Kudi Arasu — 1930, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1930-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 11
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1930-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 344
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
வேகம்வபற்றது பண்யாட்டுப்புரட்சி
“தீண்டாமை என்னும் விஷயத்தில் இருக்கும் கொடுமையும் மூடத்தனமும் யோசித்துப்பார்த்தால் அதை மன்னிக்கவோ அலட்சியப் படுத் தவோ நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம், இப்போதைக்கு அதற்கென்ன அவசரம் என்று காலம் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.”
“பக்தி என்பதே அடிமையைவிட மோசமான வார்த்தை அடிமை என்பது சரீரத்தால் மாத்திரம் தொண்டு செய்ய கடமைப்பட்டவனாவான். பக்தி என்பது சரீரத்தினால் தொண்டு செய்ய வேண்டியதுடன், மனத்தினாலும் செய்ய வேண்டியது.”
“எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ சமத்துவத்துக்கு இடம் இல்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கிறது”
என்ற கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
தாழ்த்தப்பட்டோரை ஏற்ற மறுக்கும் பேருந்துகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று இராமநாதபுரம் ஜில்லாபோர்டு தலைவரான ஊ.பு.அ செளந்தரபாண்டியன் அறிவித்தார். அத்துடன் தாழ்த்தப்பட்ட மாணவர் களைப் பள்ளியில் சேர்க்க மறுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். பெரியார் பாராட்டி வரவேற்றார்.
தஞ்சை ஜில்லா போர்டு தலைவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் உறுதி யான பார்ப்பன எதிர்ப்பாளராக இருந்தும்கூட அவரது எல்லா நடவடிக்கை களையும் கண்களை மூடிக்கொண்டு பாராட்ட பெரியார் தயாராக இல்லை. பார்ப்பனரல்லாதாரின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்தி அவர் பார்ப்பனர் களுக்குப் பதவி வழங்கியபோது பெரியார் கண்டிக்கத் தயங்கவில்லை.
சோதிடம், நாஸ்திகம், கலியாண விடுதலை, விபசாரம் என்ற தலைப்பு களில் கருத்தாழமிக்க தலையங்கங்கள் இடம்பெற்றுள்ள தொகுப்பு இது.
பெண்களும் ஆண்களும் குப்பாயமும் லுங்கியும் ஆன பொது உடையை அணியலாம் என்ற கருத்தை பெரியார் முன்வைக்கிறார். பார்ப்பனர். களைக் கட்சியில் சேர்க்கும் நீதிக்கட்சியின் முடிவை பெரியார் கண்டித்ததால் அதுவரை பெரியாரின் பொறுப்பில் விட்டிருந்த “திராவிடன்” நாளேட்டை நீதிக்கட்சி திரும்பப்பெற்றுக்கொண்டது.
தாலி இல்லாத திருமணங்களும் மறுமணங்களும் பெருகி பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி வேகம்பெற்ற காலமிது. வபொருனடக்கம்
- பதிப்பாளர்
குடி அரசு - 1930 @) 4 5 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
1 சோதிடம் 1
2. ஒரு யோசனை 17
3, விருதுநகரில் உண்மைச் சுயமரியாதை திருமணம் 18
4. வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் 21
5. சட்டசபை தேர்தல்: 27
6. ஏன் பார்ப்பனர் கூடாது? 30.
7. சாரதா சட்டம் 33
8. சட்டமறுப்பு இயக்கம் 35
9. கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன். வாசகசாலைத் திறப்பு விழா 37
10. மலாய் நாட்டில் சுயமரியாதைச் சங்கம் 43
11. ராஜி 44
12. காந்தியார் 48
13. கதர் 50
14. wrwenb - fumfl மிராசுதாரர்கள் மகாநாடு 51
15. தேர்தல் 11 58
16. மலாய் நாட்டு வக்கீல்களின் தேசியம்” 62
17. ஆர். கே. ஷண்முகம் 65
18. கும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 68
19. கும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மகாநாடு 74
20. கல்யாண விடுதலை 85
தேர்தல் பிரசாரம்
21.
சத்திய மங்கலத்தில் திரு. நபிகள் பிறந்த நாள் உண்மைப் பிரதிநிதிகள்
22.
23.
ஈரோடு நபிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்
24.
தேர்தல்கள்
25.
சமதர்மமும் நாஸ்திகமும் சுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும் சம்பாஷணை
26.
27.
தீண்டாதாரும் கல்வியும்
28.
தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும் கோவை முனிசிபல் நிர்வாகம்
29.
30.
31.
கேரள சீர்திருத்த மகாநாடு
32.
ராஜி முறிவு பெரிய அக்கிரகாரத்தில் சுகாதார வாரக் கொண்டாட்டம்
137
33,
141
நாகர்கோவிலில் சமதர்ம சொற்பொழிவு
34.
147
தேர்தல் முடிவின் பலன்
35.
158
36.
குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம்
163
37.
நாஸ்திகம்
170
கலெக்டர் கவனிப்பாரா?
38.
177
வைசிறாய் பிரபுக்கு வேண்டுகோள்
39.
178
40.
நீலாவதி - ராம சுப்ரமணியம் திருமண அழைப்பு
180
மந்திரிகள்
41,
181
42.
இனியாவது புத்தி வருமா?
182
திருச்சியில் நீலாவதி - ராம சுப்ரமணியம் திருமணம்
43.
187
44.
மறுமணம் தவறல்ல.
45.
கடவுளின் நடவடிக்கை
197
சிவநேயர் சிறுமை
46.
47.
விபசாரம்.
பெண்கள் சொத்துரிமை
48.
49.
குருசாமி - குஞ்சிதம்
குடி அரசு - 1930 @)
நாடார் முன்சீப்பு
221
சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதின் ஆபத்து
223
திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார்
224.
மந்திரிமார்கள்
225
பொது உடைகள்1
233
இரண்டு கேஸ் விடுதலை:
238
அரசியல் வியாபாரம்
240
ஜாதி மதப் பெயர்கொடுக்காதீர்கள்
242
திரு. பன்னீர்செல்வம்
243
கிருஷ்ணன் அர்ஜுனன் சம்வாதம்
245
உதிர்ந்த மலர்கள்
249
சித்திரபுத்திரன் விபசாரமே ஜாதிக்குக் காரணம்
250
257
“தேசீயக் கிளர்ச்சி£யும் “சீர்திருத்த” முயற்சியும்
262
கல்வியும் கல்வி மந்திரியும்
267
2
ஜாதி முறை
271
கார்த்திகை தீபம்
277
கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்
279
தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்
285
சிங்கப்பூர் கடிதம்
288
அறிவிப்பு சுயமரியாதை தொண்டர்கள் மகாநாடு
291
292
இது சொன்னது சுயமரியாதைக்காரரா?
300
யந்திரங்கள்.
301
16.16 மேனனுக்கு ஜே!
308
ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை
310
கரூரில் சுயமரியாதைப் பிரசாரம்
312
மதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே
316
மந்திரிகள் நிலை.
317
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
79. கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை
319
80. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் நன்றி கெட்டதனம்
325
81. ஆஸ்திகர்களே எது நல்லது?
326
82. வேண்டியது என்ன?
327
83. கல்யாணரத்து தீர்மானம்
331
84. பெடசி.சிதம்பர நாடார் தேவஸ்தானக் கமிட்டி மெம்பர்
332
85. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் தலைவிரி தாண்டவம்
334
86. சுயமரியாதைத் தலைவர்.
335
87. காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதை
340
88. சாமிக்கு வெடிசத்தம் பிரார்த்தனை
342
89. அருஞ்சொல் பொருள்
343
குடி அரசு - 1930 ()
வாரப்பழிப்புட = | படங னவ A உறவே ராமம், னக | எரர் பிரிவ ணக B துனி ண டே (T 1 i p g | என
வட நனி வாகா கற் சஸ் நடவும் . அல், அளகால்க அழி S நாப S Wimanly ணன: த எ அ, நல், அருந்த கள்: s சை ரி) தி கலிலி வலை i வத க ர்ச் ப்பத், உம்பர் சிங்காரம் அவர்களின் மிகவு ம்குணமுள்ளமருந்துகள் ன [மச்ரன்கிபலாரின் அப மு தப்பாம அவார்டு ளைப் Sl AR i ஹா சந்தனு இற் வதம் கவ் கல்ப் கன il கத இரதம் i bk உயி தினுள் வல வல்
மலையன் டட T LI கே கயல்:
ம) தரத்தை மரு த் டக் ன் 3 AR அனை e T et ey , க த நன வை டி. B எல்காம் அண்டு கோ
s g S e i, B s u
9 படட... QuAwaRer எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
குடி அரசு - 1930 @) 10
சோதிடம்
இந்தியாவில் இந்துக்கள் என்பவர்கள் சாமி ஆடுதல் வாக்குச் சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்கு துன்பம் சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டி சாத்தான், கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை ஸ்வாதீனப்
படுத்தல், முன் ஜன்மம் பின் ஜன்மம் உண்டெனல் இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கைக் கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும், எதிரிகளின் கேட்டிற்கு என்றும் எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை வைத்து பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பி ராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க் கின்றோம். சாதாரணமாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள். ஆகிய மூவரும் மக்களின் பேராசைக்கும் முட்டாள் தனத்திற்கும் சரிபங்கு தாயாதிகளேயாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவனு டைய ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தி யும் கிரகதோஷ பரிகாரத்திற்கு சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங்களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால் ஏற்பட்ட பயத்திற்காகவும், ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச்சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர் களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்க கடைச்சாமான்
பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள் அரைமண்டலம் நவகிரகங் களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது ஒரு கிரகத்திற்கோ ஒருசாமிக்கோ, அர்ச்சனை, எள்ளு, பருத்திக்கொட்டை முதலிய தானம், விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகியவை களையும், ஏதாவது புண்ணிய புராணம் படித்தல் முதலியவைகளையும் சொல்லிவிடுவான். இவைகளை எல்லாம் செய்வதால் மந்திரவாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக்குச் சேர்ந்து விடும்.
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இந்தப்படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம்.ஆகவே இந்த விஷயத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவைகளைப் பற்றி விசாரிக்குமுன். ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப்போம்.
அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷயங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம்,பலன் முதலாகியவைகளை மொத்தமாய் வருஷப் பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும், அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும், இஷ்ட சித்திக்கு ஏதாவது விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல்
பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் - கேள்க்கப்பட்ட நேரம், கேட்ப வரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசியனுக்கு எட்டும் நேரம், கேட்பவ ரின்
தாய், தகப்பன் சகோதரம் பந்து முதலானவர்களின் பிறந்தகால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவைகளைக் கேட்டல், ஒரு அங்கத்தை தொடுதல் முதலாகிய வைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே மேல்கண்ட
எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்துப் பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆறாய்வோம்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்! ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டு கால்
நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது.
கால் தலை ஆகிய யெல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போ மானாலும் அந்த நேரத்தை சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும் என்பதை யோசிப்போம். குழந்தை
குடி அரசு - 1930 @) 12
கீழே விழுந்ததும் அது உயிருட னிருக்கிறதா? இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்தச் சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தை குறிக்க அங்கேயே அவனுக்கு கடிகாரம் வேண்டும். அந்த கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்கு பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புரமிக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும். மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களின் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள்.
ஒன்றுக்கு 226666 (இரண்டு லட்சத்து இருபத்தாராயிரத்து அறுநூற்று அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக்கானது ஐந்து லட்சம் ஜனத்துகை உள்ள சென்னை நகரத்திற்கு தினம். ஒன்றுக்கு 70 - எழுபது குழந்தைகள் - பிறப்பதாக கணக்குப் போடப்பட்டிருக்கின்றது) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில் இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்குப் பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால்
நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம் பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகிறது. ஆகவே இந்த 33 குழந்தைகளுக்கு மாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க
முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப
தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்கு போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.
சாதாரணமாய் ஒரு ஜாதகம் என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாளிகை) அந்த சமயத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகிய
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வைகளைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2-ந் தேதி புதன் கிழமை காலை சுமார் 10 7, மணிக்கு விருச்சிக
லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டு சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லிவிடக் கூடும் என்பதே அநேகமாக ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 7, நாளிகை உடையதாகும். இந்த ஐந்தே கால் நாளிகைக்குள் அதாவது 126 நிமிஷ
நேரத்திற்குள் உலகத்திலே20160/இருபதாயிரத்து நூற்று அறுபது குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக்கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக் கண் ணாடிப் பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள்பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும். இதுவுமொரு புறமிருக்க,
இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப் பட்ட கணக்குப் படிக்கு 4158 நாலாயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு! குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும்.
ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக மேற்படி 4158 பேருக்கும் வாழ்க்கையில் ஒரு விதமான பலன் அனுபவமிருக்க முடியுமா? அந்தப்படி இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
தவிர இந்தபலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரக்ஷிக்கிற கடவுள்களின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன்: ஜென்மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற்படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற்சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டியவைகளில் அது தவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டுப்போகும். கிரகங்களின் தன்மை யினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜன்ம கர்மத்தின்படி என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டுப் போகும். மூலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டுப்
போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற்றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர இன் நான்கும் சேர்ந்து
குழப்பிக் கொண்டிருக்க முடியாது.இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு அவசியமான பிறந்த நேர லக்கினத்தால் ஏற்பட்ட கிரகத் தன்மைப் பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்ப
குடி அரசு - 1930 @) 14
தாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரியான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப்பட்ட ஜாதகன் ஒருவனுக்கு சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்ளுவோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்ட வனுடைய ஜாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தாலொழிய ஒருக்காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது உறுதியானதாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்டதாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா?
என்றால் ஒருக் காலமும் முடியவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண்டால் சோதிடம் பொய்யாய் விடும். அன்றியும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த
இருவர்கள் ஜாதகத்திலும் “இந்த சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாய் இருப்பதின் மூலம் இருவருக்கும் அந்தக் காலத்தில் அந்த சம்பவங்களால் கொலையோ சிறைவாசமோ கண்டிப்பாய் ஏற்படாது” என்று தான் அந்த
ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படி இருக்கு மானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதையாயிருந் தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறைவாசமும் கிடைக்க முடியவே முடியா என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் ஜாதகத்தில் ஏற்கனவே இருக்கின்றபடி நடந்து தானே தீரும்.
இதற்கு சாந்தி தோஷ பகிஷ்காரம் என்பவைகள் செய்வதன் மூலமா வது ஏதாவது பலனை மாற்றி விட முடியுமா என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்ப தால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தி யாகும் என்று ஜோசியன் சொல்வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு
மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிரகங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா அல்லது அவைகள் மாறுமா என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திர மில்லாமல் இம்மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பக்ஷம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய்யென்றே தீர்மானமாகி விடும்.
நிற்க, முடிவாக எந்தக் காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம்
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?
ஜாதகபலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம்சொல்லுவது மடமையும் யோக்கியப் பொருப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்க்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்கு திருட்டுத் தொழிலில் பொருள் லாபம் கிடைக்கும்
என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அதுமாத்திரமல்லாமல் திருட்டுக் கொடுத்தவனுக்கு பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந் தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்கு பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனிடமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில் இன்னான் இன்னாரிடம் திருடு வதால் இன்ன இன்னாருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதக பலனும் இருந்தாக வேண்டும்.
ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால்
பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜன்மவினைப்பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப் பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்புவதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடியோடு. விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு
சமயம் விரிப்போம்..
குடி அரசு - தலையங்கம் - 06.07.1930
குடி அரசு - 1930 @) 16
ஒரு மோசணை
சென்ற மே மாதம் 25 தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் “ஒரு யோசனை” யென்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் துகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக இருப் பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டி ருந்தோம். அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங்களில் சுமார் பத்துப் பேர். களேதான் அதற்குச் சம்மதம் கொடுத்திருக்கிறார்கள். சுமார் முன்னூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப் பற்றி கவலையில்லை யென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள்.
நிற்க,
மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள் கண்டிப்பாகப் பக்கங்களைக் குறைக்
கக் கூடாதென்றும், செளகரியப்பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித் திருக்கிறார்கள். ஆகவே வாசகர்களின் பெரும்பான்மையோர்களுடைய அபிப்பிராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடி அரசு பத்திரிகையில் பக்கங்களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதை தெரியப்
படுத்திக் கொள்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.07.1930.
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
விருதுநகரில், உண்மைச் சுயமரியாதை திருமணம்
தலைவரவர்களே! மணமக்களே! அவர்களது பெற்றோர்களே! மற்றும் சகோதரி, சகோதரர்களே! இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையா யிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும்.
நமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரிய தென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்கு கிடைக்கக் கூடியதென்றும் கருதி இருக்கிறோம். அனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சை யெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம்.
நம்மை மகாராஜனாகவும் க்ஷமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் யோக்கிய முடையதும் உண்மை யுடையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா? நம்மி.
டம் பிச்சைக்கு வருவானேன்? தவிர வாழ்த்துவதும் அர்த்த மற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகி விடாது. வேண்டு
மானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம். ஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை உண்டு. அக்கடமை என்னவென்றால் ஆசைப்படுகின்றவனது ஆசை நிறைவேற உதவியாய் இருப்பதுதான்.
அவ்விதம் நான் ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேற நான் எவ்வளவு தூரம் உதவியாய் இருக்கமுடியும் என்பது எனக்கே தெரிய வில்லை. ஆனால் எனது நரைத்த தலையைப் பார்த்து என்னை முதலில் கூப்பிட்டு விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.
ஆகையால் இந்த சமையத்தை நிறைவேற்றிவைக்க சக்தி இல்லாது ஆசைப்படுவதை விட மணமக்களையும் மணமக்கள் வீட்டாரையும்
குடி அரசு - 1930 @) 18
பாராட்டி மணமக்களுக்கு ஏதாவது இரண்டொரு யோசனை சொல்ல உபயோகித்துக் கொள்ளுகின்றேன்.
சகோதரர்களே! தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதை கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மையானது என்று சொல்லுவேன். என்னவெனில் இந்த கல்யாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி! கட்டவில்லை.மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிக்க துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க்
கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும் அவர்: களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறி யாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி
வந்திருந்தால் அருத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.
நம்மை நாம் சூத்திரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டி
ருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரண மாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டி ருக்க
வேண்டும். அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின் றன. ஆதலால் அப்பேர்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க
முயற்சித்த இந்த மணமக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற் றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன், பாராட்டுகிறேன். பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் தாலியை! அருத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 - பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள். ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்னவென்றால் அவர்கள் தயவுசெய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் ஐந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளை யும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு
கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபை யோருக்கும்
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வெறுப்புத் தோன்றும்படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவை களுக்கு ஒழுங்கும் அவசியமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனை குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத் துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன் மாரும். இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர். களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனை யோடும் தனக்கு இஷ்டமில்லாத செளகரியமில்லாத கஷ்டத் தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது.ஆகவே இப் போதைய குழந்தை
இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளைமாற்றிவிட வேண்டும்.
தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமண மாகி விடாது.பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போ லவே பெண் களுக்கும் சொத்துரிமை உண்டு, தொழில் உரிமை உண்டு என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர் களாவார்கள்? ஆகையால் அவர்களுக்கு சொத்துரிமையும் அவசியமான தாகும். தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும்.அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.
தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.
வீட்டுவேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்கு தலைவியாய் இருப்பதும் குடும்பத்திற்கு எஜமானி
யாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்தி அவர்களுக்கு தக்க பயிர்ச்சி கொடுக்க வேண்டும்.
குறிப்பு--10.07930 இல் விருதுநகர் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில். சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 13.07.1930
குடி அரசு - 1930 @) 20
வகுப்புணாரிப் பிரதிநிதித்துவம்
இந்தியாவில் முதல் முதலாக அரசியல் கிளர்ச்சி உண்டாக்கப் பட்டதின் உத்தேசமே, இந்திய ஆட்சி உத்தியோகம் முழுவதும் ஆங்கிலே
யர் கையிலே இருப்பதால் இந்தியர்களுக்கும் இந்திய அரசாட்சியில் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டேதான் ஏற்படுத்தப்பட்டது என்பது எல்லா அரசியல்வாதிகளாலும் ஒப்பு கொள்ளப்பட்ட உண்மையாகும். யாராவது ஆக்ஷேபிப்பதாயிருந்தால் 45 ஹுத்திய அரசியல் ஸ்தாபனங்கள் என்பவைகளின் தீர்மானங்களைப் பார்த்தால் நன்றாய் தெரிய வரும். இப்படி அவர்கள் கேள்க்க வேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டதென்றால் ஆங்கில அரசாட்சியின் பயனாக இந்திய மக்களுக்கு சற்று கல்வி, அன்னிய நாட்டு வர்த்தமானம் முதலியவை
கள் மூலம் அரசியல் விஷயங்கள் அறிய வசதி ஏற்பட்டதேயாகும்.ஆகவே அவர்களது ஆசையானது அரசாட்சி உத்தியோகங்களில் புகுந்து அதை அடைவதற்கு அரசியல் ஸ்தாபனம் என்பதை ஏற்படுத்திக் கொண்டு அதன்
மூலமாய் தங்களுக்கு இன்ன இன்ன உத்தியோகங்களில் உரிமை கொடுக்க வேண்டுமென்றும், பிறகு அதில் இத்தனை இத்தனை ஸ்தானங்கள் தங்களுக்கே (இந்தியர்களுக்கே) வேண்டுமென்றும் அதற்கும் பிறகு அது இன்ன இன்ன மாதிரியில் கிடைக்கக் கூடியதாய் இருக்கவேண்டும் என்றும் கேட்கப்பட்டது போலவே அரசாங்கத்தாரும் இந்திய அரசாட்சியில் இந்தி யர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதித்து அக் கொள்கையின் பேரி லேயே நாளா வட்டத்தில் கொடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. என்றாலும் இன்னமும் அவைகள் போராதென்றும் அப்பிரதிநிதித்துவத்திற்குக் கொடுக்கப்
படும் சுதந்திரங்களும் அதிகாரங்களும் சவுகரியங்களும் போராதென்றும் கேள்க்கப்பட்டு வருகின்றது.
எனவே மேல்கண்ட மாதிரியான பிரதிநிதித்துவமும் சுதந்திரமும் மக்களுக்கு கிடைத்ததில் அவைகள் பெரும் பெரும் பதவிகளாகவும், பெரும் பெரும் சம்பள வருவாயுள்ளதாகவும், பெரும் பெரும் அதிகாரங் களுள்ளதாகவும் மக்களுக்கு அவை கவுரவமும் கீர்த்தியு முடையவை களாகவும் ஏற்பட்டு விட்டதால் அவைகள் மீது எல்லா மக்களுக்கும் ஆசை ஏற்பட்டு ஒவ்வொருவரும் அதை அடைய முயற்சி செய்ய வேண்டியதாய்
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஏற்பட்டுவிட்டது. இதன் பயனாய்ப் பதவிகள் எல்லாம் அரசியல் ஸ்தாபனங் களில் முன்னணியில் இருப்பவர்களுக்கே கிடைக்கக் கூடியவைகளாய் விட்டபடியால் அரசியல் ஸ்தாபனத்தின் மூலமாய் தங்களுக்கு கிடைக்காது என்று கருதினவர்களுக்கும் அந்த ஸ்தாபனங்களில் செல்வாக்குப் பெற முடியாமல் தடுக்கப்பட்டிருந்தவர்களுக்கும் தங்களுக்கென்று தனி ஸ்தாப னங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டு விட்டன. ஆனதினால் அதற்காக பதவி - அதிகாரம் உத்தியோகம் ஆகிய ஆசை கொண்டவர்கள் ஒரே ஸ்தாபனத்தை நம்பிக் கொண்டிருக்க முடியாமல் தனித்தனியாகப் பிரிந்து போய் தனித்தனியாக ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களானார்கள்.
இப்படி பிரிந்து தனியாக ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் தங்கள் தங்கள் ஸ்தாபனங்களுக்கு ஏதாவது ஒரு கொள் கையையும் கண்டுபிடிக்க வேண்டியவர்கள் ஆனார்கள். இதனால் அவசிய மில்லாத கொள்கைகளை உண்டாக்கவும் அவசியமான கொள்கை களை மறுக்கவும், மறைக்கவும் வேண்டிய அவசியம் அரசியல்வாதிகளுக்கு ஏற் பட்டது. ஆகவே இந்த வேலைகள் சற்று படித்தவர்களுக்கே வேண்டியிருந் ததாலும் படித்தவர்கள் பெரும்பாலோர் பார்ப்பனர்களாகவே இருந்ததாலும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் மிகச் சுருக்கமாயிருந்ததாலும் பார்ப்பனரல் லாத பொது மக்கள் பாமரர்களாயிருந்ததாலும் பார்ப்பன சூழ்ச்சியை ஜெயித்து அரசியல் ஸ்தானத்தின் உத்தியோகங்களிலும் பதவிகளிலும் பங்கு பெற முடியாத பார்ப்பனரல்லாதார்கள் அரசியல் துறையை விட்டு சமூகத் துறையின் பேரால் ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் மக்களை தங்கள் வசப்படுத்தி அரசியலில் பங்கு பெற முயற்சிக்க வேண்டியவர்களானார்கள்.
இந்தக் காரணத்தால் ஏற்பட்டதுதான் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் என்பதாகும். இந்த ஸ்தாபனக்காரர்கள் முன் கூறியதுபோல் தங்களுக்கும் ஏதாவது ஒரு கொள்கையை கண்டு பிடிக்க வேண்டியிருந்ததால் தங்களுக்கு கிடைக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் எல்லா வகுப்பு மக்களுக்கும் எண்ணிக்கைப்படி பங்கு போட்டுக் கொடுப்பதாகவும் தங்களு டன் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், சொன்னதோடு புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமானதால் அதற்கு சற்று பலம் வேண்டு மென்றுங் கருதி பிரிட்டிஷ் ஆக்ஷிக்கு உள்பட்ட சுயராஜ் ஜியம் அடைவது என்கின்ற பேரையும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கூட்டத்திலும் ராஜவிசுவாச பல்லவியும் பாடிவர வேண்டியதாயிற்று. ராஜ விசுவாசம் என்பது காங்கிரஸ் ஆரம்பித்த காலம் முதல் கொண்டு எந்தக் கூட்டத்திலும் முதல் முதல் செய்யும் தீர்மானமும் கூட்டமுடிவில் பாடும் ராஜ வாழ்த்துப் பாட்டுமாகும். ஆகையால் பார்ப்பனரல்லாதார் கக்ஷியாரும் அதையே பின்பற்ற
வேண்டியதாயிற்று.
குடி அரசு - 1930 @) 22
எனவே இந்தப் புதிய ௧௯9 எல்லோருக்கும் பங்கு கொடுக்க
சம்மதித்துப் பார்ப்பனர்களை விலக்கியதாக தெரிவித்தவுடன் பாமர மக்க ளும் படித்த பார்ப்பனரல்லாதார் எல்லோரும் இதில் சேர ஆரம்பித்தார்கள்.
இதைக் கண்ட பார்ப்பனர்கள் இக்ககியை ஒழிக்கக் கருதி இது வகுப்புத் துவேஷக் ககஷியென்றும், தேசத்துரோகக் ககஷியென்றும், உத்தி யோக வேட்டைக் கக்ஷியென்றும் தூற்ற ஆரம்பித்தார்கள். என்ன தூற்றியும் புதுக்ககஷிக்குக் கூட்டம் அதிகமாகி விட்டதால் அதை வேறு விதத்தில் ஒழிக்கக் கருதி பார்ப்பனரல்லாதாரிலே சிலர் அவர்களை அதாவது உத்தி யோகத்திற்குத் தகுதி இல்லாத ஆள்களையும் தனி சுயநல வாதிகளையும் போதுமான புத்தியில்லாத ஆள்களையும் பிடித்து மற்றொரு பார்ப்பன ரல்லாதார் S8 ஒன்றை ஸ்தாபித்து அதாவது அவர்கள் தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என்று பேர் வைத்தால் இவர்கள் அதை வேறு வார்த்தை
யில் சென்னை மாகாண மக்கள் சங்கமென்று வைத்து இதிலும் வகுப்புவாரி
பிரதிநிதித்துவம் கொடுப்பதாயும் பார்ப்பனர்களை சேர்ப்பதில்லையென்றும், கொள்கைகள் வைத்து ராஜ விசுவாசத்தை மாத்திரம் மாற்றி சங்கத்தை நடத்தினார்கள். கடைசியாக அந்தப் புதிய அதாவது சென்னை மாகாணச் சங்கத்தில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் சிலர் வகுப்புவாரி பிரதிநிதித்து வத்தைப் பலமாக வலியுருத்த ஆரம்பித்தவுடன் அச்சங்கத்தைப் பார்ப்பனர்
கள் தாங்களாகவே அழித்து விட்டு அதிலிருந்த சிலஆள்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். இதிலிருந்துதான் காங்கிரசில் ஒத்துழையாமை யில் இருந்த பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் அபிப்பிராய பேதம் வளரத் துடங்கிற்று.
சுருக்கமாகச் சொல்லுமிடத்து வகுப்புவாரி பிரதிநிதித்துவக் காரணத் தாலேயே காஞ்சீபுரம் மாகாண காங்கிரஸ் கான்பரன்சில் இருந்து நாமும் திரு எஸ்.ராமனாதன் முதலியவர்களும் சண்டை போட்டுக் கொண்டு வெளி யேறி
வந்ததாகும்.
அது முதல் இன்று வரை அவ்வகுப்பு வாதத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இதற்கு ஏற்பட்ட இடையூறு எவ்வளவு என்பது பொது ஜனங்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். திருவாளர்கள் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார், பி. வரதராஜுலு, ஆதி நாராயண செட்டியார் முதலியவர்கள் கிருஷ்ணசாமி பாவலர், குப்புசாமி, அண்ணாமலை கூட்டம் முதலாகியவர்கள் போன்றவர்களுமான பார்ப்பன ரல்லாதார்களும், “நவசக்தி” “தமிழ்நாடு” “ஊழியன்” “லோகோபகாரி” முதலிய பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும், “சுதேசமித்திரன்” “இந்து” “சுய ராஜ்யா” முதலாகிய எல்லா பார்ப்பன பத்திரிகைகளும் சேர்ந்து செய்து வந்த எதிர்ப்பிரசாரமும் பழி சுமத்தியதும் இவ்வளவு அவ்வளவல்லவென்றே சொல்லி ஆக வேண்டும்.
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேச முன்னேற்றத்திற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் மிக்க அவசியமென்று நாம் கருதியதா லேயே அதை முக்கியமாய்க் கொண்டு காங்கிரசை விட்டுப் பிரிந்து அதற் காக இந்த பத்திரிகையும் ஏற்படுத்தி, விடாமல் நாம் உழைத்து வந்ததாகும். இதற்காக வேண்டியே ஜஸ்டிஸ் கட்சியையும் ஆதரித்தோம். சைமன் கமிஷனையும் ஆதரித்தோம். அரசியல் கொள்கைகள் என்பது எதுவானா லும்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லையானால் வேண்டியதில்லை என்று எதையும் கண்டித்தோம்.
கடசியாக ஒரு வழியில் அதை அடைந்தோம். அதாவது தேர்தல்
களில் மகமதியர், கிருஸ்தவர், மகமதியரல்லாதவர்களில் (“இந்து”க்களில்? ஜாதி இந்துக்கள் தீண்டப்படாத இந்துக்கள் என்கின்ற பிரிவுகளுக்கும் நாம் கேட்டதற்கு மேலாகவே பெண்கள் என்கின்ற பிரிவுக்கும் சேர்த்துக் கிடைக்கப்பட்டிருப்பதோடு சர்க்கார் உத்தியோகங்களிலும் மேல் கண்ட வீதம் கிடைத்தும் வருகின்றது. இந்த பிரிவுகளில் விகிதம் சற்று கூடுதல் குறைச்சல் இருந்தாலும் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டாய் விட்டன.
ஆனால் எதிரிகளிடமிருந்து ஒரு வழியில் வெற்றி பெற்று விட்ட சந்தோஷம் அடைவதற்குள் இப்போது இந்த வகுப்புவாரி பிரதிநிதித்து வமானது பார்ப்பனரல்லாதார் என்கின்ற கட்சியாராலேயே எங்கு அழிக்கப்
பட்டு விடுமோ என்கின்ற பயம் நமக்கு பலமாய்த் தோன்றி கவலைப்பட வேண்டியதாய் இருக்கின்றது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கண்டு பார்ப்பனரல்லாதாரின் கட்சி முன்னணியில் இருப்பவர்களும் செல்வாக் குள்ளவர்களிலும் கல்வியுள்ளவர்கள் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.
உதாரணமாக ஒரு கிருஸ்தவர் தங்களுக்கு உள்ள வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசி எம்மையும் வைதார். ஏனையா?' என்றோம். அதற்கு அவர் “கிருஸ்தவர்களில் அநேகர் படித்து இருக்கின் றோம், எங்களின் மொத்த ஜனத்தொகை மிகக் குறைவு. ஆகவே எங்கள். பங்குக்கு மிகக் குறைவான ஸ்தானங்கள் தான் கிடைக்கும். ஆதலால் உத்தி யோகங்களில் இந்த முறையானது எங்களைக் கெடுத்துவிடும். வகுப்புவாரி கணக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்திருந்தால் கிருஸ்தவர் என்கின்ற சலுகையில் அதிகப் பலன் அடையலாம் என்றார். பார்ப்பனர்களுக்கு அவர்கள் மதம் படிக்க செளகரியம் செய்து கொடுத்திருப்பது போல், கிருஸ்தவர்களுக்கும் அவர்கள் மதம் படிக்கச் செளகரியம் செய்திருப்பதால் மத மாற்ற பலனாகவும் பாதிரிகள் பள்ளிக்கூட பலனாகவும் தாராளமாய் படித்து விடுகின்றார்கள். ஆதலால் அவர்களுக்கும் இது விரோதமாய் காணப்படுகின்றது.
அது போலவே ஒரு பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவரைக் கண்டு ஏனையா வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தலையில் கையை வைக்கப்
குடி அரசு - 1930 @ 24
பார்க்கின்றீர்? என்றதற்கு அவரும் மிக்க வருத்தத்துடன் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் தங்களுக்கு மிக்க கெடுதி ஏற்பட்டதாகச் சொன்னார். என்ன வென்றதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வந்து எங்கெங்கோ சந்து பொந்தில் இருக்கின்ற வகுப்பாருக்கெல்லாம் பங்குபோய் விட்டது என்றும். “உதாரணமாக மந்திரி கனம் முத்தயா முதலியார் உத்திரவுப்படி 12 ஸ்தானத்
தில் 2 பார்ப்பாருக்கு, 2 மகம்மதியருக்கு, 1 தீண்டதாருக்கு, 1 கிருஸ்தவர். முதலியவருக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு என்று ஏற்பட்டிருப்பதில் 6. பார்ப்பனரல்லாதார் பங்குக்கு பல வகுப்புக்காரர்கள் பங்குக்கு வந்து விடுகின்றார்கள், வன்னியர், வேளாளர், நாடார், நாயக்கர், பிள்ளை, செங்
குந்தர், செட்டியார், வண்ணான், நாவிதன், குயவர் என்று அநேகர் கிளம்பி ஜாதிமகாநாடு கூட்டி ஒவ்வொருவரும் பங்குக்கு வரும் போது நமக்கு எங்கே. இடமிருக்கின்றது? எங்கள் வகுப்பில் படித்த பிள்ளைகள் எவ் வளவோ இருக்கின்றனர். ஆதலால் இது நமக்கு பெரிய ஆபத்தாய் இருக்கின்றது. இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும்” என்றார். ஆகவே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றவர்கள் எவ்வளவு யோக்கியர்களாக. இருக்க முடியும்? என்பதை யோசித்தால் இதிலிருந்து விளங்காமல் போகாது. இந்தக் கருத்தைக் கொண்டு தான் ஜஸ்டிஸ் கக்ஷி யில் செல்வாக்கிலுள்ள
ஜாதித் தலைவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை ஒழிக்கக் கருதி “தகுதியானபடியும் பலன் தரத் தக்கபடியும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்” என்று மாற்றி விட்டார்கள். இதன்படி தகுதியும் பலனும் தரத்தக்க ஒரே ஜாதியார் பிரதிநிதிகளாக இருக்கலாம்.
மற்ற ஜாதியாரை தகுதியும் பலனும் உடையவர்களாகக் கூட ஆக்க வேண்டியது அனாவசியமாகும் என்றே ஏற்படும். இந்த சூக்ஷி வார்த்தை உண்டாக்கப்பட்ட கதையைப் பற்றி இங்கு ஒரு சிறு விபரம் சொல்லி இதை முடிக்கின்றோம். 1920ம் வருஷம் திருநெல்வேலியில் திரு. எஸ். சீனிவாசய்யங்கார் தலைமையில் கூடிய மாகாண காங்கிரஸ் கான்பரஸ்சின் போது நாமும் திரு.100. சிதம்பரம் பிள்ளையும் திரு. தண்டபாணிபிள்ளையும்
கலந்து தயாரித்து விஷயாலோசனை சபையில் வகுப்புவாரி தீர்மான மொன்று. கொண்டுவந்து பிரேரேபித்தோம். அதை திரு. VO. சிதம்பரம் பிள்ளை: ஆமோதித்துவிட்டார். அப்போது அவருக்கிருந்த செல்வாக் கினால் அதை
சுலபத்தில் தள்ளி விட முடியாமல் அவருக்கு லோக மான்ய திலகர் பேரால் திரு. கஸ்தூரி ரங்கய்யங்கார் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நாங்கள் ஒப்புக்கொள்ளாததால் அது நிறைவேறி விடும் போல் தோன்றிற்று. உடனே திவான் மாதவறாவ் என்கின்ற ஒரு பார்ப்பனரை விட்டு அப்பொழுது தான் இந்த சங்கதி தெரிந்ததாக பாசாங்கு செய்யச் செய்து இது நிறைவேறினால் சில பார்ப்பனர்கள் காங்கிரசில் நாஜீனாமா செய்து விடுவார் கள் என மிறட்டச் செய்தார்கள். என்ன செய்தும் நாங்கள் சம்மதிக்காததால் பார்ப்பனர்கள் எல்லோரும் கூடி யோசித்து வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அதாவது Commu-
nal representation என்பதற்கு பதிலாக தகுதியுள்ள பிரதிநிதித்துவம் adequate
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
representation என்று திரு. ராஜ கோபாலாச்சாரியார் திருத்தம் கொண்டு வந்து திரு.சத்தியமூர்த்தி ஆமோதித்தார். நாங்கள் எவ்வளவு பேசியும் எல்லா மகமதிய கனவான்களும் கைதூக்கி விட்டதால் திருத்தம் நிறைவேறிவிட்டது.
பிறகு தலைவர் திரு. சீனிவாசய்யங்கார் காஞ்சிபுரத்தில் கல்யாண
சுந்தர முதலியார் செய்தது போலவே நாங்கள் மறுபடியும் பொது மகாநாட்டில் ஆக்ஷபிப்போம் என்று கருதி மற்ற தீர்மானங்கள் எல்லாம் முடிந்ததும் “இது பொதுநலத்திற்கு விரோதமான தீர்மானமானதால் அதை நான் தள்ளி விட்டேன்” என்று சொல்லி முடிவுரை ஆரம்பித்து விட்டார். நாங்கள் வைதுகொண்டே வெளியேறிவிட்டோம். இப்போது பார்ப்பனரல்லாத தலைவர்களும் அதையே பின்பற்றி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் சூக்ஷி செய்து அதை ஒழிக்க முன் வந்து வெற்றி பெற்று விட்டார்கள்.
அரசியல் கொள்கைகள் எது கேடுகெட்டாலும் வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமையைக் காக்கவாவது பார்ப்பனர்களை சேர்க்க மறுப்பதுடன். இத்தலைவர்களையும் கக்ஷியிலிருந்து நீக்க வேண்டியது பார்ப்பனரல்லாத பாமர மக்கள் நன்மையைக் கோரி மிக்க அவசியமென்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
தஞ்சையில் 2 தீர்மானம் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஒன்று முன் உள்ளபடியே எல்லா வகுப்புக்கும் எண்ணிக்கையின் பேரில்
பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது.
மற்றொன்று சுயநலத் தலைவர்கள், சூழ்ச்சித் தலைவர்கள் ஆகியவர். களின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவர்களை கட்சி
யில் இருந்து விலக்குவது என்பது. பிறகு தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாது என்கின்ற தீர்மானத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயமாகும். இது சமயம் ஏமாந்தால் பிறகு பார்ப்பன ரல்லாத சாது
மக்கள் சுலபத்தில் தலையெடுக்க முடியாது என்பதை பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!
குடி அரசு - தலையங்கம் - 13.07.4930
குடி அரசு - 1930 @) 26
சட்டசயை தேர்தல்
சட்டசபை தேர்தல்கள் வேலைகள் துவக்கமாகிவிட்டது. அபேக்ஷ கர்கள் ஆகஸ்ட் முதல் தேதியில் நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்தாக வேண்டும்.செப்டம்பர் 9 தேதியில் தேர்தல் (எலக்்ஷன்) ஆனதால் நியமனச்
சீட்டு தாக்கல் செய்தவுடன் பிரசாரம் துவக்க வேண்டும். ஆதலால் அபேக்ஷ கர்களாய் நிற்பவர்களுக்கு இன்னம் சுமார் ஒன்னரை மாதங்களுக்கு ஓய்வு உரக்கம் இருக்காது. அது மாத்திரமல்லாமல் அவர்களிடம் நாணயமும் இருக்க முடியாது. அதோடு அவர்களுக்கு தங்கள் மனதிற்கும் வாக்குக்கும் செய்கைக்கும் சிறிதும் சம்மந்தமும் இருக்க முடியாது. யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து எந்த எந்த சமயத்திற்கு எதை எதைச் செய்தால்- சொன்னால் ஓட்டுக் கிடைக்குமோ அந்தபடியெல்லாம் நடந்தும் பேசியும் ஓட்டுச் சம்பாதிக்க வேண்டியதே அவர்களது எலக்ஷன் தர்மமாகும். ஏனென்றால் ஓட்டர்கள் பெரிதும் 100-க்கு 90 பேர்கள் மூடர்கள் ஆன தாலும், எஞ்சியுள்ள 100-க்கு 10ல் 7 பேர்கள் சுயநலக்காரர்கள் ஆனதாலும் மீதி 3 பேர்கள் தங்க ளால் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருப்பவர்களானதாலும் பணக் கொழுப்பு சமயோசித தந்திரம் ஆகிய இரண்டும் உடையவர்களுக்கு முதல் வெற்றியும், மேற்படி இரண்டு குணங்களை தனித்தனியே உடையவர் களுக்கு இரண்டாவது வெற்றியுமே கிடைத்து விடும். அதில் சிறிதும் சம் சயமே இருக்க முடியாது. ஏனெனில் அப்படிப்பட்ட வர்கள் மாத்திரமேதான் எலக்ஷனில் அபேகஷ்கர்களாய் நிற்க முடியும் படியாக தேர்தல் நிலைமை
அமைந்திருக்கின்றது. 1920வது வருஷத்திய சீர்திருத்தம் வருவதற்குமுன் ஒருவாறு பெருமை வேண்டியவர்களும் படித்து உத்தியோகம் வேண்டிய வர்களும் மாத்திரமே அபேக்ஷகர்களாய் நிற்க தேர்தலில் இடமிருந்தது. ஆனால் 1920 வருஷத்திய சீர்திருத்தமோ பெருமையும் உத்தியோகமும்
மாத்திரம் அல்லாமல் அதிகாரமும் லட்சக் கணக்கான பணம் வருவாயும் கிடைக்கக் கூடியதாக அமைக்கப்பட்டு விட்டதால் அதிகார ஆசையும் பணத்தாசையும் உள்ளவர்களும் சேர்ந்து அபேட்சகர்களாய் நிற்க வேண்டிய
தாய் விட்டது.
இந்த ஆசைகளை அஸ்திவாரமாகவே வைத்தே தேர்தலுக்காக பல கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு அதின்பேரால் மக்களுக்கு கூட்டு
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆசைக்காட்டி ஆள்களை சேர்த்துக் கொண்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டு காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங் களின். மூலம் அப்பார்ப்பனர்கள் தேர்தலை உத்தேசித்தே தேசாபிமானம் காட்டி மக்களை வெகு காலமாய் ஏமாற்றி வந்தது யாவரும் அறிந்த விஷயமே
யாகும்.
ஆனால் சமீபகாலமாய் தேசியத்தினுடையவும் தேசாபிமானத் தினுடையவும் யோக்கியதை வெளியாகிவிட்டதால் பார்ப்பனர்கள் தேர்தல் களில் தோல்வியையே அடைய நேரிட்டு விட்டதால் தேர்தலுக்கு நிற்க தைரியமற்று வரவர அவர்கள் தேர்தலை “சீ, அந்த பழம் புளிக்கும்” என்கின்ற முறையில் பகிஷ்காரம் செய்ய வேண்டியதாகி விட்டது. தமிழ் நாட்டைப் பொருத்த வரை காங்கிரசிற்கும் பார்ப்பனர்களுக்கும் அடியோடு. செல்வாக்குக் குன்றி வேறு விதத்தில் ஏமாற்றமடைந்தவர்களும் மற்ற கட்சிகளில் வெறுப்புங் கொண்டவர்களும் மாத்திரமே போய்ச் சேரும்படி யான ஸ்தாபனமாகி விட்டது.
இந்தக் காரணத்தால் தமிழ் நாட்டில் காங்கிரசுக்கும் தேசீயத்திற்கும் பார்ப்பனர்களுக்கும் செல்வாக்கில்லாமல் போய் தேர்தல்களில் வெறும்
சீர்திருத்தக் கொள்கையின் மீது மாத்திரம் பார்ப்பனரல்லாதார்களேபோட்டிப் போட வேண்டியதாகிவிட்டதால் அவர்களுக்குள்ளாகவே சுயநலத்தின் மீது அர்த்தமற்ற இரண்டு மூன்று ககஷிகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தத் தேர்தலிலும் போட்டிப்போட போகின்றார்கள். இப்போட்டியில் மேல்படி ககஷிகளுக்கு பெயர்கள் சொல்ல வேண்டுமானால் ஒன்று உத்தியோகத்திலி ருக்கும் மந்திரி ககஷியார் என்றும் மற்றொன்று அம்மந்திரி உத்தியோகத் திற்கு வர ஆசைப்படும் கக்ஷியார் என்றும் மற்றொன்று எந்த கக்ஷி ஜெயிக் குமோ அதில் சேரும் கக்ஷியார் என்றும் தான் பிரிக்க முடியுமே அன்றி மற்றபடி வேறு ஏதாவது சரியான கொள்கையை உத்தேசித்துப் பிரித்துச் சொல்ல இடமில்லை. ஒரு சமயம் ஒரு கக்ஷியை ஜஸ்டிஸ் கக்ஷியார் என்று ஏன் சொல்லக் கூடாது என்று கேட்கப்படுமானால் இப்போது மந்திரிகளாய் இருக்கும் இரு பார்ப்பனரல்லாதாரும் ஆளுக்கு 100,100 ரூபாய் கொடுத்து ஜஸ்டிஸ் ககஷியில் சேர்ந்து அக்கக்ஷிக் கொள்கைகளை ஒப்புக் கொண்ட வர்களேயாவார்கள். ஆதலால் மந்திரிகளும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கையை உடையவர்களே தவிர அக்கட்சியின் எந்த கொள்கைக்கும் எதிரிகளல்ல.
மற்றும் மந்திரியாக வர ஆசைப்படும் கக்ஷி என்பதற்குப் பதிலாக பார்ப்பனரல்லாதார் கி என்று சொல்லக்கூடாதோ என்று கேள்க்கப்படு மாயின் அதற்கும் இடமில்லை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் அவர்களும் மந்திரிக்கு ஆசைப்படும் கக்ஷியார்களும்! பார்ப்ப னர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்து கொண்டார்கள். அன்றியும் அத்தீர்மானத்தை ஒரு பொது மகாநாட்டில் ஊர்ஜிதம் செய்து
குடி அரசு - 1930 @) 28
கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ணமும் போய் இப்போது தாங்கள் (நிர்வாக சபையில்) தீர்மானித்துக் கொண்டதே போதும். என்று தீர்மானித்துக் கொண்டதாலும் அதை பார்ப்பனல்லாதார் க௯ஷி என்று சொல்லுவதற்கும் இடமில்லாமல் போய்விட்டது. ஆகவே இந்த ககஷி களுக்கு மேல் கண்டபடி மந்திரியாய் இருக்கும் கக்ஷி மந்திரியாய் வர: ஆசைப்படும் கக்ஷி, எது எது ஜெயிக்குமோ அதில் சேரும் ககஷி என்று தான் பெயர்கள் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த கக்ஷிகளில் இரு ககஷியார் மாத்திரம் தங்கள் தங்கள் வேலைத் திட்டங்களை ஒருவாறு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவ்விரண்டையும் அடுத்த வாரம் வெளி யாக்கி அதை
பற்றிய நமது அபிப்பிராயத்தை பிறகு வெளியிடுவோம்.
பொதுவாகச் சொல்லுமிடத்து பார்ப்பனரல்லாதாரிலேயே இப்படியாக இரண்டு ககஷி பிரிந்திருக்க வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். பொதுநலப்பொறுப்பற்ற ஆள்களின் சூகஷிகளே பார்ப்பனல்லாதார் களுக்கு இம்மாதிரி பிளவை உண்டாக்கிவிட்டது என்று சொல்வது மிகை யாகாது.
சென்ற தேர்தலில் ஜஸ்டிஸ் ௧௯9 தோல்வி அடைந்ததின் பயனாய் அது வெளிப்பட்டு பிரசாரங்கள் செய்து காங்கிரஸ் சார்பாய் இருந்த மந்திரி கக்ஷியை ஒழித்து ஜஸ்டிஸ் கக்ஷி சார்பான மந்திரி ககஷியை அமைத்து அதனிடம் பார்ப்பனரல்லாதார் கக்ஷிக் கொள்கைப் பிரகாரமே சரியானபடி வேலை வாங்கி வந்ததுடன் அம்மந்திரி க௯ஷி ஜஸ்டிஸ் கக்ஷிக்குள் அய்க்கி யமாகி விட்ட சமயத்தில் அதை அப்படியே ஜஸ்டிஸ் கக்ஷியாக ஆக்கி விடாமல் சிலரின் சுயநல சூக்ஷியானது மறுபடியும் மந்திரி கக்ஷியை தனிக்
கச் செய்து அதற்குத் தனி பலமும் ஏற்படுத்திக் கொள்ள இடங்கொடுத்து இப்போது அதை ஒரு சரியான எதிரியாக ஆக்கிக் கொண்டது. இது மாத்திரமல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியானது (பார்ப்பனரல்லாதார் கட்சியானது!
மந்திரி கட்சியை ஒழிப்பதற்கென்று செய்த முயற்சியில் மந்திரி கட்சிக்கு வெட்டின குழியில் தானே போய்விழுந்து விட்டது. அதாவது அவர்கள். மந்திரிகள் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கின்றார்கள் என்று அதன் மீது பழி கிளப்பி விட்டு கடைசியாக அப்பழிக்குத் தாங்களே
ஆளாகிப் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி பார்ப்பனரல்லாதார் கட்சி என்கிற பெயரையே கொன்று விட்டார்கள். இதிலி
ருந்து ஜஸ்டிஸ் கட்சிக்குப் பெயரும் கெட்டு பலமும் குறைந்ததோடு நாணய
மும் போய் மக்களிடம் மதிப்புமில்லாமல் போக வேண்டியதாகி விட்டது.
ஆகவே மந்திரிக் கட்சியும் மந்திரிக்கு ஆசைக் கட்சியுமாய் தேர்த
லுக்கு போட்டி போடவேண்டியதாகி காங்கிரஸ் செய்தது போலவே தங்கள். தங்கள் கட்சியின் பேரால் நிற்கும்படி அபேட்சகர்களைக் கெஞ்ச வேண்டிய தாகிவிட்டது. அபேட்சகர்களும் “நீங்கள் ஜெயித்தால் எனக்கு என்ன உத்தி யோகம் கொடுக்கின்றீர்கள்?” “நீங்கள் ஜெயித்தால் எனக்கு என்ன உத்தி
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
யோகம் கொடுக்கின்றீர்கள்?” என்று வியாபாரம் பேசி ஒப்பந்தம் செய்யப் பார்க்கின்றார்கள். ஒவ்வொரு கட்சியாரும் தங்கள் கட்சிக்கு ஆள்களை சேர்ப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு கேட்டதெல்லாம் கொடுப்பதாய் வாக்களித்து ஏமாற்றி வருவதன்மூலம் தங்கள் தங்கள் கட்சிக்கு 40, 50 பேர்களுக்கு குறையாமல் வருவார்கள் என்று இருவரும் எதிர்பார்க்கின்
றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தந்திரக்காரர்கள் எல்லாம் தாங்கள் ஒரு கட்சிப் பேரும் சொல்லாமல் தனிக் கட்சியின் பேரால் பலர் நிற்கின்றார்கள். எது எப்படி இருந்தாலும் நமது ஆசையெல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் நெல்லூரில் நாணயத் தவருதலாய் நடந்து கொண்ட போதி லுங்கூட அதனால் ஏற்பட்ட கெடுதியையும் சமாளித்து அக்கட்சியே வெற்றி பெற வேண்டும் என்றே ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது பார்ப்பனர்களையும் தங்கள் ஸ்தாபனத்தில் அங்கத்தினர்களாய்
சேர்த்துக் கொள்வது என்ற தீர்மானத்தோடு தேர்தலுக்கு நிற்குமானால் அது சரியான தோல்வி அடையவேண்டும் என்பதே நமது மனப்பூர்வமான விருப்பமாகும். ஏனெனில் அந்தத் தோல்வியானது பார்ப்பனரல்லாத இயக்கத் தலைவர்கள் என்பவர்களுக்கு விரோதமாக முடிந்தாலும் பார்ப்பன ரல்லாத சமூகத்திற்கு இரட்டிப்பு பலனை தருவதோடு இனியாவது கண்டிப் பான கொள்கையோடு கட்சி பரிசுத்தமடையக் கூடும் என்றும் நினைக்கின் றோம்.
நிற்க, சுயமரியாதை இயக்கத்தைப் பொருத்தவரை வரப்போகும் தேர்தல்களில் சுயமரியாதைக் கொள்கைகளை ஆதரிப்பவர்களை ஆதரிப் பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.அவ்வியக்கத் தலைவர்களுக்கும் நிர்வாகஸ்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் யார் எக்கட்சியில் இருந்தாலும் இயக்கக் கொள்கைகள்தான் பிரதானமாக இருக்குமே ஒழிய கட்சி என்பது இரண்டாவதேயாகும் என்பதையும் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.07.1930
குடி அரசு - 1930 @) 30
ஏண் பார்ப்பணர் கூடாது?
பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனத்தில் பார்ப்பனர்களை ஏன் சேர்க்கக் கூடாது என்னும் விஷயம் தஞ்சாவூர் ஜில்லா பாபநாசம் தாலூகா போர்டு தேர்தலைப் பற்றிய இரகசியத்தை தெரிந்தால் அதன் உண்மை ஒருவாறு விளங்கும். பாபநாசம் தாலூகா போர்டுக்கு சுமார் 15 அங்கத்தினர்கள் உண்டு. இதில் பார்ப்பனர்கள் 3 பேர் பார்ப்பனரல்லாதார் 12 பேர்கள். இந்தப் பன்னி ரண்டு பேர்களில் 6 பேர் திரு. பன்னீர்செல்வம் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆறு பேர் திரு. வீரய்யா வாண்டையாரைச் சேர்ந்தவர்கள். இதில் எந்தக்
கட்சி ஜெயிக்க வேண்டுமானாலும் பார்ப்பனர் தயவில்லாமல் முடியாத நிலைமையாகிவிட்டது. ஆக திரு.பன்னீர் செல்வம் கட்சியார் எப்படியாவது
திரு. வீரய்ய வாண்டையார் ஜில்லா போர்டுக்குள் நுழை யாமல் இருந்தால் போதும் என்று கருதி பார்ப்பனர் இடம் ராஜி பேசப் புறப் பட்டு மூன்று பார்ப்பனரில் ஒருவருக்கு தாலூகா போர்டு தலைமை ஸ்தானம் கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக தங்கள் கட்சியாருக்கே இரண்டு ஜில்லா போர்டு மெம்பர் பதவியையும் கொடுக்க வேண்டுமென்றும் பேசி முடிவு செய்து விட்டார்கள். இந்த சங்கதி திரு. வாண்டையார் கட்சியார் அறிந்து எப்படியாவது திரு. பன்னீர் செல்வத்தை ஜில்லா போர்டில் தோற்கடிக்க வேண்டுமென்று கருதி அதே பார்ப்பனர்களிடம் போய் தாங்கள் அந்தப் பார்ப்பனரில் ஒருவருக்கு தா.போ. தலைவர் பதவியும் மற்றொரு பார்ப்ப னருக்கு ஒரு ஜில்லா போர்டு பதவியும் கொடுப்பதாகவும் தங்களுக்கு ஒரு ஜில்லா போர்டு மாத்திரம் கொடுத்தால் போதுமென்றும் ஒப்பந்தம் பேசி பழய ஒப்பந்தத்தை அதாவது பன்னீர் செல்வம் கட்சியாரிடம் செய்து கொண்டிருந்த. ஒப்பந்தத்தை இரகசியமாய் முரித்துவிட்டார்கள். இந்த சங்கதி திரு. பன்னீர்செல்வம் கட்சியாருக்கு தெரியாது. இந்த நிலையில் தாலூகா போர்டு முதல் மீட்டிங்கி கூடினதும் ஒரு பார்ப்பனனை தலைவராக பிரேரே பிக்க இரு கட்சியிலிருந்தும் பார்ப்பனரல்லாத இரு கனவான் எழுந்து பிரேரேபித்தார்கள்.
இதிலிருந்தே முதல் ஒப்பந்தக்காரரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் சற்று இருந்து பார்த்ததில் விஷயம் விளங்கிவிட்டது.
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பிறகு அந்தப் பார்ப்பனரே தலைவராய் தெரிந்தெடுக்கப்பட்டு விட்
டார். இதோடு மறுபடியும் ஒரு பார்ப்பனரும் ஜில்லா போர்டு மெம்பராய் தெரிந்தெடுத்து விட்டார். பிறகு திரு. வாண்டையார் ஒரு ஜில்லா போர்டு மெம்பர் பதவியை பெற்றார்.
அன்றி இனியும் அந்த போர்டுக்கு இந்தக் காலாவதி வரையில் அந்த மூன்று பார்ப்பனர்களுக்கு இந்த 12 மெம்பர்களும் சதாகாலம் சலாம் போட்டுக் கொண்டு இருந்தால்தான் இவர்களது காரியம் பலிக்கும். இல்லா விட்டால் கஷ்டமான நிலையாகத்தான் போய் விடக்கூடும்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி இருக்காமல் இருந்தால் இன்றையத் தினம் தஞ்சை ஜில்லாவில் திரு. பன்னீர்செல்வம் தலைவராயிருக்கவும் முடியாது, திரு. வாண்டையார் போட்டி போட்டி
ருக்கவும் முடியாது. இந்த நிலை அடைந்ததை அடியோடு மறந்து விட்டு தங்களுக்குள் போட்டி போட்டு பார்ப்பனர் அடியில் விழுந்து இருவரும் தவிக்கும் படியான காலம் இப்பொழுதே வந்துவிட்டது. இனி பார்ப்பனர். களை உள்ளே சேர்ப்பதென்றாகிவிட்டால் என்ன கதியாகும் என்பதை திரு வாளர்கள் பன்னீர்செல்வமும் வாண்டையாரும் கவனிக்க முடியாமல் போனாலும், தஞ்சாவூர் வாசிகளான மற்ற பார்ப்பனரல்லாதார்களாவது கவனிக்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.
12 பார்ப்பனரல்லாதார்கள் போர்டில் இருந்தும் 3 பார்ப்பனர்கள் மாத்திரம் இருந்து கொண்டு ஒருவர் தலைவராகவும் ஒருவர் ஜில்லா போர்டு மெம்பராகவும் வந்து விட்டார்கள் என்றால் நம்மவர்களின் சுயமரியா தைக்கு
நாம் வெட்கப்பட வேண்டாமா? என்று கேள்க்கின்றோம்.நிற்க, மேல் படி மூன்று பார்ப்பனரில் மீதி உள்ள ஒரு பார்ப்பனரும் வைஸ்பிரசிடெண்ட் வேலையை இது வரை வாங்கி இருப்பார் என்றோ அல்லது வாங்கிவிடக் கூடுமென்றோ நினைக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.07.1930
குடி அரசு - 1930 @) 32
சாரதா சட்டம்
சாரதா சட்டம் பிறந்து அமுலுக்கு வந்து 35 ஆகி 4வது 15 முடிவதற்குள்ளாகவே அதற்குப் பாலாரிஷ்டம் வந்து விட்டது.
என்னவெனில் ராஜாங்க சபையில் அச்சட்டத்தின் ஜீவ நாடியை அருத்தெரியும் மாதிரியில் அதாவது பெண்களுக்கு 14 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனச்சாக்ஷியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்கு
சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டுக ளுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.
இந்த பிரேரேபனை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசய மொன்றுமில்லை.
ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.
சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற் கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர். கள் (பார்ப்பனர்கள்! சட்ட மறுப்புக்காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள்.
என்றும், அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேற் றும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக்காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியை சமாளித்
துக் கொள்ளவே இந்த தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின் றோம். நிற்க.மனச்சாக்ஷியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம்.
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கொடுக்கும் படி சட்டத்தை திருத்துவதானால் இந்தியன் பினல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாக்ஷி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனச்சாக்ஷி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும். மூடனுடைய மனச் சாக்ஷி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்ட
மும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேள்க்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களா னால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.07.1930
குடி அரசு - 1930 @) 34
சட்ட மறுப்பு இயக்கம்
தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே
முழங்குகின்றது.
ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்
குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு.மாள வியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
தேசீயப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி! என்று கதர ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம் பித்து விட்டது.
ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாய் விட்டது. மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுக்கடை, பள்ளிக் கூட மரியல்களோ வென்றால் “தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால்” நிறுத்த வேண்டிதாய் விட்டது.
வேதாரண்யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களை கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது.
மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை. அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லையானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கி விட்டது. அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைதுக் கொண்டே தூக்க மில்லாமலிருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத் தில் அடங்கிவிடும். தவசங்கள் விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குச் சற்று உணவுப்
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்தக் காரணங்களைக் கொண்டு இந்தக் கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்
திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழை மக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.07.1930
குடி அரசு - 1930 @) 36
கோடைக்கானல் காஸ்மாயாலிட்டண் வாசகசானைத் திறப்பு விழா
பெருமை மிக்கத் தலைவர் அவர்களே! சகோதரிகளே!! சகோதரர் களே!!! இந்த சிறிய ஊரில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருப்பது எனக்கு அதிசயமாயிருக்கிறது.நீங்கள் செய்த வரவேற்பு ஆடம்பரங்களுக்கும் நான்
சிறிதும் தகுதியில்லை என்பதை யான் உணர்கிறேன். ஆனாலும் அவை களையெல்லாம் எனது கொள்கைக்கு நீங்கள் அளிக்கும் ஒரு நற்சாட்சிப் பத்திரமென்றே கருதுகிறேன். நீங்கள் இங்கு ஆரம்பித்திருக்கும் வாசக சாலையானது மிகவும் பாராட்டக்கூடியதாகும். நமது நாட்டில் கோயில் கட்டுவதற்கும், கும்பாபிஷேகம் செய்வதற்கும், பூஜை, உற்சவம் நடத்து வதற்கும் நாசமாகிற பணங்களும், இடங்களும், நேரங்களும் இம்மாதிரி வாசக சாலைகளுக்கு உபயோகப்படுத்தப் பட்டிருக்குமானால் மக்களுடைய அறிவு கல்வி இன்றைக்கிருப்பதைப் போல் நூறுமடங்கு அதிகமாக வளர்ச்சி பெற்று மக்கள் சுயமரியாதையோடு வாழ முடிந்திருக்கும்.
நமது நாட்டில் வாசகசாலையின் பெருமை மக்கள் அறியாமலிருப் பதற்கு இரண்டு காரணம். ஒன்று வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வியில்லாமலிருப்பது. மற்றொன்று மக்க ளுக்கு பகுத்தறிவில்லாமலிருப்பது. இந்த இரண்டும் வாசகசாலையை ஏற்படுத்தவிடாமல் குழவிக் கல்லை நட்டி கோயில் கட்டுகிற வேலையில் மக்களை திருப்பிவிட்டது. ஆனால் உங்கள் விஷயம் அப்படிக்கில்லாமல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவு உணர்ச்சியானது இந்த அருமை யான காரியத்தை செய்யத் தூண்டிற்றென்றே கருதி இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் எனது மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
ஒரு நாட்டின் மதக்கொள்கைக்கும் ஆட்சியின் தன்மைக்கும் அளவுகோள், அந்த நாட்டு மக்களின் கல்வி யறிவேயாகும். நமது நாட்டில் நூற்றுக்கு 93 பேர் கல்வியில்லாத தற்குறிகள். நூற்றுக்கு 99 பேர் கல்லில் முட்டிக் கொள்ளும் மூடர்கள். இப்படிப்பட்ட இந்த நாடு எப்படி அறிவுள்ள
ஒரு சுதந்திரமான நாடாகும்? இந்த நாடானது சமீபகாலம் வரை எல்லா
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மக்களும் கல்வி கற்கக் கூடாது எல்லா மக்களும் அறிவாளிகளாகயிருக்கக் கூடாது, எல்லாமக்களும் சுதந்தரமாக இருக்கக்கூடாது என்கின்ற கொள்கை யையுடைய மத ஆதிக்கத்திற்கு அடிமையாயிருந்த அரசர்களாலேயே ஆளப்பட்டு வந்திருக்கிறது. அதனால்தான் 100க்கு 97 வீதமுள்ள மக்கள் தற்குறிகளாயிருக்க ஏற்பட்டது. இப்பொழுது அம்மாதிரி கொள்கை யில்லாமலும் எல்லாரும் படிக்கலாம் என்கின்ற கொள்கையுடைய அரசர் களுடைய ஆட்சியிலுமிருக்கிறபடியால் இப்போது கல்வி பரவ ஆரம்பித்து விட்டது. ஆனால் எல்லோரும் படிக்கலாம் என்று சொல்லக் கூடிய அரசாங்
கம் வந்து 150 வருஷகாலமாயும் ஏன் இன்றைக்கு 100-க்கு 10பேர்தான் படித்திருக்கிறார்கள் என்கின்ற ஒரு கேள்வி பிறக்கலாம்.அதற்குச் சமா தானம் என்ன வென்றால் இந்த 150 வருட காலமாய் வெள்ளைக்கார ஆட்சி இருந்து வந்தாலும் கூட அவர்கள் எல்லோரும் படிக்கக்கூடாது என்கின்ற கொள்கையையுடைய பார்ப்பனர்களின் இஷ்டப்படி நடந்து வந்ததால் பார்ப்பனர்கள் இஷ்டத்திற்கு விரோதமாகப் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அதிகமாய்ப் படிக்கமுடியாமல் போய் விட்டது. இப்போது கொஞ்சங் கொஞ்சமாக அரசாங்கத்தினிடத்துள்ள பார்ப்பன ராதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாத ஆதிக்கம் பெருகுவதின் பலனாக அந்தக் கொள்கைகளை எல்லாம் மறந்து எல்லாரும் படிக்க ஆரம்பித்து விட்டார் கள். அடுத்து வரும் ஜனக் கணிதத்தில் 100-க்கு 15 பேராவது படித்தவர்களா
யிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே இந்த விகிதமானது சென்ற 150 வருஷத்திற்கு 7வீதமும் 1920லிருந்து 1930 - க்குள் 10 வருஷத்தில் அது இரட்டித்து 15 வீதமும் ஏற்பட்டிருக்கின்றது போலவே இந்த பார்ப்பனரல் லாதார் இயக்கம் இப்படியே நடைபெற்றுப் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் ஆட்சியில் இன்னுமதிகமாகப் பலப்படுமானால் குறைந்தது இருபத்தைந்து வருஷத்துக்குள்ளாக இந்த நாட்டில் தற்குறிகள் என்பவர்களே இல்லாமல் போகலாமென்று நினைக்கிறேன். இந்த நாட்டு பார்ப்பனராதிக்கமானது அரசாங்கத்தாராலும் மக்களைப் படிப்பிக்க முடியா மலும் சொந்தத்திலும்
தங்கள் மக்களைப் படிப்பிக்க முடியாமலும் அவ்வளவு தரித்திர நிலையில் 100-க்கு 97 பேர் நிரந்தரமாயிருக்கும் படி பார்ப்பன மதச் சூட்சி செய்து விட்டது. இந்த மதச் சூட்சியை வெட்டிப் புதைத்தப் பிறகுதான் எல்லா மக்களும் படிக்க முடியும். அப்படிக்கில்லாத வரையில் எவ்வளவுதான் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் செளகரியமில்லாமலே போய் விடும். வெள்ளைக்கார அரசாங்கம் இந்தியர்களைப் படிக்க வைக்காமல் 100-க்கு 93 பேர்களை தற்குறிகளாக வைத்துவிட்டது என்று நமது பார்ப்பனர் களும், அவர்களது திருவடி சம்பந்திகளான பார்ப்பனரல்லாதவர்களும் மேடையில் நின்று கொண்டு சொல்லுவார்களானால் அந்தப் பார்ப்பனர்கள் மாத்திரம் ஆண், பெண் உள்பட காப்பிக்கடை, வேசித்தெரு முதலிய இடங்களில் பிழைக்கும் சகலர்களும் 100-க்கு 100பேர் படித்திருப்பதற்குக் காரணம் என்ன என்றால் என்ன சமாதானம் சொல்லுவார்கள்? இதிலிருந்து இந்தியர்களில்
குடி அரசு - 1930 @) 38
பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்காமலிருப்பதற்குக் காரணம் வெள்ளைக்கார ஆட்சியா? அல்லது நமது முட்டாள்தனத்தின் பலணாய் நாம் சுமந்து கொண்டிருக்கும் பார்ப்பன மத ஆட்சியா? என்பதை யோசித்துப் பாருங்கள். நமது மக்களில் ஒரு பெரிய விவசாயி தன்னுடைய இரண்டு பிள்ளைகளைக் கூட படிக்க வைப்பதற்கு திணருகிறான். ஆனால் அன்றாடம் பிச்சை எடுக்கிற தொழிலையுடைய பஞ்சாங்கப் பார்ப்பான் தன்னுடைய 5 பிள்ளைகட்கும் படிப்புச் சொல்லி வைத்து பட்டதாரி யாக்கிவிட்டு தொப்பை போட்டுக் கொண்டு திண்ணையில் கொரட்டை விட்டுத்தூங்குகின்றான். இது எப்படிச் சாத்தியப்படுகிறது? ஆகவே இதற்கு வெள்ளைக்கார ஆட்சி காரணமா: பார்ப்பனராட்சி காரணமா வென்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு பள்ளிக்கூடத்தில் எல்லாப் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளலாமென்பதாகக் கூட பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் அரசாங்கத்தில் ஏற்பட்ட பிறகுதான் உத்தரவு போடமுடிந்தது என்றாலும் கூட பார்ப்பனராதிக்கமும் பார்ப்பனத் திருவடி சம்பந்திகள் ஆதிக்கமும் இருக்கின்ற ஊர்களில் இன்னமும் இதை அமுலுக்குக் கொண்டுவர முடியவில்லை. இன்றையத் தினம் அதாவது பூரணச் சுயேச்சைக்கு மக்கள்
கல்லில் முட்டிக் கொள்ளுகிற காலத்திலும் கூட தெருவில் நடப்பதற்கே பார்ப்பனர்களுடன் போராட வேண்டியும் பார்ப்பன தாசர்களிடம் அடிபட வேண்டியுமிருக்கின்றதென்றால் வெள்ளைக்காரன் பேரிலேயே எல்லாக் குற்றங்களையும் சொல்லிக் கொண்டு இருப்பதில் ஏதாவது பொருளிருக் கிறதா? ஆகவே நாம் முன்னேற வேண்டுமானால், மற்ற நாட்டாரைப் போல் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமானால், அவைகளுக்கு முட்டுக் கட்டையாகவுள்ள சகலத்தையும் ஒழித்தெறியத் தயாராயிருக்க வேண்டும். அவ்விதம் மக்கள் தயாராவதற்கும் அறிவு பெறுவதற்கும் இம்மாதிரி வாசகசாலைகள் மிகவும் அவசியமாகும்.
சாதாரணமாக கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புஸ்தகப் படிப்பையும் குருட்டு உருப்போட்டு பரிட்சைகளில் (பாஸ்)தேரி விடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் பி.ஏ.,எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர்களையும், தமிழ்சங்
கத்தில் படித்து வித்வான் பரிட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர்கள் என்று சொல்லி விட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில் அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக் கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அலமாரியில் உள்ள புஸ்தகங்களைப் போல் இவர்களும் தங்கள் மனதில் பல விஷயங்களை “பதிய வைத்திருக்கும் ஒரு நகரும் அலமாரி” என்றுதான் சொல்ல வேண்டும்.
படிப்பு வேறு அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள். படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம்
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணமாக ஒரு கோள பூகோள சாஸ்திரத்தில் எம். ஏ. (பண்டித) பட்டம் பெற்ற ஒரு உபாத்தியாயர் (ப்ரபசர்! பிள்ளைகளுக்கு சூரிய சந்திர கிரகணத்தைப் பற்றி வானசாஸ்திரப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பூமியும், சூரியனும், சந்திரனும் ஒன்றுக் கொன்று
சுற்றுவதின் பயனாய் ஒன்றால் ஒன்று மறைக்கப்படுவதால் அதன் ஆகுர்தியும் ஒளியும் மறைவுபடும், அதைத்தான் சந்திரகிரகணம் என்றும் சூரியகிரகணம் என்றும் சொல்வது என்று பாடம் சொல்லி கொடுப்பான். ஆனால் சந்திர: கிரஹணமோ சூரிய கிரஹணமோ வந்து விட்டால் சூரியன் என்கின்ற ஒரு தேவதையைறாகு, கேது என்கிற தேவதைகள் துன்பப் படுத்துவதாகவும், இது அவர்களுக்கு ஏற்பட்ட சாபத்தீடு என்றும், அதற்காக மக்கள் தோஷ பரிகாரம். செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு கிரஹணம் பிடிக்கும்போது
ஒரு ஸ்நானமும், விடும்போது ஒரு ஸ்நானமும், மத்தியில் மந்திரங்களும், ஜெபங்களும் செய்வான். சாப்பிடாமல் பட்டினி யாகவும் இருப்பான்.மற்றும்
தான் பிறந்த நேர கிரக நக்ஷத்திரமும் கிரகண நேர கிரக நக்ஷத்திரமும் ஒன்றாயிருந்தால் நெற்றியில் பட்டங் கட்டிக் கொண்டு முழுகுவான்.ஆகவே அவனது படிப்பானது வான சாஸ்திர பரிக்ஷயில் (பாஸ்! தேரத்தான் உபயோகப்பட்டதே தவிர அந்த எம்.ஏ. பட்டம் பெற்றவனுக்கு அது அறிவுக்கு சற்றும் பபன்படவே இல்லை. ஆனால் நமது தமிழ்பண்டிதர்கள் நிலையோ அப்படிக்கூட இருக்க முடிவ தில்லை. அவர்களுக்கு உள்ள படிப்பே முட்டாள்களாக்குவதற்கு முதல்தர மருந்து போன்றது. புராணங்களைத் தவிர அவர்களுக்கு வேறு படிப்பே கிடையாது. இலக்கணம்
நீதிநூல் என்று சிலது படிப்பார்கள். ஆனாலும் அவைகளும் ஆரம்பமும்
மூடத் தனமானதாகவே இருக்கும்.முடிவும் மூடத்தனமானதாகவே இருக்கும். மத்தியபாகமோ உலக வாழ்க் கைக்கு பயன்படாததாகவும், அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆதார மானதாகவும் இருக்கும். ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் என்பவர்களுக் காவது அறிவாளர்களாவதற்கு ஏற்ற பல நூல்கள் உண்டு.தமிழ் பட்டதாரி களுக்கோ மடையர்களாவதற்கேற்ற நூல்களே உண்டு. அதாவது அவை பெரிதும் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்பன போன்றவை களைத் தவிர. இலக்கணம், இலக்கியம் என்று சிலதும் கூட்டி இவைகளை உருப்போட்டு பரீட்சை கொடுத்தவர்களாவார்கள். ஆகவே ஆங்கிலப் பட்ட தாரிகளிடம் எதிர்பார்க்கும் அதாவது அறிவுஇயல் புஸ்தகங்கள் படிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்த அளவு கூட தமிழ் பட்டம் பெற்ற பண்டிதர்கள் என்பவர்களிடம்
எதிர்பார்க்க முடியாது. ஆகவே. மனிதன் முழு மூடனாக வேண்டுமானால் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்து பண்டித னாக வேண்டியதுதான் என்பதற் கிணங்கத்தான் நமது படிப்பும் அறிவும் இருக்கின்றது. தமிழ் பண்டிதர்கள் என்பவர்களுடைய யோக்கியதையை நான். பார்த்த பிறகு மக்களை அறிவுக்காக தமிழைப்படி என்று சொல்லுவது மிக்க மோசமான காரியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஏனென்றால்
குடி அரசு - 1930 @) 40
அவர்களுக்கு பொது அறிவு ஏற்படும் படியான படிப்புக்கு தமிழில் ஆதாரங்களே இல்லை என்பதுதான். வடமொழி ஆதாரங்களே தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பல வேஷங்களுடன் திகழ்கின்றனவேயன்றி மக்களுக்கு அறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் உண்டாகும்படியானவை
கள் அல்ல. ஆகவே மக்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் உலகஇயல் அறிய சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஆதாரங்கள் பத்திரிகைகள் படிக்கவும் பல மக்களிடம் சேர்ந்து பழகிப் பேசவும் செளகரியமுள்ளதான வாசக சாலைகளே யாகும்.
நிற்க சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி நான் பேசுவேன் என்று விளம்பரப்படுத்தி இருக்கின்றீர்கள்.
சுயமரியாதை இயக்கமானது நமது நாட்டு மக்களின் சமத்துவத்
திற்காகவும் சகோதரத்துவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஏற்படுத்தப் பட்ட ஸ்தாபனமாகும்.
அது முதலாவதாக மக்கள் பிறவியில் கீழ் ஜாதி, மேல்ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஆண் மேலானவன், பெண் கீழானவள் என்கின்றதை யும், பணக்காரன் ஏழை - அரசன் குடிகள் - குரு சிஷ்யன் - கடவுள் அடியார் என்கின்றவைகளில் இருந்து வரும் உயர்வு தாழ்வு வித்தியாசங் களையும் அடியோடு ஒழிக்க வேண்டுமென்பதே அதன் முக்கிய கொள்கை யாகும். மேல்கண்ட உயர்வு தாழ்வு வித்தியாச உணர்ச்சியே மக்களை அடிமைப் படுத்தி விட்டது. எல்லா நாடுகளிலும் இந்த வித்தியாச உணர்ச்சி கள் மாறுபட்டு சமத்துவவுணர்ச்சியும் சுதந்திர உணர்ச்சியும் பரவி வரு கின்றது.
நமது நாடு மாத்திரம் உலகத்திலேயே எல்லா வகைகளிலும் அடிமை நாடாக இருக்கின்றது. இந்த நாட்டு மக்களைப்போல் மனிதத் தன்மையற்ற மக்களை வேறு எந்த நாட்டிலும் காண்பதரிது. மக்களுக்கு சுய அறிவும் இல்லை, பிறர் அறிவையும் கேட்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அத்தடைகளை விலக்க முயற்சிக்கும் போதுதான் கடவுளும், மதமும், மதாச்சாரியர்களும் வந்து பார்ப்பனர் மூலமும் பண்டிதர்கள் மூலமும் குறுக் கிடுகின்றார்கள். அப்படிக் குறுக்கிடும்போது அவைகளைத் தூக்கித் தூர எறிந்து விட்டுப் போக வேண்டியதாகின்றது. அப்போது சுயநலக்காரர் களால் நம்மை மதத்துரோகிகள் என்றும் கடவுள் விரோதிகள் என்றும் சமயாச்சாரிகளை தூஷிக்கின்றவர்கள் என்றும் சொல்லப்படுகின்றார்கள். நமது நாட்டு மக்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாகவே மூட நம்பிக்கை:
யிலும் குருட்டுப் பழக்க வழக்கத்திலும் ஈடுபட்ட பாமர மக்களானதினால் சுயநலக்காரர்கள் சூட்சியை சுலபத்தில் நம்பி ஏமாறுகிறார்கள். அவர்களை யெல்லாம் அறிவுள்ள மக்களாக்கி நாட்டை சுதந்திரமுள்ளதாகவும் செய்ய வேண்டுமானால் எவ்வித பழிப்புக்கும் தூற்றலுக்கும் பயப்படாமல் வேலை
செய்தால்தான் முடியுமே ஒழிய அன்னியர் நம்மை குற்றம் சொல்லுவார் களே
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
என்று பயந்தால் ஒரு காரியமுமே செய்யமுடியாது. நம்மை அன்னிய ஆட்சிக்கு அடிமைப் படுத்தினவர்கள் நமது நாட்டு வைதீகர்களும் பண்டி தர்களும் பணக்காரர்களுமே ஆவார்கள். இவர்களுக்கு உதவி செய்வது மதமும் கடவுளுமேயாகும். மதத்தின் கொள்கையையும் கடவுள் செயலை
யும் ஆயுதமாக வைத்துக் கொண்டே இந்த நாட்டு மக்களின் அறிவையும் சுயமரியாதையையும் நாசமாக்கி விட்டார்கள். போதாக் குறைக்கு தேசீயம் என்பதாக ஒரு புதிய புரட்டு சில காலமாய் புறப்பட்டு அது மதமும் கடவு ளும் பாக்கிவைத்த கொஞ்ச நஞ்சங்களையும் ஒழிக்கத் தலைப்பட்டு விட்டது. 40 வருஷ காலமாய் நமது நாட்டில் ஏற்பட்ட தேசீயம் இதுவரை மக்களுக்கு என்ன நன்மை செய்திருக்கின்றது? என்பதை யோசித் துப் பாருங்கள். தேசீயத்தின் பலனாய் பலர் உத்தியோகம் சம்பாதிக்கவும் பலர் பதவி சம்பாதிக்கவும் ஏற்பட்டதே தவிர தீண்டாமை ஏதாவது ஒழிந்ததா பாருங்கள்.
குறிப்பு: 20.07:930 ஆம் நாள் கோடைக்கானல் காஸ்மாபாலிட்டன் வாசக சாலையைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 27. 07. 1930
குடி அரசு - 1930 (2) 42
மலாய் நாட்மூல் சுயமரியாதைச் சங்கம்
உண்மைத் தர்மம்
மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் “தமிழர் சீர் திருத்தக்காரர்கள் சங்கம்” என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத் தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின் றோம்.
இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர் பிரமுகர்
கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராமசாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப்
பிடத்தக்கதாகும்.
அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகையில்,
1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச்சிரம
தர்மத் தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.
2. பெண்களுக்கு உரிமை அளித்தல்.
3. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.
4. சிக்கன முறையைக் கைக் கொள்ளுதல்.
5. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல்...
என்று சொன்னதிலிருந்து அவைகள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ் வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக் கும் எளிதில் விளங்கும்.
தவிரவும் “சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக் குடன் மறைந்து போவதற்குக் காரணம் அச்சங்கங்களுக்கு ஒரு சொந்த இடம். இல்லாததே” என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தானும் திருவாளர் பி. கோவிந்தசாமி செட்டியாரும் சேர்ந்து ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் அக்கூட்டத்திலேயே வாக்களித்திருப்பதானது அவர்களின் பரோபகார
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
எண்ணத்தையும் உண்மைத் தர்மத்தை உணர்ந்திருக்கும் உணர்ச்சியையும் காட்டுகின்றது.
மலாய் நாட்டில் எங்கு பார்த்தாலும் சீனர்களுக்கு ஒரு பொது இடம் இருப்பதை நமது சுற்றுப் பிரயாணத்தில் கண்டோம்.
ஆனால் அங்கு இந்தியர்களுக்கு எங்கு பார்த்தாலும் கோவிலும், பூஜையும் தான் பார்க்க முடிந்ததே ஒழிய ஒரு தனிப் பொதுக் கட்டிடம் நமது கண்களுக்குத் தென்படவே இல்லை. இதை எதற்காக எடுத்துக் காட்டு கின்றோமென்றால் இந்தியர்களின் அறிவே, பொது நலம் என்றால்- பொது தர்மம் என்றால் கோவிலைக் கட்டி குழவிக் கல்லை நட்டி கும்பாபி ஷேகம் செய்து அதில் முட்டிக் கொள்வதே தான் என்று கருதி இருக்கிறார்கள்.
ஆனால் நமது உயர் திருவாளர்கள் ஓ.ராமசாமி நாடார் அவர்களும், பி.கோவிந்தசாமி செட்டியார் நாயுடு அவர்களும் சேர்ந்து சுமார் 5 ஆயிரம் அல்லது 20000 ரூ.க்குள் ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் தீர்மா னித்து இருப்பதிலிருந்து கோவிலுக்கு பணம் போடுவது முட்டாள்தனம் என்பதை. நன்றாய் உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிகின்றது.
இக்கட்டிடமும் சங்கமும் நிரந்தரமாய் இருந்து அதன் கடமைகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கு சிறிது பண்டுத் துகையும் இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயமாகும். அதற்கும் திரு. நாடார் அவர்கள் முயற்சிப்பார்கள் என்றே நம்புகின்றோம்.
இவ்விஷயத்தில் பார்ப்பன சூட்சியும், அவர்களது தாசர்களது தொல்லைகளும் தடைகளாக ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் அவர் களுக்கெல்லாம் நமது நாடாரவர்கள் சிறிதும் பயப்படமாட்டார் என்பது நமது
உறுதியாகும். எப்படியெனில் திரு. நாடாரவர்கள் முடிவுரையில்,
“நமது இயக்கத்திற்கு எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படு கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு பலமாகவும், வேகமாகவும் இயக்கம் பரவும்”.
என்று சொல்லியிருப்பதிலிருந்து எதிர்ப்புகளையும், தடுப்புகளையும் வரவேற்கின்றார் என்பது நன்றாய் விளங்குகின்றது.
மற்றும் சுயமரியாதை வீரர்களான கோ. சாரங்கபாணி, அதிசயம், எஸ். கோபால், அ. ராஜகோபால் முதலியவர்களும் மற்றும் திருவாளர்கள் வெ. சோமசுந்திரம் செட்டியார், கோ. ராமலிங்கத் தேவர், அ.கி. சுப்பண்ணன், கா. தாமோதரனார், ரா. து. கோவிந்தசாமி, மு. ரெ. முத்துக்கண்டியர், த.வ. குமாரசாமி, & குப்புசாமி, பு. ர. கோவிந்தசாமி, ரெ.திருவேங்கிடம், அ. ௧. நாராயணசாமி, எ. ஆ. சிவராய பிள்ளை ஆகியவர்களும் இம்முயற்சியில் ஈடுபட் டிருப்பதைப் பார்க்க இச்சங்கமானது சிங்கையில் தலைசிறந்து
குடி அரசு - 1930 (2) 44
விளங்கி ஒரு செல்வாக்குப் பொருந்திய பொது நல ஸ்தாபனமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆகவே வெகு சீக்கிரத்தில் அச்சங்கத்திற்கு கட்டிடம் முதலியவை
கள் ஏற்பட்டு திறப்புவிழா நடந்து பிரசாரம் துவக்கப்படும் என்று உறுதியாய் நம்புவதுடன் இந்திய தாழ்த்தப்பட்ட - கொடுமைப் படுத்தப்பட்ட - இழிவு படுத்தப்பட்ட - மக்களின் சார்பாக மேல்கண்ட நண்பர்களுக்கு நமது மனம்
நிறைந்த நன்றியறிதலைச் செலுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.07.1930
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ராகி
திருவாளர்கள் ஜயக்கர் அவர்களும், சாப்ரூ அவர்களும் திரு. காந்திக்
கும் கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.
இம் முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக்
காரர்களும், பொதுஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சியைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப்படு கின்றார்கள். இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்கு
சலிப்புத் தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசீய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது.
சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான
எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை “தேசீய வாதிகள்” உணரத் தலைப் பட்டு விட்டார்கள்.அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள். கஷ்டத்தில்
சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் திபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு விட்டார்கள். இதனால் பல மக்களுக்கு சத்தியாக்கிரகத்தின் மீது ஆத்திரம் உண்டாக இடம் ஏற்பட்டு விட்டது.
நிற்க, திருவாளர்கள் ஜயக்கரும் சாப்ரூவும் ராஜி முயற்சிக்கு வைசி ராய்க்கு எழுதிய கடிதத்தில் தங்களுக்கு திரு. காந்தியின் நடவடிக்கையில் அனுதாபம் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்கள்.
திரு. வைசிராய் பதில் கடிதத்திலும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியத்தை இந்தியர்கள் வசம் ஒப்படைக்க முடியாது என்பதாகச் சொல்லி, இந்தியர்கள் பூரண சுயாக்ஷிக்கு அருகர் அல்ல வென்றும், அவர்க ளது யோக்கியதைக்கு மேல் கொடுக்க முடியாதென்றும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார். இந்த நிலையில் திரு. காந்தி ராஜிப் பேச்சுக்கு இடம் கொடுப்பது எவ்வளவு தன் மதிப்பு உள்ளது? என்பதை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தவிரவும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத
குடி அரசு - 1930 (2) 46
காரியங்கள் எவை என்பதைப் பற்றிக் கூட இப்பொழுது கூற முடியா தென்றும், அது லண்டன் மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும் என்றும் வைசிராய் பிரபு சொல்லியிருப்பதிலிருந்து வெகு காலமாகவே சொல்லிக் கொண்டு வருவதைத் தவிர லார்ட் இர்வின் கடுகளவாவது இரங்கி வந்தாரா? என்பது அறிவாளிகள் யோசிக்கத்தக்கதாகும். எனவே இந்த யோக்யதை உள்ள ராஜியில் மக்களும், தலைவர்களும் பத்திரிகைக் காரர்களும் காட்டும்.
உற்சாகத்திலிருந்து சத்தியாக்கிரகத்தின் குற்றத்தையும், வெற்றியற்ற தன்மை யையும் இப்பொழுதாவது உணர்ந்துவிட்டார்கள் என்றே தெரிய வருகிறது. முன்னைய ஒத்துழையாமையை யாருடைய வேண்டுகோளும் விருப்ப மும் இல்லாமலே திடீரென்று நிறுத்தினார். இப்போது ஏதாவது ஒரு சாக்கைக் கொண்டு நிறுத்த வேண்டியதாயிருக்கின்றது. “எல்லாம் கடவுள் செயல்.”
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.07.4930
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
யார்
திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது.மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது. ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டியதில்லை யென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத் தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத்தக்கது. திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர். களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம்.தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளி நூல் வெள்ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்க வில்லை. என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிற மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி
பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசண்டம்மையால் செய்தாய் விட்டது. இரண்டாவதாக திரு. திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய்விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?
கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையை “பகவான்” வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமானதாகவோ அல்லது அனுபவத்திற்கு சாத்தியமானதாகவோ இருக்கின்றதா? நிற்க
குடி அரசு - 1930 @) 48
மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டிருக்கிறாராம்..
பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களை புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக்கொண்டோ இருப்பதாகும்.
ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும், பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர் களுக்கே விட்டுவிடுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.07.4930
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கதர்
கதர் பிரசாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம்பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்டநிர்பந்தப்படுத்தி விட்டது.
இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை. துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்கா மசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது.பஞ்சு விலை கண்டி க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ.க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள். இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ. க்குள் மிக்க சவதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.
520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன்
ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.
10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் இடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 -0 நூற்பு கூலி ரூ1. நெசவு கூலி1-14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும். சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாயமாகும். இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப்படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை.
ஆகவே தேசீய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்கவும்தான் வழியேற் படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.07.1930
குடி அரசு - 1930 @) 50
மாயவரம் - சீயாழி
மிராசுதாறர்கள் மகாநா௫
அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! இன்றையதினம் இந்த பொதுக் கூட்டத்தில் தற்கால நிலைமையைப் பற்றி
நானும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று இத்தாலூகா பிரபல மிராசுதாரர்களானவர்களால் அழைக்கப்பட்டு பேசக் கேட்டுக் கொண்டதற்கு
மிக்க நன்றியுடையவனாக யிருக்கின்றேன்.
இதற்கு முன் இந்தக் கூட்டத்தில் பேசிய கனவான்களின் பேச்சை நீங்கள் கேட்டீர்கள். நாட்டின் தற்கால நிலைமையைப் பற்றி அவர்கள் பேசியதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் மனிதன் சட்ட மறுப்பு செய்யக் கூடாதென்பதையும், சட்டத்திற்கடங்க வேண்டியதென்பதையும் இராஜாவுக்கு பக்தியாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நான் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவ்விஷயத்தில் எனது கொள்கை உங்கள் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்தேயிருக்கலாம். சுயமரியாதை மகாநாட்.
டிலும் தீர்மானித்திருக்கின்றோம். அதாவது மனிதனுக்கு இராஜ பக்தியும், கடவுள் பக்தியும் கற்பிக்கப்படுவதானது மனிதனை அடிமைத் தனத்தி
லாழ்த்தும் அறிகுறியேயாகும் என்பதாக வெகுநாளாகவே நான் பேசியும்
எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் இதிலிருந்து துரோகியாகவோ, துவேஷியாகவோ இருக்க வேண்டுமென்பதான பொருள் அதிலில்லை யென்பதை நான் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆகவே மனிதன் கடவுளுக்கே பக்தி காட்ட வேண்டிய அவசியமில்லையானால், பிறகு இராஜாவுக்கு எதற்காக பக்தி காட்ட வேண்டுமென்பதை யோசித்துப் பாருங்
கள். இராஜா என்பவர் பிரஜைகளாகிய நம்மிடமிருந்து ஒரு வேலையை ஒப்புக்கொண்டவராகிறாரே யொழிய வேறில்லை.ஆகவே அவ்வேலையில் அவர் கடமையை அவர் செய்ய வேண்டியதும், நம் கடமையை நாம் செய்ய வேண்டியதும் தான் முறையாகும்.
ஒருவருக் கொருவர் தன் தன் கடமையைச் செய்வதில் ஒருவரிடம் ஒருவர் பக்தி காட்ட வேண்டிய அவசியமெங்கே யேற்படுகின்றது என்று
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கேட்கின்றேன். அப்படி காட்டுவதானால் அது வெறும் வேஷமேயாகும் கடவுள் பக்தி என்பதும் அப்படித்தான். கடவுள் என்பதாக நீங்கள் கருதுகிற படி ஒன்றிருந்தால் அதன் கடமையை அது செய்ய வேண்டியதுதான். அது போலவே மனிதன் தனது கடமையைத் தான் செய்ய வேண்டியதுதான். நமது பக்தியை எதிர்ப்பார்த்து நமக்கு நன்மை செய்யும் கடவுளும் நமக்கும் வேண்டாம் அம்மாதிரி ராஜாவும் நமக்கு வேண்டாம். பக்தி என்பதே அடிமையை விட மோசமான வார்த்தை என்று எண்ணுகின்றேன். அடிமை யென்பது சரீரத்தால் மாத்திரம் தொண்டு செய்யக் கடமைப்பட்டவனாவான். பக்தி என்பது சரீரத்தினாலும் தொண்டு செய்ய வேண்டியதுடன் மனத்தி னாலுஞ் செய்ய வேண்டும். இதனால் மனதை சுவாதினமற்றதாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் எதிர்பார்க்கும் மனிதன் யாருக்கும் பக்தனாயிருக்கமுடியாது, யாரையும் பக்தியாயிருக்கச் சொல்லவு முடியாது.
அதுபோலவே சட்டமறுப்பென்பதும் தப்பிதமென்பதாக நான் ஒப்புக் கொள்ள முடியாது - சட்டமறுப்பு மனிதனுடைய இயற்கைக் குணங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ சட்டங் களை மீற வேண்டியவனாகவேயிருக்கிறான்.சாதாரணமாக ஒருவனை யொருவன். அடித்தால், வைதால், திருப்பியடிப்பதும் வைவதும் பெரும் பான்மையான மனித சுபாவமாயிருப்பதை நாம் காண்கின்றோம். ஒருவனை யொருவன் அடித்தால் சர்க்காரில் பிராது செய்து தண்டிக்க வேண்டியது சட்டமுறை.. மற்றபடி திருப்பியடிப்பது அச்சட்ட முறையை மீறின தாகுமல்லவா?
ஆனால், மனித சுபாவம் எல்லாவற்றிற்கும் சட்டத்திற்கும் அடங்கி நடக்க வேண்டுமென்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. தன்னால் சாத்தியப் பட்டதற்கும், தனக்கு இழிவில்லாததற்கும் தான் நேரான மனிதன் அடங்கி நடக்க முடியும். மற்றவைகளை மீறத்தான் நேரிடும். இழிவை உத்தேசித்து சட்டத்தை மீறுகின்றவர்கள் அதனால் வரும் பலாபலனை அடைய தயாரா யிருக்கவேண்டும் - சட்டத்தை மீறி விட்டு பலன் அனுபவ விஷயத்தில் ஒளியப் பார்ப்பவனும், பயப்படுகிறவனும் உண்மையான சட்ட மறுப்புக் காரனாக மாட்டான். நாளை நான் தெருவில் நடக்க மறுக்கப் படுவது எனது சுயமரியாதைக்கு ஈனமென்று கண்டால் அதுசம்பந்தமான சட்டத்தை மறுக்கத்தான் செய்வேன். ஆனால் அதனால் வரும் பலனையடையத் தயாராயிருந்து கொண்டுதான் மறுப்பேன். நான் சட்ட மறுப்புக்குச் சிறிதும் பயந்தவனல்ல.நான் 4, 5 தடவை சட்டங்களை மறுத்துமிருக்கின்றேன். அதற் காகப் பல தடவை தண்டனையு மனுபவித்திருக்கின்றேன் என்றாலும் மீறப் படும் விஷயங்கட்கு தராதரம் தெரிய வேண்டும்.எது மீற வேண்டியது, எது மீற வேண்டாதது என்பது போன்ற விஷயங்கள் மிகவும் கவனிக்கப்படத் தக்கதாகும். பிரஸ்தாப சட்டமறுப்பு என்பதை நான் அவ்வளவு அவசியமாய்
மீற வேண்டியவைகளில் ஒன்று என்பதாகக் கருதவில்லை. சிலர் அவசியமான
குடி அரசு - 1930 @) 52
தென்று கருதியிருக்கலாம். அதைப்பற்றி எனக்குக் கவலை யில்லை. ஏனெனில் என் அபிப்பிராயத்தை நான் சொல்லுகிறேன். உப்புச் சட்ட
மறுப்புக்கு அனுகூலமாகச் சொல்லப்படுங் காரணமெல்லாம் சமுத்திரத் துத் தண்ணீர் பொது வென்றும், அதையெடுத்துக் காய்ச்சுபவர்களிடம் வரி கேட்கக் கூடாதென்றும் சொல்லப்படுகின்றது. இந்த வாதம் ஞானமற்ற தென்றே தான் சொல்லுவேன். அரசனே நமக்கு வேண்டியதில்லை யென்று சொல்லுவதானால் சமுத்திரத்துத் தண்ணீர் பொதுவாகும்.
அரசன் ஒருவன் வேண்டுமென்று ஒப்புக் கொண்டால் அரசாங்கத் திற்கு எப்படியாவது வரியைக் கொடுக்கத்தான் வேண்டும். அந்த வரி எப்படி வேண்டுமானாலும் விதிக்கலாம். ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பொருளின் மீதும், ஒவ்வொரு தொழிலின் மீதும் விதிக்கப்படும். குடிகளிடமிருந்து வரி வசூலிக்க ஏற்படுத்தும் வழிகளில் நமக்கு அதிகச் சண்டையில்லை. வேண்டுமானால் எவ்வளவு வரி வேண்டுமென்பதில் சண்டைபோடலாம். சமுத்திரத்துத் தண்ணீர் பொது வென்று கருதுகிறவர்கள் தென்னைமரத்துப் பாளைத் தண்ணீர் சமுத்திரத்துத் தண்ணீரை விட நமக்கே சொந்தமானதல்லவா? அது பொதுவானது கூட அல்லவே. அதற்கு ஏன் வரிகொடுக்கின்றோம்? சர்க்கார் தயவில்லாமல் நாமே காய்ச்சுகின்ற சாராயத் திற்கு ஏன் வரி கொடுக்கின்றோம்? நாம் கஷ்டப்பட்டு நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு ஏன் வருமானவரி கொடுக்கின்றோம்? இதுபோல் எத்தனை
வரிகள் கொடுக்கின்றோம். இந்த வரிகளைவிட உப்புவரி எந்தவிதத்தில் அநியாயமானதென்பது நமக்கு விளங்கவில்லை. தவிர தாங்கமுடியாத வரியென்று சொல்லப்படுகின்றது. இது புரட்டுப் பிரசாரமேயாகும். நமது அரசியல் வாதிகள் தங்கள் யோக்கியதைக்கு மீறின சம்பளத்தையும் உதவித் துகையையும் செலவுத் துகையையும் பெறுகின்றார்கள். இன்னமும் அதிக மாய்ப் பெற ஆசைப்படுகின்றார்கள். அதனாலேயேதான் நமது யோக் கியதைக்கு மீறின வரியைக் கொடுக்க நேரிடுகின்றது. நமது வரி குறைய வேண்டுமானால் நமது மக்கள் தினம் ஒன்றரையணா வரும்படி கூட யில்லாமல் திண்டாடும் போது நமது மக்களே அந்த அரசாங்கத்தில் மாதம் 100,500, 1000, 2000, 3000, 4000, 5000, 6000 என்பதாக அளவுக்கு மீறி சம்பளம் கொள்ளையடிக்கின்றார்களே, இதைப் பற்றி யாராவது கவனிக்கின் நீர்களா? நமக்குக் கல்விக்கு சர்க்காரிடம் பணம்போதாதற்குக் காரணம் கல்விக்கு ஒதுக்கப்படும் பணங்களெல்லாம் கல்வி அதிகாரிகளும், உபாத்தி யாருமே கொள்ளை கொள்ளையாய் சாப்பிட்டு விடுகிறார்கள். சுகாதாரப் பணமெல் லாம் டாக்டர்களும், சிப்பந்திகளும் சாப்பிட்டு விடுகிறார்கள். உபாத்தியாயர். கட்கும், அதிகாரிகட்கும், டாக்டர்களுக்கும், தொழிலாளர்கட்கும் என்ன வித்தியாசம்? தொழிலாளி சாதாரணமாக தினம் 8 அணாவுக்குக் கஷ்டப் படுகிறான். உபாத்தியாயரானால்,டாக்டரானால், உத்தியோகஸ்தரானால் தினம். 8ரூ. 80ரூபாய் என்பதாக அனுபவிக்கிறார்கள். பிரஜைகளால் தாங்கமுடியாத
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சம்பளம் வாங்கும் பிரதிநிதிகளுடைய, பிரதிநிதி ஸ்தாபனங் களுடைய பிரஜைகள் தாங்கமுடியாத வரியைக் கொடுத்துத்தானாக வேண்டும்.
நமது பிரதிநிதிகள் செய்யும் அக்கிரமத்திற்கு அறிவில்லாமல் சர்க்கார்
மீது பாய்கின்றோம். இதுவரை நாம் பெற்ற சுதந்தரத்தையும், சுயராஜியத் தையும், சுயேச்சையையும் பார்க்கும்போது இனியும் வருகின்ற சுயராஜியம் நூற்றுக்கு 90 மக்களான ஏழைகளையும், குடியானவர்களையும் அடியோடு அழித்து விடுமென்றே நான் உறுதியாய்ச் சொல்லுவேன். கயராஜியமென் பதே
சிலரின் சுயநலமே தவிர வேறில்லை. எல்லாவற் றையும் விட “பூரண: சுயேச்சை”யென்பது சுத்த ஹம்பக்கென்பதே என் அபிப்பிராயம். யாரோ சிலருக்கு உத்தியோகங் கிடைக்கவும் யாரோ சிலருடைய கீர்த்திக்கும் சத்தி யாகிரகம் செய்தால் நானும் அதில் சேர வேண்டுமா? இதை ஆரம்ப முதலே
நான் ஆக்ஷேபித்து வந்திருக்கிறேன். சைமன் கமிஷன் வந்த காலமுதலே ஏன் 1927- ஹு முதலே இந்த காங்கிரஸ் கொள்கைக்கும், பூரண சுயேச்சைக் கொள்கை என்பதற்கும் நான் விரோதமாகயிருந்திருக் கிறேன். முன்னையை விட இப்போது பின்னும் உறுதியாயிருக் கிறேன்.
இன்றைய தினம் இந்தச் சட்ட மறுப்பு முட்டாள்தனமானது, தேசத்
துக்குக் கேடு சூழ்வது, ஏழைகளைக் கெடுப்பது என்று நான் மாத்திரம் சொல்லவில்லை. சாதாரணமாக இந்தியர்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாகவே சொல்லுகின்றார்கள் என்பதே எனது அபிப்பிராயம்.
உதாரணமாக இந்தியாவிலுள்ள 30 கோடி மக்களில் மகமதிய சமூக மாகிய 4ல் ஒருபாகம் ஏழரைக் கோடி மக்களின் சமுதாய மகாநாடுகள் சட்ட மறுப்பைக் கண்டிக்கின்றன. 5 கோடி மக்களாகிய தீண்டாதார் என்பவர்கள் சட்டமறுப்பைக் கண்டிக்கின்றார்கள். ஒரு கோடி கிறிஸ்துவர்கள் சட்ட மறுப் பைக் கண்டிக்கின்றார்கள். மீதியுள்ளவர்களில் அரசியல் ஸ்தாபனங்களி லேயே மிதவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசீய வாதிகளாகியவர்கள். எல்லோருமே சட்ட மறுப்பை ஒப்புக் கொள்ளவில்லை...
