Kudi Arasu — 1931, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1931-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 12
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1931-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 488
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
அய்ந்து ஆண்டுகளில் அதிசயப் புரட்சி
*குடி அரசு” ஏழாவது ஆண்டில் பயணத்தைத் தொடங்கும் கால
கட்டம். கராச்சியில் கூடிய காங்கிரஸ் கமிட்டியில் காந்திக்கும், காங்கிரசுக்கும் எதிராக எதிர்ப்புக்குரல் உயர்ந்ததை சுயமரியாதைப் பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று “குடி அரசு' குறிப்பிட்டது. மாநாட்டுத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரசின் லட்சியம், உண்மையான சுதந்திரத்தை
ஈட்டித் தராது என்று அறிவித்தார்.
பல்லாவரத்தில் - சைவர்கள் நடத்திய பொதுநிலைக் கழக மாநாட்டுத் தீர்மானத்திலும், சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் பிரதிபலித்தது. வழமைக்கு மாறாக, தீண்டாமை ஒழிப்பையும், கலப்புத் திருமணத்தையும் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். தூத்துக்குடி, காரைக்குடி, பிறையாறு, நன்னிலம் ஆகிய ஊர்களில் சுயமரியாதை மாநாடுகள் நடந்தன. பழமையில் ஊறிப் போன செட்டிமார் நாட்டுப் பகுதியில் நடந்த சுயமரியாதை மாநாட்டின் தீர்மானங்களை விமர்சித்த “குடி அரசு” ஒரு சுயமரியாதை மாநாட்டுக்குரிய தீர்மானங்களாக, அவற்றைக் கூறினால், அது பரிகசிக்கத் தக்கதாகும் என்றாலும், பழமையாளர்களிடையே இந்த சிறிய மாற்றமே பெரிய சாதனையாகும் என்று சுய விமர்சனம் செய்து எழுதியது. மாநாட்டுத் தலைவரான இந்திய சட்டசபை உறுப்பினர் ஆர்.கே.சண்முகம் தமது தலைமை உரையில் - பெரியார் பற்றி தாம் காந்தியுடன் நடத்திய உரை யாடலைப் பற்றிக் குறிப்பிட்டார். புத்தருக்குப் பின் அவரது உபதேசங்கள் மீண்டும் - கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் பரவி, மக்களிடம் உணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை, அவர் காந்தியிடம் தெரிவித்த போது, உடனே காந்தி, பெரியார் ராமசாமி தானே இதற்குக் காரணம் என்று கேட்டுள்ளார்.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலகட்டமும் இது தான். அது பற்றி *குடிஅரசு' தீட்டிய கருத்தாழமிக்க தலையங்கம் இத்தொகுதியில் அடங்கி யுள்ளது. முழுமையாக பார்ப்பன மயமாகிக் கிடந்த தென்னிந்திய ரயில்வே தனியார் நிறுவனத்தில் முதன் முதலாக ஊழியர் சேர்க்கைக்காக குழு அமைக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பிட புதுவையிலிருந்து எஸ்.குருசாமியைஆசிரியராகக் கொண்ட “புதுவை முரசு",
செட்டிநாடு பகுதியிலிருந்து பொன்னம்பலனார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட “சண்டமாருதம்” ஆகிய இரு வார ஏடுகள் வெளிவரத் தொடங்கின. பாராட்டி வரவேற்ற “குடி அரசு” சுயமரியாதை இயக்கத்துக்கு மாவட்டம் தோறும் ஒரு பத்திரிகை வரவேண்டும் என்று எழுதியது.
“காதல்”, “சமூக சீர்திருத்தமும் சமயக் கொள்கையும்”, “ஆத்மா”. “ஜனநாயகம்”, “கர்ப்பத்தடை” போன்ற தலையங்கங்களில் பெரியார் முன் வைக்கும் சிந்தனைகள் மிகவும் ஆழமானவை. இஸ்லாம் மார்க்கத்திலும், “புரோகித ஒழிப்பு” நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் பெரியார், பஞ்சா வணக்கம், கொடி வணக்கம், கூண்டு உற்சவம் போன்றவற்றைக் கண்டிக்கிறார். முஸ்லீம்களுக்கு தனி அரசியல் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
வட மாநிலங்களில் “வர்ணாஸ்ரம சுயராஜ்ய மாநாடுகளை “தேச பக்தர்”கள் நடத்தி, அதில் மனுதர்மத்தை ஆதரித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்ட செய்திகளையும் “குடி அரசு” கண்டனத்துடன் பதிவு செய்துள்ளது.
சுயமரியாதை இயக்கத்தின் ஆஸ்தியே “மனஉறுதியும், நிர்தாட்சன்ய முந்தான்” என்று கூறும் பெரியார், “நாம் ஒருவருக்கு பதில் சொல்ல. வேண்டும் என்ற கவலை ஏற்படும்படியாக எவ்வித காரியத்தையும், யாருடைய தயவையும் பிரதி பிரயோகத்தையும் எதிர்பார்க்கக் கூடாதென்றே இருக்கிறோம்” என்கிறார்.
6 ஆண்டுகளில் “குடி அரசு” பத்திரிகையின் தொண்டை மதிப்பீடு செய்யும் பெரியார், ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் வரும் விமர்சனங் களைப் பட்டியலிட்டுக் காட்டி. இப்படி “குடி அரசை” மறுப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையிலாவது குடி அரசு கொள்கையை தர்க்கமாடி மறுக்க முன் வந்தார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார்.
“நாமும் இதுவரை என்ன செய்து விட்டோமென்று கவலைப்பட வேண்டியதில்லை; கவலைப்படவுமில்லை” என்று பெரியார் கூறினாலும், “குடி அரசும் அதன் பத்திராதிபரும், சுயமரியாதை இயக்கமும் 5 ஆண்டு
களில், இந்தியாவில் அதிசயப் புரட்சியை நடத்தியுள்ளது” என்று லண்டன் ரேஷனலிஸ்ட் பிரஸ் அசோசியேஷன், தனது “லிட்டரரி கைடு* பத்திரிகையில் எழுதியது.
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளின் தாக்கங்கள் சமூகத்தில் பல்வேறு நிலைகளில் பிரதிபலித்த காலகட்டம் இது.
- பதிப்பாளர்
ணொருளாடக்கம்
தோன்றிவிட்டது சமதர்ம உணர்ச்சி
13
புதிய பத்திரிகைகள்
19
சுசீந்திரம் எச்சரிக்கை
BB 8RB
மூன்றாவது சுயமரியாதை மகாநாடு
சித்திரபுத்திரன்.
ஜாதி ஆதிக்க சுயராஜ்யம்
“புதுவை முர: சு”
“சண்டமாருதம்”
27
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றி திரு. செளந்திரபாண்டியன் அபிப்பிராயம்
இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா
30
ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தியோகஸ்தர்
மெளலாணா முகமதலி
களக்காடு ஐக்கியமுஸ்லீம் ஆண்டு விழா இந்திய பொருளாதாரம்
காதல் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சொற்பொழிவு
வட்ட மேஜை முடிவு
பாலர் பரிபாலனம்
சட்ட மறுப்புக்கு சர்க்கார் உதவி
ருஷ்யாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம்
திரு. சி.ராஜகோபாலாச்சாரி ஈ.வெ. இராமசாமி சந்திப்பு
மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும் சட்டசபையில் எனது அநுபவம்
கிரேநகரில் ஆதிதிராவிடர் ஆண்டுவிழா
ஜனநாயகம்
பல்லாவரப் பொது நிலைக்கழகக் கூட்டம்
பண்டித மோதிலால் முடிவெய்தினார்
முஸ்லீம் வாலிபர்களுக்கு
சுயமரியாதை மகாநாடு - முன்னேற்பாடு கூட்டம்
“எனதுகாதல்”
காந்தி - இர்வின் சம்பாஷணைப் பலன் என்னவாகும்?
இந்தியாவில் அறிவு இயக்கம்
தேசீயவியாபாரம்
தைப்பிங் கடிதம்.
துணுக்குகள் கர்ப்பத்தடை
ராஜி- ஓ- @ - ஓராஜி ! உப்பு சத்தியாக்கிரக ராஜி!!
சுங்கக்கேட்டுகளின் தொல்லை ஒழிந்தது
காரைக்குடியில் பார்ப்பனீயத் தாண்டவம்144
புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாடு
நிர்பந்தக் கல்யாணம்
இனி என்ன?
புதியகொள்கை ஏன்?
சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்
கராச்சிக்குப் போகின்றவர்களே இந்தியாவுக்கு எது வேண்டும்? சைவவைணவ போட்டி
புத்த மதமும் சுயமரியாதையும்
பகத்சிங்
ஆதிதிராவிடர்கள் என்பவர் யார்?
நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் கவனிக்குமா?
கராச்சி
51.
குடி அரசு - 19310)
பாராட்டுதலும் வாழ்த்தும்
52.
206
ஓர் சம்பாஷணை
207
இந்தியாவின் ஜனத்தொகை
209
தூத்துக்குடி மகாநாடு திருநெல்வேலி ஜில்லா 4-வது சுயமரியாதை மகாநாடு.
210
221
ஸ்ரீவில்லிப்புத்தூர்
222
செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு
228
செட்டிநாடு மகாநாடு
230
இந்துமுஸ்லீம்
241
தென் இந்தியரயில்வே கம்பெனிலிமிடெட்
246
தீண்டாமை
248
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
252
257
கலைகள்
காந்தியும் நாகரீகமும்
261
கருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை
263
இந்துமத தர்ம பரிபாலனசட்டம்
265
8 8
ஏழாவதாண்டு.
271
சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அய்யர் - அய்யங்கார் சம்பாஷணை
278
ஆத்மா
70.
291
ஒரு நல்ல சேதி பஞ்சமா பாதகங்கள்
297
300
பிரிட்டிஷ் ஆக்ஷியின் இன்றைய தீமைகள்
302
அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை
307
இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்
310
உபாத்தியாயர்கள்
313
கதர் போர்டு நினைத்தது முடிந்தது காஞ்சீபுரம்போலீஸ் ஸ்டேஷனிலும் புத்தர், பிள்ளையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டையா?'
317
318
வங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு 321
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
திருப்பூர் காங்கிரஸ் பிரசாரமும் பணமுடிப்பின் யோக்கியதையும்
80.
'கதரும்- ஹிந்தியும்
81.
களூர் முனிசிபல் நிர்வாகம்
82.
ஹிந்து ஊத்துக்குளி ஜமீன்தார் மரணம்
83.
84.
85.
“நான்”
86.
ஜனாப் அலாவுதீன் ராவுத்தர்
87.
“சுதந்திர வீரன்"
88.
காங்கிரஸ் கூட்டத்தில் சொற்பொழிவு
89.
திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா
90...
தீண்டாமை
91.
3 வது மாகாண சுயமரியாதை மகாநாடு
92.
திரு. சத்தியமூர்த்தி ஈரோட்டில்போலீஸ் அமளி
93.
94.
ஈரோட்டில் போலீஸ் அக்கிரமம்
95.
சி. இராஜகோபாலாச்சாரியாரின் வேலைத்திட்டம்
96.
பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் “காங்கிரஸ்” பிரசாரம்
97.
புதிய முறை சீர்திருத்த மணம் தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானங்கள்
98.
99.
விருதுநகர் சுயமரியாதை மகாநாடு.
100.
வருந்துகிறோம்
101.
தரங்கம்பாடி சமுத்திரக்கரையில் கூட்டம் பிரசாரபோதனாமுறை பள்ளிக்கூடம்
102.
103.
சுயமரியாதை இயக்கமும் காங்கிரசும் தினசரி
104.
105.
மதுவிலக்கு நாடகம்
106.
107.
குடி அரசு - 19310)
இந்துமதம்
108.
412
திருவாரூரில் சுயமரியாதைப் பிரசாரம்
109.
413
நன்நிலம் மகாநாடு
110.
421
தமிழ் மாகாண மகாநாடென்பது மறுபடியும்பார்ப்பனபிரசாரமேயாகும்
111.
426
430
மதிப்புரைகள்
112.
432
சுதேசி “ஆனாலும் ஒருசமயம்”
113.
440
114.
முஸ்லீம் மகாநாடு
441
115.
கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம் 446
116.
449
117.
சுயமரியாதை உதயம்
460
118.
துருக்கியில் பெண்கள் முன்னேற்றம்
119.
462
120.
464
465
இந்துமுஸ்லீம் சித்தயங்கோட்டை “மக்கள் விடுதலை சேவை சங்கம்”
121.
122.
திறப்பு விழா அருஞ்சொல் பொருள்
472
123.
488
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
குடி அரசு - 19310) 10 11 வ... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இண்டர் தெ. 2041 il விக!
அஆப்சக்கணம்கன தந்சாட்ரி பதிநிரல்களும், தங்க வெடல்களும் பரிசுபெற்ற, டாக்டர் சிங்காரம் அவர்களின் உலகப்பிரரித்தபெற்ற உண்மையான மருத்துகள்,
மஹா சத்தனுதித் தைலம். (ஓர னேனெவரரின் அதவ இறை]
e e
@8 நான் நினை பரநதிவேல். i சங்கள் gy மரல் .
: டு. 9. சங்காரம் அண்டு கோ... 935 அருந்த வைத்இயணவட தெப்பக்குளம் போஸ்டு இருவிாப்பன்ஸ்.
குடி அரசு - 19310)
கோண்றிவிட்டது சமதர்ம உணர்
பீரார் நாட்டில் லேவாதேவிக்கார பணக்காரர்கள் வீட்டிலும் ஏராளமாக பூமிகள் வைத்திருக்கும் மிராசுதாரர்கள் வீட்டிலும் கைத்தொழி லாளிகளும் விவசாயத் தொழிலாளிகளும் கூட்டம் கூட்டமாகப் புகுந்து பணங்களையும், தானியங்களையும் கொள்ளையடித்ததோடு கடன் பத்திரங்கள், பாண்டுகள், கணக்குப் புஸ்தகங்கள் முதலிய கடன் கொடுத்த ஆதாரங்களையும், பூமிகள் குத்தகைக்குக் கொடுத்த ஆதாரங்களையும் தேடி எடுத்து அவைகளை நெருப்பிட்டுக் கொளுத்தி சாம்பலாக்கி விட்டதாகச் செய்திகள் தினசரிப் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. அவைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
இதுமாத்திரமல்லாமல் இந்தப்படி செய்ததற்கு மற்றொரு நோக்கமும் அதில் காணப்படுகின்றது. அதாவது,
இந்த மாதிரி ரொக்க சொத்துக்களும், பூமி சொத்துகளும் அநேகமாய். பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்காரர்கள் இடமும், லேவாதேவிக்காரர் கள் இடமுமே போய் சேரக்கூடியதாய் இருப்பதால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களையும் கண் வைத்துக் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதாகத் தென்படுகிறது.
ஆகவே இவற்றிலிருந்து இந்த முறையை உயர்ந்த ஜாதி தத்துவத் தையும், பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக நன்றாய்த் தெரிய வருகின்றது. உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால் இந்த முறையைத் தான் கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
அன்றியும் இன்று இந்தியாவிற்கு வெளியில் உள்ள வேறுபல தேசங்களில் இம்முறைகள் தாராளமாய்க் கையாளப்பட்டும் வருகின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும்.மற்றும் பல நாடுகளில் விடுத லைக்கு இம்முறைகளையே கையாள முயற்சிகள் செய்யப்பட்டும் வருகின்றன.
இங்கிலாந்து முதலிய நமக்கு முக்கியமான நாடுகளில்கூட இம்முறைகளை புகுத்த ஒரு பக்கம் பிரசாரமும், மற்றொரு பக்கம் அதைத்
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தடுக்க முயற்சிகளும் நடந்துவருகின்றன. இவற்றின் உண்மைகள் எப்படி இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு முன் இம்முறைகளை பாவம் என்றும், நரகம் கிடைக்குமென்றும் மிரட்டி ஏய்த்துக் கொண்டிருந்த தெல்லாம் போய் இப்போது இது “நாட்டுக்கு நல்லதா?” “தீமை விளைவிக்காதா?” “நமது நாட்டுக்குப் பொருந்துமா?” “நல்வாழ்க்கை நடப்புக்கு விரோதமாய் இருக்காதா?” என்கின்றவை போன்ற “தர்ம ஞானம்” பேசுவதின் மூலம்தான் இம்முயற்சிகளை அடக்கப் பார்க்கிறார்களே ஒழிய இது சட்ட விரோதம், பாவம், கடவுள் செயலுக்கு மாறுபட்டது என்கின்ற புரட்டுகள் எல்லாம் ஒரு பக்கம் அடங்கிவிட்டன.
ஆனாலும் இந்த தர்ம சாஸ்திர ஞானமும் யாரால் பேசப்படுகின்றது என்று பார்ப்போமானால் பார்ப்பனராலும், பணக்காரராலும், அதிக நிலம் வைத்துக்கொண்டிருக்கும் பெரிய நிலச்சுவான்தாரர்களாலும் இவர்கள் தயவால் அரசு ஆட்சி நடத்தும் அரசாங்கத்தாலும் தானே தவிர உண்மை
யில் ஜாதி ஆணவக் கொடுமையால் தாழ்த்தப்பட்டும், முதலாளிகள், லேவா தேவிக்காரர்கள் கொள்ளையால் கஷ்டப்படுத்தப்பட்டும், நிலச்சுவான் தாரர்
கள் கொடுமையால் துன்பப்படுத்தப்பட்டும் பட்டினி கிடக்கும் ஏழை மக்க
ளுக்கு இம்முரையைத் தவிர வேறு முறையில் தங்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற உணர்ச்சி பெருகிக்கொண்டே தான் இருக்கின்றதே தவிர சிறிதும் குறைந்ததாகவில்லை.
தவிர பொதுவாகயிருக்கப்பட்ட ஒருபொது மனிதனிடம் இன்றைய நிலைமையை இரு தரப்பாரும் எடுத்துச்சொல்லி எது நல்லது? உலகம் எப்படி. இருக்க வேண்டும்? என்று தீர்ப்புக் கேட்டால் இன்று பீரார் ஏழை மக்கள். செய்த காரியம் மிகச் சரியென்றும் இதை வெகு நாளைக்கு முன்னமே செய்து இருக்க வேண்டும் என்றும்தான் சொல்லுவானே தவிர இன்றைய பார்ப்பனத் தன்மையையும் பணக்காரத் தன்மையையும் ஒருநாளும் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.
அன்றியும் இம்முறையை நாமும், அதாவது நம் நாட்டு மக்களும் அநேகமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இன்றும் கையாடிக் கொண்டுதான் வருகின்றோம். உதாரணமாக இன்றைய சமூக சீர்திருத்தக் கொள்கையோ, ஜாதி ஒழிப்புக்கொள்கையோ, சுயமரியாதைக் கொள்கையோ, சுயராஜ்யம் கேட்கும் கொள்கையோ பூரண சுயேச்சைக் கொள்கையோ ஆகியவைகள் எல்லாம் இந்த சமதர்ம பொதுவுடைமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதேயாகும். அதாவது இவையெல்லாம் பலத்தை
யும், கிளர்ச்சியையும், சண்டித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கொடுக்க இஷ்டமில்லாதவனிடத்தில், இணங்க இஷ்டமில்லா தவனிடத்தில் தட்டிப்பிடுங்குவதோ வலுக்கட்டாயமாய் பறிப்பதோ ஆகிய குறியைக் கொண்டதேயாகும். அதிலும் சுயராஜ்ஜியமோ பூரண விடுதலையோ
குடி அரசு - 19310) 14
கேட்பதை விட -அடையக் கைக்கொண்டிருக்கும் இன்றைய முயற்சியைவிட ஜாதி ஒழிப்பது என்பது மிகுதியும் சமதர்மமும் பொது உடைமைத் தன்மையும் கொண்டதாகும்.
ஏனெனில் சுயராஜியமும், விடுதலையும் மனித சட்டத்தை மீறி மனித ஆகஷியைமீறி பலாத்காரத்தில் சண்டித்தனத்திலே அடையக் கருதுவதாகும். ஜாதி ஒழிப்பது என்பதோ கடவுள் கட்டளையையும், ஆக்ஷியையும், கடவுள் சட்டத்தையும் மீறி பலாத்காரம் சண்டித்தனம் ஆகியவைகளையும் அதற்கும் மேம்பட்டது ஏதாவது இருந்தால் அதையும் உபயோகப்படுத்தி அடியோடு
ஒழிக்க முயற்சிப்பதாகும்.
ஆகவே மனிதன் ஒவ்வொருவனும் இன்று எந்த விதத்திலும் சம தர்மத்தையும், பொது உடமைத் தத்துவத்தையும் அடைய முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றான் என்பது நன்றாய் விளங்கும்.
எனவே, இன்று மனிதன் எப்படியும் சட்டம் மீறிவிட்டான். பலாத்காரத்
துக்கும் துணிந்துவிட்டான். ஆனால் அம்மாறுதல்களாலும் துணிவுகளாலும் தோன்றப்படும் எண்ணங்களை மாத்திரம் செய்கையில் செய்ய தன்னால் ஆகுமா ஆகாதா என்று யோசித்துப்பார்த்து தன்னால் ஆகும் என்று நினைக் கின்ற முறைகளை எல்லாம் கையாடிக்கொண்டும் ஆகாது என்பவைகளை மாத்திரம் பிரயோகிக்க முடியாமல் தவித்துக் கொண்டும் இருக்கின்றானே ஒழிய சட்டத்திற்கு பயந்தோ நீதிக்கு பயந்தோ அவை தர்மமல்ல என்று கருதியோ ஒன்றையும் எவனும் செய்யாமல் விட்டுக் கொண்டிருக்கவில்லை.
ஆதிக்கத்தில் இருக்கின்றவன் தன் ஆதிக்கம் என்றைக்கும் நிலைத் திருக்க ஒரு சட்டம் செய்து கொண்டிருப்பானேயானால் அடிமைப்பட்டு, தூழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, பட்டினியால் கஷ்டப்படுத்தப்பட்டு இருக்கின்றவன் எத்தனை நாளைக்கு அவ்வாதிக்கக் காரன் செய்துகொண்ட அந்த சட்டங்களுக்கு பயந்து அடங்கியிருக்க முடியும்? என்பதை யோசித்துப்பார்த்தால் சட்டத்திற்கு அடங்கி நடந்து வந்த நாள்கள் எல்லாம் முட்டாள்த்தனமாய் வீணில் கழித்த நாள்கள் என்பது எவனுக்கும் விளங்காமல் போகாது. இன்றைய தினம் உலகில் எல்லா ஆதிக் கக்காரனுக்கும் நரகமும் சட்டமும் தன் ஆயுதமாயிருக்கின்றதே தவிர நியாய மும்நீதியும்யாருக்கும் ஆயுதமாயில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
“அன்றியும், சட்டப்படிக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசாங்க ஆதிக்கத்தை அழிக்கக் கருதி சட்டம் மீறுகின்றோம்”. என்பது உலகத்தாரால் குற்றமல்ல, அநீதியல்ல என்று குடிகளாலும், பணக்கார முதலாளிகளாலும் கருதப்படுமானால்
“சுதந்திரத்தை உத்தேசித்து” “விடுதலையை உத்தேசித்து” என்று தங்களுக்கு இஷ்டமில்லாத சட்டத்தை மீறி நடப்பவர்களை தடியால்
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அடிப்பதும், மண்டையை உடைப்பதும் குற்றமல்ல அநீதியல்ல என்று ஒரு அரசாங்கத்தால் கருதப்படுமானால்
இரு கூட்டத்தின் பயனாலும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட நேர்ந்தும் அதைப்பற்றி கவலையில்லாமல் பழயகாரியங்களையே தொடர்ந்து நடத்துவது குற்றமில்லை அநீதி அல்ல என்று கருதப்படு மானால்,
“உயர்ந்த ஜாதிக்காரன் என்பவனை ஒழிப்பதும், பணக்காரன் என்பவனை கொள்ளை அடிப்பதும் கடன் கொடுத்தவன் என்பவனின் ஆதாரத்தை நெருப்பு வைத்துக் கொளுத்துவதும் ஏராளமான தானியம் வைத் திருப்பவனை கட்டிப்போட்டு தானியங்களை அள்ளிக்கொண்டு போய் வயிற்றுப்பசியை தீர்த்துக் கொள்வது” என்பதும் அந்நாட்டு ஏழை மக்களுக்
குப் பட்டினியால் வாடுகின்றவர்களுக்கு, இழிவுபடுத்தப் பட்டவர்களுக்கு எப்படி குற்றமாகுமென்பது நமக்குத் தோன்றவில்லை.
அன்றியும் முன்னே குறிப்பிட்ட காரியங்கள் எல்லாம் அதாவது சுயராஜியம் பூரண சுயேச்சை என்பவைகள் கேட்கப்படுவதும், கொடுக்க முடியாது என்று சொல்லப்படுவதும் தின்றுகொளுத்து பேராசையால் பலத் திமிரால் நடைபெறப்படுபவைகளாகும். ஆனால் பின் குறிப்பிட்ட செய்கை கள் அதாவது பீரார் ஏழைமக்கள் செய்த காரியம் இழிவைப் போக்கவும், பட்டினியால் மடிபவர்களின் ஜீவனத்திற்கு ஆகவும் மனிதன் செய்து தீரவேண்டிய இயற்கை உணர்ச்சியைப்பற்றிய தாகுமென்றே நமக்குப் படுகின்றது.
எது எப்படி இருந்தாலும் கையில் வலுத்தவன் என்கின்ற முறையிலும் உயிருக்குத் துணிந்தவன் என்கின்ற முறையிலும், எவனுக்கும் எதுவும் செய்ய இன்றைய உலகத்தில் பாத்தியமிருக்கின்றதை நம்மால் மறுக்கமுடியவில்லை. ஆகவேதான் அது இன்று உலகதர்மமா யிருந்தும் வருகின்றது. ஆகவே அதுதப்பு,இது தப்பு என்று பேசுவதெல்லாம் கையா லாகாத தன்மையாகதான், வீண் பேச்சாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய அவற்றில் சத்தியம் இருப்பதாய் காணப்படவில்லை.
உதாரணமாக பரமார்த்திகம் என்று சொல்லப்படுவதும் 50 கோடி மக்கள் பின்பற்றுவதும் பூஜிப்பதுமாயிருக்கும் பைபிள் என்னும் கிறிஸ்தவ வேதத்தைப் பறிமுதல் செய்வதும், அதைப் படிப்பவர்களைத் தண்டிப்பதும், இவற்றிற்கு எதிராய் இருப்பவர்களை தூக்கில் போடுவதுமாய் இருக்கும் தன்மை இன்று உலகில் நடக்கப் பலர் பார்க்க கேட்க்க சர்வ சாதாரண மாகிவிடவில்லையா?
அதுபோலவே சுமார் 30 கோடி மக்கள் பின்பற்றுவதும், பூஜிப்பதும், கடவுள் வாக்கு என்று சொல்லப்படுவதுமான குர்ஆன் என்னும் இஸ்லாமிய வேதவாக்கியங்கள் பறிமுதல் செய்யப்படுவதும், தடுப்பவர்களை
குடி அரசு - 19310) 16
தண்டிப்பதுமான தத்துவம் தாண்டவமாடுவதையும் பார்க்கவும், கேட்கவும் சாதாரணமாகி விடவில்லையா?
இவைகள் மனித சுதந்திரத்திற்காகவும், மனிதன் முற்போக்கிற்காகவும் என்று உண்மையாய் கருதியே செய்யப்பட்டு வருவதாக அநேகர் உணர்ந்து
திருப்தி அடைந்தும் ஆய்விட்டதே.
உலகத்தில் இவைகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட பின்பு ஒருவன் பொருளை - ஒருவன் கஷ்டத்தை - ஒருவன் சட்ட சாக்காலும் தந்திர சக்தியாலும் அனுபவிப்பதென்றால் இனி அந்தத் தன்மைகள் எத்தனை நாளைக்கு இருக்கமுடியும்?
இனிமேல் அதாவது இன்றையதினம் எவ்வளவு பலவீனமான ஒரு அரசாங்கமாய் இருந்தாலும் அவ்வரசாங்கத்தை அழித்து வேறு அரசாங் கத்தைஸ்தாபிப்பது என்கின்ற கொள்கையில் யார் என்ன திட்டம் ஏற் படுத்திக் கொண்டு வேலை செய்தாலும் இனி ஒருக்காலமும் அதில் எவரும் வெற்றி பெற முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.ஏனெனில் அது ஒரு கூட்டத்தாரிடம் உள்ளஆதிக்கத்தை மற்றொரு கூட்டத்தார் கைப்பற்றி ஆட்சி செலுத்தப்பார்ப்பதாகுமே ஒழிய அது பொதுஜனங்களுக்கு பயன்படுவதாகாது.
ஆதலால் அம்மாதிரி முயற்சியில் ஆக்ஷியில் பங்குபெற ஆசைப் படுபவர்களும், அவர்களது சிப்பந்தி சிஷ்யகோடிகளும் அவர்களால் ஏமாற்றப்பட்டவர்களும்தான் அதில் இனி ஈடுபட முடியுமே தவிர உண்மை யான பொது ஜனங்கள் ஒரு காலமும் ஈடுபடமாட்டார்கள்.
அப்படிக்கில்லாமல் அதிகமாய் அளவுக்கும், தகுதிக்கும் மீறி அனுப விப்பவனிடம்-வைத்துக் கொண்டிருக்கின்றவனிடம் உள்ளது எதையும் கைப்பற்றுவது, அதை எல்லோருக்கும் சமமாய்க் கொடுப்பது என்கின்ற கொள்கை மீது எந்தத் திட்டம் வைத்து வேலை செய்தாலும் எல்லாப் பொது மக்களும் அதில் சேரக்கூடும். சேருவதனால் பயனும் பெறக்கூடும். ஆனால் அது சாத்தியமா என்று பலர் கருதக்கூடும். இந்த இடத்தில் சாத்தியமா என்று கருதுவதற்கு முன் இது நியாயமா அல்லவா என்று யோசித்துப் பார்த்து நியாயம் தான் என்ற முடிவுக்கு வந்தார்களேயானால் அவர்களுக்கு உண்மை யான உணர்ச்சி இருக்குமானால் பிறகு அங்கு இது சாத்தியமா? என்கின்ற கேள்விக்கோ, யோசனைக்கோ இடமே இருக்கநியாயமில்லை. இருந்தாலும் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. நம்மை அறியாமலே நமக்கு அந்த நியாய உணர்ச்சி வெற்றியடையச் செய்துவிடும். அன்னிலையில் - அத் தருமத்தில் இன்று வெற்றி பெற்றதேசங்கள் எல்லாம் இது சாத்தியமா என்று கருதிப்பார்த்து வெற்றி பெற்றவை அல்ல. மற்றெப்படி என்றால் நியாயமா என்று பார்த்து நியாயம்தான் என்று மனப்பூர்த்தியாய் திருப்திப்பட்ட
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பின்பேயாகும். ஆதலால் இங்கு சாத்தியமா என்ற யோசனைக்கு சிறிதும் வேலையில்லை.
ஆகவே இன்று வெள்ளைக்கார அரசாங்கம் விட்டால், அடுத்த அரசாங்கம் நமது சமதர்ம அரசாங்கமும் பொது உடமை அரசாங்கமு மாகவே தான் இருக்கவேண்டுமே ஒழிய வெறும் ராமராஜ்ஜிய- சுயராஜ்ஜிய- மோக்ஷ- நரகப் பூச்சாண்டிராஜ்ய அரசாங்கமாக இருக்கக் கூடாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே அந்த சேதியை ஆதாரமாய் வைத்து இதை எழுதினோம்.
குடி அரசு - தலையங்கம் - 04.011931
குடி அரசு - 19310) 18
புதிய பத்திரிகைகள்
செட்டியார் நாட்டில் திரு.அ. பொன்னம்பலனார் ஆசிரியத் தலை. மையில் சண்டமாருதம் பத்திரிகையும், பிரஞ்சு இந்திய நாட்டில் திரு.எஸ். குருசாமி அவர்கள் ஆசிரியத் தலைமையில் புதுவை முரசுப் பத்திரிகையும் துவக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு, உண்மைச் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இன்று சுயமரியாதை இயக்கத்திற்கு சில பத்திரிகைகளே இருக்கின்றன.
அதாவது “குடி அரசு” “குமரன்” “நாடார் குலமித்திரன்” “முன்னேற்றம்” “தமிழன்” “புதுவை முரசு” “சண்டமாருதம்” ஆகியவாரப் பத்திரிகைகளேயாகும். “திராவிடன்” தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய் விடுமோ: இருந்தாலும் சுயமரியாதைக் கொள் கைக்கே உழைக்குமோ என்பது பற்றி பலருக்கு சந்தேகமும் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் அதையும் சேர்த்தே பார்த்தாலும் இவை மாத்திரம் போதாதென் போம். சீக்கிரத்தில் சுமரியாதைத் தொண்டனும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது. ஏனெனில் அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும் அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார். இனியும் ஜில்லாதோறும் ஒரு பத்திரிகை சுயமரியாதை இயக்கப்பிரசாரத்திற்கு ஏற்பட வேண்டும் என்பதே நமதாசை.
அன்றியும் நமதியக்கத்தால் பலருக்கு வயிற்றுப் பிழைப்புப்போய் புஸ்தக வியாபாரமும், கேட்லாக் வியாபாரமும் போய் யோக்கியதையும் போய் திண்டாட ஏற்பட்டு விட்டதாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நமது இயக்கம் “எமனாய்” தோன்றிவிட்டதாலும் தங்கள் ஜீவ வாழ்வை உத்தே
சித்து எதிர்க்க வேண்டிய அவசியமுள்ள பத்திரிகைகள் பல இன்னும் தோன்றலாம் தோன்றியும் இருக்கின்றன. ஆதலால் அதனதன் யோக்கிய
தைக்குத் தகுந்தபடி அதனதன் பாஷா ஞானத்தில் நடைபெற இன்னும் பல பத்திரிகைகள் வேண்டியது அவசியமுமேயாகும். ஆதலால் சுயமரியாதை மக்கள் இவைகளை ஆதரிப்பார்கள் என்றும் இன்னும் பல பத்திரிகைகள் தோன்ற உதவி அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.011931
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
க்லாம் எச்சரிக்
சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்மந்தமாய் திருவாங்கூர். ஹைகோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்க உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம். வம்புச்சண்டைக்கு போகாமல் இருக்கலாமே ஒழிய வலிய வரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்கு பணிவான எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.011931
குடி அரசு - 19310) 20
மூண்றாவது சுயமரியாதை மகாநா௫
மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்தாகும். அந்தப்படி இவ்வருஷம் மார்ச்சுமாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் மகா நாடு நடத்துவதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம். ஏனெனில்: ரயில் போக்குவரத்து சவுகரியமும் உர்ச்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதை வீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்திய ஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜ பாளையம், சிவகாசி முதலிய இடங்களுக்கும் அருப்புக் கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்திய பாகமாகவும் இருப்பதாகும்.
ஆகவே இந்த வருஷம் மாகாண மகாநாடு விருதுநகரில் நடை பெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம். மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. WPA. செளந்திர பாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார், VV. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக் கோட்டை கோபால கிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை 5. இராமச்சந்திரன், முருகப்பா முதலியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகா நாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப் பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித ஐயமுமில்லை.
தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டி லிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரரா கவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கிற தைரியம் இருக்கிறது. இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும் அமுலில் நடத்த வேண்டியதாகவுமிருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதவசி யமாகும். தண்ணீர் செளகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு சில மகாநாடுகளும், 3, 4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப் பட்டிருப்பதாய்த்
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தெரிய வருகிறது. விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டு விட்டால் அவர்களைப் போல எடுத்துக்கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்ப வர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய தில்லை. இதை உத்தேசித்தே மேல் கொண்ட காரியங்களைப் பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாகக் கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கூட்டியிருக்கிறார்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.011931
குடி அரசு - 19310) 22
A
மூடர்களே!மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது, அம்மன்கள் விக்கிரகங்களின் கழுத்திலிருக்
கும் தாலிகள் திருட்டுப்போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது! திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப்போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது. அச்சு ஓடிகின்றது. இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் அந்த விக்கிரகங்களில் அந்த தேர் வாகனங்களில் “புனிதத்தன்மை தெய்வத்தன்மை அருள் தன்மை ஆண்டவனை ஞாபகப்
படுத்தும் தன்மை” முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்க ளிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா தயவு செய்து சொல்லுங்கள்.
இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோடீஸ்வர: னாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்பராய்ப் போகிறான் என்பதைப்
பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப்போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்.
இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக்கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுண்ணு நினைக்கின்றீர்கள்.
மூடர் :- சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அது தான் கடவுள்.
பதில் :- சரி, அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக் கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம்.
(பகுத்தறிவு)
மூடர்:- கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள். தனமாகும்.
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பதில் :- அப்படியானால் உலகப்படைப்புக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடர்:- உங்களோடுயார் பேசுவார்கள்.
பதில் - சரி நல்ல காரியமாச்சுது. “சனியன்” தொலைந்தது. ஆனால் காணாத இடத்தில் குலைக்காதே.
குடி அரசு - உரையாடல் - 04.01.1931
குடி அரசு - 19310) 24
ஹாதி ஆதிக்க சுயாராஸ்மாம்
வட மாகாணத்தில் சுயராஜ்ஜியத்திற்காக என்று செய்யப்படும் சத்தி யாக்கிரக ஆர்ப்பாட்டம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணாசிரம சுயராஜ்ஜிய சூட்சிகளும் அங்கு தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகின்றன. அங்கு வருணாசிரம சுயராஜ்ஜிய மகாநாடு என்பதாக ஒன்று பெருத்தமுறையில் ஏற்பாடு செய்து வருணாசிரமமும், ஜாதி உயர்வு தாழ்வும், மனுதர்ம சட்டங்களும் அவசியம் என்றும் அவைகளை நிலை நிறுத்த பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டதை அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆதி திராவிடர்கள் என்போர்கள் அம்மகாநாடு நடக்கமுடியாமல் சத்தியாக் கிரகம் செய்ததாகவும் அதற்காக, அவர்களில் பலரைச் சிறைப்படுத்தி இருப்ப தாகவும் பொது ஜனங்கள் எல்லாம் கூடி வருணாசிரமத்தை நிலை நிருத்துபவர். களைக் கண்டித்ததாகவும் காணப்பட்டிருக்கின்றன. வெள்ளைக்காரர் ராஜ்ஜிய மாகிய “பட்டப்பகலில்” இந்த அக்கிரமம் நடக்கும்போது இனி வருணாசிரம சுயராஜிய ராஜ்யத்தில் என்ன வித அக்கிரமம் நடக்காது என்பதை யோசித்துப். பார்க்கும்படி நினைப்பூட்டுகிறோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 04.011931
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
< 3 புதுவை முரசு
“புதுவை முரசு” என்னும் வாரப்பத்திரிகை ஒன்று புதுவை யுதுச் சேரியில் இருந்து சில மாதங்களாக வெளிவருவது யாவருக்கும் தெரிந்த
தாகும். அப்பத்திரிகை ஆரம்பித்ததின் ணோக்கமே சுயமரியாதைக் கொள்கை களைப் பறப்பவேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே துவக்கப் பட்டதாகும்.
அப்பத்திரிக்கைக்கு இப்போது திரு.எஸ். குருசாமி பி.ஏ., அவர்கள்
ஆசிரியராய் இருக்கச் சம்மதித்து இருக்கின்றார்.
திரு.குருசாமியைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம், அவர் பல நாள் குடிஅரசு ஆபீசி லும்,ரிவோல்ட் பத்திரிகை பிரசுரத்தில் முக்கியஸ்தராகவும் இருந்து வந்தவர். சுயமரியாதை இயக்க கொள்கைகள் முழுவதும் நன்றாய் உணர்ந்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் போதிய உலக ஞானப் பாண்டித்தியம் உடையவர். இவ்வியக்கத்திற்கே தனது வாழ்நாளை பயன்படுத்த கவலை கொண்டுள்ள. ஒரு உண்மைச் சுயமரியாதை வீரர். அவர் தனது சுயமரியாதை உணர்ச்சிக் கேற்ற துணைநலம் கொண்டவர். ஆகவே அப்படிப் பட்ட ஒருவரால் நடத்தப் படும் பத்திரிகை சுயமரியாதை உலகத்திற்கு சிறந்த பயனளிக்கக் கூடியது என்பதில் யாவருக்கும் சந்தேகமிருக்காது. ஆகவே அப்பத்திரிகையை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியது நாட்டின் சுயமரியாதையில் பற்றுள்ளவர்கள் கடமையாகும்.
சந்தா வருஷம் 1-க்கு உள்நாட்டுக்கு ரூ.3-0-0 வெளிநாட்டுக்கு ரூ.5-0-0 ஆயுள் சந்தா ரூ.30-0-0
விலாசம் - “புதுவை முரசு” காரியாலயம், நெ.4 லல்லி தொலாந்தா. வீதி புதுச்சேரி, 51
குடி அரசு - மதிப்புரை - 04.014931
குடி அரசு - 19310) 26
66 | 33
ஆசிரியர் அட வராண்ணம்பணைர்
கோட்டையூரிலிருந்து வெளிவரும் “சண்டமாருதம்” என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப்பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அபொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளி யிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கேற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதே யாகும். அதன் ஆசிரியரான திரு. அ. பொன்னலம்ப னாரைப்பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். என்னேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராக்ஷ மாலை பூண்டு தேவார திருவாசக, ராமலிங்கசாமி முதலாகிய பாடல்களை கண்களில் நீர் ஒழுகத் தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசை யோடு பாடிப்பாடி சைவப். பிரசாரம் செய்தவர் - பூவாழூர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர் களில் ஒருவராய் இருந்தவர். அப்படிப் பட்டவர் சுயமரியாதையில் திரும்பி “சண்டமாருதம்” போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே “சண்டமாருதம்” என்ற பத்திரிகையின் ஆசிரியராயிருக்கிறார். ஆகவே தமிழ் மக்கள், சிறப்பாக சுயமரியாதையில் கவலையுள்ள மக்கள் யாவரும் அதற்கு சந்தாதாரராய்ச் சேர்ந்து ஆதரிக்க வேண்டியது கடமை
யாகும்.
அதன் வருட சந்தா ரூ.3-0-0. வெளிநாட்டுக்கு ரூ. 4-0-0 விலாசம் - “சண்டமாருதம்” ஆபீஸ், கோட்டையூர், ராமநாதபுரம் ஜில்லா.
குடி அரசு - மதிப்புரை - 04.011931
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
“இந்த இருபத்தைந்து மாத காலத்தில் றாமநாதபுரம் ஜில்லா போர்ட் நிர்வாக நடவடிக்கைகளில் இது வரையும் ஒரே ஒரு விஷயம். அதாவது விதியின் அர்த்த சம்மந்தமான விஷயம் சம்மந்தப்பட்ட ஒரே ஒரு விஷயம் தவிர மற்றப்படி விஷய அட்டவணைகளில் கண்ட விஷயங்கள் எல்லாம் ஓட்டுக்கு விடாமல் ஏகமனதாகவே பைசலாகி இருக்கின்றது என்று கூறுகின்றேன்” என்று சொன்னார்.
ஆதிக்கத்தையும், ஜாதி ஆதிக்கத்தையும் விடுத்து ஏழை மக்களுக்கும்,
அவ்விதம் செய்யப்படுமானால் போர்டின் தலைவர்களுக்கு இப் பொழுது ஏற்படும் அநேகஇயற்கைக் கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கி தாக்ஷண்ணியமில்லாமல் தனது கடமையைச் செய்ய இடமுண்டாகும். ஆகையால் சர்க்கார் இந்த ஏற்பாட்டைச் சீக்கிரம் அதாவது அடுத்த வரு ஷத்திலாவது செய்வார்களென்று நம்புகிறேன் என்றும்.
குறிப்பு - நாமினேஷனில் வந்த தலைவர்கள், எலக்ஷனில் வந்த அங்கத்தினர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இதற்குமேல் பெற்ற வர்களை இத்தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பார்த்ததில்லை.இனியும் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமேயாகும். ஸ்தல நிர்வாகம், பொருப்பு பணக்கார
தனது நிர்வாகத்தில் தனக்கும், மெம்பர்களுக்கும் நடந்து வந்த சம்மந்தத்தைப்பற்றி அவர் சொல்லும்போது,
குடி அரசு - 19310) 28
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான அம்சமென்று கருதுவதோடு அதை எந்தக் காரணம் பற்றியும் எடுத்து விடக்கூடாது என்று கருதுகின்றேன். அதோடு ஓவ்வொரு ஜில்லா போர்டுக்கும் ஒவ்வொரு நிர்வாக அதிகாரி எக்ஸ் கூட்டிங் ஆபீசர்! இருக்க வேண்டுமென்று எனக்கும் இச்சட்டம் செய்யும் பொழுது தோன்றியது போலவே இப்பொழுதும் தோன்றுகிறது.
“ஸ்தலஸ்தாபன சட்டத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மான விதிமிகவும் அவசியமாய் இருக்க வேண்டிய தொன்றாகும். அதை நான் நல்ல
திரு. சசனந்திரபாண்மமயண் அவிப்பிராயம்
P Soconss B - b
சுயமரியாதைத் தலைவர்
தான் ஸ்தல ஸ்தாபன ஆக்ஷி பயன்படத்தக்க தாகவும், நல்ல ஆக்ஷியாகவும் இருக்க முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சம உரிமை இருக்கும் படியான ஆதிக்கத்திற்கு வருங்காலத்தில் திரு. பாண்டியன் அவர்கள் போன்ற சுயமரியாதை வீரர் களின் ஆட்சிக்குள் வந்து சேர முடியும். அவர்களைப் போன்றவர்களால்
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 04.011931
பர்.)
இருகூர் திராவிட முண்ணேற்ற சங்கம் முதலாவகாண்டு விழா
ஊாதிக்வகாடுமை, உயர்வு தாழ்வு ஒழிய, கடஷன் நம்பிக்கையையும், மக நம்பிக்கையையும்,
விணை, விதி நம்பிக்கையையும் அமு€யோடு ஒழிக்க வேண்டும்.
சகோதரர்களே! சகோதரிகளே!
உங்கள் சங்க ஆண்டு விழாவில், சங்க சம்மந்தமாகவும் மற்றும் உங்கள் முன்னேற்ற விஷயமாகவும் பெரியோர்களான ராவ்சாகிப் ராமச்
சந்திரம் செட்டியார், சின்னப்பாவு, சுப்பையா ஆகியவர்கள் பேசியது கேட்டி
ருந்தீர்கள். உங்களது குறைகளை யெல்லாம் எடுத்துக்காட்டினார்கள். உங்களைத் தெருவில் நடக்கவிடாததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவிடாமல் தடுத்து கலகம் செய்ததைப்பற்றியும், உங்கள் பிள்ளைகள் படிப்பதனால் இந்த ஊர் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்.
கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டதைப் பற்றியும், மற்றும் ராமநாத.
புரம் ஜில்லாவில் ஆதிதிராவிட சமூகத்தை மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப்பற்றியும் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன்னதை கேள்க்க எனக்கு மிக மிக ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்புதாரிகள் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கையில் உங்களை இக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்ல வென்றும் நீங்களும் இக் கொடுமை: அனுபவத்தில் உங்கள் சமூகத்தை உத்தேசித்து பரிதாபப்பட நியாயமில்லை. என்றும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கை.
யின் பேரில் தங்களது பழக்க வழக்கங்களின் பேரில் தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் அவர்கள் நம்பும் - வணங்கும் கடவுளின் கட்டளை, செய்கை என்ற உறுதியின் பேரில் தங்கள்.
முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வ புண்ணியம் - தலைவிதி என்கின்ற சுதந்திரத்
தின் பேரில் ஒரு உரிமைப்பாராட்டி அம்மாதிரி செய்கின்றார்களே ஒழிய வேறில்லை. அதுபோலவே நீங்களும் பிறர் உங்களை நடத்துகின்ற அந்த மாதிரியான கொடுமைகளை நினைத்து மாத்திரம், அதுவும் அந்த சமயத்தில் மாத்திரம் சிறிது அக்கிரமமாகவும் கொடுமையாகவும் இருப்பதாக கருது கின்றீர்களே ஒழிய இதற்கு காரணமென்ன? இப்படிப்பட்ட ஒரு கொடுமை
குடி அரசு - 19310) 30
யானதும், அக்கிரமமானதுமான காரியம் ஏன் நடக்கின்றது? என்கிற விஷயத்திலும் இதை எப்படி அடியோடு ஒழிப்பது? இதற்காக என்ன செய்ய வேண்டியது? என்கின்ற விஷயங்களை நீங்கள் நினைப்பதுமில்லை. அப்படிப்பட்டவைகளை வேறு யாராவது எடுத்துச் சொன்னாலும் அவை களை ஒப்புக்கொண்டு நடவடிக்கையில் நடப்பதற்கு துணிவதுமில்லை. வீணாய் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சமயங்களில் உங்களில் தனிப்பட்ட வர்களுக்கு ஏதாவது சங்கடம் வந்த காலத்தில் மாத்திரம், இரண்டொரு வார்த்தைகளால் அதுவும் இதன் அஸ்திவாரத்தை கவனியாமல் தனிப்பட்ட
நபர் மீதோ வகுப்பார் மீதோ குற்றம் சொல்லி கூப்பாடு போடுவதும் பிறகு நாலுநாள் கடந்து விட்டால் அது மறைந்து போய் பழையபடி ஆய்விடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. பொதுவாழ்க்கையில் உள்ள சில கனவான் களும் உங்களுக்குப் பரிந்து பேசுவதுபோல் வக்காலத்து பேசுவதுபோல் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு பிறகு அவரவர்கள் சொந்தவேலையை அவரவர்கள் பார்ப்பதும், பிறகு என்றும் போல் சாதாரணமாயிருப்பதும் வழக்கமாக இருக்கின்றது. என்னுடைய சுமார் 20, 30 வருஷ- பொது வாழ்க்கைத் தொண்டில் இந்த சம்பவங்கள் அநேகம் எனக்கு அனுபவ முண்டு. உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபமிருப்பது போல் பேசி கண்: களில் கண்ணீர் வடித்துவிட்டுப்போவார்கள். பிறகு அவர்கள் வீட்டிற்குப் போனவுடன் பழைய உணர்ச்சிதான் அவர்களிடம் தாண்டவமாடும். இதற்கு உதாரணம் வெளியில் போய்த் தேடவேண்டியதில்லை உங்களிடத்திலேயே இருப்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பீர்களானால் விளங்கும். அதாவது உங்களில்பலர் உங்களை விட உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் அய்யர், கவுண்டர், நாயுடு முதலிய ஜாதியார் உங்களைத் தாழ்மையாகக் கருது வதை மாத்திரம் நினைத்து வருத்தப்படுகின்றீர்களே யல்லாமல் பறையர் சக்கிலியர்கள் என்பவர்களை நீங்கள் உங்களிலும் தாழ்ந்த ஜாதியாகக் கருதி அவர்களை உங்களுக்குச் சமமாக நினைத்து சுதந்திரங்கள் கொடுக்க மறுக் கின்றீர்கள். இதற்கு எல்லாம் காரணம் உங்கள் மத உணர்ச்சியும், உங்கள் கடவுள் உணர்ச்சியும், உங்கள் விதி உணர்ச்சியுமேயாகும். மத சம்பிரதாயப்படி
நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களு டைய பூர்வஜன்ம கர்மத்தின் விதி யென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர் களும் அப்படியேதான் மத ஆதாரத் தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள். இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென் மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனா யிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடணாய் இருப்பதற்கும், அயோக்கி யனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனா யிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழை
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
யாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்திகொண்டு இருக்கின்றார்கள். இந்த மாதிரிமக்களை உடைய தேசத்தில் எந்தமாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும்,மானமுள்ள தேசமாகவும்,சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்யவேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடை பெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்.
சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேதகாலத்தில் இருந்திருக்கின்றது. அரிச் சந்திரன் காலத்தில் இருந்திருக்கின்றது. ராமன் காலத்தில் இருந்திருக் கின்றது. எல்லா ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் இருந்திருக்கின்றது. அதற்குமேல் இனி எப்போது இருந்திருக்க வேண்டும் என்று சொல்ல ஆசைப் படுகின்றீர்கள்?
மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் கீழ் ஜாதி உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல் ஜாதி கீழ் ஜாதி உணர்ச்சிகளை காட்டப்பட்டிருக்கின்றன. இந்துமதம் என்பதில் வைணவத்திலாவது சைவத்திலாவது ஜாதிப்பிரிவு உயர்வு தாழ்வு தத்துவம் காணப்படாத கடவுள்களோ அவதாரங்களோ, திருவிளையாடல் களோ, கடவுளைக் காட்டிய பெரியார்களோ, புராணங்களோ, இதிகாசங்களோ ஏதாவது ஒன்றைக்காட்ட முடியுமா? என்று கேட்கின்றேன். 64 நாயன்மார் களுக்கும், 64 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். 2 ஆள்வார்களும் 12 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆதாரமான - சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக்கொண்டால், அவைகளில் அளவில்லாத ஜாதியும் அதற்கு தாரதம்மியமும் காணப். படுவதை யாரும் மறுக்கமுடியாது. ஆகவே எந்த நிலையில் எந்த ஆதாரத் தைக் கொண்டு இன்று உங்கள் மத நம்பிக்கைக்காரனும், அதைச்சேர்ந்த கடவுள் நம்பிக்கைக்காரனும், அது சம்பந்தமான வேதம் சாஸ்திரம், புராணம், இதிகாச நம்பிக்கைக்காரனும் உங்களிடம் வந்து ஜாதி பாகுபாடும், ஜாதி வித்தியாசமும் இல்லை என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறேன்.
இந்து மத சம்பிரதாயப்படி ஜாதி இல்லை என்று உங்களிடம் யார் சொல்ல வந்தாலும் அவர்களை மூடர்கள் என்றோ மோசக்காரர்கள் என்றோதான் கருத வேண்டும். மற்றும் சிலர் தொழில் பாகுபாட்டைக் கண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு பிரிக்கப்பட வில்லை. ஆதலால் தொழில் பிரிவு இருக்கத்தான் வேண்டும் என்று சொல்லி “கீதை
குடி அரசு - 19310) 32
யில் பகவான் சொல்லுகின்றார்” என்று உங்களை ஏய்க்கக்கூடும். அவர் களும் அதுபோலவே அறியாதவர்களாகவோ, ஏய்க்க வந்தவர்களாகவோ தான் இருக்க வேண்டும். தொழிலுக்காக வந்தாலும் ஏன் பாகுபாடு இருக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், மத்தியானம் வியாபாரியாகவும், இராத்திரியில் உபாத்தியராக வும், ஒருவனை
ஒருவன் இம்சைப்படுத்துகின்ற காலத்தில் அவனை உபத்திரவத்தில் இருந்து மீட்பவனாகவும் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். மறுநாள் காலையில் உழுகின்றவனாகவும், பகலில் நெய்கின்ற வனாகவும், மாலையில் விற்கின்றவனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன். ஆகவே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லுகின்றவர்களும், அந்தணர், அரசர், வணிகன், வேளாளர், குடிமக்கள் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் பிறவியினால் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் தொழிலினால் என்று சொல்லுகிறவர்களும், ஒரே மாதிரியானவர்களே தவிர இவர்களில் அறிவாளி களோ அல்லது யோக்கியர்களோ இருக்க முடியாது என்றே சொல்லுவேன். இந்தப்படி ஒரு முறையும் நமக்கு வேண்டியதில்லை என்றும் சொல்லுவேன். அது மக்களுக்கு எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் பயன் விளைவிக்க வேயில்லை. இவையெல்லாம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, எஜமான், அடிமை, முதலாளி, கூலி முதலிய கொடுமைத் தன்மைகளைத்தான் உண்டாக்க பயன்படுகின்றனவே ஒழிய மக்கள் சமத்துவத்திற்கும், சுதந்திரத்
திற்கும் சிறிதும் பயன்படவில்லை. ஆகையால் மக்களில் எந்த வகையிலும் உயர்வு தாழ்வு உணர்ச்சி ஏற்பட முடியாத மாதிரியில் தான் உலக வாழ்க்கை நடப்பு ஏற்பட வேண்டும் அதற்கு தகுந்த மார்க்கமே செலாவணியாகப் பார்க்கவேண்டும். இல்லாதவரை இன்றைய கொடுமைகள் ஒழிய மார்க்கமே இல்லை. இத்தொண்டில் தயவு தாக்ஷண்ணியம் பார்ப்பதும் முன்னே செய்த வேலையை பின்னே அழித்துக் கொண்டு போவதாகும். இந்த விஷயங்கள் வரவர ரத்தக்களரியும் மண்டை உடையவும், உயிர்ச் சேதமும் ஏற்படத் தேவையான நிலைக்கே கொண்டுவந்து விட்டுக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்டு யாரும் பயந்து விடக்கூடாது. இன்றைய அஹிம்சா தர்மம் என்பவைகள் எல்லாம் பெரிதும் புரட்டுகளாகவே முடிந்துகொண்டு வருவதை நேரில் பார்க்கின்றோம். தந்திரசாலிகள் எல்லாம் அடிபடாமல் தப்பித்துக் கொள்ளவும் சாதாரண ஜனங்களும் யோக்கியர்களும் அடியும் உதையும் மண்டை உடைவும் துப்பாக்கி வெடியும் அடையவும்தான் அஹிம்சா தர்மமாய் இருக்கின்றது. அது எப்படியிருந்தாலும் மனிதன் மனித சுதந்திரம் அதாவது, தெருவில் நடப்பது, குளத்தில் தண்ணீர் மொள்ளுவது, மனிதனுக்கு மனிதன் தொடுவது, முதலிய சுதந்திரங்கள் கூட கொடுப்பதற்கு
தன்தன் நாட்டினனாலேயே தன் இனத்தாலேயே தடைப்படுத்தப்பட்டிருக்கும் போது அதுவும் மதத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடக்கும்போது வேறு நாட்டானிடம் அரசாக்வி சுதந்திரம் என்று கேட்கப்படுவதைப் பார்த்தால் இதை
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
எதற்கு ஒப்பிடுவது? என்பது எனக்கு புலப்படவில்லை. ஒன்றா உங்களுக்கு மனித சுதந்திரம் கிடைக்கவேண்டும். அல்லது நீங்கள் இந்த நாட்டிலாவது இதை மதத்திலாவது இந்த சமூகத்திலாவது இல்லாமல் இருக்கவேண்டும். இந்த முடிவைத் தவிர எப்படியோ உயிர்வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு இப்படியே இருப்பது மிகவும் மானங்கெட்டத்தனமாகும். இவ்விஷயத்தில் பொருத்துப் பொருத்து பார்க்கலாம் என்பதும் பேடியின் கொள்கையேயாகும். எவ்வளவு நாள் பொருப்பது? எவ்வளவு மெள்ளப். போவது? இவற்றிற்கு ஏதாவது நாணையமோ யோக்கியப் பொறுப்பான அர்த்தமோ வேண்டாமா? இந்த நிலைக்காக இதற்கு முன் எத்தனையோ பேர் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் வக்காலத்துப் பேசியாய் விட்டது. எத்தனையோ பேர் தர்ம நியாயம் பேசியாய் விட்டது. அவ்வளவும் பழய நிலையை பலப்படுத்தவே முடிந்தது. “தோலைக்கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆய்விட்டது” என்பதுபோல் தேசீயமானது ஒரு பக்கம் அரசியல் சுதந்திரம் கேட்டுக் கொண்டும் மற்றொரு பக்கம் வர்ணாசிரம சுயராஜ்ஜியமும் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழிப்பாசை மயக்கத்தில் கூட “ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும், பரையர் வேண்டும், தீண்டாமை வேண்டும், மனுதர்மம் வேண்டும்” என்று மகாநாடுகள் கூடிப் பேசப்படுகின்றன. இதை ஏன் என்று கேட்க ஆட்கள் இல்லை. தேசிய வீரர்களில் வெள்ளைக்காரன் ஒடிப்போகவேண்டும் என்று சொல்ல மாத்திரம் அனேக ஆட்கள் இருக்கின்றனர்.
சகோதரர்களே! இன்றைய தினம் வெள்ளைக்காரன் இருப்பதா? போவதா? என்பது நமது கவலையல்ல. உங்களுக்கும் அந்தக் கவலை: வேண்டாம். நம்மீதும் உங்கள் மீதும் நமது மக்களால் சுமத்தப்பட்ட இழிவு களும் நடத்தப்படும் கொடுமைகளும் ஒழிவதாக வேண்டும் என்பதை முடி வான லக்ஷியமாய்க் கொள்ளுங்கள். அதற்காக உயிரைவிட நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் தயாறாயிருங்கள். இன்றைய தினம் உலகத்
தில் பல தேசங்கள் பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசமும் எஜமான் கூலிக்காரன் வித்தியாசமும் இருக்கக்கூடாது என்று முடிவு கட்டி வேலை: செய்து வெற்றியடைந்து கொண்டு வருகிற காலத்தில் நீங்கள் பார்ப்பார ஜாதி பரச்சாதி ஒருவரை ஒருவர் பார்த்தால் தொட்டால் தெருவில் நடந்தால் தீட்டு என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருந்தால் நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்கிறதை யோசித்துப் பாருங்கள். இந்த உணர்ச்சிகள் உங்களுக்கு தோன்றாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் முட்டாள் தனமும் அதற்கு ஆதரவான உங்கள் மத நம்பிக் கையும் தெய்வ நம்பிக்கையுமே ஆகும். ஆதலால் அதை முதலில்விட்டு விரட்டி அடியுங்
கள். பிறகு தானாகவே சுயமரியாதை தோன்றி நியாயமும் சமத்துவமும் கிடைத்துவிடும்.
கடைசியாக சென்ற வருஷம் உங்கள் சங்கத்தை திறந்து வைத்து பல.
குடி அரசு - 19310) 34
உபன்யாசங்கள் புரிந்து பல உதவியும் புரிந்து உங்கள் முன்னேற்றத்தில் சதா கவலையும் கொண்டு உழைத்து வந்தவரும் இன்றும் இங்கு வந்து உங்களுக்கு அரிய உபன்யாசம் செய்தவருமான திரு. சி.எம். ராமச்சந்திரம் செட்டியார் அவர்களுக்கு அரசாங்கத்தில் ராவ் சாகிப்பட்டம் அளிக்கப் பட்டிருப்பதைக் கேட்க நீங்கள் எல்லோரும் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். ஆகவே அக்கனவானை உங்கள் சார்பாக நான் பாராட்டுகின்றேன். மற்றும் கோவை
சிவிக் அசோசியேஷன் செகரட்டரி திரு. சின்ன அப்பாவு அவர்கள் உங்கள் முற்போக்கில் கவலை கொண்டு அடிக்கடி கவனித்து உங்களுக்கு அரிய புத்திமதிகள் சொல்லி வந்ததற்கும் உங்கள் சார்பாய் நான் மனப்பூர்வமாய் பாராட்டுகின்றேன். கோவை திரு. சுப்பன் அவர்கள் இன்று உங்களுக்கு முக்கியமான பிரசங்கம் செய்ததற்கும் அவரையும் பாராட்டுகிறேன். இந்த முதலாவது ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து நடத்தும் பெருமையை எனக்குக் கொடுத்து எனக்கு செய்த வரவேற்புக்கும் நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: கோவை, இருகரில் 03.011931 அன்று நடைபெற்ற இருகூர்ஆதி திராவிட சமூகத்தினர்களால் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்ற சங்க ஆண்டு விழா தலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 1011931
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஸ்தல ஸ்காபணங்களுக்கு நிர்ணாக P
இன்றுநமது நாட்டில் நடைபெற்று வரும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங் கள் சிறிதாவது நாணைய லட்சியத்தின் பேரிலோ, நாகரீக மக்களைக் கொண்ட நாடு என்ற தத்துவத் தன்மையிலோ நடைபெறுவதாகச் சொல்ல முடியாது என்பதே நமது அபிப்பிராயம்.
சில இடங்களில் நாகரீகமாயும் நாணையமாயும் நடக்கின்றது, நடந்தது, நடக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் பெருவாரி யாக100க்கு
75க்கு மேலாக நடைபெறும் நிர்வாகங்கள் பெரிதும் மோசனமானவைகளே யாகும். இதற்கு முழு பொறுப்பும் அவ்வவ்விடத் திய மக்கள் பேரிலேயோ, அல்லது ஸ்தாபன அங்கத்தினர்கள் மீதிலேயோ மாத்திரம் போடத்தகுந்தது அல்லவென்றும் சொல்லுவோம். இன்னமும் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டுமானால் அநாகரிகமும் ஒழுக்கக் குறைவானதுமான ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குப் பெரிதும் அந்த இலாகா மாற்றப்பட்ட இலாகாவாக இருப். பதும்,ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிப் பதவிக்கு படிகளாய் இருப்பதும், ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிகளைக் காப்பாற்றத்தக்க ஆதரவுகளாய் இருப்பது மான ஒரு முறை முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம். மற்றும் வெரும், வெரும் ஆள்கள் எல்லாம் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் மாதம் 2000, 3000, 4000, 5000 கணக்காக பணம் சம்பாதிக்கத் தகுந்த உத்தியோகங்களை அடைந்து லாபம் அடைவதைப் பார்த்தே அதற்கு உதவி செய்தவர்கள், செய்யத் தகுந்தவர்கள் செய்பவர்களுக்குச் செய்ப வர்கள் ஆகியவர்களும் அதுபோல் சம்பாதிக்க ஆசைப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் அந்தப் படி அடைவதற்கு சட்டத்தின் சாக்கால் யாதொரு மார்க்கமும் இல்லாமலி ருப்பதால் சட்டத்தின் சாக்கால் அதிகாரமிருக்கின்ற. வர்களின் தைரியத்தால் சட்டத்தையோ, நாணையத்தையோ, ஒழுக்கத் தையோ லட்சியம் செய்யாமல் கொள்ளையடிக்க வேண்டியவர்களாகவும், கொள்ளையடிப்பவர்களை அனுமதிக்க வேண்டியவர்களாகவும் ஆகி விடுகின்றார்கள்.
ஆகவே இவ்வக்கிரமங்கள் இன்றைய சுயராஜியத்தினுடையவும், அரசியல் சீர்திருத்தத்தினுடையவும் பலன் என்றே சொல்லுவதோடு,
குடி அரசு - 19310) 36
பணக்காரர்களுக்கும் ஆங்கிலம் படித்தவர்களுக்குமே இவை போகக் கூடியதாகவும் இருப்பதால் ஏற்படுபவைகளேயாகும். இவற்றை அடியோடு மாற்றி யோக்கியமான நிலைக்கு கொண்டு வருவதானால் இன்றைய போக் கைப்பார்க்கும்போது சுலபமான காரியம் என்று நமக்குத் தோன்றவில்லை.
ஆயினும் எவ்வளவு தூரம் இவ்வித அக்கிரமங்களை குறைக்க முயற்சிக்கலாமோ அவ்வளவு காரியத்தை தற்கால சாந்தியாகச் செய்யக் கூடியதைச் செய்யலாம் என்று நமக்குத் தோன்றுகின்றன. அதாவது நாம் சில வருஷமாய் சொல்லிக்கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனத் திற்கும் ஒவ்வொரு எக்ஸிகூட்டிங் ஆபீசர் நிர்வாக உத்தியோகஸ்தர்) என்பவரை அரசாங்கத்தார் நியமிப்பது என்பதேயாகும். இன்றும் சென்னை கார்ப்ப ரேஷன் முனிசிபல் கவுன்சிலில் இருக்கும் கமிஷனர் எனும் உத்தி யோகஸ்தர் சென்னை முனிசிபாலிட்டியின் நிர்வாக உத்தியோகஸ்தரேயாவார். அவருக்குத்தான் அம்முனிசிபாலிட்டி நிர்வாக பொருப்பு ஒப்படைக்கப்பட்டி ருக்கின்றது. உத்தியோக நியமனம், உத்தியோகஸ்தர் களின் மீது ஆதிக்கம் முதலியவைகளும், முக்கியமான வேலைகள், கன்ட்றாக்ட்டுகள் முதலியவை
கள், கொடுக்கல் வாங்கல் ஆதிக்கம் முதலியவைகளும் அந்நிர்வாக உத்தியோகஸ்தரிடமே ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் அம் முனிசிபல் நிர்வாகம் (யாதொரு தடங்கலுக்கு இடமில்லாமலும், தயவு தாட்சண்யத்திற்கு இடமில்லாமலும் நடந்து வர அனுகூலமாய் இருக்கின்றது. சென்னை முனிசிபாலிட்டி என்பது சுமார் 5 லட்சத்திற்கு மேல்பட்ட ஜனத் தொகை கொண்டதும், சுமார் 50 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதும், முக்கிய மானவர்களும், நாகரிகமும், படித்தவர்களும், பெருத்த வியாபாரிகளும் தேசீயவாதிகளும் என்பவர்கள் இருக்கின்றதான இம்மாதிரி முக்கியபட்டண நிர்வாகத்தை கவுன்சிலர்களின் ஆதிக்கத்திற்கு அடங்காத ஒரு தனி நபரிடம் நிர்வாகம் ஒப்புவிக்கப்பட்டு இருக்கும் போதும் அதனால் எல்லாம் சுய ஆட்சித்தன்மைக்கு கேடு இல்லாமல் இருக்கும்போது மற்றபடியான வெளி இடங்களில் மாத்திரம் அதுபோல் நிர்வாக உத்தியோகஸ் தர்களை நியமிப்ப
தில் எந்த விதத்தில் சுய ஆட்சித் தத்துவம் கெட்டுப்போகும் என்பது நமக்கு விளங்கவில்லை. கவுன்சிலர்களோ போர்டார்களே செய்யும் தீர்மானத்தை தீர்மானத்தின் தத்துவப்படி நடத்துவிக்க ஒரு நிர்வாக அதிகாரி இருந்தால் அவரால் என்ன கெடுதி ஏற்படக்கூடும் என்பது விளங்கவில்லை.
ஓட்டர்கள் தயவைக் கோறும் கவுன்ஸிலர்களும், கவுன்சிலர்களின் தயவைக்கோரும் சேர்மெனும் ஞாயமாய் நடந்துகொள்ள முடியாது என்ப தற்கு ஆயிரம் உதாரணம் சொல்லலாம். எஜமானனும் அவனது குமாஸ் தாவும் ஒரு கவுன்சிலில் இருக்கக்கூடாது என்று எதற்காக சட்டம் செய்யப் பட்டிருக்கின்றது? ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு நீதிபதியிடம் அந்த வீட்டுக்காரன் மீது வியாஜ்யம் இருந்தால் வியாஜ்யக்காரன் வீட்டில் குடியிருக்கும் காரணத்தைச் சொல்லி நீதியில் சந்தேகப்பட்டு வேறு
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ளுகிறான். நியாயாதிபதியும் ஒரு கட்சிக்காரனும் ஒரே தாசி வைத்திருந்ததற்காக மற்ற கட்சிக்காரன் பயந்து கேசை மாற்றிக் கொண்டிருக்கிறான்.
இப்படி சாதாரண விசயங்களில் எல்லாம் நியாயம் தவறும் என்கின்ற. பயம் இயற்கையாய் இருக்கும்போது அநேக மக்களின் நன்மையை, அநேக
ரின் வரியை இம்மாதிரி பாமர மக்கள் தயவில் தொங்கிக் கொண்டி ருக்க வேண்டியவர்களிடம் ஒப்புவிப்பது, ஸ்தல ஸ்தாபனத் தலைவர் களையும், மற்ற பொதுமக்களையும் வேண்டுமென்றே ஒழுக்க ஈனமாய் நடக்கும்படி தூண்டுவதேயாகும்.
அன்றியும் மாதம் 4000, 5000 ரூபாய் சம்பளம் வாங்கும் மந்திரிகள், நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்கள் இடமிருந்த சில அதிகாரங்களை அதாவது அந்தந்த இலாக்காவுக்கு உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பிடுங்கி இப்போது பப்ளிக் சர்வீஸ் கமீஷனர்கள் என்பதாக சிலரை நியமித்து அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டது யாவருக்கும் தெரியும். இந்தப்படி ஏன் செய்யப்பட்டது? என்று பார்த்தால் மந்திரிகளிடம் இந்த அதிகாரங்கள் இருந்தால் அந்தக் காரியங்கள் நியாயமாய் நடைபெறா
மல் போக அநேக மார்க்கங்கள் இருக்கின்றன என்றும், மந்திரிகள் பலர் தாக்ஷண்யத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகையால் பல கஷ்டங்கள் ஏற்படும் என்றும் நினைத்தே இந்தப்படிச் செய்ய வேண்டியே வந்தது. மனிதன் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் விரும்புவது எவ்வளவு அவசியம், இயற்கை யென்று கருதுகின்றோமோ அதுபோலவே சுதந்திரங்களும் அதிகாரங்களும் நீதியாய் நடைபெறுவதற்கு பத்திரங்கள் செய்ய வேண்டிய
தும் அவசியத்திலும் அவசியமாகும். சுருக்கமாக ஒரே ஒரு காரணம் சொல்லு
கின்றோம். அதிலிருந்து மற்றதை ஒருவாறு யூகித்தறியலாம். அதாவது இன்று முனிசிபாலிட்டி, தாலூகாபோர்டு முதலியவைகளுக்கு நிர்வாக அதிகாரி ஒருவர், கவுன்சிலர்களுடைய சலுகைக்கும் தயவுக்கும் தொங்கிக் கொண்டி ருக்க வேண்டியவர் அல்லாதவறாய் இருந்திருப்பாரானால் அந்த ஸ்தாபனங் களின் சிப்பந்திகள் இருப்பவர்களைவிட 10 மடங்கு யோக்கியர்களாகவும் யோக்கியதாபக்ஷம் உடையவர்களாகவும் இன்று இருக்கும் சம்பளத்தைவிட பகுதி அளவு சம்பளத்தில் நியமிக்கப்பட்டவர் களாகவும் குறைந்தது 3ல்1 பாகம் குறைந்த எண்ணிக்கையுள்ள சிப்பந்திகளுடனும் அந்தந்த ஸ்தாபனங்
கள் இன்றைய நடப்பைவிட நல்ல நடப்பிலும் நடந்துகொண்டு வரும்படி யானவைகளாய் இருக்கும் என்பதில் நமக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது. மற்றபடி கன்ட்றாக்ட் விஷயத்திலும் ஸ்கீம்கள் விஷயத்திலும் அதிகமான நன்மைகளை வரிசெலுத்தும் ஜனங்களும் பிரதேசமும் அடைந் திருக்கக் கூடும் என்றும் சொல்லுவோம். அன்றியும் சில ஸ்தாபனங்களில்: இருக்கும் நல்ல நாணையமும் பொருப்பும் நேர்மையும் உள்ள தலைவர்கள் கூட இன்று தங்கள் பொருப்புகளை, நிர்ணயமாய் நடத்தமுடியாமல் இருப்பதற்கும் தாங்கள் பாமரமக்கள் தயவில் இருக்க வேண்டிய
குடி அரசு - 19310) 28
நிலைமையும் தாங்கள் அநாவசியமான தாட்சண்யத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வேறொரு சாக்கு இல்லாமல் இருப்பதும் ஆகும். இந்தப்படி ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நியமித்துவிட்டால் நாணையமாய் நடக்கும் தலைவர்களுக்கும் நல்ல நிர்வாகத்தில் ஆசையிருக்
கும். தலைவர்களுக்கு எவ்வளவோ விதத்தில் அனுகூலமாய் இருக்குமே தவிர அவர்களுக்கு நஷ்டம் ஒன்றுமே ஏற்பட்டுவிடாது. பல நல்ல தலைவர் களும் இந்தப்படி சொன்னதும் இந்தப்படி நியமிக்க ஆசைப்பட்டதும் நமக்கு நன்றாய் தெரியும், அன்றியும் இம்மாதிரி நிலைமை ஏற்பட்டு விட்டால் நிர்வாகத் தலைவருக்கு நேரமில்லை, சாவகாசமில்லை என்கின்ற கஷ்டம் நீங்கிவிடும். அது மாத்திரமல்லாமல் தேர்தல்களுக்கு 1000, 2000, 5000, 10000 ரூபாய்கள் வீதம் செலவுசெய்து ஓட்டர்களுக்கு பணம் கொடுத்து, கவுன்சிலர் களுக்கும் போர்டு மெம்பர்களுக்கும் பணம் கொடுத்து ஸ்தானம் பெற ஆசைப்படமாட்டார்கள். அதிலும் ஸ்தல ஸ்தாபன புது சட்டத்தின்படியும், வரப்போகும் புதிய சில திருத்தத்தின்படியும் கண்டிப்பாய் நிர்வாக உத்தி யோகஸ்தர் இல்லாவிட்டால் தீவட்டிக் கொள்ளை ஸ்தலமாக மாறிவிடும். ஆகவே அடுத்த கவுன்சிலில் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தி யோகஸ்தர்களை நியமிக்க ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசி
யம் என்று சட்டசபை அங்கத்தினர்களுக்கு ஞாபக மூட்டுகின்றோம். அந்த நிர்வாக அதிகாரியும் ஒரு டிப்டி கலெட்டர் உத்தியோக முள்ளவராகவே இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கவுன்சிலர்களுக்கு பிடிக்கவில்லை. யானால் மறுபடியும் கவுரமான உத்தியோகத்துக்கு போகக்கூடியவராய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரால் தன் மனச்சாக்ஷிப்படி நடக்க முடியாமல் போய் விடும். ஆகவே சுதந்திரத்துடன் நியாயமாய் நடக்கத்தகுதி யுள்ளவர்களைப் பார்த்து நியமிக்க வேண்டியது அவசியமாகின்றது.
நிற்க இதைப்பற்றி யாராவது பரிகாசம் செய்வார்களானால் அவர். களுக்கு ஒரே ஒரு பதில் சொல்லிவிடும்படியும் குறிப்பிடுகின்றோம். அதாவது சேர்மென்கள் மீதும் பிரசிடெண்டுகள் மீதும் சட்டசடைப் பிரதிநிதி களுக்குநம்பிக்கையில்லாத காரணங்களாலேயும் அவர்கள் பெரும்பான்மை யோர்கள் தேர்தல்களில் நடந்துகொண்ட மாதிரியாலேயும் கேவலம் எலக் ஷன் நடத்துகின்ற அதிகாரங்களைக்கூட அவர்களிடம் இருந்து பிடுங்கப் பட்டாய் விட்டதே. இதில் அவமானம் இல்லையா? என்று கேட்கின்றோம். இன்னம் ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் காரியங்களை விளக்கிச்சொல்ல. வேண்டுமானால் வெட்கப்பட வேண்டியதாகும். ஆனாலும் அவற்றையும் அவசியம் வந்தால் வெட்கத்திற்கு பயந்து கொண்டு சொல்லாமல் விடப் போவதில்லை என்றே கருதிக் கொண்டிருக்கின்றோம். ஆதலால் அந்த அவசியம் இல்லாமலே இந்த ஏற்பாட்டைச் செய்துவிடுவது சுயமரியாதை உலகத்திற்கு நலம் என்று தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 11.01.1931
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மென்னாணா முகமதலி
மெளலானா முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்கமாட்டார்கள். அவர் ஒரு உண்மையான
வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லுபவர் களில் அவரும் ஒருவர். ஏழைமக்களை ஏமாற்றி பணக்காரர்களும் படித்த வர்களும் அனுபவிக்கும் போக்கியமாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போ துமே பிடிக்காது. தேசீயப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக் கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவே கிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்கமாட்டார்.
அவர் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகம் இருக்கின்றது. அதாவது,
“நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன்” என்று சொன்னார்.
சாவது அதுவும் எந்த நிமிஷத்திலும் சாவது தான் கிரமம் என்றும் உண்மை யென்றும் முடிவு செய்து கொண்டு சாகாமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் லாபமாய் கருதிக்கொண்டு சாவதற்கு வருத்தப்படாமலும் கவலைப்படாமலும் இருக்கவேண்டும் என்கின்ற இயற்கையைக் கண்டு பிடித்து கவலையற்றிருந்தவர் அவரேயாவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிக்க பிடிவாதமும் உறுதியும் கொண்டவர்.
அன்றியும் முதலில் நான் முஸ்லீம், பிறகுதான் நான் இந்தியன் என்று அடிக்கடி சொல்லுபவர். தன்னைப்பற்றி தனது எதிரிகள் எவ்வளவோ பழிகளை கட்டிவிட்டும் அவற்றிற்கு பதில் சொல்லவேண்டுமே என்கின்ற லட்சியம் கூட இல்லாமல் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றுகூட லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி நடக்கும் வீரகுணம் உடையவர். இவ் வருங்குணங்கள் கொண்ட ஒரு கலங்கா வீரர் மாண்டது உலக இயற்கையே யாயினும் வருந்தாமல் இருக்க முடியாது.
குடி அரசு - இரங்கல் செய்தி - 1.011931
குடி அரசு - 1931 () 40
கனக்காடு ஐக்கிய முஸ்லீம் தண்டு விழா
இந்திய வராருணாகாரறம்
தலைவர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!!!
இன்று நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்க களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் ரயிலில் பிரயாணம் செய்துவிட்டு 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக் கிறேன். ஆனதால் இன்றைய விசயத்தைப் பற்றி நான் சரி வரப் பேச முடியா தென்றே கருதுகிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியா தென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் “இந்திய பொருளாதாரம்” என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்ட தல்ல என்றாலும் எந்தத் தலைப்பினாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத் தான் சொல்லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததே யாகும். ஆனாலும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பேயாகும். இதன் மூலம் எனது சங்கதியை சொல்ல முடியா விட்டால்
பின் எதின் மூலம் நான் சொல்லக்கூடும்? ஆனால் எனக்கிருக்கும் கஷ்ட மெல்லாம் அதிக நேரம் பேச முடியாதென்பதே யாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன்.
சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும் பணம் காசாய் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்கு தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம் காசு புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படை யாகக் கொண்டதாகவே இருக்கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள்.கைத்தொழில்காரர்கள், கூலியாள் கள், ஏவலாள்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப்பது வழக்கம். மந்திரி களுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிர பணமாக ஏதும் கொடுப் பதில்லை. எனக்குத் தெரிய 40,50 வருஷங்களுக்கு முன் வேஷ்டி கொடுப்
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பவன், உலோகப்பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப்பவன், தோட்டங்களுக்கு கலப்பை, ஏர் செய்து கொடுப்பவன், செருப்பு தைத்துக் கொடுப்பவன். சுவர் வைப்பவன் முதலியவர்கள் எல்லோரும் தானியம்தான் வாங்கிக் கொள்ளுவார்கள். சில ஆட்களுக்கு வருஷத்திற்கு இவ்வளவு என்று இருக்கும்.
பெருத்த மிறாசுதாரர்களிடம் பார்த்தாலும் தானியத்தை தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிறாசுதாரர்களிடமும் அரசாங்கப். பழக்கம் முதலியவைகளிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச்சிறு நாணையமாகத்தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டு பாஷையல்ல, நாணையமும் அல்ல. சின்னப்பணம் அதாவது ரூ. 1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வமுள்ளவனையும், பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்னும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவை களிலும் 100
பணம் 200 பணம் 500 பணம் என்று பணக்கணக்கில்தான் கணக்கு சொல்லு வதாகும். சமீபகாலம்வரை கூட மலையாளத்தில், திருவாங் கூர், கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட்டில் ரூபா என்று பிராது போடுவதில்லை. 10. ஆயிரம் ரூபாயிக்கு பிராது போடுவதாணாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப்பண எண்ணிக்கையைக் காட்டிதான் பிராது போடும் வழக்கம் இருந்து
வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.
ஆகவே ரூபாய் என்பதும் பவுன் என்பதும் வெளிநாட்டு நாணை: யங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே பொருளா தார நிலையில் நம்நாடு முன்னையைவிட சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொதுவாகப் பார்த்தால் பொருளாதாரம் நம்
நாட்டில் குறைவு என்று நான் சொல்லமாட்டேன். மற்ற நாட்டைவிட இந்தநாடு பொருளாதாரத்தில் குறைந்ததல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லை யானால் வெள்ளைக் காரனுக்கு இங்கு வேலை இல்லை. இதுபோலவே இதற்கு முன் வெளி
நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும் முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
ஆகவே இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையான பேர்களை வயிரார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறுபல. காரியங்கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கியமானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.
குடி அரசு - 19310) 42
மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் மனிதனுக்கு எவ்வளவு கிடைத் தாலும், எவ்வளவு விளைந்தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத்தில் வேறு எப்பாகத்திலும் காணமுடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிரவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு அந்த நிலைகளைக் காப்பாற்றிக்கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால் இந்த உலகம் உள்ளவரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அதுமாத்திரமல்லாமல்
இந்தநாட்டில் அரசனுக்கும் குடிகளுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக் கும், தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிறாசுதாரனுக்கும் குடியான
வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவ னுக்கும் இருக் கும் முறையும் மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொரு ளாதார நிலை இன்றைய நிலையைவிட கடுகளவுகூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும் முன் சொல்லப்பட்ட மதம்,கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும் இந்தியா எவ்வளவு வளம்பொருந்திய நாடானாலும் செல்வம் பொருந்திய தானாலும், பொன் விளையும், “புண்ணிய” பூமியானாலும் தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள்.நாயன்மார்கள், முனிகள்,ரிக்ஷிகள், மகாத்மாக்
கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்ட நதி ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும் தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியா வுக்கு நிரந்தர சொந்தமானதேயாகும் என்பதை கவனத்தில் வையுங்கள்.
நம்முடைய பொருளாதாரக் கஷ்டமெல்லாம் முதலாவது, அநாவ சியமான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் நூறுக்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வைகளுக்கும், குருட்டுப்பழக்கம், மூடநம்பிக்கையானவைகளுக்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுகபோகத்திற்கும் செலவு செய்யப்படுவ தினாலேயே வீணாய் விடுகின்றன.
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கமாக பொருள்களெல்லாம் போய். சேரும்படியாகியும் விடுகின்றன.
மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும்படிக்கே செலவாகும்படியான முறைகளே இங்கு வெகுகாலமாய் இருந்துவருகின்றன. அதாவது. புத்தியை செலவழித்து குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணமாகும்.
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சாமி பூசை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.
பிறகு மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும் அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால் அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத்தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும் பான்மையோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலியவைகளால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத்தொடங்க வேண்டியிருக்கின்றன. இவைகள் எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்கு பொருள் இல்லா.
மல் கஷ்டப்படும்படி செய்து விடுவதுடன் சதா தரித்திரர்களாகவும் கடன்காரர் களாகவும் இருக்கவேண்டியதாய் இருக்கின்றது.
இவை மாத்திரமல்லாமல் நாட்டின் பொருளாதார நிலையை விர்த்தி செய்ய அவசியமான பொதுத் தொழில் சாலைகள், யந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருள்களை: எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வ தோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவைகளுக்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துக்கள் ஒதுக்கிவைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.
ஆகவே இந்த மாதிரியாக எல்லாம் எல்லாப்பொருள்களும் நாச மாகிக்கொண்டும், வீணாகிக்கொண்டும் இருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில்தான் பொருளாதாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். நம் நாட்டுப் பொரு ளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் சற்று கவனித்துப் பாருங்
கள். நம்முடைய வாழ்க்கைத்தன்மையை மேல் நாடுகளைப்பார்த்து நாளுக்கு
நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னையைவிட அதாவது 30,
40, 50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததைவிட அதிகமான ஆடம்பரங் களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனை யைக் கண்டு காப்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவையெல் லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமென்றோ சொல்ல வரவில்லை. ஆனால் மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ் வின் சுகபோகத்தையும் உயர்த்திக்கொண்டுபோகின் றாரோ அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண் டும் வாழ்க்கைத் தன்மை
யின் அவசியத்திற் கேற்ற வருவாய்க்கு வகை செய்துகொண்டும்தானே
குடி அரசு - 19310) 44
அதில் பிரவேசிக்கவேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு லாபம் அடை கிறான். அதனால் அவர்கள். சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா, மேல் நாட்டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய வேலை சாமார்த்தியம் அல்ல என ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்துவிடுகிறான். அதற்கேற்ற சாதனங்களை அவன் கையாடுகிறான். அதற் காகவே மேல்நாட்டுச் செல்வத்தையும், அறிவையும், ஊக்கத்தையும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப் பட்டவனைப் பார்த்து வேலை செய்வதிலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக்காமல் அதாவது, அதுபோல் நடக்காமல் அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து அவனைப்போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? - பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப்பாருங்கள்.
நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப்போன கைத் தொழில் களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட்டினத்தில்:
நூல் நூற்கவேண்டும், கைத்தரியால் வேஷ்டி நெய்ய வேண்டும் என்கின்றார்.
கள். போராக்குறைக்கு தக்கிளியில் நூல் நூற்பது தேசீயப் பொருளாதார பக்தியாக குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் ராட்டினத்தில் நூல் நூற்றால் கால் ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் நூற்று1 அணா அல்லது அதிகமானாலும் 0-1-6 அணா கூலிதான் அடையக்
கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைதான் உற்பத்தி செய்யக்கூடும். மேல்நாட்டானோ ஒரு ஆள் ஒரு நாளையில் இதைவிட குறைந்த நேரத்தில் இதைவிடக் குறைந்த கஷ்டத்தில் இதைவிட உயர்ந்த சரக்காக 5 றாத்தல் 6 றாத்தால் நூற்று தினம் 2 ரூபாய் சம்பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார்
தினம் 2 ரூ. சம்பாத்தியத் திற்கும் நம் நாட்டான் தினம் 2அணா சம்பாதிக்கவும்
இதுவும், மற்றும் இதுபோலவே விவசாயத்துரையிலும்,வியாபாரத் துரையிலு முள்ள காரணங் களாகுமே யல்லாமல் வேறு ஒரு காரணமுமல்ல. சமூக சீர் திருத்த சம்மந்தமான விஷயங்களுக்கு நமது பண்டிதர்கள் எப்படி தொல் காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்த கால நாகரிகத்தைக் கொண்டு சமூக முன்னேற்றம் செய்யப் பார்க்கின்றார்களோ அதுபோலவே நமது தேசீயப் பொருளாதாரப் பண்டிதர்கள்அதைவிட முந்திய காலத்திய
கைத் தொழில்களைக் கண்டுபிடித்து அந்தத் துறையில் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.
ஆகவே இந்திய பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர் களது மதமும், கடவுளும், சடங்குகளும், கர்நாடகத்தில் பித்துக்கொண்ட
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தலைவர்களுமே காரணமல்லாமல் வேறு ஒன்றும் முக்கிய காரணமல்ல என்பது எனதபிப்பிராயம்.
சகோதரர்களே! வருஷம் ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள். மதம், கடவுள், சடங்கு ஆகியவைகளுக்கு செலவாவதை மறுக்கின்றீர்களா? பல கோடிக்கணக்கான ரூபாய்கள் சாமி, கோயில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகியவைகளுக்காக அடங்கி, முடங்கிக்கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின்றீர்களா? எனவே இந்தத் துகைகள் எல்லாம் புதிய முறை ஆராய்ச்சி முறை மேல் நாட்டு முறைஆகியவைகளில் கைத்தொழிலும், வியாபாரமும், விவசாயமும் செய்யப்பட்டு குருட்டுப்பழக்கம் மூட நம்பிக்கை சுயநலக்காரர்
கள் சூழ்ச்சி ஆகியவைகளில் இருந்து மீண்டு விட் டோமானால் நமது பொரு ளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படி செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப்பாருங்கள். எனவே எனக்குக் கொடுத்த விஷயத்தின் தலைப்பில் எனக்குத் தோன்றியதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா? என்று யோசித்துப் பார்த்து உங்கள் மன
திற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக்கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய் கேட்டுக்கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.
குறிப்பு:-272830 இல் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஐக்கியமுஸ்விம் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழா.
குடி அரசு - சொற்பொழிவு - 18.011931
குடி அரசு - 19310) 46
காதல்
அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும்.ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமை யாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அநாவசியமாய் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைபடுத்தப்பட்டு வரப்படு கின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங் களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும்,நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவை
கள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் அந்தப்படியோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்ட வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு நேசம் ஆசை காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு “நடப்பு வேறு” என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல
முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும். அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும். “அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
“அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்; அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒருகாலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும் பிறகு வேறு ஒருவர் இடமும் அந்தக் காதல் ஏற்படாது.
“அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விப சாரம் என்று தான் சொல்லவேண்டுமே யொழிய அது ஒருக்காலும் காதலா காது” என்றும்,
“ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோவிரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது” என்று சொல்லப்படு கின்றது.
மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படு கின்றது.
ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனு போகமும் மக்களின் அனுபவஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டு மென்றோ மறைக்கின்றவர்கள் என்றேதான் கருதவேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு.ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவை களைப்பற்றி மற்றொரு பெண்ணோ ஆனோ மற்ற மூன்றாமவர்கள் யாரா வதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கை யையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்ட
லில் சாப்பிடுவதுபோலவும், தனக்குப்பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோடாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவே சிப்பது அதிகப் பிரசங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவ துமாகுமென்றும் சொல்ல வேண்டும்.
குடி அரசு - 19310) 48
இப்படிச் சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமையையும் அணி யையும் அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப்பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும்
தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறுபொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதின் வேறு விதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத்தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றபடி தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் பெண் சேர்க்கை-கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு,ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்க ளையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அருத்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
நிற்க இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தாணகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத் தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண் ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர் களால் கேள்விப்படுவதாலும், உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறுவழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமேதான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும்கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த
மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இருக்கலாம் - வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ,ஆவல் கொள்கி றானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப் படவில்லை.
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை- திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை. என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோடாவத்தை கவனித்தால் விளங்கா மல் போகாது.
அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமை யைக் கொண்டோ, தனது போகபோக்கியத்திற்கு பயன்படுவதைக்கொண் டோ, அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவை யான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டேதான் யாரும் எந்தப் பெண்: ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ளமுடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்
துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷ-மாத்திரத்தில் காட்டப் பட்டதாக இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்து வதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க் கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண்: தன்னை ஒரு அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய். நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?
நிற்க அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறு ஜென்மத்திலும்” இவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கருதி விடுகிறாள். 4-நாள் பொருத்தபின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும், சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாகவேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும். இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின்
குடி அரசு - 19310) 50
நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க் காத கெட்டகாரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக் காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா?
பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளா.
மல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது
சரீரத்தின்நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மை யாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தி யுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவ னிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப்படும்படி விட்டால்: அப்போது கூடகாதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன்மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல்: குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.
காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை, பக்குவம், லக்ஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லக்ஷியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர்: விட்டுக்கொடுத்துக்கொண்டு சதா அதிர்ப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியதுதானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாத தையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துரவிகளாய் விட்டார்களானால் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோதமில்லையானால் ஒருவர் ஞானியாகி துரவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல்
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படு வதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப் பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?.
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சிலசமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்தக் காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி
விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்று கருதி, எப்படி பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அனேகர். தங்களை பக்திவான்கள் என்று பிறர் சொல்லவேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும், பட்டை நாமம் போடுவதும் . சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பது மான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக்கொள்ளுகின்றார். களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன் னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்: ளுகின்றார்களோ அதுபோலும் உண்மையான காதல்களானால் இப்படி இருப் பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர் களும் தங்கள் காதலைக் காட்டிக்கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத
குடி அரசு - 19310) 52
வேஷத்தை யெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.
ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃரிணைப்பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப். பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வே நில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கை
யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாற கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலி ருந்து நாம் யாரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல்கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.
ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன
இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் “இது காத லல்ல” “அது காதலுக்கு விரோதம்” “அது காம இச்சை” “இது மிருக இச்சை” என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர் கள் கூற்றை
யும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.
எஞ்ஞான்றும் காதலரிருவர் கருத்து ஒத்து உற்று ஆதரவு பட்டதே இன்பம். “பரனை” நினைத்து இம்மூன்றும் விட்டதே பேரின்பம்...
சற்றேனும் ஏறுமாறாயிருப்பாளே யாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்ளு. (ஒளவை வாக்கு!
குடி அரசு - தலையங்கம் - 18.01.1931
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
செண்ணை பச்சையப்பண் கணாசாலையில்
சொற்வராழிவ
தலைவர் அவர்களே! இளைஞர்களே ! சகோதரர்களே! 2 மணி நேரத்
திற்கு முன் தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப்பற்றிய என்னுடைய பழய சங்கதிகளையே
இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாண வர்களும், இளைஞர்களுமாயிருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள். நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரி வித்துக் கொள்ளுகிறேன்.
நண்பர்களே! சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம்? என்பதும் சமயக்கொள்கை என்றால் எந்த சமயம்? என்பதும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு அவசியமாகும். நான் இப்போது பொதுவாகமனித சமூகம் என்பதையும், பொதுவாக மனித சமூகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளு கிறேன். பிறகு அவசியமிருந்தால் தனிச்சமூகம், தனிச்சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன். பொதுவாக சமயங்கள் - மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொண்: டாலும் அவை மனிதசமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்ட வையாகும்.
மனிதவாழ்க்கைக்கேற்ற திட்டங்களேதான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவதுமாகும்.
ஒரு வாசகசாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ண
குடி அரசு - 19310) 54
யித்துக்கொள்வது போலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள்: சேர்ந்திருப்பதற்காகவும் தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்:
களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும். இதுவும் அந்தந்த காலதேசவர்த்த மானத்திற்கும் மக்கள் அறிவு நிலைமைக்கும் வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப்: படுவதேயாகும். ஆனால் அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமை களைக்கூட சரிவர உணர்ந்து நடந்து கொள்ளமுடியாத அறிவு - இல்லாத காலத்தில் மக்களை பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்கி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக்கருதி ஏற்படுத்திய கொள்கைகளும் சேர்ந்ததாகும். அதாவது எப்படி ஒரு குழந்தையானது தன்னைக்காப்பாற்றிக்கொள்ளக் கூடிய சக்தி இல்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக் குழந்தை வெளியில்போய் நடமாடி ஆபத்தில் பட்டுக் கஷ்டப்படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒருவித பயம் உண்டா
கும் படியான பூச்சாண்டிபிடித்துக்கொள்வான் என்றும், பேய் பூதம் பிடித்துக் கொள்ளும் என்றும் துண்டுத்தடிக்காரன் பிடித்துக்கொண்டுபோய் அடைத்து விடுவான் என்றும் இன்னும் பலவகையாய்ச் சொல்லுவதோடு கையையும்,
முகத் தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாத படி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுகமுடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப். போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம்மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும் மதக்கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள். அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும் தான் இன்றைய மோக்ஷம், நரகம், எமன், அடுத்த ஜென்மம், கர்மம், விதி, செக்கில்போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும். மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம் இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவைகளுமாகும். அதுமாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில்: சொல்லுபவைகளை யெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டுமானபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்ப மாட்டார்களென்று கருதி (ஏனெனில் அவை நம்பமுடியாததும் அறிவுக்குப்: பொருந்தாததுவுமாய் இருப்பதால் அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார், பகவான் சொன்னார், ரிஷி சொன்னார், முனிவர் சொன்னார் என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோக்ஷம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்க வேண்டும் என்று சொல்லி
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
நம்பச்செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக்கொள்கைகளை மக்களுக்
குள் புகுத்தி இருக் கிறார்கள். இவற்றை யெல்லாம் உண்மை என்று நம்பின பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முறட்டுப் பிடிவாதம் குரங்குப்பிடியாய் பிடித்து, சிறிதுகூட காலத்திற்கும் அறிவின் நிலைமைக்கும் யேற்றமாதிரி திருத்துவதற்கு விடாமல் முட்டுக் கட்டை போட்டு வந்ததாலேயே அறிவுக்குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்ற படியும் பல பல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருத்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய். இருந்ததெல்லாம் கருதவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று. ஆகவே இன்றையத் தினமும் மக்கள் எந்த சமயமானாலும் இந்தத் தத்துவத்
தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேச வர்த்தமானத்
திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் செனக ரியமுடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமாயினும் சமய மாயினும் (கொள்கையாயினும்) அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.
அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலகவாழ்க்கை நலத் திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும் அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்கு கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும் அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமை என்றும் அது எப்படிப்பட்டதானாவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாயிருந்தாலு மதை அழித்துத்தீர வேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொ: ருவருடையவும் முக்கியமான கடமையாகும்.
ஆகவே அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக்கொள்
கைகளாகும். இனி இந்திய சமூகத்தையும் இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக்கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமூகம் பெரிதும் சமயத்தைக்காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப்பதிலும் மற்றொரு சிறிப்புக்கு இடமான விஷயமென்ன வென்றால் மனித சமூக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளை யெல்லாம் விட்டுவிட்டு அக்கொள்கைகளை நிறைவேற்ற வென்று பொய்யாக
வும் கற்பனையாகவும் பயத்திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கைகளைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு கட்டி அழுவதாயிருக்கின்றது. காரணம் என்னவென்றால் மனிதனை அறிவு பெருவதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து
நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமூகம் இன்றும் சுயஅறிவு அற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது? என்பவைகளை கவனிக்காமல் கீழ் நிலை
குடி அரசு - 19310) 56
யிலேயே இருந்து கொண்டு சீர்திருத்ததடையவோ, முன்னேற்றறடையவோ முடியாமல் தவிக்கின்றன. உதாரணம் வேண்டுமானால் பாருங்கள். எல்லா சமயக்காரர்களின் மனோ பாவமும் குணமும் மற்றவனிடம் நடந்துகொள்ளும் பான்மையும் ஒரே மாதிரியாக இருப்பதை காண்கின்றோம். ஆனால் ஆண் களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயத்தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இவன் இஸ்லா: மானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பெளத்தன், இவன் இந்து, இவன் சைவன், இவன் வைணவன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங் களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே மதம் என்பதும் சமயம் என்பதும் யாருக்கும் அநேகமாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதே ஒழிய கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும் மக்கள் வேஷத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கொள்கைகளை அடியோடு நழுவ விட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்கு காரணம் என்னவென்றால் இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக்கொடுத்து அதை கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள் பின்பற்றுகிறார்களா இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை வற்புருத்தாததே யாகும். எந்த சமயத்திற்கும் இந்தமாதிரி வேஷந்தான் பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான் எந்த சமயமக்களிடமும் சமயஉண்மைகொள்கைகளைப் பார்க்கமுடியாமல் போனதோடு சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள்கையைச் சொன்னாலும், லக்ஷியம் செய்யாமல்: போய்விடவேண்டியாகிவிட்டது.
அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத்திலேயே அதாவது வேஷ- மாத்திரத்திலேயே சமயப்பிரதானம் கிடைத்துவிடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம் நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக, பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோக்ஷம், கடவுள், அருள், அடுத்த ஜன்மத்தில் மேன்மையான பதவி ஆகியவைகள் என்பவைகள். எல்லாம் மேல்கண்ட வேஷமாத்திரத்தாலே கிடைத்து விடுவதாய் அவர் களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டு விட்டதாலும் வெரும் வேஷத்தைப் போடுகின்றதாலேயே மோக்ஷமடையக் கருதி அதிலேயே௱ஈடுபட்டு பிரதான சமயக்கொள்கையை அலகஷியப்படுத்தி விடுகிறார்கள்.
ஆகையால் இன்றையதினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டு மானால் அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனைகளை யெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோக்ஷம் நரகம் தலைவிதி கடவுளின் பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜா வாய் பிறக்கலாம் என்பவைகளையும் சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும். அப்படிக்கில்லாதபக்ஷம் எப்படிப்பட்ட நல்ல. கொள்கையுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக் காது. மேலும் கொள்கையையும் அறிவையும் பிரத்தியக்ஷ அனுபவத்தையும்
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பொருத்திவிடவேண்டும். அதைக்கொண்டு அவரவர்களையே நடந்து கொள்ளும்படி விட்டுவிடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெரும் பாட்டிக் கதைச் சமயங்கள் இன்றைய சமூக முன்னேற்றத்திற்கு பயன்படவே படாது என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.
உதாரணமாக முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக் கல்வி அறிவு செளகரியமில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர் பிரயாணம் போய் விட்டுமென்று கருதி அந்த ஊருக்கு போனால் புண்ணியம், இந்த சாமியை தரிசித்தால் மோக்ஷம், இந்த தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய் பிறப்பான் என்றெல்லாம் சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக் கதைகள் எழுதி வைத்ததுடன் ஜீவகாருண்யம் என்பதையும் உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை ஆகியவைகள் மீது சவாரிசெய்து அவற்
நிற்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்கட்டுமென்று கருதி காலால் நடந்து போனால் அதிக மோக்ஷம் அவசியம் கிடைக்கு மென்றும் எழுதி வைத் திருந்தால் இன்று வர்த்தமானப் பத்திரிகை ரயில் , மோட்டார், ஆகாயக் கப்பல் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டு மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போகவேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவே தான் அனேக விஷயங்களை சமயத்தின்பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி மூடர்களாக
வும், தரித்திரர்களாகவுமாகி அடிமைகளாய் கஷ்டப்படுகின்றார்கள். இக் கஷ்டத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் சமயத்தின் உண்மை தத்துவத்தை தைரியமாய் எடுத்து ஓத வேண்டும். அதன் போலித் தத்துவங்களை தைரியமாய் அழிக்க வேண்டும். அதோடுபோலி கற்பனை நிபந்தனைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம் , புண்ணியம், மோக்ஷம்,அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திரவங்கள் எல்லாவற் றையும் அடியோடு ஒழித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு விடுதலையோ சுதந்திரமோ, திருப்தியோ, மோக்ஷமோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்த உபத்திரவங்களும் மடத்தனங்களும் இன்று உலகத்தில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்றது என்று ஒருசமயம் சொல்லலாம். ஆனாலும் இந்து சமயம் என்பதிலும் இந்தியமக்கள் என்பவர் களிடமுமே அதிகமாக மிக்க கெடுதி தரும்படியாக-சிறிதுகூட முன்னேற்ற மடைய முடியாதபடியாக - சீர்திருத்தம் செய்ய சற்றும் ஒறுப்படாததாக
இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடை களை அழித்து முன்னேற்றமும், விடுதலையும் அடைந்து வருகின்றார் கள். ஆதலால் வாலிபர்களே! நீங்கள் சற்று நிறானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமூகம் முன்னேரும் படியும் சமயக் கொள்கைகள் அதற்கு பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள்.
குறிப்பு -சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சமூக சீர்திருத்தமும் சமயக் கொள்கைகளும் ” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 25.011931
குடி அரசு - 19310) 58
வாட மேனை முழுவ
1920-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் வழங்கின போது அதிலும் முன்னேற்றமான சீர்திருத்தம் வழங்கும் விஷயத்தில் “ஒரு 10 வருஷ-காலம் பொறுத்து பிரிட்டிஷ் பார்லி மெண்டினால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதை இந்தியாவுக்கு அனுப்பி அதன் மூலம் இந்தியரின் தேவையையும் தகுதியையும் விசாரித்தறிந்து அதற்குத்தகுந்ததான அரசியல் முன்னேற்றம் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தபடியே 1929ல் ஒரு கமிட்டியை அதாவது சைமன் கமிட்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்தப்படி அனுப்பப்பட்ட கமிட்டியை காங்கிரஸ் என்னும் பெயரால் ஒரு கூட்டம் பகிஷ்காரம் செய்த தாய் காண்பித்தாலும் மற்றபடி இந்தியாவிலுள்ள. எல்லாப் பொது ஸ்தாபனங் களும், சமூக சமய ஸ்தாபனங்களும், மேலும் இந்திய ஜனப்பிரதிநிதி களடங்கிய ஸ்தலஸ்தாபனங்களாகிய தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளும், அரசியல் நிர்வாக ஸ்தாபனங் களாகிய மாகாண சட்டசபை, இந்தியா சட்டசபையாகிய ஸ்தாபனங்களும் பெரிதும் வரவேற்று உபசரித்து தங்கள் குறைகளையும் கஷ்டங்களையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லி மேற்கொண்டு அளிக்கப்படும் சுதந்திரங் களை நிர்வகிக்கும் தகுதிகளையும் எடுத்துக்காட்டி அவற்றிற்காக பல திட்டங் களையும் வகுத்து அக்கமிட்டி வசம் கொடுத்ததும் யாவரும் அறிந்ததே
யாகும்.
இவை ஏற்பட்ட பிறகு காங்கிரசானது தன்னுடைய அபிப்பிராயத் தை. தேச மகாஜனங்களும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளாமல் போய் விட்டதே என்கின்ற கோபமான ஆத்திரத்தால் சட்ட மறுப்பென்பதன் மூலம் பாமர மக்கள் சுலபத்தில் ஏமாறத்தகுந்ததான கொள்கைகளாய் கண்டு பிடித்து சுதேசியென்றும், வரி மறுப்பு என்றும், மதுவிலக்கு மறியல் என்றும் சொல்லும்படியான திட்டங்களைக் கொண்டு சட்ட மறுப்பு முதலிய கிளர்ச்சி களை ஆரம்பித்ததும் அக்கிளர்ச்சியையும் பொது ஜனங்களும் பொதுஜன ஸ்தாபனங்களும் பல சமூக ஸ்தாபனங்களும் சட்ட சபைகள் முதலியவை களும் லட்சியம் செய்யாமல் சைமன் கமிட்டிக்கு முன் தங்களால் சமர்பிக்கப்: பட்ட திட்டங்களை விவரித்துச் சொல்வதற்காகவும் அத்திட்டங்கள்: நிறைவேற்றப்படுவதன் மூலம் ஒரு சமூகத்திற்கும் மற்றொரு சமூகத்திற்கும் அபிப்பிராய பேதம் ஏற்படாமலும் ஒரு லக்ஷியத்திற்கும் மற்றொரு லட்சியத்திற்கும் முரண் ஏற்படாமலும் ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மாகாணத்திற்கும் அதிருப்தி ஏற்படாமலும் இருப்பதற்காகவென்று எல்லா. மாகாணப் பிரதிநிதிகளையும் எல்லா சமூக சமயப் பிரதிநிதிகளையும் எல்லா லட்சியப் பிரதிநிதிகளையும் வரவழைத்து நன்றாய் தர்க்கித்து முடிவு செய்வது என்னும் கருத்தின் மீது வட்டமேஜை மகாநாடு என்பதாக ஒன்றை லண்டனில்: கூட்டி அதற்கு இந்தியர்களால் கொண்டாடப்பட்டவர்கள், முன் வழங்கப்: பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தங்களை நடத்திக் கொடுத்தவர்கள், மேலும் நடத்திக் கொடுக்கத் தகுதியும் செல்வாக்கும் உடையவர்கள் என்று கருதக் கூடியவர்களில் பலரை சமய, சமூக, ஜாதி, வகுப்பு, தொழில், லட்சியம், ஆண், பெண் தன்மை வாரியாகப் பிரதிநிதிகளை அறிந்து வரவழைத்து சுமார் மூன்று மாத காலம் பேசி, விவாதித்து ஒரு முடிவுக்கு வந்ததோடு புதிய சீர்திருத் தத்தின் போக்கு இன்ன விதமாய் இருக்க வேண்டும் என்கின்ற தன்மையை
யும் தீர்மானித்து அத்தீர்மானத்தையும் ஏகமனதாய் நிறைவேற்றிக் கொண்: டார்கள் என்பதும் யாவருமறிந்த விஷயமாகும்.
இவை ஒரு புறமிருக்க பிரிட்டிஷ் பிரதம மந்திரியாரும் மேற்கண்ட விஷயங்கள் நன்றாகக் கலந்து பேசி தர்க்கித்து ஒரு தீர்மானத்திற்கு வந்த தற்காக இந்தியாவுடன் நேசமாகவும் அன்னியோன்ய நட்பாகவும் இருக்க வேண்டுமென்கின்ற எண்ணத்தின்பேரில் என்று மனப்பூர்வமான ஆசை யைக் காட்டி மனம்விட்டுப் பேசியதில் பல நன்மொழிகள் கூறி பிரதிநிதி களையும் மகிழ்ச்சியுடன் உபசாரம் செய்து வழியனுப்பியிருப்பதும் இந்த நல்ல காரியத்திற்காகவென்று ழை இந்தியப்பிரதிநிதிகளும் பிரதம மந்திரி யாரின் தயாளகுணத்திலும் பிரிட்டிஷாரின் நல்ல எண்ணத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுவதற்காக அவர்களைப்புகழ்ந்து பாராட்டியதுடன்
நன்றியும் செலுத்திவிட்டு இந்தியாவுக்கு கப்பலேறி இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி இரண்டொரு வாரத்தில் இங்கு க்ஷமமாய் வந்து சேர்ந்தும் விடுவார்கள் என்பது உறுதி.
இந்த நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டிய 3வது தவணை சீர்திருத்த முயற்சியின் அத்தியாயங்கள் ஒருவாறு முடிவு பெற்றதாகி விட்டதென்றே கூறலாம். ஓவ்வொரு கூட்டத்தாரும் இச் சீர்திருத்தங்கள் “தங்களால் தான் கிடைத்தது” “தங்களால்தான் கிடைத்தது” என்று பெருமையும் பாராட்டிக்கொள்ளலாம். ஆனால் இன்றிலிருந்து அனேகமாய் காங்கிரசுக்கோ மற்றபடி திரு. காந்தி கிளர்ச்சிக்கோ கூட இனி மேல் உள்ள கவலையும் வேலையுமெல்லாம் இந்த சீர்திருத்தத்தின் பயனாய். ஏற்படப் போகும் பெரிய பெரிய அதிகாரங்களும், பதவிகளும், சம்பளங் களும் மற்ற விதமான பண வரும்படிகளும், பெருமைகளும் யார் யார் அடையும்படி செய்வது என்பதைத்தவிர வேறு வேலையில்லாமல் போய்விடுமென்பதில் நமக்குச் சந்தேகமில்லை. சர்க்காரும் அநேகமாய் இந்த எண்ணத்தையே கொண்டு கூடிய சீக்கிரம் ஜெயில் கதவுகளை யெல்லாம் திறந்து அரசியல் கைதிகள் என்று சொல்லப்படும் “தேச பக்தர்களை” எல்லாம்
குடி அரசு - 19310) 60
வெளியில் விரட்டி அடித்துத் துரத்தி விடக்கூடும் என்பதிலும் நமக்குச் சந்தேகமில்லை. வெளிவந்த, இந்த “தேசபக்தக் கூட்டங்களும்” இனி கொஞ்சகாலத்திற்கு அதாவது தேர்தல்காலம் சமீபிக்கும்வரை மக்களின் உப்பு வரியைப்பற்றியோ, சீமை ஜவுளியைப் பற்றியோ, கள்ளுகுடியைப் பற்றியோ சிறிது கூட கவலையில்லாமல் தேர்தலுக்கு ஆள்களைப் பொறுக்கி எடுத்து கூட்டு வியாபாரப் பங்கு உண்டாக்கி ஒப்பந்தம் பேசி அடுத்தத் தேர்தலுக்குத் தயார் செய்யும் வேலையிலேயே சரியானபடி ஆழ்ந்து கிடந்து தேர்தல் சமீபத்தில் வந்த பிறகுதான் மறுபடியும் ஒருமுறை உப்புவரி, சுதேச சாமான், மதுவிலக்கு ஆகிய கொள்கைகளைப்பற்றி பேசமுடியும் என்று முடிவு கட்டிவிடலாம்.
ஆகவே, இந்தக் காங்கிரசு விஷயமும் உப்புக் காய்ச்சும் கிளர்ச்சி விஷயமும், நிரபராதிகள் உதை அடிபட்டு, மண்டையுடைத்து, உயிர்கூட துறக்கவேண்டி நேர்ந்த விஷயமும், சிலர் பெரிய பெரிய நஷ்டம் அடைந்த விஷயமும் கொண்ட அத்தியாயமும் ஒருவாறு முடிவுபெறலாம்.
இவற்றிற்கெல்லாம் சமாதானமாக “நாங்களும் இந்தமாதிரியெல்லாம் செய்யாவிட்டால் இதுகூட கிடைத்திருக்காது” என்கின்ற எண்ணத்தின் மீதே
சிலர் தங்கள் தங்கள் கஷ்டத்திற்கு சமாதானம் செய்து கொண்டாலும் கொள்ளலாம்.
ஆகவே இவையும் ஒருபுறமிருக்கட்டும். இனி சீர்திருத்தத் திட்ட விஷயத்தையும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படப்போகும் பலனையும் பற்றி சிறிது யோசிப்போம்:-
முதலாவது இந்த சீர்திருத்தத்தின் மூலம் வகுப்புவாதம் ஒழிந்த தென்றாவது, ஒழிவதற்கு வகை ஏற்பட்டதென்றாவது சொல்வதற்கு இல்லை யென்பதையும், வகுப்புக்குவகுப்பு நம்பிக்கைக்கு மார்க்கமோ, சமாதா னமோ, வகுப்புப் பிரதிநிதித்துவ விஷயமோ கூட வட்டமேஜை மகாநாட்டின் காலத்தில் 4ல் 3பங்கு நாட்களான சுமார் இரண்டு மாதகாலம் பேசியும் எவ்வித முடிவும் பெறாமல் போனபடியே திரும்பப்பட்டது என்பது கூட இல்லாமல், இங்கு இருந்து சீமைக்குப் போகும்போது இருந்த நிலைமை யைவிட அதிக மோசமான அவநம்பிக்கையின் மீதே திரும்பும்படியாகி விட்டதென்றும்
சொல்லலாம்.
எப்படியிருந்தாலும் தேசியவாதிகளில் படித்த மக்களுக்குள்ளும் பணக்காரர்களுக்குள்ளும், ஜமீன்தார், முதலாளி ஆகியவர்களுக்குள்ளும் இப்போதைய சீர்திருத்தம் அதாவது வழங்கப்போவதாக ஏற்பட்ட சீர் திருத்தம் சைமன்கமிஷன் சிபார்சுக்கு மேல் என்றும் மிக்க தாராளமான தென்றும் பொதுஜனப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்டவைகளுக்கும் மேல் என்றும் எங்கும் அபிப்பிராயமாயிருப்பதைக் காணலாம்.
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
நம்மைப் பொருத்தவரையில் நாமும்கூட வகுப்புவாதமும் அவ நம்பிக்கையும், பிரதிநிதித்துவமும் நேர் செய்யப்படாமலும் ஆண் பெண், விஷயம், தாழ்த்தப்பட்டவர்கள் விஷயம் முதலிய விஷயங்களில் கண்டிப் பான ஒருசமத்துவ திட்டத்தை உறுதியாக்கி முடிவு செய்யாததைப் பற்றியும், அதிருப்திப் படுவதோடு சுதேச சமஸ்தானங்களையும் கொண்டு வந்து நம்முடன் பிணைந்திருக்கும் ஒருபெரிய ஆபத்தைப் பற்றியும் மிகவும் மிகவும் வருந்த வேண்டியிருக்கின்றது. இந்த விஷயமானது இதுவரையில் அளித்து வந்த சீர்திருத்தங்களால் எப்படி நமது பாமர மக்களை நம்நாட்டு படித்தவனும்,பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும் ஏமாற்றி, அடக்கி, ஆண்டு கொள்ளை அடித்துகொண்டும், அவர்களும் பாமரமக்களும் ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டு கிடக்கும்படியாயும் ஐரோப்பியர்களின் காரியம் ஒரு ஊசிமுனை அளவுகூட குந்தகமில்லாமல் நடக்கும்படியாக இருந்து கொண்டிருக்கும்படி செய்யத் தகுந்ததாய் இருந்ததோ அதேபோல். ஏன்? இப்போது அதற்கும் மேலாக தங்கள் காரியம் பந்தோபஸ்தாக இருக்கும்படியும், இங்குள்ள சிறு மீன்களைப் பெரு மீன்கள் பிடித்துச் சாப்
பிட்டுக் கொண்டு தங்களுக்கு என்றும் குறையாப் பங்கு கஷ்டமில்லாமல் கொடுத்துக்கொண்டு வரும்படியாகவும் பார்த்து பெரிய ஆபத்துக்களை கொண்டுவந்து விட்டாய் விட்டது. இந்தப்படி பிரிட்டிஷ் சர்க்கார் செய்யவும் இதை இந்தியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொள்ளவும் இனி காங்கிரஸ் தலைவர். களும் ஒப்புக் கொள்ளவும் திருகாந்திகூட மேலொப்பம் போடவும்வேண்டிய அவசியம் ஏற்படப்போகும் காரணம் என்ன வென்று யோசித்தால் அது தானாகவே விளங்கும்.என்னவென்றால் இந்தியநாட்டில் ருஷியக் கொள்கை பரவிவிடுமோ என்கின்ற பயத்தின் மீது பிரிட்டிஷார் இந்தியப் படித்தவர் களையும் பணக்காரர்களையும் கூட நம்பாமல் பாதுகாப்புக்காக சுதேச சமஸ் தானங்களையும் இப்போது இந்த ஆக்ஷியின்மீது ஆதிக்கம் செலுத்தும்படி யாகவும் பங்குபெரும்படியாகவும் செய்துவிட்டார்கள். இனி மத்திய அரசாங்கத்தில் எப்போதும் சுதேச சமஸ்தானங்களின் ஆதிக்கம் தான் தலை. சிறந்து நிற்கப்போகின்றது. எப்படியெனில், தாலூகா ஜில்லாபோர்டுகளில் எப்படி ஜமீன்தார்கள் ஆதிக்கமும், பாளையக்காரர்கள், பட்டக்காரர்கள் பண்ணையக்காரர்கள் ஆதிக்கமும் தானாகவே ஏற்பட்டுவிடுகின்றதோ அதே போன்றும், மற்றும் சட்டசபைகளிலும் ஜமீன்தார்கள் ஆதிக்கமும் பணக்காரப் பிரபுக்கள் ஆதிக்கமும் தலை சிறந்து விளங்குகின்றதோ அதே போலவும், இவர்கள் எப்படி அந்தஸ்தாபனங்களில் இருந்துகொண்டுசர்க்கார் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொடுப்பதுடன் தங்கள் ஆதிக்கத்தையும் நிலை.
நிறுத்திக் கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்கும் உதவி செய்து கொண்டு வரப் படுகின்றார்களோ அது போலவும் தான் இனி சுதேச சமஸ்தானங்களையும் கொண்டுவந்து நுழைத்ததின் மூலம் பணக்காரனுக்கும் பார்ப்பானுக்கும் அரசாங்கத்திற்கும் மற்றொரு புதிய ஆதரவு ஏற்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். இந்தமாதிரி அரசாங்கத்தை இனி பாமர மக்களால் சிறிதுகூட அசைக்க முடியாதென்றே சொல்லிவிடலாம்.
குடி அரசு - 1931 1) 62
அன்றியும் சமதர்மக் கொள்கையையோ, ஒரே பக்கம் செல்வ மெல்
லாம் போய்ச்சேர்ந்து கொண்டிருப்பதைத் தடுக்கும் கொள்கையை யோ இனி சுலபத்தில் எதிர்பார்க்க முடியாமல் செய்யப்பட்டு விட்டது. திரு. காந்தியவர் களும் தான் உப்பு சத்தியாக்கிரகக் கிளர்ச்சியை ஆரம்பித்ததற்குக் காரணமும் “ருஷியக்கொள்கை போல்ஸ்விஷம் இந்தியாவில் பரவிவிடும் என்று கருதி அதைத்தடுப்பதற்குத்தான் உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பித் தேன்” என்று சொல்லியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால் கட்டாயம் அரசாங்கத்தார் இந்தக் கருத்துக் கொண்டேதான் இப்படிச்செய்தார்கள் என்பதும், திரு.காந்திக்கும் இது மிகத் திருப்தியாயிருக்குமென்பதும் தாணாய் விளங்கும். இந்தக்காரியமா னது இந்தியா “விலங்கைத்தரித்து குட்டையில் மாட்டிக்கொண்டதற்கு” ஒப்பேயாகும். இதில் சிறிதும் சந்தேகமேயில்லை. ஏனெனில் நம்முடைய இன்றைய சுதேச ராஜாக்கலெல்லாம் ஏறக்குறைய தசரத சக்கரவர்த்தி போலும், ராமனைப் போலும், கிருஷ்ணனைப் போலும், அரிச்சந்திரனைப்போலும், கூன்பாண்டியனைப்போலும் தான் இருக்கின்றார் களே யொழிய அதிலிருந்து
சிறிதும் மாறுபட்டவர்கள் மிகமிகச் சொற்பமே யாவார்கள். ஆகவே, இந்தமாதிரி சமஸ்தானங்களை யெல்லாம் அதாவது இந்தியாவிலுள்ள சுதேச அரசாங்கங்களின் தொல்லைகளையெல்லாம் அடி யோடு ஒழிக்கவேண்டுமென்று கருதிக்கொண்டிருந்த நமக்கு அவர் களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான ஆதிக்கமும் பந்தோபஸ்தும் ஏற்பட்டி ருக்கின்றதென்றால் அதைப்பற்றி என்ன சொல்லுவது என்பது வாசகர்கள் தான் முடிவுகட்ட வேண்டும்.
தவிர, மற்ற சீர்திருத்தங்கள் விஷயத்திலோ வட்ட மேஜை மகா நாட்டில் தீர்மானமாகியிருக்கின்ற தீர்மானப்படி பார்த்தால் அன்னிய நாட்டு சம்பந்தம், வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பு, சீர்திருத்தத் திட்டத்தை நடத்தி வைத்தல், சிறுபான்மை யோரின் பாதுகாப்பு முதலிய சில. விஷயங்களில் பாதுகாப்பு செய்துகொண்டிருப்பது தவிர மற்றவைகளை
மத்திய அரசாங்கத்திற்கு ஒப்படைத்து அதை இந்திய பிரஜைகளின் பிரதிநிதி களால் நிர்வகிக்கச் செய்யச் சம்மதிக்கப்பட்டாய் விட்டது. பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கும் உரிமை முழுவதையும் நமக்கே விட்டுக்கொடுத்துமாய் விட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்கள் பந்தோபஸ்தில் வைத்துக் கொண்ட விஷயங்கள் சரியா தப்பா அல்லது அதையும் அவர்கள் நமக்கு ஒப்படைத்துவிட வேண்டியதுதானா என்கின்ற விஷயம் வேறானது. அது விஷயத்தில் வட்ட மேஜை மகாநாட்டுக்குச் சென்றவர்கள் யாருக்கும் ஆக்ஷேபனையோஅதிருப்தியோ கிடையாது.நமக்கும் அதில் அதிக தகராறு கிடையாது. ஏனெனில் அவைகளை நமது கைக்கு மாற்றிவிட்டதினாலேயே அவை நமது மக்களுக்கு பயன் படும்படியாக செய்யப்படுமா என்கின்ற விஷயத்தில் நாம் பயந்து கொண்டு தான் இருக்கின்றோம். அது ஒருபுற மிருந்தாலும் மாற்றப்பட்டு நம்மிடம் ஒப்படைக்கப் போகும் விஷயங்கள். எப்படி நடைபெறும் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கலாம்.
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இந்த இடத்தில் வாசகர்களை பரிசுத்தமான மனதுடன் நடுநிலை யிலிருந்து வாசிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம். இந்த “சுதந்திரமும் லாபகரமானதுமான” சீர்திருத்தங்கள் வந்ததற்காக யார் பெருமை பாராட்டிக் கொண்டாலும் சரி அல்லது இன்னும் முற்போக்கான சுதந்திரம் வராமல் போனதற்கு யார் மீது குற்றம் சுமத்தப்படுவதானாலும் சரி அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. வந்திருப்பதும் வரப்போவதும் இந்தியப் பொது மக்களுக்கு என்னபலனைக் கொடுக்கும் என்பதுதான், கீழே எழுதப்போவ தின்கருத்தாகும். அப்படிப் பார்ப்போமானால் கிராமப்பஞ்சாயத்து, யூனியன், தாலூகா, ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டியாகிய பிரதிநிதி ஸ்தாபனங்களில்: இது வரையிலும் இன்றும் புகுந்திருக்கும் ஊழல்களும், மாகாணசட்டசபை, நிர்வாகசபை மந்திரிசபை ஆகியவைகளில் தேர்தல், நியமனம் முதலியவை களில் பிரவேசித்திருக்கும் யோக்கியதைகளும், நாணயங்களும், ஒழுக்கங் களும், அவற்றின் நிர்வாகங்கள் நடக்கும் தன்மைகளையும் பார்த்தால் இந்த யோக்கியதைகளும், தன்மைகளும் இந்தமாதிரி சரக்குகளும் தான் நாளைக்கு
இந்திய நிர்வாகத்திலும் அதாவது மத்திய அரசாங்கத்திலும் போய் ஆதிக்கம் செலுத்த இடம் ஏற்பட்டது என்பது அல்லாமல் வேறு ஒன்றுமில்லை என்பது
நன்றாய் விளங்கும். அன்றியும் இதற்குமுன் வந்துள்ள சீர்திருத்தங்கள் எந்த மாதிரி மக்களுக்குப் பயன்பட்டது? எந்த முறையில் நடத்தப்பட்டது? என்ப தையும் பார்த்தால் வரப்போகும் சீர்திருத்தமும் யாருக்குப்பயன் தரும்? எப்படி நடைபெறும்? என்பதற்கு “வினாடி பலன்” கூட எழுதிவைத்து விடலாம்.
உதாரணமாக, பெரிதும் எப்படிப்பட்டவர்கள் பிரதிநிதியாகின்றார்கள்? என்ன முறையில் பிரதிநிதி ஆகின்றார்கள்? ஆனபின்பு எப்படி நடந்து கொள்கின்றார்கள்? என்கின்ற விஷயத்தைப் பார்த்தால் மாகாணங்களில்: இருந்த அயோக்கியத்தனங்களும் நாணயக்குறைவான தன்மைகளுந்தான் இந்திய மத்திய அரசாங்கநிர்வாகத்திலும் தாண்ட வமாடப் போகிறது என்பதை கல்லின் மேல்எழுதிப் பொன்னால் செதுக்கிவிடலாம். இன்றையத் தேர்தல்களுக்கும், நிர்வாகப்பதவி பெருவதற்கும் செய்யப்படாத அயோக் கியத்தனங்கள் இந்த உலகில் எங்காவது, எந்த சமூகத்தினிடமாவது இருக் கின்றதா என்று கேட்கின்றோம்.
சீர்திருத்தப் பிரதிநிதிகள் தெரிந்தெடுப்பு முறையும், அவர்கள் தனி யோக்கியதையும், பெரிதும் இந்தப்படியென்பதாக ஒருபுரமிருந்தாலும், மொத்தத்தில் சீர்திருத்தம் என்பதின் தன்மைதான் எப்படி இருக்கின்றது என்பதையும் சற்று பார்ப்போம்.
“தண்டுவன் வீட்டில் குமரியை அடமானம் வைக்கப்பட்டது” என்கின்ற கிராமப் பழமொழிபோல்,
யோக்கியப் பொருப்பும் நாணையமும் சிறிதுகூட இல்லாததும், பணத்தாசையும் அயோக்கியத்தனமும் மித மிஞ்சி உள்ளதுவுமான கூட்டத்
குடி அரசு - 19310) 64
தூர்கள், சமூகத்தார்கள் தவிர வேறு எந்த விதத்திலும் சிறிதாவது ஒரு இரண்டு பேராலாவது யோக்கியன் என்றும் நாணையஸ்தன் என்றும் வெளிக் காகிலும் சொல்லப்படக்கூடிய ஒரு மனிதனும் சுலபத்தில் இந்தியப் பொது ஜனப். பிரதிநிதியாவதற்கு மார்க்கமில்லாத முறை கொண்ட சீர்திருத்த மாகவே
இருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் ஆள் ஒன்றுக்கு எந்த வேலையாவது
செய்து நாள் ஒன்றுக்கு 0-12-0 அணா கூடசம்பாதிக்க சிரமமான யோக்கியதை இல்லாத ஒருவன் நாள் ஒன்றுக்கு மொத்த ஜன சங்கையில் ஆள் ஒன்றுக்கு
0-3-0 அணா கூட வரும்படியில்லாத நாட்டில் மாதம் 1க்கு 5000, 6000, 7000
ரூபாய்கள் வீதம் சம்பளமும் சில சமயம் மாதம்க்கு 10,000, 15,000 வீதம் லஞ்ச
மும் சம்பாதிக்கத்தகுந்ததும் சம்பாதிக்கலாம் என்ற ஆசையும் நம்பிக்கையும் உண்டாக்கத் தகுந்ததுமான அநேக உத்தியோகங்களும் பதவிகளும் அதிகாரங்களும் கிடைப்பதல்லாமல் வேறு ஒன்றும் அதிகமாக இல்லை என்று
உறுதியாகச் சொல்லுவோம். இது மாத்திரமல்லாமல் இந்தப்படியான பதவி முதலியவைகளைப் பெறுவதற்கு மனிதன் அதாவது பிரதிநிதியாக இருக்க
விரும்புகிறவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்த்தால்
முன் சொன்னது போல் இனி இதற்கு மேற்பட்ட அயோக்கியத்தனம் உலகில்.
எதற்கும் எந்த பாகத்திலும் செய்யப்படுவதில்லை என்கின்ற “உயர்ந்த” தத்துவமான காரியத்தைச் செய்து தான் பெற வேண்டியிருக்கின்றது.ஆகவே இவற்றிலிருந்தே இந்த சீர்திருத்தமானது எவ்வளவு மேலானது என்பது
மூடனுக்கும் நன்றாய் விளங்கும். ஆனால் பணம் பதவி அதிகாரம் ஆகிய ஆசைகொண்ட மக்களையும் அவர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய மக்களையும் இந்த மாதிரி சீர்திருத்தமும் இதுபோன்ற தன்மை கொண்ட
இன்னும் அதிகமான சீர்திருத்தமும் மேலானது என்பதோடு அவர்களும்
அவர்கள் முன்னோர்களும் “முன் ஜன்மத்தில் செய்த பூஜா பலத்தினால்” கிடைத்தது என்று சொல்ல செய்வதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாகப்.
பெருவதற்கு இனியும் ஒரு தரம் இரண்டு தரம் ஜெயிலுக்குப் போகலாம் வா என்று மற்றவர்களை அழைக்கவும் செய்யும்.
ஆனால் இந்தியாவின் ஜனத் தொகையில் 100க்கு 90 பேர்கள் கொண்டவர்களான ஏழைமக்கள், உழுகும் குடியானவர்கள், தொழிலாளிகள்,
கூலிக்காரர்கள், தீண்டப்படாதவர் முதலாகியவர்களுக்கு இந்த சீர்திருத்தம் என்ன பலனைக் கொடுக்கும் என்றும் பார்த்தால் முன்னிலும் அதிகமான தொல்லைகளையும் கொடுமைகளையும் ஒழுக்கக் குறைவுகளையும்தான் உண்டாக்குமென்று “தீர்க்கதரிசனம்” சொல்லுவோம்.
நம்முடைய முடிவான கருத்தென்னவெனில் “இந்தியாவுக்கு ஜனநாயக ஆக்ஷி'” என்பதெல்லாம் ஏழைகளைக் கொடுமைப்படுத்து வதான சூக்ஷியும் அயோக்கியத்தனமும் என்று அகராதி எழுதவேண்டியதேயாகும்.
ஏனென்றால் ஜனங்களின் யோக்கியதை என்ன? அவர்கள் பிரதி நிதிகள் எப்படிப்பட்டவர்கள்? ஜனநாயகக்கொள்கை எப்படிப்பட்டது?
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
என்பவைகளைப் பார்த்தால் முன்சொன்னபடி இளைத்தவர்களை வலுத்த வர்களும் அயோக்கியர்களும் ஏமாற்றுவ தென்பதல்லாமல் வேறு என்ன
இருக்கின்றது? மேலும் இந்த ஐம்பது வருஷ- சொந்த அனுபவத்தில் நாம் இதைத் தவிர வேறு ஒன்றையும் முடிவு செய்ய நமக்குப்போதிய ஆதாரம் கிடைக்கவும் இல்லை.
இன்னமும் தெளிவாகப் பேச வேண்டுமானால் நமது ஜனநாயகம் என்பது கூலிக்காரனுக்கும் தொழிலாளிக்கும் முதலாளி காப்பாளனாகவும், உழுகும் குடியானவனுக்கு மிராசுதாரனும் ஜமீன்தாரனும் காப்பாளனாகவும், பெண்களுக்கு ஆண் காப்பாளனாகவும், பரையனுக்கு பார்ப்பான் காப்பா ளனாகவும், சாதுக்கு தந்திரசாலி காப்பாளனாகவும் (இதற்கு வேறுஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால் எலிக்குப் பூனை காப்பாளனாகவும்) இருக்க சம்மமதிப்பது போல்தான் இன்று இந்திய மக்களுக்கு ஜனநாயகம் ஆகஷித்தன்மையில் வரும் காப்பாளத்தன்மையும் இருக்கின்றதே தவிர வேறில்லை.
ஆகவே இந்தமாதிரியான ஜனநாயக ஆக்ஷியை மூடனும் அயோக் கியனு மல்லாத எவர்தான் விரும்புவார்கள் என்பதை யோசித்து முடிவு செய்யும் பொருப்பை அறிவுள்ள வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றேன்.
கடைசியாக நாம் சொல்லுவதென்னவென்றால் உலக மக்களில் பெரும்பாலோர் பூரண விடுதலை சமதர்மம் பொது உடைமைத்தன்மை ஆகிய உயர்வான தர்ம போகங்களை அடையக்கருதிக் கொண்டு அதற்கான முயற்சிகள் செய்துகொண்டுமிருக்கும் காலத்தில் நம்நாடு மேலும் மேலும் அடிமையாகிக்கொண்டு வருவதும் ஏழைகளை வஞ்சித்து ஏகபோகமாய் சம்பளம் லாபம் வரும்படி ஆகியவைகளை ஒரு கூட்டம் கொள்ளை யடிப்பதும் தப்பு என்றும் சம்பளத்தையும் வரும்படியையும், லாபத்தையும், உத்தியோகத்தையும் குறைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கும் காலத்தில் மறுபடியும் அதிகமான சம்பளமும் உத்தியோக ஆசையும் நமது பிரதிநிதி என்பவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதுமான காரியங்களால் நாமும் - நமது நாடும் - இன்றைய உலகப்போக்கில் வெகுதூரம் பிற்போக் கடைந்துவிட்டோம் என்றே சொல்லுகிறோம்.
இனி இராஜாக்கள் மகாராஜாக்கள் ஜமீன்தார்கள் என்பவர்கள் யோக்கியதையும் சம்பளம் உத்தியோகஸ்தர்கள் ஆகியவைகளின் யோக்கிய தையும் பற்றி அதை அடையும் வழியைப் பற்றியும் விபரமாய் பின்னால் எழுதுவோம்.
“ அரசியல் சீர்திருத்தம் சமதர்மக் கொள்கைக்கு ஆபத்து”
குடி அரசு - தலையங்கம் - 25011931
குடி அரசு - 19310) 66
யாஸர் பாரிபாணைம்
சென்னை பண்டிதர் திரு.எஸ். ஆனந்தமவர்களால் எழுதப்பட்ட “பாலர் பரிபாலனம்” என்னும் புஸ்தகம் வரப்பெற்றோம். நமது நாட்டில் குழந்தை வளர்ப்பிலோ அல்லது அதன் போஷணையிலோ போதிய சிரத்தையும், கவனமும் காட்டப்படுவதில்லை யென்பதோடு அனேகருக்கு அதன் விபரமே தெரியாதென்று சொல்லவேண்டி இருக்கிறது. இதனா லேயே
சிசு மரணமும், அகால மரணமும், பலவீனமும், ஊக்கமின்மையுமாகிய வைகள் மலிந்து அன்னிய நாட்டார் முன்னிலையில் இந்தியர்களை மாக் களாகக் கருதப்படும் படியாகச் செய்து வருகின்றது. இவை மாத்திரமல் லாமல் மக்களுக்கு நல்லொழுக்கமும் பகுத்தறிவும் கூட அடைவதற்கில் லாமல் இருந்துவரப் படுகின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் பிள்ளை களை எப்படி பரிபாலிப்பதென்கிற விஷயத்தில் சிறிதும் அறிவும், ஆராய்ச் சியும் இல்லாததே காரணமென்பதைத் திரும்பவும் வலியுறுத்திச் சொல்ல வேண்டி. யிருக்கின்றது.
இத்தகைய பெருங்குறையை போக்க திரு. ஆனந்தமவர்கள்
முயற்சித்து இப்புத்தகம் எழுத முன்வந்தது பேருதவியேயாகும். இதில் குழந்தை பிறப்பு, குழந்தைப் பருவத்துன்பங்களும், காயலாவும், ஸ்நானம், உடை, ஆகாரம், தாதி, தொத்து வியாதியிலிருந்து காப்பாற்றுதல், அம்மை
குத்துதல், உடற்பயிற்சி, தூக்கம், மல ஜலங்களித்தல், உணவு, கல்வி கொடுக்
கும் முறை முதலிய அனேக விஷயங்களைப்பற்றி தெளிவாகவும், முறை யாகவும் எழுதப்பட்டிருக்கிறது. இது வைத்திய சாஸ்திரமாத்திரமல்லாமல் சரீரதத்துவம், மனோதத்துவம் முதலிய பல நூல்களையும், ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு முக்கிய புஸ்தகமாகும். ஆகவே இப்படிப்பட்ட அருமை யான புஸ்தகத்தை எழுதின பண்டிதர் திரு. எஸ்.எஸ். ஆனந்தமவர்கள் அறிவிலும் ஆராய்ச்சியிலும் வைத்திய பாண்டித்தியத்திலும் வல்லவ ரென்பதை நாம் தமிழ் நாட்டாருக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. எனவே இப்புஸ்தகமானது ஒவ்வொரு தாய்மாரிடத்திலும் ஒவ்வொரு புஸ்தகாலயத்திலுமிருக்க வேண்டியதோடு ஆண் பெண் பள்ளிக்கூடங் களிலும் பாடமாய் இருக்கத் தக்கதென்றும் சொல்லுவோம்.
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
வேண்டுவோர் கீழ்கண்ட விலாசத்திற்கெழுதி பெற்றுக் கொள்ளவும்.
விலாசம் பண்டிட் எஸ்.எஸ்.ஆனந்தம்
தமிழ் மருத்துவசாலை
221, தங்கசாலைத் தெரு, சென்னை.
குடி அரசு - மதிப்புரை - 25.011931
குடி அரசு - 19310)
68
சட்ட மறுப்புக்கு சர்க்கார் உதவி
சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அது அற்ப ஆயுளாய் முடியுமென்றே முடிவுகட்டி இருந்தோம். அந்தப்படி ஒழிந்து விடுமென்று எதிர்பார்த்த காலத்திற்கு மேலாக சற்று காலம் கடத்திவரப். படுகின்றது. சட்டமறுப்புத் தன்மையை தைரியமாய் வெளியிலெடுத்துச் சொல்ல முடியாதவர்களும் அதில் கலந்து கொள்ள சிறிதும் தைரியமில்லாத வர்களுமாய் இருந்த சில கூட்டாத்தாருக்கு சட்டமறுப்பு இயக்கம் நீடித்து இருப்பதால் வாயில் பேசி பெருமையும் திருப்தியும் அடைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்த மாதிரி இனியும் கொஞ்சம் காலம் கடத்தும் நிலைமைக்கு சட்டமறுப்புக்காரர்களாவது வாய்ப்பேச்சுவீரர்களாவது சிறிதும் பொறுப்பாளிகளல்ல என்பதே நமது முடிவு மற்றுயார் என்றால் சர்க்காராரே முக்கிய காரணஸ்தர்களா வார்கள். இந்தக்கிளர்ச்சி ஆரம்பித்த காலத்தில் அனேகமாய் இந்தியாதேசம் முழுவதும் அதற்கு எதிரிடையாய் இருந்த காலத்தில் பேசாமல் விட்டுவிட்டு பிறகும் கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்துக்கொள்ளாமல் அனாகரீகமான முறையில் முறட்டு பலத்தை பிரயோகித்ததால் இப்போது பாமர மக்களை மயங்கச்செய்து அதில் கவனம் செலுத்தும்படி செய்து வருகின்றது-நியாய, அனியாயங்களை கவனியாமலும் காரணகாரியங்களை கவனியாமலும் இதுசமயம் பாமரமக்கள் பலர் அவ் வியக்கத்திற்கு அனுதாபம் காட்டுகின்றார்கள். சட்டமறுப்பின் விஷயம் தெரிந்தோ அதன் தத்துவத்தை உணர்ந்தோ அனுதாபம் காட்டப்படவில்லை. என்பது உறுதியானாலும் சர்க்கார் நடவடிக்கையின் பலனாய் “சர்க்காரார் அடிக்கிறார்கள். அடிக்கிறார்கள் என்கின்ற ஒரு காரணத்திற்காகவும், “நாளைக்கு நம்மையும், இப்படித்தானே அடிப்பார்கள்” என்கின்ற எண்ணத் தைக் கொண்டும் அவ்வியக்கத்தினிடம் அனுதாபம் காட்டுகின்றார்கள். பாமர: மக்களின் அனுதாபம் சட்டமறுப்பு இயக்கத்தின் பக்கம் திரும்பி விட்டது என்கின்ற சந்தேகம் படித்த மக்களுக்கு உண்டான வுடன் அவர்கள் தாங்கள் அடுத்த தேர்தலில் ஸ்தானங்கள் பெறவேண்டுமே என்கின்ற கவலையின் மீது அவர்களும் சட்டமறுப்பு இயக்கத்தில் அனுதாபம் உள்ளவர்கள் போல் நடந்து கொள்ள வேண்டியவர்களாகிவிட்டார்கள். இந்தநிலைமைக்குக் காரணம் சர்க்கார் என்றுதான் மறுபடியும் சொல்லுகின்றோம். நிரபராதிகள் அனேகர் அடிபடுகின்றதானது அவ்வியக்கத்தை நெய் வார்த்து வளர்ப்பதுபோல் ஆகின்றது.
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அன்றியும், இதில் சர்க்கார் காட்டின தந்திர புத்தியும், இயக்கத்திற்கு அனுகூலமாகி விட்டது. உதாரணமாக வைசிராய் பிரபு தன்னைப் பொருத்த வரையில் தான் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத் தின்மீது வழவழவென்று பேசுவதும் திரு. காந்தியையும் காங்கிரசையும் புகழ்வதும் இந்தியா மந்திரி தன்னைப்பொருத்தவரை தான் நல்ல பிள்ளை யானால் போதுமென்று இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதும் பிரிட்டிஷ் முதல் மந்திரி தன்னைப் பொருத்தவரைதான் எல்லாரை யும்விட நல்லபிள்ளையாய் ஆகிவிட வேண்டுமென்று யெல்லாவற்றையும் ஆதரிப்பதுபோல் பேசுவது மாகிய காரியங்கள் இயக்கத்தை வளர்த்திக் கொண்டே இருக்கின்றது. அவர் கள் உண்மையிலேயே மனப்பூர்வமாய் மனதிலுள்ளதை பேசினார்கள் என்று சொல்லுவதானால் இம்மாதிரி தடியடி தாண்டவம் நடந்து கொண்டு இருக்க முடியாது. சென்னையில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் போலிசார் நடவடிக்கையையும் சர்க்காரின் போக்கையும் கண்டித்து மூன்றுநாளையில் இரண்டு தீர்மானங்கள் செய்யப்பட்ட பிறகுகூட அதேமுறையில் தடியடிப் பிரயோகம் நடக்கின்றதென்றால் நடுநிலைமையில் உள்ளவர்கள் இக் காரியத்திற்கு சென்னை அரசாங்கத்தையே பொருப்பாக்க முடியாது.
இந்தியா கவர்ன்மெண்டிலிருந்து “நான் நல்லமனிதன்போல் வாயில் பேசிக்கொண்டிருக்கின்றேன். நீ உன்காரியத்தைப்பார்” என்று உத்திரவு வந்திருந்தாலொழிய மற்றபடி வேறு காரணம் இருக்க முடியாதென்றே கருத வேண்டி யிருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதற்காக யோசித்து முடிவு செய்ய காங்கிரஸ் தலைவர்கள் என்பவர். களை விடுதலையும் செய்துவிட்டு மறுபடியும் இந்தக்காரியம் செய்வதானது, “சர்க்காரார் சட்டமறுப்புக்கு பயந்து கொண்டு தலைவர்களை விட்டு விட்டார்.
கள் என்று எங்கும் பாமர ஜனங்கள் எண்ணி சர்க்காராரை ஏளனம் செய் வார்களே என்கின்ற பயத்தின் மீதும் இந்திய அரசாங்கம் தடிப்பிரயோ
கத்திற்கு அனுமதி கொடுத்து வருவதாகவும் கருத வேண்டி இருக்கின்றது.
எந்தவித எண்ணத்தின் மீது வெகு புத்திசாலித்தனம் என்று கருதி இந்தக்காரியம் செய்திருந்தாலும் இதற்கு யார் பொறுப்பாளியானாலும் சர்க்காராரின் இந்த செய்கையானது பாமர மக்களை சட்டமறுப்பு இயக்கத்
திற்கு அனுதாபம் காட்டவே இக்காரியம் பயன்படுகின்றது என்பதில் சந்தேக மில்லை. பாமர ஜனங்களை கிளப்பிவிட இது மிகவும் பயன்பட்டு வரு கின்றது.
உதாரணமாக சென்னையில் இந்தவாரம் நடந்த தடிப்பிரயோகமானது
மிக்கப் பெரிது செய்யப்பட்டு சென்னை ஜனங்களின் 100 க்கு 50 பேர்களின் மனமானது சட்டமறுப்பு இயக்க சம்மந்தமான எல்லா நடவடிக்கைகளி னிடமும் அனுதாபம்காட்டும்படி செய்து இருக்கின்றது. பரீட்சை பார்க்க வேண்டுமானால் சமீபத்தில் நடந்த தேர்தலில் சென்னையில் வெற்றி பெற்ற
4 சட்டசபை அங்கத்தினர்களும் தங்கள் ஸ்தானத்தை இராஜீனாமா செய்து
குடி அரசு - 19310) 70
விட்டு இன்று மறுபடியும் நிர்பார்களேயானால் ஒருவர் கூட வெற்றி பெற மாட்டார்கள். சாதாரணமாக திரு. கே.பாஷ்யம் அவர்களுக்கு முதல் ஸ்தான
மும் மற்றவை அவர் சொல்லுகின்ற ஆள்களுக்குமே கிடைக்கும் என்று தைரியமாய்ச் சொல்லலாம். ஆகவே பாமர மக்களின் மனதைப் பாழாக்கத் தான் இம்மாதிரி நடவடிக்கை பயன்படுகின்றது. இயக்கத்தில் கலந்துள்ள வர்களில் 100க்கு 99 பேர்களின் எண்ணம் இதுதான் என்பதை சர்க்காரார்
தெரிந்திருந்தும் இம்மாதிரி நடந்தால் பிறகு இதற்கு யார் மீது குற்றம் சொல்ல.
முடியும்?
தவிர நமது மக்களுக்கும் சொந்தபுத்தி குறைவு என்பதற்கு மற்றொரு உதாரணம் சொல்லுவோம். அதாவது சர்க்கார் தடியடியை வெகு நாளாகவே வெகுபேர்மீது பிரயோகித்து வந்திருக்கின்றார்கள். இதுவரை சுமார் எத்த னையோ பேருக்கு எத்தனையோ விதமான அடி கிடைத்திருக்கின்றது. ஆனால் அவர்கள் பேர்கள் எல்லாம் அனாமதேயமாய் போய்விட்டது. திருவாளர் பாஷியத்திற்கு நடந்ததாகச் சொல்லப்படும் தடியடியானது “ஆகாயமளாவி, கடல்முட்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர் முதுகிலும் தடிப்பு உண்டாகிவிட்டது” என்று புராணப்புளுகர்கள் வர்ணிக்கும் மாதிரி இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் அடிபட்டது போல் கருதும்படி அவ்வளவு தந்திரம் செய்யப்பட்டிருக்கின்றது,
நமது ஆட்களே இந்த பிரசாரத்திற்கு பெரிதும் காரணம் என்று சொல்லுவோம். ஏனெனில் அவர்களது பயங்காளித்தனமே அதற்கு காரணமாகும்,
திரு, பாஷ்யம் பட்ட அடியானது ஈரோடு திரு. ஈஸ்வரன் பட்ட அடியில் 100 ல் ஒரு பங்கு இருக்காது,
திரு, ஈஸ்வரனை இன்னவிதமாய்த்தான் அடிப்பது என்றில்லாமல். அடித்து காரில் வைத்து ஊரை விட்டு 15மைல் தாட்டி ஒரு காட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் இரவில் விட்டுவிட்டு வந்தார்களாம்.இம்மாதிரி காரியங்களுக்கு இந்தக் கூட்டத்தார் யாரும் அனுதாபப்படவே இல்லை, ஆகவே அடிபடுவதும் அனுதாபப்படுவதும் அதற்காக சர்க்காரைக் கண்டிப்
பதும் எல்லாம் அடியோடு தன் தன் சொந்த நலத்திற்கும், விளம்பரத்திற்கு மாகவே இருக்கின்றதேயொழிய உண்மையான காரியத்திற்கோ ஒரு பொது நலத்திற்கோ இல்லை யென்பது நன்றாய் விளங்குகின்றது. திரு, பாஷியத் திற்காக மாத்திரம் சென்னையில் வக்கீல்கள் ஒன்றுகூடி துக்கம் கொண்டாடி ஊர்வலம் சென்றார்களாம். இது எதற்காக? அடுத்த எலக்ஷன் ஓட்டுக்காகவா? அல்லவா என்பதை யோசித்தால் உண்மை விளங்காமல் போகாது. நிற்க,
எந்த வக்கீலாவது இதற்காக ஒரு நாள் வேலையைநிறுத்தி அனுதாபம் காட்டினாரா. அடித்ததும், அடிக்கச்செய்ததும், அய்யங்கார் பார்ப்பனர்தானே
7 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அவரை ராஜீனாமா செய்என்றார்களா? அவர் பேரையாவது வெளிப்படுத்தி னார்களா? சர். உஸ்மான் பெயர்தானே அடிபடுகின்றது.
சட்டமறுப்பை ஆதரித்துப் பேசிவந்த பலர் வட்டமேஜை மகாநாட்டில். ஏற்பட்ட சீர்திருத்தங்களுக்குக் காரணம் சட்டமறுப்பு இயக்கந்தான் என்றும் சட்டமறுப்பு இயக்கத்தைக் கண்டு சர்க்காரார் இருப்பதா போவதா என்றும் எண்ணவேண்டியவர்களாகி விட்டதால் பயந்து கொண்டு கொடுத்து விட்டார்
கள் என்பதாகவும் ஒரு சோம்பேறிக்கூட்டம் திண்ணை திண்ணையாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பொய்யாக்கவேண்டிய அவசியமும் சர்க்காராருக்கு ஏற்பட்டு விட்டாற்போல் ஒருபுறம் வாயிலும் ஒருபுறம் தடி யாலும் பேசவேண்டியவர்களாகி விட்டார்கள்.
வட்டமேஜைத் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும், சமீபத்தில் கலந்து பேசப்போகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. அதன் பயனாக சமீப காலத்திற்குள் இந்திய சட்டசபையும் மாகாண சட்டசபைகளும் கலைந்து புதிய தேர்தல்கள் அதுவும் ஒரு வருஷத்திற்குள்ளாகவே புதிய தேர்தல்கள் ஏற்படலாம் என்பதாக நினைக்கவேண்டியிருக்கின்றது. மாகாணங்களின் நிர்வாகசபை அங்கத்தினர்களின் எண்ணிக்கைகளும் குறைந்து அவைகளும்
மந்திரி ஸ்தானங்களாக மாறினாலும் மாறலாம்.
ஆகவே இந்தமாதிரி தேர்தல்களுக்கு இந்தத் தடிப் பிரயோகமானது வெகு தூரம் உதவி செய்யக்கூடும். அந்தப்படி ஏற்பட்டாலும் நாம் அதிசயப் படநியாயமில்லை. சென்னை காங்கிரஸ் தலைவர்கள் திரு. காந்தி அவர் களுக்கு இதைத்தான் முக்கியமாய் வலியுறுத்துவார்கள். திரு. சீனிவாச சாஸ்
திரியார் போன்றவர்கள் வார்த் தைக்கு திரு. காந்தி முதலியவர்கள் காது கொடுத்துத்தானாக வேண்டி யிருக்கும். திரு. சாஸ்திரியாரும் சீமையில் இருந்தே இதற்கு உத்திரவு வாங்கி வந்திருக்கலாம் என்று கூட எண்ண வேண்டியிருக்கின்றது.
ஆகவே ஒரு சமயம் திரு. காந்தி அவர்கள் இதற்கொப்புக்கொண்டால் சட்டசபைகள் அவசரமாக கலைவது என்பது உறுதியேயாகும். அந்தப்படி அவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட வட்டமேஜை மகாநாட்டிற்குப் போனவர்கள் ஸ்தானம் பெறவும் அடுத்த சீர்திருத்தத்திற்கு விதிமுறைகள் ஏற்படுத்தவும், என்கின்ற அவசியத்தின் மீதாவது கலைக்கப்படலாம். அல்லது
புது வைசிராய் வந்தவுடன் ஒரு புதிய மாறுதலைக்காட்டவாவது ஏற்படலாம். அந்த சமயத்தில் பழைய சுயராஜ்யக்கட்சி தோன்றியது போல் சுதேசிக்கட்சி என்பதாக ஒன்று தோன்றி தேர்தல்களுக்கு போட்டி போட்டாலும் போடலாம். ஆதலால் இன்றைய மந்திரிகளும் சட்டசபை மெம்பர்களும் மறுபடியும் தாங்கள் ஸ்தானம் பெறவேண்டுமே என்கின்ற எண்ணத்தின் மீது சட்ட மறுப்புக்கு அனுதாபம் காட்டி கண்களில் நீர் ஒழுக்கவேண்டிய அவசிய முடையவர்களாவார்கள் என்பதிலும் அதிசயமிருக்காது என்போம். எனவே
குடி அரசு - 19310) 72
பொது அபிப்பிராயம் சர்க்காருக்குவிரோதமாக பலப்பட்டுக்கொண்டு வருவ தற்கு தடிப்பிரயோகம் ஒருபுறம் பயன்பட்டு வருவதால் சென்னை அரசாங்கம் உடனே கவனித்து புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள வேண்டுவது அவசியமாகும்.
குடி அரசு - தலையங்கம் - 01.02.1931
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ருஷ்யாவைய் பற்றி சர். பாகூர் அயிப்பிராயம்
உயர்திரு.சர். ரவீந்திரநாத் டாகூர் அவர்கள் ருஷியா மாஸ்கோ வுக்குச்
சென்றிருந்த சமயம் அங்கு ஒரு பத்திராதிபருக்குப் பேட்டி அளித்துப் பேசியதில்,
“நீங்கள் குடியானவர்கள் விஷயத்தில் மிக்க சிரத்தை எடுத்து, அவர். களுக்கு கல்வி பரவும்படி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். எங்கள் தேசத்
தில் கல்வி,கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. உங்களி டமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். தேகபலம், கல்வி இவை யில்லாத வர்களையும் உபயோகித்துக்கொள்ளும் விஷயம் மிக்க சாமர்த் தியமானது. இங்குள்ள தாய் தகப்பனற்ற சிறுவர்கள், புது உலக வாழ்வுக்குத் தகுந்த சக்தி யையும், நம்பிக்கையையும் உடையவர்களா யிருக்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தைப் போக்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் திருப்தியாயிருக் கின்றது. வைத்தியம், சுகாதாரம் நல்ல நிலையில் இருக்கின்ற தென்று வைத்தி
யர்கள் சொல்லுகிறார்கள்” என்று சொன்னார்.
இதிலிருந்து ருஷியாவின் மேன்மை யாவருக்கும் நன்றாக விளங்கும். இவைதவிர, மற்றொரு விஷயமும் சொன்னார். அதாவது,
“மதம், செல்வ நிலை, சமூகவாழ்வு ஆகிய விஷயங்களில் உங்க ளினின்று மாறுபட்டவர்கள் இடம் கோபியாமல், விவசாயிகளைக் கல்வி மூலம் திருத்த முயற்சிப்பது போல், இவர்களையும் கல்விமூலம் திருத்தும் படியான முறையை அனுஷ்டிக்க வேண்டாமா?” என்று சொன்னாராம். இதை: மாத்திரம் நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், மதப் பித்தர் களையும், செல்வச் செருக்கர்களையும், சமூக வாழ்வில் உயர் தனம் பெற்ற அனுபவக்காரர்களையும் நல்ல வார்த்தையாலோ, பிரசாரத்தாலோ, கல்வி யாலோ திருத்துவதென்பது சுலபமான காரியம் என்பது நாம் கருதவில்லை. இவர்களுக்கு ருஷியக்காரர் செய்யும் ஏற்பாடுகள் தான் பொருத்தமான தென்பது நமதபிப்பிராயம்.
ஆகவே எல்லா விஷயத்திலும் ருஷிய அரசாங்க சீர்திருத்த முறை மேலானதென்றே சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.02.1931
குடி அரசு - 19310) 74
திரு. சி. ரானகோயாலாச்சாரி
ஈ.வை. இராமசாமி சந்திப்பு
திருவாளர் சி.ராஜகோபாலாச்சாரியார் 29 தேதி காலையில் சென்னை யிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் கிரான்ட் டிரன்க் எக்ஸ்பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி
ருந்தார் :பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
திரு. ஈ.வெ. இராமசாமி 29 ௨ காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாகவந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈவெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும் போது எதிரிலிருந்த கூட்டத்தை கவனிக்கும் போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண் டொரு வார்த்தைகள் பேசிக்கொண்டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந் திருந்த திரு. பட்டாபி கீதாராமையரையும் கண்டு மரியாதை செய்தார். அந்த
சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையை யும் எல்லோருக்குமே ஞாபகப் படுத்தியது என்பதில் ஆக்ஷபணை இல்லை. பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.
இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால் பத்திரிகைகளில் ஈவெஇராமசாமி அங்கிருந்த விஷயத்தைக் குறிப்பிட்டதைப்பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரியவந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரை பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக்கொண் டாலும் திரு.ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள் ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.
திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்தவரையில் தனது கொள்கை களில் எவ்வித மாற்றமும் இல்லை.அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
“மக்கள் விடுதலை அடைவதற்கு செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும் அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய கொள்கையாகும்” என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர்பாராமல் காங்கிரஸ் வாதியாயிருப்பார். ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப் படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01021931
குடி அரசு - 19310) 76
மேல்நாட்முண் கோதியும் கீழ்நாட்மூண் பீதியும்
தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ் நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டு மென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக்கொண்டு - நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒருசமயம் மேல் நாட்டின் பெருமையையும் கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேசவேண்டு மென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆன போதிலும் இந்தத் தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்ல. லாமென்பதாகக் கருதி சில குறிப்பு வைத்திருந்தேன். ஆனால் இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள் சமாதி வணக்கம்,கொடி, பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாமார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்டு மக்கள் மூட நம்பிக்கையால் பின்பற்றுவதாகுமென்றும் சொன்னபோது இங்குகூட்டத்திலிருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய் விட்டது போல் கருதி கூக்குரலிட்டதையும், கோபத்துடன் ஆக்ஷேபித்த தையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவைகளையெல்லாம்
தூரத் தள்ளிவிட்டு அவருக்கேற்பட்ட பீதியையும், இன்னும் அதுபோலவே இந்துக்களென்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேசவேண்டியது அவசியம் என்று கருதிவிட்டேன். அதாவது இம்மாதிரி கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற்கடமை யென்பதைப் பற்றியே பேசுகிறேன்.
நண்பர்களே! ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லை யென்றோ அது அறிவுக்குப் பொருத்தமில்லை யென்றோ, அதனால் பயனில்லை. யென்றோ, அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர்
எடுத்துச் சொன்னால் அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால்: அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலை யென்ன வென்றால் தைரியமாய்த் தக்க சமாதானம் சொல்லி தங்கள் கொள்கைகளை-
தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவைகளுக்கு பொருத்தி மெய்ப்பித்துக் காட்டவேண்டியது யோக்கியமான கடமையாகும். அந்தப்படியான காரியம் ஒன்றும் செய்யாமல்:
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
எடுத்ததற்கெல்லாம் கடவுள் போச்சு, மதம் போச்சு, மார்க்கம் போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு என்று வெறும் கூப்பாடு போடுவதானால் என்ன பயன் விளையக்கூடும். மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் எதோ முழுகிப் போய் விட்டது போல் ஆத்திரப்படக்கூடும். பிறகு அவர்களுக்கும் விபரம் தெரிந்து விட்டால் இந்தமாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்து விடுவார்கள். விஷமப் பிரசாரமும் சுயநலப் பிரசாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது. எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும் போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும். பிறகு தான் தங்கள் தங்கள் முட்டாள்தனத்தைப்பற்றி வருந்துவார்கள். ஆகையால் தான் விஷம பிரசாரங்களைப்பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை. ஆனால் சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி வேண்டாமா என்பது தான் எனது கேள்வி.
நண்பர்களே! என்னைப்போல் ஒரு சாதாரண மனிதன் பேசுவதி னாலோ, தனக்குத் தோன்றியதை எழுதுவதினாலோ கடவுள் போய் விடும்- மார்க்கம் போய் விடும்- சமயம் போய்விடும் என்று நீங்கள் பீதி அடைவீர் களானால் உங்கள் கடவுளுக்கும் மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கடவுளை உறுதி யானவரல்ல, உண்மையானவரல்ல என்றும், உங்கள் சமயம் உறுதி யானது அல்ல, உண்மையானது அல்ல என்றும், நீங்களே கருதியிருக்கின்றவர். களாகிறிர்கள்.நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லையென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லை யென்பதை உறுதியாய் நம்புங்கள். அவைகளைப்பற்றி உண்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிவதல்ல. எனது வேலை. நீங்கள் சொல்லுவதற்கு, நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதார மென்ன? அது உங்கள் பகுத்தறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்து வருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்வது தான் எனது வேலையாகும். அவைகளுக்கு இடம் கொடுப்பதாலேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவைகளைப்பற்றி மறுபடியும் வெளியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவா வென்று கேட்கின்றேன்.
இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத்தான் பயன்படக் கூடும் என்பதை நீங்களே ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள். “எங்கள் கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகமாயிருக்கக்கூடியவர்” என்று கருதிக் கொண்டு, “அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம்” என்று சொல்லிக் கொண்டு. இருக்கின்ற நீங்கள், “அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா வென்று பார்க்கலாமா” என யாராவது கேட்டால்:
குடி அரசு - 19310) 78
உடனே இந்த மாதிரி பயந்தால் அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்கு கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்கின்ற விஷயத்திலும், அவர். சர்வ வியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் தங்களது மார்க்கம் அவரால் தான் ஏற்பட்டது என்கின்ற விஷயத்திலும் நம்பிக்கையிருக்கின்றதா. வென்பதை சற்று யோசித்துப் பாருங்கள். மனிதனுடைய அறிவிற்குப் பயப்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்குப் பயப்படும் மார்க்கமும், உலகத்தில் யாருக்கென்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும் ஆராய்ச்சி யையும் கண்டால் ஏன் இப்படிப் பயந்து ஓடுகின்றீர்கள்? ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காத காரணமே இன்று இந்தியா, உலகிலுள்ள நாடுகளி ளெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியர்கள் உலகிலுள்ள மக்களி ளெல்லாம் இழிவான மக்களாகவுமிருக்க வேண்டியதாகி விட்டது. கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை, மதம் என்றால் மூடநம்பிக்கை யென்கின்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைத் தவிர கடவுளுக்கும் மதத்
திற்கும் வேறு அவமானம் வேண்டியதேயில்லை. இந்த மாதிரி அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கின்வனை விடகடவுளையும், மதத்தையும் பற்றி கவலைப்படாதவனோ, இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்றவனோ வீரனென்றே நான் சொல்லுவேன். ஏனெனில் கவலைப்பட்டுக் கொண்டு உண்டு என்று சொல்லிக்கொண்டு மெய்பிக்க திண்டாடிக் கொண்டும் நடுங்கிக்கொண்டும் திரிவது பயங்காளித் தனமென்றே சொல்லுவேன்.
சகோதரர்களே! நாங்கள் வேலையில்லா வெட்டி ஆள்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டிதபுராண காலகேஷேபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில். ஏதாவது ஜீவனத்திற்கோ பெருமைக்கோ சிறிதாவது இதில் வழியுண்டா? நாங்கள் ஏன் எங்கள் சொந்த காசையும் நேரத்தையும் செலவு செய்து கொண்டு இந்த மாதிரி ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டு காசுக்குதவாத வெரும் ஆட்கள் எல்லாம் எங்களை வையும் படியாகவும் “சாபம்” கொடுக்கும்படி யாகவும், வெட்டுகின்றேன், குத்துகின்றேன் என்று மிரட்டவும், அவ்வள வையும் லட்சியம் செய்யாமலும், வந்ததுவரட்டும் நாம் செத்துப் போனால். நமக்குத்தானாகட்டும் மற்றும் யாருக்குத்தானாகட்டும் என்ன முழுகிப் போகும் என்கின்ற துணிவின் பேரில் வீட்டிலுள்ள வர்களிடம் கடைசிப் பயணம் சொல்லிக்கொண்டு வந்து, இந்த மாதிரி அலைவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள். இக் கூட்டத்திற்கு தலைமை வகித் திருக்கும் தலைவர் ஜனாப் தாவுத்ஷா பி.ஏ. அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எவ்வளவோ பாடுபடுகின்றவர். அவர் சப் மேஜிஸ் திரேட் உத்தியோகத்தை ராஜிநாமா கொடுத்தவர். ராஜிநாமாக் கொடுக்காமல் இப்போது அவர் உத்தியோகத்திலேயே இருந்திருப்பாரேயானால் இன்றையதினம் ஏதாவது ஒரு பெரிய பதவியில் இருப்பார். மாதம் 4000, 5000 சம்பளமுள்ள உத்தி யோகத்தில் இல்லாவிட்டாலும் மாதம் 900, 1000 ரூ. உத்தியோகத்திலாவது
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இருந்திருப்பார். அப்படிப்பட்டவர் ஏன் இந்த மாதிரி பாடுபடுகிறார் என்பதை யோசித்துப்பாருங்கள்.
இன்று உலகம் போகின்ற போக்கில் உலகமக்கள் அடைந்திருக்கின்ற முற்போக்கில் - நாகரீகத்தில் நாம் எந்த நிலையிலிருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.
நம் “அறிவாளிகள்” இன்று சாமி போச்சு, சமயம் போச்சு, சைவம் போச்சு, சாமியும் சைவமும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது என்ப தாக சிறிதும் வெட்கமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். நம்மைக் காப்பாற்ற ஏற்பட்ட சர்வ சக்தியுள்ள கடவுளை, நம்மை வாழ்விக்க ஏற்பட்ட பரிசுத்த சமயத்தை, நாம் காப்பாற்ற வேண்டிய அளவு நெருக்கடி யான சமயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தால், அது கடவுளுடையவும், சமயத்தினுடையவும் பலக்குறைவா? அல்லது அந்த மாதிரி சொல்லுகின்ற மக்களின் அறிவுக்குறைவா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். மனிதனுக்கு எப்படிச் சுயமரியாதை பிரதானமோ, அப்படியே கடவுளுக்கும், மார்க்கத்திற்கும்கூட சுயமரியாதை அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள். அப்படியானால் தங்களைக் காப்பாற்ற இந்த மாதிரி இத்தனை வக்காலத்து கொடுத்திருக்கும் அவைகளுக்கு சுயமரியாதை இருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள்.
சகோதரர்களே! ஐரோப்பாவின் “நோயாளியான” துருக்கியானது, ஆண்டவனுக்கும் மார்க்கத்திற்கும் வந்த நெருக்கடியைக் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்திருக்குமானால் இன்று அது இன்றைய மாதிரியில் இருந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப்பாருங்கள். கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் இருந்த ருஷீயா இன்று ஆண்ட வனையும், மார்க்கத் தையும், ஆதாரத்தையும் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்தால் அது இன்றைய நிலையை எந்தக்காலத்திற்காவது அடைய முடியுமா வென்பதை யோசித்துப்பாருங்கள்.
அதுபோலவே, சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கி லாந்தையும், அமெரிக்காவையும் நினைத்துப்பாருங்கள். எந்த நாட்டுக் கார னாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத்தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள் தனமானதும், பயனற்றதும், நாசவேலையானதுமான வேலையில் ஈடுபடுத்தியிருக்கின் றார்களா வென்பதை நடு நிலையிலிருந்து யோசித்துப்பாருங்கள்.
கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலை யாகும்? என்று நினைக்கிறீர்கள். அவர்களை விட பயங்காளிகள், அறிவிலி
கள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகின்றீர்கள். கடவுளுக்கும்,
சமயத்திற்கும் அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையு டையதாகவே ஆகாது.
