Kudi Arasu — 1930, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1930-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 10
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1930-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 288
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு சங்கீத மாநாடுடன் கூடுகிறது. பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் பட்டியலையும் பெரியார். வெளியிட்டார். இந்து மகாசபைத் தலைவராக இருந்தாலும் பம்பாய் மாகாண சட்டசபையில் தீண்டாமை ஒழிக்கும் தீர்மானம் கொண்டுவந்தமைக்காக எம்.ஆர். ஜெயகரை அழைத்து மாநாட்டுக்குத் தலைமை ஏற்கச் செய்தார். கவர்னரின் நிர்வாக சபை உறுப்பினராக கட்டாயம் ஒரு தாழ்த்தப்பட்டவரை: நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்திய பெரியார், தாழ்த்தப்பட்டவர்களை தேவஸ்தான போர்டு உறுப்பினராக்கிய முதல்வர் சுப்பராயனை இவ்வாறு பாராட்டினார்.
“தொட்டதற்கெல்லாம் தன் இஷ்டப்படி கைதூக்க இரட்டை மெஜா
ரிட்டி வைத்திருந்த ஜஸ்டிஸ் மந்திரியார் காலத்திலும் செய்வதற்குப் பயப்படும் படியான காரியங்களை தாராளமாகச் செய்யும்” சுப்பராயன் என்று அவரது பாராட்டு விரிந்தது. அதே சுப்பராயன் ஆட்சியில்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த தேவதாசி ஒழிப்பு மசோதா சட்டமானது. இதற்குப் பெரிதும் காரணமாக பெரியார் செயல்பட்டார். சைமன்குழு தாழ்த்தப்பட் டோருக்கான தனித் தொகுதியை கொள்கை அளவில் ஏற்றதை பெரியார். வரவேற்றார்.சிருங்கேரி சங்கராச்சாரி சந்திக்க விரும்பி பெரியாருக்கு கடிதம் எழுதியதும் இதே காலகட்டம்தான். கடிதத்தில் இடம் பெற்றி ருந்த * சனாதன தர்மத்தைக் கெடுக்காமல்” * கரும காண்டத்தில் உள்ள அவர வர் கடமையைச் செய்து” ¢ சாஸ்த்திரங்கள் இடங்கொடுக்கும் வரையில்” போன்ற நிபந்தனை களைச் சுட்டிக்காட்டிய பெரியார் இந்த சந்திப்பில் எந்தப் பயனும் இருக்காது என்று புறந்தள்ளினார்.
“இந்தியா ஒரு நாடா? அது சாதிகளின் காட்சி சாலையாக - மத கண்:
காட்சி சாலையாக - பாஷைகள் கண்காட்சி சாலையாகத் தானே இருக்கிறது” என்ற கேள்வியை உரையாற்ற அழைத்த வன்னியர் சாதி மாநாட்டிலேயே எழுப்பினார். ருஷ்ய மதப்புரட்சி என்ற முக்கியக் கட்டுரையும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது.
தனது தோற்றப்பொலிவுக்கு மெருகூட்டிய தாடியுடன் பெரியார் மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய காலம் இது.
- பதிப்பாளர்
குடி அரசு - 1930 0
IN(HATL_HBID
நாகர்கோவில் மகாநாடு
11
உ N oo oa e
தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்.
17
பூரண சுயேச்சைப் புரட்டு
20
செங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்
24
ஈரோடு ஆலயப் பிரவேசம்
25
மலேயா நாட்டு சுற்றுப்பயணம்
28
சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு
30
உதிர்ந்த மலர்கள்
33
35
மலாயா பிரயாணம்
மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்
40
42
“சித்திரபுத்திரன்” மானக்கேடான காரியம்
45
சுயமரியாதை மாகாண மகாநாடு
49
53
“குடி அரசு” சந்தாதாரர்களுக்கு ஓர் அறிவிப்பு ஓர்வேண்டுகோள்
55
உதிர்ந்த மலர்கள்
56
57
“தமிழ் நாடு” பூரண சுயேச்சைப் புரட்டு 11
59
64
ஸ்தல ஸ்தாபன மசோதா
ஸ்ரீமுகம்”
69
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
திரு. ஈ. வெ. ராமசாமியாருக்கு“ஸ்ரீ ஜக்த்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீமுகம்”
21.
22.
இரண்டு வைத்தியர்கள்
239.
“சித்திரபுத்திரன்”
உதிர்ந்த மலர்கள்
24.
சென்னை அரசாங்க உள் நாட்டு மெம்பர் பதவி
25.
காங்கிரஸ்
26.
பட்ஜட் என்னும் வரவு செலவு திட்டம்
27.
மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை
28.
காந்திப்போர்
29.
தேவதாசி ஒழிப்புச் சட்டம்
30.
31.
ஓர் மறுப்பு
32.
ஜஸ்டிஸ் ககஷி
சாரதா சட்டம்
33,
34.
ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
ஈரோட்டில் மகாநாடுகள்
35.
ரூபாய் இனாம்
36.
பொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம்
37.
கர்ப்பத்தடை
38.
இரட்டை வெற்றி
39.
40.
பூரண வெற்றி
விரதப் புரட்டு
41,
தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சுதல் சத்தியாக்கிரகம்
42.
“கடைசிப் போரின்” முதல் பலன்
43.
உதிர்ந்த மலர்கள்
44.
சங்கீத மகாநாடு
45.
46.
புதியமுறை விவாகம் ஆறாவது ஆண்டு
47.
குடி அரசு - 1930 0
கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள்
154
திரு. சி. ராஜகோபாலாச்சாரியாரின் சாமர்த்தியம்
162
சென்னையில் நிரபராதிகள் கொல்லப்பட்டனர்.
163
உதிர்ந்த மலர்கள்.
164
சிவகாமி - சிதம்பரனார் திருமண அழைப்பு
166
திரு. காந்தியார்
167
சிவகாமி - சிதம்பரணார் புனர் விவாஹம்
170
புரட்டு ஈரோடு மகாநாடு
172
173
உதிர்ந்த மலர்கள்.
182
ஒரு யோசனை
184
ஈரோடு மகாநாடு
188
தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்
193
அறிவிப்பு
194
5 ரூபாய் இனாம்
195
சேலம் வன்னியகுலகஷத்திரியர் மகாநாடு.
196
சுயமரியாதை மகாநாடு முடிவு
201
சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்.
209
ருஷியா விடுதலை அடைந்த விதம் கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா
213
217
மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு
224
திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி
228
திருடர் அல்லாவிட்டால் மூடர்.
249
சுயமரியாதை இயக்க அபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள் 252
சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை
255
உதிர்ந்த மலர்கள்
73.
261
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு சாவுமணி.
74.
265
சைமன் கமிஷன் யாதாஸ்து
75.
271
கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின். எட்டாவது ஆண்டுவிழா
272
சைமன்ரிப்போர்ட்டு
276
பார்ப்பனரல்லாதார் கட்சி
280
அருஞ்சொல்பொருள்
287
குடி அரசு - 1930 0)
" ol urt 016 சலிப்பிதி வலை 15 ©6 0:10.
ட 'வியயிகள் விளம்பர ல். 168 க: 1. தந்து கோட்லிமம் சதம் கதத 2 Ak v, வெராணம், னு நடந்த விளம்பரத்தக்கு தனி விகிநம்.
மால | ஈரோடு, சுக்வெ @ தை மீ 0 ௨ (10—1—1980) ஞாயிற்றுக்ழெமை: | மலர் 35 o வ T அயில ிகிமை! . இறை-சானை செல், ரங்களுநதர் சந்தோஷத் ள் * 1] வாச 4 » . B சுவாச காச் நிவாரணி. ஜனோபகாரி தைலம். & ரை ஒல்ல் டங்க் ஆரிசசிவாம்ளன பேச். துபை நிுவின்சனர், சனா! டத. அனத் மெத்தன * எ Bl சன்ஸ் சதைக் எ தலைக் ப ந்தன வநகத சனத் வன் எட் £ b e gty 2 elsanret, மக்கடைபு தொண்டையில் உண்டாரும். iy s, எிச்க் கை, புன் தவிடும், எதா
ஆச்சுசசுச௬௬௬ ச்க்கக்ளக்ளள்ககக்கள்கக
ப ல்க னர்தகைவப் 4 ல்க த சவற ஒர்த் நக. it el o Ly
s, சாய்க்க, புளிப்பு, அரக்மமத்தல் முதலி வியா இனன் 156 தேசத்து ககம. எற்படக்கடய 90 விகாநிகளும் நீரும், பண்ன வக் & I வல் e
த்தல் களா ன் கும் கடன கல் உ il தாதி ol சிதறின e கக்க சீர்களை & தரவும் மன் வகு உ கள் விங்கு கடல் ஒன் விலகு 8-0 S g வக்க s 186 இல்லாத ஆட்களே கலணிக்விபடமாப்டாது. i, நதவும்காக ஷால் ஹ், ன்
பார்ச ௨ ஈய்வு மருத்து." அதை i ஏம்ப்ம்ட எல் வீக்லி ரஸ் வினை கண்டல் என்கன
க றத ஒட வால் o O, கவுர் G தங் கெண்ட என்க ம. வடி செத்த ஒன்னாம் அனுக சவலை ச்
பதில் தழில் வெளில g “மோட்டார்கள் இயந்திச சாஸ்திரமும் அச்
அ அபோகப்பயிற்சிமுறையும். வில ரூபா 1-8-0 (s 115, வு 8 b ity மர் பலம் எழுப்ப வங்கம்.
© bk St T2 தெரு ணை ரத்ந,
கடவுள் கடவுளென காசைத்” தொவக்காதே
தென் இந்தயா மோட்டார் Bt க் ay s, சென்னை.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
குடி அரசு - 1930 0 10
நாகர்கோவில் மகாநா௫
சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவின் கீழ் திருவாங்கூர் சமஸ் தானத்தைச் சேர்ந்த நாகர்கோவிலில் டிசம்பர் 27, 28-ல் கூடிய அகில திருவாங்கூர் சமுதாயச் சீர்திருத்த மகாநாட்டின் சுருக்கமான நடவடிக்கை. களை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கிறோம். இம்மகாநாட்டைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன், நாம் அதற்குப் போகக் கூடாமல் போனதற்காக நமது சமாதானத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். இம் மகா நாட்டை நடத்துவதற்காக மாதக் கணக்காய் பெருமுயற்சி எடுத்து ஏற்பாடு செய்து வந்த திருவாளர் பி. சிதம்பரம் பி. ஏ. பி. எல். அவர்களின் விருப்பத் திற்கிணங்க நாமும் வருவதாக ஒப்புக் கொண்டதோடு நமது சவுகரியத்தை உத்தேசித்தே மகாநாடும் 2, 3 தடவை ஒத்திவைக்கப் பட்டதாயினும், திடீ ரென்று எதிர்பாராமல் மலேயா நாட்டிலிருக்கும் நமது சகோதரர்கள் பெருஞ் செலவில் ஒரு மகாநாட்டை நடத்துவதாக ஏற்பாடு செய்து கொண்டதோடு, நமது சுற்றுப் பிரயாணத்தைப் பற்றிய நீண்ட அறிக்கையையும் வெளியிட்டு விட்டு, நமக்கு அவசரமாக உடனே புறப்படுமாறு தந்திச் செய்தி அனுப்பி விட்டதால், தள்ளமுடியாத நிலையில் நாம் அவர்களைத் திருப்தி செய்யும்
பொருட்டும், நமது திருவாங்கூர் சகோதர சகோதரிகளுக்கு நமது நிலைமை யைச் சொல்லிக் கொள்ளலாமென்ற எண்ணத்தினாலும் உடனே புறப்பட்டுப் போகும்படி நேர்ந்து விட்டது. ஆகையால், நாகர்கோவில் மகா நாட்டில் நாம் கலந்து கொள்ள வேண்டிய நல்ல சந்தர்ப்பத்தை இழக்க நேர்ந்தமைக்காக
மிகுதியும் வருந்துகிறோம்.நிற்க,
நாகர்கோவிலில் நடந்த வரவேற்புத் தலைவர் உபந்நியாசத்தையும் நடவடிக்கைகளையும் நாம் படித்துப் பார்த்த வரையில் இந்தியாவில், சிறப்பாக இந்து சமூகம் என்பதில் ஏதாவதுசிறிது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு முதலாவதாக வேலை செய்ய வேண்டிய இடம் சுதேச சமஸ்தானங்களே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கமுள்ள இடமல்ல
என்றும், அதிலும் முதல் முதலாகச் செய்ய வேண்டிய இடம் சுவாமி விவேகா நந்தரால் “பைத்தியக்காரர் நாடு” என்று சொல்லப்பட்டமலையாள ராஜ்ஜியமா கியதிருவாங்கூர் சமஸ்தானமென்பதே நமது அபிப்பிராயமாகும். ஏனெனில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடக்கும் மனிதத் தன்மையற்ற சமூகக்
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கொடுமைகளைப் பற்றியும், அவ்விடத்திய ராஜாங்கம் எவ்விதம் “ராம ராஜ்யமாகவே” இன்றும் இருந்து வருகிறது என்பதைப் பற்றியும், பார்ப்பன ஆதிக்கம் எவ்வளவு தூரம் அரசாங்க உதவியோடு செலுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பற்றியும் நாம் அடிக்கடி எழுதி வந்திருப்பதுடன் மகாநாட்டு நடவடிக்கைகளாலும் வாசகர்கள் அறிந்திருக்கலாம். இந்த நிலையில் இப்போது நடந்த மகாநாடானது எவ்வளவு முக்கியமும் அவசியமுமானது என்பதை நாம் அதிகமாய் வலியுறுத்த வேண்டியதில்லை என்றே நினைக் கிறோம்.
மேற்படி மகாநாட்டின் நடவடிக்கைகளில் முதலாவதாக வரவேற்புத் தலைவர் திருவாளர் பி. சிதம்பரம் அவர்களின் பிரசங்கத்தைப் பற்றி சிறிது எடுத்துக் கூறவேண்டியது அவசியமாகத் தோன்றுகிறது. அவர்களது பிரசங்கத்தினின்றும் இதுவரையில் பலர் அறிந்திருக்க முடியாத சில ரகசியங்களும் சில உண்மைகளும் வெளியாகியிருக்கின்றன. நாகரீக உலகம் ஏளனம் செய்யக் கூடியதும், பகுத்தறிவுடைய எந்த மனிதனும் வெறுக்கக் கூடியதுமான பல செய்திகளுக்கு திருவாங்கூர் சமஸ்தானம் காரணமாக இருக்கிறது என்பது அப்பிரசங்கத்திலிருந்து அறியக் கிடக்கின்றது. உதாரணமாக, பெண்கள் தங்கள் அரையின் மேல்பாகத்தைத் துணியால் மூடிக் கொள்வதைப் பற்றி எழுதியிருப்பதைக் கவனித்து வாசிப்போருக்கு.
திருவாங்கூர் சமஸ்தானத்தின் சமூக ஊழல்கள் நன்கு விளங்காமற் போகாது. அதாவது, மேற்குக் கரையிலுள்ள பெண்கள் தங்கள் அரைக்கு மேற் பாகத்தைத் துணியால் மூடிக்கொள்வது முகமதிய நாகரீகத்தில் ஏற்பட்ட
தென்று கூறப்படுகின்றது. திருவனந்தபுரத்தைக் கைப்பற்றிய ஒரு முஸ்லிம் சர்தார் ஆங்குள்ள சூத்திரப் பெண்கள் ஆண்களைப் போலவே உடுத்திக் கொள்ள வேண்டுமென்றும் வட மலையாளத்துப் பெண்களைப் போல் மேலா டையின்றி வெளிச் செல்லலாகாதென்றும் கட்டளை விதித்தார். “சூத்திரர் களில்” உயர் வகுப்புப் பெண்கள் தங்கள் மேற் பாகத்தை அன்று முதல் ஆடையால் மறைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கைக் கொண்டனர் என்று
சரித்திரம் கூறுகிறது. கீழ்த்தர “சூத்திரர்கள்” தங்கள் மேற் பாகத்தை மூடிச் செல்லல் கூடாது; மேற் பாகத்தைத் துணிகொண்டு மறைத்துக் கொள்ள தங்களுக்கு மாத்திரம்தான் உரிமையுண்டு என்று உயர்தர “சூத்திரர்கள்” வற்புறுத்தி வந்தார்கள். மேலாடையால் பல சச்சரவுகள் நேர்ந்தன. தென் திருவிதாங்கூரில் லண்டன் கிறிஸ்தவப் பிரசாரச் சங்கம் ஒன்று வேலை செய்து வந்து, நாஞ்சில் நாட்டில் தனது மதத்தைப் பரப்பி நிலை நாட்டியது நாடார். கிறிஸ்தவப் பெண்கள் உயர்தர “சூத்திரப்” பெண்களைப் போல் மேலாடை அணியத் துவங்கிவிட்டார்கள். இதனைக் கண்ட உயர்தர வகுப்பைச் சார்ந்த
நாயர்கட்கும் மற்ற “சூத்திரர்” கட்கும் கோபம் உதித்தது. அவர்கள் பலாத்கா ரத்தை பிரயோகிக்கலாயினர். “சூத்திரர்கள்” தெருவில் வரும் மேலாடை தரித்த நாடார் பெண்டிரைத் தாக்கினர். 1858-ல் இச்சச்சரவு மிகவும் முதிர்ந்து விட்டது.
குடி அரசு - 1930 0 12
திரு. சிதம்பரம் அவர்கள் பின்னும் விளக்கமாகக் கூறுகிறதாவது:-
“இதன் பேரில்தான் திவான் சர். டி.மாதவராவ் பழக்க வழக்கத்தை மீறக்கூடாதென்றும், இதில் மாறுதல் விரும்பினால் சர்க்காருக்கு விண்ணப்பம். செய்து கொண்டுசர்க்காரால் இதற்கெனச் சட்டச் சீர்திருத்தம் செய்து கொண்ட பிறகே அவ்வாறு செய்தல் வேண்டுமென்றும் உத்தரவு போட்டு விட்டார்”. இவ்வுத்திரவைக் கிறிஸ்தவப் பிரசாரகர் நியாயமான தென்று கருதவில்லை. திவான் உயர்தர வகுப்பாரை வெளிப்படையாக ஆதரிப்பதாகவே கருதினர். பிறகு, முதலாக மகாராஜாவுக்கும் பின்னர் சென்னை அரசாங்கத்திற்கும் இக்கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் மனு செய்து கொண்டனர். இதன் பேரில் அக்காலத்தில் சென்னை கவர்னராயிருந்த சர். சார்லஸ் டிரவிலின் என்பவர்
பிரிட்டிஷ் ஸ்தானீகருக்கு பின் வருமாறு எழுதினார் :-
“உண்மை, நியாயம், மனித அபிமானம் எல்லாமுமே இதில் நம் புரமிருக்கின்றன. இச்சமயம் நாம் உறுதியாக நிற்காவிட்டால் நாகரீக உலகம் நம்மைத் தூற்றும். பிரிட்டிஷ் குடிகட்கும் திருவிதாங்கூரில் எல்லாவிதமான சுதந்திரங்களும் அளிக்கப்படும் என்னும் மகாராஜாவின் விளம்பரத்தைக் கொண்டே ஒரு வகுப்பினரை மிகவும் கொடுமையாக நடத்த சூழ்ச்சி
செய்யப்படுகிறது. நீர் இந்தக் காலத்திற்கு இது ஏற்றதல்ல வென்றும் ஒரு அறிவுடைய சிற்றரசர் இவ்வாறு செய்தல் கூடாதென்றும் அவருக்கு எடுத்துரைப்பீராக”.
இதன் பேரில் ஸ்தானீகர் மகாராஜாவை வற்புறுத்தி,மகாராஜா மீண்டும்.
ஓர் விளம்பரம் மூலமாக மேலாடை தரித்துக் கொள்ளுவதில் எல்லோருக்கும் சுயேச்சை உண்டென்றும் ஆனால் கீழ்த்தர வகுப்பினர் உயர்தரப் பெண்: களைப் போலவே மேலாடை தரிக்கலாகாது என்றும், பிரசுரம் செய்தார். இதுவே இன்று வரை திருவிதாங்கூரில் சட்டம் என்று நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இவ்விதமாக, உடையணிவதில் கூட சாதி உயர்வு தாழ்வு பாராட்டி வரும் திருவாங்கூர் சமஸ்தானத்தை சுவாமி விவேகானந்தர் “பைத்தியக்காரர். வாழும் நாடு” என்று சொன்னதில் ஏதாவது ஆச்சரியமிருக்கிறதா என்று கேட்கிறோம்? இதர இடங்களில் இருப்பதைப் போலவே, திருவாங்கூரிலும் பார்ப்பனர்களையன்றி சாதி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தில் எவ்வளவு கொடுமையாகவும் மன இரக்க மின்றியும் நடந்து கொள்கிறார்கள் என்பதையும் விளக்கமாகச் சொல்லி
யிருக்கிறார். இந்து மதத்தில் உண்மையாக அக்கரை இருப்பவர்களோ, அல்லது இந்துக்களின் ஒற்றுமையிலும் முன்னேற்றத்திலும் கவலையிருப் பவர்களோ, அல்லது “இந்து மதத்தை”க் காப்பாற்றுவதற்காக இருப்பதாகச் சொல்லப்படும் கொள்ளைக் கூட்டத்தாரைப் போன்ற சங்கராச்சாரிகளோ, ஜீயர்களோ, மடாதிபதிகளோ, பண்டார சன்னிதிகளோ தாழ்த்தப்பட்ட மக்கள்.
12 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
விஷயத்தில் மனிதத் தன்மை இல்லாமல் கொடுமையாகவும் காட்டு மிராண்டித் தன்மையாகவும் நடந்து கொள்கிறார்களேயன்றி சிறிதாவது மனிதத் தன்மையோடு நடக்கிறார்களாவென்று நமது வாசகர்களைக் கேட்கிறோம். இத்தகைய தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவோ ஆயிர வருஷங்களாக எவ்வளவோ கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு “இந்து” மதத்திலிருந்து வந்துங்கூட, கிறிஸ்தவ மிஷனெரிகள் என்பவர்களும். மகம்மதியர்களும் இல்லாவிட்டால் இப்போதிருக்கும் இந்த நிலைமையைக் கூட அடைந்திருக்க மாட்டார்களென்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் கிறிஸ்தவ மதத்திலுங்கூட சாதி வித்தியாசம் பாராட்டப்பட்டு வருகிறது ஒரு அளவுக்கு உண்மையே யாயினும், “இந்து” மதத்திலிருக்கும் கொடுமையிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களை விடுவித்து அவர்களையும் மனிதர்களாக ஆக்கிவிட்ட பெருமை முற்றிலும் கிறிஸ்த வர்களையும் மகமதியர்களையுமே சாருமென்பதை ஒருவரும் ஆட்சேபிக்க
முடியாது. இது சம்பந்தமாகச் சரித்திரக்காரர்கள் எழுதி வைத்திருக்கும் பல உண்மைகளையும் எப்படி திருவாங்கூர் சமஸ்தானம் முற்றிலும் பார்ப்பனர். களுடைய வாழ்விற்காகவே இருந்து வருகிறது என்பதையும் திருவாளர். சிதம்பரம் அவர்கள் புள்ளி விவரங்களோடு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
பிறகு இரண்டாவதாக மகாநாட்டுத் தலைவர் சொற்பெருக்கிலும் சில அரிய விஷயங்கள் வெளியாகி இருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் என்ன வென்பதையும் அதன் தத்துவம், இலட்சியம் முதலியவைகளைப் பற்றியும் எப்படி இது முற்றிலும் ஒரு புதிய இயக்கம் அல்லவென்பதைப் பற்றியும், எப்படி பார்ப்பனர்கள் எவ்வகையான சீர்திருத்தத்திற்கும் எந்தக் காலத்திலும் எதிரிகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் உண்மையான “கடவுள்” “உண்மையான கோவில்” இவைகள் எது என்பதைப்பற்றியும், சுயமரியாதை இயக்கம் என்பது முற்றிலும் பகுத்தறிவு இயக்கமே தவிர வேறல்ல என்பதைப் பற்றியும், சமூகக் கொடுமை நிறைந்து சாதி வேற்றுமை
யும் தீண்டாமையும் தலைவிரித்தாடும் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு, எப்படி சுயமரியாதை இயக்கம் மிகவும் அவசியம் என்பதைப் பற்றியும் தலைவர் திரு. திவான்பகதூர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் வெகு தெளிவாகவும் சுருக்க மாகவும் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.
கடைசியாக மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றியும் நமது அபிப்பிராயத்தைச் சொல்ல விரும்புகிறோம். தீண்டாமையை ஒழிப்பதற்காக கோவில் முதலிய பொது ஸ்தாபனங்களில் இந்துக்களெனப் படுவோர்கள் எல்லாரையும் அனுமதிக்கப்பட வேண்டியதற்காக பொது ஜன அபிப்பிராயத்தைப் பலப்படுத்துவதன் பொருட்டு பல பெரியோர்கள் சேர்ந்த ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருப்பதுடன் அதையே அரசாங்கம் மூலமாய் அமுலுக்குக் கொண்டு வருவதற்காகத் திருவாங்கூர் சட்டசபையிலும் ஒரு மசோதாக் கொண்டு வருவதாகத் தீர்மானித்திருப்பதை நாம் பெரிதும்
குடி அரசு - 1980 (1) 14
போற்றுகின்றோம். எப்படி, பெண்களின் கல்யாண வயதை உயர்த்துவதற்
காகப் பல வருஷங்களாக, பல பெரியோர்கள் முயற்சி செய்தும் அது சமயத்
தில் சட்டமாகச் செய்யப்பட்ட பின்பே அது நடைமுறையில் வருவதற்கு மார்க்கம் ஏற்பட்டிருக்கிறதோ அதுபோலவே, தீண்டப்படாதார் விஷயத்தி
லும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பல சீர்திருத்தக்காரர்கள் முயற்சி செய்தும் இன்று வரை ஒரு பலனையும் அளித்ததாக நாம் பார்க்க முடிய வில்லையாதலால் அது சம்மந்தமாக உடனே சட்டம் செய்தாலன்றி பார்ப்பனர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் சற்றாவது இரக்க புத்தியோ நல்லறிவோ வராதென்று உறுதியாய் கூறுவோம்.
தவிர, குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் பீனல் கோடில் கொலைக்
குற்றம் செய்தால் மற்றவர்களைத் தண்டிப்பது போலவே பார்ப்பனர்களையும் தண்டிக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது மிகவும் முக்கியமானதாகும்.
ஏனெனில், பார்ப்பனர்கள் யாரைக் கொன்றாலும் எத்தனைப் பேர் களைக் கொன்றாலும் மற்றவர்களைப் போல் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதாக இப்போது திருவாங்கூரில் சட்டமிருக்கின்றது. ஏனெனில் மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளபடி திருவாங்கூர் ராஜ்யம் அரசாளப்படுவதால் இம்மாதிரியான சட்டம் அங்கு இருக்க வேண்டியிருக் கிறது. இதனால் திருவாங்கூரில் பார்ப்பனர்கள் யாரைக் கொலை செய்தாலும் செய்யலாம்.ஆனதால் அம்மாதிரி இனி நடவாமல் இருக்கும்படி கொலைக்
குற்றம் செய்தால் பார்ப்பனராயிருந்தாலும் மற்றவர்களுக்கு விதிப்பது போல மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இது சுயமரியாதையை உத்தேசித்து அவசியம் செய்து தீர வேண்டியதாகும். தவிர பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடவும் முறை ஜெபம் (அரச ருக்கு பிராமணனைக் கொன்ற தோஷம் தீர என்று! செய்யவும், திருவாங்கூர். ராஜ்யத்தின் பணத்தை செலவழிக்கக் கூடாது என்கின்ற தீர்மானம் மற்றெல்லாவற்றையும் விட முக்கியமான தீர்மானமாகும். ஏனெனில், இதே ராஜாங்கத்தில் இரண்டு நாளைக்கு ஒரு வேளை கஞ்சி இல்லாமலும் தொழில் இல்லாமலும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடிமடியவும், நாட்டை விட்டுக் கூலிகளாக கடல்கடந்து ஓடவுமானக் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது பார்ப்பான் என்று பிறந்தவர்களுக்கெல்லாம் தினப்படி அரசாங்கப் பணத்தில் மூன்று வேளை வெட்டிச் சாப்பாடும் ஐம்பத்தாறு நாளில் எட்டு லட்ச ரூபாய் பாழாகும்படியான முறை ஜெபமும் (வைதீகச் சடங்கும்”) ஒரு அரசாங்கம் செய்வதென்றால் அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமும் முட்டாள்தனமுமான காரியமுமாய் இருக்கும் என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம்.
ஆகவே திருவாங்கூரில் கூடிய சீர்திருத்த மகாநாடானது மிகவும் அவசியமும் முக்கியமூமானதென்பதைப் பற்றியும் அது மிகவும் அவசிய
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மான தீர்மானங்களைச் செய்தது பாராட்டுதற்குரியது என்பதும் மகாநாட்டின். வேகத்தை அநுசரித்து இப்போது அங்கு ஏற்பட்டிருக்கும் கோவில் பகிஷ்கார: நடவடிக்கையாலும் தெரிந்து கொள்ளலாம்.
கடைசியாக, இவ்வளவுக்கும் காரணமாயிருந்தது உயர்திருவாளர்.
பி. சிதம்பரம் அவர்களுடையவும் அவர்களது உண்மை நண்பர்களுடை
யவும் முயற்சியும் ஊக்கமும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.
குடி அரசு - தலையங்கம் - 19.01.1930
குடி அரசு - 1930 0 16
தஞ்சை வில்லா BUTTG தனைனர் கேர்கல்
தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27 ௨ நடைபெறக் கூடும் என்று தெரியவருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுய மரியாதை இயக்க சங்கத்தின் உப தலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. எ.டி.பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க்கின்றோம். ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது.திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந் தாலும் இருக்கலாம்.ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொதுமக்களைப் பொறுத்த வரையி
லும் குறிப்பாக பார்ப்பனரல்லாதார் நன்மையைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு எ.டி.பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லா போர்டுக்கு இது சமயம்
மறுபடியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியமான தென்பதே நமது அபிப்பிராயமாகும். அன்றியும், இந்த அபிப்பிராயத் தையே தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கத்தில் பற்று கொண்ட சில செல்வந்தர்களும் ஆயிரக் கணக்கான தொண்டர்களும் கொண்டுள்ளார்கள்.
தவிர, பார்ப்பனரல்லாத சமூகப் பிரமுகர்களில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பொறுப்பும் நாணயமும் அற்ற சிலர் தங்கள். சுயநலம் காரணமாக ஒருவரை ஒருவர் கெடுக்க எண்ணியதும் அதனால் ஒருவருக்கொருவர் தற்காப்பிற்கு பத்திரங்கள் தேடிக்கொள்ள ஏற்பட்டது மான காரியங்களால் இனி தென்னாட்டில் நடந்தேறும் ஒவ்வொரு தேர்தல்
களிலும் நியமனங்களிலும் இவ்விதமான எதிர்ப்புகளையும் தொல்லை களையும் எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதைக்
குறித்து நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை. அன்றியும் இந்நிலைமை காரணமாக பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் வளர்க்க ஒருவருக்கொருவர்.
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
போட்டி போடுவதைப் பார்த்து நாம் வெட்கப்படாம லிருக்கவும் முடிய வில்லை.
நெல்லூர் மகாநாடானது எப்படியோ நமக்கு இந்நிலைமையை அளித்து விட்டது.நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாத சமூகத்திற்குள் ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களிடமிருந்தாவது அதற்குள் ஏற்பட்ட உள். 16 குடி அசசு சக்கு வதம் வ கட்சியாகிய ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரிட மிருந்தாவது மந்திரி கட்சியாரிடமிருந்தாவது மற்றும் இவைகளின் சார்புக் கட்சியாரிடமிருந்தாவது அவரவர்கள் கட்சிக் கொள்கைகள் முழுமையுமோ, அல்லது, அதிலுள்ளவர்களின் நடத்தைகள் முழுவதையுமோ அடியோடு ஒப்புக் கொண்டு நாம் அதில் கலந்திருக்கவில்லை என்பதையும் அல்லது வேறு எந்த விதமான சுயநல லட்சியத்தைக் கொண்டோ அல்லது யாருக் காவது பயந்தோ நாம் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவித்
துக் கொள்ளுகிறோம். ஆனால் நமது சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மற்ற கட்சியார் மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவைகளை விட இவைகள் எத்த னையோ மடங்கு மேலானது என்பதாகவும், வசதியுள்ளது என்பதாகவும் கருதி நமது இயக்கத்தின் நன்மையை உத்தேசித்தே நாம் அவற்றில். களங்கமறக் கலந்திருந்ததுடன் கூடுமானவரை ஒத்துழைத்தும் வந்தோம். எனவே, இந்த முறையில் தான் தஞ்சை ஜில்லா போர்டு தலைமைப் பதனியானது திரு பன்னீர் செல்வம் கையை விட்டுப் போக நேருமானால் ந ன்பு கண்டிப்பாய் அது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே த ட (ல அல்லாமல் மற்றப்படி அதற்கு இடையில் வேறு இடமில்லை என்று சுயமரியாதைப் பாடங்கள், அட டோ கருதுவதுடன் திரு. பன்னீர் செல்வம் தோல்வியானது பார்ப்பனரல்லாத
மக்கள் தோல்வியாகுமென்றும் கருதுகின்றோம். க்க க் அற் வைவால்கவலைகைக . காத்தொலையாவது முன்பணம் அதுப்பவேன்டும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.011930 மானேஜர், குடி. அரசு புத்தகாலயம், நவ o மைனவி 00 தபம் என் அக 50 எடை வளைத்த, இளம கடா வெயிட் என்ற எடும் வெண்டத்த ன s வித லு! த் ருத், ௮:
18 19 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10 குடி அரசு - 1930 0)
தமிழச. ஒரு புதிய அரிய வாரப் பத்திரிகை ) சென்னைவினின் ன Qarsfaxs@srs gi.
நியூ இந்தியா ௮ கம்பெனி, லிமிடெட்
(நடப் ப்பாவில் வ்தாழிக்கப்பட்டது]
சர்: டேோராப் ஜே டாட்டா. Kt
மூலதனம். அதுல மகப்பட்ட குளம் று செய்யப்பெற்ற
தை துகளை யணம் வேண்ட நகும் விளத்தக்கு எழுதாக்.
ட கத [கெள & 600 தமிழரச காரிய நிலயம், நி! லைந்பை 930 &, சென்ன, சக்கை ௧௧௨௨௨௨௧௧௧௨
ய இன்வியூள், i ஒன்றென்று கூறிக்கொள்ள அதற்கு உரிமை கண்டா வைலம
எனென்றகள் இல்லாத இடங்களில் Wi, செருப்பு மைன், மொட்டாக, விபத்து முதலி பாலித அஷ்: பான்ன்வளு்ரும் ஏஜென்சிகள் கெடக்கும்
பாஞ்ச o,
இன்ஸ்டியூட் தாசசெக் 5, LR, க பலம் எ சண்ட 6, னான் ) e, ந் கண்ண பயன கக் த்க் 8 இ பதிலை தக்கை த னன் =
கலப்பு மணத்தால்தான்
ஜாதி ஒழியும்
.o
ன் கைன்ளல்கம் பபிதா? SRS P SR கண்டன்ன ட
பூரண ௬யேச்சைய் புரட்டு
அரசியல் புரட்டுகள் நாளுக்கு நாள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி, மக்களை ஏமாற்றி நாட்டைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றது என்பதற்கு உதாரணம் இந்திய தேசிய காங்கிரஸ் என்பது. “இந்தியா பூர்ண சுயேச்சை அடைய வேண்டும் என்பது காங்கிரஸ் லட்சியம்” என்பதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதே போதுமான அத்தாட்சியாகும்.மத சம்மந்தமான புரட்டுகளுக்கு மதிப்பு குறைந்த பின்பே தந்திரக்காரர்களும் சுயநலக் காரர்களும் ஏமாற்றி வயிரு வலிப்பவர்களும் இந்த அரசியல் புரட்டை இவ்வளவு ஆதிக்கத்திற்கு கொண்டு வர வேண்டியதாகி விட்டது.
இன்றைய தினம் இந்தியாவிலுள்ள மக்களில் லக்ஷத்தில் ஒருவருக்குக் கூட பூர்ண சுயேச்சை என்றால் என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதனால் நமக்கு என்ன பலன் உண்டு என்பன போன்ற விஷயங்கள் சிறிதும் தெரிந்திருக்காதென்றே சொல்லலாம்.அது மாத்திரமல்லாமல் பூரண சுயேச் சைத் தீர்மானம் கொண்டு வந்தவர்களும் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தவர்களுமே அதற்கு ஏதாவது ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டு அல்லது தங்களுக்குள்ளாகவே விளக்கிக் கொண்டு அதைக் கொண்டு வந்தார்களா? என்று கூட சொல்ல முடியாது. ஆனால் பூரண சுயேச்சைத் தீர்மானம் நிறைவேறியவுடன் காங்கிரசிலிருந்து ராஜினாமாக் கொடுத்த சில தேசீயவாதிகளுக்காவது தெரியுமா என்று கேட்கலாம். அவர்களுக்கும் தெரியாதென்றே சொல்லுவோம்.பின்னை ஏன் ராஜினாமாக் கொடுத்தார்கள் என்றால், சர்க்கார் அடக்கு முறை வந்தால் ஜெயிலுக்குப் போக வேண்டுமே என்று பயந்து சைமன் கமிஷன் வந்தபோது சர்க்கார் இரண்டொருவரைப் பிடித்தவுடன் பயந்துகொண்டு காங்கிரசைராஜினாமாக் கொடுத்து “நான் தான் ஹர்த்தால் செய்வதில்லை என்று முன்னமேயே சொல்லி விட்டேனே என்று விளம்பரப்படுத்திய போது என்ன நாணையம் இருந்ததோ அந்த நாணையம் கொண்டு தான் அநேகர் இப்பொழுதும் ராஜினாமாக் கொடுத்தார்களே ஒழிய பூரண சுயேச்சையின் தத்துவம் தெரிந்து தேசீய வெறி கொண்டோ அல்லது பூரண சுயேச்சை வேண்டாமென்றோ அது சரியல்லவென்றோ தோன்றி
ராஜினாமாச் செய்தவர்கள் அல்ல.
குடி அரசு - 1930 0 20
எனவே, சுயராஜ்ஜியம் என்பதற்கு எப்படி இது வரை அர்த்தமே
இல்லாமல் இருந்ததோ அது போலவே இன்னும் அதைவிட மேலாகவே அர்த்தமில்லாமல் இது செலாவணியாய்க் கொண்டிருக்கின்றது. இந்த பூரண: சுயேச்சைத் தீர்மானம் சென்னை காங்கிரசில் வந்தபோது திரு. காந்தி அதை: விளையாட்டுப் பிள்ளைகள் நடவடிக்கை என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆனால் 2 ஹும் கழித்து அந்த வார்த்தை விளையாட்டுப் பிள்ளை களிடமிருந்து “மகாத்மாக்களிடம்” சென்று விட்டது. இந்த இரண்டு வருஷ இடையில் பூரண சுயேச்சைக்கு எப்படி அவ்வளவு பெரிய அந்தஸ்து வந்து
விட்டது என்பது “சிதம்பர” இரகசியமாய் இருக்கின்றது. அன்றியும் இன்றைய தினம் பூரண சுயேச்சை என்கின்ற வியாபாரத்திற்கு இன்றைய தினம் யார்.
யார் கூட்டாளிகள் என்று பார்த்தால் “ஜாதி மதங்களையெல்லாம் ஒழிக்க வேண்டும்” “சொத்து வித்தியாசங்களை யெல்லாம் ஒழிக்க வேண்டும்” என்கின்ற திரு. ஜவாரிலால் நேரும், ஜாதி மத வர்ணாசிரம தர்மங்களை யெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்கின்ற திரு. காந்தியும் முக்கிய கூட்டாளி களாவார்கள்.
இவர்களுக்கு எதிரியாக சின்ன நேருவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு எதிர்க்கும் “இந்த அரசாங்கத்தில் எவ்வித சம்மந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது. பள்ளிக் கூடம், கோர்ட்டு, சட்டசபை ஆகியவைகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் அதிகமாக பூமி சொத்து வைத்திருப்பவர்கள் இடம் உள்ள சொத்துக்கள் எல்லோருக்கும் போய்ச் சேரும்படி பார்க்க வேண்டும்” என்றும் சொல்லும் திரு. சுபாஷ் சந்திரபோசும், பெரிய நேரு விடம் போட்டிப் போட்டு எதிர்க்கும் அரசாங்கத்தின் தயவாலேயே தங்கள் வாழ்வை நடத்திக் கொண்டு எல்லோரிடமும் இருக்கும் சொத்தும் தனக்கே வந்து சேரும்படியான காரியம் நாணயமற்ற முறையில் அனுபவத்தில் செய்து கொண்டிருக்கும் திரு. சீனிவாசய்யங்காரும் பூரண சுயேச்சை வியாபாரத்
திற்கு போட்டி வியாபாரக் கூட்டாளிகளாவார்கள். மக்கள் பிறவியில் உயர்வு
தாழ்வு உண்டு அதற்கு ஆதாரமான எந்த காரியங்களும் யாரும் பிரவேசித்து எவ்வித மாறுதலும் செய்யக் கூடாது என்று மதத்தின் பேரால் மனுதர்ம
சாஸ்திரத்தின் பேரால் வாதாடும் திரு. சத்தியமூர்த்தியும் அந்த மனுதர்ம சாஸ்திரமே உலக வாழ்க்கைக்கு கடவுளால் அளிக்கப்பட்டது என்கின்ற திரு. ராஜகோபாலாச்சாரியும் மேற்கண்ட இரண்டு வியாபாரக் கம்பெனிகளுக்கும் கஷ்டக் கூட்டாளிகளாவார்கள், மற்றவர்களைப் பற்றி இப்போது சொல்லாமல்
நிறுத்தி விடுகின்றோம்) இதிலிருந்து பூரண சுயேச்சை வியாபாரம் எவ்வளவு புரட்டானது என்பதை ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். நிற்க, இதற்கு இப்போது அவசரமான திட்டம் ஒன்று அதாவது சட்டசபை பகிஷ்காரம் இதற்கு பூரண சுயேச்சைக்கு ஓட்டுக் கொடுத்தவர்களுக்குள்ளாகவே மூன்று வித அபிப்பிராயம். அதாவது ஒன்று சட்ட சபை பகிஷ்காரம் என்பது; இரண்டு. சட்டசபை, பள்ளிக் கூடம், கோர்ட் ஆகிய மூன்றும் செய்தால்தான் ஒப்புக் கொள்வோம் இல்லாவிட்டால் ஒன்றும் வேண்டாம் என்பது; மூன்று
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பகிஷ்காரம் எல்லாம் பார்த்து தோல்வி அடைந்தாய் விட்டது. ஆதலால்
பகிஷ்காரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது. இன்னமும் இது போல பலதுமிருக்கலாம். எப்படி இருந்தாலும் சிலர் சட்டசபை ராஜீநாமா கொடுத்து விட்டார்கள் என்றாலும் ராஜீநாமாவில் நூற்றுக்கு தொண்ணுூருக்கு மேல் பட்டது இரண்டு காரணங்களாலேயே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது ஒன்று வழக்கம் போல் சட்டசபைகளுக்கு காலாவதி ஆகும் போது ராஜீநாமாவோ வெளியேற்றமோ செய்து விட்டு தேசீய வீரர்களாகி பாராட்டப் பட்டு அடுத்த தேர்தலில் அதிக ஓட்டு சம்பாதிக்கலாம் என்று நம்பிக் கொடுப்பது போல் ராஜீநாமா கொடுத்தது. இரண்டு, சென்ற தேர்தலின் போது
திரு. சீனிவாசய்யங்கார் சுயராஜ்யக் கட்சிக்கு ஆள்கள் சேர்க்கையில் “எப்படியாவது காங்கிரசில் உத்தியோகம் ஒப்புக் கொள்ளும்படி செய்து விடுகின்றேன்” என்று ரகசியமாய் உறுதி கொடுத்ததை நம்பி பல ஆள்கள் போய் அதில் சேர்ந்தது போல் சமீபத்தில் வைசிராயுடன் ராஜி பேசி ஏதாவது
ஒரு முடிவு ஏற்பட்டு நமக்கு அதிக ஓட்டு கிடைக்கும்படியும் சிரமமில்லாமல் சட்டசபை ஸ்தானம் கிடைக்கும்படியும் திரு. காந்தி செய்து விடுவார் என் கின்ற ஜாடை அவரது சிஷ்யர் காட்டியதை நம்பி ராஜினாமாக் கொடுத்து விட்டுக் காத்திருப்பது என்பது. மற்றபடி இச்சட்டசபை கலைக்கப்பட்ட தேதி
முதல் தங்களது ராஜினாமா அமுலுக்கு வரத்தக்கது என்பது போன்ற ராஜினாமாக்களைப் பற்றியும் “நான் காங்கிரசின் பேரில் வந்ததால் காங்கிரசு கட்டளையை ஏற்று ராஜினாமா செய்து விட்டு நாணயத்தைக் காப்பாற்றி தனி உரிமையில் நிற்கின்றேன்” என்பவர்களைப் பற்றியும் நாம் சொல்லித்தான் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாக நாம் நினைக்கவில்லை. ஆகவே இவ்வளவுதான் தீர்மானமானதற்குப் பின் ஏற்பட்ட நிலைமையாகும். இது எப்படியோ இருக்கட்டும். இந்த தீர்மானத்திற்கு என்னதான் அர்த்த மென்று பார்க்கலாம் என்றாலோ திரு. காந்தியார் திரு. ரவீந்திரநாதருடன் பேசியதில் தனக்கு ஒரு கொள்கையும் சொல்ல முடியவில்லை என்றும் என்ன செய்வது என்பது தனக்கு சிறிதும் இன்னும் ஜாடைகூட தோன்றவில்லை என்றும் சொல்லிவிட்டார். திரு ஜவாரிலால் அவர்களோ ரஷ்யாவிற்கு போய் விட்டு வந்தவர் என்கின்ற ஒரு அரட்டலைத் தவிர வேறொரு காரியத்தையும் அவரிடம் காண முடியவில்லை. இந்த யோக்கியதை உள்ள இவர்கள் தான் இந்தியா அரசியலை நடத்துகின்றவர்களாக இருக்கின்றவர்கள். இது திரு காந்தியை எந்த விதத்திலாவது பின்பற்றலாமா என்பதிலும் அவருக்கு ஏதாவது ஒரு இயக்கத்தை நடத்த ஆற்றலுண்டா என்பதிலும் கவனம் செலுத்திப் பார்ப்போமானால் நம்மைப் பொருத்தவரையில் அதாவது அவருக்கு பரம பக்தனாகவும் சிஷ்யனாகவும் இருந்த அனுபவத்தைக் கொண்ட வரையில் மேல் கண்ட இரண்டு விஷயத்திலும் அவரிடம் நமக்கு நம்பிக்கை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் முதலாவ தாக அவர் ராம ராஜ்யத்தை விரும்புபவர். அதாவது ஒவ்வொரு மனிதனும் அவனவன் பிறவிக்கு உரித்தான தொழிலையே செய்ய வேண்டுமென்பவர்.
குடி அரசு - 1930 0 22
தவிர ஆயிரம் வருஷத்திற்கு முன் மக்கள் இருந்த நாகரீக நிலைமைக்கு போக வேண்டும் என்பவர். புதிய ஆராய்ச்சி உலகம் இன்னது என்பதைப்
பற்றி கவலையே இல்லாமலிருப்பவர். இரண்டாவதாக மண் குதிரையை நம்பினதுபோல் நடுத்தூக்கில் விட்டுவிட்டு ஓடிப் போகின்றவர்.இந்த இரண்டு காரியமுமே அவரை பின்பற்றுவதற்கு அனுகூலமில்லாதது என்போம். ஆனால் அவரிடம் பணம் உள்ளவரையிலும், அவருக்கு பணம் வசூல் செய்ய சக்தியும் வழியும் செளகரியமும் இருக்கும் வரையிலும், அவர். பெயரைச் சொன்னால் ஓட்டும் செல்வாக்கும் கிடைக்கும் என்கின்ற மயக்க முள்ள வரையிலும் அவருக்கு சிஷ்யர்களும் பின்பற்றுகின்றவர்களும் இருந்து தான் தீருவார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை. ஏனெனில் மோசமும் விவசாரமும் சிறந்து விளங்கும் இடங்கள்: புண்ணிய ஸ்தலங்களாகவும் பித்தலாட்டங்களும் அயோக்கியத் தனங்களும் கூடா ஒழுக்கங்கள் என்பவைகளும் தலை சிறந்து விளங்கும் நபர்கள். ஆச்சார்ய சுவாமிகளாகவும் மடாதிபதிகளாகவும் விளங்கி சிஷ்யர்களையும் பின்பற்றுபவர்களையும் ஏராளமாகக் கொண்டு பணம் ஏராளமாய் வசூலிக்
கும் சக்தி இருக்கும் போது திரு.காந்திக்கு அவ்வித அனுகூலங்கள் இருப்ப
தில் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை என்று சொல்ல வேண்டும்.
(தொடரும்)
குறிப்பு -தொடர்ச்சி 23.02.30 இதழ் தலையங்கம்.
குடி அரசு - தலையங்கம் - 02.02.1930
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
செங்கல்பட்டு வில்லா யோர்டு தேர்தல்
செங்கல்பட்டு ஜில்லா போர்டுக்கு 30-1-29 தேதியில் தலைவர் தேர்தல்
குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சுமாதம் 31 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு சேதியும் தேர்தல் நடந்து ராவ் சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத் திருக்கின்றது. எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான
திரு. திவான்பகதூர் எம். கே. ரெட்டியாருக்காவது அல்லது திரு. ராவ் சாகிப்
சி. ஜெயராம் நாயுடுகாருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளி யாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய் விடக் கூடாது என்பதே நமது ஆசை. இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க
நாம் கொஞ்ச காலத்திற்கு முன் “பார்ப்பனர்களும் பார்ப்பனக் கூலிகளும் அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளியாக அடங்கிப் போய்
விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”” என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களை கண்டே பார்ப்பனர்களும் அடிமை களும் தலைநீட்ட புறப்பட்டு விட்டார்கள்.ஆனாலும் ஜாண் நீட்டினால் முளம் கத்தரிக்க நமக்கு சக்தி உண்டு. பழய ஆயுதங்கள் எண்ணை இட்டு உரையில் வைத்திருக்கின்றதே தவிர மழுங்கிப் போய்விட வில்லை. யாரும் பயப்படத் தேவையில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.021930
குடி அரசு - 1930 N 24
ஈரோ௫ Opcouni பிரவேசம்
ஈரோடு ஆலயப் பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரிகை
யில் சில விஷயமும் காணப்படுகின்றது.
அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானம் செய்யப்பட்டது முதல் “தமிழ்நாடு” பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப் பிரசாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும். அத்தீர்மானம் நிறைவேறிய பின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச்
சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப் பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்து விட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால் நம்மைக் கேட்காமல் திடீரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்தபோது சிலர் ஆலயப் பிரவேசத்திற்கு “நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள். இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு.ஆதலால் அதைப் பற்றி
நீ கேழ்க்க வேண்டியதில்லை” என்று சொன்னார்கள். இதை அனுசரித்து திரு. ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு குறிப்பு அனுப்பி விட்டார். இருந்த போதிலும் ஆலயப் பிரவேசம் செய்தவர்களைக் கவனிக்காவிட்டா
லும் அக்கொள்கையைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே.
நாம் கேசு விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய் தோம். இந்த கேசுக்கு சுமார் நானூறு ரூபாய்கள் இதுவரை செலவாகி இருக் கின்றது. (இது திரு. ஈஸ்வரன் சொன்ன கணக்குப் படி) இவற்றுள் சுமார் நூறு ரூபாய்கள் வரை நாம் கொடுத்திருக்கிறோம். மலாய் நாட்டுக்கு போன நமது ஏஜன்டு திரு. காளியப்பன் அவர்களால் நூறு ரூபாய்களுக்கு மேலாகவே
வசூல் செய்தனுப்பப்பட்டது. நமது மைத்துனர் திரு. மாப்பிள்ளை ராமசாமி ஈஸ்வரனிடத்தில் 45 ரூபாயிக்கு மேலாகவே கொடுக்கப்பட்டதாக அவர். சொன்னார்.இது தவிர இக்கேசு சம்மந்தமாய் வெளியூர்களிலிருந்து வருகின்ற வர்கள் எல்லோருக்கும் ஜாகை செளகரியம் சாப்பாடு ஆகியவைகள் நமது வீட்டிலேயே நடந்து வந்திருக்கின்றது. திரு. ஈஸ்வரனுக்கும் அவரது சினேகி
தர்களுக்கும் கேசு ஆரம்பித்த காலம் முதல் கேசு முடிந்த நாள் வரையில் - கேசு முடிந்து பணம் கட்டி விடுதலையாகி வெளி வந்த மறுநாள் வரை:
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சாப்பாடு நமது வீட்டில் தான் நடந்து கொண்டு வந்தது; வருகிறது. “அதற்கு முன்னும் வருஷக்கணக்காய் பல வருஷங்கள் நமது வீட்டில்தான் சாப்பிட்டு வருகிறார்”. தவிர கேசுக்கு ஆஜரான இரண்டு மூன்று வக்கீல்களும் யாருக்காக வந்தார்கள் என்பதையும் அவ்வக்கீல்களையே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் இது விஷயமாக செய்த காரியங்கள் சுருக்கமாகச் சொல்வதானால் வக்கீல் கடைசியாக ஆர்க்குமெண்டுக்கு வந்து விட்டுப் போன தற்குக் கூட நாம் தான் மலாய் நாட்டிலிருந்து வந்ததும் முதல் வேலையாக ரயில் சார்ஜ் கொடுத்தோம்.மலாய் நாட்டுக்கு புரப்படும்போதும் ரயிலேறிய பின் கட்சி வேலையாக வக்கீலுக்கு ரயில் சார்ஜ் கொடுத்து விட்டுத்தான் பயணம் சொல்லிக் கொண்டோம், இந்த கேசுக்கு என்று வந்திருந்த திரு. கிரித்திவாசுக்கும் சில சமயம் ரயில் சார்ஜ் கொடுத்தோம். இவர்கள் கோயில் பிரவேசம் செய்யப்போகும் போதும் நமது வீட்டில் தான் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். கோவிலுக்குள் இருந்த போது கூட நாம்
ஊரில் இல்லா விட்டாலும் நமது மனைவியார் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்.
கள். இவ்வளவு காரியங்களையும் பெற்றுக் கொண்டும் நாம் வழக்கிற்கு விரோதமாய் நடந்து கொண்டதாகவும் யாரையும் உதவி செய்ய விடாமலும் தடுத்ததாகவும் சொல்வதற்கு எவ்வளவு தூரம் துணிந்திருக்கிறார்கள் என்பதையும் புதைபட்ட திரு. பி. வரதராஜுலு இக்கூட்டத்தைப் பிடித்து மறுபடியும் கரையேர நினைப்பதும் எவ்வளவு யோக்கியமான காரியம் என்பதையும் வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும். செய்து விட்டுச் சொல்லிக் காட்டுவதற்கு இதை எழுதவில்லை.நமது மீது சுமத்தப்படும் பழிப்புக்கு பதில் சொல்ல வேண்டியிருப்பதால் எழுதுகிறோம். ஆனால் நாம் ஒன்று ஒப்புக் கொள்ளு கின்றோம். அதாவது இக்கேசுக்கு பணம் கொடுக்கும்படி பொது ஜனங்களுக்கு எனது மனைவியின் பேரால் ஒரு அப்பீல் வெளியிட ஆரம்பித்தார்கள். அதை நான் பத்திரிகையில் போட மறுத்ததுண்டு. காரணம்
கேசுக்கு அதிக பணச் சிலவில்லை. ஏனெனில் சாப்பாடு நம்முடையது வக்கீல்களுக்கு பீசுகிடையாது. சார்ஜ் சத்தமும் ஸ்டாம்பும் தான் வேண்டியது. இதற்கு அதிகமான பணம் தண்ட வேண்டியதில்லை. நம்மைக் கேட்ட போதெல்லாம் மேல்கண்டபடி ஒரு தடவை கூட இல்லை என்று சொல்லாமல் பணம் கொடுத்திருக்கின்றோம். அடிக்கடி பொது ஜனங்களை பணம் கேட்பதால் கொள்கையில் அபிமானம் குறைந்து விடும் என்று சொல்லியே நமது பேரை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னோம். மற்ற காரணங் களையும் மற்றும் இப்படி ஒரு கூட்டம் பொருப்பில்லாமல் நடந்து கொள் வதால் நமக்கு அடிக்கடி ஏற்பட்டு வந்த இடையூருகளையும் நஷ்டங்க ளையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வந்த நமது சகிப்புத் தன்மை யையும் பின்னால் விவரமாய் எழுதுகிறோம். ஆனால் ஒன்று, இன்றைய தினம் வெகு வீரமாய் ஈரோடு ஆலயப் பிரவேசத்தைப் பற்றி எழுதும்
தமிழ்நாடு திரு. பி. வரதராஜுலு, திரு. ஈஸ்வரனைப் பாராட்டி ஒரு தந்தி கொடுத்து ஏமாத்தினதல்லாமல் ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவி செய்தாரா
குடி அரசு - 1930 0 26
என்றாவது இது மாத்திரமல்லாமல் வேறு எந்த சத்தியாக்கிரகத்திலாவது கையெழுத்தும் வாக்குத்தத்தமும் செய்து நாணையமாய் நின்று அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டு நடு சந்தர்ப்பத்தில் விட்டு விட்டு ஓடின நடவடிக்கைகள் ஒன்றுக்கு மேல்பட்ட தடவை இல்லையா என்றாவது நினைத்துப்பார்த்தால் இவ்வளவு விஷமத்தனம் செய்ய வெட்கப்படு வாரென்றே சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.02.1930
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மனையா நாட்டு சுற்றுப்பயணம்
எதிர்ப்பிரசாரத்தால் ஏற்பட்ட நண்மைகள்
தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற்
பும் உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப்
பற்றிப் பேசிய புகழ் வார்த்தைகளும் தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்து தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவை
களில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த
மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலாய் நாட்டு பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டிருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரஸ்தாபங்க ளைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும் ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே அடியோடு மறை தனது கொள்கைகளுக்கும் தொண்டுக்கும் முன்னிலும் அதிகமான உறுதியும் ஊக்கமும் ஏற்பட்டுவிட்டதென்றும் யோக்கியமான எவ்வித அரசியல்காரர் களும் மத இயல்புக்காரர்களும் அரசாங்கத்தார்களும் தன்னைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்றும் சுயமரியாதையும் சமத்துவமும் அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் லட்சியமென்றும் ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடாதென்று தான் உறுதியாய் கருதி இருப்பதாயும் சொல்லி முடித்தார்.
குறிப்பு : 20-12-1929 91 நாள் ஐக்கிய இந்திய சங்கத்தாரின் வரவேறபுப் பத்திரத்திற்கும் பினாங்கு தமிழ்மக்கள் கழகத்தாரின் வரவேற்புப் பத்திரத்திற்கும் மறுமொழியாக நன்றி கூறி பேசியதன் சருக்கம்.
குடி அரசு - 1930 0 28
நாங்கள் இங்கு எந்த கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ ஆதரவையோ உண்டாக்க வரவில்லை யென்றும் மற்றவர்களைப் போல் பணம் வசூல் செய்து மூட்டைக் கட்டிப் போக வரவில்லையென்றும் உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்
தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோமென்றும் அதற்கு தக்க உதாரணங் கள் காட்டி பேசினார்.
குறிப்பு : 20-12-1929 ஜனாப் முகமது ராவுத்தர் அவர்களின் மாளிகையில்
விருந்துக்குப் பின் மலாய் நாட்டிற்கு வந்ததின் பேச்ச சருக்கம்.
கடவுளைப் பற்றியோ, சமயங்களைப் பற்றியோ பிரசாரம் செய்வது தனது வேலை அல்லவென்றும் தான் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களுக்கு அதன் எதிரிகள் தக்க சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாமல் பயங்
காளித் தனமாயும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியும் கடவுள்கள், மதங்கள், வேதங்கள், புராணங்கள் என்பவைகளைக் கொண்டு வந்து முட்டுக் கட்டை யாய்ப் போடுவதால் அவைகளை எடுத்து எறிந்து விட்டு முன் செல்ல வேண்டிய நிர்பந்தம் தனக்கு ஏற்படுகின்றதென்றும் ஆனாலும் கடவுளும், உண்மையான மதமும் உண்மையான வேதமும் கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டிய தில்லை என்றும் சொன்னார்.
குறிப்பு:20-22-1929 கப்பல் பிரயாணிகளின் குறைநிவாரணச்சங்கத்தலைவர் திரு. ஏ: சிங்காரம் பிள்ளை, காரியதரிசி எம்.துறைராஜு, கப்பல் பிரயாண இன்ஸ் பெக்டர் எம்.எம்.எஸ். முதலியார் ஆகியோரின் ஆலோசனைக்கு மறுமொழியாக பேசியதன் சுருக்கம்.
குறிப்பு : 20, 27. 12. 1929 பினாங்கு சொற்பொழிவு.
கடவுள் உண்டா?
இடையில் ஒரு மலையாளி தங்கள் நாட்டைப்பற்றி இங்கு பேசக் கூடாது என்று அக்கிராசனரைக் கேட்டுக் கொள்வதாகச் சொன்னவுடன் ஆவேசத்துடன் மலையாளச் சங்கதிகள் ஒன்று விடாமல் சொல்லி இது பொய்யா? இது பொய்யா? என்று கேட்டு, இது மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மற்றும் பல விஷயங்களையும் விளக்கி இதற்காகத் தான் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்றும் சொல்லி அமர்ந்தார்.
குறிப்பு : 21-12-1029 ஈபோ இந்தியர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பில் பேசிய சொற்பொழிவின் இடையில் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 02.02.4930
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சிங்கப்பூர் டஷண் ஹாலில் மலேயா இந்தியண்
அசோசியேசண் மகாநா௫
தான் மலேயா நாட்டிற்கு வந்து ஒரு வாரமே ஆகின்றபடியாலும் இரண்டு மூன்று ஊர்களே பார்த்திருக்கின்றபடியாலும் அதற்குள் மலேயா நாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாதென்றும், மதுவிலக்கைப்பற்றியும் இம்மகாநாட்டைப் பற்றியும் பேசுவதாகவும் சொல்லி மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சுலபத்தில் விலக்கு செய்யக் கூடியதல்லவென்றும், இவர்களிடம் கடவுள் மூலமாகவும் மதக்கொள்கை மூலமாகவும் மதுப்புகுந்திருக்கின்ற தென்றும் அவ்விரண்டு. அபிப்பிராயமும் தளர்த்தப்பட்டாலல்லாமல் பொதுவாக பூரண மது விலக்கு முடியாதென்றும் சிறப்பாக நூற்றுக்குத் தொண்ணூறு மக்களாகிய பாமர: மக்களுக்குள் சிறிதுகூட முடியாதென்றும் இந்துக்களுடைய கடவுள்களில் பாமர மக்கள் கடவுள்களாகிய முருகன் காட்டேரி கருப்பன் வீரன் முனி யாண்டி காளி பராசக்தி முதலாகிய கடவுள்களும் மற்றும் பல பார்ப்பன கடவுள்களும் யாகம் சாந்தி முதலிய வைதீகச் சடங்குகளுக்கு வழிபடும் இந்துக்களில் மதுவை கட்டாய வஸ்துவாக கொண்டிருக்கின்றது என்றும் அனேகம்பேருக்கு மதுபானம் மதசம்பிரதாயத்திலும் மரியாதை சம்பிரதாயத்
திலும் கட்டாய வஸ்துவாக கருதப்பட்டு வருகின்றது என்றும் அதனாலேயே தான் மதுவிலக்குக்குமிதக்குடி(டெம்பரன்ஸ் என்றும் பேர் ஏற்பட்டதென்றும்.
இதில் நம்பிக்கை உள்ள சமூகத்திற்கு மதுவிலக்கு என்பது சுலபசாத்தியமல்ல என்பதே தமது அபிப்பிராயமென்றும் மலாய் நாட்டில் உள்ள தோட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கள்ளுக்கடையும் கள்ளுள் வைத்து நைவேத்தியம் செய்ய ஒவ்வொரு சாமி கோவிலும் இந்து மக்கள் சம்மதத்தின் பேரிலேயே கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டதாகவும் அக்கோவில்களை யெல்லாம். இடித்து அச்சாமிகளை யெல்லாம் ஒழித்தாலொழிய மதுவிலக்கைப் பற்றி. பேசுவது யோக்கியமாகாதென்றும் இப்படியே அனேகமான ஒழுக்கமற்ற காரியங்கள் மதத்தின் பேராலும் சாமியின் பேராலும் மக்களுள் புகுத்தப்பட்டிருக்கிறதென்றும் அதனாலேயே தான் நமது ஒழுக்கமும் முன்னேற்றமும் தடைப்பட்டு வருகின்ற தென்றும் ஆதலால் அதை
ஒழிக்கவேண்டுமென்றால் முதலில் அதற்கு அஸ்திவாரத்தைக்கண்டுபிடித்து
குடி அரசு - 1930 0 30
அது ஏதுவானாலும் அதை இடித்தெறிய தயாராக வேண்டுமென்றும் சொல்லி மகாநாடு விஷயத்தில் எதோ தனது அனுபோகத்தை தெரிவிப்பதாகச் சொல்லி பேசியதாவது:-
சகோதரர்களே!
இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கையைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்ப கால நடவடிக்கைகளை ஒத்திருக்
கின்றது. அதாவது இந்தியப் பொது மக்களுடையவும் பாமர மக்களுடையவும் நன்மைக்காகவென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக்கப்பட்டது. ஆணால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்து விட்டு உத்தியோகத்திற்கும் தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப்புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையாயிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற்கேற்ற பல தீர்மானங்கள் செய்து விட்டு பாமர: மக்களை ஏமாற்ற ரோட்டுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்த வேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள். காரியத்தில் சீர்திருத்தம் என்னும் பேரால் கொழுத்தச் சம்பள முள்ள சில உத்தியோகங்களை அந்த படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்தபடி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதிகாரங்களும் மற்றும் தொல்லை
களும் பெருகினதை தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்படவில்லை,
சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சிகளும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய் விட்டது. ஏனென்றால் ஸ்தாபனங் களில் முக்கியஸ்தர்களாயிருக்கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்
கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்ற சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள்.
பிரிந்து போய் வேறு ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர். களாவதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் சாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை: ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது. எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும் ஸ்தாபனங் களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூட்சியா லும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.ஆகையால் இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசை பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொது மக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களை கட்டாயப் படுத்தும்படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுயமரியாதையையும்
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
உண்டாக்குவதே தவிர உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டு மென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்.
இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்றுபடுத்திக்கொண்டாலொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆதலால் நீங்கள் அதாவது எங்கள் காங்கிரசைப்
பின்பற்றி எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப் போல பாழாக்கி ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன் (மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள். எல்லோரும் “சபாஷ், சபாஷ், “உண்மை, உண்மை” என்று கைதட்டி ஆரவா
ரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. ராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்.
குறிப்பு : 26.2.1929 இல் சிங்கப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்ற மலேசியன் இந்தியன் அசோசியேசன் மாநாட்டில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 02.02.1930
குடி அரசு - 1930 0 32
உதிர்ந்த மலர்கன்
1.நமது நாடு பார்ப்பனீய ஆதிக்கத்திலும் பணக்கார செல்வாக்கிலும் இருக்குமட்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்துதான் ஆகவேண்டும்.
2. பூரண சுயேச்சை என்பது ஒரு மனிதன் எந்த விதத்திலும் எதற்கும் அடிமைபட்டிறாத விடுதலை என்றால் நான் அதை மனப்பூர்வமாய் வரவேற்கின்றேன்.
அப்படிக்கில்லாமல் பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு போவதும் திரு. காந்தி சொல்லும்) ராம ராஜ்ஜியம் ஏற்படுத்துவதும் என்றால் ரஷிய அரசாங்கத்தையே நான் கூவி அழைக்க முந்துவேன்.
3. இந்த நாட்டிற்கு சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்டு அதை அமுலில் நடத்திவைக்கும் ஆசை பொது மக்களுக்கு ஏற்பட்டதற்காக யாருக்காவது
நன்றி செலுத்த வேண்டுமானால் அது முதலில் திருமதி மேயோ அம்மைக்கு
உரியதாகும்.
(ஈ. வெ.ரா?)
குடி அரசு - துணுக்குகள் - 02.02.1930
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
e T TR லல g _;,lflgpflfl. mug“ அறிய வாரப் u gt தரகு s b சென்னையிவிள்அ OuifogRsrg .
அலகை i ;
கை
பெரிய இன்வியூன்ல். அூறிக்கொள்ள அதற்கு உரிமை உண் குடி அசசு புத்தளலயம், 8 கன்டுள் இகத இடக்களல் உல பெரு ல ுவ்கட வெளி்தல் ரப துப்ப praprilrpg கட்த
மிராஞ்ச மா மானஞரியன் இமைய திறன் பாசம் ராகாண்ட Sussdirmads பாடங்கள். இமலிக்க காயி படல் இட்ட. சவரியாதைக் தாட்டு T
வதக்க gt அப் | கை S
மானோர் குடு அச புத்தளம் 11 ஈவா௫ காச S ரணி. சோடு, பல்லவன் imornnsesennsannacnon
$ அன்பையன்ஸ் கேம்பிரிட்ஜ். இன்ஸ்ரநலுட் நாசரேத் 5. LR,
ஸ்தாபன ஹூ 1920. Ot அவித்த விட்
o 8 2 &y 4 s 800 பவியின் ன் விவ டப் ஒன் விட க ன சய 3 வ ஸ் o o iy A e B ey e பாள s e பகனக பனகல் I ol oyt பப் S| அன்ன வல்வனு லைப்ல ஐ oo ol ஆண்ளகிளக்கம் பப்ப தன் ஆகடப்பட்டு நரம எகமயாளால் கெள்ரிடப்பட்டது.
குடி அரசு - 1930 0) 34
யமணைபா பிரமாணம்
மலாயா நாட்டுக்கு “சென்ற வருஷம்” டிசம்பர் 5715 ௨ கப்பலேறி, “இவ்வருஷம்” ஜனவரி மாதம்16 தேதிஇந்திய நாடு சுகமே வந்து சேர்ந்தோம். இந்த சுற்றுப் பிரயாணத்தில் மலாய் நாட்டில் நடந்த விஷயங்கள் ஒருவாறு சென்ற வாரப் பத்திரிகையிலும், இவ்வாரப் பத்திரிகையிலும் பிரசுரித்திருக்
கும் மலாய் நிரூபரின் சுற்றுப் பிரயாண நிரூபத்தில் காணலாம்.
மலாய் பிரயாணத்தைப் பற்றி நாம் சிறிதும் நினைத்திருக்காத நிலையில் திரு. சாமி அற்புதாநந்தா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கை உணர்ச்சி விசேஷமாய் பரவி வருகின்றதெனினும், சில விஷமக்காரர்கள் சுயநலத்தின் காரணமாய் இந்து மதத்தின் பேரால் தொல்லை விளைவிக் கின்றார்கள் எனவும், சுயமரியாதைக்காரர்களுக்கு, “இந்துக்களைப் புதைக்
கும் சுடுகாட்டில் கூட இடம் கொடுக்கக் கூடாது” என்று இந்து மத சங்கத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்ததாகவும், சுயமரியாதைக் கல்யாணங்களை
சர்க்கார் ஒப்புக் கொள்ளக்கூடாது என்று விஷமம் செய்கின்றார்கள் எனவும்,
ஒரு முறை வந்து போனால் மிக்க அனுகூலமாயிருக்குமென்றும் பொருள்பட
எழுதியிருந்தார்.
இதைப் பார்த்ததும் அது சமயம் போய்த்தான் பார்க்கலாமா என்பதாக ஒரு எண்ணம் தோன்றியதால் இது சமயம் சிறிது வேலை இருக்கின்ற தென்றும் ஒன்று இரண்டு மாதம் பொருத்து வர முயற்சிப்பதாகவும் ஆனால் அங்குள்ள முன்னேற்றம் பத்திராதிபரையும் திரு. காளியப்பனையும் கலந்து அவர்களைக் கொண்டு எழுதும்படியும் பதில் எழுதினோம். இப்படியிருக்க ஒருமாதம் கழித்து திடீரென்று 15 நாள் சாவகாசத்தில் புறப்படும்படி நிகழ்ச்சிக்
குறிப்புடன் ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்திற்கு, “வர முடியாது” என்று எழுதியதுடன் அந்நிகழ்ச்சிக் குறிப்புகள் மற்ற பத்திரிகைகளுக்கும் அனுப்பப் பட்டதாய் தெரிந்ததால் அதை பிரசுரிக்க வேண்டாம் என்று தகவலும் அனுப்பிவிட்டோம். தவிர திருவாளர்கள் சாரங்கபாணி, காளியப்பன் இவர்கள் கடிதமும் இதை அனுசரித்து புறப்படும்படியாகவே கிடைத்தது. எல்லாவற்றிற்குமாக ஒரு நீண்ட தந்தி ஒன்றை சென்னையில் இருந்து “குடி
38 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
அரசு” ஆபீசு ஈரோட்டிற்கு மாற்றப்படவேண்டி இருப்பதற்காகவும், நாகர்கோவில் மகாநாட்டுக்காகவும், பார்ப்பனரல்லாதாருக்குள்ளாகவே கட்சிப்பிளவு தகராருகள் இருப்பதாலும் இது சமயம் கண்டிப்பாய் வருவதற்கு செளகரியமில்லை என்பதாக தந்தி கொடுத்தோம். இதற்கு பதிலாக, “6000. டாலர்கள் (பதினாயிரம் ரூபாய்கள்) செலவழித்துச் செய்த மகாநாட்டு ஏற்பாடுகளும் வரவேற்பு ஏற்பாடுகளும் வீணாய் விடும், வராவிட்டால் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்களுடைய நிலைமை நெருக்கடியாகி
விடும்” என்று திருவாளர்கள் சாரங்கபாணியும், காளியப்பனும் தந்தி அடித்தார்கள். அதைப் பார்த்த இவ்விடத்திய நமது நண்பர்கள் கண்டிப்பாய் போக வேண்டும் என்றும் இவ்விடத்திய காரியங்களை எல்லாம் தாங்கள் சரியாய்ப் பார்த்துக் கொள்ளுவதாகவும் சொன்னதோடு கைவல்லிய சாமி யாரும் கண்டிப்பாய் போக வேண்டுமென்று சொன்னார்கள். இவைகளை அனுசரித்துப் போவதாக தீர்மானித்து, ஒரு தந்தியை சிங்கப்பூருக்கு திரு சாரங்கபாணிக்கு கொடுத்துவிட்டோம். அதற்குப் பதிலாக திரு. சாரங்கபாணி அவர்களால் நமது வருகைக்கு அவ்விடம் இந்து சபையார் பெரிய எதிர்ப்பு செய்கிறார்கள் என்றும் அதனால் அவ்விடத்திய சர்க்கார் நம்மை கப்பல் விட்டு இறங்க அனுமதிக்க மாட்டார்கள் போல் இருக்கின்றதென்றும் இறங்க விட்டாலும் பேச விடமாட்டார்கள் என்றும், தகுந்த ஏற்பாட்டுடன் கண்டிப்
பாய் வரவேண்டுமென்றும் தந்தி கொடுத்திருந்தார். இது டிசம்பர் மாதம் 9 தேதி கிடைத்தது. அதைப் பார்த்த பிறகு கப்பல் ஏறும் நாள் மிக சமீபத்தில் இருந்ததால் அதாவது 11 தேதியாயிருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் “ மகா நாடு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. கப்பல் ஏற வேண்டாம்; கடிதம் பார்” என்பதாக மகாநாட்டு வரவேற்புத் தலைவரான திரு. அய்யாரு அவர்கள் பேரால்
பினாங்கிலிருந்து ஒரு தந்தி கிடைத்தது. இதைப் பார்த்ததும் கஷ்டம் ஒழிந்தது என்று மெத்த சந்தோஷமாக இருந்தோம். ஆனால் இங்குள்ள நண்பர்களும் நமது தமையனாரும் இந்த தந்தி பொய்யாயிருக்குமென்றும்; மறுபடியும் தந்தி கொடுத்து கேட்க வேண்டும் என்றும் சொன்னதால் மறுபடியும், “இப்படி ஒரு
தந்தி கிடைத்தது: அது உண்மையா” என்று கேட்டோம். அதற்கு பதில் “பினாங்கு தந்தி பொய், கண்டிப்பாய் புறப்படு, பயணத்தை உறுதிப்படுத்து” என்று பதில் 11-ந் தேதி கிடைத்தது. இதை பார்த்தபிறகு மறுபடியும் கவலை ஏற்பட்டது. ஏனெனில் அவ்விடத்திய சர்க்கார் நம்மை கப்பலைவிட்டு இறக்காமல் பாரிஸ்டர் திரு மணிலால் அவர்களை செய்தது போல் செய்து விட்டால், நாம் என்ன செய்வது என்கின்ற கவலை தவிர வேறில்லை. இதன் பேரில் சென்னை அரசாங்க பிரதம அதிகாரிகளை கேட்கச் செய்ததில் அவர்கள் மலாய் அரசாங்கத்தில் தாங்கள் பிரவேசிக்க முடியாது என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்களாம். பிறகு எப்படியானாலும் சரி இவ் வியக்கம் காரணமாக வந்ததை அனுபவிப்போம் என்றே புறப்பட்டோம். நாள் சுருக்கமாயிருந்ததால் 11 தேதி சென்னையில் கப்பலேர முடியாமல் 13 ந்
குடி அரசு - 1930 0 36
தேதியே நாகைக்கு புறப்பட்டு அங்கிருந்து 15 ௨ கப்பலேறி விட்டோம்.
கப்பலில் கம்பி இல்லாத தந்தி மூலமாய் பல வரவேற்பு தந்திகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் சற்று கவலையுடனேயேதான் கப்பல் பிரயாணம் செய்தோம். நாங்கள் பினாங்கு துறைமுகத்திற்கு 4 மைல் தூரத்தில் கப்பல் நின்று இருக்கும் போதே ஒரு வெள்ளைக்கார சாதாரண அதிகாரியும் மற்றொரு ராணுவ உடை தரித்த வெள்ளைக்கார அதிகாரியும் சில போலீசு காரரும் நம்மிடம் வருவதைப் பார்த்ததும் சரி, “நமக்கு தடைவுத்திரவு வந்து விட்டது” என்று முடிவு செய்து கொண்டு மனதில் நம்மை அறியாமல் ஏற்பட்ட ஒரு விதத் திகிலுடன் முகத்தை மாத்திரம் சிரிப்பாகக் காட்டிக் கொண்டு நின்றோம். அவர்கள் இருவர்களும் கிட்ட வந்ததும் சலாம் செய்து, ஒருவர் அசிஸ்டெண்ட் கண்ட்ரோலர் என்றும் மற்றவர் சார்ஜண்ட் என்றும் தாங்களே அறிமுகம் செய்து கொண்டார்கள். பிறகு பேச ஆரம்பித்ததும் என்னிடம் பேச வேண்டியவைகளை திரு. ராமநாதன் அவர்களிடம் சொல்லும்படி சொன்னோம். பிறகு அவர் பேசும் போதே ஒரு வித தைரியம் வந்தது. அதற்குள் பினாங்கிலிருந்து சில சங்கத்து நண்பர்கள் வந்து ஒரு கடிதம் கொடுத்தார்கள். அதில் இதைப் பற்றிய காரியம் ஒன்றுமில்லாமல்
நிகழ்ச்சிக் குறிப்பு இருந்ததால் அந்தக் கவலை நீங்கிவிட்டது. இதற்குள் மற்றொரு படகில் சாமி அற்புதானந்தா, சுப்பிரமணியம் முதலியவர்களும்
மற்றும் சில இந்து, மகமதிய கனவான்களும் வருவதைப் பார்த்தோம். இறங்க விடமாட்டார்களோ என்றுநினைத்த எண்ணம் போய் இவ்வளவு ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டது. பினாங்கில் இறங்கியவுடன் பலவிதமான விஷயங்கள் காதுக்கு வந்தன. அவற்றுள் ஒன்று நம்மை கத்தியால் குத்துவதற்கு ஒரு நபருக்கு 500 வெள்ளி பேசி ஏற்பாடு செய்திருப்பதாகவும், நாம் போகுமிடங்களிலெல்லாம் கலகம் செய்வதற்கும் துண்டு பிரசுரங்கள் போட்டு வழங்கி வருவதற்கும் 500 வெள்ளி பேசி பலரை: நியமித்திருப்பதாகவும், மற்றும் கிருஸ்துவுக்கு விரோதமாய் பேசினதாகவும், சொன்னதாகவும், மகமது நபிக்கு விரோதமாய் பேசினதாகவும், இந்து மதத்தை ஒழித்து இந்துக்களை மகமதிய மதத்தில் சேர்ப்பிக்க மகமதியரிடம் பணம் வாங்கிக் கொண்டு மலாய் நாட்டுக்கு வருவதாகவும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விரோதமாய் ஒத்துழையாமை பிரசாரம் செய்ய வருவதாக
வும், போல்ஷிவிசம் பிரசாரம் செய்ய வருவதாகவும் இன்னும் பலவிதமாக
துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் பத்திரிகை மூலமாகவும் பிரசாரம் செய்தி ருந்த விஷயம் நேரில் பார்த்தோம். தவிரவும் அவ்விடத்திய ஒரு ஆங்கில தினசரிப் பத்திரிகை, அரசாங்கத்திற்கும் சட்டசபை அங்கத்தினர்களுக்கும்
நாம் பெரிய கலகக்காரரென்றும் நம்மை மலாய் நாட்டில் விட்டால் ஜனசமூகத்
தின் சாந்த குணம் கெட்டு சர்க்காருக்கு தொல்லையேற்படுமென்றும் எச்ச ரிக்கை செய்வதாக ஒருவாரம் தவறாமல் தலையங்கமும் உப தலையங்கமும் எழுதி வந்தது. இது நிற்க “தமிழ் நேசன்” பத்திரிகைக்காரரான ஒரு அய்யங்
கார் ஊர் ஊராகச் சுற்றி பிரசாரம் செய்ததுடன் தனது பத்திரிகையில்,
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கடவுளுக்கும் மதத்துக்கும் ஆபத்து என்று தினப்படி எழுதிக் கொண்டே வந்தது. தவிர இவ்வளவும் போதாமல் திரு வரதராஜுலு நாயுடுவின் பேப்பரும் மருந்தும் விற்கும் ஆள்களும் கூலிகளும் விஷமப் பிரசாரம், அதாவது தோட்ட கூலிகளை கிளப்பி விட்டு தோட்டக்காரருக்கு தொல்லை விளைவிப்பான். இவன் “காந்தி மனிதன்” என்றும் சொல்லிவந்தார்களாம்.
மற்றும் ஒரு விசேஷம் அதாவது இந்து மகாசபைத் தலைவர், அவ்வூர் போலீஸ் கமிஷனரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்துப் பேசுகையில், இந்தியாவிலிருந்து வரும் ஈ.வெ. ராமசாமி என்பவர் எங்கள் கடவுளான இராமரை விவசாரத்தில் பிறந்தவன் என்று சொல்லுகின்றார். ஆதலால் அவரை இங்கே வரவிடக் கூடாது என்றாராம். அதற்கு அந்த போலீஷ் கமிஷனர், “அதற்கு நாம் என்ன செய்யலாம் எங்கள் வெள்ளைக் காரர்களில் சிலபேர் ஏசுகிருஸ்துவையும் இப்படித்தான் அதாவது அவர் தாயார். விவாகமாவதற்கு முன் அவரைப் பெற்றதால் விவசாரத்தில் தான் பிறந்து இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். கேட்டால் சைன்சுபடிக்கு ஒரு ஆள் கூடாமல் எப்படி பிள்ளை பிறக்கும் என்கின்றார்கள். ஆகவே மத விஷயங்களில் இப்படிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே இருந்து வருகின்றது. அதற்காக யாரையும் தூக்கில் போட முடியாது” என்றும் சொன்னாராம். இப்படியாகப் பல விதத்திலும் எதிர்ப் பிரசாரங்கள் செய்தார்கள் என்பது மாத்திரம் நமது காதுக்கு எட்டியதே தவிர
காரியத்தில் பலன் ஒன்றும் காண முடியவே இல்லை. “தமிழ் நேசன்” பத்திராதிபர் “ஒரு அய்யங்கார்” சர்க்காரார் நம்மை மலாய் நாட்டில் இறங்கக் கூடாதென்று உத்திரவு போட்டு விட்டதாகக் கட்டுக்கதை கட்டி விட்டதால் அதை நம்பி அனேகம் பேர் கப்பலிலிருந்து நாம் இறங்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டு இறங்கினால் குத்தி விடுவதாயும் கலகம் செய்வதாயும் பேசி விட்டார்கள். நாம் பினாங்கில் இறங்கியதும் அங்கு துறைமுகத்தில் ஜனங்கள் நடந்து கொண்டதை பார்த்த பிறகுதான் யாரும் எவ்வித எதிர்ப் பிரசாரமும் செய்யாமல் இருந்து விட்டார்கள்.