நமது தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் எத்தனைபேர் சட்ட மறுப்பை ஆதரிக்கின்றார்கள் என்று யோசித்துப் பாருங்கள். சென்னையில் உள்ள “தேசீய பத்திரிகைகள்” இந்து பத்திரிகை ஒப்புக்கொள்ளவில்லை; தமிழ்நாடு ஒப்புக்கொள்ளவில்லை; சுதேசமித்திரன் ஒப்புக்கொள்ள வில்லை. அதன் ஆசிரியர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ஆதியிலேயே இராஜினாமாக் கொடுத்து தப்பித்துக் கொண்டார்கள். சட்டமறுப்புக்கு விரோதமாகவே ஜாமீன் கட்டி நடத்துகிறதுடன் தாங்கள் அதில் சேரவில்லை யென்று விளம்பரமும் செய்துவிட்டார்கள். மற்றபடி பார்ப்பனச் சங்கங்கள், பார்ப்பனரல்லாதார் சங்கங்கள், பார்ப்பனரல்லாதார்களில் உள்ள பல வகுப்புச் சங்கங்கள் ஆகிய எல்லா ஸ்தாபனங்களும் சட்ட மறுப்பை ஒப்புக்
குடி அரசு - 1930 @ 54
கொள்ளாததுடன் கண்டித்து மிருக்கின்றன. மிராசுதாரர்கள், வியாபாரிகள், ஜமீன்தார்கள் எல்லோரும் எதிர்க்கிறார்கள், இனி தனித்தனி தலைவர்கள் என்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். யார் ஆதரிக்கின்றார்கள் என்று பாருங்கள். திரு. சீனிவாஸையங்கார், திரு. சத்தியமூர்த்தி, திரு சர். சி.பி. இராம
சாமி ஐயர், திரு. சர். சிவசாமி, திரு. சீனிவாச சாஸ்திரி, திரு. எம்.கே.ஆச்சாரி இவர்களெல்லாம் ஒரு காலத்தில் தலைவர்கள், தேச பக்தர்கள், தேசீய
வாதிகள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பார்ப்பனர்கள் அல்லவா? இவர்களில் யாராவது ஆதரிக்கின்றார்களா? வெளி மாகாணங் களிலும் திருவாளர்கள் ஜயகார், ஜின்னா, சிந்தாமணி, கேல்கார், சாப்ரூ ஆகியவர்கள் ஆதரிக்கின்றார்களா? ஆகவே ஏதாவது ஒரு கூட்டத்தார், ஜாதியார், ஸ்தாபனத்தார் என்று சொல்லும்படியாக யாராவது ஆதரிக்கின்றார்களா? ஏதோ “திரு. காந்தி ஆரம்பித்தார். அவர் நல்லவர்; அவர் அவதார புருஷர்; அவர் மகாத்மா; அவரிடம் நமக்கு அதிக பக்தியுண்டு: அவர் எங்கள் ஜாதி” என்று சொல்லிக் கொள்வோரும், அவர் செல்வாக்கின் பலனாய் தங்கள் புரட்டுகளையும், பித்தலாட்டங்களையும் மறைத்துக் கொண்டிருப்பவர்களும்
மற்றும் அவரிடம் தனிப்பட்ட சிநேகமோ, விசுவாசமோ உள்ளவர்களும் தவிர வேறு யார் இச்சட்ட மறுப்பில் கலந்துள்ளார்களென்று யோசித்துப் பாருங்கள். அவருடைய ஆதிக்கத்தில் பல லட்ச ரூபாய்கள் இருக்கின்றன. யாராவது இரண்டொரு உண்மையாளரிருந்தாலும் இருக்கலாம். அதற்காக எல்லோருமே யோக்கியவர்களென்று ஒப்புக் கொள்ளவேண்டுமா? தவிர. நமது தமிழ் நாட்டிலுள்ள சமூக சீர்திருத்த வேலையின் பயனாய் அநேக சீர்திருத்த விரோதிகள் காங்கிரஸ் பெயரையும் சட்ட மறுப்புப் பெயரையும் சொல்லிக் கொண்டு சீர்திருத்தங்களுக்கு முட்டுக்டகடைபோட அவைகளை உபயோகித்துக் கொள்ள நினைப்பதன் மூலம் அப்படி ஒரு கூட்டம் அத் துடன் சேர்ந்திருக்கின்றது. ஆகவே உப்புச் சட்ட மறுப்பை நான்மாத்திரமோ அல்லது பார்ப்பனரல்லாதார் கட்சியார் மாத்திரமோ ஆதரிக்கவில்லை யென்பதாகவும், கண்டிக்கின்றேன் யென்பதாகவும் நினைப்பது சுத்த முட்டாள் தனமென்றே சொல்லுவேன். இதுவரை சுமார் 5000, 6000 பேர்களே சட்டத்தை மறுத்திருக்கிறார்கள் என்று கணக்கு வெளியாயிருக்கின்றது. அடிபட்டவர்கள் அநேகர்களை நாமே நிரபராதிகளே ஒழிய சட்டமறுப்பில் சேர்ந்தவர்களல்ல என்று சொல்லி விட்டோம். கடைசியாக இந்த நாட்டி லுள்ள எவரையும் விட எனக்கு இந்த நாட்டு விடுதலையிலாவது, மக்கள் விடுதலையிலாவது கவலை குறைவென்று யாராவது கருதினால் அவர்கள் ஏமாந்து போவார்கள் என்றே உறுதியாய்ச் சொல்லுவேன். ஆனால் உப்புச் சட்ட மறுப்பும், போலி அரசியற் கிளர்ச்சியும் நாட்டின் விடுதலைக்கும், மக்கள் விடுதலைக்கும் கேடு சூழ்வதென்றே சொல்லுவேன். நாட்டு விடுதலைக்குச் செய்ய வேண்டிய வேலையும், மக்கள் விடுதலைக்குச் செய்ய வேண்டிய வேலையும் வேறு இருக்கின்றது. அதையே தான் நான் செய்து கொண்டுவருகிறேன். அதற்காக இன்னமும் செய்யத்தயாராயிருக் கிறேன். அந்த வேலை சர்க்காரை:
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
“ஓழிப்பதாலோ” அவர்களை “ஸ்தம்பிக் கச்” செய்வதாலோ ஆகின்ற காரியமல்ல. எனது தொண்டிற்கு எதிரிகள் அரசாங்கமேயல்ல. அரசாங்கத்தைவிட மோசமானவர்கள், எதிரியானவர் கள் நம் நாட்டவர்களிலேயே இருக்கின்றார்கள். மக்களுக்கு அறிவை வளர்த்து மனிதத் தன்மையை அடையச் செய்தால் தான் அவர்கள் விடுத லைக்கு லாயக்காவார்கள். நமது மக்களுக்குப் பெரும் பாலும் பகுத்தறிவே பூஜியம். அடிமைத்தனத்தில் அவர்களுக்குச் சிறிது கூட வெறுப்புமில்லை. இந்த நிலையிலுள்ளவர்கள் பேரால் யாரோ சிலர் பூரண சுயேச்சையும் சுய ராஜ்யமும் கேட்பது முழுப் புரட்டேயாகும். அதில் சிறிதும் நாணயமில்லை என்று உறுதியாகச் சொல்லுவேன். உண்மையான தேசிய வாதிக்கு இப்போது அரசாங்கத்தோடு போர் கிடையாது. இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே தேசீயவாதிகள் கிடையாது. இந்த தேசம் பல ஆயிரக் கணக்கான வருஷங்களாக சுயராஜ்யத்துடனாவது பூரண சுயேச்சையுட னாவது இருந்ததென்று யாராலாவது சொல்ல முடியுமா? ஏன் அப்படியிருக்க முடியவில்லை யென்பதற்குண்டான குறைகளை கண்டு பிடித்து அவை களை நீக்க வேண்டாமா? ஒருவனையொருவன் தாழ்த்தி யடக்கிச், சுயேச்சை யில்லாமல் செய்வதே இந்த நாட்டு மத தர்மமாகவும், நீதி தர்மமாகவுமிருக் கின்றது. இந்த முறை யொழிந்தாலல்லது நாடு உருப்படாது.அதைக் கவனிக்
காமல் நாம் ஒரே தவறுதலை 2000 வருஷமாகச் செய்து வருகின்றோம். இப்போதும் அதையே செய்கின்றோம்.
இந்தியாவில் வருடமொன்றுக்குப் பதினாயிரக்கணக்கான பட்ட
தாரிகள் புதிது புதிதாகப் பெருகுகிறார்கள். இவர்கள் எல்லோருக்குமே உத்தியோகம் தான் வேண்டியிருக்கிறது. அதற்கெல்லாம் அரசாங்கத்தைத் தவிர வேறு மார்க்கமில்லாமல் செய்து கொண்டார்கள். ஆகவே அரசாங்க உத்தியோகம் அதிகப்படுத்த வேண்டுமானாலும், அரசாங்கப் பெரும் பதவி யாருக்காவது வேண்டுமானாலும் பாழும் தேசியத்தைத் தவிர வேறு வழியில்லை. கைத்தொழில் செய்வதென்றால் சில வகுப்புக்கு பழக்க முமில்லை, உரிமையுமில்லை. ஆகவே பெரும்பாலும் உடலினால் பாடுபட முடியாத சோம்பேரிகளாலேயே உத்தியோகங்களை எதிர்பார்த்து இன்றைய “தேசியம்” தலைவிரித்தாடுகின்றது. இதற்கும் இது போன்றவைகளுக்குமிடம் கொடுத்துக் கொண்டே வந்தால், ஆட்சியின் இன்றைய முறை இன்னும் பலப்படத்தான் உதவுமே தவிர அதை முழுதும் நமது நன்மைக்கே அனுகூலமான ஆட்சியாக மாற்றமுடியாததாகிவிடும். சர்க்காரின் அடிமை களாயிருந்து அவர்களுக்கு அனுகூலமானபடியெல்லாம் ஆட்சியை நடத்திக் கொடுப்பது முதலில் ஒழிய வேண்டும். அதை யாரும் கவனிப்ப தேயில்லை. ஆகையால் தேசாபிமானிகள் என்பவர்கள் சர்க்காரை எதிர்ப் பதைவிட அதை கண்டிப்பதை விட அதை நடத்திக் கொடுப்பவர்களை எதிர்க்கவும் கண்டிக்கவும் செய்ய வேண்டும். தப்பிதத்தின் அஸ்திவாரத் தைக்
குடி அரசு - 1930 @) 56
கவனியாமல் படும்பாடு வீணான பாடாகத்தான் முடியும் என்பதாகத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஆகவே, சகோதரர்களே! நன்றாய் ஆலோசித்
துப் பாருங்கள். பிறகு உங்களுக்குச் சரியென்று பட்டதைச் செய்யுங்கள்.
குறிப்பு : 27-07-1930 ஆம் நாள் மாயவரம் ஆனந்த தாண்டவ ஹாவில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 03.08.1930
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சட்டசபை தேர்தல்களுக்கு நிற்பவர்கள் தங்களது நியமனச் சீட்டுகளைத் தாக்கல் செய்து விட்டார்கள். அவர்களில் பெரும்பாலோரும் ஏதாவது ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டே நியமனச் சீட்டுத் தாக்கல் செய்திருப்பார்கள். சிலர் ஜெயிக்கும் கட்சியை எதிர்பார்த்து எதில் வேண்டுமானாலும் சேருவதற்கு வசதி வைத்துக் கொண்டு நியமனச் சீட்டைத் தாக்கல் செய்திருப்பார்கள்.
பொதுவாக தேர்தல்களில் நிற்கப்படுபவர்களில் பெரும்பான்மை யோரின் யோக்கியதைகளையும் நாணயங்களையும் குறித்து முன் ஒரு தலையங்கத்தில் விவரமாய் கூறியிருக்கிறோம். கொள்கையும் நாணயமும் எப்படி இருந்தபோதிலும் தேர்தல் சமயங்களில் கட்சியின் பேரால் நிற்பவர்.
கள் தங்கள் கட்சிக்காக என்று கட்சியின் சார்பாய் பொதுமக்களின் மனதைக் கவரத்தக்க ஏதாவது சில கொள்கைகளை வெளியிடுவது என்பது எங்கும் நடைபெற்று வரும் வழக்கமாகும்.அதுபோலவே இத்தேர்தலிலும் நமது மாகாண சட்ட சபைக்கு நிற்கும் இரண்டு முக்கிய கட்சியாரும் தங்கள் தங்கள் கொள்கைகள் என்பதாக சில விஷயங்களை அறிக்கையின் மூலம் வெளி யிட்டு விட்டார்கள். இவ்விரு ௧௯9 அறிக்கைக் கொள்கைகளும் நம்மைப் பொறுத்தவரை தேர்லுக்கு ஓட்டு வாங்குவதற்காக வெளியிட்ட அறிக்கைக
ளாகும் என்பதே நமது அபிப்பிராயமாகும். ஆனபோதிலும் இருவர்களின் உண்மையான கொள்கைகளை நாம் அறிய முடியவில்லை என்று சொல்லி விடுவதற்கில்லை. ஜஸ்டிஸ் கட்சி 6 வருஷ காலம் அதிகாரத்தில் இருந்த போது செய்திருக்கும் வேலைகளையும் சுதந்திர தேசியக் கட்சி என்னும் இப்போதைய மந்திரி கட்சி நாலு வருஷ காலம் அதிகாரத்தில் இருந்து கொண்டு செய்து வந்திருக்கும் வேலைகளையும் கவனித்துப் பார்க்க பொது மக்களுக்கு தக்க செளகரியம் கிடைத்தே இருக்கின்றது.
ஆதலால் இரு கட்சியாரும் விசேஷ சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஒழிய இனியும் அவைகளையே தான் - அவற்றை அனுசரித்தே தான் நடந்து கொள்வார்கள் என்பதாகவே அறிவுள்ள எவரும் முடிவு செய்து
குடி அரசு - 1930 @) 58
கொள்வார்கள். இரண்டு கட்சியும் தனது அதிகார காலத்தில் அரசியல் வேலை களைக் காட்டிலும் சமூக சீர்திருத்த வேலைகளில் மிக்க கவனம் செலுத்தி தக்க வேலைகள் செய்திருக்கின்றன வென்பதை சீர்திருத்தவாதிகள் யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இதற்கு உதாரணம் சுருக்கமாக வேண்டு மானால் இரு கட்சியும் சீர்திருத்த விரோதிகளான பார்ப்பனர்கள், விரோத மாகவே கருதி வருகின்றார்கள் என்பதினாலேயே அறிந்து கொள்ளலாம்.
இரு கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் அரசியல் சம்மந்த மான கொள்கைகளைப்பற்றி வெளியிட்டிருப்பதற்கும், அக்கட்சியார்களின் மனதில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் நமக்கு நன்றாய் தெரியும்.
அரசியல் கிளர்ச்சிக்காரர்களின் வலையில் பட்டவர்களைச் சமாதானப் படுத்தவும் ஒரு கட்சி மற்றொரு கட்சியைக் குற்றம் சொல்வதன் மூலம் தோற்கடிக்கவும் எண்ணம் கொண்டு கோர்த்த வெறும் வார்த்தைகளேயாகும். ஆகவே அதைப்பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை.
பொதுவாக இரண்டு கட்சியும் சைமன் கமிஷனை ஆதரித்தேயிருக் கின்றது: வரவேற்றுமிருக்கின்றது. அக்கட்சியார் இருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை சைமன் கமிஷனுக்கு ஒரு முகமாக சமர்ப்பித்தவர்களே யாவார்கள். சட்ட மறுப்பியக்கத்தில் சேராதவர்கள் என்பதோடு மாத்திர மல்லாமல் சட்ட மறுப்பு இயக்கத்தை அடக்கும்படிசர்க்காருக்குத் தெரிவித்
துக் கொண்டவர்களுமாவார்கள்.
ஆனால் சட்டமறுப்பு மூலமாய் நிரபராதிகள் கஷ்டப்பட்டதற்கு வருந்தினவர்களுமாவார்கள். இது சம்மந்தமாக உபயோகித்த வார்த்தை களில் மாத்திரம் வேண்டுமானால் ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் சிறிது வித்தியாசமிருக்கலாம்.
இது சகஜமேயாகும். ஏனெனில் அதிகாரத்தில் இருப்பவர்கள் சில பொறுப்பை சுமந்து கொண்டிருப்பவர்களானதால் அவர்கள் சற்று அடக்க மாக பேச வேண்டியதும், அது இல்லாதவர்கள் சற்று துடுக்கமாகப் பேசுவ
தும் இயற்கையானதேயாகும்.
நமது நாட்டைப் பொறுத்தவரை அதாவது தமிழ்நாட்டைப் பொறுத்த வரைப் பார்ப்பனரல்லாதார்களில் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் சீர்திருத்தத் துறையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுபவர்களே யாவார்கள். ஏனெனில் இது சமயம் தமிழ்நாடு சீர்திருத்தத் துறையிலேயே செல்வாக்குப் பெற்றிருப்பதால் எவரும் அதை மதித்துத்தான் ஆக வேண்டும். அந்தப்படி அதை மதித்து அதற்கு இணங்காதவர்கள் எவ்வளவு மெஜாரிடியுடன் சட்டசபையில் வீற்றிருந்தாலும் வெளியில் தலைகாட்ட சிறிதும் செல்வாக்கு இருக்க முடியாது.
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆகையால் பொதுவாக இத்தேர்தலில் அடியோடு முடியா விட்டா லும் கூடுமானவரையாவது அவர்களது அளவுக்கு மேல் பார்ப்பனர்களை நுழைய விடாமல் செய்ய வேண்டியதைத் தவிர தேர்தலில் நம் போன்றவர் களுக்கு வேறு வேலை இருக்காது என்றே கருதுகிறோம். மற்றபடி இரண்டு ககஷியையும் நாம் பொதுவாக மதித்து வந்திருந்தும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர். கள் நெல்லூரில் ஏமாற்றினதையும் நாணயத் தவறுதலாய் நடந்து கொண்ட
தையும் மக்களை மறக்கும்படி செய்ய அது ஒரு முயற்சியும் செய்யவில்லை யானதினால் அதன் பலனை அவர்கள் அடைந்தே விட்டார்கள். இதற்கு ஆதாரம் என்ன வென்றால், அது நெல்லூரில் சட்டசபைக்கே நடவடிக்கை
களில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டால் ஜஸ்டிஸ் கக்ஷிக்கே ஆபத்து வந்து விடும் என்று மாய்மால கூக்குரலிட்டு விட்டு மூன்று மாதத் திற்குள்ளாகவே ஜஸ்டிஸ் கக்ஷியில் பார்ப்பனர்களை சேர்க்காவிட்டால்: ஜஸ்டிஸ் ககஷியே அடியோடு போய்விடும் என்று சொல்லவேண்டிய நிலைமைக்கு வந்து விட்டதே போதுமானதாகும்.
இதற்கு மேலும் அக்கக்ஷித் தலைவர்களுக்கு தங்கள் தவறுகளுக்கு
புத்திக் கற்பிக்க வேண்டிய காரியம் ஒன்றை அவர்கள் எதிர்ப்பார்கள் என்று
நாம் நினைக்கவில்லை.இது வினையின் பயனேயாகும்.
இவை நிற்க ஓட்டர்களுக்கு நமது அபிப்பிராயத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டிய முறையில் சில வார்த்தைகளைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றோம். அதாவது:- தேர்தல்களில் ஓட்டர்கள் எப்பொழுதும் கக்ஷிகளை கவனிக்கக்கூடாது என்பதேயாகும். இதை வெகுநாளாகவே நாம் சொல்லி வந்திருக்கின்றோம். நமது நாட்டில் காங்கிரசானது ஒரு காலத் தில் செல்வாக்காய் இருந்து அந்த செல்வாக்கின் பேரால் முனிசிபாலிட்டி முதலிய தேர்தல்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்பதாக தீர்மானித் துக் கொண்டு பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் காங்கிரஸ் & அபேக்ஷகர்களாய் நின்ற காலங்களில் நாம் காங்கிரஸ் கமிட்டித் தலைவ
ராயும், காரியதரிசியாயும் அதில் முக்கிய அங்கத்தினராயும் இருந்த காலங்க
ளிலும் கூட “கக்ஷிப் பெயரைப் பார்க்காதீர்கள் நிற்கும் ஆசாமிகளின் யோக்கியதையையும், நாணயத்தையும் பார்த்து ஓட்டுச் செய்யுங்கள்” என்றுதான் சொல்லியும், எழுதியும் வந்ததோடு இதை யனுசரித்து பல துண்டுப் பிரசுரங்களும் பதினாயிரக்கணக்காய் வெளிப்படுத்தியும் இருக் கின்றோம். க௯ஷிகள் என்பது அனேகமாய் மந்திரி பதவிக்கும் உத்தியோக ஆசைக்கும் தான் வேண்டியதாய் இருக்கும். தனிப்பட்ட நபர்களோ பொது நலக்காரியங்களுக்கு வேண்டியவர்களாய் இருப்பார்கள். உதாரணமாகச் சொல்லுவோமானால் திருவாளர்கள். செளந்தரபாண்டியன்,॥./ஷண் முகம், &..பன்னீர்செல்வம் போன்றவர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியின் பேரால் நிற்பார்களானால் ஓட்டர்கள் ஜஸ்டிஸ் ககஷியினிடத்தில் எவ்வித அதிருப்தி உள்ளவர்களாயிருந்தாலும் மேற்கண்ட கனவான்களையும் அவர்கள்
குடி அரசு - 1930 @) 60
போன்றவர்களையும் கக்ஷியின் காரணமாக தள்ளிவிட முடியாதென்றே சொல்லுவோம். அது போலவே திருவாளர்கள் 5. முத்தய்யா முதலியார், Dr. சுப்பராயன் போன்றவர்களையும் சுதந்தர தேசியக் க௯ஷி என்பதின் சார்பாக நின்ற போதிலும் அக்ககஷியினிடம் திருப்தி இல்லாதவர்கள் அக்கனவான் களை தள்ளிவிட முடியாதென்றே சொல்லுவோம். ஏனெனில் அவரவர்கள். தங்கள் தங்கள் ஆதிக்கங்களின் கீழ் இருந்த ஸ்தாபனங்களின் மூலம் செய்தி
ருக்கும் வேலைகளைப் பார்த்தே இதைச் சொல்லுகின்றோம். இவ்விஷயத்
தில் நமது அளவுகோல் சீர்திருத்த விஷயத்திலும் பார்ப்பனரல்லாதார். விஷயத்திலும் அனுகூலமாயிருந் தார்களா? இருக்கின்றார்களா? என்பது வேயாகும். இவைகளைத் தவிர மற்ற விஷயங்களில் தங்கள் தங்கள் சவுரியங் காரணமாக தாக்ஷண்யம் காரணமாக ககஷி காரணமாக சில தந்திரங் கள்: செய்திருந்தாலும் இருக்கலாம். அதாவது இரு ககஷியாரும் பார்ப்பனர் களை தங்கள் தங்கள் கக்ஷியில் சேர்க்க தங்களுக்கு உதவிசெய்ய அவர்களை மானமிழந்து கெஞ்சுகின் றார்கள். இரு கக்ஷியாரும் வருணாசிரம - புராண: மூடக்கொள்கையுடைய ஜாதி மத ஆணவம் கொண்ட ஆசாமிகளை தங்கள் கக்ஷிகளின் பேரால் நிறுத்தி தங்களுக்கு அவர்களுடைய ஆதரவைத் தேடு கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ் கொள்கைக்காரர்களையும் சுயமரியாதை கொள்கை விரோதிகளையும் தங்கள் தங்கள் கக்ஷியில் சேர்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அன்றியும் அப்பேர்ப்பட்ட வர்களை உத்தேசித்து தங்கள் தங்கள் கொள்கைகளைக் கூட சிறிது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கிறார்கள். ஆகவே இவைகளையெல்லாம் நடு நிலை மையில் இருந்து பார்த்தால் இப்போதைய தேர்தல்களுக்கு இவை அவசி யமான தந்திரங்களாகவே இருந்து வருகின்றது. ஆனாலும் ஓட்டர்கள் ஞான முடையவர்களாகி யோக்கியமும் நாணயமும் உடையவர்களாகின்ற வரை:
யில் மேற்கண்ட புரட்டுகளுக்கு நாட்டில் செல்வாக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். ஆதலால் இந்த தேர்தல்களில் ஓட்டர்கள் யாரும் கக்ஷிப் பெயர்களைக் கண்டு விருப்பு வெறுப்புக் கொள்ளாமல் அபேக்ஷகர்களின் தனிப்பட்ட யோக்கியதைகளையும் முன்பின் அவர்கள் செய்த காரியங் களையும் செய்யக் கூடிய சவுகரியம் இருப்பதையும், கவனித்து அபேக்ஷகர் களை தெரிந்தெடுக்க வேண்டுவதே தற்கால நிலையில் முறையாகுமென்று வற்புறுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 03.08.1930
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
i நாட்டு வக்கீல்கனின்
“தேசியம்”
மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3,4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை 111.5.
பாரிலும் வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்கு கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபனை சொன்னதாகவும் அவ் வாட்சேபனை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத் துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன்னார்களாம். அதற்கு பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாக்கிர
கத்தில் ஈடுபட்டதால் சிறை செல்ல நேரிட்டதென்றும் மதராஸ் ஹைகோர்ட்
டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிஸ்டர் என்றும் எடுத்துக் காட்டினாராம். இதற்காக கனம் ஜட்ஜி அந்த விண்ணப்பத்தை பைசல் செய்ய 2 மீ£வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த விஷயத்தில் இவ்வித ஆட்க்ஷபனை கொண்டு வந்ததை நாம் பல மாகக் கண்டிக்கின்றோம். வக்கீல்கள் அரசியல் சம்மதமான கிளர்ச்சிகளில் ஈடுபடுவதும், தண்டனைகள் அடைவதும் அவர்களின் இப்போதைய தொழில் முறையில் முக்கிய அம்சமாகி விட்டது. இந்தியாவில் அனேக வக்கீல்கள் தண்டனை அடைந்து இப்பொழுது வக்கீல்களாகவே இருக்கின் றார்கள். இது ஒருபுறமிருக்க, திரு. K 2. கேசவமேனன் அவர்கள் ராஜத் துவேஷ விஷயமாய்ச் சிறைச் சென்றவர் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லுவோம். சென்னை ஹைகோட்டில் அவர் மிக்க பிரபல வக்கீலாக இருந்தவர். இந்தியாவில் பிரபலமாயிருந்த கனவான்கள் யாராவது தேச சேவையின் பலனாய் உண்மையான தியாகம் செய்தவர்கள் இருப்பார். களானால் அவர்களில் திரு.1626 மேனன் முதன்மையானவராவார். மலை யாள தேச முழுமையும் KPK. மேனன் என்றால் கண்களில் நீர் விடுவார்கள். அப்பேற்பட்ட உண்மையான தியாகியானவர். திருவாங்கூர் ராஜியத்தில் வைக்கம் என்னும் ஒரு பிரபல கோயில் உள்ள ஊரில் உள்ள பொதுத் தெருவில் ஈழவர்கள் நாடார்கள் முதலியவர்கள் கூட நடக்கக் கூடாது என்று
குடி அரசு - 1930 @) 62
தடைசெய்யப்பட்டத் தெருவில் அவர்களுக்குத் தெருப் பாத்தியம் வாங்கிக் கொடுக்கச் செய்யப்பட்ட முயற்சியில் திருவாங்கூர் அரசர் என்னும் சுதேச ராஜாவால் 6 மீ£தண்டிக்கப்பட்டு ஜெயிலிலும் மிக்க மரியாதையாய் நடத்தப் பட்டவர். அத்தண்டனையின் போது நாமும் அவரும் திருவாங்கூர் ஜெயி
லில் ஒன்றாகவே தண்டனை அனுப்பவித்தவர்களாவோம். கடைசியாக காலாவதி தீருமுன் எங்களை விடுதலை செய்து விட்டதோடு திரு. கே. பி. கே. மேனனை எதற்காகத் தண்டித்தார்களோ அந்த காரியமான வைக்கம் ரோட்டுகளை எல்லோரும் நடக்கும்படியாக உத்தரவு கொடுத்து விட்டார்கள். ஆகவே திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் செய்த காரியம் குற்றமா அல் லது திருவாங்கூர் அரசாங்கம் அவரை சிறைபடுத்தினது குற்றமா என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
ஆகவே இப்படிப்பட்ட திரு. மேனன் அவர்களை மலாய் வக்கீல்கள்
சிலர் ஆட்சேபிப்பதிலிருந்து அவர்கள் தேசீயமும், சமூக சீர்திருத்தமும், அரசியல் முற்போக்கு முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம்...
நம்மைப் பொறுத்தவரை இவ்வித ஆட்சேபனைகள் அறியாமை யினாலோ அல்லது பொறாமையாலோ தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றோம். இது வக்கீல் தன்மையின் பிறவிக் குணமாம் போலும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.08.1930
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
குடி அரசு - 1930 @) 64
ஆர். கே. ஷண்முகம்
உயர்திருவாளர் கோவை ஆர். கே. ஷண்முகம் அவர்களை இந்தி
யரில் அறியாதார் யாரும் இருக்க முடியாதென்றே கருதுகின்றோம். மேல் நாட்டவர்களும், அவரைப்பற்றி விசேஷமாக அறிந்திருப்பார்கள். சிறப்பாக தமிழ் நாட்டில் தெருவில் விளையாடும் குழந்தைகள் முதல் அரசர் வரை அவரைப் பற்றி நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். அன்றியும் சுயமரியாதை.
உலகத்திலும், சீர்திருத்த உலகத்திலும் திருவாளர் செளந்தரபாண்டியன் அவர்களைப் போலவே - சில விஷயங்களில் அவருக்கு மேலாகவே திரு. ஷண்முகம் அவர்கள் பெயரும் ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக தங்கள் தங்கள் வீட்டு நபர்களைப் போலவே வழங்கப்பட்டு வருகின்றது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
திரு. ஷண்முகம் அவர்கள் அறிவு, திறன், ஆராய்ச்சி, அனுபவ ஞானம், முயற்சி, கல்வி, செல்வம் ஆகிய அருங்குணங்களும், தன்மை களும் ஒன்று போலவே அமையப் பெற்றவராவார். அப்பேர்ப் பட்டவரின் சேவையானது பொதுவாக சீர்திருத்த உலகத்திற்கும், அரசியல் என்கிற உலகத்திற்கும் மிக்க இன்றியமையாதது என்பதை எடுத்துக்காட்ட வேண்டி யதில்லை.
ஆகவே அவர் சமீபத்தில் நடைபெறப்போகும் இந்திய சட்ட சபைத் தேர்தலுக்கு எம்.எல்.ஏக்கு மறுபடியும் ஒரு அபேக்ஷ்கராக நிற்கின்றார் என்ற சேதி கேட்டு இந்திய நாட்டில் மகிழ்ச்சியடையாதார் யாருமே இருக்க
முடியாது.
சென்ற அதாவது நான்கு வருஷத்திற்கு முந்திய தேர்தலில் அவர் இந்தியாவில் இல்லாமல் இருக்கும் போதே அதாவது அவர் ஆஸ்ட் ரேலியா கண்டத்தில் இருக்கும் போதே போட்டியன்னியில் ஏகமனதாய் தெரிந்தெடுக்கப்பட்டவராவார். சமீபத்தில் காங்கிரஸ் கட்டளைப்படி தனது ஸ்தானத்தை ராஜினாமா கொடுத்துவிட்டு சுதாவில் மறுபடி நின்றபோதும் போட்டியன்னியில் தெரிந்தெடுக்கப்பட்டவராவார். அப்படிப்பட்டவருக்கு இம்முறை தேர்தலில் போட்டி ஏற்பட்டதானது வருந்தத்தக்கதேயாகும். அப்
65 டட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
போட்டியும் சாதாரணமாகப் பொது நலத்தை பொறுத்தோ ஸ்தானத்தைப் பொறுத்தோ அல்லது பதவியை அபேக்ஷித்தோ அல்லாமல் கக்ஷியையும், சொந்த அபிப்பிராய பேதங்களையும் கட்சி பேதத்தையும் கருதி திரு. ஷண்முகம் “போட்டியன்னியில் தெரிந்தெடுக்கக் கூடாது” என்கிற எண்ணத்தின் மீது அவருக்குத் தொந்திரவுக் கொடுக்க ஆசைப்பட்டு ஏற்படுத்தப்பட்ட போட்டியாக நமக்கு காணப்படுவதால் அதற்காக நாம் பெரிதும் வருந்த வேண்டியிருக்கின்றது. திரு. ஷண்முகம் அவர்கள் சீர்திருத்தத் துறையில் வேலை செய்ய வேண்டும் என்கின்ற ஆசை யினாலேயே இந்திய அரசாங்கத்தில் பெரிய சம்பளமாகிய மீ” 3000,
4000 ரூ, போன்ற வருமானம் கிடைக்கக் கூடிய டாரிப் போர்ட் (வரிவிதிக்
கும் சபை! மெம்பர் பதவியையும் லக்ஷியம் செய்யாமல் தனக்கு வேண்டா மென்று விட்டு விட்டார். இந்த விபரங்களை பொது மக்கள் இந்து, சுதேச மித்திரன் ஆகிய பார்ப்பன பத்திரிகைகளிலும் பார்க்கலாம்.
நிற்க, சென்னை மாகாணத்திலிருந்தும் சிறப்பாக தமிழ் நாட்டிலிருந்தும் இந்திய சட்டசபைக்கு 10க்கு 9 ஸ்தானங்களுக்கு பார்ப்பனர்களாகவே அதிலும் அய்யங்கார்களாகவே சிறப்பாக சீர்திருத்த விரோதியும் வருணா சிரமக் கொள்கையுடையவருமான பார்ப்பனர்களாகவே போய்க் கொண்டி ருப்பது வழக்கம். அவற்றுள் திரு. ஷண்முகம் ஒருவர் மாத்திரம் பார்ப்பன ரல்லாதாராகவும், சிறப்பாக வர்ணாசிரம எதிரியாயும் சீர்திருத்தக் கொள்கை உடையவருமாக போய் கொண்டிருந்தார். அது மாத்திரமல்லாமல் நமது நாட்டுப் பார்ப்பனர்கள் சென்னை மாகாணத்துப் பார்ப்பனரல்லாதார்கள். “போதிய அறிவும், ஞானமும், செல்வாக்கும் இல்லாதவர்கள் என்றும் அவர்கள் தேசத்துரோகிகள், சிறப்பாக தேசீயத்திற்கு விரோதிகள்” என்றும் வெளி மாகாணக்காரருக்கு பிரசாரம் செய்து பார்ப்பனரல்லாதார் மீது அலக்ஷியமும் அசூயையும் ஏற்படும்படி செய்திருந்த விஷமக் கூற்றுகள். யெல்லாம் திரு. ஷண்முகம் இந்திய சட்ட சபைக்குச் சென்ற பிறகு தான் உடைத்துப் பொடியாக்கி குழி வெட்டிப்புதைக்கப்பட்டதை பார்ப்பனர்களே
ஒப்புக் கொண்டு அவர் மறுபடியும் இந்திய சட்டசபைக்கு செல்ல முடியாமல் முயற்சிக்கிறார்கள் என்றால் மற்றபடி பார்ப்பனரல்லாதார்க்குத் தெரியாமல் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். திரு.ஷண்முகம் அவர்கள் இந்திய சட்டசபைக்கு சென்றதின் பயனாய் பார்ப்பனரல்லாதார் பெருமையையும், திறமையையும் இந்தியாவும் உலக மும் அறிய முடிந்தது என்பது மாத்திரமல்லாமல் சென்னை மாகாணத்துப் பார்ப்பனர்கள் தேசீயவாதி, மிதவாதி, அமிதவாதி உட்பட எல்லோருடைய யோக்கியதையும் வெளிப்படுத்தப்பட்டதானது எல்லாவற்றையும் விடப் போற்றத்தக்கதும் பாராட்டத்தக்கதுமான காரியமாகும். இன்றைய தினமும்
திரு. ஷண்முகம் இந்திய சட்டசபையில் இருந்ததின் மூலம் வெளிமாகாணத் தலைவர்களின் சம்மந்தம் வைத்துக் கொண்டிருப்பதாலேயே தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் எல்லா இந்திய தேசியத் தலைமை ஸ்தானங்கள் எல்லாம்.
குடி அரசு - 1930 @) 66
பறிக்கப்பட்டு அவர்களும் மூலையில் உட்காரப்பட வேண்டியவர் களாகி விட்டார்கள் என்பதை எவரும் நாம் சொல்லித் தெரிய வேண்டியவர் களாயிருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகின்றோம்.
இவ்விஷயங்கள் எல்லாம் பொது மக்கள் நன்றாய் உணர்ந்திருந் தாலும் இன்றைய தினமும் இந்திய சட்டசபைக்குத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாதார்கள் சிறிதும் ஆபேட்சிக்காமல் அலக்ஷிய மாகவே இருந்து கொண்டு பார்ப்பனர்களே பெரிதும் அங்குப் போய்ச் சேரும்படி செய்வது முன்னும் வழக்கமாய் இருந்தாலும் இப்போதும் வழக்கமாய் இருக்கிறது.
உதாரணமாக கோவை, சேலம், வட ஆற்காடு ஆகிய மூன்று ஜில்லாக் களும் சேர்ந்த தொகுதி தவிர மற்றத் தொகுதிகளில் எல்லாம் பார்ப்பனர்களே இருந்துவருகின்றார்கள் என்பதோடு வரப்போகும் தேர்தல் களுக்கும் சென்னை, கோவைத் தவிர மற்றவைகளில் எல்லாம் பார்ப்பனர்கள் அபேகஷகர்களாய் இருக்கிறார்கள். அன்றியும் இதில் மற்றும் ஒரு ஆபத்து என்ன வென்றால் மேல் கண்ட பார்ப்பன அபேக்ஷகர்கள் எல்லாம் வருணாசிரமக் கொள்கையின் மீதும் சாரதா சட்டத்தை அழிப்பது அல்லது திருத்துவது என்கின்ற கொள்கையின் மீதுமே தான் நிற்கின்றார்கள். இது செங்கற்பட்டு, தென் ஆற்காடு ஜில்லாத் தொகுதிக்கு நிற்கும் பெரிய “சீர்திருத்தவாதி” யான திரு. டி. ரங்காச்சாரியின் விளம்பரத்தைப் பார்த்தால் தெரியும். ஆகவே வருணாசிரமத்தை அடியோடு எதிர்க்கும் பார்ப்பன ரல்லாதார் அபேக்ஷகர்கள் இன்றைய தினம் சென்னை மாகாணத்திலாகட்டும்,
தமிழ் நாட்டிலாகட்டும் திரு.ஆர். கே. ஷண்முகம் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்றும் உறுதியாகச் சொல்லுவோம்.
அது மாத்திரமல்லாமல் அவர் வருணாசிரமத் தருமத்திற்கு விரோதமாய் இருக்கின்றார் என்று சொல்லி அந்தக் காரணத்தால் அவரை: பாமரமக்களிடம் குற்றமும், பழியும் சுமத்தி தோற்கடிக்கச் செய்து விடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே திரு. ஷண்முகம் அவர்களுடன் போட்டிப் போட எதிர் அபேகடஷகருக்கு தைரியம் ஏற்பட்டதென்பதே நமது அபிப்பி ராயமாகும்.ஆகவே அவரது தேர்தலில் அவர் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும் தமிழ்நாடும் பார்ப்பனரல்லாத மக்களும் வருணாச் சிரமத்தை விரும்பி அதன் கொள்கைப்படி தாங்கள் சூத்திரர்களாக விரும்பு கிறார்களா அல்லது அப்பட்டத்தை வெறுக்கின்றார்களா என்கிற பரிகைஷ முடிவாகத்தான் இருக்கின்றது. நிற்க திரு. ஷண்முகம் அவர்களுக்கும், போட்டி அபேக்ஷகருக்கும் உள்ள தாரதம்மியமும், வெற்றிக்குள்ள சவுகரிய
மும் இத்தேர்தலில் பொது மக்கள் கடமையும் பின்னால் தெரிவிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.08.1930
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கும்பகோணம் தானூகா கோண்டாவது யார்ப்பணால்லாதார் மகாநாடு
அன்புள்ள சகோதரிகளே! சகோதரர்களே!
நான் இங்கு வந்தது முதல் இதுவரையிலும் எனக்காக வென்று செய்யப்பட்ட ஆடம்பரங்களையும், ஊர்வலங்களையும் என்னைத் தலை வனாக பிரரேபிப்பதன் முகத்தான் என்னைப் பற்றி பலர் பேசிய புகழுரை களையும் எனக்காக என்று இப்போது வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரங் களில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களையும் கவனித்துப் பார்த்ததில் நான் மிக்க வெட்கப்பட வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில் எந்த மூட நம்பிக்கைகளையும், குருட்டு பக்தியையும் அடியோடு ஒழிக்க வேண்: டுமென்று முயற்சி செய்கிறேனோ, அவற்றை அதை யொழிப்பதற்காகக் கூடிய இந்த மகாநாட்டில் உங்களாலேயே என் விஷயத்தில் உபயோகப் படுத்தப்படுவதை நான் பிரத்தியட்சமாகப் பார்க்கிறேன். இவற்றை அநு மதித்துக் கொண்டிருக்கிற நான் எந்த விதத்தில் இத் தொண்டில் வெற்றி யடைய முடியும்? அல்லது என்னைப் பொறுத்த அளவிலாவது அவற்றி லிருந்து திருத்தமடைகிறேனென்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே இம் மாதிரியான செய்கைகளை தயவுசெய்து அடியோடு இனி விட்டுவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். மக்களுடைய உணர்ச்சிக்காக
வும் பிரசாரத்திற்காகவும் செய்யப்படுகிறதென்று சொல்லப்படுவதனாலும் அதற்கும் சிறிதாவது அளவும், பொருத்தமும் வேண்டும். இப்படிச் சொல்வ தற்கு என்னை மன்னிக்க வேண்டுமாய் கோருகிறேன்.
இந்த சிறிய கிராமத்தில் இவ்வளவு பெரிய எதிர்ப்புக்கிடையில் இத்துணை பெரிய கூட்டம் பெண்களும், ஆண்களும், தாழ்த்தப்பட்டவர். களுமாய்க் கூடி இருப்பதானது நமது கொள்கையிலுள்ள உணர்ச்சி சிறிதும் இந்தக் கிராமத்துப் பார்ப்பனர்களின் கிளர்ச்சிப் பெரிதுமாய்ச் சேர்ந்து தான் இவ்வளவுக் கூட்டங் கூட நேர்ந்தது என்று கருதுகிறேன்:
சகோதரர்களே! நான் மகாநாட்டுக்கு வரும் வழியில் கண்ட காட்சி களானது எனது கொள்கையிலும் அபிப்பிராயத்திலும் என்னை மிக்க
குடி அரசு - 1930 @) 68
உறுதிபடுத்தி விட்டது. வழி நெடுக போலீஸ் உதவியின் பேரில் ஒவ்வொரு கிளைப்பாதைக்கும் நூற்றுக்கணக்கானப் பார்ப்பனர்களும், பார்ப்பன ரல்லாதார்களும் வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு கையில் தடியுடன் நின்றதையும், திருவாவடுதுறை கோயிலுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாத ஆட்கள் கழிகளுடன் நின்றுக் கொண்டிருந்ததையும், இவைகளுக்கெல்லாம் சர்க்கார் அதிகாரிகளும் பண்டார சந்நிதிகளும் உள்ளூர உடந்தையாயும், சகாயமாகவும் இருப்பதையும் பார்க்க இந்த நாடா னது என்றென்றைக்கும் அன்னிய ஆட்சியிலிருப்பதற்கு தகுதியானதே யொழிய இந்த நிலையில் ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதை இல்லை யென்றே நினைக்கிறேன். இன்றைய தினம் இங்கு வெள்ளைக்கார ஆட்சி யில்லாமல் பண்டார சந்நிதிகளாட்சியோ, பார்ப்பனராட்சியோ, இவர்களைக் குருவாய்க் கொண்ட இந்துக்கள் ஆட்சியோ இருந்திருக்குமானால் நான் இங்கு வந்து சேர்ந்திருக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். இந்த அதிகாரிகளும் ஏறக்குறைய எல்லாம் பார்ப்பனர்களாகவே யிருந் திருந்ததின்
மூலம் வெள்ளைக்கார ஆட்சியின் பயம் அவர்கட்கு இல்லா திருக்குமே
யானால் நம்மை ஒரு நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத் தெறிந்து இருப்பார்கள். என்னுடைய இந்தப் பத்துப்பதினைந்து வருஷத்திய பொது வாழ்வு சுற்றுப் பிரயாணத்தில் ஒரு இடத்திலாவது இந்த மாதிரி பார்ப்பனர்கள். வரிந்து கட்டிக் கொண்டு தடியுங் கையுமாய் நின்று கொண்டி ருந்ததை யான் எங்கும் பார்த்ததில்லை. நம்முடன் வந்த கூட்டமானது சற்று நிதானம். தவறியிருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதிகாரிகளுடைய சலுகை இல்லாதிருந்திருக்குமானால் அவர்களுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டிருக்க முடியுமா? நாம் என்ன அக்கிரமங்களை செய்ய இந்த மகாநாட்டைக் கூட்டியிருக்கிறோம்? அல்லது இதுவரையில் யாருக்கு எவ்விதமான அநீதி நமது தொண்டால் ஏற்பட்டது? நமது உரிமைகளை நாம் எதிர்பார்ப்பதும், நமது சுயமரியாதையை நாம் அடைய
முயற்சிப்பதும், இவ்வளவு பெரிய ஆத்திரத்திற்கும், மூர்க்கத் தனத்திற்கும் இடங் கொடுக்குமானால் இந்த நிலையில் நமது நாட்டின் ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமாவென்று யோசித்துப் பாருங் கள். இந்த நாட்டில் உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலம் முதல் எனக்கு அதனிடம் சிறிதும் அனுதாபமில்லாதிருந்தது உங்கள் எல்லோருக் கும் தெரிந்ததேயாகும். அது விஷயத்தில் எனது அபிப்பிராயத்தையும் சிறிதும் மறைக்காமல் வெளியிட்டு வந்ததோடு அதனால் ஏற்படும் கெடுதிகளையும் துணிந்து விளக்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு அனேக கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்பட்டிருப்பதையும் சகித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். எங்களூரில் மகாநாடு நடந்த காலத்தில் அதிகாரிகளால் எவ்வளவோ கஷ்டங்கள் ஏற்பட்டன. மற்றும் நான் செல்லு கிற இடங்களிலெல்லாம் பார்ப்பன அதிகாரிகள் இருக்குமிடங்களில் மிக்கத் தொல்லைகள் ஏற்பட்டு வருவதையும் பார்த்து வருகிறேன்.பல மொட்டைக்
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கடிதங்களும் வந்து கொண்டு இருப்பதோடு பிரசாரத்துக்கும் பத்திரிகைக் கும் இடையூறுண்டாகும்படி பல முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த
ஊருக்கு வருவதற்கு முன் எனக்கு ஒரு மிரட்டுதல் கடிதம் வந்தது. ஆகவே இந்த நாட்டுப் பார்ப்பனராதிக்கமும், பார்ப்பனீய உணர்ச்சி யும் ஒழியும் வரை இன்றைய அரசாங்கத்தை எப்படி எதிர்க்க முடியும்? அதன் உதவியை எப்படித் தள்ள முடியும்? இந்த நிலையில் நம்மைப் பார்ப்பன ராதிக்கத்தினிடமும், பண்டார சந்நிதிகளாதிக்கத்தினிடமும், பணக்கார ஆதிக்கத்தினிடமும் விட்டு விட்டு இந்த சர்க்கார் போய் விடு கிறோமென்று சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் போக வேண்டாமென்று தான் சத்தியாக் கிரகம் செய்ய வேண்டுமே யொழிய போகச் செய்யும் சத்தியாக்கிரகத்தில் ஒருக்காலும் சேர்த்து கொள்ள
முடியாது. இந்த கிராமத்து அக்கிரகாரமானது தஞ்சாவூர் மகாராஜாவால் தனது முன்னோர்களின் எலும்புகளைக் கங்கை யில் கொண்டு போய் போடுவதை விட பிராமணர்கள் என்பவர்களின் வயிற்றிற்போய் சேரும்படி அரைத்துக் குடிக்க செய்து விட்டால் அதிகப் புண்ணியமென்பதாகக் கருதி “பிராமணர் "களும் அப்படியே அரைத்துக் குடித்ததற்காக அக்காலத்தில் சில பார்ப்பனர்களுக்கு இந்த அக்கிரகாரங் களையும் கட்டிக் கொடுத்து நூறு வேலி 600 ஏக்கர் நஞ்சை நிலமும் கொடுத்ததாக சொல்லப்படுவதுடன் ஏதோ ஒரு பிராமணன் என்பவன் தீண்டாதான் ஒருவனுக்குத் தன் வீட்டிலழைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் அவனை இந்த ஊர் “பிராமணர்கள்” எல்லாம்
சேர்ந்து ஜாதியை விட்டு விலக்கி கங்கையில் போய் ஸ்நானம் செய்து விட்டு. வரும்படி ஊரை விட்டு விரட்டினதாகவும் அந்தப்பிராமணன் கங்கையைத்
தன் வீட்டுப் புழக் கடையிலேயே வருவித்துக் காட்டினதாகவும், பிறகு அவனைச் சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே எப்படிப் பார்த்தாலும் இந்த ஸ்தலப் பெருமையின் படி ஒன்று இங்குள்ளவர்கள். எலும்பைத் தூளாக்கிக் கரைத்துக் குடித்தவர்களாயிருக்க வேண்டும், அல்லது பறையனை வீட்டில் வைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் கங்கை இந்த. கிராமத்துக்கு வரத் தகுந்த அவ்வளவு நன்மையடைந்ததாகயிருக்க வேண்டும். அப்படியிருக்க இதை நம்புகிற பார்ப்பனர்கள் எப்படி வீதியில் பறையன் நடந்து விடுவான் என்று தடி எடுத்துக் கொண்டு தெருவில்
நிற்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இது மூர்க்கத்தனமா? அல்லது ஆச்சாரமா? அந்த வீதி யில் எல்லா மிருகங்களும் செல்வதைப் பார்க்கிறோம். இந்துக்களில் ஒரு சாரார் தவிர மற்றவர்கள் எல்லாரும். செல்வதையும் பார்க்கிறோம். மற்றத் தெருக்களில் நடக்கும் போது எவ்வளவோ அசிங்கியங்களை மிதித்துக் கொண்டேதான் காலைக் கழுவாமல் அத் தெருவில் யாவரும் நடப்பதைப் பார்க்கிறோம். அந்த தெருவிலுள்ள பார்ப்பனர்களுக்கு அவர்கள் வயலில் வேலை செய்து நெல் விளைத்துக் கொடுத்த அவர்களது மதத்தைச் சேர்ந்த மக்கள் போகக் கூடாதென்றும் அவர்களுடைய “மதத்திற்கெதிராயிருந்து அவர்களது கோயில்களையும், சாமிகளையும் சாஸ்திரங்களையும் உடைத்து இடித்து
குடி அரசு - 1930 @) 70
கொளுத்திய” மகமதியர்களைத் தாராளமாகப் போக விட்டுக் கொண்டும் இருக்கிறார் களென்றால், இதானது மதத்தையும், சாத்திரத்தையும் ஆதாரமாகக் கொண்டு தடுக்கப் படுகிறதாவென்று ஆலோசித்துப் பாருங் கள். பறையன் சக்தியற்றவனாக இருக்கிறான். படிப்பில், செல்வத்தில், சுய மரியாதையில் கேவலமாக அழுத்தப்பட்டிருக்கிறான். மகமதியன் சகல செளகரியத்துடனும் வீரியத்துடனும், சுயமரியாதையுடனுமிருக்கிறான் பறையனை வேண்டாம் என்று சொன்னால் பறையன் பயந்து கொள்வான். யோக்கியப் பொறுப்பற்ற சர்க்காரும் அதற்கு இடங்கொடுத்துக் காவலாளை அனுப்பிக் கொடுக்கும். மகமதியனோ தெருவில் நடக்க வேண்டாமென்று சொல்லி விட்டால் உடனே உதை கொடுப்பான். “வேண்டாம் என்று சொல்பவர்களின் பெண்டுபிள்ளைகளையும் கட்டியணைவதோடு மாத்திரம் நில்லாமல் தூக்கிக் கொண்டும் போய் விடுவான்.” அப்போது சர்க்காரும் வாலையொடுக்கிக் கொள்ளும். ஆகவே தீண்டாமையும், தெருவில் நடக்கா மையும் எதிலே இருக்கின்றதென்று யோசித்துப் பாருங்கள். இந்து மதத் திலும் சுயமரியாதையற்றத் தன்மையிலுந்தானே தீண்டாமை இருந்து வரு கின்றது. இந்த கிராமத்தில் மகமதியர்களின் எண்ணிக்கை எவ்வளவு சுருக் கம். தாழ்த்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு அதிகம்? அப்படி
யிருந்தும் மகமதியர்களுக்கு சுதந்திரமும், இந்துக்களுக்குத் தடையும் ஏற்பட்டிருப்பது மதம் காரணமா அல்லவா? அப்படிப்பட்ட மதம் எதற்காக இருக்கவேண்டுமென்றால் மக்களுக்கு வெறும் கோபம் வருகிறதே யொழிய மற்றபடி எவ்வித சமாதானமும் சொல்லுகிறவர்களைக் காணோம்.இப்படிப் பட்டவர்களை நாம் மூடர்களென்றும், மூர்க்கர்களென் றும், அயோக்கியர்கள் என்றும் சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?
சகோதரர்களே! கண்டிப்பாக நான் ஒன்று சொல்லுகிறேன். இந்து மத மென்பது ஒழிகின்ற வரையில் குறைந்தது வெள்ளைக்காரனுடைய
ஆட்சியாவது இருந்துதான் ஆக வேண்டும். இந்த நாட்டில் அநேகருடைய மனதை தேசீயக் கிளர்ச்சி கவர்ந்து இருப்பது எனக்குத் தெரியும். அவர்களில் பெரும்பாலோர் பொறுப்பற்றவர்களும், அறியாதவர்களும் சுயநலக்காரர்:
களும், சிலர் உண்மை யறியாதவர்களுமே யாவார்கள். இந்த ஒரு சிறு கிராமத்
தில் தெருவில் நடப்பதைத் தடுப்பதற்காக பார்ப்பனர்களும் அவர்களு டைய கூலிகளாகிய பல பார்ப்பனரல்லாதார்களும் அவர்களைக் காக்க போலீசுகளும், மேஜிஸ்ட்ரேட்டுகளும் நூற்றுக்கணக்காக நின்று கொண்டி ருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நாட்டு மக்களின் ஈனத்தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்? இந்தியனும், ஐரோப்பியனும் அல்லாத ஒரு மனிதன் இன்றைய தினம் இந்தியாவுக்கு வந்து திருவிசலூர் அக்கிர காரத்துப்பார்ப்பனர்களின் காட்சிகளையும், நகரங்களிலும், பட்டினங் களிலும் நடக்கும் சட்டமறுப்பு மீட்டிங்குகளின் பேச்சுகளையும் காண்பா னேயானால் எள்ளி நகையாட மாட்டானாவென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் ஏதாவது சத்தியாக்கிரகத்துக்குப் பயந்து கொண்டு பேசு கிறேன் என்று
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கருதுகிறீர்களா? நானும் ஒரு காலத்தில் சட்ட மறுப்பு மறியலும், சத்தியாக்கிரகமும் செய்து பார்த்து அதற்காக பல தடவை சிறை சென்றுமிருக்கிறேன். இந்நாட்டில் எல்லாரையும் விட பெரிய தேசப் பக்தனாகவுமிருந்து பார்த்துமிருக்கிறேன். வருணாசிரம தருமிகளெல்லாம் என்னை ராஜரிஷி யென்றும் பிரமரிஷி என்றும் சொன்னதோடு உற்சவங் களில் தேர்களில் கூட எனது படத்தை இழுத்திருக்கிறார்கள்.
ஆகவே ஒரு மாசமோ, மூன்று மாசமோ, ஆறு மாசமோ ஜெயிலுக்கு போவதால் எனக்கொன்றும் ஆபத்து வந்து விடாது. சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொள்வதால் எனக்கொன்றும் மரியாதையுங் குறைந்து விடாது. ஆதலால் நான் எவ்வித சத்தியாக்கிரகத்திற்கும் எந்த ஜெயிலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பின்னை ஏன் அதை ஆதரிக்கவில்லை என்றால், அதன் உண்மையும், அனுபவமும் எனக்கு சிறிதாவது தெரியும்.
சுமார் பத்து வருஷத்திற்கு முன் ஏற்பட்ட ஒத்துழையாமையின்போது முப்பதினாயிரம் பேர்கள் சிறை சென்றோம்; ஒரு கோடி ரூபாய் செலவுஞ் செய்தோம். ஒரு வளைந்து போன பின் (Pin) ஊசிக்கும் பயன்படவில்லை. நான் அவ்வளவு பாடுபட்டும். எவ்வளவோ தேசீயப் பிரசாரம் செய்தும் இன்றும் திருவிசலூர் அக்கிரகாரத்தில் தடியும் கையுமாய் பார்ப்பனர்கள். நின்று கொண்டிருப்பதை மாற்ற முடியவில்லையென்றால் யோக்கியனுக்கு வேலை அங்கா? இங்கா? என்று பாருங்கள். உண்மையில் எந்த வைதீகர்.
களும் வருணாச்சிரம தருமிகளும் என்னைப் பெரிய ராஜரிஷி என்றும், பிரமரிஷி என்றும், தேசப் பக்தன் என்றும், தேசியவீரனென்றும் அழைத்தார். களோ அவர்களேதான் இன்றைய தினம் என்னைத் தேசத்துரோகி என்றும், மதத் துவேஷி யென்றும் அழைக்கப்படுவதை நான் பார்க்கிறேன்.
ஆகவே இதிலிருந்தே நான் முன் செய்த தொண்டு வைதீகர்கட்கும், வருணாசிரமிகட்கும் அனுகூலமான தென்றும் இப்போது நான் செய்வது அவர்களுக்கு விரோதமானதென்றும் நன்றாய் விளங்கவில்லையா? இவற்றிலிருந்து தான் எனது தொண்டில் எனது அபிப்பிராயத்தில் நாளுக்கு நாள் உறுதிப்பட்டுக் கொண்டு வருகிறது.என்றையதினம் அரசியல் என்பதாக
நம் நாட்டில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டதோ அன்றையதினமே படித்த மக்கள். என்பவர்களிடம் நாணயக் குறைவும் சுயநலமும் ஏற்பட்டு விட்டது. அதன் பயனாய் பாமரமக்கள் ஏமாற்றமடைந்து பழய அரசியல் நிலைமை யைவிட அதிக மோசமான நிலைமை ஏற்பட்டு விட்டது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் அன்னிய ஆட்சியையொழிக்கும் அரசியல் கிளர்ச்சி என்பது உதவவே உதவாது; முடியவே முடியாது. ஏனெனில் நமது நாடானது அந்நியராட்சிக்கு அநுகலமாகவே ஆதியிலிருந்தே அமைக்கப்பட்டு
விட்டது. அதற்கு உதாரணமாக நமது நாடு அன்னிய ஆட்சி இல்லாதிருந்த ஒரு காலத்தை நம்மால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
குடி அரசு - 1930 @) 72
உதாரணமாக இந்தியாவானது ஐரோப்பியராட்சிக்கு முன், துருக்கி யராட்சியிலேதான் சுமார் ஆயிரம் வருஷம் வரை யிருந்து வந்திருக்கிறது. அதற்குமுன் ஆட்சிக்கு சரித்திரங்களையோ புராணக் கதைகளையோ ஆதார மாய் எடுத்துக் கொள்வதாய் இருந்தால் ஆரியர்களுடைய ஆட்சி யாகத்தான்.
இருந்திருக்கிறது. அதற்குமுன், அல்லது அதன் மத்தியில் ஏதாவது ஆட்சி சொல்ல வேண்டுமானால் காட்டு ராஜாக்களும், ஆரியக் கொள்கைக்கு அடிமையாயிருந்த மூட ராஜாக்களும் இருந்த ஆட்சியில் தான் நாடு. சின்னாபின்னப்பட்டு கிடந்திருக்கிறது. இந்த நிலையில் எப்பொழுது இந்தியா அந்நிய ஆட்சியின் கீழ் இருந்திருக்கவில்லையா யென்பதை யோசித்துப் பாருங்கள். இவைகளில் எந்த ஆட்சியை நாம் சுய ஆட்சி என்று சொல்லுவது. எந்த ஆட்சியை அந்நிய ஆட்சி என்று சொல்லுவது? என்பவைகளை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
நீதி வழுவாமல் நடந்த இராஜிய பாரங்கள் என்பது மநுதரும சாஸ்திர கொள்கைப்படிக்கு நடந்ததாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. தரும ராஜ்யங்கள் என்று சொல்லுவது இராமனும், அரிச்சந்திரனும் போன்றவர்கள் ஆண்ட இராஜ்ய பாரத்தையும் அவர்களின் கதைகளிலிலுள்ள கொள்கை களையும் தான் சொல்லப்பட்டிருக்கின்றன. சாதாரணமாக இராமனைக் கடவுளாக நம்பி இருப்பவர்களையும் இராமன் கதையை உண்மை யென்று கருதிக் கொண்டிருப்பவர்களையும் இராம ராஜ்யத்தை இன்றயதினம் ஒப்புக் கொள்ளுகிறார்களாவென்பதைக் கேட்கிறேன். இராம ராஜ்யம் வருணாசிரம ராஜ்யமா அல்லவா? இராமராஜ்யத்தில் மக்களுக்குச் சம சுதந்திரம் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? அதுபோலவே அரிச்சந்திரன் இராஜ்யத்தில் நீதியோ, நாணயமோ சிறிதாவது இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? இந்தக் கதைகள் உண்மையாக இல்லாவிட்டாலும் இதைத்தானே நல்லரசாட்சிக்கு அறிகுறியாய்ச் சொல்லப்படுகிறது. அரிச்சந்திரன் தன் பெண்: சாதியை மற்றொருவனுக்கு விலை கூறி விற்றான் என்பதினாலேயே பெண்:
கள் விற்கப்படும் சாதனம் என்பதும் அடிமை என்பதும் உறுதிப்பட வில்லையா? பறையனிடம் அரிச்சந்திரன் அடிமையானான் என்பதினா லேயே தீண்டாமையும் சாதி ஆணவமும், அடிமை விற்பனையும் உறுதிப் படுத்தப்படவில்லையா? யாகத்திற்காக முனிவர்களுக்குப் பணம் கொடுத் தார்கள் என்பதும், மற்றும் பிராமணர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தான் என்பதும் பார்ப்பனராதிக்கத்தையும் அவர்களுக்கு எல்லா சொத்தும் உரிமை என்பதும் உறுதிப்படவில்லையா? (தொடரும்!
குறிப்பு : 02-08-1930 ஆம் நாள் திருவிசலூரில் நடைபெற்ற கும்பகோணம் வட்ட இரண்டாவது பார்ப்பறைல்லாதார் மாநாடு- தலைமையுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 10.08.1930
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கும்பகோணம் தானூகா கோண்டாவது யார்ப்பணால்லாதார் மகாநாடு
அதுபோலவே இராமராஜியமும், இராமாயணத்திலுள்ளபடி உண்மை யாயிருக்குமானால், அது வெறும் ஜாதி வித்தியாசத்தையும், பார்ப்பன உயர்வையும் கற்பிக்கின்றதல்லாமல் வேறு என்ன நீதி அதனுள் அடங்கி யிருக்கின்றதென்பதை யோசித்துப்பாருங்கள். பெண் கொடுமை இராமாய ணத்தைப் போல் வேறெதிலும் காண்பது அரிது. உதாரணமாகத் தாடகையைக் கொன்றது; சூர்ப்பதகையை மூக்கையும், முலையையும் அறுத்தது; கைகேசியையும் கனியையும் இழிவுபடுத்தியது முதலிய வைகளும், சீதை கர்ப்பமாக இருக்கும் போது அவளினது கர்ப்பத்தில் சந்தேகம் ஏற்பட்டதற் காக அவளைக் கொண்டுபோய் வனாந்திரத்தில் தனியே விட்டுவிட்டு வரச்செய்தானென்பதும் கடைசியாக அவள் உயிருடன் புதைக்கப்பட்டது மான காரியங்களிலிருந்து பெண்களின் உயிரை எவ்வளவு அலட்சியமாகக் கருதப்பட்டிருக்கிறதென்பது விளங்கவில்லையா? அது போலவே ஒரு பார்ப்பனரல்லாதான் தவஞ்செய்ததற்காக அவனை இராமன் கொன்றானென் றால் அதில் ஜாதி ஆணவம் விளங்கவில்லையா? மற்றும் தசரதன் அறுபத னாயிரம் பெண்சாதிகளோடு இருந்தா னென்பதிலிருந்து பெண்களை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறார் கள் என்பது விளங்கவில்லையா?
மற்றும் பாதரட்சையை சிம்மாசனத்தில் வைத்து பரதன் பதினான்கு வருஷம் இராஜியபாரஞ் செய்தானென்பதிலிருந்து அந்த நாட்டு மக்களின் சுயமரியா தையைப் பற்றி சிறிதாவது அவ்வாட்சிக்கு கவலையிருந்ததா என்பனவா கியவை விளங்கவில்லையா? இதுபோலவே சேர, சோழ, பாண்டியர்களின் அரசாங்கத்தின் யோக்யதையும் சமணர் கழுவேற்றப் பட்டதிலிருந்து எவ்வளவு மூர்க்கத் தனமான காட்டு மிராண்டித்தனமான இராஜியமாயிருந் திருக்கின்றதென்பது விளங்க வில்லையா? ஆகவே வெள்ளைக்காரர்கட்கும் முகமதியர்கட்கும் முன்னால் இந்தியாவில் ஒரு நாளும் சுயேச்சையான இராஜியமோ யோக்கியமான இராஜியமோ இருந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மகமதிய அரசாட்சியும், ஆங்கிலேய அரசாட்
சியும் இந்த நாட்டுக்கு யாரால் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது நாமெல்லோரும் அறியாத விஷயமா? பார்ப்பனீயமும் மத ஆதிக்கமும்
குடி அரசு - 1930 @ 74
ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னா
லும் தீராது என்றுதான் சொல்ல வேண்டும். (அதிக நேரமாய் விட்டதால் மற்றதை முடிவுரையில் சொல்வ தாகச் சொல்லி சாப்பாட்டிற்காக மகாநாடு கலைக்கப்பட்டது.
“பார்ப்பனரல்லாதாருக்கு நன்மை செய்பவர்களுக்கே வோட் செய்ய வேண்டுமென்ற தீர்மானம் குறித்து பேசுகிறேன். இப்படிப்பட்ட தீர்மானம் வரவேற்பு கமிட்டியால் ஏன் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கை:
யில், பொதுவாகப் பார்ப்பனரல்லாதாருக்குத் தற்சமயம் உள்ள எந்தக் கட்சி யாரிடமும் நம்பிக்கையில்லையென்றே தெரிகிறது. நமது நாட்டில் அநேக கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் இன்றைய தேர்தல்களில் இரண்டு கட்சி களே முக்கியம். மிதவாத கட்சி, காங்கிரஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி, சுயேட்சை
கட்சி என இப்படிப்பட்ட பலகட்சிகளெல்லாம் இருந்தும், இப்போது ஜஸ்டிஸ். கட்சியார் என்பவரும், தேசீயக் கட்சியார் என்ற மந்திரி கட்சியா ரம் தேர்தலில் பெரும்பாலும் நின்று போட்டிபோடப் போகிறார்கள்.
அந்த இரண்டு கட்சியாரும் தம் தம் அறிக்கையை வெளியிட்டிருக் கிறார்கள். அவற்றில் எது உயர்வு எது தாழ்வு என்று கண்டுப்பிடிப்பது கஷ்டமான காரியம்.இரு ககஷியாரும் தேர்தல் காலம் தவிர மற்ற காலங் களில் எந்தவித கொள்கையையும், ஒழுங்கையும் கொண்டு எவ்வித பிரசார மும் செய்தவர்கள் அல்ல.
அவர்கள் இரு திறத்தாரும் தம் தம் அறிக்கையை எழுதியபோது அதை எப்படி எழுதினால் பொது ஜனங்கள் ஏமாறுவார்களோ அப்படி எழுதவேண்டுமென யுக்தி செய்து எழுதியிருக்கிறார்கள். ஏனெனில் நமது மக்கள் தம் வோட்டுக்களைத் தகுதியானபடி உபயோகப்படுத்தப் போதிய அறிவு பெற்றில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். தேர்தல் நடக்கும் போது ஜனங்கள் தாக்ஷண்யத்திற்காகவும், பணத்திற்காகவும், நிர்பந்தத் திற்காகவும் கட்டுப்பட்டே வோட் பதிவு செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். அறிக்கையில் கூறப்பட்ட கொள்கைகளில் உள்ள ரகசியத் தைக் கண்டுபிடிப்பது மிகக் கஷ்டமான காரியமல்ல. ஜஸ்டிஸ் கட்சியார். ஆட்சியில் இருந்த 6 வருஷத்திலும், மந்திரி கட்சியார் ஆட்சியில் இருந்த சென்ற 4 வருஷத்திலும் இரு வகையார்களும் தவறுதல் செய்திருக்கிறார்கள். இரண்டு வகையாரும் நன்மையும் செய்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார். பார்ப்பன ஆதிக்கத்தைக் குறைக்கப் பாடுபடுகிறார்கள், மந்திரி கட்சியாரும் பாடுபட்டிருக்கிறார்கள், சிலசமயம் ஜஸ்டிஸ் கட்சியாரும் பார்ப்பனரல்லா தார். நலத்தை அலட்சியம் செய்திருக்கிறார்கள் என்றும், சில சமயம் மந்திரி கட்சியாரும் பார்ப்பனரல்லாதாரது நலத்தை அலட்சியம் செய்திருக்கிறார்.
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
களென்றும் சொல்லுவதற்கு இடம் ஏற்படக் காரணம் என்னவென்றால் அநேகமாக அவையெல்லாம் முதலில் தம் நிலைமைக்கு ஆபத்து வராமல் காப்பாற்றிக் கொள்வதற்குச் செய்து கொண்ட நடவடிக்கைகளேயாகும். அவர்கள் தம் நிலைக்குப் பந்தோபஸ்து தேடிக் கொண்ட பிறகுதான், மற்றவர். களுக்கு நன்மைகளை நாடிச் செய்ய முடியும். தனிப்பட்ட நபர்களின் சுயநலத்திற்காக கொள்கைகளை விட்டுக் கொடுத்து துரோகம் செய்த சங்கதி
யும் இரு கக்ஷியாரிடமும் ஏராளமாய்க் கண்டு பிடிக்கலாம். ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென்பவர் முழுவதும் பரிசுத்தமான வராகவே இருந்தாரென்பது இது வரைக்கும் செத்துப் போனவர்களுக் குள்ளும் இருந்திருக்க முடியாது. உயிரோடு இருக்கிறவர்களுக்குள்ளும் இருக்க
முடியாது. “கடவுளே” அவர்களது ஸ்தானத்தில் வந்து அமர்ந்தாலும் அவரும் அப்படித்தான் செய்ய முடியும்.யாரும் முதலில் தம் நிலைக்கு பந்தோபஸ்து செய்து கொள்வார் என்றே நான் சொல்லுவேன். இப்படி இரண்டு கட்சி மந்திரிகளும் பலரை சுயநலத்திற்காக ஆதரிக்கையில் அயோக்கியர்களையும், திருடர்களையும் கூட ஆதரிக்கிறார்கள். இதன் ரகசியத்தை நான் அறிந்திருக்கிறேன். பொறுப்பில்லாதாரும் ஆதரிக்கப் பட்டிருக்கிறார்கள். சுயநல உருக்கொண்டாரும் நாணயமும் பொறுப்பும் இல்லாதாரும் ஆதரிக்கப் பட்டிருக்கிறார்கள். நான் இங்கு இத்தீர்மானத்தின் மீது எந்த வகையான மந்திரிமார்களைப் பற்றியும் குற்றம் சொல்லவோ, தூற்றவோ வரவில்லை. நம்முன் இருப்பதைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட தன்மையில் இரண்டு கட்சி மந்திரி களாலும் துன்ப முற்றவர்கள் எப்படியும் இருக்கத்தான் நேரும்.
இந்தத் தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் திரு.பன்னீர் செல்வத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் கூட சில சமயம் தவறியிருக்கலாம். ஆயினும் அவர் பார்ப்பனரல்லாருடைய நன்மைகளைக் கவனிப்பதில் பிடிவாதமாக இருந்து காரியம் செய்தவர். இந்த மாகாணத்தில் எந்த ஒரு ஜில்லா போர்டின் தலைவரும் செய்யாத அவ்வளவு பெரிய அபூர்வமான வேலைகளை அவர் இந்த ஜில்லாவில் செய்திருக்கிறார். அவ்வளவுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் வேறு எந்த ஜில்லாவிலும் இல்லை. கூடுமான வரைக்கும் கஷ்டப்பட்டிருக்கிறார். மக்கள் அதை உணர வேண்டும். திரு. செளந்திரபாண்டியரைப் பற்றியும் அப்படியே ஒப்பிட்டுச் சொல்லலாம். ஆகவே அவ்விருவரும் எந்தக் கட்சியிலிருப்பினும் நீங்கள் அந்த இருவருக்கும் “வோட்” செய்ய வேண்டியது உங்கள் கடமையாகும். இல்லா விட்டால் நீங்கள் பொது நன்மைக்கும் பொது ஜனங்களுக்கும் விரோதம் செய்தவர்களாவீர்கள்.
இங்கு நம் நண்பர் ஒருவர் கனம் முத்தையா முதலியார் பற்றி பேசினார். அதாவது, அவர் கனம் முத்தையா முதலியார் நமக்கு பெருத்த நன்மை செய்திருக்கிறாரானாலும் ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய்
குடி அரசு - 1930 @) 76
நின்று காங்கிரஸ்காரர்களின் சார்பில் இருந்தார் என்று சொன் னார். அப்படிப் பார்த்தால் இங்கே இருக்கும் நம் சின்னையா அவர்களையும் கழுத்தைப்
பிடித்துத் தள்ளி விடவேண்டும் என்றல்லவா ஆகும். ஏனெனில் அவரும் தாம் காங்கிரசிலிருந்த போது ஜஸ்டிஸ் கட்சியை வைதேன் என்று
சொல்லியிருக்கிறார். நேற்று ஒரு மாதிரியாக இருந்தவர் இன்றைக்கு வேறு மாதிரியாக ஆகலாம். காங்கிரசில் டாக்டர். நாயர் அவர்களும், திரு. செட்டி
யார் அவர்களும் எவ்வளவு உழைத்து இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். கடைசியில் அவர்களும் ஏமாற்றமடைந்தவர்கள் தான். இதற்கு யார். என்ன செய்வது? ஜஸ்டிஸ் கட்சியார் தமது ஆட்சியில் செய்யாததும், செய்ய நினைக்காததுமாகிய அற்புதமான காரியத்தை நமது கனம் முத்தையா முதலியார் செய்திருக்கிறார். அதற்காக நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு “முத்தையா” என்று அவருடைய பெயரை இட வேண்டு மென்பேன். நமது எதிரிகள் பார்லிமெண்டிலும், இந்தியா சட்டசபையிலும் அவர் செய்த நன்மையை அழிப்பதற்காக பாடுபடுகிறார்கள். இந்தியா சட்டசபையிலுள்ள அங்கத்தினர்களில் 100-க்கு 99 பேர் பார்ப்பனர்களாக நம் மாகாணத்தினின்றும் போய் உட்கார்ந்து கொண்டு கனம் முதலியார் வீதாச்சாரமுறைப்படி உத்தியோகம் பிரித்த செயலைத் தாக்குகிறார்கள். அவர். பிரித்திருக்கிற முறையினால் எல்லாருக்கும் பங்குவீதம் கிடைத் திருக்கிறது. இதற்காகவே பார்ப்பனர்கள் இவருடையத் தலையில் கை வைக்கப் பெரிய முயற்சிகள் செய்கிறார்கள்.
நம் பிள்ளைகள் படிப்பது, வேலைகள் கிடைக்க வேண்டும் என்ப தற்கே. பிள்ளைகளின் உத்தியோகத்தை நம்பியே பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள். கனம் முத்தையா முதலியார் உத்தியோகங்களை பங்கு பிரித்து கொடுக்க செய்திருக்கிற ஏற்பாட்டினால், ஒரு வகுப்பான் தன் கொள்கையை விட்டுக் கொடுத்தோ, நாணயமற்றத் தன்மையிலோ யோக்கிய தன்மைக்கு மீறியோ, உத்தியோகம் பெற முடியாது. வெகு காலமாய் தாழ்த்தப்பட்டு தீண்டாதார் ஆக்கப்பட்டவருக்கும் பங்குகிடைத்திருக்கிறது. முகமதியர்களுக்குப் போதிய பங்கு பெற முடிந்திருக்கிறது. கிறிஸ்தவர்: களுக்கும் போதிய பங்கு பெற வாய்த்தது. கிறிஸ்தவர்களில் சிலர் இதற்கு விரோதமாக இருந்தார்கள். ஏனெனில் அவர்களில் படித்தவர் அதிகம். உத்தியோகம் எல்லாம் விகிதாச்சாரத்தில் வந்து விட ஏதுவாய் விட்டது. ஆகையால் அதை புதுப்பிக்காவிட்டாலும் சரி அதை அழிக்கவே கூடாது.
ஒருவர் செய்த நன்றியை மறப்பது எல்லாவற்றைவிட இழிகுணமாகும்.இதை கவனித்து கனம் முத்தையா முதலியார் எந்தக் கட்சியிலிருந்தாலும் அவருக்கு நீங்கள் வோட் செய்யுங்கள் என்று நான் சொல்லுகிறேன். அவர் செய்தது யாரோ ஒரு சில நண்பர்களுக்கு கெடுதலாக இருந்தால் அதைப் பொருட்படுத்தக் கூடாது.
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கட்சி பிரதானமல்ல
ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சியிலிருந்தபோது ஈரோடு முனிசிபாலி டியில் எவ்வளவோ திருட்டு புரட்டுகள் நடந்திருக்கின்றன. அதனால் பலருக்கு எவ்வளவோ கெடுதல்கள் நடந்திருக்கின்றன. அதற்கெல்லாம் அவர்கள் தெரிந்தும் உடந்தையாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் (ஜஸ்டிஸ் கட்சியார் அநேக துறைகளில் பொதுவாக நன்மைகள் செய்திருக் கின்றார்கள். இந்த காரணங்களையெல்லாம் கவனிக்கையில் நாம் கட்சியைப் பிரதானமாகக் கவனிக்காமல் தனிப்பட்ட நபர்களின் திறமையையும், உணர்ச்சியையும், அவர்கள் செய்யக் கூடிய செளகரியத்தையும் பிரதான மாகக் கவனித்து வோட் செய்ய வேண்டும்.மிகவும் கண்டிப்பாகப் பார்த் தால் ஒருவரும் மிஞ்சமாட்டார்கள். உதாரணமாக ராவ்பகதூர் சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார் தம் மகள் கலியாணத்தில் பார்ப்பன புரோகிதர். களைக் கொண்டு கலியாணம் நடத்தினார். ஆனால் அவரே முன் செய்த கலியாணத்தில் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு நடத்தினார். அவர் இப்படி ஏதாவதொன்றில் தவறினார் என்று கருதி அவர் மக்களுக்குச் செய்கிற மற்ற நன்மைகளை தியாகங்களை எல்லாம் மறந்து விடுவதா? அவரைக் குற்றம் சொன்னால் அவர் “சுயமரியாதை” இயக்கத்தை விட்டு விடுவாரா? கனம் முத்தையா முதலியாரைப் பாருங்கள்; அவர் கூட திவசம் செய்து பார்ப்பனர். காலில் விழுந்தார். அவர் பண்டார சன்னதி ஒருவரையும் வணங்கினார். அவர். செய்த மற்ற காரியங்களுக்கு நாம் நன்றியறிதல் உடையவர்களாக இருக்க வேண்டாமா?
இப்போது நம் திரு. பன்னீர் செல்வம் சுயமரியாதைக் கட்சியில் உதவித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். காரணம் அவர் அதில் இருந்தால் தேர்தலில் பாதிரிமார்கள் அவருக்கு உதவி செய்ய
மறுக்கின்றார்கள். ஏனெனில் பாமர மக்களுக்கு நன்மை தீமைத் தெரியாது.
நாம் கட்சியின் பெயரைக் கவனிக்காமல் பார்ப்பனரல்லாதாருக்கு நன்மை செய்யக் கூடியவர் யாராயிருந்தாலும் அவருக்கு வோட் செய்தே தீர வேண்டும். யோக்கியர்களுக்கே வோட் செய்ய வேண்டும்.
நான் காங்கிரசில் இருந்தபோது, “காங்கிரஸ்காரர்களாயிருப்பினும், பார்ப்பனரல்லாத கட்சியாக விருப்பினும் யோக்கியர்களுக்கே வோட் செய்ய வேண்டும். கட்சியின் பெயரைக் கவனிக்க வேண்டாம்” என்றேன். இதற்காக,
மதுரை காங்கிரஸ் கமிட்டியில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து என்னைக் கண்டனம் செய்தார்கள். என்னை ராஜினாமா செய்யும்படி கேட்டார்கள். நான் அதுதான் எனது கொள்கை என்று சொல்லி சும்மா இருந்து விட்டேன்.
இப்பொழுது காங்கிரசின் பேரால் நின்றால் வோட் கிடைக்கும் போல்
குடி அரசு - 1930 @) 78
இருந்தால் சிலர் அதன் பேராலும் தேர்தலுக்கு நின்றிருப்பார்கள். ஆனால் இப்பொழுது காங்கிரஸ் கட்சியாருக்கு இங்கு செல்வாக்கும், மதிப்பும் இல்லை. அந்த லேபில் ஒட்டிக் கொள்வதனால் அவர்களுக்குச் சவுகரியம் இல்லை. ஒவ்வொருவர் தத்தம் கடமையையும் சவுகரியத்தையும் உணரு கையில் ஒவ்வொரு கட்சியிலும் சேரத்தான் செய்வார்கள்.கனம் முத்தையா முதலியார். காங்கிரஸ் டிக்கட்டினால் தேர்ந் தெடுக்கப்பட்டாரென்று குற்றம் சொன்னால் போதுமா? பொதுவாக அவர் அப்படிச் செய்தது நமக்கு நன்மையா? தீமையா? ஜஸ்டிஸ் கட்சியாரும் மற்ற கட்சியார்களையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு இழுக்கத்தானே பாடுபட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அரசியல் தந்திரமாம். நான் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். உங்க ளைக் கட்டாயப்படுத்தவில்லை. திரு. பன்னீர் செல்வத்தைப் பற்றியும், கனம் முத்தையா முதலியாரைப் பற்றியும் ஏதோ என் அபிப்பிராயத்தை தெரிவிக் கவே சொன்னேன்.இவர்கள் மட்டுமல்ல இதுபோல இன்னும் மற்ற ஜில்லாக் களிலும் அநேகர் இருக்கிறார்கள். ஆகவே நான் இந்த தீர்மானத்தை உங்கள் அபிப்பிராயத்துக்கு விடுகிறேன்.
முடிவுரை
சகோதரர்களே! அபிப்பிராயப் பேதம் இல்லாமலே எல்லாத் தீர்மா னங்களும் நிறைவேறிவிட்டன. முடிவுரையாக நான் என்ன சொல்லப் போ கிறேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இப்போதைய நிலைமை எப்படி இருக் கிறது? எப்படி நடந்தால் - என்ன முயற்சியில் ஈடுபட்டால் நம் நிலைமை மேன்மையாக இருக்கும்? உலகில் நம் நாடு தாழ்ந்த நிலையிலிருக்கிறது..
கல்வி, செல்வம், விவசாயம், சுகாதாரம், அறிவு, மனிதத்தன்மை ஆகிய இந்த
முக்கிய அங்கங்களில் நான் காலையில் சொன்னது போல் நம் நிலைமை மாற வில்லை.நாம் தெய்வத் தன்மை என்று எவ்வளவோ சொல்லிக் கொண்டு வாழ்கிறோம். ஆனால் நாம் காட்டுமிராண்டித் தனமாய்த் தான் இருக்கிறோம்.
நம் நாட்டு யோக்கியதையைப் பாருங்கள். முதலாவதாக,
கல்வி
கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் மேனாட்டாரெல்லாம்.
100க்கு 100பேர் கல்வியறிவுடையவராக இருக்கிறார்கள்.ஆனால் நம் நாட்டில் 100க்கு7 பேர்தான்.அடுத்த கணக்கில் அது 10 ஆகலாம்.ஆனால் இந்த100க்கு
7 பேர் என்றதும் பொய் கணக்கே. எப்படி என்றால் தீண்டாத வகுப்பாரில் 1000க்கு 5 பேர்தான். நாயுடு, செட்டியார், முதலியார், கவுண்டர் முதலியதாகிய சாதிப்படி பார்த்தால் 100க்கு ஒன்றரை, 2 அல்லது இரண்டரையாகத்தான்
இருக்கும். இன்னும் நம் சகோதரிகள் கணக்கு 1000க்கு 1 அல்லது ஒன்றரை தான் இருக்கும், இதெல்லாம் எப்படி 100க்கு 7 வீதம் சராசரி கணக்கானது என்றால், அது 100க்கு 100 வீதம் படித்த பார்ப்பனர் கணக்கை நம்முடன்
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சேர்த்து கணக்குப் போட்டதால் வந்த விகிதமாகும். வண்ணார், பரியாரியார், இன்னும் மற்ற வகுப்பாரில் படித்தவர்கள் 100க்கு 2 பேர் கூட இருக்க முடியாது. இம்மாதிரி 100க்கு 7 பேர் படித்திருக்கும் நம்மிடை கல்வி பரவாததற்கு வெள்ளைக்காரர்கள் தான் காரணம் என்று நமது தேசீயவாதிகள் சொல்லுகிறார்கள். ஆனால் பார்ப்பனர் மட்டும் 100க்கு 100பேர் படித்ததற்கு,
யார் காரணம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. பஞ்சாங்கப் பார்ப்பனர்கள்
படித்து வாழவே நம்நாட்டில் தேசீயமும் பொது நல செளகரியங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
மதக் கொடுமை
நம் மதமும், நம் நீதிகளும், நம் தெய்வங்களுமே நமது கல்வியற்ற நிலைமைக்குக் காரணமாகும். உதாரணமாக வேத தர்ம சாஸ்திரங்களைப் பாருங்கள். அவற்றில் இன்னார்தான் படிக்கலாம், இன்னாருக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்கின்றதான நிபந்தனையிருக்கிறது. இதனாலேதான் நம் நாட்டில் கல்வி இல்லை.
“சூத்திரன்” படிக்கக் கூடாது. அவனுக்குப் படிப்பு சொல்லிக்கொடுக்
கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற இந்து மதத்திற்கு நாம் கட்டுப் பட்டதால் “சூத்திரர்” என்ற நாமத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் படிக்க முடியாமல் போய் விட்டது.
மிஸ் மேயோ பனகால் அரசரைக் கண்ட போது “பார்ப்பனரல்லாதா
ருக்கு மூளையில்லையா? ஏன் படிக்கவில்லை” என்றார். அதற்கு பனகால் அரசர் “அது பார்ப்பனர் மூளையின் சூழ்ச்சியாலேயே” பார்ப்பனரல்லாதார்
படிக்க முடியாமல் போயிற்று என்றார். அப்படியே மேயோ அம்மையாரும் எழுதி விட்டார்.
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி இந்தக் குற்றத்தை மறுக்கையில் மாட்டிக் கொண்டார். அவர் “சூத்திரர்கள்” வேத சாஸ்திரந்தான் படிக்கக் கூடாதே யொழிய மற்றவற்றைப் படிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார். முன் காலத்தில் வேதம், சாஸ்திரம் இவைதவிர வேறு படிக்க நூல் இல்லை. இங்கிலீஸ்காரன் வந்த பிறகு தான் புஸ்தகம் ஏற்பட்டது. முன் காலத்தில் படிப்புக்கு வேறு வசதி இல்லை. நீதி நூல்கள் தான் இருந்தன. புராணங்கள். தவிர வேறு இலக்கியம் இல்லை. அவைகளும் வடமொழியில்தான் இருந்தன. இப்படியெல்லாம் இருந்ததால் நாம் படிக்க முடியவில்லை. வெள்ளைக்காரர்கள் வந்த பின்பே நாம் இப்போது 100க்கு 7 வீதமாவது படிப்பு அனுபவிக்க முடிந்தது.
இக்காலத்திலும் பார்ப்பனர்கள் கேள்வியின்றி ஆட்சியிலிருந்ததால், அவர்கள் மாத்திரமே படிக்கச் செளகரியமாக விருக்கும் படியாக வழிகளை வகுத்து வந்தார்கள்.
குடி அரசு - 1930 () 80
வீண் செலவால் தரித்திரம்
பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப்படுகிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததை குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தை பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான். 10 வருஷ மீதத்தை கலியாணம், கருமாதியில் செலவு செய்து
விடுகிறான். இவையன்றி சில்லரைச் சடங்குகளும், சில்லரைத் தேவதை களும். உற்சவங்களும் நம் செல்வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திரவான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.படிப்புக்குப் போதுமான பணம் இல் லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். உற்சவங்கள். காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ. வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரணமாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக் கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும் ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த்தால் எந்தக் காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது. திருச்சிராள்ளி ரங்கநாதர். தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆற்காடு ஜில்லா அருணாசலம்: செங்கற்பட்டு வரதராஜ உடையவர்: சென்னப் பட்டினம்
கபாலீசர்; சித்தூர் வெங்கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு. திருப்பதி கோயிலில் 20 லட்ச ரூ. காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூபாய் வட்டி அடையலாம். இந்த ஜனங்கள் காணிக்கைகள், உண்டி யலில் கொடுத்தல், போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு செய்து விடுகிறார்கள். திருப்பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லாவிற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப
முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?
தலைக்கு நாள் ஒன்றுக்கு, 2, 5,10,15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய ஐரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. நம் தேசத்தில்
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண்டரை: அணா செலவு செய்ய கற்ற பிறகுதான். இத்தனைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும். ஏழையாகவே இருக்கிறோம். நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நெட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட்களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்த தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய்யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், “கடவுள்
தந்தார்” என்கிறான். ஏழையானவன் “கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை” என்று நினைக்கிறான். ஏழை மக்கள் “கடவுள் கொடுக்க வில்லை” என்கின்றார்களே யொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம். என்று நினைப்பதில்லை. எதற்கும் “கடவுள் செய்வான்” என்ற கொள்கையே
இருக்கிறது.
செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோகமாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர்களால் சாமிக்கும், கோயில்களுக்கும்
சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல், தாசி, மேளம் ஏற்படுத்தல், மரக்கட்டைகளின் மேல் பொம்மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5000,10000 பேர் இழுப்பதில் பணத்தைப்
பாழ் செய்கிறார்கள். இது மோட்சமாம்! இப்படியெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்கு கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டுக் கும்பிடுவது மில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால், மருத்துவ ஆஸ்பத்திரி கல்வி அபிவிருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத்திரிக்காகவும் கொடுப்பான். இத்துடனில்லாமல் அவன் தன் நாட்டையும் படிக்க வைத்தப் பின் நம் நாட்டிலுள்ள ஏழை களும், அனாதைகளும் உயர்த்தப்படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறான். தொழிற்சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளைகளையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலையில் நம் செல்வத்தைப் பாழாக்குகிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.
திருடனுக்கு திருடி பணம் வந்தாலும் அவன் காத்தானுக்கும், காளிக்கும் பொங்கல் போட்டு பாழாக்குகிறான். புதையல் எடுத்தாலும் சாமி தலையில் போட்டு விடுகிறான். இந்த நிலைமைக் கெல்லாம் நம் மூட
குடி அரசு - 1930 @) 82
நம்பிக்கைகளே காரணம்.மற்ற நாட்டான் நம் நாட்டின் இந்த நிலைமை யைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியாது. கல்லுக்கு 15 தேவடியாள், 20 ஆயிரம்
ரூபாய் செலவில் உற்சவம்! அது தினம் 10 வேளை தின்பது! இவை போன்றவைகளுக்கு நம் முட்டாள் தனமே காரணம். நம் முட்டாள் தனத்தை யெல்லாம் வெள்ளைக்காரன் உணர்ந்து கொண்டான். இந்தநிலையில் அவன் எப்படி நமக்குப் பயப்படுவான்? நாம் இப்படியிருக்க இருக்க வெள்ளைக்காரனுக்குத்தான் நன்மை. இப்பொழுது எங்கும் நூல் நூற்கப் படுகிறது. ஒரு கொட்டங்கச்சியில் உப்புத் தண்ணீரை முகந்து 2 அணா விறகைச் செலவு செய்து உப்பு காய்ச்சினால் வெள்ளைக்காரன் ஓடிப் போய் விடுவானா? தக்ளியில் நூல் நூற்பதால் வெள்ளைக்காரன் நடுங்கி விடுவானா? நமது குற்றங்களை உணர்ந்து நாம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டாமா?
கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்
உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாக வேண்டும்.
நான் கடவுளை உண்டு என்றோ, இல்லை என்றோ சொல்ல வர வில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய்
விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. “ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண்டாம் என்கிறான்” என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும். பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டுதலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உ இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீணாக கடவுளுக்கென்று அழிக்காதே என்றே சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய்வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.
ஆலயங் கட்டியவர்கள் கதி
தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டி ருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசுதாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும்
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
செய்யவில்லை. வெள்ளைக்காரன் தான் சொத்துகள் கொடுக்கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?
பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழி யாகிறது. ஏழைகளின் குழந்தைகள் பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள்.“அந்தக் குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலை யில் கொட்டாதே” என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது. அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்ய முடியும்? சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண்யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வை குண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது முதல் மனிதன் அயோக் கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான், கொடுமை செய்தான். ஒரு சிம்டா “விபூதி”க்காக எல்லாப் பாவமும் போக்கி மோக்ஷம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனு பவங்கள்
லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத் திற்கும் இடமில்லாமற் போய் விட்டது. தான் மோட்ச மார்க்கத்தை நாடு வதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமைசெய்பவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருக்காலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல...
குறிப்பு :திருவிசலூரில் 02-08-1930-ல் நடைபெற்ற கும்பகோணம் தாலூகா இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மாநாட்டின்தலைமை உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 17.08.1930
குடி அரசு - 1930 @) 84
கல்யாண வி௫தலை
ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்சாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண: தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமை யாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலிய வைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யா ணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண் களை வஞ்சிக்கின்றோம்.
பொதுவாக கவனித்தால் நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத் திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமை யும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என் பதை. நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து
வருகிறது.
இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச்சடங்கும், தொந்தமும் உலகத்தில் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடு களில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடுமாத்திரம் குரங்குப் பிடியாய் பழய கருப் பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக் கின்றது.
சென்ற வருஷம் செங்கல்பட்டு மகாநாட்டில் பெண்களுக்கும் ஆண். களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடனும் சமிபத்
தில் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சட்டம் வேண்டும் என்று தீர்மானித்தவுடனும் உலகமே முழுகி விட்டதாக சீர்திருத்த வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உட்பட பலர். கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கற்பட்டுத் தீர்மானத்திற்கு பிறகு வெளி நாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள். ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. ரஷியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகிறது. ஜர்மனியில் புருஷனுக்கும் பெண்
ஜாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யா ணத்தைரத்து செய்து கொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டு வரப்பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்டசபையில் சட்டம் நிறை வேற்றிவிட்டார்கள். மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றது. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாம லிருந்து வருகின்றதானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிகைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண் ஜாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு என்பதாய் கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளியாவதை பார்த்து வருகின்றோம்.
சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்கு பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கிறோம். தெய்வீக சம்மதமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப் பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மை யான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படிக்கில்லாத வரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.
நமது “சீர்திருத்தவாதிகள்'” பலர் ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொள்வதை பற்றி மாத்திரம் குடி முழுகிப் போய் விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தே
சித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்கு சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படி பேசு கின்றார்களா என்பதும் விளங்கவில்லை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.
நிற்க, ஒரு பெண்சாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1930 @) 86
அதென்னவெனில் கல்யாணம் என்பது மனிதன் இன்பத்திற்கும், திருப்திக் குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்ட மில்லாத, ஒற்றுமைக்கு இசையாத, கலவிக்கு உதவாத, ஒரு பெண் எந்த காரணத் தினாலோ ஒருவனுக்கு பெண்ஜாதியாக நேர்ந்து விட்டால் அப்போது புருஷனுடையக் கடமை என்ன என்று கேட்கிறோம். அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிபட்ட ஒரு புருஷன் அமைந்து விட்டால் அப் பெண்ணின் கதி என்ன என்று தான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின்
அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும்
புரியாமல் போகாது. ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாணம் ஆன புருஷர்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும் தான் செய்ய வேண்டிவரும், அன்றியும் இது சமயம் ஒற்றுமைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களை உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண்களை திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால் தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லி கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும் முன்பின் அறிமுகமில்லாமல் செய்யப் பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால் அது ஒரு புறமிருந்தாலும் மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்.
அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக்
கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக் கில்லாமல் “ஏதோ கல்யாணம் என்பதாக செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்” என்று கருதி துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதும் அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமேயாகும் என்பதே நமதபிப்
பிராயமாகும்.
குடி அரசு - தலையங்கம் - 17.08.1930.
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
தேர்தல் பிரசாரம்
செங்கற்பட்டு ஜில்லா சட்டசபைப் பிரசார நோட்டீசு அதாவது “செங் கல்பட்டு ஜில்லாவிலுள்ள சட்டசபை ஓட்டர்களுக்கு ஒரு விண்ணப்பம்” என்ற தலைப்புக் கொடுத்து பிரசுரிக்கப்பட்ட நோட்டீசு ஒன்று நமது பார்வைக்கு அனுப்பப்பட்டதைப் பார்த்தோம். அதில் 7 பிரிவுகள் இருக்கின் றன. அவற்றுள் 6 பிரிவுகளுக்கு போட்டி அபேட்சகர்களையே பதில் சொல்லும்படி விட்டு விடுகின்றோம்.
அதில் உள்ள மூன்றாவது பிரிவான ஒன்று நம்மை வலுவில் சண்டைக்
கிழுப்பதால் வந்த சண்டையை விட மனம் வரவில்லை. அதாவது:-
“சென்ற வருஷத்தில் செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மகாநாடு என்று ஒரு கூட்டம் நடத்தி, நம் தேவலாயங்களை அழிக்க வேண்டு மென்றும், நம் கோவில்களில் ஒரு பைசாகூடச் செலவு செய்யக் கூடாதென்றும், இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம் முதலிய நம் அரும் பெரும் நூல்களை ஒழிக்கவேண்டுமென்றும் ஆபாசத் தீர்மானங்களை அங்கீகரித்த சுயமரியாதை மகாநாட்டை நடத்தியவர்கள் திரு. ஜெயராம் நாயுடுவும், திரு. வேதாசல முதலி யாரும் என்பது நீங்கள் யாரும் அறிந்த விஷயமே. திரு. வேதாசல
முதலியார் மேற்கண்ட மகாநாட்டுக் காரியதரிசி யாகவிருந்து அதை நடத்தியதையும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த திரு. அப்பாசாமி முதலியார் ராவ் பகதூர் பட்டம் பெற்றதையும்; திரு. ஜெயராம் நாயுடு ராவ்சாகிப் பட்டம் பெற்றதையும் நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டும். கேவலம் பட்டங்களுக்கு ஆசைப்பட்டு நம் மதத்தையும், தெய்வத்தையும் வாய்க்கு வந்தபடி தூஷிப்பவர்களுக்கு ஆதரவு அளித்த திரு. ஜெயராம் நாயுடுவுக்கும், திரு. வேதாசல முதலியாருக் கும் எதற்காக ஓட்டுக் கொடுக்க வேண்டும் என்று தெய்வ பக்தியும் உண்மைச் சுயமரியாதையுமுள்ள நீங்கள் நன்கு ஆலோசிக்க வேண்டும்” என்பதாகும்.
இந்தப்படி அவர்கள் எழுதியதற்காகவே எப்படியாவது திருவாளர் கள்.
குடி அரசு - 1930 @) 88
ஜெயராம் நாயுடுவையும் வேதாசல முதலியார் அவர்களையும் தேர்த லில் வெற்றி பெறச் செய்ய வேண்டியது அந்த ஜில்லா சுயமரியாதை உணர்ச்சியுள்ள மக்களது கடமையாகும்.
சுயமரியாதை மகாநாடு நடத்தியதற்கு உதவி செய்ததற்காக அவ்விரு கனவான்களும் தோல்வியடைய வேண்டுமென்று அந்த நோட்டீசு போட்ட கனவான்கள் உண்மையாய்க் கருதுவார்களானால் செங்கல்பட்டுச் சுய மரியாதை மகாநாடு நடத்த ஆதி காரணமாய் இருந்து மகாநாட்டின் வர
வேற்புத் தலைவராயுமிருந்த நமது நண்பர் சுயமரியாதை வீரர் திரு. திவான் பகதூர் எம்.கே. ரெட்டி அவர்களை இவர்கள் என்ன செய்ய நினைத்தார்கள்? அல்லது என்ன செய்ய முடிந்தது? என்பதை யோசிக்க வேண்டியது உண்மைச் சுயமரியாதைக்காரர் கடமையாகும். திரு. எம். கே. ரெட்டியார். அவர்கள் போட்டியன்னியில் மறுபடியும் ஜில்லாபோர்ட்டு தலைவராய் தெரிந்தெடுக்கப் பட்டதுடன் திவான் பகதூர் பட்டமும் பெற்றார். இதற்காக அந்த ஜில்லாவில் “சுயமரியாதை உள்ள எந்த ஆஸ்திகரும்” உயிர்விட்டு விடவும் இல்லை. அல்லது திரு ரெட்டியாரை தூக்கில் போட்டு விடவு மில்லை. திரு.ஜெயராம் நாயுடுவைப் போல் ஆயிரம் ஜெயராம் நாயுடுகள் தோற்றுப் போனாலும் திரு வேதாசலத்தைப் போல் இரண்டாயிரம் வேதா சலங்கள் தோற்றுப் போனாலும் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் செய்த காரியங்கள் ஒரு காலமும் நடக்காமல் போகப் போவதில்லை என்பதை மிக்க உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் மூடர்களாயிருக்கும்
வரையில் தான் திரு. எம். பாலசுப்பிரமணியம் போன்ற வருணாச்சிரம அழுக்கு மூட்டைகளின் ஏமாற்றுதல்களும் ஆஸ்திகப் பிரசாரமும் பலிக்குமே ஒழிய வேறில்லை. திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் வெற்றி பெற்றால் நமது மக்களை இன்னும் மூடர்களாய் இருக்கிறார்கள். பகுத்தறி வற்றவர்களாயிருக்கிறார்கள் என்பது தான் உறுதிப்படுமே தவிர மற்றபடி சுயமரியாதைக் கொள்கையில் ஒரு அணுவளவும் அதற்காக அசைந்து விடாது. ஜாதியையும், கடவுள்களையும், மதத்தையும், கோவில்களையும் காப்பாற்றுவதற்காக திரு. பாலசுப்பிரமணிய முதலியார் சட்டசபைக்குப் போவதும் அவரை மக்கள் அனுப்புவதும் உண்மையானால் திரு. பால சுப்பிரமணியம் ஜாதிப்படி சூத்திரராகவும், மதப்படி பார்ப்பனர் அடிமை யாகவும் தான் இருக்கத் தகுதி உடையவரே தவிர அவர் சட்டசபையில் இருந்து ராஜரீக விஷயம் கவனிக்க சிறிதும் யோக்கியதை அற்றவர் என்று நம்மால் மெய்ப்பிக்க முடியும். திரு. கள்ளிப்பட்டி கிருஷ்ணசாமி நாயக்கராவது தன்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ளுகின்றார். திரு. பாலசுப்ரமணிய முதலியார் தன்னை சூத்திரன் அல்லது சற்சூத்திரன் என்று தானே தேவாரம், திருவாசகம் பெரியபுராணம், இராமாயணம் முதலிய “நம் அரும் பெரும் நூல்கள்” படி சொல்லிக்கொள்ள வேண்டும்.
திரு. பாலசுப்ரமணிய முதலியாரவர்கள் திவான் பகதூர், ராவ் பகதூர்,
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ராவ்சாகிப் முதலிய பட்டங்களை புளிக்குமென்று தள்ளிவிட்டு சற்சூத்திரப் பட்டத்தை ஒப்புக் கொள்வதாயிருந்தாலும் அவரைத் தெரிந்தெடுக்கச் செங்கல்பட்டு ஜில்லா ஓட்டர் மகாஜனங்கள் அப்பட்டத்தை ஒப்புக் கொள்
ளத் தயாராயிருக்கிறார்களா என்று கேட்கின்றோம். ஆகவே செங்கல்பட்டு
ஜில்லா பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் தங்களுக்கு உண்மையான சுய மரியாதை இருக்கின்றது என்பதை காட்டிக் கொள்ள வேண்டுமானால் சற் சூத்திரர்கள். போன்ற கோடரிக் காம்புகளுக்கு ஓட்டுச் செய்யாமல் பார்ப்பன ரல்லாத சமூகத்திற்கே சுயமரியாதைக்காக உழைக்கும் பெரியார் களான அதாவது ஜாதி வித்தியாசத்தையும் உயர்வு தாழ்வையும் போலி மதத் தையும் பொய்ப் புராணங்களையும் பொல்லா (பணம்பிடுங்கி) தெய்வத்தை யும் ஒழித்து மக்களுக்குள் சமத்துவத்தையும் அன்பையும் இரக்கத்தையும்,
பரோபகாரத்தையும் சத்தியத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தி சுதந்திர மளிக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க வீரர்களுக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.08.1930
குடி அரசு - 1930 @) 90
சத்திய மங்கலத்தில்
திரு. நபிகள் பிறந்த நான்
அன்புள்ள சகோதரர்களே! பெரியோர்களே!
இஸ்லாமிய உலகத்திற்கு மிகவும் முக்கியமானதும், மக்களின் நன்மைக்காக உலகத்தில் தோன்றிய பெரியார்களில் மிக ஒப்பற்ற சிறந்த வருமான ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப்பட்ட இக்கூட்டத்திற்குத்தலைமை வகிக்க இரண்டாம் தடவையாகவும் அழைத்தது பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக சென்ற ஆண்டிலும் என்னை அழைத்து தலைமை வகிக்கச் சொன்னீர்கள்.
நிற்க, இன்றைய நிலைமையில் நாம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட ஆசை கொண்டிருக்கின்றோம் என்றாலும் இந்தியாவை இந்தியர். களே ஆளுவது என்று ஏதாவது ஒரு காலத்தில் நடக்கக் கூடியதானாலும் ஆகலாம். ஆனால் இன்றைய நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுவதென்பது சுலபத்தில் முடியாதென்பதே எனது அபிப்பிராயம். நான்
இப்படிச் சொல்லுவது பற்றி உங்களில் சிலர் திடுக்கிடலாம். இரு சமூக ஒற்றுமைக்கும், என்றைக்கும் மதக் கொள்கைகள் என்பது முட்டுக்கட்டை யாகவேதான் இருக்கிறது. மதத்தைவிட மோட்சத்தைவிட மக்கள் ஒற்றுமை முக்கியமும் அவசியமுமானதாகும் என்று பட்டால்தான் இரு சமூகமும் ஒற்றுமையடைய முடியும். அப்படிக்கில்லாதவரை இப்படியே வெறும் வாய்ப் பேச்சு ஒற்றுமையாகவே இருக்க வேண்டியது தான். மற்ற நாட்டின் மக்கள் நடந்து கொள்வதைப் பார்த்தாவது நாம் நடந்து கொள்ள முயற்சிப் பதில்லை. நமக்கு மதமெல்லாம் நடை, உடை, பாவனை முதலிய வேஷத் தில் இருக்கின்றதே தவிர மதம் எதற்காக என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக் கின்றதோ அதற்காக உபயோகப்படக்கூடியதாயில்லை. இன்றையதினமும்
மதமும், சமயமும் ஒருவனுக்கு அவன் அணியும் வேஷம் என்றுதான் மதத்தில் பட்டவர்களில் 100க்கு 99 பேர்கள் நினைத்துக் கொண்டு அதன்படி நடந்து வருகிறார்கள். பொதுவாக அந்த உணர்ச்சியும், வேஷமும் ஒழிந்தா லொழிய உலக மக்களுக்கு ஒற்றுமையும், சாந்தமும் கண்டிப்பாய் கிடை யவே கிடையாது.
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நிற்க, சென்னையிலிருந்து வந்திருக்கும் ஜனாப் பஷிர் அகமது சையீது சாயபு அவர்கள் இப்போது சென்னை சட்டசபைக்கும் அபேட்ச கராக
இருக்கிறார்; ஆதலால் அவர் இந்த பிராந்தியத்திற்கு வந்து தனது மகமதிய சகோதரர்களிடத்தில் பேசிப் போக வந்திருக்கிறார். ஆகவே அவர் கள் முதலில் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். அவர்கள் பேசியப் பிறகு முடிவுரையாக கடைசியில் நான் பேசுகிறேன். (எனச் சொல்லி ஜனாப் பஷிர். அகமது சையீது சாகிப் அவர்களைப் பேசும்படி கேட்டுக் கொண்டார். அவர் பேசி முடித்த பின் கடைசியாக முடிவுரையாக!
சகோதரர்களே! பெரியோர்களே!