குடி அரசு - 1931 () 80
ஆகவே நீங்கள் முதலில் அந்த பயத்தை ஒழியுங்கள். “சமாதை வணங்க வேண்டாம்” அதற்கு “பூசை செய்யவேண்டாம்” என்றால் உங்கள். மார்க்கம் போய்விடுமா? அப்படியானால், இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்துமத சம்மந்தமான கோவில்களெல்லாம் பெரிதும் சமாதுதான். அந்தக் கடவுள்களெல்லாம் அநேகமாய் அந்த செத்துப் போன ஆள்களேதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிபு. அதனால்தான் பல புண்ணிய ஸ்தலங்களும் பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று அதையொழிப்பதற்கு தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்க மாகும். இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும், அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடாதென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர் விரோத மாக நீங்கள் சமாதுகளை யெல்லாம் வணங்கவும் பூசிக்கவும், ஆரம்பித்து விட்டீர்களானால் நீங்கள் எப்படிமற்றவர்களை குற்றம் சொல்ல யோக்கியதை யுடையவர்களாவீர்கள்? அதுமாத்திரமல்லாமல், அல்லாசாமி பண்டிகை
யிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ்லாமானவர்கள் சிலர் நடந்து கொள்வது மிகவும் வெருக்கத்தகுந்ததாகும். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்கமென்றும், இயற்கை மார்க்க மென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்? என்பதை யோசித்துப்பாருங்கள். இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் அந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவுமார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்கமுடியவே முடியாது. அதோடு மாத்திர மல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டியாருக்கும் கூட இது அவமானமும் வசைச்சொல்லுமாகும் என்றே சொல்லுவேன். இன்று இந்து
வும், கிருஸ்தவரும் பகுத்தறிவைக்கண்டால் பயப்படுகின்றார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று ரூபிக்க பந்தயம் கட்ட வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட அதாவது சமாது வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்டமக்களை ஏராளமாய் வைதுக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர். களையும் வைத்துக்கொண்டு இஸ்லாம் மார்க்கம், பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்லிக்கொள்வதென்பது எனக்குத்தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள்,இவைகளைக் கொண்ட இஸ்லாம்மார்க்கம் பகுத்தறிவு மார்க்க மாகுமா? கோபிப்பதில் பயனில்லை. இந்து மதம் என்பதை விட,கிருஸ்துமதம் என்பதை விட இஸ்லாம் மதம் என்பது மேலானது என்பது எனதபிப்பிராயம் என்று எங்கும் சொல்லுவேன். ஆனால் அதில் இனி சிறிது கூட சீர் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பவர்களுடன் நான் சிறிது பலமாக முரண்பட்டவனே யாவேன். ஏனெனில் நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகின்றேன். அதுவும் இன்று இஸ்லாம் மார்க்கத்தார் என்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் அனுஷ்டித்து வரும்- நடந்து
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
வரும் கொள்கைகள். இஸ்லாம் மார்க்க கொள்கைகள் என்றால் ஆண்: பெண் இரு துறையிலும் சீர்திருத்தம் செய்யவேண்டிய சங்கதி பல இருக்கின்ற தென்று தைரியமாய்ச் சொல்லுவேன். நீங்களும் அவற்றை சீர்திருத்த வழி தேடுங்கள். அவற்றை நிலைக்க வைக்க ஆதாரத்தை தேடாதேயுங்கள். மனிதனின் நன்மைக்கும் செளகரியத்திற்கும் மார்க்கம் ஏற்பட்டதென்று கருதி தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஓத்திட்டுப் பாருங்கள். எக்காலத்திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றபடி தானாகவே மாறவோ, மாற்றிக் கொள்ளவோ செளகரிய மிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள். இருட்டானால் விளக்கைப்பற்ற வைத்துக் கொள்ளுங்கள், பகலானால் விளக்கை அணைத்து விடுங்கள் என்றுதான் பகுத்தறிவுள்ள
மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கு வைத்திருக்காதீர்கள் என்றோ, சொல்லி இருக்க முடியாது. ஆகவே, காலப் போக்குடன் கலந்து கொள்ள பயப்படாதீர்கள். இந்தியாவுக்கு இரண்டுமதம் சொந்தமாய்விட்டது. அதாவது இந்துமதம் இஸ்லாமிய மதம் இரண்டும் ஒன்றுபட்டாலொழிய இந்தியாவுக்கு விடுதலை: இல்லை. ஒருவர் மதத்திற்கு ஒருவர் வர வேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது. இருவரும் பகுத்தறிவுப்படி நடந்துகொள்ளலாம் என்றால், யாருக்கும் ஆக்ஷபனை இருக்க வழியிருக்காது. தங்கள் மதம் பகுத்த
நிவுக்கு ஏற்றதாய்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள். எடக்குப்பேசித்தான் தீருவார்கள். அவர்கள் அதன் பயனை அடைந்துதான் தீருவார்கள். இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும், பூரண விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக்கொள்ளத்தான் உதவும். இதுவரை பொதுவாகப் பேசினேன், கடைசியாக இந்துகளுக்கென்று சில. வார்த்தை பேசுகின்றேன். ஏனெனில் நானும் சில நண்பர்களும் சாப்பிட்ட
தற்குப் பிறகு ஒரு நண்பர் இந்தஊர் கோவில் தேரையும், கோபுரத்தையும் வந்து பார்க்கும்படி கூப்பிட்டார். நாங்கள் பார்ப்பதற்காக அங்கு சென்றோம். பிறகு அங்கு பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. காட்டு மிராண்டிகள் காலத்தில்தான் சாமி களும் கோவில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராலும் மறுக்கமுடியாத படி அவைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
முதலாவது நாங்கள் இந்த ஊர்தேரைப் பார்த்தோம். அதில் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் மிகமிக ஆபாசமானவையாய் காணப் பட்டன. அவைகளுக்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதானாலும், மனிதப்பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலும் இது போன்ற
மற்றும் பல உருவங்களை சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒப்புக் கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை. கோபுரங்களைப் பார்த்ததைப்
பற்றிச் சொல்லலாம் என்றாலோ அவற்றைப்பற்றி இன்னும் ஒரு உவை நினைப்பதற்குக்கூட கஷ்டமாய் இருக்கின்றது. பெண்களை அதில்
குடி அரசு - 19310) 82
படுத்துகின்ற பாடும், காம விகாரங்களை அதில் எடுத்துக்காட்டி இருக்கும் முறையும் அநியாயம், அநியாயம். இவைகளையெல்லாம் நெருப்புவைத்துக் கொளுத்தி இடித்து எறிந்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல் லாம் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்துவிட்டாலொழிய இதைச் சேர்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.
“சுயமரியாதைகாரர்கள் புராணக் குப்பைகளைக் கிளரிக்கிளரி வெரும் ஆபாசங்களைப் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள்” என்று பேசு கின்றீர்கள். எங்கள்மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளுகின்றீர்கள்.
ஆனால் இந்த கோவில்களுக்குப்போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து காசும் கொடுத்து இந்த உருவங்களைப்பார்க்க வந்துகொண்டி ருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிதுகூட சிந்திப்ப தில்லை. நாங்கள் எழுதுவதையும் பேசுவதையும் பார்த்து வெறுப்புக் கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக் கைகள் நின்றதா? நிருத்த யாராவது பாடுபட்டீர்களா? காரமடைத்தேரில் இதைவிட அசிங்கமாகப்பார்த்தேன். திருவொற்றியூரில் வெகு ஆபாசமாய்ப் பார்த்தேன். மதுரை முதலிய இடம் சொல்லவே வேண்டியதில்லை.ஆனால் இந்த ஊர் கோபுரம் எல்லாவற்றையும் மீறி விட்டது. இதுவரை நாங்கள். எழுதாத, பேசாத நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. எல்லாம் சாமிகளாகவும்ரிஷிகளாகவும், முனிவர் களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றன. இதையெல்லாம் பற்றி அன்னிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ணமாட்டார்களா? கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய் விட்டது. இதை நிறுத்தவேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இதுவரை சமயதிருத்தக்காரரும் சமூக திருத்தக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்கு பணம் படைத்த மூடர்களும் யோக்கியப் பொருப்பற்றவர்களும் இந்த சித்திரங்களுக்கு சாயம் அடித்து ரிப்பேர் செய் கின்றார்களே. அவர். களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை. சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் ஊரார் பணத்தை ஏழைகள் பணத்தை கொள்ளை அடித்து அவர்களைப் பட்டினிபோட்டுவிட்டு இந்த மாதிரி மிருக மனிதப் புணர்ச்சிகளுக்கு பொம்மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர் பிடித்ததுமான காரியமாகும் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்த லக்ஷணத்தில் நாங்கள் இந்த கோவிலுக்குள் புகுந்துவிடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்ற
தாம். நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவில்காரர்கள் எல்லாம் இப்படியேதான் செய்கின்றார்கள். ஆகவே இந்துக்கள், சமயவாதி
கள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின்றேன்- இந்த இந்துமதத்தை இன்னமும்
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
எத்தனை நாளைக்குத்தான் காப்பாற்றப் போகின்றீர்கள்? என்று கேட்கின் றேன். மதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. வருத்தப்பட்டுப் பயனில்லை, வெட்கப்பட வேண்டும். அப்போதுதான் அறிவு, ஒழுக்கம், நாகரீகம் விளங்கும். ஆகவே சகோதரர்களே! இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப்பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளற்ற கூப்பாடு போடுவதால் பயன் விளையாது. இனியும் இந்தமாதிரி குஷ்டவியாதி வந்த சரீரமாதிரி இந்த சமுகம் நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு:திருநெல்வேவிமாவட்ட களக்காட்டில் நடைபெற்ற ஐக்கியமுஸ்லீம் சங்கமாநாட்டின் இரண்டாம் நாளில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 01.02.1931
குடி அரசு - 19310) 84
சட்டசபையில் எணது GunIueID
சென்ற சில ஆண்டுகளில் மாதர் முற்போக்கு எவ்வளவு முன்னேறி யிருக்கிற தென்பதும் தங்கள் தற்கால நிலையறிந்து தங்கள் உரிமைகளைப் பெற எவ்வாறு முனைந்து நிற்கின்றனரென்பதற்கும் சமீபத்தில் நடைபெற்ற மாதர் மகாநாடுகளும், அவைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுமே போதிய சான்று கூறும். இந்தியாவிலேயே முதன் முதல் சட்டசபையில் ஸ்தானம் பெற்ற பெண் அங்கத்தினர் ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மையாரே யாகும். அதிலும் உபதலைவர் பதவி பெற்றது போற்றற்குறியதேயாகும்.
அம்மையார் அவர்கள் தனது சட்டசபை அநுபவத்தை ( ஆங்கிலத்
தில்) எழுதி பிரசுரித்துள்ள பிரதி ஒன்று வரப்பெற்றோம். இதில் தான் பதவி வகித்து வந்த காலத்தில் தான் கொண்டுபோன தீர்மானங்களின் விபரமும் அதையொட்டிய விவாதங்களும் சர்க்கார் தரப்பு பதிலும் அவை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட விபரமும் செவ்வனே விளக்கப்பட்டுள்ளது. தேவதாசி மசோதாவுக்கும் விபசார விடுதியொழிப்பு சட்டத்திற்கும் இருந்த எதிர்ப்புப் பல. அதன் முழு விபரங்கள் இதில் காணப்படுகின்றன. இதை முற்றும் படித்த வர்களுக்கு பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராடுவதில் எவ்விதத் திலும் ஆண்களைவிட இளைத்தவர்களல்ல என்பதும்:-
ஆனால் தகுதியுடையவர்களே யென்பதும் விளங்கும். இதன் ஆசிரியை விரும்புவதே போல் குடும்ப நிர்வாகத்திற்கு பெண்களின் கூட்டுரவு எவ்வளவு அவசியமோ அதேபோல் தேச பரிபாலனத்திற்கும், அவர்கள் ஒத்துழைப்பும், உதவியுமவசியமென்பது புலப்படும். இப்புத்தகம் 247 பக்கம் கொண்டது. புஸ்தகம் 1க்கு விலை ரூ. 2-0-0. வேண்டுவோர் அவ்வம்மையாருக்கு எழுதவும்.
குடி அரசு - மதிப்புரை - 01.02.1931
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கிறேநகரில் ஆதிதிராவிடர் ஆண்டுவிழா
. S 0o oy
சகோதரிகளே! சகோதரர்களே!
சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத்
தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என் கிறோமோ எது எது உண்மையான - இயற்கையான சமரச சன்மார்க்க மென்று கருதுகின்றோமா அவற்றிற்கு நேர் விரோதமாகவேமனித வாழ்க்கை அமைக் கப்பட்டிருக்கின்றது. இது நமதுநாட்டில் மட்டும் அல்ல உலக முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப்போயிற்று. ஆனால் நமது நாட்டில் மற்ற நாடுகளைவிட வெகு தூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப் பட்டு விட்டது.
முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்க மல்லாமல் நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டி ருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களா லோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில் அவை ஒன்றுக் கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல் சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.
ஆகையால் நான் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேசவேண்டு மானால் அவைகள் சம்மந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச சன்மார்க்கம் என்று சொல்ல வேண்டியதாயிருக் கின்றது. இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகின்றேன். நான் உண்மை யான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமூகத்தார், அடைந்த தனிமனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்.
குடி அரசு - 19310) 86
எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன் மார்க்கம் அடைந்தார்கள் - அடைகின்றார்கள் - அடைய முழற்சிக்கின்றார்
கள். இவைகளில் சிறிது தாட்சண்யப்பட்ட வர்கள் கூட தோல்வியே யடைந்து விட்டார்கள்.
உதாரணமாக கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் ௬ுஷியர்கள், பாதிரி மார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத்தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ரஷிய சரித்திரத்தில் சமரசத்திற்கு பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்து விட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை அதாவது சமரசத்திற்கு எதிர்பிரசாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களை பட்டாளத்தில் சேரச் செய்தார்
கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட் டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்க போட்
டார்கள். அது போலவே சர்ச்சுகளை தொழிற்சாலை பள்ளிக்கூடம் முதலிய வைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாமல் போக்குவரவுக்கும், மற்ற செளகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள். பணக்காரர்கள் சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்: களுக்கு பூமி, தொழிலில்லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாதவர்களுக்கு படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தினார்கள். கல்யாண முறையை ஒழித்து பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச் செய்து அளவுபடுத்தி ஆண் பெண் வாழ்க்கை இன்பத்திற்கு செளகரியம் செய்தார்கள். இன்னும் பல காரியங்கள் செய்தார்கள். ஆனால் நமக்கு இவை பொருந்துமா என்று
சிலர் கேட்பார்கள்? யார் கேட்பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி, உயர்ந்த ஜாதிக்காரன், அரசன் ஆகியவர்கள் தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். மற்றவர்கள்.
100க்கு 90 க்கு மேற்பட்டவர்களாவார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள் அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள்: இருக்கவேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்? முதலா வது உங்களைக் கேட்கின்றேன். நீங்கள் இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகின் நிர்களா? இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றீர்களா? என்ன சொல்லு கின்றீர்கள்? (சிரிப்பு ஆகவே இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படு
வார்கள். ஆனால் நமக்கு இன்றே அம்மூன்றும் ஒழிய வேண்டும் என்கின்ற
ஆத்திரமுமில்லை. ஏனெனில் இன்னும் அநேக நாடுகள் இருக் கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்
தில் அந்த முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால் இங்கு மற்றநாட்டில் இல்லாததான ஜாதி உயர்வு தாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆகவேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்மபலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை. சகோதரர்
களே!நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும் , மதத் திற்கும், கடவுளுக்கும் எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள் என்பதை யோசித்துப்: பாருங்கள். என்னபலன் அடைந்திருக்கின்றீர்கள்? இந்த நிலைமையில்: உங்கள் ஆயுள்காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுகின்றீர்களா? இன்றைய நிலைமையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லக்ஷியம் என்று கருதுவீர்களானால் நீங்கள் எதற்காக நாளைய தினம் வரையில்கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள். என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லக்ஷியமோ இருக்க வேண்டும். சும்மா அறைத்த மாவை அறைத்துக்கொண்டிருப்பது போல் வெரும் ஆகாரம் உட் கொள்ள
வும், உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன வுணர்ச்சியும், ஞானமுமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதே. இது போதாதா? இனி மனிதன் என்றும், ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும் பணக்காரன் என்றும், கடவுளை கண்டு பிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கின்றேன். இதைப்போன்ற அறிவீனமும் அவமானமும் ஆன காரியம் மனித சமூகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமூகம் அழிந்துபோவது ஜீவகாருண்ணியத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது.
ஆகவே உங்கள் லக்ஷியங்களை முடிவுசெய்து கொள்ளுங்கள். அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள் அதை மற்றொரு ஜன்மத் திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜன்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜன்மம் என்னும் புரட்டை கற்பித்திருக்கின் றார்கள். முன் ஜன்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த் துண்டாவது உங்களுக்கு இந்த ஜன்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜன்ம காரியங்களின் செய்கைகளோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜன்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்து விட்டார் என்று முட்டாள். தனமாய்க் கருதி உங்கள் கஷ்டத்தை நிலைநிருத்தி உங்கள் சந்ததிகளுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச்சியும் அறிவும் அற்ற சோம்பேறிக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அதுசிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேரி யாகின்றீர்கள் - கடவுளுக்கு இடம் கொடுத்து கோயில்கட்டி உறுப்படிகளை அதிகமாக்கி நமது குறைகளையும் கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுது வந்ததுபோதும் என்றே
குடி அரசு - 19310) 88
சொல்லுகின்றேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள் உங்கள் அறிவையும் மனிதத்தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லு கின்றபடி நடவுங்கள். உங்கள் பொருப்பை அதின் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள். அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களை சரியான வழியில் செலுத்தும். “கடவுளை”ப்போல் அவ்வளவு மோசமும், புரட்டும், ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்தமானங்களும் உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்தமானங் களை உணர்ந்து நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்கு பூசை போட்டீர்களானால் வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை! இதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.
தவிர பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்ல வேண்டி யிருக்கின்றது. அதை சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரன்
கீழ் ஜாதிக்காரனை நடத்துவதை விட, பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.
அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்மந்தமேற்படும் சமயங்களில்: மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின்றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள். அதுவும் நமது நாட்டில் மிகவும் மோசமாய் நடத்துகின்றார்கள். அந்த ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருக பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும். நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளால் வளர்க்கப்: பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்; எத்தனைக் கிழவ னானாலும் எனக்கு பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டு அனுபவிப் பேன்; ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன்தான் கட்டிக்கொள்ள வேண்டும். அவன்செத்துப்போனாலும் புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு: ஆண் பெண் சேர்ந்து அனுபவிக்கும் இன்பம் என்பதாக ஒரு குணம் உண்டு என்பதை மறந்து விடவேண்டும் என்று விதி ஏற்படுத் தப்பட்டிருக்கின்றது. இதற்கும் கடவுள், மதம், முன்ஜன்மப் பலன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக் கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும்
இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக் கொள்ளலாம் என்றும், பெண்:
கள் அப்படி மாற்றிக்கொள்ள நினைப்பது சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக்கின்றது. ஆண்களைப் போலவே பெண்கள் செய்யத் தயாராக வேண்டும் ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள்
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படிச் சொல்லுவது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும் ஆண்களுக்கு எவ்வளவு வேண்டு மானாலும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்கு
புத்தி அநேககாலமாக சொல்லியாய் விட்டது. கல்யாணம் செய்து கொள்ளு வதே அடிமைப் பிரவேசம் என்றாய்விட்டது. ஒரு மனிதனாவது இவர்கள் சொல்லுகிறபடி யோக்கியனாகவில்லை.
ஆகவேஅது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறுமார்க் கத்தை கடைபிடிக்க வேண்டியதாய் விட்டது. இதுவரையில் ஆண்கள் பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம்; பலனேற்படவில்லை என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம் சென்று இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி.அடியுங்கள் என்று சொல்லுகின்றோம். இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இது போல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்லுகின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்டம் இல்லாதவர்கள் கல்யாணத்தை
ரத்து செய்து கொண்டு தனித்தனி வாழட்டும். இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும். பயப்படக் கூடாது. பெண்கள் தங்கள். வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும். முக்கியமாய் கண்டபடி கணக்கு வழக்கில் லாமல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. இதில் அதிக ஞாபகம் இருக்கவேண்டும். பிள்ளை பெறுவது கடவுள் செயல் என்றும், அது பாக் கியத்தில் ஒன்றென்றும் கருதிக்கொண்டு, முட்டாள் தனமாய் மக்கள் கஷ்டப் படுகின்றார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது 16 பிள்ளைகள் பிறக்க வேண்டு மென்று ஆசீர்வாதம் செய்கின்றார்கள். இது அவர்கள் சொல்லுகின்றபடியே நடக்கும் என்று பயந்து கொண்டு நான் பேசவரவில்லை. ஆனால் இப்படி ஆசீர்வாதம் செய்வது எவ்வளவு முட்டாள் தனமும் பொருப்பற்ற தன்மையும் என்று சற்று யோசித்துப்பாருங்கள்.
ஆகவே இந்தக் காரியத்தில் எத்தனைக்கெத்தனை ஜாக்கிரதை யாயிருந்து கண்டபடி பிள்ளைபெறாமல் தப்பித்துக் கொள்ளுகின்றீர்களோ: அத்தனைக்கத்தனை கவலையும் தொல்லையும் ஒழிந்து சுதந்திரமும் விடுதலையும் அடைந்தவர்களாவீர்கள். எவனோ தெரிவில் போகின்றவன் “இப்படிச் சொல்வதால்” ஒரு சமயம் எல்லோருமே பிள்ளை பெறாமல்: இருந்து விட்டால் உலகம் விர்த்தியாவது எப்படி என்பான். இப்படிப்பட்ட வன் சுத்த மூடன் என்று தான் அருத்தம். உலகம் விர்த்தியாவதற்காக மனிதன் பல குட்டிகள் போட்டு தொல்லைப்படவேண்டுமா? நாய், பன்றி, கழுதை,
குடி அரசு - 19310) 90
குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம் பட்சி ஊர்வன முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளுக்கும் பொறிக்கும் குஞ்சுகளும் பீச்சும் குஞ்சுகளும் போதாதா என்று கேட்கின்றேன்.
வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக்காதீர்கள். ஓவ் வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள் அபிப்பிராயப்படி எதை
யும் முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.
குறிப்பு - ஈரோடு பெருந்துறையை அடுத்த கிரே நகரில் 26.011931அன்று
நடைபெற்ற ஆதிதிராவிட ஆண்டுமாநாட்டில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 08.02.1931
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஊணஙநாமாகம
சின்னா பின்னப்பட்டு சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜன நாயகம் என்பது அதாவது அந்த ஜனங்களாலேயே அந்த சமூகத்தை ஆட்சி செய்து, முற்போக்கடையச் செய்வது என்பது முடியவே முடியாது. இன்னும் விளக்கமாய்ச் சொல்வதானால், அதாவது, பல மதமாய், பல ஜாதியாய்,பல வகுப்பாய், பல லக்ஷியமாய் பிரிந்து சராசரி 100க்கு 10 பேருக்கு கூட கல்வியறிவில்லாமல் இருக்கும் இந்தியாவுக்கு, இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்பதேயாகும்.
இந்த அபிப்பிராயம், நாம் மாத்திரம் சொல்வதாக மக்கள் கருதினாலும் நமக்கு ஆக்ஷபணையில்லை. ஆனாலும் அறிஞர்களும், அனுபவ சாலிகளுமான அநேகர் இதே அபிப்பிராயம் கொண்டிருப்பதை நாம் கேட்டு மிருக்கின்றோம்.
அன்றியும் இந்த நமது மேல் கண்ட அபிப்பிராயத்தை நிரூபிக்க இதற்கு முன் பல ஆதாரங்களை நாம் எடுத்து காட்டியும் இருக்கின்றோம். ஆணாலும், இப்போது கிடைத்த இரண்டொன்றையும் எடுத்துக்காட்டு வோம். அதாவது:-
இந்திய நாட்டிலுள்ள மனித சமூகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தீண்டா தவர்களாக- மனிதர்களால் தொடக்கூடாதவர்களாக-அநேக விஷயங்களில் மனித உரிமைகளை அனுபவிக்கக் கூடாதவர்களாக - தெருவில் நடக்கவோ, குளத்தில் தண்ணீர் அருந்தவோ பொதுக்கோயில், மடம், சத்திரம், சாவடி என்பவைகளில் பிரவேசிக்கவோ சில பொது இடங்களில் சென்று படிக் கவோ, சில பொது இடங்களில் சென்று கூலிவேலை, உத்தி யோகம் முதலிய வைகள் செய்யவோ தடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்ட வர்களாகயிருக்கின்றார்கள் என்பதில் சிறிதும் ஆகேஷபணையே இல்லை என்பது உலக மறிந்த விஷயமாகும். ஒரு சமயம் 6 கோடி என்கின்ற எண்ணிக்கையில் சிறிது வித்தியாசமிருப்பதாக யாராவது சொல்லியிருக்க லாமே அல்லாமல், இந்த மாதிரி கொடுமைப் படுத்தப்பட்ட மனித சமூகம் இந்தியாவில், இந்துக்கள் என்பவர்களுக்குள் இல்லை என்று யாரும் சொன்ன தேயில்லை.
குடி அரசு - 19310) 92
ஆகவே, சற்றேறக் குறைய இந்துக்கள் என்பவர்களில் 3-ல் 1-பங்கு ஜனங்கள், இந்த நிலையில் வெகுகாலமாய் இருந்து வருகின்றதையறிந்தும், இவர்களுக்கு எவ்வித விடுதலையும் இல்லாமலேயே இப்படிச் செய்யப் பட்ட கூட்டாத்தாராலேயே, இந்தியாவுக்கு ஜனநாயக ஆட்சி கேட்டுக் கொண்டு
வரப்படுகின்றது.
ஜனநாயக ஆட்சி “வழியில்” சுமார் 20, 30 வருஷகாலமாக நடக்க சந்தர்ப்பம் கிடைத்து மிக்க நெருக்கமான வழி என்பதிலாவது நடந்து வந்தும், இன்று வரை இந்தமாதிரி ஜனநாயக தத்துவம், இந்த 6 கோடி மக்கள் கொண்ட சமூகத்திற்கு ஒரு காரியமும் செய்ய முன்வரவேயில்லை. வேறு யாராவது அவர்களுக்கு ஏதாவது செய்வதாயிருந்தாலும் எந்தக் காரியத்திற்கும் இவர்கள் சம்மதிப்பதும் இல்லை.இவர்களை மீறி ஏதாவது சிறிது நடந்தாலும்,
நடப்பதாயிருந்தாலும் அது இந்திய ஜனநாயகத்தின் தத்துவத்தின் பலனா யில்லாமல், பிரிட்டிஷ் தனி நாயகத்தின் தயவால் என்றே சொல்லும் படியாகவே நடந்து வந்திருக்கின்றன. வந்துகொண்டே யிருக்கின்றன.
மற்றும், இந்தமாதிரி தாழ்த்தப்பட்டு கொடுமை செய்யப்பட்ட 6 கோடி சமூகமானது இன்றையத்தினம் எங்காவது, ஏதாவது ஒருவித செளக ரியத்தை வழக்கத்திற்கு விரோதமாய் அனுபவிக்கிறார்கள் என்று சொல்லப் படு மானால், அது ஜனநாயகத் தடையையும் பலத்தையும் மீறி, ஜன நாயகத்தை தனிநாயகம் தோற்கடித்த, ஆதிக்கம் செலுத்தியதின் பயனாய் நடக்கின்றதே யல்லாமல் வேறில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம். வெளிப்படை யாய்ச் சொல்லவேண்டுமானால் பார்ப்பாருக்கோ, சைவருக்கோ, சைவ வேளாளருக்கோ மற்றும் தங்களை “பிரம்ம, க்ஷத்திரிய வைசிய சற்சூத்திர” என்று எண்ணிக்கொண்டிருக்கும் மேல் ஜாதிக்கோ இந்த வெள்ளைக்கார அரசாங்கம் “எமனாக”த்தோன்றியபோதிலும், மேல் கண்ட கொடுமை களை
யும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடுமைப். படுத்தப்பட்ட 6 கோடி மக்களுக்கு, இந்த வெள்ளைக்கார அரசாங்கம் “சர்வ தயாபரரும், காருண்ய மூர்த்தியுமான கடவுளால்” அனுப்பப்பட்டது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதில் சந்தேகமும் இல்லை. அதில் ஒரு அதிசயமும் இல்லை.
அன்றியும், இன்று இனியும் கேட்கப்படும் ஜனநாயக சுதந்திரங்கள் கூட மேற்கண்ட தாழ்த்தப்பட்டு கொடுமை செய்யப்பட்டமக்களை இனியும் தலையெடுக்க வொட்டாமல் செய்யவேண்டும் என்கின்ற ஆசையைக் கொண்டு தான் கேட்கப்படுகின்றது என்பதை மறுக்கவோ, ஆக்ஷபணை சொல்லவோ போதிய காரணம் கிடையாதென்றே தைரியமாய்ச் சொல்லு வோம். இன்று அவர்கள் அனுபவிக்கும் தொல்லைகளில் முக்கியமானது என்னவென்றால், மற்ற மக்களைப்போல் விகிதாசாரம் தாங்கள் படிக்க முடியாதது, மற்றமக்களைப் போல் தங்கள் விகிதாசாரம் தாங்கள் சம்பாதிக்க முடியாதது, மற்றமக்களைப்போல் தங்கள் விகிதாசாரம் அரசியல்
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுதந்திரங்களை அனுபவிக்க உத்தியோக வகையரா பெற முடியாதது முதலியவைகளாகும். இந்தமூன்றும் எந்த ஜனநாயக ஆக்ஷி யிலாவது, ஏதாவது ஒரு பரிகாரத்திற்கு இடம் இருக்கின்றதா? என்று பார்த்தால், பரிகாரம் கேட்பதே தேசத்துரோகமாகவும் ஜனநாயக தத்துவத்திற்கு விரோதமாகவும் பாவிக்கப்படுகின்றது. இதைப்பற்றி யாரும், எந்த ஜன நாயக வாதியும், தேசீய வாதியும் வெட்கப்படுவது கூட கிடையாது. இந்த நிலையைப் போல ஒரு மானக்கேடான காரியம் இந்த நாட்டுக்கு வேறு ஒன்றுமே கிடையாது என்று சொல்லுவோம். அரசியல் சீர்திருத்தம் அதிகமாய் வழங்குவதற்காக என்று இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சைமன் கமிஷனை, இந்த நாட்டில் 100க்கு
99 4],பார்ப்பனரும் ஆக்ஷ்பித்து பகிஷ்கரிக்க வேண்டுமென்றார்கள். சில பார்ப்பனரல்லாத சோணகிரிகளும் அவர்களை பின்பற்றினார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட வர்களில் எல்லோருமே சைமன் கமிஷனை வரவேற்று, ஆதரித்து தங்கள் குறைகளைச் சொல்லிக் கொண்: டார்கள். பகிஷ்கரித்தவர்கள் யோக்கியதையையும், ஆதரித்தவர்கள் அடைந்த பலனையும் இப்போது கவனித்துப் பார்த்தால், பகிஷ்காரக்கூச்சல். போட்டவர்கள் தங்கள் சமூக நலனுக்கும் ஆதரித்தவர்கள் தங்கள் விடுதலைக்குமாக நடந்து கொண்டார்கள் என்பது விளக்கமாகும். சைமன் கமிஷனை ஆதரித்து, தங்கள் குறைகளைச் சொல்லிக்கொண்ட தாழ்த்தப் பட்டவகுப்பார்களின் பிரதிநிதிகளாக லண்டனுக்குச்சென்ற திருவாளர்கள் டாக்டர் அம்பரிட்கார், ராவ் சாஹிப் சீனிவாசன் ஆகிய இரு கனவான்களும் வெளியிட்டிருக்கும் ஒரு யாதாஸ்துப்படியும் றாவ்சாஹிப் சீனிவாசன் அவர்
கள் லண்டனிலிருந்து தங்கள் வகுப்பாருக்கு அறிவித்திருக்கும் கம்பி யில்லாத் தந்தியி லிருந்தும் நாம் அறிவது என்னவென்றால்,
அவர்கள் தங்கள் யாதாஸ்தில் கண்டிருப்பதானது:-
தங்களுக்கு இந்நாட்டின் சமத்துவமான நகரவாழ்க்கை சுதந்திரம் கிடைப்பதற்கு அடியில் கண்ட திட்டங்களை சட்டமாக ஆக்கச்செய்யப்பட வேண்டுமென்றும்,
பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்களுடைய மற்ற குடி ஜனங்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை, யாதொரு தடையுமில்லாமல் தங்களுக்கும் கொடுக்க வேண்டும். அவைகள் எந்த முறையில் இருக்கவேண்டுமென் றால், மற்றவர்கள் பொதுவாக எல்லாக் காரியங்களிலும் அனுபவிக்கும் சுதந்திரங் களை போலவே உதாரணமாக பொதுசத்திரங்கள், மடங்கள், பள்ளிக் கூடங்கள், ரோட்டுகள், குளங்கள், கிணறுகள், இதர தண்ணீர் துறைகள் முதலாகியவைகளிலும், தரையிலாவது, தண்ணீரிலாவது, ஆகாயத்திலாவது செல்லும் வாகனங்கள், நாடக சாலைகள், பொது இளைப்பாரும் இடங்கள், சந்தோஷ விளையாட்டு, களியாட்டு இடங்கள் முதலிய இடங்கள் ஆகியவை
கள் எந்த முறையில் நடத்தப்பட்டாலும், அவைகளில் சென்று, அவற்றின் பலனையும், செளகரியத்தையும், மற்ற குடிஜனங்கள் அனுபவிப்பது போல்
குடி அரசு - 19310) 94
தாங்களும் அனுபவிக்க தாராளமான உரிமைகள் இருக்க வேண்டும் என்றும்,
அவ்வித சுதந்திரங்களை யாராவது தடுத்தால் அப்படித் தடுப்பவர் களை 5 வருஷ காலம்வரை தண்டிக்கத் தகுந்தபடி சட்டத்தில் விதிகள் இருக்க
வேண்டும் என்றும்,
மேல்கண்ட நிபந்தனைகளுக்கு விரோதமாய் நடக்கும் முறையில், தங்களை யாராவது, எந்தக் காரியத்திலாவது பஹிஷ்காரம் செய்தால் அல்லது
செய்யும்படி தூண்டினால், அப்படிப்பட்ட கூட்டத்தார்களையோ, தனி மனிதர்களையோ, முறையே 7 வருஷம் 5 வருஷகாலம் வரை தண்டிக்கவோ, அல்லது தகுந்த அபராதம் விதிக்கவோ அல்லது இரண்டும் செய்யவோ விதிகள் செய்யவேண்டும் என்றும்,
மற்ற சமூகத்தாருக்கு இருப்பது போல், மற்றவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், சாக்ஷி கொடுக்கவும், சொத்துக்களை வாங்கவும், விற்க
வும், குத்தகைக்கு விடவும், குத்தகை வசூலிக்கவும், சொத்துக்களை சுதந்திர
மாய் அனுபவிக்கவும்,
சர்க்கார் நிர்வாகம், ராணுவம் ஆகிய துறைகளிரண்டிலும் மற்ற ஜனங்களைப் போலவே, தாங்களும் உத்தியோகங்களை தாராளமாய் வகிக்க
வும், எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் சேர்ந்து வாசிப்பதற்கும்,
தெரிந்தெடுக்கப்படும் ஸ்தாபனங்களில் தங்கள் சமூகத்தினரின் மொத்த எண்ணிக்கைக்குச் சரியான பிரதிநிதித்துவம் இருக்கவும்,
கோயில்கள், பொது மடங்கள், சத்திரங்கள் ஆகியவைகளின் சொத் துக்களை மற்றவர்கள் அனுபவிப்பது போலவே தாங்களும் அனுபவிக்கவும்,
தங்கள் உரிமைகளை காப்பாற்றிக்கொள்ளும் விஷயத்தில் மற்றவர் களுக்கு இருக்கும் சுதந்திரங்கள் செளகரியங்கள் தங்களுக்கும் இருக்கவும்,
குற்றங்களுக்கு தண்டனைகள் விதிப்பதில் கொஞ்சமும் வித்தியாச மில்லாமல் இருக்கவும், கண்டிப்பான சட்டவிதிகள் செய்யப்பட வேண்டும்.
மற்றும், தங்கள் சமூக எண்ணிக்கைக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிப்பதும், தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தெரிந்தெடுக்கவும்,
முதல் 10 வருஷத்திற்கு தனித் தேர்தல் முறை அளிக்கவும்,
பிறகு சாத்தியப்பட்டால், பொதுத் தேர்தலில் சேர்த்துக்கொள்ள வசதி செய்து கொள்ளவும்,
பொதுத்தேர்தல் முறையை தங்கள் வகுப்பார் ஆக்ஷபித்தால் அவர்களை நிர்பந்தப்படுத்தாமல் இருக்கவும்,
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
உத்தியோகத் தெரிந்தெடுப்பில், தங்கள் வகுப்பில் வீதாச்சாரம் தெரிந் தெடுக்கவும்,
உத்தியோகங்களில், இப்போது இதர ஜாதிகள் எத்தனை விகிதாச் சாரம் இருக்கின்றார்களோ, அத்தனை பேர்கள் வீதாச்சாரம் வீதம், தங்கள் சமூகத் தாரும் உடனே வந்து சேர்ந்து உத்தியோகம் அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டியதும்,
இந்தக் காரியங்களுக்காக ஏற்படுத்தப்பட்டச் சட்டங்களை, எந்த மாகாணமாவது சரியான படி அமுலில் கொண்டுவரவில்லையானால், கவர்னர் ஜனரல் சபையிடம் அப்பீல் செய்துகொள்ள உரிமையிருக்கவும், அப்படிப் பட்ட அப்பீலின் மீது, கவர்னர் ஜனரல் உடனே பிரவேசித்து மேல்படி சட் டத்தை சரியானபடி நடத்திவைக்கப் பாதுகாப்புகளும் இருக்கவேண்டும்.
கடைசியாக, இந்த சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டு இது அமுலுக்கு வரும் போது, இதற்காக அதாவது இவை ஒழுங்காக நடைபெற இதற்கென்றே ஒரு தனி இலாகா ஏற்படுத்தி, அதற்காக ஒரு தனி மந்திரியையும் ஏற்பாடு செய்யவேண்டும். அவர் மத்திய சபையின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருக்கவேண்டியதோடு பாரபக்ஷமில்லாமல் நடந்துகொள்ளக்கூடிய சுதந்திர
மும், தன்மையுமுடையவராகவும் இருக்க வேண்டும்.
மாகாண நிர்வாகசபைகளிலும், மத்திய அரசாங்கநிர்வாக சபையிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஸ்தானம் பெறத்தக்க முயற்சியும், ஏற்பாடும் செய்ய கவர்னருக்கும் கவர்னர் ஜனரலுக்கும் சட்டப்பூர்வமான வசதிகள் இருக்க வேண்டும் என்பவைகளாகும்.
இந்தப்படியான ஒரு யாதாஸ்தை வட்ட மேஜையில் ஆஜர் செய் திருக்கின்றார்கள்.
நிற்க, மேற்கண்ட இந்த யாதாஸ்துக்கு அதாவது இந்தப்படியான
சீர்திருத்தம் வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டதற்கு வட்டமேஜை யாரும் ஒப்புக் கொண்டிருப்பதாக திரு. ராவ்சாஹிப் சீனிவாசன் அவர்கள் தனது சமூகத்தாருக்குக் கொடுத்த ஒரு தந்தியால் தெரியவருகின்றது.
அந்தத் தந்தியின் சாரமாவது:-
1. தனித்தொகுதி மூலம் தேர்தல் நடத்துவது,
2. தங்கள் சமூகத்தில் வயது வந்தவர்களுக்கு எல்லாம் ஓட்டு உரிமை அளிப்பது, 3.மாகாண சட்ட சபைகளில் எப்படியும் 100க்கு 15 வீதம் ஸ்தானங்களுக்கு குறைவில்லாமல் இருப்பது, 4.மந்திரி சபையில் தாழ்ந்த வகுப்பாருக்கு ஒரு ஸ்தானம்
இருப்பது,
குடி அரசு - 19310) 96
5. எல்லா உத்தியோகங்களிலும் விகிதாச்சாரம் தங்கள் சமூகத்துக்கு உத்தியோகம் வழங்குவது, ஆகிய இவைகளுக்கு விதாயங்கள் ஏற்பட்டு விட்டதாக தெரி கின்றது. ஆகவே இந்த செளகரியங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு இன்று ஜன நாயகம் உதவி செய்ததா? தனி நாயகம் உதவி செய்ததா? என்று பார்த் தால் தனிநாயகத்தின் பெருமை விளங்காமல் போகாது.
மற்றொரு உதாரணம்
நிற்க, ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு மற்றொரு உதாரணம் சொல்லு 'வோம்.அதாவது, சமீபத்தில் ஒரு வருஷத்திற்கு முன் இந்திய சட்ட சபையில்: நிறைவேறின பாலிய விவாகத்தடுப்புச் சட்டமானது ஜன நாயகத்தால் நிறை. வேற்றப்பட முடியாமல், தனி நாயகத்துவத்தின் உதவியாலேயே நிறை வேற்றப்பட்டது. அது அமுலில் வருவதில் ஜனங்கள் - ஜன பிரதிநிதிகள் ஆகபிக்கிறார்கள் என்று இன்றும் சொல்லப்படு கின்றது. இந்தச் சொல்லுக்குப் பயந்து, ஜனநாயகத்துக்கு சார்பளிக்கும் அரசாங்கம், தனி நாயகம் செய்யாமல் பயப்படவும் செய்கின்றது.
அன்றியும் அந்தச் சட்டத்தை ஒழிக்கவும், மீறவுமே ஜன சுபாவம் முந்திக்கொண்டு இருக்கின்றது. இந்தப்படி செய்வதற்காகச் சொல்லப்படும் காரணம் என்ன வென்று பார்த்தால் அது பகுத்திவையோ, அனுபவ பலனையோ மனித வர்கத்துவ சாஸ்திரத்தையோ ஆதாரமாய்ச் சொல் லாமல் “ஒரு காலத்தில் இருந்த ஒருவர் சொன்னார்” “அந்தப்படி நடக்கா விட்டால்: மதத்துக்கு விரோதம்” “பாவமானதாகும்.” “நரகம் வரும் என்று வேதம் சொல்லுகிறது” என்ற காரணங்களால் ஆகேஷ்பிக்கப்படுகின்றன. இருக்கின்ற அல்லது வரப்போகின்ற அல்லது இன்றும் அதிகமாக வர வேண்டிய ஜனநாயக ஆகஷி திட்டம் என்பதிலும், இந்தப்படியான அதாவது ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒரு பெயர் உடையவரால் யாருக்காகவோ சொல்லப். பட்டதாக ஏற்பாடு செய்திருக்கும் - எழுதி வைத்திருக்கும் மதத் துக்கும், வேதத்திற்கும் விரோதம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்படு வதற்கு மார்க்கமில்லாமல் வெகு ஜாக்கிறதையாய்ப் பார்த்து திட்டம் வகுக்கப் படவேண்டுமென்றே சொல்லப்படுகின்றது.
ஆகவே இந்த ஜனநாயகம் மனித வர்க்கத்திற்கு நியாயமான
சுதந்திரத்தையும், சவாதீனத்தையும் கொடுக்கக் கூடியதா அல்லது அடிமைத் தனத்தையும், கெடுதியையும் கொடுக்கக்கூடியதா என்பதை யோசித்தாலும், ஜனநாயகத்தின் யோக்கியதை சுலபத்தில் விளங்காமால் போகாது. நமது மக்களின் ஜனநாயக உணர்ச்சியானது இன்று “நமது தேசம்” “நமது மதம்” “நமது ஜாதி” என்கின்ற தத்துவத்தின் மீதும் “முதலில் தேசம்” என்று பலரும் “முதலில் மதம்” என்று சிலரும் “முதலில் ஜாதி” என்று அநேகரும் கருதியே
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஜனநாயகதிட்டம் வகுப்பதில் முனைந்திருக்கின்றார்களே யொழிய, முதலில் மனித சமூகம் பிறகுதான் மற்றது என்கின்ற அறிவு இந்த நாட்டில், இன்றைய தினம், மகாத்மாக்கள் முதல் தேசிய வீரர்கள்-தொண்டர்கள் வரை, தேசாபி மானி முதல் தேசபக்தர் தேசியவாதிகள் வரை - ஆச்சாரியார், மடாதிபதி, சுவாமிகள் முதல் அடியார் கூட்டங்கள் வரை, ஆஸ்திக பண்டிதர்கள் முதல் அவர்களது மாணவர்கள் வரை யாராவது ஒருவருக்கு இருக்கின்றதா? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தால் ஜனநாயகத் தத்துவத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது.
ஜனநாயகம் என்பதில், ஜனம் என்றால் மனிதர்கள் என்றும், நாயகம் என்றால் ஆட்சித்துவம் - எஜமானத்துவம் என்றும் பொருளாகும்.
ஆகவே மனித ஆட்சித்துவம் என்பது மனித தர்மத்துக்கும், மனித துவத்திற்கும் பொதுவான நன்மை பயக்கும்படியானதாகவும் காப்பு அளிக்
கும் படியானதாகவும் இருக்கவேண்டியதா? அல்லது “என் தேசம் காப்பாற்றப்பட்டபின்தான் மனித தர்மம், என் மதம் காப்பாற்றப்பட்ட பின்தான் மனித தர்மம், எனக்கு மோட்சத்தில் சரியான இடம் தேடிக் கொண்ட பின் தான்மனித தர்மம், எனக்கு நரகம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டபின்தான் மனித தர்மம்” என்று பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டு மனித பொது தர்மத்தையே கவலையற்றதாகக் கொண்டால் அந்த ஜன நாயகம் மனிதவர்க்க ஆட்சி ஆகுமா? அல்லது மத நாயகம், அல்லது தனிப்பட்ட மனிதனின் மோட்சநாயக ஆட்சியாகுமா என்று பார்த்தாலும், ஜனநாயக ஆட்சியின் போலித்தத்துவம் விளங்காமல் போகாது. ஏனெனில் தேசநாயக ஆட்சியும், மதநாயக ஆட்சியும் மோட்ச நாயக ஆட்சியும், மற்ற பொதுக் காரியங்களும் ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தனி மனி தனுக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நிலைமைக்கும் ஒவ்வொருவிதமாகவும் இருந்துவருகின்றது. மேலும் இவைகளுக்கெல்லாம் பூரண சுதந்திரமும், பாதுகாப்பும் அளிப்பது தான் ஜனநாயக தத்துவம் என்பதாக மகாத்மாக் களால் பூரண சுயேச்சை வீரர்களால். தேசீய வாதிகளால் உறுதிவாக்களிக்கப் பட்டாய் விட்டது. ஆகவே, இந்த ஜனநாயகம் மனித சமூகத்திற்கு ஆபத் தானதா அல்லது அனுகூலமானதா என்பது அறிவாளிகளுக்கு விளங்காமல் போகாது.
மக்களுக்கு உண்மையான மனித தர்ம நாயகம் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமானால் நடுச் சமுத்திரத்தின் முழுகப்போகும் கப்பலின் நடவடிக்கையைப் பார்த்தால் தெரியவரும். அதாவது, கப்பல் முழுகும்போது கப்பல் ஓட்டும் தலைவன் ஜனங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் முறையில் மனித தர்மம் விளங்குவதை காணலாம்.
குடி அரசு - 19310) 98
அதாவது கப்பல் முழுக ஆரம்பித்தவுடன் தேசம், மதம், ஜாதி, உத்தியோகம், பணம், பதவி ஆகியவைகளை கவனிக்காமல் பலக் குறை வானவர்களையும் சக்தி குறைவானவர்களையும் காப்பற்றுவதே முதல் கடமையாய் நினைத்து பெண்களையும், வயோதிகர்களையும், குழந்தை களையும், நோயாளிகளையும் முதலில் காப்பாற்றுகின்றான். ஆகவே ஆட்சியிலும் அப்படிப்பட்டகொள்கையே மனித தர்ம நாயக ஆட்சி யாகும். இந்த ஆட்சியை ஜனநாயக ஆட்சி கப்பலிலிருக்கும் எல்லா ஜனங் களுக்கும் சுதந்திரம் கொடுத்தால் முதலில் எடுத்துக்காட்டிய ஜனநாயகக் கொள்கை ஆதிக்கமானது ஒவ்வொரு தனி மனிதனும் தான் தான் முதலில் காப்பாற்றப் பட வேண்டும் என்று ஆசைப்பட்டு கலகம் ஏற்பட்டு அதனால் கரையேறும் சாதனங்கள் கூட எல்லாம் அடியோடு முழுகிப்போகும். இந்த மாதிரிதான் நமது ஜனநாயகமும் இருக்கின்றது.
மற்றொரு உதாரணம்
அதாவது ஜனநாயக ஆகஷி மனித தர்மத்திற்கு எவ்வளவு ஆபத்து கரமானது என்பதற்கு மற்றொரு உதாரணம் என்னவென்றால் “இவ்வாரம் இந்திய சட்டசபையில் சர் ஹரிசிங்கவரால் கொண்டுவரப்பட்ட விவாக
சீர்திருத்த சட்டமானது ஒரே அடியாய் தலையில் அடித்து சொல்லப்பட்டு விட்டது.
இந்த சட்டமானது வெகுகாலமாக அனேக அறிவாளிகள் என்பவர் களால் ஆலோசித்து சம்மதிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதாகும்.
அச்சட்டமானது பூரண முற்போக்கடைந்தது என்றோ மனித
தர்மத்திற்கோ, மனித சுபாவத்திற்கோ, மனித சுதந்திரத்திற்கும் முழுஉரிமை அளிக்கக் கூடிய தென்றோ சொல்லிவிட முடியாததாயிருந்துங்கட, அதாவது ஒரு மனைவிக்கு மேல் விவாகம் செய்துகொள்ளக்கூடாது என்கின்ற தடையை வைத்தும் அது ஜனநாயகத்துவ பிரதிநிதிசபையாலும் ஜனநாயக
தத்துவ அரசாங்கத்தின் ஜனப் பிரதிநிதி அங்கத்தினராலும் நானபிஷியல்லா மெம்பராலும்) விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவென்று பார்த்தால் திரு. ராஜாபகதூர் கிருஷ்ணமாச்சாரியர் என்ற ஒரு அய்யங்கார் பார்ப்பனர் “எனது மூதாதைகள் செய்த ஏற்பாட்டு படிதான் இருக்கவேண்டும். அதற்கு விரோதமானவைகளை ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. ஆதலால் இந்தச் சட்டம் கூடாது” என்பதாகச் சொல்லி சட்டத்தை எதிர்த்திருக்கின்றார். மற்றவர்களும் இதை அனுசரித்தே மதக்கட்டளையை முன்னிட்டே எதிர்த்திருக்கின்றார்கள். கடைசியாக
சர்க்கார் தரப்பில் சட்டமெம்பர் என்கின்ற ஒரு பார்ப்பனர் தனது பார்ப்பனப். புத்தியையே காட்டி சர்க்காருக்கும் தனது சமூக ஆதிக்கத்திற்கும் குந்தக மில்லாமல் பேசி அதை நிராகரிக்கச் செய்துவிட்டார்.
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அந்தச் சட்டத்தின் சாரமெல்லாம் தனக்கு இஷ்டமான பெண்ணை, அதுவும் ஒரே ஒரு பெண்ணை மணந்து கொண்டு வாழ்வதை எந்த சட்டமும் தடுக்கக்கூடாது என்பதேயாகும். (அதாவது கலப்பு மணத்திற்கு அனுமதி யளிப்பது) இதனால் மதம், பெரியோர் செய்த ஏற்பாடு ஆகியவை கள் கெடக்கூடாது என்கின்ற காரணங்களே, மனிதஉரிமைக்கு தடையாய் இருக் கின்றது என்று ஏற்படுகின்றதே அல்லாமல் அது மனித தர்மத்திற்கோ, சரீர செளக்கியத்திற்கோ நாணையத்திற்கோ ஒழுக்கத்திற்கோ என்ன தடை அல்லது கெடுதி ஏற்படுகின்றது என்பது கவனிக்கப்படவில்லை என்கின்றது நன்றாய் விளங்குகின்றது.
ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் தலைமை வகித்த திரு. ஐயகர் அவர்கள், கலப்புமணத்தைப் பற்றிப் பேசும்போதுதான் கலப்பு மணத்தைப் பற்றி வெள்ளைக்கார அதிகாரிகளுடன் பேசியதாகவும், அதற்கவர்கள் “கலப்பு மண சட்டத்தைப் பாசுசெய்து நிறைவேற்றி) எங்களை இந்த நாட்டைவிட்டு விரட்டப் பார்க்கின்றீர்களா என்று கேட்டார்கள்” என்பதாக எடுத்துச் சொன்னார். ஆகவே, கலப்பு மணம், அனுபவத்தில் நமது நாட்டில் நடைபெறுமானால், நமது நாட்டில் ஐரோப்பியர் ஆக்ஷியோ, கிருஸ்துவர். ஆக்ஷியோ, மகமதிய ஆக்ஷியோ, இந்துக்கள் ஆக்ஷியோ மற்றபடி பெளத்தம், கிறிஸ்து, இஸ்லாம், இந்து முதலிய மதங்களோ, பார்ப்பான், பறையன் முதலிய ஜாதிகளோ அன்னிய ஆக்ஷிகளோ அடியோடு நமது நாட்டைவிட்டு ஏன் உலகத்தையே விட்டுக் கூட ஓடிப்போக மார்க்கமுண் டாகும். இந்த நிலை கூடாது என்கின்றவர்களுடைய ஆக்ஷிதான் இன்றும் ஜனநாயக ஆகஷியாகவும், இனியும் அதிகமான முற்போக்குள்ள ஜனநாயக ஆகஷியாகவும் இருக்கின்றது, இருக்கவும் போகின்றது.
ஆகவே, லெனின் ஆக்ஷியோ,கமால்பாஷாஆக்ஷியோதான் மனிதத் தர்ம - மனித நாயக ஆக்ஷியாக இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி எந்த
சீர்திருத்தம் கொடுத்து, எந்த ஜனநாயக ஆக்ஷி கொடுத்து, அதை எந்த மகாத்மா ஒப்புக்கொண்டு அதை எந்த வெள்ளைப் பார்ப்பானோ, கருப்புப் பார்ப்பானோ மொட்டைப் பார்ப்பானோ மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு நடத்திக் கொடுப்பதாயிருந்தாலும் அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சி யாயிருக்க முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
மேலும் மனிதனுக்கு ஒரு நாயகம் வேண்டி இருந்ததின் காரணமே மனிதசமூகம் நாயகமில்லாமல் வாழ்க்கை நடத்தமுடியாமல் போனதி னாலேயேயாகும். அந்தப்படி முடியாமல் போனதற்கு காரணம், மனிதனுக்கு அறிவில்லாத தன்மையும் சுயநலத்தடிப்புமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மேல்கண்ட இரண்டும் மக்களுடன் மக்கள் கலந்து ஒற்றுமையாயும் நம்பிக்கையாயும் வாழச்செய்ய முடியாது.
குடி அரசு - 19310) 100
ஆகவே மக்கள் தங்களுக்கு ஒரு அரசன் வேண்டியது என்பதற்கு ஆதாரமான காரணங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு அரசன் இல்லாமல் வாழ லாம் என்கின்ற தன்மை அடையும் வரை தங்கள் பொது வாழ்வில் தங்க ளுக்கு தாங்களே நாயகர்களாயிருந்து கொள்வது என்பது சாத்தியமான காரியமாகுமா என்பதை கவனித்துப் பார்த்தாலும் ஜனநாயகத்தின் முட்டாள் தனம் விளங்காமல் போகாது. அந்தக் காரணங்கள் சரிபடுத்தப் படாத ஜனங்
கள் மறுபடியும் தங்களைத் தாங்களே தங்கள் பொதுவாழ்வுக்கு நாயகர்களாய் இருந்து கொள்ளுவது என்பது சாத்தியமான காரியமாகுமா? என்பதை கவனித்துப் பார்த்தால் ஜனநாயத்தின் முட்டாள்தனம் விளங்காமல் போகாது.
ஆகவே இப்போது ஜனநாயக ஆக்ஷி என்று நாம் சொல்லுவ தெல்லாம் ஒருக்காலும் மனித தர்ம ஆக்ஷியாகவே ஆகாது.
முதலில் நான் மனிதன். பிறகு தான் இந்தியனோ, எவனோ ஆவேன்...
குடி அரசு - தலையங்கம் - 08.02.1931
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பலைாவப் வாது நிலைக்கழகக் கூட்டம்
சென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத்திருக் கின்றன. அவை ஒரு அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக் கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக்கூடியதாக வுமிருப்பதால் அதைப்பற்றி சில குறிப்பிடுகின்றோம்.
இம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக்
கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம்கொடுக்கின்றன.
பல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமசனவை
திருவாடுதுரை திருபனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைகளளுக்கும் வாக்குறுதிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் தீர்மானங் களும், தமிழுக்கும், சைவத்திற்கும், மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டு மென்னும் வேண்டுகோள் தீர்மானமும், மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்மந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும். அவை யாவன:
கோவிலுக்குள் யெல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்கவேண்டும்,
ஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வேண்டும்,
கோவில்களில் தேவதாசி முறை கூடாது,
அனாவசியமானதும் அதிக செலவானதும் சமயக் கொள்கைக்கும் அறிவுக்கும் பொருத்தமில்லாததுமான உற்சவங்களை நிறுத்திவிட வேண்டும்.
சாரதா சட்டத்தை உடனே அமுலில் கொண்டுவர வேண்டும்,
பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை வழங்க வேண்டும்,
குடி அரசு - 19310) 102
சாதி வித்தியாசம் பாராமல் கலப்பு மணம் செய்து கொள்ளலாம்,
விதவா விவாகம் செய்யப்படவேண்டும்,
இவைகளுக்குச் சமய ஆதாரங்களில் இடமிருக்கிறது,
அன்றியும் இக்காரியங்கள் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்றவை யாகும்.
என்பதாகத் தீர்மானித்திருப்பதோடு மற்ற காரியங்களிலும், அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒத்துவராதது எதுவாயினும் அது முதநூலாயிருந்தாலும் (அதாவது கடவுள் வாக்காகவோ வேத கட்டளை யாகவோ இருந்தாலும்) அதை ஒப்புக்கொள்ளமுடியாது என்பதாகவும்
தீர்மானித்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது அதாவது பகுத்தறிவையும் (நியாயமாகிய ஒழுக்கத்தையும் ஏற்றுக்கொண்டதோடு அக்கொள்கைகள் அவர்கள் கருதும் கடவுள் வாக்குக்கும் வேத (மறைக் கட்டளைக்கும் விரோத மானாலும் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை என்பதாகத் தீர்மானித்திருப் பதிலிருந்து மாறுதல் வேண்டுபவர்களுக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இனி சைவம் என்பது எது அதன் கொள்கை அல்லது தத்துவம் என்பவை எவை என்பதைப் பற்றி நமக்கு இப்போது அதிகக் கவலையில்லை. ஏனெ னில் அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் பொருத்தலானவைகளை ஒப்புக்கொள்வ
தும், பொருத்தமற்றவைகள் எதுவானாலும் தள்ளிவிடுவதும் என்கின்ற தன்மை ஏற்பட்டுவிட்டால் அந்தக் கொள்கைகள் கொண்ட எந்தச் சமயத்தினி டமும், எந்தக் கூட்டத்தினிடமும் நமக்கு தகராரில்லை. மற்றபடிஇனிமேல் அறிவு எது? ஒழுக்கம் எது நியாயம் எது? என்பது போன்ற சில விஷயங்கள். இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். இவைகள் மனிதனுக்கு மனிதன், இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம், நிலைமைக்கு நிலைமை வேறுபடத் தோன்றலாம், வேறுபடலாம். ஆனபோதிலும் இந்த வேறுபாடு மனிதசமூக
மொத்தத்திற்கும் பொருத்தமானதே ஒழிய சைவத்திற்கு மாத்திரமோ, ஒரு தனிக்கூட்டத்திற்கு மாத்திரமோ ஏற்படக்கூடியதல்லவானதால் அதைப் பொது அபிப்பிராய வேறுபாடாகக்கருதி அவர்களுடைய ஒத்துழைப்பை ஏற்றுக் கொண்டு நடுநிலையில் இருந்து விவாதிக்கத் தாராள உரிமையும், செளகரி யமும் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றோம்.
முடிவில் பல்லாவரத் தீர்மானங்கள் சைவர்கள் என்பவர்களும் பண்டிதர்கள் என்பவர்களும் வேறு தத்துவார்த்தமில்லாமல் ஒப்புக்கொள்
ளும் தீர்மானங்களானால் அவர்களைப் பொருத்தவரையில் பொருத்தமான விஷயங்களில் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித் துக்கொள்ளுகிறோம்.
பல்லாவரம் அடிகளை நாம் ஆதியிலேயே முரட்டுச் சைவர் களோடும், புராணப்பிழைப்புப் பண்டிதர்களோடும் சேர்த்ததேயில்லை.
102. பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12.
அடிகளுடைய பழைய ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும் முற்கூறிய கொள்கை களை அடிப்படையாகக்கொண்டது என்பதும் சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலருக்காவது சீர்திருத்த உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும் ஏற்பட்டிருக்குமானால் - பண்டிதக் கூட்டத்தார் களில் எவருக் காவது பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருக்குமானால் அது பெரிதும் திரு. மறைமலை அடிகள் சாரலாகத்தானிருக்குமென்றும் கருதி யிருந்ததோடு நாம் எவ்வெத்துறையில் எவ்வித மாறுதல்கள் விரும்பு கின்றோமோ அத்தனைக்
கும் அடிகள் ஆதரவளிப்பார் என்று நம்பியும் இருந்தோம். எரிதல் காரண மாய் சிலர் பல காரணங்களால் - பல சூட்சிகளால் அடிகளை சறுக்கலில் இழுத்து விட்டார்கள். எனினும் அடிகள் முற்றிலும் சறுக்கி விடாமல் தன் ஆற்றலையேபிடித்துச் சமாளித்துக் கொண்டார். இதற்கு உதாரணம் வேண்டி யவர்கள் திருநெல்வேலி சைவப் பெரியார் மகாநாட்டிற்கும் திருப்பாதிரிப்
புலியூர் மகாநாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் திருபாதிரிப் புலியூரில் அடிகள்நிகழ்த்திய சொற்பொழிவையும் நோக்கினால் உண்மையுணரலாம். எனவே இவை நமக்கறிவிக்கப்பட்ட பல்லாவரப் பொது நிலைக்கழகத் தீர்மானங்கள் என்பவைகளைக்கொண்ட அபிப்பிராயமேயாகும்.
மற்றவை முழு நிகழ்ச்சிகளையும் அறிந்த பின்னர் விபரமாய் தெரிவித்துக்கொள்ள ஆசை கொண்டுள்ளோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.02.1931
குடி அரசு - 19310) 104
யண்முத மோதிலால் முழவனய்திணார்
பண்டித மோதிலால் நேரு அவர்கள் இந்தியாவில் கீர்த்திபெற்ற மனிதருள் ஒருவராவர்.அதோடு பெருந்தியாகிகளுள் ஒருவராவர். அவர் ஐக்கிய மாகாணத்தில் ஒரு பேர் பெற்ற வக்கீலாயிருந்தவர். கல்கத்தாவுக்கு திரு. தாஸ் போலவும், பம்பாயிக்கு திரு. ஜெயக்கர் போலவும், மத்திய மாகாணத்திற்கு திரு.சாப்ரு போலவும், சென்னை மாகாணத்திற்கு திரு. சீனி வாச ஐயங்கார் போலவும், பெரும் பெரும் வரும்படியுள்ள வக்கீலாகவும் வக்கீல் தொழிலில் கெட்டிக்காரர் என்று பிரமாதிக்கும்படியாகவும் வாழ்க்கை
யில் எல்லோரைப் பார்க்கிலும் பெருமையாகவும் வாழ்ந்து வந்தவர். அவரது வீடும் வாழ்க்கைத் திட்டமும் அரண்மனைபோலவே இருக்கும்.
இந்திய பொதுவாழ்க்கையை என்றைய தினம் படித்தவர்கள் மூலமும் படித்தவர்களுக்குள்ளாகவுமே ஆரம்பிக்கப்பட்டதோ அன்று முதலே வக்கீல்களே பொது வாழ்வில் இறங்கி வேலை செய்யும் கீர்த்தி பெறவும்
முடிந்து வந்தது. அந்த முறையில்தான் திரு.திலகர் முதல் திரு.சத்தியமூர்த்தி ஈராக அநேகர் அநேகமாக பொது வாழ்க்கையில் பிரசித்தி பெற்றவர்களாக
நேர்ந்தது.
திரு. காந்தியவர்களும் இந்த முறையிலேயே பொதுவாழ்வுக்கு வரவேண்டியவரானாலும் அவர் பிரவேசித்த காலம் முதல்தான் அதற்கு முன் இருந்தது போன்ற அதாவது பொதுவாழ்வுப் பிரவேசம் சுயநல வாழ்வுக்குப் படிக்கட்டாயிருந்து வந்தது மாறி சிறிதாவது தியாகம் செய்து தன்னலத்தை மறுத்த பிறகேதான் பொது வாழ்வில் மக்கள் பிரவேசிக்க கூடியதாக மாறி விட்டதால் பொது வாழ்வுக்கு ஒரு கெளரவம் ஏற்பட்டு மக்களால் மரியாதை செய்ய வேண்டியதாயிற்று. அந்த நிலை நாட்டில் செல்வாக்குப்பெறவும் பொதுவாழ்க்கையை மதிக்கப்படவும் ஏற்பட்ட சம்பவங்களுக்கு திரு. காந்தியே முதன்மையான காரணஸ்தர் என்றாலும் தேசபந்து தாசும், பண்டித நேருவும் அதற்கு உயிர்கொடுத்தவர்களாவார்கள்.
தங்களுடைய அரச போகத்தையும், செல்வ வரும்படியையும் ஒரே அடியில் துறந்து வெளி வந்தவர்களில் இவ்விரு கனவான்களும் முதன்மை யானவர்கள். ஆனால் தேசபந்துவை விட பண்டிதரின் தியாகம் சற்று மேம் பட்டதாகும். ஏனெனில் தேசபந்துவுக்குப் பெரும் வரும்படியும் உயர்ந்த
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
போகமும், பண்டிதருக்கு இளைக்காததாக இருந்தாலும் தேசபந்துவுக்கு பணலக்ஷியமற்ற தன்மையும் எந்த நிலையையும் சரிப்படுத்திக்கொள்ளும் தன்மையும் ஏற்கனவே கொஞ்சம் இருந்துவந்ததால் அவரது தியாகமானது அவருக்கு அவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய்த் தோன்று வதற்கில்லாமல் இருந்தது எனலாம். ஆனால் பண்டிதரின் தியாகமானது அந்த நிலைமைக்கு முன் சிறிதும் நினைத்திருக்காத மாதிரியில் ஒரு பெரிய அர- சனை “வானப்பிரஸ்த ஆக்ஷிமத்தைக்”கைக்கொள்வதற்காக குடி படை களோடு ஊர்வலத்துடன் வனத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தால் அடுத்த நிமிஷம் அவனுக்கு எப்படியிருக்குமோ அதுபோல திடீரென மாறினவராவார். கஷ்ட மறியாதவர் உலக இயற்கை தெரியாதவர். உலகமே தன்னைப்போல் செல்வமாகவும், போக போக்கியமாகவும் இருப் பதாகக் கருதியிருந்தவர், திடீரென்று சன்யாசியானார். குடும்பத்தோடு சன்யாசியா
னார். நாளை சாப்பாட்டுக்கு என் செய்வது என்ற விசாரமில்லாமல் உள்ளதை யெல்லாமிறைத்தார். சில சமயத்தில் நாளைச் சாப்பாட்டுச் செலவுக்கு வழி தேடுவது என்பது ஒரு பெரிய சிக்கலான பிரசினையாக இருந்ததுகூட நமக்குத்தெரியும். அவருக்கு மற்றவர்களைக் கேட்கவும் தெரியாது. யாராவது கொடுத்தால் அதை வாங்குவதும் பெரிய அவமானமென்றும் கருதுவார். இப்படிப்பட்ட பெருமானுக்கு இந்தப் பாக்கியங்கள் கிடைத்ததானது அவரது முயற்சியைக் காட்டிலும் அவரது ஒரே குமாரரான திரு. ஜவர்லாலுவின் முயற்சியே அதிகமானது என்று சொல்லுவது முழுதும் தவருதலாகாது. அதாவது,
அவரது குடும்பமே அந்த நிலையை அடைவதில் சிறிதும் தயங்க வில்லை என்பதாகும். பண்டிதர் திரு. காந்தியின் பழைய கொள்கைகளில் முழுகொள்கைகளையும் ஒப்புக்கொள்ள முடியாதவறாயிருந்தாலும் திரு. காந்திக்கு ஆதியில் சிறிதும் இடையூறு செய்யாதவராகவே இருந்தார். இதன் பயனாகவே திரு. காந்தியும் தனதுவசத்திற்கு இழுக்கப்பட்டார். இந்த நிலையே அவருக்கு இந்திய அரசியல் வாழ்வில் திரு. காந்திக்கு அடுத்த ஸ்தானம் கிடைக்கச்செய்தது. இதனினும் விசேஷமென்னவென்றால் இதற்கு அடுத்த ஸ்தானமும் திரு. ஜவார்லால் அவர்களுக்கே கிடைத்திருப்பதாகும். ஆகவே இன்று உலகமுறையில் ஒரு பெருமை வாய்ந்த, தியாகம் வாய்ந்த, கீர்த்திவாய்ந்த பெரியார் திரு. பண்டித மோதிலால் நேரு என்பதில் யாருக்
கும் ஆக்ஷேபனை இருக்காது. மனிதர்களுக்கு வரும் பெருமையும், மேன்மையும், கீர்த்தியும் எல்லாம் அவரவர்களது கொள்கைகளினாலேயே
தான் ஏற்படக்கூடியது என்று சொல்லிவிட முடியாது. மற்றபடி தியாகமும், சுயநலமின்மையுமே கொள்கை வித்தியாசத்தையும் மறைத்துவிடும். ஆகவே அந்தகுணம் இந்தியாவியில் தேசபந்துவுக்கும் நமதுபண்டிதருக்கும் கிடைத்தது. பண்டிதர் 70 வது வயதில் முடிவெய்தியது அற்ப ஆயுள் என்றோ, குறைந்த ஆயுள் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனாலும் பொது
வாழ்வுக்கு தியாகம் வேண்டும் என்ற ஒரு உணர்ச்சிக்கு அறிகுறியாய் இருந்த
குடி அரசு - 1931 (1) 106
பெரியார் தன் ஸ்தானத்திற்கு ஒருவர் ஏற்படும் முன் முடிவெய்தினது மிகவும் வருந்தத்தக்கதே யாகும். இந்திய சராசரி வயது 23, இங்கிலாந்து சராசரி வயது 46.பண்டிதர் அவர்கள் இரண்டு சராசரி வயதையும் எப்படிதாண்டிவிட்டாரோ அதுபோலவே இந்தியாவிலும் மற்றும் உலகத்திலும் உள்ள சராசரி மக்களின் தன்மையில் இருந்து எத்தனையோ பங்கு மீறினவர் என்பதில் ஆக்ஷபனை யில்லை. ஆகவே அவர் முடிவெய்தும் போது எவ்வித குறைவுமில்லாமல் தனது முயற்சியின் - லக்ஷியத்தின் பயனை ஒருவாறு எய்தினார் என்றே சொல்லக்கூடும். ஒரு சமயம் கொஞ்சம் நஞ்சம் மீதி இருப்பதாக அவர் கருதி இருந்தாலும் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமலே தான் தனது கடைசி மூச்சையும் விட்டு இருப்பார் என்பது நமது உறுதி. ஏன் எனில் அவரது அருமைப் புதல்வர் திரு. ஜவர்லால் நேரு தந்தையின் பாக்கிவேலையையும் அதற்கு மேற்பட்ட புதிய வேலைகள் பலதையும் செய்து முடிப்பார் என்பதில் தந்தைக்கு சிறிதும் சந்தேகமிருந்திருக்காது என்பதுதான். ஆகவே அது போலவே பெரிய நேரு மறைந்தபோது அவர் நமக்கும் எவ்வித குறைவை
யும் வைத்துவிட்டுப்போகவில்லை. எப்படி எனில் சின்ன நேரு இருக்கின்
றார். அவரால் தந்தையின் ஸ்தானம் அடையப்பட்டு தந்தையின் பாக்கி வேலைகள் ஏதாவது இருந்தாலும் அவை நடத்திவைக்கப்பட்டு அதைவிட முக்கியமான உண்மை விடுதலையாகிய சமதர்ம வேலைகளையும் நடத்திக் கொடுக்கவல்லவரான ஒரு அருங்குழந்தையை நமக்கு அளித்திருப்பதால் இதைக்கொண்டு நாம் சாந்தியடைவோமாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.02.1931
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
முஸ்லீம் ணாலியர்களுக்கு
சமீப காலமாக, அதாவது சுமார் ஒரு வருஷகாலமாக அநேக இஸ்லாம் வாலிபர்களுடனும், பல மெளல்விகளுடனும், இரண்டொரு மெளலானாக்களுடனும் நெருங்கிக் கலந்து பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. அதிலிருந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் பலர் முழுவதையும், சிலர் ஒன்றிரண்டு தவிர மற்றதையும் ஒப்புக்கொள்ளு பவர்களாகவே அறியமுடிந்தது.
ஆனால் கடவுள் என்பதைப்பற்றி மாத்திரம் அவர்களில் அநேகர் தங்கள் அபிப்பிராயத்தை வெளியில் எடுத்துச் சொல்லவே பயப்படு வதையும் சிலர் அப்புறம்இப்புறம் திரும்பிப்பார்த்துப் பேசுவதையும், பார்க்கும்போது நமக்கு மிக்க பரிதாபமாகவே இருந்தது.
அதில் ஒருவர் நம்மிடம் பேசுகையில் “நீங்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசும், எழுதும் எழுத்துக்கள் எல்லாம் இந்துமதக் கடவுள்களைப் பற்றி மாத்திரம் பேசுகின்றீர்களா? அல்லது மற்ற மதக்கடவுள்களையும் பற்றி பேசுகின்றீர்களா?'”” என்று கேட்டார்.
அதற்கு நாம் விடையளிக்கையில் “நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ
சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும் சகல. நடவடிக்கைகளுக்கும் தானே காரண பூதனாயிருக்கின்றதும், அதை வணங்கி னால் நமது தேவைகள் பூர்த்தியாகுமென்பதும், அதற்கு பணி விடை செய்
தால் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும் என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது செய்த கருமத்திற்குத் தகுந்த பலனை நாம் செத்தபிறகு நமது ஜீவன் அல்லது ஆத்மா என்பவைகளுக்கு அளிக்கின்றாறது என்னப்படுவதுமான கடவுள் என்பது எந்த மதத்தைச் சேர்ந்ததானாலும், அந்த அர்த்தம் கொண்ட கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றோம்” என்று சொன்னோம்.
“இந்தப்படி சொல்வதற்குக் காரணம் என்ன?” என்று அவர் கேட்டார்.
நாம் அதற்கு விடையளிக்கையில், “இந்த மாதிரியான ஒரு கடவுள் தன்மையைமக்களுக்குள் புகுத்துவதால் மனித வர்க்கம் தன் முயர்ச்சியற்று, முற்போக்கற்றுப் போவதற்கு இடமேற்படுகின்றது என்றும், இந்தியா இன்று
குடி அரசு - 1931 () 108
இந்த மிருகப்பிராய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும், மற்றும் மக்களில் உயர்வு தாழ்வும், செல்வவானும், தரித்திரனும் இருக்க இதுவே காரணம்” என்றும் சொன்னோம்.
அதற்கவர் “அப்படியானால் உங்களுடைய கடவுள் சம்பந்தமான எழுத்துக்கள் எங்கள் ஆண்டவனையும் தானே சேர்த்துப் பேசுவதாயிருக் கின்றது” என்று சொன்னார்.
நாம் அதற்கு, நான் என்ன செய்யலாம், உங்களுக்காக வேண்டு மானால் இஸ்லாமானவர்கள் கடவுள் தவிர என்று சொல்லி விடட்டுமா? என்று சொன்னோம்.
அதற்கவர் சிரித்துக்கொண்டே, எங்களைப் பரிகாசம் செய்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு “நீங்கள் மேலே குறிப்பிட்டகுணமும், தன்மையும் கொண்ட கடவுளைப்பற்றித்தான் சொல்லுகின்றேன் என்று சொன்னபிறகு, இஸ்லாமானவர்கள் கடவுள் மாத்திரம் அதிலிருந்து எப்படி விலக்கப்படும் என்றும் இன்றைய தினம் எல்லா மார்க்கத்தாரும் இந்த மாதிரியாகத்தானே கடவுளைக் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று சொன்னார்.
அப்படியானால் அதற்கு நாம் என்ன செய்வதென்று சொன்னோம்.
அதற்கவர் “அதை மாத்திரம் விட்டுவிடக்கூடாதா” என்றார்.
நாம் எதை, இஸ்லாம் கடவுளை மாத்திரமா? என்றோம்.
அவர் மறுபடியும் சிரித்துக் கொண்டு “பொதுவாகக் கடவுள் என்பதையே தான் சொல்லுகின்றேன்.” என்று சொன்னார்.
நாம் மற்ற கடவுள்களைச் சொன்னால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டது என்றும், வேண்டுமானால் உங்கள் கடவுளைச் சொல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் சொன்னோம்.
இவற்றை நாம் பரிகாசமாய் சொல்லுவதாக அவர் உணர்ந்து பிறகு உண்மையாய் பேசுவதாய்ச் சொல்லிப் பேசியதாவது :-
“நீங்கள் சொல்லுவதில் குற்றம் இருப்பதாக நான் சொல்லவரவில்லை. ஆனால் என்போன்றவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பது தான் எனது கவலையே ஒழிய கடவுளைப் பற்றிய கவலை எனக்குச் சிறிதும் கிடையாது. சுமார் பத்துவருஷ- காலமாகவே எனக்கிருந்ததில்லை. ஆனா
லும் கவலை இருக்கின்றதாக நம்பிக்கொண்டு நடக்கின்றவர்களைவிட நான் மிகவும் ஒழுக்கத்துடனும், நியதியுடனும் நடந்து வந்திருக்கின்றேன் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். ஆனால் என்னுடைய நடவடிக்கையை விட கடவுளைப் பற்றிக்கவலை கொண்டிருப்பதாக நான் நடந்து கொண்ட வேஷ
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
நடவடிக்கையே என்னை பிறத்தியார் மதிக்கச் செய்திருக்கின்றதே அல்லாமல் என் ஒழுக்கத்தைப்பற்றி யாரும் மதிப்பதில்லை. ஆதலால் கடவுளைப் பற்றி கவலையில்லை என்று சொல்லிவிட்டால் என்னை எனது மார்க்கத்தார்கள் ஒழித்து விடுவார்கள்” என்று சொன்னார்.
அதற்கு நாம் உங்களுக்கு அந்த மாதிரி மக்களின் மதிப்பு வேண்டு மானால் அந்தப்படியே நடவுங்கள் இல்லாவிட்டால் தைரியமாய் உண்மை யை எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னோம்.
பிறகு, அவர் கடைசியாக முஸ்லீம் வாலிபர்களுக்குள்ளாவது இப்படியொரு இயக்கம் ஆரம்பிக்கலாம் என்று கருதியிருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நாம் மிகவும் சந்தோஷம் என்று சொன்னோம். பிறகு வேறுபல விஷயங்கள் பேசினோம்.
நிற்க, இந்தப்படியான எண்ணமுள்ள இன்னும் அநேக வாலிபர்கள் இருக்கின்றார்கள். இரண்டொரு வாலிபர்கள் இதற்காக அதாவது சுய மரியாதை இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தங்களது மார்க்கத்தைக்கூட விட்டுவிடத் தயாராயிருப்பதாகச் சொன்னார்கள். அப்படி அவர் சொல்ல நேர்ந்த அவசியம் அவருக்கு மனித சமூகத்தினிடமிருக்கும் அன்பானது அவருடைய மார்க்கத்தைவிட பெரியதாகக் கருதியதேயல்லாமல் வேறல்ல.
ஆகவே, அப்படிப்பட்ட வேகமுள்ள வாலிபர்களானாலும்,மெளல்வி களானாலும் தங்கள் சமூகத்திலுள்ள சில பழக்க வழக்கங்கள் மார்க்கத்தின் பேரினாலும், புரோகிதர்களாலும், இந்துக்கள் சாவகாசத்திலானாலும் அவை மனித இயற்கைக்கும், தர்மத்திற்கும் விரோதமாய் இருந்தால் அக் கொள்கை களை அதிலிருந்து கொண்டே திருத்த முயற்சிப்பதுதான் பயனளிக்குமே யொழியமார்க்கத்தை விட்டு திடீரென்று வெளியேறி விட வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். இந்தப்படி அவர்களை அந்த மார்க்கக் கட்டளைப்படி நடந்து ஆண்டவன் என்பவரிடம் சன்மானம் பெறவோ, மோக்ஷமடையவோ நாம் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் அந்த மார்க்கப் பேரைச் சொல்லிக்கொண்டாவது, அந்த சமூகத்தை சீர் திருத்தம் செய்யப் பயன்படுவார்களே என்கின்ற ஆசையின் மீதேயாகும்.
கமால் பாக்ஷா வீரர் மார்க்கத்தை வெளிப்படையாய் விட்டிருந்தாரா
னால், அவரால் அந்த சமூகத்திற்கு அவ்வளவு நன்மை செய்திருக்க முடியாது. ஆதலால் நமது முஸ்லீம் வாலிபர்களும், வங்காள முஸ்லீம் வாலிபர்கள். ஏற்படுத்திக்கொண்டிருப்பதுபோல இந்த மாகாணத்திலும் புரோகித ஒழிப்புச் சங்கமென்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்து கொண்டு அதன் மூலம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் அநேகத்தை நிறைவேற்றி வைக் கலாம். அன்றியும் இந்தத் துறையில் மற்றவர்களைவிட முஸ்லீம்களுக்கு வேலை குறைச்சலாய் இருக்கின்றதென்றே சொல்லுவோம். ஏனெனில்
குடி அரசு - 19310) 110
அவர்களுடைய மார்க்கக் கட்டளைகள் என்பதில் பல ஏற்கனவே சுய மரியாதைக் கொள்கையாகவே இருக்கின்றன.
ஆகையால் கடவுளைப் பற்றிய பேச்சு மாத்திரம் அவர்களுக்கும் வேண்டியதில்லை என்பது நமது அபிப்பிராயமாகும். வேண்டுமானாலும் அதை முதலில் பிரசாரம் செய்வதைவிட மற்ற காரியங்களைச் செய்வதே அனுகூலமானதாகும். விவகாரம் வரும்போது அதைப்பற்றியும் பேச யாரும் பயப்படவேண்டியதில்லை. ஆனால் அது அவரவருடைய சொந்த அபிப்பி ராயம் என்றுகூட சொல்லிக் கொள்ளலாம்.
ஆகவே முடிவாக நாம் சொல்லிக் கொள்வதென்னவென்றால் முஸ்லீம் வாலிபர்கள் இந்த தமிழ்நாட்டில் ஒரு புரோகிதமொழிப்புச் சங்கம் ஏற்படுத்திக்கொண்டு மக்களை புரோகிதக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கும்
படியும், தங்கள் தங்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க மக்களுக்குத் தைரி
யம் வரும்படியாகவும் செய்ய வேண்டியது முதல் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதற்கு அவசியமும் மற்ற இதன் முழு விபரங்களும் வேண்டுமானால் வங்காள முஸ்லீம் புரோகிதமொழிப்புச் சங்கத்தாரிடமிருந்து தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதன் அவசியத்திற்குக் காரணம் அவர்கள் சொல்லுவதற்கு மேல் நாம் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. மூட நம்பிக்கை என்பதும் புரோகித ஆக்ஷியென்ப
தும் எந்த மதத்திலும் இருக்கக்கூடாது என்பதை யாரும் ஒப்புக்கொள்ளு கின்றார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மதத்தில் அவை இல்லை என்று சொல்லிவிட்டு அன்னிய மதத்தில் இருப்பதாகச் சொல்லு கின்றார்கள். ஆதலால் இன்ன மார்க்கத்தில்தான் இருக்கின்றது என்றும், இன்ன மார்க்கத்திலில்லை யென்றும் யாரும் வாதிட வேண்டியதில்லை. நடு நிலைமையிலிருந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டுபார்த்து, தங்களுக்கு இருப்பதாய் தோன்றினால் அதை விலக்கட்டும். தோன்றாவிட்டால் அப்ப டியே இருக்கட்டும் என்கின்ற கொள்கை வைத்தே முதலில் வேலை துவக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். வேலை துவக்கினால் பொதுநல ஊக்கமுள்ளஅநேக மெளல்விகள்கூட ஒத்துழைக்கத் தயாராயிருக் கின்றார்களென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.02.1931
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுமாமரியாதை மகாநாடு - முண்ணேற்பாடு கூட்டம்
வரவேற்புத் தலைவர்களே, நண்பர்களே இன்று இங்கு கூடியிருப்பது 3-வது சுயமரியாதை மகாநாட்டை விருதுநகரில் நடத்தும் விஷய மாய் யோசிப்பதற்காகவேயாகும். மகாநாட்டை ராமனாதபுரம் ஜில்லாவில் நடத்துவதென்பது சென்ற வருஷம் ஈரோட்டில் நடந்த இரண்டாவது மகா: நாட்டின் போதே இச்சில்லாவாசிகள் அழைக்கப்பட்டு தீர்மானித்த விசய மாகும். இராமநாதபுரம் ஜில்லாவில் எங்கு நடத்துவது என்பது சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிர்வாக சபை கூட்டத்தில் விருதுநகர் பிரமுகர்களில் சிலர் முன்னிலையில் அவர்களது சம்மதத்தின் மீது முடிவு செய்ததாகும்.
ஆகவே இங்கு நடைபெறும் விஷயத்தில் எல்லாவற்றையும் விட இவ்வூர் பிரமுகர்களுடையவும், வாலிபர்களுடையவும் ஒத்துழைப்பும் ஊக்கமுமே அதிகமாக வேண்டியதாகும். நமது இயக்கத்தின் முக்கியத்தைப்
பற்றியும் அதன் பயனைப் பற்றியும் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய
தில்லை. இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பிரசாரமும் இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிரிகளின் தன்மையும் கவனித்தாலே விளங்கிவிடும். எப்படி எப்படியோ மூன்று நான்கு வருஷங்களை இயக்கப் பிரசாரம் நடைபெற்றதுடன் இரண்டு பெரிய மகாநாடுகள் நடந்து மூன்றாவது மகாநாடு நடக்கப் போகின்றது. இயக்கம் ஆரம்பித்தவுடன் பலர் இது மூன்று நாளையில் செத்துப்போய்
விடும் என்றார்கள். ஆரம்பத்திலேயே மதக்காரர்களும் வெகு பலமாக உண்டாக்க முயன்றார்கள். என்மீது சொந்தமுறையில் பல பழிப்புகளையும்
கெட்ட எண்ணங்களையும் உண்டாக்கினார்கள்.
அவ்வளவையும் தாண்டி எதிரிகளுக்கு சமீபமாய் செங்கற்பட்டி லேயே முதலாவது மகாநாடு மிகவும் பிரக்யாதியாய் நடந்தது. அந்த மகாநாட்டிற்கு அநேகமாய் இம்மாகாணப் பிரபலஸ்தர்கள் உட்பட சுமார் பத்தாயிரம் பேர் விஜயம் செய்திருக்கிறார்கள். அதன் பிரபலத்தைப் பார்த்த எதிரிகள் இந்த வருஷம் ஏதோ ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிகள் ஆகியவர் களிடமும் அரசாங்கத்தாரிடமும் உள்ள தனி செல்வாக்கு காரணமாய் மகாநாடு பிரபலமாய் நடந்துவிட்டதேயொழிய கொள்கையின் தத்துவத் தினாலல்ல என்று பேசியதோடு இனி அதே மகாநாடு எங்கும் நடக்காது
குடி அரசு - 19310) 112
என்றும் இதுவே முதலும் இதுவே கடைசியும் என்று சொன் னார்கள். மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றி நாடெல்லாம் விஷமபிரசாரம் செய்தார்கள். இவ்வளவையும் தாண்டி இரண்டாவது மகாநாடும் ஈரோட்டில் மந்திரிகள் தயவில்லாமலும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தயவில்லாமலும் அரசாங்கத்தார் சம்மதமே சிறிதும் இல்லாமலும் இயக்க அனுதாபிகள். முயற்சியிலேயே செங்கற்பட்டு மகாநாட்டை விசேஷமாக இல்லா விட்டா
லும் குற்றம் சொல்வதற்கில்லாமல் நடந்துவிட்டது. சட்ட மறுப்பு இயக்கத்
தின் செல்வாக்கு நமது இயக்கத்திற்கு விரோதமாய் இருந்தும் லட்சியம்
இல்லாமல் நடந்தேறிவிட்டது. அதற்குப் பிறகு இந்த வருடமும் இன்றுவரை கொள்கைகள் மேலும் மேலும் தீவிரமாய் குந்தகமும் இல்லாமல் இயக்கம் பரவிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் இரண்டாவது மகாநாட்டைப் பார்த்தபின்பு நமது எதிரிகள். இந்த மகாநாடு ஈரோட்டில் அல்லாமல் வேறு எங்கு போட்டிருந்தாலும் நடந்
திருக்காது. அவருடைய சொந்த ஊரானதினால் நடந்துவிட்டது. இனி அடுத்த வருஷம் நடக்காது என்றார்கள். பிறகு அடுத்த மகாநாடு இராம நாதபுரம் ஜில்லாவிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றது என்றவுடன் தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லாபோர்டு பிரசிடென்டாய் இருப்பதால் ஒரு சமயம் நடந்தாலும் நடக்குமேயொழிய மற்றபடி அந்த ஜில்லாவில் நடத்த முடியாது என்று சொன்னார்கள். ஆகவே திரு.பாண்டி யன் அவர்கள் இப்போது பிரசிடெண்டு வேலையை விட்டு விட்டதால் இனி நடக்காதென்றே கருதியிருந்தாலும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள் என்பது நிச்சயம்.
தவிரவும் இந்த விருதுநகர் மகாநாடானது பெரியதொரு பிரபல. மகாநாடாக இருக்கப் போகின்றதென்பதை இப்போதே ஞாபகத்தில் வைத்
துக் கொள்ளுங்கள். செய்கையில் கொண்டு வரவேண்டிய பல தீர்மானங் களும் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்களும் இங்கு தீர்மானிக்கப்பட போகின்றது. அப்போது இன்னும் அநேகர் நமது எதிரிகளாவார்கள். அரசாங்கத்தாரும், காங்கிரஸ்காரர்களுடன் சேருவார்களே தவிர நம்முடன் சேர மாட்டார்கள். இருவரும் சேர்ந்து அதிகமாக இருக்கும். அதைவிட ஜமீன்தார்கள் முதலியவர்களின் தொல்லைகளும் இருக்கும். அதைவிட மக்களை ஏமாற்றி அதிகச் சம்பளம் பெற்று சோம்பேரியாய் வாழும் ஆங்கிலம் படித்த கூட்டம் இருக்கும். ஆகவே இந்த நிலைகளை சமாளிப்ப தென்பது லேசான காரியமல்ல. ஆகவே, நாம் வருங்காலத்தில் அதிகமான தொல்லைக்குத் தலை கொடுக்க வேண்டிய அளவுக்கு முன்னதாகவே தக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டியதாய் விருதுநகர் மகாநாடு நடைபெற வேண்டியிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நமது கடைசி லட்சியம் உயர்ந்த ஜாதி என்பதில்லாமல் போகவேண்டுமென்பது மாத்திரமல்லாமல் ஏழை பணக்காரன் என்கின்ற வித்தியாசமும் இல்லாமல்
113 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இருக்கவேண்டும் என்பதோடு ஆளுகின்றவன், ஆளப்படுகின்றவன் என்கின்ற வித்தியாசமும் இல்லாமல் போகவேண்டும் என்பதாகும். இதற்கு விருதுநகரில் விதைபோட வேண்டும் என்பதே எனது உத்தேசம். ஆகை யால் இந்த மகாநாட்டை சிறப்புற நடத்திக் கொடுங்கள்.
குறிப்பு-விருதுநகர் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் 09-02-1931 அன்றுமாலை நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 15.02.1931
குடி அரசு - 19310) 114
66 33 எனது காதல்
மேற்கண்ட தலைப்பின்படி “எனது காதல்” என்பதாக தலைப். பெயரிட்டு கலப்பு மணம் செய்து கொள்ள முடிவுசெய்திருப்பதாகக்கண்டு
ஒரு கடிதம் ராமநாதபுரம் ஜில்லாவில் இருந்து ஒரு பெண்மணி எழுதியதாக எழுதப்பட்டு பிரசுரிப்பதற்காக நமக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
அதில் கையெழுத்தில்லாததாலும், எழுத்துக்கள் பெண் எழுத்துத் தானா என்று சந்தேகிக்கப்படக்கூடியதாகவும் இருப்பதால் அதை பிரசுரிக் கக்கூடவில்லை. ஆனால் அக்கடிதக் கொள்கைக்கு நாம் சார்பளிக்க வேண்டி யது அவசியமாயிருப்பதால் அதை பிரசுரிக்க வேண்டியது அவசியமெனவும் தோன்றுகின்றது.
ஆகவே கையெழுத்துடனும், அது எழுதப்பட்ட பெண்ணின் படம் அல்லது கைரேகையுடனும் நமக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பப்பட்டால் பிரசுரிக்கத் தயாராயிருக்கிறோம். அதில் கண்டகாரியம் நடைபெறவும் நம்
மால் ஆன அனுகூலம் செய்யத்தயாராயிருக்கின்றோம். (பர்.
குடி அரசு - பத்திராபர் குறிப்பு - 15.02.1931
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காந்தி - இர்விண் சம்பாஷணைப் பலண்
எண்ணவாகும்?
இந்தியாவின் முன்னேற்றமானது காங்கிரஸ் ஆரம்பித்தகாலம் முதலே தடைப்பட்டு விட்டதானாலும் சைமன் கமிஷன் ஏற்பட்டது முதல் அதன் பேராலும் பல தடைகள் ஏற்பட்டு வந்தன. இப்போது தொடர்ச்சியாக சட்ட மறுப்பின் மூலமாகவும் வட்ட மேஜை மகாநாட்டின் மூலமாகவும், போறாக் குறைக்கு காந்தி - இர்வின் சமரசப் பேச்சின் மூலமாகவும் மக்களின் கவனங்
கள் இழுக்கப்பட்டு காலம் வீணாகிக் கொண்டே வருகின்றது. அரசியலையே வாழ்வாகவும் தொழிலாகவும் கொண்டவர்களால் இவை பிரமாதப்படுத்தப் பட்டு பொது மக்களின் கவனங்கள் அதில் திருப்பப் படுகின்றன.
எப்படியிருந்த போதிலும், இந்த காந்தி- இர்வின் சமரச சம்பாஷணை: நாளைக்கு என்னமாக முடிந்த போதிலும் கடைசியாக இது ஒரு மினக்கெட்ட வேலையாக முடியப்போகின்றதேஒழிய காரியத்தில் ஒரு பயனையும் உண்டாக்கப்போவதில்லை என்பது மாத்திரம் உறுதியேயாகும்.
சைமன் கமிஷன் ரிப்போர்டிலும் வட்ட மேஜை மகாநாடு முடிவிலு மாவது பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவத்திற்கும் தாழ்த்தப் பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றமடையத்தக்க பிரதிநிதித் துவத்திற்கும் ஹேது ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம். இது இந்தியா வின் பெரும்பான்மையான மக்களுக்கு சுதந்திர உணர்ச்சி வழங்கினது போல: ஆயிற்று. ஆனால் காந்தி - இர்வின் சம்பாஷனையால் ஒன்றுமே ஏற்படப் போவதில்லை என்று தான் சொல்லவேண்டும்.
சமரசப் பேச்சு பேசுவதற்கு முதல் முதலாவது திரு. காந்தியவர்களின். நிபந்தனைகள் ஆறு என்று சொல்லப்படுகின்றது. அவற்றில் முதலாவது அரசாங்கக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது.
இரண்டாவது சர்க்கார் அடக்கு முறைகளை நிறுத்தவேண்டும் என்பது.
மூன்றாவது போலீசார் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். என்பது.
குடி அரசு - 19310) 116
நான்காவது பரிமுதல் செய்த சொத்துக்களைத் திருப்பிக்கொடுத்து விடவேண்டும் என்பது.
ஐந்தாவது இயக்கத்திற்கனுகூலமாகவும் சர்க்காருக்கு விரோதமாக வும் இருந்ததற்காக தண்டிக்கப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தர்களை மன்னிக்க வேண்டும் என்பது.
ஆறாவது கள்ளுக்கடையையும் அன்னிய நாட்டு ஜவுளிக்கடை யையும் மறியல் செய்வதை சர்க்கார் தாராளமாய் அனுமதிக்க வேண்டும் என்பது ஆகிய இவைகளாகும்.
சட்டமறுப்பு நிறுத்தப்பட்டதாய் திரு. காந்தி அவர்களால் ஒப்புக் கொள்ளப்படுமானால் சர்க்கார் தண்டித்து ஜெயிலில் வைத்திருக்கும் கைதி களை வெளியில் விடுவதிலும் அடக்கு முறைச் சட்டங்களை எடுத்து விடுவ
திலும் சர்க்காருக்கு ஆக்ஷபணையிருக்க சிறிதும் நியாயமிருக்காது என்று நினைக்கின்றோம். பரிமுதல் செய்த சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடுவதிலும் சர்க்காருக்கு ஆகேஷபனை இருக்க நியாயமில்லை. ஒரு சமயம் வரி செலுத்தாததால் ஏலம் போடப்பட்ட சொத்துக்களை ஏலம் எடுத்தவர்களி டமிருந்து திருப்பி வாங்கிக் கொடுப்பது சர்க்காருக்கு கஷ்ட மாயிருக்கு மானால் கூட அதற்கு தகுந்ததுகையை௱டு செய்து திருப்பி வாங்கிக்கொடுத்து விடலாம்.
தவிர போலீசார் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டு மென்
பதும், தண்டிக்கப்பட்ட சர்க்கார் அதிகாரிகளின் தண்டனையை மாற்றி அவர் களுக்கு உத்தியோகம் கொடுக்கப்படவேண்டும் என்பதும் ஒன்றுக் கொன்று முறண்பட்ட காரியமாகும்.
ஏனெனில் சர்க்காருக்கு விரோதமாய் ஜனங்களுக்கு அனுகூலமாய் நடந்தவர்கள் மன்னிக்கப்படவேண்டுமென்றால் ஜனங்களுக்கு விரோதமாய் சர்க்காருக்கு அனுகூலமாய் நடந்தவர்களும் மன்னிக்கப்பட வேண்டியது சர்க்காருக்கு நியாயம் என்றே தோன்றும். ஒரு சமயம் இந்த நிபந்தனையானது தண்டிக்கப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தர்களைக் காப்பாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டதாக இருந்தாலும் இருக்கலாம். ஆகவே இதிலும் பிரமாத மாக ஜனங்களுக்கு லாபமோ சர்க்காருக்கு நஷ்டமோ இருப்பதாய் விளங்க வில்லை.
கடைசியாக ஆறாவது நிபந்தனையாகிய கள்ளுக்கடை மறியலும் ஜவுளிக்கடை மறியலும் நடக்க அனுமதிக்கவேண்டும் என்கின்ற நிபந்தனை விவகாரத்திற்கு பொருந்தாததாகவே காணப்படுகின்றது. அவை இரண்டை யும்மறியல் செய்து ஒழிக்கவேண்டியது அவசியமா இல்லையா என்பது வேறு விஷயம். அது ஒரு ராஜி நிபந்தனைக்குப் பொருத்தமானதா என்பது தான் இங்கு யோசிக்கத்தக்க விஷயமாகும்.
" பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஏனெனில் முக்கியமாய் கள்ளுக்கடைமறியல் செய்ததற்காகவும் ஜவுளிக்கடை மறியல் செய்ததற்காகவும் தான் அதிகமானவர்களை கைதி செய்யப்பட்டும், இப்போதும் கைதி செய்துகொண்டும், போலீசாரால் அடிக்கப்பட்டும் வரப்படுகிறது. அப்படி இருக்க “அந்தக் காரியங்களை நான் செய்து கொண்டுதான் இருப்பேன் அதற்காக கைதி செய்தவர்களை: விட்டுவிடத்தான் வேண்டும்” என்று சொல்வது எப்படிப் பொருத்தமானது என்பது விளங்கவில்லை. வேண்டுமானால் பேசப்போகும் சமாதானத் திட்டத்
தில் ஒரு நிபந்தனையாக அதாவது “கள்ளுக்கடைகளை எடுத்துவிட வேண்டும். வெளிநாட்டு துணிகளை இந்தியாவிற்குள் வரவிடக்கூடாது” என்று பேசலாம்.
அதை விட்டுவிட்டு இந்தப்படி கேட்பது “கிளர்ச்சி செய்துகொண்: டிருக்க சர்க்கார் சம்மதிப்பது தான் கிளர்ச்சியை நிருத்துவதாகும்'” என்று சொல்வதுபோல்தான் காணப்படுகின்றது.
ஆகவே இவற்றின் விவகாரத் தன்மை எப்படியோ ஆகட்டும். னால் எல்லாம் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் பலன் என்ன என்பதுதான் த வுக்கு ஏற்ப கு துது இப்போது இங்கு யோசிக்கப்படும் விஷயமாகும்.
மரியலின் மூலமாய் மது பானத்தையும், அதன் கெடுதியையும் நிருத்திவிடலாம் என்பது சாத்தியப்படக்கூடியது என்று நினைக்கத்தகுந்த காரியமல்ல என்பதே நமதபிப்பராயமாகும். இந்து மதத்தில் 100-க்கு 60 பேர்களுக்கு மேலாகவே இன்றும் இந்துக்களின் கடவுள்களில் சிலவற்றுக்கு கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி வைத்துப் படைக்க வேண்டியிருப்பதும், அதைப் பிரசாதமாய்க் கொள்ளவேண்டியதாயிருப்பதும், சுலபத்தில் மறைத்து விடக்கூடிய காரியமல்ல, கள்ளை நிருத்த வேண்டுமானால் முதலா வதாக அந்தக் கடவுள்களையும், கடவுள் பூசைகளையும், சட்ட மூலமாகவும், மரியல் மூலமாகவும் ஒழித்தாகவேண்டும். இரண்டாவதாக சர்க்காருடைய கள்ளு இலாக்கா நிர்வாகத்தில் நமது மக்கள் இருந்து கொண்டு நிர்வாகம் நடத்திக் கொடுத்து பயன்பெறுவதை நிருத்தியாக வேண்டும். கள்ளுக் கடையில் நின்று கொண்டு செய்யும் மரியலை நிருத்திவிட்டு கள்ளு நிர்வாக இந்திய அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் வீட்டிலும், ஆபீசிலும், மரியல் செய்யவேண்டும்.
இந்தப்படிக்கு இல்லாமல் கள்ளுக் கடையின் முன்னால் நின்று கொண்டு போலி நாடகம் நடிப்பதில் எப்படி கள்ளு நின்றுவிடும்? என்பது நமக்கு விளங்காது. அது போலவே வெளிநாட்டுத் துணியை நிருத்த வேண்டுமென்றால் கப்பலி லிருந்து இறக்குமதியாவதை மாத்திரம் காவல் வைத்துத் தடுப்பதால் ஒருவித பயனும் ஏற்பட்டுவிடும் என்று நினைப்ப தற்கில்லை. ஏனெனில் நம்மை விட அதிகமான கூலி சம்பாதிக்கும் படியான ஒரு நாட்டில் செய்யப்பட்ட சரக்கானது மிக்க குறைந்த கூலிக்குக் கிடைக்கும்
குடி அரசு - 19310) 118
ஆள்கள் இருக்கும் நாட்டில் கொண்டுவந்து இந்த நாட்டுச் சரக்கை விட
குறைந்த விலைக்கு விற்பதென்றால் இதன் குற்றம் எங்கு இருக்கின்றது என்று உணரவேண்டாமா என்று கேட்கின்றோம். இங்கிலாந்தில் நூற்பு நெசவுத் தொழிலில் ஈடுபட்ட கூலிகள் தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 3ரூ.4ரூ.5ரூ.
வீதம் சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் நூற்பு நெசவுத் தொழிலில் ஈடுபட்ட கூலிகள் தினம் ஒன்றுக்கு சிலர் 2 அணாவும் சிலர் 8 அணா, 10 அணா,12 அணாவும்தான் சம்பாதிக்கிறார்கள். தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 3ரூ.
4ரூ. கூலிகொடுத்து நூற்று நெய்து, போக வரக் கப்பல் சார்ஜ்ஜும் கொடுத்து வரியும் கொடுத்து இந்திய விலையைவிட எப்படி சல்லீசாய் கொடுக்க அவர் களால் முடிகின்றது என்பதை யோசித்து அதற்குத் தகுந்த வழிசெய்யாமல் வெளி நாட்டார் மீது கோபிப்பதில் என்ன பலன் என்றே திரும்பவும் கேட் கின்றோம். ராட்டினத்தையும், தக்களி யையும் வைத்துக்கொண்டு கை நெச
வில் நெய்துகொண்டு 2000 வருஷம் உட்கார்ந்து தவம் செய்தாலும், எப்படிப் பட்ட சட்டமறுப்பு செய்தாலும் ஒரு காலமும் நாம் சீமைவிலை அடங்கும்படி துணிகளை வழங்க மாட்டோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள விரும்புகின்றோம்.
யந்திரங்கள் செய்வதில் நமக்குச் சிறிதும் கவலையில்லை-யந்திரங்கள் மூலமாய் வஸ்துக்களை உண்டாக்குவதில் நமக்குச் சிறிதும் கவலை யில்லை. அது மாத்திரமல்லாமல் இந்த இரண்டு காரியமும் இந்தியாவின் “தரித்திர நாராயணன் பேரால் பெரிய பாவம்” என்று கருதிக்கொண்டு 1000 வருஷத் திற்குமுன் இருந்த இராட்டினத்தையும், சோம்பேரிகள் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாவதற்காகச் செய்து கொண்டிருந்த தக்ளியையும் கொண்டு சீமைத் துணியை மரியல் செய்ய வேண்டுமென்று சொன்னால் சிறிதாவது அறிவும், சுயேச்சையும் உடையவர்கள் எப்படி உடன்படக் கூடும் என்று கேட் கின்றோம்.
இந்த மாதிரி மறியலால் இந்திய மக்களுக்கு என்ன பலன் கிடைக் கக்கூடும் என்றும் கேட்கின்றோம். இந்திய தேசிய செல்வமெல்லாம் சாமிக்
கும், சடங்குக்கும் அழுதுவிடுவதின்மூலம் ஏழை மக்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டு, ஏழைகளின் அவசியமான சாதனங்களையும், சல்லீசாய் அடையமுடியாமல் இந்தப்படி தடுத்துவிட்டால் எப்படி ஒரு நாடு முற்போக்கடைய முடியும்?
உண்மையான நல்ல எண்ணத்துடன் மறியல் வேலை செய்ய வேண்டு மானால் மறியலுக்கு வேறு நல்ல காரியம் இல்லை என்று யாராவது சொல்லி விட முடியுமா? இந்திய தேசியத்தின் பேரால், அரசியலின் பேரால், சீர் திருத்தத்தின் பேரால் ஏழைகள் பணத்தை வரியாகத் தட்டிப் பிடிங்கி சம்பள மாகப்பகல் கொள்ளை அடிப்பதை ஏன் மறியல் செய்யக்கூடாது என்று கேட் கின்றோம். உலகத்தில் எந்த தேசத்திலும் அந்தந்த தேச சர்க்காரை
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
நடத்துவதற்கு அந்தந்த நாட்டு மக்கள் அடையும் சம்பளத்தை விட இந்த தேசத்தில் இந்த தேச படித்த மக்களால் தேசியவாதிகளால் 100க்கு 200, 300. பங்கு வீதம் அதிகமாக கொள்ளை அடிக்கப்படுகின்றது.ஏழை மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் மற்ற தேசமக்கள் அடைவதை விட 100க்கு 50 பங்குக்கு மேல் குறைவாய் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதை யார் கவனித் தார்கள்? கவனிக்கின்றார்கள்? என்று கேட்கின்றோம். மற்றும் இந்த உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் மதத்திற்காகவும் மதம் காப்பாற்றப் படுவதற்காகவும், கடவுளுக்காகவும் கடவுள்கள் காப்பாற்றப்படுவதற் காகவும், அனாவசியமாய் ஒரு தம்பிடியும் செலவாகாமல் கவனிக்கப் படுகின்றது. இந்த தேசத்தில் இந்த தேச செல்வத்தின் பெரும்பாகம் அதாவது சரிபகுதிக்கு மேலாகவே மதத்
திற்கும், கடவுளுக்கு மென்று நாசமாக்கப்படுகின்றது. இதை யாராவது திரும்பிப்பார்க்கின்றார்களா என்று கேட்கின்றோம். போறாக்குறைக்கு செத்துப்போன தேசியத்தலைவருக்கும் சிரார்த்தம் செய்யப்பட்டு ஜனங் களுக்கு சடங்கின் முக்கியத்தைப்பற்றி பிரசாரம் செய்து வழி காட்டப்பட்டாய் விட்டது. இருக்கின்ற தேசியத் தலைவர்களாலும் மகாத்மாக்களாலும் தினம் தினம்ராம பஜனையும், நாமா வளியும் கடவுள் தோத்திரமும் ஸ்துதியும் காலம் தவராமல் கணக்குப்படி செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் தலைவர்களால்
- வழிகாட்டிகளால் வரப்போகின்றதாம் சுயராஜியம் என்று கருதிக்கொண்டு இருக்கின்றோம்-அதிலும் தகப்பன் எலும்பை கங்கையில் போடுவதால். தகப்பன் மோக்ஷத்திற்கு போகக் கூடுமென்று பூரணசுயேச்சைக்கார பண்டித ஜவாரிலால் நடந்துகொண்டதை நினைக்கும் போது இனி யாரை நம்புவது என்பது விளங்கவில்லை - நிர்க்க இன்றையத்தினம் மேல். நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் தங்கள் அரசாங்கத்தில் கீழ்தர சிப்பந்தி களுக்கு சம்பளங்களை உயர்த்தவும், நடுத்தர உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வை நிருத்தவும் மேல்தர உத்தியோகஸ்தர்கள் சம்பளம் குறைக்கவும் திட்டம் போடுவதை தேசிய வேலையாய்க் கொண்டிருக்கின் றார்கள். உதாரணமாக, பிரிட்டிஷ் மந்திரியும், நியூஸ்லண்ட் மந்திரியும், ஆஸ்திரேலியா மந்திரியும் தங்கள் தங்கள் சம்பளங்களை யாரும் சொல்லு வதற்கு முன்பே குறைத்துக்கொண்டு மற்ற உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தைக் குறைக்கத் திட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இது பணக்கார வாழ்வை இரக்கி ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதற்கு அடிகோலுவதாகும். இப்படிப்பட்ட அவர்களுடைய வாழ்வும் நாணை யமும், பொருப்பும், தகுதியும் இந்தியாவிலுள்ள உத்தியோகஸ்தர்களுடைய தை விட- தேசியத் தலைவர்களுடையதை விட சிறிதும் குறைந்ததல்ல என்றே சொல்லலாம். ஆனால் அவர்கள் வாங்குகின்ற சம்பளத்தைவிட இந்திய உத்தியோகஸ்தர்கள் இந்தியாவுக்கு சேவை செய்வதன் மூலமாய் வாங்கும் சம்பளங்கள் அனியாயமானதாய் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. இந்த சம்பளங்களுக்காகவே ஏழைகள் வருத்தப்படுகின்றார்கள் என்பதையாரும் கவனிப்பதில்லை. மேலும் இந்தமாதிரியான சம்பளக் கொள்ளைக்காரர் இன்று
குடி அரசு - 19310) 120.
இந்தியாவின் பல பாகத்தில் சட்டமறுப்புக்கு உதவியாளராகவும், தேசியத் தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் இருந்து வருவது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். இந்த நிலையில் இன்னும் அதிகாரம் அதிகமாக வேண்டுமென்
றும் உத்தியோகம் பெருக வேண்டுமென்றும் ராணுவம் முதலியது தங்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் கேட்கப் படுகின்றது.
இராணுவ இலாக்கா இந்தியர்கள் கையில் ஒப்படைக்கப்படப்: போவதால் இன்று என்ன புதிய நன்மை விளைந்துவிடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. வேண்டுமானால் இராணுவ இலாக்கா இந்திய மயமாக்கினவுடன் திருவாளர்கள் சீனிவாச சாஸ்திரிகள் பிள்ளைகளும், ராம
சாமி அய்யர்கள் பிள்ளைகளும், ரங்காச்சாரிகள் பிள்ளைகளும், குமாரசாமி சாஸ்திரிகள் பிள்ளைகளும், சர்மாக்கள் பிள்ளைகளும் கேப்டனாகவும், கர்னலாகவும், ஜனரலாகவும், பிரிகேடியர்களாகவும் வந்துவிடக் கூடுமே அல்லாமல் மற்றபடி ஏதாவது ஒரு ராஜியத்தைப் பிடித்து இந்திய ஆக்ஷி யின் எல்லையை விரிவாக்கிக் கொடுத்துவிடுவார்கள் என்று கருதக்கூடுமா என்று கேட்கின்றோம். வேண்டுமானால் இவர்களால் இந்தியாவைக் காப்பாற்று வதைவிட இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து உர்ச்சவங்கள், இந்து கோவில்கள், இந்து வருணாச்சிரம தர்மங்கள், இந்து சிரார்த்தங்கள், இந்து மனுதர்ம சாஸ்திரங்கள் புராணங்கள் முதலியவைகளே பத்திரமாய் காப் பாற்றப்படும். இவைகளுக்கு விரோதமாக யாராவது பேசினால் அவர்கள்
பக்கம் ஜனரல் டையர் போல் பீரங்கிகளை திருப்பப்படுமே அல்லாது இவர் களால் வேறு என்ன செய்யக்கூடும்.
ஆகவே பொதுஜனங்கள் தன்னம்பிக்கையற்று பகுத்தறிவற்று மூடர் களாகவும், மூட நம்பிக்கைக்காரர்களாகவும் இருக்கும்வரை இந்த மாதிரியாக யாரோ சிலரால் ஏதோ வழிகளில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் படியான காரியம் நடந்து கொண்டுதான் வரும் என்பதில் அதிசயமொன்றுமில்லை. ஆதலால் எந்தக் காரியத்தையும் கண்மூடித்தனமாய் நம்பி விடாமல் பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் யோசித்துப் பார்க்கும்படி வேண்டு கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.02.1931
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இந்தியாவில் அறிவு இயக்கம்
மேல்நாடுகளில் இது சமயம் வெகு தீவிரமாய் நடைபெற்று வரும் அறிவு இயக்கப்பிரசுரங்கள் பல என்பதும் அதுவே இந்தக்காலத்திய முக்கியமான காரியமாய் எங்கும் கருதப்படுகின்றது என்பதும் யாவரு மறிந்த விஷயங்களாகும். அவற்றுள் ருஷியாவிலும், சைனாவிலும், ஜெர்ம னியிலும்,துருக்கியிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடப்ப வைகள் மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும் நடைபெறுபவைகளாகும்.
நிற்க, இவ்வியக்கங்கள் முழுவதும் மிகுதியும் மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியிலும் சமரசத்திலுமே கவலை வைத்து நடத்தப்பட்டு வருகின்றவைகளாகும் என்பதில் யாருக்கும் ஆக்ஷபனை இல்லை. இதில் கலந்து முக்கிய பங்கெடுத்து வேலை செய்து வருபவர்களும் பெரிதும் உலகினோரால் வீரர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் உண்மையாளர்கள். என்றும், மதிக்கப்படக் கூடியவர்களாகவே இருந்து வருவதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.
ஆகவே இவ்வறிஞர்களான பெரியோர்கள் மக்களுக்கு அறிவையும், சமத்துவ உணர்ச்சியையும் ஊட்டுவதற்காக முயற்சி செய்து வரப்படும் பிரசாரங்கள் பெரிதும் மனித சமூகத்தின் எல்லாவித கெட்ட காரியங்களுக்
கும் ஆதாரமாய் முதலில் மதமும் மதத்தலைவர்கள் உபதேசமும் பிறகு கடவுளும் காரணமாய் ஏற்பட்டுவிட்டதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டு அவை களைப்பற்றிய மக்கள் அபிப்பிராயங்களை அடியோடு தலைகீழாய் மாற்று வதையேலக்ஷியமாய்க் கொள்ள வேண்டியதாகி அந்தப்படி பிரசாரம் செய்து கொண்டு வருகிறார்கள். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் கடவுள் என்பதான ஒரு பொருள் எவ்வித திணை பால் உடையதாக இல்லை என்கின்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்து அதன் அவசியத்தையும் மறுத்து காலத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி பிரசாரம் செய்து வருகின்றார்கள். இந்த உணர்ச்சியானது பொதுவாகவே அறிஞர்களாய் இருப்பவர்களுக்கு எவ்வித சுயநலமுமற்ற தன்மையோடும் விருப்பு, வெறுப்பும் காரணமாய் இல்லாமலும் மக்களை மக்கள் சுயநல காரணமாய் அறிவில்லாமற் செய்து ஆதிக்கம் செலுத்தி கொடுமைப்படுத்திவருவதைக் கண்டு சகியாமலே உண்மையான ஜீவகாருண்யத்தின் மீதே ஏற்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்காக
குடி அரசு - 19310) 122
அப்பெரியோர்களால் பல பல இடங்களில் பல இயக்கங்கள் தோற்றுவிக்கப் பட்டதுடன் பல புத்தகங்களும் எழுதப்பட்டு பல பத்திரிகைகளும் நடத்தப் பட்டு வருகின்றன.
அவற்றில் ஒன்றான அதாவது லண்டனில் ஸ்தாபித்து நடைபெற்று வரும் “ரேஷனலிஸ்ட்டு பிரஸ் அசோசியேஷன்” (அறிவு ஆராய்ச்சி யாளர்களின் அபிப்பிராய பதிப்பு சங்கம் லிமிடெட்) என்னும் சங்கத்தாரால் பல புத்தகங்கள் அச்சிட்டு அடக்கவிலைக்கு வினியோக்கப்பட்டு வருவது டன்1855-ஆம் வருஷம்- முதல் அதாவது சென்ற 46 வருஷங்களாகவே ஒரு பத்திரிகையும், “லிட்டரரி கைய்ட்”( அறிவு விளக்கம் ) என்னும் பேரால்:
நடத்தப்பட்டு வருகின்றது. இந்த இயக்கத்திற்கு இந்தியாவில் அநேகர் அங்கத்தினர்களாக இருந்து வருகின்றார்கள். ஆகவே அதன் பிப்ரவரி மீ” பத்திரிகையில் “இந்தியாவில் அறிவு இயக்கம்” என்னும் தலைப்பில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருக்கின்றது. அவ்வியாசம் அவ்வியக்கத்தைச் சேர்ந்த இந்திய நண்பர் ஒருவராலேயே எழுதப்பட்டதாக விளங்குகின்ற தானாலும், அது மேல் நாடுகளின் கவனத்தையும் இழுத்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
அதில் காணப்படுவதின் சுருக்கமாவது :-
“இந்திய சரித்திரத்தில் அதிசயக்கத்தகுந்தபடி இந்த 5 வருஷ காலத்தில் ஒரு பெரிய புத்துணர்ச்சிப் பிரவாகம் இருகரையும் புரண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் ஐந்தாறு வருஷ, காலத்திற்கு முந்தி சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களால் வெகு காலமாக மரியாதை செய்யப்பட்டுவந்த அபிப்பிராயங்களுக்கும், நம்பிக்கை களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரத்திலேயே ஆட்டம் ஏற்படும்படி செய்துவிட்டது. இந்த இயக்கமானது ஆரம்பத்தில் இந்துக்களில் 100க்கு 97 பேர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி மக்களை ஏமாற்றிப் பிழைத்து வந்த சோம்பேறிச் சுயநலப் பார்ப்பனீயத்தின் மீது பாய்ந்து அதைக் கண்டிப்பதின் மூலமாய் தொடங்கிப் பிறகு ஜாதி வித்தியாசத்தைக் கண்டிப்பதில் இறங்கி பிறகு விக்கிரக ஆராதனையையும், பூஜை, உற்சவம் முதலிய செலவுகளையும் கண்டித்துப் பிறகு இந்து மதத்தையும் கண்டித்து அதன் பிறகு மதங்கள் என்பவைகளையெல்லாம் பொதுவில் கண்டிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையானது மேலும் மேலும் வளர்ந்து தானாகவே பிறகு. ஆராய்ச்சித் துறையில் இறங்கி தயவு தாட்சியண்ணியின்றி பகுத்தறிவை உபயோகிக்
கச் செய்து விட்டதால் இப்போது மனிதனுக்குக் கடவுள் என்பதும் அவசியமில்லாதது. என்று கருதி அதையும் மறுக்கத்தொடங்கிவிட்டது. இந்த மாதிரி ஒரு இயக்கம் தோன்றி மூடநம்பிக்கையிலும், பிடிவாதத்திலும் குருட்டுப் பழக்க வழக்கங்களிலும் புதைபட்டு கடவுள் பேரால் தன்னறிவு கெட்டுக் கிடந்த மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டாக்கியதானது இந்தியாவின் சரித்திரத்தில் இதுவே முதன்மையானது என்பது
குறிப்பிடத்தகுந்ததாகும். இதுசமயம் இந்தியாவில் இந்த ஒரே ஒரு அறிவு இயக்கம் இருப்பதால் இந்த இயக்கமானது பயமற்ற தன்மையில் பூரண பகுத்தறிவையும் வலியுறுத்தி பிரசாரம் செய்ய வேண்டியதாகி விட்டதின் பயனாய் ஏராளமான எதிற்புகள்
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பயங்கரத்தன்மையோடு பல பக்கங்களில் இருந்து தோன்றி தொல்லைகள். விளைவிக்க வேண்டியவைகளாகி விட்டன.
ஆனால் இவ்வியக்கத்தலைவரும் இவ்வியக்கப் பிரசாரத்திற்கு ஆதாரமான *குடி அரசு” என்னும் தமிழ்வாரப்பத்திரிகையின் பத்திராதிபருமானவர் சிறிதும் சளைக்காமலும் பயப்படாமலும் செய்து வந்த வேலையின் பயனாய் இவ்வியக்கக் கொள்கைகள் வாலிபர்களின் மனதைக் கவர்ந்து விட்டதால் அவர்கள் தங்கள். பகுத்தறிவு, காரணம் என்னும் ஆயுதங்களால் எதிரிகளான வைதிகர்களை: தலையெடுக்க ஒட்டாதபடி செய்துவிட்டதுடன் எப்படிப்பட்டவர்களுடனும் வாதுக்கு நின்று தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்த வரிகட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த இயக்கத்தின் அநேக கொள்கைகளில் சமீபத்தில்வரும் ஜனகணிதத்தில் ஜாதிமதப் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடாது என்பதும் ஒன்றாகும்.இதற்கு அரசாங்க. முயற்சியும் உணர்ச்சியும் எதிராக இருந்த போதிலும் அனேகர் தங்கள் ஜாதி மதப்பெயர்களை கொடுப்பதில்லை என்றே முடிவுகட்டி இருக்கின்றார்கள் ஆகவே இந்த இயக்கம் இந்தியாவில் செய்துள்ள வேலையை அறிவதற்கு சமீபத்தில் வரும் ஜனகணிதம் ஒரு சாதனமாகும்”
என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
குடி அரசு - கட்டுரை - 22.02.1931
குடி அரசு - 19310) 124.
தேசீய வியாயாறம்
உலகத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கைக்கு விதாயங்கள். ஏற்படுத்திக்கொள்ளுவதில், பலர் பொது நல சேவை என்பதையும் ஒரு மார்க்கமாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பது யாவரு மறிந்த விஷயமாகும்.அந்த முறையிலேதான்,இன்று எல்லா விதமான பொது நல சேவைகள் என்பவைகளும், ஒரு தனித்தனி மனிதனின் சுய நல. வாழ்க்கையை முக்கிய நோக்கமாகவும், அடிப்படையாகவும் கொண்ட தாகவே இருந்து வருகின்றன.
இந்தநிலைமையானது, இந்நாட்டின் மக்களின் உண்மையான பொது நலம் என்பதை அடியோடு கெடுத்து விட்டதுமல்லாமல், இம்மாதிரி தன்மை களால் பொது நல வாழ்வானது உண்மை, ஒழுக்கம், நாணயம் என்பவைகள்
சிறிதும் இல்லாத புரட்டுக்கும், பொய்யுக்கும், வஞ்சகத்திற்கும்,நிலையா யுள்ள ஒரு வியாபார சாலை போல் ஏற்பட்டு விட்டது. இதன் பயனாகவே மக்கள் மிகவும் ஏமாற்றப்பட்டு, கஷ்டத்திற்கும், கொடுமைக்கும் ஆளாகி முற்போக்கடைய சிறிதும் இடமில்லாமல் போய் விடுகின்றார்கள். இந்த மாதிரியான காரியங்கள், சமீப காலம் வரை மதம், கடவுள், மோக்ஷம், சன்
மார்க்கம் முதலாகியவைகளின் பேராலேயே பெரிதும் நடந்துவந்திருந் தாலும், கொஞ்சகாலமாய் தேசம், தேசீயம், சுயராஜ்யம் என்பவைகளின் பேரால் வியாபாரமாகவே துவக்கப்பட்டு, மக்களுக்கு பெறுத்த இடையூறை யும், கஷ்டத்தையும் கொடுத்து வருகின்றது. ஆகவே, இந்த தத்துவத்தையே முக்கியமாய் எடுத்துக்கொண்டு இதை எழுதுகின்றோம்.
ஏனெனில், சாதாரணமாக மற்றபல நாடுகளில் பொது நலசேவை என்பதில் ஈடுபடுகின்றவர்கள் பலர் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும், கவலைக்கும் உள்ளாகி, அநேகவித தொல்லைகளை அனுபவிக்கின்றார் கள். ஆனால், இந்த நாட்டிலோ, சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லை யும், கவலையும் இல்லாமல், நேருக்கு நேராகவே, உடனுக்குடனே, பதவி, உத்தியோகம், பணம், கீர்த்தி, அதிகாரம் முதலியவைகள் மாற்றுப்பண்ட மாக அடையப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு காரணம், பொது மக்களை ஒரு கூட்டத்தார், மேலே குறிப்பிட்டபடி ஏற்கனவே மதம், கடவுள், மோக்ஷம், விதி முதலாகியவைகளால் மூட நம்பிக்கைக்கு ஆளாக்கி வைத்திருப்பதால், அந்த மூடநம்பிக்கையானது, அந்த மக்களை, தேசீய வியாபாரிகளிடமும் சிக்கி,
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஏமாந்து, கஷ்டப்படும்படி செய்து வருகின்றது.
உதாரணமாக, இந்திய தேசீய காங்கிரஸ் என்னும் ஒரு தேசீய வியா பார லிமிடெட் கம்பெனியானது, அது ஏற்படுத்தப்பட்ட நாள் முதலாகவே, அந்த தேசீய வியாபாரக் கம்பெனியில் நிர்வாக ஸ்தானம் வகித்தவர். களுக்கெல்லாம், பெரும்பான்மையாய், ஹைகோர்ட் ஜட்ஜ் உத்தியோகமும், நிர்வாக சபை அங்கத்தினர் பதவியும், மற்றும் அதில் சேர்ந்த பங்காளி. களுக்கெல்லாம், ஜில்லா ஜட்ஜ், சப் - ஜட்ஜ் முதலிய உத்தியோகபதவிகளும், மற்றும் பட்டம், கெளரவ உத்தியோகங்கள்,தொழில் விர்த்தி ஆகியவைகளும் தாராளமாய்க் கிடைத்து வந்தது யாவரும் அறிந்ததே யாகும்.
இந்த நிலைமையானது நாளுக்கு நாள் பெருகி, அநேகர் இவ் வியாபாரத்தில் பங்கெடுக்க நேர்ந்ததின்பின், லிமிடெட் கம்பெனியாய் இருந்ததானது அன்லிமிட்டெட் கம்பெனியாகி அதாவது ஒருவகுப்பாருக்கு
மாத்திரம், ஒரு தரத்தாருக்கு மாத்திரம் என்று வரையறுக்கப் பட்டிருந்ததானது மாறி, எல்லா வகுப்பாருக்கும், எல்லாத் தரத்தாருக்கும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள செளகரியம் ஏற்பட்டு, பிறகு, அதற்கு அநேக (பிரான்ச்சு ) கிளை ஸ்தாபனங்களும் உண்டாகி, இப்போது வரவரப் பெருகி, ஏறக்குறைய
சிறிது கல்வியும், தந்திரமும் உள்ள எல்லா மக்களுமே, தேசீய வியாபாரத்தில் கலந்து, அளவுக்குமீறிய அதாவது தங்கள் யோக்கியதைக்கும், தகுதிக்கும் எத்தனையோ பங்கு மீறியதான லாபத்தை- பயனை அடையும்படியாகச் செய்து விட்டது.
ஆகவே, இன்றையதினம் இந்த நாட்டில், பொது மக்களின் செளக்கி
யத்திற்கும், பத்திரத்திற்கும், ஒழுக்கத்திற்கும் விரோதமானது என்று சொல்லத் தகுந்த கள்ளு, சாராயக்கடை, சூதாடுமிடம், விபசாரிகள் விடுதி, கொள்ளைக் கூட்டத்தார் முதலாகிய எல்லா வித ஒழுக்கமும், நாணையமும், கெட்ட துறைகள் ஸ்தாபனங்கள் என்பவைகளை யெல்லாம் விட,மிக்க மோசமான துறையாகவும், ஸ்தாபனமாகவும் உள்ள ஸ்தானத்தை மேல்படி தேசீய வியாபாரம் அடைந்து விட்டது.
இன்னும் விளக்கமாய் பேச வேண்டுமானால், வேறு எந்தக் காரியத் தாலும் பிழைக்க முடியாதவர்களும், ஒழுக்கமும், நாணயமும் அற்றவர் களும்,மக்களை ஏமாற்றி வாழும் மோசக்காரர்களும் கடைசியாய்ப் போய் அடைக்கலம் புகுவதற்கு இன்று தேசீய வியாபாரத்தைவிட வேறு சுலபமான வழிநாட்டில் ஒன்றுமே இல்லை என்று சொல்லும்படியானதாகி விட்டது. இந்த அபிப்பிராயம், இன்னும் பலமாய் வலியுறுத்தத்தக்க மாதிரியில், முதல் முதல். ஆங்கிலத்தில் அகராதி எழுதின ஒரு ஆங்கில அறிவாளியான, டாக்டர். சாமியல் ஜான்சன் என்பவர், தேசபத்தி என்பதை, "Patriotism is the last refuge
of the scoundrel” என்று எழுதி இருக்கின்றார். இதன் பொருள் என்னவென்றால், “தேசீயம் - தேசபக்தி என்பது வேறு எந்த விதத்திலும் பிழைக்கமுடியாத
குடி அரசு - 19310) 126
அயோக்யர்களின் பிழைப்புக்கு கடைசி மார்க்கமாகும்” என்பதாகும். ஜார்ஜ் பர்நார்டு ஷா என்னும் மற்றொரு ஆங்கில அறிஞர், இதே விஷயமாய், “நிரந்தரமாய் ஒரு வேலையில் இருந்து வாழ முடியாதவர்கள், தங்களை: அரசியல் வாதியாக ஆக்கிக் கொண்டு, அதிலேயே தங்களது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுவார்கள்” என்று எழுதி இருக்கிறார். இந்த அறிஞர்களின் அபிப்பிராயங்கள் பெரிதும் மேல் நாட்டு அனுபவத்தைப் பொருத்தது என்று சொல்லலாம். ஆனாலும், கீழ் நாட்டு தேசியம் என்பதும், பெரிதும் மேல் நாட்டு நடப்பைக் கண்டே ஆரம்பிக்கப் பட்டிருப்பதாலும், ஏதோ சில பெரியார்கள் தவிர, மற்றபடி பெரும்பான்மையான மக்கள், நமது நாட்டிலும் அப்படிப் பட்டவர்களுக்காகவே ஏற்பட்டு,அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு, தேசீயத்தை ஆதாரமாய் உபயோகப்படுத்தி, மக்களை ஏமாற்றி, நாணையம் சிறிதுமற்ற தன்மையில், சுயநலமிகளாய் இருந்து பயனடைந்து வருவதாலும், தப்பித் தவறி யோக்கியமானவர்கள் ஒருவர், இருவர் இதில் சேர்ந்தாலும், அவர்களும் அந்தத் துறையிலேயே இழுக்கப்படுகின்ற படியாலும், மேல் குறிப்பிட்ட அறிஞர்கள் கண்ட உண்மைகள் இந்தியாவுக்கு அடியோடு பொருத்த மற்றது என்று சொல்லிவிடுவதற் கில்லை என்றே சொல்லுகின்றோம். இதற்கு உதாரணமாக, கொஞ்சகாலமாய் நமது நாட்டில் உள்ள ஜனப் பிரதிநிதி ஸ்தாபனங்கள் என்பவைகளில், ஜனப்பிரதிநிதிகளாய் நியமனம் - தேர்தல் முதலியவை பெற்ற கிராமப் பஞ்சாயத்து, தேவஸ்தானப் பஞ்சாயத்து வகையறாக்கள் முதல், மந்திரிகள், நிர்வாக சபையார்கள், கவர்னர்கள் என்கின்றவர்கள் வரையிலும், மற்றும், இந்த முறையில் அதிகாரம், சர்க்கார் சம்பள உத்தியோகம் முதலியவை பெற்ற சிப்பந்திகள், தலையாரி உத்தி யோகம் முதல் கலெக்டர், ஹைகோர்ட்ஜட்ஜ் உத்தியோகம் வரையிலும் அவற்றில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர்கள் என்பது மாத்திரமல்லாமல், முக்காலே மூணுவீசம் முக்காணி அரைக்காணி வரையில். உள்ளவர்களின் யோக்கியதையும், அவர்களின் தேசீயம் - பொதுநல சேவை ஆகியவற்றின் தன்மைகளை சுத்தமான நடுநிலைமையிலிருந்து பார்த்தால் விளங்காமல் போகாது. ஆகவே, இந்தப்படி நாம் மேலே விவரித்தெழுதிய
தின் நோக்கம் எல்லாம் முக்கியமாய் தேசீயம் என்பது பதவியும், உத்தி யோகமும், பணமும் சம்பாதிக்கும் மார்க்கமான வியாபாரத் துறையாகும் என்பதை, மக்களுக்கு வெளிப்படுத்தவே எழுதியதாகும். பொதுவாக, சுயநலமில்லாமலும், மோசம், ஏமாற்றுதல் ஆகியவை இல்லாமலும், தகுதிக்
கும், தேவைக்கும் மேல் அடைய ஆசையில்லாமலும்,நாணையமாய் உழைக் கக்கூடிய பெரியார்களும் இதில் உண்டு என்பதை நாம் மனமார ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும், அவர்கள், வெகு, வெகு, வெகு சிலரேயாகை
யால், அதைப்பற்றி கவனித்துக்கொண்டு, இவ்வளவு கெடுதலான விஷயத்தில்
சிறிதும் தாக்ஷண்ணியம் காட்டுவது தவறு என்று கருதி மொத்தமாக எழுதுகின்றோம்.
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இந்தியமக்களின் நிலைமை ஏழ்மை என்பதிலும், தரித்திரத்தால் கஷ்டப்படுகின்றார்கள் என்பதிலும், தினம் ஒன்றுக்கு, ஆள் ஒன்றுக்கு 2 அணா வரும்படிக்கும் குறைவாயுள்ள வரும்படிக்காரர்கள் என்பதற்கும், ஆக்ஷேபனை சொல்லுகின்றவர்கள் யாருமே காணோம். அப்படிப்பட்ட நாட்டில், தேசீயத்தின் பேரால், மீ”ஒன்றுக்கு 4333-5-4, 5333-5-4 6000-0-0, 7000-0-0 ரூபாய்கள் சன்மானமாக சம்பாதிப்பதும், பொதுநல சேவையின் பேரால் மாதம் ஒன்றுக்கு 1000, 2000, 3000, 4000 ரூபாய்கள் வீதம் சம்பளம் சம்பாதிப்பதும், பொது ஜன நன்மைக்கு உபகாரமான வேலை (வக்கீல் தொழில் ) முதலியவைகள் என்னும்பேரால் மீ£1க்கு 10000, 20000, 30000 ரூபாய்கள் வரையில் சம்பாதிப்பதும், மற்றும் பல சாதாரண உத்தி யோகங்களிலும், இதுபோலவே, பீ” ஒன்றுக்கு 100, 500,100, 2000 வீதம் சம்பளம் பெறுவதுமான காரியங்கள் எப்படி தேசபக்தியானதும், தேசீயமா னதும், யோக்கியமானதுமான காரியங்களாகும் என்று கேட்கின்றோம். @ e பட்டணம் பக்காவில் 6படி அரிசி விற்கின்ற இந்தக் காலத்தில், வெள்ளாமை விளைபொருள்களுக்கு விலை இல்லாத காலத்தில், கைத் தொழில் தொழிலாளர்களுக்கு போதியதொழிலும், கூலியும் கிடைக்காத காலத்தில், வியாபாரிகளுக்கு வியாபாரமும், பணப்புழக்கமும், வறும்படியும் இல்லாமல் கஷ்டப்படும் இக்காலத்தில், ஒருபெரிய நாடு கண்கள் பிதுங்க, தத்தளித்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற நெறுக்கடியான நிலைமையில், தேசீயத்தின் பேராலும், பொது நல சேவையின் பேராலும், இந்தப்படி ஒரு கூட்டம் மக்களை கொள்ளை அடித்தால், இந்தமாதிரி தேசீயமும், பொது நல சேவையும், யோக்கியமானதும், மதிக்கத்தகுந்ததும் ஆகுமா என்றும் கேட்கின்றோம். இந்த மாதிரியான அயோக்கியத் தனங்களையும், பித்தலாட். டங்களையும், ஏழைகளை, பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தந்திரங் களையும், தந்திரத்திற்கு ஆதாரமானவைகளையும், தேசீயம், தேச சேவை, பொதுநல சேவை என்று ஒப்புக்கொண்டு, அவற்றிற்கு உதவிபுரிய வேண்டுமென்றால், அயோக்கியனாகவோ, முட்டாளாகவோ இருந்தால் ஒழிய, எப்படி முடியும் என்றும், நாம் மறுபடியும் கேட்கின்றோம். தேசீயம் என்பது, வியாபாரம் என்பதாக நாம் குறிப்பிட்டதற்கு யார் கோபித்துக் கொள்வதானாலும், தேசீயத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையானவர்கள். அதை ஒரு வியாபாரம் போல் பாவித்து, கை முதல் போட்டு, தேசீயத்தை யோ பொதுநலசேவையையோ அல்லது இவை செய்வதற்கு ஆதரவானது என்ற தேர்தல்களையோ நடத்தி, வெற்றிபெற்று, மேல்கண்ட முதலுக்கு 100 க்கு100 வட்டியுடன், சில சமயங்களில் அதற்கு இரட்டிப்பு லாபத்துடன் பயன் அடைந்து, நாணையம், ஒழுக்கம் எல்லாவற்றையும் துறந்து, வாழ்க்கை நடத்துகின்றார்களா? இல்லையா? என்றும் கேட்கின்றோம். அன்றியும், இப்படிப்பட்ட காரியம், இனி மேல் நடக்காமல் இருக்கவாவது யாராவது எந்த உண்மை தேசீயவாதியாவது முயற்சிக்கின்றார்களா? கருதுகின்றார்களா? என்றும் கேட்கின்றோம்.
குடி அரசு - 19310) 128
தேசியக்கிளர்ச்சி என்னும் பேரால், இந்தியமக்களுக்கு இன்று கிடைத் துள்ள ஒவ்வொரு சீர்திருத்தமும் இந்தக்காரியத்திற்கே உபயோகப்பட்டி ருப்பதல்லாமல், வேறு ஏதாவது ஒரு காரியத்திற்கு உபயோகப்பட முடிந்ததா என்றும் கேட்கின்றோம். அன்றியும், பதவியில் இருக்கும் நபர்கள் மேல்- அவர்களது கூட்டத்தின் மேல் போட்டிபோட்டு, குற்றம் சொல்லித்திரியும் ஆட்களோ, அன்றி, மற்றொரு கூட்டத்தாரோ, தாங்கள் எப்படியாவது அந்தப்பதவியைப் பெற்று, அந்தலாபத்தை அடைய முயற்சி செய்வதைத் தவிர, மற்றபடி வேறு ஏதாவது நாணையமோ, யோக்கியப் பொறுப்போ உடையவர்களாக இருக்கின்றார்களா என்றும் கேட்கின்றோம். உதாரணமாக, நாளது வரையில், எந்தமந்திரி சபையை யார் கவிழ்க்க முயற்சித்தாலும், எந்த விதநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கலைக்க முயற்சித்தாலும், எந்த நிர்வாகசபை அங்கத்தினரை எப்படி தாக்கினாலும், அந்தந்த நபர்கள் மீதோ, கூட்டத்தின் மீதோ, நடவடிக்கைகள் மீதோ குற்றம் சொல்லுவதைத் தவிர, அவருக்கு ரூ. 4333-5-4-ம், 5333-5-4-ம் எதற்கு என்றாவது ஏன் ரூ. 1000 போறாது ரூ. 500 போறாது என்றாவது யாரும் கேட்பதேயில்லை. உதாரணமாக, இன்றையத்தினம், சென்னை சட்ட சபையில் உள்ள மந்திரிகள்
மீது பொறாமை கொண்டு, அவர்களைக் கவிழ்க்க ஒரு கூட்ட ஆசாமிகள் ஆகாயத்திற்கும், பூமிக்குமாய் முயற்சி செய்து கொண்டுவருவது யாவரும் அறிந்ததே யாகும். அது போலவே, இப்பொழுது மந்திரியாயிருக்கும் ஆசாமிகளைச் சேர்ந்தகூட்டமும் முன் மந்திரியாய் இருந்தவர்களைக் கவிழ்க்க முயற்சிசெய்து, பயனடைந்ததும் யாவருக்கும் தெரியும். ஒவ்வொரு கூட்டமும் இந்தமுயற்சியில் வரும்படியை உத்தேசித்து, தக்க பணச்செலவு செய்து, பலாபலன் அடைந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். ஆனால், இதிலுள்ள தந்திரமும், புரட்டும், சுயநலமும் என்னவென்றால், இரண்டு கூட்டமும், இன்னும் இரண்டொரு வெளவால் கூட்டமும், தேசீயத்திற்காகவும் பொதுஜன நன்மைக்காகவுமே மந்திரியாக வேண்டுமென்று சொல்லிக் கொண்டு பாடுபட்டும், நாளதுவரை ஒருவராவது மந்திரிகள் சம்பளத்தை தேவைக்குள்ள அளவுக்குக் குறைத்துக்கொள்வதாய்ச் சொல்லவே இல்லை என்பதும், அந்தத் துறையில் இதுவரை யாரும் பாடுபடவில்லை என்பது மாகும். மந்திரிகள் சம்பளத்தால், வெகுபணம் மீதியாகிவிடும் என்கின்ற எண்ணத்தின் மீதே, நாம் இந்தப்படி எழுதவில்லை. ஆனாலும், மந்திரிகள் சம்பளம் குறைவுபட்டு அது ஒரு குடும்பத்தின் கவலையற்ற வாழ்க்கைக்கு போதுமான அளவுக்கு குறைக்கப் பட்டாலொழிய மந்திரி பதவி என்பது நாணையமாகவும், யோக்கியமாகவும், நடுநிலைமையாகவும், ஒழுக்க முள்ளதாகவும் இருக்க முடியாது என்பதோடு, மற்ற ஜனங்களுக்கும் தேசீயத்தின் பேராலும், பொதுநல சேவையின் பேராலும் செய்யப்படும் ஒழுக்க ஈனமான காரியங்கள் நிறுத்தப்பட முடியாது என்கின்ற எண்ணத்தின் மீதே எழுதப்படுவதாகும்.
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை, நமக்கு மூன்று கிளர்ச்சி களின் அனுபோகமும், நான்கு தேசிய ஸ்தாபனங்களின் அனுபோகமும், அநேக தேச பக்தர்கள் அனுபோகமும், நான்கு மந்திரி சபைகள் அனு போகமும், பல ஜனப்பிரதிநிதி சபைகள் அனுபோகமும், அநேக மேல்தர, கீழ்தர உத்தியோக சேவைக்காரர்களின் நெருங்கிய பழக்கத்தால் ஏற்பட்ட அனுபோகமும் உண்டு. இவைகளின் கொள்கைகளைப்பற்றி, பிரசாரத்தைப் பற்றி, நடத்தையைப்பற்றி பலமாறுதல்கள் இருந்தாலும், இவைகளில் கலந்துள்ள தனிப்பட்ட மக்களின், 100-க்கு 99 முக்கால் பேர்களின் யோக்கிய
மும், நாணையமும், லட்சியமும் ஒன்றேயாகும். எல்லோரும் ஏழைகளை, பாமர மக்களை வஞ்சித்து, கொள்ளை யடித்து, பணம் சம்பாதித்து, பெரிய மனிதர்கள் ஆகவேண்டும் - பட்டம், பதவிகள் பெறவேண்டும், தங்கள் பிள்ளை, குட்டி சந்ததிகளுக்கு உத்தியோகங்கள் பெறவேண்டும் - என்பவைகளையே முக்கிய தத்துவமாய் - கொள்கையாய்க் கொண்டவர்கள் என்பதை, தூக்குமேடை மீதிருந்தும் சொல்லுவோம்.
இது மாத்திரமல்லாமல், யெந்தவிதமான யோக்கியர்களையும், இன்றைய தேசீயமானது அயோக்கியர்களாக்கத் தயாராயிருப்பதோடு, வெளியில் இருக்க முடியாமல் உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளு கின்றதாகவே இருக்கின்றது.
ஆகவே, இன்றையத்தினம், எந்த மாகாண சட்டசபையிலும், அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கின்ற கட்சிகள் மீதோ, மந்திரிசபை மீதோ, எந்த தேசீயக் கட்சியாவது, பொதுநல சேவைக் கட்சியாவது உண்மை யான, யோக்கியமான போட்டி போடுவதாயிருந்தால், அவர்கள் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான, யோக்கியமான காரியம் மந்திரிகளுக்கு 5166 1000 ரூ. சம்பளமும், மந்திரி உத்தியோகம் உள்ளவரை வீட்டு வாடகையும் தவிர, வேறு ஒன்றும் இருக்கப்படாது என்பதும், மற்ற மரியாதை, படி முதலியவைகளும் ஒரு சட்டசபை அங்கத்தினருக்கு சமானமானதாகவே இருக்கவேண்டும் என்கின்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்றி வைக்க முயற்சிக்க வேண்டியதாகும். அப்படிக்கில்லாமல், மந்திரிகளுக்கு விரோதமாய் என்று ஒரு கட்சியை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு எதிராக உட்கார்ந்து கொண்டு, அவர்களைத் தோர்க்கடித்து, அந்தப் பதவியைப் பெருவது என்று கருதி, இரவும், பகலும் முயற்சிசெய்து கொண்டு இருப்பதுடன், இதை ஒரு தேசீய வேலையென்றும் சொல்லிக் கொண்டு இருந்தால், இதைப்போன்ற சுயமரியாதை அற்றதும் நாணைய மற்றதும், யோக்கியப் பொருப்பும், ஒழுக்கமும், பொதுநல சேவையுமற்றது மான வேலை, வேறு ஒன்றும் இல்லை என்று வலியுருத்திச் சொல்லுவதோடு, தேசீயம் என்று சொல்லுவது ஒரு மோசடிவியாபாரம் என்பதற்கும், இதையே உதாரணமாய் எடுத்துக் காட்டுவோம்.
குடி அரசு - 19310) 130
நிற்க, இன்றைய தினம், நாட்டில் நடைபெறும் தேசியக் கிளர்ச்சிகள் பலவற்றில் கலந்துள்ளவர்களைப் பற்றிப் பேசுவதானாலும், ஏதோ சிலர் தவிர, மற்றப்படியான 100-க்கு 90 மக்கள் ஆங்கிலம் படித்த வக்கீல்கள், இயக்கத்தை நடத்துகின்ற உள்நாட்டுத் தலைவர்கள் ஆகியவர்கள் இந்த தேச சேவையைக் காட்டி அல்லது இதன் பயனாய் நாளைத் தேர்தல்களில், இம்மாதிரியான பயன்களையே பெருவதுமல்லாமல் மற்றபடி வேறு என்ன செய்யக்கூடும் - என்ன செய்யப் போகின்றார்கள் என்றும் கேட்கின்றோம். ஆகவே இந்தக் காரணங்களால்தான், தேசீயத்தை வியாபாரம் என்று சொல்லுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 01031931
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
s .
லேவாதேவி கடையில் அடுத்தாள் என்ற முறையில், பெட்டியடியில் வேலைபார்க்கும் கணக்கப்பிள்ளைகளும், செட்டிப்பிள்ளைகளும் காலை 7மணி முதல் இரவு10மணி வரை சதா கடைவேலைகளிலேயே ஈடுபட்டு சற்றேனும் ஆருதலில்லாமலும் உலக நடவடிக்கை மற்ற இதர காரியங்களை கலந்து பேசவோ, கொஞ்சமும் நேரமில்லாமலிருப்பதை முன்னிட்டு நாளது வருஷம் கார்த்திகை மாதம் 15 தேதி இரவு தைப்பிங் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் சுவாமி புறப்பாடன்று மேல்கண்ட எல்லோரும் ஒன்று கூடி இது விஷயமாகத் தினசரி காலை 6-30 முதல் 7-30 வரையிலாவது அல்லது மாலை
4 மணி முதல் 5.30 வரையிலாவது ஓய்வு வேண்டுமென்பதைப்பற்றி ஆலோ சித்து தீர்மானப்படுத்திக்கொண்டு கோவில் திண்ணையில் கூடி உட்கார்ந்தி ருந்த அவர்களின் மேலாள் என்று சொல்லும் பெரிய செட்டியார்களிடத்தில் இவர்களுடைய அனுதாபத்தைத் தெரியப்படுத்தினார்கள்.
என்ன சொல்வது கடைசியில், “ உடும்பு வேண்டாம் கைய விடுங்க” ளென்று சொன்ன முறையில் வந்து விட்டது. என்ன பரிதாபம்! மேலாள்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொண்டு “என்னடா லீவு. செட்டிய வீட்டு முறையில்லை. காலங்கெட்டுப்போச்சு. அடுத்தாள்கள் எப்படிக் கூடிப் பேச லாம்.மேலாளும், அடுத்தாளும் சமமாக போச்சு.அந்த நாளில் சட்டை போடக் கூடாது, காலில் நடையன் போடக்கூடாது, முளங்காலுக்கு மேல் வேட்டிகட்ட வேணும். இப்போது அந்த சுதந்தரங்கள் கொடுத்ததாலல்லவா வந்தது கேடு. இவன்களை இனி இப்படி விடப்படாது. சமையல்காரன்களிடம் சொல்லி சோறு போடாமல் செய்தால் என்ன செய்வார்க” ளென்று ஒவ்வொரு மேலாளும் அவர்கள் அடுத்தாள்களை கடுஞ்சொற்களால் ஏசி , படுத்தாத பாடு படுத்தி விட்டார்கள்.பாவம்! என்ன செய்வார்கள்.
உலகம் நாளுக்கு நாள் முன்னேற்ற மடையும் சமயத்தில் இந்த ஒரு சமூகத்தார், இளம்பிராயத்திலுள்ள சிறுவர்களை, ஆடுமாடுகளை அடைத்து வைத்து வைக்கோல், புல் போடுவதைப்போல் கருதி, இந்தக்கொடுமை செய்
தால் அவர்கள் எப்போது சுகதேகியாகவும், உலக நடவடிக்கை தெரிந்தவர் களாகவும் வரக்கூடும்.
குடி அரசு - 19310) 132
ஆகையால், எனது நன்ப சகோதர செட்டியார்களே! அவர்களையும் உங்களைப்போல் நினைத்து, அவர்கள் கேட்ட வண்ணம் உங்கள் வேலை களுக்கு பாதகம் ஏற்படாமல் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தால் தங்களுக் கதனால் என்ன குறைவு? அவர்கள் கேட்பதும் உலகப் பொருத்தமான விஷயமென்பதை தங்கள் சமூகத்தினர் சற்று ஆலோசித்துப் பார்த்தால் தெரியும். இம்மாதிரி கேள்விகள் மற்ற சமூகத்தினரை இந்த இளம் குழவிகள் கேட்டிருந்தால் மிகப்பிரியத்தோடு சிரமேல் தாங்கி ஆதரித்திருப்பார்கள். தங்களின் பொறாமையாலல்லவா தென்னாடு இந்நிலைமையிலிருக்கிறது. நம் சமூகத்தாரில் சிறு பிள்ளைகளுக்கு இந்த ஆதரவு கொடுக்காத நீங்களா சுய ராஜியத்திற்கு ஒற்றுழைக்கப் போகிறீர்கள்? சத்திரம், கோவில், மடம், பூரி தானம்.சிரார்த்தம் இவைகளைச் செய்வது மட்டும் சிறந்த தர்மமென்றுநினைத்
துக் கொள்ளவேண்டாம். அவைகளெல்லாம் சோம்பேறிகளுக்கு வழி காட்டியே. ஆனதுபற்றி, சிறியேன் விடுத்த வியாசத்தைக் குறைவு படுத்தாது அடுத்தாள் கோறின விஷயங்களை கவனித்து அவர்களுக்குச் சிறிதளவு
ஓய்வுக்கு ஆதரவு செய்தால் நம் சமூகத்தினர்களும் இதர சமூகத்தினர்களு முடைய நீண்டகால பழம்வழக்கங்களில் மாறுதலடைந்து முன்னேற்ற மடைந்து விட்டார்களென்ற பெருமை எல்லோருக்கும், சரீரப்பயிற்சியும், கால தேச வர்த்தமானங்களையும் அறிந்து கொள்ள செட்டி கடைகளில் வேலை செய்கின்றவர்களுக்கு ஓர் சந்தர்ப்பமும் ஏற்படும். வேறு விஷேசித்து என்ன உரைக்கப்போகிறேன்.
இங்ஙனம் உண்மை உரைப்போன்.
குடி அரசு - கட்டுரை - 01.03.1931
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
துணுக்குகள்
“நாம் அதிகம் துன்பமடைவதற்கு, நமது அறியாமையே முக்கிய காரணமாகும். ஏனெனில், நாம் எக்காரியத்தையும் கொஞ்சமேனும் முதலில். ஆலோசியாமல் செய்வதுமன்றி, நமது அறிவையும் உபயோகிப்பதில்லை” யென ஓர் பெரியார் உரைத்திருக்கின்றார். ஆனால், நமது மதமோ, நம்மு டைய அறிவை உபயோகித்து, ஆலோசனை புரிய இடங்கொடுக்க மறுக் கின்றதுடனல்லாமல் புரோகிதர்களும், மடாதிபதிகளும், குருக்களும் கூறு பவைகளை அப்படியே கண்மூடித்தனமாகவும், சுலபமாகவும் நம்பிக் கொள்ளும்படி நம்மை வற்புறுத்தியும், அப்படி நம்பினவர்களுக்குத் தான் மோட்சலோகம் சித்திக்குமெனவும் கட்டளையிடுகின்றது. இதனால், அறிவை உபயோகித்து ஆலோசிக்கின்றவர்களுக்கும், அவர்கள் உரைக்கும் மோட்ச லோகத்திற்கும் அதிக தூரம் ஏற்பட்டுவிடுகின்றது. இக்காரணத்தா லேயே மடாதிபதிகளும், குருக்களும், புரோகித கூட்டங்களும் அறிவுள்ள மானிடர். களை அபாயக்காரர்களென நினைத்து, எப்பொழுதும் அத்தகை யோரை கருவருக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டேவந்திருக் கின்றார்கள். அறிவில்லாதவர்களையும், யோசியாமல் கண்மூடித்தனமாக உரைப்பனவெல் லாம் உண்மையேயென நம்பிக்கொள்ளுகின்றவர்களையும், சுலபமாகவே அடக்கி, ஆண்டு வரமுடியுமென அம்மடாதிபதி முதலியவர்கள் நாளா வட்டத்தில் அறிந்துகொண்டுமிருக்கின்றார்கள். ஏனெனில், அம்மடாதிபதி களுக்கு இத்தகைய மானிடர்களால் அளவற்ற நன்மைகள் உண்டாயிருக் கின்றது. இம்மடாதிபதி முதலியவர்களின் முன்னோர்கள், இக்காரணத்தால்,
முன் சாக்கிரதையாகவே தாங்களும் தங்களுடைய சந்ததியாரும் சுகமாகவும், கவலையின்றியும் காலத்தைக் கழிப்பதற்காக, மற்ற மனிதர்களின் அறிவை நாசமாக்கி விட்டார்கள்.
“சந்திரனில் தோன்றப்படும் மனிதர்களின் முகங்கள் கருத்தும், விகாரமாயுமிருப்பதாக” ஓர் வானசாஸ்திரி உரைக்கின்றார். அப்படியானால், நமது புராணங்களும். சாஸ்திரங்களும் ஆபாசமாயிருப்பதைப்பற்றி (அதா வது பொய், வஞ்சனை, சூது. கொலை, விபசாரம் முதலியவைகள் நிறைந்தி ருப்பதைப்பற்றி) நாம் ஆச்சரியமடைய வேண்டியதில்லை. ஏனெனில், நமது புராணங்கள் யாவும் விண்ணுலகின் பெருமையைப்பற்றி வர்ணிப்பதில்
குடி அரசு - 19310) 134
கொஞ்சமேனும் அஞ்சவில்லை. ஆனால், அதற்கு மிதற்கும் சம்மந்த மெப்படியெனில், மதம் என்பது ஓர் வித பைத்தியம். பைத்தியத்துக் கும் சந்திரனுக்கும் கர்ண பரம்பரையான சம்பந்தமும், தொடர்ச்சியும் எப்பொழு:
தும் இருந்துகொண்டே வந்திருக்கின்றது- இருந்து கொண்டு மிருக்கின்றது.
“புராணங்களும், இதிகாசங்களும், பொதுவாகவே கலப்பற்றதும், பரிசுத்தமுமான கட்டுக்கதைகள்” யென ஓர் பேரறிஞர் கூறியிருக்கின்றார். அப்படியானால், நமது புராணங்களில் காணப்படும் கதைகளும் இவ் விதியின்
கீழ் அடங்குமாயென ஓர் சந்தேகம் நமக்கு உதிக்கலாம். ஆனால், ஆழ்ந்து கவனித்தோமேயானால், புராணங்களிலுள்ள கதைகள் யாவும், ஒன்று உண்மையாகவே பரிசுத்தமான கட்டுக்கதைகளாகவாவதிருக்க வேண்டும். அல்லது அவைகள் யாவும் அசுசியான உண்மைகளாகவாவ திருக்க வேண்டும். அப்படி அவைகள் பரிசுத்தமான கட்டுக்கதைகள் அல்ல. வென்றும், அல்லது அசுசியான உண்மைகள் அல்லவென்றும் கூறினால், பிறகு அவைகள் யாவும் உண்மையாகவே மிக்க ஆபாசமும், அபத்தமும், அசங்கியமுமான கற்பனைகளாகவாவதிருக்கவேண்டும்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 01.03.4931
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
.. குழந்தைகள் வபறுவதை குறைக்க அவசியம்
ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும், பலமும், வீரமும், சுயமரியாதையும், அறிவுமுள்ளவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்கள் குழந்தைப் பருவம் முதற்கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போவிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும்வளர்க்கப்படவேண்டும். அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் சக்திக்
கும் தகுதிக்கும் போதுமான அளவே குழந்தைகளைப் பெறுவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்படியில்லாமல், சக்திக்கும், அளவுக்கும் மீறி பெற்றோர்கள் அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத் திற்குள்ளாவதுடன், குழந்தைகளும் பலவீனர்களாகவும், செளகரிய மற்றவர்களுமாகி, அவர்களைக் கொண்டதேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள்.
உதாரணமாக. நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுவோமேயானால், நாளுக்கு நாள் ஜனங்களின் எண்ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை யோர்கள் தொழிலில்லாமல், வாழ்வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டு, அவைகளை காப்பாற்றவும், படிப்பிக்
கவும் சத்தியில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப்
பதும் நாம் அனுபவித்தும், பார்த்தும் வருவதுமான சம்பவங்களாகும். சில குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும்பங்களுக்கும், அதிகமான பிள்ளைக் குட்டிகளைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை,
நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிகின்றோம். முதலாவது, பிள்ளை: களை அதிகமாக பெறப்பெற, பெற்றோர்களின் சுகபோகங்கள் தானாகவே குறைந்து கொண்டு வருகின்றன. அதுபோலவேதான், ஒரு நாடும் தனது
சக்திக்கு மேற்பட்ட மக்களை உடையதாக ஆகிவிட்டால் அது சதா காலமும் பஞ்சத்தினாலும், நோயினாலும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டிய தோடு, அது தன் அழகையும், முற்போக்கையும் இழந்து சுயமரியாதையை யுமிழந்து தயங்கவேண்டியதாகி விடுகின்றது.
குடி அரசு - 19310) 136
இந்த உண்மையை அறியாமலே இதுவரை அனேக சமூக சீர்திருத் தக்காரர்கள் என்பவர்களும், பொருளாதார சீர்திருத்தக்காரர்களென்பவர் களும் தங்கள் நாட்டின்-மக்கள் சமூகத்தின் முற்போக்கிற்கும், பொருளாதார முற்போக்கிற்கும், வேறு எத்தனையோ துறைகளில் உழன்று கஷ்டப்பட்டும் பயனடையாமல் சலிப்பின் மீது கடைசியாக, ஒரு நாட்டுமக்களை மற்றொரு நாட்டு மக்கள் வெறுக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். சதாகாலமும் பிறர். மீதே குற்றம் சொல்ல வேண்டியவர்களாகவுமாகிவிட்டார்கள். நன்றாய் வாழுபவர்களின் மீது பொறாமைப்பட வேண்டியவர்களாகவும், மற்றவர் களைப் பட்டினி போட்டால் தான் தாம் வாழலாம் என்று நினைக்க வேண் டியவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.
ஆனாலும், சமீப காலத்தில் சில நிபுணர்கள் இவ்விஷயங்களை நடுநிலைமையிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்த்து, இவ்வித கொடுமையான நிலைமைக்கு உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அஃதென்னவென்றால், முதலில் குறிப்பிட்டதான அதாவது ஜனங்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று, ஜன சமூகத்தைப் அதிகப் படுத்தி விடக்கூடாது என்பதேயாகும்.
ஆகவே, இந்த முடிவானது இப்போது மேல்நாட்டின் அறிவாளிகள் பலராலும், மற்றும் பொது நல சேவைக்காரர்கள் பலராலும், வைத்தியநிபுணர்
கள், பொருளாதார நிபுணர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, இத் துறை களில் இறங்கி, மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து மிக்க முற்போக் கான மார்க்கங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அன்றியும், இந்த தத்துவத்தை அநேக அறிஞர்கள், தங்கள் வாழ்க்கைகளில் அமுலுக்குக் கொண்டு வந்து கொண்டும் இருக்கின்றார்கள். அதாவது மேல் நாட்டார்களில் படித்தவர்கள் என்று சொல்லப்படும் கூட்டத் தார்களிலேயே, அநேகர் கர்ப்பம் தரிக்காமல் இருக்கத்தக்க பல உபாயங் களைக்கையாண்டு வருகின்றார்கள். இதற்காகப் பல சாதனங்களையும் கண்டு பிடித்து, பொது ஜனங்களுக்கு அறிவித்து, சில சாதனங்களை வினியோகித்
தும் வருகின்றார்கள். ஆனால், சாதாரண ஏழை ஜனங்களும், பாமர ஜனங் களும் இதன் உண்மைத்தன்மையை உணரவோ, பயன் அடைய முடியா மலோ இருந்து வருகிறார்கள். உண்மையிலேயே, இம் மாதிரி அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் - கருத்தரிக்க விடாமல் - இருக்கக் கவலை: எடுத்துக்கொள்ளவேண்டியவர்கள் மிக்க ஏழை மக்களேயாவார்கள். ஆனால், இவர்களோ இம் மாதிரியான, அதாவது கருத்தரிக்காமல் இருப்ப தற்கான காரியங்களைப்பற்றிப் பேசுவது கூட நாகரீக விரோதமான பேச் சென்று கருதுகிறார்கள். அறிவில்லாத பொது ஜனங்களும், மத விஷயத்திலும், கடவுள் விஷயத்திலும் கண் மூடித்தனமான மூட பக்தியுள்ளவர்களும், இதை மதவிரோதமான தென்றும், பாவகரமானதென்றும், கடவுள் கோபத்திற்கு
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இலக்கான காரியமென்றும் பேசி, இந்தத் தத்துவங்களை எதிர்த்து வருவதால்: ஏழைமக்களும், பாமர மக்களும் இப்படி ஒரு மார்க்கம் இருக்கின்றது என்று அறியக்கூட செளகரியமில்லாமல் போய் விட்டது. ஆனால், மேல் நாட்டில், டாக்டர் மாரீஸ் டோப்ஸ் என்கின்ற ஒரு ஆங்கிலப் பெண் ஒருவர், தைரியமாக முன்வந்து எவ்வித பழிப்புக்கும், எதிர்பிரசாரத்திற்கும் அஞ்சாமல், இவ்விஷயத்தை, கற்பத்தடையை, பிரசாரம் செய்யத் துணிந்ததின் பயனாய், இப்போது இவ்விஷயம், மேல் நாட்டில் எங்கும் சாதாரணமானதும், சகஜ மானதுமான விஷயமாய்ப் பேசிக்கொள்ளப்படும்படியாக ஆகிவிட்டது. அதுமாத்திரமல்லாமல், மேல் நாடுகளில் பல இடங்களில் பிள்ளைப்பேற்றை தடுக்கும்படியான வசதிகள் சம்மந்தமாக,பல வைத்திய சாலைகள் ஏற்படுத்தப் பட்டும் இருக்கின்றன. கருத்தரிக்காமல் இருக்கவேண்டுமென்ற ஆசை உடையவர்களுக்கு அம் மார்க்கங்களைக் கற்றுக்கொடுப்பதுடன், அதற்கு வேண்டிய சாதனங்களையும், கையாளும் முறைகளையும் போதிக்கின்றார்
கள். மருந்து வியாபாரக்கடை முதலியவைகளில், கர்ப்பத்தடைக்கு அனுகூல மான மருந்துகளும், சாதனக் கருவிகளும் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள்.
இவைகள் வைத்திய நிபுணர்களாலும், சமூகச் சீர்திருத்த ஆராய்ச்சிக் காரர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால் இதை சட்ட விரோத மென்றும் யாரும் சொல்லத் துணியவில்லை. இது எவ்விதத்திலும் சட்ட விரோதமான காரியமுமல்ல என்பதை யாவரும் உணரவேண்டும். ஏனெ னில்,சட்ட விரோதமான காரியமென்பதெல்லாம் அன்னியனுக்கும், தனக்கும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொடுக்க கூடிய காரியங்களைத் தான் சொல்லலாம். இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ, அதிருப்தியோ ஏற்படுவதற்கில்லை.
அன்றியும், இந்த கர்ப்பத்தடை முறை என்பது கர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு உரியதே ஒழிய, கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனைக் கலைப் பதற்காக ஏற்பட்டதல்ல. அதற்கு இந்த முறைகள் பயன்படவுமாட்டாது. அன்றியும், கர்ப்பம் ஏற்பட்ட பிறகு கரைப்பது என்பது தாயின் சரீர சக்திக்
கும், சில சமயங்களில் உயிருக்குமே ஆபத்தை விளைவிக்க கூடியதாயிருப் பதால் கண்டிப்பாக அந்த முறையை யாரும் கையாளக் கூடாது என்பதே நமதபிப்பிராயம்.
கர்ப்பத்தைக் கலைக்கும் முறை எதுவானாலும் அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதேயாகும். தேசப் பொது நன்மையையும், சமூக நன்மையையும் மாத்திரமே உத்தேசித்து, அறிஞர்கள் கர்ப்பத்தடையைக் கண்டு பிடிக்கவில்லை மற்றும் என்னென்ன காரியங்களுக்கு கர்ப்பத்தடை அவசியமென்பதையும் சற்று விளக்குவோம்.
குடி அரசு - 19310) 138
பெண்ணானவள் திட சரீரியாயில்லாமலும், காயாலாவுடனும், சரியான அமைப்புப் பொருந்திய சரிரமாயில்லாமலும் இருக்கின்ற சமயத் தில் கர்ப்பம் தரித்து, பிள்ளைகளை பெறுவதென்பது அவளுக்கு மிகவும் அபாயகரமான தாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்.
உதாரணமாக, க்ஷயரோகத்தாலும் நீரழிவு வியாதியாலும், நெஞ்சு துடி துடிப்பினாலும் பீடிக்கப்பட்டிருக்கின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் அதிகமாக சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிக்க ஆபத்துக்கும், கஷ்டத்திற்கும் உள்ளான கெடுதியாகும்.
தொத்துவியாதி, மேகசம்பந்தமான வியாதி, காக்கை வலிப்பு, பைத்தியம், கேனம் முதலிய வியாதியுள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதும் பயனற் தும் வாழ்க்கையில் மிக்க கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதுமாகி விடும்.
பிரசவத்தினால் சரீர மெலிவும், பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவ சரீரமுடையவர்கள், மறுபடியும், மறுபடியும் கர்ப்பமானால், சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும். ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையைப்பெற்று, அது நன்றாகப் பால் குடித்து வளர்வதற்கு முன்னாலும், முதலில் கர்ப்பமாகி பிள்ளைப் பெற்ற பலவீனம் நீங்குவதற்கு முன்பும் கர்ப்பமாகி விட்டால், முதல் குழந்தைக்கு செளகரியமில்லாமல் போவதோடு மறு குழந்தையைப் பெறுவதற்கும் போதிய சக்தியில்லாமல் போய்விடும்.
பெண்ணும் ஆணும் தகுந்த வயது அடைவதற்குமுன் அதாவது பெண்கள் 22 வயதுக்கு முன்னும், புருஷர்கள் 25 வயதுக்கு முன்னும், சதிபதிகளாயிருக்கும் போது பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டால், அந்த குழந்தைகள் மிக்க இளமைப்பருவத்தின் காய்ப்பாகி உறுதியற்ற சரீரக் கட்டு டையதாகி விடும். குடும்பத்திற்கு போதிய வரும்படி இல்லாத நிலையில், பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் குடும்பத்திற்கு தரித்திரமும், கஷ்டமும் அதிகமாகி வாழ்க்கை திருப்தியுமற்றதாகி விடும்.
அன்றியும், ஆண், பெண் ருது சாந்தியானவுடன் பெண் கர்ப்பமாகி விட்டால், கொஞ்சகாலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம். கலவி இன்பம் அடைவதற்கு சாவகாசமில்லாமல் போய் விடும்.
இவ்வளவு விஷயங்களில், பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவித மாயிருப்பதுடன், பெண்களின் சுதந்திரவாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கின்றது. என்னவெனில், பெண்களுக்கு கருப்பத்தை உண்டாக்குகின்ற பொறுப்பு மாத்திரம் ஆணைச் சேர்ந்ததாயிருக்கின்றதே தவிர, மற்றபடி, கருப்பமான நிமிஷ முதல் பிள்ளை பெறும் வரை, அதன் பொறுப்பு முழுவதும், பிள்ளை பெறும் போது அடையும் பிரசவ வேதனை
யும், அதனால் உண்டாகும் ஆபத்துகளும் பெண்களே அடைகின்றார்கள்.
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பிள்ளையைப் பெற்ற பின்பும், தாயானவள் தான் தனது இரத்தத்தைப் பாலாக்கி, குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கின்றாள்.
குழந்தைக்கு வரும் வியாதிகளுக்கும் தானே பத்தியமிருக்க வேண்டி யவளாகிறார். அதைச் சுமந்து, போஷிக்கும் வேலை முழுவதும் தாயே செய்ய வேண்டியவளாகிறாள்.
பெண்ணானவள் ஒன்று, இரண்டு பிள்ளைகளை பெற்றவுடனேயே சகலவிதசுகபோகங்களிலும் விரக்தியுடையவளாகி விடவேண்டியவளாகிறாள்.
குழந்தை பெற்ற உடனே குழந்தையின் போஷனையையும், வளர்ச்சி
யையும் உத்தேசித்துத் தனது சுதந்திரத்தைவிட்டு, புருஷனுக்கும், குடும்பத் திற்கும் அடிமையாகிவிட வேண்டியவளாகிறாள். புருஷன் தனக்கு இஷ்ட மான பெண்ணை மணந்து கொள்வதற்கும் பெண்ஜாதி ஒரு புருஷனைத்தவிர: வேறு புருஷனை எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ளமுடியாத
தற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாயிருக்கின்றது. பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்குச் சுதந்திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டுவிட நேரிடுகின்றது. சிறிதளவாவது சுயேச்சையுள்ள பெண்ணாய் விளங்குவதைவிட, பிள்ளைகளைப் பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்கவேண்டியதாய் இருக்கின்றது. இதுவரை கூறி வந்தவைகளாலும், பல காரணங்களாலும் பெண்கள் கர்ப்பத்தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும் என்று சொல்லுகின்றோம்.