நிற்க, எதிர்ப் பிரசாரம் செய்வதற்கு ஏற்பட்ட காரணங்கள் என்ன என்று பார்த்ததில், பினாங்கில் இந்து மகாசபை என்று ஒரு சபை இருப்பதாகவும், அதை சர்க்கார் இந்துக்களுடைய பிரதிநிதி சபை என்று ஏற்றுக் கொண்டிருப் பதாகவும் அச்சபைப் பிரமுகர்களுக்கு அங்குள்ள இந்துக்களால் சில மரியாதைகளும் வரும்படிகளும் இருப்பதாகவும், நமது இயக்கத்தால்
அவற்றிற்கு மரியாதை குறைந்து வரும்படி குறைவதாகவும், அதனால் நமது இயக்கத்திற்கு விரோதமாய் வேலை செய்ய வேண்டி வந்ததாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்த “இந்து மகாசபை“யில் இந்துக்கள் என்பவர்களி லேயேபல வகுப்பாரை அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளுவதில்லை, என்கின்ற நிபந்தனை உண்டு. அதாவது ஆதி திராவிடர்கள், மருத்துவர்கள் முதலியவர்களை மாத்திரமல்லாமல் சமீப காலம் வரை நாடார்களையும் சேர்க்க மறுத்து வந்தார்களாம். முதல் முதலில் நாடார்களைச் சேர்க்கும்
குடி அரசு - 1930 0 38
போதும் அதிகமான பணம் கொடுத்ததால் தான் சேர்த்தார்களாம். இந்த யோக்கியதையுள்ள இந்து மகாசபை கெட்டுப் போகுமென்று சிலர் சத்தம் போட்டதால்தான் அதை யாரும் அந்நாட்டில் மதிக்கவில்லை. தவிர “தமிழ்
நேசன்” அய்யங்கார் நாம் போகும் ஒவ்வொரு ஊருக்கும் முதல் நாள் போய் வரவேற்புக்கு எவ்வளவோ இடையூறு செய்து கொண்டு போனதாக அனேகமாய் ஒவ்வொரு ஊர்களிலும் பிரஸ்தாபம் வந்து கொண்டே இருந் தது.இது தவிர மலாய் நாட்டில் உள்ள சங்கங்களில் எதில் எதில் பார்ப்பனர்கள். அங்கத்தினர்களாக இருந்தார்களோ அதிலெல்லாம் வரவேற்புக்கும் பத்திரத்திற்கும் கூடியவரை எதிர்ப்புகள் செய்து பலமான தோல்விகள். அடைந்ததுடன் இரண்டொரு சங்கத்தில் இது விஷயமாய் செய்த விஷமத் திற்கு பார்ப்பனர்களிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியிருந்ததை எங்களுக்குக் காட்டினார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் நமது மலாய் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் நாம் எதிர்பார்த்ததற்கு மேலான அளவு வெற்றிகரமாகவே
முடிந்தது. மகமதிய கனவான்களும் கிருஸ்தவ கனவான் களும் அவர்களில்
ஐரோப்பியர்களும் மற்றும் இந்து கனவான்களும் இந்த சுற்றுப் பிரயாணத்தில் சிறிதும் வித்தியாசம் பாராட்டாமல் எல்லோரும் கலந்து கொண்டதும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் போல் தலைமை வகித்து உபசாரங்கள் செய்ததும் நடவடிக்கைகளைப் பார்த்தால் நன்றாய்த் தெரியவரும். திருவாளர்கள் சுவாமி அற்புதானந்தா, கே. சுப்பிரமணியம், காளியப்பன், அய்யாரு, சாரங்கபாணி, ஒ.ராமசாமி நாடார், கோவிந்தசாமி, தாமோதிரம், பழனியப்ப செட்டியார், ஜனாப்புகள் முகம்மது ராவுத்தர், சீனி ராவுத்தர், முகம்மது யூசுப் முதலிய கனவான்கள் சிங்கப்பூரிலும் பினாங்கிலும் செய்த ஏற்பாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த இரண்டு ஊர்களில் மாத்திரம் 7500 ரூபாய்க்கு மேலாகவே செலவு செய்து இருக்கின்றார்கள். எவ்வளவு சொல்லியும் அவர்கள் சிறிதும் லட்சியம் செய்யாமல் எதிர்ப் பிரசாரக்காரர்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டுமென்கின்ற காரணத்தைச் சொல்லிக்கொண்டே வீண்: செலவு செய்தார்கள். எனவேநமதுமலாய் நாட்டு சுற்றுப்பிரயாணம் வெற்றிகர: மாக முடிந்தது என்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சி யுடன் தெரிவிப்பதுடன்
மலாய் நாட்டிலுள்ள இந்திய சகோதரர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியறி தலை செலுத்துகின்றோம். இந்திய கூலிகள் விஷயமாகவும் இந்திய பிரதிநிதித் துவ விஷயமாகவும் பின்னால் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.02.1930
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்
“எதிர் பிரசாரத்திணால் ' ஏற்பட்ட நண்மைகன்
கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு
சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர் கள் செய்யும் ஏமாற்றத்தையும் வஞ்சகத்தையும் பற்றியும் ராம கிருஷ்ணா மிஷினில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கிய மற்றவர்கள் என்றும் உதாரணமாக சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லை யென்றும் அங்கு நடக்கும் பணம் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பார்ப்பனரல்லாதாருடையதென்றும், வருஷம் 20000, 30000 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படு கின்றதென்றும், இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலை வருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. செளந்திரபாண்டியர் சட்டசபையில் கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும், ஆணாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக் கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமை
யாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொது மக்கள் பணத்தை வசூல் செய்து கொடுக்கின்றார்கள் என்றும், இங்கும் அதுபோல் இருக்கக் கூடாதென்றும் ஆசைப்படுவதாகவும் விவேகாநந்தர் அமெரிக்காவுக்கு இந்து மதப் பிரதிநிதியாய் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான
பிரதிநிதியாய் இல்லாமல் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாய் போய் கேசை ஜெயித்துக் கொண்டு வந்தாரென்றும் ஆகையால் அதனாலேயே இந்து மதம் என்பதற்கு யோக்கியதை வந்து விடாதென்றும் அவர் இந்தியாவையும் இந்துக்களையும் பற்றி இந்தியாவில் பேசி இருப்பதை பாருங்கள் என்றும், பார்ப்பனர்களைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதும், வருணாசிரமம் ஜாதி வித்தியாசம் ஆகியவைகளைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதை
யும், இந்து அரசாங்கமாகிய மலையாளத்தைப் பற்றி சொல்லி இருப்பதையும், அவர் விக்கிரகங்களைப் பற்றி சொல்லும் போது அவை பாமர மக்களுக்கு
குடி அரசு - 1930 N 40
வேண்டி ஏற்பட்டதே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல என்றுதான் சொன்னா ரென்றும், ஆனால் இப்போதைய விக்கிரகங்களை பாமர மக்களுக்கு உப யோகப்படாமலும் கண்ணில் பார்க்கக்கூட இடம் தராமலும் பண்டிதர்கள். பிரமஞானம் உடையவர்கள் கடவுளாலேயே அறிவாளிகளாய் பிறப்பிக்கப் பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும் அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும் தான் சாதனமாயிருக்கின்ற தென்றும் மற்றும் தென் இந்தியாவுக்கு வேண்டியதெல்லாம் உண்மையான சுயமரியாதையே என்று சொல்லி அவர் இருக்கின்றார் என்றும் மற்றும் இப்படி அவர் சொன்ன அனேக விஷயங்களை புஸ்தகத்தைப் பார்த்தே எடுத்துச் சொல்லி 2 மணி நேரம் கூட்டத்தையே ஆச்சரியப்படும்படி செய்து விட்டார்.
குறிப்பு : 03.01.1930 இல் கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 09.02.1930
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
| “தி ல, ல,
சைவன் :- அய்யா, தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா?
வைணவன்:- ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டு கால் பிராணிகளில் ஏணி வகையராவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகைய ராக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டு மரம் முதலியவை
நான் சாப்பிடுவதில்லை.இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக்காரர்களைப் பின்பற்றுவதாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன்.
சைவன் : - அப்படியா, இது நல்ல சைவம் தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போக வேண்டும் நான் போய் விட்டு வரு கிறேன். (என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ என்று நினைத்து ஓடிவிட்டார்.)
குடி அரசு - உரையாடல் - 09.02.4930
குடி அரசு - 1930 ) 42
கக்கம் 5:
அலங்க னு pumio மதாய் தரி பப் 434, : இெுத்ததுப் இருக் தம் இந்த
" . - காக் கால்செல் இரமானத்தை த, அரித்து என்ன. ச் டாங்டர் சா வ் அவர் வன்க களும் ராமதால் பர்தது. அகர் சான்கம
பட ள்கள் அப அதன ஸ்னனதிதரு ] சனை வித்த விட்ட 0 b
கூட நியாயய்மோ கானையமோ அவர்கள் இப்ப சட்ட எனக்கு ட்ட அடுப்ப, இல்லாம் இ் இருக்க இடமி என்றே கரத நான் பேகற்காக சொக்கம் எய்த்து ம்
43 ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
குடி அரசு - 1930 0 44
மாணக்கேடாண காரிமாம்
லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தை அனுசரித்து என்று திருவாளர்கள்
டாக்டர் யூ. ராமராவ் அவர்களும் ராமதாஸ் பந்தலு அவர்களும் ராஜிநாமா கொடுத்துவிட்ட ராஜாங்க சபை (ஸ்டேட் கவுன்சில்) ஸ்தானங்கள் இரண்டிற்
கும் இரண்டு கனவான்கள் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாய் தெரிந்தோம். இவர்களில் ஒருவர் திருவாளர் எ. ராமசாமி முதலியாரும் மற்றவர் திருவாளர் டி ஆர். ராமச்சந்திர அய்யரும் ஆவார்கள். சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் எதற்காக திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யரை ராஜாங்க சபைக்கு அனுப்பினார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. திரு. டி.ஆர். ராமச்சந்திரய்யர் இந்து வருணாசிரம தர்ம ஸ்தாபனத்தின் தலைவர். மனுதர்ம சாஸ்திரத்தையும் அதில் சொல்லுகின்றவைகளையே சனாதன தர்ம மென்றும் சொல்லுகின்ற வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்யும் சங்கத்திற்கும் தலைவர். இதை அனுசரித்து தினமும் வருணாசிரம மகாநாடு, பிராமண தர்ம மகாநாடு, சனாதன தர்ம மகாநாடு, ஆரிய தர்ம மகாநாடு ஆகியவைகள் கூட்டி தீர்மானங்கள் செய்து பிரசாரமும் செய்பவர்.
அன்றியும்.
உயர்திரு ராமசாமி முதலியார் பெரிதும் பாடுபட்டு உதவி செய்து உருப்படி செய்த சாரதா மசோதாவை அடியோடு கவிழ்க்கவும் ஒழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். இவ்வளவும் இல்லாமல் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளுக்கும் விரோதி. அதை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டிருப்
பவர். அப்படிப்பட்டவரை சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட விட்டிருப்பதைப் பார்த்தால் இது ஜஸ்டிஸ் கட்சிக்கு மாத்திரமல்லாமல் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே பெருத்த அவமானமென்றே சொல்லுவோம்.
ஏனெனில் ராஜாங்க சபைக்கு சென்னை மாகாணத்தார் சிறப்பாக தமிழ் நாட்டார்கள் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யரை தங்கள் பிரதிநிதியாய் ஒரு மனதாய் தேர்ந்தெடுத்தனுப்பி இருக்கிறார்களென்பதும் இந்த நாட்டின் பொது ஜனஅபிப்பிராயம் ஒரு மனதாய் அவரது கொள்கைக்கே சாதகமாய் இருக்கின்றது என்பதும் அல்லது குறைந்த அளவு பெரும்பான்மையான
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஜனங்கள் வருணாசிரமத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் இவற்றை வலியுருத்
தும் மனுதர்மத்திற்கும் அனுகூலமாயிருக்கின்றார்கள் என்றாவதும் முடிவு செய்ய வேண்டியதாக இருக்கின்றது.
திரு. பனக்கால் அரசர் அவர்கள் சென்ற தேர்தலில் சட்ட சபைக்கு
நிற்கும் போது பார்ப்பனர்களும் சிறப்பாய் சனாதன தர்ம வருணாசிரமக் காரர்களும் நடந்து கொண்டதற்கு சென்னை ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள். இம்மாதிரி நடந்து கொண்டால் அவர்களது சுயமரியாதைக்கு நாம் வியாக்கி யானம் சொல்லாமலே வாசகர்கள் தெரிந்து கொள்வார்களென்று நினைக்கின்
றோம். நிற்க மேற்படி ஸ்தானங்களுக்கு திரு. எ. ராமசாமி முதலியாரும் திரு. எம்.கே.ரெட்டியாரும் நிற்பதாய் முதலில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பிறகு, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பிரவேசித்து ராஜி செய்து திரு. ரெட்டியாருக்கு பதிலாக திரு கோபதி நாராயணசாமி செட்டியாரை நிற்கும்படி ஏற்பாடு செய்திருப்பதாக செய்தி தெரியவந்தது. ஆனால் கடைசியாக அந்த ஸ்தானத்தில் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று பார்த்தோம். இதிலிருந்து அதாவது திரு. எம். கே. ரெட்டி விலக்கப்பட்டதற்கும் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் புகுத்தப்பட்டிருப்
பதற்கும் இடையில் ஏதாவது சூழ்ச்சியோ தந்திரமோ புகுந்திருக்கவேண்டுமே அல்லாமல் ஒரு சிறிது கட நியாயமோ நாணையமோ இருக்க இடமில்லை என்றே கருத வேண்டியிருக்கின்றதற்கு வருந்துகின்றோம். நிற்க, தஞ்சை ஜில்லாவுக்கும் இது போலவே திரு. சர். பி.ராமசாமி அய்யர் அவர்களைச் சுலபமாய் தெரிந்தெடுக்கப்பட சில ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் ஒப்புக் கொண்டாய் விட்டதாகவும் தெரிந்தோம். இது முன் விஷயத்தைக் காட்டிலும் அதிகமான மானக்கேடான விஷயமாகும். பார்ப்பனரல்லாதார் நன்மை யையோ ஜஸ்டிஸ் கட்சியின் னிப்பட்ட நபர்களின் நன்மைகள் தவிர) பொது நன்மையையோ கருதிப் பார்ப்போமானால் மேல் கண்ட இரண்டு பார்ப்பனர்
களிலும் திரு. சர். சி.பி.அய்யரே பெரிய ஆபத்தும் சரியான எதிர்ப்புமானவர். எப்படியென்றால் முன்னவர் வாயில் சத்தம் போடுகின்றவர் அவரால் ஒன்றும் பிரமாதமான ஆபத்து வந்து விடாது. ஏதோ சில பணக்காரர்கள் பட்டை நாமத்தையும் விபூதிப் பூச்சையும் பூசிக்கொண்டு பார்ப்பனர்கள் பின்னால் சாமி சாமி என்று கும்பிடவும் ஏழைகளைப் பார்த்தால் சீறி விழவும் முடியும். அன்றியும் வெளிநாட்டு மக்கள் நம்மை இழிவாய் நினைப்பார்கள். மற்றபடி பின்னவரோ என்றால் அவர் காரியத்தில் கழுத்தை அறுப்பவர். திரு. சர். சி. பி.அய்யர் சென்னை அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருக்குமட்டும் சென்னை அரசாங்கத்தில் உத்தியோகம் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கோய முத்தூர் மகாநாட்டில் சொன்னோம். அன்றியும் அவர்களாலேயே ஜஸ்டிஸ் கட்சியார்கள் உத்தியோகம் பதவி அதிகாரம் ஆகியவைகள் இழந்து பரித விக்க நேர்ந்தார்களென்றும் ஜஸ்டிஸ் கட்சிக்கு அவர் செய்த கொடுமை யையும் துரோகத்தையும் வண்டி வண்டியாய் எடுத்துச் சொன்னதோடு அவர். நாணையத்தைப் பற்றியும் குற்றம் கூறி ஆகாயத்திற்கும் பூமிக்குமாக பிரசாரம்
குடி அரசு - 1980 N 46
செய்தோம். அப்படிப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் இப்போது அவரை (சர். சி. பி. யை! இந்தியா சட்டசபைக்கு கஷ்டமின்றி சற்று ஏறக்குறைய போட்டியின்றி அனுப்பப்படுகிறாரென்றால் பொது ஜனங்கள் என்ன நினைப்பார்கள்? எனவே இதற்கு அனுகூல மாயிருக்கும் கட்சிப் பிரமுகர்கள் சிலரின் நாணையத்தைப் பற்றி என்ன சொல்வது என்பது நமக்கே விளங்கவில்லை. அதிலும் சர். சி. பி. அவர்கள் இந்திய சட்டசபைக்கு தான் போவதற்காக சொல்லும் காரணம் என்ன வென்றால் ரவுண்டேபிள் கான்பரன்சுக்கும் புதிய சீர்திருத்தத்தில் விதிகள் செய்வதற்கும் தனக்கு செளகரியம் இருக்குமென்று கருதியே இப்போது தான் ஆசைப்படுவதாக சொல்லி கேட்டுக் கொண்டாராம். அப்படியானால் இந்த சமயத்தில் அவர் அங்கு போக நாம் விடலாமா? என்று யோசித்தால் கடுகளவு சுயமரியாதை இருந்தாலும் அவர் அங்கு போகாமல் இருப்பதற்கு தன்னால் கூடியவரை முயற்சி செய்வதே உண்மையான பார்ப்பனரல்லாதாருக்கோ ஜஸ்டிஸ் கட்சியாருக்கோ கடனாகும். அப்படிக்கு இல்லாமல் அவரைச் சுலபமாய்ப் போக விடுவது என்பது நினைக்கநினைக்க பதறக்கூடிய காரியமாய் இருக்கின்றது.
தவிர சென்னை நகரத்தில் காலியாயிருக்கும் ஒரு சென்னை சட்டசபை ஸ்தானத்திற்கு ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் ஒருவரும் நிற்காமல் அதையும் ஒரு வருணாசிரமக்காரராகிய திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கு போட்டியின்றி விட்டு விட்டதாகத் தெரிகின்றது. இதுவும் ஜஸ்டிஸ் கட்சிக்கு பெரிய அவமானமும் அதன் பலக்குறைவைக் காட்டக் கூடிய அறிகுறியும் ஆகும் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சி உண்மை வீரர் எனத்தகும்
திரு. சுந்திரராவ் நாயுடு அவர்கள் அந்த ஸ்தானத்திற்கு நிற்பதாக தெரிவித்து விட்டு கடைசியாக வருணாசிரமத்திற்கு போட்டியின்றி விடுவதென்றால் இதிலும் எந்தத் தலைவர் புகுந்து என்ன புரட்டுப் பண்ணினார்களோ
என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறதும் தவிர இது மிகவும் வருந்தக்கூடிய காரியமாகும்.
இவைகள் தவிர சென்னை நகரத் தொகுதியில் இந்திய சட்டசபைக்கு காலியான ஒரு ஸ்தானத்திற்கு ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் இரண்டு கனவான்
கள் நிற்கின்றார்கள். ஒன்று பி.டி. குமாரசாமி செட்டியார், இரண்டு திரு. சிவப் பிரகாச முதலியார் ஆவார்கள். இதில் ஏன் இந்தப் பிரமுகர்கள் போட்டிப் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.ராஜாங்க சபைக்கு ஒரு பார்ப்பனர் போட்டி இன்றிப்போக பைசல் செய்த தலைவர்களுக்கு இதை போட்டியில்லாமல் செய்யத்தக்க யோக்கியதை இல்லையா என்று கேட் கின்றோம். ஆகக் கூடி இந்தப் போட்டி சுயநலப் போட்டியே தவிர இதில் சிறிதாவது பொதுநலப் போட்டி இருப்பதற்கு இடமிருப்பதாய்த் தெரிய வில்லை. ஏனெனில் திருவாளர்கள் டி.ஆர். ராமச்சந்திர அய்யரையும் சாமி வெங்கிடாசலம் செட்டியாரையும் போட்டி அன்றியில் விட்டவர்கள் இதில் போட்டிபோடுவது பொது நலத்தை உத்தேசித்ததாய் இருக்க முடியுமா என்று
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கேட்கின்றோம். அந்தப்படி இதில் இந்திய சட்டசபையில் பொது நலப் போட்டிக்கு கடுகளவாவது இருப்பதாக யாராவது காரணம் சொல்ல வரக் கூடுமானால் அப்போது சென்னை சட்டசபையும் இராஜாங்க சட்டசபையும் மனுதர்மத்திற்கும் வருணாச்சிரம தர்மத்திற்கும் போட்டி இல்லாமல் விட்டதில் கண்டிப்பாய் சுயநலத்தைத் தவிர வேறு ஒன்றுமே இருக்க முடியாது என்று தான் சொல்லித் தீர வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட கனவான்களாலேயே ஜஸ்டிஸ் கட்சியானது ஜாண் உயரவும் முழம் தாழவுமாய் கஷ்டப்பட்டுக் கொண்டு வருகின்றது. இனியும் அதே நிலைமை நிலைத்திருக்கப் பாடு படுவது சென்னையில் உள்ள சிலருக்கு ஏதாவது பலன் விளைவிக்கக் கூடியதாயிருந்தாலும் சென்னை மாகாணத்தில் சென்னைக்கு வெளியில் சிறப்பாக தமிழ் நாட்டில் அது பொது ஜனங்களுக்கு பெருத்த ஆபத்தையும் அவமானத்தையும் கொடுக்கக் கூடியதாகவே முடிவதாகும் என்று மிகுதியும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.02.1930
குடி அரசு - 1930 0 48
௬சமயாமரியாதை மாகாண மகாநா௫
சுயமரியாதை மாகாண மகாநாடு முதல் முதலாக சென்ற வருஷம்
செங்கல்பட்டில் கூடியதும் அதை அடுத்த வருஷத்திற்கு ஈரோட்டிற்கு அழைக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.
சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி 4, 5 வருஷ கால மானாலும் அது ஒரு விதமாக அதாவது சாதகமாகவோ அன்றி பாதக மாகவோ எப்படியோ ஒரு விதத்தில் பொது மக்களின் கவனத்தை இழுத்து எங்கு பார்த்தாலும் இவ்வியக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் படியான நிலைமையை பெற்றுவிட்டது.
மற்றும் இவ்வியக்கம் வேகமானது. இன்றையதினம் அரசியல் விஷயங்களிலும் மத விஷயங்களிலும் சமூக விஷயங்களிலும் புகுந்து அவைகளைவெல்லாம் சற்று ஆட்டி விட்டதோடு இதன் பேரால் பிழைத்து வந்தவர்களின் பிழைப்பில் மண் போடும்படியான நிலைமை ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவைகளுக்கு ௬ஜுவு வேண்டுமானால் நமது எதிரிகளின் வாக்கு மூலங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதாவது சட்ட சபைகளில் திரு. முத்துரங்க முதலியார் போன்றவர்கள் மூலமாய் சுயமரியாதை இயக்க விஷயமாய் கேட்கும் கேள்விகளாலும், வெளியில் திருவாளர் சத்தியமூர்த்தி, பி.வரதராஜுலு போன்றவர்கள் தேசியத்திற்கு ஆபத்து என்னும் பேரால் பிரசவ வேதனைப்படுவதாலும், இந்து கிறிஸ்தவ மகமதிய முதலிய மதப் புரோகிதர்கள் இதைப் பற்றி ஆவலாதி கூறுவதாலும், சைவ சமாஜக்காரரும், வைஷ்ணவ மண்டலக்காரர்களும் கூடிக் கொண்டு மூலை மூலையாய் ஒப்பாரி வைத்து அழுவதாலும், பண்டிதர்கள் சாஸ்திரிகள்: தங்களுக்கு மரியாதை இல்லாமல் பரிதபிக்கின்றதாலும் பல மடாதிபதிகள். இதை எதிர்க்க பணம் கொடுத்து கூலிகளைப் பிடித்து உளரச் சொல்லு வதாலும், சில அதாவது சிருங்கேரி போன்ற பெரிய மடாதிபதிகள் நம்மையே ராஜி பேச “ஸ்ரீ முகத்தின்” மூலம் கூப்பிடுவதாலும் மற்றும் சனா தன மகாநாடுகளும், ஆஸ்திகர்கள் மகாநாடுகளும் தினமும் நடப்பதாலும், கோவில் அதிகாரிகள் தங்கள் கோவில்களுக்கு ஆபத்து என்றும் வரும்படி குறைந்து விட்டதென்றும் “கோவிலுக்குள் தாழ்ந்த வகுப்பார் பிரவேசித்து
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
விடுவார்கள்” என்று சொல்லி நாம் போகின்ற ஊர்களில் எல்லாம் போலீஸ்: உதவியுடன் கதவுகளைச் சாற்றிக் கொண்டிருப்பதாலும் ஒருவாறு இதன் வேகத்தை உணரலாம்.மற்றும் ஆங்காங்கு நடைபெறும் சடங்கு புரோகிதம்
பகிஷ்காரத்தாலும், கலப்பு மணம் விதவை மணம் ஆகியவைகளின் மலிவா
லும் கூட உணரலாம். அன்றியும் இவ்வியக்கம் நமது நாடு மாத்திரமல்லாமல், வெளிநாடுகளிலும் கானலில் நெருப்பு பிடிப்பது போல் படர்ந்து கொண்டே
யும் போகின்றது.
உதாரணமாக நாம் இவ்வியக்க விஷயமாய் மலாய் நாட்டுக்குப் போகும் போது தமிழ்நாடு பத்திரிகை செய்த விஷமம் யாவருக்கும் தெரிந்
திருக்கும். மலாய் நாட்டிலுள்ள இவரது கூலிகளையும் மருந்து விற்கும் ஏஜண்டுகளையும் ஏவிவிட்டு விஷமம் செய்ததும் தெரிந்திருக்கலாம். நாம் மலாய் நாடு போகின்றோம் என்று தெரிந்ததும் நம்மை “தடுத்து விட்டார்கள்” “நாயக்கர் கோஷ்டி பகிஷ்காரம்” என்றும் “நாயக்கருக்குத்தடை உத்தரவு” என்றும் அது பலவிதமாய் எழுதி வந்ததும் யாவரும் அறிந்ததே. ஆனால்
நாம் மலாய் நாடு போய் வந்த பிறகு அதே தமிழ்நாடு பத்திரிகையும் அதன் பத்திராதிபரான திரு. வரதராஜுலுவும், அதன் கூலிகளும் பொறாமைப்படும் அளவையும் தன்னை அடியோடு ஒழிக்க முயற்சித்த ஆட்களின் காலுக்குள் புகுந்து கூலி கொடுத்துக் கட்டிவைத்து அழுகும் ஒப்பாரி அழுகையும்
ஆத்திரப்படும் மாதிரியும் அவர் பத்திரிகையில் பார்த்தாலே குடியேற்ற நாடு களிலும் இவ்வியக்கத்தில் மக்களுக்குள்ள ஆர்வம் இன்னதென விளங்கும்.
இவற்றிற்குக் காரணம் என்னவென்றால் எவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்ட காலத்தும், எவ்வளவு சூழ்ச்சி ஏற்பட்ட காலத்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆரம்பித்த கொள்கை களிலிருந்து ஒரு சிறிதும் பின் வாங்காமல் உறுதியாய் நின்றதோடு மேலும்
மேலும் முன்போகவே முயர்ச்சித்ததாலுமே தான் எவ்வித குறைவோ தடையோ இல்லாமல் இவ்வியக்கம் முன்னேறிக் கொண்டுபோகின்றது.
நிற்க, எப்படி எல்லா இயக்கங்களையும் ஒரு கூட்டம் தங்கள் சுய நலத்துக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் சோம்பேரி வாழ்வுக்கும் உபயோகப் படுத்தி வாழ்வது போலவே இவ்வியக்கத்தையும் சிலர் தங்கள் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகப்படுத்திக் கொண்ட முறையில் ஏதாவது
சிறு சிறு தடையோ பொது ஜனங்களுக்கு சிறு அதிருப்தியோ உண்டாகும் படியான காரியங்கள் சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை.
நாம் ஆட்சேபிக்கவில்லை. உதாரணமாக ஈரோட்டில் நடந்த இரண்டொரு காரியங்களைச் சொல்லலாம். ஆனாலும், அவைகளைக் கண்டு நாம் பயப்படாமலும் சளைக்காமலும் அதற்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்து
விட்டு மேல் போக வேண்டியது அறிவுடைமையே ஒழிய, அதற்காக இயக் கத்தை குற்றம் சொல்லிவிடக் கூடாது. இப்போதும் கூட வயிற்றுப் பிழைப்புக்
குடி அரசு - 1930 0 50
காக சுயமரியாதை இயக்கத்தின் பேரை வைத்துக் கொண்டு திரிபவர்களில்
சிலர் திருடுவதையும், நம்பிக்கை துரோகம் செய்வதையும், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதையும், சிறு பிள்ளைகளை வஞ்சிப்பதையும், சமயத்திற் குத்தகுந்தபடிவேஷம் போட்டு பேசி மக்களை ஏமாற்றிப் பொருள் பறிப்பதை:
யும், துர்செய்கைகளையும் செய்துவிட்டு சுயமரியாதை என்று சொல்லிக் கொண்டு திரிந்து வயிறு வளர்ப்பதையும் நாம் பிரத்தியட்சத்தில் பார்க்கின் றோம். இதற்காகவும் நாம் இயக்கத்தை குற்றம் சொல்லவோ நிறுத்தி விடவோ
முயற்சிப்பதும் மடமையேயாகும். வேண்டுமானால் எதிர்காலத்தில் இவ்வித மான காரியங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதை முன்னிட்டு
சற்று ஜாக்கிரதையாயும் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் மனப்பூர்த்தியாய் ஓப்புக் கொள்ளுகின்றோம். இவ்வியக்கம் ஏற்பட்டு இன் றைக்கு 4, 5 வருஷகாலம் ஆகியிருந்தாலும் இதன் பேரால் நம்மால் வெளிப்படுத்தப்படும் பத்திரிகைகளுக்கும் கொள்கைகளுக்கும் நாமே பொறுப்பாளியாயிருந்து வந்ததோடு பொது ஜனங்களிடமிருந்தோ அல்லது வேறு நண்பர்களிடமிருந்தோ இன்றைய வரையில் ஒரு சின்னக் காசாவது இவைகளுக்காக நாம் வாங்கவில்லை என்பதையும் இந்த சமயத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். இவ்விஷயத்தில் நாம் வேண்டுமென்றே ஜாக்கிரதையாய் இருந்து வந்திருக்கிறோம். ஏனெனில் பணம் கொடுத்த காரணத்தாலோ அல்லது வேறுவித உதவி செய்த காரணத்தாலோ நமது அபிப்பிராயத்தின் மீது அதிகாரம் செலுத்த ஏற்பட்டு விட்டால் அது நமது இயக்கத்திற்கு தொல்லை விளைவிக்கக் கூடியதாகி
விடக் கூடுமென்று பயந்தே, நமது அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்பவர்கள். எல்லாம் நமக்கு வேண்டியவர்கள் என்றும், ஏற்றுக் கொள்ளாதவர்களானால் அவர்களிடத்தில் நமக்கு வேலையில்லை என்றும் மாத்திரம் முடிவு செய்து கொண்டு நடந்து வந்திருக்கின்றோம். இந்த முறையில் இன்றையதினம் வேண்டாதவர்களாயிருப்பவர்கள் நாளை வேண்டியவர்களாகலாம்; வேண்டி யவர்களாயிருப்பவர்கள் நாளை வேண்டாதவர்களுமாகலாம். ஆதலால் அப்படிப்பட்ட சமயங்களில் நாமும் மற்ற யாவரும் மனவருத்தப்படாமல் இருப்பதற்கு எவ்வித உதவியும் யாரிடமிருந்தும் பெறாமலிருந்தால்தான்
முடியும். அன்றியும் இந்தப்படி தைரியமாயும் உறுதியாயும் இருக்க வசதி இருந்தால்தான் நமது அபிப்பிராயத்தை நிலைநிறுத்தப் பாடுபடமுடியுமே ஒழிய தாட்சண்ணியம் இருந்தால் முடியவே முடியாது.
இவ்வியக்கத்தை ஆரம்பிக்கும் போதும் கூட நாம் “என்னையே எண்ணி இப்பெரும் பழி ஏற்றேன்” என்று ஒரு பாட்டில் சொல்லப்படுவது போல் நம்மையே நாம் பொருப்பாளியாகவும் உதவியாளனாகவும் எண்ணி
யும் நம்பியுமே தான் இக்காரியத்தில் இறங்கினோமே யொழிய நமக்கு “தொண்டர்கள் உண்டு. தலைவர்கள் உண்டு, சினேகிதர்கள் உண்டு பண: உதவி செய்பவர்கள் உண்டு” என்று நினைத்து அவர்கள் உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து இவ்வியக்கத்தில் நாம் இறங்கவில்லை. ஆதலால்
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
நமது கொள்கைகளை உத்தேசித்து வருகின்றவர்களை வரவேற்க வேண்டி யதும் போகிறவர்களைப் போகச் சொல்ல வேண்டியதும், ஒழுக்கமற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தள்ளப்பட வேண்டியதும் இவ்வியக்கத்தின் கடமையாகிவிட்டது. இவ்விஷயத்தில் நமக்கு உள்ள உறுதிதான் இவ்வியக்
கத்திற்குச் சொத்தும் அஸ்திவாரமுமேயொழிய வேறொன்றுமில்லை. இது
சமயத்தில் இதை ஏன் எழுதவேண்டி வந்ததென்றால் சில தலைவர்களும் சில தொண்டர்களும் எதிரிகளாயும் எதிரிகளின் ஆள்களாயும் இருக்கின்ற இந்த
சமயத்தில் மகாநாடு நடத்துவது சற்று கஷ்டமாயிருக்காதா? என்று சில நண்பர்
கள் கவலைப்படுவதால் இதை எழுத வேண்டி வந்ததே தவிர வேறில்லை...
செங்கல்பட்டில் சிலர் ஏற்றுக் கொண்டபடி, மகாநாடு இவ்வருஷம்
மார்ச்சு அல்லது ஏப்ரலில் நடத்த வேண்டியது அவசியமானது. அதற்கு இது வரை ரூ.3000 போல் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இனியும் இரண்டாயிரம் ரூபாய் ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் கிடைத்து விடலாம். இது ஆனதும் மகாநாட்டின் வேலை துவக்கமாகிவிடும். பிறகு மேல் கொண்டு. கிடைப்பதையும் வெளி வசூல்களையும் உத்தேசித்தே மகாநாட்டை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி யோசிக்கப்படும். ஏனெனில் சென்ற மகாநாடு 10-ஆயிர ரூ. வரை செலவு செய்து இரண்டு நாளில் முடித்து விட்டதானது பலருக்கு ஏமாற்றமாயும் பொசுக்கென்றும் போயிருக்கும். ஆதலால் ஈரோட்டில் ஒரு வாரமாவது மகாநாடு நடத்த வேண்டும் என்று கருதுகின்றோம். ஏனெனில் ஒவ்வொரு தினமும் இயக்க சம்மந்தமான வேறு மகாநாடுகளும், தனித்தனி உபன்னியாசங்களும், கண்காட்சிகளும், நாடகங் களுமாக நடத்திக் காட்ட வேண்டுமென்று சில நண்பர்கள் ஆசைப்படுகின்
றார்கள். அதுபோலவே சில வடநாட்டுப் பெரியார்களை இங்கு வரவழைக் கவும் உத்தேசித்திருக்கின்றோம். அநேகமாய் இம்மாதக் கடைசி வாரத்தில் இங்கு சுயமரியாதை மகாநாடு ஆபீசு ஒன்று திறக்கப்படும். திரு ராமநாதன் அவர்கள் அதன் முக்கிய நிர்வாகஸ்தராய் இருப்பார். அது சம்பந்தமான கடிதப் போக்குவரத்துகள் அவ்வாபீசுக்கே வைத்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்வதோடு மகாநாட்டில் வேலை செய்ய இஷ்டமுள்ள கட்டுப்
பாட்டில் நிலை உள்ளவர்களும், உண்மையிலும் ஒழுக்கத்திலும் லட்சியமுள் ளவர்களுமான தொண்டர்கள் கடித மூலமாய் இப்போதே தெரிவித்துக் கொள்ளக் கோருகிறோம். அநேகமாய் மார்ச்சு முதல் வாரத்தில் தொண்டர். களுக்கு அழைப்பு வந்து விடும். உடனே வரத் தயாராய் இருப்பவர்களே.
எழுதவும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.02.1930.
குடி அரசு - 1930 0 52
“குழு அரசு
சந்காதாறர்களுக்கு ஓர் அறிவிப்பு
“குடி அரசு” பத்திரிகை சந்தாதாரர்களால் தங்களுக்குப் பத்திரிகை. சரியாய் வருவதில்லை என்பதாக தினம் ஏராளமான ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் பல பத்திரிகையின் மீதுள்ள வெறியி னாலும் (சில பணத்தை உத்தேசித்ததாகவும் இருக்கலாம்) பலவாராக பொருமை இழந்து எழுதப்பட்டவைகளாக காணப்படுகின்றன. பத்திரிகை: சென்னைக்கு மாற்றப்பட்டதாலும் சென்னையில் ஏற்பட்ட பலவிதத் தொல் லையாலும் நாம் மலாய் நாட்டுக்கு போய் இருந்த காலையில் பத்திரிகை: நிருவாகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் நடத்தையாலும் பத்திரிகைகள் 3 வாரம் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் நாம் சரியாய் அனுப்பிய காலங்களில் கூட தங்களுக்கு சரியாய் பத்திரிகை கிடைக்கவில்லை என்பதாக வரும் ஆவலா திகளே அநேகமாய் காணப்படுவதால் நாம் அவற்றிற்கு ஒரே பதில் தான் சொல்லக்கூடிய நிலையில் இருக்கின்றதற்கு வருந்துகின்றோம்.அதாவது, நாம் வாரம் 9000 காப்பிகள் அச்சடித்ததற்கு காகித செலவும், அச்சடித்தவைகளை தபாலில் அனுப்பியதற்கு ஸ்டாம்பு செலவும், ரயிலில் பார்சலாய் 47 பார். சல்கள் அனுப்பியதற்கு பார்சல் செலவும், இரசீதுகளும் நமது சந்தாதாரர். களுக்கு மெய்ப்பிக்க தயாராயிருக்கிறோம். மற்றபடி அது சந்தாதாரர். களுக்குப் போய்ச் சேராததற்கு நம்மால் காரணம் சொல்லி முடியாது. வருஷ சந்தா 3ரூ.க்கு பதிலாக 4 ரூபாயாகவும் வெளிநாட்டுக்காரர்கள் கீரூபாயுக்குப் பதிலாக 5 ரூபாயாகவும் அனுப்பினால் அப்பேர்ப்பட்ட சந்தாதாரர்களுக்கு பத்திரிகையை நாம் தபாலாபீசில் போட்டதற்காக தபாலாபீசில் ஒரு அத்தாட்சி வாங்கி ஒப்புவிக்க ஏற்பாடு செய்யப்படும். இதைத் தவிர மற்றபடி நம்மால் வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்: ளுகின்றோம். ஏனெனில் குடி அரசு ஆபீசுக்கு வாரம் ஒன்றுக்கு சராசரி 150 ரூபாய் வீதம் மாதம் 600 ரூபாய்க்கு மேற்பட்டு ஸ்டாம்பு விற்கும் தபால் இலா காவும் வாரம் 47 பார்சல் வீதம் குடி அரசுக்கு பார்சல் சார்ஜ் வாங்கும் ரயில் இலாக்காவும் குடிஅரசு விஷயத்தில் நடந்து கொள்ளும் மாதிரியைப் பார்த்
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தால் நாம் இவ்வளவு பொருப்பு தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கண்டிப் பாய் சொல்ல வேண்டி இருக்கின்றது. ஏனெனில் நமது பத்திரிகையின் தொண்டு அப்படிப்பட்டதாய் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இந்த நிபந்த னைக்குக் கட்டுப்பட்டவர்களே சந்தாதாரர்களாய்ச் சேர்ந்தால் போதுமானது.
குடி அரசு - அறிவிப்பு - 16.02.1930.
குடி அரசு - 1930 N 54
ஓர் வேண்டுகோள்
50 வருஷத்திற்க முண் சுயமரியாதை இயக்கம்
சுமார் 40, 50 வருஷத்திற்கு முன் பதிப்பித்ததும், இந்து மத ஆச்சார ஆபாச தரிசினி என்ற பெயர் கொண்டதும்,762 பாடல்களை உடையதும். கிரெளவுன் ஒண்ணுக்கு எட்டு சைசில் 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ் புத்தகம் எங்கேயாவதும், யாரிடத்திலாவதும் கிடைக்குமானால் தயவு செய்து வாங்கி உடனே நமக்கு அனுப்பிக்கொடுக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
ஏனெனில் அப்புத்தகம் ஒன்று நமக்கு ஒரு மாதத்திற்கு முன் ஒரு நண்பரால் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மிக்க பழயதாகவும் முதலிலேயே சில பக்கங்கள் இல்லாமலும் சில பக்கங்கள் கிழிந்தும் சரிவரத் தெரியாமலும் இருப்பதால் கிழியாத புத்தகம் ஒன்று வேண்டியிருக்கிறது. அப்புத்தகம் நமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமாய் வைத்துப் பாடின பாட்டுகள் அனேகம் அதில் இருக்கின்றன.
ஈ.வெ.ரா.
குடி அரசு - வேண்டுகோள் - 16.02.1930
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
உதிர்ந்த மலர்கள்
புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி
இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் “இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக் கண்டவரைக் கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேரு மென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறு ஜன்மம் எடுக்கப்படும்”
என்றும் எழுதி வைத்ததே காரணமாகும். * * * எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கி யதை அற்றவனாவான். * * க
புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்கு பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன வென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாஸ்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்துவிடுவார்கள் என்கின்ற பயம்தான். க க க
ஜாதி மத வித்தியாசங்களும் அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும் சிறிதும் அழியாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற வர்கள் ஜாதிகளின் பேராலும் மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆக்ஷேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ நாணயமோ நியாயமோ இருக்க முடியுமா என்றும் தான் கேட்கின்றேன்.
- ஈவெரா.
குடி அரசு - துணுக்குகள் - 16.02.1930
குடி அரசு - 1930 0 56
தமிழ் »
“தமிழ் நாடு” பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங்களுக்கும், திரு. கிருத்திவாசய்யர்.
நாம் குடி அரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதின வைகளில், தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத்
திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்பதற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப்
பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார் மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம். ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொரு வர்களுடைய மறுப்புகளோ எதிர்ப்புகளோ கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகி விட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலாமென்பதே நமது கருத்தாகும். ஆனால் ஒரு விஷயம் இப் போதே எழுத வேண்டியது அவசரமென தோன்றுகின்றது. அதாவது திரு. கிரித்திவாசய்யர் ரயில் சார்ஜுக்கு பணம் நம்மிடம் வாங்கவில்லையென்று எழுதியிருப்பதில் அவர் அந்தப்படி எழுதுவதற்கு நாம் ஆச்சரியப்பட வில்லையானாலும் பொதுஜனங்கள் உண்மையை அறியவேண்டி மறுபடியும் ஒரு தடவை நாம் “கிருத்திவாசய்யருக்கு ரயில் சார்ஜ் கொடுத்தது உண்டு” என்று எழுதுகின்றோம். அதுவும் நாம் சென்னையில் குடி அரசு ஆபீசின்
முன் கொட்டியிருந்த மணல் மேட்டில் இருக்கும்போது இந்த கேசு விசாரணைக்கு மிகச் சமீபத்த முந்திய நாள் கேசு வாய்தாவைச் சொல்லி ஈரோட்டுக்கு போக வேண்டுமென்று கேட்டு நாம் 5 ரூ. நோட்டாக ஒன்று எடுத்துக் கொடுத்தோம் என்று உறுதியாகச் சொல்லுகின்றோம். இந்த தடவை யும் அவர்மறுப்பாரானால் அது சமயம் திரு. கிருத்திவாசய்யருடன் கூட வந்த. மற்றொரு அய்யருடையவும் அவர் கேட்டு வாங்கிக் கொண்டு போகும்போது நம்முடன் கூட இருந்த அய்யர் அல்லாதவர்களுடையவும் பெயர்களையும் வெளிப்படுத்துகின்றோம். அப்பொழுதும் இல்லையென்று சொல்லுவாரா
னால் பிறகு பொது ஜனங்கள் எதை வேண்டுமானாலும் நம்ப உரிமையுடை யவர்களாவார்கள்.
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தவிர இது சம்பந்தமாக சில நிரூபங்களும் சில கண்டனக் கூட்ட நடவடிக்கைகளும் பிரசுரிக்க சற்று தாமதமேற்படுவதற்கு ஆக நேயர்கள் பொறுத்துக் கொள்ளவேண்டுகின்றோம். சிறப்பாக திருச்சி, மதுரை நிரூபர். களுக்கு இவ்விஷயத்தில் நன்றி செலுத்துகிறோமாயினும் அவர்களின் ஆத்திரத்தின் உணர்ச்சியில் காட்டியிருக்கும் மிதமிஞ்சிய வேகத்தை ஆதரிக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.02.1930.
குடி அரசு - 1930 0 58
பூரண ௬யேச்சைப் புரட்டு
11
1929 - ம் வருஷம் காங்கிரசானது “இந்திய தேசியப் போராட்டம்” என்பதின் இரகசியத்தை வெளியாக்கி விட்டது ஒரு புறமிருக்க இப்போது ஏதோ சத்தியாக்கிரகப் போர் சமீபத்தில் தொடுக்கப் போவதாக பெரிய ஆர்ப் பாட்டங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவ்வார்ப்பாட்டங்கள். காங்கிரசுக்கோ காங்கிரஸ் அங்கத்தினர்களுக்கோ ஒரு சிறிதும் சம்மந்த மில்லாமல் திரு காந்தி அண் கோ கம்பெனியாருக்கு கன்ட்றாக்ட்டு விடப் பட்டு விட்டதாய்த் தெரிகின்றது. இதன் கருத்து என்ன வென்றால் திரு. காந்தி
யால் ஏதாவது வெற்றி (ஏற்படப்போவதில்லை உறுதி உறுதி) ஏற்படு மானால் உடனே அதை தேசிய வெற்றி என்று கொட்டை எழுத்தில் போட்டு பெருமை பாராட்டிக் கொள்ளவும் தோல்வி அடைந்தால் “முன்னமேயே தெரிந்து தான் அதன் பொருப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாமல் திரு. காந்தி யின் தலையில் போட்டு விட்டது” என்று சொல்லவும் இடம் வைத்துக் கொள்ள செய்த காரியமே யாகும்.
அன்றியும் மேற்படி சத்தியாக்கிரகத்தையோ சட்டம் மீறுவதையோ
சர்க்கார் மதித்து ஏதாவது நடவடிக்கை எடுத்து எந்த தனிப்பட்ட நபரையாவது அல்லது எந்த ஸ்தாபனத்தையாவது கைது செய்ய ஆரம்பித்தால் “காங்கிரசுக்
கும் சத்தியாக்கிரக சட்ட மறுப்புக்கும் யாதொரு சம்மந்தமில்லை” என்று சொல்லி தப்பித்துக் கொள்ள இடம் இருக்கவும் வழி செய்து கொண்ட காரிய
மாகும்...
முதலாவது காங்கிரசின் லட்சியம் பூரண சுயேட்சை என்றவுடன் ராஜிநாமா கொடுத்து விட்டு காங்கிரசை விட்டு ஓடின வீரர்களைப் பற்றி நாம்
ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அதோடு காங்கிரசில் இருந்து கொண்டே “காங்கிரஸ் கொள்கைக்கு நாங்கள் கட்டுப்படுகின்றோம். ஆனால், அதின் திட்டத்திற்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ் வீரர்களாய் இருந்து வந்தவர்களைப் பற்றியும் நாம் இப்போது
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
அதிகமாய் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இப்படி ஒரு கூட்டம் காங்கிரசில் வெகுநாளாகவே இருந்து வருகின்றது. அதாவது எவ்வித தியாகத்திற்கும் கஷ்டத்திற்கும் தயாராயில்லாமல் பாமர ஜனங்களை ஏமாற்றி
வயிர் வளர்ப்பதற்கு காங்கிரசை உபயோகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்த முள்ள கூட்டத்திற்கு இதை விட வேறு வழி கிடைப்பது கஷ்டமானதால் இப்படி ஒன்று அதாவது “காங்கிரஸ் சுயராஜ்ய கட்சி” “காங்கிரஸ் தேசீயக் கட்சி” “காங்கிரஸ் சுயேச்சைக்கட்சி” “காங்கிரஸ் ஒத்துழையா கட்சி” என் கின்ற கட்சிகளின் பெயர்களின் நிழலில் இருந்து வந்த பெரும்பான்மை யானவர்களின் யோக்கியதைகளைக் கவனித்தாலே இந்த உண்மை விளங்கி
விடும். ஆனால் இப்போது காங்கிரசுக்கு ஆதிக்கத்திலும், நிர்வாகத்திலும் இருந்து வருகின்ற காங்கிரஸ் தலைவர்கள் என்கின்றவர்கள் இந்தமாதிரி
தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது காங்கிரசின் உண்மைத் தோற்றத்தின் பரிதாப நிலையையும் பயங்காளித் தனத்தையுமே காட்டுகின்றதே யல்லாமல் வேறில்லை. அன்றியும் ஒரு சமயம் சத்தியாக்கிரகமோ சட்ட மறுப்போ நடந்து யாராவது ஜெயிலுக்குப் போக நேர்ந்தால் அப்படிப் போனவர்களையும் இந்த காங்கிரஸ் தலைவர்கள் திரு. சி. ஆர். தாஸ் அவர்கள் முன் ஒரு சமயம் கயாவில் சொன்னது போல் “சாப்பாட்டுக்கு வகையற்றவர்களும் வேறு வேலை செய்து பிழைக்க முடியாதவர்களும் தான் வயிற்றுப் பிழைப்பை உத்தேசித்து ஜெயிலுக்கு போனார்கள்” என்று சொல்லுவதற்கும் இடம் வைத்துக் கொள்ளுவார்கள்.
இவ்வளவும் தாண்டி நாட்டில் சத்தியாக்கிரகத்திற்கோ சட்ட மறுப் பிற்கோ ஏதாவது ஒரு செல்வாக்கு (வராது) ஒரு சமயம் வந்து விடுமேயானால் அப்போதும் அதன் பலன் முழுவதையும் தாங்களே அடைவதற்கும் இடம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பல விதத்திலும் காங்கிரஸ் வெளிப்படையான பித்தலாட்டத்தில் தான் இனி இருக்க முடியும் என்பது வெளியாய் விட்டது.
இந்தியாவில் தேசீயப் போராட்டம் என்கின்ற ஏமாற்றமும் பித்தலாட்ட
மும் இனியாராலும் மறைவாய் செய்ய முடியாது. ஏனெனில் இந்திய ஜனங்கள் ஒருவாறு மூடநம்பிக்கையிலிருந்து கண் மூடித்தனமாய் யாரையும் பின்பற்று வதிலிருந்தும் விடுதலை அடைய ஆரம்பித்து விட்டார்கள். மனித னுடைய
லட்சியம் எனப்படும் அர்த்தமும் பலனுமற்ற வார்த்தைகளான மோட்ச மென்பதும் சுயராஜ்ஜியம் என்பதும் ஏமாற்றம் என்கின்ற ஒரே அஸ்தி வாரத்தின் மீது தான் கட்டப் பட்டிருக்கின்றது. மோட்சத்திற்கு இதுவரை:
அர்த்தம் விளங்காவிட்டாலும் அதன் பேரால் வயிறு வளர்ப்பவர்கள் மக்கள் நம்பி பின்பற்றி அதற்காக எப்படி கஷ்டப்பட்டு நஷ்டமடைந்து வந்தார்களோ அது போலவே தான் சுயராஜியம் தேசீயம் என்பதற்கும் விடுதலை என்பதற்
கும் அர்த்தம் விளங்காமலும் பலன் இன்னதென அறியாமலும் அதன் பேரால்
குடி அரசு - 1930 0 60
வயிறு வளர்க்கும், வாழும் கூட்டத்தாரை மூடநம்பிக்கையால் கண்மூடித்தன.
மாய்ப் பின்பற்றி இதுவரை வீண் கஷ்டமும் நஷ்டமும் அடைந்து வந்தார்கள். ஆனால் இப்போது மூடநம்பிக்கையும் கண்மூடித்தனமும் ஒழிய ஆரம்பித்து விட்டதால் இனி அது பலியாது என்பது முடிவான காரியமேயாகும்.
உண்மையாய் அறிவுடன் இருந்து பேசுவோமேயானால் நமதுநாட்டில் இந்தமாதிரி தேசீயக் கிளர்ச்சி என்கின்ற ஒரு புரட்டு ஏற்படாமலிருந்து இருக்குமானால் நம்முடைய நாட்டுநிலைமை இவ்வளவு கேவலமாக இருந்தி ருக்கவே முடியாது. தேசீய கிளர்ச்சி புரட்டானது மக்களின் உண்மையான தேச நன்மை சமூக நன்மை ஆகிய விஷயங்களில் உள்ள பகுத்தறிவை பாழ்படுத்திவிட்டது. அதன் காரணமே கேட்ட வரியை கொடுத்து விட்டு கண்ட அதிகாரிகளுக்கு கீழ்ப்பட வேண்டிய மிருகத்தன்மை ஏற்பட்டு விட்டது, இதற்கு உளவாளியாய் இருந்து வந்தது “நமது தேசீயக் கிளர்ச்சி "யே
யாகும்...
நல்ல சம்பவமாய் இந்த வருஷம் நமது நாட்டில் ஒருவாறு தேசீயக் கிளர்ச்சி என்னும் காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங்கள் அடியோடு மறைய இருந்ததானது சிலர் சூட்சியினால் மறுபடியும் கொஞ்ச காலத்திற்குத் தொல்லை இருக்கும்படி ஏற்பட்டுவிட்டது “குடியேற்ற நாட்டு அந்தஸ்தை” ஒப்புக் கொண்டு “வட்ட மேஜை மகாநாட்டுக்கு போவது” என்பதையும்
ஒப்புக் கொண்டிருந்தால் அவ்வளவுடன் காங்கிரசு தீர்ந்தது. ஏனெனில் உலகில் உள்ள மற்ற அரசியல் சமூக இயல் ஸ்தாபனங்கள் எல்லாம் மேற்படி இரண்டையும் ஒப்புக் கொள்வதால் காங்கிரஸ் என்ற ஒரு தனி ஸ்தாபனத் திற்கு தனி யோக்கியதை இருக்க அவசியமில்லாமல் போயிருக்கும்.அதனா லேயே புதிய வழி கண்டு பிடித்து பூரண சுயேச்சை என்கின்ற புரட்டைக் கொண்டு காங்கிரசை நிலை நிறுத்தக் கருதி இந்த சூட்சி செய்தார்கள். என்றா
லும் இனி அது செத்த பாம்பு ஆட்டுவதுபோல தானே ஒழிய நாட்டில் அதை. மதிப்பதற்கு சிலர் கூட இல்லை என்பது வெளிப்படை. மற்றபடி சத்தியாக் கிரகமும் சட்ட மீறுதலும் அதற்கு உபகருவியாய் வந்ததற்குக் காரணம் திரு. காந்திநிலைக்க வேண்டுமானால் அதற்கும் ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டியதாய் விட்டது. அதுதான் சட்ட மறுப்பு சத்தியாக்கிரகம் என்பவை
கள். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இவைகளை சண்டித்தன மென்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சட்ட மறுப்புக்கு நாடு தயாரில்லை என்றும் சத்தியாக்கிரகத்திற்கு மக்கள் தயாரில்லை யென்றும்.
ஒப்புக் கொண்டதுடன் ஒரு தடவை செய்து பார்த்துத் தோல்வி அடைந்த தையும் ஒப்புக் கொண்ட பிறகு மறுபடியும் சட்ட மறுப்பு சத்தியாக்கிரகம்
என்றால் அதில் ஏதாவது பொருளோ நாணயமோ இருக்க முடியுமா? இவை எதற்காக செய்வது என்பதாவது சரிவர முடிவு செய்யப்பட்டதா? ஒன்று மில்லாமல் இம்மாதிரி கிளர்ச்சி செய்வதின் கருத்து ஒன்று சண்டித்தனமாக
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இருக்க வேண்டும். அல்லது திரு. காந்தி அவர்களுக்கு “நமக்கு இந்த தகராரே வேண்டாம் போய் ஜெயிலில் செளக்கியமாய் உட்கார்ந்து கொண்டிருக் கலாம்” என்கின்ற சுயநலமாவது இருக்க வேண்டும். இது இரண்டில் ஒன்று இல்லாமல் வேறு ஒன்றும் இருக்க இடமில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும் சாத்வீக சட்ட மறுப்பு என்பதற்கு போடப்படும் திட்டங்களும் சர்க்காருக்கு ஏதாவது ஒரு வழியில் தொந்திரவு கொடுப்பதின் மூலம் விளம் பரம் ஏற்படவேண்டும் என்கின்றது போல் இருக்கின்றதே தவிர ஜனங்க ளுக்கு கஷ்டம் நீங்குவதற்கு என்கின்ற முறையில் எந்தத்திட்டமும் போடப் படுவதாய் இது வரையில் எந்த சேதியும் வெளிவரவில்லை, தவிர “சாத்வீகத்
தில் நம்பிக்கை உள்ளவர்களும் காங்கிரசில் இருப்பதால் அவர்கள் இஷ்டப் படி செய்ய காங்கிரஸ் இடங்கொடுக்கின்றது.” என்பதாகக் காரியக்கமிட்டித் தீர்மானித்திருப்பதால் தெரிகின்றது. இந்த சமயத்தில் காங்கிரசில் சாத்வீகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வேலை என்ன என்பது வாசகர்களே யோசித்துப் பார்க்க வேண்டிய காரியமாகும்.
சாத்வீகத்தில் மக்களுக்கு அல்லது காங்கிரசிலிருப்பவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிந்தபிறகும் சாத்வீக சட்ட மறுப்புக்கு காங்கிரஸ் எப்படி உத்திரவு கொடுக்கலாம்? நிற்க காங்கிரசானது சாத்வீக சட்ட மறுப்பை
திரு. காந்தியார் சொந்த சொத்தாக விட்டிருப்பதாயும் தெரிகின்றது. திரு.காந்தி அவர்களுக்கு நமது மாகாணத்தைப் பொருத்தவரை திரு. ராஜாகோபாலாச் சாரியும் கதர் இயக்கத்தின் மூலம் ஜீவனம் நடத்தும் பார்ப்பனர்களும் தான்
மந்திரிகளும் சிஷ்யர்களுமாய் இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டுத் தொண்டர்கள் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவர்களாவார்கள். அவர்கள் சிறை செல்லு வதையாவது தியாகம் செய்து, கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பதையாவது
நாம் தடுக்க வரவில்லை. இந்த இரண்டு தான் நமது இயக்கத்திற்கும் ஆதா ரமே ஒழிய அதிகாரமோ பதவியோ அல்ல என்பதை நாம் நன்றாய் உணர்ந்தி ருக்கிறோம். ஆனால் அவைகளை பலனுள்ள காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றோம். ஜாதிகளை அழிக்க கோவிலை ஒழிக்க உற்சவங்களைத் தடுக்க மற்றும் மக்களுக்கு செலவைக் கொடுப்பதும் அறிவைக் கெடுப்பதும் இழிவைத் தருவதுமான காரியங்களை ஒழித்தல் முதலாகிய ஏதாவது காரியங்களுக்கு நாம் சிறை செல்வதையோ அடிபடு வதையோ இறப்பதையோ அனுபவிக்கத் துணிவதை கடமையான காரிய மென்றே சொல்லுவோம். அப்படிக்கில்லாமல் வீணான காரியங்களில் “உப்பளங்களை முற்றுகை போடுவது” என்கிற அர்த்தமற்றதும் பைத்தியக் காரத்தனமானதுமான காரியங்களில் தலையிட்டு நமது ஆற்றல்களை எல்லாம் வீணாய் செலவழித்து விடக் கூடாது என்பதுடன் இது தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத தொண்டர்களுக்கு இது சமயம் இருக்கும் ஊக்கத்தை.
குடி அரசு - 1930 0 62
யும் ஆற்றலையும் ஒருவாறு மாற்று அவைகளை வேறு வழிகளில் திருப்பி வீணாக்கவே திரு. காந்தியின் “தமிழ்நாடு” சிஷ்யர்கள் செய்த சூழ்ச்சியாய் இருக்கக்கூடும் என்று தொண்டர்களுக்கு ஞாபக மூட்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.02.1930
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஸ்தல ஸ்காயண மசோதா
சென்னை சட்டசபையில் ஸ்தல ஸ்தாபன மசோதா ஒன்று ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம் டாக்டர். சுப்பராயன் அவர்களால் கொண்டுவரப் பட்டதானது இவ்வாரம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அநேகமாக மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் சம்மதமும் கவர்னர் ஜனரல் அவர்கள் சம்மதமும்
பெற்று இவ் வருஷத்திலேயே அமுலுக்கு வந்துவிடும் என்றே நினைக்கிறோம்.
இந்த சட்டம் செய்யப்பட்டதன் மூலம் சில நன்மைகள் ஏற்படக் கூடும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும் பலன் கொடுக்கும் முக்கியமான நன்மைகள் எதுவும் பிரமாதமாய் ஏற்பட்டு விடும் என்பதாக
நம்மால் நினைக்க முடியவில்லை.
ஸ்தல சுயாட்சி போன்ற ஸ்தாபனங்களில் ஏதாவது சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அச்சீர்திருத்தங்கள் மிகுதியும் அந்த ஸ்தாபனங் களின் நல்ல ஆட்சிக்கும் நாணயத்திற்கும் வரிப்பொருளை சரியானபடி செலவழிப்பதற்கும் உபயோகப்படக்கூடியதாய் இருக்க வேண்டும். இப்போது
நமது நாட்டில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இந்த மூன்று குணங்களையும் காப்பாற்றும்படியான சக்தி இல்லை என்று பல தடவை அழுத்திச் சொல்லு வோம். அதுவும் 1920-ம் வருஷம் ஏற்பட்ட ஸ்தல ஸ்தாபன சட்டத்திற்குப் பிறகு ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருந்த நல்லரசாட்சியும் நாணையமும் அடியோடு போய்விட்டது. பணவிஷயம் 100-க்கு 10 ஸ்தாபனங்களில் ஸ்தாபனத் தலைவர்கள் கையாடல் செய்வதில்லை என்று சொல்லலாமே தவிர மற்றபடி 100-க்கு 90 ஸ்தாபனங்கள் ஸ்தாபன தலைவர்களால் நேரிலும்
நண்பர்கள் சுற்றத்தார்கள் மூலமும் கையாடல் லஞ்சம் கன்றாக்ட்டு முதலாகி யவைகளின் மூலம் ஸ்தல ஸ்தாபன பொருள்கள் பாழாக்கப்பட்டு வருகின்றது. மேல்கண்ட குணங்கள் இல்லாத சில ஸ்தல ஸ்தாபனத்திலும்கூட தாங்களோ தங்களது பந்துமித்திரர்களோ அடையாவிட்டாலும் தாங்கள் அந்த ஸ்தாபனத் தில் இருந்து நடத்தும் ஆட்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படாமலிருப்பதற்கும்
தாங்களே அடுத்த தடவையும் அந்த ஸ்தாபனத்தில் நிலைத்திருப்பதற்கும் மற்ற மெம்பர்கள் இஷ்டப்படி நடக்க வேண்டிய நிர்பந்தங்களிலிருந்து தப்ப
குடி அரசு - 1930 N 64
முடியாததின் காரணமாய் மேல் கண்ட மூன்று குணங்களால் அந்த ஸ்தாபனங் களுக்கு ஏற்படும் கஷ்ட்ட நஷ்டத்திற்கு குறையாத பலனை உண்டாக்கிவிட வேண்டியவர்களாகி விடுகிறார்கள். மற்றும் அநேக யோக்கியர்கள் கூட நிர்வாகத்தில் செரிப்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தின் பேரி லேயேதேர்தல்களில் கண்மூடித்தனமாய் பணம் செலவுசெய்து விட்டு பிறகு அதைச் சரிப்படுத்த முயர்ச்சிப்பதில் ஸ்தாபனங்களின் நல்ல ஆட்சிக்கும் பொருளாதாரத்திற்கும் கேடு உண்டாகும்படியான மாதிரியில் நடந்து தீர வேண்டியவர்களாகி விடுகிறார்கள். இத்தியாதி குணங்கள் இந்த புது சட்டத்தால் அடியோடு மறைந்து விட்டது என்று சொல்லுவதற்கு இல்லை. ஆனால் இரண்டொரு காரியங்களில் நன்மை ஏற்பட்டிருப்பதற்கு அதை பொருத்தவரையாவது பாராட்டாமலிருக்க முடியவில்லை. அதாவது தேர்தல் விஷயங்களில் சிறிது தொல்லைகள் குறைந்திருக்கின்றது. முனிசிபாலிட்டி களில் அந்தந்த வருஷத்திய வரியை செலுத்தியவர்களுக்குத்தான் ஓட்டு ரிமை உண்டு என்கின்ற நியதி முன் இருந்ததின் காரணமாக சேர்மேன்கள் பொது ஜனங்களிடம் வரிவசூலிக்காமலே இருந்தும் தங்களுக்கு வேண்டிய சில ஆள்கள் இடம் மாத்திரம் வசூலித்துக் கொண்டும் தாங்களாகவே தொழில் வரி என்று 10 அணா வீதம் 40, 50 மூன்றாந்தர ஆள்களுக்கு கட்டி அவர்களை ஓட்டர்களாக்கி வைத்துக் கொள்ளுவதுமான முறையில் ஓட்டர் லிஸ்ட்டு தயாரித்து வைத்துக் கொண்டு தாங்களும் தங்களது நண்பர்களும் அடிமை களுமே முனிசிபாலிட்டியை பிதுராஜ்ஜித சொத்தாக அனுபவித்து வந்த வழக்கம் இனி தடைப்படும் மாதிரியில் சிறிது மாற்றமடைந்திருக்கின்றது. அதாவது பணம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் வரி செலுத்தும் ஜாப்தாவில் பெயர் இருந்தால் போதும் என்கின்ற அளவில் ஓட்டர்களின் யோக்கி யதாபக்ஷம் முன்னேற்றமடைந்திருக்கின்றது. இரண்டாவதாக தேர்தல்கள். அதாவது எலக்ஷன்களில் நடந்து வரும் அக்கிரமங்கள் ஒருவாறு மாற்ற மடைந்திருப்பதாகவும் தெரிகின்றது. இப்போது இருக்கும் ஸ்தல ஸ்தாபனத் தலைவர்களிலும் அபேகஷகர்களிலும் நூத்துக்கு 10பேர் கூட இந்த தேர்தல் விஷயத்தில் நாணையமாய் நடந்து கொண்டு வருகிறார்கள் என்று சொல்ல முடியாத நிலையிலேயே தேர்தல்கள் நடந்து வருகின்றது. உதாரணமாக நூத்துக்கு 50 தேர்தல்கள் கோர்ட்டுக்கும் 100-க்கு 75 தேர்தல்கள் கவர்மெண்: டுக்கும்போய் விவகாரங்களும் தகராருகளும் செய்த வண்ணமாகவே
இருந்து வருகின்றன.
நமக்கு நம்பிக்கை உண்டாகும் மாதிரியில் சில ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் நாமினேஷன் (ஸ்லிப்! சீட்டை கிழித்து விட்டு வரவில்லை என்று சொன்னவர்களும் போர்ஜரியாய் வித்திட்றா கடிதம் எழுதிக் கொண்டவர்: களும் “சட்டப்படிக்கு இல்லாததால் ஸ்லிப் செல்லாது” என்று நிராகரித்து விட்டவர்களும் தேர்தல் விஷயம் யாருக்கும் தெரியப்படுத்தாமல் இரகசிய
மாய் செய்து கொண்டவர்களும் ஓட்டுப் பெட்டியைத் திறந்து திருத்திய வர்களும் போலிங் ஆபீசர் மூலம் தப்பாய் மார்க்கு செய்யச் செய்தவர்களும்.
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
நல்ல ஓட்டுகளை செல்லுபடி அற்றதென்று தள்ளி கணக்கு பார்த்தவர்களும் எலக்ஷன் தேதியில் நடத்தாமல் செய்தவர்களும் ஓட்டுப் பெட்டியில் இங்கியை ஊற்றச் செய்து ஓட்டுகளை தள்ளி குறைத்து எண்ணியவர்களும் ஓட்டுப் பெட்டியில் பாஸ்பரஸ் என்னும் நெருப்பு திராவகம் ஊத்தினவர்களும். மற்ற அபேக்ஷகரின் ஓட்டுகளை பதிவு செய்யாமல் நேரமாய் விட்டது என்று சொல்லி ஆபீசை மூடி விட்டவர்களும் ஓட்டுச் சீட்டுகளை பெட்டிக்குள் போடாமல் பக்கத்தில் ஆள்கள் இருந்து வாங்கி தங்கள் இஷ்டப்பட்டபடி செய்தவர்களும் பணம் கொடுத்தும் மிரட்டியும் நேரில் இருந்து கொண்டு
ஓட்டு போட அனுமதித்தவர்களும் மற்றும் இம் மாதிரி அனேக காரியங்கள். எலக்ஷனில் தலைவரால் நடந்தது நன்றாய் தெரியும். மற்றும் போலீசார். இல்லாமல் எலக்ஷன் நடத்த முடியாததும் ஆன காரியங்கள் முதல் இம் மாதிரியான காரியங்கள் சற்றுத் தடைபடும்படியாக புதிய சட்டத்தில் எலக் ஷன்களை சர்க்கார் அதிகாரிகள் நேரில் இருந்து நடத்தும்படியான திருத்தங்
கள் ஏற்பட்டிருப்பது சந்தோஷிக்கத் தக்கதேயாகும்.
மற்றும் ஒரு விஷயம். அரை சந்தோஷத்திற்கு இடமானதையும் குறிப்பிட விரும்புகின்றோம். அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதாகும். இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் விஷயத்தில் நாம்
சுமார் பத்து வருட காலமாக எடுத்து வந்த முயற்சி வாசகர்கள் அறிந்ததே
யாகும். அதாவது 1919 ம் வருஷம் சென்னை மாகாண சங்கம் முதல் திருச்சி திருநெல்வேலி தஞ்சை திருப்பூர் சேலம் திருவண்ணாமலை காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாகாண கான்பரன்ஸ்கள் வரை: அவைகளில் இருந்து கொண்டும், கடைசியாக அதே காரணத்தால் காஞ்சீபுரம் கான்பரன்சில் இருந்து வெளியேறி குடி அரசு, திராவிடன் பத்திரிகை மூலமும் சுயமரியாதை இயக்கத்தின் மூலமும் நாம் பார்ப்பன அடிமைகளின் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் முயற்சித்து வந்திருக்கின்றோம். அந்த
முயற்சி முழுதும் கை கூடா விட்டாலும் அரசாங்க அதிகாரி உத்தியோகங் களில் ஒரு அளவும் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒரு அளவும் வெற்றி பெற முடிந்ததற்கு நாம் மகிழ்ச்சியடைந்தேயாக வேண்டும். சாதாரணமாக நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டது முக்கியமாய் கிருஸ்தவர்கள். மகமதியர்கள் இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத.
வர்கள், பார்ப்பனரல்லாதவர்களில் “தீண்டத்தக்கவர்கள்'” “தீண்டப்படாத
வர்கள்” என்கின்ற பிரிவுப் படி இருக்க வேண்டுமென்றே முயற்சி செய்தோம். ஆனால் இவற்றுள் ஒன்று தவிர அதாவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர். என்கின்ற பிரிவு தவிர மற்ற பிரிவுகளுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் இந்தப்
புதிய சட்டத்தின் மூலம் ஏற்பட்டுவிட்டது. அதுமாத்திரமல்லாமல் அளவுக்க டங்கா மகிழ்ச்சி அடையுமாறு மற்றும் ஒரு புதிய பிரிவாருக்கும் ஏற்படுத்தப் பட்டாய் விட்டது. அதாவது ஸ்தல ஸ்தாபனங்களில் பெண்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் என்பது. ஆனாலும் பார்ப்பன பார்ப்பனரல்லாத பிரிவு இல்லாமல் போய் விட்டதற்கு காரணம் என்ன வென்றால் அது தப்பான
குடி அரசு - 1930 0 66
கொள்கையென்றோ அல்லது தேச நன்மைக்கு விரோதமென்றோ இல்லாமல் இப்போது நாடு இருக்கும் நிலைமையில் அதாவது சுயமரியாதை இயக்கம் வேலை செய்ததின் பயனாய் அனேக ஸ்தல ஸ்தாபனங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அடியோடு ஒழிந்து விட்டபடியால் அவர்களால் இனி பயமில்லை என்கின்ற நம்பிக்கையின் பேரில் அந்த விஷயத்தை பார்ப்பனரல்லாத சில பிரமுகர்களே நழுவவிட்டு விட்டதால் அப்பிரிவு
நிறுத்தப்பட்டு விட்டது. நிற்க இப்போது இந்த சட்டத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயத்திலும் நாம் தேர்தலுக்கு தனித் தொகுதியே வேண்டுமென்றும் கேட்டு வந்தோம். ஆனால் புதிய
சட்டத்தில் தனித் தொகுதிக்குப் பதிலாக பொதுத் தொகுதியிலேயே ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டு வைத்து இருக்கின்றது. இது முதல்படியாகவும் பரீட்சார்த்தமாய்ப் பார்ப்பதாகவும் என்று சொல்லி ஏற்பாடு செய்திருப்பதால் இதன் மூலம் தக்க பிரதிநிதித்துவம் கிடைக்காத பட்சம் தனித் தொகுதியே
ஏற்பாடு செய்வதாகக் கருதி இருப்பது மெத்த அனுகூலமானதேயாகும்.
ஆகிய இந்த நன்மைகள் ஒரு புறமிருந்தாலும் ஸ்தல ஸ்தான நிர்வாகம் நல்ல ஆட்சியாக சீர்பட வேண்டிய வரையில் ஒரு சிறு மாறுதலும் ஏற்பட்டி
ருப்பதாய் தெரியவராததற்கு வருந்தாமலிருக்க முடியவில்லை.இப்போதைய தலைவர்களின் ஆட்சிக்கு நூத்துக்கு ஐந்து பேருடையது கூட ஒழுங்கான தென்று சொல்ல முடியாதென்பதே நமது கருத்து. எவ்வளவு நாணயமுள்ள
வரும் நடுநிலைமையுள்ளவருமான தலைவர்களா யிருந்தாலும் இப்போ துள்ள நிலைமையில் சிறிதும் அந்த ஸ்தல ஸ்தாபனங்களின் நன்மையைக் கோரி ஒழுங்காய் நடந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருந்து வரு கின்றார்கள். மெம்பர்களுடைய தாட்சண்யங்களும் ஓட்டர்களுடைய தாட்சண்யங்களும் தலைவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு விடுகின்றன. அனேகமாய் ஸ்தாபனங்களின் உத்தியோகங்கள் முழுதும் மெம்பர்களின் சிபார்சுப்படியே வினியோகிக்க வேண்டியதாய் இருக்கின்றது. அவர் களுடைய ஒழுக்கவீனமானதும் நாணயக் கேடானதுமான காரியங்களைப்
பற்றி கவனிப்பது என்பது ஸ்தாபன தலைவர்களுக்கு சிறிதும் முடியாத காரியமாயிருக்கிறது. கான்ட்றாக்ட் விஷயங்களோ பெரும்பாலும் மெம்பர். களுக்கே வேறு பெயரின் பேரால் கொடுத்துத் தீர வேண்டியதாகும். அந்த வேலை ஊழல்களை எந்த உத்தியோகஸ்தனும் கவனிக்க முடியாது. கவனித் தாலோ மெம்பர்களால் தலைவர்களிடம் சொல்லப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடும். இதுவே தமிழ் நாட்டில் மிகவும் நாணயமாய் உள்ள தலைவர்களின் நிலை. மற்றபடி அந்த தலைவர்கள் என்பவர்கள் நாணயத்
திலும் யோக்கியப் பொறுப்பிலும் கவலையில்லாமலும் இதைகொண்டே ஜீவனம் பண்ண வேண்டியவர்களுமாய் இருந்து விட்டாலோ அதன் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா? உதாரணமாக ஈரோடு முனிசிபாலிட். டியை எடுத்துக் கொண்டால் அந்த முனிசிபாலிட்டி ஒரு 3 வருஷத்திற்கு முன்னால் இருந்த தலைவரின் நடத்தையில் அதன் பொருளாதார விஷயம்
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இன்னும் 10 வருஷங்களுக்கு தலையெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றதை இன்றும் பார்க்கலாம். எவ்வளவோ திருட்டுகளும் புரட்டு களும் கைப்பிடியாய் பிடித்துக் கொடுத்தும் முனிசிபல் சட்டமும் இந்தியன்
பினல் கோடும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. குதிரை திருட்டுப் போனதிற்கப்புறம் லாயத்தைப் பூட்டினதைப் போல் இப்போது மிக்க நாணயமாயும் யோக்கியப் பொறுப்பாயும் இருக்கும் தலைவர்களை சர்க்காரார் மிரட்டுவதைத் தவிர வேறு ஒரு காரியமும் செய்ய முடியவில்லை.
ஈரோடே (அதாவது சர்க்காருக்கும் மந்திரிகளுக்கும் சுலபத்தில் உண்மை தெரியக் கூடியதும் தங்கள் கட்சி காரணமாக மந்திரிகள் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியமில்லாததுமான ஈரோபே) இப்படி இருந்தால் மற்ற ஊர்களின் நிலைமையை நாம் சொல்லிக்காட்ட வேண்டுமா? எனவே இந்த நிலை மாறுவதற்கு நாம் ஒவ்வொரு ஸ்தாபனங்களுக்கும் ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று யோசனை கூறி இருந்தோம். ஆனால் இந்த யோசனை சட்டசபையில் பரிகசித்து காற்றில் பரக்க விடப் பட்டது.
ஏனெனில் அந்த சட்ட சபையானது பெரிதும் ஸ்தல ஸ்தாபன தலைவர்கள், ஸ்தல ஸ்தாபனத்தில் செல்வாக்குள்ள அங்கத்தினர்கள் ஆகிய வர்கள் ஆதிக்கத்தையே கொண்டதாயிருப்பதால் அவர்கள் தங்களின் நன்மையையோ அதிகாரத்தையோ செல்வாக்கையோ விட்டுக் கொடுக்க முடியாததினாலும் விட்டுக் கொடுத்தால் அவர்கள் மறுபடியும் ஸ்தல ஸ்தாபனத் தலைமையையும் - ஏன்? சட்டசபை ஸ்தாபனத்தையும் இழந்துவிட வேண்டியவர்களாய் விடுவார்களானதால் அந்த யோசனையை கனம் மந்திரி ஆதரித்தும் அங்கத்தினர்களால் அவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் மறுபடியும் ஒரு சமயம் இந்த சட்டம் திருத்தவரும் சமயத்தில் இந்த யோசனை இப்போதையைப் போல் அவ்வளவு அலட்சியப் படுத்தப்படாமல் சிறிது மாறுதலுடனாவது அனுமதிக்கப்படும் என்கின்ற தைரியம் நமக்கு இருப்பதால் இப்பொழுது இவ்வளவுடன் நிறுத்தி இந்த சட்டத்திற்காக முயற்சி எடுத்து விடாப்பிடியாய் உழைத்து நிறைவேற்றின.
கனம் முதல்மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு நமது பாராட்டுதலும் ஏழை வரி செலுத்துவோரின் நன்றியறிதலும் உரியதாகுக..
குடி அரசு - தலையங்கம் - 02.03.1930
குடி அரசு - 1930 0 68
[33 1 ௨3.
சிருங்கேரி மடாதிபதி உயர்திரு “ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள்” அவர்களிடமிருந்து நமக்கு வந்த “ஸ்ரீமுக;” அழைப்பை, இவ் விதழில் வேறு ஒரு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம். திரு. மடாதிபதி அவர்கள் அந்த “ஸ்ரீ முகம்” நமக்கு அனுப்பியதற்காகவும் மற்றும் அதில் நம்முடையவும் நமது மனைவியாருடையவும் ஒரு சிறு தொண்டை மிகுதியும் பாராட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காகவும் நாம் நம் சார்
பாகவும் நமது மனைவியாரின் சார்பாகவும் நமது மனப் பூர்த்தியான நன்றி யறிதலை தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றோம். நிற்க அந்த “ஸ்ரீமுக”த்தில் “சனாதன தர்மத்தை கெடுக்காமல்;” “கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமைகளைச் செய்து” “சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்” என்கின்ற நிபந்தனைகள் கண்டு அதற்கு விரோதமில்லாமல் “சில
சுதந்திரங்கள் அளிக்கப்படும்” என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்ற படியால், நாம் அங்கு செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கின்ற விஷயம் நமக்கு சந்தேகமாகவே இருக்கின்றது. ஆயினும் பொருப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும் பல கொள்கைகளுக்கு “அபிப்பிராய கர்த்தாவாய்” இருப்பவரும் பல மக்களால் வணங்கிக் கொண்டாடி மதிக்கத்தக்கவராக இருப்பவருமான ஒரு பெரியாரின் அழைப்பை மதித்து அதற்கு இணங்கி அங்கு சென்று வரவேண்டியது மிக்கநியாயமாகு மென்றே நமக்குத் தோன்று கின்றது, ஆயினும் நமது நண்பர்களின் விருப்பத்தை அறிந்து சென்று வரலாமென்றே கருதியிருக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.03.1930
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
திரு. வை. நாமசாமியாருக்கு
“ஸ்ரீ ஐக்த்கரு சங்கராச்சாரியார் ஸ்ரீமுகம்”
“ஸ்ரீ சங்கராச்சாரி சமஸ்தானம்” நிஜசிருங்கேரி
க. நெ. 53.
4 முகாம் புஷ்பவனம் )
“அஸ்மத் பிரிய முக்கிய சிஷ்யரான கோயமுத்தூர் ஜில்லா ஈரோடு. கஷ்பா வெங்கிட்டசாமி நாயுடு குமாரர் ஸ்ரீமான் ராமசாமி நாயுடுவினுடைய சமஸ்த்த ஐஸ்வரிய ஆரோக்கிய அபிவிருத்தியின் பொருட்டு திரிகால அனுஷ்டானத்திலும் பகவத் பிரார்த்தனையுடன் ஆசிர்வதித்து எழுதி வைத்தனுப்பிய ஸ்ரீமுகம். இங்கே ஆர்காடென்னும் சடாரண்ண க்ஷத் திரங்களில் ஒன்றாகிய புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்திய ஸ்ரீ பரத்துவாஜ மஹாரிஷி ஆசிரத்தில் லோகத்தில் எல்லோருடைய க்ஷேமத் தைக் குறித்து தபஸ் செய்து கொண்டு இந்த மரியாதையை அனுப்பி
யிருக்கிறோம்..