நிகழ்ச்சிக் குறிப்பில் மற்றொரு கனவான் பேசுவார் என்றிருந்தது. ஆனால் அது நிறுத்தப்பட்டு விட்டது. முதலாவதாக ஜனாப் பவீர் அகமது அவர்கள் இன்றைய விசேடத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர்கள். ஆங்கிலத்தில் எம்.ஏஃபி.எல். படித்து பட்டம் பெற்றவர்கள். அவர்கள் பேசிய திலிருந்து மதத்தில் எவ்வளவு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் இதுவரை சொன்னதை விட வேறு விசேடமாகச் சொல்ல எப்படித்தான் முடியும். அவர்கள் பொதுவாழ்வு முக்கியமானது. நான் எதிர்பாராமலே இங்கு வந்து நண்பர் எடுத்துச் சொன்னார்கள். அது மிகவும் சிலாகிக்கத் தக்கதேயாகும். ஆகையால் நான் இஸ்லாம் சமூகம் ஹிந்து சமூகமாகிய இருவருக்குமாக சில சொல்லுகிறேன். அதைப் பற்றிச் சொல்லுவது மிகையாகாது. இஸ்லாம் மத தத்துவம் அநேகமாய் உலக மக்கள் எல்லோருக்குமே பொருத்தமானது. ஏனெனில் அது சமீபத்தில் ஏற்பட்ட மதமானதினால் மிகவும் திருந்திய மதமென்றே சொல்லுதல் வேண்டும்.
உலகமெல்லாம் ஒரு காலத்தில் காட்டுமிராண்டித் தனமாயிருந்த பிறகு நாளாக நாளாக பல வழிகளிலும் சீர்திருத்தமடைந்து வந்திருக்கின்றது. இந்து
மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சரியான பெயர் சொல்ல வேண்டுமானால் பழயமதம் புதியமதம் என்றுதான் சொல்லவேண்டும்.பழய மதக்காரரும் புது மதக்காரரும் சுலபத்தில் ஒற்றுமையாக முடியாது. இருவரும் மக்கள் நன்மைக்கு மதம் ஏற்படுத்தப்பட்டது என்று கருத வேண்டுமே ஒழிய மதத்திற்காக மக்கள் ஏற்பட்டார்கள் என்று கருதக்கூடாது. மதத்தைக் காப்பது என்கின்ற உணர்ச்சியே தப்பான உணர்ச்சியாகும். மக்கள் நன்மையையும் அவர்கள் க்ஷேமத்தையும் சாந்தியையும் காப்பாற்றுவது தான் பொது நல வாதிகள் கடமை என்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டும். இந்துக்களும், முகமதியர்களும் ஒரே நாட்டிலே ஒரே மாதிரி சுதந்திரத்துடன் வாழ வேண்டியவர்களேயாவார்கள். இதற்கு முட்டுக்கட்டையாக மதக் கொள்கைகளை போட்டுக் கொண்டிருந்தால் ஒரு நாளும் ஒற்றுமையாய் வாழ
முடியாது. ஆகையால் இருவரும் வேஷத்தை விட்டு உண்மை மனித தர்மத்தையும், அன்பையும் அடிப்படையாய் வைத்து சகோதரர்களாக
குடி அரசு - 1930 @) 92
வேண்டியது மிக்க அவசியமானது. முகமதியர்களை விட இந்துக்களே ஒற்றுமைக்கு அதிக இடையூறாக இருக்கின்றார்கள். இந்துக் கொள்கை மிக்க மூடக் கொள்கையும், அன்புக்கும் ஒற்றுமைக்கும் இடந்தராததுமாய் இருக்கின்றது. மகமதியர்களும் வேஷ வித்தியாசத்தை விட்டு அவர் மத முக்கிய தத்துவங்களைக் கடைபிடித்தால் யாருடனும் கூடி வாழ சவுகரியம் உண்டு. ஆகவே இருவரும் சீர்திருந்தி மக்களை சீர்படுத்தி ஒற்றுமையாக வாழ வேண்டும்.
குறிப்பு “சத்தியமங்கலம்பழையபள்ளிவாசலுக்கு எதிரிலுள்ளசவுக்கில்089-08 8௦0. ஆம் நாள் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் தலைமையேற்று
குடி அரசு - சொற்பொழிவு - 24.08.1930
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
உண்மைப் பிரதிநிதிகள்
ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியார் ஷே “தேவஸ்தானத்
திற்கு கட்டுப்பட்ட குளம், கிணறு, ரோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவைகளில்
யாரும் எவ்விதத் தடையுமில்லாமல் செல்லலாம்” என்பதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்து ஏகமானதாக நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
அது மாத்திரமல்லாமல் மேற்படி “தேவஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட எல்லா கோவில்களிலும் தேவதாசிகளின் ஊழியத்தை அடியோடு நிறுத்தி விட வேண்டும்” என்றும் தீர்மானித்திருக்கிறார்கள்.
இவற்றிற்கும் மேலாக இன்னொரு முக்கியமான விஷயம் அக். கமிட்டியார் செய்திருப்பதென்னவென்றால் அக்கமிட்டியாரை ஸ்ரீவில்லி
புத்தூர் செங்குந்த வாலிப சங்கத்தாரும், ஜில்லா சுயமரியாதை சங்கத்தாரும் ஒரு விண்ணப்பத்தின் மூலம் அந்த “ஜில்லாக் கமிட்டியின் ஆதிக்கத் திற்குட்பட்ட எல்லாக் கோவில்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரவேச உரிமை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட விண்ணப்பங்களை கமிட்டி கூட்டத்தில் யோசனைக் கொடுத்து ஆலோசித்து அடியில் கண்ட விஷயங்களுக்கு பதில் தெரிவிக்கும்படி அக்கமிட்டிக்கு உட்பட்ட எல்லாக் கோவில்களின் டிரஸ்டிகளுக்கும் சுற்றுக் கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள். அவைகளாவன:-
1 இந்துக்கள் எல்லோரும் கோவிலுக்குள் செல்லுவதுண்டா?
2. செல்லுமிடத்திற்கு வரையரையுண்டா?
3. எல்லோரும் செல்லாவிட்டால் அதன் காரணமென்ன?
4: ஜாதி காரணமாக யாராவது தடுக்கப்படுகிறார்களா?
5. தடுக்கப்பட்டால் அதற்குக் காரணம் உண்டா?
6. அக்காரணங்களுக்கு எழுத்து மூலமான ஆதாரம் இருந்தால் அதன் விபரம் என்ன?
குடி அரசு - 1930 @) 94
7. ஜாதி வித்தியாசம் இல்லாமல் கோவிலுக்குள் யாரையும் விடுவது
உங்களுக்குச் சம்மதமா?
என்னும் விபரங்கள் கண்டு சுற்றுக் கடிதம் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள். இவற்றிலிருந்து அத்தேவஸ்தானக் கமிட்டியின் மனோபாவம் மக்களுக்கு பிறவியினால் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்கின்ற கவலையுடைய தாயிருக்கின்றது என்பது நன்றாய் விளங்குகின்றது.
இதுபோல் தமிழ்நாட்டில் மற்றும் பல கமிட்டிகளிலும் இவ்விஷயங்
கள் கவனத்திற்கு வந்து தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த கும்பகோணம் சர்க்கிள் கமிட்டியிலும் இம்மாதிரி ஒரு தீர்மானம் வந்து அதை அக்கமிட்டித் தலைவர். நிராகரித்து விட்டார்.
ஈரோடு சர்க்கிள் கமிட்டியிலும் இம்மாதிரி ஒரு தீர்மானம் வந்து நிறைவேறிற்றே ஒழிய அது அமுலுக்கு வர அக்கமிட்டியார்களில் சிலர் எதிரிகளாய் இருந்து விட்டார்கள். அத்தீர்மானப்படி கோவிலுக்குப் போன ஆதிதிராவிடர்கள் மீது ஏற்பட்ட கேசுங்கூட இன்னமும் ஹைகோர்ட்டில் பைசலாகாமல் இருக்கின்றது.
தமிழ் நாட்டில் இப்போது அநேகமாக எங்குமே இம்மாதிரியான ஒரு வித சமத்துவக் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஆனாலும் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியினால் சமூக சமத்துவக்கிளர்ச்சி சற்று தளர்வுற்றிருக்கின்றதென்பதை நாம் மறைக்க முயலவில்லை. ஆயினும் பொதுவாகவே நமது நாட்டில் இவ்வித முற்போக்குகளுக்குப் பார்ப்பனர்கள் மாத்திரமே தடையாயிருக்கின்றார்கள் என்று நாம் சொல்லுவதற்கில்லை.. மற்றபடி அவர்கள் சூக்ஷியில் பட்டவர்களும், அவர்களைப் பின்பற்றி தாங்க ளும் அவர்களைப் போலவே பொதுஜனங்கள் முன்னால் உயர்ந்த ஜாதியார். என்கிற பெருமையை அடையலாம் என்று கருதி இருப்பவர்களும், பார்ப்ப னரைப் போலவே பாமர மக்கள் உழைப்பினால் வாழ்ந்து கொண்டே இருக்
கலாம், அதாவது மற்றவன் உழைப்பில் வாழலாம் என்பவர்களும் மக்கள் சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரிடையாகவே இருக்கின்றார்கள். இக் கூட்டத்தார்க்கு இப்போதைய அரசியல் கிளர்ச்சி சற்று உதவியாயிருப்பதால் அவர்கள் துணிவாக தங்கள் ஆதிக்கத்தை காப்பாற்ற முன் வந்து விட்டார். கள்.பாமர மக்களுக்கும் போதிய அறிவும் ஆராய்ச்சியும், இன்னமும் ஏற்பட வில்லையாதலால் தங்களது சுதந்தரங்களுக்கும், சமத்துவத்திற்கும் சர்க்கார். காரணமென்று முட்டாள் தனமாய் நம்பிக்கொண்டு தங்களது முயற்சியையும் ஊக்கத்தையும் அத்துறையில் பாழாக்கிவருவதாலேயே இவர்களை ஏமாற்றுகின்றவர்களுக்கு சிறிது கூட பயமில்லாமல் போய் விட்டது. இன்றைய தினம் நமது நாட்டில் நடைபெறும் ஜனப்பிரதிநிதி தேர்தல்களிலும் நூற்றுக்கு ஒரு பத்துப் பேர்கள் கூட மக்களை சமத்துவமாய் பாவிப்பவர்களும் மனிதனுக்கு மனித சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நோக்கமுடையவர்களும் தெரிந்தெடுக்கப்பட முடிவதில்லை என்பதோடு ஜாதி ஆணவக்காரர்களும் ஆதிக்க வெறியர்களும் சுதந்திர எதிரிகளுமே பெருவாரியாய் தெரிந்தெடுக்கப்படுகின்றார்கள். இதிலிருந்தே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர ஆவல் இல்லை என்றும் ஜனனாயக ஆகஷிக்குத் தகுதி அற்றதென்றும் தானாகவே விளங்கவில்லையா என்று கேழ்க்கின்
றோம்.
நமது நாட்டு மக்களின் கவனம் எல்லாம் இப்போது இந்தியா முழுமைக்கும் “ஐயக்கர், சாப்ரூ ராஜித்தூது எவ்விதமாய் முடியும்?” என்பதி
லும் “லண்டன் வட்டமேஜை மகாநாட்டில் என்ன முடிவு ஏற்படும்” என்ப
திலும், தென் இந்தியாவைப் பொருத்தவரை “தேசியக் கக்ஷி ஜெயிக்குமா ஜஸ்டிஸ் கக்ஷி ஜெயிக்குமா?” என்பதிலும் இழுக்கப்பட்டிருக்கின்றதே தவிர: மனிதனுக்கு மனிதத்தன்மை கிடைக்கின்ற விஷயத்தில் ஜனப் பிரதிநிதி என்பவர்களில் ஒருவருக்காவது கவலை இல்லை என்றே சொல்லு வோம்.
இக் கூட்டத்தினர்கள் எல்லோருக்கும் கூலிகளும் இக்கிளர்ச்சிகளால் வயிறு வளர்ப்பவர்களுமிருப்பதால் ஒவ்வொன்றையும் பிரமாதப் படுத்தி கூலிப் பிரசாரம் செய்பவர்களும் இல்லாமலில்லை என்றாலும் இரண்டு கக்ஷியாரும் தங்கள் தங்கள் அறிக்கையில் மக்களுக்கு சமூக சமத்துவ விஷயத்தில் பூர்ண சுதந்திரம் கிடைக்கப் பாடுபடுவதாக வெளிப்படுத்தி னார்களே ஒழிய அவர்களது உட்கருத்தெல்லாம் ஒருவரை ஒருவர் ஏமாற்றி ஏழைமக்களை வஞ்சிப்பது என்பதே என்பதாக யாரும் அறிவார்கள். சமீப தேர்தல்களில் நடக்கும் பிரசாரங்களில் ஒருவாறு இவ்வுண்மையைப் பலர் அறிந்திருக்கலாம்.அதாவது ஒரு கக்ஷியார் திரு... செளந்திர பாண்டியன் அவர்களை பலி கொடுத்ததும் டாக்டர் சுப்பராயன் அவர்களுக் கும் முத்தையா முதலியார் அவர்களுக்கும் விறோதமாக பார்ப்பனர்களை நிருத்தி அவர்களை ஆதரிப்பதும் தேசியக் கக்ஷியார் என்று சொல்லிக் கொள்ளும் மற்றொரு கட்சியார் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்களுக்கும், செங்கல்பட்டு திருவாளர்கள் வேதாசலம், ஜயராம் நாயுடு இவர்களுக்கும் எதிரிடையாக பார்ப்பனருக்கு இரண்டாவதான வருணாச்சிரமக்காரர்களை
நிறுத்தி சமூக சமத்துவ சுதந்திரக் கொள்கைகளுக்கு விரோதமாக வருணா சிரம பிரசாரங்கள் செய்வித்து தோற்கடிக்கப் பார்ப்பதும். இவ்விரு கட்சி யாரின் உண்மைக் கொள்கைகளை வெளியாக்கப் போதுமான ஆதாரம் என்றே நினைக்கின்றோம்.
முதலாவதாக தங்களை பிறவியில் எந்த மனிதனுக்கும் உயர்ந்த ஜாதியான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற - தங்களுக்கு இருக்கின்ற பொது உரிமைகளில் ஒரு சிறிதாவது தன்னைப் போன்ற மற்றொரு மனி தனுக்கு இருக்க நியாயமில்லை என்று கருதிக் கொண்டு கொடுக்க மறுத்துக் கொண்டுமிருக்கின்ற எந்த மனிதனும் அவன் எப்படிப்பட்டவனாக இருந்
குடி அரசு - 1930 @) 96
தாலும் பொது ஜனப் பிரதிநிதித்துவத்திற்கு சிறிதும் அருகனல்ல வென்றே கோபுரத்தின் மீதிருந்து கூறுவோம்.
இன்றைய தினம் நமது நாட்டில் இருக்கும் பிரதிநிதித்துவ உரிமை எல்லாம் “எலிக்குப் பூனை பிரதிநிதித்துவம்” என்பது போன்றதே ஒழிய மனிதனுக்கு மனிதன் பிரதிநிதி என்பது போன்றவை அல்ல என்றே சொல்லுவோம்.
மதக் கொடுமைகளும், ஜாதி ஆணவமும் ஒழிய வேண்டுமென்றால் ஜாதி, மதங்களுக்கு ஆபத்து வந்து விட்டது என்று ஓலமிடுகிறவர்களையும் கூப்பாடு போடுகின்றவர்களையும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்குத் தகுந்த வர்கள் என்று எந்த மூடனாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட் கின்றோம்.
ஆகவே நமது பிரதிநிதிகள் என்று வருகின்றவர்கள் ராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியார் போன்ற உண்மையான சமத்துவ நோக்கமும் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தையோ பதவியையோ சமத்துவ உரி மைக்கு தாராளமாய் உபயோகிக்கக் கூடியவர்களாகவே இருக்கும்படி பார்த்
துக் கொள்ள வேண்டியதுதான் பொதுமக்களுடைய கடமையாகும்.
எனவே மேற்கண்டபடி தீர்மானம் செய்த ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி கனவான்களை நாம் மனதாரப் போற்றுவதுடன் இவர்.
களும் இவர்கள் போன்றார்களுமே மக்களின் உண்மையான பிரதிநிதிகளாய் ஆவதற்குத் தகுதியுடையவர்களென்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். அதோடு மற்ற தேவஸ்தானக் கமிட்டியாரையும் பொதுப் பிரதிநிதிகளையும் இவர்களைப் பார்த்தாவது புத்தி வருவித்துக் கொள்ளக் கூடாதா என்று ஞாபகப் படுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.08.1930
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
FBIMT®
நபிகள் பிறந்தநான் வகாண்டாட்டம்
அக்கிராசனாதிபதிகளே! சகோதரர்களே!
இந்த மாதிரியான முக்கிய சந்தர்ப்பத்தில் கூட்டப்பட்ட இப்பெரியக் கூட்டத்தில் என்போன்றவர்களது அபிப்பிராயத்தையும், தெரிவிக்கச் சந்தர்ப்பமளித்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு
முன் இங்கு பேசிய இருவர்களில் முதலில் பேசிய மெளலானா மெளல்வி அ.க.அப்துல் அமீது சாயபு பாகவி) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் இதற்குமுன் பலதடவை நம் ஈரோட்டிற்கு வந்திருந்தாலும் குறிப்பாக திரு. காந்திய வர்களும், மெளலானா அசாத் சோபானி அவர்களும் நம் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது மெளலானா அவர்கள், மெளலானா அசாத் சோபானி அவர்களின் உருது உபந்நியாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததோடு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் கூடவே இருந்தவர் என்பது உங்களனை வருக்கும் ஞாபகமிருக்கலாம். அவர்கள் இதுவரை பேசியதிலிருந்து எதையும் எந்த மதத்தையும் சரித்திரத்திலிருந்து தீர்மானிக்கக் கூடாது என்றும், அதன் பலனைக் கொண்டும், அது மக்களுக்கு என்ன நன்மை அளித்தது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டுமென்றும், மதம் என்பது வெறும் வேஷத்திலில்லையென்றும், அது மக்களின் நன்மைக் காகவே இருக்க வேண்டுமென்றும், அத்தோடு அது எவருக்கும் நம்பிக்கை யில் மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், அனுபவத் திற்கும் ஏற்றதா யிருக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இதை நான் முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன். மற்றும் உலகத்திலுள்ள மதக்காரர்களெல் லாம் இதை ஒப்புக் கொள்ளும்பட்சம் நாட்டில் மத சம்மந்தமான எவ்வித சண்டையும், அபிப்பிராயபேதமும், பிரிவும் பல மதங்களும் ஏற்பட இடமே இருக்காது. தவிர மெளலானா அவர்கள் இஸ்லாம் மதத்தில் பெண்க ளுக்கும், தீண்டாதார் என்பவர்களுக்குமுள்ள பல சுதந்திரங்களையும், இந்து மதத்தில் அவை இல்லாததையும் எடுத்துச் சொன்னார்கள். அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும் அதைப் பற்றியே இரு சமூகத்திற்கும் பயன் படுமாறு சில வார்த்தைகள் பின்னால் பொதுவாகச் சொல்லுகிறேன். மதம் என்பது
குடி அரசு - 1930 @) 98
மக்களின் வாழ்க்கைக்கு ஏற்பட்ட கொள்கைகள் என்பதாக எல்லா மத சம்பிரதாயக்காரர்களும் குறிப்பு எழுதி இருக்கிறார்கள். Damwin's Theory Evolu-
tion Theory (டார்வின் தியரி எவுலூஷன் தியரி) என்பவையான மிருகத் திலிருந்து மனிதன் வந்த ஆராய்ச்சி, மாறுதல் முற்போக்கு ஆகிய கொள்கை களின்படி பார்த்தால் மனிதனுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி இல்லாத காலத்தில் அதாவது மனிதன் எதைஎதைக்காண்கின்றுனோஎதைஎதைஅனுபவிக்கின்றானோ அதன் தத்துவத்தை அறிந்துகொள்ள அறிவில்லாமலிருந்த காலத்திலும்அறிந்தவர்கள் சொல்லுவதை உணர்ந்து கொள்ளப் போதிய ஆற்றலில்லாத காலத்திலும், தோன்றியத் தோற்றங்களைப் பற்றியும் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றியும் திருப்திக்கும், பயத்திற்கும் கட்டுப்பாட்டிற்குமாகப் பல கட்டுக்கதைகள் மூலம் புகுத்தி அவைகளைப் பயத்தின் பேரில் நம்பச் செய்தவைதான் இன்றையக் கடவுள். உணர்ச்சியின் ஆரம்பமும் மதக் கொள்கைகளின் உற்பவமுமாகும். அந்த ஆரம்ப முறைதான் ஒரே விதமாய் உலகமெங்கும் பரவியிருந்ததாகுமென்
றாலும் பின்னால் உலகம் மாறுதலாக ஆக அனுபவம் முதிர முதிர கொள்கை
களும் உணர்ச்சிகளும் மாற வேண்டியதாயிற்று. அந்த மாறுதல் கொள்கை கள்தான் இன்று நாம் பல மதங்களாகச் சொல்லிக் கொள்ளப்படுபவை களாகும்.
ஹெட்மாஸ்டர் திரு. இராஜகோபாலைய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக அநாகரீகர் களாகவும், அறிவில்லாதவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து அவ்வப்போது சீர்திருத்தஞ் செய்ய முயற்சித்தவர்கள்தான் மதத் தலைவர்களானார்கள். அவர்கள் பொதுவாக அந்தக் காலத்தில் அநேக மனிதர்களுக்கு மேற்பட்ட அறிவுடையவர்களாகயிருந்ததாகக் காணப் பட்டதால் அவர்கள் அந்த மக்களால் காலத்திற்கேற்றபடி கடவுள் அவதார: மென்றும், கடவுள் புத்திரரென்றும் மற்றும் பலவாறாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் பின்னால் உள்ள ஜனங்களும் தங்களுடைய வழக்கமான மூடத்தனத்தை கொண்டும் மக்கள் மதிக்க வேண்டு மென்கின்ற ஆசையைக் கொண்டும் அப்பெரியார்கள் மீது அமானுஷிகமான கட்டுக் கதைகளைக் கட்டி அநேக “அற்புதங்கள்” செய்தார்கள் என்று பெருமைப்படுத்தி
விட்டார்கள். அதனால்தான் இப்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள்
தங்கள் மதத் தலைவர்களை மனிதத் தன்மைக்கு மேலாகவே மதித்து மனிதசக்திக்கு மீறினதும், அனுபவத்திற்கு ஒவ்வாததுமான குணங்களை ஏற்றிப் போற்றுகின்றார்கள். என்றாலும் காலமாறுபாட்டிற்குத் தகுந்தபடி பழைய கொள்கைகள் மாற மாற புதிய புதிய மதங்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் வரும். ஆனால் இனிமேல் தெய்வீகம் பொருந்தியவர்கள் மாத்திரம்
ஏற்படமுடியாது.
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மிகப் பழைய காலத்தில் அதாவது இந்து மத காலத்தில் கடவுள்களே நேரில் வருவதாகச் சொன்னார்கள். அதற்கடுத்த கிறிஸ்தவ மத காலத்தில்
கடவுள் குமாரர் (பிதாமகன்) வந்ததாகச் சொன்னார்கள். மகமதிய மதக் காலத்தில் கடவுளின் தூதர்கள் வந்ததாகச் சொன்னார்கள். இது மாத்திரமல் லாமல் “இனி தூதர்கள் வரமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள். தெளிவாக இன்னுந் தெரிய வேண்டுமானால் இந்துக்களில் 10 அவதாரங்களுடனும் 12 ஆழ்வார்களுடனும் 4 சமயாச்சாரிகள் உள்பட 64 நாயன்மார்களுடனும் அநேகமாய் அவதாரங்களும், தெய்வீகங்களும் நின்றே விட்டன. எத்த னையோ தடவை எதிர்பார்த்தும் எத்தனையோ பெயர்களைப் பழையபடி பொது ஜனங்கள், அவதாரமென்று கற்பித்தும் ஒன்றும் சிறிதும் பயன் பெறாமலே போய்விட்டது. அதுபோலவே கடவுளைப் பற்றியே தெரியா தென்று சொன்ன பெளத்த “அவதாரமும்” அத்துடனேயே நின்று விட்டது. கிறிஸ்துவ மதத்திலும் கிறிஸ்துவுடனும் அவர்கள் சிஷ்யர்களுடனுமே நின்று
விட்டது. அவர் மறுபடியும் வருவார் என்று சொல்லி வெகுகாலமா கியும் இப்போது எதிர்பார்ப்பதே பரிகாசத்திற்கிடமாய் விட்டது. மார்டின் லூதர். முதலியவர்களும் மனிதர்களாகவே பாவிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் தான் கிறிஸ்து மதத்தில் கட்சிகள் ஏற்பட்டுவிட்ட. இஸ்லாம் மார்க்கத்திலும்
மகமத் நபி அவர்களோடேயே நபிகள் தோற்றம் நின்று விட்டது. திரு.மகமது நபி அவர்கள் எல்லாத் தெய்வத்தன்மை பொருந்திய வர்கள் என்பவர்களிலும் பிந்தியவராதலாலும் எல்லோரையும் விட மிக்க பகுத்தறிவும், முன் யோசனையும் அனுபவ ஞானமும் உடையவரான தினாலும் “ இனி உலகில் நபிகள் தோன்றப் போவதே கிடையாது” என்று சொல்லி விட்டார். அவர் இரண்டு காரணத்தால் அப்படி சொல்லியிருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகின்றது; அதாவது ஒரு சமயம் மறுபடியும் யாராவது புறப்பட்டு சில ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன்னை தேவ அவதாரமென்றும், தெய்வாம்சம் என்றும் சொல்லி பழைய படி மக்களைப் பாழாக்கி விடாமலும் தனது கொள்கைகளை கெடுத்து விடாமலும் இருக்கட்டும் என்று மிக முன் ஜாக்கிரதையாகச் சொல்லி யிருந்தாலுமிருக்கலாம். அல்லது “இனி வரும்
காலத்தில் மக்களை அறிவு டையவர்களாக இருப்பார்கள்; இம்மாதிரி ஒருவரை சுலபத்தில் தெய்வத் தன்மை பொருந்தியவர் என்று கருதிவிட இடமிருக்காது” என்று கருதி சொல்லியிருந்தாலுமிருக்கலாம். எப்படியிருந்தாலும் திரு. மகமது நபி அவர் கள் சொன்னது பலித்துவிட்டதுடன் அவரது கொள்கைக்கு மேலானதொரு கொள்கையை இது வரை வேறு எவரும் கொண்டு வந்து அமுலில் நடத்த வில்லை என்பது
மாத்திரம் உறுதி. இதுவரைத் தோன்றிய எல்லா புது மதங் களும் கடைசியாக வந்த திரு. மகமது நபி அவர்களது கொள்கைகளுக்குப் பின் போகிறதேயல்லாமல் முன் போகவில்லை. கிறிஸ்தவர்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் இந்துக்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் புதியக் கொள்கைகளை திரு. நபி அவர்களிடம் தான் கடன் வாங்கியாக வேண்டும்.
குடி அரசு - 1930 (2) 100
அவரது கொள்கைகளுக்கு மேல் மக்கள் நலத்திற் குக் கொள்கைகள்: வகுப்பதற்கு இப்போதுள்ள எந்த மதஸ்தருக்கும் தைரிய மில்லையென்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. இஸ்லாம் மதக் கொள்கைகளுக்கு மேலாக ஒரு கொள்கை வகுக்க வேண்டுமானால் அது இப்போதைய ரஷிய மதமாகத் தானிருக்க வேண்டும். மற்றபடி அது கூடிய வரையில் மக்களுக்குத் தாராளமாக சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் வீரத்தையும் கொடுத்திருக்கின்றது.
ஆனால் மற்ற மதங்களிலும் அவைகள் இருப்பதாய் சொல்லிக் கொள்ளலாமே தவிர அந்தப்படி கொடுக்கப்படுமாயின் - அமுலுக்கு வருமாயின் அம்மதங்களே மறைந்து போய்விடும்.
இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் கொள்கைகளில் தலைகீழ் வித்தியாசமிருக்கின்றது.
இந்து மதத்திற்கு அகராதிகளில் “மகமதிய மதத்திற்கு விரோதமான மதம்” என்று ஒரு பெயர் இருக்கின்றது. அதன் கொள்கைகள் பெரும்பாலும் இந்து மதக் கொள்கைகளைத் தான் கண்டித்திருக்கின்றன.
இன்றைய தினமும் இந்திய அரசியலில் இந்துக்களுக்கு மகமதியர் அல்லாதார் என்று தான், அதாவது பார்ப்பனீயத்திற்கு எதிரிடையான மக்க.
ளுக்கு பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இருப்பதுபோலவே மகமதியர்: அல்லாதார் என்கின்ற பெயரே ஏற்பட்டிருக்கின்றது.
இந்து மதம் என்பது உலக மக்களின் ஆதி முதல் நிலைமையாகும். அது இதுவரையில் சிறிது கூட திருந்தவில்லை.
எனக்கு முன் பேசிய எட்மாஸ்டர் திரு. ராஜகோபாலய்யர் அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மக்கள் அநாகரீகர்களாய் பகுத்தறிவு இல்லாமல் இருந்த காலத்தில் ஏற்பட்ட கொள்கைகள் என்பதுதான் இன்றைய
தினம் இந்து மதத்தின் பேறால் அப்படியே இருக்கின்றன. மத்தியில் பலர் பல விஷயங்கள் சொல்லி இருந்தாலும் அவைகள் புத்தக அளவில்தான் இருக்கின்றன. மற்றபடி கடவுள் விஷயத்தில் பல கோடி கடவுள்களும் - தொட்டதெல்லாம் கடவுளாயும், நினைத்ததெல்லாம் கடவுள்களாயும், தென் பட்டதெல்லாம் கடவுளாயும் இனியும் விளங்குகின்றன. இஸ்லாம் மார்க்கம் சமீப மார்க்கமானதால் அதில் அந்தக் காரியம் மாத்திரம் அதாவது கடவுள் காரியம் வெகு கண்டிப்பாய் இருக்கின்றது. எப்படியெனில் ஒரு கடவுளுக்கு மேல் நினைத்தால் பாவம் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவனைக் கொன்றால் புண்ணியம் என்கின்றவரை கூடவும் இருப்பதாய் தெரிகின்றது.
நிற்க,
இந்துக் கடவுள்கள் உருவத்தை எல்லாம் இஸ்லாமியர்கள் உடைத்து
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சின்னாபின்னமாக்கப்பட்டதாகவும், ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் குரானையும் வைத்து மதப் பிரசாரம் செய்ததாகவும் சொல்லப் படு கின்றது. அது உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம், பொய்யாயிருந்தா லும் இருக்கலாம். ஆனாலும் அது உண்மை யாயிருந்தால் அந்த கொள்கை கொண்டமகமதிய அரசாங்கம் இதுவரை இந்தியாவில் இருந்திருக்குமாயின் இன்றைய இந்தியாவின் நிலை எவ்வளவோ மேன்மையாய் இருந்திருக்கும். தீண்டாதார்களாக ஆறு கோடியும் பயங்காளிகளும், கோழைகளும் ஒற்று மையற்றவர்களும் சோம்பேறிகளுமாக இருபது கோடியுமுள்ள மக்கள் இன்று கண்டிப்பாய் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது கல்லு போன்ற
உறுதி.
குழவிக் கல்லுக்கு கோடி ரூபாய்
ஒரு பக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் - நாட்டை விட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும்
பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்தி லிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி, வைப்பாட்டி பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டுபல்லக்கு, ரதம்,
தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி. செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?
இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜியத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக் கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இஸ்லாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்தமடைய வில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும் பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும்.
இருக்கின்றது.
எல்லா மதமும் மூர்க்கப் பிரசாரமே
சங்கராச்சாரி மதம் பெளத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ
மதம் சமணர்களைக் கழுவேற்றினதும், வைணவ மதம் புத்த விக்கிரகங் களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப் போமானால் அந்தக் காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப் படுப
குடி அரசு - 1930 (2) 102
வைகள் எதற்கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல என்று தோன்றும் ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டதா இல்லையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது. மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதை தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஓர் பழி என்று சொல்லுகின்றார்கள்.
ஆனால் சமணர்களை சைவர்கள் கழுவேற்றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களாலேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரசாரம் செய்வதுடன் அதன் பெருமையைக் காட்டிக் கொள்ள வருஷந் தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற் சவங்கள் நடத்திக் காட்டப்படுகின்றன. அக்கோயில்களில் இன்றும் கழு வேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
அது போலவே வைணவர்களும் புத்த மத விக்கிரகத்தை அழித்த
தற்கு ஆதாரமாய் ஸ்ரீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத்தை திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெரு மையாகவும் எழுதி புண்ணிய சரித்திரமாகப் பாவித்து தினமும் படிக்கப் பட்டும் வருகின்றன. இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த்தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர்' செய்ததாய்ச் சொல்லப்படும் வாள் பிரசாரத்திற்கு சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.
கிறிஸ்து நாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரசாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றன என்பது விளங்கும். இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது “நாஸ்திகர்களை நாக்கருக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திர வதை செய்ய வேண்டும், நாட்டை விட்டுத்துறத்த வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கின்றேன்.
மற்றும் இந்து “வேத சாஸ்திரங்களைப் படித்தால் நாக்கருக்க வேண்:
டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும், மனதில் ஏறிவிட்டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும்” என்பன வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன்.
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மற்றும் “பெரியோர் வாக்கை புராண இதிகாசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாஸ்திகனாவான். அப்படிப்பட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும்” என்பனவாகிய வெல்
லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
ஆகவே உலகில் மதப் பிரசாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே யொழிய அனுபவத்தில் அன்புமயமான
மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.
இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்தக் காலத்திய வேத மதக்காரர்களுக்கு தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண்டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க்கலாம்.
ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக்கிறார்கள். தவிர இந்து மதத்தில் உள்ள தீண்டாமையும், பெண் அடிமையும் சிறிதும் மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை உலகமே சொல்லுகின்றது.
எல்லாருக்குமே அவமானம்
மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும்
உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திர மல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு அந்தமதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன். இந்து மதத்தில் ஒவ்வொருவனும் மற்றவனைக் கீழ் ஜாதியான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள ஆணவத்தை அனுபவிக்கின்றானேயல்லாமல் தான் மற்றொரு ஜாதிக்கு கீழ் ஜாதியாய் இருக்கின்றோமே என்கின்ற இழிவை உணரும் உணர்ச்சியே கிடையாது. பொதுவாக இந்துக்களுக்கே சுய மரியாதை கிடையாது என்று சொல்லுபவர்களுக்கு இந்த ஒரு காரியமே போதுமான ஆதாரமாகும்.
அன்றியும் இந்து என்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் கீழ் ஜாதியாக மதித்து இழிவு படுத்துவதையும் மனித உரிமை தடுக்கப்பட்டி
குடி அரசு - 1930 (2) 104
ருப்பதையும் ஈனமான அர்த்தம் கொண்ட சூத்திரன் என்ற பேரால் குறிக்கப் பட்டிருப்பதையும் கண்டு சிறிதும் வெட்கப்படுவதில்லை. யாராவது ஒருவர் இருவர் வெட்கப்படுவதாய் பாசாங்கு செய்தாலும் காரியத்தில் உதைத்த
காலுக்கு முத்தம் வைப்பதுபோல் அந்தப்படி தன்னை இழிவு படுத்துவதற்கு அஸ்திவாரமாகவும், ஆஸ்பதமாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதத்தையும் கடவுளையும் போற்றுகின்றான். காக்கப் பாடுபடுகிறான். இப்படிப்பட்ட வர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. எவ்வளவோ அபிலாசைகளையும், பெருமைகளையும், கீர்த்திகளையும் ஆசைப்படுகின்ற மனிதன்தான் ஏன் கீழ் ஜாதியாய் மதிக்கப்படுகிறான். தன்னை ஏன் சமூக வாழ்வில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கின்றான். தன்னுடைய சொந்த இழிவை
யும், கொடுமையையும் நீக்கிக் கொள்ளக் கவலையும் முயற்சியும் ஆற்றலும் இல்லாத மனிதன் மற்றவர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருகிறேன் சுய மரியாதை உண்டாக்கித் தருகிறேன் என்றால் அதில் ஏதாவது நாணயமோ பொருளோ இருக்க முடியுமா? இஸ்லாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப்
படலாம், பெறாமைப்படலாம், அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத் திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலானவர்களாகவுமே இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் மதக் கொள்கைகளேயாகும். அதாவது சமத்துவமும், சகோதரத்துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்த சுத்தமாய்க் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோ
ரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும். இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினேகிதர்களையும், இதரர்களையும், குழந்தை களையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவைச் சாத்துவான். இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கின்றது. ஆகவே மதக் கொள்கைகளின் உயர்வு, தாழ்வு களை பலனில் இருந்து பார்த்தறிகின்றதா? அல்லது நாமே எழுதிவைத்துக் கொண்டதிலிருந்து அறிகின்றதா?
இஸ்லாமிய மதம் மதிக்கப்படுவது போல் இந்து மதம் உலக மக் களால் மதிக்கப்படுகின்றதா? ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது? இந்துக்களில் 100-க்கு 90 பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர்,
புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில்
சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப்படுவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆசைப்படுவது போல் இந்த யோக்கியதை உள்ள மக்கள் பெரிய விஷயங் களில் ஆசைப்படுவதில் என்ன பிரயோஜனம்? அது போலவே இந்து மதத்
தில் இந்துப் பெண்களின் நிலை என்ன என்று பாருங்கள். ஒரு “வேசி”க்கு
இருக்கும் சுதந்திரமும், சுயமரியாதையும், சுகமும் கூட நமது “பெண் தெய்வங்களுக்கு” இல்லை. சொத்தில்லை, படிப்பு இல்லை, விவாக சுதந்திர: மில்லை, விதவை ஆகி விட்டால் மறுமண மில்லை. இதற்கு என்ன பெயர் சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை.
உயிருடன் கட்டையில் வைத்து எரிப்பதை நிறுத்தியதே அவர் களுக்கு பெரிய உபகாரம் செய்ததாய் கருதப்படுகின்றது. ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு பெரிய அபகாரமாய் முடிந்திருக்கிறது. இம்மாதிரி கொள்கைகளுடன் உலக மக்கள் முன்னால் நாமும் நம்மை எப்படி மனிதர்கள்
என்று சொல்லிக் கொள்ள முடியும்? உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும். அதில்லாமல் காட்டிமிறாண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா? தவிர இந்த சமயத்தில் இஸ்லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டியிருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றது. இந்துக் கோயில்களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக்கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் “அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல” என்றும் “சாவகாச தோஷத்தினால்
மத்தியில் வந்து புகுந்த தவறுதல்கள்”” என்றும் சொல்லலாம். அது போதிய சமாதானமாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக்காரர்களும் “இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோக்ஷம் தேடிக் கொள்ள நாம் யாத்திரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும்” என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீமாவது பட்டினியாகவும் தொழில் இல்லாமலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அதுதான் யோக்கியமான பணக்காரனின் லக்ஷியமாகும். இந்தக் குணங்கள் இல்லாத பணக்காரன் கொள்ளைக்காரனுக்கு சமானமானவனே யாவான்.
தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் “தங்கள் மதம் உயர்ந்த மதம்” என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மாத்திரம்
குடி அரசு - 1930 (2) 106
போதாது. கஷ்டப்படுகின்ற இழிவு படுத்தப்பட்ட மக்களைத் தங்கள். மார்க்கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். தாங்கள் அனுபவிக்கும் சமத்துவ இன்பத்தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப்படுகின்ற மக்கள் யாவரும் அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும்” என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கியமான மனித
னுக்கும் தலையாயதாகும்.
அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களேயாவார்கள்.
ஆகவே சகோதரர்களே! இந்த சமயத்தில் எனக்கு அளித்த சந்தர்ப்
பத்தில் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன்.நீங்கள் தயவு செய்து அவற்றை நன்றாய் யோசித்துத் தங்களுக்
குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை தயவுசெய்து தள்ளி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.
குறிப்பு : ஈரோடு முனிசபல் எவிமெண்டரி பாடசாலையில் நடந்த திரு. நபி அவர்கள் பிறந்த நாள் விழாவிலும் சத்தியமங்கலம் விழாவின் தலைவர்
முடிவுரையிலும் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 24.08.1930
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சென்னை சட்டசபைக்குத் தேர்தல் பிரசாரங்களும் ஓட்டுச் சேகரிப்பும் தமிழ் நாட்டில் நடைபெறுகின்றதானாலும் கிளர்ச்சி உண்டாக்கத்தக்க அளவுக்கு அவ்வளவு மும்முரமாய் இல்லை என்பது யாவரும் அறிந்த விஷயமாகும். இதற்குக் காரணம் என்னவென்றால் பொது ஜனங்களுக்கு இப்போதைய தேர்தலில் சிறிதும் உற்சாகம் இல்லாதிருப்பதேயாகும். ஏனெ
னில் தேர்தல் கட்சிகளின் தத்துவமும் தேர்தலில் நிற்கும் அபேட்சகர்களும் பெரும்பாலும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கும் பெருமைக்கும் நிற்கின்றார். களே ஒழிய மற்றபடி அவற்றுள் உண்மையும், நாணயமும் பொது நல நோக் கமும் சிறிதும் இல்லை என்பதாக மக்கள் கருத நேரிட்டு விட்டதேயாகும்.
மற்றும் இரண்டாவதாக தேர்தலில் நிற்பவர்களில் 100க்கு 75 பேருக்கு மேலாகவே தங்கள் தங்கள் சாரும் கட்சித் தலைவர்களின் நன்மைக்காக அவர்களால் நிறுத்தப்படுபவர்கள் எனப்படுவது.
மூன்றாவதாக, தேர்தலில் பிரசாரம் செய்யும் கூலிப் பிரசாரகர்களும் பெரிதும் தங்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சுயநலம் காரணமாக முக்கியமாய் இன்னின்னாருக்கு ஆகக்கூடாது என்று பிரசாரம் செய்யப்படு கின்றார்களே தவிர இன்னாருக்கு ஆக வேண்டும் என்கின்ற பிரசாரம் மிக்க குறைவாயிருப்பதால் பொது ஜனங்களுக்கு அப்படிப்பட்ட பிரசாரத்தி னிடம் அபிமானமில்லாமலிருப்பதுடன் அப்பிரசாரங்களையும் வெறுப்பது.
நான்காவதாக, தேர்தலில் நிற்கும் கனவான்கள் பெரும்பாலரும் முன்பின் பேர் கேட்டில்லாதவர்களாகவும் வெறும் பணக் கொழுப்பாலும் தாங்கள் உதவி பெற்ற கட்சியாருக்கு அடிமையாய் இருப்பதற்கே நிற்பவர். களாயுமிருக்கிறார்களே தவிர சொந்த செல்வாக்கும் பொது நல உணர்ச்சியும் சிறிதுமற்றவர்களாயிருக்கிறார்கள் என்று பொது ஜனங்கள் கருத நேர்ந்தது.
ஐந்தாவதாக, தேர்தல்களில் இதுவரை இருந்து வந்த பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி அடியோடு நழுவப்பட்டு இரு கட்சியாரும் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி இரு கட்சியாரும் பார்ப்பனர்களை நிறுத்தி அப்பார்ப்பனர்களுக்கு இரண்டு கட்சியாரும் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்க
குடி அரசு - 1930 (2) 108
முயற்சித்து வருவதாகத் தெரிவது.
ஆறாவதாக, நமது நாட்டு மக்களின் கவனம், பகுதி உப்புச் சத்தியாக் கிரகத்திலும், பகுதி சுயமரியாதை கிளர்ச்சியிலும் இழுக்கப்பட்டு விட்டதால் இரண்டு காரணங்களாலும் பொது ஜனங்களால் சட்டசபை கெளரவம் அலட்சியிக்கப்பட்டிருப்பது. ஆகவே இத்தியாதி காரணங்களால் இவ் வருஷ சட்டசபைத் தேர்தல்களில் அதிகமான கிளர்ச்சியோ உற்சாகமோ காணப்படாமலிருப்பது ஓர் அதிசயமல்ல.
இவை ஒரு புறமிருக்க இரு கட்சியாருடைய சொந்த நாணயப் பொறுப்பு எப்படி இருந்தாலும் அவர்களின் உள் எண்ணம் எப்படி இருந்
தாலும் நமது சுயமரியாதைக் கொள்கைகளைப் பொறுத்தவரை ஒன்றுக் கொன்று மேல் கீழ் என்று சொல்வதற்கில்லையானாலும் இரு கட்சியாராலும் கிடைக்கக்கூடிய பயனையடையத் தவறிவிடக் கூடாது என்பதே நமதபிப் பிராயமாகும். பொது நலத்தை உத்தேசித்து இந்தப்படி எதிர்பார்ப்பதில் யாதொரு குற்றமும் இல்லை என்றே சொல்லுவோம். ஏனெனில் இந்த சர்க் காரைப் பற்றி யார் எவ்வளவு குற்றம் சொன்னாலும் அவர்களுடைய எண்ணத்திலும், நடவடிக்கைகளிலும் எவ்வளவு நாணயக் குறைவும், முரண் பாடுகளும் இருந்தாலும் நமது இயக்கக் கொள்கைகளுக்கு அவர்களால் கிடைக்கக் கூடிய அனுகூலத்தை அடைய நாம் எதிர்பார்க்கும் போது இன்றைய தேர்தலில் போட்டிபோடும் இரு கட்சியாராலும் இயக்கத்திற்குக் கிடைக்கும் பயனை அலக்ஷியம் செய்ய வேண்டியதில்லை என்றே யாருக்
கும் தோன்றும். பொதுவாக நோக்கும் போது இரு ககஷியிலும் பார்ப்பனர். களை விட மோசமானவர்கள் அல்லாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். சுயமரியாதைக் கொள்கைகளை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
என்றாலும் விரோதிகளும் இருக்கின்றார்கள் என்பதையும், விரோதி களின் ஆதிக்கம் இரு ககஷியிலும் சிறிது இருக்கின்றது என்பதையும் நாம் மறைக்க முயலவில்லை. ஆனாலும் இவ்விரு கக்ஷியாரிடமும் நாம் இப் போது எதிர்ப்பார்ப்பதெல்லாம்.
1. உத்தியோகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் படிப்பு கற்பிக்கப் படுவதிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது.
2. ஜாதி வித்தியாசமும் தீண்டாமையும் அடியோடு ஒழிய வேண்டு மென்பது.
3. பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லாவித சுதந்திரமும் இருவருக்கும் கலியாண ரத்தும் வேண்டு மென்பது.
4. கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் சிலவு செய்யப்படும்
பணமும், நேரமும், முயற்சியும் மக்கள் நலத்திற்கு அதாவது தொழி
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
லுக்கும், கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும் திருப்பப்பட்டு அந்தப்படி உபயோகப் படுத்தப்பட வேண்டுமென்பது.
5. பள்ளிக் கூடங்களில் மத சம்மந்தமான விஷயங்களைப் படிப்பிக் கவோ அவற்றின்மூலம் பொதுக் கல்வி கற்பிக்கவோ மத சம்மதமான
உணர்ச்சிகள் பள்ளிக் கூடங்களில் காட்டப் படவோ கூடாது என்ப
தும், பொதுப் பணத்தில் எல்லோருக்கும் ஒரு அளவிற்காவது சமமான கல்வி கற்பிக்க வேண்டும் என்பது.
மற்றும் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளையே முக்கியமாய் இப்போதைய சட்டசபை மூலமும், அதனால் ஏற்பட்டுள்ள மந்திரிகள்: மூலமும் எதிர்பார்க்கின்றோம்.
இவைகளில் எதையும் அசாத்தியமானதென்றோ, அமிதமான தென்றோ நடு நிலைமையில் உள்ள யாரும் சொல்லி விடமுடியாது.இவை களில் அநேகம் உலகத்தில் மற்ற நாடுகளில் நடை பெற்று வருகின்றவை களாயுமிருக்கின்றன.
முதலாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது நமது நாட்டில் அதிகமான வகுப்புகளும் உயர்வு தாழ்வு வித்தியாசங்களும் இருப்பதால் அது அநேகமாக நமது நாட்டில் மாத்திரம் இருப்பதாய்க் காணலாம். ஆனாலும் மைசூர் முதலிய சுதேச மன்னர்கள் தேசங்களில் கூட இக் கொள் கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு அமுலில் நடக்கின்றது. நமது மாகாணத் திலும். ஒருவாறு அமுலுக்கு இப்போதைய மந்திரிகளால் கொண்டு வரப் பட்டு
மிருக்கின்றது. வகுப்புவாரி கல்வி விஷயமும் நமது நாட்டில் நமது “மதத்தில்” சிலர் படிக்கலாம், சிலர் படிக்கக் கூடாது என்பதும், சிலர் படிக்க வசதி உள்ளவர்கள், சிலர் படிக்க வசதி இல்லாதவர்கள் என்பதுமான தத்து வங்கள் ஒரு சாராரால் வெகுகாலமாக வலியுறுத்தி வந்ததாலும் இனியும் வலியுறுத்தப்
படுவதாலும், இதற்கேற்ற சூழ்ச்சிகள் நிறைந்திருப்பதாலும் கல்வி யும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவப்படி கற்பிக்க வேண்டியதாகின்றது.
2 -வதான ஜாதி வித்தியாசமும், தீண்டாமையும் ஒழிய வேண்டும் என்கிற விஷயத்திலும் யாருக்கும் ஆக்ஷபணை இல்லை என்றே சொல்லப்படுகின்றன.
பொது வாழ்க்கையில் திரு. காந்தியவர்களுக்கு மாத்திரம் ஜாதி வித்தி யாசத்தில் சற்று குழப்பம் இருந்தாலும் தீண்டாமை விஷயத்தில் இதுவரை: எந்த அரசியற்காரராவது, சீர்திருத்தக்காரராவது ஆக்ஷேபித்ததே கிடை யாது. மற்றபடி வருணாச்சிரமக்காரரின் ஆக்ஷ்பணைகளைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை. அவர்கள் மநுதர்ம சாஸ்திரக் காரர்களா னதால் அவர்களைப்பற்றிப் பேசுவதே வீண் நேரக் கேடாகும்.
குடி அரசு - 1930 (2) 10
35-வதான பெண்கள் விஷயத்தில் சமவுரிமை வழங்க வேண்டு மென்ற கொள்கையையும் யாவரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. திட்டத் தில் மாத்திரம் சிறிது தகராறு இருப்பதால் அதுவும் பெண்கள் முயற்சியி லேயே சரிப்பட்டுவிடும்போல் தோன்றுகின்றது. கல்யாண ரத்து விஷயங் களிலும் மகமதியர்களுக்குள்ளும், கிருஸ்தவர்க்குள்ளும், இந்துக்களில் சில வகுப்புகளுக்குள்ளும் இப்போது அந்த வழக்கம் இருந்தே வருகின்றது. தவிரவும், இந்தியாவில் பரோடா சமஸ்தானத்தில் இதற்காக சட்டம் நிறை வேறிவிட்டது. ஆதலால் இதுவும் அசாத்தியம் என்று சொல்லி விட முடியாது.
4-வதாக கடவுள் மதச் செலவு விஷயம். இது இதுவரை மக்களுக்கு பகுத்தறிவு வளர பார்ப்பனர்களும், “பண்டிதர்” களும் முட்டுக்கட்டையாய் இருந்து வந்ததால் ஜனங்கள் உண்மையறிய முடியாமல் போய் விட்டது. இப்போது அவர்களது ஆதிக்கமும் செல்வாக்கும் குறைந்து விட்டதால் அதனால் பிழைப்பவர்களை விட இளி யாரும் அதை ஆக்ஷேபிக்க முடி யாத நிலைமைக்கு வந்து விட்டது. எனினும் பார்ப்பனரல்லாத டிரஸ்டிகள்பலர். இதை ஒரு வியாபாரமாகக் கொண்டு கொள்ளை அடிப்பதால் அவர் களே. முட்டுக்கட்டையாயிருக்கிறார்கள். ஆனாலும் பின்னால் வரப்பட்ட தேர்தல்களில் அவர்களும் புத்தி கற்பிக்கப்படுவார்களானாலும் சட்டங்கள் மூலம் இத்துறையில் பல திருத்தங்கள் செய்ய அவசியமிருக் கின்றன.
ஐந்தாவதாக மத சம்மந்தமான பாடங்கள் விஷயத்திலும் சர்க்கார்: தலையிட வேண்டிய அவசியமில்லை யென்றே சொல்லுவோம். அவற்றிற்கு “மத ஆச்சாரிய பீடங்களும்”, “மத சந்யாசிகளும்”” இருப்பதால் அவைகளை அவர்களிடமே விட்டு விட வேண்டியது நியாயமாகும். பிறகு பொதுமக்கள்
பார்த்துக் கொள்வார்கள். அப்படிக்கில்லாமல் பல மதக்காரரும் பல மத அவநம்பிக்கைக்காரரும் இருக்கும் போது எதற்காக சிறு பிள்ளை களுக்கு இவைகளை பொதுச் செலவில் போதிக்க வேண்டும்? மத சம்மந்த மும் கடவுள் சம்மந்தமும் மக்களுக்கு மூட நம்பிக்கையை வளர்த்து மக் களை மூடர்களாக்கி விட்டது என்று பலர் கருதும் போது அறிவுக்காக படிக்க வைக்கும் படிப்பில் மத சம்மந்தமான படிப்புப் படிக்க வைப்பது முட்டாள் தனங்களுக்கு எல்லாம் அரசனான முட்டாள் தனமாகும் என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள். தவிரவும் இக்கொள்கையை ரஷியா, ஜர்மனி, அமெ ரிக்கா, சைனா முதலிய தேசங்கள் ஒப்புக்கொண்டு நடத்தையில் கொண்டு வந்து விட்டன. ஆகவே நமது நாட்டில் மாத்திரம் இவை இருக்க வேண்டு மென்பது சிலரின் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக் காரணத்தை விட வேறு
காரணம் இல்லை.
பொதுப்பணத்தில் எல்லோருக்கும் சமமான கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது. இது விஷயத்தில் கல்வி இலாகாவில் பொது அறிவுக்கு என்று ஒரு பிரிவும் சர்க்கார் உத்தியோகத்திற்கு என்று ஒரு பிரிவும், தனி
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் என்று ஒரு பிரிவும் ஏற்பாடு செய்து அந்தப்படி
பிரித்து பொது அறிவுப் பிரிவில் இத்தனை வருஷத்தில் இந்தியாவில் தற்குறிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று திட்டம் போட்டு அந்தப் படிக்கு யார் யாருக்கு எந்த எந்த வகுப்பாருக்கு எவ்வித வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பவைகளைக் கண்டு திட்டம் போட்டு அதற்கு மாத்திரம் பொதுப்பணத்தை செலவு செய்ய வேண்டும். மற்றபடி உத்தி யோகத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டு விட்டதால் அந்தப் படியே மக்களைப் பொறுக்கி எடுத்து அதற்கு வேண்டிய படிப்பை வகுப்பு வாரி பிரதிநிதித்துவப்படி படிப்பிக்க வேண்டும். அதாவது மெடிக்கல்ஸ் (வைத்தியம்! இஞ்சினீரிங், சட்டம் (லா, ஐ. சி.எஸ். என்பது போன்ற பிரிவுகள் படி வகுக்க வேண்டும். அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் வேண்டிய படிப்பு அவரவர்கள் சொந்தப் பணத்தில் படித்து பயிற்சி பெறத்தக்கதாக வேண்டும். அந்த அறிவையும் ஆராய்ச்சியையும் வேண்டுமானால் அவர்கள் வியா
பாரம் போல உபயோகித்துக் கொள்ளுவதில் ஆகூஷ்பணை இல்லை.
ஆகவே இவைகளை யாரும் அமிதம் அசாத்தியம் என்று கருதிவிட முடியாது. மற்றபடி அரசியல் திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டாமா அவற்றைப் பற்றி நமக்கு கவலை யில்லையா என்று சிலர் கருதக் கூடும். நமது அரசியல் திருத்தம் முதலாவது எவ்வித உத்தியோகத்திற்கும் 15 1000. ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் இருக்கக் கூடாது என்பதாகும். அமுலுக்கு வந்துவிடுமானால் நாம் எதிர்பார்க்கும் மற்ற அரசியல் திருத்தங்களெல்லாம் அதற்குள் அடங்கிவிடும் என்பதே நமதபிப்பிராயமாகும். ஆனால் அதைப் பற்றி இப்போது பிரஸ்தாபிப்பதில் பயனில்லை என்று கருதி தற்காலம் இத்துடன் முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 31.08.1930
குடி அரசு - 1930 @) 112
சமதர்மமும் நாஸ்திகமும்
அன்புள்ள தலைவர் அவர்களே! சகோதரர்களே!
இன்று திருச்சி மருத்துவகுல சங்கத்தாரால் எனக்குச் செய்த மரியா தைக்கும் வாசித்துக் கொடுத்த வரவேற்பு பத்திரத்திற்கும் நான் உண்மை யிலேயே அருகநல்லவனானாலும், உங்களுக்கு என்னிடமும் எனது சிறு தொண்டினிடமும், கொள்கையினிடமும் உங்களுக்கு இருக்கும் அன்பும், ஆர்வமும் இம்மாதிரி செய்யும் படி செய்தது என்று கருதிக் கொண்டு அவைகளுக்காக எனது மனமார்ந்த நன்றியறிதலைச் செலுத்துகிறேன். எனக்கு முன்பு இங்கு பேசிய எனது நண்பர்களும் என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதற்கு நான் அவர்களிடம் மிக்க நன்றி காட்டுகிறேன். அன்றியும் நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும், என்னைப் பலர். நாஸ்தீகர் என்று சொல்லுகிறார்கள் என்றும், நான் நாஸ்திகன் அல்லவென்றும். எனக்காக பரிந்து பேசினார்கள். அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆயினும் என்னை நாஸ்தீகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்தீகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகின்றார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்தீகன் தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்தீகத்துக்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையை பரப்ப வேண்டுமானால் நாஸ்தீகத்தினால்தான் முடியும். நாஸ்தீகமென்பதே சம தர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்தீக ஆக்ஷி என்கிறார்.
கள். பெளத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால் தான். நாஸ்தீகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல. சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும் ஏன் எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்தீகம் என்று தான் யதாபிரியர்கள் சொல்லித்திரி வார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றன. கிறிஸ்துவையும், மகமது நபியையும் கூட நாஸ்தீகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும் தான் காரணமாகும். துருக்கியில் பாக்ஷாவும் ஆப்கானியஸ்தான் அமீரும் நாஸ்தீகர்கள் என்று
112 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால் இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம். கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப் பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளையென்றுமே தான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே நாம் இப்போது எதெதை மாற்ற வேண்டுமென்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாக
வும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள். கட்டளையை மறுத்ததே யாகும்.
உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப் பட்டது என்று சொல்லப்படுகையில் மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென் றால் அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தேதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவுளாலோ அவதாரங்களாலோ கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று சொல்லப் படுகையில் அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள் கைகள் மாற்றப்படவேண்டும் என்று சொல்லும் போது அப்படிச் சொல்லு பவன் அந்தந்தக் கடவுள்களை கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்தவனே யாகின்றார். அத னால்தான் கிறிஸ்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதியரல்லாதவர்:
காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகிறது.
அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை: மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும் போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்ல
மாட்டார்கள்.
ஜாதி, உயர்வு தாழ்வு, செல்வம், தரித்திரம், எஜமான், அடிமை ஆகிய வைகளுக்கு கடவுளும், கர்மமும் தான் காரணம் என்று சொல்லுவதானால்
பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால் மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விறோத மான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால் க்ஷவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் க்ஷவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப் பதைப் பார்த்தும் மேலும் க்ஷவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமே யாகும். ஏனெனில் கடவுள்:
குடி அரசு - 1930 @) 114
பார்த்து ஒருவனை அவனது “கர்மத்திற்காக” பட்டினி போட்டி ருக்கும் போது
நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது கடவுளை நம்பாத, கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மை யேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவரும் இருக்க முடியாது. ஆதலால் நம்மைப் பொருத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசி யாய் நாஸ்த்திகமே யாகும். நாஸ்த்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல்
யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. பொதுவாக நமது நாட்டில் உள்ள தரித்திரம் போக வேண்டுமானால் வெள்ளைக்காரனை வைவது மாத்திரம் போராது.
நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்
கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு தினமும் ஏய்த்து கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து
நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல, உங்கள் முட்டாள்தனம் தான் காரணம். ஆதலால் நீங்கள் கடவுள். செயலை லக்ஷியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான் செல் வந்தர்களின் அக்கிரமங்களை பாமர மக்கள் அறியக் கூடும். அப்பொழுது கடவுள்: செயலையும் அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆக வேண்டும்.இந்த நாட்டில் ஒருபுரம் ஏழைகள் பட்டினிகிடக்க ஒரு புரம் சிலர். கோடீஸ்வரராய்கொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திறிவது கடவுள் செயல் என்றால் இந்த நாட்டு செல்வத்தை வெள்ளைக்காரன் சுரண்டிக் கொண்டுபோவதும் அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையால் கடவுள் செயல் கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும்.
நீதியும் கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியதேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந் தார்கள்.ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப் படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் “லக்ஷிமி
புத்திரர்களாய் இருக்கிறார்கள்.” இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற்கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களை பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டிய வர்கள் ஆவார்கள். உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் “சூத்திரன் பொருள். சேர்த்து வைத்திருந்தால் பிராமணன் அதை பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம்” என்று இருக்கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்ச
காலத்திற்கு முன் இது அமுலிலும் இருந்திருக்கிறது. இனி கொஞ்ச நாள். போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லாதார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்லமுடியாது. காலம் போகப் போக நேரில் உழுது பயிர் செய்ய முடியா
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
தவனுக்கு பூமி இருக்க வேண்டியதில்லை என்றும் அப்படி யிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பது போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண் டேயொழிய இப்போது இருப்பது போல உழுகின்றவன் தன் வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு ஏன் சில சமயங்களில் அதற்கும் போராமலும் இருக்க பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அது போலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் கோ விலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம். இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளைக்கு அதர்மமாகி தலை கீழாகி மாறக்
கூடும் அப்பேர்ப்பட்ட நிலைமை வரும் போது இன்றைய நிலைமை எல்லாம். கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படு கின்றவன் கடவுள் கட்ட ளையை மறுக்க ஏன் கடவுளையே மறுக்க துணிந்தாக வேண்டும். கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன் றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக் கில்லாமல் கடவுளுக்கும் மோக்ஷத்திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பதுறுதி.
ஏனெனில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவை
களில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும் முட்டாள் தனமான நிலை
யும் அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும் மோக்ஷ சாரணங்களாலும் சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால் தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்
கிறேன்.
குறிப்பு:- 01091930 ஆம் நாள் திருச்சி மருத்துவ சங்கத்தில் திரூ.டி.பி.வேதா சலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ சங்கத்தாரால் அளிக்கப்பட்ட வரவேற்பு புத்திரத்தைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 07.09.1930
குடி அரசு - 1930 (2) 116.
சுயமரியாகைக்காறருக்கும்
புராண மரியாதகைக்காறருக்கம் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
சுயமரியாதைக்காரன்: -ஐயா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பண: நெருக்கடியான காலத்தில் கடன் வாங்கிக் கொண்டு இத்தனை அவசரமாய் காசிக்குப் போகின்றீர்களே என்ன காரியம்?
புராண மரியாதைக்காரன்:- ஒரு காரணமும் இல்லை. இந்தப் பாழாய்ப்போன சுயமரியாதை இயக்கம் வந்து பிள்ளைகளையெல்லாம் கெடுத்துவிட்டது. அதனால் தான் இவ்வளவு கஷ்டத்துடன் காசிக்குப் போக வேண்டி இருக்கிறது.
சும: சுயமரியாதை இயக்கத்திற்கும் தாங்கள் காசிக்குப் போவதற் கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லையே?
பும:- என்ன சம்மந்தம் என்றா கேட்கின்றீர்கள். நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துபோய்விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்கு கர்மம் செய்வார்களா? திதி செய்வார்களா? எள்ளுந் தண்ணீர் இறைப்பார். களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக்காரர்களால் எவ்வளவு தொல்லை?
சூம:- சரி. அதைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்காக நீங்கள் காசிக் கேனையா போகின்றீர்கள்? என்றால் அதற்கு ஒன்றும் பதில் இல்லாமல் சும்மா சுயமரியாதைக்காரரையே வைகின்றீர்களே?
பும:- சொல்லுகிறேன் கேளுங்கள். முதலாவது காசியில் செத்தால், திதி பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் பிண்டம் போட்டாலும் போடா விட்டாலும் மோக்ஷம் கிடைக்கும். இரண்டாவது அதில் ஏதாவது கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம்
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
போட்டுக் கொண்டு விட்டால் பிறகு எவனுடைய தயவும் நமக்கு வேண்டிய தில்லை. ஆதலால் இப்போது நேரே கயாவுக்குப் போய் எனக்கே நான் பிண்டம் போட்டு விட்டுப் பிறகு காசிக்குப் போய் சாகப் போகின்றேன். அப்போது இந்த சுயமரியாதைகள் என்ன பண்ணுமோ பார்ப்போம்.
சு.ம:- சரி. அப்படியானால் நீங்கள் மறுபடியும் இங்கு திரும்பி வருவதில்லை போல் தோன்றுகிறதே.
பும:- ஆம். இனி இங்கு எனக்கென்ன வேலை? பாடு பட்டு சம்பாதித்தேன். கடவுள் செயலால் ஒன்றும் குறைவில்லை.பிள்ளைகளை யும் நன்றாய் செலவு செய்து படிக்க வைத்தேன். அதிர்ஷ்டக் குறைவால் அதுகள். படிக்கவில்லை. கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதுகள் திரியறதைப் பார்த்தால் எனக்கு எள்ளுந் தண் ணீர் கூட இறைக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஆதலால் நான் வந்த காரியத்திற்கு நான் போக வேண்டாமா?
சும: என்ன காரியமாய் வந்தீர்கள். அதற்காக எங்கு போகின்றீர்கள்.
பும:- மனிதன் எதற்காகப் பிறந்தான்? அந்த ஸ்ரீமந் நாராயணனை வணங்கி அவன் பாதார விந்தம் போய்ச் சேருவதற்குத்தானே.
சும:- ஸ்ரீமந் நாராயணன் பாதார விந்தம் தாங்கள் சேருவதற்கும் உங்கள் பிள்ளைகள் எள்ளும் தண்ணீர் இறைப்பதற்கும் நீங்கள் கயாவுக்கும் காசிக்கும் போவதற்கும் என்னையா சம்பந்தம்? எனக்கு சற்று விளங்கும் படியாய் சொல்லுங்களே! நானும் தங்கள் கூடவே வந்து விடுகின்றேன்.
பு.ம:- இதெல்லாம் உங்களுக்கு சுலபத்தில் சொன்னால் புரியாது.
சும:- பின்னை எப்படிப் புரியும்?
பு.ம:- நல்ல குரு கடாக்ஷம் வேண்டும், பெரியோர்கள் சாவகாசம் வேண்டும், முன்னோர்கள் நூல்களில் பரிக"ஷ இருக்க வேண்டும், புராணங் களை மரியாதை செய்ய வேண்டும், பக்தி சிரத்தையுடன் அவைகளைப்
படிக்க வேண்டும், எதற்கும் பிராரப்த கர்மமும் இதற்கு அனுகூலமாய் இருக்க வேண்டும்.பகவான் கிருபையும் வேண்டும்.
சும:- அப்படியானால் அவைகளில் எனக்கும் ஆசையாய் தான் இருக்கின்றது. இனிமேல் நான் சுயமரியாதைக்காரர்களுடன் சேருவதில்லை. தாங்கள் சொன்னபடியே நடந்து நானும் ஸ்ரீமந் நாராயணனுடைய பாதத்தை அடைய முயற்சிக்கிறேன். தாங்களே எனக்கு நல்ல குருவாயிருந்து கடா க்ஷம் செய்து மற்ற விஷயங்களை சற்று உபதேசம் செய்யுங்கள். அதாவது பெரியோர்கள் என்று சொன்னீர்களே அவர்களில் ஏதாவது ஒரு நாலைந்து
குடி அரசு - 1930 @) 118
பேர்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள். ஒருவரிடமாவது சாவகாசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்.பிறகு முன்னோர்கள் நூல்கள் என்றீர் களே அதிலும் முன்னோர்கள் யார்? அவர்களுடைய நூல்கள் எவை? என்பனவற்றைச் சொன்னால் அதையும் அடைய முயற்சிக்கிறேன். பிறகு புராணங்களை மரியாதை செய்ய வேண்டுமென்கிறீர்களே எந்தப் புராணங் கள்? அவைகளின் பெயர்கள் என்ன? எப்படி மரியாதை செய்வது? என்ப தையும் பக்தி சிரத்தையுடன் படிக்க வேண்டுமென்றால் பக்தி காட்ட வேண் டிய விதம் என்ன? சிரத்தை என்றால் பணம் கொடுத்து வாங்கிப் படித்தால் போதுமா? அல்லது யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்க வேண்டுமா? என்கின்ற விஷயத்தையும் தயவு செய்து சொல்லுங்கள். அன்றியும் பிராரப்தகர்மம் இதற்கு அனுகூலமாய் இருக்கா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? இவ்வளவுக்கும் மீறி பகவான் கிருபை வேண்டுமென்று வேறு சொல்லுகிறீர்கள். அது எப்படி சம்பாதிப்பது ஆகிய காரியங்களைச் சற்று விளக்கித் தாருங்கள். இதோ நானும் கூடவே புறப்படுகிறேன்.
பும£- சரி, சரி. உம்மைப் பார்த்தால் சரியான சுயமரியாதைக்காரராய்த் தெரிகிறதே! அவர்கள்தான் இப்படி எல்லாம் கேட்கின்றார்கள். அவர். களுக்குத் தான் இந்தக் குயுக்தி எல்லாம் தோன்றும்.
சும:- என்ன அய்யா இவ்வளவு சந்தேகப்பட்டுவிட்டீர்கள். தெரியாத தினால்தானே நான் தங்களைக் கேட்டேன்.தாங்கள் பெரியவர்கள் மோக்ஷத்
திற்குப் போகிறவர்கள் என்று கருதித்தானே தங்களையே குருவாய்க் கேட்கின்றேன். தாங்கள் இப்படிச் சொல்லலாமா?
பு.ம:- வேண்டாமய்யா உம்ம சவகாசமே நமக்கு வேண்டாம். நீர் சரியான சுயமரியாதைக்காரர் என்பது தெரிந்துவிட்டது. உம்ம சங்கார்த்தமே நமக்கு வேண்டாம். நான் உமக்கு குருவாகவும் இல்லை.நம்ம கூட நீர் வரவும் வேண்டாம்.போம் போம் இங்கே நில்லாதேயும்.
சு.ம:- சரி. உங்களுக்கு கோபம் வருவதானால் நான் பேசவில்லை போகிறேன். எனக்கு பிராரப்தகர்மம் உதவி செய்ய வில்லையோ? அல்லது பகவான் கிருபை இல்லையோ தெரியவில்லை. தங்களைப் போன்ற பெரி யாரை குருவாக அடைந்தும் பிரயோஜனமில்லை. ஆனாலும், ஒரே ஒரு சந்தேகம் அதை மாத்திரம் நிவர்த்தி செய்து விடுங்கள்.
பும:- என்ன சங்கதி?
௯ம:- இவ்வளவு தீர்மானத்துடனும் பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் போகின்றீர்களே ஒரு சமயம் தாங்கள் வழியில் செத்துப் போய் விட்டால் என்ன செய்வீர்கள்? அப்புறம் கயாவும், காசியும் எப்படி தங்க
ளுக்கு உதவும்?
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பும:- செத்துப் போய்விட்டால் நல்ல காரியமாச்சுது. உம்மைக் கேட்க வரவில்லை. போ வெளியே புறப்படும் போது சகுனத்தடை மாதிரி வாயில் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள்!
சும:- சரி. நான் போய் வருகிறேன். நீங்களும் உங்கள் புராணங் களும், அதற்கு நீங்கள் செய்யும் மரியாதைகளும் நன்றாயிருக்கின்றன. இனி உங்களைப் போன்ற புராண மரியாதைக்காரர்களே உலகத்தில் இருக்கட்டும்; நான் போகின்றேன்.
குடி அரசு - உரையாடல் - 07.09.1930
குடி அரசு - 1930 (2) 120
தீண்டாதாரும் கல்வியும்
காஷ்மீர் மகாராஜா தனது சமஸ்தானத்தில் உள்ள மக்களில் தீண்டா
தார் என்பதாக ஒரு பிரிவு இருக்கக் கூடாதென்றும் அவர்களுக்குக் குளம், கிணறு, பள்ளிக்கூடம், தெரு முதலியவைகளில் எவ்விதத் தடங்கலுமிருக் கக் கூடாதென்றும் ஒரு பொதுஉத்திரவு பிறப்பித்திருப்பதுடன் காஷ்மீர சமஸ்தானத்தில் தீண்டாதார் என்பவருக்கும் மற்ற வகுப்பாரைப் போலவே சமமான தகுந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டு மென்றும் தீர்மானித்திருப்பதுடன், அவர்கள் கல்வியில் பிற்போக்காய் இருப்பதை உத்தேசித்து எல்லோருக்கும் கல்வி ஏற்படும்படி செய்ய இது வரை கல்விக் காக உபகாரச் சம்பளம் முதலியவைகள் கொடுத்து வந்ததை இவ் வருஷம் இரட்டிப்பாக்கிக் கொடுத்து வருவதாகவும் எல்லாவிதத்திலும் இதர பிரஜை களுக்குச் சமமாகவே அவர்களையும் பாவிக்க வேண்டு மென்றும் அரசாங்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட சீர்திருத்தவாதிகள் ஒவ்வொரு வரும் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயமில்லை. என்றாலும் இந்த உத்திரவிலிருந்து நாம் அதிகமாக மகிழ்ச்சி அடைவது எதுபற்றியென்றால் தீண்டாதார் கல்வி அபிவிருத்திக்கு உபகாரத் தொகை யை தாராளமாகக் கொடுத்து உதவியதைப்பற்றியேயாகும். ஏனெனில் இப் போதைய நிலையில் நமது நாட்டுத் தீண்டாதார் எனப்படுபவருக்கு உத்தி யோகம் உரிமை முதலியவைகள் கொடுக்கப்படுவதற்கு அதன் எதிரிகளால் சொல்லப்படும் காரணம் பெரும்பாலும் இரண்டே யாகும். அதாவது ஒன்று அவர்களுக்குக் கல்வியில்லை என்பது. இரண்டு அவர்கள் சுத்தமாகயில்லை என்பது ஆகிய இவையாகும். இவற்றுள் கல்வி கற்கவோ அவர்களுக்குப் பணம் கிடையாது. சுத்தமாகவும், சுசியாகவுமிருக்கவோ குளம், கிணறு சுவாதீ
னம் கிடையாது. அவர்கள் அதிகமான பணம் சம்பாதிக்கவோ, அவர்களுக்கு சில இடங்களில் தெருவில் நடக்கும் உரிமையும், வீடுகளில், கடை களில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் உரிமையும் கிடையாது. மற்ற படி மூட்டை முடிச்சுகள் தூக்கிக் கலி வேலை செய்யவோ அவர்களுக்கு அப்படிப்பட்ட சாமான் எதையும் தொடவுரிமை கிடையாது. காடுகளிலும், வயல்களிலும் அதுவும் வயிற்றுக்கு அரைக் கஞ்சிக்கும் போதாத அளவுக்கு
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வேலை செய்ய மாத்திரம் வழியுண்டு. ஆகவே இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களை சுசியில்லை, படிப்பில்லை என்று சொல்லிப் பொது உரிமைகள் கொடுக்க மறுப்பதானது அவர்களுக்கு மனித உரிமையைக் கொடுக்க மறுப்பதானது அவர்களுக்கு மனித உரிமையைக் கொடுக்க அந்தரங்கத்தில் இஷ்டமில்லை என்பதைத் தவிர வேறல்லயென்பது அறிவாளிகளுக்கு நன்றாய் விளங்கும். ஆகவே இப்படிப்பட்ட நிலையில் காஷ்மீர அரசர் குளம் குட்டை முதலியவைகளை பொதுவாக்கினதோடு, படிப்புக்கு உதவித்தொகையும் கொடுத்தது தான் மிகவும் பாராட்டப்பட்ட தாகும். நாமும் சென்றவருஷம் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மகாநாட்டில் தீண்டாதார் என்பவர்கள் படிப்பு விஷயத் தில் அரசாங்கத்தார். சாப்பாடும், துணியும், புஸ்தகங்களும் வாங்கிக் கொடுத்து அவர்களைப் படிக்க வைக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் செய்திருக்கின்றோம். அதை தஞ்சாவூர் முதலிய இரண்டொரு சுயமரியாதை இயக்கத் தலைவர்களைக் கொண்ட ஜில்லா போர்டுகள் தங்களால் கூடிய வரை முயற்சி எடுத்து சிறிதள வுக்காவது அமுலுக்குக் கொண்டு வந்திருப் பதுடன் சுயமரியாதைக் கொள்கையில் பற்றுள்ள கல்வி மந்திரியும் அது விஷயத்தில் சற்று கவனம் செலுத்தி வந்திருக்கின்றார். எனவே காஷ்மீர ராஜா அவர்களும் தீண்டாதா
ருக்கு கல்வி இல்லாததற்கு அடிப்படையான காரணம் என்ன வென்பதை உணர்ந்து அதற்காகப் பணம் தாராளமாய் ஒதுக்கி வைத்திருப்பதானது மிக
மிகப் போற்றத் தகுந்த சுயமரியாதைக் கொள்கையாகும்.
நமது அரசாங்கமும் தீண்டாதார் கல்வி விஷயத்தில் ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்ல வேண்டுமானால் இனி அவர்களுடைய சம்பளத்தை மாத்திரம் குறைப்பதாலோ அல்லது அடியோடு. தள்ளி விடுவதாலோ ஒரு காரியமும் நடந்து விடாது. மற்றபடி ஜில்லா ஒன்றிற்கு இத்தனை லக்ஷ ரூபாய் திண்டாதார் கல்விக்கு என்று ஒதுக்கி வைத்து அதில் அவர்களுக்கு சாப்பாடு போட்டு படிப்புச் சொல்லி வைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் தான் அவர்கள் படிக்க முடியும். ஏனென்றால் தீண்டாதவர்கள் என்பவர்களின் பிள்ளைகள் அவர்களது வயிற்றிற்கும், அவர்கள் பெற்றோர்களது வயிற்றிற்
கும் சம்பாதித்துத் தீரவேண்டிய அவ்வளவு ஏழைகளாகவும், சம்பாதிக்க வழியில்லாத வர்களாகவும் இருக்கிறார்கள். ஆதலால் மேற்கண்டபடி பணம் ஒதுக்குவதுடன் அந்த இலாகா நிர்வாகத்தையும் கண்டிப்பாக பார்ப்பன உத்தியோகஸ்தரிடமும் பார்ப்பன உபாத்தியாயரிடமும் விடாமல் கூடுமான வரை திண்டாதார் என்கின்றவர்களில் இருந்தே தெரிந்தெடுத்த கனவான் களிடமே ஒப்புவிக்கப் பார்க்க வேண்டும்.
தவிரவும், இந்தப் பணத்தையும், நிர்வாகத்தையும் ஸ்தல ஸ்தாபனங் களிடம் ஒப்புவிப்பது என்பதும் இன்றைய நிலைமையில் அவ்வளவு சரியானதென்று நாம் ஒப்புக் கொள்ளக்கூடவில்லை. ஸ்தல ஸ்தாபனங்
குடி அரசு - 1930 (2) 122
களிலுள்ள தலைவர்கள் இதுவரை தங்கள் அதிகாரங்களை தீண்டாதார்கள் விஷயத்தில் எப்படி உபயோகித்தார்கள்; உபயோகிக்கின்றார்கள் என்று கவனித்துப் பார்த்தால் அதன் யோக்கியதைகளை ஒருவாறு அறிந்து கொள்
ளலாம். சில இடங்களில் ஜில்லா போர்டு தலைவர்களாவது இவ்விஷயங் களில் சற்று யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறார்களென் னலாம். ஆனால் 100-க்கு 90 தாலூகா போர்டு தலைவர்கள் தீண்டாதார்கள் விஷயத்
தில் மிகமிகக் கேவலமாகவே நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தைரிய மாகச் சொல்லுவோம். குறிப்பாய் கவனிப்போமானால் தீண்டப்படாதாருக் காக வெட்டும் கிணற்றுக் கிராண்டு பணங்களிலும் அவர்களுக்காகக் கட்டும் பள்ளிக்கூட கிராண்டு பணங்களிலும் கூட எத்தனையோ பேர்கள் நியாயத் தவறுதலாய் நடந்திருப்பதுடன் அவர்களது நாமினேஷன்களைப் பெரிதும் மறுத்தே வந்து இருக்கின்றார்கள். (பொது வாக நாடு சமூக சீர்திருத் தமடைய வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு சந்தேகமற்ற நாண யங்கள் ஏற்பட வேண்டுமானால் முதலில் தாலூகா போர்டுகளை எடுத்துவிட வேண் டியது அவசியமாகும். ஆதலால் அடுத்த லோக்கல்போர்டு சட்டத் திருத் தத்திலாவது இந்த விஷயத்தை எதிர்பார்க்கலாமென்றேயிருக்கின்றோம்?
இவ்விஷயத்தில் இவ்வளவு தூரம் நாம் எழுதுவதற்குத் தகுந்த ஆதாரங்கள் நம்மிடம் வந்து குவிந்து கொண்டிருப்பதேயாகும். அவை பெரிதும் என்னவெனில் கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் அப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்றும், தீண்டாத வகுப்பு உபாத்தியாயர்களைச் சரியாய் நடத்துவதில்லை யென்றும், நமக்குப் புகார். வராத நாளே கிடையாதென்று சொல்லலாம். அது மாத்திரமல்லாமல் பார்ப்பன கல்வி உத்தியோகஸ்தர்களும், பார்ப்பன உபாத்தியாயர்களும், தாலூகா போர்டிலுள்ள பார்ப்பன குமாஸ்தாக்களும் செய்யும் சூட்சிகளை அறிய சக்தியில்லாமலும் அவர்களின் தாட்சண்ணியங்களை By யோக்கி யதையில்லாமலும் அவர்களதுமாய்கையில் சிக்கி விடுவதும் மற்றும் தாலூகா போர்டு தலைவர்கள் பெரும்பாலும் கிராமவாசிகளாகவும் போதிய கல்வி அறிவில்லாதவர்களாகவும் ஜாதி ஆணவம் பிடித்திருப்பதுடன் உலக ஞானமில்லாதவர்களாகவும், வருணாசிரமக் கொள்கை மதக்காரர்களா கவுமி ருப்பதால் கண்டிப்பாய் அவர்களை இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவோ, யோக்கியமாய் நடைபெறவோ சம்மதிக்கமாட்டார்கள் என் கின்ற உறுதி நமக்கு உண்டு. ஆகையால் தான் அப்படிப்பட்டவர்களிடம் இந்த வேலையை ஒப்புவிப்பது என்பது தீண்டாதார் என்பவர்களுக்குச் சிறிதும் நன்மையைப் பயக்கும் படியான காரியமாகாது என்கின்றோம். மற்றபடி ஏதோ இரண்டொருவர்கள் தாலூகா போர்டு நிர்வாகங்களில் சற்று ஞான முடையவர்களாகவும் பொது நோக்கமுடையவர்களாகவும் இருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட அந்த இரண்டொருவரை உத்தேசித்து மற்ற எல்லோரையும் நம்பி அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்புவிப்பது ஆபத்தாய்
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
முடிந்து விடும். ஆதலால் தீண்டப்படாதார் என்பவர்கள் நிலைமையை உயர்த்துவதைப் பொறுத்த எல்லாக் காரியமும் சர்க்காரிடமேயிருக்க வேண்டுமென்பதும், அதன் பலனுக்கு அவர்களே பொறுப்பாளியாயிருக்க வேண்டுமென்பதும் நமது பலமான அபிப்பிராயமாகும். உதாரணமாக நம்மை ஒருவன் தாழ்ந்த ஜாதி என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் என்றால் அவனிடம் நமது நன்மையை ஒப்புவிக்க முடியுமா என்று கவனித்தால் விளங்கிவிடும். ஆதலால் எந்தக் காரணத்தினாலாவது சர்க்கா ருக்கு இவ் விஷயம் தாங்களே பொறுப்பேற்று நடத்துவது கஷ்டமாயிருந் தால் இப்போது மதுவிலக்குக்கு ஒரு பிரசாரக் கமிட்டி ஏற்படுத்தி அதற்காக கொஞ்சம் பணமும் ஒதுக்கி வைத்து அக்கமிட்டி வசம் அந்த வேலை யையும் பணத்தையும் ஒப்புவித்திருப்பது போல் தீண்டாமை விலக் குக்கும் ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதில் பெரிதும் அவ் வகுப்பார்களையே நியமித்து அதன் வசம் அப்பொறுப்புகளை ஒப்புவித்து சர்க்கார் மேற்பார்வையி லேயே வேலை செய்யச் செய்வது மிக்கப் பயனளிக்கும். இப்போதுள்ள மதுவிலக்குக் கமிட்டியை விட இத்தீண்டாமை விலக்குக்கு கமிட்டி ஏற்படுத் தினால் அது மிக்கபிரயோஜனகரமாகவும் புத்திசாலித் தனமாகவும் நாணய மானதுமாகவும் கூட இருக்குமென்று சொல்லுவோம். இதுவும் முடியாத காரியமாகுமானால் கிறிஸ்துவ பாதிரிமார்களிடத்திலாவது இப் பொறுப்பை ஒப்புவிப்பது ஸ்தல ஸ்தாபனத்தினிடம் ஒப்புவிப்பதை விட மோசமானதா காது. ஆகையால் அடுத்த சட்டசபைக் காலாவதிக்குள் அடுத்த மந்திரி களாட்சியில் இவ் விஷயம் அவசியம் கவனிக்கப் படவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 07.09.1930
குடி அரசு - 1930 @) 124
தீண்டாமையும்
யார்ப்பண உபாத்தியாயர்களும்
விருத்தாஜலம் தாலூகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப் பள்ளி
கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர். நமக்கு செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர். இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிட
மிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்மந்தமாய் கவனித் திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடைபெறுகிறது, அது சம்மந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விபரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளு
கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.09.1930
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கோவை முணிசிபல் நிர்வாகம்
கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் 1929 - 30ம் வருஷத்திய நிர்வாக ரிப்போர்ட் வரப்பெற்று அதை முற்றிலும் படித்துப் பார்த்தோம். சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் கல்வி, பொருளாதாரம், பொதுஜன சுகாதாரம் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கடைந்திருக்கிறது. வரி வருமானம்
ரூ. 2. 74, 707-லிருந்து ரூ. 2, 96, 171க்கு உயர்ந்திருக்கிறது. பொது நிதி இருப்பிலிருந்து சிருவாணி தண்ணீர் சப்ளை வேலைத் திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ.151500ம் போக வருஷ முடிவில் ரூ 1.64 லட்சம் இருப்ப தாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இம்முனிசிபாலிட்டியைப் பற்றி சர்க்கார். எழுதிய குறிப்பில் வெகுவாகப் புகழ்ந்து கோவை முனிசிபாலிட்டியின்
நிர்வாகம் இம்மாகாண மற்றெல்லா முனிசிபல் நிர்வாகங்களை விட தலை சிறந்து விளங்குவதாய் குறிப்பிட்டு விட்டு அதன் தலைவர் திரு. இரத்தின சபாபதி முதலியாரவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டி எழுதப்
பட்டிருக்கிறது.
தக்க பலனளிக்கும் முறையில் பொது ஜனசேவை செய்து வரும் கோவை முனிசிபல் தலைவரவர்களையும் அவரது சகாக்களின் கூட்டுறவை
யும் நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.09.1930
குடி அரசு - 1930 (2) 126
€கோரன சீர்திருத்த மகாநாடு
சகோதரிகளே! சகோதரர்களே!
இன்று இங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தையும், வாலிபர்களுடைய உற்சாகத்தையும் பார்க்க எனக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் உங்கள் பாஷையாகிய மலையாளத்தில் பேச எனக்குத் தெரியாம லிருப்பதற்கு வருந்துகின்றேன். எனினும் ஏதோ எனக்குத் தெரிந்த சாதாரண
தமிழ் பாஷையில் என்னுடைய அபிப்பிராயத்தை வெளியிடுகிறேன். ஒருவாறாக உங்களுக்கு அது புரியக் கூடும் என்று கருதுகின்றேன்.
சகோதரர்களே! மகாநாட்டைத் திறந்து வைத்த பொழுது நமது நண்பர் திருவாளர் ராமவர்மாத்தம்பான் அவர்கள் செய்த பிரசங்கத்தில் அநேக விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவைகள் நான் உங்களுக் குச் சொல்ல வேண்டுமென்று கருதி இருந்தவைகளுக்கும் மேலாகவே சொல்லப் பட்டிருப்பவைகளாகும். ஆகையால் இப்போது நானும் அதைத் தான்
திருப்பிச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றேன்.
இன்று இங்கு கூடிய இந்த மகாநாட்டிற்குக் கேரள சீர்திருத்தச் சங்க மகாநாடு என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருவாளர். தம்பான் அவர்கள் சொன்னபடிக்கு நமது லக்ஷியத்தின்படி பார்ப்போமானால் சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய காரியம் ஒன்றுமே இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. ஒரு பெரிய தலைகீழான புரட்சியே தான் நாம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஆதலால் இச்சங்க மகா நாட்டில் இந்நாட்டுக்கு ஏதாவது பயன் ஏற்பட வேண்டுமானால் இதைக் கேரள புரட்சிச் சங்க மகாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நமது முன்னேற்றத்திற்கும், மனிதத் தன்மைக்கும், இயற்கைக்கும் விரோத மாய் இருக்கும் மதம் ஜாதி முதலிய காரியங்களில் சீர்திருத்தம் செய்யத்தக்க பாகமோமீத்து வைத்துக் கொள்ளத் தக்கபாகமோ ஒரு சிறிதுமே கிடை யாது. ஆதலால் தான் அவைகளை அடியோடு அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். அதோடு இல்லாமல் அவைகளுக்கு அதிகமாக ஆதர வளித்து வரும்படியான கடவுள் உணர்ச்சியென்பதையும் நாம் அழித்துத் துலைக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஆகவே இந்த நாட்டு
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மக்களால் மாத்திரமல்லாமல் பொதுவாக உலக மக்களாலேயே மிக்கப் பிரதானமாய்க் கருதப்படும்படியானவைகளான மேற்கண்ட ஜாதி, மதம், கடவுள் உணர்ச்சி ஆகியவைகளையெல்லாம் அடியோடு அழிப்பது என்பதை யாரும் சீர்திருத்த வேலை என்று சொல்ல முடியாது. தைரியமாய்ச் சொல்வதானால் நாம் அவற்றை ஒரு அழிவு வேலை என்பதாகவே கருதி நம்மையும் அழிவு வேலைக்காரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். ஆகையால் தான் நமது சுயமரியாதை இயக்கம் இதையே தனக்கு தலையான கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. இந்தக் காரியங்களைச் செய்யப் பயந்தவர்களால் உண்மையான ஒரு முற்போக்குக் காரியமும் செய்து விட
முடியாது.
இந்த நாட்டில் சீர்திருத்த வேலைகள் வெகுகாலமாக செய்யப்பட்டு வந்திருக்கின்றன. செய்தவர்களையெல்லாம் சாதாரண மனிதர்களாய் கூடக் கருதாமல் பெரிய “தெய்வத்” தன்மை பொருந்தினவர்களாகவும், விஷேச “அவதார” புருஷர்களாகவும் “மகாத்மா”க்களாகவும் கூடக் கருதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் அவர்களால் ஆன வேலை என்னவென்று பார்ப்போமானால் குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த பலன் போலதான் ஏற்பட்டு வந்திருக்கின்றனவே அல்லாமல் வேறில்லை. இப்படி இருந்தும் இனியும் அதே துறையில் அநேகர் பாடுபடுகின்றார்கள் என்றா லும் அவர்களாலும் இன்று பலனுள்ள ஒரு காரியமும் நடத்த முடியவில்லை. நடைபெறுமென்ற நம்பிக்கையுமில்லை. காரணம் என்னவென்றால் அவர் கள்: மக்களுக்கு எந்தெந்த பலன் ஏற்படவேண்டும் என்கிறார்களோ அந்தத் தப் பலன்களுக்கு எதிராயிருக்கும் அஸ்திவாரமான தடைகளை நீக்கும் விஷயத்தில் அவர்கள் சிறிதும் சம்மதிப்பதில்லை.அதன் கிட்டப் போவ தற்கே பயப்படுகின்றார்கள். மற்றும் பலர் அவைகளைக் காப்பாற்றிக் கொண்டே சீர்திருத்தம் அடைய வேண்டும் என்கின்றார்கள்.ஆதலால் தான் அப்படிப்பட்டவர்களால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கானலைஅதாவது காட்டை விவசாயம் செய்யும் படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும், முட்களையும், செடி கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டி பள்ளத்தில் போட்டு நிரவவேண்டும், கல்லுக ளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும். இந்த காரியங்க ளெல்லாம் செய்த பிறகே அந்த பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டு பயிர்களைச் செய்து பயன்பெற வேண்டும்.அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும் ஆற்றலும் விதைப் பண்டமும் வீணாய் போவதுடன் பயனற்ற கொடியும் செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும் விஷ
ஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத்தகுந்த புதர் களாகத்தான் ஏற்பட்டு விடும். ஆகையால் நாம் இப்போது புதர்களிலுள்ள கொடி, செடி, முள், புல் பூண்டு ஆகியவைகளை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும்
குடி அரசு - 1930 (2) 128
வேலையில் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இந்த வேலை
செய்யும் முன் பயிர்செய்யும் வேலையில் நாம் ஒருக்காலமும் புகக்கூடாது.. மேடு பள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும்வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில் நாம் பாய்ச்சும் தண்ணீ ரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்ந்து விடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாய்ச்சினாலும் அங்கு கொஞ்சம் கூடத் தங்காது.ஆகவே தைரியமான அழிவு வேலை அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக்கொள்ள வேண்டும். அதற்கு பயப்படக் கூடாது.
இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்துவிடக் கூடாது.
புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்கு பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடு தான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.
ஆகவே, சகோதரர்களே இப்போது நமது நாட்டில் ஆக்க வேலை செய்வது என்பது சாத்தியப்படாதது என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்
துக் கொள்ளுகின்றேன்.
பாழும் மதத்தின் பேரால் உலகமே பல பிரிவுகளாக பிரிந்து கிடக் கின்றது.
குறிப்பாக நமது நாடு மதத்தின் பேரால் பிரிந்தது மாத்திரமல்லாமல் ஜாதிகளின் பேரால் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றன.
இவை மாத்திரமல்லாமல் பணக்காரன் ஏழை படித்தவன் பாமரன் என்கின்ற பிரிவுகளும் நிரந்தரமாய் இருக்கும்படி ஏற்பாடுகள் ஆகிக் கொண்டும் வருகின்றன. இந்தப்படி நிரந்தரமாயிருக்கும் படியாக ஏற்பாடு செய்து கொண்ட மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலாகிய பிரிவுகளை அழிக்க
ஆரம்பித்தால் இதை ஆதரவாய்க் கொண்டு மற்றொரு கெடுதி நமது நாட்டில் நிரந்தரமாய் இருக்கும் படியாக அதாவது பணக்காரன் ஏழை என்கின்ற பிரிவு
நிரந்தரமாய் இருக்கும் படியாக ஒரு புது முயற்சி நமது நாட்டில் இப்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகின்றது. முதலாளி, தொழிலாளித் தன்மையும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடாகி வருகின்றது. இவைகள் எல்லாம் அரசியல் கிளர்ச்சியாலும் சீர்திருத்த முயற்சியாலுமே தான் செய்யப்படுகின்றது. அதாவது இவ்வேற்பாடுகளைத் தான் இன்றைய முன்னேற்றமென்றும், சீர்திருத்தமென்றும், சுதந்திரமென்றும் சொல்லப்பட்டு வருகின்றன. நமது பாமர ஜனங்கள் இதன் இரகசியத்தைத் தெரியாமல் அதில் விழுந்து விளக்கில் வீட்டில் பூச்சிகள் விழுவது போல் விழுந்து மடிந்து வருகின்றார்கள்.
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இதற்காகவே தான் கடவுளும், மதமும், ஜாதியும், அரசியலும் ஏற்படுத்தப் பட்டதென்றும், அந்தப்படியே பயன்படுத்தப்பட்டு வருகின்றதென்றும் நான் உறுதியாய்க் கூறுகிறேன். இவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பது தான் நாம் மனித சமூகத்திற்குச் செய்ய வேண்டிய உண்மையான தொண்டாகும். இதை விட்டுவிட்டுச் செய்யும் படியான வேறு எந்தத் தொண்டும் மனித சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகும்.
ஆகவே நாட்டிற்கு நன்மை செய்வதாய்க் கூறிக் கொண்டு மக்களை மீளாத அடிமையிலும், கொடுமையிலும் ஆழ்த்தப்போகும் பாதகமான வேலைகளை எல்லாம் கூட நாம் அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின் றோம். நாட்டுச் செல்வங்களை நாட்டிலுள்ள மக்களில் சிலர் தங்கள் தேவை களுக்கு மேலாகவும் தகுதிக்கு மேலாகவும் சேர்த்து வைத்துக் கொண்டு அவைகளையெல்லாம் அக்கிரமமான வழியில் செலவு செய்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற
மக்களேதான் இன்று “இந்த நாடு தரித்திர நிலையில் இருக்கின்றது விடுதலை பெற வேண்டும்” என்று பாசாங்கு செய்கின்றார்கள். கஷ்டப்படும் மக்களும், ஏழை மக்களும் தங்கள் மீது திரும்பாமல் இருக்கட்டும் என்று அன்னிய நாட்டுக்காரர்களை நமக்குக் காட்டி நம்மை அந்தப் பக்கம் திருப்பி விடு கின்றார்கள்.
சாதாரணமாக நாம் குழந்தைகளிடம் இருந்து ஏதாவது சாமான்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் எப்படி அதற்கு வேறு ஒரு வேடிக்கையைப் பார்க்கச் சொல்லி ஆகாயத்தைப் பார், அந்தப் பக்கம் பார். என்பதாக பிராக்குக் காட்டி அது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கும் போது
நாம் அந்த சாமானை எடுத்துக் கொள்ளுகின்றோமோ அது போலவே பாமர மக்களை சுயராஜ்யம் பார் பூரண சுயேச்சையைப் பார் மோட்சம் பார். கடவுளை பார் என்று பிராக்கு காட்டி அவர்கள் வேலையின் பயனையும் அவர்களது செல்வத்தின் பங்குகளையும் சிலரே கொள்ளை அடித்துக் கொள்ளுகின்றார்கள். இந்தக் கூட்டத்தாரின் தந்திரமே தான் இந்த நாட்டில்
தரித்திரம் என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும் அறிவும் ஆராய்ச்சி யும் அற்றதனம் என்பதற்கும் ஆதாரமாய் இருக்கின்றன.
இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்
கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு
தரித்திரமான நாடு என்று அழுகின்றார்கள். இந்த நாட்டில் உள்ள சந்நியா சிகள். துறவிகள் மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும், வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா? அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்த பொருளாதாரவாதியாவது கவனிக்
குடி அரசு - 1930 (2) 120
கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும் வருஷத்தில் லட்சக் கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த
நாடு ஏழை நாடு தரித்திர நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன். ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குளவிக் கல்லுக ளுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை லட்ச
ரூ. வரும்படியும் இருக்கின்றன வென்று பாருங்கள். இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குளவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை ஒட்டகை குதிரை பல்லக்கு தேர், ரதம் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு பல கலியாணங்களோடு வாழ் கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா? இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகின்றானா? மற்றும் பிரபுக்கள் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகள் உடையவர்களும் எத்தனை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இன்கம் டாக்ஸ் வரிகொடுக்கக் கூடிய லாபம் அனுபவித்துக் கொண்டு லட்ச லட்சமாய் கோடி கோடியாய் பொருள் சேர்த்து தாசி வேசி ராஜபோகம் அனு பவித்துக் கொண்டு நிரந்தர ராஜாவாகவும் நிரந்தர ஜமினாகவும் நிரந்தர பிரபுவாகவும்
நிரந்தர பாளையதாரராகவும் இருக்க முயற்சி மேல் முயற்சி செய்து கொண்டு இருக்கும் மக்கள் பல நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக இருந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? மற்றும் நாள் ஒன்றுக்கு 100, 200, 500, 1000 ரூபாய்கள் வீதம் சம்பாதிக்கும் வக்கீல்களும் டாக்டர்களும் ஏராளமாய் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் ஐம்பதாயிரம் லட்சம் ஐந்து லட்சம் பெறும்படியான பங்களாக்களில் வாழ்ந்து கொண்டு நிலத்தில் கால் படாமல் நகத்தில் அழுக்குப் படாமல் சரீரத்தில் வேர்வை இல்லாமல் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பல ஆயிரக்கணக்காக, லட்சக்கணக்காக வாழும் இந்த நாட்டை தரித்திரமுள்ள நாடு என்று யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்தக் கூட்டத்தினர்கள் தானே இன்றையத் தினம் இந்த
நாடு தரித்திர நாடு. ஏழை நாடு, அடிமை நாடு, சுதந்திர நாடு என்றும் ஆக வேண்டும் சுயராஜ்ஜிய நாடு ஆக வேண்டும் என்றும் பிரமாதமாய்க் கூப்பாடு போடுகின்றார்கள். ஒவ்வொரு காலத்திலும் வரு கின்ற சீர்திருத்தங்களில் எல்லாம் இந்த மாதிரி ஜனங்கள் தானே நமது பிரதிநிதிகளாய் இருந்து நமக்காக என்று ஆட்சி புரிந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தானே இன்னமும் அதிகாரமும் பெருமையும் கீர்த்தியும் பணமும் வரவும் ஏற்படவும் நாம் மதத்தையும் கடவுளையும் ஜாதி யையும் காப்பாற்ற முயற்சிப்பதோடு சுயராஜ்ஜியமும் பெற வேண்டுமென்று பெரிய பாடுகளைப்படுகின்றோம்.
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நமது நிலைக்கு காரணமென்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றது? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்கு காரணமாயிருக்கின்றது. மதத்தையாவது ஜாதியையாவது கடவுளையாவது உண்மையென்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயர்ச்சிக்கும் எவனாலும் மக்களுக்கு சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி.
ஆனால் இவைகளை அழிக்க மக்கள் ஒருக்காலமும் சம்மதிக்க மாட் டார்கள். இவைகளைக் காப்பற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள். ஆதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வந்து குழந்தைப் பருவ முதலே
நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால் இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை. இவைகளில் எங்கு கைவைத்தாலும் நமது எதிரிகள்:
நம் மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மை கொல்லப்
பார்த்து விடுவார்கள். நமது மக்களும் பெரும்பாலும் மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும் நமக்கு எதிராகவும் நின்று நமது முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள். ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாஸ்திகத்திற்கு பயப்படாமல் “ஆமாம் நான் நாஸ்திகன் தான்” என்று சொல்லிக் கொண்டு அந்த நாஸ்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போது தான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால் நாம் இனிச் செய்ய வேண்டியது
முக்கியமாய், நாஸ்திகப் பிரசாரமேயாகும். அதாவது “எனக்கு இந்த மதம் வேண்டாம், இந்த சாதி வேண்டாம், இந்த சாஸ்திரம் வேண்டாம், இந்தக் கடவுள் வேண்டாம் இவைகள் இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும். எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மையுமேயாகும்” என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும். அதுவும் இந்த நாட்டில் இந்த உலகத்திலேயே வேண்டுமே ஒழிய மேல் உலக சங்கதியை இதில் கலக்க வேண்டாம் என்று தைரியமான பிரசாரம் செய்ய வேண்டும். இன்றைய வாலிபர்களுக்கு இது தான் முக்கிய வேலை என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். இதற்கெல்லாம் முதலில் மனிதனை மோட்சத்தை சுவர்க்கத்தை மறக்கச் சொல்ல வேண்டும்.
மோட்சமும் சுவர்க்கமும் இன்றைய கள்ளு சாராயக் கடைகளை விட
தாசி வேசிகள் வீடுகளைவிட மோசமானது என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்.மோட்ச நரகம் என்பது எப்படி திருடர்கள் பிரயாணி களை வழிப்பறி செய்வதற்கு தனி வழியில் ஆள் அடையாளம் தெரியாமல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து வழி மறித்து மண்டையை உடைக்க தடிக் கம்பையும் ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பொருள் பறித்துச்
குடி அரசு - 1930 (2) 132
செல்லுகின்றார்களோ அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி மறித்துப் பொருள் பரித்துப் போகச் செய்து கொண்ட ஆயுதங்களேயாகும். ஆகையால் அதை மனிதன் முதலில் மறந் தாகவேண்டும். இந்த உலக வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் மக்களுக்கு உதவி செய்வதையும் தனது அளவுக்கும் தேவைக்கும் மேல் பட்டதை அடைய ஆசைப்படாமலுமிருக்க வேண்டியதையே மோட்சம் என்று லட்சியம் கருத வேண்டும். இந்தப்படி அளவுக்கும் தேவைக்கும்மேல் மக்களை அடையச் செய்யாமல் பார்த்துக் கொள்ளு வதையே மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் வேலையென்று நாம் கருத வேண்டும். மனிதன் இந்த நாட்டில் எப்படி தனது தேவைக்கும், அளவுக்கும், தகுதிக்கும் மேல் அடைய ஆசைப்படுகின்றானோ அதற்கு ஆதாரவாய் இருப்பதற்காகவே
மூடர்களுக்கு மேல் உலகத்தில் அவரது தகுதிக்கும், அளவுக்கும், தேவைக்கு மேலாக அனுபவிக்க ஆசை காட்டி இங்கு தட்டிப் பிடுங்கிக் கொள்ளுகி
றார்கள்.மூடர்களும், பேராசைக்காரர்களும் தான் மோக்ஷத்தை விரும்பு வதை: நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்திற்கும், சுவர்க்கத்திற் கும் பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துக்களைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக்கூடுமோ அதையே தான் மோட்சத்தில் சிருஷ்டித்து இருக்கிறார்கள்.
அதாவது இங்குள்ள மனிதனுக்குப் பொருள் வேண்டும், பெண் வேண்டும், தேவையானதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் வேண்டும், நல்ல வாலிபப் பருவம் வேண்டும், சதா இடைவிடாமல் போக போக்கியம் வேண்
டும், சாகாமல் இருக்க வேண்டும் ஆகிய இந்த விஷயங்கள் மனித னுக்கு சாகும் வரையிலும் செத்த பிறகும் அனுபவிக்கக் கூடியதாய் ஆசைப்படக்
கூடியது என்பது யாரும் அறிந்ததாகும்.