ஆகவே, இந்த தலையங்கத்தில் கர்ப்பத்தடையின் அவசியத்தைப்
பற்றி ஒருவாறு விளக்கினோம். இனி அடுத்த வியாசத்தில் அதன் உபாயங்கள்: என்ன என்பதைப் பற்றி நிபுணர்கள் என்பவர்களின் அபிப்பி ராயத்தை எடுத்து விளக்க எண்ணியுள்ளோம்.
குடி அரசு - கட்டுரை - 01.03.1931
குடி அரசு - 19310) 140
ரானி - @ - @ - ஓ.றாணி 1 உப்பு சத்தியாக்கிரக ராச!!
இந்தியாவின் அரசியல் சரித்திரத்திலேயே இதுவரையும் யாரும்
கேட்டிராத அளவுக்கு ராஜி மலிந்து போய் ராஜி - ஓ - @ - ஓ ராஜி!ராஜி-ஓ- ஓ-ஓராஜி! என்று வெகு கவலையுடன் அலைந்து திரிந்து எப்படியோ ஒரு விதத்தில் உடும்பு கையைவிட்டால் போதுமென்ற காரியத்தில் வெற்றி பெற்றதைக் குறித்து தேசியவாதிகள் பாராட்டத்தக்கவர்களே யாவார்கள்.
பொதுவாகவே ராஜியின் தத்துவமானது இதுவரை வெளியாயிருக்கும் விஷயங்களைக்கொண்டு பார்த்ததில் எது போல இருக்கின்றது என்றால் தற்காலம் இந்திய ஜனங்கள் ஒரு விவகாரத்திற்கு செல்லும்போது அவர்க ளுடைய விவகாரத்திற்குக் காரணமான காரியங்களும் எண்ணங்களும் வேறு ஒன்றாக இருந்தாலும் வேறு பல அசெளகரியங்களும் பாத்தியங்களும் லட்சியமாகக் கருதப்பட்டிருந்தாலும் வியாஜ்யம் தொடர்ந்து விவகாரத்தை மும்மரமாய்நடத்தினபிறகு அது முடிவு பெறுவதற்குள் ஏற்பட்ட களைப்பும், சலிப்பும், கஷ்டமும், நஷ்டமும் மேலும் மேலும் தொடர்ந்து நடத்தப்போதிய சாதனங்களற்ற தன்மையும் ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடைசியில் எப்படியாவது வியாஜ்யம் ஒழிந்தால் போதுமென்று கருதுவதும், வியாஜ்யம் தொடர்ந்தபோது அதற்குக் காரணமாயிருந்த லக்ஷியம் எந்த கதியாவது அடையட்டும் என்று கருதி விவகார லக்ஷியத்தின் பிரதானத்தையும், அவசியத்தையும் மறந்து அல்லது மனதார அலக்ஷியமாய்க் கருதி எப்படியாவது தங்களுடைய சொந்த கெளரவத்திற்கும் வீம்பு பேசிய வீராப்புக்
கும் மாத்திரம் ஏதாவது ஒரு வழியில் பாமர மக்களால் குறைவு சொல்லப். படாமல் இருப்பதற்கும் மொத்தத்தில் தோல்வி ஏற்பட்டு விட்டதாக பிறர் மதிப்பதற்கு இடமில்லாமலும் ஏதோ ஒரு வகையில் தொல்லை ஒழிந்தால் போதும் என்று எப்படி நினைத்து விடுகின்றார்களோ அதுபோலவே தான் இந்த 1930 வருஷத்திய “தேசியக் கிளர்ச்சி” விவகாரத்தின் முடிவும் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவேண்டியிருக்கின்றது. என்றாலும் எப்படியோ ஒரு வழியில் இனி மேலாவது பொது ஜனங்களுக்குத் தொல்லையில்லாமல்: இருக்கும்படியாக போராட்டத்தை நிறுத்த ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டு முடிவுபெற்றதைக் குறித்து “தேசியவாதி”களையும் “தேச பக்தர்” களையும் மகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றோம்.
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இந்தப் போராட்டமானது இன்னும் கொஞ்சகாலமாவது நடைபெறு வதின் மூலம் யார் யார் வெற்றி பெற்றாலும், யார் யார் தோல்வியுற்றாலும் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று ஆரம்ப முதலே கருதி வந்திருக்கின்ற நாம் இப்போது இந்த ராஜியினால் ஏதாவது லாபமோ நஷ்டமோ உண்டாய் விட்டதாக சொல்லக்கூடுமென்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
ஏனெனில் இந்த நாட்டு மக்கள் பொதுவாகவும், சிறப்பாகப் பெரும் பாலோர் தனிப்பட்ட முறையிலும் அடைந்துவருகின்ற கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், இழிவுகளுக்கும், சமத்துவமும்,மனிதத்தன்மையும் சுதந்திரமும் அடைய முடியாமல் - முற்போக்கடைய முடியாமல் தடுக்கப் பட்டு அவதிப்பட்டு வருவதற்கும் ஒரு சிறு பரிகாரமும், இக்கிளர்ச்சியின் காரணத்தினாலாவது, ராஜி நிபந்தனையிலாவது சிறிதும் இல்லை யென்று கருதுகின்றோம். ஆதலால் அவற்றைப்பற்றி நாம் கவலையோ, மகிழ்ச்சி யோ அடையவில்லை.
பொதுவாகவேநமது நாட்டு மக்களுக்கு இரண்டு வகையான கூட்டத் தாரிடத்தில் வெகுகாலமாகவே மரியாதையும், பக்தியும் மதிப்பும் இருந்து வருகின்றது. அதாவது ஒன்று, உலக வாழ்க்கையை- சுகபோக போக்கியங் களைத் துறந்த துறவிகள், சன்யாசிகள் என்றால் அவர்களிடம் காரணா காரிய மில்லாமல் மரியாதை செலுத்துவதும், பக்தி செலுத்துவதுமாகும்.
இரண்டாவது, அதிகாரமும் ஆட்சியும் செல்வமும் உடையவர் என்றால் அவர்களிடம் மதிப்பு வைத்து அவர்களைபிரமாதமாய் கருதுவது.
ஆகவே இந்த இரண்டு விதமான காரியங்களால் இன்று இந்தியர்கள் கண்ணுக்கும், மனதிற்கும் திருவாளர்கள் காந்தியும், இர்வினும் பிரமாதமாய்த் தோன்றி மக்களின் மனதைக்கவர்ந்து இருந்தார்கள் என்று சொல்ல வேண்டி யிருக்கின்றது. போதாக்குறைக்கு டி இரண்டு கனவான்கள் நிழலிலும் பேராலும் பயனடையக் காத்திருந்த மக்களின் ஆர்ப்பாட்டமும், விளம்பர
மும் மேலும் மேலும் கவனிக்கத்தக்கவர்களாகச் செய்து அவ்விரு கனவான் களின் பெயர்களும் பெருமையாய் அடிபட்டு அவர்களது சந்திப்புகளும், சம்பாஷணைகளும் மிக மிகப் பெரிதாக மதிக்கப்பட்டு நடந்த முடிவும் அர்த்தமில்லாமல் கொண்டாடப்படவும் ஏற்பட்டு விட்டது. இது பெரும் பாலும் உண்மைச் சுதந்திரமின்னதென்பதை வெகு காலமாகவே அறிய முடியாமல் வைத்திருந்த மக்களையும் மூடபக்தியில் அழுத்தி வைத்திருந்த மக்களையும் கொண்ட நாட்டுக்கு இயற்கையேயாதலால் இதைப்பற்றி நாம்
குற்றம் சொல்ல வரவில்லை.
ஆனால் இப்படிப்பட்ட பெரியோர்கள் செய்துகொண்ட ராஜியில் நாட்டுக்கு மக்களுக்கு விளைந்த பயன் என்ன என்பதே இப்போது கவனிக் கப்படத்தக்கதாகும்.
குடி அரசு - 19310) 142
ராஜி நிபந்தனைகளின் சுருக்கமாவது:-
1. காங்கிரஸ்காரர்கள் சட்டமறுப்பை நிறுத்திவிட வேண்டியது. சர்க்காரார் அடக்கு முறையை நிறுத்தி விட வேண்டியது.
2. வட்டமேஜை மகாநாட்டில் நடந்த இந்திய அரசியல் திட்ட விஷயங்களைப்பற்றி மேலே தொடர்ந்து ஆலோசிப்பது. இதில் முன் பேசிய விஷயங்கள் முக்கிய விஷயங்களாக இருக்கத்தக்கது.
3. இனியும் நடக்கப் போகும் அரசியல் திட்ட ஆலோசனைகளில். பிரிட்டிஷ் மந்திரி அறிக்கையை ஒட்டி காங்கிரஸ் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வார்கள்.
4. இந்த சமரசம் சட்டமறுப்பு சம்பந்தமான விஷயத்தைக் கொண்டு ஏற்பட்டதாகும்.
5.சட்ட மறுப்பு அடியோடு நிறுத்தப்பட்டு விடும்.
6. பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரம் என்பது கூடாது. பொதுவாக அன்னிய நாட்டு துணி விஷயத்தில் சட்டம், சமாதானம், தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்படாமல் இந்தியாவின் கைத்தொழில் பொருளாதாரம் ஆகியவைகளை உத்தேசித்து பிரசாரம் செய்வதும், விளம்பரம் செய்வதும் ஆக்ஷபிக்கப்படுவதாகாது.
7. சுதேசி சாமான்களை உபயோகிக்கும்படியும் லாகிரி வஸ்துக் களின் உபயோகத்தை விலக்கும்படிக்கும் யாருக்காவது தீங்கு விளைவிக்கும் முறையில் செய்யுங்காரியங்களால் சட்டத்திற்கு மீறின மறியல்கள் செய்யக்கூடாது. யாராவது செய்தால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும்.
8. போலீஸ் அக்கிரமங்களைப்பற்றி விசாரணை செய்வதில்லை.
9,10. காங்கிரஸ்காரரால் சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டால் சர்க்காராரும் தாங்கள் பிரயோகித்த அடக்கு முறை சம்பந்தமான சட்டங்களை திருப்பி வாங்கிக்கொள்ளுவார்கள்.
11. பர்மாவில் பிறப்புவித்த கிரிமினல் திருத்த சட்டம் வாப்பீஸ் வாங்கப்படமாட்டாது.
12.சட்டமறுப்பு சம்மந்தமாய் இப்போது நடை பெறும் வழக்குகளில் பலாத்காரம் சம்மந்தப்பட்டவை தவிர மற்றவைகள் நிறுத்தப் பட்டுவிடும்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
143
13.பட்டாள சிப்பாய்களும் போலீசாரும் சட்ட மறுப்பில் சேர்ந்து எந்தக்குற்றம் செய்திருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது.
14. வசூல் செய்த அபராதத் துகைகளையும் பரிமுதல் செய்த ஜாமீன் துகைகளையும் திருப்பிக்கொடுக்க முடியாது. ஆனால். வசூலாகாமல் இருப்பவைகள் தள்ளப்பட்டு விடும்.
15. தண்டப்போலீசை எடுத்து விடும் விஷயம் மாகாண கவர்ன் மெண்டுகள் இஷ்டத்தைப்பொறுத்தது. வசூலித்த தண்ட வரியையும் செலவு போக மீதி இருந்தால் தான் வாப்பீஸ் செய்யப்படும்.
16. அடக்குமுறை சட்டப்படி பரிமுதல் செய்து ஜப்தி செய்த அசையும் பொருள்கள் ஏலமிடாமல் விற்பனை செய்யாமல் இருந்தால். மாத்திரம் அவைகள் திருப்பிக் கொடுத்து விடப்படும். வரி பாக்கிக்காக ஜப்தி செய்யப்பட்ட அசையும் பொருள்களையும் பாக்கி வரியைக்
கொடுத்து விடுவதாயிருந்தால் திருப்பிக் கொடுத்துவிடப் படும். இந்த விஷயங்களைப் பற்றி எடுத்துக்கொண்ட நடவடிக்கை களின் பயனாய் சொத்துக்கள் ஏதாவது சேதமாயிருந்தால் அவைகளுக்கு
சர்க்காரார் பரிகாரம் செய்து கொடுக்கமாட்டார்கள். இந்த வகை ஜங்கம சொத்துக்கள் விற்கப்பட்டிருந்தால் அல்லது யாருக்காவது கொடுக்கப்பட்டு இருந்தால் திருப்பிக் கொடுக்க முடியாது. வரித்துகை போகமீதி இருந்தால் கொடுக்கப்படும்.
17. அவசரச் சட்டபடி பரிமுதல் செய்த சொத்துக்கள் அவசரச்சட்ட நிபந்தனைப்படி தான் திருப்பிக்கொடுக்கப்படும். வரிவசூலுக்காக ஜப்தி செய்யப்பட்ட பூமிகள் விற்கப்படாமலிருந்தால் திரும்பக் கொடுக்கப்படும். பூமிகள் மூன்றாதவருக்கு விற்கப்பட்டிருந்தால். அவ்விஷயங்களில் சர்க்காரால் ஒன்றும் செய்யமுடியாது. இந்தப்படி ஜப்திசெய்யப்பட்டவைகளில் சில கேசுகள் அக்கிரமமாக செய்யப்பட்டிருப்பதாக திரு. காந்தியவர்கள் தெரிவித்ததைப்பற்றி கவனித்ததில், அவர் சொல்லுவதை ஒப்புக்கொள்ளக் கூடவில்லை. ஆகையால் சர்க்காரார் அவ் விஷயமாயும் ஒன்றும் செய்ய முடியாது.
18. சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்டது என்று யாராவது தெரிவித்துக் கொண்டால் மாகாண அதிகாரிகளால் ஜில்லா அதிகாரி கள் உடனே உண்மையை விசாரித்து அறிந்து பரிகாரம் செய்ய உத்திரவிடப் படுவார்கள்.
19. ராஜீனாமா கொடுத்துவிட்ட உத்தியோக ஸ்தானங்கள் காயமாய் பூர்த்திசெய்யப்பட்டிருந்தால் ராஜீனாமா கொடுத்தவர் களுக்கு மறுபடி உத்தியோகம் கொடுக்கப்படமாட்டாது ராஜீனாமா கொடுத்த
குடி அரசு - 19310) 144.
உத்யோகங்களில் ஏதாவது இன்னமும் பூர்த்தி செய்யப்படாதது எதுவாவதுகாலியாயிருந்தாலும் அது அவர்கள் மறுபடியும் விண்ணப்பம் செய்து தங்களுக்கு அந்த வேலை வேண்டும் என்று கேட்டுக்கொள்வதின் மீது மாகாண கவர்ன்மெண்டுகள் யோசித்து தங்கள் யுக்திப்படி நடப்பார்கள்.ஆனாலும் இவ்விஷயத்தில் தாராள நோக்கம் காட்டுவார்கள்.
20. உப்புச்சட்டத்தை யாரும் மீறக்கூடாது. உப்புச்சட்டத்தில் மாறுதல் செய்யவும் முடியாது. ஆனால் சில ஏழைகளுக்கு உதவி யளிக்க என்று ஏற்கனவே சர்க்கார் அனுமதித்துக் கொண்டுவருகிற படிக்கு ஏழைகளுக்கு தங்கள் செலவுக்கு என்று உப்பளங்களில் உப்புச் சேகரித்து தங்கள் செலவுக்குப்போக மீதிஇருந்தால் அதை அந்த கிராமத்திலேயே விற்று விடவும் ஆகே£ஷபணை இல்லை. வெளி யிடங்களில் விற்கக்கூடாது. அதுவும் சமுத்திரக்கரை ஓரம் உள்ள ஏழைகளைத்தான் அனுமதிக்கமுடியும்.
21. இதுதான் சமாதான நிபந்தனை. இதை அறிந்து காங்கிரஸ் வாதிகள் தங்கள் கடமைகளைச் செலுத்தி விஷயங்களை அமுலுக்கு கொண்டுவரத் தவறுவார்களேயாயின் சர்க்காரார் பழையபடி நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவார்கள்.
(ஒப்பம் ) HW. எமர்சன்.
இந்திய சர்க்கார் காரியதரிசி.
காரியக் கமிட்டி, மாகாணக் கமிட்டிகளுக்கு அனுப்பிய தாக்கீதின் சாராம்சம்
இதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் காரியக்கமிட்டியார் சட்ட மறுப்பை நிறுத்தி அடியிற்கண்ட அறிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதன்
சாரம்:-
சர்க்காராருக்கும் காங்கிரஸ் சார்பாக திரு. காந்தியவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ராஜி ஒப்பந்தத்தை காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொண்டு அதன் படி நடக்க மற்ற காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் தாக்கீது அனுப்புகின்றது.
காரியக்கமிட்டிக்கும் சர்க்காருக்கும் தற்காலீகமாக ராஜி ஏற்பட்டு விட்டது.
சட்டமறுப்பு இயக்கத்தையும் வரி கொடா இயக்கத்தையும், பிரிட்டிஷ் சரக்கு பஹிஷ்காரத்தையும் நிறுத்தி விடவேண்டியது. மதுபானக் கடைகளையும் அன்னிய ஜவுளிக்கடைகளையும் அவசியம் நேர்ந்தால்
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பஹிஷ்காரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஆனால் அதில், பலவந்தம் வற்புறுத்தல், வீணான ஆர்ப்பாட்டம் தடையான ஆடம்பரம், சட்டவிரோதம் ஆகியவைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
வீட்டு உபயோகத்திற்கு உப்பு சேகரித்துக் கொள்ளலாம் என்பதாகும்.
இதைராஜி என்று சொல்லுவதா வேறு ஏதாவது சொல்லுவதா என்பதை வாசகர்களையே முடிவு கட்டிக்கொள்ள விட்டுவிடுகின்றோம். இந்த ஒரு வருஷகாலமாக மக்கள் அடைந்த துன்பம், அதனால் இனியும் கொஞ்ச காலத்திற்கு அனுபவிக்கத்தக்கதாய் நாட்டில் ஏற்பட்ட வியாபாரக் குறைவு, சொத்து நஷ்டம், பொதுஜன அசெளகரியம் ஆகியவைகளுக்காக சட்ட மறுப்பு இயக்கம் சிறிது நாள் எதிர்பார்த்ததற்கு மேல் வளர்ந்து வந்தது என்பதைத் தவிர ராஜி நிபந்தனைப்படி பார்த்தால் சட்ட மறுப்பு இயக்கம் பொஸ்ஸ் என்று போனது விளங்காமல் போகாது.
மேலும் சட்ட மறுப்புக்காக காங்கிரஸ் கைகொண்டு செய்த வேலை: கள் எல்லாம் அரசியல் தத்துவத்தைக் கொண்டதே ஒழிய உண்மையாக அந்தந்தத் தனிப்பட்ட வேலையின் பயனை உத்தேசித்தல்ல என்று நாம் அடிக்கடி சொல்லி வந்ததும் இப்போது வெட்ட வெளிச்சமாய் விட்டது.
அதாவது இதுவரை செய்துவந்த கள்ளுக்கடை மறியலும், ஜவுளிக்கடை மறியலும், உப்புக்காய்ச்சும், சட்ட மறுப்பும் வேறு ஒரு காரி
யத்திற்காக செய்ததே யொழிய கள்ளுறிறுத்தவும், ஜவுளி நிறுத்தவும், உப்புச் சட்டம் உடைக்கவும் செய்ததல்ல என்பதை யாவரும் உணரும்படியாக ராஜி நிபந்தனைகள் வற்புறுத்திக் காட்டி விட்டன.
ஆதலால் இந்தக் கிளர்ச்சியில் கள்ளு நின்றுவிடுமென்றும், ஜவுளி நின்றுவிடும் என்றும், உப்பு தெருக்களில் விலையில்லாமல் கொட்டிக் கிடக்கு மென்றும் கருதினவர்கள் நன்றாய் ஏமாற்ற மடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும், இந்த ராஜியைப் பற்றி தேசியப் பத்திரிகை என்பவைகளில் ஒன்றான சுதேசமித்திரன் பத்திரிகையானது ராஜியைப்பற்றி எழுதுகையில், “இவ்வளவு கஷ்டப்படாமலே இந்தபலனை அடைந்திருக்க முடியாதா என்று
சிலர் கேட்கலாம். இது வீண் கேள்வி. ஏனெனில் நடந்தது, நடந்து விட்டது: தேசமகா ஜனங்கள் அஹிம்சா தர்ம போராட்டத்தில் இறங்கி விடுவதன் பலன் ஒரு வருஷத்திற்குள் இவ்வளவு தெளிவாக விளங்கி இருக்காது” என்று சொல்லியிருப்பதில் இருந்தே இதன் பிரயோஜனமற்ற தன்மையும், ஏமாந்துபோன தன்மையும் நன்றாய் விளங்கும். மற்றும் அப்பத்திரிகை எழுதியிருப்பதில் சட்ட மறுப்பு ஆரம்பிக்கப்பட்டதின் “முக்கியமான
குடி அரசு - 19310) 146
லட்சியம் ராஜி நிபந்தனைகளில் குறிப்பிட்டிருக்கும் காரியங்கள் அல்ல. வென்பதை மறந்து விடக்கூடாது” என்றும் எழுதிவிட்டு “எதற்காக சட்ட மறுப்பு ஆரம்பிக்கப்பட்டதோ அதுவே நமது முக்கிய லட்சியம். மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு சர்வகட்சி மகாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் இப்போது சம்மதித்து விட்டது” என்றும் எழுதி இருக்கின்றது.
அந்த மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுவதிலும்,
1.சமஷ்ட்டி அரசாங்கம் ஏற்படுத்துவது.
2. இந்திய ஜனங்களின் பிரதிநிதிகளுக்கு ஜாவாப்தாரியாக
அரசியல் நடத்த ஏற்பாடு செய்வது.
3. இந்தியாவின் நன்மையை உத்தேசித்து சில பந்தோபஸ்துக்கள் செய்யப்பட வேண்டியது என்று கண்டிருக்கிறது.
இவை நல்லதா? கெடுதலா? என்பது ஒருபுறமிருந்தாலும், இந்த மூன்று கொள்கைகளையேதான் வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதிகளும் முக்கிய
மாய் வைத்து தீர்மானித்து இருக்கிறார்கள்.
ஆதலால் இது புதிய லக்ஷியம் என்றோ இனிச் செய்யவேண்டிய வேலை என்றோ சொல்லிவிடுவதற்கில்லை. இதன் யோக்கியதையை பார்க்கும் போது ஒரு சிறு கதை ஞாபகத்திற்கு வருகின்றது.
அதாவது ஒரு மாமியார் தான் வீட்டில் இல்லாத போது வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சை கேட்டதில் வீட்டிலிருந்த மருமகள் பிச்சை இல்லையென்று சொல்லி பிச்சைக்காரனை அனுப்பிவிட்டாள். அது சமயம் மாமியார் எங்கோ வெளியில் சென்று வந்து கொண்டிருந்தவள் பிச்சைக் காரனை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க அவன் உங்கள் வீட்டு மருமகள் பிச்சை இல்லை என்று சொல்லிவிட்டாள் என்று சொன்னான். அதற்கு அந்த மாமியார் “அவள் கிடக்கின்றாள் அதிகப் பிரசங்கி” என்று சொல்லி பிச்சைக்காரனை அழைத்துப் போய் தான் வீட்டு வாயிலில் நின்று கொண்டு பிச்சைக்காரனை பிச்சை கேட்கும்படி சொன்னாள். பிச்சைக் காரனும் மாமியார் சொன்னபடி வெகு ஆவலாக புதிதாய் “அம்மா பிச்சை போடுங்கள்” என்று கேட்டான். மாமியார் எஜமானி போல் நின்று கொண்டு இருந்தவள் வெகு கம்பீரமாக “பிச்சை இல்லை போ” என்று சொன்னாள். உடனே பிச்சைக்காரன் “இந்தச் சங்கதி உங்கள் மருமகளே சொல்லி விட்டார்களே. இதற்கு நீங்கள் ஏன் என்னைக் கூப்பிட்டு இந்த மாதிரி சொல்ல. வேண்டும்” என்று கேட்டான். அதற்கு மாமியார் கோபித்து “பிச்சை உண்டு இல்லை என்று சொல்லும் உரிமை எனக்குத்தான் உண்டே யொழிய என் மரு மகளுக்கு இல்லை. ஆதலால் தான் உன்னை கூட்டி வந்து என் உரிமையை நிலை நிறுத்திக்கொண்டேன்” என்று சொன்னாளாம். அதுபோல வட்ட
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மேஜை மகாநாட்டில் முடிவான விஷயங்களையே மறுபடியும் காங்கிரஸ் காரர்கள் போய் உட்கார்ந்து அந்த மூன்று விஷயங்களையும் பற்றி பேசி முடிவு செய்யவேண்டும் என்று சொல்வதின் கருத்து இருக்கின்றது.
எனவே சுதேசமித்திரன் எழுதியிருக்கின்றபடி சட்டமறுப்பு இயக்கத் தின் இலக்ஷியம் இதுவாகவே இருந்திருக்குமானால் சட்ட மறுப்புக்கு வெற்றி என்பதில் ஆக்ஷேபணையில்லை. ஆனால் எலியைப்பிடிப்பதற்குமலையை வெட்டித் தோண்டியிருக்கவேண்டியதில்லை. மற்ற விஷயங்களைப் பற்றி மறுமுறை எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.03.1931
குடி அரசு - 19310) 148
ங்கக்கேட்டுகளின் தொல் ழி
சுமார் இரண்டுவருஷ காலமாக பிரஸ்தாபத்திலிருந்து வந்த சுங்கக் கேட்டுகளின் மூலம் சுங்கவரி வசூல் செய்யும் தொல்லைகள் ஒழிந்தது. அதாவது இவ்வாரம் சென்னை சட்டசபையில் சுங்கக் கேட்டுகள் மூலம்
சுங்கம் வசூலிக்காமல் இருக்க ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது.
இதனால் ஜனங்கள் செலுத்தி வந்த வரி எந்த அளவிலும் குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. கவனித்துப் பார்ப்போமானால் முன்னிலும் அதிகமான வரியை கொடுக்கக்கூடியதாக வந்து சேரும். அன்றியும் இத னால் இவ்வரி வசூலினால் பிழைத்து வந்த ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஜீவனத்திற்கு வழி இல்லாமல் போகும். ஜனங்களுக்கு இப்போது இருந்து வரும் மோட்டார் போக்குவரத்து பிரயாணக்காரருக்கு சற்று வாடகைத் தொல்லை அதிகமாகும். இன்னும்பல அசெளகரியங்களும் உண்டாகக்
கூடும். என்றாலும் ஒரு முக்கியமான அனுகூலம் உண்டு என்பதை நாம்
எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். அதாவது சுங்கக்கேட்டுக்குப்: பக்கத்தில் வண்டிகளை நிறுத்திக்கொண்டு சுங்கக்காரர்களுடன் தொல்லை: கொடுக்கும் காரியம் ஒழிந்தது மிகவும் மகிழ்ச்சியடையத்தக்கதாகும். சுங்கக் குத்தகைதாரர்களில் 100க்கு 50 பேர்கள் சுபாவத்திலேயே யோக்கியப் பொறுப்: பில்லாமல் பிரயாணிகளை அலக்ஷியமாய்க் கருதி தொல்லை விளைவித்து வருபவர்களாகின்றார்கள். எஞ்சி உள்ளவர்களிலும் 100க்கு 75 பேர்களுக்கு மேலாகவே ஸ்தல ஸ்தாபன நிர்வாகத் தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு சகிக்க முடியாத தொல்லைகளையெல்லாம் பிரயாணி களுக்குக் கொடுத்து அதிகவரி வசூல் செய்வதில் மிக்க கஷ்டப்படுத்தி விடுகிறார்கள். இவைகள் ஒழிந்தது மிகமிக திருப்தியைக் கொடுக்கக் கூடியதாகும்.
இதனால் சில ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும் தலைவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் சில அங்கத்தினர்களுக்கும் வரும்படி குறைந்துவிடும் என்பதை நாம் மறைக்கவில்லை. சுங்கக் குத்தகை ஏலம் விடும் விஷயத்தில் அனேக ஸ்தலஸ்தாபனக்காரர்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளுவதே கிடையாது. ஒரு குறிப்பான நபருக்கே ஒன்றுக்குப் பாதியாய் குத்தகைக்கு விட்டு அந்த நபரை சுங்கம் வசூலிக்கும் விஷயத்தில் தன் இஷ்டப்படி அட்டூழியம்செய்ய விட்டுவிடுவதும் வேறு யாராவது வந்து ஏலத்தில் குத்தகைக்குக் கோரினால் தனக்கு வேண்டியவனைக் கொண்டு
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஒன்றுக்கு இரண்டாக ஏலத்தில் உயர்த்திக்கேட்கச் செய்வதும் ஏலம் முடிந்த பிறகு வருஷக்கடைசியில் அதிகமாகக் கேட்கப்பட்ட துகையை தள்ளிக் கொடுத்து விடுவதுமான முறையில் அநேக அக்கிரமங்கள் செய்து வந்ததும், ஒரு சமயம் அதிகமாகக் கேட்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட தனக்கு வேண்டாத வன் வீண் விஷயத்தில் அதிகமான தொல்லைகளையும் நெறுக்கடிகளையும் உண்டாக்கி விட்டுவிட்டு ஓடும்படி செய்து வந்ததும் நமக்கு நன்றாய்த் தெரியும். இந்தமாதிரிக் காரணங்களை உத்தேசித்து பல இடங்களில் சுங்கக்கேட்டு குத்தகைதாரர்கள் எலக்ஷன்களில் பிரவேசித்து தனக்கும் ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும் பொருத்தமான ஆட்களை தேர்தலில் கொண்டுவர முயற்சிப்பதும் அதற்காக 10 ஆயிரம், 20ஆயிரம் கூட சுங்கக் குத்தகைதாரர் செலவு செய்வதும் அந்தப் பணங்களை யெல்லாம் சுங்கக் குத்தகையில் சம்பாதிக்க முயன்று வருவதும் இத்தியாதி பல காரணங்களால் சுங்கத்தின்மூலம் ஸ்தலஸ்தாபனங்களை பூரண உரிமை யாக்கிக் கொண்டு பலவித அக்கிரமங்கள் செய்து வரும் தன்மைகள் நாம் அறிந்த விஷயமாகும். ஆகவே பல விஷயங்களில் சுங்க வசூலானது நமது நாட்டில் நாணைய மில்லாமலும் யோக்கியப் பொருப்பில்லாமலும் கெளரவ மற்ற தன்மையிலும், பிறருக்கு தொல்லை விளைவிக்கும் தன்மையிலும் நடந்துவந்ததானது ஒரு அளவுக்காவது ஒழிபட்டதற்கு சில ஸ்தல ஸ்தாபனக்காரர்களும், சுங்க குத்தகைதாரர்களும் தவிர மற்றவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டியதே யாகும். இனியும் பல இடங்களில் மார்க்கட்டு சுங்க வசூல் விஷயத்திலும் சில மாறுதல்கள் செய்தால் மிக்க நன்மையாக இருக்கும். அவையெல்லாம் அனேகமாக ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நேமிப்பதன் மூலமாக பெரிதும் செளகரியமேற்படலாம். நிற்க
இச்சட்டம் செய்யப்பட்டதில் உள்ள முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால் இச்சுங்கவரி ஒழிப்பு மசோதாவுக்கு மிகுதியும் கவலை யெடுத்து பிடிவாதமாய் வேலைசெய்து வெற்றிபெற்ற திரு. ஹில்ட்டன் பிரவுன் துரையவர்கள் சுங்கக்தொல்லையால் ஒரு தடவை கஷ்டப்பட்ட வரானதால் அதாவது ஒரு சுங்கச்சாவடியில் அச்சுங்கக் காரனுடன் வாதாடி அடிதடியாக நேர்ந்ததால் தனது அனுபவமும் தனக்கு ஏற்பட்ட தொல்லையும் மற்ற மக்களுக்கும் இருக்கும் என்று கருதி அதை ஒழிக்க கங்கணம்கட்டி அடியோடு ஒழித்து வெற்றிபெற்றது பாராட்டத்தக்கதாகும். இப்போது இந்த சட்டத்தால் இனி மோட்டார்காரர்கள் ஒரு அளவுக்கு லைசென்ஸ்வரிகள் கொடுக்க வேண்டியதாவதோடு மோட்டார் பஸ்கள் அதாவது வாடகை: மோட்டார்கள் வருஷம் ஒன்றுக்கு ஒரு பிரயாணியின் ஸ்தானத்துக்கு 40 ரூ.
வீதம் வரி கொடுக்கவேண்டிய தாகின்றது. அதாவது ஒரு மோட்டார் பஸ் 15 பிரயாணிகளை ஏற்றிக்கொள்ள ஸ்தான வசதி ஏற்படுத்தி 15 பிரயாணிகளுக்கு என்று லைசென்சு வாங்கினால் அதற்கு ஒரு வருஷத்திற்கு 600ரூ. வரி கொடுக்க வேண்டியதாகின்றது. இது போலவே 20 பிரயாணிகளுக்கானால் @ 800 ரூ. கொடுக்க வேண்டியதாகின்றது. மற்றபடி வேறு சில வரிகளும்
குடி அரசு - 19310) 150
செலவுகளும் ஏற்படுவதுடன் பெட்றோல் முதலிய எண்ணைக்கும் அதிக விலை கொடுப்பதின் மூலம் தினம் ஒரு பஸ் ஒன்றுக்கு 12 அணா முதல் ஒரு ரூபாய் போல கொடுக்கவேண்டி ஏற் படலாம். எவ்வளவு ஏற்பட்டாலும் “வண்டிபாரம் பூமி சுமக்கின்றது” என்பது போல் இவ்வளவு கஷ்டமும் பிரயாணிகள் தலையில்தான் விழுகப் போகின்றது என்பது மாத்திரம் உறுதி. ஆனாலும் இதில் நமக்கு ஒன்றும் அதிசயமில்லை. ஏனெனில் இன்றைய எவ்வித சுதந்திரமும், சீர்திருத்தமும், புதுச்சட்டமும். ஏழைகளையும், பாமரமக்களையுமே தொல்லைகொடுத்து துன்பத்திற்காளாக்குவதாயிருப்ப
தால் அந்தக்கிரமப்படி இதுவும் ஏற்பட்டதில் அதிசயமில்லை!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.03.1931
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காரைக்குமயில் பார்ப்பண்யத் தாண்டவம்
144
காரைக்குடியில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு எப்படியாவது இடை யூறு செய்யவேண்டுமென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதீகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்துகொண்டுவரும் விஷயமாய் கொஞ்சநாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது.
“தோலைக் கடித்து, துருத்தியைக்கடித்து கடைசியாக வேட்டைக் குத் தயாராகிவிட்டது” என்ற பழமொழிபோல் எந்த எந்த விதத்திலோ தொல்லை: விளைவித்தும், அது பயன் படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிச்சாக்கை வைத்து உயர் திருவாளர்கள் சொ. முருகப்பா, அ. பொன்னம்பலனார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக்குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ, பிரசங் கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்திரவு போட்டுத் தடுக்கப் பட்டி ருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அரிகுறியென்றே கருதவேண்டியிருக்கின்றது. காரைக்குடியானது உண்மை யிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதீக ஆதிக்கமும் கொண்டது என்ப தற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்காவது, குறைந்த எண்ணிக்கையுள்ள சமூகத் தாருக்காவது யாதொரு பிரதிநிதி ஸ்தானமும் ஒதுக்காமல் தீர்மானம் செய்த ஏதேச்சாதிகார மனப்பான்மை ஒன்றே போதுமானதாகும். அப்படிப் பட்டவர்கள் ஆதிக்கத்
தில் உள்ள அந்த நாடு சுயமரியாதையைப் பற்றியும், தீண்டாதவரின் சமத்து வத்தைப் பற்றியும், பெண்களின் உரிமையைப் பற்றியும் பேசுவது முனிசிபல். நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படு மென்று கருதி, அதிகாரிகளின் தயவைச் சம்பாதித்து 144 போடச் செய்ததில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை.
ஆனால் இந்த மாதிரி பணக்கார ஆதிக்க வாழ்வும், அதிகாரிகள் அவர்களுக்கு அடிமையாகி தலைவிரித்தாடும் பொருப்பற்ற அதிகாரவர்க்க ஆட்சியும் நமது நாட்டில் தாண்டவமாட இன்னும் விட்டுக் கொண்டிருப் பதுவே நமக்கு மிக ஆச்சரியமாகத் தோன்றுகிறது.
குடி அரசு - 19310) 152
அதோடு நாட்டுப் போலீசாரின் யோக்கியதை நாம் அறிந்ததேயாகும். அதிலும் பார்ப்பனப் போலீசாரைப் பற்றியோ வென்றால் அறியாதவர்கள். யாருமே இருக்க மாட்டார்கள்.அதிலும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.
உதாரணமாக ஒரு குரங்கு கள்ளைக்குடித்து, அதைத் தேளும் கடித்து விட்டால் எப்படி அது தலை கால் தெரியாமல் கண்டதை யெல்லாம் கடிக்குமோ அது போலவேதான் நமது பார்ப்பனப் போலீசு நிர்வாகம் இருக்க
முடியும். போராக் குறைக்கு இவர்களுடைய தயவை பைத்தியக்கார பணக்
காரச் செட்டியார்மார்கள் எதிர்பார்த்து தூபம் போடுவதும் சேர்ந்து விட்டால்
144 உத்திரவு மாத்திரமல்லாமல் இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யப் பின் வாங்க மாட்டார்கள். இந்தக் காரியத்திற்குத் திருப்பத்தூர் டிவிஷனல் ஆபீசர் சம்மதித்துத் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை நாம் கண்டிக்காமல் விட முடியவில்லை. ஆகையால், ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் இதில் பிரவேசித்து உண்மை யை விசாரித்து, நீதியை வழங்க வேண்டியது அவருடைய கடமையென்ப தோடு, காரைக்குடியில் உள்ள பார்ப்பனீயப் போலீஸ் ஆதிக்கத்தை உடனே குறைக்க வேண்டிய காரியமும் செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம். குட்டி குலைத்து பட்டி தலையில் விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது யோக்கியமான
சர்க்கார் கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.03.4931
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
புதுச்சேரியில் சுயமரியாதை மகாநா௫
அக்கிராசனரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!!!
எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப்பத்திரங்கள். வாசித்துக் கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும், எங்கள் வரவைப் பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய்திருப்ப தாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம் மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரிகின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க்கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.
உதாரணமாக, இவ்வளவு கிளர்ச்சியாவது இங்கு நடந்திருக்கா விட்
டால் அதிசயமாகத்தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள். அநேகமாக நாங்கள் போகின்ற ஊர் களில் எல்லாம் எதிர்க்கிளர்ச்சியே எங்கள் பிரசாரத்திற்கு மெத்த அனுகூல மளித்து வருகின்றது. நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக் காகச் செய்யப்படும் மரியாதைகளில் முதலாவது அங்குள்ள கோவில்களை: அடைத்துப் போலீஸ் காவல் போடுவதும், “நாஸ்திகர்கள் வருகிறார்கள்” என்று ஊருக்குள் பிரசாரம் செய்து எங்கள் கூட்டத்தை நடத்த விடக் கூடா தென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளுவதுமேயாகும். இந்தக் காரியங்கள் செய்யப்படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி, பொதுஜனங்கள் அப்படிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள் என்பவர்கள் எப்படியிருப்பார்கள், அவர்கள் என்னசொல்லுவார்கள் என்பதை பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும், நாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஏற்பட்டுவிடு கின்றது. இந்தக் காரணங்களால் எதிர்க் கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசிய மாகப் போயும் அங்குள்ள எதிர்க்கிளர்ச்சிக்காரர்களின் செய்கைகளின் பயனாய் மலேயாவில் இதுவரை பிரசாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய செளகரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது. அங்கு சுமார்
குடி அரசு - 19310) 154
150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாக்காதலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும். மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித் தார்களாம். அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும் படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்ட காரியம் செய்வார்கள் என்று கேட்டாராம். அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார்
கள் என்று சொன்னார்களாம். அதற்கவ்வதிகாரி சீதை யென்றால் என்ன என்று கேட்டாராம். அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார்களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசு நாதரின் தாயாராகிய மரியம்மாளைக் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள். அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? வருபவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்லவென்று சொல்லுங்கள். அதற்கு தைரியமும் ஆதாரமும் இருந்தால் பயப்படதேவையில்லை என்று சொல்லி வருகின்றவர்களின் சுற்றுப் பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களுடையது என்று சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.
ஆகவே அது போலவே இங்கும் எங்கள் பிரசாரத்திற்கு சில மக்கள் பயந்து விட்டது ஆச்சரியமாக இருக்கின்றது.
நிற்க, சகோதரர்களே, என் வார்த்தைகளை வெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச்
சுதந்திரமுண்டு. ஒருவருடைய அபிப்பிராயத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது நியாயமாகாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திர முண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். அதைத் தடுப்பது என்பது ஒரு காலும் மனிததர்மத்தில் சேர்ந்ததாகாது. நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர். கருதிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும்? நாங்களும் மனிதர்கள்தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினுடைய தனிப் பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லையே. பொதுப்பட்ட காரியங்களில் பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லாருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்க ளுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும்
விட்டுக் கொடுக்க இசையோம். எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறு பட்ட வர்கள் தக்கப் பதிலையும் ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது. ஆதார மற்றவர்கள், தந்திரத்தில் வாழ்பவர்கள், அமட்டலிலும்
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத் தான் எங்களைப்பற்றி பயம் ஏற்படக்கூடும் கோபமும் ஆத்திரமும் வரக்
கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? அஸ்திவாரமற்றவை
களும், புரட்டுகளும் என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்கு சாய்ந்து விழுந்து தான் தீரும்.
அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கும் நாளெல்லாம் வீண்: நாளாகத்தான் முடியும். வெகு நாளையப் புரட்டு என்பதாலேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள் முரடர்கள் தந்திரசாலிகள் ஆதரிக்கிற அபிப்பிரா. யங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது. அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது. சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப்பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளிவிட முடியாது. ஆதலால் தடைப்படுத்த முயற்சிப்பதிலோ, கோபிப்பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
சகோதரர்களே! நாங்கள் இங்கு எந்தவிதமான மதப்பிரசாரம் செய் யவோ, ஏதாவது ஒரு மதத்தைக் குற்றம் சொல்லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வரவில்லை: அதுபோலவே கடவுள் விஷயத்திலும் கடவுள் உண்டு இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்களுக்கும், மதக்காரர்களுக்குமுள்ள சம்மந்தத் தைப்பற்றியும் சுதந்திரத்தைப்பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வர வில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? அதன் சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங்களையும், உலகத் தோற்றங் களையும் அன்னியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுபவமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரிக்ஷித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக்கின்றோம். இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை. உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக்
கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனிதராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ளமுடியும்? மக்களை: முட்டாள் தனமும் முரட்டுப்பலமும் ஆட்சி செய்யப்பட வேண்டுமா? அல்லது அறிவும் நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.
மனிதனின் அறிவுக்கு மேற்பட்டதொன்று உண்டு என்று ஒன்றைக்
கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அறிவைக்கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் “நம்பித்தானாக வேண்டும்” என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப்போட்டு நாசமாக்கி மனித சமூகம் முழுவதையுமே அடிமைப்படுத்தி விட்டதாலேயே இன்று மனித சமூகம் இவ்வளவு தொல்லைக்கும், கவலைக்
குடி அரசு - 1931 () 156
கும் ஆளாகி ஆகாரத்திற்கே திண்டாட வேண்டிய நிலைமை யேற்பட்டு விட்டது.
சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று, ஆகாய வாணிசொன்னாள்,ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக்கற்பித்து எழுதி வைத்துக்கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டு இருப்பதும், அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத்துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவதுமான காரியங்கள் எப்படி மனிதத் தன்மையானதும் நியாய மானதுமானவைகள் ஆகும்? ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்னதானால், அசரீரி சொன்னதானால், ஆகாயவாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒருவருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப் பதெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறிமுகப்படுத்துவதெதற்கு? என்பவைகளை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை. ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லிவிட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான்? ஆண்டவன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப்படாதென் கிறார்கள். தப்பித்தவறி யாராவது கேட்டுவிட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின்னனவே யொழிய சமாதானமான திருப்தி யான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமூகம் முற்போக்கடைவதற்கே இட மில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரை சிலர் ஏமாற்ற ஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும் பித்தலாட்டங்களையும் ஆரம்பித்த இடமே இந்த இடம் தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விடவேண்டும் என்று அபிப்பிராயப் படுகின்றோம். ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீக்ஷிக்க வேண்டுமென்று மேலும் மேலும் வலியுறுத்து கின்றோம். இன்று உலகத்திலுள்ள பெரும்பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்கு தனித்தனியாக பற்பல விதமான கொள்கைகளையும் வாசகங்க ளையும் வைத்துக்கொண்டு அவர் கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும் வாசகங்களை யும் ஆண்டவன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றைப் பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்திவிட்டார்கள். அதனாலேயே மக்களுக்குள் பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப்பி ராயங்களும் காணப்படுகின்றன. இவ்வபிப் பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரை யொருவர் சந்தேகிக்கவும், வெறுக் கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க்
கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன்படுகின்றன. எந்த மார்க்கமாக என்று பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம்,ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியதுதான் மேலான தென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக் கொண்டு அதை நிலை நிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமே யாகும். இந்த உணர்ச்சியையும் செய்கையையும் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமூகத்திற்குள் ஒருவித பொதுவான ஒற்றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை. ஆகையால்தான் இந்த இடத்திலேயே மனிதன் முதல் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.
நாம் இப்போது எந்த மதக்காரர்களுடைய கொள்கைகளையும் உபதேச வாசகங்களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்ப தாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம்மு டைய வேலையும் கவலையும் அவையல்ல, மற்றென்னவெனில் எல்லா மதக் காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக்கொள்ளு கின்றவர்களானதால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும் உபதேச வாசகங்களையும் அந்த ஆண்டவனே சொன்னான் என்று சொல்லு வதால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மை யென்றும் எந்த அவதார புருஷர்கள் எந்த தூதர்கள் முதலானவர்கள் சொன்னது உண்மையாயிருக்கக்கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீகைஷ என்பவையேயாகும்:-
மேலும் இவைகளை எல்லாம் ஆண்டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப்படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலை.
யில் எங்கு இருந்துகொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல்லுகின்றார்கள் என்று கண்டுபிடிப்பதற்குமே யாகும். மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்லவேண்டுமென் கின்ற கொள்கையையோ, உபதேசத்தையோ மற்றும் ஏதோ ஒன்றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துச் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப்பதைப் பார்க்கும் போது உண்மை யிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டிருந்தால் அவைகள் ஒவ் வொரு மனிதனுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும்படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவை களை ஆண்டவன் தான் சொன்னான் என்று கருதும்படியாகவோ அல்லது குறைந்த அளவு விவாதமாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்ட வனால் செய்யமுடிய வில்லை என்றும் இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப் பட்டது என்று சொல்லப்படுவது உண்மையாயிருக்க முடியுமா என்னும் சந்தே கங்கள் தோன்றுவதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும்.
குடி அரசு - 19310) 158
அன்றியும் இவற்றையெல்லாம் ஆண்டவன் சொன்னார் என்று கண் மூடித்தனமாய் நம்புவது அவசியமா அல்லது ஆண்டவன் சொல்லி இருந்
தூல் நமக்கு ஏன் தெரிந்திருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.
நிற்க, இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும்,மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப்பார்த்து சமாதானம் கூறுகிறார்
கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச்செய்ய வேண்டுமென்பதற்காகவோ ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று
நம்பச் செய்வதற்காகவோ உலகத்திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச்சி யையும், சுதந்திரத்தையும் இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா என்று கேட் கின்றோம். இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்கவொட் டாமல் அழுத்திவைத்து விடுவதா என்றும் கேட்கின்றோம்.
மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர் களுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தை தாராளமாய் வெளியி லெடுத்துச் சொல்ல இடமளிக்க வேண்டும். தனக்கே விளங்காததையும் மற்றொருவனுக்கு விளங்கவைக்க முடியாததையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும்படியோ எதிர்பார்ப்பதும் யாரையும் நிர்பந்தப்படுத்துவதும் கண்டிப்பாய் கூடவே கூடாத காரியமாகும். அது போலவே உலக மனிதர்கள். ஒற்றுமைப்பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல்லையும் அவர்களின் உபதேசங்களின் தொல்லையும் ஒழிந்தாகவேண்டும்.. இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும். இது செய்யப்படாதவரை மனிதன் காட்டு மிராண்டித் தனத்திலிருந்து மனிதத் தன்மைக்கு ஒருக்காலமும் திரும்பமாட்டான். (இதன் தொடர்ச்சி 15031931 குடி அரசு) தொடரும்!
குறிப்பு : புதுச்சேரி ஜெப்ளே தியேட்டரில் 01.03.1931 அன்று நடைபெற்ற
மாநாட்டில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 08.03.1931
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கக் கல்யாணாம்
இவ்வாரம் வேறொரு பக்கத்தில் “எனது காதல்” என்பதாக சிவ கங்கை திருமதி. ஏ.எஸ். மணிபாய் என்னும் கன்னிகையின் கடிதம் ஒன்று பிரசுரித் திருக்கின்றோம். இதைப் பற்றி சென்ற வாரமும் பிரசுரித்து மிருந்தோம். இப்போது அந்தப்பெண்மணியின் கைப்படவே கடிதம் வந்ததால் பிரசுரித் திருக்கின்றோம். இது சம்மந்தமாக மற்றும் பல சொந்தக் கடிதங்களும் நமக்கு வந்திருக்கின்றன. அப்பெண்ணின் பெற்றோர்கள் அப்பெண் விரும்பும் நாயகனுக்கு மணம் செய்விக்காமல் வேறு யாரோ ஒருவருக்கு அதாவது அப் பெண்ணுக்குத் தெரியாத ஒருவருக்கு பெண்ணு டைய சம்மதமில்லாமலேயே விவாகம் செய்து கொடுக்கப் போவதாய் பெண்ணின் தாயாரும், சகோதரரும் ஒப்புக்கொண்டதாகவும், பெண் தான் அந்தக் கணவனை மணந்து கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லியும் கேட்காமல் கல்யாணப் பேச்சுக்
கள் நடப்பதாகவும் தெரிய வருகின்றது.
இம்மாதிரியாக நிர்பந்தக் கலியாணம் செய்வது என்பது மிகவும் அனாகரீகமான செய்கை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றதற்கு வருந்து கின்றோம். ஆகையால், இவ்விஷயங்கள் உண்மையாக இருக்குமானால் பெற்றோர்கள் தயவு செய்து மணிபாயின் திருமணத்தை அடிமை விவாக மாய் இல்லாமல் சுயேச்சை மணமாகச் செய்து கொடுக்க வேண்டுமாய் வேண்டுகின்றோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 08.03.4931
குடி அரசு - 19310) 160
கணி எண்ண?
சட்டமறுப்பு இயக்கம்
சட்ட மறுப்பு இயக்கம் சர்க்காருடன் ராஜிசெய்து கொண்டபடிக்குக் காங்கிரஸ் தனது நிபந்தனைகளை நாணையமாய் நிறைவேற்றக் கருத்துக் கொண்டு காரியக்கமிட்டி அறிக்கையின் மூலம் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டது. அது போலவே சர்க்காராரும் தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றும் விஷயத்தில் தங்கள் கடமையைச் செய்ய மாகாணக் கவர்ன் மெண்டுகளுக்கு அறிக்கை அனுப்பி சட்ட மறுப்பு இயக்கத்திற்காக சிறைப் படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்யும்படி செய்து இருக்கிறார்கள். ஆனாலும்,
இந்த ராஜியானது சட்ட மறுப்பு இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று பொதுமக்களால் கருதும்படியானதாக ஆகிவிட்டதே என்று பயப்பட்ட
சிலர் தாங்கள் தோல்வியடையவில்லை என்பதைக் காட்டுவதற் காக அங்குமிங்கும் மறுபடியும் மறியல் செய்வதாகக் காட்டிக்கொள்ள அவசிய முடையவர்களாக ஆதி விட்டார்கள்.
அதுபோலவே சர்க்கார் தரப்பிலும், சர்க்காரார் சட்ட மறுப்பு இயக் கத்தைக் கண்டு பயந்து விட்டார்களென்று பாமரமக்கள் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்கின்ற சந்தேகத்தின் மீதும் போலீசாரைப் பற்றி ஏதாவது கேவலமாய் ஜனங்கள் மதித்துவிட்டால், என்ன செய்வது என்கிறகவலை
மீதும் சர்க்கார் தரப்பிலும் சில இடங்களில் போலீசாருக்குப் பட்டம்,பதக்கம், சன்மானம் முதலியவை அளித்து வருவதின் மூலம் பொது ஜனங் களுக்குச் சர்க்காரிடமும், போலீசாரிடமும் பயம் உண்டாகும்படி செய்து வருவதுடன், சிற்சில இடங்களில் சிலரை பலாத்காரமென்னும் சாக்கால் விடுதலை செய்யாமல் வைத்திருக்கவும் ஏற்பாடுகள் செய்வதாய்த் தெரிகின்றது.
இவைகளைப் பற்றித் திருவாளர் காந்தியவர்களோ அல்லது திருவாளர் இர்வின் அவர்களோ இனிக் கவலை செலுத்தப் போவதில்லை. ஏனெனில் இர்வின் பிரபு “தான் தப்பினதே தம்பிரான் புண்ணியம்” என்று நினைத்து அடுத்த மாத வாக்கில் இந்திய விஷயங்களைப்பற்றிக் கை கழுவிவிட்டுக் கப்பல் ஏறிவிடுவார். திரு. காந்தியவர்களும் ஏதோ ஒரு
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
விதத்தில் தொல்லை ஒழிந்தது என்று கருதி இன்னும் சிறிது காலம் மக்களுக்கு இனியும் அதிகமான ஆசை உண்டாகும்படியாக சுயராஜியத் திற்கு அர்த்தம் சொல்லிக் கொண்டு அஹிம்சை - கதர் பல்லவியுடன் கடவுள் பெருமை யையும் பேசிக் கொண்டு முஸ்லீம்களுக்கு வலை வீசிக்கொண்டி ருக்கும் வேலையில் இருப்பார். மற்றபடி இயக்கத்தில் கலந்து வேலை செய்த மற்றத் தலைவர்களோ சிலர் வட்டமேஜை மகாநாட்டில் எப்படிப் பெயர்வாங்குவது, என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் தேர்தல் விஷயத்தில் கவனம் செலுத்திப் பிளான் போட்டு வருவார்கள். சிலர் அங்கு
மிங்கும் அலைந்து தங்களை வெளியில் காட்டி விளம்பரங்கள் செய்து கொண்டு இருப்பார்கள். தொண்டர்களில் பலர் இனியும் இந்த மாதிரி ஒரு இயக்கம் வராதா என்றும், வராவிட்டால் நமது நிலை என்ன என்றும் எண்ணிக் கவலை கொண்டிருப்பார்கள். சிலர் ஏதோ ஒருவிதத்தில் நமது பெயரும் தேசீய வீரர்கள் லிஸ்டில் பதியப்பட்டு விட்டாய்விட்டது என்ற மகிழ்ச்சியோடு திருப்தி அடைந்து விடுவார்கள். சிலர் தங்களுடைய தனிப்பட்ட வீரப் பிரதாபத்தைப் பேசிக்கொண்டிருப்பதிலேயே திருப்தி அடைந்து கொண்டி ருப்பார்கள். விடுதலையாகாமல் நிறுத்திவைக்கப்பட்டவர்களும் ஏதோ பல காரணங்களால் இந்த இயக்க அபிப்பிராயத்தில் இருந்து மாறுபட வேண்டி யிருக்கின்றவர்களும் ராஜியைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டும் திரு. காந்தியவர்களைப் பற்றி குற்றம் சொல்லிக்கொண்டும் தங்கள் நிலைமைக்கு ஒரு சமாதானம் தேடிக் கொண்டிருப்பார்கள். அதிக தண்டனையடைந்து விடுதலை செய்யப் படாமல் இருக்கின்றவர்களில் சிலர் மன்னிப்புக் கேட்டு வெளியில் போய் விடலாமா என்றும் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வெளியில் வந்தவுடன் காங்கிரசையும் திரு. காந்தியவர்களையும் வைது கொண்டு இருப்பார்கள். விடுதலையான பார்ப்பன ரல்லாதார்களில் பலர் இனி சுயமரியாதை இயக்கம்தான் வேலை செய்வதற்கு ஏற்றது என்றும், சிலர் சமதர்மமே சிறந்தது என்றும், சிலர் பொதுஉடைமைக் கொள்கையே சிறந்தது என்றும் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் அதில் இறங்கி வேலையும் செய் வார்கள். ஒன்றுக்கும் உதவாமல் வெளியிலிருந்து வீண் பேச்சுப் பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தவர்களில் சிலர் அகிம்சா தர்மத்தையும் ஆத்ம சக்தியையும் காந்தி அவதாரத்தையும்பற்றி புகழ்ந்து புராணம் எழுதவும் பஜனை செய்துகொண்டு புதிய புதிய வியாக்கியானங்கள் சொல்லு
வதில் வீரர்களாகவும் விளங்குவார்கள். மற்றொரு சிலர் சதி வழக்குக் கைதி களையும் விடுதலை செய்தால்தான் ராஜி, கிரமமான ராஜி என்று சொல்லு வதன் மூலம் தங்களுக்கு சதி வழக்குக் கொள்கையில் அனுதாபமும் நம்பிக்கையும் இருப்பதாகக் காட்டுவார்கள். வேறு ஒருசிலர் காந்தி ஜெயித் தாரா? இர்வின் ஜெயித்தாரா? என்று வாதம் செய்து கொண்டு இருப்பார்கள்.
கடைசியாக, வெளியிலிருந்த தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளு பவர்களில் பலர் தாங்களும் இயக்கத்தோடு கலந்திருந்ததாகச் சொல்லிக் கொண்டு மந்திரிகளாக வழி பார்த்துக்கொண்டு அதற்காகப் பல தொண்டர்
குடி அரசு - 19310) 162
களையும் தடவிக்கொடுத்துக் கொண்டும் அடிக்கடி தங்கள் பெயர் வெளியில் வரும்படியாக ஏதாவது ஒருவகை விளம்பரத்தில் கவலை செலுத்திக்கொண்டு இருப்பார்கள் மற்றும் நமது கவனத்திற்கு வரமுடியாத வேறு சிலர் வேறு சில காரியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும் யோசித்துக் கொண்டும் இருக்கலாம். நிற்க,
நம்மைப் பொறுத்தவரை நாம் இவ்வியக்கத்திற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்பதை மனப்பூர்த்தியாய் ஒப்புக்கொள்வதுடன் நாம் இவ் வியக்கத்திற்கு எதிரியாய் இருப்பதாகக்கூட பலர் நினைப்பதில் தப்பில்லை யென்றும் சொல்லுவோம். நாமும் இயக்கத்தில் கலந்து வேலைசெய்து இருந்தபோதிலும் இதைவிட வேறு என்ன விதமான பலன் அடைந்திருக்க முடியும் என்பதை யோசித்தால் நாம் சேராததால் ஒன்றும் முழுகிப் போக வில்லை என்பதும் புலப்படும். எப்படியெனில் 1921-ம் வருஷத்திய ஒற்றுழை யாமை இயக்கத்தின் போது இன்றைய நமது முக்கிய கொள்கை யாகிய தீண்டாமை விலக்கும், மதுவிலக்கும் முக்கிய திட்டமாக இருந்தும் அவ் விரண்டு திட்டமும் அரசியல் ஆயுதமாக இல்லாமல் உண்மையிலேயே தீண்டாமை ஒழிவதற்கும், மது விலக்கப்படுவதற்கும் என்று கருதியே வேலை செய்தும் இதைவிட எத்தனையோ மடங்கு பாமர ஜனங்களுடைய
ஆதரவைப் பெற்று இருந்தும் ஒரு மாதம் கோடி ரூபாய் வசூலித்துச் செலவுசெய்து பிரசாரம் செய்து 3 மாதத்தில் 30000 பேர் சிறை சென்றும், அதுவும் ஆங்கிலம் படித்து அரசாங்க பதவியை எதிர்பார்த்து பிரதிப் பிரயோஜனமடைய என்று வியாபார தோரணையில் இல்லாமல் எவ்விதத் தியாகத்திற்கும் துணிந்த உண்மையான உறுதியான தொண்டர் களாகவே முக்காலே மூணுவீசம் பேர்கள் இருந்தும் சிறைக் கூடங்களில் இன்றைய தினம் உள்ள போக போக்கியங்கள் இல்லாமல் மிக்க மோசமான நிலையில் அதாவது திருட்டு, கொள்ளை, கொலை முதலிய குற்றங்கள் செய்த குற்றவாளிகள் அனுபவிப்பது போன்ற கடினமான கஷ்டங்களை யெல்லாம் அனுபவித்தும் ராஜியைப்பற்றியே சிறிதும்கூட கவலை யில்லாமல் இரண்டில்: ஒன்றைப் பார்த்துவிடுவது என்கிற முடிவு பலருக்கு இருந்தும், சர்க்காரால் வலியவந்து “உங்களுக்கு என்ன வேண்டும் என்ன வேண்டும்” என்று கேட்டும் ராஜியைப்பற்றி பேசவோ தங்களுக்கு வேண்டி யது இன்னது என்று சொல்லவோ கூட இஷ்டமில்லாமல் இருக்கக் கூடிய நம்பிக்கையும் தைரிய
மும் இருந்தும் கடைசியாக என்ன பலனை அடைய முடிந்தது என்று பார்த்
தால் இயக்கத்தில் ஈடுபட்ட ஜனங்கள்மீது குற்றம் கண்டு பிடிக்கப்பட்டு யாருடைய மனப்பான்மையையும் லக்ஷியம் செய்யாமல் ஒருவருக்கும் தகவல் தெரிவிக்காமல் யாரையும் கேட்காமல் திடீரென்று நிறுத்தப்பட்டுப் போனதைத் தவிர வேறு ஒன்றுமே ஏற்படவில்லை. மற்றும் அந்த சமயம் ஆங்கிலம் படித்த ஆட்கள் எல்லாம் எதிரிடையாய் இருந்தார்கள். அந்தப்படி எதிரியாய் இருந்த ஆட்களே பெரிதும் இயக்கத்தின் பயனாய் பலனும் அடைந்தார்கள்.
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆகவே,அப்படிப்பட்ட அந்த இயக்கமே நாம் கலந்திருந்த காலத்தில்.
அந்தக் கதியடைந்த பொழுது இந்த இயக்கம் மாத்திரம் நாம் கலந்து இருந்தால் இப்போது அதைவிட வேறு என்ன கதி அடைந்துவிட முடியும்? ஒரு சமயம் இனியும் கொஞ்சம் அதிகமான பேர் சிறை சென்றிருக்கலாம். இன்னும் ஒரு பத்துநாள், அல்லது ஒருமாதம் பொருத்து ராஜிக்கு ஆசைப்பட்டு இருக்கலாம் என்பவைகளைத் தவிர வேறு என்ன பலன் அடைந்திருக்க முடியும்? என்று கேட்கின்றோம். தவிர வட்டமேஜை மகாநாட்டில் புதிதாகக் காங்கிரஸ் காரர்கள் கலந்து கொள்வதின் மூலம் இனி யும் அதிகமாக என்று எந்தவித அரசியல்திட்டம் ஏற்படுவதானாலும் அதனால் நமக்கு என்ன பயன் ஏற்படக் கூடும்? என்பதுதான் நமது கேள்வி. ஒருசமயம் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துவிட்டு மற்றும் அவர்கள் சம்பந்தமோ, ஆதரவோ இல்லாமல் விலகிக்கொண்டு நேப்பாளம், பூத்தானம் முதலிய தேசங்கள்போல் ஒரு தனி ராஜியபாரத்தை அதாவது இந்திய ராஜிய அரசாங் கம் என்பதாக ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோமா? அப்படியே ஏற்படுத்திக்கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும் மேல்கண்ட அந்த ராஜாங்கங்களின் யோக்கியதை நமக்குத் தெரியாததா? இன்னும் அங்கெல் லாம் அதாவது நேபாள தேசத்திலெல்லாம் அடிமை வியாபாரங்கள் நடப்ப தும்மத ஆதிக்கமே அங்கு ஆக்ஷி செய்வதும் வருணாசிரமத்திற்கு விரோத மாய் நடப்பது கொலைக்குற்றத்தை விட கொடுமையாய் மதிக்கப்படுவதும் நமக்குத் தெரியாததா? என்று கேட்பதுடன் அவ்வளவு தூரம்கூட போகாமல் இந்தியாவிலுள்ள இந்திய சிற்றரசர்களின் யோக்கியதையை பார்த்தாலே இந்திய வெள்ளைக்கார சம்பந்தமில்லாத இந்திய அரசியல் அமைப்பு அதா வது இந்திய சிற்றரசாங்கமும் இந்திய பிரமுக மக்களும் செல்வ மக்களும் சேர்ந்து எழுத்து வாசனை அறியாத சாமானிய மக்கள் பேரால் அமைக்கப் படும் அரசியல் அமைப்பு எப்படி இருக்கும் என்பதும் அறிய யாராவது ஜோசியம் கூற வேண்டுமா? என்றும் கேட்கின்றோம். ஆஸ்திகம் என்பதை போலவே சுயராஜியம் என்கிற வார்த்தையும் அமைக்கப்பட்டு விட்டதால் சுயராஜியம் என்பதைப்பற்றிக் கிளரினால் மக்கள் கோபித்துக் கொள்ளவும், கடவுளைப் பற்றிப் பேசினால் எப்படி “கடவுளின் உண்மைகளையும் கடவுள் உண்மைகளை வெளியாக்கின பெரியார்களையும் குற்றம் சொல்லுகின்றான்” என்று புராணபிழைப்புக்காரரும் பகுத்தறிவற்றவர்களும் கூப்பாடு போடு கின்றார்களோ அதுபோலவே சுயராஜியத்தைப்பற்றி பேசி னாலும் தேசத் துரோகி என்றும், “தேசீயத் தலைவர்களையும் சுயராஜியத்திற்கு வழிகாட்டிய பெரியார்களையும் குற்றம் சொல்லுகிறான்” என்றும் கோபித்துக் கொள்ளு. கிறார்கள். இந்தப்படியே மக்களை இனியும் எத்தனை நாளைக்குத் தான் வைத்திருப்பது என்பது விளங்கவில்லை. இதனால் என்ன பயன் என்பதும் விளங்கவில்லை. ஆகையால் இந்தவிஷயத்தை இனிக் கிளரிக்கொண்டி ருக்காமல் சட்டசபை போகவேண்டியவர்களுக்கும் மந்திரிகளாக வேண்டிய வர்களுக்கும் அதிகாரம் பதவி பெற்று வாழ வேண்டியவர்களுக்கும்
குடி அரசு - 19310) 164
வட்டமேஜை மகாநாட்டில் தொடர்ந்து பேசவேண்டிய வேலையையும் பூரண சுயேச்சை என்பதைப்பற்றி பேச வேண்டிய வேலையையும் விட்டுவிடுவதே நலமாகும். இந்த ஒரு வருஷ- காலத்தில் தேசமக்களில் இயக்கத்தில் சேர்ந்த வர்களில் பலருக்கு பலவித கஷ்டம் விளைந்தது என்பதோடு மாத்திர மல்லாமல் இயக்கத்தில் சேராதவர்களுக்கும் பல கஷ்டம் நேர்ந்ததோடு நாட்டின் முன்னேற்றத் திற்கும் பல தடைகள் ஏற்பட்டது என்பது நம்மால் மறைக்க முடியவில்லை. “சுதேசமித்தரன்” எழுதியது போலவே “போனது போகட்டும், நடந்தது நடந்துவிட்டது இனிப் பேசுவதில் பயனில்லை” ஆகை யால் இனி மேலாவது நாட்டிற்கு உண்மையான வழியில் முன்னேற்றமேற்
படும் படியாகவும் மக்களுக்கு உண்மையிலேயே விடுதலை உண்டாகும் படியாகவுமான வழியில் எல்லோருமே இறங்கி நமது நேரத்தையும், ஊக்கத் தையும், தியாகத்தையும் செலவழிக்க வேண்டுமென்றே ஆசைப்படுகின் றோம். சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்திருந்த பலருடைய நல்ல எண்ணத்தில். நமக்கு சந்தேகமில்லை என்பதை உண்மையாகவே தெரிவித்துக்கொள்ளு கிறோம். பலர் எவ்வித சுயநல எண்ணமும் இல்லாமலும் வேறுபல நாணைய மான நிர்ப்பந்தங்களாலும் திரு. காந்தி யவர்களிடம் உள்ள பற்றுதலினாலும் அவருக்கு இந்த சமயத்தில் உதவி செய்ய வேண்டுமே என்கின்ற ஒரு தயாள குணத்தாலும் அதில் கலந்து கொள்ள வேண்டியவர்களானார்கள் என்பதை
யும் மனப்பூர்த்தியாய் அறிந்திருக்கின்றோம் என்பதோடு, அப்படிப்பட்ட கனவான்களையும் நாம் மனமாரப் பாராட்டுவதுடன் அப்படிப்பட்ட கனவான் களின் ஆதரவும் பொருப்பும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் குறைந்து விட்டது என்றோ அல்லது அவர்களை நாம் எதிர்ப்பார்க்கவில்லை என்றோ சொல்ல வரவில்லை. எப்படியாவது சமீபத்தில்கூட விருக்கும் விருதுநகர். மகாநாட்டில் கலந்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமாய் வேண்டிக்கொள்ளு கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.03.1931
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
புதிய வகான்கை ஏண்?
சகோதரர்களே! புதிய கொள்கைகள் ஏன் என்கின்ற விஷயத்தைப் பேசுவேன் என்பதாகத் தலைவரவர்கள் குறிப்பிட்டார்கள்.
புதிய கொள்கைகள் ஏன் என்பது ஒரு கேள்வியேயாகும். அதற்குப் பதில் என்னவென்றால் நமது முன்னேற்றத்திற்குப் பழைய கொள்கைகள் பயன்படவில்லை என்பதோடு, பழைய கொள்கைகளின் பயனாய் நாம் மிகுதியும் பின்னடைந்து விட்டோம். நம்மைப் போன்ற மற்ற நாடுகள் எல்லாம் புதியகொள்கைகளாலேயே வெகு வேகமாக முற்போக்கடைந்து வருகின்றன. புதிய கொள்கைகளின் பயனாக மக்கள் எவ்வளவோ முற்போக்கடைந்து வருகின்றார்கள்.
நம்மிடம் வேறு எந்தவிதமான நல்ல காரியங்களில் உறுதியான குணம் இல்லாவிட்டாலும், பழைய கொள்கைகளைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதிலும், புதிய கொள்கைகளிடம் துவேஷமும், வெறுப்பும் காட்டுவதிலும் உலகத்தில் தாமே தலைசிறந்து விளங்குபவர்களாய் இருக் கின்றோம். ஒரு காலத்தில் காட்டிமிராண்டிகளாய் இருந்ததாகச் சொல்லப்படும் ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் இன்று உலக சமூகத்தில் தலைசிறந்து விளங்கி வருவதற்குக் காரணம் புதுக்கொள்கைகளை ஏற்கத் தாராளமாய் முன்வந்து பழையக் கொள்கைகளைக் கைவிடுவதில் சிறிதும் தயக்கங் காட்டாததேயாகும்.
எவ்வளவு கீழான நிலைமையில் இருந்த ஜப்பானியர்கள் இன்று ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள் மிகவும் மேன்மையாய் மதித்கத் தகுந்தவர்களா. கவும்,மற்றவர்கள் பார்த்து அவர்களைப் பின்பற்றும்படியாகவும் ஆன தற்குக் காரணம் அவர்கள் மற்றெல்லாவற்றையும் புறக்கணித்து முன்னேற் றத்தையே தலைமையாய் வைத்துச் சிறிதும் தயங்காமல் முன்னேற்ற வழிகளைக் கைக் கொள்ளப் பல புதிய கொள்கைகளைக் கைப்பற்றி பழைய கொள்கைகளைக் கைவிட்டதேயாகும்.
ரஷியா தேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு அநாகரி கமாவும், கொடுங்கோன்மையாகவும் ஆளப்பட்டு வந்ததாக ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்சொல்லப்பட்ட தேசம், இன்று சமதர்மம், பொதுவு
குடி அரசு - 19310) 166
டைமையாகிய உண்மை ஜீவகாருண்யத்துறையில் எவ்வளவு முற்போக் கடைந்து உலகமே பிரமிக்கும்படியாகச் செய்து வருகின்றது என்பதைக் கவனியுங்கள். இதற்குக் காரணம் என்ன? அது பழைய கொள்கைகளைக்கை விடுவதிலும் புதிய கொள்கைகளைக் கைப்பற்றுவதிலும், காட்டின துணிகர மான வீரமல்லவா என்று கேட்கின்றேன்.
அது போலவே துருக்கி தேசத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அரைக்கால் நூற்றாண்டுக்குமுன் அதன் கதி எப்படி இருந்தது? ஐரோப்பா
வால் எவ்வளவு வெறுக்கப்பட்டும். பயப்படுத்தப்பட்டும் இருந்து கொண்டு எவ்வளவு கவலையில் ஆழ்ந்திருந்தது. அப்படிப்பட்ட நாடு இன்று அந்த ஐரோப்பியர்களையே திகிலடையச் செய்து கொண்டிருப் பதற்குக் காரணம் என்ன? பழையக் கொள்கைகளை விடவோ, மாற்றவோ துணிந்த துணிச்சலும், புதியகொள்கைகளைப் புகுத்த எடுத்துக்கொண்ட முயற்சியால் அடைந்த வெற்றியுமல்லவாயென்று கேட்கிறேன்.
அதுபோலவே சைனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு கால் நூற்றாண்டுக்குள்ளகவே எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கின்றது. இப் போது ஒரு வீசம் நூற்றாண்டுகளுக்குள்ளாக எவ்வளவு பெரிய காரியம் செய்யத் துணிந்து, ருஷியாவைப் பின்பற்ற ஆசை கொண்டிருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள். இதற்கு காரணம் என்ன? பழைய கொள்கை களைப் பலிகொடுத்துப் புதிய கொள்கைகளுக்கு ஆக்கம் கொடுத்த பலன் அல்லவா என்று கேட்கின்றேன். அதிக தூரம் போவானேன்? இந்தப் பிரஞ்சு தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிரஞ்சு ரெவலூயூஷன் என்னும் உலகத் திற்கே பெரிய முதல் கிளர்ச்சியானது புதிய கொள்கைகளை அஸ்திவார மாகக்கொண்டுதானே துவக்கப்பட்டது. அதனால்தானே இன்று அது குடி அரசுராஜ்யம் என்று சொல்லிக் கொள்ள இடமேற்பட்டது.
புதியகொள்கைகளின் அவசியத்திற்கு இன்னும் என்ன காரணமும், உதாரணமும் கேட்கிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.
சகோதரர்களே! நமது இந்தியா தேசம் என்பது மேற்கண்ட நாடுகளைப். போன்றதுதானே? சில விஷயங்களில் அவைகளைவிடச் சிறந்த தும், பெரியதும், பூர்வீகமானது மென்றுகூட நாம் சொல்லிக் கொள்ளு கின்றோமா? இல்லையா? இந்தநிலையில் நாம் அடைந்த முற்போக் கென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். பழைய கொள்கையைக் காப்பாற்றுவதிலும் அவை தானாகவே ஏதாவது இறந்து போய்க்கிடந்தால்கூட அவைகளை உயிர்ப் பிப்பதிலும்தானே கவலை கொண்டிருக்கின்றோம் என்று நான் சொல்வதற்கு நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
நம்முடைய சனாதன தர்மப் பிரசாரமெல்லாம் பழைய கொள்கை: பிரசாரமல்லாமல் வேறு என்ன பிரசாரம் என்று எண்ணுகின்றீர்கள்? நம்
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
முடைய தொல்காப்பியப் பிரசாரமெல்லாம் பழைய கொள்கை பிரசார மல்லாமல் வேறு என்ன பிரசாரம் என்று கருதுகிறீர்கள்? நம்முடைய சமயப் பிரசாரங்கள் என்பவைகள் எல்லாம் பழைய கொள்கைப்பிரசாரங்கள் அல்லா மல் வேறு என்ன பிரசாரங்கள் என்று சொல்ல வருகிறீர்கள் என்று கேட் கின்றேன்.
மற்றும் பொதுமக்கள் பெரிதும் கவலை கொண்டு நடத்திவரும் கோவில், குளம், உற்சவம், வேதம், தேவாரம், பாடசாலை, புராணம், சாஸ்திரம், காலக்ஷேபம், ராம ராஜ்யம், அரிச்சந்திர ராஜ்யம் ஸ்தாபிக்கும் முயற்சி ஆகியவைகள் எல்லாம்பழைய கொள்கைப் பிரசாரமல்லாமல் வேறு என்ன மாய் இருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள்.
மற்றும் ஆரிய தர்மம், பிராமண தர்மம், வர்ணாசிரம தர்மம், ஆகிய பிரசாரமெல்லாம் பழைய கொள்கைப்பிரசாரமல்லவா என்பதை நீங்களே சொல்லுங்கள். இந்த நிலைமையில் அதாவது பழைய கொள்கைகளில் இவ்வளவு தடிப்பு ஏறி இருக்கின்ற மக்களாகிய நம்மை யெல்லாம் உடைய தேசம் எப்படிமற்ற தேசங்களைப்போல் அதாவது பழைய கொள்கைகளைப் புதைத்து புதிய கொள்கைகளை விதைத்த நாட்டின் நிலையை அடைய
முடியும் என்பதை யோசித்துப்பாருங்கள்.பழங் கொள்கைகளால் பயனில்லை யென்று கண்டவர்களும், புதிய கொள்கைகளால் மற்ற மக்கள் பயனடைந்து வருவதைப் பார்ப்பவர்களும் கண்டிப்பாய் பழைய கொள்கைகளை ஒழிக்கப் பாடுபட்டுத்தான் தீருவார்கள். அதைப்பார்க்கும் பழைய கொள்கைக்காரர்கள் ஆத்திரம் கொண்டு கோபித்து துவேஷித்து தங்களால் ஆன கெடுதியைச் செய்ய முன்வந்து தான் தீருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவ் வெதிர்ப்பைச் சமாளிக்கும் குணங்கள் புதிய கொள்கைக்காரர்களுக்கு இருந்தால் தான் புதிய கொள்கைகள் வெற்றி பெற்று நாட்டையும் சமூகத் தையும் முன்னுக்குக்கொண்டுவரச்செய்ய முடியும். இல்லாதவரை இந்த நிலைமையிலேயே இருக்க வேண்டியதுதான். ஆகையால் தான் நாங்கள் எங்களால் கூடிய அளவு புதிய கொள்கைகளுக்காகப் போராட நினைத்திருக் கின்றோம். இதிலுள்ள கஷ்டங்களை நாங்கள் உணராமல் இல்லை.
நண்பர்களே! பழைய கொள்கைகள் பயனளிக்கவில்லையென்று சொல்லுவதில் நீங்கள் உண்மையான பழைய கொள்கை எது என்று பார்த்தீர்க ளானால் நமது நாட்டில் உள்ள பழங்கொள்கைகளில் எல்லாவற்றிலும் பழமை யாயிருப்பது மதசம்பந்தமான கொள்கைகளேயாகும்.
அன்றியும் நான் மேலே சொல்லப்பட்ட எல்லா நாட்டாரும் தங்களு டைய பழங்கொள்கைகள் என்பதை மாற்றி, புதிய கொள்கைகளைப் புகுத்திய தில்பழமையான தென்பதும், மதசம்மந்தமானவைகளேயாகும்.
ஆகவே அந்தக் கருத்தைக்கொண்டே நம்நாட்டுப் பழங்கொள்கை
குடி அரசு - 19310) 168
களைப்பற்றிப் பேசி புதுக்கொள்கைகள் ஏன் என்பதைப் பற்றி பிரஸ்தாபிப்
பதில் மதத்தையே அடிப்படையாய் வைத்துச் சொல்லவேண்டியிருக் கின்றது. ஏனெனில் மனிதனுடைய அபிலாஷைகளும், எண்ணங்களும், நடவடிக்கை களும், மதத்துடன் பிணைக்கப்பட்டதாகவே இருப்பதால் மனிதனிடத்தில் அவனது ஆசை, எண்ணம், நடவடிக்கை ஆகியவைகளிடத்தில் எவ்வித ஒருசிறிய மாறுதலை எதிர்பார்த்தாலும் அதை மதத்திலும் மாறுபடக் காண முடிந்தால்தான் முடியும். அப்படிக்கில்லாமல் மனிதனின் நடப்புக்கு ஆதார மான பழைய மதக்கொள்கைகளை வைத்துக்கொண்டு மாறுதலை எதிர்பார்ப்ப தென்பது அடியற்ற பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளுவதாகவே முடியும்.
உதாரணமாக உண்மையிலேயே பழைய மதக்கொள்கைகள் என்ப வைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்காமல் இருக்குமானால் முன் சொல்லப்பட்ட ஐரோப்பா, பிரான்சு, ஜப்பான், துருக்கி, ருஷியா, சைனா முதலிய பெரிய பெரிய தேசங்களும், சமூகங்களும் இவ்வளவு பெரிய மாறுதலையும் முற்போக்கையும் அடைந்திருக்க முடியுமா என்பதை நீங்களே சற்று நிதான மாய்யோசித்துப்பாருங்கள். அதிலிருந்து புதுக்கொள்கைகள் ஏன்? என்பதற் குரிய காரணங்கள் விளங்காமல் போகாது. (தொடரும்!
குறிப்பு : புதுச்சேரியில் 01.03.1937 அன்று நடைபெற்ற மாநாட்டுரையின் தொடர்ச்சி.
குடி அரசு - சொற்பொழிவு - 15.03.1931
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சீக்கிரத்தில் சட்டசயை கயையப் போகிறதாம்
“சீக்கிரத்தில் இந்திய சட்டசபை கலையப் போகின்றது” என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை எழுதியிருப்பதாகத் தமிழ் நாடு பத்திரிகையில்
10-ந் தேதி உபத்தலையங்கத்தில் காணப்படுகின்றது. அதாவது,
“இந்தியா அரசியல் மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒத்துழைக்
கப் போகின்றார்களாதலால் அதை உத்தேசித்து டில்லி சட்டசபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடக்கப்போகின்றது” என்று ஸ்டேட்ஸ்: மென் பத்திரிகைக்கு அதன் டெல்லி நிரூபர் எழுதியிருப்பதாகக் காணப்படு கின்றது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் 1-2-31- உகுடிஅரசு தலையங்கத்தில் எழுதி இருக்கின்றோம். அப்போது சிலருக்கு அது ஆச்சரியமாகவும், உண்மையற்றதாகவும் தோன்றி இருக்கலாம். எப்படி யிருந்தாலும் இது உண்மையானால் காங்கிரசுக்காரர்களுக்கு சமீபத்தில் நடந்த காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் பலனாய் ஏதாவது பயன் உண்டு என்று சொல்வ தானால், சட்ட சபைகள் கலைக்கப்பட்டு, காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளில்: நுழைய ஒரு அகால சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர வேறு ஒன்றும் இருக்க
முடியாது. ஆதலால், இந்த ஒப்பந்தமோ அல்லது இந்த அபிப்பிராயம் தொக்கி இருப்பதான குறிகளோ, ராஜிய சம்பாஷணையில் கலந்திருக்க வேண்டு மென்று நாம் யூகிக்க பல வழிகளிலும் இடம் மேற்படுகின்றது.
ஆனால், காங்கிரசுக்காரர்களுக்கு தங்களுக்கு வெற்றி ஏற்படுவது நிச்சயம் என்கின்ற தைரியமில்லாவிட்டால் கராச்சி காங்கிரசு, சட்டசபைப் பிரவேசத்தை ஒரு சமயம் மறுத்து விட்டாலும் மறுத்து விடக்கூடும். ஆகை யால் எதுவும் கராச்சி காங்கிரசில்தான் முடிவுபெறலாம்.
ஆனாலும், அதுவரை அடுத்த தேர்தலுக்குச் செய்யப்பட வேண்டிய முஸ்தீப்புகளில் ஒன்றாகக் கள்ளுக்கடை மறியலும், ஜவுளிக்கடை மறியலும் அங்குமிங்குமாக தலை நீட்டிக் கொண்டு இருக்கவேண்டியதுதான். ஆனால், தீண்டாமை விலக்கு விஷயமாக மாத்திரம் எதுவும் தலைகாட்டப் பட மாட்டாது. ஏனெனில், தீண்டாமை விஷயம் பேசினாலோ, அதற்காக மறியல் முதலியவைகள் துவக்கப்பட்டாலோ ஓட்டுக்கிடைப்பது கஷ்டமான காரிய மாகி விடுமாதலால், அது கிணற்றில் போடப்பட்ட கல்லுபோல் பேசாமல்
இருந்து கொண்டு இருக்கும்.
குடி அரசு - 19310) 170
ஆதலால், இப்போது சட்டசபைகளில் இருப்பவர்கள் கூட தீண்டாமை சம்மந்தமாகப் பேசப்பயப்படுவதுடன், ஜவுளி மறியலுக்கும், கள்ளு மறியலுக் கும்கூட தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டாலும் கொள்ளுவார்கள். தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட சட்டசபை அங்கத் தினர்கள் கூட அடுத்த தடவை தேர்தலின் மூலம் சட்டசபைக்கு வர வேண்டி யவர்களாக இருப்பதால் அவர்களுக்கும்கூட தீண்டாமைக் கொடுமையைப்
பற்றிப் பேசுவது சற்று கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஏனெனில், ஒன்று தீண்டாமையைக் கடிந்து பேசுகின்றவர்களுக்கு ஓட்டுக் கிடைக்காமல் போகும்.
இரண்டு தீண்டாமை ஒழிந்து விட்டால் தீண்டாதவர்களின் பெயரால் இப்போது சிலருக்குக் கிடைத்து வரும் செளகரியங்கள் பிறகு கிடைக்காமல் போகலாம். ஆகவே இரண்டு காரணங்களால் அவர்களும் பயப்படுவார்கள்.
ஆகவே இந்தக் காரணங்களால் காங்கிரசுக்கு இருக்கும் மதிப்பை நாம் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், காங்கிரசினால் பொதுமக்க ளுக்குப் பயன் உண்டு என்பதையும், அந்தக் காரணத்தால்தான் காங்கிரசுக்கு மதிப்பு இருக்கின்றது என்பதையும் மாத்திரம் தான் நாம் ஒப்பு கொள்ள முடியவில்லை. பிரத்தியாரையும் நம்பச் செய்யமுடியவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.031931
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கரச்சிக்குப் போகிண்றவர்களே
இந்தியாவுக்கு எது வேண்டும்?
இந்த வாரத்தில் இந்தியாவின் விடுதலையை முற்போக்கை முன்னிட்டு என்று தேசபக்தர்கள், தேசீய வாதிகள் என்பவர்கள் இந்தியாவுக்கு இனிச்செய்ய வேண்டிய வேலை என்ன? என்று நிர்ணயிப்பதற்காக கராச்சிக்குப் போகின்றார்கள். அங்கு இந்த மாதம் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காங்கிரஸ் நடைபெறப்போகின்றது. அங்கு சென்று இனிமேல் என்ன செய்ய வேண்டியது என்று தீர்மானிப்பதற்கு முன்பதாக இந்தியாவுக்கு வேண்டியது எது என்று தீர்மானிக்க வேண்டியது முக்கியமானதும், அறிவுடைமையானதுமான காரியமாகும்.
பொதுவாக இன்று உலக மக்களில் பெரும்பான்மையோருக்கும் சிறப்பாக இந்தியாவுக்கும் முக்கியமாய் வேண்டியதான காரியங்கள் என்பவை ஆட்சியில் மாறுதலல்லவென்பதையும், இந்தியமக்களின் மன உணர்ச்சியில். மாறுதல் வேண்டியது என்பதையும் நன்றாய் உணர வேண்டும். அவற்றுள்,
1.மக்களுக்குள் பிறவியில் உயர்வு, தாழ்வு உணர்ச்சி மறைதல்.
2. ஆண், பெண் வித்தியாச உணர்ச்சி ஒழிதல்.
3. ஏழை பணக்காரன் என்ற தன்மை உணர்ச்சி அழித்தல். ஆகிய இவை மூன்றுமே முக்கியமாகும்.
தேசபக்தர்களே! தேசீய வாதிகளே! இம்மூன்று காரியங்களும் நடை பெற நேற்றைய சுயராஜியத் திட்டத்திலாவது, இன்றைய பூரண சுயேச்சைத்
திட்டத்திலாவது எங்காவது ஒரு சிறு இடமாவது பெற்றிருக்கின்றதா? அல்லது இடம்பெற மார்க்கமாவது இருக்கின்றதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதை விட்டுவிட்டு உண்மை உழைப்பாளிகளைப் பார்த்து “ஐயோ காங்கிரசை வைகின்றார்களே” “சுயராஜியத்திற்கு எதிராய் இருக்கின் றார்களே” “பூரண சுயேச்சைக்கு முட்டுக்கட்டை போடுகின்றார்களே”' என்று வருத்தப்படுவதால் பயன் என்ன?
சாதாரணமாகக் கோவில்களில் கல்லுருவங்களுக்கு முன்னால் நின்று கொண்டு, தேவாரம், திருவாசகம் முதலியவைகளில் காணப்படும் புராணக்
குடி அரசு - 19310) 172
கதையைப் பற்றிய பாடல்களைப் பாடம் பண்ணிக்கொண்டு அருத்தமும், பொருத்தமும் இல்லாமல் கண்களில் நீர் ஒழுகும்வண்ணம் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு நீட்டி நீட்டிப்பாடுவதும், அதைக் கண்டவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் கூட சில சமையங்களில் அழுகை வருவதும் பலருக்கு மனதும் “பரவச”ப்பட்டு விட்டதாகச் சொல்லிக் கொள்ளுவதும் பக்கத்தில்: இருப்பவர்களில் யாராவது ஒருவர் இருவர் இந்தப் பாட்டுகளுக்கு என்ன அருத்தம் என்றாவது இப்படி அழுது கொண்டு பாடுவதால் பயன் என்ன என்றாவது கேட்டு விட்டால் உடனே அழுதுகொண்டு பாடியவருக்கும் கேட்டுக்கொண்டு “பரவச”ப்பட்டிருந்தவருக்கும் பிரமாதமான கோபம் வந்து கேட்டவர்களை “இதன் அருமை அறியாத மூடர்கள்,கயவர்கள்” என்பதாகப் பேசி ஏசுவார்களே யல்லாது வேறு ஒரு சமாதானமும் சொல்ல மாட்டார்கள், சொல்லவும் வகை அறியார்கள். அன்றியும், இந்தப்படி பல பேர்கள் கேட்ட பிறகாவது அந்தப் பாட்டுகளின் அர்த்தமென்னவென்றோ, அவற்றை அழுதுகொண்டு பாடவேண்டிய அவசிய மென்னவென்றோ அதனால் ஏற்படும் பயன் என்னவென்றோ ஒருநாளும் சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள். ஏனெனில்,
இந்தமாதிரி இவர்கள் கோவிலுக்குப்போனதும், அங்கு பாடினதும், அழுததும் எல்லாம் பெரிதும் எப்படியாவது மற்றவர்கள் தங்களைப் பார்த்து மிகுந்த பக்திவான் என்று சொன்னால் போதும் என்கின்ற ஆசையும், வைதீக
- பக்தி உலகத்தில் தனக்கு முதல் வரிசையில் இடம் கிடைத்தால் போதும் என்கின்ற லட்சியத்தைத் தவிர வேறு கவலையே அவர்களுக்கு இருக்காது.
அன்றியும், அந்த பக்திக்கும், வைதீகப் பெருமைக்கும், அவர்களு டைய நடவடிக்கைக்கும் சிறிதும் சம்மந்தமும் இருக்காது. அதுபோலவே நமது தேசபக்தர்கள் என்பவர்களும், காங்கிரஸ் பக்தர்கள் என்பவர்களும் சுயராஜியம் அல்லது பூரண சுயேச்சை பக்தர்கள் என்பவர்களும் நமது
நாட்டில் மேடைகள் கிடைத்த பக்கம் காங்கிரசைப் பற்றியும், தேசீயத்தைப்.
பற்றியும் முன்பு யாராவது சொன்ன வார்த்தைகளை - பாட்டுகளைப் பாடம் பண்ணிக்கொண்டு திருப்பித் திருப்பி ஆவேசத்துடன் பார்ப்பவர்கள், கேட்பவர்கள் கை தட்டும்படி உடல் சிலிர்க்க விரைப்பதுமாகச் செய்யுங் காரியங்களைப் பற்றி யாராவது இதன் அருத்தமென்ன? இதற்கு அவசிய மென்ன? இதனால் பயன் யாது? என்பதாகக் கேட்டுவிட்டால் உடனே கோப
மும், ஆத்திரமும் வந்து வசைபாடுவதன் மூலம் அடக்கப் பார்ப்பதல்லாமல் யாதொரு சமாதானமும் சொல்லார்கள், சொல்லவும் அறியார்கள். இந்த மாதிரியான காங்கிரசுக்காரர்களைப் பற்றியும், தேச பக்தர், தேசீயவாதிகள் ஆகியவர்களை பற்றியும் 1925ம் வருஷம் முதல் சமீபகாலம்வரை நாம் எழுதின எழுத்துக்களும், பேசின பேச்சுக்களும் அவ்வப்போது பொது
ஜனங்கள் அறிந்ததேயாகும்.
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அதை அரங்கேற்றாத மேடையே இல்லை என்பதோடு ஊரே இல்லை. என்று கூட சொல்லலாம். அதனால் அதுமுதல் சமீப காலம் வரை: காங்கிரசுக்கும், தேசீயத்திற்கும் நமது நாட்டில் இருந்த மதிப்பு எவ்வளவு என்பதை இப்போது நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமுமில்லை. அதன் பயனற்ற- பரிசுத்தமற்ற நிலையை பலர் உணர்ந்து “அதை கைப் பற்றி பரிசுத்தமாக்கி பயனுண்டாகும்படி” செய்ய பலர் முயற்சித்ததையும் நாம் இப்போது யாருக்கும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஆகவே இந்த நிலையில் இருந்த காங்கிரசும், தேசீயமும் ஏதோ ஒரு கிளர்ச்சியின் பயனாய் சிலர் சிறை சென்று கஷ்டமடைந்ததின் பயனாய் மறுபடியும் தலையெடுத்து விளம்பரமாக நேரிட்டு மக்களின் கவனத்தை
இழுக்கும்படி ஏற்பட்டு விட்டதாலேயே அதற்கு வேறு ஏதாவது ஒரு புதிய யோக்கியதை இப்போது வந்து விட்டதாக கருதிவிட முடியுமா என்று கேட்கின்றோம். அந்தக் காலங்களில் இருந்த காங்கிரசை விட தேசீயத்தை விட இப்போது அவை என்ன புதியதொரு கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டுவிட்டது? அல்லது புதியதொரு பயனை உண்டாக்க சக்தியோ யோக்கியதையோ அடைந்து விட்டதா? அல்லது அப்பொழுது அதில் இருந்த மக்களின் யோக்கியதையைவிட இப்போது மாறுதலான மக்கள் அதில் ஏதாவது முன்னிலும் அதிகமாக மிகுந்து விட்டார்களா? என்பனபோன்ற விஷயங்களில் எதில் மாறுதலை யடைந்திருக்கின்றது என்று கேட்கின்றோம். அன்றியும் சமீப கிளர்ச்சியையே அக்காங்கிரசுதான் உண்டாக்கிற்று என்று வைத்துக்கொண்டாலும் இந்தக் கிளர்ச்சிதானாகட்டும், முன் கிளர்ச்சிகளில் இல்லாத முன்வருஷங்களில் இல்லாததாகிய எந்த ஒரு அபாரமான நன்மை யைக் கொண்டு வந்துவிட்டு விட்டது? அல்லது என்ன ஒரு புதிய திட்டத்தையாவது கொண்டுவந்து விட்டது? அல்லது மக்களுக்குள் என்ன விதமான புதிய உணர்ச்சியை உண்டாக்கிற்று? என்று பார்த்தால் “பழைய கருப்பனே கருப்பன்” என்பதல்லாமல் வேறு என்ன சொல்லக்கூடியதாய் இருக்கின்றது என்பது நமக்குப் புலப்படவிடல்லை. இந்த நிலையில் உள்ள காங்கிரசைத்தான் சில மக்களுக்கு கடவுளைக் காப்பாற்றவேண்டிய அவசியம் இருப்பது போல காங்கிரசைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்பட்டுவிட்டது என்பதல்லாமல் அவ் வளவு கஷ்டப்பட்டுக் காங்கிரசைக் காப்பாற்ற அது என்ன ஒரு புதிய தன்மையை அடைந்துவிட்டது என்பது நமக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. சும்மா, வீணே கோபிக்கின் றவர்களுக்கும் ஆத்திரப் படுகின்றவர்களுக்கும் பயந்து கொண்டு உண்மையை மறைத்துக் கொண்டிருப்பதால் இன்னும் எத்தனை வருஷத் திற்குத்தான் நாம் அதிகமாக வாழ்ந்து விட முடியும்? அல்லது வேறு என்ன பெருமையான பதவியைத்தான் நாம் அடைந்து விட முடியும்? என்பதும் நமக்கு விளங்கவில்லை.
குடி அரசு - 19310) 174
உண்மையிலேயே மனிதன் செய்யப்புகும் பேசப்புகும் காரியங்கள். ஒவ்வொன்றும் அதனால் பொது ஜனங்களுக்கு என்ன பயன் விளையும் என்பதைக்கருதித்தான் செய்யப்பட வேண்டுமே யொழிய, பிறர் என்ன சொல்லுவார்கள்? என்ன நினைப்பார்கள்? என்பதை ஆதாரமாய்க்கொண்ட தாக இருக்கக்கூடாது என்பது நமதபிப்பிராயமாகும். இதை வெகு கால மாகவே சொல்லிவந்திருக்கின்றோம். பிறர் என்ன சொல்லுவார்கள்? நமக்குத் தனித்த முறையில் இதனால் என்ன பலன் உண்டாகும்? என்று யோசித்துச் செய்யும் காரியங்கள் எல்லாம் பெரிதும் வியாபார முறையில் செய்யப்படு பவைகளாகுமேயல்லாமல் பொது நலத்திற்கேற்ற காரியமாகாது என்றுகூட சொல்லுவோம்.
பொதுவாகவே அறிவில்லாத மக்களாலும் சுயநல மக்களாலும் நியாய விறோதமாக லாபத்தை அடைந்து கொண்டிருக்கும் மக்களாலும் காற்றடிக்கும் பக்கம் சாயும் மக்களாலும் எவன் ஒருவன் தனது தொண்டின் பயனாய் பெரிதும் வெறுக்கப்படுகின்றானோ - வையப்படுகின்றானோ, சபிக்கப்படு கின்றானோ பழி சுமத்தி தனிப்பட்ட முறையில் எதிர் பிரசாரம் செய்யப்படு கின்றானோ அவனது தொண்டுதான் பெரும்பாலும் உண்மையானதாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க முடியும் என்பதும் அந்தப்படிக் கில்லாமல் அறிவற்ற மக்களாலும், சுய நலக்காரர்களாலும் அக்கிரமமாய் ஆதிக்கம் பெற்று பலனடைந்து வருபவர்களாலும் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைக்காரர்களாலும் சமய சஞ்சீவிகளாலும் எவனொருவன் தனது தொண்டின் பயனாய் பெரிதும் போற்றப்படுகின்றானோ கொண்டாடப் படுகின்றனோ அவனது தொண்டானது பெரிதும் பயனற்றதும் உண்மைக்கும் நியாயத்திற்கும் எதிரானதுமாகவும் இருந்தாக வேண்டும் என்பது நமது தெளிவு. ஆகவே மனிதன் தான் செய்யும் பொதுநல சேவை இன்னது என்ப தாக தீர்மானிக்கும் முன்பாக அது உண்மையாகவே பொது மக்களுக்குப் பயன்பட வேண்டியதாய் இருக்க வேண்டுமென்று கருதுகின்றவனாகவும் அதனால் தனக்கு வரும் எவ்வித கெடுதியையும் பழியையும் தாங்கி அலட்சியமாய்க் கருதக்கூடியவனாகவும் இருக்க வேண்டியதோடு அத் தொண்டின் பயனாய் அவன் சுயநலக்காரர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களால் அக்கிரமமாய் ஆதிக்கம் செலுத்தி யணுபவிப்பவர்களால் அறிவற்ற பாமர மக்களால் போற்றப்படாமல் புகழப்படாமல் இருக்கின் றோமா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே அந்தமுறையில் பார்ப்பதானால் இந்தியாவுக்கு வேண்டிய முக்கியமான காரியம் எது என்று முதலில் சொல்லப்பட்ட மூன்று காரியங்களையும் செய்யப்பிரவேசித்த ஒரு ஸ்தாபனத்திற்கோ தனிமனிதனுக்கோ ஒருக்காலும் பொதுஜன ஆதரவும் ஆமோதிப்பும் விருப்பமும் கிடைக்கவே கிடைக்காது. அன்றியும் அதில் பிரவேசிப்பதால் அனேக கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் ஆளாக வேண்டியதாகவும் ஏற்படும். அதனாலேயே தான் அப்படிப்பட்ட தொண்டு கள் நமது நாட்டில் சிலராலாவது ஒப்புக்கொள்ள பட்டாலும் வெளியில்
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தலைகாட்டுவதென்பதே மிக்க அறிதாய் விடுகின்றன. ஒன்று இரண்டு தலை. காட்டினாலும் அவை அடிக்கடிமறைந்தும் போகின்றன. ஏதாவது பலத்தால். அத்தொண்டுகள் “சற்று நிலை கொள்ளஆரம்பித்து விட்டாலோ” அவை அனேக கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் ஆளாக வேண்டிய தாயிருக்கின்றன.
ஆகையால் இன்று சுயநலக் காரணமாகவோ மக்களின் புகழ்ச்சி பாராட்டுதல் காரணமாகவோ அல்லாமல் உண்மையான சுயநலமற்ற பொதுத் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற கவலையோ ஆசையோ உடைய வர்கள் பொதுஜன எதிர்ப்புக்கும் வசவுக்கும் பழிப்புக்கும் சற்றும் பின் வாங்காது துணிந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்கள் மீது உயர்ந்த ஜாதியார் என்னப்பட்டவர்கள் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தி யிருக்கும் நிர்பந்தத்தையும் பெண்களின் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிபந்தனைகளையும் செல்வவான்கள் என்பவர்களால்: மற்ற மக்கள் சமூகத்திற்கு ஏற்படும் கொடுமைகளையும், முறைகளையும் அடியோடு ஒழிக்க வகைதேடவேண்டியது கடமையாகும் என்பதை உணர்ந்து அத்தொண்டில் இறங்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளு கின்றோம். இந்தத்துறையில் செய்ய வேண்டிய வேலை முழுவதும் மற்றும் அவ்வேலைத் தத்துவத்துக்கு தடையாயிருப்பவைகளைத் தகர்த்தெறிய வேண்டியகாரியங்கள் முழுவதும் பெரிதும் நமது மக்களி டையே செய்யப்பட வேண்டியிருப்பதால் நமது மக்களே அதுவும் மேல் கண்ட தத்துவங்களுக்கு பலவழிகளிலும் எதிரான உணர்ச்சியுடைய மக்களே கூடி இருக்கும்படியான காங்கிரசு என்னும் மகாசபையில் அது எவ்வளவு உண்மையானது என்று வைத்துக்கொண்டாலும் இத்தத்துவங்களை எடுத்துச்சொல்லி அதை ஒப்புக் கொள்ளச் செய்வது என்பது லேசான காரியமென்று நமக்குத் தோன்ற வில்லை. அன்றியும் காங்கிரசு என்பதனானது சுயராஜ்யம் பெற ஏற்பட்டதே ஒழிய சமதர்மம் பெற ஏற்பட்டதல்ல என்பதை அதுவே ஒப்புக் கொண்டிருக்கிறது. எந்த முறையில் என்றால் “சமதர்மம் என்பது சுயராஜியம் வந்தபின் தானாகவே வந்துவிடும்” அல்லது “பிறகு உற்பத்தி செய்து கொள்ள லாம்” என்று சொல்லி வருவதின் மூலமே தெரியலாம். “சுயராஜ்யம் பெற்றாலே சமதர்மம் ஏற்பட்டு விடும்” என்று சொல்லுவது அறியாமை அல்லது உண்மையை மறைத்துச் சொல்லுவது என்றுதான் சொல்லவேண்டி யிருக்கின்றது. ஏனெனில் சுயராஜியம் பெற்ற தேசங்களில் எல்லாம் பூரண: சுயேச்சை பெற்ற தனி அரசு நாடுகளிலெல்லாம் கூட சமதர்மம் இல்லாமலும், சமதர்மத்திற்கு பாடுபடுவதால் அதன் எதிரிகள் சுயராஜியம் இல்லாவிட்டால்: கூட பாதகமில்லை, சமதர்மம் மாத்திரம் கூடாது என்று கிளர்ச்சி செய்வதும்
நாம் அறியாததல்ல. ஆகவே சுயராஜியத்திற்கும் சம தர்மத்திற்கும் சம்பந்த மில்லை என்பதை சம தர்மத்தில் லக்ஷியமுள்ளவர்கள் நன்றாய் உணர வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம். அன்றியும் சுயராஜியத்தின் திட்டமே வேறு என்பதையும் அதனால் பயனடைகின்றவர்கள் வேறு என்பதையும்
குடி அரசு - 19310) 176
நன்றாய் யோசித்து உணரவேண்டும். சுயராஜ்யம் கிடைத்தால் சமதர்மம் கிடைத்துவிடும் என்று நம்புகின்றவர்களும், சமதர்மமில்லாமல் சுயராஜ்யம் கிடைத்தால் மக்கள் நலமடைவார்கள் என்று எண்ணுகிறவர்களும் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள் என்பதை உறுதியாய்ச் சொல்லுகின்றோம்.
ஆகவே இப்பொழுது ஏன் இதை எடுத்துக்காட்டுகின்றோம் என்று கேட்டால் இந்திய தேசீயக்காங்கிரஸ் என்னும் கூட்டம் இம்மாதம் 27தேதி கராச்சியில் கூடப் போவதாலும் இந்திய மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கின்ற பொதுநல நோக்கமுடைய மக்கள் ஆயிரக்கணக்காக அங்கு கூடப்போவதாலும் பொதுநலத்திற்காக என்று எவ்வித தியாகமும் செய்யத் தயாராகவே இனிச் செய்யவேண்டிய வேலைக்கு திட்டங்கள் வகுக்கப் போகின்றபடியாலும் அங்கு இதற்கு யேதாவது வகை செய்ய முடியுமா என்பதை உணர்ந்து, கூடுமானால் செய்யவோ கூடாவிட்டால் அதன் சம்மந்தத்தில் இருந்து விலகவோ உண்மையாளருக்கு உறுதியளிக்கக்கூடும் என்கின்ற ஆசையினாலேயாகும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.03.4931
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமி பாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொண்டார்கள். சுப்ர மணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள்.
இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணி யன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன் றான் சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில். ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தி யாய்க் கொண்டே இருந்தது.
அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாய்க் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக் கொண்டே இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக் கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்டக் கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரியபுராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரி பக்தர்கள் கதையும் அநேகமாக ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதை காணலாம். பெரிய புராண நாயன்மார்களில் குயவர் வகுப்பு என்பதற்காக ஒருநாயன்மாரை திருநீலகண்ட நாயனார் என்று உற்பத்தி செய்தது போலவே பக்தலீலாமிர்தத்திலும் குயவர் வகுப்புக்காக கோராகும்பார் என்பதாக ஒரு பக்தரை கற்பித்து இருக்கின்றார்கள். பெரிய புராணத்தில் பறையர் வகுப்பு என்பதற்காக நந்தனார் என்பதாக ஒரு நாயனாரை சிருஷ்டித்தது போலவே பக்தலீலாமிர்தத்திலும் பறையர் வகுப்புக்காக சொக்கமேளா என்கின்ற ஒரு பக்தரை சிருஷ்டித்து இருக்கின்றார்கள். இப்படியே மற்றும் பல நாயனார் களும், ஹரிபக்தர்களும் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சம்மந்தமான கதைகளும் ஏறக்குறைய ஒன்று போலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
குடி அரசு - 19310) 178
உதாரணமாக, திருநீலகண்ட நாயனார் தன் பெண் ஜாதியோடு கோபித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் திரேக சம்மந்தமில்லாமலிருந் ததைசரி செய்ய சிவபெருமான் சிவ யோகியாக வந்து இருவரையும் சேர்த்து வைத்ததாகக் கதை உண்டாக்கப்பட்டிருக்கின்றது.
அதுபோலவே பக்த லீலாமிர்தத்தில் கோராகும்பாரும் தன் மனைவி யுடன் கோபித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தேக சம்மந்தமில்லாமல் இருந்ததைச் சேர்த்து வைப்பதற்காகவே விஷ்ணு பெருமான் தோன்றி இருவர்களையும் சேர்த்து வைத்ததாகவே கதை கற்பிக்கப்பட்டிருக்கின்றது.
அதுபோலவே பெரிய புராணத்தில் நந்தனாருடைய கதையிலும் நந்தனாரைக் கோவிலுக்குள் விடும்படி பரமசிவன் இரவில் நந்தனார் கனவில். வந்து சொன்னதாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.
பக்த லீலாமிர்தத்தில் சொக்கமேளர் (சொக்கமாலா என்றும் சொல்வ துண்டு! என்னும் பறையர் ஒருவரை விஷ்ணு இரவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போனதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது
இப்படி அநேகக் கதைகள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் போட்டி போட்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் பார்ப்பனர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் உயர்வுகள் கற்பிக்கப்பட்டிருப்பதிலும் ஒன்று போலவே கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இரண்டிலும் ஜாதி வித்தி யாசத்தை
உறுதிப்படுத்தி பிறகு அந்த குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில் மாத்திரம் மிக்க கடினமான நிபந்தனைமீது மன்னிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். ஆகவே இவைகள் சிவனும், விஷ்ணும் ஆகிய இரு கடவுள்களும் ஒருவருக் கொருவர் போட்டி போட்டுக் கொண்டு செய்தார்களா? அல்லது இரண்டு சமயத்தின் பேராலும், ஜாதிகளை நிலை நிறுத்தவும், மதப் பிரசாரத்திற்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் வழிதேடும் ஆசாமிகளால் கற்பிக்கப் பட்டதா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் நாம் சொன்னால் அது மிகுந்த “தோஷமாக ஏற்பட்டு, பெரிய பாவத்திற்காளாக வேண்டியதாய் போய்விடும்.”
குடி அரசு - கட்டுரை - 22.03.1931
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
புத்த மதமும் சுயமரியாதையும்
சகோதரர்களே!
சுயமரியாதையும், புத்தமதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை. இன்று நான் ரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்கரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்டுப் போக வந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளையிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன். அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்த மடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக்கொள்ளு கிறேன். ஏனெனில் இன்று பேசும் விஷயத்திற்கு, “சுயமரியாதையும், புத்தமதமும்” என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதைப் பேசவேண்டியிருக்கும். பச்சை உண்மையானது எப்போதும் மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும்; திருப்தி உண்டாகும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படிச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் என் கடமையைச் செய்கின்றேன் என்கின்ற முறையில் பேசுகின்றேன். பிறகு அது எப்படியோ ஆகட்டும்.
சகோதரர்களே ! சுயமரியாதையும், புத்தமதமும் என்பது பற்றிப். பேசுவதில் நான் முக்கியமாய்ச் சொல்லுவதென்னவென்றால் இன்னமதந்தான் சுயமரியாதை இயக்கம் என்பதாக நான் ஒருக்காலமும் சொல்லமாட்டேன். அந்தப்படி என்னால் ஒப்புக்கொள்ளவும் முடியாது. இன்று காணப்படும் படியான எந்த மதமுமே கூடாது. அவை மனிதனுக்கு அவசியமும் இல்லை என்கின்ற கொள்கையையுடைய சுயமரியாதை இயக்கமானது எப்படித் தன்னை ஏதாவது ஒரு மதத்துடன் பிணைத்துக் கொள்ள சம்மதிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள். ஏனெனில் சுயமரியாதை இயக்கமானது ஒரு நாளும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும்
குடி அரசு - 19310) 180
ஒப்புக்கொள்ளக்கூடியதன்று. யார் சொன்னதாக இருந்தாலும் அது தன்
பகுத்தறிவுக்கு பொறுத்தமாக இருக்கின்றதா? தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா? என்பதைப் பார்த்துத் திருப்தியடைந்த பிறகே எதையும் ஒப்பு கொள்ளவேண்டும் என்கின்ற கொள்கையை யுடையது. அது எந்த மனித னையும் அந்தப்படி பரீக்ஷித்த பிறகே எதையும் ஒப்புக் கொள்ளவேண்டும் என்கின்றது.
அன்றியும் அது அந்த கொள்கையோடு அதன் நிபந்தனைக் குட்பட்டு யார் எதை சொன்னாலும் அதை யோசிக்கத் தயாராக இருக்கின்றது. அப்படிக்கில்லாமல் எந்த மதமாவது, எந்த நபராவது தான் அனுசரிக்கும் கொள்கையும், தான் சொல்லுவதும் இன்ன காலத்தில் இன்னார் மூலமாக இன்னார் சொன்னது என்பதாகவும், அதற்கு விரோதமாக யாரும் எதையும் சொல்லக் கூடாது என்பதாகவும், அதை யாரும் பரீக்ஷிக்கவும் கூடாது, அதைப்பற்றி சந்தேகமும் படக்கூடாது என்பதாகவும் யாராவது சொல்ல. வந்தால் அது எந்த மதமானாலும், அது எப்படிப்பட்ட உண்மையா னாலும் அதைச் சுயமரியாதை இயக்கம் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள முடியாது. அன்
நியும் கடவுள் சொன்னார்,அவதாரக்காரர் சொன்னார், தூதர் சொன்னார் என்று சொல்லி ஒன்றைத் தங்கள் பகுத்தறிவுக்கு பொருத்திப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கின்றவர்கள் யெவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட வர்கள் என்று சொல்லிக்கொள்ள சாத்தியப்படாது. அன்றியும் அவர்கள் தங்களைச்சுயமரியாதை உடையவர்களாக எண்ணிக் கொள்ளவுமாட்டார்கள்.
பழைய அபிப்பிராயங்கள் எல்லாம் அது ஏதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்படவேண்டும், பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின்வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.
நமக்கு முன்னால் இருந்த மனிதர்களைவிட நாம் விஷேச அனுபவ
மும், ஞானமும் உடையவர்களென்று சொல்லிக் கொள்ளப் பாத்தியமூடை வர்கள் என்பதை ஞாபகத்தி லிருத்தாதவன் மனிதத்தன்மை யுடையவனாக மாட்டான். ஏனெனில் முன் காலம் என்பதைவிட முன் இருந்தவர்கள் என்பதைவிட இந்தக்காலம் என்பதும், இப்போது இருக்கிறவர்கள் என்பவர் களும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அதிகமான சுதந்தரமும், செளகரியமு முடையது, உடையவர்கள் என்பது ஒரு சிறு குழந்தையும் ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். அன்றியும் இந்தக் காலம் அனுபவத்தின்மேல் அனுபவம் என்கின்ற முறையில் புதிய புதிய தத்துவங்கள் வளர்ந்து வந்த காலமுமாகும். மேலும் இப்போதுள்ளவர்கள் பல வழிகளில் இயற்கையாகவே முற் போக்கும் அறிவு விளக்கமும், அனுபோகப் பயிற்சியும் பெற்று வருகிற சந்ததியில் பிறந்தவர்களுமாயிருக்கிறார்கள்.
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆகவே இயற்கையாகவும் செயற்கையாகவும் முன்னோர்களைவிட நாம் எவ்விதத்திலும் அறிவிலோ, ஆராய்ச்சியிலோ, இளைத்தவர்கள் அல்ல. என்பதையும் காலவேறுபாட்டிற்கும், ககஷி வேறுபாட்டிற்கும் தகுந்த படி கருத்து வேறுபாடு அடையவேண்டிய உரிமையும் அவசியமுமுடைய வர்கள் என்பதையும் நாம் நன்றாக உணரவேண்டும்.
இந்த நிலையில் இருந்துகொண்டு நாம் பார்த்தோமானால் முன்னோர். சொன்னவைகள் என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கலாம் என்பது தானாகவே விளங்கிவிடும். நிற்க,
மற்றொரு விஷயம் என்னவென்றால், முன்னோர்கள் சொன்ன வைகள் என்பவற்றிற்கு நம் கருத்துக்கள் ஒத்து இருக்கின்றனவா என்று
பார்த்துப் பிறகு தான் நம் கருத்துக்களை உறுதிப்படுத்த வேண்டுமென்கின் றதான மனப்பான்மையையும் அடியோடு எடுத்தெரிய வேண்டும். ஏனெனில். முன்னோர் கருத்து என்பதற்காக நாம் எதற்கும் அடிமையாய் விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லுகின்றேன். முன்னோர் கருத்துக்கு அடிமையாய்க் கொண்டுவந்தோமேயானால் உண்மையையும், அறிவு வளர்ச்சியையும் நாம் அடியோடு கொன்று விட்டவர்களாவோம். ஆதலால்
புத்த மதம் தான் சுயமரியாதை இயக்கமென்று யாரும் சொல்லக் கூடாது என்று சொல்லுகிறேன்.
ஏனென்றால் உதாரணமாக புத்தமதத்திற்குக் கடவுள் இல்லை,ஆத்மா இல்லை, நித்யமொன்றுமில்லை என்கின்ற கொள்கை இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். இது புத்தரால் சொல்லப்பட்டது என்றும் சொல்லுகின்
றார்கள். இதை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்தக் கொள்கை
கள் புத்தர் சொன்னார் என்பதற்காகத் தங்கள் புத்திக்குப் பட்டாலும் படா விட்டாலும் பெளத்தர்கள் என்கின்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்: களாகின்றார்கள். இப்படியேதான் மற்ற மதக்காரர்களும் இந்துக்களோ, மகமதியர்களோ, கிறிஸ்தவர்களோ கடவுள் உண்டு ஆத்மா உண்டு நித்தியப் பொருள் உண்டு மனிதன் இறந்தபிறகு கடவுளால் விசாரிக்கப்பட்டு அதன் செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷம், நரகம், சன்மானம், தண்டனை ஆகியவை
கள் கடவுளால் கொடுக்கப்படுவது உண்டு என்பனபோன்ற பல விஷயங். களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளுக்கு காரணம் தங்களுக்கு முன்னேயே யாரோ ஒருவர் சொன்னதாக ஏதோ ஒன்றில்: இருப்பதைப் பார்த்து நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். இவை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள்.
தங்கள் அபிப்பிராயங்களை தங்கள் தங்கள் பகுத்தறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம் ஆகியவைகள் காரணமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஏற்படுவதானால் இருதிரத்தாரும் சுயமரியாதை இயக்கக்காரர்களே
யாவார்கள்.
குடி அரசு - 19310) 182
ஏனெனில் கண்மூடித்தனமாய் முன்னோர் வாக்கு என்பதாக அல்லா.
மல் தங்கள் தங்கள் அறிவு,ஆராய்ச்சியின் பயனாய் ஏற்பட்ட அபிப் பிராயம் என்று சொல்லுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலால் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் ஆகின்றார்கள்.
உதாரணமாக புத்த மதஸ்தன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒருவன் தனக்குக் கடவுள் இல்லை என்றும், ஆத்மா இல்லை என்றும், வாயால் சொல்லிக்கொண்டு காரணா காரியங்களுக்கு ஆதாரம் என்ன என்பதை அறியாமல் சந்தேகப்பட்டுக்கொண்டு இருப்பானானால் அவன் தன்னை புத்தமதஸ்தன் என்று சொல்லிக் கொள்ளமுடியவே முடியாது. அதுபோலவே ஒரு இந்துவோ, இஸ்லாமானவரோ, கிறிஸ்தவரோ கடவுள் உண்டு என்கின்ற மதக்காரராக இருந்து கொண்டு நடப்பில் தங்கள் காரியங் களுக்கும், அதன் பயனுக்கும் தங்களைப் பொருப்பாக்கிக்கொண்டு தங்கள் காரியங்களுக்குப் பின்னால் பயன் உண்டு என்கின்ற கொள்கையையும் நம்பிக்கொண்டு அதற்குச் சிறிதும் கட்டுப்படாமல் நடந்து கொண்டும் இருக்கின்ற ஒருவன் தன்னை கடவுள் நம்பிக்கைக்காரன் என்றும் தனது ஆத்மா தண்டனை யையும் சன்மானத்தையும் அடையக்கூடியது என்றும் நம்பிக்கொண்டிருக் கின்றவர்களாக மாட்டார்கள். ஆதலால் இந்த இரண்டு கூட்டத்தார்களும் சுயமரியாதைக்காரர்கள் அல்ல என்றும்தான் சொல்லு வேன்.
ஏனெனில் அவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும் விரோத மான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால், இவ் விரு கூட்டத்தாரிலும் சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் தங்களுக்குத் தோன்றியவைகளும், தாங்கள் கண்ட உண்மைகளும் முன்னோர் கூற்றுக்கு ஒத்திருந்தால் மாத்திரம் முன்னோர் கூற்றம் ஆதரவாக எடுத்துக் கொள்ள பாத்தியமுடையவர்களாவார்கள். அப்படிக்கில்லாமல் முன்னோர் கூற்றுக்குத் தான்கூட உண்மையை பொருத்துகின்றவர்களும் அல்லது அதற்கு ஆதர வாகத் தங்களது உண்மை இருக்கின்றது என்று கருதுகின்றவர்களும் சுயமரியாதைக்காரராகமாட்டார்கள்.
ஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட கொள்கையை உடையவர்களாக இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை இருப்பதாகயிருந்தாலும் அதை நீங்கள் பிரத்தியக்ஷத்தில் தெளிவுபடுத்திக்கொண்டீர்களா? அனுபவத்தில் சரிப்பட்டு வருகின்றதா? என்பதைப் பூரணமாய் அறிந்துகொண்டவர்கள் என்பதைப் பொருத்தும், அவை உங்களுடைய சொந்த அபிப்பிராயத்தின்
மீது நம்புகின்றீர்களா? அல்லது அந்தந்த கொள்கையையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? என்பதைப் பொருத்துமேதான் உங்கள் மதத்திற்கோ, கொள்கைக்கோ மதிப்பு கிடைக்கும் அப்படியில்லாமல் ஒருவன் தன்னை இந்து என்றோ, கிறிஸ்துவர் என்றோ, மகமதியர் என்றோ, பெளத்தர் என்றோ சொல்லிக்கொள்ளுகின்றவர் ஒரு நாளும் சுயமரியாதைக்காரராகமாட்டார்.
183 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காக ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதோடு அது தன்னுடைய நடைமுறைக்கு பிரத்தியக்ஷ அனுபவத்திற்கு ஒத்துவராதிருந்தும் அக்கொள்கைக்காரன் காரணாகாரியங்கள் அறியமுடியாமல் இருந்தும் அவற்றையுடைய ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது என்பது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாததாகும்.
குறிப்பு-சென்னை மவுண்ட்ரோட்டிலுள்ள தென்னிந்திய புத்தமத சங்கத்தில் 22031931அன்று ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 29.03.1931
குடி அரசு - 19310) 184
வ்
திரு.பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்.
கள் யாருமே இல்லை. அவரை தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேச பக்தர்
கள் என்பவர்களும், தேசீய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்ற தையும் பார்க்கின்றோம்.
இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப்பிரதிநிதி
திரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறு கின்றன. இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள்
திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும் படியாக தேச மகாஜனங்களுக்கும் கட்டளையிடுவதும், திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு.காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வது மான காரியங்களும் நடைபெற்றன.
ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் “காந்தீயம் வீழ்க” “காங்கிரஸ் அழிக” “காந்தி ஒழிக” என்கின்ற கூச்சல்களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகி விட்டன.
இவைகளை யெல்லாம் பார்க்கும் போது அரசியல் விஷயமாய் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவு மிருக்கிறது. எது எப்படி இருந்த போதிலும் திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரகக் கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே இக்கிளர்ச்சி மக்களுக்கோ. தேசத்திற்கோ
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச்சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல்
திரு. காந்தி யவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே பதக்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச்சொல்லியு மிருக்கின்றார். போராக்குறைக்கு அக்கம் பக்கத்து தேசத்தவர்களில் உண்மை யான சமதர்மக்கொள்கையுடைய தேசத்தார்களும் திரு. “காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே இக் காரியங்கள் செய்கின்றார். திரு. காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்” என்று ஆகாயம் முட்டக் கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசீயவீரர்கள் தேச பக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல் பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டுகிணற்றில் விழுவது போலவும்,பந்தயங் கூறிக்கொண்டு பாறையில்.
முட்டிக் கொள்வது போலவும் தலை கிறுகிறுத்து கண் தெரியாமல் கூத்தாடி னார்கள். அதன் பயனாய் சிறை சென்று வீரர்களாய் “வாகைமாலை சூடி” திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்துகொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப் பட்டதை பார்த்து விட்டு “காந்தீயம் வீழ்க” “காங்கிரஸ் அழிக” “காந்தி ஒழிக” என்று கூப்பாடும் போடுகின்றார்.
கள். இதனால்என்ன பயன் ஏற்பட்டு விடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
நிற்க, நம்மைப்பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்லவேண்டு மானால் பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும், கவலையும் அற்ற மூடமக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கெளரவம் கிடைத்தால் போது மென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு விநாடி தோறும் வேதனைப்பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதைப் பார்க்
கிலும் அவர் தன் உயிரை விட்டுமறைய நேர்ந்தது. பகத்சிங்கிற்கு மெத்த “சாந்தி” என்றும், நன்மை என்றுமே கருதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுதான் கவலைப்படு கின்றோம்.
ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பது தான் கேள்வியே தவிர,பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சிங் கொள்கைக்கு காலமும், இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்கு தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம்
குடி அரசு - 19310) 186
ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும்.
நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர். நடந்து கொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லு வோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிரயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு. பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடமையும்தான் அவரது கொள்கை யென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது :-
“பொதுஉடைமைக்கக்ஷி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான்
தீரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத் திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம் பிக்கையுடைவர் என்றும் கருதிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்தக் கொள்கையானது எந்தச் சட்டத்தின் படியும் குற்றமாக்கக்கூடியது அல்ல வென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டிய தில்லை யென்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ,கஷ்டமோ ஏற்பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதா யிருந்தாலும் நாம் நம் மனப் பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது தனிவகுப்பினிடமாவது தனி தேசத்தானிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனிமனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டுபண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக் கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத்தன்மையை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருகின்றது.
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தீண்டாமை ஒழிவதாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டுமோ அது போலவேதான் ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித்தன்மை கூலிக்காரத்தன்மை ஒழிந்து தானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவது தான் சமதர்மத்தன்மை பொது உடமைத்தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை.இந்தக் கொள்கை:
கள் தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக் கொள்கைகளை நியாயமானவையென்றும் அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில்: நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே. காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது. திரு. காந்தியவர்கள் என்றையத்தினம். கடவுள் தான் தன்னை நடத்துகின்றார் என்றும் வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலான தென்றும் எல்லாம் கடவுள்செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனியத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். ஆனால் அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும். திரு. பகத்சிங் தூக்கி லிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில்: ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லுவோம். சும்மா தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்தியமக்களுக்கு, ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும்,
சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது சாதாரணத்தில் வேறுயாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!!! இதே சமயத்
தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.03.1931
குடி அரசு - 19310) 188
ஆதிதிராவிடர்கள் எண்பவர் மார்?
இந்திய அரசியலில் ஓதாழிலானிகளுக்கப் பிரதிநிதித்துவம் எங்கே?
தேர்தல் சம்மந்தப்பட்ட காரியங்களில் ஆதிதிராவிடர்கள் என்பவர். களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதில் ஆதிதிராவிடர்கள் என்பதாக எந்தெந்த வகுப்பார்களை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது என்பது இப்போது பொது ஜனங்களுக்குள் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. லோக்கல் போர்ட் சட்டப்படியும், முனிசிபல் சட்டப்படியும் ஆதி திராவிடர்கள் என்பதற்கு வியாக்கியானம் சொல்லி இருப்பதில் “இந்து மதத்தைத்தழுவிக்கொண்டிருக்கும் பறையர், பள்ளர், வள்ளுவர், சக்கிலியர், தோட்டிகள், மாலா (தெலுங்கு பாஷையில் பறையர்! மாதிகர் (தெலுங்கு, கன்னட பாஷையில் சக்கிலி) ஹொலையர் (கன்னட பாஷையில் பறையர்! செருமர்கள் (மலையாள பாஷையில் பறையர்) ஆகிய இந்த வகுப்பார்கள் மாத்திரமே ஆதிதிராவிடர்கள் என்கின்ற வகுப்பில் அடங்கி இருக்கின் றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்திய அரசியல் பிரதிநிதித்துவத்திலோ, அல்லது ஸ்தல ஸ்தாபன பிரதிநிதித்துவத்திலோ மேற்கண்ட வகுப்பார்களாகிய பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று வகுப்பாருக்கு மாத்திரமே பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இதனால் இந்தியாவில் தீண்டா
தூர் என்கின்ற வகுப்பில் நடைமுறையில் சேர்க்கப்பட்டிருக்கின்ற வகுப்பார் களில் அரைவாசிப் பேர்களுக்குக்கூட பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாய் நினைப்பதற்கில்லை. ஏனெனில், மேற்கண்ட வகுப்பார்களைத் தவிர இன்ன
மும் எத்தனையோ வகுப்பார்களைப் பொதுவாகத் தீண்டாதார்களாகவே
கருதி வருவது யாவரும் அறிந்ததாகும்.
உதாரணமாக மலையாளத்தில் தீயர்கள், ஈழவர்கள் முதலிய பல. வகுப்பார்களையும் தீண்டாதவர்களாகவும், நெருங்காதவர்களாகவும், தெருவில் நடக்காதவர்களாகவும் கருதப்பட்டு வருகின்றது.
தமிழ் நாட்டிலும் குறவர், நாவிதர், வண்ணார், செம்படவர் என்பன போன்ற பல வகுப்பார்கள் சில இடங்களில் தீண்டாதவர்களாகவே கருதப்படு
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கின்றார்கள்.மற்றும் சில இடங்களில் நாடார் முதலிய சில சமூகங்களையும் பொதுக் கோவில், குளம், சத்திரம், சாவடி, தெரு முதலியவைகளில் பிரவே சிக்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதும், யாவரும் அறிந்ததேயாகும்.
இந்தப்படியாக அனேக சமூகங்கள் பொது மனித உரிமை வழங்கப் படாமல் இருக்கின்றபோது, சட்டத்தின் மூலமாக இந்தச் சமூகங்களுக்கு சமஉரிமையை வழங்காமலும், பிரதிநிதி ஸ்தாபனங்களில் ஸ்தானம் ஒதுக்கா மலும், இருந்தால் எப்படி இவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதாக சொல்லக்
கூடும்? எங்கோ சிற்சில இடங்களில் வேண்டுமானால் இக் கூட்டத்தார்களில்: யாரோ இரண்டொருவர் தங்கள் சொந்த செல்வ நிலை யினாலும், வேறு வியா பாரம் முதலிய துறைகளில் உள்ள செல்வாக்கினாலும், சற்று பொதுவாழ்வில் விளம்பரப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், பிரதிநிதித்துவம் பெற்றிருக்
கின்றார்கள் என்பதும் அல்லாமல் மற்றபடி வேறுவகையில் அச்சமூகங்கள் எந்த வழியிலும் பிரதிநிதித்துவம் அடைவதற்கு மார்க்க மில்லாமலேயே இருக்கின்றன.
இவை ஒரு புறமிருக்க பொதுவாக இப்போது அளிக்கப்பட்டி ருக்கும் இந்தவிதமான பிரதிநிதித்துவமானது தாழ்த்தப்பட்ட வகுப்பு, ஒடுக்கப்பட்ட வகுப்பு கொடுமை செய்யப்பட்ட வகுப்பு ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதோடு மாத்திரம் அல்லாமல் ஏழைகளாகவும், தொழிலாளிக ளாகவும் இருப்பவர்களும் சமய சமூக சமுதாயக் கொடுமைகளால் முற்போக் கடையவே முடியாத படி தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்ற பல வகுப்பாருக்
கும் பிரதிநிதித்துவம் இருக்க வழியில்லாமலேயே இப்போதைய பிரதிறிதித் துவ முறை இருந்து வருகின்றது.செல்வவான்களைப் பொருத்தவரை தாராள மாக தனிப் பிரதிநிதித்துவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கொஞ்சம் பூமி உள்ள குடியானவனுக்கு என்று ஒரு தொகுதியும், அதிக பூமி உள்ள நிலச்சுவான்தாருக்கு என்று ஒரு தொகுதியும், தோட்டகாரனுக்கு என்று ஒரு தொகுதியும், வியாபாரிக்கு என்று ஒரு தொகுதியும், லேவாதேவி காரனுக்கு என்று ஒரு தொகுதியும், மற்றும் ஆங்கிலம் படித்தவனுக்கு என்று
ஒரு தொகுதியும் ஆக இந்தபடி செல்வவான்களுக்கும், ஜமின்தாரர்களுக்கும் முதலாளிகளுக்கும், தனித்தனி பிரதிநிதித்துவம் கிடைக்கும்படியாகச் செய்துவிட்டு எந்த வகையிலும் ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களும். ஒதுக் கப்பட்டவர்களும் வருவதற்கு மார்க்கம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆகவே இந்த தத்துவங்களைப் பார்க்கின்ற போது இந்த அரசியல் அமைப்பும், ஆக்ஷி அமைப்பும் செல்வவான்களுக்கே சொந்தமாக்கி அவர் களது நன்மைக்கே அனுகூலமானதாக அமைக்கப்பட்டிருக்கின்றதே யொழிய பொதுஜன நன்மைக்கு ஏற்றதான பொதுஜன பிரதிநிதித்துவத்திற்கு லாயக்காக அமைக்கப்படவில்லை என்பது நன்றாய் விளங்கும். குறிப்பாக தொழிலாளிகள் விஷயம் சிறிது கூட கவனிக்கப்பட வில்லை என்பதும்
குடி அரசு - 19310) 190.
அவர்களது நன்மைகளையும், முன்னேற்றங்களையும் வேண்டுமென்றே வெகு ஜாக்கிரதையுடன் புறக்கணிக்கப்பட்டு அழுத்தி வைக்கப்பட்டிருக் கின்றது என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். நிற்க,
இப்போது அரசாங்க தத்துவப்படி ஆதிதிராவிடர் என்கின்ற தலைப்
பில் சேர்க்கப்பட்டுள்ள தீண்டாத வகுப்பார்கள் என்பவர்களுக்கும் கூட சரியானபடி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதாகவும் சொல்வதிற் கில்லை. எப்படியெனில் ஆதிதிராவிட வகுப்பு என்று சொல்லப்பட்ட மேல் கண்ட மூன்று வகுப்பார்களிலும் இன்றைய தினம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சுமாருள்ள மக்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவி இருக்கின்றார்கள். அந்தப்படி அவர்கள் கிருஸ்துவ மதத்தைத் தழுவி இருந்தபோதிலும் தீண்டாமையானது கிருஸ்துவமதத்திலும் இருந்து கொண்டு அங்கு வருகின்றவர்களையும் விலக்கி வைத்து இருக்கின்றது. உதாரணமாக “கிறிஸ்துவப் பறையர்கள்” என்றும் “கிறிஸ்துவச் சக்கிலிகள்” என்றும் மற்றும் இம்மாதிரியாகவே சொல்லப்படுவதுடன் அவர்கள் ஊரைவிட்டும் மற்றும் பல பொது உரிமை களை விட்டும் விலக்கியே வைக்கப்பட்டிருக் கின்றார்கள். கிறிஸ்துவர்கள். கோவிலிலுங்கூட மேல்கண்ட ஆதிதிராவிடக் கிறிஸ்துவர்கள் அனுமதிக்கப் படாமல் இருக்கின்றார்கள். ஆகவே இதிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களுக்
கும், ஏழைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் மற்றும் தொழில் காரணமாக தாழ்த்தப் பட்டவர்களுக்கும் அரசியலிலும், ஆக்ஷியிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது உறுதியாகின்றது. எனவே இந்த நிலையில் அவர்கள் வைக்கப் பட்டிருக்கும்போது இந்த நாட்டின் சுதந்திரம் என்கின்ற பெயரை: சொல்லிக்கொண்டும், இந்திய மக்களின் சமத்துவம் என்கின்ற பெயரைச் சொல்லிக்கொண்டும் நடத்தப்படுகின்ற இயக்கங்களிலும், கிளர்ச்சிகளிலும் இந்தச் சமூகத்தார் கலந்து கொள்ளவில்லையென்ற பழியை எப்படி அவர்கள்
மீது சுமத்தமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அன்றியும் நம் போன்ற வர்கள் அக் கூட்டத்தார்களை மேற்படி இயக்கங்களில் எப்படி கலந்து கொள்ளச் சொல்ல முடியும் என்பதும் நமக்கு விளங்கவில்லை,
மற்றும், உண்மையையும், நாணயப் பொறுப்பையும் ஒட்டிப் பேசுவ தானால் நம் போன்றவர்கள் அவர்களைக் கண்டிப்பாய் இவ்வித இயக்கங் களில் ஈடுபட வேண்டாமென்றுதான் சொல்லவேண்டியிருக்கும் என்றே சொல்லுவோம்..நிற்க,
இந்தப்படி வற்புருத்திசி சொல்லவேண்டிய அவசியம் என்னவென்று யாராவது கேட்பார்களே ஆனால் அவர்களுக்கு மற்றொரு ஆதாரத்தையும் உதாரணமாக எடுத்துக்காட்டக்கூடும். அது என்னவெனில் சமீபத்தில் உயர்திரு. காந்தி அவர்கள் இதுவரை அடிக்காத ஒரு பெரிய குட்டிக் கரணம் அடித்திருக்கின்றார் என்பதேயாகும். அதாவது பம்பாயில் திரு. காந்தி யவர்களை உயர்திருடாக்டர் அம்பேட்கார் அவர்கள் தனது வகுப்பார்களின்
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
நிலைமையைப்பற்றி ஒன்றும் செய்யவில்லையே என்றும், இந்த சமயத்தி லாவது தங்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா யென்றும் கேட்டுக் கொண்ட போது திரு.காந்தியவர்கள் “சுயராஜ்யம் கிடைக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது. சத்தியாக்கிரகம் முதலியவைகளும் செய்யக்கூடாது” என்றும் “சுயராஜ்யம் கிடைத்த பிறகு தீண்டாமை ஒழிந்துவிடும்” என்றும் சொல்லி இருக்கிறார். 09-ந் தேதி சுமி) இதைப் பார்க்கும்போது மயிலாப்பூர் “தேச பக்தர்களும் வர்ணாச்சிரம் சுயராஜ்ய வீரர்களும்” இதுவரை தீண்டாமை விலக்கைப் பற்றி என்ன என்ன விதமாய் சாக்குச் சொல்லி வந்தார்களோ அதையெல்லாம் திரு. காந்தியவர்களும் சொல்லுவதற்குத் தகுந்த தகுதி யையும், தைரியத்தையும் பெற்றுவிட்டார் என்பது நன்றாய் விளங்கும்.
ஆனால் ஒத்துழையாமை காலத்தில் இதே உயர்திரு காந்தியவர்கள் ஒத்துழையாதாரிடம் பேசும்போது “தீண்டாமை அடியோடு நீக்கப்பட்டா லொழிய சுயராஜ்யம் வராது” என்றும், “வந்தாலும் அது பயன்படாது” என்றும் சொன்னது இதற்குள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். ஆணால் அதற்கும் சிறிது காலத்திற்கு முந்தி பிராட்வே 8 நெம்பர் கட்டடத்தில் இதே திரு.காந்தியவர்கள் மிதவாதிகளிடத்தில் பேசும் போது “நான் சுயமரியா தைக்காக போராடப் போகின்றேனே தவிர சுயராஜ்யத்திற்காக அல்ல” என்றும், “சுயமரியாதை இல்லாத எந்த அரசியல் சுதந்திரத்தையும் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்றும் சொன்னார். ஆனால் அவையெல்லாம் இப்போது தலைகீழாகப் போய் கொண்டிருப்பதில் ஆச்சரியமொன்று மில்லையானாலும் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டிய விஷயத்தில் போட்ட குட்டிக்கரணமானது தீண்டப்படாதார் என்பவர்களுக்குள் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் ஒழிந்திருக்கும். ஆகவே இந்த நிலையில் தீண்டாதார். விடுதலை எங்கே? தொழிலாளிகளுக்கு பிரதிநிதித்துவம் எங்கே?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.03.1931
குடி அரசு - 19310) 192
நாடார்கள் தூுண்புறுத்தப்ப௫கிண்றார்கள்
ன க்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?
இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெரு வில் நடக்காமல் தடைப்படுத்தப் பட்டதும் அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். மற்றும் அவர்:
கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத்
தடுத்து உபத்திரவப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும். இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பனப் போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்: படாமல் இருந்து வருகின்றது. போதாக்குறைக்கு திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணி யென்னும் கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வல மாய்:
எடுத்துச் செல்லவொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங் கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்: டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.
சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலை யற்றதாகவும் மக்களுக்குள் இப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதாகவும் இருப்பதாகவே கருதவேண்டியிருக் கின்றது. பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வ தாகவே செய்திகள் கிடைத்து வருகின்றது. போலீஸ் இலாக்காவும், சட்ட இலாக்காவும் 30 நாள் கணக்கெண்ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணுவதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதா யிருக் கின்றதே யொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப் படுவதற்கு ஒரு பரிகாரமும் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகக் தெரியவில்லை யென்று வருத்தத்துடன் எழுதுகின்றோம். இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதா வது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லுவதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படு வதாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் துலைக்கக் கூடாதா? என்று நாடார் சமூகத்தையும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.031931
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஸ்கை ஸ்காபண அறசாங்கம் கவணிக்குமா?
ஸ்தல ஸ்தாபன புதிய சட்டப்படிக்கு தீண்டாதார், பெண்கள், சிறு வகுப்பார் முதலியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அநேக ஸ்தலஸ்தாபனத் தலைவர்கள் அச்சட்டத்திற்கு சரியானபடி மரியாதை கொடுக்காமல் தாங்கள் ஏகபோக ஆதிக்கத்தின் மனப்பான்மையையே காட்டி இருக்கின்றார்கள் என்பதாக தெரியவருகின்றது. ஆகையால் அரசாங்கத்தார். இதுவிஷயத்தில் சற்று கவலை எடுத்து ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் சரியானபடி பெண்களுக்கும், தீண்டப்படாதார் என்பவர்களுக்கும் சரியான படி ஸ்தானங்கள் ஒதுக்கியிருக்கின்றதா என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டுமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
மற்றொரு விஷயம்
லோக்கல் போர்டுகளில், தாஜூக்கா போர்டுகள் பிரிக்கப்படுவதிலும் ஒவ்வொரு தாலுக்காவுக்கு ஒவ்வொரு போர்டு இருக்க வேண்டுமென்று சட்டத்தில் தெளிவாய் இருந்தும் சில இடங்களில் 2, 3 தாலூக்காக்கள் ஒரே போர்டாக இருந்து வருகின்றதாகத் தெரியவருகின்றது. ஆதலால் ஆங்காங் குள்ள பொதுஜனங்கள் இதைக் கவனித்துத் திருத்துப்பாடு செய்யாத வரை
யில், கவர்ன்மெண்டாராவது கண்டிப்பாய் கவனித்து ஒவ்வொரு தாலூக்கா வுக்கு ஒவ்வொரு போர்டாக ஏற்படுத்துவதில் சற்று கண்டிப்பாய் இருக்க வேண்டுமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.03.1931
குடி அரசு - 19310) 194.
கர௱ச்சி
கராச்சி நகரில் இவ்வாரம் நடந்த நடவடிக்கைகள் இந்திய மக்களை: திடுக்கிடச் செய்திருக்கும் என்று சொல்லுவது மிகையாகாது. அன்றியும், சாதாரணமாகவே இந்த நான்கு, ஐந்து வருஷங்களாக குடி அரசுப் பத்திரி கையைத் தொடர்ந்து வாசித்து வந்த வாசகர்களுக்கும், சுயமரியாதை இயக்க பிரசாரங்களையும் அம்மகாநாட்டு தீர்மானங்களையும் தொடர்ந்து கேட்டு வந்த பொது ஜனங்களுக்கும், ஒரு பெரிய ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சி யையும் உண்டாக்கி இருக்குமென்பதில் சிறிது சந்தேகமில்லை.
ஏனெனில், “குடி அரசு”ப் பத்திரிகை சென்ற நான்கு, ஐந்து வருஷங் களாய் எந்தெந்தக் கொள்கைகளை சுமந்து தமிழ்நாடெங்கும் முழக்கி வந்ததோ அந்தக் கொள்கைகளேதான் பெரிதும் இவ்வாரம் முழுவதும் கராச்சியில் உண்மை உணர்ச்சியுள்ள பதினாயிரக்கணக்கான- வாலிபர் களா:
லும், பெரியவர்களாலும் முழங்கச் செய்யப்பட்டதோடு பெரும் பெரும் தலை. வர்கள் என்பவர்களையும் அம்முழக்கங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு பின்பாட்டு பாடும் படியாக செய்துவிட்டது. அதுமாத்திரம் அல்லா.
மல் நாம் எந்த எந்தக் கொள்கைகளையும், ஸ்தாபனங்களையும், அதன் தலை. வர்களையும் குறிப்பிட்டு அவை நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் தடையானதென்று முடிவு கட்டி, அவைகள் எல்லாம் ஒழிய வேண்டுமென்று ஆசைப்பட்டுப் பலமாகத் தாக்ஷண்யம் இல்லாமல் பிரசாரம் செய்து கண்டித்து வந்தோமோ அக்கொள்கைகளும், ஸ்தாபனங் களும், அதன் தலைவர்களும் இப்போது கராச்சியில் வெளிப்படையாய் வெறுக்கப்பட்டதோடு அவை அழிய வேண்டும் என்றும், தலைவர்கள் விலகிக் கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்படும் கூப்பாடுகள் ஆகாய மளாவ முழங்கிக்கொண்டே இருந்தது மற்றும் இது மாத்திரம் அல்லாமல் அவ்வார்த்தைகளைப் பந்தல்களில் எழுதிக்கட்டித் தொங்கவிடப்பட்டும் இருந்ததுடன் அத்தலைவர்களின் நேரில் தெரிவிக்கப்பட்டுமாய் விட்டது. எந்த எந்தத் தலைவர்களைப் பெரிய பெரிய மகாத்மா வென்றும், பழுத்த தேசாபிமானிகள் என்றும் கூறி, அவர்களது கட்டளைக்கும், அபிப்பிராயங் களுக்கும் மாறாக பேசுவதோ, நினைப்பதோ “பாவம்” என்றும், தேசத் துரோகம் என்றும் அநேக மக்களால் கருதப்பட்டு வந்ததோ, அந்தந்தத் தலைவர்களையே “எங்களுக்கு நீங்கள் வேண்டாம்", “திரும்பிப் போங்கள்”,
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
“உங்களதுகொள்கை ஒழிக”, “உங்களது ஸ்தாபனங்கள் அழிக”, “உட்கார்ந்து விடுங்கள்” என்ற கூப்பாடுகள் முழங்கியதோடு அவைகளை அத்தலைவர்: களே நேரில் பார்க்கவும், காதில் கேட்கவும் நேரும்படியான சம்பவங்கள் தாராளமாய் நடைபெற்றும் விட்டன.
இவைமாத்திரமல்லாமல் எந்த ஒரு “ராஜி”யானது உலகமே போற்றப் படுவதாக மக்கள் எல்லாரும், நினைக்கவேண்டும் என்று பெரிய பெரிய ஏற்பாடுகள் ஜால வித்தைகள் போல் செய்து காட்டப்பட்டதோ, அந்த ராஜி யானது கராச்சி தெருக்களில் சிரிப்பாய் சிரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் விளக்கமாய் சொல்லவேண்டுமானால் கராச்சியில் கூடியுள்ள ஆயிரக் கனக்கான வாலிபர்கள் வாயினால் “காங்கிரஸ் ஒழிக”, “காந்தியம் ஒழிக”, “ராஜி அழிக” என்ற சப்தம் மொகுடு முட்ட முழங்கிவிட்டன என்பதே யாகும்.
அன்றியும் மேற்கண்ட இந்த தத்துவம் கொண்ட விஷயங்களையே 4 வருஷத்திற்கு முன்பிருந்தே நாம் சொல்லிவந்தபோதும், எழுதி வந்த போதும், ஆங்காங்கு எழுதித்தொங்க விட்டபோதும் இந்த நாட்டில் எந்த ஒரு கூட்டத்
தார் நம்மைத் தேசத்துரோகி என்றும், விடுதலைக்கு விரோதி என்றும் கூப்பாடு போட்டார்களோ அந்தக் கூட்டத்தார்களே இன்று கராச்சித் தெருக்களில் தேசத்துரோகிகள் என்பதாகக் கூப்பிடப்பட்டதை சமாளிக்க முடியாமல் அவர். களிலும் பலர் இக்கூட்டத்தில் அதாவது மேற்கண்ட சபதங்கள் முழங்கிய கூட்டத்தில் சேர்ந்து கூடவே கோவிந்தா போட வேண்டியவர்களாகி விட்டார். கள்.சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், நமது குடி அரசின் கொள்கை களே - சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளே பெரிதும் கராச்சி நகரில் இவ்வருஷம் தாண்டவமாடின என்று சொல்லுவது எவ்விதத்திலும் மிகையாகாது.
அது மாத்திரமல்லாமல், காங்கிரசும், காங்கிரஸ் தலைவர்களும் கூட இந்தக் கொள்கைப்போர்வையையே போர்த்திக்கொள்ள வேண்டியதாகி விட்ட தையும், பார்த்த யோக்கியமான எவரும் இனி குடி அரசு கொள்கை களைக் குற்றம் சொல்லமாட்டார்கள் என்றே சொல்லுவோம்.
நிற்க, திரு. காந்தியவர்கள் விஷயமாய்ப் பலர் நடந்து கொண்டதைப் பற்றி திரு. காந்தியவர்களே மனம் நொந்து பேசியதைப் பார்த்தாலே உண். மையான விடுதலையும், சுதந்திரத்தையும் கோரும் மக்களுக்கு காந்தியத்தில் எவ்வளவு அதிருப்தியும் ஆத்திரமும் இருக்கின்றது என்பது தானாகவே விளங்கும்.
அன்றியும் தேசீய மகாசபை என்றுகூறி இந்திய பாமர மக்களை சுமார் அரை நூற்றாண்டாக ஏமாற்றி வந்த காங்கிரசைப் பற்றியும், அதன் தலைவர். களைப்பற்றியும், அவர்கள் நடத்தைகளையும், உள் எண்ணங்களையும் பற்றியும் பாரத நவவீரர்சபை மகாநாடு என்னும் தியாகத்திற்குத் துணிந்த
குடி அரசு - 19310) 196
வாலிப மக்கள் மகாநாட்டின் வரவேற்புத் தலைவரும், மகாநாட்டுத்்தலைவ
ரும் கூறியிருப்பவைகளைப் பார்த்தால் காங்கிரசு முதலியவைகளைப் பற்றி நாம் இதுவரை சொல்லி வந்ததற்கும் இவர்கள் சொல்லுவதற்கும் ஏதாவது சிறிதளவு வித்தியாசமாவது இருக்கின்றதா என்பதும் விளங்கிவிடும். மேல் கண்ட இவ்விரு கனவான்களும் காங்கிரசு நடவடிக்கைகளுக்கும் பிரசாரத்
திற்கும் பிடிக்கும் சில ஆள்கள் போன்று வாடகைக்கோ கூலிக்கோ பிடித்த ஆள்கள் அல்ல என்பதும், உண்மையாகவே மனம் கசிந்து பேசியவர்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். அதாவது அவர்களில் ஒருவர் சுவாமி கோவிந்தானந்தர், மற்றவர் சுடாஸ் சந்திரபோஸ் ஆவார். ஆகவே மேல்கண்ட கனவான்கள் கூறுவதாவது.
வரவேற்பு கமிட்டி தலைவர் சுவாமி கோவிந்தானந்தர் கூறியதின்
சாரம்:-
“பாமர மக்களுக்கு அனுகூலமான ஆக்ஷியை ஸ்தாபிக்க வேண்டு மென்பது எங்களது நோக்கம். குஷியாவின் சமதர்மக் கொள்கையை இந்தியாவுக்கு ஏற்ற விதத்தில் நடத்தப்பட வேண்டும். என்பதே எனது அவா. சமதர்மத்தோடு கூடின பூரண சுயேட்சையே இந்தியாவின் முடிவான லக்ஷியம். இந்தியாவின் ஜீவநாடி காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஆதரிக்க வில்லை. பகவத்சிங்கும் மற்ற தேச பக்தர்களும் செய்த தியாகத்தை அனுகூலமாய்க் கொண்டு கையில் வலுத்தவர்களும், ராஜியவாதிகளும் இப்போது பயனடைந்து வருகிறார்கள்” என்பதாகும்.
மகாநாட்டுத் தவைவர் சுபாஸ் போஸ் பேசியதின் சாரமாவது,
“காங்கிரசின் கொள்கைகள் பயனற்றதாகவும் பலவீனமுள்ள தாகவும் இருக்கின்றது.
காங்கிரஸ் தலைவர்களோ, முன்னுக்குப்பின் முரணாய் பேசு கின்றவர் களாகவே இருக்கின்றார்கள்.
அவர்களது நடத்தைகளோ, வாயில் பேசுவதொன்றாகவும், காரியத்தில் செய்வது வேறொன்றாகவும் இருக்கின்றன.
அவர்களது வேலைத் திட்டங்ளோ, எவ்வித புதிய மாறுதல்: கொள்கைகளும் அற்றவைகளாகும்.
அவர்கள் உள் எண்ணங்களோ எப்படியாவது மக்களிடத்தில் விஷயங்களை சரிக்கட்டிக் காட்டிக் கொண்டு போனால் போதுமென்ப தேயாகும்..
அவர்களது லக்ஷியங்களோ, ஜமீன்தாரர்களுக்கும் குடியான வனுக்கும், பணக்காரனுக்கும், கூலிக்காரனுக்கும், மேல்ஜாதிகார
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ரென்போருக்கும், தீண்டப்படாதா ரென்போருக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் எல்லோருக்குமே தாங்கள் நல்ல பிள்ளைகளாய் இருக்க வேண்டுமென்பதையே லக்ஷியமாய் கொண்டவர்கள்.
நமக்கு சதந்திரத்தைச் சம்பாதித்துக் கொடுக்க காங்கிரஸ்காரர். களால் முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கு சிறிதும் இல்லை. ஆதலால். இந்தியா கதந்திரமடைய வேண்டுமானால் வேறு ஒகு புதிய ஸ்தா பனத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்”
என்று பேசியிருக்கிறார்.
காங்கிரசின் யோக்கியதைக்கு இதைவிட நல்ல ஒரு நற்சாக்ஷிப்பத்திரம் வேறு யாராலும் கொடுக்கமுடியாது, இதுவரை கொடுக்கப்பட்டதுமில்லை. ஆகவே காங்கிரசைப்பற்றியும், அதன் தலைவர்களைப் பற்றியும் அவர்களது எண்ணங்களைப் பற்றியும் இந்த 5.6 வருஷ- காலமாக நாம் பேசியும்
எழுதியும் வந்தவைகளுக்கும் இதற்கும் ஏதாவது ஒரு கடுகளவு வித்தியா சமாவது இருக்கின்றதா என்பதை வாசகர்கள்தான் யோசித்துப்பார்த்து முடிவு கட்ட வேண்டும் என்பதாகக் கருதிவிட்டு விடுகின்றோம். நிற்க,
சுதந்திரத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகள் விஷயத்திலும் டி
திரு. போஸ் அவர்கள் கூறுவதாவது:-
“விவசாயிகள் தொழிலாளிகள் ஆகிய இவர்களுக்கு சமதர்மம் ஏற்படவேண்டும். ஜாதி வேற்றுமைகள் ஒழிக்கப்படவேண்டும், சமூகம்
மதம் என்பதான மூடநம்பிக்கைகள் எல்லாம் அடியோடு அழிக்கப் படவேண்டும். பெண்களைப், புதிய தர்மங்களை ஏற்றுக் கொள்ளச் செய்யவேண்டும்” என்பனவாகியவைகளாகும்.
ஆகவே, இந்தக் கொள்கைகள் கூட இதுவரை குடி அரசு பிரசாரம் செய்து வந்ததோடு இது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கொள்கை களாகவும் இருப்பது யாவரும் அறிந்ததேயாகும்.
தவிர, சென்ற ஒருவருஷ காலமாய் இந்தியாவில் நடந்த சத்தியாக் கிரகப் போர் என்னும் விஷயத்திலும் நமது அபிப்பிராயமானது இந்திய மக்களால் எவ்வளவு பலமாக ஊர்ஜிதம் செய்யப்பட்டது என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் வேண்டுமானால் ராஜியைப்பற்றிய பொதுமக்கள் அபிப்பிராயம் என்ன என்பதைக் கூர்ந்து பார்த்தாலே நன்றாய் விளங்கும். அதைவிட நன்றாய் விளங்கவேண்டுமானால் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஒவ் வொரு “தியாக” புருஷர்களும் தேசீய “வீரர் "களும் கிளர்ச்சிக்கு வெளிப்: படையாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்து வந்த “தேசீய வாதி” களும் எப்படியாவது சீக்கிரத்தில் ராஜி ஏற்படாவிட்டால் தமது கதி மாத்திரமல்லாமல் கிளர்ச்சியின் கதி என்ன ஆவது என்று கவலைப்பட்டு ராஜிக்காக அலைந்த
குடி அரசு - 19310) 198
தும், ராஜியாக வேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்ததும், ராஜி செய்து கொள்ளும்படி திரு காந்திக்கு பலர் தந்திகொடுத்ததும், பத்திரிகைகள் எல்லாம் “காந்தி பெரிய மனது வைத்து விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று கோரிக் கொண்டதும், மற்றும் இந்நாட்டில் உள்ள சகல முதலாளிகளும்,நிலச்சுவான் தார்களும், வியாபாரிகளும் பெரிதும் திரு. காந்தியையும், கிளர்ச்சியையும் சதா வைது கொண்டு இருந்ததுமான காரியங்களே போதிய ஆதாரங்களாய் இருந்து ருஜுவளிக்கும். இவ்வளவும் போராவிட்டால் கிளர்ச்சி துவக்கப் படும்போது திரு. காந்தியவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளையும், இறுதிக் கடிதத்தில் கண்ட வாசகங்களையும், மறுபடியும் ராஜி பேசும்போது ஏற்படுத்தப்பட்ட சமாதானக் கொள்கைகளையும், பிறகு ராஜி ஒப்பந்தப் பத்திரத்தில் காணப்பட்ட நிபந்தனைகளையும் கவனித்துப் பார்த்தாலும் போதுமானதாயிருக்கும்.
தவிர, ராஜி ஏற்பட்டபிறகு எங்கு பார்த்தாலும் ராஜி ஒப்பந்தத்தைப் பற்றிய மக்கள் அபிப்பிராயத்தை மாற்ற ஆங்காங்கு பிரசாரம் செய்ய வேண்டி வந்ததும், பிறகு ஒப்பந்தம் என்ன கதியோ ஆகித்தொலையட்டும் என்கின்ற அலட்சியத்தின் மீது எப்படியாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்கின்ற கவலையே பிரதானமாகி, வைசிராய் பிரபுவுக்குச் சதா தந்திகள் கொடுத்துக் கொண்டிருந்ததும் ஆகிய விஷயங்
கள் கிளர்ச்சியின் வீரத்தையும், ராஜியின் கெளரவத்தையும் இன்னும் நன்றாய் விளக்கிவிடும்.
மேலும், ராஜி செய்து கொண்ட தலைவர்கள் தங்களுக்கு வெற்றிகர மான நிபந்தனை எது என்பதை விளக்குகையில் ஒரே ஒரு நிபந்தனையை
மாத்திரம் எடுத்துச் சொல்லி வெற்றிகொண்டாடிவந்ததான அதாவது,
“தென்னாப்பிரிக்காவில் திரு. காந்திக்கும் திரு.ஸ்மட்சுக்கும் ஒரு
ஒப்பந்தம் நடந்து இருவரும் ஒரு ஒப்பந்தக்கடிதத்தில் கையெழுத்துப் போடும்படியான ஒரு பெருமை கிடைத்ததுபோல் இந்தியாவிலும் திரு.
காந்திக்கும் திரு. இர்வினுக்கும் ஒரு ஒப்பந்தம் நடந்து இருவரும் ஒரு ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போடும்படியான பாக்கியம் கிடைத் ததே அதுவே போராதா” என்பதும்,
“காங்கிரசு ஒரு ஜனப்பிரதிநிதி ஸ்தாபனம் என்பதை சர்க்கார் ஒப்புக் கொண்டார்களே அதுவே போராதா” என்பதுமான சமாதானங்களாலேயே திருப்தியடைய வேண்டுமென்று பெருமை பாராட்டி வந்திருப்பதும் போது மானதாகும்.
இவை ஒருபுறமிருக்க காங்கிரஸ் தலைவர்களுக்கும் திரு. காந்தி அவர்களுக்குமே தங்களுக்குள்ளாக கராச்சி காங்கிரசில் எங்கு தாங்கள் செய்து கொண்ட ராஜி ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படாமல் கவிழ்த்து விடப்படுகின்றதோ என்று ஏற்பட்ட கவலையும், ராஜியை முதலில் வெற்றி 199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
என்று கூறினவர்கள் எல்லாம் “அது வெற்றியுமல்ல தோல்வியுமல்ல. அது யுத்த சமாதான உடன்படிக்கையாகும்'”” என்று சொன்னதும், திரு.காந்தி யவர்கள் தன்னுடைய ராஜியை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி. விடுமானால் (அதாவது மக்கள் தன்னுடைய வார்த்தைகளை கேட்கா விட் டால் என்கின்ற தலைப்பில்) தான் பட்டினி கிடந்து சாகப்போவதாகவும் பய முறுத்தியதும்,மற்றும் அதை நிறைவேற்ற எவ்வளவோ பிரயாசைப் பட்டதும், வங்காளத்தில் திரு. சென்குப்தாவுக்கும். திரு. சுபாஸ் போசுக்கும் இருக்கும் தகராரை ஆஸ்பதமாக வைத்து, திரு. சுபாஸ் போசை சுவாதீனப்படுத்திக் கொண்டதின் மூலம் ராஜி தீர்மானத்திற்கு ஏற்பட்டிருந்த எதிர்ப்பை ஏமாற்றி நிறைவேற்றிக் கொள்ளச் செய்ததுமான காரியங்களும், ராஜி தீர்மானம் காங்கிரசில் வந்தபோது அதைப்பற்றி பேசியவர்களில் அதிகம் பேர், திரு. காந்தியவர்களின் பெருமைக்குப் பங்கம் வராமல் இருப்பதற்கே தாங்கள் ஆட்சேபிக்காமல் இருப்பதாக சொன்னவைகளும் கிளர்ச்சியின் பலனைத் தெரிவிக்கப் போதுமான ஆதாரங்களாகும்.
அன்றியும், இதுவரை கருப்புக்கொடி பிடிப்பதும், “திரும்பிப்போ” என்பதும், “நீங்கள் எங்களுக்கு வேண்டியதில்லை” என்பதும், மிக்க கேவலமாய் கருதப்பட்டு, அதைப்பெற நேர்ந்தவர்களையும் கேவலமாய்க் கருதுவதாக இருந்து வந்ததானது (இந்த ஆயுதமே இதுவரை காங்கிரஸ்
“வீரர் களுக்கு ஒரு பெரிய ஆயுதமாக இருந்தது இப்போது அது காங்கிரஸ் தலைவரும் உலகப்பெரியாரும் மகாத்மாவுமானவர் என்று சொல்லப்பட்ட வருக்கே ஏற்படுவதற்கு இந்த ராஜி நிபந்தனைகளே பெரிதும் காரணமாய். இருந்ததென்றால் இனி இதற்குமேல் கிளர்ச்சியின் பயனையும், ராஜியின் யோக்கியதையும் விளக்கவேண்டியதில்லை என்றே கருதி, நிறுத்திக் கொள்: ளுகிறோம். நிற்க,
இனி குடிஅரசு கொள்கைகளும் சுயமரியாதைக் கொள்கைகளும் எவ்வளவு தூரம் இந்நாட்டில் மதிக்கப்பட்டிருக்கின்றது என்று பார்ப்போ மானால் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக் கையினால் ஒருவாறு விளங்கும். அதாவது அவ்வறிக்கையில் “தென் விந்தியா (அதாவது தமிழ்நாடுவானது இந்தக் கிளர்ச்சிக்குத் தனது கிரமமான பங்கைச் செலுத்தவில்லை” என்பதாகக் குறிப்பிட்டிருந்ததும், “பத்திரிகைகள். யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டிருந்ததும், இதற்காக திரு. சத்தியமூர்த்திக் கூட்டத்தார் அழுது அதை மாற்ற வேண்டு மாய்க் கேட்டுக் கொண்டதும், அதற்காக அவர்கள் சொன்ன காரணங்களும் போதுமான ஆதாரங்களாகும். மற்றும், குடி அரசுவின் கொள்கைகள் காங்கிரஸ் தலைவர்களை எவ்வளவு தூரம் நடுங்கச் செய்துவிட்டது என்று தெரியவேண்டுமானால் காங்கிரஸ் வேலைத் திட்டம் தயாரித்து இருப்பதில் அவர்கள் காட்டியுள்ள தந்திரங்களும், அத் தீர்மானத்தை நிறைவேற்று கையில் மகாசபையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட விபரங்களும்,
குடி அரசு - 19310) 200
அதிலும் மிகுதியாக சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவர்களே கலந்து இருந்ததும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். மேல்கண்ட வேலைத்
திட்டத் தீர்மானங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டதா? தந்திரதிற்காக அதாவது பாமர மக்களை ஏமாற்ற செய்யப்பட்டதா என்கின்ற விஷயம் ஒரு
புறம் இருந்தாலும், அத்திட்டங்கள் கொண்ட கொள்கைகளுக்கு நாட்டில் செல்வாக்கு இருப்பதை அத்தலைவர்கள் உணர்ந்து இருக்கின்றார்கள் என்பதை மாத்திரம் நன்றாய் வெளிப்படுத்தி இருக்கின்றது.
அதாவது, இனி அரசியல் சீர்திருத்த விதிகளை (கான்ஸ்டிடியூ ஷை! மாத்திரம் சொல்லி பாமரமக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து விட்டார்கள். அன்றியும் “கள்ளை நிறுத்திவிடுவோம்” “வரியை குறைத்து விடுவோம்” என்பது போன்ற தூண்டிமுள்ளில் குத்தும் புழு போன்ற சில: விஷயங்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்றும், இனியும் சற்று முற்போக் கான கொள்கைகளை வெளிப்படையாய் எடுத்துச்செல்ல வேண்டிய காலம் வந்து விட்டது என்பதையும் உணர்ந்து விட்டார்கள்.
ஆகவே, அதற்கு தகுந்தபடி தந்திரம் செய்து சில திட்டங்களை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். என்றாலும், அதை நன்றாய்க் கவனித்துப்:
பார்த்தால் அதில் ஒரு இடத்திலாவது சோம்பேரிகளுடைய ஆதிக்கத்தை அதாவது பார்ப்பனீய ஆதிக்கத்தை சிறிதும் விட்டுக்கொடுத்ததாக காணப். படவேயில்லை என்பதும் அது பாமரமக்களை ஏமாற்ற என்று வெகு தந்திர மாகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் நன்றாய் விளங்கும்.
அதாவது, இனி வரப்போகும் சுயராஜ்யத்தில் பாமர மக்களுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவேண்டிய காலம் வந்து விட்டதால், அதற்காக இத்திட்டம் போடப்பட்டதென்பதாக ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதன் தலைப்பின் கீழாகவே 20 திட்டங்கள் வகுக்கப்பட்டிருக் கின்றன.
அவற்றுள், முதல் பிரிவில் 3-வது உள் பிரிவு ஒவ்வொருவனுடைய மனசாகஷிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டியதாகவும், தங்கள் தங்கள் இஷ்டப்படி மதத்தைக் கொண்டாடலாம் என்றும் இருப்பதானது மிக்க தந்திர
மும் மோசடியுமானதாகும். எப்படியெனில் இந்தத் தீர்மான வாசகத்தின் பல ணாய் நாட்டின் எப்பேர்ப்பட்ட முற்போக்கையும் தடைப்படுத்தி விடமுடியும். பொது காரியங்கள் என்பதில் ஒவ்வொருவருடைய மனசாட்சியும் மதிக்கப் படுவது அபாயமான பலனையே கொடுக்கும். உதாரணமாக, சாரதா சட்டமும், மதச் செலவுகளும் கோவில் செலவுகளும் பகுத்தறிவுக்கு விரோதமான தென்றும், நாட்டுக்கும் மனித சமூக நன்மைக்கும் கெடுதியென்றும் தெரிந்தா
லும், திரு.சத்தியமூர்த்தி திரு.எம். கே. ஆச்சாரி போன்றவர்கள் மனசாட்சியை மதிப்பதற்காக அவைகள் தடுக்கபடக் கூடாதென்றே ஏற்படுகின்றது. தவிர
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மேற்படி முதல் பிரிவிலேயே 4-வது உட்பிரிவானது கல்வியையும், அறிவையும் பாழாக்கப் போதுமானதாக இருக்கின்றது. அதாவது, வித்தை பாஷை, சிறுவகுப்பினர் எழுத்துக்கள் நூல்கள் ஆகியவைகளுக்குப் பாது காப்பு அளிப்பது என்பது. இதனால் புராணங்கள், சாஸ்த்திரங்கள், சமஸ் கிருதம் முதலிய பயனற்றவைகளும் பாஷைகளும் காப்டாற்றப்படவேண்டும் என்பதும், மூடநம்பிக்கையை மக்களிடம் இருந்து போக்காமல், காப்பாற்ற வேண்டும் என்பதுமாகும். இதுவே இந்தப் பிரிவின் உண்மையான உத்தேச உள் அர்த்தமாகவும் இருக்கின்றது.
தவிர 6-வது உள் பிரிவு வெளிக்கு நல்லதுபோல் காணப்பட்டாலும் சில வகுப்பாருக்குச் சம சந்தர்ப்பமும், சம உரிமையும் கிடைக்கச் செய்யா மல் தடுக்க உபயோகிக்கவும் உதவும்.
ஏழாவது உள் பிரிவானது கோவில்கள் என்பவற்றின் மூலமாக மக்களுக்குள் ஜாதிப்பிரிவினையும் உயர்வு தாழ்வு தத்துவமும் காப்பாற்றப் பட்டு வருவதை ஒழிக்க இடமில்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டி ருக்கின்றது. தீர்மானத்தில் உள்ளபடியான சட்டம் இப்போதும் இருந்துதான் வருகின்றது. ஆனால் உண்மையில் உள்ள வித்தியாசத்தையும், உயர்வு தாழ்வு தன்மையும் அழிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்கின்ற தத்துவம் இதில் அடங்கி இருக்கின்றது. இந்த உண்மையை திரு. சத்தியமூர்த்தி ஐயர் இத் தீர்மானம் வந்த போதே தனது பேச்சில் தன்னை அறியாமலே காட்டி யிருக்கிறார்.
2-வது பிரிவில் சர்க்கார் மதவிஷயத்தில் நடு நிலைமை வகிக்க வேண்டு மென்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இதனால் இன்று இந்த நாட்டிலுள்ள ஜாதி மத வித்தியாசங்கள் நிரந்தரமாய் இருந்து கொண்டு அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற தொல்லைகளும், மக்களின் கொடுமைகளும் நிலையாகவே இருக்கும்.
அன்றியும் இந்த நிலையானது மக்களின் முட்டாள்தனத்தைக் கொண்டு, ஆளைத்தூக்கி ஆள்மேலே போட்டு, சோம்பேரி வேட்டை ஆடு பவர்களுக்கு அனுகூலமாகவே இருந்துவரும்.
3-வது தீர்மானம் தொழிலாளர்களைப் பற்றியது. அதாவது:-
“தொழிலாளர்களுடைய காலட்சேபத்திற்குக் கட்டக்கூடிய சம்பளம் ஒரு வரையறைக்கு உட்பட்ட வேலை காலம், செளகரியமான வேலை நிலைமை, விருதாப்பியம், வியாதி காலம், வேலை இல்லாத காலம் ஆகிய வைகளுக்குப் பாதுகாப்பு” என்று இருக்கின்றது.