சம்பாதி - லோககுரு ஸ்தானமாகிய இதில் பரதகண்டத்திலுள்ள. சனாதன தர்மத்தை கெடுக்காமலும் எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகும் படிக்கும் பாரபக்ஷம் இல்லாமல் படிக்கும் சாஸ்திர எல்லைகள் கடவாமல் படிக்கும் பிபீலகாதி பிரம்மம் பரியந்தம் (எரும்பு முதல் பிரம்மாதிகளிலும்! எல்லாவற்றிலுமிருப்பது ஒரே பிரம்மமென்று எல்லோருக்கும் பிரம்மானந் தத்தை அடையச் செய்யவே ஜெகத்குரு பீடம் இருக்கிறது. கர்ம காண்டத்தில் அவரவர்கள் நன்றாய் கடமைகளைச் செய்து நடந்து அதனால் சித்தமானது சுத்தமாகி அகண்ட பிரம்மானந்த சாக்ஷாத்தாரம் அடையச் செய்வதே விரத மாகக் கொண்ட இந்த குருபீடமானது ஸ்ரீ ஆதிசங்கர பகவான் அவதாரம் பரம்பரைக் கிரமமாய் வந்து கொண்டும் குருவாயிருக்கும் போதே சிஷ்யர். களை ஏற்படுத்தி சன்மார்க்க சதாச்சாரத்தில் பழக்கி பீடாதிபத்யம் சன்யாசம். அளிப்பது வழக்கமாயிருக்கிறது... .காலதேச வர்த்த மானத்தை அனுசரித்து சாத்தியமானவரையில் சிஷ்யர்களை சன்மார்க்கத்திலும் சதாச்
குடி அரசு - 1930 0 70
சாரத்திலும் நடத்திச் சந்தோஷமாயிருக்கச் செய்து கொண்டு வருகிறது. இன்னம் காலதேச வர்த்தமானத்தை யோசித்து சாஸ்திரங்கள் இடம் கொடுத்
திருக்கும் வரையிலும் தற்கால நிலமையை அனுசரித்து சிஷ்யர்களுக்கு சில சுவதந்திரங்களையும் இந்த ஜகத்குரு சமஸ்தானம் கொடுக்க வேண்டியது அவசியமாகத் தோன்றியிருக்கிறது.
நீங்கள் நெடுநாளையப் பாரபக்ஷமின்றியிலும் தாக்ஷண்யங்க ளுக்கு உட்படாமலும் ஜீவகாருண்யமுள்ளவராயும் சுவய நன்மையைக் கருதாமல் லோக நன்மையையே முக்கியமாகக் கருதி சுக துக்கங்கள் பாராமல் மாணவமானத்தைக் கவனியாமல் ஐன்மமெடுத்தற்கு பரோப காரமே சாதனமென்று கருதி உங்கள் தர்மபத்தினி சமேதராய் பாடுபட்டு வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கி இருக்கிறது. உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி எங்கள் அபிப்பிராயங்களையும் உங்களுக்குச் சொல்லி தக்க சஹாயமும் செய்து அனுக்கிரஹிக்க வேண்டுமென்று குரு தேவதாப் பிரேரணை உண்டாயிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்மபத்தினியும் அனாதியாய் உங்களுக்குச் சொந்த பாத்தியமான இந்த ஜகத்குரு பீடத்தை சிறப்புவிப்பதற்காக இந்த சமஸ்தானத்திற்கு வந்து ஸ்ரீ சாரதா சந்திர மெளளீதரஸ்வாமிகள் பிரசாத் அனுக்கிரகம் பெற்று இப்போதிலும் அதிகமான சிரேயசை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஸ்ரீமுகம் எழுதி வைத்து அனுப்பலாயிற்று. விவேகி களுக்கு என்ன எழுத வேண்டியிருக்கிறது.”
ஸ்ரீபிரஸ்தாவித்தியானந்தநாத பாரதஸ்வாமி சங்கராச்சாரியூ,
பு.அ. வெங்கட்டரமணம் சர்வாதிகாரி
என்று கன்னடத்தில்)
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
காண்டு வைத்தியர்கன்
- சித்திரபுத்திரன்
பார்ப்பன ஆயுர்வேத வைத்தியருக்கும் பார்ப்பனரல்லாத சித்த வைத்தியருக்கும் சம்பாஷனை
ஆ.வே.வை: ஓய் சித்த வைத்தியரே; இந்த சட்ட சபைக்குள் திரு. முத்துலட்சுமி அம்மாள் போன பின்பு நமது வைத்தியத் தொழில்களுக் கெல்லாம் ஆபத்து வந்து விட்டது போல் இருக்கின்றதே. இதைப்பற்றி கேள்வி கேப்பாடு இல்லையா!
சி.வை:- என்ன ஆபத்து?
ஆ. வே. வை:- என்ன ஆபத்தா! இவ்வளவுதான் சித்த
வைத்தியத்தின் புத்தி.
சி. வை:- சரி, ஆயுர்வேத வைத்தியர்களே மகா புத்திசாலிகளாய் இருக்கட்டும். அந்த அம்மாளால் என்ன ஆபத்து வந்துவிட்டது?
ஆ.வே.வை:- பொட்டுக்கட்டக் கூடாதாம், தேவதாசிகள் கூடாதாம். இந்த இரண்டும் நின்றுபோய் விட்டால் நமது ஜீவனம் எப்படித்தான் நடக்கும்.
சி.வை:- அடேயப்பா இதுதானா பெரிய ஆபத்து. இதற்கும் நமக்கும் என்னய்யா சம்மந்தம். தாசிகள் இல்லாவிட்டால், கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குத்தான் ஜீவனம் கெட்டுப்போகும். ஏனென்றால் கோவி லுக்கு தாசிகள் வராவிட்டால் ஜனங்கள் கோயிலுக்குப் போக மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு பூசை பண்ணுவதிலும் வரும்படி குறையும்.தரகிலும் வரும்படி குறையும். அப்படி குறைந்தாலும் சிலருக்குத் தான் குறையும். நல்ல அழகான பெண்டாட்டியோ அக்கா தங்கையோ இருக்கிற பூசாரிகளுக்கு வரும்படி ரெட்டிக்குமே தவிர குறையாது. ஆகவே இதனால் நமக்கு என்ன ஆபத்து?
ஆவே.வை- சித்த வைத்தியரே உமக்குக் கண்டது கண்டபடி உளரத் தான் தெரியும். உள்ளுக்குள் இருக்கும் தத்துவம் இன்னதென்று தெரியாது.
குடி அரசு - 1930 0 72
சி.வை: ஆயுர் வேத வைத்தியருக்கே உள் தத்துவம் தெரியட்டும். நமக்குத் தெரியவேண்டாம். சங்கதி என்ன? சற்று சொல்லும் பார்ப்போம்.
ஆ.வே.வை:- சங்கதி என்னவென்றால் குருக்கள் அர்சகர்கள் பூசாரி இவர்கள் சங்கதி எப்படியோ நாசமாய் போகட்டும்.தாசி இல்லாததினால் அவர் வரும்படியோ தரகோ நின்றுபோகாது என்பது உண்மைதான். அன்றியும் எப்படியும் ஏதாவது சரி பண்ணி அதாவது சாமியை கீழே தள்ளியோ அல்லது. ஆட்டி புரட்டியோ அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் பண்ணச் செய்து வயிரை வளர்த்திக்கொள்வார்கள்.இல்லாவிட்டால் விக்கிரகம் செய்பவனை கைக்குள் போட்டு இரண்டு விக்கிரகங்களை வாங்கிக் கொண்டு போய் எங்கேயாவது ஒரு காட்டில் புதைத்து விட்டு வந்து சாமி கனவில் வந்து சொன்னதாக எந்த பணக்கார முட்டாளிடமாவது அல்லது ஒரு பார்ப்பன தலைவனிடமாவது சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து ஜனங்களை கூட்டிக் கொண்டுபோய்காட்டி
புதிதாய் எடுப்பது போல் தோண்டி எடுத்து அதற்கு கோவில் கும்பாபிஷேகம் உர்சவம் செய்து ரம்பவும் சக்தி இருக்கிறதாக காட்டி பிழைத்துக் கொள்வார்கள். அவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.
சி.வை:- அப்படியானால் பின்னை நமக்கு என்ன ஆபத்து வந்துவிடும்?
ஆ.வே.வை:- சொல்லவும் வெட்கமாக இருக்கின்றது.
சிபவை:- என்னதான் சொல்லுமே பார்ப்போம். நமக்கு நாமே பேசிக் கொள்வதில் வெட்கமென்ன?
ஆ.வே.வை:- நோயில்லாவிட்டால் வைத்தியன் எப்படி பிழைப்பான். இதை ஒத்துக் கொள்ளுகிறீர்களா இல்லையா?
சி.வை:- ஆம், உண்மைதான்.
ஆ.வே.வை:- தாசிகள் இல்லாவிட்டால் நமக்கு பணம் கிடைக்கும் படியான நோய் எப்படி பரவும்?
சி.வை: அடேயப்பா இதுதானா பெரிய சங்கதி. வருகிற நோய் எப்படியும் வந்துவிடும். அதெல்லாம் கடவுள் செயல்.
ஆ.வே.வை:- உன் கடவுள் தலையில் நெருப்பை வாரிக் கொட்டு. வேறு நோய்களுக்கெல்லாம் இங்கிலீஷ் வைத்தியமாய்விட்டது.இந்த மேக சம்மந்தமான அதுவும் இரகசியமான இடங்களில் வருகின்ற நோய்களுக்குத் தான் இப்பொழுது ஜனங்கள் டாக்டர்களை கூப்பிடவும் அவர்களுக்கு காட்டவும் வெட்கப்பட்டுக் கொண்டு நம்மை கூப்பிட்டு காட்டுகின்றார்கள். இனி தாசிகள் இல்லாவிட்டால் மேக வியாதி எப்படி அதிகமாக உண்டாகும்.
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஒரு சமயம் உண்டானாலும் அது எப்படி பரவும்?
சி.வை: தாசிகள் இல்லாவிட்டால் மனிதர்கள் எல்லாம் பரிசுத்தவான் களாகி விடுவார்களாக்கும். அப்பவும் போகிறவன் எப்படியாவது போய்த்தான் தீருவான்.
ஆ.வே.வை:- எப்படிப் போய்த் தீருவான். மற்றொருவன் சம்சாரத் தினிடம் போனால் அவன் உதைப்பான். திருட்டுத்தனமாகத்தான் போக வேண்டும்.அது சாதாரணமாய் தாசிகளிடம் நடக்கும் மாதிரிக்கு நூற்றில் ஐந்து பங்குகூட நடக்காது. அதிலும் இந்தமாதிரி நடவடிக்கைகளால் வியாதி அதிகமாய் உண்டாகிவிடாது. அவர்கள் அவசரமும் பயமும் வியாதி உண்டாவதற்கு நேரமே இருக்காது. ஆதலால் இதனால் நமக்கு பெரிய நஷ்டம் தான்.
சிவை: தாசிகள் எடுபட்டுப் போனாலும் குச்சுக்காரிகள் என்னும் பேரால் எத்தனையோ பேர்கள் இருப்பார்களேயொழிய அடியோடு விவசாரத் தனம் இல்லாமல் போய் விடுமென்று பயப்பட வேண்டாம்.
ஆ.வே.வை:- குச்சுக்காரிகள் இருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த இடங்களுக்கு 4 - நம்பர் 5 - நம்பர் பேர் வழிகள் தான் போவார்கள். அவர்கள் காசு கொடுக்கவும் சக்தி அற்றவர்கள். அவர்களால் வியாதி பரவுவதற்கும் இடமிருக்காது. பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், உத்தியோகஸ்தாள்,மரியாதைக்காரன் என்பவர்கள் போன்ற இந்த மாதிரியான. ஆள்கள் கண்டிப்பாக அந்த மாதிரி இடங்களுக்குப் போக மாட்டார்கள். ஏன் என்றால் கண்டவர்கள் கேவலமாய் மதிப்பார்கள். தாசி வீடானால் தாராள மாய்ப் போவார்கள்.பார்க்கின்றவர்களும் மதிப்பார்கள். அன்றியும் இப்படிப் பட்டவர்கள் போனால்தான் இவர்களுக்கும் சுலபமாய் நோய் வரும். அதை. தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்குப் பரப்பவும் செளகரியமாகும். இந்த இரண்டு பேராலும் நம் இஷ்டப்படி பணம் வரும். தவிரவும் இந்த குச்சுக் காரிகள் வியாபாரத்திற்கும் கூட ஆபத்து வந்து விட்ட சங்கதி உனக்குத் தெரியாதா?
சி.வை:- அதென்ன சங்கதி.
ஆவேவை:-நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரிய வில்லை. விவசாரிகள் தடுப்பு மசோதா என்று ஒன்று இப்போது சட்ட சபை
யில் பாசாகி இருக்கின்றது உனக்குத் தெரியாதா? அதனால் அதுவும் குறைந்து தான் போகும். அதுவும் தவிர குச்சுக்காரிகள் லைசென்ஸ் வாங்க வேண்டு
மாம். நோயில்லையென்று டாக்டர் சர்டிபிகேட் கொடுக்க வேண்டுமாம். இவ்வளவும் தப்பியல்லவா நமது வயிற்றுப் பிழைப்பை நடத்த வேண்டி யிருக்கிறது.
குடி அரசு - 1930 N 74
சிவை: அப்படியா சங்கதி. ஆனால் ரொம்பவும் நல்ல காரியமாச்சுது. ஒருவருக்கொருவர் இஷ்டப்பட்டு திருட்டுத் தனமாய்ப் போகிறவர்கள். எப்படியோ நடந்து கொள்ளட்டும். பணம் காசு கொடுத்து போவது என்கின்ற விவசார வியாபாரம் ஒழிந்தால் போதும். நாம் நமக்கு வரும்படி இல்லா விட்டாலும் வேறு வேலை பார்த்துக் கொள்ளுவோம்.
ஆ.வே.வை:- அந்த தர்ம ஞானமெல்லாம் வாயில் பேசிவிடலாம். உங்களுக்கு இப்பொழுது சற்று நல்ல காலம். இந்த மந்திரிகள் காலத்தில் எப்படியும் வேலை கிடைத்து விடும். இல்லாவிட்டால் மண் வெட்டி யெடுத்து மண் சுமந்தானாலும் பிழைத்துக் கொள்வீர்கள். எங்கள் கூட்டத்திற்கு இந்த
மாதிரி பிழைப்பைத் தவிர வேறு பிழைப்பு என்ன இருக்கின்றது. சொல்லும்
பார்ப்போம்.
சி.வை: அதற்கு என்ன செய்யலாம். நீங்களும் மண்வெட்டி எடுக்க வேண்டியது தான்.எத்தனை காலத்திற்குத்தான் மக்களை ஏமாற்றி துன்புறுத்தி வாழமுடியும்? தாசியும் வேசியும் ஒழிந்ததால்தானா நமது பிழைப்பு போயிற்றென்று சொல்லுகின்றீர். அதற்கு முன்னாலேயே போய்விட்டது.
ஆ.வே.வை:- அதற்கு முன்னாலேயே எப்படிபோய் விட்டது என்கின்றீர்.
சி.வை:- யூனியன் பஞ்சாயத்து தாலூக்கா ஜில்லா போர்டு முனிசிபா
லிட்டி சட்டசபை முதலான ஸ்தானங்களுக்கு எலக்ஷன் வந்ததொன்று. அதிலும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதிலிருந்து இந்த ஸ்தானங்களில் பார்ப்பன.
ரல்லாதாரும் இருக்க இடம் கிடைத்து எலக்ஷன் கிராமங்களுக்குப் போக ஆரம்பமானவுடன் பணக்காரர் வீட்டு பிள்ளைகள் யெல்லாம் தாசி, வேசி
நாடகம், சதுர், ஆடு கோழிச் சண்டை, கச்சேரி ஆகிய வேலைகளில் இருந்த. மோகத்தை எலக்ஷனில் திருப்பி விட்டார்கள். முன் சொன்ன காரியங்க
ளுக்கு செலவழித்த பணங்களையெல்லாம் எலக்ஷன்களில் செலவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் தாசிகள் இருந்தாலும் கூட அவர்களுக்கு முன் போல் தொழில் நடப்பதும் கஷ்ட்டம். வைத்தியர்களுக்கும் முன் போல் பணம் வருவதும் கஷ்ட்டம். ஏனென்றால் இந்த எலெக்ஷன் மூலமாக அவர். களுக்குக் கொஞ்சம் இங்கிலீஷ் நாகரீகம் பிடிபட்டு விடுகின்றது. அதனால் இங்கிலீஷ் வைத்தியத்தில் ஆசை விழுந்து விடுகின்றது. இது மாத்திரமா இன்னும் ஒரு காரணம் சொல்லுகின்றேன் கேளும்.
ஆ.வே.வை:- அது என்ன சொல்லும் பார்ப்போம்.
சிபவை:- சுயமரியாதை இயக்கம் வந்த பிறகு பெண்களை அதிகமாகப் படிக்க வைக்க ஆரம்பித்து விட்டார்கள். பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். படிப்பும் சுதந்திரமும் கிடைத்த பெண்கள் புருஷர்
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
களை தாசி வீட்டுக்கு சுலபத்தில் அனுப்புவார்களா? தாசிகளுக்கு மேலாக
சிங்காரித்துக் கொள்ளுகிறார்கள்; தாசிகளுக்கு மேலாக பேசத் தெரிந்து கொள்ளுகிறார்கள்; தாசிகளுக்கு மேலாக மற்ற காரியங்களும் செய்து கணவன்மார்களை அடக்கி ஆள ஆரம்பித்து விட்டார்கள்.இவைகளினால் வாலிபர்களுக்கும் தங்கள் யெண ஜாதிகளிடம் அதிகமான அன்பு காதல் ஏற்பட்டு விடுகின்றது. தவிரவும் முன்போல் மாமி மாமன் நாத்தி அதிகாரங் களும் குடும்ப வீடுகளில் குறைந்து போய் விட்டதால் புருஷன் பெண் ஜாதிமார்கள் அடிக்கடி பேசவும் கொஞ்சவும் தாராளமாய் செளகரியம் கிடைத்துவிட்டது. இத்தனையும் அல்லாமல் சாரதா மசோதா வேறு வந்து விட்டது. கல்யாணம் ஆனதும் பெண் எதற்கும் தயாராய் இருக்கின்றது. அதிலும் சுயமரியாதை இயக்கம் ரொம்பவும் முத்திப்போய் புருஷன் பெண்: ஜாதிகள் ஒருவரையொருவர் தாங்களே தெரிந்தெடுத்துக் கொள்ளுகின்ற வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்படிப்பட்டவர்கள் வேறு புருஷனையோ வேறு பெண்ணையோ கவனிப்பது என்பது மிக்க அபூர்வமாகத்தான் இருக்கும். ஆகவேபல வழிகளிலும் இந்த மாதிரி பிழைப்புக்காரர்களுக்கு இனி ஆபத்து தான்.அதற்கு யார் என்ன செய்வார்கள். இத்தனை பேர்களுக்கு நல்ல காலம் வந்தது போல் நமக்கும் வரும். இதைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்.
ஆ.வே.வை:- நீ சொல்வதைப் பார்த்தால் இனி தாசி வேசிகளிருந் தாலும் பிரயோஜனப்படாது என்றுதான் எனக்குத் தெரிகின்றது. ஏனென்றால் காலமோ கலிகாலம். ஆளுக்காள் தலைவிரித்து ஆடத் துடங்கி விட்டார்கள். கட்டுப்பாடெல்லாம் போய்விட்டது, இப்படி யெல்லாம் நடக்குமென்று வெகு நாளைக்கு முன்னமேயே பரமசிவன் பார்வதிக்குச் சொல்லிபார்வதிநந்திக்குச் சொல்லி நந்தி நாரதருக்குச் சொல்லி நாரதர் ரிஷிக்குச் சொல்லி ரிஷி முனிவர்களுக்குச் சொல்லி முனிவர்கள் பெரியோர்களுக்குச் சொல்லி பெரியவர்கள் நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
சி.வை:- நல்ல காரியமாச்சுது. பின்னையேன் அழுகிறீர். பகவான்
முதல் பெரியோர்கள் வரை சொன்ன வாக்கு தவருமா? முதலில் பகவான் தலையில் நெருப்பை வாரிக் கொட்டு என்றீர். இப்போது பகவான் வாக்கு என்கிறீரே. என்ன சங்கதி.
ஆ.வே.வை:- என்னமோ சொன்னேன். உண்மை பேச வைத்தது. நம்மை கேழ்க்க வைத்தது. நான் போய் வருகிறேன்.
சி. வை:- நல்ல காரியம்.
குடி அரசு - உரையாடல் - 02.03.1930
குடி அரசு - 1930 0 76
9
ஆஸ்த்திகப்
என்ன அய்யா நாஸ்த்திகரே, மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றிய ஆட்சேபனைகள் எப்படி இருந்தாலும் பெண்களை கடவுளே விவசாரிகளாய் பிரப்
பெண்:-
பித்து விட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன்.
அம்மா, அப்படித் தாங்கள் சொல்லக் கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக
நாஸ்திகன்:-
இருந்தாலும் இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல் வதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்லுகின் நீர்கள்? இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கி யதை? எல்லாப் பெண்களுமா விவசாரிகள்?'
ஆஃ.பெண்:-
நா:
ஆம் அம்மா, எல்லாருமே தான் “விவசாரிகள்”. இதற்காக
நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை.
என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரை: யுமா நீங்கள் விவசாரிகள் என்று நினைக்கிறீர்கள்.
ஆ. பெண்:-
ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்ல மேல் உலகத்தில் உள்ள பெண்களையும் கூடத்தான் நான் “கற்பு உள்ளவர்கள்” என்று சொல்லுவ தில்லை.
இப்படிச் சொல்லுவது தர்மமாகுமா!
ஆ.பெண்:-
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
7
கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமான மனுதர்ம சாஸ்திரம் சொல்வது எப்படிப் பொய்யாகும்- அதர்மமாகும் சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால் அதுசரியென்று நான்றாஜுப்படுத்தவும் தயாராயிருக்கிறேன்.
நாட
என்ன ௬ஜு, நாசமாய்ப் போன ௬ஜு சற்று காட்டுங்கள். பார்ப்போம்.
ஆ.பெண்:-
நமது பெரியவர்கள் கற்பைப் பரிகஷிக்கத்தக்க பரீகை்ஷகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம்
நாஃ-
சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.
என்ன பரீகை"ஷ ஐயா அது.
சொல்லட்டுமா! கோவித்துக் கொள்ளக் கூடாது.
கோபமென்னையா, மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்.தாராளமாய்ச் சொல்லுங்கள்.
“தெய்வம் தொழாள் கொழுணனைத் தொழுவாள்'
பெய்யெனப் பெய்யுமழை” என்கின்ற பொய்யா மொழிப் புலவரின் வேத வாக்கைக் கேட்டிருக்கிறீர்களா?'
ஆம். கேட்டிருக்கின்றேன்.
கற்புடைய மங்கையர்கள் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேத வாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?
ஆம். கேட்டிருக்கின்றேன்.
சரி... ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடி தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உளவு @ அங்குலம்) மழைப் பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
இது நம்மாலாகின்ற காரியமா! தெய்வத்திற்கு இஷ்டமி ருந்தாலல்லவா முடியும். இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால் இந்தப் பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.
எந்தப் பாவி எப்படித் தவித்தாலும் நீங்கள் கற்புள்ளவர் களாயிருந்தால் மழை பெய்யென்றால் பெய்து தானே ஆக வேண்டும். அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணா வது இருந்தால் மழை பெய்து தானே தீரவேண்டும்.
நா:-
குடி அரசு - 1930 0 78
எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ அப்போதே பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்ல.- “விபசாரிகள்” என்று ருஜுவாக வில்லையா? பொருமை
யாய் யோசித்துப் பாருங்கள். ஆகையால் இனிமேல் சாஸ்தி ரங்களைப் பற்றி சந்தேகப்படாதீர்கள். அதிலும் ரிஷிகளும் முனிவர்களும் சொன்ன வாக்கியமும் கடவுள் சொன்ன
வேதத்தின் சத்தாகியதும் இந்து மதத்திற்கு ஆதாரமானதும் மோக்ஷத்திற்கு சாதனமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா அம்மா? அதனால் தானே நான் கூட கல்யா ணமே செய்து கொள்ளவில்லை.
எதினால்தான்?
ஆ. பெண்:-
பெண்களை கல்யாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள் அவர்கள் விவசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டுமென்றிருக்கிறதினால்தான்.
நா: -
பின்னை என்ன செய்கின்றீர்கள்.
கடவுளோ பிறவியிலேயே பெண்களை விவசாரிகளாய் பிறப்புவித்துவிட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. ஆத லால் எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும். கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்ப தாகக் கருதி சிவனே என்று உட்கார்ந்து கொண்டிருக்கின் றேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா? என் கின்ற தைரியம் உண்டு.
அப்படியானால் நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்ததில்
ஆ.பெண்:-
ஒன்றும் குற்றமில்லை. இந்த மனுதர்ம சாஸ்திரமும் வேதமும் பொய்யா மொழியும் நீதியும் இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக் கொண்டதோ ஆன கடவுள்களும் நாச மாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நமது எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.
குடி அரசு - உரையாடல் - 02.03.4930
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
79
உதிர்ந்த மலர்கள்
எந்த மதத்தில் இருப்பதினால் ஒரு மனிதன் தீண்டப்படாதவனாய்
கருதப் படுகின்றானோ அவன் தனக்கு ஒரு சிறிதாவது சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் அவன் தான் எந்த மதத்தைச் சார்ந்தால் உடனே. தீண்டப்படாதவனாக கருதப்பட மாட்டானோ அந்த மதத்தை சார வேண்டி
யது அவனது முதற்கடமையாகும்.
ஏதாவது ஒரு குறிப்பிட்ட மதத்தில் இருந்தால்தான் “ கடவுள் அருளோ” “மோக்ஷமோ” கிடைக்கும் என்கிற விஷயத்தில் எனக்குச் சிறிதும் ஒப்புதலும் நம்பிக்கையும் கிடையாது. அவ்விரண்டு வார்த்தைகளும் அர்த்தமற்றதும் மோசமும் பரிகாசத்திற்கு இடமானதும் என்பதே எனது அபிப்பிராயம்.
மனுதர்ம சாஸ்திரத்தையும் அதற்கு ஆதாரமான வேதத்தையும் (மத ஆதாரத்தையும் ஒரு கடவுள் சிருஷ்டித்திருப்பாரானால் முதலில் அந்தக்கட வுளை ஒழித்து விட்டுத் தான் தாகசாந்தி செய்ய வேண்டும்.
மனுதர்ம சாஸ்திரத்தையும் அதை ஆதரிக்கும் வேதத்தையும் ஒரு மதம் ஆதாரமாய்க் கொண்டிருக்குமானால் முதலில் அம்மதத்தை அழித்து
விட்டுத் தான் மனிதன் வேறுவேலை பார்க்க வேண்டும்.
இந்து மதம் போய்விடுமே! இந்து மதம் போய்விடுமே!! என்று சொல்லிக் கொண்டும் இந்துமத தர்மங்களை ஒன்று விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டும் வந்தவர்களாலேயே இன்று இந்தியாவில் இந்தியர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர்கள் வேறு மதத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.
குடி அரசு - 1930 0 80
மதத்தைக் காப்பதற்கு என்றும், மதக் கொள்கைகள் சிறிதும் விட்டுக் கொடுக்க முடியாதென்றும் இதுவரை செய்து வந்த முயற்சிகளும் கிளர்ச்சி
களும் எல்லாம் இரண்டொரு வகுப்புக்களுடையவும் சில தனிப்பட்ட நபர்க ளுடையவும் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட முயற்சிகளாகவே முடிந்ததல்
லாமல், எவ்விதப் பொது நலனும் ஏற்படவேயில்லை..
“மேல் நாட்டாருக்கு ஒரு மாதிரியும் கீழ் நாட்டாருக்கு ஒரு மாதிரி யுமான சுதந்திரங்கள், வித்தியாசங்கள் இருக்கக்கூடாது” என்று சொல்லும் இந்திய தேசிய வாதிகள் தங்கள் நாட்டாருக்குள்ளாகவே பார்ப்பனருக்கு ஒரு
மாதிரியும் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு மாதிரியும் இடமும் தெருவும் குளமும் ஏன் பிரிக்கின்றார்கள்? பிரித்திருப்பதை ஏன் இன்னமும் சகித்துக் கொண்டி
ருக்கிறார்கள்? இது யோக்கியமாகுமா?
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்து மதத்திற்கு பிரதிநிதி
யாய் போகவில்லை.ஆனால் அவர் ஒரு “வக்கீலாய்” போனார்.
உன்னை க்ஷத்திரியன் என்றோ வைசியன் என்றோ நீ சொல்லிக் கொள்ளும் போது நீ பிராமணன் என்பவனுக்கு கீழ்ப் பட்டவனென்பதை நீயே ஒப்புக் கொண்டவணாகின்றாய்.
சென்ற வருஷத்திய ரயில்வே கெய்டை பார்த்துக் கொண்டு ரயிலுக் குப்போனால் வண்டி கிடைக்குமா?
சுயமரியாதையும் சமத்துவமும் விடுதலையும் வேண்டிய இந்தியா வுக்கு இப்போது வேண்டியது சீர்திருத்த வேலை அல்ல; மற்றென்னவென் றால் உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையேயாகும்.
இதுவரை நமது நாட்டில் செய்யப்பட்டு வந்த சீர்திருத்தம் என்பதெல் லாம் பாமர மக்களை படித்தவர்களும் பணக்காரரும் ஏய்ப்பதற்கு கண்டு பிடித்த ஒரு சூட்சியே ஒழிய உண்மை சீர்திருத்தமல்ல.
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட்ட கடவுளிடத்தில் மூட பக்தி
யால் ஏற்பட்ட மதத்தின் மூலம் சுயநலக்காரர்களால் வகுக்கப்பட்ட கொள்கை: களை வைத்து நமது வாழ்க்கையை நடத்துகின்றோம்.
குருட்டு நம்பிக்கையையும் மூட பக்தியையும் சீர்திருத்த வேலை யினால் ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றை அழிவு வேலையினால் தான் ஒழிக்கமுடியும். அழிவு வேலை செய்பவர்களுக்கு மகத்தான மன உறுதியும்,
சிறிதும் சந்தேகமற்ற தெளிவும், பழிப்புக்கும் சாவிற்கும் துணிவும் இருக்க வேண்டும்.
அழிவு வேலைக்காரர்களுக்கு நிதானமும் சாந்தமும் சகிப்புத் தன்மையும் அவசியம் வேண்டுமென்பதையும்: வெறுப்பும் பிடிவாதமும் கண்டிப்பாய்க் கூடாது என்பதையும் நான் ஒரு போதும் ஒப்புக் கொள்ள.
மாட்டேன்.
அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே பழிப்பார்களே எதிர்ப்பு பலமாய்விடுமே நமது செல்வாக்கு குறைந்து போகுமே என்கின்ற பயமும் பலக்குறைவும் உள்ளவர்கள் ஒரு காலமும் சீர்திருத்த வேலைக்கு உதவ
மாட்டார்கள்.
சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாட்டை உடைத் தெறிவது தான்,சீர்திருத்தத்தில் பிரவேசிப்பதற்கு உற்ற பாதையாகும்.
ராம ராஜியத்தையும், வருணாசிரமத்தையும் ஆதரிக்கும் திரு. காந்தி யினால் இந்தியாவுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க முடியாது.
- ஈ.வெ.ரா.
குடி அரசு - துணுக்குகள் - 02.03.1930
குடி அரசு - 1930 0 82
சகசெண்ணை அரசாங்க
உன் நாட்டு ஹம்பர் பதவி
சென்னை அரசாங்க நிர்வாக சபையில் இம்மாதக் கடசியில் ஒரு மெம்பர் ஸ்தானம் அதாவது கடந்த 5 - வருஷ காலமாக டாக்டர் கனம் சர். மகமது உஸ்மான் அவர்கள் வகித்து வந்த உள்நாட்டு மெம்பர் ஸ்தானம் 5 வருஷ காலாவதியின் காரணமாக காலி ஆகக் கூடுமென்பதாய் தெரிய வருகின்றது. அதை உத்தேசித்து அநேக கனவான்கள் அதை அடைய முயற்சி செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது. அரசாங்கத்தாரும் அந்தப் பதவியை யாருக்குக் கொடுக்கலாம் என்பதாக யோசனை செய்து கொண்:
டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தாருக்கு இது விஷயமாக நாம் நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட வேண்டியது நமது கடமை என்று நினைக்
கின்றோம். ஆதியில் அதாவது சுமார் 20 வருஷத்திற்குமுன் மேன்மை தங்கிய கவர்னரவர்களின் நிர்வாக சபையில் இரண்டு அங்கத்தினர்கள் இருந்ததை மூன்றாக மாற்றியதின் முக்கிய காரணமே இந்தியர்களுக்கும் அதில் இட மிருக்க வேண்டும் என்கின்ற எண்ணமே யாகும். பிறகு மூன்றை நான்காக் கியதும் அவைகளில் இந்தியர்களில் ஜாதி மதப் பிரிவுக்குத் தக்கபடி தாராள
மாய் பிரித்துக் கொடுக்க சவுகரியப்படுத்திக் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாகவே சட்டமெம்பர் ஸ்தானத்தை பார்ப்பனர்களுக்கும் மற்றொன் றாகிய உள்நாட்டு மெம்பர் ஸ்தானத்தை ஒரு மகமதியருக்கும் கொடுத்து வரப்பட்டது. சென்ற வருஷத்தில் சட்ட மெம்பர் ஸ்தானம் காலியாக நேரிட்
டதும் அதை பார்ப்பனருக்கென்றே முடிவு கட்டிவிடக் கூடாதென்றும் மற்ற சமூகத்தாருக்கும் வரிசைக் கிரமமாய் மாறிவர வேண்டும் என்றும் வாதாடி அதை ஒரு பார்ப்பனரல்லாதவருக்குக் கிடைக்கும்படி செய்யப் பட்டது. அதுபோலவே இப்போது 10 - வருஷ காலமாய் மகமதிய கனவான் கள் பார்த்து வந்த ஸ்தானமும் காலியாவதால் அதை நிர்வாக சபையில் இதுவரை: இருந்து வராத ஒரு சமூகத்திற்கே. அதை வினியோகிக்க வேண்டும் என்பதாக வலியுறுத்துகின்றோம். அதாவது நாம் அரசியலில் வகுப்பு வாரிப்பிரதி நிதித்துவம் கேட்கும் போதெல்லாம் ஆதியில் இருந்தே இந்தியர்களில் 5
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பிரிவுகளைத்தான் பிரித்துக் காட்டி கேட்டு வந்திருக்கின்றோம். அதாவது,
இந்தியர்களுக்கு என்று கொடுக்கப்படும் பதவிகள் ஸ்தானங்கள். முதலியவைகளை இந்துக்கள் அதாவது இந்துக்களில் பார்ப்பனர், பார்ப்பன. ரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மகமதியர்கள், கிறிஸ்தவர்கள். என்கின்ற ஐந்து பிரிவுகளாகப் பிரித்தே பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றோம். அவற்றுள் பார்ப்பனர், பார்ப்பனரல்லா
தார் என்கின்ற பிரிவுகளைப் பற்றி இந்த சமயம் அவசியமில்லை என்று பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் சொல்வதனாலும் சென்ற வருஷம்
சர். சி.பி.அய்யர் ஸ்தானம் காலியானதும் இந்த முறையைக் கொண்டேதான் வற்புறுத்தி அதை இதுவரை பார்ப்பாருக்கே கொடுக்கப்பட்டு வந்திருந்தாலும் அதைமாற்றி சர். கிருஷ்ணன் நாயர் அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்
தோம். அது போலவே இது சமயம் காலியான சர்.மகமது உஸ்மான் அவர்கள் ஸ்தானமும் மகமதிய கனவான்களே பார்த்து வந்திருந்தாலும் இதுவரை பார்த்திராத வகுப்பாரான தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கே கொடுக்க வேண்டி யது நியாயமாய் இருக்கின்றது என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. ஏனெனில் இதுவரை அப்படிப்பட்ட பதவிகளை மற்ற வகுப்பார்கள் எல்லாம். அனுபவித்து வந்ததுடன் இன்றைய தினமும் அது போன்ற செல்வாக்கும் அதிக சம்பளமும் உள்ள உயர்ந்த பதவிகளில் எல்லாம் அவ்வகுப்பாரை (தாழ்த்தப்பட்ட வகுப்பாரை! தவிர மற்ற வகுப்பார்கள் எல்லாரும் இருந்து கொண்டு வருகின்றார்கள். எங்கனமெனில்,
ஒரு பார்ப்பனர் மந்திரியாகவும், மூன்று பார்ப்பனரல்லாதூர்கள் அதா வது சட்ட மெம்பராக ஒரு பார்ப்பனரல்லாத மலையாள கனவானும், மந்திரி யாக இரண்டு பார்ப்பனரல்லாத கனவானும் இருப்பதோடு மற்றும் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் ஒரு மகமதியரும், ஒரு கிருஸ்தவரும் இருப்பதோடு ஏரக்குறைய இரண்டு வருஷகாலம் ஒரு கிருஸ்தவ கனவான் மந்திரியாகவும்
இருந்திருக்கிறார்.
ஆகவே தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பது ஒன்றைத் தவிர மற்ற வகுப்புகள் எல்லாம் “சீர்திருத்தத்தின்” பலனாய் ஏற்பட்ட ஒவ்வொரு பெரும். பதவிகளையும் அனுபவித்தே வந்திருக்கின்றார்கள். மற்றும் இந்து மத பரிபாலன போர்டிலும் இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனரும் பார்ப்பன ரல்லாதாருமே அனுபவித்து வந்திருக்கிறார்களே ஒழிய இந்துக்கள் என்கின்ற
தலைப்பின் கீழ் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு எவ்வித பிரதிநிதித் துவமும் பதவியும் இதுவரை கிடைத்ததாக யாரும் சொல்ல முடியாது என்றே நினைக்கின்றோம். ஆகையால் இந்த நிர்வாக சபை மெம்பர் பதவியை கண்டிப்பாய் அந்த, அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பவர்களுக்கே. கொடுக்க வேண்டியது நியாயமும் யோக்கியமும் ஆன காரியம் என்பதே
நமது அபிப்பிராயம்.
குடி அரசு - 1930 N 84
தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பது இந்தியாவிலாகட்டும் சென்னை மாகாணத்தில் ஆகட்டும் ஒட்டு மொத்த ஜனத்தொகையில் சற்றேரக்குறைய
5ல் அல்லது 6ல் ஒரு பங்குள்ள ஜனத்தொகை கொண்ட சமூகமாகவும் வெகுகாலமாகவே தாழ்த்தப்பட்டு வந்ததாகவும் மிக்க கொடுமையையும் கஷ்டத்தையும் அனுபவித்து வந்ததாகவும் இருப்பதுடன் இன்றைக்கும் பிரிட்டீஷ் கவர்ண்மென்டு இந்தியாவில் இருக்கவே கூடாது என்று யாராவது சொல்லுவார்களேயானால் அதை மறுத்து கண்டிப்பாய் அந்தக் கவர்ண்: மென்டு இருந்துதானாகவேண்டும் என்று சொல்லுவதற்கு தகுந்த காரணஸ் தர்களாயுமிருக்கின்ற சமூகத்தார்களுமாவார்கள். ஏனெனில் அரசாங்கத்தார்.
கள் இந்தியாவில் அரசியல் கிளர்ச்சி ஏற்பட்ட காலங்களிலெல்லாம் தாங்கள். இந்தியாவின் நன்மையைக் கோரியும் இந்திய மக்களில் இளைத்தவர்களை வலுத்தவர் துன்புறுத்தாமலும் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள் தாழ்ந்த ஜாதிக்காரர் என்பவர்களை கொடுமைப்படுத்தாமலும் இருப்பதற்காகவும் எல்லோரையும் சமமமாகப் பார்ப்பதற்காகவும் இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு இருப்பதை மெய்ப்பிக்கவும் சந்தர்ப்பத்தை கொடுக்கக் கூடிய சமூகத்தார்களாயிருப்பதேயாகும். அன்றியும் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இந்தியர்களில் சிலர் அதை பகிஷ்கரித்ததற்கும் பலர் அதை: வரவேற்கச் செய்ததற்கும் முக்கிய காரணஸ்தர்களுமாவார்கள். அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் முன்னேற்றமடைவதற்கும் சமத்துவம் அடை வதற்கும் பிரதிநிதித்துவம் பெருவதற்கும் இந்திய அரசியல் காரர்க ளின் சூட்சியிலகப்படாமல் இந்த அரசாங்கம் நியாயமாகவும் யோக்கியமாக வும்
நடந்து கொள்ளுமென்றும், மேலும் எந்தப்படி நடந்து கொள்ள சைமன் கமிஷன் வழி செய்யுமென்றும் நினைத்தே நம்பியே ஆதரித்தவர்களா
வார்கள். அன்றியும் நாமும் நமது சுயமரியாதை இயக்கமும் இந்த தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சைமன் கமீஷனை உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்பவர்கள் தங்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டு அதற்கு விரோதமாகச் செய்த கிளர்ச்சிகளின் சூட்சிகளை வெளியாக்கி அவைகளை:
அழித்து ஆதரித்ததுமாகும். அன்றியும் இன்றைய தினமும் பலருக்கு காங்கிரசினிடம் ஏன் திரு காந்தியாரிடமும் கூட நம்பிக்கையில்லாமல் போன
தும் காங்கிரசை விட்டும் திரு காந்தியின் சத்தியாக்கிரகம் பூரண சுயேச்சை ஆகிய சம்பந்தமான காரியங்களை விட்டும் விலகிக் கொண்ட தற்கும் சிலருக்கு ஜெயில் பயமிருந்தாலும் மற்ற பெரும்பான்மையோர்களுக்கு இந்த சமூகத் தாரும் இவர்களின் முற்போக்கு விஷயத்தில் கவர்ண்மென்டாரிட முள்ள நம்பிக்கையுமாகும். ஆகவே சென்னை அரசாங்கத்தாரும் இந்திய அரசாங் கத்தாரும் இந்த நம்பிக்கைக்கு விரோதமோ துரோகமோ செய்யாமல் தங்க ளுக்கு கிடைத்த இந்த நல்ல சமயத்தை ஒழுங்காய் உபயோகித்துக் கொள்வார் கள் என்று நினைக்கின்றோம்.
தாழ்த்தப்பட்டு கொடுமை செய்யப்பட்ட மக்களை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு அதிகாரங்களில் உயர் பதவி கொடுப்பதன்
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மூலமே தான் சீக்கிரத்தில் செய்யக்கூடுமே தவிர வேறு காரியங்களாலல்ல. உதாரணமாக பார்ப்பனர்களால் மற்றப் பார்ப்பனரல்லாதார்களை சூத்திரன் இழிந்த பிரப்பான் என்றும் மகமதியர்களை மிலேச்சர்களென்றும், கிருஸ்தவர் களை நீச்சர்களென்றும் சொல்லிக் கொண்டிருந்த கொடுமைகள் எல்லாம் இன்றைய தினம் வேகமாய் மறைந்து மறைந்து போய்க் கொண்டிருப்பதற்கு காரணம் அந்தந்த சமூகங்கள் அரசியல் அதிகாரங்களில் ஆதிக்கம் பெற்ற தினாலேயே ஒழிய மற்றபடி வேறு எந்தக் காரணங்களாலாவது என்று சொல்லி விட முடியாது.
ஆகவே அரசாங்கத்தார் தங்கள் பொருப்புகளையும் நாணயங்க ளையும் காலதேச நிலைமையையும் உணர்ந்து கண்டிப்பாய் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கே இந்தப் பதவியை வழங்க வேண்டுமென்று மற்றுமொரு முறை வேண்டுகின்றோம்.
மற்றபடி அந்தச் சமூகத்தில் அந்தப் பதவியை வகிக்கத் தகுந்த கனவான்கள் இல்லை என்று ஏதாவது சாக்குச் சொல்ல வருவார்களே ஆனால் அதை நாம் சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது என்பதோடு அதில் சிறிதும் உண்மையும் நாணயமும் இருக்க முடியாது என்றே சொல்லுவோம்.
ஏனெனில் இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப் பட்டமக்களின் பிரதிநிதியாக இந்திய சட்ட சபையில் இருக்கவும் சென்னை மாகாண மக்களின் பிரதிநிதியாக இந்தியாவுக்கே அரசியல் பரீட்சை செய்தும் மேல்கொண்டு சீர்திருத்தம் வழங்கத் திட்டங்கள் ஏற்படுத்தும் சைமன் கமிஷன் கமிட்டியில் ஸ்தானம் வகித்து இருக்கவும் மேற்படி சமூகத்தில் கனவான்கள் இருக்கும் போது, சென்னை அரசாங்கத்தில் அதுவும் சுமார். இரண்டொரு வருஷத்திற்குள் மறைந்துபோக இருக்கும் ஒரு நிர்வாக சபையில் நால்வரில் ஒருவராக இருக்கும் ஒரு மெம்பர் ஸ்தானத்திற்கு அந்த சமூகத்தில் நபர்கள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்றுதான் கேழ்க்கின்றோம். அன்றியும் நாமாகவே உயர்திரு ராவ்பகதூர் எம். சி.ராஜா,
எம். எல்.ஏ., அவர்கள் பெயரையும் ஞாபக மூட்டுகின்றோம். கடைசியாக அரசாங்கத்தார் இந்த விஷயத்தில் நியாயம் செய்யாமல் அலட்சியமாக இருந்து விடுவார்களேயானால் சர்க்காரின் நல்ல எண்ணத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கும் அவர்களிடம் அனுதாப முள்ளவர்களுக்கும் சிறிதாவது உள்ள நம்பிக்கையும் ஆட்டம் கொடுத்துவிடு மென்பதையும் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.03.1930
குடி அரசு - 1930 0 86
கிரன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின் போது வரவேற்புத் தலைவராய் இருந்தவரும் பார்ப் பனர்களின் தாசானுதாசராய் இருந்தவருமான திரு. முத்துரங்க முதலியாரும்
மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு.கே. பாஷ்யம் ஐயங்காரும் மற்றும் நிர்வாக அங்கத்தினர்களான திருவாளர்கள் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி ஆர்.சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் நிர்வாக சபையில் ராஜீனாமா செய்து விட்டார்கள். காங்கிரஸின் நிலைமை எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில் கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி,
ஆள்கள்தான் அதில் இருக்க முடிந்தது. அதாவது சட்டசபை மந்திரி முதலிய ஸ்தானங்களுக்கு அபேட்சை உள்ளவர்கள் மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது. இப்போது அதற்கு இடமில்லாமல் ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும் படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப் பட்டஆள்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலேயே காங்கிரசை பார்ப்பனர்.
கள் வளர்த்து வந்த உத்தேசம் இன்னது என்பது நன்றாய் விளங்கும்.
நிற்க, இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் காங்கிரசிலிருந்து ராஜீனாமா கொடுத்து ஓடுகின்ற ஆள்கள் எல்லாம் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது லாகூர் தீர்மானமாகிய பூரண சுயேச்சை தீர்மானத்தை வெகு வீரத்துடன் ஆதரித்த ஆசாமிகளாவார்கள். ஆனால் அத்தீர்மானம் லாகூரில் நிறைவேற்றி அதற்கு ஆரம்பவிழா நடத்தப் போவதாக பிரஸ்தாபம் வெளிப்பட்டவுடன் ராஜினாமா கொடுத்து ஓடிவிட்டார்கள். இதற்கு அவர்கள். சொல்லும் காரணம் என்ன வென்றால் அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனங் களையும் கைப்பற்ற வேண்டும் என்பதேயாகும். எனவே உத்தியோகமும் தேர்தல் ஸ்தாபனங்களை கைப்பற்றுவதுமேதான் இந்த பார்ப்பனர் களுடை
யவும் அவர்களது அடிமைகளுடையவும் தேசீய லட்சியம் என்ப தையும் அதற்கு வழி இருந்தால் தான் பூரண சுயேச்சையில் கலந்திருப்பார் கள் என்பதையும் மற்றவர்கள் யாராவது அப்படிச் செய்தால் அவர்களை குலாம் என்றும் சர்க்கார் தாசர்கள் என்றும் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் எழுதுவார்கள் என்பதையும் ஒரு சமயம் ஜெயிலுக்கு போக வேண்டிய
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தாயிருந்தால் இராஜினாமா கொடுத்து விட்டு ஓட்டம் பிடிப்பார்கள் என்ப தையும் நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.03.1930
குடி அரசு - 1930 0 88
பட்ட எண்ணும் வாவ கசைவை திட்டம்
சமீபத்தில் சென்னை சட்ட சபையில் நிகழப்போகும் பட்ஜட் வரவு செலவு திட்ட நடவடிக்கையில் மூன்று காரியம் செய்ய பணம் ஒதுக்கி வைக்கவேண்டும் என்னும் விஷயத்தில் கவலை எடுத்து அனுகூலப் படுத்திக் கொடுக்க வேண்டுமாய் சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். அதாவது,
1.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புஸ்தகம் துணி சாப்பாடு ஆகியவைகள் சாக்கார் பணத்திலிருந்து செலவு செய்து கல்வி கற்றுக் கொடுப்பது.
2. மாகாணத்தில் சென்னையை விட்டு வெளியில் தமிழ்நாட்டில் ஒன்றும் ஆந்திர நாட்டில் ஒன்றுமாக விதவைகள் ஆச்சிரமம் வைத்து அவர்களுக்கு செளகரியப்பட்ட பெற்றார் உற்றார்கள் இடமிருந்து செலவுக்கு துகை பெற்றும் முடியாதவர்களானால் சர்க்காரிலிருந்தே செலவு செய்தும் சாப்பாடு துணி கொடுத்துக் கல்வியோ தொழிலோ கற்றுக் கொடுத்து ஜீவனத்திற்கு வழியேற்படுத்திக் கொடுப்பது.
3. இப்போது மது விலக்குப் பிரசாரம் செய்வதுபோலவே சர்க்கார் செலவில் மாகாணமெங்கும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வது. இம் மூன்று காரியங்களுக்கும் பணம் ஒதுக்கிவைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
ஆகவே சட்டசபை அங்கத்தினர்களும் மந்திரிகளுமான கனவான் கள் இவ்விஷயங்களை கவனிப்பார்களா.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.03.1930.
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஷ் உகம் லைசுமிக்கும் ந்த
சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்: அடீ என் அறுமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும் மேல் உலகத்திலும் உள்ளவர்களுக் கெல்லாம் ஐசுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?
லட்சுமியான ஸ்ரீரங்க நாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம்
நீர் நன்றாய் நெய்யும் தைரும் சாப்பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம் கூட கை வைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மை சாப்பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது?
விஷ்ணு- ஐய்யய்யோ அதனாலா இப்படி செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படி செய்வதும் ஒரு லட்சுமிகடாக்ஷம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்கு கோபமாயிருந்
தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.
லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளா
தீர்கள். இன்னம் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங் கள். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை.
விஷ்ணு: பின்னையேன் லாட்டரி சீட்டு போடச் செய்தாய்?
லட்குமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர் களுக்கு செல்வத்தை கொடுப்பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல் வத்தை சேர்ப்பதற்கு அப்படிச் செய்யச் சொன்னேன்.
குடி அரசு - 1930 0 90
விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்க நாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?
லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசி யென்று பெயரும் செய்து கண்ட கண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார். களே, அதிலில்லாத அவமானம்தானா உமக்கு லாட்டரி சீட்டில் வந்து விட்டது? பக்தர்களின் பெண்களை தாங்கள் கைப்பற்றுவதும் தங்கள் தாசி களை பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்துவமாகும்.
விஷ்ணு:- அதெல்லாம் தான் இப்போது நமது உண்மை பக்தர் களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும் குடிஅரசு மூலமும் நிருத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னம் கொஞ்ச நாளைக்கு இருக்கும்
அப்புரம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.
லட்சுமி: அப்படியானால் அது போலவே இந்த காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்கு சோரு போடும் காரியமும்) அவர்களாலேயே
சீக்கிரம் நிறுத்தப்பட்டு விடும் கவலைப்படாதீர்கள், இன்னம் கொஞ்ச நாளைக்குப் பொருத்துக் கொண்டிருந்தால் போதும்.
குடி அரசு - உரையாடல் - 09.03.1930
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
காந்தியப் பேர்
இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கும் படியானதும் ஏதோ ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணப் போகின்றது என்று பாமர மக்களுக்குள் பிரமாதமாகப் பிரசாரம் செய்யப் படுவதற்கு உபயோகித்துக் கொண்டிருப்பதும், திரு. “காந்தியின் கடைசிப் போர்” என்று சொல்லப்படும் சத்தியாக்கிரக சட்ட மறுப்பு கிளர்ச்சியேயாகும். இந்த சத்தியாக்கிரக சட்ட மறுப்பு என்பதை உப்புக் காய்ச்சுவதன் மூலமும் உப்பளத்
தில் இருந்து உப்பை அள்ளிக் கொண்டு போவதன் மூலமும் செய்து பார்ப் பதாக சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது..
இம்மாதிரி திரு. காந்தியவர்கள் செய்வது இந்தியாவில் இது இரண்டாவது தடவையாகும். அதாவது, இதுபோலவே 1920, 21 - ம் வருஷத்
தில் ஒரு தடவை பஞ்சாப் அநீதியைச் சொல்லிக் கொண்டு மது பானத்தின் பேரால் ஒரு கோடி ரூபாய் கை முதலாக வைத்து கள்ளுக்கடை மறியல்
மூலமாய் ஒரு சட்ட மருப்பும் சத்தியாக்கிரகமும் தொடங்கப்பட்டு சுமார் நாலு மாத காலம் வெகு மும்முரமாய் நடந்தது. அதனால் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் வரை சிறைசென்று சிறைவாசமும் செய்தார்கள். அப்படி இருக்கை.
யில் திடீரென்று அந்தச் சட்ட மருப்பு நிருத்தப்பட்டது. திரு. காந்தியும் அது சமயம் ஒரு பார்ப்பனரின் சூட்சியால் சிறையிலடைபட நேர்ந்தது. பிறகு படித்த கூட்டத்தாரால் அவ்வியக்கத்தையும் அவ்வுணர்ச்சிகளையும் அடி யோடு நசுக்கப்பட்டு விட்டது. இதை யாவரும் அறிவார்கள். அது முதல் கொண்டு திரு. காந்தியார் விடுதலையாகி வெளியில் வந்து இந்த 5, 6 வருஷ காலமாய் அவருக்கு இன்னதுதான் செய்வது என்று தோன்றாமல் கதரின் பெயரைச் சொல்லி ஏராளமாக பணம் வசூலித்து அந்த பணத்தினால் தன்னு டன் கூட இருக்கும் சிஷ்யர்களையும் செல்வாக்குகளையும் கொண்டு அரசியல் புரட்டர்களின் இஷ்டப்படி யெல்லாம் அரசியல் இயக்கத்தை அவர் களுக்கு இணங்கச் செய்து கொடுத்துக் கொண்டு அரசியலில் தனக்கென ஒரு கொள்கையும் இல்லாமல் சமயத்திற்குத் தகுந்தபடியெல்லாம் பேசியும் நடந்தும் கொண்டு வந்தார். இதனாலேயே மனப்பூர்வமாய் அவரிடம் பக்திகொண்டு சுயநலமில்லாமல் உழைத்து வந்தவர்கள் பலர் அவரை விட்டு. நீங்கினார்கள். இவைகளைப் பற்றி விவர விவரமாக நாம் அவ்வப்போது
குடி அரசு - 1930 0 92
தெரிவித்து வந்திருக்கின்றோமாதலால் இப்போது அவைகளை விவரிக்க வில்லை.
நமது நிலை
நிற்க, நம்மைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் திரு. காந்தியிடம் நமக்கு இருந்த பக்தியும் கண்மூடித்தனமாய் குடும்ப சகிதமாய் அவரைப் பின் பற்றி வந்த தன்மையும் பிரருக்கு விளக்கிக்காட்டித்தான் தெரியச் செய்ய வேண்டியிருக்குமென்று நாம் நினைக்கவில்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 1922 @ சத்தியாக்கிரகம்
மும்முரமாய் நடக்கும்போது பம்பாயில் சர் சங்கரன் நாயர் தலைமையில் கூட்டப்பட்ட வட்ட மேஜை (ரவுண்டேபிள்! மகாநாட்டின்போது திரு காந்திய
வர்கள் பேசிய பேச்சிலிருந்தே நமது விஷயத்தை அறிந்து கொள்ளலாம்.
அதாவது “சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதென்றால் அது என்னு டைய கையில் இல்லை, ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக்
கேட்டுச் செய்யவேண்டிய காரியமாகும்” என்பதாக சொல்லி இருக்கிறார்.
மற்றும் அந்த சத்தியாக்கிரகத்திலும் சட்டமறுப்பிலும் நமக்கு இருந்த நம்பிக்கைகளைப் பற்றியும் அதில் நமக்கிருந்த துணிவுகளைப் பற்றியும் நாம் வாசகர்களுக்கு விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை என்றே கருது கின்றோம். அதையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சர்க்காரின் அடக்கு முரைக்கு நாம் ஆளாக வேண்டியிருந்த அய்ந்து முக்கிய
சந்தர்ப்பங்களிலும் வீடு சோதனை போடப்பட்ட பல சமயங்களிலும் மற்றும்
10 ஹும் 20 ஹும் தண்டிக்கக்கூடிய வழக்குகளிலும் நாம் எதிர் வழக்காட அடியோடு மறுத்து விட்டதன் மூலமும் பல தடவை சிறை சென்றதன் மூலமும் “தண்டிப்பதால் இவன் பயப்பட மாட்டான்” என்று கருதி இரண்: டொரு தடவை சர்க்காரரே நம்மீது கொண்டு வந்த வழக்குகளை திருப்பி வாப்பீஸ் வாங்கிக் கொண்டதன் மூலமும் நன்றாய் உணரலாம். கடைசியாய் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாடு முழுமைக்கும் ஈரோட்டில் போடப்பட்ட
144 வது பிரிவு உத்திரவு மாத்திரம் தான் 50, 60 பேர்கள் கைதியான பின் ஆயிரக்கணக்கான மக்கள் சட்டத்தை மீறினதால் செல்லுபடி அற்றதாகிற்று. அதாவது அந்த உத்திரவு மீறினவர்களை சர்க்கார் அரஸ்ட்செய்யாமல் விட்டு விட்டார்கள். ஆகவே இவ்வளவு தூரம் நாம் கண்மூடித்தனமாய் திரு. காந்
தியை பின்பற்றியதும் எதற்கும் தயாராய் இருந்து கஷ்ட நஷ்டங்களை அனுப விக்கத் துணிந்ததும் எதற்காக என்பதை இந்த சமயம் வாசகர்கள் சற்று கவனித்துப் பார்க்க வேண்டும். இதன்மூலம் நாம் ஏதாவது உத்தியோகத் தையோ பெருமையையோ வரும்படியையோ வயிற்றுப் பிழைப்பையோ அல்லது ஏதாவது ஒரு விதமாய் இதன் பேரால் வாழலாம் என்றோ உத்தேசித்து இதில் இறங்கினோமா? அல்லது தேசத்தின் நன்மையையும்
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கஷ்டப்பட்டும் மக்களின் பரிதாபத்தை ஒழிப்பதையும் எதிர்பார்த்து இறங்கினோமா? என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சாதாரணமாக நாம் இத்தொண்டில் ஈடுபடும்போது ஈரோட்டில் உள்ள பிரபல வியாபாரிகளில் ஒருவனாகவும், முனிசிபல் சேர்மனாகவும், தாலூக்கா ஜில்லா போர்டுகளில் குறிப்பான அங்கத்தினராகவும், தேவஸ்தானக் கமிட்டி ப்ரசிடெண்டாகவும் மற்றும் ஜில்லாவில் உள்ள பொது ஸ்தாபனங்களில்
எல்லாம் அனேகமாய் ஒவ்வொன்றிலும் தலைவனாகவும் அல்லது காரிய தரிசியாகவும் அல்லது நிர்வாக மெம்பராகவும் இருந்து வந்தோம். இந்நிலை
யில் இருக்கும்போது தான் திரு. சி.ராஜகோபாலாச்சாரியாருடையவும் திரு. வரதராஜலுவுடையவும் நட்பினால் அவ்வேலைகளை திடீரென்று ராஜிநாமா கொடுத்து விட்டு சென்னைக்குச் சென்றோம். இது இப்போதைய நமது நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நன்றாய் தெரிந்த விஷயமாகும். ஆகவே
நாம் இந்த சேவையில் இறங்கினது ஜீவனத்தையோ உத்தியோகத்தையோ பெருமையையோ வயிற்றுப்பிழைப்பையோ வாழ்க்கையையோ உத்தேசித்து இறங்கினோமா அல்லது உண்மையில் இறங்கினோமா? என்பதை யோசித்து முடிவு செய்து கொள்ள வாசகர்களுக்கே விட்டு விடுகின்றோம்.
இதை ஏன் சொல்லுகிறோம்
நிற்க, நாம் ஏன் இதை இப்போது சொல்ல வந்தோமென்றால் “தேசத்தில் இது சமயம் நடக்கும் இவ்வளவு தீவிரக் கிளர்ச்சியில் மகாத்மா முதல் அனேக தேச பக்தர்கள் ஜெயிலுக்கு போய்க் கொண்டிருக்கையில் நீ இதில் சேராமல் இருப்பது “சரியா” என்று நமக்கே பல நண்பர்கள் எழுதி இருப்பதாலும் மற்றும் சர்க்காரினுடையவோ அல்லது மந்திரிகளினு டையவோ ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களினுடையவோ தயவில் நாம். ஏதோ சுயநலம் கருதி சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு வகுப்பு பூசல்களைக் கிளப்பிவிட்டு தேச நன்மைக்கு இடையூறு செய்வதாக சிலர் விஷமப் பிரசாரம் செய்வதாக தெரிய வருவதாலும் அவைக
ளுக்கு சமாதானம் சொல்ல இவற்றை முதலில் எழுதிவிட வேண்டியதா கின்றது. ஏனெனில் பொது ஜனங்கள் என்பவர்கள் பெரிதும் நமது நாட்டில் பாமர மக்களாகவே இருக்கின்றார்கள். இன்னமும் நல்லது கெட்டது இன்னது என்று அறிய முடியாத நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் (ஏனெனில் 100 - க்கு 10 பேருக்குத்தான் கையெழுத்துப் போடத் தெரியும்) ஆதலால் இவைகள் சில சமயங்களில் நமது இஷ்டத்திற்கு விரோதமாகவே சொல்ல வேண்டியதாகிவிடுகின்றது. அன்றியும் நாம் கீழே சொல்லப் போகும் விஷயங்களுக்கும் இவைகளை முதலில் சொல்லிவிட்டால் தான் வாசகர்கள். ஏமாறாமல் உண்மையை உணரக்கூடும் என்றும் கருதியே சொன்னோம்.
குடி அரசு - 1930 N 94
போரில் நம்பிக்கை இல்லை
நிற்க, முதலாவதாக காந்திப்போர் என்பதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை. இல்லை. அதாவது முதலாவது இதன் கொள்கைகளிடமும் நடத்துகின்ற தலைவர்களின் சொந்த கொள்கைகளிடமும் சில தலைவர்களின் நல்ல எண்ணத்தினிடமும் நமக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் இவர்கள். தேசத்தை விட தேச மக்களை விடத் தங்களின் நிலையையும் தங்களின் அந்தஸ்தையும் கவுரவத்தையும் பிரதானமாய்க் கருதி இருப்பவர்களும் சிலர். தங்கள் மதத்தின் ஆதிக்கத்தையும் வருணாச்சிரம தரும ஆதிக்கத்தையும் தங்கள் வகுப்பின் ஆதிக்கத்தையும் சிலர் பிரதானமாய்க் கருதி இருப்பவர். களுமாய் இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம். அன்றியும் இந்தியாவின் இன்றைய நிலைக்கு பூரண சுயேச்சை வேண்டு மானால் - விடுதலை வேண்டுமானால் சுயராஜ்யம் என்பது வேண்டுமானால் வெள்ளைக்
காரர் சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக்கமும் அதன்குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும். பெண்கள் கட்டுப்பாடு ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும். பார்ப்பனர் ஆதிக்கம் அடியோடு ஒழிய வேண்டும். முதலாளித் தன்மை ஒழிய வேண்டும். இவ்வளவும் நடந்த பிறகுதான் வெள்ளைக்கார கொடுங் கோன்மை தாணாய் ஒழிந்து விடும். அல்லது! நம்மால் ஒழிக்கப்பட வேண்டும். ஒழிக்கப்படவும் முடியும் என்பது நமது முடிவு.
அப்படிக்கில்லாமல் இப்போது வெள்ளைக்கார ஆட்சியைப் பற்றி யோ இந்தியாவின் தரித்திரத்தைப் பற்றியோ பேசுவதென்பது வெரும்
(ஹம்பக்) மோசடி அல்லது மடமையான காரியமாகும் என்பதுதான் நமது
முடிவு. ஏனெனில்,
இந்தியா சரித்திரம்
இந்தியாவானது நமது புத்திக்கும் மனதிற்கும் எட்டக்கூடிய காலத்தி லிருந்து ஒரு நாளாவது யோக்கியமான அரசாட்சியில் இருந்ததாக இதுவரை
எந்த சரித்திரத்திலிருந்தும் அறியக் கூடவே இல்லை. பாரத ராமாயண காலம் என்று சொல்லப்பட்ட கால ஆட்சியும் சேர, சோழ, பாண்டிய காலம் என்று சொல்லப்பட்ட கால ஆட்சியும் மகமதியர், நாயுடு, மராட்டியர் ஆகியவர்கள் காலம் என்று சொல்லப்பட்ட கால ஆட்சியும் ஆகிய இவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் யோக்கியமான ஆட்சி நடந்ததென்று பெரும் பான்மை யோராலாவது ஒப்புக் கொள்ளக் கூடிய சரித்திரமோ உண்மையோ இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
எந்தக் காலத்திலும் பாமர மக்களை ஏய்க்க ஒவ்வொரு கூட்டத்தார் அவ்வப்போது தோன்றி தங்களது முரட்டு பலத்தையும், தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கொண்டு ஒவ்வொரு வழியில் கிளர்ச்சி செய்து
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஆதிக்கமும் சுயநலமும் பெற்றிருப்பதாகவே சித்திரங்களில் மிகுதியும் காணப்படுகிறது. எல்லா தேசங்களை விட, “கலை ஞானத்தில்” சிறந்ததாகச் சொல்லப்படும் இந்தியாவிற்கு அதன் பழய கலைகளையும், ஆட்சிகளையும் பார்த்தால் இக்காலத்தில் காட்டுமிராண்டிகள் என்பவர்களிடத்திலும் காண முடியாததும் வெரும் கொள்ளைக் கூட்டத்தாரிடத்திலும் காணமுடியாதது மான செய்திகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
வலுத்தவன் இளைத்தவனை ஆளுவான்
எது எப்படி இருந்தாலும் “இளைத்ததை வலுத்தது அடக்கி ஆண்டு அனுபவித்து வரும்” என்னும் இயற்கைச் சட்டம் யாராலும் எந்தக் கிளர்ச்சி
யாலும் ஒரு காலமும் மாற்றிவிட முடியாதென்பதே நமது முடிவான அபிப்பிராயமாகும். ஆதலால் இளைத்தவன் தன்னை வலுத்தவனாக்கிக் கொள்ள முயற்சி செய்து கொண்டால் மாத்திரம் வெற்றி பெறலாமே யொழிய மற்றபடி வெரும் கிளர்ச்சியினால் வலுத்தவனை வென்று விட முடியவே
முடியாது.
நமது நாடு
நடு நிலையில் நின்று பேசுவோமேயானால் இன்றைய தினம் கல்வி, அறிவு, செல்வம், ஆயுள், தொழில், மனிதத் தன்மை, மானம், தைரியம், முன்னேற்றம், பொது நலம் முதலியவைகளில் மற்றெந்த நாட்டாரையும் விட
நமது நாடு மிகுதியும் வலுவிழந்திருக்கின்றது.
உதாரணமாக இந்தியாவில் 100க்கு 10 பேர் படித்திருக்கிறார்கள்.
மேல் நாட்டில் 100 க்கு 90 பேர் படித்திருக்கிறார்கள்.
இந்தியர்களின் அறிவு அவர்களது “தலைவிதியில்” அடங்கி
இருக்கின்றது.
மேல்நாட்டார் அறிவு அவர்களது விடா முயற்சியால் தூண்டப்பட்டு வருகின்றது.
இந்தியர்களின் ஆயுள் சராசரி 25 வயது.
மேல் நாட்டாரின் ஆயுள் சராசரி 50 வயது.
இந்தியர் வருவாய் ஆள்1 க்கு சராசரி தினம் 0 - 2- 8 பை.
மேல் நாட்டார் வருவாய் ஆள் ஒன்றுக்கு சராசரி தினம் 2 - 8-0 அணா.
குடி அரசு - 1930 0 96
இந்தியாவில் புதுப்பிக்கப்படும் தேசீயத் தொழிலின் வரும்படி ஒரு மணிக்கு 0- 0-1தம்படி (ராட்டினத்தில் 1மணிக்கு ஒரு காக! கிடைக்கின்றது.
மேல் நாட்டில் புதுப்பிக்கப்படும் தொழில்களில் ஒரு மணிக்கு ஒரு ரூபாய் கிடைக்கின்றது.
இந்தியாவில் 100க்கு 93 பேர்கள் இழிமக்கள்“சூத்திரர்'” சண்டாளர் (ீண்டார்! மிலேச்சர் (துலுக்கர்) நீச்சர் (கிறிஸ்தவர்! முதலானவர்களாக இருக் கின்றார்கள்.
மேல் நாட்டில் எல்லோரும் சரிநிகர் சமானமான மனிதர்களாக இருக் கின்றார்கள்.
இந்தியாவில் தைரியம் ஒரு துப்பாக்கி சத்தம் கேட்டால் குழந்தை களுக்கு காய்ச்சல் வந்து விடுகின்றது.
மேல் நாட்டில் குழந்தைகள் ஆகாயத்திலிருந்து வெடிகுண்டு எறிய ஆசைப்படுகின்றது.
இந்தியாவின் முன்னேற்றம் “ராம ராஜ்ஜியத்திற்கும் தொல்காப்பிய காலத்திற்கும்” ஆசைப்படுகிறது.
மேல் நாட்டின் முன்னேற்றம் அரசாட்சியையே வேண்டாமென் கின்றது.
இந்தியாவின் ஆராய்ச்சி சாக்கடை நீரைக் குடித்து தலையிலும்
தெளித்துக் கொண்டால் வியாதி சவுக்கியமாகி மோட்ச லோகத்திற்குப் போக லாமென்கின்றது.
மேல் நாட்டு ஆராய்ச்சி இமயமலை உச்சிக்கும் சந்திர மண்டலத்துக்
கும் போக முயர்ச்சிக்கின்றது. 10,000 மைல் 15,000 மையில் தூரம் தந்தியில்
உருவம் போகின்றது.
இந்தியர்களின் தர்மம் வருஷம் பல கோடிக்கணக்கான பொருளை: கோவில் கட்டவும் கும்பாபிஷேகம் செய்யவும் சாமிக்குப் பூசை செய்யவும் உற்சவம் செய்யவும் வாகனம் நகை செய்யவும் சோம்பேரிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் பிழைப்பை ஏற்படுத்தவும் செலவு செய்யப்படு கின்றது.
மேல் நாட்டார் தர்மம் படிப்புக்கும் தொழிலுக்கும் கொடிய வியாதியின் சிகிச்சைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி செய்து அற்புதம் கண்டு
பிடிப்பதற்கும் “இழி மக்களை” சரிசமான மனிதனாவதற்கு எல்லாம் மக்களும்
சம இன்பமடைவதற்கும் செலவு செய்யப்படுகின்றது..
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இன்னும் இப்படியே நூத்துக்கணக்காக சொல்லிக் கொண்டே போகலாம்.
இவைகளுக்கு யார் பொருப்பாளி? வெள்ளைக்கார அரசாங்கமா? அல்லது நமது தேசீயமா? என்று தான் கேட்கின்றோம்.
மேலும் இவைகளில் அனேக விஷயங்கள் இந்தியாவில் இன்று மாத்திரமல்லாமல் நம் அறிவுக்கு எட்டாத சரித்திர காலம் முதலாகவே இப்படியே தானே இருந்து வருகின்றது. அன்றியும் இந்த நிலைமை தானே இந்தியாவுக்கு அடிக்கடி மனிதத் தன்மைக்கு விரோதமான கொடுங் கோன்மை ஆட்சியையும் அன்னிய ஆட்சியையும் உலகிலுள்ள மற்று யாவருக்கும் இளைத்த தன்மையையும் அளித்துக் கொண்டே வந்தது, வருகிறது.
இதற்கு என்ன பரிகாரம்?
இந்த நிலையை மாற்ற இதுவரையில் யார் என்ன முயர்ச்சி செய்தார்.
கள்? இத்துறைகளில் யார் என்ன முன்னேற்றம் அடைந்தார்கள்? அல்லது அடைந்து வருகிறார்கள்? இதுதான் போகட்டும் என்றாலோ இன்றைய தினம் நடைபெரும் “காந்தி போரை” யாவது எடுத்துக் கொண்டால் அது மேற் சொன்னவைகளில் ஏதாவது ஒரு காரியத்தை மாற்ற உதவுமா என்று பந்தயம் கட்டி கேழ்க்கின்றோம். இந்தியாவுக்கு இன்றையத்தினம் உண்மையாய்ச் செய்ய வேண்டிய தொண்டு உப்புக் காச்சுவதா? உப்பு களங்களில் உப்பை
வாரிக் கொண்டு வருவதா? அதற்காக மக்கள் ஜெயிலுக்கு போவதா? என்பதை வாசகர்களே நீங்கள் நடு நிலையில் இருந்து நன்றாய் கூர்ந்து
சிந்தித்துப் பாருங்கள்.
வைசிராய் சம்பளம்
இந்தியாவின் செல்வம் ஏழைகளின் வரிப்பணம் ஆகியவை “வெள்ளைக்காரர்கள் கொள்ளைஅடிப்பதற்கு”த் தகுந்த அளவுப்படி ஏன்? அதற்கு மேலாகவும் கூட இந்திய தேசியவாதிகள் என்பவர்கள் கொள்ளை அடிப்பதில்லையா? வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கும் இந்தியர்களே ஆதாரமாய் இருந்து அவர்களுக்கு உளவு சொல்லிக் கொடுத்து அவர் களிடமிருந்து பங்கு வாங்குவதில்லையா? என்பதை யோசித்து பாருங் கள். இதற்கு வெள்ளைக்காரன் என்ன செய்வான்.“எனக்கு வேண்டாம்” என்று சொல்லுவானா. திரு. காந்திக்கு வைசிராய் சம்பளமும் கவர்னர் சம்பளமும்
பார்த்து சகிக்க முடியவில்லையாம். சத்தியாக்கிரகத்திற்கு இதை ஒரு காரண:
மாய் எழுதி இருக்கிறார். இந்திய தேசீய வாதிகளும் காங்கிரஸ் தலைவர் களுமான திருவாளர்கள் ஸின்ஹா சம்பளமும் சீனிவாச சாஸ்திரி சம்பளமும் அபிபுல்லா சம்பளமும் சிவசாமி அய்யர் சம்பளமும் சர்.சி. பி. அய்யர்
குடி அரசு - 1930 0 98
சம்பளமும், கிருஷ்ணன் நாயர் சம்பளமும் வெகு தர்மமானதும் நாணைய மானதுமான சம்பளமா என்று கேழ்க்கிறோம். இவர்களுக்கு இந்த சம்பளத்தை ஏற்படுத்தினவர்கள் இந்த திரு காந்தியும் அவர் கொஞ்சி விளையாடும் திரு. தேசீய காங்கிரசும் அல்லவா என்று கேழ்க்கின்றோம். 1920 ம் ஹுத்திய
சீர்திருத்தம் இந்த திரு “மகாத்மா” காந்தியால் ஒப்புக் கொள்ளப்பட்டதும் வரவேற்கப்பட்டதும்தானா? அல்லவா? என்று கேழ்க் கின்றோம். நாம் நாலு
திராம் சாராயம் குடித்துக் கொண்டு வெள்ளைக்காரனை ஒரு திராம் சாராயம் குடிக்க வேண்டாம் என்றால் இதில் நாணையமோ யோக்கி யமோ எப்படி இருக்க முடியும்? கஞ்சி வெள்ளம் சாப்பிட்டுக் கொண்டு மாதம் 2ரூ செலவில் வாழும் மக்கள் தேசத்து சர். சங்கர நாயருக்கு 6333 - 5 - 4 காசு சம்பளம் எதற்கு? பஞ்சாங்கம் சொல்லி பிச்சை எடுத்து வாழும் சர்மாவுக்கும் சாஸ்திரிக்
கும் மாதம் 6333 - 5 - 4 காசு சம்பளம் எதற்கு? இதை ஏன் “மகாத்மா” வின் தேசீயமும் மனசாட்சியும் ஏழைகளிடமிருக்கும் அன்பும் தரித்திர நாராயண:
னும் ஆக்ஷேபிக்கவில்லை என்றுதான் கேட்கின்றோம். தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 0 - 2- 8 பை வீதம் சம்பாதனை சம்பாதிக்கும் (இந்திய! தேசத்தானுக்கு மாதம் 1க்கு 6333- 5 - 4 பை சம்பளம் வேண்டியிருந்தால் அதை தேசிய காங்கிரசும் அனுமதித்து அந்த காங்கிரசின் தலைவரே அந்தப்படி வாங்கிக் கொண்டும் வந்தால் நாள் ஒன்றுக்கு ஆள்1 க்கு 2- 8-0 அணா வரும்படியுள்ள (இங்கிலாந்து) தேசத்தானுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? மாதம் ஒன்றுக்கு 95000 தொண்ணூற்றய் யாயிரம் ரூ. அல்லவா நாம் கொடுக்க வேண்டும். இப்போது நாம் வைசிராய்க்கு 21, 000ரூ. தானே கொடுக்கின்றோம். ஆகவே, இந்த ஒருவர் சம்பளத்திலேயே ஏழை இந்தியாவுக்கு மீ” 74,000 ரூ.மீதிதானே? இதுபோலவே சர் சி. பி.ராமசாமி அய்யர் சம்பளம் வாங்கிய 5333 - 5 - 4 வீதம் கணக்கு பார்த்தால் சென்னை கவர்னருக்கு மீ” 80,000 என்பது ஆயிர ரூ. கொடுக்க வேண்டாமா? இப்போது அவருக்கு 10 ஆயிரம் தானே கொடுக்கின்றோம். இதில் ஏழை இந்தியாவுக்கு மீ” 70 ஆயிரம் மீதி இல்லையா? இது போலவே நாம் உப்பு வாங்குவதில் சர்க்காருக்கு கிடைக்கும் வரிப்பணத்தையும் திருப்பவும் சம்பள: ரூபமாக நமது தாஸ், நேரு, போஸ், பட்டேல், சாப்ரூ. ஸின்ஹா, அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, சர்மா, சாஸ்திரி, சாயபு, நாயர், முதலியார், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கவுண்டர், (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி3ஆகிய தேசிய வாதிகளும் காங்கிரஸ் தலைவர்களும் காந்தி சிஷ்யர்களும் மீ” ஒன்றுக்கு 2000, 3000, 5000, 6000, 7000 வீதம் பங்கு போட்டுக் கொள்கிறார்களே ஒழிய யாராவது வேண்டாமென்று சொல்லி வாப்சு செய்து சம்பளத்தை குறைத்துக் கொண்டார்களா? குறைத்தார்களா? குறைக்கவாவது
திட்டம் வைத்திருக்கிறார்களா? இந்தப்படியே மற்ற இந்திய தேசாபிமானிகள். வாங்கும் சம்பளத்திற்கும் “கொள்ளைக்கார வெள்ளைக்காரர்கள்” வாங்கும் சம்பளத்திற்கும், யார் வாங்குகின்ற சம்பளம் அவர்களது தகுதிக்கும் தேவைக்கும் மேல் கொண்டது என்று கேழ்க்கின்றோம். ஆகவே இந்தியர்
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
களின் வரி உயர்வுக்கும் அவ்வரி கொள்ளை அடிக்கப்படுவதற்கும் இந்திய தேசியவாதிகளும் தேசீய காங்கிரசும் அவைகளை ஆதரித்த மகாத்மாக் களும் ஜவாப்தாரிகளா அல்லது வெள்ளைக்காரர்கள் ஜவாப்தாரிகளா? என்று இப்போது யோசித்துப் பாருங்கள்.
இதுவரை செய்தது என்ன?
ஆகவே இந்தப்படி போகும் கொள்ளையை நிருத்த இதுவரை: “மகாத்மா” என்ன செய்தார். இந்திய தேசியம் என்ன செய்தது என்று கேட்கின்றோம்,
இந்த வரியினால் கஷ்டப்படுகின்றவர்கள் குடியானவர்களேயாவார். கள்.அவர்களுக்கு கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் தீண்டாத வகுப்பார்களான “சண்டாளர் களாவார்கள். இந்த இரு வகுப்புக்கும் காந்தி கடைசிப் போரில் “மகாத்மா” என்ன வழி செய்தார் அல்லது செய்கின்றார் என்று கேழ்க் கின்றோம். குடியானவர்கள் வரி குறைய வேண்டுமானால் முதலில் வரி மறுப்பு செய்வதா அல்லது சம்பள மறுப்பு செய்வதா என்றுதான் கேட்கின் றோம். அது போலவே சண்டாளர்களை மனிதர்களாக்க வேண்டுமானால் முதலாவது கட்டுப்பாடுகளை உடைப்பதா அல்லது கட்டுப்பாடுகளான ராமாயணம் பாரதம் வருணாசிரமம் ஆகியவைகளை நிலை நிறுத்த பிரசாரம் செய்வதா என்று கேட்கின்றோம். இவைகளை யெல்லாம் விட்டு விட்டு உப்புக் காய்ச்சுவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடும். வேண்டுமானால் பாமர மக்களில் சிலர் ஏமாந்து ஜெயிலுக்குப் போகக் கூடும். இதனால் நமக்கு
லாபமும் இல்லை நஷ்டமுமில்லை. ஆனாலும் தேச முற்போக்கு வெகுதூரம் தடைப்பட்டு விடும் என்றே பயப்படுகின்றோம். அன்றியும் வெள்ளைக்கார
னுக்கும் தனது கொள்ளைக்குத் தக்க நியாயம் கிடைத்துவிடும் என்றும் கருதுகின்றோம். ஆகையால் காந்திப் போரால் நாட்டிற்கு நன்மை இல்லை என்றும் கெடுதியே அதிகம் ஏற்படும் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.
கல்லுச் சாமியும் அயோக்கிய மத ஆச்சாரிகளும்
இந்தியப் பாமரக் குடியானவர்களும் கொடுமைப்படுத்தப்பட்ட வாயில்லாப் பூச்சிகளான கூலிகளும் தீண்டப்படாதவர்களும் பாடுபட்டும் கஷ்டப்பட்டும் சம்பாதித்த பணத்தை நமது நாட்டு கல்லுச் சாமிகளும், அயோக்கிய மத ஆச்சாரிகளும், அக்கிரம மடாதிபதிகளும், சூழ்ச்சிக்காரப்
பார்ப்பனர்களும் சுயநலப் படித்தவர்களும் மூட பணக்காரர்களும் கொடிய முதலாளிகளும் மற்றொருபுரம் கொள்ளையடித்துக் கொண்டு நாட்டைக் கொடுமைப்படுத்திக் கொண்டு இருப்பதை விட உலகத்திற்கே முன்னணியில் இருந்து கொண்டு உலக முற்போக்கில் கவலை எடுத்து உழைக்கின்ற
முயற்சியும் தகுதியுமுடைய மக்களுக்குப் போவதில் உலகத்திற்கு என்ன
குடி அரசு - 1980 (1) 100
கஷ்டம் வந்து விடும் என்று கேட்கின்றோம். “தகுதியுடையவனே அடை வான்” என்கின்ற இயற்கை சட்டம் யார் தடுத்தாலும் செலாவணியாய்க் கொண்டு தான் இருக்கும்.
மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூச்சல் போடும் சூழ்ச்சிக் காரர்கள் மக்களை தெருவில் நடக்கவிட மாட்டேன் என்கின்றார்கள்.
கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் கசடர்களோ, அக்கடவு ளைக் காண மனிதனை அனுமதிக்க மாட்டேன் என்கின்றார்கள்.
மரைகளையும் கலைகளையும் காப்பாற்ற வேண்டும் என்னும் சுயநல தூர்த்தர்களோ அம்மரைகளையும் கலைகளையும் மக்கள் கற்க - அதன் உண்மையை அறிய .இடம் கொடுக்க மாட்டேன் என்கின்றார்கள்.
இந்த மாதிரி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் உள்ள ஒரு அரசாங் கத்தை அல்லது வெள்ளைக்காரர்களை ஒழித்துவிடுவதால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது நமக்கு விளங்கவில்லை.