ஆகவே இந்தக் காரியங்களையே மேல் உலகத்தில் இருப்பதாகவும் அதை அடையக் கூடும் என்றும் ஆசையுண்டாகும்படி அதாவது மேல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் பொன்னும் ரத்தனங்களும் இறைந்து கிடக்கு மென்றும் உலகமே பொன்னுலகமென்றும் அங்கு அரம்பை ஊர்வசி முதலாகிய தேவ கன்னிகைகள் என்பவர் என்றைக்கும் வாலிபமாய் நம் பக்கத்தில் இருந்து கொண்டு நமக்கு சதா போகம் கொடுத்துக் கொண்டிருப் பார்களென்றும், காமதேனு கற்பக விருட்சங்கள் நமக்கு எது தேவையோ அது உடனே கொண்டு வந்து கொடுக்குமென்றும், நரை, திரை மூப்பில்லை யென்றும், நாம் சாகாமல் சிரம் சீவியாய் இருப்போமென்றும் சொல்லி ஏற்பாடு செய்து விட்டதால் அவைகளை மனிதன் நித்தியமாய் நம்பி இந்த உலகத்தையும், இங்குள்ள போக போக்கியங்களையும் அநித்தியமாய் எண்ணி கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களையெல்லாம் இந்த மோக்ஷத்
திற்கு என்றே செலவு செய்வதுடன் நில்லாது இதற்காக என்று பலவிதமான அக்கிரமமான வழிகளிலும் மற்ற மக்களை வஞ்சித்தும், பட்டினி போட்டும்
132 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பொருள் பறித்தும் கூட இதற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. உதாரணமாக ஏழை மக்கள் கஞ்சிக்கு அலையும் போது குடம் குடமாய் பால் குடங்களைத் தினமும் கல்லின் தலையில் கொட்டி அவற்றை நாற வைப்பதின் கருத்து என்ன என்று பாருங்கள். குடியிருக்க நிழல் இல்லாமல் மக்கள் திரியும்போது மலைகளையும் பாறைகளையும் உடைத்து கோட்டை கள் போல் சந்திரகாந்த மண்டபங்கள் போல் மக்கள் கோவில்கள் கட்டுவ தின் கருத்து என்னவென்று பாருங்கள். எவ்வித தொழிலும் செய்வதற்கு மூலதனம் இல்லாமலும் தொழிலில்லாமலும் மக்கள் வயிறு வளர்க்கக் கப்பலேறி வேறு. நாட்டிற்கு கூலிகளாய் போய் சொத்துப் பொத்தென்று மாண்டு மடிந்து கொண்டிருக்கும் போது பொம்மைகளை வைத்து உற்சவம் செய்வதும் அவற்றிற்கு பத்து லக்ஷம், ஒருகோடி, பத்துக் கோடிக் கணக்காக நகைகளும், பாத்திரங்களும், வாகனங்களும், துணிகளும் சேர்த்து வைப் பதின் கருத்தென்னவென்று பாருங்கள். நாளுக்கு நாள் வாழ்வு கஷ்டத்திற்கு வந்து ஏழைகள் மலிந்து வரும்போது லக்ஷம், ஐம்பதாயிரம், மூன்று லக்ஷம் ரூபாய்கள் செலவு செய்து கும்பாபிஷேகங்கள் செய்வதின் கருத்து என்ன வென்று யோசித்துப் பாருங்கள். பூமிகளை உழுது கஷ்டப்பட்டு பயிர். செய்யும் குடியானவர்கள் அரைவயிற்றுக்குக்கூட போதும்படியான ஆகார
மில்லாமல் கஷ்டப்படும் போது குழவிக்கல்லுகளுக்கும், செம்பு, பித்தளை பொம்மைகளுக்கும் தினம் பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிகள் போட்டுப் பொங்கி நைவேத்தியம் செய்து பாடுபடாத சோம்பேறிகளுக்கு குடும்பத்துடன் போட்டுக் கொண்டிருக்கும் கருத்து என்ன என்று எண்ணிப்பாருங்கள். மக்களில் நூற்றுக்கு 10 பேர்களுக்குக் கூட அதாவது சாராசரி படிப்பு எழுத்து வாசனைகூட இல்லா மல் இருக்கும்போது வேத பாடசாலை, தேவார பாடசாலை முதலியவை களும் கல்லுகள், பொம்மைகள் பின்னால் நின்று கொண்டு ஆயிரத்திற்கு ஒருவருக்குக் கூட புரியாத வேத பாராயணம் முதலியவைகள் செய்யப் படுவதற்கும் லக்ஷக்கணக்காய் செலவு செய்யப்படுவதின் நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். இப்படியாக நமது நாட்டில் இது போலவே எவ்வளவு காரியங்கள் நடைபெறுகின்றது என்பதை நோக்கினால் மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுத்தியாவது, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலாவது சிறிதும் லக்ஷியமில்லாமல் நாம் மோக்ஷத்திற்குப் போக வேண்டும். நாம் பிரபுவாய் இருக்க வேண்டும். லக்ஷுமி புத்திரராய் ராஜாவாய் நிரந்தர செல்வவானாய் சிரம்சீவியாய் இருக்க வேண்டும் என் கின்ற பேராசையல்லாமல் வேறு தத்துவம் அதில் என்ன இருக்கிறது என் பதை யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி மோக்ஷம் கற்பிக்கப்பட்டு அதை அடைவதே மனிதனின் முக்கிய லக்ஷியம் என்று போதிக்கப்பட்டிருக் கின்ற பேராசை ஜனங்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் இந்த உணர்ச்சியை அழிக்காமல் என்ன காரியம் நம்மால் செய்ய முடியும் என் பதை யோசித்துப் பாருங்கள். ஆதலால் தான் முதலில் மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்பட வேண் டியது அவசியம் என்று கருதுகின்றேன்.
குடி அரசு - 1930 (2) 134
சகோதரர்களே! இந்த மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியதைப் போலவே நரக உணர்ச்சியும் அழிக்கப்பட வேண்டும். மோக்ஷ உணர்ச்சி
எப்படிப் பேராசையின் பிரதிபிம்பமோ அது போலவே நரக உணர்ச்சியும், அடிமைத்தனத்தினுடையவும், பயங்காளித்தனத்தினுடையவும் பிரதி
பிம்பமாகும். நரகத்திற்கு பயப்படுவதாலேயே அநீதிகளுக்கு மனிதன் ஆளாகின்றான். தைரியமில்லாத கோழையாயிருக்கின்றான் இவைகளை யெல்லாம் விட மனிதன் சிறிதாவது முற்போக்கடைய வேண்டுமானால் சிறிதாவது இயற்கையின் இன்பத்தை நுகர வேண்டுமானால் யெல்லாவற்றை யும்விட மனிதனுக்கு விதி - கர்ம பலன் - என்கின்றதான உணர்ச்சிகள் கண்டிப்பாய் ஒழிய வேண்டும். விதியும் கர்மபலனும் என்கின்றவைகளான உணர்ச்சி இந்திய நாட்டிற்கு ஏற்பட்டிருக்கவில்லையானால் இன்றைய தினம் இந்தியா அநேக விஷயங்களில் ருஷியர்களுக்கு ஏன் இந்த உலகத் தில் உள்ள மற்ற எந்த நாட்டு மக்களின் நிலைமைக்கு மேலாக இருந்து அநேகமாக உலக மக்களுக்கே சமத்துவத்தையும் சம இன்பத்தையும் இயற்கை இன்ப நுகர்ச்சியையும் கொடுத்து சர்வ சுதந்திரத்துடன் வாழச் செய்திருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவேன். ஆகையால் இந்த கர்ம பலன் உணர்ச்சி மனிதத் தன்மைக்கு மிகவும் கேடான எதிரி என்பதை நீங்கள் நன்றாய் ஞாபகத்தில் வைக்க வேண்டும். நான் மேலே காட்டிய இந்த காரணங்கள் தான் இந்த உலகத்தில் நமது நாட்டை மாத்திரம் இந்த இழிவான நிலையிலும், மீளா அடிமைத்தனத்திலும் வைத்திருக்கின்றன. இவைகள் ஒழிந்தால் தானாகவே இந்தியா சுயமரியாதை பெற்று விடும்! சுதந்திரம் பெற்று விடும்! மனிதத் தன்மை அடைந்துவிடும். ஆகையால் சகோதரர் களே நீங்கள் இந்திய நாட்டின் முற்போக்குக்கும் விடுதலைக்கும் மனிதத் தன்மைக்கும் பாடுபட வேண்டுமானால் மேற்கண்ட காரியங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.
இதற்கு மாறுபாடான அபிப்பிராயமுள்ளவர்கள் சிலர் - ஏன் பலர்: இருக்கலாம். இன்றைய உலகம் பெரிதும் அப்படிப்பட்டவர்களையே அதிகமாகக் கொண்டிருக்கின்றது. ஆதலால் இந்த எனது அபிப்பிராயம் அவர்களுக்கு மிக்க கஷ்டமானதாகத் தோன்றலாம். அவர்களால் நமக்குப் பல வித கஷ்டங்களும், தொல்லைகளும், தடைகளும், ஆபத்துகளும் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நாம் அவைகளைத் தாராளமாய் எதிர்பார்த்து அவைகளைப் பற்றி ஆச்சரியப்படாமல் பயப்படாமல் சமாளித்து நிற்க முனைந்து கொண்டு தான் இந்தத் தொண்டு செய்ய வேண்டும். சுயமரியாதை
இயக்கத் தொண்டு என்பது மற்றத் தொண்டுகளைப் போல் அதாவது ஏதாவது, புராணங்களைப் படித்து விட்டு பக்தி ரசக் கீர்த்தனை பாடி விட்டு அல்லது மேடைகளில் நின்று “இந்த இராக்ஷச அரசாங்கத்தை அழிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு மக்களிடத்தில் இருந்து பண்டிதன் என்றோ, பக்திவான் என்றோ, தேசீய வீரன் என்றோ சுலபத்தில் பெருமை பெற்றுவிடக் கூடிய
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
காரியமல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள் ளுங்கள்.
போகிற இடத்தில் எல்லாம் கல்லடி படவும், வசவு கேட்கவும் கலகக் காரர்களாலும் நமது எதிரிகளின் கூலிகளாலும் தொல்லைப்படத் தயாரா யிருக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே இவ்வளவு நேரம் எனக்கு சரி என்று பட்டதை நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்று நினைத்ததை எனது நாடு என்று சொல்லப்படுவதை மற்ற நாடுகள் எதற்கும் இளைத்ததல்ல என்னும் படியான நிலைமைக்குக் கொண்டு வர வேண்டியதற்கு ஏற்ற சாதனம் என்று கருதியதை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்கள் அபிப்பிராயங்களை
யும் என்னிலும் உங்களிலும் மாறுபட்டவர்களது அபிப்பிராயங்களையும் பொறுமையாய் கேட்டு எல்லாவற்றையும் நடுநிலையில் இருந்து யோசித்து
உங்கள் புத்திக்கு எட்டிய முடிவுப்படி நடக்க முயலுங்கள். குற்றமிருப் பினும் அனுபவத்தில் சீக்கிரம் திருத்த மாகிவிடும்.
குறிப்புஃதிருவாங்கூர் ராஜ்யுத்தில் சேர்த்தலையில் 7-9-1930 இல் நடைபெற்ற கேரளசிீர்திருத்த மாநாட்டுத் தலைமையுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 14.09.4930
குடி அரசு - 1930 (2) 136
ராசி முறிவு
தற்காலம் இந்திய நாட்டில் நடைபெறும் அரசியல் கிளர்ச்சி சம்மந்தமான சட்டமறுப்பு சத்தியாக்கிரகம் முதலியவைகள் விஷயமாய் சர்க்காருக்கும், திரு. காந்தியாருக்கும் ராஜி செய்வதாக சில கனவான்கள் தோன்றி ஒரு மாத காலமாக மக்களின் கவனத்தை அதில் செலுத்தச் செய்து வந்தார்கள். ராஜி விஷயம் வெற்றி பெற்று விட்டால் அதன் பெருமை எங்கு தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு இல்லாமல் போய் விடுமோ என்று கருதி “ராஜிக்கு அஸ்தீவாரமானவர் மகாகனம் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி யவர்களே யாவார்கள்” என்று பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரம் செய்தன. அது மாத்திரமல்லாமல் சென்னையிலிருந்து திரு. எ. ரங்கசாமி ஐயங்கார் தனக்கும் அதில் பங்கிருக்கட்டும் என்று போய் உள்ளே கலந்து அநேக அசோசியேடட் பிரஸ் செய்தியும் பிரீபிரஸ் செய்தியும் “நமது நிருபர்” செய்தியும் கலம் கலமாய் வெளியிட்டு பிரபலப்படுத்தினார். கடைசியில் நடந்த காரியம் ரூ. 1க்கு 16 அணாவாக இருந்தது ரூ. 1க்கு 192 பையாக ஆனதைத் தவிர வேறில்லை.
ஏனெனில் உண்மையில் ஏதாவது விவகாரம் இருந்தால் பைசல் செய்ய யாருக்காவது வேலையிருக்கக்கூடும். அதுவோ, தற்கால கிளர்ச்சி யில் ஒன்றும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. இரண்டா வதாக பஞ்சாயத்தில் பிரவேசித்தவர்களும் சத்தியாக்கிரகத்திலும், சட்ட மறுப்பிலும் வெறுப்புக் கொண்டவர்கள். அதாவது அவைகள் அவசிய மற்றவை என்று கருதினவர்கள், நமது மாகாணத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள் தேசீயவாதிகள் என்பவர்கள் எப்படி இந்த சட்ட மறுப்பும் சத்தியாக்கிரகமும் சரியானதல்ல என்று சொல்லி விட்டு அதை விட்டு விலகிக் கொண்டார்களோ அது போலவும் மற்றும் மிதவாதிகளும், ஜஸ்டிஸ் காரர்களும், சுதந்திர தேசீய வாதிகளும் சட்டமறுப்பும் சத்தியாக்கிரகமும் நாட்டிற்கும், மக்களுக்கும் கேடு சூழ்வதென்றும், உடனே அடக்கப்பட வேண்டியதென்றும் சர்க்காருக்கு யோசனை சொல்லி, அதற்காக தங்கள் உதவியையும் சர்க்கார் தேடுவதாயிருந்தால் தங்களுக்கு இன்னின்னது செய்ய வேண்டும் என்றும் சர்க்காருடன் வியாபாரம் பேசினார்களோ அது போன்றதான மற்ற மாகாணங்களிலுள்ள மக்களில் இந்த ராஜிக்குப் புலப்பட்ட சமாதானப்
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பெரியார்கள் என்பவர்களு மாவார்கள். அவர்கள் ராஜிக்குப் புறப்பட்ட காரணம் எல்லாம் சத்தியாக்கிரகமும் சட்டமறுப்பும் தேசத்திற்கு தொல்லை விளைவிக்கின்றது என்று கருதிதான் புறப்பட்டார் களே ஒழிய சுயேச்சை என்பதை வாங்கப் புறப்பட்டவர்கள் அல்ல. ஆதலால் அவற்றை நிறுத்த திரு. காந்தியிடமும் திரு. வைசிராயிடமும் தூது போனார்கள். திரு. வைசிராய் அவர்கள் “அரசியல் சுதந்திர விஷயத்தில் நான் சொல்ல வேண்டியவைகள். எல்லாம் 3,4 மாதங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டதைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டிய தில்லை” என்று சொல்லிவிட்டார். திரு. காந்தியவர்களோ “என்னுடைய கருத்தெல்லாம் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அனுப் பின இறுதிக்கடிதத்தின் மூலம் 11 நிபந்தனைகள் போட்டு எழுதிக் கொடுத்து விட்டேன். வேண்டுமானால் தற்கால சாந்தியாக 11ல் பகுதி குறைத்துக் கொண்டு ஐந்தரை நிபந்தனைகளுக்கு சர்க்கார் கட்டுப் பட்டால் யுத்தத்தை நிறுத்தி விடுகிறேன்”
என்று சொல்லி விட்டார். மற்றும் உப தலைவர்களும் அதற்கு மேலொப்பம் போட்டு விட்டார்கள். இந்த நிலை யில் இரண்டு கட்சியாருக்கும் இன்று யாதொரு கஷ்டமும் இல்லாம லிருக்கின்றது.
அதாவது இன்றைய அரசியல் யுத்தப்பலன் என்னவென்றால் திரு காந்தியாரும் அவரது பிரதம சகாக்களும் செளக்கியமாகயிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு காசு நஷ்டமும், ஒரு சிறு தொந்திரவும் கூடயில்லை. அது போலவே வைசிராய் பிரபுவுக்கும் ஒரு கவலையும் இல்லை. தோள் தினவெடுத்த பலசாலிக்கு சரீராப்பியாச வேலை கிடைத்தது போல் நல்ல வேட்டை கிடைத்தது. திரு. காந்தியார் தேச மக்களைப் பார்த்து “சட்டங் களை: மீறுங்கள், அடிபடுங்கள், சிறை செல்லுங்கள், தியாகமில்லாமல் ஒன்றும் வராது, உங்களைப் பாராட்டுகிறேன்” என்று சொல்லி உத்திரவு கொடுத்து உற்சாகப்படுத்துவதுடன் அவர் பொறுப்பு நீங்கி விட்டது. வைசிராய்க்கு, தேச மக்கள் பணத்தில் உத்தியோகம் பார்க்கும் - தேச மக்கள் பிரதிநிதிகளிடம். “சட்டத்தையும், சமாதானத்தையும் காப்பாற்ற உங்களாலானதையெல்லாம். செய்யுங்கள். பெரிய ஆபத்து காலத்தில் சிறிய தர்மத்தையும், நீதியையும் பார்த்தால் முடியாது. அடித்தாவது, மண்டையை உடைத்தாவது, சுட்டாவது நிலைமையை சமாளித்து மக்களைக் காப்பாற்றுங்கள். இதுவரை நீங்கள் செய்ததெல்லாம் நிரம்ப சரி உங்களைப் பாராட்டுகிறேன்” என்று சொல்லி விட்டார். இருவரும் இன்று பெருமையுடனும், கீர்த்தியுடனும் விளங்குகின் றார்கள். இவற்றால் நாட்டுக்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்த்தால் ஜனங்கள் கஷ்டப்படுகின்றார்கள். வெள்ளைக்கார வியாபாரிகளும், இந்திய வியாபாரிகளும் நஷ்டமடைகிறார்கள். வெள்ளைக்காரத் தொழிலாளிகளும், இந்தியத் தொழிலாளிகளும் தொழிலில்லாமல் ஜீவனத்துக்கு வகையின்றி கஷ்டப்படு கின்றார்கள்.அதிகாரிகளும் சிலர் அடிபட்டுச் சுட்டுக் கொல்லப் பட்டு விட்டார்கள். ஜனங்களிலும் பலர் அடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டு
குடி அரசு - 1930 (2) 138
விட்டார்கள். இதுவரை ஏற்பட்ட லாப நஷ்டம் இருவருக்கும் சமம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய யாருக்கும் கம்மி ஜாஸ்தி என்று சொல்வதற்கில்லை. இந்த யுத்தம் இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு தொடர்ந்து நடந்தாலும் இந்தப் பலனைத்தான் அல்லது இதை அனுசரித்த பலனைத்தான் அடையக்கூடும் என்பதாகவே தோன்றுகின்றது. எப்படி இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை அடிதடியும் உயிர்ச் சேதமுமில்லாமல்
இன்னும், கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து இந்த யுத்தம் நடந்தால் ஏழை மக்களுக்கு அனுகூலம் என்பதாகத் தோன்றுகின்றது.
எப்படியெனில் வியாபார மந்தமானாலும், ஆகாரப் பொருள்களின் விலைவாசிகள் ஏழைகளுக்கு அனுகூலமாயிருக்கிறது. பணக்காரர்களின்
திமிர் சற்றுக் குறைவு பட்டு வருகின்றது. பணமில்லாத வியாபாரிகளுக்கும்
இயக்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு ஏதோ ஒரு விதத்தில் தங்கள் வரவு செலவை ஒழித்து கணக்குகளைச் சரிக்கட்டிவிட்டு கிளர்ச்சி முடிந்த பிறகு புதுக்கணக்குப் போட சவுகரியமாயுமிருக்கும். ஆகவே யுத்தம் தொடர்ந்து நடப்பதே நன்மையெனக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகையால் ராஜி முறிவுக்கு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மற்றபடி நமது இந்தியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும், இந்தியப் பிரதிநிதிகள் அரசாங்க உத்தியோகங்களையும், இலாக்காக்களையும் குறைத்து நிர்வாகத்தை சுருக்கிக் கொள்ளவும் சம்மதிக்கின்ற போது தானா கவே வரி குறைந்து விடும். அரசியல் உரிமையும் நாணயமாய் பயன்படும். ஆதலால் இப்பொழுது வரியைப் பற்றியோ, உரிமையைப் பற்றியோ கவலைப்படுவது பயனற்றதேயாகும் என்பது நமதபிப்பிராயமாகும்.
மற்றபடி பூரண சுதந்திரங்கள் என்பதும், நம் நாட்டிலுள்ள ஜாதிமத வித்தியாசங்களும், உயர்வு தாழ்வுகளும் நீங்கினால்தான் கிடைத்த சுதந்திரங் களை மக்கள் நலத்திற்கும் தேசத்தின் நலத்திற்கும் பயன்படுத்த முடியுமே யொழிய இந்த நிலைமையில் அவனவன் சுயநலத்திற்கும் சுய ஜாதி நலத்திற் கும்தான் ஒவ்வொருவனும் உபயோகிப்பான் என்கின்ற பயமிருப்பதால் யாராவது ஒருவன் அதிகாரம் வகிக்கவோ அரசாங்கம் நடத்தவோ நாம் கண்டிப்பாய் விடமுடியாதவர்களாய் இருப்பதால் பூரண சுதந்திரத்திலும், அதிக சீர்திருத்தத்திலும் நமக்கு இப்போது ஆத்திரமில்லை.ஆகையினால் இப்போது ஏதோ இரு கூட்டத்தாருக்கும் இருக்கும் செல்வாக்குகளை: ஜமின்தார்கள் ஆட்டுக் கடாச் சண்டை, சேவல் சண்டை ஆகியவைகள் நடக்க விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இருப்பதால் அவ்விரு திறத்தா
ருக்கும் எவ்வித கஷ்டமும், நஷ்டமும் இல்லை. நாட்டுக்கும் இந்த சண்டை
யினால் பிரமாத லாப நஷ்டமும் இல்லை என்றாலும் இதிலிருந்தும் மக்கள்
கற்றுக் கொள்ளத்தக்க படிப்பினைகள் அதிகம் உண்டாகி அதன் பின்னால்
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நமது இயக்கத்திற்கும் பல எதிர்பாராத நன்மைகள் ஏற்படக்கூடும் என்றும் நாம் நினைத்து கிளர்ச்சி தொடர்ந்து நடக்கும் வரை நடக்கட்டும் என்றும் மறுபடியும் ஆசை கொண்டு முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.09.1930
குடி அரசு - 1930 @) 140
பெரிய அக்கிரகாறத்தில் சுகாதார வாக்
கொண்டாட்டம்
சகோதரர்களே!
இன்றைய கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகள் எல்லாம் நடந்தேறிவிட்டன. இனி இக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் என்னிடமிருந்து ஏதாவது சில வார்த்தைகளையாவது நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இதனால் சுகாதார விஷயத்தைப் பற்றி அதிகம் சொல்ல எனக்கு சுகாதார விஷயத்தில் போதிய ஞானம் இல்லா விட்டாலும், அனுபவத்தைக் கொண்டு ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன். சுகாதாரம். என்பது மக்களுக்கு மிகவும் அவசியமானவைகளில் ஒன்றாகும். அதற்காகத்தான் இப்போது அரசாங்கத்தாரின் முயற்சியாலும், மற்றும் சில அறிவாளிகளின் முயற்சியாலும் சில வருஷங்களாக நமது நாட்டில் இந்தமாதிரி சுகாதார வாரக் கொண்டாட்டமென்பதாக பலவிடங்களில் நடை பெற்று வருகின்றனவென்றாலும், உலகத்திலேயே நாகரிகம் பெற்ற நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் எல்லாம் நமது நாடே சுகாதார விஷயத்தில்
மிக்கக் கவலையீனமாகவும், கேவலமாகவுமிருந்து வருகின்றது. இவ் விஷயங்கள் வெளிநாடுகட்குச் சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். வெளிநாட்டிற்கும் நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும், அனுஷ்
டிப்பு முறைகளும் நேர் தலை கீழாக யிருக்கின்றன. அதாவது நமது நாட்டு சுகாதாரமெல்லாம் ஒரு ஜாதி மனிதனை மற்றொரு ஜாதி மனிதன் தொட்டால் தோஷம், மற்றொரு ஜாதி மனிதன் பார்த்தால் தோஷம், வேறொரு ஜாதி மனிதன் நிழல் மேலே பட்டால் தோஷம், இன்னொரு ஜாதி மனிதன் தெருவில் நடந்தால் தோஷம் என்கிற முறையிலிருக்கிறதே தவிர மற்றபடி மனிதன் அசிங்கமாக இருக்கக் கூடாது, துர்நாற்றம் வீசக் கூடாது கெட்ட காற்று சுவாசிக்கக் கூடாது, தொத்து வியாதிக்கிருமிகள் இருக்கக் கூடாது, கெட்டுப் போன பதார்த்தமாயிருக்கக் கூடாது என்கிறது போன்ற கவலைகள் சுத்த சுத்தமாய்க் கிடையாது.
இதன் காரணமெல்லாம் மனிதனுக்குச் சுகாதார ஞானம் இல்லாத தேயாகும். ஒரு மனிதன் பணக்காரனாக வேண்டும், பெரிய உத்தியோகஸ்
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
தனாக வேண்டும், பெரிய பண்டிதனாக வேண்டும், பெருமையுடையவனாக வேண்டும் என்கின்றது போன்ற விஷயங்களில் அதிக கவலை வைத்திருக் கின்றானே ஒழிய நல்ல திடகாத்திர திரேகத்துடனிருக்க வேண்டும். சுகஜீவி யாயிருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் கவலைப்படு வதில்லை.
மேல்நாட்டார் முதலியவர்கள் தாங்கள் உலகத்தில் இருப்பதே சுகமாய் வாழ்வதற்கென்றும், சுகாதார முறைப்படி இருப்பதற்கே சம்பாதிப்பதென்றும். சுகாதார வாழ்க்கையை அனுசரித்தே தனது பொருளாதார நிலைமை என்று கருதி அதற்கே தனது கவனத்தில் பெரும் பாகத்தைச் செலவு செய்கிறான். அதனாலேயே மேனாட்டுக்காரன் நம்மைவிட இரட்டிப்புப் பலசாலியாக வும்,
சுக சரீரியாகவும், அதிக புத்தி கூர்மையும், மனோவுறுதியும் உடைய வனாகவுங்,நம்மை விட இரட்டிப்பு வயது ஜீவியாகவும் இருந்து வருகிறான். நமது மக்களின் சராசரி வயது 24 லேயாகும். வெள்ளைக் காரனின் சராசரி வயது 45 ஆகும். இதற்குக் காரணமென்ன என்பதை நாம் கவனிப்பதில்லை. சுகாதாரத்தினால் இன்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. “எல்லாம் கடவுள் செயல்” என்கின்ற ஒரே ஒரு அறிவு தான் நமக்கு உண்டு. நமக்கு காலரா வந்தால் ஓங்காளியம்மனின் குற்ற மென்று பொங்கல் வைக்கவும், வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி
வந்தால் மாரியம்மனின் குற்றமென்று மாரியாயிக்கு தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம் வயிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதலை செய்து கொள்ளுவோம். நரம்புச் சிலந்தி வந்தால், சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம். நம் சங்கதிதானிப்படியென்றால் குழந்தைகளுக்குக் காயலா வந்தால் பாலாரிஷ்டம் என்போம், கிரகதோஷ மென்போம். செத்து விட்டால் விதி மூண்டு விட்டதென்போம். ஆகவே இந்த மாதிரி வழிகளில் தான் நமது
புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது? ஆகாரத் திலாவது பானத்திலாவது காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும் படியான அறிவோ படிப்போ நமக்குக் கிடையாது. நமது நாட்டு சுகாதாரத்
தின் யோக்கியதை தெரிய வேண்டுமானால் மிஸ் மேயோவின் “இந்தியத்
தாய்” என்னும் புத்தகத்தைப் பார்த்தால் சிறிது விளங்கும். நமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்கு முன்புறமாகக் கொண்டுபோய்க் கொட்டுவதே வழக்கம். பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போவது வழக்கம். நமது குழந்தைகளுக்குப் பொது வீதிகளேதான் கக்கூஸ்களாயிருக்கின்றன. பெரிய ஆட்களுங்கூட இராத்திரி நேரங்களில் ரோட்டு ஓரங்களில் ஜலமல வுபாதைக்கு இருப்பதே வழக்கம். வாய்க்கால், குளம், கிணறு, குட்டையாகி யவைகளின் கரைகளையேதான் பொது ஜனங்கள் கக்கூசாக உபயோகித்து
குடி அரசு - 1930 @) 142
வருகின்றார்கள். அங்குளங்களிலேயே கால் அலம்புவது முதலிய அசிங்கி யங்கள் செய்கின்றார்கள். நமது வீட்டு ஜலதாரைத் தண்ணீரெல்லாம் கிராமங் களில் தெரு நடுவில் ஓடுவதும், அதையே மக்கள் மிதித்து, மிதித்து நடப்பதும் மழை வந்தால் கரையிலுள்ளத் தண்ணீரும் தெருவிலுள்ள தண்ணீரும் வழிந்தோடி வாய்க்கால்களிலும் குளம் குட்டைகளில் விழுவ தும் அதையே மறுபடியும் ஜனங்கள் குடிப்பதும், குளிப்பதுமான காரியங் கள் செய்வதும்,
சர்வ சாதாரண வழக்கமாயிருக்கின்றது.
பட்டணங்களிலும் ஜலதாரைத் தண்ணீரெல்லாம் ரோட்டின் இரு மருங்குகளிலும் பள்ளம் வெட்டி ஓடச் செய்வதும் அப்பள்ளத்து ஓரத் திலேயே திண்ணைபோட்டு சதா அங்கேயே உட்கார்ந்து கொண்டு வியா
பாரம் முதலியவைகள் செய்வதும், பலகாரக் கடை முதலியவைகள் அந்த
டிச்சின் ஓரத்திலேயே சுடுவதும், அங்கேயே வைத்து விற்பதுமாகிய காரியங் கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. நமது நாட்டு ஸ்தல ஸ்தாபனங் களிலோ அவற்றின் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்குமே சுகாதாரம் என்றால் என்னவென்று தெரியாது. டிச்சின் மேல் வைத்து வியாபாரம் செய்வதற்கே லைசென்ஸ் கொடுப்பார்கள். சுகாதாரத்திற்கு ஏற்பட்ட பணத்தையெல்லாம் சுகாதார உத்தியோகஸ்தர்களும், சிப்பந்திகளுக்கும் சம்பளமாய் கொடுத்து நல்லபேர் வாங்குவதற்கே செலவு செய்து விடு வார்கள். அந்த உத்தியோகஸ்தர்களும், சிப்பந்திகளும் தங்கள் எஜமான னுக்கு சுகாதார அறிவு கிடையாது என்பது நன்றாய்த் தெரியுமாதலால் அவர்கள் எஜமானர்களுக்கு சலாம் போட்டு அவர்களை புகழ்ந்து பேசி திருப்தி செய்வதிலேயே தங்கள் காலத்தைக் கடத்தி வாங்கிய சம்பளத்திற்
குக் கடனைக் கழித்து விடுவார்கள். தெருவில் குப்பையைப் போட்டால் வீட்டுக்காரனைக் கேட்கமாட்டார்கள். கேட்டால் அவன் நாளைக்கு ஓட்டுப் போட மாட்டான். எச்சிலையையும், குழந்தைகள் மலத்தையும், சாம்பல் முதலிய குப்பைகளையும் தாராளமாய் வீதிகளில் கொட்டுவார்கள். அவர்க
ளுக்குச் சிறிதும் அறிவும் இருக்காது, பயமுமிருக்காது. கேட்பதற்கு ஆளு மில்லை. ஊரைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கும். அக்கொசுக்களினால் வீட்டிற்கு இரண்டொரு
வர் காயலாவாயிருந்து கொண்டேயிருப்பார்கள். இதற்கு என்ன காரணமென் பதே சுகாதார சிப்பந்திகளுக்குத் தெரியாது. அதன் பொறுப்பும் அவர்களுக் கில்லை. மேல் நாடுகளில் இவ்விஷயங்கள் கேட்பதற்கே ஆச்சரியப்படத் தக்க தாயிருக்கும். அவர்களின் சுகாதார அறிவே அற்புதமான பழக்க வழக்கங்களாயிருக்கும்.
ஒவ்வொரு வீட்டுக்காரனும் தனது வீட்டுக் குப்பைச் செத்தைகளைக் கொட்டிவைக்க அவனவன் வீட்டில் ஒரு மூடிபோட்ட குப்பைப் பெட்டியை வைத்திருப்பான். ஒவ்வொருவனும் அதில் கொட்டியே மூடிவிடுவான்.
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வீதியில் ஒரு கிழிந்தத் துண்டுக் கடிதத்தைக் கூடபோட மாட்டான். எவ்வளவு தூரமானாலும் நடந்து போய் குப்பைத் தொட்டியிலிலேயே போடுவான். தெருவில் அசிங்கியம் செய்ய மாட்டான். எச்சில், மூக்குச்சளி முதலியவைகள்கூட துப்பமாட்டான். யாராவது செய்தாலும் அப்படிப் பட்டவனை மிக்க இழிவாயும் நாகரீகமும் மரியாதையும் தெரியாத முட்டா சென்றே இழிவாய் கருதுவான். ஜலதாரைகளை ஜனங்கள் கண்களுக்குத் தெரியாமல் பூமிக்குள் ஓடும்படியாகச் செய்வார்கள். ஊரைச் சுற்றி தண்ணீர். தேக்கமில்லாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். ஏதாவது தேங்கி இருந்தாலும்.
அவற்றில் அடிக்கடி மருந்து போட்டு பூச்சிகளும், துர்நாற்றமும், கொசுவுமில்லாமல் செய்து விடுவார்கள். மக்களிடம் வாங்கும் வரியில் பெரும்பாகத்தை சுகாதாரத்திற்கென்றே ஒதுக்குவார்கள்.
வியாதிக்கும். கடவுளுக்கும் ஒருக்காலமும் சம்மந்தப்படுத்த மாட்டார்கள். நமது மக்களுக்கும் சுகாதார அறிவு வர வேண்டுமானால் கடவுள் செயல் என்கின்ற முட்டாள்தனம் முதலில் ஒழிய வேண்டும். சாதாரணமாக ஈரோட்டில் 1917வது வருஷத்திற்கு முந்தி வருஷம் ஒன்றுக்கு 200 பேருக்குக் குறையாமல் காலராவினால் செத்துக் கொண்டே இருப்பார்.
கள். சில வருஷங்களில் 300, 400 பேர் கூட சாவார்கள். அதற்காக எவ்வ ளவோவேல் மிரவணையும், ஓங்காளியம்மன் பொங்கலும் வருஷா வருஷம் செய்வார்கள். சில சமயங்களில் வருஷத்திற்கு இரண்டு தடவைகள் கூட காலரா வந்து அநேகரை கொள்ளை கொண்டு போய் விடும். ஆனால் 1917ம் வருஷம் முதல் ஈரோட்டில் காலராவினால் வருஷம் பத்துப் பேர்கள் கூட சாவதில்லை. இதற்கு காரணமெல்லாம் கடவுள் தயவு அல்லவே அல்ல. மற்றென்னவென்றால் அந்தவூருக்குக் காவேரியிலிருந்து தண்ணீர் குழாய் வைத்து அதன் மூலம் நன்றாக வடி கட்டி மருந்து கலக்கின தண் ணீரை
குடிக்கின்ற படியால் வழக்கமாக வரும் காலரா அங்கு வருவதே கிடையாது. இல்லாவிட்டால் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியானவுடன், மார்கழி மாதத்தில் ஒரு தடவையும், பழநித் தைப்பூசம் ஆனவுடன் ஒரு தடவையும் பங்குனி
மாதத்தில் பழநி உத்திரம் ஆனவுடன் ஒரு தடவை யுமாக காலரா வருவதுடன்
வாய்க்கால் கரையோரங்களிலுள்ள கிராமங் களில் எல்லாம் மாரியம்மன் பண்டிகை சாட்டுவதினால், பொங்கலினாலும், கூட்டங்கள் கூடி அசிங்கியங்கள் செய்வதினாலும் காலரா ஏற்பட்டு அந்த அசிங்கியங்கள். எல்லாம் வாய்க்காலில் கலந்து வந்து கரையோரங்களிலுள்ள மற்ற
கிராமத்தார்கள் அந்த தண்ணீரை சாப்பிடுவதாலும் வழக்கமாக வரு ஷம் தவறாமல் காலரா வந்து கொண்டிருப்பது வழக்கமாயிருந்து வந்தது. ஆனால் இப்போது அது கிடையாது. இதனாலேயே மனிதன் தனது அறிவி னாலும், முன் ஜாக்கிரதையினாலும் வியாதி வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்பது தெளிவாகவில்லையா என்று கேட்கின்றேன்.
குடி அரசு - 1930 @) 144
சென்னை, நாகப்பட்டினம், தஞ்சை முதலிய இடங்களில் குழாய்த் தண்ணீர் வந்த பிறகு கால், கைகள் முதலியவைகள் பெருப்பது குறைந்து விட்டதை நேரில் இன்றும் பார்க்கலாம். இப்படியே அநேக விஷயங்கள் கொஞ்ச காலத்திற்குமுன் கடவுள் செயல், விதியென்று எண்ணிக் கொண்டி ருந்தவைகள் எல்லாம் இப்போது சுகாதாரத்தை சரியாய் கவனித்து அநுஷ் டித்து வந்ததினால் அநுகூலமாய் இருக்கின்றது. ஆதலால் சுகாதார விஷயம் சொந்த அறிவைக்கொண்டு கவனித்து செய்யவேண்டிய ஒரு முக்கிய
காரியமாகும்.
சிறுபிள்ளைகளே இக்கூட்டங்களில் அதிகமாயிருக்கின்றபடியால் அவர்களுக்கும் சில விஷயங்கள் சொல்லுகிறேன். சிறு பிள்ளைகளுக்கு சுகாதார விஷயங்கள் சரியாய் கற்பிக்க வேண்டியது உபாத்தியாயர்கள் கடனாகும். நமது நாட்டு உபாத்தியாயர்களோ பெரிதும் மூட நம்பிக்கையிற் பட்டவர்களானதால் அவர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு அறிவும், சுகா தார உணர்ச்சியுமிருக்கும்; இருக்கக்கூடுமென்று எதிர்பார்ப்பது அறியாமை யாகும்.நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விஷயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியாயர்களை படிப்பிவிக்கவேண்டும். 100ல் 5 உபாத்தியாயர்களுக்குக் கூட அறிவு என்பதாக ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. தொழிலாளி வயிற்றுப் பிழைப்புக்கு ஏதோ ஒரு வேலை பழகி யிருப்பது போல் உபாத்தியாயர்களும் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன வேலை பழகலாம் என்று கவலையெடுத்து கவனித்ததில் உபாத்தியாயர் தொழில் சுலபமானது என்று கருதி அதில் பிரவேசித்தவர்களேயா வார்கள். உலக ஞானமற்ற சோம்பேறிகள் என்றால் உபாத்தியாயர்களைத் தான் சொல்ல வேண்டும். பொறுப்பில்லாத ஒரு வேலையென்றால் உபாத்தியாயர் வேலையைத்தான் சொல்ல வேண்டும். ஆதலால் இந்த மாதிரி உபாத்தியாய தொழிலாளிகளிடம் படிக்கும் பிள்ளைகள் மூடர்களாவதில் அதிசயமில்லை. பிள்ளைகளுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, அடக்கம் இம் மூன்றும் கிடையவே கிடையாது. வீதிகளில் பிள்ளைகள் கட்டுப்பாடின்றி திரிவதும் விஷமங்கள் செய்வதுமாகிய காரியங்களுக்கு உபாத்தியாயர் களின் பொறுப்பின்மையே
காரணமாகும்.
நான் பார்த்தவரை ஒரு உபாத்தியாயருக்காவது பிள்ளைகளை அடக்கி வைக்க சக்தி கிடையாது. ஆகையால் பிள்ளைகளுக்குப் புத்தகப் படிப்பை விட அடக்கமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியமானதாகும். உலக இயற்கையையும் சுபாவத்தையும் சொல்லி வைக்க வேண்டும்.பிள்ளைகள் முதலில் தினம் தவிராமல் காலையில் எழுந்தவுடன் வெளிக்குப் போக வேண்டும். கொஞ்சமாகவானா லும் நல்ல பதார்த்தங்களைச் சாப்பிட வேண்டும். ஒழுங்குப்படி, காலப்படி சாப்பிட வேண்டும். காலம் தவிரும்படியும், தவரி எதையும் செய்யும் படியும் விடக் கூடாது.
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆகவேசகோதரர்களே! பிள்ளைகளே! நான் ஏதோ எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களுக்குச் சொன்னேன். இவற்றுள் உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை விட்டு விடுங்கள். கடைசியாக நீங்கள் எனக்குச் செய்த கெளரவத்திற்காக நான் மறு முறையும் நன்றி செலுத்துகிறேன்.
குறிப்பு: ஈரோட்டை அடுத்த பெரிய அக்கிரகாரத்தில் மத்திய தர பாடசாலையில் 27-8-1930 அன்று நடைபெற்ற சுகாதார வாரக் கொண்டாட்டத்தில் ஆற்றிய தலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 21.09.1930
குடி அரசு - 1930 (2) 146
நாகர்கோவிலில் சமதர்ம வசாற்வபாழிஷ
சகோதரிகளே! சகோதரர்களே!
உலகத்தில் நமது நாட்டின் நிலை எப்படிப்பட்டதென்று நம்மில் அநேகருக்குத் தெரியாது. ஏனெனில் மற்ற நாடுகளின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று தெரிந்தால்தான் நமது நாட்டு நிலைமையின் தன்மை தெரியவரும். நமது நாட்டில் 100க்கு 90 பேர்களுக்கு கல்வி இல்லாமலும், அறிவு விருத்திக்கான ஆதாரமில்லாமலும், சமுதாய சம்மந்தமான விஷயங்
களில் சுதந்திரமில்லாமலும் மத விஷயங்களில் மூடப் பழக்கங்களாலும், குருட்டு நம்பிக்கைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டுக் கிடக்கின்றபடியால் பெரும்பான்மையானவர்கள் உலக நிலையை அறிய சக்தியற்றவர்களாய் இருக்கின்றார்கள்.
உண்மையில் நடுநிலையிலிருந்து பார்ப்பீர்களானால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமக்கு மனித
சுதந்திரம் மறுக்கப்பட்டு நாய், கழுதைகளிலும் கீழாக மதிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு அடிமையாய் இருந்து வந்திருக்கின்றோம் என்று சொல்லலாம்.
(இந்த சமயத்தில் ஒருவர் சரித்திரத்தில் அப்படி இல்லை. சரித்திரம் படித்து விட்டு பிறகு பேசவேண்டும் என்று சொன்னார். அதற்கு பதிலாக திரு. இராமசாமி சொன்னதாவது)
நான் சரித்திரம் படிக்கவில்லையானாலும் என் அறிவுக்கும் கேள்விக்
கும் எட்டியதை நான் சொல்லுகிறேன். நான் சொல்லுவதை மறுக்கின்றவர்கள் இந்த இடத்திற்கு வந்து ஆதாரத்துடன் மறுக்கட்டும். ஆயிரம் வருஷமாக அல்ல, இப்பொழுது நான் இன்னும் அதிகமான காலமாகவே அடிமையாய் இருந்து வந்திருக்கின்றோம் என்று சொல்லுகின்றேன். அதாவது இந்தியாவுக்குப் பழைய சரித்திரம் எந்த காலத்திலிருந்து கிடைத்ததோ அது
முதலும் அதற்கு முன்னால் புராண காலம் அதாவது இராமன், கிருஷ்ணன், அரிச்சந்திரன் முதலிய அரசர் காலம், மநுதரும காலம், வேத காலம் என்று சொல்லப்படுகின்ற காலம் முதலும் மற்றும் இந்து மதம் என்பதற்கு என்ன
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வயதோ அது முதலும் இந்திய பெரும்பான்மை மக்கள் உண்மையான அடிமையாய் இருந்து வந்திருப்பதோடு மற்றும் இன்றைய தினமும் நமது நாட்டில் உள்ள மக்கள் பலருக்கு ஒரு நாய்க்கும், கழுதைக்கும் உள்ள
சுதந்திரம் கூட அளிக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டு வந்திருக் கின்றது என்று சொல்லுகிறேன். மற்றும் பேசப் போனால் சுதந்திரம், சமத்து வம்: என்கின்ற பேச்சே இந்த நூற்றாண்டில்தான் நம் போன்றவர்கள் தைரிய மாய் பேச முடிந்தது என்று கூடச் சொல்லுவேன். இதற்கு மாறுபாடாய் சொல்ல தைரியமும், சரக்கும் இருக்கின்றவர்கள் இந்த மேடைக்கு வந்து சொல்லட்டும். ஆதாரங்கள் காட்டட்டும் நான் ஒப்புக் கொண்டு எனது அபிப் பிராயங்களைத்
திருத்திக் கொள்ளத் தயாராயிருக்கிறேன் என்று சொன்னார். (மற்றொருவர். எங்களை நாயிலும், கழுதையிலும் கேவல மானவர்கள் என்று சொன்னது சரியல்ல என்று சொன்னார்?
சகோதரர்களே நாயிலும் கழுதையிலும் மாத்திரம் கேவலமாய் நடத்தப்படுகின்றோம் என்று சொன்னதற்கு ஒருவர் வருத்தப்படுகின்றார்.
நான் அதற்கு நாயிலும் கழுதையிலும் மாத்திரம் கேவலமல்ல, மலம் தின்னும் பன்றியிலும் புழுத்த நாய் மலத்தினும் கேவலமாய் நடத்தப் படுகின்றோம் என்று சொல்லுகின்றேன்.
உதாரணமாக, சுசீந்திரம் தெருவில் நாய் மலம், கழுதை மலம் கிடக்கின்ற இடத்திற்கு இந்த நாட்டு இந்துக்கள் என்ற நம்மவர்களில் மூன்
றில் இரண்டு பாகம் பேர்கள் போக முடியுமா என்று கேட்கின்றேன். இதற்கு
யார் பதில் சொல்லத் தயாராயிருக்கிறீர்கள். உங்களில் இரண்டொருவர் வேறு காரண சம்மந்தமாய் உள்ள ஆத்திரத்தின் மீது பேசப்படுவதாகவே எனக்குக் காணப்படுகின்றது. உண்மையில் மனப்பூர்த்தியான ஆக்ஷபத்தின் மீது பேசப்படுவதானால் அவர்கள் இந்த மேடைக்கு வந்து பேசட்டும். நான் இன்று இரவு 12 மணியானாலும் அவர்களது ஆக்்ஷேபங்களுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டே போகின்றேன். அப்படிக்கில்லாமல் கலகத்துக்காகப் பேசப்படும் பேச்சுகளுக்குப் பின்வாங்கிக் கொள்வது என்பது எனது பொதுத் தொண்டில் இதுவரை ஒரு நாளாவது நேர்ந்தது கிடையாது.
அன்றியும் மற்ற சகோதரர்களே! நீங்கள் அவர்களிடம் கோபத்துக்கு போகாதீர்கள். அவர்களை மேடைக்கு அழைத்து அவர்கள் சொல்லுவ தையும் பொறுமையாய்க் கேளுங்கள். பிறகு உங்கள் சொந்தப் பகுத்தறி வைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்து எது சரியென்று பட்டதோ அதை பின்பற்றுங்கள். ஆக்ஷேபத்தைத் தெரிவிப்பவர்களிடம் கோபப்படுவதானது நமக்குச் சமாதானம் சொல்ல சக்தியில்லை என்பதைத்தான் காட்டும். ஆகையால் நான் பேசுவதில் இங்கு யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல நான் தயாராயிருக்கின்றேன். எனக்கு யாரும் சிபார்சு வேண்டிய தில்லை. கேள்வி கேட்பவர்களை தாராளமாய் விட்டு விடுங்கள். அவர்.
குடி அரசு - 1930 @) 148
களோடு மனஸ்தாபப்படாதீர்கள் (என்று சொல்லி, வந்து பேசும்படி அழைத்
தார். கேள்வி கேட்டவர்கள் யாரும் வரவில்லை. கேள்வி கேட்டவர்கள் வந்து பேசியப் பிறகுதான் மேல்கொண்டு பேசப்படும் என்று சொல்லியதின் மீது நாகர்கோயில் வக்கீல் திரு. சிவதானு பிள்ளையவர்கள் மேடைக்கு வந்து பழைய சரித்திரங்களும், ஆதாரங்களும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வரால் எழுதப்பட்டதென்றும், எழுதினவர்கள் தங்கள் தங்கள் இஷ்டப் படியே எழுதப்பட்டதென்றும், ஆதலால் அதிலிருந்து எதையும் பிரமாண மாய்க் கொள்ள முடியாதென்றும், திரு. இராமசாமி யாருடன், தான் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து உழைத்ததாகவும் அவர்களது தொண்டில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் சொல்லும் சமுதாயக் குறை
களும் ஜாதி மதக் கொடுமைகளும் எல்லாம் உண்மையென்றும், ஆனால் அவை சட்டத்தின் மூலம் நீக்கப்பட வேண்டு மென்றும், அதற்காக சுயராஜ்யம். வேண்டுமென்றும், திரு. இராமசாமியாரும் இந்த சுயராஜ்யக் கிளர்ச்சியில் சேர்ந்திருந்தால் இதுவரை எவ்வளவோ பலன் ஏற்பட்டிருக்கு மென்றும் தெரிவித்துக் கொள்வதாகவும் மற்றபடி பெரியாரது தொண்டில் காங்கிரஸ் காரர்களாகிய தங்களுக்கு யாதொரு ஆக்ஷேபனையும் இல்லை யென்றும் பேசினார்?
உடனே திரு.இராமசாமியார் எழுந்து, திருவாளர் சிவதானு பிள்ளைய வர்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் சமுதாய சம்மந்தமான சீர்திருத்த சட்டம் செய்ய நமது பிரதிநிதிகள் என்பவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும் சாரதா சட்டம், மதபரிபாலன சட்டம் முதலியவைகள் படும் பாட்டைப் பார்த்தால் இதனுண்மை விளங்கும் என்றும்,
இன்றும் நமது தலைவர்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே மத விஷயத்தில் சமூக விஷயத்தில் சட்டம் கூடாது, பிரசாரத் தின் மூலம் தான் செய்யப்பட வேண்டும் என்றும் மற்றும் சில தலைவர்கள் அரசியலிலாவது காங்கிரசிலாவது சுயராஜ்யத் திட்டத்திலாவது மத விஷயம், சமுதாய விஷயம் புகுத்தப்படக் கூடாதென்று பேசி வருவதும் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பேரால் தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதும் நண்பர் திரு. சிவதானு பிள்ளையவர்களுக்கும் தெரியுமென்றும் ஆகை யால் இன்றைய நிலையில் நமது கொடுமை படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இழிவுபடுத்தப் பட்ட மக்களுக்கு இப்போது கேட்கப்படும் சுயராஜ்யம் ஆபத்தென்றும் சொன்னார்,
பிறகு யாரும் பேச வரவில்லை.
(10.09.1930 இல் சொற்பொழிவு /
அடுத்த நாள் நாகர்கோவிலிலும், பணக்குடி முதலியவிடங்களில் பேசியதன் சுருக்கம் :
சகோதரர்களே! இன்று இந்தியாவில் பல பாகத்தில் சுயராஜ்யத்திற்கு
என்று ஒருபுறம் மக்கள் போராட, அதற்காக பலர் பல கஷ்டங்களும்,
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நஷ்டங்களும் அனுபவிக்க நாங்கள் ஏன் இன்று சுயமரியாதைப் பிரசாரம் செய்கின்றோம்? நாங்கள் ஏதாவது இன்று மற்றவர்கள் செய்யும் அவ்வளவு தியாகங்கள் செய்ய பயந்தவர்களா? அல்லது வேறு ஏதாவது சுயநல காரணமாய் நாங்கள் சுயராஜ்யத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகின்றவர்களா? என்று யோசித்துப் பாருங்கள். என்னைப் பொறுத்த வரை சுயராஜ்யத்திற் கென்று நம்மில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாக மக்கள் செய்த முயற்சிக்கும், கிளர்ச்சிக்கும், பட்ட கஷ்டத்திற்கும், அடைந்த நஷ்டத்திற்கும் குறையாமல் நான் எனது பங்கிற்கு மேலாகவே செய்து பார்த்து விட்டேன்.
அது அவ்வளவும் பயனற்றதாகி விட்டது என்று முடிவும் செய்து விட்டேன். இந்தியாவில் குறிப்பாக இந்துக்கள் என்கின்ற மக்களில் 100-க்கு 90 பேருக்கு இப்போது முதலில் சுயராஜ்யம் வேண்டியதில்லை என்ப தோடு அது மிகவும் இந்த நிலையில் ஆபத்தானது என்றுங் கூட சொல்லு கின்றேன்.
ஆனால் பின்னை என்ன வேண்டுமென்றால் சுயமரியாதையே வேண்டும். இந்துக்கள் என்றாலே அதன் ஆதாரப்படிக்கு 100-க்கு 90 பேர்கள் சுயமரியாதை அற்றவர்கள், பிறவி அடிமைகள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அநேகக் காரியத்தில் அவ்விந்துக்கள் சுயமரியா தையற்ற தன்மையையும் இழிவான தன்மையையும் இன்னும் அனுபவத்தில் அடைந்து வருகின்றார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாதென்று தைரியமாய்ச் சொல்லுவேன். இன்றைய சுயராஜ்ய முயற்சியே இந்த அடிமைத்தனத்தையும், இழிவுத்தன்மையையும் பலப்படுத்தும் படியான ஒரு சூக்டி முயற்சி என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். அதாவது மேல்ஜாதிக்காரன் மேல்ஜாதியாய் இருக்கவும், பணக்காரன் பணக்காரனா யிருக்கவும், அதிகாரக்காரன் அதிகாரக்காரனாயிருக்கவும், முதலாளி முதலாளியாயிருக்கவும், பிரபு பிரபுவாயிருக்கவும், ஜமீன்தாரன் ஜமீன்தா ரனாயிருக்கவும், ஏழை ஏழையாகவே இருக்கவும், கூலி கூலியாகவே யிருக்கவும் செய்யப்படும் பந்தோபஸ்து தான் சுயராஜிய முயற்சியாய் இருந்துவருகின்றதை நான் பார்க்கின்றேன். இந்த முயற்சியில் ஏழைகள். நிலைமையாவது, கூலிகள் நிலைமையாவது, கீழ் மக்களென்று இழிவு படுத்தப்பட்ட மக்களின் நிலைமையாவது சிறிதுகூட மாறப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் அப்படிப்பட்ட மக்களுக்கு இன்னும் புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ, சுதந்திர உணர்ச்சியோ சிறிதும் வரவில்லை. அப்படிப்பட்ட ஏழை பாமர மக்களின் பேரால் தாங்கள் தங்கள் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், இன்னும் மேல் போகவுமே நமது பிரதிநிதி என்பவர்களால் இக்காரியங்கள் செய்யப்படுகின்றன. இதுதான் இன்றைய சுயேட்சையின் சூட்சி. ஏழை மக்களும், இழிவு படுத்தப்பட்ட மக்களும் இன்று சுயேச்சையோ சுயராஜ்யமோ அடைய வென்று மேற்கண்ட கூட்டத் தார்களால் செய்யப்படும் முயற்சிகளை வெற்றியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். நான் இரண்டு சீர்த்திருத்தங்
குடி அரசு - 1930 (2) 150
களைப் பார்த்துவிட்டேன். அதாவது 1910-ல் பெறப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்களையும் 1920-ல் பெறப்பட்ட சீர்திருத்தங்களின் பலன்களையும் பார்த்தாய் விட்டது. அவைகள் பெரிதும் ராஜாக்கள் என்பவர்களுக்கும், ஜமீன்தார்கள் என்பவர்களுக்கும், முதலாளி என்பவர்களுக்கும், பணக்காரர்.
கள் என்பவர்களுக்கும், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கும், படித்தவர்கள் என்பவர்களுக்கும், மத ஆச்சாரிகள் என்பவர்களுக்குமே உதவியும், அவர்கள் நிலைமையை ஸ்திரமானதாகவும் செய்திருக்கின்றதே தவிர வேறில்லை. இப்போதைய சுயராஜியத் திட்டத்திலோ, நேரு திட்டத் திலோ, குடியேற்ற நாட்டந்தஸ்து திட்டத்திலோ, பூரண சுயேச்சைத் திட்டத் திலோ இந்தநிலைகள் மாறுவதற்கு ஏதாவது திட்டங்கள் வகுக்கப் பட்டிருக் கின்றதா? என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்கின்றேன். இப்போது எங்கு பார்த்தாலும் புதுப்புது ராஜாக்கள் ஏற்படுகின்றார்கள். புதிய புதிய ஜமீன்
தார்கள் தங்கள் சொத்துகளைப் பாகம் பிரிக்க முடியாமலும், விற்க முடியா மலுமான பந்தோபஸ்துடன் ஸ்திரமாயிருக்க ஏற்பாடு செய்துகொண்டு
வருகிறார்கள். முதலாளிமார்கள் எவ்வளவு லாபம் சம்பாதித்தாலும் கேள்வி இல்லை.பணக்காரன் எவ்வளவு பூமிகள் சேர்த்தாலும் கேள்வி இல்லை. மேல் ஜாதிக்காரன் மற்றவர்களை எவ்வளவு இழிவாய் நடத்தினாலும் கேள்வி இல்லை. படித்தவர்கள் எவ்வளவு மூடர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதில் கேள்வி இல்லை.மதாச்
சாரியர்கள் எவ்வளவு மூடர்களாகவும், மக்கள் நலனில் கவலையில்லாத அயோக்கியர்களாகவும் இருந்தாலும் கேள்வி இல்லை. ஆகவே இவ்வித மான சுயராஜ்ஜியம் வந்தாலும் எவ்வளவு பூரண சுயேச்சை வந்தாலும் மேற் கண்ட இக்கூட்டத்தார்கள்தானே நமது பிரதிநிதியாய் இருப்பார்கள்?
இவர்கள் சேர்ந்து செய்யும் அரசாங்கம் பகல் கொள்ளைக்கூட்ட அரசாங்கமா? ஜனப்பிரதிநிதி அரசாங்கமா? என்று நன்றாய் உங்கள் புத்தி யைக் கொண்டு நடுநிலைமையில் இருந்து யோசனை செய்து பாருங்கள்.
குடியேற்ற நாட்டந்தஸ்து வந்தாலும், பூரண சுயேட்சை வந்தாலும் நமது பிரதிநிதிகள் யாராய் இருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள். இன்று இருக்கும் பணக்காரனும், ஜமீன்தாரனும், முதலாளியும், உயர்ந்த ஜாதிக் காரனும்தானே பிரதிநிதியாய் வருவார்கள். இவர்கள் தம்மில் ஒருவருக் கொருவர் கொள்ளையடிக்கத்தானே ராஜரிகம் நடத்துவார்கள். இன்று நமது ரவுண்டேபில் பிரதிநிதிகள் யார்? என்று பாருங்கள். இன்று நமது சட்டசபை பிரதிநிதிகள் யார்? என்று பாருங்கள். இவர்கள் தானே இந்த இருபது வருட
காலமாய் ஏழை விவசாயிகளின் தொழிலாளிகளின் (தீண்டப்படாத வர்களின்! தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாய் இருக்கின்றார்கள்.
அன்றியும் இதுவரை சுயராஜியக் கிளர்ச்சி ஸ்தாபனங்களில் நமது தலைவர்களாய் இருந்து வந்தவர்கள் யார்? இன்றும் இருந்துவருபவர்கள்
யார்? என்று யோசித்துப் பாருங்கள். இந்த விதமான அரசியல் சீர்திருத்த
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஸ்தாபனங்களிலும் சுயராஜிய ஸ்தாபனங்களிலும் இருக்கும் பிரதிநிதிகளும், தலைவர்களும் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று செய்துவந்த காரியங்கள் என்னவென்றும் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட பகுத்தறி வில்லாத பாமர மக்களை இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி நடத்தி வந்திருக்கின்றார்கள் என்றும், இந்த பாமர மக்கள் எப்படி நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் சற்று யோசித்துப் பாருங்கள்.
வரப் போகின்றது என்று சொல்லப்படும் எந்த சீர்திருத்தத்திலும் கூட சுயநலக்காரர்களின் அதாவது ஜமீன்தார்கள், வியாபாரிகள், வட்டிக் கொள்ளைக்காரர்கள், படித்தவர்கள், பெரிய பெரிய தோட்ட முதலாளிகள் முதலானவர்களுக்கு பிரதிநிதித்துவமும் விருத்தியாவதற்கு வழியும், பந்தோபஸ்தும் இருக்கின்றதேயொழிய ஏழை மக்களுக்கு அவர்களது ஏழைத் தன்மையில் இருந்து விடுதலை பெற என்ன செளகரியம் இருக் கின்றது? நாட்டுச் செல்வமும், நாட்டுத் தொழிலும், நாட்டு பூஸ்திதிகளும், சிலரே கொள்ளையடித்து, சிலரே தங்கள் சுவாதீனம் செய்துகொண்டு, சிலரே தங்கள் இஷ்டப்படி அனுபவிக்க வசதி இருக்கத்தக்கதான சுயராஜியம் யாருக்கு வேண்டும்? ஜனங்களுக்கு அறிவில்லாதபோது அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பது குரங்கு கையில் கொள்ளிக்கட்டையைக் கொடுத்ததுபோலவேயாகும்.
இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் பகுத்தறிவும், கல்வியும் வளர்க்கப்படும் காலமாயிருக்கின்றபடியால் இந்தக் காலத்தில் தலைவர்கள் என்பவர்கள், இந்திய பிரதிநிதிகள் என்பவர்கள் பாமர மக்களை பகுத்தறி வுள்ளமக்களாக்குவதில் முயற்சி செய்யட்டும் என்றுதான் சொல்லுகின்றேன். இந்தியாவில் இந்தியர்களில் நடுநிலைமையுடன், பொதுநோக்குடன் அரசு
புரியும் பிரதிநிதிகள் இன்று யாரும் இல்லை. இல்லவே இல்லை.திரு. காந்தி யானாலும் சரி, பண்டித நேரு ஆனாலும் சரி, மாளவியாஜி யானாலும் சரி இவர்கள் யாருக்கும் நெல்லு காய்க்கின்றது மரமா செடியா என்பதும், நெல்லாய்க் காய்க்கின்றதா, அரிசியாய்க் காய்க்கின்றதா என்பது போன்ற விஷயங்களும் தெரியாதென்றே சொல்ல வேண்டும். ஆரம்ப கால காங்கிரஸ்: அதாவது படித்தவர்கள் தங்கள் நன்மைக்காக வக்கீல் வேலையில் செல்வாக்கும் கீர்த்தியும் பெறுவதற்காகவும் அரசாங்கத்தில் பெரிய உத்தி யோகம் பெறுவதற்காகவும் வக்கீல்களாலும் அவர்களது ஜுனியர்களாலும் அவர்களது கட்சிக்கார வியாபாரிகள், ஜமீன்தார்கள் முதலியவர்களின் உதவிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தில் விழுந்து அதன் அனு பவம் மாத்திரம் பெற்று அதே மனப்பான்மையிலிருந்து அதை வளர்த்து வந்து மக்களுக்கு எதைச் சொன்னால் தங்கள் கட்சியில் சேர்வார்கள் தங்க ளோடு கூட கோவிந்தா போட்டு கைதூக்குவார்கள் என்று கண்டுபிடித்து
சுதேசியம், தீண்டாமை விலக்கு, கள்ளு விலக்கு, வரி குறைப்பு என்கின்ற வார்த்தைகளைத் திரு. சுப்பிரமணிய பாரதி அவர்கள் சொன்னது போல்
குடி அரசு - 1930 (2) 152
அதாவது, “உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவாரடிக் கிளியே” என்பது போல் சொல்லி பாமர மக்களை ஏமாற்றிய கூட்டத்தில் விழுந்து கரையேற முடியாமல் தவிக்கின்றவர்கள் ஆவார்கள். இவர்களுக்கும் இந்திய மக்கள் விடுதலைக் கும் யாதொரு சம்பந்தமுமில்லை
என்று தைரியமாகச் சொல்லுவேன்.
ஏனெனில் திரு. காந்தியவர்களுக்குத் தீண்டாமை ஒழியாமல் சுயராஜி
யம் அடைய முடியாது என்பதும், அது ஒழியாத சுயராஜியம் எதுவும் மக்க
ளுக்குப் பயன்படக்கூடிய உண்மையான சுயராஜியமாய் இருக்க முடியாது என்பதும் நன்றாய் தெரியுமென்பது மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள்' திருவாக்காலேயே ஆயிரக்கணக்கான தடவை சொல்லப்பட்டிருப்பதும் யாவருக்கும் தெரிந்த காரியமாகும். யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரது
“யங் இந்தியா” பத்திரிகையில் தீண்டாமை விலக்கைப் பற்றி அவர் எழுதிய வியாசங்கள் திரட்டிப் போடப்பட்டிருக்கும் “யங் இந்தியா” புத்தகத்தை
வாங்கிப் பார்த்தால் நன்றாய்த் தெரியவரும். அப்படி இருக்க, இப்போது சட்ட
மறுப்பும், சத்தியாக்கிரகமும் உப்புக்காகவும் சீமைச் சாமான் களுக்காகவும் எதற்காக செய்யப்படுகின்றது? தீண்டாமை ஒழியாமல் பூரண சுயேச்சை யாருக்கு? என்றும் அல்லது தீண்டாமை ஒழிந்து விட்டதா என் பன போன்ற விஷயங்களை நடுநிலைமையிலிருந்து பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது.
சகோதரர்களே! இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லத் திரு. காந்தி அவர்கள் நழுவிக் கொண்டுவந்தாலும் அதில் சேர்ந்துள்ள மற்ற ஆட்கள் தங்கள் சுயநலத்தை முன்னிட்டு பொதுஜனங்களை ஏமாற்றித் தந்திரமாகப் பதில் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அதென்னவென்றால் சுயராஜியம் வந்த பிறகு தீண்டாமையானது சரிபட்டு விடுமாம். சட்டசபை களில் நாம் சட்டம் செய்து கொண்டால் சரியாய் போய்விடுமாம்.இதை நீங்கள் நம்புகின் நீர்களா? அப்படியானால் இப்போது சட்டம் செய்வதை யார். தடுக்கின் றார்கள்? இதுவரை எந்த பிரதிநிதி இதற்குச் சட்டம் கொண்டு வந்தார். சட்டசபையில் எந்தச் சட்டப்படி இத்தீர்மானம் நமது பிரதிநிதியால் கொண்டு வர முடியாமல் செய்யப்பட்டிருக்கின்றது என்பன போன்ற விஷயங்களை யோசித்துப் பாருங்கள்.
இன்று நீங்கள் தீண்டாமை ஒழிக்கச் சட்டம் செய்யக்கூடிய பிரதிநிதி
கள் சட்டசபைக்கு அனுப்பும்படியான புத்தியும், தகுதியும் வசதியும் உங்களுக்கு இருக்கின்றதா? உங்களால் முடியுமா? என்று யோசனை செய்து பாருங்கள்.
சாரதா சட்டத்தை அழிக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு சட்ட சபைக்கு நின்ற இரண்டு பார்ப்பனர்களுக்குப் பார்ப்பனரல்லாதார் 100-க்கு 75 பேர்கள் ஓட்டு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நிற்க
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பார்ப்பனரல்லாதார்களில் யாருமில்லை. சுயமரியாதையுள்ள ஒரு மெம்பரா வது சட்டசபைக்குப் போக முடிவதே இல்லை என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள். இந்துக்கள் என்பவர்களின் சட்டசபைத் தொகுதிக்கு மகமதிய ரல்லாதார் என்கின்ற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற கவலையும் உணர்ச்சியும் உள்ளவர்களில் இந்தியா பூராவிலும் ஒருவர் கூட சட்டசபைக்குப் போக முடியவில்லை. அதுதான் போகட்டும், இந்து லாவி லும், இந்தியா சட்டசபையிலும், மாகாண சட்டசபையிலும் நம்மை சூத்திரர் கள்: என்று குறிக்கப்பட்டிருப்பதையும், குறிக்கப்படுவதையும் இன்றும் சொல்லப்படுவதையும் மாற்றவும் தடுக்கவும் நீங்கள் ஒரு சுயமரியாதை யுள்ள பிரதிநிதியாவது சட்டசபைக்கு அனுப்ப இன்றுவரை உங்களால் முடியவில்லை.
சென்ற சட்டசபைக் கூட்டத்தில் நம்மையெல்லாம் சூத்திரர்கள் என்று தாராளமாய்ச் சொல்லப்பட்டதை எழுந்து ஆட்சேபிக்க மனித உடல் தாங்கிய ஒரு ஜீவன் கூட அந்தக் கூட்டத்தில் இல்லை.
சாதாரணமாக எனக்கு அதுசமயம் சட்ட சபையில் பல சிநேகிதர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் சொன்னேன். அதைக்கண்டிக்கும் படியும் இனிமேல் அப்படிச் சொல்லக்கூடாது என்று தீர்மானிக்கும் படியும் யார் யாரையோ கேட்டுக்கொண்டேன். பனகால் அரசர் முதல் யாராலும் முடிய வில்லை. தங்களுடைய சுயநலத்திற்கு கெடுதிவரும் என்றே பயந்து கொண்டார்கள்.“அத்திப் பூ பூத்தால் போல்” ஒரு பெண் நியமனம் செய்யப் பட்டது என்றால் அது சட்டசபைக்குப் போனதும் “பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு மதப்படிப்பு சொல்லிவைக்க வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வரத்தான் முடிந்ததே யொழிய மக்களுக்கும் பெண்களுக்கும் விரோதமாய் இருக்கும் மதத்தை அழிக்கத்தகுந்த ஒரு பெண்ணை சட்டசபைக்கு அனுப்ப நம்மால் முடியவில்லை.
இன்றைய தினம் இந்து தேவஸ்தான பரிபாலன சட்டத்தில் எல்லா இந்துக்களும் கோவிலுக்குள் போகலாம் என்று சட்டம் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் நாம் சுயமரியாதையுள்ள பிரதிநிதிகளை சட்ட சபைக்கு அனுப்பமுடியாமல் போனதா? அல்லது சுயராஜியம் இல்லாமல் போனதா? என்பதை உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள்.
இன்றைய தினம் பூரண விடுதலையுள்ள அரசாங்கம் வந்து அதில் தேர்தல் நடைபெறுமானால் நானாவது என்னைப் போன்ற நண்பர்களாவது சட்டசபைக்குப் போகமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.10000, 20000, 30000 ரூபாய் செலவு செய்து தான் உங்கள் பிரதிநிதியாக வேண்டும்.அதுவும் ஜாதியைக் காப்பாற்றுகின்றேன், மனுதர்மத்தை காப்பாற்றுகின்றேன், கோவிலைக் காப்பாற்றுகின்றேன், சாமியின் பெண்டு பிள்ளைகள் தாசிகள் ஆகியவற்றைக் காப்பாற்றுகின்றேன், மோட்சத்திற்கு கூட்டிவிடும் தரகர்.
குடி அரசு - 1930 @) 154
களைக் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்தான் அப்படிப்பட்டவருக்கும் ஓட்டு கிடைக்குமே அல்லாமல் எந்த யோக்கியனுக்காவது, அறிவாளிக் காவது, சுயமரியாதைக்காரனுக்காவது ஓட்டுக் கிடைக்குமா என்று யோசித்துப் பாருங்கள். இதற்கு வெள்ளைக்காரர்கள் முட்டுக்கட்டை போடுகின் றார்களா? அல்லது நமது மக்களுக்கு அறிவில்லையா என்று யோசித்துப் பாருங்கள்.
9-ந்தேதி எங்கள் மாகாணத்தில் சட்டசபை எலக்ஷன் நடந்தது. அதில் வெற்றி பெறப்போகும் பிரதிநிதிகள் யார் என்று கருதுகிறீர்கள். ஊர் மக்களிடம் 100க்கு 3, 4 வரையில் வட்டி வாங்கி பணம் சம்பாதித்து பார்ப்பா னுக்கும், பாழும் கல்லுக்கும் அழும் கூட்டத்தார்களும், விளைந்தாலும், விளையாவிட்டாலும் உதைத்து வரி வசூலிக்கும் ஜமீன்தார்களும் 1000,2000, 5000, 10000 கணக்கான ஏக்கர் பூமிகளை உடைய பெரிய மிராசுதாரர்களும் முனிசிபாலிடிகளும் ஜில்லா தாலூகா போர்டுகளைத் தங்கள் வியாபார தொழிலாய் உபயோகிக்கும் ஸ்தல ஸ்தாபன வியாபாரிகளும், மக்கள் ஒழுக் கங்களையும் குடும்பங்களைப் பாழாக்கிக் கொள்ளையடிக்கும் வக்கீல் களும் மற்றும் இவர்கள் போன்ற ஏழை மக்களைக் கொடுமை செய்பவர் களும், அவர்களது நன்மை, தீமையில் சிறிதும் கவலையில்லாதவர்களும் தவிர ஒரு சுயமரியாதையுடையவராவது, யோக்கியராவது அங்கு இருக் கின்றார்கள் அல்லது வரப்போகிறார்கள் என்று கருத முடியுமா? என்று உங்களைக் கேட்கின்றேன்.
நான் சட்டசபைத் தவிர எல்லா ஸ்தாபனங்களிலும் இருந்திருக் கின்றேன். அவைகளின் அனுபவங்கள் எனக்கு நன்றாகத் தெரியும், ஈரோடு கோவில் பிரவேசமுயற்சி என்ன ஆச்சுது? என்பது உங்களுக்குத் தெரியாதா? இன்னும் தெருப்பிரவேச முயற்சிக்குக் கூட தைரியமாய் யாரும் வெளிவர:
முடியாமல் ஆளுக்காள் பழி சுமத்தி பொறுப்பை நழுவ விட்டு விடுவதில் தான் இருக்கின்றது. சுயமரியாதை இயக்கத்தில் கலந்து இருந்த பல பெரியார்களுக்குக் கூட சுயமரியாதை இயக்கத்திலிருந்து ராஜிநாமா கொடுத்த பிறகுதான் வெற்றி கிடைத்திருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தில் கலந்திருக்கின்ற பல பெரியார்களுக்கு அதற்காகவே போட்டிகள் உண்டா யிற்று. இவர்கள் எல்லோரும் சட்டசபைக்குப் போய் நமது பிரதிநிதிகளாக என்ன செய்யப்போகின்றார்கள் அல்லது என்ன செய்யக்கூடும் என்று கருது கிறீர்கள்? நமது வரி பணத்தை எப்படி வெள்ளைக்காரனைப் போலவே கூட்டுக் கொள்ளை அடிக்கிறது? அதில் இன்னும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுப்பது என்பது போன்று திருட்டு சொத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் திருடர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வது போல் இன்று சண்டை போட்டு நாளைக்குக் கொள்ளை அடித்துப் புதுப்புது ஜமீன் தார்களாகவும் பாகம் பிரித்துக் கொள்ளவும், விற்கவும் முடியாத பிரபுகள் குடும்பக்காரர்களாகப் போவதைத் தவிர வேறு என்ன செய்யப்போகிறார்கள்
என்று நினைக்கின்றீர்கள். மற்றும் நமக்கு ஏதாவது பாமர மக்களிடம்
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
செல்வாக்கு இருக்கிறது என்று நினைத்தால் நம்மை பெரியாரென்றும், தலைவர் என்றும், சுயமரியாதை இயக்கமே மேலானதென்றும் கூறித் திரிவார்கள். நமக்கு செல்வாக்கு இல்லையென்று தெரிந்தால் “சுயமரியாதை என்கின்ற பேரே எனக்குப் பிடிக்கவில்லை.” “மதத்தில் பிரவேசிப்பது தப்பு” “சாமிகளை குறைகூறுவது நன்றாய் இல்லை” என்றும் நமது பெரியார். “அரசியலில் பிரவேசித்து விட்டார்” என்றும் “நிரம்பவும் அவருக்குத் தலை கிருகிருத்து போய்விட்டது” என்பது போன்ற எதை யாவது சொல்லி விட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்து தான் சுயமரியாதைக் காரருடன் சேர்ந்தவரல்ல என்றும் சொல்லி விடுவார்கள்.
உதாரணமாக ஒரு கனவான் உண்மையாக சுயமரியாதைக் கொள்கை
கள் எல்லாவற்றிலும் நம்பிக்கையுடையவர்களாயிருந்ததோடு, விக்கிரக ஆராதனையைவமிகவும் வெறுப்பவராயிருந்தார். “விக்கிரகங்களை உதைத்
தால் (இன்னும் பலமான வார்த்தையில்) என்ன செய்யும்” என்று கூட ஒரு
கூட்டத்தில் சொன்னவர்கள். அப்படிப்பட்ட கனவான்கள் “விக்கிரகங் களைக்
குற்றம் சொல்லாதீர்கள்” என்று எனக்குப் புத்திமதி சொல்ல வேண்டிய வரானார். காரணம் என்ன வென்று கருதுகின்றீர்கள். இப்படிச் சொன்ன காரணத்திற்காக அவரைச் சில பிரதிநிதி ஸ்தானங்களில் தோற் கடிக்க அவரது எதிரிகள் முயற்சி செய்தார்கள். உடனே இப்படி ஒரு கரணம் அடித்து அந்த ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவராய் விட்டார். இந்தமாதிரி நிலையில் சிக்கிக் கொள்ள முடியாத பிரதிநிதிகள் இன்று நமக்கு இல்லவே இல்லை. இதை நம்புங்கள்! நம்புங்கள்! யாராவது இருந் தால் அவர் நமக்கு பிரதிநிதியாய் வர முடியாது.
எங்கள் ஜில்லாவில் பார்ப்பனராதிக்கத்தை ஒருவாறு ஒழித்தோ மானாலும் அதற்குப் பதிலாக அவர்களைப் போன்ற வருணாசிரமத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடைய ஒருவரைத்தான் பிரதிநிதியாகக் கொண்டு வரமுடிந்தது. அதுவும் வேண்டா மென்றால் இன்னமும் மோச மானவர்கள் தான் வருவார்கள்.
ஆகவே இந்தக் கூட்டம்தான் இன்றைய நிலையில் உங்கள் சுயராஜ்யத்திலும், பூரண சுயேச்சையிலும், குடியேற்ற நாட்டந்தஸ்திலும் இந்திய மக்களுக்குப் பிரதிநிதியாக வரமுடியும். ஒரு சமயம் காங்கிரஸ்: காரர்களே சட்டசபைகளைக் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளு வோம். அவர்கள் யார்? ஆகாயத்திலிருந்து குதித்து வரக்கூடியவர்களா? அநேகமாய் இதே ஆட்கள் தான் காங்கிரசின் பேரால் வருவார்கள் அல்லது இது போன்ற வேறு இரண்டொரு ஆட்களும் வரக்கூடும்.
ஆகவே இப்படிப்பட்ட ஆட்களை நமது பிரதிநிதிகளாக வைத்துக் கொண்டு எந்த சுயராஜ்யம் வந்தாலும் நமக்கு சிறிதும் பயனில்லை.
குடி அரசு - 1930 (2) 156
வெள்ளைக்காரனும் நமது பணக்காரர்களும், படித்தவர்களும் சண்: டைப் போட்டுக் கொண்டிருப்பதாலாவது போட்டிக்காகவேனும் அல்லது தங்கள் சுயநலத்திற்காகவேனும் ஒவ்வொருவரும் “நாங்கள்தான் ஏழை களின் பிரதிநிதி, தாழ்த்தப்பட்டவர்கள் பிரதிநிதி” என்று போட்டிக்கு வாயி லாவது சொல்லிக் கொள்ளுகின்றார்கள். இந்தப்படி வெள்ளைக்காரர்களே இல்லாமல், இந்தப் பணக்காரர்களும், படித்தவர்களும், வியாபாரிகளும், பெரிய பெரிய மிராசுதாரர்களும், ஜமீன்தாரர்களும் மாத்திரமே ஆட்சியை நடத்துவார்களானால் ஆளுக்கு கொஞ்சவீதம் நம்மை அடிமையாகப் பங்கு போட்டுக் கொள்ளுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கும்
ஆதலால் இன்றைய நமது கேவலநிலை விர்த்தியாகும் படியான தாகவாவது அல்லது இப்படியே இருக்கும்படியானதாகவாவது எந்த
சுயராஜியமும், சுயேச்சையும், மாறுதலும் சிறிதும் நமக்கு வேண்டாம். ஏமாற்றி ஏய்த்துக் கொள்ளையடித்தவர்கள் தங்கள் நிலையைப் பத்திரமாய் காப்பாற்றிக் கொள்ளைச் சுயராஜ்யம் பெற நாம் விடக்கூடாது. எல்லாவற் றையும் ஒன்றாய்ப் போட்டுப் பங்கிட்டுக் கொள்ளத்தக்கதாகவோ அல்லது எந்த நிலையையும் யாரும் அடையத்தக்கதாகவாவது உள்ள சீர்திருத்தமும். சுயராஜியமும், சுதந்திரமும்தான் நமக்கு வேண்டும். அதற்கு மக்கள் தயாரா
கும் வரை மூன்றாவதான ஒருவன் இவர்களை மிரட்ட இருப்பதில் ஒன்றும்
முழுகிப் போய்விடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நம் முடைய மக்களிடம் நமக்கு நம்பிக்கை ஏற்படும் போது, மூன்றாவதானவன்' தானாகவே மற்றவர்களைப் போலவே ஆய்விடுவான். அல்லது தானே மூட்டைக் கட்டிக் கொள்ளுவான். நாம் அதை மறந்து விட்டு “வெள்ளைக் காரனே நீ கொள்ளைக்காரன். ஓடிப்போ எங்கள் நாட்டைவிட்டு” என்று மாத்திரம் வாயில் சொல்லிக் கொண்டு கையில் தக்ளி சுற்றுவதனால் ஒரு
காரியமும் முடிந்துவிடப் போவதில்லை.
அன்றியும் அவர்களிடமுள்ள அதிகாரத்தை நமது உயர்ந்த ஜாதியார் என்பவர்களிடமும் ஜமீன்தாரர்களிடமும், மிராசுதாரர்களிடமும், வக்கீல்களி
டமும், வட்டி வியாபாரிகளிடமும், சந்நியாசிகளிடமும் வாங்கிக் கொடுக் கவும் முடியாது என்று கண்டிப்பாய் சொல்லி விடுங்கள். இந்தப் போலித் தேசீயப் பூச்சாண்டிக்குப் பயப்படாதீர்கள்.
குறிப்பு : 11.09.1630 ஆம் நாள் நாகர்கோவில் ஆர்வாய் மொழி, பணக்குடி ஆகிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 21.09.1930
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
தேர்தல் முழவிண் பனை
சென்னை மாகாணத்தில் நடைபெற்ற சட்ட சபையின் தேர்தல்களின் முடிவுகள் இந்த வாரத்தில் அநேகமாய் எல்லாம் வெளியாய் விட்டன.
இதில் முக்கியமாய் நாம் மகிழ்ச்சி அடையத்தக்கது இரு விஷயங்க ளாகும். அதாவது தேசம், தேசியம், காங்கிரசு என்பவைகளின் பேரால் மக்களை ஏமாற்ற பலருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது ஒன்று.
மற்றொன்று, பார்ப்பன சூட்சிக்கு செல்வாக்கில்லாமல் போய் விட்டதாகும். உதாரணமாக இதுவரை இந்திய சட்டசபைக்கு தமிழ்நாட்டி லிருந்து வெறும் அய்யங்கார்களே பெரும்பாலாய் போய்க் கொண்டிருப்பது
வழக்கம். இவ்வருஷம் அது சற்று மாறிவிட்டது. அதாவது மதுரை இராம நாதபுரத்திற்கு திரு.சேஷயங்காருக்குப் பதிலாக திரு. ராஜாராம் பாண்டி யனும், சென்னைக்கு திரு. சீனிவாசய்யங்காருக்குப் பதிலாக திரு எ. இராம சாமி முதலியாரும், மலபார், தென் கன்னடத்திற்கு திரு. கே. வி. ரங்கசாமி அய்யங்காருக்குப் பதிலாக கொல்லங்கோடு வாசுதேவ ராஜாவும், சித்தூர், சென்னை வகையராவுக்கு துரைசாமி அய்யங்காருக்குப் பதிலாக திரு. இராம கிருஷ்ண ரெட்டியாரும் வந்திருப்பது குறிப்பிடத் தகுந்த மாறுதலாகும்
செங்கற்பட்டில் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சி இல்லாதிருக்கு மானால் அங்கும் ஒரு அய்யங்காரை மாற்றி யாராவது பார்ப்பனரல்லாதாரே வந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி ஜில்லாக்களுக்கும் இந்திய சட்டசபைக்குப் போவதில் ஏதாவது சுயநலம் அடைய மார்க்கம் உண்டு என்று அறியத்தக்க நிலைமை யாருக்காவது இருந்திருக்குமானால் அங்கும் ஒரு பார்ப்பன ரல்லாதாரே வெற்றி பெற்றிருக்கலாம் என்றாலும் ஒரு தொகுதியாவது பார்ப்பனருக்கு விடப்பட வேண்டியது நியாயமானதால் அதற்காக தஞ்சை தொகுதி விடப்படுவதில் ஆக்ஷபனை இல்லை.ஆனாலும் அந்த இரண்டு அய்யங்கார் பார்ப்பனர்களும் சாரதா சட்டத்தை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு. வெற்றி பெற்றது தான் நாம் வருந்தத்தக்க முடிவாகும். மற்றபடி சென்னை சட்டசபைக்கும் தமிழ்நாட்டிலிருந்து இவ்வருடத்தில் ஆறு பார்ப் பனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவும் சென்ற வருஷத்தில் இருந்த
குடி அரசு - 1930 (2) 158
எண்ணிக்கைக்கு மிக்கக் கீழாகவே வந்து விட்டது குறிப்பிடத் தக்கதாகும்.
அதாவது சென்ற வருஷம் சென்னையில் இருவர், தென் ஆற்காட்டில் ஒருவர், தஞ்சையில் ஒருவர், திருச்சியில் இருவர், கோவையில் ஒருவர்,
மதுரையில் ஒருவர், இராமநாதபுரத்தில் ஒருவர், மலையாளத்தில் ஒருவர் ஆக பத்துப்பேர்கள் பார்ப்பனர்கள் இருந்தார்கள். இவ்வருஷம் சென்னை ஒரு ஸ்தானம்,தென்னாற்காடு,கோவை,மலையாளம், திருச்சியில் ஒரு ஸ்தானமாக அய்ந்து இடங்களில் அவர்களது ஸ்தானங்கள் மாற்றப்பட்டு விட்டது. மற்ற இடங்களும் அநேகமாக தஞ்சையைத் தவிர பாக்கி யெல்லாம் மாற்றியே
இருக்கலாம். ஆனாலும் அவைகளும் பார்ப்பனரல்லா தார்களுக்குள்ளாகவே மந்திரி கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்கின்ற போட்டி களால் மாற்ற முடியாமல் போய்விட்டதே தவிர பார்ப்பனர்களின் செல்வாக் கால் அவர்களது சொந்த முயற்சியால் வரப்பட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே பார்ப்பனர். அல்லாத கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி சென்ற தேர்தலில் வகுப்புவாதம் காரணமாக என்று தோல்வியுற்றும், வகுப்பு வாதத்திற்கு விரோதமாய் தேசீயப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஒரே மூச்சாய் கூப்பாடு போட்டும் ஜஸ்டிஸ் கட்சியாரும் அதற்குப் பயந்து கொண்டு பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதாய்த் தீர்மானம் செய்தும் பார்ப்பனரல்லாதார் கட்சி பிற்போக்கான கட்சி யென்றும், அதை ஒழிக்க வேண்டுமென்றும் காங்கிரஸ் தீர்மானம் செய்தும், ஜஸ்டிஸ் கட்சியும், மந்திரி கட்சியும், நாஸ்திக இயக்கமும் தேச விடுதலைக்கு முட்டுக்கட்டையான இயக்கமும் ஆகிய சுயமரியாதை கட்சியோடு சேர்ந்து விட்டது என்று விஷமப் பிரசாரங்கள் செய்யப்பட்டும், இந்தத் தடவை இந்த மாதிரியான மாறுதல் ஏற்பட்டிருக்கின்றதென்றால் பார்ப்பனீயத்திற்கு எதிரான பிரசார மும் நாஸ்திகப் பிரசாரமென்பதும், வகுப்புவாதப் பிரசாரமும் பயன்பட்டி ருக்கின்றன வென்றே சொல்லுவோம். ஆனாலும் திருச்சி நகரத் தொகுதிக் கும், மதுரை நகரத் தொகுதிக்கும் பார்ப்பனர் வெற்றி ஏற்பட்டது அவ்விரு நகர பார்ப்பனரல்லாதார்களுக்கும் அவமானம் என்றே சொல்லுவோம். வட ஆற்காடு ஜில்லாவுக்கு ஒரு பார்ப்பனர் புதிதாக வந்ததானதும் வருந்தத் தக்கதானாலும் அதைவிட மோசமான திரு. ஆதிநாராயண செட்டியார் மாற்றப்பட்டு அந்த ஸ்தானத்திற்குத் தான் பார்ப்பனர் வரப்பட்டார் என்பது சிறிதே
ஆறுதலளிக்கத் தக்கதாகும்.
திருச்சி சேதுரத்தினமையர் உபத்திரவமில்லாத பார்ப்பனர் என்று சொல்லப்பட்டாலும் திரு. நாராயணசாமி பிள்ளையை விட மோசமில்லை என்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும், ஜில்லாப் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையைக் காக்கவாவது இந்த நிலை ஏற்பட்டது ஒரு வழியில் நன்மையேயாகும். இராமநாதபுரம் ஜில்லாவானது இன்னமும் நாட்டுக் கோட்டையார் ஆதிக்கத்திலும் இராமநாதபுரம் ராஜா அவர்கள் ஆதிக்கத்
திலும் இருக்கும்வரை அந்த ஜில்லாவில் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கு
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இருந்து கொண்டு தான் இருக்கும். அவ்விருவருக்கும் உண்மையான சமூக உணர்ச்சி வரும்வரையிலும் அல்லது அந்த ஜில்லா மக்களுக்கு பூரண சுய மரியாதை உணர்ச்சி வரும் வரையிலும் இவ்வளவு தான் எதிர்பார்க்கலாம்.
தவிர தஞ்சை ஜில்லாவில் திரு. முத்தையா முதலியார் வராமல் போனது வருந்தத்தக்க விஷயமாகும், ஏனெனில் நாம் அவர் மறுபடியும் வந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதெல்லாம் ஒரே ஒரு காரியத் திற்காகத்தான். அதாவது அரசாங்க உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவப்படி உத்தியோகம் பெற வசதியான உத்தரவு போட்டதற்கு ஆகவேதான். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அவர் தோல்வியுற்றார். என்று சொல்லப்படுமானால் அதிலிருந்து பார்ப்பனரல்லாதார்களுக்குப் போதுமான சுய அறிவு இல்லை என்று சொல்லியாக வேண்டியதற்கு அந்த
ஒரு காரணமே போதுமானதுடன் நமது மக்களுக்கு வோட்டை உபயோ
கிக்கும் யோக்கியதை இல்லை என்றே சொல்லுவோம். அல்லது சென்ற தேர்தலில் காங்கிரசின் பேரால் நின்று விட்டு மந்திரி உத்தியோகம் பெற்றுக் கொண்டதால் தோல்வியுற்றார் என்று சொல்லுவதானால், அதுவும் யோக்
கியப் பொறுப்பற்ற வார்த்தையென்று தான் சொல்லுவோம். எப்படி யெனில்
காங்கிரசின் பேரால் நின்று, திரு. படேல் உத்தியோகம் பெற்று மாதம் 3000, 4000 ரூபாய் சம்பாதித்ததும், காங்கிரஸ் பேரால் நின்ற தலைவர் திரு நரசிம்மராஜு உத்தியோகம் பெற்று மாதம் 2000, 3000 ரூபாய் சம்பாதித்ததும் இன்னமும் பண்டித நேரு திரு. ரங்கசாமி அய்யங்கார் திரு. சத்தியமூர்த்தி ஆகியவர்கள் காங்கிரசின் பேரால் நின்று அரசாங்க கமிட்டியில் பதவி பெற்று அலுவல் பார்த்ததும் பணம் பெற்றது முதலான காரியங்கள் பிரத்தி யக்ஷத்தில் நடந்து இருக்கும் போலும். இந்த ஆசாமிகள் எல்லாம் இன்றைய தினமும் தேசபக்தர்களாகவும் தலைவர்களாகவும் இருக்கும் போதும் திரு. முத்தையா முதலியார் மந்திரி பதவி ஒப்புக் கொண்டது மாத்திரம் பாவ மென்றால் இதை அறிவுள்ளவர்கள் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும். ஏதோ பதவி போட்டியில் ஒருவருக்கொருவர் செய்த எதிர்ப் பிரசாரத்தால் தோல்வி ஏற்பட்டுவிட்டதென்றால் நமக்கு ஆக்ஷேபனை யில்லை.
ஆகவே பொதுவாக இந்தத் தடவை தேர்தலில் பார்ப்பன ஆதிக்கம் ஒருவாறு குறைவு பட்டது என்கின்ற வரையில் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரப்பட்ட சேதியேயாகும்.
மற்றபடி பார்ப்பனரல்லாதார்களில் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கொடுமை செய்யப்பட்ட மக்கள், தொழிலாளிகள், கூலிக்காரர்கள், சாதாரண குடியானவர்கள் ஆகிய 100க்கு 90க்கு மேற்பட்ட ஜனசமூகத்திற்கு
இத் தேர்தல் முடிவானது சரியான “கூற்றுவன்”- அதாவது அவர்களது உயிரை வாட்டத் தகுந்த தன்மையது என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால்
இந்தக் குற்றம் பிரதிநிதித்துவ அமைப்பைப் பற்றியதே ஒழிய
குடி அரசு - 1930 (2) 160
வோட்டர்களைப் பற்றியது என்று நாம் சொல்ல வரவில்லை.
வோட்டர்களுக்கு புத்தியும், நன்மை தீமை அறியும் சக்தியும், வோட்டுச் செய்யும் தன்மையின் நாணயமும் உண்டாக்கும் வேலைக்கு இதுவரை எந்த சீர்திருத்தத்திலும் இடமில்லை. எந்த தலைவரும் அதற்கு முயற்சி செய்யவும் இல்லை. ஆகையால் அது விஷயத்தில் நாம் வோட்டர். களைப் பயிற்றும் முயற்சியில் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களைக்
குற்றம் சொல்வது மூடத்தனமேயாகும்.
தவிர உண்மையான ஒரு யோக்கியன் என்பவன் அதாவது சமதர்மத்
தில் லக்ஷியமுள்ள ஒருவன் இன்றைய தினம் ஒரு கிராமப் பஞ்சாயத்து சபைக்கு நின்றால் கூட வெற்றிபெற முடியாத நிலையில் தான் இன்று இந்திய வோட்டர்களின் அறிவும், சமதர்ம பிரதிநிதியின் நிலைமையும் இருக் கின்றது.
தவிரவும், சட்டசபையின் மூலம், ஒருவனுக்குத் தனது சுய நலப்பயன் பெற ஆசையில்லையானால் அங்கு வேலையும் இல்லை; வெற்றியும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தேர்தலுக்கும் 10, 20, 30, ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டி யிருக்கின்றன. செலவு செய்யாமல் வோட்டர்களுக்குப் பெரிதும் பணம் கொடுக்காமல் வோட்டுபெற முடிவதில்லை. பொதுக்காரியத்திற்கு உண்மை யாய் உழைப்பவன் எதற்காக கையில் இருந்து பதினாயிரக்கணக்காகச் செலவு செய்யமுன் வருவான். அன்றியும் பணக்காரனுக்குத் தான் இப்படிச் செலவு செய்யமுடியும். பொது நலத்தில் ஈடுபடும் பணக்காரன் கிடைப்பதும் அருமை.
ஏழைகள்ஈடுபட்டாலோ அவர்களுக்குப்பணமில்லாததால் அவர் கள்: வர முடிவதில்லை.
ஆகையால் இந்த சட்டசபைகளை நாட்டுக்கு பெரும்பான்மை மக்க
ளின் பிரதிநிதித்துவம் என்று யாராலும் சொல்லவே முடியாது.
உதாரணமாக இப்போது வெற்றி பெற்று வந்திருக்கும் கனவான் களைப் பார்ப்போமானால் கூட உண்மை நன்றாய் விளங்கிவிடும்.
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஏற்பட்டுள்ள 30, 35 பொது ஸ்தானங்களுக்கு வெற்றி பெற்றிருக்கும் கனவான்கள் யாரென்றால் ஜமீன் தார்கள், லேவா தேவிக் காரர்கள், பார்ப்பனர்கள், வக்கீல்கள் 500,1000,10000 ஏக்கர் நிலங்கள் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய மிராசுதாரர்கள் ஆகிய வியாபாரிகள் இவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. இந்தக் கூட்டத்தார். ஏழை மக்களுக்கு பிரதிநிதிகள் என்றால் இவர்களை விட வெள்ளைக் காரர்களே அரசாட்சியில் இருப்பதில் என்ன கெடுதி என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனெனில், மேற்கண்ட அத்தனை பேரும் ஏழைகளைப் பாமர மக்களைத் தாழ்த்திக் கொடுமைப்படுத்தி இம்சித்து வயிற்றிற் கில்லாமல்
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அடித்துத் துரத்தி அந்தநிலை பெற்றவர்கள் ஆவார்கள் என்பதோடு இனியும் அதே நிலையில் மேலும் முற்போக்கடையக் கருதிக் கொண்டிருப்பவர்களும். ஆவார்கள். ஆகையால் இவர்களது ஆட்சியை விட மோசமான ஆக்ஷி உலகத்தில் வேறு எந்த ஆட்சியும் இருக்காதென்று தான் சொல்லுவோம். ஆதலால் தேர்தல் முடிவைப் பற்றி பொதுவாக நாம் சிறிதும் சந்தோஷப்படுவதற்கில்லை. ஆனாலும் இவர்களுள் ஏதாவது தனிப்பட்ட நபர்களைப் பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடி ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஏதா வது நன்மை செய்து கொள்ள முடியுமா என்பதுதான் நாம் இனிச் செய்ய வேண்டிய வேலையாகும். இப்பொழுது வெற்றி பெற்றவர்களெல்லாம் பெரிதும் தேர்தல்களில் தாங்கள் செலவழித்த பணத்தை எடுப்பதற்குக் கூடிக் கூடி யோசனையும் முயற்சியும் செய்து கொண்டிருக்கும் வேலையில் முனைந்திருக்கின்றார்கள் ஆனதால் அவர்கள் யோசனை முடிந்து ஆய்ந்து
ஓய்ந்த பிறகு நமது லட்சியத்திற்கு ஏதாவது வகை உண்டா என்று முயலு வோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.09.1930
குடி அரசு - 1930 (2) 162
குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம்
சகோதரிகளே! சகோதரர்களே!
இங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஒரு அம்சமாகிய மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்
னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதிதாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை.தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ அதுபோலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் பட வேண்டியதில்லை. ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண்ணையோ, பல பெண்களையோ வைப்பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ
வந்துள்ள, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வரு கின்றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு
புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லுகின்றோமே தவிர: மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் நடப்புக்கு விரோதமாகக் கூட சில வகுப்பு களில் இருந்ததுமான தத்துவங்கள் எதுவும் அதிலில்லை.
நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கவழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண் ணை அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசை படுகிறான். அவற்றில் சிலது அனுபவிக்க கிடைத்து விட்டால் சிலசமயங் களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுப வித்ததாக மகிழ்ச்சியடைவதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமை யையும் உற்சாகத்தையும் அடைகின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசியமாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்
தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான்மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை..
ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திருமண விஷயத்
தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண்ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது.
பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவை தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்க ளுக்குச் சுதந்திரம் ஏற்பட்டு விட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய்விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை? அவர்களுக்குள்ள சுதந்திரத் தினால் தங்களின் அப்படிபட்ட ஒரு நிலையைக் காட்ட ஒருபெயரை: பழக்கத்தில் கொண்டு வருவதற்கில்லாமல் செய்து விட்டார்கள்.
சாதாரணமாக கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புருஷனை விதவன் என்று கூப்பிடவேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் என்கின்ற பதங்கள். இருக்கின்றன. இந்த விடோ என்பதும் விதவை என்பதும் ஒரு சொல்
மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வடமொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தைகளுக்குள்ள சம்மந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமது புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாத தால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூட்சிதான் விதவைத் தன்மைக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம்
பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.
அன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால்
ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக்கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண் ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்
றும். தவிரவும் பெண்ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச் சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000 ரூ.பெருமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும்.
குடி அரசு - 1930 (2) 164
தவிரவும் இம்மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.
சாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம்படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டிமார்கள், சில வகுப்புப் பண்டாரங்கள் என்பவர்கள், சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந் தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத்தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய
வகுப்புகளில் சிலவற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருதுகின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுபவத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்றவை களில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதைக் கவனியா மல் இப்போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கின்றது. எனது தங்கை பெண்ணுக்கே விதவை மணம் செய்யப்
பட்டிருக்கின்றது. ஆகவே இம்மாதிரி மணம் புதியதென்று சொல்வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமான தென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப்பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுயமரியாதை இருக்கும் என்றும் நான் கருதமாட்டேன்.
சாதாரணமாக நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதா வது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப்படுகின்றனர். சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் படியான எந்த கொள்கைகளும், சட்டங்களும் ஒரு நாளும் சரியாக நடைபெறவே நடை பெறாது. அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவ
னுக்கு நல்ல போஷனையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத்
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக் கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்துவிடும் என்று தான் கருதுகிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.
தவிர சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசியமான அதிகச் செலவும் அதிகக் காலக் கேடும் இருக்கக்கூடாது என்பதும் தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கிய தத்துவமாகும்.
ஆதலால் உள்ள சடங்குகளையும், பணச்செலவையும், காலச் செலவையும் குறைத்து நடத்துவதே இத்திருமணத்தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும் இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என்பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது சுய மரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்டதென்றும் “ஆத்மார்த்த”த்திற்கு என்றும், அதில் ஏதோ “தெய்வீகம்” இருக்கிறதென்றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந்திரங்களையும், இயற்கை இன்பங்களை யும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டு மென்பதே முக்கியமானதாகும்.
தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரணமாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறிவற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன்படும் படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத்தையும் இப்படிப் பட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியநானது மனிதனை வெறும் பிணமாக்குவதற்கும் அடிமையாக்குவதற்குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை. தெய்வீகக் கலியாணத்தில், ஆத்மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜமான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற்படுத்த வேண்டும். தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமுண்டா? ஆத்மார்த் தத்தில் ஆண்: ஆத்மா; பெண் ஆத்மாவென்கின்ற பிரிவுண்டா?'
குடி அரசு - 1930 (2) 166
எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழாக்கப்பட்டுவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதை தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லையென்பதுதான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப்பிராயம். இம் மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதற்கு அவர்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சியத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத்திற்காகவே அழைக்கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக்கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டியதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்ன வென்றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொருப்போ உரிமையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது பெண் தான் புருஷ னுக்கு அடிமையாயிருக்க கடவுளால் பிறப்பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சி யற்ற ஜீவனென்றோ “கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்,” அவன்
அடித்தாலும், உதைத்தாலும் அன்னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கணவனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளுகிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க
முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ, உணர்ச்சி யிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ணவேண் டியது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்கள்தான் பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்தவர்களாவார்கள். முக்கியமாய் இதற்காக வேண்டியேதான் ஆத்மார்த்தம் தெய்வீகம் என்பவைகளிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப் படுத்தப்படுகின்றோம். இது போலவே மணமகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டென்றும், தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின் றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடி
யும் என்றும் கருதி அனுபவத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண்டும். தனக்கு அடிமைக்காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டோமென் கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டுமானால் விபசார. மென்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டுமானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப்பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும், கட்டாயம் ஏற்பட்டு விடும்.
ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங்களே பெரிதும் மனிதத் தன்மைக்கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூராய் இருந்து வரு கின்றது.
பெண்களைப் பெற்றோர்களும் ஒரு விஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.
அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒரு விதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும்
கற்றுக் கொடுக்கக்கூடாது.
பெண்ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவதாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத்தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண் களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக் குணங்களோ வேண்டுமென்று கருதும் படி
கற்றுக் கொடுக்கக் கூடாது.
அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனை தெரிந்தெடுத்துக் கொள்ள பெண்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண்கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.
இப்போது பெரும்பான்மையான தெய்வீகத் திருமணங்கள் என்பது
வெறும் அடிமைத் திருமணமாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுப்பொறுப்பும் விடப்பட்டதாகவும், நிற்பந்தத்திற்கும், ஒரு கட்டுப் பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந்தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.
இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையானாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.
இதற்கு முன் பக்குவமான “சாந்தி முகூர்த்தமான” விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.
குடி அரசு - 1930 (2) 168
வேறு ஜாதியில் ஒரு “விதவை” யைக் கல்யாணம் செய்து கொண்ட போது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப்பிராயத்தைக் கண்டு பயப்படக் கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது. ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களா கவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அடிமைகளுக்கு லக்ஷணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் “முடியாது போ, உன் வேலையை பார்” என்றுதான் சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத் தால் பெரிய மூட்டையாய் இருந்தாலுங் கூட “தூக்குவதற்குள் என்னையா அவசரம்” என்பார்கள்.ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டுமானால் அமிதமான கொள்கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப் போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டிருப்பார்கள்.
குறிப்பு :- நாகர்கோவில் கோல்டன் தியேட்டரில் திரு. நல்லசிவனுக்கும் திருமதி. கமலாம்பாளுக்கும் 10-09-1930 காலை நடைபெற்ற விதவை மறுமணத்தில் தலைமை ஏற்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 28.09.1930
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நாஸ்திகம்
உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது அநேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால் அவ்வார்த் தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கொள்வதேயாகும். மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும் வெறுப்புக் கொள்ளவும் புரோகிதர்கள், பாதிரிகள், மெளல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டார்களே தவிர கடவுள் என்பதைப் பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப் படாமல் இருப்பதோடு அது (கடவுள் என்பது மனதிற்கும்
புத்திக்கும் எட்டாதது என்பதாகவும் அப்படிப்பட்ட ஒன்றை நம்பித்தானாக வேண்டும் என்றுநிர்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது. இப்படியிருந்த போதிலும் என்றையதினம் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்று கற்பிக்கப் பட்டதோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதம் ஏற்பட்டு வெகு காலமாகவே இவ்வாதப் பிரதிவாதம் நடந்து வருவதோடு நாளது வரை: முடிவுபெற முடியாமலே இருந்து வருகின்றது.
உதாரணமாக, கடவுள் இல்லை என்று சொல்லும்படியான பல மதங்களும் கூட உதாரணமாக சூனிய மதம், நிரீஸ்வர மதம், உலகாயுத மதம், நாஸ்திக மதம் என்பது போன்ற பல உண்டு என்றாலும் கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்கின்ற ஒரு கிளர்ச்சி வலுத்து அதை அமுலுக்குக் கொண்டு வந்து மற்றும் உலகமெங்கும் அக்கொள்கையைப் பரப்ப, பிரசாரமும் செய்ய ஏற்பாடுகள் சாதாரணமாக இந்த இருபதாவது நூற்றாண் டில்தான் தைரியமாகவும், பலமாகவும் செய்ய முடிந்து வருகின்றதென்ப தாகவும் தெரியவருகின்றது.