குடி அரசு - 19310) 202
இதானது தொழிலாளி, முதலாளி என்பதாக இரண்டு ஜாதிகள் பிரிந்து தொழிலாளிகளை நிரந்திரமாய் அவர்களது ஆயுட்காலம் எல்லாமும் அவர். களது சந்ததிகள் காலமும் தொழிலாளர்களாகவே இருக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் போலவே இருக்கின்றது. அதாவது தொழிலாளர்களுக்கு ஜீவனத் துக்குப் போதுமான கூலி இவ்வளவென்று திட்டம் செய்வதும், முதலாளிகள். கணக்கு வழக்கின்றி கொள்ளை அடித்துப் பொருள் சேர்க்க வழி செய்வதும் என்றால், இது மிகவும் மோசமான காரியமாகும். தொழிலாளிகளுக்கு அவர் களுக்கு வேண்டிய ஜீவனச் செலவு போக முதலாளிகளுடைய லாபத்திலும் ஒருபங்கு இருக்க வேண்டியது நியாயமாகும்.
ஏனெனில், தொழிலாளிகள் தங்களுடைய சம்பாதனையில் தங்கள் ஜீவனச் செலவு போக காலக் கிரமத்தில் பணம் மீத்து வைத்து அவர்களும் ஒரு காலத்தில் முதலாளிகளாகத் தாராளமாய் வழியை திறந்து விட்டு விட வேண்டும். அப்படிக் கில்லாமல் செய்திருப்பதானது இதுவும் ஒரு வித வருணாசிரமதர்மமேயாகும். அதாவது தொழிலாளி மகன் தொழிலாளி யாகவே இருக்கச் செய்வ தாகும். ஆதலால் இந்த பிரிவு தொழிலாளிகளை ஏமாற்றத்தான் உதவுமே தவிர அவர்களை முன்னுக்குக் கொண்டு வர
முடியாது.
9-வது பிரிவில் பூமியில் இருந்து குறிப்பிட்ட ஒரு வருமானத்திற்கு மேல்பட்ட வரும்படி கிடைத்தால் “வருமான வரி விதித்தல்” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதுவும் ஏமாற்றுத் தீர்மானமேயாகும். இதனால். யாருக்கும் எவ்விதப் பயனும் ஏற்படாது.
பூமிக்குடையவர்களும், அதிக வெள்ளாமை செய்ய முயற்சிக்கமாட் டார்கள். ஒரு சமயம் தானாகவே தாராளமாய் விளைந்தாலும் வீண்செலவு
கள் மூலம் விவசாயக்கணக்கு, வரவுச்செலவை சரி கட்டிக்காட்டி, ஆதாயம் காட்டாமல் செய்து விடுவார்கள். ஆகையால் நாம் முன் ஒரு சமயம் எழுதியபடி பூமி உடையவர்களுக்கு இத்தனை ஏக்கரா பூமி உடையவருக்கு ஏக்கரா ஒன்றுக்கு இன்ன விகிதம் தீர்வை என்று வரி விதித்தால் செலவுக்கு மேல்பட்டு மீதி கிடைக்கக்கூடியவனுக்கே அதிகவரி ஏற்படும். பூமிகளும் ஒரே கையில் போய் சேர்ந்து விடாமல் பலபேர்கள் அனுபவிக்கவும் அனு கூலமாய் இருக்கும். இதனால் ஏழைகளுக்கு எவ்வித தொந்தரவும் இருக்காது. ஆதலால் இந்த பிரிவு சிறிதும் பயனற்றதேயாகும்.
மற்றும் இந்தப்படியே அநேகமாய் ஒவ்வொரு பிரிவிலும் பயனற்ற. தன்மைகள் அடங்கிக் கிடப்பதுடன்,சமய சமூக சமுதாயத்துறைகளில் சிறிதும் கை வைக்காமல் ஜாக்கிரதையாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே இத்திட்டங்கள் ஏமாற்றும் தன்மையுடன் பாமர மக்களைக் தங்கள் பக்கம் இழுக்கச் செய்த சூட்சித் தன்மையும் பொருந்தினவையாகு மென்றுதான் சொல்லுவோம். ஜாதிமத விஷயம், புராணவிஷயம், மத விஷயமான
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அவரவர்கள் மனசாக்ஷி விஷயம் அதாவது மூடநம்பிக்கைகள் விஷயம், தொழிலாளிகள் நிலைமை, பணக்காரர்கள் நிலைமை, முதலியவைகளில் இப்போது நம் நாட்டில் நடை முறையில் இருப்பதைவிட எவ்வித மாறுதலும் காங்கிரஸ்காரர்கள் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்யப் போவதாய்ச் சொல்லும் இந்த புதிய அரசியல் திட்டத்தால் ஏற்பட்டுவிடும் என்றோ, ஏற்படுத்த ஆசை கொண்டு இத்திட்டங்களை வகுத்தார்கள் என்றோ நம்மால் சொல்லமுடியவில்லை.
ஆகவே, சமதர்மத்திலும், பொதுவுடமைக் கொள்கையிலும் நம்பிக் கையும், ஆர்வமும் உள்ள வாலிபர்கள் இதைக்கண்டு ஏமாந்து விடாமல் திட்டமான கொள்கைகளை வெளிப்படையாக விளக்கி அவற்றை தயவு தாட்சண்யம் இல்லாமல் வலியுருத்தி, அமுலில் கொண்டுவர பாடுபட வேண்டியதே அவர்களது கடமையாகும்.
சாதாரணமாகவே இந்தியாவைப் போல, பல வழிகளிலும் முதலாளி. களாலும் வைதீகர்களாலும் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் எல்லாம் விடுதலைப் பெற்று முன்னுக்கு வந்த சரித்திரங்களைப் பார்த்தால் அவை எதுவும் இம்மாதிரி ஏமாற்றமான தீர்மானங்களால் விடுதலை அடைந்து விடவில்லை என்பதும், சமய சமூக சமுதாயக் கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட்டதான புரட்சியாலேயே திடீரென மாறுதலையடைந்து, விடுதலை பெற்றன என்பதும் விளங்கும். ஆனால் இந்தியாவுக்கு வரப்போகின்ற சுயராஜியத்தில் வேறு வழிகளில் சிறிது முற்போக்கிற்கு இடமிருந்தாலும், இவ்விதக்காரியங்கள் வெகு ஜாக்கிரதையாகவே நழுவ விடப்பட்டிருக் கிறதுடன், இதை மக்கள் அறியாமல் இருக்கத் தந்திரங்களும் செய்யப் பட்டிருக்கின்றன. ஆகவே இந்த மாதிரியான சுயராஜியம் வருவதால் இந்தியாவின் பொதுமக்களாகிய 100க்கு 90 வீதமான மக்களுக்கு எந்த விதத்தில் மாறுதலோ,புதியநன்மையோ இருக்கின்றது என்று கேட் கின்றோம்.
இன்றைய தினம் முதலாளி தன்மைக்கு மாத்திரம் உடையவர் களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவானது, பூரண சுயேச்சைக் கிளர்ச்சியின் பயனாய் விடுபட்டு முதலாளித் தன்மையும் வருணாச்சிரம வைதீகத் தன்மை
யும் உள்ள கூட்டத்தார் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப் படுவதாக இருக்கின்றதே தவிர வேறு எவ்வித நன்மையும் மாறுதலும் காணப்படுவதாய் இல்லை. முதலாளித் தன்மை அடியோடு அழிபட வேண்டும் என்பதில் நமக்கு ஒரு
சிறிதும் ஆக்ஷபனை கிடையாது. ஆனால் ஒன்றில் இருந்து விடுபட்டு, மறுபடியும் இரண்டிலும்போய் மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமான காரியமாகும். திரு. காந்தியவர்கள் தன்னை முதலாளி கூட்டத்தவர் அல்ல என்று சொல்லக்கூடுமானாலும் அவர் முதலாளி கூட்டத்தாருடைய தத்துப்புத்திரர் என்பதை ஒப்புக் கொண்டு தானாக வேண்டும். இரண்டாவதான வருணாச்சிரம வைதீக விஷயத்திலோ
குடி அரசு - 19310) 204
திரு. காந்தி அவர்கள்தானே அவைகளில் ஒரு உருவாக இருக்கின்றவர். ஆகவே முதலாளிகளின் தத்துபுத்திரரும், வருணாச்சிரம தர்மியும் இராம இராஜியத்தை விரும்பும் புராண மரியாதைக்காரரும், ஒரு சரியான “ஹிந்து” வுமான திரு. காந்தி அவர்கள் பயணத்தில் இதற்குமேல் நாம் வேறு என்ன எதிர்பாக்க முடியும்?
குடி அரசு - தலையங்கம் - 05.04.1931
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பாறாட்௫ுகனும் வாழ்த்தும்
சென்ற வாரம் நாம் திருச்சி முனிசிபல் சபையார் மக்களுக்குப் புதிதாக சில லைசென்சு வரிகள் விதிக்கப்பட்டதில் பொது ஜனங்களுக்குள் இருந்த அதிருப்தியைக் குறிப்பிட்டு விட்டு, எதிரிகள் பரிகாசம் செய்வார்களே என்று சிறிதும் பயப்படாமல் முனிசிபல் சபையார் தைரியமாய் முன்வந்துப் புதிய வரிகளை குறைத்துவிடவேண்டும் என்று தெரிவித்துக்கொண்டோம்.
அதுபோலவே திருச்சி முனிசிபல் கவுன்சிலர் அவர்களும், சேர்மென் அவர்களும் தைரியமாய் முன்வந்து அதிகமாகப் போட்ட வரிகளைக் குறைத்து விட்டதாக சேதி எட்டி இருக்கின்றது. இது அவர்களுக்கு மிக்க பெருமையும் கெளரவமுமான காரியமாகும். இதற்காகத் திருச்சி பொது ஜனங் களைப் பாராட்டுவதுடன் கவுன்சிலர்களையும், சேர்மென் அவர்களை யும் நாம் மனமார வாழ்த்துகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.04.1931
குடி அரசு - 19310) 206
ஓர் சம்பாஷணை
எதார்த்த வாதியும், கிறிஸ்துஹக போதகரும் பேசியது
எதார்த்தவாதி : ஐயா! தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள். யாரால், எப்பொழுது எழுதப்பட்டது.
போதகர் : பழய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்டபல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீஷர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.
எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்துக்குப்: பயப்படாதவர்கள் தானே?
போதகர் : இல்லை சார்; எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படு கிறவர்கள்தான்.
எதா : நல்லது, அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே ?
போத : ஆம், வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராட் சியாளர் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்த தாகக் குறை கூறுவார்கள்.
எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக் கலாம்.
போத : அப்படியானால் (ஆபிராம்) ஆப்பிரகாமைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தென்ன?
எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசி தானே?
போத: ஆம் வாஸ்தவந்தான். ஆதியாகமம் 2-ம் அதிகாரம் 7ம் வசனத்
தில் (கடவுளே!) தேவனே... அவன் ஒரு தீர்க்கதரிசி... என்பதாய்ச் சொல்லி யிருக்கிறார்.
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
எதா: அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ம் அதிகாரம் 11ம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும்... பொருள்படப் பேசியதைத் தாங்கள் வாசித்ததுண்டா?
போத: அ ஆ ஆம்வாசித்ததுண்டு. ஆனால், அவன் மனைவி ச.ஆ.
சாராள் அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.
எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து
தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?'
போத : சார் அது பழைய எர்ப்பாட்டில் உள்ளது. புதிய ஏர்ப்பாட்டில்:
உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எதா : சரி ஐயா, நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர்களாலேதானே
உங்கள் பைபிள் எழுதப்பட்டது.
போத: தெய்வமில்லாத காலமிது என்பதாய் முனு முனுத்துக் கொண்டு
நழுவி விடுகிறார் .
எதா : பைபிள் காலத்தில் தெய்வப்பயமில்லாத இடமிருந்தது. இப் பொழுது காலம் வந்துவிட்டது என்பது உங்கள் அநுபவம். ஆனால் எங்க ளுக்குத் தெய்வ கவலை யில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு,
குடி அரசு - உரையாடல் - 05.04.1931
குடி அரசு - 19310) 208
இந்தியாவின் மொத்த ஜனத்தொகை 1931ம் வருஷத்திய கணக்குப்படி 351500000 முப்பத்தைந்து கோடியே பதினைந்து லக்ஷம் 1921ம் வருஷத்தில் 320900000 முப்பத்திரண்டு கோடியே ஒன்பது லக்ஷம். ஆகவே இந்த பத்து வருஷத்தில் 3கோடிக்குமேல்பட்ட ஜனங்கள் பெருகி இருக்கிறார்கள். சராசரி நூற்றுக்குப் பத்துப் பேர்களுக்கு மேலாகவே அதிகரித்திருக்கின் றார்கள்.
ஒரு தேசம் அதிலும் கைத்தொழில் வளப்பமில்லாத தேசமாகிய அதாவது கைராட்டினத்தைக்கொண்டு பிழைக்கவேண்டிய நமது இந்தியா வானது, தனது ஜனத்தொகையை இப்படி ஏற்றிக்கொண்டே போனால் பிறகு வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும், நோயும் ஏற்படாமல் வேறு என்ன செய்யமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அன்னிய ஆட்சி யை நம் நாட்டைவிட்டுத் துரத்தி விட்டதினாலேயே ஜன விருத்தி குறைந்து விடும் என்று சொல்லமுடியாது. ஆகையால் பஞ்சத்தை ஒழிக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், அன்னியநாட்டுச் சாமான் களை பஹிஷ்கரிப்பது என்பதைவிட மக்கள் அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் தடுப்பதற்கு ஆதாரமான கர்ப்பத்தடை முறையை கையாள வேண்டியதே முக்கியமான வேலையாகும். ஆகையால் உண்மையான தேச பக்தர்களும், தேசியவாதிகளும், இந்தக் காரியத்தைப் பிரசாரம் செய்வதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை தேடுவார்களாக.
குடி அரசு - கட்டுரை - 05.04.1931
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தூத்துக்குழ மகாநா௫
சுயமரியாதை இயக்க சம்மந்தமான மகாநாடுகளும், பிரசாரக் கூட்டங் களும் தமிழ் நாட்டில் எவ்வளவு மும்மரமாக நடைபெற்று வருகின்றது என்பதோடு அதன் கொள்கைகள் நடைமுறையில் நடந்து எவ்வளவு பயன் அளித்து வருகின்றதென்பதைப்பற்றி நாம் யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.
இவ்வியக்கப் பிரசாரத்தில் ஒரு பாகம் காங்கிரசையும், காந்தீயத் தையும், தாக்கியும், உப்புச் சத்தியாக்கிரகத்தை எதிர்த்தும் வந்ததாகும் என்பதை நாம் யாரும் எடுத்துக்காட்டவேண்டிய அவசியமில்லாமலே ஒப்புக் கொள்ளுகிறோம். அதோடு மாத்திரமல்லாமல் ( நாம் சென்ற வருஷ- ஆரம்பத்தில் தெரிவித்தது போலவே ) இதன் பயனாய் நம்மீது பலருக்கு
அதிருப்தியும், துவேஷமும், கோபமும் ஏற்பட்டு நமக்கும், நமது பத்திரிகைக் கும் விரோதமாகப் பலவித எதிர்ப் பிரசாரங்கள் செய்ய நேர்ந்ததும், அதனால் பல சில்லரைச் சங்கடங்கள் விளைந்ததும் பலர் அறிந்ததேயாகும். எப்படி யிருந்தபோதிலும் ஆரம்பத்தில் நாம் வெளிப்படுத்திய கொள்கைகளில்
சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், அவை சம்மந்தமான நமது அபிப்பி ராயத்தை நாம் ஒண்டியாய் இருந்தபோதிலும் சிறிதும் மறைக்காமலும் நமக்குச் சரி என்றுபட்டதை யெல்லாம், பல நண்பர்களும் நமது நன்மையில் பற்றுள்ளவர்களும் தடுத்தும் தாராளமாய் எழுதிக் கொண்டும், பிரசாரம் செய்து கொண்டுமே வந்தோம். அதன் பலன் என்ன ஆயிற்று என்பதைப்
பற்றி அறிய விரும்புகின்றவர்கள் காங்கிரசின் நடவடிக்கைகளையும், காங்கிரசின் சென்ற வருஷ- நடவடிக்கையின் அறிக்கையையும் கவனித்துப்
பார்த்தால் தாராளமாய் விளங்கிவிடும்.
சுமார் 4 வருஷங்களுக்குமுன்பாக திரு.காந்தியவர்கள் தமிழ் நாட்டில்
கதர் பண்டுக்குப் பணம் வசூலிக்க வந்த சமயத்திலும் நாம் ஒருவரேதான் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்து பண வசூலைக் கண்டித்துவந்தோம். மற்ற பத்திரிகைகளும், தேசீயவாதிகளும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் உள்பட அநேகர் அதை ஆதரித்ததுடன் பணமும் உதவிவந்ததோடு நம்மை யும் கண்டித்து வந்தார்கள். அதனால் எவ்வித பலமான பயன் ஏற்படா விட்டாலும். ஒரு சிறு அளவுக்காவது அவரது வசூல் பாதிக்கப்பட்டது என்பதைப் பலரும் ஒப்புக்கொண்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் அது
குடி அரசு - 19310) 210
நடந்த கொஞ்ச நாளிலேயே அதற்குப் பணம் கொடுத்தவர்கள் உள்பட அநேகர் அக்காரியத்தில் தாங்கள் நடந்து கொண்டதற்கும், பணம் கொடுத்த
தற்கும் வருந்தினார்கள் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம் வேண்டு மானால் அதே திரு.காந்தியவர்கள் இப்போது தமிழ் நாட்டில் பணவசூலுக்கு வந்தால் என்ன ஆகுமென்பதை நினைத் தால் விளங்கும்.
அதுபோலவே உப்புச் சத்தியாக்கிரத்தைப் பற்றியும் நாம் கண்டிக் கும்போது பலர் நம்மீது வருத்தப்பட்டிருந்தாலும் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதையும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட கஷ்டம், நஷ்டம் ஆகியவை எவ்வளவு என்பதைக் கவனித்தவர்களுக்கு ஒருவாறு
விளங்கி இருக்கும்.
கோயில், குளம் உற்சவம் முதலியவைகள் எவ்வளவு அநாகரி கமானதும், ஒழுக்கக் குறைவானதும், அறிவற்றதும், நஷ்டமும் நாட்டுக்குக் கேடும் உள்ளதுமாயிருந்தாலும் பூசாரிகளும், புரோகிதர்களும், புராணக் காரரும், புலவர்களும், புஸ்தகக் கடைகாரர்களும் உள்ளவரை எப்படி அவை ஒழியாதோ, ஒழிப்பதும் மிக்கக்கஷ்டமோ அதுபோலவே காங்கிரசும் காந்திய
மும், கதரும், தேசீயம் சுயராஜியம் என்பவைகளும் எவ்வளவு பித்தலாட்ட மானதானாலும், நாட்டு முற்போக்கிற்கு விரோதமானதானாலும், சுதந்திரத்
திற்கும், சமதர்மத்திற்கும் முட்டுக்கட்டை போடுவதானாலும் பலரின் சுயநல: வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்விற்கும் மாத்திரம் பயன் படுவதானாலும், பார்ப்பனரும், படித்தவர்களும், வக்கீல்களும் பதவி, பட்டம் பெற ஆசைப் பட்டவர்களும், பத்திரிகை பிழைப்புக்காரர்களும், “தேச பக்தர்களும்” “தேசீய வீரர்களும்” கதர் வியாபாரிகளும், கதர் தொண்டர் களும் உள்ளவரை நிலைத்துத்தான் தீரும். அதை ஒழிப்பதும் சுலபமான காரியமல்ல. ஆகை
யால், எதிர் பிரசார அளவுக்கு உடனே பயன் எதிர் பார்க்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதனால் நமக்கு கஷ்டமும் உண்டாகலாம் என்பதும் நமது அபிப்பிராயமாகும். ஆன போதிலும் நம்மைப்பொருத்தவரை நாம் தைரியத்தை விட வில்லை, அபிப்பிராயங்களில் சந்தேகமில்லை. நம்பிக்கையில் குறைவேற் படவில்லை எதிற்கும் முயற்சியையும் ஊக்கத்தையும் சிறிதும் தளர்த்திக் கொள்ளவில்லை. ஒரு பத்து வருஷம் பொருத்தாவது நமதபிப்பிராயத்தைச்
சரி யென்று மக்கள் ஒப்புக்கொள்ளுவார்கள் என்கின்ற தைரியத்துடனேயே நமது வேலையைச் செய்து வருகின்றோம்.
இன்றையதினம் கடவுள் அவதாரம், லோககுரு என்கின்ற சங்கராச் சாரியார்கள் படுகின்ற பாட்டுக்கும், பண்டார சன்னதிகள் மகாசன்னிதானங்.
கள் என்னும் மடாதிபதிகள் படுகின்றபாட்டையும் பார்த்தால் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், கடவுள், கடவுள் அவதாரம், ஆழ்வார், நாயன்மார்கள் என்கின்றவைகள் படுகின்றபாட்டைப்பார்த்தால் அவை
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
களைவிட எத்தனையோ பங்கு தாழ்ந்ததாய் மக்களால் மதிக்கப்படும் காங்கி
ரசும், காந்தீயமும், கதரும் ஒரு காலத்தில் சிரிப்பாய் சிறிக்கப்படும் என்பதில் யாருக்கும் ஆக்ஷபணையோ பயமோ வேண்டியதில்லை என்று தைரிய
மாய்ச் சொல்லலாம் ஏனெனில் முன் சொல்லப்பட்ட காரியங்களில் நம்பிக்கை
யும், பக்தியும், பிழைப்புக்குமார்க்கமும் கொண்டவர்களாலேயே தான் பின் சொல்லப்பட்டவைகளிலும் நம்பிக்கையையும் பக்தியையும் பிழைப்புக்கு மார்க்கமும் கொள்ளப்பட்டனவாக இருக்கின்றன. ஆகவே அவர்களது புத்தி இரண்டிலும் ஒன்று போலவே தான் சொல்ல முடியும் என்பது விஞ்ஞான தத்துவமான உண்மையாகும்.ஆகை யால் ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்கு பகுத்தறிவை உண்டாக்கி விட்டோமேயானால் பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக்கூடியவர்களாகி விடுவார்கள் என்ப தோடு இந்த தொண்டைத்தான் சுயமரியாதை இயக்கம் செய்து வருகின்றது என்றும் சொல்லுகின்றோம். இதற்காகவே ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் செய்யப்பட்டும் வருகின்றன.
அப்படிச் செய்யப்படுபவைகளில், இதுவரை நடந்து வந்த மகாநாடு களில் தூத்துக்குடியில் நடந்த திருநெல்வேலி ஜில்லா 4 வது சுயமரியாதை மகாநாட்டை ஒரு முக்கியமான மகாநாடு என்றே சொல்லலாம். எதனா லெனில் அது கூட்டப்பட்ட இடம், அதன் தலைவர் அங்கு நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் ஆகியவைகளினாலேயாகும். திருநெல்வேலி ஜில்லா தான் முதல்முதல் சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டியது. அவற்றுள் தூத்துக்குடியானது மிகவும் உணர்ச்சியுள்ள ஊராகும். அதன் தலைவர் சுய மரியாதை இயக்கத்தின் உருவமாய் விளங்குபவர். தீர்மானங்களோ சுய மரியாதை இயக்கத்தின் மிகவும் உருதியும் தைரியமும் கொண்ட உண்மை தோற்றமாகும். மகாநாட்டுத் தலைவர் உபன்யாசமானது தைரியமாக உண்மை களை வெளிப்படுத்திய ஒரு முக்கிய தஸ்தாவேஜு என்றே சொல்லலாம்.
அதாவது, தலைவர் தமது உபந்யாசத்தில் சொல்லி இருப்பதில் காணப்படுபவைகளாவது,
“இந்தியமக்களின் அடிமை நிலைக்கு அவர்களது குருட்டுப் பழக்க வழக்கங்களே காரணம். இந்து முஸ்லீம் சச்சரவுகளுக்கு நமது மகாத்மாதான் காரணம். ஏனெனில் மதப்பூசல்களை ஒழிப்பதற்கு (இந்துக்களும், முஸ்லீம் களும்) அவரவர்கள் மதக்கட்டளைப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் மேலும் மேலும் விர்த்தி செய்து வளர்க்கவேண்டுமென்று மகாத்மா காந்தி சொல்லுகிறார்.
ஆனால் அவர் சொல்லுகின்றபடி இந்து மதமும் இஸ்லாம் மதமும் இனியும் மேலும் மேலும் வளர்க்கப்பட்டால் கான்பூரில் நடந்த கலகமே தூத்துக்குடியிலும் நடைபெறும் என்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை.
குடி அரசு - 19310) 212
பாம்பையும் மரத்தையும் வணங்கி பேயையும் பிசாசையும் கள்ளும் சாராயமும்வைத்து பூசித்து ஆண் பெண் குறிகளை சிலையாக பூசனை செய்து அடையாளமாக நெற்றியில் தரித்துக்கொள்வதாய் இருக்கின்ற மதம் எந்த மதம் என்று கேட்கின்றேன்.
இந்து மதத்தில் தேவ அசுரர் சண்டையும் கிறிஸ்தவர் நடத்திய குரூசேட் சண்டையும், இஸ்லாம் மதத்தினர் நடத்திய ஜிஹாத் சண்டையும் ( மனித சமூகத்தில் அன்பை விளைவித்தவைகள் ஆகுமா குரோதத்தையே விளைவித்தன.
கடவுள் என்பது ஒரு விளையாட்டு சாமான். சுவர்க்கம் மோட்சம் என்பவை தின்பண்டங்கள். நரகம் என்பது ஒரு பூச்சாண்டி. இம்மாதிரி கற்பனைகள் எல்லா மதத்தையுமே பற்றிக் கொண்டிருக்கின்றன.
சுயமரியாதை இயக்கம் எந்த மதத்தையும் தனிப்பட்டு தாக்கவில்லை. மதம் எல்லாம் ஒருங்கே அழிந்து போனால் மாத்திரம் மனித சமூகம் முன்னேரும் என்று சொல்லுகிறது. ஆனால் ஹிந்துமதம் மிகவும் மோச மானது. அது மனிதனை மிருகப்பிராயத்தில் வைத்திருக்கிறது.
திலகருக்கும் தாசருக்கும் இறுதிச்சடங்குகள் வெகு ஆர்பாட்டமாய். செய்யப்பட்டன. மோதிலால்நேரு அவர்கள் காயத்திரி மந்திரம் ராமபஜனை முதலியவை நடத்தி மோட்சத்திற்கு அனுப்பப்பட்டார். அவரது குமாரர் தகப்பனார் அஸ்தியை பிரயாகை ஆற்றில்விட்டார்.
இவைகள் நடத்தப்பட முடியாத கோடிக்கணக்கான மக்கள் நரகத்
திற்கு போகின்றவர்களா என்று கேட்கின்றேன்.
மகாத்மாக்களும் தலைவர்களுமே இக்கதியானால் பாமர மக்கள் கதி என்ன?
கர்மாவை நம்பினவன் கடைத்தேரமாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
மூட எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் அகற்றவே சுயமரியாதை இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
தத்துவார்த்தம் ஓவியம் என்கின்ற சாக்கால் கோயில் கொடுமைகளும் புராண ஆபாசங்களும் நிலைத்திருக்கின்றன.
கொல்லாவிரதம் பூண்டவர் ( மகாத்மா ) கீதைக்கு தத்துவார்த்தம் சொல்லி புகழலாம். உயிர்கொலைசெய்த யாகத்தை மறியல் செய்த பெண்: மணியை கொன்றவனும், பார்ப்பான் செய்யும் தபசை ஒரு “சூத்திரன்” செய்த தற்குமாக “சூத்திரனைக் "கொன்றவனும் ஆன ஒரு அரசனைஇராமாயணம் புகழ்கின்றது.
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இத்தகைய நூல்களும் பாத்திரங்களும் காவியத்திற்கும் ஓவியத்
திற்கும் ஆதாரமாய் இருந்தால் அத்தகைய காவியமும் ஓவியமும் அழிவதே மேல்.
அமெரிக்காவில் நீகிரோவர் துயரத்திற்கு எந்த நிற இருமாப்பு காரணமோ அதே நிற இருமாப்பு தான் நமது நாட்டுத் தீண்டாமைக்கு காரண மாயிருக்கிறது.
இது ஆரியர் ஆதிகாலத்தில் நமது நாட்டில் குடியேரியபோது பழங் குடிமக்களை அசுரர் ராக்ஷதர், மிலேச்சர், பஞ்சமர், சூத்திரர் என்று இழிவு படுத்தக் காரணமாய் இருந்தது.
தீண்டாமைஎன்பது ஏணிமரப்படி போல் இந்த நாட்டு மக்கள். ஒவ்வொருவரையும் பீடித்திருக்கின்றது.
தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்று பேசும் இந்திய தலைவர்கள். வருணாச்சிரம தர்மத்தை ஒழிக்க ஒருப்படுவதில்லை.
தீண்டப்படாதாரை விட பெண்கள் கேவலமாய் நடத்தப்படுகின் றார்கள். அவர்களுக்கு சொத்துரிமை இல்லை. அவர்கள் மற்றவர்களின் சொத்தாயிருக்கின்றார்கள். ஆண்களின் உபயோகத்திற்கு உண்டாக்கப்பட்ட வர்கள் என்றுகருதப்படுகிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தி வைப்ப தற்கு ஏற்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மணம் என்று பெயர். பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் இச்சடங்கு ஒழியவேண்டும். ஆணும் பெண்ணும் தங்கள் முழு சம்மதத்தினால் கூடி வாழவேண்டும், கூடியபிறகு இஷ்டமில்லாவிட்டால் பிரிந்துகொள்ள வசதி வேண்டும்.
மக்கள் தனித்தனியாய் வேலை செய்வது அற்றுப்போய் கும்பல் கும்பலாய்க் கூடிவேலைசெய்ய வேண்டியதாக ஏற்பட்டன. மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி செய்த வேலைகள் மறைந்து இயந்திரங்களால். அதிக கஷ்டமில்லாமல் வேலை செய்யப்படும் செளகரியங்கள் ஏற்பட்ட காலத்தில் இந்திய காங்கிரஸ் ஒவ்வொருவனும் தனக்குவேண்டிய துணியை
யும், உப்பையும் தன்னையே செய்து கொள்ளும்படி சொல்லுவது தேச முன்னேற்றத்திற்கு ஒவ்வாத காரியமாகும்”.
என்பதாகவும் மற்றும் பல விஷயங்களை பலதத்துவ ஆராய்ச்சியுடன் பேசியிருக்கின்றார். இப்படி பேசியிருக்கும்,
திரு. ராமநாதன் அவர்கள் வைதீக ஒத்துழையாதார் கோஷ்டியில் இருந்தவர் என்பதோடு திரு. காந்தி அவர்களின் நன்நம்பிக்கையைப் பெற்ற பிரதம சீடர்களின் ஒருவராய் இருந்தாரென்பதையும் வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அவரது உபன்யாசத்தைப் படித்துப் பார்க்க வேண்டுமாய். ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - 19310) 214
இவரது உபன்யாசம் முழுவதையும் கவனத்துடன் கூர்ந்து வாசித்தால்
திரு. காந்தியவர்களின் ஒவ்வொரு திட்டமும் ஆட்சேபிக்கப் படுவதுடன் அதனால் மக்களுக்கு ஏற்படும் கெடுதியும் நன்றாய் விளங்கும். இதில் எந்த அபிப்பிராயமாவது சரியான முகாந்திரம் காண்பித்து எதிர்க்கவோ கண்டிக் கவோ கூடியதாய் இருக்கின்றதா என்பதை அறிஞர்கள் ஆலோசித்துப் பார்க்க விரும்புகிறோம். சுயமரியாதை இயக்கம் காந்தீயத்தையும் காங்கிரசை
யும் கதரையும் ஆக்ஷேபிப்பதின் தத்துவமும் இதுவேயாகும்.
ஆதலால்தான் தூத்துக்குடிமகாநாட்டில் சில தீர்மானங்கள் செய்யப் படவேண்டியதாயிற்று. என்னவெனில் திரு. காந்தியவர்களிடம் (அதாவது காந்தீயத்தில்) நம்பிக்கை இல்லை என்பதாகவும், எதற்காக நம்பிக்கை இல்லை என்பதை விளக்கமாக அத்தீர்மானத்தில் விளக்கப்பட்டும் இருக்கின்றது. ஏனெனில் யாருக்காவது அத்தீர்மானத்திற்கு ஆகேஷபணை சொல்ல ஆசை இருந்தால் அவர்களுக்கு விபரம் தெரிய செளகரியம் இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே காரணங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அதென்னவெனில்
1.“மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் கையாளுவதாலும்,
2. தனது செய்கைகளுக்கும் பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லிவருவதால் ஜனங்களின் பொருப்பும் தன் நம்பிக்கையும் தன் முயற்சியும் அற்றுப் போவதாலும்,
3. வருணாச்சிரமம் ராமராஜியம் மனுஸ்மிருதி முதலிய பழய கொடுங்கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திரும்பிக் கொண்டு வர முயற்சிப்பதாலும்,
4.நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைதடை செய்து வருவதாலும் சமதர்மக் கொள்கைக்கு விரோதியாய் இருப்பதாலும் திரு. காந்தியவர் களிடத்தில் நம்பிக்கை இல்லை” என்று தீர்மானித் திருக்கின்றது.
இந்தத் தீர்மானத்தை ஆக்ஷேபிக்கின்றவர்கள் பகுத்தறிவற்றவர் களுக்கும் சுய அறிவற்றவர்களுக்கும் சுயநலக்காரர்களுக்கும் பாமர
மக்களுக்கும் நல்ல பிள்ளையாவதற்கு ஆசைப்பட்டு தந்திர புத்தியுடன் சூட்சி திறங்களுடன் இத்தீர்மானத்தைக் கண்டிக்கின்றோம் என்று சொன்னால் நாம் அதைசிறிதும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.மேலும் அதை பயங்காளித் தனம் என்று தான் சொல்லுவோம். ஏனெனில் தீர்மானத்தில் குறிப்பிட்ட குணங்கள்
திரு. காந்தியிடம் இருக்கின்றதா இல்லையா? என்றும் அக்குணங் கள் சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு முரண்பட்டதா இல்லையா என்றும் சுயமரியாதைக்காரர்கள் இக்கொள்கையுடை யவர்களிடம் நம்பிக்கை வைக்க முடியுமா யென்றும் விபரமாக காரணங் காட்டி ஆட்சேபிக்கவேண்டியது
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுய மரியாதையுடையவர்கள் கடமையாகும் என்று தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
இம்மகா நாட்டில் இத்தீர்மானம் கொண்டு வந்தவர்களின் உத்தேசமும் காரணமும் என்னவென்றால் “கராச்சி காங்கிரஸ் கொள்கைகளில் மக்கள் ஜீவாதாரவுரிமைக் கொள்கைகள் என்பவையெல்லாம் சுயமரியாதைக் கொள்கைகளே” என்றும், “இனி காங்கிரசுக்கும் காந்தீயத்திற்கும் சுய மரியாதை இயக்கத்திற்கும் வித்தியாசமேயில்லை” யென்றும், “சுயமரியாதை இயக்கக் காரர்கள் எல்லாம் காங்கிரசில் சேர்ந்துவிடலாம்” என்றும் சிலர் “சுயமரியாதை இயக்கமே தேவையில்லை” யென்றுங்கூட சொல்ல வந்த தாலும் பாமர மக்கள் இதை நம்பி ஏமாந்துபோகாமல் இருக்கவும் சரியான கொள் கைகள் காங்கிரசு. ஒப்புக்கொள்ளும் வரை காங்கிரசுக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் இடையில் வேலி யிருக்கவேண்டுமென்றும், எந்தக்காரணம் கொண்டும் சுயமரியாதை இயக்கக்காரர்கள் காங்கிரசில் கலந்துகொள்வதின் மூலம் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையென்று பாமர: மக்கள் நினைத்து ஏமாந்து போகாமல் இருக்கவேண்டும் என்கின்ற ஆசை யாலேயே காந்தீயத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள வித்தியாசங் களை எடுத்துக் காட்டவே இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகும்.
இனி மற்றொரு தீர்மானமென்னவென்றால்,
“இந்தியா உண்மையான விடுதலைபெருதவற்கு வருணாச் சிரம மதவித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், கர்மபலன், மறுப்பிறப்பு, விதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக் கையை ஒழித்து, தன்நம்பிக்கையையும் தன் முயற்சி யையும் உண்டாக்கும் படியான கொள்கைகளை மக்களுக்கு புகட்டி, பூமிக்கு உடையன் - குத்தகைக்கு உழுபவன், முதலாளி- தொழிலாளி, ஆண் - பெண், மேல் ஜாதி - கீழ்ஜாதி என்ற பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும்,சமூகவாழ்விலும், அரசியலிலும் சகலருக்கும் ஈடுபட அவகாசமும் சம அந்தஸ்தும் சம உரிமயையும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமூகத்தை திருத்தியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இம்மகாநாடு கருதுகின்றது”
என்பவைகளாகும்.
ஆகவே உண்மையான விடுதலைக்கு இந்திய மக்கள் இப்போது செய்யவேண்டிய வேலையிதுவே யாகும். இந்த வேலைத்திட்டம் காங்கிர சிலோ, காந்தீயத்திலோ கிடையாது என்பதை அறிஞர் ஒவ்வொருவரும் அறிந்தே இருப்பார்கள். காங்கிரசின் 20 திட்டங்களிலும் ஜவஹர்லாலின் பூரண சுயேச்சை திட்டத்திலும் காந்தியின் ராமராஜிய திட்டத்திலும் இவை கிடையாதென்றும் சொல்லுவோம்.
குடி அரசு - 19310) 216
சுயராஜியப் பிரசினையும் பூரண சுயேச்சை விளம்பரமும் ராம ராஜிய கோஷமும் ஒரு சில தனிப்பட்டவர்களின் பெருமைக்கோ நன்மைக்கோ மாத்திரம் என்றால் அவை சரியான திட்டங்கள்தான். அப்படிக்கில்லாமல் “இந்திய மக்கள் 35 கோடி ஜனங்களுக்காக நாங்கள் கேட்கின்றோம்” என்றால் அவைகளை நாம் ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது.அவை இந்தியாவை இன்னமும் மோசமான நிலைமைக்குதான் கொண்டு போய்
விடும்.
கர்மத்தையும், கடவுள் செயலையும் நம்புகின்றவர்களுக்குச் சுதந்திர
மும் சம தர்மமும் இல்லையென்பதை அறிவுள்ளவன் உணராமல் இருக்க மாட்டான்.
அவ்விரண்டும் வெகு நாளைக்கு முன் ஒழிக்கப்பட்டு இருந்திருக்கு மானால் இன்று சுயராஜியத்திற்கும் பூரண சுயேச்சைக்கும் நாம் யாருடைய தயவையும் எதிர்பார்க்கவேண்டியிருக்காது. “சுயராஜியமென்கின்ற செப்பிடு வித்தையை வைத்துக்கொண்டு அன்னிய நாட்டாரின் ஆக்ஷி கூடாது” என்று சொல்லுகின்றார்களே யொழிய இன்ன ஆட்சிமுறை கூடாது என்று சொல்லு வதில்லை. இது வேண்டுமென்றே சூழ்ச்சியால் மறைக்கப் பட்டிருக்கின்ற தென்றே சொல்லுவோம்.
நம்மைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட கொள்கை மக்களை ஆட்சி புரியவேண்டுமே யொழிய ஒரு குறிப்பிட்ட நாட்டார்களோ வகுப்பார்களோ, மதக்காரர்களோ ஆட்சிப்புரியவேண்டும் என்பதல்ல.பல மதம் பல ஜாதி பல சமூக அபிமானம் கொண்டமக்கள் வாழும் நாட்டில் பல மதம் பல ஜாதி பல சமூக அபிமானம் ஆகியவைகள் ஒழிகின்றவரை இவைகளில் சம்பந்தப் படாத அல்லது ஜாதி, மத சமூக வித்தியா சமோ அபிமானமுமோ இல்லாத அவைகளில் கவலையற்ற மக்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்போம். அதினாலேதான் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு ஒழிந்தால் ருஷிய அரசாங்கக் கொள்கையே இந்தியாவை ஆட்சிபுரிய வேண்டும் என்கின்றோம். அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் கிறிஸ்துவ தகராருக்கு இடமேயிருக்காது. தீண்டாமைக் கொடுமைக்கும் இடமி ருக்காது. ராமராஜியத்தைப் பற்றிய பேச்சே இருக்காது. தகப்பன் எலும்பைக் கங்கையில் போட்டு மோட்சம் தேடிக்கொடுக்கும் செப்பிடு வித்தையும் நடக்காது. ஆகையால் அப்படிப் பட்ட ஆட்சி யோக்கியமான முறையில் சமாதானமுறையில் நமக்கு வேண்டு மானால் தூத்துக்குடி தீர்மானப்படி மக்களை தயார் செய்யவேண்டியதே முக்கிய கடமையாகும்.
நமது லட்சியம் இன்னது, தேவையின்னது என்று வெளியிடுவதில் உள்ள தந்திரமே இன்று நாம் பொதுவாழ்வில் அபிப்பிராய பேதமும், அல்லலும் பட்டுக்கொண்டு இருக்கின்றோம். இந்துக்கள் சுயராஜிய தத்துவம் இந்து மத ராஜியமாகவேண்டும் என்பதும், முஸ்லீம்களின் சுயராஜிய தத்து
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
வம் இஸ்ஸாம் ராஜியமாகவேண்டுமென்பதும் தவிர வேறு அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்று கோபுரத்தின் மீது இருந்தும் கூவுவோம். இந்த இரண்டு அந்தரார்த்தமும் இரு சமூக பாமரமக்களையும் பூச்சி புழுக்களாக்கி நசுக்கிபிழிகின்றன. ஆனால் மதவெறியால் இக்கஷ்டத்தை மக்கள் உணர: முடியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவில் உள்ள இந்து வாலிபர்களானாலும் சரி, முஸ்லீம் வாலிபர்களானாலும் சரி,மதத்தை அடியோடு மறந்தாலல்லது மனித விடுதலை கிடையாது என்கின்றோம். ஆங்கிலேயனுக்கும் மதமில்லை. அமெரிக்கனுக்கு மதம் இல்லை. பிரஞ்சியனுக்கும் மதம் இல்லை.அவர்கள். மதம் எதையும் தியாகம் செய்து உலகபோக போக்கியத்தைத் தாங்களே அனுபவிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. ருஷியாகாரனுக்கு அது கூட கிடையாது. எல்லா இன்பங்களும் எல்லா மக்களுக்கும் பொது ஆகையால் சகலத்தையும் எல்லோருக்கும் சமமாய் அனுபவிக்கவேண்டும். என்பதே அவர்கள் மதம். இதுவே உயர்ந்த எண்ணம். உயர்ந்த மதமென்று உணருங்கள். அன்பையும் சமத்துவத்தையும் உண்மை மதமாய்க் கொண்ட எவனும் இந்தக் கொள்கையை ஆட்சேபிக்கமாட்டான். அன்பும் சத்தியமும் சமத்துவமும் தான் கடவுள் என்ற, கடவுள் நம்பிக்கை கொண்ட எவனும் இதை ஆட்சேபிக்கமாட்டான். அந்தப்படி யாராவது அன்பையும் சத்தியத் தையும் சமத்துவத்தையும் கடவுள் என்றும் மதம் என்றும் எண்ணிக் கொண்: டிருக்கின்ற ஒருவன் சமதர்ம கொள்கையையும் பொதுவுடமைக் கொள்கை யையும் ஆட்சேபிப்பானேயானால் அவன் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும், மக்களை ஏமாற்றித் திரியும் பாஷாண்டியே யாவான் என்பதை தூக்கு மேடையிலிருந்தும் சொல்லுவோம். ஆகையால் வாலிபர்காள்! ஏமாந்து பாஷாண்டிகள் கையில் நாட்டைக்காட்டிக்கொடுத்து விடாமல் தைரியமாய் நின்று உண்மையைச் சொல்லுங்கள். உண்மைக்காக கும்பல் கும்பலாய் உயிர் விடுவதில் நாட்டுக்கு ஒன்றும் நஷ்டம் வராது இந்தியாவிற்கு ஏற்கனவே பூபாரம் அதிகமாய் விட்டது. ஏதாவது காரணத்தால் பூபாரம் சற்று குறைந்தால் இருக்கின்ற மக்களுக்கு சற்று செளகரியம் அதிகம் ஏற்படலாம்.
ஏனெனில், இந்தக் கோழை நாட்டிற்கு, வஞ்சக நாட்டிற்கு, சோம்பேரி நாட்டிற்கு, மனிதர்களைத்தின்னும் மாநாட்டிற்கு முப்பத்தைந்தரைக் கோடி. மக்கள் இருப்பதானது இந்த நாட்டிற்கு மிகவும் பாரமாகும். ஆகையால், உண்மைக்கும் சமத்துவத்திற்குமிடையில் உயிரை விடுவது நன்மையாகும்.
நாம் பொது உடமைக் கொள்கை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்து மதத்திற்கும், மனுதர்மக் கொள்கைக்கும், கேடு செய்ததாகாது. அவைகளின் பலனை அவை அனுபவிக்கச் செய்ததாகுமே தவிர வேறில்லை. மனுதர்ம சாஸ்திரத் தில் சூத்திரன் தொழிலாளி! சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் (சோம்பேரி! பலாத்காரத்தால் பிடுங்கிக்கொள்ளலாம் என்று இருக்கின்றது. ஆனால் நாம் இப்போது சோம்பேரி பணம் வைத்திருந்தால் பலாத்காரமில்
குடி அரசு - 19310) 218
லாமல் பிடுங்கிக் கொள்ளலாம் என்றுதான் சொல்லுகின்றோம். இதுதான் சுய மரியாதை இயக்கத்தின் கடைசி லக்ஷியம். ஆகையால் இதை அக்கிரம மென்று எந்த அறிவாளி, எந்த யோக்கியன் சொல்லக்கூடும் என்று கேட் கின்றோம்.
ஆகவே, இதற்கு விரோதமான எந்த ஸ்தாபனமும், எந்த தர்மமும் சுயமரியாதை இயக்கத்துடன் சேரவோ ராஜி பேசவோ முடியாது என்பதை யும், இதனால் என்ன வருவதானாலும் சுயமரியாதைச் சங்கத்தார் பொருத் தருள வேண்டும் என்றும் உண்மையாய்த் தெரிவித்துக்கொள்வதோடு சத்தற்ற எலும்பைக் கடித்து பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலியுண்டாக்கிக் கொள்வது போல் அன்னியன், அன்னியன் என்கின்ற உணர்ச்சியில் வெள்ளைக்காரர் களுடன் மோதிக்கொள்வதில் பயனில்லை என்றும் நமது நோக்கம் தடை
படும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் .
குடி அரசு - தலையங்கம் - 12.04.1931
* தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்
பகத்சிங்
1(a) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம் மகாநாடு மனமாரப்பாராட்டுகின்றது.
(0) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக்கொள்கையும் கவர்ந்து கொள்ளும்படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத்தோடு வரவேற்கின்றது.
(6) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும் பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றது.
விடுதலை சுதந்திரம்
2, இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வர்ணாசிரம மதவித்தியாசங்களை அடியோடுஅழித்து, கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து, தன்னம்பிக்கையும் தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி, பூமிக்குடையவன்- உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவை களான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமூகத்துறைகளிலும்,
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அரசியல்களிலும் சகலரும் சமசுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக் கூடிய முறையில் நமது சமூகத்தைத் திருத்தி அமைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்று இம் மகாநாடு தீர்மானிக்கின்றது.
பெண் உரிமை
3.(a) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பதாக இம்மகாநாடு திட்டமாய்க்
கருதுகின்றது.
(0) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக்கொள்ளவேண்டுமெனவும், தேக சக்திக்கு செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற் காகக் கர்ப்பத்தடைமுறைகளை அவசியம் கையாளவேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
நம்பிக்கையில்லை
4.0) மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடை பெறுகின்ற மூட நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினா லும்,
(இ) தனது செய்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் தன்னம்பிக்கையும்,
தன் முயற்சியும் பொறுப்பும் அற்றுப்போவதாலும்,
@ வர்ணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக்கொண்டுவர முயற்சி செய்து வருவதா லும்,
@ piog) நாட்டில் இயந்திர வளர்ச்சியை தடைசெய்து வருவதாலும்,
(8). சமதர்மக் கொள்கைகளுக்கு விரோதமாயிருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லை என்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
குடி அரசு - 12.04.1931
குடி அரசு - 19310) 220
திருவுநலவேலி வில்லை வது ௬யமரியாதை மகாநா௫
சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு. எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதார் குமாரர். அவர் எம்.ஏ, பி.எல், படித்துப் பட்டமும் சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர். ஓத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும், தனது சம்பாதனையையும் விட்டுவெளியேரி சிறை சென்ற
வர். இவர் சிறைசென்ற காலம் எது என்றால் இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மரு மகனைப் போல் அளவுக்கும் தகுதிக்கும் மீறின உரிமைகளும், சுக போகங் களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது. திரு இராம நாதன் அவர்கள் தலையில் கூடையும் கையில் மண்வெட்டியும் கொடுக்கப். பட்டு தெருவில் ரோட்டுபோடும் வேலைசெய்தவர்.சிறை அதிகாரிகளால் பல நிர்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல் தனி அரையில் அதாவது “கூனு கொட்டடியில்” போட்டு மக்களைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் இல்லாமல் வதைக்கப்பட்டவர். இதற்காக இவரைப்பற்றி மாத்திரம் சட்ட சபையில் பலகேள்விகள் கேட்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். தவிர சென்னை மகாஜன சங்க காரியதரிசியாயும், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் காரியதரிசி யாயும் இருந்தவர். இவைகள் தவிர தமிழ், கேரளம், கர்னாடகம் ஆகிய நாடுகளுக்கு கதர் போர்டு நிர்வாக காரிய தரிசியாயும் இருந்தவர். இவ்வளவும் தவிர திரு. காந்தியவர்களுக்கு உற்ற சீடராகவும் இருந்து, திரு.காந்திய வர்களால் மிகவும் போற்றப்பட்டவராகவும் இருந்தவர். இவ்வளவும் அல்லாமல் யாதொரு சுயநலப் பிரதிப் பிரயோஜனமும் எதிர் பாராமலும், தன் கைப்பொறுப்பிலேயே சகல செலவும் செய்து கொண்டு இவ் வியக்கத்தில் உழைப்பவர். அன்றியும் அவரது கொள்கையில் மயக்கமும் குளருபடியும் சமயத்திற்குத் தகுந்த அர்த்த வியாக்கியானமும் இல்லாமல் மிகத்தெளிவும், ஒரே நிலையும் உள்ளவர்.ஆகவே இப்படிப்பட்ட ஒருவர் இந்த மகாநாட்டுக்கு கிடைத்திருப்பதால் மகாநாடு உண்மைச் சுயமரியாதை மகாநாடாக நடந்து உண்மையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக் களுக்கு உண்மையான வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பு: 04.04.1931 அன்று தூத்துக்குடி பாலகிருஷ்ண எலக்டிரிக் தியேட்டரில் நடைபெற்ற மாநாட்டில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 12.04.1931
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
க ல்லிப்புக்துார்
சகோதரர்களே!
நாங்கள் இங்கு சுயமரியாதை இயக்கசம்மந்தமான பிரசாரம் செய்யவே அழைக்கப்பட்டோம். இங்குள்ள முனிசிபல் தகராறுகளைப்பற்றி எங்களுக்
குக் கவலை இல்லை. யாருக்கும் ஓட்டுவாங்கிக் கொடுக்க நாங்கள் இங்கு வரவில்லை. உங்களில் சிலர் நாங்கள் யாரோசிலருக்கு ஜஸ்டிஸ் கக்ஷி பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்க வந்திருப்பதாய்க் கருதிக்கொண்டு ஆத்திரப் பட்டதாய் தெரிகின்றது. நாங்கள் பணம் வசூல் செய்யவும் இங்கு வரவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் என்னைப் பொருத்தமட்டில் இரண்டு காரியங்கள் உறுதி. அதாவது இயக்கத்தின் பேரால் யாரையும் போய் நான் எனக்கு ஓட்டு கேட்பதில்லை. இயக்கத்தின் பெயரால் வயிரு வளர்க்கவோ அல்லது யாரையும் போய் பணம் கேட்கவோ போவதில்லை. இந்த இரண்டு காரியங் களைப் பொருத்தவரை நான் உறுதியாக இருக்கின்ற தாய் நான் என்னைக் கருதிக்கொண்டிருக்கும்வரை எப்படிப்பட்டவர்களுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் வராது என்றும் எனதுகொள்கை எதுவானாலும் அதை வெளியி லெடுத்துச் சொல்ல பயப்படவேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கருதி இருக்கின்றேன். இந்த உறுதிதான் இந்த இயக்கம் ஆரம்பித்த காலம்முதல் என்னை இயக்க விஷயத்தில் எவ்வித ராஜிக்கும் இணங்காமல் ஒரே பிடியாய் இருக்கவும் மேலும் மேலும் முற்போக்கான கொள்கையை எடுத்துச் சொல்: லவும் செய்து வருகிறது. இதில் சேர்ந்திருக்கும் மற்றவர்களைப் பற்றியும் நான் குறைகூறுவதில்லை. அவரவர்கள் நிலைமையைப் பார்த்து அவரவர்களை அதற்கு தகுந்தபடி மதித்துவிட்டு அவரவர்களால் கூடுமான உதவியை இவ் வியக்க நலத்திற்கு பெற்றுக் கொண்டு வருகிறேன். எனவே யார் வேண்டுமா னாலும் எனது கொள்கை முரணை எடுத்துக்காட்டி அதன் மூலம் இவ்வியக் கத்திற்கு ஏதாவது குற்றம் சொல்ல வந்தால் மாத்திரம் நான் பயப்படுவேனே ஒழிய வேறு எந்த வழியில் யார் மிரட்டினாலும் நான் பயப்படக் கூடாதவனாய் இருக்கிறேன்.
சகோதரர்களே! மற்றும் நான் சொல்லுவ தென்னவென்றால் எந்தக்
காரணத்தாலும் இந்த இயக்கம் அழிவுபடவும் முடியாது என்பதை தயவு செய்து உணருங்கள். என் நடத்தையாலோ என் சாவினாலோ இயக்கம் சிறிது கூட அடங்க முடியாது. என் சாவைப்பற்றி எனக்கு 12 வருஷ- காலமாகவே கவலையற்று இருக்கின்றேன்.
குடி அரசு - 19310) 222
ஆதலால் தான் இவ்வளவு தலைகீழான இயக்கத்தை ஆரம்பித் திருக்கின்றேன். ஆதலால் தான் இவ்வளவு தலை கீழான கொள்கைகளைத் தைரியமாய் வலியுறுத்துகின்றேன். நான் சாவுக்கோ, அடி, உதைக்கோ பயந் திருந்தால் கடவுளைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்றும், கோயில்கள் ஒழிய வேண்டுமென்றும், தீர்த்தங்கள் தூர்க்கப்பட வேண்டும் என்றும், கதர்
திட்டம் பயனற்றது என்றும், காங்கிரஸ் புரட்டு காந்தீயம் மயக்கம் என்றும்,
கற்பு என்பது பித்தலாட்டமென்றும், காதல் என்பது இல்லையென்றும், இராமன் என்பவன் கெட்டவன், இராவணன் என்பவன் நல்லவன், புராணம் என்பது ஆபாசம், வேதம் என்பது சூது, மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், கல்யாண விலங்கு வேண்டாம், பிள்ளைகள் பெறவேண்டாம், பணக்காரத் தன்மை ஒழியவேண்டும்.பார்ப்பனீயம் அழிய வேண்டும். கடவுளைப்பற்றிக் கவலை கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டும், மற்றும் இதுபோன்ற பல பழையதும், உணர்ச்சியானதுமான விஷயங்களையும் குற்றம் சொல்ல
முன் வந்திருப்பேனா என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப்படி சொன்ன அநேகர் இதற்கு முன் பட்டதை எல்லாம் நான் தெரிந்து கொண்டு எல்லா வற்றிற்கும் துணிந்துதான் இப்படிச் சொல்லுகிறேனா அல்லது தெரியாமல் சொல்லுகின்றேனா என்று யோசித்துப்பாருங்கள். இப்போது நாங்கள் எங்கிருந்துவருகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ன தீர்மானம் நிறைவேற்றிவிட்டு வரு கின்றோம் என்பது உங்களுக்குத்தெரியுமா? என்று கேட்கின்றேன்.
தூத்துக்குடியில் இருந்து வருகின்றோம். தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டில் திரு. காந்தி அவர்களிடம் நம்பிக்கையில்லை என்று தீர்மானித்து விட்டு வருகின்றோம். ஜாதிமத வித்தியாசங்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுவிட்டு வருகின்றோம்.
ஆகவே நாங்கள் எங்களுக்குத் தோன்றிய விஷயங்களை எடுத்துச் சொல்ல பயப்படவில்லை என்பதை உணருங்கள். அப்படி நாங்கள் சொல் வதால் ஏதாவது கெடுதி ஏற்படுமென்று தோன்றினால் நீங்கள் மறு கூட்டம் கூட்டி தக்க காரணங்களோடு மறுத்துச் சொல்லுங்கள். அப்படிச் சொல்ல முடியாவிட்டால் உங்களிடம் போதிய சமாதானம் இல்லையென்றும், நீங்கள் சொல்லுவதை மக்கள் மதிப்பதில்லை என்றும், அல்லது நீங்கள் கோழைகள் என்றும்தான் அருத்தம். காங்கிரசிலாவது, கதரிலாவது நாங்கள் உங்களைவிட இளைத்தவர்களல்ல. தமிழ் நாட்டில் கதர் ஸ்தாபனம் ஏற் படுத்தியவர்களே நாங்கள்தான். நாங்கள் கதருக்குத் தனி ஸ்தாபனம் ஏற்படுத் தியவுடன் தங்கள். லாபம் போய்விட்டதே என்று உங்கள் ஊர் கதர் வியா பாரிகளும் மற்றும் கதர் வியாபாரிகளும் கூப்பாடு போட்டது எனக்குத் தெரியும். கதரைப்பற்றியும், காந்தியைப் பற்றியும் கிராமம் கிராமமாய் நடந்து சென்று, பிரசாரம் செய்தவர்கள் நாங்கள்தான். எங்களைப் பார்த்துத்தான் அநேகர் காங்கிரசைப் பற்றியும், கதரைப் பற்றி பேசவும், பிரசாரம் செய்யவும் பழகினார்
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கள் என்று ஆயிரக்கணக்கான தடவைகளில் நீங்களே சொல்லி இருக்கின்
நீர்கள். அப்படிப்பட்ட நாங்கள் ஏன் இன்று கதர், காங்கிரஸ், காந்தியம் ஆகிய மூன்றையும் கண்டித்துப் பேசுகின்றோம் என்று யோசித்துப்பாருங்கள். எங்க ளுக்கு ஏதாவது சுய நலம் கற்பிக்கின்றீர்களா? உங்கள் மனதில் இருந்தால்: தைரியமாய்ச்சொல்லுங்கள்.திரு.எஸ். இராமநாதன் அவர்களை இன்னமும்
திரு. காந்தியும், திரு.ராஜ கோபாலாச்சாரியும் அழைத்துக்கொண்டுதான் இருக் கின்றார்கள். அவர் காங்கிரசில் இருந்தால் மாகாண காரியதரிசி மாத்திர மல்லாமல் இந்திய காங்கிரஸ் காரியதரிசியாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவார். பணமும், மாதம் 300, 400 பெறப்படுவார். அவர் காங்கிரசைவிடும்போதும்,
கதர் போர்டில் மாதம் 150, 200 வீதம் சம்பளம் கொடுக்கப்பட்டதை வேண்டாம் என்று தள்ளிவிட்டுதான் வந்தார். நாளதுவரை அவரைப்பற்றி யாரும் எவ்வித. உள்எண்ணமும், கற்பித்துப் பேசமுன்வரவில்லை. அவருடைய அபிப்பிரா: யங்களை மறுத்துச் சமாதானம் சொல்லவும் முன் வரவில்லை. இன்றைம்
தினம் அவர் பேரில் குற்றம் சொல்லுகின்றவர்களோ, அவரது கொள்கைகளுக் காக அவரைக் கண்டிக்கின்றவர்களோ 100-க்கு 90பேர்கள் ஏதோ ஒரு வகை:
யில் காங்கிரஸ் பேரிலோ, கதர் பேரிலோ, தேசீயத்தின் பேரிலோ தொழிலில் ஊதியம் சம்பாதிப்பவர்களாகவே இருப்பதை நீங்கள் கவனித்துப்பார்த்தால்: உணரலாம். அவ்வளவுயில்லாவிட்டாலும் நானும் காங்கிரசில் மாகாணத் தலைவராகவும், கதரில் கதர் போர்டு பிரசிடெண்டாகவும், காந்தீயத்தில் மாறு
தல் வேண்டாத வைதீக காந்தி சீடனாகவும் இருந்தவன்தான். வேறு ஒன்றும் சொல்லாமல் நான் இதுவரை காங்கிரசில் இருந்திருந்தால் திரு. ராஜகோபா: லாச்சாரியைப்போல் நானும் ஒரு மடாதிபதியாய் இருந்து கொண்டு கையில்
2, 3 லட்சம் ரூபாய் ஆதிக்கம் வைத்துக்கொண்டு, பல சிஷியர்களையும் உடையவனாக இருப்பேன்.
முன் ஒத்துழையாமை ராஜிக்கு திரு. காந்தி என் மனைவியைக் கேட்டுத்தான் பதில் சொல்லவேண்டுமென்று சொன்னதுபோல் உப்பு சத்தியாக்கிரக ராஜிக்கும் நம்மைக் கேட்டுத்தான் திரு. இர்வினுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும்படியான மனிதனாகி இருப்பேன். அதனால் எனக்கும் சிறிதுகூட பொருள் நட்டமோ, சரீர செளக்கியக் குறைவோ ஏற்பட் டிருக்கவுமாட்டாது.
அன்றியும், காங்கிரஸ்காரர்கள் பதவியோ, உத்தியோகமோ பெற நேரும்போது முதல் பங்கு எனக்குக் கிடைக்கவும் ஒரு சந்தர்ப்பம் உண்டு. ஆகவே நாங்கள் ஏன் இன்று உங்களிடம் வசவு கேட்கின்றோம். கதர், காங்கிரஸ், காந்தி என்னும் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். நாடு பிற்போக்கடைகின்றது. ஏழைகளும், தாழ்த்தப்பட்டோரும் தலை தூக்க முடியாமல் அழுத்தப்படுகின்றதை எங்களால் பார்க்க, சகிக்க முடியவில்லை.
குடி அரசு - 19310) 224
கதர்
இந்த நாட்டில் கதரையும், காங்கிரசையும், காந்தியையும் பற்றிச் சொல்லிக்கொண்டு, வாழ்வதற்குப் பல செளகரியங்கள் ஏற்பட்டு விட்டதால் அவற்றிற்குச் செல்வாக்குப் பலத்து விட்டது. அதற்கு வக்காலத்துப் பேச அநேகர் ஏற்பட்டு விட்டார்கள். ஆதலால் அதை எதிர்ப்பவர்களுக்குக் கஷ்டம் அதிகமாகிவிட்டது. 50 வருஷ காங்கிரசினால் கண்ட பயன் இதைத் தவிர வேறு என்ன? 10 வருஷ கதரில் கண்ட பயன் என்ன? நான் கதர்தான் கட்டுகிறேன். என் நண்பர்கள் பலர் இன்னும் கதர்தான் கட்டுகிறார்கள். கண்ட பலன் என்ன? ஒன்றுக்கு மூன்றாய், நான்காய்ப் பணம் கொடுக்கின்றோம். ஆனால், “அசெளகரியத்தால் அடிக்கடி கஷ்டப்படுகின்றோம். கஷ்ட மாவது சகித்துக் கொள்ளலாம்” என்றால் பணம் எத்தனை நாளைக்கு நஷ்டப்படுவது? கெஜம் 3 அணாவுக்கு வாங்கக்கூடிய துணிக்குப் பதிலாக அதைவிட மட்ட மான துணிக்கு கெஜம் 10 அணா கொடுக்கின்றோம். கதரை குற்றம் சொல்லு கின்றீர்களே யொழிய 3 அணா துணிக்கு10 அணா கொடுக்கின்றீர்களே என்று நீங்கள் சற்றுகூட யோசியாமல் இருக்கின்றீர்கள். காயலாக்காரன் காயலா: தீருவதற்கு மருந்து சாப்பிடுவதுபோல் என்று சொன்னால் வாயிதா காலம் வரை மருந்து சாப்பிடலாம். அப்படிக்கின்றி காயலா வராமல் இருக்க வேண்டுமானால் எப்போதும் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்கிற முறையில் எத்தனை நாளைக்கு மருந்தே சாப்பிட்டுக் கொண்டி ருப்பது. அறிவிருந்தால் வேறு வைத்தியனைத் தேட வேண்டாமா? என்று கேட்கின்றேன். உங்கள் கதரினால் அநேக சோம்பேரிகள், பித்தலாட்டக் காரர்கள் கொள்ளை லாபமடைந்து பிழைக் கின்றார்கள். யாரோ பாட்டிமார் கல்வி அறிவு கொடுக்கப்படாமல் அடக்கி வைக்கப்பட்டிருப்பவர்கள் சிறிது கூலிபெறுகிறார்கள்.அதுவும் ஒருமணிக்கு ஒரு தம்பிடியேபெருகின்றார்கள். இந்த திருப்தி போதுமா? உங்கள் அறிவை நடு நிலைமையில் வைத்து யோசியுங்கள். பணமுள்ளவன் இடமிருந்து, அல்லது பைத்தியகாரர்கள் இடமிருந்து பணம் செலவு செய்யத்தான் கதர் பயன்படுகின்றதே அல்லாமல்: ஏழை மக்கள் 100-க்கு 75 பேர்களான ஏழை மக்கள் 20 பேர்களான நடுத்தர மக்கள் ஆகியவர்களுக்கு கதர் பயன்படக் கூடியதா சாத்தியப்படக்கூடியதா என்று யோசியுங்கள். நாட்டுக்கும், சமூகத்திற்கும் அறிவிற்கும் அனுபவத்
திற்கும் பொருத்த மில்லாத திட்டங்களை வகுத்துக்கொண்டு தேசம் என்னும் பேரால் பொது மக்களை கதர் கட்டுகின்றாயா இல்லையா என்று மிரட்டினால்
கதர் திட்டம் யோக்கியமான புத்திசாலித் தனமான திட்டம் ஆகுமா என்று கேட்கின்றேன்.இன்று கதர் ஒருவித கொள்கையுடையவர்களுடைய வேஷச் சின்னமாய் இருக்கின்றதே யொழிய அந்தக் கொள்கைகளில் ஒன்றாய் இருப்ப தாகத் தெரியவில்லை. எப்படி யென்றால் சிவ பக்தர்கள் என்பதற்கு அடையாளம் விபூதியும் ருத்திராட்சமுமாய் இருப்பது போல் தேச பக்தர்கள். என்பதற்கு அடையாளம் கதருடையாயிருக்கின்றது. மற்றபடி இரண்டுக்கும் வேறு வித்தியாசமில்லை.
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆகவே இந்த மாதிரியான காரியங்களில் மக்களைக் கட்டாயப் படுத்துவது மனிதனை அடிமைப்படுத்துவதேயாகும்.
காங்கிரஸ்
தவிர காங்கிரஸ் விஷயத்திலும் நானறிய இந்த 20 வருட காலமாய். காங்கிரசினால் ஏழை மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை. மக்களுக்குச் சரீரப்பிரயாசையாவது மனக்கவலையாவது மானமற்ற தன்மையான இழி வானது சிறிதும் குறைந்ததாகயாரும் சொல்லமுடியாது. இனி வரப்போகும் சுதந்திரத்திலாவது மக்களின் இவ்விதகஷ்டம் குறையத்தக்கநிலைமை ஏற்படும் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. இது வீணாக ஏழைகளையும் முட்டாள்களையும் கைமுதலாய் வைத்துக்கொண்டு சிலரால் செய்யப்படும் தேசீய வியாபாரமே தவிர இதனால் கடுகளவும் மக்களுக்கு நன்மை உண்டாகப்போவதில்லை. ஏதாவது உண்டாயிற்று அல்லது உண்டாகப் போகின்றது என்று உங்களுக்குத் தோன்றினால் எடுத்துச் சொல்லுங்கள்.
சமய சமூகம்
மற்றபடி சமய சமூகத்துறைகளில் நமக்குப் பல நூற்றாண்டுகளாக உள்ள கஷ்டமும் நஷ்டமும் சிறிதுகூடக் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதை ஒழிக்க யாரும் பாடுபடுவதில்லை. அதைப்பற்றி யாரும் நினைப்பதுமில்லை. அந்தத்துறையும் பலருக்கு ஜீவனத்திற்கு ஆதாரமாய் விட்டதால் அதை வளர்த்துக்கொண்டிருக்க செளகரியம் ஏற்பட்டு விட்டது. சமயங்களை அழித்து சமூகக் கட்டுப்பாடு களை ஒழிப்பது என்றால் உங்களுக்குப் பிராணன் போகின்றது போல் இருக்கின்றது. அதனால் உண்டாகும் கஷ்டங்கள் எவ்வளவாணாலும் சகித்துக் கொண்டிருக்கப் பின் வாங்குவதில், காப்புக்காய்த்துபோன இடத்தில் அடிபட்டால் எப்படி வலி தோன்றுவதில்லையோ அப்படியே மூட நம்பிக் கையில் காப்புக் காய்த்துபோன முட்டாள் தனம் தடிப்பேரியிருப்பதால் நஷ்டம் தெரிவதில்லை. கஷ்டம் தெரிவதில்லை. மானாவமானம் தெரிவதில்லை.
உங்கள் சாமிக்கு எத்தனை ரூபாய் பாழாகின்றது என்பதை உணர்ந். தீர்களா? உங்கள் மகாத்மா உணர்ந்தாரா? உங்கள் காங்கிரஸ் உணர்ந்ததா? உங்கள் காங்கிரஸ் தலைவர்கள் பக்தர்கள் உணர்ந்தார்களா? இதையெல்லாம் விட்டு விட்டு மானமற்று நாம் தேசீயம் தேசீயம் என்று கூப்பாடு போடுகின் றோம். சோம்பேரிகளிடம் வேலை வாங்க நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. சோம்பேரிகள் விர்த்தியாகாத மார்க்கம் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. சும்மா வெறுமனே காந்திக்கு ஜே என்கின்றீர்கள். திருப்பதி வெங்கிடாசல பதிக்கு கோவிந்தா! என்பதற்கும், பழனியாண்டவருக்கு அரோகரா!
குடி அரசு - 19310) 226
என்பதற்கும் காந்திக்கும் ஜே! என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கவனித்துப்பாருங்கள். ஒவ்வொருவீட்டுக் குழந்தைகளுக்கும் காந்திக்கு ஜே கற்பிக்கப்பட்டு வருகின்றதைப் பார்த்துத்தான் வருகின்றேன். இது மூட நம்பிக்கைத் தடிப்பும் அல்லாமல் இதில் அறிவும் கவலையும் சிறிதாவது இருக்கின்றதா என்று கவனித்துப் பாருங்கள். இந்த நிலையில் உள்ள மக்களாகிய நீங்கள் எங்களைக் குற்றம் சொல்ல வருகின்றீர்கள். உங்களைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. பரிதாபப்படுகின்றேன். உங்களை ஏய்த்து இந்தக் கதியாக்கிய தந்திரசாலிகளின் கூற்றையும் முயற்சி யையும் ஒழிக்க ஆசைப்படுகிறேன்.
குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுவாசகசாலைக்கு முன்புறம் 06.04.1931 அன்று. நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 12041931
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
செட்முமார் நாட்டு முதனாவது
சுமாமரியாதை மகாநா௫
சகோதரிகளே! சகோதரர்களே!
நான் திரு. சண்முகம் அவர்களைப் பற்றிப் பேசுவது எனக்கே கொஞ்சம் சங்கடமாகத்தானிருக்கின்றது. ஏனெனில், அவர் எனது ஜில்லாக்
காரர்.அத்தோடு, இவ்வியக்கத்தில் ஈடுபட்டு, ஒத்துழைக்கும் எனது நண்பரும் ஆவார். அப்படிப்பட்டஒருவருடைய பெருமையைப்பற்றி எடுத்துச் சொல்ல. ஏற்பட்டது எனக்கும் சங்கடமான நிலைமை, எனது நண்பருக்கும் சங்கடமான நிலைமை ஏற்பட்டது தானென்று சொல்ல வேண்டும். ஆனபோதிலும், கடமை யைச் செலுத்தவேண்டிய அவசியம் நேர்ந்த காலத்தில் சொந்த அசெளகரி யத்தை உத்தேசித்து நழுவிக்கொள்ளப் பார்ப்பது நியாயமாகாது.ஆகவே, சில வார்த்தைகள் சொல்லவேண்டியவனாகயிருக்கின்றேன். ஏனெனில் இந்த நாட்டில், சுயமரியாதை பிரசாரம் நடை பெறக்கூடாதென்றும், இந்த மகாநாடு இங்கு நடத்தப்படக் கூடாதென்றும், பல சிவநேயர்களும், பண நேயர்களும் பெரிய முயற்சிகள் எடுத்து, எவ்வளவோ சூழ்ச்சிகளும் கஷ்டங்களும் செய்து பார்த்தார்களாம். ஒன்றும் பயன்படாமல்போய், பிரசாரமும் தாராளமாய். நடைபெற்று, மகாநாடும் இவ்வளவு ஆடம்பரத்தோடு இத்தனை ஆயிர ஜனங்களுடைய ஆதர வோடு ஆண்-பெண், மேல் ஜாதி- கீழ் ஜாதி, பணக் காரன்-ஏழை என்கின்ற பாகுபாடும், வித்தியாசமுமில்லாமல் நடைபெறுவதை பார்த்தவுடன், மேற்படி பணநேயர்கள் “யாரோ சில காலிகள் வந்து கூட்டம் போட்டு, கத்திவிட்டுப் போகின்றார் ”களெனவும், சிவநேயர்கள் “ யாரோ சில: அறிவற்ற பாமரமக்கள் வந்து கூப்பாடு போடுகின்றார்” களெனவும், அதைப். பற்றி யாரும் கவனிக்கப்பட தெனவும் சொல்லிக்கொண்டு, இளைப்பாரு வதாகக் கேள்விப்பட்டேன். ஆதலால்தான், இந்தக் கூட்டத்தில் வந்திருக்கும் காலிகளும் அறிவற்ற பாமர மக்களுக்கும் யார் யார் என்பதை தெரிவிப்ப தற்காகவும், இதிலிருந்து இந்தப்படிசொன்னவர்கள் யாராயிருக்கக் கூடுமென் பதை உங்களையே யூகித்து அறிந்து கொள்ளச் செய்வதற்காகவும் சில வார்த்தைகள் பேசுகின்றேன். திரு. சண்முகம் அவர்கள் ஒரு பணக்காரரும், இயந்திர சாலை முதலாளியும், நிர்வாகியுமாவார்.அவர் பி.ஏஃபி.எல்.பட்டம் பெற்ற படிப்பாளியாவார், நான்கு ஜில்லாக்களுக்கு பிரதிநிதியாக இந்திய சட்டசபை அங்கத்தினருமாவார். அது மாத்திரமல்லாமல், இந்தியாவின்
குடி அரசு - 19310) 228
பிரதிநிதிகள் அடங்கிய இந்திய சட்டசபைக்கு உபத்தலைவருமாவார். உயர்
திரு. காந்தி முதலியவர்கள் செல்லும் வட்டமேஜை மகாநாட்டிற்கு இந்திய பிரதிநிதியாக செல்ல தெரிந்தெடுக்கப்பட்டவருமாவார். தமிழ்நாட்டிலிருந்து எப்பொழுதும் திரு. ஐயங்கார்களே இந்திய சட்டசபைக்குச் செல்வதாக யிருந்த வழக்கத்தை, இவர் ஒருவர்தான் மீறி, அங்கு போனவரும், மற்றவர்: களையும் ஒவ்வொரு ஐயங்கார்களாக ஒழித்துக்கொண்டு வரும்படியாக ஏற்பாடும் செய்தவருமாவார். திரு-ஷண்முகம் அவர்கள் பள்ளியில் படிக்கும் பொழுது முதலே, நல்ல அறிவாளியென்றும், பேச்சாளியென்றும் தங்கப் பதக்கமும், போட்டிப்பரிகைஷ வெற்றி பத்திரமும் பெற்றவர். அவர் வக்கீல் தொழிலிலும் பிரபலமும் சாமார்த்தியமும் பொருந்தியவர்.மாதம் 3000 ரூபாய் சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகம் கிடைக்க விருந்ததை வேண்டாமென்று சொன்னவர். இவைகள் மாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கக் கொள்கை களை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளா விட்டால் தான் காங்கிரசில் இருக்கமாட்டே னெனவும் சொன்னவர். அன்றியும், சுயமரியாதை இயக்கம், நாஸ்தீக இயக்க மல்லவென்று எங்கும் பேசி, வெற்றிபெற்று வருபவர்.ஆகவே, இப்படிப்பட்ட பிரமுகர்கள் கலந்து, தலைமை வகித்து நடத்தப்படும் இந்த மகாநாடு யாரோ இரண்டுகாலிகள் வந்து பேசிவிட்டு போனதாகுமா யென்பதை நீங்கள்: தெரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் இதைச்சொன்னேன். மற்றும், சுய மரியாதைச் சங்கத் தலைவராகிய டபுள்யூ.பி.ஏ செளந்திரபாண்டியன் அவர்: களும், மற்றும் அவர்போன்ற இரண்டொரு கனவான்களும் இதில் கலந்து உழைப் பதையும் நீங்கள் பார்க்கின்றபோது, இந்த ஊரிலுள்ள காலிகளில்லாத பணக்காரர்களென்பவர்களுக்கு இவர்கள் எந்த விதத்திலாவது சிறிதும், இளைத்தவர்கள் அல்லவென்பது உங்களுக்கு நன்றாய்த்தெரியும். அறிவு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் இந்தப்பக்கத்திலுள்ள, எந்தப்பெரிய ஆள் என்பவரின் அறிவிற்கும், சுயமரியாதை இயக்கத்திலுள்ள எந்த சாதாரண ஆளின் அறிவும் குறைந்ததல்ல வென்பதை நீங்கள் நன்றாக இதுவரை உணர்ந்திருப்பீர்கள். ஏதோ, இந்தப் பக்கங்களிலுள்ள சில அதிகாரி களை தங்களுடைய பணச் செருக்கினால் சுவாதீனப் படுத்திக் கொண்டிருக் கின்றோம் என்கின்ற ஆணுவத்தால், சில்லரைத் தொல்லைகள் விளைவிக்
கின்ற ஒரு காரியத்தைத் தவிர வேறு எந்த விதத்திலும், இந்த மகாநாடுகள் பாதிக்கப்படகூடியதல்ல. ஆகையால்,இச்சிறு உரைகளோடு திரு ஷண்முகம் அவர்களை இம்மகாநாட்டின் தலைமை வகித்து, நடத்திக் கொடுக்கும்படியாக்
கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு : காரைக்குடியில் 07:04.7937.அன்று நடைபெற்ற செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டில் தலைவரை முன்மொழிந்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 19.041931
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
செட்முநா௫ு மகாநா௫
செட்டிமார் நாட்டு மகாநாடு காரைக்குடியில் இம்மாதம் 78 தேதிகளில். இந்திய சட்டசபை அங்கத்தினரும் உபதலைவருமான கோவை உயர்திரு. ஆர்.கே-ஷண்முகம் அவர்கள் தலைமையில்நடந்தது.மகாநாட்டின் நடவடிக் கைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. மகாநாட்டின் தீர்மானங்கள் பெரிதும் மிகவும் சாதாரணமான தீர்மானங்களேயாகும். ஏனெனில் செட்டிநாடு என்பது மிகுதியும் செல்வவான்கள் ஆதிக்கத்திலிருப் பதாகும். மேலும் அவர்கள் புராண மரியாதையில்மிகுதியும் ஈடுபட்ட வைதீகச் செல்வவான்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்களாவார்கள். அதுமாத்திர மேயல்லாமல் சமூக வாழ்வில் தங்களை வைசிய குலத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து ஜாதிப் பெருமை அடைகின்றவர்களுமாவார்கள்.
இந்தநிலையில் அதாவது பணத்திமிர், மதத்திமிர், ஜாதித்திமிர் ஆகிய மூன்றிலும் சூழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாட்டில் இந்த அளவுக்காவது தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேற்ற முடிந்ததே என்கின்ற மகிழ்ச்சியின் மீதே பலர் திருப்தி அடைகின்றார்கள். ஆனாலும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மகாநாட்டை ஒரு சுய மரியாதை மகாநாடு என்று சொல்லுவதென்றால் பரிகாசத் திற்கிடமாகத் தான் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஏனெனில் புராண மரியாதைக்காரர்கள் கூட்டமாகிய பல்லாவரத்து மகாநாட்டுத் தீர்மானங்களைத்தான் வேறு பாஷையில் எழுதப்பட்டது என்று சொல்லலாமே தவிர மற்றபடி உண்மையான சுயமரியாதை மகாநாட்டுத் தீவிர தீர்மானங்களை அனுசரித்தது என்று சொல்ல முடியாது.
ஆனபோதிலும் செட்டிமார் நாட்டில் ஒரு மகாநாடு அதாவது சுய மரியாதை என்னும் பேரால் கூட்டப்படுவது என்பது லேசான காரியமல்ல. என்பதை நேரில் இருந்து பார்த்தவர்கள் தான் அறியமுடியும். மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னிருந்தே இரண்டு வருஷகாலமாய் இம்மாதிரி பிரசாரத் திற்கே அங்கு போதிய செளகரியமில்லாமல் எவ்வளவோ கஷ்டத்திற் கிடையில் அங்குள்ள நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வேலை செய்து வந்து காரியத்திலும் துணிவாய் இரண்டு மூன்று கலப்பு மணம், விதவை
குடி அரசு - 19310) 230
மணம் முதலியவைகள் செய்து பல பத்திரிகைகளும் துண்டுப் பிரசுரங்களும் பதினாயிரக்கணக்காய் வழங்கி கிராமம் கிராமமாய் சென்று கலகம் கலவரம் முதலியவைகளுக்கெல்லாம் தலைகொடுத்துப் போதாக் குறைக்கு போலீசார். தொல்லைக்குமாளாகி144 உத்திரவு முதலியவைகள் எல்லாம் தாராளமாய் பெறப்பட்டு மற்றும் பல கோர்ட்டு விவகாரங்களிலும் அதாவது சிவிலிலும் கிரிமினலிலும் இழுத்து விடப்பட்ட இவ்வளவையும் சமாளித்து இவ்விதத் தொல்லைகளுக் கிடையிலேயே இந்த மகாநாடு கூட்டப்பட்டிருக்கின்றதென்
றால் இதன் கஷ்டம் எவ்வளவு என்பதை வாசகர்கள் தானாகவே உணரலாம். இந்தமகாநாடு விஷயத்தில் “குமரன்” பத்திராதிபர் திரு. சோ. முருகப்பா அவர்கள் சகலத்திற்கும் துணிந்து தனது சொத்தையும் மானத்தையும் சரீரத் தையும் ஒரு துரும்பாய் நினைத்து எது எப்படியானாலும் இயக்கமே பிரதான மானது என்று எண்ணிய துணிவான எண்ணமே இவ்வளவுக்கு அந்த இடத்
தில் மகாநாடு நடத்த முடிந்தது.
ஆகவே இவைகளைக் கவனித்தவர்களுக்குத் தீர்மானத்தின் வேகத்தைவிட மகாநாடு இவ்வளவு செல்வாக்காகவாவது நடந்ததென்பதே
மிகவும் வெற்றிகரமாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் தோன்றும் என்பதில்: யாருக்கும் ஆட்சேபணையிருக்காது. இவை ஒருபுறம் இப்படி இருந்த போதிலும் இம்மகாநாட்டிற்குத் தலைமை வகித்த திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்களின் தலைமைப் பேருரையானது போற்றத்தக்கதேயாகும். அதின் ஒவ்வொரு வாக்கியமும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் சுயமரியாதை இயக்
கத்தின் அவசியமும் அது செய்திருக்கும் வேலையும் அது இந்த நாட்டுக்கு இந்தக் காலத்திற்கு எவ்வளவு ஏற்றதும் முக்கியமான தென்பதும் நன்றாய் விளங்கும். அதோடு இவ்வியக்கம் அரசியல் இயக்கங்களோடு முறண்படுவ
தாகக் காணப்படுவதற்கும் தகுந்த சமாதானங்கள் கிடைக்கும்.
அன்றியும், பாமர ஜனங்கள் அரசியல்காரர்களுடையவும், அரசியல் பத்திரிகைக்காரர்களுடையவும் வார்த்தைகளையும் எழுத்துக்களையும் ஆழ்ந்து யோசித்துப்பார்த்து உண்மை கண்டு பிடிப்பதற்குப் போதிய ஞான மில்லாததால் “சுயமரியாதை இயக்கம் அரசியலில் மிகவும் பிறப்போக்காய் இருக்கின்றது” என்கின்ற பேச்சுக்களைக் கிளிப்பிள்ளைகள் போல சுய ஞானமின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றவர்களுக்கெல்லாம் திரு. ஷண்: முகம் அவர்களின் தலைமை உரையானது ஒரு பெரிய மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும். அதாவது திரு.ஷண்முகம் அவர்கள் தலைமை உரை:
யில் காணப்படும் வாக்கியங்களாவது:-
“சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்டதற்கு காரணம் இந் நாட்டு மக்களுக்கு சுயமரியாதை இல்லை” என்பதோடு, “பொது வாகவே தென் னாட்டு மக்களுக்கு சுயமரியாதை இல்லை” நமது நாட்டு மக்களின் தருமத்தின் மூலமாகவே நமது சுயமரியாதை கெடுகின்றது.
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
“கடவுளைப்பற்றிக் கவலை கொள்ளாதே என்பது நாஸ்திக மாகாது” “புத்த பகவானும் கடவுளைப்பற்றிக் கவலைப்படாதே” என்றுதான் சொல்லி யிருக்கிறார்.
“மக்கள் தங்களது முட்டாள் தனத்தை மாற்றி அறிவு பெறவே நேர மில்லாமல் இருக்கும்போது கடவுளைப்பற்றிய யோசனையில்.
ஏன் நேரத்தைப் பாழாக்கவேண்டும்?”
“செட்டிமார்களின் தரும முயற்சிகளே நமது சுயமரியாதையை பங்கப்படுத்துகின்றது””
“இந்தியாவில் வேறு எங்கும் தென்னாட்டைப் போல் இவ்வ ளவுசுயமரியாதையற்ற தர்மம் நடத்தப்படுவதில்லை.”
“தென்னாட்டுக்கே சுய மரியாதை இயக்கம் மிகவும் அவசியம்.”
“மக்களைக் கோவில்களும், புராணங்களுமே அறியாமை
யிலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்துகின்றன என்று முதல் முதல் சொன்னவர் புத்தரேயாவார்.”
“புரோகிதர் தந்திரத்தினாலும், சூட்சியினாலும் புத்தரின் உபதேசங்கள் தலையெடுக்க முடியாமல் போய்விட்டது.”
“ஆனாலும் இப்போது 10 வருஷமாக மறுபடியும் அவ் வுணர்ச்சிகள் பரவிவரத் துடங்கிவிட்டன.”
“இவ்வுணர்ச்சியை”ப் பரப்பினவர் பெரியார் ராமசாமியாரே யாவார். நான் இவ்வியக்கத்தைப்பற்றி மகாத்மா காந்தி இடத்தில் கூறினேன்.
அவர் இவ்வியக்கத்தலைவர் யாரென்று என்னைக்கேட்டார். நான் இராமசாமிப்பெரியார் என்று சொன்னேன். உடனே அவர் அப்படியாகத் தான் இருக்கமுடியும் என்று தானும் நினைத் தாகக் கூறினார்.
இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தை ஏன் ஆரம்பித்தார். என்ற பிரசினை வந்தபோது, பக்கத்தில் இருந்த ஒரு நண்பர் திரு. ராமசாமி காங்கிரசில் இருக்கும் போதே அவருக்கு இந்த உணர்ச்சி உண்டு என்று சொன்னார்.
இது முற்றிலும் உண்மை, ஏனெனில் அவர் நீண்டநாளாகவே பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி உடையவர் என்று நான் அறிவேன்.”
குடி அரசு - 19310) 232 233
“விடுதலைபெற்ற நாடுகள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்
தால் தான் விடுதலை பெற்றிருக்கின்றது.”
“மேல்நாட்டில் முதலாவது சுயமரியாதை இயக்கம் இது போலவே சமுதாய சீர்திருத்தமாகத் தோன்றிற்று. அதாவது கத் தோலிக்க கிறிஸ்துவர்கள் தொல்லை பொறுக்கமாட்டாமல் மார்ட்டின்
லூதர் என்னும் பெரியார் ஓர் இயக்கத்தை தோற்று வித்தார்.”
“பிறகு இரண்டாவதாக பிரான்சில் அரசியல் கிளர்ச்சியாகத் தோன்றியது. அதிலும் நமது கொள்கைகளே சிறந்து விளங்கின.”
“மூன்றாவதாக ரஷியாவில் சுயமரியாதை இயக்கம் ஆரம்
பித்து அது சமதர்ம இயக்கமாக மாறியது.”
“இவ்வாறு இங்கிலாந்து, பிரான்சு, ஜர்மனி, ருஷியா முதலிய நாடுகளில் ஏற்பாடா கிய கிளர்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தால் அவற்
நின் மூலாதாரம் நமது சுயமரியாதை இயக்க கொள்கைகளே தான் என்பது புலப்படும்”
“மதநூல்கள் யாவும் மனிதனுடைய சுயமரியாதைக்கு முர ணானவைகள்.”
“ஜாதிபேதம் அழிவதால் போய்விடும் மதமும், எல்லா மக்க ளும் சரிசமானம் என்பதால் போய்விடும் கடவுளும் ஒழிவதா யிருந். தால் அதற்கு நாங்கள் (சுயமரியாதைக் காரர்கள்! ஜவாப்பு தாரிகள் அல்ல.”
“தீர்திருத்தத்திற்கு மதமும் கடவுளும் முட்டுக்கட்டையா யிருந்தால் அவைகளை அழிக்கவே நாங்கள் முயலுவோம்.”
“ஜாதி வித்தியாசம், ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோத மானது.”
“சமத்துவம் விரும்பும் நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது பலர் குற்றமென்கிறார்கள். அதற்கு சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் மேல் நாட்டு பழக்கவழக்கங்களை காட்டி அங்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லை என்கிறார்கள். மேல்நாடுகளில் கீழ்மேல் ஜாதி வித்தியாசமிருக் கின்றதா என்றால் தலைகுனிந்து முணுமுணுகின்றார்கள்.”
“இந்து மதத்தில் பெண்களுக்கு தகப்பன் சொத்தில் பாத்திய மில்லை. இப்படிச் சொல்லுகின்றவர்கள் மதவாதிகளே யாகும்.”
“தான் பெற்ற பெண்ணிற்கு சொத்தில்லாமல் எவனோ ஒருவ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
னுக்கு பிண்டம் போடுவதற்காக என்று சொத்துக்களை கொடுத்துவிட வேண்டுமாம். நமது சொத்துக்கு இருக்கும் பாத்திய தையைப் பாருங்கள்.”
“இந்தமாதிரியாக மதம் பிண்டத்தோடு முடிவதாக யிருந்தால்
மதம் அவசியமா என்று கேட்கின்றேன்.”
“மகாத்மாவின் ( காங்கிரசின் ) 20 திட்டங்களில் ஒன்று இந்த வைதீக மதத்தைக் காப்பதற்கே அமைத்த தாகும்”
“இதற்கு பெயர்தான் மதநடுநிலைமை யாகும்.”
“இந்த மத நடுநிலைமையைத்தான் நாம் இன்று அழிக்க வேண்டும் என்கின்றோம்.”
“மதநடுநிலைமையுள்ள சுயராஜியம் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் பலன் ஒன்றே யாகும்.”
“லண்டன் மகாநாட்டில் மத நடு நிலைமைதான் தலை
விரித்தாடும்.”
“நான் “ஜாதிபேத மிருக்ககூடாது” “பொட்டுக்கட்டக் கூடாது” என்பதான இரண்டு தீர்மானங்கள் கொண்டுவந்திருக் கின்றேன்.”
“மகாத்மா கூறும் சுயராஜியம் வந்தால் எனது மசோதாக்கள் ஒரு சிலராலேயே தூக்கி எறிந்துவிடப்படலாம்.”
“சாதாரணமாய் 10 வருஷங்களில் ஏற்படவேண்டிய சீர்திருத் தங்கள் ஆங்கில அரசாங்கத்தில் மத நடுநிலைமையாலேயே 150. வருஷங்களாகியும் இன்னும் ஏற்படவில்லை.”
“மதநடு நிலைமை வகிக்கும் அரசாங்கமும், சுயராஜியமும் ஒழிந்தால் அல்லது நமக்கு உண்மை விடுதலை வரப் போவ தில்லை.”
“மதநடு நிலைமை ஒழிக்கப்படாத சுயராஜியம் நமக்கு வேண்டவே வேண்டாம். அது நமக்கு மிகவும் ஆபத்தானதாகும்.”
“சுயராஜியத்திற்குமுன் நமது சுயமரியாதையையும், சக்தியையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.”
முடிவுரையில் கூறியதாவது:-
“நமது தீர்மானங்களைப் பார்த்தவர்கள் இவற்றுள் எதை யாவது குற்றம் சொல்ல இடமுண்டானால் தைரியமாகச் சொல்ல முன்வரட்டும்.”
குடி அரசு - 1931 (1) 234
“குழந்தைகள் பட்டினியால்வாட, கல் விக்கிரகத்தின் தலையில்
பால் ஊற்றுவது அறிவுடைமையாகுமா?”
“வேறு எந்தத் தீர்மானத்தையாவது செய்து, ஆஸ்திகர் என்று பெயர் வாங்குவதைவிட, இத்தீர்மானங்கள் செய்து நாஸ்திகர் என்று பெயர் வாங்குவதே மேலானது.”
“எந்தக் கட்சியின் உதவியும் நமக்குக் கிடைக்குமென்று எதிர் பார்க்கக்கூடாது.”
“காங்கிரசோ,ஜஸ்டிஸ் கட்சியோ மற்ற எதுவும் நமதியக்கத்
திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்க வேண்டியதில்லை.”
“எகிப்து, அயர்லாந்து, ருஷியா, துருக்கி, சீனா முதலிய நாடுகள்
25 வருஷத்திற்கு முன்பே சுயமரியாதை இயக்கம் துடங்கி விட்டது.”
“நாம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றோம்.”
“வாலிப உலகம்தான் அந்நாடுகளில் வெற்றியை அளித்தது” என்று பேசினார்.
இதைப்பற்றி வாசகர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது,
சென்ற வாரம் குறிப்பிட்ட தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் பிரசங்கத்தையும் இவ்வாரம் குறிப்பிட்டிருக்கும் செட்டியார் நாட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் திரு.ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் பிரசங்கத்தையும் படித்துப்பார்த்தபின் இதைப்பற்றி யார் என்ன ஆட்சேபனை சொல்லக்கூடும் என்பதே நமது கேள்வி.
அரசியலைப் பற்றியும், மத இயலைப்பற்றியும் இருவரும் சொல்லி யுள்ளவைகள் தான் சுயமரியாதை இயக்கத்தின் மத இயல் அரசியல் சம்பந் தமான ஜீவநாடிகளாகும். எவ்வித தேசீய வாதியும், மதவாதியும் இந்தத் தத்துவத்திற்கு வந்தால்தான் இந்தியாவில் தேசீயமோ, மதமோ இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி அதுவரையில் ஒரு காரியமும் நடைபெற சுயமரியாதை இயக்கம் அனுமதிக்கப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி. மறுப்பு வேலையிலும், நாச வேலையிலுமே அது இறங்கி, முடியா விட்டால் தானே முடிவு பெற்றுவிடுமேயொழிய ராஜி என்பதோ, பின்னால் போவ தென்பதோ அதனிடம் யாரும் எதிர்பார்க்க முடியாது.
போதாக்குறைக்கு சென்னையில் இந்த வாரம் அதாவது 11-ந் தேதி பச்சையப்பன் மண்டபத்தில் கூடிய மாதசம்பளக்கார சிப்பந்திகள் மகா நாட்டில் ( தொழிலாளர் மகாநாட்டில்) தலைமை வகித்த பம்பாய் மாகாணப்.
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பிரமுகர் திரு.ஜம்நாதாஸ்மேதா அவர்களின் தலைமை உபன்யாசத்தில் குறிப்பிட்டிருக்கும் இரண்டொரு வசனங்களையும் இங்கு குறிப்பிடு கின்றோம். அதாவது, ( சுதேசமித்திரனில் காண்கிறபடி)
“பணக்காரர்கள் தாங்களாக தங்களிடம் சேர்ந்திருக்கும் பணக்குவி யலை கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சொத்து சேர்ந்த விதம் பலாத்காரமாய் படையெடுத்து நிலங்களை வலுவில் பிடுங்கிக் கொண்டு அவர்களிடம் வாடகை ( குத்தகை ) என்று வசூலிக்கப்பட்டதால் சொத்துக்கள் குவியலாய்க் குவிந்து விட்டது.”.....
“இவ்விதம் நிலச்சொந்தம் கொண்டாடுவதால் அவர்கள் (நிலச் சுவான்தார்கள் ) ஓரு வேலையும் செய்யாமல் ஏராளமாய் பணம்
சேர்த்துக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு
மேலும் கூறுவ தாவது,
“மக்களுக்கு சாசுவதமான நன்மை ஏற்படவேண்டுமானால்
பின் வரும் மூன்று முறைகளில் ஒன்றைக் கையாளவேண்டும்.”
1”சோவியத் ரஷியாவில் செய்ததைப்போல நிலச்சுவான்தாரர் களிடமிருந்து பலாத்காரமாகச் சொத்தை கொடுக்குமாறு செய்வது.
2. படிப்படியாக அபேதவாத (சமதர்ம) கொள்கைகளைக் கையாளுவது.
3. தற்கால அமைப்பை மாற்றாமல் பெரிய பணக்காரர்களுக்கு அதிக வரியைப்போட்டு, அந்த வருமானத்தைக்கொண்டு கல்வி வசதி, முனிசிபல் செளகரியம், பிரசவ உதவி, வயோதிகர்களுக்கு உபகாரச் சம்பளம் முதலியன கொடுப்பது.”
என்று சொல்லிவிட்டு, ஆனால் பலாத்காரத்தினால் செய்யும் காரியம் எதுவும் பலன் தராது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். தவிரக் கடைசியாக அவர்
“தொழிலாளிகளுக்கு எல்லாத் தொழில்களிலும் லாபத்தில் பங்கு கொடுக்குமாறு சட்டமியற்றவேண்டும்.” என்றும் சொல்லியிருக்கிறார்.
எனவே இதிலிருந்து தொழிலாளிகள் விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தையேதான் திரு. ஐம்னாதாஸ்மேதா அவர்களும் எடுத்துக்கூறி இருக்கின்றார் என்பது புலனாகும்.
ஆகவே இவைகளை யெல்லாம் உற்று நோக்கினால் இந்தியாவின் 35கோடி மக்களை மூன்றரைக் கோடி வெள்ளைக்காரர்கள் துப்பாக்கி, பீரங்கி,
குடி அரசு - 19310) 236
வெடிகுண்டு, ஆகாயக்கப்பல் முதலியவைகளை வைத்துக்கொண்டு ஆட்சி
புரியும் கொடுமையைவிட துப்பாக்கி பீரங்கி முதலியவைகளில்லாமல் 35 கோடிமக்களை ஒரு கோடி பார்ப்பனர் மத விஷயத்திலும், சமூக விஷயத் திலும் அடிமையாக்கி நாகரீக மற்ற முறையில் கொடுமையாய் எவ்வித நன்மையும் புரியாமல் ஆட்சி புரிவதையும்,
பொருளாதார இயலில், 35 கோடி மக்களை ஒரு கோடி பேர்கள் எஜமான், லாபம், வட்டி, குத்தகை, வாடகை என்கின்ற வகையில் மிக்க கொடுமையாய் அடக்கி மிருகங்களைவிட கேவலமாய் நடத்தி வருவதை யும் கவனித்தால் வெள்ளைக்கார ஆட்சியைவிட பின்கண்ட பார்ப்பனீய, பணக் கார ஆதிக்க ஆட்சி மிகவும் சகிக்கமுடியாத கஷ்டமாயிருப்பதை, அறிவும் சுயமரியாதையுமுள்ள ஒருவன் சுலபத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த நிலைமையில் தான் காங்கிரஸ் சம்பந்தமான பலரும், பார்ப்பனர்களும், அவர்களது சிஷ்யர்களான தேசீய வீரர்களும் நமது சுயமரியாதை இயக் கத்தை சர்க்காருக்கு அனுகூலமான இயக்கமென்று பழிசுமத்தி விஷமப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். இதை நம்புவதற்கு போதிய மூடமக்கள் தேசத்தில் இல்லையானாலும் பூனை தான் கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடித்தால் எப்படி உலகமே கண் மூடியிருக்குமென்று கருதுமோ அந்தப். பான்மையைப் போல் நடந்து கொண்டு வருகின்றார்கள். என்றாலும், இதன் யோக்கியதையும், சீக்கிரத்தில் வெளியாகக் கூடிய சந்தர்ப்பங்கள் தானாகவே ஏற்படும்படியாக சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்கு வலுத்து வருவதால் இப்படிப்பட்டவர்கள் இனி வேறு தொழில் பார்த்துக்கொள்ளவோ அல்லது இதன் நிழலில் மறைந்து கொள்ளவோ இல்லாவிட்டால் வேறு சக்தியற்ற வர்களாகிவிடுவார்கள் என்பது நமது உறுதி.
இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கத்திற்கும் சர்க்காருக்கும் இருந்துவரும்- இருக்கப்போகும், சம்மந்தத்தை தைரியமாக இந்த சமயத்தி லேயேவெளியிட்டு விடுகின்றோம்.
அதாவது,
பார்ப்பனீயத்தையும், பிரபுத்தன்மையையும் கொண்ட சுயராஜ் யத்திற்கு பாடுபடும்காந்தீயத்தை எதிர்க்கும் முறையில் சர்க்கார் தயவை சுயமரியாதை இயக்கம் ஒரு அளவுக்காவது எதிர்பார்க்க வேண்டி வந்தால் தாராளமாய் எதிர்ப்பார்த்துத்தான் தீரும்.
பணக்காரத் தன்மையையும், பார்ப்பனீயத்தையும் ஒழித்து சமதர்ம
மும், பொது உடமைத் தத்துவமும் கொண்ட சுயராஜ்யமாகிய மனித தர்ம சுயராஜ்யம் பெறுவதற்கு இந்த சர்க்கார் முட்டுக் கட்டையாயிருந்தால் அதை அழிக்கும் வேலையில் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறு வேர் அற்றுப் போகும் வரையில் அதில் ஈடுபட்டிருக்கும்.பிரிட்டிஷ் ஆக்ஷியானது எப்படி
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இருந்த போதிலும் அது பார்ப்பனீய ஆட்சியைவிட மோசமான தல்ல என்பது நமது அபிப்பிராயமாகிவிட்டது.அதுமாத்திரமல்லாமல் திரு.காந்தி கேட்கும் ராமராஜிய ஆட்சியைவிடமோசமானதல்ல என்ப தோடு பிரிட்டிஷ் ஆட்சி முதலாளிகள் ஆட்சி என்கின்ற விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கு
சிறிதும் சந்தேகமில்லை. பார்ப்பனீய ஆட்சியும், இராமராஜ்யமாகிய காந்தீய ஆட்சியும் ஒழிந்த பிறகுதான் முதலாளிகள் ஆட்சியை ஒழிக்கமுடியும். இவை இரண்டும் அதற்குத் தூண் களாய் இருக்கின்றன. ஆகவே அதன் முறை மூன்றாவதாகும். இவைகளை யெல்லாம் அடியோடு விட்டு விட்டு நேரே பிரிட்டிஷ் ஆட்சியில் கையை வைப்பது பார்ப்பனீய ஆட்சிக்கும் காந்தீய ஆட்சிக்கும் உறம் தேடுவதே யாகும். பார்ப்பனீயமும், காந்தியமும்
தான் இந்தியாவில் பிரிட்டிஷாரை வரவழைத்ததும், இன்னமும் அவர்: களையே ஆட்சி செய்து கொண்டிருக் கும்படி உதவிபுரிந்து கொண்டிருக் கின்றதுமாகும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முடிவான அபிப்பி
ராயமாகும்.
உதாரணம் வேண்டுமானால் பிரிட்டிஷாரின் எந்த அக்கிரமத்திற்கும், எந்த கொடுங்கோல் ஆட்சிக்கும் பார்ப்பனீயம் உதவி புரியவில்லை என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் பார்ப்பனீயம் வெகுநாளைக்கு முன்பே ஒழிந்திருக்குமானால் பிரிட்டிஷ் இருந்த இடம் தெரியாமல் உலகத்தில் மறைந்திருக்கும். ஆகையால்தான் சுயமரியாதை இயக்கம். இப்போது பார்ப் பனியத்திடமும், பிரபுத்தன்மையிடமும் வேலைசெய்ய வேண்டுமென்கிறது. பிரபுத்தன்மை ( முதலாளித் தன்மை) ஒழியும்போது யாருடைய முயற்சியு மில்லாமல் பிரிட்டிஷ் ஆதிக்கம் விகிதாச்சாரம் ஒழிந்து தான் தீரும். அல்லது பார்ப்பனீயத்தீற்கும் பிரபுத்தன்மைக்கும் விரோதமாய் வேலைசெய்யும் போது பிரிட்டிஷ் ஆதிக்கம் குறுக்கிட்டால் அதையும் சேர்த்து அழிக்கத்தான் சுயமரியாதை இயக்கம் வேலை செய்யும். ஆகவே உண்மை விடுதலைக்கு மார்க்கம் தேடுவதை விட்டுவிட்டு போலிக் கூச்சல் போடும் வேலையில் சுயமரியாதை இயக்கம் ஒருநாளும் இரங்காது என்பதை வாசகர்கள் உணர்வார்களாக.
குடி அரசு - தலையங்கம் - 19.04.1931
* செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு - தீர்மானங்கள்
1.புதிதாக கோயில்களும், சத்திரங்களும், வேதபாடசாலைகளும், பசு மடங்களும் அமைக்கக் கூடாது. இதுவரை ஏற்பட்டுள்ளவைகளை பொதுப் பள்ளிக்கூடங்களாகவும், மாணவர்களின் விடுதிகளாகவும், குழந்தைகளுக்கு பாலுதவும் ஸ்தாபனங்களாகவும், எல்லா மக்களுக்கும் சமமாய் பயன்படும்படி மாற்றிவிடவேண்டும்.
குடி அரசு - 19310) 238
2. கலப்புமணம் செய்யப்பட வேண்டும்.
3. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.
4. சாரதா சட்டம் அமுலுக்கு வர வேண்டும்.
5. பெண்களுக்கு சொத்துரிமை ஏற்படுத்த ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக சட்டசபையில் ஒரு மசோதா சீக்கிரத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.
6. பெண்களுக்கு விலை கொடுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
7. கலியாணம் ஒரே நாளில் புரோகிதரின்றி சுறுக்கமாக நடைபெற வேண்டும்.
8. பல்லாவரத்து தீர்மானங்கள் பண்டிதர்களின் மனமாறுதலை: காண்பிப்பதால் அவைகளைப் போற்றுகின்றது.
9.ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக, ஆர்.கேஷண்முகம் அவர்களால் இந்திய சட்டசபையில் கொண்டு வந்திருக் கும்மசோதாவை பாராட்டுவதுடன், கராச்சியில் எல்லா பொதுஸ்தலங்களிலும் எல்லா வகுப்பாருக்கும் சம உரிமை உண்டு என்கின்ற தீர்மானத்தில் கோயில் களும் சேர்க்கப்பட்டிருக்குமென நம்பி, அதைப் பாராட்டுகின்றது.
10. இப்பகுதியில் ஆதிராவிடர்கள் முதலியவர்களுக்கு இடையூறுகள் பல செய்யாமல் சாதகமாயிருக்கும் வல்லம்பர், கள்ளர், மறவர், அகமடியர், செட்டிமார்கள் முதலிய வகுப்பினரைப் போற்றுகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் பகைமை கொண்டு, கொடுமை விளைவிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை இம்மகாநாடு கண்டிக்கின்றது. இந்த ஜில்லா போலீஸ் உத்தியோகத்துக்கு, வைதீக உணர்ச்சியாவது ஜாதிப்பற்றாவது இல்லாத ஓர் பார்ப்பனரல்லாதாரை நியமனம் செய்யும்படியாக அரசாங்கத் தாரை வற்புறுத்துகின்றது.
இப்பகுதியில் ஆதிதிராவிடர்களை கொடுமைப் படுத்தியதாகச் சொல்லப்படும் குறைபாடுகளை விசாரித்து, அரசாங்கத்தாருக்கு அறிவிக்க அடியில் கண்ட கனவான்களடங்கிய கமிட்டி யொன்று நியமிக்கப்பட்டது. கமிட்டி கனவான்கள் :- உயர்திருவாளர்கள் ராமநாதபுரம் ராஜா, செட்டி நாட்டு குமாரராஜா, எஸ். முருகப்பா, எஸ்.ஆர்.எம். வெங்கடாசலம்... எஸ்.ராமச்
சந்திரன்.
11.ஜில்லாபோர்டு, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி ஆகிய பொது ஸ்தாபனங்களில், கள்ளர்,வல்லம்பர், முகமதியர், ஆசாரிமார், பெண் மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
வேண்டுமெனவும், அரசாங்கத்தார் இதில் தலையிடவேண்டுமெனவும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.
12. ஐந்து கோயில் தேவஸ்தான வறும்படியை படிப்புக்கும் வைத்திய சாலைக்கும் பயன்படுத்தவேண்டுமென டிரஸ்டிகளை கேட்டுக் கொள்
ள_ுகின்றது.
13. ஆதிதிராவிட ஹோம் கட்டுவதற்காக 10,000ரூபாயும் 13 ஏக்கரா நிலமும் ஒருகனவானால் அளிக்கப்பட்டும் அஸ்திவாரம் போடப்பட்டும் முனிசிபாலிட்டியார் அதைப்பற்றி கவனியாதிருப்பதற்காக வருந்துவ தோடு, உடனே அதைப்பற்றி கவனிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறது.
14. குடிஅரசையாவது, குமரனையாவது தினசரியாக்க வேண்டு மென கேட்டுக்கொள்ளுவது.
15. சிவகெங்கை ஜமீனில் வெள்ளாமை யில்லாத நிலங்களுக்கும், அதிக வரியுள்ள நிலங்களுக்கும் வரியைக் குறைப்பதற்கு அரசாங்கத்தார் ஒரு கமிட்டியை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை பிரேரேபித்தும், ஆதரித்தும் பேசிய கனவான்கள் : - திருவாளர்கள் :- பள்ளத்தூர் மு.அ. அருணாசலம், டிலி.அருணாசலம், சொ. முருகப்பா , ஆர்.வி. சாமினாதன், பெரி.சி. மெய்யப்பா, சி.மு.ரு.நாராயணன், சாமி சிதம்பரனார், கிஅ.பி. விஸ்வ நாதன், நீலாவதி, ராமாமிர்தம்மாள், சுப.முத்தையா, அ.கா. சொர்னனாதன், ராம. சுப்பிரமணியம், நா. வீரப்பன், அ. பொன்னம்பலனார், ஜீவானந்தம், கஞ்சமலைமூர்த்தி, ராமச்சந்திரன், அ.ர.சு.ப.வேடப்படா, எஸ்.வி. லிங்கம், கே. அழகிரிசாமி முதலியவர்கள் ஆவார்கள்.
குடி அரசு - 19.04.1931
குடி அரசு - 19310) 240
i த
இந்தியாவின் உண்மை விடுதலைக்கு இந்து முஸ்லீம் ஒற்றுமை அவசிய மென்று அடிக்கடி கூறப்படுவதோடு சுமார் 20,30 வருஷகாலமாக அதற்காக பல பெரியார்களும் பாடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது திரு. காந்தியவர்களே இவ்வேலையில் முனைந்திருக்கிறார்.
இதே காந்தியவர்களால் கொஞ்ச காலத்திற்குமுன் இந்தியாவின் விடுதலைக்கு தீண்டாமை ஒழிய வேண்டியது முதன்மையானகாரியம் என்றும் தீண்டாமை ஒழியாவிட்டால் சுயராஜ்யமே வராது என்றும் சொல்: லப்பட்டது. ஆனால் இப்போது அந்த பிரச்சினை வெகு சுலபத்தில் தீர்ந்து போய் விட்டது. அதாவது “சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை தானாகவே ஒழிந்து போகும்” என்று அவராலேயே சொல்லப்பட்டாய் விட்டது.
ஏனெனில் சுயராஜ்யம் வந்தால் மதத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்கின்ற நிபந்தனை காந்தி சுயராஜ்யத்தில் முக்கியமான நிபந்தனை யாதலால் “மதத்தில் தீண்டாமை இருப்பதால் அதைப்பற்றி பேசுவது மத விரோதம்” என்று ஒரு உத்திரவு போட்டு விட்டால் தீண்டாமை விஷயம் ஒரே பேச்சில் தானாகவே முடிந்துவிடும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.ஆகை யால் இப்போது தீண்டாமையைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய தில்லை.
அன்றியும் திரு.காந்தியின் “ சுயராஜ்யம் ” இப்போது தீண்டாமை ஒழியாமலே வரவும் போகின்றது. ஏனெனில் தீண்டாதார் எனப்படுபவர். களில் தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வர இணங்கமாட்டோம் என்று சொல்லுவதற்கு அறிவும் வீரமுமுள்ள ஆசாமிகள் இல்லை. ஆதலால் “மத நடுநிலைமை” சுயராஜ்யமாய் தாண்டவமாடுகின்றது.
ஆனால் இந்து முஸ்லீம் விஷயம் அப்படியில்லை. ஏனெனில் லக்னோ ஒப்பந்தத்திற்கு பிறகும் வகுப்புவாரி தனித்தொகுதி பிரதிநிதித் துவத்திற்கு பிறகும் அவர்களுக்கு ( முஸ்லீம்களுக்கு) ஒருவாறு மனிதத் தன்மை ஏற்பட்டுவிட்டது. அவர்களை சுலபமாய் இனி யாரும் ஏய்த்துவிட முடியாது. இந்து முஸ்லீம் ஒற்றுமை எவ்வளவு வாயளவு பேசினாலும் காரியத்தில் இந்துக்கள் எப்படி ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முஸ்லீம்
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
களை ஏமாற்றப் பார்க்கின்றார்களோ அது போலவே, முஸ்லீம்களும், முஸ்லீம் இந்து ஒற்றுமையை வாயளவில் எவ்வளவு பேசினாலும் காரியத்தில்
சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இருந்துவரும் தன்மையை அடைந்து விட்டார்கள்.
இந்தத்தன்மையையுடைய இருவரையும் நாம் குற்றம் சொல்ல வர வில்லை. ஏனெனில் இருகூட்டத்தாரும் தங்களின் இரு மதத்தின் உண்மை யான தன்மைப்படியே இருவரும் நடந்து கொள்ளுகின்றார்கள். ஆகையால் மேற்படி இரு மதத்தின் பிரதானமும் தளர்த்தப்படும் வரை இந்தியா மாத்திர மல்லாமல் இவர்களையுடைய எந்த தேசமும் இப்படித்தான் நடந்து கொள்ள
முடியும். சுலபத்தில் ஒற்றுமையைக்காணமுடியாது.
உதாரணமாக கொஞ்ச காலத்திற்கு முன்பு காலஞ் சென்ற லாலா லஜபதிராய் அவர்கள் “மகமதியரல்லாதாரை கொல்லவேண்டும் என்கின்ற வசனம் குரானில் இருக்கும்வரை இந்து முஸ்லீம் ஒற்றுமை சாத்தியப்படாது” என்று “சுயராஜ்யா”வில் எழுதியிருந்தது யாவருக்கும் ஞாபகமிருக்கும்.
மற்றும் இன்னும் அதுபோலவே இஸ்லாம் மதத்தை விர்த்திசெய்ய கத்தி, ஈட்டி, பலாத்காரம் ஆகியவைகளை உபயோகித்து யுத்தம் செய்யலாம் என்கின்ற தாத்பரியங்களும் அதில் இருந்து வருவதும் யாவரும் அறிந்ததே.
அதுபோலவே “ஆரியரல்லாதவர்களெல்லாம் மிலேச்சர்கள்” “ஆரியரல்லாதவர்கள் பாஷை மிலேச்சபாஷை. ஆரியரல்லாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும், அவர்கள் அழிக்கப்படவேண்டும், அவர்கள் பூமிக்கு சாரம்” என்று “இந்துக்கள்” வேதத்தில் இருந்து வருவதும், சைவனல்லாதவன் கழுவேற்றப்பட்டதாய் புராணங்களில் இருந்து வருவ தும் வேதம் என்பது என்ன, புராணம் என்பது என்ன என்பதையும், இந்து தர்மம் என்பது என்ன என்பதையும் அறிந்தவர்கள் எல்லாம் நன்றாய்த் தெரிந்திருப்பார்கள்.
இஸ்ஸாம் தர்மத்தில் “இஸ்லாம் அல்லாதவன் காபர் அதாவது நாஸ்திகன் அழிக்கத்தகுந்தவன்” என்று இருப்பதும் இந்து அகராதியில் மகமதியன் என்றால் ராக்ஷதன், அசுரன் என்றும் மிலேச்சன் என்றும் இருப்
பதும் யாவரும் அறிந்ததேயாகும். அன்றியும், இவைகளை இருதிறத்தாரும் அறிந்திருந்தும் இந்த விஷயங்களில் எவ்வித மாறுதலும் செய்யாமலும் அதுமாத்திரமல்லாமல் எவ்வித மாறுதலும் செய்யக்கூடாது என்கின்ற நிபந்தனையை சுயராஜியத் திட்டத்தில் ஒரு முக்கிய நிபந்தனையாகவும் வைத்துக் கொண்டு இந்து முஸ்லீம் ஒற்றுமை, ஒற்றுமை என்று கூப்பாடு போட்டால் அக்கூப்பாடுகள் வேஷக் கூப்பாடா? அல்லது ஏய்ப்புக் கூப்பாடா? அல்லது வாஸ்தவத்திலேயே போடும் ஒரு உண்மைக் கூப்பாடா? என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய்க் கோருகின்றோம்.
குடி அரசு - 19310) 242
நாம் இந்தப்படி எழுதுவது சில தேசீயப் பிழைப்புக்காரர்களுக்கு பிடிக்காததுபோல் காணப்படலாம். அவர்கள் இருகூட்டாத்தாரிடையும் துவேஷ முண்டாக்கவும் வகுப்புக் கலவரமுண்டாக்கவும் பிரசாரம் செய்வ தாக நம்மைப் பற்றி விஷமப் பிரசாரமும் செய்யலாம்.ஆனாலும், அதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் நாம் எழுதுவது உண்மையா இல்லையா என்று பரிசோதித்துப்பார்க்க வேண்டுமென்றுதான் கவலைப்படுகின்றோம்.
இம்மாதிரியான இரண்டு மதத்தையும்தான் இருகூட்டத்தார்களும் வளர்க்க வேண்டுமென்றும், இருமதத்தாரும் அவரவர்கள் மதத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் இந்தியாவின் ஏக தலைவரான திரு.காந்தியவர்கள் கூறுகின்றார்கள். இது இந்துக்களிலும் முஸ்லீம்களிலும் உள்ள மத பக்திக்காரர்களைத் திருப்தி படுத்தி திரு.காந்தியை மகாத்மா என்று ஒப்புக்கொள்ளவும் உதவும். ஆனால்இது இருசமூகத்தினுடையவும் ஒற்றுமைக்கு சாத்தியப்படக் கூடியதா என்று யோசித்துப் பார்க்கும்படி பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இரு சமூகத்திலுள்ள வாலிபர்களும் ஒன்று கூடி இரு மதங்களிலு முள்ள வேஷத்தையும், துவேஷத்தையும் ஒன்றுக்கொன்று அடிப்படையா யுள்ள மாறுபாட்டையும் ஒழிக்க முன்வந்து துவேஷமும் வேஷமும் மாறுபாடும் கற்பிக்கும் பாகம் எதிலிருந்தாலும் அவை யார் சொன்னதாக இருந்தாலும் தைரியமாய் எடுத்தெரிந்துவிட்டு ஒற்றுமைக்கான திட்டங் களைப் புகுத்தி இருவரும் தங்களை மனிதத் தன்மை மதக்காரர்கள் (கொள்கைக்காரர்கள்! என்று சொல்லிக் கொண்டு புரப்பட்டால் இந்தியா மாத்திரமல்லாமல், இந்து முஸ்லீம்கள் மாத்திரமல்லாமல் உலகமெல்லாம் உலகத்திலுள்ள சமூகமெல்லாம் இந்தக் கொள்கையின்கீழ் அன்புத் தன்மை யோடு சகோதர வாஞ்சையோடு ஆட்சி புரியப்படலாம். அதில்லாமல் அவரவர்கள் மதத்தைப் பலப்படுத்திக்கொண்டு அவைகளுக்குச் சிறிதும் பங்கமோ மாறுபாடோ இல்லாமல் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுத்தலாம் என்பது சிறிதும் பயன் படாததாகும். அந்தப்படி ஏதாவது ஒருசமயம் ஒற்றுமை ஏற்பட்டு விட்டதாக யாராவது சொல்லுவதானாலும் சிலருடைய தனிப்பட்ட நன்மைக்கு உதவுமேயல்லாமல் இந்திய மக்களின் பொது நன்மைக்குச் சிறிதும் உதவாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக கூட்டப்பட்ட முஸ்லீம் மகாநாட்டுத் தீர்மானங்களைப் பார்த்தால் ஒற்றுமையின் தத்துவம் எவ்வளவிலிருக்கிறது என்பது விளங்கும்.
அவையாவன:-
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
1. “இந்துக்கள் வீண் ஆதிக்கம் செலுத்த விரும்பியதால் காசி, ஆக்ரா, மிர்ஜாப்பூர், கான்பூர் முதலிய பல இடங்களில் வகுப்புக்கலவரங்கள் ஏற்பட்டதைக்குறித்து வருந்துகிறோம். காங்கிரஸ் வகுப்பு மனஸ்தாபங் களில் தனது போலி சாத்வீகக் கொள்கையை கைவிட்டுவிட்டது என்றே நாங்கள் கருதுகின்றோம். பெரும்பான்மையான சமூகத்தார் இவ்வாறு இனியும் மனோபாவம் கொண்டிருந்தால் உள்நாட்டுக் கலகம் விளைவது திண்ணம். இந்திய சர்க்காரும், பிரிட்டிஷ் சர்க்காரும் இந்தியநிலைமை யைச் சமாளிக்க திட்டமான கொள்கையின்றி, காங்கிரஸ் வேண்டுகோ ளுக்கே செவிசாய்த்து வருவதால் துரதிருஷ்டம் கொண்ட இந்நாடே அழிந்துபோகும் நிலைமை உண்டாகி விடும் என்று எச்சரிக்கின்றோம்.”
2. “பார்லிமெண்டிலிருந்து அதிகாரங்கள் மன்னர்கள் கைக்கு மாற வேண்டுமென்றும், ஐக்கிய ஆட்சி முறையில் சேரும் எல்லோருடைய முழுச்சம்மதமுமின்றி எந்த விஷயத்தையும் ஐக்கிய சர்க்கார் நிர்வாகத்தில் விட்டு விடக்கூடாதென்றும் இம்மகாநாடு அபிப்பிராயப்படுகின்றது. தற்பொழுதுள்ள நிலையில் தனித்தொகுதிகளே வேண்டும் ஐக்கிய சர்க்கார் சட்டசபையில் நூற்றுக்கு 33 1, வீதம் முஸ்லீம்களுக்கு ஸ்தானம் வேண்டும்.”
3. “இந்தியமன்னர்கள் லண்டனுக்குச் செல்லும் பொழுது கப்ப லிலேயே, முஸ்லீம்களைத் தலையெடுக்க வொட்டாமற் செய்யும் வண்ணம் சதியாலோசனை செய்து கொண்டனர். இந்நிலையில், நிம்மதியாயும், அபாயமின்றியும் வாழவல்ல இரண்டொரு மாகாணங்களை நாம் பிரத்தியே கமாக வைத்துக்கொள்ளுவது தான் நமக்கிருக்கும் ஒரேவழி. இந்துக்களடங் கிய தலைமைசர்க்காரிடத்திலே ராணுவத்தை விட்டுவைக்க நாம் ஒரு நாளும் சகிக்க மாட்டோம். ராணுவத்தில் முஸ்லீம்களுக்கு பெரிய உத்தி யோகம் ஒன்றும் கொடுக்கமாட்டார்கள். இதுவும் தவிர, கான்பூர் போன்ற கலக சமயங்களில் முஸ்லீம்களை இந்த ராணுவம் பாதுகாக்காது. காங்கிரஸ் பிரிட்டிஷாருடன் போர்புரிந்து, அதிகாரத்தை பெற்றதாயின், சற்றும் தயங்காது சகல தியாகங்களையும் செய்து, காங்கிரசுடன் நாம் போர் புரிவோம்” என்பதாகும்.
முஸ்லீம் சமூகத் தலைவரான மெளலானா செளகத் அலி அவர்கள். பேசி இருப்பதாவது :-
“முஸ்லீம்கள் திரு.காந்தியிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. லட்சம் காந்தியையும் நான் ஒருவனே எதிர்த்துப் போராட முடியும்” என்று பேசியிருக்கிறார்.
மற்றும் அவர் “திரு. காந்தி முஸ்லீம்களில் சில ஏமாளிகளை வைத்துக் கொண்டு வாயாடுகின்றார்கள். இந்து முஸ்லீம்கலவரத்திற்கு திரு. காந்தியே
குடி அரசு - 19210) 244
காரணம். அதோடு மாத்திரமல்லாமல் திரு.காந்தி முஸ்லீம்களுக் குள்ளாகவே ஒருவரை ஒருவர் வெட்டி கொள்ளும்படி செய்கிறார்” என்று பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்து முஸ்லீம் சமரசம் செப்பிடுவித்தையா அல்லது முடியக்கூடியாதா? என்று யோசித்துப் பாருங்கள். வகுப்புகளையும் மதத்தையும் காப்பாற்றிக் கொண்டு தாங்கள் தந்திரசாலிகளாகவும் அதிக எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருக்கின்றோம் என்கின்ற காரணத்திற் காக வகுப்பு வாரி மத வாரிபிரநிதித்துவம் கூடாது என்று சொல்லும் வரை வகுப்பு ஒற்றுமையும் மத ஒற்றுமையும் எதிர்பார்ப்பது முட்டாள் தன மாகவே முடியும் என்பதோடு எந்த “தேசீயமும்” எந்த “அஹிம்சை”யும் இனி பொதுமக்களை ஏமாற்ற முடியாது என்பது உறுதி.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.041931
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தெண் இந்திய ரயில்வே கம்வபணி லிமிவடட்
தென் இந்திய ரயில்வேயின் நிர்வாகம் முழுவதும் பிராமணமயமாக இருப்பது யாவரும் நன்கறிந்த விஷயம். பிராமணரல்லாதாருக்கு ஒரு வித சுதந்திரமுமில்லாமல், பிராமணர்களாலேயே கொள்ளையிடப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது. பிராமண ரல்லாதாருக்கு ஏஜண்டு ஆபீசிலும், இன்னும் இதர நிர்வாக ஸ்தாபனங்களிலும் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இந்த ரயில்வேயின் நிர்வாகத்தை ஓர் பிராமண: அக்கிரகாரமென்று கூறுவது மிகையாகாது. இந்நிலைமைக்கு ரயில்வேக் கம்பெனியின் நிர்வாகஸ்தர்களும் இது வரையிலும் உடந்தையாகவேத்தான் இருந்துகொண்டு வந்திருக்கின்றார்கள். ஜனத்தொகையின் வீதாசாரப்படி ரயில்வேக்களில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டுமென சட்ட சபைகளில்: போராடியதற்கு “அது கம்பெனிகாரர்களின் ஆதிக்கத்துள்ளடங்கியிருப்ப
தால், அவர்களுடைய பிரியத்தைப் பொருத்தது” என இதுவரை கூறப்பட்டு வந்ததையும் சகலரும் அறிவார்கள். ஆனால், இப்பொழுது தென் இந்திய ரயில்வேயின் ஏஜண்டின் மனம் முற்றிலும் மாறுதலடைந்து, பிராமண: ரல்லாதாருக்கும், அவர்களுடைய தொகையின் வீதாசாரம் உரிமைகளும், உத்தியோகங்களும் வழங்கப்படவேண்டுமென உறுதி கொண்டு, அதற்கேற்ற வாறு“ஸ்டாப் செலக்ஷன் போர்டு” என்னும் ஒரு போர்டை நியமித்திருப்பது மிகவும் போற்றக்கூடியதோர் விஷயமாகும். பிராமணரல்லாதார்களும் ஏஜண்டின் மன மாறுதலை வரவேற்று, தங்களு டைய உரிமைகளைப் பெற
வும்; சுதந்திரங்களையடையவும் முன்னணியில் நிற்பார்களென கருது கின்றோம்.
ஸ்டாப் செலக்ஷன் போர்டு
இந்த போர்டிலுள்ளஅங்கத்தினர்கள் தான் இனி ரயில்வேயின் நிர்வாகத்திற்கு வேண்டிய உத்தியோகஸ்தர்களையும், சிப்பந்திகளையும் தேர்ந்தெடுப்பவர்களாவார்கள். அப்படித் தேர்ந்தெடுப்பதிலும் பிராமண: ரல்லாதாரின் உரிமைகள் தான் முதலில் கவனிக்கப்படும். 11: மூர்ஹெட் என்பவர் கமிட்டியின் தலைவராவர். இக்கமிட்டியின் காரியதரிசி 14162. வேலுப்பிள்ளை என்பவர், இவ்விரண்டு உத்தியோகஸ்தர்களும் பிராமண: ரல்லாதாரின் குறைகளை செவ்வனே ஆராய்ந்து, அவர்களுடைய
குடி அரசு - 19310) 246
உரிமைகளை நிலைநாட்ட கொஞ்சமும் அஞ்சமாட்டார்களென கருதுகின் றோம். இந்த ரயில்வேயில் ஊழியம் செய்யப்பட்ட எண்ணிறந்த பிராமண ரல்லாதாரின் முன்னேற்றம் இவ்விரண்டு பேருடைய பொறுப்பிலுந் தானிருக் கின்றது. ஆகையால், அவர்கள் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கும், செல்வாக்கிற்கும், கொஞ்சமும் பயப்படாமல், பிராமணரல்லாதாரின் குறை களை நிவர்த்திக்க முயற்சி செய்வார்களென நினைக்கின்றோம். அவ் வாறே உத்தியோகங்கள் வழங்கப்படுவதிலும், சிப்பந்திகளை தெரிந்தெடுப்பதிலும், பிராமணரல்லாதாரின் உரிமைகள் தான் முதலில் கவனிக்கப்படுமெனவும் நினைக்கிறோம். ஏனெனில் பிராமணர்கள் ஏஜண்டின் ஆபீசிலும், இன்னும் இதர நிர்வாக ஸ்தாபனங்களிலும் 100க்கு 90 பேருக்கு அதிகமாகவே காணப்படுகின்றார்கள்.
ஏஜெண்டின் இம்மனமாறுதலை நாம் முழு மனதுடனும் வரவேற் கின்றோம். இக்கமிட்டியை நியமித்ததுடன் ஏஜண்டின் பொறுப்பு நீங்கிவிட வில்லை. ஆனால் இக்கமிட்டியார் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, அதன்படி நடந்துகொண்டு வருகின்றார்களா என்பதை அடிக்கடி கவனித்துக் கொண்டு வருவாரெனவும் நம்புகின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 19.04.4931
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தீண்டாமை
இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமையைவிட சுயராஜியத்தை விட
- பூரண சுயேச்சையை விட - காந்தி - இர்வின் ஒப்பந்தத்தைவிட - தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமானது என்கின்ற விஷயம் கடுகளவு அறிவும் மனிதத் தன்மையும் உடையவர்களாகிய எவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் இப்போது அழுவாரற்ற பிணமாய், கேள்வி கேட்பாடு அற்று அலக்ஷியப் படுத்தப்பட்டு கிடக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் அவர்கள் அதாவது தீண்டப்படாதார் என்பவர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு முயற்சி செய்து தங்கள் இழிவுகளையும் கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முயற்சிப்ப தையும் இந்தப்பாழும் சுயராஜியமும் பூரண சுயேச்சையும் என்கின்ற வெறும் வாய் வார்த்தைகள் தோன்றி பழையவைகளையே புலப்படுத்திக் கொள்ள வும்புதியவைகளை தலைகாட்டாமல் இருக்கவும் முயற்சி செய்வதன் மூலம் தடுத்து அழுத்தி வைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நெறுக்கடியான சமயத்
தில் இந்தமுக்கியமான விஷயம் (தீண்டாமைக் கொடுமை விஷயம்) இக் கதியானால் இனி எப்போது தலையெடுக்க முடியும் என்பது நமக்கு விளங்க வில்லை. இந்திய சுயராஜியத்திற்கு இன்று இந்து முஸ்லீம் விஷயம் தடை யாய் இருக்கின்றது என்று தேசீயக்காரர்கள் நீலிக்கண்ணீர்விட செய்தது எது என்று பார்த்தால் முஸ்லீம் சமூகத்தாருடைய கிளர்ச்சியும் அவர் களுடைய ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். ஆகவே அதை விட முக்கியமானதும் அவசியமானதும் மனிதத் தன்மை யானதுமான தீண்டாமை ஒழிக்கும் விஷயம் இந்து முஸ்லீம் “விசாரத்தில்” ஆயிரத்தில் ஒருபங்கு கூட கவலைப்படுவதற்கு லாயக்கில்லாததாகப் போன தற்கு காரணம் தீண்டப் படாதார் என்பவர்களுக்குள் ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாததே காரணமாகும். சாதாரணமாக சுமார் 20 வருஷத்திற்கு முன்பு லக்னோவில் முஸ்லீம்களுக்கு சில உரிமையும், சீர்திருத்த திட்டத்தில் தனி வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமையும் கொடுத் தது போல் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் ஏதாவது வழி செய்து இருந்தால் இன்று அந்த சமூகத்திலும் 100க்கு இத்தனை பேர்கள் என்பதாக படிப்பிலும் உத்தி யோகத்திலும் சமூக வாழ்க்கையிலும் ஸ்தானங்கள் பெற்று இருந்து இந்தச் சமயத்தில் அவர்களும் மனிதர்கள் என்று மதிக்கப்பட்டு இந்திய பூரண விடுதலைக்கு திட்டம் வகுக்கும்போது அவர்களையும் கலந்து
குடி அரசு - 19310) 248
ஆலோசிக்க வேண்டிய காரியம் முக்கியமானதாக திரு. காந்தி அவர்களும், அவர்களையும் ஒரு சமூகமாக மதிப்பதாக காட்டிக் கொண்டாவது இருக்க முடிந்திருக்கும். அப்படிக்கு இல்லாததாலேயே “தீண்டப்படாதார் விஷயம் சுய ராஜியம் வந்த பின்பு சரியாய் விடும்” என்கின்ற ஒரே பேச்சில். முடிவடையவும் முடிந்துவிட்டது.
இவை ஒரு புறமிருக்க கராச்சி காங்கிரசில் புதிய சுரராஜியத்தில் ஏழை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வகுக்கப்பட்ட ஜீவாதாரமான உரிமை கள் என்பவையான 20 திட்டங்களில் தீண்டாமை விஷயமும் ஜாதி வித்தியாச விஷயமும் எப்படி காப்பாற்றப்பட்டிருக்கின்றது என்று பார்த் தால் அதில். உள்ள சூகஷியும் சாமார்த்தியமும் நன்றாய் விளங்கும். அது என்ன வென்றால், பிரஜா உரிமை முதலாவது தீர்மானத்தின் 6வது உட் பிரிவால் “ஜாதிவகுப்பு காரணமாக பொது உத்தியோகம், அதிகாரம், கெளர வம் தொழில் ஆகிய விஷயங்களில் எவ்வித வித்தியாசமும் கொள்ளக் கூடாது” 7வது உட்பிரிவில். “பொதுகிணறு, பொதுவீதி, பொது இடம் ஆகியவைகளை உபயோகித்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு” என்பதாக குறிக்கப்பட்டிருக் கின்றது.
இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஜாதியையோ தீண்டப்படாத வகுப்பு என்று சொல்லப்படுவதையோ ஒழிக்கும் எண்ணமோ, கவலையோ இல்லா. திருப்பதை நன்றாய் உணரலாம். ஒரு சமயம் அதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமோ என்னமோ என்கின்ற எண்ணத்தின் மீதே திரு. சத்தியமூர்த்தி ஐயர் 15-ந்தேதி இந்து பத்திரிகையில் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது “பொது இடம் என்பதில் வகுப்பு பாத்தியமுள்ள பொது இடமும், தனிப்பட்ட வர்களால் விடப்பட்டபொது இடமும், கோயில் சம்மந்தப்பட்ட பொது இடமும் இதில் சம்மந்தப்பட்டதல்ல” என்றும் எழுதி இருக்கிறார். இவை மாத்திரமல்லாமல் தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப் பட்ட வகுப்புகள் என்பவைகளுக்கு மற்றவகுப்பார்களைவிட எவ்வித வித்தியாசமும் அதாவது தனிச்சலுகை எதுவும் காட்டப்படாது என்பதை வலியுருத்தியும் காட்டப்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி பார்த்தால் இப்போது அவர்களுக்குச் சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் தேர்தலிலோ, மற்ற வழிகளிலோ சம உரிமைபெற சில தனி ஏற் பாடுகள் செய்து இருப்பதும்கூட ஒழிக்கப்பட்டு விடவேண்டியதாகிவிடும். அது மாத்திரமல்லாமல் சட்டங்களிலும், ஆதாரங்களிலும் ஜாதியும், வகுப்பும் குறிக்கப்படவேண்டியதாகும் என்பதோடு அவற்றைப் பற்றி மதங்களில் உள்ள நிலைமையையே அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியதுமாகும்.
இதற்கு ஆகவே அதன் முந்திய பாகத்தில் மதநடு நிலைமையையும் அது சம்மந்தமான மனச்சாட்சியையும் வலியுறுத்தப் பட்டும் இருக்கின்றது.
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தீண்டாமை உண்டு, ஜாதி வித்தியாசமுண்டு, புனிதமான ஸ்தலங்கள் என்று கருதப்படுபவைகளில் எல்லா மக்களுக்கும் சம சுதந்திரம் கிடையாது. மற்றபடி யாருக்கும் பிற்பட்ட வர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக தனிச்சலுகை காட்டப்பட மாட்டாது என்பதாகும்.
ஆகவே புதிய சுயராஜியத்தில் ஜாதி, வகுப்புக் கொடுமைகள் சட்டத்
தின் மீதே தாண்டவமாடும். ஆனால், சுயராஜியமில்லாத அன்னிய ராஜியத் தில் அதாவது இப்போதய ராஜியத்தில் அநேக விஷயங்களில் ஜாதி, வகுப்பு வித்தியாசக் கொடுமைகள், பழக்கம்,வழக்கம்,மாமூல் என்பவை களையே பிரதானமாய் கொண்டு ஒரு விதத்தில் தாண்டவமாடி வந்தது. ஏதோ ஒரு விதத்தில் இப்போது தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற எண்ணமும், உணர்ச்சியும் பொது மக்க
ளுக்குத் தானாகவே ஏற்பட்டு அவை அழிபடக்கூடிய நிலைமை ஏற்படுகின்ற காலத்தில் பூரண சுயேச்சையின் பேரால் மறுபடியும் ஜாதி, வகுப்பு, பேர்களும்,
ஆதாரங்களும் ஒரு மனிதன் மனசாட்சியை உத் தேசித்து சட்டத்தின்மூலம் நிலை நிறுத்தும்படியாக ஆயிருப்பது மிகுதியும் கண்டிக்கத் தக்கதேயாகும்.
இனி ஏற்படப்போகும் சுயராஜியத்தில் வரும் சமத்துவத்திற்கு ஒரு உதாரணம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் அதாவது, காங்கிரஸ் தீர் மானத்தின் பலனாய் நமது பெரியார்களும் எவ்விதத்திலும் குற்றம் சொல்ல. முடியாதவர்களுமான ஆர்.கே.ஷண்முகம் (வைசியகுலம் என்று சொல்லப்
படும்) அவர்களும், திரு. டபிள்யூ பி.ஏ. செளந்திரபாண்டியன் (க்ஷத்திரிய குலம் என்று சொல்லப்படும் ) அவர்களும் திருச்செந்தூர் கோவில் எல்லைக்குள் போகக்கூடாது என்பது இன்னும் பலமாக நிலை நிறுத்தப் பட்டது என்பதேயாகும். “வைசியர்” “க்ஷத்திரியர்” குலங்களே இப்படி இருக்கும்போது இனி சுப்பப் பரையன், கருப்பன் சக்கிலி “சண்டாள” குலம் என்பதைச் சேர்ந்தவர்களே) என்பவர்களின் நிலைமையைப்பற்றி பேச வேண்டுமா என்று கேட்கின்றோம். நிற்க,
இதைப் படித்துப் பார்க்கின்றவர்களில் பலருக்கு இந்த நிர்ப்பந்தங்க ளானது தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும், தீண்டப்படாத வகுப்பாருக்கும் தான் ஏற்பட்டவைகளே தவிர “ஜாதி இந்துக்கள்” என்று சொல்லிக்கொள்ளப் படும் பார்ப்பனரல்லாத மக்களைப் பாதிக்காது என்று தோன்றக்கூடும், அப்படித் தோன்றுவது முட்டாள் தனமான தோற்றமேயாகும்.
“மதநடு நிலைமை” “மனசாக்ஷி”” என்கின்ற இரண்டு வார்த்தைகள். பிரயோகப் படுத்தப்பட்ட பிறகு இந்து மதம் என்பதில் கண்டிப்பாய் “பிராம ணன்”, “சூத்திரன்”, “பஞ்சமன்” என்கின்ற மூன்று பிரிவுகளும், அவை களுக்கு இப்போது அனுபோகத்திலும் மதச்சம்மந்தமான ஆதாரத்திலும்
குடி அரசு - 19310) 250
உள்ள விஷயங்கள் நிலை நிறுத்தப்பட்டு, அவைகளின்படி அமுல் நடத்தப்
படும் என்பதைக் கண்டிப்பாய் உணர்வார்களாக.
ஆகவே தீண்டாதார் எனப்படுவோரும், தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுவோரும் மற்றும் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதையோ சமத்துவமோ பெறவேண்டுமானால் “பூரண சுயேச் சையை”யேலட்சியமாய்க் கொண்ட இன்றைய காங்கிரசை நம்பிக் கொண்டி ருந்தால் பெருமாள் மாறி பெத்தப்பெருமாளானகதையாகத்தான் முடியும்.
வட்டமேஜை மகாநாடாவது ஒரு விதத்தில் சூகஷி இல்லாமல் பேசவும், தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லவும் பயன்படக் கூடியதாக இருக்குமாதலால் அங்கு செல்லுகின்றவர்களாவது இவ் விஷயங்களில் ஜாக்கிரதையாய் இருந்து கவனித்தால் சிறிதளவாவது நமக்கு அனுகூலம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அங்கு மதசம்மந்தமான நடுநிலைமை மனசாட்சி ஆகியவைகள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
ஜாதி, வகுப்பு என்கின்ற பிரிவினைகள் ஏற்படுவதற்கு இடமில்லாமல் படிக்கு வாழ்க்கைத் திட்டங்களையும், ஆதாரங்களையும் ஏற்படுத்த வேண்டும். எந்த ஆதாரங்களிலும் ஜாதிக்கு கலமே இருக்கக்கூடாது. வருணாச்சிரம பட்டங்களும் பெயர்களுக்குப் பின் ஜாதிப்பட்டமோ, வகுப்புப் பட்டமோ இருக்கக்கூடாது. சிவில் கிரிமினல் சட்டங்களில் ஜாதிப் பிரிவு களுக்கும், வகுப்புப் பிரிவுகளுக்கும் இடமே இருக்கக் கூடாது என்பது போன்ற இன்னும் பல நிபந்தனைகளை வற்புறுத்தி இந்த சீர்திருத்தம் முதல் கொண்டாவது ஜாதி வகுப்புக் கொடுமையை அழித்து விடும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்தக் காரியத்தில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்தார் களேயானால் இந்தியாவைப் பல வகைகளிலும் பிடித்த எலும்புருக்கி வியாதி யானது அடியோடு ஒழிந்துபோகும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.041931
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
காங்கிரஸ் தீர்மானங்களும் சட்டமறுப்பு சத்தியாக்கிரகங்களும் தென்னாட்டில் தேர்தலையே குறிக்கோளாகக் கொண்டது என்பதாக நாம் பலமுறை சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம்.
அதுமாத்திரமல்லாமல் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டவுடன் இனி “தலைவர்களுக்கும்” (பார்ப்பனர்களுக்கும்) “தொண்டர்களுக்கும்” (பார்ப்பனரல்லாதார்க்கும்! தேர்தல் பிரசாரத்தைவிட வேறு பிரசாரம் இருக் காது என்றும் தேர்தலை உத்தேசித்தே ஆங்காங்கு கள்ளுக்கடை மறியல், ஜவுளிக்கடை மறியல் ஆகியவைகள் நடத்தப்படும் என்றும் எழுதியும் இருந்தோம் . இந்த விஷயங்கள் வாசகர்களுக்கு அப்போழுது சற்று அலட் சியமாகக் கருதப்படக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நாம் எழுதியதுபோலவே தேர்தல் பிரசாரங்கள் “தலைவர்களால்” (பார்ப்பனர் களால்) தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு விட்டது. அதற்கு அனுகூலமாகத் தொண்டர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்! ஆங்காங்கு இந்தத் தலைவர் களுக்கு வரவேற்பு அளித்து கூட்டம் கூட்டி ஜே போட்டு ஓட்டர்களை: அறிமுகப்படுத்தி அத்தலைவர்களின் உத்திரவுக்குக் கீழ்ப்படியும்படி செய்யும்படியான வேலையில் மும்மரமாய் ஈடுபட்டு இருக்கிறார்கள். சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் பணமுடிப்பும் அளிக்கின்றார்கள்.
சமீபத்தில் புதிய சட்டத்தின் படி ஸ்தல ஸ்தாபன தேர்தல்கள் நடைபெறப் போகின்றபடியால் அத்தேர்தல்களில் பார்ப்பனரல்லாதார். உணர்ச்சியுள்ள கனவான்கள் எந்தெந்த ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று இருக்கின்றார்களோ அவர்களைக் கவிழ்த்தும் வேலையில் காங்கிரஸ் பிரசாரம் என்னும் பேரால் மிகவும் தீவிரமாக முயற்சிகள் செய்து வருகின்றார்கள். அதாவது தென்னாட்டை பிரிவுகளாகப் பிரித்து காங்கிரஸ் “தலைவர்கள்” (பார்ப்பனர்கள்) தலைமையில் தங்கள் சிஷ்ய கோடி தொண்டர்களுடன் புறப்பட்டிருக்கிறார்கள். எப்படியென்றால்,
திருவாளர்கள் சி. இராஜகோபாலச்சாரியார் தலைமையில் ஒரு கோஷ்டி, வட ஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களுக்கும், டாக்டர் ராஜன் அய்யங்கார் தலைமையில் ஒரு கோஷ்டி. கோயமுத்தூர், சேலம், திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களுக்கும், ஏ.வைத்தி
குடி அரசு - 19310) 252
நாதய்யர் தலைமையில் ஒரு கோஷ்டி மதுரை, திருநெல்வேலி,ராம நாதபுரம், செட்டிமார் நாடு ஆகிய இடங்களுக்கும் என்று பிரித்துக்கொண்டு புறப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு உபதலைவர்களாக ஒரு கூட்டம் (அதுவும் வெறும் பார்ப்பனர்களாகவே திருவாளர்கள் டி.வி.எஸ்.சாஸ்திரியார், ஆலஸ்யம் ஐயர், வெங்கிட்டராமய்யர், ஈ. கிருஷ்ணய்யர், என்.எஸ். வரதாச்சாரியார், கே.
சந்தானம் அய்யங்கார் எக்கியேஸ்வர சர்மா, சங்கரய்யர், சங்கரய்யர் லக்ஷிமி. அம்மாள், வி.வி.எஸ்.அய்யர் செல்லம்மாள், லக்ஷிமிபதி அய்யர் அம் மாள், லக்ஷ்மணராவ்கமலாதேவி அம்மாள், கிருஷ்ணமூர்த்தி அய்யர், சுப்பையர்,
சுந்திரமய்யர் முதலிய பல அய்யர், அய்யங்கார், அம்மங்கார் களும் இவர்கள். தவிர மற்றும் ஆங்காங்கு போகின்ற இடத்தில் உள்ள வக்கீல் அய்யர் அய்யங்கார் அம்மங்கார்களும் இருப்பதோடு கூட்டங்களில் எங்காவது கேள்விகள் குழப்பங்கள் ஏற்படுகின்ற சமயத்தில் இடத்தில் மாத்திரம் முன்னால் நிறுத்துவதற்கு என்கின்ற உள் எண்ணத்துடன் சிறிது நன்றாய்ப்: பேசுவதற்கும் தலைகொடுப்பதற்கும் பார்ப்பனரல்லாதார்களின் உப தலைவர்
கள், தொண்டர்கள் என்னும் பேரால் வெகு சிலர்களும் அவர்கள் பெயரைக் குறிப்பிட வேண்டுமென்பதாக விரும்புகிறவர்கள் யாரும் இருக்கமாட்டார் களென்றே கருதுகின்றோம்.ஆனாலும் அவர்கள் பெயரையும் குறிப்பிட்டு விட்டால் ஒரு விதத்தில் தப்பர்த்தம் கற்பிக்கப்படயிடமில்லாமல் இருக்கலா: மென்று கருதி அதையும் குறிப்பிட்டேவிடுகின்றோம். அதாவது திருவாளர்
கள் கோவை சி.பி.சுப்பையா, தஞ்சை வெங்கிடு கிருஷ்ணபிள்ளை, வேத ரத்தினம்பிள்ளை, திருநெல்வேலி திரிகூட சுந்திரம் பிள்ளை, வட ஆற்காடு அண்ணாமலை பிள்ளை ஆகியவர்கள் பெயர்கள் இக்கோஷ்டியார்களுடன் ஆங்காங்கு காணப்படுகின்றன. எனினும் அவர்கள் எவ்வளவு தூரம் இதில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் இவர்களுக்கு எவ்வித மரியாதை
கள் தலைவர்கள் என்பவர்களால் அளிக்கப்பட்டிருக்கின்றன வென்பதும் இவர்களிடம் மேற்கண்ட முக்கிய தலைவர்கள் பார்ப்பனர்கள்! எவ்வளவு மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றார்கள் என்பதும் இவர்களு. டன் நெருங்கிப் பழகி இவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான பார்ப்பன
ரல்லாத இரண் டொருவர்களுக்குத்தான் நன்றாய்த்தெரியும் ஆனாலும் அதை நாம் வேண்டுமென்றே இங்கு வெளிப்படுத்தவில்லை. மற்றும் இந்தப்.
பிரசாரக் கூட்டத்திற்கு பணம் கொடுப்பவர்கள் யார் என்றுபார்த்தால் நெற்றி வேர்வை நிலத்தில் கொட்டப் பாடுபடும் பார்ப்பனரல்லாத மக்களே மூட்டை கட்டி பண முடிப்பை அப்பார்ப்பன பிரசாரத்திற்கு காணிக்கையாக வைக்
கின்றார்கள். ஆனால் இது சங்கராச்சாரியாருக்கு கொடுப்பதைவிட மோச மல்ல என்றே சொல்லலாம்.
ஏனென்றால் இந்தப் பணத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாதா ராவது சாப்பிடுகின்றார்கள் என்கின்ற திருப்தி இருந்தாலும் இந்தக்
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காணிக்கைத் தொகையானது எந்தப் பார்ப்பனரல்லாதார் கொடுக்கின்றார் களோ அந்த சமூகச் செல்வாக்கை ஒழிக்கப் பிரசாரம் செய்யவே பயன் படுத்தப்படுகின்றன என்பதை பார்க்கின்றபோது நம் நாட்டு மக்களின் நிலையை எடுத்துக்காட்ட இதைவிட வேறு உதாரணம் தேவையா என்று கேட்கின்றோம்.
இதற்கேற்றார்ப் போல் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்; புதிய சட்டத்தின் படி நடைபெற யேற்கனவே ஒரு வருஷ-காலம் வாய்தா கொடுக்கப்பட்டு அந்த ஒரு வருஷ காலவாய்தாவும் தீர்ந்து இப்போது மறுபடியும் புது எலக்ஷன்கள் நடைபெற இன்னும் 6 மாதமோ ஒரு வருஷமோ வாய்தா கொடுக்கப் போகின்றதாக தெரியவருவதைப் பார்த்தால் இனியும் ஒரு வருஷகாலத்திற்கு குறையாமல் இந்தத் தேர்தல் பிரசாரத்தொல்லை நமது
நாட்டில் இருக்கும்போலத்தான் காணப்படுகின்றது. பிறகு அதுமுடிந்த வுடன் சட்டசபை தேர்தல் பிரசாரங்கள் முறையே இந்தப்படி தொடங்கப் படலாம். ஆகவே நம் நாட்டு விடுதலைப் பிரசாரங்கள், தேசீயப் பிரசாரங்கள் ஆகிய பொது நல சேவைகள் என்பவைகள் எல்லாம் தேர்தல் பிரசாரமும் பதவி பெருவதுமாகவே இருந்து வருகின்றதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம். இந்தத் தந்திரம் சுமார் 50 வருஷமாக (காங்கிரஸ்: ஆரம்பிக்கப் பட்ட காலமாக! ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது என்றாலும், இந்த விழிப்பான சமயத்திலும் அதே கூட்டம் அதே காரியத்தை
இனியும் இந்த நாட்டில் நடத்துகின்றது என்றால் - நடத்த செளகரியமிருந்து வருகின்றது என்றால் இந்த நாட்டு மக்கள் எந்த அளவில் முற்போக் கடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே ஆங்காங் குள்ள பார்ப்பனரல்லாத மக்கள் இந்த சூட்சிப் பிரசாரத்திற்கு ஏமாந்துவிடாமல்: ஜாக்கிரதையாய் இருக்கவேண்டுமென்றே எச்சரிக்கை செய்யவே இதை எழுதுகின்றோம். நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று எழுதுவதி னாலேயே வாசகர்கள் தவறுதலாய் நினைத்து விடக்கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதாவது இப்படி எழுதியதால் டி பிரசாரக்கூட்டங்கள் நடத்தப்படுவதில் யாராவது குழப்பம் விளைவிக்கவோ, கேள்விகள் முதலியவைகள் கேட்டு தொல்லை விளைவிக்கவோ வேண்டும் என்பதாக கருதிவிடக்கூடாது என்றும் மேலும் அப்படிப்பட்டகூட்டம் எதுவானாலும், யார் பேசினாலும், எதைச் சொன்னாலும் இஷ்டப்பட்டவர்கள். பேசாமல் கேட்டுக் கொண்டிருப் பதும் இஷ்டமில்லாதவர்கள் அங்கு இருக்காமல் திரும்பிவிடுவதுமாக இருக்கவேண்டுமே யொழிய சிறிது கலவரமாவது உண்டாக்குவது யோக்கிய மல்ல வென்றே சொல்லுவோம். கூட்டங்களில் பேசியானவர்களின் பேச்சுக்கள் ஏதாவது குற்றமுடைய தாகவோ உண்மைக்கு மாறானதாகவோ திருத்தி தப்பர்த்தம் புரியும்படி கூறப் பட்டதாகவோ இருந்ததாக தெரிய வருமானால் அவற்றை பொருமையுடன் கேட்டுக் கொண்டிருந்து மறுநாளோ அல்லது அதற்கடுத்த செளகரியப்பட்ட நாளோ இதற்கென்றே ஒரு கூட்டம் கூட்டி அவர்கள் பேசிய மாதிரி நாம்
குடி அரசு - 19310) 254
பேசாமல் அதாவது அதே குற்றத்தை நாம் செய்யாமல் தெளிவாயும் நியாயமாயும் விளக்குவதன் மூலம் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்றே தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ஆகவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் குழப்பமோ காலித்தனமோ தொல்லைகளோ விளைவிக்கக்கூடாதென்று, மறுபடியும் வலியுறுத்திக் கூறுகின்றோம். பார்ப்பனப் பிரசாரத்திற்கு வருகின்றவர்கள் பலர் வரும்படிக்கோ, பெருமைக்கோ வருகின்றவர்களாக இருக்கலாம் என்றாலும் பெரும் பான்மையோர் ஒருபொதுநல சேவையை குறிகொண்டே வருகின்றார்கள் என்பதை நாம் மறைக்க முயலவில்லை. ஆனால் அப்பொதுநல சேவை எதுவென்றால் தங்கள் பார்ப்பன சமூகத்தின் நன்மையையும் ஆதிக்கத்
தையும் உயர்வையும் குறியாக வைத்து அவற்றை நிலைநிருத்தவும் பெருக் கவும் என்ற நோக்கம் கொண்ட சமூகத் தொண்டர்களாக வருகின்றபடியால் அந்த அளவில் அவர்களுக்கு உள்ள சமூக பக்தியை நாம் பாராட்ட வேண்டி யவர்களாகவும் பொறாமைப் பட வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
பார்ப்பனரல்லாத சமூகத்தில் அந்த மாதிரி சமூக நன்மைக்கு என்று கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு புரப்படுகின்ற மக்கள். மிக மிக சுருக்கமே ஆகும். பார்ப்பனர்களுக்கு பணம் கொடுத்து ஆதரித்து பார்ப்பனரல்லாதார் பக்தி காட்டுவது போல் பார்ப்பனரல்லாத பிரசாரகர்கள். வந்தால் அவர்களை ஆதரிப்பவர்களும் பொதுச்செலவுக்கு பணம் கொடுப்பவர்களும் மிக மிக சுருக்கமே யாகும். பார்ப்பன பிரசாரகர்களி டத்தில் இருக்கும் கட்டுப்பாடும் அடக்கமும் பார்ப்பனரல்லாத பிரசாரக். களிடத்தில் காணப்படுவதும் அருமையோகும்.உதாரணம் வேண்டுமானால். சாதாரணமாக நமது நாட்டில் காங்கிரஸ் என்னும் பார்ப்பனப்பிரசாரம் ஏற்பட்டு 50 வருஷங்களாகியும் இன்றுவரை ஒரு பார்ப்பனத் தலைவராவது - ஒரு பார்ப்பன அதிகாரம் பதவி பட்டம் பெற்ற ஆசாமியாவது - சட்டையை கழட்டி வைத்தால் ஜேப்பில் இருக்கின்ற பேனாவைத்திருடி விற்றுப் பிழைக்கும் ஒரு பார்ப்பனத் தொண்டனாவது- “சுத்தமாய் நாளைக்கு கஞ்சிக்கு வகையில்லை” என்று சொல்லிக்கொள் ளக்கூடிய ஒரு உபாதானப் பிச்சைகாரப் பார்ப்பனனாவது எந்தச் சமயத்திலும் எப்படிப்பட்ட நெருக்கடி யான நிலைமையிலும் தன்னுடைய சமூகநன்மையையும் சமூக ஆதிக்கத் தையும் சமூக உயர்வையும் கடுகளவாவது விட்டுக் கொடுத்ததாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
வேண்டுமானால் கள்ளுசாராயம் குடிப்பார்கள், எங்கு வேண்டு மானாலும் புசிப்பார்கள், கண்டபடியெல்லாம் திரிவார்கள், எவ்வளவு இழிவான தென்று கருதப்பட்ட வேலைகளை வெல்லாம் கூட செய்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட எவர்களிடமும் பார்ப்பன சமூக நலத்தையும் உயர்வையும் ஒரு கடுகளவாவது விட்டுக்கொடுத்ததாக ஒரு சிறிதும் காண முடியாது. மற்றபடிபார்ப்பனரல்லாதார்களிலோ என்றால் சமூக நலத்தையும்
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சமூக சுயமரியாதையையும் ஒரு ஓட்டுக்கு விற்றுவிடத் தயாராயிருப்பார்கள். இந்த வித்தியாசங்களே தான் எப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமை யையும் பார்ப்பனர்கள் சமாளித்து வருவதும், பார்ப்பனரல்லாதார்கள் எப்படிப் பட்ட செளகரியமான நிலைமை கிடைத்தாலும் அதிலிருந்து சடுதி யில் கீழேவிழுந்து விடுவதுமாயிருகின்றார்கள்.ஆகையால் இனியாவது பார்ப்பன ரல்லாத பொதுமக்கள் கவனித்து சமூக நன்மையை முக்கியமாய் கருதி சூக்ஷிக்கும் தந்திரத்திற்கும் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையுடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டுமாய் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தி எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.04.1931
குடி அரசு - 19310) 256
சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல. யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளு வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்துகொண்டு “சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்” என்று பழிசுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப்: பார்க்கிறார்கள். ஆகவே இது அவர்களுடைய நியாயமற்ற தன்மையையும் பயங்காளித்தன்மையையும் வேறு வழியில் சமாதானம் சொல்ல சக்தியற்ற தன்மையுமே காட்டுவதாகின்றது.
கோவில்களைக் குற்றம்சொல்லி அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக்காட்டி இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும் இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்துகொண்டு “அவைகள் அவசியம் இருக்க வேண்டும்” என்றும் “அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை: அழிந்துவிடும்” என்றும் “சாமி பக்திக்காக தாங்கள் கோவில்களைக் காப்பாற்றுவதில்லை” என்றும் “ஓவியக்கலை அறிவுக்காக கோவில்கள். காப்பாற்றப்பட வேண்டும்” என்றும் சொல்லுகின்றார்கள். இதுபோலவே புராணங்களைப் பற்றிய ஆபாசங்களை எடுத்துச் சொல்லும் போதும் இதே பண்டிதர்கள் “புராணக் கதைகளை நாங்கள் மதிப்பதில்லை” என்றும் “அப்: புராணங்களில் உள்ள இலக்கண இலக்கிய கலைகளையே காப்பாற்ற முயற்சிக்கின்றோம்”” என்றும், “கம்பன் கவிச்சுவையும் சேக்கிழார் தமிழ்ச் சுவையும் இவ்வுலகில் வேறு எங்கும் காணமுடியாது” என்றும் “ஆதலால் அவைகள் காக்கப்பட வேண்டும்” என்றும் பேசுகின்றார்கள்.
ஆகவே நமது பண்டிதர்களின் ஓவியக்கலையும்,காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால் அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால் இந்தியக்கோவில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மதிக்கமுடியாத ஓவியங்கள் என்பதோடு அவை மனிதத்தன்மையும், பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் அவை இருப்பதையும் காணலாம்.எப்படியெனில் இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்மந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத்தவிர தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அருமை என்றே சொல்ல வேண்டும். அது மாத்திர மல்லாமல் அவைகளில் இயற்கைக்கு முறண்பட்டதே, 100-க்கு 99 ஓவியங்
கள் என்றும் சொல்லவேண்டும். சாதாரணமாக மனிதனும், மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும் மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பக்ஷிகளின்மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும், நாலு கைகளும், ஒன்று, இரண்டு.
மூன்று, நான்கு, ஐந்து ஆறு முகங்களும், சிறிய உருவத்தின்மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் புஷ்பத்தின் மீது ஒருபெண் நிற்பதும் இந்த மாதிரியாகவும் இன்னமும் இதைவிட எத்தனையோ பொறுத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஒவியமாகக் கருதப்டுகின்றன. சாதாரணமாக மேல்நாடு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா? உண்மை தோற்றமா? என்று மருளும்படியாகவும் அவைகளுடைய சாயல் முதலிய வைகளில் இருந்தே குணம், காலம், இடம்,நடவடிக்கை முதலியவைகள் தெரிந்துகொள்ளும்படி யாகவும் அவைகள் பிரத்தியக்ஷமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும் எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச்சாதாரண தன்மையில் அறியும்படியாகவும் நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக்கொள்ளும் படியாகவும் இருப்பதைக் காணலாம். இவற்றிற்காக ஒரு தம்படியாவது செலவில்லா மலும், பூஜை, நைவேத்தியங்கள் செய்வதின் மூலம் நேரத்தையும், அறிவையும் பறி கொடுக்காமலும் அனுபவிக்கலாம்.
ஆகவே அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங் களையும், பதுமைகளையும் விட்டுவிட்டு, அநாகரீகமும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப்பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து பூஜை முதலியது செய்து கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக்கொண்டு. “.அவைகளை ஓவியக்கலைக்
காகக் காப்பாற்றுவதற்காக இப்படிச் செய்கின்றோம்” என்றால் இது பகுத்தறி
வும், யோக்கியக் குணமும் படைத்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா.
- பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.
இதுபோலவே காவியங்கள் என்பவைகளை எடுத்துக் கொண்டோ மேயானால் அதன் ஆபாசக் களஞ்சியங்களை அளவிட்டுச் சொல்ல முடியாது. நமது மக்களில் 100-க்கு 1பேரே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். அவர்களில் ஆயிரத்திற்கு அரை பேரே காவிய இலக்கண இலக்கியங்களை
குடி அரசு - 19310) 258
அறியக்கூடியவர்கள். அவர்களில் எத்தனையோ ஆயிரத்திற்கு ஒருவரே புராணங்களை வெரும் இலக்கியமாகவே மாத்திரம் எண்ணுபவர்கள் அல்லது அனுபவிப்பவர்கள் என்பதாக கணக்கெடுக்கலாம்.
ஆகவே இவர்களைத்தவிர மற்ற கோடிக்கணக்காண மக்கள் அவற்றை என்னவாகக் கருதுகின்றார்கள்? அதைப்பார்த்தபின், கேட்ட பின் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள்? என்கின்ற விஷயங்கள் இந்தப் பண்டிதர்களுக்கு தெரியாததா என்று கேட்கின்றோம்.
கம்பராமாயணத்தின் கவி அழகையும், சேக்கிழார் புராணத்தின் தமிழ் அழகையும் பண்டிதர்கள் எடுத்துச்சொல்லும்பொழுதே புஸ்தகத் தின் முன்
தேங்காய், பழம் உடைத்து கற்பூரம் பற்றவைத்து, பூஜை செய்து, கீழே விழுந்து கும்பிட்ட பிறகு “ஸ்ரீ மதேராமானுஜாய நமஹ” என்றும், “நமப்பார்வதீபதே
- அரகர சங்கர மகாதேவா” என்றும் சொல்லிவிட்டுப் பிறகு கண்மூடி, கை கூப்பி, காப்புச் சொல்லி அருள் உண்டாக்கிக்கொண்டு பிறகுதான் கவி
படித்துப் பொருள் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள். அதுவும்யார் முன்னிலை:
யில், எப்படிப்பட்ட ஆண் பெண் முன்னிலையில் என்ப தைப்பற்றி நாம் விவரிக்கவே வேண்டியதில்லை.
ஆகவே இந்த நிலையில் புராணங்கள், காவியங்கள் ஆகியவைகள் இலக்கியத்திற்கும், இலக்கணத்திற்கும் பயன்படுகின்றனவா- பயன்படுத்தப். படுகின்றனவா? அல்லது மக்களை இலக்கண இலக்கிய அறிவற்ற மக்களாக்
கப் பயன் படுத்தப்படுகின்றனவா என்பதை அறிவுள்ள வாசகர்க ளையே யோசித்து அறிந்து கொள்ளும் படி விட்டுவிடுகின்றோம்.
இந்த இடத்தில் நாம் முக்கியமாய் குறிப்பிடுவது என்னவென்றால் நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும்,புஸ்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரி காட்டுமிராண்டித் தனமான அநாகரிகமான காவியங்களும், ஓவியங்களுமல்லாமல் வேறு வகை ஒன்றுமில்லாமல் போன தால் அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும், வஞ்சகத்தையும் சொல்லிக்கொண்டு இவை களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.
ஆகவே இம்மாதிரி ஆபாசமும் அநாகரீகமானதுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்படவேண்டுமானால் முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு, வாழ்க்கைச் செளகரியத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டியது பகுத்தறிவையும், நாகரீகத்தையும் விரும்பும் பொது ஜனங்களின் கடமையாயிருக்கின்றது.
மேல்நாட்டுப் பண்டிதர்களுக்கு அவர்களுடைய கல்வியானது பகுத்தறிவை உண்டாக்கக் கூடியதாய் இருப்பதால் அவர்கள் அனாகரீகப்
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பழங்காவியங்களுடையவும், ஓவியங்களுடையவும் உதவி சிறிதும் இல்லாமலே உயிர்வாழ செளகரியமடைந்திருக்கிறார்கள்.
ஆனால் நம்முடைய பண்டிதர்கள் பரிதாபகரமான நிலைமையில் இருப்பதால் அவர்களைக் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லை என்றே சொல்லுவோம்.
குடி அரசு - கட்டுரை - 26.04.1931
குடி அரசு - 19310) 260
காந்தியும் நாகரீகமும்
உயர்திரு. காந்தியவர்கள் தற்கால முற்போக்குக்கும், ீர்திருத்தத்திற்கும், நாகரீகத்திற்கும் பொருத்தமற்றவர் என்பதோடு அவர் பழைய கால நிலை மைக்கே மக்கள் போகவேண்டும் என்கின்ற அறிவு உள்ளவர் என்றும் மூட நம்பிக்கையிலும் மூடப்பழக்க வழக்கங்களிலும் மிகுதியும் ஈடுபட வேண்டு மென்றும் ஆகவே இந்தியா விடுதலைபெறவோ முற்போக்கடையவோ நாகரீகம் பெறவோ திரு.காந்தியிடத்தில் நம்பிக்கை வைக்க முடியா தென்றும் கொஞ்சகாலமாக எழுதிவருகின்றோம். அதுமாத்திரமல்லாமல் அவர் இந்தியர்களின் பிரதிநிதியாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூட எழுதியிருந்தோம். இவைகளையெல்லாம் அனுசரித்தே திருநெல்வேலி
ஜில்லா தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டிலும் பல காரணங்கள் காட்டி திரு. காந்தி இடம் நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப். பட்டிருக்கிறது.
இந்தத் தீர்மானமானது சிலருக்கு அதிருப்தியைக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. காங்கிரசிலும் காந்தீயத்திலும் புதிதாக ஞானஸ்நானம் பெற்று மதம் மாறின சில பக்தர்களுக்கு மேல் கண்ட நம்பிக்கையில்லாத தீர்மானத்தால் மிக்க மனவருத்தமேற்பட்டதாகவும் கேட்டு மிக வருந்தி னோம். பலர் துக்கம் விசாரித்ததாகவும் தெரிந்தோம்.ஆனால் இவை களுக்கு எவ்வித பரிகாரமும் செய்யக்கூடாத நிலைமையில் நாம் இருக்கின் றோம் என்பதை ஒப்புக்கொள்ளுகின்றோம். ஆயினும் அப்படிப்பட்டவர்கள் திருகாந்தியை உணருவதன் மூலம் தானாகவே அத்துக்கங்கள் ஒழியக்கூடும் என்று நினைக்கின்றோம். திரு.காந்தியவர்கள் டெல்லியில் இந்திய வியாபார சங்கமகாநாட்டை திறந்து வைக்கும்போது அவர் பேசியிருக் கும் பேச்சானது (சுதேசமித்திரனில் காண்கின்றபடி) “நான் தென்னாப்பிரிக்காவில் ஜெனரல். ஸ்மட்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தென்னாப்பிரிக்காவில் வந்து குடியேறிய வெள்ளைக்காரர்கள் தங்கள் நாகரீகமானது கீழ்த் திசைக்காரர் களின் செல்வாக்கால் சீர்கெட்டுப் போகக்கூடாது என்று கருதுகின்றார்கள். என்று என்னிடம் கூறினார். அது போலவேதான் இந்தியாவும் விரும்பு கின்றது” என்று பேசியிருக்கின்றார்.
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
‘wppn @ நாகரிகங்கள் இந்தியாவிற்குள் புகுந்து இந்திய நாகரிகத் தைக் குலைக்காமல் இருக்கவேண்டுமென்று (இந்தியா? நான் விரும்பு கின்றேன்” என்று பேசியிருக்கின்றார். ஆகவே திரு.காந்தியவர்களின் முற் போக்கையும் சீர்திருத்தத்தையும் நாகரீகத்தையும் அறிய வேண்டியவர் களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். இது மாத்திரமல்லாமல் இனியும் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு பத்திரிகை நிரூபரிடம் பேசும்போது சுயராஜி யம் கிடைத்தவுடன் கிருஸ்துவ பாதிரியார்கள்யெல்லாம் இந்தியாவை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விடுவார்கள் என்பதாகசொல்லி இருக்கின்றார். அதுவும் எப்படிப்பட்ட பாதிரிகள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றால். கல்வி கற்பிப்பதன் மூலமாகவும், ஆஸ்பத்திரிகள் வைத்து நோய்களுக்கு சிகிச்சைசெய்வதன் மூலமாகவும் மதப்பிரசாரம் செய்யும் பாதிரிமார்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆகவே திரு.காந்தியவர்கள் நம்நாட்டுப் பண்டிதர்கள் விரும்பும் சீர்திருத்தம், நாகரீகம் முதலியவை கொண்ட தொல்காப்பியனார் காலத்திய நாகரீகக் காரராகவே இருக்கின்றார் என்பதில் இனியும் யாருக்காவது சந்தேகம் இருக்கின்றதா என்றே கேட்கின்றோம்.