வெள்ளைக்காரர்களையோ அல்லது அரசாங்கத்தையோ ஒழித்து விட்டு இந்த பாமர மக்களையும் ஏழைக் கூலிகளையும் தீண்டக் கூடாத “சண்டாளர்களையும்” பிரகு யாரிடம் ஒப்புவிப்பது என்பதும் நமக்கு விளங்க.
வில்லை.
ஒத்துழையாமையும் பார்ப்பனரும்
ஒத்துழையாமையின் போது சர்க்கார் மீது மக்களுக்கு எவ்வளவோ வெறுப்பை உண்டாக்கினோம். அதனால் சர்க்காரும் சற்று கலங்கினார்கள். ஆனால் அது சமயமும் ஒரு பார்ப்பான்தான் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் வைக்க யோசனை கூறி சர்க்காருக்கு உதவி செய்தார். அதன்பிறகு அந்த பலனை யார் அனுபவித்தார்களென்றால் அந்தப் பார்ப்பனர்களே யாவார்கள். உதாரணமாக ஒத்துழையாமை ஒடுங்கின உடனே திரு. இராஜ கோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கவும் பார்ப் பன ஆதிக்கத்திற்கு ஏற்ற மந்திரிகளை நியமிக்கவும் கோவைக்கும் சென் னைக்கும் ஓடி வந்து விட்டார். மற்றும் ஒத்துழையாமையை வைத, ஒழித்த பார்ப்பனர்கள் எல்லாம் உடனே காங்கிரசுக்காரர்களாகவும், தேசீயவாதி களாகவும் ஆகி பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிக்க ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப் போட்டார்கள். அது போலவே இப்போதும் தமிழ்நாட்டில் இந்த காந்திபோரின் பேரால் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பேரையாவது நாம் ஜெயிலுக்கனுப்பிவைத்தோமேயானால் அடுத்து வரும் ஆகஸ்டு செப்டம்பர்.
மாதம் சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்களுக்கு அல்லது அவர்கள் அடிமை களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் கட்சியை அழித்து
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற மந்திரிகளை நியமிக்க இதே திரு. இராஜ கோபாலாச்சாரியார் மறுபடியும் சென்னைக்கு ஓடிவந்து விடுவாரென்பதில் யாருக்கு என்ன சந்தேகம். அதற்காகவே திருவாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கிட்டரமணய்யங்கார், சீனிவாசய்யங்கார், முத்துரங்க முதலியார், வரதராஜுலு நாயுடு, ஆதிநாராயண செட்டியார் முதலாகியவர்கள் காங்கிரசில் ராஜினாமா கொடுத்து விட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் வசம் காங்கிரசை
யும் ஒப்புவைத்து விட்டு தயாராய் நாக்கில் ஜலம் சொட்ட காத்துக் கொண்: டிருக்கிறார்கள்.
இந்த பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் சட்ட சபைக்குப் போவதுதான் காந்திப் போரின் சட்டமறுப்பும் சத்தியாக்கிரகமும் என்பதானது
தேர்தல் சூழ்ச்சியாய் முடியுமே அல்லாமல் வேறு ஏதாவது காரியம் தமிழ் நாட்டில் நடக்குமா என்று கேட்கிறோம்.மேலும் சர்க்கார் மது விலக்குப் பிரசா ரத்தைப் பரிகாசம் செய்து கெட்ட எண்ணம் கற்பிக்கும் இதே திரு.ராஜ கோபா
லாச்சாரியாரின் சென்ற தேர்தலுக்கு முந்திய மதுவிலக்குப் பிரசாரத்தின் யோக்கியதை என்ன ஆயிற்று?
வருணாச்சிரமக்காரறான ஒரு திரு வெங்கிட்டரமண அய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கவும் பார்ப்பனரல்லாத கட்சி மந்திரிகளை அழிக்கவும் தானே உபயோகப்பட்டது. இந்த திரு. சி.ராஜகோபாலாச்சாரியார் தானே ஒத்துழையாமையை அழிக்க சூழ்ச்சி செய்து காங்கிரசையும் அய்யங்கார். வசம் ஒப்புவித்து அவருக்குத் தலைவர் பட்டம் சூட்டினார்.
நமது சபதம்
டில்லி காங்கிரசில் சூட்சி செய்து காக்கினாடா காங்கிரசில் வெளிப் படையாக நமது மனம் பதறப்பதர திரு. ராஜகோபாலாச்சாரியார் தானே ஒத்துழைமைக்கு கருமாதி செய்தார்? அப்போதே நாம் காங்கிரசை எதிர்த்துப் பிரசாரம் செய்வதாய் சபதம் செய்துவிட்டு வந்தோம். அந்தப்படியே செய்தோம். பிரகு பெல்காம் காங்கிரசில் திரு. காந்தியைப் புரோகிதராய் வைத்து திதியும் செய்துவிட்டார். அப்போதும் திரு. காந்தியிடம் நாம் இந்த கெதி ஆகுமென்று சபதம் கூறிவிட்டுத்தான் வந்தோம். அடுத்தாப் போல் காஞ்சீபுரத்திலும் பைத்தியக்கார திரு. கல்யாணசுந்திர முதலியாரைக் கொண்டு.
எம் போன்றவர்களைத் தைரியமாய் வெளியாக்கினார். அப்போதும் பொதுஜனங்களிடம் இந்த விஷயங்களைச் சொல்லிச் சபதம் கூறிவிட்டே வெளியேறினோம்.
கடைசியாக பெங்களூர் சென்று திரு. காந்தியவர்களிடம் தனித்து உண்மைகளைச் சொல்லி விட்டு வந்துதான் நமது தொண்டை தீவிரமாய்
குடி அரசு - 1980 (1) 102
ஆரம்பித்தோம். ஆகவே அன்றுமுதல் இன்றுவரை நாம் ஒரே கொள்கை யுடன் ஒரே தொழிலைத்தான் செய்து வருகின்றோம். இதனால் நம் நாட்டுக்கு இதுவரை என்ன கெடுதல் ஏற்பட்டுவிட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. நமது தொண்டுக்கு வேறு விதமாக சமாதானம் சொல்ல முடியாதவர்கள், கடவுளும் மதமும் கலைகளும் போய்விட்டது என்றுதான் சொல்கின்றார். களே அல்லாமல் வேறு ஒன்றும் சொல்லவில்லை.ஆகவே கடவுளுக்காகவும் மதத்திற்காகவும் கவலைப்படுவது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகில் வேறு ஒன்றும் இருக்கக்கூடுமென்று நம்மால் கருதமுடியவில்லை. இதைப் பற்றி அநேக தடவை எழுதி இருக்கின்றோம். ஆதலால் இப்போது மறுபடியும் விரிக்கவில்லை.
நம்மைப் பொருத்தவரை நமது மக்களுக்குச் சுயமரியாதை ஏற்பட்டு
மனிதத் தன்மையுடன் எல்லோரும் சரிசமமாக வாழவேண்டு மென்பதுதான் நமது ஆசையே ஒழிய வெள்ளைக்காரன் போவதோ இருப்பதோ நமது கவலையல்ல. உலகத்தில் நமது பாழும் இந்தியாவைத் தவிர மற்ற எந்த
நாட்டிலும் இது சமயம் சமதர்மக் கொள்கைகளே தலைவிரித்து ஆடுகின்றன. இந்தியா மாத்திரம் பார்ப்பன ஆதிக்கத்திலும் முதலாளிகள் ஆதிக்கத்திலும் நசுக்குண்டு அன்னிய ஆட்சிக்கு உளவாளியாகவும் கூட்டாளியாகவும் இருந்து வருகின்றது. இந்த நிலையை மாற்ற திரு. காந்தியின் உப்புக் காச்சும் சத்தியாக்கிரகமோ சட்ட மறுப்போ ஒருக்காலும் பயன்படாது என்று நாம் கருதுவதால் நாம் அதில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றோம். மற்றபடி உண்மையான விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் என்று எந்த வேலை ஆரம்பித்தாலும் நமது உயிரையும் கொடுக்க நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.03.1930
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தேவதாசி ஒழிப்புச் சட்டம்
கோயில்களில் பெண்களை பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திரு. முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தை சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.
இதற்காக சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களையே பொது மகளீர்களாக்கி நாட்டில் விவசாரித்தனத்திற்கு செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்து வரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றி
யும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையு டன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது. ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ, கோரின அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்
கம் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் தேசிய வழக்கத்தின் பேராலும், இருந்து வர ஒரு க்ஷண நேரமும் விட்டுக்கொண்டு. வந்திருக்காதென்றே சொல்லுவோம்.
ஆனால் நமது இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி குடி புகவும்நிலை பெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும் உதவி யாகவும் இருந்து வந்ததால் அப்பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர்களும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால் அந்தப் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்! தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டு விட்டார்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு விரோத
மாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையிலாவது இதுவரை: ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். ஆனால் இப்போது கொஞ்ச காலமாய் அப்பார்ப்பனர்களின்
குடி அரசு - 1980 (1) 104
தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக் காரர்களை மிரட்டக்கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக் கூடிய சமயம் ஆதரித்தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சத்தியத்தையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம்பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையின் பலனேதான் இப்போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரசாரம் செய்யவும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும்; சட்டசபையில் இது சமயம் ஒரு முடிவை பெற்று தீரவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன அபிப்பிராயத்திற்கு வர நேர்ந்ததுமாகும்.
நிற்க, இப்போது திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும், “பொட்டுக் கட்டுவதை ஒழிக்கும்” இந்த மசோதாவானது வெகு காலமாகவே ஜனப் பிரதிநிதிகள். என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும் பொதுமகாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன் இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இது சம்மந்தமாக, திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள்: அவர்கள் ஒரு துண்டு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார். அதன் சுருக்கமாவது.
தேவதாசி மசோதா
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 வருஷ முதல் நடைபெற்று வருகிறது. 1906, 1907 வருஷம் உலக தேசீய மகாநாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப்பதற்காகப் பல மாகாண சர்க்கார் அபிப்பிராயங்களையும் அறிந்து தம்மால் கூடியவரை: ஒழிப்பதென முடிவு செய்ததினின்று, இந்தியா கவர்ன்மெண்டும், இந்த தேவதாசி மசோதாவில் அதிக சிரத்தைக் காட்டி வந்தது.
1912 வருஷம் பழய இம்பீரியல் சட்ட நிரூபண சபையில் மூன்று இந்திய அங்கத்தினர்கள், கனம் மாணிக்ஜிதாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியவர்கள், இந்த கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறே மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர். இந்திய சர்க்கார் உள்நாட்டு சர்க்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்த உடன் 1913 வருஷம் செப்டம்பர் மாதம் தாங்களாகவே ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அம்மசோதா ஒரு செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்களது ரிப்போர்ட்டையும் 1914 வருஷம் மார்ச்சு மாதம் பெற்றார்கள். அந்தரிப்போர்ட் மறுபடியும் இப்போதைப் போலவே பொதுஜன அபிப்பிராயத்துக்கு விடப்பட்டது. இம்மசோதாவை நிறைவேற்றுவதில்
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
எல்லோருக்கும் பூரண எண்ணமிருந்த போதிலும், அத்தகைய பெண்களை. எவ்வாறு காப்பாற்றுவது என்பது போன்ற சில சில்லரை விவாதங்கள். கிளப்பிவிடப்பட்டதால் அம்மசோதா தானாகவே அது சமயம் மறைந்து விட்டது. அதன் பின்னர் மகாயுத்தக் கிளர்ச்சியினால் அது கவனிக்கப்பட முடியாமல் போயிற்று. பிறகு 1922 வருஷம் டாக்டர் கோர் மீண்டும் அதை. இந்திய சட்டசபையில் கொண்டு வந்தார். டெ தீர்மானத்தின் மேல் விவாதம்
நிகழ்ந்து கடைசியாக அது மறுபடியும் பொது ஜன அபிப்பிராயத்திற்கு பிரசுரிக்கப்பட வேண்டுமென்ற பிரரேபனை அதிகப் படியான ஓட்டுகளால் தோற்கடிக்கப்பட்டது. பிறகு மேல்படி 1922-ம் வருஷத்திய தீர்மானத்தின் மீது 1924 -ம் வருஷம் அதை சட்டமாக்கப் பட்டதோடு, அதை அனுசரித்து இந்தியன் பினல்கோடு 372, 373 செக்ஷன்கள் திருத்தப்பட்டன. அதன் சட்டம்
1925 -ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாதென்றே சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் பொட்டுக் கட்டப்பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாயிருக்க வேண்டு மாதலால் 14 வயதிற்குள்தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. அதாவது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்கு மேல் பொட்டுக்கட்ட
எந்தக் கோயில் அதிகாரி யும் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்பொழுது மேற்படி சட்டம் வந்தபிறகு 16 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கு பொட்டுக்கட்டப் பட்டால் கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு அந்த விதமாக அனேக கேஸ்கள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனை
யும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே வைதீகர்களது அபிப்பிராயப்படி பார்த் தாலும்கூட, சாஸ்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவில்
களில் பொட்டுக்கட்ட மத அனுமதியில்லையென்று தெரிகிறது. இந்தியன் பினல்கோடுபடி ஒரு மைனர் பெண்ணைப் பொட்டுக் கட்டுவது குற்ற மென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக் கட்ட கோவிலினிடமிருந்து உத்திரவு பெற்று விடுகிறார்கள். இது வியபசாரத்துக்கு அனுமதி கொடுத்ததாகு மேயன்றி வேறில்லை. பொதுஜன அபிப்ராயம் இதை சட்டமாக்க அனுகூல மாயேயிருக்கிறது. பத்திரிகைகளில் இதை ஆதரித்து எழுதியும் பொதுக் கூட்டங்களில் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் சங்கங் களில் அதை ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் இந்தக் கொடிய பழக்கத்தினால் அல்லலுறும் சமூகத்தினரே இதை சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும் இருக்கின்றனர். டிஸ்டிரிக்டு போர்டு முனிசிபாலிட்டிகளிலும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறெல்லாமிருக்க இச்சட்டத்திற்குப் பொது ஜன அபிப்ராயத்தை அறிய விரும்புவானேன்? என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபனையோ எதிர் அபிப்பி ராயமோ இருக்கவே முடியாது. இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பது போல் தேவதாசி என்று ஒரு
குடி அரசு - 1980 (1) 106
வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும். ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமாகையால் இவ்வழக்கம் பெண்: களின் அந்தஸ்தையும் கெளரவத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாயிருக் கிறது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமூகத்தையோ விபசாரத்
திற்கு அனுமதி கொடுப்பதும், பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும். சிறு குழந்தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமூக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப் பட்ட நிலைமையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.
தவிர இதுவிஷயத்தில் சாஸ்திர சம்மந்தமான வைதீகர்களின் ஆட்சேபணைக்கும் இடமில்லை. ஏனெனில் சாஸ்திரத்தில் 14 வயதுக்கு முன் கன்னிப் பெண்ணாய் இருக்கும் போதுதான் பொட்டுக் கட்ட வேண்டும் என்று இருக்கின்றது. இந்தியன் பினல்கோட் 372, 373 செக்ஷன்களின்படியோ 18 வயதுக்குள் பொட்டுக் கட்டக்கூடாது என்றும், கட்டினால் ஒரு வருஷக் கடினக் காவல் தண்டனையும் அபராதமும் என்றும் இருக்கின்றது. ஆகவே இது விஷயத்தில் வைதீகமும் இந்து மதமும் 1924 வருஷத்திலேயே ஒழிந்துவிட்டது. இந்நிலையில் இப்போதைய வைதீகர்கள் என்பவர்கள். இதை ஆட்சேபிப்பதானால் ஒன்று அவர்களது சாஸ்திரம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும்; அல்லது தாசிகள் மூலம் தங்கள் வகுப்பார்.
களில் சிலர் வயிறுவளர்ப்பது கெட்டுப் போகுமே என்கின்ற ஜாதி அபிமான மாக இருக்க வேண்டும்.
அடுத்தாப்போல் பொது ஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தன மாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாகவோதான் இருக்க. வேண்டும். ஏனெனில் இந்து சமூகத்தில் கடவுள் பேரால் மதத்தின் பேரால் விவசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர். களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால் அவர்களைப் போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது. எந்தப் பெண்களாவது இந்தத் தொழிலில் ஜீவிக் கலாம் என்று கருதி அதற்காக சுவாமியையும் மதத்தையும் உதவிக்கு உப யோகப்படுத்த நினைத்தால் அவர்களைப் போல் ஈனப்பெண்கள் வேறு எங்கும் இருக்கவே முடியாது. ஆகவே இந்தச் சட்டம் சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது மிக்க அவசியமும் யோக்கியமுமான காரியமுமாகும். ஆனால் அந்தப்படி நிறைவேற்றப்படாமல்
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இருக்க சட்ட மெம்பர் ஆட்சேபணைகளைக் கிளப்பி இதைப் பொது ஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தடைப்படுத்தி விட்டது மிகவும் வருந்தத்தக்கதாகும். அதற்கு அனுகூலமாய் ஜஸ்டிஸ் கட்சி அங்கத் தினர்கள் ஓட்டுக் கொடுத்தது அவர்களுக்கு மிகுதியும் மானக்கேடான காரியமாகும். அக்கட்சியார்கள் இந்த காரியத்தைகூட செய்ய முடியவில்லை யானால் பின் என்ன வேலை செய்யத்தான் அந்த சட்ட சபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகவில்லை. “காங்கிரஸ்காரர்.
கள் சட்டசபையில் இல்லாததால் இச்சட்டம் நிறைவேற்றாமல் போயிற்று” என்று திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் நமக்கு எழுதி இருப்பதைப்
பார்க்க நமக்குத் தாங்க முடியாத அவமானமாகவே இருந்தது.
எப்படியானாலும் அடுத்த சட்ட சபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமேயானால் சர்க்காரின் யோக்கியத்திலும் ஜஸ்டிஸ் கட்சியாரின் சுயமரியாதையிலும் தெருவில் போகின்றவனுக்குக் கூட மதிப்
பும் நம்பிக்கையும் இருக்காதென்றே சொல்லுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.03.1930
குடி அரசு - 1980 (1) 108
ஓர் மறுங்யு
சுயமரியாதை இயக்கத் தலைவர் திரு. ஈ.வெ. இராமசாமி அவர்கள் கீழ்க்கண்ட மறுப்பை பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பியிருக்கிறார். அதாவது :-
இருபதாந்தேதி வெளிவந்த சென்னை தினசரிப் பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கான சுயமரியாதைச் சங்க அங்கத்தினர்கள் உப்பு வரியை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யப் போவதாக ஒரு செய்தி வெளி வந்திருப் பதைப் பார்த்தேன். யாராவது தன் சொந்த ஹோதாவிலோ அல்லது வேறு ஹோதாவிலோ உப்புச் சட்டத்தை மீறுவதைப் பற்றி எனக்கு ஆட்சேப மில்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பெயரால் யாராவது உப்புச் சட்டத்தை மறுப்பு செய்யத் தொடங்கினால் அம்முயற்சி சுயமரியாதை இயக்கத்தாரால் ஆதரிக்கப்பட்டதாகாது. அவ்வியக்கத்தின் முக்கிய அங்கத்தி னர்களில் ஒருவர் என்கின்ற முறையில் எனக்காவது சுயமரியாதை சங்கத் தலைவருக்காவது அதில் சம்பந்தமே கிடையாது. உப்புச் சட்டத்தை மீறுவ தென்பதை இது சமயம் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உப்புச் சட்டத்தை மீறுவதனால் சுயமரியாதை இயக்கத்துக்கு எத்தகைய நன்மையும் உண்டாகாது.
குடி அரசு - அறிக்கை - 23.03.1930
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஹன்ஸ் ககூறி
ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களை அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கின்ற தீர்மானம் ஒன்றை நிர்வாகக்கமிட்டி தலை வருக்கு திருவாளர்கள் பி.எஸ். குருசாமி நாயுடு அவர்களும் எம்.தாமோதர நாயுடு அவர்களும் அனுப்பியிருக்கின்றார்கள். அதாவது
“தற்கால நிலைமை மாறுதல்களை உத்தேசித்து பார்ப்பனர்களை: தென்இந்திய நலவுரிமைச்சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஒரு விசேஷ மகாநாடு (ஸ்பெஷல் கான்பரன்ஸ்) கூட்டவேண்டுமென்றும் இக்கமிட்டி தீர்மானிக்கின்றது” என்பதாகும்.
இப்பொழுது மேல்கண்ட இந்த தீர்மானத்தை அனுப்பியிருக்கும் கனவான்களே நெல்லூரில் பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கை கட்சி
யில் சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை என்கின்ற தீர்மானத்தை எதிர்த்தவர்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இப்போது பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியிலேயே சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்திருப்பதற்குக் காரணம் “தற்கால நிலைமையை உத்தேசித்து” என்று தான் சொல்லுகின்றார்கள். பார்ப்பனர்களைச் சேர்த்துத் தான் ஆக வேண்டும் என்கின்ற அளவுக்கு தற்கால நிலைமை எப்படி மாறுதல் அடைந் திருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. சென்ற சட்டசபை தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியில் பலர் தோல்வி அடைந்து மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது முதல் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமும் காங்கிரசில் சேரவேண்டும் என்கின்ற எண்ணமும் அக்கட்சி பிரமுகர்கள் ஒவ்வொருவர் மனதிலும் துடித்துக் கொண்டேதான் இருந்தது.
காங்கிரசில் சேர்ந்தால் சாதித்துவிடலாம் என்கின்ற எண்ணத்தைப் பரிட்சித்துப் பார்க்க கோயமுத்தூர் மகாநாட்டில் தாராளமாய் இடம் கொடுத்தோம், அது போலவே பலர் காங்கிரசுக்கும் போய் அதன் பலனையும் அனுபவித்துப் பார்த்து விட்டு இரண்டாம்பேர் அறியாமல் வீடுவந்து சேர்ந்தார்கள்.
அதுபோலவே இதற்காக கூடும் மகாநாட்டில் நாம் இந்த தீர்மானத் தையும் மகாநாட்டில் ஆட்சேபிக்கப்போவதில்லை. மற்றவர்கள் ஆட்சே
குடி அரசு - 1980 (1) 10
பிப்பதையும் நாம் தடுக்கப்போவதில்லை. அதன் சம்பவத்தை அதுவே அடையட்டும் என்று தான் விட்டுவிடப்போகின்றோம். ஏனெனில்,
சமீபத்தில் தான் கோயமுத்தூரில் திருவாளர்கள் பி.முனுசாமி நாயுடு, பி.டிராஜன், ஆர்.கே.ஷண்முகம், சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், எ.ராம சாமி முதலியார், ஈ.வெ.ராமசாமி ஆகியவர்கள் கூடி பார்ப்பனர்களை: அங்கத்தினர்களாக சேர்ப்பதா என்கின்ற விஷயமாய்ப் பேசி “வேண்டுமா னால் அரசியல் சட்டசபை நடவடிக்கைகளில் (பொலிட்டிக்கல் கவுன்சில்
பார்ட்டியில்) சேர்த்துக் கொள்ளலாம்” என்றும் “ஜஸ்டிஸ் கட்சியில் கண்டிப்
பாய் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது” என்றும் பேசி முடிவு கட்டிக்கொண்டு அதை அடுத்தாப்போல் ஒரு விசேஷ மகாநாடு கூட்டி தீர்மானிப்பதென்றும் ஒப்புக் கொண்டுபோனார்கள். ஆனால் அத்தீர்மானம் இனியும் ஒரு மாதம் ஆவதற்குள் “தற்கால நிலையை உத்தேசித்து” என்று மறுபடியும் அந்த விஷயத்தைக் கிளப்பியிருப்பதானது ஆச்சரியப்படக் கூடியதேயாகும். அன்றியும் இப்போது கொஞ்ச காலமாய் ஜஸ்டிஸ் கட்சிக்கு,
சற்று அதிக செல்வாக்கு ஏற்பட்டு இதுசமயம் அதில் கொஞ்சம் அதிகமான மெம்பர்கள் சேர்ந்து கட்சியின் கூட்டம் தாங்கமுடியாத அளவுக்கு கும்பலாகி
நெருக்கம் ஏற்பட்டு விட்டதாலும் அந்த நெருக்கத்திற்குத் தகுந்தபடி போட்டிகளும் பலமாய் விட்டதாலும் எப்படியாவது அதன் கூட்டத்தைச் சற்று கலைத்து சிலரைவெளியாக்கி நெருக்கத்தைக்குறைத்து போட்டியைக் கம்மிப்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் சில “ தலைவர்களுக்கு” ஏற் பட்டுவிட்டதால் இது சமயம் அக் கட்சிக்கு ஒரு கொள்கையில் நிற்பதோ அல்லது ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டிருப்பதோ மிக்கமுடியாத நிலை மைக்கு போய்க்கொண்டிருக்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் அடிக்கடி நாமேமுட்டுக்கட்டையாய் இருந்ததாகக் காட்டிக்கொள்ள இஷ்டமில்லை. இந்த நிலையில் அந்தத் தீர்மானம் கொண்டுவந்திருக்கும் கருத்தைப் பார்க்கும்போதும் திருவாளர்கள் சி.பி.ராமசாமி அய்யருடன் டி.ஆர். ராமச் சந்திர அய்யரும் போட்டியன்றி தெரிந்தெடுக்கப்படவேண்டிய அவசியம். ஏற்பட்டிருக்கும்போதும் அனேகமாய் விசேஷ மகாநாட்டில் இத்தீர்மானம். நிறைவேறவிடலாமென்றே நாம் நினைக்கின்றோம். எப்படியானபோதிலும் அது விஷயத்தைப் பற்றி நாம் இப்போதே நமது அபிப்பிராயத்தை சிறிதும் ஒளிக்காமல் சொல்லிவிடுகின்றோம். அதாவது பார்ப்பனர்களை தென் இந்திய நலவுரிமைச்சங்கத்தில் அங்கத்தினர்களாய்ச் சேர்த்துக்கொள்ளப்படு மானால் பார்ப்பனரல்லாதார் கட்சி என்று வழங்கும் ஜஸ்டிஸ் கட்சி துலைந்தது என்பதேதான் நமது முடிவு. அதாவது இத்தீர்மானத்தின் பயனால் ஏதாவது இரண்டொரு பணக்காரர்களோ சூட்சிக்காரர்களோ சில பெரிய உத்தியோகங் களையும் பதவிகளையும் அனுபவிக்கலாமே யொழிய பதினாயிரக்கணக் கான படித்த வாலிபர்களின் கதியும் சமூக சமத்துவ முற்போக்கின் கதியும் இனி அதோகதிதான் என்பதும்.
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
வெகு கஷ்டப்பட்டு நிதானமாய் முன்னேறிவந்த இம்மாகாண பார்ப்பனரல்லாத சமூக நிலை இனி வெகுவேகமாய் பின்னோக்கி விடு மென்பதுவும் உறுதி! உறுதி!! அன்றியும் அக்கட்சியில் கொள்கையோ நாணயமோ யோக்கியப் பொருப்போ சிறிதும் கூட இனி இருக்கவும் முடியாது என்பதும் நமது உறுதி...
குடி அரசு - கட்டுரை - 23.03.1930
குடி அரசு - 1980 (1) 112
சாரதா சட்டம்
சாரதா சட்டம் இந்தியசட்டசபையில் திருத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் அமுலுக்கு வருவது ஒத்திவைக்கப்படும் என்றும் ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது.
ஆனால் சென்னை சர்க்கார் அச்சட்டத்தின் பிரதிகளை பொது ஜனங்களுக்கு வினியோகித்திருப்பதுடன் பத்திரிகைகளிலும் வெளியிட்டி ருக்கிறார்கள். எனினும் எப்படி நடக்கும் என்று சொல்வது முடியாத காரியமா யிருந்தாலும் இவ்விஷயத்தில் சர்க்கார் ஏதாவது பின் வாங்கினார்களே. யானால் அதன் பலனை கண்டிப்பாய் அடைவார்கள் என்பதை மாத்திரம் நாம் உறுதியாய் நம்பி இருக்கிறோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 23.03.1930
113 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
இவ்வார சென்னை சட்டசபை வரவு செலவு திட்டத்தில் திரு. வி.ஜ.. முனுசாமி பிள்ளை அவர்கள் ஆதிதிராவிடர்களுக்கு அவர்கள் எண்ணிக் கைக்கு தகுந்தபடி உத்தியோகமளிப்பதில்லை என்று குறை கூறியதற்கு பதிலாக அரசாங்கத்தார் சார்பாக சீப் சிக்கர்ட்டரி அவர்கள் அந்தப்படி உத்தி யோகங்கள் கொடுக்கும் விஷயமாக அரசாங்கத்தாரால் யோசனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் உத்தியோகங்களைப் பெற்றுக்கொள்ள ஆதி திராவிடர்கள் முன் வரவேண்டுமென்றும் பதில் கூறினார்கள். இது மனப்
பூர்வமாய் சொல்லப்பட்ட பதிலானால் இதிலிருந்து இப்போது எல்லா விதத்
திலும் தகுதியுடன் இருந்து முன் வந்திருக்கும் திரு. ராவ் பகதூர் யம்.சி.ராஜா அவர்களுக்கு சமீபத்தில் காலியாகும் நிர்வாகசபை மெம்பர் பதவி கிடைக் கக்கூடும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமாகாது என்று நினைக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.03.4930
குடி அரசு - 1980 (1) 14
ஈரோட்மல் மகாநா௫கன்
இரண்டாவது சுயமரியாதை மகாநாடு ஈரோட்டில் மே மாத முதல் வாரத்தில் கூட்டப்படுவதற்கு வேண்டிய முயர்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயத்தில் மற்றும் பல மகாநாடுகள்அதாவது பெண்கள். மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு முதலிய மகாநாடுகளும், விவசாயம் கைத்தொழில் முதலிய பொருள் காட்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று பல நண்பர்கள் அபிப்பிராயப்பட்டிருப்பதற்கு இணங்க. அவைகளையும் நடத்த வேண்டும் என்னும் உத்தேசத்துடன் வேலைகள்
நடந்து வருகின்றன.
மகாநாட்டிற்கு இதுவரை சுமார் 5000 ஐயாயிரம் ரூபாய்களே வாக்களிக் கப்பட்டிருக்கின்றது என்றாலும் ஒட்டு மொத்தம் சுமார் 10000 ரூ பதினாயிரம் ரூபா வரையில் வசூலில் எதிர்பார்க்கலாம் என்றே கருதி இருக்கின்றோம். மகாநாடுகள் அதிகமாய் இருப்பதாலும் குறைந்தது 4, 5 நாள்களுக்காவது நடத்த வேண்டுமென்று கருதியிருப்பதாலும் மேல்கண்ட பதினாயிரம். ரூ.போருமென்று சொல்வதற்கு இடமில்லை. ஆகவே வரவேற்பு கமிட்டி போஷகர்களுக்கு 25ரூ. என்றும் வரவேற்பு கமிட்டி அங்கத்தினர் களுக்கு
5ரூ. என்றும் பிரதிநிதிகளுக்கும் மூன்று ரூபா என்றும் மேல்கண்ட மூன்று வகைக்கும் சாப்பாட்டு கட்டணமில்லாமல் போடுவதென்றும் விசிட்டர். களுக்கு கட்டணம் ஒரு ரூபாய் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. நிற்க, திருவாளர் ஆர். கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் வரவேற்புக் கமிட்டி தலைவராகவும், திருவாளர் கோவை சேர்மென் அண்டு ஜில்லா போர்டு பிரசிடெண்டு, ராவ் பகதூர் சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், ஈரோடு சேர்மென்16.& ஷேக் தாவுத்து சாயபு, எஸ். ராமநாதன் ஆகிய கனவான்கள் பொது காரியதரிசிகளாகவும் இருந்து மகாநாட்டை சிறப்புடன் நடத்திக் கொடுக்க தயவுடன் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். மற்றும் மகாநாட்டுக்கு வாலண்டியர்களாக இருந்து மனப்பூர்வமாய் தொண்டு செய்வதற்கும் அனேகத் தொண்டர்கள் முன் வந்து தாங்களாகவே தினம் பல கடிதங்கள் எழுதியும், நேரில் வந்தும் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டும் இருக்கின்றார்கள். மற்றும் பொது ஜனங்கள் அன்பாகவும் ஆவலாகவும் மகாநாட்டு விஷயத்தில் பல யோசனைகளையும் ஊக்கங்களையும் அளித்துக்
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கொண்டு வருகின்றார்கள். ஆகவே மகாநாடுகள் ஒரு விதத்தில் திருப்தி
கரமாயும் வெற்றிகரமாயும் நடைபெறுமென்றே முழு நம்பிக்கையுட னேயே இருக்கின்றோம் என்றாலும் மகாநாட்டுக்கும் அதன் கொள்கை களுக்கும் எதிர்ப்புக்கூட்டம் சில இருந்து கொண்டு, அவை தடங்கலான விஷமங்களை செய்து கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறைக்க முயலவில்லை.
உதாரணமாக இவ்வார சட்டசபையில் சைவ சித்தாந்த ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்தே ஒரு வாறு அறியலாம். அதாவது சுயமரியாதை இயக்கத்தார்களை மதசம்பந்தமான உத்தியோகத்தில் நியமிக்கலாமா என்றும், சுயமரியாதைக்காரர்கள் விக்கிரக ஆராதனைக்கு விரோதிகள் அல்லவா என்றும் மற்றும் பல கேள்விகள் கேழ்க்கப்பட்டதிலிருந்து இந்து மதமும். இந்து பரிபாலன போர்டுகளும், ஸ்தாபனங்களும் விக்கிரக ஆராதனைக்காரர்களான கூட்டத்தார்களுக்கே சொந்தமானதென்றும் கருதிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும், அவர்க ளால் கூடிய இடையூறுகளை யெல்லாம் செய்யத் தயாராயிருக்கின்றார்கள் என்பதும் நன்றாய் விளங்குகின்றது. மற்றொரு புறம் ஒரு கூட்டம், “சுயமரி யாதை இயக்கம் சர்க்காருக்கு அடிமைப்பட்ட கூட்டமென்றும் உத்தியோகங் களுக்கு ஆசைப்பட்ட கூட்டமென்றும்” சொல்லிப் பிரசாரம் செய்வதும், மற்றொரு புறம் சுயமரியாதை இயக்கம் மந்திரிகளை ஆதரிக்கின்ற இயக்க மென்றும் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதும் மறைக்கக் கூடிய தல்ல. இவைகள் ஒருபுறம் இப்படியிருக்க இதுசமயம் திரு. காந்தி அவர்களால் துவக்கப்பட்டிருக்கும் உப்புக் காச்சும் சத்தியாக்கிரகத்தின் கிளர்ச்சியினால் தென்னாட்டில் ஒரு கூட்டம் “உலகமே திரண்டு திரு. காந்தியாரைப் பின் பற்றி இந்த சர்க்காரை ஒழிக்கப் போகும் சமயத்தில் சுய மரியாதை இயக்கத்தார் சர்க்காரை ஆதரித்து விடுதலைக்கும் பூர்ண சுயேச்சைக்கும் எதிரியாய் இருக்கின்றார்கள்” என்று பாமர மக்களை விஷமத் தனமாய் கிளப்பி விட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள். இவை இப்படி யிருக்க,
மற்றொரு புறம் ஆதாரமில்லாமல் சிலர் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் திடீர் திடீர் என்று தங்களுக்குத் தோன்றியக் காரியங்களைச் செய்வதும் தோன்றிய அபிப்பிராயங்களை வெளியிடுவதுமான காரியங் களால் பொது ஜனங்களின் மனதை குழப்பத்திற்குள்ளாக்குவதுமாகச் செய்து வருவதும் யாரும் அறியாததல்ல. ஆகவே இப்படியாகப் பலவித எதிர்ப்புகளும் சங்கங்களும் இருந்து வருகின்றது.
எது எப்படி இருந்த போதிலும் நமது கொள்கைகளையே நாம் உலக விடுதலைக்கும் சிறப்பாக நமது நாட்டுக்கும், குறிப்பாக பார்ப்பனரல்லாத கூட்டத்தாருக்கும் பூரண ஆதாரமாகக் கருதி இருப்பதால் அதன் பலா பலனைத் தனித்து நின்றாவது அனுபவித்து தீரவேண்டிய உறுதி கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோமாதலால் பின்வாங்கமுடியாத நிலையில் எதற்கும் தயாராய் இருக்கின்றோம் என்பதை பொது ஜனங்களுக்கு வணக்க.
குடி அரசு - 1980 (1) 116.
மாய்த் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிற்க, இவ்வியக்கம் ஏற்பட்ட பிறகு தமிழ் நாட்டில் அடிக்கடி சுய மரியாதை மகாநாடுகள் கூடுவதும், இது சம்பந்தமாகப் பல ஆண்டு விழாக்
கள், கொண்டாட்டங்கள் முதலியவைகள் நடப்பதுமாய் இருப்பதின் மூலம் அன்பர்களுக்கு அடிக்கடி செலவுகள் ஏற்பட்டு வருவதும் நமக்கு நன்றாய்த் தெரியுமானாலும், பலவித எதிர்ப்புகளுக்கும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கும் இம்மாதிரி அடிக்கடி மக்கள் கூடி இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டு அமுலில் நடத்த முயற்சிகள் செய்வதுதான் தகுந்த பதிலே ஒழிய வேறு இல்லை.ஆதலால் இம்மாதிரியான காரியங் களைப்பிரசாரத்தை முன்னிட்டுச் செய்து தீரவேண்டியதா யிருக்கின்றது. அன்றியும் அரசியல் விஷயங்
களுக்காக இதுவரை மக்கள் அடைந்த நஷ்டத்திற்கும் பட்ட கஷ்டத்திற்கும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்டபலப்பல கெடுதிகளுக்கும் கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்த சமூக இயக்கத்திற்கு செலவாகும் நஷ்டமும், கஷ்டமும் பதினாயிரத்தில் ஒரு பங்குக்கூட இருக்கா தென்றே சொல்லுவோம். ஆதலால் தமிழ்நாட்டு இளைஞர்கள் கவனித்து, தமிழ் மக்களுக்கு இன்றியமையாத இந்த இயக்கத்திற்காக நடைபெறும் மகாநாட்டை சிறப்புற நடத்தி பலன் பெற உதவி செய்ய வேண்டிக் கொள்ளு கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.03.4930
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
5ளுயாய் இணாம்
- சித்திரபுத்திரன்
திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாக்கிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் பெரிதும் பார்ப்பனர்களே. கலந்து அவர்களே முழுவதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன?
திரு. காந்தி இந்த சத்தியாக்கிரகப் போருக்கு பணமே வேண்டிய தில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோபாலாச்சாரியார் பணம் வேண்டுமென்று கேட்பதின் இரகசியமென்ன?
அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூட்சியென்ன?'
இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார்களையே ஏற்படுத்தி பிரசாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன?
இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்க காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையனுப்பியவர்களுக்கு குடி அரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனாமாகவும் அளிக்கப்படும்.
குறிப்பு : - முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான விடை எது என்பதை நிர்ணயிப்பதற்கும் நானே தான் ஜட்ஜு எனக்கு மேல் அப்பிலோ கேழ்வியோ கிடையாது.
- சித்திரன் - 0/௦ குடி அரசு . ஈரோடு
குடி அரசு - அறிவிப்பு - 30.03.1930
குடி அரசு - 1980 (1) 118
வொட்டுக்கட்டு நிறுத்தும் சட்டம்
டாக்டர் முத்து டை௬மி ஷாட்மு மசோதா
டாக்டர். முத்து லட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரு. ஈ. வெ.ராமசாமியார் சென்னை சட்டசபை காரியதரி.
சிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது
1. ஹிந்துப் பெண்களை ஹிந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டு வதினால் அவர்கள் வியபிசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.
2. பண ஆசையினால் தேவதாசிகள் வியபிசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த வியபிசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கிய
மானதாகும்.
3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் வியபிசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் வியபிசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். வியபிசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடைய வில்லை. வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக் காகப் பெண்கள் வியபிசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம்
இன்னும் வரவில்லை. ஆனால் சமயத்தின் பேரால் மதக் கடமையாகப் பெண்:
கள் வியபிசாரம் செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்க வேண்டும். தற்காலச் சட்டப்படி18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப்
படும் பெண்களுக்கும் கூட இள வயது முதலே பெற்றோராலும் வளர்ப் போராலும் வியபிசாரம் செய்யத் தூண்டப்பட்டும் தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக் கட்டி வியபிசாரம் செய்வது மோட்ச்ச சாதனமான தென்றும், பணம் சம்பாதிக்க நல்ல வழி என்றும், சிறு வயது முதலே அப் பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது. பெண்களை வியபிசாரத்தில் ஈடு
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
படுத்தாமல் சட்டம் ஏற்படும் வரை பெற்றோரும் வளர்ப்போரும் அவர்களை வியபிசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத் தான் செய்வார்கள்.
4. மைனர் பெண்களுக்குப் பொட்டுக் கட்டக் கூடாதென்று ஏற்கனவே சட்டம் ஏற்படுத்தி மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரங்
களில் அனுமதி இல்லை. ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவ மடைந்த பெண்கள் பொட்டுக் கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப் படத் தேவையில்லை.டாக்டர். முத்து லட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமூக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமுலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.
குடி அரசு - கடித அறிக்கை - 30.03.1930
குடி அரசு - 1980 (1) 120
கர்ப்பத்தடை
கர்ப்பத்தடை என்பது பற்றி சுமார் 2 வருஷங்களுக்கு முன் நாம் எழுதியது அநேகருக்கு திடுக்கிடும் படியான சேதியாயிருந்தது. ஆனால் இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும், ஒரு சாதாரண சேதியாய் விட்டது.வர வர அது செல்வாக்குப் பெற்றும் வருகின்றது. பெரிய உத்தியோகத்தில் இருந்த சர். பி.சிவசாமி அய்யரும் பெரிய உத்தியோகத்தில் இப்போதும் இருக்கும் ஜஸ்டிஸ் ராமேசம் அவர்களும் மற்றும் பலரும் இது விஷயமாய் அடிக்கடி பேசி வருகின்றதையும் எழுதி வருகின்றதையும் பத்திரிகையில் பார்த்தும் வருகின்றோம். சமீபத்தில் சென்னை சட்டசபை யிலும் கர்ப்பத் தடை விஷயமாய் பிரசாரம் செய்ய வேண்டுமென்று பிரஸ்தா
பிக்கப் பட்டதையும் நேயர்கள் கவனித்து இருக்கலாம்.
ஆனால் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன. அதாவது பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்ற வர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும் பிள்ளைகளின் தாஷ்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திர திசையை உத்தேசித்தும், குடும்ப சொத்து குலையாமல் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்தும், கர்ப்பத் தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டினர் பலர்கூட ஆதரிக்கின் றார்கள்.ஆனால் நமது கருத்தோ இவைகள் எதையும் பிரதானமாய்க் கருதி யது அல்ல. மற்றெதைக் கருதி யென்றால் முன் சொன்னது போல் பொதுவாக. பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாய் இருப்ப
தால் சாதாரணமாய் பெண்கள் பிள்ளை பெறுவது என்பதையே அடியோடு
நிறுத்தி விட வேண்டும் என்கிறோம், அது மாத்திரமல்லாமல் பல பிள்ளை களை பெருகின்ற காரணத்தால் ஆண்களும் கூட சுயேச்சையுடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவேயிருக்கிறார்கள். இதன் உண்மை சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும் ஸ்திரியும் தங்கள் சுதந்திரங்க ளுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தாலே
தெரியும்.
ஒரு மனிதன் தான் கஷ்ட நிலையில் பேசும் போது “நான் தனியா
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
யிருந்தால் ஒரு கை பார்த்து விட்டு விடுவேன். 4, 5 குழந்தையும் குட்டியும் ஏற்பட்டு விட்டதால் இவைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கின்ற கவலையால் பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு ஆளாயிருக்க வேண்டி இருக்கின்றது” என்றே சொல்லுகின்றான். அது போலவே ஒரு
ஸ்திரீயும் புருஷனாலோ அல்லது வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும் போது “நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின் மேல் துணியைப் போட்டுக் கொண்டு போய் விடுவேன்; அல்லது ஒரு ஆற்றிலாவது குளத்திலாவது இறங்கி விடுவேன். இந்தக் கஷ்டத்தை சகித்துக் கொண்டு அரை நிமிஷமும் இருக்க மாட்டேன். ஆனால் இந்த குழந்தைகளையும் குஞ்சுகளையும் நான் எப்படி விட்டு விட்டு போகமுடியும்” என்றே சொல்லு கின்றாள். ஆகவே இந்த இருவர்களுக்கும் அவர்களது சுயேச்சையையும் விடுதலையையும் கெடுப்பது இந்த குழந்தைகளும் குஞ்சுகளும் என்பவை களேயாகும்.
உலகத்தில் மக்கள் கஷ்டப்பட்டு தன் தன் ஜீவனத்திற்கு பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்று அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும்போது பிள்ளைகளையும் குட்டிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தலை மேல் இருக்குமானால் அந்த இடத்தில் எப்படி சுயேச்சை இருக்க முடியும்? ஆகையால் ஆண் பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கற்பமாவதும் பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது.. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியா யிருக்கிறது. அதனால் தான் நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெருவதை நிருத்தியே ஆக வேண்டும் என்கின்றோம். அன்றியும், பெண்கள் வியாதிஸ் தர்கள் ஆவதற்கும் சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவ தற்கும் இந்த கர்ப்பம் என்பதே மூல காரணமாயிருக்கின்றது. தவிரவும் ஆண். களில் பிரம்மச்சாரிகளும், சன்யாசிகளும், சங்கராச்சாரியார்களும், தம்பிரான் களும், பண்டார சன்னதிகளும் ஏற்பட்டிருப்பது போல் பெண்களில் பிரம்மச் சாரிகளும் சங்கராச்சாரி முதலியவர்களும் ஏற்படுவதற்கும் இந்த கர்ப்பமே தடையாயிருந்து வருகின்றது. இந்நிலையில் தான் பெண்கள் விடுதலைக்கும். சுயேச்சைக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். இந்தப்படி நம்மில் ஒருவருக்கொருவர் கருதும் காரணம் எப்படி இருந்த போதிலும் நமக்கும் மற்ற கர்ப்பத் தடைக்காரருக்கும் கர்ப்பத்தடை அவசியம் என்பதில் அபிப் பிராய பேதமில்லாதிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஆனால் இந்த முக்கிய காரியங்களில் சமீபகாலத்தில் சட்ட சபையில் அரசாங்கத்தினர் சார்பாய் சுகாதார மந்திரி கர்பத்தடை பிரசாரத்தை எதிர்த்
தும், பெண்கள் சார்பாய் சட்ட சபைக்கு சென்ற டாக்டர். முத்து லக்ஷ்மி அம்
மாளும் அவருக்கு அணுசரணையாய் இருந்ததும் நமக்கும் மிக்க ஏமாற்றத் தையே கொடுத்து விட்டது. இந்த தேசத்தில் பிறக்கும் குழந்தைகளை
குடி அரசு - 1980 (1) 122
யெல்லாம் இந்த தேசத்து அரசாங்கமே வளர்த்து அவைகளுக்கு கல்வி கொடுத்து மேஜர் ஆக்கி விட வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை இருந் திருக்குமானால் சுகாதார மந்திரி அரசாங்கத்தின் சார்பாய் கர்ப்பத்தடையை எதிர்த்திருக்க மாட்டார். அப்படிக்கில்லாமல் யாரோ பெற்று யாரோ வளர்த்தி மக்களைப் பெருக்கி அடிமைக்கு விடுவதனால் சர்க்கார் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முன் வருவார்கள். உண்மையான சுகாதாரத்தில் பிள்ளைப் பேற்றை தடுப்பது முக்கியமான சுகாதாரம் என்று சுகாதார மந்திரிக்
கும் பெண்மணியாய் இருந்தும் டாக்டர் பட்டம் பெற்ற வைத்திய அம்மா ளுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்க காரியமேயாகும். இந்த விஷயத்தில் அரசாங்கத்தார் விபரீதமான அபிப்பிராயப்பட்டு விட்டாலும் கூட பொது ஜனங்கள் அதை லக்ஷியம் செய்யாமல் ஒவ்வொருவரும் இதை கவனித்து அவரவர்களே தக்கது செய்து கொள்ள வேண்டியது மிக்க அவசியமான காரியமாகும்.
மது விலக்கு பிரசாரத்தை விட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிர சாரத்தை விட, இந்த கர்ப்பத்தடை பிரசாரம் மிகவும் முக்கியமான தென்பதே
நமது அபிப்பிராயம்.
ஆதலால் இந்த கர்ப்பத் தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி அதன் மூலம் பிரசாரம் செய்ய பொது ஜனங்களில் சிலராவது இது சமயம் முன் வரவேண்டுமென்றே வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.04.1930
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இரட்டை வற்றி
பன்னீர்செல்வம்
உயர் திருவாளர் றாவ் பகதூர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் முன்னமேயே வாசகர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம். ஆனால் அந்த தேர்தலின் மேல் சில சட்ட சம்மந்தமான ஆட்சேபனைகளைக் கிளப்பி எதிர். அபேட்சகர்கள் அரசாங்கத்திற்கு செய்து கொண்ட விண்ணப்பத்தால் இரண்டு மாத காலம் அந்த தேர்தல் முடிவை கிரமப்படி அரசாங்கத்தார் ஒப்புக் கொண்டு கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் காலம் கடத்தி வந்தார்கள். ஆனா
லும் முடிவாக தேர்தல் செல்லுபடியானதை சென்ற வாரத்தில் பிரசுரம் செய்து விட்ட சேதி யாவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். இதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உத்தியோகக் காலம் மற்றும் சிறிது காலம் வளர்வதற்கு இடமுண்டாகி இரட்டை வெற்றி ஏற்பட்டதே தவிர வேறொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் மேற்படி தேர்தலின் மீது அது செல்லத் தக்கதல்லவென்று எதிர் அபேக்ஷகர் கோர்ட்டில் ஒரு வியாஜியம் தொடுத்து இருக்கின்றார்கள். அதன் கதிரிம் அனேகமாய் முடிவில் இப்படியே தான் ஆகிமூன்று வெற்றி ஏற்படக் கூடுமென்று இப்போதே முடிவு கட்டி விடலாம்.
எலக்ஷன்கள் நடந்ததும் எதிர் அபேகஷகர் தனது திருப்திக்கும் தனது கட்சியார்களின் திருப்திக்கும் இம் மாதிரி ஆக்ஷேபங்கள் கிளப்புவதும் அநேகமாய் எங்கும் இயற்கையாகவே இருந்து வருகின்றது. ஆனால் 100 -
க்கு தொண்ணூற்றுக்கு மேற்பட்ட தேர்தல் ஆக்ஷேபங்கள் தோல்வி அடைந்தே வருவதும் சகஜமாகவும் இயற்கையாகவுமே இருந்து வருகின் றது. எனினும் இம் மாதிரி சம்பவங்கள் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி மகிழ்ச்சியடைய இரண்டு சந்தர்ப்பங்களையும் தோல்வி அடைந்தவர்கள் ஏமாற்றம் அடைய இரண்டு சந்தர்ப்பங்களையும் அளித்து வருவதும் அனுபவத்தில் கண்டதேயாகும். சுகமும் துக்கமும் மாறி மாறியும் தொடர்ந்து தொடர்ந்தும் வருவது இயற்கையேயாகுமன்றோ!
குடி அரசு - 1980 (1) 124
எம். கே. ரெட்டி
உயர் திருவாளர் திவான்பகதூர் எம். கே. ரெட்டியவர்களும் செங்கல் பட்டு ஜில்லா போர்டு தலைவராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்டார். என்கின்ற சேதியைக் கேட்க வாசகர்கள் மிகுதியும் மகிழ்ச்சியும் அடை
வார்கள்.
திரு. எம்.கே. ரெட்டி அவர்களின் ஜில்லா போர்டு நிர்வாகமும் திரு. பன்னீர்செல்வத்தின் நிர்வாகமும் பார்ப்பனரல்லாதார் சமூக நன்மையையும் சுயமரியாதைக் கொள்கையையே பெரிதும் தழுவி நடந்துவந்த காரணமே அவ்விரு போர்டு தலைவர் தேர்தலுக்கும் சற்று எதிர்ப்பும் சூக்ஷியும் பலமாய் இருக்க நேரிட்டது. ஆனாலும் அவ்விரு போர்ட் தலைவர்களும் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டதானது நமது இயக்கத்திற்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.04.1930.
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பூரண வைற்றி
சாரதா சட்டம் அமுலுக்கு வந்து விட்டது. சாரதா சட்டம் என்பது:
14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்களுக்கும் 18 வயதுக்கு கீழ்பட்ட ஆண்களுக்கும் விவாகம் செய்யக் கூடாது. செய்தால் தண்டனை என்ற நிபந்தனையைக் கொண்டது. மற்றபடி இதைத் தவிர இந்த சட்டத்தில் வேறு எவ்வித ஆபத்தும் கிடையாது என்பது யாவருக்கும் தெரிந்ததே. ஆனால்
இந்தசட்டத்திற்கு இருந்துவரும் எதிர்ப்பு பெரிதாயிருந்தாலும், சிறிதாயிருந் தாலும் மதம் என்னும் பேரால் அல்லது வேறு எதையும் இது வரை யாரும் சொன்னதில்லை. மதத்தின் பேராலும் கட ஆக்ஷபணை சொல்லுகின்ற
வர்களும் இருமதங்களின் பேராலேயே சொல்ல முன் வந்திருக்கிறார்கள். ஒன்று மகமதிய மதம். மற்றொன்று இந்து மதம், மகமதிய மதத்தின் பேரால் ஆக்ஷேபம் சொல்லுகின்றவர்கள் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை கலியாணம் செய்வது கூடாது என்றோ அல்லது அது மத விரோதம் என்றோ சொல்வதில்லை. அன்றியும் 14 வயதுக்குக் கீழ்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற மத நிர்பந்தமிருப்பதாக
வும் அவர்கள் சொல்லுவதில்லை. ஆனால் “கலியாணத்திற்கு வயது நிர்ணயம் கூடாது” என்று மாத்திரம் தான் சொல்லுகின்றார்கள். இதற்கு மற்ற ஜனங்கள் எவ்வளவு மதிப்புக் கொடுப்பார்கள் என்பது விளங்கவில்லை. ஆதலால் இதைப்பற்றி நமக்கு லட்சியமில்லை. ஆனால் இந்து மதத்தின் பேரால் சொல்லுகின்றவர்கள் பெண்களுக்கு 12 வயதுக்குள் கலியாணம் செய்தாக வேண்டும் என்றும் பெரிய மனுஷியானப் பெண்ணை கலியாணம். செய்து கொள்ளக் கூடாது என்றும், இவைகளுக்கு விரோதமாய் செய்தால் மத விரோதமென்றும், பாவமென்றும், நரகம் கிடைக்குமென்றும் சொல்லு கின்றார்கள்.
இது சரீர சாஸ்திரக் கூற்றுப்படி எப்படி இருந்த போதிலும் பெண்களை. அடிமை என்றும் பெண்களுக்கு எந்த நிலையிலும் சுதந்தரம் கொடுப்பது கூடாதென்றும் சொல்லுகின்றவர்களுக்கும் அதை அனுமதிக்கும் மதத்
திற்கும் வேண்டுமானால் சரியான நியாயமாய் இருக்கலாமே யொழிய, ஆனால் பெண்களுக்கு சுதந்தரம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களும்
குடி அரசு - 1980 (1) 126
நம்மைப் போல் மனித ஜன்மம் தான் என்றும் கருதுகின்றவர்களுக்கும் ஒரு
சிறிதும் நியாயமாய் தோன்றாது? மக்களை நரகத்திற்காவது அனுப்பலாமே யொழிய, அடிமையாய் இருக்க விடக் கூடாது என்றுதான் தோன்றும்.
அன்றியும் இந்து மதத்தின் கல்யாண ஒழுங்கு முறை இந்த மார்ச் மீ£1௨ முதல் 31 தேதி வரை நடந்த கல்யாணங்களைப் பார்த்தால் அதிலிருந்தே தெரிந்து கொண்டிருக்கலாம். சாதாரணமாக நமது நாட்டில் மட்டும் ஒரு வருஷ வயதிற்கு கீழ்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத்திரம் நூற்றுக்கணக்கான கல்யாணங்கள் நடந்திருக்கின்றன. மற்றும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9.10 வருஷங் களுக்கு உள்பட்ட கல்யாணங்கள் பல பல ஆயிரங்களாக இருக்கலாம். இவற்றுள் பி. ஏ. பி.எல். எம்.ஏ.எம்.எல். பட்டம் பெற்றவர்களும் இங்கிலாந்து முதலிய மேல் நாடுகளுக்கு யாத்திரை சென்று வந்த சீர்திருத்தவாதிகளும்,
சரீரக் கூற்று அறிந்த டாக்டர்களும், மேடையில் சீர்திருத்தத்தைப் பற்றி பேசு கின்றவர்களும் ஆகிய கூட்டத்தார்களின் வீட்டுக் கலியாணங்களே எண்ணிறந்தனவாயிருக்கின்றன. இவைகளை எல்லாம் பார்க்கும் போது இந்த சட்டம் எவ்வளவு அவசியம் என்பது மக்களுக்கு இப்பொழுதாவது விளங்கி
இருக்கும்.
இந்த மாதிரி நிலைமை நமது நாட்டில் வெகு காலமாய் இருந்து வந்தும், இந்த அக்கிரமங்களைக் கவனித்து இவ்விதமாக ஒரு சட்டம் செய்யப் படுவதற்கு இந்திய அரசியல் வாதிகளாலேயே சுமார் 25 வருஷ காலமாக தடை செய்யப்பட்டு வந்திருக்கும் விஷயம் இந்திய சட்ட சபை நடவடிக்கை. களைக் கவனித்து வந்தவர்களுக்கு நன்றாய் விளங்கும். சிறிது காலமாக நமது நாட்டில் அரசியல் புரட்டுகள் வெளியாக்கி அரசியல் சீர்திருத்த இயல் ஆகிய இயக்கங்களை தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்களின். யோக்கியதையும் சூட்சியையும் வெளியாக்கி இந்நாட்டுக்கு வேண்டியது அரசியலா? அல்லது மதப் புரட்டு பார்ப்பனப் புரட்டு ஆகியவைகள் ஒழிபட வேண்டிய சமூக சீர்திருத்த இயலா? என்பதை பாமர மக்களை நன்றாய் உணரச் செய்த பிறகே பாலிய விவாகத்தை ஒழிக்கும் சாரதா சட்டத்தின் அவசியமும், பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்கும் டாக்டர். முத்து லட்சுமி அம்மாள் சட்டத்தின் அவசியமும் “தீண்டாமை ஒழிக்கவும்” பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கவும், விதவைகளுக்கு சொத்துரிமை கொடுக்கவும் கொண்டு வரப்பட்டிருக்கும் ஜெயகர் முதலியவர்கள் சட்டத்தின் அவசியமும் ஜனங்கள் உணரவும், அவை வெளி வரவும் செல்வாக்கு பெறவும் இடம் கிடைத்து வந்திருக்கின்றன.
ஆனாலும் இவைகளுக்கு பலமான எதிர்ப்புகள் இல்லாமலும் இல்லை.
இருந்தாலும் சீர்திருத்தக்காரர்கள் ஒருவாறு பூரண வெற்றி பெற்று வருகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். எப்படி எனில் சீர்திருத்தக் காரர்கள் 100க்கு 10 விஷயத்தில் வெற்றி பெற்றால் அதுவே பூரண வெற்றி யான 100க்கு 100 பாகம் வெற்றி பெற்றதாகும்.
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஏனெனில் உண்மை சீர்திருத்தக்காரர்கள் எண்ணிக்கை நமது நாட்டில் 1000 -க்கு ஒன்று கூட இருக்க மாட்டார்கள். சீர்திருத்த விரோதிகள் எண்: ணிக்கை பகுதிக்கு மேற்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். மீதியுள்ள பாமர மக்களோ தனக்கும் தெரியாமல், பிறர் சொல்வதையும் அறிய சக்தியற்ற மூடர்களாக வைக்கப் பட்டிருப்பவர்கள். இந்த நிலையில் உள்ள ஒரு நாட்டில்
ஒரு சிறு வெற்றி ஏற்பட்டாலும் அது முழு வெற்றியேயாகும். உதாரணமாக,
சீர்திருத்தங்களுக்கு விறோதமாய் இருந்து, சீர்திருத்தங்களை எதிர்த்து வெற்றி பெற்றவர்களைப் பற்றி வெற்றி மகிழ்ச்சி கூறுகின்ற உணர்ச்சியுள்ள மக்கள். அடியோடு மறைந்து வருகிறார்கள். ஆனால் சீர்திருத்தத்தில் ஒரு சிறு பாகம் வெற்றியானாலும் அதை புகழ்ந்து வெற்றி மகிழ்ச்சி அடைகின்றவர்கள். தாராளமாயும், வெளிப்படையாயும் ஏற்பட்டுவிட்டார்கள்.
இந்த நிலை மிகவும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அடையத் தக்க நிலையாகும். ஆதலால் சீர்திருத்தக்காரர்கள் தங்களது தோல்விக்கும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளுக்கும் சிறிதும் கவலைக் கொள்ளக். கூடாது. ஆனால் வெற்றியில் எவ்வளவு மகிழ்ச்சி அடைவதாய் இருந்தாலும் அதோடு திருப்தியும் அடைந்து விடக்கூடாது என்று சொல்லுவோம். பொட்டு கட்டு மசோதா சென்ற மாதம் சென்னை சட்டசபையில் நிறைவேறி இருக்க. வேண்டியதானது அனாவசியமாய் ஒத்திப் போட நேர்ந்ததானது
விசனிக்கத்தக்கதாகும். ஆனாலும் அடுத்த கூட்டத்திலாவது அது நிறைவேறி விடக்கூடும் என்றே கருதி இருக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.04.1930.
குடி அரசு - 1980 (1) 128
விரதப் புரட்டு
உமாமகேஸ்வரா நூலை விரதம் “றநைமிசாரண்ய வாசிகனைக்க கூத பூராணிகர் சொன்னது
- சித்திரபுத்திரன்
ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப் பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து தனக்கு அந்த பெண்ணை இரண்டாவது பெண்ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்த கிழப் பார்ப்பான் மணக் கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்த பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொருத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை “ந புருடனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளை பெறக் கடவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை “பூர்வ ஜன்ம கருமத்தின் பல னாய் நான் விதவையாகி விட்டதால், தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய் போய் விட்டதே” என்றாள். அதற்கு அந்த ரிஷி “நான் கண் தெரி யாத குருடனானதால் அறியாமல் அந்தப்படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது. ஆனாலும் அது பலிக்கும் படி செய்கிறேன் பார்” என்று சொன்னார். “என் புருஷன் இறந்து வெகு நாளாய் விட்டதே. இனி அது எப்படி பலிக்
கும்”? என்று சாரதா கேள்க்க அதற்கு அவர் “நீ உமாமகேஸ்வர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கை கூடு மென்று” கூறினார்.
“அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி?” என்று சாரதா கேட்டாள். அதற்கு முனி சொல்லுவதாவது:-
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
“சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்கார வைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து மலர்களால் அர்ச்சித்து தினமும் அன்ன ஆகார மிட்டு வருஷக் கணக்காய் பூசை செய்து பார்வதி பரமசிவ உருவத்தை
மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாக்ஷ ரத்தை தியானித்துக்கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும்” என்றார்.
அது கேட்ட சாரதை யானவள் அந்தப் படியே அதுமுதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு முனிவர் சொன்னபடி உமாமகேஸ்வர விரதத்தை கிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதி தேவி சாரதைக்கு பிரத்தியட்சமாகி.“உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டாள்.
சாரதை, “எனக்கு புருஷன் வேண்டும்” என்றாள். பார்வதி “அப்ப டியே உன்னை ஒரு புருஷன் தினமும் வந்து சொற்பனத்தில் புணருவான். அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும்” என்று வரம் கொடுத்தாள். அது முதல் சாரதையின் சொற்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று. அதைக் கண்ட அவ்வூரார் எல்லோரும் சாரதை சோரம் போய் கர்ப்பம் ஆய் விட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புளுவுதிறும்படிபார்வதி செய்து விட்டாள்.
10 மீ£பொருத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள். அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி மகா மகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென்றார்கள். செல்லும் வழியில் சொர்ப்பனத்தில் வந்த புருஷன் நேரில் வந்து சாரதையுடன் கலந்து கொண்:
டான். பிறகு கொஞ்ச காலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுவித்து புருஷன் இறந்து போனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன் கட்டையேறி இருவரும் சிவபத மடைந்தார்கள் என்று நைமி சாரண்யவாசிகளுக்கு சூதக முனிவர் வியாசரிடம் கேட்டுத் தெரிந்ததை சொல்லுகிறேன் என்று சொன்னார்.
இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில் உமாமகேஸ்வர விரத மகிமை
யும் விரதத்தின் பலனும் என்கின்ற தலைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை. கவனிப்போம்.
இந்த கதையின் ஆபாசம் எவ்வளவு மோசாமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப் போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக்
குடி அரசு - 1980 (1) 120
கொடுக்கும் வழக்கமும், பார்ப்பனர்களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்: டாலும் புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேராமல் பெண்ஜாதியான (சாரதை சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமயம் உடன்கட்டையேராமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிக்கு இந்தப்பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும் ஒரு குருட்டு ரிஷி தெரியா
மல் சொல்லிவிட்ட காரியம் ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடிவிடுமா?' அந்தப்படி கூடுமானாலும் பார்ப்பனனையும் அவன் பெண்ஜாதியையும் பார்வதி பரமசிவன் போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்து விடுவா ளா? அப்படிவருவதாயிருந்தாலும் பார்வதி நேரில் புருஷனை கொடுக்காமல் தூக்கத்தின் போது கனவில் வந்து வந்து புணர்ந்து விட்டு போகும்படி கட்டளை யிடுவாளா? அப்படி கட்டளையிடுவதானாலும் கனவில் புணர்ந்ததற்கு கனவில் கற்பமுண்டு பண்ணாமல் விழித்த பிறகுங்கூட அந்தகற்பம் இருக்கும்படி செய்வாளா? அப்படித்தான் செய்தாலும் அதன் காரணத்தை பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து இந்த இரகசியம் தெரியாத பொது ஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைப் பற்றி சந்தேகப்பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும்படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப்பட்டவர்கள் வாய் அழுகிப்புளுவு தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா? அன்றியும் கோகர்ணத்திற்கு போகும் வழியில் அந்த சொர்பனப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும் பொது ஜனங்கள் சந்தேகப்படும் போது வரும்படி செய்திருக்கப்படாதா?' அன்றியும் அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும் முன்னைய கிழப்புருஷனுக்கு உடன் கட்டை ஏராத குமரி சாரதை இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆன பின் உடன் கட்டை ஏறினாள்?
வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப் புரட்டு, புராணப் புரட்டு என்பது போல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதும் சுய நல சூக்ஷி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள். விரதம் என்றால் ஒரு பார்ப்பனனையும் பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன் போல் பாவித்து, அபிஷேகம் பூசை ஆராதனை செய்தால் விதவைகளுக்கு புருஷன் சுவர்ப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை?
இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரத மிருந்து “சொர்ப்பனத்தில்”” புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள். சாரதையைப்போல் அநேக விதவைகள் இப்போதும் கற்பமானாலும் பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல்லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழித்து விடுகின்றார்கள் போலும். பார்ப்பன @ எவ்வளவு மோசமானது
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
என்பதை இதிலிருந்தாவது விரதமிருக்கும் வைதீகர்களும் விரதமிருக்கும் பெண்களும் புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள்.
மற்ற விரதங்களைப்பற்றி பின்னால் சமயம் நேர்ந்தபோது எழுது கிறேன்.
குடி அரசு - கட்டுரை - 06.04.4930
குடி அரசு - 1980 (1) 132
தமிழ் நாட்முல்
2 iy காய்ச்௯௬தல் சத்தியாக்கிரகம்
திரு. காந்தி “கடைசிப்போர்” துவக்கப்பட்டாய் விட்டது. மும்முரமாக. ஆங்காங்கு வேலைகள் நடைபெறுவதாக பத்திரிகைகளில் காணப்படு கின்றன. தொண்டர்களும் வந்து குவிவதாக பத்திரிகைப் பிரசாரங்கள் பக்கம் பக்கமாய் பறக்கின்றன. பத்திரிகைப் பிரசாரங்களை பார்க்கும் வாலிபர்க ளுக்கு ரத்தம் துடிக்கின்றது. அவர்களுக்கு தாமும் போய்ச் சேர்ந்து கொள்ள லாமா என்கின்ற பதட்டம் நாக்கில் தண்ணீர் ஊறுகின்றது, “இந்த போர் சீக்கிரம் அடங்கிப் போகும்” “தோல்வி ஏற்பட்டு விடும்” என்று கருதி இதிலிருந்து விலகியவர்களும் பரிகாசம் செய்தவர்களும் இந்த பத்திரிகை ஆர்ப் பாட்டங்களைப் பார்த்து “ஜெயித்து விடும் போல் இருக்கின்றதே. நமக்கு நோகாமல் கிடைக்கக்கூடிய தேசபக்தன் பட்டமும் தேசீய வீரன் பட்டமும் வீணாய்ப் போய் விடும் போல் இருக்கின்றதே இனி எப்படியாவது உள்ளே.
புகுந்து கொள்ளலாமா” என்று பலர் மன விசாரத்துடன் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில்,
நமக்கும் பல மிரட்டுதல் மொட்டைக் கடிதங்களும் யோசனை கூறும்
நண்பர்கள் கடிதங்களும் வந்த வண்ணமாய் இருக்கின்றன. இந்த இயக்கத்தில் நாம் ஈடுபடாததாலும் அதைப் போற்றியாவது எழுதாமல் இருப்பதாலும் மற்றும் அதைக் கண்டித்து எழுதுவதாலும் இத்துடன் எனது செல்வாக்கு ஒழிந்து சுயமரியாதை இயக்கமே அடக்கிப் போகும் என்றும் நமது எதிரிகள். சந்தோஷப்பட்டுக் கொண்டுமிருக்கின்றனர்.
எப்படி இருந்தாலும் சரி. உப்புக் காய்ச்சும் சட்ட மறுப்பு வெற்றி பெற்று
தெருத் தெருவாய் உப்பு மலை மலையாய்க் குவித்துக் கிடந்தாலும் சரி, அதோடு வெள்ளைக்கார ராஜாங்கமே ஒழிந்து இந்திய “பூரண சுயேச்சை” அடைந்து இங்கிலாந்து தேசமும் நமது கைக்கு வருவதாயிருந்தாலும் சரி. இந்த உப்புக் காய்ச்சும் காரியத்தையோ இது சம்பந்தமான சட்டமறுப்புக் காரியத்தையோ நாம் சிறிதும் ஒப்புக்கொள்ளவே மாட்டோம் என்பதை தைரியமாய்ச் சொல்லுவதோடு இதனால் இந்தியாவுக்கு ஒரு வளைந்து போன
132 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
குண்டு ஊசியளவு நன்மை கூட ஏற்படாது என்றும் கோபுரத்தின் மீதிருந்து கூறுவோம்.
மேலும் இம்மாதிரி வெறும் அர்த்தமற்ற ஆவேசக் கிளர்ச்சி எவ்வளவு வெற்றி பெற்றாலும் பாமர மக்கள் தினம் தினம் பத்திரிகைகளில் எழுச்சியான சேதிகளை படித்து அவ்வப்போது ஆனந்தமடைந்து கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் ஏற்படாது என்று நாம் இப்போது சொல்லுவதை பத்திர
மாய் ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்திருந்து பரீட்சித்து பார்க்கப் பிரார்த் திக்கின்றோம்.
மேலும் இக்கிளர்ச்சியானது வெறும் வாண வேடிக்கை போல் நடக்கும் போது அடையும் மகிழ்ச்சியோடு முடிந்து விடப்போவதுடன் கிளர்ச்சி அடங்கிய பிறகு ஒரு ஆயிரக்கணக்கான தேசபக்தர்கள் புதிதாகவோ அல்லது இரண்டு தரம் மூன்று தரம் சிறை சென்ற தேசீய வீரராகவோ ஏற்பட்டு அடுத்து வரும் தேர்தல்களுக்கு ஏஜண்டுகளாக ஆவதைத் தவிர வேறு எவ்வித பலனையும் அளித்து விட முடியாது.
ஒவ்வொரு சீர்திருத்தம் வரும் போதும் ஏதாவது ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு அதன் பயனை ஒரு சிலர் அடுத்து வரும் தேர்தலில் உபயோகித்துக் கொள்ளுவது இயற்கையாகி இதுவரை நடந்து வந்த சம்பவமுமாகும். அது போலவே இப்போதும் நடப்பதில் ஆச்சரியமில்லை. அன்றியும் பொதுவா கவே நாம் ஒன்று சொல்ல விரும்புகின்றோம், அதனால் பலருக்கு கோபமும் ஆத்திரமும் உண்டாகலாம்.எனினும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. சைமன் கமிஷனை இந்தியா ஒட்டுக்குமே பஹிஷ்க்கரிக்க வேண்டுமென்று கூச்சல் போட்டபோது, நாம் மாத்திரமே தான் அதை எதிர்த்து நமது அபிப்பி ராயத்தை வலியுறுத்தினோம். தென்னாட்டு மக்களை பதினா யிரக்கணக்காக கூட்டி வைத்து மகாநாடு கூட்டி வரவேற்பு தீர்மானமும் செய்தோம். பிறகு எல்லா சட்டசபைகளும் எல்லா சமூக சபைகளும் ஒன்று இரண்டு தவிர மற்ற எல்லா அரசியல் சபைகளும் அதை வரவேற்று உபசாரமும் செய்து தங்கள். குறைகளையும் தேவைகளையும் தெரிவித்துக் கொண்டன. ஆனாலும் அந்த
சமயத்திலும் நமக்கு பல மொட்டைக் கடிதங்கள் மைலாப்பூர் தபாலா
பீசிலிருந்தும் திருவல்லிகேணி தபாலாபீசிலிருந்தும் கும்பகோணம் தபாலா பீசிலிருந்தும் சுட்டு விடுவதாகவும், குத்தி விடுவ தாகவும் கண்டு எழுதி வந்தன.அவற்றில் சில இரத்தத்தினால் கையெழுத்தும் செய்யப்பட்டிருந்தன. அதுபோலவே ஜாதி மதபேத விஷயங்களிலும் பிரவேசித்து நமக்குப் பட்டதை வெளியில் எடுத்துச் சொல்லி வருவதில் பலர் ஆத்திரப்பட்டு கண்டபடி கடிதம் எழுதினார்கள். இப்பொழுதும் அது போலவே தான் பல இதைப் பார்த்து பிரமாதமாய்க் கோபித்து மொட்டைக் கடிதம் எழுதவோ அல்லது உண்மையிலேயே ஏதாவது காரியத்தில் செய்யவோ ஆன காரியங் கள் நடைபெறலாம். அன்றியும் நமது மகாநாட்டிற்கும் சற்று சங்கடம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். எப்படி ஆனாலும் சரி நமக்கு அதைப் பற்றிக்
குடி அரசு - 1980 (1) 134
கவலையில்லை. நமக்குத் தோன்றியதைச் சொல்லிவிட்டு வந்ததை அனுபவிக்கத் தயாராயிருக்கிறோம்.
அதாவது திரு. காந்தியவர்களால் இந்தியா ஒருநாளும் ஒரு நன்மையையும் அடைய முடியாது என்பதே. அவர் காரியமெல்லாம் வாண: வேடிக்கையைத் தவிர வேறொன்றுமே இல்லை என்பது நமது அனுபவ ஆராய்ச்சி முடிவு. உதாரணமாக இந்த 10 ஹகாலமாக இந்திய மக்கள் திரு காந்தியை மகாத்மாவாக - ஏன் அவதாரமாகவும் வணங்கி மரியாதை செய் தார்கள். அவர் கேட்டபடி யெல்லாம் ரூபாய்கள் கொடுத்தார்கள், சொன்னபடி யெல்லாம் கூட்டம் கூட்டமாக கூடி ஜெயில் சென்றார்கள். கதர் முதலிய விஷயங்களில் கண்மூடித் தனமாய் பின்பற்றினார்கள். சர்க்காரும் அவரைக் கண்டு சிறிது அஞ்சினார்கள். இவ்வளவையும் கொண்ட அவரால் இந்தியாவுக்கு இதுவரை ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேள்க்கின்றோம்..
காந்தியார் ஆச்சிரமம் ஒரு பெரிய மடமாயிற்று. அதற்கு ஆதாரமாக 2 லக்ஷம்
3 லக்ஷம் 10 லக்ஷம் என்கின்ற தொகை கொண்ட முதலுடன் ஆங்காங்கு கிளை மடங்கள் ஏற்பட்டது. இவைகளைத் தவிர மற்றபடி திரு. காந்தியார். அரசியல் தலைமை இந்தியாவில் ஏற்பட்டது முதல் இதுவரை ஏற்பட்ட லாபம்: என்ன? என்று மறுபடியும் கேள்க்கின்றோம். இந்த 10 @ முயற்சியில் இந்தியாவின் வரி ஒரு தூசியளவாவது குறைந்த தென்று சொல்ல முடியுமா?
மற்றும் அதற்கு எதிரிடையாக வரி அதிகமாயிற்று என்று நாம் புள்ளிகளுடன் ரூபிப்போம். உத்தியோகங்களோ சம்பளங்களோ குறைந்ததாகவாவது சொல்ல முடியுமா? மேலும் மேலும் அவைகள் ஒன்றுக்கு ஒன்றரையாகவும் இரட்டிப்பாகவும் ஏற்பட்டது என்று நம்மால் சொல்ல முடியும்.
பொருளாதார விஷயத்திலாவது இவரைச் சுற்றித் திரிந்த உத்தியோ கஸ்தர்கள் வக்கீல்களைத் தவிர வேறு பாமர மக்கள் இந்த 10 வருஷத்தில் ஒரு சிறிதும் முற்போக்கடைந்ததாக சொல்வதற்கும் இல்லை. இவைகள் தான் இப்படி என்றால் மற்றப்படி சமூக துறையிலாவது ஏதாவது தக்க பலன் ஏற்பட்டதாக யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்க்கின்றோம். ஒருவித முன்னேற்றமும் ஏற்படா விட்டாலும் இவ்விஷயங்களாகிய அரசியல் பொரு ளாதாரம் சமூகத் துறை ஆகிய மூன்று இனங்களிலும் திரு. காந்தியார் அபிப்பி. ராயமாவது சரியானது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்க் கின்றோம்.
அரசியலில் அவரது கொள்கைகள் எல்லாம் அதாவது பஹிஷ்கார.
மும் சட்ட மறுப்பும் தோல்வி அடைந்து கொண்டே வந்திருக்கின்றது. பொருளாதாரத்திலோ கதர், கதர் என்று கதரிக் கொண்டிருப்பதைத் தவிர. அதனால் பல பேர் அதிக நஷ்டமடைவதன் மூலம் சிலருக்கு தினம் 0 -0 - 6, 0-0-9 பைசா வீதம் அற்பக்கூலி கிடைத்ததைத் தவிர வேறு ஒன்றையுமே காணோம். சமூகத் துறையிலோ வருணாசிரமும் புராணங்களும் காப்பாற்றப்
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
படுவதற்கு ஆதரவளிக்கப் பட்டதைத் தவிர மடங்கள் ஏற்படுத்தப் பட்டதைத் தவிர வேறு ஒரு பலனும் ஏற்பட முடியவில்லை. இந்த நிலையில் 10 வருஷம்: கடந்து 11 வது வருஷத்தில் “நான் இரண்டிலொன்று பார்த்து விடுகின்றேன். இனித் திரும்பி வருவதில்லை” என்று தனது மனசலிப்பு மேலும் தோல்விகளின் மேலும் தவறுதல்களின் மேலும் கோபித்து கொண்டு சண்டி யுத்தத்திற்கு புறப்பட்டிருப்பதானது தற்கொலை செய்து கொள்ளப் போவது போலல்லாமல் வேறு என்ன பலனுக்கு அனுகூலமானதாயிருக்கின்றன.
திரு. காந்தியாரின் 1 நிபந்தனைகளை வெள்ளைக்காரர்கள் சுலபத்தில்
ஒப்புக் கொண்டு விடுவார்களா? ஏதோ ஒரு விதத்திலாவது செல்வாக்கு இருக்கும் ஒருவரை திடீரென்று கைதி செய்தால் வீண் கலாட்டா ஏற்பட்டு விடுமோ என்கின்ற யோசனையின் பேரில் விட்டுப் பார்க்கலாம் என்பதைத் தவிரவும் திரு. காந்தியாரும் தானாகவே ஜெயிலுக்கு போகப் பிரயத்தனப் படுவதால் நாம் அதற்கு அனுகூலம் செய்யலாமா என்கின்ற யோசனையின் பேரிலும் சர்க்கார் சற்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாலும் இருக்
கலாம். அல்லது நாளை மறுநாள் பிடித்தாலும் பிடிக்கலாம். அல்லது விட்டுவைத்துக் கொண்டு அரசாங்கத்தார் ஏதோ பயந்தவர்கள் போல் வேஷம் போட்டு யோக்கியப் பட்டம் பெறலாமா என்று சும்மா இருந்தாலும் இருக்கலாம். இவைகளினாலெல்லாம் இந்த சட்ட மறுப்பும் சத்தியாக்கிரகமும் யாருக்கு என்ன பயன் விளைவித்து விடும் என்பதுதான் இங்கு கவனிக்கத் தக்கதாகும்.
தவிறவும் மற்றொருபுறம் இவ்வளவு பெரிய தேசீயப் போரில் மக மதியர்களையாவது தாழ்த்தப்பட்ட வகுப்பாரையாவது கலந்து ஆலோசிக்கப் பட்டதா? அல்லது இந்து முஸ்லிம் பிரச்சனையைப் பற்றியாவது அல்லது “தீண்டாதார்” “உயர்ந்த ஜாதியார்” என்ற பிரச்சினையைப் பற்றியாவது யோசித்து ஏதாவது பரிகாரமோ சமாதானமோ செய்யப்பட்டதா? ஒன்றுமே இல்லையே! “முஸ்லீம்கள் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்கள் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் சரி, நான் எனது காரியத்தை நடத்தித்தான் தீருவேன் என்று முடிவுகட்டி விட்டார்”. இதனால் முஸ்லீம்கள் திரு. காந்தியும் காங்கிரசும் வகுப்பு வாதிகள் என்றும் ஒரு வகுப்பை மற்றொரு வகுப்பு அடக்கியாள நினைப்பதே தேசீயமாயிருக் கிற தென்றும் உப்பு சத்தியாக்கிரகம் என்பது திரு. காந்தியாரின் சூதாட்டம் என்றும்
அதில் எந்த முஸ்லீமும் ஏமாந்து போய் விழுந்து விட வேண்டாம் என்றும், சில முஸ்லீம்கள் தங்கள் விளம்பரத்திற்கு ஆக அதில் கலந்திருந் தாலும் அது முஸ்லீம் பிரதிநிதித்துவ மாகாதென்றும் உருப்படியான வேலை கள் ஒன்றும் அதில் இல்லை யென்றும் ஆகிய இந்த விபரங்களைக் கண்டு அகில இந்திய சென்ட்ரல் கிலாபத் கமிட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டு
இருக்கின்றது.
குடி அரசு - 1980 (1) 136
இது 8 கோடி முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்களின் அபிப்பிராயமல்லவா என்று கேள்க்கின்றோம். அது போலவே தாழ்த்தப் பட்ட மக்கள் சார்பாக பம்பாய் முதலிய இடத்து தாழ்த்தப்பட்ட மக்கள்.
தங்களுக்கு இருக்கும் இழிவை முதலில் நீக்கிவிட்டு பிறகு சத்தியாக்கிரகம் நடத்தலாம் என்று வழி மறிக்கின்றார்கள். இது 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையானவர்கள் அபிப்பிராயமல்லவா என்று கேள்க் கின்றோம்.
இந்தப்படி14 கோடி மக்களின் சமூக ஆசைகளையும் குறைகளையும் அலட்சியம் செய்து விட்டு “நான் கடைசிப் போர் ஆரம்பித்து விட்டேன், தேசத்தின் மானத்தைக் காப்பாற்ற எல்லோரும் வாருங்கள்” என்றால் பொறுப் புள்ள மக்கள் யாராவது வருவார்களா? மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் சமூக இயல் ஸ்தாபனங்களை யெல்லாம் தூசி போல் அலட்சிய
மாய் மதித்துக் கொண்டு ஒன்றையும் லட்சியம் செய்யாமல் “இரண்டில் ஒன்று
பார்த்து விடுகின்றேன்” என்று சொன்னால் அதை யார் மதிப்பார்கள்? யார்.