ஏனெனில் இதுவரையில் உலகத்தில் எந்த நாடும் பெரிதும் புரோகிதக் கூட்டத்தாரின் ஆதிக்கத்திலும், கடவுள் பிரசாரத்தின் பேரால் கெளரவமும்,
வயிற்றுப் பிழைப்பும் நடத்தி வந்தவர்களின் ஆதிக்கத்திலும் இருந்து வந்ததாலும், உலகத்திலுள்ள அரசாங்கங்களும் மதத்துடனும், கடவுளு டனும் பிணைக்கப்பட்டே இருந்ததாலும் கடவுளை மறுக்கும் அபிப்பி ராயத்திற்கோ
குடி அரசு - 1930 (2) 170
கூட்டத்திற்கோ நாட்டில் ஆதரவு இல்லாமல் போனதோடு அவர்கள் மீது தோஷமும் கற்பிக்கப்பட்டு அந்த அபிப்பிராயம் வலுக்க முடியாமலும், பரவ முடியாமலும் போய் விட்டது. ஆனால் இந்த நூற்றாண்டில் கடவுள் மறுப்பு என்பது பாமர மக்களுக்குள் ஒருவித வெறுப் பும், அதிருப்தியும் தரக்
கூடியதாயிருந்தாலும் மற்றும் கடவுள் பேரால் அல்லது கடவுள் சம்மந்தமான மோக்ஷம், சாஸ்திரம், கதை, புராணம், பிரசாரம் ஆகியவைகளின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு மிகுதியும் ஆத்திரத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் நடுவு நிலையிலுள்ள அறிஞர்களால் இவ்விஷயம் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஆலோசிக்கப்பட்டு வருவதும் அவ்வித அபிப்பிராயக் காரர்களைப் பெரிதும் அறிவாளிகள் என்றும், ஞானவான்கள் என்றும் சொல்லுவதும் மதிப்பதுமாய் இருந்து வருகின்றன. மேல்நாட்டு அறிவாளிகள் என்று சொல்லப்படு பவர்களுக்குள் இன்றும் அநேகர்கள் நாஸ்திகர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அது மாத்திர
மல்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ருஷியா, சைனா முதலாகிய இடங்களின் முக்கிய பட்டணங்களில் கடவுளை நிலைப்படுத்தும் மதங்களை. எதிர்க்கவும் நாஸ்திகத்தைப் பரப்பவும் என்றே பல ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப் பட்டு அவற்றிற்காக பத்திரிகைகள் துண்டுப் பிரசுரங்கள் முதலியவைகள் செய்யப்பட்டும் வருகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில் நியூயார்க் என்கின்ற பட்டணத்தில் “நாஸ்திகத்தை உலகமெங்கும் வியாபிக்கச் செய்வதற்கான சங்கம்” என்னும் பெயரால் ஒரு ஸ்தாபனத்தை ஏற்பாடு செய்து அதன் மூலம் 3, 4 வருஷங் களாக நல்ல வேலைகள் மும்முரமாய் செய்யப்பட்டு வருகின்றன. அங்கி
ருந்து நமக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையின் படி அச்சங்கமானது பிரசாரத்திற்காகவும் துண்டு பிரசுர வினியோகத்திற்காகவும் வருஷம் ஒன்
றுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாயுக்கு மேலாகவே செலவு செய்து வந்திருக்
கின்றது. இப்போது இந்த வருஷத்தில் “கிறிஸ்துவ மதம் வெடிப்புக் கண்டு விட்டது” என்கின்ற பேராலும் “மதம் என்றால் என்ன?” “கடவுள் என்றால் என்ன?” “கடவுள் இல்லாத முற்போக்கு” ஆகிய இவை போன்ற தலைப்பு களால் பல லக்ஷக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வெளியாக்கப் பட்டிருப்பதாகக் காணப்படுகின்றது. சங்க அங்கத்தினர்கள் வருஷத்திற்கு வருஷம் 100 க்கு 50 வீதம் உயர்ந்துக் கொண்டு வருவதுடன் பல இடங்களில் கிளை ஸ்தாபனங்கள் ஏற்பட்டு வெளிநாடுகளிலும் கூட பிரசாரங்கள் செய்யப்பட்டு வருவதாய்க் காணப்படுகின்றது. வேறு பாஷை கள் மூலமும் சைனா முதலிய இடங்களுக்கு ஆட்களை அனுப்பி இது போன்ற பிரசார
மும் துண்டுப் பிரசுரங்களும் நடைபெற்று வந்திருப்பதாகவும் காணப்படு வதோடு ஒவ்வொரு கனவான் ஒவ்வொரு வேலையை ஏற்றுக் கொண்டு
திருப்தி தரத்தக்க அளவு பிரசாரம் செய்திருப்பதாயும் காணப்படுகின்றது. இதன் தலைமை காரியஸ்தலம் அமெரிக்க நியூயார்க் பட்டனத்தில் 14 வது
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வீதி 307 - E நெம்பர் கட்டிடத்தில் நிருவப்பட்டிருக்கின்றது. இதில் சேரவிரும்பும் அங்கத்தினற்கு வருட சந்தா ஒரு டாலர் அல்லது மூன்று ரூபாயாகும் என்பதாகவும் காணப்படுகின்றது.
இப்படியே லண்டன் பட்டணத்தில் சில ஸ்தாபனங்கள் அதாவது “தாராள நினைப்புக்காரர்கள் சங்கம்” என்றும் “அறிவாளிகள் சங்கம்”
என்றும் “உண்மை நாடுவோர் சங்கம்” என்றும் பல சங்கங்கள் ஏற்படுத்தி அது போலவே பிரசாரமும் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் சில
துக்கு வயது 40, 50க்கு மேல் ஆயிருந்த போதிலும் அவைகள் இப்போது தான் மிக்க பிரபலமாயும், செல்வாக்காயும் நடைபெற்று வருகின்றதாக அறிவிக்கப்படுகின்றன.
இவற்றில் கலந்துள்ள நபர்களில் உலகத்திலே மிக்க அறிவாளிகள் ராஜதந்திரிகள் என்று சொல்லப்பட்ட பெரியார்களே அதிகமாயிருக்கின் றார்கள். ஆகவே நாஸ்திகப் பிரசாரம் உலகில் சகஜமாகவும் செல்வாக் காகவும் நடைபெறுகின்றன என்பதை தெரிவிக்கவே இவற்றை மேற் கோள்களாக குறிப்பிட்டோம்.
இனி அதனால் ஏற்படும் கெடுதி என்ன? நன்மை என்ன? என்பவைகளைப் பற்றி யோசிப்போம். சாதாரணமாக மனிதன் நாஸ்திகனா
யிருந்தால் அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவனாயிருந்தால் ஒரு கட்டுப் பாட்டிற்கு அடங்கி நடக்க மாட்டான் என்றும் திருட்டு, பொய், மோசம், ஒருவன் சொத்தை ஒருவன் அபகரித்தல், முறை தவரி கலத்தல் மக்களை இம்சித்தல் முதலாகிய காரியங்கள் செய்யப் பயப்பட மாட்டான் என்றும் சொல்லப்படுகின்றது. இதைப்பற்றி கவனிக்குமுன்பு உண்மையான கருத்தில் இந்த கடவுள் நம்பிக்கை உள்ள மனிதன் எவனாவது உலகில் இருக்கின்றானா என்பதை முதலில் யோசிப்போம்.
சாதாரணமாக கடவுள் என்கின்ற பதத்திற்கு மக்களில் பெரும் பான்மையோர்கள் கருதிக் கொண்டிருக்கும் கருத்து என்ன வெனில் சர்வ சக்தியும் அதாவது உலகம் உலகத்திலுள்ள ஜீவராசிகள், புல் பூண்டு தாவரங் கள்முதலியயாவும் தனது இச்சையால் உண்டாக்கப்பட்டுதனதுசக்தியால் இயங்கச் செய்யப்படுகின்றதானதும் எங்கும் வியாபித்திருப்பதானதும் சர்வ ஜீவராசிகளையும் ரக்ஷிக்கும் தன்மையுடையதானதும் எல்லாவற்றையும் சமமாய்ப் பார்ப்பதானதும் சுருக்கமாய் சொல்வதனால் அவனன்றி (அக் கடவுள் சித்தம் அன்றியில்) ஒரு அணுவும் அசையாததான சக்தியுடைத் தானது என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இக் கருத்து சரியா, தப்பா என்று யோசிப்பதற்கு முன்னும் இப்படி ஒரு வஸ்த்து இருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்வதற்கு முன்னும் இப்படி மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதானது உலகத்திற்கு நன்மையா? தீமையா? என்று முடிவு செய்வதற்கு முன்னும் இந்தப்படி உலகத்தில் எந்த மனிதனாவது உண்மை
குடி அரசு - 1930 (2) 172
யில் நம்பி இருக்கின்றானா? அந்தப்படி நம்பி இருப்பதற்குத் தகுந்த படி அவனது மனம், மெய், மொழி ஆகியவைகளால் ஏற்படும் நடவடிக்கைகள். காணப்படுகின்றனவா? அதாவது எந்த மனிதனு டைய நடவடிக்கையில் இருந்தாவது மேல்கண்ட சக்தியும் குணமும் கொண்ட ஒரு வஸ்துவை நம்பி நடக்கின்ற மனிதனின் நடவடிக்கைகள் இவை என்று கருதும்படியாக இருக்கின்றனவா? என்பதை யோசிப்போமானால் இதுவரை ஒரு மனித னையாவது அம்மாதிரி நம்பிக்கையின் மீது நடக்கின்றான் என்பதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் அந்தப்படி ஒரு கடவுள் இருப்பதாக ஒரு மனிதன் கூட தனது வாழ்க்கையில் எண்ணி இருக்க முடிவதில்லை என்றும்தான் சொல்ல வேண்டி இருக்கின்றதே தவிர வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
இது அதாவது இப்படிச் சொல்லுவதானது சாதாரண மக்களிடையே
மாத்திரமல்லாமல் கடவுள் பிரசாரம் செய்பவர்களிலாவது கடவுளைக் கண்ட வர்களாக சொல்லப்பட்டவர்களிலாவது கடவுளுக்குச் சமமாகக் கருதும் சமயாச்சாரிகள், மதத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனத் தலைவர்கள் முதலாகிய வர்களுக்குள்ளாவது நாஸ்த்திகத்தைக் கண்டு பயந்து நடு நடுங்கித் துயரப் பட்டு கண்ணீர் வடிக்கும் ஆஸ்திகப் பண்டிதர்கள், சாஸ்திரி கள், வைதீகர்கள் முதலாகியவர்களுக்குள்ளாவது மற்றும் மகாத்மாக்கள் வேதாந்திகள் பெரி யோர்கள் முதலியவர்களுக்குள்ளாவது இதுவரை ஒருவராவது இருந்த தாகவோ, இருப்பதாகவோ சொல்லுவதற்கில்லையே.
ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு தனி மனிதனென்றும் தனக்காகத் தான் செய்யவேண்டிய காரியம் பல உண்டு என்றும் அவற்றை தினமும் செய்வதாகவும், அவனவன் இஷ்டப்பட்டபடி செய்து கொண்டும் அதனதன் பலனை அடைந்து கொண்டும், அது போலவே மற்றவர் களையும் செய்யும் படி தூண்டிக்கொண்டும் மற்றவர்கள் செய்வதில் குண தோஷம் கற்பித்துச் சொல்லிக் கொண்டும், அதற்காக விருப்பு வெறுப்புக் காட்டிக் கொண்டும், மகிழ்ச்சி துக்கமடைந்து கொண்டும் தான் இருக்கிறானே ஒழிய கடவுளின் சர்வசக்தியைப்பற்றியோ, சர்வவியாபகத்தைப் பற்றியோ, சர்வ தயாபரத்தைப் பற்றியோ, சர்வ சமத்துவத்தைப் பற்றியோ நம்பி இருப்பவன் ஒருவனும் இல்லை யென்று தான் சொல்ல வேண்டும்.
ஆகவே இதிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வஸ்து இல்லை என்றும் இருப்பதாகவும் யாரும் நம்பி இருக்கவில்லை என்றும்தான் முடிவு கட்ட வேண்டியிருக்கின்ற தென்பது ஒரு பக்கமிருந்தாலும் அப்படி ஒன்று இருப்பதாக கற்பித்து நம்பச் செய்வதினாலாகிலும் காரியத்தில் ஏதாவது, அதாவது கடவுள் நம்பிக்கையினால் ஏற்படக் கூடும் என்று கருதுகின்ற, முன் சொன்ன காரியங்களாவது நடக்கின்றதா என்று பார்த்தால் திருடாதவன், பொய் சொல்லாதவன் பிறர் பொருளை வஞ்சிக்காதவன் முறை தவறி கலவி செய்யாதவன், பிறருக்கு இம்சை கொடுக்காதவன் முதலான காரியங்கள்
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
செய்யாதவன் என்பவன் ஒருவனைக் கூட காண முடிவதில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. அன்றியும் திருட்டு, வஞ்சகம், பொய், முறை தவறிகலத்தல் முதலாகிய காரியங்கள் எவை என்று தீர்மானிப்பதே கஷ்ட மான காரியமாயிருக்கின்றது என்றாலும் மக்கள் எதை எதை மேல் கண்ட மாதிரிகுணங்கள் என்று கருதுகின்றார்களோ அதைச் செய்யாமல் இருக்க இந்த எண்ணத்தையும் நம்பிக்கையும் உண்டாக்குவதாலோ நிலை நிருத்து வதாலோ முடிகின்றதா? என்பதுதான் இங்கு யோசிக்கத் தக்கதாகும்.
இது ஒரு புரமிருக்க மேல்கண்ட அதாவது கடவுள் என்பதற்குக் கற்பிக்கப்பட்ட குணங்கள் உடையதான ஒரு கடவுள் என்பது இல்லை என்றும், அல்லது இருக்கமுடியாது என்றும் கருதுகின்றவர்களிடத்திலாவது அந்தப்படி கருதிக் கொண்டிருக்கின்றார்கள் என்று பிறரால் கருதப்படுகின்ற வர்களிடத்திலாவது முன் சொல்லப்பட்ட திருட்டு பொய் வஞ்சகம் பிறரை: இம்சிப்பது முதலிய குணங்கள் கடவுள் நம்பிக்கைக் காரர்களை விட (ஆஸ் திகர்களைவிட) அதிகமாய் இருப்பதாகவாவது, அல்லது பிற மக்களுக்கு ஆஸ்திகர்களைப் போன்ற நன்மை செய்ய வில்லை என்றாவது சொல்ல முடியுமா என்று பார்த்தால் அதுவும் முடியாத காரியமாய்த்தான் காணப் படுகின்றதே ஒழிய வேறில்லை.
மக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேல்கண்ட விதமான காரியங் களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டு விட்டு தனக்கே புரியாத படி ஒன்றை நினைத்துக் கொண்டு
“கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும்,
“கடவுளை ஒப்புக் கொள்ளுகின்றாயா இல்லையா” என்று கேட்பதும்,
“கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒருவருக்கொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்?”
“ஓருவர் பணக்காரனாகவும் ஒருவர் ஏழையாகவும் ஏன் இருக்க வேண்டும்?”
“ஒருவர் கூன், குருடு, மொண்டி, குஷ்ட ரோகி முதலியவனாயும், ஒருவன் நல்ல திட சரீரியாகவும் ஏன் இருக்க வேண்டும்?”
“ஒருவனுக்கு ஏன் பத்துப் பிள்ளை? ஒருவனுக்கு ஏன் நாலு பிள்ளை? ஒருவனுக்கு ஏன் பிள்ளை இல்லை?” என்றும்
இருவர் ஒரே காலத்தில் தனித்தனியாக வியாபாரம் ஆரம்பித்தால் ஒருவர் நஷ்டமும், ஒருவர் லாபமும் ஏன் அடைவேண்டும்? என்பது போன்ற
குடி அரசு - 1930 (2) 174
கேள்விகள் கேட்டு அதன் மூலம் மேல்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களை பகுத்தறிவு இல்லாதவர்கள் ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.
இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலில் வாயை அடைக்க வேண்டுமானால் இம்மாதிரியாக தோற்றங்களில் ஒன்றுக் கொன்று வித்தியாசங்கள் காணப்படுவதாலேயே (மேல் கண்ட குணமுடைய! கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லிவிடலாம்.
எப்படியெனில் சர்வ சக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து சர்வத்
திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்
தையும் ஒன்று போலவே சிருஷ்டித்திருக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வசக்தியும் சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்டகடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பது தான் பதிலாகும்.
ஏனெனில், மொண்டிக்கும், முடவனுக்கும், நல்லவனுக்கும், கஷ்டப் படுபவனுக்கும், கஷ்டப்படுத்துகிறவனுக்கும் “கடவுளே” காரணஸ்தனா யிருந்தால் கடவுளை சர்வ தயாபரத்துவமுடையவனென்றும், பாரபக்ஷ மில்லாத சர்வசமத்துவ குணமுடையவனென்றும் எப்படிச் சொல்லமுடியும்? இந்தப்படி பகுத்தறிவைக் கொண்டு சொல்லக்கூடிய சமாதானங்கள் ஒரு புறமிருக்க ஆராய்ச்சியைக் கொண்டு அறியக் கூடிய சமாதானங்களைப் பற்றி
சற்று கவனிப்போம். ஒரே கையால் கை நிறைய அரிசியை அள்ளி அள்ளி வேறாய் வைத்து ஒவ்வொரு தடவை அள்ளிய அரிசியைத் தனித் தனியாய் எண்ணிப் பார்த்தால் அவற்றுள் ஒன்றுக் கொன்று எண்ணிக்கை வித்தியாசமிருப்பானேன்? அதே மனிதன் அதே கையால் அதே நிமிஷத்
தில் அதே குவியலிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படு கின்றது? ஒரே பூமியில், ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதை கள் சில முளைத்தும், சில முளைக்காமலும் முளைத் தனவைகளில் சில வளராமல் கூளையாகவும், சில அதிக உயரமாகவும், சில அதிகமான மணி கள் கொண்ட கதிராகவும், சில குறைவான மணிகள் (தானியங்கள்) கொண்ட கதிராகவும்,
சில முளைத்து நன்றாய் தளைத்தும் ஒரு மணி கூட இல்லாத வெறும் கதிராகவும் இருக்கக் காரணம் என்ன? ஒருவினாடியில் ஒருபூமியில் நட்ட
செடிகள் ஒன்று பல கிளைகளுடனும், ஒன்று சுவல்ப்ப கிளைகளு டனும் வளருவதும் ஒன்று பதினாயிரக்கணக்காக காய்ப்பதும், ஒன்று நூற்றுக் கணக்காக காய்ப்பதும், ஒன்று பூ விட்டு எல்லாம் கருகி உதிர்ந்து விடுவதும் ஒன்று பூ விடாமலும் பிஞ்சு விடாமலும் வரடாயிருப்பதும் என்ன காரணம்? கடவுள் ஒருவர் இருந்தால் இவைகள் எல்லாம் அதனதன் இனத்தில் ஏன் ஒன்றுபோல் இருக்கக் கூடாது?
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஒருசமயம் கடவுளே இந்தபடி செய்திருப்பார் என்று சொல்வதானால் அம்மரம் செடி தானியம் முதலியனவைகள் இப்படி பலன் அடைவ தற்கு காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ அதுதான் மனிதர்களைப் பற்றிய சம்மந்தமான கேள்விகளுக்கும் சமாதானம். என்பது தானாகவே புலப்படும். (மறுபடியும் தொடரும்!
குடி அரசு - தலையங்கம் - 28.09.1930
குடி அரசு - 1930 (2) 176
கலக்டர் கவணிப்யாரா?
கோபிசெட்டிபாளையம் டிப்டி கலெக்டரவர்கள் தேவஸ்தான மரங் களை கள்ளுக்கு விடும்படி தர்மகர்த்தாக்களை நிர்பந்திக்கிறாரென்றும், கள்ளுக்கடைக்காரர்களுக்கு மரம் கிடைக்காவிட்டால் மணியக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவதாகச் சொன்னதாகவும் நம்பத்தகுந்த இடங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது. இது உண்மையானால் சர்க்காரிடத்தில் பொது ஜனங்களுக்கு துவேஷமும், பொது ஜனங்களு டைய வரிப்பணத்திலிருந்து வருடம் 4 லட்ச ரூபாய் செலவு செய்து சர்க்கா ரால் செய்யப்படும் மதுவிலக்கு பிரசாரத்தினிடத்தில் சந்தேகமும், கெட்ட எண்ணமும் ஏற்பட இடமுண்டாவதோடு சர்க்காருக்கு நல்ல பேர் கிடைக் கும் படியாகச் செய்யப்பட்டு வரும் பிரசார முதலியவைகளுக்கு இடஞ்சலும் ஏற்படுமாகையால் நமது ஜில்லா கலெக்டர் அவர்கள் தயவு செய்து இந்த விஷயத்தைக் கவனித்து இந்தப்படி நடப்பதை நிறுத்தவும். இந்தப்படிக் கில்லையானால் ஒரு அறிக்கை வெளியிடவும் முயற்சி செய்வாரென்று நம்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.09.1930
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வைசிறாய் பிரபுக்கு வேண்டுகோன்
லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்கமானது ஹிந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாச மென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத்தொகைக் கணக்கு கொடுக்கும் போது! ஹிந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகா தென்பது அதன் கொள்கை. ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ் கமிஷனரைக் கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும் பாதவர்களை கூறும்படி வற்புறுத்தலாகாதெனக் கேட்டுக் கொண்ட தற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங் கத்தார் வைசிறாய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:-
பற்பல மாகாணங்களிலுமுள்ள ஹிந்து சமூகத்தினரில் பலர் ஹிந்து மதத்துக்கு ஜாதி வித்தியாசம் அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு இந்து சமயத்தினர் முன்னேற் றமடைய முடியாமல் போய்விட்டதென்றும் உணர்ந்திருக்கின்றனர். இத்த கைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும். இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது. அரசியல், சமூக விஷயங்களில் இப்போது தோன்றியிருக்கும் புத்துணர்ச்
சியால், பழைய காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சில ஆசாரங்கள் இப்போது அவசியமில்லையென்றும், அவற்றால் தற்காலம் கஷ்டங்களே ஏற்படுகின் றன வென்றும் பலர் நம்புகின்றனர். ஆதலின் அடுத்த சென்சசில் தங்கள். ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது பலருடைய ஆவல். ஆதலின் தாங்கள் அப்படிப்பட்டவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதென அவ் விலாக்கா அதிகாரிகளுக்கு உத்திரவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். இத்தகைய அனுமதி முன்னரே சீக்கியர்களுக்கும், பாஞ்சாலத்திலுள்ள ஆதி
இந்துக்களுக்கும் அளித்திருப்பதால் மற்ற இந்துக்களுக்கும் இந்த அனுமதி குற்றமாகாது. ஜாதி என்று கேட்டிருக்கும் இடத்தில் “ஒன்றுமில்லை” என்று குறிப்பிட்டுவிடுவதும் தவறாகாது. ஆதலின் தாங்கள் சென்சஸ் எடுக்கும் அதிகாரிகள், அல்லது குமாஸ்தாக்கள் ஜாதியை கூறும்படி கட்டாயப்படுத்த லாகாதென்றும், ஜனங்கள் சொல்லாமலிருக்கும் போது அவர்களாகத் தங்க
குடி அரசு - 1930 (2) 178
ளுக்குத் தோன்றியதைப் பதிவு செய்யாமலிருக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்து இந்து சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலு வீர்களென்று எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 28.09.1930
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நீலாவதி - நாம சுப்ரமணியம் திருமண அழைப்பு
ஐயா:- “குடி அரசு”, “திராவிடன்”, “குமரன்” பத்திரிகைகளுக்கு வியாசம் எழுதிவரும் மதிநிறைச் செல்வி திருச்சி
நீலாவதிக்கும்
மதிநிறைச் செல்வன் கொத்தமங்கலம்
ராம சுப்ரமணியத்திற்கும்
பிரமோதூத ஹு ம் புரட்டாசி மீ£19-ம் 6-10-30) தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திருச்சியில், தென்னூர் ரோட் 4 நெம்பர் இல்லத்
தில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருக்கிறபடியால், அதுபோது தாங்கள். தயவுசெய்து தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எழுந்தருளி சாக்ஷியளிக்க விழைகின்றோம்.
ஈரோடு ஈ. வெ. ராமசாமி
1-10-30 ஈ. வெ. ரா. நாகம்மாள்
குடி அரசு - அழைப்பு - 05101930
குடி அரசு - 1930 (2) 180
திரிகள்
அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத் தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி.முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக்கூடும்.
யார் யார் “தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக் கிறாரோ'” என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன்
தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் “பிரம்மா எழுதின சங்கதி” உத்தியோகம் போன பிறகுதான் தெரியும்.
எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ்வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக் காரர். என்று தான் சொல்ல வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும்
நபர்களும் கூட தாங்கள் நியமனம் ஆன பிறகுதான் தங்களுக்கு இல்லை என்று முடிந்த பிறகும்தான் கவர்னரையும் பிரமாவையும் போற்றவோ, தூற்ற வோ போகிறார்கள்.
இந்த மாதிரி மந்திரிகள் நியமனமாவதும் ஏமாற்றமடைவதும், வெறும்
மந்திரி உத்தியோகத்திற்கு வருகிறவர்களுடையவும், ஏமாற்றமடைகிறவர் களுடையவும் “தலையெழுத்துக்களை” மாத்திரம் பொறுத்ததாய் இல்லா மல் இவர்கள் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடையவும் வரக் கூடாது என்று எதிர்பார்ப்பவர்களுடையவும், இவர்களால் பிழைக்கலாம், இவர்களால் கெட்டுப் போகக்கூடும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களு டையவும் “தலையெழுத்துக்களையும்” பொறுத்திருப்பதால் இந்த தலை யெழுத்துக்கள் எப்போதும் பலருக்கு மிக்க குழப்பத்தையே தந்து கொண்டே வருகின்றன.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.10.1930
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
Salumaigi புத்தி வருமா?
பெண்களுக்க வசாத்துரிமை
இந்திய நாட்டில் அநேகமாய் உலகத்தில் வேறு எங்கும் இல்லாததும் மனிதத்தன்மைக்கும் நியாயத்திற்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் அவற்றுள் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லவென்பதையும், மனிதத் தன்மையும் நாகரீகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டுமானால் மற்றும் உலகிலுள்ள மற்ற பெரும்பான்மை யான நாட்டார்களைப் போலவே அந்நிய நாட்டினர்களின் உதவியின்றி தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆகஷி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் முக்கியமானதாகவும் அவசரமாய் தீர்க்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம். அவைகளில் முதலாவது எதுவென்றால் இந்திய மக்களிலேயே பல கோடி ஜன சங்கியையுள்ள பல சமூகங்களை பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து அவர்களை பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும்.
இரண்டாவதானது எதுவென்றால் பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்தரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க “கடவுளாலேயே” சிருஷ் டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாகும்.ஆகவே மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரை க்ஷணம் கூட இருக்க விடக் கூடாதவைகளாகும்.
இந்தக் காரணத்தாலேயேதான் நாம் மேற்கண்டவிஷயங்கள் இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் இந்தியாவுக்கு பூரண சுதந்திரம் கேட்ப தோ இந்தியாவின் பாதுகாப்பையும் ஆகஷி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் தாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம் என்று சொல்லுவதோ மற்றும் இந்தியாவுக்கு அந்நியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாமென்று
குடி அரசு - 1930 (2) 182
சொல்லுவதோ ஆகிய காரியங்கள் முடியாததென்றும் அவை சுத்த அறியாமைத்தனமானதென்றும் இல்லாவிட்டால் சுயநல சூகஷியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு.
இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்கு பயமோ சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான் இவ்வித முட்டாள்தனமானதும் சூக்ஷி யானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களாயு
மிருக்கின்றோம்.
ஏனெனில் தங்கள் சமூகத்தாரென்றும் தங்கள் சகோதரர்களென்றும் ஜீவகாருண்யம் என்றும் கூட கருதாமல் தங்கள் நாட்டு மக்களையே சுதந்திரமளிக்காமல் மனிதர்கள் என்று கூட கருதாமல் அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் மக்களிடம் மற்றும் அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்தையோ, விடுதலையையோ ஒப்புவிப்பதென்றால் கசாப்புக் கடைக்காரரிடம் ஆடுகளை ஒப்புவித்த தாகுமே தவிர வேறல்ல என்று கருதுவதால்தானே ஒழிய வேறல்ல. இந்தத் தத்துவ மறியாத சில தீண்டப்படாதவரென்று தாழ்த்தப்பட்ட மக்களும் சுதந்
திரம் அளிக்கப்படாதவர்கள் என்று அடிமைப்படுத்தப்பட்ட பெண்களும் தங்களுக்கு மற்றவர்களால் இழைக்கப்பட்ட கொடுமையையும் இழிவை யும்
கருதிப் பாராமல் “இந்தியா சுதந்திரம்” “விடுதலை” என்னப்பட்ட கூப்பாடுகளில் கலந்து கொண்டு தாங்களும் கூப்பாடு போடுவதைக் காண் கின்றோம். ஆனாலும் அவர்களுக்கு உண்மை சுதந்திரம் விடுதலை என்ப வைகளின் பொருள் தெரியாததாலும் தெரிய முடியாமல் வைத்திருந்த வாசனையினாலும் அப்படி அறியாமல் திரிகின்றார்கள் என்றே கருதி இருக்கின்றோம்.
தீண்டாமை என்னும் விஷயத்தில் இருக்கும் கொடுமையும், மூடத் தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால் அதை மன்னிக்கவோ, அலட்சியமாய் கருதவோ “நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இப்போது அதற்கு என்ன அவசரம்” என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடந் தருவதில்லை. ஒருவன் அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால் இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அநுபவிக்கும் கொடுமைகள் என்ப வைகள் போதாது என்றும் சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும் சதா ராணுவச் சட்டம் அமுலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால்தான் இம்மாதிரி கொடுமைப் படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து புத்தி வருமென்றும் நமக்கு சிற்சில சமயங்களில் தோன்று வதுமுண்டு. ஆனால் இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல் மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால் இன்னமும் எவ்வளவு இழிவும்
183 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான கஷ்டத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும் என்றா
லும் இந்நிலை மாறுதலடையக்கூடும் என்ற உறுதியை உண்டாக்கத் தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.
அடுத்ததான பெண்கள் விஷயத்திலும் அவர்களுடைய சுதந்திரத் தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமை யானது இது போலவே இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும் அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக் கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்ல வேண்டும்.
எப்படியெனில் இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள்,
சுதந்திரவாதிகள், சுயேச்சை வாதிகள், தேசீய வாதிகள், மக்கள் நல உரிமை: வாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும் மேற்கண்ட கூட்டத்தார்களில் 100க்கு 99 பேர்களுக்கு மேலாக சுயநலங்கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் இவர்களது முயற்சி இல்லாமலும் சில சமயங்களில் மேற்கண்ட சுயநல சூட்சிவாதிகளின் எதிர்ப்புக்கும் இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அநுபவிக்கும் மேற்கண்ட இருவகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப்
பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம். அதாவது இந்திய சுதேச சமஸ் தானங்கள் என்று சொல்லப்படும் மைசூர், பரோடா, காஷ்மீர், திருவநந்த புரம் முதலிய சமஸ்தானங்கள் இந்த கொடுமைகளை ஒழிக்க ஒவ்வொரு துறையில் ஒவ்வொன்றுமாக முன் வந்திருக்கின்றன என்பதாகும்.
காஷ்மீர் சமஸ்தானத்தில் எந்த விஷயத்திலும் தீண்டாமையைப் பாவிக்கக் கூடாதென்றும், தீண்டப்படாதார் என்னும் வகுப்பாருக்கு மற்றவர். களைப்போல் சகல உரிமையையும் அளிக்கப்பட்டிருப்பதோடு கல்வி விஷயத்தில் அவர்களுக்கு சாப்பாடுப் போட்டு இலவசமாய் கற்றுக் கொடுப் பதென்றும் தீர்மானமாயிருக்கும் விஷயம் முன் தெரிவித்திருக்கிறோம்.
மற்றும் பரோடா சமஸ்தானத்தில் பெண்கள் கல்யாண ரத்து விஷய மாய் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பற்றியும் முன்னர் தெரிவித் திருக்கிறோம். மற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களைக் கடவுள் பேரால் விபசாரிகளாக்கி கோவில்களின் ஆதரவுகளைக் கொண்டு அவ் விபசாரத்தன்மையை நிலை நிறுத்துவதையும் அநுபவத்தில் நடத்து வதையும் ஒழிக்கச் சட்டம் நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வந்ததை யும் முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம்.
இப்போது மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் விஷயமாக யோசனை செய்யப்பட்டு அவ் யோசனையை அரசாங்
குடி அரசு - 1930 (2) 184.
கமும் ஜனப் பிரதிநிதிகளும் ஒப்புக் கொண்டு அதற்காக ஒரு கமிட்டியும் நியமித்து அக்கமிட்டியார் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கலாம் என்ற தத்துவத்தை ஒப்புக் கொண்டு ஏகமனதான ரிபோர்ட்டு அனுப்பியிருப்ப
தாயும் “திராவிடனி”ல் வெளியாக்கப்பட்டிருக்கிறது.
அதன் முக்கிய பாகம் என்னவென்றால்:-
1 “பெண்கள் வாரிசு சொத்து உரிமை அநுபவிக்கத் தகுதியுடை
யவர்கள் அல்லவென்பது கொடுமையும் அநீதியுமாகும்.
2 பெண்கள் ஸ்ரீதனம், நன்கொடை முதலிய சொத்துக்கள் அடைந்து அவைகளை வைத்து நிர்வகித்து வரத்தக்கவர்கள் என்ற உரிமையும் வழமையும் இருக்கும்போது வார்சு சொத்து அடைய ஏன் தகுதி யுடையவர்களாக மாட்டார்கள்?
3. பெண்களுக்கு வார்சு சொத்துரிமை இல்லை என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாயிருப்பதோடு பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கே கேடாயுமிருக்கிறது.
4. ஆகவே இவற்றிற்கான சட்டம் செய்ய வேண்டியதும் பெண்கள். என்கின்ற காரணத்திற்காக அவர்களுக்கு எவ்வித சிவில் உரிமை யையும் தடுப்பது கூடாது என்று திட்டமாய் முடிவு செய்து விட வேண்டியதுமான காலம் வந்து விட்டது.
5. எந்த விதமான ஸ்ரீதன சொத்தையும் பெண்கள் தங்கள் இஷ்டப்படி விநியோகித்துக் கொள்ளலாம்.”
என்பவைகளாகும். இவைகள் ஒரு புறமிருக்க மற்றொரு விஷயத்
திலும் பெண்களுக்கு சில சுதந்திரங்கள் அளிக்க அக்கமிட்டி சிபார்சு செய்தி ருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
அவை யென்னவெனில்:-
“புருஷன் மேக வியாதிக்காரணாகவாவது கொடிய தொத்து வியாதிக் காரனாகவாவது இருந்தாலும்,
வைப்பாட்டி வைத்திருந்தாலும், தாசி, வேசி வீடுகளுக்குப் போய்க் கொண்டிருப்பவனாயிருந்தாலும், மறு விவாகம் செய்து கொண்டவ ணாயிருந்தாலும்,
கொடுமையாய் நடத்தினாலும், வேறு மதத்திற்கு போய்விட்டாலும்,
புருஷனைவிட்டுப் பிரிந்திருக்கவும் புருஷனிடம் ஜீவனாம்சம் பெறவும் பூரண உரிமையுண்டு.” என்பதாகும். அதோடு மேற்படி இந்த
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
விஷயங்களை அநுசரித்து ஒரு மசோதாவும் தயாரிக்கப்பட்டிருக்கின்ற தாகவும் காணப்படுகின்றது.
ஆகவே இந்தச் சட்டம் அநேகமாக கூடியசீக்கிரம் மைசூர் சமஸ் தான சட்டசபையில் நிறைவேறி சட்டமாக்கப்படுமென்றே நம்பலாம். இவற் றில் சொத்துக்களின் அளவு விஷயங்களில் ஏதாவது வித்தியாச மிருந்த போதிலும் பெண்களுக்கு சொத்துரிமை கொள்கையும் பெண்கள் புருஷனை விட்டு விலகி இருந்து கொள்ளும் கொள்கைகளும் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கும் விஷயம் கவனித்து பாராட்டத்தக்கதாகும்.
இந்தப்படி இந்தியாவிலுள்ள சுதேச இந்து சமஸ்தானங்களெல்லாம் ஒப்புக் கொண்டு சட்டம் செய்து கொண்டு வரும்போது பிரிட்டிஷ் இந்தியா விலுள்ள தேசீயவாதிகளுக்கும் பூரண சுயேட்சை வாதிகளுக்கும், ஜன நல உரிமைவாதிகளுக்கும் மாத்திரம் இக் கொள்கைகள் அவசியமானவைகள்' என்றோ சட்டம் செய்யத்தக்கது என்றோ தோன்றப்படாமலிருப்பதானது இக்கூட்டத்தார்களின் நாணயக் குறைவையும் பொறுப்பற்றத் தன்மை யையும்
நன்றாகக் காட்டுவதற்கு ஒரு அறிகுறியாகும்.
சாரதா சட்டம் (குழந்தை மணத் தடுப்பு சட்டம்) என்கின்ற ஒரு சட்டம் பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால் பாசாகியும் இந்திய தேசியவாதிகளாலும். பூரண சுயேட்சை முயற்சியாலும் அது சரியானபடி அமுலுக்கு வரமுடியா
மல் முட்டுக்கட்டைப் போடப்பட்டிருக்கிறது மிகவும் வெட்கக் கேடான
காரியமாகும்.
மற்றும் அச்சட்டத்தை ஒழிப்பதாக தெரியப்படுத்தினவர்களை ராஜாங்க சட்ட சபைக்கும் இந்திய சட்டசபைக்கும் மாகாண சட்டசபைக்கும் நமது பிரதிநிதிகளாக அனுப்பியது இன்னமும் மானக்கேடானக் காரிய
மாகும்...
நமது தேசியவாதிகள் என்னும் அரசியல் வாதிகள் இம்மாதிரி காரியங்களைச் சிறிதும் கவனியாமல் இருப்பதோடு நாம் ஏதாவது இவற்றிற்
காகப் பிரசாரம் செய்தால் “இது தேசியத்திற்கு விரோதம்” “சுயராஜ்யம் கிடைத்து விட்டால் பிறகு சட்டம் செய்து கொள்ளலாம்” என்று சொல்லு வதும் வேறு யாராவது இவைகளுக்காக சட்டம் செய்ய சட்டசபைக்கு மசோ தாக்கள் கொண்டு போனால் “சீர்திருத்தங்கள் சட்டங்களின் மூலம் செய்ய விட முடியாது. பிரசாரத்தின் மூலம்தான் செய்ய வேண்டும்” என்று சொல்லு வதுமான தந்திரங்களினால் மக்களை ஏமாற்றி காலம் தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.
ஆகவே இந்த நிலைமையில் முதலில் நமது கடமை என்ன என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 05.10.1930
குடி அரசு - 1930 (2) 186
திருச்சியில்
நீலாவதி - ராம ச௬ுய்ரமணரியம் திருமணம்
சகோதரிகளே! சகோதரர்களே!
இன்றைய தினம் நாம் நீலாவதி - ராமசுப்பிரமணியம் திருமணத்தை
முன்னிட்டு இங்கு கூடியிருக்கிறோம். இடம் இல்லாததனால் மிக நெருக்கமாக இருக்கிறது. அநேகம் ஜனங்கள் கீழே நிற்கின்றனர். இம் மாதிரிக் கல்யா ணங்கள் நமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வனவாகவே இருக்கின்றன. அறிவு கொண்டு உண்மை நோக்கத்தோடு இவ்விருவரின் திருமணம் நடை பெறப் போகின்றது. திருமணம் நடந்த பிறகு நண்பர்கள் இரண்டொரு வார்த்தைகள் சொல்வார்கள். திருமணத்தை நடத்திக் கொள்ளு மாறு மண: மக்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். (மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் மாலையிட்டு மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்!
இங்கு எல்லோரும் விஜயம் செய்து இப்பொழுது நடைபெற்ற
திருமணத்திற்குச் சாட்சி அளித்தோம். அது நமது கடைமையுமாகும். இப் பொழுது நடைபெற்று வரும் மற்ற மணங்கள் எப்படி நடைபெறுகிற தென்றால், ஒரு பெண்ணையும் ஆணையும் பிடித்து இருவரின் சம்மத மில்லாமலேயே கட்டாயப்படுத்திச் செய்யப்படுகிறது. அந்தப் பெண்ணா னவள் கொஞ்சமும் சுதந்தரமற்று மாமன், மாமி, நாத்தி, கொழுந்தன், புருஷன் ஆகியவர்களுக்கு என்றும் அடிமையாகவே இருந்து வரவேண்டியவளா யிருக்கிறாள். “கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்” என்று
கூறிப் பெண்ணினுடைய வீரத்தையும், மனிதத் தன்மையும் அழிக்கப் பட்டிருக்கிறது. நளாயினி, சீதை, சந்திரமதி முதலியவர்களைப் போல இருக்க வேண்டுமென்று பெண்களுக்குச் சொல்லப்படுகிறது. சந்திரமதியைப் போல் இருக்கவேண்டுமென்றால், கடனுக்காக புருஷன் தன் மனைவியை விற்றுவிடலாமென்றுதான் அர்த்தம், புருஷன் தன் மனைவியை விற்பனை செய்ய உரிமையுள்ளவன் என்றால், இதை விடப் பெண்களுக்கு மரியாதை கெட்டதனம் வேறென்ன இருக்கிறது. சீதையைப் பற்றிய கதை ரொம்ப ஆபாசமானது. சீதை நிறை கர்ப்பமாய் இருக்கும் பொழுது காட்டுக்கு
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
விரட்டப்பட்டாளென்றால், அது எவ்வளவு மூடத்தனம் என்பதை யோசித்துப் பாருங்கள். நளாயினி சரித்திரமும் ரொம்ப ஆபாசமானது. புருஷன் ரொம்பக் குஷ்டரோகி. அவன் தாசி வீட்டிற்குப் போக வேண்டு மென்று பிரியப் பட்டானாம். அவனைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய் தாசி
வீட்டில் விட்டாளாம். இது எப்படி யிருக்கிறதென்றால் தாசி வீட்டிற்குப் போக லைசென்ஸ் கொடுப்பது போலிருக்கிறது.புருஷனைத் தாசி வீட்டில் கொண்டு போய் விடுவது தான் பெண்ணின் கற்பா என்று கேட்கிறேன். புருஷன் தாசி வீட்டிற்குப் போக வேண்டுமென்று கூறினால், அவனை வெளியில் தள்ளி கதவைச் சாத்துவதுதான் சுயமரியாதையுடையவளின் செயலாகும்.
ஒருவர்:- ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா? ஹிந்து மதக் கடவுள்கள் பல மனைவிகளையுடையவர்களாய் இருக்கின்றனர். அந்த மதம் தப்பிதமானது என்று கூறும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை மணம் செய்ய அனுமதிக்கலாமா? என்று கேட்டார்.
திரு.இராமசாமி அவர்கள் பதில் கூறியதாவது:
இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நமது கடமையேயாகும். சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகிறதென் றால், ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் தங்கள் பகுத்தறிவை உபயோகப் படுத்த வேண்டுமென்றும், ஆண், பெண் இருவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது. சுயமரியாதை இயக்கத் தால் கண்டிக்கப்படுகிற தேவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்பது நோக்கமல்ல. தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சு விடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும். பகுத்தறிவிற்கு எது பொருத்த மாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். கல்யாணம் என்பது ஒரு மனிதனு டைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு ஆணுக்
கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக் கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார். கல்யாணத்தை கத்தரிக்காய், வாழைக்காய் போல நினைத்து பொருத்தமற்ற முறையில் கல்யாணத்தைச்
செய்து வைத்து வாழ்க்கை முழுமையும் துன்பத்திலும் அடிமைத்தனத்திலும். இருக்கும்படி செய்வது அறியாமையாகும். சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்து மதச் சட்டப்படி ஒரு மனைவி யிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக
குடி அரசு - 1930 (2) 188
முடித்து வைத்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச்
சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்.
குடி அரசு - சொற்பொழிவு - 12.10.4930
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மறுமணம் தவறல்ை
திருச்சியில் இம்மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நீலாவதி- ராமசுப்பிரமணியம் திருமணத்தின் போது ஒரு கேள்வி பிறந்தது. அதாவது “ஒரு மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?” என்று கூட்டத்தில் ஒருவர்: எழுந்து கேட்டார். அதற்கு அப்போதே பதில் சொல்லப்பட்டதானாலும், இந்த விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவருக்குள்ளாகவேபலருக்கு அம்மாதிரி மறுமணம் செய்து கொள்வது தவறு என்கிற அபிப்பிராயமும், சந்தேகமும் இருப்பதாலும் பொது ஜனங்களிலும் பலர், “மனைவியிருக்க மறுமணம் செய்துகொள்வது சீர்திருத்தக் கொள்கைக்கு விரோதம்” என்று கருதுவதாலும், இதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை இவ்வாரம் தலையங்கமாக எழுதலாம் என்று கருதி தொடங்குகின்றோம்.
முதலாவது இந்தக் கேள்வியைப் பற்றிக் கவனிக்கும் முன்பு மணம் என்பது என்ன? என்பதை முதலில் விளக்கிக் கொள்ள வேண்டும். மணம் என்பதை நாம் மணமக்கள் செளகரியத்திற்காக என்று செய்து கொள்ளப் படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு என்றுதான் கருதுகின்றோம். அதில் இருவர் களுடைய சுயேட்சையும் சேர்ந்தோ அல்லது தனித்தனியோ கட்டுப் படுத்தும் எவ்வித கொள்கைகளும் இருக்கக் கூடாது என்றும் கருதுகின் றோம். இம்மாதிரி கருதுவது சரியா, தப்பா என்று முடிவு செய்வதிலிருந்தே மேற்கண்ட கேள்விக்குச் சிறிது சமாதானமும் கிடைத்துவிடும்.
நிற்க, இன்று உலகத்தில் இயற்கை உணர்ச்சியிலும், அநுபவத்திலும் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கையின் கீழும் மறுமணம் என்பது எங்காவது தடுக்கப்பட்டிருக்கின்றதா என்பதை நம்மால் அறியமுடியவில்லை. அது மாத்திரமல்லாமல் மண விஷயமாய் ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களிலும்,
எந்த மத விஷயமான கொள்கைகளிலும் மறுமணம் என்பது தடுக்கப்பட்டி. ருப்பதாகவும் தெரியவில்லை. இந்து மதத்தில் அறுபதினாயிரம் பெண்கள் வரையிலும் மகமதிய மதத்தில் சுமார் 10 பெண்கள் வரையிலும், கிறிஸ்தவ மதத்தில் அளவு குறிப்பிடாமல் எவ்வளவு பெண்களை மணம் செய்து கொள்ள நேர்ந்தாலும் அதுவரையிலும் மணம் செய்து கொள்ள இடமிருக்
கின்றது. இவற்றுள் கிறிஸ்து மதத்தில் மாத்திரம் திருமணத்தை ரத்து செய்து
குடி அரசு - 1930 (2) 190
விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதாகவும், அந்தப்படி ரத்து செய்து கொள்வதிலும் இன்னின்ன நிபந்தனைகளின்படிதான் செய்து கொள்ளலாம் என்றும் காணப்படுகின்றது. அதாவது சமுதாய சம்மந்தமான ஒரு பந்தோபஸ்தை உத்தேசித்து மாத்திரமே அல்லாமல் கொள்கைக்காக அல்ல என்று புரியும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இவ்வளவுதான் மறுமண விஷயத்தில் மற்ற மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற் கும் உள்ள வித்தியாசம். எனவே ஒன்றுக்கொன்று நிபந்தனைகளிலும் திட்டங்களிலும் தான் வித்தியாசமே தவிர மற்றபடி மறுமணக்கொள்கையை மதங்களின் படி பார்த்தால் எந்த மதமும் ஆட்சேபித்திருப்பதாய் தெரிய வில்லை. அன்றியும் இந்து மதத்தில் கடவுள்களே பல மணங்கள் செய்து கொண்டதாகவும் மற்றும் வைப்பாட்டிகளை வைத்திருப்பதாகவும், மத ஆதாரங்களில் காணப்படுவதுடன் அக்கடவுள்களை அந்தப்படியே அதா வது பல மனைவிகள், வைப்பாட்டிகள் ஆகியவைகளுடன் பூசை உற்சவம் முதலியவைகள் செய்தும் வருகின்றார்கள். மகமதிய மதத்திலும் திரு. மகமது நபி அவர்களே பல மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புக் கொள்ளப்படு கின்றன. ஆகவே இதை மறுப்பவர்களோ இம்மாதிரி கடவுள்களையோ, திரு. நபிகளையோ குற்றம் சொல்லுகின்றவர்களோ ஒருக்காலும் தங்கள் மதத்தின்
பேரால், மத சம்மந்தமான கட்டளைகளின் பேரால் மறுக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அந்தப்படி யாராவது ஒருவர் தன்னை இந்துவென்று சொல்லிக் கொண்டு இம்மாதிரி அதாவது ஒரு மனிதன் மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்பாரேயானால் அப்படிப்பட்டவரை நாம் மதத்தை விட தன்னு டைய பகுத்தறிவையோ அல்லது அநுபவ சவுகரியத்தையோ அல்லது வேரேதாவது ஒரு கொள்: கையோ முக்கியமாகக் கருதிக் கொண்டு இம்மாதிரி கேள்வி கேட்க வந் திருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும்.
ஆகவே அக்கேள்விக்காரர் தன்னை இந்து என்று கருதிக் கொண்டு கேள்வி கேட்பதை விடப் பகுத்தறிவுக்காரர் என்றோ அநுபவக் கொள்கைக்
காரர் என்றோ கருதிக் கொண்டு கேள்வி கேட்கிறார் என்று அறிந்தோ மானால் அது விஷயத்தில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன் அவருக்கு நியாயம் மெய்ப்பிக்கும் விஷயத்தில் நமக்குச் சிறிதும் கஷ்டமில்லை என்றே எண்ணுகின்றோம்.
நிற்க, பொதுவாக ஒரு மனிதனுக்கு தன் முதல் பெண்சாதி 0 செத்துப் போன காலத்திலும், @) மற்றொரு கணவனிடம் ஆசை கொண்டு வெளிப்
பட்டு விட்ட காலத்திலும் மறுமணம் செய்து கொள்ளுவதை யாரும் குற்றம் சொல்லுவதில்லை.அதுபோலவே @) தீராத கொடிய வியாதிக்காரியா யிருக்
கும் காலத்திலும் மறுமணம் செய்து கொள்ளுவதை யாரும் ஆட்சேபனை செய்வதில்லை (4) பயித்தியகாரியாய் புத்தி சுவாதீன மில்லாமல் போய் விட்ட காலத்திலும் யாரும் ஆட்சேபனை செய்வதில்லை. ஆகவே
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பகுத்தறிவுக்காரரும் அனுபவக் கொள்கைக்காரர்களும் மேற்கண்ட முதலா வது தவிர மற்ற 3 சந்தர்ப்பங்களில் மனைவியிருக்க மறுமணம் செய்யப் படுவதை ஆட்சேபிக்க மாட்டார்கள். இனி ஐந்தாவது, ஆறாவது முதலிய வைகளாகப் பல விஷயங்களைக் கவனிப்போம். (5) மனைவி அறியாமை: யாலோ, முரட்டுத்தனமான சுபாவத்தாலோ புருஷனை லட்சி யம் செய்யா
மல் ஏறுமாறாய் நடந்து கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம்.
(6) புருஷன் பெண்ணின் மனத்திற்குத் திருப்திப்படாததாலோ அல்லது எந்தக் காரணத்தாலோ புருஷனிடம் பெண்ணுக்கு அன்பும் காதலும் இல்லாமல் வெறுப்பாயிருப்பதாக வைத்துக் கொள்வோம். (7) மேற்கண்ட குணங்களுடன் அடிக்கடி தாய் வீட்டுக்குப் போய் விடுவதாக வைத்துக் கொள்ளுவோம். (8) புருஷனுடைய கொள்கைக்கு நேர் மாற்றமான கொள் கையுடன் புருஷன் மனம் சதா சங்கடப்படும்படி பிடிவாதமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர் என்று வைத்துக் கொள்ளுவோம். ௫) செல்வச் செருக்கால் புருஷனைப் பற்றிய லக்ஷிய்மோ கவலையோ இல்லாமல் நடந்து கொள்ளுகிறவள் என்று வைத்துக் கொள்ளுவோம். இவைகள் மாத்திரமல்லாமல் மற்றும் இது போன்ற குணங்கள் உள்ள மனைவியிடம் அகப்பட்டுக்கொண்ட கணவன் கதி யென்ன ஆவது? என்பதைக் கவனிக்க வேண்டியது கேள்வி கேட்பவர்கள்அதாவது அனுபவ கொள்கைக்காரர்கள் என்பவர்களின்! முக்கியக் கடமையாகும். இவை தவிர புருஷனுக்கு 12 வய
திலும் பெண்ணுக்கு 10 வயதிலும் மற்றும் மணமக்களுக்கு இதிலும் கீழான வயதிலும் பெற்றோர்களாலோ, மற்றோர்களாலோ திருமணம் செய்யப்பட்டி
ர௬ப்பதால் அவைகள் மணமக்கள் அனுசரிக்க வேண்டிய தர்மங்களுக்கு கட்டுப்பட்ட மணங்களாகுமா? அல்லது திருமணங்கள் செய்து வைத்தவர் கள் அநுசரிக்க வேண்டிய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவைகளாகுமா? என்ப தும் கேள்வி கேட்கின்றவர்கள் அதாவது பகுத்தறிவுகாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாகும். இந்தக் காரணங்கள் தவிர மற்றும் எது எப்படி இருந்தாலும் மனதுக்குப் பிடிக்கவில்லை, அன்புக்குச் சிறி
தும் பாத்திரமில்லை, காதலுக் குச் சிறிதும் இஷ்டமில்லை, வாழ்க்கைத் திருப்
திக்கும் இன்பத் திற்கும் சிறிதும் பயன்படவில்லை என்று மணமகன் முடிவு செய்து கொள்ளத் தகுந்த மணமகளாய் அமைந்து விட்டால் அப்போது மணமகளின் கடமை என்ன? என்பதை மதக்கட்டுப்பாட்டுக்காரரும், அநு பவக் கொள்கைக் காரரும், பகுத்தறிவுக்காரரும், பாமர பொது ஜனங்களும் சேர்ந்து கவனித்துப் பார்க்க வேண்டிய காரியமாகும்.
கடைசியாக இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க இவைகளைப் பற்றிய யோசனையே சிறிதுமின்றி மற்றொரு புறம் “எப்படி இருந்தாலும் பொருத்துக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும் தான் வேண்டும், ஒருக் காலமும் மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்ளக்கூடாது” என்று ஒருவர்: சொல்லுவாரானால் அப்படிச் சொல்லுகின்றவர் எந்தக் கொள்கை யின் மீது அல்லது என்ன அவசியத்தைக் கோரி அல்லது என்ன நியாயத்தை
குடி அரசு - 1930 (2) 192
உத்தேசித்து எவ்வித அநுபவத்தை அனுசரித்து அல்லது எந்தப் பகுத்தறி வைக்கொண்டு இப்படிச் சொல்லுகின்றார்கள் அல்லது எதிர்பார்க்கின்றார்கள். என்பது விளக்கப்படவேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் அது கவனிக் கப்படத்தக்கதாகும். ஏனெனில் சாதாரணமாகப் பேசுவோமானால் வெகு சாதாரண பாமர மக்கள் என்பவர்களும் கூட இக்காலத்தில் ஒரு விஷ யத்தைப் பற்றிப் பேசும் போது அது “சுருதி, யுக்தி, அநுபவம் ஆகிய மூன்
நிற்கும் பொருத்தமாயிருக்கின்றதா” என்று கேட்பது எங்கும் சகஜமா யிருப்பதைப் பார்க்கின்றோம். அன்றியும் அம்மூன்று வார்த்தைகளின்
அமைப்பும் முதலில் குறிப்பிட்ட சுருதிப்படி (அதாவது நமக்கு முந்தி இருந்த அநுபவசாலிகளின் அபிப்பிராயங்கள் என்கின்ற முறையில் கவ னிக்க வேண்டும் என்கின்ற தத்துவம் கொண்ட தானாலும் அப்படிப்பட்ட அநுபவசாலிகளின் அபிப்பிராயம் எவ்வளவு) சரியானதென்று சொல்லப் பட்டாலும் கூட மற்றும் அவ்விஷயமானது யுக்திக்கு (அதாவது நமது பகுத்தறிவுக்கு)ம் ஒத்ததாயிருக்கின்றதாவென்று கவனிக்க வேண்டும் என் கின்ற தத்துவத்தையே கொண்டு யுக்தி என்பதை இரண்டாவதாக வைக்கப் பட்டிருக்கின்றதையும் பார்க்கின்றோம். அப்படி யும் அதாவது யுக்திக்கும் பொருத்தமானதாகயிருந்து விட்டதாகச் சொல்லப் படுவதானாலும் அது அநுபவத்திற்கு (அதாவது நடைமுறையில் கொண்டு செலுத்த ஏற்ற தாயிருக்கின்றதா? என்று கவனித்துப் பார்க்க வேண்டும் என்கிற தத்து வத்தை. வைத்தே அநுபவம் என்பதை முடிவில் மூன்றாவதாக வைக்கப் பட்டிருக்கின்றது என்பது யாவருக்கும் விளங்கும். ஆகவே ஒரு மனிதன் “ஒரு மனைவி இருக்கும்போது மறுமணம் செய்து கொள்ளக் கூடாது” என்பது இந்த மேற்கண்ட மூன்று பரீட்சைகளில் எந்த பரீட்சைக்கு விரோத மானது என்று கேட்கின்றோம். நிற்க, திருமணத்தில் மணமகனுக்கு மண: மகளை வாழ்க்கைத் துணையென்று கருதுகின்றோம். இன்னிலையில் மேலே ஆரம்பத்தில் சொல்லப்பட்ட 9 - வகையில் பட்ட குற்றமான குணங் கள்: அமைந்த மணமகள் ஒரு மணமகனுக்கு அமையப்பட்டு விட்டால் அது வாழ்க்கைத்துணையா அல்லது வாழ்க்கைத் தொல்லையா என்பதை முதலில் கண்டிப்பாய்க் கவனிக்க வேண்டும். வேடிக்கையாக வெளியிலி ருந்து பேசுகின்றவர்களை உண்மையறியாமல் நிலையறியாமல் சிறிதும் பொறுப்பற்ற முறையில் பாமர மக்களின் ஞானமற்ற தன்மையை தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாய் குற்றம் சொல்லக் கருதிக் கொண்டு “மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா” என்று யார் வேண்டு மானாலும் பேசிவிடலாம். அதாவது “மனைவியிருக்க மறுமணம் செய்து கொள்வது அக்கிரமம், அயோக்கியத்தனம்” என்பதாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தப்படி செய்து கொண்டது தப்பா, அல்லது இந்தப் படி சொன்னது தப்பா என்பதையும் பகுத்தறிவைக் கொண்டாவது அநுபவத்தன்மையைக் கொண்டாவது இந்தப்படி பேசுகின்றோமா, நினைக் கின்றோமா- இவ் விஷயத்தில் நாம் பிரவேசிக்கின்றோமா என்று நினைத்துப்
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பார்த்தால் கடுகளவு அறிவுடையவனுக்கும் ஒருக்காலமும் உண்மை விளங்காமற் போகாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
கடைசியாக ஒன்று சொல்லுகின்றோம். ஒரு மனிதன் ஒரு விஷயம் தனக்கு இஷ்டமில்லை என்றோ அல்லது இஷ்டமாயிருக்கின்றதென்றோ இன்ன காரியம் செய்ய தனக்கு உரிமை இருக்க வேண்டுமென்றோ உரிமை இருக்கக்கூடாது என்றோ கருதுவதற்கு அருகதை உடையவன்தானா அல்லது மற்றவர்களா என்பதும் இம்மாதிரி விஷயங்களில் முடிவான அபிப்பிராயத்திற்கு வர அவனவனுக்கு உரிமை இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டியது உண்மையான விடுதலையும் சுதந்திரம் கோருகின்ற
வர்களின் கடமையுமாகும்.
நிற்க, வாஸ்தவத்திலேயே அன்பும், காதலும் இல்லாத அல்லது தனக்கு ஏற்படாத ஒரு இடத்தில் மனிதன் எப்படி வாழ்வது? மக்களுடைய
அன்புக்கும், காதலுக்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் தான் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணும் சேர்ந்து மணம் (வாழ்க்கை ஒப்பந்தம்) செய்து கொள்வதா? அல்லது மணம் செய்து கொண்டதற்காக என்று அன்பையும், காதலையும், இன்பத்தையும், திருப்தி யையும் தியாகம் செய்வதா? என்பதை ஜீவசுபாவமுடைய ஒவ்வொரு வரையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம். உலகில் உள்ள மூடப்பழக்கவழக்கங்களில், அர்த்தமற்ற கட்டுப்பாடுகளில்- சிக்கிக் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பது என்பது சுலபமான காரியமல்லவானாலும் அவ்விதக் கட்டுப்பாடுகளையும், கஷ்டங் களையும் ஒழிக்கவென்றே ஏற்பட்ட ஸ்தாபன நடவடிக்கைகளையே மூடப் பழக்க வழக்கப்படியும் குருட்டு நம்பிக்கைப்படியும் செய்யவில்லை என்று
குற்றம் சொன்னால் சொல்லுபவர்களுக்கு அறிவு என்பது ஏதாவது இருக் கின்றதாவென்று தான் கருத வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இவ்வியக்கம் அதற்காகவே ஏற்பட்டிருக்கும்போது அதன் நடவடிக்கை கள் வேறு எப்படி இருக்க முடியும். ஆகையால் இவ்வித யுக்திக்கும் அனுபவத்திற் கும், மனித சுதந்திரத்திற்கும், இன்பத்திற்கும், திருப்திக்கும் விரோதமான கொள்கைகள் எதற்காக காப்பாற்றப்பட வேண்டும் என்னும் விஷயங்களை அன்பர்கள் நடுநிலையில் இருந்து நேர்வழியில் சிந்தித்துப் பார்ப்பார்களாக.
நிற்க, சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளாகவே மறுமண விஷயத்தில் உள்ள அதிர்ப்தியைப் பற்றிச் சற்றுக் கவனிப்போம்.
சுயமரியாதை இயக்கத்தில் கலியாண ரத்து என்பதும் ஒரு திட்ட மாகும். அந்தப்படியே செங்கற்பட்டு மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு ஈரோடு மகாநாட்டில் அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டு மென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே மணம் செய்து கொண்ட மணமக்கள் அந்தப்படியே கணவன் மனைவியையோ, மனைவி,
குடி அரசு - 1930 @) 194
கணவனையோ கலியாண பந்தத்திலிருந்து நீக்கிவிட அல்லது நீங்கிக் கொள்ள உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது. இந்தப்படி ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கை அமுலில் கொண்டு வரச் சட்ட சம்பந்தமான இடையூறு யாருக்காவது எந்த மதத்திற்காவது இருக்குமானால் அதற்காக சட்டத்தை யுத்தேசித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா? அல்லது சட்டங் களைக் கவனிக்காமல் நியாயம் என்று தோன்றிய படிநடந்து கொள்ளுவதா? என்பதைக் கவனித்துப் பார்த்தால் அவர்களது அதிர்ப்திக்குச் சிறிதும் இடமிருக்காது என்றே கருதுகின்றோம்.
உதாரணமாக சுயமரியாதைக் கொள்கைப்படி செய்யப்படும் திரு மணங்களிலும் சில சட்டப்படி செல்லக் கூடாதவைகளாகயிருந்தாலுமிருக்
கலாம். அதாவது:-
“மணமக்கள் இருவரும் வேறு வேறு ஜாதிகள்” என்று சொல்லப் படும்
கலப்பு மணங்களும், மூடப் பழக்க வழக்கங்களும் அர்த்தமற்றதும் அவசியமற்றதுமான சடங்குகள் செய்யப்படாத சில திருமணங்களும் செல்லுபடியற்றதாகவானாலும் ஆகலாம் என்று சட்ட வல்லவர்கள் சொல்லு வதாகக் கேள்விப்படுகின்றோம். அப்படியிருந்தாலும் கொள்கையிலிருக் கும் அவாவை உத்தேசித்து சட்டத்தைக் கவனியாமலும், அதனால் ஏற்படக் கூடிய பலன்களை லட்சியம் செய்யாமலும், எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் மணம். செய்து கொள்ளுவதை நாம் பார்க்கின்றோம். ஆகவே மறுமண விஷயத்தில்
முதல் “மனைவி”யை சட்டப்படி கலியாண ரத்து செய்ய முடி யாமல் போய்விட்டதால் “கல்யாண ரத்து செய்யாமல் மறுமணம் நடத்தப் பட்டது” என்று சொல்லப்படுவதை விட இம்மாதிரி திருமணங்களில் சுயமரியாதைக் காரர்களுக்கு கொள்கைப் பிசகோ நியாயப் பிசகோ இருப்ப தாக நமக்குத் தோன்றவில்லை.
தவிரவும், முதல் மனைவி மணமகனுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டு. இருக்கும்போது கூட மறுமணம் செய்து கொள்ளப்படுவதையும் சுய மரியாதைக் கொள்கை ஆதரிக்கின்றது என்பதைப் பற்றியும் சற்று கவனிப் போம். மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்ன விதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத் திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும். அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடையதாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான்
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இருக்க வேண்டும்; காதல் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல
முன் வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம். ஆனால் அநுபவத்தில் உள்ள சில சவுகரிய அசவுகரியங்களை உத்தேசித்து அன்பும் காதலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை
நாம் மறுக்க வரவில்லை. அன்றியும் ஒப்பந்தங்களினால் கட்டுப் பட வேண்டியதாகவும் காதல் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டு விட்ட தாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைமைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே. இடமில்லை. ஆதலால் அப்படிப்பட்ட காரியங்களை அவர வர்கள் இஷ்டத்திற்கே விட்டு விட வேண்டியது அவசியமாகும். முடிவாக ஒன்று சொல்லி இதை இப்போது முடிக்கின்றோம். அதாவது:-
இம்மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் ஒரேயடியாய் அடியோடு
இடம் இல்லாமல் போக வேண்டுமானால், பொதுவாகப் பெண்கள் நிலைமை மாறியாக வேண்டும். ஏனெனில் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்படு வதற்குப் பெரிதும் அஸ்திவாரமாயிருக்கும் காரணமெல்லாம் “இப்படிச் செய்து விட்டால் முன் மணம் செய்து கொண்ட பெண்ணின் கதியென்ன ஆவது?” என்கின்ற கவலை கொண்டேதான் கேள்வி கேட்கப்படுகின்றது. எந்தெந்தக் காரணத்தால் புருஷனுக்குப் பெண் பிடிக்கவில்லையோ - ஒத்து வரவில்லையோ அந்தந்தக் காரணங்களால் பெண்ணுக்குப் புருஷன் பிடிக்காத போது இப்போது புருஷனுக்கு இருக்கவேண்டுமென்று சொல்லப்
படும் சுதந்திரமும் சவுகரியமும் போல பெண்களுக்கும் ஏற்பட்டு விடுமா
னால் பிறகு இந்த மாதிரியான அநுதாபமும் கவலையும் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட இடமேயிருக்காது என்பது தான்.நம்மைப் பொருத்த வரை: ஆண்களுக்குச் சொன்ன விஷயங்கள் எல்லாம் பெண்ணுக்கும் பொருந்துமென்றும், அவர்களுக்கும் ஆண்களைப் போலவே ஏற்பட வேண்டுமென்றும் அம்மாதிரியே அவர்களும் நடந்து கொள்ள வேண்டு மென்றும் அப்பொழுதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் ஏற்பட்டதாகும் என்பதோடு உண்மையான திருப்திகரமான இன்பத்தையும் காதலையும் அடையமுடியுமென்றும் கருதுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.40.1930
குடி அரசு - 1930 (2) 196
கடவணிண் நடவமழுக்கை
- சித்திரபுத்திரன்
உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு! கின்றது என்று சொல்லப் படுமானால் அவரை நடுநிலைமையுடையவரென்று சொல்லுவதைவிட பாரபக்ஷமுடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.
அவரை கருணையுடையவரென்று சொல்லுவதைவிட கருணை யற்றவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியக்ஷ உதாரணங்கள் யிருக்கின்றன.
அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.
அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.
அவர் அறிவாளி என்று சொல்வதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ர௬ஜுவு இருக்கின்றது.
(அதுவே முடிந்த முடிவானால்! அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.
அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றாரென்பதை விட தீமையை செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.
அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிக மாக இருக்கின்றார்கள் என்று சொல்லத்தகுந்த அத்தாக்ஷிகள் மிதந்து கிடக்கின்றன.
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அவர் நாகரீக முடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டு மிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.
அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப் பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.
அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்து வதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.
அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்.
குடி அரசு - கட்டுரை - 19.10.1930
குடி அரசு - 1930 (2) 198
சிவநேயர் சிறுமை
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்னும் நாட்டுக் கோட்டைச் செட்டி யார்மார்கள் தென்னிந்தியாவிலுள்ள மற்ற சமூகத்தார்களை விட செல்வ வான்களாவார்கள். எல்லோருமே வியாபார பழக்கமுள்ளவர்களாதலால் சற்று புத்திக்கூர்மையாயும் இருக்கப்பட்டவர்களாவார்கள்.அப்படிப்பட்ட சமூகத்
தார் ஜாதி சமய விஷயத்தில் பிடிவாத குணமுடையவர்களாகவும், குருட்டு நம்பிக்கையும், மூடபக்தியும் உடையவர்களாகவும் இருந்து வருவ தால் அவர்களது செல்வங்கள் பெரிதும் கோடிக்கணக்காகப் பாழாக்கப் படுவது மல்லாமல் நாகரிக வளர்ச்சியில் மிகுதியும் பின்னடைந்தவர்க ளாகவே அநேகர் இருந்து வருகின்றார்கள். பல மக்களிடம் பழகும் சந்தர்ப் பங்களும், பல நாடுகள் சென்றுவரும் சவுகரியங்களும் அவர்களுக்கு ஏராளமாயிருந்தும் மேல்கண்ட ஜாதி சமய விஷயத்தில் உள்ள பிடிவாத குணத்தால் உண்மையான நாகரீகத்தின் புறமும் செல்வத்தின் கிரமமான செலவின் புறமும் சிறிது கூடத் திரும்பிப் பார்க்க முடியாமல் கண்ணைக் கட்டி பரந்த காட்டுக்குள் விடப்பட்ட சுயேச்சைக்காரர்கள்போல் வகை தொகை தெரியாமல் செலவு செய்து கொண்டிருக்கவேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். இந்த சமூகத்தார்களில் இப்படிப்பட்டவர்களே பெரும் பகுதியாய் இருந்து வருவதில் நாட்டின் முன்னேற்றம் பெரிதும் பாதக மடைய இவர்களே ஒரு காரணமாயுமிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. பணம் சம்பாதிப்பதை முக்கிய காரணமாகக் கொண்டு வெளி நாடுகள் சென்று ஏராளமான செல்வங்களை இந்த நாட்டுக்கு கொண்டு வரு கின்றார்கள் என்பது போற்றக் கூடியதானாலும் அந்த செல்வம் நாட்டின் நாசத்திற்கும், பெருத்த ஜனத்தொகை கொண்ட சமூகங்களின் கேட்டிற்கும் பயன்பட்டு வருவது பற்றி துக்கப்படாமல் இருக்கவும் முடியவில்லை.
ஏதோ அச்சமூகத்தில் சில செல்வவான்கள் உண்மை நிலை யறிந்த மக்களாய் இருக்கின்றார்கள் என்று சொல்லக் கூடுமானாலும் அவர்களுக்
கும் போதிய தைரியமும், வீரமும் இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை: அடக்கிக் கொண்டு பழமையைப் பின்பற்றித் தீரவேண்டிய நிர்பந்த முடையவர்களாகவே இருந்து வருகின்றார்கள். மற்றபடி அச்சமூகத்தில் சில வாலிபர்கள் மாத்திரம் தைரியத்துடனும், வீரத்துடனும் வெளிவந்து
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மேல்கண்ட குற்றங்களிலிருந்து விலக தங்களாலானதைச் செய்கின்றார்கள் என்று சொல்லலாம். ஆனாலும் அவர்களுக்கும் எதிர்ப்பும் தொல்லையும் விளைவிக்கும் கூட்டம் அச்சமூகத்திலேயே இல்லாமலும் இல்லை. அப்படிப்பட்ட கூட்டத்திற்கு அச்சமூகத்தில் ஆதரவளிப்பவர்களும் இல்லாமலில்லை. பெரும் பெரும் செல்வங்களைக் கொண்ட இச்சமூகம் இந்தப்படியான பிற்போக்குடைய நிலையில் இருப்பது நாட்டு நன்மைக்கு விரோதமாயிருப்பதால் அதைப்பற்றியே இவ்வாரம் சிறிது குறிப்பிட எண்ணுகின்றோம். இதற்கு இப்போது என்ன சந்தர்ப்பம் நேரிட்டதென்றால் மேற்கண்ட செட்டியார்களின் நாட்டிலிருந்து “சிவநேசன்” என்னும் பெய ரால் வெளியாக்கப்பட்ட ஒரு வெளியீடு நமது பார்வைக்கு எட்டியதை பார்க்க
நேர்ந்தது. இவ்வெளியீட்டில் ஒன்றை சுமார் ஒரு வருஷத்திற்கு முன்னும் ஒரு தடவை நாம் பார்க்க நேரிட்டபோது அதிலிருந்த ஒரு விஷயத்திற்கு அப்போதும் ஒரு குறிப்பு எழுதினோம். அதாவது அதில் விபூதி என்னும் சாம்பலை உயர்த்தியும் நாமம் என்னும் மண்ணைத் தாழ்த்தியும் எழுதப்பட்டிருந்தது. எப்படியெனில் கடவுள் மனிதனுக்கு நெற்றி கொடுத்திருப்பதே விபூதியிடுவதற்கென்றும் அதற்காகவே கடவுள் நெற்றியை குறுக்கு வசத்தில் அதிக நீளமாய் வைத்திருக்கின்றார் என்றும், இதை அறியாதவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்றும், நாமம் (கோபி சந்தனம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் புணர்ந்து கழுவி விடப் பட்டதின் அறிகுறி என்பதுமாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்தவு டனே சிவனேசர்களின் யோக்கியதை இதை அநுசரித்ததாகத்தான் இருக்க
வேண்டும் என்றும் கருதி அதற்குத் தகுந்தவாறு அறிவு கொளுத்தி குறிப்பு எழுதினோம். அதுபோலவே இப்போது பார்க்க நேரிட்டவெளியீட்டிலும் சில விஷயங்கள் காண நேரிட்டன. என்னவெனில் சமீபத்தில் திருச்சியில் நடந்த
திரு. நீலாவதி- ராமசுப்ரமணியம் திருமணத்தைப் பற்றியும் மற்றும் திரு. முருகப்பா-மரகதவல்லி திருமணத்தைப் பற்றியும், திரு. சுந்தரி-அருணகிரி திருமணத்தைப் பற்றியும் இழிமொழியில் இகழ்ந்து எழுதியிருப்பதுடன் மணமகளையும், மணமகனையும் குறைவுபடுத்தியும் எழுதப்பட்டிருந்தது.
எழுதிய முறை கோழைத்தனமும் இழி குணத்தன்மையும் கொண்ட
தாகக் காணப்பட்டதேயொழிய ஒரு யோக்கியமான முறையில் எழுதப்பட்ட தாகவும் காணப்படவில்லை. ஏனெனில் அத்திருமணங்களால் ஏற்பட்ட குற்றமென்ன? அதனால் யாருக்கு என்ன நஷ்டம்? எந்தக் கொள்கைப்படி அது குற்றம்? அதில் உள்ள நாணயத் தவறுதல் என்ன? என்பன போன்றவை களைக் காட்டி எழுதியிருக்கப்படுமானால் அதில் மனிதத்தன்மை பொலிந் திருப்பதைக் காணலாம். அப்படிக்கில்லாமல் கல்யாணத்திற்கு வந்திருந்த வர்களில் இருவர் தவிர மற்றவர்கள் “ஜட்காவாலாக்களும் அன்னக் காவடிகளும், டெம்பரவரிகளும், போலிகளும், சில்லரைப் பேர் வழிகளும்” ஆவார்களென்றும் மற்றும் அவன் இவன், அவள் இவள் என்று கள்ளுக்கடை சாராயக்கடை பாஷைகளிலும் பெயர்கள் குறிப்பிடுவதில்
குடி அரசு - 1930 (2) 200
சிறிதும் மரியாதை இல்லாமல் காட்டுமிராண்டிகள் பாஷையிலும் எழுதப் பட்டிருப்பதுடன் மணப்பெண்களை சுண்ணாம்புக்காரி, வெற்றிலைப் பாக்குக் கடைக்காரி, எச்சில் படிக்கத்தில் கரித்தூவுபவள், தாசி, வேசி, சகண்ட், தேர்ட், போர்த் ஹாண்ட் என்றும் மற்றும் அதுபோன்று குச்சுக்காரத் தெருவில் பிறந்த குழந்தைகளின் பாஷையில் அற்பத்தனமாய் இழி துறையில் உபயோகிக்கப்பட்டுமிருக்கின்றன. இதில் மற்றொரு விசேஷ மென்னவென்றால் இந்த வெளியீட்டுக்கு சிவநேசன் என்ற பெயரும் இதில் சேர்ந்தக் கூட்டத்தார்களுக்குச் சிவநேசர்கள் என்ற பெயரும் வைத்துக் கொண்டிருப்பதாகும். அன்றியும் இந்தக் கூட்டத்தார் இப்படி எழுதுவதற்குச் சொல்லப்படும் காரணமாய் அவர்கள் குறிப்பிடுவது என்ன வென்றால் இத்திருமணங்களால் அவர்கள் சாதியும் சமயமும் போய்விடுகின்றன. என்பதாகும். ஆனால் இந்த பேர்வழிகள் எந்த சாதி சமயத்தைப் பற்றி இவ்வளவு கவலை எடுத்துக்கொண்டு இப்படி எழுதினார்கள் என்பது மாத்திரம் அதில் இருந்து சரியாய் விளங்கவே இல்லை. இந்தப்படி எழுதும் சிவநேசர் ஜாதியும், சிவநேசர் சமயமும் போய்விட்டதென்று கவலைப் படுகின்றார்களோ அல்லது இப்படிப்பட்டவர்களை ஆதரிக்கும் ஜனங்க ளுடைய மூட நம்பிக்கை ஜாதியும், மடச்சமயமும் போய்விட்டதென்று கவலைப்படுகின்றார்களோ என்பதும் நாம் அறியக்கூடவில்லை. கடுகள வாவது மானம், வெட்கம், மனிதத்தன்மை, யோக்கியப் பொறுப்பு ஆகிய சாதாரண குணங்களாவது இந்த சிவநேசக் கூட்டத்திற்கு இருந்திருக்கு மானால் எவ்வித குற்றமும் செய்யாத நிரபராதிகளான மக்களை யாதொரு காரணமும் இல்லாமல் திருமணத்திற்கு வந்திருந்ததற்கு ஆகவே ஜட்கா வாலா, டெம்பர்வரி, அன்னக் காவடிகள், காலி, போலி, சில்லரை பேர்வழி என்றும், பெண் மக்களையும் தாசி, வேசி போன்ற அற்ப வார்த்தைகளாலும் வசைபாட சம்மதிக்க முடியுமா என்று கேழ்க்கின்றோம்..
இதுபோலவே திருப்பிச் சொல்ல வேண்டுமானால் இவர்கள் யோக்கியதைக்கும், நடத்தைக்கும் தகுந்த வார்த்தைகள் சுலபத்தில் கிடைக் காததாலும் அது அழகாயிராதென்றும் கருதி அதில் நேரம் செலவழிப்பதை விட்டு விட்டு அவ் வெளியீட்டின் மூலம் அவர்கள் கவலைப்படும் விஷயத்தில் பிரவேசிக்கின்றோம்.
அதாவது:- அதில் முக்கியமாய் குறிப்பிட்ட 1. கல்யாணம் கண்ட றாக்டா? என்பதும் 2. ஜாதி சமயம் போய்விடுகிறதே என்பதும் 3பிள்ளை யார். பட்டி இரணிக்கோயில் கூட்டத்தார்கள் சேர்ந்து மணமக்களை ஜாதியை விட்டு விலக்கிவைக்க வேண்டும் என்றும் விரும்பும் விஷயங்களைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.
முதலாவது,
கல்யாணத்தை கண்டறாக்ட்டு ஒப்பந்தம்) தான் என்றே நாமும்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சொல்லுகின்றோம். அது ஒரு ஒப்பந்தமல்ல என்று சொல்வதானால் அறிவுக் கேற்ற ஆதாரங்களை காட்டட்டும் என்றே கேட்கின்றோம். அதுவும் மணம் செய்து கொள்ளுகின்ற மணமக்கள் செய்துகொள்ளும்படியான ஒப்பந்தம் கொண்டது தான் கல்யாணமே தவிர வேறொருவர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்காக மணமக்கள் கட்டுப்படவேண்டும் என்பது கல்யாணம் அல்ல என்றே சொல்லுவோம். அதை இழவும் (துக்கம் மனிதத்தன்மை யற்றதும் என்றுதான் சொல்லுவதோடு அப்படிப்பட்ட ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு கஷ்டப்படுபவன் மூடன் அல்லது அடிமை என்றுதான் சொல்லுவோம். அதோடு அவ்வித ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றவர்களையும் அறிவிலிகள் அல்லது சுயநலத் தரகர்கள் என்றும் சொல்லுவோம். ஆண் பெண் சம்மதமின்றி அதுவும் அவர்களது தக்க பருவ உணர்ச்சியின் தேவை இன்றி மற்றும் தேவைக்குப் பொருந்தாத கல்யாணங்களின் யோக்கியதை இன்றைய தினம் அம்மாதிரி. மணமக்கள் உள்ள வீடுகளில் நடக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கேட்டு அறிந்து நடுநிலைமையில் இருந்து நினைத்துப் பார்த்தால் நாம் சொல்லுவதின். உண்மை விளங்காமல் போகாது. அதைப் பற்றி விரிக்கின் பெருகும்.
இரண்டாவதாக ஜாதி சமயம் என்பதைப் பற்றி பேசுவோம். இதில் நாட்டுக் கோட்டையார் ஜாதி என்பதையும் நாட்டுக் கோட்டையார் சமயம் என்பதையுமே எடுத்துக் கொள்ளுவோம். பிறகு சாவகாசமாய் மற்ற ஜாதி சமயத்தைப் பற்றி கவனிப்போம்.
நாட்டுக் கோட்டையார் ஜாதிக் கொள்கைகள் என்பது அச்சாதி மக்களுக்காவது அனுஷ்டிக்க முடிகின்றதா? நன்மையாயிருக்கின்றதா? உலக நாகரீகத்திற்கு ஏற்றதா? என்பனவாகிய முதலியவைகள் இங்கு கவனிக் கத்தக்கதாகும். இன்றைய தினம் பொதுவாக எங்கும் ஜாதி என்பதற்கு ஆதாரமாய் இருக்கும் கொள்கைகளில் பல வேஷத்திலேயே உடைய தாகும். அந்தப்படி பார்த்தால் நாட்டுக் கோட்டையாருக்கு உள்ள ஜாதி வேஷப்படி இன்றையதினம் யார் யார் இருக்கின்றார்கள். அவைகளில் 30 ணிக்குக் கீழ்ப்பட்ட வாலிபர்கள் ஜாதிக் கொள்கைக்கு விறோதமாய் தலையில் மயிர். வளர்த்துக் கத்தரித்துக் கொள்ளுகின்றார்கள். 30 வயதுக்கு கீழ் பட்ட பெண்கள் காது துவாரத்தை சிறிதாக்கி கம்மல் தோடு இட்டுக் கொள்ளு கிறார்கள். இரவிக்கையும் போட்டுக் கொள்ளுகிறார்கள். இனியும் இது போலவே பல விஷயங்கள் செய்த இந்த ஜாதிக் கொள்கை வேஷத்தில் இன்றும் பல மாறுதல் அச்சாதி, பிரபு வீடு முதல் ஏழை வீடு வரையிலும் இன்று புகுந்து விட்டன. சிவநேசர் கூட்டத்திலும் தாண்டவமாடுகின்றன. ஆகவே இம்மாதிரியான ஜாதி வேஷக் கொள்கைகளை தப்பு என்று இவர்கள் சொல்லுவார்களானால் பழய கொள்கைநியாயமும் நாகரீக முமானதா என்று கேட்கின்றோம். “பழைய கொள்கையைச் சேர்ந்த வேஷங்கள் தான் நியாயமானது. அதில் சிறிது மாற்றினாலும் ஜாதி கெட்டுப் போகும்” என்று
குடி அரசு - 1930 (2) 202
கருதுவார்களானால் கொஞ்ச காலத்துக்குள் நாட்டுக்கோட்டை ஜாதியாரெல்
லாம் உலகத்திலுள்ள கண்காட்சி சாலைகளுக்கு விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போகப்பட வேண்டியவர்களாகத்தான் ஆய்விடுவார்களே தவிர: நாட்டுக்கோட்டை நகரத்தில் வசிப்பதற்கு ஆளே கிடையாமல் போய்விடும் என்றே சொல்லுவோம்.
ஜாதியைக் காட்டுவதற்கு அடுத்தாப்போலுள்ளது சடங்கும் அது பற்றிய பழக்க வழக்கங்களுமாகும்.
ஆகவே அந்த விதமான ஜாதி சடங்குகள் பழக்க வழக்கங்கள். ஆகியவைகளைப் பற்றி சிறிது கவனிப்போம். அவை அறிவிற்கும், நாகரீகத்திற்கும், செளகரியத்திற்கும் ஏற்றதா என்பதையும் கவனிப்போம்.
முதலாவது அவர்களுடைய கல்யாணம் என்பதில் உள்ள கஷ்டங் களே ஒரு மனிதன் காதினால் கேட்க சகிக்காததாகும். கல்யாணம் செய்த பிறகு அப்பெண்களுடன் வாழும் தன்மையோ மிகவும் பரிதாபகரமான தாகும். அதாவது ஒரு சாதாரண மனிதனுக்கு கல்யாணம் ஆக வேண்டு மானால் 35 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வேண்டும். ஒரு மனிதனுக்கு முதல் மனைவி இறந்துபோயோ, இருந்து எவ்வளவு நியாயமான காரணத்தால் பிடிக்காமல் போயோ மறுபடியும் வேறு கல் யாணம் செய்து கொள்வதானால் கண்டிப்பாய் 40, 50 ஆயிரம் முதல் அறுப தாயிரம் ரூபாய் வரை வேண்டும். இப்படி செலவு செய்தாலும் 25 வயதுக் காரனுக்கு 9 வயது பெண்ணும் 35 வயதுக்காரனுக்கு1! வயது பெண்ணும் தான் கிடைக்கும். பெண் கொடுப்பவர்கள் பணக்காரர்களாய் இருந்தாலோ 20, 30, 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்துதான் தங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்யாணத்திலும் 16 வயது பெண் ணுக்கு 11 வயதுமாப்பிள்ளை.
யும், மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் பணக் காரர்களாயிருந்தால் 14 வயது
16 வயது பெண்ணுக்கு 9, 10 வயது மாப் பிள்ளைகளைக்கூட கல்யாணம் செய்வதும் வழக்கத்திலிருக்கின்றன. மற்றும் இம்மாதிரி கல்யாணங்களும், கல்யாணப் பெண் மாப்பிள்ளைகளின் பொருத்தங்களை, அழகுகளை, குணங்களை, கல்விகளை, திரேக பொருத்தங்களைக் கவனியாமல் சம்மந்திகளின் சிநேக அவசியத்தையும், வியாபாரத் தேவைகளையும், கெளரவங்களையும் உத்தேசித்தே மணங்கள் நிச்சயிக்கப்படுபவைகளாகவும் இருப்பது வழக்கம்.
சமீபகாலத்தில் அந்த நாட்டில் 63 ஆயிரம் ரூ. சொத்துடையவர். ஒருவர் தனது 25 வது வயதில் 57 ஆயிரம் ரூபாய் செலவு செய்து கல்யாணம் செய்து கொண்டார். அக்கல்யாணம் சில்லரைச் செலவு வகையராக்களுக்கு விபரம் என்னவென்றால்:-
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பெண்கிரயம் 37500
நகை 10500
கல்யாண செலவுக்காக 5500
கல்யாணம் முடித்த தரகுக்காரருக்கு 3500
ஆக ரூ. 57000
செலவாகி விட்டது.
கல்யாண மாப்பிள்ளைக்கு அவர் செலவு போக மீதிப்பட்டது சுமார்
ஐந்து ஆறு ஆயிரம் ரூபாயேயாகும். இதைக் கொண்டு தான் இனி அந்த மணமக்கள் பிழைக்க வேண்டும்.
இது தவிர அதே நாட்டில் மற்றொரு கனவான் முதல் பெண்ஜாதி இறந்துபோய் மறுமணம் செய்து கொள்வதற்கு தனது 36வது வயதில் 50ஆயிரம் ரூபாய் செலவு செய்து 8வயது பெண்ணைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்.
மற்றொரு கனவான் தனது நாணயத்தின் மீது பலரிடம் கடன்வாங்கி 50 ஆயிரம் ரூ. செலவு செய்து சிறு பெண்ணை கல்யாணம் கட்டி 2, 3 மாதம் இங்கிருந்து விட்டு கடன்காரர்கள் தொல்லைக்காக சம்பாதிக்க வெளிநாடு சென்று ஒரே மாதத்தில் இறந்துபோய் விட்டார். பணம் கொடுத்தவர்களுக்கு
4 மீ வட்டியுடன் பணம் போய்விட்டது. அந்த 10 வயது பெண்ணுக்கோ சாகும் வரை விதவையாய் இருக்க வேண்டியதாய்விட்டது.
இந்த மாதிரியாக ஜாதிக் கல்யாணப் பெருமை ஒரு புறமிருக்க கல்யாணம் செய்து கொண்ட பெண்களை தாய்வீட்டில் விட்டுவிட்டு 3 வருஷம் 4 வருஷம் கப்பல் பிரயாணம் போய் விடுவதென்பதும் நாட்டுக் கோட்டை செட்டியார்களில் எங்கும் நடைபெறக் கூடியதும் மிகவும் செல் வாக்குப் பெற்றதுமான ஜாதிக் கொள்கையாகும். பெண்சாதியைக் கூட அழைத்துக் கொண்டு போனாலோ ஜாதி கெட்டுப் போகும் என்பதும் அந்த ஜாதியின் ஒரு முக்கிய கொள்கையாகும். பிறகு அவர்கள் வீட்டிற்கும் நகைக்கும் சடங்கிற்கும் விருந்து முதலியவைகளுக்கும் முறைதலை என்பது போன்ற சமூகச் சடங்கிற்கும் அவர்கள் பணம் செலவு செய்வது முதலிய ஜாதி கொள்கைகளை விரித்தால் அதுவும் மிகப் பெருகிவிடும். நிற்க, இனி சமயக் கொள்கைகளைப்பற்றி சற்று கவனிப்போம்.
ஜாதிக் கொள்கைகளையாவது பெரிதும் பரிகாசத்திற்கும் துன்பத்
திற்கும் இடமாயிருக்கின்றதே என்று மாத்திரம் சொல்லலாம். அவர்களு டைய
குடி அரசு - 1930 (2) 204.
சமயக் கொள்கைகள் என்பதோ மக்கள் கேட்டிற்கே ஆதாரமா யிருக்கின்றன.
என்னவெனில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்மார்களின் சமயக் கொள்கைகள் பெரிதும் என்னவென்றால் கோயில் கட்டுவதும் வெள்ளி, தங்கம் ரதம், தேர்வாகனம் செய்வதும் பூசைகள், கும்பாபிஷேகங்கள் உற்ச வங்கள் செய்விப்பதும் சத்திரங்கள் வேதபாடசாலைகள் கட்டிவைப்பதும் முதலிய வைகள் ஆகும். இவைகளுக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்று பார்ப்போமானால் பல கோடிக்கணக்கேயாகும்.இச் செலவுகள் வீண் செலவும் தேசியப் பொருள் நஷ்டமுமல்லாமல் வேறு என்ன என்று சொல்லக் கூடும். செய்தவர்களும் நஷ்டமடைந்து சிலர் பாப்பராகி தாங்கள் கடன் வாங்கியவர்களுக்கும் முழுதும் கொடுக்க முடியாமல் இன்சால் வெண்டாகி
தீர்த்துக் கொடுக்கப்பட்டு அழிகின்றதை நேரிலேயே பார்க் கின்றோம். இவைதவிர மற்றும் பார்ப்பனர் காலில் விழுவதும் அவர்களைக் குருவாய்க் கொள்ளுவதும் இவர்களது சமயமாயிருக்கின்றது. இந்த மாதிரி சமயம் காக்கப்படுவதில் யாருக்கு என்ன லாபம்? என்று கேட்கின்றோம். நாட்டுக் கோட்டைச் செட்டியார்களில் தேவகோட்டையில் ஒரு பிரபல கோடீஸ்வரர். ஒருவர் சமீப காலத்தில் நன்றாயிருந்தது யாவருக்கும் தெரியும்.அவர் சுமார். 60, 70க்கு மேல்பட்ட கோயில்கள் கட்டினவர். பல கும்பாபி ஷேகங்கள். செய்து வேத பாடசாலை, அன்ன சத்திரம் முதலியவை கட்டி னவர் வியாபாரத்தில் நஷ்டமடையாமல் தாசி, வேசி, குடி, சூது ஆகியவை களில் செலவழிக்காமல் ஒழுங்காய் நடந்து வந்தும் தன் சொந்தப் பணம் முழுவதும் போய் கடன்காரருக்குப் பதில் சொல்ல வேண்டியவராய் விட்டார் என்றால் இந்த மாதிரியான சமயக் கொள்கை இனியும் காக்கப்பட வேண்டுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் திரு. தர்மபூஷணம் தி. நா. முத்தய்ய செட்டியார் என்கின்ற கனவான் 50, 60 லக்ஷத்திற்கு மேற்பட்ட ஸ்திதி உடையவராயிருந்தவர். இவரும் பல கோயில்களைக் கட்டி வெள்ளிரதம் முதலிய வாகனம் செய்து
சத்திரம் வேதபாடசாலை பிராமண சமாராதணை, பிராமண தர்மம் முதலிய வைகள் செய்தவர். “லோககுரு சங்கராச்சாரி சுவாமி” களின் பாதத்திற்கு 1008 பவுன் கொண்டு ஒவ்வொரு பவுனாய் போட்டு அர்ச்சித்து சஹஸ்திர நாமம் செய்து) அவரது பாத தீர்த்தம் சாப்பிட்டு “தர்மபூஷணம்” என்று கெளரவப் பட்டம் பெற்றவர். இவரும் இன்று கடன்காரருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிட்டராம். இவருடைய கணக்கையும் ஒரு தக்க ஆடிட்டரைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்தால் இவ்வளவு பணமும் கோவில் கட்டி வேத பாடசாலை வைத்து பார்ப்பனருக்கு கொடுத்துக் கொடுத்து இந்த நிலைக்கு வரவேண்டியவரானார் என்றே ரிப்போர்ட்டு எழுதுவாரே தவிர வேறு விதமாய் “தப்பு வழியில்” செலவு செய்ததாகவோ கொடுக்கல் வாங்கலில் நஷ்டமடைந்ததாகவோ எழுதமாட்டார். இதுபோல் கஷ்டப்பட்டவர்கள். கஷ்டப்படுகின்றவர்கள் குடும்பம் இனியும் எத்தனை இருக்கின்றது என்பது
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அச் சமூகத்திலேயே பலருக்குத் தெரியும். ஆகவே இம்மாதிரி ஜாதியும் சமயமும் காப்பாற்றப்பட வேண்டுமென்கின்ற அவசிய மென்னவென்றும் அதனால் அச் சமூகத்திற்கோ அல்லது நாட்டிற்கோ பலன் என்ன என்றும் கேழ்க்கின்றோம்.
இவைகள் ஒருபுறமிருக்க இச்சிவநேசக் கூட்டத்தாரின் ஒழுக்கங் களைப்பற்றிப் பேசுவோமானால் அங்குள்ள டாக்டர்களை, வைத்தியர்களை: விசாரித்துப் பார்த்தால் அவர்களைக் கொண்டு என்ன விதமான வியாதியஸ் தர்கள் அதிகமாக ஆஸ்பத்திரிக்கு வருகின்றார்கள் என்பதைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிடச் செய்தால் உண்மை நன்றாய் விளங்கிவிடும். மற்றும் அவர்கள் தங்கள் தங்கள் சொந்த நடவடிக்கைகளையே ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டாலும் விளங்காமல் போகாது. மற்றும் ஜாதி சமயத்தைக் காப்பாற்றும் சிவநேசக் கூட்டத்தாரின் பிள்ளைக் குட்டிகளைப் பற்றியோ வென்றால் அவர்கள் வெளியிடும் விளம்பரங்களைப் பார்ப்போமானால் பத்திரிகைகளிலெல்லாம் தங்கள் பிள்ளைகள் மைனர்களாக, சில்லரைப் பேர்வழிகளாக, டெம்பரவரிகளாக, காலிகளாகவும், எடுப்பார் கைப்பிள்ளை களாக புத்தி சுவாதீனமில்லாதவர்களாக ஆகிவிட்டதாகவும் அவர்களுக்கு யாரும் ஒரு பைசா அளவு கூட கடன் கொடுக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளும் - தெரிவிக்கும் விளம்பரங்களையே அநேகமாய் நாள்தோறும் பத்திரிகைகளில் பார்க்கலாம்.
தனித்தனியாய் அனுபவிக்கும் மாதிரியான இம்மாதிரி பலன்கள் ஒரு புறமிருக்க பொதுவாக அச் சமூகத்திற்கே அதாவது அச் சமூகம் இவ்வளவு கஷ்டப்பட்டு ஜாதியையும் சமயத்தையும் காப்பாற்றி தமிழ்நாட்டிலெங்கும் கோவில்கள் கட்டி இவர் கப்பலேறிச் சென்ற நாடுகளிலும் கோவில்கள் கட்டிப் பெரும் பெரும் சமய தர்மம் செய்து வந்தும் சிறிதும் ஜாதிக் கொள்கைகள் தவறவிடாது வந்தும் வாழ்க்கையில் பெரும்பான்மையான மக்கள் எவ்வித நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்தால் இன்று அச் சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் 20 வயது முதல் 45 வயது வரையில் கல்யாணமில்லாமலும் கல்யாணம் செய்து கொள்ள மார்க்கமில்லாமலும் வெறும் ஒத்தை ஆட்களாகவே இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட இவர்கள் வேறு சாதியில் கல்யாணம் செய்து கொண்டால் மாத்திரம்தான் சாதி கெட்டுப் போகுமென்று ஓலமிடுகிறார்களே ஒழிய மற்றபடி கூத்தி, வைப்பு முதலியவைகள் வைத்துக் கொண்டு எவ்வளவு ஒழுக்கயீனர்களாகத்
திரிந்தாலும் அவர்களுடைய சாதி சிறிதும் கெடுவதில்லை. அதைப்பற்றி சாதியிலோ, சமூகத்திலோ யாரும் சிறிதும் இழிவாய்க் கருதுவதும் இல்லை.
இந்த மாதிரி கல்யாணம் செய்து கொள்ள முடியாத ஆட்களுக்கு இக் கூட்டம் இதுவரை என்ன பரிகாரம் செய்திருக்கின்றது. அல்லது அவர்களை வேறு என்ன செய்யும்படி கட்டளை இடுகின்றது என்பதை அறிய விரும்பு கின்றோம்.
குடி அரசு - 1930 (2) 206
தவிர, மேல்கண்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்மார்களின் இன் றைய பொதுநிலை பொருளாதார விஷயங்களிலும் கவலைக்கிடங் கொடுக்
கக் கூடியதாகவே தான் பல கஷ்டங்கள் காணப்படுகின்றன.
எப்படியெனில் இவர்கள் பெரும் பெரும் பொருள்கள் கொண்டு போய் வைத்து தொழில் நடத்திவரும் வெளிநாடுகளிலெல்லாம் இப்போது கஷ்டமே ஏற்பட்டிருக்கிறது. பர்மா நாட்டில் பர்மா பிரிவினையும், பூகம்ப மும்,
கூலிச் சண்டையும், மலாய் நாட்டில் ரப்பர் விலை இறக்கமும், ஈய விலை
இறக்கமும், சிலோன் நாட்டில் கொப்பரை, தேயிலை, ரப்பர் ஆகிய வைகளின் விலைகள் வீழ்ச்சியும், உள்நாட்டில் கோர்ட்டுக்கு போகாமல் பணம் வசூலிக்க முடியாத நிலைமையும் ஆகிய காரியங்களும் கவலைப் படும்படியாகவே செய்து வருகின்றன. இதுவரை இவர்கள் கட்டி வைத்த கோவிலும், செய்து வைத்த கும்பாபிஷேகமும், பண்ணிவைத்த பூசையும், தேர், ரதம், வாகனம் முதலானவைகளும் இந்தக் கவலைக்கு என்ன பரி காரம் செய்கின்றன என்று
கேழ்க்கின்றோம்.
ஜாதிப் பெருமையும் சமயப் பெருமையும் விபூதிப் பெருமையும், பிராமண விசுவாசப் பெருமையும் இக்கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் செய்யக் கூடும் என்றும் கேழ்க்கின்றோம். ஆகவே இவ்வளவையும் பார்த்துக்கொண்டு, அனுபவித்துக் கொண்டு இன்னமும், இம்மாதிரி கொள் கைகள் கொண்ட இந்த சாதியையும் சமயத்தையும் காப்பதற்கு முயற்சிப்பது அறிவுடைய செயலாகுமா என்றும் கேட்கின்றோம். எனவே இனியாவது மானமுள்ளவர்கள் இந்த மாதிரி ஜாதி சமயப் பேச்சே பேச மாட்டார்கள் என்றும் அவற்றை ஒழிக்கப் பாடுபடுபவர்களுக்கு உதவி செய் வார்களே தவிர, இடையூறு செய்யமாட்டார்கள் என்றுமே கருதுகின்றோம்.மற்றும் இது விஷயமாய் அநேக விஷயங்களை நாம் மனதார மறைத்து விட்டோம்.
இப்படியெல்லாம் இருக்க வீணாய் நிரபராதிகளை “சில்லரை பேர்வழிகள்; போலிகள், டெம்பரவரி ஆள்கள், தாசிகள், வேசிகள்” என்பன போன்ற வார்த்தைகளால் இழித்துக் கூறியது யோக்கியர் செய்யும் வேலையா என்பதை சிவநேசர்களை யோசிக்கும்படியும் மற்றும் அச் சமூகத் தலை வர்களையும் இவர்களுக்கு புத்தி சொல்லும்படியும் வேண்டிக் கொண்டு இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.10.1930
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
விபசாரம்
விபசாரம் என்னும் வார்த்தையானது அநேகமாய் ஆண் பெண்: சேர்க்கை சம்பந்தப்பட்டதற்கே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக அதாவது ஒரு பெண் தனக்குக் கணவன் என்றோ, தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றவன் என்றோ வேசித் தொழிலிலிருப் பவளானாலும் யாராவது ஒரு புருஷனிடம் தற்கால சாந்தியாய் தன்னைக் குத்தகையாய் அனுபவிப்பவன் என்றோ சொல்லப்படும் படியான அந்தக் குறிப்பிட்ட ஆண் மகனைத் தவிர மற்றொருவரிடமோ, பல பேர்களிடமோ சேர்க்கை வைத்துக் கொண்டிருப்பதற்கே, கணவனாலும் வைப்புக்கார
னாலும், குத்தகைக்காரனாலும் மற்றும் பொது ஜனங்களாலும் சொல்லப்
படுகின்ற, அதாவது ஒரு பெரிய குற்றம் சாட்டுவதற்கும் பழி சுமத்துவதற்கும். உபயோகிக்கும் சொல்லாகும். ஆனால், அதே பெண்ணை அந்தக் கணவனோ வைப்புக்காரனோ மற்றொருவருக்குத் தன் சம்மதத்தின் பேரில் கூட்டி விடுவானானால் அதை அவர்கள் விபசாரம் என்று சொல்லுவதில்லை. இந்த சங்கதி பொது ஜனங்களுக்குத் தெரிந்தாலும் கணவனைத்தான் அவர்களும் வசை கூறி குற்றம் சொல்லுவதே தவிர பெண்ணை விசேஷ மாக முன் சொல்லப்பட்ட விபசாரியென்கின்ற முறையில் அநேகமாக குற்றம் சொல்லுவதில்லை. அன்றியும் இம்மாதிரி குற்றம் சாட்டுதலும் வச வுக்கும், பழிப்புக்கும் உபயோகப் படுத்துதலும் ஆண்களுக்குக் கிடையாது. அன்றியும் ஆண்களை விபசாரன் என்று வைக்கின்ற வழக்கமும் கிடையாது. அப்படிச் சொல்லப் படுவதற்காக எந்த ஆணும் கோபித்துக் கொள்ளு வதும் கிடையாது.
ஆகவே விபசாரம் என்னும் வார்த்தையின் அநுபவ தத்துவத்தைக்
கூர்ந்து கவனித்துப் பார்த்தால் “விபசாரம்” என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்று தான் சொல்ல வேண்டுமே யொழிய வேறல்ல. ஏனெனில் விபசார தோஷம் என்பதும் விபசாரம் செய்வதால் ஏற்படும் ஒழுக்கக் குறைவு என்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்கே தான் உண்டேயொழிய ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையவே கிடையாது.
குடி அரசு - 1930 (2) 208
உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் குறிப்பிடுவோம். அதாவது நமது நாட்டில் இதுவரை விபசாரம் செய்ததற்காக வென்று பெண்களைத் தான் பழி சுமத்தி குற்றம் சொல்லி ஜாதியை விட்டுத் தள்ளி வைத்திருக் கின்றார்களே யொழிய - வீட்டை விட்டுத் துரத்தியிருக்கின்றார்களே யொழிய
- அடித்தும், உதைத்தும், வைதும் துன்பப்படுத்தியிருக்கிறார்களே யொழிய - சில சந்தர்ப்பங்களில் கொலைகளையுங் கூட செய்திருக்கிறார் களே யொழிய, ஆண்களை இம்மாதிரியாகச் செய்திருப்பதாக நாம் கண்டதோ கேட்டதோ
இல்லை...
நிற்க, சில இடங்களில் விபசாரம் ஆண்களுக்குத் தற்பெருமை யாகவும் கீர்த்தியாகவும் கூடயிருக்கின்றதைப் பார்க்கின்றோம். சில ஆண் கள் அதைப் பெருமையாய் சொல்லிக் கொள்ளுவதையும் கேழ்க்கின்றோம்.
மக்களும் விபசாரிமகன் என்று சொன்னால் தான் கோபித்துக் கொள்ளுகின்றார்களே தவிர விபசாரனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை. ஆனால் எந்த சமயத்தில் ஆண்கள் கோபித்துக் கொள்ளுகின்றார்களென்றால் தங்கள் மனைவிகள். வைப்பாட்டிகள், குத்தகை தாசிகள் விபசாரம் செய்தார்கள் என்று சொன் னால் மாத்திரம் உடனே கோபித்துக்கொள்ளுகின்றார்கள். மேலும் மிகவும் அவமானமேற்பட்டு விட்டதாக பதருகிறார்கள்.மற்றும் தங்கள் பெண் களைத் தங்களுடைய சம்மதத்தின் பேரில் தங்கள் சுய நலத்திற்காக விப சாரத்திற்கு விட இணங்குகிறான் என்றோ பெண்ணை அடக்க முடியாமல் “ஊர்மேல்” விட்டு விட்டான் என்றோ சொல்லுகின்ற போது அதிகமாய்க் கோபித்துக் கொள்ளுகின்றார்கள்.ஆகவே இந்த அநுபவங்களையும் கொண்டு மேலே காட்டியபடி அதாவது விபசாரம் என்று சொல்லும் வார்த்தையின் தத்துவம் பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்றும், ஆண்களுடைய போக போக்கியப் பொருள் என்றும், விலைக்கு விற்கவும், வாடகைக்கு விடவும் கூடிய வஸ்து என்றும் கருதியிருக்கின்றார்கள் - என்பது இன்னும் தெளிவாய் விளங்கும்.
நிற்க, அது அதாவது விபசாரம் என்னும் வார்த்தையை வழக்கத்தில்
ஏன் பெண்களை மாத்திரம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது? “ஆண்களைச் சொல்லுவதற்கு ஏன் அது பயன்படுத்தப்பட வில்லை? யென்று கவனிப்போ மானால் அதிலிருந்து மற்றொரு உண்மையும் புலப்படும். அதென்ன வென்றால் விபசாரம் என்று சொல்லப்படுவது சுபாவத்தில் உண்மைக் குற்றமுள்ள வார்த்தையாக இல்லை என்பதேயாகும். எது போலென்றால் எப்படி கற்பு என்னும் வார்த்தையையும் அது பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமைகொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகு
மென்றும் சொல்லுகின்றோமோ அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கொள்வதற் கென்றே ஏற்படுத்தப்பட்ட தென்றும் காணப்படுவதோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும். சாதாரண மாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திர மும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததே யாகும்... ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதே யாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாக யிருக்கலாம். ஆன போதிலுங் கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு
கட்டுப் படாமையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும்.
மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலி ருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவை
யும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூல மாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எது வென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்
றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனுடைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும்
கட்டுப்பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத் திற்கு. விரோதமல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம் கூறுவோம்.
மலையாள நாட்டில் இரண்டு மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்படுத்திக் கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. ஆனால் அந்தப் பெண் மேற்கண்ட இரண்டு மூன்று புருஷர்களைத் தவிர மற்ற ஆண்களிடம் அதுவும் தங்களுக்கு மனைவியாயிருக்கும் காலத்தில் பிற ஆண்களிடம்
குடி அரசு - 1930 (2) 210
சம்பந்தம் வைத்துக் கொண்டால் மாத்திரம் தான் அதை விபசாரமாகக் கருதி
சில சம்பவங்களில் கொலைகள் கூட நடக்கின்றன. மற்றும் சில வகுப்புகளில் தங்கள் இனத்தார் தவிர மற்ற இனத்தாரிடம் சாவகாசம் செய்தால் மாத்திரம். விபசாரமாய்க் கருதப்படுகின்றன. நமது நாட்டிலும் சில வகுப்புகளில் குடும்பத்தைச் சேர்ந்த மச்சாண்டார், கொழுந் தனார் (அதாவது புருஷன் சகோதரர்கள்! மாமனார் ஆகியவர்கள் சம்பந்த மானது விபசாரத்தனமாய் கொள்ளப்படுவதில்லை. இக் கொள்கைகள் நம் நாட்டுப் பழங்குடி மக்கள்
மிகுதியும் கொண்ட சில சமூகங்களின் பழக்க வழக்கங்களுடன் கலந்து செல்வாக்குப் பெற்றிருப்பதை இன்றும் தாராள மாய்ப் பார்க்கலாம். இதுபோல் இன்னும் பல விஷயங்களும் உண்டு, ஆகவே இவைகளையெல்லாம் கவனித்துப் பார்த்தால் விபசாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை மீது பொதுவான ஒழுக்கக் குறைவு என்கிற தத் துவத்தில் எப்போதும் பழக்கத்தில் அமுலில் இல்லை யென்பது விளங்கும். நிற்க,
மனித சமூகத்திற்கென்று பொதுவாக சில கட்டுப்பாடுகளும் ஒழுங்
கும் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அடியோடு ஆக்ஷேபிக்க வரவில்லை. ஆனால் அவை தனிப்பட்டவர்கள் அதாவது ஆண்டான் அடிமை முறை, எஜமான் கூலி முறை, முதலாளி காரியஸ்தர் முறை, சிநேகிதர்கள் முறை, கூட்டாளிகள் முறை, வாழ்க்கைத் துணைகள். முறை போன்ற தன்மைகள் கொண்ட அதாவது தனிப்பட்ட சம்மந்தங்க ளுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பது போன்றதான ஒழுங்கு கட்டுப்பாடுகள் போல பொது வாழ்விற்கு பொதுக் கொள்கைகளாகியிருக்கக் கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்துக்கும் பாதக மேற்பட்ட தாகவும் அதுவும் பிரயோகத்தில் சிறிதும். பாரபக்ஷம் உயர்வு தாழ்வு தத்துவம் கொண்ட தல்லாததாகவும் இருக்கவேண்டு மென்பதோடு எல்லாவற்றையும் விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்ததாகவு மிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதக. முண்டுபண்ணாததாகவுமிருக்க வேண்டும். (நியாயமான என்றதினாலேயே எது நியாயம்? என்பதற்காக “தர்மசாஸ்திரங் களை”த் தேட வேண்டும் என்பது கருத்தல்ல. மற்றெப்படி கண்டு பிடிப்ப தென்றால் ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லப் படுவதானது பிறத்தி யானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால் அவன் முதலில் சொன்னவன் ஒப்புக் கொள்ளு கின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதே யாகும். அதாவது இருவருக்கும்
ஒன்று போன்றது! அன்றியும் அறிவுக்கும் சாத்தியத்திற்கும், அநுபவத் திற்கும் ஏற்றதாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இப்படிக்கெல்லாம் இல்லாமல் வெறும் நிர்ப்பந்தத்திற்கு நாணய
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மற்றதும் அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒவ்வாததானதுமான விஷயங் களுக்காக வலுத்தவர்கள் தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றின படிக் கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்து கொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத் தனத்தையும், அறிவுத் தடையையும் தான் உண்டாக்கும்.
சாதாரணமாக பொது வாழ்க்கையில் ஒருவன் செய்யக் கூடாதென் பதாக ஏற்பாடு செய்திருக்கும் திருட்டு என்பதான ஒரு குணத்தை எடுத்துக் கொள்ளுவோம். அது இன்றைய வழக்கில் ஒரு மனிதனுக்கு அதாவது திருட்டு கொடுத்தவனுக்கு கஷ்டத்தையும் மனவருத்தத்தையும் கொடுக்கக் கூடியதாயிருக்கின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஏனெனில் நம்ம சொத்தை ஒருவன் திருடினால் நமக்கும் அப்படித்தான் இருக்கும். ஆனால் எதனால் அந்த நஷ்டமும், சங்கடமும் ஏற்படுகின்ற தென்று பார்ப்போமானால் திருட்டுக் கொடுத்தவன் திருட்டுப் போன சொத்தை தன்னுடையது என்றும் அது தனக்கே சொந்தம் என்றும் எண்ணி யிருப்பதால்தான். உலகில் பொருளியல் சமத்துவம் ஏற்படுகின்றவரை திருட்டு. என்னும் குணமானது குற்றமாகத்தான் பாவிக்கப்படும். உலகத் திலுள்ள எல்லாச் சொத்தும் உலகத்திலுள்ள எல்லோருக்கும் சொந்தம். ஒவ்வொருவனும் பாடுபட்டுத் தான் சாப்பிட வேண்டும். தேவைக்கு மேல் எவனும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பன முதலிய கொள்கைகள். ஏற்பட்டு விட்டால் திருட்டுப் போவதும் திருட்டுப் போனதைப் பற்றிக் கவலைப்படுவதும் தானாகவே மறைந்துவிடும். ஆனால் இப்போதும் “நான் திருடுவது குற்றமல்ல. நீ திருடுவது தான் குற்றம். நான் பொய் சொல்வது குற்றமல்ல.நீ சொல்வது தான் குற்றம். நான் விபசாரம் செய்வது குற்றமல்ல. நீ செய்வதுதான் குற்றம்” என்பது போன்றதான பொது ஒழுக்கங்கள் என்பவைகளும் பொதுக் கட்டுப்பாடுகள் என்பவைகளும் ஒரு நாளும் பொது
வாழ்வுக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன் படாது. இன்று உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் இருந்து வரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்மம் முதலியவைகள் எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிராக வும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும், தனிப்பட்டவர்கள் சுயநலத் திற்கேற்ற சூட்சியாகவும் செய்யப்பட்டவைகளாகவேயிருக்கின்றன.
கடைசியாக மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால் உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி,
நித்திரை புணர்ச்சி மூன்றும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனு பவமாய்க் காண்கின்றோம். இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங் களும் அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.
குடி அரசு - 1930 (2) 212
ஆகவே பொது உணர்ச்சியும் இந்திரிய செயலும் மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆசையின் காரணமாய் எதையும் ஆசைப்படுவதும் அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக் கின்ற தைப் பார்க்கின்றோம். ஆகவே உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையும் மனிதனால் சாமான்யத்தில் கட்டுப்படுத்தக் கூடியதல்ல.யாராலாவது கட்டுப் படுத்தப் பட்டு விட்டது என்றால் அப்படிப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. நாம் சொல்லுவதும் அவருக்குச் சம்பந்தப்பட்டதல்ல. ( அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னமோ! அந்தப் படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும் இந்திரிய செயலை
யும் ஆசையையும் கட்டுப்படுத்தும் படியானதாகக் கொள்கைகளை ஒழுக் கங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவாணியாகுமா? செலாவாணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமா வென்று தான் கேட்கின்றோம். பொய் சொல்லக் கூடாது என்று வாயால் சொல்லி விடுகின்றோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக்குறை வென்று சொல்லி விடுகின்றோம். ஆனால் தொழில் முறைமைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து அதனால்
பிறருக்குக் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல் களையும் வியாபாரிகளையும் மனித சமூகத்தில் எவ்வித இழிவின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு பெருமையைக் கொண்டு அம் மக்களை கெளரவ மாகவும் மதிக்கின்றோம்.. ஆனால் அது போலவே நடக்கும் மற்றொரு தொழில்காரரை உதாரணமாக தேவதாசிகள் போன்றார்களை இழிவாகக் கருதுகின்றோம்.
பொதுவாக இம் 3 பேர்களாலும் மனித சமூகங்களுக்குக் கெடுதியும் நஷ்டமும் இருந்தும் இருவரை ஏற்றுக் கொண்டு ஒருவரைத் தள்ளுவ தானது கேவலமும் சூட்சியும் சுயநலமுமேயல்லாமல் இதில் நியாய மிருப் பதாகச் சொல்லமுடியுமாவென்று கேட்கின்றோம். எந்தத் தொழிலானாலும் மற்றவர்களுக்குக் கெடுதியைக் கொடுக்கும் தொழில் எதுவானாலும் அது இல்லாமலே உலகம் நடக்கும் படியாகத்தான் பார்க்க வேண்டும். இப்படிப் பட்ட விஷயத்தில் மாத்திரம் வேண்டுமானால் இயற்கையை மாற்றி கட்டுப் பாடுகளை ஏற்படுத்துவது அவசியமாகலாம். அப்படிக்கில்லாமல் ஒரு வருக்கு ஒருவிதம் என்பதாக மாற்றுவது பயன்படாததாகவே முடியும். எனவே இப்போது நடைமுறையிலிருக்கும் விபசாரமென்பதும் அதன் தத்துவமும் பெண்களை அடிமைப் படுத்துவதற்காக பெண்கள் அடிமைகள் என்னும் கருத்தின் மீது ஏற்படுத்தப் பட்டவைகள் ஆதலாலும் அது ஆண்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமலிருப்பதாலும் அது ஒப்புக் கொள்ள முடியாததாய் காணப்படுவதோடு பெண்கள் சுதந்திரம் பெண்கள் விடுதலை என்பவைகளுக்காக நடைபெறும் காரியங்களில் விபசாரம் என்னும் காரியம் வந்து முட்டுக்கட்டை போடுமானால் அதைத் தைரியமாய் எடுத்தெரிந்து
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
விட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியது உண்மையான உழைப்பாளிகளின் கடமையாகுமென்பதையும் குறிப்பிட்டு விட்டு இப் போதைக்கு ஒருவாறு
முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.40.1930
குடி அரசு - 1930 @) 214.
பெண்கள் சொத்துரிமை
இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம்.
3, 4 வாரங்களுக்கு முன் நாம் “இனியாவது புத்திவருமா” என்னும் தலைப்பின் கீழ் பெண்கள் சொத்துரிமையைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்.
கள் கவனித்திருக்கக் கூடும். அதற்கு அனுகூலமாக இவ்வாரம் சென் னையில் ஒய். எம்.சி.எ. கட்டடத்தில் நடந்த ஒரு மீட்டிங்கின் நடவடிக்கை யானது நமக்கு சிறிது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. அதாவது,
பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இரு கனவான்கள் தங்கள் அபிப்பிராயத்தை மிக வலிமையாய் வற்புருத்திப் பேசி இருக்கின்றார்கள். அவர்கள் பேசி யிருப்பவைகளில் முக்கியமானவை எவையெனில்,
மனிதருக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய வித்தியாச மில்லை என்பதும்,
ஆண்கள் அடைய விரும்பும் சீர்திருத்தங்கள் போலவே பெண்: களுக்கும் அளிக்க வேண்டும் என்பதும், ஆண்களைப் போலவே பெண் களுக்கும் சொத்துக்கள் அநுபவிப்பதென்பது சர்வ சுதந்திரமாய் இருக்க வேண்டும் என்பதும், இதைப் பற்றி இதுவரை யாரும் எவ்வித கிளற்சியும் செய்யவில்லை என்பதைப் பற்றியும், கணவன் அயோக்கியனாக இருந்
தாலும், கெட்ட வியாதிக்காரனாய் இருந்தாலும் மனைவிகள் அவனை விட்டு விலகி வாழலாம் என்றும்,
இப்படி விலகி வாழ்ந்தாலும் புருஷன் ஜீவனாம்சமும் அவன் சொத்தில் பாத்தியதையும் இருக்க வேண்டும் என்றும் விதவைகள் மறுமணம் செய்து கொண்டாலும் முதல் புருஷன் சொத்தில் பங்கு பெற பாத்தியம் இருக்க வேண்டு மென்றும் உபந்நியாசகராகிய திரு. நாராயண குரூப் அவர்கள் பேசி இருக்கிறார்.
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அக் கூட்டத்திற்கு தலைமை வகித்த திரு. டி. ஆர். வெங்கிட ராம சாஸ்திரியார் என்பவர் மாஜி அட்வொகேட் ஜனரலும் சென்னை அரசாங்க
மாஜி சட்ட மெம்பரும் ஆவார்.
இவரும் இந்தியாவில் எல்லா ஜாதி மதஸ்தர்களுக்கும் பொதுவாக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று பேசியிருப்பதோடு சீர்திருத்த விஷயத்தில் முஸ்லீம்கள் ஒத்து வர மாட்டார்கள் என்று பயப்படுவதாகவும் அதற்காதாரமாய் சாரதா சட்டத்தைப் பற்றிய முஸ்லீம்களின் ஆக்ஷ்பனை யையும் எடுத்துக் காட்டிவிட்டு,
மேலும் பெண்கள் இப்போது ஆண்களைப் போலவே எல்லா வழிகளிலும் முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு, அவர்களுக்கு சகல உரிமையும் கொடுக்க வேண்டும் என்பதை மனப் பூர்வமாய் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்.
எல்லாவற்றையும் விட அவர் பேசி இருப்பதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் “ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் பெரியோர்கள் செய்த ஏற்பாடு என்பதற்காக கண் மூடித்தனமாய் ஒன்றை பின்பற்ற வேண்டு மென்பது அறிவுடைமையாகாது” என்பதும் இந்த நாகரீக காலத்தில் அதாவது 20 வது நூற்றாண்டில் இருந்து கொண்டு 13 வது நூற்றாண்டு கதைகளைப் பற்றி பேசி அவற்றை மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக்குவது மிகவும் பரிகசிக்கத்தக்கதாகு மென்று பேசியிருப்பது
மாகும்...
இதை மற்றப் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத பழமை விரும்பி களும் கவனிக்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.
பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல வென்றும் அவர்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமாய் இருக்கத் தகுந்தவர்கள் என்றும் நாம்
முதலில் தீர்மானம் செய்து கொண்டோமேயானால் பிறகு மேல் கண்ட சீர்திருத்த விஷயங்களும் மற்றும் ஒழுக்க சம்மந்தமான தென்றும் கட்டுப் பாட்டுக்காக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொள்கைகளின் யோக்கியதைகள் எல்லாம் தானாகவே விளங்கி விடும். அந்த எண்ணம். ஆண்களுக்குச் சரியாக உண்டாகாததினாலேயே பெண்கள் சுதந்திரம் என் னும் விஷயங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்கள் பெண்களுக்
குத் தயவு செய்து பிச்சை கொடுப்பது போலவே கருதுகின்றார்கள். உண்மை யான சுதந்திரம் பெண்களுக்கு ஏற்பட வேண்டுமானால் வாழ்வில் அதாவது ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கைத் துணைகளாய் வாழும் வாழ்க்கையில் இருவருக்கும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகளிலும் ஒரேமாதிரியான ஒழுக்க
மும் கட்டுப்பாடும் இருக்கும்படி வாழ்க்கையையும் அது சம்பந்தமான அரசியல் சட்டங்களையும் திருத்திக் கொண்டாலொழிய உண்மையான
குடி அரசு - 1930 (2) 216
சுதந்திரம் ஏற்படவே முடியாது. மக்கள் மனதிலும் “இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்ரக்ஷணையிலும் இருக்
கும் படியாக படைக்கப்பட்டிருக்கின்றார்கள்” என்கின்ற உணர்ச்சி அடி யோடு மாறியுமாக வேண்டும். அந்த வுணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்
லாமல் இன்றைய நிலை பெண்களுக்கே பெரிதும் முதலில் மாற வேண்டி யதாக இருக்கின்றது.
ஏனெனில் அவர்களை அழுத்தி அடிமைப் படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலார்கள் என்றும், ஏதாவது ஒரு ஆணின் காப்பில் இருக்க வேண்டியவர்களென்றும் தங்களையே கருதிக் கொள்ளும்படி செய்து விட்டது. ஆதலால் அது முதலில் மாற வேண்டியது அவசியமாகின்றது.
ஆகவே அவர்களது சுதந்திரத்திற்கு சொத்துரிமை இல்லாததோடு தங்களின் அடிமையுணர்ச்சியும் பயமும் காரணமாயிருப்பதால் வாழ்க்கை
யில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அவ்வடிமை உணர்ச்சியும் பயமும் அடியோடு மறையும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது பெண்கள். விடுதலைக்குப் பாடுபடுவர்களின் முக்கிய கடமை என்பதை ஞாபகப் படுத்துகின்றோம்.
தவிர பெண்களை ஆண்கள் எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக் கின்றார்கள் என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தையும் இந்த சந்தர்ப்பத்திலேயே குறிப்பிட விரும்புகின்றோம்.
அதாவது மலையாள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புக்களில் ஆண்கள் குடும்பத்தில் மூத்தவர் யாரோ அவர் மாத்திரமே தங்கள் ஜாதியில் அதாவது நம்பூதிரி ஜாதியிலேயே ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது என்றும் மற்ற ஆண்கள் வேறு ஜாதியில் அதாவது நாயர் ஜாதியில் உள்ள பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தப்படி வைத்துக் கொள்வதிலும் நாயர். பெண்கள் வயிற்றிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அக் குழந்தைகளைக் கொடுத்த நம்பூதிரியின் சொத்தில் பங்கு இல்லை என்றும் ஒரு கொள்கை இன்றும் இருந்து வருவதுடன் இதை நாயர் பெண்களும் ஆண்களும் ஒரு பெருமையாகவும் கருதி வருகிறார்கள்.இதனால் நம்பூதிரி வகுப்புப் பெண்கள் அநேகர் 40, 50 வருஷம் வரையில் கூட கல்யாண மில்லாமல் பேருக்கு மாத்திரம் சாகும்போது ஒரு நம்பூதிரிப் பார்ப்பனக் கிழவனால் தாலிகட்டச் செய்து விடுவதும் மற்றும் இதற்காகவே ஒரு கிழவனுக்கு 6,7 மனைவிகளைக் கட்டுவதும் வழக்கமாயிருந்து வருகின்றது. இந்தக் கொடுமையை உணர்ந்த நம்பூதிரி வாலிபர்கள் தங்கள் சமூகத்தின் காட்டு மிராண்டித் தனமான இக்கொள்கைகளை அழிக்கத் தோன்றி இப்போது எவ்வளவோ தாராள நோக்கங்களுடன் வெளிக்கிளம்பி விட்டார்கள். இவைகளில் ஒன்றாகத்தான்
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பூணூல் அணிவது முட்டாள்த் தனமென்றும் அவற்றை கழற்றி நெருப்பில் போட்டு கொளுத்த வேண்டும் என்றும்
தீர்மானம் செய்து அவ்வாரே பலர் கழற்றி நெருப்பில் கொளுத்தியும்
விட்டார்கள்.
பலர் தலையில் உள்ள முன் குடுமிகளை எல்லாம் சிறைத்து விட்டு
கிராப் செய்து கொண்டார்கள். இப்போது தம்பியாய் இருக்கின்றவர்களும் கல்யாணமும் செய்து கொண்டார்கள்.
இந்தக் கல்யாணக் கொள்கை விஷயத்தில் நாம் முக்கியமாய் மகிழ்ச்சியடையும் விஷயம் ஒன்றேயாகும். அதாவது நம்பூதிரிப் பெண்கள்
40, 50 வருஷம் வரை பலர் புருஷனில்லாமல் இருக்கும் கொடுமைகள் ஒருவாறு ஒழியும் என்பதேயாகும்.நம்பூதிரி ஆண்கள் கல்யாணமில்லாமல் இருக்கவேண்டும் என்றும் பெண்ஆசை இருந்தால் நாயர் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் என்றும் செய்து கொண்ட கட்டுப் பாடுகளைப் போலவே நம்பூதிரிப் பெண்களிலும் கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள் வேறு ஏதாவது ஒரு வகுப்பு ஆண்களை சம்மந்தக் காரனாக நாயகனாக வைத்துக் கொள்ளலாம் என்பதாக ஒரு திட்டம் செய்து கொண்டிருப்பார்களானால் அந்த வகுப்புப் பெண்களுக்குக் கஷ்டமே இருந்திருக்காது. அப்படிக்கில்லாமல் தங்கள் வகுப்பு பெண்களை வீட்டில் கல்யாண மில்லாமல் அடைத்து வைத்து விட்டு வேறு வகுப்புப் பெண்களை வைப்பாட்டிகளாக அனுபவித்துக் கொண்டு இருப்பதானதும் மிகவும் கொடுமையான காரியம் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கொடுமையை ஒழிக்க நம்பூதிரி வாலிபர்கள் முயற்சித்தால் அதற்கு இடையூ றாக நாயர். கனவான் பிரவேசித்து அந்த வாலிபரை பகிஷ்காரம் செய்வது என்பது
மிகவும் மானக்கேடான காரியமாகும். சுயமரியாதை அற்ற ஜாதி யைச் சேர்ந்த பெண்கள் என்று அந்த ஜாதியைப் பற்றி நம்பூதிரி வாலிப சங்கத்தார். வெளியிட்ட சுற்று அறிக்கையில் குறிப்பிட்டது மிகவும் பொருத்த மானது என்றே சொல்லுவோம். ஆகவே பழமையின் பேரால் பெண்களை வெகு காலமாகக் கொடுமைப்படுத்தி வந்த காரியங்கள் இப்போது திடீர் திடீரென்று அழியும் படியாக ஆங்காங்கு முயற்சிகள் அதுவும் காரியத்தில் நடைபெறுவதை இந்த இரண்டொரு வருஷங்களாகத் தான் பார்க்க முடி கின்றன. இவற்றிற்கு ஏற்படும் எதிர்ப்புகளை மக்கள் எவ்வளவு கேவலமாக
வும், அலட்சியமாகவும் கருதக் காலம் வந்து விட்டது என்பதை நினைக்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஹைகோர்ட்டில் நடந்த ஒரு அரசியல் சம்மந்தமான வழக்கில் பழமை விரும்பியான ஒரு வருணாசிரமப் பார்ப்பனர்: அதாவது திரு.டி. ஆர். ராமச்சந்திரய்யர் என்பவர் “சில காலிகள் நாளைய
தினம் பூணூல் போடக்கூடாது என்று சொன்னால் அதற்கும் கட்டுப்படுவதா?”
குடி அரசு - 1930 (2) 218
என்று பேசி இருக்கிறார். இதை ஒரு தேசீயவாதியும் கண்டிக்கவே இல்லை.
இந்த திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் அவர்கள் மலையாளத்தில் பூணுலைக் கழட்டி நெருப்பில் போட்டு கொளுத்திய நம்பூதிரி பார்ப்பனர் களை என்ன செய்தார் என்றும் அந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கூட்டத்தில் பூணூல் போடுவது முட்டாள்தனமென்று தீர்மானித்த தீர்மானத்தை பற்றி என்ன செய்தார் என்றும் கேழ்க்கின்றோம்.
அறிவு விஷயத்தில் உலகம் போகும் முற்போக்கை கவனிக்காமல் தங்களுடைய சுயநலத்தையே பிரதானமாய்க் கொண்டு பழைய கந்தல்களை'
புரட்டிக் கொண்டு கசுமாலங்களைக் கழுவி விட்டுகொண்டே இருந்தால் அதை இனியார் மதிப்பார்கள் என்பதை இந்த கூட்டத்தின் சுயநல ஆத்திர மானது அவர்களை அறிய முடியாமல் செய்து கொண்டே வருகின்றன.
ஆகவே இனி பொது நல சேவைக்காரர்களும் மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களும் அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிய திட்டத்தை மாத்திரம் போட்டுக் கொண்டிருக்கும் யோசனையை விட்டுவிட்டு சமூக வாழ்க்கை நிர்வாக சம்மந்தமான விஷயத்திலும் அவசியமான திட்டங்களைப் போட வேண்டிய காலம் வந்திருப்பதை கவனிக்க விரும்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26101930
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
குருசாமி - குஞ்சிதம்
திருச்செல்வர்கள் எஸ். குருசாமி, எஸ். குஞ்சிதம் ஆகிய இருவர் களும் இவ்வருஷம் கடைசியாக நடந்த செப்டம்பர் மாதப் பரீட்சையில் பி.. ஏ.வகுப்பில் தேறியிருக்கிறார்கள்.திருமணம் நடக்கும் போது திரு. குரு சாமி
பி. ஏ. வகுப்பில் ஒரு பாடம் மாத்திரம் தேறியிருந்தார். திரு. குஞ்சிதம் மாணவியாயிருந்தார். திருமணம் நடந்து “சதிபதி”களாக வாழ்ந்து கொண்டே இருவரும் படித்து பரீட்சையில் தேறியிருப்பதற்கு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அவர்களது முயற்சியைப் பாராட்டுகிறோம்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 26.10.4930
குடி அரசு - 1930 (2) 220
நாடார் முண்சீப்பு
சென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு. நடராஜ நாடார் பி.ஏ.ஃபி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் தயவினால் விருத் தாசலம் (தென்னாற்காடு ஜில்லா முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று. உத்தியோகம் ஒப்புக் கொண்டார். இந்த கனவான் சுமார் ஒன்றரை வருஷத்
திற்கு முன்பாகவே முன்சீப் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவர். இந் நியமனம். வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப்பட்டதன் மூலமே கிடைக்கப் பட்டதாகும். இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காறாகவே தான்
வந்திருப்பார். இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள். சப் ஜட்ஜியாகவோ, ஜில்லா ஜட்ஜி யாகவோ பிரிட்டீஸ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாடார் சமூகத்திற் கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறிஸ்தவர்கள். வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள். நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இனியாவது நாடார் மக்கள் கண் விழித்து கிறிஸ்தவ நாடார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களை கிறிஸ்தவர்களுக்குண்டான விகிதாச்சாரத்தில் பெற்றுக் கொள்ளும்படியும், தங்கள் சமூகத்திற்குண்டான விகிதாச்சாரத்தில் வேறு யாரும் பிரவேசிக்காத படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதம் காப்பாற்றப்படவேண்டும். ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அதில் யாரும் பிரவேசிக்கக் கூடாதென்றும், இந்த நிபந்தனையின் மீதே சுயராஜ்யமும் சுயேச்சையும் பெற விரும்பும் ஸ்தாபனங்களும், கிளர்ச்சிகளும் நடக்கும் போது நாடார் சமூகம் போன்ற வகுப்பார்கள் தங்கள் உரிமை பெறுவதில் மிக்க கவலையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியதுடன் அந்தப்படி தாராளமாய் பல்லைக் கெஞ்சாமலும் மனச் சாட்சியையும் கொள்கைகளையும் விற்காமலும் தானாகவே கிடைக்கும் படியாக அரசாங்க யந்திரத்தில் தக்க மார்க்கம் செய்து கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும். இது நிரந்தரமென்று நாம் சொல்ல வரவில்லை. எது வரையும் ஜாதிப் பிரிவும், மதப்பிரிவும் அவைகளுக்கு ஏற்ற தாழ்ச்சி
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
உணர்ச்சிகளும் ஆதாரங்களும் காக்கப்படுகின்னனவோ அதுவரையில் கண்டிப்பாய் மேல் கண்ட கொள்கை இருந்தே ஆகவேண்டும் என்று சொல்லுகின்றோம். “சுயராஜ்ய அரசாங்கம் ஏற்பட்டால் எல்லாம் சரியாய் விடும். ஆகையால் அதுவரை யாரும் தங்கள் உரிமை கேட்கக் கூடா தென்று
சிலர் அதாவது இப்போது தங்கள் உரிமைக்கு மேலாக பலன் அனுபவித்துக் கொண்டிருக்கின்றவர்களும் அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டியவர்களும் சொல்லுவார்கள். அதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் இப்போது இருப்பதை விட சுயராஜ்ய அரசாங்கம் என்று சொல்லுவதில் வகுப்பு உரிமையும், மத உரிமையும் அதிகமாகத்தான் வலியுறுத்தி என்றும் மாராமல் இருக்கும்படி பந்தோபஸ்து செய்ய வேண்டி யிருக்குமேயொழிய இதை விட சிறிதும் குறைவாயிருக்காது என்று கோபுரத்தின் மீதிருந்து கூவுவோம். ஏனெனில் சுயராஜ்ய கவர்ன்மெண்டில் ஜாதியையும் மதத்தைப் பற்றியக் கொள்கை என்னவென்பதையும் அதற்
காகப் பல மதக்காரர்கள் இடமும், பல வகுப்புக்காரர்களிடமும் இதுவரையும் இப்போதும் செய்து கொண்டு வந்திருக்கும் ஒப்பந்தத்தையும் ராஜியையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நிற்க இம்மாதிரி வகுப்புவாரி உரிமைக்கு பார்ப்பனர்களைப் போலவே கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சிற்சில இடங்களில் சொல்ல வருவார்கள். ஏனென்றால் பார்ப்பனர். களைப் போலவே தாங்களும் கிறிஸ்தவர்களும்) அதிகம் பேர் படித்திருப் பதாகவும் கிறிஸ்தவ ஜன சங்கைப்படி தங்களுக்கு உத்தியோகம் கொடுத்தால் அது மிகவும் போராததாகி விடும் என்றும் ஆகையால் தாங்கள் அரசாங்க மதத்தை சேர்ந்தவர்கள் என்னும் சலுகைமேல் அதிக உத்தியோ கம் பெறுவது இந்த வகுப்புவாரித் திட்டத்தினால் குறைந்து போய் விடு மென்றும் கருதி சொல்லுவார்கள். இதையே மற்றும் இம்மாதிரியான இரண்டொரு வகுப்பும் சொல்லக் கூடும். ஆனால் வெகு காலமாய் தாழ்த்தி கொடுமைப் படுத்தி வைத்திருக்கும் மக்களுக்குக் கண்டிப்பாய் இந்த வகுப்புரிமைத் தவிர வேறு கதியே கிடையாதலால், அவர்களும் மற்றவர் களைப் போல் வரும் வரையிலாவது இதை வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டியது அவர்களது கடமையாகும். “சர்க்கார் உத்தியோகம் பெறுவது அடிமை தனம்” என்று கூட
சிலர் சொல்ல வருவார்கள். அதையும் யாரும் கவனிக்கக் கூடாது. ஏனெனில் சுயராஜ்யமே உத்தியோகம் பெறுவதற்காகத் தான் கேட்கப்பட்டது. இன்று நாம் கேட்கும் சுயராஜ்யமும் உத்தியோகம் தான். அதாவது அதிகாரம் செய்வதும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் தான். ஆதலால் இதை நம்பி முட்டாள்களாய் விடக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.10.1930
குடி அரசு - 1930 (2) 222
சட்டசயைக்குப் பார்ப்பணர் சல்வதின்
ஆபத்து
திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்க கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும் , கல்யாண வயதைப்
பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்கு சிறிது கூட மாற்றம் செய்யச் சீர்திருத்த வாதிகளையாவது சர்க்காரையாவது சட்டசபைகளை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காக கட்டுப்பாடான பிர. சாரம் செய்ய வேண்டுமென்றும் தன்னால் கூடிய வரை தான் சட்ட சபையில் பார்த்துக்கொள்வதாகவும் கூறியிருக்கின்றார். சுயராஜ்யம் கிடைத்தப் பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசீயவாதிகளும் அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன. நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத் துரோகம் என்பதாகவும் சுய ராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும் போய் விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆகவே எப்படியாவது சட்டசபை முதலிய ஸ்தானங்களுக்கு அரசி
யல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மை யான சீர்திருத்தத்திற்கு போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும். அதை விட்டு விட்டு அரசியல் கொள் கைகள். என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டா வது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித் தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனீயப் பிரதிநிதியாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமை
யேயாகும்.
குடி அரசு - செய்திவிளக்கக் குறிப்பு - 2610-1930
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சம்பனக் கான்னை
திரு. சி.எஸ். இரத்திணசயாபதி முதலியார்
கோவையில் கூடிய நடு வகுப்பு உத்தியோகஸ்தர்கள் மகாநாட்டில் தலைமை வகித்த திரு. சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எம்.எல். சி. அவர்கள் செய்த தலைமை உபன்யாசத்தில் கண்ட ஒரு விஷயத்தை நாம் பாராட்டுகின்றோம். அதாவது “உயர்ந்த சம்பளம் வாங்குபவர்கள் சம்பளத் தைக் குறைத்து குறைந்த சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தை உயர்த்தி எல்லோருடைய சம்பளத்தையும் ஒருவிதமாய் நிர்ணயிக்கவேண்டும்” என்று பேசி இருக்கின்றதானது மிகுதியும் போற்றத்தக்கதாகும். குடிகளுக்கு வரிப்பளுவு அதிகமாயிருப்பதும் சர்க்கார் வேலையில் இருப்பவர்களில் அநேகருக்குச் சரியான ஜீவனத்திற்குப் போதாத சம்பளமிருப்பதற்குக் காரணம் சில உத்தியோகஸ்தர்களுக்கு ஏராளமான சம்பளங்களும் தகுதிக்கும் தேவைக்கும் அதிகமான சவுகரியங்களும் ஏற்பட்டிருப்பதே யாகும்.
என்றைய தினம் அரசியல் புரட்டு நமது நாட்டில் தோன்றிற்றோ அன்று முதலே பெரிய பெரிய உத்தியோகமும் அவற்றிற்குக் கொள்ளை கொள்ளை. யான சம்பளமும் அதிகப் பட்டுக்கொண்டும் உயர்த்திக்கொண்டுமே
வந்திருக்கின்றது. இனியும் உயருகின்றது. இவை முதலான கொடுமைகளை யெல்லாம் யோசித்தே ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் எந்த உத்தி யோகத்திற்கும் அதாவது எவ்வளவு பொறுப்புள்ள உத்தியோகத்திற்கும் மாதம் 1000 ரூபாயுக்கு மேற் பட்ட சம்பளம் இருக்கக்கூடாது என்பதாக ஒரு தீர்மானமும் நிறை வேற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் அது எப்போது அமுலுக்கு வரும் ?
குடி அரசு - கட்டுரை - 26.10.1930
குடி அரசு - 1930 @) 224.
மந்திரி மார்கள்
சென்னை மாகாணப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டபின் அமைக்கப் படவேண்டிய மந்திரிசபை அமைக்கப்பட்டாய் விட்டது.
அதாவது திவான் பகதூர் 8. முனுசாமி நாயுடு அவர்கள் முதல் மந்திரியாகவும், திரு. 21. இராஜன் பாரிஸ்டர் அவர்கள் இரண்டாவது மந்திரி யாகவும், திவான் பகதூர் 5. குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மூன்றாவது மந்திரியாகவும் நியமனம் பெற்றிருக்கின்றார்கள்.
இவர்களைப் பாராட்டி வரவேற்கு முன்பாக பழைய மந்திரிகளை அவர்களது அருமையான தொண்டுக்காகப் பாராட்டி வழியனுப்ப வேண்டி
யது அறிவும் நடுநிலைமையுமுள்ளோர் முறையாகும். அந்தப்படி பாராட்டி. வழியனுப்புவதில் சிறிது கூட மிகைப்படுத்தாமல் உண்மையை உள்ளபடி சொல்லுவதானாலும் இதில் போதிய இடம் கிடைக்க மாட்டாது என்றே கருதுகின்றோம்.
முதலாவதாக, அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதாவது இராஜிநாமா கொடுத்த மூன்று மந்திரிகளின் நாணய விஷயம் மிக பரிசுத்தமானது என்பது அவர்களுடைய எதிரிகள் கூட இதுவரை அதைப்பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ளாததாலேயே நன்றாய் விளங்கும்.
இரண்டாவது, பார்ப்பனரல்லாதார் நன்மையின் பொருட்டு தங்களால்
கூடிய அளவுக்கும், சில சமயங்களில் மேலாகவும் நன்மை செய்திருக்கின் றார்கள். உதாரணமாக முதன் மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள். பெண்களும், தீண்டப்படாதவர்கள் என்பவர்களும் சொற்பத்துகையுள்ள மதக்காரர்கள் என்பவர்களும் ஸ்தல ஸ்தாபனங்களில் தேர்தல் மூலம் இடம் பெறும்படிசெய்திருப்பதும்,நாமினேஷன்களே அடியோடு இல்லாமல் எல்லா ஸ்தானங்களையும் தேர்தல்களுக்கே விட்டுவிட்டதும், பெண்கள் கல்வி விஷயத்தில் தாராளமான அளவுக்கு அதாவது 3வது பாரம் வரை இலவசமாக கிடைக்கும்படி செய்தது ஆகிய மூன்று காரியங்களும் மூன்று இரத்தினங்கள் என்றே சொல்ல வேண்டியதாகும். இந்தக் காரியங்கள் இந்தியா முழுவதிற்கும்
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பார்த்தாலே இவர் மாத்திரமே தான் இப்படிச் செய்தவராயிருப்பார்.
மற்றும் இரண்டாவது மந்திரியான திரு. முத்தையா முதலியார் அவர்கள் சர்க்கார் உத்தியோகங்களில் எல்லா மக்களுக்கும் பங்கு கிடைக்
கும் படியாக ஏற்பாடு செய்தவராவார். இதைப் பார்க்கும் போது வகுப்பு மதத் திட்டமானது, கடுகளவு மனித சுபாவமுள்ளவனும் போற்றித் தீர வேண்டிய தோடு எதுவரையில் இந்த நாட்டில் வகுப்பு உயர்வு தாழ்வு பிரிவுகளும் மத உணர்ச்சியும் இருக்கின்றதோ அதுவரை அவருக்கு நன்றி செலுத்தித் தீர
வேண்டியதாகும்.
இது தவிர சர்க்காரைக் கொண்டே மதுவிலக்குப் பிரசாரம் நடக்கும்
படி ஏற்பாடு செய்ததானது உலகமே போற்றக் கூடிய காரியமாகும். உலகத்தில் இப்போது அநேக தேசங்கள் இதைப் பாராட்டி பின்பற்றி வருகிறது.
திரு. சேதுரத்தினமய்யர் அவர்களும் உத்தியோக வினியோக விஷயத்தில் பார்ப்பனர் அல்லாதார் விஷயத்தில் மிக்க மேன்மையாக நடந்து கொண்டதுடன் மற்ற மந்திரிகள் செய்யும் காரியங்களுக்கு யாதொரு இடையூறும் இல்லாமல் எதிர்பார்த்தறற்கு மேலாகவே ஒத்துழைத்து வந்தது பாராட்டத்தக்கதேயாகும்.
இவற்றையெல்லாம் விட ஸ்தல ஸ்தாபன மந்திரி இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு சுயமரியாதைச் சங்கத் தலைவர் திரு. செளந்திரபாண்டியன் அவர்களை அநேக எதிர்ப்புக்கு இடையில் நியமனம் செய்ததும், கொடுமை செய்யப்பட்டுத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திருவாளர்கள் சாமி சகஜானந்தம் அவர்களையும் முனுசாமி பிள்ளை அவர். களையும் தேவஸ்தானக் கமிட்டி அங்கத்தினர்களாக நியமனம் செய்ததை
யும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளைச் சேர்க்க மறுக்கும் பள்ளிக் கூடங்களுக்கு கிராண்டு உதவித்தொகை கொடுப்பதை மறுப்பதன் மூலம் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் சேர்க்கும்படி செய்த காரியத்தையும் அவசியம் பாராட்ட வேண்டியதாகும். மற்றபடி பொதுவாகவே மூன்று
மந்திரிகளும் தங்களாலான அளவுக்கு மனப்பூர்த்தியாய் தயவு தாக்ஷண்யம் என்பதில்லாமல் சுயமரியாதை இயக்கத்திற்கும், கொள்கைக்கும் உதவி புரிந்து வந்திருப்பதும் சட்டசபை முதலிய இடங்களிலும் பார்ப்பனர்களும் அவர்களது ஆயுதங்களும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் தைரிய மாய் பதில் சொல்லி இயக்கத்தை ஆதரித்து வந்ததற்கும் சுயமரியாதை இயக்
கம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டதாகும்.
மற்றும் இவர்களில் பார்ப்பனரல்லாத மந்திரிகள் இருவரும் ஜஸ்டிஸ் கட்சியில் கலந்து அதற்குத் தங்களால் கூடிய உதவி பல வகையிலும் செய்து
குடி அரசு - 1930 (2) 226
வந்ததும் குறிப்பிடாமல் விடக் கூடியவைகள் அல்லவென்றே சொல்லு வோம். கடைசியாக இம் மந்திரிகள் கட்சி காரணமாகவோ கொள்கை காரண மாகவோ அல்லாமல் தனிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே மறுபடியும் மந்திரிகளாய் வரக்கூடாமற்போய் விட்ட போதிலுங்கூட அவர்களுடைய
முழு ஆதரவும் நமது இயக்கத்திற்கும், பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லாமல் உறுதியாய் நம்பியிருக்கின்றோம்.
நிற்க, புதிய மந்திரிகளை வரவேற்பதிலும் மிகைப்படுத்திக் கூறாமலே உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மிகவும் பாராட்ட வேண்டியதே
யாகும்.மந்திரிகளையும் கட்சி காரணமாகவோ, கொள்கை காரணமாகவோ அல்லாமல் அதாவது வராமல் போனவர்களுக்கு சொல்லப்பட்ட காரணம் போலவே தனித்தனியான முயற்சி காரணமாகத் தான் வெற்றி பெற்றார்கள். என்பதை முதலில் சொல்லி விடுகின்றோம். ஏனெனில் இம்மந்திரிகளைக் கொள்கை காரணமாக பதவி பெற்றார்கள் என்று சொல்லுவோமேயானால் பழைய மந்திரிகள் கொள்கை காரணமாக பதவி இழந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டியதாகும். ஆகவே இந்த இரண்டையும் யாரும் ஒப்ப மாட்டார்கள். இன்றைய மந்திரிகளிலும் அதிகம் பெயர், யார் யார் எந்தக் கட்சி என்பது கூட அநேகமாய் தேர்தலின் போதும் மந்திரி நியமனத்தின் போதும் தான் பெரும்பாலோருக்கு அறிய முடிந்தது என்பது யாவருக்கும் தெரியும்.
நிற்க, ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒன்று இன்று இருக்கின்றது என்றும், அதன் பேரால் இன்று மூன்று கனவான்கள் மந்திரி பதவி பெற்றார்கள் என்றும் சொல்லப்படுவதற்கு யாராவது பொறுப்பாளி என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் அது பெரிதும் திருவாளர்கள் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார், பி. டி. இராஜன் ஆகிய இருவர்களையே சேரும். இந்த இரு கனவான்களே இக்கட்சியை குலையாமல் பார்த்து உருவாக்கிய வராவார்கள். எப்படியெனில் அக்கட்சியின் மெஜாரிட்டி அங்கத்தினர் என்பவர்கள் “எந்தக் கை வலுக்கும்” என்கின்ற “ஜோசியத்திலே”யே இருந்தவர்களாவார்கள்.
மேலும் சொல்ல வேண்டுமானால், இந்த இரு கனவான்களின் இவ் வளவு முயற்சியிருந்தும் கூட ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் சில அங்கத்தி
னர்களின் பெயரை வெளியிடுவதற்குக் கூட அக்கட்சியின் முக்கிய அதா வது ஜீவாதாரமான கொள்கையைப் பலிகொடுத்த பிறகே தான் முடிந்து ஜஸ்டிஸ் கட்சி என்று ஒரு கட்சி இருப்பதாக வெளியில் காட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கு நெல்லூர் சம்பவம் காரணமாகிவிட்டது.
நிற்க, மந்திரி கட்சி அதாவது மந்திரிக்காக கொள்கையுடைய கட்சி வெற்றி பெற்றதா? ஜஸ்டிஸ் கட்சி அதாவது கொள்கைக்காக மந்திரியாகும் கட்சி வெற்றி பெற்றதா என்று பார்ப்போமானால் மந்திரி கட்சிதான் வெற்றி பெற்றதென்று சொல்லவேண்டும். அதாவது மந்திரிக்காக கொள்கையுடைய
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கட்சியாகத்தான் இன்று அது வெற்றிபெற்றது. ஏனெனில் நமது நாடு இன்று உள்ள நிலையில் நமது மக்களுக்குள்ள அறிவு உணர்ச்சியில் தேர்தலில் வெற்றி பெற்ற கனவான்கள் தன்மையில் இவ்வளவு தான் எதிர்பார்க்க
முடியும். அன்றியும் இது இந்தியா முழுமைக்குமே அரசியல் என்னும் விஷயமும், தேசீயம் என்னும் விஷயமும் ஏற்பட்ட பிறகு அவைகளும், பார்ப்பனர்களும் காட்டிய வழியாகும். இதற்காக யாரையும் குற்றம் சொல்வதில் பயனில்லை. மக்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்தினால் கொள்கைக்காக என்னும் கட்சி வெற்றிபெறலாம்.
நிற்க, திரு பனகால் அரசர் காலமான உடனேயே திரு. முனுசாமி நாயுடு அவர்கள் தலைவராக வருவார் என்றும், வரவேண்டுமென்றும் எல்லோரும். எதிர்பார்த்ததுண்டு. பல காரணங்களால் அவருக்கு அன்று தைரியமும் சவுகரியமும் இல்லாமல் போய்விட்டது. அதுபோலவே திரு பி.டி. இராஜன் அவர்கள் தலைவராய் வரவேண்டுமென்று தமிழ் நாட்டு மக்கள் பெரிதும் விரும்பினதும் எதிர்பார்த்ததுமுண்டு. தவிரவும் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால்
மந்திரி பதவி அடைய ஒருவருக்கு உரிமையுண்டு என்று சொல்லப்படுமானால் அது திரு. பி. டி. ராஜன் அவர்களுக்கே கிடைக்க வேண்டியதாகும். ஆந்திரநாட்டுப் பொதுமக்களில் இன்னமும் அநேகருக்கு ஜஸ்டிஸ் கட்சி என்றால் என்ன என்று கூட தெரியாதிருக்கும் நிலையில் எத்தனையோ எதிர்ப்புக்கும் பார்ப்பன சூட்சிக்கும் தலை கொடுத்துக் கொண்டு தமிழ் நாட்டுப் பொது மக்கள் பலத்தைக் கொண்டே கட்சியை நிலைநிறுத்தி அதற்காக வெகு பணமும் செலவும் செய்து வந்த குடும்பம் திரு. பி.டி ராஜன் அவர்களுடைய குடும்பமேயாகும்.ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் இதுவரை யாதொரு பதவியும், பட்டமும், அரைப் பைசா லாபமும் இல்லாமல் நஷ்டமும் அடைந்து கொண்டு வந்ததுடன் சென்ற மந்திரி நியமனத்தின் போதே தனக்கு வலுவில் தானாகவே வந்த மந்திரி பதவியை கட்சியின் சுய மரியாதையை உத்தேசித்து தனக்கு வேண்டியதில்லை என்று சொல்லி மறுத்துத் தள்ளி விட்டவர் திரு. ராஜனேயாவார். ஆதலால் அவருக் குக் கிடைத்ததில் அதிசயமோ, அதிக லாபமோ ஒன்றும் இல்லையென்றே சொல்லுவோம்.
அன்றியும் அவரும் அவரது குடும்பமும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் எவ்வளவோ அபிமானமும், உதவியும், ஆதரிப்பும் செய்து வந்தவர்களானதினால், இயக்கத்தின் பேராலும் முதலில் திரு.ராஜன் அவர்கள் வரவேற்கப்படவேண்டியவரேயாவர். ஏனெனில் முதல் முதலாக சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் பரவவும் ஆங்காங்கு கிளை ஸ்தாபனங்கள் ஏற்படுத்தவும், அவரது குடும்பத்தில் காலஞ்சென்ற பெரியார்.
திரு. எம்.டி. சுப்பிரமணிய முதலியாரவர்களும், மற்றொரு பெரியார் திரு.டி. சோமசுந்திர முதலியாரவர்களும் ஊர் ஊராயும், கிராமம் கிராமமாயும் அலைந்தவர்களாவார்கள். மேலும் பார்ப்பனர்களும் தேசியப் பிழைப்புக்
குடி அரசு - 1930 (2) 228
காரரும் “ஜஸ்டிஸ் கட்சியை வெகு ஆழத்தில் வெட்டிப் புதைத்து ஆய்விட்டது” என்று ஆரவாரம் செய்த காலத்தில் “இல்லை, இல்லை அது முன்னிலும் அதிகமாக வலுவுடன் விளங்கப் போகின்றது” என்று காட்டு வதற்காக மதுரையில் சுயமரியாதை மகாநாட்டையே, ஜஸ்டிஸ் மகாநாடு என்னும் பெயரால் நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் தருவித்து தைரியமூட்டி அக்கட்சிக்கு புத்துயிர் அளித்தவர்கள் திரு. ராஜன் குடும்பத் தார்களேயாகும். ஆகவே புத்துயிர் அளித்தும், வளர்த்தும், காப்பாற்றியும் வந்த திரு. ராஜன் அவர்களே முதலில் அக்கக்ஷி சார்பாக மந்திரி பதவி அடையவேண்டியவராவார் என்பது யாவரும் ஒப்ப முடிந்ததாகும். நிற்க,
திரு. முனுசாமி நாயுடு அவர்கள் ஆந்திர நாட்டு அங்கத்தினர்கள் ஆதரவைப் பெரிதும் கொண்டவரானதினாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தலைவராக ஏற்பட்டதினாலும், அவரும் கூட சென்ற தடவை மந்திரி நியமனத்தின் போது ஒரு ஸ்தானம் வலிய வந்ததை கட்சிக் காரணமாக மறுத்து விட்டவரானதினாலும், அவரும் ஒரு ஸ்தானம் அடையத் தக்கவ ரேயாவர். ஆனால் அவரது கொள்கைகள் நாட்டு நன்மைக்கு ஏற்றவைகள். அல்ல வென்பதை இங்கு நாம் மறைக்க முடியவில்லை. காங்கிரசின் செல்வாக்குக்கு மிகவும் பயந்தவர் பயப்பட வேண்டியவர் அதனாலேயே ஜஸ்டிஸ் கக்ஷியில் பார்ப்பனரைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், அடிக்கடி சொல்லுபவர். அதனாலேயே தேசியப் புரட்டை ஆதரிப்பவர். “சீர்திருத்த விஷயம் வேறு, அரசியல் விஷயம் வேறு” என்று கூட சொல்ல வேண்டிய அவசியமுடையவர். ஆனபோதிலும் இந்த அபிப்பிராயங்கள். எல்லாம் அவருக்கு ஏற்படக் காரணமென்ன என்போமானால் ஆந்திர
நாட்டில் பார்ப்பனரல்லாத பிரசாரம் சரிவர செய்யாததாலே ஒழிய வேறல்ல. ஆகையால் நமது பிரசாரம் ஆந்திர நாட்டுக்கும், அங்குள்ள மக்களுக்கும் தேசியப் புரட்டு விளங்கி காங்கிரஸ் செல்வாக்கும் தமிழ் நாட்டைப் போல் குறைத்து விடுமானால் தானாகவே மாறிவிடக்கூடும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஆகையால் அதற்காக சிறிது மார்ஜன் விடவேண்டிய தேயாகும்.
தவிர, திரு. எஸ். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் ஒரு மந்திரியாக வந்ததும் பாராட்டத்தக்கதேயாகும். உலகப் பிரசித்தியான கோயமுத்தூர்.
மகாநாட்டுக்குத் தலைமை வகித்த முதலே அவருக்கு உரிமை ஏற்பட்டு விட்டது. நன்றாய் பேசக் கூடியவர். இந்த ஸ்தானத்திற்கு ஜமின்தாரர்கள் ராஜாக்கள் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் திரு. ரெட்டி
யாரவர்கள் வர நேர்ந்ததானது எவ்வளவோ மேலானதாகும்.அவர்கள் நமது சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்வளவோ ஆதரவளித்தவர்களாவார்கள். சட்டசபையில் தைரியமாய் எந்தவித எதிர்ப்பையும் மறுப்பையும் சமாளித்து பேசத் திறமையுடையவர் இவர் என்றே சொல்லலாம். மற்ற இரு மந்திரிகளையும் கூட நடத்தக் கூடிய அளவு சக்தியுடையவர். ஆகவே
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நியமன மந்திரிகள் மூவரும் பொதுவில் பாராட்டத்தக்கவர் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் இதிலிருந்தே வரவேண்டியவர்கள் எல்லாம் வந்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. இன்றைய தினம் இந்தப்படியாவது ஒரு கட்சியிருப்பதற்கு முக்கிய ஆதரவாயிருந்தவரான திரு சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியாரவர்கள் ஒரு பதவி அடையாமல் போனதற்கு காரணம் அக்கட்சியின் பலக்குறைவேயாகும். பொது நல சேவைக்கு வந்ததன்
மூலம் தனது கிரமமான வருவாயும் கெட்டு, கை முதலிலும் செலவு ஏற்பட்டு லக்ஷக்கணக்காய் பொருள் நஷ்டமடைந்த வரும் நாணய விஷயத்தில் எதிரிகளும் குற்றம் சொல்ல முடியாத மிக்க பரிசுத்தமுள்ளவருமானவர்கள்' யாராவது தமிழ் நாட்டில் இருப்பார் களானால் அதில் முதன்மையானவர் திரு.
சி.எஸ். ரத்தினசபாபதி முதலியா ரவர்களே ஆவார்கள். அவரே இன்றைய கட்சி அமைப்புக்கு பெரும் பொறுப்பாளியாவர். அவரில்லாதிருந்திருக்குமானால் இன்று மந்திரியா யிருக்கும் கனவான்களில் இரண்டொருவர் மந்திரியாக வந்திருக்கக் கூடுமென்று வைத்துக் கொண்டாலும் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் மந்திரிகளாய் இருந்திருக்க முடியாது என்று தைரியமாய்ச் சொல்லுவோம். ஆகவே அப்படிப்பட்ட ஒருவர் மந்திரியாக இல்லா விட்டாலும் சட்டசபை பிரசிடெண்ட் ஆகவாவது இருக்கும் படியாக ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர் கள் பார்ப்பார்களேயானால் தங்கள் கடமையை சிறிதாவது உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால் அரசியல் துறையில் பிரவேசித்து விட்டால் நன்றியும், நாணயமும், விசுவாசமும் தேய்வுபடுவது இயற்கை. ஆகையால் என்ன நடக்கும் என்று
உறுதி கூற முடிவதில்லை.
நிற்க, ஜஸ்டிஸ் க௯ஷியாரின் இன்றைய நிலைமைக்கு அளவுக்கு மேல் பாடுபட்டதின் மூலம் தனது சட்டசபை அங்கத்தினர் பதவியையும் மனமார: தியாகம் செய்தவரும் திரு. ராஜன் அவர்கள் ௧௯9 அமைப்பு இவ்வளவு வெற்றி பெறுவதற்கும் மிக்க உதவியாயிருந்தவரும் திருவாளர் WPA. செளந்திரபாண்டியன் அவர்களேயாவார். ஆகவே அவரும் எப்படியாவது
மறுபடியும் நியமன மூலமாவது ஸ்தானம் பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும் நன்றியறிதல் குணம் காட்டிக் கொள்வதும் அக்
கட்சியின் முக்கியமான கடமையாகும். மற்றபடி கடைசியாக ஒரு விஷயம் சொல்லி இதை முடிக்கின்றோம். அதாவது இன்றையதினம் நமது நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியையும் அதன் கொள்கைகளையும், இன்று பதவி பெற்ற அதன் மந்திரிகளையும் பாராட்டாமல் யாராலும், எக்கட்சியாலும் இருக்க முடிய வில்லை என்பதானது வெள்ளைக்காரப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும், தேசீய வேஷப் பத்திரிகைகளும் எழுதுவதைப் பார்த்தாலே தெரியவரும். இதன் உண்மை என்ன வென்றால் நாட்டில் பார்ப்பனரல்லாதார். கிளர்ச்சிநிலை மிக்க மேன்மை அடைந்திருக்கின்றது என்பதுவேயாகும். சென்ற தேர்தலில் பதவியடைந்த மந்திரிகளின் கட்சியைவிட, அவர்களது எண்ணிக்கையைவிட, ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் வந்த அங்கத்தினர்களின்
குடி அரசு - 1930 (2) 230
எண்ணிக்கை அதிகமாகவே இருந்ததும், அவர்கள் இந்தத் தடவை போலவே ஒரு கொள்கையை வெளியிட்டிருந் ததும் யாவருக்கும் தெரியும். அப்படியிருக்கப் பார்ப்பனப் பத்திரிகைகளும், தேசீயப் பிழைப்புக்காரர்களும், ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகக் காங்கிரஸ். கட்டளையை மீறியாவது தங்கள் வாக்குறுதிகளைத் தவிர்த்தாவது வேறு கட்சியை அதாவது கொள்கை இல்லையென்றும் எண்ணிக்கையில் குறைந்ததென்றும் இன்றைய தினம் அவர்களாலேயே சொல்லும் கட்சியை “இதை விட மோசமான” நிலையில் இருக்கும் போது ஆதரித்து அப்படிப் பட்ட கட்சியிலிருந்து மந்திரிகளை நியமிக்கச் செய்து அவர்களையும் மனமார, வாயார, கையாரப் பாராட்டிய காரணம் என்ன என்பதையும் இன்று அதை விட்டுவிட்டு முன்பு தாங்கள் ஒழிக்கப் பாடுபட்ட ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும் காரணம் என்ன என்பதையும் கூர்ந்த அறிவுடன் யோசித்துப் பார்த்தால் அதில் ஒரு உண்மை ரகசியம் விளங்காமல் போகாது. ஒருசமயம்.
“ ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் கொள்கையை மாற்றிக் கொண்டால் அதனால் நாங்கள் ஆதரிக்கின்றோம்” என்று அக்கூட்டம் சொல்ல வருமானால் அது
சிறிதும் பொருந்தாது. ஏனெனில் இவர்கள் என்ன கொள்கை மாற்றிக் கொண்டார்கள் என்பதாக அவர்கள் சொல்லக்கூடும் என்று கவளித்துப் பார்த்தால் அதன் புரட்டும் வெளியாகி விடும். அதாவது “பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டார்களே அந்தக் கொள்கைதான்” என்று ஒரு சமயம் சொல்ல வருவார்களேயானால் அக்கட்சியில் இதுவரை ஒரு பார்ப்பன ரையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதும், சேர்த்துக் கொள்ளும் படியாக தங்களால் விதிகளைக் கிரமப்படி மாற்றிக் கொள்ளவுமில்லை என்பதும், அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டவுடன் விட்டுவிட்டார்கள் என்பதும் அவர்.
களுக்கே தெரியும். அன்றியும் அதிலிருந்து சமயத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகிறார்கள் என்று குறை கூறக் கூடுமே தவிர அதைத் தங்களுக்கு அனுகூலமாய் எடுத்துக் கொள்ளமுடியாது. அன்றியும் ஏற்கனவே மந்திரி களாய் இருந்தவர்கள் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டும் இருக்கிறார்.
கள்.அதில் ஒருவர் மந்திரியாயுமிருந்தார்.
ஆகவே அந்தச் சமாதானம் புரட்டு என்பதும், அதற்காகப் பார்ப்ப னர்கள், இந்த மந்திரிகளையோ, ஜஸ்டிஸ் கட்சியையோ பாராட்டவில்லை என்பதும் விளங்கும்.மற்றென்னவென்றால் பழைய மந்திரிகள் சுய மரியாதை இயக்கத்தைப் பலமாய் ஆதரிப்பவர்களென்பதும், இவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர்களைவிட இவர்கள் தங்களுக்கு அதிக ஆபத்
துக் காரர்கள் அல்லவென்றும் அவர்கள் நம்பியிருப்பதுமாகும். ஆனால் இந்த நம்பிக்கையிலும், இந்தக் கூட்டத்தார்கள் போன மந்திரிகளை நம்பினது போலவே வந்த மந்திரிகளையும் நம்பி ஏமாந்து போவார்கள் என்பது நமது “ஜோசியமாகும்.”
நிற்க, திரு. சுப்பராயன் அவர்கள் மந்திரி பதவி கிடைக்காததி
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
னாலேயே எதிர் கட்சியாய் இருந்து எதையும் ஆகஷ்பிப்பது என்கின்ற அரசியல் (சிறுமை) குணத்தைப் பின்பற்றாமல் நல்ல காரியங்களுக்கு ஒத்துழைத்து தன்னாலான உதவி செய்வதும், தீய காரியங்களுக்கு தாக்ஷண்யப்படாமல் தைரியமாய் எதிர்ப்பதுமான சுயமரியாதைக் கொள் கையைக் கடைபிடித்து இந்த மந்திரி சபையால் நாட்டுக்கும், பார்ப்பன ரல்லாத சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புக்கும் நன்மை உண்டாக்கும்படிபார்க்க வேணுமாய் ஆசைப்படுகின்றோம்.
ஆகவே மேற்கண்ட கொள்கைகளையே உத்தேசித்து ராஜினாமாக் கொடுத்த மந்திரிகளைப் பாராட்டி வழியனுப்பி - புதிதாய் வந்த மந்திரிகளை வரவேற்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.11.1930
குடி அரசு - 1930 (2) 232
பொது உடைகன்
1
இந்தியமக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந் திரமோ பெருவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளு வதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே லக்ஷியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்ப தைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தாரென்றும், ஒரே லக்ஷியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும் விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதை யறியலாம்.
ஆனால் நமது இந்தியாவைப் பற்றி பேசப் புறப்படுவோமேயானால் இது ஒரே சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே லக்ஷியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவானது பல மதங்களாய் பல ஜாதிகளாய் பிரிந்திருப்பதோடு பல உள்வகுப்புகளாகவும் பிரிந்திருப்பதல்லாமல் பாஷைகளிலும், உடைகளிலும், நடை பாவனைகளிலும் பல பல மாறுதல்களைக் கொண்டிருக் கின்றது. சாதாரணமாக மதம் என்பதைப் பொறுத்த வரையிலாவது அவை தனித் தனி மனிதனுடைய நம்பிக்கையையும் மன உணர்ச்சியையும் சேர்ந்தது என்பதாக
ஒரு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் பாஷைகளும் ஜாதிப் பிரிவுகளும் மக்கள் ஒருவருக்கொருவர் அன்னி யோன்னியம் பெற முடியாதபடி உயர்வு தாழ்வு கொடுமைகளுடன் எதற் காக இருக்க வேண்டும் என்பவற்றிற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்.பல பாஷைகள் மூலமும் மக்கள் பிரிவு படும்படியான பாஷை வேறுபாடு கள் ஏன் என்பதற்கும் இதுவரை யாரும் சமாதானம் சொல்லாததோடு ஒவ்வொரு ஜாதியாரும் தன் ஜாதி பெரிது, தன் ஜாதி பெரிது என்று சண்டை யிடுவதும், ஒவ்வொரு பாஷையாரும் தன் பாஷை பெரிது, தன் பாஷை பெரிது என்று வாதிடுவாருமாக இருந்து கொண்டு அவைகளுக்கு பிரதானம் தேடும் முறையில் வேற்றுமையையும் துவேஷத்தையும் வளர்த்திக் கொண்டு இருக்க
232 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வேண்டியுமிருக்கின்றன. இத்தியாதி வித்தியாசங்கள் எந்தக் காலத்திற்குத் தொலைவது? மக்கள் எந்த காலம் ஒன்றுபட்டு ஒரு சமூகமாகி ஒரு லக்ஷியம் கொள்ளுவது? என்பவைகளை நினைத்தால் மனம் ஒடிய வேண்டியிருக்கின்றதே தவிர நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் மக்கள் ஒன்றுபட்ட சாயலை அடைந்து பார்வையிலாவது அதாவது மனித னுக்கு மனிதன் பார்த்தவுடனே ஒரு வேற்றுமை உணர்ச்சி தோன்றுவதற் கில்லாமல் செய்து விட்டால் பிறகு ஒவ்வொருவரும் தன் தன் மதம் ஜாதி வகுப்புப் பாஷை ஆகியவைகளைக் காட்டிய பின்பு ஒரு சமயம் வேற்றுமை உணர்ச்சி உண்டானாலும் அதை அது முதலில் பார்த்தவுடன் தோன்றிய ஒற்றுமையுணர்ச்சியின் பலத்தால் தலை தூக்காதிருக்கும்படி செய்யலாம்.
ஆதலால் ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பல விதமான வேற்றுமை களை யொழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால் முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாயிருக்கும் உடையை ஒன்று படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
உதாரணமாக மற்ற நாட்டினரான சைனாகாரரையோ, ஜப்பான்கார ரையோ இன்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டாரில் அந்த நாட்டாருக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாத சாயலையும், உடையையும் கொண்டிருப்பது யாவருமறியலாம்.
அதுபோலவே ஐரோப்பாக்காரருக்குள்ளும் மக்கள் சாயலையோ உடையையோ கொண்டு எந்தவித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடி
யாது. இதனால் அத்தேச மக்களுக்கு தங்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு ஒரு லகஷியத்திற்கு பாடுபட முடிகின்றது.
இந்த உண்மையையும், இரகசியத்தையும் கண்டுதான் வீரர் கமால்
பாக்ஷா அவர்கள் எல்லோரும் ஒரே வித உடையணிந்து ஒரே சாயலாகவே இருக்க வேண்டுமென்று உத்தரவு போட்டதின் மூலம் துருக்கி நாடு சிறிய தாக இருந்தாலும் அது தன்னையும் ஒரு வல்லரசென்று மதிக்கும் படி செய்து கொண்டது. இதைப் பின்பற்றியேதான் ஆப்கானிஸ்தானமும் முயற்சிக்
கின்றது.
ஆகவே இந்த கொள்கையானது நமது இந்தியாவுக்கு உலகத்திலுள்ள மற்றெல்லா நாட்டைக் காட்டிலும் மிக்க அவசியமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.
இத்தியாதி காரணங்கள் கொண்டு நமது நாட்டிற்கும் இப்போது வெகு அவசரமாக உடையும், சாயலும் மாற்றப்பட்டு ஒன்றுபோல் தோன்றும்படி செய்ய வேண்டியது அவசியமென்று கருதியே நாம் இதை எழுத முற்பட் டோம். இவ்வெண்ணம் நமக்கும், நமது நண்பர்களில் பலருக்கும் வெகு நாளாகவே இருந்து வந்தாலும் என்ன மாறுதல் செய்வது என்னும் விஷயத்
குடி அரசு - 1930 @) 234
தில் யோசனையாகவே இருந்து வந்ததால் தாமதப்பட்டு விட்டது.
அதோடு நாம் சொல்லுவது மற்றவர்களுக்கும் சம்மதப்படும் படியாய் இருக்க வேண்டுமே, உடனே பின்பற்ற வேண்டுமே என்கின்ற யோசனை
யும் இருந்து வந்தது.
சாயல், உடை, பழக்க உணர்ச்சி ஆகியவைகளில் மேல் நாட்டாரைப் போல் கட்டுப்படுகின்ற வழக்கமோ கவலையோ நம்மவர்களுக்கு சிறிதும் கிடையாதாதலினாலும் அவ்வித வித்தியாசங்களே இந்த நாட்டின் பெரு மைக்கும், இயற்கை வனப்பிற்கும் அணிகலனாயிருப்பதாக மக்கள் கருதி வருவதாலும் இது இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாததாகக் கூட பலருக்குத் தோன்றினாலும் தோன்றலாம்.
மேல் நாட்டார் கட்டுப்பாட்டுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டு மானால் அவர்கள் உடை, முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள மாறுதலும் அதை ஒரே அடியாய் ஐரோப்பா, ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா முதலிய கண்டங்கள் உடனே பின்பற்றுவதும் அது போலவே அப்பெண்கள் தலைமயிர் முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசமும் அதை எல்லா கண்டத்து வெள்ளைக்காரரும் பின்பற்றுவதும் பார்த்தாலே போதுமானதாகும்.
அவசியமென்றோ கட்டுப்பாடென்றோ அவர்களுக்குத் தோன்றிவிடு மானால் எந்த மாறுதலானாலும் அதை அரச ஆக்கினைப் போல் பாவித்து எல்லோரும் உடனே கீழ்படியும் வழக்கம் அவர்களுக்குள் உண்டு. கட்டுப் பாட்டிற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றை குறிப்பிடுகின்றோம். அதாவது ஐரோப்பாவில் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்து கொண்டதில் சில உயர். குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பப் பெண்கள் தாங்களும் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டாலும் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மனைவியான மேரி ராணியார் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்ளாததால் சற்று அதிருப்தி யுடன் கட்டுப்பாட்டிற்குப் பயப்பட வேண்டியவர்களாக இருந்தார்களாம். இதை அரச குடும்பத்தார் அறிந்ததும் இளவரசர் மனைவியாரான இளவரசி யை உடனே தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும்படி செய்தார்களாம். இப்போது அது பொது தேசாச்சாரமாய் விட்டது. ஆனால் நம்ம நாட்டிலோ எப்பேர்பட்ட மாருதலாயிருந்தாலும் அது எவ்வளவு சரியானதாயும், தேவையானதாயும், இருந்தாலும் பயனும் பொருளும் அற்ற பழய வழக்கம்
என்னும் “பேயுக்கு” அதாவது மூட பயத்திற்கு அடிமையாகி உடனே அதை
குற்றம் சொல்லவும் உள் எண்ணம் கற்பிக்கவும், எதிர் பிரசாரம் செய்ய வும் புறப்பட்டு விடுகிறார்கள். ஆதலால்தான் ஆயிரக் கணக்கான வருஷங் களாக இந்திய மக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு பிரிந்து துவேஷங் கொண்டு அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகவே ஆகி
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆகவே இதை ஒரு வழியில் போக்க முயர்ச்சிக்க வேண்டுமென்று கருதியே பல மாறுதல்களுடன் உடை மாறுதல்களைப் பற்றி துணிந்து ஏதா வதுதெரிவிக்கலாமா என்ற எண்ணம் கொண்டு இதனை எழுத முற்பட்டோம். இப்போது நமக்கு அதாவது இந்தியர்கள் என்பவர்களுக்குள் பல வித உடுப்பும் சாயலும் இருப்பதை பார்க்கின்றோம் .பெண்களிலும் அப் படியே. சாதாரணமாக ஆண்களுக்கு இரண்டு பெரிய பெரிய வேஷ்ட்டி அவசியமாகின்றது. இதை தவிர ஒன்று அல்லது இரண்டு சட்டையும் அவசியமாகிறது. இது தவிர ஒரு துவாலும் அவசியமாகின்றது. இது தவிர பலருக்கு தலை உருமால் அல்லது குல்லாயும் தேவையாகின்றது. அது போலவே பெண்களுக்கும் 16 முழப் புடவையும், ரவிக்கையும், பாடி என் னும் உள் சட்டையும், உள் ஆடை என்று ஒரு பாவாடையும் வேண்டியிருக் கிறது. இவ்வளவு துணிகளும் உயர்ந்த தினுசில் வாங்கவேண்டுமானால் அதிகப் பணச் செலவுமாகின்றது. சாதாரணமாக ஒரு ஜதை உயர்ந்த தினு சானால் 100,
200, 300, 400 ரூ. கூட ஆகிவிடுகின்றது. இவ்வளவு செலவு செய்தும் வேற்றுமையையே காட்டுகின்றது. சாதாரணமாக யாராயிருந்தாலும்
இடுப்புக்கு 4 முளத்தில் ஒரு வேஷ்டியை கைலி போல அதாவது இரு தலவும் மூட்டியதாகவும், ஒரு முக்கால் கை குடுத்துணி அதாவது Half harm என்று சொல்லக்கூடிய ஒரு சட்டையும், சட்டப்பையில் அடங்கக் கூடிய ஒரு சிறு துவாலும் இருக்கும் படியாக இந்திய உடையை ஏன் மாற்றக் கூடாது என்பதே. நமது யோசனை. இந்தப்படிதான் இன்று மலையாள நாட்டில் மகமதியர்களும், கிறிஸ்தவர்களும் உடை அணிகிறார்கள். மற்ற இந்துக்களிலும் ஆண்களும் அநேகமாய் 100க்கு 90 பேர் இப்படித்தான் உடை அணிகிறார்கள். மற்றப்படி உடையில் செய்யும் மாறுதல் போலவே தலைமயிர் விஷயத்திலும் ஆண்கள் கிராப்பு செய்து கொண்டும் பெண்கள் வெள்ளைக்காரப் பெண்களைப் போல தலைமயிரை கீழ் காது அளவுக்குக் கத்தரித்துக் கொள்ளவும் செய்து விட்டால் அநேகமாக சாயலிலும் எல்லா மக்களுக்கும் சிறப்பாக ஆண் பெண்களுக்கும் ஒன்றுபட்ட காக்ஷி ஏற்பட்டுவிடும். வித்தியாச உணர்ச்சியும் தானாக மாறிவிடும். இப்போது பெண்களுக்குத் தலையில் மயிர் வளர்த்திருப்பதைப் போன்ற அசவுகரியமும், நேரக் கேடும், வீண் செலவும் போல வேறு எதிலுமில்லை என்றே சொல்லலாம். அதனால் அவர்கள் படும் கஷ்டம் நடுநிலையில்
இருந்து பார்த்தால்தான் தெரியும். அவர்களது உடை, நகை, தலைமயிர், பெரிய சீலை ஆகியவைகளே பெண்களை பலவீனர்களாகவும், அவற்றின் பொருட்டு அடிமைகளாக ஆக்கி அவர்களை மெல்லியலார் பலமற்றவர்கள். என்று சொல்லும்படியும் ஆக்கிவிட்டது. தலைமயிரை ஒரு அழகாகப் பாவித்து உணர்ச்சி சரீரத்தில் ஊறிக் கிடப்பதால் இதைப் பற்றி நினைக்கும் போதும் சொல்லக் கேட்கும் போதும் மக்களைத் திடுக்கிடச் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அதன் உபத்திர:
வமும் கெடுதலும் தெரியவரும். இது போலவே நகை விஷயத்திலும் பல
குடி அரசு - 1930 (2) 236
மாறுதல்கள் காணப்பட்டாலும் அவைகள் இந்த மாதிரி அதாவது உடை மாற்றமாகிவிட்டால் தானாகவே மாறிவிடும்.மலாய் நாட்டிலும், பர்மா நாட்டி
லும், கண்டி நாட்டிலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், பவுத்தர்.
கள் உள்பட எல்லோரும் ஆண் பெண் அடங்கலும் இம்மாதிரி உடைதான் உடுத்துகிறார்கள். மற்றபடி ஆங்கில உடை உடுத்துவது பலருக்குப் பிடிக்க
லாம். ஆனால் அது பெரிதும் குளிர்தேச உடையாதலாலும் உஷ்ண தேசத்
திற்கு சவுகரியமில்லாததானதினாலும் அன்றியும் எல்லா மக்களாலும் சாத்தி யப்படக் கூடியதல்லவானதாலும் அதை நாம் பொது மக்களுக்குள் புகுத்து வது சிரமமானதும் பொருத்தமற்றதுமாகும் என்று கருதுகின்றோம்.
மற்றபடி செல்வவான்களும் சவுகரியமுள்ளவர்களும் அணிவதில்
நாம் ஆக்ஷேபிக்க வரவில்லை. ஏனெனில் அவ்வுடையின் காரணமாக இப்போது எவ்வித ஜாதி மத வகுப்பு வித்தியாசங்கள் ஏற்படுவதற்கில்லாமல் இருப்பது தான்.
நிற்க, வெறும் ஒரு கால் சட்டை அதாவது சாதாரண செராய் போட்டு குடுத்துணி மாத்திரம் போட்டுக் கொண்டால் என்ன ஆக்ஷேபம்? என்று சிலர். கேட்கக் கூடும். அந்த உடையும் ஏற்கக்கூடியதானாலும் அது எல்லோருக்கும் அவசரத்திற்கும் சாத்தியப்படாததாகி விடும் என்று பயப்படுகின் றோம். சிலருக்கு அது அசவுகரியமாகவும் இருக்கக்கூடும் என்றும் நினைக்கின் றோம். ஆனால் அந்தப்படி போட்டுக் கொள்வதை நாம் ஆக்ஷேபிக்க வரவில்லை. ஏனெனில் அதுவும் முன் சொன்னது போல ஜாதி மத வகுப்பு முதலிய பிரிவினைகளைக் காட்ட சாதனமாயில்லாதிருப்ப தால்தான்.
ஆகவே நாம் மேல் சொன்ன அதாவது 4 முளத்தில் ஓரம் இரண்டை
யும் சேர்த்து மூட்டி தைத்ததாக எந்த வர்ணம் உள்ள துணியாயிருந்தாலும் அதை இடுப்புக்கும், ஒரு முக்கால் கை சட்டையே மேலுக்கும் உடுக்கும் படியான மாதிரியை பொது உடையாக ஆக்கலாம் என்பது நமக்கு சரி யென்று
தோன்றினதால் அதை இப்போது எழுதினோம். ஆனால் இதை அதாவது ஒரு மகாநாட்டில் வைத்துப் பேசிய பின்பே அமுலுக்குக் கொண்டு வர கருதி இருக்கிறோம். அதற்குள் அவசரப்பட்டு இஷ்டப்பட்டவர்கள் உடுத்திக் கொள்வதில் எவ்வித ஆக்ஷ்பனையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி அடுத்தாப்போல் மக்களுக்கிடும் பெயர் கள் விஷயத்திலும் பலப் பிரிவுகளைக் கண்டு பிடித்து வேற்றுமை உணர்ச்சி கள் ஏற்பட இடமேற்படுகிறது. ஆகவே அவைகளையும் கவனித்து பெயரினால் ஒரு மனிதன் ஒரு மனிதனை பிரித்துக் காணாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.
குடி அரசு - தலையங்கம் - 09.41.1930
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கோண்டு கேஸ் வி௫கலை
ஈரோடு ஆலயப்பிரவேசவழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ் வழக்குகள் ஹைக்கோர்ட்டு அப்பீலில் இருந்தது நேயர்களுக்கு ஞாபக மிருக்கும். அதுபோலவே சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கும்.
இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப் பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு கேஸ்கள் விடுதலையாகி விட்டன.
முதல் கேசு. அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாரு டைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரி
கள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தினார்கள் என்ப தாக
யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்லவேண்டி யிருக்கிறது.
இரண்டாவது கேசாகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரமாகவே நடத்தப் பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜுமெண்ட் கீழே
குறிப்பிட்டிருக்கிறோம். திருவாங்கூர் போலீசு கமிஷனர் திரு. பிட் துரை இருந்திருந்தால் இன்றைய தினம் திருவாங்கூரில் ஒரு ரோட்டு கூட ஒரு
நபருக்கும் உரிமை இல்லாததாக இருக்காது. கோவில் பிரவேசம் கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அங்குள்ள பார்ப்பன ஆதிக்கமானது இவ்வளவு தொல்லையை கொடுத்துவிட்டது. இம்மாதிரி சந்தர்ப்பங் களில் ஒவ்வொரு வழக்கு முடிவும் ஐகோர்ட்டுக்குச் சென்றே நியாயம் பெறவேண்டுமானால் சாதாரண ஜனங்களுக்கு சாத்தியப்படக் கூடியதா குமா என்பதை யோசித்தால் இம்மாதிரி விஷயங்களுக்கு வெளிப்படையா யும் தெளிவாயும் ஒரு சட்டம் ஏற்பட்டுவிட வேண்டியது அவசியமாகும். பொதுவாகவே இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதி வித்தியாசமும், உயர்வு தாழ்வும் ஒழிவதற்குப் பார்ப்பனர்கள் எப்படி சம்மதிக்க மாட்டார்களோ அது
குடி அரசு - 1930 (2) 238
போலவே மகமதியர்கள், வெள்ளைக்காரர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். ஆதலால் “இந்துக்கள்” ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவர்கள் மேல் கண்டவர் களின் விரோதத்தையும், அவர்களால் செய்யப்படும் தொல்லைகளையும் சமாளிக்க தயாராயிருந்து கொண்டுதான் பிரவேசிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
நிற்க, இவ்விஷயங்களில் இனி மேல் நடக்க வேண்டிய விஷயங் களைப்பற்றி யோசித்து பின்னால் வெளியிடுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.111930
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அரசியல் alumunmb
டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப்போவதாகத் தெரிகின்றது.
அதாவது,
1சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டந்தஸ்துக்கு குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப் படுவ தாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.
2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்யவேண்டுமென்று சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.
3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை: செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது.
என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.
இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக் கலாடவோ தேவையில்லையென்றும் சொல்லுவோம். ஏனெனில் இந்தமாதிரி காரியங்களின் நடவடிக்கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் “தேசியப் பத்திரிகைகள்” என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடி யாலும் “சென்ற தேர்தலின்” போது “தேசியக் கட்சியை” விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட “தேசியக்கட்சி” மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப்புடையவைகளாகி விட்டபடியாலும் அவைகள் “கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி” போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும். ஆகையால்
குடி அரசு - 1930 @) 240
ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.11.1930
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
23053 மதப் வபமார்
உ க்காதீர்கன்
முக்கியமாண 6வேண்ட௫ுகோன்
இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கை யை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங்களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப் படுவீர்கள். அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன்
என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேரா
வது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளு
கிறேன்.
ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலை
யும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.
அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று
மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல் லோரும். பார்ப்பனருக்கு அடிமைகள், அவர்களது தாசிமக்கள் என் கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதை யுள்ள எவரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்கு திருடன், அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஈ. வெ. ரா.
குடி அரசு - வேண்டுகோள் - 09.111930
குடி அரசு - 1930 @) 242
திரு. பண்ணீர்கல்வம்
உயர்திரு ராவ் பகதூர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாப னங்களில் இருக்கும் வெகு சில கண்ணியமான தலைவர்களில் முக்கியமான வர்களுக்குள் ஒருவராவர். அவர் மீது நாணையத் தவறுதலான வார்த்தைகள் இதுவரையிலும் யாருமே பிரஸ்தாபித்தது கிடையாது. அவரைப்போல் பார்ப்பனரல்லாத மக்கள் விஷயத்தில் தனது ஆதிக்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களிலும் விகிதாச்சார உரிமை கொடுத்தவர்கள் மிக மிக அருமையாகும். அப்படிப்பட்டவரை சென்னை ஐகோர்ட்டார் ஏதோ ஒரு விண்ணப்பம் போட்டதின் காரணமாய் நாணையமற்றவர் என்றும், யோக்
கியர் அல்லாதவர் என்றும் ஐக்கோர்டு ஜட்ஜ்ஜிகள் பேசியதாக பத்திரிகை களில் காணப்படுகின்றன. கோர்ட் விவகாரங்களில் விண்ணப்பம் போடும். விஷயங்களைக் கொண்டு ஒருவனை யோக்கியன், அயோக்கியன் என்று தீர்மானிப்பதாயிருந்தால் இந்த இந்தியாவில் கோர்ட்டு சம்மந்தமுள்ள மக்களில் 100க்கு வீசம் பேர் கூட இருக்கமாட்டார்கள் என்று நாம் உறுதி யாய்ச் சொல்லுவோம்.
கோர்ட்டு சட்டங்களே உண்மைக்கு நியாயமளிக்க முடியாதபடி தான் இருக்கின்றன. அவைகளைக் கையாளும் வக்கீல்கள் அவ்விண்ணப்பம் போடும் விஷயத்தில் செலுத்தும் புத்தியும் மனப்பான்மையும் நடுநிலை யிலிருந்து பார்த்தால் அவர்களை விட நாணையக் குறைவானவர்களும் யோக்கியர்கள் அல்லாதவர்களும் வேறு யாரும் இல்லையென்று சொல்ல வேண்டிய அளவுக்கே இருப்பார்கள். அச்சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி அவ்விண்ணப்பங்களை விசாரிக்கும் ஜட்ஜுகள் என்பவர்களும் ஏறக்குறைய பெரும்பான்மையான பேர்கள் இக்கூட்டத்திலிருந்தே தான் பொறுக்கி எடுக்கப்படுகிறார்கள். ஆகவே கோர்ட்டு விவகாரங்களில் பெரும்பாலும் இப்படிப்பட்ட வக்கில்கஞுடைய யோசனைகளை அனு சரித்தே நடந்து கொள்ளுகின்ற ககஷிக்காரர்களைப் பற்றி ஜட்ஜிகள் திடீ ரென்று இம்மாதிரியான அபிப்பிராயத்திற்கு வருவதானது மிக்க அதர்மமானதென்றே கருதுகின்றோம்.
திரு. பன்னீர்செல்வத்தை நன்றாய் அறிந்தவர்கள் இந்த ஜட்ஜிகளின்
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதுடன் பொது ஜனங் களும் இந்த ஜட்ஜிகள் அபிப்பிராயத்தால் ஏமாந்து போகமாட்டார்கள் என்றும்
நாம் உறுதியாய் நம்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.111930
குடி அரசு - 1930 (2) 244
கிருஷ்ணண் அர்சுனன் சம்வாதம்
- சித்திரபுத்திரன்
அர்ஜுனன்: சகே சீனாம் நிகே சீனாம் காகதி புருஷோத்தமா?
கிருஷ்ணன்:- அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ் சயா! இதன் பொருள்.
அர்ஜுனன்: - ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக் கின்று விதவைகளுக்கு என்ன கதி?
கிருஷ்ணன் :- ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.
அர்ஜுனன்: - ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவு ளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடிபட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப்
பற்றி உனக்கு சிறிதும் அவமானமில்லையா?'
கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப் படவேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப்
படித்த கேட்ட ஒவ்வொருவரும் இதனைக் கொண்டாட வேண்டுமேயொழிய குற்றம் சொல்லக்கூடாதென்றும், குற்றம் சொன்னால் பாவமென்றும், நரக
மென்றும் அவற்றை எழுதின அவர்களே எழுதி இழிவை அடக்கி விட்டார் கள்.ஆதலால் நமக்கு ஏன் கவலை?
அர்ஜுனன்:- கிருஷ்ணா! அதுதான் போகட்டும், நம்ப முடியாத அநேகப் பொய்யையும் புளுகையும் சொல்லி நீ சின்னக் குழந்தையாயிருக்.
கும் போது பெரிய முலையை உருஞ்சி சூப்பையாக்கி விட்டாயென்றும் மலையை சுண்டு விரலால் குடையாய்ப் பிடித்தாய் என்றும் 10 ஆயிரம் பெண்களை ஏக காலத்தில் கலந்தாய் என்றும் இப்படி எல்லாம் எழுதி இருக்
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கின்றார்களே இந்தப் புளுகுகளை எவன் நம்புவான்?
கிருஷ்ணன் :- ஓ! அர்ஜுனா! அதைப் பற்றியும் நீ கவலைப்படாதே. ஏனென்றால் அந்தப் படியெல்லாம் எழுதினவர்கள் இவற்றையெல்லாம் எவன் நம்பவில்லையோ அவன் நாஸ்திகன் என்றும் அவனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் அரசன் தண்டிக்காவிட்டாலும் அவன் நரகத் துக்கு போகவேண்டும் என்றும் எழுதி மக்களை மிரட்டி பயப்படுத்தி வைத் திருக்கின்றார்கள். ஆதலால் எவனும் தைரியமாய் தான் இவற்றை நம்பு வதில்லை என்று வெளியில் சொல்லவரமாட்டான்?'
அன்ஜுனன்:- அதென்ன கிருஷ்ணா! பாவம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே,
கிருஷ்ணன்:- அந்தப்படி புரியாமலிருக்கின்றதாகவே பார்த்துதான் சொல்லி இருக்கின்றார்கள்.
அர்ஜுனன்:- அதென்ன புரியாததைச் சொன்னால் என்ன பயன்.
கிருஷ்ணன் : - ஒருவனுக்குத் தெரியாததையும் புரியாததையும் சொன்னால் தான் மனிதர்கள் பயப்படுவார்கள். புரியும்படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால் தான். அது செய்தால் பாபம், இது செய்தால் பாபம், நினைத்தால் பாபம் என்றெல்லாம். மிரட்டி வைத்திருக்கின்றார்கள்.
அர்ஜுனன்:- இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?
கிருஷ்ணன்:- முடிந்தவரையில் முடியட்டும்.
அர்ஜுனன்:- இந்தப் புரட்டு வெளியாய் விட்டால் அப்புரம் என்ன செய்வது?
கிருஷ்ணன் : - அப்புரம் வேறு புரட்டை உண்டாக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும்.
அர்ஜுனன்:- அதென்ன புரட்டு?
கிருஷ்ணன் :- அரசியல் புரட்டு.
அர்ஜுனன்: - அதுவும் வெளியாகிவிட்டால்?
கிருஷ்ணன் :- அதற்குள் பார்த்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு புரட்டும் மண்டுகள் நிறைந்த இந்தியாவுக்கு சுலபத்தில் வெளியாய் விடவா போகின்றது?
குடி அரசு - 1930 @) 246
அர்ஜுனன்: - சுயமரியாதைக்காரர்கள் இந்த இரண்டையுமே சேர்த்து வெட்டவெளியாக்கிக் கொண்டு வருகின்றார்களே, சீக்கிரத்தில் வெளியாய் விடாதா?
கிருஷ்ணன்:- அவர்களால் சுலபத்தில் முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு புரட்டின் மேல் தாங்கள் வாழ்வையே ஏற்பாடு செய்து கொண்ட அநேகர் சுயமரியாதைக்காரர்களுக்குள்ளாகவே இருக்கிறார்கள். அந்தப்படி
மீறி அவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கைக்குக் கேடு வந்தாலும் வரட்டும் என்று துணிந்து கட்டுப்பாடாய் வேலை செய்தாலும் கூட அது தமிழ்
நாட்டிலும் மலையாளத்திலும் தான் செல்லும். இந்தியாவில் மற்ற பாகங்கள்: எவ்வளவோ இருக்கின்றன.
அர்ஜுனன்:- எப்படியானாலும் என்றைக்கிருந்தாலும் இந்த இரண்டு புரட்டுக்கும் ஆபத்து ஆபத்துதான்.
கிருஷ்ணன்: அந்தக் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்.நடந்த வரை: நடக்கட்டும்.
வைணவதாசன் : - என்ன தேசிகர்வாள் உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே. இதுஎன்ன பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?
சைவ பண்டாரம்: - அசிங்கமென்னையா வந்தது. ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோக்ஷத்திற்கு போய்ச் சேர்ந்து விடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் நல்ல
காரியம் செய்து மோக்ஷத்திற்கு ஒருக்காலமும் போக முடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால் விபூதி பூசியாவது. மோக்ஷத்
திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.
வைணவதாசன் : - எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை. சந்தோஷ மாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.
சைவ : - என்ன சந்தேகம்.
வைணவதாசன் : - ஏ. ஒரு சிம்ட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்துக்கு போய் விடும் என்றீர்களே மக்கள் இங்கு அதிக மாக சாம்பலை மலத்தின் மீது கொட்டிகொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே,
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோகஷத்திற்குப் போயிருக்குமே, அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோக்ஷத்திற்கு போய் அந்த எழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம் தான்.
சைவ: - சரி சரி, நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது. உம்மு டைய யோக்கியதை பார்ப்போம். நீர் ஏனையா மண்ணை குழைத்து பட்டை பட்டையாய் வலிப்பு மாட்டுக்கு சூடுபோட்டது போல் போட்டுக் கொண்டி ருக்கின்றீர்.
வை. தா:- உம்மை கேட்ட சங்கதிக்கு பதில் சொல்லும். பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.
சை:- நாளைக்காவது சொல்லுவீரா?
வை.தா:- நான் நீர் சொன்ன பிறகு தான் சொல்லுவேன்.
கடவன் இருந்தால்
சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார் அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்கு தேவை இல்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலா வது செய்திருப்பார்.
உதாரணமாக மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதை பார்க்கின்றோம். ஆனால் கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவராமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கின்றோம்.
இது என்ன கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா அல்லது ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லாமல் அவரவர்: காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?
குடி அரசு - உரையாடல் - 09.111930
குடி அரசு - 1930 @) 248
உதிர்ந்த மலர்கள்
அரசியல்
அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு.
ஈ. வெ.ரா.
அரசியல் சீர்திருத்தம் என்பது அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
ஈ. வெ. ரா.
கடவுள் அவசியம்
அறிவும், ஆராய்ச்சியும், மன உறுதியும் அற்றவர்க்கே கடவுள் உணர்ச்சி அவசியமாகும். வேஷக்காரர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் கடவுள் மிக அவசியமாகும். சோம்பேறிகளுக்கும், ஊணார் பிழைப் பில் உண்டு களித்திருப்பவர்களுக்கும் கடவுள் மிக மிக அவசியமாகும்.
ஈ. வெ. ரா.
குடி அரசு - துணுக்குகள் - 09.11.4930
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
த்தி o திரன்
கடவுள் கருணை
இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு.
பெக்கிங் (சீனா? 100000
கெய்ரோ 40000
காஷான் 40000.
லிஸ்பன் 50000 மொராக்கோ 12000
தென் அமெரிக்கா 50000. அலப்போ 20000
தென் இத்தாலி 14000
மென்சோடா 12000
பெரு எக்வாடா 25000 கராகாடோ 37000
ஜப்பான் 30000
இந்தியா 20000
பிரான்சிஸ்கோ, சிசிலி 77000
மத்திய இத்தாலி 30000
கான்சு சினா 300000
ஜப்பான் 220000
சில்லரையாக பல இடங்களில் 100000
ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும்,
குடி அரசு - 1930 (2) 250
புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படி புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர்களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில் அவர்கள் அதற்கே. பிறந்தவர்கள்.நிற்க.
விணா - விடை
வினா:- நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்னகாரணம்?
விடை:- நமது மதமும் ஜாதியும்.
வினா: - நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம்.
ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர். களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?
விடை: - மதமும் ஜாதியும்.
வினா:- நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராய்க் கொண்டே
வருவதற்குக் காரணமென்ன?
விடை- வினையின் பயன்.அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார். பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்து வந்த “பாவமானது” அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும்,ஜட்ஜி களாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்.
வினா :- எந்த விதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?
விடை:- வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம்
சொல்லத் தகுந்ததாகும்.
வினா:- கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை:- ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா:- மகம்மதியானவதில் என்ன கெடுதி?
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
விடை : - ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
வினா:- உண்மையான கற்பு எது?
விடை:- தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.
வினா: - போலி கற்பு என்றால் எது?
விடை ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக் கோ, பணத்திற்கோ பயந்து மனத்திற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக் கற்பு
வினா : - மதம் என்றால் என்ன?
விடை:- இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்துவதும்
தான் மதம்.
வினா:- நாட்டுக் கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?
விடை:- பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டுவது இல்லை என்பதாகும்.
வினா:- தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு கொடுக்கப்படுகின்றது.
விடை- பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.
வினா:- பெண்களை படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற் படுத்தினார்கள்?
விடை:- அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.
வினா:- மனிதனுக்கு கவலையும் பொருப்பும் குறைய வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும்?
விடை:- பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.
வினா:- பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
குடி அரசு - 1930 (2) 252
'விடை:- தலைமயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்..
வினா:- பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை:- அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல்சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்?
வினா:- எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.
விடை:- ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.
வினா:- பெரிய மூடன் யார்?
விடை:- தனது புத்திக்கும் பிரத்தியக்ஷ அனுபவத்திற்கும் தோன்று வதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
வினா:- ஒழுக்கம் என்பது என்ன?
விடை:- ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.
வினா:- சமயக்கட்டுப்பாடு, சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
விடை:- மனிதனை தன் மனச்சாக்ஷிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது தான் சாதி சமயக்கட்டுப்பாடாய் இருக் கின்றது.
வினா:- உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
விடை:- கடவுள் எங்கு மரைந்து போவாறோ என்று பயந்து அவ ரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கை யாகக் காணப்படுகிறது.
வினா:- இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆகி கூடாது?
விடை:- இந்தியர்கள் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனை கூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.
வினா:- ஜனநாயக ஆகி என்றால் என்ன?
விடை தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வினா:- இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை:- அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும்.
வினா:- இந்தியா சீர்பட என்ன வேண்டும்?
விடை- இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத் தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும் நிபந்தனை யற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.
வினா: - இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?
விடை:- இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபடமுடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுள்களுமே யாகும்.
வினா:- கிருஸ்தவ மதத்தில் சில ஆபாச கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆனுகிறார்கள்.
விடை:- கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தன முமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்
பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ
சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள் தனமுமாகும்.
வினா:- பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர:
முடிந்தது?
விடை:- மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் பார்ப்பார்கள் எல்லோரையும் விட முன்னேறியிருக்க.
முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட் டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.
வினா:- ஆண் வியபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோக்ஷத்
திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் வியபசாரத்திற்கு என்
செய்வார்கள்.
விடை- அதற்காக எந்த வியபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட
குடி அரசு - 1930 @) 254
வேண்டியதில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக் கிறார்கள். அன்றியும் சமயல் செய்ய வேண்டிய வேலைகூட இல் லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால் காமதேனு, கற்பக விருக்ஷம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும்.
வினா:- பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பை யாயிருக்கின்றது?
விடை:- அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை
வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.
வினா: - பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்க்ஷத்
திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?
விடை:- கடவுள் இருக்கிறார். போறாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.
சும்மா சொன்னேன்
வினா:- கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார் தெரியுமோ? அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார்கைக்காவது கிடைத்தால் நல்ல உதை. கிடைக்குமென்றுதான்..
விடை:- என்ன அக்கிரமம் என்றா கேட்கின்றீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போராதா?
கார்த்திகை தீபம்
பாலர் பாலுக்கழ பட்னியால் பலர் மடிய எத்திசையோரும் இகழும்படி வெண்ணையும் நெய்யும் கொண்டு கல்லிலும் நெருப்பிலும் கொட்டும் கயமையே கார்த்திகை தீபமாகும்.
நமது மதமும், தெய்வமும் உர்ச்சவமும் முட்டாள்தனமானதென்றும். அது செல்வத்தைப் பாழாக்குகின்றதென்றும் மக்களுக்கு யாதொரு பலனை யுமளிக்கின்றதில்லை என்றும் சொல்லப்பட்டு வருவதற்கு உதாரணம்
சமீபத்தில் திருவண்ணாமலையிலும் திருச்செங்கோடு முதலிய ஊர்களிலும் கார்த்திகை தீபம் (கூம்பு - சொக்கப்பானை ) என்கின்ற உற்சவத்தின் போது குடம் குடமாய் டின் டின்னாய் நெய்யையும், வெண்ணையையும் கொண்டு
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
போய் நெருப்பில் கொட்டப்போகும் முட்டாள் தனமும் வீண் செலவும், அதனால் செல்வம் பாழாவதும் போதாதா என்று கேழ்க்கின்றோம். இதற்கு பார்ப்பன தேசீயப் பத்திரிகைகள் என்ன சமாதானம் சொல்லப் போகின்றன என்பதை கவனிப்போம்.
குடி அரசு - உரையாடல் - 16.111930
குடி அரசு - 1930 (2) 256
விபசாரமே லாதிக்குக் காரணம்
அடுத்து வருகிற சென்ஸஸ் கணக்கில் (ஜனக் கணிதத்தில்) இந்துக்கள் என்பவர்கள் ஜாதிப் பெயரைக் கொடுக்கக் கூடாதென்பதாக லாகூர் ஜட்பட் டோரக் மண்டலத்தாரும் மேலும் அநேகர்களும் தீவிர முயற்சியெடுத்து வருகிறார்களென்பது யாவர்க்குந் தெரியும். மற்றும் இந்தியாவிலுள்ள சீர்திருத்தவாதிகளென்பவர்களிலும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் முதல் தாழ்ந்த ஜாதியார் என்று பிற மக்களால் சொல்லப்படும் ஆதிதிராவிடர்கள் என்கின்றவர்கள் முதலிய எல்லாராலும் அநேகமாக மேடைகளில் பத்திரிகைகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.
இதைப் பற்றி நமது “குடிஅரசி”லும் அநேக அறிஞர்களால் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதோடு சுயமரியாதை மகாநாடு, பார்ப்பன
ரல்லாதார் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு முதலிய மகாநாடுகளில் இதைப் பற்றி பல தீர்மானங்கள் செய்யப்பட்டு அதையநுசரித்தே அநேக கனவான் கள் ஜாதிக் குறிப்பைக்காட்டும் பட்டம் முதலியவைகளையும் விட்டிருப்பது யாவருக்கும் தெரியும். ஆகவே ஜாதிப் பிரிவும் வித்தியாசங்களும் இருக்கக் கூடாதென்பது இந்தியாவின் ஒரு முகப்பட்ட அபிப்பிராயமென்பதும், கோரிக்கையென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். பொதுவாகப் பார்க்கும் போது போதிய உலக ஞானமற்ற மக்களுக்கு ஜாதிப் பிரிவுகளை ஒழிப்ப தென்றால் பிரமாதமாகத் தோன்றுவதும், சிலருக்கு ஏதோ முழுகிப் போவது போல் அவர்கள் மனதிற்குப் பெரிய திகில்கள் உண்டாவதும் சகஜமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் ஜாதி என்பதின் உண்மையும், உற்பவமும் இன்ன தென்றறியாத மயக்கத்தினால் தோன்றப் படுவதே தவிர. வேறில்லை.
ஒரே நாட்டு மக்களை பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருப் பது நமது இந்தியாவில் தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும். அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்: கைக்கும் பொருத்தமில்லாமல் வெரும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம்
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆதாரமாய் இருப்பதைத் தவிர மற்றபடி அவற்றால் யாதொரு பயனும் இல்லாமல் இருப்பதும் யாவரும் அறிந்ததாகும். எனவே இப்படிப்பட்ட ஜாதி உயர்வும் தாழ்வும் எப்படி ஏற்பட்டதென்றும் இதற்கு ஆதாரம் என்ன என்பதையும் சற்று கவனிப்போம்.
பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர்களுக்குள் ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டவர்களுக்குள் மாத்திரம்தான் “கடவு ளால் சிருஷ்டிக்கப்பட்டது” என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங் களாக அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பது மிக்க இழிவானதாகவும் கருதப் படுவதாக குறிக்கப் பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக் கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம். அதாவது “ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் ஜாதி முறை தவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும். ஏற்பட்ட பிரிவு” களென்றும், அப்படிப் பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக் கின்றதென்றும்
ஆதாரங்களில் இருக்கின்றன.
அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம ஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன. அந்த விப ரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக் கின்றோம். ஆகவே
அதில் உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும் என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் எனப்படுபவர்களே பஞ்சம ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும், பிராமணன் க்ஷத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் இந்தப்படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந் தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி “சிற்றரசு, மந்திரித்துவம்” முதலிய பதவிகளில் இருப்பவர்களாயிருந்தால் அவர் களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பது டன் இவற்றிற்காதாரம் சுப்பரபோதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாதவியம், சாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன.
தவிர மேல் கண்ட பிராமண ஜாதி ஆண், க்ஷத்திரிய ஜாதி பெண்ணை: விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும்
குடி அரசு - 1930 (2) 258
தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவரனைவரையும் குறிப்பிடத் தக்கதாகவே
குறிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளைகள் குயவர் என்றும் நாவிதர் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பிராமணன் சூத்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரசவர் அதாவது செம்படவர் என்றும், சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக் காரர். அதாவது வேடுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்.
கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பிராமண குலப் பெண்களுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் சருமகாரர் அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. க்ஷத் திரிய குலப்பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்! கனகர் (அதா
வது தங்க வேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும் கூறப்பட்டிருக் கின்றன.
இந்த மாதிரி “கீழ் மேல்” ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில் ஒன்றாகிய அயோவகச் சாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் பார்க்கவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்தப் படியே இப்போது அமுலில் உள்ள சாதிகளையெல்லாம் குறிக்கும்படி யாகவே இன்னும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.
இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி நூல்களில் அதாவது அபிதான கோசம், அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்: களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை: இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல் கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும், விபசாரம் செய்தும் பிறந்த பிள்ளை களாக ஏற்பட்டவர்கள் என்றே கூறப்பட்டிருக்கின்றன. செட்டியார்மார்களை யும் ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படு கின்றது.
ஆகவே ஜாதியை கட்டிக் கொண்டு அழுவது இவ்விழிவுகளை மரை முகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை. உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
அதை நம் மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டு மிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.111930
குடி அரசு - 1930 (2) 260 26] ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மஹா 73 இத் தைலம் தலை விரி நல்லைக் வேது... எண் மார்கை நைக. ம வனினைதுக் ன
ப தகவ் க அணக ச செய்த க் "தம் உணைவ வயர்கள் பாப்கடில் ஆடை பெண் மால
12 அலைகள் க உட சாலாமிசி வேடுயம் கவசமும் சக்த சாலைக்கு, " Sppims ஈருத்துகள்.
ஆ. இ. இங்காம் அண்டு கோ, தெப்பக்குனம்போஸ் டு, Bt R கக்க்க்த்த்த்குஞ்த்த்த்குல்ஸல் உக்கடம் டட
ம் 13 . n ° H”“.I ம்
“சீர்திருத்த” முயற்சியும்
இன்று இந்திய மக்களில் பெரும்பான்மையோருடைய உணர்ச்சி களை: காங்கிரஸ் “தேசீயக் கிளர்ச்சி“யும் வட்ட மேஜை மகாநாட்டு “சீர்திருத்த” முயற்சியுமே கவர்ந்து கொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் சிறை சென்றும் அடிபட்டும் செல்வமிழந்தும் கஷ்டப்படும் மக்கள் பலர் இருக்கிறார்கள். என்பதில் ஆக்ஷேபணையில்லை. சீர்திருத்தம் அளிக்கும் முயற்சியில்
சர்க்கார் பெரும் துகைகளைச் செலவு செய்து பெரும் எதிர்ப்பு களைச் சமாளித்து கமிட்டி விசாரணைகள் நடத்துவதும், வ. மே. மகா நாடுகள் கூட்டி யோசிப்பதுமான காரியங்கள் நடைபெற்று வருவதும் யாவ ரும் அறிந்ததாகும். என்றாலும் இவ்விரண்டினுடைய முடிவு என்ன என்ப தும் அதனால் நாட்டுக்கு நன்மை என்ன என்பதும் அநேகமாக ஏற்கனவே நம்மால் முடிவு செய்யப்பட்டு விட்ட விஷயங்கள் தானே யொழிய
வேறில்லை...
அதாவது கிளர்ச்சியினால் அநேகர்கள் தேச பக்தர்களாகவும், தியாகி களாகவும் ஆகலாம். முயற்சியினால் பலருக்கு பெரிய பெரிய பட்டமும், பதவியும், உத்தியோகங்களும் கிடைக்கலாம். இதைத் தவிர நாம் எதிர்.
பார்க்கும் காரியம் கிடைக்குமென்று நம்புவதற்கில்லை. சைமன் கமிட்டியார். தெரிவித்தபடியும் சர்க்கரவர்த்தியார் தெரிவித்தபடியும் இந்தியாவில், “அனாதி” காலம் தொட்டு இருந்து வரும் மேல் ஜாதி, கீழ் ஜாதி வித்தியாசக் கொடுமையும் ஆண்-பெண் உயர்வு தாழ்வு வித்தியாசக் கொடுமையும், பணக்காரன் - ஏழை வித்தியாசக் கொடுமையும், மிராசுதாரன் - உழுகின்ற குடியானவன் வித்தியாசக் கொடுமையும், பொதுவில் மதக்கொடுமையும் ஆகியவைகளை நன்றாய்க் கவனித்து அஸ்திவாரத்தில் இருந்தே பரித்துக் களைந்து எறியும்படியான கிளர்ச்சியும் முயற்சியுந்தான் உண்மையில் ஏதாவது பயனளிக்கக்கூடியதாகுமே தவிர வேறல்ல.