திரு.காந்தி நினைத்துக்கொண்டிருக்கும் கீழ் நாட்டு நாகரீகம் என்பது என்ன என்பதாக வாசகர்கள் அறிய வேண்டுமா? என்று கேட்கின்றோம். முதலாவதாக அவர் இந்து மதமே ஒரு உருவாய் எடுத்து தான் வந்திருப்ப தாக தன்னைப்பற்றி அடிக்கடி சொல்லிவந்திருக்கின்றார். இந்திய மக்களுக்கு இந்து மதமே போதும் என்றும் வேறு மதம் வேண்டியதில்லை என்றும் இந்து மதம் என்றால் வருணாச்சிரம தர்மமும் இராமாயணத்தில் உள்ள இராமனது தர்மமும் பாரதத்தில் உள்ள கீதையினது தர்மமும் என்றும் அடிக்கடி சொல்லிவருகிறார். அது மாத்திரமல்லாமல் கீதை உபதேசமும் கீதை பிரசார
மும் செய்தும் வருகின்றார். ராமராஜியத்தை ஸ்தாபிப்பதற்காகவேதான் மூச்சுவிடுவது முதல்-தூங்குவது வரையில் உண்டான காரியங்கள் செய்து கொண்டு உயிர் வாழ்ந்திருப்பதாகவும் சொல்லுகின்றார்கள். ஆகவே இந்த இருபதாவது நூற்றாண்டில் சைன்சு உலகத்தில் 10,000-மைலுக்கு அப்பாலும் இப்பாலும் மக்கள் இருந்துகொண்டு ஒருவரை ஒருவர் நேரில் கண்டு பேசிக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் ராமாயண பாரத காலத்து நாகரிகத்திற்கும் இந்து மதக்கொள்கைக்கும் ஏற்ற ராஜீய பாரம் இருக்கவேண்டும் என்றால், சொல்லுகின்றவர் ஏதோ ஒரு காரணத்தால் சொல்லுவதானாலும் இதை ஆதரித்து ஆமாம் போடுகின்றவர்களின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை வாசகர்களே யூகித்து உணர்ந்து கொள்ள விட்டுவிடுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 26.04.1931
குடி அரசு - 19310) 262
கருங்கல் பானையாம் முணிசிபல் வொண் பாடசாலை
பெண்கள் யாவரும்படிக்கவேண்டும். தங்களுடைய சீர்திருத்தத்தின் படி அரசாங்க உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்து தயாராயிருக்க வேண்டும். இனி மேல் சுயமரியாதை உள்ள எந்த ஆண்களும் படித்த பெண்ணைத்தான் கலியாணம் செய்துகொள்வார்கள். ஆதலால் பெண்கள் படித்திராவிட்டால் அவர்கள் “கன்னியா ஸ்திரிகள்'”” மடத்திற்குதான் இனி அனுப்பப்படுவார்கள். அனேக ஆண்கள் தாங்கள் கல்யாணம் செய்து கொண்ட பிறகுகூட இப்போது யோசித்துப்பார்த்து தங்களது சுயமரியாதையை உத்தேசித்து தாங்கள் முன்கலியானம்செய்து கொண்ட படிக்காத பெண்களை தள்ளிவிட்டு படித்த பெண்களாகப் பார்த்து மறு விவாகம் செய்துகொள்ளப் பார்க்கின்றார்.
கள். ஆதலால் பெரிய பெண்கள் கூட தங்களுக்கு “எப்படியோ ஒருவிதத்தில் கல்யாணமாகிவிட்டது. இனி பயமில்லை” என்று குருட்டு நம்பிக்கையில்
இருந்துவிடாமல் அவர்களும் கஷ்டப்பட்டு படித்து தங்கள் தங்கள் புருஷன் மார்களை வேறு கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படா
மல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் படித்தால் கள்ளப் புருஷர் களுக்குக் கடிதம் எழுதுவார்கள் என்று மூடப் பெற்றோர்கள் கருதுகிறார்கள், சொல்லுகின்றார்கள். அது மிகவும் முட்டாள் தனமும் போக்கிரித்தனமுமான கருத்தாகும். எந்த பெற்றோர்களும் இதற்காக பயப்பட வேண்டியதில்லை. எந்தப் பெண் கடிதம் எழுதினாலும் ஆண் பிள்ளைகளுக்குத்தான் எழுது வார்களே ஒழிய வேறு யாருக்கும் எழுதமாட்டார்கள். ஆதலால், நாம் ஆண் களுக்கு இப்போதே சொல்லி வைத்துவிடலாம் என்னவென்றால் எந்தப் பெண் கடிதமெழுதினாலும் படித்துப்பார்க்காதீர்கள் என்றும், படித்துப் பார்த்தா
லும் பதில் எழுதாதீர்கள் என்றும்சொல்லிவைத்துவிடலாம். அந்த வார்த்தை களை ஆண்கள் கேட்காவிட்டால் அந்த ஆண்களை தண்டிக்கின்ற தண்டனையையே பெண்களுக்கும் தண்டித்து விடலாம். இந்த காரியத்திற் காக உலகில் உள்ள மக்கள் சமூகத்தில் பாதியைப் படிப்பில்லாமல் வைத் திருப்பது என்பதும் மிகவும் மோசமான காரியமேயாகும்.
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சற்றுமுன் இங்கு நடந்த துருவசரித்திரத்தில் பெண்கள் நடித்தமாதிரி மிகவும் போற்றதக்கதாகும். இதை கற்பித்த உபாத்தியாயர் மிகவும் கற்பிப்
பதில் தேர்ந்த உபாத்தியாயர் என்பது எனது அபிப்பிராயம். பிள்ளைகளும் மிகவும் கூர்மையான அறிவுள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும் .
ஆனால், கதை மாத்திரம் மிகவும் மோசமானது. ஏனெனில் இக் கதையில் அறிவும் இல்லை ஒழுக்கமும் இல்லை. இரண்டு பெண்டாட்டி கதை சில விஷயங்களில் இயற்கையாகக் காணப்பட்டாலும், காட்டுக்குப் போய் தபசுசெய்து ஏதோ காரியம் சாதித்ததாகச் சொல்லப்படுவது இயற் கைக்கும். அறிவுக்கும் நேர்விரோதமானதோடு மக்கள் அறிவைக் கெடுப் பதுமாகும். ஆதலால் உபாத்தியாயர்கள் இனி இம்மாதிரி காரியங்களுக்கு நல்ல கதை. களாக அதாவது அறிவு, ஒழுக்கம், முயற்சி, தன்நம்பிக்கை ஆகிய காரியங் களுக்கும் மக்கள் பின்பற்றி நடப்பதற்கும் ஏற்றதாகப் பார்த்துத் தெரிந் தெடுத்து நடத்தப்பட வேண்டும்.
தவர கும்மி. கோலாட்டங்களை ஒழித்து விட்டு ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக் குத்து, குஸ்தி முதலியவைகளையும் சொல்லிக்கொடுத்து ஒரு ஆண் பிள்ளைக்கு உள்ளபலம், தைரியம் உணர்ச்சி ஆகியவைகள் பெண்களுக்கும் உண்டாக்கும்படியாகவும் செய்யவேண்டும்.
குறிப்பு: ஈரோட்டில் 20.04.1931 அன்று “பெண்கல்வி” பற்றி ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 26.04.1931
குடி அரசு - 19310) 264
இந்து மத தர்ம பரிபாணை சட்டம்
இந்து மத பரிபாலன சட்டம் ஒன்று சென்னை சட்ட சபையில் சுமார்
6. 7 வருஷத்திற்கு முன் கொண்டுவரப்பட்ட காலத்தில் பார்ப்பனர் எல்லோரும் ஏகோபித்தும் பார்ப்பனரல்லாதார்களில் பலர் பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டும் அச்சட்டத்தை “மதத்தில் சர்க்கார் பிரவேசித்து விட்டார்கள்” என்று ஆக்ஷ்பித்ததுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டவர்
கள் மீதும் கெட்ட எண்ணம் கற்பித்து எவ்வளவோ எதிர்பிரசாரம் செய்தும் வந்தது யாவரும் அறிந்ததேயாகும்.
அதுமாத்திரமல்லாமல் காங்கிரஸ் முதலிய அரசியல் ஸ்தாபனங் களின் பேராலும் பல பார்ப்பனர்கள் அச்சட்டத்தை எதிர்த்ததும் இந்தக் காரணத்தைவைத்தே தேர்தல்களில் எதிர்பிரசாரம் செய்ததும் பொது ஜனங் களுக்கு ஞாபகமிருக்கலாம். “இந்து” “சுதேசமித்திரன்” முதலிய “தேசீய” பத்திரிகைகளும் அச்சட்டத்தைக் கண்டித்து எழுதி பார்ப்பன சந்தாதாரர் களைக் கொண்டு மகஜர்கள் வாங்கி சர்க்காருக்கு அனுப்பியதும் ஞாபக மிருக்கலாம். அப்படிப்பட்ட நெருக்கடியான காலத்தில் நாமும் நமது நண்பர் கள்பலரும் பொது ஜன அபிப்பிராயம் என்பதற்கு எதிராய் நின்று பார்ப்பனர். களின் எதிர்ப்புகளை யெல்லாம் தாக்கி கண்டித்து அச்சட்டத்தின் நன்மை யைப்பற்றியும், தேவையைப்பற்றியும் பொது ஜனங்களுக்கு எடுத்துக்கூறி எதிர்ப்பிரசாரத்தை அடக்கி வந்ததும் யாவரும் அறிந்திருக்கலாம்.
இந்தநிலையில் அச்சட்டம் சட்டசபையில் நிறைவேறி, கவர்னர், துரை, வைசிராய் பிரபு, அரசர் பெருமான் ஆகியவர்கள் சம்மதம் பெற்று முடிவாக அது அமுலுக்கு வந்திருக்கும் விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும்.
ஆனால் இப்போது அந்த சட்டத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? என்று பார்த்தோமேயானால் அச்சட்டம் இல்லாதபோது இருந்த நிலைமை யைவிட எந்த அளவாவது “இந்து மத தர்மம்” மாறுபாடடைந்திருக் கின்றதென்றோ, “மக்களுக்கோ” “மதத்திற்கோ” “தர்மத்திற்கோ” நன்மை ஏற்பட்டிருக்கின்றதென்றோ சொல்லுவதற்கில்லை என்றுதான் சொல்ல. வேண்டியதாக இருக்கின்றது. ஆனால் அச்சட்டத்தின் பேரால் சில பார்ப்பன ரல்லாதார் கொஞ்சம் சம்பளம் பெறுகின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளு வோமென்றாலும் விகிதாச்சாரத்தைவிட அதிகமாகவே பார்ப்பனர்களும்
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அச்சம்பளத்தில் பங்கு பெருகின்றார்கள் என்பதைப் பார்த்தால் அதிலும் பார்ப்பனரல்லாதாருக்கு விசேஷ- லாபமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அந்த இலாக்காவின் மூலமாக பார்ப்பனரல்லாதாரியக்க மென்னும் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலும் பதவியிலும் இருப்பதற்கு ஒரு வசதி அளிக்கின்றது என்கின்ற முறையில் அனுகூலமாயிருக்கின்றது என்று நினைப்போமானால் அவ்வழியிலும் பார்ப்பனர்களும் தங்கள் விகிதாச்சாரத்
திற்கு மேற்பட்ட பதவியையும் அதிகாரத்தையும் லாபத்தையும் அனுபவித் துக்கொண்டுதான் வருகிறார்கள். ஆதலால் அந்த வழியிலும் பார்ப்பன ரல்லாதாருக்கு விசேஷ- லாபம் ஏற்பட்டது என்று சொல்லி விடுவதற்கும் இல்லை.
கோவில் நிர்வாகங்களின் யோக்கியதைகளைப்பற்றி நமக்குக் கவலை: யில்லையானாலும் அதன் வரும்படிகளான தேசத்தின் பொதுச் சொத்துக்கள் போகும் மாதிரியைப் பார்க்கும் போது அதாவது இந்தச் சட்டத்திற்கு முன் அதிகாரத்தின் பேரால் திருட்டும் கண்டபடியெல்லாம் செலவினங்களின் பேரால் கொள்ளையும் போய்க்கொண்டிருந்த பணங்கள் இப்போது அதாவது சட்டத்திற்குப் பிறகு சட்டப்படி திருட்டும் கொள்ளையும் போய்க் கொண்டி ருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டி யிருக்கின்றதற்கு வருந்துகின்றோம். ஆகவே அந்தவகையிலாவது பயன் உண்டு என்று சொல்லுவதற்கும் இடமில்லை.
மற்றபடி மக்களுக்கு மதஉணர்ச்சியோ, தர்மஉணர்ச்சியோ, ஒழுக்க உணர்ச்சியோ கற்பிக்கப்படுகின்றதா என்றாவது பார்த்தால் அந்தத்துறை யிலும் விஷயங்களில் முன்னையைவிட இப்போது மோசமாகவே நடை பெற்று வருவதை எடுத்துச்சொல்லவேண்டி இருப்பதற்கும் வருந்த வேண்டியதாகவே இருக்கின்றது.
தேவஸ்தானக் கமிட்டிகள் நியமிக்கப்படும் ஒழுங்கும் அவர்களால். தர்ம கர்த்தாக்கள் டிரஸ்டிகள் நியமிக்கப்படும் ஒழுங்கும் பெரிதும் முட்டாள் களின் பணத்தை நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற கனவான்கள் அடிக்கும்கூட்டுக் கொள்ளையாகவே நடைபெற்று வருகின்றன. கோயிலின்பேரால் மதத்தின் பேரால் வசூலாகும் பணத்தில் ஒரு காசு குறைவில்லாமல் வசூல் செய்யவும், கோயிலின் பேரால் மதத்தின் பேரால் நாசமாகும் பணத்தில் அரை காசு குறையாமல் வட்டியுடன் நாசமாக்கவும், கோயிலின் பேரால் மதத்தின் பேரால் வயிறுவளர்ப்போர்களுக்கு எவ்விதக் கேள்வி கேப்பாடுமில்லாமல் தாராளமாய்பிழைப்பு நடக்கவுமான காரியங்கள் தான் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இந்த மாதிரி சட்டம் நிறைவேற்றப்பட்டதால் என்ன பலனைக் கொடுத்தது? இதன் அவசியம் என்னவாயிற்று? என்பதைப்பற்றி யோசிக்க வேண்டியதற்கு இது முக்கியமான சமயம் என்றே சொல்லுவோம்.
குடி அரசு - 19310) 266
எல்லா மக்களுக்கும் சம நியாயம், சம சந்தர்ப்பம், சம உரிமை கொடுப்பதே நோக்கமாகக் கொண்டதன் பயனாகவே பதவியும், அதிகார மும்
பெற்ற கூட்டத்தார் இன்று இந்த இந்துமத தர்ம பரிபாலன சட்டத்தினால் “இந்து மதத்திற்கு, தர்மத்திற்கு செய்த நன்மை என்ன என்பதை பொது ஜனங்கள். யோசித்துப் பார்க்க வேண்டியது முதற்கடமையாகும். இரண்டாவதாக இந்த மாகாணத்தில் இந்து மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கும் 4- கோடி மக்களில் சுமார் ஒரு கோடி மக்களுக்கு இந்துக் கோவில்கள் என்பவைகளில் பிரவேசமளிக்க இதுவரை யாதொரு மார்க்க மும் செய்யாமல் ஒரு கூட்டமானது 10-வருஷமாய் மாதம் 5000, 4000, 2000, 1000, 800, 500, 250, 150, 100, 75 வீதம் பல நூற்றுக்கணக்கான மக்கள் சமதர்மத்தின் பேரால் பதவி அடைந்து சம்பளம் பெற்று வாழ்வதில் என்ன பிரயோஜனம் என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களுக்கு நினைப்: பூட்டுகின்றோம்.
மற்றும் 400-லட்சம் “இந்து மக்களில்” 13 லட்ச மக்கள் பார்ப்பனர் என்னும் பேரால் பிறவியின் காரணமாக அக்கோயில்களில் அனுபவிக்
கும் நியாயமற்ற உயர்வையும், செல்வத்தையும் சிறிதுகூட மாற்றி நியாயம் செய்ய முடியாமலும். அவர்கள் தவிர மற்ற மக்கள் சிங்கு, நாயகர், செட்டி
யார், முதலியார், நாயுடு, தேவர், பிள்ளை என்கின்ற எல்லா ஜாதியாருக்கும் அக் கோயிலில் பார்ப்பனர் கிட்ட நெருங்கக்கூடாதவர்களாய் இருந்து அனுபவிக்கும் இழிவையும் கொடுமையையும் சிறிதுகூடப் போக்க முடியா மலும் இருக்க மேல்கண்டபடி ஒருசிலரை இந்து தர்மபரிபாலனம் என்னும் பேரால் கொள்ளையடிக்கவிட்டுக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் என்று யோசித்துப் பார்க்கும்படியும் விரும்புகின்றோம்.
மற்றும் சாதாரணமாக சென்னை மாகாணத்தின் இந்து கோவில், மடம் ஆகியவைகளின் வரும்படி போர்டார் கணக்குப்படியே வருஷம் ஒன்றுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஆகின்றது.
மற்றும் அதன் பேரால் பொது ஜனங்களுக்கு ஏற்படும் செலவைப் பற்றி இங்கு நாம் குறிப்பிடவில்லை...
ஆனாலும், அக்கோயில்களுக்கும், மடங்களுக்கும். இருக்கும் வரும்படி இல்லாத ரத்தினம், பொன், வெள்ளி முதலிய உலோகவகைகளின் பொருமானம் எத்தனை கோடி ரூ. பொருமானதாகும்? ஆகவே அவற்றின் குறைந்த வட்டி வருமானமும் சேர்ந்தால் இன்னும் வருமானம் அதிகப் படலாம். இந்த வருமானங்களில் இந்துமத பரிபாலன போர்டார் மற்றும் அதன் சிப்பந்திகள் ஆகியவர்கள் சம்பளமாகப் பெரும் ஒரு பாகம் தவிர மற்ற பாகங்கள் முழுவதும் ஒழுக்கமற்றதும், அனாவசியமானதுமான வகை களிலேயே செலவாகின்றன என்பதை யாராவது மறுக்க முடியுமா? அதாவது புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களான “சாமி” களினுடையவும்
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அவர்களது பெண்டுபிள்ளை வைப்பாட்டி அடியார்கள் பக்தர்கள் ஆகியவர். களினுடையவும் பூசைக்கும், கல்யாண முதலிய உற்சவத்திற்கும் என்றும், மற்றும் டிரஸ்டிகளின் சொந்தப் பிரயோசனத்திற்கு என்றும் வீண் போகின் றனவே தவிர வேறு என்ன பலனுக்கு பயன்படுகின்றன?
ஆகவே கோவில்,மடம் ஆகிய ஸ்தாபனங்களும், அதன் செல்வங் களும் இந்துமத தர்மபரிபாலன போர்டு ஏற்பட்டு 7 வருஷ- காலமாகியும் யாதொருவித மாறுதலும் இல்லாமல் இருக்குமானால் இந்தச் சட்டத்தினால் நன்மை ஏற்பட்டதாக எப்படிச் சொல்லமுடியும் என்று கேட்கின்றோம்.
குறைந்த அளவாவது கோவில்கள் மூலமும், மடங்களின்மூலமும் மக்களுக்குச் சமத்துவ மேற்படுத்த அவர்களுக்கு யோக்கியதை இல்லா விட்டாலும், அச்செல்வத்தைக்கொண்டு மக்களுக்கு அறிவு விர்த்திக்கோ, தொழில் விர்த்திக்கோ பயன் படும்படியான வித்தைகளைப் படிப்பிக்க வேண்டிய ஏற்பாடுகளாவது செய்திருக்கக் கூடாதா என்று கேட்கின்றோம் . ஆகையால் அந்தத்துறையிலும் இதுவரை ஏதாவது செய்யப்பட்டதாகச் சொல்லுவதற்கில்லாமலே இருந்து வருகின்றது.
ஆகவே, இந்த நிலைமையில் இருந்துவரும் மதபரிபாலன போர்டை கண்டிக்காமல் இருக்கமுடியவில்லை. மத போர்டு நிர்வாகஸ் தர்கள் பெரும்பாலும் நாணையமும், யோக்கியப் பொருப்புமுள்ளவர்கள் என்பதில் நமக்கு ஆக்ஷபமில்லை என்பதோடு அவர்கள் பெரும் சம்பளம் பெறத் தகுதி உடையவர்கள் என்றே சொல்லலாம். ஆனாலும் அவர்களால் மத தர்மபரிபாலனத்திற்கு என்ன பயன் என்பதுதான்நமது கவலை.
மதம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? என்கின்ற கேள்விகள். புறப்படும் காலையில் மதத்திற்கும் தர்மத்திற்கும் எவ்வளவோ தத்துவார்த் தங்கள் கூறிவிட்டு இயற்கைக்கு விரோதமான விளையாட்டு பொம்மை களுக்கும் சித்திரங்களுக்கும் செய்யும் பூஜை உற்சவம் முதலியவைகளின் பேரால் பலகோடிக்கணக்காக செல்வத்தை பாழாக்குவதுதானா மததர்ம பரிபாலனம் என்று கேட்கின்றோம்.
இவ்வளவு கோடி ரூபாய்களை இவ்வளவு அனாகரிகமான வழியில் இந்த உலகில் வேறு எந்ததேசத்திலாவது இவ்வளவு முட்டாள் தனமாக பாழாக்கப்பட்டு விட்டு100க்கு 97பேர்கள் கீழ்ஜாதி மக்களாகவும், 100க்கு 90 பேர்கள் தன் பெயர் எழுதத்தெரியாத தற்குறிகளாகவும் இருந்து வருகின் றார்களா என்று கேட்கின்றோம். பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து பார்ப்பன ரல்லாதமக்கள் ஆதிக்கம் வரவேண்டும் என்றும் அதுவும் சமதர்ம ஆதிக்கம் வரவேண்டும் என்றும் கருதி இச்சட்டத்தை ஆதரிக்கப் பாடுபட்ட தின் பலன் இதுதானா என்று யோசித்துப் பார்த்தால் நெஞ்சம் குமுறுகின்றதே ஒழிய கொஞ்சமும் திருப்தி அடைய இடமில்லாமலேயே இருக்கின்றது.
குடி அரசு - 19310) 268
உலகம் போகின்ற போக்கில் மதப்பிடிவாதக்காரர்களும் புராண மரியாதையில் மூழ்கி இருந்தவர்களுமான பலர் தைரியமாக வெளிவந்து மகாநாடுகள் கூட்டி இம்மாதிரி நாட்டின் செல்வம் பாழாய்க் கொண்டிருப் பதை நல்வழியில் பயன்படுத்த இசைந்து வருகின்ற காலத்தில்.
அதாவது திருநெல்வேலியில் இம்மாதம் 4, 5 தேதிகளில் கூடிய சைவசித்தாந்த மகாநாட்டில்,
1. “ஏராளமான செல்வங்களையுடைய சைவமடங்களை அரசாங்கத்தார் இந்துமத பரிபாலன இலாகாவின் கீழ் கொண்டு வராமலும் போர்டார்களுடைய பரிசீலனைக்குகூட கொண்டு வராமலும் விட்டு வைத்திருப்பது நியாயமல்ல வென்றும் இனியாவது அப்படிப்பட்ட மடங்களையும் ஆதீனங்களையும், அரசாங்க பரிபாலன இலாக்காச் சட்டத்திற்குள் கொண்டு வந்து அவைகளை பரிசீலனைசெய்து வரவேண்டுமாய் அரசாங்கத்தாரை இச்சைவ மகாநாடு வேண்டிக்கொள்ளுகின்றது.”
2. “ஏராளமான செல்வம் படைத்த முக்கியமான பொது மடங்களே இச்சட்டத்தைவிட்டு விலக்கப்படுவதாயிருந்தால் இந்த மாதிரியாக ஒரு சட்டமே தேவை இல்லை என்றும் சட்ட சபையில் சமீபத்தில் கொண்டுவரப் போகும் தண்டவரி சட்டதிருத்தமும் அவசியமில்லை என்றும் இப்போது இச்சட்டம் அமுல் நடக்கின்ற மாதிரியானது கோயில்களுக்கும் சிறு மடங்களுக்கும் வீண்தொல்லை யையும் நஷ்டத்தையும் விளைவிக்கத்தான் பயன்படுகின்றதா யிருக்கின்றதென இச்சைவ மகாநாடு தீர்மானிக்கின்றது.”
3.“சைவசமய நூல்கள் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று வரையறுத்துக் கூறுகின்றமையால் சிறு தெய்வவணக்கமும் உயிர்ப்பலி இடுதலும் ஜாதி வேற்றுமைகள் காட்டுதலும் சைவ ஒழுக்கத்திற்கு மாறுபட்ட தென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.”
என்பதான தீர்மானங்களை செய்திருக்கின்றபோது யாரோ சில. சுயநலக்காரர்களுக்கும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களுக்கும் பயந்து கொண்டு அரைத்தமாவையே திருப்பித்திருப்பி அரைப்பது போல் பூசை உற்சவம் முதலியவைகளுக்காக வீணாக செல்வங்களை விறயமாக்கிக் கொண்டி ருப்பதற்கு ஒருபோர்டும் பல அதிகாரிகளும் பலசிப்பந்திகளும் இருப்பது மானக்கேடான காரியமல்லவா என்று யோசித்து பார்க்கும்படி பொது மக்களை கேட்கின்றோம்.
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆதலால் அந்த போர்டு இனியாவது சற்று தனது பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து இவ்வளவு செல்வங்களும் ஒரு யோக்கியமான
- பயன்படத்தக்கவழியில் செலவு செய்யப்பட ஒரு திட்டம் போட முயற்சிக்க வேண்டும் என்றும் அந்தப்படி செய்ய முடியாவிட்டால் சுயமரியாதை உள்ளவர்கள் அதைவிட்டு விலகி விடுவதன் மூலம் அப் போர்டுக்கு புத்தி வருவிக்கச் செய்யவேண்டுமென்றும் தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத்தலையங்கம் - 26.04.1931
குடி அரசு - 19310) 270
ஏழாவதாண்டு
நமது “குடிஅரசு” தோன்றி ஆறாண்டு நிறைவு பெற்று ஏழாவதாண் டின் முதல் மலராய் இவ்வாரப்பதிப்பு வெளியாகின்றது. இந்த சென்ற ஆறாண்டுகளாய் “குடி அரசு” நாட்டிற்கு செய்து வந்த தொண்டைப்பற்றி இதன் வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
இந்த நாட்டின் சமுதாய உலகத்திலும், மத உலகத்திலும், அரசியல் உலகத்திலும் இந்த வீசம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஒரு சிறு அளவாவது “குடி அரசு” தன்னை பொருப்பாளியாக்கிக் கொள்ளுவதில் யாரும் ஆக்ஷபணையோ பொறாமையோ படமாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.
“குடி அரசி”ன் கொள்கைகளை ஆதிமுதற்கொண்டு இதுவரையில் கவனித்துவந்த எவரும் சற்று மேல்நிலையில் உள்ளவர்கள் அவற்றை “மிகவும் அதிதீவிரக்கொள்கை” யென்றும், “சாத்திய மற்றது” என்றும். “இது எந்தக்காலத்தில் நடக்கப்போகின்றது” என்றும், “கொள்கை சரி, போக்கு சரியல்ல” என்றும், “மிக வேகமாய் போகின்றது” என்றும், மற்றும் இது போன்ற பல மாதிரியாகவே சொல்லிவந்ததும், சற்று கீழ் நிலையில் உள்ளவர்.
கள் குடிஅரசு கொள்கை “கடவுள் மறுப்பு” என்றும், “மதம் மறுப்பு” என்றும் சொல்லி வந்ததும், சற்று பணக்காரர்களாயிருப்பவர்களும் உயர்ந்த ஜாதிக் காரரென்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களும், குடி அரசு கொள்கை, “கட்டுப்பாடு இல்லை; மேல்படி கீழ்படி இல்லை”, “அத்து அடக்கம் இல்லை” என்று சொல்லி வந்ததும்,பண்டிதக் கூட்டத்தாரில் உள்ளவர்கள் குடி அரசுக்கு “கல்வியில்லை, ஆராய்ச்சியில்லை, இலக்கண இலக்கியம் தெரியவில்லை, ஆதலால் என்ன என்னமோ கண்டதெல்லாம் எழுதுகின்றது, இதனால் சமயத்திற்கு ஆபத்து வந்துவிடும். சமய ஞானங் களுக்கும் சமயாச்சாரியார் வாக்குகளுக்கும் ஆபத்து வந்துவிடும்” என்று சொல்லிவந்ததும்,அரசியலில் இருந்தவர்கள் “குடிஅரசு” அரசியல் ஞானமற்றது, அதன் பிரசாரம் தேசீய உணர்ச்சிக்கு விரோதமா யிருக்கின்றதே” என்று சொல்லி வந்ததும், மற்றும் இந்த மாதிரியாகவே தனித்தனி வகுப்பார்கள், பிரிவார்கள், சுயநல லட்சிய வாதிகள் முதலாகிய கூட்டத்தார்களால் குற்றம் சொல்லவும் , எதிர்பிரசாரம் செய்து பாமர மக்களை குடி அரசுக்கு விரோதமாய் கிளப்பி விடவும் பல.
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
முயற்சிகள் நடைபெற்று வந்தது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் இதுவரை மேல் கண்ட எந்த மறுப்புக்காரர்களிலும் எவராவது ஒருவர் குடி அரசின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கொள்கையைப்பற்றிய அபிப்பிராயத்தை எடுத்துக்கொண்டு விவகாரம் சொல்லி தர்க்கமாடி மறுத்து நியாயம் சொன்ன தாக ஏற்படவில்லை என்பதை நாம் எடுத்துக்காட்ட சிறிதும் தயங்கவில்லை.
ஆனால் குடி அரசு பிரவேசித்த துறைகள் சாதாரணமாய் வேறு யாரும் பிரவேசிக்கக்கூடாத அவ்வளவு கஷ்டமான துறைகளில் புகுந்து. வேலை செய்த முறையில், மேற்கண்ட சில்லரை சில்லரையான மறுப்பு களாவது, அதிருப்திகளாவது, முண முணப்புகளாவது வராமலிருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதும் நியாயமான காரியமாகாது என்பதையும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள் என்றே கருதுகின்றோம்.
குடிஅரசு பிரவேசித்த துறைகளில் அதாவது,
1.பார்ப்பனர்.
2.அரசியல்.
3.மதம்.
4.கடவுள்.
5.வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம்.
6.சைவம்,வைணவம் முதலிய சிறு சமயங்கள்.
7.காந்தீயம்.
8.பண்டைய ஒழுக்கங்கள்,முறைகள், மூடப்பழக்க வழக்கங்கள்.
9.செல்வ நிலைமை முதலாளி-தொழிலாளி முறை.
10. ஆண், பெண் தன்மை.
முதலிய துறைகளில் பிரவேசித்து அவைகளில் மக்களுக்குள் ஒரு பெரிய மனமாறுதலை உண்டாக்கியிருக்கின்றது என்பதை நாம் எடுத்துக் காட்டவேண்டியதில்லை. ஆனாலும் அதைசற்று விளக்குவதில் வாசகர்கள் சலிப்படையமாட்டார்கள் என்று நினைக்கின்றோம். அதாவது,
1 பார்ப்பன விஷயம்
இஃதானது குடி அரசு தோன்றுவதற்கு முந்தியே பார்ப்பனர்கள் விஷயத்தில் “பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்”” என்கின்றதான ஒரு கிளர்ச்சி. இந்நாட்டில் யிருந்திருந்தாலும் அது தப்பான வழியிலேயே தப்பான
குடி அரசு - 1931 () 272
உத்தேசத்துடனேயே பொது மக்களுக்கு பயன்படாத முறையில் போய்க் கொண்டிருக்கின்றது என்ற ஒரு குற்றம் சொல்லப்பட்டது யாவரும் உணர்ந்ததாகும். எப்படியெனில் இது விஷயமான முந்திய கிளர்ச்சியின் கொள்கைகள் எல்லாம் “பார்ப்பனீயம் நல்லது பார்ப்பனர்கள் தான் கெட்ட வர்கள்” என்று சிலரும், மற்றும் “வைதீகப் பார்ப்பனர்கள் யோக்கியர்கள், அரசியல் பார்ப்பனர்கள்தான் அயோக்கியர்கள்” என்று மற்றொரு சிலரும் கருதி இருந்ததோடு அக்கிளர்ச்சிக்காரர்கள் பெரிதும் உத்தியோகம், அரசியல் ஆகியவைகளில் உள்ள பார்ப்பனர்களை மாத்திரம் வெறுத்து பஞ்சாங்க, பரிசாரக, ஓட்டல்கார, கோவில்மணி அடிக்கிற முதலிய பார்ப்பனர்களை வணங்கி “சுவாமிகளே!” என்று கூப்பிட்டு அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டு அவர்களின் காலைக்கழுவின தண்ணீரைக் கூட சில சமயங்களில்
குடித்தும் வந்தார்கள்.
இந்த குணம் திருவாளர்கள் சர்.பி.தியாகராய செட்டியார், பனகல் அரசர், சர்பாத்ரோ, தணிகாசலம் செட்டியார் முதலியவர்கள் உள்பட எல்லா பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்பவர்களுக்குள்ளும் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்த திரு. திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் போன்ற அரசியல்வாதிகளுக்குள்ளும் இருந்து வந்தது என்பது யாவரும்
அறிந்ததேயாகும்.
ஆனால் குடி அரசு தோன்றிய பிறகே இந்தமாதிரி எண்ணமானது அடியோடு மாறி இப்போது பொது ஜனங்கள் “எங்களுக்கு எந்தப் பார்ப்பனர்கள் மீதும் தனிப்பட்ட அதிருப்தியோ வெறுப்போ இல்லை” என்றும், “அவர்களது பார்ப்பன தர்மமும், பார்ப்பன சடங்கும், பார்ப்பன ஆதீக்க சம்மந்தமான முறைகளும், ஆதாரங்களுமேதான் எங்களுக்குப் பிடிக்கவில்லை” என்றும் “அவைகளை விட்டு விட்ட-பாராட்டாத பார்ப்பனர்களிடம் எங்களுக்கு ஆகேஷபணை இல்லை” என்றும் சொல்லப் புரப்பட்டதோடு பார்ப்பனீயத்தன்மை உள்ள பார்ப்பனரல்லாதாரிடமும் கூட இதுபோலவே வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கின்றது.
ஆகவே இந்தத்துறையில் குடி அரசு அஸ்திவாரத்திலேயே கையை: வைத்து பார்ப்பனீயத்தொல்லையை என்றுமில்லாமல் போகும்படி வேலை: செய்து வந்திருக்கின்றது-வருகின்றது-வரும்.
2. இதுபோலவே அரசியல் துறையிலும் குடி அரசு தோன்றுவதற்கு முன் அரசியலில் தலைப்பட்டிருந்த சில ஆட்கள் மீதும், அதன் பயனை யனுபவிக்கும் சில ஆட்கள் மீதும் மாத்திரமே சிலருக்கு சந்தேகமும் பொறாமையும் கொண்டு அரசியலின் மூலம் பிழைப்பை நடத்த உத்தேசித் திருக்கும் ஆட்களுள் மாத்திரமே போட்டி போடுவதன் மூலம் அரசியல் துறையின் கிளர்ச்சிகள் நமது நாட்டில் நடந்து வந்தன. ஆனால் குடி அரசு தோன்றிய பின்னர்தான் “அரசியலிலுள்ளஆட்களைப்பற்றி நமக்கு
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கவலையில்லை, அதன் அடிப்படையான கொள்கைகளைப் பற்றியே கவலை: கொள்ள வேண்டும்” என்கின்ற உணர்ச்சியேற்பட்டு அரசியல் கொள்கை களையேதலை கீழாய் மாற்றும்படியான நிலைமை உண்டாக்கியிருக்கின்றது டன் அந்தப்படி அரசியல்காரரும் உணர்ந்து அவர்களையே பழைய கொள்கைகளைப்பற்றி பேச வெட்கப்படும்படி செய்து வருகின்றது.
மேலும் காங்கிரஸ் விஷயத்திலும் குடி அரசு தோன்றுவதற்கு முன் பொது ஜனங்களுக்குள் “காங்கிரசு நல்லது. அதை நடத்துகிறவர்கள்தான் கெட்டவர்கள்” என்கின்ற உணர்ச்சி இருந்தது மாறி குடி அரசு தோன்றிய
பின் “காங்கிரசே நாட்டின் நலத்துக்கு மோசமானது. அது உத்தியோகத்
திற்கும், அதிகாரத்திற்கும், பதவிக்கும் விண்ணப்பம் போடும் தபால் பெட்டி” என்கின்ற உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றது.
3. மத விஷயத்திலும் குடி அரசு தோன்றுவதற்கு முன் மக்களுக்கு “மதமே பிரதானம்” என்றும் “இந்துமதமே உலகில் சிரந்த மதம்” என்றும் பொது மக்களுக்கும் இந்து மக்களுக்கும் இருந்துவந்த வெகுநாளைய உணர்ச்சிகள் மாறி இப்போது “இந்துமதம் என்பதாக ஒரு மதம் உண்டா? அதற்கு ஏதாவது கொள்கைகள் உண்டா?” என்கின்ற எண்ணமும் “மக்களுக்கு மதம் அவசியமா?” என்கின்ற எண்ணமும் “மதம் என்பதும் மற்ற வியாபாரங்களைப் போல் மக்களுக்கு ஒரு வியாபாரமும், மூட நம்பிக்கையுமானதல்லவா” என்கின்ற எண்ணமும் ஏற்பட்டு மதத்தின் பேரால் வாழ்க்கையும், பெருமையும் அடைய கருதி இருக்கின்றவர்கள் இடமும் மூடர்களிடமும், தவிர மற்றவர்களிடம் அதற்கு யோக்கியதையே இல்லாமல்: இருக்கும்படி செய்துகொண்டு வருகிறதுடன், மதத்தை வெகு காலமாய் அனுசரித்து பின்பற்றி வந்தவர்களும் தாங்கள் இதுவரை எவ்வித பலனும் அடையாமல் வீண் காலத்தை அதில் செலவிட்டு விட்டோமே என்று தங்கள் ஏமாந்த தன்மையைப்பற்றி வருந்தும்படியாகவும் செய்து வந்திருக்கிறது.
4 கடவுள் விஷயத்திலும் குடி அரசு தோன்றுவதற்குமுன் அதைப் பற்றி மக்கள் வெகுபிரதானமாகக் கருதி வந்தவைகள் எல்லாம் குடி அரசு தோன்றிய பின்புஅதனால் ஏற்பட்ட பெரும் பெரும் கிளர்ச்சிகளின் பயனாய். சிலருக்கு “கடவுள் உண்டோ இல்லையோ என்பதைப் பற்றிய கவலையும், விசாரணையும் அனாவசியம்” என்று கருதும்படியாகவும், சிலருக்கு “மக்களுக்கு உலகவாழ்க்கை சுலபமாய் நடைபெறுவதற்கு கடவுள் உண்டு என்கின்ற உணர்ச்சியுடன் இருப்பது நல்லது” என்கின்ற முடிவுக்கு வரும் படியாகவும் மற்றும் அனேகருக்குள் “கடவுளைப்பற்றிய கவலை ஏன்” என்கின்ற எண்ணத்தையும் உண்டாக்கிவிட்டதுடன் “கடவுள் இல்லை என்று நினைத்துக்கொள்வதால் மனிதன் உலகத்தில் வாழ்வதற்கு தகுதியுடைய வனாகத்தகுந்த அறிவு, பொருப்பு,தன்னம்பிக்கை.குற்றம் உணர்தல் முதலிய அருங்குணங்கள் ஏற்படும்” என்கின்ற ஒரு உணர்ச்சியையும் அனேகருக்கு உண்டாக்கி இருக்கின்றது.
குடி அரசு - 1931 () 274
5. வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பவைகளும் குடி யரசு தோன்றுவதற்கு முன் அவற்றிற்கு இந்நாட்டில் இருந்த பெருமைகள் எவ்வளவு என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே அவ்வளவு பிரமாதமான மதிப்புகள் அவைகளுக்கு இருந்த உணர்ச்சிகள் எல்லாம் இப்போது மாறி “வேதம், சாஸ்திரங்கள் என்பவைகள் எல்லாம் ஒரு
சாராரின் ஆதீக்கத்திற்கும், பிழைப்பிற்கும் ஏற்பட்டதென்றும், அவைகளுக்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்லவென்றும், தங்களுக்கு அது ஆதாரங்கள் அல்லவென்றும், புராணங்கள் என்பவைகள் கட்டுக்கதைகள், ஒழுக்கத்
திற்கும், உண்மைக்கும், இயற்கைக்கும் மாறுபட்ட, வெறுக்கத்தகுந்த புஸ்தகங்
கள், அவை கீழ் மக்களால் பெரிதும் தொடுக்கப்பட்டவைகள், இதிகாசங்கள். என்பவைநடந்தவை அல்ல, மதிக்கத்தகுந்தவை அல்ல, பூஜிக்கத்தகுந்தவை அல்ல என்று பண்டிதர்கள் முதல் அனேக அறிவாளி களும் பாமரமக்களும் வெளியில் தாராளமாய் சொல்லப் புரப்பட்டு விட்டதோடு, அவைகளில் ஒரு சிலவற்றை மாத்திரம் கலைகளுக்காகவும் அதாவது கவி அழகு, கற்பனை அழகு, இலக்கண இலக்கிய அழகு ஆகியவைகளுக்காக மாத்திரம், அதுவும் அந்தக்கருத்துடனேயேதான் பார்க்கத்தக்கது என்கின்ற அளவுக்கு அபிப்பி ராயம் சொல்ல வந்து விட்டதுடன், புராணங்களைப்பற்றி, சாஸ்திரங்களைப்.
பற்றி பேசுவதற்கே மக்கள் வெட்கப்படும்படியான நிலையையும் “குடிஅரசு” கொண்டுவந்து விட்டுவிட்டது.
6 மற்றபடி சைவம், வைணவம் ஆகிய சமயங்களைப்பற்றியோ என்றால் “குடி அரசு” தோன்றுவதற்குமுன் அச்சமயங்களே எல்லா மக்களு டையவும் வாழ்க்கையின் லக்ஷியமாய் இருந்து தாண்டவமாடினதுடன், அவைகளே மக்களுக்கு செல்வமாகவும், செல்வாக்காகவும், கீர்த்தியாகவும், அழகாகவும், பெருமையாகவும், நாகரீகமாகவும் விளங்கியதோடு சமய ஆச்சாரிகளும், மடாதிபதிகளும், ராஜாக்களுக்கு சமானமாய் கருதப்பட்டு வந்தவைகளும் எல்லாம் “குடி அரசு” தோன்றியபின் அவைகள் சிரிப்பாய் சிரிக்கத்தகுந்த நிலைமைக்கு வந்து, சமய வேஷமும், சமயப் பெருமையும் பரிகசிக்கத் தகுந்த நிலைக்கு வந்துவிட்டதுடன், அதனதன் கொள்கை களுக்கும், சமய ஆச்சாரிகளுக்கும், சமயதெய்வங்களுக்கும் முன்பிருந்த மதிப்பற்று, புதிய புதிய தத்துவார்த்தங்கள் சொல்லி, “குடிஅரசுக் கொள்கை
கள் தான் எங்கள் சமயக் கொள்கைகள்” என்பதாக வியாக்கியானம் செய்வதன் மூலம் அவை காப்பாற்றப்பட வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டன. மற்றும் “குடிஅரசு” தோன்றுவதற்குமுன் இவை ஒன்றை ஒன்று வைது கொண்டு இருந்தவைகள் இப்பொழுது எல்லாவற்றையும் மறந்து எப்படியாவது எந்தக் கொள்கையுடனாவது சமயம் என்பதாக ஒன்று உயிர். வாழ்ந்தால் போதும் என்கின்ற நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
7.அடுத்தாப்போல் திரு-காந்தியவர்கள் விஷயமும் வேறு பல வழிகளில் “மகத்தான வெற்றி இருப்பதாக” பேசிக் கொள்ளப்பட்டாலும் அரசியல் சமுதாய இயல் ஆகியவைகளைப்பற்றிய விஷயங்களில் அவரது அபிப்பிராயங்களில் மிகவும் தாராளமாய் கண்டிக்கப்படத் தக்கதாகி விட்டது. அவருடைய கதர் விஷயமும் சைவத்திற்கும், விபூதி, ரத்திராட்சத் திற்கும் என்ன சம்மந்தமோ அதுபோல் காந்திக்கும்- கதருக்கும் என்பதாக ஆகிவிட்டது. ஏதோ பார்ப்பனருக்கும் பார்ப்பனீயத்திற்கும் அவர் உற்ற துணையாய் இருப்பதாலும் மற்றும் அதுபோலவே தேசீயத்தின் பேராலேயே வாழ்ந்து தீரவேண்டிய ஒரு கூட்டத்திற்கும் அவருடைய பெயரை உச்சரிக்க வேண்டியது இன்றியமையாததாய் போய்விட்டதாலும், காந்தி காந்தி என்கின்ற ஒரு சத்தம் கொஞ்சம் ஊசலாடுகின்றதே தவிர மற்றபடி அவரிடம் இந்நாட்டு மக்களுக்கு சொந்தபக்தி எவ்வளவோ மாறியிருப்பது தானாகவே விளங்கும்.
8.பழையபழக்கம், வழக்கம், வார்சு பாத்தியம், பெரியோர் வார்த்தை
கள் என்கின்றவைகளின் மூலமாய் இருந்துவந்த மூடப்பழக்க வழக்கங்கள். எல்லாம் அநேகமாய் இப்பொழுது வர வர காரணகாரியம் சொல்லி
பகுத்தறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்திருக்கின்றதா என்று பார்க்கின்ற நிலைக்கு வந்துவிட்டது.
9.கடைசியாக பணக்காரர்களுடைய தொல்லை எதிர்பார்த்த அளவுக்கு ஒழியவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இறங்குமுகம் ஏற். பட்டு, சிறிதுசிறிது பொது உணர்ச்சியில் அவர்களுக்கு மதிப்பு குறைந்து விட்டதென்றே சொல்லுவோம். தொழிலாளிகளின் மேல் முதலாளிகளுக்கு இருந்துவந்த ஆதீக்கமும் மறைந்து தொழிலாளிகளுக்கு வரவர தைரிய மும், முதலாளிகளுக்கு வரவர பயமும் ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது. ஆனாலும் வரப்போகும் வருஷத்தில் தெளிவாய் காணக்கூடிய அளவுக்கு இந்தத்துறை இன்னமும் எவ்வளவோ தூரம் முற்போக்கடையும் என்கின்ற தைரியம் இருக்கின்றது என்கின்ற நம்பிக்கைக்கு இடம் இருக்கின்றது.
10. ஆண், பெண் தன்மை இந்தத் துறையானது குடி அரசு தோன்று வதற்குமுன் மக்கள் வாயில் பேசுவதற்கும், மனதில் நினைப்பதற்கும் அஞ்சக்கூடிய விஷயங்கள் எல்லாம் குடிஅரசு தோன்றியபின் அடியோடு மாறி, ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த விஷயத்திலும், எவ்வித வித்தி யாசமும் இல்லை என்கின்ற உணர்ச்சியையும், ஆண்களுக்கு கட்டுப்பட்டு அடங்கி பெண்கள் இருப்பது இருவருடைய சுயமரியாதைக்கும் குறைவு என்றும், பெண்ணுக்கு ஆண் கட்டுப்பட்டு அடங்கி நடப்பது பெருமையும், நாகரீகமும், முறையும் என்கின்றதுமான உணர்ச்சியும் ஏற்பட்டு விட்டது.
ஆகவே இத்யாதி துறைகளில் குடி அரசின் தொண்டு பலளளித் திருக்கின்றது என்று திருப்தியுடனேயே சொல்லுகின்றோம்.
குடி அரசு - 19310) 276
ஆனால் சென்ற வருஷம் அதாவது குடி அரசின் ஆறாவது வருஷ- ஆரம்ப மலரின் தலையங்கத்தில் கண்டதுபோலவே 6-வது வருஷம் முழுவதும் குடி அரசுக்கு முந்திய வருஷங்கள் போன்ற செல்வாக்கு பெருக்கம் இருந்தது என்று சொல்லுவதற்கில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை
களுக்கு சென்ற ஐந்து வருஷத்தைவிட ஆறாவது வருஷத்தில் தான் ஒரு முக்கியபதவியும், கெளரவமும், பொதுமக்கள் ஆமோதிப்பும், “இனிமேல் அதை எதிர்ப்பதோ குற்றம் சொல்லுவதோ முடியாத காரியம்” என்று, அதன் எதிரிகளாய் இருந்தவர்கள் எல்லாரும் எண்ணி, எப்படி யாவது அதன் பெயரைச் சொல்லிக்கொள்ளக்கூடிய செளகரியம் நமக்கும் வந்தால் தேவ
லாம் என்று கருதும்படியான ஒரு நிலைமை ஏற்பட்டது என்கின்ற விஷயத்
தில் நமக்கு சிறிதும் ஐயமில்லை.
ஆனால் ஏழாவது ஆண்டின் எதிர்கால நிலையைப்பற்றி எழுது வதில், அது ஆறாவதுஆண்டைப் போலவே இவ்வருஷ- வேலைத் திட்டமும் சற்று கஷ்டமானதாயிருந்தாலும் , பத்திரிகை முற்போக்கைப் பற்றி ஆறாவது வருஷம் போல் தடைப்படாது என்பதுடன் அதிக முற்போக்கடையும் என்கின்ற தைரியமும், நம்பிக்கையும் நமக்கு உண்டு. ஏனெனில் இந்த ஒரு வருஷத்திய நமது பிரசாரம் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் ஒரு உணர்ச்சி யும், அரசியல் கிளர்ச்சியிடம் சிலர் வைத்திருந்த நம்பிக்கை ஏமாற்றமடைந்த பலனும், இவ்வருஷம் நடக்கப் போகும் அரசியல் (காங்கிரஸ் - காந்தி)
பிரசாரமும் மற்றும் இரண்டொரு விஷயங்களும் மக்களுக்கு அறிவை ஊட்டி உண்மையை விளக்கித் தெளிவைக் கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை நமக்கு தூராளமாய் இருக்கின்றது.
குடி அரசு - தலையங்கம் - 03.051931
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி
அவப்யார் - அலப்யாங்கார் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
அய்யர் - என்ன அய்யங்கார்வாள் சுயமரியாதை இயக்கம் ஆரம்ப மான காலத்திலேயே நான் பிராமணாளுக்கு ஆபத்து வந்துவிட்டதே என்றும் இதற்கு ஏதாவது வழிசெய்யக் கூடாதா என்றும் கேட்டதற்கு “அது இந்தியாவில் மாத்திரம் நடக்காது சீக்கிரம் ஒழிந்துவிடும் என்று சொன்னீர். இப்பொழுது நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டே வருகிறதே. எல்லோரும் அதை ஆதரிக்கவும் துணிந்துவிட்டார்களே: அதாவது சைவர்
கள் ஒன்று கூடி” 3000 வருஷத்திற்கு முன் இருந்த கொள்கைகள் எல்லாம் சுயமரியாதை இயக்க கொள்கைகள்தான்” என்கிறார்கள். வைணவர்கள் ஒன்று கூடி தங்கள் கொள்கையும் அதாவது “ராமாநுஜர் கொள்கையேசுயமரியாதை இயக்க கொள்கை” என்கிறார்கள். ஸ்மார்த்தர்கள் “சங்கரர் மதமே வேதாந்த
மதம். ஆகையால் ஸ்மார்த்த மதமே சுயமரியாதை இயக்க கொள்கைதான்” என்கின்றார்கள்.மகமதியர்கள் ஒன்றுகூடி “1300 வருஷத்திற்கு முன்னேயே சுயமரியாதை இயக்க கொள்கையைத்தான் நபிகள் நாயகம் உபதேசித் திருக்கிறார்கள்” என்கின்றார்கள். பெளத்தர்கள் “2000 வருஷத்திற்கு முன்னா. லேயே பகவான் புத்தர் சுயமரியாதை இயக்கக் கொள்கையைத்தான் உப. தேசித்து பிரசாரம் செய்தார்” என்கின்றார்கள். “சித்தர்கள் உபதேசமெல்லாம் சுயமரியாதைக் கொள்கைதான்” என்கின் றார்கள் பொதுமக்கள்.பண்டிதர் களில் பலர் “உலகாயித மதம் தான் சுய மரியாதைக் கொள்கை. ஆதலால் அதுவும் இந்து மதத்தில் ஒரு பகுதிதான்” என்கின்றார்கள். பிறகு எந்த விதத்தில் அது அழிந்தோ மறைந்தோ போகும் என்பது நமக்கு விளங்க வில்லேயே!
அய்யங்கார்:- இதற்கெல்லாம் நீர் பயப்படாதீர். யாரோ எதையோ சொல்லிக்கொண்டு போகட்டும். நமது இந்து மதத்தை அதாவது நாம் இன்று அனுசரித்து வரும் கொள்கையை யாரும் ஒன்றும் செய்யமுடியாது . நம் பெரியார்களுக்கு இவற்றையெல்லாம் ஒழிக்க வழிதெரியும். இதைவிட கஷ்டமான காலத்தில் எல்லாம் இருந்து சமாளித்து வந்து இருக்கிறார்கள்.
குடி அரசு - 19310) 278
அய்யர்: எப்படித் தெரியும்? 10,12 வருஷத்திற்கு முன் ஜஸ்டிஸ் கட்சி என்று ஒன்று தோன்றி எவ்வளவு தொல்லை விளைவித்துவிட்டது உமக்குத் தெரியாதா?
அய்யங்கார்:- எல்லாம் தெரியும் அதற்காகத்தானே நம் பெரியவாள். அப்போதே காந்தியைப் பிடித்து வந்து ஒரு கிளர்ச்சி செய்து ஏராளமாய் பணம் வசூல் செய்து பலரை ஜெயிலுக்கு அனுப்பி ஜஸ்டிஸ் கட்சியை வீழ்த்தினார்களே. மற்றும் அவர் வீடு வாசல்களுக்குள் எல்லாம் புகுந்து கலகம் செய்யச் செய்தது கூட உமக்குத் தெரியாதா?
அய்யர்: சரி, அப்படியெல்லாம் செய்து ஜஸ்டிஸ் கட்சியை வீழ்த்திய பிறகுதானே சுயமரியாதை இயக்கம் வந்து வீழ்ந்துவிட்ட கட்சியை மறுபடியும்
தூக்கி நிருத்தி முன்னிலும் அதிகமான தொந்திரவு கொடுத்துவிட்டது?
அய்யங்கார்:- தூக்கி நிருத்திவிட்டதால் என்ன ஆய்விட்டது. அக்கட்சியின் விஷப்பல்லுகளைப் பிடுங்கிவிட்டோமா இல்லையா? இப்போது அக்கட்சியை தண்ணிப் பாம்புபோலத் தானே ஆக்கிவிட்டோம். அது இப்போது சம்பளத்தோடு சரி. வேறு சிறிதாவது வாலாட்டுகிறதா பார்.
அய்யர்:- அக்கட்சியால் நமக்குத் தொல்லையில்லையானாலும் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியைவிட மோசமாக அதாவது ஜஸ்டிஸ் கட்சியாவது மூர்த்தன்னியமாய் இருந்த காலத்திலும் கூட உத்தியோகத் தில். மாத்திரம் பங்கு கேட்டது. இது பிராமணர்களின் யோக்கியதையையே அடி யோடு ஒழித்து பிராமணர்களை எல்லாம் போர்ட்டராக ஆக்குகிறேன். மூட்டை தூக்க வைக்கிறேன். அதுவரை ஒழியமாட்டேன் என்றல்லவா சொல்லிக்கொண்டு காரியம் செய்து வருகின்றது.
அய்யங்கார்: இதற்கெல்லாம் பயப்படாதீர். சுயமரியாதை இயக்கத்
தின் ஆடம்பரத்தையும் அதனால் ஏற்படும் ஆபத்தையும் உத்தேசித்துத் தானே இப்போது அதை ஒழிக்க மறுபடியும் முன்போலவே காந்தியைப் பிடித்து மற்றொரு கிளர்ச்சியை நம்மிட பெரியவாள் ஆரம்பித்தார்கள். அது ஆரம்பமாகி ஒரு வருஷம் போட்டபோட்டில் சுயமரியாதை இயக்கம் அடங்கி விடவில்லையா?
அய்யர்:- என்ன அடங்கி விட்டது? எங்குபார்த்தாலும் மாதம் ஒன்று, இரண்டு, மூன்று மகாநாடுகள் நடக்கின்றன. வாரம்தோறும் பிரசாரங்கள் நடக்கின்றன. சுயமரியாதை இழவு, சுயமரியாதை கல்யாணம், சுயமரியாதை சாந்தி முகூர்த்தம், சுயமரியாதை கிரகப்பிரவேசம், சுயமரியாதை கருமாதி, சுயமரியாதை தெவசம், சுயமரியாதை வாசகசாலை திரப்பு விழா, ஆண்டு விழா, சுயமரியாதை சங்கத் திறப்பு விழா, ஆண்டு விழா, சுயமரியாதை கலப்புமணம், சுயமரியாதை மறுமணம், சுயமரியாதை விதவை மணம்,
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
குழந்தைகளுடன் விதவைகளின் திரு மணம், பார்ப்பனீயமற்ற சடங்கு சுயமரியாதை சங்க கட்டட அஸ்திவாரம் என்பதாக ஏதேதோ தினத்திற்குத் தினம் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரியம் நடந்து கொண்டே தோன்றிக் கொண்டே இருக்கின்றதே தவிர எங்கு அடங்கி விட்டது?
அய்யங்கார் இதெல்லாம் ஒரு வேகத்தினாலும், மற்றும் இதை ஒரு புதியநாகரீகமாக மக்கள் கருதுவதினாலும் செய்யப்படுகின்ற ஒரு வேடிக்கை சங்கதியே ஒழிய மக்கள் இதன் உண்மையை உணர்ந்து செய் கின்றார்கள் என்று கருதவேண்டாம். புத்தருக்கு மேலாக இவர்கள் ஒன்றும் செய்துவிட
முடியாது.
அய்யர்:- இதை நான் ஒப்பமுடியாததற்கு மன்னிக்க வேண்டும். அந்தக்காலம் வேறு இந்தக்காலம் வேறு. இப்போழுது அந்தக் கூட்டத்தில் பெரிய மனிதர்கள் என்பவர்கள், பண்டிதர்கள், படித்தவர்கள், நல்ல மதபக்தி
யும் மத ஆராய்ச்சியும் உள்ளவர்கள், யாதொரு தயவு தாட்சன்னியத்திற்கும் கட்டுப்பட வேண்டாதவர்கள். இப்படியாக அநேகர் அக்கொள்கைகளை: வாய்ப்பேச்சு மாத்திரமல்லாமல் காரியத்திலும் பின் பற்ற ஆரம்பித்துவிட்டார் கள்.இதுமாத்திரமல்லாமல், கல்யாண விஷயங்களில் ஜாதி பேதமில்லாமல் கீழ் ஜாதி மேல் ஜாதி பார்க்காமல் கொள்வினை கொடுப் பினை ஆகியவை நடத்த அநேகர் துணிந்துவிட்டார்கள். அநேகர் காரியத் திலும் செய்துவிட்டார்கள். பிராமணனைக் கண்டால் கும்பிடுவதும் சாமி என்று கூப்பிடுவதும் அவ மானமாய்க் கருதுகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் பிராமணர்களே. முதலில் கையெடுக்க வேண்டியதாய் இருக் கிறது. இப்படி இருக்க “இது ஒரு வேகம் நாகரீகம்” என்று நீர் சொன்னால் நான் எப்படி ஒப்புக் கொள்ள
முடியும்?
அய்யங்கார்:- இதெல்லாம் அநேகமாய் பயமும் சுயநலமும், பேரா சையும் தாக்ஷண்யமும் காரணமாகத்தான் செய்யப்பட்டு வருகின்றவை. வெகு சீக்கிரத்தில் இந்தக் கூட்டமே மறுபடியும் பழைய பாடம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நீர் மாத்திரம் ஒன்றையும் கவனிக்காமல், கதர், காந்தி- காங்கிரஸ் சுயராஜ்யம் என்று மந்திரம் ஜெபித்துக் கொண்டு பிரசாரம் பண்ணும். இந்த மந்திர சக்தி சுயமரியாதை இயக்கத்தையும் கொள்கை களையும் இருந்தவிடம் தெரியாமல் அழித்துவிடும். ஆணால் இதில் உமக்கு தைரியம் இருக்கவேண்டும். பஞ்சாக்ஷரம், அஷ்டாக்ஷரம், தாரகம், காயத்ரி என்கின்ற மந்திர சக்திகள் எல்லாம் என்ன என்று நினைக்கிறீர்? இது போலத்தான்.ஆகையால் நீர் சரியாய் ஜபித்தீரானால் வெகுசீக்கிரம் நம்பக்கம் மக்கள் திரும்பி விடுவார்கள்.
அய்யர்:- காந்தியும் காங்கிரசும் சுயராஜியமுமே சுயமரியாதைக் கொள்கையை ஒப்புக்கொண்டாய் விட்டதே இனி இந்த மந்திரம் எப்படி சுயமரியாதை இயக்கத்தை அழித்திவிட முடியும்?
குடி அரசு - 19310) 280
அய்யங்கார்:- காங்கிரசும் காந்தியும் சுயமரியாதை இயக்கக் கொள்கையை எங்கு எப்போது ஒப்புக்கொண்டார்கள்? உமக்கு அத் தீர்மானத்
திற்கு தத்துவ அர்த்தம் தெரிந்தால்தானே உண்மை விளங்கும். நீர் மேலாகப்
பார்க்கிறீர். அதனால் “சுயமரியாதை இயக்கக் கொள்கைதான் காந்தி காங்
கிரஸ் கொள்கை” என்று உளருகிறிர்.
அய்யர்:- சுயமரியாதை இயக்கத் தொண்டர்களே “சுயமரியாதை இயக்கக் கொள்கையே காங்கிரஸ் கொள்கையாகிவிட்டதால் இனி சுய மரியாதை இயக்கம் வேண்டாம்” என்கிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் எல்லாம் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளே காங்கிரஸ் கொள்கையாத லால் சுயமரியாதைக்காரர்கள் எல்லாம் காங்கிரசில் சேரவேண்டுமென்கின் றார்கள். ஆகவே நீர் மாத்திரம் இப்படிச் சொன்னால் நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
அய்யங்கார்: உம்மால் இப்போது ஒப்புக்கொள்ள முடியாது. பிறகு
தெரியும் அதன் சூட்சம்.
அய்யர்:- சூட்சமென்ன?மோட்சமென்ன? உங்க அய்யங்காரில் ஒருவரே, அதாவது கே சந்தானம் அய்யங்கார் சென்றவாரம் ஈரோட்டில் ஒரு கூட்டத்தில் “சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை இவ்வருஷ- காங்கிரஸ் அப்படியே ஒப்புக் கொண்டாய்விட்டது. ஆதலால் உங்கள் இராமசாமி நாயக்கர் இனியும் இதில் (காங்கிரசில் சேராமல் வேதாந்தம் பேசிக்கொண்டு இருப்பது நியாயமல்ல” என்று சொன்னார். நான் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். அப்படி இருக்க எனக்கு சூட்சமம் தெரியவில்லை. என்கின்றீரே.
அய்யங்கார்:- அந்தசமயத்தில் நானும் கூடத்தான் அங்கிருந்து அவா
(திரு சந்தானம் அய்யங்கார் சொன்னதை யெல்லாம் கேட்டுக் கொண்டுதான்
இருந்தேன்.
அய்யர்: சரி, அப்படியானால் அதில் சூட்சமமென்ன இருக்கின்றது?
அய்யங்கார்:- சூட்சமென்னவென்றா கேட்கின்றீர். சொல்லுகிறேன் கவனமாய் கேளும்,
இராமசாமி நாயக்கர் சாமியைப்பற்றி. மதத்தைப்பற்றிச் செல்லுவதை ஒப்புக்கொள்ள முடியாது என்று சந்தானம் அய்யங்கார் சொன்னாரா? இல்லையா?
அய்யர்:- ஆம், அதனால் அங்கு சிறிது தகரார்கூட எற்பட்டது. என்னவென்றால் “இது காங்கிரஸ் பிரசாரமா, சாமி பிரசாரமா?” என்று ஒருவர்: கேட்டார். பிறகு அந்த வார்த்தையை விட்டுவிட்டு வேறு பேச்சுப் பேசினார்.
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இதில் சூட்சமமென்ன?
அய்யங்கார்:- சாமி, மதம் இரண்டையும் ஒப்புக்கொள்ளப்படாது என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கை.
அய்யர்:- அப்படியல்லவே.
அய்யங்கார்:- பின்னை எப்படி.
அய்யர்:- “சாமியைப்பற்றி கவலைப்படாதே. சாமிக்கு பணம் காசு நேரம் செலவு செய்யாதே. சாமிபேரில் பழியைப் போடாதே பகுத்தறிவைக் கொண்டு எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்றுதான் சொல்லு கின்றது.
அய்யங்கார்: அதற்கு என்ன அர்த்தம்? (பிராமணாளுக்கு) நமக்குத் தான் சாமி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? அதைப்பற்றி கவலை நமக்கு எதற்கு? நாம் சாமி இருப்பதாக ரொம்பத்தான் நினைத்துக் கொண்டி ருக்கிறோமா? அல்லது அதற்காக மிகுந்த கவலைப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோமா? அல்லது எல்லாப்பழியையும் அதன் மீது போட்டு விட்டு கைகட்டிக்கொண்டு சும்மாதான் இருக்கின்றோமா?
அய்யர்: பின்னே நமக்கும் அவாளுக்கும் என்னதான் வித்தியாசம்?
அய்யங்கார்:- அங்கு அல்ல நமது சூக்ஷம்.
அய்யர்:- பின்னே எங்கு இருக்கின்றது நமது சூட்சமம்?
அய்யங்கார்- “கடவுள் ஒருவர் உண்டு. அவரே நம்மை நடத்துகிறார். நமது செல்வம் முயற்சி அறிவு எல்லாம் அவருக்கு அர்ப் பணம் செய்து சுவாமியிடம் பக்தி காட்டி அவர் பாதார விந்தத்தை அடை வதே மனிதப்பிறவி எடுத்ததின் பயன்” என்றும், “இந்த ஜன்மத்தில் நாம் கோவில், குளம், சாவடி, பிராமணாளுக்கு தான தர்மம் செய்வதன் மூலம் அடுத்த ஜன்மத்தில் நாம் நல்ல ஜன்மம் எடுக்க வேண்டும்” என்றும் சொல்லு வதல்லவாநம்ம கொள்கை? இதுதான் காந்தி கொள்கை. இதுதானே காங்கிரஸ் கொள்கை. இந்தக் கொள்கையைக் கொண்டுதான் நாம் உலகத்தில் வெகு காலமாக ஆதிக்கத்துடன் வாழ்கின்றோம். இதில் கையை வைக்க விட்டால் தானே சுயமரியாதை இயக்கமும் நமது இயக்கமும் ஒன்று என்று சொல்ல முடியும். இந்தப்படி ஒப்புக்கொண்டு யாராவது நம்மவர்கள் சுயமரியாதை இயக்கத்துடன் சேருகின்றார்களா? என்பதை நன்றாய் யோசித்துப்பாரும். சைவனை எடுத்துக்கொள்ளும், சைவன் என்றால் என்ன. சில பண்டிதர்கள் தானே.அந்த சைவர்கள் என்ன வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வார்கள். சாமியைப் பற்றி கவலைப்படாதே என்றால் ஒரே ஓட்டமாக ஓடிப்போவான்.
குடி அரசு - 19310) 282
பின் சாமி இல்லாவிட்டால் புராணம் ஏது? புராணம் இல்லாவிட்டால் பண்டிதன் என்கின்ற பெயர் ஏது? இப்படியே மற்ற சமயமும், மகமதியர்களும் இப்படித்தான். அதிலும் சில பண்டிதர்கள் தான் ஆதிக்கம். ஆண்டவனைப் பற்றி கவலைப்படாதே என்று அவரிடம் சொல்லிப் பார்த்தால் மண்டையை உடைத்துவிடுவார். இப்படித்தான் காங்கிரசும். காந்தி ஒவ்வொரு வார்த்தைக்
கும் கடவுள் சித்தம், கடவுள் பிரார்த்தனை இல்லாமல் பேசுகின்றாரா? “கடவுள்
மீது பழியைப் போடவேண்டாம். கடவுளைப்பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று காந்தி இடம் யாராவது சொல்லிப்பார்த்தால் சங்கதி தெரியும் . இரண்டு காதையும் மூடிக்கொண்டு பட்டினி கிடந்து செத்துப் போவேன் என்று முக்காடு போட்டு படுத்துக்கொள்ளுவார். ஆகவே சுயமரியாதை இயக்கத்
தின் அஸ்திவாரக் கொள்கையை இந்தக் கூட்டத்தினர்கள் யாவரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவ்வியக்கத்தில் இருப்பவர்களே 100-க்கு 90- பேர்
கள் ஒப்புகின்றார்களா என்பதே சந்தேகம். ஆகையால் கடவுள் கவலையும், கடவுள் மீது பொருப்புப் போடும் குணமும் இந்து மத தர்மமும் மோக்ஷமும் மறுஜன்மம் ஆகியவைகளும் உள்ளவரை பிராமணாளை (பார்ப்பானை! யாரும் ஒன்றும் அசைத்து விட முடியாது. தெரியாமலா பிராமணாள் எல்லாம் காந்தியை மகாத்மா ஆக்கி விட்டார்கள். எப்படி யிருந்தாலும் காந்தி சூத்திரன்தானே. அப்படி இருந்தும் அவரை நம்முடைய வைதீகபிராமணாள் கூட மகாத்மா என்கிறார்களே எதற்காக? விபீஷணனை(ராக்ஷதனை? சிரஞ்சீவி ஆக்கவில்லையா? அனுமானை (குரங்கை! சிரஞ்சீவி ஆக்க வில்லையா? இது நடந்ததோ இல்லையோ, அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. பிராமணாள் நடந்து கொள்ளவேண்டிய முறைக்கு ராமாயணம் ஒரு வழிகாட்டி என்கின்ற அருத்தத்தில் நான் உமக்கு எடுத்துக்காட்டுகிறேன். இதனாலேயே என்னை புராணமரியாதைக்கார முட்டாள் என்று சொல்லி விடாதேயும்.
இந்த காந்திகூட எதுவரையில் மகாத்மா உமக்குத் தெரியுமா“ ராம ராஜியம் ஸ்தாபிப்பேன்” “கீதைதான் என்னை நடத்துகின்றது” “பெண்கள்: எல்லாம் சந்திரமதி போல் இருங்கள்.” “வருணாச்சிரம தர்மம் உலக நடவடிக் கைக்கு சிறந்தது” என்று சொல்லும் வரை தான் மகாத்மா, அப்படிக்கில்லாமல்: கொஞ்சம் மாறினாலும் தலைகீழாக கவிழ்ந்து விடுவோம் இது உமக்குத் தெரியாதா?
அய்யர்:- அவரைக்கூட கவிழ்க்க இனி யாராலாவது முடியுமா?
அய்யங்கார் ஏன் உமக்குத் தெரியாதோ.
அய்யர்:- தெரியாது.
அய்யங்கார்: முன் ஒருதரம் காந்தி தீண்டாமை விஷயத்தில் கொஞ்சம் அதிகமாய் அதாவது அஸ்திவாரத்தில் கைவைக்கத் தகுந்தமாதிரி
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பேச ஆரம்பித்தவுடன் தென்னாட்டிலுள்ள நம்மிட பெரியவாள் எல்லாம் “மதத்தைப்பற்றிப் பேச உமக்கு என்ன யோக்கியதை” என்று வளைத்துக் கொண்டதும், பம்பாயில் “காந்தியைக் கொல்ல வேண்டும்”, “அவன் ஒரு முட்டாள்” “காந்தி அயோக்கியன்” என்று சொன்னதும், பூனாக்காரர் “காந்தீ
யம் தேசத் துரோகம். திலகர் கொள்கைக்கு விரோதம்” என்று சொன்னதும், மாளவியாவை தலைமைகொண்ட இந்து மகாசபையாரும் “காந்திக்கு இந்து மதத்தைப் பேச உரிமை இல்லை”என்று சொன்னதும் உமக்குத் தெரியாதா? எங்கே தீண்டாமையைப் பற்றி, மதத்தைத் தாக்கி மாத்திரம் இப்போது தான் ஆகட்டும் காந்தியை ஒரு வார்த்தை மாத்திரம் பேசச்சொல்லு அவருடைய மகாத்மா தன்மை எத்தனை வினாடி நிலைக்கின்றது என்று பார்ப்போம்? நம்ம பெரியவாளும் நம்ம பத்திரிகைகளும் அவரை ஒரே அடியாய் தூக்கி தலைகீழாகக் கவிழ்த்து விடுவார்கள் தெரியுமா? இன்னும் ஒரு உதாரணம் சொல்லுகின்றேன் கேள். 1922 @ ஒத்துழையாமை யானது சிறிது (பிராம ணாளுடைய/ தேவைக்குமேல் போனவுடன், தாசை தேசபந்துவாக்கி சுயராஜ்யக் க்ஷி உண்டாக்கி ஒத்துழையாமை ஒழித்து இதே காந்தியை மூலையில் உட்கார வைத்துவிடவில்லையா? ஆக்கவும் அழிக்கவும் நாம் தானே. அதனால்தானே நாம் பிரம்மஸ்ரீ ஆனோம்.
அய்யர்:- இது சரி. ஆனால் முன் சொன்ன தீண்டாமையைப்பற்றி கராச்சி காங்கிரஸ் தாராளமாக தீர்மானித்து விட்டதாக சொல்லுகின்றார்களே!
அய்யங்கார்:- என்ன தாராளம்?
அய்யர்:- “ஜாதிமதபேதமில்லாமல் எல்லோரும் பொது ரோட்டு, கிணர் ஆகிய இடங்களுக்கு போகலாம்” என்று சொல்லி தீர்மானம் போட்டு இருக்கின்றார்களே!
அய்யங்கார்.-அத்தீர்மானத்தில் என்ன இருக்கின்றது உம்ம தலை. புருடை? நீர்பிராமணணாயிருந்தும் உமக்கு மூளையே கிடையாது. உங்கள் படுக்கை வீட்டில் சூத்திராள் படம் - அதாவது ராஜாக்கள், ஜமீன்தார்கள், மந்திரிகள் முதலியவர்கள் படம் ஏதாவது சுவற்றில் தொங்கவிட்டு இருந்ததோ.
அய்யர்: அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் பேசாதீர். உண்மையைச் சொல்லுமே, மற்றபடி அத்தீர்மானத்தின் இரகசியம் தான் என்ன?
அய்யங்கார்:- பொதுரோட்டில் இன்று யார் நடப்பதில்லை? பொது சந்தையில் இன்று யார் போவதில்லை? பொது ரயில் வண்டியில் இன்று யார் ஏறுவதில்லை? கச்சேரி நாடகக்கொட்டாய் வீதி மீட்டிங்கு இவைகளில் யார் நுழைவதில்லை. அதுபோலவே பொதுக்கிணறுகள் என்பதில் நகரங்களில். கிணறு கிடையாது. வாய்க்கால், நதி , இல்லாவிட்டால் பெரிய குளம், இல்லா விட்டால் தண்ணீர் குழாய். இன்னும் வரவர எல்லாப் பட்டணங்களிலும்
குடி அரசு - 19310) 284
தண்ணீர் குழாய் ஏற்பட்டு விடப்போகின்றது . ஆதலால் கிணற்றைப்பற்றிய தீர்மானத்தால் பயமில்லை. நகரங்களில் உள்ள தெருக்களில் எல்லாம் இப்போதும் யாரும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். கிராமங்களில்
மாத்திரம் சில தெருக்களில் போவதில்லை. அங்குள்ள பிரபுக்கள் பயத்தால்:
கீழ் ஜாதிக்காரர்கள் நாளைக்கும் காந்தி போகச் சொன்னாலும் போக மாட்.
டார்கள். போனாலும் ஒன்றும் முழுகிப்போகாது. ஏனென்றால் மற்ற வீதி களுடன் அதையும் சேர்த்து விடலாம். ஆதலால் இத் தீர்மானத்தினால் மதம் எங்குபோய்விட்டது? இதனால் எல்லாம் பிராமணாளுடைய உயர்வு எங்கு எப்படி போய்விடும் என்று கருதுகீன்றீர்?
அய்யர்:- பின்னை எதினால்தான் பிராமணாள் உயர்வும் அதை ஆதாரமாய்க்கொண்ட மதமும் இருக்கின்றது? என்கிறீர்.
அய்யங்கார்:- அது உம்ம புத்திக்கு இதுவரை படாதது எனக்கு அதிசயமாகவே இருக்கின்றது.
அய்யர்:- அது எது என்று சற்று சொல்லித்தான் காட்டுமே
பார்க்கலாம்.
அய்யங்கார்: பிராமணாளும் அவர்கள் மதமும் காப்பாற்றப் படுவது முக்கியமாய் கோயில்களாலேயேயாகும். அந்த இடத்தில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால்தான் பிராமணாளுக்கும் வருணாச்சிரமத்திற்கும் ஒரு சமயம் ஆபத்து ஏற்படலாம். ஆகையால் அதில் கை வைக்க எப்படிப்பட்டவர். களுக்கும் சிறிதும் இடம் கொடுக்க நம்மிட பெரியவாள் ஒப்ப மாட்டார்கள். அது “மகாத்மா” காந்தியாணாலும் சரி, அவர்கள் பாட்டனார்களான சுவாமிகள். ஆச்சார்ய சுவாமிகளானாலும் சரி ஒன்றும் நடக்காது. ஆகை யால் அந்த இடம் (கோவில் மாத்திரம்) வெகு ஜாக்கிரதையாகவே காப் பாற்றப்பட்டு வருகின்றது. (சேரமாதேவி குருகுலத்தைப்பாருமே. குரு குலத்தையாவது நம்மவாள் அடியோடு ஒழித்துவிட்டார்களே ஒழிய வருணாச்சிரமத்தை விட வில்லையே! கராச்சி காங்கிரசில் கோயிலைப்பற்றிய பேச்சே கிடையாது. ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதைப் பற்றிய பேச்சோ சிறிதும் கிடையாது தெரியுமா?
அய்யர்: அப்படியா.
அய்யங்கார்- என்ன அப்படியா என்று கேட்கின்றீர். உங்கள் பிர்மஸ்ரீ சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் தானே அதை நன்றாக விளக்கி இருக்கிறார். அதாவது, “கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் கோவில்களைப் பற்றிய பேச்சு இல்லையாதலாலும் (அது விஷயாலோசனை கமிட்டியால் வந்தும்) அதை சேர்க்கக் கூடாது என்று மனமார தள்ளிவிட்டதினாலும் மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி யாருக்கும் கோயிலைப் பற்றிய பிரஸ்தாபிக்க இஷ்டமில்லை என்று நமக்கு தெரிய வந்ததினாலும் பொது உரிமையைப்பற்றிய தீர்மானத்தை
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
திருத்த வேண்டிய அவசியமில்லை” என்று விளக்கி இருக்கின்றாரே நீர் பார்க்கவில்லையா? இது ஏன் தெரியுமோ? இந்த தீர்மானத்தை ஆதாரமாய் வைத்துக் கொண்டு யாராவது தென்னாட்டில் கோயில் பிரவேச சத்தியாக் கிரகம் ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் விளக்கினார்.
அய்யர்:- காங்கிரஸ் தீர்மானத்தின் கருத்து இந்தப்படிதான் என்று உமக்கு எப்படித் தெரியும்.
அய்யங்கார்:- எப்படி தெரியும் என்றா கேட்கிறீர்? சொல்லுகிறேன் கவனமாய் கேளும். காங்கிரஸ் காரியக் கமிட்டியார், “இத்தீர்மானங்கள் அவசரமாய் பாசாக்கப்பட்டதாக பலர் கருதுவதால், அதில் ஏதாவது விலக்கு வதோமாறுதல் செய்ய வேண்டியதோ அவசியம் உண்டா” என்று ஆங்காங் குள்ள ஜனத்தலைவர்கள் தேசபக்தர்கள் தியாகிகள் ஆகியவர் களுக்கு அனுப்பி அபிப்பிராயம் கேட்டிருந்தார்கள். ஏன் கோவில் இதில் சேர்க்கப் படவில்லை என்பது நன்றாய் விளக்கப்படட்டும் என்று அந்த முறையில் நமது தென்னாட்டு ஜனத் தலைவரும் தியாகியும் தேசபக்த ருமான நமது பிர்மஸ்ரீ சத்தியமூர்த்தி அய்யர்வாளுக்கும் அந்த சர்க்குலர் வந்தது. அதாவது அய்யர்வாள் ஒரே அடியாய் தீர்மானத்தின் சூக்ஷமத்தைத் தைரியமாய் உடைத்துவிட்டார். அதாவது காங்கிரஸ் காரியக்கமிட்டி சார்பாக காரிய தரிசிக்கு தந்தி கொடுத்தார். அவர்களும் சரி என்று ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
அய்யர்:- அதன் கருத்து அப்படியல்ல என்று மறு தந்தி ஒன்றும் வரவில்லையா?
அய்யங்கார்:- இல்லை.அன்றியும் எப்படி வரும் ? ஜாக்கிரதையாகத் தானே தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. அப்படி ஏதாவது மாறுவதா
யிருந்தால் பிறகு அத்தீர்மானத்திற்கே ஆபத்து வந்து விடாதா?
அய்யர்:- அப்படியா இவ்வளவு புத்திசாலித்தனமாக அத் தீர்மானம் செய்தவர்கள் யார்?
அய்யங்கார்:- யார் என்றா கேட்கின்றீர். தென்னாட்டில் சேரமாதேவி குருகுலத் தகராரின் போது ஈ.வெ.ராமசாமி நாயக்கனும் எஸ். ராமநாத பிள்ளையும் சேர்ந்து “ பிறவியில் ஜாதி வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பது காங்கிரசைப் பொருத்தவரையாவது அமுலில் கொண்டு வர: வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரசில் ஒரு தீர்மானத்தை பாசாக்கினவுடன் காங்கிரசிலிருந்து ராஜினாமா கொடுத்தும் மற்றும் அந்த பிரசாரத்திலிருந்து விலகியும் இருந்து அந்த மாதிரி தீர்மானம் கொண்டு வந்த ஆளுகள் அதாவது ராமசாமி ராமனாதன் ஆகியவர்கள் காங்கிரசில் இருக்க முடியாமல் காங்கிரசை விட்டுப்போன பிறகு காங்கிரசில் வந்து சேர்ந்தார்களே அவர்கள்தான்.
குடி அரசு - 19310) 286
அய்யர்: அப்படியா அப்படிப்பட்டவர்கள் யார்? அவர்கள் பெயர்கள் என்ன?
அய்யங்கார்:- பிர்மஸ்ரீகள் 6.ராஜகோபால ஆச்சாரியார், ॥ப6ஆச்சாரியார், 01.5.5.ராஜன் அய்யங்கார், 0:4:சாமினாத சாஸ்திரியார். 115.வரதாசாஸ்திரியார், சந்தான அய்யங்கார், மட்டப்பாரை 1.5. வெங்கிட ராமையர்,ஏ.வைத்தியநாதய்யர், எக்கியேஸ்வர சர்மா.6சங்கரய்யர் இன்னும் சில பிர்மஸ்ரீகள் அதாவது இப்பொழுது தென்னாட்டில் காந்தீயம் காங்கிரசுஈயம் என்று பிரசாரம் செய்கின்றார்களே இந்த மகான்கள் தான்.
அய்யர்- அப்படியா? சரி. இதனால் சுயமரியாதை இயக்கம் விழுந்து விடுமா?
அய்யங்கார் விழுகாமல் என்னசெய்யும் ? நம்முடைய பெரியவாள். சூக்ஷிகளில் இருந்து சுயமரியாதைக்காரர் தப்புவதென்றால் இலேசான காரியமா?
அய்யர்:- சுயமரியாதை இயக்கம் கடவுள் ஜாதி மதம் ஆகியவைகள். மாத்திரம் அல்லாமல் பணக்காரன் - ஏழை, ஆண்-பெண், முதலாளி - தொழிலாளி ஆகிய விஷயத்திலும் கையை வைத்து பெரிய கலக்கம் கலக்குகின்றதே. அதனால் இப்போது தொழிலாளிகள் எல்லாம் நிமிர்ந்து பேசுகின்றார்கள். பெண்கள் வீட்டில் ஆண்களுக்கு அடங்கி நடப்பதில்லை. சம்பள ஆட்கள் எல்லாம் முதலாளிகளை மதிப்பதில்லை.மற்றும் இதுபோன்ற பல உணர்ச்சிகளைக் கிழப்பிவிட்டு தொல்லை விளைவிக் கின்றார்களே, பரிகாரி முதல்கொண்டு வாய்யா, போய்யா என்கின்றானே. இவைகள் எல்லாம் எப்படி பழையபடி சரிப்படும் ?
அய்யங்கார்:- இதெல்லாம் சு.ம. இயக்கக்காரர்களின் சமதர்மக் கொள்கை பிரசாரத்தின் உபத்திரவம் என்பதாக எனக்கும் தெரிகின்றது. ஆனால் அதுவும் சீக்கிரம் அடங்கிவிடும்.
அய்யர்: எப்படி அடங்கிவிடும்?
அய்யங்கார்:- காந்தி இருக்கும் வரை நமக்கு பயமில்லை. அவர். பகத்சிங் வகையறா தூக்கப்பட்டதும், மற்றும் அந்த இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் அதை காட்டிக் கொடுத்துதான் இராஜப்பிரதிநிதியிடம் ராஜி பேசினதும் மற்றும் இந்தியாவின் ஆக்ஷியில் சுதேச ராஜாக்களை யெல்லாம் கொண்டு வந்து போட்டு அவர்களுக்கும் இதில் ஆதிக்கம் வாங்கிக் கொடுத்ததும் முதலாகிய காரியங்கள், இந்த மாதிரி சமதர்மக் கொள்கைகளை எல்லாம் வெகு சீக்கிரத்தில் அடக்கிவிடும். ஆகை
யால் நாம் பிழைக்க வேண்டுமானால் கெளரவமாய் வாழவேண்டு மானால், பழம் ஏற்பாட்டுப்படி வருணாச்சிரமம், ஜாதி வித்தியாசம் ஆண் பெண்
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
வித்தியாசம், முதலாளி தொழிலாளி வித்தியாசம் இவைகள் நிலைத்து இருந்து
நாம் பாடுபடாமல் பூதேவர்களாகவும் சுவாமிகளாகவும் இருந்து பிழைக்க வேண்டுமானால் மகராஜன் காந்தி நன்றாய் இருக்கவேண்டும். அவருக்கு மிகுதியும் கெளரவமும் செல்வாக்கும் நாம் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும். அவர் செல்வாக்கு குறைந்தால் இந்தியா சுயமரியாதைக் கொள்கையின் கீழ்தான் இருக்க முடியும். ஆகையால் காந்தியைக் காப்பாற்ற வேண்டும். அவர்தான் இப்போது நமக்கு (பிராமணாளுக்கு) நல்ல ஆயுதமாக இருக்கின்றார் தெரியுமா?
அய்யர்: அப்படியா! காந்தீ வாழ்க!மகாராஜன் காந்திவாழ்க! மகாத்மா காந்தி வாழ்க Il எங்கள் அப்பன் காந்தி வாழ்க!!!
அய்யங்கார்:- அப்படிச் சொல்லு. இனி நாம் பிழைக்க வேண்டு மானால் இது தான் நமது மந்திரமாய் இருக்கவேண்டும்.
அய்யர்- யார் யாரோ காந்தி ஒழிக! காந்தியம் ஒழிக! காங்கிரஸ் ஒழிக! என்கின்றார்களாமே?
அய்யங்கார்: அதைப்பற்றி நாம் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. அதையெல்லாம் காந்தியே பார்த்துக் கொள்ளுவார். அந்த மாதிரி ஆசாமி களை ஒழிப்பதற்கு நம்ம காந்தி சர்க்காரைப்பிடித்து அடக்கி விடுவார்.
அய்யர்: ஜவர்லால்நேருகூட அந்த கட்சியைச் சேர்ந்தவராமே.
அய்யங்கார்:- எந்தக் கட்சியை?
அய்யர்:- காந்தி ஒழிய என்று சொல்லுகின்ற மக்கள் கொள்கையை சேர்ந்தவர்களாமே.
அய்யங்கார்:- அதெல்லாம் சும்மா சொல்லுவது. அவர் என்றால் மாத்திரம் பிராமணரல்லவா? “மழைக்கால் இருட்டானாலும் மந்தி (குரங்கு) கொம்பு விட்டுக் கொம்பு தவரிப் பாயுமா?” ஜவர்லால் எவ்வளவு தீவிரமாய் பேசினாலும் பிராமணத் தன்மையை மாத்திரம் விட்டுக் கொடுத்து விடுவார். என்று நீர் கனவிலும் என்ணிவிட வேண்டாம். உதாரணம் வேண்டுமானால். சொல்லுகிறேன் கேள்.
அய்யர்: சொல்லும் பார்ப்போம்.
அய்யங்கார்:- ஜவர்லால் ஆங்கிலம் படித்தவர். குழந்தைப் பருவத்திலேயே சீமைக்குச் சென்று அங்கேயே படித்து வளர்ந்தவர். ருஷியா வுக்குக்கூட போய் வந்தவர். மூடப்பழக்க வழக்கங்கள் மதப்பித்து ஆகிய வைகள் ஒழிய வேண்டுமென்றும், அவை ஒழியாமல் சுயராஜ்யம் வராது என்றும் சொன்னவர். இதெல்லாம் உமக்குத் தெரியுமா? தெரியாதா?
குடி அரசு - 19310) 288
அய்யர்:- நன்றாய்த் தெரியும். அதனால்தான் நான் அவர் நமக்கு எதிரியாயிற்றே என்று பயப்படுகின்றேன்.
அய்யங்கார்:- போமய்யா போம். உமக்கு சூட்சம அறிவு இருந்தால் அல்லவா இந்த சூக்ஷ்மம் எல்லாம் அறியக்கூடும்.
அய்யர்:- நீர்தான் சூக்ஷம அறிவுக்காரராயிருமே. சங்கதி என்ன? சொல்லும்.
அய்யங்கார்: ஜவர்லால் நேரு மேல்சொன்ன இவ்வளவு இருந்தும் எலும்பைக் கொண்டுபோய் கங்கை ஆற்றில் போட்டு மாதா மாதம் பிண்டம் போட்டால் அந்த எலும்பின் ஜீவன் மோக்ஷத்திற்கு போவார் என்று சொல்லி அவர் தகப்பனார் எலும்பை கங்கையில் போட்டு பிண்டம் கொடுத்தாரே, அது உமக்குத் தெரியுமா?
அய்யர்:- ஆம் தெரியும்.
அய்யங்கார்:- இதிலிருந்தே பார்த்துக்கொள்ளுமே. வீரர் ஜவர்லால்: நேரு நமது பிராமணத்தன்மையை விட்டுக் கொடுத்துவிட்டார்களா ? என்பதை.
அய்யர்:- ஓ! ஓ! அப்படியா? இந்த இரகசியங்கள் எல்லாம் எங்க ளுக்குத் தெரிவதேயில்லை.
நாங்கள் சுயமரியாதை இயக்கத்தை கண்டதும் பயந்து விட்டோம்.
அய்யங்கார்:- ஒன்றுக்கும் பயப்படவேண்டியதில்லை. காந்தியும் காங்கிரசும் உள்ளவரை சுயமரியாதை இயக்கமோ, நாஸ்திக இயக்கமோ, போல்ஸ்விக் இயக்கமோ இன்னும் சமதர்மம், பொது உடமை, இயற்கைத் தன்மை முதலிய இயக்கங்களோ எதுவும் பிராமணனை ஒன்றும் செய்து விடாது என்று தைரியமாயிரும்.
அய்யர்:- வட்டமேஜை மகாநாட்டில் என்ன என்னமோ சுதந்திரம் வரப் போகுதாமே அதிலேதாவது ஆபத்து வந்து விட்டால்?.
அய்யங்கார்.- அதைப்பற்றியும் பயப்படவேண்டியதில்லை. அங்கு சென்று நமது ஜீவாதாரத்தைக் காப்பாற்றத்தானே காந்தியை “சத்தியாக்கிரக
இயக்கம் தோற்றுப் போகும். பிறகு வருணாசிரமத்திற்கும் இந்து மதத்திற்கும் ஆபத்து வந்து உமக்கும் அவமானம் ஏற்பட்டு விடும்” என்று நம்ம சீனிவாச சாஸ்திரிகளும் இராஜகோபாலாச்சாரிகளும் பேதிக்குக் கொடுத்து இயக்கத்தை எப்படியாவது நிறுத்தி விட்டு அவரை வட்டமேஜைமகா நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதுமாத்திரமல்ல, இந்து ராஜாக்களையும் கொண்டுவந்து நம்மிடபெரியவாள் இந்த ீர்திருத்தத்தில் புகுத்திவிட்டார்கள்.
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆதலால் அது விஷயத்திலும் பயப்படவேண்டிய தில்லை. இன்னும் அநேக சங்கதிகளிருக்கின்றன. சாவகாசமாய் சொல்லு கிறேன். இப்போதே மூன்று பக்கத்திற்கு மேலாகிவிட்டது. யாரும் கோபித் துக் கொள்ளக் கூடாது.
குடி அரசு - உரையாடல் - 03.05.1931
குடி அரசு - 19310) 290
அதமா
ஆத்மா, என்னும் விஷயத்தைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் நமது நண்பர்கள் பலர் இது ஒரு தத்துவ விசாரணை விஷயம். இதைப்பற்றி எழுதவோ, பேசவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத் தக்காரருக்கு எதற்கு? சுயமரியாதைக்காரர்கள் அனாவசியமாய் கண்ட கண்ட விசயங்களிலெல்லாம் தலையிட்டு சீர்திருத்தத் துறையைப் பாழாக்கிக் கொள்ளுவானேன்? என்று கூசாமல் பேசுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட நண்பர்கள் சமுதாய சீர்த்திருத்தம் என்பது என்ன என்பதாக சரிவர உணராத வர்கள் என்று நினைத்துவிட்டு நம் பாட்டுக்கு நாம் மேலே செல்லக் கூடிய நிலையிலேயே இருக்கின்றோம்.
ஏனெனில் சமுதாய சீர்த்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் இடிந்துபோன - சுவண்டு போன - ஆடிப்போன பாகங்களுக்கு சுரண்டி கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள். ஆணால் நம்மைப் பொருத்த வரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரித்துக் கொள்ளுகின்றோம். மற்ற படி நாம் யார்? என்றால் என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் (மக்கள் சமுதாயம் என்றால் உலக மக்கள் சமுதாயம்! ஏன் சீர் திருத்தப்பட வேண்டிய நிலைமைக்கு வந்தது? என்பதை உணர்ந்து உணர்ந்தபடி மறுபடியும் அந். நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கின்றபடியால் சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்றமக்கள் அனேகர் நினைத்திருந்த தற்கு நாம் மாறுபட்ட கொள்கை யையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டியநிலைமையில் இருக்கின்றோம்.
இதனாலேயே தான் பலவற்றில் உலக மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதைத் தப்பு என்றும், தேவை என்பதை தேவை இல்லை என்றும், கெட்டது என்பதை நல்லதென்றும், நல்லது என்பதை கெட்டது என்றும், காப்பாற்றப்பட வேண்டும் என்பதை ஒழிக்க வேண்டும் என்றும், மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயத்தை கூறுவோராக-
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும் மதிக்கப்படுவதும் பழிக்கப்படாமல் - குற்றம் சொல்லப்படாமல் இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும். உதாரணமாக இது விஷயமாய் நாயனார் அவர்களது குறளில்
“உலகத்தார் உண்டென்பதில் என்பான் - வையத் தலகையா வைக்கப்படுவான்”
என்று ஒரு குறள் காணப்படுகின்றது. இதன் பொருள் அக்குறளில் காண்கின்றபடி பார்த்தால் “உலகத்தாரால் உண்டு என்று சொல்லப்பட்டதை இல்லை என்று சொல்லுபவன் உலகில் பிசாசாக மதிக்கப்படுவான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதில் இருந்து உலகத்தார் என்பது யாரைக் குறிப்பிடுகின்றது? “உலகத்தார் என்றால் உயர்ந்தோர்” என்று சொல்லுவதானால் உயர்ந்தோர் என்பதற்கு லக்ஷணமென்ன? பிசாசு என்றால் அர்த்தமென்ன? வையத் தலைகை என்பதற்கு திருவள்ளுவர் கருத்தென்ன? அவர் பிசாசை நம்பி இருந்தாரா? என்பன போன்ற பல தர்க்க விவகாரங்கள் அக்குறளுக்குப் பொருள் கூறுவதில் சிலருக்கு ஏற்பட்டாலும் அதன் அதிகாரத்தின் தலைப்புப்படி அக்குறளின் கருத்து “அநேக மக்களால் உண்டு என்று கருதப். பட்ட ஒரு விஷயத்தை இல்லை என்று சொல்லுபவன் அறிவில்லா தவன்” என்று பொருள்படுவதாகவே வைத்துக் கொள்ளுவோம். இப்படி இருந்தாலும் இதிலிருந்து அவன், அதாவது உலகத்தாரால் உண்டு என்பதை இல்லை யென்று சொல்லுபவன் எதனால் அறிவில்லாதவன் என்று கண்டு பிடிக்க வேண்டியது இங்கு முக்கியமாகின்றது. எவ்வாறெனில், உண்டு என்பதை இல்லை என்று சொல்லுகின்றதற்காக அவன் கொண்ட கருத்து குற்றமு டையதா? அல்லது பலர்- அநேகர் மற்றவர்கள்- எல்லோரும் உண்டு என்று சொல்லப்பட்ட ஒரு அபிப்பிராயத்திற்கு, அது எப்படி இருந்தாலும் கண்மூடித் தனமாய் பின்பற்றாமல் தனது சொந்த அபிப்பிராயத்தை துணிந்து சொல்ல. வந்துவிட்டானே அந்த அடங்காத-கீழ்படியாத - ஊருடன் ஓத்துப் போகாத -ஆணவமான தண்மையுடைய அந்தசெய்கை குற்றமுடையதா? என்று யோசிக்க வேண்டியது இங்கு முக்கியமான காரியமாகும். ஆகவே உலகத்தார் உண்டு என்பதை மறுத்துக் கூறியதற்கு ஆதாரமாக அவன் கொண்ட அபிப்பி ராயம் குற்றம் என்று ஏற்படுமானால் இங்கு உலகத்தார் சொல்லுவதெல்லாம் சரியானதாய்த்தான் இருக்கும் என்று பொருள் கொண்டு நாயனார் சொல்லி இருக்க வேண்டும். அல்லது அப்படி உலகத்தார் அபிப்பிராயத்துக்கு விரோத மாக அபிப்பிராயப்பட்டதை ஒருவன் தனித்து எடுத்துச் சொல்லுவது என் கின்ற தன்மை குற்றமானதென்று கருதி நாயனார் சொல்லி யிருந்தால் மனிதனுக்கு அவனவனபிப்பிராயத்திற்கு சுதந்திரமில்லை என்று வள்ளுவர் கருதி அப்படிச்சொல்லி இருக்க வேண்டும். ஆகவே அக்குறளானது உலக
குடி அரசு - 19310) 292
மக்களில் பொதுவாக பெரும்பான்மையோரையோ அல்லது அறிவாளி களாகிய பெரும்பான்மையோரையோ யாரைக் குறிப்பில் வைத்துக்கொண்டு நாயனார் சொல்லி இருந்தாலும் அக்குறள் பொதுவில் குற்றமுடையது என்பதே நமதபிப்பிராயம்.
ஆதலால் ஆத்மா என்கின்ற விசயத்தைப்பற்றி யார் என்ன சொல்லி இருந்தாலும் - உலகமே என்ன கருத்துக் கொண்டிருந்தாலும் அதை லக்ஷி
யம் செய்யாமலேயே நாம் நம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றோம்.
ஆதலால் ஆத்மா என்பது ஒரு வஸ்து அல்ல, பொருள் அல்ல.அது
சுதந்திரம், அறிவு உணர்ச்சி முதலாகியவைகளை உடையதல்ல என்பதோடு அது ஒரு பெரிதும் அர்த்தமற்ற வார்த்தை என்றே நமக்கு காணப்படுகின்றது. இங்லீஷ், தமிழ் அகராதிகளில் பார்த்தாலும் ஆத்மா என்பதற்கு இங்லீஷில். சோல் (Soul) என்றும், சோல் என்றால் அறிவு-யோசனை - ஆசை பிறக்கும் இடம், ஊக்கம், உள் சக்தி, மனிதவர்க்கம், உயிர் என்கின்ற பொருள்கள். காணப்படுகின்றன.
தமிழ் அகராதிகளிலும் அதுபோலவே ஆத்மா அல்லது ஆன்மா என்றால் காற்று, அறிவு, உடல், உயிர், பிராணன், மூளை முயற்சி, பிரம்மன், சுபாவம் என்கின்ற பொருள்கள் காணப்படுகின்றன. இவைகளில் இருந்து அதாவது இந்த வார்த்தைகளில் இருந்து விளக்கப்பட வேண்டியது ஒரே ஒரு வார்த்தைதான் ஆகும். பிராணன் அல்லது உயிர் என்பதற்குத்தான் அர்த்தம் விளங்கவேண்டி இருக்கின்றது. மற்ற வார்த்தைகள் எல்லாம் தானே அர்த்தம் புரியும்படியாய் இருக்கின்றன.
ஆகவேபிராணன் என்பது என்ன என்று பார்த்தால் அது ஒரு காற்று, பிராணவாயு இருதயத்தில் இயங்கிக்கொண்டிருப்பது என்பதாகத் தான் அகராதிகளில் காணப்படுகின்றது.
இது இங்ஙனமிருக்க இப்போது பழக்கத்தில் ஆத்மா என்றால் அது
சரீரத்திற்குள் இருக்கும் ஒரு நித்திய வஸ்துவென்றும் அது சூக்ஷம வஸ்து வென்றும் அதற்கு பிறப்பு இறப்பு இல்லை என்றும் அது மனிதன் இறந்த பின்பு வெளிப்பட்டு மறுபடியும் சரீரம் எடுப்பது என்றும், மற்றும் அது
சரீரத்தில் இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன் பயனை சரீரத்தை விட்டுப் பிரிந்த பின்பு கடவுள் மூலம் அனுபவிக்கின்றதென்றும் மற்றும் எத்தனையோ விதமாக அதைப்பற்றி பல மதங்களில் பல விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றதாய் அறிகின்றோம்.
உதாரணம் என்னவென்றால் அது மனிதனுக்குள் இருந்து மனித
சரீரத்திற்கு வேறாய் “என் சரீரம்” என்று சொல்லுவதன் மூலம் சரீரத்திற்கும் வேறுபட்டதென்றும் சொல்லுவது போன்ற ஏதேதோ பிரிவுகள் காட்டி அந்த
293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆத்மா சரீரம் விட்டுப்பிரிந்த பிறகு அடைய வேண்டிய - அடையக்கூடிய பலன் ஆகியவைகளைப் பிரதானமாகக் கருதி அதற்கு தகுந்தபடி அதற்காகவே மனிதன் வாழவேண்டியது அவசியமென்று சொல்லப்பட்டு அந்த மாதிரி ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையே மதங்கள் போதிக்கின்றன வென்றும் அதற்காகவே உலகத்தில் மனித கோடிகளுக்கும் மதம் அவசியமென்றும் சொல்லப்படுகின்றது.
ஆகவே கிறிஸ்து, பெளத்தம், இஸ்லாம், இந்து ஆகிய மதங்களில்: பெளத்த மதம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில் தான் ஆத்மாவுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் பற்றிய விஷயங்களை வைத்துக் கொண்டு இருக்கின்றன.
நிற்க மேற்கண்ட ஆத்மா என்பதில்
1. மனித ஆத்மா மாத்திரம்தான் மேற்கண்ட மத சம்மந்தங்களுக்கு அதாவது கடவுளுக்கும் ஆத்மாவுக்குமுள்ள சம்மந்தத்திற்காக ஏற்பட்ட மதங்களுக்கு சேர்ந்ததா? அல்லது புல், பூண்டு, அணு, ஜெந்து, ஊர்வன, பறப்பன, நகர்வன, நீர் வாழ்வன முதலிய ஜெந்துக்களின் ஆத்மாக்கள் என்பவைகளும் அதில் சேர்ந்தவைகளா?
2. இந்தப்படி மனித ஆத்மாவுக்கும் மற்றய ஆத்மாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டா? அல்லது எல்லாம் ஒரே தன்மையானதுதானா?
3. மனித ஆத்மா மனித சரீரத்தில் இருக்கும்போது அது செய்த வினைக்கு ஏற்ற பலனை சரீரத்தை விட்டுப்பிரிந்த பிறகு அனுபவிக்கின்றது என்பது போலவே மற்றப் புல், பூண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன, நீர் வாழ்வன, அணு ஜந்துக்கள் முதலியவைகளின் ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விலகிய பிறகு அவைகளின் வினைக்குத் தகுந்த பலனை அனுபவிக்கின்றனவா?
4. இந்த ஆத்மாக்களில் மேல் கண்ட ஜந்துக்கள் ஒவ்வொன்றுக்கும் சிறிது சிறிது வித்தியாசங்கள், குணங்கள், தன்மைகள் முதலியவைகள் அதாவது புலன்வித்தியாசங்கள் அறிவுவித்தியாசங்கள், உள்ளதுபோலவே மனிதஜீவனும் மற்ற ஆத்மாக்கள் போலவே இருப்பதோடு புலன் அறிவு விஷயத்தில் சற்று கூடுதல் வித்தியாசம் மாறுதல் முதலியவைகள் உடைய
ஜந்துவா?
5. உலகத்திலுள்ள மேல் கண்ட ஜந்துக்கள் எல்லாம் வேறு. மனித ஜெந்து மாத்திரம் வேறு என்று சொல்லும்படி வேறுபாட்டை உடைய ஜந்துவா மனிதன்?
என்பன போன்ற இன்னும் பல கேள்விகளும் சந்தேகங்களும் ஒரு
குடி அரசு - 19310) 294
பக்கமிருந்தாலும், மனிதன் என்பதையே நாம் என்ன என்பதாக முதலில் ஆராய்வோம். மனிதன் என்பதின் தன்மை விளக்கம் ஆங்கிலத்தில் (541) என்பதான தான், நான், என் என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளே யாகும். அக்குறிப்புகளில் ஒரு மனிதன் தன்னை நான் என்று சொல்லிக் கொள்ளும் போதும் எனக்கு என்னுடைய என்று சொல்லிக் கொள்ளும் போதும் ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது? அது எப்படி உண்டாகின்றது? என்பதை கவனித்தால் ஆத்துமத் தன்மை என்பது தானாகவே விளங்கும்.
அதாவது ஒரு மனிதன் நான் என்பதில் அந்த மனிதசரீரத்தின் எந்தப் பாகம் தனித்து இருந்து நான் என்கின்றது? அல்லது அந்த சரீரம் மொத்தமுமா? அல்லது சரீரமில்லாமலா? சரீரத்தில் எதுவரை நான் என்ற உணர்ச்சி இருக்கின்றது? சரீரத்தில் இருந்து எது போய்விட்டால் நான் என்பது போய்விடுகின்து? என்பது முதலாய் கேள்விகளுக்கு சமாதானம் கிடைத்தாலொழிய நான் என்பது விளங்காது.
இந்த முறையில் நான் என்பதை கவனிக்கும்போது என் சரீரம், என்
உயிர், என் ஆத்மா, என் ஆவி, என் ஜீவன், என் மனம், என் அறிவு, என்
புத்தி, என் எண்ணம், என் சித்தம், என் பிராணன், என் பிராணவாயு, என் சூக்ஷம சக்தி, என் கடவுள், என் ஆண்டவன் என்பது போன்ற அதாவது மனிதன் அல்லது ஆத்மா அல்லது ஜீவன் என்பவைகளாகிய எது எதை
நாம் மனிதனாக ஆத்மாகவாக இருக்கக்கூடும் என்று கருதுகிண்றோமோ அவைகளை எல்லாம் தன்னில் இருந்து தனிப்படுத்தி அவைகள் கூட
என் என்பதைச் சேர்த்து பேசுவதைப் பார்க்கின்றோம். ஆகவே என் (நான்) வேறு. மேற்கண்ட மற்றவைகள் எல்லாம் வேறு என்பதாக நினைக் கும்படியாக இருக்கின்றது. ஆதலால் இவைகள் எல்லாம் மனிதனுடைய தன்மை உணர்ச்சி ஆகிய நான் என்பது அல்ல என்றே சொல்ல வேண்டி
யிருக்கிறது.
இந்த நிலையில் மனிதனாகிய நான் என்னும் தன்மை உணர்ச்சி செய்த காரியங்களுக்கு ஆக நான் அல்லாத அதாவது என் ஆத்மா என்பதாகிய ஒருவஸ்துவோ ஒரு ஜீவனோ ஒரு சக்தியோ ஆகிய சூக்ஷம ஜீவன் என்பது எப்படி அந்தப்பயனை அனுபவிக்க முடியும்? அனுபவிப்பதுதான் எப்படி நியாயமாகும்? நான் செய்த காரியத்திற்கு என் ஆத்மாவை தண்டிப்பதோ, கண்டிப்பதோ சன்மானமாகியவைகளை கொடுப்பதோ எப்படி கடவுளின் நீதியாகும்? என்கின்றதான விஷயம் மிகவும் யோசிக் தத்தக்கதாகும்.
இந்தமாதிரியான பிரச்சினைகளுக்கு சமாதானம் சொல்லுபவர்கள் பெரிதும் ஒரே சமாதானம் தான் சொல்லுவார்கள். அதென்னவென்றால் “இம் மாதிரியான பிரச்சினை வெகு ஆயிரம் வருஷங்களுக்கு முன்னமேயே பலரால் கேட்கப்பட்டாய்விட்டது. இவை சாதாரண மனிதர்களுக்கு புரியும் படி யானவைகள் அல்ல, சொன்னாலும் உங்களைப் போன்றவர்களால்
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கிரகித்துக் கொள்ளமுடியாது. வேண்டுமானால் கைவல்யம், ஞானவெட்டி, வாகிஷ்டம், கீதை, வேதாந்தசாரம், தத்துவகீதை முதலாகியவைகளைப் பாருங்கள். அதற்கு வேறு பல பக்குவங்கள் வேண்டும்” என்பது போன்ற பதிலை சொல்லி விடுவார்கள்.
சாதாரணமாக கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமானவர்களுக்கும் அனேகர் இந்த விஷயத்தில் கவலைப்படாமல் தீர்ப்புநாளை உத்தேசித்து தாங்கள் இந்த சரீரத்துடனேயே ஒரு காலத்தில் மறுபடியும் எழுப்பப்பட்டு ஏதோ ஒரு பலனை அடையக்கூடும் என்கின்ற அளவோடு விட்டு விட்டார்.
கள். ஆதலால் அவர்களிடம் அதிக சிக்கலோ புரட்டோ கிடையாது. பெளத்தர்கள் “ஆத்மா என்பதே கிடையாது நித்திய வஸ்து என்பதே கிடையாது” என்பதாக முடிவு கட்டிவிட்டார்கள். ஆதலால் அவர்களுக் குள்ளும் இம்மாதிரியான கொசமுசாக்கள் கிடையாது.
ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர்கள் மாத்திரம், ஆத்மா, சூக்ஷம சரீரம், மோக்ஷ லோகம், நரகலோகம், மறுபிரப்பு அதுவும் பலவித மாய் அதாவது புல்லாகிப் பூண்டாகி என்று படிப்படியாய் ஏற்பட்டது என்றும் இவைகள் எல்லாவற்றையும்விட மற்றொருவிதமாய் அதாவது ஆத்மாக்கள்
பிதுர் தேவதைகள் ஆகி பிதுர்லோகம் என்பதில் இருந்து கொண்டு பிள்ளைகள் சந்ததியார்கள் முதலியவர்களால் இந்த உலகத்தின் பிராமணா ளுக்கு கொடுக்கப்படுவதை அவர்களது மந்திர சக்தியின் மூலமாய் பெற்று அடைந்து வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் இன்னும் பலவிதமாய் சொல்லப். படுகின்றன. ஆகவேஇவை தானாகவே ஒன்றுக்கொன்று முரண்படுவதாலும் அதைப்பற்றி முன்னமேயே பலபல சமயங்களில் வேறுவேறு வியாசங்களில். எழுதப்பட்டதாலும் இதை நிறுத்திவிட்டு அடுத்த வியாசத்தில் “நான்” அல்லது 5ளீ தன்மை என்பதைப்பற்றி விவரிப்போம்.
குடி அரசு - கட்டுரை - 03.05.4931
குடி அரசு - 19310) 296
ஒரு நல்ல சேதி
ஈரோடு முணிசியாலிமு
ஈரோடு முனிசிபாலிடியானது கொஞ்ச காலத்திற்கு முன் இருந்து வந்த பொருப்பற்றதும், நாணையமற்றதுமான நிர்வாகத்தின் பயனாய் செல்வங்கள் பாழாகி கண்டபடி கண்டவர்களால் ஒழுங்குகளும், பண்டங் களும் கையாளப்பட்டு கடைசியாக கடனில் மூழ்கி சம்பளம் வகையறா பட்டுவாடா செய்யவும் சக்தியற்று இந்த மாகாண பாப்பர் முனிசிபா லிடியிலும் ஒழுக்க ஈனமான முனிசிபாலிடியிலும் முதல்நெம்பராய் இருந்து வந்ததானது மாறி, தற்கால சேர்மென் ஜனாப், கே.எ. ஷேக்தாவூத் சாயபு அவர்கள் காலத்தில் நாணையமும், பொருப்பும் பெற்று செல்வ நிலைமையிலும் சற்று நன்னிலை: அடைந்து இப்போது நல்ல முனிசிபாலிடிகளில் ஒன்று என்று சொல்லத்தக்க பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அவரது சொந்த செல்வாக்கினால் ஈரோடு முனிசிபாலிடியால் கல்வி இலாக்காவுக்கு கொடுக்கப்பட வேண்டிய
ரூ. 44,000 - ம் கவர்ன்மெண்டார் தள்ளிக் கொடுத்து வஜா செய்து கொண்டார்கள். மற்றும் அவரது சொந்த பிரயத்தனத்தினால் ஜில்லா போர்டுக்கு கொடுப்பட வேண்டிய 2, 3 வருஷ பாக்கியாகிய சுமார் 25,000 ரூபாயும் ஒருவிதத்தில் தள்ளிக் கொடுத்து ஜில்லா போர்டினால் நிரந்தரமாய் வருஷம் 4000, 5000 ஈரோடு முனிசிபாலிட்டிக்கு லாபம் இருக்கும்படியாய் செய்யப்பட்டாய் விட்டது.
மற்றும் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு தாங்கமுடியாத பாரமாகவும் பெருநஷ்டமாகவும் இருந்து வந்த ஹைஸ்கூல் (அதாவது முன்னிருந்த சேர்மெனால் பாதிரிகள் தாட்சண்ணியத்திற்காக தலையில் போட்டுக்கொண்ட ஒரு உபத்திரவம்) ஆனது இப்போது கோவை ஜில்லா போர்டாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால் அவ்விஷயத்தில் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு வருஷம் 7000, 8000 வீதம் மீது ஏற்படும்படியாக ஆகிவிட்டது.
கன்ட்றாக்டர்கள் தொல்லைகளால் கவுன்சிலர்களுக்குள் அடிக்கடி நிகழும் எதிர்பாராத மனவருத்தங்களும் இனிமேல் நேராமல் இருப்பதற்கு முனிசிபல் வேலைகளை டிபார்ட்டுமெண்டு மூலமாகவே செய்வது என்ப தன்
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மூலம் இனி அவ்விதம் ஏற்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடாகிவிட்டது. ஆகையால் பல வழிகளிலும் ஜனாப், ஷேக்தாவூத் சாயபு அவர்கள் காலத்தில் ஈரோடு முனிசிபாலிடி நல்ல நிலைமை அடையும் வழியில் திரும்பிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் மறுபடியும் அரசாங்கமும் பொது ஜனங்களில் ஒரு கூட்டமும் முன் நடந்து கொண்டதுபோல் பொருப் பற்ற தன்மையில் நடந்துகொள்ளாமல் யோக்கியமாய் நடந்துகொண்டால் ஈரோடு முனிசிபாலிடி கோயமுத்தூர் முனிசிபாலிடிக்கு உள்ள நல்ல பெயரில் அரைவாசிப் பெயராவது வாங்கக்கூடும்.
கடைசியாக ஈரோடுமுனிசிபாலிடியின் கடன் கஷ்டங்கள் ஒருவாறு தீர்க்கப்பட்டதற்கும் அதன் கஷ்ட நிலைமை ஒருவாறு நிவர்த்தியானதற்கும் கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்டு திவான் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களின் உதவி மிகுதியும் போற்றத்தக்கதும் நன்றி பாராட்டத்தக்கதுமாகும். ஈரோடு முனிசிடாலிடியில் அவரது ஞாபகச்சின்னம் எங்காவது இருப்பதற்கு ஈரோடு பொது ஜனங்களோ, முனிசிபா லிடியாரோ முயற்சிக்க வேண்டியது அவர்களது முக்கிய கடமையாகும்.
கடைசியாக ஒன்று. அதாவது ஈரோடு மின்சார சக்தி வினியோக விஷயமாய் அந்த நிர்வாக பொருப்பையும் உரிமையையும் சர்க்காரார்கள் ஈரோடு முனிசிபாலிடியாருக்கு கொடுக்காமல் ஏதோ ஒரு வெள்ளைக்கார கம்பெனிக்கு கொடுத்தது மிகவும் அக்கிரமமும் அநியாயமுமான காரியமாகும். அதுமாத்திரமல்லாமல் இந்தப்படி செய்ததற்கு அரசாங்கத் தார் சொல்லும் காரணம் மிகவும் அநீதியுமானதாகும்.
அதாவது, “ஈரோடு முனிசிபாலிடியின் நிர்வாகம் மிகவும் ஒழுங்கீனமாகவும் யோக்கியப் பொருப்பற்று நடந்து கடன்கார முனிசிபாலிடியாய் இருப்பதால் மின்சார சக்தி நிர்வாக சுதந்திரப் பொருப்பை. அதற்குக் கொடுக்க முடிய வில்லை” என்று சொல்லிவிட்டார்கள். ஒழுக்கீனமாகவும், யோக்கியப் பொருப்பில்லாமலும் யாரோ நடந்துகொண்ட காரியத்திற்கு ஆகவும் அப்படிப்பட்ட காலத்தில் பொது ஜனங்களும் கவுன்சிலர்களும் எவ்வளவோ தூரம் சர்க்காராரை பிரவேசிக்கும்படி கேட்டுக்கொண்ட காலத்திலும் வேண்டுமென்றே அலக்ஷியமாய் இருந்துவிட்டு இப்போது அதே குற்றத்தை ஈரோடு முனிசிபாலிடியார் மீது சுமத்துவதானது சிறிதும் ஒழுங்கல்ல என்றுதான் சொல்லவேண்டும் -
இந்த மின்சார நிர்வாக சுதந்திரத்தை ஈரோடு முனிசிபாலிடியாருக்கு கொடுக்காமல் ஒரு வெள்ளைக்கார தனி வியாபாரக் கம்பெனிக்கு கொடுத்த
தால் ஈரோடு முனிசிபாலிடிக்கு வருஷம்!-க்கு 20,000-க்கு மேலாகவே 30.000 ரூ.வரை கூடவரக்கூடிய ஆதாயம் நஷ்டமாகிவிட்டது. யூனிட் 1-க்கு 0-0-6 வீதம் வாங்கும் மின்சாரத்தை அக்கம்பெனியார் நமக்கு யூனிட் 1-க்கு 5- அணாவுக்கு விற்கப் போகின்றார்கள். கோயமுத்தூர் முனிசிபாலிடி
குடி அரசு - 19310) 298
விஷயத்திலும் சர்க்காரார் இப்படித்தான் செய்ய இருந்தார்கள்.ஆனால் அந்த சேர்மென் திரு.சி.எஸ். ஆர் அவர்களின் செல்வாக்கால் கோயமுத்தூர் முனிசிபாலிடி சமாளித்துக் கொண்டது. ஆனால் ஈரோட்டு முனிசிபாலிடிக்கு அந்தப்படியான செல்வாக்கு இப்போது இல்லையானாலும் ஈரோடு பொது ஜனங்கள் தங்கள் ஒற்றுமையையும் கட்டுப்பாட்டையும் காட்டி தைரியமாய் எதிர்த்து நின்றால் ஈரோடும் வெற்றி பெறலாம். அதாவது “ஈரோடு முனிசி பாலிடி மூலமாய் அல்லாமல் வேறு வழியில் வரும் மின்சாரம் எங்களுக்கு வேண்டாம்.நாங்கள்யாரும் தனி வியாபாரக் கம்பெனிகாரர்களிடம் மின்சாரம் வாங்கி உபயோகித்துக் கொள்ள மாட்டோம்” என்று உறுதியாய் சொல்லி விட்டால் போதுமானதாகும்.
அந்தப்படி செய்தால் ஈரோடு முனிசிபாலிடிக்கு குறைந்தது வருஷத்
தில் 20000 ரூ. வருஷம் மீதியாகும்.
குடி அரசு - கட்டுரை - 03.051931
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
யஞ்சமா பாதகங்கள்
“பஞ்சமா பாதகங்கள்” என்னும் ஒரு புத்தகம் தன் ஆசிரியரான திரு. அ. அய்யாமுத்து அவர்களால் நமது பார்வைக்கு அனுப்பப்பட்டதை பார்வையிட்டோம்.
அப்புத்தகத்தில் பஞ்சமா பாதகமெனப்படும் கொலை, களவு, பொய்,
கள், காமம் என்னும் ஐந்து விஷயங்களும் உலகில் எந்த சந்தர்ப்பங்களில் உண்டாகின்றன? அவை ஏன்? யாரால் உண்டாக்கப்பட்டது? அது உலக வழக்கில் எப்படிநடைபெறுகின்றன? இன்ன இன்ன விதத்தில் இன்ன இன்ன காரணங்களால் நடைபெரும் பஞ்சமா பாதகங்கள் குற்றமுடையன வாகுமா?
உண்மையில் நடைபெரும் பஞ்சமா பாதகங்கள் குற்றமாய் கருதப். படுகின்றனவா? என்பவைகளையும் இன்றைய நிலையில் அதாவது சமூக, மதஅரசியல் நிலையில் பஞ்சமா பாதகம் என்பது நிகழாமல் இருக்க முடியுமா என்றும் அவை உண்மையில் நடக்கப்படாமலும் மற்றவருக்கு துன்பம் இழைக்காமலும் இருக்க வேண்டுமானால் எப்படி உலக சமுதாயக் கொள்கை இருக்க வேண்டும் என்பதையும் விவரித்து விளக்கி எழுதப் பட்ட புஸ்தக மாகும். இப்புத்தகம் கிரெளன் 1-8 சைசில் 50 பக்கங்களுக்கு மேல் கொண்ட தாகும். விலை அணா 2. தனிப்பிரதி வேண்டுவோர் 0-2-6 அணா ஸ்டாம்பு அனுப்பப்பட வேண்டும்.
கிடைக்குமிடம் :
அ.அய்யாமுத்து, புஞ்சை புளியம்பட்டி, கோயமுத்தூர் ஜில்லா.
குடி அரசு - மதிப்புரை - 03.05.1931
300 குடி அரசு - 1931 (1)
சிகப்பா கல் ந்தது வேட் விளம்பா் க்கும் [ங்க க%.
| வடி விக்குது ஒளிவு க யாட | சரட் g e Ao e (10111} I மம் 8
் : e ; வைத்திய யாஸ்கா பண்டுட் எஸ். எஸ்ஃ க க்கள் ஜ்.
i புகழ்பெற்ற சத்த மருந்துகள், ண கத்் 1
Py ey sl T s BT n நடக N லோட் வேத ட தவம் அம் ந்த அம்பிகா | அவலை கைம்... இதே e e ]
வே னகினிப் ந ன்னான் ல் L அவன்தன் வொ கங்கன் பன்னக கவன் எண் என்றாள் களவை பவன எல்லை கமம் கண்னன் பக அ ரதம் கதர் ச்ட் அஸ்க தற்ஸ் ளை § இடவும் ஏற்றான் தகை இயம் அன் தொல்புகழ்! எனும் சழ பப் ஆவ்வ் நனை மலை 7.
குமிழ் வைத்தியசாகல, ன சல்ககட்தெரு, கென்ய :
301 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பிரிட்முஷ் ஆகூறியிண் கண்றைய தீமைகன்
I நியாயம் வழங்கு முறை:
சிவில் லாகா
பிரிட்டிஷார் ஆக்ஷியின் பயணாய் இந்திய மக்களுக்குள்ள கஷ்டங் களில் முக்கியமான கஷ்டங்கள் இரண்டு. அவை வரிக்கஷ்டமும் அல்ல, வியாபாரக்கஷ்டமும் அல்ல.
ஆனால் இந்திய அரசியல் பிழைப்புக்காரர்கள் பாமரமக்களை ஏமாற்றி தாங்கள் தான் இந்திய ஜனப்பிரதிநிதிகள் என்று காட்டிக்கொண்டு அரசாங்கத்தாரிடம் உத்தியோகம், பதவி, பட்டம், பெற வரியைப்பற்றியும், வெளிநாட்டு வியாபாரத்தைப்பற்றியும் கள்ளைப்பற்றியுமே எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். அறிவோடு கூடி நடுநிலைமையில் இருந்து ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தானேயானால் இவைகள் யெல்லா வற்றையும் விடமுக்கியமாய் இருக்கும் குறைகள் தானாகவே புலப்படும். அதாவது
வக்கீல் தன்மைகளும் உத்தியோக தன்மைகளுமேயாகும். இவ் விரண்டும் இந்தநாட்டில் பிரபுத்தன்மையைக் காப்பாற்ற இருக்கின்றதே ஒழிய நியாயத்தைச்செய்யவோ ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவே யில்லை. அரசியல் துறையில் சம்மந்தப்பட்டதான வக்கீல் முறையும் உத்தி யோக
முறையும் இந்தியாவில் இந்த மாதிரி இல்லாதிருந்திருக்கு மானால் இந்த நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும் நாணயக்குறைவும் தரித்திரமும் மக்களுக்கு கஷ்டமும் அலைச்சலும் இருக்க முடியவே முடியாது என்ப தோடு இவ்வளவு தூரம் வித்தியாசப்படும்படியான ஏழைத்தன்மையும் பணக்காரத்தன்மையும்கூட இருக்கமுடியாது என்று உறுதியாய்ச் சொல்லு வோம்.
ஏழைகளையும் மத்திய தரத்தாரையும் இந்த நாட்டில் தலையெடுக்க வொட்டாமல் செய்து வருவது இந்த வக்கீல் முறையும் உத்தியோக முறை யுமே தவிர வேறு ஒன்றுமேயில்லை.
ஏனெனில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு பணக்காரனாயிருப்பவன் தனது பணத்தின் மகிமையினால் 100க்கு 90 விஷயங்களில் தன் இஷ்டப்படியேநியாயம் பெறுகின்றான்.நியாயாதி பதிகள்
குடி அரசு - 19310) 302
என்பவர்களும், வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூ றாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி பெறுவதற்கு அனுகூல மாகவுமே இருக்கின்றார்கள்.
இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும்,
நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அதுமாத்திரமல்லாமல் தேசத்தின் ஒழுக்கமும், நாணய
மும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள். என்று சொல்லுவது சிறிதும் மிகைபடக் கூறுவதாகாது என்பதே நமதபிப் பிராயம்.
நமது நாட்டுப் பணக்காரர்களில் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக்குறைவும் ஏற்படவும், அவர்கள் நாட்டின் நலனுக்கு பொருப்பற்ற தன்மையாய் நடந்து கொள்ளவும் காரணமே நமது வக்கீல் களாவார்கள்.
இந்த நாட்டு விவசாயக்காரர்கள் பெரிதும் கடன்காரர்களாக இருக்க வேண்டி ஏற்பட்டதற்கு காரணமும் இந்த நமது வக்கீல்களேயாவார்கள்.
மக்களுக்கு விவகாரத்தில் அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படு வதற்கு காரணமும் வக்கீல்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அன்றியும், நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக்கொண்டு போவ
தற்கும், நியாயஸ்தலங்கள் அதிகமாவதற்கும், வக்கீல்கள்தான் காரணஸ்தர் களாவார்கள். இன்னும் உண்மையை ஒளிக்காமல் தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால் மக்கள் அயோக்கியர்களாவதற்கும், நாணயக்குறைவாயி ருப்பதற்கும்கூட நமது வக்கீல்கள் பெரிய பொறுப்பாளிகளாவார்கள்.
இதற்கு காரணம் பிரிட்டிஷ் அரசாங்கமா? இந்திய மக்களா? என்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் அரசாங்கத்தைவிட இந்திய மக்களே மிக அதிகமான பொறுப்பாளியாவார்கள்.
ஏனெனில், பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் இந்திய மக்களுக்கு சம்மந்தமும், பங்கும் இருக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த காலத் திலேயே இந்த வக்கீல் கூட்டங்களேதான் இந்திய மக்களின் பிரதிநிதிக ளாயிருந்து வக்கீல் தொழில் விர்த்தியாகி வக்கீல்கள் தாராளமாய் பிழைப்ப
தற்கு ஏற்றதான திட்டங்களையே இந்திய சுதந்திரத்திற்கும், அரசாட்சியில் பங்கும், சம்மந்தம் பெறுவதற்கும் அனுகூலமான கொள்கை என்று பாமர: மக்களுக்குச் சொல்லி நம்பச்செய்து ஏமாற்றி அரசாங்கத்தாரையும் ஒப்பச் செய்து அரசாங்க சீர்திருத்த மூலமாகவும் சட்ட மூலமாகவும் அவைகளைப் பெற்றுக் கொண்டு, தங்கள் தொழிலில் மிக்க தாராளமாகவும், தைரியமாகவும், அயோக்கியத்தனங்களையும் நாணயக்குறைவுகளையும் உபயோகித்து
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
வந்து, நாளுக்கு நாள் அது முதிர்ந்து, இன்று நாட்டிற்கும் சமூகத்திற்கும் இந்தநிலை ஏற்பட்டு விட்டது.
இந்தமாதிரி வக்கீல் ஆதிக்கமானது இன்றைக்கும் நமது பாமர மக்களுக்கு யோக்கியமாகவும், நாணயமாகவும் இருக்க முடியாத வக்கீல் களின் பிரதிநிதித்துவம் தான் பிடிக்கச்செய்கின்றதேஒழிய உண்மையான பிரதிநிதித்துவம் ஏற்படுத்திக்கொள்ள யோக்கியதை இல்லாமல் செய்து விட்டது.
ஆகவே இதன் பயனாய் வெள்ளைக்கார வக்கீல்களிடமும் வெள்ளை: கார அதிகாரிகளிடமும் காணமுடியாத அநேக ஒழுக்கக்குறைவுகளும் நாணயக்குறைவுகளும், நடுநிலையற்ற தன்மையும் நம்ம வக்கீல்கள் இடமும், நம்ம உத்தியோகஸ்தர்கள் இடமும் தாராளமாய் இருந்துவரு கின்றன. அது மாத்திரமல்லாமல் ஒழுக்கமும், நாணையமும் உள்ளவர்கள் வக்கீலுக்கும், உத்தியோகத்திற்கும் அருகதையற்றவர்களாகியும் விட்டார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சிவில் இலாகா என்று சொல்லப்படும் அதாவது சொத்துக்களின் உரிமைகளைப் பொறுத்த விவகார இலாகாக்களை எடுத்துக் கொண்டால் கீழே இருந்து அதாவது ஒரு சம்மன் சார்வுசெய்யும் சேவகன்
முதல் குமாஸ்தா இலாகா உள்பட உள்ள சிப்பந்திகள் வரை உள்பட அவர்: களது ஒழுக்கமும் நாணயமும், யோக்கியப்பொறுப்பும் மிக மிக மோசமான தாகவே நடைபெற்றுவர வெகு காலமாய் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற தென்றே சொல்லவேண்டும். இவ்விலாகாவில் லஞ்சமும், மாமூலும், மோச
மும் ஹைகோர்ட் ஜட்ஜிகள், இலாகா தலைவர்கள் என்பவர்கள் ஆகிய எல்லோருக்குமே தாராளமாய் தெரிந்து வேண்டுமென்றே அனுமதித்துக் கொண்டு இருக்கும் அளவை மனிதனால் சொல்லத்தரமுடையவைகள். அல்ல என்றே சொல்லுவோம். வக்கீல்கள் தொல்லைகளும், நீதிபதிகள் தொல்லைகளும் ஒருபாகம் என்றால் மேல்கண்ட சிப்பந்திகள், நடுத்தர உத்தியோகஸ்தர்கள் ஆகியவர் களின் தொல்லைகள் சகிக்கமுடியாதவை யாகும். இந்தத்துறைகளில் சீர்திருத்தமோ ஒழுங்கோ செய்ய இன்றையதினம் இந்தநாட்டில் ஒரு அரசியல் வாதியாவது ஒரு தேசீயவாதியாவது கிடையவே கிடையாது. இதனால் வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி அவனிடம் உள்ளதை கையைத்திமிரிப்
பிடுங்கிக் கொள்ளுவதைவிட கோர்ட்டு மூலமும், வக்கீல்கள் மூலமும் பிடிங்கிக் கொள்வதோ தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதோ மிகவும் சுலபமானதும் சட்ட பூர்வமானதுமான காரியமாகவே இருந்து வருகின்றது.
ஆகவே இந்த முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூல மாகப் போய்விட்டதால் அவர்களும் அதாவது நம்நாட்டுப் பணக்காரர்களும் சந்தோஷமாகத்தங்கள் முழுபலத்தோடு இதை ஆதரிக்க வேண்டியவர்
களாகி விட்டார்கள்.
குடி அரசு - 19310) 304
எனவே இந்தமாதிரியான நடுநிலைமையற்ற அதிகாரிகளும் நாணயமும், ஒழுக்கமும், யோக்கியப்பொறுப்புமற்ற வக்கீல்களும் நியாய இலாகா சிப்பந்திகளும் தாங்கள் இந்த காரியங்கள் செய்வதற்காக அடையும் ஊதியத்தை, வரும்படியைப்பார்த்தால் உலகத்தில் எந்த யோக்கியமான, நாணையமான மனிதனும் தொழிலாளியும் அடையும் ஊதியத்தைவிட எத்தனையோ மடங்கு அதிகமாகவே பெறுகின்றார்கள். ஒரு முனிசீப்பு என்பவர் 300 ரூபாயில் ஆரம்பமாகி மேல்கண்ட அக்கிரமங்களைச் செய்வ
தன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும் ஹைகோர்ட் ஜட்ஜ்வரையில் உயர்த்தப்படுகிறார். ஒரு வக்கீல் மாதம் 100 ரூ. முதல் அக்கிர மும், அயோக்கியத்தனமும், நாணயக்குறைவும், பித்தலாட்டமும் செய்யும்
அளவுக்குத்தக்கபடிபடிப்படியாய்கெட்டிக்காரணகிமாதம்10ஆயிரம்,20ஆயிரம் ஐஆபிரம்ரூவரைபெறும்படியானயோக்கியதை யுடையவனாகிறான்.
உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணய மற்ற தென்றும், வெளிப்படையாய் தெரியும்படியாக நடந்து கொள்ளும் ஈனத் தன்மையுடைய ஒரு தொழிலில் சட்டப்பூர்வமாகவே இந்தப்படி கொள்ளை அடிக்க இடமிருந்தால், இந்த அரசாங்கத்தின் வேறு எந்த வரியை - யார் செய்யும் காரியத்தை நாம் அக்கிரமம் என்று சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தத்தொழில்களில் இவ்வளவு அக்கிரமம் செய்வதற்கு இவர்களுக்கு எப்படி வழிகிடைத்தது என்று பார்ப்போமானால்,
1.வக்கீல்களும், நியாயாதிபதிகளும் ஒரேகூட்டத்தினரா யிருப்பது. அதாவது வக்கீலே நியாயாதிபதி ஆவதும், நியாயாதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும்.
2. சட்டமானது ஒரு வர்ஜா வர்ஜநமில்லாமல் பத்ததி நிர்ணயம் ஆகியவை இல்லாமல் ஒவ்வொரு மனிதனுடைய இஷ்ட மும் ஒரு சட்டமாவதும், ஒருவனுடைய இஷ்டத்தை மற்றொருவன் இஷ்டப் பட்டால் பின்பற்றலாம், இல்லாவிட்டால் பின்பற்ற வேண்டியதில்லை. என்பதும், மற்றும் தனக்கு இஷ்டமானவர்கள் அபிப்பிராயத்தை பின்பற்றலாம் என்பதும், அவற்றை யெல்லாம் விட்டுவிட்டு தன் இஷ்டப்படி நடக்கலாம் என்று இருப்பதுமான லா ரிப்போர்டுகளை அதாவது வேறுபல ஜட்ஜுகளின் அபிப்பிராயங்களை சட்டமாக ஏற்றுக்கொள்ள வசதி இருக்கும் முறைகளே சட்ட உலகத்தில் நீதி உலகத்தில் இவ்வளவு ஒழுக்க ஈனங்களை கற்பித்து நீதிபதிகளையும், வக்கீல்களையும் இவ்வளவு ரூபாய்கள் கொள்ளை அடிக்க வசதி செய்து கொடுத்து வருகின்றது.
நியாயஉலகம் சீர்படவேண்டுமானால் அதில் ஒழுக்கத்திற்கும், கிரமத்திற்கும், சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால் முக்கியமாக மேல் கண்ட இரண்டு முறைகளையும் ஒழித்துவிட வேண்டும்.
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்குவழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுக்கப் படுவதையும் நிருத்திவிட வேண்டும்,
இந்தக் காரியங்கள், அதாவது இந்தமாதிரி வக்கீல்கள் பெருகுவதான காரியங்கள், இந்த நாட்டின் நியாயத்தையும் ஒழுக்கத்தையும் சாந்தியையும் கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக்கிருமிகளை வளர்ப்பதற்கே ஒப்பாகும்.
இனி விவகார முறையில் இருக்கும் அக்கிரமங்கள் இந்த ஒரே வியாசத்தில் சொல்லக்கூடியதல்ல. உதாரணமாக ஒருவிவகாரம் தொடுத்து 20. வருஷத்திற்கு மேலாகியும் இன்னமும் முடிவு பெறாத விவகாரங்கள் பல இருக்கின்றதென்றால் விவகார முறையின் யோக்கியதையைச் சொல்ல. வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ஆகவே அவற்றைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.05.1931
குடி அரசு - 19310) 306
அர்ச்சகர் - சேோசியார் சம்பாஷணை
-சித்திரபுத்திரன்
அர்ச்சகர்- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா
இருக்கிறது.
ஜோசியர்: - என்ன காரணம் ?
அர்ச்சகர்; இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.
ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக் காரர்கள் சாமி இல்லை, பூதம் இல்லை என்றுசொல்லி மக்களைக் கோவிலுக்குள். போகக்கூடாது என்று பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா?
அர்ச்சகர் - இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை. என்று சொல்லட்டும், கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.
ஜோசியர்:- மற்றென்ன காரணம் என்று சொல்லுகிறீர்கள்?
அர்ச்சகர்; கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி, அதை நிருத்திவிட்டார்களல்லவா?
அதனால்தான்?
ஜோசியர்: இதற்கும் பக்திக்கும் சம்மந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?
அர்ச்சகர்:- கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்? கடவுள்தான் எங்கும் நிரைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வர வேண்டுமா?
ஜோசியர். மற்றெதற்காக வருகின்றார்கள்?
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அர்ச்சகர்:- இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு வருகின்றார்கள்.
1. தன்னை பக்திவான் என்று பிறர் மதிக்க வேண்டும்.
2. அங்குவரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும், ஆண் களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும், இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வளிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும், சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை. ஆக இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால் தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவைகள் கிடைக்கும். ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில் என்ன பிரயோஜனம்? கோவில் சம்பளமாகிய மாதம்1-12-0 ரூ.சம்பளமா நமக்குக் கட்டும்?
ஜோசியர்: அப்படியா சங்கதி. அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழிகிடைக்காதோ?
அர்ச்சகர்-- என்ன வழி?
ஜோசியர்:- நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து, தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன?
அர்ச்சகர்: அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய செளகரியம், வீடு,வாசல், கட்டில், படுக்கை முதலிய செளகரியம் ஆகியவைகள் வேண்டாமா இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?
நாம் ஏதோ தூசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில். ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி அதுவும் இரகசியம் என்றும், அவசரமென்றும் பயப்படுத்தி 10,5 பெற்றுக்கொண்டு கஷ்ட மில்லாமல், நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா? அப்படிக்கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ளமுடியுமா?
ஜோசியர்:- என்னமோ கஷ்டகாலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்துவிட்டது.
அர்ச்சகர்: உங்களுக்கு என்ன வந்தது ?
ஜோசியர்:- இப்போது எந்தத் “தேவடியா” மகன் நம்மிடம் ஜோசியம்
குடி அரசு - 19310) 208
பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையேமிகவும் குறைந்து போய்விட்டது.
அர்ச்சகர் : - ஏன்?
ஜோசியர்:- ஏன் என்ன அததுகளே பெண்ணும்-மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.
அர்ச்சகர்: இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?
ஜோசியர்; - அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குதான் எங்கு. வருகின்றார்கள். “திருட்டுத் தேவடியா பிள்ளைகள்” காயலா வந்தால்-தலை வலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதேயில்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள். என்னடா என்று கேட்டால் சுயமரியாதையடா என்கின்றார்கள்.
அர்ச்சகர்:- சரி, இவ்வளவு ஆனதற்கப்புரம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.
ஜோசியர்:- என்ன?
அர்ச்சகர்:- நாமும் சுயமரியாதை பிரசாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ளமெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது எப்படி என்றால் இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான் அதாவது “நானும் சுயமரியாதைக்காரன்” என்று சொல்லிக்கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல.
ஜோசியர்:- அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பெளத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால், இந்த சு-ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்? இது தெரிந்துதான் பு-ம. பயல்களை: (புராண மரியாதைக்காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்பதில்லை. என்று தீர்மானித்து விட்டார்களே.
அர்ச்சகர்:- அதுவும் அப்படியா. அப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளும் இந்த ச-ம.காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.
குடி அரசு - உரையாடல் - 10.051931
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கோண்டு தமிழ் திணசரி பத்திரிகைகள்
இவ்வாரம் “திராவிடன்” “இந்தியா” என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர்பெற்றுத் தோன்றியதாகும். பின்னையது புதிதாகவே தோன்றிய
தாகும்.
எப்படி இருந்த போதிலும் இவைகள் இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு வக்காலத்து பேசும் வகையில் நமக்கு எச்சரிக்கை செய்து கொண்டே புறப்பட்டிருக்கின்றபடியால் நமது கொள்கைகளுக்கு இவை களால் ஆதரவு எதிர்பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டியிருக் கின்றது.
ஏனெனில் நாமோ பல மதங்களையும் பல சமயப் பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண்:
டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், பல சமூகக் கொள்கைகளையும் அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக் கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை, உயர்வு, தாழ்வு வித்தியாசத்தையும், தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு துலைத்தாகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததாகும். அதோடு மாத்திரமில்லாமல் “கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் சம்மந்தமுண்டாக்கு வதே மதம்” என்றும், அல்லது “கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் உள்ள சம்மந்தத்தை உணரச் செய்வதே மதம்” என்றும் சொல்லும் படியான மதக் கொள்கை: யையும் சமயக் கொள்கையையும் கண்டித்து அவைகள் முட்டாள் தனம் என்பதாக நிரூபித்து மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஒரு மதம் (கொள்கை) இருப்பதானால் அதற்குத் தகுந்தபடி இருக்கட்டும், இல்லா விட்டால் ஒழியட்டும் என்பதன் மூலம் மதங்களிடம் துவேஷிக்கின்றோம் என்னும் பெயர் பெற்று இருக்கின்றோம்.
அதுபோலவே சில சமூகத்தாரும். சில சமயத்தாரும் மக்களை ஏமாற்றி, தங்கள் சமூகமே மேலானதென்று வஞ்சித்து, ஆதிக்கம் பெற்று அவ் வாதிக்கத்தை நிலைநிறுத்த, “அரசியல்” என்றும், “தேசீயம்”” என்றும், “காந்தியம்” என்றும், “சத்தியாக்கிரகம்” என்றும் பல சூக்ஷித் துறைகளை
குடி அரசு - 19310) 310
உண்டாக்கி, அதன் மூலம் மேலும் மேலும் மக்களை வஞ்சித்துவரும் அயோக்கிய சமூக சமயத்தை ஒழிக்கும் முறையிலும், அவர்களது தந்திரங் களை வெளியாக்கிக் கிளர்ச்சி செய்யும் முறையில் சில சமயக்காரருடனும், சில சமூகக்காரருடனும் சண்டை தொடுக்க வேண்டியவர்களாகவும் இருக் கின்றோம். இதனால் பல சண்டைகளை கிளப்ப வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
இதனால் “தேசீய ஒற்றுமை” கெடுவது மாத்திரமல்லாமல் “தேசீய உணர்ச்சி” கூட ஒழிவதானாலும் நாம் லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்கின்றோம். ஆதலால் மேல்கண்ட கொள்கைகளையுடைய நமக்கு மேல்கண்ட இரண்டு பத்திரிகைகளும் அனுகூலமில்லாததோடு எதிர்ப்பாக இருக்க நேரிடும் என்பதை அவைகள் தாராளமாய் வெளிப்படுத்தி இருக்கின்றன.
எப்படி எனில் ஒன்று, அதாவது “திராவிடன்” தனது முதல் இதழில். “சமயத் துவேஷம், சமூகத்துவேஷம், மதத்துவேஷம் முதலியன இல்லாமல்
காக்கும்” என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இரண்டு, “இந்தியா” தனது முதல் இதழில் சமய சமூகச் சண்டைகளை கிளப்பி தேசீய ஒற்றுமைக்கு இடர் செய்யும் இயக்கங்களை எப்பொழுதும் எதிர்த்துப் போராடும் என்று எழுதிக் கச்சை கட்டி நின்று கொண்டு இருக் கின்றது.
ஆகவே “இந்தியா” “திராவிடனை” விட ஒருபடி முன்னேறி இருக்கின்றதென்றே சொல்லுவோம். எனவே குடி அரசுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் முன்னுள்ள எதிரிகளைவிட மற்றும் சற்று அதிக பலம் கொண்டசரியான எதிரிகள் இருவர் தோன்றி இருக்கின்றார்கள் என்றுதான் முடிவு கட்டிக் கொண்டு தயாராயிருக்கவேண்டும்.
மற்றபடி காங்கிரசுக்கும், சமயத்திற்கும், மதத்திற்கும் (ஆதிக்கம் பெற்று சில சமூகங்களுக்கும், கூட்டத்தாருக்கும் ஆப்தமான இரு நண்பர்கள் தோன்றி இருக்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டும். எப்படி இருப்பினும் பொது மக்களுக்கு “உலக நடப்பை உணர்த்துவது பத்திரிகை களாகும்” என்னும் கருத்தின் மீது அப்பத்திரிகைகளையும் ஆதரித்து, அதன் உள்எண்ண மனப்பான்மையை உணர்ந்து கொள்ளுவதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் உறுதியான மனோதிடத்தில் ஆதரிக்க வேண்டுமாய் மறுபடியும் பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
இப்பத்திரிகைகளின் பத்திராதிபர்கள் இருவரும் பார்ப்பனரல்லா. தார்கள் என்பதோடு இருவரும் பத்திராதிபர்களாகவும் இருந்தவர்களாவார்
கள். ஆதலால் அவர்களது கருத்தையும், திறத்தையும், நலனையும் மக்கள்
3n பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஏற்கனவே நன்றாய் உணர்ந்தவர்களாவார்களாதலால் அதைப்பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே விட்டுவிடுகின்றோம்.
விலாசம்:-
“திராவிடன்”
14, மவுண்ட்ரோட், சென்னை. “இந்தியா” 1-ஜெனரல் பாட்டர்ஸ் ரோட், மவுண்ட் ரோட், சென்னை.
குடி அரசு - கட்டுரை - 10.05.1931
குடி அரசு - 19310) 312
ஊபாத்திமாயர்கள்
நமது நாட்டில் உள்ள தொழில் வகுப்புத்தொகுதிகளில் உபாத்தியாயர் வகுப்புத்தொகுதி என்பதே மிகவும் மோசமானதும், முட்டாள் தனமானது மான தொகுதி என்று சொல்லுவோம்.
அக்கூட்டத்தாரில் பெரிதும் அநேகருக்குச் சிறிதும் பகுத்தரிவு என்பதும், உலக கல்வி என்பதும் கிடையாது என்பது நமது 40, 50 வருஷத்திய அனுபவமாகும். அதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களைப் போன்றதும் பண்டித உபாத்தியாயர்களைப் போன்றதுமான முட்டாள் தனமும் அசந்தர்ப்ப குணமும் அதிகப்பிரசங்கித்தனமும் மற்ற உபாத்தியாயர்களிடம் சற்று குறைவாகவாக இருக்கலாம்.
பொதுவாகவே உபாத்தியாயர்கள் என்பவர்களுக்குப் பகுத்தறிவு உதயத்திற்கு வழியில்லாமலே போய் விடுகின்றதான தன்மையே அவர்களது மூடத்தனத்திற்குக் காரணமாகும்.
முதலாவது உபாத்தியாயர் தொழில் என்பது இப்போது நமது நாட்டில். கிராமபோன்யந்திர வேலையாகவேதான் இருக்கின்றது.
என்னவெனில், ஏதோ ஒன்றைப் படிப்பது, அதை ஒப்புவிக்கும் முறையில் பரீட்சை கொடுப்பது, மறுபடியும் அதை பிள்ளைகளுக்கு கிராம் போன் மாதிரி போதிப்பது ஆகிய காரியங்களைத் தவிர வேறு பகுத்தறிவு பெற சிறிதும் நேரமும், அவசியமும், செளகரியமும் இல்லாத வாழ்க்கை யிலேயே இருந்து வருவதால் அவர்கள் மூடர்களாகவே இருக்கக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்கள் படிக்கும் புஸ்தகமும் சொந்த வாழ்க்கையும் பெரிதும் மூடநம்பிக்கையும் இயற்கை விரோதமும் இழி தகைமையும் கொண்ட சமய சம்மந்தமான நூல்களும் கொள்கை களுமாகவே ஏற்பட்டு விட்டால் இவர்களது அறிவுத்திறத்தை வர்ணிக் கவும் வேண்டுமா என்று கேட்கின்றோம்.
இந்த மாதிரியான மூடர்களிடமே மாணாக்கர்களாயிருந்து கல்வி பெறும் நமது மக்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கும் என்பதை நாம் விளக்கவேண்டியதில்லை .
313 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இன்னும் நல்ல உதாரணம் வேண்டுமானால் வடமொழியிலும் தென் மொழியிலும் வல்லவர்கள் என்கின்ற சாஸ்திரிகள், வித்துவான்கள் ஆகியவர்களின் சொந்த பகுத்தறிவுகளை நிதானமாய் தனித்துத்தனித்து கவனித்துப் பார்த்தால் அதிலிருந்தே மற்ற படித்தவர்கள் யோக்கியதைகள் எல்லாம் கூட விளங்கும்.
இவற்றை உத்தேசித்துத்தான் பல சுயமரியாதை மகாநாடுகளில் உபாத்தியாயர்களை தற்காலம் தற்பித்து செய்யும் முறை தவறு என்றும்... அவர்களுக்குப் பாடப்புத்தகமாக வைக்கும் புத்தகங்கள் இன்ன இன்ன மாதிரி இருக்கவேண்டும் என்றும், பல தீர்மானங்கள் செய்து வருகின்றோம். ஆனாலும் நாடு இன்னமும் பார்ப்பன ஆதிக்கத்திலேயேயும் வைதீக அழுக்கு மூட்டைகள் ஆதிக்கத்திலேயும் இருப்பதாலும் அரசியல் ஒழுக்க இயல், அறிவுஇயல் முதலியவை சம்மந்தமான ஸ்தாபனங்கள் எல்லாம் சமய ஆதிக்கத்தினால் வாழும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதாலும் நமது கருத்துக்களுக்கு ஒருசமயம் மதிப்பு ஏற்பட்டாலும் அவை நடை முறைக்கு சாத்தியமில்லாமல் இருக்கின்றன. நிற்க,
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு உபாத்தியாயரின் யோக்கியதையைப்பற்றி சிறிது விளக்குவோம். அதாவது:-
நமது ஜில்லாவில் ஒரு கனவானிடம் ஒரு பார்ப்பன உபாத்தியாயர். ஒருதக்க சிபார்சுடன் வந்து தனக்கு ஜீவனத்திற்கே மிகக் கஷ்டமாயிருப்ப தாகவும், எப்படியாவது தனக்கு ஒரு உபாத்தியாயர் வேலை போட்டுத்தர வேண்டுமென்றும் கேட்டார். அக்கனவான் தன்னிடம் உபாத்தியாயர் உத்தி யோகம்காலி யில்லையென்று சொல்லியும் பட்டினிக்கிடப்பதாக துக்கப்பட்ட தனால் மனமிளகி, டெம்பரவரியாக, தற்கால சாந்தியாக ஒரு உத்தி யோகத்தை காலியாக்கி பதிலியாகக் கொடுத்தார். மற்றும் இந்தப்படியே அடிக்கடி காலி வேலைகளை பதிலியாகவே இவருக்குக் கொடுத்துக் கொண்டும் வந்தார்.
ஆகவே இந்த உபாத்தியாயருக்கு அப்பெரியார் தன்னுடைய ஜில்லா எல்லைக்குள் ஏற்படும் தற்கால காலி ஸ்தானங்களை எல்லாம் இவருக்கு அப்போதைக்கப்போது கொடுத்துக்கொண்டுவந்திருக்கிறார். என்றாலும் டெம்பரரியாக நியமிக்கப்பட்ட இப்படிப்பட்டவருக்கு பள்ளிக்கூட வெயில்கால நீண்டவிடுமுறைச்சம்பளம் கொடுக்க சட்டப்படி நியாயம் கிடையாது என்பது யாவரும் அறிந்ததாகும்.
இப்படி இருக்க சென்ற வருஷம் ஒரு நாள் அதாவது வேலையில்லாத காலத்தில் உபாத்தியாயர் அப்பெரியார் வீட்டிற்கு வந்து தனக்கு சாப்பாட் டிற்கே வழி இல்லையென்றும் இரண்டு மூன்று நாள் பட்டினி கிடப்பதாகவும் சொன்னார். இதை நம்பி அப்பெரியார் தனது சொந்தப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கையில் கொடுத்து அனுப்பினார். இதைப் பெற்றுக்கொண்டு
குடி அரசு - 19310) 314
ஊருக்குப் போன உபாத்தியாயருக்கு பள்ளிக்கூடம் திறந்தஉடன் மறுபடியும் ஒரு காலி ஸ்தான பதிலி உத்தியோகம் கொடுத்தார். இந்தப்படி யாக இந்த உபாத்தியாயருக்கு அக்கனவான் அடிக்கடி வேலைகொடுத்து காப்பாற்றி வந்திருக்கின்றார். இப்படிப்பட்ட பெரியாருக்கு அந்த உபாத்தி யாயர் எழுதி ரிஜிஸ்டர் செய்து அனுப்பி இருக்கும் கடிதத்தில் கண்டசில குறிப்புகளை குறிப்பிடுகின்றோம். அதாவது:-
ஐயா... “நான் தங்களிடம் வேலைபெற்றதில் ஒருவருஷம்தான் கோடைகால லீவு சம்பளம் கிடைக்கப்பெற்று இருக்கிறேன். மற்ற வருஷ- விடுமுறை காலங்களில் சம்பளமில்லாமல் தவித்து இருக்கிறேன்... ஒரு பிராமணன் இவ்வாறு அலைக்கப்படுவது நியாயமா?
உங்களுக்கும் இந்தக் கதியை நான் விரும்பாவிட்டாலும் நீங்கள். இம்மாதிரி கஷ்டப்பட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்?
செல்வம் தங்கி இராது, அதிகாரம் நிலைக்காது... தங்கள் ஆத்மா பாவத்தைச் செய்யலாகாது.
நான் சென்ற மே மாதத்தில் தங்கள் வீட்டில் பட்டினி விரதமிருந்த போது தாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தீர்கள். அந்த ஒரு ரூபாய்க்கு ஸ்டாம்பு இதில் அனுப்பி இருக்கிறேன்.
எங்கள் குடும்பம் வேதம் ஓதிய பெரியவாள் வம்சம்.
உங்கள் ஆத்துமா பரிசுத்தமடைய வேண்டுமானால் அந்த பக்தர்கள் நிறைந்த வம்சத்திற்கு தீங்கு செய்யலாகாது.
என்னைக் காப்பாற்றுவதன் மூலம் தங்களை காத்துக் கொள்ளுவீர்கள். என்று நம்புகின்றேன் .
வேதம் உண்மை - கடவுள் சத்தியம், காயத்திரி ஜபம் வீணாகாது, பதிவிரதைகள் வாக்கு பலியாமல் போகாது.
பிராமணர்களை சதா கஷ்டத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.
தாங்கள் அடைந்துள்ள பதவியில் மமதைக்கொண்டு -.....பதவி பூர்வ புண்ணியத்தால் உண்டானது.
அடுத்த ஜன்மத்திற்கு உங்கள் குலத்தின் க்ஷ லாபத்தைத் தேடுங்கள்.
ஏழைகளுக்குச் செய்யும் தீமை தங்களுக்குச்செய்து கொண்டதாகும்.
“நான் அடையும் இன்ப துன்பம் பகவான் சத்திய ரூபிக்கு சாறும்” என்பதாக எழுதியிருக்கிறார். இவர் ஒரு பார்ப்பனர் ராமச்சந்திரன் என்ற பெயர் கொண்டவர்.
இன்றைய உபாத்தியாயர்களில் 100-க்கு 90க்கு மேற்பட்டவர்களின்
315 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
யோக்கியதையும் இப்படிப்பட்டதாகும் என்பதற்கு இன்னும் பல சான்றுகள் நம்மிடமிருக்கின்றன.
மற்றொரு சமயம் ஹெட்மாஸ்டர் ஒரு பள்ளிக்கூட காரியதரிசிக்கு கடிதம் எழுதும்போது ஆனால் கையழெத்தில்லாமல் மொட்டை கடிதமாய்
எழுதப்பட்டது. அதாவது,
“ஐயா நீர் இப்போதுதான் சீமைக்கு அனுப்பி கல்வி கற்பித்த உம்மு டைய மகனைத் தின்று இருக்கிறீர். இன்னும் ஒரே ஒரு பெண்தான் இருக் கிறது. எனக்கு துன்பம் செய்தால் பகவான் அந்த ஒரு பெண்ணையும் தின்று விடும்படி செய்து விடுவார்” என்று எழுதியிருந்தார்.
இதிலிருந்து இந்த உபாத்தியாயர்கள் வேதம் முதலியவற்றைப் போற்றுவதைப்பற்றியும் நன்றி விசுவாசம் முதலிய குணங்கள் இல்லாத தைப்பற்றியும் நாம் குற்றம் சொல்லவரவில்லை. ஆனால் இவர்கள் எவ் வளவு மூடர்கள், இவர்களது மூடநம்பிக்கை எவ்வளவு, இவர்களின் அற்ப புத்தியின் நிலைமை எவ்வளவு? இந்த மாதிரி தரமுள்ள மக்களை பிள்ளை களுக்கு படிப்பு கற்றுக்கொடுக்கும்படி சொன்னால் அந்தப் பிள்ளைகள் உருப்படுவார்களா? அறிவு பெறுவார்களா? என்றுதான் கவலைப்படு கின்றோம். ஆகவே இன்று நம் நாட்டு மக்களில் படித்தவர்கள் என்பவர் களிலேயே100க்கு 90 பேர்கள் பகுத்தறிவற்ற மூடர்களாய் இருப்பதற்கும் மூட பக்திக்காரராய் இருப்பதற்கும் காரணம் எல்லாம் இந்த மாதிரி முழு மூடர்களான உபாத்தியாயர்களிடம் படிப்புப் பெறச்செய்தி க்கும் முறையே யாகும். இந்த நிலையில் இவர்களுக்கு இந்த உபாத்தியா யர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமோ நினைத்தால் அளவுக்கு எத்தனையோ மடங்கு மீறியதாகும். சாதாரணமாக இன்றைய நிலையில் உபாத்தியாயர்களுக்கு மீ”
20 ரூ.க்கு கம்மிஇல்லாமலும் 50 ரூ.க்கு மேற் படாமலும் சம்பளம் கொடுத்தால் தாராளமான சம்பளமாகும். ஆனால் இன்றைய சம்பள திட்டம் ஏழைகள் படிக்கக்கூடாது என்றும், உடல் பிரயாசைப்பட்டு சம்பாதிக்கின்ற தொழிலாளி. பிள்ளைகள் படிக்கக்கூடாது என்றும், ஆனால் ஊரை ஏமாற்றி சோம்பேரி யாய் இருந்து அயோக்கியத் தனம் செய்து பாட்டாளிகளின் பலனைக் கொள்ளை அடிக்கும் அயோக்கிய வஞ்சகர்களின் சந்ததிகளே படிக்க வேண்டும் என்றும், அவனும் மூடனாகவும் அயோக்கியனாகவுமே இருந்து இந்தநிலைமையை வளர்க்க வேண்டும் என்றும் அடிப்படையான தத்துவத்து டனேயே கல்வித்துறையை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதென்றே கருத வேண்டி யிருக்கின்றது. ஆகவே, சம்பள விகிதத்தைப்பற்றியும், அதன் தகுதியைப் பற்றியும் பின்னால் எழுதுவோம்... இப்போது அவர்களது தகுதியைப்பற்றி குறிப்பிடவே இதை எழுதினோம். இந்தப்படி இன்னும் பல உதாரணங்கள் உண்டு.
குடி அரசு - கட்டுரை - 10.05.1931
குடி அரசு - 19310) 316
கதர் போர்டு நினைத்தது முழந்தது
உப்பு சத்தியாக்கிரகத்தின்போது வேதாரண்யத்திற்கு சென்று சிறை. சென்ற திருப்பூர் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலிருந்த திரு. சிதம்பரய்யர் என்னும் பார்ப்பனர் இப்பொழுது திருப்பூர் அகில பாரத சர்க்கா சங்கத்தைச் சேர்ந்த காதி வஸ்திராலயத்தில் ரூபாய் 50 சம்பளத்தில் காஷியர் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ஷேயாரை வேதாரண்யத்திற்கு அனுப்பும்போது ஜியாரை உபசரித்து அனுப்புவதற்காக கூடிய கூட்டத்தில் திரு.!!.5.வரதாச்சாரியார்,திருசிதம்பரய்யரைப் பற்றிவானமளாவப் புகழ்ந்தது எல்லோருக்கும் தெரியும், “ திரு. சிதம்பரய்யர் அவர்கள் ரயில்வே உத்தியோகத்தில் இருந்த போதிலும் ஒழிந்த நேரங்களில் கதர் வாங்கிக் கொண்டு போவதும் கதர் விற்பனை செய்வதும் கதரின் மேல் அவருக்குள்ள பற்றுதலும் மிகவும் சிலாகிக்கத்தக்கது என்றும், இப்படிப்பட்டவர்கள் தேசத்துக்கு பாடுபட வந்திருப்பது நம் பாக்கியமே” என்றும், பலவாராக
புகழ்ந்து பேசினார். அப்போதே கூட்டத்திலுள்ளவர்கள் உப்பு சத்தியாகிரகம்
தீர்ந்து ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் திரு. சிதம்பரய்யருக்கும் சர்க்கா சங்கத்தில் ஒரு வேலை கிடைக்கும் என்றும் பலபேர் நினைத்துக் கொண்டி ருந்தார்கள்.அதுபோலவே நினைத்த காரியம் கைகூடிவிட்டது. திரு. சிதம்ப ரய்யர் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். இன்றுவரை 100க்கு 90 பார்ப்பனர்கள் சர்க்கா சங்க நிர்வாகத்தில் இருந்தும் ஒரு முஸ்லிமுக்காவது அதில் இடம் கிடையாது. சர்க்கா சங்கம் என்றால் பார்ப்பன அக்கிராரம் என்று திரு. ஈ வெ. ராமசாமியார் பொருள் சொன்னது திரு. 115.வரதாச்சாரியார் காலத்தில்தான்
முற்றுப்பெற்றது.
சுமார் நாலு வருஷ காலமாக டெ சர்க்கா சங்கத்தில் வேலை பார்த்து வந்த திரு. கண்ணாயிரம் பிள்ளையவர்கள் டிசர்க்கா சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு காரியதரிசிக்கும் அவருக்கும் கடிதப் போக்குவரத்து நடந்து இப்போது உள்ளூர் பிரமுகர்களுடன் சமாதான பேச்சு நடந்து வருகிறது. முடிந்த விபரம் பின்னர் விபரமாக பிரசுரிக்கப்படும்.
-ஒரு நிருபர்
குடி அரசு - செய்திக் குறிப்பு - 10.051931
317 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காஞ்சீபுரம் போலீஸ் ஸ்டஷனிலும் புத்தர்,
பிண்னையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டையா?
பொதுவாக நகரங்கள் மாட மாளிகை, வீடு வாசல்களாலானவை. ஆனால் ஆக்ஸ் போர்ட் நகரம் கல்லூரிகளாலானது என்றும்,மான்செஸ்டர். நகரம் மில்களாலானது என்றும் சிறப்பு முறையில் வழங்கப்படுவது போன்று கோயில்களாலான நகரம் ஒன்று உலகத்தில் உண்டு என்று கூறுவதானால் காஞ்சீபுரத்தைத் தான் கூறவேண்டியிருக்கும். காஞ்சீபுரத்தின் வீடுகளின் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் அந்நகரத்துக் கோயில்களின் எண்ணிக்கை. குளக்கரைகளெல்லாம் கோயில்கள். கழணி தோட்டங்களெல்லாம் கோயில்
கள். வீட்டுப் புறக்கடைகளெல்லாம் கோயில்கள். சாமிகள் கணக்கோ சொல்லித் தொலையாது. கோயிலில்லாது கேட்பாரற்று, வெயிலிலுலர்ந்து, மழையில் நனைந்து வாடிவதங்கும் சாமிகளைப் பார்க்கவும் பரிதாப மாயிருக்கும். ஒரு கோயிலில் ஒரு சாமியல்ல. ஒன்று போலவே ஆயிரக்கணக் கான சாமிகள். சில கோயில்களில் சாமிகள் நாத்து விட்டிருக்கிறது. ஒரு லிங்கத்திலேயே 108, 1008 லிங்கங்கள். இரடி விழுந்தாலும் சாமியல்ல, சாமிகளின் மேலும், கோயிலன்று கோயில்களின் மேலுந்தான் விழ வேண்டும். நகரத்தை விட்டு ஒரு மைல் சென்று தனியிடம் தேடி வெளிக்கு உட்காரு வதானாலும் அங்கும் ஒரு கோயிலோ, சாமியோ யிருக்கப் பார்க்கலாம்.
அதிலும் சீக்கியர் மடம், சங்கரர் மடம் போன்ற பல வகுப்பினர். மடங்களும், கிறிஸ்தவாலயம், மகமதிய பள்ளிவாயில்கள், சைன புத்த கோயில்கள், சிவாலயங்கள், தென்கலை வடகலை வித்தியாசமுள்ள வைண:
வக் கோயில்கள் இவையன்றி பல ஜாதி வகுப்பினர் ஆதிக்கங்களிலுள்ள தனிப்பட்ட கோயில்கள் முதலிய எல்லாமத ஜாதி வகுப்பினரின் ஆலயங் களாலும் நிரம்பப்பட்டு மத வேற்றுமைகளுக்கு ஆஸ்பதமான சரித்திர சம்பந்தமுடையது இக்காஞ்சிமாநகரம். இன்றும் ஒவ்வோராண்டைய வைகாசித் திருவிழாவிலும் நடக்கும் தென்கலை வடகலைச் சண்டையில் போலீஸ் காவலிருக்கும் போதே மண்டையோடு மண்டையுருண்டு கோர்ட்டுக்கும் போவதைக் காணலாம்.
இத்தகைய அருஞ்சிறப்புகளமைந்த இக்காஞ்சீபுரத்தில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்காக சமீப காலத்தில் ஒரு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விசேடமென்ன வென்றால் உள்நுழையும்
குடி அரசு - 19310) 318
வழியின் இருமருங்கிலும் மதிற்சுவருக்குள், ஒரு பக்கலில் நிர்வாண புத்த சிலையொன்றும், மறுபக்கத்தில் பிள்ளையார் சிலையொன்றும், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்கும், புத்த சிலைக்கும், பிள்ளையார் விக்கிரகத்துக்கும் உள்ள தொடர்பென்ன? இதற்கு முன்பு அச்சிலைகள் அக்கட்டிடத்துக்குச் சமீபத்திலுமிருந்ததில்லை.அவ்விடமும்
ஓர் கக்கூஸ் கட்டப்பட்டிருந்தவிடம். ஆகையால் பழைமை பாராட்டவும் நியாயமில்லை.ஊரில் சாமிகளில்லை, அதற்காக வைத்திருப்பார்க ளென்றா.
லும், காஞ்சீபுரத்தைப் பற்றி முன்பே வர்ணிக்கப்பட்டாய்விட்டது. அவ்வக் கால அரசர்கள் தாங்கள் பின்பற்றிய மதங்களை தங்கள் ஆட்சியில் நிலை நாட்டி வந்தது போலிருக்குமோ வென்று பார்த்தாலும், அரசாங்க மதத்துக்கும்
இச் சிலைகளுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பிறகு, ஏன், எப்படி அச்சிலைகள் அங்கு வைக்கப்பட்டன? அதிகாரியின் சம்மதமின்றியும்,அவர். இடங்கொடாமலும் அவைகள் அவ்விடத்தில் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்க வழியில்லை. அவ்வாறு நேர்க்கினும் தம் மதத்தை நிறுவ ஒரு ஜைன விக்ரகத்தையல்லவோ ஒரு நயினாரானவர் வைத்தோ அன்றி அனுமதித்தோ யிருக்க வேண்டும்? புத்த சிலை நாட்டப்படுவானேன்? ஓர் வேளை பிற மதத்தினர்க்கஞ்சி ஜைன விக்ரகத்துக்குப் பலவழிகளில் வேற்றுமையில்லாது ஏறக்குறைய ஒத்ததான புத்த சிலையை நாட்டியிருக்கக்கூடுமோ என்னும் சந்தேகமுண்டாகிறது. இருப்பினுமிருக்கலாம். அப்படியானால் பெரும் பாலோரான பிற “இந்து” க்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை திருப்திப் படுத்த பிள்ளையார் விக்ரகமும், இடம் பெற்று விட்டதில் ஆச்சரியமில்லை யல்லவா?
மக்களின் அறிவு விருத்தியடைந்து வருமிக்காலத்தில், மதங்களைப். பற்றிய ஆராய்ச்சிகளும், சர்ச்சைகளும், நடந்து வருமிக்காலத்தில், அறியாமையும், மூடக் கொள்கையும், குருட்டு நம்பிக்கையும் பஞ்சாய்ப் பறந்து வருமிக்காலத்தில், கோயில்களையும், சாமிகளையும் பற்றிய ஓர் புத்துணர்ச்சி உலக முழுவதும் பரவி அவைகளை யொழிக்க முயற்சிக்கப் பட்டுவரு மிவ்விருபதாம் நூற்றாண்டில், எல்லா மதத்தினரும், எல்லா வகுப்பினரும், எல்லா கொள்கையினரும் வரக்கூடிய, எல்லோருடைய பணத்தினாலும், கட்டப்பட்டு எல்லோருக்கும் பொதுவான, அதிலும் அரசாங்கக் கட்டிடத்தில் புத்த, பிள்ளையார் சிலைகளை ஸ்தாபிக்கப்பட்டி ருக்கிறதென்றால், அதன் பொருள்தானென்ன? மேலும் இக்காஞ்சீபுரத்தின் நிலைமை தெரிந்திருந்தும், இங்கு நடக்கும் மதச்சண்டைகளையறிந்திருந்தும், அச்சண்டை சச்சரவுகளையடக்கி சமாதானத்தை நிலைநாட்டி வரவேண்டிய போலீஸ் இலாகாவுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலேயே இத் தகைய சிலைகளை நாட்டப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மன வருத்தத்தை யுண்டுபண்ணக் கூடியதாயுள்ளது.
319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆகையால், காஞ்சீ நகர போலீஸ் தலைமையதிகாரியும், போலீஸ் மேலதிகாரிகளும் இவ்விடயத்தையூன்றி கவனித்து கூடிய விரைவில் அச் சிலைகளை அவ்விடத்தைவிட்டகற்றி பொதுமக்களுக்கு திருப்தியையளிக்க முன்வருவார்களாக.