அதில் கவலை செலுத்துவார்கள்? ஏதோ ஆவேசத்தில் பலவீனமுள்ள வாலிபர்கள் சிலர் அல்லது பலர் ஒரு 10 நாளைக்குக் கூட இருந்து கூச்சல் போடலாம். இதனால் ஏற்படும் பலன் என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள். பொதுவாக இந்தக் கிளர்ச்சி பாமர மக்களுக்குப் பெருத்த சங்கடத் தையும் நெருக்கடியான நிலைமையையும் கொண்டு வந்து விடப் போகின்ற தென்பதையும் இதனால் இன்னம் ஒரு 10 வருஷத்திற்கு நாட்டின் முன்னேற்
றம் தடைப்பட்டு, நாடு எல்லாத் துறையிலும் பிற்போக்கடைய நேரிடும் என்பதையும் தெரிவித்துத் தீர வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.04.1930
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
[33 ரிய் யோ ரின்
o .
திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் “கடைசிப் போரினால்” இந்தியா
வுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள்: ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம்
எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ரூஜுவு ஏற்பட்டு விட்டது.
அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும்
காந்திப் போரில் மிக்க அக்கரை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.
உப்பு சத்தியாக்கிரகத்திற்கு பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின் வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரால் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல. உப்பு சத்தியாக் கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதீகர்கள் இதுபோல் அநேக காரியங்கள். சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்வித கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும் கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர். கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும். ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசீய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்ப
தற்கு சரியான பதிலாகும். ஆனாலும் இது விஷயத்தில் இது உண்மையா யிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக் கின்றோம். கண்டிக்கின்றோ மென்பது போலி தேசீய வீரர்களைப்போல்
குடி அரசு - 1980 (1) 138
வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகி றோம். உணராமல் சாரதா சட்டத்தை சர்க்கார் திருத்துவார்களேயானால் வைதீகக் கூச்சலுக்குப் பயப்படுவார்களே யானால் அது கடைசிப் போரின்
முதல் பலனாகுமே ஒழிய வைதீகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக் கொள்ள மாட்டோம்.இது மாத்திரமல்லாமல் கடைசிப் போர். முடிவு பெறுவதற்குள் இது போல் இன்னம் அனேகம் கெடுதிகள் ஏற்படப் போவதையும் எதிர்பார்த்து தான் ஆக வேண்டும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.04.1930
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
உதிர்ந்த மலர்கள்
1 நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது.
2 சுயமரியாதை இயக்கமானது வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.
3 சுயராஜ்யம் கேட்பதற்குமுன் அது ஏன் நமக்கு இல்லாமல் போய் விட்டது என்பதை அறிந்தாயா? என்றைக்காவது இந்து அல்லது இந்தியன் என்கின்ற முறையில் நீ சுயராஜியத்துடன் வாழ்ந்திருக்கின்றாயா?'
4.ராமராஜ்யமென்றால் அது இந்துக்கள் ராஜ்யமல்ல. கடவுள் ராஜ்யம் என்று திரு.காந்தி இப்போது புரட்டிக் கொண்டார். ஆனாலும் பரவாயில்லை. அது எந்தக் கடவுள்? அந்தக் கடவுளின் ராஜ்ஜிய தர்மம் எது? அன்றியும் அவர் “என்னுடைய ராமன் வேறு ராமாயண ராமன் வேறு” என்கின்றார். சரி யென்றே வைத்துக் கொள்ளுவோம், ஆனால் அந்த இராமனை அவர்
எங்கிருந்து கண்டு பிடித்தார். ராமாயணத்திலா அல்லது வருணாச்சிரமத்திலா?
5.“தீண்டாமை விலகினால் ஒழிய இந்தியா சுயராஜ்யம் பெற முடியாது. பெறுதவற்கும் அருகதை இல்லை” என்று சொன்ன திரு காந்தியார் இன்று சுயராஜ்யத்திற்கு ஆக உப்புக் காய்ச்சப் போவதின் காரணம் என்ன? தீண்டா மையை விலக்கவா அல்லது அது விலகிவிட்ட தென்று நினைத்தா அல்லது சுயராஜ்யம் பெறவா?
6. ஒரு மனிதன் தனக்கு மோக்ஷத்தில் இடம் பிடிப்பதற்கு ஆக வெகு பேர்களை நரகத்தில் (துக்கத்தில் அழுத்துகிறான்.
7.மாடுகள் தினவெடுத்துக் கொண்டால் உரஞ்சிக் கொள்வதற்கு, தேப்புக்கல் அடித்து நட்டுவைக்கும் இந்து மக்கள் விதவைகளுக்கு என்ன செய்திருக்கின்றார்கள்?'
குடி அரசு - 1980 (1) 140
8.மண மென்பது மணமக்களின் மன மொத்ததேயாகும்.
9.வருணாசிரமத்தையும் பிறவியில் ஜாதியையும் தகப்பன் வேலை யையே மகன் செய்ய வேண்டுமென்னும் வகுப்பு பிரசாரத்தையும் செய்யும் திரு. காந்தியின் தீண்டாமை விலக்கு பிரசாரத்தை விட அரசாங்கத்தின் மது
விலக்குப் பிரசாரம் மோசமானதல்ல..
10. ஒரு குறிப்பிட்டபண்டிதனை விபசாரிமகன் என்று ஒரு காவியம் எழுதி அதில் அவனையே தன் தாயின் விபசார வியாபாரத்திற்கு தரகனாய் வைத்து அருமையான கற்பனைகளைக் கொண்டு பாடியிருந்தால் அந்த பண்டிதன் அந்தக் காவியத்தின் இன்பத்திற்கும் பொருள் சுவைக்கும் கற்பனை அலங்காரத்திற்கும் ஆசைப்பட்டு அக்காவியத்தை படிப்பானா காப்பாற்றுவானா? ஓ கவிச்சுவைக்காரர்களே பதில் சொல்லுங்கள். கம்பராமா யணம் அதில் சேர்ந்ததா அல்லவா?
11. பெரிய புராணமும் ராமாயணமும் பாரதமும் உள்ள வரை ஜாதி
பேதமும் வருணாசிரமமும் ஒழியவே ஒழியாது.
12. சைவமும் வைணவமும் வருணாசிரம மதமே ஒழிய சமரச சமயமல்ல. எப்படி எனில் விபூதி பூசினால் தான் சைவன். நாமம் போட்டால் தான் வைணவன். தீகைஷயும் சமாசனமும் (முத்திரையும்) பெற்றால் தான் உயர்ந்தவன் என்று மேற்படி இரு மதமும் நிபந்தனை கொண்டிருக்கிறது.
13. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன் பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.
14 சுயமரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய் விட்டது.
ஆனால், நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோஷன் போட்டு கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத் தான் சுயமரியாதைக்காரர்கள். செய்கின்றார்கள்.
15.நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திரிதராஷ்டிரனும் பாண்டு
வும் அவர்களின் தகப்பனுக்கு பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும்
கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால் ராமாயணத்தில் ராமன் பிறந் தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின்ற தென்றால் உடனே
கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.
16-மார்ச்சு மாதம் 31 தேதியின் ரயில்வே கைடானது ஏப்ரல் மாதம் -
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்துவிட்டது. ஆனால் நாம் “திரேதாயுகத்”து கெய்டைப் பார்த்து “கலியுகத்தில்” பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.
17. ஒரு திராவிடன் குமிழ் மகன்! பார்ப்பன மதத்தில் இருப்பதைவிட மகமதிய மதத்திலோ கிறிஸ்தவ மதத்திலோ இருப்பது கொஞ்சம் கூட தப்பாகாது.
18. பத்து மாதத்துக் குழந்தையைக் கக்கத்தில் வைத்துச் சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்த்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
19. நம்மைப் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் என்று கூப்பிட்டால் நாம் அவர்களை மிலேச்சர்கள் என்று கூப்பிட்டு வழக்கப்படுத்த வேண்டும்.
20. மேல் நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம் சமூகம் கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.
21. அரசியல் இயக்கம் “முதலில் நாங்கள் இந்தியர்கள் பிறகுதான் பார்ப்பனர்கள், பரையர்கள் என்று பார்க்க வேண்டும்” என்று சொல்லுகின்றது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ முதலில் நாங்கள் மனிதர்கள், பிறகுதான் இந்தியர்கள் அய்ரோப்பியர்கள், என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.
22 வெள்ளைக் காரர்களை ஆதரிக்க இந்தியாவில் சட்டைக் காரர்கள் இருப்பது போலவே, ஆரியர்களை ஆதரிக்க சைவ, வைணவ மதக்காரர்கள் இருக்கிறார்கள்.
23. ஸ்தல புராணங்கள் என்பதெல்லாம் அன்னிய நாட்டு சரித்திரங் களையும் ஆராய்ச்சி சக்திகளையும் அறியும் ஆற்றல் கொண்டதாய் இருக்க வேண்டுமே யொழிய “எவ்வளவு பாபம் செய்தாலும் ஸ்த்தலத்தின் தூசி மேலே பட்டால் மோட்சத்திற்கு போகலாம்” என்பதாக இருக்கக் கூடாது.
24. மேல் நாட்டு வித்துவான்களும் பண்டிதர்களும் புதிய கருத்துக் களையும் புதிய காட்சிகளையும் கண்டு பிடிப்பதில் தங்கள் அறிவைச் செலுத்தி வருகிறார்கள்.இந்தியப் பண்டிதர்களோ, முன் ஒருவன் எழுதி வைத் ததை குருட்டு உருப்போட்டு புதிய தத்துவார்த்தம் கூறுவதிலும், கொங்கை,
குடி அரசு - 1980 (1) 142
அல்குல், துடை, உதடு, கூந்தல் ஆகியவைகளை வர்ணிப்பதுகளிலும் கடவுளைப் பற்றி போராடுவதிலும், கண்ணில் நீர் பெருகப் பாடுவதிலும் கருத்தைச் செலுத்தி வருகிறார்கள்.
25. ஒரே வஸ்துவைத் தலையில் இருக்கும் போது கூந்தல் என்று அழைக்கின்றோம் எண்ணை போட்டு சீவுகின்றோம். வாசனை கட்டுகின்
றோம். ஆனால் அது அந்த இடத்தைவிட்டு நழுவி விட்டால் நேரே அதை குப்பைத் தொட்டியிலேயே கொண்டு போய்ப் போட்டு விடுகின்றோம். அதற்கு தலைக்கும் குப்பைத் தொட்டிக்கும் மத்தியில் ஒரு ராஜியோ சமாதானமோ செய்யத் தகுந்த வேறு இடம் எதுவுமே கிடையாது.
26. இந்தியாவுக்கு ஜனநாயகக் கொள்கை கூடவே கூடாது? ஏனென்
றால் ஜனங்களில் 100க்கு 90 பேர்கள் பாமர (மூட) மக்கள்.100க்கு 97 பேர்கள். “இழி மக்கள்”. இவர்களது நாயகத்துவம் நாட்டைச் சீர்படுத்துமா?
27. ஒரு பார்ப்பான் தன்னை இந்தியா முழுமைக்கும் 33 கோடி
மக்களுக்கும் பிரதிநிதி என்று சொல்லும் போது நான் ஒரு மூலையில் ஒரு வகுப்பாருக்கு பிரதிநிதி என்று சொன்னால் இதில் எவ்வளவு நஷ்டம் வந்து விடும்?
28. மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலத்தைத் தொடு கின்றான் - அதற்காக உடனே குளிப்பதில்லை - சதா றோட்டில் மலம் எச்சில் மூத்திரம் ஆகியவைகளை மிதித்துக் கொண்டு நடக்கிறான். அதற்காக வும் உடனே குளிப்பதில்லை. நதிக்கும் குளத்திற்கும் குளிக்கப் போய் குளித்து விட்டு தண்ணீர் கொண்டுவரும் ஸ்ரீகள் றோட்டில் மலம் எச்சில் மூத்திரம் முதலியவைகளை மிதித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்காகவும் குளிப்ப தில்லை. னால் ஒரு “பறையரையோ” ஒரு “சூத்திரனையோ” தொட்டு விட்டால் - அவன் வேஷ்டி மேலே பட்டு விட்டால் - அவன் தண்ணீர். குழாயிக்கு பக்கத்தில் நின்று தண்ணீர் பிடித்த ஈரத்தை மிதித்து விட்டால், உடனே குளிக்க வேண்டுமென்கிறான். இவனுக்கு சுயராஜியம் வேண்டுமாம்.
29. வீதியில் மல மூத்திரம் எச்சில் மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்கு பிச்சைக்கு வந்த பார்ப்பான், நமது பட்டுப் பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான் - அதை தொட்டால் தீட்டு என்கின்றான்.
30. பூணூல் போட்டதின் கருத்து இன்ன இன்னார் தான் படிக்கத் தகுந்தவர்கள் என்பதை காட்டுவதற்காகவும் “சூத்திரன்” இன்னான் என்று கண்டு பிடிப்பதற்கு ஆகவும் தான். அதனால் தான் மேலே வேஷ்டி போடு வது கூட மரியாதைக் குறை வென்று செய்யப்பட்டிருக்கிறது.
31. பார்ப்பனர்களைத் தவிர மற்றைய பெரும்பாலும் தொழிலாளிகளே'
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பூணூல் போட்டுக் கொண்டிருப்பதின் காரணம் அக்காலத்தில் தொழிலாளிக. ளுக்கு ஏற்பட்ட ஒரு வித சுயமரியாதை உணர்ச்சியேயாகும்.
32. பார்பார்கள் எவன் பெண்ணுக்கோ பொட்டுக் கட்டி சிங்காரித்து கோவிலில் நிறுத்தி ஆள்களைத் தருவித்து கொள்ளை அடிக்கிறார்கள். இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டுமென்றால் இந்து மதம் கெட்டுப் போகுமாம்.
33. இரண்டாயிரம் வருஷமாக இந்திய மக்களுக்கு இருக்கும் இழிவை
யும் அவமானத்தையும் விட உப்புச் சட்டம் அவமானம் என்று ஒரு தேசிய வாதி சொல்வதானது உண்மை அவமானத்தை மறைப்பதற்கு செய்யும்
சூக்ஷியேயாகும்.
34. உப்புச் சட்டம் தேசத்திற்கு பெரிய அவமானம் என்று திரு மாளவியா இப்போது சொல்லுகிறார்.
ஆனால் சூத்திரப் பட்டம் தேசத்திற்கு பெரிய கவுரவமா என்று அவரை வணக்கமாகக் கேட்கின்றோம்.
இந்த நாட்டில் ஒரு “சூத்திரன்” உப்பு சத்தியாக்கிரகம் செய்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்றுமே இல்லை யென்று உறுதியாகச் சொல்லுவேன்.
35. பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருக்கும் அரசர்கள் “மகா விஷ்ணுவின் அவதாரமாவார்கள்”.“சூத்திரர்களுக்கும்”' “பறையர்களுக்கு” அனுகூலமாயிருக்கும் அரசர்கள் இராக்ஷதர்கள், நீச்சர்கள், கெடுங்கோன்மை
காரர்கள், அன்னியர்கள் ஆவார்கள். இதுதான் பார்ப்பன தர்மம்.
36. சீதையின் கற்பு விஷயத்தைப் பற்றி நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கவனிக்காதீர்கள். அந்தம்மாளுடன் நெருங்கிப் பழகிய புருஷ னாகிய “திரிகாலக்கியானி சாக்ஷாத் ஸ்ரீராம பிரானே” என்ன சொல்லி இருக்கி
றார் என்பதைத் தேடிப் பாருங்கள்.
37. ஒருவருடைய எவ்வித அபிப்பிராயத்தையும் மறுப்பதற்கு யாருக்
கும் உரிமை உண்டு.ஆனால் அதை வெளியிடக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.
- ஈவெரா.
குடி அரசு - பொன்மொழிகள் - 13.04.1930
குடி அரசு - 1980 (1) 144.
சங்கீத மகாநா௫
ஈரோட்டில் மே மாதம் 24, 25 முதலிய தேதிகளில் நடக்கும் இரண்டா வது சுயமரியாதை மகாநாட்டின் ஆதரவில் வேறு பல மகாநாடுகளும் நடைபெறும் என்பது நேயர்கள் அறிந்ததாகும். அவற்றுள் சங்கீத மகாநாடு என்பதும் ஒன்றாகும்.
சங்கீத மகாநாடு கூட்டும் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது,
சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையான தென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமூகத்துக்கு அது மிக்க இன்றியமையாத தென்றோ கருதியல்ல. உலகத்தில் மக்களுக்குள்ள அனேகவிதமான உணர்ச்சி தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்பிராயம். உதாரணமாக சங்கீதம் என்பது தேசத்திற்குத் தகுந்த படியும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடியும் அவரவர்களது அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தபடியும் இருப்பதே தவிர, ஒரே சங்கீத முறையானது உலகத்திற்கெல்லாம் பொறுத்த மானதென்று சொல்ல முடியாது. ஒரு நாட்டு சங்கீத உணர்ச்சிக்காரனுக்கு இன்பமாயி ருப்பது மற்றொரு நாட்டு வித்வானுக்கு புரியாததாகவே இருக்கும். மேல் நாட்டு சங்கீத இன்பம் கீழ் நாட்டான் அனுபவிக்க முடியாது. அதுபோலவே, கீழ்நாட்டு சங்கீத இன்பம் மேல் நாட்டானுக்கு இன்பமாக இருக்க முடியாது. ஆனால் பொதுவில் சங்கீதம் என்னும் ஒரு கலை விஷயத்தில் உலக மக்களுக்கெல்லாம் ஒரு வித போக்கிய அனுபவமிருக்கின்றதை மாத்திரம் காணலாம். ஆனாலும் அதை ஒருவர் அதிகமாக அனுபவிக்க ஆசைப் படுவார். மற்றொருவர் அதை சாதாரணமாகக் கருதுவார். எப்படி இருந்தாலும் உலகில் உள்ள பல கலைகளில் அதுவும் ஒன்றாய் இருக்கின்றது.
நம்மைப் பொருத்தவரை நாம் இம்மகாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்ல வென்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றென்னவெனில் சங்கீதத் துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். என்பதற்காகவேதான் சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்த. வேண்டுமென்று கருதி நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும்.
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
எப்படியும் நமது நாட்டில் மற்ற எல்லாத் துரைகளையும் பார்ப்பனர்கள் கைபற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள்ளாக்கி அத்துரையில் மற்ற மக்களைத் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தி வைத்திருக்கிறார்களோ அதுபோலவே
சங்கீதத் துறையும் முழுதும் பார்ப்பனராதிக்கமாகி அதன் மூலம் நமது பொருள்கள் கொள்ளை போவதுடன் அதைக் கொண்டிருக்கும் நமது மக்க
ளின் சுயமரியாதையும் கொள்ளை போயிருக்கின்றது; போய்க் கொண்டும் வருகிறது. உதாரணமாக நமது தமிழ் நாட்டில் சங்கீத விஷயத்தில் தேர்ச்சி யுள்ள பார்ப்பனரல்லாத வித்வான்௧ள் அனேகர் இருக்கிறார்கள். அதிலும் சங்கீத சம்மந்தமான பல கலைகளிலும் தமிழ் நாட்டிற்கே சிறந்தவர்கள் முதன்மையானவர்கள் - இணையில்லாதவர்கள் - என்று சொல்லப்படுபவர். கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களேயாவார்கள். இப்படி இருந்தாலும் இவர்களது வாழ்வும் அந்தஸ்தும் பெரிதும் மிக்க சுயமரியாதை யற்றத் தன்மையாகவே இருந்து வருகின்றது. பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் - அதாவது வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், பிடில்,
நாகசுரம், மிருதங்கம், தவுல் முதலாகிய வாத்தியங்களில் முதன்மையான பார்ப்பனரல்லாத வித்வான்கள் தங்களிலும் எவ்வளவோ கீழ்த்தரப் பார்ப்பன. வித்வான்௧ளால் மிக்க இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். அது மாத்திரமல் லாமல் இதன் பயனாய் பிரபுக்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள் பலரும் கூட பார்ப்பனரல்லாத வித்வான்கள் என்றால் மிக்க இழிவாகவே கருதும் உணர்ச்சியைக் கொண்டு இருக்கின்றார்கள்.
உதாரணமாக சென்ற இரண்டு மூன்று வருஷத்திற்கு முன் நாட்டுக் கோட்டை நகரத்தில் ஒன்றான கானாடுகாத்தானுக்கு நாம் போயிருந்த காலத்தில் தென் இந்தியாவுக்கே முதன்மையான நாகசுர வித்வான் திரு. பொன்னுசாமி அவர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபா கொடுத்து ஒரு பிரபு வீட்டு விஷேசத்திற்கு வாத்தியத்திற்காக வரவழைக்கப்பட்டிருந்தார். அப்படிப்பட்ட அவர் நின்று வாசிக்கும் போது தனது வேர்வையைத் துடைத்துக் கொள்ள ஒரு சிறு வெள்ளைத் துவாலை தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு வாசிக்கத் துடங்கினதும் அவ்வூர் பிரபுக்கள் சிலர் “மேளக்காரன் தோளில் துண்டுப் போட்டுக் கொண்டு வாசிக்கலாமா” என்று குற்றம் சொல்லி வாசிப்பதைத் தடுத்தார்கள். அதற்கு அந்த வித்வான் பதில் சொல்லமாட் டாமல் விழித்தார். அப்போது சமீபத்தில் இருந்த நமது நண்பர் ஒருவர் அவ்வித்வானை நோக்கி “நீங்கள் மேல் துவாலை எடுக்காதீர்கள் அவர்க ளுக்கு கேழ்க்கப் பிரியமில்லாவிட்டால் போய் விடட்டும் அல்லது நீங்களா வது போய் விடுங்கள் ” என்று சொன்னார். சேரமாதேவி குருகுல நிகழ்ச்சி போராட்ட சம்மந்தமாக கானாடு காத்தான் வைசு சண்முகம் வீட்டில் நடந்த கமிட்டி கூட்டத்திற்கு தந்தை பெரியாருடன் சென்றிருந்த பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி அவர்கள் இசை ஆர்வம் காரணமாக மெநிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது அக்கொடுமை கண்டு சகிக்க முடியாது தான் விசிறியால் அக்கலைஞனுக்கு விசிறிவிட்டு தோல் துண்டை எடுக்க வேண்டாம் என்று
குடி அரசு - 1980 (1) 146
உரத்த குரலில் முழங்கினார். இதைக் கேட்ட வீட்டுக்கார பிரபு தனது விஷேச காலத்தில் இந்தப்படி ஒருசம்பவம் நடந்தது, வாத்தியக்காரர் போய் விட்டார். என்கின்ற கெட்டப் பெயர் வருமே என்று பயந்து சீக்கிரத்தில் வாசிப்பை
முடித்துக் கொண்டார். இம்மாதிரியான சம்பவம் அனேக இடங்களில் இன்றும் நடக்கின்றது. மற்றும் பார்ப்பனரல்லாதப் பெண் வித்வான்களா யிருந்தால் உட்கார்ந்து பாடும்போது சபைக்கு ஒவ்வொரு மனிதன் வரும் போதும்
எழுந்து எழுந்து கும்பிட்டு விட்டுத்தான் உட்கார வேண்டியிருக் கிறது. ஆண்: பாட்டுக்கார வித்வான்௧ளோ பிரபுக்களிடம் பேசும்போதும் இடுப்பில் மேல் வேட்டியை எடுத்து சுருட்டிக் கட்டிக் கொண்டும் முழங்காலுக்கு மேல் இடுப்பு வேஷ்டியைக் கட்டிக்கொண்டும் இடக்கையை வலகட்கத்தில் வைத்து வலக் கையால் வாயைப் பொத்தி குனிந்து, “மகா ராஜா”. “எஜமான்”, “ஸ்வாமி”, “சமூகம்” என்று மேல் மரியாதை வைத்து பேச வேண்டியிருக்கின்றது. இப்பிரபுக்களும், இவ்வித்வான்களிடம் பேசும் போது, நீ, அவன், டேய் என்கின்ற ஒருமை அடிமை முறையில் பேசுவதும் வழக்கமாய் இருக்கின்றது. இதே தொழிலிலிருக்கும் பார்ப்பனர்களும் தங்கள் சகோதரத் தொழிலாளிகள் பார்ப்பனரல்லாதவர்களாயிருந்தால் அவர்களிட மும் இப்படியேதான் நீ, அவன், அடே என்கிற வரிசை வைத்து தான் பேசுகிறார்கள். ஒரு இரண்டு மூன்று ஜான் உயரம் உள்ள பையனாயிருக்கும் பார்ப்பன வித்வானும் கூட எட்டரை ஜான் இருக்கும் பார்ப்பனரல்லாத வித்வானை ஒருமையிலேயே
தான் அவன், நீ, அடே என்று பேசுகிறான். அந்த சிறு பைய வித்துவானிடம் இந்த பெரிய வித்துவான்கள் பேசும் போதும் “ஸ்வாமிகள்” என்று மரியாதை வைத்து பேசுகின்றார்கள். நிற்க நமது பிரபுக் கள் என்பவர்கள் பார்ப்பன வித்வான்களிடம் பேசும் போதெல்லாம் மரியா தையாகவே பேசுவதும், தாங்களாகவே முதலில் கும்பிடுவதும் இதற்கு பார்ப் பனர்கள் இடதுகையை தங்கள் இடுப்பிற்கு கீழாகக் காட்டி “ஆசிர்வாதம்” என்று சொல்லுவதுமான காரியங்கள் தினமும் நடந்து வருகின்றது. ஆனால் சதுர் முதலிய கச்சேரி களில் தாசிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களை ஆட்டு விப்பவராயிருந்தாலும் தாளம் போடுகிறவராயிருந்தாலும் அல்லது அப் பெண்களுக்கு மாமாக்களாய் கூட இருப்பவர்களாய் இருந்தா லும் அவர்: களைக் கண்டால் நமது பிரபுக்கள் கும்பிடுவதும் சுவாமிகளே என்று கூப்பிடு
வதும் ஆன காரியங்கள் முக்கியமாக எல்லா கிராமந்திரப் பிரபுக்களிடமும் இன்னமும் பார்க்கலாம். இவைகள் ஒருபுறமிருக்க பார்ப்பன பிரபுக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கும் சடங்குகளுக்கும் மேளம் வாசிப்பதற்குத் தவிர மற்றபடி சபைக்கச்சேரிகளுக்கு பாடவோ, கதைகள் செய்யவோ கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களை கூப்பிடுகின்ற வழக்கமே ஒரு சிறிதும் இல்லை. அதுமாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் பாடுவ தையோ கதை செய்வதையோ புராணம், உபன்யாசம் முதலியவை செய்வதையோ பார்ப்பனர்கள் கேள்ப்பது மத சம்பரதாயப்படி தோஷம் என்றே கருதி இருக்கிறார்கள். ஏனெனில் “சூத்திரன் வாக்கை கேள்க்கக் கூடாதாம்.”
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
அன்றியும் பார்ப்பன பக்க வாத்தியக்காரர்களில் அனேகர் பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதையும் இழிவாய் கருதுகிறார்கள். பார்ப்பனரல்லாத பக்கவாத்தியக்காரர்கள் கூட ஒரு பார்ப்பனச் சிறு வித்து வானுக்கு வாசிப்பதை பெருமையாய் கருதுகின்றார்களேயொழிய பார்ப்பன ரல்லாத வித்வான்களுக்கு வாசிப்பதைக் கவுரவக் குறைவாகவே கருதுகின்
றார்கள். அன்றியும் ஒரு பார்ப்பனச் சிறுவன் பாடினாலும், கருவி களால் வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு “பலே” “பலே” “பேஷ்” “பேஷ்” என்று கைத்தட்டுவதும் தலையை ஆட்டுவதும் மெய் மறந்தது போல் கண்கள் மேலே சொருகும்படி வேஷம் போடுவதும் அதை ஒன்றுக்கு இரண்டாக விளம்பரம் செய்து அவனுக்கு பிரக்யாதி சம்பாதித்துக் கொடுப்பதிலும் அதிக கவலையாய் இருக்கிறார்கள்.
ஆனால் பார்ப்பனரல்லாத வித்வான்களாயிருந்தால் அவர்கள் எவ்வளவு பெரிய வித்துவான்களாயிருந்தாலும் வேண்டுமென்றே கட்டை சாரீரம்” என்பதும், “கணக்கு போராது', என்பதும், “மேல் ஸ்தாயில் சுகப் படாது” என்பதும் மற்றும் ஏதேதோ பொருத்தமற்றவைகளைச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வது எங்கும் வழக்கமாக இருக்கின்றது.
இவைகளை நாம் சுமார் 40 வருஷத்திற்கு மேல்பட்ட நமது பிரத்தி யக்ஷ அனுபவத்தில் கண்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே நாம் சங்கீத மகாநாட்டில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதின் முதல் காரணம் சங்கீத ஞானத்திற்கு ஆகவோ சங்கீத கலை வளர்ச்சிக்கு ஆகவோ மாத்திரம் அல்ல என்றும் மேல்கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லா
தார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விறோதமாயிருக்கும் கொடு மையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
இதை உத்தேசித்தே சில சங்கீத சம்மந்தமான சபைகளில் நாம் பேச நேர்ந்த போது கூட சங்கீதத்தில் இச்சை வைத்ததிற்காகவும் சங்கீதத்தை தொழிலாகக் கொண்டதற்கு ஆகவும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத் திற்காக இவ்வளவு கேவலமாயும் இழிவாயும் நடத்தப்படுவதாயிருந்தால்
சங்கீதக் கலையே அடியோடு அழிந்து போவதே மேல் என்றும் அதனால் யாருக்காவது ஜீவனத்திற்கு கேடு வருமானால் அப்படிப்பட்டவர்கள். இச்சங்கீதத்திற்கு “கருமாதி” செய்துவிட்டு றோட்டில் கல் உடைத்து வயிறு வளப்பதே மேல் என்றும் அத்தொழிலும் ஜீவனமும் சங்கீதத்தை விட கவுரவமும் மேன்மையுமான வேலை என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.
ஆகவே சமீபத்தில் ஈரோட்டில் நடக்கும் சங்கீத மகாநாட்டில் மற்ற சங்கீத மகாநாடுகளைப் போல் சங்கீத சாஸ்திரம் என்பதைப்பற்றி பேசியே
குடி அரசு - 1980 (1) 148
காலம் போக்காமல் சங்கீதத்தை கைக்கொண்ட பார்ப்பனரல்லாத மக்களு டைய சுயமரியாதையை காப்பாற்றும் விஷயத்திலும் அதிகமான கவனம் செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நிற்க இன் றய தினம் தமிழ் நாட்டில் சங்கீத விஷயத்தில் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல்,
பிடில், மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம், கடம், கொன்னக்கோல், நாகசுரம் முதலிய அனேகம் துறைகளில் நிகரில்லாதவர்களும் மிக்க விற்பத்தி பெற்ற வர்களுமாக சுமார் 400, 500 பேர்கள் வரையில் பார்ப்பனரல்லாதார்களில் இருந்தும் அவர்களைப் பற்றிய பெயர்கள் கூட அனேகருக்குத் தெரிய முடியாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றது. அவர்களில் சிலரின் பெயர்களையும் திரு. ராமசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த லிஸ்டுப்படி மற்றொரு பக்கத்தில் காணலாம்.மற்றப் பெயர்களும் பின்னால் வெளிவரும். இந்த சமயத்தில் நாம் இந்த வித்துவான் எல்லோரையும் அவசியம் இம்மகாநாட்டுக்கு வரும்படி இதன் மூலம் அழைக்கின்றோம். அவர்களில் அனேகர் அவசியம் வரவும் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். அனேக விதமான சிறோன்மணிகள் வருவதாகவும் வந்து பாடவும் வாசிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நாம் மனப் பூர்த்தியான நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்வதோடு பொது ஜனங்களிலும் சங்கீத கலை
யிலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் பெருந்திரளாகக் கூடி வந்து இம்மகாநாட்டைச் சிறப்பிக்கச் செய்து அதை கைக்கொண்ட பார்ப்பன ரல்லாத மக்களுக்கு மேன்மையும் சுயமரியாதையும் ஏற்படுவதற்கு உதவி யாய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.04.1930
* சேரமாதேவி குருகுல நிகழ்ச்சி போராட்ட சம்மந்தமாக கானாடு காத்தான் வைசு சண்முகம் வீட்டில் நடந்த கமிட்டிக் கூட்டத்தில் தந்தை பெரியாருடன். சென்றிருந்த பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்கள் இசை ஆர்வம் காரணமாக ழை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது அக் கொடுமை கண்டு சகிக்க முடியாது தான் விசிரியால் அக்கலைஞனுக்கு விசிரிவிட்டு தோல் துண்டை எடுக்க வேண்டாம் என்று உரத்த குரவில் முழங்கினார்.
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
புதியமுறை விணாகம்
உலகத்தில் விவாகம் செய்து கொள்ளுவதில் ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமான முறைகள் பார்த்து விவாகம் செய்து கொள்ளுவது வழக்கமாய் இருந்து வருகின்றதே ஒழிய எல்லா நாட்டிலும் எல்லா மதத்திலும் ஒரேவிதமான சொந்தங்களை கையாளுவதில்லை என்பது யாவரும் அறிந்த
தூகும்.
உதாரணமாக மகமதியர்களுக்குள்ளும் ஐரோப்பிய கிரிஸ்தவர்: களுக்குள்ளும் தங்கள் தகப்பனுடன் பிறந்த சகோதரர்களான சிறிய தகப் பனார் பெரிய தகப்பனார் பெண்களை விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. இந்துக்கள் என்பவர்களில் தகப்பனுடன் பிறந்த சகோதரி. களான அத்தை பெண்களையும், தனது சகோதரி பெண்களையும், தனது தாயுடன் பிறந்த மாமன் சிறிய தாயார் பெரிய தாயார் பெண்களையும் விவாகம். செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு.சையாம் தேசத்தில் தன்னுடன் கூடப் பிறந்த சொந்த தங்கையை விவாகம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு.
அந்த தேசத்தில் வேறு யார் செய்து கொண்டலும் செய்து கொள்ளா விட்டாலும் அந்த நாட்டு அரசன் கண்டிப்பாய் தனது தங்கையைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இது ஆரிய முறைப்படி அரசானா யிருப்பவன் அவசியம் செய்து கொள்ளவேண்டும் என்கின்ற பழக்கம்
இன்றும் அங்கு இருந்து வருகின்றது. சையாம் நாட்டு அரசர்களுக்கு அநேக மாய் முதலாவது ராமன் இரண்டாவது ராமன் என்றே பெயர் இடுவது வழக்கம். இப்போதய ராஜாவுக்கு நாலாவது ராமன் என்று பெயர்.
சையாம் நாட்டு பெளத்த ராமாயணத்தில் ராமன் தனது தங்கையாகிய சீதையை கல்யாணம் செய்து கொண்டான் என்றே கண்டிருக்கின்றது. திரு.சீனிவாசய்யங்கார் எழுதி இருக்கும் பால ராமாயணம் என்றும் புத்தகத்
தில் இந்த சரித்திரம் காணலாம். ஆனால் இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் இவ்விஷயம் மிகவும் தோஷமாய் கருதப்பட்டு வரும் விஷயம் யாவரும் அறிந்ததாகும். என்றாலும் பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடும் மலையா ளத்தில் இந்துக்கள் என்பவர்களுக்குள்ளும் சிறிய தகப்பனார் பெண்களை. பெரிய தகப்பனார் குமாரர்கள் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கம் உண்டு
குடி அரசு - 1980 (1) 150
என்பது சமீபத்தில் நடந்த ஒரு நாயர் சமூக விவாகத்தில தெரிய வருகின்றது.
அதாவது:- சென்னை அரசாங்க நிர்வாக சபை லா மெம்பர் உயர்திரு திவான்பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் அவர்களின் குமாரர் திரு. பி.அச்சுத மேனன் ஐ.சி.எஸ். அவர்கள் தனது சிறிய தகப்பனாரான தஞ்சை ஜில்லா போலீசு சூப்பிரண்டெண்டு திருவாளர் யம். கோவிந்த நாயர் அவர்கள்.
குமாரத்தி திருமதி பத்மினி அம்மாளை விவாகம் செய்து கொண்டிருக்கிறார். அவர்களின் உருவப் படமும் பிரசுரித்திருக்கின்றோம்.
ஆகவே சொந்தம், முறை, பந்துத்துவம் என்பவைகள் எல்லாம்
அந்தந்த நாட்டுப் பழக்க வழக்க மென்பதைப் பொருத்தே அல்லாமல் கடவுள் கட்டளை என்றோ அல்லது வேதகட்டளை சாஸ்திரக் கட்டளை என்றோ சொல்வதெல்லாம் அறியாமை அல்லது புரட்டு என்கின்ற இரண்டில் ஒன்றே தவிர வேறில்லை. இது இப்படி இருக்க அத்தை பிள்ளையையும் அக்காள். பிள்ளையையும் சிறிய தாயார் பிள்ளையையும் கட்டிக்கொள்ளுகின்ற இந்துக் களைப் பார்த்து கிருஸ்தவர்களும் மகமதியர்களும் பரிகாசம் செய்வதும் சித்தப்பன் பிள்ளையையும் சொந்தச் சகோதரியையும் கலியாணம் செய்து கொள்ளும் கிருஸ்தவர் மகமதியர் சையாம் அரசர் ஆகியவர்களை இந்துக்
கள் பார்த்து பரிகாசம் செய்வதும் கிணத்துத் தவளை குணமே யொழிய வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
குடி அரசு - கட்டுரை - 27.04.1930
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இதறாவது ஆண்டு
நமது “ குடிஅரசு” ஐந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது.
“குடிஅரசு” தான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கையில் இருந்து
சிறிதும் பின் வாங்காமலும் விருப்பு, வெருப்புக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமலும் ஏதோ தன்னால் கூடிய தொண்டை மனப் பூர்வமாய் செய்து கொண்டு வந்திருக்கின்றது. அன்றியும் குடி அரசானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரை மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்று வந்ததுடன் நாளுக்கு நாள் முற்போக்கடைந்தும் வந்திருக்கின்றது.
இவ்வாறாவது ஆண்டும் அந்தப்படி முடியும் என்கின்ற விஷயத்தில் நமக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில் அது இனிச் செய்யக் கருதி
இருக்கும் தொண்டானது கொஞ்ச காலத்திற்கு பாமர மக்களிடம் நமக்குள்ள. செல்வாக்கையும் பணக்காரர்கள் பண்டிதர்கள் பெரிய அதிகாரிகள் பதவியா ளர்கள் என்பவர்களிடம் நமக்கு உள்ள செல்வாக்கையும் இழக்க நேரிடு வதுடன் “குடி அரசை” இது வரை ஆதரித்து வந்தவர்களாக காணப்பட்ட வர்களின் எதிர்ப்பையும் அனுபவிக்க வேண்டிய நிலையைக் கொண்டு வந்துவிடும் என்றே நினைக்கிறோம். அதாவது நாம் சென்னைக்கு போகும் போது ஒரு தலையங்கத்தில் தெரிவித்தது போல “குடி அரசு” பார்ப்பனர் களை வைது அவர்கள் செல்வாக்கை ஒழித்து பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களைப் பிடுங்கிப் பார்ப்பனரல்லாதார் வசம் ஒப்புவிக்க மாத்திரம் ஏற்பட்டதல்ல என்றும் பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற வர்கள் எல்லோரையும் வெளியாக்கி மத இயலில் உள்ள மூடநம்பிக்கையை ஒழிக்க முயற்சிப்பது போலவே அரசியல், உத்தியோக இயல், பொருளாதார இயல், சமூக இயல், பத்திரிகை இயல், பண்டித இயல், வைத்திய இயல், பணக்கார இயல், பார்ப்பனரல்லாதார் இயக்க இயல் என்பன முதலாகியவை களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் புறட்டுகளையும் வெளியாக்கி அவைகளையும் ஒழிக்க வேண்டிய வேலைகளை மேற்போட்டுக் கொள்ளும் போது இவ்வளவு இயல்களின் எதிர்ப்பும் நமக்கு மிக்க கஷ்டத்தை கொடுத்து
தான் தீரும்.சிற்சில சமயங்களில் அவ்வெதிர்ப்புகளை சமாளிக்க நமக்கு சக்தி
குடி அரசு - 1980 (1) 152
இல்லாமல் போனாலும் போகலாம். அதனால் பத்திரிகை முற்போக்கும் செல்வாக்கும் சற்று, ஏன்? அதிகமாகவும் குறைந்தாலும் குறையலாம்.
ஆன போதிலும் அவைகள் இந்நாட்டிற்கு அதிலும் பார்ப்பன ஆதிக்கம் குறைந்த இந்த சந்தர்ப்பத்திற்கு முக்கியமாய் தேவையானதாய் இருப்பதால் நமது செல்வாக்கையும் பத்திரிகை முன்னேற்றத்தையும் பிரதானமாய்க் கருதாமல் மக்களின் மூட நம்பிக்கைகளையும் சுயநலக்காரர்: களின் புறட்டுகளால் மக்கள் ஏமாறுவதையும் ஒழிப்பதையே பிரதானமாய்க்
கருதி அதில் இறங்கித் தீர வேண்டியவர்களாயிருக்கின்றோம்.
ஏனெனில் நாம் காங்கிரசிலிருந்து தொண்டாற்றிய காலத்தில் நம்முடன் கூட உழைத்து வந்த திருவாளர்கள் வரதராஜுலு, ராஜகோபாலாச்சாரியார்,
திரு. வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களிடம் இருந்து நாம் பிரிந்ததும் அவர்களோடு அபிப்பிராய பேதங்கொண்டு சண்டை போட்டதும் எதற்காக? மற்றும் நாம் தலைவராய்க் கொண்டு கண் மூடித்தனமாய் பின்பற்றி வந்த திரு. காந்தியாரையும் கண்டித்து வருவது எதற்காக?
சொந்த விரோதத்திற்காகவா? அல்லது சொந்த சுய நலத்திற்காகவா? என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மைக் காரணம் விளங்காமல் போகாது. அவர்களது கொள்கை பிடிக்கவில்லை. அவர்களது தொண்டு நாட்டிற்கு நலந்தருவதல்லவென்கின்ற காரணங்களையே முக்கிய ஆதாரங்களாய் வைத்து அவர்களோடு போராடி அவர்களிடம் நமக்கு காணப்படும் குறைகளை வெளிப்படுத்தி வந்தோம். இன்றும் வருகின்றோம். அதே போல் இப்போது சுயமரியாதை இயக்கத்தின் பேராலோ ஜஸ்டிஸ் கட்சியின் பேராலோ சீர்திருத்தத்தின் பேராலோ நம்முடன் உழைத்து வந்தவர்களின் அபிப்பிராய பேதத்தையும் அவர்களது கொள்கைகளால் நாட்டின் நலத் திற்கோ நமது தொண்டிற்கோ விபரீதம் ஏற்படும் என்கின்ற நிலை தோன்றும் போது அவர்களுடன் போராட வேண்டியது நமது கடனாகி விட்டது. ஆகையால் இந்த ஆறாவது ஆண்டு பலருக்கு இன்பத்தை கொடுக்காத
தானாலும் நமது உண்மை நண்பர்களுக்கு பூரண திருப்தியையே அளிக்கும் என்கின்ற நம்பிக்கையின் மீது இறங்கி விட்டோம்.
குடி அரசு - தலையங்கம் - 04.05.4930
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கேட்டால் கேளுங்கன்
கேட்காவிட்டால் போங்கன்
இந்திய நாட்டில் இது சமயம் தேச விடுதலையின் பேரால் ஒரு குழப்பம் ஏற்பட்டு, அதனால் எங்கு பார்த்தாலும் கலவரமும் அடிதடியும் சிறைவாசமும் உயிர்ச்சேதமும் நடந்து வருவதாகத் தெரிகின்றது. பொது மக்களுக்குள்ளாகவும் பலருக்கு ஒரு வித உணர்ச்சி தோன்றி இக்குழப்பத்தில் கலந்து கொள்ள வேண்டியது பெரிய தேசாபிமானம் என்றும், இதனால் தங்களுக்கு பிற்காலத்தில் ஏதோ ஒரு பெரிய லாபமும், கீர்த்தியும் ஏற்படும் என்றும் கருதப்பட்டு வருகின்றது. இந்த நிலைக்கு பொதுவாக டாக்டர் சுப்பராயன் அவர்கள் சென்ற வருஷம் செங்கல்பட்டு முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் சொன்னது போல், அதாவது “மக்கள் மத விஷயத்
தில் பெரிதும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தப் பட்டிருப்பதால் அது போலவே அரசியலிலும் ஆராய்ச்சியில்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் கண்மூடித் தனமாய் நடந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்” என்று சொன்னதும், மற்றும் சமீபத்தில் ஸ்ரீமதி பெசண்டம்மையும் “இந்தியர் களுக்குள் இருந்து வரும் மூட நம்பிக்கையின் பலனே இக்குழப்பத்திற்கு காரணமாயிருக்கின்றது” என்று சொன்னதும் மிகவும் பொருத்தமானதாகும்.
ஏனெனில் இந்தியர்களில் அதாவது இப்போதைய குழப்பத்தில் கலந்து கொண்டிருக்கும் மக்களிலும் இக்குழப்பத்தை ஆதரிக்கும் மக்களிலும் 1000க்கு ஒன்று இரண்டு பேருக்காவது இப்போது நடைபெற்று வரும் குழப்பத்திற்கு ஆஸ்பதமான தேசீயத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதற்காகவென்று செய்யப்படும் உப்புக் காய்ச்சுவதைப் பற்றியோ ஏதாவது தெரியுமா என்று கவனித்துப் பார்த்தால் அதாவது எப்படி பார்ப்பனர்கள் மோட்சம் என்றும் சொர்க்கம் என்றும் பாவ விமோசன மென்றும் சொல்லுவதை நம்பி அதற்காக அவர்கள் சொல்லுகின்றபடி யெல்லாம் கேட்டு கண்மூடித் தனமாய் நடப்பதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களை செலவு செய்வதுமான காரியத்தில் மக்கள் நாசமடைவதும் சகஜமாயிருக்கிறதோ அதே போல் “தேச பக்தி” “தேசீய விடுதலை” என்கின்ற பேரால் மக்கள் பாழாகின்றார்கள் என்பது தெரியவரும்.
குடி அரசு - 1980 (1) 154
அன்றியும் யாராவது இம்மூடக் காரியங்களை வெளியாக்கி தடுத்துச் சொன்னால் எப்படி மதவிஷயத்தில் கண்மூடித்தனமாய் நடப்பதை எடுத்துச் சொல்லுகின்றவர்கள் நாஸ்திகர்களென்று குற்றம் சாற்றப்படுகிறார்களோ அதே போல் தேசீய விஷயத்தில் உள்ள மூடநம்பிக்கையை எடுத்துக் காட்டு கின்றவர்கள் தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டப்படுகின்றார்கள். ஆகவே இவற்றிற்கு முக்கிய காரணம் மேல் சொல்லப்பட்டது போல் நமது மக்களின் மூடநம்பிக்கையும் குருட்டு பக்தியுமேயாகும்.
பார்ப்பனர்களுக்கு கொடுப்பதற்கும் மோட்சத்திற்கும் எப்படி சம்பந்த மிருக்கக் கூடும்? என்கின்ற விஷயத்தை ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தா னானால் உப்புக்காய்ச்சுவதற்கும் தேச விடுதலைக்கும் எப்படி சம்பந்த மிருக்கக் கூடும்? என்பதும் மோக்ஷம், சொர்க்கம் என்பது என்ன என்று அதன் புறட்டுகளை சற்று யோசித்து பார்ப்பார்களேயானால் அவருக்கு தேசீயம் சுயராஜ்ஜியம் என்பதின் புறட்டுகள் என்ன என்பதும் சுலபத்தில் விளங்கிவிடும்.
எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய் யவோ ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் இக் குழப்பத்
திற்கும் காரணமாயிருக்கிறது.
ஆகவே நமது நாட்டில் ஏதாவது ஒரு துறையில் மூட நம்பிக்கைக்கு அனுமதியும் அதை காப்பாற்ற நிர்ப்பந்தமும் இருக்கும் வரை இம்மாதிரி, குழப்பநிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு தான் வரும். அதற்காக விசனப் படுவதில் யாதொரு பலனும் உண்டாகப் போவதில்லை. மேலும்,
தட்டிச் சொல்லுபவர்கள் மீது கோபமும் ஆத்திரமும் பாமர மக்க ளுக்கு உண்டாய்க் கொண்டு தான் வரும். ஆகவே அக்கோபத்திற்
கும் ஆத்திரத்திற்கும் ஆளாகத் துணிந்தவர்கள்தான் தட்டிச் சொல்ல யோக்கியமுடையவர்களாவார்கள். மற்றவர்கள் பயந்து கொண்டு கூட்டத்தில் கோவிந்தா போட வேண்டியவர்களாகவேதான் இருப்பார்கள்.
ஏனெனில் மதத்தின் பேரால் நடைபெரும் காரியங்களால் எப்படி ஒரு கூட்டத்திற்கு வயிறு வளர்க்க வசதி ஏற்பட்டு அவ்வசதியை நிலைநிறுத்திக் கொள்ள அக்கூட்டத்தார் மதத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களாகி விட்டார். களோ அது போலவே “தேசீயத்தின்” பேரால் ஏற்படும் காரியங்களால் மாத்திரம் வயிறு வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நமது நாட்டில் ஒரு
கூட்டம் ஏற்பட்டு விட்டபடியால் அக்கூட்டத்தார் “தேசீயத்தை” காப்பாற்ற வேண்டிய அவசியமுடையவர்களாகி விட்டார்கள்.
வயிறு வளர்ப்பை உத்தேசித்து மோட்சத்தில் நம்பிக்கை உண்டாகும்
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
படி பிரசாரம் செய்வது போலவே வயிறு வளர்ப்பை உத்தேசித்து “தேசீயத்
தில்” நம்பிக்கை உண்டாகும்படி பிரசாரம் செய்ய வேண்டியது அவர்களுக்கு அவசியமாகிவிட்டது. எனவே இவ்விரு துறையிலும் உள்ள மூடநம்பிக்கை களை அடியோடு அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது தான் இது சமயம் இந்நாட்டிற்கு மிகவும் அவசியமான காரியமாகும். ஆதலால் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்னும் துறையில் கவலை கொண்ட நாம் பாமர மக்களுடன் கூடிக் கொண்டு கூட்டத்தில் கோவிந்தா போட முடியாத நிலையில் இருக்கின்றதுடன் மூட நம்பிக்கையால் ஏற்படும் பலனை விளக்கவேண்டியவறாகவும் இருக்கின்றோம்.
சுமார் 10, 12 வருஷங்களுக்கு முன்பு இதைப் போல் ஒரு குழப்பம் இந்த “மகாத்மா” வினாலேயே பஞ்சாப்பில் ஏற்படுத்தப்பட்டது. பிறகு அது ஒத்துழையாமையாக மாறிற்று. அது இப்போதிருக்கும் குழப்பத்தை விட எத்த னையோ மடங்கு அதிகமாக இந்தியா நாடு முழுவதிலும் குழப்பம் ஏற்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அடி, உதை, உயிர்ச்சேதம் ஆகியவை களால் துன்பப்பட்டார்கள். பதினாயிரக் கணக்கான மக்கள் சிறை வாசம் செய் தார்கள். கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாயின. இவைகளால் ஏற்பட்ட பலன் என்ன? செத்தவர்கள் “வீர சுவர்க்கம்” புகுந்தார்கள் என்று சொல்லப் பட்டது. சிறை சென்றவர்கள் பெரிய பெரிய “தேசீய வாதி”களானார்கள்.
பணம் கொடுத்தவர்கள் “தேச பக்தர்களானார்கள்”. இதில் கலந்து மேடையில் நின்று பேசிய வக்கீல்களும் டாக்டர்களும் “தேசீய வாதி” களாகி
முன்னிலும் அதிகமான பணம் வரும்படி உடையவர்களானார்கள்.
“தலைவர்கள் என்பவர்கள் அசைக்க முடியாத மகாத்மாக்கள்” ஆனார்கள். தங்களுக்கென்று ஆச்சிரமங்களும், மடங்களும் ஏற்படுத்திக் கொண்டார்கள். மற்றபடி பொது ஜனங்களுக்கு இதனால் ஏற்பட்ட நன்மை என்னவென்று கேட்கின்றோம்?
மேல் கண்டபடி பஞ்சாபில் ஏற்பட்ட குழப்பத்தால் குழந்தைகளும் நிரபராதிகளும் கொல்லப்பட்டதைத் தவிர, பெண்கள் மானபங்கம் செய்யப் பட்டதைத் தவிர, பல இடங்களில் ராணுவச் சட்டம் அமுல் நடத்தப்பட் டதுடன் பாமர மக்களுக்கு வரி அதிகப்படுத்தப்பட்டது. பார்ப்பனர்களுக்கும் அவர்களை பின்பற்றின பார்ப்பனரல்லாதவர்களுக்கும் பெரிய பெரிய உத்தியோகங்கள் கற்பிக்கப்பட்டது. அதற்காக ஆயிரக் கணக்கான ரூபாய்கள் சம்பளமாக உயர்த்தப்பட்டது.
இவைகளைத் தவிர வேறு என்ன நடந்தது?
1920 ஹி த்தில் பிராட்வே 8ம் நெம்பர் கட்டிடத்தில் திரு. காந்தியாரை: ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது:-
குடி அரசு - 1980 (1) 156
“பஞ்சாப் அக்கிரமத்திற்கும் கிலாபத் அநீதிக்கும் ஒத்துழையாமை நடத்த வேண்டும் என்று சொல்லுகிறீர்களே அரசாங்கத்தார் பஞ்சாப் அக்கிரமத்திற்காக இனி ஒன்றும் செய்ய முடியாது. ஏதோ சிறிது ஜட்ஜ்மெண்ட்
தவறிவிட்டதால் இப்படி நேர்ந்து விட்டது. ஆதலால் மறந்து விடுங்கள் என்று சர்க்கார் தரப்பில் சொல்லிவிட்டார்கள், கிலாபத் விஷயத்திலோ துருக்கி யிலேயே ஒரு வித சமாதானம் ஏற்பட்டு துருக்கி அரசரே உடன்படிக்கையில் கையெழுத்து செய்து விட்டார். மற்றபடி ஒரு சமயம் சுயராஜ்ஜியத்திற்காக ஒத்துழையாமை என்று சொல்லுவீர்களேயானால், அதற்காகவும் சர்க்கார் ஒரு சீர்திருத்தம் வழங்கிவிட்டார்கள். தாங்களும் அதை நடத்திக் காட்டவேண்டும் என்று ஏற்றுக் கொண்டு விட்டீர்கள். இனி எதற்காக ஒத்துழையாமை ? ” என்று கேட்டார், அதற்கு திரு காந்தியார் சொன்ன பதில் என்ன வென்றால் “இந்திய
மக்களின் சுயமரியாதைக்காக ஒத்துழையாமை செய்ய வேண்டியிருக் கின்றது” என்று பதில் சொன்னார்.
ஆகவே மேற்படி ஒத்துழையாமை நடத்தியதின் பலனாக காந்தியார் அபிப்பிராயப்படி இந்தியாவுக்கு ஏற்பட்ட சுயமரியாதை எவ்வளவு என்று இப்போதே கேட்கின்றோம். ஒத்துழையாமையின் பலனாக ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்திற்கு உண்டான பலன் எவ்வளவு? என்று கேட்கின்றோம்
மற்றும் தீண்டாமை ஒழியாமல், ஜாதி மத வித்தியாச உயர்வு தாழ்வு ஒழியாமல், சுரராஜியம் அடைய முடியாதென்றும், அதைப் பெற நினைப்பது கூட முட்டாள் தனமென்றும், இதே திரு. காந்தியார் பேசியதின் எதிரொலி
இன்னமும் அடங்கவில்லை. எழுதியதின் இங்கி இன்னமும் காயவில்லை... அப்படி இருக்க இப்போது சுயராஜ்யம் பெற உப்புக் காச்சுவதும் சர்க்கார். சட்டத்தையும் மீறுவதும் எதற்கு என்று மறுபடியும் கேட்கின்றோம்?
சட்டம் மீற வேண்டும் என்று சொல்லி மக்களை ஏவி விட்டு விட்டு “இது சட்டத்திற்கு விரோதம்” “அது நீதிக்கு விரோதம்” என்று பேசுவது எதற்கு என்றும் கேட்கின்றோம்?
“மக்கள் மண்டை உடைபட வேண்டும்”, “மக்கள் உயிர் சுட்டுக் கொல் லப்பட வேண்டும்”, “இந்த சர்க்காருக்கு என்னை பிடிக்க சக்தியில்லை”, “கை. முறிக்கப்படும் வரை விடாதீர்கள்”, “ஆங்காங்கு என்ன என்ன சட்டம் மீறக் கூடுமோ அதையெல்லாம் மீற வேண்டியது தான்” என்பவையெல்லாம் பேசி மக்களுக்கு போதையை உண்டாக்கி விட்டு மக்களையும் கண்மூடித்தனமாய் கண் கொண்டமாடு போல் நடந்து கொள்ளச் செய்துமாய் விட்டது. இதனால் பலர் சிறை சென்றாய் விட்டது. இனியும் பலர் செல்லக்கூடும். பலர் உயிர். மாய்ந்தாய் விட்டது. இனியும் பலர் மாளக் கூடும். அடக்கு முறை சட்டங்கள் கிளம்பிவிட்டது. ராணுவச் சட்டம் முதலிய கொடுமைகளின் நிழல் தெரி கின்றது. மற்றும் பொது ஜனங்களின் சொத்துக்கள் உயிர்கள் பெண்டு பிள்ளைகள் காப்பாரற்று பரிபோகவும் கூடும் போல் தெரிகின்றது.
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பாளி? என்ன பரிகாரம்?
ஒரு புரத்தில் “சுயராஜ்யம் பெற என்னமாவது செய்து சட்டம் மீற வேண்டியதுதான் என் கடமை” என்று திரு. காந்தி சொல்லவும், மற்றொரு
புறம் “மக்களைக் காப்பாற்ற நீதியையும் சமாதானத்தையும் நிலைநிருத்த எப்படியாவது சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியது தான் எமது கடமை” என்று அரசாங்கம் சொல்லவும், இருவரின் பலமும் ஒன்றோடொன்று முட்டிக் கொள்ளும் போது நிரபராதிகளும், யோசனையற்ற பாமர ஜனங்களும், கஷ்டப்படுவதுவான சத்தியாக்கிரகமா? என்று கேட்கின்றோம். இருவருக்கும் ஆள் கூட்டமும் பணப் பொழக்கமும் தாராளமாயிருக்கின்றது..
பாமர மக்கள் இருவரையும் நம்புகிறார்கள்.
ஒரு புறம் “அரசாங்கத்தை ஒழித்து விட்டால் நமக்கு வரியே போய்
விடும். வேண்டிய சாமான்களை கடைகளிலிருந்து சும்மா அள்ளிக் கொண்டு வந்து சாப்பிடலாம். நம்மை யார் கேட்கப் போகிறார்கள்” என்று அநேகர் நம்புகிறார்கள்.
மற்றொரு புறம் “அரசாங்கம் போய் விட்டால் நமது கதி என்ன ஆகும்? பிறகு கையில் வலுத்தவன் காரியம் தானே? மதக் கொடுமை ஜாதிக் கொடுமை காலிகள் கொடுமை ஏமாற்றுக்காரர்கள் கொடுமை ஆகியவை களிலிருந்து எப்படி மீளுவது?” என்றும் அநேகர் கருதுகின்றார்கள். இன்றைய குழப்பத்தில் இவைகளுக்கெல்லாம் என்ன பரிகாரம் இருக்கிறது? என்று தான் கேட்கின்றோம்.
ஏழைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றுவதில் யார் கெட்டிக் காரர்கள் என்பதில் தான் தேசீய போராட்டமும் சர்க்கார் சமாளிப்பும் இருக் கின்றதே ஒழிய நாணையமும் யோக்கியப் பொறுப்பும் சற்றாவது இவைகளில் தென்படுகின்றதா என்பது நமக்கு விளங்கவில்லை.
சென்ற வருஷத்தில் நமது நாட்டில் ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங் களிலாவது இப்போது நமது நாட்டில் பல இடங்களில் நடந்து வரும் தொழி
லாளர் போராட்டங்களிலாவது இந்த தேசிய வீரர்களுக்கோ தேசியத் தலைவர்: களுக்கோ எவ்வளவு கவலை இருந்தது - இருக்கின்றது? நமது நாட்டு தொழி லாளர்களை காட்டிக் கொடுத்து அவர்கள் போராட்டத்தை அழித்தவர்கள்.
யார்?
ஜாதி உயர்வு தாழ்வு கொடுமைக்கு தேசீய வீரர்கள் என்ன செய் தார்கள்? அதை ஒழிக்க தலைவர்கள் என்ன உதவி புரிந்தார்கள்?
கஞ்சிக்கு இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவதையும், ஜாதிக் கொடுமை
யால் இழிவு படுத்தி கொடுமைப் படுத்தப்படுவதையும் விட இந்த “சுயராஜ்ஜி
குடி அரசு - 1980 (1) 158
யம்” எந்த விதத்தில் மேலானது? யாருக்கு வேண்டியது?
தொழிலாளர் போராட்டத்தையும் ஜாதிக் கொடுமை போராட்டத் தையும் கண்டு ஒளிந்து கொண்ட கோழைகள் சுயராஜ்ஜியத்திற்கு சாதிக்கப் போகின்றோமென்றால் இவர்களை மடையர்கள் தானே நம்புவார்கள்.
உப்பு போராட்டத்திற்கு ஓடி ஓடி மீட்டிங்கி போடும் வக்கீல்கள், டாக்டர்கள் பார்ப்பனர்! ஏழைகள் கொடுமைக்கும் ஜாதிக் கொடுமைக்கும் என்ன செய்தவர்களாயிருப்பார்கள்?'
அல்லது இவர்கள் காங்கிரஸ் கட்டளையில் எந்த பாகத்தை காரியத்தில் ஏற்றுக்கொண்டு நடந்தவர்களாயிருப்பார்கள்: அல்லது இவர்கள். வரும்படியில் எந்த பாகத்தை கொடுத்து உதவினவர்களாயிருப்பார்கள்?' வருணாச்சிரமத் தலைவரான உயர் திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் தலைமை:
வகித்துத் தேசீயத்திற்கு அனுதாபம் காட்டியிருந்தால் அந்த தேசீயம் எவ்வளவு நாணையமானதாயிருக்க முடியும்?
இன்றைய போராட்டத்தில் தமிழ் நாட்டில் தலைமை வகித்து நடத்து கின்றவர்கள் யார்? எல்லோரும் பார்ப்பனர்கள் அல்லவா? அவர்கள் இந்த போராட்டம் உண்மையில் ஏழைகளுக்கு நன்மையாயும் ஜாதிக் கொடுமை ஒழியக் கூடியதாயும் இருந்தால், இதில் கலந்து கொண்டிருப்பார்களா?' அறிவுள்ள மக்களுக்கு இது விளங்க வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
நமது மக்கள் நிலை மற்றவர்களை விட நமக்கு நன்றாய்த் தெரியும்.
கழுத்தில் ருத்திராட்சமோ துளசி மணியோ கட்டிக் கொண்டு சாம்ப லையோ நாமத்தையோ பூசிக் கொண்டு வருகின்றவர்கள் காலிலெல்லாம் விழுகின்றவர்கள் தானே ஒழிய வேறில்லை. அதிலும் சென்னையில் இருப்பவர்களோ இந்த விஷயத்தில் மிகவும் மோசமானவர்கள். ஒரு கிழவி மஞ்சள் நூலை மொத்தமாக கழுத்தில் போட்டுக் கொண்டு ஒரு முரத்தை
ஏந்திக் கொண்டு ஆ! ஊ!! மாரியாயீ!! என்று கத்தினால் காலுக்கு தண்ணீர். ஊற்றி தேங்காய் பழம் உடைத்து வைத்து கற்பூரம் பற்ற வைத்து விழுந்து கும்பிட்டு வாக்கு கேட்கும் புத்திசாலிகளேயாவார்கள். இந்த அறிவு தானே இவர்களது மற்ற வாழ்விலும் பரிணமிக்க முடியும், இவர்களே இப்படியானால்
மற்றும் நமது கிராமவாசிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
ஆகவே இன்றையதினம் நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் பாமர மக்களின் அறியாமையின் பலனாலும் மூட நம்பிக்கையின் பலனாலுமே ஒழிய ஒரு சிறிதும் நாட்டின் நலத்தை உத்தேசித்தல்ல வென்றே
நாம் துணிந்து கூறுகின்றோம். இதிலீடுபட்டு கஷ்டமனுபவிப்பவர்களிடம் நமக்கு அனுதாபமிருக்கின்றது, அவர்கள் கஷ்டங்களைப் பற்றி கேள்க்கும்
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
போதும் பார்க்கும் போதும் துக்கம் உண்டாகின்றது. ஆனால் இதற்காக நாம் என்ன செய்ய முடியும்? இமயமலை பனியால் குளிரால் விரைத்துப் போகின்றது வாஸ்தவமாய் இருக்கலாம்.ஆனால் அதற்கு நம்மால் போர்வை போட்டு மூடி குப்பை செத்தைகள் அரித்து குளிர் காய வைக்க முடியுமா என்று கேட்கின்றோம். எலியை பூனை பிடித்து சாப்பிடும் போது மனம் பதறுகின்றது. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அதனதன் இயற்கைப் பலனை அது அது அடைந்துதான் ஆக வேண்டும். அதிலும் “எல்லாம் ஆண்டவன் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது” என்று கற்பித்து மக்கள் அறிவைக் கெடுத்து முயற்சியைக் கெடுத்து வந்த ஞானோப
தேசத்தின் பலனை இந்த தேசம் அடையாமல் செய்ய யாராலும் முடியவே
முடியாது.
கடைசியாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு பார்ப்பனரல் லாதான் என்கின்ற முறையில் ஒன்று கூறிவிட்டு இதை முடிக்கின்றோம்.
சகோதரர்களே!
இந்திய நாட்டில் சமூக வாழ்வில் நமது நிலை என்ன? நமக்கு சுய ராஜியம் ஒரு கேடா? அதாவது பிறவியில் நாம் “சூத்திரர்களாய்” இழி மக்களாய்க் கருதப்படுகின்றவர்களல்லவா? புனிதமான ஸ்தானங்கள் என்ப வைகளில் நாம் செல்லக் கூடாதவர்களல்லவா? நம்மால் பார்க்கப்படும் ஆகா ரமும் தொடப்படும் தண்ணீரும் தோஷமடைகின்றதல்லவா? நாம் தீண்டப் படாதவர்கள் அல்லவா? ஒவ்வொரு ஓட்டலிலும் வெளியில் நிற்க வேண்டியவர்களல்லவா? அயோக்கிய மனிதனை சுவாமி! என்று கூப்பிட வேண்டியவர்களல்லவா? நம் பின்னால் கோடிக்கணக்கான சகோதரர்கள் தெருவில் நடக்கவும் அருகில் வரவும் யோக்கியதை அற்றவர்களாக நம்மா
லும் கருதப்படுகிறார்களா இல்லையா? நமது நாட்டில் நமது சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலேயே 100க்கு 3 பேர் உள்ள ஜனத் தொகையினரால் இந்த கொடுமை இழைக்கப்படுவதைச் சகித்துக் கொண்டி ருக்கின்றோம். இந்த இழிவுக்கு நாம் இதுவரை என்ன செய்தோம்? செய்யத் துணிந்தோம்? இவர்களால் செய்யப்பட்ட சட்டத்தில் இருக்கும் இழிவை யாவது புராண புஸ்தகங்களில் இருக்கும் இழிவையாவது நீக்கிக் கொண்: டோமா? வாழ்வில் வழக்கத்தில் இருக்கும் இழிவையாவது நீக்கிக் கொண்: டோமா? இந்த ஈன நிலையில் நாம் இருந்து கொண்டும் நம்மை ஈனப் படுத்தினவர்களையே சாமி! சாமி! யென்று கூப்பிட்டுக் கொண்டும் இருக்கும். படி வைக்கப்பட்டிருக்கும் நமக்கு உப்புச் சட்டம் மீறுவது ஒரு கேடா? அதற்காக சத்தியாக்கிரகம் செய்வது ஒரு கேடா? சகோதரர்களே நாயினும். கேடாய் மலத்தினும் கேடாய் புழுத்த புழுவினும் கேடாய் சமூக வாழ்வில் தினமும் அனுபவித்து வரும் இழிவைப் பொருத்துக் கொண்டு ஒருவன் சுயமரியாதைக்காக நாட்டின் விடுதலைக்காக உப்புக் காய்ச்சுகிறேன், உப்புச்
குடி அரசு - 1980 (1) 160
சட்டம் மீறுகிறேன் என்று சொன்னால் அவனிடம் நாணையமாவது யோக்கியப் பொறுப்பாவது அறிவுடைமையாவது இருக்க முடியுமா? சமூக வாழ்வில் நமது நிலையை நினைத்துப் பார்த்த சுயமரியாதை உள்ளவர்கள்.
உப்புக் காய்ச்சப் போக முடியுமா? அதை நினைக்கவாவது நேரமிருக்குமா? இன்றைய தினம் தமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சும் வேலையிலும் உப்புச் சட்டத்தை மீறும் வேலையிலும் பார்ப்பனர்கள் இவ்வளவு மும்முரமாய் கலந்திருப்பதின் இரகசியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். பணம் வசூல் பண்ணும் காரணம் என்ன என்று யோசித்துப் பாருங்கள்.இந்த நாட்டு மக்களுக்கு “சூத்திரர்களுக்கு” தங்கள் சமூக வாழ்வில் உள்ள இழிவும் மனிதத் தன்மையற்ற நிலையும் ஞாபகத்திற்கு வராமலிருக்கட்டும் என்றும் வேறு யாராவது ஞாபகத்திற்கு கொண்டு வர முயற்சித்தாலும் அம்முயற்சி அழிக்கப்படட்டும் என்று கருதி செய்த சூகஷியல்லவா இது?
ஆகவே இதுசமயம் நாம் கண்டிப்பாய் சொல்லுவது என்ன வென்றால் இப்போது நமக்கு மோக்ஷமோ சுயராஜ்ஜியமோ கண்டிப்பாய்த் தேவை யில்லை. இவை இரண்டும் ஏமாற்றுத் தன்மையுடையதான புறட்டும் சூக்ஷி எண்ணங்களும் கொண்டு கற்பித்த அர்த்தமற்ற வார்த்தையாகும்! அர்த்தமற்ற வார்த்தையாகும்! அர்த்தமற்ற வார்த்தையாகும்! அதில் கவலை செலுத்துவது நமது அறிவற்றத் தன்மையும் சுயமரியாதையற்ற தன்மையுமாகும் என்பதே
யாகும்.
ஆகையால் இதைக் கேட்டால் கேளுங்கள் கேள்க்காவிட்டால் போங்
கள். கேட்காமற் போனதற்காக வருந்தும் காலம் ஒன்று வரும் என்கின்ற நம்பிக்கை நமக்குண்டு.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.05.1930
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
திரு. சி.ராஜகோபாலாச்சாரியார் சட்டத்தை மீறினாரென்று அரஸ்ட் செய்யப்பட்டு 6-மாத வெருங்காவல் தண்டனையும் 200 ரூ.அபராதமும் அடைந்தார். சிறைக்குப் போகும் போது தமது தலைமைஸ்த்தானத்தை வெகு ஜாக்கிரதையாக திரு.சந்தானஅய்யங்காரிடமே ஒப்புவித்து விட்டுப் போயி ருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் “திரு ஆச்சாரியர் சிறைசெல்லநேர்ந்தால் தான் அந்த ஸ்தானத்தை ஏற்று நடத்துகிறேன்” என்று ஒப்புக்கொண்டிருந்தும் கூட அவரிடம் தலைமை ஸ்த்தானத்தை ஒப்புவிக்காமல் ஒரு அய்யங்காரி டமே ஒப்புவித்து விட்டுப் போனது மிகவும் சாமர்த்தியமேயாகும்.
ஒத்துழையாமை காலத்திலும் கூட திரு. ஆச்சாரியார் தனது தலைமை:
ஸ்த்தானம் காலி செய்ய நேர்ந்தபோதெல்லாம் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரி டமோ திரு. ராஜனிடமோ தான் ஒப்புவிப்பதில் கவலையாகவே இருந்தவர்.
ஆதலால் இப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்தது பாராட்டத்
தக்கதே,
குடி அரசு - செய்தி விளக்கம் - 04.05.4930
குடி அரசு - 1980 (1) 162
செண்ணையில் நிரபராதிகள் வகால்லப்யட்டணர்
திரு.காந்தியின் உப்பு சத்தியாக்கிரக குழப்பத்தின் பயனால் பல நிரபராதிகள் போலீசாரால் அடிபட்டும், சுடப்பட்டும் கஷ்டப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் நாம்மிக்க துக்கத்துடன் அநுதாபப்படுகின்றோம். இம்மாதிரியான சம்பவங்களில் சர்க்கார் தங்களுடைய புத்திசாலித்தனத்தை
உபயோகித்துத் தக்க பொருப்பு எடுத்து நிரபராதிகளுக்குத் துன்பம் நேராமல் படிக்கு இயக்கத்தைச் சமாளிக்காமல் வெரும் துப்பாக்கி பலத்தையும், தடிப்பலத்தையும் கொண்டே அடக்க நினைத்ததானது கவலையற்ற தன்மை
என்பதும், கடமையைச் சரியாய் உணராத தன்மை யென்பதும் நமது அபிப்பிராயம்.
இச்சம்பவத்திற்கு தேசீயவாதிகள் சர்க்காரை கண்டபடி வைது விடுவதினாலேயே பரிகாரம் தேடிவிட்டவர்களாகி பெரிய பெரிய தேசீய வாதிகளாகி விடலாம். சர்க்காராரும் சட்டத்தையும் அமைதியையும் காப் பாற்றுவதற்கு இதைவிட வேறு மார்க்கங்கள் பயன்படாமல் போய்விட்டது என்று சொல்வதினாலேயே “சர்வ வல்லமையுள்ள” அரசாங்கத்தாராகி
விடலாம்.
இந்த இரண்டினாலும் கஷ்டப்பட்ட- மாண்ட- பரிகொடுத்த நிரபராதி களான மக்களுக்கு என்ன சமாதானம் ஏற்படும் என்று கேட்கின்றோம்?
அரசியல் சாமார்த்தியம் இல்லாமல் இம்மாதிரியாக நிரபராதிகள் கஷ்டப்படும்படி தடியையும். துப்பாக்கியையும் உபயோகிப்பதின் மூலமே சட்டத்தையும் சமாதானத்தையும் காப்பாற்றுவது இன்றைய அதாவது 20வது நூற்றாண்டின் அரசியல் முறையானால்- அதிலும் நாகரிகம் பெற்று முன்னணி
யில் நிற்கும் மக்களின் அரசாட்சி முறையானால் மனுராஜ்யத்தையும், ராமராஜ்யத்தையும், கூன்பாண்டியன் ராஜ்யத்தையும் நாம் எப்படி குற்றம் சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்காரார் இதற்கு என்ன
தான் சமாதானம் சொல்லுவதானாலும் தங்கள் கடமையைச் சரியான படி சரியான காலத்தில் செலுத்தவில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
குடி அரசு - செய்தி விமர்சனம் - 04.05.1930
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
உதிர்ந்த மலர்கள்
1.பரம், ஆத்மார்த்தம், விதி, அல்லது கடவுள் செயல்- என்று சொல்லப்
படும் இம்மூன்றையும் அழிக்க தைரியமும் சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள்.
ராஜ வாழ்த்தும் கடவுள் வாழ்த்தும் மனிதனின் அடிமைத்தனத்திற்கு அஸ்திவாரக் கல் நடுவதாகும்.
2. திரு. காந்தியவர்கள் தனது சத்தியாக்கிரகம் தோல்வியுற்றால் “இந் தியா விடுதலை பெற கடவுளுக்கு விருப்பமில்லை போல் இருக்கின் றது” என்று ஒரு வார்த்தையில் ஜனங்களுக்கு சமாதானம் சொல்லி விடுவார். அல் லது உண்மையில் அப்படியே அவர் நினைத்தாலும் நினைப்பார்.
3. தொட்டதெற்கெல்லாம் கடவுள் செயல் கடவுள் செயல் என்று சமா தானம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணரா
தவர்கள் அல்லது தங்கள் தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.
4. எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப் பட்டாய் விட்டது. அவைகள் ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாய் விட்டது. குரங்குப் பிடியாய் இவற்றைப்
பிடித்துக் கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண் வேலையாகும்.மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய் கொண்டேயிருக் கிறார்கள்.
மண்ணையும் சாம்பலையும் குலைத்து பூசுவதே சமயமாய் விட்டது.
5. பார்ப்பானுக்கும், பாளாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.
கூடா ஒழுக்கங்களும், அண்டப் புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளைத் திருப்பித்திருப்பிப் படிப்பதே காலட் சேபமாகி விட்டது.
ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக்குள்ள
குடி அரசு - 1980 (1) 164
கவலையே அடியோடு போய் விட்டது.
வலிவுள்ளவன் வலிவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சியாய் விட்டது.
பணக்காரன் யேழைகளை அடிமைப் படுத்துவதே முறையாய் விட்டது.
தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே வழக்கமாய் விட்டது.
அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப்படுத்துவதே நீதியாகி விட்டது.
வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திர சாலியாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே
இல்லாமல் போய்விட்டது.
இவைகளை சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
இதனால் கலகம் உண்டாகுமானால் அதற்காகப் பின் வாங்க வேண்டுமா?
திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலேயே இறங்கி இருக்கின்றோம். மானங் கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை.
- ஈவெரா.
குடி அரசு - துணுக்குகள் - 04.05.1930
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சிவகாமி - சிதம்பாணார் இருமண அழைப்பு
திருவாளர் தமிழ்ப்பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்ப கோணம் திரு. குப்புசாமிபிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர்கட்கும் 5-5-30 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திரு. ஈ.வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுயமரியாதை மகா நாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.
திருமதி ஈ. வெ. ரா. நாகம்மாளவர்கள் திருமண வைபவத்தை நடத்தி
வைப்பார்கள்.
- ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - அழைப்பிதழ் - 04.05.4930
குடி அரசு - 1980 (1) 166
திரு. காந்தியார்
திரு. காந்தி அவர்கள் சர்க்காரால் பந்தோபஸ்த்தில் வைக்கப்பட்டு
விட்டார்கள். இதனால் திரு. காந்தி ஏமாற்றமடைந்தாரே தவிர எவ்விதத்திலும் திருப்தி அடைந்தார் என்று சொல்லமுடியாது. ஏனெனில் தான் உப்பு சட்டம் மீறுவது என்று கிளம்பியவுடன் தன்னை சர்க்கார் கைது செய்து விடுவார்கள். என்றும் இதனால் சர்க்காருக்கு ஏதோ பிரமாதமான கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்றும் கருதி வெளிக் கிளம்பினார். ஆனால் சர்க்காருக்கு இந்த விஷயம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டபடியால் அந்தப்படி செய்து விடாமல் திரு. காந்தியாரை அவரது இஷ்டப்படி செய்ய விட்டு, அவரது கொள்கைகளாலும் செய்கைகளாலும் ஏற்படும் பலன்களை உலகம் அறியும்படிசெய்து தாங்கள் செய்யப்போகும் காரியத்திற்கு நியாயமும் தேடிக் கொண்டு பிறகு வெகு சாதாரணமாய் பிடித்து பந்தோபஸ்த்தில் வைத்து விட்டார்கள். “காந்தியைப் பிடிப்பார்கள்” “காந்தியைப் பிடிப்பார்கள்” என்று பொது ஜனங்கள் பிரமாதமாய்க் கருதி எதிர் பார்த்துக் கொண்டிருந்த காலத்தி லெல்லாம் பேசாமல் அசரப் போட்டு விட்டு பொசுக்கென்று பிடித்ததாலும், அவரைப் பிடிக்கு முன்பு ஆங்காங்கு பல கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்த சமயமாயிருந்ததாலும் திரு. காந்தியைப் பிடித்தது அவ்வளவு பெரிய உணர்ச்சி ஏற்படத்தக்க காரியமாய் இல்லாமல் போய் விட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமென்னவென்றால் திரு. காந்தி 1921-ல் அஹிம்சா தர்ம மந்திரத்துடன் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து அதனால் பல பல கலகங்களும் உயிர் சேதங்களும் கஷ்ட நஷ்டங்களும் மக்களுக்கு ஏற்பட்டு, அதை சமாளிக்க முடியாமல் திடீரென்று சத்தியாக்கிரகத்தை நிறுத்தி “தோல்வியடைந்து விட்டேன்” என்று அவராலேயே ஒப்புக் கொள்ளப்பட்டு
இருந்தும், இந்த அனுபவத்தை வேண்டுமென்றே புரக்கணித்து விட்டு மறு படியும் அதே காரியத்தைச் செய்து அதே பலனை அடைவது என்பது சிறிதும் பாராட்டக் கூடிய காரியமாகாது. ஆனாலும் அவரைப் பொருத்தவரையில் அவருக்கு ஒரு ஓய்வு ஏற்பட்டு விட்டது என்பதைப் பொருத்தவரையில் அவரைப் பாராட்ட வேண்டியதேயாகும்.
நிற்க, திரு. காந்தியார் பந்தோபஸ்த்தில் வைக்கப்பட்ட பிறகும் கூட சில இடத்தில் குழப்பமேற்பட்டு உயிர்ச் சேதங்களும் பொருள் நஷ்டங்களும்
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஏற்பட்ட சேதியைக் கேள்விப்படும் போது இம்மாதிரியான காரியங்களில் திரு. காந்தியாருக்கு பங்கு இல்லை என்று சொல்லிவிட முடியாதென்றே சொல்லுவோம். இச்சம்பவங்களில் பொது ஜனங்கள் மீது குற்றம் சொல்ல நமக்கு சிறிதும் மனம் வரவில்லை. ஏனெனில் பொது ஜனங்கள் 1000க்கு 990 பேர்கள் பாமர மக்கள், தங்கள் செய்கைகளின் பலன்களில் சிறிதும் ஞானமில் லாதவர்கள். இதை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதேயாகும். ஆகவே இப்படிப்பட்டவர்கள் காரியத்திற்கு அவர்களையே பொருப்பாளிகளாக்குவது
சிறிதும் நியாயமாகாது. அவர்களை நடத்துகின்றவர்களே பொருப்பாளிகளா வார்கள். சர்க்காரின் மீதே முழு குற்றமும் சொல்லுவதும் போதிய சமாதானம் ஆகிவிடாது. ஏனெனில் சர்க்கார் புதிதாக ஒன்றும் செய்து விடவில்லை. இதற்கு முன் இப்பேர்ப்பட்ட கலவரங்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்ன செய்து வந்தார்களோ அதையே தான் இப்போதும் செய்து இருக்கிறார்கள். இது மாதிரி சந்தர்ப்பங்களில் இனியும் இதையேதான் செய்வார்கள். ஏனெனில் அவர்களது “மிருக பலத்தினிடமும்” “அசுர பலத்தினிடமும்” திரு. “காந்தியின் அஹிம்சா தர்ம” பலம் தலைகாட்ட முடியவில்லை என்பது நிதர்சனமாகி விட்டது.