இவ்விதக் கிளர்ச்சிக்கும் முயற்சிக்கும் மக்களை முந்த விடாமல் செய்வதற்காகவே தான் இன்றைய “கிளர்ச்சியும்” “முயற்சியும்” நடை பெறுகின்றன.
குடி அரசு - 1930 (2) 262
ஆகவே இவையிரண்டும் இந்தியாவின் உண்மையான விடுதலைக்
கும், சுதந்திரத்திற்கும் விரோதமானதென்றே சொல்லுவோம். ஆனாலும் சீர்திருத்தம் அளிக்க முயற்சிக்கின்ற கூட்டத்தாராவது மேல்கண்ட கொடுமைகளை ஒப்புக் கொண்டதோடு அவற்றிற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமென்பதாக வாயாலாவது சொல்லுகின்றார்கள். ஆனால் கிளர்ச்சிக்காரர்களோ அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் சீர்திருத்தமளிக்க முயற்சிக்கின்றவர்கள் உண்மையாகப் பேசுகின்றார்களா அல்லது பொய்யாக வேஷத்திற்கு நொண்டிச்சாக்குக்காக பேசுகின்றார்களா என்பது வேறு விஷயமானாலும் அதுவும் அவசரத்தில் முடிவு செய்யக் கூடிய காரியமல்ல வென்றே சொல்லுவோம்.
ஏனெனில் எல்லா வகை பிரதிநிதிகளையும், அழைத்திருக்கின் றார்கள், எல்லா விஷயங்களையும் வெளிப்படையாய் எடுத்துச் சொல்லி யிருக்கின்றார்கள். இனி அவர்கள் அதற்கு விதாயம் செய்தாலும் செய்யா விட்டாலும் கொடுமைப்படுத்தப்படும் மக்கள் அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டே கிளர்ச்சி செய்யவாவது முயற்சி செய்யவாவது ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கி விட்டார்கள். எந்த விதத்திலோ ஒரு சீர்திருத்தம் வெளியாகி அமுலில் ஆரம்பிக்கப்பட்ட 10 வருஷத்திற்குள் மேல் கண்ட அதாவது கொடுமைப்படுத்தப்பட்டவர்களின் கிளர்ச்சி பலப்பட்டு அதற்காக வகை சொல்லித் தீரவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கும் ஆதிக்கக்காரருக்கும் வந்து தீருமென்றே கருதுகின்றோம்.
அன்றியும் திரு. காந்தியவர்களும் தனது கிளர்ச்சியை ஆரம்பித்த
தற்குக் காரணங்கள் சொல்லும்போது அவைகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட விஷயம் யாவருக்கும் ஞாபகம் ஓர் பக்கமிருக்கும். என்னவென்றால் “இந்தக்
கிளர்ச்சி ஆரம்பிக்காதிருந்திருந்தால் இந்தியாவில் போல்சுவிசம் அதாவது சமதர்மக் கொள்கை ஆரம்பமாகிவிடும்”” என்று பயந்து கொண்டு இக்கிளர்ச்சி சட்ட மறுப்பு இயக்கம் ஆரம்பித்ததாகச் சொல்லி இருக்கிறார். இதன் தத்துவார்த்தம் என்ன வென்றால் திரு. ஜவார்லால் நேரு அவர்கள் பூரண சுயேச்சை கொள்கைக்காரர் என்றும் அவர் சமீபத்தில் ருஷியா முதலிய இடங்களுக்குப் போய் வந்தவர் என்றும் அவருடைய உணர்ச்சி அதில் இழுக்கப்பட்டிருக்கின்றதென்றும்தான். அதாவது திரு. காந்தியார் அதை தடுக்காதிருந்தால் காங்கிரசே அந்த வழியில் திரும்பி கடைசியாக சமதர்மக் கிளர்ச்சி புறப்பட்டுவிடும் என்றும் பயந்ததாக காட்டப்பட்ட தாகும்.
ஆகவே திரு. காந்தியவர்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் போல்ஸ்விசத்தை - சமதர்மக் கொள்கையை தடுப்பதற்காக இந்த தேசியக் கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டதென்பது விளங்கும். சமதர்மக் கிளர்ச்சி வந்து விட்டால் திரு. காந்தியாருக்கு முழுகிப் போவதென்ன என்பது
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நமக்கு புலப்படவில்லை. என்றாலும் அதைப்பற்றி நாம் இப்போது விவரிக்காமல் விட்டு விட்டு நமது மற்றைய அபிப்பிராயத்திற்கு போவோம்.
இன்றைய இந்தியாவின் வரிக் கொடுமைக்கு முக்கிய காரணங்கள்
இரண்டாகும். ஒன்று வரி விதிப்பதில் அனுசரிக்கும் முறை. இரண்டு, இந்திய அரசியல் உத்தியோகங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் சம்பளக் கொள்ளை. இந்த இரண்டும் சீர்திருத்தப்பட்டாலொழிய நாட்டின் வரிநிலை என்றுமே
சீர்படப் போவதில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். அதாவது பூமிகளுக்கு வரி (தீர்வை! விதிப்பதில் இன்கம்டாக்ஸ் என்றும் வருமான வரி
விஷயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் முறையே இதிலும் அனுசரிப்ப தாய் இருந்தால் வரிக் கொடுமை அநேகமாய் நீங்கிவிடும் என்றே சொல்லுவோம். எப்படி எனில் இத்தனை ஏக்கர் பூமி உடையவனுக்கு இன்ன விகிதம் வரி என்பதாக கணக்கு போட்டு வரிவிதிக்க வேண்டும். அதாவது 5 ஏக்கர் நஞ்சைக்கும் (தண்ணீர் பாயும் பூமிக்கும்) 25 ஏக்கர் புஞ்சை அதா வது மழையை எதிர்பார்த்து விளையும் பூமிக்கும் குறைவாக உடையவர் களுக்கு இப்போது இருக்கும் வரி தீர்வை விகிதத்தில் பகுதியாக்கி 500 ஏக்கர்காரருக்கு மேல்பட்டவர்களிடமிருந்து இப்போதிருப்பதில் இரட்டிப் புப் பாகம் வரி உயரும்படியாக படிப்படியாக உயர்ந்ததான ஒரு திட்டம் ஏற்பாடு செய்தால் அல்லது இந்தக் கொள்கையை அனுசரித்து சற்றேறக் குறைய திட்டம் ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக வரி கஷ்டம் நீங்குவதோடு பூமிகள் ஒரே பக்கத்தில் போய் சேர்ந்து விடாமல் இருப்பதற்கும் வரிமுறை கொடுமையில்லாமல் பயன்படுவதற்கும் அனுகூலமாயிருக்கும்.
அப்படிக்கில்லாமல் ஒரு ஏக்கர் காரனுக்கும் 5000, 100000 ஏக்கர் காரனுக்கும் ஒரே வரி விகிதம் இருப்பதால் பூமி எல்லாம் ஒரே பக்கம் போய்ச் சேரவும் மற்றும் அநேக கெடுதிகள் ஏற்படவும் அனுகூலமா யிருக்கின்றது.
நிற்க இரண்டாவது விஷயமான சர்க்கார் நடவடிக்கை சம்பள விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் ஒரு பெரும் பகல் கொள்ளை என்றே சொல்லக் கூடியதாயிருப்பதால் எப்போதுமே வரி போராமலேயே இருந்து வருகின்றது. அன்றியும் சம்பளம் போரவில்லை என்கின்ற கூக்குரலும் சதா இருந்து வருகின்றது. இதன் பயனாய் போராத அதாவது குறைந்த சம்பளக்காரரால் கையாளப்படும் பிச்சைக்காக, லஞ்சம், ஒழுக்க ஈனம், நியாயம் தவறுதல் ஆகிய காரியங்கள் செல்வாக்குப் பெற்று இவை பெரிய சம்பளமுள்ள பெரிய உத்தியோகங்களிலும் தாராளமாய் தாண்ட வமாடுவது சகஜமாகி வந்துவிட்டது. ஆதலால் இனியாவது லஞ்சம் நியாயம் தவறுதல் ஆகிய காரியங்கள் பொது ஜனங்களால் வெறுக்கப்பட்டு உத்தி யோகங்கள் பரிசுத்தமும் நேர்மையும் அடையவேண்டுமானால் கண்டிப்பாய் சம்பளமுறை மாற்ற வேண்டியது மற்றொரு விஷயத்திலும் அவசியமாகும். அதாவது 20, அல்லது 25 (இடத்தை அநுசரித்து) ரூபாய்க்கு குறைவில்லாமல்
குடி அரசு - 1930 (2) 264
1000, 1250 ரூபாய்க்கு மேல்படாமல் இருக்கும்படியாகவே திட்டம் ஏற்படுத்தவேண்டும். உத்தியோகங்களின் எண்ணிக்கையும் இப்போது உள்ளதில் பகுதிக்குக் கொண்டு வந்து விட வேண்டும்.
மக்களுக்கு நாணயமும், ஒழுக்கமும் ஏற்படுத்துவதற்குத் தனி ஒற்றர் C1D இலாகா வைத்து சீர்படுத்த ஏற்பாடு செய்து இதில் சற்றும் தாட்சண்யமற்ற நடுநிலைமை கையாளும் பட்சம் 10 வருஷத்தில் மக்கள் சீரடைந்து உத்தியோகங்களின் சீர்கேடும் நாணயத் தவறுதலும் லஞ்சமும் ஒழிந்து விடக்கூடும்.
இன்றைய தினம் நமது நாட்டில் அரசியலிலாவது அரசாங்க உத்தி யோகங்களிலாவது, ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷி நிர்வாகத்திலாவது பொது வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளும் குடித்தனப் பாங்கான வாழ்க்கையிலாவது, நாணயமும் ஒழுக்கமும் சிறிது காண்பது கூட மிகக் கஷ்டமாகவே இருந்து வருகிறது. ஆகவே இந்த விஷயம் மற்றெல்லா விஷயங்களைவிட முக்கியமாய்க் கவனிக்கப்படவேண்டியதாகும்.
இப்போது சில உத்தியோகங்களுக்குப் பெரிய பெரிய சம்பளங்கள். கொடுக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவையாவன.
ஒன்று. வெள்ளைக்காரர் தங்களுக்கு இந்தச் சம்பளம் ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் அந்த உத்தியோகங்கள் இந்தியர்க்கு வந்த காரணமாய் அந்த சம்பளமும் அப்படியே இந்தியர்களுக்குத் திருப்பப்பட்டதால்
என்பதும்,
இரண்டு. பெரிய உத்தியோகங்களுக்கு, அதாவது, பொருப்பும், அதிகாரமுமுள்ள உத்தியோகங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கா விட்டால் அலட்சியமும், நடுநிலைத் தவறுதலும் ஏற்பட்டுவிடும் என்பதோடு நாணயத் தவறுதலாக நடக்க வேண்டிய ஆசை உண்டாக்கப்பட்டு விடும் என்பதுமாகும். இவற்றை நாம் ஒப்புக் கொள்ள முடியாது.
ஐரோப்பியருடைய சம்பளத்தை குறைக்க நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமேயொழிய அந்தச் சம்பளம் நமக்கு வரவேண்டுமென்பது ஐரோப்பியர்களின் சம்பளத்தை நாமே ஆதரிப்பதாகும் என்பதோடு இதை பண ஆசையால் தேசத்தின் பெயரால் கொள்ளை அடிக்கும் அயோக்கியத் தனம் என்றும் சொல்ல வேண்டியதாகும். இந்த அயோக்கியத்தனத்தை இந்திய பொது மக்களுக்குள் புகுத்தியது தேசீய இயக்கமும், தேசீய கிளர்ச்சியும், அவைகளிரண்டும் சேர்ந்ததால் பிறந்த குழந்தையாகிய அரசியல் சீர்திருத்தமும் தான் என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.
“இரண்டாவதான அதாவது அதிகச் சம்பளம் கொடுக்கா விட்டால் நடு நிலைமை தவருவார்கள், பொருப்பை உணரமாட்டார்கள், லஞ்சம்
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வாங்குவார்கள்” என்பது. இதுவும் போதிய காரணமாகாதென்றே சொல்லு வோம்.
உத்தியோகஸ்தர்கள் நாணையமாய் பொருப்புடன் நடுநிலையில் நடந்து கொள்ளுவது என்பது அரசியல் அமைப்பில் இருக்கின்றதே ஒழிய சம்பளம் அள்ளிக் கொடுப்பதில் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவோம். உதாரணமாக 5533 - 5 - 4 சம்பளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்
மந்திரிகள் முக்கியமான காரியங்களில் நடுநிலையிலும் தங்கள் மனதில் நியாயம் என்று தோன்றிய வழியிலும் தேசத்திற்கும் மக்களுக்கும் நன்மையான காரியம் என்பதிலும் சிறிதும் நாணையமாய் நடந்து கொள்ள முடியாமல் எப்படியாவது உத்தியோகத்தை சம்பாதிக்கவும் அதை குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கவும் தான் நடந்து கொள்ளும்படி அரசியல் அமைப்பு ஏற்பட்டிருக்கின்றதே ஒழிய வேறில்லை. இப்படியான குணம் ஏற்பட்டதற்கு அதிகச் சம்பளமே காரணம் என்று கூட சொல்லுவோம்.
அதுபோலவே மற்ற உத்தியோகங்களிலும் மேல் கண்ட குணங்க ளோடு லஞ்சம் என்பதும் சேர்ந்து கடையில் பீடி, சிகரட்டு விலைக்கு வாங்குவது போல் நியாயம் விலைக்கு வாங்கத்தக்க அவ்வளவு சாதாரண நிலையில் இருந்து வருகின்றது. இவ்வளவும் போறாமல் இன்றைய அரசியல்
கிளர்ச்சியும் சீர்திருத்தமளிக்கும் முயற்சியும் இந்த தன்மையை மேலும் விர்த்தி செய்ய அனுகூலமாயிருப்பதைத் தவிர இவைகளில் ஒரு சிறியதை. யாவது குறைப்பதற்கு வழியில்லை.
தேசீயக் கிளர்ச்சியில் வரும் பூரண சுயேச்சையானாலும், சீர்திருத்த மளிக்க முயற்சி செய்யும் சர்க்காரால் வரும் முழு சீர்திருத்தமானாலும் இரண்டும் உயர்ந்த ஜாதிக்காரன், பணக்காரன், படித்தவன் ஆகிய மூவருக்
கும் மாத்திரம் அனுகூலமும், முற்போக்குக்கான சுதந்திரமும் சீர்திருத்த முமாய் இருக்குமே தவிர 100க்கு 90 மக்களாய் இருக்கின்ற குடியானவனுக்
கும் கூலிக்காரனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் வேண்டிய மார்க்கம் அதில் ஒன்று மிருக்காது என்றும் சொல்லுவோம்.
மற்றபடி கல்வி, நீதி முரை, அரசியல் தத்துவம் முதலியவைகளைப்
பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.11.1930
குடி அரசு - 1930 (2) 266
கல்வியும் கல்வி மந்திரியும்
சென்னை அரசாங்க கல்வி மந்திரி திவான்பகதூர் கனம் குமாரசாமி ரெட்டியாரவர்கள் திருநெல்வேலியில் முனிசிபாலிடியாரால் வழங்கிய ஒரு உபசாரப்பத்திரத்திற்கு பதிலளிக்கும் போது பேசியிருப்பதில் காணப் படுவதாவது:-
“இன்று தேசமிருக்கும் நிலையில் நமக்கு வேண்டியது ஆரம்பக் கல்வியேயாகும். உயர்தரக் கல்வியை நிறுத்தியாவது ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டியது இன்றியமையாதது. இந்தக் கவலைமீது இதுவரை கல்வி முறையில் சரியானபடி கவனம் செலுத்தப் படவில்லை. சரியான கொள்கையும் திட்டமும் ஏற்படுத்தாததே இதற்குக் காரணம். மக்களுக்கு வரவர அறியாமை அதிகரித்துக் கொண்டு வருவது யாவரும் அறிந்ததாகும். கல்வி விஷயத்திலாகும் வீண் பணச் செலவு அதிகம்.
செலவுக்குத் தகுந்த பலனில்லை. என்னுடைய உத்தியோக காலத்தில் கல்வி முறையை நேர்மையான வழியில் திருப்பி ஆரம்பக் கல்வியை நாட்டில் எல்லாப் பக்கமும் புகுத்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இந்த நாட்டில் இல்லையென்று ஏற்பட்டால் அதுதான் கல்வி விஷயத்தில் நான் செய்த நல்ல காரியமாகும்” என்று பேசியிருக்கிறார்.
இதை நாம் மிகுதியும் சரியான அபிப்பிராயம் என்று சொல்வதோடு. திரு. ரெட்டியாரையும் மனதாரப் பாராட்டுகிறோம். கல்வி விஷயத்தில் நமது
நாட்டிலுள்ள குறைகள் உலகத்தில் எங்குமேயிருக்காதென்று கூறலாம்.இதற்கு முக்கிய அத்தாட்சிக்கு வெகுதூரம் போக வேண்டியதில்லை. சர்க்காரின் 1921
ம் வருஷத்திய ஜனகணிதப்படி பார்த்தால் 100க்கு இந்தியர்களில் 7 பேர்களே படித்தவர்களாகும்.
இந்தக் கணக்கிலும் 100க்கு 3 பேராயுள்ள பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர் படித்திருப்பதைக் கழித்து மற்ற மக்களில் மொத்தம் படித்தவர்கள் வீதாசாரம் பார்ப்போமானால் இந்தியர்கள் 100க்கு 4 பேரே படித்தவர்கள். அதாவது எழுத்து வாசனையுடையவர்களாயிருக்கிறார்கள். ஒரு தேசத்தின் இழிவுக்கும் அறியாமைக்கும் பாமரத்தன்மைக்கும் இதைவிட வேறு அத்தாட்சி என்ன வேண்டும் என்று கேட்கின்றோம். இந்த நிலைமை
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஏற்பட்டதற்குக் காரணம் இந்த அரசாங்கத்தினால் கல்விக்காக செலவழிக்
கப்படும் பணங்களும் முயற்சிகளும் பெரும்பாலும் முன் சொல்லப்பட்ட
100க்கு 3 பேராயுள்ள ஜன சமூகம் மாத்திரம் 100க்கு 100 பேராக படிக்கப்படு வதற்காகவே சூக்டி செய்து கொண்டு செலவழிக்கப்பட்டிருப்பதோடு இந்த இலாக்காவின் ஆதிக்கம் அந்த வகுப்பாரிடமே சிக்கிக் கொண்டிருந்ததே முக்கிய காரணமாகும். இந்த புரட்டை இதுவரை யாரும் கண்டுபிடிக்க வேயில்லை. இன்றைய தினமும் இந்தியாவில் தற்குறித்தன்மை ஒரு இருபது வருஷத்திற்குள்ளாவது இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டுமானால், கல்வி இலாக்காவிலிருந்து பார்ப்பனர்களை விலக்கி வைத்தோமானால் தான் கண்டிப்பாய் முடியக்கூடிய காரியமாகும். கல்வியிலாக்காவானது பார்ப் பனர்கள் கையில் இருந்ததினாலேயே அதற்காக ஒதுக்கிய பணங்கள் பெரும்பகுதி நிர்வாகிகள், உபாத்தியாயர்கள் சம்பளம் என்கின்ற பேரால் கொள்ளை போய்விட்டது. இப்போதும் கொள்ளை போகின்றது.
கல்வி இலாக்காவிலுள்ள சம்பளம், வேறு எந்த இலாக்காவிலும் இவ்வளவு தாராளமாயில்லை என்றே சொல்லலாம்.
உதாரணமாக, ஒரு பையன் பி. ஏ. படித்து விட்டு சர்க்கார் செலவில் ஒரு வருஷம் உபாத்தியாயர் வேலைக்கு எல். டி. படித்து விட்டு வந்து விட்டால் உடனே மாதம் 75 ரூபாய் சம்பளம் வாங்க அருகனாய் விடுகிறார். பிறகு வருஷம் 2ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கிரேடு அதிகச் சம்பளம் பெற அருகராயிருக்கிறார். எதற்காக இவர்களுக்கு இவ்வளவு சம்பளம் என்பதைப்
பற்றி யாருமே கவனிப்பதில்லை.இந்த சம்பளம் சாதாரணமாய் மூன்றாவது பாரம் வரை சொல்லிக் கொடுக்கக் கூடிய 3 உபாத்தியாயர் களுக்குக் கொடுக்கலாம். இன்னம் புரொபசர்கள், லெக்சரர்கள், எட்மாஸ்டர் கள், பிரின்ஸ்பால்கள் ஆகியவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் இதைப் போல் பலமடங்கு ஆகிறது. இந்தப் பணம் ஏழைகளிடமிருந்து வரி வசூலித்ததும், பிள்ளைகளின் பெற்றோர்களும் இதற்காக என்று மற்றவை களில் அதிகமாக சம்பாதித்ததுமாகும். இந்த மாதிரி சம்பளம் உபாத்தியாயர் களுக்குக் கொடுப்பதற்காக பிள்ளைகள் சம்பளங்களை உயர்த்துவதாலேயே எல்லாப் பிள்ளைகளும் படிக்க முடிவதில்லை. இது தவிர கல்வியிலாக்கா சர்க்கார் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பதால் சம்பளம் குறைப்பதற்குக் கூட அவர்கள் சம்மதிக்காததால் சர்க்கார் நிர்ப்பந்தத்திற்காகவே தனிப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகிகள் கூட அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக் கின்றது.
சாதாரணமாக இன்றைய நிலைக்கு BALT. கள் மீ£ரூபாய் 40, சம்பளத்
திற்கு தாராளமாய் கிடைக்கும்படி செய்யலாம். கிடைக்கவும் செய்யும். மற்ற உத்தியோகங்களைப் போல் சம்பளம் குறைந்தால் லஞ்சம் வாங்குவார்கள், நடுநிலையில் இருக்கமாட்டார்கள் என்று சொல்லவும் இதில் இடமில்லை. இந்த மாதிரி சம்பளத்தை அனுசரித்து பிள்ளைகள் சம்பளமும் மற்ற
குடி அரசு - 1930 (2) 268
செலவுகளும் குறைத்து விட்டால் 10000க்கணக்கான 8.&.க்கள் தோன்றி விடுவார்கள். சாதாரண மக்கள் படிக்க முடியாத செலவுகள் வைத்திருப்பதால் அதிகமான பேர்கள் படிக்க முடியாமல் இருக்கின்றதே தவிர படிக்கத் தகுந்த
புத்தி இல்லாததால் அதிகம் பேர் படிக்க முடியவில்லை என்று சொல்ல
முடியாது. இது போலவே அந்த இலாக்கா அதிகாரிகளுக்கும் சிப்பந்திக ளுக்கும் கொடுக்கப்படும் சம்பளமும் இது போலவே ஒன்றுக்கு இரண்டாக
வும் சில சமயங்களில் மூன்றாகவும் கொடுக்கப்படுகின்றன. இந்த அதிக செலவுகள் எல்லாம் மேல் வகுப்பு படிப்புகளை உத்தேசித்தேதான் செய்யப் பட்டு வருகின்றன. கல்வி இலாக்காவையே இரண்டாகப் பிரித்து ஆரம்பக் கல்விக்கு ஒரு இலாக்காவும், உயர்தரக் கல்விக்கு ஒரு இலாக்காவுமாக ஏற் பாடு செய்து ஆரம்பக் கல்வியை சர்க்கார் செலவிலும் உயர்தரக் கல்வியை முழுதும் மாணாக்கர்கள் செலவிலும் வைத்துவிட்டால் ஆரம்பக் கல்வியை நாமெல்லாம் பரப்புவதற்கு பணம் கிடைக்காமல் போகவே போகாது. அந்த உபாத்தியாயர்களுக்கும் வயிரார சாப்பாடு போடலாம்.டா. படித்து விட்டதி னாலேயே அவன் குடும்பத்திற்கு “75 ரூ.க்கு கம்மியாயிருந்தால் போதாது என்று சொல்லும் கல்வி இலாகா உத்தியோகஸ்தர்கள் ஆரம்பக் கல்வி சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயர்களுக்கு L5 15 ரூ. போராதா 20 ரூ. போராதா என்பதற்குக் காரணம் உபாத்தியாயர்களிலும் பெரும்பாலும் அது ஒரு ஜாதி, இது ஒரு ஜாதி என்று ஏற்பட்ட சூக்ஷியே தவிர வேறில்லை. ஆகையால் கல்வி மந்திரி கல்வியை பரப்ப வேண்டுமானால் பார்ப்பனர். களுக்கே ஏகபோக ஆதிக்கமாய் இருக்கும் அந்த இலாக்காவை விகிதாச்
சாரம் எல்லா மக்களுக்கும் பொதுவான ஆதிக்கம் இருக்கும் படியாக்கி கூடுமான வரையில் பார்ப்பனர்கள் அதில் இல்லாமலே செய்வாரானால் அவ ருடைய உத்தேசத்திற்கு ஏதாவது ஆரம்ப விழாவாவது செய்தவராவார்.
தவிர மந்திரியார் எவ்வளவு தான் கல்வியை பரப்பினாலும் சாப்
பாடும், புஸ்தகமும் சிலேட்டுமில்லாமல் படிக்க முடியாமல் இருக்கும் சமூகத்திற்குள் கல்வியை புகுத்தவே முடியாது என்பதை அவர்கள் நன்றாய் உணர்ந்து அதற்கு ஒருவகை செய்தாக வேண்டும் என்பதையும் ஞாபக மூட்டுகின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாப்பாடும், படிப்பு, சாதனப் பொருளும் கொடுப்பதால் தான் அவர்கள் ஆரம்பக்கல்வியாவது அடைய முடியுமே தவிர மற்றபடி வெறும் பேச்சிலும், உத்தரவிலும் ஆகிவிடாது என்பதை மறுபடியும் வலியுறுத்துகின்றோம்.
தவிர, கல்வியில் இருக்கும் பல நிர்பந்தங்கள் அனாவசியப் பாடங்கள் ஆகியவைகள் ஒழிக்கப்படவேண்டும்.
கல்விப்பாடங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். தொழில்கல்வி பள்ளிக் கூடங்களென்பது ஒழுங்காய் நிர்ணயிக்கப் படவேண்டும்.
இப்போது பிள்ளைகளுக்கு தொழில் சொல்லிக் கொடுப்பது என்பது
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மற்றப் புரட்டுகளைப் போலவே இதுவும் ஒரு பார்ப்பனப் புரட்டு என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக் கூடத்தில் நெசவு வகுப்பும், தச்சு வகுப்பும் வைத்து வக்கீல்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், மிராசுதார் ஆகிய வர்கள் பிள்ளைகளையும் மற்றும் மேல் கண்ட வேலைகளுக்குப் போகப் படிக்கும் பள்ளிக்கூடப் பிள்ளைகளை எல்லாம் அதில் படிக்கச் செய்து அதை கற்றுக் கொள்ளச் செய்வதாகிய பயனற்ற காரியமானது அந்த இலாகா தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள ஞானத்தைக் காட்டுவதற்கும் போதுமான ஆதாரமாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.111930
குடி அரசு - 1930 (2) 270
காதி முறை
சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே!
முன்16 -10 - 30ம் தேதி குடி அரசு தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு
சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்று சொல்லப்பட்டதோடு அந்த சாதிகளே தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக் காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார். அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு
சிலர் டெ சாதிக்கிரமத்தை அதாவது ஆதிசாதி என்பவைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும். மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர்,அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ்
நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும் ஒரு கற்ப னையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தங்கள் நால்வ
ருக்கும் தொண்டு செய்ய அடிமையாயிருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தான் “பள்ளு பறை பதினெட்டு சாதிகள்” என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். ( இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வட மொழிப்படி பார்த்தாலும் சரி, தென் மொழிப்படி பார்த்தாலும் சரி, வேளாளர்:
4 வது சாதி என்பதை ஒப்புக்கொள்ள கின்றார்கள் என்பது மாத்திரம்
இதிலிருந்து அறியக் கிடக்கின்றது?
அந்தப்படி கூறப்படும் பள்ளு, பறை பதினெண் குடி மக்கள் என்ப வர்களைக் குறிக்கும் முறையில் “பணி செய்யும் பதினெண் வகைச் சாதியார்” என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணை வாணிகன், ஒச்சன் கல் தச்சன்,
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கன்னான், குயவன், கொல்லன், கோயிற் குடியன், தச்சன், தட்டான், நாவிதன் பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்!
ஆனால் இதே பதினெண் மக்களை அபிதானகோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள்களாக, சிவிகையர், (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர் களாம்! குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணை வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதினெட்டு பெயர்கள் குறிக்கப்
பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ்நாட்டிலுள்ள தெலுங் கர்களை (ஆந்திரர்களை! குறிப்பிடுவதில் “கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும், உப்பமைப்பவர்களாகவும் அனுப்பப்பட்டவர் கள்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.
இவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளாள் செட்டிகள். இவர்கள் சோழபுரத்தார், சித்தக் காட்டார், பஞ்சுக்காரர் முதலிய பல திறப் பட்டவர்கள். இதற்கடுத்தப்படியிலுள்ளோர் கார்காத்தார். அடுத்த வரிசை யிலுள்ளோர் சோழிய வேளாளர். இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தப்படியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாம்ச போசனம் செய்பவர்கள்! இவரிற் றாழ்ந்தோர் அகம்படியர், அவரிற் றாழ்ந்தோர் மறவர். அவரிற் றாழ்ந்தோர் கள்ளர். அவரிற் றாழ்ந்தோர் இடை
யர். இவர்கட்கடுத்த படியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்தப் படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இவற்றுள் எதிலும் “பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகு
பாடும், தாழ்வுக் கிரமமும் சந்தேகமோ, ஆகூஷபனையோ சொல்லுவதற்குச் சிறிதும் இடமில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தால் ஜாதியின் சூட்சித் தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி க்ஷத்திரியர் களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆக்ஷேபனைகளும் க்ஷத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங்களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவு படுத்திவருவதும் அநேக இடங்களில் பிரதிய க்ஷமாய் காண்கின்றோம்.மற்றும் ஒவ்வொரு சாதியாரும் தங்கள் தங்கள் சாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண் டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும்
குடி அரசு - 1930 (2) 272
பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்ட வர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப் பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.
எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒரு வனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள். அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத சாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாகயிருக் கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது “விபசாரம்” “கீழ் மேல் ஜாதி கலப்பு” என்று சொல்லும் படியான “இழிதன்மை” யில் பிறந்தவர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவமாயிருக்கின்றதை யாரும் மறுக்கமுடியாதென்று உறுதி கூறுவோம்.
மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர
ஜாதிக்கும், ஜாதியை கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆக்ஷேபனையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப்
பாய்ச் சொல்லுவோம்.
இவை ஒருபுறமிருக்க இந்த ஜாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும். உரிமைகளையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதிப் பேரை சொல்லிக் கொள்ள முடியாத படியும் அதை கனவிலும் நினைக்க முடியாதபடியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது “நாலாவது ஜாதியார்களாக சூத்திரர்கள் என்று சொல்லப்படும் வகுப்பாருக்கு பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கும் உரிமையானது எப்படி இருக்கின்றது” என்று பார்த்தால் இப் போது “பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்” (அதாவது கிரிமினல்ட் ரைப்ஸ்? என்று சொல்லக் கூடியவர்களுக்கு சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டி ருக்கின்ற நிர்பந்தத்திற்கும் சட்டதிட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும்
சிறிது கூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரியாகவே ஏற் படுத்தி இருக்கின்றார்கள். உதாரணமாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.
அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.
“ஸ்நாதமஸ்வம், கஜமத்தம்
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ரிஷபம் காம மோஹிதம்
குத்தரமக்ஷரசம்
யுக்தம் தூரதப்
பரிவர்ஜையேல்”
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதங் கொண்ட யானை
யையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.
“ஐப.ஸ்தப,தீர்த்தயாத்திர,
பிரவர்ஜ் ஜய,மந்தர சாதனம்
தேவதாரா தனம் சசய்வஸ்திரி
சூத்திர பத தானிஷள்” அதாவது ஜபம், தபசு தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒரு போதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.
“நபடேல் சமஸ்கிருதம் வாணீம்”'
(சூத்திரன்! சம்ஸ்கிருதம் படிக்கக் கூடாது என்பது கருத்தாகும்.
“நைவ சாஸ்திரம் படே நைவ
சுருணுயாத் வைதி காக்ஷரம் நஸ்நாயாது தயால் பூர்வம் தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்””
(சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட்கவோ ஒருக் காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.
“இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி”
இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள் படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.
“சாதுர்வர்னியம் மயாசிருஷ்டம்
பரிசரியாத் மகம்
கர்மம் சூத்ரஸ்ஸியாபி பாவனாம்” (கீதாஸ்லோகம்!
குடி அரசு - 1930 (2) 274
நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்கு பிராம்மண சிசுருஷைதான் தர்மம் என்பது கருத்து.
இது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவை
கள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப் பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் பகவான் வாக்கு
கள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.
எந்த காரணத்தாலோ இந்து மத தர்மத்தை அனுஷ்டித்துத் தீர வேண்டியதல்லாத ஒரு ஆக்ஷி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ்வொருவரும் தங்கள். தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலை நிறுத்திக்கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதை சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.
ஏதோ “பொல்லாத விதிவசத்தினால்” இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் திரு. காந்தியாரும் வருணாசிரமத்தைக் கோரும் “தேசீய” தலைவர். களும் கேட்க்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம் மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும்
சற்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒருக்காலமும் போகவே போகாது என்பதை கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின் றோம்.
இன்றையதினம் தேசியவாதிகளாய் இருக்கின்றவர்கள் இந்தியா
சுதந்திரம் அல்லது பூர்ண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மை யான ஆசையுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள்ளைக்கார ஆகஷியிருக்கும் போதே ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியதுதான் அறிவுள்ள வேலையாகும். அதை விட்டு விட்டு முதலில் “ந போய் விடு நாங்கள் பார்த்துக் கொள்ளு கிறோம்” என்று சொன்னால் அது “தான் சாவதற்கு தானே மருந்து குடித்தது” போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 99 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர் களாய் இருப்பதோடு ஒவ்வொருவரும் மேல்ஜாதி ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதும் தனக்கு கீழ் பல ஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவதுமான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள்கையும், ஜாதி ஆதிக்கத் திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆகஷியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதிக் கொடுமைகளும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும் என்பதையோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.
இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள்: ஆகியவைகள் இல்லாதிருந்திருக்குமானால் இந்தியா ஒரு நாளும் அன்னியர் ஆக்ஷிக்கோ அடிமைத் தனத்திற்கோ, அடிமையாகி இருக்கவோ முடியவே முடியாது. ஆனால் “அம்பட்கார்களையும், ஜின்னாக்களையும், ராமசாமி முதலியார்களையும், ராதாபாய்களையும் ஏதாவது ஆசைக்காட்டி ஏமாற்றி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், இழிவுகளையும் மறைக்க வைத்து “எங்கள் நாட்டு ஜாதி உயர்வு தாழ்வு விஷயமும் ஒருவரை ஒருவர்: அடக்கி ஆண்டு இழிவு படுத்தும் சமூகக் கொடுமை விஷயமும் நாங்கள் எப்படியோ சரிபடுத்திக் கொள்ளுகிறோம். இப்பொழுது நீங்கள் போங்கள்” என்று சொல்லச் செய்து விடலாம். ஆனாலும் நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதை யெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்பட்டு
பின் அயலானை வெளியில் போகச் சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றையதினம் உள்ள இழிவையும் கொடுமையையும், அடிமைத்தனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதி வைப்போம்.
ஆகவே எப்படியாவது ஜாதிப் பிரிவையும் அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்றும் அதற்கு ஆரம்பவிழா செய்ய அடுத்து வரும் சென்சஸ் ஒரு சரியான சந்தர்ப்பம் என்றும் அதில் காணப்பட்ட ஜாதியையும் மதத்தையும் தெரிவிக்காதீர்கள் என்றும் தெரி
வித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.11.1930
குடி அரசு - 1930 (2) 276
கார்த்திகை தீயம்
கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.
இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்களை டின் டின்னாய்
கல் பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எறிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளை போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டு வார்கள்.
இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100,1000,10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுப் பொட்டணம், பருத்திவிதைப் பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள்போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்த சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும்.
ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லக்ஷம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லக்ஷம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்த பெருந் துகைச்செலவில் நாட்டுக்கோ, மக்களுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ, சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பொருமான பிரயோஜனமாவதுமுண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் விளங்காமற்போகாது. அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம் கொள்ளை போகின்றதே, கொள்ளை. போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மரியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேசபக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை. அதைப் பற்றிநினைப் பதுமில்லை.அதைப்
பற்றிப் பேசுவதே மதத்துரோகமாகவும், நாஸ்திக மாகவும்
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சொல்லப்படுகின்றது. இம்மாதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லக்ஷ்க்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.. ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இதை கவனித்து இம்மாதிரியான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சிகளையும் விட எத்தனையோ மடங்கு பயன் தரக்கூடியதும் பல வழி களிலும் அவசியமானதுமான முயர்ச்சிகளாகும் என்பதை ஞாபக மூட்டுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.111930
குடி அரசு - 1930 (2) 278
களூரில் சுமாமரியாதையப் பிரசாரம்
கரூர் முனிசிபல் சேர்மென் அவர்களே! வைஸ் சேர்மென் அவர்களே!
முனிசிபல் கவுன்சிலர் அவர்களே! கரூர் நகர மகாஜனங்களே!!!
இன்று நீங்கள் இவ்வளவு ஆடம்பரத்துடன் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரிகைக்கும் மற்றும் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற வரவேற்புக் கொண்டாட்டத்திற்கும் நான் சிறிதும் தகுதியுடையேன் அல்ல என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், நீங்கள் உங்களுடைய அபிமானத்தையும், ஆமோதிப்பையும் கொண்ட ஒரு தொண்டனுக்கு நீங்கள் காட்ட வேண்டிய ஒரு அதிகமான அன்பையும் மரியாதையுமே பொருத்தமற்ற என் விஷயத்
தில் காட்டியிருக்கின்றீர்கள் என்றே நான் கருதுகிறேன். ஆக இந்த அன் பையும் மரியாதையும் எனக்கு என்றோ அல்லது எனது தொண்டுக்கென்றோ கருதாமல் எனது கொள்கைக்கென்றே கருதுகிறேன். இதற்கு உதாரணம் என்ன வெனில் உங்கள் உபசாரப் பத்திரத்தில் கண்டிருக்கும் வாக்கியங் களேயாகும். ஆகவே அதற்காக என் என்றும் மறவாத நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கனவான்களே! இன்று இந்திய நாட்டின் பல பாகங்களிலும் தேச விடுதலையின் பேரால் ஒருவித கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது
நான் மனித சமூக விடுதலைக் கென்று ஒரு தனி வழியில் சென்று கொண்டி ருப்பதை நீங்கள் பாராட்டிப் புகழ்ந்திருப்பது எனக்கு மேலும் மேலும் ஊக்கத்தையும் உறுதியையும் கொடுக்கக் கூடியதாயிருக்கின்றது.
ஏனெனில் சிற்சில சமயங்களில் எனது தொண்டிற்கு ஏற்படும் எதிர்ப்புகளையும், பழிப்புகளையும் கண்டு நிதானித்து அயர்கின்ற சந்தர்ப் பங்களிளெல்லாம் உங்கள் போன்ற பொது ஜனங்களுடையவும், பொது ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களுடையவும் ஆமோதிப்பும் அன்பும் அனு கூலமாயிருப்பது அவ்வயர்வையும், நிதானிப்பையும் மாற்றி விடுகின்றது.
இது போது சமூக சமத்துவத் தொண்டே வேண்டற்பாலது என்கின்ற குறிப்பை நீங்கள் எடுத்துக் காட்டியது போலவே நானும் எனது 10, 20 வருஷத்திய பொது சேவையின் பலனாய் கண்டு பிடித்த ஒரு உண்மை
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
யாகும். நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், விடுதலை பெற வேண்டுமானால், ஒற்றுமையான லக்ஷியமும் ஒன்றுபட்ட அபிப்பிராயமும் வேண்டும். ஆகவே அதற்காக பாடுபடுவது தான் நாட்டு விடுதலை முயற்சி என்று நான் கருதுகிறேன்.
ஏனெனில் சரித்திர காலம் தொட்டே-புராணக்கதைகளின் கற்பனைக் காலந்தொட்டே இந்நாடு மடமையிலும் அடிமைத் தனத்திலும் ஆழ்த்தப் பட்டிருப்பதை உணர்ந்தவர்களுக்கு இப்போது நடைபெறும் சமூகத் தொண்டின் பெருமையும் அவசியமும் தானாக விளங்கும். ஆகவே இது விஷயங்களைப் பற்றிய விரிவுரைகளை இவ்வூர் பிரபல கனவான்கள் ஏற்பாடு செய்திருக்கும் வெளிப்பொதுக் கூட்டத்தில்நிகழ்த்தலாம் எனக் கருதி இத்துடன் நிறுத்தி விட்டு முனிசிபல் நிருவாக சம்பந்த விஷயமாக சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று நீங்கள் உங்கள் உபசாரப் பத்திரத்தில் கேட்டிருக்கின்ற படி அதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டபடி நான் ஈரோடு முனிசிபல் சேர்மெனாயிருந்
திருந்தாலும் சொர்ப்ப காலமாகிய இரண்டு வருஷ காலமே இருந்திருக் கிறேன். அதுவும் எனக்குப் பிடிக்காமல் நான் ராஜீனாமா செய்து விட்டு வந்தவன். அன்றியும் இன்றைய நிலைமை வேறு. ஆகவே நான் நிர்வாகத்
தில் இருந்த கால சுவல்ப அனுபவத்தையும் வெளியில் வந்த பிறகு அறிந்த சில அனுபவத்தையும் அதைப்பற்றிய என் சொந்த அபிப்பிராயத்தையும் பற்றி ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன். அந்தப்படி நான் எடுத்துச் சொல்லும் விஷயங்களில் சிலது பச்சை உண்மையாகக் கூட இருக்குமாத
லால் சிலருக்கு அது மன வருத்தமாயிருந்தாலும் இருக்கலாம். ஆன போதிலும் நம்நாட்டு விஷயங்களைச் சகோதரர்களாகிய நாம் நமக்குள்
பேசிக் கொள்வது நமது நடப்புக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்குமே தவிர அதனால் எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டு விடாதாதலால் நான் அதற்காக கவலைப்படவில்லை.
நண்பர்களே! முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு, ஜில்லா போர்டுகள். என்பது நம் நாட்டு மக்களின் சுகாதாரம், போக்குவரத்து வசதி, வாழ்க்கை செளகரியம், கல்வி முதலிய ஒரு சிறு நன்மையான விஷயங்களின் பொறுப்பு களை அரசாங்கத்தார் குடி ஜனங்களாகிய நம்மிடமே ஒப்புவித்து நடத்திக் கொண்டு போகும்படி செய்திருக்கும் காரியங்களின் ஸ்தாபனங் களாகும். இவற்றை நாட்டு நடப்பு மொழியில் சொல்லுவதானால் குடிமக்கள் பஞ்சாயத்து நிர்வாகம் என்று சொல்லலாம். இதை நாம் ஒழுங்காக நிர்வாகம் செய்யத்
தெரிந்து கொண்டோமானால் நமக்கு மேற்பட்ட ஒரு அரசாட்சியே தேவையில்லாத சமதர்ம பஞ்சாயித்து ஆட்சியை நாமே நடத்திக் கொண்டு போகக் கூடியநிலைமை அடையலாம். அவ்வாட்சியில் மேல் ஜாதி, கீழ் ஜாதி, ஏழை பணக்காரன், அரசன் குடிகள் என்கின்ற வித்தி யாசக் கொடுமைகள்
குடி அரசு - 1930 (2) 280
இல்லாமல் எல்லோரும் சமமான மனிதர்களே என்கின்ற கொள்கைதான் தலைசிறந்து விளங்கும். அப்படிப்பட்ட ஆட்சிதான் மனித சமூகத்திற்கு சாந்தியைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.
ஆகையால் இன்று நம் வசமிருக்கும் முனிசிபாலிட்டி முதலிய பஞ்சாயத்து ஸ்தாபனங்கள் மேல் குறிப்பிட்ட சுகாதாரம், போக்குவரவு சாதனம், வாழ்க்கை செளகரியம், கல்வி முதலியவைகளுக்கு மாத்திரம் ஏற்பட்டது என்பது மாறி நீதி, குற்றவிசாரணை, நிர்வாகம், றாணுவம் ஆகிய விஷயங்களும், இப்பஞ்சாயத்துகளின் மூலமாகவே நடத்த நாம் முயற்சித்து வெற்றி பெற வேண்டும். அதுதான் நமது பஞ்சாயத்து ஆட்சியின் முடிவான லட்சியமாயிருக்க வேண்டும். அதற்குத் தயாராவதற்கே, இன்றைய தினம் நம் கைவசமிருக்கும் பஞ்சாயத்துகளை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அக்காரியத்தை சுலபமான காரியம் என்று கருதிவிடக் கூடாது. அதற்கு அநேக கஷ்டப்படவேண்டும் என்பதோடு குறிப்பாய் நமது நாட்டில் அதிகக் கஷ்டமாயிருக்கும். ஏனெனில் இங்கு மற்ற நாடு களைப் போல பணக்காரன், எளியவன், வலுத்தவன், இளைத்தவன் என்கின்ற கொடுமை மாத்திரமில்லாமல் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிறவி காரணமுமி ருக்கின்றது. இது எந்த நாட்டிலுமில்லாதது என்பதோடு இங்கு மிக்க மோச மான நிலையிலிருந்து கொண்டு எல்லாப் பொதுக் காரியத்தையும் எவ்வித முன்னேற்றமுமடையாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. முன்னேற்றமடைந் துள்ள நாடுகள் என்பவை இவ்வித வித்தியாசங்கள் ஒழிந்தவைகளே யாகும். இந்த நாட்டு ஸ்தல ஸ்தாபன பஞ்சாயத்து ஆட்சிக்கு இந்த ஜாதி உயர்வு தாழ்வுகளே இன்று பல வழிகளில் தொல்லை விளைவிப்பதாக இருந்து வரு
கின்றது. அதோடு மக்களின் மூட நம்பிக்கை முதலிய பல மடமைகளும் நமது நாட்டு நிர்வாகத்தை நல்வழிப்படுத்தி சமதர்மமடையத் தடைகல்லா யிருக்கின்றது. ஆகவே இவையிரண்டும் இப்போது முதல் முதலாக ஒழிக்கப் பட வேண்டும். பொதுவாக இன்றைய பஞ்சாயத்துக்கள் பெரிதும் சீர்கேடா கவே இருக்கின்றன.
முதலாவது பஞ்சாயித்து அமைப்பு முறைகளும் அதன் தேர்தல் எலக்ஷன் முறைகளும் அரசாங்கத்தின் பேரால் பஞ்சாயத்து ஸ்தாபனங் களின் மீது ஆட்சி செய்யும் முறைகளும் மிக்க கேவலமாக இருக்கின்ற வென்றே சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன். அதிலும் எனக்கு
சற்று அனுபவமுள்ள நமது மாகாணத்தைப் பொருத்தவரை இங்கு ஸ்தல ஸ்தாபன ஆட்சியென்பது ஒரு பஞ்சாயித்துப் பொது நல நிர்வாக ஆட்சி என்று சொல்வதற்கில்லாமல், கூட்டு வியாபார ஆட்சியென்றே சொல்ல வேண்டும். இதிலுள்ள ஓட்டர்கள், அபேட்சகர்கள், அங்கத்தினர்கள், தலைவர்கள் நிர்வாக மந்திரிகள் வரை ஒரே யோக்கியதை அதாவது சுயநலமே முக்கிய லட்சியமாயல்லாமல் பஞ்சாயித்தின் உண்மைத் தத்து வத்தை அறிந்து அதற்கு மரியாதை கொடுப்பவர்கள் மிக்கஅபுரூபமாகவே
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
காணப்படுகின்றார்கள். பஞ்சாயத்து ஸ்தாபனங்களின் கடமை என்ன? எப்படிப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? யார் தலைவர்களா யிருக்க வேண்டும் முதலிய விஷயங்கள் மக்களுக்கு கற்பிக்கப்படவே யில்லை. அதற்கு இங்கு எவ்வித பள்ளிக் கூடமுமில்லை. எவ்வித யோக் கியர் பஞ்சாயத்து ஸ்தாபனங்களுக்கு வந்தாலும் கடமை என்ன என்பதை அறிவதற்கு ஜனங்கள் விடுவதேயில்லை. சுய நலமும் கவுரவமும் தான்: கடமையென்பதையே கற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். இன்றைய தினம் கெளரவத்திற்கும், கீர்த்திக்கும் தான் ஸ்தல ஸ்தாபனப் பதவி என்பது ஆக்ஷ்பிக்க முடியாத உண்மையாயிருக்கிறது. இந்த லக்ஷனத்தில் தேர்தல் முறைகளோ மிக்க ஆபாசமானது. இப்படிச் சொல்லுவதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது.
உதாரணம் வேண்டுமானால் சொல்லுகிறேன். ஒன்று நம் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள் அநேகம் கோர்ட்டுக்குப் போவது. இரண்டு ஸ்தல ஸ்தாபனத் தலைவர்களுக்கு இருந்த அதிகாரங்களை அரசாங்கத்தார் பிடுங்கி அதிகாரிகளுக்கும் கொடுத்து விட்டது. மூன்று பணம் காசு புளக்கம் வெளிப்படையாயும் தாராளமாயும் ஏற்பட்டு விட்டது. இன்னும் என்ன உதாரணம் வேண்டுமென்பீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நமது ஓட்டர்களுக்கு, பிரதிநிதிகளுக்கு வேண்டிய யோக்கியதைகள் என்ன என்பதே தெரியாது. சுய நல லட்சியம் கொண்ட பிரதிநிதிகளே தெரிந்தெடுக் கப்படுகின்றார்கள். கடமை உணர்ந்தவர்களையோ, போதிய சாவகாச மிருப் பவர்களையோ, பொது நலத்திற்கு நாணயமாயுழைக்க சக்தியும், செளகரி யமும், அறிவும், ஆசையும் கொண்டவர்கள் தெரிந்தெடுக்கப்பட முடிவதே யில்லை.சிறு மீன் போட்டு பெருமீன் எடுக்கக் கூடியவர்கள் தான் தெரிந் தெடுக்கப்பட முடிகின்றது. பொறுப்பை உணர்ந்த பிரதிநிதிகளும் இல்லை. பொருப்பை வலியுருத்தி உணர்த்தும் ஓட்டர்களும் இல்லை. இந்த நிலை யிலுள்ள மக்களைக் கொண்ட எந்த ஸ்தாபனந்தான் என்ன செய்யும்.
இந்த லட்சணத்தில் ஜாதிச் சண்டையும் கட்சிச் சண்டையும் கலந்து கொண்டால் பிறகு சொல்லவும் வேண்டுமா? நான் கீழே உள்ளவர்களை
மாத்திரம் குற்றம் சொல்லவில்லை, மேலே உள்ள நிர்வாக அதிகாரிகள்.
மந்திரிகள் ஆகியவர்களே இந்த மோசமான நிலையை வளர்ப்பவர் களா யிருக்கின்றார்கள். ஏனெனில் அவர்களும் நாணயமாய் நடந்து கொள்ள முடியாத நிலைமையில் அப்பதவிகளை அடைபவர்களாய் இருக்கின் றார்கள். அவர்கள் அப்பதவியில் இருக்க வேண்டுமானால் கீழே நடக்கும் அக்கிரமங்களை ஆதரித்து அநீதியாய் நடந்து கொண்டால் தான் முடியும் படியாய் அந்தப் பதவிகள் அமைக்கப்பட்டுவிட்டன. 20,30 வருஷ கால மாய் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அதிகமான சுதந்திரங்கள் அளிக்கப்பட்ட தாகச் சொல்லப்பட்டாலும் முன் இருந்த நாணயமும் நல்ல ஆட்சியும் இப்பொழுதிருக்க முடிவதில்லை. இந்தக் காரணங்களால் சில சுதந்திரங்கள்.
குடி அரசு - 1930 (2) 282
பிடுங்கப்படுவதும் நம்பிக்கையில்லை தீர்மானங்கள் பேரால் பல நிர்பந் தங்களும் அவநம்பிக்கைகளும் பாதுகாப்புகளும் ஏற்படுத்த வேண்டிய தாய் விட்டது. இன்னும் சில சுதந்திரங்கள் பரித்துக் கொள்ளவும் முயற்சிக் கப்பட்டது. ஆனால் அச்சுதந்திரங்களை அனுபவித்து அதனால் நன்மை அடைகின்றவர்களே ஜட்ஜிகளாயிருந்ததினால் அது சற்று சாத்தியப்படாது போயிற்று. அதாவது ஸ்தல ஸ்தாபன தலைவர்களின் நிர்வாக அதிகாரத்தை
பரித்து விடுவது என்பது. ஆனால் அது ஏதாவது ஒரு காலத்துக்கு நடந்து தான் தீரும். இன்றைய நிலைமையில் நானும் கூட அந்த சுதந்திரங்களை தலைவர்களிடமிருந்து பரித்து அங்கத்தினர்களுடைய தாட்சண்ணியத்
திற்கும்,நிர்பந்தத்திற்கும் உட்படாத ஒரு நிர்வாக அதிகாரியிடம் ஒப்ப டைக்க வேண்டுமென்றுதான் விரும்பினேன், விரும்பு கிறேன்.
ஸ்தல ஸ்தாபனங்கள் இன்று வக்கீல்கள் கட்சிக்காரர்களை சம்பாதிப் பதற்கும், பணக்காரர்கள் சட்டசபைக்குப் போவதற்கும், கிராமத்து மிராசு தாரர்கள் விவசாயத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும், ஒரு முதல் படிக் கட்டா யிருக்கின்றன. அது மாறியாக வேண்டும். பொருப்பை உணர் கின்றவர்கள் வர வேண்டும். ஒரு 5 வருஷ காலமாவது ஒருவன் நிர்பய மாய்ப் பொது
நன்மைக்குத் தாக்ஷண்ணியமில்லாமல் உழைக்கத்தக்க மாதிரி யில் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஸ்தல ஸ்தாபன விஷய அனு போகங்கள் இருக்க வேண்டும்.
தவிர சுகாதார விஷயம் முக்கியமாய்க் கவனிக்கப்படவேண்டும். பொது ஜனங்களுக்கும் சுகாதாரம் வாழ்க்கையில், நடைமுறையில் கொண்டு வரும் மாதிரியில் கற்பிக்கப்பட வேண்டும். இப்பொழுது ஜனங்களுக்குப் பெரிதும் சுகாதார அறிவே சூனியமாயிருக்கின்றது. தன் தன் வீட்டு குப் பையை அடுத்த வீட்டுக்குப் பக்கத்தில் கொட்டிவிடுகிறான். இந்த முறையில் எல்லா வீட்டுக்குப் பக்கத்திலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றது. ரோட்டின் இருமருங்கும் கக்கூசுகளாகவே பாவிக்கப்படுகின்றன. இதைப் பற்றி சேர்மென் கவனித்தால் கவுன்சிலர்கள் நிஷ்டூரப்படுகிறார்கள். கவுன் சிலர்கள் கவனித்தால் ஓட்டர்கள் கோபித்துக் கொள்ளுகிறார்கள். சேனிடரி சிப்பந்திகளுக்குச் சம்பளம் தாராளமாய் கொடுப்பதைத் தவிர அதிகாரம் நடத்த தாராளமாய் இடம் கொடுப்பதில்லை. பிறகு காரியம் எப்படியிருக்கு மென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்த அதிகாரமும் பறிக்கப்படவேண்டியது தான் என்று சொல்ல வேண்டி வருமோ என்று பயப்படுகிறேன். முதலில் சுகாதாரமும், பின்னது படிப்பாக வும் தான் ஸ்தல ஸ்தாபனங்கள் கவனிக்க வேண்டும். ரோட்டுப் போக்குவரத்தும் சாதனம் வேலை செய்வது சர்க்காருக்கே விட்டுவிட வேண்டும். சர்க்காரிடம் கண்
டித்து வேலைவாங்க ஜனங்கள் பழக வேண்டும். பொருப்புகளையெல்லாம் நம்ம தலையில் போட்டுக் கொள்வதில் பயனில்லை. இன்னின்ன சாதனம் வேண்டுமென்று தீர்மானிக்கும் வேலை நம்முடையதாகவும், நடத்திக்
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கொடுக்கும் வேலை சர்க்காருடையதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது அநேகமாய் சர்க்கார் நிர்ணயிக்கும் வேலை களை நாம் நடத்திக் கொடுக்கின்றோம். இந்த குற்ற இரகசியம் நாம் அறியவில்லை.
நிற்க, இப்போது நாமினேஷன்களே ஒழிந்து எல்லா ஸ்தானங்களும் எலக்ஷனானதை நான் ஒரு விஷயத்திற்காக சந்தோஷப்படுகிறேன்.எதற்காக என்றால் பணக்காரன் பணம் சற்றாவது ஏழைகளுக்கு (ஓட்டர் களுக்கு பங்கிப் போகின்றது என்பதற்காகத்தான். இதைத் தவிர மற்றபடி இதனால் இன்றைக்கு வேறு அதிகமான நன்மைகள் ஒன்றும் ஏற்பட்டு விடாது.
(தொடர்ச்சி 21121930 குடி அரசு இதழ்)
குறிப்பு-29717930இல் கரூர் முனிசிபல் உபசாரப் பத்திரத்திற்கு பதில் அளித்து: ஆற்றிய உரை
குடி அரசு - சொற்பொழிவு - 07.12.1930
குடி அரசு - 1930 @) 284
தஞ்சை வில்லா BUMTEG தனைனர் தேர்தல்
கோட்டை விட்டாய் விட்டது
தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் முதல் தேதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தலில் அபேட்சகராக நிற்க உத்தேசித்திருந்தவர்கள் திருவாளர்கள் வாண்டையார், சாமியப்ப முதலியார், நாடிமுத்துப்பிள்ளை, மருதவனம்பிள்ளை, இராஜப்பா போன்ற பார்ப்பன. ரல்லாதார்களும் 1000,2000, 3000, 5000 ஏக்கர் நஞ்சை பூமியும்,10 லக்ஷம் 20
லக்ஷம் சொத்தும் பெருமானமுடையவர்களான பிரபுக்களுமாவார்கள். இப்படியிருந்த போதிலும் இவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதார். முன்னேற்றங்களுக்கு என்று ஏற்பட்ட கிளர்ச்சியின் பயனாகவே மனிதர்கள் என்று வெளியானவர்கள். இந்தக் கனவான்கள் தாங்கள் தான் பார்ப்பன ரல்லாத சமூகத்திற்குப் பிரதிநிதியாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு பொது வாழ்வில் இரங்கி பல கெளரவ ஸ்தானம் பெற்றவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் பார்ப்பனரல்லாதாரியக்கம், அதாவது சமதர்ம இயக்கத்தின் பெயரால் பதவி, பட்டம், அதிகாரம் சில விஷயங்களில் பணம் முதலியவைகளும் கூட்டுக் கொள்ளை போல் அடைந்தவர்கள். இப்படி யெல்லாம் இருந்தும் இவர்களுக்கு இந்தப் பதவிகள் கிடைத்தவுடன் யாருக்காக, யாரால் அடைந்தோமென்ற நன்றியறிதல் குணமும் நாணயமும்
சற்றுமில்லாமல் இந்தப் பதவிகளும், பட்டமும், அதிகாரமும், பணமும் தங்கள் சொந்தத்திற்காகவே தங்கள் சொந்த முயற்சியாலேயே அடைந்ததாக சுயநலப்பித்துக் கொண்டு எல்லாக் கொள்கைகளையும் மறந்து தம் சொந்தப் பெரியவர்கள் வீட்டுச் சொத்து போல் பாவித்து ஒருவருக்கொருவர் சொந்தத்
தில் சுயநலமே கொண்டு கொள்கையேயில்லாமல் சண்டை போட்டு அடி யோடு கோட்டையை விட்டு விட்டு பழைய குருடி கதவைத்திரடி என்கின்ற யோக்கியதையில் “சூத்திரர்” நிலைக்கே அதாவது பார்ப்பனர்களுக்கு அடிமையாயிருக்கவே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்கின்ற தன்மைக்கே வந்து விட்டார்கள்.இன்றைய தினம் தஞ்சை ஜில்லா நிலைமை பழையபடி “பிராமண” ஆதிக்கத்திற்குப் போய்விட்டது. பார்ப்பனரல்லா தார். பிரதிநிதிகள் என்று சொல்லி அதிகாரம் பெற்ற பிரபுக்கள் தங்கள் அதிகாரப் பெருமையைச் செங்கற்பட்டு தீர்மானங்களை மறுத்து தாலூகா போர்டில்
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
தீர்மானம் செய்ய ஒரு கூட்டமும், சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்து சைவப்பிரசாரம் செய்ய மற்றொரு கூட்டமும், சுயமரியாதை இயக்கங்களில் கலந்துள்ள உபாத்தியாயர்களை மாற்றவும், தண்டிக்கவும், நீக்கவும் ஒரு கூட்டமும், எது எக்கேடு கெட்டாலும் “பகவான் கிருஷ்ண னைப்போல்” லீலை நடத்திக் கொண்டிருக்க ஒருகூட்டமும், மற்றும் சில கூட்டம் மற்றும் சில சில வேலைகளை செய்து கொண்டு அடியோடு கோட் டையை விட்டு விட்டார்கள். இதிலிருந்து பார்ப்பனரல்லாதாயிருந்தாலும், பணக்காரர்களாயிருந்தால் அவர்கள் பொதுஜன பிரதிநிதியாக லாயக்கற்ற வர்கள் என்றும் இந்த மாதிரி பணக்காரர்களை அழித்தா லொழிய பார்ப்பன ரல்லாதாரியக்கம் - சமதர்ம இயக்கம் உருப்படி ஆகாது என்பதுமான எண்ணம் வலுக்கவே இடம் கொடுத்து வருகிறது. என்ன சுயராஜ்யம் வந்தாலும் என்ன குடியேற்ற ஆட்சி வந்தாலும், என்ன பூரண சுயேச்சை வந்தாலும் இந்தக் கூட்டங்கள் தான் பங்கு போட்டுக் கொண்டு இந்தப்படி சந்தி சிரிக்க மானங்கெட்டுத்திரிய முடியுமே ஒழிய கஷ்டப் படுகின்ற தாழ்த்தப்பட்டு மிதிபட்டுக் கிடக்கின்ற இந்திய மக்களாகிய100க்கு 95பேர்கள் கொண்டமனித சமூகத்திற்கு ஒரு பயனும் உண்டாகப் போவ தில்லை என்பது உறுதியென்றே தோன்றுகின்றது. நினைத்தால் மனம் பதருகின்றது. கும்பகோணம் சேர்மென் ஒரு அய்யங்கார், கும்பகோணம் தாலூகா போர்டு பிரசிடெண்ட் ஒரு அய்யங்கார். பாபனாசம் தாலூகா போர்டு பிரசிடெண்ட் ஒரு அய்யர். மன்னார்குடி தாலூகா போர்டு பிரசி டெண்டு ஒரு அய்யர். கடைசியாக தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் ஒரு அய்யர். அதுவும் ஏகமனதாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர். தஞ்சை தாலூகா போர்டு தலைவர், தாலுகா போர்டு மெம்பர் பதவிக்குக் கூட தேர்தலில் தோற்றுப் போகத்தக்க செல்வாக்கு உடைத்தானவர்..
இதுபோலவே இனி மற்றதுகளும் ஆட்டத்தில் இருக்கின்றன. ஆட்டத்தில் இல்லாவிட்டாலும் “சூத்திரர்களாய்” அதாவது பார்ப்பன அடிமைகளாய் இருக்க வேண்டியவர்கள். ஏன் சற்றேரக்குறைய அந்தப் படியே இருக்கிறார்கள் என்று சொல்லத்தக்கவர்களை விட வேறில்லை என்று சொல்லப்படவேண்டியவர்களாக இருக்கின்றவர்கள். இந்த நிலை தஞ்சை ஜில்லாவுக்கு வந்து சேர வேண்டிய காரணமே தஞ்சைப் பிரபுக்கள் மாஜி மந்திரி திரு. முத்தையா முதலியாரை ஒழிக்கவேண்டும் என்று ஆரம்பித்த சூட்சியே இந்த கதிக்குக் காரணமாகும்.
அதில் தஞ்சை பிரபுக்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அதனால் அவர்கள் “சற்சூத்திரர்”கள் பதவிக்கு வந்துவிட்டார்கள்.
இது அந்த ஜில்லா பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்தே யொழிய போட்டி போட்ட பிரபுக்களுக்கு ஒன்றும் மூழ்கிப் போகவில்லை. பார்ப்பனரல்லாத பாமர ஜனங்களுக்கு இந்தக் கதி நேரவேண்டியதும் ஒரு
குடி அரசு - 1930 (2) 286
விதத்தில் கிரமம்தான். ஏனெனில் அவர்களுக்கு பணக்காரர்களிடத்தில் இருக்கும் பக்தியும், மரியாதையும் என்றைக்கிருந்தாலும் இந்தப் பலனைத் தான் கொடுக்கும். ஆனால் இதனால் பிரபுக்களுக்கு ஒன்றும் முழுகிப் போகாது. ஏனெனில் அவர்களுக்கு தாலூகா போர்டாபீசிலும், ஜில்லா போர்டு ஆபீசிலும், முனிசிபாலிட்டியிலும் வேலை இல்லாமல் போய்விட்ட தினாலேயே அவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விடப் போவ தில்லை. லாபமில்லாமல் போய்விடப் போவதில்லை. வேறு எத்தனையோ வழி இருக்கிறது. ஆனால் பார்ப்பனரல்லாத சமூகம் இன்னும் 5 வருஷத் திற்குள் அந்த ஜில்லாவில் தலை தூக்க முடியாமல் போய்விடும் என்றே சொல்லுவோம். திரு பன்னீர் செல்வம் அவர்கள் செய்த வேலை எல்லாம் பாழாய் போகப் போகிறது என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டிய தில்லை.
திரு. முத்தையா முதலியார் அவர்களை ஒழித்த பலன் தஞ்சாவூர் ஜில்லாவுடன் மாத்திரம் போகாமல் இந்த மாகாணமெங்குமே கஷ்ட்டமான நிலையை உண்டாக்கி விட்டது. அதாவது மாஜி மந்திரி திரு. முத்தையா முதலியார் அவர்களது முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வகுப்பு வாரி உத்தியோக வினியோக சம்மந்தமான உத்திரவுகள் கூட மார ஆரம் பித்து
சிலதுகள் மாறியும் விட்டன.நாணயமாய் இருந்த தலைவருக்கு திரு.பன்னீர் செல்வத்திற்கு ஹைகோர்ட்டில் அயோக்கியப்பட்டம் வாங்கிக் கொடுத்து அதை சீமையிலும் வினியோகிக்க தக்க இழிவான காரியங்கள் செய்யப்பட்டுவிட்டன. ஆகவே மிராசுதாரர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் சண்டையும் பணக் கொழுப்புமானது இந்த நாட்டு மக்களுக்கு எவ்வளவு துன்பத்தை விளைவிக்கின்றன என்பதற்கு இவை உதாரணங்களாகும்.
இந்த மாகாணத்தில் 24 ஜில்லா போர்டு தலைமையும் பார்ப்பன ரல்லாதார்களிடமே இருந்து வந்ததானது நெல்லூர் நடவடிக்கையில் ஒவ்வொன்றாக நழுவ ஆரம்பித்துவிட்டது. மேலும் ஒவ்வொன்றாக நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் வரவும் ஆரம்பித்து வந்தும் விட்டது. ஆகவே தமிழ்நாட்டில் தஞ்சாவூர் ஜில்லா இந்த கதி அடைந்தது பற்றி மனம் வேதனையடையாமல் இருக்கமுடியவில்லை. ஆனபோதிலும் உண்மை உணர்ச்சியுடைய திரு. காயாரோகனம் பிள்ளை அவர்கள் சற்று கவனிப் பார்களானால் மறுபடியும் தலைதூக்க இடம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று கருதுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 0742-1930
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சிங்கப்பூர் .
சென்ற வார இதழில் சிங்கப்பூரில் இருந்து தமிழ் மகன் எழுதிய ஒரு கடிதம் ஒன்று பிரசுரித்திருந்தது வாசகர்கள் படித்திருக்கக்கூடும்.
அதாவது சிங்கப்பூர் முன்னேற்றம் பத்திரிகையில் கண்ட விஷயங் களுக்காக மலாய் நாட்டிலுள்ள சில நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சங்கடப்பட்டு முன்னேற்றம் பத்திரிக்கையை குறை கூறுவதாகவும் அதன்மீது நடவடிக்கை நடத்த முயற்சிப்பதாகவும் அக்கடிதத்தில் இருந்து தெரிய வருகின்றது.
நடவடிக்கை நடத்துவதில் யாரும் எவ்வித ஆக்ஷேபணையும் சொல்வதில்லை. பத்திரிகாசிரியர்கள் எந்த அபிப்பிராயத்தை தெரிவிக்கு
முன்னும் அதனால் ஏற்படக்கூடிய பலன்களுக்கெல்லாம் தயாராயிருந்து சந்தோஷமாய் வரவேற்கக் கூடியவர்களாகவே இருப்பார்களே தவிர, இம்மாதிரி சிறு மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்களாகவோ அல்லது தனது கொள்கையைமாற்றிக் கொள்ளக் கூடியவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
ஆதலால் அதற்காக நாம் ஒன்றும் சிபார்சுக்கு வரவில்லை.ஆனால் செல்வமும் செல்வாக்கும் உள்ளதும், தமிழ்நாட்டிற்கு பிரதானமான தென்பதுமான ஒரு சமூகம் சமூக வாழ்வில் இவ்வளவு மோசமான நிலை
யில் இருக்குமானால் தமிழ் மக்களின் அறிவிற்கும் மூட நம்பிக்கைக்கும் இதைத்தானே அளவு கருவியாக கருதப்படும் என்பதுதான் நமது கவலை.
இப்போது உலகத்தில் மேம்பாடும் நாகரிகமும் பெற்றிருக்கும் மக்கள். இந்தியர்களை எப்படி மதிக்கின்றார்கள் என்பது நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமல்ல.
இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தை வளரச் செய்யும் முயற்சிகள் இருந்தவரை அதைத் தாங்கிக் கொண்டிருந்ததன் மூலம் நாட்டுக் கோட்டையர். சமூகமானது ஒரு பெரிய புகழுக்கும் கீர்த்திக்கும் உரிய சமூகமாகக் காணப்பட்டதையும், அந்தப்படி பார்ப்பனர்களால் பிரசாரம் செய்யப்பட்ட தையும், நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். இன்றைய தினம்
குடி அரசு - 1930 (2) 288
அப்பார்ப்பனீயத்தை அடியோடு வீழ்த்த வேண்டிய முயர்ச்சி நடக்கும் போது அப்பார்ப்பனீயத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் நிலைமையெல்லாம்.
சற்று கஷ்டமாகத்தானிருக்கும் என்பதும் தானாகவே விளங்கும்.
அந்த நிலையில் நாட்டுக் கோட்டையர்களுடைய பழய கீர்த்தியும்
புகழும் நிலை நிற்க முடியாததுடன் அப்பார்ப்பனீயத்தை வளர்க்கவும் நிலை
நிறுத்தவும் செய்த முயர்ச்சிகளின் பலன்களை மற்றவர்களைப் போலவே இவர்களும் விகிதாச்சாரம் அடையக் கடமைப்பட்டவர்களுமாவார்கள். கர்மத்தின் பலனை அடைந்து தீரவேண்டியது யாராய் இருந்தாலும் இயற்கையேயாகும். அவ்வித இயற்கையில் இருந்து தப்ப வேண்டுமே யானால் அதற்குத் தகுந்த “பிராயச்சித்தங்கள்'” செய்தாக வேண்டும்.
அப்படிக்கில்லாமல் “நான் முன் செய்தபடியே இன்னும் செய்து கொண்டிருப்பேன். ஆனால் அதன் கருமபலன்கள் என்னைத் தொடரக் கூடாது” என்று ஒருவர் சொல்வாரேயானால் அவருக்கு விஷய ஞானமும்; பகுத்தறிவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு இன்றைய
தினம் மெளடீகத்திலும் அடிமை வாழ்விலும் இருப்பதற்கு முக்கிய காரணம் பண்டிதர்களும் நாட்டுக் கோட்டையர்களுந்தான் என்றால் அவர்கள் வாய் பேசாமல் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
ஏனெனில் பண்டிதர்கள், பார்ப்பனர்களின் நூல்களைப் படித்துவிட்டு ஏனெனில் அதைத் தவிர அவர்களுக்குப் படிக்க வேறு நூல்கள் கிடையா
ததால்) அதில் உள்ள ஊழல்களும் புரட்டுகளும் சூட்சிகளும் தெரிந்தி ருந்தாலும், பார்ப்பனர்களுக்கு பயந்து அவற்றையே திருப்பித் திருப்பி பிரசாரம் செய்வித்ததாலும் நாட்டுக் கோட்டையர் சம்பாதித்ததைக் கொண்டு தங்களுக்கு புகழ் ஏற்படுவதற்கு பார்ப்பன உபதேசமும் அவர்கள் மூலமாயு மல்லாமல் வேறுவழி இல்லாததால் அவர்கள் கட்டளைப்படியே குட்டிச் சுவர்களாக இருந்த கோவில்களையெல்லாம் கற்கோட்டைகளாக்கி பார்ப்ப னீயத்தை நிலைக்க வைத்து விட்டார்கள். ஆகவே இவ்விரு கூட்டமும் நேராகும்வரை அவர்களை எதிர்த்துப் போராட வேண்டியது இன்னாட்டின் மெளடீகத்தையும் அடிமைத்தனத்தையும் ஒழிக்கமுன் வருபவர்கள் வேலையாகும். ஆனால் இவ்வேலையில் சற்று கஷ்டம் உண்டு என்பதை நாம் மறைக்க முயலவில்லை. எப்படியெனில் முன்னவர்கள் வாயாடிகளும் படிப்புத் திமிருடையவர்களுமாவார்கள். பின்னவர்கள் பிடிவாதமும் பணத் திமிருமுடையவர்களாவார்கள். இந்த நிலைமையுள்ளவர்களுடன், போராடி வாயாடித்தனத்தையும், படிப்புத் திமிரையும், பிடிவாதத்தையும், பணத்
திமிரையும் நமக்கு அனுகூலமாய்ச் செய்து கொள்வதென்றால் அது லேசான காரியமல்ல. அதற்காக அவர்களால் பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து தான் ஆக வேண்டும். அதற்குத் தைரியமுள்ளவர்கள்தான் இவ்வேலையில் இரங்க வேண்டும்.
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
உதாரணமாக பண்டிதக் கூட்டத்தார்கள் பலர் இன்று சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று பிரசாரம் செய்து வருவது இவ்வியக் கத்தாரை நாஸ்த்திகர் முன்னோர்களை வைது அவர்களது நூல்களை இகழ் பவர்கள் என்றும், சைவ சமயத்திற்கு ஆபத்து என்றும், மற்றும் பல விதமாய்
கூச்சல் போட்டு மக்களைக் கிளப்புவதும், நாட்டுக் கோட்டையர்களில் சிலர். அதாவது சிவநேசன் திருக்கூட்டத்தார் என்பவர்கள் “சுயமரியாதை இயக்கத்
தார், நமது சமயத்தைக் கெடுக்கின்றார்கள்; சாதியைக் கெடுக்கின்றார்கள்; சமூகக் கட்டுப்பாட்டை அழிக்கின்றார்கள்: இதற்கு கேள்வி இல்லையா? கேட்பாடு இல்லையா” என்று சத்தம் போடுவதும் இவ்வியக்கத்தில் சம்மந் தப்பட்ட மக்களை “காலிகள், போலிகள், சில்லரைகள், ஜட்கா வண்டிக் காரர்கள் (அதாவது பணமில்லாதவர்கள்!” என்பதும் மற்றும் தாருமாறாக
பேசுவதும் எழுதுவதுமாயிருக்கின்றவைகளே போதுமான உதாரணமாகும்.
இச்சிவநேசர் யோக்கியதைக்கும் அவர்களது பணத்திமிருக்கும் மற்றும் ஒரு உதாரணம் கூறுவோம். அதென்னவெனில் நாம்19- 10 - 30 ம் தேதி குடிஅரசு தலையங்கத்தில் சிவநேசர் சிறுமை என்று தலையங்கமிட்டு எழுதிய 3 பக்கமுள்ள ஒரு வியாசத்திற்கு பதிலாக அச்சிவநேரசர் திருக் கூட்டத்தார் சிவநேசர் திறமை என்னும் தலைப்பின் கீழ் எழுதிய ஒரு வெளி
யீட்டில் குறிப்பிட்டது என்னவென்றால் “இச் செல்வச் சமூகத்தின் சிறுவர் களுக்கு தங் குலச் சிறுமிகளை கூட்டிக் கொடுத்து - - - - - - தன வணி கருக்கு சம்மந்தியாகிய இழி தகை பெரியார் ஈரோட்டு நாயக்கர்” என் கின்ற ஒரு வாக்கியமும் குடிஅரசு தலையங்கத்தில் “சிவநேயர் சிறுமை” என்னும் கட்டுரையில் கண்ட விஷயங்களை “ஒரு குடியைக் கெடுக்கும் கோடாரி காம்புதான் தகவல் கொடுத்திருக்க வேண்டுமென்றும்” எழுதிய தையே அவ்வளவு பெரிய வியாசத்திற்கு பதிலாக்கினார்களே அல்லாமல் 3 பக்கம் 12 கலம் கொண்ட பல விஷயங்களில் ஒன்றுக்காவது உண்டு, இல்லை. அல்லது அதற்கு வேறு தத்துவார்த்தம் என்று கூட எழுதவில்லை.
ஒவ்வொரு சமூகங்களிலும் இப்படிப்பட்ட பிற்போக்காளர்கள் உண்டு. என்றாலும் நாட்டுக் கோட்டையார் சமூகத்தில் இருப்பது நாட்டுக்கு ஆபத்தானதாகும். ஏனெனில் பணமுள்ள கூட்டம் இந்தப்படி பிற்போக்கான முறையைத் தழுவி அதில் முனைந்திருப்பது நாட்டின் விடுதலைக்குத் தடை யாகும் என்ற காரணத்தால்தான். ஆனாலும் இப்போது பல பண்டிதர்களும் பல நாட்டுக் கோட்டையாரும் உண்மை வழிக்குத் திரும்பி உண்மையான தொண்டு செய்து உதவி புரிந்து வருகின்றார்களாதலால் அதிகமாக பயப் படவோ கவலைப்படவோ வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.12.1930
குடி அரசு - 1930 (2) 290
அறிவிப்பு
“குடிஅரசு” இது சமயம் 16 பக்கங்கள் கொண்டு வெளிவருவதால், பல அன்பர்களால் எழுதியனுப்பப்படும் நீண்ட கட்டுரைகள் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். வழக்கமாக எழுதிவரும் கட்டுரைகளே சில சமயங்களில் இடமின்மையால் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சமயம் வாய்க்கும் போது அவைகளை பிரகரிக்க உள்ளோம். அன்பர்கள் மன்னிப் பார்களாக. தவிர நமது பத்திரிகை ஒரு கொள்கை பிரசார பத்திரிகை யாதலால் அதில் செய்திகளுக்கும், வர்த்தமானங்களுக்கும் இடம் ஒதுக்க முடிவதில்லை. ஆதலால் செய்திகள் போட முடியாமைக்கு வருந்துகிறோம். கொள்கை சம்பந்தமான செய்திகள் மிக மிக சுருக்கமாகவும், முக்கியமாகவும் இருந்தால் மாத்திரம் கவனிக்கக்கூடும் என்பதை வணக்கமாக தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
(ப-ர்.)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 07.42.1930.
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சுயமரியாதை தொண்டர்கன் மகாநா௫
தமிழ்நாட்டு சுமரியாதைத் தொண்டர்கள் விஷேச மகாநாடு என்னும் பேரால் இம்மாதம் முதல் தேதி கோயமுத்தூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நான்கு தீர்மானங்கள் செய்ததாக நமக்கு செய்தி கிடைக்கின்ற விபரம் மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். இதற்கு
முக்கியமாய் இருந்த கனவான்கள் மூவரும் அதாவது தலைமை வகித்த திரு. ஜே. எஸ். கண்ணப்பர் அவர்களும், வரவேற்பு கழகத் தலைவ ராயிருந்த கொங்குரபாளையம் பொன்னம்பலம் அவர்களும், காரியங்கள் பொறுப்பேற்று நடத்திய திரு. அய்யாமுத்து அவர்களும் உண்மைச் சுயமரியாதை வீரர்கள், தொண்டர்கள் என்பதில் ஆக்ஷபனை இல்லை என்பதை நாம் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிலும் சில உண்மைத் தொண்டர்கள் இருந்திருப்பார்கள் என்பதையும் நாம் மறுக்க வரவில்லை.
ஆனால் அவர்களை எல்லாம் இம்மகாநாடு கூட்ட நிர்பந்தப் படுத்தியது தற்காலம் நடைபெறும் அரசியல் இயக்க நடவடிக்கைகளும் உணர்ச்சிகளும் தான் என்று நாம் கருதியிருக்கும் அபிப்பிராயத்தை வெளியிலெடுத்துச் சொல்லாமல் இருக்க நாம் ஆசைப்படவில்லை. இதற்கு ஆதாரம் வேண்டுமானால் அம்மூன்று கனவான்களின் பிரசங்கங்களை: படித்துப்பார்த்தாலே விளங்கி விடும். அரசியல் இயக்க கிளர்ச்சி சம்மந்தமாக நடந்த சம்பவங்களும் நடவடிக்கைகளும் அவற்றைப் பற்றி பத்திரிகைகள் பிரசாரங்கள் செய்த முறைகளும் அவற்றின் மூலம் சில வாலிபர்களுக்கும் ஏற்பட்ட உற்சாகங்களும் ஆகிய எல்லாம் சேர்ந்து சுயமரியாதை இயக்கத்
தைச் சேர்ந்த சில வீரர்களுடையவும், தொண்டர்களுடையவும் மனதைக் கவர்ந்து விட்டது.
இந்த நமது அபிப்பிராயத்திற்கு அனுகூலமாக திரு. எஸ். ராமநாதன் அவர்கள் இடி மகாநாட்டுக்கு வர இயலாமை சிறிது எழுதிய ஒரு கடிதத்தில்
குறிப்பிட்டிருப்பதைக் குறிப்பிடுகிறோம்.
“தற்சமயம் காங்கிரஸ் இயக்கத்தின் எழுச்சியில் சுயமரியாதைத் தொண்டர்களும் இழுக்கப்பட்டதை நான் உணர்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.
குடி அரசு - 1930 (3) 292
மக்களுக்கு ஒரு எழுச்சியையோ, உற்சாகத்தையோ, ஆத்திரத் தையோ உண்டாக்கி விட்டுவிட்டு அவர்களுக்கு தகுந்த வேலை கொடுத் துக் கொண்டிருக்காவிட்டால் அது தாறுமாறாகக் கண்ட கண்ட பக்கங்களில் எல்லாம் போய் முட்டச் செய்யும் என்பது இயற்கையேயாகும்.
இந்த இயற்கையிலிருந்து மேற்கண்ட மூன்று கனவான்களும் தப்ப முடியாததாலேயே அவர்கள் அரசியல் இயக்கக் கவர்ச்சியில் விழுந்து விட வேண்டியவர்களாகி விட்டார்கள்.
நம்மைப் பொறுத்தவரை நாம் சுயமரியாதை இயக்கத்திற்கும் அரசி யல் சம்மந்தமான கிளர்ச்சிக்கும் மத்தியில் சரியான தடைச்சுவர் இருக்க வேண்டும். என்பது முடிவான அபிப்பிராயமாகும்..
இதற்கனுசரணையாக திரு. எஸ். ராமநாதன் அவர்கள் எழுதியிருக்
கும்படி டெ கடிதத்திலிருந்து மற்றும் ஒரு குறிப்பைக் குறிப்பிடு கின்றோம்.
“சுயமரியாதை இயக்கம் மனித வர்க்கத்தின் பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்டது. காங்கிரஸ் இயக்கம் இந்திய மக்களின் தேச பக்தியை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றுக்கு அறிவே பிரதா
னம்; மற்ற துக்கு பக்தியே பிரதானம்”
இதை உத்தேசித்தே சுயமரியாதை மகாநாடுகளில் எல்லாம் இது வலி உருத்தப்பட்டு வந்திருக்கின்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த அபிப்பிராயம் மாறுதலையடையாமல் இருக்க வேண்டு மென்றே நாம்
விரும்பிக் கொண்டிருக்கின்றோம்.
இதற்கணுசரனையாகத் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் அனுப்பி யிருக்கும் செய்திகளில் மற்றொன்றைக் குறிப்பிடுகின்றோம்.
“காங்கிரசில் சேர்ந்து பணியாற்றுங் காலையில் சுயமரியாதைக் கொள்கைகளை கை நழுவ விடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம்” என்று குறிப்பிட்டிருப்பது கவளிக்கத்தக்கதாகும்.
நாம் இப்படிச் சொல்லுவதாலேயே இன்றைய அரசாங்கத்தைக் காப்
பாற்றிக் கொண்டும் அதனிடம் வாலாட்டிக் கொண்டு அடிமையாய் இருக்க. வேண்டுமென்று நாம் சொல்ல வரவில்லை. ராஜ விசுவாசம் என்பதும் ராஜ
வாழ்த்து என்பதும் அடிமைக்கு அறிகுறி என்றும் எந்தக் கூட்டத்திலும் அது கூடாது என்றும் தீர்மானித்து இருப்பது இந்த தேசத்தில் சுயமரியாதை: இயக்கமேயாகும்; கவர்னர்கள் பார்க்க விரும்பியும் நிர்வாக சபை காப்நெட் மெம்பர்கள் பார்க்க விரும்பியும் கலெக்டர்கள் சொல்லி அனுப்பியும் பார்க்க சவுகரியமில்லாமல் போனவர்கள் சுயமரியாதை இயக்கத் தொண்டர் களே. யாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் இன்றைய அரசியல் இயக்கத்தை
293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வெருப்பதாலேயே அதில் பங்கு கொள்ளாததாலேயே அதை அடிமை இயக்கமென்றோ அதிலுள்ளவர்கள் அடிமைகள் என்றோ சொல்லுவது அறியாமையாகுமே தவிர அது உண்மையாயிருக்க முடியாது. அன்றியும் அரசியல் கலவரத்தினாலேயே ஒருவன் தன்னை மற்றவர் பேடி என்றோ, தேசத்துரோகியென்றோ சொல்லுவார்களே என்று பயப்பட்டு அதில் இறங்கி விடுவானேயானால் அவனும் ஒரு கோழையாவானே தவிர வீரனாகி விட மாட்டான். நம்மைப் பொறுத்தவரை நாம் திரு.எஸ்.ராம நாதன் அவர்களை வைத்துக் கொண்டே திரு. காந்தியவர்களிடம் 1927 வருஷத்திலேயே “இந்தியா விடுதலையடைய வேண்டுமானால், சுய மரியாதை அடைய வேண்டுமானால் இந்து மதமும் காங்கிரசும் ஒழிந்தாக வேண்டும்” என்று சொல்லிவிட்டு வந்தவனாவோம் என்பதை இந்தச் சமயத்திலும் எடுத்துச் சொல்லுகின்றோம். அந்த நிமிஷமே இந்த செய்தியை திரு. காந்திக்கும்
நமக்கும் 20 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த திரு. ராஜகோபாலாச்சாரியாரிடமும் சொல்லிவிட்டே வாசல் கடந்தோம். அது முதலே அந்தப் பிரசாரமும் செய்தோம். காங்கிரஸ் ஒழிய வேண்டும் என் கின்ற நம்முடைய அபிப்பிராயம் இன்றைய கிளர்ச்சியில் ஏற்பட்டதல்ல.1920 வருஷத்திய கிளர்ச்சி அனுபவத்திலேயே ஏற்பட்டதாகும். இந்து மதம் என்பது அழிய வேண்டும் என்கின்ற அபிப்பிராயமும் நமக்குச் சுமார் 25. 30 வருஷத்திற்கு முன்னாலேயே ஏற்பட்டதாகும். 5, 6 வருஷ காலமாகவே அரசியல் கிளர்ச்சியும், தியாகத்தின் பயனும், கஷ்டத்தின் பயனும் பாமர மக்களை - ஏழைகளை- தொழிலாளிகளை-கூலிகளை நசுக்கிப் பிழியவே உபயோகப்பட போகின்றது என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகம் இருந்த தில்லை. இந்தியாவென்பது 100க்கு 93 பேர்கள் கொண்ட ஏழைகள் நாடேயொழிய 100க்கு 3, 4 அல்லது 5 பேர்கள் கொண்ட செல்வந்தர்கள். சூட்சிக்கார சோம்பேறிப் பிழைப்புக்காரர்கள் நாடல்ல என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் இன்றைய அரசியல் கிளர்ச்சியில் இந்தியா வுக்கு ஏதாவது பலனுண்டாகுமா என்பது விளங்கும். ஜாதித் திமிறும், பணத்
திமிறும், ஜாதிக் கொடுமையும், பணக்காரன் கொடுமையும் இந்த நாட்டில் இருந்து எடுபடுவது தான் இந்தியாவின் விடுதலையாகுமே யொழிய வெள்ளைக்காரனிடம் இருக்கும் அதிகாரத்தைப் பணக்காரனிடமும், சோம் பேறிகளிடமும் ஒப்புவிப்பது விடுதலையாகாது.இந்தியாவுக்கு வெள்ளைக் கார ஆட்சி அதாவது முதலாளிகள் ஆட்சி கொண்டு வந்ததும் அதைக் காப்பாற்றி வளர்த்தும், வளர்ப்பதும் ஜாதி ஆணவம் கொண்டவர்களும் பணத்திமிர் கொண்டவர்களுமேயாகும். ஆகவே அப்படிப்பட்ட அவர்களை இன்றும் கல்லுப்போல் வைத்துக் கொண்டு அவர்களை சிறிதுகூட அசைக்க. முடியாமல் இருந்து கொண்டு வெள்ளைக்காரனைப் பற்றியே மாத்திரம் பேசுவதோ, அவனைக் குறைகூறுவதோ, எய்தவனை விட்டு விட்டு அம்பை நோகும் மூடர்களுக்கு சமமேயாகும். வருணாச்சிரமக் காரனும், பணக் காரனும் நம்மை வெள்ளைக்காரன் பக்கம்தான் திருப்பி விடுவான். நாம்
குடி அரசு - 1930 (2) 294.
உஷாராய் இருந்து பகுத்தறிவோடு பார்ப்போமானால் அம்பு யாரால் எய்யப்பட்டது - கொடுமை எங்கிருந்து வருகின்றது என்பது நமக்கு விளங்கும்.
உதாரணமாக தேசீயக் கிளர்ச்சியால் செய்யப்படும் கள்ளுக்கடை மறியலால் மக்களுக்கு ஏதாவது கடுகளவு லாபம் உண்டா என்றும் அதில் ஏதாவது உண்மை இருக்கின்றதா என்றும் யோசித்துப் பாருங்கள். நமது சகோதரர்களில் அநேகர் கள்ளு இலாக்கா சிப்பந்திகள் முதலியவர்கள். கள்ளு வரும்படியை நம்பியிருக்கிறார்கள். அந்த உத்தியோகத்தை நம்பி நாம் பிள்ளைகள் பெற்று வளர்த்து படிக்க வைத்து கள்ளு வியாபாரம் நடத் திக் கொடுக்க சர்க்காருக்கு ஒப்படைத்திருக்கின்றோம். இன்றைய வரையில் இதில் ஒருவராவது இந்தத் தொழில் வேண்டாமென்று விட்டு விட்டு வரவில்லை.
இன்றும் வரவில்லை.1922லும் வரவில்லை.
மற்றும் கள்ளு வரும்படியை நம்பி வைத்திருக்கும் பள்ளிக் கூடத்தில் நமது குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றோம். அதை நம்பி மரங்கள் வளர்த்து வைத்திருக்கின்றோம். அதற்காதாரமாக பல சாமிகளையும் வைத்திருக்கின்றோம். அந்த வரும்படியில் நடைபெறுகின்றது. இவ்வளவும் போதாமல் அந்த இலாக்காவை நடத்திக் கொடுக்க ஒரு மந்திரியையும் நாம்
ஏற்படுத்தி அதற்கு மாதம் 5333-5-4 சம்பளம் ஏற் படுத்தி அந்த உத்தியோகமும் வெள்ளைக்காரனுக்கோ, பார்ப்பானுக்கோ போகவிடாமல்
நாம் தடுத்து நம்மவர்களான பார்ப்பனரல்லாத சகோதரர் கையில் ஒப்படைத்து இருக்கின்றோம்.
ஆகவே நமது சகோதரராகிய அந்த மந்திரியும் அந்த சிப்பந்திகளும் கள்ளு வியாபாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டளையும் கடமையுமு டையவர்கள். இந்த நிலையில் நாம் கள்ளு மறியல் செய்ய வேண்டிய தாயிருந்தால் கள்ளுக் கடையிலா, மந்திரிகள் சிப்பந்திகள் வீட்டிலா யோசித்
துப் பாருங்கள். இந்த நிலையில் இந்தியர்கள் - தேசீயவாதிகள் மறியலில் ஏதாவது உண்மையோ, நாணயமோ இருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இப்படியே பல காரியங்களிலும் உண்மை தெரியாமல் வஞ்சகர்: சூட்சிக்கும் அறியாமைக்கும் ஆளாகி அவஸ்தைப்படுகின்றோம். இது போலவே சுதேசிப் பொருள் பரதேசிப் பொருள் என்பதிலுமுள்ள புரட்டு களை நாம் அறிவதில்லை. இந்த நாட்டில் சுதேசிப் பொருள் ஆதரிக்க வேண்டும் என்பதின் பொருள் என்னவென்று சொல்லப்படுகிறதென்று பார்ப்போமானால் “சுதேசிப் பொருள்களை ஆதரித்தால் தொழில் கிடைக்கு மென்று சொல்லப்படுகின்றது” அந்த பேச்சில் சிறிது கூட நாணயம் இல்லவேயில்லை. ஏனெனில் இந்த நாட்டில் தொழிலாளிக்கு ஒரு வித பாதுகாப்பும் கிடையாது. பணக்காரன் முதலாளி ஆகியவர்கள் அடையும்
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
லாபத்திற்கு ஒரு கணக்கோ எல்லையோ கிடையவே கிடையாது. 100க்கு 100 லாபமடைந்தாலும். 100க்கு 250 லாபம் அடைந்தாலும் அது அவனது “யோகமாய்” “அதிர்ஷ்டமாய்” போய் விடுகிறது. இன்ன லாபத்திற்கு மேல் முதலாளி லாபமடையக்கூடாது என்கின்ற நிபந்தனையே கிடையாது. ஆனால் தொழிலாளி வயிற்றுக்குப் போரவில்லை என்று வேலை நிறுத்தம் செய்தால்
- கூலி போராது என்று கேட்டால் அவனை சர்க்காரிடம் சொல்லி துப்பாக்கியால் சுடச் செய்ய வேண்டியது, 10, 10 வருஷம் தண்டிக்கப்பட வேண்டியது அவர்களது வீடுகளில் நெருப்பு வைத்துக் கொளுத்த வேண்டியது ஆகிய காரியங்களே தொழிலாளிகளின் நிலை. இதற்குச் சமா
தானம் “அவர்களது தலையெழுத்து” “துர் அதிர்ஷ்டவசம்” என்பதைத் தவிர: வேறில்லை...
இந்த நிலையில் எதற்காக சுதேசிப் பொருளை ஆதரிப்பது? எதற்காக கள்ளுக்கடை மறியல் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் ஏழை மக்களுக்கு எது சுலபமோ அதை வாங்கிக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டியது தான் சமதர்மமாகுமென்பது நமது சொந்த
அபிப்பிராயமாகும்.
முதலாளி நிலையும், தொழிலாளி நிலையும் வரையறுத்த பிறகுதான் சுதேசி பொருள் பேச்சும் பிரசாரமும் பயன்படுமே தவிர இந்த நிலையில் ஒன்றும் பயன்படாது.முதலாளிகள் கொள்ளை அடிக்கத்தான் சுதேசி பிரசாரம் உதவும். இன்னம் உதாரணம் வேண்டுமானால் கதரை எடுத்துக் கொள்ளுவோம்.கதர் பிரசாரம் நாமே செய்தோம். கதர் கட்டாதவன் “தேசத் துரோகி” “நரகத்துக்குப் போவான்” என்றெல்லாம் சொன்னோம். கதர்சாலை ஏற்படுத்தினோம். ஏழைகளையும் பிச்சையெடுத்தாவது வயிற்றை வாயைக் கட்டியாவது கதர் கட்டும்படிபிரசாரம் செய்தோம். கதர் சம்பந்தமான அனேக காரியங்களுக்கு நாம் பொறுப்பாளி என்று சொல்லிக் கொள்ள நமக்கு பல உரிமைகள் உண்டு. கடைசியாக என்ன பலன் ஏற்பட்டது. கோயம்புத்தூர் மால் மில்லின் நாலரை முழம் வேஷ்டி 4 வேஷ்டிகள் கொண்ட ஒரு தான் 1-12- 0க்குதிரு.செங்கோட்டையா விற்கிறார். ஆனால் நாலரை முழம் கதர் வேஷ்டி
2 வேஷ்டிக்கு 1-12-0க்குக் கொடுத்து சுதேச கைத்தொழிலை ஆதரிக்க வாங்குகின்றோம். அதாவது 7 அணா வேஷ் டிக்கு 14 அணா கொடுத்து வாங்குகின்றோம். இப்படிப்பட்ட இந்த நிலையை ஆதரிப்பது தான் நம் சுதேசி
கைத்தொழில் ஆதரிப்பு என்றால் கண்டிப்பாய் இந்த மாதிரி ஆதரிப்பு ஒழிந்து தானாக வேண்டும் என்று சொல்லுவோம். “இந்தப்படியாவது ஆதரிக்காவிட்டால் ஏழைகளுக்கு ஜீவனத்திற்கு மார்க்க மில்லை” என்று சொல்லுவார்களே யானால் அப்படி வேலையில்லாமல் இருக்கும் ஆட்கள்: பட்டினி கிடந்து வேதனைப் பட்டு பணக்காரர்கள் மீது பாய்ந்து அவர்களது பணத்தை ஏழைகளுக்குப் பங்கீட்டுக் கொடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து கொண்டு அங்கு ஏதோ தன்னாலான வேலையைச் செய்து விட்டு ஜெயில் சாப்பாடு சாப்பிட்டுக்
குடி அரசு - 1930 @ 296
கொண்டிருப்பது மொத்த நாணையமும் பொது நலமுயற்சியும் கொண்ட யோக்கியமான வேலையுமாகும் என்று பதில் சொல்லுவோம். அந்தப்படிக்கு இல்லாமல் பம்பாய் ஆமதாபாத் மில் சொந்தக்காரர்களான முதலாளிகள் சுதேசி பிரசாரமும் மாதம் 100, 150, 200 சம்பளம் வாங்கும் கதர் இலாக்காகாரர்கள் கதர்ப் பிரசாரமும் சட்டசபைக்குப் போய்க் கள்ளை: நிறுத்துகிறவர்கள் கள்ளு பிரசாரமும் செய்வதென்றால் இதில் என்ன நாணையம் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. பெரிய, பெரிய மிராசுதாரர்கள் ஆளுக்கு 1000, 2000, 5000 ஏக்கர் பூமி வைத்துக் கொண்டு உழுகின்ற ஆட்களுக்கு வயிரார சோறு கிடைக்காமல் படி நசுக்கிப் பிழிந்து விவசாயம் செய்யச் செய்து பலன் அனுபவித்து மேலும் மேலும் 100, 200, 500 ஏக்கர்கள் வருஷாவருஷம் வாங்கிப் பூமி சேர்த்துக் கொண்டு மற்றவனுக்கு ஒரு ஏக்கரா பூமி கூட இல்லாமல் கொள் முதல் செய்து விட்டு ஒரு 2-8-0ரூ போட்டு ஒரு ஜதை கதர் வேஷ்டியை வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியில் வந்து கூலிகளிடம் பெரிய அனுதாபி உள்ளவன் போல் “கனவான்களே கதர் கட்டுங்கள் ஏழைகள் பிழைப்பார் கள்” என்று கதர்ப்
பிரசாரம் செய்து விட்டால் அவனை நாம் பெரிய தேசாபி மானி, ஏழைப் பங்காளன், தர்மப் பிரபு என்று மதித்து விடுகின்றோம். திரு. எஸ். சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, முத்தரங்க முதலியார் முதல் நாம் அநேகரை: இப்படியே நம்பி ஏமாந்தோம். நம்மைப் பார்த்து நமது ஏழை களும்
ஏமாந்தார்கள். நமது தொழிலாளிகளும் நாச மானார்கள். சென்னை மில்கள் தொழிலாளிகளும், நாகை ரயில்வே தொழிலாளிகளும் நாசமடைந் ததற்கு இன்றைய “தேசீயவாதிகள்'அல்லவா என்பதை சற்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் தேசீய இயக்கத்தின் யோக்கி யதை விளங்கிவிடும்.
நிற்க இன்றைய தினம் நம்மை ஆளுவதும் இந்த மாதிரி பணக்காரக் கொள்கை தானே தவிர வெள்ளைக்காரர் என்பதும் ஒரு அன்னியன் என்பதுமான கொள்கை ஆளவில்லை. இந்த வித்தியாசம் இன்னும் சற்று தெளிவாய் தெரிய வேண்டுமானால் சுதேச சமஸ்தானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். என்ன கொள்கை அந்த நாட்டு மக்களை ஆளுகின்றது? எனவேலஜாதித் திமிரும், பணத்திமிரும் ஒழிக்கப்பட வேண்டியது தான். தேசீய இயக்கமானாலும். சுயமரியாதை இயக்கமானாலும், பூரண விடுதலை இயக்கமானாலும் அவை செய்ய வேண்டிய வேலைகளாகும். ஆகவே ஜாதித்
திமிரும், பணத்திமிரும் ஒழிய மதமும் கடவுளும் ஒழிய வேண்டும்.மதமும் கடவுளும் ஒழிக்கப்பட்ட நாட்டில்தான் ஜாதித் திமிரும், பணத் திமிரும் ஒழிந்து சமதர்மம் ஏற்பட்டு பணக்காரன் ஏழை என்கின்ற கொடுமை இல்லாமல் இருக்கின்றன என்பதை உணருங்கள். ருஷியாவை யாவது தள்ளி விடுங்கள். சைனா விடுதலையாகிக் கொண்டு வருகின்றதை பாருங்கள். கடவுள்களும் மதங்களும் முன்னால் ஒழிந்து கொண்டு வருவதும் பின்னால் சமதர்மம் வளர்ந்து கொண்டு வருவதும் பட்டப்பகல் போல் தெரிய
வருகின்றது.
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆகையால் காங்கிரசு காப்பாற்றப்பட வேண்டுமானால், அது விடுதலைக்கு ஏற்பட்டது என்று சொல்லப்பட வேண்டுமானால் சுயமரியாதை இயக்கம் காங்கிரசில் போய் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமானால் காங்கிரசு இந்த நிபந்தனைக்கு உள்பட்டால் மாத்திரம் ராஜி பேசுவோம். அதாவது,
“இந்தியா விடுதலை பெறுவதற்கு சமதர்மம் ஓங்குவதற்கு ஜாதியும், மதமும், கடவுள்களும் அழிக்கப்பட வேண்டியது முதன்மையான காரியம் என்பதை காங்கிரசு முக்கிய கொள்கையாய் கொள்ளு
கின்றது.”
என்று ஒப்புக் கொள்ளுமேயானால் அதில் சேருவோம். அதை உண்மையான தேசீயக்கிளர்ச்சி என்போம். அப்படிக்கில்லாமல் திரு. பாரதியார் அவர்கள் சொன்னது போல் “உப்பென்றும் சீனியென்றும் உள்
நாட்டுச் சேலை என்றும் செப்பித்திரிவாரடி கிளியே செய்வதரியாரடி”” என்று கொக்குபிடிக்கும் வித்தை போல் “காங்கிரஸ்”*தேசீயம்” “பொது எதிரி” “அன்னியன்” என்பன போன்ற வார்த்தைகள் பேசி காலங் கடத்துவது பாமர மக்களை ஏய்க்க உதவுமே அல்லாமல் அதில் காரியம் ஒன்றும் காண
முடியாது.
ஆகையால் எந்தக் காரணம் கொண்டும் சுயமரியாதை இயக்க உண்மைத் தொண்டர்கள் இன்றைய அரசியல் கிளர்ச்சியில் சம்மந்தப்படக் கூடாதென்றே கருதுகின்றோம். பக்ஷாத்தாபமிருக்கின்றவர்கள் இளகிய மனசுக்காரர்கள் முதலியவர்கள் அதில் சேர்ந்து வேலை செய்வதை நாம் தடுக்கவில்லை, ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் மாத்திரம் வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.
நிற்க, சுயமரியாதை இயக்கத்தார் எவ்வித சத்தியாக்கிரகமும் ஆரம் பிக்கவில்லை என்று ஒரு பெரிய பழி சொல்லப்படுவதற்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கின்றதை ஒப்புக் கொள்கின்றோம்.
நம்மைப் பொருத்த வரை நாம் அந்த முயர்ச்சியை விட்டு விட வில்லை. பல காரணங்கள் குறுக்கிட்டுக் கொண்டு வந்ததையும் பல அபிப்பி ராயங்களையும் மதிக்க வேண்டியிருந்தாலும் சற்று நிதானிக்க வேண்டியதா யிற்று. ஆனாலும் அதற்கு அப்போது முன் வந்த அனேக தொண்டர்கள் இப்போதும் தயாராகவே இருக்கின்றார்கள். சமீபத்தில் துவக்கப்படும் என்றே நம்பி இருக்கின்றோம். ஆனால் காங்கிரசுடன் போட்டி போடுவதற் காக என்று ஏதாவது ஒரு காரியம் செய்தாக வேண்டுமென்பது நமக்கு உசிதமாய் தோன்றவில்லை.
இந்தியாவில் இன்று இருக்கும் ஆட்சி வெள்ளைக்கார ஆட்சியல்ல,
குடி அரசு - 1930 (2) 298
ஜாதித்துவம், பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய மூன்று ஆட்சிதான் இந்தியாவை ஆட்சி செலுத்துகின்றது. இம்மூன்றையும் ஒழிக்க வெள்ளைக் கார ஆட்சி ஒழிப்பது என்பதையோ அன்னியன் ஆட்சியை ஒழிப்பது என்பதையோ ஆதாரமாய் கொண்ட காங்கிரஸ் அல்லது தேசீயம் என்ப தான அரசியல் கிளர்ச்சியால் முடியவே முடியாது! முடியவே முடியாது.
ஆனால் சுயமரியாதை தொண்டர் மகாநாட்டின் முதல் தீர்மான மானதும் திரு. அய்யாமுத்து அவர்களாலும் திரு. ஜி. வேலப்ப நாயுடு அவர்களாலும் பிரேரேபித்து ஆமோதிக்கப்பட்டதுமான,
“ஜாதி மத பேதா பேதங்களும் முதலாளி தொழிலாளி என்ற பேதா பேதங்களும் ஏழை பணக்காரன் என்ற கொடுமையான சமூக நிலைமையும்
மாறி உண்மையான சமதர்மம் ஏற்படுத்துவதே சுயமரியாதை இயக்கத்தின் முடிவான கொள்கை என்று இம்மகாநாடு ஊர்ஜிதம் செய்கின்றது”
என்று தீர்மானித்த தீர்மானத்தை ஆதாரமாய்க் கொண்ட இயக்கமாகிய சுயமரியாதை இயக்கத்தால் தான் முடியும். ஆகையால் தான் நமது பொது நல உணர்ச்சியும், உர்ச்சாகத்தையும், ஊக்கத்தையும், தியாகத்தையும் வீண்:
காரியத்தில் செலவழித்து விடக் கூடாது என்று எச்சரிக்கை செய்யவே இதை எழுதுகின்றோம்..
குடி அரசு - தலையங்கம் - 07.12.1930
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இது ஊசாண்ணனது ச௬ுமாமரியாதைக்காறரா?