- ஒரு நிரூபர்
குடி அரசு - கட்டுரை - 10051931
குடி அரசு - 19310) 320
வங்கான மாகாண வண்களுக்குக்கூட
காங்கிரசின் மீது கசப்பு
கல்கத்தா டவுன் ஹாலில் வங்காள ஸ்திரீகள் மகாநாடு ஸ்ரீமதி சாரனா. தேவி செளத்ராணி தலைமையில் நடைபெற்றது. ஸ்திரீகளின் உரிமைகள் வற்புறுத்தப்பட்டும் அதை எவரும் சட்டை செய்யவில்லை என்றும், சிறப்பாக பண்டிதர் ஜவர்லால் நேரு கூட அதை அசட்டை செய்தது ஆச்சர்யமான தென்றும் சென்குப்தாவை மாகாண இளைஞர் மகாநாட்டில் தலைமை வகிக்காது தடுத்தது ரொம்பவும் சரி என்று ஆதரித்ததும், பலர் பிரசங்கமாரி பொழிந்தார்கள்.
பிறகு அங்கு செய்யப்பட்ட தீர்மானங்களாவன:-
சாரதாசட்டம் உடனே அமுலில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருக்க வேண்டுமென்றும், கலப்புமணம், விதவை மணம், இவைகளை அனுஷ்டிக்க வேண்டுமென்றும், ஆண் களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஒழுக்க முறை இருத்தல் வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
சிறைபுகுந்த வங்க நாட்டு பெண்களை நமது நாட்டு வீரர்கள். போற்றுகிறார்கள், புகழுகிறார்கள், வீரமணிகளென்கிறார்கள், இவர்கள் வங்க நாட்டு வீரப் பெண்மணிகளின் அடிகளை பின்பற்ற வேண்டுமென்றே சுயமரியாதைக்காரர்கள் விரும்புகிறார்கள்.கேரள நாட்டில் காந்தி காந்தி என்று கதறிக் கொண்டும், தேசீயமகாநாடுகளில் தலைமை வகித்து பிரபலஸ்தராக விளங்கும் சென்குப்தாவுக்கு ஸ்ரீமதி சாரளாதேவிசெளத்ராணி தலைமையில் கூடிய வங்க நாட்டுப் பெண்கள் மகாநாட்டில் ஆதரவு இல்லாமல் போன தேன்? இதையும் தென்னாட்டார் தெரிந்து தெளிதல் அவசியம்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 10.051931
321 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
திருப்பூர் காங்கிரஸ் பிரசாரமும் பணாமுழய்பிண் மோக்கியதையும்
சென்ற வாரத்தில் இவ்வூருக்கு திரு. இராஜகோபாலாச்சாரியுள்பட சில காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தார்கள். உடனே பத்திரிகை நிரூபருக்கு ஆள் அனுப்பினார்கள். நிரூபரும் உடனே வந்து சேர்ந்தார். திரு. இராஜ கோபாலாச்சாரியாரின் திக்விஜயங்களையும் அவருடைய பிரசாரத்தின் முக்கிய கொள்கைகளையும் பத்திரிகைக்கு தந்தி கொடுக்கப்பட்டது. பின்னர்
பணமுடிப்புக்கு ஒரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டது.சிறை சென்ற திருமதி. பத்மாவதி ஆஷருக்கு திருப்பூர் பொதுஜனங்களின் பெயரால் அவர் செய்த தியாகத்தை பாராட்டி ஒரு பண முடிப்பு கொடுப்பதென்றும் டெ யாரின் தலைமையில் கிராம பிரசாரத்துக்கு ஷி பணம் செலவழிக்கப்படுமென்றும், ஆனால் ழெபணமுடிப்பை திரு. இராஜகோபாலாச்சாரியரிடம் கொடுத்து விடவேண்டியதென்றும் முடிவு செய்யப்பட்டது. உடனே, திரு. ஆஷர். கம்பெனியார் ரூ. 501 பிரபல பஞ்சு வியாபாரியும் காங்கிரஸ் தலைவரான வருமான ஒரு கனவான் ரூ.101 பட்டியல் போட்டு விட்டார்கள். பிறகு சர்க்கா சங்கத்தின் சர்டிபிகேட் பெற்ற கதர் வியாபாரிகளுக்கு உடனே இந்த நிதிக்கு துகை போடும்படி கட்டளை பிறந்தது. உடனே கதர் வியாபாரிகள், தங்கள் நற்சாக்ஷி பத்திரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வழக்கப்படி ரூ.50 முதல். ரூ.21வரை பட்டியலில் போட்டு துகைகளும் கொடுத்து விட்டார்கள்.மற்றவர் களும் துகை கொடுத்து விட்டார்கள்.துகையும் சுமார் ஆயிரம் வரை ரொக்கம் பை கட்டியாய் விட்டது.
மாலை 7-மணிக்கு நொய்யல் நதிக்கரையில் கூட்டம் கூடியது. திரு. ஈஸ்வரமூர்த்தி கவுண்டர் பணமுடிப்பு கட்டி திருமதி.பத்மாவதி ஆஷரிடம் பணமுடிப்பை கொடுத்தார். திருமதி. அம்மையாரும் பெற்றுக் கொண்டு ஒப்பந்தப்படி திரு.ஆச்சாரியார் அவர்களிடம் உடனே கொடுத்துவிட்டார்கள்.
பின்னர் பிரசங்கம் ஆரம்பமாயிற்று. திரு. (சந்தானம் அவர்கள் திருமதி. ருக்மணி லக்ஷிமிபதி அவர்களை புகழ்ந்து கூறினார். திரு. இராஜ கோபாலாச்சாரியார் திரு. வேதரத்தினம், அவர்களை புகழ்ந்து சில வார்த்தை கள் கூறி, திரு. காந்தி அவர்கள் சொல்லி அனுப்பினாரென்று சில உப தேசங்களைச் சொன்னார். திரு. வேதரத்தினம் அவர்கள் நேற்றைய தினம்
குடி அரசு - 19310) 322
கரூர் ஆற்றங்கரையில் திரு.1.55. இராஜன் அவர்கள் பேசும்பொழுது இந்த ஆற்றங்கரையிலுள்ள மணல்களெல்லாம் இந்த 10 வருஷங்களாய் நடந்த உபந்நியாசத்தைக் கேட்டு கொண்டிருந்து இப்போது அவைக ளெல்லாம் பிரசங்கம் செய்யுமென்று சொன்னார். ஆனால் நான் திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரைகளிலுள்ள மணல்கள் மாத்திரம் அல்லாமல் பக்கத்தில் உள்ள மரம் செடிகளெல்லாம் உபந்நியாசம் செய்யுமென்று நம்புகிறேனென்று சொல்லிவிட்டு இவ்வளவும் தெரிந்து கொண்டிருக்கும் திருப்பூரில் பொது ஜனங்களாயுள்ள நீங்கள் எல்லோரும் கதர் அணியவில்லையே என்றுதான் வருத்தப்படுகின்றேனென்று சொன்னார். பின்னர் திரு. திருகூடசுந்தரம் பேச எழுந்ததும் திரு. KV. கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் ஸ்ரீனிவாசபுறத்தில் பெண்களுக்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருப்பதாயும் அந்தக் கூட்டத் திற்கு திருமதிகள் பத்மாவதி ஆஷரும், ருக்மணி லக்ஷிமிபதியும் போக வேண்டியிருப்பதால் திரு. திருகூடசுந்தரம் பேசப் போகும் கூட்டத்திற்கு திரு. விட்டல்தாஸ் ஆனந்தஜீசேட் அவர்களை தலைமை வகிக்கும்படிக்கும் சொல்லும்படியாய் திரு. ஈஸ்வரமூர்த்தி கவுண்டரை கூட்டத்தில் சொல்லும் படி செய்து அவரும் அம்மாதிரி சொல்லவே திரு. திருகூடசுந்தரனாருக்கு பெருத்தஅவமானம் ஏற்பட்டு தானும் இந்தக் கூட்டத்தில் அதிக நேரம் பேசப் போவதில்லை என்றும் 6 காரணங்கள்தான் சொல்லப் போவதாயும் அதிலும்
3 காரணங்கள் சொல்லிவிட்டு 3 நிமிஷத்தில் உட்கார்ந்து விட்டார். இனிமேலாவது திரு.திருகூடசுந்தரனார் பார்ப்பன சூழ்ச்சியை நன்கு தெரிந்து கொண்டு இவர்களுடன் பின்பற்றுவதை நிறுத்திக் கொள்வாராக.
“ஒரு நிரூபர்
குடி அரசு - செய்தி விமர்சனம் - 10.05.4931
323 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கதரும் - ஹிந்தியும்
இந்திய நாட்டின் சுயராஜ்யத்திற்கு கதரும், ஹிந்தியுமே முக்கியமான. மந்திரங்களாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. சென்ற ஒத்துழை யாமையின் போது கதர் கட்டாதவர்களுக்கு ஓட்டு இல்லாமல் இருந்தது. இப்போது மில் முதலாளிகளின் தாக்ஷண்யத்திற்குக் கட்டுப்பட்டு அந். நிபந்தனை கைவிடப்பட்டு விட்டாலும், இப்போது வேறு ஒன்று அதாவது ஹிந்தி படிக்காதவர்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை என்கின்ற கட்டளை ஏற்பட்டு அதனால் தென்னாட்டாருக்குப் பிரதிநிதித்துவம் கூட இல்லாமல் செய்தாய் விட்டதாக சொல்லப்பட்டாய் விட்டது.
சாதாரணமாக வியாபாரத்தில் அதிக மோசடி செய்கின்றவர்கள். மருந்து வியாபாரிகளேயாவர்கள். கதரைப்பார்த்த பின்பு (பேடண்ட் மெடி ஷன் என்று) உரிமை செய்துகொண்ட மருந்து வியாபாரிகள் மோசடி எத்தனையோ பங்கு நல்லதென்பதோடு அவைகளில் அநேகம் சில சமயங் களில் நல்ல பலனையும் கொடுத்து வருகின்றது.
ஆனால் இந்தக் கதர் ஆரம்பம் முதல் அந்தம் வரை ஏமாற்ற வனதாகவே முடிவு பெறுகின்றது. திரு ாந்தியவர்கள் மில்லுகளை ஒப்புக் கொண்டாய் விட்டது. மில்துணிகளை கட்டவேண்டியது அவசியம் என்றும் தீர்மானித்தாய் விட்டது. இப்படி இருக்க இனி கதர் எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. அதுவும் மனதார மோசடியாக ஏன் நடைபெற வேண்டும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
சாதாரணமாக, பஞ்சு பாரம் ஒன்றுக்கு 360 ரூபாய் விலையிருக்கும் போது கதர் விற்று வந்த விலையையே இன்றும் அதாவது பஞ்சு பாரம் ஒன்றுக்கு 125 ரூபாய் விலையிருக்கும்படியான காலத்திலும் விற்க அனுமதி கொடுத்திருப்பதானது எவ்வளவு அக்கிரமமானது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும். பாரத்துக்கு 100 ரூபாய் இரங்கினால் கதருக்கு ஒரு கெறத்திற்கு ஒரு அணா குறைத்ததாக பெயர் செய்கின்றார்கள்.
சாதாரணமாக இன்றையவிலைக்கு பஞ்சு ராத்தல் 1க்கு 0-4-0 அணா: வே ஆகின்றது. மில்லில் நூற்றால் ராத்தலுக்கு இரண்டணாக் கூலியானால் கையில் நூற்பதால் ராத்தலுக்கு ஐந்தணா கூலி ஆகின்றதானாலும் அதையும்
குடி அரசு - 1931 (1) 324
சேர்த்தே ஒரு ராத்தல் நூலுக்கு சேதாரம் உள்பட 0-9-6 அணா விலையே யாகின்றது.10 அணா வென்றே வைத்துக்கொள்ளுவோம். 54 இஞ்சு அகல முள்ள 10 கெஜம் துணிக்கு 4 ராத்தல் இடை நூல் செல்லும் இதற்கு நெசவு கூலி 10 கெஜத்திற்கு இப்போதும் ரூ 1-14-0 கொடுப்பதாகவே வைத்துக் கொண்டு பார்த்தாலும் பீ்ஒன்றுக்கு ரூ4-6-0 ஆகின்றது. அதாவது, கெஜம்
1க்கு 7அணா ஆகும். இந்த விலைப்படி பார்த்தாலும் மில் துணிக்கும் கதருக்
கும் 100க்கு 100பங்கு அதாவது ஒன்றுக்கு இரண்டாகவே கெஜம் 0-3-6 அணாவுக்கு7 அணா கொடுக்க வேண்டியதாகின்றது.
ஆனால் இப்போது காங்கிரசால் நற்சாட்சிப் பத்திரமும் அனுமதிச்
சீட்டும் பெற்ற கதர் கடைகளில் 10 கெஜம் பீசு1க்கு ரூ6-4-0க்கு விற்கப் படுகின்றது. அதாவது கெஜம் ஒன்றுக்கு 10 அணா வீதம் விற்பதில் அதில் 100க்கு 30வீதம் அதிகமாக விலை கொடுக்கவேண்டியதாயிருக்கின்றது. காங்கிரஸ் சின்னத்திற்காக, அர்த்தமில்லாத சுயராஜ்யத்திற்காக ஒன்றுக்கு மூன்றாக பணம் அதிக செலவு செய்வதின் மூலம் இன்று கதர் வியாபாரிகள் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதைத்தவிர நாட்டிற்கு விளைந்த நன்மை என்ன என்பது விளங்கவில்லை.
இது ஒருபுறமிருக்க திருப்பூரிலுள்ள கதர் வியாபாரிகள் எல்லாம் இந்த பத்து வருஷ- காலத்தில் தங்களின் செல்வ நிலைமை எவ்வளவோ பெருக்கிக்கொண்டு வெறும் ஆட்கள் எல்லாம் இப்போது கையில் 10ஆயிரம் முதல் 40, 50 ஆயிரம் ரூபாய் வரையில் தங்கள் செலவு போக மீத்து இருக் கின்றார்கள். கோயில் அர்ச்சகர், சாமி பக்திக்காரர் ஆவதுபோல் கதர் வியாபாரிகள் காந்தி பக்தர்கள் ஆகியிருக்கின்றார்கள்.
அல்லாமலும் குறிப்பாக இந்த வருஷத்தில் மாத்திரம் அதாவது உற்சவ காலங்களிலும் அர்ச்சர்களுக்கு வரும்படி வருவதுபோல், சத்தியாக் கிரக காலங்களில் கதர் வியாபாரிகள் ஆளுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் சம்பாதித்து இருக்கின்றார்கள் என்றாலும் இவர்கள் எல்லாம் அநேகமாக சாதாரணமான வியாபாரிகள் என்றே சொல்லலாம். இப்படியிருக்க இவர்கள் இத்தனை பேர்களுடையவும் வியாபாரத்திற்கும் எத்தனையோ பங்கு மேலாகவே உற்பத்தி செய்து வட்டியில்லாத முதலை வைத்து வியாபாரம் செய்து வந்த காங்கிரஸ் கதர் போர்டுக்குச் சென்ற வருஷத்தில் இந்தப்படி நூற்றுக்கு 30 வீதம் லாபம் வைத்து விற்று வந்தும் கூட மொத்தத்தில் 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்று கணக்குக் காட்டியிருப்பதாக ஒரு நண்பர். தெரிவித்திருக்கின்றதைப் பார்க்கும்போது காங்கிரஸில் கதர் என்பது எவ்வளவு மோசமான துறையாயிருந்து வருகின்றது என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்து உண்மை உணர வேண்டுகின்றோம்.
தவிர அந்த இலாகாதான் இன்று தமிழ் நாட்டின் சத்தியாக்கிரகத் திற்கு பெரிதும் உதவி செய்து இருப்பதைப்பார்க்கும்போது வியாபார
325 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
முறையிலேயே சத்தியாக்கிரகம் நடத்த கதர் இலாகா ஆயுதமாய் இருந்து வருவதும் பார்ப்பனர்கள் காங்கிரஸ் வாதிகளாகவும், தேச பக்தர்களாகவும், தியாகிகளாகவும் இருப்பதற்காக கதர் இலாகா இருந்து இம்மாதிரி மக்களை கொள்ளை அடித்தும் நஷ்டம் காட்டி வரவேண்டி வருவதும் உண்மை என்பதை இப்பொழுதாவது பொது ஜனங்கள் உணர்வார்கள் என்று நம்பு கின்றோம்.
அன்றியும் அரசாங்க உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிறிதித் துவம் வந்ததன் மூலமாக ஏதோ ஒருசில பார்ப்பனருக்கு உத்தியோகம் கிடைக்கவில்லையானாலும் கூட காங்கிரசு, கதர், ஹிந்தி ஆகிய திட்டங்கள் அக் குறையை பூர்த்திசெய்வதோடு பங்கு கிடைக்கும்படி செய்யவே இவை கள் காப்பாற்றப்பட்டு பார்ப்பனருக்கு பயனளித்து வருவதை யார் மறுக்கக் கூடும் என்றும் கேட்கின்றோம் .
நிற்க கதரின் புனிதத்தன்மை இங்ஙனமிருக்க இனி ஹிந்தியின் புனிதத்தன்மையை சற்று கவனிப்போம்.
இந்தியா நாட்டில் முப்பத்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல பாஷை, பல மதம், பல நாகரிகம், பலநடை உடை பாவனைகளாக இருந்துவருவதை யாவரும் மறுக்கமுடியாது. அப்படி இருந்தாலும் மக்களுக்குள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பாஷையின் பேராலும், போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம்.
இந்த நிலைமையுவுள்ள சமூகங்களை பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பதை கண்டுபிடித்து அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் கண்மூடித் தனமாய் யெல்லோரையும் ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டுமென்று அரசி. 'யலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும் என்று கேட்கின்றோம். ஹிந்தி என்பது அனேகமாக வடமொழியின் சார்போ, அல்லது திரிபோ' ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதீக்கத்தை நிலை நாட்ட வடமொழிக்கு உயர்வு கொடுக்க பல வழிகளிலும் சூ௯$ செய்து உலக: வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய 'அவ்வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாளாக தமிழ்மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்.இப்போது மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும் ஆரிய நாகரீகம் சமயக்: கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும் ஹிந்தியை அரசியல் விஷய: மாக ஆக்கி அதைக் கதரைப் போல் ஏன் கதரைவிட அதிகமாக ஒவ்வொரு: 'வருக்குள்ளும் புகுத்தப்பார்ப்பது எவ்வளவு வஞ்சமான காரியம் என்பதை: நமது சோணகிரிகள் அனேகர் இன்னும் உணரவே இல்லை. தமிழ்ப்
குடி அரசு - 19310) 326
பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்து சூடு போட்டதுபோல் மேலெல்லாம் தீட்டிக்கொண்டு சிவ,சிவ,சிவ என்பதற்கும் ராம,ராம,ராம என்பதற்கும் உதவுவார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது அனாவசி யமான ஒரு பாஷை சூக்ஷித்திறத்தில் சுமத்தப்படுகின்றதே என்கின்றஅறிவும், கவலையும் சிறிதும் கிடையாது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.
உலகமே தங்கள் கிராமம்தான் என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் மலையேறி இப்போது நிலப்பரப்பு, நீர்பரப்பு முழுதும் தெரிந்து 200 கோடி மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டி ருக்கும்போது உலக செலாவணி பாஷை ஏதோ அதை மனிதன் அறியாமல் கபீர்தாஸ் இராமாயணத்தை படிக்க வேண்டிய ஹிந்திபாஷை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வர வேண்டி யிருப்பதை ஹிந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறுத் துகின்றது என்றே சொல்லுவோம்.
தமிழ்பாஷையின் பாண்டித்தியம் என்பது இப்போதே அனேகமாய் பார்ப்பனர்களிடமேயிருக்கின்றது. தமிழ் பாஷையின் சங்கத்தலைவர்கள் பார்ப்பனர்களாய் இருக்கின்றார்கள் என்பதோடு இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களை ஹிந்தி படிக்கக் கட்டாயப் படுத்துகின்றார்கள் என்றால் தமிழ் பாஷைக்காரர்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை தமிழர்களே உணர்வார்களாக.
ஆகவே அரசியல் துறையில் இருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அறிவு இருந்தாலும் அதை பார்ப்பனர்களுக்கு தக்கவிலைக்கு விற்று விட். டார்கள் என்றாலும் அரசியலில் இல்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவை யாவது தக்கவழியில் உபயோகித்து தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத்தலையங்கம் - 10.05.1931
327 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
களூர் முணிசியல் நிர்வாகம் சாங்கத்தாரின் பாராட௫தல்
“மிகவும் சாமார்த்தியகரமாகவும், விர்த்தியாகத் தக்க வழியிலும், ஸ்தல ஸ்தாபன ஆட்சியின் கருத்துக்கள் நிறைவேற்றும்படியான முறையில் வெற்றிகரமாகவும் கரூர் முனிசிபல் நிறுவாகம் நடத்திக் காண்பிக்கப்பட்டி ருக்கின்றது” என்று சென்னை அரசாங்கத்தார் இந்த மாகாண ஜில்லா முனிசிபாலிட்டிகள் சம்மந்தமாக எழுதி வெளியிட்ட 29-30 வருஷத்திய பொது நிர்வாகக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இந்த பாராட்டுதலைப் பார்த்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவ தோடு கரூர் முனிசிபல் அக்கிராசனரையும், அங்கத்தினர்களையும் மனமாரப் பாராட்டுவதோடு கரூர் முனிசிபாலிடிக்கு இந்த மாதிரியான ஒரு நன்மை யையும், கெளரவத்தையும்,நற்சாட்சிப் பத்திரத்தையும் சம்பாதித் துக் கொடுக் கத்தக்க அங்கத்தினர்களையும், தலைவரையும் தெரிந்தெடுத்த கரூர் மகா ஜனங்களையும் பாராட்டி போற்றுகின்றோம்.
குடி அரசு - செய்திக்குறிப்பு - 10.05.1931
குடி அரசு - 19310) 328
ஹிந்து
இந்த வியாசமானது ஹிந்து மதம் என்பது என்ன? ஹிந்துக்கள். என்பவர் யார்? ஹிந்து மதத்தால் மக்களுக்கு விடுதலை உண்டா? என்பதைப் பற்றி ஆராய்தல் என்னும் தன்மையில் எழுதப்படுவதாகும்.
இதற்குமுன் பல தடவைகளில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல ரூபமாக வெளிவந்திருந்த போதிலும் அவ்வாராய்ச்சியில் நமது முக்கிய தத்துவங்கள் சிலவற்றிற்கு அநுகூலமாக அதாவது நமது கருத்துக்களை ஒத்ததாகக் காணப்படும் சில விஷயங்கள் இவ்வார “நவ சத்தி” யின் உப. தலையங்கத்தில் காணப்படுவதால் அதனை எடுத்துக்காட்டவும் மற்றும் அவைகளில் இருந்து இந்துக்கள், இந்துமதம் ஆகியவைகள் எவ்வளவு தூரம் சமய சமூகம் என்பவைகளுக்கு பொருப்பற்ற தன்மையாகவும், ஒரு நாட்டின் கேட்டிற்கே இவை முக்கிய ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவும் இதை எழுதுகின்றோம்.
அதாவது “நவ சக்தி”யின் 6-5-1931 ௨ உபதலையங்கம் இந்துக்கள்
யார்? என்னும் தலைப்பில் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் எழுதி இருப்பதின் சுருக்கமாவது:-
வடநாட்டில் சத்பந்திகள் என்று ஒரு சமூகத்தார் இருக்கின்றார்கள். அவர்களில் சாந்தேஷ் என்னும் ஜில்லாவில் மாத்திரம் 40000 பேர் இருக் கின்றார்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளு கின்றார்கள்.
ஆனால் அவர்களது நடவடிக்கைகள் சிலது இந்துக்களைப் போலவும் சிலது முஸ்லீம்களைப்போலவும் காணப்படும். இதனால் இந்துக்கள் வருணாச்சிர தர்ம மகாநாடு கூட்டி மேல்கண்ட சத்பந்திகள் என்னும் சமூகத் தார்களை இந்துக்கள் அல்ல என்று தீர்மானித்து விட்டார்கள். பிரகு சத்பந்தி
கள் சங்கராச்சாரி சாமியாருக்கு அப்பீல் செய்ததில் சங்கராச்சாரியும் அவர் களை இந்துக்கள் அல்ல என்று சொல்லி விட்டார். பிறகு சங்கராச்சாரியார் கட்டளை மீது மேல் கண்ட சத்பந்திகளை மற்ற இந்துக்கள் மத பகிஷ்காரம் செய்தார்களாம். சத்பந்திகள் இதனால் தங்களுக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார்கள். நீதிபதி சத்பந்திகள் இந்துமுஸ்லீம் ஆகிய இருவர் வழக்க ஒழுக்கங்க ளையும் பின்பற்றுவதாய் காணப்படுவதால் மானநஷ்டமில்லை என்று வழக்கைத் தள்ளிவிட்டார். 329 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இதில் நீதிபதி தீர்ப்பு ஒரு புறமிருக்கட்டும் . மற்றபடி வருணாச்சிரம மகாநாட்டாரும், சங்கராச்சாரியாரும் கொண்ட முடிவு ஆராய்ந்து பார்த்தால் சத்பந்திகள் வேதம்தான் இந்து மதத்தின் ஆதாரம் என்பதை ஒப்புக்கொள்ளா ததாலும், ஏகாதசி முதலிய விரதம் இல்லாததாலும், பசுவை போற்றாமை யினாலும், மற்றும் வெள்ளிக்கிழமை உபவாசமிருப்பதாலும். மேற்குநோக்கி பிரார்த்தித்து வணங்குவதாலும் சத்பந்திகள் இந்துக்களாக மாட்டார்கள் என்று முடிவு சொல்லி இருக்கின்றார்கள்.
இன்னார் இந்து, இன்னார் இந்து அல்ல என்று வரையருத்து கூறும் அதிகாரம் யாருக்குண்டு. வேதத்தை ஆதாரமாகக் கொள்ளுபவர்கள் தான் இந்துக்களாவார்கள் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கின்றது? அதற்கு ஆதாரம் எது? இந்து சமூகத்தில் வேதத்தை பொருட்படுத்தாதவர்கள் அநேகர் இல்லையா? இந்துக்கள் எல்லோருக்கும் வேதம் தெரியுமா? வருணாச்சிரம இந்து மதத்தில் எல்லோருக்கும் வேதம் படிக்க உரிமை யுண்டா? வேதம் படிக்கவே உரிமையில்லாதவர்கள் வேதத்தை எப்படி ஒப்ப முடியும்? சங்கராச்சாரியார் எல்லா இந்துக்களுக்கும் குருவா? சங்கராச்சாரி
யார் கொள்கைகளை ஒப்புக்கொண்டு நடப்பவர் மாத்திரமா இந்து? (என்ற பல கேள்விகளை கிளப்பி விட்ட பிறகு, திரு. திரு.வி.கல்யாணசுந்திர முதலி யாரவர்கள் தமது அபிப்பிராயமாகக் கூறுவதாவது )
இந்து மதம் என்று சொல்லுவதானது எக்கட்டுப்பாட்டுக்கும் உட் பட்டதல்ல. அதற்கு சத்மார்க்கம் என்று பெயர். அதில் எல்லாக் கொள்கை களுமடங்கும். அது யாருக்கும் உரிமையுடையதாகும். அதை ஒரு கட்டுப் பாட்டிற்குள் அடிமைப்படுத்துவது அறியாமை. சமரசக் கொள்கையுடை யோரனைவரும் இந்துக்கள்.
இந்து என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது
ஒருவன் கோவிலுக்குப் போவது, போகாமலிருப்பது மதசின்னங்கள். அணிவது, அணியாமலிருப்பது, உருவத்தை வழிபடுவது, வழிபடாம லிருப்பது, ஆத்திகம் பேசுவது, நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொண்டும் செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்.
இந்து மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு
பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணாச்சிரமாகும். இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவதில்லை.
வருணாச்சிரமத்தை ஒப்புக்கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்ல. வென்று யாரும் தள்ளுவதில்லை.
வேதாந்த மதக்கார சங்கராச்சாரியார் வருணாச்சிரமத்தில் ஏன் விழ வேண்டும்.
குடி அரசு - 1931 (1) 330
வேதத்தை ஆதாரமாகக்கொண்டு இவர்இந்து, இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத்தின்படி நடக்காதவர்களை யெல் லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா?
பார்ப்பன வக்கீல்கள் இந்துக்களாவார்களா? அவர்களை இந்துக்கள் அல்லவென்று சங்கராச்சாரியார் ஏன் கூறவில்லை?
சமரசம் சன்மார்க்கம் ஏற்பட்டு வரும் இந்நாளில் இடைக்காலத்தில். ஏற்பட்ட வருணாச்சிரமத்திற்கு ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.
நால்வருண மாசிரம முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே......
என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவற்றுள் இந்துமதத்தைப்பற்றி நாம் அவ்வப்போது சொல்லிவந்த பல விஷயங்களையே திரு. முதலியார் அவர்களும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்துமதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக்கொண்டு மேலும் கோவிலை ஒப்புக் கொள்ளாமலும் உருவ வழிபாட்டைச் செய்யாமலும் மதச்சின்னத்தையும் அணியாமலும் கடவுள் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளாமலும் இருப்பவர். கள் கூட இந்துமதஸ்தர்கள்தான் என்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றார். மற்றும் அதுமாத்திரமல்லாமல் சமரசக் கொள்கைகள் உடையாரனைவரும் இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
இவற்றையெல்லாம்விட மற்றொன்று அதாவது ஒவ்வொருவருடைய மனச்சாகஷிக்கும் மதிப்புக் கொடுப்பது இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும். எனவே வாசகர்களுக்கு இப்போதாவது இந்துமதம் என்பதின் கொள்: கையும் யோக்கியதையும் நடைமுறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைகொண்டு கசக்கிப் பிழிந்துபார்ப்பனச் சோம்பேரிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கியதையும் விளங்கவில்லையா? என்று கேட்கின்றோம்.
இந்த நிலைமை உள்ளமதத்தை உத்தேசித்து காங்கிரசில் “மத நடு நிலைமை வகிப்பது” “மனச்சாக்ஷிக்கு மரியாதைகொடுப்பது”” என்கின்ற தான வார்த்தைகளை “பூரண சுயேச்சைத் திட்டத்தில்” சேர்த்திருப்பது என்றால் இந்தக்கொள்கைகளின்படி மக்களுக்கு விடுதலை உண்டா என்று கேட்கின்றோம்.
331 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சங்கராச்சாரியின் மனச்சாக்ஷியும் சந்தேஷ் ஜில்லா இந்துக்கள். என்பவர்களின் மனச்சாக்ஷியும் சத்பந்திகளை இந்துக்கள் அல்லஎன்று சொல்லச் செய்து விட்டது என்பதோடு இதை ஆக்ஷேபிக்க யாருக்கும் உரிமை இல்லை யென்பதாகவும் ஏற்பட்டுவிட்டது. மற்றும் திரு. முதலியா ரவர்கள் இந்து மதத்திற்கு வேதம். ஆதாரம் ஒன்று சொல்லுவது பொருந் தாது என்றும், எல்லா இந்துக்களுக்கும் சங்கராச்சாரியார் குருவாயிருக்க முடியாது என்றும், வேதத்தை ஓத எல்லா இந்துக்களுக்கும் உரிமை அளிக்கப் படவில்லை என்றும், வேதம் ஓதவே உரிமை இல்லாதவன் வேதத்தை எப்படி
ஒப்புக் கொள்ளமுடியும் என்றும் விளங்கக் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து வேதத்தை ஒப்புக்கொள்ளாத அனேகர் இந்துக்களாக இருக்கின்றார்கள் என்பதும் புலனாகின்றது.
இதானது குர் ஆனை ஒப்புக்கொள்ளாதவர்கள் இஸ்லாமாகவும், பைபிளை ஒப்புக்கொள்ளாதவர்கள் கிறிஸ்துவர்களாகவும் இருக்கலா மென்பது போலவே இருக்கின்றது.
ஆகவே ஒருவனை மத விரோதி என்றோ மதத்தலைவர் விரோதி என்றோ சொல்லுவதற்கு இடம் எங்கே இருக்கிறது? என்று கேட்கின்றோம்.
இவைகளையெல்லாம் கவனித்தால் நமது நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் விடுதலையோ, முன்னேற்றமோ ஏற்படவேண்டுமானால் நமது
திரு. திரு.வி.கல்யாணசுந்தரமுதலியாரவர்கள் எடுத்துக்காட்டிய கொள்கைகள். கொண்டதான இந்துமதம் என்பதை அடியோடு அழித்து ஒழித்து ஆகவேண்டும் அதை ஒழிக்காமல் சன்மார்க்கமோ சமரசமோ இல்லை: என்பது உறுதி. ஏனெனில், இந்தமாதிரி கொள்கையற்ற... ஒரு ஆகாயக் கோட்டை மதத்தின் பேரால் இந்தியாவில் 22-கோடி மக்களை மூடர்களாக்கி, மானமற்றவர்களாக்கி - மனிதத்தன்மை யற்றவர்களாக்கி- வேசியாக்கி - வேசிமக்களாக்கி - தீண்டாதாராக்கி- காணாதாராக்கி சில சோம்பேரிகளும் சில அயோக்கியர்களுமே அடக்கி ஆண்டு ஆதிக்கம் செலுத்திவரும் கொடுமை ஒழியாமல் வேறு எவ்வழியிலும் இந்நாட்டுக்கு விடுதலை இல்லை: என்பதினால்தான்.
கடைசியாக நாம் கூறுவதாவது:- திரு.முதலியார் அவர்கள் இந்து மதத்திற்கு சொல்லும் வியாக்கியானங்கள் முழுவதும் ஒரு மதத்திற்கு இருப்பது என்பது மக்களின் மிருகப்பிராயத்தை காட்டுவதனாலும் அதில். அவர் சிறிதுகூட நடப்பிற்கு விரோதமாய் எதையும் கற்பித்துக்கூறவில்லை. என்பதை நாம் மனமார ஒப்புக்கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத்தலையங்கம் - 10.05.1931
குடி அரசு - 19310) 332
ஊத்துக்குளி ஐமீண்தாறர் மாணம்
ஊத்துக்குளி ஜமீன்தார் பாளையத்தார்! உயர்திரு. திவான்பகதூர். முத்துராமசாமி காளிங்கராயர் அவர்கள் 1-5-31 தேதி வெள்ளிக்கிழமை இரவு
10 மணிக்கு ஊத்துக்குளியில் தமது அரண்மனையில் முடிவெய்தினார் எனக்கேட்டு மிகவும் வருந்துகின்றோம்.
ஜமீன்தார் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லாவில் புராதனமும், பிரபலமும், கீர்த்தி வாய்ந்ததுமான ஒரு பாளையத்தார் ஆவார்கள். இவர் 1864 ஹ் ஜனவரி மீ£24-ந் தேதி பிறந்தார். இன்றைக்கு இவரது வயது 67 ஆகின்றது. 1881ல் பட்டத்திற்கு வந்தார். இவர் பட்டத்துக்கு வந்து இன்றைக்கும் 50 வருஷம் ஆகின்றது. இந்த ஜமீன் பரம்பரைக்கிரமத்தில் இவர் ஒருவரே 50 வருஷம் பட்டம் ஆண்டார் என்பதோடு இவர் 33-வது பாளையதாரர் ஆவார்.இவர்களது பாரம்பரியர்களால்தான் பவானியிலி ருந்து ஈரோடு வழியாக கொடுமுடி வரை வெட்டப்பட்டிருக்கும் காளிங்கராயன் வாய்க்கால் என்னும் 50 மைல் நீளமுள்ள வாய்க்கால் வெட்டப் பட்டதாகும். இந்த ஜமீன்தாரர் அவர்கள் பட்டம் ஏற்றுக்கொண்டது சிறு வயதாய் இருந்தாலும் ஒரு ஆங்கில உபாத்தியாயர் மூலமே கல்வி, பழக்க ஒழுக்கம், நாகரிகம் முதலியவை கற்பிக்கப்பட்டு வந்தார். இவருடைய 50 வருஷ- ஜமீன்தார் வாழ்க்கையானது இவரைப் போன்ற இரண்டு பங்கு, மூன்று பங்கு வரும்படியுள்ள பெரியஜமீன்களையெல்லாம் விட மிகப் பெருமையாகவும், பிரபலமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கோயமுத்தூர் ஜில்லாப் பொது வாழ்வுக்கு ஒரு திலகம்போல். இருந்தவர் என்று சொல்வது மிகையாகாது. இவர் கொங்குவேளாள சமூகத் தைச் சேர்ந்தவர். அச்சில்லா வாசிகளான மற்ற பிரமுகர்கள்போல் அல்லாமல் ஜில்லாவிலுள்ள எல்லா சமூகப் பிரபலஸ்தர்களிடமும் நெருங்கின பழக்கமும், நேசமும் உடையவராயிருந்ததோடு ஜில்லாவின் சகல காரியங்களுக்கும் தலைவராக இருந்து மக்களுக்கு யோசனை சொல்லி வந்தார். ஜமீன்தார் கர்நாடகப் பெரிய மனிதர்கள்போல் ஜாதி பேதங்களில் தங்களைப் பார்ப்பனர் களுக்குக் கீழ்ப்பட்ட ஜாதி என்றும், தாங்கள் சில ஜாதிகளுக்கு மேல்பட்ட வர்களென்றும் கருதி வருணாச்சிரம தர்மத்தைக் காப்பாற்றி பிராமண: விசுவாசத்தாலும், பக்தியாலுமே நாகரீகமடைந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதுபோல் இல்லாமலும், பார்ப்பனர் வீடு தவிர மற்ற யார் வீட்டிலும்
333 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சாப்பிடுவதில்லையென்று வேஷமாகச் சொல்லிக் கொள்வதாலேயே பெரியவர்கள் என்று கருதும்படியாகவும் இல்லாமல் அதற்கு நேர் விரோத மாய் ஊண், உடை, மரியாதை ஆகிய விஷயங்களில் ஜாதிவித்தியாசம் என்பதே இல்லாமல் எல்லாருடனும் சமத்துவம் காட்டு வதும், பட்லர்கள் (“பறையர்கள்”) என்பவர்களைக் கொண்டு சமையல் வகையரா செய்வித்து சாப்பிட்டு வந்தார். கடவுள் என்னும் விஷயத்தில் மாத்திரம் சற்று அதிகமான உணர்ச்சி இருந்து வந்த போதிலும், புதிய நாகரீகம் அதாவது (up to datefash-
101) என்கின்ற விஷயத்தில் இந்தியாவுக்கு மேல்நாட்டு நாகரீகம் எது இறக்குமதி யானாலும் அது முதலில் ஜமீன்தார் அவர்கள் வீட்டில் வந்து
புகுந்து அவர்கள் மூலம்தான் அது மதிப்புபெற்று உலாவும்படியாக இருக்கும்.
தவிர, ஜமீன்தாரர்கள் என்ற பேரால் அநேகர் இந்நாட்டில் இருந்த போதிலும், மரியாதை கொடுத்து, மரியாதை வாங்குவது என்பதிலும், யாரு டனும் பட்சமாய்ப் பேசுவது என்பதிலும், ஒரு மனிதனிடம் முதல் நாள் பழகும்போது எப்படிப்பழகினோமோ அதே முறையில் கடைசிவரை நடந்து கொள்வது என்பதிலும் மிக்க ஆசையும், கட்டுப்பாடும் உடையவர்.
ஆங்கிலத்தில் எட்டிக்கட் என்று சொல்லப்படும் அதாவது மக்களிடம் மக்கள்பழகும் வாழ்க்கைப்பத்ததி என்னும் விஷயத்தில் வெள்ளைக் காரர்கள்கூட நமது ஜமீன்தாரிடம் வந்து பழகிப் போகும்படியான உயர் நிலை
யில் இருந்தவர். தென்னாட்டு மற்ற ஜமீன்தாரர்களின் மரியாதையை மிகவும் பெற்றவர் என்பதோடு அவர்களின் மதிப்பையும் நன்கு பெற்றிருந்தார். பொதுக்காரியங்களுக்குத் தாராளமாய் பணம் உதவும் பிரபு. இவருக்கு 5-வது
ஜார்ஜ் அரசர் பட்டாபிஷேக ஞாபகார்த்தமாய்1913ம் வருஷம் திவான்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரது குமாரர்கள் இருவரில் உயர்திரு முத்துக் கிருஷ்ணசாமி காளிங்கராயர் அவர்கள் மூத்தவர். குமார ராஜாவாக இருந்து பட்டத்துக்கு வந்து விட்டார்கள். இளையவர் லண்டன் சென்று உயர்தரக் கல்வி கற்று வந்து, திருவாங்கூர் மகாராஜாவின் பிரைவேட் செக்ரிடியாய் இருந்து இப்போது அதை விட்டு ஊருக்கு வந்து தாமதிக்கின்றார்.
இக்குடும்பம் மற்ற பணக்காரர்களைப்போல் பார்ப்பன தாசர்களாயல் லாமல் எப்போதும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையில் மிகவும் கவலை கொண்ட குடும்பமாகும்.
தென் இந்தியாவுக்கே ஏன்? இந்தியாவுக்கே முதல் முதலாய் கோய
முத்தூரில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மகாநாட்டை முன்னின்று நடத் திய கனவான் நமது ஜமீன்தாரவர்களே யாகும். அன்று முதல் இன்றளவும் எக்காரணம் பற்றியும் அக்கொள்கையில் சிறிதும் மாற்ற மேற்பட இடமே யில்லாமல் இருந்து வந்திருக்கின்றது. இவர்கள் 67 வருஷ-காலம் உயிருடன்
இருந்து 50 வருஷகாலம் ஆகஷியில் இருந்து காலமானதோடு அடுத்த பட்டத்திற்கு தன்னிலும், எவ்விதத்திலும், குறையாத குணமும், மேன்மையும்
குடி அரசு - 19310) 334
உள்ள குமார ஜமீன்தாரர் வந்திருப்பதோடு மிக்க புத்தி சாதுர்யமும், தைரிய
மும் வீரமும் பொருந்திய இளைய குமாரர் நடராஜ காளிங்கராயர் உற்ற துணையாய் இருந்து பழையபடியே எல்லாக் காரியங் களும் நடைபெற்று வரும் என்பதில் எவ்வித ஆக்ஷேபத்திற்கும் இட மில்லை என்று
இருந்தாலும், ஒப்பற்ற ஒரு பெரியாரை கோயமுத்தூர் ஜில்லா இழந்து விட்டது என்பதற்கு புதிய ஜமீன்தாரரும் அவரது சகோதரரும் தான் மக்களுக்கு ஆறுதல்கூற வேண்டுமென்று கூறி முடிக்கின்றோம்.
குடி அரசு - இரங்கலுரை - 10.05.1931
335 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
“கேசீய£ணாதிகளும் “கேச” பக்தர்களும்
நமது நாட்டு அரசாங்கத்தாரை தனிப்பட்ட முறையில் பார்த்தோ மேயானால் நமது நலத்தைப்பற்றிய பொறுப்பு ஒரு சிறிதும் அற்றவர்கள் என்பதையும் அவர்கள் தங்கள் ஜாதி, தங்கள் நாடு ஆகியவைகளின் நன்மையையே பெரிதும் கவனித்து அதற்காகவே இந்திய நாட்டின் ஆட்சி நடத்தும் உரிமையை அடைந்து ஆட்சி புரிந்து வருகின்றார்கள் என்ப தையும் நாம் வெகு நாளாய் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம் என்பதோடு அந்த ஆட்சியானது அதாவது பிரிட்டிஷ் ஆட்சியானது இந்தியாவில் அன்னிய ஆட்சிக்கு முன் வெகு காலமாய் இருந்து வந்ததாக சரித்திரங் களில் காணப்படும் இந்தியமன்னர்களின் ஆட்சியைவிட - இந்திய “தெய்வ அவதார” ஆட்சிகளைவிட எவ்வளவோ பங்கு மேலானதும் மனிதத் தன்மை பொருந்தியதாகுமென்பதையும் அவ்வப்போது எடுத்துக் காட்டி
ஆதாரங்களுடன் மெய்பித்து வந்திருக்கின்றோம்.
மேலும் இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் யோக்கியமான ஆட்சிமுறைகள் என்பவைகள் எல்லாம் இன்றையதினம் நம்மால் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று சொல்லப்படும் படியான மனுதர்ம ( பார்ப்பன ஆதிக்க) ஆட்சிமுறையாகத்தானிருந்து வந்ததாகக் காணப்படுகின்றனவே
- சொல்லப்படுகின்றனவே தவிர மனிதத்தன்மை ஆட்சி முறை - சமதர்ம ஆட்சி முறை ஒரு நாளும் இருந்ததாக எங்கும் எதிலும் காணப்படவே யில்லை யென்றும் உறுதியாய்ச் சொல்லுகின்றோம்.
இன்னும் பார்க்கப்போனால் ( சனாதன தர்மத்தை) பழைய தர்மத்தை அனுசரித்து செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டு வரும் இன்றைய இந்திய கிரிமினல் சட்டமும், இந்து சிவில் லா சட்டமும் கூட மனுதர்ம (பார்ப்பன ஆதிக்க முறையை) சாஸ்திரத்தை அனுசரித்திருக்கின்றதையும் அவை மனித தர்மத்தை - சமதர்மத்தை சிறிதும் லட்சியம் செய்யப்படாமல் இருந்து வருவதையும் பார்த்தால் சாதாரணமாக யாவருக்கும் நாம் மேல் எடுத்துக் காட்டியதன் தத்துவம் விளங்கும்.
வெள்ளைக்கார ஆட்சி கூட வெள்ளைக்கார நாட்டில் இரண்டொன்று தவிர மற்றபடி அநேகமாய் மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட
குடி அரசு - 1931 1) 336
தாயிருந்தாலும் அவர்களால் நடத்தப்படும் இந்திய ஆட்சியானது மனித தர்மத்தை அடிப்படையாகக்கொண்டதாயில்லை என்பதையும் நாம் சிறிதும் தயங்காமல் சொல்லுவோம். ஆனால் இந்தப்படியான ஆட்சிக் கொடுமை அதாவது மனித தர்மத்திற்கு விரோதமான - சமதர்மமற்ற ஆட்சிக் கொடுமைக்கு வெள்ளைக்காரர்களே பொறுப்பாளிகள் அல்லவென் பதையும்
நாம் எங்கும் தைரியமாய்ச் சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
ஏனெனில் வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டில் தங்களது ஆட்சி என்றும் நிலைத்திருக்கவும், இந்த நாட்டுச் செல்வத்தைத் தாராளமாய் தங்கள் நாட்டுக்கு கொள்ளைகொண்டு செல்லவும் உத்தேசித்து இந்த நாட்டில் யாருடைய தயவு தங்களுக்கு இருந்தால் தங்களது மேற்படி எண்ணம் தாராளமாய் நிறைவேறுமோ அவர்களது தயவை பூரணமாய் சம்பாதிக்க வேண்டியே அவர்கள் மனித தர்ம ஆட்சி என்பதை அடியோடு மறந்து முழு வதையும் கைவிட்டு மனுதர்மப்படி (பார்ப்பன ஆதிக்கத்திற்கு தகுந்தபடி) ஆட்சி முறையை வகுத்து நடத்த வேண்டியவர்களானார்கள். இன்றைய தினமும் இந்த நாட்டின் ஆட்சிமுறை மனித தர்மப்படி நடக்க வேண்டு மானால் மனுதர்ம ஆட்சியை அடியோடு ஒழிப்பதற்கு இந்திய மக்கள் சம்மதப்பட்டால் ஒழிய ஒரு நாளும் இந்த நாட்டில் மனித தர்ம ஆட்சி சாத்தியப்படவேபடாது என்பதை தைரியமாய்ச் சொல்லுவோம்.
ஆகவே அந்தப்படி மனுதர்மம் அழிபட பார்ப்பனர்கள் ஒரு நாளும் ஒப்பமாட்டார்கள் . இந்தப் பார்ப்பனர்களை மீறி வெள்ளைக்காரர் ஏதாவது ஒரு நல்ல ஆட்சி முறையை ஏற்படுத்துவதாயிருந்தால் அவர்களை ஒழிப்பதற்கு நம் பார்ப்பனர்கள் முயலுவார்கள்.
ஆதலால் வெள்ளைக்கார ஆட்சி இந்த நாட்டை விட்டுப் போய் விடுவதாலேயோ அல்லது திரு.காந்தியே ஏக நாயகராக ஏற்பட்டு விடுவதா லேயோ மனித தர்ம ஆட்சியை இந்த நாட்டில் நிலை நிறுத்திவிடமுடியும் என்றுயாராவது சொல்லவருவார்களானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை: மூடர்களென்றோ அல்லாவிட்டால் மக்களை ஏமாற்றுகின்ற தற்காக பேசும் பித்தலாட்டக்காரர்கள் என்றோ தான் சொல்ல வேண்டியிருப் பதற்கு வருந்துகின்றோம்.
இன்னும் தைரியமாயும் வெளிப்படையாயும்சொல்லவேண்டுமா னால் இன்றைய வெள்ளைக்கார ஆக்ஷியோ ஆதிக்கமோ ஒழியவேண்டும் என்று சொல்லுகின்றவர்களில் திரு.காந்தியவர்கள் உள்பட 100க்கு 90 பேர்களின் உள் எண்ணமெல்லாம் மனித தர்ம ஆக்ஷியை இந்த நாட்டில் தலைகாட்டச் செய்யாமல் செய்யவும் மனுதர்ம ஆக்ஷியை (இராம ராஜ்யத்தை) நிலை நிறுத்தவும் செய்யப்படும் முயற்சியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இதைபாமரமக்கள் சரிவர உணராமல் மோசம் போய்க் கொண்டிருப்பதனால் இந்தநிலை வளர்ந்துகொண்டே இருக்கின்றது. உதாரணமாக மனுதர்மத்திற்கு
337 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
எதிரானதாகக் கருதப்பட்ட இந்துமத பரிபாலன சட்டமும் தேவதாசிகள் ஒழிப்புச்சட்டமும் குழந்தை மணத் தடுப்பு ( சாரதா ) சட்டமும் செய்யப் புரப்பட்டகாலத்தில் அதற்கு எதிராய் ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்புகள் எல்லாம் இச்சட்டங்கள் செய்யப்படுவதே வெள்ளைக்கார ஆக்ஷியின் கொடுமை என்பதாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதும் மக்கள் அதை நம்பி அச்சட்டங்களுக்கு எதிராய் இருந்ததும் கடைசியாக “சர்க்கார் தாசர்கள்” “தேசத் துரோகிகள்” அரசாங்கத்தார் (வெள்ளைக்காரர்கள்) ஆகியவர்கள் தயவில் இச்சட்டங்கள் நிறைவேற்ற முடிந்ததும், முடிந்தபிறகும் சரியானபடி அமுலில் இல்லாததுமே போதிய காரணங்களாகும்.
மேலும் மற்றொரு உதாரணமும் அதாவது யாவருக்கும் சுலபத்தில் விளங்கும்படியானதாக எடுத்துக் காட்டவேண்டுமானால் சமீப கராச்சி
காங்கிரசில் “பூரண சுயராஜிய” கவர்ன்மெண்டில் திரு.காந்தி கூட்டத்தார் செய்யப்படப்போகும் ஆ க்ஷியின் தன்மைகள் எப்படி இருக்கும் என்று எடுத்துக்காட்டி இருக்கும் 20 பிரிவுகளிலும் மற்றும் அதன் பல உட்பிரிவு களிலும்,சற்றேறக்குறைய 3,4 பிரிவுகள் தவிர மற்றப் பிரிவுகளை இந்நாட்டில் நிறைவேற்றி வைக்க ஆக்ஷேபணையாய் - முட்டுக் கட்டையாய் இருப்ப வர்கள் மனுதர்ம ஆக்ஷியைச் சேர்ந்த இந்தியர்களா, அல்லாதபடிஅரசாங்கத் தார்களா? என்று யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்.
ஆகவே அன்னியன் ஆக்ஷியில் இருந்துகொண்டு இருந்தாலும் நாம் செய்யக்கூடிய செளகரியம் உள்ளவைகளை செய்துகொள்ளாமலும் மற்றவர்
கள் செய்ய வந்தாலும் அதைத் தடுத்துக்கொண்டும் இருக்கின்ற மக்கள் தாங்களே ஆக்ஷி நடத்தக்கூடிய எஜமானர்களாகி விட்டால் மற்றவர்கள் சமஉரிமை பெறவோ மனித தர்மம் நடைபெறவோ தகுந்த தான ஆக்ஷியை நடத்த சம்மதிப்பார்களா என்பது அறிஞர்கள் கவனிக்கத் தக்கதாகும்.
ஆகவே இந்தியாவுக்கு ஏதாவது அரசியல் மாறுதல் ஏற்படுத்த வேண்டுமானால் அதில் மனுதர்மக் கொள்கைகள்- வர்ணாச்சிரமகொள்கை
கள் - பார்ப்பன ஆதிக்க கொள்கைகள் ஆகியவைகள் அல்லாத ஆக்ஷி ஏதாவது ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை சிறிதாவது இருந்தால்தான் இந்த ஆக்ஷியை மாற்ற முயற்சிக்கலாமே ஒழிய மற்றபடி செய்யப்படும் அரசியல் முயற்சிகள் பாமரமக்களின் தற்கொலை முயற்சிகளே யாகும் என்பதை ஒவ்வொரு மனிததர்மவாதியும் உணர வேண்டுமாய் விரும்பு கின்றோம். இந்த இரகசியத்தை நமது மக்களில் பலர் அறிந்திருந்தும் கூட அவர்களில் பலரில் தற்கால நிலைமையானது மனு தர்மத்தை ஸ்தாபிக்கும் அரசியல் முயற்சியில் கலந்துகொள்ளவே தூண்டுகின்றது.
தற்கால நிலைமை என்றது என்னவென்றால், நமது பார்ப்பனர்கள். அதாவது சரீரப்பிரயாசைப்படாமல் சோம்பேரியாய் இருந்து காலம் கழிப்ப
தில் அநுபவப்பட்டவர்கள் - நமது நாட்டை அன்னியர்களுக்கு காட்டிக்
குடி அரசு - 19310) 338
கொடுத்து தங்களது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற நிலையில் வெகுகாலமாய் இருந்து வருபவர்கள்- பல உத்தியோகங்களையும் அவற்
நிற்கு பெரும் பெரும் சம்பளங்களையும் மற்றும் பல செளகரியங்க ளையும் அடையத்தக்கதான திட்டங்களை ஏற்படுத்தி அதை அனுபவிப்பதே தேசீயத் தொண்டு என்றும், மக்களை நம்பச்செய்து அதனாலேயே தேசபக்தர்கள் கடமை யென்றும், வெகுகாலமாகவே அனுபவத்தில் கொண்டு வந்து விட்டதால் எல்லோரும் சோம்பேரிப் பிழைப்பை விரும்பும் தேசபக்தர்கள். தேசீய வாதியாக முயற்சிக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். இந்த நிலையில் உள்ள நம் நாட்டில் இப்போது வரவர இந்தமாதிரியான தேச பக்தர். கள்- தேசீயவாதிகள் மற்றவகுப்பிலும் அதிகரித்து விட்டார்கள். ஏனெனில்: இப்போது கொஞ்ச காலமாக “வகுப்பு வாதங்கள்” ஏற்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும் தேசபக்தர்களும் தேசீய வாதிகளும் விகிதாசாரம் ஆவதற்கு புரப்பட்டுவிட்டதால் சிறுவகுப்பாய் இருந்து பெரும்பங்கு பெற்ற “தேசீய வாதிகளுக்கும்,” “தேச பக்தர்களுக்கும்” தகுந்த அளவு “தேசீய வாதம்” செய்யவும் “தேசபக்தி” காட்டவும் இடமில்லாமல் போய்விட்டது. அன்றியும் தேசீயவாதிகளையும், தேசபக்தர்களையும் உற்பத்தி செய்யும் தொழில்சாலை: களாகிய பள்ளிக் கூடங்கள் மேலும் மேலும் அதிகமான “தேசீயவாதிக ளையும்” “தேச பக்தர்களையும்” உற்பத்திசெய்து கொண்டு வரும் காரணத்தால் ஏற்கனவே இருந்து வந்த நியாயவாதி வேலைகளும், மோக்ஷ வாதி வேலைகளும், தெய்வபக்தி வேலைகளும் இவர்களுக்கு போதுமான தல்லாமல் போய்விட்டதாலும் தேசீய வாதிகளுக்கு உடலில் வேலைசெய்து பிழைப்பது அவமானம் என்று கருதும்படியான அளவுக்கு அவர்கள்
சரீரத்தில் பலக்குறைவும் மனதில் சோம்பேரித்தனமும் பேராசையும் ஏற்பட்டு விட்டதால் இந்த மாதிரி தேசீயவாதி வேலைகளையும், தேசபக்த வேலை: களையும் இவர்களில் ஒவ்வொரு நபரும் கைகொள்ள வேண்டியதாய் நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
ஆகவே இந்த தேசீய வாதிகளுக்கும் தேசபக்தர்களுக்கும் உடலில். பாடுபடக்கூடிய ஒரு சக்தியோ, அல்லது பாடுபட்டு சாப்பிடுவது அவமான மல்ல என்கின்ற ஒரு எண்ணமோ, சோம்பேரியாக இருந்து மக்களை ஏமாற்றி வயிறுவளர்ப்பது அவமானம் என்கின்ற ஒரு உணர்ச்சியோ ஏற்படும்வரை:
இந்த தேசத்தில் ஏதாவது ஒரு வேஷத்தில் தேசீயக்கிளர்ச்சி என்பது இருந்து கொண்டு அநேக “தேசபக்தர்களையும், தேசீய வாதிகளையும்” ஆதரித்துக் கொண்டுதான் இருக்கும். இப்படிப்பட்ட கிளர்ச்சிகளுக்கு “மகாத்மா காந்தி” என்கின்ற ஒரு “அவதார புருஷரே” தான் வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. உதாரணமாக யார் மந்திரியாகவந்தாலும் வரவேற்க ஒரு கூட்டம் எங்கும் இருப்பது போல யார் தலைவராக வந்தாலும் பின்பற்றி “தேச பக்தியை” காட்டிதேசீயவாதிகளாவதற்கு ஒரு கூட்டம் காத்துக்கொண்டுதான்
இருக்கும்.
339 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆகவே இந்த அரசாங்கத்தினால் இந்த நாட்டின் தேசீயக் கிளர்ச்சி என்பதை சுலபத்தில் இனி நிறுத்திவிட முடியாது என்று தைரியமாய்ச் சொல்லுவோம். அந்தப்படி நிறுத்துவதும் இந்த மாதிரி ஆக்ஷிக்கு நன்மை அல்ல என்றும் சொல்லுவோம். நல்ல எண்ணம் கொண்ட அரசாங்கம் இந்நாட்டு நன்மையை உத்தேசித்து இவ்வித கிளர்ச்சிகளை நிறுத்த ஆசைப் பட்டால் முதலாவதாக கல்விச் சாலைகளை சோம்பேரியாக்கி தேசீயவாதி யாகவேண்டிய நிர்பந்ததில் வைக்கும் படிப்பைக் கொடுக்காமலும் அதாவது தேசத்தைக் காட்டிக்கொடுத்தும் மக்களை ஏமாற்றி சோம்பேரியாய் இருந்து பிழைப்பதற்கு மட்டும் தகுதியான படிப்பாகிய “மேல் படிப்பைக்” (Higher Edu-
cation) கொடுக்காமல் 3வது பாரத்தோடேயே பிள்ளைகளின் புஸ்தகப் படிப்பை நிறுத்தி அவர்களுக்கு சிறுவயதிலேயே பாடுபட்டுச் சாப்பிடும்படி யான சரீர வலிமையையும், மன வலிமையையும் கொடுக்கும்படியானதுமான கல்வியைக் கொடுத்து வரவேண்டும்.
பிள்ளைகள் பள்ளியை விட்டு நின்றவுடன் தொழில் செய்யும்படி யான தொழில் சாலைகளையும் விவசாயங்களையும் ஏராளமாய் சர்க்கார் தரப்பில் வைத்திருக்க வேண்டும். இந்தமாதிரி செய்தால் ஒழிய இன்றைய
தேசபக்தியும், தேசீய வாதமும் இந்த நாட்டில் இனிஒருநாளும் குறைவு படவே படாது.
இப்போதே பதினாயிரக்கணக்கான வாலிபர்கள் சோம்பேரி மனப் பான்மையுடன் ஆகாயக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டு கஞ்சிக்கு வகை யில்லாமல் தங்கள் பெற்றோர்களால் படிக்க வைக்க ஏற்பட்ட செல வினால் குடும்பப் பொருள்களை இழந்தும், சிலர் கடன்களுடனும் திரிந்து கொண்டும் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் வயிற்றுப் பசிக் கொடுமை தீர வேண்டுமானால் தேசீய வாதி என்றோ, தேச பக்தர் என்றோ சொல்லிக் கொண்டு ஏதாவது ஒரு கிளர்ச்சியில் சேர்ந்து வயிறு வளர்ப்பதை விட வேறு என்ன வழியிருக்கின்றது? என்று அரசாங்கத்தாரை நாம் கேட்கின்றோம்.
இந்த தேசபக்தியும் தேசியவாதமும் அரசாங்கத்தாரை ஒன்றும் செய்து விட முடியாது என்கின்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் தைரியமாயிருந்
தாலும் “சமாதானமாய் ராஜ பக்தியுடன் வாழும் குடி மக்களுக்கு” அதாவது பணக்காரர்களுக்கும் அரசியல் மூலம் பதவி பட்டம், பணம் பெற நினைத்துக் கொண்டிருக்கும் வக்கீல்கள் முதலியவர்களுக்கும், பெரிய விவசாயிகளுக்
கும் எவ்வளவு தொல்லை விளைவித்து வருகின்றது, விளைவிக்கப் போகின்றது என்பதை அரசாங்கத்தார் உணரவேண்டியது முக்கிய கடமை
யாகும்.
சமீபத்தில் காலம் சென்ற சட்டமறுப்புக்கிளர்ச்சி இன்னும் தொடர்ந்து நடப்பதற்குப் பணமும், இன்னமும் தொடர்ந்து ஜெயிலுக்குப் போய் “மாபெரும் தியாகிகள்” ஆவதற்கு தேசியவாதிகளும், தேசபக்தர்களும்
குடி அரசு - 19310) 340
தாராளமாய் இருப்பதாக வீம்பு பேசிக்கொண்டிருந்தும் அது திடீரென்று நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன? சர்க்காருக்கு ஏற்பட்ட- ( இல்லை) ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட கஷ்டங்களைவிட பொது ஜனங்களுக்கு (செல்வவான்களுக்கு - முதலாளிகளுக்கு உண்மையில் ஏற்பட்ட கஷ்டமும் நெருக்கடியுமே தலைவர்களை மிரட்டி நிறுத்தச் செய்து விட்டது.
ஆகவே இனி எவ்வித சீர்திருத்தம் வந்தாலும் (காரியமான சீர் திருத்தம் ஒன்றுமே வரப்போவதில்லை) அச்சீர்திருத்தத்தில் இந்த மாதிரியாக மக்கள் தேசீய வாதிகளாகவும் தேசபக்தர்களாகவும் ஆய்த்தீர வேண்டிய கஷ்டத்திற்கு இடமில்லாமல் செய்தாலொழிய “தேசிய கிளர்ச்சி” ஒருக் காலமும் இந்த நாட்டில் இனி நிறுத்தப்படப் போவதில்லை. ஏனெனில் இக் கிளர்ச்சி ஒன்றேதான் இப்போதைய வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்கக்கூடியதாகி விட்டது. நிற்க
எது எப்படியிருந்தபோதிலும் இம்மாதிரியான தேசபக்தர்களும் தேசியவாதிகளும் தாராளமாய் ஏற்படும் நிலை ஏற்படுவதானது நமது கொள்கைக்கு மிகவும் நன்மை என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. எப்படி யெனில் இந்த தேசபக்தக்கூட்டம் இன்று சர்க்கார் பக்கத்தில் திரும்பி இருப் பதை மறந்து விட்டு மக்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தால் வெகு சீக்கிரத்தில் சமதர்ம ஆட்சி ஏற்பட செளகரியம் ஏற்பட்டுவிடும் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சமதர்ம ஆட்சி ஒரு நாட்டில் ஏற்பட வேண்டு மானால் மனுதர்மத்தால் மக்களுக்கு இருக்கும் அவமானம் விளங்கி வாலிபர் களுக்கு சாப்பாட்டுக்கு இன்னமும் சற்று அதிகமான கஷ்டம் ஏற்பட வேண் டும். அப்பொழுது தான் அவமானத்துடன் வாழ்ந்து - பட்டினி கிடந்து - உயிர். மாள்வதைவிட சமதர்மத்திற்கு உயிர்விடுவது மேல் என்கின்ற உணர்ச்சி நம் வாலிபர்களுக்கு உண்டாகும். ஆதலால் இக்கிளர்ச்சியும் நன்மைக்கே தான்.
குடி அரசு - தலையங்கம் - 17.05.1931
341 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
< 33
சென்றவாரத்திற்கு முந்திய வாரத்தில் ஆத்மா என்னும் விஷயத்தைப் பற்றி எழுதிய வியாசத்தின் இறுதியில் அதன் தொடர்ச்சி பின்னால் வரும் என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது ஆத்ம உணர்ச்சி என்று சொல்லப்படு வதான “நான்” (என், எனது, என்னுடைய என்பதின் தன்மையைப் பற்றி எழுதுவதாக எழுதியிருந்தோம்.
ஆகவே இப்போது மனிதன் தன்னை உணர்த்தும் வகையில் நான் என்று சொல்லிக் கொள்வது எது என்பதே இப்போது இவ்வியாசத்தில் ஆராய்வதாகும். முன் வியாசத்தில் ஆத்மா என்பதைப் பற்றிச் சொன்னது போலவேதான் இப்போது “நான்” என்பதைப் பற்றியும் சொல்ல வேண்டி யிருக்கின்றது.
மனிதன் தன்னை நான் என்று சொல்லிக் கொள்வது எதனால்? அது எது? என்னும் ஆராய்ச்சியானது இந்து மதம் என்பதின் கடைசி அதாவது “வேதாந்த” தத்துவமாகப் பாவிக்கப்பட்டு “அதைக் கண்டுபிடிப்பதே கடவுளைக் கண்டு பிடித்ததாகும்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக “தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனா வான்”
என்றும், “தன்னைத்தான் அறிந்தால் கடவுளை அறியவேண்டிய தில்லை” “தன்னை அறிந்தவரை ஞானி” என்றெல்லாம் சொல்லப் படுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.
ஆகவே இந்தப்படி சொன்னவர்கள் எல்லாம் ஒரு மனிதன் தன்னை “நான்” என்று சொல்லிக்கொள்கின்றானே அது எது என்று கண்டுபிடிக்கும்
விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய கஷ்டம் இருப்பதாக நினைத்தோ அது சுலபத் தில் மனதுக் கெட்டாதது என்று கருதியே இப்படிச் சொல்லியிருக்கக் கூடும் என்பதாகவும், மற்றும் “நான்” என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து ஒருவன் அதைக் கண்டுபிடித்து விட்டானேயானால் பிறகு அவன் “ஞானி யாகவும்” “துறவியாகவும்” அல்லது கடவுளைப்பற்றி கவலைப்பட வேண்டி. யவனல்லாத - லக்ஷியம் செய்யப்பட வேண்டியவனல்லாத “நாஸ்தீகனாக”
வும் ஆகிவிடக்கூடும் என்று கருதிச் சொன்னதாகவும் இருக்கக்கூடும் என்பதாக முடிவு செய்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
குடி அரசு - 19310) 242
எப்படி இருந்தாலும் ஒரு மனிதன் தான் யார்? தனக்குள் இருந்து நான்
- என் என்று வரும் உணர்ச்சி எது? அதெப்படி உண்டாகின்றது? எது வரையில் அவ்வுணர்ச்சி இருக்கின்றது? என்பவை முதலான உண்மையை உணர்ந்தால் அவன் நாஸ்திக அபிப்பிராயத்தை அதாவது ஆத்மாவோ, கடவுளோ இருக்கின்றது என்பதை நம்பாத கொள்கையையே கொள்ள வேண்டியவனாகி விடுவான் என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டு என்பதை ஒப்புக் கொள்ளுகின்றோம்.
உலகத்தில் பெயரும் - உருவமும் உள்ள வஸ்துக்கள் எல்லாம் ஒரு வித சேர்க்கையால் அதாவது பல கூட்டுப் பொருள்களால் சேர்ந்து இருக்
கும் வடிவத்தையே பெரிதும் உணர்த்துவதாகும்.
ஏனெனில் உலகத்தில் உள்ள எந்தப் பெயருக்கும் மாறுதலையடை யாத ஒரு தனி வஸ்து என்பது கிடையவே கிடையாது என்பதை ஞாபகத்
தில் வைத்துக் கொள்ளவேண்டும், ஏனெனில் எந்தப் பெயரும் ஒரு தோற்.
த்திற்கு அல்லது ஒரு உருவத்திற்கு அல்லது ஒரு வடிவத்திற்குத்தான் உபயோகிக்கப்பட்டு - சொல்லப்பட்டு வருகின்றதே அல்லாமல் வஸ்து
வுக்குப் பெயர் சொல்லப்படுவதில்லை என்பதேயாகும்.
உதாரணமாக நாம் ஏதாவது ஒரு வஸ்து என்பதை எடுத்துக் கொண்டு அதற்குப் பெயர் என்ன? என்று ஒரு மனிதனைக் கேட்டு, அவன் சொன்ன பெயரையே திருப்பிச் சொல்லி அந்தப் பெயருக்குண்டான வஸ்துவைத் தொட்டுக் காட்டும்படி அம்மனிதனையே கேட்டால், அந்த மனிதன் தொட்டுக் காட்டும் பாகத்தில் இருக்கும் வஸ்துவானது அந்தப் பெயரை அதாவது அவன் முன் சொன்ன பெயரை உடையதாக அது காணப் படாததை நாம் நன்றாய்ப் பார்க்கலாம், அதாவது
ஒரு லாந்தர் - ஒரு மேஜை-ஒரு கடிகாரம் - ஒரு புஸ்தகம் என்பது போன்ற பெயர்களை உடைய வஸ்துக்கள் என்பவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு அவற்றின் பெயர் என்ன என்று கேட்டால் முறையே முன் சொன்ன பெயர்களைத்தான் சொல்லுவான்.
ஆனால் ஒரு லாந்தர் என்பது எது என்று தொட்டுக் காட்டச் சொன்னால் லாந்தர் என்பதில் அவன் தொட்டுக் காட்டிய பாகம் ஒரு சிமிணி யையோ, கண்ணாடியையோ, தகட்டையோ, கம்பியையோ, ஆணியையோ தான் தொட்டுக் காட்டப்பட்டதாய் இருக்கும்.
அதுபோலவே ஒரு மேஜையைத் தொட்டுக் காட்டச் சொன்னால் தொட்டுக் காட்டிய பாகம் ஒரு பலகையையோ, அல்லது காலையோ, ஆணியையோ, குமிளையோ, கைப்பிடியையோதான் தொட்டுக் காட்டியதாய் காணப்படும்.
343 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அது போலவே ஒரு கடிகாரம் என்பதையும் தொட்டுக் காட்டச் சொன்னால் அவன் மேல் மூடியையோ, கண்ணாடியையோ அல்லது, திறந்த கடிகாரமாய் இருந்தால், ஒரு சக்கரம் என்பதையோ, ஆணி என்பதையோ தொட்டுக் காட்டியதாகத்தான் காணப்படும்.
அதுபோலவே ஒரு புஸ்தகம் என்பதையும் தொட்டுக் காட்டச் சொன்னால் அவன் தொட்டுக் காட்டிய பாகம் காகிதமாகவோ, அட்டை யாகவோ, காலிகோ துணியாகவோ, தோலாகவோ தான் காணப்படும்.
இப்படியே மற்றும் அதன் உள்பிரிவு பெயர்களும் அதாவது மேல் சொல்லப்பட்ட பெயர்களும் சரியானபடி தொட்டுக் காட்டப்பட்டதாகவும் இருக்கமுடியாது. ஏனெனில் அவன் லாந்தர் என்பதாகக் காட்டியது கம்பி என்பதனாலும், கம்பி என்பதாக ஒன்றைத் தொட்டுக் காட்டியதாக இல்லாமல்: இரும்பைத் தொட்டுக்காட்டியதாகதான் காணப்படும். இரும்பு என்பதை
காட்டும் போது ஏதோ ஒரு வகையான மண்ணின் சேர்க்கையை காட்டிய தாகத்தான் காணப்படும். இப்படியே நமக்குக் காணப்படும் வஸ்துக்கள்
எல்லாம் ஏதோ ஒரு ரூபமாத்திரத்திற்கு - ஒரு உருவத்திற்கு-ஒரு மாதிரியான தோற்றத்திற்கு அந்தப் பெயர் சொல்லப்படுவதாகக் காணப்படுமே அன்றி
அந்தப் பெயருக்கு அந்த வஸ்து கட்டுப்பட்டு அந்த வஸ்துக்கள் வேறு எந்த ரூபத்தை அடைந்தாலும், வேறு எந்த குணத்தை அடைந்தாலும் அந்தப் பெயரையே யுடையதாக காணும்படியான ஒரு வஸ்துவும் காணப்பட முடியாது என்பது இவற்றிலிருந்து நன்றாய் உணரக் கிடைக்கின்றது.
ஆகவே லாந்தர் என்றதும், மற்றும் மேஜை, கடிகாரம், புஸ்தகம் என்றதும் ஒரு வித வடிவத்தில் காணப்படும் ஒரு தோற்றத்தின் பெயரே அல்லாமல் ஒரு வஸ்துவின் பெயர் அல்ல என்பதும் இதனால் உணரத்
தகுந்ததாகும்.
எப்படியெனில் மேஜை நாற்காலி, பெஞ்சு, ஊஞ்சல் என்று சொல்லப். படுவதான வஸ்துக்கள் மரம் என்னும் ஒரே மூலப் பொருளாலும் இரும்பு என்னும் ஒரே உபமூலப் பொருளாலும் செய்யப்பட்டிருந்தாலும் தனித்தனி வடிவத் தோற்றத்தினால் தனித்தனி பெயரை உடையதாகி இருப்பது போலவே உலக வஸ்துக்கள் வடிவம், உருவம், சாயல், குணம், நிலை முதலாகிய பேதத்தால் பலவித பெயர்களை உடையதாயிருந்து பல பல காரணங்களால் அதே வஸ்துக்கள் வேறு பல பெயர்களையும் அடைந் தாலும் முடிவில் அவற்றின் மூலப்பொருள்கள் பெயர் எல்லாவற்றிற்கும் ஒரே (தாது) பெயருடைய வஸ்துவாகவேதான் இருக்கும்.
இதுபோலவேதான் ஜீவன்கள் என்கின்ற “உயிர்'ப் பிராணிகள் எல்லாம்கூட உருவத்தில்-தோற்றத்தில் வேறு வேறு வகையாய் - பெயராய் சொல்லப்பட்டாலும் அவற்றின் மூலப் பொருள்களும் ஒன்றேயாகும்.
குடி அரசு - 19310) 244
அதாவதுமரத்தையே மூலப் பொருளாய்க் கொண்டமேஜை, நாற்காலிபெஞ்சு முதலிய பல பெயர்களுக்கு உருவம் தோற்றம் ஆகியவைகளே காரணமாய் இருப்பது போல் அணுக் கிருமி, பூச்சி, புழு, பக்ஷி, மிருகம், குரங்கு மனிதன் முதலாகிய பல ஜெந்துக்களும் உருவம், தோற்றம், குணம் முதலிய காரணமாய் பலபெயர்கள் சொல்லப்பட்டாலும் தொட்டுக்காட்டும் பாகங் களானது எல்லா ஜீவ வர்க்கத்திற்கும் ஒரேமாதிரியான-ஒரேபெயர் கொண்ட தான மூலப் பொருளாகத்தான் இருக்கும். ஆகவே ஜீவ வர்க்கங்கள் என்பனவாகிய சகல ஜீவப் பிராணிகளும் சாயல், உருவம், தோற்றம், குணம் முதலியவற்றை அவற்றின் மூலப் பொருள்களும், தத்துவமும் ஒன்றே யாகும்.
எனவே எத்தனையோ கோடிவித ஜீவப்பிராணிகள் என்பதில் மனிதன் என்பதும் ஒருவிதமான தோற்றமுடைய வுருவத்திற்கு சொல்லப்படும் பெயரேயொழியமனிதன் என்கின்ற ஒரு தத்துவத் தனிப் பொருள் இல்லை என்பதை இதனால் ஒருவாறு உணரலாம். ஏனெனில் மனிதன் என்று
குறிப்பிடுவதற்கு தொட்டுக்காட்டக்கூடிய ஒரு வஸ்து மனித சரீரத்தின் எந்த பாகத்திலும் கிடையாது என்பதாலேயாகும். உதாரணமாக ஒரு மனித உருவத்தைக் காட்டி அவனை மற்ற ஒரு மனிதனைத் தொட்டுக் காட்டச் சொன்னால் அவன் ஒரு மனிதன் என்பவனின் சரீரம் என்பதில் ஏதாவது ஒரு அவயவத்தைத்தான் தொட்டுக்காட்டுவான். அந்த அவயவத்திற்கு ஏற்கனவே பெயர் கை, கால்,வயிறு, மார்பு, முதுகு, தோள் என்பவை முதலாகிய ஏதாவது ஒரு பெயரையுடைய அவயமாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெயருக்குடைய அவயவ வஸ்துவையும் கவனித்துப் பார்க்க ஆரம்பித்தால் அது தசை, தோல் முதலாகிய பெயர்களையுடைய பொருளாகத்தான் காணப்படும். இப்படி எல்லாம் இருந்தாலும் கூட அப்படி காட்டப்பட்ட மனிதனும் இயங்குதல் அதாவது அசைகின்ற சக்தி இருக்கும் போதுதான் அந்த தோற்றத்திற்கு மனிதன் என்கின்ற பெயரை உடையதாகவும் அதாவது அசைகின்ற சக்தி இல்லாது போய் விட்டால் மனிதன் என்ற பெயரையுடைய அதே தோற்றம் பிணம் என்னும் பெயரையுடையதாக ஆகிவிடுகின்றது.
அன்றியும் மனிதன் அசையும் சக்தியை உடைத்தாயிருக்கும் வரை அந்த சரீரத்தில் எந்த பாகம் அதாவது முன் சொல்லப்பட்ட அவய வங்களாகிய கண், காது, வாய், கால், கை முதலாகிய எந்த பாகம் போய் விட்ட போதிலும் மனிதன் என்றே சொல்லப்படுகின்றது. ஆகையால் அசையும்
சக்தி உள்ள ஒருவித தோற்ற உருவத்திற்குத்தான் இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதாய் இருந்து வருவதை பார்க்கின்றோம். இந்தப் படியான மனிதன் அசையும் சக்தியை உடைத்தாய் இருக்கும்வரை தான் அவனுக்குள். உயிரோ-ஜீவனோ-ஆத்மாவோ ஒன்று இருக்கின்றது என்று கருதுகின்றார்களே ஒழிய வேறில்லை.
345 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இந்த அசையும் சக்தி இருக்கின்ற ஜீவன்கள் எல்லாவற்றிற்குமே தான் ஆத்மா என்பதாக ஒன்று இருக்கின்றது என்பது ஆத்மாவாதிகளின் கொள்கையாகும். அதாவது “சரீரத்தில் இருந்து ஆத்மா பிரிந்து விட்டால் அசைவு நின்று விடும்”. அதாவது மனிதன் செத்துப்போவான் என்று சொல்லுவார்கள். எப்படி இருந்தாலும் “சரீரத்திற்கு அசையும் சத்தியை கொடுப்பது தான் ஆத்மா” என்பது ஆத்மாவாதிகள் கொள்கையென்பதும் இதனால் புலப்படும். ஆகவே இந்த அசையும் சக்தி சரீரத்திற்கு எப்படி உண்டாகின்றது? இது எப்படி நின்று போகின்றது? என்பதை சரிவர: உணர்ந்தோமானால் ஆத்மாவின் யோக்கியதை இன்னதொன்று ஒருவாறு விளங்கிவிடும்.
இதற்குமுன் ஆத்மாவைப் பற்றி சில கேள்விகள் எழுகின்றன.
அதாவது சரீரத்திற்குள் ஆத்மா எப்படி வந்தது? ஏன் வந்தது? சரீரத்தை விட்டுவிட்டு ஆத்மா எப்படி வெளியேறுகின்றது? அது ஏன் வெளியேறிவிடுகின்றது? எந்த மாதிரி ஆத்மா மனித சரீரத்திற்குள் வரு கின்றது? எந்த மாதிரி ஆத்மா கழுதை முதலிய மிருக சரீரத்துக்குள் வரு கின்றது? எந்த மாதிரி ஆத்மா அணுக்கிருமி முதலிய சரீரத்திற்குள் நுழைக் கின்றது? ஜீவன்களின் அசைவு, பலம், குணம் முதலிய பலவித மாறுதலான நடவடிக்கைகளுக்கு ஆத்மா காரணமா - அல்லது அதனதன் சரீர அமைப்பு காரணமா என்பன போன்ற பல கேள்விகளாகும். (இவை பழைய கேள்விகளாக பலருக்கு காணப்படலாம் என்றாலும் பழைய கேள்விகள் புதிய மனிதர்களுக்கு தோன்றக்கூடாமல் செய்வதற்கு பழைய காலத்தில் இருந்தே யாரிடத்திலும் சக்தியில்லாமல் போய்விட்டதால் அது புதிய மனிதர்களுக்கும் தோன்றுவதற்கு யார் என்ன செய்ய முடியும் இவை ஒரு புறம் நிற்க இனி
எடுத்துக் கொண்ட விஷயமாகிய “நான்” என்பதைப் பற்றி கவனிப்போம்.
ஒருமனிதன் தான் “நான்” என்று சொல்லுவது அந்த மனிதனுக்குள் இருக்கும் அசையும் சக்தியாகிய ஆத்மா என்பதா? அல்லது வேறு பொருளா? என்று பார்ப்பதனால் அது வேறு பொருளா அல்லவா என்பதை கண்டு பிடிப்பதற்கு முன்னாலேயே ஆத்மா என்பது நான் என்று சொல்லு வதல்ல என்பதானது சீக்கிரத்தில் கண்டு பிடிக்கக்கூடியதாக இருக்கின்றது. எப்படியெனில் ஒரு மனிதன் பேசும்போது, “என் ஆத்மா என்றும், நான் என் ஆத்மாவை விடமாட்டேன் என்றும் இந்த மாதிரி நான், என், என்பது வேறு என்றும், ஆத்மா என்பது வேறு என்றும் பிரித்துப் பேசுவதையும் பேசும்படி இருப்பதையும் பார்க்கின்றோம்”. ஆகவே சரீரத்தின் அசையும் சக்தி ஆத்மா என்றால், இந்த நான் என்பது அதைவிட்டு வேறுபட்டமற்றொரு விஷயமாக இருக்கும் என்று கருத வேண்டியதாய் இருக்கின்றது என்பது இதனால் ஒருவாறு புலப்படும்.
குடி அரசு - 19310) 246
ஆனால் ஒருமனித சரீரத்தில் ஆத்மா என்பதாக ஒரு வஸ்துவும் உயிர் என்பதாக ஒரு வஸ்துவும் நான் என்பதான தன்மையை உணர்த்த ஒரு வஸ்துவும் ஆக மூன்று வஸ்துக்கள் இருக்கும் என்று நினைப்பது சரி யான நினைப்பாகாது என்பதோடு அப்படி நினைத்தாலும் அவைகளில் எது மனிதனை நடத்துகின்றது. அல்லது மனிதனுடைய நடத்தைக்கு ஜவாப் தாரித் தனமுடையது என்னும் விஷயம் மயக்கத்தையும் முரண்களையும் விளை:
விக்கக் கூடியதாக ஆகி விடும். ஆதலால் நான் என்று சொல்லப் படுவதும், எண்ணப்படுவதும் தனிப்பட்ட ஒரு வஸ்துவல்ல என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது. மற்றபடி பின்னை அது என்னமாய்தான் இருக்கக்
கூடும் என்ற கேள்விக்கு நமது அபிப்பிராயத்தை தெரிவிக் கின்றோம்.
அது பிசகாய் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அந்தப் பிசகானது ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்று பிரித்துச் சொல்லுகின்றது போன்ற அவ்வளவு பெரிய பிசகாகவும் ஆத்மாவுக்கு குணங்கள் கற்பிக்கின்ற அளவு பிசகாகவும் இருக்காது என்பது மாத்திரம் உறுதி. திருத்துவதற்கு யாவருக்
கும் உரிமை கொடுத்தே நமதபிப்பிராயத்தை தெரிவிக்கின்றோமே யொழிய இதுவே சரியான அபிப்பிராயம் என்பதாக நாம் ஒன்றும் இவ்விஷயத்தில் சொல்ல வரவில்லை.
ஆகவே ஆத்மா என்பதாக தனித்துப் பிரித்து உணர்த்தக்கூடிய வஸ்து ஒன்று இல்லையென்று சொல்லுவதோடு இனி “நான் என்ற உணர்ச்சி என்ன என்பதைப்பற்றி சிறிது சொல்லுவோம். (தொடரும்!
குடி அரசு - கட்டுரை - 17.05.4931
347 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஊணாய் அலாவஷதீன் ராவக்கர்
தென்னிந்திய நல உரிமைச் சங்க உதவித் தலைவரும், மதுரை முனிசிபல் கெளன்சிலரும், நமது நண்பருமான ஜனாப் கா.ம. அலாவுதீன் ராவுத்தரவர்கள் 55.31ந் தேதி காலை 7மணிக்கு தமது 55 வது வயதில் முடிவு எய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம். ஜனாப் ராவுத் தரவர்கள் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்தில் அதிகக் கவலை பூண்டு, மிக்க அக்கரையுடன் தொண்டாற்றியவராவர். ஜஸ்டிஸ் க௯ஷ9ி தோல்வி யடைந்த பிறகு மதுரையில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மகா நாட்டின் போது மிக்க ஊக்கத்துடன் ஒத்துழைத்து மகாநாட்டை சிறப்புர நடத்திவைத்த பெரியார்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் காலஞ்சென்றது எல்லா பிராமணரல்லாதார்களுக்கும், சிறப்பாக மதுரை பிராமணரல்லாதாருக்கும் ஓர் பெரிய நஷ்டத்தை விளைவித்ததுடன் அவர்களின் முன்னேற்றத்தில் மிக்க கவலையுடன் அரும்பாடுபட்டு வந்த ஒரு உற்ற நண்பரை இழந்து விட்டார் களெனக் கூறுவது மிகையாகாது. நமது அனுதாபத்தை அன்னாரின் குடும்பத் தாருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - இரங்கல் செய்தி - 17.05.1931
குடி அரசு - 19310) 248
தந்திர ண்ண்”
சுதந்திர வீரன் என்னும் பத்திரிகையின் முதல் மலர், முதல் இதழ் வரப்பெற்றோம். அதன் தலையங்கத்தில் கடவுள், காந்தி, காங்கிரஸ், புராதான நாகரீகம், தேசீயம் ஆகியவைகளைப் புகழ்ந்தும், எழுதியிருக்கின் றதுடன் இதையே தமது கொள்கையாகவும் கொண்டிருப்பதாகவும் அறியக் கிடக் கின்றது. ஆதலால் இதன் கொள்கை “காந்தீயம்” என்பதாகவே தெரிய வரு கின்றது. இப்பத்திரிகைக்கு உயர்திரு. எஸ். சத்தியமூர்த்தி ஐயரால் அனுப்பப். பட்டிருப்பதாய்க் காணப்படும் ஒரு வாழ்த்துச் செய்தியில் “இந்தியா சுய ராஜியம் இழந்து அன்னியர் கையில் சிக்கிப் படும் கஷ்டத்தில் ஒரு பாகத்தை அனுபவிப்பதுடன் தமிழ் நாட்டார் தங்கள் சுயமரியாதையையும் இழந்து கஷ்டப்படுகின்றார்கள்.”
“ஆகவே சுதந்திர வீரன் சுயராஜியத்திற்குப் போராடுவதுடன் தமிழ் நாட்டார் இழந்ததை (சுயமரியாதையை! அடைய உதவுமென்று நம்பு கின்றேன்” என்பதாக எழுதி இருக்கின்றார். ஆகவே இதை லட்சியம் செய்து நடக்கும் முறையில் முயன்று நின்று வெற்றிபெற விரும்புகின்றோம்.
ஆசிரியர் திரு.ஜெ.பிராட்ரிக்ஸ் “தந்திர வீரன்” ஆபீஸ், பெரிரா வீதி,
தூத்துக்குடி
குடி அரசு - மதிப்புரை - 17.051931
349 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காங்கிரஸ் கூட்டத்தில் சாற்வராழிஷ
சகோதரர்களே!
நமது ஊருக்கு வந்த விருந்தாளியை வரவேற்கவும், அவருக்கு நமது மரியாதையைக் காட்டிக்கொள்ளவும் என்று நமது ஊர் மக்களின் பிரதிநிதி ஸ்தாபனமாகிய முனிசிபல் சபை திரு. சென்குப்தா அவர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரமளிக்கத் தீர்மானித்து, அவ்வரவேற்பளிக்கும் கூட்டத் திற்கு என்னை தலைமை வகிக்க வேண்டுமென்று நமது முனிசிபல் சேர் மென் திரு. ஷேக் தாவுத் சாயபு அவர்கள் விரும்பியபடியும், உங்கள் எல்லோருடைய ஆமோதிப்புப் படியும் எனக்கு அளிக்கப்பட்ட இந்தப் பெருமைக்கு நன்றி செலுத்துகின்றேன்.
திரு. சென்குப்தா அவர்கள் முதலில் முனிசிபல் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசியபின் இந்த முனிசிபாலிட்டிக்கு மின்சார சப்ளை பொறுப்பை ஒருவெள்ளைக்காரக் கம்பெனிக்கு அரசாங்கத்தார் கொடுத்து விட்டதைக் கண்டித்துப் பேசினார். அது மிகவும் சரியானதேயாகும். ஆனா லும், அக்குற்றம் முழுவதும் அரசாங்கத்தாருடையதல்ல. அவர்களுக்கு நம்மிடம் இவ்வளவு அலட்சியம் ஏற்படுவதற்கு நமது கேவல நிலைமையே காரணமாகும்.
நமக்கு உண்மையில் அரசாங்கத்தார் செய்தது தப்பு என்றும் அவர்கள் நம்மை அலட்சியம் செய்தது நமக்கு அவமானம் என்றும் நம் எல்லோருக்கும் தோன்றுமானாலும் நாம் இப்போதே ஒரு முடிவு செய்து கொள்ளவேண்டும். அதாவது, நமது முனிசிபல் சங்கத்தின் மூலம் வினி யோகிக்கப்பட அனுமதி கொடுத்தால் ஒழிய நாம் மின்சாரத்தை உபயோகித்
துக் கொள்ளுவதில்லை என்கின்றதான ஒரு உறுதி நமக்கு இருக்க வேண்டும். அப்படியானால் தான் நமது காரியம் வெற்றிபெறும். நமது சுயமரியாதையும் காக்கப்படும். அப்படிக்கில்லாமல் சர்க்காராரை ஒருவர் வைது பேசவும் மற்றொருவர் கைதட்டவுமான காரியத்தால் ஒரு காரியமும் நடந்துவிடாது.
நிற்க, அரசியல் இயக்க சம்பந்தமாக திரு. சென்குப்தா அவர்கள் அநேக விஷயம் உங்களுக்கு எடுத்துச் சொன்னார். அக்கிராசனர் என்கின்ற முறையில் உபன்யாசகர் பேசிய விஷயத்தை ஒட்டியும், அதைப் புகழ்ந்தும்
குடி அரசு - 19310) 350
பேசுவதுதான் எனது தர்மமாகுமே யொழிய அவற்றுள் அபிப்பிராயப் பேதப்பட்ட விஷயங்களை எடுத்துக் கொண்டு அக்கிராசனர் தான் மாறு பட்ட அபிப்பிராயத்தைத் தெரிவிக்கு முறையில் எதையும் பேசுவது தர்மமாகாது.
ஆகவே நான் அவர்கள் பேசிய விஷயங்களில் நான் மனப் பூர்வமாய் ஆமோதிக்கும் விஷயங்களை எடுத்துப் பேசிப்பாராட்டுவதன் மூலம் எனது கடமையைச் செலுத்துகிறேன்.
வெள்ளைக்கார ஆட்சியில், வியாபார முறையில் நமக்கு உள்ள கெடுதிகள் முழுவதும் திரு.சென்குப்தா அவர்கள் எடுத்துக்காட்டியது உண்மையேயாகும். அந்தப்படி வெள்ளைக்காரர்கள் தைரியமாய்ச் செய்ய.
நாம் விட்டுக் கொண்டே வந்துவிட்டோம். இப்போதும் அதைத் தடுக்க வேண்டுமானால் அவர்கள் இந்த நாட்டில் வியாபார ஆட்சி செய்யத் துடங் கின காலத்தில் நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு செளகரியம் செய்து கொடுத்தோமோ, அதையே இனியும் செய்து கொண்டிருந்தால் முடியாது. அவர்களது வியாபார ஆட்சிக்கு இங்கு அவர்களுக்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கும் தன்மைகளை ஒழிக்க வேன்டும். அதை திரு.சென்குப்தா அவர்கள் தனது பிந்திய பாகத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால் இங்குள்ள பலருக்கு அவரின் முந்தியபாக உபன்யாசம் மிக சந்தோஷமாய் இருந்தது.அநேகர் கைத் தட்டினார்கள். தலை ஆட்டியும், குலுங்கிக் குலுங்கி யும் சிரித்தார்கள். ஏனென்றால் அவையெல்லாம் வெள்ளைக் காரர்களை வைதவைகளேயாகும்.
ஆனால் அவர் உபன்யாசத்தின் பிந்திய பாகம் அநேகருக்கு மிக்க சங்கடமாக இருந்ததை நான் பார்த்தேன்.முகத்தைச் சுண்டவைத்துக் கொண்டார்கள், தங்கள் அதிருப்தியையும் சிலர் காட்டினார்கள்.
திரு. சென்குப்தா அவர்களும் “இந்த நாட்டில் தீண்டாமை கொடுமை
என் புத்தியை கலைத்து விட்டது” என்றும், “கோபியில் ஒரு பார்ப்பான் தைரியமாய் என்னை எதிர்க்க வந்துவிட்டான். நீங்கள் எப்படி இவ்வளவு
தூரம் விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்” என்றும் என்னைக் கேட்டார். நான் நீங்களே நேரில் பார்க்க நேர்ந்தது சந்தோஷம் என்று சொன்னேன்.
“காங்கிரஸ் காங்கிரஸ் ஆகிவிடாது.
'காந்தி காந்தி” என்பதால் ஒரு காரியமும்
காங்கிரசைப்பற்றி இங்கு எவ்வளவு பெருமைப்படுத்தி கூறிக் கொண்டாலும் அதற்கு திரு.சென்குப்தா சொன்னபடியான கொள்கையை யுடையமெம்பர் லக்ஷம் ஜனங்களில் ஒருவர் கூட இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.
351 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இன்று காங்கிரசில் மெம்பர்களாய் இருக்கும் ஜனங்களால் ஒரு காரியமும் முடிந்துவிடாது என்பது எனது உறுதி. பஞ்சகச்சமும், பட்டை நாமமும், உச்சிக் குடுமியும் வைத்துக்கொண்டு, “என்னைத் தொடாதே எட்டி
நில்” என்று சொல்லுபவர்கள் தக்களியை கையில் சுற்றிக்கொண்டு 4 அணா: கொடுத்து காங்கிரஸ் மெம்பராகி “மகாத்மா காந்திக்கு ஜே” “காங்கிரசுக்கு ஜே” என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருப்பவர்கள், 100பேர்களால் ஆகும் வேலையை விடமக்களில் “தீண்டாமை என்பதே கிடையாது இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லோரும் சகோதரர்கள், சோம்பேரி வாழ்க்கையை ஒழிக்க வேண்டும்” என்று உண்மையாய் கருதிக் கொண்டு கதர் கட்டாமல் “காந்தி ஒழிக' “காங்கிரஸ் ஒழிக” என்று சொல்லுகின்ற வனாயிருந்தாலும் அவனே நாட்டுக்கு நன்மைச் செய்கின்றவனாவான். பிந்தியவனது முயற்சியினால் தானாகவே அன்னியநாட்டு வியாபார ஆக்ஷி ஒழிந்துபோகும் என்பது எனது நம்பிக்கை.
இந்த தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் காங்கிரசு மெம்பர்களை விட காங்கிரஸ் மெம்பர் அல்லாதவர்களிலேயே அதிகமான ஜனங்கள் காரியத்தில் நடந்து காட்டுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
போலி மெம்பர்களைக் கொண்ட எந்த ஸ்தாபனமும் எவ்வளவு செல்வாக்கு உள்ளதாக இருந்தாலும் அதனால் ஒரு பயனுமே விளையாது.
தீண்டாமையை அனுஷ்டிப்பது காட்டுமிராண்டித்தனம் என்று திரு.சென்குப்தா சொன்னார். இப்போது காங்கிரசிலிருப்பவர்களில் காட்டு மிராண்டிகளல்லாதவர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.
வெள்ளைக்காரர்கள் ஆக்ஷி சில விஷயங்களில் விஷக்கிருமிகளின் தொல்லைகள் போலத்தான் இருக்கின்றது என்பதை நான் ஒப்புக் கொள்ளு கின்றேன்.
ஆனால் விஷக்கிருமிகள் ஏற்படாதபடி நம் நாட்டை சுத்தமாக வைத் திருக்கவேண்டாமா என்று கேட்கின்றேன்.
சிறிதும் குப்பை கூளமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குப்பை கூளம் மலிந்து கெட்டகாற்று ஏற்பட்டால் அதிலிருந்து விஷக்கிருமிகள் உண்டாகித்தான் தீரும். அதன் ஆதாரத்தை கவனியாமல் விஷகிருமி கடித்ததற்கு மாத்திரம் அவ்வப்போது மருந்து போட்டுக் கொண்டிருந்தால் கிருமி உபத்திரவம் ஒரு நாளும் நீங்காது. அது உண்டாவதற்கு ஆதாரமான குப்பை கூளங்களை அடியோடு அப்புறப்படுத்த வேண்டும். அதுபோலவே நமது நாட்டிற்கு அன்னிய ஆட்சி ஏற்பட வேண்டிய காரணம் என்ன? என்பதை கவனியுங்கள். அதை யார் கொண்டுவந்து விட்டார்கள் என்பதை
குடி அரசு - 19310) 352
நினைப்பூட்டிப் பாருங்கள். அந்தக் காரணத்தை ஒழியுங்கள். அக்காரணம் தீண்டாமை, ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசமேயாகும். அதை கவனிக்காமல் காந்திக்கு ஜே வந்தே மாதரம் என்றால் மந்திரத்தில் மாங்காய் விழுமா? அன்னியரை ஏமாற்ற நினைத்து நாமே ஏமாந்து போகத்தான் இவைகள். உதவும். உண்மையிலேயே நாம் வெள்ளைக்கார கொடுமையைவிட நமது நாட்டு மக்களில் சிலருடைய கொடுமையாலேயேதான் அதிக கஷ்டப்படு கின்றோம். அன்றி யும் இந்த மக்களாலேயேதான் வெள்ளைக்காரர்கள் மேலும் மேலும் கொடுமை செய்ய இடமேற்படுகிறது.
ஆகவே, சகோதரர்களே! நமது பெரியார் திரு சென்குப்தா அவர்கள் சொன்ன விஷயங்களை நீங்கள் நன்றாய் கவனித்து ஒவ்வொன்றையும் உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து தள்ளுவதைத் தள்ளி கொள்ளுவதைக் கொண்டு சரியென்று பட்ட வழியில் நடவுங்கள் .
குறிப்பு : ஈரோடு மகாஜன ஹைஸ்கூல் மண்டபத்தில் 16.05.1931 அன்று. நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றியதலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 17.05.1931
353 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
திருச்சி பார்ப்பணால்லாத ணாலிபசாங்க கரண்டாவது ஆண்டு விழா
தலைவர் அவர்களே ! சகோதரர்களே!
“சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பதுபற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக்கூடும் என்று நம்புகின்றேன்.
சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன்.
பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில். நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரிய வில்லை. ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிகசாதாரண விஷயமாகவே தோன்று கிறது. ஆனால் கேட்பவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் உண்டாகலாமே என்கின்ற எண்ணம் மாத்திரம் சற்று தயங்கச் செய்கின்றது. இருந்த போதிலும் யாரையும் நான் சொல்லுவதை எல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ளும்படி கேட்கப்போவதில்லை. அன்றியும், நான் சொல்லுவ தெல்லாம் சரியாகவே இருக்குமென்று கண்மூடித்தனமாய் நம்புங்கள் என்றும் உங்களுக்குச் சொல்லுவதில்லை. என் அபிப்பிராயத்தைச் சொல்லுகிறேன். அதை உங்கள் அபிப்பிராயங்களோடு வைத்து ஒத்துப் பார்த்து சரி எது, தப்பு எது என்பதை உணர்ந்து நீங்கள் உணர்ந்தபடி நடவுங் கள் என்றுதான் சொல்லுகின்றேன்.
ஆதலால் நான் சொல்லுவதில் யாருக்கும் எவ்வித கெடுதி ஏற்படவோ, சங்கடம் ஏற்படவோ இடமிருக்காது. மனிதன் பொதுவாகவே எவ்வித
குடி அரசு - 19310) 354
அபிப்பிராயங்களையும் கேட்பதற்கும் தெரிவதற்கும் ஒரு வித ஊக்கம் உடையவனாக இருக்க வேண்டும். இல்லை யானால் மனிதன் உண்மையைக் கண்டு பிடிக்கவோ, அறிவு பெறவோ, முன்னேற்றமடையவோ முடியாது.
அன்றியும் நமது சொந்த அறிவில் நமக்குப் போதிய தைரிய மிருந்தால்.
யார் என்ன சொன்னாலும் யாரிடம் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது. ஆகையால் ஒருவரை பேசாமல் இருக்கச் செய்வது என்பதோ, பேசுவதைக் கூட கேட்காமல் இருக்கச் செய்வது என்பதோ கோழைத்தனமேயாகும்.
ஆகவேநான் சொல்லுவதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலை யிலிருந்து கேட்கும்படி கோறுகிறேன்.
சகோதரர்களே! சுயமரியாதை சுயராஜ்யம் என்று சொல்லப்படும் இரண்டு வார்த்தைகளிலும் சுயமரியாதை என்பது நீங்கள் எல்லோரும் பொருள் தெரிந்து அனுபவத்தில் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் பிரயோகித்துவரும் ஒரு உண்மை வார்த்தை என்பதில் உங்கள் யாருக்கும் ஆகேஷபணை இருக்காதென்றே கருதுகின்றேன்.
மற்றும் ஒவ்வொரு மனிதனும் அவ்வார்த்தையின் தத்துவத்தை மனதில் பதிய வைத்து தன்னுடைய ஒவ்வொரு எண்ணமும் செய்கையும் அதைப்பொருத்தே இருக்கவேண்டுமென்று கருதுவதையும் உணருகின்
நீர்கள். ஆனால் சுயராஜ்யம் என்னும் பதமோ சமீபகாலத்தில் உண்டாக்கப் பட்டதான ஒரு வார்த்தையேயாகும்.
எதுபோலவெனில் இந்து மதம் என்பதாக ஒரு வார்த்தை எப்படி சமீப காலத்தில் கற்பிக்கப்பட்டு அதற்கு ஒரு கருத்தில்லாமலும், அருத்தமில்லா மலும் வார்த்தை அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதோ அதுபோலவே தான் சுயராஜ்யம் என்னும் ஒரு வார்த்தை கற்பிக்கப்பட்டு அருத்த மில்லா மலும், கருத்தில்லாமலும் வெறும் வாய்வார்த் தையில் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற வார்த்தையாகும். ஆனால் இந்த வார்த்தைக்கு அருத்தமும் கருத்துமில்லாமல் போனாலும் “சுயராஜியமே எனது பிறப்புரிமை” என்று சொல்லப்படுவதிலும் அதற்கே எல்லா முக்கியஸ்தானமும் கொடுக்கப்படு
வதிலும் அதாவது மேலே குறிப்பிட்ட இந்து மதத்திற்கு பிரதானம் கொடுப்பது போலவே கொடுக்கப்பட்டு மிகப்பிரமாதப் படுத்தப்பட்டு அதற்காகப் பெரிய கிளர்ச்சியும் செய்யப்பட்டு வருகின்றது. பாமர மக்களுக்கு உலகக்கல்வியும் பகுத்தறிவு ஞானமும் இல்லாத காரணமே சுயராஜ்யம் என்னும் வார்த்தை மோக்ஷம், கைலாயம் என்னும் வார்த்தையைவிட மிக்க விளம்பரமும் மக்களின் கவர்ச்சியும் பெற்று விட்டது. இவ்வளவு மாத்திரம் அல்லாமல் “சுயராஜியம் கடவுள் யெத்தனத்தாலும் கடவுள் சித்தத்தாலும் அடையப். படவேண்டியது” என்றும் அதன் சர்வாதிகாரியான திரு.காந்தி அவர்களால்:
355 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சொல்லப்படுவதாகி இனி அதற்காக வேறு கடவுள் தயவை எதிர்பார்த்து அர்ச்சனைகள் பிரார்த்தனை கள் செய்யப்பட வேண்டியதாகவுமாய்விட்டது. ஆனால் சுயமரியாதைக்கு அந்தக் கடவுள் தயவு தேவையில்லை என்ப தோடு, அந்தக் கடவுளைப் பற்றிய கவலையும் வேண்டியதில்லை என்று சொல்வதோடு சகலமும் சுய முயற்சியினாலேயே ஆக வேண்டும் என்றும் சொல்லப்படுவதாகும்.
அதுமாத்திரமல்லாமல் சுயமுயற்சியை விட்டு கடவுள் தயவுக்கும்,
கடவுள் செயலுக்கும் இதுவரை எதிர்பார்த்திருந்ததின் பலனே நமது நாட்டுக்கு இன்று சுயமரியாதை இவ்வளவு இன்றியமையாத அவசியமாய் போய் விட்டதென்றும் அது சொல்லுகின்றது.
நிற்க, இன்றைய தினம் கருத்தில்லாமல் கற்பிக்கப்பட்டிருக்கும் சுயராஜியம் என்னும் போலி வார்த்தைக்கு ஆதாரமாகப் பல காரணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்னன. அவை என்னவெனில்,
“இந்த நாட்டு மக்களுக்கு கல்வியில்லை, செல்வமில்லை. தொழிலில்லை மற்றும் அநேக குறைகளிருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் சுயராஜியமில்லாததே. ஆதலால் சுயராஜியம் சம்பாதிக்க வேண்டும்” என்பதாகச் சொல்லப்பட்டு பாமர மக்களை நம்பச் செய்து பட்டினி கிடப்பவர்களையும் வேலையில்லாமல் திண்டாடுவோரையும் சிறு பிள்ளைகளையும் சோம்பேரிக் கூட்டங்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றது. ஆனால் நான் இவற்றிற்கு அதாவது கல்வி, செல்வம்தொழில் முதலாகியவை நமது நாட்டில் இல்லை என்பதற்கும் இவை மாத்திரம் இல்லாமல் மற்றும் அறிவு, ஆராய்ச்சி, முற்போக்கு, ஈவு, இரக்கம், ஒழுக்கம், நியாயம், நீதி, மனிதத்தன்மை முதலாகியவைகூட இல்லாமல் போனதற்கும் நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லா
மல் போனதே காரணம் என்று சொல்வதோடு, சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி மேல்கண்ட சாதனங்களை மக்கள் அடையச் செய்யும் பாதை களை அடைக்கவே “சுயராஜிய முயற்சி” என்பது புதிதாகக் கற்பிக்கப்பட்டி ருக்கின்றது என்றும் நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அன்றியும், சுயராஜிய முயற்சி என்பது வெரும் “வெள்ளைக்காரனைப் பற்றி வசை புராணம் பாடுவதன் மூலமே அவனுக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வேண்டு மென்பதின் மூலமே நமது கஷ்டமெல்லாம் நீங்கி விடும்” என்று சொல்லப்: பட்டு வருவதோடு இதுவரை அப்படியே செய்யப் பட்டும் வரப்படுகிறது.
ஆனால் சுயமரியாதை இயக்கம் சுயராஜிய முயற்சியைப்போல் எல்லாப் பொறுப்பையும் வெள்ளைக்காரன் மீது சுமத்தி அவனைப் பற்றிப் பேசுவதிலேயே காலம் கழித்து அவனுக்குக் கஷ்டம் கொடுப்பதிலேயே நமது ஊக்கத்தையும், முயற்சியையும் செலவழிப்பதில் கவலை கொள்ளு வதில்லை. ஆனால் அவர்களதுவெள்ளைக்காரர்களது! அக்கிரமத்திற்
குடி அரசு - 19310) 356
காதாரமானதும், இடங்கொடுப்பதும், கொடுத்துக்கொண்டு இருப்பதானதுமான விஷயம் எது - யாரால்? என்று கண்டுபிடித்து அதாவது அந்த அக்கிரமங் களுக்கு எது தூண்களாய் இருந்து தாங்கிக் கொண்டிருக்கின்னனவோ அவைகளை பரித்துக் கீழே தள்ளும் வேலையில் ஈடுபடச் செய்கின்றது.
ஆகவே நாட்டில் உள்ள குறைகளை ஒப்புக்கொள்ளுவதில் சுயராஜி யத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக வித்தியாசமில்லை. அதற்கு ஆதாரமான காரணங்களை கண்டு பிடிப்பதிலும் காரணஸ்தர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்களே தாங்கள் தப்பித்துக் கொள்ள அன்னியர் பேரில் பழி சுமத்துவதையும் மாத்திரம் சுயமரியாதை இயக்கம் நம்பி ஏமாந்து போவ தில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
உதாரணம் வேண்டுமானால் பாருங்கள்.
கல்வியில்லை என்பது வாஸ்தவந்தான், ஆனால் யாருக்குக் கல்வி இல்லை? பார்ப்பனர் ஒழிந்த ஏனையோருக்குதான். அதிலும் பள்ளு, பறை என்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விவசாயம், கைத்தொழில் ஆகிய வைகள் செய்யும் சரீரப் பிரயாசைப்படும் மக்களுக்குத் தான் கல்வியில் லையேயொழிய வேறென்ன?
ஆனால் பாடுபடாத சோம்பேறிக் கூட்டமான பார்ப்பனர்கள் எல்லோருமே நமது நாட்டில் படித்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா என்று கேட்கிறேன். இதற்கு வெளைக்காரர் காரணமா - சுயராஜியம் இல்லாதது காரணமா? அல்லது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியும், அதனால் ஏற்படவேண்டிய பகுத்தறிவு இல்லாததும் காரணமா? என்பதை உங்கள் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
இன்றைய வெள்ளைக்கார அரசாங்கத்தில் அதாவது சுயராஜிய மில்லாத அரசாங்கத்தில் பார்ப்பனர்கள்தான் படிக்கவேண்டுமென்றாவது, அவர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக்கூடாது என்றாவது, எங்காவது சட்ட மிருக்கின்றதா? அல்லது அவர்களது ஆட்சியில் மற்றவர்கள் படிக்க வசதி செய்யப்படாமலாவது, ஏதாவது சட்டபூர்வமான தடைகள் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் 100க்கு கால்பங்கு கூட படித்தவர்கள் இல்லை. பெண் மக்களில் 100க்கு அரைப் பங்கு கூட படித்தவர்கள் இல்லை. விவசாயம், கைத்தொழில் முதலியவை செய்யும் வகுப்பார்களில் 100க்கு ஒருவர் கூடபடித்தவர்கள் இல்லை. ஆனால் பார்ப்பனர்களில் 100க்கு100 பேர்கள் படித்தவர்களாக இருக்கின்றார்களே. இதற்கு என்ன காரணம் சொல்லுகின்றீர்கள்? என்று கேட்கிறேன். இது சுயராஜியமில்லாததாலா?
357 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை இல்லாததாலா? என்ற கேள்விக்குத் தயவு செய்து பதில் சொல்லுங்கள்.
ஒரு சமயம் பணம் இல்லாததால் பார்ப்பனரல்லாதார் படிக்க முடியவில்லை என்று சொல்ல வருவீர்களானால் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் எப்படி பணம் சேர்ந்தது? அவர்கள் உங்களைவிட அதிகமாகப் பாடுபட்டு பணம் சம்பாதிக்கின்றார்களா? அவர்கள்தான் தங்களையே அடிக்கடி தாங்கள் பிச்சை வாங்கி உண்ணும் ஜாதி என்றும், புரோகிதம் செய்தும், மணி யாட்டியும், தட்சணையும், உபதானமும் பெற்று வயிர் வளர்க்கும் ஜாதி யென்றும் பல தடவை அவர்களே தாராளமாய்ச் சொல்லிக்கொண்டிருக் கிறார்களே! இன்றும் அந்தப்படி தான் பலர் இருந்தும் வருகிறார்களே. இதை நீங்கள் அறியாததா? இப்படி இருக்க அவர்கள் மாத்திரம் எப்படி 100க்கு 100
பேர் படித்தார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். சுயமரியாதை உணர்ச்சி உண்டாகி பகுத்தறிவு உங்களுக்கு ஏற்பட்டுவிடுமானால்தான் இந்த இரகசியத்தை நீங்கள் சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியும்.மற்றபடி உங்களுக்கு விளங்கவே விளங்காது.
சும்மா வாயில் சுயராஜியம், சுயராஜியம் என்று கூறிக்கொண்டு கொடி யைச் சுமந்துகொண்டு வந்தேமாதரம் என்று பிதற்றித்திரிய வேண்டியதுதான் நமது மக்களின் வேலையாகிவிட்டது. ஆனால் இதனால் என்ன பலன் கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்? என்கின்ற அறிவு பூஜியமாகிவிட்டது. இன்னமும்நிர்தாட்சன்னியமாய் நான் பேசுவது என்றால் சுயராஜியம் என்பது இருந்த காலத்தில் தான் அதாவது அன்னிய ஆட்சி என்பது இல்லாத காலத்தில்தான் இந்தியமக்களில் இன்னும் அதிகமான எண் ணிக்கை உள்ள மக்கள் தற்குறிகளாய் இருந்திருக்கின்றார்கள். அன்னிய ராஜியம் ஏற்பட்ட பின்னரே “பள்ளு, பறை” தொழிலாளி - பெண்கள் ஆகிய எல்லா வகுப் பாரும் படிக்கலாம் என்கின்ற சட்டமும் அனுமதிப்பும் ஏற்பட்டது. அன்னிய
அரசாகஷியில் ஏற்பட்ட இந்த சட்டமும் அனுமதியும் கூட இன்று சுயராஜியம் கேட்கும் மக்களாலேயே ஆக்்ஷேபிக்கப்பட்டு வருகின்றது. அனேக கிராமங்களில் பள்ளு, பறை பிள்ளைகள் படிக்க சர்க்கார் பணமும் இடமும் கொடுத்தாலும், சுயராஜியம் கேட்கின்ற தேசிய வாதிகள், தேச பக்தர்கள், காங்கிரஸ்வாதிகள் ஆகிய ஜனங்களிலேயே பலர் பள்ளிக்கூடத்தில் உட் காரவோ, பள்ளிக்கூடம் இருக்கும் இடத்திற்கு நடந்து போகும் தெருவையோ அனுமதிப்பது கூட இல்லை. தேசீயவாதி களிலேயே கூட தேசபக்தர் களிலேயே கூட இப்படிப்பட்டவர்கள் இருந்தால் மற்ற மக்களின் ஆக்ஷே பணை எவ்வளவு இருக்கும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றேன்.
இந்தக் கொடுமையை ஒழிக்க சுயராஜியத்தில் வழி யிருக்கின்றதா? அல்லது சுயமரியாதையில் வழி இருக்கின்றதா? என்று இப்போது யோசித்துப்
குடி அரசு - 19310) 358
பாருங்கள். முதலாவது முன்னால் இருந்து வந்த நமது சுயராஜிய அரசாங்கத்தில் ஒரு கூட்டத்தார்தான் படிக்கலாம். மற்றக்கூட்டத்தார். படிக்கக்கூடாது என்று சட்டமிருந்தும் இன்னும் அது நமது மத தர்மமாய் இருப்பதும், அன்னிய ராஜியத்தினாலேயே அவை முழுவதுமாய் தலை. காட்டச் செய்யாமல் மறைக்கப்பட்டிருப்பதும் அன்னிய ராஜியம் மறைந்த உடன் அவை அதாவது மததர்மம் என்னும் பேரால் மறுபடியும் தலைதூக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றேன்.
நாளைய தினம் இந்த திரு.காந்திக்கே சக்கரவர்த்திப்பட்டம் சூட்டினா.
லும் இந்த மத தர்மங்கள்அழிக்கப்பட முடியுமா என்று உங்களைக் கேட் கின்றேன். அவரைச்சுற்றித் திரிகின்றவர்கள் யார் என்று பாருங்கள். இந்தக்
காந்தியும் அவரது இந்தக் கூட்டமும் நாளைக்கு இந்தத்துறைகளில் ஏதாவது நன்மை செய்யக்கூடுமானால் இன்று அவர்கள் செய்வதை யார் தடுக்கின்றார்கள் என்று நான் கேட்கின்றேன்.
செல்வம்
இதுபோலவே செல்வநிலையும் மிக மோசமானதுதான் என்பதை நான். ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், யாருடைய செல்வநிலை மோசமா னது? என்பதை யோசித்துப் பாருங்கள். பாடுபட்டு உழைப்பவர்களுடைய வும், யோக்கியமானவர்களுடையவும், செல்வநிலைதான் மோசமாக இருக் கின்றதே தவிர சோம்பேரிகள், சூக்ஷிக்காரர்கள், வஞ்சக்காரர்கள், கல் மன முடையவர்கள் ஆகியவர்களுடைய செல்வநிலை எங்காவது மோசமாக இருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள்.
எந்த நாடாவது சோம்பேரிகள் எல்லாம் மூக்குபிடிக்க சாப்பிட்டு அவர்களது பெண்டு பிள்ளைகள் எல்லாம் மோட்டார் சவாரி செய்து கொண்டு மாட மாளிகைகளில் குடிஇருக்கும்படியான மேன்மையில் இருந் தால். அந்தநாடு செல்வநிலையற்ற நாடு ஆகுமா? அல்லது சுயமரியாதை அற்ற மூடர்களையுடைய நாடு ஆகுமா என்று கேட்கின்றேன்.
இந்த மூடத்தனம் ஒழிய சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா? என்று யோசித்துப்பாருங்கள். இன்று உங்களுக்கு சுயராஜியம் வேண்டுமென்கிற ஆட்கள் எல்லாம் பெரிதும் நான் மேலே சொன்ன பாடுபடாமல் சோம்பேரியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிர் வளர்க்கும் வஞ்சகர்களும், அவர்களது கூலிகளும் அல்லாமல் ஏதாவது ஒருவர் இரண்டு கூடை மண் வெட்ட தகுதி உடையவரோ அல்லது ஒரு நாலு பரி தண்ணீர் இறைக்கும் அறிவுள்ளவரோ, அல்லது ஒரு மூட்டை தூக்க தகுதி யுடையவரோ அல்லது ஏதாவது ஒரு சரீரத் தொழில் புரிய யோக்கியதை உடையவராகவா இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்த்துக் கண்டு
பிடித்துச் சொல்லுங்கள் என்று கேட்கின்றேன். மதத்தின் பேரால் காவி கட்டி
359 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சன்னியாசிகளாகி மோகஷத்திற்குப் பிரசாரம் செய்யும் சோம்பேரிகளுக்குச் சமமாக மற்றொரு வேஷம் போட்டு சுயராஜியப் பிரசாரம் செய்கிறவர்கள் தவிர பாடுபடுவதற்குத் தகுதி உடையவர்கள் எத்தனை பேர் என்று கேட்கின்றேன். மற்றும் ஒவ்வொரு தனி மனிதனின் வரும்படி இந்த நாட்டில் எவ்வளவு வரையில் இருக்கின்றது பாருங்கள். வருஷம்!0 லக்ஷம் 8 லக்ஷம் வரும்படி உள்ள தனி மனிதர்கள் எவ்வளவு பேர்கள் இருக்கின்றார்கள். ஆள் ஒன்றுக்கு 1000, 2000, 5000, 10000 ஏக்கராக்கள் நிலமுடையவர்கள் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள். இந்த யோக்கியதையில் இவர்கள் இருப்பதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதைகள் இருக்கின்றன? நாட்டுக்கு இவர்களால். என்ன நன்மைகள் இருந்து வருகின்றன? என்று யோசித்துப் பாருங்கள்.
மற்றும் இவர்களாவது ஒரு வகையில்நகரும் பிராணிகளாக இருக்கின்றார்கள். மற்றபடி நகராத ஜெந்துக்களாகிய கடவுள்களுக்கு - குழவிக்கல்லுக்கு - எடுத்து உட்காரவைக்கும் - தூக்கிச்செல்லும் ஜீவன்களான பண்டார சன்னதிகள் சங்கராச்சாரியார் ஆகிய நகரா ஜெந்துக்களுக்கு இந்த நாட்டில் எவ்வளவு செல்வம் எவ்வளவு வரும்படி இருக்கின்றது என்பதை சற்று கவனித்துப் பாருங்கள்.
இந்தப்படி செல்வமுள்ள நாட்டின் செல்வநிலை போராது என்று ஒருவன் சொன்னால் அவன் மூடன் அல்லது உண்மையை மறைப்பவன் என்று கருதுவீர்களா அல்லது பெரிய தேசபக்தன் தேசியவாதி என்று கருது வீர்களா என்று கேட்கின்றேன். இந்தப்படியான செல்வநிலை மாற சுயராஜி
யம் வேண்டுமா, சுயமரியாதை வேண்டுமா என்பதை இப்பொழுதாவது நன்றாய் யோசித்துப்பாருங்கள். கன்னியாகுமரி முதல் கல்லுருவங்களை: எடுத்துக்கொள்ளுங்கள். கன்னியாகுமரி அம்மனுக்கு மாதத்திற்கு 3-நாள் வீட்டிற்கு தூரமாகின்ற சடங்குகள்கூட செய்யப்படுகின்றது. அவ்வளவு சக்தியுள்ளசாமி: ஆணால் அந்த சுத்துப்பிரகாரத்துக்குள், காந்தி,லாலா லஜபதி முதலிய எப்பேர்பட்ட மகாத்மாக்களும் தேசபக்தர்களும், தேசீயவாதிகளும் கூடபோகக் கூடாது.
இந்த நிலையில் ஒரு கல்லுக்கு இருக்கும் கெளரவம், செல்வம், கட்ட
டம், பூஜை, உற்சவம், வீட்டுக்குத்தூரமான சடங்கு ஆகியவற்றிற்கு செலவு எவ்வளவு என்று கருதுகிறீர்கள். அதற்கு 5 மையில் அடுத்தாப்போல் உள்ள சுசீந்திரத்திலுள்ள ஒரு கல்லுக்கு தினம் 10 மூட்டை அரிசி வேகவைத்துப் படைக்கப்படுகின்றது. அந்தக் கல்லு இருக்கும் இடத்திற்கு கால்மைல் தூரத்திற்கு இப்பால் கூட சில மனிதர்கள் நடக்கக்கூடாது. இதற்கு வருஷந். தோரும் கல்யாணம் முதலிய அநேக ஆடம்பரங்கள் இப்படியே. அதற் கடுத்த வானமாமலை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்திருப்போரை, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகர், ஸ்ரீவில்லிபுத்தூர்., ராமேஸ்வரம், திருப்பரங்குன்றம், மதுரை, பழனி முதலிய இடங்களின் செல்வமும், செலவையும் பார்த்துவிட்டு அவசர அவசரமாகவே ஸ்ரீரங்கத்
குடி அரசு - 19310) 260
திற்கு வந்து பாருங்கள். இந்த கோவில் திருபணி கும்பாபிஷேகம் தைலக்காப்பு உற்சவம், பூஜை, சொத்து, நகை, வாகனம், கட்டடம் ஆகிய வைகளை கணக்குப் பாருங்கள். இதுபோன்ற மற்ற தஞ்சை, வடஆற்காடு, செங்கல்பட்டு ஜில்லாக்களையும் கணக்குப் பாருங்கள். மற்றும் ஒவ்வொரு கிராமத்திய கிராமதேவதை பிறகு அவனவனு டைய குலதேவதை குலகுரு வரையிலும் கவனித்துப் பாருங்கள். இந்தச் சொத்தும் செலவும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் நாடு உண்மையிலேயே செல்வமில்லாத நாடா? என்பதை தயவுசெய்து நடுநிலைமை யிலிருந்து யோசித்துப்பாருங்கள்.
இந்த செல்வமும் செலவும் மக்களுக்கு பிரயோகிக்கப்பட்டால் இந்த நாட்டிற்கு வேறு என்ன தேவை இருக்கும் என்று கேட்கின்றேன். இதற்கு சுயராஜியம் வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா?என்று யோசித்துப்
பாருங்கள். இதைத் திருத்துவதற்கு எந்த சுயராஜியத்திலாவது திட்டம் இருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள். சர்வாதிகாரி காந்தி சுயராஜிய திட்டத்தில் ராமராஜியதிட்டம் போட்டாய்விட்டது. அதாவது மத விஷயத்
தில் பொதுவில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. பூரண சுயேச்சைக்கும் மேல்பட்ட போல்ஸ்விக்வீரர் ஜவர்லால் அவர்கள் சுயராஜிய திட்டத்திலோ செத்தவர் எலும்பு கங்கையில் போட்டால்தான் அவரது ஆத்மா மோக்ஷ மடையும் என்கிற திட்டம் போட்டாய்விட்டது காலம் தவறாமல் பிண்டங் களும் போட்டுக்கொண்டு வரப்படுகின்றது.
இந்த நிலையில் இந்தக் கோவில்கள் இடிபடவும் இந்தச் சாமிகள் அழி படவும் இந்த சோம்பேரி மடாதிபதிகள் சங்கராச்சாரிகள் ஏர் உழும்படியும், செய்யப்பட இவர்களது சுயராஜியத்தில் இடம் உண்டா என்று கேட்கின் றேன். இந்த சொத்துக்கள் வரும்படிகள் எல்லாம் பாடுபடும் மக்கள் வயி றார கஞ்சிகுடிக்கவும் ஏமாற்றப்படாமல் இருக்கவும் இவர்களது சுய ராஜியத்தில்: இடம் உண்டா என்று கேட்கின்றேன்.
சொத்துக்களையெல்லாம் சிலர் கைவசப்படுத்திக் கொண்டு பாடுபடுப வர்களின் வரும்படிகளையெல்லாம் சோம்பேரிகள் அனுபவித்துகொண்டு பாடுபடுபவனுக்கும் தொழிலாளிக்கும் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச வரும் படியையும் கல்லுக்கும் குட்டிச்சுவற்றிற்கும் அழுகும்படி செய்து கொண்டு இருக்கின்ற ஒரு நாட்டுக்கு சுயமரியாதை வேண்டுமா? அல்லது சுயராஜியம் வேண்டுமா ? என்று யோசித்துப் பாருங்கள்.
சுயராஜியம் வந்தால் இந்த வீண் செலவுகளில் எதையாவது நிறுத்த முடியுமா? இந்தக் கோவில்களில் எதையாவது இடிக்கமுடியுமா? இந்தச் சாமிகளில் எதையாவது ஒழிக்க முடியுமா? என்று பாருங்கள்.
ஒவ்வொரு சாமிக்கும் 7- சுத்து கோட்டைச்சுவர்கள் போன்ற மதில். களும் 5, 6 பிரகாரங்களும் ஆகிய இவைகள் எல்லாம் எதற்கு? இவைகள்
361 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இல்லாவிட்டால் சுவாமிகள் ஓடிப்போகுமா? ஓடிப்போனால்தான் என்ன கெடுதி ஏற்பட்டு விடும்? அல்லது சுவாமி என்றால் என்ன? அது ஒரு குற்றவாளியா? அல்லது கைதியா? அல்லது சிறைபிடிக்கப்பட்ட அடிமையா? இந்த மாதிரி அடைப்பட்டுக்கிடக்கும் சிறிதும் சுமரியாதை இல்லாத சாமியை கும்பிடுகின்ற மக்களுக்கு சுயமரியாதை எப்படி ஏற்படும்? அந்த சாமிகள் ஒழிந்தாலல்லது சுயமரியாதை ஏற்படமார்க்க மில்லை. இந்த மாதிரி சாமிகள். ஒழிய எந்த சுயராஜியத்திலும் திட்டமில்லை என்பது தெரிந்தும் சுயராஜியம், சுயராஜியம் என்று வீணாய் உளறுகின் றோம். இந்த மாதிரி நாட்டையும் ஜன சமூகத்தையும் தேசத்தின் செல்வத் தையும் பாழாக்கும் சாமிகள் முதலில் ஒழியவேண்டும். ஏழைகளின் - உழைப்பாளிகளின் செல்வத்தை கொள்ளை: யடித்த பணக்காரர்கள் “கடவுள் செயலால் பணம் கிடைத்தது” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டிருப்பதும் ஏழைகள் பாடுபட்ட பொருள்களை: ஏமாற்றுக்காரர்கள் கொள்ளை கொண்டுவிட்டால் அதை உணராமல் “கடவுள் செயல்” என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடப்பதற்கும் ஆதாரமான “கடவுள் செயல்” “தலைவிதி” என்பவைகள் முதலில் ஒழியவேண்டும். இவை ஒழிவதற்கு சுயராஜியத்தில் இடமிருக்கின்றதா? சுயமரியாதை இயக்கத்தில் இடமிருக் கின்றதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
மற்றும் இதுபோலவே விவசாயம், அறிவு, ஆராய்ச்சி, வலிமை முதலிய பல காரியங்களுக்கும் சுயராஜியத்தில் சிறிதும் இடமில்லை என்றும் சுயமரியாதை ஒன்றினாலேயே தான் இவைகளை சுலபத்தில் அடையலாம்.
குறிப்புதிருச்சிநகரவை பொதுமண்டபத்தில் 17051931 அன்று ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 24.05.1931
குடி அரசு - 19310) 262
தீண்டாமை
உலகத்திலுள்ள கொடுமைகள் எல்லாவற்றையும் விட, இந்தியாவில் மக்களை மக்கள் தீண்டாமை என்கின்ற இழிவு சம்மந்தமாக செய்துவரும் கொடுமையேமிகப் பெரிதாகிய கொடுமையென்றும், அதற்குச் சமானமாக வேறு எந்தக் கொடுமையையும் கூற முடியாதென்றும், எல்லா மக்களாலும் அரசியல் சமூக இயல் வாதிகளாலும் சொல்லப்பட்டு பொது மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமுமாகும். ஆனால், அது விஷயத்தில் மாத்திரம் பயன்படத்தக்க வழியில் ஏதாவதொரு முயற்சியை இதுவரையில் யாரும்
எடுத்துக் கொள்ளாமலேவெறும் வாய்ப்பந்தல் போடுவதினாலேயே மக்களை ஏமாற்றிக் கொண்டு காலங்கழித்து வருவதும் பிரத்தியட்சத்தில் தெரிந்த காரியமாகும்.
சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சட்டமறுப்பு கிளர்ச்சியில் உப்புக் காய்ச்சுவது, வனத்தில் பிரவேசிப்பது, கள்ளுக்கடை மறியல் செய்வது, ஜவுளிக்கடை மறியல் செய்வது, என்பவைகள் போன்ற சில சாதாரணமானதும், வெறும் விளம்பரத்திற்கே ஆனதுமான காரியங்கள் செய்யப்பட்டு 40 ஆயிரம்பேர் வரையில் ஜெயிலுக்குப் போயும் அடிப் பட்டும் உதைபட்டும் கஷ்டமும்பட்டதாக பெருமை பாராட்டிக் கொள்ளப் பட்டதே தவிர இந்த மிகக் கொடுமையான தீண்டாமையென்னும் விஷயத் தைப்பற்றி எவ்வித கவலையும் யாரும் எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. இதற்குக் காரணம் ஒருசமயம் இது மேல்கண்ட மற்றவைகளைப் போன்ற அவ்வளவு முக்கியமான காரியம் அல்லவென்று அரசியல் காரர்கள் கருதியிருப்பார்களோ என்னவோ என்பதாக யாராவது சமாதானம் சொல்லக் கூடுமா? என்று பார்த்தால் அந்தப்படியும் ஒருக்காலும் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.
ஏனெனில் “தீண்டாமை மிக்க கொடுமையானது” என்றும், “தீண்டாமை ஒழியாமல் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வராது” என்றும், “வந்தாலும் நிலைக்காது” என்றும், உயர்திரு. காந்தியவர்களே பல தடவை சொல்லியிருப்பதோடு “இந்திய அரசியலில் தீண்டாமை விலக்கையே முக்கிய திட்டமாக வைத்து வேலை செய்ய வேண்டும்” என்றும் சொல்லி அரசியல் திட்டத்திலும் தீண்டாமை ஒழிப்பதற்கு பிரதான ஸ்தானமும்
363 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கொடுக்கப்பட்டிருக்கின்றது யாவரும் அறிந்ததாகும்.
இவ்வாரம் கூடிய சேலம் ஆதிதிராவிடர் மகாநாட்டில் தலைமை வகித்த ராவ்பகதூர் எம்.சி.ராஜா அவர்கள் தமது தலைமைப் பேருரையில் சொல்லியிருப்பது போல் அதாவது,
“4921ம் வருஷத்திய காங்கிரசில் சுயராஜ்யம் பெறுவதற்கு தீண்டாமையை ஒழிக்க வேண்டியது முதற் கடமையாகும். சுயராஜ்யம் பெறுவதற்கு முன்னாலேயே தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமே யல்லாமல் அது சுயராஜ்யம் பெற்ற பிறகு செய்ய வேண்டியவேலையல்ல”
என்றும் தீர்மானித்திருப்பது மாத்திரமல்லாமல், சென்னை யில்
திரு. காந்தியவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும் போது,
“தீண்டாமை யென்னும் கொடுமையை ஒழிக்காவிட்டால் சுய ராஜியத்திற்கு வழியில்லை. சுயராஜ்யம் பெற மார்க்கமும் ஏற்படாது” என்றும் சொல்லியிருக்கின்றார்.
இந்தப்படி எல்லாம் திரு.காந்தியவர்கள் சொல்லியிருந்தும், மற்றும் காங்கிரஸ் திட்டத்தில் தீண்டாமையை முதல் திட்டமாக வைக்கப்பட்டு இருந்தும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் அதாவது தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் இதுவரை என்ன செய்திருக்
கின்றது?
உண்மையைக் கூறவேண்டுமானால் காங்கிரசானது இது வரையில் தீண்டாமை விலக்குக்காக யாதொரு வேலையும் செய்ய வில்லை என்று நான் தைரியமாய்க் கூறுவேன். காங்கிரசுக்காரர்கள் இந்து முஸ்லீம் பிரச்சினை ஒன்று மட்டும் தீர்ந்து விட்டால் போதுமென்று நினைக்கின்றார்கள்.
அன்றியும், “தீண்டாமை ஒழியாமல் எவ்வளவு விரிவான சுயராஜ்யம் பெரினும் அதை அடுத்த நிமிஷமே இழக்க நேரிடும்” என்றும், “சர்க்கார் நம்மை அடக்கி ஆளுகிறார்கள், நாம் தீண்டாதார். களை அடக்கியாள விரும்புகின்றோம். ஆகையால் சர்க்காருக்கும் நமக்கும் வித்தியாசமில்லை. ஆதலால் தீண்டாமை யொழியும்வரை
நாம் சுயராஜ்யத்திற் கருகதை இல்லை” என்றும் சென்ற வருஷத்தில் கூட திரு. காந்தியவர்கள் சொல்லியிருக்கின்றார்”
என்று பேசியிருக்கிறார்.
மேலும் திரு.1.. ராஜா பேசி இருப்பதாவது,
குடி அரசு - 19310) 264
மோதிலால் நேரு தீண்டாமைக்கு இந்துக்களே பொருப்பாளி.
கள் என்றும் லாலா லஜபதி, மாளவியா, ஜெயகர், சாப்ரூ முதலிய
இந்துத் தலைவர்கள் “தீண்டாமையை வைத்துக் கொண்டு சுயராஜியம் கேட்பது ஒன்றுக்கொன்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதாகும்”
எனவும் கூறியிருக்கிறார்கள். இவை தவிர இந்து மகா சபையும்,
“தீண்டாதார்களை கோவில், குளம், பள்ளிக்கூடம், கிணறு, ரஸ்தா ஆகியவைகளில் சமஉரிமை அனுபவிக்க உரிமை அளிக்க வேண்டும்” என்று தீர்மானம் செய்து இருக்கின்றது”
என்றும் பேசிவிட்டு கடைசியாக பேசியிருப்பது என்னவென்றால்:-
“4921-ம் வருஷத்திலும் 1928-ம் வருஷத்திலும் காங்கிரசுகளில் இது விஷயமாய் செய்த தீர்மானங்கள் எல்லாம் பிறந்த உடனேயே செத்துப் போய்விட்டது. மகாத்மாவும் காங்கிரஸ்காரரும் சர்க்காரை எதிர்த்து, உப்பு சத்தியாக்கிரகம் செய்ததில் ஒரு பகுதியையாவது, இந்து மகா சபையார் முஸ்லீம்களை எதிர்த்துப் போராடும் முயற்சியில் ஒரு பகுதியையாவது மேல்கண்ட தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவர உபயோகித்திருப்பார் களேயானால் இந்த நாட்டில் சுயேச்சைக்கு பாதக மளித்து வரும் தீண்டாமைக் கொடுமை அடியோடு ஒழிந்து போயிருக்கும். இனியாவது மகாத்மா காந்தி இதை கவனிப்பாரா?”
என்பதாக பேசி இருக்கின்றார். இந்தப்படி திரு1.. ராஜா அவர்கள் பேசி இருப்பதில் ஒரு சிறு எழுத்தையாவது எந்த காங்கிரஸ்வாதியோ அல்லது தேசீயவாதியோ ஆக்ஷேபிக்க முடியுமா? என்று பந்தயம் கூறி கேட்கின்றோம்.
தீண்டாமை ஒழிய வேண்டும் என்கின்ற விஷயத்தில் நாம் தீண்டா தார்களை தூக்கி நிறுத்திவிடப் போவதாக எண்ணிக்கொண்டு பேசுவதாக
வும், அவர்களுக்கு நாம் வக்காலத்துப் பேசிவருவதாகவும் யாவரும் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதாக தெரிவித்துக் கொள்ளு கிறோம். மற்றெதற்காக நாம் பாடுபடுகின்றோம் என்றால் அனேக விஷயங். களில் நாமும் அதாவது தீண்டாதார் அல்லாதார்கள் என்று கருதிக் கொண்டி ருக்கின்ற பார்ப்பனரல்லாதார்களும், தீண்டாதாராகவும் கிட்ட நெருங்காதாரா கவும் பாவிக்கப்பட்டு வருகின்றோமே என்கின்ற சுயமரியாதை உணர்ச்சி யினால் தான் என்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
ரயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இந்தியர்கள் ஓட்டலிலும், பொதுத் தெருக்களில் இருக்கும் காப்பிக்கடை, பலகாரக்கடை, சாப்பாட்டுக் கடை,
365 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஓட்டல்களிலும், கோவில், சில குளம் முதலியவைகளிலும், சில பொதுப் பள்ளிக்கூடங்களிலும், தீண்டாதாராகவே மதித்து ஒதுக்கப்படுகின்றோம் என்ற காரணத்தினாலேயே தான்.
கடுகளவாவது ஒருமனிதனுக்கு சுயமரியாதை இருந்தால் இந்த விஷயங்களெல்லாம் எந்த மனிதன் மனதுக்கும் கஷ்டமாகத் தோன்றாதா என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்.
உயர்திரு. சென்குப்தா அவர்கள் தென்னாட்டு சுற்றுப்பிரயாணத்தில் பல இடங்களில் காங்கிரஸ் சம்பந்தமாக பேசியதில்,
“அமரிக்காவில் நீக்கிரோவர்களை அமரிக்கர்கள் நடத்துவது காட்டுமிராண்டித்தனம் என்று கருதி இருந்தேன். ஆனால், இப்போது இங்கு வந்து பார்த்த பிறகு அமரிக்கர்களைவிட இந்த நாட்டில் பிராமணர்கள் தீண்டாமை விஷயத்தில் காட்டு மிராண்டித்தனமாய் நடந்து கொள்ளு கிறார்கள் என்பதாக உணருகிறேன்.” என்று பேசியதோடு “இந்த மாகாண காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை ஒழிக்கும் வேலையைவிட்டு விட்டு வேறு மறியல் வேலையிலும், கொடியெடுத்துக்கொண்டு திரியும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது காங்கிரசுக்கு அவமானம்” என்றும் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறார். இதை எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்க வேயில்லை. அது மாத்திரமல்லாமல் கோபியில் சில பார்ப்பனர்கள் திரு. சென்குப்தாவை பேச விடாமல் கூட்டத்தில் ஏதோ குழப்பம் செய்ததாகவும் தெரியவருகின்றது.
நிற்க,திரு.சென்குப்தாஅவர்கள்மற்றொரு கூட்டத்தில் பேசும் போது,
“இந்திய காங்கிரஸ் பிரிட்டிஷாரை இந்திய இராணுவ மேற்பார்வை யை இந்தியர்கள் வசமே விட்டுவிட வேண்டுமென்று கேட்கின்றதே. அந்தப்படி ஒரு சமயம் இராணுவ சுதந்திரமும் இந்தியருக்குக் கிடைத்து விட்டால் ஒவ்வொரு இந்திய சிப்பாயிக்கும் இன்றைய நிலையில் ஒவ் வொரு சமையல் அறைகள் வேண்டியிருக்குமே. காங்கிரஸ் இதற்கென்ன செய்யப் போகின்றது? நாம் யுத்தத்திற்கு எத்தனை ஆள் சேர்க்கவேண்டு மோ அத்தனை ஆட்களுக்கும் தனித் தனி சமையல் அறையும், சமையல் ஆட்களும் அல்லவா நமக்கு வேண்டியிருக்கும்? இந்தத் தொல்லையை வைத்துக்கொண்டு நாம் எப்படி இராணுவத்தை நடத்த முடியும்?” என்று கூட சொல்லியிருக்கிறார்.
சென்னை மாகாண காங்கிரஸ் வீரர்கள் வெள்ளைக்காரனைத் திட்டும் வரையில் கை தட்டி சிரித்துக்கொண்டும், தீண்டாமையைப்பற்றிப் பேசும் போது தலையைத் தொங்கப் போட்டு “பூமாதேவி” யுடன் இரகசியம் பேசிக் கொண்டும் இருந்தார்களே யொழிய அதைப்பற்றி சிறிது கூட கவலை செலுத்தினதாகத் தெரியவில்லை.
குடி அரசு - 19310) 266
இவை ஒருபுறமிருக்க, சென்னை மாகாண பார்ப்பனர்கள் இப்போது புதிதாக ஒரு முயற்சி செய்து வருகின்றார்கள். அதென்னவென்றால் தீண்டாதார்களை நகரங்களுக்குள் கக்கூசு எடுக்கப் போடுவதால் பிராமணர்
கள் சரியாய் நடமாடுவதற்கில்லாமல் தீட்டுப்படுகின்றார்கள் என்றும், ஆதலால் ஜாதி இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரை மலம் எடுக்க முனிசிபா லிடியார் நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறார்கள்.
ஆகவே இவைகளுக்கெல்லாம் இப்பொழுதுதான் ஆகட்டும் இந்திய தேசிய காங்கிரசுக்கோ உயர்திரு. காந்திக்கோ, வீரர் ஐவர்லால் நேருவுக் கோ உண்மையில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்கின்ற கவலையும் ஆசையும் இருக்குமானால் இந்த “யுத்தறிறுத்த” ஒப்பந்தத்தின் பயனாய் ஏற்பட்ட ஓய்வு காலத்தை இந்தத் தீண்டாமையை ஒழிக்கும் வேலையில் செலவிடும்படியான ஏற்பாட்டை ஏன் செய்யக்கூடாதென்று தான் கேட் கின்றோம்.
இந்தப் பெரிய சர்வாதிகாரிகளான ஏக தலைவர்களுக்கு ஒருசமயம் வேறு முக்கியமான அதாவது இந்து முஸ்லீம் கிறிஸ்தவ ஒற்றுமை வேலை
கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களும் வீரர்களும் தொண்டர்களுமாவது ஏன் இந்த வேலையில் தங்கள் ஓய்வை செலவழிக்கக்கூடாது என்றும்தான் கேட்கின்றோம்.
இவ்விஷயம் இப்படியெல்லாம் இருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உயர்திரு. C. ராஜகோபாலாச்சாரியாரின் பண வசூல் விண்ணப்ப வெளியீட்டில் ஹிந்தி பிரசாரம் செய்வதை பிரமாதமாக குறிப்பிட்டிருக் கிறார்களே யொழிய தீண்டாமை விலக்கைப் பற்றி ஒரு வார்த்தையும் கூட அதில் குறிப்பிடவில்லை. தீண்டாமையின் தாண்டவமும், அதன் தொல்லை.
யும் இவர்களுக்கு தெரியாதா என்றும் கேட்கின்றோம். இந்த சமயத்தில் இந்தப்படியாக நாம் ஏன் கேட்கின்றோம் என்றால் தியாகிகளும், சமதர்மக் காரர்களும் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் வீரர்கள் “காங்கிரசினால் தான் தீண்டாமை ஒழிக்கப்படுமே யொழிய மற்றபடி வேறு எந்த வழியிலும் முறையிலும் தீண்டாமை ஒழிக்கப்பட முடியாது” என்று சொல்லுவதன் மூலம் அந்தத் துறையையும் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பதால் மற்றவர்கள் இவ்விஷயத்தில் செய்யும் காரியங் களுக்கும் இடையூறும் முட்டுக் கட்டையும் உண்டாகும் படியான சூக்ஷிகள் செய்வதால் நாம் எழுதவேண்டி நேரிடுகின்றதேயொழிய வேறில்லை. எப்படி இருந்தாலும் இந்த சமயமானது இந்தக் காரியத்திற்கு அதாவது தீண்டாமை ஒழிப்பது என்பதற்கு மிக்க அனுகூலமான சமயம் என்றே சொல்லலாம். எப்படியெனில் ஏதோ ஒரு வகையில் சுயமரியாதை இயக்கம் செய்துள்ள கிளர்ச்சியாலும், தீண்டத்தகாதார் என்னப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்டுள்ள தீவிர உணர்ச்சியாலும் பொது ஜனங்களுக்குள் ஒருவித பரபரப்பு ஏற்பட்டிருப்பதுடன் எதிர்ப்புக்கு அதிக மரியாதை இருக்காது என்பதாகவும்
367 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தோன்றுகின்றதுதான். ஆதலால் காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாத தலைவர்களும், தொண்டர்களும் தனியாகக் கூடியாவது, இந்த சமயத்தில் மற்ற ஸ்தாபனக்காரர்களையும் கலக்கிக்கொண்டு ஏதாவது ஒரு முயற்சிக்கும் முந்துவார்களாக. இந்த நிலையில் தீண்டப்படாதார் என்பவர்களும் தகுந்த படி கிளர்ச்சி செய்தோ அல்லது தீண்டாமைக்கு ஆதாரமான “இந்து” மதத்தை விட்டுவிடச் செய்தோ தங்களின் இழிவுகளையும் கொடுமைகளை
யும் ஒழித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்து கின்றோம்.
தீண்டாதார் என்பவர்களில் ஆங்கிலம் படித்தோ அல்லது செல்வம் படைத்தோ உத்தியோகம் நியமனம் முதலியவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களால் தீவிரமான முயற்சிகள் எதுவும் செய்யப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் ஆங்காங்குள்ளவர்கள் கூடிக்கூடி ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டியதும் மிகவும் அவசியமாகும் என்பதை
யும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.05.1931
குடி அரசு - 19310) 268
3 வது மாகாண ௬மாமரியாகை மகாநா௫
விருதுநகரில் நடக்கவிருக்கும் 3-வது சுயமரியாதை மகாநாடானது
முன் குறிப்பிட்டபடி ஜுன்-மீ”6,7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்ட தென்று தெரிவிக்க வேண்டியதாகிவிட்டது. ஏனெனில் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே இசைந்து அதை உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு வந்து நீலகிரியில் ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் சர். ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும் மேலும் அவருக்கு அந்த வலி நிற்காமல் மிகவும் தொந்திரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர முடியாமலும் அதுவரை இங்கு இருக்க முடியாமலும் திடீரென்று தமது ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது. ஆன போதிலும் மகாநாட்டை எந்த விதத்திலும் ஒரு வாரம் முன்பின்னாகவாவது நடத்திவிடலாம் என்கிற தீர்மானத்தின் மீதே தலைவர் உயர்திருவாளர் செளந்திரபாண்டியன் அவர்களும், மற்றும் விருதுநகர் பிரமுகர்கள் திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார நாடார் முதலியவர்களும் வெகு மும்மரமாகவே மகாநாட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு வருகிறார்கள். வேறு தலைவர் தேர்ந்தெடுத்து சீக்கிரம் மகாநாடு நடக்கும் தேதியை தெரிவிக்கப்படும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.05.4931
369 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
திரு. சத்தியமூர்த்தி
உயர்திரு. சத்தியமூர்த்தி அய்யர் தென் இந்தியாவிலுள்ள பார்ப்பன அரசியல்வாதிகளையெல்லாம் விட மிகவும் நல்லவர் என்றே சொல்லு வோம்
- அவருக்கு சூது வஞ்சகம் ஆகிய காரியங்கள் அவ்வளவு அதிக மாய் அதாவது பிறத்தியார் கண்டுபிடிக்க முடியாதபடி செய்தவற்குத் தகுந்த அளவு தெரியாது என்றே சொல்லுவோம். ஆதலால் இப்படிப்பட்ட வர்களால் பார்ப்பனரல்லாதாருக்கு அதிகமான கெடுதி ஒன்றும் செய்துவிட முடியாது. அந்த முறையிலேயேதான் அவரை நல்லவர் என்று சொல்லு கின்றோம். அவருடைய பொதுநல சேவையின் ஆரம்பமானது மிகவும் பரிசுத்தமாகவே ஆரம்பிக்கப்பட்டு என்பதே நமது அபிப்ராயம். ஆனால் பிறகுஅவரை அய்யங்கார் கூட்டப்பார்ப்பனர்கள் அய்யர்கூட்டப் பார்ப்பனர் களுக்கு விரோதமாய் உபயோகித்துக்கொள்ள நினைத்து திரு.சத்திய மூர்த்தியை மிகவும் தூக்கிவைத்துக் கெடுத்து விட்டார்கள். அவரும் இந்த அய்யங்கார் கூட்டத்தையும் அவர்களது அரசியலையுமே நம்பி தன்னைப்.
பற்றி அதிகக்கவலை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டதினாலும் தனக்கு என்று ஒரு கொள்கையைபிடித்து வைத்துக் கொள்ளாமல் போனதினாலும் கிரமப்படி அவருக்கு இருந்திருக்க வேண்டிய மதிப்பு இல்லாமல் போய் விட்டது. அவர் மிதவாதக் கூட்டத்திற்குள் இருந்திருப்பாரானால் இன்றைய தினம் அவரது சொந்த நிலை வேராகவே இருந்திருக்கும். திருவாளர்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார், எ.ரங்கசாமி அய்யங்கார், எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் தங்களது தகுதிக்குமேல் பெரிய மனிதர்களாவதற்கு
திரு. சத்தியமூர்த்தி அய்யர் எவ்வளவோ காரணஸ்தராவார் என்பது நமக்கு
தெரியும். அக்கூட்டம் இவருக்கு சிறிதும் நன்றியும் விசுவாசமும் காட்டாமல்: போனது பெரிய குற்றமேயாகும். ஆனால் அரசியலில் பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கு நன்றியற்ற தன்மை இயற்கையேயாகும்.
நிற்க, திரு. சத்தியமூர்த்தி அய்யர் சமீபத்தில் சொன்ன ஒரு விஷயத் தில் அர்த்தம் இல்லாமல் இல்லை. அதாவது “தென்னாட்டில் உள்ள பார்ப்பனர். பார்ப்பனரல்லாதார் சண்டை காரணமாக வட நாட்டில் உள்ள மூன்றாந்தர ஆசாமிகள் எல்லாம் பெரிய தலைவர்கள்ஆகிவிடுகின்றார்கள்” என்று சொன்னது அர்த்தமற்றதும் பொறாமையுடையதுமான வார்த்தை என்று நாம் ஒப்புக்கொள்ளமுடியாது. வடநாட்டில் இருந்து தென்னாட்டுக்கு அழைத்து
குடி அரசு - 19310) 270
வரும் தலைவர்கள் எல்லோரும் தென்னாட்டு அரசியல்வாதிகள் விளம்பரம் செய்யும் அளவுக்கு - மரியாதை செய்துவரும் அளவுக்கு தகுதியுடையவர்
கள் என்று சொல்லமுடியாதென்பதே நமது அபிப்பி ராயமுமாகும். ஆனால் தென்னாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லா தார் சண்டையும் காங்கிர
சுக்கு விரோதமாக தென்னாட்டில் இருந்து வரும் உணர்ச்சியும் அதனால் தென்னாட்டில் உள்ள பார்ப்பனர் எவருக்கும் பார்ப்பனரல்லாத அரசியல் வாதிகளுக்கும் மரியாதை இல்லாமல் போன காரணமுமே வடநாட்டு ஆசாமிகளுக்கு தென்னாட்டில் பூரணகும்பம் எடுத்தாக வேண்டியநிலையை கொண்டு வந்து விட்டுவிட்டது. உண்மையைப் பேசப்போனால் திரு. காந்திக்
கும் கூட இவ்வளவு மரியாதை ஏற்பட்டதற்கு காரணமும் தென்னாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் சண்டையே தவிர வேரல்ல. எப்படியெனில் தென்னாட்டு பார்ப்பன ரல்லாதார் தலையில் கையை வைக்க திரு. காந்தியை மகாத்மா ஆக்க வேண் டியநிர்பந்தம் நமது பார்ப்பனருக்கு ஏற்பட்டுவிட்டது. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மாத்திரம் சாதாரணமாக தீண்டாமை என்னும் விஷயத்தில் உண்மையில் (சூது புரட்டு இல்லாமல்) மனப்பூர்வமாய் விட்டுக்கொடுத் திருப்பார்களேயேனால் திரு. காந்தியை விட பெரிய யோக்கியதையை யுடையவர்களாக ஆவதற்கு பலர் இந்நாட்டுப் பார்ப்பனரிலும் இருக் கின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். என்ன செய்வது அவர்கள் நிலைமை அப்படி ஏற்பட்டுவிட்டதால் அவர்களுக்கு இருக்க வேண்டிய கிரமமான மரியாதை இல்லாமல் போய்விட்டதுடன் மரியாதைக்கு லாயக்கில்லாத வர்களுக்கும் இவர்கள் மரியாதை செய்யவேண்டியவர்களாகி விட்டார்கள். நமது நாட்டுப் பார்ப்பனர்களில் கல்வி, செல்வம், சக்தி முதலிய குணங்கள் படைத்தவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்குள் ஒருவருக்காவது தேசத்தைப்பற்றியோ மக்களைப் பற்றியோ உண்மையாய் கவனிக்க முடியாமல் தங்கள் உயர்வை நிலைநிறுத்திக் கொள்வதற்கே பாடுபட வேண்டிய கவலையை முக்கியமாய்க் கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதால் அவர்களது மற்றப்பெருமை பிரகாசிக்க இடமில்லாமல் போய் விட்டது. மற்றும் பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும் எத்தனையோ பட்டேல் களுக்கும் எத்தனை டஜன் கணக்கான சென்குப்தாக்களுக்கும், நரிமேன் களுக்கும் சமமான தனிமனிதர்கள் எத்தனையோ பேர்கள் அரசியலிலேயே இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தலையெடுக்கக் கூடாது என்பதாக பார்ப்பனர்களே சூஷி செய்து வந்ததால் வெளிநாட்டு வேஷக்காரர்களுக்கு நமது நாட்டில் மதிப்பு ஏற்பட வேண்டியது அவசிய மாகிவிட்டது. அதிகம் பேசுவானேன் வெள்ளைக்கார ராஜியம் இந்தியாவில் இருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் வெளிமாகாண காரர்கள் நமது மாகாணத்தில் மகாத்மாக்களாவதற்கும் மற்றும் பெரிய தலைவர்கள் தேசபக்தர்கள் முதலாகியவர்கள் ஆவதற்கும் காரணமாகி இருக்கின்றது.
371 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
நியாயமாய் பேசுவோமானால் தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதார். என்னகாரியத்திற்காக திரு. காந்தியை மகாத்மா என்று கூப்பிட வேண்டும் என்பதே நமக்கு விளங்கவில்லை.
திரு. காந்தியின் அரசியல் அபிப்பிராயமாகட்டும், சமுதாய அபிப்பிராயமாகட்டும், ஏழைத்தொழிலாளிகளைப் பற்றிய அபிப்பிராய மாகட்டும், மற்றும் அவரது பகுத்தறிவு, நிலையான கொள்கை முதலியவை களைப்பற்றிய அபிப்பிராயமாகட்டும் ஏதாவது ஒன்று இந்த நாட்டு பார்ப்பன ரல்லாத மக்களில் யாராவது ஒருவர் ஒப்புக்கொள்ளத்தக்கதாக இருக்கின்றதா.
- யாராவது ஒப்புக்கொள்ளுகின்றார்களா? என்று கேட்கின் றோம். அரசியல்: உலகில் அரசியல் பிரசாரத்தை தொழிலாக கொண்டவர்களும் அரசியல் பத்திரிகையை நடத்துவதை தொழிலாக கொண்டவர்களும் அரசியலின் பேரால் பெரிய பதவி பட்டம் பெற்று பெரிய மனிதர் ஆனவர்களும் ஆக வேண்டி எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் ஆகிய கூட்டத்தில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் ஏதாவது ஒருவர் திரு. காந்தியின் கொள்கைகளை உண்மையில் ஒப்புக்கொள்ளுகின்றார்களா என்று கேட்கின்றோம். ஆனால் இங்கு ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்ட பொறாமை, அசூயை, பேராசை, போட்டி ஆகிய காரியங்களால் திரு. காந்தி மகாத்மாவாகவும் மற்ற மூன்றாந்தர ஆள்கள் பூரண கும்பமெடுக்க வேண்டிய தலைவர்களாகவும் விளங்க வேண்டியவர்களாகிவிட்டார்கள். அதுபோலவேதான் இனியும் அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. இவை நடக்காமல் இருக்க வேண்டுமானால்:
அதற்குத் தகுந்த வழி திரு. சத்தியமூர்த்தி அய்யருக்கு இல்லாமலில்லை. அதென்னவென்றால் அரசியல் புரட்டை தாராளமாய் வெளியாக்க வேண்டும். எப்படியாவது தங்கள் சமூக ஆதிக்கம் நிலைத்திருந்தால் போதும் என்கின்ற எண்ணத்தை விட்டுவிடவேண்டும். ஜாதி வித்தியாசத்தையும் தீண்டாமை யையும் ஒழிப்பது தான் நமது முக்கிய வேலை என்றும் அதுவேதான் இந்த
நாட்டில் இருந்து வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஒழிக்கும் வேலை என்றும் கருதவேண்டும். இந்த ஒரு காரியம் ஒப்புக்கொண்டால் மற்ற காரியத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து ராஜிசெய்து கொண்டு எல்லோருமே ஒத்துழைக்க ஏற்பாடு செய்யமுடியும். இந்தக் காரியத்தில் திரு. சத்தியமூர்த்தி போன்றவர்கள் இரங்கி வேலை செய்தால் அவர் வடநாட்டுத் தலைவர்களுக்கு மேலானவர் என்பதாக ஆவார் என்பது மாத்திரமல்லாமல் தென்னாட்டிற்கும் ஒரு மாபெருந் தலைவராய் விளங்கக் கூடியவராவார் என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
குடி அரசு - துணைத்தலையங்கம் - 24.05.1931
குடி அரசு - 19310) 272
ஈரோட்மல் போலீஸ் அஹணி
18-5-31-ந் தேதி மாலை 5 மணிக்கு சுமார் 4,5 ரூபாய் பெறுமான ஒரு
திருட்டு மோதிரத்தை விலைக்கு வாங்கிய ஒரு பையன் ஏதோ ஒரு ஷராப்புக் கடையில் இருப்பதாக ஈரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேள்விபட்டு இரு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈரோடு பிரபல ஷராப்பு வியாபாரி யாகிய உயர்திரு. மாரிமுத்து ஆசாரி கடைக்குச் சென்று விசாரித்ததாகவும், அந்த ஆசாரியார்
பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதில் திருப்தி அடையாத சப்- இனஸ்பெக்டர் ஒருவர் அந்த ஆசாரியாரை ஓங்கிக் கன்னத் தில் அடித்த
தாகவும், அதற்காக அங்கு சுற்றியுள்ள ஜனங்களுக்கு மன வருத்தமேற்பட்டு சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்தாகவும், அதற்காக கடை வீதியானதால் ஜனங்
கள் சீக்கிரம் கூடிவிட்டதாகவும், இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நயந்து பதில். சொல்லிக் கொண்டிருக்க மற்றொரு சப்-இன்ஸ் பெக்டர் ஸ்டேஷனுக்குச் சென்று பல கான்ஸ்டேபிள்களை கத்தி, தடி, துப்பாக்கிகளுடன் கூட்டிக் கொண்டு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்ட ருடன் வந்து, திரு. மாரிமுத்து ஆசாரி உள்பட சிலரை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்துப் போன தாகவும் சொல்லப்படுகின்றது. இது இப்படியிருக்க பொது ஜனங்கள் எங்கு திரு.மாரிமுத்து ஆசாரியாரை போலீசார் அடித்து விடுவார்களோ யென்று கவலைகொண்டு சுமார் 2000 பேர் வரையில் போலீஸ்டேஷனைச் சுற்றி கூடி விட்டார்கள். பெரிய பேங்கர் களும்,வியாபாரிகளும் ஜாமின் கொடுப்பதாகச் சொல்லியும், போலீசார் அவர்களை ஜாமீனில் விடாததால் டிப்டி கலெக்டர் ஜணாப்.கான்பகதூர் ஜிண்டா சாயபு அவர்களிடம் சென்று இவ்விஷயத்தைச் சொல்லிக் கொண்டவுடன் அவர் உடனே புறப்பட்டு வந்து அரஸ்டு செய்யப்: பட்டவர்களை ஜாமீனில் விடச் செய்ததும், கூட்டம் கலைந்து விட்டது. இரண்டு சிறு பையன்களை மாத்திரம் இன்னமும் விடுதலை செய்யாமல் இருக்கிறார்கள். அன்று இரவு பொது ஜனங்கள் ஒன்றுகூடி போலீஸ்டேஷ
னில் காவல் புரியாதிருந்தால் போலீசார் திரு. ஆசாரியையும், மற்ற ஆட் களையும் நையப்புடைத்திருக்கக் கூடும் என்றே எல்லாரும் கருதினார்கள். ஆனால் ஒரு அடிகூட அப்புரம் யாருக்கும் விழவில்லை. இப்போது போலீஸார் திரு.மாரிமுத்து ஆசாரி அவர்கள் மீதும் திரு. மாரிமுத்து ஆசாரி போலீசார் மீதும் பிராதுகள் செய்திருப்பதாகத் தெரிய வருகின்றது.
373 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இது தவிர ஈரோடு பொது ஜனங்கள் காந்தி சவுக்கில் சுமார் 2000 பேர். கள் ஒரு கூட்டம் கூடி போலீசாரின் அக்கிரம நடவடிக்கையை கண்டித்துத் தீர்மானங்கள் செய்து மேல்அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். விஷயம் எப்படி இருந்தாலும் கோவை ஜில்லா கலெட்டர் அவர்களாவது, ஜில்லாபோலீஸ் சூப்ரெண்டென்ட் அவர்களாவது தயவு செய்து ஈரோடுவந்து இருதரப்பாரையும் கூப்பிட்டு விசாரித்து கேசுகள் மேற்கொண்டு நடவாமல், தேவையானால் இருவர்களுக்கும் புத்திசொல்லி விஷயத்தை இவ்வளவுடன் நிறுத்தி விடுவது போற்றத்தக்க காரியமாகும்.
இல்லாதவரை போஸீசுக்கு ஒரு கெட்ட பெயரும், ஜனங்களிடம் ஒரு அனாவசியமான பரபரப்பும் இருந்து கொண்டு மெனக்கேடும், பணச் செலவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இவ்விஷயத்தில் வியாபாரிகள் எல்லாம் ஒன்று கூடி இருக்கின்றார்கள். மற்றும் இதற்கு ஊர் பொதுஜனங் களில் பலரும் ஆதரவாய் இருக்கிறார்கள். இதன் வெற்றி தோல்வியானது ஜனங்களுக்கும், போலீஸ்காரருக்கும் என்பதாக திரும்பிவிடக்கூடும் போல் தெரிகின்றது. கடைசியாக ஒரு விஷயம். டிப்டி கலெக்டர் திரு. கான்பகதூர் ஜிண்டா சாயபு அவர்கள் அந்த இரவில் தைரியமாய் வெளிவந்து அரஸ்ட் செய்யப்பட்டவர்களை ஜாமினில் விடச்செய்து ஜனங்களுக்குச் சமாதானம் செய்து எவ்வளவோ பெரிய கலவரம் நடக்க இருந்ததை ஒன்றுமில்லாமல் செய்தது போற்றத்தக்கதேயாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.05.1931
குடி அரசு - 19310) 374
ாடமல் போலீஸ் அக்கிரமம்
சகோதரர்களே! போலீஸார் அத்துமீரி நடந்த காரியத்தை கண்டிப் பதற்கு நாம் இக்கூட்டம் கூடியதாக சொல்லப்பட்டது என்றாலும் “போலீசார்.
ஏன் அடித்தார்கள்” என்று விசாரணை செய்ய நாம் இங்கு கூடவில்லை. ஆனால் ஒரு கண்ணியமுள்ள கனவானை கடைவீதியில் வைத்து அவ மானம் செய்ததான அக்கிரம காரியத்தை கண்டிக்கவே கூடியிருக்கின்றோம்.
ஒருவன் குற்றம் செய்தால் குற்றத்திற்கு உரிய எந்த நியாயமான தண்டனையையும் அடைவதில் நாம் சிபார்சுக்குப் போகப்போவதில்லை. மேலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், அவர்களை தண்டிப்ப திலும் நாம் போலீசாருக்கு உதவிபுரிய வேண்டியது அவசியந்தான். குற்றவாளி களை பிடிப்பதில் நாம் உதவி செய்யாது, போலீசுக்கு விரோதமாக நடந்தால் ஊரில் சமாதானம் என்பது ஏற்படாது என்பது நாம் உணர்ந்ததேயாகும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் போலீசார் நடந்து கொண்ட முறையானது அக்கிரமமானதாகும். ஏனெனில், போலீசார் ஒரு பெரியமனிதரை அடித்து விட்டார்கள். இதைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. இல்லா விட்டால் நாளைக்கும் இப்படித்தான் செய்வார்கள். மேலும் அவர்களால் அடிக்கப் பட்டவரோ மிக்க மரியாதையுள்ளவர். சுத்த சாது. உண்மையாக நடக்கக் கூடியவர். ஒருவார்த்தையும் துடுக்காக பேசாதவர் என்பது உலகமே அறிந்த தாகும். அப்படிக்கில்லாமல் யோக்கிய தையற்றவராயிருந்தால், இன்று நாம் இங்கு கூடியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. இதனால் திரு. மாரிமுத்து ஆசாரியாரிடத்தில் நமக்கு மரியாதை குறையவில்லை. மேலும் இவர்: யாரிடத்தில் அடிக்கடி லேவா தேவிசெய்து கொண்டு இருக்கின்றாரோ அவர் களே... அந்த சேட்டுமார்களே வேண்டியது துகையை ஜாமீனாக கொடுக்க வந்ததும் திரு. ஆசாரியார் அவர்களின் யோக்கியதையை வெளிப்படுத்து கின்றது. அவரை போலீசார் இம்சை செய்ததினாலேயே அவருக்கு ஒரு கெட்ட பெயராவது அல்லது அவருடைய யோக்கியதை குறைந்து விட்ட தாகவாவது ஏற்பட்டு விடாது.அவருடைய யோக்கியதை இன்னும் அதிக மாகக் காணப்படுமேயல்லாமல், குறைந்துவிடாது. ஆனால் போலீசாரின் யோக்கியதை தான் கேவலமாய்க் கருதப்பட்டுவிட்டது.
போலீஸ் இலாகாவிற்கு தற்கால அரசியல் காரணங்களால் அதிகாரங்
கள் அதிகமாக வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களும் தங்களுடைய
375 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அதிகாரத்தை இம்மாதிரி மூர்க்கத்தனமாகவே சில இடங்களில் காண்பித்துக் கொண்டு வருகின்றார்கள். போலீஸ் சிப்பந்திகளின் அக்கிரமத்துக்காக வேறு சில அதிகாரிகள் சில சந்தர்ப்பங்களில் பொது ஜனங்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆணாலும் சில விஷயங்களில் போலீசார்
கள் அத்துமீறியே நடந்துகொண்டு வந்திருக்கின்றார்கள். குறிப்பாக, இப்பொழுது நமது ஊரில் நடந்த சம்பவத்தைப்பற்றி நாம் வருந்தாதிருப்ப தற்கில்லை. ஆனால், நடந்தது நடந்துவிட்டது. அதைப்பற்றி நாம் பிரமாத மான கிளர்ச்சிகள் செய்து, போலீசுக்கும், ஜனங்களுக்கும், விரோதத்தை வளர்த்துக்கொண்டிருப்பதை விட, ஏதாவது ஒரு முயற்சி செய்து இம்மாதிரி சம்பவங்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் நமது கடமையாகும். ஏனெனில், இன்று நாம் பேசாதிருந்தால், நாளைக்கு நமக்கும் இந்த மாதிரியேதான் நடந்துதீரும். ஆகையால் இம்மாதிரியாக அதிகாரிகள் இனி நடவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதனால், நமக்குப் போலீசே வேண்டாமென்பது அர்த்தமாகாது. நமக்கு சில சந்தர்ப்பங்களில் போலீசாரின் உதவி அவசியம் வேண்டியிருக்கின்றது. அவர்களுடைய பந்தோபஸ்தும் தேவைதான். ஆதலால் இந்த சம்பவத்தையே ஓர் ஆதாரமாக வைத்து, ஒருவிதகிளர்ச்சியையும் நாம் செய்துவிடக் கூடாதென்பதையும் இச்சந்தர்ப்பத்தில் அறிவித்துக் கொள்ளுகின்றேன். ஏனெனில், இதை ஓர் ஆதாரமாக வைத்து பெரியதொரு கிளர்ச்சி செய்து விட்டால் இதிலிருந்து அநேக கேசுகள் உண்டாகலாம். பிறகு அதனால் நிரபராதிகள் கஷ்டப்பட வேண்டிவரும். நமது சுயமரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள பாடுபட வேண்டியதுதான். ஏதோ சில போலீசார் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொண்டால், எல்லாப் போலீசையே நாம் குற்றம் சொல்லுவதும் கூடாது. ஈரோட்டில் இதுவரை ஒருவித கலகமுமில்லாதிருந்தது. இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்கள் மாதிரி ஒற்றுமையாகத்தான் நாளது வரையிலும் இருந்து கொண்டு வருகின்றோம். அப்படியிருக்கும் பொழுது போலீசார். இதற்காக ஜனங்களிடத்தில் அன்பாயிருந்து, யோக்கியப் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். அதைவிட்டு யோக்கியதையற்ற முறையில் போலீசார் நடந்து கொண்டதானது வருந்தக்கூடிய காரியமேயாகும். மேலதி காரிகள் இதை நன்கு விசாரணை செய்து, நீதி செலுத்தி ஜனங்களுக்கு போலீ சிடத்தில் மதிப்பு இருக்கும்படி செய்ய வேண்டும். ஜனங்களின் சிநேகத் தையும் ஒத்துழைப்பையும் அதிகாரிகள் நாடவேண்டுமென்பதற்காகத்தான்
நாம் இன்று தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது. விஷயம் நியாயஸ்தலத்திற்கு போய் விட்டதாக தெரிகின்றது. ஆதலால் இங்கு விவகாரத்தின் உள்விஷயங்களைப் பற்றி விஸ்தரித்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. போலீசார் எவ்வளவுதான் அக்கிரமமாகவும் யோக்கிய பொறுப்பற்றும் நடந்து கொண்டபோதிலும் கூட நாமும் அதேமாதிரி நடக்கக்கூடாது.
குடி அரசு - 19310) 276
திரு. மாரிமுத்து ஆசாரியார் வகையறாக்களை போலீஸ் ஸ்டேசனில். அடிக்க முயற்சித்ததாக கேள்விப்பட்டேன். எனக்கும் அப்போழுது ஆள்: வந்தது. எங்கு அவர்களை அடித்து, இம்சைகள் செய்து விடுவார்களோயென ஜனங்களும் பயந்து கொண்டு சந்தேகமாகவே தானிருந்திருக்கிறார்கள். நானும் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்ததோடு அடிக்கடி ஆட்களை: அனுப்பி, ஸ்டேசனில் என்ன நடக்கின்றதென்பதை யறிந்து கொண்டேதா. னிருந்திருக்கிறேன். நமது டிப்டி கலெக்டர் அவர்கள் வந்து அவர்களை: ஜாமீனில் விடும்படி கூறியதாக அறிந்தபிறகே தான் நான் படுக்கைக்குச் சென்றேன். இப்பொழுது வந்திருக்கும் டிப்டி கலெக்டர் மிகவும் நல்லவர்.