ஆகவே திரு. காந்தியாரின் ஓய்வுக்காகவும் அவரது தோல்விகளும் தவறுதல்களும் மறைபடுவதற்காகவும் பாமர மக்கள் பலி கொடுக்கப்பட் டார்கள் என்பதைத் தவிர இச்சம்பவங்களுக்கு வேறு பெயர் கொடுக்க நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
தவிர, சர்க்காரால் சட்டம் மீறுகின்றவர்களை எல்லாம் கைதி செய்யா
மல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால் சர்க்காருக்கு அதிகமாக “தேச பக்தர்களை” உண்டாக்கிவிட இஷ்டமில்லை என்பது ஒன்று. மற்றொன்று என்ன வென்றால் முன் போல் இல்லாமல் இப்போது தண்டிக்கப்படுகின்றவர்களுக்கு ஜெயிலில் சற்று செளகரியம் முன்னிலும் அதிகமாய் செய்து கொடுக்க வேண்டியிருக்கின்றதாகும். இந்த இரண்டு காரியங்களுக்காகவேதான் தொண்டர்களை அடித்தோ விரட்டியோ துரத்தி விடுகின்றார்கள் என்று கருதுகின்றோம். எது எப்படி இருந்தாலும் தொட்ட தற்கெல்லாம் அடிப்பது, சுட்டு வீழ்த்தி பயமுறுத்துவது என்பது போன்ற காரியங்களை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. நம்மைப் பொருத்த வரை சட்டம் மீறுவது என்பது குற்றமான காரியம் என்பதாக நாம் கருத வில்லை. நமது சுயமரியாதைக்கு விறோதமான காரியங்களுக்கு சட்டம் மீற வேண்டியதுதான், அடிபட வேண்டியதுதான், உயிர் மாள வேண்டியது தான், அதை அடக்க சர்க்கார் தன்னால் ஆனதைப் பார்க்க வேண்டியது தான். ஆனால் இந்த கடைசி ஆயுதம் வீணாய்ப் போகும்படி அனாவசியமாய் பொருப்பற்ற தன்மையில் உபயோகப்படுத்தக் கூடாதென்பதே தான் நமது அபிப்பிராயம். இப்போது நடந்து கொண்டிருக்கும் சுயமரியாதை மகாநாட்டில்
மனிதத் தன்மையை மனிதன் பெருவதற்காக அதாவது வழி நடை பாத்தியம்,
குடி அரசு - 1980 (1) 168
தண்ணீர் பாத்தியம் முதலியவை பெறுவதற்கு என்று ஒரு தீர்மானம் செய்து
அதற்கு ஒரு கமிட்டியும் போட்டு 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு சத்தியாக் கிரகம் துடங்க வேண்டும் என்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகின்றோம். மகாநாட்டிற்கு வந்திருக்கும் வாலிபர்களும் வாலிபர் மகா நாட்டில் இதை கவனித்து தக்கது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 11.05.1930
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சிவகாமி - சிதம்பரண௱ர்
புணர் விவாஹம்
காலிகட்டுகல் என்னும் சடங்கு ஒழிந்தது.
திருமதி ஈ.ணவ.ரா நாகம்மையார் அவர்கள் 5 . i
இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க் காதல் கொண்டு. தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண்: இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை.ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகு காலமாக வேரூன்றி கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும் பெண்ணை ஆண் அடிமையாக்குதற் கறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாம
லும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.
பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றி யிற்றைக்கு 4, 5 வருஷங்களேயாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தேறியிருப்பது உங்களுக்
குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல் களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தா
மல் இளைஞர்கள் தைரியமாய் முன் வர வேண்டும்.
இத்திருமணத்தில் தாலி கட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்
டிருக்கிறது.
கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக
கடித்து வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில்
குடி அரசு - 1980 (1) 170
ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.
பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும் பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்குமென்றே கருதப்பட்டு வருகிறது. அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்
கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா? அதற்காக கல்யாண: காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலி கயிறு கட்ட வேண்டும். அப்படியல்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக்.
கட்டி அடிமைப் படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனையிழந்த கன்னிகை தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப்பாட்டில் கழிக்க வேண்டும் என்ற
மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமி போல தைரியமாய்
முன் வர வேண்டும். இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரீகமான செய்கையென்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய எதிர்ப்பையும் இடைஞ்சலையும் மூடக் கட்டுப்பாடுகளையும் உதறித் தள்ளி
தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடு கூடிய செய்கைகளையும் நடவடிக்கைகளையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக் கடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமாற வாழ்த்துகிறேன்.
குறிப்பு:- 5. 5. 30 தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு கும்ப கோணம் பிரபல மிராஸ்தாரும், முனிசிபல் கவுன்சிலரும் ஆனரரி மேஜிஸ் திரேட்டு மாகிய உயர்திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் செல்வி திருமதி சிவகாமி அம்மைக்கும் தமிழ் பண்டிதர் சாமி சிதம்பரணார் அவர்கட்கும் ஈரோடு. திரு. ஈவெ.ரா. அவர்கள் தோட்டத்தில் 2-வது சுயமரியாதை மகாநாட்டுக் கென அமைத்திருந்த சிங்காரக் கொட்டகையில் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் நடத்தி வைத்த திருமணத்தில் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 11.05.1930.
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
G
பாமர மக்களை ஏமாற்றப் படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது. கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல்வதுண்டு நாட்டில் செய்யப்படும் வஸ்துக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு. அவ்வாறாகவே “பஞ்சமர்கள்” என்போர் யார்? அவர்கள். துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும்
சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறி யாத தலைவர்களும் கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன. இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்றுகிறோம். தீர்மானத்தை சபையின் முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர். தீண்டாமை ஒரே நொடியில் பறந்து விடும் என்ற புரட்டுச் சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார். மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும் ஊக்கமும் அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாச்சிரமிகள்! வீற்றிருக்கும் போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம்.
“கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப்பதில்லை” என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக்
குண்டு கிடக்கும் காலத்திலே சாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமைய டையமனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.05.1930
குடி அரசு - 1980 (1) 172
ஈறோ௫ மகாநா௫
1
இம்மாதம் 10, 11, 12, 13 தேதிகளில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மகாநாடும் அதை அனுசரித்து வாலிபர் மகாநாடு, பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு ஆகிய ஐந்து மகாநாடுகள் முறையே திருவாளர்கள் பம்பாய் எம். ஆர். ஜயகர், நாகர்கோயில் பி.சிதம்பரம், டாக்டர் முத்துலட்சுமி அம்மாள், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், தஞ்சை பொன்னையா ஆகியவர்கள் தலைமையில் நடைபெற்றன. இம் மகாநாடுகளுக்கு வரவேற்புக் கழக அக்கிராசனர்களாக முறையே திருவாளர்.
கள் ஆர்.கே. ஷண்முகம், ஜே. எஸ். கண்ணப்பர், லட்சுமி அம்மாள், கார்குடி சின்னையா, காரைக்குடி சொ. முருகப்பர் ஆகியவர்கள் இருந்து வரவேற்புக் கழக சார்பாய் வரவேற்று இருக்கின்றார்கள். இவை தவிர மேற்படி 4
நாட்களிலும் இரவு 9 மணி முதல் நடு ஜாமம் 2 மணி 3 மணி வரையில் கொட்ட கையில் சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தன. மகாநாட்டு காரியங்களை. நிர்வகிக்க திருவாளர்கள் ஈரோடு சேர்மென் கே. ஏ. ஷேக்தாவுத் சாயபு, கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்ட் சி.எஸ்.ரத்தினசபாபதி, எஸ்.ராமநாதன் முதலியவர்கள் பொது காரியதரிசிகளாகவும் திருவாளர்கள் மு. ச. முத்துக் கருப்பஞ் செட்டியார், ஈ. வி. நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, கே.என். நஞ்சப்பகவுண்டர், ஏ.ஆர்.சிவாநந்தம்,கி.அ.பெ. விஸ்வநாதம், மா.ராமசாமி, மாயவரம் சி.நடராஜன், சாமி சிதம்பரனார், கேசவலால், காளியப்பன், மு. ௪. சுப்பண்ணன், சுப்பராய ஆச்சாரி, அழகிரிசாமி, எஸ்.வி.லிங்கம், எஸ். குரு
சாமி, ஈ. வெ. கிருஷ்ணசாமி நாயக்கர் முதலிய பலர் தனித்தனி இலாகா காரிய தரிசிகளாகவும் திருவாளர்கள் வரதப்பன், ஆறுமுகம் ஆகியவர்கள் தொண்டர்படைத் தலைவர்களாகவும் இருந்து மகாநாட்டுக் காரியங்களை: எவ்விதத்திலும் குறைவு படாமல் இனிது நடத்திக் கொடுத்தார்கள். மகாநாடு கூடின காலமானது சென்ற வருஷத்திய செங்கல்பட்டு மகாநாட்டைப் போலவே, அதாவது சைமன் கமிஷன் வரவினால் ஏற்பட்ட கிளர்ச்சி சந்தர்ப்
பத்தைப் போலவே இவ்வருஷமும் நாட்டில் அதை விட பல மடங்கு அதிக கிளர்ச்சியும் நெருக்கடியுமான சமயம் என்று சொல்லப்படும் உப்புச் சட்டம்
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மீறும் கிளர்ச்சி சமயத்திலும் திரு காந்தி முதலிய பல நூற்றுக்கணக்கான கனவான்கள் சிறையிலடைப்பட்டும் அடிுடு, தள்ளு முதலிய பலாத்காரச் செய்கைகள் இருதரப்பிலும் நடந்து கொண்டு இருக்கும் படியான சமயத்தி
லும் மகாநாடு கூட நேர்ந்ததோடு பார்ப்பனரல்லாத பிரமுகர்களுக்குள்ளும் அவர்களது கட்சிகளுக்குள்ளும் அபிப்பிராய பேதங்களும் மனத்தாங்கல்
களும் ஏற்பட்டிருக்கும் சமயத்திலும் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தொண்டர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்குள்ளும் அபிப்பிராய பேத மேற்பட்டிருக்கின்றதாக வதந்திகள் கட்டி விட்டுக் கொண்டிருக்கும் சமயத்தி
லும் மூட நம்பிக்கையின் பலனால் அரசியல் கிளர்ச்சி என்பதில் பெரிதும் மக்கள் மனம் திருப்பப்பட்டு சுயமரியாதை இயக்கம், நாஸ்திக இயக்கம், பார்ப்பன துவேஷ இயக்கம், சர்க்கார் ஆதரிப்பு இயக்கம், படியாத மக்களால் நடத்தப்படும் இயக்கம், பணக்காரர்களுக்கு விரோதமான இயக்கம், பண்டிதர்களை அழிக்கும் இயக்கம், போல்ஸ்விக் இயக்கம் என்று கிருத்திரப் புத்தியுடன் பலர் விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் காலத்திலும் அரசாங்கத்தாராலும் சுயமரியாதை இயக்கமானது அரசியல் சம்பந்தமான இயக்கமாதலால் அதில் சர்க்கார் ஒத்துழைக்க முடியாது என்று கருதப்பட்டு அந்தப்படியே நமக்கும் பல இலாக்காக்களுக்கும் தெரிவித்துவிட்டதுடன் அந்தப்படியே பல இலாக்காக்கள் ஒத்துழைக்காமலும் சில இலாக்காக்கள்' விஷமங்களுக்கு இடம் கொடுத்துக் கொண்டும் இருந்த காலத்திலும் மற்றும்
நான்கு நாள் இரவும் பகலும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்த காலத்திலும் நடைபெற வேண்டியதாகிவிட்டதுடன் ஏற்பாடு செய்திருந்த தேதியை விட 15 நாள் முன்னதாக வைத்தே நடைபெற வேண்டியதாகி விட்டது. இவ்வளவு அசெளகரியங்களுடன் நடத்த வேண்டியிருந்தாலுங் கூட சென்ற வருஷத்தை விட எவ்விதத்திலும் குறைவில்லாமலும், சில விஷயங்களில் அதற்கு மேலாகவும் சிறப்புடனும் வெற்றியுடனும் மகாநாடு நடந்தேறிற்றேயல்லாமல் எவ்விதத்திலும் குறைவு படவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும் திரு.யம். ஆர். ஜயகர் அவர்களை
நாம் இம்மகாநாட்டுக்கு தலைமை வகிக்க அழைக்க வேண்டுமென்று முதல்
முதல் கருதிய காலத்தில் முதலாவதாக எந்த காரணத்தைக் கொண்டு கருத நேர்ந்ததென்றால் நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கைகளின் காரணமாக பார்ப் பனரல்லாத தலைவர்கள் என்பவர்களுக்குள் அபிப்பிராய பேத மேற்பட்டு
மூன்று நான்கு கட்சிகளாகி ஒருவரையொருவர் நசிக்கி விட வேண்டுமென்று
கருதி அதற்காக ஒழுங்கையும் நியாயத்தையும் மீறி சில சமயங்களில்
பார்ப்பனரல்லாதார் நன்மைகளையும் கூட பலிகொடுத்து மூர்த்தண்ணியமாக நின்று தங்கள் தங்கள் சுயநலப் பிரசாரம் செய்து வருகையில் சென்னை மாகாணத்தில் யாரைத் தலைவராகத் தெரிந்தெடுத்தாலும் அசெளகரியம் நேரிடுமென்று கருதியே வெளி மாகாணங்களில் இருந்து ஒரு கனவானை தெரிந்தெடுக்க நேர்ந்தது. இரண்டாவதாக வெளி மாகாணத் தலைவர்களும் இங்கு வந்து நமது இயக்கத்தின் நிலைமையும் மக்களின் கருத்தையும்
குடி அரசு - 1980 (1) 174
அறிந்து போவதுநலம் என்பதாகவும் தோன்றிற்று. இந்த இரண்டு காரணங்கள் முக்கியமானதாகும். இந்த நிலையில் திரு. ஜயக்கர் அவர்கள் பெயரை நாம் உச்சரித்ததும் அவர் இந்து மகாசபைத் தலைவர் என்றும் வேத சாஸ்திரப் புராணப் பற்றுடையவரென்றும். நமக்குப் பலர் தெரிவித்தார்கள். இதேபோல்
திரு. ஜயக்கருக்கும் நமது இயக்கம் கடவுள் மறுப்பு இயக்கமென்றும் மத எதிர்ப்பு இயக்கமென்றும் அவர் வருவதற்குள் கொட்டகை தீப்பற்றி எரிக்கப்பட்டு விடுமென்றும் வழியிலேயே அவர் கொல்லப்பட்டு விடக் கூடுமென்றும் பல மாதிரியான மிரட்டுக் கடிதங்களும் எழுதினார்கள். இதன் காரணமாக திரு. ஜயக்கர் அவர்கள் நமது சுயமரியாதை இயக்க சம்பந்தமான கொள்கைகள் நடவடிக்கைகள் ஆகிய பிரசுரங்களை அனுப்பும்படி தந்தி அடித்தார். அதற்கு நாம் உடனே “ரிவோல்ட்” பத்திரிகைகளில் சென்ற மகாநாட்டுத் தீர்மானம் தலைவர்கள் உபன்யாசம் நமது போக்கு ஆகியவை கள் அடங்கிய சில பிரதிகளை அவருக்கு அனுப்பியதில் திரு. ஐயக்கர். அக்கொள்கைகளையும் தீர்மானங்களையும் போக்கையும் ஒப்புக் கொண்டு சந்தோஷ மடைந்ததுடன் அதை அனுசரித்தே தான் தமது பிரசங்கம் இருக்குமென்று தந்தி அடித்தார். நாமும் அவரது மற்ற கொள்கைகளைப் பற்றிய விபரம் தெரியாதிருந்தாலும் தீண்டாமை விலக்கிலும் ஜாதிமுறை அழிவிலும் பெண்கள் சம சுதந்திரத்திலும் சைன்சும் மதமும் ஒத்து இருக்க வேண்டும் என்ற கருத்திலும் அவர்கள் செய்யும் காரியங்களும் பேசும்
பேச்சுகளும் பத்திரிகை மூலமாகவும் நண்பர்கள் மூலமாகவும் தெரிந்திருந்
ததால் அவர் வந்து தென் இந்தியா நிலைமையையும் நமது கொள்கை களையும் தெரிந்து போக ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் என்றே கருதி அவரை அழைத்தோம்.
நிற்கஇவ்வருஷம் மகாநாடு நடத்த ஏற்பாடு செய்திருந்த நமது வயல் பூமியில் வெள்ளாமைப் பயிர் இருந்ததாலும் வேறு சில அதாவது சித்திரா பெளர்ணமி, சித்திரைத் திருவிழா, பக்ரீத் பண்டிகை மற்றும் சிலருக்கு ஏற்பட்ட துக்க சம்பவம் ஆகிய முதலியவைகளால் 10, 15 நாள் மகாநாட்டை தள்ளி வைக்கத் தீர்மானித்து 25, 26 தேதிகளுக்கு மாற்றி தந்தி கொடுத்ததில் ஒரு
வாரத்திற்கு பிறகே அந்த தேதி தங்களுக்கு சவுகரியப் படாதென்று திரு. ஜயக்கர் தெரிவித்ததால் மறுபடியும் மகாநாடு 10 நாள் இருக்க பழயபடி 15 நாள் முந்தி10,11 தேதிகளிலேயே நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆகவே இத்தனை வித எதிர்ப்புகளும் அசெளகரியங்களும் போதிய சாவகாசமில்லாமையும் இருந்தும் மகாநாடானது சுமார் 2000 பெண்களும் 4000 ஆண்களும் அடங்கிய கூட்டமாகவே கடைசிவரையில் இருந்து வந்தது. இதனால் பொது ஜனங்கள் கடவுள் மறுப்புக்கும் மத எதிர்ப்புக்கும் போல்ஸ்விஷத்திற்கும் படியாத மக்கள் தலைமைக்கும் பணக்காரர்கள் ஒழிவுக்கும் பண்டிதர்கள் அழிவுக்கும் சர்க்கார் ஆதரிப்புக்கும் பயப்படாத மக்களாகி விட்டார்கள் என்பது நன்றாய் வெளியாய் விட்டது.
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
உதாரணமாக ஒத்துழையாமை கிளர்ச்சி நடந்த காலத்தில் பல தாலூகா
ஜில்லா மகாநாடுகளிலும் மாகாண மகாநாட்டிலும் தலைமை வகித்தல் ஆஜ ராகி பேசுதல் பிரமுகராயிருத்தல் ஆகிய பல காரியங்கள் நடத்தி யிருக்கின்றோம்.
மற்றும் பார்ப்பனரல்லாதார் இயக்க மகாநாடுகள் பலதையும் சென்று பார்த்திருக்கின்றோம். அவைகள் அவ்வளவிலும் அதிகமான ஜனங்கள் வந்த மகாநாடென்று சொல்லிக் கொள்ளப்படும் மதுரை மகாநாட்டை விட
குறைந்தது மிகவும் நான்கு ஐந்து பங்கு மக்கள் அதிகமாக இம்மகாநாட்டிற்கு அதுவும் நெருக்கடியும் அசெளகரியமுமான இந்த சந்தர்ப்பத்தில் வந்திருந் தார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். கொட்டகையானது 50 அடி அகலத்
திலும் 120 அடி நீளத்திலும் போடப்பட்டிருந்ததானாலும் மக்கள் அக்கொட் டகை முழுவதும் நிறைந்து இருந்தார்களென்றால் மழையும் உற்சவமும் மற்ற அசெளகரியங்களும் இல்லாதிருந்திருக்குமானால் கொட்டகை இடம் போதாதென்றே சொல்ல வேண்டும். அன்றியும் இதே சமயத்தில் நான்கு நாள் முன்னதாக திருப்பூரில் டாக்டர் ராஜன் தலைமையில் நடந்த அரசியல் மகா
நாட்டுக்கு வந்திருந்த ஜனக் கூட்டத்தின் எண்ணிக்கைக்கும் ஈரோடு மகாநாடு ஜனங்கள் எண்ணிக்கைக்கும் கணக்குப் பார்த்தால் பல பூஜ்ஜியங்கள் தான் வித்தியாசமிருக்குமே யொழிய வேறில்லையென்று சொல்லலாம். ஆகை யால் இவ்வியக்கம் பொதுஜன ஆதரவைப் பெற்றுவிட்டதா இல்லையா? என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம். நிற்க மற்றொரு விசேஷ மென்னவென்றால் இதுவரை நமது இயக்க வெளிப்படை எதிரிகளும், ரகசிய எதிரிகளும் நம்மீது ஒரு குற்றம் சொல்லி வந்தார்கள். அது என்னவென்றால் தாலூகா ஜில்லா போர்டு மெம்பர்களும் தலைவர்களும் வேறுதலை உத்தே சித்து நம்மை சுற்றிக் கொண்டு திரிவதாகவும் அவர்களது நலத்திற்காகவே இந்த இயக்கம் வேலை செய்வதாகவும், அரசாங்க அதிகாரிகளும் அவர் களை நாம் ஆதரிப்பதற்காக நமக்கு அனுகூலமாயிருப்பதாகவும் சொல்லி வந்தார்கள். இந்த மகாநாட்டில் அப்பேர்பட்ட கூட்டம் சென்ற மகாநாடு கூட்டத்தில் இருந்தவர்களில் 10-6 ஒரு பங்கு கூட வரவே இல்லை.இவ்வியக் கத்தால் தங்களுக்கு உதவி ஏற்படாது என்பதை அப்பேர்பட்டவர்கள் நன்றாய் உணர்ந்து கொண்டார்கள். சில தேர்தல் பிரியர்கள் இவ்வியக்கத்துடன் சேர்ந்தால் நமக்கு தேர்தல் ஆகாமல் போகுமோ என்றும் பயந்து கொண்டு தங்கள் பயத்தையும் நமக்கு காட்டி விட்டார்கள்.
ஆதலால் அந்தவித பழியிலிருந்தும் நமதியக்கம் மீண்டுவிட்ட தானது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றபடி தீர்மான விஷயங்களிலும் தீண்டாமை விலக்கு, ஜாதி அழிப்பு, புராண ஒழிப்பு, பெண்கள் விடுதலை, கல்யாணரத்து, கடவுள் செலவு,
மதக்குறி பட்டம், சடங்கு ஒழிப்பு, பெண்களுக்கு உத்தியோகம் முதலாகிய வைகளைப் பற்றி தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுடன் சென்ற வருஷத்
குடி அரசு - 1980 (1) 176
தைவிட இவ்வருஷம் ஒரு படி முன்னேறி வழிநடை பாதை, குளம், Lidrallé
கூடம், சத்திரம், சாவடி, ஓட்டல், கோவில் முதலாகியவைகளில் எல்லோருக்
கும் சம உரிமை கிடைக்க சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மா னித்து அதற்காக ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க தோடு கூடிய சீக்கிறத்தில் அக்கமிட்டி செய்யும் வேலையிலிருந்து சுய மரியாதைச் சங்கத்தார் வாய்ப்பேச்சு வீரர்களா? கர்ம வீரர்களா? என்பதும் பயங்காளிகளா? தியாகிகளா? என்பதும் நன்றாய் விளங்கிவிடும்.
அன்றியும் சுயமரியாதை வாலிபர் மகாநாட்டில், கூட்ட ஆரம்பங் களிலாவது முடிவிலாவது கடவுள் வணக்கம், ராஜ வணக்கம், தலைவர்: வணக்கம் முதலியவைகள் பாடக்கூடாது என்று தீர்மானித்திருப்பதிலிருந்தும்,
சர்க்கார் சம்மந்தமான எந்த உத்தியோகத்திற்கும் ஆயிர ரூபாய்க்கு மேல் பட்ட சம்பளம் இருக்கக்கூடாது என்று தீர்மானித்திருப்பதிலிருந்தும் சுய மரியாதை இயக்கக்காரர்கள் அடிமைகளா? பண ஆசை உத்தியோக ஆசை உடையவர்களா? என்பதும் தானாகவே விளங்கிவிடும். அன்றியும் ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமென்னும் கொள்கையைக் காங்கிரசில் புகுத்தக் கூடாதென்று சொன்ன காங்கிரசும் பிறவியில் உயர்வு தாழ்வு கூடாதென்ற தீர்மானம் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில் நிறைவேறியவுடன் ராஜினாமாக் கொடுத்த திருவாளர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், டாக்டர். சாஸ்திரி, சந்தானம், வரதாச்சாரி முதலிய பார்ப்பனர்களும் அவர்களது சிஷ்ய கோடிகளும் மக்கள் விடுதலையும் மக்கள் சமத்துவமும் சம்பாதித்துக் கொடுக்கும் தேசபக்தர்களா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிவதோடு அதை. நிலை நிறுத்தும் மதம் வேதம் சாஸ்திரம் புராணம் சாமி ஆகியவைகள் எல்
லாம் அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் தேச பக்தர்களா? என்பதையே யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
தவிர இந்த மகாநாட்டில் ஒரே ஒரு தீர்மானம் மாத்திரமே விவாதத் திற்கு இடமாகி தள்ளப்பட்டு விட்டது. மற்றொரு தீர்மானம் கேட்டுக் கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது. அதாவது, திரு. காந்தியின் உப்புச் சட்ட மீறுதலை ஆதரித்து அதனால் துன்பமுற்றவர்களுக்கு அனுதாபம் காட்டி ஸர்க்காரை கண்டனம் செய்வது.
மற்றொன்று திரு. காந்தியாரின் உப்பு சட்ட மறுப்பு சத்தியாக்கிரகம் ஆகியவைகளில் நம்பிக்கை இல்லை என்று கண்டனம் செய்வது. பிந்தியதை கொண்டு வந்த நண்பர் கேட்டுக் கொண்டதின் பேரில் நிறுத்திக் கொண்டார். முந்தியதைக் கொண்டு வந்த நண்பர் பிரேரேபித்ததில் அக்கிராசனர் அரசியல் (அதாவது பொலிட்டிகல்) விஷயத்தை சம்மந்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்கின்ற நிபந்தனை உள்ள இந்த மகாநாட்டில் அந்த விஷயம் கொண்டுவருவது நியாயமாகாது என்ற காரணம் சொல்லி தள்ளப்பட்டு
விட்டது. அவைகளை தவிற வேறு எல்லா வித தீர்மானமும் அநேகமாய் ஏகமனதாகவே நிறைவேறிற்று.
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இனி செய்ய வேண்டியது
மற்றபடி மகாநாடு இனிது நிறைவேறிய மகிழ்ச்சியோடே இதை முடிக்கநாம் விரும்பவில்லை. இனி அடுத்த மகாநாடு வரையில் நாம் செய்ய வேண்டிய வேலையை நிர்ணயித்து அதில் ஈடுபட வேண்டியதே முக்கிய மான காரியமாகும்.
முதலாவதாக கடவுளைப் பற்றியும், சமயத்தைப் பற்றியும், ஆழ்வார் நாயன்மார்கள் என்பவர்களைப் பற்றியும் மக்கள் பேசிக் கொண்டு திரியாம லிருக்கும் படி செய்ய வேண்டும். அவைகளின் மீது பழிபோட்டு மக்களை. ஏமாற்றி சோம்பேறிகளாக்கி வயிறு வளர்ப்பவர்களின் தொழிலையும் செல்வாக்கையும் அடியோடு ஒழிக்க வேண்டும். ஆக இவ்விரண்டு காரிய
மும் நமது சுயமரியாதைத் தொண்டர்களுக்கு முக்கிய பிரசாரமாயிருக்க வேண்டும்.
இரண்டாவதாக விதவை மணமும், கலப்பு மணமும் எங்கும் நடக்கும் படியாகப் பிரசாரம் செய்ய வேண்டும்.
புராணங்களிலும் புராண மதங்களிலும் நம்பிக்கையுள்ள - அல்லது அவற்றை ஜீவனமாகக் கொண்ட பண்டிதர்களை எங்கும் பகிஷ்கரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்களே தான் மக்களுக்கு மூட நம்பிக்கை என்னும் விஷத்தைச் செலுத்துகின்ற கொடிய ஜந்துக்களாய் இருக்கிறார்கள்.
மேற்கண்ட சுயமரியாதைக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாத தலைவர்களையும் தொண்டர்களையும் சுயநலத்திற்காகவே இதில் வந்து
சேரும் சுயநலப் புலிகளையும் கூடுமானவரை ஒதுக்கியே நமது காரியத்தைச் செய்துகொண்டு போக நாம் சக்தியுடையவர்களாக முயற்சிக்க வேண்டும்.
சுயமரியாதை இயக்கத்தில் கலந்து கொண்டு இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் என்பவர்களின் மூட நம்பிக்கையை வெளிப்படுத்த யாரும். தயங்கக் கூடாது.
திருவிழாக்கள் புண்ணியஸ்தல யாத்திரை முதலிய காரியங்களுக்குச் செல்லுகின்றவர்களை நிறுத்தவும் திருவிழாப் புரட்டுகளையும் புண்ணிய ஸ்தலப்புரட்டு முதலியவைகளை வெளியாக்கவும் திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு பிரசாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இவைகள் ஒரு புறம் நடக்கச் செய்வதோடு மற்றொரு புரம் பொது வான வழிநடைபாதை, குளம், கிணறு, சத்திரம், சாவடி. பள்ளிக் கூடம், ஓட்டல், கோயில் முதலியவைகளில் பிறப்பின் காரணமாய் இருக்கும் வித்தியாசங் களை ஒழிக்க ஆங்காங்கு பிரசாரங்களும் சத்தியாக்கிரகமும் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
குடி அரசு - 1980 (1) 178
மக்களுக்கு துன்பத்தையோ, கஷ்டத்தையோ, நஷ்டத்தையோ இழிவையோ கொடுக்கும்படியான ஒழுக்கக்கேடுகளான காரியங்கள் மக்கள் செய்யாமலும் நாணையமாய் இருக்கும்படியும், மதுபானம் முதலிய தீய காரியங்கள் செய்யாமல் இருக்கும்படியும் பிரசாரங்கள் நடைபெற வேண்டும்.
சட்டத்தை எதிர்பாராமல் ஒவ்வொரு பெற்றோர்களும் சகோதரர்களும் கணவன்மார்களும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும்படியான பிரசாரத்தையும் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட அரசியல் என்கின்ற பார்ப்பன ஆதிக்க சூக்ஷியில் மக்கள் சிக்கி அறிவையும் தைரியத் தையும் வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கிய வேலை யாகும் யாதொரு கொள்கையும் இல்லாமல் வெறும் வயிறு வளர்ப்புக் காகவும் வியாபாரத்திற்காகவும் புஸ்தகம், மருந்து, சில்லரைச் சாமான், ஷாப்பு சாமான்கள் முதலியவைகளை நூற்றுக்கு 200, 300, 400 ஆக லாபம் வைத்து விற்று மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பதற்காகவும் செல்வாக்குள்ள ஸ்தாபனங்களின் பேரையும் கொள்கைகளையும் சொல்லிக் கொண்டு புறப்பட்டு மக்களை ஏமாற்ற நடத்தும் பத்திரிகைகளின் யோக்கியதையை வெளியாக்கி அவைகளிடம் மக்கள் ஏமாறாமல் இருக்கும்படியும் செய்ய வேண்டும்.
இது போன்ற காரியங்களில் முனைந்து நிற்பதையே இவ்வருஷத் தொண்டாய் ஏற்றுக்கொள்ள வேண்டியது சுயமரியாதைத் தொண்டர்களின்
முக்கிய கடமையாகும்.
இத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் நமக்குத்
தெரியும். அதாவது நாம் மேற்கூறிய காரியங்களைச் செய்யும்போது இத்தொண்டின் பலனால் பாதகமடையும் கூட்டத்தாரால் நமது இயக்கத்தை
யும் நம்மையும் நமது தொண்டர்களையும் பற்றி பலவித குற்றம் சுமத்தி பழியுரைகள் கட்டிவிடப்படும்.
அதாவது முதலில் நம்மை நாஸ்திகர் என்பார்கள்.அதற்கு நாம் சிறிதும் அஞ்சக்கூடாது. ஏனெனில் கடவுள் என்கின்ற ஒன்றை இல்லை என்று சொல்லுகின்றவன் தான் நாஸ்திகன் என்றால் அந்த தன்மையில் நாம் நாஸ்திகர் அல்ல. ஏனெனில் கடவுள் என்கின்ற வார்த்தையே அர்த்தமற்றதும் விளங்காததும் ஆனதென்று சொல்லும் நாம் அது உண்டா இல்லையா என்கின்ற வேலையில் பிரவேசிப்பது முட்டாள்தனம் என்றே கருதி இருக்கின்றோம். அதோடு கூடவே கடவுள் இல்லை என்று சொல்லும் வாதமும் பயன் படக் கூடியது என்பதை நாம் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் கடவுள். என்கின்ற வார்த்தைக்கு இன்னதுதான் அர்த்தம் அது இன்ன பொருளைத் தான் குறிக்கிறது என்று தெரிந்தாலல்லவா அந்த வஸ்து உண்டு இல்லை என்கின்ற வாதங்கள் பயன்படக்கூடியதாய் இருக்கும்? உதாரணமாக ஒரு
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மனிதனைப் பார்த்து உங்கள் வீட்டில் கீக்கிரி மூக்கிரி இருக்கின்றதா? என்று கேட்டால் அவன் அது இன்னது என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றது என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அவன் எவ்வளவு மூடனாவானோ அது போலவேதான் கடவுள் விஷயத்திலும் உண்டு இல்லை என்று சொல்லும் இருவர்களுமே யாவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் யாரை நாம் அயோக்கியர்கள் என்று சொல்லுகின்றோம் என்றால் கடவுள் ஒருவர் உண்டு.அவரே உலகத்தையும் அதில் உள்ள சகல வஸ்துகளையும் உண்டாக்கி அவைகளின் சகல நடவடிக்கைகளையும் தானே நடத்திவிப்ப வராய் இருந்து கொண்டு நடத்தி வருகின்றார் என்று சொல்லிக் கொண்டு தனக்கு இச்சையில்லாத காரியங்களின் மீது வெருப்பையும் சிலர் மீது தூஷணை யையும் செய்து கொண்டு இருப்பவர் கசடன் அல்லது அயோக்கியன் ஆகிய இரண்டில் ஒன்று என்று தான் சொல்லுகின்றோம். அன்றியும் அப்படிப்பட்டவர்கள் சுய நலம் பிடித்த பித்தலாட்டக்காரர்கள் என்றும் சொல்லுகின்றோம். மற்றபடி வேதத்தையும் சாஸ்திரத்தையும், புராணத்தையும் தர்க்கிக்கின்ற வனும்,நிந்திக்கின்றவனும், நாஸ்திகன் என்றும் சொல்வதனால் நாம் நாஸ்திகர்களே யாவோம்.
ஏனெனில் மேல் கண்ட மூன்றும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற ஆட்சி என்றும் அவைகள் பெரிதும் மனிதத் தன்மை அற்றது என்றும் அனேகமாய்க் காட்டுமிராண்டிகளாலும், அயோக்கியர்களாலும் தங்கள் சுய நலத்திற்கென்று ஏற்படுத்தப்பட்டதென்றும் சொல்லுவதுடன் அவை ஒழிந்தாலல்லது மக்களுக்கு விடுதலையும் சுயமரியாதையும் ஏற்படாது
என்றும் சொல்லுகின்றோம். இது நமது இயக்க ஆரம்ப காலத்திலேயே சொல்லியும் இருக்கின்றோம்.
இனி சுயமரியாதை இயக்கத்தார்கள் எழுத்து வாசனை அற்றவர்கள்.
என்று இகழப்படுவது நம்மைப் பொருத்தவரை நமக்கு எழுத்து வாசனை அதிகமாக இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் மனிதன் எழுத்து வாசனை இருந்தால்தான் அறிவுடையவன் ஆவான் என்பது ஒரு காரியத்தை செய்ய ஆற்றல் உடையவனாவான் என்று சொல்லப்படுவதும் மடத்தனம் அல்லது அயோக்கியத்தனம் என்பதே நமது முடிவு. ஏனெனில் எழுத்து வாசனை இல்லாத பலரை பெரியார்கள் என்று மக்கள் வணங்கு வதைப் பார்க்கின்றோம். எழுத்து வாசனை அதிகமாக கற்ற பண்டிதர்கள். என்பவர்கள் அனேகர்கள் மூடர்களாகவும் இணையற்ற அயோக்கியர்களாக வும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். ஆகவே எழுத்து வாசனை இல்லாதவர்கள் அறிவற்றவர்கள் அயோக்கியர்கள் என்பதானது எழுத்து வாசனையுள்ள மூடர்களும் அயோக்கியர்களும் தாங்கள் பிழைப்பதற்காக சொல்லும் சூழ்ச்சியே தவிர அதில் சிறிதும் யோக்கியமும் நாணயமும் கிடையாதாகையால் சுயமரியாதை இயக்கத்தார் அதற்கும் பயப்படக்கூடாது என்றே சொல்லுவோம்.
குடி அரசு - 1980 (1) 180
சுயமரியாதைக்காரர் மற்றும் பெரியோர்களை குற்றம் சொல்லுகின்
றார்கள் என்பது. இதற்கும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது என்றே சொல்லுவோம். ஏனென்றால் அனேகர்கள் கஷ்டப்படாமல் சோம்பேரியாய் இருந்து பிச்சை வாங்கித் தின்பதற்கும் பிரசங்கம் பண்ணிப் பிழைப்பதற்கும் புஸ்தகம் அச்சுப்போட்டு விற்பதற்கும் பலரை அதுவும் கடைந்தெடுத்த அயோக்கியர்களை பெரியவர்களாக்கி மக்களை ஏமாற்றுகின்றார்கள். அப் பெரியார் என்பவர்கள் அனேகர்களை ஒவ்வொருவருடைய யோக்கியதை களையும் பட்டவர்த்தனமாக பல தடவை வெளியிட்டிருக்கிறோம். ஒரு “பெரியாரின்” அயோக்கியத்தனத்திற்கும் அக்கிரமத்திற்கும் கூட சமாதானம் சொல்ல யோக்கியதையும் தைரியமும் இல்லாத வீணர்களே சுயமரியாதைக் காரர்கள் பெரியாரைப் பழிக்கின்றவர்கள் என்று பேசுகிறார்கள், எழுதுகின்
றார்கள். ஆகையால் அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
தவிரவும் ராமாயணம் - பாகவதம், பாரதம், விஷ்ணு புராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்த புராணம், சிவபுராணம் முதலாகிய புஸ்தகங்களையும் அவற்றில் வரும் பாத்திரங்களையும், அவர். களின் நடவடிக்கைகளையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்வதில்லை என்பதோடு அவற்றின் ஊழல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்தியர்களின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் அவைகளே. முட்டுக்கட்டையாய் இருந்து வந்தன, வருகின்றன என்றும் முடிவு செய்து இருக்கின்றோம். அன்றியும் அதற்காகவே சுயமரியாதை இயக்கத்தின் பெரும்பகுதி நேரத்தையும் பத்திரிகைகளின் பெரும்பகுதி பாகத்தையும் ஒதிக்கிவைத்தும் இருக்கின்றோம். அவ்வளவோடு இல்லாமல் சில புராணங்
களும் மநுதர்மம் போன்ற சாஸ்திரங்களும் மனிதத் தன்மைக்கும் ஒழுக்கத்
திற்கும் மக்கள் சுயமரியாதைக்கும் இடையூறாய் இருப்பதால் அவைகளை கொளுத்த வேண்டுமென்று சொல்லுவதுடன் சில இடங்களில் அவைகளை கொளுத்தியும் இருக்கின்றோம். ஆதலால் இம்மாதிரியான குற்றங்கள் சுமத்தப்படுவதற்கும் பழி சுமத்தப்படுவதற்கும் சுயமரியாதைக்காரர்கள். பயப்பட கூடாதென்றே சொல்லுவோம்.
மற்றபடிசுயமரியாதைக்காரர்கள் மீது அரசியல் சம்பந்தமாக சொல்லப் படும் குற்றங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதைப் பற்றி அடுத்த
வியாசத்தில் விவரிப்போம்.
குடி அரசு - தலையங்கம் - 18.05.1930
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
உதிர்ந்த மலர்கள்
1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற் கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.
2. கடவுள் ஒருவர் உண்டு அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமா யிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தான் இச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிரரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன்.
பார்ப்பன பிரசாரம்.
3.ஆழ்வார்கள் கதைகளும் நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும்.
4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளா மல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.
5. வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால் அவர்கள் படித்தது எல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பை யுமேயாகும்.ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.
6. எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போ
லாகும்.
7.நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து நானும் சுயமரியாதைக் காரன்
தான் என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது புராணங்களெல்லாம் பொய் என்றும் சமயங்களெல்லாம் ஆபாசம் என்றும் பேசி மேடையில் இடம்
குடி அரசு - 1980 (1) 182
சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு புராண பிரசாரத் தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால் பண்டிதர்களை கிட்ட சேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிறதையாக யிருக்க வேண்டும். - ஈவெரா.
குடி அரசு - பொன்மொழிகள் - 18.05.1930
182 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஒரு கமோசணை
கைரா.
“குடி அரசி”ன் ஆறாவது வருஷ வேலை முறைகளைப் பற்றி வாசகர்களையும் அபிமானிகளையும் ஒரு யோசனை கேட்க விரும்பு கின்றேன். அது விஷயத்தில் வாசகர்களும் அபிமானிகளும் தயவு செய்து ஆர அமர நிதானமாய் யோசனை செய்து தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன். “குடி அரசு” ஆரம்
பித்த இந்த ஐந்து வருஷ காலத்தில் அது இந்தியாவிற்கும் சிறப்பாக தென் இந்தியாவிற்கும் செய்திருக்கும் வேலை யைப் பற்றி பொது ஜனங்களுக்கு
எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை...
சரியோ, தப்போ அது தனக்குத் தோன்றியதைத் துணிவுடன் வெளி யிட்டு வந்திருக்கின்றது என்பதையும், அதன் கொள்கைகள் ஒவ்வொன்றும் பொது ஜனங்களிடையில் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிப் படித்தவர்கள் என்பவர்கள் முதல் பாமரர்கள் என்பவர் வரையிலும் அவர்களது உணர்ச்சி களைத் தட்டி எழுப்பி இருப்பதுடன், பொது மக்களிடையில் பெரிய மன மாறுதலையும் ஏற்படுத்தி இருக்கிறது. “குடி அரசி”ன் கொள்கைகளால் பாதிக்கப்படும் சுயநலக்காரர்கள் கூடத் தைரியமாய் மறுக்கவோ எதிர்க்கவோ முடியாமல் சிலர் மறைமுகமாகப் பிரசாரம் செய்வதும் சிலர் “குடி அரசு” க் கொள்கைகளோடு கலந்து கொண்டு வேஷம் போட்டு உள்ளே இருந்தே ஏமாற்றப் பார்ப்பதுமான வகைகளில்தான் எதிர்க்க முடிந்ததே தவிர வேறில்லை. இதற்கெல்லாம் காரணம் அதனுடைய கொள்கைகளின் சக்தியே தவிர வேறில்லை என்பதை மனப்பூர்த்தியாய்த் தெரிவித்துக் கொள்ளு கிறேன். ஆனால் அது இன்னமும் இந்தியாவுக்கும், உலகத்திற்கும் செய்ய வேண்டிய வேலைகள் நிரம்ப இருக்கின்றன. அவைகளை செய்வதற்கு “குடி அரசி” ற்கு இனியும் சற்று சுயேச்சை அதிகமாக வேண்டியிருக்கிறது.
இது வரையிலும் “குடி அரசு” சுயேச்சையோடு இருந்தது என்று சொல்லுவதானாலும் அது சில சமயத்தில் அரசாங்கத்தையும், சில சமயத்தில் செல்வவான்களையும் சில சமயத்தில் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களையும், சில சமயத்தில் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள் என்பவர்களையும்,
குடி அரசு - 1980 (1) 184
சில சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களையும், சில சமயத்தில் மந்திரி களையும், சில சமயத்தில் தொண்டர்கள் என்பவர்களையும் ஆதரித்தும், அவர்களிடம் தாட்சண்யங்கள் காட்டியும், அவர்களின் குற்றங்களைத் தைரிய
மாய் வெளியில் எடுத்துக் காட்டாமலும் இருந்து வந்திருப்பதை நான் மறைக்க. முயற்சிக்கவில்லை. நமது கொள்கைகள் சற்று கடினமாய் இருந்தாலும்,
எதிர்ப்புகள் மிக்க பலமாயிருந்ததாலும் பொது ஜனங்களில் பெரும்பாலோர்.
மிகப் பாமர மக்களாய் இருந்ததாலும் அவைகள் பரப்பப்படுவதற்கு பாமர
மக்களின் அறிவுக்கும் நிலைமைக்கும் தகுந்தபடி, நமது நிலைமையைச் சரிபடுத்திக் கொள்ள வேண்டி இருந்ததால் மேல் கண்டவர்களுக்கு நாம் தாட்சண்யம் காட்ட வேண்டி இருந்தது. இந்த ஐந்து வருஷ வேலையின் பலனாகவும் பொது மக்களிடம் காணும் உணர்ச்சியாலும் நிலைமையினாலும் இனியும் அவ்வித தாட்சண்யங்களுக்கு ஆளாக வேண்டியதவசியமென்று தோன்றவில்லை. ஆதலால் நடைபெறும் வருஷம் சற்று நிர்தாட்சண்ய மாகவே இருக்க வேண்டுமென்று ஆசைப்படவேண்டி இருக்கின்றது.
அதற்காக பாமர மக்களின் ஆதரவு அதிகம் உண்டாக்கிக் கொள்வதற்கு பத்திரிகை இன்னமும் சற்று அதிகமாய் பரவத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டியதவசியமாகும்.“குடி அரசு” ஏற்பட்டதின் பலனாயும் அது மிக்க குறைந்த சந்தாவோடு அரிய விஷயங்களைக் கொண்டு வெளியானதின் பலனாயும் நானும் வாரந்தோறும் இரண்டு நாள் மூன்று நாள் “குடி அரசின்” கொள்கைகளைப் பரப்புவதற்கு ஆங்காங்கு பிரசாரத்திற்குச் சென்று வந்ததன் பலனாயும், தமிழ் நாட்டில் தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு இதுவரையில் சேர்ந்திராத அளவு சந்தாதாரர்கள் சேரும்படியானதோடு பத்திரிகைப் படிக்
கும் மக்களையும் அதிகமாக உண்டாக்கி இருக்கிறது. இப்பொழுது எனது
உடல் நிலையானது அதிகமாகப் பிரசாரங்களுக்கு வெளிச்செல்ல முடியா
திருக்கிறபடியாலும் புதிய வருஷ வேலை முறைகளின் பயனாய் எதிர்ப்புகள்: பலமாக கூடுமானதாலும் பத்திரிகை விஷயத்தில் அடியில் கண்டபடி மாறுதல் செய்ய விரும்புகிறேன். ஆதலால் சந்தாதாரர்களும் அபிமானிகளும் யோசித்து தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்ளுகிறேன்.அதாவது. “குடிஅரசு” வாரப் பத்திரிகையின் வருஷ சந்தா
மூன்று ரூபாயாக விருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாமென்பது.
2 பத்திரிகையை இப்பொழுதிருந்து வரும் 20 பக்கத்திற்கு பதிலாக தற்காலம் பன்னிரண்டு பக்கமாகவும் பதினையாயிரம் சந்தா சேர்ந்த பிறகு அதாவது ஆறுமாதத்தில் பதினாறு பக்கமாகவும், பன்னிரண்டு பக்கமாயிருக்கும் போது நாலு பக்கத்திற்குள்ளாகவே விளம்பரமும். பதினாறு பக்கமாயிருக்கும் போது
சுமார் 5 பக்கத்திற்குள்ளாகவே விளம்பரமும் வைத்துக் கொள்ளுவது.
இந்தப்படி இது தொடங்கும் போதே பகுத்தறிவு என்னும் மாதப் பத்திரிகையும் வருஷத்திற்கு எட்டுஅணா சந்தாவில் தொடங்குவது. ஏஜண்டு
களும் பத்திரிகைகளை, முக்காலணாவிற்கு விற்று காலணா கமிஷன் எடுத்துக்
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கொள்வது, மற்றொரு விஷயம் அதாவது:-
பத்திரிகையின் மேல் பக்கத்திய இதழ்கள் வர்ண காகிதமாயில்லாமல் வெள்ளைக் காகித மாகவே இருக்க வாசகர்கள் சம்மதித்தால் ஆரம்பத்தி லிருந்தே வருஷம் @ 2 - 0 - 0 சந்தாவிற்கு 16 பக்கம் போடுகிறதென்பது. இந்தப்படி செய்வதற்கு சந்தாதாரர்கள் ஆசைப்பட்டு அனுமதி கொடுப்பதா யிருந்தால் தங்களுக்கு இருக்கிற பொறுப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பூட்டுகிறேன்.
அதாவது இந்தப்படி செய்ய அநுமதியளிக்கும் ஒவ்வொரு அபிமானி
களும் மேற்கண்ட மாதிரியில் பத்திரிகை தொடங்கிய கால முதல் ஒரு மாதத்திற்குள்ளாக குறைந்தது 25 சந்தாதாரர்களுக்கு குறையாமல் 50 சந்தா தாரர்கள் வரையில் சேர்ப்பதற்கு உறுதி கொண்டு, உறுதிவாக்கும் கூடவே அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு தொடங்கப் போகும் புதிய முறைப் பத்திரிகைகளில் செய்தி களுக்கு இடமிருக்காது என்பதையும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை ஏன் எழுத நேருகிறதென்றால் இப்பொழுது “குடி அரசு” க்கு வரும் செய்திகள் ஒரு தினசரிக்குக் கூட வர முடியாத அளவு வந்து கொண்டிருக்கிறது. ஆதலால் அவைகளை எல்லாம் பத்திரிகையில் போட முடியாமல் மூட்டைக் கட்டி பையில் போட்டுக் கொண்டு வரப்படுகிறது. என்பதை மிக்க வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எச்சரிக்கை
பத்திரிகையின் கொள்கைகளைப் பற்றி முன்னமே “குடி அரசில்” தெரிவித்திருக்கிறதானாலும், சுருக்கமாக முக்கியமான கொள்கையை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.
அதாவது இப்போதுள்ள சமயங்களென்பவைகளைக் கண்டிப்பாக
ஒப்புக் கொள்வதில்லை என்பதும் சாமிகள் என்பவைகளின் சங்கதிகளைத் தாட்சண்யமில்லாமல் வெளிப்படுத்தி விடுவதென்பதும், செல்வவானாயிருப்
பதும், ஏழையாயிருப்பதும் கடவுள் செயலால் என்கின்ற எண்ணத்தை மக்களி டமிருந்து அடியோடு போக்கி செல்வத் தன்மையின் கொடுமைகளையும் புரட்டுகளையும் தெளிவுபடுத்தி விடுவதும் அதுபோலவே அரசாங்கமும் கடவுளுடைய கட்டளை என்பதை மாற்றி ஜனங்களுக்காக எல்லாரையும் சம
மாய் நடத்தும் சமதர்ம ஆட்சிதான் நிலைபெறவேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பதுமாகும். இதற்கு இடையூறாய் வரும் சமையக்காரனையோ, சாமி பக்திக்காரனையோ, பண்டிகனையோ, பணக்காரனையோ, அரசாங்கத் தையோ, ஆட்சியையோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதேயாகும்.
குடி அரசு - 1980 (1) 186
ஆகவே இவைகளை ஆதரிக்கக் கூடிய அபிமானிகள் தயவு செய்து தங்களது இஷ்டத்தை சீக்கிரத்தில் அறிவிப்பார்களானால் அநுகூலமாயி ருக்குமென்று தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன்.
குடி அரசு - தலையங்கம் - 25.05.1930
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ஈரோடு மகாநா௫
ரா
ஈரோடு மகாநாடு விஷயமாய் சென்ற வாரம் எழுதி இருந்த தலையங்
கத்தில் அரசியல் விஷயமாய் நம்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு அடுத்த வாரம் சமாதானம் சொல்லுவோம் என்று எழுதி இருந்தோம்.
அதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை பல தடவைகள் சொல்லியும்
எழுதியும் இருந்தாலும் மகாநாட்டின் நடவடிக்கை விஷயமாய் பொறாமை: கொண்டவர்களுக்கும் வேறு மார்க்கம் இல்லாமல் இந்த சமயத்தில் அதாவது.
“வெள்ளைக்காரர்கள் இந்திய ராஜ்ய பாரத்தை மகாத்மாவிடம் ஒப்பு வித்துவிட்டு மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு பெண்டு பிள்ளை களைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறுகின்ற சமயத்தில் சுய மரியாதைக் காரர்கள் அவர்களை (வெள்ளைக்காரர்களைப்! போகாதீர்
கள்! போகாதீர்கள்! என்று கையைப் பிடித்து இழுத்து தேசத் துரோகம் செய்கிறார்கள்”.
என்று சுமத்தப்படும் குற்றத்திற்கு சமாதானம் சொல்ல வேண்டி இருக்கிறதால், சிலவற்றை அதாவது முன் சொல்லி வந்தவைகளையே திரும்பவும் சொல்லுகின்றோம்.
அதாவது இந்த சத்தியாக்கிரகமாகிய உப்புச் சட்டத்தை மீறுவது என்பதே அர்த்தமற்றதும் மூடத்தனமானதுமாகும் என்பது நமது அபிப்பி ராயம். இதை திரு. காந்தியே ஒப்புக் கொண்டு விட்டார். இதை 24-5-30 ௨ தினசரி பத்திரிகைகளில் காணலாம்.
அன்றியும் மேற்கொண்டு இதற்கு ஏதாவது சமாதானம் சொல்லக்கூடு. மென்றால் இதனால் சர்க்காருக்கு ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு கொடுக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் ஞாயமிருப்பதாக ஒரு மேதாவியும் இதுவரையிலும் சமாதானமும் சொல்லவரவில்லை.
வாசகர்களே! இரண்டு வருஷத்திற்குமுன் பூர்ண சுயேச்சையை
குடி அரசு - 1980 (1) 188
முட்டாள்தனம் என்றும், விளையாட்டுப் பிள்ளைத்தனம் என்றும் சென்னை
யில் சொன்ன திரு. காந்தி லாகூரில் பூரண சுயேச்சைத் தீர்மானத்தை ஆதரித்
தார் என்பதை ஒரு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நேரு திட்டம் என்பதாகிய குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்பதைப் பற்றி எட்டுக் கோடி மகமதியர்களும் ஆறு கோடி தீண்டாதவர்கள் என்பவர்களும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதையும் வாசகர்களே மற்றொரு பக்கத்தில் ஞாபகத்
தில் வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றபடி திரு. காந்தியின் இறுதிக் கடிதத்தில் கண்ட பதினொருத் திட்டங்களும் அனுபவசாத்தியமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.
மேற்கண்ட மூன்றிலும் தீண்டாமை விலக்குவதற்கும், மக்கள் ஒற்று மைக்கும் சகலருக்கும் சம சந்தர்ப்பம் கிடைப்பதற்கும் ஏதாவது வழி இருந் ததா? இருக்கிறதா? என்பதையும் யோசியுங்கள். இது நிற்க இந்த சத்தியாக் கிரகத்தில் கலந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கவனிப்போம்.
வடநாட்டுத் தலைவர்கள் தொண்டர்கள் என்பவர்களில் ஒவ்வொரு வரையும் பற்றி தெரியாவிட்டாலும் நன்றாய்த் தெரிந்த தென்னாட்டு தேச பக்தர்கள் என்பவர்களையும் தேசீயவாதி களென்பவர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது தென்னாட்டில் சத்தியாக்கிரகத்தை இப்போது நடத்து வது கதர் இயக்கமாகும்.
கதர் இயக்கத் தென்னாட்டுத்தலைவர் திரு. ராஜகோபாலாச் சாரியாவார். இவர் மனுதர்ம சாஸ்திரத்திற்கு வக்காலத்து பேசியவர். காங்கிரஸ் கொள்கை யில் ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்பது இருக்கக்கூடாது என்பவர். இதற்காக ராஜிநாமா கொடுத்தவர். சென்ற வருஷ வேதாரண்ய மகா
நாட்டில் பூரண சுயேச்சையை எதிர்த்து தோற்கடித்தவர். இது தவிர கதர் இயக் கத்தில் உள்ளவர்கட்கெல்லாம் ஜெயிலில் இருந்தாலும் சம்பளம் உண்டு. அந்தச் சம்பளப் பணமும் கதருக்கென்று பொது ஜனங்களிடத்திலிருந்து வசூல் செய்த பணமாகும். மற்றபடி திருவாளர்கள் குப்புசாமி, அண்ணா மலை..... போன்ற தேசபக்தர்கள் காங்கிரஸ் நிதியிலிருந்து பயன்பெற்று வந்த வர்கள். இது தவிர சில வக்கீல்களும்,டாக்டர்களும், மருந்து வியாபாரிகளும்,
ஷாப்பு சாமான் வியாபாரிகளும் பத்திரிகையிலேயே ஜீவனக்காரர்களுமா வார்கள். இவர்கள் உண்மையான தேச பக்தர்களாயிருந்தால், தேசீயவாதி களாய் இருந்தால், முதலில் தங்கள் தொழிலில் இருக்கிற மோசத்தை நிறுத்திவிட்டு, வந்து பிறகு தேச பக்தியைக் காட்டலாம். ஒரு வக்கீல் தன்னை தேசபக்தன் என்று சொல்லுவானேயானால் அவனைவிட கொள்ளையடிக்கிற அரசாங்கம் ஆயிரம் பங்கு தேசபக்தராயிருக்க முடியும். ஒரு பேட்டண்டு மருந்து விற்கிற மருந்து வியாபாரி தேசபக்தனாக ஆவானேயானால், அவனை விட ஜனங்களை “நாய் போல் சுட்டு வீழ்த்துகிற” “ராட்சஷ
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
அரசாங்கம்” ஆயிரம் பங்கு நீதியுடையதாகும். ஒரு டாக்டர் ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும் படிக்கு லாயக்கில்லாத மக்கள் வாழும் தேசத்திலே மாதம் இரண்டாயிரம், மூவாயிரம், கொள்ளையடிக்கும் ஒரு வைத்யன் பெரிய தேசபக்தர் ஆவானேயானால் அந்த நாட்டில் எந்த அன்னிய அரசாங்கமும் நீதியுள்ளதாகவே இருக்க முடியும்? உதாரணமாக திரு. நாகேஸ்வரராவ் என்கின்ற தேச பக்தர் இந்திய ஜனங்களிடத்திலேயே மருந்துவிற்று மாதம். பதினாயிரக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார் என்றால், இந்த தேச
பக்தர் இந்த நாட்டின் ஏழை மக்களிடத்தில் காட்டிய பக்தியினாலா? அல்லது இந்த தேசத்து மக்களுடைய தரித்திரத்தை அறிந்து அவர்கட்கு நன்மை செய்கிற மாதிரியில் குறைந்த விலைக்கு இந்த மருந்து விற்கிற தயாள குணத்தினால் தேச பக்தரானாரா? இப்படியே இப்பொழுது இருக்கும் தேசபக்தர், தேசீயவாதிகள், தேசியப் பத்திரிகையாளர் என்கிறவர்கள் நிலைமைகளை எல்லாம் அவர்கள் சொந்தத் தொழிலைக் கொண்டும், சொந்த நடவடிக்கைகளை கொண்டுமே இது போலவே சொல்லிக் கொண்டு போகலாம். இவைகளிலிருந்து ஒருவர் இருவர் மிச்சப்படுவாரானால் அவர்கள் அடுத்தத் தேர்தலுக்கு அஸ்திவாரம் போடப் போனவர்களே தவிர மற்றபடி அவர்கள் நாணயம் நாம் அறியாததல்ல.
இதிலும் தவறி ஒன்றிரண்டு பேர் மீதிப்படுவாரேயானால், அவர்கள். மாரியம்மன் உத்சவத்திற்கு செடில் குத்திக் கொண்டு ஆடுகின்றவர்களை சேர்ந்து கொள்வார்களே தவிர உண்மையில் பெரிய தேசீயவாதிகள் ஆகி
விடமாட்டார்கள். இந்த இருபதாவது நூற்றாண்டில் இந்த அர்த்தமில்லாத ஒரு காரியத்திற்கு ஒருவர் பேரை வைத்துக் கொண்டு எத்தனையோ பேர்கள் செய்கிற சூழ்ச்சிகளை அறியாமல் கோவிந்தா! போடுகிற மக்கள் இருக்கும் போது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் சாமியின் முகத்தில் ஒருவன். பிறந்தான், தோளில் ஒருவன் பிறந்தான், காலில் ஒருவன் பிறந்தான் என்று சொன்னதும் அதை மக்கள் நம்பினதும், இன்னும் நம்பிக் கொண்டிருப்பதும் ஆச்சரியம் என்று நமக்குத் தோன்றவில்லை. அதிலுள்ள ஏமாற்றமும், மூடநம்பிக்கையுமே இந்த அரசியலிலும் அரைக்கால் மாற்றுக் கூட குறையா மல் பிரதிபலித்துக் கொண்டு வருகிறது. அவைகளைச் சொன்ன முனிவர்: களுடையவும், ரிஷவிகளுடையவும் யோக்கியதையே அரசியல் தத்துவங் களைச் சொல்லும் மகாத்மாக்களிடத்தும் பிரதிபலித்துக் கொண்டு வருகிறது. ஆகையால் இன்றைய உண்மையான கஷ்டத்திற்கும் இந்த நாட்டின் அவசிய மான தேவைக்கும் அந்தரிஷிகளின் தத்துவங்களும், இந்த மகாத்மாக்களின் உபதேசங்களும் கடுகளவு கூட பயன்படாது என்பதே நமது முடிவான அபிப்பிராயமாகும். நமக்கு வேண்டியதெல்லாம் மனிதன், மனிதனாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதே. இதற்கு நேர் விரோதமாய் மனிதனை மனிதன் நாய், கழுதை, பன்றியிலுங் கேடாய் மதிப்பதும், தெருவில் நடக்க மறுப்பதும், தண்ணீர் அருந்தத் தடுப்பதும் சர்வ வல்லமையும், சர்வ தயாபரத் துவத்தையும் கொண்ட கடவுள் என்பவர் இருப்பதாய் சொல்லப்படும்
குடி அரசு - 1980 (1) 190
இடத்திற்குச் செல்ல எதிர்ப்பதும் இந்த நாட்டு மக்களாலேயே நடைபெறு வதை பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவர், “உப்பு இயற்கைப் பண்டம், எல்லார்க்கும் பொதுவான சொத்து, அதற்காக உயிரைவிட வேண்டும்” என்று சொல்வாரானால் அதில் கடுகளவு உண்மையாவது யோக்கியப் பொறுப்பா வது இருக்க முடியுமா? என்பதை வாசகர்கள்தான் யோசித்து முடிவு கட்ட வேண்டும்.
அன்றியும் அந்த நிலையான பழைய இழிவை மறைக்கத்தான் புது இழிவைப் பற்றிப் பிரமாதமாக தென்னாட்டில் பேசப்படுகிறதென்றும் சொல்லு வோம். இரண்டாயிரம் வருஷமாகவே நமக்கு இருந்து வருகிற இழிவும் வாழ்க்கையில் நிமிஷத்திற்கு நிமிஷம் அவமானப்படுத்தும் கொடுமையுமான காரியங்கள் எல்லாம் 1999 வருஷத்துக்கு முன்னேயே அறிந்திருந்தும் அதைப்பற்றிச் சிறிதும் லட்சியஞ் செய்யாமல் அதற்கு ஆதாரமான சாமியை
யும், மதத்தையும், சாஸ்திரத்தையும், கோயில் கட்டி வைத்து வலம் வந்து பூஜை செய்து கும்பிட்டுக் கொண்டு இருக்கிற சுயமரியாதையற்ற மனிதர்களாகிய நமக்கு, உப்புக்கு விலை கொடுப்பதும், உப்புச் சட்டத்திற்கு கீழ்படிவதும் நஷ்டமும் அவமானமும் என்றால் எந்த அறிவாளி இதை நம்புவான் என்று
தான் கேட்கின்றோம். இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு இந்த நாட்டு மக்களால் இழைக்கப்படும் இழிவும் கொடுமையும் நீங்குவதற்கு முன்னால், இந்த இழிவை கொள்கையாகக் கொண்டிராத எந்த அரசாங்கமானாலும் இந்த நாட்டைவிட்டுப் போக வேண்டுமென்றால் ஒருக்காலும் நாம் அதில் கலந்து கொள்ள முடியாது.
நம் நாட்டு மக்களே நம்மை மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் செய்யும் இழிவைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்று யாராவது நம்மிடம் சொல்லுவார்களேயானால், அவர்கட்கு நாம் சொல்லும் பதில் என்னவென்
றால், அப்படியானால் வெளிநாட்டு மக்கள் அரசியலின் பெயரால் ஒற்றுமை யற்றவர்களும் மூட மதியர்களுமான நம்மை செய்யும் இழிவைப்பற்றி நமக்கு இப்போது கொஞ்சங்கூட கவலை இல்லை என்பதேயாகும். இன்றைய நமது நிலையில் அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதும் முட்டாள்தனமும் பயனற்றதும் என்பதுமாகும்.
ஆகவே யார் என்ன சொல்லுவதாயிருந்தாலும், உப்புச் சத்தியாக் கிரகம் வெற்றி பெறுவதின் மூலம், நாளைய தினமே வெள்ளைக்காரர்கள். அரசாங்கம் நாட்டைவிட்டு கொடியையும், முத்திரையையும், கஜானா சாவி யையும் திரு. காந்தியிடமே கொடுத்து விட்டு பெண்டு பிள்ளைகளுடன் கப்பல் ஏறுவதாயிருந்தாலும் ஒருக்காலும் நாம் அதில் பங்கு பெற முடியாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறோம். ஏன் இவ்வளவு தூரம் நாம் இந்தப்படி எழுதுகிறோம் என்றால், நமது நாட்டு மக்களைப் பிடித்திருக்கும் அரசியல் மூடநம்பிக்கை வியாதிக்கும், அதனால் போகும் கொள்ளைக்கும் இவ்விதம்
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
எழுதினால்தான் கொஞ்சமாவது உணர்ச்சி கொடுக்கக் கூடும் என்று கருதியே தவிர வேறல்ல. இதற்காக வழக்கம் போல் நம்மை திட்டுகிறவர்களோ, தூற்று கிறவர்களோ அல்லது வேறு ஏதாவது செய்கிறவர்களோ செய்து கொள்ளட்
டும். அதைப்பற்றி ஒரு சிறிதும் நமக்குக் கவலை என்பதே இல்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.05.4930
குடி அரசு - 1980 (1) 192
கேவஸ்தாண 6யோர்௫ம் துணிகா மந்திரியும்
தேவஸ்தான போர்டு நிர்வாக கமிஷனர்கள் நியமனமும் சர்க்கிள்
கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங் களை பொறுத்தமட்டில் ஏற்பட்ட விசேஷம் என்ன வென்றால் தேவஸ்தான போர்டு தலைவர்கள் ஐந்து பேரும் பார்ப்பனரல்லாதவராக நியமிக்கப்பட்டி ருக்கின்றனர். அதோடு நீலகிரி ஜில்லா தேவஸ்தான கமிட்டிக்கு ஒரு ஆதி திராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரகுரமாகிவிட்டது.
“தேவஸ்தானம்” என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றித்
திரியும் சில ஆஸ்தீகக் கூலிகளுக்குமே உரியது, மற்றையோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கவும் கூடாதென்ற கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப்பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர். எண்ண ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டியாக முன்வந்து டி நியமனங்களைத் துணிகரமாகச் செய்துள்ள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுடைய தைரியத்தையும் நிர்வாகத்தையும் சுயமரியாதை உலகம்
பாராட்டற்பாலது..
தொட்டதற்கெல்லாம் தன் இஷ்டப்படி கைத்தூக்க இரட்டை மெஜா
ரிட்டி வைத்திருந்த ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலும் செய்வதற்குப் பயப்படும். படியான காரியங்கள் இந்தக் காலத்தில் வெகு தாராளமாக நடைபெறுவது
குறிப்பிடத்தக்கதாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.05.1930
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
அறிவிப்பு
இரண்டு ஆண்டுகட்கு முன்னர் திருநெல்வேலி திரு. கே. சுப்ரமண்
யம் என்பவர் இந்தியாவில் நமது இயக்கத்தின் பெயரையும் நம்முடைய பெயரையும் உபயோகப்படுத்தி அதன் பயனாய் அநேக தவருதல் செய்த தாக தெரியவந்து, அதை பத்திரிகையில் வெளிப்படுத்தி இருந்தோம். பின்னர்: திரு.சுப்ரமண்யம் அவர்கள் இந்தியாவிலிருந்து மலாய் நாடு சென்று அங்கி ருந்து நமக்குதான் ஏதோ தவருதலாய் சில காரியம் செய்து விட்டதற்கு வருந்துவதாகவும், அதை மன்னிக்க வேண்டுமெனவும் இனி இந்த மாதிரி யான எந்த குற்றங்களும் செய்வதில்லை என்றும் நீண்டதொரு மன்னிப்புக் கடிதம் எழுதியிருந்தார். நாமும் அவர் இனிமேல் திருந்திவிடுவாரென நம்பியே இருந்தோம். ஆனால் நாம் மலாய் நாடு சென்று திரும்பிய பின் நமக்கு பினாங்கிலிருந்து ஒரு முக்கிய நண்பரிடமிருந்து வந்திருக்கும் கடித வாயிலாக திரு. சுப்ரமண்யம் அவர்கள் மீண்டும் மலாய் நாட்டில் தவறுத லானவும் மோசடியானதுவுமான குற்றங்கள் பல செய்துவிட்டு வேறு எங்கேயோ சென்று விட்டதாகத் தெரிய வருகிறது. ஆதலால் திரு. சுப்ர மண்யம் அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்தாலும் அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தாலும் இதைப் பற்றி நமக்கு சரியான சமாதானம் எழுதாவிட்டால், அவசியம் அடுத்த வாரம் அக்கடிதம் பிரசுரிக்க வேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - அறிவிப்பு - 25.05.4930
குடி அரசு - 1980 (1) 194
5 ளூயாமய் இணாம்
திருவாளர்கள் எஸ். சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ் திரிகள் இவர்கள் விலாசம் முதலில் தெரிவிப்பவர்கட்கு ஐந்து ரூபாய் இனாம்: பரிசு அளிக்கப்பெறும்.
- சித்திரன்
குடி அரசு - அறிவிப்பு - 25.05.1930
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
€சலம் வண்ணியகுகைஷைத்திரிமார் மகாநா௫
உங்களை நீங்ககே தாழ்த்திக்கான்ணாதீர்கள்
சகோதரர்களே!
உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக் கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜனமுள்ள விவசாயத்தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக் கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால் இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நான் சில வார்த்தைகள்
கூற விரும்புகின்றேன். அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப்போக நான் இங்கு வரவில்லை. மற்றபடி நான் எந்தத் துறையில் ஈடுபட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறேனோ எந்தக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்குச் சாதகம் ஆனவைகள் எனக் கருதி தொண்டாற்றுகின்றேனோ அதைப்பற்றியேதான் இப்பொழுதும் இந்த
சந்தர்ப்பத்தில் சொல்லப்போகிறேன். நான் சொல்லுவனவற்றில் பல உங்கள் மனதிற்குச் சங்கடத்தைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். பல உங்களுக்குப் பிடிக்காமலிருந்தாலுமிருக்கலாம். எப்படி இருந்த போதிலும் என் சொற்கள் முழுவதையும் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நான் கூறப் போவதில்லை. நான் கூறுவனவற்றை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியெனப்பட்டால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள் என்ற முறையில்தான் சில சொல்லுகிறேன்.
சகோதரர்களே
பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இளி கூட்டுவதாயிருந் தால் தங்கள் ஜாதிப் பெருமையைப் பற்றி பாட்டிக் கதைகள் பேசி
குடி அரசு - 1980 (1) 196
அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படிவெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இம் மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் நீங்கள் சில ஜாதிக்கு மேலானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.ஏனெனில் நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆக வேண்டுமென்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக் கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ் ஜாதி பட்டம் நிலைத்து விடுவதோடு நீங்கள் மேல் ஜாதி என்கின்ற தத்துவம் தகராறில்
இருந்து விடுகின்றது.
உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல க்ஷத்திரிய ரென்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்: கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்டஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதமில்லாமல் ஒப்புக் கொண்டவர். களாகி விட்டீர்கள். ஆனால் உங்கள் க்ஷத்திரியத் தன்மையாலோ தகராறுக ளுக்கு குறைவில்லை. நீங்கள் வன்னியர் குல க்ஷத்திரியரென்றால் நாடார்கள். தங்களை அக்கினி குல க்ஷத்திரியர்களென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றை விட கொஞ்ச
மும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி உங்களை கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை க்ஷத்திரி யர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழிவார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பேரைச் சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.நாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் க்ஷத்திரியர்கள் அல்ல என்று சொல்லி விட்டு தாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள். நீங்கள் மூன்று பேரும் க்ஷத்திரியர்கள் அல்ல. நாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் க்ஷத்திரி, யர்கள் அல்ல; நாங்கள் தான் சரியான க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். இது போல் இன்னமும் குடகு க்ஷத்திரியர்கள் எத்தனையோ பேர் க்ஷத்திரியப் பட்டத்திற்கு இத்தனைப் பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும், சண்டை யும்போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலணாய் எச்சில் கிண்ணம் கழுவுபவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்ப வனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்து விட்டது. அப்படி கிடைக் கப்பெற்ற அந்தப் பிச்சைத் தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக்
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கொண்டு மகாநாடு கூட்டி, க்ஷத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லி விடுகிறான். அப்படி இருந்துங்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் சிறிதும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக்கழுவி தண்ணீரைக் குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக்கிறான். ஆகவே இந்த மாதிரி ஒரு இழி வானதும் முட்டாள்தனமானதும் அர்த்தமற்றதுமான காரியங்களுக்கு இம் மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தாலும் இம்மகாநாடுகள் அழிந்து போவதே மேல் என்று மிக்க வருத்தத்துடன் சொல்லிக் கொள்ளுகி றேன். தங்கள் ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு
பிற ஜாதிகளை சாடையாயும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடு
களின் சுபாவமாய் விட்டது. இதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள். தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை: தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் என்பவர்கள் தங்களை விஸ்வப் பிராமணர்கள் என்பதும், செளராஷ்டிரகள் என்பவர்கள் தங்களை: செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், சாலியர்கள் என்பவர்கள் தங்களை சாலிய பிராம ணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள். உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்க்கை நடத்திக் கொண்டு தங்களை: பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேரிப் பட்டங்களை வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றதை பார்க்கின்றோம்.
ஆனால் பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்து கொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல க்ஷத்திரியர்கள் கூட அல்ல பேசப்போனால் வைசியர் கூட அல்ல, நாங்கள்தான் பிராமணர்கள், நீங்கள் எல்லோரும் எங்களுக்குத் தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் சட்ட புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்து விட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக் கொண்டு செளகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேரி செளக்கிய நிலை நிலைப்பதற் கேதான் இப்பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படத் தக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம். ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக் கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக்
குடி அரசு - 1980 (1) 198
கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
சகோதரர்களே! இந்தியா ஒரு நாடு ஆக வேண்டாமா?
இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே இந்தியா முழுமையும் பற்றிபேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாய்
இருக்கின்றதா?
நீங்களே யோசித்துப் பாருங்கள். சாதிகள் காட்சி சாலையாக, மத கண் காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?
இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம்ம நாட்டை
யும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்த்துக் கொள்ளுவதென்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அதிசயிக்கத்தக்கபடி முன்னேறுகிறார்கள். ஆச்சரியமானதும் அற்புதமானதுமான காரியங்களைச் செய்கின்றார்கள்.
நாம் இன்றையதினம் யார் க்ஷத்திரியர் என்று பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம்.
க்ஷத்திரியன் என்கின்ற வார்த்தைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? அந்த பெயரினால் என்ன லாபம். அந்த பட்டம் வைத்துக் கொண்டால் நம்மிடம் என்ன மாறுதல் ஏற்பட்டு விட்டது? எந்த தேசத்தைப் பிடித்தோம். எதை ஆளுகிறோம் யாரிடத்தில் கூறித் தரம் காட்டினோம். ஏதோ சிலர். பூணூலைப் போட்டுக் கொண்டதைத் தவிர காரியத்தில் 100க்கு 90 பேர்கள். கூலிகளாயிருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் காணோமே. எனது நாடார். நண்பர்கள் அநேகர் இப்போது பூணூலை அறுத்தெறிய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் ஜாதி விஷயத்தை இனி மறந்துவிட்டு உலகப் போக்கில் கலந்து கொள்ள முன்வாருங்கள் என்று கூப்பிடவே இங்கு வந்தேன். உலகப்போக்கு இப்போது எப்படி இருக்கிறது. ஆகாயத்தில் மனிதன் மணிக்கு 250 மயில் வேகம் பறக்கிறான். தண்ணீருக்குள் முழுகும் மனிதரை மணிக்கு 50 மயில் வேகம் ஓடுகிறான். நீங்கள் இமயமலைமேல் ஏறமுடியாமல் அதுதான் கைலாயம், அதுதான் வெள்ளிமலை. அங்குதான் பரமசிவன் கால்மேல் கால்போட்டுக்கொண்டு துடைமேல் பார்வதியை உட்கார வைத்துக் கொண்டு தலையில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு அதன் மூலம் கங்கை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த புளுகுக்
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கதைகள் எல்லாம் இப்போது தவிடுபொடி ஆகும்படியும் வெள்ளைக்காரன் “கைலாயத்திற்கு” போய் “பரமசிவனின் தலையைப் பிடித்து” ஆட்டி அங்கு ஒன்றுமில்லை என்பதை ருஜுப்படுத்திவிட்டான். ஆணைப் பெண்ணாக்
கவும், பெண்ணை ஆணாக்கவும், செத்தவர்களை பிழைக்க வைக்கவும்
முயற்சிக்கிறார். கிழவனைக் குமரனாக்குகிறான். ஆண் குழந்தை வேண்டு மானால் ஆண் குழந்தையையும் பெண் குழந்தை வேண்டுமானால் பெண் குழந்தையும் பெற்றுக் கொள்ள வழிகண்டு பிடிக்கிறான். செவ்வாய் மண்டலம். போகிறான். தந்தியில் சேதி அனுப்பி பாட்டு அனுப்பி இப்போது ஆட்டம் அனுப்புகிறான். பொம்மைகள் எல்லாம் கம்பியில்லாத தந்தியில் உருவங்கள். எல்லாம் ஆகாய தந்தியில் வருகின்றது. (நமக்கு யார் க்ஷத்திரியர் என்பதும்,
க்ஷத்திரியர் உலகத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதும் இன்னமும் நமது ஆராய்ச்சி யில் முடிவு பெறவில்லை) ஆகவே அந்தமாதிரி உலகப் போக்கை: நீங்களும் தயவு செய்து திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளத்தான் இங்கு வந்தேனே ஒழிய இவ்வளவு காயலாவுடன் உங்கள் மனம் நோகும் படியே நான் இங்கு வரவில்லை. மற்றபடி இந்த நாட்டில் இருக்கும் உங்கள்
சமூகம் ஒற்றுமையுடன் பாடுபடாவிட்டால் நீங்கள் எவ்வளவோ மேன்மை பெற்று இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செய்யலாம். சட்டசபை ஸ்தல ஸ்தாப னம் இவைகளை கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர் நிலைக்கு கொண்டு. வாருங்கள். வெறும் நாமமும் பூணூலும் ஒன்றையும் அளித்து விடாது. மூடப்பழக்க வழக்கங்களை விட்டு ஓட்டி அறிவை பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள். சட்டசபை முதலிய தேர்தல்களில் நீங்கள் தைரியமாய் முன் வாருங்கள். கட்சி பேதங்களை விட்டு ஒழியுங்கள். முதலில் உங்கள்.
சமூகம் முழுவதும் ஒன்றானால்தான் மற்ற சமூகங்களுடன் நீங்கள் சரிசமமாக ஒத்துவாழமுடியும் என்பதை தெரியப்படுத்திக் கொண்டு நான் இதுவரை: சொன்னவைகளை அப்படியே நம்பிவிடாமல் உங்கள் சொந்த அறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு இம் மகாநாட்டை திறந்து வைத்ததாகச் சொல்லி அமர்கின்றேன்.
குடி அரசு - சொற்பொழிவு - 01.06.1930
குடி அரசு - 1980 (1) 200
சுமாமறரியாதை மகாநாடு முழுவ
சகோதரி சகோதரர்களே!
நான் மகாநாட்டில் அதிகமாக பேசக் கூடாது என்று கருதியிருந்தேன். ஆகிலும் இந்தக் காரியத்தை நானே செய்ய வேண்டுமென்று நண்பர் ௦. ஷண்முகம் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியதால் சில வார்த்தைகள். சொல்லி எனது கடமையைச் செய்கிறேன்.
இந்த மகாநாட்டை பிப்ரவரி மாதத்திலேயே நடத்தியிருக்க வேண்டி யது. நானும் என் நண்பர்களும் மலேயா நாடு சுற்றுப் பிராயணஞ் சென்று இருந்ததால் அங்கிருந்து வந்த பிறகு போதிய சாவகாசத்தோடு இப்போது
தான் நடத்த முடிந்தது.
மலேயா நாட்டிலிருந்து வந்ததும், மகாநாடு நடத்த எண்ணி மகா நாட்டுக்கு யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று நண்பர்களோடு கலந்து பேசுகிற போதே முதலில் திரு. ஜயக்கர் அவர்கள் பெயர்தான் மனதுக்குப்பட்டது. உடனே திரு. ஜயக்கர் அவர்களைக் கேட்டு சம்மதிக்கும்
படிச் செய்யும் படியாக திரு. ஷண்முகம் அவர்கட்கு டில்லிக்கு தந்தி கொடுத்தேன். அதற்கு திரு. ஐயக்கர் அவர்கள் ஊருக்குப் போய் விட்டார். எழுதியிருக்கிறேன் என்று பதில் வந்தது. பிறகு திரு. ஷண்முகம் அவர்கள் கோவைக்கு வந்தபிறகு கோவையிலிருந்து திரு. ஜயக்கர் அவர்கள் சுயமரியாதை இயக்க சம்பந்தமான கொள்கைகளையும் அதன் சம்பந்தமான
பிரசுரங்களையும் தெரிய ஆசைபடுவதாக தந்தி வந்தது. வந்தவுடன் அதற்குப் பதிலாக சென்ற மகாநாட்டின் நடவடிக்கைகள் கொண்ட ரிவோல்ட்டு பத்திரிகை பிரதிகளில் சிலவற்றையனுப்பியதும், திரு. ஐயக்கர் அவர்கள் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டு, தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டார். அதற்குள்ளாக நண்பர்கள் பலர் இந்த நாஸ்திக இயக்கத்துக்கு திரு. ஜயக்கர் அவர்கள் தலைமை வகிக்க ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் வர மாட்டார் என்றும் இங்கிருந்தே சில விஷமக் கடிதங்கள் போயிருப்பதாகவும் பல நண்பர்கள் பேசிக் கொண்டார்கள். அவர் ஒப்புக் கொண்டதான சங்கதி பத்திரிகைகளில் வெளியானதும் இவ்விடமிருந்து நமது இயக்கத்தின்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
விரோதிகள் சிலர் திரு ஐயக்கருக்கு அவரை வர வேண்டாமென்றும் வந்தால் கொல்லப்பட்டு விடுவார் என்றும் அவர் வருவதற்குள் கொட்டகையில் தீ வைக்கப்பட்டு விடுமென்றும் பல மாதிரியாகவெல்லாம் எழுதினார்கள். (இந்த மொட்டைக் கடிதம் ஈங்கூர் தபாலாபீசில் முத்திரையிடப்பட்டதாக திரு. ஜயக்கர் அவர்களால் காட்டப்பட்டது இவ்வளவையும் பார்த்த பிறகு திரு. ஜயக்கர் அவர்கள் சற்றும் யோசியாமலும் தான் இது வரையிலும் போகாத
ஒரு புது ஊருக்கும் அதுவும் முன்பின் கேட்டிராத ஒரு சிறு ஊருக்கு வரத் துணிந்ததென்றால் அது மிகவும் ஆச்சரியப் படத்தக்கதும் பாராட்டப்படத் தக்கதுமேயாகும்.
திரு. ஜயக்கர் அவர்கள் தனது முடிவுரையில் மொட்டைக் கடிதாசி களைப் பற்றியும் மிரட்டுதல் கடிதாசிகளைப் பற்றியும் சொல்லும் போது, இந்த கடிதங்களைப் பார்த்த பிறகுதான் தனக்கு இவ்வியக்கத்தின் பெருமை விளங்கிற்றென்றும் அப்படிப்பட்ட ஊருக்கு என்ன நேருவதா யிருந்தாலும் போய்விட்டுத் தான் வர வேண்டுமென்கின்ற எண்ணம் தனக்கு தோன்றிய தாகவும் சொன்னதிலிருந்து அம்மாதிரியான கடிதம் எழுதியவர்கட்கும் நம் மகாநாட்டின் சார்பாக முதலில் நன்றி கூறுவதற்குக் கடமை பட்டிருக்கிறோம்.
இரண்டாவதாக இவ்வளவுக்கும் துணிந்து வந்து மகாநாட்டை இவ்வளவு கெளரவமாய் நடத்திக் கொடுத்ததற்கு திரு. ஜயக்கர் அவர்கட்கு நமது என்றும் மறக்கமுடியாத நன்றியறிதல் உரித்தாகுக.