- சித்திரபுத்திரன்
“பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கடைத் தேறலாம் - சற்றேனும் ஏறுமாறாய் இருப்பாளே யாமாகில் கூறாமல் சன்னி யாசம் கொள்ளு”
என்று “நீதி நூல்கள்” முறையிடுகின்றன. இதைச் சொன்னது சுயமரியாதைக்காரர்களல்லவே. இப்பொழுது சுயமரியாதைக்காரர்கள்' ஏறுமாறாய் இருக்கும் “விரதை””களை விட்டுவிட்டு சன்யாசம் கொள்ளு என்பதற்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணை கொள்ளு. சன்னியாசம் கொள் ளாதே என்கிறார்கள். இதனால் புருஷனின் சன்யாசம் மாறிற்றேயொழிய பெண்ணின் விரதத்திற்கு யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. இதற்காக ஏன் சிவநேயர்கள் வேப்ப எண்ணை குடிக்க வேண்டும்?
குடி அரசு - விமர்சனம் - 14.12.1930
குடி அரசு - 1930 (2) 200
ய ந்திறங்கள்
“மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி” என்று நாம் கருதியிருந்த காலமும் அந்தப்படியே யந்திரங்களை எல்லாம் “பிசாசு” என்று பிரசாரம் செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும், தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும் மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதை குறைக்க வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்ட போதும் எந்த மனிதனும் யந்திரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் வரவேற்றே ஆக வேண்டும்.
ஏன் என்றால் மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டு பிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையை குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும்,ஆராய்ச்சியும் இல்லாத இடங்களில் தான் யந்திரங்கள் அருமையாய்
இருப்பதும் அலட்சியமாய் கருதுவதுமாய் இருக்குமே தவிர மற்ற இடங்களில் அதாவது அறிவு ஆராய்ச்சி முன்னேற்றமுள்ள இடங்களில் யந்திரத் தாண்டவமே அதிகமாயிருக்கும்.
வியாச ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதாகிய “மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விறோதி, யந்திரங்கள் “பிசாசு” என்று நாம் கருதியதாக குறிப்பிட்ட தானது அறிவும் ஆராய்ச்சியும் கூடாது என்கின்ற எண்ணத்தின் மீதோ இயற்கையோடு போராட வேண்டுமென்றோ அல்லது மனிதன் சரீரத்
தால் கஷ்டப்பட்டு, இம்சைப்பட்டுதான் ஆகவேண்டும் என்றோ கருதியல்ல. ஆனால் மற்றெதைக் கருதி அவ்வபிப்பிராயம் கொண்டோம் என்றால் “யந்திரங்கள் பலபேர், பலநாள் செய்யும் காரியத்தை வெகு சிலபேர் சில நாளில் செய்து விட்டால் மற்ற ஆள்களுக்கும் மற்ற நாள்களுக்கும் ஜீவனத்
திற்கு - கூலிக்கு மார்க்கம் எங்கே? அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு என்ன சமாதானம்?” என்று சொன்னவர்களின் வார்த்தை களை நம்பினதாலேயே தவிர வேறில்லை.
301 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இந்தப்படியே இன்றும் இன்னும் அநேகர் நினைத்துக் கொண்டும், நம்பிக் கொண்டும் யந்திரங்களை ஆட்சேபித்து வெறுத்துப் பேசிக் கொண்டுமிருக்கின்றார்கள். ஆனால் இந்தப்படி எண்ணிக் கொண்டிருந்த நாம் அந்தக் காலத்திலும், இந்தப்படி இப்பொழுது எண்ணிக் கொண்டிருக் கின்ற அநேகர் இப்போதும் தங்கள் தங்களைப் பொருத்தவரை தங்கள் தங்கள். காரியத்திற்கு மனித சரீர வேலையைவிட யந்திர வேலையையே விரும்பி அதை உபயோகித்தே தான் வந்தோம், வந்தார்கள், வருகிறார்கள்.
உதாரணமாக கால்கள் இருக்க கட்டை வண்டிகள் இருக்க (கட்டை
வண்டியும் இயந்திரம்தான் இருந்தாலும்! யந்திரத்தின் மூலமாய்த் தான் அதாவது ரயிலில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்தான் மோட்டாரில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்த் தான் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாகவே ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய் தோம். அதையே எல்லா மக்களுடைய போக்குவரத்து சாதனமாக ஆக்க வும் ஆசைப்படுகின்றோம். மற்றவர்களும் ஆசைப்படு கின்றார்கள். ஆகவே இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான். சொல்லவேண்டுமே தவிர இது எவ்வித குற்றமுள்ளதும் அநியாயமானதும் என்று சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.
ஆகவே யந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக் கோடும் போராடும் ஒரு அறிவீனமான - பிற்போக்கான வேலையாகுமே தவிர மற்றபடி பயனுள்ள வேலையாகாது. உதாரணமாக 10 மூட்டைகளை ஒரு வண்டியில் ஏற்றி முன்னே நான்கு பேர் இழுத்துக் கொண்டும் பின்னே நான்கு
பேர் தள்ளிக் கொண்டும் உடல் வேர்க்க நெஞ்சொடிய மணிக்கு மூன்று மைல் தள்ளாடித் தள்ளாடி இழுத்துக் கொண்டு போவதும், அதே மாதிரியான 25 மூட்டைகளை ஒரு மோட்டார் லாரியில் ஏற்றி ஒரு மனிதன் நோகாமல் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதுபோல் உட்கார்ந்து கொண்டு சுக்கானை
மாத்திரம் பிடித்துத் திருப்பிக் கொண்டு மணிக்கு 25 மைல் போவதுமான இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் சுயமரியாதைக்கு
- ஜீவகாருண்யத்திற்கு - மனித சமூகத்திற்கு - முற்போக் கிற்கு மற்ற ஜீவன்களை விட மனிதனுக்கு பகுத்தறிவு என்பதாக ஒரு குணம் அதிகமாக உண்டு என்கின்ற “உயர்” குணத்திற்கு எது ஏற்றது என்று கேட்கின்றோம்.
மற்றும் பாஷைகள் ஆதியில் எழுத்துகள் கூட இல்லாமல் சப்த ரூபமாய் இருந்ததும், பிறகு எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டதும், அவை கூரிய ஆணிகளால் ஏடுகளில் எழுதப்பட்டதும், பிறகு காகிதம் ஏற்பட் டதும், அதில் நாணலில் எழுதினதும், உருக்குத் தகடுகளில் எழுதினதும், பிறகு பெளண்டன் பேணாவில் எழுதினதும், டைப்பில் அடிப்பதும், அச்சடிப்பதும் அந்த அச்சும் மணிக்கு 100 பிரதிகளாக இருந்து இப்போது 10000 பிரதிகள் வீதம்
குடி அரசு - 1930 (2) 302
அச்சடிக்கும் படியானதும். அதுவும் 12 X 8க்குமாயிருந்த அகல காகிதத்தில் மாத்திரமிருந்து இப்போது 60 ):40க்குமாக அச்சடிக்கக் கூடியதானதுமான காரியங்கள் படிப்படியாய் விருத்தி ஆகி யிருக்கின்றதை பார்த்துக் கொண்டும் அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டும் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் அதை செய்து கொண்டும் இருக்கின்றோம். இவை யெல்லாம் யந்திர பலன்கள் அல்லவா? என்றும் இவற்றில் எது தள்ளுவதற்குரியது? என்றும் கேட்கின்றோம்.
இது தவிர மற்றொரு உதாரணத்தைக் கவனிப்போம். சங்கராச்சாரி மடாதிபதி என்று சொல்லப்படும் ஆட்கள் ரயிலில் ஏறுவது நீச்சத்தனம்
என்றும், மாட்டுவண்டி. குதிரைவண்டி ஆகியவைகளில் ஏறுவது ஜீவ இம்சை என்றும் கருதிக் கொண்டும் மரக்கட்டையில் பல்லக்கு செய்து அதற்குத்
தந்தம், வெள்ளி, தங்கம் முதலிய தகடுகள் போட்டு அதன்மீது தான் ஏறி உட்கார்ந்து கொண்டு தண்டு 1க்கு 4பேர் வீதம் 4தண்டுக்கு 16பேர் ம்கு ம்கு என்று முக்கிக் கொண்டு மணிக்கு 4மைல் வீதம் தூக்கி ஓடுவதை பார்க்கின்றோம். இது யந்திர சம்மந்தமில்லாதது என்று வைத்துக் கொண்டா
லும் (கண்டிப்பாய் பார்த்தோமானால் பல்லாக்கு என்பதும் ஒரு யந்திரமே
யாகும்) இந்த வாழ்வு காட்டு மிராண்டி உலக வாழ்வா? அல்லது நாகரீக உலக வாழ்வா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் தூக்கு வதை விட்டு மாடோ, கழுதையோ, குதிரையோ, ஒட்டகமோ, யானையோ சுமப்ப தாக
வைத்துக் கொண்டாலும், அதுவும் அதற்கு சற்று அடுத்த காட்டு மிராண்டி வாழ்வா அல்லது நாகரீக - ஜீவகாருண்ய வாழ்வா என்றும் கேட் கின்றோம்.
ஆகவே இவைகளிலிருந்து யந்திரம் மனிதனுக்கு அவசியமென் றும் செளகரியமானதென்றும், ஜீவகாருண்யமுடையதென்றும் முற்போக்குக் கும்
நாகரீகத்திற்கும் ஏற்றதென்றும் இயற்கை உணர்ச்சியில் பட்டதென்றும் அறிவு ஆராய்ச்சியின் பயனென்றும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்.
ஆனால்
ஆனால் முன்சொல்லப்பட்ட அதாவது “யந்திரங்கள் பெருகுவதால் தொழிலாளிகளுக்கு வேலையில்லாமல் போய் ஜீவனத்திற்கு கஷ்டப்பட வேண்டியதாகுமே” என்பதற்கு சமாதானம் சொல்லியாக வேண்டும். இதற்கு பதிலாக நாம் அவர்களைக் கேழ்ப்பதென்ன வென்றால்
“தொழிலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? இது யாருடையக் கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது?” என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்.
பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப்படுபவன், சுகப்படுபவன்,
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வேலைசெய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறுகிறவன்' ஏமாற்றுகிறவன் என்பன போன்ற பிரிவுகள் மனித வாழ்க்கையில் இருக்கும் படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியமும் ஆதாரமுமுண்டா என்பது நமது இரண்டாவது கேள்வியாகும்.
மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் செளக
ரியம் அல்லது தேவையின் அவசியம் என்பதிற்காகவா? அல்லது முத லாளி, மிராசுதாரன் ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம்பாதிக்கவோ பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத்திற்காகவா என்பது மூன்றாவது கேள்வியாகும்.
இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் அறிந்தோமானால் வேலை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் ஒருவனை ஒருவன் கொடுமைப் படுத்துவதுதான் இந்த முறைகள் என்பதும் விளங்கிவிடும்.
இவை ஒருபுறமிருக்க வேலைகளின் கூலிகளை உயர்த்தி, வேலை
நேரத்தைக் குறைத்து, முதலாளிகளின் லாபத்தையும் குறைத்து, ஒரு வரை யரை ஏற்படுத்தி, உள்ள நேரத்தையும் கூலியையும் எல்லா வேலைக்காரர் களுக்கும் பங்கு வரும்படியான ஒரு திட்டம் போடுவோமேயானால் அதாவது மோட்டார் பஸ்காரர்கள் யூனியன் வைத்து வருகின்ற பிரயாணி கள் சத்தத்தை உயர்த்தி கிடைத்த வாடகையை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வதுபோல் செய்தால் வேலையில்லாத் திண்டாட்டம் தானாகவே ஒருவாறு ஒழிக்கப்பட்டு விடுமா இல்லையா என்று கேட்கின்றோம்.
நிற்க, இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே பிறருக்கு அடிமையாய் உழைப்பதற்காகவே மனிதன் பிறந்திருக்கிறானேயொழிய சுகப்படுவதற்கில்லையென்றும் ஆதலால் அவன் வேலைசெய்வதற்காக ஒரு தொழில் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டுமென்று தான் ஏற்படுகின்றது. இதுவும் தான் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழுநேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படுகின்றது. இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வைவிட மிக மோசமான வாழ்வேயாகும். எப்படி எனில் அவற்றிற்காவது (ஒரு காரண்டி உத்திரவாதம் இருக்கின்றது. அதாவது அதன் எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கின்றான். மனித வேலைக்காரனுக்கோ உத்தர: வாதமே கிடையாது. இன்னும் பட்சிகள், காட்டு மிருகங்கள் ஆகியவை களில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சவுகரியமிருக் கின்றது.
இப்படி இருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன் 100க்குத் 90பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும்
குடி அரசு - 1930 (2) 304
அதுவும் காரண்டி இல்லாத அடிமையாய் இருந்து வேலை செய்வது என்பதும், அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயர்க்கைக்கு மாறுபட்ட ஒரு பெரிய அக்கிரமமாகும்.ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரதவிக்க
ஆரம்பித்தால்தான் “தங்களுக்கு பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள் தனமாய் பாடுபடுவதும் தங்களைப் போன்ற பிரரால் ஏய்க்கப்படுவதும் ஏன்?” என்கின்ற காரணத்தை உணர முடியும். உணர்ந்து சமநிலையை அடைய முயற்சிக்கவும் முடியும்.
அதை விட்டு விட்டு “முதலாளி தொழிலாளி நிலைமையும்,
மிராசுதார் உழவன் நிலைமையும் உலக வாழ்க்கையின் செளகரியத்திற்கு அவசியம்” என்பதாகச் சொல்லி அதுவும் “கடவுள் செயலால் முன் ஜென்மத்தின் கர்ம பயனால் தலைவிதியால் ஏற்பட்டது” என்று சொல்லிக் கொண்டு அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே எவ்வளவு கூலி வாங்கிக் கொடுத்தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும்பான்மையானவர்களின் கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது. எப்படி யெனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ அது போலவே முதலாளி தொழிலாளி முதலிய பாகுபாடுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுதந்திரமும் பயன்படாமலேயே போய்விடுவதோடு கீழ்நிலை மேல்நிலை என்பதும் மாற்ற முடியாததாகிவிடும். ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராசுதாரன் என்பவைகளும் ஒருவித வருணாச்சிரம தர்மமே தவிர வேரல்ல. ஆச்சிரமங்கள் என்றாலே படிகள்: நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.
நமது நாட்டில் பிறவியிலேயே பல படிகள் இருப்பதாலும் அதனா லேயே நாம் சதா கஷ்டப்படுவதாலும் தொழில் வாழ்க்கையில் உள்ள படி களை நாம் கவனிக்கவே நேரமும் ஞாபகமும் இல்லாதவர்களாய் இருக்கின்
றோம். மனிதன் உண்மையான சமத்துவமடைய வேண்டுமானால் பிறவிப் படிகளையும் தொழில் படிகளையும் கடந்தவனாகத் தான் இருக்க வேண்டும். அவ்விரண்டு படிகளையும் ஒழித்த - அவ்விரண்டு படிகளையும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலையென்று சொல்லப்படுவதாகும்..
நிற்க, இவற்றிற்கெல்லாம் முக்கியமாக இன்னொரு விஷயமுண்டு.. அதை சரியாக உணர்ந்து கவனித்தோமானால் மேல்கண்ட கஷ்டங்களைப் பற்றிய கவலைகள் கூட நாம் அதிகம் பட வேண்டிய அவசியமிராது. அதென்னவெனில், யோசனை யில்லாமல் கண்ட கண்டபடி ஜனத்தொகை: யை விர்த்தி செய்வதாகும்- பிள்ளைகளைப் பெருவதாகும்.2 ஏக்கரா பூமி உள்ளவன் 100 மாடுகளை வாங்கி வளர்ப்பானேயானால் எப்படி அவனால் அந்த மாடுகள் போதிய தீனி கிடைத்து ரக்ஷிக்கப்பட முடியாதோ அது
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
போலவே மனித சமூகமும் தேவைக்கும் தன்னால் தாங்குவதற்கும் அதா வது காப்பாற்றக் கூடியதற்கும் அதிகமாகவும் தேசத்தின் கால நிலைமைக்கு மேலாகவும் பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்பட்டு தனது ஆகாரத்தில் பங்கு கொடுத்து கடைசியில் இருவருக்கும் போதுமான ஆகாரமில்லாமலும், போதுமான ஆதரிப்பு இல்லாமலும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருப்பதை ஒழிக்காமல் வீணாய் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் என்ன பயன் என்பது முக்கியமாய் கவனிக்கத் தக்கதாகும்.
இந்திய நாட்டு நிலைமை நமக்குத் தெரிய சுமார் 40, 50 வருஷ காலமாகவே மக்களுக்கு “வேலையில்லாமல்” வெளிநாடுகளுக்கு கூலி
யாகச் செல்வதே வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இது மாத்திரமல் லாமல் அடிக்கடி பஞ்சமும் கொள்ளை நோயும் வந்திருக்கிறது. இது இந்த நாட்டு சுயமரியாதைக்கே மிகவும் கேடானதாகும். அளவுக்கும், சக்திக்கும் மீறிபிள்ளைகளைப் பெருவதால் யாருக்கு என்ன லாபம்? என்று யோசிக்க வேண்டும்.
“உலகம் விர்த்தியாக வேண்டாமா” என்கின்ற சொல் சுத்த முட்டாள். தனமானதும் சிறிதும் பொருளற்றதுமான சொல்லே ஒழிய அது ஒரு கவனிக்கத்தகுந்த சொல் அல்ல வென்பதே நமது அபிப்பிராயம். சம்போக. விஷயங்களில் கவலையற்றும், முரட்டுத்தனமாயும், அளவுக்கு மீறியும் நடந்து கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளைப் போலவே
தான் குழந்தைகள் ஏற்படுவதும் என்பதே தவிர அதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமே இல்லை. சம்போக உணர்ச்சி இந்த உலகத்தில் உள்ள ஜீவ ஜந்துக்களில் மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவனுக்கும் குழந்தை பெறு வதற்காக என்கின்ற எண்ணத்தின் மீது தோன்றுவதே கிடையாது. மனிதன் பகுத்தறிவுக்காரன் என்கின்ற ஆணவத்தால் அவனுக்கு ஏற்படும் அநேக முட்டாள் தனமான செய்கைகளைப் போல் குழந்தை பெற வேண்டும் என்ற
முட்டாள் தனமும் ஏற்பட்டு அது ஒரு ஆசையாகி பிறகு அது ஒரு சொத்தாகி பிறகு “மோக்ஷத்திற்கு” உதவும் காரியமாகவுமாகி கடைசியாய் வீண்
கஷ்டமும் தொந்தரவும் பட்டு மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுத்த தைக் கொடுப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லாததாய் முடிந்து விடுகிறது.
மேலும் பிள்ளை பெருவதினாலேயே மொத்த ஜன சங்கியையில் பகுதியான பெண்கள் சமூகம் அடிமையாகி அனேக ஆபத்துகளுக்கும் வியாதிக்கும் உள்ளாகி அற்ப ஆயுளுடன் கஷ்டமும் படவேண்டியதாகி அவர்களது வாழ்வே மிக்க பரிதவிக்கத்தக்க வாழ்வாக முடிகின்றது. பெண்: அடிமைக்கு காரணம் அவர்கள் பிள்ளை பெறுவதும், அதிலும் அதிகமான பிள்ளைகளைப் பெருவதும் அதனால் உடல் நலிந்து பலவீனமுடையவர். களாவதும், பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பொருப்பு தங்களுக்கே. என்று கருதுவதால் சுதந்திரமும் வீரமும் இன்றி அடிமையாவதுமான காரியங்களுக்கு ஆளாக வேண்டியவர்களுமாகிறார்கள். பெண்கள் விஷ யம்
குடி அரசு - 1930 (2) 306
இப்படி இருப்பதோடு பொதுவில் வேலையில்லா கஷ்டத்தை நீக்க வும்
மக்கள் கவலையும் தொல்லையும் கஷ்டமும் இல்லாமல் இருக்கவும் பிள்ளைப் பேற்றைக் குறைப்பது என்பது ஒரு தக்க வழியாகும்.
ஒரு சமயம் இவையெல்லாம் யாருக்காவது பிடித்தமற்றதாகுமே யானால் வேறு இன்னம் ஒரே ஒரு வழிதான் உண்டு என்று சொல்லுவோம். அதென்னவெனில் எவணொருவன் தன் தேவைக்குமேல் சொத்தும் ஸ்திதியும் வைத்திருக்கின்றானோ அவனை குற்றவாளியாக்கி திருடனுக் குண்டான தண்டனையைக் கொடுப்பது என்கின்ற ஆக்ஷியை ஏற்படுத்து வதுதான்.
இந்த ஆகஷி ஏற்பட்டுவிட்டால் பிறகு யாருக்கு வேலை இருந்தா லும் யாருக்கு வேலை இல்லாவிட்டாலும் ஜீவனம் சரியாகும். இதற்காக அதிக கவலையும் படவேண்டியதில்லை. இந்தப்படிக்கெல்லாம் இல்லாமல் நாட்டு செல்வத்தை எல்லாம் ஒருவன் தன்னிடமே வந்து சேரும்படியான முறையை மனித வாழ்க்கைக் கொள்கைகளாக வைத்துக் கொண்டு பல பேர்கள் பட்டினி இருந்து கொண்டு இருப்பதும், ஏன் பட்டினியாயிருக் கிறார்கள் என்று கேட்டால் வேலைகள் கிடைக்காததால் பட்டினியாய் இருக் கின்றார்கள் ஆதலால் யந்திரங்களை எல்லாம் ஒழித்து விட்டு கடப்பாரை யும், சம்மட்டியும் வாங்கிக் கொடுத்து வேலை வாங்க வேண்டுமென்றும் சொல்வதானால் இது எவ்வளவு அக்கிரமமானதும் அயோக்கியத்தன மானதும் திருட்டுத்தனமானதுமான காரியம் என்பது யோசித்தால் விளங்கா
மல் போகாது.ஆகையால் நாட்டுக்கும் முற்போக்குக்கும் மனித சமூக நாகரிக வளர்ச்சிக்கும் யந்திரங்கள் மிகவும் முக்கியமானது என்று சொல்வ தோடு அவற்றின் மூலம் மக்கள் சரீரப் பிரயாசையில் இருந்து விடுதலையாக நினைப்பதுவும் இயற்கையும், அவசியமும் ஆனதென்றும் சொல்லுவதோடு
எஜமான், வேலைக்காரன், முதலாளி, தொழிலாளி, ஜமீன்தாரன், குடியான வன் என்பவைகளான படிகள் நிலைத்திருக்க வேண்டுமானால் மாத்திரம் தான் ஒரு நாட்டுக்கு யந்திரம் எதிரியே ஒழிய மற்றபடி சமதர்மம் விரும் பும் நாட்டுக்கு யந்திரமே சரியான அவிழ்தமாகும் என்றும் தைரியமாய்ச் சொல்லுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.12.193
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
K. P. K. மேனனுக்கு Ges!
யார்ப்பணத் வதால்லைக்க உதாரணம்
உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத் தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகியாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக
மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை
நிறுத்தி தனது செல்வமெல்லாவற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து
மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு ஸ்தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர். அஹிம்சையில் மிக்க நம்பிக்கை
யுமுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத்
தில் தமது சமுகமான நாயர் சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மானித்து
மற்றும் சில பாரிஸ்டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தி யாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால் 6 மாதம் காவலில் வைக்கப் பட்டாலும் சிறையில் மிக்க கெளரவமாய் நடத்தப்பட்டு தண்டனை காலம் தீருவதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டு அவர் கோரியபடியே திருவாங்கூர். அரசாங்கம் இணங்கி வந்து வைக்கம் தெருக்களை பொதுஜன நடமாட்டத்திற்கு எல்லோருக்கும் பொதுவாய் விட்டு விட்டதுடன் மற்றும் பல ரோட்டுகளையும் எல்லா ஜாதியாருக்கும் பொதுவாக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
ஆகவே இவைகளிலிருந்து திரு.கே.பி. கேசவ மேனன் அவர்களின் யோக்கியமும், முயற்சியும் எப்படிப்பட்டதென்பது யாரும் நன்றாய் உணரலாம். அன்றியும் அவர் தென்னிந்தியாவிலுள்ள கெளரவமான கனவான்களில் ஒருவராகவும், எல்லா கெளரவமான கனவான்களின் சிநேகிதராகவும், ஐகோர்ட் ஜட்ஜ், திவான். நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகினவராகவுமிருந்து வந்ததும் இம் மாகாணத்தாருக்கு நன்றாய் தெரியும். இந்தப்படி உள்ள இவர் இங்கு வக்கீல்
குடி அரசு - 1930 (2) 208
தொழில் நடத்துவது என்பது பிடிக்காமல் ஏனெனில் இவ்விடத்திய நியாயாதிபதிகள் பெரிதும் பார்ப்பனர்களாக ஏற்பட்டு வருகின்றபடியாலும், அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனச் சலுகையிலிருப்பதாகவும் மற்றும் பல காரணங்களாலும் அவருக்கு ஏற்பட்ட சில குடும்ப துக்கத்தாலும் இந்தியாவிலிருக்க மனமில்லாமல் மலேயா நாட்டுக்குப் போய் தனது தொழிலை கண்ணியமாய் நடத்திவரலாமென்று கருதி அங்குள்ள நியாயாதி பதிகளின் நேர்மை குணத்தை நம்பி மலேயா நாட்டுக்குச் சென்றால் அங் கும் இவ்விடத்திய பார்ப்பனர்களே தொல்லை கொடுக்க ஆரம்பித்து அவருக்குப் பல உபத்திரவம் செய்து வருவதாகத் தெரிகிறது. இதைப்பற்றி முன்னொரு தடவையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.
அதாவது திரு. கே. பி. கேசவ மேனனவர்கள் மீது மலாய் நாட்டு
வக்கீல்களில் சிலர் பொறாமை காரணமாக குறிப்பாய் சொல்ல வேண்டு மானால் ஒரு பார்ப்பனரின் கிருத்துருவத்தின் மீது அவரை FM.S. கோர்டு களின் வக்கீல்கள் சங்கத்தில் சேர்க்கக் கூடாதென்று பல முயற்சிகள் செய்யப் பட்டன. அதென்னவெனில் திரு. கே.பி. கே. மேனன் ராஜத்துரோகி என்றும், அவர் சிறை சென்றவர் என்றும், வக்கீலாயிருக்க லாயக்கற்ற வரென்றும், தொழிலாளர்களை தூண்டிவிட்டு கலகம் செய்பவரென்றும், பல மாதிரியான விஷமப் பிரசாரங்கள் செய்து அவரை அங்கு அனுமதிக்காமல் இருக்கும்
படியாகச் செய்யப் பல விதத்திலும் பலமாக முயற்ச்சித்தார்கள். எவ்வளவு சூட்சி செய்தும் கடைசியாக திரு. மேனன் அவர்கள் ஆதியில் எதிர்பார்த் தது போலவே மலாய் நாட்டு ஜட்ஜிகளின் நேர்மை குணத்தால் வெற்றி பெற்று அந்த நாட்டு நீதிவாத வக்கீலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் என்ற சேதி கேட்டு மிக்க மகிழ்ச்சி யடைகின்றோம். திரு. கே.பி.கே. மேனன் அவர்களையும் பாராட்டுவதோடு மலாய் நாட்டுத் தலைமை நீதிபதி அவர்
கள் பார்ப்பது போலவே நாமும் அவர் மலாய் நாட்டுத் திலகமாய் விளங்க. வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.42.1930
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஊதி முறை
ஊாதிப்வபமர் வகா௫க்க கவேண்மும அவசியமில்லை
சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப்
பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்சஸ் சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங்களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக்கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி ஒழிக்கும் சங்கத்தார் இந்திய கவர்ன்மெண் டுக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு கவர்ன்மெண்டார் அனுப்பிய பதிலை நமக்குத்
தெரிவித்திருக்கிறார்கள். அப்பதிலில் குறிப்பிட்டிருப்பதென்ன வென்றால்,
“ஜாதி வித்தியாசம் ஒழிபட வேண்டுமென்னும் விஷயத்தில் கவர்ன் மெண்டுக்கு மிக்க அனுதாபம் உண்டு. ஆனால் ஜாதி வித்தியாசப் பிரிவுகளை சென்சஸ் குறிப்பில் குறிப்பிடாததினால் மாத்திரமே ஏதாவது பலன் உண்டாய் விடும் என்று எண்ணுவதற்கில்லை. ஆன போதிலும் கல்யாண விஷயத்திலும் சாப்பாட்டு விஷயத்திலும் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜாதிக் கொள்கையை உண்மையாய் அடி யோடு விட்டு இருக்கின்றவர்கள் தங்களுக்கு ஜாதி இல்லையென்று சொன்னால் அதை ஜனக் கணக்கு எடுப்பவர்கள் (அதாவது என்யூமிரேட்டர்கள்! ஒப்புக் கொண்டு அந்தக் கலத்தில் ஜாதியில்லை அதாவது ॥ என்று பதிவு செய்து கொள்ளலாம்.”
என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது தற்சமயம் நமக்குப் போதுமானதாகும். ஏனெனில் தங்களுக்கு ஜாதி இல்லையென்று கணக்குக் கொடுக்க இஷ்டமுள்ளவர்கள் சர்க்கார். நிபந்தனைக்குப் பயந்து அதாவது ஜாதிப்பெயர் கொடுக்கா விட்டால் ஏதாவது ஆபத்து வருமோ என எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இது தைரியத்தைக் கொடுப்பதாகும்.
குடி அரசு - 1930 (2) 210
ஆதலால் ஜாதி வித்தியாசம் மனதில் மாத்திரமல்லாமல், அனுபவத் திலும் பாராட்டாமலிருக்கின்றவர்கள் தைரியமாய் என்யூமரேட்டர்கள் - கணக்கெடுப்பவர்களிடம் தங்களுக்கு ஜாதியில்லை அல்லது (101) நில் என்று சொல்லிவிடலாம் என்பது விளங்கும்.
அதுபோலவே மதம் என்ன என்று கேட்கும் போதும் தைரியமாய் தங்களுக்கு மதம் இல்லையென்று சொல்லிவிடலாம். இதை மீறிக் கணக்கெடுப்பவர்கள் ஏதாவது சொல்லித்தானாகவேண்டுமென்று கேட்டால் “பகுத்தறிவு மதம்” (Rationalist) என்று சொல்லி விடலாம்.
ஆதலால் யாரும் சர்க்காருக்கு பயந்து கொண்டு உண்மைக்கும், தங்கள் உணர்ச்சிக்கும் விரோதமாய் ஜாதிப் பெயரோ, மதப் பெயரோ கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.121930
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
களுரில் சுயமரியாதைய் யிரசாராம்
ஸ்தல ஸ்தாபனங்களில் நாமினேஷன் எடுபட்டதானது ஏழைகளுக்கு மிகவும் நன்மையானதாகும். கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாகி எலக்ஷன் காலாவதியும் குறைந்து அடிக்கடி எலக்ஷன் நடப்பதாயிருந்தால் இன்னமும் நல்லதென்றே ஏழைகள் சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் எலக்ஷன் வரும்போதெல்லாம் பணம் கிடைக்கும் என்ற ஆசைதான். எலக்ஷனில் நிற்பவர்களும் ஓட்டுக் கேள்க்கும் போது ஓட்டர்களை கெஞ்சுவதும், பார்ப்பதும் தவிர மற்ற காலங்களில் ஓட்டர்களை கவனிப்ப தேயில்லை.நமது எலக்ஷன்களால் அனேக பெரிய குடும்பங்கள் கெட்டுப் போய் இன்சால்வெண்டு கூட ஆகியிருக்கின்றன. அநேக குடும்பங்கள் கடனில் மூழ்கியிருக்கின்றன. எங்கள் ஜில்லாவில் ஒரு தாலூக்காவில் தாலூகா
போர்ட் எலக்ஷனினாலேயே அத்தாலூக்கா பணக்காரர்களில் சுமார் 20, 30 குடும்பங்கள் வரையில் சுமார் 15 ஆயிரம் முதல் ஒண்ணரை லக்ஷ ரூபாய் வரையில் கடன்காரர்களாக ஆகி இருக்கிறார்கள்.
இந்தப் போட்டிக்காரர்களுக்குள்ளும் இந்த மாதிரி எலக்ஷனுக்கு செலவு செய்து பதவி பெற்றவர்களுக்குள்ளும் நூத்துக்கு 4, 5 பேர்களுக்குக் கூட ஸ்தல நிர்வாக விஷயம் சரியாய் தெரிந்து பொருப்புடன் நிர்வகிக்கக் கூடிய ஞானமும் சவுகரியமும் இருக்குமோ என்பது சந்தேகமான காரியமே
யாகும். இதன் பயனாய் கட்சி இல்லாத ஜில்லாவோ, தாலூக்காவோ,டவுனோ, கிராமமோ மிகவும் அறிது என்றே சொல்லலாம். ஆன போதிலும் இந்த எலக்ஷன்களால் மற்றொரு நன்மை உண்டு என்பதையும் நான் மறைக்க வில்லை. அதாவது கிராமத்து மிராசுதாரர்களுக்கு இந்த எலக்்ஷன்களில் ஊக்கம் ஏற்பட்டதாலும் அதனால் பட்டணங்களுக்கும், நகரங்களுக்கும் போய் பல பேர்களுடன் பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதாலும், அவர்களுக்கு சற்று விஷய ஞானம், கல்வி, அறிவு முதலியவைகள் அடை வதற்கு இடம் ஏற்பட்டு முன்போன்ற காட்டு ராஜாத்தனமில்லாமல் சற்று நாகரீகமடைகின்றார்கள் என்பதும், மற்றும் தாசி, வேசி முதலிய காரியங்
களும், கலகம், காலித்தனம் முதலிய காரியங்களும் அடியோடு விலக சந்தர்ப்பங்களும் அளிக்கின்றன. எலக்ஷன் இல்லாவிட்டால் இதில் செல
வாகும் நேரமும், ஊக்கமும், முயற்சியும். பணமும் வேறு காரியங்களில்தான்'
குடி அரசு - 1930 (2) 312
செலவாக வேண்டியதாகிவிடும்.
சாதாரணமாக சட்டசபை தேர்தல்களினாலேயே அநேக ஜமீன் தாரர்கள் யோக்கியர்கள் ஆகியிருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் எலக்ஷன்கள் உத்தேசித்து பலன் கொடுக்கா விட்டாலும் வேறு பல நன்மைகள் கொடுப்பதால் அது இருக்கலாம் என்றே அபிப்பி ராயப்படுகின்றேன்.
தவிர ஸ்தல ஸ்தாபனப் புதிய சட்டத்தில் உள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைப் பற்றிச் சிலர் குறை கூறுகின்றார்கள். நம்பிக்கையில்லாத தீர்மானம் சற்று தொந்திரவு செய்வதாகக் காணப்படுவது உண்மையானாலும் ஸ்தல ஸ்தாபன இலாக்கா அரசாங்கம் பொருப்பற்றதும், சுய நலத்திற்காக நியாயத்தை தியாகம் பண்ணித் தீர வேண்டியதாயும் ஏற்பட்டுவிடுவதாய் இருப்பதால் இம்மாதிரி ஒரு தீர்மானம் இருந்தாலொழிய தலைவர்களை யோக்கியமாய் நடந்து கொள்ளும்படி செய்ய வேறு மார்க்கமே கிடையாது.
அயோக்கியர்கள் ஏதாவது சூட்சியின் பயனாய் தலைவர்களாக வந்து விட்டால் 5 வருஷ காலத்துக்கு அவரது அயோக்கியத்தனத்தில் இருந்தும் நாணையக் குறைவில் இருந்து தப்பி நிர்வாகம் ஒழுங்குப்பட வேறு வசதி யேயில்லாமல் இருப்பது மிகவும் அனியாயமாகும். எனது அபிப்பிராயம் பிரதிநிதியாய் தெரிந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் அதாவது கவுன்சிலர்
கள், மெம்பர்கள் கூட ஓட்டர்களின் மெஜாரிட்டி ஓட்டர்களால் நம்பிக்கை இழந்து விட்டால் அல்லது அந்த தொகுதியின் மெஜாரிட்டி மெம்பர்கள் சம்மதமில்லையென்று தெரிவித்துவிட்டால் மெம்பர்கள் தங்களுடைய அந்த ஸ்தானத்தை காலி செய்து விடும்படியாக சட்டம் செய்ய வேண்டு மென்பதே யாகும். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அதனால் ஏற்பட்ட கஷ்டங்களை நான் நன்றாய்ப் பார்த்து இருக்கின்றேன். ஒரு உதார ணமாக எங்கள் ஊர் முனிசிபாலிட்டியையே வேண்டுமானாலும் காட்டுகின் றேன். முதலாவது எலக்்ஷனிலேயே புரட்டுகளும் அனியாயங்களும் செய்து தன்னை தப்பாய் விளம்பரம் செய்து கொண்ட ஒரு சேர்மெனின் 3 வருஷ ஆட்சியில் மிக்க செல்வம் பொருந்திய ஈரோடு முனிசிபாலிட்டி பாப்பராகி முனிசிபல் சிப்பந்திகளின் சம்பளத்திற்கே கூட பணமில்லாமல் திண்டாட்டமாகிவிட்டது. அந்த சேர்மெனின் திருட்டுகளையும் புரட்டு களையும் பணங்களை கையாடியவைகளையும் தனது லாபத்துக்காக முனி
சிபல் கவுன்சிலர்கள் சம்மந்தமில்லாமல் பல வேலைகளை உண்டாக்கிக் கொண்டு அதன் மூலம் கொள்ளை அடித்ததையும் கைப்பிடியாய் கவுன் சிலர்கள் பிடித்துக் கொடுத்தார்கள். மொத்தம் 20 கவுன்சிலர்களில் 12 கவுன்
சிலர் ஸ்தல ஸ்தாபன மந்திரியிடம் நேரில் சென்று இந்த திருட்டுக்களையும், நாணயக் குறைவுகளையும் எல்லாவற்றையும் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினார்கள். இது விஷயமாய் இவற்றிற்கு ஆதாரமாய் கணக்கு பரிசோத
313 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கர்கள் அறிக்கைகளில் காணப்பட்ட விஷயங்களை எல்லாம் எடுத்துக் காட்டப் பட்டது அவை மிக்க பலமான குற்றங்களாகும்.2 வருஷம் 3 வருஷம் தண்டிக்கக் கூடியவைகளாகும். மேலும் அதாவது முனிசிபல் ரிக்கார்டுகளில் திருத்தமும் நுழை வரியும் பொய் பில்லுகளும் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு எடுத்துச் சொல்லப்பட்டது. அப்படியெல்லாம் இருந் தும் அந்தக் காலத்திய ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் லட்சியம் செய்யவே இல்லை. அதோடு மாத்திரம் அல்லாமல் இம்மாதிரி யோக்கியதை உள்ள சேர்மன் விஷயத்தில் பச்சாதாபப் பட்டு “பிள்ளைக் குட்டிக்காரர் பிழைத் துப் போகட்டும் என்றே கருதிவிட்டது. கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் அனுப்பிய
காலத்திலும் அதை சேர்மென்டிஸ் அலவு (தள்ளி விட்டார்! செய்து விட்டார். கடைசியாக My 12 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா
செய்தார்கள். அவர்களில் நியமனமான கவுன்சிலர் களும் உண்டு. ராஜினாமா செய்த பிறகும் ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் லட்சியம் செய்யவே இல்லை. இந்தநிலை அந்த சேர்மெனுக்கு பழம் நழுவிப்பாலில் விழுந்ததுபோல் ஆகி முன்னிலும் அதிகமாக அக்கிரமம் செய்து அந்த முனிசிபாலிட்டி பொருளாதார விஷயத்தில் ஒரு 10 வருஷத் திற்கு தலை எடுக்க முடியாதபடி அவ்வளவு பாப்பராகிவிட்டது. சர்க்கா ருக்கு கொடுக்க வேண்டிய வாய்தா கடன்கள் கொடுக்க முடியவில்லை. வட்டி கட்ட முடியவில்லை. ஜில்லா போர்டுகளுக்கு வருஷா வருஷம் கொடுக்கக்கூடிய விகிதாச்சார பாகம் கூட கொடுக்க முடியவில்லை. மேலும் தனித்தனி இலாக்காக்களுக்கு ஒதுக்கி வைத்த பணங்கள் எல்லாம் கண்டபடி வேறு இலாக்காக்களின் பெயரால் பாழாக்கப் பட்டும் கையாடியும் போய் விட்டது. அவசியமான காரியங்கள் செய்ய பணமே இல்லாமல் போய் விட்டது. இந்த அனியாயங்களை ஒழிக்க கவுன்சிலர்களாலாவது ஊர் மகா ஜனங்களாலாவது ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடைசியாக அந்த சேர்மெனை தேர்தல் சட்டமுறையில் கோர்ட்டு நடவடிக்கையால் சுமார் 4, 5 ஆயிரம் ரூபாய் செலவழித்து பிரகு ஒழிக்கப்பட்டது. இந்த மாதிரி ஆசாமிக்கு அனேக பெரிய மனிதர்கள். உத்தியோகஸ்தர்கள் சிபார்சுகள் வந்து பொது ஜனங்களுக்கு மிக்க கஷ்டத்தை உண்டாக்கி விட்டது. இப் போது ஒரு யோக்கியமான நாணயமான சேர்மென் இருக்கிற காலத்தில் பழய அக்கிரமங்களுக்காக இப்போது ஈரோடு. முனிசிபாலிட்டியை ஏன் கலைத்து சர்க்கார் மேல்பார்வை யில் நடத்தக்கூடாது என்கின்ற மாதிரியில் கேள்வி கேள்க்கும்படியாய் இருக்கின்றது. இதை எல்லாம் பார்க்கும்போது நம்பிக்கை இல்லாத் தீர்மான சட்டம் சுமார் 10 ஹுங்களுக்கு முன்னாலேயே ஏற்பட்டிருக்குமானால் பொது ஜனங்கள் வரிப்பணம் எவ்வளவோ மீதியாகி ஸ்தல நிர்வாக தலைவர்களும் எவ்வளவோ யோக்கியர்களாக அமயக்கூடிய மாதிரியில் வந்திருப்பார்கள். ஆதலால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இருப்பது நல்லதென்றே சொல்லலாம். ஆனால் சில சமயங்களில் அது தப்பாய் உபயோகிக்கப்பட்டு யோக்கியமாய் இருக்கும் தலைவர்களுக்கும் தொந்திரவு ஏற்பட்டு விடலாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனாலும் அது பெரும்பாலும்
குடி அரசு - 1930 @) 314
அதற்கு தகுதியானவர்களுக்கே பிரயோகப் படும்படி சீக்கிரத்தில் திருத்தமடைந்து விடும் என்றே கருதுகிறேன். எப்படி எனில் சர்க்காராலோ ஜில்லாபோர்ட் தலைவர்களாலோ நாமினேஷன் செய்யப்படும் அங்கத்தினர்கள் இனிமேல் இல்லை. ஆகையால் ஜனப் பிரதிநிதிகள் பெரும்பான்மையோர் அக்கிரமம் செய்பவர்கள் என்று ஜன நாயக ஆக்ஷி விரும்புகின்றவர்கள் அதில் பங்கெடுக்க ஆசைப்படு கின்றவர்கள் சொல்ல முடியாது. ஒரு சமயம் சிலர் அப்படிச் சொல்ல வருவார் களானால் அப்படிப்பட்டவர்கள் ஜன நாயக ஆகஷியில் குற்றம் சொல்லு கின்றவர்கள் அதில் பங்கெடுத்துக் கொள்ளாமல் தாங்களாகவே விலகிவிட வேண்டியதுதானே ஒழிய ஒழுங்காய் நடந்து கொள்ளத் தெரியாதவர்களின்
பிரதிநிதியாய் அந்த ஸ்தானத்தில் இருக்க விரும்புவது சகயமரியாதை அற்ற தன்மையே ஆகும். தவிரவும் தன்னை தெரிந்தெடுத்தவர்களே வேண்டாம். என்று சொல்வதை குற்றம் என்று சொல்லுவது நாணையமும் ஆகாது. அப்படி சொல்வது ஒழுங்காகும் என்று சொல்லப்படுமானால் அதே ஓட்டர் கள் முன் தெரிந்து எடுத்ததும் ஏன் தப்பாய் இருக்கக்கூடாது என்கின்ற கேள்வியும்
புரப்படலாம். ஒரு நல்ல சேர்மென்யோ, தலைவரையோ மெம்பர்கள் அனாவசியமாக அடிக்கடி நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து நீக்குவார்களேயானால் அவர்களை தெரிந்தெடுத்த ஓட்டர் கள் கவனித்து அடுத்தத் தடவை வேறு ஒரு கவுன்சிலரை தெரிந்தெடுப் பார்கள். அல்லது அவர்கள் அதை மெம்பர் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்கட்டும். அதற்காக நாம் ஏன் எந்த அங்கத்தினர்களால் தலைவரா னோமோ அதே. அங்கத்தினரை நம்மை தலைவராக்கிய போது யோக்கியர் என்றும், புத்திசாலிகள் என்றும் சொல்லிவிட்டு நம்மை வேண்டாமென்று சொல்லும்போது மாத்திரம் அவர்களை அயோக்கியர் என்றும் முட்டாள்கள் என்றும் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்க்கின்றேன். இந்த அதிகாரம் தெரிந்தெடுப்பவர்களுக்கு இருந்தால்தான் அபேக்ஷகர்கள் பணம் கொடுத்து ஸ்தானங்கள் பெற முயலமாட்டார்கள். ஏனெனில் இப்பொழுது கொடுத்தால் அடிக்கடி மாதா மாதம் பணம் கொடுக்க வேண்டுமே என்கின்ற பயம் இருக்கும். ஆதலால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நல்ல முறையாகுமே தவிர, தவறல்ல என்பேன்.
குறிப்பு கரூரில் சுயமரியாதைப்பிரசாரம் - குடிஅரசு 07. 12 1930 தொடர்ச்சி
குடி அரசு - சொற்பொழிவு - 2112.1930
315 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
மதங்கள் எல்லாம் குத்துப் போாணவைகளனே
A By v
இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது, எல்லா மதங்களும். செத்துப் போய் விட்டன. செத்தப் பிணங்களே சடங்கு ரூபமாகவும், வேஷ ரூபமாகவும் நாற்றமெடுத்து அதனால் மனித சமூகத்திற்கு பிற்போக்கு என்னும் வியாதியை கொடுத்துக் கொண்டு வருகின்றன.
உண்மையில் எந்த மதஸ்தனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ளுவதில்லை, நடந்து கொள்ள முடிவதுமில்லை. உதாரணமாக பெளத்தர்கள், கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமானவர்கள், இந்துக்கள் என்பவர்கள் சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக் கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கின்றவனை காண முடிகின்றதா? முதலாவதாக வேஷத்திலும், சடங்கி லுமே சரியாக நடந்து கொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்திலும் வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனையிலும்100க்கு ஒன்று வீதம் கூட நிர்ணயமாய் நடக்கவோ, ஆசைப் படவோ கூட முடிகின்றவர் காணப்படுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களேதான் இன்று தன், தன் “மதத்தைக் காப்பாற்ற வேண்டும்” “ மதத்திற்கு ஆபத்து ” என்று சொல்லிக் கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டு
குழி தோண்டிப் புதைக்காமல் நாற்றத்தில் அழுந்திக் கொண்டு இருக்கிறார்கள். மலத்தில் இருக்கின்ற புழுக்கள் எப்படி மல நாற்றத்தை வெறுக்க முடியாமலும். மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அது போல்
எல்லாம் மனிதர்களுமே மதப் பிண நாற்றத்தில் புரளுவதால் உண்மை உணர
முடியாமல் அழுந்துகின்றனர்.
குடி அரசு - கட்டுரை - 21.12.1930
குடி அரசு - 1930 (2) 316
மந்திரிகள் நிலை
- சித்திரபுத்திரன்
இனி எந்த மந்திரியும் சுயமரியாதைக்காரர்கள் தயவால் தான் வாழ
முடியும், ஏனெனில் அவர்களிடமிருந்த இரண்டு முக்கியமான அதிகாரங்கள் ஒழிந்து விட்டன. என்னவெனில்,
1.நாமினேஷன் அதிகாரம், 2. உத்தியோகம் கொடுக்கும் அதிகாரம்
இந்த இரண்டு அதிகாரமும் சாதாரணமாக ஒரு.. இருந்தால் கூட மக்களில் பணக்காரரும், பிரபுவும், ஜமீன்தாரர்களும், ராஜாக்களும், மிராஸ் தாரர்களும், வியாபாரிகளும், பண்ணைகளும், பிரசிடென்டுகளும், சேர்மென் களும்,ஹ க்ஷ ஊனு படித்த வாலிபர்களும், மந்திரிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு தாசானுதாசனாகக் கும்பிடு போட்டுக் கொண்டு அவர்களது மூக்கு சளியை யும், கண் பீழையையும் வர்ணித்து சித்திரக் கவி பாடி பஜனை செய்து கொண்டு வலம் வருவார்கள்.
ஆனால், இப்பொழுதோ மேற்கண்ட அதாவது நாமினேஷன் அதிகாரமும் உத்தியோகம் கொடுக்கும் அதிகாரமும் “ முண்டச்சிகள்.
கெர்ப்பம் கரைவது போல்” நாளுக்கு நாள் கரைந்து கொண்டே போய் கடைசி யாக உதிரக் கட்டியாக மாறி ஒன்றுமில்லாமல் போய் விட்டது. ஆதலால் அவர்களிடத்தில் இந்த மாதிரி கூட்டத்தார்களுக்கு இனி வேலையோ, மரியாதையோ கூட இருக்க அவசியமில்லை. ஆணாலும் சட்டசபை மெம்பர்.
கள் தயவு வேண்டும் என்கின்ற ஹோதாவில் சிலருடைய தயவு மந்திரி களுக்கு வேண்டியிருக்கும் என்பதில் ஆக்ஷபணை இல்லை.
அந்த சட்டசபை மெம்பர்களும், சுயமரியாதை இயக்கமும் கூடிய
சீக்கிரத்தில் அதாவது “காங்கிரஸ்காரர்கள்” தேர்தல்களுக்கு நிற்க ஆரம்ப மானவுடனே ஒன்றாய்விடுவார்கள், ஒன்றாகிதான் தீரும். ஆகவே வெகு வேகத்தில் சுத்த சுயமரியாதைக் கொள்கை ஆட்சியே பூரண மந்திரி ஆட்சி
யாகித் தீரும் என்பதில் சந்தேகமில்லை. அந்தப்படி ஆகும் போதுதான் நாட்
டுக்கு, மனித சமூகத்திற்கு உண்மையான நன்மை ஏற்படும்.
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
எப்படி எனில் தீண்டாமை ஒழித்தல், பெண்கள் விடுதலை, ஜாதி ஒழித்தல், எல்லோரும் படித்தல்... மூட பக்தியும் பழக்க வழக்கமும் ஒழித்தல், பகுத்தறிவை வளர்த்தல், சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுத்தல், பணக்காரர்கள். கொடுமை ஒழித்தல் முதலான காரியங்கள் நடைபெறும். இக்காரியங்கள் இந் நாட்டு மக்களில் 100க்கு 90 மக்களுக்கு பயன்படக் கூடியதும், அவசியமானது மாயிருப்பவைகளாகும்..
குடி அரசு - கட்டுரை - 21121930
குடி அரசு - 1930 (2) 318
கிருஷ்ணாண், அர்சாணண் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
அர்ஜுனன் : ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி, வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப் படுகின்றனவே; அதுமாத்திரமல்லாமல் அந்த பெண் வேஷத்தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே. இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.
கிருஷ்ணன் : ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒருநாளும் செய்ததே இல்லை.அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு “நான்” பெண் வேஷம் எப்படிப் போடமுடியும். அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும். ஒரு சமயம் திரு. அ. இராகவன் சொல்லுவது போல் ஆண், ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படி பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்ப்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்ப்பவனுக்கு புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல்லப் பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.
அர்ஜுனன்: அந்த தத்துவார்த்தம் என்ன எனக்குச் சற்று சொல்லு
பார்ப்போம்.
கிருஷ்ணன் : அந்தமாதிரி எழுதின தத்துவார்த்தம் என்னவென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும் எதிரியை ஜெயிக்க போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டு மானால் இந்த வழி மிக சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப்போய் காட்டியோ, அல்லது அவனுக்கு கூட்டி விட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம்
319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
என்பதே இதன் தத்துவார்த்தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் இரகசியங்களில் ஒன்று என்பதை காட்டுவதற்காக எழுதப்பட்ட தாகும். இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாதவன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந்திருந்தால் அதற்கு பொதுஜனங்கள். திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது “சக்கரத்தின் மகிமையினால்” சம்பாதித்துதான் வெற்றி பெற்றான், பதவி பெற்றான் என்று சாதாரண பாமர: மக்களை கூடச் சொல்லுவதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என்விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர்; பெண்கள.......க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்தத் தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்.
ஆதலால் வெற்றி பெறுவதற்கு ஒருவழி என்பதைக்காட்டும் தத்துவப் பொருளுக்காகவே “பெரியோர்கள்” இப்படி எழுதி வைத்தார்கள். புராணங் களில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் இது போலவே தத்துவார்த் தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றை பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்த பழக்கமும் வழக்கமும் தத்து வார்த்தத்தை பின்பற்ற வேண்டிய அவசியமுமாகியவைகளெல்லாம் சுயமரியாதைக்காரருக்கு அல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.
அர்ஜுனன் : சரி சரி. இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம். சற்று தயவு செய்து அதையும் விளக்கி
னால் உனக்கு “புண்ணியம்” உண்டு.
கிருஷ்ணன்: அதென்ன சொல்லு பார்ப்போம்
அர்ஜுனன் : அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்யாசி ரூபமாக, பக்தன் ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட் டான் என்றும் அந்தப்படியே அவன் கொடுத்தானென்றும் சொல்லப்படு கின்றதே அதன் ரகசியம் என்ன?
கிரு : இது தெரியவில்லையா?
அர்ஜுனன் : தெரியவில்லையே.
கிருஷ்ணன் : சன்யாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகஸ்
தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்ய வேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்க வேண்டும். அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்தப்படிசன்யாசிக்கு பெண்களைக் கொடுக்கும் போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்யாசி
குடி அரசு - 1930 (2) 320
ரூபமாய், ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்யாசியாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டிற்கு வந்தால், அவன் கேட்டவுடனேயே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. அதாவது “இந்த சன்யாசி - சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ” என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்துவிடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப்பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக்காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.
தவிரவும், குரு, சாமியார், பாகவதாள்; பரதேசி, அடியார்கள் இப்படிப் பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்துக் கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்த அந்த வீட்டுக்காரருக்கு இந்த “புண்ணியமும்” கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன்.சிலர் தெரிந்தே விட்டுக்கொண்டிருக் கின்றார்கள். சிலர் தெரியாதது போலவே காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும்
மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.
அர்ஜுனன்: சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்குகின் றாயா?
கிருஷ்ணன் : என்ன அது, சொல்லு பார்ப்போம்.
அர்ஜுனன் :அதாவது புராணங்களில் அக்கிரமமான, வஞ்சகமான, புரட்டான காரியங்கள் செய்ய வேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகின்றதே, இதன் தத்துவமென்ன?'
கிருஷ்ணன் : இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (யார்ப்பனனே! தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும்,
அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ நரகமோ ஏற்படு மென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய் புரட்டு சுயநலத் திற்காக எழுதப் பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும், இப்போ
தும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும் அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கை தேர்ந்தவர்கள் என்றும் காட்டு வதற்காகவே அந்தப்படிஎழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியாதைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காக பார்ப்பனர்களை தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங் களுக்கு பொருப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்க
321 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ளாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப்பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.
அர்ஜுனன் : இன்னம் ஒரு சந்தேகம்.
கிருஷ்ணன் : என்ன சொல்லு.
அர்ஜுனன் : கடவுளை படைத்தார்களல்லவா மனிதர்கள்.
கிரு : ஆம்!
அர்ஜுனன் : அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள்: இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவாகனம், கும்பாபிஷேகம் முதலியவைகள் செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும், கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்கு கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?
கிரு: அதன் இரகசியம் என்னவென்றால் மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டுவிடுவான், அணிந்து கொள்வான். அப்புரம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால் தான் கல்லி
லும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்கு தனக்கு வேண்டியதை யெல்லாம் நைவேத்தியம் செய்யச்செய்து தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி செய்ய வேண்டியது குறுக்கே இருப்பவர்களுக்கு அதாவது பூசாரிகளுக்கு அவசியமாயிற்று. அந்தப் பூசாரிகளுக்கே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்து விடும். கடவுள் மஹிமைகளும் ஒழிந்து விடும்.
அர்ஜுனன் : சரி இவைகள் எல்லாம் எனக்கு ஒரு மாதிரி விளக்க மாயிற்று. இன்னும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.
கிரு: சரி.
கேள்வி - விடை
கே : கட்சிகள் என்றால் என்ன?
வி:நல்ல லட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றி தங்கள் வசம். செய்து சுயநல லாபம் அடைவது. உதாரணமாக காங்கிரஸ் கட்சி, தேசீயக் கட்சி முதலிய பல கட்சிகள்.
குடி அரசு - 1930 (2) 322
கே:அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது!
கே: ஏன்?
வி: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை, பணம் கேட்பதில்லை, உத்தியோகம் கேட்பதில்லை, பதவி கேட்பதில்லை, பட்டம் கேட்பதில்லை. அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எது அதிகக்கெடுதி
மக்களைக் கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்லுகிறவர் களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்வதனால் கோவிலுக்குப் போகும்
படி சொல்லுகின்றவர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.
கோவிலை இடிக்கின்றவர்களை விட, கோவில் கட்டுகின்றவர்களா லேயே மக்களுக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்படுகின்றன.
கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்றவர்களை விட, கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள். நல்லவர்கள்.
100 ரூபாய் இனாம்:
தானாக ஏற்பட்ட கடவுள் எங்காவது உண்டா?
இந்த மூவரில் யார் நல்லவர்கள்?
கருப்பக் கவுண்டர் உதைப்பதாகச் சொல்லி மிரட்டி ஓட்டு வாங்கி னார்.
தனபாலு செட்டியார் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்.
பஞ்சாபகேச அய்யர் சுயராஜ்யம் வாங்கி கந்தாயம் தள்ளிப் போடுவ தாக ஆசைக்காட்டி ஓட்டு வாங்கினார்.
இம்மூவரில் யார் யோக்கியர்கள்?
இவர்களில் யார் பதிவிரதைகள்?
1கீதா, புருஷன் பற்தோபஸ்தினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.
323 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
2 மீனாக்ஷி புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்யவில்லை.
3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற் குப்
பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.
4. இரஞ்சிதம் தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.
5. சரஸ்வதி மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.
6. மேனகை தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை.
7. கோகிலா தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை.
இவர்களில் யார் பதிவிரதைகள்?'
குடி அரசு - உரையாடல் - 21.12.1930
குடி அரசு - 1930 @) 324
மஙீராங்கம் ஈங்கநாதரிண் கண்றி வகட்டதனம்
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி சிறிது கூட நன்றி விஸ்வாசமில்லாமல் தனது பூஜைக்கும், உர்ச்சவத்திற்கும் பணம் சேகரித்து வைப்பதற்காக ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்னும் பெயரால் ஒரு லாட்டரி சீட்டு நடத்த முக்கிய ஏற்பாடு செய்தவரும், அந்த சீட்டு நடவடிக்கைக்கு பிரதம காரியதரிசியாய் இருந்தவருமான ராவ்பகதூர் சடகோபாசாரியாரை தபால் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று கொன்று போட்டார். இந்தப் படுபாவி ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசிக்கு வருகின்ற பக்தர்கள் எத்தனை பேரைக் கொல்லப் போகின்றாறோ தெரியவில்லை. இப்போதே ஏகாதசி உர்ச்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக ஸ்ரீரங்கத்திற்கும்,
திருச்சிக்கும் காலரா, மாரியம்மாளை அனுப்பிவிட்டாராம். இனி அங்கு வரும் எத்தனை பக்தர்கள் அந்தப் பிரசாதத்தைக் கொண்டு போய் எந்தெந்த ஊர். பக்தர்களுக்கு வினியோகிப்பார்களோ தெரியவில்லை.
குடி அரசு - செய்தி விளக்கம் - 2112.1930
325 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
ஆஸ்திகர்களே எது நல்லது?
கல்லில் தெய்வம் இருப்பதாகக் கருதி, அதற்கு ஒரு கோவில் கட்டி, அந்த சாமியை வணங்க தரகர் ஒருவரையும் வைத்து அந்த கல்லுச்சாமிக்கு மனிதனுக்கு செய்யும் அல்லது மனிதன் தான் செய்து கொள்ளும் மாதிரி யாகவெல்லாம் செய்து, அதற்கு வீணாக பணத்தை பாழாக்கி நேரத்தை வீணாக்குவது நன்மையானதா?
அல்லது மனிதனிலேயே தெய்வம் இருப்பதாகக் கருதி அதற்கு அந்த மனிதனையே தரகராக வைத்து தனக்கு வேண்டியது போலவும் தான் பிறர். தன்னிடத்தில் நடக்க வேண்டுமென்று கருதுவது போலவும் அந்த மனிதனுக்கு செய்து அவனிடத்தில் நடந்து கொள்வது நல்லதா?
குடி அரசு - கேள்விகள் - 21.12.1930
குடி அரசு - 1930 (2) 326
Canaimipuigy எண்ண?
இந்திய தேசிய காங்கிரசு என்பது எதற்காக ஆரம்பிக்கப்பட்ட தென்ற ரகசியம் இப்போதைய அனேக “தேசியவாதிக”ளுக்குத் தெரியாதென்றே சொல்லுவோம்.
அது ராஜ வாழ்த்துப் பாடி, முதலில் ராஜ விஸ்வாசத் தீர்மானம் செய்து பிறகு உத்தியோகங்களை உண்டாக்கி தங்களுக்கே கருணை கூர்ந்தளிக்க வேண்டும் என்று தீர்மானித்து பிறகு அவ்வுத்தியோகங்களை எப்படி எப்படி உற்பத்தி பண்ணுவது என்பதற்கு வழிகள் காட்டுவதும், இவைகள் எல்லாம் பொது ஜனங்களுக்காக, தேசியத்திற்காக, பொது ஜனங்கள் பேரால் கேள்ப்பதாய் இருக்க வேண்டுமென்பதற்காக பொது ஜனங்கள் ஏமாறும்படி யாக இரண்டொரு தந்திர வார்த்தை சொல்லி அவர்களை அழைத்து வைத்து கை தூக்கும்படி செய்து, அவர்கள் பேரால் சர்க்காருக்கு அறிக்கை செய்வ தற்குமே காங்கிரஸ் ஏற்படுத்தப்பட்டு நடை பெற்று வந்தது. இதன் உண்மை யை உணரவேண்டுமென்பவர்கள் காங்கிரசு நடவடிக்கைகள் என்ற புத்த கத்தை சுதேசமித்திரன் புத்தகக் கடையில் வாங்கிப் பார்த்தால் விளங்கும்.
இப்படிப்பட்ட இந்த காங்கிரசானது சர்க்காருக்கு மிகவும் அனு கூலமாயிருந்ததால் அதாவது தங்கள் குடி ஜனங்களில் பலரை அதுவும் எழுதப் படிக்கத் தெரிந்த சற்று அறிவுள்ளவர்களை எல்லாம் தாங்கள் குடிகள் பணத்தில் விலைக்கு வாங்கி தங்களுக்கு அடிமையாக்கிக் கொள்ளவும், அவர்களைக் கொண்டே தாங்கள் இங்கு நிலைத்திருப்பதர்க்கு வேண்டிய காரியங்கள் செய்து கொள்ளவும் அனுகூலமாயிருந்தது. அது மாத்திர மல்லாமல் அரசன் என்பவன் எந்தெந்த விதத்தில் குடிகளுக்கு பொறுப் பாளியாய் இருக்க வேண்டுமோ அந்த பொறுப்புகளுக்கெல்லாம் குடிகளை ஜவாப்புதாரியாக்கி விட்டு தன்னுடைய சுயநலகாரியமும் குடிகளின் பிரதிநிதிகளே போட்டி போட்டு செய்து கொடுக்கத் தயாராயிருக்கவும் செய்து விட்டது. அதோடு புதிய புதிய சீர்திருத்தக் கிளர்ச்சிகளும்; தேசியக் கிளர்ச்சி களும் அந்த காங்கிரசிலிருந்தே புறப்பட்டு வந்ததால், அவையெல்லாம் அரசாங்கத்தை ஆட்டி, ஆட்டி கூறு குத்தி பலப்படுத்துவது போல், அரசாங் கத்துக்கு ஆக்கமளித்து அதை நிலையாக நிலை நிறுத்திக் கொண்டும் வந்தது.
327 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இப்படியான முயர்ச்சிகளிலேயே ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களும்
இருந்து வந்ததால், மேலும் மேலும் அந்த நிலை வளர்வதற்கு இடம் ஏற்பட்டதே ஒழிய, பொது மக்களுக்கு நன்மை யுண்டாகும்படியான காரியம் ஒன்றுமே காணமுடியவில்லை. காணப்படாதது மாத்திரமல்லாமல் பொதுஜன நன்மைக்கு ஆன காரியம் என்ன என்பது கூட தெரியமுடிய வில்லை. உதாரணமாக இன்றைய தினம் பொது ஜனங்கள் பல காரணங் களால் எவ்விதத் தியாகத்திற்கும் தயாராயிருந்தாலும், அவர்கள் எதை வேண்டி என்ன காரியத்தை எதிர்பார்த்து தங்களது ஊக்கத்தை செலவழிப்ப தென்றே தெரியாமல் விழிக்கின்றார்கள். இதற்கு உதாரணம், இன்றைய தினம் இந்தியாவில் இருந்து சீமைக்குச் சென்றிருக்கும் வட்டமேஜை மகாநாட்டு பிரதிநிதிகளையும் அவர்களது வார்த்தைகளையும் பார்த்தாலே தெரிய வரும். மற்றபடி இங்குள்ள தேசியத் தலைவர்களோ தாங்கள் சீமைக்கு போவதற்கு
சந்தர்ப்பம் ஏற்படாமல் போனதே தாங்களும் தங்கள் மூதாதை களும் “முன் ஜன்மத்தில் செய்த பூஜா பலன்” என்று கருதிக் கொண்டிருக் கின்றார்கள். திரு. காந்தி அவர்களும் வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போகாமல் தப்பித்துக் கொள்ள பிரயாசைப் பட்ட தெல்லாம், அங்கு போய் என்ன கேழ்ப்பது என்கின்ற கஷ்டமும், அதற்காக வெள்ளைக்காரர்கள் கேள்விக்கு என்ன
பதில் சொல்லுவது என்கின்ற நடுக்கமுமேபோக வொட்டாமல் இருக்க வேண்டியதாய் விட்டது. மீறி ஏதா வது தங்களை சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமாய் போயிருந்தாலும், தங்களில் ஒருவருக்கொருவர் அடிதடி போட்டுக் கொள்ளும்படியாய் நேருமே, வகுப்புத் தகராறுக்கு என்ன செய்வது என்கின்ற பயமும் கண்டிப்பாய் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவே முடியாமல் செய்து விட்டது. இங்கிலாந் தில் இன்று இந்து முஸ்லீம் சண்டையே பலமாய் இருப்பதால் எல்லோரு டைய நேரத்தையும் அதுவே கவர்ந்து கொண்டதால் வேறு மற்ற வர்கள் சண்டையைப் பற்றி நினைக்கவே
நேரமில்லை..
இது முடிந்த பிறகே, சுதேச மன்னர்களுக்கும், இந்திய சீர்திருத்தத் திற்கும் உள்ள சண்டைகள் புறப்படும். அதுவும் முடிந்த பிறகு பார்ப்பனர். அல்லாதார் முதலிய தத்துவ சூட்சிச் சண்டைகள் புறப்படும். ஆகவே இந்த சண்டைகளே பிரதானமாகவும் இது சம்மந்தமான சூட்சிகளே கவலை யாகவும் இருக்குமே ஒழிய இந்தியாவுக்கு பொதுவாக வேண்டியது எது என்பது ஒருவருக்கும் தெரியவும் தெரியாது. அது அவர்களுக்கு புலப்படப் போவது மில்லை.
போனவர்கள் போக இந்தியாவில் இருக்கும் தேசீயவாதிகளோ “ஓடினவனுக்கு ஒன்பதாமிடத்தில் சனி, இருந்தவனுக்கு எட்டாமிடத்தில் சனி” என்பது போல் திகைக்க வேண்டியதாயிருக்கின்றனர்.
குடி அரசு - 1930 (2) 328
அதாவது, என்ன செய்வது என்பதே தெரியாமல் “ஏதாவது ஒரு விதத்தில் சர்க்காருக்கு தொந்திரவு கொடுக்க வேண்டியது நமது கடமை” என்பதைத் தவிர வேறெவ்வித குறியும் இல்லை. உதாரணமாக பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது போல் உப்புக் காச்சலாமா? பாரஸ்ட்
சட்டம் மீறலாமா? கள்ளுக்கடை மறியல் செய்யலாமா? ஜவுளிக் கடைமறியல் செய்யலாமா? சர்க்கார் வாங்கிய கடனை மறுக்கலாமா? வரி கொடுக் காமல் இருக்கலாமா? சென்சஸ் பகிஷ்காரம் செய்யலாமா? சர்க்கார் ஏதாவது ஒன்று. வேண்டாமென்று சொன்னால் அதை வேண்டுமென்றே மீறி செய்ய லாமா? கொடியேற்றலாமா? கொடியை வணங்கலாமா? தக்ளி சுற்றலாமா? என்பன முதலாகிய மற்றும் இவை போல ஏதாவதொன்றைச் செய்யலாமா என்பதைத் தவிர. ஜனங்களுடைய நன்மைக்கான காரியம் என்பதாக ஏதாவது ஒன்றைக் கண்டு பிடித்து அதைச் செய்யலாமா என்கின்ற கவலையோ லக்ஷியமோ இல்லாமல் வெறும் கலாட்டாவில் பத்திரிகை களில் பிரமாதப்படுகிறதே அல்லாமல், உருப்படியான காரியம் எதையும் காண எவராலும் முடியவில்லை. வீணான வழியில் ஊக்கமும் உணர்ச்சியும் போய்க் கொண்டிருக்கின்றன. படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசியல் வாதிகள், தேசியவாதிகள், தேசபக்தர்கள் ஆகியவர்கள் காரியங்கள் தான் இப்படி இருக்கின்றனவே என்று நினைத்தால் இவர்கள் தவிர மற்றவர்களான பொதுநலத்தில் ஜீவகாருண்யத்தில் - தர்ம காரியத்தில் கவலை கொண்டமற்ற கனவான்களின் செய்கைகளும் கைங்கரியங்களுமோ இதைவிட மோசமான காரியமாகவே இருக்கின்றன. பொதுக் காரியம் என்பதே நமது நாட்டில் கோவில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது, பழய கோவில்களை பழுது பார்க்கும் திருப்பணி செய்வது, கும்பாபிஷேகம் செய்து அதிக நாளாய் விட்டதே சாமியின் சக்தி குறைந்து இருக்குமோ என்று சந்தேகத் திற்காக ஒரு கும்பாபிஷேகம் செய்து அந்த சாமிகளுக்கு வாகனம்,ரதம், தேர், உற்சவங்கள் முதலியவைகள் செய்வது,சத்திரம் கட்டி வருகின்ற பக்தர் களுக்கு பிராமணர்களுக்கு சாப்பாடு போடுவது, வேதபாடசாலை, தேவார பாடசாலை முதலியவை கட்டுவது, லக்ஷப்பிராமண சமாராதனை, லக்ஷத் தீபம் முதலியவைகளை செய்விப்பது ஆகிய காரியங்களே பொது தர்மமாக நடைபெறுகின்றன.
ஏதாவது மக்களுக்கு பிரசாரம் செய்வது என்றாலோ ஆடு, கோழி, மீன் சாப்பிடக் கூடாது, சாப்பிட்டால் நரகம் என்றும், திருநீரு பூசினால் பாவமெல்லாம் போகும் என்றும், மற்றும் இதுபோல் பிரசாரம் செய்வதும், பொது ஜனங்களுக்கு ஏதாவது ஒழுக்கம் கற்பிக்க வேண்டுமானால் ராமாய ணம், பாரதம், பாகவதம், திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்கள் படிப்பதன் மூலம் ஒழுக்கங்கள் கற்பிப்பதும் ஆகிய காரியங்களே மற்றவர்.
கள் பிரபுக்கள் நாகரீகமடைந்தவர்கள் ஆகியவர்களின் பொதுநல சேவை
யாக இருக்கின்றன.
329 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்று வேண்டியது இன்னது என்று அறிந்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்பதை வாசகர்களையே யோசித்து உணரவிட்டு விடுகின்றோம். ஆகவே தேசபக்தியும், கடவுள்
பக்தியும் மனிதனை சுயநலஸ்தானாகவும், கண்மூடித்தனமாய் பின்பற்ற வேண்டியதாகவும் செய்கின்றதே தவிர மனித சமூகத்தின் நாட்டின் முன்னேற்றத்தின் ஏ, பி, சி, டி யைக் கூட காணச்செய்ய முடிவதில்லை. தேசபக்தி என்கின்ற வார்த்தையே வெள்ளைக்காரன் ராஜ்ஜியத்தில் உத்தியோகம் சம்பாதிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதல்லால் வேறு எதற்காக வாவது ஏற்படுத்தப் பட்டு வேறு ஏதாவது பலன் கொடுத்தது என்று யாராவது ஒற்ற விரலை நீட்டமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.தேச பக்தியும் கடவுள் பக்தியும் மனித சமூகத்திற்கு என்ன பலனைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கின்றது? அல்லது கொடுத்தது என்றாவது யாராவது சொல்ல முடியுமா?
மற்ற தேசத்தாரெல்லாம் விடுதலையடைய சுதந்தர மடைய இந்த மாதிரிதான் நடந்தார்களா? என்று கேள்க்கின்றோம். மக்கள் முன்னேற்றம் அடையவும் அவர்களது கஷ்டமும் சரீரப் பிரயாசையும், அடிமைத் தனமும், ஒழியவும்
மனிதத் தன்மை இன்னது மனிதனுடைய இயற்கைத் தன்மை இன்னது என்பவைகளை உணர்த்தி அவைகளை அடையச் செய்வது கவலையற்று வாழச் செய்வதற்கு இதுவரை யார் என்ன கவலை எடுத்து என்ன காரியம் செய்திருக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் பொது நலத்திற்குப் பாடுபடுகின்றேன் என்கின்ற ஏணியின் மூலம் சுயநலத்திற்கு போகின்றானே அல்லாமல் உண்மையான பொது நலத்துக்காக வேலை செய்வதற்கு யார்: இருக்கின்றார்கள்? இருந்தார்கள்? அல்லது அதற்காக வேண்டியது என்ன என்றாவது யார் அறிந்தார்கள்? வீணே சுயநலமும் குருட்டு நம்பிக்கையும் கொண்டவர்கள் செய்கையானது பல வழிகளிலும் இன்றய தினம் நாட்டை, ஜன சமூகத்தை பாழாக்கிக் கொண்டு வருகின்றதை தவிர வேறு ஒரு
காரியமும் காண முடியவில்லை. இந்த லக்ஷணத்தில் யாராவது உண்மையைச் சொல்ல வந்தால், அவர்களை தேசத்துரோகி என்றும் நாஸ்திகன் என்றும் மூளாவணம் பேசுவதிலும் குறைவில்லை...
ஆகவே இந்த சமயமானது பொது ஜனங்கள் நன்றாய் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து முடிவுக்கு வரவேண்டிய ஒரு முக்கிய சமயம் என்பதை மாத்திரம் குறிப்பிட்டு வலியுருத்தி விட்டு இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.12.1930
குடி அரசு - 1930 (2) 330
கல்யாணத்து தீர்மாணம்
ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாகரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாக தெரிய வருகிறது. அன்றியும் 3 மணி நேரம் அத் தீர்மானத்தின் மீது பல பெண்கள் கூடி பலமான வாதப் பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்று விட்டாலும் கூட இந்த சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெண்கள். விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக்கின்றது. ஏனெனில் கல்யாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளை காதினால் கேள்க்கவே நடுங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆண்களுக்கு அடங்கி அடிமையாய் கிடந்து வந்து பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிரருக்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும். அவர்களையெல்லாம் “கடவுள்” போலவே பாவிக்க வேண்டு மென்றும், கணவன் குஷ்ட்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய், அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லக்ஷணமென்றும். பெண்க ளுக்கு கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில், கல்யாண ரத்து என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்கு சுதந்திரம் என்றும் சொல்லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும், அதுவும் பெண்க ளாலேயே அதைப் பற்றி பலர் பேசி வாதப்பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படு வதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல. அது மாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும்படி அதற்கு ஓட்டு கிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்து கூடிய சீக்கிரம் பெண்ணுலகு விடுதலை பெற்று விடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21121930
331 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
பெ. சி. சிதம்பர நாடார் €ேவஸ்தானக் கமிட்மு வமம்பர்
றாமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டிக்குக் காலியான ஒரு ஸ்தானத்
திற்கு நாடார் கனவான் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று பொது ஜனங்கள் விரும்பியதும், மேற்படி தேவஸ்தானக் கமிட்டி தலைவர் சுயமரியாதை வீரர்.
திரு. எஸ். ராமசந்திரன் அவர்கள் கண்டிப்பாய் ஒரு நாடார் கனவானையே நியமிக்க வேண்டுமென்று தேவஸ்தானப் போர்டை வற்புறுத்தி நாடார் குல மித்திரன் பத்திராதிபர் திரு. ௯ ஆ. முத்து நாடார் அவர்கள் பெயரை எடுத்துக் காட்டி இருந்ததும் நேயர்கள் அறிவார்கள். ஆனால் திரு. முத்து நாடார் அவர்கள் பெயர் ஓட்டர் லிஸ்டில் இல்லாததால் போர்ட் இலாக்கா மந்திரி அவர்கள் வேறு ஒரு நாடார் கனவான் பெயரை சிபார்சு செய்யும்படி கமிட்டித் தலைவர் திரு. ராமச்சந்திரன் அவர்களை கேட்டிருந்ததற்கு ஒப்ப அவர். விருதுநகர் பாத்திர வியாபாரம் திரு. பெ. சி. சிதம்பர நாடார் பெயரை தெரிவிக்கவே இலாக்கா மந்திரி அவர்கள் திரு. சிதம்பர நாடார் அவர்களை நியமித்திருப்பதாய் தெரிய நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
திரு. சிதம்பர நாடார் அவர்கள் ஒரு சுயமரியாதை வீரர். விருதுநகர்.
நாடார் சமூகத்திற்கே முதல் முதல் சுயமரியாதைக் கொள்கைகளை அனுஷ்
டிக்க வழி காட்டியவர்.15,20 ஹு காலமாகவே பொதுக்காரியங்களிலும் சமூக முன்னேற்ற விஷயங்களில் மிகவும் ஊக்கமாய் உழைத்து வருபவர். முனிசி பாலிட்டியிலும் மற்றும் சமூக விஷயங்களிலும் அறிய வேலை செய்தவர். ஆகவே இப்படிப்பட்ட கனவான் தேவஸ்தானக் கமிட்டிக்கு நியமிக்கப் பட்டதில் அதுவும் இராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டிக்கு நியமனம். பெற்றதில் நமக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும். எதை உத்தே சித்து? என்றால் இன்று நம் நாட்டில் உள்ள தேவாலயங்கள் எல்லாம் ஜாதி பிரிவையும், உயர்வு
தாழ்வையும் நிலைநிறுத்தி அவற்றிற்கு ஆக்க மளிப்பதற்கு உரைவிட மாயிருப்பதால் அவ்வித ஜாதி வித்தியாசத்தையும், உயர்வு தாழ்வையும் அடியோடு அழிப்பதற்கு திரு. பெ. சி. சி. அவர்கள் இவ் வேலையை உபயோகித்து சுயமரியாதை வீரர் திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்களுக்கு பூரண உதவியாய் இருப்பார் என்பதை உத்தேசித்தேயாகும். இவரை நியமிக்க
குடி அரசு - 1930 (2) 332
உறுதி கொண்ட முன்னைய இப்போதைய இரண்டு மந்திரிகளையும் பாராட்டுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.12.1930
333 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நம்பிக்கை இல்லாத் தீர்மாணத்தின் தலைவிரி தாண்டவம்
மதுரை சேர்மென் திரு. ஆர். எஸ்.நாயுடு அவர்கள் மதுரை முனிசிபல் கவுன்சிலில் ஏற்பட்ட ௧௯௮ பிரதி கக்ஷியினால் தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அப்படியிருந்தும் அதை லக்ஷியம் செய்யாமல் எதிர்ககஷி கவுன்சிலர்கள் 19 பேர் கூடியிருந்து ஏகமனதாக அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள். இவரின் கை மிகவும் சுத்தமானது என்றாலும் ௧௯9 பிரதிகக்ஷி அதை கவனிக்க முடி யாமல் செய்து விட்டது. இப்போது திரு. துளசிராம் பி.ஏ., பி.எல். அவர்கள் ஏக மனதாய் மதுரை முனிசிபல் சேர்மெனாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு 157900 ரூபா சம்பளமும் 100 ரூ.அல்லவன்சும் உண்டு.
திண்டுக்கல் சேர்மென் திரு. சோலை நாடார் அவர்களும் கக பிரதி
கக்ஷி காரணமாக தனது சேர்மென் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இவரும் மிக்க பரிசுத்தமும் நாணயமும் உடையவர். நம்பிக்கையில்லாத தீர்மானச் சட்டம் ஏற்பட்டு கொஞ்ச காலமே ஆனதால் அது இன்னமும் சரியானபடி பிரயோகிக்கப் படத்தக்க யோக்கியதை அடைய முடிய வில்லை. யோக்கியர்களும் கை பரிசுத்தமுள்ளவர் களும், அதற்கு பலியாகி வருகிறார்கள். இதற்கு காரணம் நம்பிக்கையில்லாத் தீர்மான சட்டமல்ல. மற்றென்னவென்றால் மந்திரி பதவிகளின் போட்டியால் ஏற்பட்ட பலன் களேயாகும்.
இருந்த போதிலும் புதுச் சட்டப்படி அமைக்கப்படப் போகும் ஸ்தல ஸ்தாபனங்களில் அது தகுந்தபடி பிரயோகிக்கப்படும் என்று கருதுகின்றோம். இப்பொழுது மந்திரி பதவி அடைய போட்டி போடும் பலராலும் நாமி. னேஷன் கவுன்சிலர்களே பெரிதும் கவுன்சிலுக்குள்ள கலகத்திற்கு காரண மாயிருப்பதால் இன்றைய நாமினேஷன் முறை இருக்கும் காரணம் சரியாய் பயன்பட முடியாமல் இருக்கின்றது. ஆதலால் சீக்கிரம் புதிய சட்டப்படி முனிசிபாலிட்டியும், போர்டும் அமைக்கப்பட ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21121930
குடி அரசு - 1930 @) 334
சுயமரியாதைத் தனைனர்
சுயமரியாதைச் சங்கத்தின் தலைவர் உயர் திரு. WPA. செளந்திர பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியை க்ஷண நேரத்தில் ராஜினாமா செய்து உண்மைச் சுயமரியாதைக்கு உதாரண:
மாய் விளங்கிவிட்டார். திரு. பாண்டியன் அவர்கள் அந்த ஸ்தானத்தை ஒரு போதும் விரும்பினதேயில்லை. அவரது நண்பர்களின் வலியுறுத்தலுக் காகவும், ஒரு கொள்கைக்காகவும் அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவுமே அதை ஒரு ஆயுதமாக ஒப்புக் கொண்டது முதல் அந்த வேலையை மிக்க நீதியுடனும், பொறுப்புடனும், சுயமரியாதை யுடனும் யாருடைய தயவு தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல், தனக்குச் சரியென்று தோன்றியபடி நடந்து வந்தார். முக்கியமாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும் தன்னால் கூடியவரையில் அதன் மூலம் நன்மை செய்து வந்தார். பணக்காரர் ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் அதிகாரத்தையும், சலுகையையும் பிரயோகித்து வந்தார். பணக்காரர்கள். குற்றத்தை எடுத்துச் சொல்லுவதிலும், அவர்களின் பணத்திமிரான காரியங்களைக் காண்பதிலும், சிறிதும் பின் வாங்காது ஜாதித்திமிர்காரரைக் கண்டிப்பது போலவே தைரியமாய் கண்டித்து நட வடிக்கை நடத்தி வந்ததோடு அவர்களுக்கு அடிக்கடி புத்தி புகட்டியும் வந்தார். அப்பதவியின் மூலம் சுயமரியாதைக் கொள்கையை பல விஷயங் களில் நடை முறையில் நடத்திக் காட்டினார். தனக்கென்று வேறு தொழில் ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் தனது முழு நேரத்தையும் அதிலேயே செலுத்தி வந்தார். இவை மாத்திர மல்லாமல் எந்த நிமிஷத்திலும் “நாளைக் கும் அந்த வேலையில் இருக்க வேண்டும்” என்றாவது மறுபடியும் அதை அடையவேண்டு மென்றாவது கருதாமல் ஒவ்வொரு நிமிஷமும் அந்தப் பதவியை அலட்சியமாய் கருதிக் கொண்டே நடுநிலையிலிருந்து பிசகாமல் தான் செய்ய வேண்டிய காரியங்களை துணிவுடன் செய்து வந்தார். (இவ் வளவு காரியங்களும் சர்க்கார் நியமனத்தின் மூலம் அப்பதவி கிடைத்ததி னாலேயே தான் செய்ய முடிந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகின்றோம். ஏனெனில்
தேர்தல் மூலம் பதவி பெற்றிருந்தால், அங்கத் தினர்களுக்கு விலை கொடுத்தோ, வியாபாரம் பேசியோ அடிமைப்பட்டோ அடைந்தி ருக்க
335 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
வேண்டுமாதலால் இவ்வளவு சுயேச்சையோடும், சுயமரியாதை யோடும், நாணயத்தோடும், நீதியோடும் இருந்திருக்கவே முடியாது) இப்படிப் பட்ட ஒரு பெருமையும் நீதியும் வாய்ந்த கனவானின் நிர்வாகம் சிலருக் காவது தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமில்லாமல் போவ தில் ஆச்சரிய மொன்றுமில்லை.
அதுமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் இயக்க அரசியல் வானம் கருத்து அடித்த சண்டமாருதத்தால் பொதுக் கட்டுப்பாடு நாணயம் ஆகியவைகள் சின்னாபின்னப்பட நேர்ந்து. சுயநலமும், பேராசை யும் நாட்டில் தாண்டவமாடியதின் பயனாய் நடந்த நிகழ்ச்சிகள் நம்பிக்கை யில்லாத் தீர்மானங்களுக்கு அதிகமான தலைவிரி கோலம் ஏற்பட்டு அதைச் சுலபமாய் யாரும் கையாடும்படி செய்து விட்டது.
ஆகவே அது உசிதா உசிதமில்லாமல் கையாடப்படும்படியாக ஆனதும் அதிசயமல்ல. இந்த நிலையில் சிலர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் மீது அதை பிரயோகிக்கக் கருதி அது வெளிப்பட்டால் தங்களுக்கு ஆமோதிக்கவும், ஆதரிக்கவும் கூட நபர்கள் கிடையாதென நினைத்து வெகு பத்திரமாக இரகசியத்திலேயே ஏற்பாடு செய்து திடீரென்று கொண்டு வந்திருப்பதாகத் தெரிகின்றது.
இத் தீர்மானம் வருமென்று தெரிந்திருந்தால், உடனே முன்னமேயே ராஜினாமா செய்திருப்பார். வெறும் மந்திரி சம்மதமான கட்சி காரணமாய் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தவிர திரு. பாண்டியன் அவர்கள் நிர்வாகத்தைப் பற்றி சிறிதாவது அதிர்ப்தி அடைந்து அதனால் கொண்டு வரப்பட்டது என்று யாராலும் சொல்லமுடியாது.அவரது நிர்வாகத்தில் யாரும்
எந்தச் சமயமும் மீட்டிங்கில் அதிர்ப்தி பட்டதாக காட்டினதே கிடையாது.
உதாரணமாக சமீபத்தில் ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் திரு.மெக்வீன் அவர்கள் மீட்டிங்கில் ஒரு காரியத்தில் பிரசிடெண்டின் நடவடிக் கைக்கு அதிர்ப்தி காட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கவோ ஆமோதிக்கவோ கூட அந்த கூட்டத்தில் ஒரு மெம்பரும் இல்லை. ஜில்லா கலெக்ட்டரை அனுசரித்துப் பேசக் கூட ஆளில்லை. இது வரை எந்தப் பத்திரிகைகளாவது அவரது நிர்வாகத்தை ஆக்ஷேபித்தோ, அதிர்ப்தி காட்டியோ அல்லது கட்சிவாதம் நடந்ததாகவாவது காட்டியோ ஒரு வரியும் எழுதப்பட்டதாக சொல்ல முடியாது. அவர் நிர்வாக நேர்மைக்கு ஒரு சிறிய உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் காட்டுவோம். அதாவது “எந்த மோட்டார் பஸ் காரராவது தீண்டப்படாத மக்கள் என்பவரை பஸ் ஸில் ஏற்றிச் செல்ல மறுத்தால் அந்த பஸ் லைசென்ஸ் கேன்சில் செய்யப் படும்” என்று * உத்திரவு போட்டார். பள்ளிக் கூட விஷயங்களில் தாழ்த்தப் பட்டமக்களைச் சேர்க்காத பள்ளிக்கூட உபாத்தியாயர்களையெல்லாம் மாற்றியும், தண்டித்தும் சர்வ சாதாரணமாக எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் யாரும் படிக்கும் படியாய் செய்தார். நாட்டுக் கோட்டை நகரத்தார் விஷயங் களில் பணக்காரர்களை விட
குடி அரசு - 1930 (2) 336
சாதாரண மக்களிடமே அதிக நேசம் வைத்தும் சீர்திருத்த வாலிப உலகத்திற்கு உர்ச்சாகத்தை தந்து அவ்வகுப்பில் அநேகருக்கு “பணமே எல்லாம் செய்யவல்லது” என்கின்ற உணர்ச்சியை மாற்றி, அன்பைப் பெருக்கி வந்தார். வைதீகர்களிடமும் பணக்காரர் களிடமும் பேசும் நேரமெல்லாம் தனக்கு மிக்க கஷ்டமாக இருப்பதாகவே இருக்கும். வாலிபர்களிடமும், சாதாரண மக்களிடமும், தாழ்த்தப்பட்ட மக்க ளிடமும் பேசும் நேரத்தையே மிக்க உர்ச்சாகமாகக் கருதுவார். இப்படிப் பட்ட குணமுள்ள ஆட்சியில்
வைதீகர்களுக்கும், செல்வந்தர்களுக் கும், பிரபுத்தனக்காரருக்கும் அதிருப்தி ஏற்பட்டதும் நம்பிக்கை இல்லை என்று சொல்ல வேண்டி வந்ததும் திரு. பாண்டியன் அவர்களுக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரமாகும். இதன் மூலம் மற்ற மெம்பர்கள் போர்டிலிருந்து சீர்திருத்த உலகத்திற்கும், சுயமரியாதை உலகத்திற்கும், சமதர்ம உலகத்திற்கும் தொண்டு செய்ய திரு. பாண்டியனை உதவியது ஒரு பெரிய உபகாரமே யாகும். ஆதலால் இந்த நிலை ஏற்பட்டதற்கு நாம் உண்மையாகவே மகிழ்ச்சியடைகின்றோம்.
திரு. பாண்டியன் அவர்கள் பெரிய தனவந்தர். அதாவது வருஷம் 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை வருவாயுள்ள செல்வக் குடும் பத்தைச் சேர்ந்தவர். ஆகவே அவர் தனக்கு பணமில்லாததால் பணக்காரரை: வெறுத்தார் என்று யாரும் சொல்லி விட முடியாது.
திரு.பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லாபோர்டுத் தலைமைப் பதவியில் பட்டுக் கொண்டதாலும், மற்றும் அரசியல் தொல்லை யாலும் சுயமரியாதை இயக்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதே தவிர, அதாவது அவர். வெளியில் இருந்தால் எவ்வளவு பலன் ஏற்பட்டு இருக்குமோ, அவ்வளவு பலன் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.
இது நிற்க, ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதும், சீர்திருத்தம் என்பதும், அரசியல் சுதந்திரம் என்பதும் நாட்டிற்கும், பாமர மக்களுக்கு ஏழை மக்க ளுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு தூரம் பயனளிக்கக் கூடியதா யிருக்கின்றது என்பதை பொது ஜனங்கள் அறிய இது ஒரு சந்தர்ப்பமாக ஏற்பட்டது மற்றொரு விதத்தில் மகிழ்ச்சியடையத் தக்கதாகும்.
ஆகவே இன்றைய தினம் இந்நாட்டில் பொதுஜனங்களுக்கு பிரதிநிதியாக பிரபுத்தனமும், வைதீகமும்தான் இருக்க யோக்கியதையுடைய அரசியல் சுதந்திரங்கள் இருக்கின்றனவே ஒழிய உண்மையான மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு எவ்வித சாதனம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
இது தவிர ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்கள் இந்த மாதிரி காரணங்களில் அடிக்கடி மாறி மாறித் தொல்லையடையாமல் ஒரே ரீதியில் நடைபெற வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு சுதந்திரமாய் நடக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் இருப்பாரானால் இம்மாதிரிக் காரியங்களால்
337 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
கொள்கைகள் மாறுபடாமல் இருக்கலாம். ஆனால் இன்று சட்ட சபையிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத் தலைமையிலும் ஒரே கனவான்கள் பெரிதும் இருப்பதால் அதை ஏற்படுத்த முடியவில்லை. ஆன போதிலும் இவை களுக்காக வெல்லாம் நம்பிக்கை இல்லாத் தீர்மானச் சட்டம் வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை.அது இருந்துதான் தீர வேண்டும். இன்றைய தினம் கக்ஷி பிரதிக்ககஷிகளால் மந்திரி போட்டிகளால், அரசியல் தகராருகளால் தான் இது வரை டை சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றதே தவிர நிர்வாகக் குற்றத்திற்குத் திறமைக்கு பிரயோகிக்கப் படவில்லை. இம்மாதிரி காரியங்களால் உடனே தலைமை ஸ்தானம் காலிசெய்யப்பட வேண்டியதும் ஒரு விதத்தில் அவசியமாகும். இல்லாத வரை இக் கக௯ஷிகள் நிர்வாகத்திற்குள் புகுந்து, ஸ்தாபனங்களை மிக்க கேவலமாக ஆக்கி விடும். இந்தக் குறிப்பிட்ட சம்பவம் கூட சுயமரியாதை உணர்ச்சியினால் ஏற்பட்ட தாகும். ஏனெனில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு போதிய மெஜார்ட்டி இல்லை என்பது உறுதியானாலும் இம்மாதிரி மனப்பான்மை உள்ள இடத்தில் இனி இருப்பது கொஞ்சமும் சுயமரியாதை அல்ல என்றே விலகி விட்டார். ஆனால் மற்ற சம்பவங்களில் மெஜாரிட்டி மெம்பர்கள் எந்தக் காரணத்தை கொண்டானாலும், ஒருவரை வேண்டியதில்லை என்று கருதிவிட்டால் அவர் மறுபடியும் அதிலேயே இருக்கும்படியாக இருந்தால் அந்த மெஜாரிட்டி மெம்பர்கள் தொல்லையால் நிர்வாகம் பாதிக்கப்படாதா என்று கேட்கின்றோம். மெஜாரிட்டிக்கு விரோதமாய் உள்ளே இருந்து எப்படி யாருடைய தயவின் மீது சமாளித்துக் கொண்டிருந்தாலும் அது சுயமரியாதை அற்ற தன்மையோடு, நிர்வாகம் பாழ் என்றே சொல்லுவோம். பொதுவாக பதவிகள் அடையும் மார்க்கமும் மந்திரிகளாய் வரப்பட்டவர் கள் நிலையும் இன்று இருப்பது போலவே என்றும் இருக்குமேயானால் கீழ் நிர்வாகங்களுக்கு எவ்வளவு பந்தோபஸ்து ஏற்படுத்தினாலும் இப்படித்தான். நடக்கும். சாதாரணமாக மந்திரிகளுக்குக் கூட இந்த நிபந்தனைகள் தானே இருக்கின்றது. அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால் விட்டு விட்டுப் போய் விட வேண்டும் என்பதாகத் தானே இருக்கின்றது. ஆகவே மேலுள்ளது போலவே தான் கீழ் இருப்பதும் இருக்கின்றது. ஆதலின் நாம் இதை மாத்திரம் குற்றம் சொல்வது ஒழுங்காகாது.
இவைகளையெல்லாம் நினைப்பதற்கு முன் ஜனநாயகம் நல்லதா, தனி நாயகம் நல்லதா, அல்லது பஞ்சாயத்து குடிஅரசு நாயகம் நல்லதா, என்று
முடிவு செய்வதில் தான் உண்மை நன்மை கிடைக்க முயர்ச்சி செய்ய முடியும்.
குடி அரசு - தலையங்கம் - 28.12.1930
குடி அரசு - 1930 (2) 338
* உயர்திரு. வனவுந்திரப்பாண்முமாரின்
உத்திரவு
ராமநாதபுரம் வில்லா யோர்டு
மோட்டார் கம்வபணி முகலானிகளுக்கு சவுக்கமு
ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர், மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குப் பின்வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கி
றார்கள். அது வருமாறு :-
“இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது “பஸ்களில்” ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும்
டிக்கட்டில், “ஆதிதிராவிடர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட் டாது” என்று நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகின்றோம். இவ் வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும். மிக அக்கிரம மானதாகவும் இருக்கிறது. ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுக்கவோ டிக்கட்டு
களில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை: செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்து ஒரு வாரத்துக்குள் அந்தத் தடை விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கட்டுடன் ரிப்போர்டு செய்து கொள்ளவேண்டும்.
339 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
காங்கிரஸ் தனைவர்கனிண் கோக்கியதை
வாலிபர்களுக்கு விருந்து
ருஷிய பொது உடமைக் கட்சிக்காரர் அன்னிய தேசப் பிரசாரத்திற் கென்று ஒரு இலாக்கா வைத்து தங்கள் கொள்கைகளை உலகமெல்லாம் பரப்ப
உத்தேசித்து அந்தந்த நாட்டுக்குத் தகுந்தபடி திட்டங்கள் ஏற்படுத்தி, அதை அந்தந்த நாட்டில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றார்கள். அந்த முறையில் இந்தியாவிற்கு என்று அவர்கள் வகுக்கப்பட்ட திட்டங்கள், லண்டன் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்ததின் சுருக்கம் சென்னை “இந்து” பத்திரிகையில் லண்டன் நிருபரால் தந்தியடிக்கப்பட்டு அப் பத்திரிகையில் பிரசுரமானதின் கருத்தை மொழி பெயர்த்து மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. அது வாலிபர்களுக்கு ஒரு விருந்தாகும், அதில் சில இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமானதென்று காணப்படா விடினும் காங்கிரசையும் இன்றைய இயக்கத்தையும், அதன் இயக்கத் தலைவர்களையும் பற்றிக் கூறியிருக்கும் குறைகளில் பெரும்பான்மை நமது அபிப்பிராயமும் ஆகும் என்பதோடு அதையே நாமும் பல தடவை எழுதி வந்திருக்கின்றோம். திட்டத்திலும் பெரும்பான்மை நாம் எழுதி வந்தவை களாகும். பொது ஜனங்களின் உண்மையான சுதந்திர உணர்ச்சி களைக்
கெடுத்து தொழிலாளர்களுக்கும் உழுகின்ற குடியானவர்களுக்கும் துரோகத் தைச் செய்தது காங்கிரசேயாகும் என்று நாம் பல தடவை எழுதியும், பேசி
யும் இருப்பதை பொதுவுடமைக் கட்சியாரும் ஒப்புக் கொண்டிருப்பதிலி ருந்தாவது இக்காங்கிரசினால் ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் பய னில்லை என்பதை எளிதில் உணரலாம்.
மற்றும் அதில் தலைவர்களைப் பற்றி எழுதியிருப்பவைகளுக்கோ நாம் அதிக வியாக்கியானம் எழுதத் தேவையில்லை என்று கருதி விட்டு
விட்டோம்.
காங்கிரசின் குற்றத்தையும் துரோகத்தையும் உணர்ந்தால் தலைவர் கள்
குற்றத்தையும் துரோகத்தையும் பிரித்துக் காட்ட வேண்டியதில்லை.
மற்றப்படி பணக்காரர்கள் சொத்துகளையும் பூமிகளையும் கோயில்,
குடி அரசு - 1930 @) 340
மடங்கள் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்பது மற்ற நாட்டுக்கு பொருந்தாவிட்டாலும், நமது நாட்டுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இங்கு சொத்துக்களை அடைவதற்கு பிறவியிலேயே ஜாதிகள். வகுத்து இருப்பதோடு, சிலர் பிறவியின் காரணமாகவே சொத்து அடை வதற்கில்லாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். சிலர் பிறவியின் காரண மாகவே சொத்துக்கள் தங்கள் வசம் வரும்படியாகவும் செய்து கொண்டிருக் கின்றார்கள். இந்தக் கொள்கைகள் மதத்தோடு சேர்க்கப்பட்டும் இருக்கின்றன. ஆகையால் இந்த மாதிரி நாட்டின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொதுச் சொத்தாக ஆக்க வேண்டிய கொள்கை ஆட்சியில் ஏற்பட வேண்டியது மிக
மிக அவசியமாகும்.
ஒரு நாட்டு சொத்து அந்த நாட்டுக்கு சொந்தமாகும். அந்த நாட்டு மக்கள் எல்லோருக்குமே சொந்தமானதாகும். அப்படி இருக்க அதை
தந்திரத்தாலும், கை பலத்தாலும், கடவுள் பேராலும், மதத்தின் பேராலும்,
கர்மத்தின் பேராலும், விதியின் பேராலும் ஒரு சிலரே அனுபவித்துக் கொண்டு பலர் ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதும் அதுவும் பிறவி காரணமாய் தந்திரத்தால் புரட்டால் இக் கொள்கையை நிலை நிருத்தி
வைத்திருப்பதும் அக்கிரமமேயாகும்..
இன்றைய தினம் தலைவிதியை நம்பாத உலக ஏழை மக்கள் எல்லா ருடைய உள்ளத்திலும் இருக்கும் உணர்ச்சி இதுவேயாகும்.
முடிவாக மற்ற விஷயங்கள் எது எப்படி இருந்தாலும் இந்திய காங்கிரசானது இந்தியாவின் 100க்கு 90 மக்களாகிய குடியானவர்கள் தொழி லாளிகள் ஆகிய இந்தியாவின் உண்மை மக்களுக்கு விரோதமானது என் பது மாத்திரமல்லாமல், பொது துரோகமானது என்பதையும் இன்றைய தலை
வர்கள் பொது விடுதலை எதிரிகள் என்பதையும் நம்மைப் போலவே சம தர்மவாதிகளும் கருதி இருக்கிறார்கள் என்பவற்றை மாத்திரம் அறிவிக்க
விரும்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.12.1930
34 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
சாமிக்கு வமுசத்தம் பிரார்த்தணை
திருவாங்கூர் ராஜியத்தில் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் வரும் வழியில் சாஸ்த்தா கோவில் என்று ஒரு கோவில் இருக்கின்றது. அந்த சாமிக்கு அந்த பக்கத்திய ஜனங்கள் தாங்கள் உத்தேசித்த காரியம் நிறை வேறினால் வெங்காய வெடி வேட்டுகள் இத்தனை போடுகிறேன் என்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம்.மோட்டார் பஸ்காரரும் அந்தப் பக்கம் பஸ் போகும் போதெல்லாம் வண்டியை நிருத்தி வெடி வேட்டுப் போட்டுச் செல் வது வழக்கம்.இந்த வேண்டுதலையை நிறைவேற்றும் விதம் எப்படி என் றால் ரோட்டுக்கும் கோவிலுக்கும் சுமார் 100, 150 அடி இருக்கும். ரோட்டு கோவிலை விட கொஞ்சம் மேடானது. இந்தக் கோவில் பூசாரிகளில் இருவர். ரோட்டில் மோட்டார் பஸ் செல்லுகின்ற பக்கம் வந்து நின்று கொண்டு ஒவ் வொரு பஸ் பிரயாணியையும் பார்த்து சாஸ்த்தா வெடி, சாஸ்த்தா வெடிகள் என்று கேழ்ப்பார். பிரயாணிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வேண்டு தலைக்கு தகுந்தபடி ஒன்று இரண்டு ஐந்து என்று இம்மாதிரி சொல்லி ஒவ்வொரு வெடிக்கும் ஒருச் சக்கரம் (திருவாங்கூர் நாணையம்) வீதம் அதாவது 7 பைசா வீதம் கணக்கு கொடுத்து விடுவார்கள். இதைப் பெற்றதும்
அந்த பூசாரி அங்கிருந்து உரத்த குரலில் இத்தனை இத்தனை வெடி என்று கத்துவான் அந்தப்படி கோவிலில் இருந்து வெடி சப்தம் கேழ்க்கும். அதாவது கோவிலில் உள்ள மற்றொரு பூசாரி வெங்காய வெடி பட்டாசை ஓங்கி நிலத்தில் அடிப்பதால் பெரிய சப்தம் கேழ்க்கும். வேண்டுதலைக் காரர்கள். ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கும்பிடு போட்டுவிட்டு பஸ்ஸில் ஏறிப் போய் விடுவார்கள். இந்தப்படி அந்தப் பூசாரிகளுக்கு தினம் 4, 5 ரூபாய்கள் வீதம் ஆதாயம் கிடைக்கும். ஆகவே பூசாரிகளின் ஆதாயத் திற்காக பக்தர்களின் பக்திக்கு எத்தனையோ மார்க்கங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
அவைகளில் பல இன்னமும் நம்நாட்டிலும் அநேகம் இருந்து வருகின்றன.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 28.12.1930
குடி அரசு - 1930 @) 342
அருஞ்கசால் வாருன்
பொறாமை
விரும்புதல் அளவுக்கு அதிகமாக உறுதியான சான்று
அபூர்வமாக, அரிதாக
நிலையற்றது
மருந்து, ஒளடதம் உருவம், உடல் கட்டளை, ஆணை
எழுந்தருளுமாறு மந்திரத்தால் தெய்வத்தை வேண்டி அழைத்தல் இடம், பற்றுக்கோடு இவை போன்ற கடைக்கண். வஞ்சனை
குலம் அய்யம், சந்தேகம் காப்பாற்றுகை:
விலை மலிவாக
சிட்டிகை, பெருவிரல் ஆட்காட்டி விரல்
சேர்த்து எடுக்கும் அளவு தூய்மை
தன் விருப்பாய், தானாக அன்புடைமை, அருளுடைமை
ஏற்றத் தாழ்வு
எடுத்துக்காட்டு கட்டு, பந்தம், துயர் அச்சமின்றி
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 11
நிஷ்டூரம். நேர்ச்சை
கொடுமை
நேர்த்திக் கடன்
பாதராவிந்தம் பாலாரிஷ்டம்
பாதத் தாமரை, காலடி குழந்தைப்பருவ தொடர் நோய் இன்னொரு செய்தியில் கவனத்தை செலுத்துதல்
பிராக்கு
ஊர்வலம்: நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில்
மிரவணை முறைதலை
திருமணத்திற்கு முன்பும் பின்பும் பெரும் பொருட்செலவில் செய்யப்படும்சடங்குகள் விதண்டா வாதம், பிறர்கூறுவதை.
மூளாவண்ணம்
மறுத்து தன்கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம்
மூலைவிதி வர்த்தமானம் விதாயம்
தலைவிதி நிகழ்காலம், தற்கால நிகழ்வுகள்
முடிவு பழமைவாதிகள், மாற்றம் விரும்பாதோர்.
யதாபிரியர்கள் ஜட்கா வண்டிக்காரர்
குதிரை வண்டிக்காரர், (பணமில்லாதவர்கள்?
3 ஆவது பாரம்
Third Form, 8 ஆம் வகுப்பு
குடி அரசு - 1930 @)
344