அவர் இவ்விஷயத்தை நன்றாக விசாரணை செய்து, முடுவு கூறுவாரென்பதே என்னுடைய அபிப்பிராயமாகும். ஆகையால் நாம் அடிக்கடி கூட்டம் போடு வதோ வாலிபர்களைத் தூண்டிவிடுவதோ ஆகிய காரியங்கள் செய்யக் கூடாது. அதிகாரிகளைப் பரிகாசம் செய்யவும் கூடாது.
கோர்ட்டில் விசாரணை நடக்கும் பொழுது, நாம் பொருமையாகவும் அடக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அதிகமாகக் கூட்டம்போட்டு, விசாரணை நடைபெறாமலும் செய்துவிடக்கூடாது. அம்மாதிரி இன்று அதிகமாக ஜனங்கள் கூட்டம் கூடியதனால் தான் இந்தக் கேசை இம்மாதம் 5-ம் தேதி காங்கயத்தில் விசாரணைக்குப் போட்டிருப்பதாக இப்போது நான் கேள்விப்படுகிறேன். ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மையோ அது எனக்குத் தெரியாது. இம்மாதிரியான புகார்களுக்கு நாம் இடந்தராமல் நடந்துகொள்ள வேண்டும். காங்கயத்தில் விசாரணை போட்டிருப்பதானது நமக்குத்தான் அதிக கஷ்டம். அவர்களோ சர்க்கார் செலவிலேயே போய் வருவதுமல்லாமல், சர்க்காரார் அவர்களுடைய செலவுக்குக் கொடுக்கிற பணத்திலும் சிறிது மீதி செய்துகொண்டு லாபமடைவார்கள். ஆனால் நமக்கு எல்லாம் கைச்செலவேயாகும்.
மேலும் போலீசாருக்கு இதனால் அதிக செலவும் ஏற்படப் போவ தில்லை. அநியாயமெனத் தோன்றினாலும், அல்லது இந்தக் கேஸ் அப்பீலில் நிற்காது, உடைபட்டுப் போகும் என்று தோன்றிய பொழுதிலும்கூட, சில அதிகாரிகள் வேண்டுமென்றே நடவடிக்கை நடத்தி அலைந்து திரியட்டும் என்று சமாதானம் செய்து கொள்ளுகிறார்கள். “எனக்கென்ன செலவு வந்தது? இரண்டு வரி எழுத வேண்டியதுதானே. அவன் போய் செலவுசெய்து கொண்டு அலையட்டுமே” என போலீசு அதிகாரிகள் கூறுகின்றதாக சொல்லுகின்றார்கள்.
ஆதலால் இதற்காக இனி எவ்வித கிளர்ச்சியும் வேண்டாம். மேலும்
சிலர் நம்மைத் தூண்டிவிட்டு மேன்மேலும் நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் கூறுவார்கள். நமக்கு இருக்கும் ஆத்தி
ரத்தில் நாம் அவர்களுடைய வார்த்தைகளுக்கு இணங்கி நடந்தோமே
377 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
யானால், அவர்கள் “சென்னைக்குச் செல்லலாம்” “டில்லிக்குச் செல்லலாம்” “ஒரு கை பார்த்து விடவேண்டும்” என பலவாறாக நம்மைத் தூண்டிக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்கள் கண்ணுக்குக் கூட கிடைக்க மாட்
டார்கள். நமக்கும் இரண்டு நாள் வரையிலும் தான் இந்த ஆத்திரம் இருக்கும். பிறகு அது தானாகவே அமர்ந்து விடும்.
இதுவரையிலும் திருமாரிமுத்து ஆசாரியார் இருந்தவிடமே தெரியா மலிருந்தது. ஆனால் இந்த சம்பவத்தால் அவருடைய பெயர் எல்லோருக்
கும் தெரியவந்தது. இவ்வாறு கூட்டம்போட்டு, சில தீர்மானங்களை நிறை வேற்றிவிடுவதால் மட்டும் நமது பொறுப்பு முடிந்து விட்டதாக நாம் நினைத்துக்கொள்ளக்கூடாது. வேண்டுமானால், அல்லது அவசியம் நேர்ந்தால் எல்லாரும் ஆள் ஒன்றுக்கு 5 அல்லது 10 கொடுத்தாவது அவருக்கு நியாயம் கிடைக்கும்படி செய்யவேண்டும். இப்பொழுது இவ் விடத்தில் ஒரு தீர்மானம் பிரரேரேபிக்கப்போகின்றார்கள். அதைக்கவனித்து நிறைவேற்றுவீர்களென நம்புகின்றேன்.
குறிப்பு:19.05.1931ஆம் நாள் ஈரோடு காரைவாய்க்காலில் காவல்துறையைக்
கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 24.05.1931
குடி அரசு - 19310) 278
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உயர்திரு. சி. இராஜ கோபா. லாச்சாரியார் அவர்கள் பணம் வசூலிப்பதற்காக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அந்தப் பணத்தின் மூலம் செய்யப்படும் வேலைத் திட்டங் களையும் குறிப்பிட்டிருக்கின்றார். அவைகளில் 5-வது திட்டமாக:-
ஹிந்தி:- “ஜனங்களிடையே இருக்கும் குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் போக்கி பகுத்தறிவும் ஏற்படுவதற்குப் பாடு பட வேண்டும்”
என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது தற்காலத்திற்கு ஏற்றதொரு வேஷமேயானாலும் இவர்களும் இவர்களது சிஷ்யகோடிகளும் செல்லு மிடங்களிலெல்லாம் பாரதக்கதையையும்,ராமாணயக் கதையையும், நளன் கதையையும் மற்றும் விஷ்ணுவின் 10 அவதாரக் கதைகளையும் பிரசங்கம் செய்து, பிரசாரம் செய்து கொண்டே போவது குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் ஒழித்து பகுத்தறிவை உண்டாக்கும் பிரசார மாகுமா? என்று வணக்கத்துடன் கேட்கிறோம்:
அன்றியும் அந்த டி அறிக்கையில் உள்ள 8 திட்டங்களிலும் தீண்டாமை விலக்கு திட்டத்தை மாத்திரம் வெகு ஜாக்கிரதையாகவே நமது ஆச்சாரியாரவர்கள் அடியோடு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டிருக் கிறது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
குடி அரசு - கட்டுரை - 24.05.1931
379 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
.. ்கீல்கன்,
மாணவர்கள் “காங்கிரஸ்” பிரசாரம்
இப்போது கோர்ட்டும் பள்ளிக்கூடமும் மூடப்பட்டு லீவு நாளாய் இருப்பதால் அந்த நாளைக் காங்கிரஸ் பிரசாரம் மென்னும் பார்ப்பன பிரசாரத் திற்காக ஊர் ஊராய் சென்று வெகு கவலையாய்ப் பிரசாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும், மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள்.
இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குள்ளும், மாணவர்களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது. பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் பிரசாரம் செய்யும்படி நாம் விரும்பவிலை. ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரசாரம் ஏன் செய்யக்கூடாது என்றுதான் கேட்கின்றோம். பார்ப்பனரல் லாத சமூகம் ஒரு மனிதன் தன்னை தூக்கி ஏதோ விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவுதான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவுக்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்? நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள் தனது தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப் படுவதல்லாமல் அந்த சமூக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத் திலுமே அரிதாயிருக்கின்றது.
படித்த மகமதிய சகோதரர்களிடமும் அதுபோலவேதான் சமூக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. இந்த சமயத்தில் ஒரு மகமதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரசாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்பட வில்லை. யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாக ஒன்றைக் கொண்டுவந்து விட்டால் அவ்வுத்தியோகங்களில் “எனக்கு பங்கு கொடு” என்று கேட்கமாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின்றார்களே யொழிய பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்பு வித்து, சமத்துவத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய்வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடையாது.
குடி அரசு - 19310) 380
ஆகையால் பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச் சென்று பார்ப்பனப் புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 24.05.1931
381 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
புதிய முறை சீர்திருத்த மணம்
வபொண்ணம்பணைர் - சுலோசணா
திருவாளர் அ. பொன்னம்பலனார் அவர்களது திருமணமானது 24ந் தேதி மாலை 5 மணிக்கு பிறையார் நாடார் ஹைஸ்கூல் ஆலில் உயர்திரு. புரபசர் லக்ஷிமி நரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருமண: ஒப்பந்தம் நடைபெறுவதற்கு முன் திரு. ஈ. வெ. இராமசாமி எழுந்திருந்து சில வார்த்தைகள் சொன்னார்.
அதாவது சீர்திருத்த திருமணம் என்றும் சுயமரியாதைத் திருமணம் மென்றும் சொல்லப்படுபவைகளெல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்மந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமை இல்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத இயற்கை தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும். சுயமரியாதை இயக்கத் திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அனேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத - அர்த்தமற்ற, அவசிய மற்ற சடங்குகள் இல்லாத, புரோகிதமே இல்லாத ஓரேநாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண்செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங் களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணை: வர்களாய் ஏற்றுக்கொண்ட மணங்களும், மனைவியை புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு மனைவி ஏற்கனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலி லீடுபட்டப் பெண்கள் பொட்டுக்களை அறுத்து விட்டு செய்துகொண்ட மணமும் இப்படி யாக பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன.
ஆனால் இந்த திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்த திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குடி அரசு - 19310) 282
இன்றையமணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார். அப்படி இருக்க இந்தம்மைக்கு இப்போது முதல்புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண்டாவதாக செய்துகொள்ளும் சீர்திருத்த திருமணமாகும். இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும். பெண் ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய பந்துக்களுடையவும் முழுச் சம்மதத் துடனேயே இது நடைபெறுகின்றது. பெண்ணின் தகப்பனார் இப்பொழுதும்” 500, 600 ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாக அறி கிறேன். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டி ருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல்யாணச் செலவு மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது. பெண்ணின் சிறிய தகப் பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார். அதனால்
தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்த திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன். மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப்பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் “சைவவேளாளர்” வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தவர். அவற்றை யெல்லாம் அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமதபேதம் இல்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர். பெண் ஸ்ரீவைணவர் என்று சொல்லப்படுவதும் சாத்தாதார் என்று சொல்லப் படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர். அவற்றையெல்லாம் அடியோடு விட்டுவிட்டதுடன் இத்திருமண விஷயத்
தில் அப்பெண்ணுக்கு வேறுயார் யாரோ எவ்வளவோ குக்ஷிகள் செய்து பெரும் பெரும்பழிகள் கூறி அதன் புத்தியை கலைத்தும் அதற்கெல்லாம்
முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத்திற்கு இசைந்தனர். ஆகவே இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாகப் பிரசாரம் செய்கின் றோமோ அவைகளில் முக்கியமான தொன்றென்றும் ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை- ஏன் உலகத் தையே சமதர்மமக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று
கருதுகிறேன்.
குடி அரசு - சொற்பொழிவு - 31.051931
383 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தஞ்சை வில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மாணங்கன்
இம்மாதம் 24,25ம் தேதிகளில் பிறையாற்றில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமாகக் கருதப் படுவதும், பலருக்கு திடுக்கிடும்படியான அளவுக்கு பிரமாதமாய் காணப்படு வதுமான தீர்மானங்கள் மூன்று.
அதாவது,
1. “மக்களுக்குள் இருந்துவரும் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கு முட்டுக்கட்டையாக விருக்கும் “இந்து மதம்” என்பது அழிக்கப்பட வேண்டியது மிக்க அவசியமாகும்.”
2. “மக்கள் உண்மையான சுதந்திரமும், சமதர்மமும், பொது வுடைமைத் தத்துவமும் அடைய வேண்டுமானால் அவற்றிற்குஇடை யூறாக விருக்கும் கடவுள் நம்பிக்கையும், எதற்கும் அதையே பொறுப்
பாக்கும் உணர்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.”
3. “பெண்கள் ஆண்களைப் போன்ற விடுதலையையும், சமதர்ம ஒழுக்கத்தையும், சுதந்திரத்தையும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு தடையாயிருக்கும் பிள்ளைப்பேற்றை (கர்ப்பத்தை! அடக்கி ஆள வேண்டியது அவசியமாகும்”
என்பவைகளாகும்
ஆகவே இதன் கருத்து மத உணர்ச்சி, கடவுள் உணர்ச்சி ஆகியவை மக்கள் வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டு இருக்கக் கூடாதென்பதேயாகும்.
பொதுவாகநமது நாடானது உண்மையான விடுதலையும், சுதந்திரமும், சமதர்மமும் அடைவதற்கு நாம் வெகுகாலமாகவே மேல்கண்ட இம்மூன்று தன்மைகள் அதாவது மக்களுக்குள் தீண்டாமை ஒழிவதும், ஜாதி வித்தியாசம் நீங்குவதும், பொருளாதார சமதர்மம் ஏற்பட வேண்டுமென்பதும், பெண்கள்.
குடி அரசு - 19310) 384
விடுதலையும், சம உரிமையும் அடைய வேண்டுமென்பதையுமே முக்கிய மாய்ச் சொல்லி வந்திருக்கின்றோம். இதை அன்று முதல் இன்று வரை: மறுப்பவர்கள் - மறுத்தவர்கள் யாருமில்லை. ஆகவே இம்மூன்று காரியங் களும் ஏற்படவேண்டுமென்று உண்மையாயும், யோக்கியமாயும் விரும்பும்
- ஒப்புக்கொள்ளும் ஒவ்வொருவரும் அவற்றிற்கு இடையூறுகளாயிருப். பவைகளை ஒழிப்பதின் மூலம் தான் அவைகளை அடைய முடியுமென்பதை ஒப்புக்கொண்டே தீருவார்கள்.
இந்நிலையில் பார்த்தோமானால் நமக்கு தீண்டாமைக்கும், ஜாதி வித்தியாச உயர்வு- தாழ்வுக்கும் ஆதாரமாக “நமது மதம்” என்று சொல்லப்
படும் “இந்துமதம்” என்பதாக ஒன்று இருந்து கொண்டுதான் முட்டுக்கட்டை யாக இருக்கின்றதே யொழிய, வேறொன்றுமில்லை.
இந்து மதம் என்பதின் ஜீவ நாடியே தீண்டாமையும், ஜாதி வித்தியாச முந்தான் என்பதை, “இந்து மத” சம்பந்தமான ஒரு சிறிது ஞானமுள்ள மக்களும் உணருவார்கள்.
அன்றியும், இன்றைய தினம் தீண்டாமையையும், ஜாதி வித்தியா சத்தையும் ஒழிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்களான நமது எதிரிகள் எதை பிரதானமாய்ச் சொல்லுகின்றார்களென்றால் “இந்து மதத்தை”த் தான் பிரதானமாய்ச் சொல்லுகின்றார்கள்.
ஆகவே இந்து மதத்தின் நிழலில் தான் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடைக்கலம் புகுந்து கொண்டிருக்கின்றதே யொழிய வேறு எவருடைய பலத்தாலும் ஆதாரத்தாலும் அவை இருக்கவில்லை. அன்றி
யும் ஜாதி வித்தியாசத்தைக் காப்பாற்றுவது தான் இன்று இந்துமத சம்பர தாயமாக இருக்கின்றதே யொழிய, வேறு ஒரு காரியமும் இந்துமதத்தின் அனுபவமாய் எந்த இந்து மக்களிடமுமில்லை என்பதும் அனுபவ ஞான முள்ள யாவரும் நன்றாய் அறியலாம்.
முதலாவது, இந்த ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவைகள் அனுபவத்திலிருப்பது தான் இந்து மதம் என்பதைத்தவிர, மற்றபடி இந்து மதம் என்றால் என்னவென்று இந்துக்கள் என்பவர்களில் கோடிக்கு ஒருவராவது விளக்க முடியுமா? அல்லது தங்களுக்காவது தெரியும்படி விளக்கிக் கொண்டிருக்கின்றார்களா? என்று பந்தயம் கூறிகேட்கின்றோம். வார்த்தையளவு அல்லாமல் கருத்தளவில் யாருக்காவது விளங்குமா? விளங்கியிருக்கின்றதா? என்றும் கேட்கின்றோம்.
தவிரவும், இந்து மதம் என்று சொல்லப்படுவதற்கு ஆதாரமென்று சொல்லக்கூடியதும், இந்துக்கள் என்ற தலைப்பின் கீழ் கட்டுப்பட்ட மக்களில்
100க்கு 25 பேராவது தெரிந்து, ஒப்புக்கொள்ளக் கூடியதுமான ஆதாரமோ, தர்மமோ, கொள்கைகளோ, கோட்பாடுகளோ எதுவுமில்லையென்று நம்மால்
385 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தைரியமாய்ச் சொல்லக்கூடுமானாலும், ஒரு சமயம் வேறு யாராவது இருப்பதாகச் சொல்லி கட்டாயப்படுத்தி மக்களை ஒப்புக்கொள்ளச் செய்யும் எந்த ஆதாரத்திலாவது தீண்டாமையையும், ஜாதி வித்தியாசத்தையும் வற்புறுத்தாத ஆதாரமோ, தருமமோ, கொள்கையோ கோட்பாடோ இருக் கின்றதா யென்றும் கேட்கின்றோம்.
இஸ்லாம் மதத்திற்கு குர் ஆன், கிறிஸ்துவ மதத்திற்கு பைபிள் என்பவை இருப்பது போல் இந்து மதத்திற்கு என்னயிருக்கின்றது என்பதாக இந்துமத அபிமானிகள் யாராவது சொல்லமுடியுமா? இந்துக்களுக்கு மேற்கண்டதைப் போன்ற ஒரு வேதமிருக்கின்றதா? இருந்தால் அது இந்துக் களென்பவர்கள் தெரியக்கூடியதா? அது இந்துக்கள் என்பவர்கள் எல்லோ: ரையும் கட்டுப்படுத்தக் கூடியதா? என்று கேட்பதோடு இந்து மதத்தைக்
காப்பாற்றக் கவலைக் கொண்டவர்கள் என்பவர்களாவது அதில் உள்ளவற்
நிற்கு கட்டுபட சம்மதிப்பார்களா? என்பதின் மூலம்தான் ஒரு மதத்தின் ஆதாரமின்னதென்பதை நிச்சயிக்க முடியுமேயொழிய, மற்றபடி எவருக்கும் புரிவிக்கப்பட முடியாமலும், தங்களுக்கே புரியாமலும் பேசுவதில் யாதொரு பயனும் ஏற்படாதென்பதுடன் இந்த நிலையில் உள்ள இந்து மத சம்பந்தமான வக்காலத்தே பரிகாசத்திற்கு மிடமாகுமென்பதையும் ஞாபகப்படுத்துகிறோம்.
இந்திய பாமரமக்களின் முட்டாள் தனத்தையும், கற்ற மக்களின் அயோக்கியத்தனத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்கறிகுறியாகத் தான் இந்து மதமென்ற உணர்ச்சி இருக்கின்றேதே என்பதோடு இந்தியாவில் 100-
க்கு 10-பேருக்குக்கூட இந்துமதமென்றாலென்ன வென்பது விளங்காமலே' அதற்கு அடிமையாகவாழ்ந்து கொண்டிருக்கின்றார்களென்றும் நாம் பந்தயம் கூறிச்சொல்லுவோம்.
மேலும், தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் ஒழிவதற்கு மாத்திர மல்லாமல், இந்து மக்களின் அறிவு விர்த்திக்குமான உதயத்திற்கும் இந்து மதம் என்கின்ற உணர்ச்சியொழிய வேண்டியதவசியமென்று மேலும் மேலும் வலியுறுத்திச் சொல்லுவோம். ஆகவே, இவ்வித இந்துமதமென் பதைக்
கட்டிக் கொண்டு அழுவதும், அதற்கு ஏதேதோ வியாக்யானங்கள் சொல்லு வதும்,அசிங்கத்தையெடுத்து மேலே பூசிக்கொள்ளுவதை யொக்குமே தவிற புத்திசாலித்தனம் ஒன்றும் விளங்காது. பொதுவாக மதங்கள் என்பதே “அதாவது கடவுளுக்கும், மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தைக் காணவும் - கடவுளை மனிதன் அடையவும்” என்று சொல்லப்படுவதான மதங்கள்: என்பதே “மூட நம்பிக்கை'”யென்றும், “ஹம்பக்” யென்றும் உலக மக்கள். பெரும்பாலோரால் சொல்லிக்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில் பல இடங்களில் அவை யொழிக்கப்பட பிரசாரங்கள் செய்துகொண்டும் வரப் படுகின்ற இந்தக் காலத்தில் கேவலம் அர்த்தமில்லாத, ஆதாரமில்லாத இந்துமதம் என்பதற்கு ஒருவர் வக்காலத்துப் பேசவருவதென்றால் இதைவிட பரிகாசத்திற்கிடமான காரியம் வேறில்லை என்றே சொல்லுவோம்.
குடி அரசு - 19310) 286
அடுத்தபடியாக இந்துமதம் எதற்காகக் காப்பாற்றப்பட வேண்டு மென்பதே நமக்குப் புலப்படவில்லை. அதில் ஏதாவது உயர்ந்த கொள்கைகளோ, பிரயோஜனப்படத்தக்க தத்துவங்களோ அல்லது ஞானங்களோ இருக்கின்ற தென்று யாராவது சொல்லவந்தால், அவர்களைப் பற்றி நாம் சிரிப்பதுடன் அவர்களுக்கு . உவமையாகவுமொரு பழிமொழியைச் சொல்லிக்காட்ட வேண்டியவர்களாகவுமிருக்கின்றோம். அதாவது, ஒருவன் “பஞ்சபாண்டவர். களை எனக்குத் தெரியாதா? கட்டில் கால்கள் போல் மூன்றுபேர்களென்று சொல்லி, இரண்டு விரல்களைக்காட்டி, தரையில் ஒன்றை எழுதி, கடைசியில் அதையும் காலால் தேய்த்து விட்டானாம்.” என்பதை யொக்கும்.
ஆகவே, இப்பழமொழிப்படி எப்படி இந்த நபர் பஞ்சபாண்டவர்கள் என்பவர்கள் கட்டில் குத்துக்கால்கள் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆகிய இவையொன்றுமே தெரியாதவர் என்று ஏற்படுகின்றதோ, அது போல்
இந்துமதம் என்பது “எனக்குத் தெரியாதா?, அது அநேக உயர்ந்த தத்துவங் கள், ஆத்ம ஞானங்கள் முதலியவைகள் கொண்ட பழமையான” தென்று சொல்லுபவர்களுமாவார்கள் என்றுதான் நாம் அபிப்பிராயப்பட வேண்டி
யிருக்கிறது.
எனவே, இப்படிப்பட்ட மக்களின் அபிப்பிராயத்திற்கு யாரும் பயப் படவேண்டியதில்லை யென்பதைத் தவிற, வேறு சாமாதானம் பொது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை யென்றே கருதுகின்றோம்.
மற்றபடி சமதர்மத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கைக்கும் கடவுள் உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டிய தென்பதும் நமது உறுதியான அபிப்பிராய மேயாகும். கடவுள் நம்பிக்கையும், கடவுள் மீது பொறுப்பு போடுபவனும் சுதந்திரமனிதனாயிருக்க நியாயமேயில்லையென்று பல தடவைகளிலும் சொல்லி வந்திருக்கின்றோம்.
கடவுள் உண்டா? இல்லையா? என்கின்ற பிரச்சினையில் நாம் புக வில்லை. அதுமுடிந்த விஷயமாகும் எப்படியெனில், “தொட்டதிற் கெல்லாம் கடவுள் ! கடவுள்!” யென்று சொல்லி சதா பிரார்த்தனை செய்து கொண்டி
ருக்கும் திரு. காந்தியும், சைவசமய நிபுணர்களின் மகாநாடு கூட்டமும், ஏற்கனவே இதைப்பற்றி ஒரு முடிவு சொல்லியாய்விட்டது. அதாவது, “கடவுளிருப்பதாய் மனிதன் நினைத்துக் கொள்வது நல்லது” என்று மாத்திரந் தான் சொல்லிவிட்டார்கள். ஆதலால், அது ஒரு மனிதன் ஒரு பலனையுத் தேசித்து நினைத்துக் கொள்ளவேண்டிய விஷயமாய் போய்விட்டதென்ப தினால் புலனாகின்றது. ஆகையால், நாம் இனியும் அதில் பிரவேசிக்க வேண்டிய வேலையில்லை. ஆனால், மனிதனுடைய தற்கால நிலைக்கு கடவுள்தான் காரணமென்றால் மனிதனின் நிலையை மாற்ற வேண்டுமென்று சொல்ல நமக்கு யோக்கியதை ஏது? இப்படிப் பட்டவர்களுக்கு முயற்சி செய்யத்தான் மனம் எப்படி வரும்? என்பதுதான் நமது கருத்து. ஆதலால்தான்
387 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கடவுள் உணர்ச்சியையும், அதன் மேல் பொறுப்பு சுமத்துவதையும் அழிக்க வேண்டுமென்கிறோம்.
பிறகு, பெண்கள் கர்ப்பத்தடை விஷயம்.
நாம் பெண்கள் பிள்ளைகளைப் பிரசவிக்கவே வேண்டாமென சொல்லவரவில்லை. அச்செய்கையினால் பெண்கள் அடிமைகளாகின்றார் களென்பதற்காகவே, முக்கியமாய் அதைத் தங்களாதீக்கத்தில் வைத்து, இஷ்டப்படி தாங்கள் சுதந்திரமாயிருக்கத் தக்க மாதிரியாக உபயோகித்துக் கொள்ளச் சொல்லுகின்றோம். ஆண்கள், பெண்களைத் தங்களைப் போலெண்ணுவார்களானால், அப்போது பிள்ளைகளைப் பிரசவிப்பதன் கஷ்டமும், அதனாலேற்படுமடிமைத்தனமும் அவர்களுக்கு விளங்கும். அவர்களை அடிமைகளென்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு, இதிலுள்ள கஷ்டம் விளங்காது.
மற்றபடி பெண்களின் “கற்பு ஒழுக்கத்தில் சம சுதந்திரம் இருக்க வேண்டுமென்னும் விஷயத்தில், சிலருக்கு - அதாவது சில ஆண்களுக்குப் பெரிய கஷ்டமிருப்பதாகத் தெரிய வருகின்றது. பெண்கள் கற்புள்ளவர் களாயிருக்க வேண்டுமென சொல்லுவதற்கு, எந்த ஆணுக்குரிமையுண்டென
நாம் கேட்கின்றோம்.
தவிறவும், பெண்களுக்கு புத்தி சொல்ல ஆண்கள் யாரெனவும் கேட்கின்றோம். “கற்பு” என்னும் பூச்சாண்டியின் யோக்கியதை யாவருமறிந்த. இரகசியமே யொழிய, அது ஒருவருக்கும் தெரியாததல்ல. பெண்களை நாம் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் பொது மகளிராயிருக்க வேண்டு மென சொல்லவரவில்லை. ஆணால் மற்றபடி நாம் சொல்லுவதென்ன வென்றால், எல்லாவிஷயங்களிலும்ஆண்களுக்குள்ள சுதந்திரம், பெண்களுக்குமிருக்க நியாயமுண்டு 'கற்புத்தவறும்” விஷயத்திலும், ஆண்களுக்குள்ள நிபந்தனை களும் தண்டனைகளும் தான் பெண்களுக்கு மிருக்க வேண்டுமென்று சொல்லுகின்றோமே யொழிய, வேறில்லை. கற்பு என்பதாக ஒரு குணம் உண்டா? இல்லையா? அது இயற்கைக்கும் சாத்தியத்திற்கும் ஏற்றதா என்கின்ற பிரச்சினைகள் அது வேறு விஷயம். ஆனாலும் யோக்கியமான ஆண் பிள்ளைகள் இதற்குப் பயப்பட வேண்டிய தவசியமேயில்லை.
எவனொருவன், தான் “கற்புள்ளவணாயிருக்க”” இருக்கவில்லையோ, எவனொருவானால் இருக்க முடியவில்லையோ அவனுக்குத்தான் இதில் அதிகமான கவலையும் பயமுமிருக்க நியாயமுண்டே தவிற மற்றவர்கள் இதைப்பற்றி கவனிக்க வேண்டியதேயில்லை. அல்லாமலும் நாமாவது “ஆண்கள் கற்புள்ளவர்களாயிருந்தாலும், பெண்கள் கற்புள்ளவர்களா யிருக்கக்கூடா' "தென்று சொல்லியிருந்தால்தான், நம்மீதுமொருவர் கோபித் துக்கொள்ளவும் ஒருவருக்கு உரிமையுண்டு. இப்படிக்கெல்லாம் இல்லா மல்
குடி அரசு - 19310) 388
சும்மா வீணே “கற்புப் போய்விட்டதே, கற்புப் போய்விட்டதே” யென்று யாராவது கூப்பாடு போட்டால், அதைப் போலிக்கூச்சலென்று தான் கருதி. குப்பைத் தொட்டியில் போடவேண்டுமே தவிற அதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆகவே,தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள் மிக முக்கியமானதும், நியாயமானது மென்பதோடு, கூடிய சீக்கிரத்தி லிதுவே, உலகத்தீர்மானங்களாக யேற்படப் போகின்ற தென்பதோடு, இதே தீர்மானங்
கள் இன்னும் வெகு சமீப காலத்திற்குள் “இந்திய தேசீய காங்கிரசிலும்” புகாதவரையில் அக்காங்கிரசே இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போகப் போகின்றதென்ற உறுதியையும் கொண்டிருக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 31051931
389 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
விருதுநகர் சுயமரியாதை மகாநா௫
விருதுநகர் சுயமரியாதை மகாநாடு ஜூன் முதல் வாரத்திலாவது இரண்டாவது வாரத்திலாவது நடத்துவதாக உறுதி செய்யப்பட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததில் மகாநாட்டுத் தலைவர் திரு. சர் ஹரிசிங்கவர் அவர்கள் நீலகிரியில் இருந்து உடல் நலமில்லாமல் திரும்பிப்போய் விட்ட தாலும் வெய்யில் கடுமையை உத்தேசித்து வேறுதக்க தலைவர் சமீபத்தில் கிடைப்பதற்கில்லாமல் இருப்பதால் மகாநாட்டை ஆகஸ்டு வாக்கில் நடத்து வதாக தள்ளிப்போட்டு விட்டதாய் விருதுநகர் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டி
யார் தீர்மானம் செய்திருப்பதாக தெரிவித்துவிட்டார்கள். மகாநாட்டு விஷய
மானது இந்தப்படி அடிக்கடி மக்கள் ஏமாற்றமடையும் படி நடந்து வருவது பலருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதா யிருந்தாலும் அதற்கு அனுகூலமாக சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் மறுப்பதற்கில்லை. என்பதையும் ஒருவாறு தெரிவித்துக் கொள்ளு கின்றோம். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு நமது இயக்க எதிரிகள் விசமப்பிரசாரம் செய்யக்கூடும். ஆனாலும் வரவேற்புக் கமிட்டியார் இதை உணராதவர்கள் என்று சொல்லி விட முடியாது. இதற்காக அவர்கள் மகா நாட்டை எந்த முறையில் நடத்த வேண்டுமென்று கருதி இருக்கின்றார்களோ அதை மாற்றிக்கொள்ள அவர்கள் இஷ்டப்படவில்லை. ஆகையால் நண்பர்கள் இந்த ஒரு தவணை யையும் பொறுத்துக்கொள்ள வேண்டு கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.05.1931
குடி அரசு - 19310) 390
+ raBCmmi
பச்சையப்பன் கலாசாலை தமிழ் புலவரும் “திராவிடன்” பத்திராதி பருமான உயர்திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள் திடீரென முடிவெய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம். இவர் ஓர் தமிழ் பண்டிதராய் விளங்கியதுடன், சமூதாயச் சீர்திருத்தத்தில் ஆர்வங் கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக பல உபன்யாசத் தொண்டுகளும் புரிந்
திருக்கிறார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பாடுபட்டவர்களில் ஒருவரா
வார். பொதுவாக தமிழுலகமும், சிறப்பாக பிராமணரல்லாத உலக மும் ஓர் நண்பரை இழந்து விட்டார்களெனக்கூறுவதுமிகையாகாது. ஆகவே அவரது
பிரிவுக்கு வருந்துவதோடு, நமது வருத்தத்தை அவருடைய குடும்பத் தாருக்கும் முக்கியமாக அவரது உடற்பிறந்த பின்னோர் திருவாளர் மணி கோடீஸ்வர முதலியார் BALT, அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு - இரங்கல் செய்தி - 31.051931
391 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காங்கம்பாமழ சமுத்திரக்கரையில் கூட்டம்
சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த 5, 6 வருஷ- காலத்தில். நாட்டில் ஏற்பட்டிருக்கிற உணர்ச்சிகள் என்ன என்பதைப் பற்றியும், அதனால். ஏற்பட்ட காரியங்கள் என்ன என்பதைப்பற்றியும், சுயமரியாதை இயக்கத்தின் பேரால் சொல்லப்பட்ட அபிப்பிராயங்களெல்லாம் முதலில் கேட்பவர்க ளுக்கு அதிசயமாகவும், தலைகீழ் புரட்சியாகவும் காணப்பட்ட போதிலும் சாதாரணமாக ஒவ்வொரு அபிப்பிராயங்களும் ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷங்களுக்குள்ளாகவே செல்வாக்குப்பெற்று எல்லா ஜனங்களா.
லும் சகித்துக்கொண்டு வரப்படுகின்றதென்றும், பார்ப்பனர்களுடைய ஆதீக் கத்திலும், பார்ப்பனீய பிரசாரகரின் ஏக நாயகத் தன்மை யிலும் இருந்துவந்த காங்கிரசு முதலிய அரசியல் ஸ்தாபனங்களும் பல மத ஸ்தாபனங்களும் பல சமுதாய வகுப்பு ஸ்தாபனங்களும் இப்பொழுது இந்த அபிப்பிராயங்களையே சொல்லத்துடங்கிவிட்டதென்றும், இவைகளுக் கெல்லாம் காரணம் நாம் ஆரம்பித்த எடுப்பிலிருந்து ஒரு சிறிதும் எந்தக் கொள்கையிலும் பின்போகா
மல் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டு வந்ததோடு, யாருடைய பழிப்புக் கும்,பகைமைக்கும் தாட்சன்னியத்திற்கும் பயப்படாமல் உறுதியுடனிருந்த தோடு, யாரானாலும், எப்படிப்பட்டவர் களானாலும், நமது கொள்கையை ஒப்புக்கொள்ள வில்லையானால் நமக்கு அவர்களைப் பற்றிய கவலை யில்லையென்றும் அலட்சியமாயிருந்ததோடு சிறிதும் ராஜிக்கு இடங் கொடுக்காமலிருந்துமே வந்ததே முக்கிய காரணமாகும்.
நம்மைப்பற்றிப் பலர் குற்றம் சொன்ன காலத்திலும் நமதியக்கம் இது வரை என்ன சாதித்ததென்று கேள்விகள் கேட்கவந்த காலங்களிலும் நாம் அவர்களை லட்சியம் செய்து பதில் சொல்லிக்கொண்டிராமல், நமது லட்சியத் திலேயே கவலை வைத்துக்கொண்டு “நாம் அப்படித்தான் செய்வோம், இவ்வளவுதான் நாம் செய்தது. இஷ்டமிருந்தால் பின்பற்றிவா., இல்லா விட்டால் உன் வேலையைப்பார்த்துக் கொண்டுபோ. நாம் சொல்லுவதுதான் நமது கொள்கை, அதன் பேரில், நமது கொள்கையின் பேரிலோ, நமது செய்கையின் பேரிலோ ஆதிக்கம் செலுத்த வேறுயாருக்கும் உரிமை யில்லை” என்று சொல்லிக்கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான், நல்லதோ. கெடுதியோ நமதியக்கத்தின் தற்கால நிலைமைக்குக் காரண மாகயிருந்துவருகிறது. ஏனெனில், நாம் யாரிடத்திலும் நமதியக்கத்திற்காக “இப்படிச்செய்கிறேன், அப்படிச் செய்கிறேன்” என்று வியாபாரம் பேசி.
குடி அரசு - 1931 () 392
ஒப்பந்தம் செய்து, அட்வான்சு வாங்கவில்லை. ஒருவருக்கும் கட்டுப்பட்டு எவரையும் ஏதாவதொரு விஷயத்தை நம்பச்செய்து அதனால் நஷ்டத்தை யடையுங்க ளென்று யாருக்கும் நஷ்டத்தையுண்டுபண்ணவோ, யாருடைய தயவையும் எதிர்பார்க்கவோ இதுவரையில் வைத்துக்கொள்ளவில்லை. நாம் சொல்லுவதற்கும், செய்வதற்கும், சொல்லாததற்கும், செய்யாததற்கும், நம்மையே பொறுப்பாளியாக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் கலந்து ஒத்துழைத்ததாக சொல்லப்படக்கூடியவர்களெல்லாம் நமது கொள்கையும், அவர்களது கொள்கையும் ஒன்றாயிருக்கிறமுறையில் நம்முடன் சேர்ந்து இருக்கின்றவர்களே தவிற, அவை சிறிது மாறினவுடன் பிரிந்து போய்விட வேண்டியவர்களே யாகையால், கொள்கை மாறாமலிருக்கும் வரையிலுந் தான் யாரும் ஒத்துழைக்க ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களென்று கருதி, சேர்ந்து வேலை செய்துகொண்டு வந்தவர்களென்றுநினைத்தோமே யொழிய யாரையும் கூட்டுவியாபார ஒப்பந்தமாக ஒருவருக்கொருவர் எப்படி இருந்தா
லும் ஒத்துப்போகவேண்டிய நிர்பந்த முடைய குடும்ப வாழ்க்கை காரியமாக கருதவேயில்லை.
அன்றியும், நாமும், நாம் இதுவரை என்ன செய்துவிட்டோமென்று கவலைப்பட வேண்டியதில்லை. கவலைப்படவுமில்லை. ஏனெனில், நம் முடைய லக்ஷியம் மிகப்பெரியது. இதற்காக நாம் செய்யும் முயற்சி மிகச் சிறியது. இதனுடைய நஷ்டம் நமக்கொன்றும் பிரமாதமானதல்ல. அன்னிய
ருக்கும் நம்மால் ஏற்பட்ட நஷ்டமோ, கஷ்டமோ சிறிதும் கணக் கிடத்தகுந்த தேயல்ல. ஏதோ நமக்குத் தோன்றியதை பேசுவது, எழுதுவது, ஊரூராய்ச் சுற்றுவது என்பதைத் தவிற நாம் ஒன்றும் பிரமாதமாக கஷ்டப் பட்டுவிட வுமில்லை. இதற்காக செலவழிக்கப்பட்ட பொருளோ, ஊக்கமோ எதிர் பார்க்கும் காரியத்திற்கு எத்தனையோ மடங்கு சிறியதேயாகும். முன் ஒரு சமயம் நாம் சொன்னது போல் “மலைபோன்ற ஒரு பெரிய காரியத்தைக் கொண்டுவருவதற்காக தலை முடிபோன்ற அற்பசக்தியைக்கொண்டு கட்டி யிழுக்கப் பார்க்கிறோம். வந்தால் மலைபோன்ற கொள்கைகள் வரட் டும். வராமல் அறுந்துபோனால் முடிபோன்ற நமது அற்பமுயற்சிகள் வீணாய் போகட்டும். நமக்கு அதைப்பற்றி பெரிய கவலையொன்று மில்லை. இதனால், பெரிய நஷ்டமொன்று ஏற்பட்டுவிடப் போவதில்லை” யென்று கருதிக் கொண்டே முன் செல்கிறோம்.
ஏனெனில் இவ்வளவு பெரிய இயக்கத்திற்கும், நமது மனஉறுதியும், நிர்தாட்சன்யமுந்தான் ஆஸ்தியாகவும் மூலப்பொருளாகவும் இருக்கின்றதே தவிர வேறில்லை. ஆதலால், தான் நாம் ஒருவருக்குப்பதில் சொல்ல வேண்டும் என்ற கவலை ஏற்படும் படியாக எவ்வித காரியத்தையும், யாரு டைய தயவையும் பிரதி பிரயோஜனத்தையும் எதிர்பார்க்கக் கடாதென்றே இருக்கிறோம். மற்றும் நமதியக்கத்திலுள்ள அதாவது இந்த நமது
393 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அபிப்பிராயத்தையே கொண்டுள்ள நமது நண்பர்களும், இந்த மாதிரியாகவே தங்களுடைய அபிப்பிரயங்களையும், தங்கள் சக்திகளையும், இஷ்ட செளகரியங்களையும் பாதிக்கக்கூடிய எந்தக் கட்டுப்பாட்டிலும் விழுந்து விடக் கூடாதென்றே சொல்லுகிறோம்.
எந்தக் காலத்திலும், எந்த இயக்கமோ, எந்த அபிப்பிராயமோ, ஸ்தாப னமோ செல்வாக்குடையதாக யிருந்தால் காரணகாரியங்களை கவனி யாமலும், அவ்வியக்கத்தின் பிரமுகர்களது நடவடிக்கைகளையும், அபிப் பிராயங்களையும் கவனியாமலும் வந்து தெரிந்தோ, தெரியாமலோ வந்து புகுந்துகொள்வதும், பிறகு வேறு யேதாவது செல்வாக்குள்ள இயக்கமோ, அபிப்பிராயமோ, ஸ்தாபனமோ தோன்றினால் அதில் பாய்ந்துவிடுவதும், அந்தப்படி பாய்ந்து விட்டதற்கு பிறருக்கு சமாதானம் சொல்லுவதற்காக தாங்கள் முன்போய்ச் சேர்ந்த இயக்கத்தையோ, அபிப்பிராயத்தையோ, ஸ்தாபனத்தையோ அல்லது அது சம்பந்தமானவர்களையோ குற்றம் சொல்லுவதன் மூலம் சமாதானம் சொல்லப்பார்ப்பது உலக மக்களில் பலரது இயற்கையேயாகும். மற்றும் ஒரு இயக்கத்திற்கு தாராள செல்வாக்கிருக்கும் வரையிலும், அதாவது ஒருவண்டி பள்ளத்தாக்கில் தானாக உருண்டுப் போவதாக யிருந்தால் வண்டியைத் தொங்கிக் கொண்டே வண்டிக்குப் பின்னால் ஓடுவதும், அப்படிக்கில்லாமல் மிக்க பாரத்தோடு ஒரு வண்டி சேற்றில் புதைந்துகொண்டோ, மேட்டில் ஏற வேண்டியதாகவோ ஏற்பட்ட போது அதைத் தோள் கொடுத்து தள்ளிவிட வேண்டிய கஷ்டத்திற்குப் பயந்துகொண்டு கழிபோட்டுக்கொண்டு தொல்லை கொடுப்பதும், விட்டு விட்டு ஓடபார்ப்பதும் சில சாதாரணமக்களுக்கு சகஜமேயாகும். இதைக் கண்டு இயக்கத்தின் பொறுப்புடையவர்கள் பயப்படாமலும், தங்களிடம் ஏதாவது மாறுதல் குணம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதைமட்டும் பார்த்துக் கொண்டு தைரியமாகவும், உறுதியாகவுமிருக்க வேண்டுமென்பது தான் இம் மாதிரியான சமயத்தில் நான் எனது நண்பர்களுக்குச் சொல்லும் யோசனை
யாகும்.
ஒரு இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவ னுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெரு மையைக் கண்டு சந்தோஷமடைந்தவன் சிறுமையைக்கண்டு துக்கப்பட வேண்டியதுதான். பெருமையைக் கண்டு சந்தோஷமடையாதிருந்தவன் சிறுமையைக்கண்டு துக்கிக்கவேண்டியதில்லை. எப்படி யிருந்தபோதிலும் இவ்விரண்டையுமுத்தேசித்துத் தனது உறுதியான கொள்கைகளிலிருந்து பிறளாமலிருப்பானேயானால் அவன் ஒருவகையில் காரியசித்தியடைந்த வனேயாவான். ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியம் தனது சொந்த லாப நஷ்டத்திற்கா? அல்லது பொது ஒரு கஷ்டத்தை நீக்கும் பிறர் நலத் திற்கா? என்பதை முதலில் தனக்குள்ளாகவே யோசித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டுவித லாப நஷ்டத்திற்கும் தயாராயிருக்க வேண்டும்.
குடி அரசு - 19310) 394
சகோதரர்களே! இன்றைய தினம் எனக்குமுன் பேசிய திருவாளர்கள் திருஞானசம்பந்தம், சாமி சிதம்பரனார், அழகர்சாமி முதலியவர்கள் “ஆத்மா” “கடவுள்” என்பதைப்பற்றி வெகு உறுதியாகவும், தைரியமாகவும் பேசினார்
கள். இதைக்காண எனக்கு அளவில்லாத சந்தோஷமும் தைரிய மும் ஏற்பட்டுவிட்டது. இரண்டு தமிழ் பண்டிதர்கள் ஆதரித்துப் பேசுவ தென்றால் சாதாரணமான விஷயமல்ல. எனது இன்றைய அபிப்பிராயங்கள் பெரிதும் ஏறக்குறைய 30, 35 வருஷத்திய அபிப்பிராயங்களேயாகும். சுமார் 30. வருஷங்களுக்கு முன்பாக ஒரு வாலிப அதிகாரியுடன் இந்துமதத்தை பற்றி
நான் அதுஒரு “புரட்டான மதம்” என்று சொன்னபொழுது அவர் எனது அபிப்பிராயங்களுக்குச் சமாதானம் கூறாமல் ஒரே அடியாய் “சுவாமி விவேகானந்தர் அமெரிக்கவுக்குச் சென்று எத்தனையோ படிப்பாளிகள் முன்பாக ஹிந்து மதத்தைப்பற்றிப் பேசி, உலகத்திலுள்ள மதங்களில் இந்து மதமே சிறந்ததென்று சொல்லி மெய்ப்பித்துவிட்டு வந்துவிட்டார். அப்படி யிருக்க நீ ஒரு சாதாரண மனிதன் இந்துமதத்தைப்பற்றிப் பேச லாமா?” என்று
தான் பதில் சொன்னார். உடனே அதற்கு நான் அப்பொழுதே “விவேகாநந்தர். இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாக அமெரிக்காவுக்குச் சென்றாரே யொழிய அவர் பிரதிநிதி முறையில் நடந்து கொள்ளவில்லை” யென்றும் “வக்கீலுக் குள்ள உரிமைகளை யெல்லாம் கையாடி, ஜெயித்துக் கொண்டு-வந்தா” ரென்றும் “அமெரிக்காவிலுள்ளவர்கள் உண்மைப் பிரதிநிதிகளுக்குள்ள. உரிமைகளைக் கையாடி, தோல்வியடைந்தார்க” ளென்றும், எடுத்துச் சொன்னேன். அன்றியும், சமீபத்தில் சுமார்10 வருஷங்களுக்கு முன்பு வக்கீல் உயர்திரு. மைலாப்பூர் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்களுடன் காங்கிரஸ் பிரசாரமாக ஆங்காங்கு சென்ற காலையில் ஒரு நாள் மதுரையில் இரவு 10 - மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருக் கையில் ஆத்மா வைப் பற்றியும், கடவுளைப்பற்றியும் இதே அபிப்பிராயம் சொன்னபொழுது, உடனே அவருக்கு கோபம் வந்து “உம்மிடம் சாவகாசம் வைத்ததே தப்பு” என்றும் “நீர் இவ்வளவு கீழான மனிதனென்று எனக்கு இதுவரையிலும் தெரியா” தென்றும் சொல்லி பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார். ஆனால் அப்படிப்பேசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் அவருடைய தலைமையின் கீழ் “ஒத்துழையாமை” சம்பந்தமான பிரசங்கம் செய்த பிறகு தலைவர் முடிவுரை: யாக என்னைப்பற்றி அவர் பேசும்போது “ஸ்ரீமான் ஈவெஇராமசாமி நாயக்கர். ஒரு பெரிய இராஜ ரிஷி” யென்றும், “இவர் நமக்குத் தலைவராகக் கிடைத்தது நமது பாக்கியம்” என்றும், மற்றும் பல விதமாகப் புகழ்ந்து பேசினார். மறு நாட்காலையில் அவருடைய கோபம் தணிந்த பிறகு, தானாகவே என்னுடன் பேசவந்த பொழுது “நாயக்கர்வாள்! கோபஞ்செய்து கொள்ளாதீர்கள். இராத்திரி தாங்கள் அம்மாதிரி பேசியதற்கு காரணம் இன்னதென்று தெரிந்து கொண்டேன். அதாவது, சீமைக்குச்சென்று, கல்விக்கற்றுவந்த உங்களுடைய குழந்தைகள் திடீரென்று இறந்துபோன வெறுப்பினால் தாங்கள் இவ்வித யெண்ணங்கொண்டு விட்டதாக உணர்ந்தேன். ஆதலால் கோபித்துக் 395 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கொள்ளாதீர்க”ளென்று சமாதானம் சொன்னார். நான் அதற்கும், இதற்கும் சம்பந்தமில்லையென்றும், அக்குழந்தைகள் எனது தமையனார் குழந்தை களென்றுமே அவருக்கு மீண்டும் உரைத்து, எனதபிப்பிராயத்தையே பலமாக மறுபடியும் வற்புறுத்தினேன். ஆகவே, நான் இந்த விஷயங்களெல்லாம் வெகு நாளாகவே கொண்டுள்ள அபிப்பிராயங்களானாலும், அவற்றின் சம்மந்த மான சகல தொல்லைகளையும் மேற்போட்டுக் கொண்டு, பிரசாரம் செய்கிற தென்கிறவேலையாக இப்பொழுதுதான் திரிகிறேன். இதற்கு முன் நான் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிநேகமாக ஏற்பட்டவர்களிட மெல்லாம் இதைப்பற்றியே பேசியுமிருக்கிறேன்.
ஆத்மா என்னும் விஷயத்தில் சுருக்கமாக பதில் சொல்லவேண்டு மானால், அது ஒருவித உணர்ச்சியேயொழிய ஒரு தனிப்பட்ட வஸ்துவல்ல., அவ்வுணர்ச்சியானது சரீரத்தின் அசைவு, நின்றவுடன் ஒழிந்துபோகும் என்ப தேயாகும். இதைப்பற்றி இரண்டுவியாசங்கள் “குடி அரசி”ல் முன்னாலேயே எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாவது வியாசமும் சமீபத்தில் வரும். ஆத்மா என்பதைப்பற்றிய பேச்சே பேசாமலிருந்தால் நல்ல தென்றும், இதனால் பல. ஜனங்களுடைய அதிருப்தி யேற்பட்டு, நமக்கு வெளி உதவிகள் குறைந்து போகுமெனவும் சிலர் கூறுகின்றார்கள். அதை ஒத்துக்கொள்ள என்னால் முடியவில்லை. “எனது அபிப்பிராயங்களை சொல்லுவதை நமது கடமையாக வைத்துக் கொள்ளுவோம். மற்றவர்களுக்கு துன்பமில்லாத முறையில் பிரசாரம் செய்வோ "மென்பதைத் தவிர, வேறு விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு, அபிப்பிராயங்களை மூடிவைத்துக் கொண்டிருப்பது நியாயமாகாது. நமது ஆயுள்காலத்திற்கு எவ்வித அளவும், உறுதியும் பந்தோபஸ்து மில்லையாதலால், கூடுமான வரை செளகரியமிருக்கும்பொழுது நமது அபிப்பிராயங்களை எல்லாம் சொல்லிவிடுவதுதான் சரியென்று நினைக்கின் றேன். நமது நாட்டில்தான் இவ்வித சாதாரண அபிப்பிராயங்களை வெளியிடு வதற்குக்கூட இவ்வளவு பயப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு காரண: மெல்லாம் இந்த நாட்டிலுள்ள சோம்பேரி வாழ்க்கைகாரர்களின் ஆதிக்கமே யாகும். ஆனாலும் இந்தப்படி தைரியமாய் நாம் புதிய அபிப்பிராயங்களைச் சொல்வதால் நமக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படுமென்று பயப்பட வேண்டிய தில்லை. லாபமடைகின்றவன் தான் நஷ்டத்திற்குப் பயப்படவேண்டும். நமக்குலாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை.ஆதலால் அதைப்பற்றி யாரும் கவலைப் படாமல் விஷயம் சரியா, தப்பா என்கிற முறையில் கவலை: செலுத்தி, யோசிக்க வேண்டியதே மக்களின் கடமையென கருதுகிறேன்.
குறிப்பு - 25.05.1931 அன்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 31051931
குடி அரசு - 19310) 396
பிரசார போதணாமுறை பன்னிக்கூடம்
சுயமரியாதை இயக்கத் தத்துவங்களை பிரசாரம் செய்ய ஈரோட்டில். போதனா முறை பாடசாலை ஒன்று ஏற்படுத்தி சிறிது காலத்திற்கு பயிற்சி கொடுப்பது என்பதாக ஏற்பாடு செய்து கொஞ்ச நாளைக்கு முன் அதற்காக ஒரு திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது ஞாபகமிருக்கலாம். அந்தப்படி அவ்வப்போது தனித்தனியாக சிலர் வந்து பயிற்சி பெற்று போனார்கள். என்றாலும் ஒரு முறையாக வைத்து அப்போதனாமுறை பயிற்சி செய்யப் படவில்லை.
ஆனால் இப்போது இந்த ஜூன் 15715 தேதியில் இருந்து முறை யாகவே பள்ளிக்கூடப்பயிற்சி முறையில் ஒரு பயிற்சி சாலை ஏற்படுத்த நிச்சயித்திருப்பதால் அதில் சுமார் 20, 25 பேர்களையே சேர்த்துக் கொள்ளக்
கூடும். ஆதலால் வர இஷ்டமுள்ளவர்கள் தயவு செய்து 8 உக் குள் இவ் விடம் வந்து சேரும்படியாக விண்ணப்பம் அனுப்ப வேணுமாய்க் கோரப் படுகிறார்கள்.
விண்ணப்பம் எழுதுகின்றவர்கள் அந்தந்த ஜில்லாவிலுள்ள சுய மரியாதை இயக்கத்தில் பற்றுள்ள பிரமுகர்களின் மூலம் அறிமுகச் சீட்டு வாங்கி அனுப்பவேண்டும்.
குடி அரசு - அறிவிப்பு - 31.051931
397 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுமாமரிமாதை இயக்கமும் காங்கிரசும்
சுயமரியாதை இயக்கமானது இப்போது நடைமுறையில் இருக்கும் காங்கிரசுக் கொள்கைகளைக் கொண்ட தேசீயத்திற்கும் திரு. காந்தியவர் களின் தத்துவமாகிய காந்தீயத்திற்கும் நேர்மாற்றமானது என்பதை நாம் மறைக்க முயலவில்லை.
எப்படியெனில் இன்றைய காங்கிரசு திட்டங்கள் காகிதத்தில் என்ன இருந்தபோதிலும் தேசீயத்தின் பேரால் நடைமுறை திட்டங்கள் என்பவை களாக,
1.கதர்
2.ஹிந்தி
3. கள்ளுக்கடை ஜவுளிக்கடை மறியல் என்பவைகளேயாகும்.
மேற்கண்ட இந்த மூன்று திட்டங்களிலும் சுயமரியாதை இயக்கம் மாறுபட்டேயிருக்கின்றது என்கின்ற விபரம் ஏற்கனவே குடி அரசு வாசகர்
கள் உணர்ந்ததுவேயாகும்.
கதர் விஷயத்தில் 1928ம் வருஷத்திற்கு முன்னிருந்தே அதாவது திரு. காந்தியவர்கள் தென்னாட்டிற்கு கதர் பண்டு வசூலுக்கு வந்த காலத்திலேயே கதரின் தத்துவத்தைக் கண்டித்து வந்திருக்கின்றோம். அதையே குடி அரசிலும் திராவிடனிலும் பல தடவை எழுதி வந்திருப்பதோடு அனேக மேடைகளிலும் கதர் கொள்கையைக் கண்டித்துப்பேசியும் வந்திருக் கிறோம்.
ஆதலால் கதரைப்பற்றிய நமது அபிப்பிராயம் என்பது இப்போது புதிதாக ஒன்றும் ஏற்பட்டதல்ல. இதை அனுசரித்தேதான் இவ்வாரம் லால்குடியில் நடந்த 3வது சுயமரியாதை மகாநாட்டில் கதர் கொள்கையைக் கண்டித்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது,
(அ) “தற்காலம் இந்தியதேசியத்தில் காங்கிரஸ் மகா சபையின் ஆதர
வில் மகாத்மா காந்தியும் அவரைச் சேர்ந்தவர்களும் செய்துவரும் கதர்ப்
குடி அரசு - 19310) 398
பிரசாரமும் கதர் உற்பத்தி, விற்பனை வேலைகளும் இந்திய நாகரீக அபி
விருத்தியை தடைப்படுத்துகிற படியாலும்,
(அற மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கு அவரவர்களே தனித்து நின்று உழைத்து மற்றவர் கூட்டுழைப்பைக் கருதாதிருக்க வேண்டுமென்றும் பிற்போக்கான கொள்கை கதர் வேலைக்கு அடிப்படையாயிருந்து (மற்ற தேசத்து மக்கள் கூட்டுழைப்பு மூலம் தொழில் களை அபிவிருத்தி செய்து முன்னேறும் இக்காலத்தில்) நமது நாட்டு மக்களைத் தனித்த வாழ்க்கையின் மூலம் மிருகப் பிராயத்தையடையும்படி செய்வதாலும்,
(இ இயந்திர சாலைகளைப் பகைத்து தொழில் விவசாய முறைகளில். இயந்திர வளர்ச்சியைத் தடுத்து மனிதப் பிரயாசையை அதிகப்படுத்தும் முறைகளைக் கையாளுவதின் மூலம் கதர் வேலை மனித வாழ்க்கையில் ஓய்வுக்கும், அறிவு வளர்ச்சிக்குமான நேரத்தைக் குறைப்பதாலும்.
(ஐ இந்த மகாநாடு கதர் இயக்கத்தைக் கண்டிப்பதோடு இந்திய மில் துணிகளை உடுத்தவும், இயந்திரங்களை வளர்க்கவும், கூட்டுத்தொழில் முறைகளைக் கையாளவும் மக்களிடை தீவிர பிரசாரஞ் செய்யவும் தீர்மா விக்கிறது”
என்பதாகும். ஏனெனில்
காங்கிரசின் கதர் கொள்கையானது இந்திய பொருளாதாரம், கைத் தொழில், வியாபாரம் ஆகிய மூன்றையும் பற்றியதாக இருக்கிறதென்பதோடு ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியதை அவனவனே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என்னும் தத்துவத்திலும் இந்தக் கதரானது இந்திய நாகரீகத்தையும் பண்டையப் பெருமையையும் பற்றியதாகவும் கருதப் பட்டிருக்கின்றது.
ஆகையால் இந்தத் தன்மையிலுள்ள கதரின் ஒவ்வொரு நிலையை
யும் கவனித்துப் பார்த்தோமானால் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாகரீக வளர்ச்சிக்கும் இந்தவித அபிப்பிராயங்கள் கொண்ட கதர் தத்துவம் எவ்வளவு தூரம் கெடுதியை உண்டு பண்ணத் தக்கதாயிருக்கின்றது என்பது விளங்கும்.
முதலாவதாக பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டு கதர் எந்த விதத்தில் அதற்குப் பயன் அளிக்கக் கூடியதாயிருக்கின்றது என்பதை யோசித்துப் பார்ப்போம். பஞ்சு விலை எவ்வளவுக்கெவ்வளவு குறைகின்ற தோ அவ்வளவுக்கவ்வளவு விவசாய மக்களுக்கு கஷ்டம் ஒரு புறமி ருந்தாலும் பஞ்சு விலையைப் பற்றிய அதாவது மூலப்பொருளைப்பற்றிய லட்சியமே இல்லாமல் கதரின் உற்பத்தி, நூற்புநெசவு ஆகியவற்றின்
399 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
செலவுகளே அதாவது அசல் விலையே மிகவும் கூடுதலாகவே அடங்கும் படியாக ஆவதோடு அதை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு நிலையும் கஷ்டமானதும் முன்னேற்றத்திற்கு உதவாததுமாகவே இருக்கின்றது.
அதாவது யார் எவ்வளவு பாடுபட்டாலும் கதர் நூல் விஷயத்திலும் நெசவு விஷயத்திலும் துணிரகம் விஷயத்திலும் இன்று காணப்படும் தன்மையிலிருந்து இனி சாதாரணத்தில் எவ்வித மாற்றத்தையாவது செய்து விடக்கூடும் என்று சுலபத்தில் எண்ணுவதற்கில்லை. ஏதாவது ஒரு சிறு மாற்றமாவது ரகம் முற்போக்குத் தன்மையில் செய்யலாம் என்றாலோ அதற்கேற்படும் கூலி முற்போக்கின் தகுதிக்கு மேற்பட்டதாக செல வழித்தாக வேண்டிவரும். இது தவிர விலை விஷயத்தில் இனி இதைவிட குறைக்கும் படியான நிலைமை சுலபத்தில் ஏற்படப்போவதில்லை.
ஏனெனில் கதர் தொழிலோ கதர் வியாபாரமோ மக்களின் சாதாரணப். பழக்கத்தில் உள்ள தொழிலாயும் வியாபாரமாயும் இல்லாமல் வேறு ஏதோ ஒரு தத்துவத்திற்காக தியாகம் செய்து தீரவேண்டிய முறையில் - மற்றவர்கள்.
நிர்பந்தத்தின் மீது நூற்றல், நெய்தல், விற்பனை வியாபாரம் செய்தல். வாங்கிக் கட்டுதல் ஆகிய காரியங்கள் முழுவதும் நடைபெற வேண்டியதாக இருந்து வருகின்றது. இவ்வளவு கஷ்டப்பட்டும் உத்தேசித்தக் காரியமாகிய பொரு ளாதாரம் என்பது வாங்கி விற்கின்ற மத்திய மனிதன் என்கின்ற முதலாளி தவிர மற்ற யாருக்கும் அது சிறிதும் பயன்படாததாயிருப்பதுடன் உண்மை யிலேயே வாங்கிக் கட்டுகிறவன் அதிக பொருள் அதாவது 100க்கு 250 பங்கு நஷ்டமடைவதற்கும் தயாராயிருக்க வேண்டியவனாகவே யிருக்கின்றான். அப்படிச் செய்தும் தொழிலாளியாகிய நூற்புக்காரன் மணிக்கு ஒரு தம்பிடி அல்லது ஒன்னரைத் தம்பிடி அதாவது ஒரு அணா வில் 12-ல் ஒரு பாகம் அல்லது 8ல் ஒரு பாகமே பெறமுடிகின்றது. நெசவுக்காரனும் சாதா மில் நூல் நெசவு நெய்வதைவிட இரண்டு மடங்கு கஷ்டமும் கவனமும் செலுத்தி வேலை செய்து பழைய கூலியையே தான் பெறவேண்டியதாயிருக்கின்றது.
இவ்வளவும் தவிர முன்குறிப்பிட்டதுபோல் கதர் வாங்குகின்றவனும் ஒன்றுக்கு இரண்டரையாய் விலை கொடுத்தும் சாதாரண சரக்கைவிட மிகக் கேவலமான தென்று சொல்லும்படியான சரக்கையே வாங்கி வேறு ஒரு காரியத்தின் பொருட்டு சமாதானம் செய்து கொள்ளவேண்டியதாயிருக் கின்றது.
ஆகவே பொருளாதாரத்துறையில் கதர் எந்தவிதத்தில் பயன் அளிக்கின்றது என்பது இதிலிருந்தே அறியத்தகுந்ததாகும்.
இனிக் கதர் தத்துவம் கைத்தொழில் துறையில் எப்படிப் பயன்படு கின்றது என்று பார்ப்போம். கதர் கைத்தொழில் உலக கைத்தொழில் முறைக்கு நேர்விரோதமானதாக இருக்கின்றது. எப்படியெனில் கைத் தொழில் என்பது
குடி அரசு - 19310) 400.
வேலை செய்கின்றவன் கொஞ்ச நேரத்தில் அதிக சரக்கு உற்பத்தி பண்ணக் கூடியதாகவும், அதுவும் சரீரப்பிரயாசை தேவையின் பாகம் நாளுக்குநாள் குறைந்து கஷ்டமில்லாமல் செய்யக்கூடியதாகவும், சாமான் மாதிரியும் நாளுக்கு நாள் உயர்ந்த தரமானதாகவும் இருக்க வேண் டியதோடு அதை வாங்கி உபயோகிக்கும் மக்களுக்கு அந்தசாமான்கள் அதிக சரசமாய் இருப்ப
தாகக் காணக் கூடியதோடு அச்சாமானின் வேலைப் பாடானது மக்களை வாங்கும்படி தூண்டக்கூடியதாகவும் இருக்க வேண்டியதாகும். இந்த முறை
யில், பார்த்தாலும் கதர் தத்துவம் முதல் பிரிவுக்கு சொல்லப்பட்ட காரணங். களால் கைத்தொழில் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு நிலையிலும் விபரீத மாகவே இருந்து வருகின்றது.
மூன்றாவதாக வியாபாரத் துறையில் பார்த்தாலும் மூலப் பொருளை: அதிகமாக செலவு செய்து அதாவது ஒரு வேஷ்டிக்கு எவ்வளவு மூலப்பொருள் பஞ்சு) வேண்டுமோ அதற்குமேல் இரண்டு அல்லது மூன்று பங்குவீதம் பஞ்சை செலவுசெய்து (அதாவது மொத்தமான நூலில் முரட்டு துணியாகத்தான் பெரிதும் நெய்ய முடிவதால் இரண்டுமூன்று வேஷ்டிக் காகும்படியான பஞ்சு ஒருவேஷ்டிக்கே செலவாகும்படியாகச் செய்து ) அது சம்பந்தப்பட்ட தொழிலாளிகளையும் கசக்கிப்பிழிந்து விற்கின்றவனையும் வாங்குகின்றவனையும் வேறு காரணத்திற்காக அதாவது வியாபாரத்தில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லாமல் நிர்பந்தத்தின் பொருட்டு ஜனங்கள். இந்த விற்றல் வாங்கல் வியாபாரம் செய்யும்படியாக இருப்பதால் கதர் தத்து
வம் வியாபார முறைக்கும், அதன் முற்போக்குக்கும் நேர் விரோதமான தாகவே இருக்கின்றது.
தவிர ஒருநாட்டின் பொருளாதாரம், கைத்தொழில், வியாபாரம் ஆகியவை மூன்றும் முற்போக்கடையவேண்டுமானால் இம்மூன்றும் மற்ற நாடுகளில் எப்படி முற்போக்கடைந்து இருக்கின்றது? மற்ற நாட்டுக்கும் நமது நாட்டுக்கும் உள்ள வியாபார செளகரியம் எப்படி இருக்கின்றது? அதன் போட்டியின் தத்துவம் என்ன? உலகப் போக்கு என்ன? என்பவைகளை யோசித்துப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு நாடும் நவீன ஆராய்ச்சி இயந்திர செளகரியம் வியாபார தந்திரம் ஆகிய காரியங்களைக் கொண்டே யொழிய பண்டைய காலத்தின் கைத்தொழில்முறையை புதுப்பித்ததாலோ ஆராய்ச்சி யை அலகஷியம் செய்து இயந்திரங்களை வெறுத்ததாலோ அல்லது மறியல் செய்து நிர்பந்தப்படுத்தி வியாபாரம் செய்யச் செய்ததினாலோ அல்ல வென்பது விளங்கும்.
இந்திய தேசத்தின் மக்களை ஜாதிவாரியாகப் பிரித்து ஒவ்வொரு
ஜாதிக்கு இன்ன இன்ன தொழில் என்று கற்பித்து அந்தத்தொழிலை அந்தந்த ஜாதித் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டியதுதான் மனித தர்மம் என்கின்றதான நிர்பந்தம் இங்கு இருந்து வருவதாலும் இந்தத் தொழிலாளி ஜாதியல்லாதவர்களே “இந்நாட்டின் நலத்தை கோருகின்ற தலைவர்கள்”
401 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
என்பதாக ஆகிவிட்டதாலும் அதுமாத்திரமல்லாமல் இந்த மாதிரியான வருணாச்சிரமதர்ம தொழில் முறையில் நம்பிக்கை உள்ளவர்களும் அதை மேலும் நிலைநிறுத்தப்பாடுபடுகின்றவர்களுமே தொழில் முறையைசீர்திருத்
தம் செய்கின்றவர்களாக இருப்பதினாலும் பண்டைய தொழில் முறையை புதுப்பிக்க வேண்டுமென்றும் புதிய நாகரீக இயந்திரங்கள் கூடாது என்றும் ஒவ்வொருவரும் ஓய்வு நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்றும் அவனவனுக்கு வேண்டியதை அவனவனே செய்துகொண்டு தனித்தனி தொழிலாளியாய் இருக்கவேண்டுமேயொழிய கூட்டுத்தொழிலாளிகளாய் இருக்கக்கூடாதென்றும் சொல்ல வேண்டியதாயிற்று. ஏனெனில் இந்தப்படி ஒவ்வொருவனும் தனித்தனித் தொழிலாளியாக இருந்தால்தான் அதோடு *அவனவனுக்கு வேண்டியதை அவனவனே செய்துகொள்ளவேண்டும்” என்கின்ற வேலையில் அமர்ந்திருந்தால்தான் தொழிலாளிகள் ஒன்றுசேரவோ அவர்கள் நிலையைப் பற்றி கலந்து ஆலோசிக்கவோ அல்லது தங்களது யோக்கியதையை சற்று உயர்த்திக்கொண்டு தொழிலாளி தன்மையில் இருந்து நழுவிக் கொள்ளவோ அவர்களது பரம்பரை தர்மத்தில் இருந்து விலகவோ முடியாததாயிருக்கும் என்று கருதியே இச்சூட்சி செய்யப்பட்டிருக்கிறது. ஆதலாலேயேதான் புதிய நாகரீகமும் இயந்திர செளகரியமும் கூட்டு வேலையும் தொழிலாளிகள் முன்னேற்றமும் கதர் தத்துவத்தில் சிறிதும் இல்லாமலிருக்க வேண்டியதாகி விட்டது.
ஆகவே, வருணாச்சிரம கட்டுப்பாட்டை உடைத்து மனிதவர்க்கத்தின் சரீரப்பிரயாசையைக் குறைத்து குறைந்த நேரத்தில் அதிகக் கூலி கிடைக்கும் படி செய்து மூலப்பொருள்களை வீணாக்காமல் விவசாயிகளுக்கும் அதிகப் பணம் வரும்படி செய்து எல்லா மனிதருக்கும் எல்லா தொழில் செய்யவும் எல்லாவித பதவியடையவும் தகுந்தபடியாக ஆக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக இத்தகைய கதர் திட்டம் ஒழிந்தேயாகவேண்டும் என்பது நமதபிப்பிராயமாகும்.
தவிர, இந்தியாவுக்கு எந்த விதமான ஆட்சி முறையோ, அல்லது சுயேச்சையோ பூரண சுயேச்சையோ, அல்லது ராம ராஜியமோ, தர்ம ராஜிய மோவருவதானாலும் இந்தியா உலக முற்போக்கில் கலந்து கொள்ளவும் புதிய ஆராய்ச்சியின் பயன்களை அனுபவித்து மனித சமூகம் இன்பமும் திருப்தி
யும் யடையவும் தகுந்ததாக, ஆவதற்குத்தக்கதாய் இருக்க வேண்டுமே யொழிய மற்றப்படி அவனவன் வயிற்றுப்பாட்டிற்கும் அவனவனுக்கு வேண்டிய இன்றியமையாத அவசியங்களுக்கும் அவனவனே அவனது வாழ்நாள் நேரம் முழுவதையும் செலவு செய்து கொண்டிருக்கும்படியான தத்துவங்கள் கொண்டதாக இருக்கக்கூடாது என்பதே நமதபிப்பிராயம்.
இந்தக் காரணங்களாலேயே திரு. காந்தியவர்களின் தத்துவமானது இந்தியாவை ஒரு நாளும் விடுதலையுள்ள நாடாகவோ மனித சமூகத்தின் முற்போக்கிற்கும் நாகரீக அபிவிருத்திக்கும் சரீரப் பிரையாசையைக்
குடி அரசு - 19310) 402
குறைத்துக்கொண்டு வாழும்படியான நாடாகவோ ஒரு நாளும் ஆக்க முடியா தென்றே சொல்லுவோம்.
ஏனெனில் அவரது நோக்கமெல்லாம் பண்டைய நிலைகளையே பெருமையாய்க் கருதுவதிலும் பண்டைய முறைகளை புதுப்பிப்பதிலும் இருக்கின்றதே யொழிய இன்றைய உலகம் என்பது என்ன என்பதில் கவலையோ, கருத்தோ என்பது சிறிதும் இல்லை. பண்டைய நிலைமையை பெருமைப் படுத்தி, பண்டைய முறைகளை புதுப்பிப்பதில் யாருக்கு அனு கூலம் என்று பார்ப்போமானால் மக்களை ஏமாற்றிக்கொண்டு சோம்பேறி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனர்களுக்கும் பாடுபடுவோரின் பலனை அனு பவிக்கும் பிரபுக்களுக்கும், சரீரப் பிரயாசை இல்லாமல் வாழ்வை நடத்த விரும்பும் படித்த கூட்டத்தார் என்பவர்களுக்கும் அனுகூலமாகவும், தங்கள் ஆதிக்கத்திற்கேற்ற அரசியலை ஸ்தாபித்துக் கொண்டு சுகத்திலிருக்கவும், அதற்கு பயன்படக்கூடியதாகவும் யிருக்கலாம். இந்தக் கூட்டத்தார் முன் திரு. காந்தி அவர்களும் மகாத்மாவாய், அவதார புருஷராய், தெய்வத்தன்மை பொருந்தியவராய், உலகம் போற்றும் உத்தமராய் உலகுக்கே பெரியோராய் விளங்கலாம்.
ஆனால் பாடுபட்டும் கூலியில்லாமல் பட்டினி கிடப்பவனுக்கும் தலைமுறை தலைமுறையாய் ஏழையாய், கூலிக்காரனாய் இருப்பவனுக்கும் தெருவில் நடக்க, குளத்தில் குடிக்க யோக்கியதை இல்லாமல் பன்றியிலும், கழுதையிலும், நாயிலும் கேடாய் மதிக்கும் இந்நாட்டுப் பழங்குடி மக்க ளுக்கும் திரு. காந்தியவர்கள் “எமனாய்” இல்லாமல் வேறுயாராய் இருக்க முடியும் என்பதைப் பகுத்தறிவுடன் நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
மற்றது மற்றொரு சமயம்.
குடி அரசு - தலையங்கம் - 07.06.1931
403 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
Bamail
சுமாமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ் பத்திரிக்கை
லாலுகுடி தாலூகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப்பற்றி நெடுநேரம் பேசினார்கள். திருஈ.வெ. இராமசாமி, தினசரி அவசியமில்லை என்றும் தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப் பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆகவேண்டுமென்றும் நீங்கள் முன்வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதை தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப்பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச்சொன்னதின் பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆகேஷபணையில்லை யென்றும் சொன்னார். அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது. பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திருசொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. மற்றும் இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதர வளிக்க முன் வந்தார்கள். சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் தோன்றியபோது 6 மாதம் திருச்சியில் நடத்திப் பார்த்து முடியாவிட்டால் சென்னையிலேயே நடத்தலாம் என்றும் பேசப்பட்டது. பத்து பங்குகள் அதாவது 5000ரூக்கு அங்கேயே விதாயம் ஏற்பட்டது. சமீபத்தில் நடைபெறும் நன்னில சுயமரியாதை மகாநாட்டிலும் அடுத்தவாரம் போல். கொடைக்கானலில் நடைப்பெறப் போகும் சுயமரியாதை சங்க நிர்வாக கமிட்டியின் போது சங்கத் தலைவரைக் கலந்தும் இவ்விஷயம் மேற்கொண்டு யோசிக்கப்படும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931
குடி அரசு - 19310) 404
மதுவிலக்கு நாடகம்
தேசியத்தின் பேரால் ஏதாவது ஒரு நாடகம் நாட்டில் நடந்து கொண்டி ரக்கா விட்டால் மக்கள் காங்கிரசையும், காந்தியையும் அடியோடு மறந்து விடுகின்றார்கள்.
ஆதலால் தேசிய தொழில்காரர்களுக்கு ஏதாவது ஒரு வேலை நடத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது. அதற்கு ஏற்றாப்போல் காங்கிரஸ் பக்தர்களுக்கும் பொதுஜனங்களின் காணிக்கைப் பணம் தாராளமாய் இருக்கின்றது. அதற்கேற்றாப்போல் வேலையில்லாத் தொந்திரவால் கஷ்டப்படும் வாலிபர்களும் நாட்டில் ஏராளமாய் இருக்கின்
றார்கள். ஆகவே இவ்விரண்டும் சேர்ந்தால் பெட்றோல் எண்ணைக்கும், நெருப்புக்கும் உள்ள சம்மந்தம் போல் ஒன்றுக்கொன்று வெகு சுலபமான சம்மந்தம் ஏற்பட்டு விடுகின்றது.
ஆகையால் இவை இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன வேலை செய்யலாம் என்று பார்த்தால் பொது ஜனங்கள் சீக்கிரம் ஏமாறுவதற்கு அனுகூலமாக கள்ளுக்கடை மறியல்கள் தான் தென்படுகின்றது. ஆகவே இதன் மீது தலைவர்கள் என்பவர்கள் வாலிபர்களை ஏவி விடுவதால் ஏதாவது ஒரு கலகம் ஏற்படுகின்றது. அக்கலகத்தை பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்வதே பெரிய தேசீயப் பிரசாரமாகக் கருதப்பட்டு விடுகின்றது. இந்த முறையிலேயே மதுவிலக்கு நாடகம் நடைபெறுகின்றது.
விளம்பரக்காரர்களும், ஸ்தல ஸ்தாபனம், சட்டசபை, முதலியவை களில் ஸ்தானம் பெறக் காத்துக்கொண்டிருக்கின்றவர்களும் இந்த நாடகத்
திற்கு சில சமயங்களில் பாத்திரங்களாய் இருக்கவேண்டியவர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதன்பயன்களை நாடகக் கம்பெனி சொந்தக்காரர். களாகிய தலைவர்கள் என்பவர்களே அடைகின்றார்கள்.
உதாரணமாக திருப்பூரில் நடந்த மறியலில் அடித்தவர்களும், அடிப் பட்டவர்களும், அதாவது அடித்ததாகக் கெட்டபேர் வாங்கினவர்களும், அடிபட்டு அவஸ்தைபட்டதாகச் சொல்லப்பட்டவர்களும் ஒரே ஊர்க்காரர், ஒரே கூட்டத்தார்கள், ஒரே ஜாதி சொந்தக்காரர்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதன் பலன் பெருமை அசோசியேட் பிரஸ், பிரிபிரஸ் சேதிப் பெருமை சமாதானம் செய்துவந்த பெருமை முதலாகிய கெளரவங்க 405 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ளெல்லாம் உயர்திரு. சி.ராஜகோபாலச்சாரியார் அவர்களது “பாத சன்னி தானத்திற்கு”ப் போய்ச் சேரவேண்டியதாகி விட்டது.
நம்மவர்கள் மூடத்தனமாக நடந்து, பட்டதுதான் பயன். ஒரு சமயம் யாராவது கொஞ்சம் இவ்வித இயக்கத்தால் பிழைக்க வேண்டியவர்களல்லா தவர்கள் ஒருவர், இருவர் இதில் சேர்ந்து அடிபட்டதாகப் பேர்வாங்கியிருந்தா
லும் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஏதாவது ஒருஸ்தானம் ஒதுக்கி வைக் கப்படுவது மல்லாமல் மற்றபடி இதனால் என்ன பயன் என்பது விளங்க வில்லை.
இந்த மறியலில் சம்மந்தப்பட்ட வாலிபர்களைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. மற்றபடி பெரியவர்கள், தேசபக்தர்கள், பொதுநல சேவைக் காரர்கள் என்பவர்களை ஒன்று கேட்கின்றோம்.
அதாவது இந்தக் கள்ளுக்கடை மறியல் செய்வது என்பது இதனால் அதாவது இவர்களது மறியலில் கள்ளுக்குடி நின்றுவிடும் என்று கருது கின்றார்களா? அல்லது வெள்ளைக்காரனை இந்த நாட்டைவிட்டு ஓட்டு வதற்கு அல்லது “சுயராஜியம்” பெறுவதற்குப் பயன் படக்கூடியது என்று கருதுகிறார்களா என்று கேட்கின்றோம். கள்ளுக்கடை ஏலத்தில் எடுத் திருப்பது திருப்பூர் பிரபுக்கள். மறியல் செய்வது திருப்பூர் பிரபுக்கள். கள்ளுக்கு மரம் வளர்த்து குத்தகைக்கு விடுவது அக்கம் பக்கத்தில் பிரபுக்கள்: இந்தக் கள்ளைக் குடிப்பது திருப்பூர் தொழிலாளிமக்கள். அரசாங்கத்தில் மாதம் ரூ.5000 வாங்கிக்கொண்டு கள்ளு நிர்வாகம் பார்ப்பது இந்த மாகாணப். பிரபுக்கள் ஜனப்பிரதிநிதிகள். மேலும் ஜனப்பிரதிநிதியாக இந்த வேலைக்குப். போட்டி போடுவதும் இதே ஜில்லா பிரபுக்கள். மற்றும் இந்த இலாகாவில். மாதம் ரூ. 2500 சம்பளம் முதல் ரூ.12 சம்பளம் வரையில் வாங்கி ஜீவனம் செய்து கொண்டு வேலை பார்க்கும் சுமார் 10000பேர்களும் இந்த மாகாண இந்திய (படித்த மக்களேயாவார்கள். மற்றும் இந்தக் கள்ளு, சாராய வியாபாரத்தால் தொழிலால் பிழைக்கும் சுமார் 20000 மக்களும் இந்த மாகாண இந்தியமக்கள். இப்படியெல்லாம் இருந்தாலும் இந்தத் தொழிலும் சட்டத்தில் குற்றமானதல்ல. மதத்தில் குற்றமானதல்ல, “ஒழுக்கத்திலும்” குற்றமானதல்ல. (அளவுக்கு மீறினால் குற்றம் சொல்லலாம்) இந்த நிலையில் யாரோ இரண்டு பேர் ஏதோ காரணத்திற்காக கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டு யாரோ இரண்டொருவனை “அப்பா, சாமி கள்ளுக் குடிக்காதே” “காந்தி கட்டளை இட்டு இருக்கிறார்” “ராஜகோபாலாச்சாரி கட்டளையிட்டி ருக்கிறார்”. “சத்தியமூர்த்தி கட்டளையிட்டு இருக்கிறார்” என்று சொல்லி விடுவதாலேயோ அல்லது அந்தக் குடிகாரனிடமோ, கள்ளு வியாபாரக் காரனிடமோ இரண்டு அடி வாங்கிக்கொண்டு அதை ஒன்று பத்து நூறாகப் பெருக்கிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து விடுவதாலேயோ கள்ளுக் குடிநின்று போகுமோ? என்பதை யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 19310) 406
சத்தியாக்கிரகம், மறியல் என்பவைகள் வீண் சண்டித்தனமே யில்லாமல் அதில் ஏதாவது கடுகளவுநாணையமோ, யோக்கியப் பொறுப்போ, இருக்க முடிகின்றதா? என்றுகேட்கின்றோம். உண்மையாய் யோக்கியமாய் கள்ளை நிறுத்த சத்தியாக்கிரகம் செய்பவர்கள் கள்ளு மந்திரி வீட்டில் கள்ளு இலாகா அதிகாரி வீட்டில் - மரம் கள்ளுக்குவிடும் குடியானவன் வீட்டில் - கள்ளு இறக்கும்போது மரத்தடியிலும் மற்றும் இது முதலாகிய ஆரம்ப நிலையிலிருந்து ஏதாவது ஒன்றில் செய்தால் சிறிது அர்த்தமாவது உண்டு. அவைகளை விட்டு விட்டு எல்லாக் காரியமும் நடந்தும், செலவாகும் பணமெல்லாம் செலவாகி, செய்யவேண்டிய சடங்கெல்லாம் செய்யப்பட்டு கள்ளுக்கடைக்குள் கள்ளு வந்து விற்பனைக்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது “காந்திக்கு ஜெ” “கள்ளுக்குடிக்காதே” என்று சொல்லுவதால் எப்படி நிற்கமுடியும் என்பதை அனுபவ ஞானமுள்ள மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
மேலும் இந்துக்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகார ரம், கிறிஸ்துவர்களில் இருக்கும் அவ்வளவு விகிதாச்சார குடிகாரரும் போல அவ்வளவு விகிதாச்சார குடிகாரர்கள் மகமதியர்களில் இருக்கின்றார் களா: என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒருக்காலமும் அவ்வளவு குடிகாரர்கள் இல்லை என்றே சொல்லு வோம். இதன் காரணம் என்னவென்றால் அவர்களது மதமானது கள்ளை அவ்வளவு கடினமாக வெறுக்கின்றது. மற்றபடி இந்துக்கள் என்பவர் களிலும்
மற்றும் சற்று கல்வி அறிவு மேல்ஜாதிக்காரர்கள் என்கின்ற எண்ணத்துடன் சரீரப்பாடுபடாமல் சோம்பேரியாய் இருக்கும் சைவ வேளாளர் தொண்டை மண்டல வேளாளர் பெருவாரியான வியாபாரிகள் வைசிய செட்டிமார்கள் என்பவர்கள் முதலியவர்களிலும் குடிக்கின்ற மக்கள் விகிதாச்சாரம் மிகவும் சுருக்கமானதேயாகும். அந்த சுருக்கமும் ஏதோ ஒருவித நாகரீகப்பைத்தியக் காரணமாக, செயர்க்கைவாசனை காரணமாக இருப்பதல்லால் மற்றபடி குடிகாரர்கள் என்கின்ற முறையில் ஏற்படுவது கிடையாது. ஆகவே இன்றைய குடிகார மக்களின் குடிக்கு காரணம் என்ன என்பதை அறிவாளிகள் இப் போதாவது யோசித்துப்பார்த்தால் உண்மை உணராமலிருக்க முடியாது.
சாதாரணமாக கள் இலாகா சனப்பிரதிநிதிகள் ஆதிக்கத்திற்கு வரா மலிருந்து சர்க்கார் இடமே இருந்திருந்தால் அது சம்மந்தமாக சட்டம் முதலியவைகள் செய்யவாவது சற்று இடமிருக்கும் இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் ஜனப்பிரதிநிதிகளில் மெஜாரிட்டியார். யாரோ அவர்களே அந்த இலாகாவை நடத்தும் வேலையை ஒப்புக் கொள்ளும் மந்திரியாகிவிட்டதால் மந்திரிவேலை கிடைக்காதவர்களும் அடுத்த தடவை அதை அடையலாம் என்று காத்திருப்பவர்களும் அதைப் பற்றி ஏதாவது பேசிக்கொண்டும் இவ்வித பிரசாரம் செய்து கொண்டு மிருக்கலாமே யொழிய மற்றபடி இதனால் எல்லாம் கள்ளுக்குடியை ஒழிக்க
407. பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காரியத்தில் ஒரு துரும்பை அசைத்துவிட முடியுமா? என்று கேட்கின்றோம். வீணாக இது பொதுஜனங்களில் பதவி வேட்டைக் காரருடைய சுயநல வஞ்சகத்தையும் பாமரமக்களின் முட்டாள் தனத்தையும் கைமுதலாக வைத்துக்கொண்டு நடத்தும் போலி நாடகமே யொழிய மற்றபடி கள்ளு மறியலில் சிறிதும் பயனும் நாணயமும், யோகியப் பொறுப்பும், புத்திசாலித் தனமும் இல்லையென்றே சொல்லுவோம்.
அன்றியும் அரசியல் கருத்துக் கொண்ட மறியல்களை நிறுத்தி விட்டு பொருளாதாரத்திற்கும் சன்மார்க்கத்திற்குமான தனிப்பட்ட சீர்திருத்தத் துறையில் மறியல் செய்வதாய் சொல்லி ராஜி பேசிக்கொண்டு ஜெயிலிலி ருந்து வெளியில் வந்த பிறகு மறுபடியும் அரசியல் கருத்தில் செய்யும் மறியலில் எவ்வளவு தூரம் பயனும் நாணயமும் உண்டாகும் என்பதைப் பொது ஜனங்களே யோசித்துப் பார்ப்பதன்மூலம் இந்திய தேசீயத்தின் நாணயத்தையும் தலைவர்களின் நாணயத்தையும் அறிந்துகொள்ளட்டும் என்றே விட்டு விடுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 07.06.1931
குடி அரசு - 19310) 408
வஹா
உயர்திரு. ஜவஹர்லால் நேரு உடல் சுகத்திற்கென்று தென்னிந்தி யாவிற்கு வந்து ஒரு சரியான நாடகமாடி விட்டு ஊருக்குத் திரும்பினார். எப்படித் திரும்பினார்? சமதர்மக் கொள்கைகளையும் பொதுவுடைமைக் கொள்கைகளையும் பல்லவியாக வைத்துக் கொண்டார்.
“யோக்கியர்களுக்கு அரசியல் உலகம் வெறுப்பைக்கொடுக்கின்றது.
சீக்கிரம் அதை விட்டு விலகிக்கொள்ளுவேன்” என்றார். ஆனால் தான் கடைசிவரை அரசியல் பிரசாரமே அதுவும் அரசியல்காரர்கள் முறையைப். பின்பற்றியே செய்தார். சமூக இயல் விஷயத்தில் தீண்டாமையைப்பற்றி உண்மையைத் தைரியமாய் பேசுவதற்கு ஒவ்வொரு நிமிஷமும் நடுங்கினார். ஏதாவது ஒரு சமயத்தில் தீண்டாமை யொழியவேண்டுமென்று பேச நேர்ந் தாலும் உடனே அதற்கு பந்தோபஸ்தாக எந்த ஜாதியாரின் உரிமை களையும் பாதிக்க விடமாட்டேன் என்றும் ஒருகரணம் அடித்துக் கொண்டே பார்ப்பனர். களின் கோபத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டார்.
காங்கிரசிலும் தீண்டாமையைப்பற்றி ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார். ஆனால் இப்போது செய்ய வேண்டிய வேலை அதுவல்ல. கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் தான் என்று ஒரு பல்டி அடித்துத் தப்பித்துக் கொண்டார். ஆகவே அவர் கூடியவரையில் திரு. இராசகோபாலாச்சாரியாரை விடசாமர்த்தியமாகவே நடந்து கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒவ்வொரு ஜாதி மதக்காரருடையவும் உரிமைகள் பாதிக்கப்படாமலும் ஒரு ஜாதியாரால் மற்றொரு ஜாதியாருடைய உரிமை பாதிக்கப்படாமலும் இருக்க வேண்டுமென்று கருதி வேலை செய்பவர்களால் தீண்டாமையை ஒழிக்கவோ பொதுவுடைமையும், சமதர்மமும் கொண்ட கொள்கையை ஏற்படுத்தவோ முடியுமா? என்பதை அறிவுள்ள வாசகர்கள் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜாதியின் உரிமையென்று எப்பொழுது பாகுபடுத்திக் கொண்டாரோ அப்பொழுதே திரு. ஜவஹர்லால் ஒவ்வொரு ஜாதியையும், கீழ்ஜாதி மேல் ஜாதி என்ற பாகுபாடுகளையும் படிகளையும் ஒப்புக்கொண்டு அவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற ஒப்புக்கொண்டார் என்பதில்
409 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
யாரும் சந்தேகப்பட முடியாது.
ஆகவே இன்றையதினம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லா
தார், தீண்டாதார், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள் ஆகிய தகறாருகள் ஜாதிமதத்தை ஆதாரமாய்க் கொண்டு சில செளகரியங் களை தங்கள் தங்கள் ஜாதிமத உரிமை என்று கருதி அதுவும் குர்ஆன், பைபிள், வேதம், தர்மசாஸ்திரம் ஆகியவைகளின்படி கடவுள் கட்டளையாக அனுபவித்து வருவதாகவே கருதிவருகிறார்கள். இவற்றிற்குப் பாதகமில்லா.
மல் பார்த்துக்கொள்ள வீரர் ஜவர்ஹர்லாலுடைய தயவு எதற்குஎன்றுதான் கேட்கின்றோம். இப்பொழுதே அப்படித்தானே நடைபெற்று வருகின்றது? இது போதாதா? இதைக்காப்பாற்ற காங்கிரசும், காந்தியும், நேருவும் எதற்கு? இதற்கு ஒருஇரும்புப்பூண் போட்டு இனி யாராலும் எந்தக் காலத்திலும் அசைக்காமல் இருக்கவா? என்று கேட்கின்றோம். ஒவ்வொரு ஜாதி உரிமையையும், ஒவ்வொரு மத உரிமையையும், ஒவ்வொரு வகுப்பு உரிமையையும் காப்பாற்றுவது, காங்கிரஸ் கொள்கை யானால், காந்தி கொள்கையானால், நேரு கொள்கையானால், இவைகளை விட வெள்ளைக்கார கொள்கை ஆயிரம் மடங்கு மேலானதென்று கல்லின்மேல் செதுக்கி வைப்போம்.
மற்றும் தீண்டாமையை ஒழிப்பதைப் பற்றி திரு. ஜவஹர்லால்நேரு கூறினது எவ்வளவு ஏமாற்றுகரமானது என்பதை தீண்டாமை யொழிப்பதில் கவலையுள்ளவர்கள் உணரவேண்டும்.
“தீண்டாமையொழிப்பதும் காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றுதான். ஆனால் கள்ளுக்கடையும் ஐவுளிக்கடையும் மறியல் செய்யும் வேலைதான் இப்போது காரியத்தில் செய்யவேண்டியது” என்று கூறினால் இதன் யோக்கியத்தன்மை என்ன என்று கேட்கின்றோம்.
தீண்டாமையானது பறையர், சக்கிலியர், பள்ளர் என்று சொல்லப் படுபவர்கள் முதலிய சிலருடைய கஷ்டம் என்று மாத்திரமே சிலர் கருதி யிருக்கிறார்கள். இந்தக் கருத்தேதான் நமது மக்களின் சுயமரியாதை யற்ற தன்மைக்கு ஒரு உதாரணமாகும்.
திரு. ஜவஹர்லால் நேருவை நேற்று கண்யாகுமரி கோவிலுக்குள் சென்று “கடவுளை” தரிசிக்க அனுமதிக்காமல் போலீஸ் பந்தோபஸ்துடன் விறட்டி அடித்து விட்டார்கள். திருவனந்தபுர பட்டணத்தின் சில தெருக்களில்.
திரு. ஜவஹர்லால் ஊர்வலம் போவது கூடாது என்று காவல் மூலம் தடுத்து விட்டார்கள். இந்தக்கதி திரு. லஜபதிக்கும் திரு. காந்திக்கும் கூட ஏற்பட்டது தான் என்பது யாவரும் அறிந்ததேயாகும். ஆகவே “சக்கிலியர், பறையர், பள்ளர்” ஆகியவர்களுக்கு கோவி
லிலும், குளத்திலும். தெருவிலும் தீண்டாமை தத்துவப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறதோ அதே உரிமைகள்தான் “சமதர்ம” ஜவஹர்லால்:
குடி அரசு - 1931 (1) 410
நேருவுக்கும் அவர் “பாட்டனார்” “மகாத்மா” காந்திக்கும், அவர் பூட்டனான “பாஞ்சால தெய்வம்” லாலா லஜபதிக்கும் மறுக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் தங்களை “நல்ல ஜாதி” என்று கருதிக் கொண்டிருக்கும் “நாயக்கர், செட்டியார், பிள்ளை, முதலியார்” முதலிய “பெரிய ஜாதி” என்று எண்ணிக் கொண்டி ருப்பவர்களுக்கும் தங்களை விஸ்வ, தேவாங்க, செளராஷ்டிர பிராமணர்கள், க்ஷத்திரியார், வைசியர், சற்சூத்திரர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர் களுக்கும் நடந்து கொண்டுதான் வருகின்றது. இதில் செய்யப்பட வேண்டும் என்று கருதும் எவ்வித சிறு மாறுதலும் ஜவஹர்லால் நேருவின் திட்டப்படி ஏதாவது ஒரு ஜாதியாரின் உரிமைக்கு விரோதம் செய்ததாகவேதான் ஏற்பட்டுத் தீரும். அதனால் தான் திரு. காந்தி முதல் எல்லோருமே “அந்தக் கோவிலில் சாமி யில்லை””என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் விடுவதுடன் அல்லாமல் மற்றபடி அங்கு ஒரு நிமிஷ- நேரமாவது தங்கியிருந்து எவ்வித மான காரியமும் செய்ய முடியாதவர்களாகப் போய் விட்டார்கள். இது போலவேதான் முதலாளி- தொழிலாளி நிலைமையைப் பற்றியும், ராஜாக்கள், ஜமீன்தார்கள், குடிஜனங்கள் நிலைமையைப் பற்றியும் இந்த “சமதர்மக்” கூட்டம் நினைத்துக்கொண்டு முதலாளிகளும் ராஜாக்களும் கலந்த - அவர். களுடைய உரிமைகள் பாதிக்கப்படாத சுயராஜ்யம் (சமஷ்டி ஆட்சி) சம்பா திக்க ராஜி பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இதை திரு. காந்தியவர்கள் இர்வின் பிரபுவிடம் ஒப்புக்கொண்டதோடு திரு. காந்தியவர்கள் இப்போதே முதலாளிகளின் வர்த்தக சங்கத்தின் கெளரவ! அங்கத்தினராகவும் தன்னைத் தெரிந்தெடுத்துக்கொண்டார்.
இனி ராஜாக்கள் சங்க கெளரவ அங்கத்தினர் பதவி மாத்திரம் அவருக்குக் கிடைக்கவேண்டியது பாக்கியிருக்கின்றது. இது இதுவரையில் அவருக்குக்கிடைக்காமல் இருப்பதற்கு சில ராஜாக்களுக்கு திரு. காந்தியிடம் இன்னும் பூரண நம்பிக்கை ஏற்படாததுவேதான் காரணமாகும். அதுவும் ஏற் படும்படி சிறிது சிறிதாய் ராஜாக்களைப்பற்றி பேசி உறுதிமொழி கொடுத்துக் கொண்டுதான் வருகிறார். அதுவும் சீக்கிரம் முடிந்துவிடும் என்றே கருதி விடலாம். இந்த நிலையில் இந்த தேசத்தின் தேசீய இயக்கம் நடைபெறுவதும் இதன் தலைவர்களாகிய திரு. ஜவஹர்லால் பொதுவுடைமைக்காரராயிருப்ப: தாகவும் திரு. காந்தி சமதர்மக்காரரா யிருப்பதாகவும் பரமரமக்களுக்கு விளம்பரப்படுத்தப்படுகின்றது. ஆகவே திரு. ஜவஹர்லால் பொதுவுடைமைத் தத்துவம் ஒவ்வொரு ஜாதி உரிமையையும் காப்பாற்றுவதும் திரு. காந்தியின் சமதர்ம தத்துவம் ராமராஜியத்தை ஏற்படுத்தி முதலாளிகளையும் ராஜாக்களையும் காப்பாற்று வதும் என்கின்ற பார்ப்பனீய முதலாளி தத்துவ ஆட்சி என்பதை இப்போதா வது மக்கள் உணர்வார்களாக.
குடி அரசு - கட்டுரை - 07.06.1931
411 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
= .
இந்துமதம், இஸ்லாமானவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கொள்கை
யில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை: இந்துமதம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது. இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று கூடச் சொல்லலாம். இஸ்லாமியரையும் கிறிஸ்த வரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள். தங்கள் சமூகத்திற்கு எதிறாய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை. பிரிட்டீஷ் அரசாங் கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமான நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் “தீண்டாதாரும்”” இழிவாய் நடத்தப்படுவது டன் சுயமரியாதை இல்லாத முறையிலும் சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும் இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும் தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள். இந்துமதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமானவர். களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மற்றொருவிதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமூக எண்ணிக்கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரணமாயிருக் கின்றது. இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம் கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மத சமூக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அது போலவே வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமூக எண்ணிக்கை யும் இவ்வளவு பெருகி இருக்காது. ஆகவே அவ் விஷயத்தில் இந்து மதம் இருப்பது முஸ்லீம்- கிறிஸ்து மதங்களுக்கு லாபமே யாகும் ஆகையால் இந்துமதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கும் அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும் பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்துமதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
குடி அரசு - கட்டுரை - 07.06.1931
குடி அரசு - 19310) 412
திருணாரூரில் ௬யாறரிமாதைய் பிரசம்
தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! இன்று நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயமான “கராச்சிக் காங்கிரசும், சுயமரியாதையும்” என்பது நோட்டீசில் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. இதைப்பற்றி பல இடங்களில் பேசியும், எழுதியு மிருக்கின்றேனே யென்று சொல்லியும் கூடயாரோ சிலரால் “கராச்சிக் காங்கிரசுக்கும், காங்கிரஸ் தீர்மானங்களுக்கும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கும் வித்தியாச மில்லையாதலால் சுயமரியாதை இயக்கம் வேண்டியதில்லை” யென்று சொல்லப்படுவதாகவும், அதை நம்பி சில வாலிபர்கள் காங்கிரசில் கலந்து கொள்ளஆசைப்படுவதாகவும் தெரியவருவதால், இரண்டுக்குமுள்ள சம்பந்தத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல வேண்டுமென்றே, இந்த விஷயத்தைப்: பற்றி பேசவேண்டுமென்று குறிப்பிட்டதாகச் சொன்னார்கள். ஆகவே, இப்பொழுது நான் இதைப்பற்றி பேசுவேனென்பதாகக்கருதி, அதிலும் இது சம்பந்தமான எனதபிப் பிராயத்தை உள்ளபடி சிறிதும் ஒளிக்காமல் எனக்குப் பட்டதை சொல்லுவேனென்று யெண்ணி, நீங்களித்தனை பெயர்கள் இன்று இங்கு கூடியிருக்கிறீர்கள். ஆகவே நான் இந்தச் சமயத்தில் யாருக்காவது பயந்து கொண்டோ, யார் தாட்சன்னியத்திற்காவது மயங்கிக்கொண்டோ எனதபிப்பிராயத்தை உள்ளபடி வெளியிடாமல் மறைத்துப் பேசுவேனே யானால், உங்களை ஏமாற்றியவனென்பதாக ஆவதோடு, நானும் ஒரு பயங் காளியென்பதாகவே யாகிவிடுவேன். இந்தப்படி நீங்கள் ஏமாற்றப்படுவ தாலும், நான் பயப்படுவதாலும், யாருக்கென்ன லாபம் ஏற்படக்கூடும்? நாங்கள் ஏதாவது உங்களிடம் பணம் பறிக்கவோ, பத்திரிகை பிரசாரம் செய்யவோ அல்லது யாரிடமாவது சம்பளம் பெற்று கூலிப்பிரசாரம் செய் யவோ, அல்லது உங்களுடைய ஓட்டுகளை யாருக்காவது வாங்கிக் கொடுக்க ஏஜண்டுகளாகவோ, தரகர்களாகவோ, அல்லது வயிற்றுப்பிழைப்புக்கே இதையொரு தொழிலாகக் கொண்டு, புராணப் பிரசங்கிகளைப் போல உங்களை ஏமாற்றி திருப்தி செய்து விட்டுப்போகவோ அவசியமுடையவர்: களாக இங்கு இப்போது வரவில்லை. எதோ எங்களுடைய வாழ்நாட்களானது வீணாகாமலும், எங்கள் வயிற்றுப்பிழைப்புக்கும், வாழ்க்கை, சுகபோக ஆசைக்குமே வீணாகக் கழியாமல் ஏதாவதொரு பயனுள்ள காரியத்தை செய்து விட்டு அதுவும் எங்களுக்கு உண்மையாகவும், உறுதியாகவும், சரி யென்று பட்ட காரியத்தையே செய்துவிட்டு முடிவெய்தலாமே யென்கிற
413 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
யெண்ணத்தின் மீதே சகல சுக, துக்க பலன்களுக்கும் துணிந்து உண்மை யென்றுபட்டதை யெடுத்துச் சொல்ல வந்திருக்கின்றோம்.
ஆகவே, சகோதரர்களே! நீங்களும் இது போலவே இந்த விஷயத்
தில் நியாயமாகவும், யோக்கியமாகவும் நடந்து கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். எதற்காக வென்றால் நாங்கள் சொல்லுவதை அப்ப டியே நம்பி, மோசம் போய் விடாதீர்களென்பதற்கும், வேறு எந்தக் காரணத் தினாலாவது நாங்கள் சொல்லும் விஷயங்களுக்குள் புகுந்து பாராமல் அப்படியே தள்ளி விடாதீர்களென்பதோடு எங்களுடைய சொந்த பெருமை, சிறுமை ஆகியவைகளை யுத்தேசித்து விஷயங்களை மதிக்காதீர்கள் என்பதற்குமாகத்தான் இப்படிச் சொல்லுகிறேன். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய சொந்த அறிவையும் ஆராய்ச்சியையும் கொண்டு, நடுநிலைமையிலிருந்து அலசிப்பார்த்து தள்ளுவதைத் தள்ளி, கொள்ளுவதைக் கொள்ளுங்கள். அந்த தைரியத்தைக் கொண்டு தான் நாங்களும் தைரியமாய் உண்மையென்று பட்டதை பேசுகிறோம்.
நாங்கள் சொல்லும் விஷயங்கள் உங்களுக்குப் புதிதாகயிருக்கலாம், அசாத்தியமாகயிருக்கலாம், ஆச்சரியமாகவிருக்கலாம், திடுக்கிடக்கூடிய தாகவிருக்கலாம். உங்களுடைய உணர்ச்சிக்கும் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் விரோதமாயிருக்கலாம். அன்றியும், நாங்களிதற்கு முன் எப்போதாவது வெளிப்படுத்தின அபிப்பிராயங்களுக்கு மாறுபாடாயிருந்
தாலும், அவற்றைவிடத் தீவிரமானதாயிருந்தாலுமிருக்கலாம். எப்படியிருந்த போதிலும் நீங்கள் மாத்திரம் நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தால் தான், ஏமாராதிருக்க முடியுமே யொழிய மற்றப்படி மத விஷயத் தைப்போல் அரசியலிலும் யார் சொல்லுவதையும் நம்ப வேண்டுமென்றும், நம்பாவிட்
டால் பாவம், நரகம் வந்துவிடுமோ என்று பயப் படுகின்ற தன்மை போலும் வைத்துக் கொண்டால் கண்டிப்பாய் இதிலும் ஏமாந்துதான் போக முடியும் என்பதை தெரிவித்துக் கொண்டு மேலே பேசுகிறேன்.
சகோதரர்களே! கராச்சி காங்கிரசும், சுயமரியாதையும் என்னும் விஷ யத்தில் எங்களபிப்பிராயத்தைச் சொல்லுவதென்பதில் முதலாவது நாங்கள:
தற்குத் தகுந்தவர்களாயென்பதும் கவனிக்க வேண்டிய விஷயந்தான். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் காங்கிரஸ் என்பதிலும் கொஞ்சகாலம் உழைத்து அதன் தத்துவங்களையும் உள் பிரகாரத்திலிருந்து மனப்பூர்வமா யுணர்ந்தவர்களேயாவோம். அத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும், ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கும் பல தடவை ஆளானவர்களுமாவோம்.
இன்னும் விவரமாய்ச்சொல்ல வேண்டுமானால் அதற்காகப் பல தடவை “சிறைக்கு” சென்றுவந்தவர்களுமேயாவோம். அதன் பெருமையை யுத்தேசித்து இப்பொழுது உங்களிடம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஆனாலும் கஷ்டத்திற்கு பயந்து கொண்டு நாங்கள் ஏதோ இவ்வித
குடி அரசு - 19310) 414
அபிப்பிராயம் சொல்லுவதாக சொல்லுகின்றவர்களுடைய வார்த்தைக்கு சமாதானம் தெரியாமல் திண்டாடாதீர்கள் என்பதற்காகத்தானே சொல்ல வேண்டியவனாவேன். அன்றியும், நாங்கள் காங்கிரசின் கொள்கைகள், திட்டங்கள், தீர்மானங்களாகியவைகளின் உள்யெண்ணம் என்னவென்பதும், வெளியெண்ணமென்னவென்பதும் அவற்றை தீர்மானிக்கும் முறை எப்படி யென்பதும், அதன் தலைவர்கள், தொண்டர்களாகியவர்களின் தன்மை எப்படிப்பட்ட தென்பதையும், அத்திட்டங்களையும், தீர்மானங்களையும் பிரசாரம் செய்யும் மாதிரியும் அமுல் நடத்தும் மாதிரியும், அதிலுள்ள நாணயங்களும், அதனாலேற்படும் பயன்களும் நன்றாய் அறிந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்களே யாவோம். அதோடு சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், அதன்பேரால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள், திட்டங்கள், அதன்பயனாய் ஏற்பட்ட பலன்கள் ஆகியவைகளையும். நன்றாயறிந்திருக்கிறோமென்றே கருதிக் கொண்டிருக்கிறவர்களாவோம். ஆதலால், மேற்கண்ட இரண்டு விஷயத்திலும் சிறிதாவது அனுபோகங் கொண்டே பேசுகிறோமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
சகோதரர்களே! என்னுடைய சொந்த கருத்துப்படி காங்கிரசும், சுயமரியாதையும் ஒன்றுக் கொன்று மாறானது என்பதோடு குறிப்பாக கராச்சிக் காங்கிரசினால் நாட்டு மக்களின் உண்மையான சமதர்மத்துக்கும், மற்ற நலத்
துக்கும் எவ்வித அனுகூலத்தையும் விளைவிக்காதென்பதோடு, அதனால். சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் நடைபெறவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியேற்படவும், இடையூறு ஏற்படுமென்றும் நான் கருது கிறேன். இரண்டினுடைய அடிப்படையான கொள்கைகளே ஒன்றுக் கொன்று மாறானதாகுமென்றும் கருதுகின்றேன்.
உதாரணமாக சில கூறுகிறேன். சகோதரர்களே! நமது சுயமரியதை இயக்கத்தின் கொள்கைப்படி முதலாவதாக மதமும், ஜாதியும், கடவுளுணர்ச் சியும்மக்களிடத்திலிருந்து விலக்கப்பட வேண்டியதவசியமாகும். காங்கிரஸ் கொள்கைப்படி மதமும், ஜாதியும், கடவுளுணர்ச்சியும் முறை பிசகாமல்: காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமாகும். சுயமரியாதைக் கொள்கையில் பிராமணனென்பவறும், பறையனென்பவறும் நாட்டிலிருக் கக்கூடாது. காங்கிரஸ் கொள்கைப்படி அவர்களிருந்துதான் தீருவார்கள்.
சுயமரியாதைக் கொள்கையில் இந்துமதமென்பதும், மநுதர்ம சாஸ்திர மென்பதும் அழிக்கப்படவேண்டும். காங்கிரஸ் கொள்கையில் இந்துமதமும், மநுதர்மசாஸ்திரமும் காப்பாற்றப்படவேண்டும்.
சுயமரியாதைக் கொள்கையில் இராமஇராஜ்யம், ஹரிச்சந்திர இராஜ்ய மாகிய இந்துமத ஆதார, புராண இராஜ்ய பாரங்கள் - இராஜ்ய முறைகள் அழிக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி இராமஇராஜ்யமும், ஹரிச்சந்திர இராஜ்யமும் புதுப்பித்தாக வேண்டும்.
415 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுயமரியாதைக் கொள்கைப்படி இந்த ஊர் கமலாலய கோவிலின் கட்டட விஸ்தீரணமாகிய ஐந்து வேலி விஸ்தீர்ணமுள்ள இடம் சமநிலை யாக்கப்பட்டு, பயிர் செய்யப்பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் கொள்கைப் படி கமலாலயத்தையும், அதைச் சுற்றிலுமுள்ள குட்டிச் சுவர்களையும் பந்தோபஸ்தாய்க் காப்பாற்ற வேண்டும்.
சுயமரியாதைக் கொள்கைப்படி ஏழை-பணக்காரன், முதலாளி- தொழிலாளி, சோம்பேரி- பாடுபடுபவன்,மேல் ஜாதி - கீழ் ஜாதி, மிராசுதாரன்- பயிர் செய்பவன், ஜமின்தாரன் - குடியானவன், மேல்வாரக்காரன் - கீழ்வாரக் காரன் என்கின்ற தன்மைகளிருக்கக் கூடாது. காங்கிரஸ் கொள்கைப்படி இவர்கள் ஒவ்வொருவருடைய பிறப்புரிமைகளையும், அதாவது அவரவர். கள் பிறக்கும்போது இருந்த சொத்துரிமைகளைக் காப்பாற்றி, அவரவர் களுக்கு மதத்தின்பேரால், வர்ணாச்சிரம தர்மத்தின் பேரால், சாஸ்திரங்களில் கூறியுள்ள நீதிநிபந்தனைகளின் பேரால் உள்ள உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.
சுயமரியாதைக் கொள்கைப்படி ஆயிரம்வேலி, இரண்டாயிரம் வேலி நிலமுள்ள மடாதிபதிகளும், கோயில் சாமிகளும் ஒழிக்கப்பட வேண்டும். அவைகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தும், மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தவும் வேண்டும். காங்கிரஸ் கொள்கைப் படி மடங்களையும், சாமிகளையும், காப்பாற்றுவதோடு அதன் சொத்துக்களையும், மடங்களுக்கும், சாமிகளுக்கும் பழைய வழக்கப்படி, மாமூல்படி அடைந்து கொண்டிருக்கச் செய்யவேண்டும்.
சுயமரியாதைக் கொள்கைப்படி மடாதிபதிகளும், சங்கராச்சாரியார். களும்,மதப்பிரசார சன்னியாசிகளென்பவர்களும் பட்டாளத்தில் சேர்க்கப் படவும், விவசாயத்திலமர்த்தப்படவும் செய்வதோடு, சக்தியில்லா தவர்களை தானியக்களஞ்சியங்களை சோம்பேரிகள் கொள்ளை கொள்ளாதபடி காவல் காக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி இம் மடாதிபதிகளையும், சங்கராச்சாரிகளையும், நூற்றுகணக்கான மக்கள் பல்லக்கில் ஊரூராய் சுமந்துகொண்டு, அவர்கள் கால்களை (பாதத்தை) கழுவினத்தண்ணீரை மக்களுக்குக் குடிப்பித்து, அதற்காக வரிகள் வசூலித்துக் கொண்டிருக்க வேண்டும்.
சுயமரியாதைக் கொள்கைப்படி மக்களுக்கு மேல்லோகம்- கீழ் லோகம், மோட்சலோகம் - பிதுர்லோகம் என்கின்றதான பித்தாலாட்டங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி செத்துப் போனவர்களுடைய ஆவியை மோட்சலோகத்திற்கும், பிதுர்லோகத் திற்கும் அனுப்புவதற்கு பிணங்களின் எலும்புகளையும், சாம்பலையும், கங்கையில் போட வேண்டும்.
குடி அரசு - 19310) 416
சுயமரியாதைக் கொள்கைப்படி ஆத்மாவே சந்தேகம். காங்கிரஸ் கொள்கைப்படி மகாத்மாக்கள், குட்டி மகாத்மாக்கள் உண்டு.
இப்படிப்பட்டவையான அநேக வித்தியாசங்கள் இன்றைய காங்கிரஸ், காங்கிரஸ் கருத்தாக்கள், காங்கிரசின் ஏகநாயகர்களாகியவர்களுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இருந்து வருகின்றன. இவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு “காங்கிரசுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் வித்தியாசமில்லை” என்றும் “காங்கிரசில் பூரண சுயேச்சை உண்டு” யென்றும், பொதுவுடைமைத் தத்துவம்,சமதர்மக் கொள்கை ஆகியவைககள் உண்டு. என்றும் பேசுவதில் யோக்கியப் பொறுப்போ, நாணயப் பொறுப்போ இருக்க முடியுமா? வென்பதை யோசித்துப் பாருங்கள்
சகோதரர்களே!
இந்த நாட்டின் சொத்துக்களெல்லாம் கடவுள்களுடையதாகவும், சம்பாதனைகளெல்லாம், மோட்சப் பிரவேச அனுமதிச் சீட்டுக்கும், வழிப் பிரயாணதுக்குமாகவும், மக்களின் சூட்சிக்காரர்களெல்லாம் மோட்சவழி காட்டிகளாகவும், சுயராஜ்ய கர்த்தாக்களாகவும்,பாடுபடுகிற ஜனங்களெல்லாம் அடிமைகளாகவும், பாவிகளாகவும் இருந்து கொண்டு பட்டினி கிடப்பவர். களாகவும் இருந்து வரும் முறைதான் இன்றைய கராச்சி காங்கிரஸ் சுயராஜிய திட்டமென்பதை யுணருங்கள். எந்தத் திட்டத்தில் ஏழையென்றும், அடிமையென்றும், ஈனனென்றும், மக்கள் பிறவி யில்லையோ அதுதான் சுயமரியாதை இயக்கத்திட்டம். எந்தத் திட்டத்தில் முதலாளியென்றும், தொழிலாளியென்றும் ஜாமீன்தாரனென்றும் குடியானவனென்றும் மடாதி பதிகளென்றும் சிஷ்யர்களென்றும், பிராமணனென்றும் சூத்திரனென்றும், பறையன் என்றும், பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சாஸ்திரப்படியுள்ள பிறப் புரிமை காப்பாற்றத் திட்டம் போடப்பட்டிருக்கின்றதோ அதுதான் சுயராஜியத் திட்ட மென்பதை யுணருங்கள்.
நாற்பத்தைந்து வருஷகாலம் காங்கிரஸ் இருந்து வந்தும், லோக மானியர்கள், லோகநாயகிகள், மகாத்மாக்கள், தெய்வீக அவதாரரச் சக்தியு டையவர்கள், வீரர்கள், தியாகிகள் என்பவர்கள் காங்கிரசுக்குத் தலைமை வகித்து காங்கிரசை குரங்குபோல் ஆட்டி வந்தும் இன்னமும் இந்த நாட்டை விட்டு பறையரும், சண்டாளரும், முகாலோபம் செய்யக்கூடாத இழிவான மனிதரும் ஒழிந்த பாடில்லை, ஒழிவதற்குரிய அறிகுறிகளும் காணப்பட வில்லை என்றால் காங்கிரசும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றா என்பதை யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பிராமணனும், பூதேவனும், சூத்திர னும்,பஞ்சமனும், பாக்கியவானும், நிர்ப்பாக்கியவானும் இந்த நாட்டை விட்டு ஒழிந்த பாடில்லை. ஒழியும் மார்க்கங்களும் குறிப்பிடப்படவில்லை என்றால் காங்கிரசும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றா? என்று யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டில் ஏழைமக்கள் கோடிக் கணக்காக கஞ்சிக்குத் திண்டாடிக்
417 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கொண்டு படிப்பில்லாமல் துணியில்லாமல், மனிதத்தன்மை யில்லாமல் நாயாய், கழுதையாய், பன்றியாய், ஏன் அதற்கும் கேவலமாய் நடத்தப்பட்டு வருவதொருபுறமிருக்க, கல்லுகளை ஆட்டுக்கல்லாகவும், குழவிக் கல்லாகவும் ஆக்கி ஒன்றுக்குள் ஒன்று சிக்க வைத்து அதன் தலைகளில் தேன், பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேகங்களை செய்து கொண்டு அவைகளுக்குப் பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி கற்பித்து பட்டு, பட்டாடை, வயிரக்கெம்புநகைகளை சாத்தி கட்டை முட்டிகளையடுக்கி அதன் மீது தூக்கி வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் சுமப்பதையும், பதினா யிரக்கணக்கான மக்களிழுப்பதையும் இதற்காக இந்த நாட்டில் மாத்திரம் பல கோடிக்கணக் கான ரூபாய்கள் பாழாவதையும் பார்த்தும் காங்கிரஸ், ஏனென்று கேட்க வில்லை. அப்பக்கம் திரும்பியும் கூட பார்க்கவில்லை என்றால் இனியும் கூட காங்கிரசும், சுயமரியாதை இயக்கமும் ஒன்றா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்த நாட்டின் வாழ்க்கை முறையானது வியாபாரத்தின் மூலம், வட்டி வாங்குவதின் மூலம், புரோகிதம், குருஸ்தானம், உத்தியோகம் முதலியவை களின் மூலம் பாடுபடுவர்களுடைய செல்வமெல்லாம், வரும்படியெல்லாம் சிலரிடமே போய் பெருகவும், அவர்கள் அதை தங்களுடையதேயென்று பாழாக்கவுமான மாதிரியிலேயே பாழாக்கத்தகுந்த வாழ்க்கைத் திட்ட மிருந்து வருகிறது. இதைப் பற்றி எந்தக் காங்கிரசும் திரும்பிப் பார்க்கவே யில்லை. ஆனால் நேற்றுத் தோன்றிய சுயமரியாதை இயக்கம் இம் மாதிரி யானத் தன்மைகளையெல்லாம் ஒழித்தாக வேண்டுமென்றே சொல்லுகிறது. இந்த வேலையைத்தான் விடுதலை மார்க்கம் என்று சொல்லுகின்றது. காங்கிர சானது, வெள்ளைக்காரன் அனுபவித்து வரும் போக போக்கியத்தை இந்த நாட்டுப் பணக்காரனும், படித்தவனும், பார்ப்பனனும், மகாத்மாக்களும், தேசீய வாதிகளும், அனுபவிக்க வேண்டுமென்கின்ற ஆசைக்காக “வெள்ளைக்கார இராஜியம் இந்நாட்டை விட்டுப் போக வேண்டு” மென்கிறது. சுயமரியாதை இயக்கமானது இந்த நாட்டு செல்வத்தையும், இன்பத்தையும், இயற்கை வளத்தையும், எல்லா மக்களும் சமமாக அனுபவிக்கவும். இந்த நாட்டு சொத்துக்களெல்லாம் எல்லா மக்களுக்கும் பொதுவானதாயிருக்கவும் இந்த நாட்டு மக்களெல்லாம் பிறவியில் உயர்வு - தாழ்வு என்பது சிறிதுமில்லாமல் சகோதரர்கள் போலிருக்கவும், இந்நாட்டுச் சோம் பேரிகள் சூட்சிக்காரர்கள். பாமர மக்களை யேமாற்றாமலிருக்கவுமான காரியங்களுக்கு மாத்திரந்தான் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இந்த நாட்டை விட்டுப் போய்த்தீரவேண்டு மென்று சொல்லுகிறது. இந்த நாட்டிலுள்ள ஜமீன்தாரர்களுடைய அக்கிரமம் சகிக்க முடியவில்லை. மிராசுதாரர்களுடைய அநீதி, கொடுமை ஆகியவை
கள் நிர்வகிக்க முடியவில்லை. பார்ப்பனர்களுடைய அகம்பாவமும் ஏமாற்று தலும் நினைக்கமுடிய வில்லை. இரண்டு இங்கிலீஷ் எழுத்துகள் தெரிந்து விட்டதனாலேயே படித்தவர்களென்று சொல்லப்படுவர்களின் பகல் கொள்ளை தாங்க முடிய வில்லை. இவைகளை யெல்லாம் அழிப்பதற்கு
குடி அரசு - 19310) 418
காங்கிரஸ் என்ன செய்கிறது? இத்தனை பேரையும் காப்பாற்ற காங்கிரஸ் பாடுபடுகின்றதா? இல்லையா? என்று உங்கள் மனதைக் கேளுங்கள். உங்கள். அறிவைக் கேளுங்கள். உங்கள் அனுபவத்தைக் கேளுங்கள், உங்கள் நாணையத்தை கேளுங்கள்.
ஆனால் சுயமரியாதை இயக்கமானது இந்த மாதிரியான பிரிவுகள் கூடாதென்பதோடு இதற்கு ஆதாரமாய் இருந்து வருவதான எதுவும் கூடாது. அவைகள் எல்லாம் அடியோடு அழிக்கப்பட வேண்டுமென்றல் லவா: சொல்லுகின்றது.
சகோதரர்களே! இந்த கோவில்களைக் கண்டால். இந்தத் தேர் திரு விழாக்களைக் கண்டால், இதன் சொத்துக்களைக் கண்டால் உங்களுக்கு வயிறு பற்றி எரியவில்லையே. அதற்கு பதிலாக “ஆநந்த பாஷ்பம்” பெருக் குகின்றீர்களே! பிள்ளைக்குட்டிகளுடன் விழுந்து கும்பிடுகின்றீர்களே! இந்த ஜால வித்தைக்காரர்கள் உங்களை எவ்வளவு முட்டாள்களாக்கி வைத் திருக்கிறார்களென்பதை இதிலிருந்தாவது சிந்தித்துப் பாருங்கள்.
இந்த மடாதிபதிகள் உங்கள் செல்வத்தை கொள்ளை கொண்டு சோம் பேறிகளைக் கூட்டி வைத்து “மதன கோலாகலக்கிரீடை”, “ஜலக்கிரீடை”, “கிருஷ்ண லீலை” நடத்துகின்றார்களே! உங்களுக்கு ஆத்திரமில்லையா? அதற்கு பதிலாக விழுந்து கும்பிட்டு கால்கழுவின தண்ணீரைக் குடித்துக் காணிக்கை செலுத்துகின்றீர்களே! உங்களுக்கு மதியில்லை, மானமில்லை. என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?
நான் போக்கிரியாய் இருக்கலாம்,காலியாய் இருக்கலாம், கூலியாய். இருக்கலாம். இந்த கோவிலும், மடமும், இருப்பதும், இவற்றை நீங்கள் விழுந்து கும்பிட்டுக் கன்னம் கன்னமாய் போட்டுக் கொள்வதும், அறிவுள்ள, மானமுள்ள மனிதனுடைய செயலா? என்றுதான் கேட்கின்றேன். இவை களை ஒழிக்கவேண்டாமா? இந்தச் சொத்துக்களை எடுத்துக் கல்விக்கும், அறிவுக்கும், மானத்திற்கும், மனிதத்தன்மைக்கும் செலவழிக்க வேண்டா மா? என்றுதான் கேட்கின்றேன்.
நீங்கள் என்னைப் பார்த்துக் கோபிப்பதிலோ, ஆத்திரப்படுவதிலோ சிறிதும்பயனில்லை, இதனால் நீங்கள் என்னை என்செய்வீர்கள் என்ப திலும் எனக்குக் கவலை இல்லை. உங்களை “வாழவைக்கும்” காங்கிரசு, அதுவும்
கராச்சிக் காங்கிரசின் யோக்கியதையைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் மானத்திற்கும்,மதிக்கும், மனிதத்தன்மைக்கும் இந்தக் கராச்சிக் காங்கிரசு என்ன செய்தது, செய்கின்றது, செய்யக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
உங்கள் இத்தனை பேரையும் இந்த நிலைமையிலேயே இருக்கச் செய்யத்தானே காங்கிரஸ் கர்த்தாவாகிய மகாத்மா என்பவர் காலையும்
419 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மாலையும், “ராம் ராம், சீத்தாராம்” என்று பஜனைபாடுகிறார், பிரார்த்தனை செய்கின்றார், கீதைபடிக்கிறார். அவர்களது சீஷர்களும் சென்ற விட மெல்லாம், புராணப் பிரசங்கம் செய்கிறார்கள். இது உங்களுக்குப் புரிய வில்லையா?
ஆகவே கடவுள் பூஜையிலும், பிரார்த்தனையிலும், ராம பஜனை
யிலும், புராண காலக்ஷேபத்திலும் இருந்து ராம ராஜியம் அடைய வேண்டு மென்கின்றீர்களா? அல்லது இவற்றையெல்லாம் அழித்து, ஒழித்து மனித தர்ம ராஜியம் வேண்டுமென்கின்றீர்களா? என்பதுதான் இப்போது உங்கள் முன்
நிற்கும் கேள்வி.அது வேண்டுமானால் காங்கிரசில் சேருங்கள். இது வேண்டு மானால் சுயமரியாதையில் சேருங்கள். “இரண்டும் ஒன்று” என்று மாத்திரம் சொல்லாதீர்கள் என்றுதான் சொல்லுகின்றேன். மற்றபடி உங்கள் இஷ்டம்.
குறிப்பு : திருவாரூர் கமலாலயத்துக்கு முன்புறம் உள்ள தெப்புக்குளத்து மைதானத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 14.06.1931
குடி அரசு - 19310) 420
நன்நிலமை மகாநாடு i கண்டனம்
தஞ்சை ஜில்லா நன்றிலத்தில் இம்மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா மகாநாட்டில் ஹிந்திபாஷையைக் கண்டனம் செய்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. அத்தீர்மானமாவது:-
“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்ற பொது விஷயங்களுக்கும் உதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக வென்று படிக்கச் செய்வதானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு. தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும், நவீனத்தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற்போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டு மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானமாகும். இதைபற்றி நாம் 1926 ம் வருஷத்திலேயே “குடி அரசு” பத்திரிகையில் “தமிழுக்குத் துரோக
மும், ஹிந்தியின் இரகசியமும்” என்பதாக ஒரு வியாசம் எழுதி இருக்கின் றோம். அது மாத்திரமல்லாமல் “இந்து மதப் புராண இதி காசங்களை உண்மை
யாய் உணரவேண்டுமானால் - துளசிதாஸ் இராமாயணத்தை நன்றாய் அறிய வேண்டுமானால் ஹிந்தி படிக்கவேண்டும்” என்று சென்னை திருவாளர் கே. பாஷ்யம் அய்யங்கார் என்ற “ஒரு தேச பக்தர்” சென்ற வாரத்தில் கூட பேசி யிருக்கின்றார். இதிலிருந்தும் ஒருவாறு ஹிந்தியின் இரகசியம் அறியலாம்.
அன்றியும் ஹிந்தி பாஷையைப் பொது பாஷையாக ஆக்குவது முடியாத காரியமென்றும், அது கூடாத காரியமென்றும் பார்ப்பனீயப் புராணக் கதைகளை பரப்பத்தான் முடியுமென்றும் வங்காளம் மாடர்ன்ரிவ்யூ பத்திராதி பரான பாபு ராமாநந்த சட்டர்ஜி அவர்கள் தமது பத்திரிகை யில் எழுதி இருக்கிறார்கள்.
421 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இதிலிருந்தும் ஒருவாறு ஹிந்தியானது பார்ப்பனப் பிரசாரபாஷை என்றும், அரசியலுக்கு அது சாத்தியப்படாத பாஷை என்றும் விளங்கும்.
இந்நாட்டில் பார்ப்பனீயம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களையும், பார்ப்பனீயங்களையும், பரப்பும் நோக்கத்துடனேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம்பெற்று வந்திருக் கின்றன. உலக வழக்கில் ஒரு சின்னக்காசுக்கும் பயன்படாத சமஸ்கிருத பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதிக்கமும், அதற்கெ னவே பல ஏற்பாடும், செலவும், மெனக்கேடும் பார்ப்பனீயத்தைப் பரப்பவே செய்யப்பட்டு வருகின்றன. சமஸ்கிருத காலேஜ், சமஸ்கிருதப் பாடசாலை, மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செல விலேயே நடைபெற்று வருகின்றன. இது இந்த நாட்டு மக்களின் சுய மரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரணமாகும். இதை தட்டிப்பேச இன்றைய சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சுவிடவும் ஆள்கள் இல்லை. போதாக் குறைக்கு இன்று ஹிந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்தியமக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப்பட்டு வருகின்றது. இது இந்நாட்டு மக்களுக்கு பாஷை விஷயத்திலும் சுயமரியாதையில்லையென்பதற்கு ஒரு உதாரணமாகும்.
தமிழ்நாட்டுக்கு ஹிந்தி என்ன அவசியத்திற்கு என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசீய வாழ்வில் இல்லை. தேசபக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர்களாலேயே நிறப்பப்பட்டுவிட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும் பார்ப்பனர்களால் பிடித்து வைக்கப்பட்ட தலைவர்: களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசீயமந்திரத்தை உருப்போட்டு ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.
இந்த நாட்டில் இன்றைய தமிழ் பாஷையே தமிழ் மக்களின் சுயமரியாதைக்கும்,மனிதத் தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாக விருக்கின்றது என்பதைப் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம். இன்றைய தமிழ் பாஷையில் பெரிய இலக்கியமாய் பாவிக்கப்படுவதாகிய கம்பராமாயணம் பெரிய புராணம் ஆகிய இவ்விரண்டும் கூட மானமுள்ள, சுயமரியாதை - வீரம் ததும்பிய, இரத்த ஓட்டமுள்ளதமிழ் மக்களால் சுட்டுப். பொசுக்க வேண்டிய புஸ்தகமாகும். தமிழ் மக்கள் என்று சொல்லிக் கொள்ளு. கின்றவர்களுக்கு போதிய மான உணர்ச்சி இல்லாததாலேயே அவற்றிற்கு
தமிழ் நாட்டில் இன்னமும் இடமிருக்க வேண்டியதாகிவிட்டது. இன்றைய
தினம் தமிழ் படித்து தமிழ் பாஷையில் பற்றுகொண்டு தமிழைத் தாய் பாஷை யாய்க் கொண்ட ஒருவனாவது தன்னுடைய தமிழ் தாய் வடமொழிப் புருஷனுடன் சோரத்தனம் செய்து கொண்டிருக்கின்றாளா? இல்லையா
குடி அரசு - 19310) 422
வென்றும் பிள்ளை களையெல்லாம் கூட வடமொழிப் புருஷனுக்கு உதவும்படியாகவே அவனைப் போலவே பெற்றுக்கொண்டுமிருக்கின்றாளா? இல்லையா வென்றும், அப்படிச் சோரத்தனம் செய்ததில் முதல்தரப் பிள்ளை: களாயும் சிரஞ்சீவி பிள்ளைகளாயும் இந்தக் கம்பராமாயணமும் பெரிய புராணமும் இருக்கின்றதா இல்லையா? என்றும் கேட்பதோடு இந்த வடமொழிப் புருஷனுக்கு தங்களது தமிழ்த்தாயை கூட்டிவிட்டு பெருமை யடைவதன் மூலமே தமிழ் பண்டிதர்கள் இன்று உயிர் வாழ்ந்து ஜீவனம் செய்து வருகின்றார்களா? இல்லையா வென்றும் கேட்கின்றோம்.
தமிழ்த்தாய் தானாகவே சமஸ்கிருதப் புருஷன் மீது ஆசைப்பட்டு “விபசாரம்” செய்வதில் நமக்கு ஆக்ஷபணை இல்லை. ஆனால் இந்தப் பண்டிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு, தங்கள் சுயநலப் பெருமைக்கு தமிழ்த்தாயை கூட்டி விட்டுப் பிழைப்பதைத்தான் நாம் வெறுக்கின்றோம். அப்படிக் கூட்டிவிடுவதாவது தமிழ்த்தாயின் மக்கள் சமூகத்திற்காவது அவர்களது சுயமரியாதைக்காவது ஆபத்தில்லாமல் இருக்குமானால் நமக்கு ஆக்ஷபணையில்லை. அப்படிக்கின்றி இன்று நாட்டைப் பாழாக்கி விட்டது இந்த சமஸ்கிருதப் புருஷனிடம் தமிழ்த்தாயை சம்பந்தப்படுத் தியதே என்று
தெரிந்து இருந்தும், மறுபடி இதையே ஆதரித்தால் இதற்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை. இது இப்படியிருக்க இப்பொழுது மற்றொரு புருஷனை (ஹிந்திப்பாஷையை! தமிழ்த்தாயிக்கு நமது தேச பக்தர்கள் கண்டு பிடித்து இருப்பது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. இனி தமிழ்த்தாயிக்கு தகுந்த புருஷன் வேண்டுமானால் மானத்துடனும் வீரத்துடனும் அறிவுடனும் பிள்ளைகளைப் பெற்று அவைகளை வைத்துக் காப்பாற்றும் புருஷன்தான் இருக்கவேண்டும். அதுவும் தகுந்தபடியான சுதந்திர காதல் மணமாகத்தான் செய்விக்க வேண்டுமேயொழிய இனியும் இம்மாதிரி வயிற்றுப் பிழைப்பை மாத்திரம் கருதிய சம்மந்தமாகவும், அதுவும்
தமிழ்த்தாயிக்கு அல்லாமல் மற்றவர்களுடைய கயநலத்திற்காகவும் இருக்கும் அடிமை மணமாகவும் இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம்.
தமிழ்த்தாயிக்கு யோக்கியதை இருந்து அவள் தகுந்த மானமுள்ள. மக்களைப் பெற்று இருந்தால் நாட்டு நலனுக்கு ஏற்ற சகல விஷயத்தையும் தமிழிலேயே ஆக்கியிருக்கவேண்டும். நாட்டிற்கு தமிழே போதுமான தாயிருக்க வேண்டும். அப்படி இல்லையானால் தமிழ்த் தாயின் தகுதிக்கும் அவசியத்திற்கும் ஏற்றது எதுவோ அதைக் கொள்ளவேண்டும். இன்றையத் தினம் நாட்டிற்கு கவியழகு, கற்பனையழகு, புராண அழகு, மோட்ச அழகு, பகவான் வாக்கு அழகு. அவதாரப் பெருமை அழகு அல்ல வேண்டி யிருப்பது. இவை சோம்பேரிகளுக்கும் மக்கள் கஷ்டத்தை உணராத வன் நெஞ்சகர்களுக்கும் ஊரான் உழைப்பில் வயிறு வளர்க்கும் அயோக்கியர் களுக்கும் அவசியம் உணரமுடியாத அறிவிலிகளுக்குமே இவை வேண்டிய
423 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தாகும். மற்றபடி மானமுள்ள மக்களுக்கு - பக்ஷாதாபமுள்ள மக்களுக்கு - யோக்கியர்களுக்கு அறிவாளிகளுக்கு இந்தியாவின் 35 கோடி மக்கள் சமத்துவ உணர்ச்சியுடன் இருக்கவும் வயிற்றுப் பிழைப்புக்கு மானத்தை விற்காமல் வாழவும், பணக்காரன், படித்தவன், மேல்ஜாதிக்காரன் என்கின்ற வஞ்சகர்களால் மிதிபட்டு நசுக்கப்படாமல் இருப்பதற்கும் குழந்தைகளுக்கு பூச்சாண்டியையும், காக்கையையும் பிராக்கு காட்டி கையில் இருப்பதை தட்டிப் பிடிங்கிக்கொள்வது போல் மோட்சத்தையும், காவியத்தையும், கவியழகையும், கடவுளையும். கலைகளையும் காட்டித் தட்டிப் பிடுங்கிக் கொள்ளாமல் அவரவர்கள் பாடுபட்டது அவரவர்களுக் காவது உதவவும்,
“நீ வீதியில் நடக்க வேண்டாம்.அருகில் வரவேண்டாம், கண்களில் தென்பட வேண்டாம், படிக்க வேண்டாம் “சர்வ தயாபரனும் சர்வ கருணாமூர்த்தியும் சர்வ சக்தனும்” ஆகிய “கடவுளிடம்” கூட பக்கத்தில் நெருங்க வேண்டாம்” என்கின்ற அயோக்கியத்தனம் நீங்கவும் வேண்டியது முக்கியமாய் இருக்கின்றபடியால் அதற்கு எந்த பாஷை வேண்டும்? எந்த பாஷைப் படித்தால் இந்த மாதிரியான அற்பபுத்தி நீங்கும்? என்பதுதான் நமது கேள்வி. ஆகவே இன்றைய இந்தத் தேவைக்கு - இன்று இந்த நாட்டிற்கு ஹிந்தி வேண்டுமா? இங்கிலீஷ் வேண்டுமா? என்பதை மானத்துடன் உள்ளவர்கள். நடு நிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து சொல்லட்டும் என்றே வேண்டு கின்றோம். ஹிந்தி பாஷையை படிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தத்தை காங்கிரசில் கொண்டு வந்து புகுத்தியதே வருணாச்சிரமத்தை நிலை. நிறுத்தவும் அதைக் கட்டாயப்படுத்தி மக்களுக் குள் புகுத்தவுமே செய்த சூக்ஷியான காரியமாகும். இந்த அயோக்கியத் தனத்திற்கு திரு. காந்தி அவர்கள் கண்டிப்பாய் உளவாளி என்றே சொல்லுவோம். இதனால் வாய் வெந்து போவதானாலும் சரி. தலையில் இடி விழுவதானாலும் சரி, முன் காலத்து ரிஷிகளும், முனிவர்களும் நமக்கு எவ்வளவு கொடுமையை விளை: வித்தவர்கள் என்பதாக இப்போதைய மானமுள்ள மக்கள் எப்படிக் கருது கின்றார்களோ அதற்கு ஒரு முந்திரி கூட குறைவல்ல இன்றைய மகாத்மாக் களால் நமக்கு வரும் ஆபத்தும் இழிவும் என்பதில் எமக்குச் சிறிதும் சந்தேக மில்லை. யாருக்காவது சந்தேகம் இருந்தால் சென்ற வாரம் திரு. காந்தியவர்
கள் யங்இந்தியாவில் “வர்ணாச்சிரம தர்மம்” என்கின்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தை யற்று கவனியுங்கள்.
“வர்ணாச்சிரம தர்மங்களில் குறிப்பிட்ட நான்கு தர்மங்களில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்தப்பாகுபாடுகள் பரம்பரைத் தொழில் சம்பந்தமாக பட்டது.”
“பிராமணன் வித்தை கற்றுக்கொடுக்கவும், க்ஷத்திரியன் சக்தியற்றவர் களைப்பகைவரிடமிருந்து காக்கவும், வைசியன் உழவுத்தொழில் செய்யவும், சூத்திரன் உடலால் உழைத்து வேலை செய்யவும் என்று ஏற்பட்டவை களாகும்.”
குடி அரசு - 19310) 424
“இந்து மதம் இவற்றை ஜனசமூக வாழ்வில் அங்கீகரித்து கிரமமாக நடத்தையிலும் அனுஷ்டித்து வருகின்றது”.
“இந்தப்படியான அவரவருக்கு உரிய காரியத்தை அவரவர் செய்யத் தவறியதால்தான் இப்போது வருண தருமம் அழிந்து பல ஜாதிகள் தோன்றின”.
“வகுப்பு ஒற்றுமைக்கும் கலப்பு விவாகம், சமபந்திபோஜனத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது எனது திடமான அபிப்பிராயம்.”
“கலப்பு விவாகங்களால் நாட்டில் வகுப்பு ஒற்றுமை ஏற்பட்டு விடு மென்று நான் நம்பவில்லை.”
“மனிதர் யாவருமே சமம். ஆனால் இந்த சமம் என்பது ஆத்மா வைப் பொறுத்த வரையில் தானேயொழிய சரீரத்தை பொறுத்த வரை
சமமல்ல.
என்ற குறிப்புகளை அதில் எழுதி இருக்கிறார். இந்த மாதிரியான வருண தர்மத்தை நிலை நாட்ட வந்த புருஷனை “பிராமணர்கள்” மகாத்மா என்று கூறுவதிலும், அவரைப் பின் பற்றுவதிலும், அவர் சொல்லுகிறபடி யெல்லாம் ஹிந்தி படிப்பதிலும், கீதை படிப்பதிலும், ராமராஜ்ஜியம் ஸ்தாபிப். பதற்காக கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் செய்வதிலும் யாதொரு அதிசயமும் கொள்ளஇடமில்லை. ஆனால் “நாங்களும் சுயமரியாதைக் காரர்கள்தான்'” தமிழ்மக்கள் இந்த மாதிரியான வருணாச்சிரமத்திற்குக் கட்டுப். பட்டவர்கள் அல்ல...... என்று சொல்லுகின்ற மக்கள் இந்த மகாத்மா வையும், அவர்களை மகாத்மாவாக்கின பார்ப்பனர்களின் வால்களையும் பிடித்துத் தொங்கிக் கொண்டு திரிவதில்தான் நமக்கு அதிசயம் காணப்படுகின்றது.
இதைப் பார்க்கின்றபோது “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்”” என்று சொன்ன வார்த்தை மிகவும் பொருத்தமும், அருத்தமும் கொண்ட வார்த்தை என்றே தோன்றுகின்றது.
குடி அரசு - தலையங்கம் - 14.06.1931
425 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தமிழ் மாகாண மகாநாவடண்பது மறுபமுமரம்
யார்ப்மண பிரசாரமேயாகும்
சென்ற ஒரு வருஷ-காலமாய் இந்திய நாட்டில் நடைபெற்ற ஒருவித “அரசியல் கிளர்ச்சி” நாடகத்தின் பயனாய் தமிழ்நாட்டில் பழையபடி பார்ப்பன பிரசாரம் தைரியமாயும் வெளிப்படையாயும் துவக்கப்பட்டு விட்டது. இதை நன்றாய் உணரவேண்டும் என்பவர்கள் இம்மாதம் 6, 7 தேதிகளில் மதுரையில் தமிழ் நாட்டு மக்கள் பேரால் நடைபெற்ற “ஏமாற்றுந் திருவிழா” (தமிழ் மாகாண மகாநாட்டு) நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தவர்கள் உணரக்கூடும்.
முதலாவது இந்த ஏமாற்றுத் திருவிழாவானது தமிழ்நாட்டு 13 ஜில்லாக்களின் சுமார் 2/, கோடி ஜனங்களின் பிரதிநிதித்துவமாக நடத்தப் படுவதாக எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் அதற்குத் தெரிந்தெடுக்கப் பட்டு கிடைத்தத் தலைவர் யார் என்பது ஒரு முக்கிய விஷயமாகும்.
திரு. 5. சத்தியமூர்த்தி அய்யர் தமிழ் நாட்டு 27, கோடி மக்களின்
முன்னேற்றத்திற்கு தலைவரென்ற காரணத்தாலேயே அந்தத் திருவிழாவுக்கு ஆள்பட்ட பார்ப்பனரல்லாதாரின் பரிதாப நிலைமைக்கு வேறு அத்தாக்ஷி வேண்டியதில்லை. அவரைத் தவிர வேறுயாரும் தெரிந்தெடுக்க கிடைக்க வுமில்லை, முடியவுமில்லை. எனவே இந்த ஸ்தானம் தமிழ்நாட்டு பொது ஸ்தாபனமாம்!
நிற்க, திரு. சத்தியமூர்த்தி அய்யருக்கு என்ன கொள்கை? ஜீவனத் திற்கு என்ன வழி? இவர் இந்த நாட்டு பெரும்பான்மையான மக்களுக்கு எப்படிப் பிரதிநிதியாக உரியவர்? இவரது சொந்தத் தன்மைதான் என்ன? முன்பின் நாணையம் என்ன? இந்நாட்டு மக்களின் நன்மைக்கு இவர் எப்படி பொறுப்பாளி? என்பவை போன்ற காரியங்களால் அந்த ஸ்தாபனத்தின் யோக்கியதையை ஒருவாறு உணரலாம்.
இதுதவிர இம்மகாநாட்டுக்குச் சென்றிருந்த பெரும்பான்மையான மக்கள் யாருடைய பிரதிநிதிகள்? அவர்களின் தன்மையென்ன? கொள்கை என்ன? அவர்கள் இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த வகையில் பிரதிநிதிகளாக வந்தவர்கள்? என்பவைகளை யோசித்துப்
குடி அரசு - 19310) 426
பார்த்தால் பிரதிநிதிகளின் யோக்கியதை ஒருவாறு விளங்கும்.
மற்றும் இந்த நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களின் பிரதிநிதிகள். எத்தனை பேர்? முஸ்லீம் பிரதிநிதிகள் எத்தனை பேர்? தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் பிரதிநிதிகள் எத்தனை பேர்? என்ற கணக்கைப் பார்த்தாலும் மற்றொரு விதத்தில் அதாவது இந்த நாட்டில் “தெய்வீகமாகவும்” 105 சம்பந்த மாகவும், ஜாதி வகுப்பு சம்பந்தமாகவும் ஏற்பட்ட பிரிவுகளுக் கெல்லாம் இந்த ஸ்தாபனம் எப்படி பிரதிநிதித்துவம் பொருந்தியது என்பதும் ஒருவாறு விளங்கும்.
இவைகள் எல்லாம் ஒருபுறமிருந்தாலும் அந்த விழாவுக்குச் சென்ற பார்ப்பனரல்லாதார் வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எப்படி மதிக்கப் பட்டார்கள்? அவர்களுடைய அபிப்பிராயங்கள் எப்படி கவனிக்கப்பட்டது? என்பவைகளைக் கவனித்தால் அதன் நாணையமும், யோக்கியப் பொறுப்பும், எண்ணத்தின் தன்மையும், போனவர்களின் சுயமரியாதையும் ஒருவாறு விளங்கும்.
இவை ஒரு புறமிருக்க அந்தத் திருவிழாவில் செய்யப்பட்ட தீர்மானங்களின் யோக்கியதையைப் பார்த்தாலோ மற்றவிஷயங்கள் எல்லாம் தானாகவே புலப்பட்டுவிடும். இவற்றைப்பற்றி பின்னால் யோசிப் போம். தலைவர் திரு. சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் உபன்யாசத்தில் காணப்படும் முக்கியமானதும் அவரது உள்ளம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது மான முக்கிய விஷயம் ஒன்றே ஒன்றாகும். அது என்னவென்றால்,
“ஸ்தல ஸ்தாபனங்கள் இப்போது மிகவும் சீர்கேடடைந்து விட்ட தூதலால் அதைக் காங்கிரசுக்காரர்கள் கைப்பற்றவேண்டும்”” என்பதேயாகும். “கோடி வித்தலுனு கூட்டிக்கு” என்று தெலுங்கில் ஒரு பழமொழி யுண்டு. அதாவது கோடி வித்தைகளும் (சகல சாமர்த்தியங்களும்) சோற்றுக் குத்தான் என்ற பொருள் கொண்டது. அதுபோலவே பார்ப்பனர்களுடைய இன்றைய தேசீயப் புரட்டுகள் பூராவும் ஜகஜாலப்புரட்டுகள் முழுவதும் இந்த ஸ்தல. ஸ்தாபனம், சட்டசபை, மந்திரி சபை, மற்ற உத்தியோகங்கள் முதலியவை களைப் கைப்பற்றத்தானே யொழியவேறில்லை.இந்தப் புரட்டை அவர்களால்: மறைக்க முடியவில்லை. எப்படியாவது வெளிப்படுத்தி விடுகின்றார்கள்.
இதையனுசரித்து சில தீர்மானங்களும், மகாநாட்டில் வந்தது. ஆனா
லும் அவற்றின் உள்எண்ணத்தை சுயமரியாதைக்காரர்கள் கண்டு பிடித்து வெளியாக்கி விடுவார்கள் என்று கருதி, மறைமுகமாய் அதாவது இப்போ தைய தேர்தல் முறைகளை கண்டித்து அதை திருத்த கவலை கொண்ட சீர்திருத்தக்காரர்களைப் போல் ஒரு தீர்மானம் செய்து கொண்டார்கள்.
கதர் விஷயத்திலும், கதர் புரட்டை வெளியாக்கி, கதர் இலாகா வையும் கண்டித்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது விஷயாலோசனை
427 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கமிட்டியில் எப்படியோ நிறைவேற்றப்பட்டாய் விட்டது. அதாவது:-
“கதர் இலாகா பிரதிநிதித்துவம் பொருந்தியதாயில்லாமலும் காங்கிர
சின் அமுலுக்கு உட்பட்டு இல்லாமலும் இருப்பதோடு அதன் உத்தியோக ஸ்தானங்களில் ஒரே கூட்டத்தினர் நிரம்பி இருப்பது பொது ஜனசபை தத்து வத்திற்கு விரோதமாயிருப்பதால் அதை பொது பிரதிநிதி சபையாக்குவதற்கு வீதாசாரப்படி உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டு எல்லா சமூகத்தாராலும் நடத்தப்பட வேண்டும்” என்பதாகும்.
இது விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டும் பொதுக் கூட்டத்தில் 5, 6 பேர்களின் ஓட்டுகளால் தோற்றுவிட்டதாக தலைவரால் சொல்லப்பட்டுவிட்டது. இந்த முடிவையும் சபையார் ஒப்புக் கொள்ளாமல் கூச்சல் போட்டும் பயனளிக்கவில்லையாம். இந்த ஓட்டில் பார்ப்பனர் எல். லோரும் ஒரு புறமாகவும், பார்ப்பனரல்லாதவர் எல்லோரும் ஒரு புறமாகவும் ஓட்டு கொடுத்தார்களாம். மற்றொரு பெரும் புரட்டான விஷயம் என்ன வென்றால், மகமதியர் தீண்டாதார் ஆகிய “சிருபான்மையோர் கோரும் உரிமைகளை தாராள மனதுடன் கவனிக்க வேண்டும்” என்பது.
சிறுபான்மையோர் உரிமைகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தால் அது நாளைக்கு கொடுக்க வேண்டி வந்து விடுமே என்கின்ற யுக்தியின் மீதே தாறாளமாய்க் கவனிக்கப்படும் என்று தந்திரமாகப். போடப்பட்டிருக்கின்றது. இது ஏதோ பெரும்பான்மையோரை பிச்சை கேட்பது போலவும் பெருபான்மையோர் தயவுக்கும் தர்மத்திற்கும் கொடுக்க வேண்டியது போலவும் கருதி.பிச்சைக்காரனுக்கு பதில் சொல்லுவது போல். “ஆகட்டும், கவனிக்கலாம்” என்று ஆணவத்துடன் சொல்லும் பதிலேயாகும். இப்படிப்பட்ட ஸ்தாபனத்தில் சிறுபான்மையோர் கலந்து கொள்ளுவது அவர். களது சுயமரியாதைக்கு ஏற்றதல்லவென்றே சொல்லுவோம். அன்றியும் இத் தீர்மானம் ஏமாற்றுகின்ற மனப்பான்மை யுடன் செய்யப்பட்டது என்றும் சொல்லுவோம்.
இனித் தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில்,
“காங்கிரசு தீண்டாமையை தொலைக்க வேண்டும் என்ற காங்கிரசு கட்டளையை பரப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறது”.
“தெரு, கிணறு, பள்ளி, தேவாலயம் ஆகியவைகளில் இடம் கொடுக் குமாறு வைதீகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறது” என்பதாகும். அதாவது காங்கிரசின் உத்தேசத்தை ஜனங்களுக்கு தெரிவித்துவிட்டு வைதீகர்களை: கேட்டுக்கொள்ள வேண்டியது என்பதுதான் தீண்டாமை ஒழிப்பதின் முயற்சி போலும்! கள்ளுக்கடை ஜவுளிக்கடையை மாத்திரம் மறியல் செய்யவேண்டும் என்பது Gy மகாநாட்டுத் தீர்மானம். ஆகவே பார்ப்பன இனத்தாரான
குடி அரசு - 19310) 428
வைதீகர்களைக் கேட்டுக் “கொள்ளவேண்டியதும்” பார்ப்பனரல்லாதார் இனத்தாராகிய வியாபாரிகளை மறியல் செய்ய வேண்டியதும் என்றால் இவர்களது உள் எண்ணம் என்ன என்பது ஒரு முழு முண்டத்திற்கும் விளங் காமல் போகாது.
அவர்களுக்கு யார்ப்பனர்களுக்கு) நஷ்டம் உள்ள காரியமோ அவர்கள் ஆதிக்கத்திற்கு குறைவு வரும் காரியமோ எதுவானாலும் அதன் அருகே யாரும் போகக்கூடாது. அதாவது தூர நின்று பிச்சை கேட்டுக் கொள்ளவேண்டியதுதான்.மற்றவர்கள் விஷயத்தில் மறியலே செய்து வெளி யாக்கி மானத்தைக் கெடுத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது என்பது பார்ப்பனர் கருத்து. அதுவே “மகாத்மா” உத்திரவு. அதுவேமகாநாட்டுத் தீர்மானம் என்றால் இவற்றையறிந்தும் மறியல், மறியல் என்றால் அதில் 100-க்கு 99 வயிற்றுக் கொடுமையும், முட்டாள் தனமும் இல்லாமல் வேறு என்னமாய் இருக்கமுடியும் என்பதை வாசகர் களே உணர்ந்து பார்க்கட்டும். தவிர கதரையே கட்ட வேண்டும் என்று ஒரு தீர் மானமும் உள்நாட்டு நூலால் நெய்த துணியையே கட்டவேண்டும் என்று மற்றொரு தீர்மானமும் செய்திருப்பதானது கதரின் சாயம் கொஞ்சம் வெளுத்துப்போனதை அவர்களே ஒப்புக் கொண்டதாகும்.
மற்றொரு தீர்மானம் என்ன வென்றால் “சமூகத் துவேஷத்தை கிளப்பி விடுகின்றவர்கள் வார்த்தையை நம்பக் கூடாது என்று கேட்டுக் கொள்ளு கின்றது” என்பதாகும். இதிலிருந்தே இவர்கள் செய்த திருட்டுத் தனம் இவர்கள் மனதையே உறுத்தி முன் ஜாக்கிரதையாக பந்தோபஸ்து செய்து கொண்டார்கள் என்பது புலனாகிவிட்டது. ஆகையால் பார்ப்பன ரல்லாத மக்கள் இனியாவது புத்திவந்து தங்கள் சமூக சுயமரியாதைக்குப் பாடுபடு வார்களாக! இதைப்பற்றி சென்னை திருவாளர் ம.சிங்காரவேலு செட்டியார் எழுதியதை மறுவாரம் பிரசுரிப்போம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.06.1931
429 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மதிப்புரைகள்
“பகுத்தறிவே விடுதலை - அல்லது ஜீவாத்மா இல்லை” என்னும் இந்தப் புத்தகம் நமது நண்பர் உடுமலைப்பேட்டை உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களால் எழுதப்பட்டு நமது பார்வைக்கு வந்ததைப் பார்த் தோம்.
இப்புத்தகமானது நாம் பார்த்தவரையில் பகுத்தறிவையே பிரதானமாய். வைத்து மிகுந்த மன ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு அருமை யான கருத்துக்களடங்கிய புஸ்தகமாகும் என்பது நமது அபிப்பிராயம். இதில் அநேக சொந்தப் புதிய அபிப்பிராயங்களும், யாவரும் ஆச்சரியப்படும் படியாகவும், எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும்படியாகவும் பல மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே மக்களுடைய மூடநம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாய் இருந்துவரும் ஜீவாத்மா, மதம், கர்மம், முன்பின் ஜன்மம் ஆகியவைகளைப் பற்றியும் மற்றும் கடவுள் வணக்கம், விக்கிரக ஆராதனை, பிரார்த்தனை அவைகளுடையவும், மற்றும் மத சம்பந்தமானதுமான சடங்குகள், இவைகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் முதலியவைகளைப் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் கண்டித்து எழுதப் பட்டிருக்கின்றது. மேலும் இவை மாத்திரமல்லாமல் மக்களுக்குள் பிறவி, ஜாதி வித்தியாசம், வருணாசிரமதர்மம் முதலிய விஷயங்களும் கண்டிக்கப்பட்டிருப்பதுடன் இவைகள் உண்டாக்கப் பட்டதின் உள் எண்ணங்
கள் முதலியவைகளையும் விளக்கிக் காட்டப் பட்டிருக்கின்றது.
இந்தப்படி காட்டப்பட்ட இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகச் “சித்தர்
கள்” வாக்கியங்கள் முதலிய பல மேற்கோள்களைக் குறிப்பிட்டிருப்பது டன், விளக்கச் சித்திரங்களையும் யாவரும் உணரும்படியாக வரையப்பட்டி ருக்கின்றன. பொதுவாகக் கூறுமிடத்து இந்தியாவின் இன்றைய அரசியல், சமூக இயல், அறிவு இயல் முதலாகியவைகளின் நிலைமைக்கு முக்கிய காரணம் மதம் என்பதைக் குறிப்பிட்டு சிறப்பாகத் தீண்டாமையும், பெண்: அடிமையுமே முக்கிய காரணம் என்பதையும் சொல்லிக்காட்டி இவைகள் எல்லாம் ஒழிந்தால் அல்லது இந்தியா விடுதலையை அடைய முடியாது என்பதையும் தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவோம்.
குடி அரசு - 19310) 430
இப்புத்தகத்தை வாசித்துப் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் இதிலி
ருந்து அநேக அரிய கருத்துக்களையும்,புதிய எண்ணங்களையும் அடைந்தே தீருவார்கள். ஆகவே இவ்வரிய வேலையை மேற்கொண்டு உண்மைத் தொண்டாற்றிய உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களுக்குப் பகுத்தறிவு பெற்றுத் தீர வேண்டிய இந்திய மக்கள் சார்பாக நமது நன்றியறிதல்: உரித்தாகுவதாக. (இப்புத்தகம் குடிஅரசு புத்தகாலயத்திலும் கிடைக்கும்!
குடி அரசு - மதிப்புரை - 14.06.1931
431 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுகேசி
தலைவர் அவர்களே! சகோதரர்களே! நான் எதிர்பாராமல் திடீரென்று கூப்பிடப்பட்டுவிட்டேன். இங்குபேச வேண்டிய அவசியமிருக்குமென நான் கருதவேயில்லை. தங்கள் அழைப்பிற்கிணங்கியும் எனது நண்பரும் சகோதரவாஞ்சையும் உள்ள திரு. நடேச முதலியார் அவர்கள் தலைமை வகித்து நடத்தும் விழாவுக்கு நான் அவசியம் வரவேண்டுமென்றும் ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் திடுக்கிடும்படியாக அழைக்கப்பட்டு விட்டேன். மற்ற இடங்களில் பேசுவதற்கு எனக்கு எவ்வளவு உற்சாகமும் ஆசையும் இருக்குமோ அவ்வளவு உற்சாகமும் ஆசையும் இங்கே பேச எனக்கு உண்டாகவில்லை. மற்றும் என் மனதிற்கு வருத்தமாகவே
இருக்கின்றது.
ஏனெனில் இந்த சங்கமானது எந்தத் திட்டத்தில் நடைபெற இருக் கின்றதோ அத்திட்டங்களுக்கு நேர்மாறான அபிப்பிராய முடையவனாகிய நான் இன்று இந்த கொண்டாட்டமான தினத்தில் அதற்கு நேர் விரோதமாக பேசுவ தென்றால் அது யாருக்கும் கஷ்டமாகவே இருக்குமல்லவா? ஆனாலும் தலைவர் அவர்கள் இவ்விஷயத்தில், எனது அபிப்பிராயத்தையும் யோசனையையும் சொல்ல வேண்டுமெனக் கேட்டதாலும் என்னைக் கேட் காமலே, பேசவேண்டுமாய் கூப்பிட்டு விட்டதாலும் நான் இவ்விஷயத்தில் எனது அபிப்பிராயத்தை சொல்லிவிடுகிறேன். அதைத் தாங்கள் தங்கள் சொந்த அறிவைக் கொண்டு யோசித்துப்பாருங்கள், சகோதரர்களே! நமது மக்களுக்கு மூடநம்பிக்கையில் அதிகப்பழக்க மேற்பட்டுவிட்டதால் பகுத்தறிவை உபயோகிப்பது என்பது மிகுந்த கஷ்டமான காரியமாக இருக் கின்றது. ஆணாலும் சில முக்கிய விஷயங்கள் மூட நம்பிக்கையால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சிறிது கஷ்டத்துடனும் நஷ்டத்துடனுமே பகுத்தறிவைக் கிளறி விடவேண்டியதாகின்றது. சகோதரர்களே! நாட்டுக்குக் கெடுதியான ஒருவேகம் மூடநம்பிக்கையின் பயனாய் ரயில் வண்டி மாதிரி போய்க்கொண்டிருக்கின்றது. ரயில்வண்டி கூடாது என்று சொல்லும் ஒருவன் அதை இல்லாமல் செய்துவிட ஓடும் ரயிலுக்கு முன்னால் போய் நின்று தடுப்பதால் என்ன பயன் விளையுமோ அந்தப் பயன்தான் எனது அபிப் பிராயத்திற்கு விளையும் என்பது எனக்குத் தெரியும். ஆதலாலேயே நேர் வேகத்தில் போய் முட்டிக் கொள்ளாமல் அதன் அஸ்திவாரத்தில் வேலை
குடி அரசு - 19310) 432
செய்யவேண்டுமென்று கருதி அநேக விஷயங்களில் நான் நிதானமாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன். ஆனாலும் இந்த மாதிரி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பட்டுக் கொள்ளுகிறேன். ஆகிலும் நடப்பது நடக்கட்டும் என்றேதான் இப்போது பேசப்போகிறேன்.
சகோதரர்களே! உங்கள் சங்கக் கொள்கையில் அதாவது சுதேச ஜவுளி வர்த்தக சங்கம் என்பதில் நீங்கள் கருதி இருக்கும் சுதேசக் கைத் தொழில் கைநெசவு, கைநூற்பு என்கின்றவைகளையே முக்கியத் திட்டங்களாய் வைத் திருப்பது என்பதில் நான் விரோதமான அபிப்பிராயமுடையவனா யிருக்கிறேன்.
முதலாவது சுதேசக் கைத்தொழில் என்பதையே எடுத்துவிட வேண்டு மென்றும் அந்த உணர்ச்சி கூடாதென்றும் சொல்லுகின்றேன். சுதேசத் தொழில் என்று இருந்தாலும் பாதகமில்லை. ஒவ்வொரு தொழிலும் கையால்: செய்ததாகவே இருக்கவேண்டும்மென்று நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது. நமது
நாட்டுப் பொருளாதாரத்திற்கும் தொழில் பெருக்கத்திற்கும் கைத் தொழி லையே அதாவது கையினால் செய்யும் தொழிலையே விர்த்தி செய்வதும்
புத்துயிர் அளிப்பதும் ஆதரிப்பதும் என்பதான காரியங்கள் தொழிலுக்கும், பொருளுக்கும் தொழிலாளிக்கும் கேடு செய்வதாகும். முக்கியமாக கதர் என்று சொல்லும் விஷயம் இன்னமும் மோசமானதாகும். அதனால் தொழில் முறை: விர்த்தியுமில்லை. பொருளாதார விர்த்திக்கும் இடமில்லை. தொழிலாளி களுக்கும் பயன் இல்லை. அதுபோலவே தான் கைத்தறி, கை நெசவு என்ப வைகள் எல்லாம் தொழில்முறைக்கு கேடுவிளைவிப்பதும் தொழிலாளிகளின் முற்போக் குக்கும், விடுதலைக்கும் எதிரியுமானதாகும். அது நாகரிக முற்போக்கடைய வேண்டிய நாட்டிற்கு சிறிதும் பொருந்தாததுமாகும் அன்றி
யும் இந்த உணர்ச்சி சமதர்மத்திற்கும் பொது உடைமை தத்துவத்திற்கும் மாறானதுமாகும். இவை மாத்திரமல்லாமல் இயற்கைக்கும் அதோடு மனிதத்
தத்துவத்திற்கும் முரண்பட்டதும் காரியத்தில் சித்தி பெறாமல் போவதோடு தானாக ஏற்படும் முன்னேற்றத்தையும் தடுப்பது மாகும்.
சகோதரர்களே! இன்றைக்கு கதர் ஏற்பட்டு 10,12 வருஷங்களாகியும்
சுமார் 4050 லட்ச ரூபாய் இத்தொழில்முறை பிரசாரத்திற்கு மாத்திரம் இந்நாட்டு மக்கள் பணம் செலவு செய்யப்பட்டு அநேகரை இதில் ஈடு படுத்தியும் என்ன பலன் ஏற்பட்டது? என்பதை கவனியுங்கள். இதற்காகவே கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் 100 க்கு 5 பேராவது கதர் கட்டினவர்கள் காணப்படுகிறீர்களா? அப்படித்தான் சற்றுக் குறைவாகவேக் காணப் படுவதாக வைத்துக் கொண்டாலும் இவர்கள் தங்களது பெண்டு பிள்ளை களுக்கு 1000ல் ஒருவர் வீதமாவது வாங்கிக்கொடுத்து அதைப்பயன்படுத்து கிறவர்கள் இக்கூட்டத்திலாவது உண்டா? என்று யோசித்துப் பாருங்கள்.
433 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இதை நான் இந்த கதர் அபிமானிகள் மீது குற்றமாகச் சொல்லவர வில்லை. ஆகாத முடியாத - இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோத மான காரியத்தில் ஏதோ வேகத்தில் ஏதோ ஒரு காரியத்தை உத்தேசித்து தலையிட்டுவிட்டு விழிக்க நேரிட்டுவிட்டது என்றுதான் சொல்லுகின்றேன்.
கதர் ஏழைகளுக்குச் சோறு போடுகின்றது என்பது பொருளற்ற வார்த்தை யேயாகும். அது சில இடங்களில் வேண்டுமென்றே ஏமாற்ற உபயோகப் பட்டு வருகின்றது. பாமர ஜனங்கள் இதை நம்பி ஏமாந்து விடுகின்றார்கள். கதரின் தத்துவத்தால் இந்த நாட்டில் யாரும் பலனடைவதில்லை. பலனடையவும் முடியாது. ஆனால் கதரைப்பற்றி திரித்தும் குழப்பியும் பிரசாரம் செய்வதால் சிலர் அதுவும் மற்றவர்களுடைய அளவுக்கு மீறிய நஷ்டத்தால் பயனடைகின்றார்கள். எப்படியென்றால் நேற்று நான் திருவாரூரில் இருந்து வரும்போது என் கூட இச்சங்கத்தின் தலைவர் மில்,
கதர் வியாபாரி ஜனாப் முகமது சுல்தான் சாயபு அவர்கள் கூட்டாளி திரு. வஃப.மா. முதலியார் பிரயாணம் செய்தார். அவரிடம் நான் சில விபரம் தெரிந்தேன். அதாவது பதினெட்டு நெம்பர் மில் நூலினால் நெய்யப்பட்ட துணி 50 இஞ்சு அகலம் கெஜம் ஒன்றுக்கு 3 அணா 6 பைக்கு விற்பதாகச் சொன்னார். ஆனால் அதே அகல நீளம் கதர்18நெம்பர் நூலாய் இருந்தால் கஜம் 12 அணாவுக்கு மேல் அடங்குவதாகவும் 10நெம்பர், 8நெம்பராய் இருந்தால் கஜம் 9 அணாவுக்கு கொடுக்கலாம் என்றும் சொன்னார்.
ஆகவே மக்கள் 0-3-6-க்கு பதிலாக 9 அணா12 அணா போடுவதால் மாத்திரம்தான் “ஏழைகள் பிழைக்கலாம்” என்று சொல்லப்படுகின்றதே தவிர அத்தொழிலினால் யாரும் பிழைப்பதில்லை. ஆகவே இது பார்ப்பனர்கள். பிழைக்க என்று மற்றவர்களுக்குக் கடவுள் பேரால் போடும் ஒரு முட்டாள் வரிபோல் வேறு சிலர் பிழைக்க என்று கதர் வரி என்பதாகக் கதர் கட்டுப வரிடம் வசூலிக்கப்படும் ஒருவித வரித்திட்டமேயொழிய கதர் ஒரு தொழில் திட்டமல்லவென்றும் அதனால் யாரும் யோக்கியமாய் பிழைக்க முடியாது என்றும் நான் உறுதியாய்ச் சொல்லுவேன்.
கதர் பக்தர்களுக்கு இது புரியாவிட்டாலும் கதர் கர்த்தாக்களுக்கு இந்த அபிப்பிராயம் புரிந்ததுதான். ஜனங்கள் கண்விழித்துப் பிறகு அவர்களும் தங்கள் அபிப்பிராயங்களை இப்போது மாற்றிக்கொண்டார்கள். உயர்திரு. காந்தி அவர்களே இப்போது இன்று நடைபெறும் கதர் திட்டம் பயன்படாது
என்று கருதி ஒரு யந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு குறைந்த நேரத்தில் கொஞ்ச கஷ்டத்தில் அதிகமான அளவு நூல் நூற்கும்படியான ஒரு புதிய இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார். அதன் கருத்து என்ன? கைத்தொழிலிலிருந்து
- கைராட்டினத்திலிருந்து யந்திரத் தொழிலுக்கு - யந்திர ராட்டினத்திற்கு பாய்ந்திருக்கிறார் என்பதல்லவா? என்று கேட்கின்றேன்.
குடி அரசு - 19310) 434
அப்படிப்பட்ட யந்திரம் கண்டுபிடித்தால் கைராட்டினம் என்ன கதியாவது? இப்போது கைராட்டினத்தில் நூல் நூற்ற “ஏழைகளுக்கு நாளைக்கு வழி என்ன?” இந்த கதர் என்ன கதியாவது? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். தவிரவும் கதர் கர்த்தாக்களே கதர் விஷயத்தில் பலவித அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அதாவது, கதரே தான் இந்தியாவின் விடுதலை என்று ஒருவரும், யந்திரங்கள் வரும்வரை கதர் என்று ஒருவரும், வேலையில்லாத நேரத்தில் வேலை கொடுக்க என்று ஒருவரும், வேறு தொழிலுக்கு மார்க்கம் கண்டு பிடிக்கும் வரைதான் கதர் என்று ஒருவரும் சும்மா இருக்கும் ஒய்வு நேரங்களில் ஆண் பெண் சகலரும் கதர் நூல் நூற்பதின் மூலம் ஜவுளியே சும்மா கிடைத்து விடும் என்று ஒருவரும், கதர் சுற்றுவதில் ஒரு ஓங்காரம் - பிரணவ சப்தம் ஏற்பட்டு எதிரிகளை அழித்து விடும் என்று ஒருவரும், இந்தப்படி கடவுளுக்கு லக்ஷணம் சொல்லுவதற்கு மேலாகக் கதருக்கு லட்சணம் சொல்லுகின் றார்கள். ஆனாலும் கடைசியாக ஒரு வரியாக வசூலிக்கப்பட்டு சிறிது பாகமே ஏழைகளுக்குப் போய்ச் சேரும் படியான செப்பிடு வித்தையாகவே முடிந்துவிட்டது. நிற்க,
மற்ற தொழில் விஷயங்களிலும் கைத்தொழில் என்கின்ற மனப் பான்மையை விட்டொழிக்க வேண்டும். கைத்தொழில் சாமான்களையே ஆதரிப்பது என்கின்ற மனப்பான்மையையும் விட்டொழிக்க வேண்டும். இது பயன்படாத காரியமாக ஆகிவிடும். இன்றைய தினம் நம் நாட்டில் அநேக “கைத்தொழில் விற்பனர்களுக்கு” வேலையில்லாமல் போய் விட்டது. வேலை கொடுக்கவும் நம்மால் முடியாமல் போய்விட்டது.