சகோதரர்களே! திரு.ஜயக்கர் அவர்கள் மகாநாட்டிற்கு வந்து தலைமை: வகித்து நடத்திக் கொடுத்தது மாத்திரமல்லாமல் அவர் நமது இயக்கத்தை பற்றியும், அதன் ஒவ்வொரு கொள்கையைப் பற்றியும், புகழ்ந்து பேசி யிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நாம் என்றும் மறக்கமுடியாததும், நமக்கு எவ்வளவோ பின்பலமானதுமான வார்த்தைகளுமாகும். அதோடு அவர் எத்தனை வித எதிரிகள் ஏற்படுவார்கள் என்றும் அவர்கள் எவ்வெவ் விதமான பழி வார்த்தைகளால் எதிர்ப் பிரசாரம் செய்வார்களென்றும் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் இந்த நாட்டிலே இருந்தவர் போல அவ்வளவு முன்யோசனையுடன் சொன்னது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. எல்லாவற் றையும் விட ஒன்றுக்கும் பயப்படாமல் தைரியத்துடனும் ஊக்கத்துடனும் தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு போக வேண்டுமென்றும் எவ்வித எதிர்ப்பையும் லட்சியம் செய்யக் கூடாதென்றும் இதுதான் இந்தியா வுக்கு முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியமென்றும் அவர் எடுத்துச் சொன்னதிலிருந்து நமது மனம் எவ்வளவு உற்சாகத்தையடைந்திருக்கிற தென்பதையும் நம் எதிரிகள் மனம் எவ்வளவு வெட்கப்பட்டிருக்கும் என்பதையும் தங்கட்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.எல்லாவற்றையும் விட அவர் சொன்ன மற்றொரு விஷயத்தைப் பற்றி உங்கள் எல்லாரையும் விட நானே அதிகமாகப் பெருமை பாராட்டிக் கொள்ளுகிறேன்.
குடி அரசு - 1980 (1) 202
என்ன வென்றால், “இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு ஏடு ஏடாய் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்கின்ற வார்த்தைக்கு மேலானதாகவோ ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டு பிடிக்க முடியாது” என்று சொல்லி
யிருப்பதாகும்.
இந்த வார்த்தையானது நமது நண்பர்களிலேயே சிலர் “கொள்கைக ளெல்லாம் நமக்குக் பிடிக்கின்றன. ஆனால் சுயமரியாதை என்கிற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை” என்று சொல்லுகிற மேதாவிகளுக்குத் தக்க
பதிலாகும்.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் சொன்னார்கள். ஆயினும் இப்பொழுது அதைத் தவிர வேறு பெயர் வைப்பது பொருந்தாதென்று அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். அது போலவே தான் இந்தப் பெயரும் இப்பொழுது யாராருக்கு பிடிக்கவில்லையோ அவர்க. ளெல்லாம் கூடிய சீக்கிரத்தில் இந்தப் பெயரைத் தங்களுடைய பிள்ளைகட்கும் வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த இயக்கமானது இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் வைத்து கொண்டு மூடப்பழக்க வழக்கங்க ளையும் எடுத்துக் காட்டிக் கொண்டு மக்களைப் பரிகாசம் செய்து கொண்டி ருப்பதுபோலவே என்றைக்கும் இருக்குமென்றோ அல்லது இவைகள். ஒழிந்தவுடன் இயக்கத்திற்கு வேலையில்லாமல் போய் விடுமென்றோ யாரும்
கருதி விடக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறது என்கின்ற தன்மையிருக்கும் வரையிலும் ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினிக்கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டு விட்டு வயிற்றைத் தடவிக் கொண்டு சாயுமான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற தன்மை இருக்கிற வரையிலும் ஒருவன் இடுப்புக்கு வேஷ்டி இல்லாமல் திண்டாடுவதும் மற்றொருவன் மூன்று வேஷ்டிப் போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக்
காரர்கள் எல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுய வாழ்வுக்கே ஏற்பட்டது என்று கருதி கொண்டிருக்கிற தன்மையிருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தே தான் தீரும். மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்வியக்கத்தையும் ஒழிக்க இந்த உலகத்தில்
யாராலும் முடியாதென்பதே நமது உறுதி. ஆகையால் இதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மற்றொரு எதிர்பாராத நன்மை என்னவென்றால் நல்ல கோடை
காலத்தில் அதிலும் கோடை மூர்த்தண்யமான மத்திய காலமாகிய அக்கினி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கொடிய உஷ்ண காலத்தில் இந்த மகாநாடு இங்கு கூட்ட நேர்ந்தது பற்றி நான் வெகு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன், வருகிற ஜனங்கள் வெயிலின் கொடுமையினால் உஷ்ணந் தாங்காமல் கஷ்டப்படுவார்களென்றும் ஸ்நானஞ் செய்து கொள்வதற்குக் கூட வாய்க் காலில் தண்ணீரில்லாமல் சர்க்காரால் நிறுத்தப்பட்டு பெரிய கஷ்டம் ஏற்பட்டு. விட்டதே என்றும் கவலைப்பட்டு தண்ணீர் செளகரியத்திற்காக எவ்வளவோ கஷ்டமெடுத்துக் கொண்டிருந்தேன். அதற்காக சாமான்கள் எவ்வளவோ வாங்கிப் போட்டுமிருந்தேன். அப்படியிருக்க மகாநாடு நான்கு நாளிருக்கு
முன் மழை ஆரம்பித்து இரவு பகலாய் ஒரு மணி நேரங்கூட சாவகாசமில் லாமல் பெய்து கொண்டிருந்ததைப் பார்த்து நான் மிகக் கவலைப்பட்டு விட் டேன். மழைப் பெய்வதைப் பார்த்து ஊரில் பலர் பரிதாபப்பட்டிருந்தாலும் அதாவது இவ்வளவு பெரிய முயற்சிகள் எடுத்துச் செய்கிற இந்தக் காரியம் நன்றாய் நடப்பதிற்கில்லாமல் போய் விடுகிறதே என்று பரிதாபப் பட்டிருந் தாலும் சிலர் சந்தோஷப் பட்டுக் கொண்டு “சாமியையும் மதத்தையும் பெரி யார்களையும் வைதவர்கள் இதுவரையில் யாராவது உருப்படியாகியிருந் தாலல்லவா சுயமரியாதைக்காரர்கள் காரியமும் உருப்படியாகு”” மென்றும் “மகா நாட்டை நடத்த விடாமற் செய்யவே கடவுள் இம்மாதிரி மழையைக் கொண்டு வந்து விட்டுவிட்டார்” என்றும் பல மாதிரி பேசினார்கள். இந்த
வரில் அநேகப் பெண்களும் இதை உண்மையென்றே நம்பி இதேப் பேச்சாக பேசிக்கொண்டுமிருந்தார்கள். ஆனால் நேற்று பகல் 1 மணியுடன் மழை நின்று ஈரோடு பட்டணத்தை நீலகிரி மலை போல் குளிர்ச்சியாக்கி வந்திருந்த ஜனங்கட்கெல்லாம் எத்தனை ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருந்தாலும் செய்ய முடியாத அவ்வளவு குளிர்ந்த காற்றையும் செளகரியத்தையும் உண்டாக்கி விட்டது. தண்ணீர்க்காக கொண்டு வந்த பானைகள் அப்படியே கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கின்றன. தண்ணீர் குழாய்களெல்லாம் மூடி வைக்க வேண்டிய வேலையே சரியாய் இருக்கின்றது. ஐஸ் கட்டிகள் எல்லாம்.
திரும்பிப் பார்ப்பாரற்று கரைகிறது. நமது எதிரிகள் சொல்வது போல் ஒரு சாமியே இருந்து அது இந்த மகாநாட்டையே நடக்க ஒட்டாமல் செய்ய வேண்டுமென்று கருதி மழையைப் பெய்யச் செய்திருக்குமேயானால் இன்: றைய நிலையைப் பார்க்கிற போது அது ஒன்றா ஏமாந்து போயிருக்க வேண்டும் அல்லது அதற்கு புத்தி வந்து நாம் என்ன செய்தாலும் மகாநாடு
நடந்து தான் தீரும் என்று கருதி நம்முடன் ஒத்துழைக்க முடிவு செய்து கொண்டிருக்க வேண்டும்.
பொதுவாக மழையினால் நமக்கேற்பட்ட நன்மை இவ்வளவு அவ்வ ளவு என்று சொல்ல முடியாது. தவிர அநேக காரியங்களில் வந்திருந்த பிரதிநிதிகளை சரியானபடி கவனிக்க முடியாமல் எவ்வளவோ குறைகள் ஏற் பட்டிருக்கலாம். (ஒன்றுமில்லை என்கிற சப்தம்) என்ன இருந்தாலும் மன்னித்
குடி அரசு - 1980 (1) 204.
துக் கொள்ள வேண்டும். திடீரென்று மகாநாட்டை பதினைந்து நாள் முன் கூட்டியே நடத்த வேண்டி நேர்ந்ததால் சரியானபடி விளம்பரமும் செய்யாத தால் வேறு பல உத்சவம், பண்டிகை, கல்யாணம் ஆங்காங்கு நேர்ந்திருந் தாலும் எவ்வளவு ஜனங்கள் வரக்கூடுமென்று எதிர் பார்த்திருந்தோமோ அதற்கு இரட்டிப்பாகவே வந்து விட்டதால் எங்களால் சரியானபடி கவனிக்கப்
பட்டிருக்க கூடுமென்ற நம்பிக்கையில்லை. ஆனால் எங்களுடைய அன்பிலா.
வது, ஆசையிலாவது, கவலையிலாவது ஒரு சிறிதும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறோமென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் மகாநாட்டுக்கு நன்கொடையளித்தவர்களுக்கும் நன்றியறிதலை செலுத்து கிறோம். இரண்டு மூன்று நாள்தான் வெளியில் வசூலுக்குபோனோமானாலும் போன இடங்களில் நாங்கள் எதிர்பார்த்த தொகைக்கு ஒரு சிறிதும் குறை யாமல் எங்கட்கு தாராளமாகக் கிடைத்தது. முன்றே ஊர்களில் தான் நாங்கள். வசூல் செய்தோம். அவ்வளவும் உயர்திரு வாளர்கள் சி.எஸ்.இரத்தினசபாபதி அவர்களாலும் கே.ஏ. ஷேக் தாவூத் அவர்களாலும் பழனிச்சாமி அவர். களாலேயுமே வசூல் செய்யப்பட்டதாகும்.
சில இடங்கட்கு நாங்கள் வசூலுக்கு வரவில்லையென்று மனஸ்தா பப்பட்டுகொண்டதாகவும் கேள்விப்பட்டோம். இந்த காரியத்துக்கு எவ்வளவு போதுமென்று கருதினோமோ அவ்வளவுடன் நின்று கொண்டோம். திரு. பி. எஸ்.ஜி. அண்டு சன்ஸ் வெங்கட்டசாமி நாயுடு அவர்கள் நெற்றியில் பெரிய நாமத்தை போட்டுக் கொண்டு கொட்டகைக்குள் வரும் போது நீங்கள் எல்லோரும் அவரைப் பார்த்து சிரித்தீர்கள். அவர்கள் இந்த ஜில்லாவில் ஒரு பெரிய குடித்தனக்காரரும், மில் மானேஜரும் அதாவது நூல்யந்திர சாலை மானேஜருமாவார். அவர்கள்பல பள்ளிக் கூடங்களையும் தர்ம கைத் தொழிற் சாலைகளையும் அநாதை ஆசிரமங்களையும் வைத்து நிர்வகித்து வருகிறவர். நமது மகாநாட்டுச் செலவுக்கு வசூலுக்கு போனவுடன் என்ன தொகை கேட்டோமோ அதை யாதொரு பதிலும் சொல்லாமல் ரூ.250க்கு கையெழுத்
துப் போட்டு ரூபாயை கொடுத்து விட்டார்கள்.நமது கொள்கைகளில் அனேக விஷயங்களில் மிகப் பற்று கொண்டவர். காரியத்திலும் நடத்திக் கொண்டு வருகிறார். சத்தியாக்கிரகம் முதலிய காரியங்கட்கு இன்னும் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள், இந்த ஜில்லாவில் இவர்களைப் போலவே இன்னும் அநேக கனவான்கள் கொடுக்க காத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆனதினால் பெரிய நாமத்தைப் பார்த்து அவர் ஏதோ அந்த நாமத்தால் ஏமாந்தவர் என்று கருதி விடாதீர்கள். உங்களை ஏமாற்றத்தான். அவர் அவ்வளவு பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முடிவாக இம்மகாநாட்டிற்கு உதவி செய்து பெரிதும் கஷ்டப் பட்டு உழைத்த பல பெரியார்களைப் பற்றியும் இந்த
சமயத்தில் சில வார்த்தை கள் சொல்லி அவர்களுக்கும் எனது நன்றியறிதலை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
முதலாவதாக நமது இயக்க ஸ்தாபனத் தலைவராகிய உயர்திரு டபுளியூ, பி. ஏ. செளந்திரபாண்டியன் அவர்கள் இம்மகாநாடு விஷயத்தில் செய்த உதவிக்கும் அடிக்கடி இங்கு வந்து ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் அளித்த ஊக்கத்திற்கும் இயக்கத்
தின் சார்பாக அவருக்கு நன்றியறிதல் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.
அது போலவே வரவேற்புத் தலைவர் திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்களும் அடிக்கடி இங்கு வந்து விஷயங்களை கவனித்து அப்போதைக் கப்போது நமக்கு வேண்டிய யோசனைகளை சொல்லி வந்ததுடன் தலைவர் சம்பந்தமான காரியங்கள் கடிதப்போக்குவரத்துகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டு வரவேற்பு கமிட்டியை நடத்தி கொடுத்ததற்கு அவருக்கும் நமது நன்றியறிதல் உரியதாகும்.
பிறகு இம்மகாநாட்டுக்கு காரியதரிசிகளாய் இருக்க சம்மதித்து முழுப் பொறுப்பையும் தங்கள் மீது போட்டுக் கொண்ட உயர்திருவாளர்கள் கோவை சேர்மேன் 05. இரத்தினசபாபதி ஈரோடு சேர்மேன் கே. எ. ஷேக்தாவூது சாயபு ஆகியவர்களின் உதவிக்கு தக்க நன்றியறிதல் செலுத்த எனக்கு வார்த்தைகளே கிடைப்பது அருமையாயிருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்வதனால் இந்த மகாநாட்டைப் பொருத்த வரையில் அவ்விரு கனவான்களும் இல்லையானால் இந்த மகாநாடே இவ்வளவு வெற்றிகரமாய் நடந்திருக்காது என்றே சொல்ல வேண்டும். இதில் கொஞ்சங் கூட முகஸ்துதியோ கூட்டிச் சொல்வதோ இல்லை என்பதை நம்புங்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தையும் சொல்வதனால் சட்ட சபையில் கேள்விகள் சரமாரியாய் புறப்பட்டு விடும். ஆனால் அதற்கெல்லாம் இவ்விரு வர்களும் பயந்தவர்கள் அல்ல.டிஸ்ட்ரிக்ட் போர்டு உதவி இன்ஜினியர் திரு. மகா வீரப்பா அவர்களும் ஓவர்சியர் திரு. விஸ்வநாதய்யர் அவர்களும் 15, 20 நாட்களாக தங்கள் ஒழிவு நேரங்களையெல்லாம் இரவும் பகலும் இக் கொட்டகைக்கே செலவிட்டார்கள். கொட்டகை விஷயத்தில் நான் சிறிது கூட கவலை எடுத்துக் கொள்ளவேயில்லை. அவர்கள் கைப்பட பந்தல் கால்கள்.
நட்டதும் மற்ற வேலைகள் செய்ததுமான காரியங்கள் எப்போதும் மறக்க
முடியாததாகும்.
அது போலவே முனிசிபல் அதிகாரிகளும் செக்ரிடெரி திரு.ராமசாமி முதலியார், ஓவர்சியர் திரு. நாராயணசாமி முதலியார், பிட்டர் திரு. பொன்னுசாமி, சுகாதார இன்ஸ்பெக்டர்கள் திருவாளர்கள் ராமசாமி அய்யர். வேலுச்சாமி பிள்ளை ரோட்டு ஓவர்சியர் சேஷய்யங்கார் முதலியவர்களும்
மற்றும் முனிசிபல் சிப்பந்திகளும் கழனியாயிருந்த இந்த இடத்தையும் மிக்க
புதராயிருந்த பாதைகளையும் மிக்க ஆபாசமாயிருந்த அசிங்கங்களையும் இவ்வளவு தூரம் சிங்காரத் தோப்பு போல ஆக்கி வைத்ததுடன் ரோட் விஷயங்களிலும் சுகாதார விஷயங்களிலும் அவர்கள் எடுத்துக் கொண்ட
குடி அரசு - 1980 (1) 206
முயற்சிகளும் கவலைகளும் மிகவும் மிகவும் போற்றக் கூடியதாகும்.
மற்றபடி சாப்பாட்டு விஷயமாய் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு மிக்க திருப்திகரமாய் நடத்திக் கொடுத்த திருவாளர் எம்.எஸ். முத்துக் கருப்பஞ் செட்டியாரவர்கள் செய்த உதவியைப் பற்றி நான் உங்களுக்கு அதிகமாய் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
பிரதிநிதிகள் எல்லோரும் அவர்கள் பெயரையே புகழ்ந்து சொல்லிக் கொண்டிருப்பதை நான் காதாரக் கேட்டேன். மகாநாட்டு நடவடிக்கைகள்
எப்படி இருந்தாலும் வந்த பிரதிநிதிகளுக்கு தக்க ஜாகையும் நல்ல சாப்பாடும். போட்டால் போதுமென்றுதான் நான் முதலில் நினைத்தேன். அந்த காரியம் அவர் ஒப்பு கொண்டதால் எனக்கு ஒருபெரிய விடுதலை ஏற்பட்டது. இந்த ஊணில் நடக்கும் எந்த காண்பரன்சிலும் கொள்கை அவருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சாப்பாட்டு வேலையை அவர் ஒப்புக் கொள்வதே
வழக்கம். அதற்குத் தகுந்தபடி கஷ்டப்பட்டு அதை குறைவில்லாமல் நடத்திக் கொடுப்பதும் அவர்கள் வழக்கம்.அதுபோலவே இந்த மகாநாட்டில் ஏற்பட்ட வேறு குறைகள் ஏதாவது இருந்திருந்தாலும் கட அவைகளையெல்லாம் திரு. முத்துக் கருப்பஞ் செட்டியாருடையவும் இவரது நண்பர்களுடையவும்
முயற்சி மறைத்து விட்டதென்றே சொல்லுவேன்.
ஆதலால் அவருக்கு நமது நன்றியறிதல் என்றும் உரியதாகுக. வாலண்டியர்கள் தொண்டர்கள் விஷயத்திலும் அது போலவே திரு. முத்து கருப்பஞ் செட்டியார் அவர்களின் தம்பி மு. ச. சுப்பண்ணன் அவர்கள். தொண்டர் இலாக்கா காரியதரிசியாகவும் திருவாளர்கள் வரதப்பன் ஆறுமுகம் தொண்டர் தலைவராகவும் இருந்து தொண்டர்களை அன்பாய் நடத்தினதும், தொண்டர்களும் அதற்கு கட்டுப்பட்டு சிறிதும் சோம்பலும் எவ்வித வேலையிலும் வெறுப்பில்லாமலும் நடந்து கொண்டதற்கு மிக மிக பாராட்டக்கூடியதாகும். இவ்விஷயத்தில் நான் எதிர்பார்த்ததற்கு மேல் பல வழிகளிலும் அதிகமான உதவிகளையே அவர்களிடமிருந்து அனுபவித்
திருக்கிறோம்.
மற்றபடி பந்தல் சிங்காரிப்பு, லைட்டுகள், கண்காக்ஷி முதலியவை களின் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு நடத்திக் கொடுத்த திருவாளர்கள் மாயவரம் நடராஜன், சாமி சிதம்பரனார், ராமையா, சின் னைய்யா, லிங்கம், அழகிரிசாமி, காளியப்பன், பல்லடம் ராமசாமி, சிவானந்தம், செகப்பண்ணன், கேசவ ஐயா, சிக்கய்ய நாயக்கர், N ராமசாமி நாயக்கர், முதலியவர்களின் உதவி குறிப்பிட்டு இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாததாகும். திரு. அய்யாமுத்து, 5. ராமநாதன் இவர்களின் உதவி தனியாக. போற்றத்தக்கதாகும். சமையல் வேலைக்கென்று விருது நகரிலிருந்து உயர்திரு செந்தில்குமார நாடார், ராமசாமி, திருவண்ணாமலை ஆகிய வர்களால் அனுப்பிக் கொடுக்கப்பட்ட நாடார் சமையல்காரர்கள் செய்த
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சமையல் பெருமையும் ருசி பாகமும் நீங்களே நேரில் அறிந்ததாதலால் அதைப்பற்றி நான் பேசாமல் அச்சமையற் காரர்களுக்கு உங்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி செலுத்துகிறேன். சமையல் பரிமாறின பண்டாரங்கள், ஆதிதிராவிடர்கள், கிருஸ்துவ மகமதியர்களும், மாசிலாமணி, மாரிமுத்து
நாடார், மாரிமுத்து செட்டியார் ஆகியவர்களுக்கும் நமது நன்றி உரியதாகுக.
மற்றும் மகாநாட்டிற்கு தங்கள் மனைவியார்களை அழைத்துக் கொண்டு வந்த கனவான்களுக்கும் நன்றி செலுத்துகின்றேன். கடைசியாக நமது இயக்கத் தையும் இதன் உணர்ச்சிகளையும் நேரில் இருந்து பார்த்த திரு. ஜயகர்: அவர்கள் இதை வெளி மாகாணங்களிலும் பரவ முயற்சிப்பார்கள் என்று உங்கள் சார்பாய் வேண்டிக் கொண்டு என் வார்த்தையை முடிக்கின்றேன்.
@I 11051930 இல் ஈரோடு சுயமரியாதை மாநாட்டு நிறைவு நன்றியறிதல்
உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 01.06.1930
குடி அரசு - 1980 (1) 208
திறத்தில்
சுயமரியாதைப் யோர்
சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு “கஷத்திர” ஸ்தலமாகும்.அது திருநெல்வேலிக்கு 40-வது மயிலில் உள்ள நாகர்கோயி லுக்கு 2, 3 மயில் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னி யாக்குமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர் கள்:
செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது. அந்த ரோட்டுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொது ஜனங்களின் வரிப்பணத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோட்டுகளுள்ள திருவாங்
கூர் ராஜியமானது ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபஸ்வாமி என்பதின் தாசரால்! பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோட்டில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்
கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும் அந்த பத்பநாப சாமியின் பக்தர்களுமேயாவார்கள். மற்றபடி அந்த சாமியின் பக்தர்களல் லாதவர்களும் இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருஸ்தவர்களுக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு யாதொரு ஆக்ஷேபணையும், தடங்கலும் சிறிது கூட கிடையாது. இது தவிர மேற்கண்டபடி இந்துக்கள். என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமூகத்தாரைத்தவிர
மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜெந்துவும் மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம் தான் அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்
தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20 வது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் காரியத்திற்காகவே அதாவது அதுபோன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923 ம் வருஷத்தில் அதே திருவாங்கூர். ராஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம்
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
செய்ய வேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த
சத்தியாக்கிரகம் சுமார் 5,6 மாத காலம் நடைபெற்று பலர் பலதடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடையதாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்த சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்
தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இது வரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும் இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்ப தாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகின்
றது. அதற்கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இது சமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும் பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிப்பிடித்தவருமான ஒரு திவானின் ஆகஷியிலும் அந்த குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிஸ்ட் ரேட் ஆட்சியிலும் ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்பிரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது. இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்கு பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆக்ஷி செய்தவர். இவர் காலத்தில் தான் தொண்டர்களை அடித்தல்
குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்
வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீச்சத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்
தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற்கெல்லாம் வெளிப்படுத்தி னவர். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார் அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப் பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.
நிற்க, எது எப்படி ஆன போதிலும் சத்தியாக்கிரகம் வெற்றியான போதிலும் தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத் தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.
குடி அரசு - 1980 (1) 210
தவிரவும் ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மா னம் செய்து அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும். அக்கமிட்டியும் அதே சமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டு
மென்றும் அதுவும் முதலில் தெருவு, குளம், பள்ளிகூடம் முதலியவை களிலேயே தொடங்க வேண்டுமென்றும் தீர்மானித் திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். ஏனெனில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசரமானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக்கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண்ணத்தை நீக்குவதற்குத் தான் செய்யக் கூடியதே தவிர மற்றபடி கோவிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும் எல்லோரும் கோயிலுக்கு போகலாம் என்றும் ஏற்பட்டு விட்டால் கோயில் பிரவேசத்தைத் தடுக்க மறியல் கூட செய்ய வேண்டிவருமென் றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தே தான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதை. அநுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக்கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக்கிர கத்தை விட ஒரு ஹிந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது நாட்டு முன்னேற்றத்திற்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கிவிடுவதுடன் அரசியல் மூடநம்
பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கி விடும். ஆகையால் இதை சத்தியாக்கிரக கமிட்டியார் தயவு செய்து ஆதரித்து அதைமேல் போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம். இன்றைய
தினம் “சுசீந்திரத்தில்” தெருவில் நடக்கத் தடைப்படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரீகம் முதலியவைகளில் முன்ன
ணியில் நிற்கின்றவர்களுமான ஈழுவ சமுதாய மக்களுமாவார்கள். அவர்க ளோடு ஆசாரிகள் நாடார்கள் முதலிய பல கைத்தொழில் வியாபார மக்களு மாவார்கள். இப்படிப்பட்ட ஓர் பெரும் செல்வாக்கும் நாகரீகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத் தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆக்ஷே்பணை செய்ய அதைச் சுயமரியாதையுள்ள எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதை இந்த இழிவை
நிவர்த்தித்து இந்த கொடுமையிலிருந்து இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின்
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்பதென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும் கருத்து முள்ள பேச்சாகாது. ஆகையால் சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டி
யார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர்கோவிலிலாவது திருநெல்வேலியிலாவது கூட்டி
சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால் வழி நடை சுதந்தரம் ஒன்று.பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று. ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றி பெற்றவர்களா வோம். இந்த சத்தியாக்கிரகமானது 1925-வது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப்பட்டதாகும். அவ்வாக்குறுதி ஏமாற்றப் பட்டதின் பயனாக இப்போது ஆரம்பிக்கப்படுகின்றதாதலால் இதற்கு முன்னையவிட இரட்டிப்பு பலம் இருக்க நியாயமிருக்கின்றது. அன்றியும் பொது ஜன ஆதரவும் அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்டசபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரஸ்தாக்
களிலும், பொது சத்திரங்களிலும் பொது நீர்த்துரைகளிலும் சமஸ்தானத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவைகளுக்கு விரோதமாக திருவாங்
கூர் சர்க்கார் நடப்பார்களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆக்ஷி இந்திய ஆகஷியா? பிரிட்டிஷ் ஆக்ஷியா? என்பதும் விளங்கிவிடும்.
ஆகையால் சுயமரியாதை தொண்டர்களே! சமதர்ம தேசீயவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவை தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பா ரங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.06.4930
குடி அரசு - 1980 (1) 212
ரஷியா வி௫கலை அடைந்த விதம்
ருஷியா தேசம் விடுதலை அடைந்த விதத்தைப் பற்றி அமெரிக்கா விலுள்ள திரு. சுசீந்திர போஸ் என்னும் இந்திய கனவான் ஒருவர் எழுதி “ரஷிய மதப்புரட்சி” என்னும் வியாசத்தின் சுருக்கத்தை மற்றொரு புறம் பிரசுரித்திருக்கின்றோம்.
அதை வாசகர்கள் சற்று ஊன்றிப் படித்தால் மத சம்பந்தமாகவும், மதக்குருக்கள், மடாதிபதிகள், புரோகிதர்கள் ஆகியவர்கள் சம்மந்தமாகவும்
நாம் 4, 5 வருஷ காலங்களாய் குடி அரசில் எழுதி வரும் விஷயங்களில் அநேகங்களை ஒத்து இருப்பதைக் காணலாம்.
பழய ரஷியாவில் உள்ள மத நிலைமை மத ஆச்சாரியார்கள். மடாதிபதிகள் ஆகியவர்கள் நிலைமையே தான் இன்றைய நமது இந்தியா
விலும் இருந்து வருகின்றது. ஆகவே ரஷியாவின் அந்த பழயநிலை நீங்கிய பிறகு தான் எப்படி ருஷியா சுவாதீன நாடு ஆவதற்கு இடம் ஏற்பட்டதோ அது போலவே இந்தியாவும் மதக் கட்டுப் பாட்டிலிருந்தும் மத ஆச்சாரியர்.
கள் மடாதிபதிகள் ஆதிக்கத்தில் இருந்தும் புரோகிதர்கள் புரட்டில் இருந்தும் அடியோடு விடுபட்டால் ஒழிய உண்மையான சுவாதீன நாடாகாது என்பது நமது அபிப்பிராயமாகும்.
மதக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தினவர்களெல்லாம் ஒருவர்களாவது சமாதான முறையிலோ அகிம்சா தர்மத்திலோ மனச்சாட்சிப்படி நடக்க விட்டோ ஏற்படுத்தினதாகவும் அவைகளை காப்பாற்றும் முறையிலாவது நீதியையோ நியாயத்தையோ சமாதானத்தையோ கொண்டு காப்பாற்றி வந்ததாகவும் யாவராலும் கொள்ள முடியாது. எந்த மத சரித்திரத்தைப்
பார்த்தாலும் யுத்தம் செய்து அடித்து, குத்தி, மிரட்டி, கொன்று, கழுவேற்றி குடலைப் பிடுங்கி மற்றும் எவ்வளவோ சித்திரவதை முதலிய கொடுமை களும் தந்திரம் புரட்டு பொய் முதலிய காரியங்கள் செய்தேதான் அவைகள் உண்டாக்கப்பட்டு இருப்பதோடு யாராவது தட்டிப்பேசினால் தர்க்கம் செய்
தால், நியாயம் கேட்டால் அவர்களையும் அது போலவே அடித்தும் நாக்க
ருத்தும் கண்ணைப் பிடுங்கியும் சித்திரவதை முதலியவைகள் செய்தும்
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தண்டித்து மற்றும் பல வகையில் மிரட்டியும் பயப்படுத்தியுந்தான் காக்கப் பட்டு வந்தது, வருகின்றதே தவிர வேறில்லை. இவற்றிற்கெல்லாம் அந்த அந்த மதஸ்தர்கள் சரித்திரங்களும் மதபிரசாரம் செய்த சரித்திரங்களும் அதற்கு முன் இருந்த மதக்காரர்கள் நடந்து கொண்ட சரித்திரங்களும் இப்போதும் சில சமயங்களில் சில இடங்களில் நடந்து வருகின்ற பிரத்தியட்ச நடவடிக்கைகளும் யாவர்க்கும் நன்றாய் விளங்கும்.
ஆதியில் உலகத்தில் ஏற்பட்ட ஆட்சிகள் எல்லாம் பெரிதும் மக்களைக் காப்பதற்கல்லாமலும் நாட்டை எதிரிகளிடமிருந்து தப்புவிப்பதற் கல்லாமலும் முக்கியமாய் மதத்திற்காகவென்றே ஆதிக்கம் பெற்று பிறகு அதை ஆட்சி முறை ஆக வைத்து அரசாட்சி ஆரம்பிக்கப் பட்டு வந்ததுடன் அதையே மதத்தின் பேராலேயே நடத்தி மக்களை அடிமைப்படுத்தியதோடு அதன் பேராலேயே மக்களிடமிருந்து பணமும் பறித்து வந்து பிறகு அது மெள்ள மெள்ள தனி அரசாட்சியாக மாறினதாகவே பெரிதும் சரித்திரம் காண
முடிகின்றது.
இந்திய நாட்டு சரித்திரமும் அநேகமாக மகமதியர்கள் இந்தியாவுக்கு வரும் வரை மத ஆக்ஷியாகத் தான் ஆங்காங்கு கையில் வலுத்தவன் ஆண்டு கொண்டிருந்ததாக அறியலாம். மகமதியர்களும் கிருஸ்துவர்களும் இந்தியாவுக்கு வந்து இன்றைக்கு சுமார் ஆயிரம் வருஷகாலம் ஆகியிருந் தாலும் இந்துக்கள் என்பவர்கள் மீதுள்ள பழய மத ஆதிக்கம் சிறிதும் குறைவடையாமல் இருக்கவே அன்னிய ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து அரசாக்ஷியின் பேரில் அப்படியே இருந்து வர ஏற்பாடு செய்து தாராளமாய் மனம் ஒப்பியே மத ஆதிக்கமும் சிறிதும் குறைவுபடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றது. ஆதலால் தான் மற்ற நாடுகளையெல்லாம் விட இந்தியாவுக்கு இன்றைய நிலையில் இரண்டு வித ஆதிக்கம் ஒழிய வேண்டி இருக்கின்ற தென்றே சொல்லுகிறோம். எனினும் மேலே சொன்னபடி மத ஆதிக்கமே அன்னிய ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறபடியால் முதலில் மத ஆதிக்கம் ஒழிந்தால் பிறகு அன்னிய ஆதிக்கம் தானாக ஒழிய ஆரம்பித்துவிடும் என்பதே நமது கருத்து. (இன்றையத்தினம் நாம் அன்னிய ஆதிக்கம் என்று சொல்லுவது எதைஎன்றால் இந்தியர்கள் அல்லாதவர்கள் ஆதிக்கம் என்பதல்ல என்பதையும் அன்னிய நாட்டின் நன்மையை பிரதான மாய்க் கருதி ஆக்ஷி செய்யப்பட்டு வருகின்ற ஆதிக்கம் என்பதையும் ஒவ்வொருவரும் நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்)
மத ஆதிக்கமும் அன்னிய ஆதிக்கமும் ஆகிய இரண்டும் ஒரே அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கும் விஷயம். நன்றாய் கவனமாய் யோசித்துப் பார்த்தால் தான் விளங்கும்.
எப்படியெனில்:- மதத்தின் பேரால் நம் மக்கள் மீது இப்போது இருந்து
வரும் ஆதிக்கமானது சிறிதாவது நமது நன்மையைக் கருதியது அல்லவென்
குடி அரசு - 1980 (1) 214
பது சிறிதாவது நமக்கோ நமது நாட்டின் நன்மைக்கோ பயன் படக்கூடியது அல்லவென்பதும் அவை சிறிதாவது நமது அறிவுக்கோ சமூக உணர்ச்சிக்கோ ஜவாப்தாரித்தனமுடையது அல்லவென்பதும் அதைப்பற்றி ஏதாவது தட்டிப் பேசுவது கூட மதத்துரோகமும் ஜனங்களின் சமாதானக் குறைவு உண்டாக்கத் தக்கதாவதும் வகுப்புத் துவேஷத்தை உண்டு பண்ணுவது ஆகும் என்பதும் ஆக எப்படி சொல்லப்படுகின்றோமோ அப்படியே தான் அன்னிய ஆதிக்கத்திலும் நாம் ஏதாவது தட்டிப் பேசினால் கண்டிக்கப்படுகின்றோம். அதாவது அன்னிய ஆகி சிறிதாவது நமது நாட்டு நன்மைக்காகவல்ல வென்பதும் அதனால் நமக்கும் நமது நாட்டுக்கும் சிறிதும் நன்மையில்லை என்பதும் நமக்கு ஜவாப்தாரித்தனமுடையதல்ல என்பதும் தட்டிப் பேசுவது ராஜத் துரோகமும் சமாதான பங்கமும் வகுப்புத்துவேஷமும் ஆகும் என்பது
மாகும். ஆதலால்தான் மத ஆதிக்கத்தை நாம் முதலில் அழித்துவிட்டால் பிறகு அன்னிய ஆதிக்கத்திற்கு வலுவு தானாக குன்றிவிடும். நமக்காகவே ஆளப்படக்கூடிய ஆக்ஷி தானாக ஏற்பட்டுவிடும் என்று சொல்லுகிறோம். எனவே இந்த மேல் காட்டிய நமது தத்துவத்திற்கு ருஷியாவில் மதப் புரக்ஷி யானது ஒரு சரியான உதாரணம் ஆகும் என்று கருதித்தான் அதை வாசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
தவிரவும் ரஷியாவில் அந்தக் காலத்தில் இருந்து வந்த பணக்கார ஆதிக்கமே தான் சற்றேறக்குறைய இந்த நாட்டிலும் இப்போது இருந்து வருகின்றது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. என்னவென்றால் பணக் காரனுடைய பணம் நாட்டின் நன்மைக்கும் ஏழைகளின் கஷ்டம் நீங்குவதற்
கும் பயன்படுவதாயிருந்தால் நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய
தில்லை. ஏனெனில் எப்படி ஒரு இராஜ்ஜியத்தின் ஆக்ஷி அந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான தென்றும் அது அந்த நாட்டு மக்களின் நலத்துக் காகவே பயன்படத்தான் ஆளப்பட வேண்டுமென்றும் நாம் சொல்லுகின் றோமோ அது போலவே ஒரு நாட்டின் செல்வமும் பூமியும் மலையும் ஆறும் அந்த நாட்டு மக்களுக்கு சொந்தமென்றும் அந்த நாட்டு மக்களின் நன்மைக் காக பயன்படத்தான் அவை இருக்க வேண்டியது என்பது நியாயமும் அவசியமுமாகும். அப்படி இல்லாமல் “ஆகி மாத்திரம் மக்களுக்கு பொது வானது, சொத்து மாத்திரம் எனக்கு சொந்தமானது, அதை நான் என்ன வேண்டுமானாலும் என்னிஷ்டப்படிசெய்து கொள்ள எனக்கு பாத்தியமுண்டு. நாட்டு நன்மையைப் பற்றியோ ஏழைகள் நன்மையைப் பற்றியோ எனக்கு கவலை இல்லை” என்று ஒரு செல்வவான் சொல்லுவானேயானால் அது
சிறிதும் நம்மால் ஒப்புக் கொள்ளக்கூடிய நியாயமாகாது. ஏனெனில், பொது வாக நமது நாட்டின் வறுமை நிலைக்கு நமது நாட்டு பெரும் பெரும் செல்வவான்களும் பெரும் மிராசுதாரர்களும் பிரபுக்களும் காரணஸ்தர்கள் என்பதை நாம் சொல்லாமலிருக்க முடியாது. மத ஆகஷிக்காரர்கள் எப்படி
தங்கள் மத உணர்ச்சி உதவியினால் மக்களை அடிமைகளாக்கி ஆக்ஷி செலுத்துகின்றார்களோ அது போலவேதான் செல்வ ஆகஷிக்காரர்களும்
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தங்கள் செல்வநிலை உதவியால் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமை களாக்கி கஷ்டப்படுத்துகின்றார்கள்..
ஆகவேமதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் சேர்ந்து
தான் நாட்டை (அதாவது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களாகிய! ஏழைகளை வருத்துகின்றது. ஆதலால் நாட்டுக்கு உண்மையாக விடுதலை வேண்டுமானால் இம்மூன்று துறையிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்.
டால் தான் விடுதலையடைய முடியுமேயல்லாமல் வெறும் அரசியலைப் பற்றி அதன் அஸ்திவாரத்தை விட்டு விட்டு கூச்சல் போடுவதாலும் அரசாங்க ஆதிக்கத்தின் மீது கண்மூடிக்கொண்டு குறை கூறுவதாலும் ஒரு காரியமும்
நடத்து விடாது.நிற்க மேற்கண்ட இம்மூன்று விஷயத்திலும் புரட்சி ஏற்படும் போது இம்மூன்றிற்கும் உதவியாய் இருக்கின்ற ஆயுதங்களையும் முதலில்
நாம் பிடுங்கிக் கொள்ள வேண்டும். அதென்னவென்றால் அது தான் கடவுள் என்பதாகும். எப்படியெனில் ஆட்சி ஆதிக்கக்காரன் “உங்களை ஆளும்படி கடவுள் எங்களை அனுப்பினார்” என்கின்றான். மத ஆதிக்கக்காரன், உங்க ளுக்காக “உங்களை மோட்சத்திற்கு அனுப்ப கடவுள் இந்த மதத்தை ஏற் படுத்தி அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார்” என்கின்றான். செல்வ ஆதிக்கக் காரன் “முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால் இந்த செல்வத்தை கடவுள் எனக்குக் கொடுத்தார்” என்கின்றான். ஆகவே இம்
மூன்று கொடியவர்களுக்கும் (மக்கள் விரோதிகளுக்கும்) ஆயுதங்களாக இருப்பது கடவுளாகும். ஆகவேதான் அதை நாம் முதலில் ஒழிக்க வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அம்மூவர்களுக்கும் கடவுள் அனுகூலமாயிருப் பதால் அக்கடவுளை அவர்கள் எப்படி காப்பாற்ற முயலுகின்றார்களோ அது போலவே நமக்கு அக்கடவுள் விரோதமியிருக்கிறபடியால் நாம் விடுதலை பெற கடவுளை முதலில் ஒழிக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். அதாவது அம்மூவரையும் பார்த்து நாம் “உங்களை கடவுள் அனுப்பினாரோ கடவுள் உண்டாக்கினாரோ உங்களுக்குக் கடவுள் கொடுத்தாரோ என்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு இல்லாமல் செய்து கஷ்டப்படுத்தி உங்களுக்குக் கொடுத்து இருக்கும் கடவுளை நாங்கள் அரை நிமிஷமும்
ஒப்புக் கொள்ள மாட்டோம், கால் வினாடியும் அந்தக் கடவுளை இருக்கவும் விட மாட்டோம்” என்று சொல்லி விட்ட பிறகு தான் உங்கள் ஆதிக்கங்க ளையும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி ஆக வேண்டும் என்கின்றோம். இந்தக் கொள்கையைக் கொண்டுதான் ருஷியர்களும் சம
தர்மம் ஏற்பட வேண்டுமானால் முதலாவது கடவுள் ஒழிய வேண்டுமென்று நினைத்து அதற்காக முதல் முதலாக கடவுளைக்காட்டும் மதத்தின் பேரில் போர் புரிந்து வெற்றிபெற்று பிறகே அவர்கள் மற்ற காரியங்களும் செய்து கொள்ளத் தக்கவர்களாணார்கள் என்பது விளங்குகிறது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.06.1930
குடி அரசு - 1980 (1) 216
எட்டாவது ஆண்டுவிழா
சகோதரர்களே! சகோதரிகளே!
இந்தக் கண்ணனூரிலுள்ள பழமையானதும் மிக்க பொதுஜன சேவை
செய்து வருவதுமான உங்களுடைய செவ்வாய் தரும சமாஜத்தின் தலைமை வகிக்கும் பெருமையை எனக்குக் கொடுத்ததற்காக முதலில் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமாஜத்தின் மூலமாக நீங்கள் செய்திருக்கும் பொது நல சேவைக்கும் உங்களை மிகவும் பாராட்டு வதோடு இங்குள்ள பொது ஜனங்களையும் இன்னும் அதிகமாக ஒத்துழைத்து உங்கட்கு வேண்டிய சகாயஞ் செய்து இச்சமாஜத்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும் படியாய் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்
கிறேன். இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகித்ததன் மூலம் எனது சொந்த அபிப்பிராயமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீங்கள். எதிர்பார்ப்பதோடு நானும் சொல்ல வேண்டியதும் எனது கடமையாக இருக்கிறது. அப்படிச் சொல்லுவதில் உங்களுடைய சமாஜத்தின் பெயராகிய
தர்மம் என்பது பற்றியும் இரண்டு பெரியார்கள் உபன்யாசம் செய்த விஷயங் களாகிய பெண்கள் சுதந்தரம், தர்மம், கடவுள் என்பது பற்றியும் முறையே பேசுவது பொருத்தமானதென்று கருதுகிறேன். ஆகையால் அவைகளைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன். முதலாவதாக தர்மம் என்பது
பற்றி சொல்கிறேன்.
சகோதரர்களே! தர்மம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் தர்மம் என்கின்ற வார்த்தை பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதைப் பற்றி
பலர் பலவிதமாக சொல்லவும் எழுதவும் படுகிறது. ஆனால் சாதாரணமாக தர்மம் என்பதற்கு பொருள் கூறும்போது தர்மம் என்பது ஒரு மனிதனின் கடமைக்கும் மனிதனின் இயற்கைத் தன்மைக்கும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செய்ய வேண்டிய உதவிக்கும் மற்றும் ஒரு மனிதன் ஆத்மார்த்த சாதனம் என்னும் நலமடைவதற்குச் செய்ய வேண்டிய கடமை என்பதற்கும்
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பொதுவாக இயற்கை என்பதற்கும், உபயோகப்பட்டு வருவதோடு பெரும். பாலும் பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும் ஏமாற்றுக்காரர்களும் பிழைப்ப தற்கும் ஒரு சாதனமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்த போதிலும் நான் அதை நீங்கள் எந்த வழியில் உபயோகப்படுத்த கிறீர்கள் என்று கருதுகிறேனோ அதைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லு கிறேன்.
அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்கிற உதவியை தர்மம் என்று கருதி அதையே உங்கள் கடமையாகவும் கொண்டு நடந்து வருகிறீர்கள் என்பதாகவே நினைத்து அதைப் பற்றியே சில வார்த்தைகள். சொல்லுகிறேன். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்யும் உபகாரம், கடமை என்பவைகள் காலதேச வர்த்தமானத்துக்கேற்றது போலும் அவ்வப் போது மாறுதலடையக் கூடிய ஒரு தன்மையுடையதேயல்லாமல் மற்றபடி தர்மம் என்பது ஏதோ ஒரு காலத்தில் யாராலோ யாருக்கோ குறிப்பிடப்பட்டு அதேபடிக்கு நடந்து கொண்டிருக்கவேண்டியது அல்லவென்பதை உணர்ந்து கொண்டால் தான் நாம் உண்மையான தர்மம் செய்தவர்கள் ஆவோம் என்ப தோடு நமது தர்மமும் மக்களுக்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியதாகும். அப்படிக்கில்லாமல் நமது பெரியோர்கள் செய்து வந்தார்கள்; முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்; அவதாரங்களும் ஆச்சாரிகளும் எழுதிவைத்
தார்கள்; வெகுகாலமாக நடந்து வருகிறது; அனேகம் பேர்களும் செய்து வரு கிறார்கள் என்கின்றதான காரணங்களை வைத்துக் கொண்டு கண்மூடித்தன. மாக அதன் பலாபலன்களை கவனியாமல் செய்து கொண்டிருப்பது வீண் வேலையாகும்.
ஏனெனில் ஒரு காலத்தில் தருமம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள் தனமாகத் தோன்றப்படுவதை நேரில் பார்க்கிறோம். உதாரணமாக மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேகரித்து அவற் றைப் பார்ப்பனர்கட்கு அள்ளிக் கொடுத்து ஆசிர்வாதம் பெறுவது மனிதனு டைய கடமையான தருமம் என்று கருதப்பட்டு வந்தது.ஆனால் அவை இன் றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும் ஏமாந்தத்தனம் என்றும் தோன்றி விட்டது. அதுபோலவே ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திச் சம்பா தித்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது, மோட்சத்தில் இடம் சம்பா
தித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதை முட்டாள் தனமென்றும், தேசத்திற்கு கெடுதியை விளைவிக்கத் தக்கதான தேசத்துரோகம் என்றும் தோன்றி அனேகர்களுக்கு, பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்தியசாலை முதலியவைகட்கு உபயோ கப்படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றிவிட்டது. ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து, நான்கு வேளை சாப்பிட்டு விட்டு சாம்ப லையும் மண்ணையும் பூசிக் கொண்டு உத்திராட்சத்தையும் துளசி மணியை
யும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது. ஆனால் இப்போது அது
குடி அரசு - 1980 (1) 218.
திருடர்களுடையவும் சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடுகின்றவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. ஒரு காலத்தில் கள்ளையும் சாராயத்தையும் குடிக்கக் கூடியதாகவும், ஆட்டையும் எருமையையும் பலி யாக சாப்பிடக் கூடியனதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதை கும்பிட்டுக் கொண்டு அவைகளை அதற்கு வைத்துப் படைத்துக் கொண்டு தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப் பட்டு வந்தது. இப்பொழுது அவைகள் காட்டுமிராண்டித்தனமென்று உணர்ந்து மக்களுக்கு உணர்த்தப்பட்டு வருகிறது. மற்றும் ஒரு கூட்டத் தாருக்கு ஆடும், பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது. மாடு தின்பது
அதர்மமாய் இருக்கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தருமமாக இருக்கிறது. பன்றி தின்பது அதர்மமாக இருக்கின்றது. வேறொருக் கூட்டத்
தாருக்கு எந்த ஜெந்துவையும் சாப்பிடுவது தருமமாக இருக்கிறது. பிரிதொருக் கூட்டத்தாருக்கு எந்த ஜெந்துவையானாலும் சாப்பிடுவது அதர்ம
மாயிருக்கிறது..
ஒரு மதக்காரருக்கே மதக் கொள்கைபடி கள்ளு, சாராயம் குடிப்பது தருமமாயிருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு அவைகளைத் தொடுவது அதர்மமாயிருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே விவாக சம்மந்த முறையிலும் ஒரு கூட்டத்தார் அத்தைப் பெண்ணை மணக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன், பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள். பிறிதொரு கூட்டத்தார் சிறிய தாயார் பெண்ணை மணக்கிறார்கள்.இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை மணக்கிறார்கள். ஒரு வகுப்பார் தத்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை வெறுக்கிறார்கள். இன்னொரு
கூட்டத்தார் விபசாரத்தனத்தை தங்கள் குல தருமமாக கொள்ளுகிறார்கள். வேறொரு கூட்டத்தார் பார்ப்பனர்களை யோக்கியமற்றவர்களென்று வெறுக்
கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதன மென்று கருதுகிறார்கள். இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தருமமாகக் காணப்படுகிறது. மேலும் இது போலவே சாஸ்திர விடயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமூகத்திற்கு கடவுளால் அளிக்கப்பட்ட தருமமென்று சொல்கிற மனுதரும சாஸ்திரம் வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அவை சுயநலக்காரர். களின் சூட்சிக்காரர்களின் அயோக்கியத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்து கொளுத்தப்படுகிறது. இது போலவே காலத்திற்கும் தேசத்திற்கும்
அறிவிற்கும் தகுந்த படி தருமங்கள் மாறுவது சகஜமாக இருக்கிறது. உதாரணமாக உங்கள் சமாஜத்திலேயே ஒரு அதிசயமான மாறுதலைப்
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பார்க்கிறேன். அதாவது மக்கள் இறந்துபோய்விட்டால் அவர்களை வைத்து சுடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு அழகான ஒரு பெட்டி செய்து வைத்திருக்கிறீர்கள். இந்த பெட்டியை அனேகருக்கு உதவி, அனேக பிணங் களை அதில் வைத்து வண்டியில் கொண்டு போனதாக உங்கள்ரிப்போர்டில் வாசித்திருக்கிறீர்கள். இதை இந்துக்கள் என்பவர்கள் சற்றுக் கேவலமாகக் கருதுவதுண்டு. எனக்கு ஐந்தாறு வருடமாக இம்மாதிரி செய்ய வேண்டுமென் கிற ஆசை இருந்து வருகிறது. ஆனால் நீங்கள் செய்திருப்பது பலருக்குப் புதிதாகவும் அதர்மமாகவும் தோன்றினாலும் சீக்கிரத்தில் இந்த பழக்கம்
எங்கும் தருமமாகி விடுமென்று கருதுகிறேன்.
ஆகையினால் தருமம் என்கிற விஷயத்தில் மிக அறிவைச் செலுத்தி உலகத்தையெல்லாம் நன்றாய் ஆராய்ந்தறிந்து மிக்க அவசியமென்றும் பயன் படத்தக்கது எதுவென்றும் தெரிந்து செய்வது தான் உண்மையான தரும மாகும்.ஆகவே இது வரையில் நீங்கள் செய்து வந்திருக்கும் தருமங்களைப் பாராட்டுவதோடு இனியும் காலதேசவர்த்தனமானத்திற்குத் தகுந்தபடி எல்லா மக்களுக்கும் பயன்தரதக்க தர்மமாகவே செய்து வருவீர்களென்று கருது கிறேன்.
அடுத்தாற்போல் பெண்கள் சுவாதந்திரியம்:-
பெண்கள் சுதந்திரம்
பெண்கள் சுதந்திரம் என்பது பற்றி திருமதி. அலர்மேல் மங்கைத் தாயாரம்மாள் அவர்கள் பேசியதை நீங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்: டிருந்தீர்கள். பெண்கள் சுதந்திர விஷயத்தில் எனக்கு மிக்க ஆவல் உண்டு. என்னுடைய இயக்கத்தில் அதற்கு நான் முக்கிய ஸ்தானம் கொடுத்திருக் கிறேன். என்னுடைய அபிப்பிராயத்தில் ஒரு இந்து என்பவன் தன்னை ஒரு இந்து மதத்தான் என்று சொல்லிக் கொண்டு பெண்கட்கு சுதந்தரம் வேண்டு மென்று சொல்லுவதை ஒருக்காலும் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்து மதத்தில் பெண்களுக்கு சுதந்தரம் இல்லை என்பதே நீங்கள் நன்றாய் உணர வேண்டும். பெண்களுக்கு சுதந்தரம் வாங்கிக் கொடுக்க பிரியப்படுப வர்கள் அதற்கு தடையாய் உள்ளதை எதிர்க்கவும் அழிக்கவும் துணிந்தவர். களாயிருந்தால் தான் அவர்கள் உண்மையான சுதந்தரவாதிகள் ஆவார்களே தவிர மற்றபடி தடைகளை ஆதரித்து கொண்டு சுதந்திரம் பேசுகிறவர்கள் தந்திரவாதிகளே ஆவார்கள், அல்லது மூடர்களே ஆவார்கள்.
இந்து மத தருமத்தில் பெண்கள் ஈனப்பிறவி, கடவுளாலேயே விபச் சாரிகளாகப் பிறப்புவிக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாய் விபச்சாரம் செய்திருப்பாள் என்கிற நம்பிக்கையோடுப் பிராயசித்தம் செய்துக் கொள்ளக் கூடியவன்.பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும் வரையில் தகப்பனுடைய பந்தோபஸ்தில்
குடி அரசு - 1980 (1) 220
இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்ட பிறகு புருஷனுடைய பற்தோபஸ்திலிருக்க வேண்டும். புருஷன் இறந்த பிறகு மகனுடைய பந்தோ பஸ்திலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்க வீணர்களாய்ப் போய் விடுவார்கள். பெண்களுக்குச் சொத்து இருக்க கூடாது. அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது, ரகசியம் சொல்லக் கூடாது. இன்னும் இவைபோன்ற எத்தனையோ நிபந்தனைகள் தரும சாஸ்திரத்திலும் கலியுகத்
திற்கு ஆதாரமான பராசரஸ்மிருதியிலும் மற்றும் அவைகளை ஆதரிக்கும் இதிகாசப் புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
இவைகளை இந்த புஸ்தகங்களையும் சாஸ்திரங்களையும்) ஒப்புக் கொள்ளுகிறவனும் உண்மையான சநாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளு கிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்பதே தான் எனது அபிப்பிராயம்.
இந்த விஷயத்தில் திராவிட தர்மமோ, சமண தருமமோ எல்லாம் ஒரேவித யோக்கியதைக் கொண்டதே என்பது எனது அபிப்பிராயம். தெய்வத் தன்மை பொருந்தியவரென்று சொல்லும் திருவள்ளுவர் என்பவர் கூட தம் பெண்சாதியை விபசாரியா பதிவிரதையா என்று பரிட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு மணலை சோறாகச் சமைக்கச் சொல்லி அந்த அம்மாளும் அது போலவே சமைத்துப் போட்ட பிறகே தான் கலியாணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படி பரீட்சை செய்து பார்த்தால் இன்றையதினம் உலகத்திலுள்ள பெண்கள் எல்லாம், இங்கு இருக்கிற பெண்கள் எல்லாம் விபசாரிகளென்று தான் நாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரியாலும் மணலை அரிசி சாதமாக சமைக்கவோ, மழை பெய்ய சொல்லவோ, பச்சை வாழைத்தண்டுவைக் கொண்டு சமையல் செய்யவோ முடியாதென்று சொல்ல வேண்டியிருக்கிறது. வேறு எந்த காரியத்துக்காகவும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்பதாயிருந்தாலும் பெண்க ளுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்பது அழிய வேண்டி யது மிக்க அவசியமாகும். இந்து மத புராண இதிகாசங்களில் புருஷன் தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதாகவும், புருஷன் குஷ்டரோகியாகி விட்டதால் அவனைக் கூடையில் சுமந்துக் கொண்டு போனதாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்படுகிறது. எவ்வளவு அக்கிரமும் கொடுமை யுமானக் கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள். நளாயினியைப் போல் இருப்பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்று விடுவேனேயொழிய குஷ்ட ரோகியை சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். பெண்கள் விபசாரிகள் என்பதை ஆதரிக்க எழுதி வைத்த ஆதாரங்களில் ஒன்று தான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரெளபதை என்பவள் தனக்கு ஐந்து புருஷன்மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால் தான் விபச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லாமலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அரிச்சந்திர புராணத்தில் தன் பெண் ஜாதியை பல சொத்துகளில் ஒன்றாகக் கருதி வேறு எவனுக்கோ விலைக்கு விற்றதாக
வும், அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமை என்பதை ஒப்புக் கொண்டு வாங்கப்பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு “புண்ணிய” புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதி மார்களைக் கூட்டிக் கொடுத்ததாகவும் அந்தப் பெண்களும் அப்புருஷர்கள். வாக்கைத் தட்டக்கூடாது என்று கருதி அடியார்களிடம் போய் படுத்துக் கொண்டதாகவும், சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் சில நீதிக் கதைகளில் தங்கள் புருஷன்மார்களுடைய வைப்பாட்டிகளுக்குத் தொண்டு செய்ததா
கவும் சொல்லப்பட்டிருக்கிறது. இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப்
பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்டதாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கி கொண்டு ராஜாவுக்கேக் கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் நம்முடைய பழைய அரசர்கள். ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்ததாகவோ, பெண்சாதிகளை சமமாகவோ காண்பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவதாயிருந்தா
லும் அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இது வரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டு வந்ததெல்லாம் வெறும் புரட்டும் முன்னுக்கு பின் முரணுமாய் முடிந்திருக்கிறதே தவிர காரியத்தில் உண்மையாகப் பெண்கள். விடுதலைக்கு மார்க்கங்கூட கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது தான் எனது அபிப்பிராயம். பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண்: சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப் பாடு உள்ள அடிமை பிரசாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுத லையை உண்டாக்காது. மற்றும் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிகமாக அடிமைகள் ஆவார்களா? சுதந்தர
குடி அரசு - 1980 (1) 222
மடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். இவற்றை எல்லாம் விடகற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை அயோக்கியத்தனமாய் அவர்கள். தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில் ஒரு நாளும் பெண் மக்களை:
உலகம் முன்னேற்றமடையவோ, சுதந்தரமடையவோ ஒருக்காலும் முடியவே முடியாது. கற்புக்குலட்சணம் சொல்கிறபோது ஒரு பழமையான தமிழ் நூலில் காணப்படும் ஒரு வார்த்தை எவ்வளவு கடுமையான அடிமைத்தனத்தை மனதில் வைத்து உண்டாக்கப்பட்ட தென்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதாவது யாராவது ஒரு புருஷன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளை தன் மனதில் நினைத்து விட்டானேயானால் அந்த பெண்ணுடைய கற்புக் கெட்டுப் போய்விட்டதாம். ஏனெனில் அந்த பெண் கற்புடையவளாய் இருந்திருந்தால் மற்றொரு மனிதன் அவளை மனதில் நினைத்திருக்க முடியாதாம். எவ்வளவு (அ) நீதி என்பதை நினைத்துப் பாருங்கள்! எந்த நிர்பந்தமானாலும், எந்தக் கட்டுப்பாடானாலும், எந்த தருமமானாலும், ஆணுக்கும், பெண்ணுக்கும், இருவருக்கும் சமமாக விருப்பதனால் அதைப் பற்றி நமக்குக் கவலை யில்லை. (தொடர்ச்சி 29.06.1930 குடி அரசு இதழ்?
குறிப்பு:01060930 இல் கண்ணனுரில் (செவ்வாய்பாகத்தில் உள்ளதர்மசமாஜ மண்டபத்தில் நடைபெற்ற தர்ம சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா- தலைமை - தொடக்கவுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 08.06.1930
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மறுயமயரம் பார்ப்பணர் மகாநா௫
“குடி அரசு” ம் சுயமரியாதை இயக்கமும் ஏற்பட்டது முதல் தமிழ்
நாட்டில், பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு என்றும் வருணாச்சிரம தரும மகாநாடு என்றும், ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு என்றும், சநாதந தர்ம
மகாநாடு என்றும், ஆஸ்திக மகாநாடு என்றும் இந்துமத தர்மமகாநாடு என்றும் இப்படி பல்வேறு பெயர்களால் அடிக்கடி மகாநாடுகளைக் கூட்டுவதும் இந்து
மதம், வேதம், சாஸ்திரம், புராணம், ஸ்மிருதி. இதிகாசம், மோட்சம். நரகம் என்பவைகளைப் பற்றிப் பேசி நிலைநிறுத்தித் தங்களை மிக்க உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்று தாங்களே நினைத்துக்கொண்டு. தங்களுக்கு தனி மரியா தையும் தனி சுதந்திரமும் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு, பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களையெல்லாம் குறை கூறிக் கொண்டும், அவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி ஆத்திரமும் பொறாமையுங் கொண்டு அதற்குத் தடைகளைக் கற்பிப்பதும் ஆகிய காரியங்கள் செய்து வருவதோடு. ஸர்க்காரையும் தங்களிஷ்டப்படி நடக்க வேண்டுமென்றும், அதற்கு விரோதமாய் நடந்தால் ஸர்க்காருக்கு விரோதிகளாய் உள்ளவர்க ளிடம் சேர்ந்து கொள்ளுவோம் என்று பயப்படுத்துவதும் ஆகிய காரியங்க ளைச் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இந்த கொள்கையை அனுச ரித்தே சென்ற மே மாதம் 31 ம் தேதியில் கும்பகோணத்தில் “சென்னை மாகாண பிராமண மகாநாடு” என்னும் பேரால் ஒரு மகாநாட்டைக் கூட்டி சில பார்ப்பனர்கள் சேர்ந்து சீர்திருத்த சம்பந்தமான பல கொள்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்துப் பேசி கண்டித்துத் தீர்மானம் செய்திருப்பதோடு. சர்வகட்சி மகாநாட்டில் பிராமணர்களுக்கென்று பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்றும், சாரதா சட்டத்தை எடுத்து விட வேண்டுமென்றும்.டாக்டர்.
கவர் மசோதாவை நிறைவேற்றி வைக்கக் கூடாதென்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த மகாநாட்டிற்கு ஸர்க்கார் உத்தியோகத்
தில் வெகுகாலம் சேவை செய்து பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஐயங்கார் பார்ப்பனர் வரவேற்பு அக்கிராசனராகவும், சென்னை நீதி ஸ்தலத்
தில் வெகுகாலம் வக்கீலா யிருந்தும் சென்னை ஹைகோர்ட்டில் சில காலம் ஜட்ஜ் ஆகயிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய்கள் சம்பாதித்து இப்பொழுதும்
வக்கீல் உத்தியோகத்தில் மாதம் ஆயிரக்கணக்காக பணம் சம்பாதித்துக்
குடி அரசு - 1980 (1) 224
கொண்டிருக்கும் திரு. வி. வி. சீனிவாசையங்காராகிய மற்றொரு ஐயங்கார்
பார்ப்பனர் மகாநாட்டின் தலைவருமாவார். இவ்விரு ஐயங்கார்களும் மகா
நாட்டில் வரவேற்பு அக்கிராசனர் என்ற முறையிலும், மகாநாட்டுத் தலைவர் என்கிற முறையிலும் செய்திருக்கும் பிரசங்கங்களைக் கவனித்துப் பார்த்தால் பார்ப்பனப் புரட்டுகள் என்பதும், அவர்கள் செய்துவரும் சூட்சிகள் என்ன வென்பதும், அவர்கள் நம்மை எவ்வளவு கேவலமாகக் கருதி ஏமாற்றப் பார்க்கிறார்களென்பதும், சீர்திருத்தங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும், மக்களின் ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும் விடுதலைக்கும் பார்ப்பனர்கள். எவ்வளவு விரோதிகளாய் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும், இன் றைக்கும் இருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
உதாரணமாக வரவேற்பு அக்கிராசனர் திரு. இராமானுஜம் ஐயங்கார் “இந்த தேசத்தை நம்முடைய தேசத்தார் ஆளுவதாய் ஏற்பட்டால் அப்போது நமது நிலை என்னமாயிருக்கும் என்கின்ற விஷயத்தில் எனக்கு மிக பயமாயிருக்கிறது” என்று சொல்லி பிறகு “அதற்கு ஆதாரமாக இரண்டு சங்கதிகளை தெரிவிக்கிறேன். அதாவது சில மாதங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட கலியாணச் சட்டம் என்பது ஒன்று; அப்பிராமணர்களுக்கு
நம்மிடத்தில் இருக்கும் விரோதடாவம் என்பது மற்றொன்று” என்று சொல்லி யிருக்கிறார். அந்த விரோதபாவத்துக்கு ஆதாரங்கள் காட்டும் போது எல்லா வகுப்பார்களுக்கும் சம சந்தர்ப்பம் உத்தியோகங்களில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். இதைக் காட்டுகிற முறையில் ஸர்க்காரார் நல்ல வேலைக்காரர்களாயும், பரீட்சையில் தேறினவர்களாயும் பார்த்து உத்தியோகங்களுக்கு நியமித்துக் கொண்டிருந் ததை மாற்றி இப்பொழுது மற்றவர்களை (அதாவது கெட்ட வேலைக்காரர்: களையும் பரீட்சையில் தேறாதவர்களையும்) வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லுகிறார்.
இந்த இரண்டு காரணங்களையே பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி இந்தியர்களால் இந்தியாவை ஆளப்படும் நிலைமை ஏற்பட்டு விட்டால் தங்க ளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கு முக்கிய உதாரணமாக எடுத்துக் காட்டி யிருக்கிறார். ஆகவே இந்த நாட்டிற்கு அந்நிய அரசாங்கம் தான் இருக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் தங்களை உண்மையான பிராமணர்கள். என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கவலையிருந்து அந்த அந்நிய ஆட்சிக்கு அவர்கள் எவ்வளவு உதவி செய்து வந்திருக் கிறார்கள் என்பது நன்றாய் விளங்கும். இது தவிர வேதத்தை பிராமணர்கள். எல்லோரும் படித்து அதன் படியே எல்லோரும் நடக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.நிற்க, தீண்டாமை விஷயமும், ஆலய பிரவேச விஷய
மும், வேதத்திலும் தர்ம சாஸ்திரத்திலும் கண்டிப்பாய் சொல்லியிருக்கிறபடி யால் அதற்கு விரோதமாக நடந்தால் மற்ற விஷயங்களில் வேதமும் தர்ம
சாஸ் திரமும் அலட்சியஞ் செய்யப்பட்டு விடுமாதலால் தீண்டாமை விலக்குவ
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
தற்கும் தீண்டாதார்களை ஆலய முதலியவைகளில் அனுமதிப்பதற்கும் கண்டிப்பாய் இடங்கொடுக்கக் கூடாதென்று சொல்லியிருக்கிறார். ஆகவே பார்ப்பனர்கள் வேதத்தையும் சாஸ்திரத்தையும் காப்பாற்றுவதற்காக தீண். டாமை விலக்குக் கூடாதென்றும், ஆலயங்களிலும், தெருக்களிலும் பிரவே சிக்க விடக் கூடாதென்றும் சொல்லப்படுவதானால் வேதமும், சாஸ்திரமும் காப்பாற்றப்பட்டுவிட்டால் வேதத்தின் படியும் சாஸ்திரத்தின் படியும் நமது நிலைமை என்னமாய் இருக்குமென்பதை வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை: யுள்ள ஆஸ்திகர்களையும் இந்துக்களையும் யோசித்துப் பார்க்கும் படி வேண்: டிக்கொள்ளுகிறோம். கடைசியாக மகமதியர்கள் செய்த பலாத்காரங்க ளுக்கும் கிறிஸ்தவர்கள் செய்த சூட்சிகளுக்கும் தப்பிப் பிழைத்த நாம் இனி எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதாகச் சொல்லி தைரியமும்
காட்டிக் கொண்டிருக்கிறார்.
நிற்க மகாநாட்டின் தலைவர் திரு.வி.வி. சீனிவாசையங்கார் அவர். களும் முன் பேசிய வரவேற்பு அக்ராசனரை தழுவியே பேசியிருப்பது குறிப் பிடத்தக்கதாகும். அதில் அவர் கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்தியாவில் பிரமுகர்களும் பாமர ஜனங்களும் பிரிட்டீஷ் கவர்ன்மெண்டார் செய்திருக்
கும் நன்மைகளைப் பாராட்டி இந்தியாவிற்குப் பிரிட்டீஷ் ராஜ்யத்தை அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவது வழக்கம் என்றும், ஆனால் இப்போது சுயேச்சையடைய பிரதிநிதி ஸ்தலங்கள் வேண்டுமென்று கருதி மேல் நாட்டு ஜனநாயக ஸ்தாபனங்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்: டிருக்கிறார்களென்றும் இது பெரிய தவறு என்றும் அதைவிட ஆபத்தான காரியம் வேறொன்றும் இல்லை என்பதாகத் தான் நினைப்பதாகவும் சொல்லி யிருக்கிறார். சீர்திருத்தக் கோரும் எவரும் ஜனங்களுடைய தன்மையையும் பழைய அனுபவங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டு மென்றும் ஆதலால் நமக்கு சீர்திருத்தம் கூடாதென்றும் சொல்லியிருப்ப
தோடு, அதற்கு உதாரணமாக இப்பொழுது இதுவரை கிடைத்த சீர்திருத் தங்களில் பெருத்த அதிகார நிருவாகம் மூன்றாந்தரமான மனிதர்களிடம் போய் விட்டதென்றும், ஆதலால் அது கூடாதென்றும், இத்தேசத்திற்கு அருகதையில்லாத சீர்திருத்தம் கொடுபட்டதால் இம்மாதிரி கஷ்டம் ஏற்பட்டதென்றும் சொல்லி யிருக்கிறார். ஆகவே அதனாலும் பார்ப்பனர். களினுடைய சுயராஜியம் என்ன என்பதும், எப்படியானால் அவர்களுக்கு சுயராஜியம் இஷ்டம் என்பதும், எப்படியானால் சுயராஜியம் வேண்டாமென் பதும் இதனால் நன்றாய் விளங்கி விட்டது. தவிர பிராமணர்களிடம் மற்றவர். கட்கு ஏற்பட்ட துவேஷத்தினால் மதம், கடவுள் பல நூற்றாண்டுகளாக பிராம ணர்கள் பாதுகாத்து வந்த கதைகள் பாரமார்த்தீக லட்சியங்கள் ஆகிய இவைக:
ளுக்கு விரோதிகளாக பிராமண ரல்லாதார் ஆகிவிட்டதாகவும் மிக்க வருந்து
கிறார். ஆகையால் இவைகளைக் காப்பாற்றத் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார். அதோடு சுயமரியாதை இயக்கம் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இனித் தூங்கிக்
குடி அரசு - 1980 (1) 226
கொண்டிருந்தால் காரியங்கெட்டுப் போகுமென்றும் மிக்க வருந்துகிறார். அதோடு ரஷியாவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறவர்களும் பலர். இருக்கிறார்களென்றும் மிக்க ஓலமிடுகிறார். ஆகவே பிராமண மகாநாடு என்பதும் பிராமணியம் என்பதும் வேதம், கலை, ஆத்மார்த்தம் என்பதும் பார்ப்பனர்களால் எதற்காக காப்பாற்றப்படுகிறதென்பதும் இப்போதாவது பொது ஜனங்கள் அறியலாமென்று நினைக்கின்றோம்.
இதை நம்மவர்களிலேயே உள்ள சில பண்டிதர்களும் அழுக்கு மூட்டைகளும், வெறுந்தலைப் பணக்காரர்களும் தெரிந்திருந்தாலும் அப் பார்ப்பனர்களுக்கு அஞ்சித் தங்கள் வயிறு வளர்ப்பதையும் போலி கெளரவத்தையும் உத்தேசித்து அவர்களோடு கூடவே அவர்கள் ஆட்டத்
திற்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள். ஆதலால் மற்றவர்களாவது இந்த சூட்சியையறிந்து பார்ப்பன ஆயுதங்களுக்குக் கழுத்தைக் கொடுக்க மாட்டார். களென்று நம்புகிறோம். தவிர பிராமணர்கள் தங்களுடைய பிராமணீயத்தை விட்டுவிட்டதினாலும் வேதம் படிக்காததினாலும், ஆத்மார்த்தத்தைக் கருதாததினாலும் தங்கட்கு இம்மாதிரி கஷ்டம் வந்திருப்பதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாம் சிறிதும் ஆட்சேபனையோ தடங்கலோ செய்வதில்லை என்பதை நாம் உண்மையாகவே பார்ப்பனர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு பார்ப்பனரும் இப்போது அவர்கள் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேதம் படிக்கப் போவதையும் மூன்று வேளை குளித்து விட்டு ஆறுகாலம் சந்தியாவந்தனம் செய்வதையும் காயத்ரீயை ஜபிப்பதையும் பிராணாயாமம் பண்ணுவதையும் நாம் சிறிதும் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது விஷயத்தில் நமக்கு எவ்வித நஷ்டமு மில்லை. ஆனால் அதற்காக நம்மை வந்து காசு கேட்கக் கூடாதென்றும்
இந்தக் காரியங்களுக்காக இவர்களுக்கு நமது மூட சிகாமணிகள் பிச்சைக் கொடுக்கக்கூடாதென்றும் வெட்டியில் சோறு போடக்கூடாதென்றும் பார்ப்ப னரல்லாத மேற்படி மூடசிகாமணிகளை மாத்திரம் வேண்டிக் கொள்ளு கிறோம்.
இந்தப் பார்ப்பனர்களும் இந்தக் காரியங்களைத் தங்களுடைய மோட்.
சத்திற்கும், ஆத்மார்த்தத்திற்கும் செய்து கொண்டிருந்தால் போது மென்றும் நமக்காக நமது மோட்சத்திற்காக ஒன்றும் செய்ய வேண்டா மென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம். கடைசியாக நாம் சொல்லுவது என்ன வென்றால் இந்த இருபதாவது நூற்றாண்டில் ருஷியாவையும் ஜப்பானையும் சைனாவையும் துருக்கியையும் பார்த்த இந்த இரண்டு அய்யங்கார் பார்ப்பனக் குள்ளநரிகள் பிராமண மகாநாட்டைக் கூட்டிக் கொண்டு பாரமார்த்திகத்தையும் ஆத்மார்த் தத்தையும் பற்றிப் பேசி, நம்மை ஏமாற்ற நினைக்கிறார்களே என்றால் இதற்கு முன் இருந்தவர்கள், மூட ஜனங்கள் காலத்தில் எவ்வளவு மோசங்கள் செய்தி ருப்பார்கள்? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.06.1930
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
திருவாளுூரில் ஈ. வவ. இறாமசாமி
௬சமயாமரியாதை இயக்கம்
தலைவர் அவர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!
முதலாவதாக இக்கூட்டத்திற்கு ஒரு மணிநேரம் தாமதப்பட்டு வந்ததற்கு வருந்துகிறேன். காரணம் நமது சிதம்பரனார் அவர்களுக்கு சற்று உடல் நலிவு ஏற்பட்டு அவருக்குக் காயலா 103 டிகிரி இருந்தபடியினால் கொஞ்சநேரம் அவருக்காக காத்திருக்கும்படி நேரிட்டது. அதனாலேயே தான் நீங்கள் மாலையில் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு ஊர்வலத்தைக் கூட நான்
ஒப்புக் கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆகையால் அதற்காகவும் எனது வருத்தத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். அன்றியும் திரு. சிதம் பரனார் அவர்களுக்கும் - திருமதி சிவகாமி அம்மாள் அவர்கட்கும் ஈரோட்
டில் சுயமரியாதை கலப்பு “விதவை” திருமணம் நடைபெற்றதை முன்னிட் டும் அவர் இந்த ஊர் பாடசாலைக்கு மாற்றப்பட்டதை முன்னிட்டும், அவர்கள். இருவரும் இந்த ஊருக்கு வரும் போது நானும் எனது மனைவியாரும் கூடவே வரவேண்டுமென்று இவ்வூர் நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்ட திற்கிணங்க இங்கு வந்தோம். ஆயினும் வந்த சமயத்தில் திரு. சிதம்பரனா
ரக்குக் காயலா ஏற்பட்டு விட்டதால், அவர் வரமுடியாமல் திருமதி சிவகாமி. இக்கூட்டத்திற்கும் வந்திருக்கிறார்கள். திரு சிதம்பரனார் அவர்கள் நமது இயக்கத்துக்காக பாடுபடுபவர்களில் மிகவும் உண்மையான உழைப்பாளியா
வார். அவருக்கு சீக்கிரம் காயலா குணமாகிவிடுமென்று நம்பியிருக்கிறேன். திருமதி சிவகாமி அம்மாளும் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து இந்த ஜில்லாவிலேயே ஒரு பெரிய குடும்பத்தில் புகுந்தவர். திருமதி சிவகாமியின் முதல் கணவர் பி. ஏ. படித்தவரும் சுமார் இரண்டு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட செல்வந்தரென்றும் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்பேற் பட்ட பெருங் குடும்பங்களில் கலப்பு மணம் முதலியன ஏற்படுவது நமக்கு
மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. திரு. சிவகாமி பதினாறு பதினேழு வயதுள்ள சிறு பெண்ணாகயிருந்த போதிலும் நமது இயக்கத்தில் பற்றுள்ள. வரும், நல்ல கல்வியுள்ளவருமான ஒரு கணவன் இருந்தால் போதும் என்கின்ற அபிப்பிராயத்தைத் தெரிவித்ததானது நமது இயக்கத்தின் பலனாய் பெண்கள் உலகம் எவ்வளவு முற்போக்கடைந்திருக்கிறதென்பதை நீங்கள்.
உணர்வீர்கள்.
குடி அரசு - 1980 (1) 228
சகோதரர்களே! இனி காலை முதல் இதுவரையிலும் எங்கட்குச் செய்த ஊர்வலம் விருந்து முதலிய உபசாரத்துக்கும், வாசித்துக்கொடுத்த வரவேற்பு பத்திரங்கட்கும், எனது நன்றியறிதலைச் செலுத்திக் கொண்டு சில வார்த்தை களால் அதற்குப் பதில் கூற வேண்டியவனாக யிருக்கின்றேன். உண்மையி லேயே நீங்கள் செய்த இவ்வளவு பெரியஆடம்பரங்களும் புகழ்ச்சி உரைகள். கொண்ட பத்திரங்களும் எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லாததும், சிறிதும் பொருத்தமில்லாததுமென்பதோடு நினைக்க நினைக்க நான் வெட்கப்படக் கூடியதாகவேயிருக்கிறது. என்றாலும் இந்த இயக்கத்தில் உங்களுக்குள்ள அளவுகடந்த உணர்ச்சியாலும் ஊக்கத்தாலுமே என்னுடைய மறுப்பைக் கூட லட்சியஞ் செய்யாமல் இவ்வளவு ஆடம்பரம் செய்து விட்டீர்களென்றே நினைக்கின்றேன். ஆனாலும் இந்த ஆடம்பரங்களை எனக்காக நீங்கள் செய்கிறீர்களென்று நினைக்காமல் இவ்வியக்கத்தின் வெற்றிக்கு அறிகுறி யென்று கருதிக்கொண்டு இன்னும் மேலும் நான் உறுதியுடனும் ஊக்கத்து டனும் நடப்பதற்கு இவைகளை ஒரு தூண்டு கோலென்றும் கருதிக்கொண்டு. எனது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நண்பர்களே! இன்று நான் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியே பேசுகிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்னால் இங்கு நான் வந்து பேசி
யிருக்கிறேன். அப்பொழுது இதே இடத்தில் எனது நண்பரும், நமது இயக்கத் தின் பிரமுகரும், உங்கள் ஜில்லா போர்ட் தலைவருமான திருவாளர் ராவ் பகதூர் எ.டி. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் எனக்கும் ஒரு வரவேற்பளித்
தீர்கள். அதற்கு முன்னும் இரண்டொரு தடவை கோவில் மண்டபத்தில் பேசியதாகவும் ஞாபகமிருக்கிறது. அதற்குப் பிறகு இங்கு வரச் சந்தர்ப்பப்பட வில்லையானாலும் நமது இயக்கத்திற்கு முதல் முதலாக இந்த ஊரிலிருந்து தான் எதிர்ப்பும், எதிர் பிரசாரமும் பல துண்டுப் பிரசுரங்களும், வசைப் புராணங்களையும் கொண்டெழுந்ததென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு அவ்வெதிர்ப்பை ஆரம்பித்தவர்கட்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவ்வெதிர்ப்புதான் நமது இயக்கத்தை இவ்வளவு வேகமாக நடத்தச் சந்தர்ப்பங்கள் கொடுத்தது. நிற்க நான் முன் இங்கு வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் எதைப் பற்றி என்ன. விஷயங்கள் பேசினேனோ அதையே தான் இப்போது பேசப்போகின்றேன். ஆனால் அந்த காலத்தில் இவ்வளவு தைரியமாகவும் விளக்கமாகவும் பேச முடியவில்லை. இப்பொழுது சற்று தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறேன். இதைத் தவிர என்னுடைய பேச்சிலோ கொள்கைகளிலோ பத்து வருஷங் கட்கு முன்னிருந்ததற்கும் இப்போதைக்கும் ஒன்றும் மாறுதலில்லை என்பதே என் அபிப்பிராயம்.