உதாரணமாக ஒரே தையல் ஊசியையும் குண்டூசியையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டில் அதை கையினால் செய்யத் தெரிந்தவர்கள் ஏராளமாய் இருக்கின்றார்கள். மேலும் செய்யும்படி ஆயிரக்கணக்கான மக்களைப்பிடித்து வேலை சொல்லிக் கொடுத்துத் தயார் செய்யமுடியும். ஆனால் நம்மில் ஒருவராவது அதை வாங்குவோமா? ஒரு சமயம் காந்தி போன்ற ஒருவர் “மகாத்மாவாகி” பல லக்ஷக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பிரசாரம் செய்து அதனால் பிழைக்க வேண்டிய பலரை ஏற்படுத்தி மோக்ஷம் கிடைக்கும் என்பதுபோல் “கை ஊசி வாங்கினால் சுயராஜ்யம் கிடைக்கும்” என்று பிரசாரம் செய்தால் இப்போது கதர் வாங்குவதுபோல்: சிலராவது வாங்குவர்களா? என்பதும் சந்தேகந்தான் என்றாலும் அநேகமாய் அந்த ஊசிகளை வாங்கமாட்டார்கள் என்றுதான் சொல்லுவேன். ஏன்? வேலை நயமில்லாததாலா என்றால் அதுவல்ல. மற்றென்னவென்றால் அதை வாங்க நமது மக்களுக்கு விலை சரிப்படாது. ஏனெனில் ஒரு ஊசி செய்ய நமது கைத்தொழில் முறையில் செலவாகும் நேரத்தில் பல ஆயிரம் ஊசிகள் இயந்திரத்தொழில் முறையில் நம்பிக்கையுள்ளவரால் செய்யப்பட்டு
435 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
விடுகின்றது. ஆகவே ஒரு காசுக்கு 12 ஊசி விற்கும்போது ஒரு ஊசிக்கு 12 தம்பிடி கொடுப்பதென்றால் யாரும் சம்மதிக்க முடியவே முடியாது என்பது
தான்.
அதுபோலவேதான் மற்ற விஷயங்களும். ஆகவே கைத்தொழில் பைத்தியத்தை விட்டு விடவேண்டும். இயந்திரத் தொழில் முறையை ஆதரிக்க வேண்டும்.
அன்றியும் கைத்தொழில் கைத்தொழில் என்பது பொதுவுடைமை தர்மத்திற்கு விரோதமானது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். முதலாளி தொழிலாளி என்கின்ற பாகுபாடு இருக்க வேண்டும் என்கின்ற மனப் பான்மையுடையவர்கள் தான் கைத்தொழில் கைத்தொழில் குடிசைத் தொழில் என்று கட்டியழுவார்களே தவிர சமதர்மமும் பொதுவுடைமை தத்துவமும் கோருபவர்கள் கைத்தொழிலை அதாவது இயந்திர உதவியில்லாமல் செய்யப்
படும் தனிப்பட்டவர்கள் தொழிலை, விரும்பமாட்டார்கள். கைத் தொழில் என்பதே வர்ணாச்சிரம தர்மத்தின் அடிப்படையாகும். திரு. காந்தியவர்கள் சொல்லுகின்ற வர்ணாச்சிரம தத்துவமேதான் கதர் முதலிய கைத்தொழில் முறைகள். எப்படியெனில் அவர் மக்கள் பரம்பரைத் தொழில்களையே (பரம்பரை முறையில்) செய்ய வேண்டும் என்கிற கருத்துடையவர். ஆகவே தொழிலாளி மகன் தொழிலாளியாகவும் முதலாளி மகன் முதலாளியாகவும் இருப்பதற்காகச் செய்யப்படும் மறைமுகமான பிரசாரமே தான் இந்த கதர், கைத்தொழில், குடிசைத்தொழில் என்பவைகளாகும். சமதர்மமும் பொது வுடைமை தத்துவமும் ஏற்படவேண்டுமானால் வர்ணாச் சிரமும் பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழியவேண்டும்.
அன்றியும் கைத்தொழில் செய்வதன் மூலமேதான் அதாவது மக்களுக்கு சரீரத்தில் பாடுபடும்படியான வேலை கொடுத்து அவர்களை: வாட்டி வளவை நிமிர்த்துவதான் மக்களுக்கு ஜீவனத்திற்கு வழி ஏற்படுத்த
லாம் என்று சொல்லுகின்றவர்கள் கூற்றையும் நான் ஒப்புக் கொள்ளமுடியாது. அந்த முறையையும் நான் ஏற்கமுடியாது.
ஏனெனில் அவர்கள் மக்கள் பிறந்ததும் வளர்ந்ததும் இருப்பதும் தொழில் செய்து சரீர பிரயாசைப்பட்டு உழைத்து சாப்பிடத்தான் இருக்கின் றார்கள் என்று கருதும் எண்ணத்தினாலேயே மக்களைக் கீழ்மைப்படுத்தி விட்டார்கள். ஆனால் இந்தப்படி சொல்லிக்கொண்டு இருக்கின்ற மக்களில்
சிலர் மாத்திரம் உட்கார்ந்து கொண்டு பாடுபடாமல் ஜீவிக்க என்று பிறந்து வளர்ந்து வாழ்பவர்களாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இதை மோசடி யான எண்ணமென்றே சொல்லுவேன்.
கஷ்டப்பட்டு சாப்பிடுவதற்கென்றே மனிதன் பிறந்தான் என்று சொல்லுவதானால் மனித சமூகம் இல்லாமல் போவதே மேலான காரியமாகும்.
குடி அரசு - 19310) 436
“உலகம் வேண்டுமானால் மனித சமூகம் பெருகவேண்டும்” என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் பெரிதும் மற்ற மக்கள் உழைப்பில் சாப்பிடு கின்றவர்களே யாவார்கள். ஆகவே மக்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்று சொல்லி கஷ்டப்பட மார்க்கம் தேடுவதைவிட மக்கள் இல்லாமலே போவதற்கு செய்யப்படும் காரியம் மிகவும் நல்ல காரியமாகும்.
உதாரணமாக இரண்டு மாட்டை காலையில் 3 மணிக்கு செக்கில் பூட்டி மாலை 7 மணி வரைக்கும் ஓட்டி அடித்து அதன் வாலை முறித்து முதுகுத் தோல்பட்டை வாங்கி கழுத்து பூசனிக்காய் போல் வீங்க வைப்பதன் மூலம்தான் அந்த மாடுகள் வாழமுடியும் என்றால் அப்படிப்பட்ட மாடுகளை எல்லாம் கசாப்புக்கடைக்காரனிடம் ஒப்புவித்து விட்டு இனி மேல் மாடுகளை யாரும் உற்பத்தி செய்யக் கூடாது என்று சட்டம் போடுவதே மேலான காரியம் என்றுதான் சொல்லுவேன். இந்த மாதிரி நிலை யில் ஒரு மாடுகூட பிழைத்திருக்க வேண்டியதில்லை என்பதே எனது அபிப்பிராயம்.
தவிர பொதுவுடைமை தத்துவத்திற்கு, வெள்ளைக்கார ஆக்ஷியேதான் விரோதமாய் இருக்கின்றது என்பதை நான் ஒப்புக் கொள்ளமுடியாது. நமது
நாட்டில் உள்ள வர்ணாச்சிரம தர்மந்தான் அதுவும் திரு. காந்தி சொல்லும் வர்ணாச்சிரம தர்மம்தான் பொது உடைமைக்கு விரோதமானதாகும். இந்த வர்ணாச்சிரம தர்மம்தான் இந்த நாட்டுக்கு வெள்ளைக்கார ஆக்ஷி முதலிய வெளிநாட்டு முதலாளிகள் ஆக்ஷியை கொண்டு வந்துவிட்டதாகும்.இன்னும் அவ்வாக்ஷியை நடத்திக் கொடுப்பதே -அதைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதே நமது நாட்டு வர்ணாச்சிரம தர்மமுறையேதான் ஆகும்.
முதலாளி தொழிலாளி என்ற முறையும் வர்ணாசிரம தர்ம முறையில். பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த முறையில் தான் இப்போது நமது நாட்டில் மஞ்சள் புரோகிதர்களும். மஞ்சளும் கருப்பும் கலந்த அரசர்களும், மீன்களும், மிராசுகளும், வியாபாரிகளும் இருக்கின்றார்கள் என்பதோடு இவர்களுடைய பத்திரத்திற்கென்றே வெள்ளை முதலாளிகள் வருவிக்கப் பட்டு காப்பாற்றப்படுகின்றார்கள். ஆகவே நமது நாட்டு மேல் கண்ட புரோகிதர்களும், அரசர்களும், மீன்களும் முதலாளிகளும் பரம் பரை முறை, முறை-பாத்தியமே பிறப்பு உரிமை என்பவைகள் எல்லாம் அடியோடு ஒழியும் போது அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு -அதன் பலத்தால் இருக்கும் வெள்ளை முதலாளி ஆக்ஷி கசகசவென்று நசுக்கிவிடும். அதில். சிறிதும் சந்தேகேமேயில்லை. தவிர யந்திரங்கள்வந்தால் மக்களுக்கு வேலை கிடைக்காது என்று சொல்லப்படுகின்றது.
இதுவும் முதலாளி, தொழிலாளி தத்துவ வர்ணாச்சிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எதற்காக ஒருவனுக்கு சதா தொழில் இருக்கவேண்டும்? புலி, கரடி.சிங்கம், நாய், குரங்கு பகடி ஆகியவைகளுக்கு சதா தொழில் இருந்தும் கொண்டிருக்கின்னனவா? அவை தொழில்
437 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
செய்துதான் ஜீவிக்கின்றனவா? புரோகிதன், அரசன், ஜமீன், மிராசு, வியாபாரி. உத்தியோகஸ்தன் முதலியவர்கள் சதா சரீரத்தால் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்களா?
மேலும் இவர்கள் எல்லாம் வேலை செய்யாததால் உடல் கெட்டுப் போகின்றதே என்று சரீராப்பியாசம் (Exercise) செய்து கொண்டிருப்பதை நாம் பார்க்கவில்லையா? ஒரு கூட்டம் சரீரத்திற்கு வேலை இல்லையே என்று சரிராப்பியாசம் செய்யவும் மற்றொரு கூட்டம் ஜீவனத்திற்கு மார்க்கமில் லையே என்று வேலை செய்து கஷ்டப்படவுமாயிருப்பதற்குக் காரணம் வர்ணாசிரம சமூக வாழ்க்கை முறையா? அல்லது யந்திரத்தினால் ஏற்பட்ட கெடுதியா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாட்டில் இருக்கின்ற வேலையையும் மக்கள் எண்ணிக்கையையும் அவர்களுக்கு வேண்டிய ஆகார முதலிய சாமான்களையும் கணக்குப் போட்டு அந்த சாமான்களை யந்திரங்களால் செய்வதன் மூலம் குறையும். நேரத்தைக் கழித்து மிகுதியுள்ள நேரத்தை எல்லா மக்களுக்கும் பங்கு போட்டு பிரித்துக் கொடுத்து அவர்கள் வாழ்நாள் ஜீவனத்திற்கு வேண்டிய முழுக் கூலியையும் கொடுக்க ஆரம்பித்து விட்டால் வேலை சரியாய்ப் போய்விடுமா? இல்லையா? அதாவது ஒரு வாரத்திற்கு ஒரு மனிதனுக்கு இத்தனை மணி நேரம் மாத்திரம் வேலை செய்தால் போதும் என்கின்ற முறையில் பங்கீட்டுக் கொடுத்துவிடவேண்டும். இப்படிச் செய்தால் ஒருவாரத்தில் ஒரு நாள் கூட ஒரு மனிதனுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. மீத நாட்களில் கஷ்டப்படாமல் சாப்பிடக்கூடும் எதுபோலவென்றால் தொழிலாளிகளுக்கு நாம் இப்போது தினம் ஒன்றுக்கு 8 மணி 6 மணி என்று திட்டம் போட்டு சட்டம் செய்கின்றோமல்லவா? இதையே வாரத்திற்கு இத்தனை மணி என்று திட்டம் போட்டு விட்டால் தீர்ந்ததல்லவா? அதுபோலவும் உபாத்தியாயர்களுக்கு ஒரு வாரத்திற்கு இத்தனை பீரியட் என்று கணக்குப் போடுவது போலவும் வாரத்தில் ஒரு மனிதன் இத்தனை மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டோ மேயானால் தொழிலாளிகள் கஷ்டம் தானாகவே நீங்கி விடும். அப்படிக் கில்லாமல் ஜட்கா வண்டி குதிரை போலவும் செக்குமாடு போலவும் வேலை வாங்கிக் கொண்டு அதன் பலன்களை யெல்லாம் வேலையை சிறிதும் செய்யாத கூட்டமாகிய புரோகிதர், முதலாளி, மிராசுதார் ஆகியவர்களே அனுபவித்தால் வேலை எப்படி கிடைக்கும்? சரியான கூலி எப்படி கிடைக்கும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஆகவே சகோதரர்களே, நமது நாட்டுத் தொழில்விர்த்திக்கு கதர் இடையூறு என்றும், ஏழைகளுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு கதர் பயன்படவில்லை என்றும் கதரின் பேரால் விதித்திருக்கும் அதாவது கெஜம்
3 அணா பெறும்படியான துணியை 9 அணா போட்டு வாங்குவதினால்
குடி அரசு - 19310) 438
வாங்குகின்றவன் அக்கிரமமாகவும் நிர்பந்தமாகவும் நஷ்டப்படும் கெஜத்
திற்கு ஆரணாவிலிருந்து சிறிது பாகமே தர்மத்திற்கு என்று ஏழைகளுக்குப். பயன்படுகின்றதென்றும் தர்மம் வேறு, கைத்தொழில் வேறு, பொருளாதார வியாபாரம் வேறு என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்
றும் பொது உடைமை தத்துவதற்கு நமது நாட்டுக் கைத்தொழில் முறையும் புரோகிதன், முதலாளி, ஜமீன்தார், மேல்ஜாதி, கீழ்ஜாதி முறைகளே தான் முக்கிய விரோதிகளேத் தவிர வெள்ளைக்காரன் ஆட்சியே முக்கிய மான தல்லவென்றும் ஆதலால், நீங்கள் இவைகளைக் கவனித்து யோசித்து உங்கள் அபிப்பிராயப்படி நடந்துகொள்வதில் உங்களுக்குப் பூரண உரிமை யுண்டு என்றும் இதுவரை எனக்குப்பட்டதைச் சொன்னேன் என்பதோடு இந்த ஊணில் இப்படி ஒரு சங்கம் ஏற்பட்டு இதனால் வர்த்தகர்கள் ஒற்றுமைப் படவும்
மற்றும் -ஷராப்பு வியாபாரிகளும் இதில் கலந்துகொண்டு இருப்பதுமான காரியம் மிகவும் போற்றத்தக்கதேயாகும். தலைவர் அவர்களும் இவ்வளவு
தூரம் இதில் பங்கெடுத்து உங்களுக்கு அரிய உபதேசம் செய்தது போற்றத் தக்கதேயாகும்.
குறிப்பு : 10-06-1931 அன்று ஈரோடு சுதேசி ஜவுளி வர்த்தக சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 14.06.1931
439 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
o2 ““ஆணானும் ஒருசமயம்
“மகாத்மா” காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்கு போகமாட்டார். ஒரு சமயம் போனாலும் போகக் கூடும். ஆனாலும் அது சந்தேகந்தான். அப்படி சந்தேகமில்லாமல் போவது ஒரு சமயம் உறுதியானாலும் அவர்தான் போவாரேயொழிய மற்றவர்கள் போகமாட்டார்கள். ஒரு சமயம் மற்றவர்கள். போனாலும் மகாத்மாதான் காங்கிரஸ் பிரதிநிதியாய் இருப்பார். “மகாத்மா” காங்கிரஸ் பிரதிநிதியாய் போனாலும் வட்ட மேஜை மகாநாட்டில் மாத்திரம் கலந்துகொள்ளமாட்டார். வட்ட மேஜை மகாநாட்டில் ஒரு சமயம் கலந்து கொண்டாலும் காங்கிரஸ் ககஷியை மாத்திரம் எடுத்துச்சொல்லிவிட்டு விவகா:
ரத்தில் கலந்துகொள்ளமாட்டார். விவகாரத்தில் ஒரு சமயம் கலந்து கொண்: டாலும், பாதுகாப்பு விஷயத்தில் மாத்திரம் சிறிதும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஒருசமயம் பாதுகாப்பில் விட்டுக்கொடுத்தாலும் இந்திய நன்மைக்கென்று தான் எதையும் விட்டுக்கொடுப்பாரேயொழிய பிரிட்டிஷ் நன்மைக்காக வென்றுசிறிதும் விட்டுக்கொடுக்கமாட்டார். பிரிட்டிஷ் நன்மைக்காகவென்று ஒருசமயம் எதாவது விட்டுக்கொடுத்தாலும் * ஐயோ பாவம் ! அவர்களும் (பிரிட்டிஷார்களும்) நம்மைப்போல் மனிதர்கள் தானே ! பிழைத்துப் போகட்
டும்” என்று கருதி தயாளத்தின் மீதுதான் விட்டுக்கொடுப்பாரேயொழிய “மிருக பலத்திற்கு” பயந்துகொண்டு ஒருக்காலும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஒரு சமயம் “மகாத்மா” மிருகபலத்திற்கு பயப்படுவதானாலும் ராஜியை
உத்தேசித் தும், பெருந்தன்மையை உத்தேசித்துந்தான் பயப்படுவாரேயொழிய அஹிம்சையும், சத்தியாக்கிரகமும் தோற்றுப்போகுமே என்று ஒரு நாளும் சந்தேகப்படமாட்டார். ஒரு சமயம் தோற்றுப்போகுமே என்று சந்தேகப்படா மலும் ஒரு சமயம் தோற்றே போய்விட்டாலும் அது கீதையின் ரகசியமாயும், கடவுள் செயலாயுந்தான் இருக்குமேயொழிய ஒரு நாளும் “மகாத்மா” காந்தி செயலாய் இருக்க முடியாது என்பது மாத்திரம் உறுதி.
( ஒரு ஜோசியன் )
குடி அரசு - கட்டுரை - 14.06.1931
குடி அரசு - 19310) 440
முஸ்லீம் மகாநா௫
தலைவரவர்களே! கனவான்களே!
இந்தப் பெரிய மகாநாட்டில் என்னை சில வார்த்தைகள் பேசும்படி அழைத்ததற்கு நன்றி செலுத்துகிறேன். இந்தச் சமயமானது அரசியல் சம்மந்தமான ஒரு நெருக்கடியான சமயம் என்பதை முஸ்லீம் சமூகமானது உணர்ந்து ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி தங்கள் தங்கள் அபிப்பிராயங் களை தெரிவித்துக்கொண்டு வருகின்றன. அபிப்பிராயங்களில் சற்று ஒருவருக்கொருவர் - மாறுபட்டவர்களாயிருக்கலாம். ஆனாலும், விஷயத்
தின் நெருக்கடியை உணராதவர்கள் இல்லை. இந்தச் சமயத்தில் எல்லா முஸ்லீம் மகாநாட்டிலும், சமீபத்தில் வருவதாயிருக்கும் அரசியல் சீர்திருத்த
த்தில் முஸ்லீம்களின் நிலை என்ன என்பதே முக்கிய பிரச்சினையாய் இருக் கின்றது. அதிலும் முக்கியமாய் இருப்பது அச்சீர்திருத்தங்களுக்கு முஸ்லீம் பிரதிநிதிகளாய் தேர்தலில் பிரதிநிதித்துவம் பெறுவதா? அல்லது இந்துக் களின் பிரதிநிதியாய் பிரதிநிதித்துவம் பெறுவதா? என்பதே முக்கிய பிரச்சினையாய் இருந்து வருகின்றது. உண்மையை யோக்கியமாய்ப் பேச வேண்டுமானால் முஸ்லீம்கள் முஸ்லீம் பிரதிநிதிகளாய் முஸ்லீம்களின் ஓட்டைக் கொண்டே பிரதிநிதிகளாக அங்கம் பெறவேண்டும் என்பதாகவே இந்தியாவின் பெரும்பான்மையாகிய முஸ்லீம்கள் விரும்புகின்றார்கள் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.இதுசரியா? தப்பா? என்பது வேறு விஷயம். அதோடு அது சரியா? தப்பா? என்று முடிவு சொல்லுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதைப் பொருத்தே தப்பு சரி என்கின்ற முடிவைப் பற்றியும் பேச வேண்டியதாகும்.
நிற்க, இவ்வளவு விஷமபிரசாரம் வெளிப்படையான ஒரு உண்மை யை அதாவது முஸ்லீம்களின் பெரும்பான்மையான மக்கள் தனித் தொகுதியைவிரும்புகின்றார்கள் என்பது குருடனும் அறியும் படியாக இருந்த தும் ஒரு சில இந்து தேசீய பிழைப்புக்காரர்களும் தங்கள் சுயநல வாழ்வுக்கு தேசீயத்தை ஏற்படுத்தி அதை நம்பி இருக்கின்றவர்களும் இவ்வளவு பெரிய உண்மையை மறைத்துப் பிரசாரம் செய்கின்றார்கள். இந்த ஆட்களே இந்திய தேசீயத் தலைவர்களானால் இவர்களால் நடைபெறும் தேசீய ஆக்ஷியில் எவ்வளவு நாணயமும் யோக்கியமும் இருக்கும் என்பதை யோசித்துப்: பாருங்கள். பொதுவாகவே இந்துக்களும் முஸ்லீம்களும் மதத்திலும், ஆச்சார
441 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12.
அனுஷ்டானங்களிலும் மற்றும் எவ்வளவோ விஷயங்களிலும் பிரிவுபட்டு இருக்கின்றார்கள். இரண்டு சமூகங்களும் ஒன்றுபடுவது என்பது சுலபத்தில்
முடியாத காரியமாகும். வரப்போகும் சீர்திருத்தத்திலும் இவ்விரண்டு சமூகங் களும் ஒன்று சேரமுடியாதபடி அதாவது அவரவர்கள் மதத்திற்கும் ஆச்சார அனுஷ்டானத்திற்கும் சிறிதும் பங்கம் ஏற்படாதபடி பத்திரமாய் காப்பாற்றப். படவேண்டும் என்பதே முக்கியநிபந்தனையாகும். ஆகவே, இரண்டு நேர்க் கோடுகள் எப்படி ஒன்று சேர முடியாதோ அப்படிப் போல் ஜாக்கிரதையாய் காப்பாற்றப்படும் ஒன்றுக் கொன்று மாறான மதத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு
நாளும் ஒன்று சேர முடியாது. அப்படி இருக்க வேண்டி ஏற்பட்ட இரு சமூகங் களும் அவரவர்கள் பிரதிநிதிகளை அவரவர்களே தெரிந்தெடுத்துக் கொள் வதன் மூலம்தான் “பத்திரமாய்” இருக்க முடியும்.
ஆகவே இந்தநிலையில் முஸ்லீம்கள் தனித்தொகுதி கேட்பதில் பிசகு ஒன்றும் இல்லை. ஆனால் அதற்கு ஆக்ஷேபனை சொல்லுவதில் தான் எனக்கு நியாயமிருப்பதாகப் புலப்படவில்லை.
வாயில் வேண்டுமானால் “இந்து முஸ்லீம் சகோதரர்கள், இந்து முஸ்லீம் ஒற்றுமை” என்று பேசலாம். அதில் ஒரு சிறிதும் நாணயமே இருக்க. முடியாது. ஏனெனில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள மத சம்பந்தமான சமூக சம்பந்தமான, கொள்கைகள் சம்பந்தமான ஒற்றுமை கள்: எப்படிப்பட்டது என்பது எனக்கும் கொஞ்சம் தெரியும்.
இந்து முஸ்லீம் ஒற்றுமையும் நம்பிக்கைக்கு பாத்திரமான சகோதரத் தன்மையும் வேண்டுமானால் அவற்றிற்கு இடையூறாயிருக்கும் மதக் கொள்கைகளில் முதலில் திருத்தம் ஏற்படவேண்டும். அப்படிக்கில்லாமல் இருவர் மதக் கொள்கைகளையும் பத்திரமாய்க் காப்பாற்ற வேண்டும் என் பதில் “யார் கழுத்தை யார் அறுப்பது?” என்கின்ற உண்மைதான் அதில் தொக்கியிருக்கின்றது. அதுவேதான் அதற்கு அருத்தமாய் இருக்க முடியும். ஏனெனில் இன்றைய தினம் அரசியல் துறையில் இருக்கும் மக்கள் அரசியலை விடமதத்தையே பிரதானமாய்க் கருதி இருக்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல் மத ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே அரசியல் ஆதிக்கம் வேண்டும் என்கின்றவர்களாய் இருக்கின்றார்கள். ஆகவே இந்தக் கூட்டத்தார்கள் “தேசீயம் முக்கியமானது,அரசியல் முக்கியமானது” வெள்ளைக்காரனை இந்த நாட்டை விட்டு ஒழிப்பது முக்கியமானது, என்று சொல்லுவதை நான் ஹம்பக் - புரட்டு என்றே கருதுகின்றேன். ஆதலால் சிறுபான்மையாய் இருக்கின்றவர்களுக்கு ஒன்று போதுமான பாதுகாப்பு வேண்டும், அல்லது இருவருக்கும் பொதுவாய் இருவரும் அல்லாதவரான மத்தியஸ்தர் ஒருவர் வேண்டும். மத்தியஸ்தனுக்கு கூலி கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதற்கு யார் என்ன செய்வது? ஆகையால் இன்றைய தினம் நமக்கு மத்தியஸ்தன் வேண்டாம் என்றால் கட்டாயம் பந்தோபஸ்து
குடி அரசு - 19310) 442
வேண்டியதுதான். ஆதலால் முஸ்லீம்கள் தங்களுக்குத் தனி தொகுதியையே தான் வேண்டும் என்பதில் குற்றமில்லை.
இந்து முஸ்லீம்களில் இந்தியாவுக்கு இன்னார்தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. உரிமை இருக்கின்றது என்றால் இருவருக்குமே உரிமை இருக்கின்றது. இந்தியாவில் இருக்கும் 7', கோடி முஸ்லீம்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டவர்கள் இஸ்லாம் மார்க்கம் ஏற்படுவதற்கு முன்பே இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த சமூகத்தின் பரம்பரையார் ஆவார்கள். அவர்களது மார்க்கம் வேறானதினாலேயே அவர்கள் இந்தியர்களல்லாதவர்களாய்ப் போய்விட முடியாது. இந்தியாவில் உள்ள யாருடைய உரிமைக்கும் அவர்களது உரிமை இளைத்ததாகி விடாது. இந்துக்கள் என்று சொல்லப்படுகின்றவர்களும் இந்துமதம் என்பது தோன்றுவதற்கு முன்பே இங்கு பிறந்து வளர்ந்து வரும் சமூகத்தைச் சேர்ந்த வர்களாவார்கள். அவர்களுக்கும் சகல உரிமையும் உண்டு. ஆதலால் இதில் ஒருவர் மேல் ஒருவர் கீழ் அல்லது ஒருவர் சொந்தக்காரர், ஒருவர் அன்னியர். என்று பேசுவதெல்லாம் கையில் வலுத்தவன் காரியமாகுமே ஒழிய நியாய மான காரியமாகாது.
ஆதலால் முஸ்லீம்கள் இந்தச் சமயம் ஏமாந்து போகக் கூடாது என்றே சொல்லுவேன். “விடிய விடிய கண் விழித்து இருந்து விடியற்காலம் திருடன் வருகின்ற நேரத்தில் தூங்கி ஏமார்ந்து விடாதீர்கள்” என்றே சொல்லுகின்றேன். எப்பொழுது “தேசீயவாதிகளும் மகாத்மாக்களும்” எங்களுக்கு மதத்தைப்: பற்றி கவலை இல்லை என்கின்றார்களோ அப்பொழுது வேண்டுமானால் தனித் தொகுதியை பற்றி கவலை இல்லை என்று சொல்லி விடலாம். அதுவரை பத்திரமாகத்தான் இருக்கவேண்டும்.
ஏனெனில் நமது பிரதிநிதி என்பதாக தேர்தலுக்கு நிற்பவர்கள் எல்லாம் நிற்கின்றவரை ஓட்டு கேட்கின்ற வரையில், வெற்றி பெற்று அங்கத்தின ராகின்ற வரையில் நமது பிரதிநிதி என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். வேலை ஆனவுடன் பிறகு அவர்களுக்கு மாத்திரம்தான் அவர்கள் பிரதிநிதிகளாகி அவர்கள் சொந்த செளகரியத்திற்காக அந்தப்பதவியை எவ்வளவு இழிவாய் வேண்டுமானாலும் உபயோகப் படுத்தி விடுகின்றார்கள். இப்படிப் பட்ட மக்கள்தான் இன்று எந்த சமூகத்திலும் பிரதிநிதியாகத் தகுந்தவர்களாய் இருக்கின்றார்கள்.
இம்மாதிரி ஆட்களுக்கு தனித்தொகுதி இல்லாவிட்டால் அச்சமூகத் திற்கு பெரிய ஆபத்து என்றுதான் சொல்லுவேன். இப்பொழுதே தனித் தொகுதியின் மூலம் பிரதிநிதி ஆனவர்களே அந்த ஸ்தானத்தை எவ்வளவு தப்பாய் உபயோகிக்கின்றார்கள் என்றும் தெரிந்தெடுத்த மக்களின் அபிப் பிராயத்திற்கு எவ்வளவு விரோதமாய் இருக்கின்றார்கள் என்றும் பாருங்கள்.
443 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆகவே பொதுத் தொகுதியில் தெரிந்தெடுக்கப்படும் 33 பிரதி நிதிகளால் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் நன்மையை விட தனித் தொகுதியால். தெரிந்தெடுக்கப்படும் 23 பிரதிநிதிகள் இருந்தால் அதிகமான நன்மையே ஏற்படும். என்ன நன்மையென்று சிலர் கேட்பார்கள். நன்மை என்ன என்பது யாருக்கும் தெரிந்ததுதான்.உத்தியோகங்கள் பதவிபட்டம், பணம் சம் பாதிக்க செளகரியங்கள் ஆகியவைகள்தான் தேசீயமாகவும் அரசியல் சீர்திருத்த மாகவும் இருந்து வருகின்றது. இதுதான் இனி வரப்போகின்ற தேசீயத்திலும், சீர்திருத்தத்திலும் கிடைக்கப் போகின்றது. இதை மறுப்பது ஜாலவித்தை யாகுமே ஒழிய நாணையமாகாது. ஆகவே இவை எல்லோருக்கும் சரி சமமாய் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் தனித்தொகுதி வேண்டு மென்பதாகும்.
தவிர, தனித்தொகுதியால் ஒற்றுமை ஏற்படாது என்கின்றார்கள். இதிலும் சிறிது கூட அர்த்தமில்லை என்றுதான் சொல்லுவேன். இப்போது
சுமார் 20 வருஷ-காலமாய் தனித் தொகுதிதான் இருந்து வருகின்றது. இதனால். என்ன விரோதம் ஏற்பட்டுவிட்டது? என்ன ஒற்றுமையில்லாமல் போய்விட்டது? என்று கேட்கின்றேன். இப்போது இதை மாற்ற வேண்டிய அவசியமான காரியமென்ன? என்றும் கேட்கின்றேன். கூட்டுத் தொகுதி யாயிருந்தால் எவ்வளவோ கலவரங்கள் ஏற்பட்டு இருக்கும். உதாரணமாகக் கூட்டுத் தொகுதி உள்ள முனிசிபாலிட்டிகளில் இந்து முஸ்லீம் கலகம் மனஸ்தாபம் அல்லது அபிப்பிராய பேதம் இல்லாத முனிசிபாலிட்டி ஒன்றைக் காட்டுங்கள். எலக்ஷன் காலத்தில் இந்து முஸ்லீம் மதத் துவேஷமே எலக்ஷன் பிரசாரமாய் இருந்ததும், இருப்பதும் எனக்கு நன்றாய்த் தெரியும்.
ஒரு வார்டில் ஒரு இந்துவும் ஒரு முஸ்லீமும் தேர்தலுக்கு நின்றால் இந்துவானவன் ஓட்டர்களிடம் சென்று “துலுக்கனுக்கு ஓட்டுப் போடாதே” என்றுதான் முதலில் சொல்லுகிறான். ஒரு முஸ்லீமானவன் “ஓரு காபிருக்கு ஓட்டுப் போடாதே” என்றுதான் சொல்லுகிறான். இப்படிச் சொல்ல: பயப்படுகிற இடத்திலும் கூட “நான் ஒரு இந்துவாச்சே எனக்கு, ஓட்டுப் போடக்கூடாதா?” “நான் ஒரு இஸ்லாமானவனாச்சுதே, எனக்கு ஓட்டுப் போடக்கூடாதா?'” என்று கேட்பதோடு இருவர்களும் ஓட்டர்களை “நீ யாருக்
குப் பிறந்தவன்” என்று கூடக் கேட்டு விடுகின்றார்கள். ஆகவே கூட்டுத் தொகுதி தேர்தல்கள் மதத் துவேஷத்தையும் வகுப்பு துவேஷத்தையும் கிளப்பிவிட்டுத் தீரவேண்டிய அவசிய முடையதாகவே ஆகிவிடுகின்றது.
தமிழ்நாட்டில் கூட்டுத் தொகுதிகளே அநேக இடங்களில் மதத்துவேஷத்தை கிளப்பிவிட்டிருக்கின்றது. இந்து முஸ்லீம்கள் சகோதரர்கள் ஆகவேண்டு மானால் ஒற்றுமையுடையவர்களாக வேண்டுமானால் முதலில் வெளிவேஷத் திலாவது நடைஉடை பாவனைகளிலாவது ஒன்றுபோல காணப்பட இரு சமூகமும் ஓப்புமா என்று கேட்கின்றேன். வெளிக்குக் கூட ஒற்றுமையாக
முடியாத சமூகம் பிறகு உள் அந்தரங்கத்தில் பரஸ்பரம் எப்படி ஒற்றுமையும் நம்பிக்கையும் அடைய முடியும்? ஆகவே சகோதரர்களே! நீங்கள்
குடி அரசு - 19310) 444
தனித்தொகுதியே விரும்பி அதையே ஏகமனதாய் நிறைவேற்றிக் கொண்ட விஷயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக் கின்றது. இவ்வளவோ டேயே நீங்கள் நின்றுவிடாமல் இதைக் கடைசிவரை கொண்டு செலுத்தி முடிவில் வெற்றிபெற முனைந்து நில்லுங்கள்.
குறிப்பு:14-6- அன்று கோவைசாமி பிக்சர் பாலசில் நடைபெற்ற கோவை மாவட்ட முஸ்லீம் மாநாட்டின் இரண்டாம் நாளில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 21061931
445 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சுமாமரியாதைத் திருமணம்:
சகோதரிகளே! சகோதரர்களே! இன்று இங்கு நடக்கும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. இதை நான் முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக்கொள்ளமுடியாது. பார்ப்பான் வரவில்லை என்பதையும், அர்த்தமற்ற சடங்குகள் அநேகமாயில்லை என்பதையும், வீண்மெனக்கேடான காரியமும் வீண் செலவுமான காரியமும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தாலி கட்டத் தயாராயிருப்பதாகத் தெரிகிறேன். பெண் உட்கார்ந்திருக்கும் மாதிரியைப் பார்த்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு முன் அறிமுகம் கட ஆன தில்லை போல் காணப்படுகின்றது. சுயமரியாதைக் கல்யாணத்தின் முறைகள் இன்னின்னது என்று இப்போது வரையறுப்பது என்பது காதால் கேட்பதற்கே முடியாத காரியமாயிருக்கும். கல்யாணம் என்பதே வேண்டிய தில்லை என்று சொல்லக்கூடிய திட்டம் சுயமரியாதை இயக்கக் கொள்கையில் ஒரு காலத்தில் வரக்கூடும். எந்தப்பெண்ணும் எந்த மாப்பிள்ளையும் புருஷன் பெண். ஜாதிகளாகப் போகிறார்கள் என்று பெற்றோர்களுக்குக் கூடத் தெரிய முடியாத நிலைமை ஏற்படும். இந்த மாப்பிள்ளைக்கு இதற்கு முன் எத்தனை பெண்: கல்யாணமாயிற்று? இந்தப் பெண்ணுக்கு இதற்குமுன் எத்தனை புருஷன் கல்யாணம் ஆயிற்று? என்கின்ற கணக்குப் போடக்கூடிய காலம் வரும். மற்றும் அதைப்பற்றியே மக்கள் விசாரிக்க - யோசனை செய்யக்கூடிய அவசியமே இல்லாமலும் போகக்கூடும். அந்த மாதிரி கல்யாண முறையும் இன்றைய குடும்ப வாழ்க்கை முறைகள் ஒழிந்து ஆணும் ஆணும் சிநேகமாய். அன்பாயிருப்பது போலவே ஏதோ ஒரு பெண்ணும் ஏதோ ஒரு ஆணும் பெண்ணும் சிநேகமாயிருக்கின்றார்கள் என்கின்ற அளவில் மாத்திரமே சம்பந்தமிருக்கும்படியான காலமும் வரும். இதெல்லாம் அநேகமாய் பெண் மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும், உண்மைச் சுதந்திரம் என்பது என்ன என்கின்ற உணர்ச்சியும் வந்தவுடனே ஏற்பட்டுவிடும். இப்போது பெண்கள் அடிமைப் பொருள்கள் என்றும் தாங்கள் மற்றவன் அனுபவிக்கும் பொருள் என்றும்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள நினைப்பதே அவர்களின் அடிமை உணர்ச்சியின் அறிகுறியாகும். அந்தக்
குடி அரசு - 19310) 446
கருத்துக் கொண்டுதான் அவர்களுக்கு நடை, உடை அணி முதலியவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு தாசி என்பவள் அதாவது தான் பிறர் அனுபவிப்பதற்காக இருக்கின்றவள், அதன் பயனாய் ஜீவிக்கின்றவள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருத்தி தன்னை அலங்கரித்துக் கொள்வதில் இருக்கும் மனோபாவத்திற்கும் மற்றப் பெண்கள் அலங்கரித்துக் கொள்ளு வதில் இருக்கும் மனோபாவத்திற்கும் அதிக வித்தியாசமிருப்பதாக நான் கருதுவதில்லை. மிருகம், பட்சி ஆகியவைகள் ஆணைவிடபெண் தாழ்ந்த தென்று கருதுவதில்லை. “ஆணுக்காகத்தான் பெண் இருக்கிறோம் என்று கருதி, தங்கள் மீது ஆண்கள் ஆசைப்பட வேண்டும் என்று சிறிதும் முயற்சிப் பதில்லை. ஆண்கள் ஆசைப்படும்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கருதுவதுமில்லை. ஆனால் பெண் ஜன்மம் எடுத்து தாங்கள் அலங்கரித்துக் கொண்டு ஆண்கள் ஆசையை எதிர்பார்ப்பதற்கே ஏற்பட்டதென்பதாய் கருதுகிறார்கள். தன் சொந்தப் புருஷனை சந்தோஷிக்கச் செய்யவோ திருப்தி அடையச் செய்யவோ என்று செய்யுங் காரியங்களும் கூட ஒரு வித அடிமை எண்ணத்தில் பட்டதே ஆகும். நடைஉடை பாவனைகளில் புருஷனை விட மாறுபட்டிருக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மையும் அடிமை மோகமே யாகும். இவைகள் எல்லாம் இயற்கைக்கு மாறுபட்டவையே யாகும். எப்படியோ ஆதியில் இம்மாதிரி ஏற்பாடு செய்து விட்டதால் அந்த பத்திகள் இனியும் நடந்து வருகின்றன. ஆண்களும் அனேகமாய் தனது வீட்டை, வண்டியை, மாட்டை அலங்கரிப்பதில் என்ன மனோபாவம் கொள்ளுகின் றார்களோ அதே மனோபாவம்தான் தன் பெண் ஜாதியை சிங்காரிப்பதிலும் கொள்ளுகிறான். ஆகையால் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது என்கின்ற மனப்பான்மையை ஒழிக்க வேண்டியது பெண்கள் விடுதலையில்
- சுதந்திரத்தில் ஒரு திட்டமாகும்.
தவிர திருமணம், கல்யாணம் என்பவைகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தவிர மற்றபடி இதில் வேறு ஒன்றுமே இல்லை. இந்த ஒப்பந்தமும் இருவர் செளகரியத்தை பொருத்த காரியங்களுக்கு மாத்திரமே அல்லாமல் மற்றொன்றுக்கும் இல்லை. அதுவும் இருவருடைய சமமான செளகரியத்திற்குத் தானேயொழிய ஒருவருக்கு அதிக செளகரியம் ஒருவருக்கு குறைந்த செளகரியம் என்பதாக சிறிது வித்தியாசங்கூட கொண்ட தாயிருப்பதல்ல. அதிலும் இருவரது சுதந்திரங்களும் சமமாய்க் கருதப்பட்ட
தாகவும் அதற்கு எவ்விதத்தடையும் இருப்பதாகவும் இருக்கக் கூடாததாகும். அனேகமாய் இந்த ஒப்பந்தங்கள் எழுதி ரிஜிஸ்டர் செய்வதுதான் இனிப் பொறுத்தமானதாக இருக்கும். வேண்டுமானால் புதுவீடு குடிபோதல், புதிய தொழில் வியாபாரம் முதலிய காரியங்கள் துவக்கப்படுபவை ஆகியவை களுக்காக எப்படி முதலிலேயே சற்று விளம்பரம் இருந்தால் அனுகூலம் என்று கருதுகின்றோமோ அதுபோல் நண்பர்கள், நான்கு பந்துக்கள், அக்கம் பக்கத்தார்கள் ஆகியவர்களுக்கு தெரியக்கூடியதாய் இருப்பதும் நன்மை யானதுதான். அதிலும் ரிஜிஸ்டர் இல்லாத திருமணங்களுக்கு சாக்ஷிகள்
447 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
இருக்க வேண்டியது அவசியம் என்கின்ற முறையில் பலர் அழைக்கப்படு வதும் சரிதான். ஆனால் இதற்காகவே அதிகச்செலவும் மெனக்கேடும் கூடாது என்பது மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். திருமணச் சடங்கு என்று ஒன்றை தனிப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.
மணமக்கள் சபைக்கு வந்து தங்கள் தங்கள் ஒப்பந்தங்களைச் சொல்லி
ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாய் தங்கள் தங்கள் சுருக்கெழுத்துள்ள மோதிரம்மாற்றிக் கொள்வதோ மாலை மாற்றிக்கொள்வதோ போதுமானதே யாகும். இதற்காகவென்று ஏன் அதிகப் பணச்செலவு செய்ய வேண்டும்? என்பதுதான் எனக்கும் புரியவில்லை. புதுச்சேலை, புதுநகை தாம்பூலம் இவைகளெல்லாம் பயனற்ற செலவாகவே ஆகின்றன. அனேக சுயமரியாதை கல்யாணங்களில் மாப்பிள்ளை சாதாரண உடுப்புடன் இருந் திருக்கிறார்கள். பெண்கள்தான் உயர்ந்த சேலையும், விலையுயர்ந்த நகை களும் அணிந்து ஒரு ஆணானவன் பெண் வேஷம் போட்டிருப்பது போல் விளங்குகின்றார்
கள். இவையெல்லாம் நாகரீகம் என்பதோடு பெண் மக்களின் தன்மையையே குறைத்து விடுகின்றது. பெண்கள் சுதந்திரத் துக்கும், பெண்கள் விடுதலைக்
கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும். “நான் அடிமையாய்த்தான் இருப்பேன் நீ மாத்திரம் எனக்கு எஜமானணாய் இருக்கக் கூடாது” என்பதில் அர்த்தமேயில்லை.
தவிர பெண்களுக்கு பிள்ளைப்பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும். பிள்ளைகள் பெறாமல் இருப்பதற்கு எவ்வளவு செளக
ரியம் செய்து கொள்ளக்கூடுமோ அவைகளை செய்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கென்று பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காப்பாற்றுவதற்கு என்று அதற்கு நேர் விரோதமாய் என்னென்னமோ செய்து அஞ்ச வேண்டி யதாகி விடுகிறது.எவ்விதத்திலும் பொறுப்பில்லாதவர்கள் வெகுதாராளமாய்.
“46 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்துவிடுகிறார்கள். பிள்ளை பெற்று வளர்க்கக் கஷ்டப் படுகின்றவர்கள்
யார் என்பதை யோசித்துப்பாருங்கள். நமது அறிவீன மானது இக் கஷ்டங்களை உணரச்செய்யாமல் செய்து விடுகிறது. உணர்ந் தாலும் அதற்கு
நாம் ஜவாப்தாரியல்ல என்று நினைத்துக் கொள்வதால் அக்கஷ்டத்திலிருந்து விலக முடிவதில்லை.
குறிப்பு-கும்பகோணம் சாக்கோட்டையில் 12-06-1931,அன்று நடந்த ராகு: காலத் "திருமணத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1931
குடி அரசு - 19310) 448
திரு. காந்தியிண் உண்மைத் தோற்றம்
தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை.
உயர்திரு. காந்தியவர்கள் மக்கள் கள்ளு, சாராயம் குடிக்கப்பட வேண்டியதின் உண்மையான அவசியத்தைப் பற்றியும், அதை எப்படி, எப்போது நிறுத்த முடியுமென்பதைப் பற்றியும், மற்றும் தான் கேட்கும் சுயராஜியத்தின் தத்துவத்தைப் பற்றியும் தமது அபிப்பிராயத்தை விளக்கமாக வெளியிட்டிருக்கிறார்.
இந்த அபிப்பிராயங்களை அவர் பரோடா சமஸ்தானத்திற்கு இம் மாதம் 12 - ந் தேதி திருவாளர்கள் வல்லபாய் பட்டேல், அப்துல் கபூர்கான் ஆகியவர்களுடன் சென்ற பொழுது அங்குள்ள மக்கள் அளித்த வரவேற்புக் குப்பதில் சொன்ன முறையில் வெளியிடப்பட்டதாகும். அதாவது,
1“கதரில்லாமல் வெறும் மது விலக்கு ஒரு நாளும் வெற்றி பெறாது.
2 கள்ளு,சாராயக்கடைகளை மூடிவிடுவது நம்முடைய வேலை யல்ல.
3. குடிகாரர்கள் தாங்கள் குடிக்கும் பழக்கத்தை அவர்களாகவே விட்டுவிட்டாலொழிய, திருட்டுத்தனமாய் கள், சாராயம் உற்பத்தி செய்து, எப்படியாவது குடித்துத்தான் தருவார்கள்.
4. கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், இப்பொழு திருப்பது போலவே திருட்டுத்தனமாய் கள்ளு, சாராயம் விற்பனை யாகிக் கொண்டு தானிருக்கும்.
5. குடி வழக்கம் நிற்க வேண்டுமென்றால் குடிகாரர்களுக்குக் கைத்தொழில் கற்றுக் கொடுத்தால் தான் நிறுத்த முடியும். இல்லை. யாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும் வழக்கத்தை ஒரு நாளும் விடமாட்டார்கள்.
6. பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழி லாளர்களுக்குத் தங்களது களைப்பையும், ஆயாசத்தையும், தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாயிருக்கிறது.
449 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
7.நான் தென்னாப்பிரிக்காவிலிருந்த பொழுதும், வேலைசெய்து களைத்துப் போனவர்களுக்கு வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறேன்.
8. அங்கு தென்னாப்பிரிக்காவில் என்னுடன் இருந்த கூலி களுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட பொழுதெல்லாம் நானே கடைக்
குப் போய் சாராய வகைகளை வாங்கி வந்து பிரியமாகக் கொடுத் திருக்கிறேன்.
9.மிருகங்களைப் போல் வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு மதுபானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது.
10. தங்கள், தங்கள் வீடுகளிலேயே ஏதாவது ஒரு தொழில் செய் கின்ற தொழிலாளிகள் தான் எளிதிற் குடியை விட்டுவிட முடியும்”
என்று பேசிவிட்டுத் தனது சுயராஜியத்திட்டத்தைப் பற்றிப் பேசியிருப்ப தாவது.
குடிசைத் தொழில்
1. “கிராமவாசிகளுக்கு அவர்கள் தங்கள் வீட்டிலேயே கை
இராட்டினத்தால் நூல் நூற்றல், தறி போட்டு நெசவு நெய்தல், செருப்புத் தைத்தல், பால், தயிர், வெண்ணை ஆகியவைகளைச் செய்தல், மற்றுமிது போன்ற வேலைகளை மீண்டும் புதுப்பிப்பதின் மூலமே கிராம ஜனங்களைச் செல்வவான்களாக்க வேண்டும்.
2. இந்தத் தொழிலால் வரும் வரும்படியே அவர்களுக்குப் போது மானது.
3. மற்றபடி இவர்கள் பம்பாய் வர்த்தகர்களைப் போல பெரும், பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டியதில்லை.
4. அவர்களதுபணப்பெட்டிகளில் வெள்ளி நாணயங்கள் கொஞ்ச மாகவே இருக்க வேண்டும்.
5.இது தான் சுயராஜ்ய வேலைத்திட்டமாகும்.
6. சென்ற வருடம் நாம் செய்த வேலை இந்த சுயராஜ்யத்திற்கு அஸ்திவாரமானது” என்று பேசியிருக்கிறார்.
இந்த விபரங்கள் இம்மாதம் 13-ந் தேதி வெளியிடப்பட்ட தினசரிப் பத்திரிகைகளாகிய “சுதேசமித்திரன்” 5-வது பக்கம் 2- வது கலத்திலும், “திராவிடன்” 4-வது பக்கம் 3-வது கலத்திலும் 12-ம் தேதி தமிழ்நாடு 8-வது
குடி அரசு - 19310) 450
பக்கம் 4-வது கலத்திலும் 12-ந் தேதி “ஹிந்து” 8- வது பக்கம் 2-வது கலத்திலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே திரு. காந்தி அவர்கள் கள்ளு,சாராயம் குடிப்பவர்களின் அனுபவத்தைச் சொல்லி அதை யொழிக்கக் கண்டுபிடித்திருக்கும் திட்டங்களென்ன வென்றால் “பெரிய தொழிற் சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள், தங்கள் களைப்பையும், ஆயாசத்தையும், போக்கிக் கொள்ளுவதற்கு அவர்கள் கள், சாராயம் குடித்துத் தானாக வேண்டும் - குடித்துத்தான் தீருவார்களென்பதோடு, அவர்களுக்கது வேண்டியதாகவு மிருக்கின்றது” என்பதாகவும் முடிவுகட்டி, தொழில் செய்து களைப்படைந்த மக்களுக்குத் தானே சாராயமும் வாங்கி நேரிலேயே கொடுத்திருப்பதாகத் தனது சுய அனுபோகத்தையும் சொல்லியிருக்கிறார்.
இந்தப்படி இவர் சொல்லுவதில் நமக்கு இப்பொழுது ஆக்ஷே பனையில்லை.ஆனால் கள்ளை நிறுத்துவதின் தத்துவமிப்படியிருக்கையில் இப்பொழுது தொண்டர்களென்பவர்களை ஏவிவிட்டு, கள்ளு, சாராய கடை களண்டைப் போய் நின்று கொண்டு,மறியல் செய்யும்படி சொல்லுவது எதை யுத்தேசித்து என்றுதான் கேட்கின்றோம்.
“குழந்தைகளிடம் பிரியமிருப்பவர்களுக்கு அக்குழந்தைகளது மலத்தினிடமும் அசிங்கம் தோன்றுவது இல்லை” என்பது போல் மகாத்மா விடமிருக்கும் - இருந்து தீர வேண்டிய “பக்தி”யினால், சில தொண்டர்கள வரது வார்த்தைகளின் யோக்கியதையையே உணர முடியாமல் போக வேண்டியவர்களாகி விடுகிறார்கள்.
மதுவிலக்கு செய்வதானது மக்கள் ஒழுக்கத்தையும், சன்மார்க்கத் தையுமுத்தேசித்தேயொழிய, அரசியல் காரணங்களுக்காக வல்ல வென்று திரு. காந்தியாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அப்படி யிருக்க இப்போது செய்யப்படும் கள்ளுக்கடை மறியலானது சன்மார்க்கத்திற்கு அதாவது மக்களை கள், சாராயக் குடியிலிருந்து விலக்குவதற்கு அடியோடு பயன்படாதென்று மனதாரத் தெரிந்த பிறகும் கள்ளுக்கடை மறியல் களெதற்காக நடைபெறச் செய்து வருகின்றன? என்பது ஒவ்வொரு வரும், முக்கியமாய் யோசித்துப் பார்க்க வேண்டிய வேலையாகும்.
இது ஒரு புறமிருக்க, குடியொழிப்பதென்கின்ற காரணத்தின் பேரில்
திரு. காந்தியவர்கள் சொல்லும் மற்றொரு யோசனை எவ்வளவு மோசமான தாகயிருக்கின்றது என்பதையும், பொது மக்களுணர வேண்டுமென்று விரும்புகின்றோம்.
அஃதென்னவெனில், ஒரு தொழிலாளி இயந்திரத் தொழிற் சாலையில் வேலை செய்தால் அவனுக்கு அதிக களைப்பும், ஆயாசமு மேற்படு மென்றும், அப்போது அவ்வாயாசத்தை தீர்த்துக் கொள்ள அவனுக்குக்
451 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கள்ளு, சாராயம், அவசியமாகத்தானிருக்குமென்றும், இதற்கு மறியல் செய்வதால் பலன் ஏற்படாதென்றும், ஒவ்வொருவனும். அவனவன் வீட்டிலேயே ஏதாவதொரு தொழிலைச் செய்தால்தான் அவனுக்குக் களைப்பு இருக்க முடியாதென்றும், அப்பொழுது தான் அத்தொழிலாளி குடிக்கா மலிருக்க முடியுமென்றும் சொல்லுகிறார்.
இது, தொழிலாளர் ஒருபக்கம் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தால் அவர்களொன்று கூடி முதலாளிகளுக்காபத்தை யுண்டாக்கி விடுவார். களென்றும், தொழிலாளிகள் தங்களுடைய நிலைமையை யுயர்த்திக் கொள்ள யோசனை செய்து, தொழிலாளித் தன்மையை ஒழித்து விடுவார்களென்றும் பயந்து கொண்டு, முதலாளிகளுக்கனுகூலமாகவும், தொழிலாளிகளின் முன்னேற்றத்திற்கு விரோதமாகவும், அதாவது வர்ணாச்சிரமத்தைப் பிரசாரம் செய்யும் சூட்சித்திட்டமே தவிர, மற்றெவ்வித நியாயமோ, நாணையமோ இதிலிருப்பதாக நினைக்க முடிகின்றதா? என்று கேட்கின்றோம்.
ஏனெனில், இன்றைய தினம் கைத்தொழிலாளிகளென்பவர்கள் அதுவுமவரவர்கள் வீடுகளிலிருந்து கொண்டு சொந்தத்திலேயே ஒரு தொழில் செய்பவர்களென்பவர்கள் 100-க்கு 90 பெயர்கள் குடிகாரராகவேயிருக்
கிறார்கள். உதாரணமாக நெசவுத் தொழிலீடுபட்ட, தங்களைப் பிராமணர் களென்று சொல்லிக் கொள்ளுபவர்கள் முதற்கொண்டு சகல வகுப்பாரும்
100க்கு 75 பெயர்கள் குடிகாரர்களாகவே தானிருக்கிறார்கள். உதாரணமாக, மதுரை, சேலம், கோயமுத்தூர் முதலாகிய ஜில்லாக்களைப் பார்த்தாலே இவ்வுண்மையை யாவருமெளிதிலறியலாம்.மற்றும்
கொல்லுவேலை, தச்சு வேலை, தட்டார வேலை, சித்திர வேலை, கொத்து வேலை, கொல்லத்து வேலை, கருங்கல் கட்டட வேலை,தோல் பதனிடும் வேலை, செருப்புத்தைக்கும் வேலை முதலியாகிய வீட்டுத் தொழிலாளிகளும் பெரும்பாலும் குடிகாரர்களாகவேயிருக்கிறார்கள். அப்படிப்பட்டத் தொழிலாளிகளையும், “நீங்கள் ஏன் குடிக்கின்றீர்கள்?” என்று காரணம் கேட்டால் திரு. காந்தியவர்கள் சொல்லும் சமாதானத்தையே தான் அவர்களும் சொல்லுகிறார்கள். அதாவது “பாடுபட்டு உழைப்ப வனுக்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா?” வென்றுதான் சொல்லுகின் றார்கள்.
தவிரவும், தொழிற்சாலை தொழிலாளிகளைவிட இந்த மாதிரியான தொழிலாளிகளுக்குத் தான் குடிப்பதற்கு செளகரியமுமதிகமேற்படுகின்றது. எப்படியெனில், அன்றாடமிவர்கள் கைகளுக்குக் காசு கிடைக்கின்றது. இவர்களிஷ்டம் போல் குடித்துவிட்டுத் திரிய நேரமும் கிடைக்கின்றது. ஆகவே”“குடிசைத் தொழிலாளிகள் குடிக்கமாட்டார்கள்” என்றும், “குடியை
சீக்கிரம் விட்டுவிட முடியுமென்றும் திரு. காந்தி அவர்கள் சொல்லுவது அவ்வளவு நியாயமும். பொறுத்தமுமான வார்த்தைகளாகுமாயென்பதை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்.
குடி அரசு - 19310) 452
அன்றியும் திரு. காந்தி அவர்கள் மதுவிலக்குக்கும், கதர் பிரசாரம் அவசியம் என்று ஒரு புதிய சம்பந்தத்தை ஏற்படுத்துகின்றார். அதாவது “கதரைப் பரப்பாமல் குடியை நிறுத்த முடியா”தென்கிறார். இது “ஆடி அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம்” போலவே
இருக்கின்றது.
எந்தக் கருத்திவ்விரண்டையுமொன்றாக்கிப் பேசுகிறாரென்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் கதர் பரவினால் தொழிலாளிகளுக்கு வரும்படி கிடைக்காது, ஆதலால் குடிப்பதற்கு அவர்களுக்குக் காசில்லாமல் போவதன் மூலம் குடி நின்றுவிடுமென்று கருதி, இப்படிச் சொல்லியிருந்தாலிருக்க லாமேயொழிய மற்றபடி வேறு நியாயம் இருப்பதாகக் காணமுடியாது. ஆனாலும் கதர் பரவியிருக்கும் திருப்பூரில்தான் குடிகாரர் கள் மறியல் செய்பவர்களை யுதைத்து, காந்திக்கும் கொடும்பாவி கட்டி இழுத்ததுடன்; அதற்குக் கள்ளு அபிஷேகமும் செய்தார்கள் என்று தெரியவருகிறது. இது எப்படியோ இருக்கட்டும்.
திரு. காந்தி அவர்களிஷ்டப்படியே பார்த்தாலும், கதர் பரவா மலிருக்கும் போது ஏன் குடி நிறுத்தும் வேலையை (மறியனைச் செய்கிறா ரென்பது நமக்கு விளங்கவில்லை.
“கடை மூடப்படுவதனால் குடி நின்று விடா”தென்று தெரிந்தும் காங்கிரசுக்காரர்களால் ஏன் கள்ளுக்கடைகளில் முன் மறியல்செய்து, கலக முண்டாக்கப் படுகின்றதென்பதும் நமக்கு விளங்கவில்லை.
சர்க்கார் சட்டம் செய்து, கள்ளு, சாராய முற்பத்தியும், விற்பனையும்
நிறுத்தப்பட்டு விட்டாலும் மற்ற மக்களால், “திருட்டுத்தனமா யுற்பத்தி செய்து, இப்போதைய அளவே திருட்டுத்தனமாய் விற்கப்பட்டு தான்வரு” மென்று தெரிந்தும், சர்க்காரைக் குற்றம் சொல்லுவதையே மது விலக்குப் பிரசாரமாய் ஏன் செய்யப்படுகின்றது என்பது நமக்கு விளங்க வில்லை. “வேலை செய்து களைத்துப்போன தொழிலாளிக்கு களைப்புத் தீரக் கள்ளு, சாராயம் வேண்டியதுதா' னென்று தெரிந்து மிதை யுண்மையாகவே நம்பியும்தானே அதாவது திரு. காந்தியவர்களே தொழிலாளிகளுக்குக் கள்ளு, சாராயம் முதலியவைகளை வாங்கிக் கொடுத்து அதன் மூலமாயவர்களுடைய களைப்பையு மாயாசத்தையும் தீர்த்திருந்தும் எதற்காகத் தொழிலாளிகள் குடிக்கப்போகும் இடங்களில் தொண்டர்களை நிறுத்தி மறியல் செய்யச் செய்கிறாரென்பதும், தொண்டர்களை அடிபடச் செய்கிறா ரென்பதும் நமக்குப் புரியவில்லை.
இந்த அபிப்பிராயங்களையேதான் சென்ற வாரம் “தமிழ்நாடு”
பத்திரிகையில் திரு. வரதராஜுலு நாயுடுவும் எழுதியிருந்தார். மந்திரி களானவர்களு மிதையேத்தான் சொல்லுகின்றார்கள். பிரத்தியக்ஷ யனு
453 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பவத்திலு மிப்படித்தான் காணப்படுகின்றது. மற்றபடி இதிலுள்ள வித்தியாச மெல்லாம் மேற்கண்டவர்கள் முன்னாலேயே சொல்லிவிட்டார்கள். ஆனால், திரு. காந்தியவர்கள் இம்மாதம் 12-ம் தேதி தானிதைச் சொன்னா ரென்பதைத் தவிர்த்து, வேறு வித்தியாசமில்லை.
அன்றியும், மற்றவர்கள் இவ்விஷயத்தில் வாயில் சொல்லுவதுபோல் செய்கையிலும் செய்கின்றார்கள். திரு. காந்தியோ தான் சொல்லுவதற்கும், தான் செய்யச்செய்வதற்கும் பொருத்தமில்லாமல் நடந்து கொள்ளுகிறா ரென்பதுதான் வித்தியாசமாகும்.
ஆகவே மதுவிலக்கு மறியல் விஷயத்தில் திரு. காந்தி அவர்களிடந் தானிந்தப்படி வித்தியாசமிருந்தாலும், மறியல் செய்யும் தொண்டர்களுக் காவது பகுத்தறிவில்லையா? அல்லது சுதந்திரயுணர்ச்சியில்லையா? அல்லது தங்களபிப்பிராயத்திற்கு மதிப்பில்லையா? அல்லது வேறு வழியில்லையா? என்று கேட்கின்றோம்.
காந்தி சுயராஜியம்
மறியல் விஷயமிப்படியிருக்க, இனி திரு. காந்தியவர்களின் சுயராஜியத்தில் தொழிலாளர்களின் - கிராமங்களின் நிலைமை யென்ன வென்று பார்ப்போமானால், பரோடா ராஜியத்தில் பேசின மேற்கண்ட வாசகங்களின் பிற்பகுதியில் குடிசைத்தொழிலாகக் கிராமவாசிகள் “கை இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டியது,”
“கைத்தறியில் நெசவு நெய்ய வேண்டியது,”
“ஆடு, மாடு வாங்கி மேய்த்துப் பால், தயிர், வெண்ணை ஆகியவை களை யுண்டாக்க வேண்டியது,”
“செருப்புத் தைக்க வேண்டியது” “மற்றுமிது போன்ற தொழில் களையே செய்ய வேண்டிய”தென்றுரைத்திருக்கிறார். இப்படிச் சொல்லு வதற்கும் காரணமென்னவென்றால் அவர்களுக்கு அதாவது கிராம வாசிகளுக்கு - தொழிலாளர்கள், பம்பாயிலிருப்பவர்களைப் போல் அதிகப் பணக்காரர்களாக வேண்டியதில்லையாம். ஏனென்றால் அவர்களுடைய பெட்டிகளில் கொஞ்சமாகத்தான் பணமிருக்க வேண்டுமாம். இவ்வளவும் சொல்லிவிட்டு “இதுதான் வரப்போகும் சுயராஜியத்திட்ட” மென்றும் சொல்லி விட்டார். அன்றியும், “இதற்காகவேதான் சென்ற வருஷம் கிளர்ச்சிகள் செய்யப்பட்டு, அதற்கேற்ற விதையும் போடப்பட்டிருக்கிற” தென்பதாகவும் கூறிவிட்டார்.
“குடி அரசை வெகு கஷ்டத்தோடு வாசிக்கும் வாசகர்களே! மற்றும் “குடி அரசை” வெறுக்கும் காங்கிரஸ் அபிமானிகளே!! காந்தி பக்தர்களே!!!
குடி அரசு - 19310) 454
தேசீயசுயமரியாதைக்காரர்களென்று சொல்லிக் கொள்ளுபவர்களே! இந்தக் கொள்கையை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா? என்று தான் உங்களை நாம் வெள்ளையாய்க் கேட்கின்றோம். தத்துவார்த்தம் சொல்லவராதீர்கள். உண்மையைப் பேசுங்கள்.
கிராமவாசிகள் செருப்புத் தைக்க வேண்டுமாம்! ஆடு, மாடுகள் மேய்க்க வேண்டுமாம்! இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டுமாம்! கைத் தறியில் நெசவு நெய்யவேண்டுமாம்! ஆனால் பம்பாய்வாசிகள் கோடீஸ் வரர்களாகி, அதற்கு தகுந்த போக போக்கியங்களை யனுபவிக்க வேண்டு
மாம்! இதுதான் சுயராஜ்ஜியத்திட்டமாம்! ஆகவே இந்தப்படியான மனோ பாவங்கொண்ட திரு. காந்தியைப் “பாரத நவஜவான்” உண்மை வீரர்கள். “காந்தி ஒழிக!” “காந்தீயம் ஒழிக!!” “காங்கிரஸ் ஒழிக!!!” என்று சொன்னதி லென்ன தப்பிதமிருக்கின்றது? காந்திக்கு வேண்டுமானால், காந்தீயம் யொழியாதென்பதில் நம்பிக்கையிருக்கலாம். ஆனால், நமக்கு இப்படிப் பட்ட காந்தீயம், ஒழிய வேண்டுமா? வேண்டாமா? ஒழியாமல் சமதர்மம் ஏற்படுமா? என்று கேட்கின்றோம். “திரு.காந்தி, இந்தியாவை வெள்ளைக்கார ஆட்சிக்கு
முன்னிருந்த பழைய அதாவது ஆதிகாலத்து இந்தியாவுக் குக் கொண்டு போகப்பார்க்கின்றார் என்று திருவாளர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள். சொன்னதிலென்ன தப்பித மிருக்கின்றது? என்று கேட்கின்றோம்.
“ருசியப் பொதுவுடைமைக்காரர்கள்” “இந்திய கிராம வாசிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், திரு. காந்தி அவர்கள் ஒரு பெரிய துரோகி” என்றும், “காங்கிரஸ், தொழிலாளிகளுக்கும், பாமர மக்களுக்கு மேற்பட வேண்டிய முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை” என்றும் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றதென்று கேட்பதுடன் நாமிதுவரை சொல்லி வந்த விஷயங்களிலெந்த வெழுத்துக் குற்றமானதென்றும் கேட்கின்றோம்.
இதைப் படிக்கின்ற காந்தி பக்தர்கள், நம்மீது காய்ந்து விழலாம். நமது குடலைப் பிடுங்கி மாலையாகப் போட வெண்ணலாம். இந்தப்படி எழுதி யதாலேயே ஒரு பத்து சந்தாதாரர்கள் குறையலா மென்பவைகளெல்லாம் நமக்குத் தெரியும். தெரிந்தே தானெழுதுகின்றோம்.
ஆனால் நமது இலட்சியமெல்லாம், “இன்று நம்மை யாரும் “மகாத்மா” வென்றோ, “தேசபக்தன்”, “தேசீயத்தலைவன்”, “தேசீயத் தொண்டன்” என்றோ சொல்ல வேண்டுமென்பதல்ல. நமது “குடி அரசு” பத்திரிகைக்கு 15,000 சந்தாதாரர்கள் வேண்டுமென்ற ஆசையுமல்ல” வென்பதை வாசகர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
455 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
ஆனால் திரு. காந்தியைப் பற்றி, காந்தீயத்தைப் பற்றி நாம் கொண்ட அபிப்பிராயம் சரியா? தப்பா? என்பதை மக்களின்னும் கொஞ்ச காலம் சென்றாவ துணர்ந்தாலும் போதும் அல்லது இந்த மக்களின் சந்ததிகளாவது உணர்ந்தாலும் போதுமென்பது ஒரு லக்ஷியமாயும், அதையுணராதமக்களால், இந்தியாவிலொரு நாளும் சமதர்மக் கொள்கை ஏற்படுத்த முடியா தென்பதும் நமது முடிவாகும். கடவுளையும், மதத்தையும், வேதத்தையும், தெய்வத் தன்மை பொருந்திய பெரியார்களென்பவர்களையும் பற்றிப் பேசுவதற்கு வேண்டிய அறிவையும், தைரியத்தையும் விட, திரு. காந்தியைப்பற்றியும். காங்கிரசைப் பற்றியும் பேசுவதற்கு சற்று அதிக அறிவும், அதிக தைரியமும், வேண்டியிருக்குமென்பதாக நாம் சிறிதும் கருதவில்லை. நிற்க,
மதத்தில் பார்ப்பனன் - பறையனென்கின்ற இருபாகுபாடுகளு மொழி வதற்கு இருவருடைய கூட்டமுமொழிந்தாக வேண்டுமென்று எப்படி விரும்புகின்றோமோ, அப்படியேதான் சமூக வாழ்வு என்பதிலும், முதலாளி
- தொழிலாளியென்பதாகிய பாகுபாடுமடியோடொழிவதற்கு இரு பெயரை யுடைய இரு கூட்டமுமொழிந்தாக வேண்டு மென்கிறோம். ஏனென்றால் முதலாளி- தொழிலாளி என்கின்ற பதமே, வைசிய- சூத்திர என்று சொல்லப் படும் வருணாச்சிரம தர்மக் கொள்கைக்கு ஏற்படுத்தப் பட்டதே யாகும். வைசியன்- சூத்திரனென்பது வடமொழிப் பதங்கள். அதாவது சமஸ்கிருத வார்த்தைகள். முதலாளி - தொழிலாளியென்பது தென் மொழி பதங்கள். அதாவது தமிழ் வார்த்தைகள். ஆகவே இவ்விரண்டிலும், பாஷை வித்தியாச மென்பது மாத்திரம் தவிர கருத்து வித்தியாசமென்பது சிறிது மில்லையென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
சூத்திரனென்றால், சரீரத்தில் வேலை செய்பவன் - முதல் மூன்று பேருக்கும் தொண்டு செய்பவன் - அடிமை யென்பவைகளே, அதையுண்: டாக் கியவர்களின் வியாக்கியானமாகும். அதுபோலவே தொழிலாளியென் றாலும். சரீரத்தில் வேலை செய்பவன் - மற்றவர்கள் அவசியத்திற்கும், வாழ்க் கையின் தேவைக்குமே வேலை செய்யும் வேலையாள் - தொண்டன் யென்பவைகளேயாகும்.
அவனுக்கும் உணவுமட்டுந்தானளிக்க வேண்டும். இவனுக்கும், ஜீவனத்திற்குப் போதுமான அளவுதான் ஏதாவது கொடுக்க வேண்டும். ஆகவே,இந்தப் பாகுபாடுகளை சனாதன மகாநாட்டிலும், ஆரியதரும பரி பாலன மகாநாட்டிலும், பிராமண மகாநாட்டிலும், பேசும் போது “மனு தர்மம்” “வருணாச்சிரமபாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. இவைகளை விட்டு காங்கிரஸ் மகாநாட்டிலும், அரசியல் மகாநாட்டிலும் பேசும்போது “சுயராஜியம்”, “முதலாளி - தொழிலாளித்தன்மை பாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. ஆகவே இரண்டு மகாநாடுகளிலும், ஒரே கருத்தின் மீதுதான், ஒரே மனப்பான்மை யுள்ள மக்களால் தான் பேசப்பட்டும், தீர்மானிக்கப்பட்டும் வருணாச் சிரமதர்மம் வெற்றி பெற்று வருகின்றது.
குடி அரசு - 1931 () 456
இந்தத் தருமம் வியாபார முறையில் மாத்திரமல்லாமல், விவசாய முறையிலுமிந்தக் கருத்துடனேயே தானிருந்து வருகின்றது. அதாவது, ஜமீன்தாரன் மிராசுதாரன் யென்பவர்களாகின்ற பூமிக்குச் சொந்தக் காரர்களும், விவசாயத்தொழில் செய்யும் கூலியும், அதாவது பண்ணையும்- பண்ணையாளுமாகிய இரண்டு பிரிவுகளும் கூட வைசியன்- சூத்திரனென் கின்றப் பதங்களின் - தத்துவத்தின் கருத்தேயாகும்.அதனால்தான், வருணாச் சிரம தரும முறையில் பூமியுடையவர்களையும், வைசிய வருணத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதனாலேயேதான்.திரு. காந்தியும், பூமியுடைவர் களையும் அதாவது ஜமீன்தாரர்கள் முறைமையையும் காப்பாற்றப் பாடுபடு கின்றேனென்று அடிக்கடி சொல்லிவருகிறார்.
உதாரணமாக, அதே 19ந் தேதி “சுதேசமித்திரன்” பத்திரிக்கையின் 5- வது பக்கம் 6-வது கலத்தில் “மகாத்மாவும் இனாம்தாரர்களும்” என்கின்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை விளக்கமாய் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, ஜமீன்தாரர்களின் கோஷ்டியொன்று, தங்களுடைய நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக திரு. காந்தி அவர்களை, இம்மாதம் 10-ந் தேதி பம்பாயில் கண்டு கேட்ட பொழுது, “ஜமீன்தாரர்க ளுடைய சொத்துரிமைகளுக்குத் தீங்கிழைக்க நான் கனவிலும் கருத வில்லை” யென்று சொல்லி யிருக்கிறார்.
இதனாலேயேதான் வருணாச்சிரமதருமம். பிறவியிலானாலும் சரி தொழில் முறைமையிலானாலும் சரி. அடியோடு ஒழிக்கப் பட்டாலொழிய சமதர்மமேற்பட முடியாதென உரைக்கின்றோம். ஆனால் திரு. காந்தியவர் களோ இந்த “வருணாச்சிரமமென்பதைத் தொழில் முறையில்தான் நான் சொல்லுகிறேன்” என்பதாகச் சொல்லிவிட்டு, உடனேயே அதற்கடுத்த வாக்கியத்தில் ஆனால் “தொழில் முறையென்பது பரம்பரைக்கிரமமாக இருக்க வேண்டுமென்று சொல்லி வருகின்றார். இதற்கும் காரணம்
சொல்லும் பொழுது இந்தப்படி அதாவது “தொழிலானது, பரம்பரைத்தொழில் முறையைக் கொண்டதாயிருந்தால்தான் உலகம் கிரமமாய் நடைபெற முடியும், தொழிலுமொழுங்காய் நடைபெறு”மென்று சொல்லி வருகிறார்.
ஆகவே, எந்தக் காரணத்தைக் கொண்டானாலும் சரி, எந்த முறை மையிலிருப்பதானாலும் சரி, வருணாச்சிரம தருமமென்பதை அடியோடு ஒழித்தாக வேண்டியதுதான் மக்களின் முக்கியக் கடமையாகும். வருணாச் சிரமமொழிந்த இடந்தான் விடுதலை - சமதர்ம நிலையமாகும்.
ஆதலால், முதலாளி - தொழிலாளி யென்கின்றத் தன்மை எக் காரணத்தைக் கொண்டும், எம்மாதிரியிலுமிருக்க விடக்கூடா தென்றேதான். பொதுமக்களுக்கு நாம் யெடுத்துக் சொல்லுகிறோம்.
457 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
காங்கிரசில், தொழிலாளர்களுடைய யோக்கியதையுயர்த்தப் படு மென்று சொல்லுவதெல்லாம், ஒரு மனிதனை “நல்ல தொழிலாளியாயிருக்
கச் செய்யப்படு மென்று சொல்லுவது போல்தானேயொழிய வேறில்லை.
தொழிலாளிகள் என்று ஒரு தனி வகுப்பு இருக்கும்படி செய்து. அவர்களுக்கு எவ்வளவுதான் உயர்ந்தநிலைமை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அந்தநிலைமையிலும் சரீரப்பாடுபடுவதொரு கூட்டமாகவும், அதன்பயனை யடைவது மற்றொரு கூட்டமாகவுமிருக்கத் தக்கப் பாகுபாடுகளிருக்கின்றதா? இல்லையா? என்றுதான் கேட்கின்றோம். “நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை மட்டும் போகா” தென்பது போல, இந்தத் திட்டமடியோடு மாறவில்லையானால் எந்த ஆக்ஷி வந்துதானென்ன பயன்? யாரைத்தான் இந்த நாட்டைவிட்டு விறட்டி என்ன பயன்? என்று கேட்கின்றோம்.
“ஒவ்வொருவருடைய உரிமைகளும், பாதுகாக்கப்படு” மென்கின்ற சுயராஜ்யத்திட்டமே சூதும், வஞ்சகமும், நிறைந்ததும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் கழுத்துக்குச் சுருக்குப் போடும் திட்டமாகு மேயல்லாமல் எந்த விதத்திலும் சுருக்கைத் தளர்த்தும் திட்டமாகாது. ஊரார். உழைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போதுள்ள பாத்திய தைகள் சிறிதாவது மாறக் கூடியதுமாகாது.
ஆகையால் ஆங்காங்குள்ளஅறிவுள்ள மக்கள், பொது ஜனங்களுக்
கும், இந்த அபிப்பிராயங்களை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல. வேண்டும். மறியலைக் கண்டு மக்களேமாந்து போகாமல், அதிலுள்ள முரண்பாடுகளையும், புரட்டுகளையும், உள்ளெண்ணங்களையும் தைரியமாய். வெளியாக்க வேண்டியது மிக்க அவசியமாகும்.
அதாவது, ஒவ்வொரு ஊணிலும் தைரியமாய்க் கூட்டங்கள் போட்டோ, அல்லது துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்தோ இவ்விஷயங்களைப் பரப்ப வேண்டும். விவரங்களறியாப் பாமர மக்கள், “கள்ளுக்கடைகாரனுக்கனு கூலக்கார” னென்றோ “சர்க்காராருக் கனுகூலக்கார” னென்றோ தங்களைச் சொல்லுவார்களென்று யாரும் பயந்து கொள்ளக்கூடாது. சொன்னால் சொல்லிக் கொண்டு போகட்டும். அதற்காக, நமது, கடமையை நாம் விட்டு விடக் கூடாது. இந்த இருபதாவது நூற்றாண்டில், அதுவும் மேல்நாடுகளி. லெல்லாம் தொழில் முறையிலும் வருணாச்சிரமதர்ம தத்துவமடியோ டொழிந்து வருமிக்காலத்தில் இந்த நாட்டில், வருணாச்சிரம தருமம் பரம்பரை முறையில் இருந்து வர முயற்சிகள் நடப்பதென்றால் இந்நாட்டு மக்களின் கேவலமான நிலைமைக்கும், முட்டாள்தனத்திற்கும் வேறு அத்தாக்ஷியே வேண்டியதில்லை.
குடி அரசு - 19310) 458
கடைசியாக ஒரு வார்த்தை, அதென்ன வென்றால், தொழிலாள சகோதரர்களும், தொழிலாளிகளிடம் அனுதாபமுள்ளவர்களென்பவர்களு மெந்த விதத்திலிந்தக் காங்கிரசையும், காந்தீயத்தையுமாதரிக்கின்றார் களென்பது தான் நமக்கு ஆச்சரியமாயிருக்கின்றது.
தொழிலாளர்கள் காங்கிரசையும், காந்தீயத்தையும் ஆதரிப்பதும், அவைகளுக்கு அனுசரனையாயிருப்பதுமென்பது “உதைக்கின்ற கால் களுக்கு முத்தம் கொடுப்பதையே யொக்கும்.
தொழிலாளிகள் ஏதாகிலும் தங்களுடைய நிலைமையை உயர்த்திக் கொள்ளவேண்டுமானால் இதுதான் அவர்களுக்குத் தக்க சமயமென்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.
இந்தத் தொழிலாளிகளொன்று கூடி தொழிலாளர்களென்பதாக ஒரு பிரிவோ அல்லது அவர்களுக்கென்று ஒரு தனிசட்டமோ இல்லாமலிருக் கவும் பார்த்துக் கொள்ளவேண்டியக் குறிப்பை மனதில் வைத்தே வேலை செய்ய வேண்டுமென்பதையும் குறிப்பிட்டுவிட்டு இதை முடித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.06.1931
459 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
sunpfumans உதயம் ண்கள் ௬தந்திரம்
சொத்துரிமை
மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்கு சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும் சொத்துக்களை வைத்து சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்.
கல்யாண ரத்து
பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து, செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.
அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7-வருஷகாலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்டமில்லா விட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3- வருஷ- காலம், ஒற்றுமையின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களா யிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ளவர்களாக இருந்தாலோ, ஆகிய காரணங்களால் துன்பப்படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங் களை சட்டமூலம் ரத்து செய்து கொள்ளலாம்.
மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம் ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படா தவர்கள் தன்னை கல்யாணப் பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலகிக்கொண்ட 6 மாதம் பொருத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.
மைசூரில் கல்யாண வயது
மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடா யிருக்கிறது.
குடி அரசு - 19310) 460
செங்கல்பட்டுத் தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட “சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டு திட்டமில் லாமல் செய்கின்றது” என்று சொல்லி கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருது கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.06.1931
461 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தியில் வண்கள் மண்ணேற்றாம்
திறைமறைவில் உரை போட்டுக் கொண்டு இருக்க வேண்டிய பெண்கள் இன்று துருக்கியில் பிறந்ததின் பயனாய் திறையை அவிழ்த்துத் தள்ளி உரையைக் கழட்டி எறிந்து விட்டதோடல்லாமல் “எங்களுக்குக் கல்யாணம் வேண்டாம். கல்யாணம் செய்து கொள்ளுவதன் மூலம் புருஷர்களுக்கு அடிமையாய் இருக்க இனி நாங்கள் சம்மதிக்கமாட்டோம்”
என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதோடு நிற்காமல் எங்களுக்கு உத்தியோகம் வேண்டும்” என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். புர்தாவை-கோஷாவை-படுதாவை “மதக்கட்டளை” என்று சொல்லப்பட்ட மார்க்கத்தில் பிறந்தும்-இஸ்லாம் மார்க்கத்தின் பிரமுகரான கலீபா இருந்த பிரதான நகரமாகிய துருக்கியில் பிறந்தும் துருக்கியானது கமால்பாஷா என்கின்ற ஒப்பற்ற ஒரு வீரரின் ஆ க்ஷியில் இருக்க நேர்ந்ததின் பயனாய் இன்று அப்பெண்மணிகள் “எங்களுக்கு கல்யாணம் வேண்டாம், உத்தியோகம் வேண்டும்” என்று சொல்லக்கூடிய யோக்கியதை அடைந்து விட்டார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பாங்கி முதலிய வியாபார ஸ்தலங்களிலும் அதாவது சதா பல புருஷர்கள் நடமாடும் இடங்களிலும் தங்கள் தலையைக் கத்தரித்துக் கொண்ட அழகான முஸ்லீம் பெண்கள் தாராளமாய் வேலையில் அமர்ந்திருக்கிறார்கள். மெடிக்கல் காலேஜ் (வைத்தியக் கலாசாலை! லா காலேஜ் (சட்டக் கலாசாலை) முதலிய இடங்களில்: பெண்கள் அதிகமாக சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களில் பலர் “ஆண்கள் பலபேர் கல்யாணம் இல்லாமல் இருக்கும்போது நாங்கள் ஏன் கல்யாணம் இல்லாமல் இருக்கக் கூடாது”? என்று கேட்கின்றார்களாம்.
மற்றும் பலர் “ நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால். நன்றாய்ப் பழகி சகல குணமும் தெரிய நேர்ந்த புருஷர்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வோம்” என்று சொல்லுகின்றார்களாம்.
மற்றும் பலர் “ நாங்கள் 40 வயது ஆனபிறகுதான் கல்யாணத்தைப்
பற்றி யோசிக்கத் துடங்குவோம்” என்று சொல்லுகின்றார்களாம். பெண்கள்: முன்னேற்றம் என்னும் துறையில் துருக்கிப் பெண்கள்தான் உலகத்திற்கே வழிகாட்டிகளாக ஏற்படக்கூடும் என்றே நினைக்கின்றோம். ஆகவே இந்தியா
வில் உள்ள சகல பெண்மணிகளும் ஒன்று துருக்கிப் பெண்களைப் பின்பற்ற
குடி அரசு - 19310) 462
வேண்டும், அல்லது துருக்கியில் பிறக்காததற்காக ஒப்பாரிவைத்து அழ வேண்டும். இல்லையேல் மதக்கட்டளைகளுக்கு தாங்களே (பெண்கள்! வியாக்கியானம் சொல்லப் புரப்படவேண்டும். இம்மூன்றைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
குடி அரசு - கட்டுரை - 21.06.1931
463 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
61.0.திரு.காந்தியிண் தீண்டாமையின்
திருகணி வியாக்கியானம்
உயர் திரு காந்தியவர்களை ஒரு தென்னாட்டுப் பார்ப்பனர் ஒருவர் தீண்டாமையைப் பற்றி சந்தேகம் தெரிவிக்குமாறு ஒரு கடிதம் எழுதி இருந்
தார். அதற்கு பதிலாக திரு. காந்தி எழுதி இருப்பதில் காணும் குறிப்பாவது,
தீண்டாமை விஷயமான காங்கிரஸ் தீர்மானங்கள் இன்னும் அரசியல். திட்டத்தில் ஒன்றாக நிருவப்படவில்லை.அதாவது நான் சொல்லுவதுதானே ஒழிய இன்னமும், அரசியல் கொள்கையாக ஒப்புக்கொள்ளவில்லை. பர்! அப்படிநிறுவப்பட்டாலும் நீதிஸ்தலங்கள் (அதாவது கோர்ட்டுகள்! இவற்றை கவனித்துக்கொள்ளும். வேதங்களினுடையவும் சாஸ்திரங்களினுடையவும் கட்டளைகளை புறக்கணிக்கப்படமாட்டாது. (அதாவது அவைகளுக்கு விறோதமாக ஒன்றும் செய்யப்படமாட்டாது. பர் காங்கிரஸ் அமைப்பு போது மான அளவு விரிவுள்ளதாகவே இருக்கின்றது. (அதாவது எப்படி வேண்டு மானாலும் வியாக்கியானம் செய்து கொள்ள தகுதியாகவே இருக்கின்றது.
பார்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 21.06.1931
குடி அரசு - 19310) 464
i த
இந்த நாட்டில், இந்துக்கள், முஸ்லீம்கள் என்கின்ற இரண்டு சமூகங் களும் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையுடைய சமூகங்களாகும். ஆனால் அவை இரண்டும் தங்கள் தங்களது நடை உடை ஆச்சாரம் அனுஷ் டானம் ஆகியவைகளில் ஒன்றுக்கொன்று நேர் விரோதமான சமூகங்கள் என்பதோடு உண்மையைப் பேச வேண்டுமானால் இவ்விரு சமூகங்களும் அரசியலிலும் மத விஷயத்திலும் ஒவ்வொருவருடைய இலக்ஷியங்க ளிலுங்கூட வேறுபட்ட தென்று சொல்லும்படியான சமூகங்களாகும்.
உதாரணமாக நடை உடை ஆசார அனுஷ்டானங்களிலுள்ள மாறு பாட்டைப் பற்றி நாம் யாருக்கும் எதுவும் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை என்று கருதினாலும், அரசியல் மத இயல் இலட்சியங்களில் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதில் சிலருக்காவது விவரம் தெரிய வேண்டியிருக் கலாம். ஆதலால் அதைப்பற்றிக் கவனிப்போம்.
இந்தியாவிலிருக்கும் இந்துக்களில் 1000க்கு 998 பெயர்கள் மத உணர்ச்சியின் பயனாகவே மகமதியர்களை வெறுக்கின்றார்கள் என்று சொல்லுவதிலும் அதுபோலவே இந்தியாவின் பெரும் பகுதியில் உள்ள மகமதியர்களில் 1000க்கு 999 பெயர்கள் இந்துக்கள் என்பவர்களை வெறுக் கின்றார்கள் என்பதிலும் யாருக்கும் சந்தேகமிருக்காது. இதில் ஒரு சமயம் எண்ணிக்கைகளிலும் ஏதாவது ஒரு சிறு அளவு வித்தியாசம் இருந்தால் இருக்கலாமே யொழிய ஒருவரையொருவர் வெறுக்கின்றார்கள் என்கின்ற உண்மையில் வித்தியாசம் இருக்குமென்று யாரும் சொல்லமுடியாதென்றே கூறுவோம்.
ஏனெனில் மகமதியர்களை இந்துக்கள் மிலேச்சர்கள் என்றும், முரடர்.
கள் என்றும் கருதும்படியாக இந்துமத ஆதாரங்களிலும் இந்தியாவின் சரித்திரங்கள் என்று சொல்லப்படுபவகைகளிலும் காணப்படுவதுடன் இன்றைய உண்மையான இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களால் மகமதியர்கள் தொடுவதற்கோ - உண்பவை தின்பவைகளில் கலந்து கொள்ளு வதற்கோ அருகரற்றவர்கள் என்றே கருதியிருக்கின்றார்கள் என்பதில் ஆகே்ஷபணையிருக்க முடியாது. அதுபோலவே இந்துக்களைப் பற்றியும் மகமதியர்களுக்கு தங்களது மத சம்பிரதாயப்படி இந்துக்களை இழிவாய்
465 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கருதவும் தங்களுக்கு நிரந்திர எதிரியாய்க் கருதவுமான உணர்ச்சிகள் தான் இருந்தும் வருகின்றது. இன்னும் மதக்கொள்கைகள் என்பது அந்தந்த மதக்காரர்கள் அல்லாதவர்களுக்கு உலகத்தில் இட மில்லை என்று கருதக் கூடிய அளவில் தாண்டவமாடிக் கொண்டி ருக்கின்றன.
ஆகையால் தான் இந்துக்கள் இந்தியநாடு தங்களுடையது என்ற மனப்பான்மை மீது இந்தியாவில் தாங்களே ஆதிக்கம் செலுத்த வேண்டு மென்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் அதுபோலவேதான் மகமதியர்கள் இந்தியா முழுவதும் மகமதிய இராஜ்யமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் பார்த்து வருகின்றோம். இருவருடைய மதசம்பந்தமான ஆதாரங்களும் இந்த இலட்சியத்தை வலியுறுத்துவதாகக் கொண்டதென்றே சொல்லுவோம்.
இந்திய அரசியல் தலைவர் திரு. காந்தி அவர்கள் அடிக்கடி தனது “சுயராஜ்யத் திட்டத்தின் கருத்து ராமராஜ்யம்” என்று சொல்லுவதே இந்துக் களின் அரசியல் மனப்பான்மையை விளக்கக்கூடியதாகும்.
அதோடு மகமதியர்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுவதை இந்துக்கள் அருவறுப்பதும், இந்துக்கள் தெருவில் மேளம் அடிப்பதை மகமதியர்கள். தடை செய்வதும் போதிய உதாரணங்களாகும். ஏனெனில், இந்த இரண்டு தத்துவங்களிலும் மத உணர்ச்சியிருக்கின்றதே தவிர மற்றபடி பொது நோக்கு உணர்ச்சியில்லை என்பது விளங்கும்.
நிற்க, இந்நாட்டில் இந்துக்கள், மகமதியர்கள் என்கின்றதான பெயர். கொண்ட இரு சமூகங்களென்பதில், எண்ணிக்கையில் இந்தியாவில் மகமதியர்களைவிட இந்துக்கள் என்பவர்கள் அதிக எண்ணிக்கையுள்ளவர் களென்று சொல்லுவதானாலும் அதாவது மகமதியர்களைவிட இந்துக்கள் 3 பங்கு அதிகமான எண்ணிக்கையுடையவர்கள் என்று கணக்கு சொல்லு வதானாலும் உண்மையில் மகமதியர்களே இந்தியாவில் வலிமைபொருந்திய சமூகத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில் இந்துக்களின் ஜனசங்கை எவ்வளவு பெரிய எண்ணிக்கை. யாயிருந்தாலும் அதில் பல பிரிவுகள் ஏற்பட்டு சின்னா பின்னப்பட்டு தங்களை ஒரு சமூகம் என்ற சொல்லிக்கொள்ளமுடியாத நிலைமையில் பிரிக்கப்பட்டுக் கிடப்பதால் மகமதியர்களே இந்துக்களை விட பெரிய சமூகமாவார்கள் என்கின்றோம்.
மேலும் இந்துக்கள் என்கின்ற கூட்டத்திலிருந்து பஞ்சமர்கள் அல்லது ஆதிதிராவிடர்கள் என்கின்ற சமூகத்தாரான 4ல் ஒரு பங்கு ஜனத்தொகைக் கொண்ட சமூகத்தை விலக்கித்தான் இந்து சமூக எண்ணிக்கை யைக் கணக்குப் போடவேண்டும். ஏனெனில் அவர்களை ஒரு வித அடிமை
குடி அரசு - 19310) 466
யாகவும் மிருக ஜீவன்களைவிட கேவலமாகவும் இந்துக்கள் கருது கிறார்கள். இதுபோலவே இந்துக்களில் மற்றும் பலசமூகங்கள் ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு என்று சொல்லிக்கொள்ளும் முறையில் சமத்துவம் பாராட்டப்பட முடியாத - ஒற்றுமை பாராட்ட முடியாத நிலைமையிலுள்ள பல பிரிவு களையும் கூர்ந்து பார்த்தால் தானாகவே மகமதிய சமூகம் தான் அதிக எண்ணிக்கையுடையது என்பதும் விளங்கும்.
அன்றியும் மகமதியர்கள் தங்களை எல்லோரும் இஸ்லாமானவர்கள் என்று சொல்லிக்கொள்வது போல் இந்துக்கள் எல்லோரும் தங்களை ஒரு கூட்டத்தில் சேர்த்துச் சொல்லிக் கொள்ள வார்த்தையே கிடையாது. ஒருவித பாவனையும் கிடையாது. தனித்தனி சமயம், ஜாதி, வகுப்பு, உட்பிரிவு ஆகியவைகளைச் சொல்லிப் பிரித்துக்காட்டிக் கொண்டே தீரவேண்டிய வர்களாய் இருக்கிறார்கள்.
வேண்டுமானால் வேறு ஒருவனை ஏமாற்றும் போதும் வேறு ஒருவனுடன் சண்டைக்குப் போகும்போதும் மாத்திரம் தான் இந்து என்றால் என்ன என்று உணர்ந்து கொள்ளமுடியாத மக்களைப்பிடித்து “நாம் எல்லோரும் இந்துக்கள்” என்று உரிமை பாராட்டுவதும், அது தீர்ந்த பிறகு அந்த மக்களையே “எட்டி நில் தொடாதே” என்பதுமான குணங்கள் இந்து சமூகத்தி லுள்ள,சகல பிரிவார்களிடமும் இருந்துவருவது வழக்கமாகயிருந்து வருகின்றது. இதுபார்ப்பனனானாலும், சைவனானாலும், வைணவனானாலும், வேளாளனானாலும், “எந்த வருண”த்தானானாலும் மற்றும் யாரானாலும் இவர்களுக்கெல்லாம் இந்த உணர்ச்சி இயற்கை உணர்ச்சியாயி ருந்தே வருகிறது.
ஆகவே இத்தியாதி காரணங்களால் இந்துக்கள் என்பவர்கள் தங்களை ஒரு சமூகம் என்று சொல்லிக் கொள்ளமுடியாத நிலைமையில் வெகுகாலமாய் இருந்து வருவதும் இந்துக்கள் தவிர மற்ற சமூகங்கள் எவ்வளவு
சிறியதாயிருந்தாலும் அவை ஆதிக்கத்திலிருந்து வருவது மாயிருந்து வருகிறது. மற்றும் இந்தக் காரணமேதான் இந்தியாவை வெளிநாட்டு மக்களே. அதாவது “இந்துக்கள் அல்லாத சமூகமே” ஆளக் கூடியதாகவும் இருந்து வருகின்றது. ஆகவே இந்து சமூகமும் இஸ்லாம் சமூகமும் இந்தியாவில் இப்போதுள்ள ஆக்ஷியின் பயனாய் எவ்வளவு கஷ்டப்பட்டு வருவ தாயிருந்தாலும் “அன்னிய ஆக்ஷியை” ஒழிக்கும் விஷயத்தில் ஒன்றை யொன்று நம்பி ஒத்து வேலை செய்யமுடியாமல் இருந்துவருவதுடன் மூன்றாவதொருவனுடைய தீர்ப்பே இவர்களது வாழ்வுக்கு வேண்டியதாய்
இருக்கின்றது.
ஆதலால் புதிய அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதான முயற்சிகள் யார் யாரோலோ எவ்வளவு முயற்சிகள் செய்தும் முடிவு பெறாமல் முறிந்துபோய்விட்டது நமக்கு சிறிதும் ஆச்சரிய
467 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
மாக இல்லை.இம்முயற்சியின் அஸ்திவாரமே ஒருவரையொருவர் யேய்க்கும்
தத்துவத்தில் இருந்து முளைத்ததே தவிர உண்மையில் நல்ல எண்ணத்தின் மீது சிறிதும் யேற்பட்டதல்லவென்றே சொல்லுவோம். இருவருக்கும் உள்ள தகராறு என்பதே பிரதிநிதித்துவம் என்பதில் மாத்திரம்தான் இருந்து வருகின்றதேயொழிய இன்னமாதிரி சீர்திருத்தம் வேண்டும் என்பதில்: இருப்பதாகக் காணவில்லை.
ஆகவே ஒருவர் கோரும் பிரதிநிதித்துவம் மற்றொருவர் கொடுக்க சம்மதிக்காததும் ஒருவர் கொடுக்கும் பிரதிநிதித்துவம் மற்றொருவருக்கு திருப்தி இல்லாததும் ஒருவரிடம் ஒருவருக்குள்ள அவநம்பிக்கையே யாகும்.
ஆதலால் இருவரும் அவநம்பிக்கைப் படுவதிலிருந்தே ஏமாற்றும் தன்மைதான் ஒற்றுமை என்கின்ற ரூபத்தில் இருந்துவருகின்றது என்பது விளங்கும். இந்த நிலையில் நாம் யார் மீதாவது அதிகமான குற்றம் சொல்ல வேண்டுமானால் இந்துக்கள் என்பவர்கள் மீதுதான் அதிக குற்றம் சொல்ல வேண்டியதாய் இருக்கின்றது. அதாவது இந்துக்கள் இடம் தான் ஏய்க்கும் எண்ணம் அதிகமாய் இருக்கின்றது என்று சொல்லுவோம். எப்படியெனில் இந்தியாவில் இந்துக்கள், மகமதியர்களை நினைப்பதைவிட இன்னும் அதிக இழிவாய்க் கருதும் 5, 6 கோடிமக்கள் தீண்டாதவர்களாய் தெருவில் நடக்கா. தவர்களாய், கல்வியின்றி, நல்ல உடையின்றி, நல்ல ஆகாரமின்றி, இருக்க வீடு இன்றி, குளிக்க தண்ணீர் இன்றி, தொழில் செய்ய உரிமை இன்றி அடிமைப் படுத்திக் கொடுமைப்படுத்தி இம்சிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களைப் பற்றி எந்த இந்து தலைவருக்கும் மகாத்மாக்களுக்கும் சிறிதும்- கடுகளவும் கூட இந்த அரசியல் கிளர்ச்சி ராஜியில்- திட்டத்தில் சேர்த்துக் கொள்ள கவலையே இல்லாமல் இருந்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலைமையைப் பற்றிய யோக்கியமான பேச்சே இந்து தலைவர்களுடைய இலக்ஷியத்தில் கிடையவே கிடையாது. மகமதியர்களுடன் ராஜி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற கவலையுள்ளஅரசியல் ஸ்தாபனமானது தீண்டாதவர்களுடன் ராஜி செய்து கொள்வதைப்பற்றி இலக்ஷியப்படாமல் இருப்பதற்குக் காரணம் தீண்டாதவர்கள் பலமற்றவர்கள், அறிவற்றவர்கள். என்கின்ற எண்ணங்களை விட வேறு ஒரு காரணமு மிருக்கமுடியாது என்றே சொல்லுவோம்.
ஏனெனில் தீண்டாதவர்கள் என்பவர்களும் அரசியல் ஒற்றுமையில். தங்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்பதை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டிருக் கிறார்கள். இந்திய அரசியல் ஸ்தாபனத்தில் அவர்கள் கலந்து கொள்ளா மலேயே இருந்து வருகின்றார்கள். இப்படியெல்லாம் இருந்தும் இவர்களைப் பற்றி இந்துத் தலைவர்கள் சிறிதும் இலக்ஷியமில்லாமல் இருப்பதும்,
குடி அரசு - 19310) 468
மகமதியர்கள் விஷயத்தில் இவ்வளவு கவலைப்படுவதும் என்றால் இதில் ஏமாற்றும் தன்மை இல்லை என்று எப்படி சொல்லமுடியும்? அன்றியும், 5 கோடி ஜனத்தொகையுள்ள அந்த ஒரு சமூகத்திற்கு 2, 3 பேர்களே வட்ட மேஜை மகாநாட்டுக்கு பிரதிநிதிகளாய் இருக்கின்றார்கள் என்றால் இந்துக்கள் மாத்திரமல்லாமல் அரசாங்கத்தாரும் அவர்களை ஏய்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால் மகமதியர்கள் “உதைப்பதற்கு” தயாராய் இருக்கிறார்கள். உயிரை விடத் தயாராய் இருக்கி றார்கள். வேறு மதஸ்தனை கொன்றாலும் கொல்லுவதின் மூலம் செத்தாலும் மோக்ஷமென்று கருதி இருக்கிறார்கள். அந்த உணர்ச்சிதான் அவர்களை மனிதர்களாக வாழச்செய்கின்றது.
நமது தீண்டாதவர்கள் என்பவர்களோ காலில் விழுந்து கும்பிடுவதை- சாமி சாமி என்று கெஞ்சுவதை- உதைக்க உதைக்க உதைத்த காலுக்கு முத்தம் கொடுப்பதை “மோக்ஷம்” என்று கருதுகின்றார்கள். ஆதலால், மகமதியர் களது மோக்ஷ வழியை கண்டு உலகம் நடுங்குகின்றது. தீண்டாதவர்கள் என்பவர்களின் மோக்ஷ வழியைக்கண்டு உலகம் அவர்கள் மீது ஏறி சவாரி செய்கின்றது. இந்த நிலைமையில் ஒருவருக்காவது ஒருவருக்கு உண்மை ராஜியோ, ஒற்றுமையோ, நம்பிக்கையோ எப்படி உண்டாகக் கூடும் என்பதை யோசித்தால் உண்மை விளங்கும்.
இந்த நிலைமையில் “சுயராஜியம்” எப்படி சாத்தியம் என்பதை யோசித்தாலும் உண்மை விளங்கும். இந்தியாவானது சுயராஜியத்திற்கு
தகுதியாய் இருந்தால் அதைப் பெறுவதினின்றும், தடுக்க இந்த உலகத்தில் யாராலும் முடியவே முடியாது. இந்து, இஸ்லாம் சமயங்களும் வருணாச்சிரம தர்மமும், தீண்டாமையும் உள்ளவரை உண்மையான விடுதலை “சுயராஜ்யம்” இந்தியா ஒருநாளும் பெற முடியவே முடியாது என்பதை மனதில் வைத்து அவை ஒழியத் தகுந்த வேலை செய்வதுதான் ஒற்றுமையும் விடுதலையும் அடையும் மார்க்கமாகுமே தவிர வேறில்லை.
இன்றையத் தினம் இந்தியாவில் ஏதோ பிரமாதமாய் விடுதலைப் போர். நடப்பதாக கூறப்படுவதும் காணப்படுவதும் வெறும் புரட்டேயாகும். இது ஒரு இந்தியப் பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும், ஒரு புறமாகவும், வெள்ளைக்காரப் பணக்காரன் ஒரு புறமாகவும் இருந்து கொண்டு தங்கள் தங்கள் நன்மைக்கு என்று செய்து வரும் ஒரு போராட்டமேயாகும். அதாவது வெள்ளைக்காரப் பணக்காரன் தனது அரசாக்ஷி என்னும் தந்திரத்தை ஒரு ஆயுதமாகவும், இந்தியப் பணக்காரனும், மேல்ஜாதிக் காரனும் இந்திய பாமர: ஜனங்களின் முட்டாள்தனத்தையும், சில மக்களின் வேலையில்லாத்தனத் தையும் வயிற்றுப் பிழைப்பையும் ஆயுதமாக வைத்துக்கொண்டு செய்யப் படும் யுத்தமேயாகும்.
469 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
யுத்தநிறுத்த ராஜியின் போதும் இதே காரணம்தான் திரு. காந்தி இந்திய வர்த்தக சங்கத்தின் கெளரவ அங்கத்தினராகவும் லார்டு இர்வின் ஐரோப்பிய வர்த்தக சங்கத்தின் கெளரவ அங்கத்தினராகவும் இருந்துதான் ராஜிபேசினார்
கள். ஆகவே முறையே இருவரும் இந்திய வர்த்தகர்கள் சார்பாகவும் ஐரோப்பிய வர்த்தகர்களின் சார்பாகவுமே பேசி ராஜி செய்து கொண்டார்கள்.
ஆகவே இவை முதலாளிகளுடைய போராட்டங்கள் என்பதும் இதற்கு பாமர மக்களையும் தொழிலாளிகளையும் பலி கொடுக்கின்றார்கள். என்பதும் அரசியல் கிளர்ச்சிகளில் சிறிது கலந்து அனுபோகப்பட்டிருந் தாலும் கண்ணாடியில் பிரதி பிம்பம் தோன்றுவது போல் விளங்கும்.
இந்த யுத்தம் ஒருவாறு முடிந்தவுடன் இதே பாமர மக்களும் வயிற்றுக் கில்லாத ஆட்களும் உண்மை விடுதலைக்குப் பாடுபட திரும்பக் கூடும் என்றாலும் இப்பொழுது நடக்கும் போராட்ட முடிவு நிபந்தனையில் அப்படிப்: பட்ட ஒரு யுத்தம் அதாவது உண்மை விடுதலைக்கு உரித்தான யுத்தம் மறுபடியும் ஏற்படாமல் இருக்கும்படியான பந்தோபஸ்து செய்வதும் ஒரு பெரிய காரியமாய் இருந்து வருகின்றதை உணருகின்றோம்.
அதுதான் புதிய சுயராஜ்ய திட்டம் என்பதில் உள்ளஅதாவது சமஷ்டி அரசாங்கமுறை என்று சொல்லப்படுவதான, சுதேச அரசர்களின் ஆக்ஷி
யையும் இந்தசீர்திருத்தத் திட்டத்தில் சேர்த்திருப்பதும், மத நடுநிலைமையும், ஒவ்வொரு சமூகத்தினுடைய உரிமையும் காப்பாற்றுவது என்பதுமான நிபந்தனைகளுமாகும். சுதேச இராஜாக்கள் நமது ஆக்ஷியில் கலந்து கொள்வது என்பது “பணக்காரர்கள் காப்பாற்றப்படுவார்கள்.” என்பதும், மத.
நடு நிலைமை என்பது “இரண்டு மதத்தின் பேராலும் பல சோம்பேறிகள். வாழலாம்” என்பதும், ஒவ்வொரு வகுப்பு உரிமையும் காப்பாற்றப்படும் என்பது “பார்ப்பனர்கள் காப்பாற்றப்படுவார்கள்” என்பதும் தானே தவிர: வேறில்லை. ஆகவே இந்த சுயராஜியக் கிளர்ச்சி என்பது பணக்காரன், சோம்பேறி, பார்ப்பான் ஆகிய கூட்டம் பிழைப்பதற்கும் நிலையாய் தங்கள். நிலைமையை பந்தோபஸ்து செய்து கொள்வது என்பதற்குமே அல்லாமல்: வேறு ஒன்றுமில்லை என்பதாக உறுதி கூறுவோம்.
இந்தப் போராட்டமானது முதலாளிகள் சண்டை என்பதற்கு உதாரணம். என்னவென்றால் வெளிநாட்டுச் சாமான்களை பகிஷ்கரிப்பது என்பதே
யாகும். எப்படியெனில் இந்தப் பூச்சாண்டியை அரசியலில் 1907ம் வருஷம் முதலிலிருந்தே கையாளப்பட்டு வரும் தந்திரமாகும்.
இந்த பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கு அத்தாக்ஷி வெளி நாட்டுத்துணியை பகிஷ்கரிப்பதற்காக கதரைப் பர்த்தி செய்ய ஏற்பாடு செய்திருக்கும் காரியமேயாகும். கதரில் இயந்திரம் முதலிய முதலாளியை காப்பாற்றுவதும், கூலிக்காரனை, தொழிலாளியை அடக்கி வைப்பதுமான
குடி அரசு - 19310) 470
தத்துவம் அடங்கியிருப்பது நன்றாய் விளங்கும். ஒவ்வொரு அரசியல்
கிளர்ச்சியின் போது (Boycott) “பாய்காட்” “பகிஷ்காரம்” என்று சொல்லிக் கொண்டு கலவரம் செய்துவிட்டு, ஏதாவது ஒரு அதிகார - உத்தியோக செளகரியம் கிடைத்தவுடன் அந்நிய நாட்டு வியாபாரத்தை தாராளமாய் விட்டுவிட்டு எலக்ஷன்களில் போட்டிபோடுவதும் யாவரும் அறிந்த தேயாகும்.
இந்தியாவில் ஒரு பழமொழியுண்டு. அதாவது “கொட்டை நூற்று
பஞ்சம் விடியுமா?” என்று சொல்லுவதுண்டு. இதன் கருத்து என்னவென்றால்: நூல் நூற்பதினால் தரித்திரம் ஒழியுமா என்பதேயாகும்.
ஆகவே இன்றைய சுயராஜ்ய முயற்சிக்கும் ஏழைகள் பணக்காரர்கள் ஆவதற்கும் தொழிலாளிகள் பிழைப்பதற்கும் கள்ளுக்குடி ஒழிவதற்கும் கொட்டை நூற்க வேண்டியது (ராட்டினத்தில் நூல் நூற்கவேண்டியது! தான் முக்கிய மார்க்கமாயிருக்கின்றது என்பது எவ்வளவு தந்திரமானது என்பதை யோசித்தால் சிறிதளவு மூளையுள்ளவர்களுக்கும் தெரியாமல் போகாது.
இதுபோலவே கள்ளுக்கடை மறியல் என்பதும் எலக்ஷன் நெருங்க நெருங்க இது ஒரு எலக்ஷன் பிரசாரமாய் புறப்படுவதும், எலக்ஷன் முடிந்த வுடன் மறியல் ஒழிந்து போவதுமல்லாமல் வேறு அதில் ஏதாவது நாணய மிருக்கின்றது அல்லது இருந்தது என்றாவது யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்தால் அதன் புரட்டும் விளங்காமல் போகாது.
ஆகவே கதரும், மறியலும், இந்து, முஸ்லீம் ஒற்றுமை முதலிய காரியங்களாலும் ஏற்படப்போகும் பயன் என்ன என்பதை அறிவுடைய - சுயநலமற்ற மக்கள் உணர்ந்து பாமர மக்களுக்கு எடுத்துரைக்க வேணுமாய் விரும்புகின்றோம்.
இதைப்பற்றிய மற்றும் விபரங்களையும் சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளின் யோக்கியதைகளையும் மற்றொரு சமயம் புள்ளி விவரங் களுடன் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 28.06.1931
471 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
சிக்கயாவ்கோட்டை “மக்கள் வி
சேவை சங்கம் திறப்பு விழா
ஆர்வமுள்ள அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!
இந்த ஊரில் மக்கள் விடுதலைசேவை சங்கம் என்பதாக ஓர் சங்கம்
புதிதாக ஏற்படுத்த யுத்தேசித்து, அதை திறந்து வைக்க வேண்டுமென என்னை அழைத்ததற்காக நான் நன்றி செலுத்துகின்றேன். இவ்வூர் பிரமுகர்
கள் அளித்த வரவேற்புக்கும், வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரப் புகழ் மொழிக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். அவை எனது தகுதிக்கும், அளவுக்கும் மீறிய வகையில் செய்யப் பட்டிருப்பதால், அவை களை நான் ஏற்றுக்கொண்டேனென சொல்லுவதற்கு முடியாத நிலைமை யிலிருக்கிறேன். இயக்கத்தினிடம் உங்களுக்கிருக்கும் ஆசையால் மெய் மறந்து, அன்பினால் மரியாதை செய்திருக்கிறீர்கள். ஏனெனில், எனக்குப் பொருந்தாததும், மேம்பட்டதுமான வாசகங்கள் வரவேற்புப் பத்திரத்தில் மிகுதியும் காணப்பட்டிருக்கிறது. நமது அக்கிராசனர் உரைத்தது போல் மரியாதை செய்யும் முறையில் அதிகமாகச் செய்யப் பட்டிருக்கிற தென்ப தாகவே கருதினாலும் அவ்வார்த்தைகள் எனது கொள்கைகளுக்காதார மாயிருக்குமென நினைத்து அதன்மூலம் நீங்கள் ஆதரவளிப்பதாய்க் கருதி உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
சகோதரர்களே! இன்று, இங்கு மக்கள் விடுதலைச்சங்கமென்பதை நான் சடங்கு முறையில் திறந்து வைக்க வேண்டியவனாயிருக்கின்றேனே யொழிய வேறு வகையிலில்லை. ஏனெனில், அது ஏற்கனவே திறந்து தானிருக்கிறது. ஆனால், பொது ஜனங்களுக்கு விளம்பரம் செய்வதற்காக இப்படியொரு சந்தர்ப்பம் செய்து கொண்டிருக்கிறீர்களென்றே கருதுகிறேன். அன்றியும், இதைப்பொதுஜனங்கள் தெரிந்து, பயன்படுத்திக்கொள்ள வேண்டு மென்பதற்காகத்தா னிந்தச்சமயம் நானும் சில வார்த்தைகள் சொல்லுகின் றேனே யொழிய வேறில்லை. இதற்காகவே மற்றும் பல பெரியோர்களும் பல அரிய விஷயங்களை எடுத்துச் சொல்ல இங்கு வந்திருக்கிறார்கள், இச் சங்கத்தின் நன்மையைப் பற்றியும், அவசியத்தைப் பற்றியும் அக்கிராசனர வர்கள் எடுத்துரைத்தார். ஆனாலும், என்னிடமிருந்தும் சில வார்த்தை
குடி அரசு - 19310) 472
களெதிர்பார்க்கிறீர்களென நினைக்கிறேன். இப்பொழுது உங்கள் ஊரில் நிறுவப்பட்டிருக்கும் இச்சங்கத்தால் நீங்கள் ஏராளமான நன்மையை யடையக்
கூடும். ஆனால் நீங்கள் இச்சங்கத்தை சரியானபடி பயன்படுத்திக் கொள்ளத் தவறுவீர்களாகில், இச்சங்கத்தினால் யாதொரு பிரயோஜனமுமேற்படா தென்றே சொல்லுவேன். அதோடு இந்தக் கிராமத்திய மக்களுக்கு சரியான உணர்ச்சியில்லையெனவும்தான் கருத வேண்டும். இச்சங்கத்தால் மக்களுக்கு அறிவு புகட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் இவ்வூர் பிரமுகர்கள். முன் வந்து இவ்வளவு பிரபலமாய் இதைத் துடங்கி இருக்கிறார்கள். இச்சங்கமானது இன்று சித்தய்யங்கோட்டை மக்களுடையதாக இருக் கலாம். நாளை இச்சங்கமே மதுரை ஜில்லா முழுவதிலு முள்ள மக்களுடைய தாகலாம். பிறகு தமிழ்நாடுடையதாக விருக்கலாம். கடைசியாக இந்தியா தேசம் முழுவதும் பரவி உலக மக்களுக்கே அறிவுபுகட்டக் கூடிய தாகவு மிருக்கலாம். இச்சங்கத்தை இந்த ஒரு கிராமத்துக்கு மட்டுமென்று நினைத்து விடாதீர்கள். உலக மக்களுக்கே விடுதலை ஸ்தாபனமாக விளங்கவேண்டும் என்று கருதி வேலை செய்யுங்கள். ஒவ்வொரு நாடும் இவ்வாறு ஒவ்வொரு சங்கங்களை ஸ்தாபித்துத்தான், அந்தந்த நாட்டு மக்களுடைய விடுதலைக் காகப் பாடுபடுகின்றது. நாம் எந்தெந்த வகையில் நமது மக்களை விடுதலை செய்ய முடியுமென்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்கு ஆதாரமாக மற்ற தேசங்களில் எவ்வாறு பாடுபட்டு மக்கள் விடுதலைய டைந்து மேன்மையை அடைந்திருக்கின்றார்களென்பதையும் உணர்ச்சி பெற்றிருக்கின்றார்களென்பதையு மறிந்துதான் நாமும் நமது மக்கள் விடுதலைக்கு வழிதேட வேண்டியவர்களாயிருக்கின்றோம். ஏனெனில் நமக்கு விடுதலை என்பதற்கே இன்னமும் அருத்தம் தெரியாதவர்களா. யிருக்கிறோம். இந்த ஊரானது பெரும்பாலும் கைத்தொழிலாளிகள் நிறைந்த ஊராகும். ஆகவே இந்த ஊர் தொழிலாளிகள் எவ்வளவு தூரம் விடுதலை பெற்று எவ்வளவு தூரம் முன்னுக்கு வர வேண்டுமென்பது இந்த ஊர் தொழிலாளிகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளமுடியாது. வெளிநாட்டு நிலையையும் பார்த்தால்தான் விளங்கும். உதாரணமாக இந்த ஊர் கைத் தொழிலாளி ஒருவன் தினம் 1-க்கு 4 அணா கூலி கிடைத்தால் போதுமென நினைக்கக்கூடும். ஆனால் மதுரையிலுள்ளவன் எவ்வளவு சம்பாதித்து எப்படி வாழுகின்றான் என்பதையும், மதராசிலுள்ளவன் எவ்வளவு சம்பாதித்து எப்படி வாழுகின்றான் என்பதையும் கவனித்துப் பார்த்தால் தான் அவனது நிலை எப்படிப்பட்டது என்பது அவனுக்கு விளங்கும்.
அதுபோலவே வெளிநாட்டிலும் அதாவது அமெரிக்காகாரன் எப்படி வேலை செய்து எவ்வளவு சம்பாதிக்கிறான்? ருஷியாகாரன், இங்கிலாந்துக் காரன் எப்படி சம்பாதித்து எப்படி வாழுகிறான் என்பதையெல்லாம் கவனித் தால்தான் கைத்தொழில் எப்படி இருக்கவேண்டும், எதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதெல்லாம் விளங்கும். ஆனால் நமது தொழிலாளிகளில் அநேகருக்கு ஒன்றுமே தெரியாது. விடுதலையென்றால் என்னவென்றும்
473 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
தெரியாது. உதாரணமாக ஒரு தோட்டத்தில் வேலை செய்யக் கூடியவன், நாள்தோறும் 12மணி நேரம் வேலை செய்கின்றான். இன்னொரு தோட்டத்திலே தினம்10 மணி நேரந்தான் வேலை செய்கிறார்கள். மற்றும் சில தோட்டங்களில் வேலை செய்பவர்கள் 10மணி நேரம் வேலை செய்தாலும் குடியிருப்பதற்கு ஒரு வீடும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இன்னும் சில தோட்டங்களில், மனிதர்கள் குறைந்த அளவு வேலை செய்வதுமல்லாமல் சரீரத்தால் அதிகப் பிரயாசை படுவதற் கில்லாமல் இயந்திரங்களுமமைக்கப் பட்டிருக்கின்றது. இவைகளை யெல் லாம் கவனிக்கக் கூடியஒரு தொழிலாளி, தனக்கும் அவ்வாறு உதவியை அளிக்கும்படியாக அதாவது விடுதலை வேண்டுமென கேட்கக்கூடும். ஆகையால் தொழிலாளி என்பவர்களும் அடுத்த தேசங்களைத் திரும்பிப் பார்த்தால் தான் அவர்களுக்கு விடுதலை: யின்னதென்பதை அறிந்து கொள்ளமுடியும்.
அதுபோலவேதான் மற்ற மக்களும் மற்ற துறைகளிலும் விடுதலை என்பதை அறிய மற்ற நாடுகளையும் அங்குள்ளமக்கள் நிலையையும் உணரமுடியும். இம்மாதிரியான விடுதலை என்பதை நாமடைய வேண்டு மானால், அதற்கு நாம் எப்படி உழைக்கவேண்டும்? எந்தெந்தத் துறையில் முன்னேறியிருக்க வேண்டும்? முற்போக்குக்கு எவ்வாறு பாடுபடவேண்டும்? ஆகியவைகளை அவசியம் அறிய வேண்டும். மக்கள் விடுதலையடைவ தற்குரிய மார்க்கங்கள் எவை என்று யோசித்தால் பல இருக்கின்றன என்பது விளங்கும். பொதுவாக மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவசி
யம் வேண்டியிருப்பவைகள் கல்வி, செல்வம், தொழில், சமூக சமத்துவம், பெண்கள் சமத்துவம், பெண்கள் விடுதலை ஆகியவைகளிலேயே நமக்கு முதன் முதலாக விடுதலை வேண்டியிருக் கின்றது. மற்ற தேசத்தாருடைய கல்வி, செல்வம், தொழில், சமத்துவம், நாகரீகம், விவாகம், விவாகரத்து ஆகியவைகளுடன் நமது தேசத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால்தான் நமது நாட்டின் தன்மை நமக்கு சுலபமாக விளங்கும். அதோடு நமது நிலை. இவ்வாறிருப்பதற்குக் காரண மென்ன? என்பதையும் அறிந்து அவை களினின்று விடுதலையடையும் படியான மார்க்கங்களைத் தெரிந்து, அதற்கென பாடுபட்டோமேயானால் நமக்கு நிச்சயமாகவே வெற்றியேற்படும். ஆகவே சகோதரர்களே! இவ்விஷயங் களில் என்னுடைய புத்திக்கு சரியென்று பட்டதையும், அனுபோகத்துக்கு ஒத்திருக்கக் கூடியவைகள் எனறு பட்டவைகளைத்தான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.நான் கூறும் விஷயங்களுக்கு ஆட்சேபணையே கிடையா தென்கின்ற தீர்மானத்தின் மீதாவது, அல்லது ஆட்சேபணையே இல்லை யென்ற எண்ணத்தின் மீதாவது நான் உங்களுக்குச் சொல்ல வரவில்லை. நான் கூறுபவைகள் எனக்கு நியாயமாக யிருக்கின்ற தென்பதுதான் என்னுடைய அபிப்பிராயமாகும். ஆதலால் அதை அலகஷியம் செய்ய உங்களுக்கு பூரண உரிமையுண்டு. நீங்கள் என்னுடைய அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் அறிய ஆவலுள்ளவர்களாயிருக்கின்றீர்கள் என்று நான் உணர்வதினால் எனக்குப்
குடி அரசு - 19310) 474
பட்ட உண்மையை உரைக்க வேண்டியவனாக யிருக்கின்றேன். அபிப்பிராய பேதங்களுக்கு மக்கள் கட்டுப்பட்டவர்களே யாவார்கள். ஒருவர் அபிப்பிராயம் மற்றொருவருக்கு பிடிக்காமலிருப்பது சகஜமேயாகும். ஆனால் அவர்களுக்குப் பட்டதை அவரவர்கள் சொல்ல இடம்தந்து அதை ஆராய்ந்து பார்ப்பது நியாயமும் அறிவுடைமையுமாகும். மக்கள் பலவித எண்ணங்களையுடைவர்களும், மனதையுடையவர்களுமாவார்கள். நமது எல்லோருடைய கண்களும் ஒவ்வொரு விஷயங்களில் ஒவ்வொரு மாறுதலு டையதாகத்தானிருக்கும். ஆனால் நன்றாய் அறிவு அனுபவம் ஆகியவை களைக் கொண்டு ஆராய்ச்சி செய்தால்தான், நாமும் உண்மையை உணர்ந்து ஒருவித முடிவை அடையமுடியும் இல்லையாகில் குழப்பத்தில்தான் இருக்க வேண்டும்.
ஆகவே சகோதரர்களே! நான் சொல்வனவெல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள் தான் என்று நான் சொல்வதோடு நான் ஒரு சாதாரண: மனிதன் தான். நான் எவ்வித தெய்வத்தன்மை பொருந்திய ஒரு தீர்க்க தரிசியல்ல. ஆகையால், தனிமனிதன் என்கிற முறையில் தான் என்னுடைய அபிப்பிராயங்களையும், நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்கு சரியென்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். “ஒரு பெரியாருரைத்து விட்டா” ரென கருதி, நீங்கள் அப்படியே அவைகளைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளேதான். நான் உரைப்பவைகளை நீங்கள் நம்பாவிட்டால் பாவமென்றாவது தோஷமென்றாவது அல்லது நரகத்துக் குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் கேட்டு நாம் வேதவாக்கென அப்படியேநம்பிவிட்டதினால் தான் நாம் இன்று அடிமைகளாக யிருக்கின்றோம். நான் உரைப் பவைகளை: ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவைகள் உண்மை யெனத் தோன்றி னால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்.இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில் அவைகளை உண்மையென ஒப்புக் கொள்ளுவதில் மட்டும் பிரயோஜனமில்லை. அதை அனுஷ்டானத்தில் கொண்டுவந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள்.எனது சொந்த அனுபோகங் களை நான் அறிந்து உங்களுக் குரைப்பது தான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிந்து அதன்படிநடப்பதுதான் உங்கள் விடுதலை.
கல்வி
தற்காலம் கல்வியானது நமது நாட்டில் மிக்க மோசமான நிலைமை யிலிருக்கின்றதென்பதுதான் என்னுடைய அபிப்பிராயமாகும். அரசாங்க அறிக்கைகளின் மூலமாகவும் அடிக்கடி பிரசுரிக்கப்படும் புள்ளிகளின் மூலமாகவும் நமது நாட்டில் படித்த மக்களென்பவர்கள் 100க்கு 10 பெயர்கள். தானிருக்கின்றார்கள். பாக்கியுள்ள 90 பெயர்களும் தற்குறிகளாகத்தானிருக்
475 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
கின்றார்கள். இவைகளிலும் பிராமணர்களைத் தள்ளி பிராமண ரல்லாதார். களில் 100க்கு எத்தனை படித்தமக்களிருக்கின்றார்களென்பதை பார்த்தோமே யானால், அவர்களோ 100க்கு 5பெயர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள். நாம்தான் அவ்வறிக்கைகளின் கடைசி வரியிலிருக்கின்றோம். அரசாங்க அறிக்கையிலும் பார்ப்பனரல்லாதாரில் அநேக வகுப்பார் கல்வியில் பின்ன டைந்திருப்பதால் அவர்களுக்கு என்று கல்வி சம்பளம் கூட குறைந்திருக் கின்றார்கள். பெண்களுக்கு சம்பளமே இல்லை என்றும் ஏற்பாடு செய்திருக் கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் 100க்கு 50,60, 70 வீதமும் இன்னும் சில நாடுகளில் நமது நாட்டுப் பார்ப்பன சமூகம் போல100க்கு 100 மக்களும் படித்த வர்களாகயிருக்கின்றார்கள். நமது நாட்டில் மட்டும் 100க்கு 90 பெயர்கள் தற்குறியாயிருப்பதற்குக் காரணமென்ன? அதுவும் பார்ப்பனரல்லாதவர். சமூகம் 100க்கு 95க்கு தீண்டாதார் சமூகம் 100க்கு 997, ம் பெண்கள் சமூகம் 100க்கு 99 '/,யும் தற்குறிகளாயிருப்பதற்கு காரணம் என்ன? இதற்கு அரசாங்கமா காரணம்? என்பதை யோசித்துப் பாருங்கள். இதற்குக் காரணம் கண்டு பிடிக்க இதுவரை நாம் என்ன செய்திருக்கின்றோம்? என்ன செய்கின்றோம்? என்பதை கவனித்துப் பாருங்கள். அரசாங்கம் நமக்குக் கல்வி கற்றுக் கொடுக்க வில்லையா? அல்லது அரசாங்கத்தில் பண: மில்லையா? அல்லது மக்களுக்கு கல்வி கற்கவேண்டுமென்கிற ஆசை யில்லையா? யென்பவைகளைக் கவனித்தோமானால் ஏன் மக்கள் கல்வி கற்கவில்லை? என்பதற்குக் காரணம் விளங்கும். சகோதரர்களே, நமது சமூகம் இதற்கு முன் என்றைக் காவது கல்வி அறிவுடன் இருந்ததாக சொல்லக் கூடுமா? என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுது அதன் உண்மை தெரியும், சர்க்காரார் பார்ப்பனர்களுக்கு மட்டும் தானா படிப்பு சொல்லிக் கொடுக்கின்றார்கள்? இல்லவே இல்லையே, எல்லோரையும் ஒன்றாய்தானே பாவிக்கிறார்கள். ஆதலால் இதிலுள்ள சூக்ஷியை அறிந்தீர்களானால் விடுதலையின் உண்மைத் தத்துவம் விளங்கும். நமது மதத் தத்துவப்படிக்கு ஆதிகாலத்திலினின்னன்ன ஜாதிதான் கல்வி கற்க வேண்டுமென சட்ட திட்டங்களிருந்தன. படிக்க ஒரு ஜாதியும், படிப்பு சொல்லிக்கொடுக்க ஒரு
ஜாதியும் இருந்து வந்ததோடு அதிலும் இன்னது இன்னதுதான் படிக்க வேண்டுமென்பதுமாகிய திட்டங்களும் ஆதியிலிருந்தது. இவைகளை நாம் வெளியிலெடுத்துரைத்தால், எல்லாரும் ஒத்துக்கொள்ளுகிறார்கள். ஆட்சே பனை செய்பவர்களெ வருமேயில்லை. ஒரு தடவை திரு. கோகலே அவர்கள் “பெண்களும் படிக்க வேண்டியது மிக்க அவசியமே. ஆகையால் அவர் களையும் ஆண் களைப் போல் பள்ளிக்கூடங்களுக் கனுப்ப வேண்டுமென பம்பாயில் உரைத்த பொழுது மக்கள் அவரைத் துன்பப்படுத்தி, இம்சித்து, “கோகலே அயோக்யன், அவன் இருப்பதற்கே தகுதியில்லை” எனவும் உரைத்தார்களாம். ஆண் மக்களின் நிலைமையை விட பெண் மக்களின் நிலைமை படிப்பு விஷயத்தில் மிக்க மோசமானதாகவே இருக்கின்றது. இதிலும் தீண்டாதார் எனப்படுபவர்களின் நிலைமையே இன்னும் இதைக்
குடி அரசு - 19310) 476
காட்டிலும் மிக்க மோசமானதாகவே இருக்கின்றது. கல்வி மக்களுக்கு அவசியமென்பதை அறிந்து மக்கள் ஒத்துக்கொண்ட போதிலும் கூட, மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் மற்றவர்கள் படிக்காமலிருப்பதற்குரிய பல தந்திரங்கள் இன்னமும் செய்துகொண்டு தானிருக்கின்றார்கள். சில இடங்களில் தீண்டப்படாதாருக்கு பள்ளிக் கூடங்களே இல்லை. அப்படி பள்ளிக் கூடங்கள் சில யிருந்தபோதிலும் கூட போதுமான உபாத்தியாயர்கள் அப்பள்ளிக்கூடங்களுக்கு அகப்படுவதுமில்லை. அப்படியொரு சமயம் பள்ளிக்கூடமும், உபாத்தியாருமிருந்த போதிலும் கூட, தீண்டாதாரின் மக்கள் சில தெருக்களில் நடந்து அப்பள்ளிக் கூடங்களுக்குச் செல்ல உரிமை யில்லை. அவர்கள் அத்தெருக்களில் நடமாடக் கூடாதென தடுக்கப்படு கின்றார்கள். இவ்வளவு கஷ்டங்களையும் அவர்கள் மீறி, படிக்க ஆரம்பித் தாலோ அவர்கள் படிப்பதற்கு போதிய பணமில்லை. அவர்களுக்குப் போதுமான சாப்பாடில்லை. இத்தகையைக் கஷ்டங்களை நாம் எப்படி நீக்க வேண்டும்? என்று பார்த்தால் நமது சமூகத்திற்கு மதவிஷயத்தில் உள்ள முட்டுக் கட்டைகளை முதலில் நீக்குவதுதான் எல்லோரும் படிக்க முயற்சி செய்வ தாகும். மதத்தை காப்டாற்றிக்கொண்டு எல்லோரும் படிக்க வேண்டு மென்பது அறியாமையேயாகும். ஆதலால் மதக்கட்டுப்பாட்டை ஒழிக்க முதலில் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்சிப்பதற்கும் நமக்குத் தைரியம் வேண்டும். அவ்வித தைரியம் நமக்கு ஏற்பட்டால்தான் கல்வி விடுதலையுமேற்படும். இவைகளைவிட்டு,“சரஸ்வதிகடாக்ஷமில்லை, பணமில்லை, அரசாங்காத்தார் கல்வி கற்பிக்கவில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் விடுதலை அடையத் தகுந்த புத்தி இல்லாதவர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும்.ஏனெனில், பிராமணர்களும் இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டும் சாதாரண வரும்படியுள்ளவர்களுமாய் இருப்பவர்களேயல்லாமல், வேறு அரசாங்கத்தில் உள்ள பெரியப் பணக்காரர். களல்ல. அவர்கள் குமாஸ்தாக்களாகவும். காபி கிளப்புக்காரர்களாகவும், புரோகிதர்களாகவும், தக௲௲ணை வாங்குபவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருந்தும்கூட, அவர்களில் 100க்கு 99 பெயர் எப்படி வாசிக்க முடிந்தது என்பதை யோசித்தோமானால் அப்பொழுதுதான் அதன் சூக்ஷம் புலப்படும். ஆகவே நமது நாட்டில் இப்பொழுது இருந்து வரும் மததர்மங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்குமானால் சிலரைத் தவிர்த்து பெரும்பாலான மக்கள் படிக்கவே முடியாது. நமது மத தர்மப்படி இன்னின்னவர்கள் தான்
கற்றுக் கொடுக்க வேண்டு மெனவுமிருக்கின்றது. அந்த முறையை அஸ்தி வாரமாக வைத்தே இன்றைய உபாத்தியாயர்கள் எல்லாம் பார்ப்பனர் களாயிருக்கிறார்கள். இவர்களிடத்தில் படிக்கும் பிள்ளைகள் 100க்கு 90 பெயர்கள் தலையெடுக்க முடியாமல் போகின்றது. ஆகையால் இந்த முறைகள் நடைபெறும்படி யனுமதித்து கொண்டிருப்பதா? அல்லது இவைகளையழிப்பதுதான் நமக்கு விடுதலையை அளிக்குமா? என்பதை யோசனை செய்து பாருங்கள்.
477 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
செல்வம்
நமது பொருளாதாரத் துறையை ஆராய்ச்சி செய்தோமானால்தான், நமது நாட்டில் எவ்வளவு செல்வமிருக்கின்ற தென்பதும், நமது நாடு செல்வமுள்ள நாடா? அல்லது ஏழை நாடா? என்பதும் விளங்கும். நமது நாட்டில் உள்ள ஒருவனுடைய சம்பாதனை தினம் ஒன்றுக்கு சராசரி 2 - அணாவுக்கும் கொஞ்சம் குறைந்ததாயிருக்கின்றது. ஆனால் மேல் நாட்டிலோ ஒருவனுக்கு தினம்தோறும் சராசரி ரூ. 2 வரும்படி அகப் படுகின்றது. இவ்வித நிலைமையை நாம் மாற்றவேண்டுமென எண்ணி, முயற்சிப்பதே பொருளாதார விடுதலையாகும். ஆகையால் இந்த விடுதலைக்
கும் நாம் எப்படி எந்த முறையில் வேலை செய்ய வேண்டியிருக்கின்ற தென்பதை யோசனை செய்து பாருங்கள். நம்மிடத்தில் நமக்குப் போதுமான பொருளில்லையா? இல்லாதிருக்குமானால் அதற்குக் காரண மென்னயென் பவைகளை யோசனை செய்து பாருங்கள். நாம் பொருள் சம்பாதிக்கக் கடவுளைக் கும்பிடுகின்றோமே ஒழிய எந்த விதத்தில் பாடுபட வேண்டும்? எதனால் பொருள் கிடைப்பதில்லை? என்று யோசிப்ப தில்லை. நாம் கல்விக்கு எப்படி சரஸ்வதி என்று ஒரு பெண் தெய்வத்தை உண்டாக்கி வணங்கி வருகின்றோமோ, அதுபோலவேதான் நமது நாட்டு செல்வத்துக்கும் ஒரு பெண் தெய்வமாகிய லக்ஷ்மியை உண்டாக்கி வணங்கி வருகின்றோம். ஆகையால் ஒருவன் தான் ஏழையாக யிருந்தால் தனக்கு “லக்ஷ்மி கடாக்ஷ மில்லை” என சுலபமாக எண்ணிக்கொண்டு லக்ஷ்மி கடா கஷத்தையடைய கையிலுள்ளதையும் கடன் வாங்கியும் செலவு செய்கிறான். பணக்கார னாயிருப்பவனும் தனக்கு “லக்ஷ்மி கடாக்ஷ£மிருப்பதாக நினைத்துக்கொண்டு அதற்கே தனது சொத்தை செலவு செய்து வருகிறான்.
ஓர் ஏழை ஒரு நாள் முழுவதும் கஷ்டப்படுகிறான். அவன் காலை 6 மணிக்கு கையில் மண்வெட்டியைப் பிடித்தானானால் பகல் 1மணிக்குத்தான் கீழே வைக்கிறான். கொஞ்சமேதாகிலும் ஆகார முட்கொண்டு அவன் மீண்டும் 1-30 மணிக்கு மண் வெட்டியைப் பிடித்தானானால் மாலை 6-30 அல்லது 7 மணிக்குத்தான் கீழே வைக்கின்றான். இவ்வாறு இவன் ஓயாமல் கஷ்டப்பட்டும் இவனுடைய வேலைக் குத் தகுந்த கூலியகப்படுவதில்லை. இதற்குக் காரணம் “கடவுளின் கிருபையில்லை” யெனவும் “லக்ஷ்மி கடாக்ஷ மிருந்தால் தானே முடியு” மென்பதாகவும், “தனக்கு இந்த வேலையையே செய்து பிழைக்க தலையில் பிரமன் எழுதிவிட்டான்” என்றும் கருதிக் கொண்டு வாழ்நாள் கழிய மண்வெட்டியையே நம்பியிருக்கிறான். அது போலவே சிறிதும் பாடுபடாமல் ஒருவன் பணக்காரனாயிருக்கின்றானே எனக் கேட்டால் “லக்ஷ்மி கால்போட்டு விட்டாள்” என்பதாக சொல்லுகிறான். ஆகவே இந்த இரண்டு வித நிலைமைக்கும் ஒரே காரணத்தையுரைக் கின்றார்களே யல்லாமல், நாம் உண்மையறிய ஆராய்வதில்லை. மேல் நாட்டுக்காரர்கள் தங்களுடைய அறிவை தினமும் விருத்தி செய்து கொண்டே
குடி அரசு - 19310) 478
வருகிறார்கள். பல துறைகளையும் ஆராய்ந்து, பல வித தந்திரங்களால் அத் துறைகளில் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேறிக் கொண்டே யிருக்கிறார்கள். தங்கள் தொழில் முறையை தாங்களாகவே மாற்றுகிறார்கள். ஒரு தொழிலில் இருந்து மற்ற தொழிலுக்கு தாராளமாய் பிரவேசிக்கிறார்கள். தங்கள் முன்னேற்றத்திற்கும் பின்னேற்றத்திற்கும் தங்களையே பொறுப்பாக்
கிக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள். தலைவிதியையும் நல்ல காலத்தையும் எதிர்பார்த்து சும்மாயிருந்து விடுவதில்லை. உதாரணமாக முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மோட்டாருக்கும், இப்பொழுது கண்டு பிடித்திருக் கப்பட்ட மோட்டாருக்குமுள்ள வித்தியாசங்களை நாம் கவனித் தோமானால் மேல் நாட்டுக்காரன் தொழிலில் முறையில் எவ்வளவு தூரம் முன்னேற்ற மடைந்திருக்கின்றான் என்பது புலப்படாமலிராது.
ஆனால் நாமோ ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்ட கட்டை வண்டி களினின்றும் இன்னும் நாம் சிறிதும் முன்னேற்றமடையாமல் இருக்கின்றோம். வேண்டுமானால் இரும்பு ஆணிகளுக்குப் பதிலாக வெள்ளி முலாம் பூசிய ஆணிகளை உபயோகிப்பதில் மட்டும் முன்னேற்ற மடைந்திருக்கின்றோம்.
தொழில்
தொழிலில் நாம் முன்னேற்றமடையாததற்குக் காரணம் ஆதியில் மக்களை நான்கு வருணங்களாகப் பிரித்து அதாவது பிர்ம, -க்ஷத்திரிய, வைசிய, சூத்திரரென நான்கு வருணங்களாகப் பிரித்து 100க்கு 90 பெயர் களடங்கிய ஒரு கூட்டத்தை சூத்திரர்களெனத் தாழ்த்தி 'சூத்திரர்களுக்கு வயிற்றுக்கு மட்டும் உண்ணப் போதுமான உணவிருந்தால் அதுவே அவர்களுக்குப் போது'மெனவும் “அவர்கள் மற்ற மூன்று வருணத்தாருக்கும் தங்களுடைய சரீரத்தால் பாடுபட்டு உழைக்கவேண்டும்” எனவும் எழுதி வைத்துக்கொண்டு அத்தருமங்களின்படி நாம் நடந்து கொள்ள வேண்டு மெனவும் அதனின்று தவறக் கூடாதெனவும் தவறினால் பாபமெனவும் உரைக்கப்பட்டு வந்ததோடு அரசர்களும் இந்த சட்டத்தை காப்பாற்றி வந்ததால் நாம் தொழில் விர்த்தி இல்லாமல் போனதற்குக் காரணமாகும். இவ்வித நிலைமையின் பயனாய் பணம் சம்பாதிப்பவர்கள் - சீர்படுபவர்கள்
யார் என்பதை யோசித்துப் பாருங்கள். பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர் களுக்கும் வைசியர்களுக்குமே தான் பணம் மேன்மேலும் சேருமேயல்லாமல்: இந்த நிலையில் யார் எவ்வளவு பாடுபட்டாலும் தொழிலாளிகளாகிய “சூத்திரர்” களிடம் ஒரு நாளும் பணம் சேராது என்பதோடு வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட உணவு கிடைப்பது கஷ்டமாகத்தான் இருக்கும்.
இவ்வித நிலையால்தான் மக்கள் தங்களுடைய முயற்சியில் கவலை யற்றவர்களாக இருந்து கடவுள் மீது பொறுப்பைப்போட்டு அடுத்த ஜன்மத்
தில் பணக்காரர்களாக பிறப்பதற்குத் தங்கள் குறைந்த வரும்படியுமான
479 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டியவர்களாயிருக் கிறார்கள். கடவுள் உணர்ச்சியே தான் அவர்கள் விடுதலையடைவதைத் தடுத்துக்கொண்டேயிருக்கிறது.
ஆகவே பொருளாதாரத் துறையில் நாம் விடுதலை அடைந்து முன்னேற்றமடைய வேண்டுமானால் நாம் கவலையுள்ளவர்களாகி நம்மை ஏமாற்றி “சூத்திரர்”களாக்கியவர்களுடன் சண்டை போட்டேதான் தீர வேண்டும். ஆகையால் நாம் அதற்காகக் கவலையில்லாதிருந்தாலும் அக் கட்டுப்பாட்டை ஒழிக்காமலிருந்தாலும் ஒரு நாளும் முன்னேற முடியாது.
“நமது பெரியவர்கள் எப்படி இருந்து வந்தார்களோ அப்படியே இருக்க வேண்டுமேயொழிய புதிய மாதிரியில் நடக்கலாமா?” என்று நாம்
கருதிக் கொண்டிராமல் “இரண்டுஅணாவிலிருந்து இரண்டு ரூபாய் எவ்வாறு சம்பாதிக்க முடியும்? ஏன் சாம்பாதிக்க முடியாது? மற்றவர்கள் எப்படிச் சம்பாதிக்கிறார்கள்? மற்ற நாட்டிலுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படிச் சம்பாதிக்கின்றார்கள்?'” என்பவைகளை யோசனை செய்து முன்னேறும் மார்க்கங்களை கண்டுபிடித்து அனுஷ்டானத்திலும் அதாவது நடை முறை யிலும் கொண்டு வந்தால்தான் பொருளாதாரத் துறையில் முன்னேற முடியும்.
ஒருவன் இரண்டு மாடுகள் ஒரு வண்டி ஒரு மனைவி இரு குழந்தை களையுடையவனாக இருந்தால் அவன் வண்டியோட்டி சம்பாதிக்கும் பணத்தால் 6 பெயர்களைக் காப்பாற்ற வேண்டியவனாக இருக்கின்றான். இவ்வாறு கஷ்டப்படுவதினின்றும் விடுதலையடைய வேண்டுமானால் இயந் திரங்களினால் எவ்வளவுக் கெவ்வளவு நம்முடைய வேலையைச் சுருக்கிக் கொண்டு குறைந்த நேரத்தில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக விர்த்தி செய்ய முடியுமோ அவ்வாறு செய்தால் மட்டுந்தான் நாம் விர்த்தியடைய
முடியும்.
நமது நாட்டு மக்கள் தங்களுடைய மனிதத்தன்மையை இழந்து விட்டதினால் தான் நமது நாடு இன்று இம்மாதிரியான கேவல நிலைமை யிலிருப்பதற்குக் காரணம். ஏனெனில் நமது நாட்டு மக்களில் 100க்கு 3 பெயர்கள் உயர்ந்தவர்களெனவும், பூதேவர்களெனவும், பிர்மாவின் முகத் திலிருந்து உற்பத்தியானவர்களெனவும், பிராமணர்களெனவும் கூறப்பட்டு பாக்கியிருக்கப்பட்ட 97 பெயர்களும் கீழ் ஜாதி மக்களெனக் கருதப்பட்டு
வருகின்றது. இந்த நிலைமை இந்தியாவில் ஜனித்த ஒரு காரணத்தி னாலேதான் நமக்கு எற்பட்டது. மற்ற நாடுகளில் இவ்விதமான அதாவது நிலைமையை அனுசரித்து கீழ் ஜாதியெனக் கருதப்படுவதில்லை. நமது மக்களுக்கு பாரம்பரியமாகவே மானமில்லையெனவும், மனிதத் தன்மையே கிடையாதெனவும் கூறுவதற்கு இந்த ஒரு காரணமே போதுமானதென
குடி அரசு - 19310) 480
நினைக்கின்றேன். மேலும் நாம் பெண்களை மிக்க இழிவாகவும். கெளரதைக் குறைவாகவும் நடத்துகிறோம். நமக்கு வேலையைச் செய்ய சந்தைக்குச் சென்று மாடுகளை விலை கொடுத்து வாங்கி வந்து, வேலை வாங்குவது போலவேதான் நாம் பெண்களையும் நடத்திக்கொண்டு வருகின்றோம். “புருஷன் வெளியில் வேலை செய்தால், பெண்ஜாதி அப்புருஷனுக்கு அடிமையாயிருந்து வீட்டில் வேலைசெய்தும், பிள்ளைகளைப்பெற்றும், அவர்களைக் காப்பாற்றுவதுந்தான் பெண்களின் வேலை'யெனவும், கடமை யெனவும் நாம் கருதி வருகின்றோம். நாம் மானங்கெட்டவர்களெனக் கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். கடவுள் சிருஷ்டியில் பெண்களை அடிமைகளாகவும். மனிதத் தன்மைக்கு லாயக்கற்றவர்களாகவும், சிருஷ்டிக்கப்பட்டதாய்க் கருதுகிறோம். இது இந்தியாவில் தானேயொழிய வேறு நாடுகளில் கிடையவே கிடையாது. நம் பெண் மக்கள் இவைகளி லிருந்து விடுதலையடைய வேண்டுமானால் நமது பெண் மக்களுக்குபோதிய தைரியமும் வீரமும் வேண்டும். இவ்விரண்டும் அவர்களிடத்தில் இல்லை.
நாம் ஆண்களும் பெண்களும் இந்தியாவில் பிறந்தவர்கள் என்று பெருமை யாக சொல்லிக்கொள்கிறோமேயன்றி வேறு ஒருவிதமான யோக்கியதையும் நம்மிடத்தில் இல்லை. தீண்டப்படாதார் என்பவர்களின் நிலைமையோ சொல்லத்தரமன்று. அவர்கள் 5, 6 கோடி மக்களாய் இருந்தும் ஒரு குடியான வனுக்கு 1008கால்நடைகள் ஆடு மாடுகள் இருப்பதுபோல் இந்திய மேல்ஜாதி மக்களுக்கு 56 கோடி மனிதக் கால்நடைகள் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒரு காரணமே போதும் இந்தியர்கள் அயோக்கியர்
கள் என்பதற்கும் அடிமையாய் நடத்தப்பட தகுதி உள்ளவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும்.
நமது வீரம்
நாம் இங்குதான் “பாரத வீரர்கள் பீமன் சந்ததிகள்” என்று மேடை யேறிப் பேசிக்கொள்ளுகின்றோமேயொழிய ஒரு அராபி தேசத்தவனை நடுத்தடத்தில் கண்ணில் பார்த்துவிட்டால் நமது மக்கள் ஆண் பெண்: அடங்களும் நடுங்குகின்றன. காலுடன் மூத்திரம் பெய்ந்து கொள்ளுகின்றன. வெளி தேசத்திலிருந்து எவன் வந்தாலும் அவனைக் கண்டால் இப்படித்தான் நடுங்குகின்றோம்.
வெளிநாட்டுக்காரன் இங்கு வந்து சம்பாதித்துப் போவதற்குக் காரணமே நமக்கு வீரமும் நாணையமும் அற்ற தன்மையேயாகும். நமது கிராமங்களில் ஒரு அராபி தேசத்துக்காரன் 4 ரூபாய் பெரும்படியான ஒரு சால்வையை 8 ரூபாய்க்கு கொடுத்துவிட்டு 6 மாதம் பொருத்து வந்து பணம் கேட்டால் வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து சங்கராச்சாரிக்குக் காணிக்கை கொடுப்பது போல் பய பக்தியுடன் கொடுத்து விடுகின்றோம். அவனைக் கண்டால் நடுங்குகின்றோம். உள்ளூர்வாசியிடம் கடன்பட்டிருந்தாலோ.
481 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
அவனுடைய கடனைக் கொடுக்க மறுப்பதல்லாமல் “பண்ணுவதைப் பண்ணு” என்றும் சொல்லுகிறோம். அயலூரானென்றால் நடுங்குகின்றோம். இதற்குக் காரணமென்ன? ஏனெனில், நமது தைரியம் அவ்வளவில் தானிருக் கின்றது. மற்றும் ஓர் உதாரணம் என்னவென்றால் ஒரு ரயில் வண்டியில் ஆப்கன் தேசத்தான் ஒருவன் இருந்து அவ்வண்டி முழுமையும் காலியாக யிருந்தாலும் கூட நாம் அவ்வண்டியில் ஏற மாட்டோம். நாம் பத்துபெயர்கள். வரை ஒரு அறையிலுட்காந்து அவ்வண்டியில் இடமில்லாதிருந்த போதிலும் கூட வடதேசத்தான் ஒருவன் தைரியமாக அங்கே வந்து உட்காருவான். நாமும் உடனே வண்டியைக் காலி செய்து விடுவோம் .
ஆனால் நாம் காளி,வீரன்,கருப்பன், முனியன், சடையாண்டி முதலிய
“வீரம் பொருந்திய தெய்வங்களை” கும்பிடுகிறவர்களாகவுமிருக்கிறோம். எதற்காக கும்பிடுகிறோம் என்றால் அத்தெய்வங்களுக்குள்ள தைரியம் நமக்கும் வர வேண்டுமெனவேதான் என்கின்றோம். ஆணால் நாம் அதனால். தைரியமுடையவர்களாக வாகின்றோமா என்று பார்த்தாலோ, அப்படியு மில்லை. நமது தைரியமெல்லாம் முதலில் “அடி பார்க்கலாம்” என்பதிலும் அடி விழுந்தால் “ஓடுவதற்குள் என்ன அவசரம்” என்பதிலேயேதான் இருக்கின்றது. யார் அடித்தாலும், திருப்பியடிக்கக்கூடிய நிலைமையில் நாமின்று இல்லை.
முயற்சி
முயற்சி விஷயத்தில் மேல் நாட்டாரோ “இமயமலை உச்சியைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றும் “அதிவேகமாகப் பறக்க முயற்சிக்க வேண்டு” மென்றும், அவ்வித முயற்சியினால் மரணமடைந்தாலும் பரவாயில்லையென
வும் மேல் நோக்கிக் கொண்டே சென்று கொண்டி ருக்கிறார்கள். மேலும் நம்மை சுலபத்தில் எவ்வாறு அடக்க முடியும். எவ்வாறு நிரந்தரமாய் அடிமை கொண்டு இருக்க முடியுமென்பதற்குறிய மார்க்கங்களை ஆராய்வதிலுமிருக் கின்றார்கள். ஆனால் நமது இந்தியா விலோ ஒன்றுமே இல்லை. ஏனெனில் தைரியமும், வீரமும், நமக்கில்லை. உதாரணமாக, ஒருவன் ரூபாய் 400, ரூபாய் 500 லஞ்சம் முதலிய செலவுசெய்து ஒரு லைசென்ஸ் வாங்கி துப்பாக்கிவாங்கி இருந்தாலும் அந்தத் துப்பாக்கியின் குதிரையானது கெட்டுப்போய் குதிரையை கம்மாளனிடம் கொடுத்துவிட்டு கட்டையை மூலையில் வைத் திருக்கும் பொழுது கூட நமது குழந்தைகள் தற்செயலாய் அந்தத் துப்பாக்கி யிருக்குமிடத்திற்கு சென்று விட்டாலோ உடனே “துப்பாக்கி! துப்பாக்கி! கிட்டபோகாதே போகாதே” என்று சத்தமிடுகின்றோம். ஏன்? நமக்கு பயமே அதிகமாயிருக்கின்றது. தைரிய உணர்ச்சியென்பது சிறிதுமில்லை. இதனால் நமது அறிவு எவ்வளவு தூரம் முதிர்ச்சியடைந்திருக்கின்றதென்பது புலப் படாதிராது. நாம் வீணாய் “நாளை” என நாட்களை கழித்துக்கொண்டு தான் செல்லுகின்றோமேயல்லாது வேறில்லை. விஷயங்களை உணரக்கூடிய சக்தி
குடி அரசு - 19310) 482
நமக்கில்லை. அப்படி யாராவது உணர்ந்து சொல்ல வந்தாலும், “நமது முன்னோர்கள் எவ்வளவு பெரியவர்கள். அவர்களுக்குத் தெரியாத சங்கதியா இவர்களுக்குத் தெரிந்து விட்டதா? இவர் நேற்று வந்த பயல்தானே.அவரை: விடவா இவன் பெரியவன்?” என உரைப்பதிலிருக்கின்றோம்.
இதற்குக் காரணம் என்னவென்றால் நமது அடிமைத்தனம் நம்முடைய தலையின் மீது ஏறி, உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. அது நமது அறிவை கூரில்லாமல் செய்துவிட்டது. நமது நாட்டிலிருக்கக் கூடிய “அறிவாளிகளும்,” *தீர்க்கதரிசிகளும்,” 'கவிவாணர்களும்,” “தெய்வத் தன்மை பொருந்திய வர்களும்” பழைமையைக் குரங்குப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைமையிலிருந்து அவர்கள் சிறிதேனும் நழுவுவார்களேயானால் அவர்: களுடைய கவிகளை அரங்கேற்ற முடியவே முடியாது. அவர்கள் தீர்க்கத் தரிசிகளாகவு முடியாது என்பதே.
மக்கள் ஒவ்வொன்றையும் யோசனை செய்து யுக்தியை செலுத்தி, புதிது புதிதாக ஒவ்வொன்றையும் கண்டு பிடிப்பதற்குத்தான் ஆராய்ச்சி எனக் கூறப்படும். ஆனால் நாமோ நமது முன்னோர்கள் என்ன செய்து கொண்டி ருந்தார்க ளென்பதை ஆராய்ச்சி செய்வதிலும், அதை நிலை நிறுத்த என்ன செய்யவேண்டுமென்பதை ஆராய்வதிலுந்தான் ஆராய்ச்சி துறையில் இருந்து வருகின்றோமேயல்லாது, அதாவது பின்னால்தான் திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறோமேயொழிய, முன்னோக்கி பார்ப்பதே இல்லை. ஆனால், மேல்நாட்டுக்காரனோ பின்னோக்குவதே கிடையாது. அவன் எப்பொழுதும் முன்னோக்கிய பார்க்கின்றான். அவன் ஏதாகிலும் ஒன்றைப் புதிதாக கண்டு பிடித்தால் மேன்மேலும் ஆராய்ச்சி செய்து 1930-ல் இப்படி இருந்தால் 1940-ல் இது எப்படி இருக்கும்? 1950ல் எப்படி இருக்கும்? 1960 ல். எப்படியிருக்கும்? என்பதையே அறிந்து கொள்ள முயற்சிக்கின்றான்.
இதுதான் நமக்கும் அவர்களுக்குமுள்ள வித்தியாசம். உதாரணமாக ஒரு போர்டு மோட்டார் வண்டியையெடுத்துக் கொள்ளுங்கள். 20 வருடங் களுக்கு முன்னிருந்த ஒரு போர்டு வண்டியின் உருவம், இப்பொழுது எப்படியிருக்கின்றதென்பதைக் கவனித்துப் பாருங்கள். எல்லாம் புதுமாதிரி, எவ்வளவோ செளகரியங்களமைத்திருக்கின்றான். மேலும் அப்பொழுது மணி ஒன்றுக்கு 18 மைல் சென்றால், இப்பொழுது 90 மைல் வீதம் செல்லு கின்றது. ஒரு காலன் பெட்ரோலுக்கு அப்பொழுது 15 மைல் தூரம் சென்றால். இப்பொழுது 30 முதல் 40மைல் தூரம் செல்லுகின்றது. மோட்டாரில் காணப்படும் கோளாறுகளை குறைத்துக் கொண்டே முன்னேறிக்கொண்டு வருகின்றான். அவனுக்கு மனிதத் தன்மை, உணர்ச்சி, ஊக்கம், முயற்சி. கவலை ஆகியவைகளிருக்கின்றன. நமக்கோ அவைகளில்லை.ஆகையால் தான் நமது நாடு முன்னேறவில்லை. எது எடுத்தாலும் நமது நாட்டில் “பழைமை” வந்து குறுக்கிடுகின்றது. நமது நாட்டு மக்களில் மோட்டாரையே
483 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பாராத மக்களுமிருக்கின்றார்கள். தவறி ஏதாவதொரு மோட்டாரை பார்த்து விட்டாலோ “ரயில் வண்டி அறுத்துக் கொண்டு வந்து விட்டது” என சொல்லக் கூடியவர்களுமிருக்கின்றார்கள். இவைகளுக் கெல்லாம் காரணம் என்ன? நமக்குக் கவலை,ஊக்கமில்லை, முயற்சியுமில்லை, முற்போக்கடைய ஆசை யுமில்லை. நாடு முற்போக்கடைந்து விட்டால் சோம்பேறிகளுக்கு இட மிருக்காது என்பதுதான். நாம் ஒவ்வொன்றுக்கும் புராணக்கதைகளை: யொப்பிட்டு, திருப்தியடைகிறோம்.
நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பவைகளில் முதன்மையானது, நமது புராணங்களிலும் மதக் கொள்கைகளிலும் நம்பிக்கை வைத்திருக்கும் மூடப்பழக்கவழக்கங்களுமேயாகும்.
சுகாதாரம், ஆயுள்
இந்த கிராமத்தில் சுமார் 1000, 1500 வீடுகளிருக்கின்றன. இவ்வூர் வாசிகளிலநேகர் பெரிய பணக்காரர்களாகவுமிருக்கின்றார்கள். அப்படி யிருந்தும் உங்களுடைய தெருக்கள் எப்படியிருக்கின்றன? பார்த்தீர்களா? எவ்வளவு அசிங்கம்? எவ்வளவு குப்பை? எவ்வளவு துர் நாற்றமுடைய தாயிருக்கிறது? இவ்வித நிலைமையிலிருந்தால் நமக்கு காயலா வருவதற்கு யாரைக் கேட்கவேண்டும்? நமது நாட்டு மக்களின் சராசரி வயது ஒவ்வொரு வனுக்கும் 24 தான் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் மேல் நாட்டில் ஒவ்வொருவனுக்கும் சராசரி வயது 45 என்பதாக சொல்லுகிறார்கள். இதற்குக் காரணமென்ன? அங்கு “இயமன்” இல்லையா? நமது நாட்டு “இயமன்” அவர்களிடம் சிறு வயதில் செல்லுவதில்லையா? அவனுக்கு நம்மிடம்தானா. சதாவேலை இருக்கின்றது? என்று யோசித்துப் பாருங்கள். நமது நாட்டு மக்களிறந்துவிட்டால் உடனே “நாம் என்ன செய்வது” “அவனுடைய சீட்டை பிரம்மதேவன் கிழித்துவிட்டான். விதி முடிந்தால் யார் என்ன செய்ய முடியும்?” என சொல்லிவிடுகிறோம். ஆனால் மேல் நாட்டானோ அப்படி இல்லை. அவன் யாராகிலும் காலராவில் இறந்துவிட்டால், உடனே ஆகாரம், தண்ணீர், காற்று முதலியவைகளை கவனித்து, ஆராய்ச்சி செய்து தக்க முறை களை கண்டுபிடித்து மற்றவர்கள் சாகாமல் இருக்க பாடுபடுகின்றானே யொழிய, நம்மைப்போல் ஓங்காளியம்மனைக் கும்பிடுவதில்லை. நமது மதராஸைப் பொறுத்தவரையிலும் ஒரு உதாரணம் என்ன வென்றால், ஒரு தடவை சென்னையில் 15 நாட்கள் வரையிலும் காலரா இருந்ததினால், உடனே ஒருமீட்டிங்கில் “ஹெல்த் ஆபிசர் வேலைக்கு லாயக்கு இல்லை” என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். “ஹெல்த் ஆபிஸரும் அதற்குக் தக்கவாறு பதில் சொல்லி தனது முயற்சியில் 15 நாள் பொறுத்தாவது அடியோடு நிறுத்தப்பட்டதை எடுத்துக் காட்டினாரே அல்லாமல் கடவுள் செயலுக்கு நான் என்ன செய்ய முடியுமென்பதாக உரைக்கவேயில்லை. அவர் அந்த வியாதியை நீக்குவதற்குரிய மார்க்கங்களை ஆராய்ச்சி செய்து
குடி அரசு - 19310) 484
அவ்வியாதியை அறவே நீக்க முயற்சிக்கின்றாரேயல்லாது எல்லாப் பொறுப்பையும் கடவுளின் தலை மீது சுமத்திவிட்டு, சும்மா இருந்து விடுவ தில்லை. நமது நாட்டு மக்கள் நோய் வந்தால் டாக்டரை அழைத்து வைத்யம் செய்வதற்குப் பதிலாக ஆடு, கோழி முதலியவைகளை அறுத்து பொங்க லிட்டு சாமியை கும்பிட்டு விட்டு பேசாதிருந்து விடுகின்றோம். இவ்வித நிலமையில் நாம் இருந்து கொண்டு “விடுதலை” “விடுதலை” யெனப் பெருங் கூச்சலிடுவதில் மட்டும் என்ன பயன்? நமதுமக்களுக்கு வேண்டிய கல்வியை ஊட்டிபெண் மக்களுக்கும் சுகாதாரத்தையும் அதன் அவசியத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களை சுத்தமாக இருக்கும் படி செய்து வந்தால் சுகாதார விடுதலை அடைவோமா? அல்லது அவர்களை கவனியாமல் எல்லாம் கடவுளின் தலையில் சுமத்தி சாமியைக் கும்பிட்டுக் கொண்டு உட்கார்ந்து இருப்பதால் விடுதலைய டைவோமா? என்பதை சிறிது யோசனை செய்து பாருங்கள்.
நமது நாட்டு கர்ப்பஸ்திரீகளில் 100க்கு குறைந்தது 10 பெயர்களாவது இறந்து விடுகின்றார்கள். அப்பொழுது “நாம் அவள் கருத்தரித்த நேரம் அப்படி யிருக்கிறது. அவள் புருஷனுக்கு இரண்டு பெண்டாட்டி யோகம் இருக்கின்றது. அதற்கு நம்மால் என்ன செய்ய முடியு'மென்பதாக மட்டும் உரைத்து, திருப்தியடைந்து விடுகிறோம். வியாதிகளைத் தடுத்துக் கொள்ளக் கூடிய அறிவை நாம் மக்களுக்குப் புகட்டவேண்டும். அதற்குரிய சுகாதார வைத்திய, மருத்துவ, கல்வி ஸ்தாபனங்களை நமது நாட்டில் பரப்ப வேண்டும். ஆனால் நமது நாட்டில் உள்ள செல்வவான்களும், நாட்டு கோட்டை செட்டிமார்களும் தங்களுடைய செல்வத்தைக் கோயில்கள் கட்டுவதிலும், கும்பாபிஷேகங்கள் செய்வதிலும், செலவழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்களே யல்லாது மக்கள் முன்னேற்றத்திற்குரிய மார்க்கங்களில் செலவிடத் தயாராக இல்லை. இத்தகைய இவர்களு டைய செய்கையால் ஒரு சாரார் மட்டும், ஒரு கூட்ட மட்டும் பிழைப்பதற்கு வழி யேற்படுகிறதேயன்றி, எல்லா மக்களுக்கும் அந்தப் பொது ஸ்தாபனம் உபயோகப்படுவதில்லை. மேல் நாட்டு செல்வவான்௧ளோ அப்படியில்லை. அவன் எல்லோருக்கும் உதவும் படியாக கல்விச் சாலைகளையும், ஆஸ்பத் திரிகளையும் ஸ்தாபித்து பொதுமக்களுக்குப் பயன்படும்படியான முறையில் உதவுகின்றான். நமக்கோ அவ்வித உணர்ச்சி கொஞ்சமேனும் கிடையாது. நமது மக்கள் விடுதலையடைய வேண்டுமானால் நாம் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து கொண்டு வந்தால் தான் முடியுமேயன்றி வெறும் கூச்சல் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் ஒரு நாளும் மக்களுக்கு விடுதலை கிடையவே கிடையாது.
485 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
பெண்கள் விடுதலை
நமது நாட்டுப்பெண்களை அடிமைகளைப் போலவும், மாடுகளைப் போலவுமே நாம் நடத்திக் கொண்டு வருகின்றோம். பெண்களும் தங்களை: அடிமைகளென்றுதான் நினைத்துக் கொண்டு வருகின்றார்கள். பெண்கள் அவ்வித நிலைமையிலிருந்து விடுதலையடைய வேண்டுமானால், நாம் அவர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியுண்டாக்கிக் கொண்டும், ஊட்டிக் கொண்டும் வரவேண்டும். பெண்கள் ஆண்களின் அடிமையல்ல என்றும், அவர்கள் ஆண்களின் சிநேகிதர்களேயாவர்கள் என்றும் கருதும்படி நாம் அவர்களுக்கு விஷயங்களை எடுத்துக்கூறி அவர்களது உரிமைகளை அடைய வசதியளிக்க வேண்டும். வாயளவில் எழுத்தளவில் மட்டும் உரிமைகளளிப்பதாக உரைப்பதில் பிரயோஜனமில்லை. இப்பொழுது நமது இந்தியாவில் 35 கோடி மக்களிருக்கின்றார்கள். பெண்களையும் நாம் மக்களென நினையாமலும் அவர்களுடைய உரிமைகளை நாம் அவர்க ளுக்கு வழங்காமல் அவர்களை அடிமைகளென்று கருதி. நடத்திக்கொண்டு வந்தால், அப்பொழுது 171, கோடி மக்கள்தான் இந்தியாவில் மனிதர் களெனவும், பாக்கி 177, கோடி மக்கள் மிருகங்களெனவும் தான் கூற வேண்டும். நாம் அவர்களுக்கு வேண்டிய கல்வியை புகட்டாமலும், அறிவு வளர்ச்சிக்கான முறைகளில் அவர்களுக்குச் சுதந்திரமும், விடுதலை: யுமளிக்காமலும், அவர்களை வெறும் சட்டி சுரண்டிகளாகச் செய்து விட்டோம். சுதந்திரத் தாய்மார்களாக நமது பெண்களிராவிட்டால் அவர்களது குழந்தைகளும் சுதந்திரமில்லாதவர்களாகவேதானிருப்பார்கள்.ஆகையால், பெண்களுக்குத்தான் நாம் முதன் முதலாக விடுதலையளிக்க வேண்டும்.
விதவைகளின் முன்னேற்றம்
விதவைகளை நாம் இன்னாட்டில் ஒன்றா சிறைப்படுத்தி அடிமை களாக இருக்கவும், இல்லாவிட்டால் விபசாரிகளென இருக்கவுந்தான் இந் நாட்டில் இடமிருக்கிறது. ஆனால் புருஷர்களையோ நாம் அவ்வாறாக நினைப்பதேயில்லை. “அவனுக்கென்ன ஐயா! அவன் ஓர் ஆண்பிள்ளை, அவன் ஈக்குச் சமானமானவன் எந்த இடத்துக்கும் போகலாம், என்னமும் செய்யலாம்” என தைரியமாக உரைக்கின்றோம். விதவைகளை மட்டும் நாம் பலவந்தப் படுத்தி, ஜெயிலில் வைத்திருப்பது போல் வைத்து, அவர்களை வெளியேவிடாமல் காவல் செய்து வருகின்றோம். இது ஒருக்காலும் நியாயமாகாது. மேலும், “கடவுள் செய”லெனவும் ஒரு காரணத்தைக்காட்டி அவளைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டியவர்களாகின்றோம். அவள் சிறிது மீறி நடந்துவிட்டால் உடனே அவள் “விபசாரி” என சுலபமாகவே கூறிவிடுகிறோம். இயற்கைத் தத்துவங்களுக்கு ஆளாகாமல் இருப்பது என்பது இவர்களுக்கு விரோதமான காரியங்களால்தான் முடியும். ஆகவே ஒரு மனித ஜீவன் இயற்கை உணர்ச்சிக்கு விரோதமாய் இருப்பது என்பது
குடி அரசு - 19310) 486
கொடுமையான காரியமாகும். விதவைகளால் நாட்டுக்கு வெகு தொல்லை. மனித சமூகத்திற்கு வெகு கவலையானதாகும். ஒரு குடும்பத்தில் ஒரு விதவையிருந்தால் அக்குடும்பத்திற்கு எப்படியும் இழிவு ஏற்பட்டே தீரு கின்றது. விதவைத் தன்மையைக் காப்பாற்றுவது பெரிய கஷ்டமாகத் தானிருக்கும். ஆகையால் பெண்கள் விடுதலையிலும், கைம்பெண்களின் விடுதலையேமிக முக்கியமானதாகும். ஆகையால் அவர்களுக்கு உடனே விடுதலையை அளியுங்கள். விடுதலையளிப்பதாக உரைப்பதில் மட்டும் பிரயோஜனமிருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இங்குள்ள வாலிபர்
கள் யாவரும், ஒன்றாகச் சேர்ந்து, இனி “விதவைகளையேதான் விவாகம் செய்து கொள்ளுவோம்” எனத் தீர்மானித்து, விதவைகளையே விவாகம் செய்து கொள்ள முன்வர வேண்டும். இது ஒருவகுப்பாருக்கு மட்டும் நான் கூறுவதாக என்ன வேண்டாம். எல்லா ஜாதியாருக்குமே இது உரைக்கப் பட்டதாகும்.
குறிப்பு:22-06-1931அன்றுதிண்டுக்கல் அருகிலுள்ள சித்தயங்கோட்டையில். மக்கள் விடுதலை சேவை சங்க திறப்பு விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 28.06.1931
487 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 12
OUBEHAFTEO வாருன்
ஆஸ்பதமான ஆனந்த பாஷ்யம்
இடமான, பற்றுக்கோடான
ஆனந்தக் கண்ணீர்
தாரதம்மியம் மூர்த்தண்ணியமாக
ஏற்றத் தாழ்வு ஊக்க மிகுதி
யாதாஸ்து யாதாஸ்து
அறிக்கை, குறிப்பு அறிக்கை, குறிப்பு முதுமைக்காலம்
விருத்தாப்பியம் வேறது
வாய்ப்பு இணை, ஒப்பு.நிரப்பல்
பர்த்தி
பிரக்யாதி
நன்கு அறியப்படுதல், கீர்த்தி, பொருள், விளக்கம் அரிசிபிச்சை
தாத்பர்யம் உபதானம்
பயிற்சி உடலுழைப்பு முகம் காட்டல், முகம் பார்த்தல். விளையாட்டு
தற்பித்து
சரீரப் பிரயாசை முகாலோபம் கிரீடை
பத்ததி
ஒழுங்கு, வழக்கம்
குடி அரசு - 19310)