நிற்க. நமது எதிரிகள் நம்மைப் பார்த்து சுயமரியாதை இயக்கமென்ப தாக ஒரு இயக்கம் எதற்காக வேண்டுமென்கிறார்கள். அன்றியும் இவ்வியக் கமானது தப்பான வழியில் மக்களைச் செலுத்துகிறதென்றும் ஒழுக்கத்தைக்
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கெடுக்கிறதென்றும், தேச நலத்துக்கும் கேடு சூழ்விக்கிறதென்றும் அரசாங்கத் துடன் நட்புக் கொண்டதென்றும் மற்றும் பலவாறாகப் பழிசுமத்தப்படு வதாகவும் கேள்விப்படுகிறேன். இவற்றிற்கு நான் சமாதானஞ் சொல்லு முன் நீங்களாகவே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அதாவது நாங்கள் யார்? எங்கள் முன்பின் தொழில் என்ன? இத்தொண்டின் மூலம் நாங்கள் எதிர். பார்க்கும் சுநலமென்ன? என்பதையும் எங்களை ஆட்சேபிப்பவர்களின் யோக்யதையையும் அவர்களது முன்பின் வாழ்வையும் லட்சியங்களையும் யோசித்துப் பாருங்கள். முதலாவதாக என்னையும் நமது அக்கிராசனர் திரு. இராமனாதன் அவர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு இவ் வியக்கத்தின் பேரால் ஏதாவது உத்தியோகமோ பண வரும்படியோ ஏற்படுத்
திக் கொண்டிருக்கிறோமா? இந்த இயக்கம் ஏற்பட்ட காலந்தொட்டு இன்றைய வரையில் யாரிடத்திலாவது ஒரு சின்னக் காசாவது இயக்கத்திற்காக வசூல் செய்திருக்கிறோமா? வேறு எந்த விதமான உதவியாவது இவ்வியக்கத் திற்கோ எங்கள் சொந்தத்திற்கோ இவ்வியக்கத்தின் பேரால், ஏதாவது எதிர். பார்த்திருக்கிறோமா? அல்லது நாங்கள் இம்மாதிரி பொது நலத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றி அரசாங்க உத்தியோகத் திலிருந்து இருக்கிறோமா? எங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கு உத்தியோகத்
துக்கு வேண்டியாவது, வேலை செய்கிறோமென்று சொல்வதானாலும் அப்படி யாவது எங்களுக்குப் பிள்ளை குட்டிகள் ஏதாவது இருக்கிறதா? அல்லது எங்களுக்கு ஜீவனத்திற்கு ஒரு மார்க்கமோ, ஒரு நிலைமையோ இல்லாதவர் களா? அல்லது பொது ஜன சேவையின் பேரால் கஷ்டப்படாமலாவது தியா கஞ்செய்யாமலாவது பயந்து கொண்டு வெறும் மேடையில் மாத்திரம் சாமர்த் தியமாய்ப் பேசி விட்டு கஷ்டம் வந்த போது ஒளிந்து கொள்ளுகிறது முதலாகிய பித்தலாட்டமான காரியங்கள் செய்திருக்கிறோமா? இவற்றை எல்லாம் நீங்கள் நன்றாய் யோசித்துப் பாருங்கள்.பிழைப்புக்காக பொது ஜன சேவையில் இறங்கினவர்களல்ல, ஒரு ஒழுங்கும் நிலையும் ஆன தொழிலிலிறங்கி வாழ்வை நடத்திக் கொண்டிருந்து பொது ஜன சேவைக்காக திடீரென்று அவைகளை விட்டு விட்டு வந்தவர்களே யொழிய பொது நலத்துக்கென்று வந்த பிறகு ஜீவனத்துக்கு வழி தேடிக் கொண்டவர்களல்ல. இதை நீங்கள் சற்று கவலை எடுத்து ஆராய்ந்து பார்ப்பீர்களானால், எங்களுக்
கும் மற்ற தேசபக்தர்கள், தேசீய வாதிகள், காங்கிரஸ் வீரர்கள், உப்புக் காய்ச்
சிகள், சாமி சமயக் காப்பாளர்கள் முதலாகியவர்கட்கும் உள்ள வித்தியாசங் கள் நன்கு புலப்படும். தவிர, திரு. இராமநாதன் அவர்கள் எம். ஏ. பி. எல். ஹைகோர்ட் வக்கீலாகயிருந்து வந்ததும் அவர்கள் ஒரு பெரிய கல்வியாள
ராகவுமிருந்து வக்கீல் தொழில் ஆரம்பத்திலேயே மாதம் முன்னூறு நானூறு சம்பாதித்துக் கொண்டிருந்ததை விட்டு விட்டு, திடீரென்று, துறவி போல் எல்லாவற்றையும் விட்டு விட்டுப் பொதுத் தொண்டிலிறங்கி ஜெயிலுக்கும் சென்று திருடர்கள், கொலைகாரர்கள், அயோக்யர்கள் போல் நடத்தப்பட்டு மண் வெட்டியையுங் கடையையும் சுமந்து கொண்டு மண்வாரியும் தெருவில் கல்லுடைத்தும் கூனுக்கொட்டரையில் அடைபட்டும் மற்றும் பல தண்டனை
குடி அரசு - 1980 (1) 230
கள் அடைந்தும் வந்தவர். நானோ அவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கா
விட்டாலும், ஒழுங்கான வியாபாரத்திலிருந்து வெளியாகி பல தடவைகளில் சிறை சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவனே யாவேன். இன்னும் என்னோடு கூட ஒத்துழைக்கும் பல நண்பர்களும் தக்க செல்வமுடைய வர்களும் சிறை சென்று பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்தவர்களே தவிர. இதனால் பிழைக்கக் கூடியவர்கள் அல்ல. தவிரவும் இன்றைய தினம் இந்த இயக்கத்தில் வேலை செய்யும் போது உங்களால் நாங்கள் எப்படி மதிக்கப்படு கிறோமோ கெளரவிக்கப்படுகிறோமோ அது போலவே காங்கிரஸிலுமிருந்து மதிக்கப்பட்டவர்களும் கெளரவிக்கப்பட்டவர்களுமேயாவோம். உதாரண மாக தமிழ் நாடு ஒத்துழையாமை காங்கிரஸ் கமிட்டியிலே நான் தலைவனா கவும் அக்கிராசனர் திரு. இராமநாதன் அவர்கள் காரியதரிசியாகவும் ஒத்துழையாமை காலம் பூராவும் இருந்திருக்கிறோம். இப்பொழுதும் அதாவது நாங்கள் இவ்வளவு பெரிய “தேசத் துரோகியும், கடவுள் துரோகியும்” ஆன பிறகுங் கூட, நாங்கள் விரும்பினால் தமிழ் நாடு காங்கிரஸ் தலைமையும், நிருவாகப் பொறுப்பும் எங்கள் கைக்குத் தாராளமாகக் கிடைத்து விடும். ஆனால் நாங்கள் அவ்வேலைகளை ஒரு தேசீய வஞ்சகம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். ஆதலால் தான் நாங்கள் இத்துறையில் வேலை செய் கிறோம். இதில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படநேர்ந்தாலும் ஜெயிலுக்குப் போக நேர்ந்தாலும் நாங்கள் இன்னமும் தயாராகத்தான் இருக்கிறோமே தவிர நாங்கள் யாரையும் ஏமாற்றி விட்டு, மோசஞ் செய்து சுயநலம் அநுபவிப் பதற்காக நாங்கள் இத்தொண்டில் இறங்கவில்லை. நம்மைத் தூஷிக்கிறவர்கள். நமது கொள்கைகளின் குற்றங்களையெடுத்துச் சொல்லி மெய்பிக்காமல் நமக்கு கெட்ட எண்ணம் கற்பிப்பதில் கவலையதிகமாக எடுத்துக் கொண்டி ருப்பதனாலேயே அவர்கள் யோக்யர்களல்லாதவர்களென்றும், பயங்காளிக ளென்றும் ஞாயமற்றவர்களென்றும் விளங்கவில்லையா? தவிர எங்கள். விஷயத்தைப் பற்றி சற்று எடுத்துச் சொன்னதினால் நாங்கள் தற்பெருமைக் காரர்கள் என்ற குற்றத்திற்காளாக வேண்டியவர்களாக இருந்தாலுமிருக்கலாம். ஆனபோதிலும் பொது ஜனங்களை ஏமாற்றத்திலிருந்து விடுவிப்பதற்காக அம்மாதிரியான குற்றங்கள் சில சமயங்களில் செய்ய வேண்டியே நேரிடு
கிறது. தவிர நான் பொது நல சேவையில் இறங்கும் போது எந்தக் கொள்கை யோடு இறங்கினேனோ அந்தக் கொள்கையிலிருந்து இன்னம் மாறவில்லை, ஆனால் எங்கள் கொள்கையை நிறைவேற்ற எந்த ஸ்தாபனத்தை நாங்கள் கருவியாக உபயோகித்துக் கொண்டோமோ அந்த ஸ்தாபனம் தனது கொள் கையை விட்டு மாறிவிட்டதால் நாங்கள் அந்த ஸ்தாபனத்தை விட்டு மாறி எங்கள் கொள்கைக்காக வேறு ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியநிர்ப்பந்தம் உடையவர்களானோம்.
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கொள்கை ஒன்றே.
நாங்கள் ஒத்துழையாமையில் சேர்ந்து தலையில் மூட்டையைச் சுமந்து கொண்டு கிராமம் கிராமமாய்த் திரிந்து தினம் இரண்டு மூன்றிடங்களில் கூட பிரசங்கங்கள் செய்து கொண்டிருந்த காலத்திலும், எங்களுடைய கொள்கை: கள் வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டே அடியோடு விரட்டி விடுவது அல்லவென்பதை உங்கட்குத் தைரியமாகச் சொல்லுகிறேன், மற் நறென்னையெனில் எல்லா மக்களையும் மானமுள்ளவர்களாக்கி சமத்துவ மடையச் செய்வது, எல்லாருக்குள்ளும் ஒற்றுமையை உண்டாக்குவது, மக்களை அறிவாளிகளாக வாழச் செய்வது, பொருளாதார நிலைமையை உயர்த்துவது, ஜனங்களை சுகமாக சிக்கனமாக வாழவைக்க வேண்டியது முதலாகிய இந்தக் கொள்கைகளையே ஒத்துழையாமையின் போதும் வேறு பெயர்களால் அதாவது தீண்டாமை விலக்கு, ஹிந்து முஸ்லீம் முதலிய ஒற்றுமை, மதுவிலக்கு, கதர் என்னும் பெயர்கள் கொண்ட திட்டங்களாக ஏற் படுத்தப்பட்டிருந்ததே தவிர மற்றபடி சுயராஜியமென்பதாகவோ வெள்ளைக் கார ஆட்சியை விரட்டுதல் என்பதாகவோ வேறு தனிக் கொள்கைகள் எதுவும் நாங்கள் ஏற்படுத்தவேயில்லை. தவிரவும் சுயராஜியம் என்பதைப் பற்றி சில படித்த நபர்களும் உத்தியோக ஆசைக்காரர்களும் எங்களிடம்
வந்து பேசின காலத்திலும் மேற்கண்டவைகள் தான் சுயராஜியமென்று சொன்னோமே தவிர இவைகளைத் தவிர சுயராஜியமென்பதாக தனியாக நாங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை, அதைப்பற்றி பேசவுமில்லை. அப்போது நாங்கள் தலைவராகக் கொண்டிருந்த திரு. காந்தி அவர்களும் மேற்கண்ட கொள்கைகளைத் தான் சுயராஜியம் என்று ஆயிரக்கணக்கான தடவை பேசினதும் எழுதினதும் இன்னமும் தக்க ஆதாரங்களுடன் இருந்து
வருகிறது. ஆனால் திரு. காந்தி அவர்களுக்கு முதுகெலும்பு இல்லாது போனதினாலும், தாட்சண்யங்களினால் ஏற்பட்ட பலவீனத்தினாலும் ஒத்து ழையாமையைநிறுத்திவிட்டு அந்தக் கொள்கைகளையும் அழித்து விட்டுக் காங்கிரஸை உத்தியோக வேட்டைக்காரர்கள் வசம் ஒப்பிவித்து விட்டு அர்த்த மற்ற கிளர்ச்சியில் இறங்க வேண்டியதாகப் போய் விட்டது. அர்த்தமற்ற
கிளர்ச்சியில் இறங்கியதால் சர்க்காரோடு இராஜி பேசவேண்டிய நிலைமைக்
கும் வந்து விட்டது. ஆனால் நாங்கள் ஒத்துழையாமைக் காலக் கொள்கை களையேதான் பெரிதும் நடத்த சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்திருக் கிறோம். எங்கள் சுயமரியாதை இயக்கத்தில் தீண்டாமை விலக்கு முக்கிய மானது.மத சம்பந்தமான மூடக் கொள்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் ஒழிப்பதன் மூலம் இந்து முஸ்லீம் முதலிய ஒற்றுமைக் கொள்கை முக்கியமா
யிருக்கிறது. பகுத்தறிவுடன் இருக்கச் செய்வதற்காக செய்யும் முயற்சியில் மது விலக்குக் கொள்கையும் ஆராய்ச்சிக் கொள்கையும் முக்கியமாக இருக்கிறது. அது போலவே சடங்குச் செலவுகளையும் உத்சவச் செலவுகளையும் நிறுத்தச் செய்வதன்மூலம் கதரைவிட சிக்கனமும் பொருளாதாரமுமான திட்டமும் எங்களுக்கு முக்கியமானதாயிருக்கிறது. ஆகவே இந்தக் காரியங்களைத்
குடி அரசு - 1980 (1) 232
தான் நாங்கள் நாட்டின் விடுதலைக்கும் மனித தர்மத்திற்கும் ஆதாரமாய்க் கொண்டு சுயமரியாதை இயக்கங் கண்டு நாங்கள் வேலை செய்து வருகிறோம்.
இதனால் எங்களை தேசத் துரோகியென்றோ கடவுள் துரோகி யென்றோயார் சொல்வதானாலும் நாங்கள் பயப்படவோ பின் வாங்கவோ போவதில்லை என்பதை வணக்கத்துடனும் உறுதியுடனும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
திட்டம் தான் வித்தியாசம்
தீண்டாமை
சகோதரர்களே! ஒத்துழையாமையிலிருந்த தீண்டாமை விலக்குத் திட்டத்திற்கும் சுயமரியாதை இயக்கத்திலிருக்கும் தீண்டாமை விலக்குத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சற்றுக் கவனியுங்கள். ஒத்துழையாமை யிலுள்ள தீண்டாமை விலக்கு திட்டமானது தீண்டாமையைக் கொண்டு மற்ற மக்களைத் தீண்டாதவர்களென்று சொல்லி ஒதுக்கித் தள்ளி வைத்து தீண்டாமையின் பயனாய் ஆதிக்கம் அடைந்து வருகின்றவர்களிடம் சென்று தீண்டாமையை ஒழியுங்களென்று சொல்லிக் கொண்டிருந்தோம். அன்றியும் தீண்டாமைக்கு ஆதாரக் கர்த்தாக்களான பார்ப்பனர்கள் கையிலேயே அவ்வேலையும் ஒப் படைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அது சிறிதும் பயன் பெறாமல் பட்டபாடெல்லாம் வெறுங்காற்றாய்ப் போய்விட்டது. ஆனால் நாங்களிப் பொழுது சுயமரியாதை இயக்கத்தில் தீண்டாமை விலக்குத் திட்டத்திற்காக செய்யும் வேலை என்னவென்றால் தீண்டா தாரிடத்திலேயே நேரிற் சென்று,
“ஓ! தீண்டக்கூடாத சகோதரர்களே! சில சுயநல அயோக்யர்கள், சோம்பேறிகள், மதத்தின் பேராலும், சாமியின் பேராலும் வேத சாஸ்திரத்தின் பேராலும் உங்களை இழி பிறப்பாளர்களென்று ஏற்பாடுகள் செய்து உங்களைக் கண்டாலும் உங்கள் நிழல் மேலே பட்டாலும், உங்களோடு பேசி னாலும் உங்கள் பாஷை உச்சரித்தாலும், உங்களைத் தொட்டாலும், நீங்கள். தொட்டதைத் தொட்டாலும், நீங்கள் நடந்ததின் மேல் நடந்தாலும் தீட்டு என்றும், தோஷமென்றும், பாவமென்றும் எழுதி வைத்து உங்களைக் கொடு மைப் படுத்துகிறார்கள். உங்களை வைப்பாட்டி மக்களென்று அழைக்கிறார்.
கள். தங்கட்கு அடிமை வேலை செய்யவே உங்களைக் கடவுள் சிருஷ்டித்தார். என்று சொல்லுகிறார்கள். நீங்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்க.
வும் மற்றொரு கூட்டம் நோகாமல் உங்களை ஏய்த்துச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக் கொண்டு உங்களைப் பார்த்து சண்டாளர்களென்றும் சூத்திரர்.
கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கவும் இன்னும் எத்துணை நாட்களுக்குப் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? நீங்களும் மனிதர்கள்தானா?' உங்களுக்கு மானமில்லையா? வெட்கமில்லையா?”'
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இந்து முஸ்லீம் ஒற்றுமை
இநது முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லிக் கொடுமைப்படுத்தப்பட்ட இழிவுப் படுத்தப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பி அவர்கள் மூலமாகவே தீண்டாமையை ஒழிக்க வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதுதான் தீண்டாமை விலக்கு விஷயத்தில் சுயமரியாதை இயக்கத் திட்டத்துக்கும், ஒத்துழையாமை இயக்கத் திட்டத்துக்கும் உள்ள வித்தியாசமாகும்.
அது போலவேதான் இந்து முஸ்லீம் ஒற்றுமை விஷயத்திலேயும் ஒத்துழையாமை இயக்கமானது ஒவ்வொரு மதக்காரரிடத்திலும் சென்று ஒவ்வொரு மதத்தையும் சரியென்று சொல்லிப் புகழ்ந்து மதப் பிரசாரம் செய்வதின் மூலம் மக்களுக்கு அதிகமான மதப் பைத்தியத்தை உண்டாக்கி அதின் மூலம் இந்து முஸ்லீம் கிருஸ்தவர்கள் முதலியவர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட வேலை செய்து வந்தது. ஆனால் அவ் வேலையின் பயனாய் கலகங்களும் விரோதங்களும் ஏற்பட்டு முன்னிலுமதிகமான வேற்றுமைகள்: உண்டானதுதான் கண்ட பலனேயன்றி வேறில்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் நாங்கள் செய்யும் இந்து முஸ்லீம் கிருஸ்துவர் முதலிய வர்கள் ஒற்றுமைத் திட்டமென்னவென்றால்,
“ஓ! மதவாதிகளே! மதம் மனிதனுக்கேற்பட்டதே ஒழிய மதத்துக்காக மனிதன் ஏற்பட்டவனல்ல. எந்த மதமானாலும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் கட்டுப்பட்டதே ஒழிய முரட்டுப் பிடிவாதத்துக்கும் மூட நம்பிக்கைக்கும் ஆதாரமானதல்ல.மதமானது மக்களை ஒற்றுமைப்படுத்தி சமத்துவம் அளிப் பதற்கு ஏற்பட்டதே ஒழிய வேற்றுமைப் படுத்தி வித்தியாசங் கற்பிப்பதற்கல்ல. எந்த மதமும் காலதேசவர்த்தமானத்திற்கும் மக்கள் செளகரியத்திற்கும் சமாதான வாழ்க்கைக்கும் இணங்கி வர வேண்டியதே தவிர எந்த இடத்துக்
கும் எந்தக் காலத்துக்கும் சிறிது கூட மாற்றக்கூடாதது என்று சொல்லப்படு வதல்ல. ஆகையால் இக்கொள்கைக்கு விரோதமாயிருப்பவைகளை மத மென்று கருதாதீர்கள். அது மனித சமூகத்தை அழிக்க வந்த விஷ நோய் களென்று கருதுங்கள் ”'
என்று சொல்வதன் மூலம் இந்து முஸ்லீம் முதலிய மத சம்பந்தமான வித்தியாசங்களையும் பிடிவாதங்களையும் மூட நம்பிக்கைகளையும் ஒழித்து மக்களுக்குள் ஒற்றுமையையும் அன்பையும் உண்டாக்கச் செய்ய சுய மரியாதை இயக்கம் பாடுபடுகிறது.
பொருளாதாரம்
அது போலவே பொருளாதார சிக்கன விஷயத்திலும் ஒத்துழையாமை: இயக்கமானது கதரின் பேரால் இராட்டினம் சுழற்றுவதால் மக்களுக்கு மணிக் கொரு பைசா வீதம் குறைந்த வரும்படியை உண்டாக்கி சிக்கனத்தின் பேரால்
குடி அரசு - 1980 (1) 234
அதிக விலையுள்ள கதரை வாங்கியுடுத்துவதின் மூலம் அதிகச் செலவையும் ஏற்படுத்தி மக்கள் நாகரீக உலகத்தில் கலந்து கொள்வதற்கில்லாமலும் செய்து சதா சர்வகாலம் கடவுள் செயல் கடவுள் செயல் என்று சொல்லி மக்களின் ஈனநிலைமைக்கும் தரித்திரத் தன்மைக்கும் கடவுளையே பொறுப்பாளியாய்க்
காட்டி விட்டதால் மனிதன் மிருகமாகி கடவுளின் பேரால் அடிமையாகச் சம்மதிக்கச் செய்த கதர் என்னும் பொருளாதாரத் திட்டத்தால் மனிதர்களின்
தன் முயற்சி யழிந்ததல்லால் வேறொரு பலனும் ஏற்பட்டதில்லை என்பதை யுணர்ந்து நாங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் மக்களிடத்திற் சென்று,
“ஓ மக்களே! பொருளாதாரத் திட்டத்திற்கு எல்லா மக்களுக்கும் எந்தக் காலத்துக்குமே கதர் பொருத்தமானதல்ல. இராட்டினஞ் சுற்றாததினாலேயே இந்த நாட்டிற்குத் தரித்திரம் வந்து விடவில்லை. பின் என்னவென்றால் பணக்காரன் தன் முயற்சியினால் மற்றவர்களிடம் உள்ள பணத்தை பல வழிகளில் கொள்ளையடித்துக் கொண்டு வேறொருவர் வந்து அதைக் கைப்பற்றாமல் இருக்கட்டுமென்றும் தான் பணம் சம்பாதித்த இழிவான முறைகளைப் பற்றி மற்றவர்கள் குற்றஞ் சொல்லாமலிருக்கட்டு மென்றும் கருதி முன்ஜாக்கிரதையாக இந்தப் பணமெல்லாம் எனக்குக் கடவுள். கொடுத்தார், அவர் தபவாலேயே நான் பணக்காரணானேன் என்று சொல்லி விட்டுத் தான் சம்பாதித்ததில் ஏதோ ஒரு பாகத்தைக் கடவுளுக் கென்று ஆடம்பரமாய்ச் செலவும் செய்து விட்டு அப்பணம் வேறு யாருக்கும் உதவாமல் தானே சுயநலமாய் ஒன்றுக்குப் பத்தாக வீண் செலவு செய்து கொண்டு வாழ்கின்றான்.ஆனால் ஏழைகளோ தங்களுக்குப் பணமில்லாமல் போனதற்குக் காரணம் தங்கள் முயற்சிக் குறைவும் அறிவுக் குறைவும் என்பதையும் உணராமல் கடவுள் செயலென்றும், கடவுள் கொடுக்கவில்லை யென்றும் சோம்பேரி ஞானம் பேசிக் கொண்டு அடிமையாகவும், தரித்திர வானாகவும் இருப்பதோடு கொஞ்சம் நஞ்சம் ஏதாவது கையில் கிடைத்தால் அதையும் பணக்காரணைப் பார்த்துக் காப்பியடித்து தானுங் கடவுளுக்கும் சடங்குகளுக்கும் செலவு செய்தால் கடவுள் தனக்கும் அதிகப்பணம் கொடுப் பாரென்று நினைத்து உள்ளதையுங் கூடப் போட்டு விட்டு வெகு ஜாக்கி ரதையாக தரித்திரத்தையும் அடிமைத்தனத்தையும் காப்பாற்றிக் கொண்டு
வரப்படுகிறது. ஆகையால் அதனாலேயே ஏழைகள் ஏழ்மைத்தனம் அதிகப் படுவதற்கும் நிலை நிற்பதற்கும் காரணமாகிறது”. என்பதை ஏழை மக்கட்கு
எடுத்துச் சொல்லி அவர்களுடைய முயற்சியையும் அறிவையும் தட்டி எழுப்பி வீணாகப் பணத்தை சாமிக்கும் சடங்குக்கும் செலவு செய்யாமல் தடுப்பதின்மூலம் நாங்கள் பொருளாதார நிலையை உயர்த்திச் சிக்கனத் தன்மையை நிலை நாட்ட முயற்சிக்கிறோம். இதுபோலவே தான் மற்றும் பல துறைகளிலும் ஒத்துழையாமையின் போது நாங்கள் எந்தெந்தக் கொள்கைக்கு வேலை செய்தோமோ அதே கொள்கைகட்குத்தான் இப்பொழுதும் எங்கள்.
புத்திக்குத் தக்கபடி திட்டங்களை மாற்றிக் கொண்டு வேலை செய்து வருகிறோம்.
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
எங்களுடைய இந்த முயற்சியில் இதற்கெல்லாம் காரணமாக அரசாங்
கத்தார் மீது பழி சுமத்திக்கொண்டு அரசாங்கத்தாரை மாத்திரம் வைது கொண்: டிருக்கிற வரையில் நாங்கள் பெரிய தேச பக்தர்களாகவும், வீரர்களாகவும், தியாகிகளாகவும் கருதப்பட்டோம். ஆனால் இப்பொழுது அவைகளில் மூலா தாரத்தைக் கண்டுபிடித்து அஸ்திவாரத்தில் கையை வைத்து அடியோடு சாய்க்க ஆரம்பித்தவுடன் இப்பொழுது நாங்கள் தேசத் துரோகிகளாகவும், பார்ப்பன துவேஷிகளாகவும், நாஸ்திகர்களாகவும், மதத் துரோகிகளாகவும் ஆய்விட்டோம். ஆகவே நாங்கள் இந்த தேசத் துரோகத்திற்கும் பார்ப்பன
துவேஷத்திற்கும் நாஸ்திகத்திற்கும் மதத்திற்கும் பயந்தால் எங்களால் பலன் தரக்கூடிய எந்தக் காரியமும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துதான்
துணிந்து இத்தொண்டில் இறங்கி இருக்கிறோம்.
சகோதரர்களே! பொருளாதார விஷயத்தில் பணக்காரர்களின் பணச் செருக்கை யொழித்து அவர்களது பணம் ஏழைகட்கும் நாட்டிற்கும் உப யோகப்பட வேண்டியதென்று சொல்லி அப்பணத்தை நாட்டிற்குப் பயன் படுத்துவதே எமது வேலையாகும். ஒருவன் ஒருவனை எஜமானனாய் ஒப்புக் கொள்வதற்கும் அடிமைத் தனமாயிருப்பதற்கும் அவனது மூடத்தனமே காரணமல்லாமல் மற்றபடி அது கடவுள் செயல் அல்ல வென்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்நிலையில் தான் நாம் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ தாக்குவதாகச் சொல்லப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். எங்களுடைய பொது வேலையின் அநுப வத்தையும் விடுதலை ஆராய்ச்சியையும் கொண்டுதான் இந்த வேலையில் இறங்கியிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை அரசியலைப் பொறுத்த கவலையே நமக்குக் கிடையாது. முதலாவதாக நமக்குள் நாம் தள்ளி வைக்கப் பட்டிருக்கும் நிலைமையிலிருந்தும் நமக்குள் நாம் இழிவு படுத்தப்படும் இழிவிலிருந்தும் நம்மவர்களால் கொடுமைப் படுத்தப்படுவதிலிருந்தும் மீள வேண்டியதே முக்கியமான வேலையாகும். இந்த காரியங்களுக்கு அரசாங்
கத்தார் அநுகூலமாயில்லாமல் நமது முயற்சிக்கு இடையூறாக யிருக்கும் போது மாத்திரம் தான் நாம் அரசாங்கத்தாரின் பக்கம் திரும்பவேண்டும். மற்றபடி இப்போது அரசாங்கத்தாரிடத்தில் நமக்கு வேலையில்லை. உதாரண. மாக நமது முயற்சியையும் இயக்கத்தையும் குற்றஞ்சொல்லி ஆட்சேபிக்கும் பார்ப்பனர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் நன்றாகப் படித்து அரசாங்கத் தாருடனே இருந்து கொண்டு நமது வரிப்பணத்தில் பெரும் பாகத்தை சம்பளமாக பீசாக....... அநுபவித்துக் கொண்டிருக்கிறதையும் நாம் பார்க்கி றோம். ஆனால் நமது இயக்கத்தை அரசாங்கத்தார் அடக்காமல் சும்மா விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகப் பல பார்ப்பனர்கள் அரசாங்கத்
தின் மீது வெறுப்புக்கொண்டு விஷமப் பிரசாரஞ் செய்வதும், அரசாங்கத் தாரைப் பார்த்து “நாங்கள் தானே பொது ஜனங்களை இராஜ வாழ்த்துப்பாட வைத்தோம், நாங்கள் தானே உங்கள் இஷ்டம் போல் எல்லாம் இந்த நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு போக இடங் கொடுத்தோம். அப்படி
குடி அரசு - 1980 (1) 236
யிருக்க இப்போது நீங்கள் எங்களுக்கும் உங்களுக்கும் ஆபத்தைத் தரும் இந்த சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்கிறீர்களா? அல்லது நாங்கள் உப்புச் சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொள்ளட்டுமா?”
என்று அரசாங்கத்தாரை மிரட்டுகிறார்கள். இப்பொழுது நமது நாட்டில் கொஞ்சகாலமாக நடந்து வரும் பார்ப்பன மகாநாடுகளெல்லாம் இந்தத் தீர்மானத்தையே தான் செய்து கொண்டு வருவதை நீங்கள் பார்க்கலாம். ஆகையால் இப்பொழுது நாம் அரசாங்கத்தாரிடத்தில் சிறிது தகராறுக்குப் போவதாயிருந்தாலும் இந்தப் பார்ப்பனர்கள் உடனே உப்புச் சத்தியாக் கிரகத்தை நிறுத்திவிட்டு ஒவ்வொருவராக நம்மை யொழிப்பதற்கு சர்க்காருக்கு உளவு சொல்லிக் கொடுக்கப் போய்விடுவார்கள். உதாரணமாக கோயம்புத்தூர் மகாநாட்டில் நாம் சர்க்காரைக் கொஞ்சம் கண்டித்தவுடன் திரு. சத்தியமூர்த்தியும் அவர் கூட்டத்தாரும் கவர்னரிடமும் இராஜப் பிரதிநிதி யிடமும் ஐரோப்பிய வர்த்தகர்களிடமும் சென்று “பார்ப்பனராகிய நாங்கள். அரசாங்கத்தாருக்கு ஒன்றும் கெடுதல் செய்யவில்லை.” என்றும் “பார்ப்பன ரல்லாதார்கள் தான் இம்மாதிரி சேர்ந்து கோயம்புத்தூரில் தீர்மானஞ் செய்தி ருக்கிறார்க” ளென்றும் சொன்னதொன்றே போதுமானதாகும். இன்றைய
தினம் சட்ட மறுப்பில் மிக்க அனுதாபத்தைக் காட்டும் திரு. டி.ஆர். இராமச் சந்திரய்யர் அவர்கள் யார் என்பது நமக்குத் தெரியாதா? அவர் தானே சென்னை மாகாண பார்ப்பன வருணாச்சிரமத் தலைவராவார். மற்றும் திரு. காந்தியை முட்டாள் என்று சொன்ன பார்ப்பனரும் வக்கீல் வேலையையும் பள்ளிக்கூடத்தையும் சட்டசபையையும் விட்டுவிலகுவது தேசத் துரோக மென்று சொன்ன பார்ப்பனரும் காங்கிரஸ் கொள்கையில் ஜாதி வித்தியாசம் ஒழியவேண்டுமென்பதாகத் திருத்தவேண்டுமென்று சொன்னவுடன் இராஜினாமாக் கொடுத்துக் காங்கிரசை விட்டுப் போன பார்ப்பனர்களும் தானே இப்பொழுது தலைவர்களாயிருக்கிறார்கள். உதாரணமாக சென்னை
யில் கூடிய காங்கிரசின் போது அனேகர் எங்களிடம் இராஜி பேச வந்தனர். கோஸ்வாமி முதலியவர்களே நாம் ஏன் காங்கிரசை விட்டு விட்டோம் என்ற
னர். நாம் நாளையே இக்காங்கிரசில் சேர்வோம். எங்கட்கு அது புதிதல்ல, இந்த ஜாதி முறை ஒழிய வேண்டுமென்று சமுதாய சம்பந்தமான ஒரு ஏற்பாட்டை காங்கிரசை ஒப்புக் கொள்ள வையுங்கள் என்றோம். அதற்குக் கல்கத்தா திரு. கோஸ்வாமி, டாக்டர் அன்சாரி, திருமதி சரோஜினி ஆகிய வர்கள் ஆகட்டுமென்றார்கள். திரு. 16 ஷண்முகம் அவர்கள் இதை அனுசரித்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தார். அது விஷயாலோசனைக்
கமிட்டிக் கூட்டத்திற்குக் கூட கொண்டுவரப் படவில்லை.மத சம்பந்த சமூக சம்பந்த விஷயம் அரசியலியக்கத்தில் புகக்கூடாது என்று கூறிவிட்டனர்.திரு. சரோஜினியும், டாக்டர் அன்சாரியும் முக்கியமாக இராஜி பேச முயற்சித் தவர்கள். அவர்கள் எங்கள் முன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபிறகு மீண்டும் பேச வரவேயில்லை. இதுதான் காங்கிரசின் “சமூக வேலை”.
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சேரமாதேவி குருகுலப் போராட்டத்தின் போது காங்கிரஸ் பணத்தில் சில பேரை வெளியில் வைத்தும் சிலரை உள்ளே வைத்தும் சோறு போட் டனர். காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வரையில் ஜாதி வித்தியாசம் கூடாதென திரு.
5. இராமனாதன் அவர்கள் பிரரேபித்த வார்த்தையானது ஏற்றுக் கொள்ளப் பட்டு அரங்கேறியது. இதைக் கண்டதும், “உண்மை தேசாபிமானிகள்”
எல்லாம் இராஜிநாமா செய்துவிட்டனர். நமது நண்பர் திரு. இராஜகோபா லாச்சாரி,டாக்டர் ராஜன், திரு. சந்தானம், திரு. வரதராச்சாரி, Sm. TV. சாஸ்திரி இந்த “தியாகி” களும் “நல்லெண்ணம் கொண்டவர்களும்” ஆகிய எல்லா
ரும் ஒரே அடியில் இராஜிநாமா செய்தனர். ஆகையால் காங்கிரசினிடத்து மாத்திர மன்றி அதை நடத்தும் இந்த மனிதர்களிடத்தும் எங்கட்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதனாலேயே தான் புது “சுயமரியாதை” இயக்கம் தொடங்கப்பட்டது.
திரு.எஸ் இராமநாதன் அவர்கள் செட்டி நாட்டில் இந்த விஷயங்களை திரு.காந்தியிடம் சொன்னபோது அவர் அது மெய்யா? என்று கேட்டார். இந்த டாக்டர்ராஜனே அப்படிச் செய்தார் என்று திரு. எஸ். இராமநாதன் சொன்னார்.
திரு. காந்தி உண்மையா என்று திரு. ராஜனைக் கேட்டதற்கு அவர் ஆம் அது
என் சொந்த அபிப்பிராயத்தைப் பொறுத்தது. அரசியல் ஸ்தாபனத்தில் சமூக விஷயம் புகுத்தப்படக் கூடாது! என்று பதில் சொன்னார்! திரு. காந்தியாரும் அது “அவரவர் அபிப்பிராயம்” என்றார்! அதற்கு முன் Sm. MK ஆச்சாரி
திரு. காந்திக்கு இதைப் பற்றிக் கடிதம் எழுதி, இந்தமாதிரி காங்கிரசில் சமூகசம்பந்த விதி செய்யலாமா? வென்று கேட்டிருந்தார். அதற்கு திரு. காந்தி செய்யலாமென்று பதில் எழுதினார். பிறகு நாங்களெல்லோரும் காங்கிரசை விட்டுவிட்ட பிறகு அவர்கள் ஒவ்வொருவராக மீளவும் காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள். நாம் ஜாதி வேற்றுமையை ஒழித்தல் என்னும் புது இயக்கத்தைத் தொடர்ந்தோம். சாதியினால் ஏற்பட்ட கொடுமையையும் இழிவையும் ஒழிக்க வேண்டுவது அவசியம் என்று கருதினோம். நமது பாமர மக்களின் அறியா மையையும் ஏமாந்த தன்மையையும் உபயோகம் செய்து கொண்டு நம்மீது அவர்கள் இராமசாமி நாயக்கன் “தெய்வத்தை வைகிறான், சாஸ்திரத்தை வைகிறான், மதத்தை வைகிறான்” என்று இப்படி எல்லாம் தூற்ற ஆரம்பித்து விட்டனர். இந்தத் தூற்றுதலைக் கேட்ட பாமர ஜனங்கள் எங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். நாம் “உங்கள் மதத்தில் சாஸ்திரத்தில் பிரவேசி யோம். ஆனால் எங்களுடைய வேலையில் அவை தடையாய் வந்தால் அவற்றைக் கண்டுநாம் பயப்படோம் என்றோம்”. இதற்கு நியாயமுடன் பதில் கூறாமல் “மதம் அப்படிச் சொல்லுகிறது” என்றனர். ஒரு மனிதனைப் பறையனாக விருக்க ஒரு மதம் சொன்னால் அந்தமதம் வேண்டுமா?
ஒருவனுக்குச் சூத்திரப் பட்டம் கொடுக்கவும் ஒரு மதம் இருப்பின் அந்தமதம் வேண்டுமா? என்று கேட்டால் “இந்தச் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும். இப்படிப்பட்ட இந்து மதம் வேண்டாம்” என்றே சுயமரியாதையுள்ள ஒவ்வொருவனும் சொல்லுவான். இப்போது ஒருவன் தன்னை “ஹிந்து”
குடி அரசு - 1980 (1) 238
என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் அவன் கண்டிப்பாக “சூத்திரப் பட்டத்தை” ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட மதம் எனக்கும் வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம். இந்த மாதிரியான இந்து மதத்தைக் கடவுள் உண்டாக்கினார் என்று சொல்லப்படுவதினால் அந்தக் கடவுளும் வேண்டாம்.
எனக்குக் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ, சாத்திரத்தைப் பற்றியோ அக்கரையில்லை.ஆனால் கெடுதியை நீக்கவும் கொடுமைகளைக் போக்கவும் முயற்சிக்கிற போது “கடவுள் தான் சாதிகளை ஏற்படுத்தினார். அதன்படி நடக்கத்தான் வேண்டுமென்றால் அந்தக் கடவுள் எத்துணைப் பெரிய கடவுளாயிருந்தாலும் அதைச் சுட்டுப் பொசுக்க வேண்டாமா? அதைப் புதைக்க வேண்டாமா? வென்றே உங்களைக் கேட்கிறேன். இந்த நிலைமையிலேயே நாம் எல்லாவற்றையும் தாக்க வேண்டியிருக்கிறது. இல்லா விட்டால் எங்கட்கு அவற்றில் என்ன வேலை? எவன் அவற்றை வைத்துக் கொண்டுப் பிழைத்தால் என்ன? நம்மைத் தாழ்த்தி அமுக்கிக் கொடுமைப்
படுத்த அந்த மதம் சாத்திரம் கடவுள் ஆகிய மூன்றையும் கொண்டு வந்தால் நான் ஏன் சம்மதிப்பேன்? இதனாலேயே நாம் எல்லோருக்கும் அதிலும் பார்ப்பாருக்கும் விரோதிகளாய் போய் விட்டோம். இவற்றால் ஏமாற்றிக் கொண்டு வந்த கூட்டத்தாருக்கு விரோதிகளானோம். பிறப்பில் வித்தியாசம் பாராட்டக் கூடாது, ஒருவனை யொருவன் அடக்கியாளக் கூடாது என்று சொல்வதால் ஒன்றும் முழுகிப் போய்விடாது. யோக்கியமான மதமும் யோக்கி யமான கடவுளுமாயிருந்தால் இதனாலெல்லாம் போய் விடாது. அப்படியே போய் விடக்கூடிய கடவுளால் என்ன நஷ்டம் வந்து விடும்.
ஒரு கதை
ஒரு வேடுவனையும் ஒரு வேளாளனையும் பற்றி ஒரு கதை சொல்லு கிறேன். அதாவது ஒரு வேளாளன் ஒரு பிள்ளையாரைப் பக்தியாகப் பூசை செய்து கொண்டுவந்தான். ஒரு நாள் ஒரு வேடுவன் அந்தப் பிள்ளையாருக்கு நேராய்க் கால் நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தான். உடனே அந்தப் பிள்ளை:
யார் வேடுவனை ஒன்றும் செய்ய முடியாமல் வேளாளனிடம் போய் “அந்த வேடுவனைக் காலை எடுக்கச் சொல்லுகிறாயா அல்லது உன் கண்ணைக் குத்தட்டுமா” என்றதாம். ஏன்! அந்தப் பிள்ளையார் கோபம் அந்த வேடனிடம் செல்லவில்லை? இதே மாதிரிதான் கடவுள்கள் எல்லாவிடத்தும் செய்வதா யிருக்கிறது. ஒரு கூட்டத்தில் மனுஸ்மிருதி நெருப்பில் கொளுத்தப் பட்டது. ஏனெனில் அதில் நமக்கு சகிக்கமுடியாத இழிவு கூறப்பட்டிருப்பதால் ஒரு சூத்திரனுடைய பணத்தைப் பலாத்காரமாகப் பிடிங்கிக் கொள்ளலாமென்றும், இதுதான் இந்து மத ஆதாரம் என்றும், இது கடவுள் சொன்னதென்றும் சொல்லப்படுவதை எண்ணி அந்த மனுஸ்மிருதி நெருப்பு வைக்கப்பட்டது. அப்பொழுது தற்போதைய தேசபக்தர்கள் திரு. இராஜகோபாலாச்சாரியார்.
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
உட்பட பலர் ஆட்சேபித்தார்கள். இதற்கு சர்க்காரையும் உதவிக்குக் கூப்பிட் டார்கள். (வெட்கம் வெட்கம்)
நீங்கள் சம்பாதித்து ஒரு கூட்டத்தாருக்கு கொடுப்பதும்,” “சூத்திரர் முதலியோர் படிக்கக் கூடாது அவர்கட்குச் சுயேச்சைக் கொடுக்கக் கூடாது”
என்றால், அந்த மனுநூலைக் கொளுத்தி உங்களது இழிவைப் போக்கிக் கொள்வதா அல்லது அதை ஒப்புக்கொள்வதா? ஆகையாலேயே இந்த இயக் கத்தை விடாதீர்கள் என்று சொல்லுகிறோம்.எனவே இவ்வளவு நேரம் நான் பீடிகையாகச் சொல்லிக் கொள்ள வேண்டியதாயிற்று. அதிக நேரமாய் விட்டா
லும் இன்னும் ஒரு மணியில் ஏதோ கொஞ்சம் சொல்லி முடிக்கின்றேன். பெரிய கூட்டமாயிருப்பதால் சொல்ல ஆசைப்படுகிறேன். இன்றைய நிலை
யில் சுயேச்சையும் சுயாதீனமும் பெறப் பாடுபடுவது என்னமாய் முடியும்? இந்தத் தடைகளைப் போக்குங்கள். மற்ற மற்ற தேசத்தார்கள் தங்கள் நாட்டுக்
குற்றம் நீங்கிய பிறகே சுயேச்சையடைய என்ன செய்தார்கள் என்பதையும் எப்படியடைந்தார்களென்பதையும் நினையுங்கள். நம் குற்றம் நீங்க வேண்டிய தற்காக நாமும் அவர்களைப் போல செய்வதா? இல்லையா? அவர்களது வழியை விட்டு விட்டால் வேறு வழியில்லை. வெறும் வாய் வார்த்தையால்
ஒன்றும் முடிந்து விடாது. பெரியோர் போன வழியில் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் நடக்காது. நாம் இப்பிரிட்டன் முதலிய நாடுகளை எடுத்துக் கொள்ளுவோம். அவர்களுடைய கல்வி, விவசாயம், தொழில், அறிவு, மனிதத்தன்மை ஆகிய இவற்றிற்கும் நம்முடைய நிலை மைக்கும் வேற்றுமையைப் பாருங்கள்.
நமது நிலை
இந்தியாவில் கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். சென்ற தடவை ஜனன மரணக் கணக்கெடுத்த காலத்தில் இந்தியாவில் 100க்கு7 பேர் படித்த வர்கள். இப்பொழுது ஏழுடன் மூன்று கூட்டி பத்து பேராக வைத்துக் கொள்: ளுங்கள். ஆனால் மேல் நாட்டில் 100க்கு 90 அல்லது 99ம் படித்தவர்கள். அப்படியே பெண் கல்வியை எடுத்துக் கொண்டாலும் நம் நாட்டில் 1000க்கு
10 பேர்களே அதிகம். ஆனால் இங்கிலாந்தில் 1000க்கு 900 பெண்கள் படித் திருக்கிறார்கள். ஐரோப்பியர்களதுநிலையையும் நம் நிலையையும் பாருங்கள். பிராமணர்களே மற்றவர்களை படிக்கக் கூடாதபடி செய்து இந்த நிலைமைக்கு
ஆக்கி வைத்தார்கள்.அதற்கு ஆதாரமாக சாஸ்திரங்களும் எழுதி வைத்திருக் கிறார்கள். மற்றவர்களைப் படிக்க வைக்கக் கூடாது. இதை ஆதரித்தால்தான் இடம் தருவோம் என்று மகம்மதியரிடம் பார்ப்பனர்கள் ஒப்பந்தமும் செய்து கொண்டதால் மகம்மதியர் காலத்தில் நமக்குச் சரியான கல்வியில்லாமற் போயிற்று. கடைசியாக மகம்மதியர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறவே வெள்ளைக்காரர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அதனாலேயே கோகலே அவர்கள் கட்டாய இலவசக் கீழ்தரக் கல்வி கொடுக்கப்படவேண்டுமென ஒரு
குடி அரசு - 1980 (1) 240
சட்டம் கொண்டு வந்தார். அப்போது தர்பங்கா போன்றவர்களும் மதத்தின்
பேரால் ஆழ்த்திக் கொடுமை படுத்துவோரும், ஒரு தூது கூட்ட மூலமாக வைசிராயை பேட்டி கண்டு, சூத்திரன் படிக்கக் கூடாது. மதத்துக்கு ஆகா தென்றும், இது ஆதியில் நமக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு விரோதமென்
றும், மீறினால் அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும் கூறினார். ஆகவே பல காரணங்களால் அரசாங்கத்தார் அந்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாமற் போயிற்று. சுயமரியாதை உணர்ச்சி நம் மக்கட்கு ஏற்பட்ட பிறகே இலவசக் கல்வியும் கட்டாயக் கல்வியும் ஏழைகட்கு சில இடங்களிலாவது இப்போது தரப்படுகிறது. நாம் மற்ற நாட்டாரை விட அதிகக் கடவுள் நம்பிக்கையையும் கல்விக்காக ஒரு கடவுளையும் வைத்து கும்பிடுவதையும் சரஸ்வதியென ஒரு படம் வைத்துப் பூஜித்தலையும் வருடத்தில் பல தடவை உற்சவம் கொண்டாடு வதையும் செய்கிறோம். அதிக மரியாதையும் செய்கிறோம். சரஸ்வதி என்று புத்தகங்கள், ஏடுகள், கடிதாசிகள் எல்லாவற்றையும் கும்பிடுகிறோம், கண்: ணில் ஒற்றிக் கொள்ளுகிறோம். இத்தனை வருஷங்களாகச் செய்கிற இத் தனை பூஜைக்கும் நாம் 100க்கு 7 பேர்தான் படித்தவர் ஆனோம். ஆனால் இதே கடிதாசியை - இதே நமது சரஸ்வதியை வெள்ளைக்காரன் மலம் துடைக் கிறான்.100க்கு 90 பேர்கள் படித்துமிருக்கிறார்கள். நாம் 100க்கு 93 பேர்கள். தற்குறிகள். இந்த சரஸ்வதியை மறந்துவிட்டு உங்கள் அறிவு, முயற்சி, காரியம் இவற்றை நீங்களே கவனியுங்கள். எல்லோரும் படித்தவர் களாவோம்.
சிலர் வெள்ளைக்காரன் மேல் தப்பிதம் கூறி அவன் ஏன் படிக்க வைக்கவில்லை என்கிறார்கள். வெள்ளைக்காரன் என்ன செய்வான்? அவன் படிப்புக்காக இவ்வளவு என நம்மைக் கொண்டே ஒதுக்கி வைத்து விட்டான். நிர்வாகத்திற்கு இவ்வளவு என ஒதுக்கி வைத்து விட்டான். அதற்கு மேல் கேட்டால் வரி போடவேண்டுமென்கிறான். சீர்திருத்த அரசாங்கத்தில் இவ்வளவு தான் முடியும். இதற்கு மேல் வழியில்லை என்பது நமக்குத் தெரியும். ஏன் என்றால் நம் தேசீயவாதிகள் சம்பளமாகவே அவ்வளவு பணத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்கள். ஆனால் நம்மிடம் வேறு பணமோ யோக்யதையோ இல்லையா என்று பார்ப்போமானால் சர்க்கார் நம்மிடமிருந்து ஆட்சிக்காக வாங்கும் வரியை நாம் சிறிதும் பயனில்லாத சாமி சடங்கு வகையராக்களுக்கு மோட்ச வரியாகக் கொடுத்து வருகிறோம்.நமது வாழ்க்கையில் மோட்சத்தைப் பிரதானமாய் கருதுகிறோமே யல்லாமல் கல்வியை பிரதானமாகச் சிறிதும் கருதவில்லை. அதன் பொறுப்பு முழுமை:
யும் “பொறுப்பில்லாத” அரசாங்கத்தினிடம் விட்டுவிட்டு மோட்சத்திற்கு பணத்தை செலவழித்து விடுகிறோம். இப்படியாக நமது செல்வமும் கவலையும் மோட்சமென்கிற ஒரு ஓட்டையில் போய்க்கொண்டிருக்கிறது. அதை முதலில் மூடுங்கள்.அவ்வோட்டை அடைபட்டால் நம்மெல்லோரு டைய படிப்புக்கும் பணம் இருப்பதுடன் பிறரையும் சாப்பாடு போட்டு படிக்க வைக்க பணம் அகப்படும். சாதாரணமாக தமிழ் நாட்டில் மாத்திரம் ஒரு பத்து வருஷத்திற்கு மோட்சச் சடங்கையும், சுவாமி உற்சவங்களையும் நிறுத்திப்
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பார்ப்பீர்களானால் நீங்களெல்லோரும் படித்துவிட்டு இந்த நாட்டு மிருகங்க ளையும் பட்சிகளையும் கூட படிக்க வைக்க முடியும்.மற்றும் சில்லரை தேவ தைகளின் உற்சவங்களையும் வேண்டுதல்களையும் நிறுத்தி விட்டோமேயா னால் அதில் மீதியாகும் பணத்தில் ஆகாயக்கப்பல் பள்ளிக்கூடமும் கம்பி இல்லாமல் உருவங்களையனுப்பும் தந்தி பள்ளிக் கூடங்களும், செத்தவர் களைப் பிழைக்க வைக்கும் பள்ளிக் கூடங்களும் வைத்து மக்களுக்கு கற்றுக் கொடுக் கலாம். நான் சொல்லுகிற விஷயத்தில் உங்கட்கு ஏதாவது அவ நம்பிக்கை யிருக்குமானால்
திருப்பதி
திருப்பதி சாமி ஒன்றை எடுத்துக் கொண்டாலே சந்தேகந் தீர்ந்து விடும். அந்த சாமிக்கு வருஷம் ஒன்றுக்கு 17 லட்சம் ரூபாய் காணிக்கை வருகிறது. இதுதவிர அந்த சாமிக்கு ஏழரை கோடி ரூபாய் பெறுமான சொத்துமிருக்கிறது. அந்த சொத்துக்களை விற்று 100க்கு மாதம் எட்டணா வட்டிக்குக் கொடுத்து வாங்கினாலும் வருஷத்தில் நாற்பது லட்சம் ரூபாய் வட்டி வரும்.இவை தவிர அந்தக் கோவிலுக்கும் உத்சவத்துக்கும் வேண்டுதலைக்கும் காணிக்கை செலுத்துவதற்கும் யாத்திரை போகும் ஜனங்களின் ரயில் சார்ஜ் முதலிய செலவுகளைக் கணக்குப் பார்த்தால் அதிலும் நாற்பது ஐம்பது லட்ச ரூபாய் கணக்கும் ஆக இந்த மூன்று இனங்களில் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு சாமியால் மாத்திரம் வருஷம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீணாகிறது. இது போலவே சற்றேறக்குறைய தமிழ் நாட்டில் மாத்திரம் திருச்செந்தூர், இராமேஸ்வரம்,மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவாரூர் முதலிய கோயில்களையும் சங்கராச்சாரி பண்டார சந்நதி ஆகிய மடங்களையும் கும்பகோணம் மகாமகம் போன்ற உத்சவங்களையும் மற்றும் 108 திருப்பதி 1008 சிவலிங்கம் வகையரா பாடல் பெற்ற ஸ்தலங்களையும்
மற்றும் மாரியாயி ப்ளேகாயி, காளியாயி முதலிய கிராமதேவதை முதலியவை களுக்கும் மற்றும் சடங்கு சிரார்த்தம் கருமாதி முதலியவைகட்கும் ஆகும் செலவு மெனக்கேடு வகையராக்களையும் சேர்த்தால் எத்தனை பத்துக்கோடி ரூபாய்கள் ஆகுமென்று சற்றுப் பொறுமையாயிருந்து கணக்குப் போட்டுப் பாருங்கள்.இவையெல்லாம் மனிதனைக் கெடுக்கவும் அவனது அறிவைப்
பாழாக்கவும் என்றும் தரித்திர வானாகவேயிருந்து அடிமையாயிருக்கவுமே அந்தச் சாமிகள் உத்சவங்கள் சடங்குகள் மோட்சங்கள் என்பவைகளெல்லாம் சுயநலக்காரர்களால் அயோக்ய எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.
என்ன பலன்?
நிற்க திருப்பதி யாத்திரையால் மனிதனுக்கு என்ன பலன் ஏற்படுகிறது? அதனால் என்ன ஒழுக்கம் காண்கிறோம். ஒருவன் 2000 ரூபாயைக் கொண்டுபோய் திருப்பதி உண்டியலில் கொட்டிவிட்டு வருவானேயானால்
குடி அரசு - 1980 (1) 242
அவனுடைய அரையங்குலமாயிருந்த நாமம் இரண்டங்குலம் அகலமா
வதும், சனிக்கிழமை பிடிப்பதும் மக்களைக் கண்டால் என்னைத் தொடாதே!
எட்டிநில்! என்பதைத் தவிர வேறு ஒழுக்கமோ நாணயமோ அன்போ ஏற்படு கிறதா? தவிரவும் திருப்பதிக்குப் போனதினாலேயே அது வரையில் செய்த பாவமெல்லாம் ஒழிந்துவிட்டதென்று கருதி இனிப் புதுப்பாவமும் செய்யலாம் என்கிற தைரியம் உண்டாகிவிடுகிறது.
தவிர, இந்த மாதிரியான சாமிகளால், உத்சவத்தால் இதுவரை நாட்டிற்கு யாதொரு பலனும் ஏற்பட்டதில்லை என்பது கண்கூடு.
விவசாயம்
விவசாய விஷயத்திலும் சாமிகளையும் விதியையும் பழய பழக்க வழக்கங்களையும் நம்பி எவ்வளவோ நஷ்டம் அடையும்படியான பிற்போக் கிலேயே யிருக்கிறோம். நம் நாட்டு விவசாயம் 2000 வருஷத்திற்கு முன் இருந்ததாகச் சொல்லப்படும் நிலைமையில் தான் இருக்கிறதே தவிர சிறிதும் முற்போக்கடையவில்லை. இந்த நாட்டில் ஒரு ஏக்கராவுக்கு நூறு ருபாய் லாபம் வருவதானால் மேல் நாட்டில் ஏக்கராவுக்கு ஆயிரம் ரூபாய் வரும்படி யாக வேலை செய்கிறார்கள். ஆனால் நாமோ விவசாயத்திற்கொரு கட வுளைக்கற்பித்து மாட்டையும் ஒரு கடவுளாக நினைத்து அதனது கொம்பில் ஒரு தெய்வத்தையும் வாலில் ஒரு தெய்வத்தையும் காலில் ஒரு தெய்வத் தையும், தொடையில் ஒரு தெய்வத்தையும், சாணியிலும் மூத்திரத்திலும் மோட்சங் கொடுக்கிற சக்தியையும் கற்பித்து மாட்டிற்குப் பூஜை செய்து பொங்கல் போட்டு சாணியையும் மூத்திரத்தையும் கலக்கிக் குடிப்பதோடு நமது விவசாய ஆராய்ச்சி முயற்சி முடிந்து விடுகிறது. இன்னுங் கொஞ்சம் அதிகமாகச் செய்ய வேண்டுமானால், ஏறு உழுவதற்கு முன் பார்ப்பானைக் கூப்பிட்டுப் பஞ்சாங்கம் பார்த்து, நல்ல நாள் கண்டுபிடித்து ஏறுக்கும், கொழு
வுக்கும், நுகத்துக்கும், கருவத்தடிக்கும், உழவுகோலுக்கும், ஒவ்வொரு தெய்வங்களைக் கற்பித்து, சாம்பிராணி புகை போட்டு பார்ப்பானுக்குப் பணம்
கொடுத்து ஏறு கட்டுவதோடு ஆராய்ச்சி முடிந்து விடுகிறது. இந்த பூஜையும் நல்ல நாளும் பார்ப்பானுக்குக் கொடுத்த காசும் கொஞ்சங் கூட நமது விவசா யத்துக்குப் பொறுப்பாளியல்லவேயல்ல. விளையாவிட்டால் விதியோடு பொறுப்பு நின்று போய்விடுகிறது. மேல் நாட்டானோ விவசாயத் தில் ஒரு கடவுளையும் லட்சியஞ் செய்யாமல் தன்னையும் தன் அறிவையும் முயற்சி யையும் பொறுப்பாக்கி எந்தவிதமான பூமிக்கு எந்தவிதமான பயிர் செய்வது
என்பதிலும் எந்தவிதமான பயிருக்கு எந்தவிதமான எரு விடுவது என்ப
திலும் கவலையெடுத்து வேலை செய்கிறான். ஆஸ்திரேலியாவில் பழ விவசாயக்காரர்கள் புளிப்பான பழங் காய்க்கும் மரத்தை இனிப்பாக்கவும் நூற்றுக்கணக்காக பழம் காய்க்கும் மரங்களை ஆயிரக்கணக்கான பழங்கள் காய்க்கும் படி செய்யவும், பத்துநாட்களில் கெட்டுப்போகும்படியான
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பழத்தை ஒரு மாதத்திற்கு கெடாத படியான பழம் காய்க்கும்படி செய்யவும் வேண்டிய காரியங்கள் ரஸாயன கூட்டுகள் மூலமாகவும் திராவகங்களை செடிகளில் செலுத்துவதன் மூலமாகவும் பயிர் செய்கிறார்களென்று நமது நண்பர் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்கள் தனது ஆஸ்திரேலியா யாத்தி ரையைச் சொல்லும் போது எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஒரு மனிதனுக்கு
முப்பது ஏக்ரா நிலமிருந்தால், அதில் ஐநூறு பேர்களுக்கு சதா வேலையி
ருக்கும் படியான ஒரு தொழிற்சாலை மாதிரி விவசாயஞ் செய்யலாமென்றும் சொல்லியிருக்கிறார். நாம் அந்த விதமான துறைகளில் சிறிது கூட விசாரமில்லாமல் அதிகமாக பயிர் பிடிக்க வேண்டுமானால் பிடிக்காததற்கு முன்னமே எங்கே கண் திருஷ்டிப் பட்டு விடுமோ என்று பயந்து கொண்டு.
பயிர் செய்திருக்கும் பூமியில் ஒரு கோலை நட்டு அதில் ஒரு விகாரமும் ஆபாசமுமான உருவத்தைக் குத்தி கையில் எதையோ கொடுத்து தலையில் சட்டியை கவிழ்த்து கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிட்டு வீட்டில் போய் உட் கார்ந்து கொள்ளுகிறோம். இந்த நிலையில் உள்ள உங்களை வெள்ளைக்கார அரசாங்கம் பாழாக்கிற்றா? உங்கள் கடவுளும் விதியும் பாழாக்கிற்றா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
செல்வநிலை
தவிர நமது செல்வ நிலையை நினைத்தால் இன்னும் மோசமாயிருக் கிறது. நமது நாட்டில் ஒரு ஆளின் சராசரி வரும்படி ஒரு நாளைக்கு ஒரு அணா ஆறு பை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த நிலையிலுள்ள நமக்கு செல்வத்துக்குக் கூட லக்ஷமி என்ற ஒரு கடவுளை வைத்து தினமும் வணங்குகிறோம். அதற்காக செய்யும் செலவும் கணக்கு வழக்கில்லை. இவ்வ
ளவு செலவும் ஏழையாயிருப்பதற்கு ஒரு சமாதானத்திற்குத் தான். அதாவது நமக்கு லக்ஷ்மி கடாட்சமில்லை, நாம் எவ்வளவுதான் ஆசைப்பட்டும் பாடு பட்டும் என்ன பிரயோஜனம் என்று நினைத்து சோம்பேறித் திருப்தி அடை வதற்குத் தான் உபயோகப்படுகிறதே தவிர முயற்சிக்கும் அறிவுக்கும் உபயோகப்படுகிறதில்லை,
தொழில் முயற்சி
நம்மவர் ஏதோ சொற்ப முதல் கையிலிருக்கிறதென்று கருதி ஒரு புது தொழிலை செய்யலாமாவென்று நினைத்தால் முதலில் தன்னுடைய பேர் நாமத்திற்கு கால பலன் எப்படியிருக்கிறதென்று பார்ப்பானைக் கூப்பிட்டு பரிசோதிக்க வேண்டியதாய் விடுகிறது. அவன் வந்த உடனே இவரின் பேரைக் கேட்டு கோடுகிழித்து இன்ன வீட்டில் இன்ன கிரகம் இருப்பதனால்
6 மாதத்திற்கு தொட்டதே துலங்காது - ஒரு வேலையும் செய்யாதே என்று சொல்லிவிட்டு தனக்கு வரவேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு போய் விடுகிறான். நம்மவரும் அதை நம்பிக் கொண்டு இந்த ஆறு மாத காலம்
குடி அரசு - 1930 0 244
வெளியில் போனால் கூட ஏதாவது கிரகப் பிழைகள் ஏற்பட்டு விடுமோ எனக் கருதி பத்திரமாய் வீட்டிற்குள்ளேயே இருந்து கையிலுள்ளதும் போதாமல் கடனும் வாங்கி சாப்பிட்டு விடுகிறான். ஆறு மாதங் கழித்து நல்ல கிரகம் வருகிறபோது தொழிலுக்கும் ஜீவனத்திற்குமே கையில் காசு இல்லாமல் அறிவு பிழையை பெருக்கி கிரகப் பிழையை ஊண்ஜிதப்படுத்திக் கொள்கிறான். சிரிப்பு ஆகவே நமது அறிவைப் பறி கொடுத்து ஜோஸ்யர் அப்படிச் சொன் னார் குருக்கள் இப்படிச் சொன்னார் என்று கருதி இன்ன கிரகம் இன்ன மாதம் இத்தனையாந் தேதி இன்ன கிரகத்திற்கு போகிற தென்று எதிர்ப்பார்த் துக் கொண்டிருக்கிற நாம் முன்னுக்கு வரமுடியுமா? அல்லது கிரகத்தையும் சரஸ்வதியையும் லட்சுமியையும் விதியையும் லட்சியம் செய்யாமல் தோன்றி யவுடன் ஊக்கத்துடன் வேலை செய்யும் மேனாட்டார் முன் வருவார்களா? ஆகவே நம்மை இந்த கதியாக்கினது வெள்ளைக் காரர்களா? நமது மதமா விதியா என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
மனிதத்தன்மை
நிற்க, நமது மனிதத் தன்மையிலாவது சுயமரியாதையிலாவது நாம் எப்படியிருக்கிறோ மென்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட்டில் பிறவி
யில் மக்கள் எல்லோரும் சமம். நமது நாட்டிலோ நூற்றுக்கு 97 பேர்கள்: பிறவிலேயே இழிபிறப்பானவர்கள். அதாவது கடவுளுடைய ஒரு இழிவான ஸ்தானத்திலிருந்து பிறந்தவர்கள். இவ்வளவு பெரிய நாட்டில் நூற்றுக்கு 3 பேர்கள் தான் சரியான மனிதர்கள். ஆகவே மேற்கண்ட உயர்ந்த ஜாதியாரான 100க்கு 3 பேர்களுக்கு 100க்கு 97 பேர்களான இழிபிறப்பு மக்கள் வைப்பாட்டி மக்களாயிருந்து அடிமையாகி தொண்டு செய்வதன் மூலமே மோட்சத்திற்குப் போக வேண்டியவர்களான சுயமரியாதையற்றவர்களாகவேயிருக்கின்றார்.
கள்.இந்த இழிவும் மனிதத் தன்மையும் சுயமரியாதையற்ற தன்மையும் நமது கடவுளாலும் மதமாலும் ஏற்பட்டதா? அல்லது வெள்ளைக்காரர்களால் ஏற்பட்டதா? என்பதை யோசித்துப் பாருங்கள். இதிலிருந்து நீங்கள் செய்த கடவுள் பூசையும் புண்ணியமும் உங்களைத் தாழ்த்துகிறதா அல்லது உயர்த்துகிறதாவென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்தக் கடவுள் மதம், சாஸ்திரம், விதி இன்னான்கையும் அடியோடு ஒழிக்காமல் எந்த வெள்ளைக்கார இராஜியத்தையொழித்தாலும் ஒருக்காலும் மனிதத் தன்மை
யும் சுயமரியாதையும் அடைய மாட்டீர்களென்பதுநிச்சயம்.
வலிமை
நிற்க உடல் வலியிலும் மன உறுதியிலும் மேனாட்டாருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் நமது நிலையின் உண்மை நன்றாய் விளங்கும், ஒரு மேனாட்டான் ஒரு ஆகாயக் கப்பலுடனும் சில வெடிகுண்டு களுடன் இமய மலையிலிருந்து புறப்படுவானேயானால் 24 மணி நேரத்தில்
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கன்னியாகுமரி வரையில் சாம்பலாக்கி விட முடியும். ஒரு பீரங்கி வெடி
யினால் இருபது மைலுக்கு அப்பாலுள்ள பட்டணத்தைத் தூளாக்க முடியும். ஒருதுப்பாக்கி வெடிப் புகையினால் பதினாயிரக் கணக்கான மக்களை மயங்கி
விழச் செய்யமுடியும். ஆனால் நாம் தட்டிப் பேச ஆளில்லாத சமயத்தில் மேடையிலேறிக் கூப்பாடு போடவும் துப்பாக்கி சப்தத்தைக் கேட்டால் நமது குழந்தைகளுக்குச் சுரம் வரவும் மற்ற நாட்டுக்காரனைக் கண்டால் பயப்பட
வும் தயாராயிருக்கிறோம். பலத்துக்கும் மனவுறுதிக்குங் கூட வீரன், கருப்பு, காட்டேரி என்பதாக பல சாமிகளை வைத்து கும்பிட்டும், ஓட்டம் பிடிப்பதில்
தான் தயாராயிருக்கின்றோம்.
ஆராய்ச்சி
நிற்க,நமது அறிவு ஆராய்ச்சி விஷயத்திலும் பழைய நிலைமையிலே தானிருக்கிறோம். ஏதாவது பெரிய விஷயங்களைப் பற்றிப் பேசினால் கலியுகம் இன்னும் என்னென்ன வேண்டுமானாலுஞ் செய்யுமென்று சொல்லிவிட்டு வெகு ஜாக்கிரதையாக பழைய நிலைமையைக் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளைக்காரனோ நேற்றிருந்த நிலைமையிலிருந்து சிறிதாவது மாறுதலடையவே இன்றைக்கு ஆசைப் படுகிறான். 1930-ல் இருக்கும் நிலைமை 1940-ல் எவ்வளவு மாறுதல் அடைந் திருக்குமென்று நம்மாலேயே சொல்ல முடியாது. அவர்கள் கண்டுபிடிக்கும் அற்புதங்களும் செய்யும் அருமையான வேலைகளும், நமக்குச் சிறிதும் அர்த்தங்கூட ஆவதில்லை. ஆகாயத்தில் ஒரு மணிக்கு 200, 300 மைல் வீதம் பறக்கவும் பூமியில் ஒரு மணிக்கு100,150 மைல் வீதம் ஓடவும் தண்ணீருக்குள். ஒரு மணிக்கு 100, 120 மைல் நீந்தவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். கம்பி
யில்லாமல் 5000 மைல் 10000 மைலுக்கப்பால் நிமிஷக் கணக்கில் சேதியனுப் பவும், உருவங்களை யனுப்பவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதெல்லாம். அவர்கள் சொந்த அறிவின் மீது பொறுப்பைப் போட்டுக் கண்டு பிடித்தவர் களேயொழிய, தெய்வத்தின் மீதா வது, விதியின் மேலாவது பழி போட்டுக் கண்டு பிடித்தவர்களல்ல. சாதாரண மாக ஆயிரத்தித்தொளாயிரத்தில் நாம் கண்ட போர்ட் மோட்டார் காரானது வருஷம்தோறும் முன்னேற்றமடைந்து வந்து செலவும் வேலையும் குறைந்து கொண்டே வருகிறது. 1940-ல் அது எவ்வளவு முற்போக்கடைந்திருக்கு மென்று சொல்ல முடியாது. விலையை குறைக்கவும் செலவைக் குறைக்கவும் வேகத்தை அதிகப்படுத்தவும் எண்ணை கூட இல்லாமல் ஓட்டவும் முயற்சி செய்துகொண்டு வருகிறார்கள். நாமோ இந்த அற்புதங்களையெல்லாம் காதிலும் கேட்டு கண்ணிலும் பார்த்து ஒரே வார்த்தையில் அதாவது “இவையெல்லாம் வெள்ளைக்காரர்கள். இங்கிருந்து திருடிக் கொண்டு போனதுதானே” என்பதாகச் சொல்லி விடுகி
றோம். நமது நாட்டில் 200 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றை மாட்டு வண்டியும் இரட்டை மாட்டு வண்டியும் இன்னமும் அப்படியேதானி ருக்கிறது. பிரயாணம் செய்கிறவர்கட்கு சித்ரவதையாக யிருந்தாலும் சிறிதும்
குடி அரசு - 1980 (1) 246
மாறுதல் செய்ய நாம் முற்படுவதில்லை. ஏதாவது மாறுதல் செய்வதென்றால் இரும்பாணிக்குப் பதிலாக பித்தளை ஆணியும் பித்தளை ஆணிக்குப் பதிலாக வெள்ளி ஆணியையும் போட்டுக் கொஞ்சம் பாரத்தை அதிகமாக்கி விடுகிறோமே தவிர உட்காருவதற்கு செளகரியமோ பாரத்தைக் குறைப்பதோ வேகத்தை அதிகப்படுத்துவதோ ஆன காரியங் களில் சிறிதும் கவலை யெடுப்பதில்லை.
முற்போக்குக்கு யார்
மேல் நாட்டில் ஒவ்வொரு மனிதனும் அறிவாளிகள் சொன்னபடிக் கேட்டுத் தெரிந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் ஒவ்வொருவனும் ஐயர் என்ன சொல்லுகிறார்! சமயம் என்ன சொல்லுகிறது? சாஸ்திரமென்ன சொல்லுகிறது? என்று பார்த்துக் கொண்டிருப்பதோடு கடவுள் வந்து சொற்பனத்தில் சொல்லு வார் என்று காத்துக்கொண்டிருக்கிறான். இருபது வருஷத்திற்கு முன் ஒரு வெள்ளைக்காரப் பெண் அணிந்து வந்த உடை சுமார் இருபது கஜத்துக்கு மேலாகவே யிருக்கும். பெரிய வீட்டுப் பெண்கள் நடந்தால் துணி பூமியில் இழுபடாமல் தூக்கிக் கொண்டு போவதற்கு ஆள் வைப்பார்கள். அவயங் களைப் பெரிதாகக் காட்டுவதற்கு முயற்சிப்பார்கள். இன்றைய தினம் அவர்க. ளுடைய உடை இரண்டு கஜம் துணியில் முடிந்துவிட்டது. எவ்வளவு குறுக்க வேண்டுமோ, எவ்வளவு சுருக்க வேண்டுமோ அவ்வளவுக்குக் குறைத்து விட்டார்கள். நாம் எதைச் சுருக்கினாலும் கடவுள் கோபித்துக் கொள்வாரோ வென்று நடுங்குகிறோம்.
முற்போக்கு
வெள்ளைக்காரருடைய ஆராய்ச்சி அடுத்த ஹுத்திற்கு என்ன மாறுதல் செய்வதென்று துடித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஆராய்ச்சி 2000 வருஷங்கட்கு முன் எப்படியிருந்தோமோ அப்படியே இருக்க வேண்டுமென்று கருதி அதைக் கண்டுபிடிக்கத் தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்படுகிறது. எனவே வெள்ளைக்காரனுடைய முற்போக்குக் குதிரை முன்னாலும், நமது குதிரை பின்னாலும் போய்க் கொண்டிருக்கிறது. நம்மு டைய முட்டாள்தனமான காரியங்கட் கெல்லாம் அவசியத்தையும் காரணத்
தையும் சொல்லாமல், பகவான் சொன்னார், மனு சொன்னார், ஆகமம் சொல் விற்று, ஆழ்வார் சொன்னார், ஆச்சாரியார் சொன்னார் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சமாதானமில்லை. ஆகவே நாம் எந்தக் காலத்திலோ எவனோ எதையோ எதற்கோ சொன்னான் அதைப்பற்றி நமக்கு என்ன கவலையென்று கருதி இந்தக் காலத்துக்குத் தகுந்ததை செய்யாமல் வாளா யிருப்போமானால் மனிதர்களாக வாழ முடியாது.
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மூட நம்பிக்கை
எப்படி பஞ்சாட்சரம் ஜெபித்தால் விபூதி பூசினால் மோட்சம் வரு மென்று மூட நம்பிக்கையால் கருதிக் கொண்டு துன்பப்படுகிறோமா அதுபோலவே தான் தக்ளி சுற்றினால் உப்புக் காய்ச்சினால் விடுதலை வரு மென்று மூட நம்பிக்கையால் கஷ்டப்படுகின்றோம். பஞ்சாட்சரத்திலும் விபூதி
யிலும் நமக்குள்ள மூட நம்பிக்கை தான் தக்ளியிலும் உப்புக் காய்ச்சுவதிலும் திரும்பிவிட்டு விட்டதே தவிர வேறில்லை.அதில் நமது கடுகளவு ஆராய்ச்சி யாவது செய்திருப்போமானால் இதிலும் அணுவளவாவது ஆராய்ச்சி செய்யப் புத்தி புகுந்திருக்கும். பரம்பரையாய் நமக்குள்ளிருந்த மூட நம்பிக் கையே நம்மை ஆட்சி செய்து கொண்டு சிறிதும் முன்னேறவொட்டாமல் தடுக்கின்றது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாஸ்த்திகம்
இப்போது நீங்கள் இந்தக் கட்டத்திலிருந்து வெளியில் போகும் போது
உங்களிற் சிலர் இராமசாமி சரியாய்த் தான் பேசினான். அதில் என்ன தப்பிருக் கிறதென்று ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்வீர்கள். ஆனால் பக்கத்தில் கேட்டண்டை ஒரு பார்ப்பான் நின்று கொண்டு உங்களைப் பார்த்து “நன்றாய் நாஸ்திகப் பிரசாரம் கேட்டீர்களா? பாகவதத்தில் இத்தனையாவது ஸ்காந்தத்
தில் இந்த மாதிரி இன்ன இடத்தில் இத்தனை மணிக்கு இன்னான் வந்து இந்த மாதிரி நாஸ்திகம் பேசுவான், ஜனங்கள் ஞானமில்லாமல் கேட்டுக் கொண்டி ருப்பார்கள்.அதுதான் கலி வந்ததற்கு அடையாளம். அது சமயம் ஜாக்கிரதை யாயிருந்து அதை மறக்கடிக்க ஒவ்வொருவராக முயல வேண்டுமென்று பகவான் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். ஆதலால் இவற்றை நம்பாதீர்
கள்!” என்று சொல்லுவான். நீங்களும் திடுக்கிட்டு ஆ! என்ன பிசகு செய்தோ மெனக் கருதி இந்த விஷயத்தைக் கேட்டதற்காக உங்கள் காதைக் கழுவிக் கொள்வீர்கள். இப்படியேதான் உங்களை ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.ஆகையால் எந்த விஷயத்தையும் கண்மூடித் தனமாய் நம்பி விடாமல் உங்கள் அறிவைக் கொண்டு நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்து அதன் முடிவின்படி நடவுங்கள் என்று கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறேன்.
குறிப்பு:-05.06.7830 இல் நடைபெற்ற திருவாரூர் பொதுக்கூட்டச் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 15.06.1930
குடி அரசு - 1980 (1) 248
திருடர் அல்லாவிட்டால் மூடர்
திருநெல்வேலி ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம்
7, 8, 9.10 தேதிகளில் திருநெல்வேலியில் வெகுசிறப்பாய் நடந்தேறியது. அம்மகாநாடு அங்கு கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டவுடன் திருநெல் வேலி நெல்லையப்பர் சாமி கோவிலில் மாஜி தாசில்தார் திருவாளர் எம்.வி. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் தலைமையில் ஆஸ்திக மகாநாடு என்ப தாக ஒன்றைக் கூட்டி “சுயமரியாதைக்காரர்கள் தங்கள் பத்திரிகையில் “திரு டர்க்கழகு திருநீரடித்தல்” என்று எழுதியிருப்பதால் இது சைவ உலகத்தை அவமானப்படுத்தினதாகும்.ஆகவே சுயமரியாதை மகாநாட்டுக்கு சகோதரர் கள்யாரும் போகக்கூடாது” என்று முடிவு செய்து பல கனவான்கள் கையொப்
பமுமிட்டுத் துண்டு பிரசுரமும் வழங்கி இருந்தார்கள். அப்படி யிருந்தும் மகாநாட்டுக்கு ஏராளமான சைவர்கள் வந்திருந்ததோடு மகா நாட்டை ஒரு சைவப் பெரியாரும் தேவஸ்தான டிரஸ்டியும் போலீஸ் டிப்டி சூப்ரண்: டெண்டெண்டாகயிருந்து பென்ஷன் பெற்றவருமான உயர்திரு. ராவ்சாகிப் கற்பக விநாயகம் பிள்ளை அவர்களே மகாநாட்டை திறந்து வைத்து திரு.
ஈ. வெ. ராமசாமி வரும்வரை மகாநாட்டுக்கு அக்கிராசனராக வுமிருந்து நடத்திக் கொடுத்து திரு. இராமசாமி வந்தவுடன் அவர் வசம் அக்கிராச னத்தை ஒப்புவித்து விட்டுச் சென்றிருக்கிறார். மற்றொரு சைவப் பெரியாரான
திரு. கடயம் சங்கரராயர் பி.ஏ.பி.எல். அவர்களே வரவேற்புத் தலைவராக
இருந்து மகாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். இது தவிர மகா நாட்டில் காலை
யும் மாலையும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் பிரதிநிதி களாகவும், காட்சி யாளர்களாகவும் நாலுமணி நேரம், ஐந்து மணிநேரம் வந்திருந்து நடவடிக்கை
யில் கலந்திருக்கிறார்கள். இந்த ஆஸ்திகக் கூட்டத்தாருடைய சைவக் கட்ட ளையை எத்தனை சைவப் பெரியார்கள் மதித்தார்கள் என்பது நடவடிக்கை களைக் கவனித்தவர்கட்குத் தெரிந்திருக்கும்.
தவிர திருநெல்வேலி சைவர்களின் கையாயுதமாயிருந்து கொண்டு பார்ப்பனப் பிரசாரஞ் செய்து கொண்டிருக்கும் *லோகோபகாரி” என்னும் பத்திரிகையானது தனது ஜுன் 12ம் நாள் பத்திரிகையில் “குடி அரசின் கூற்று”
என்னும் தலையங்கத்தில் “திருடர்க்கழகு திருநீரடித்தல்” என்று குடி அரசில்
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
எழுதியிருப்பதால் குடி அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எழுதியிருக்கிறது.
நாம் இதுவரையிலும் எவ்வித தப்பிதமும் செய்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய சமயம் நேரவில்லையானாலும் தவறுதல் என்று தோன்றி னால் மன்னிப்புக் கேட்க எப்பொழுதுமே தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் எவ்விதத்திலும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாக சிறிதும் விளங்கவில்லை. அதாவது திருநீரு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால்
“திருடர்க்கு அழகு திருநீரடித்தல்” என்பது நன்றாய் விளங்கும். இல்லா விட்டால் மூடர்க்கழகு யென்றாவது விளங்கும். எப்படி எனில் திருநீரு என்பது சாம்பல். அதை இடுவது கடவுளின் அருளைப் பெறவாம். அதை இடுகின்றவர்கள் கருதுவதும் தாங்கள் எவ்வளவு அக்கிரமக்காரர் ஆணாலும்
திருநீரிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய் கைலாயம் சித்தித்துவிடும் என்பதேயாகும்.
இதற்கு ஆதாரமாக திருநீரின் மகிமையைப் பற்றி சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப்பனன் மிக்கஅயோக் கியனாகவும் கொலை, களவு, கள், காமம்,பொய் முதலிய பஞ்சமா பாதகமான காரியங்கள் செய்து கொண்டே இருந்து ஒரு நாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியை புணர்ந்த
தாகவும், அந்த சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப்பானை ஒரே குத்தா
கக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு. போய் எரித்துவிட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்க ளுக்காக எமதூதர்கள் கட்டிப்பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்திற்றள்ளக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில் சிவகணங்கள் ரத்தின விமானத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எமதூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்துக் கைலாயத்திற்கு பார்வதி இடம் கொண்டு போனதாகவும், எமன் வந்து “இவன் மா பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படி கொண்டு போகலாம்?” என்று வாதாடினதாகவும், அதற்கு சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்று திருநீறு பட்டு விட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோக்ஷத்திற்குஅருகனானதினால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும், இதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒருநாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோக்ஷ மில்லை என்று சொல்லி வாதாடி சிவகணமும், எமகணமும் எமனும் சிவனி
டம் சென்று இவ்வழக்கை சொன்னதாகவும், பிறகு சிவன் இந்த பார்ப்பனன் உயிருடன் இருக்கும்வரை மகாபாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக்
குத்திக் கொன்று சுடுகாட்டில் இவன் பிணத்தை எறிந்து விட்டபோது மற்றொரு
குடி அரசு - 1980 (1) 250
பிணத்தைச் சுட்ட சாம்பலின் மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும்போது அதின் காலில்பட்டிந்திருந்த அந்த சாம்பலில் கொஞ்சம் பிணத்தின்மீது பட்டு விட்டதால் அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்றென்று சொல்லி எமனைக் கண்டித்தனுப்பிவிட்டு பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள்.
அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் அத் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு அந்த முறைப்படி இட்டால் இதில் எழுதக் கூடாத மகாபாதகங்கள் செய்வதினால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்றும், அவன் பிதிர்கள் செய்த பாவங்கள்கூட நீங்கி நரகத்திலிருந்தாலும். சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதியிருக்கின்றது. இவை பிரமோத்திர காண்டம் 14வது,15வது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோக்ஷ ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாய் இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கும் வேலையை வாசகர் களுக்கே விட்டு விடுகிறோம்.
தவிர நாம் முன் எழுதியதற்காக வருத்தமடைந்த திரு நெல்லையப்ப பிள்ளை அவர்கள் வேளாளன் திருநீறு பூசினால்தான் மோக்ஷத்திற்கருக னென்றும், மற்றவன் பூசினால் அருகராகாரென்றும் கருதிக் கொண்டிருப்பவர். உதாரணமாக திருநெல்வேலி ஜில்லா முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் திருநீறு பூசிய யாவரும் கோவிலுக்குள் போகலாம் என்ற தீர்மானம் வந்த காலத்தில் 2000 பேர் உள்ள கூட்டத்தில் ஆக்ஷபித்தவர் இவர் ஒரே ஒருவ
ராவார். ஆகவே “திருடர்க்கழகு திருநீறடித்தல்”” என்று எழுதிய விஷயத்தில் இவருக்குச் சிறிது கூட கோபம் வர நியாயமே இல்லை. ஒரு சமயம் லோகோபகாரிக்கு மனவருத்தமிருக்குமானால் அது “திருடர்க்கு அல்லது.
மூடர்க்கு”” என்று திருத்த ஒரு திருத்தம் கொண்டு வந்தால் ஒப்புக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.06.1930
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
௬மாமரிமாதை இயக்க அணிமாணிகளுக்கு ஒரு வேண்டுகோள்
நமது இயக்கம் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உயர்வு தாழ்வை வெறுக்கிறது. ஆலய உருவ வழிபாட்டை வெறுக்கிறது; மனிதனை மனிதன் மதத்தின்பேராலும், கடவுளின் பேராலும், சமயத்தின் பேராலும், சடங்குகளின்
பேராலும் அடிமைப்படுத்துவதையும் ஏமாற்றிப் பிழைப்பதையும் வெறுக்
கிறது. இவ்வளவும் இந்து மதத்தால் நேரிட்ட தீமை என்று கருதி மதத்திலும் சாஸ்திரங்களிலும் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தி வருகிறது. மனிதனை மனிதன் எவ்வழியிலும் ஏமாற்றி பிழைக்கக்கூடாது. இதுவே நமது இயக்கத்
தின் முக்கியகொள்கை.இவைகளை வருணாசிரம தருமிகள் ஒப்புக்கொள்ளா விட்டாலும் நன்கு படித்தவர்களும் உலக ஞானம் உள்ளவர்களும் ஒருவாறு. ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். ஆயினும் இவர்களும் காரியத்தில் காட்ட அஞ்சுகிறார்கள், மனிதனுக்கு பிறப்பு, இறப்பு, கலியாணம் முதலியவைகளில் சடங்கு அவசியமா என்பதை நாம் சிந்திப்பதே கிடையாது. சடங்கு செய்ய வேண்டியது அவசியமானால் யார் செய்தாலும் நமக்கு ஒன்று தான். பிராமணன் நம்மால் பிழைப்பதுமன்றி நம்மை இழிவாகக்கருதி நடத்துகிறான். என்று நாம் சொல்லலாம். இதே மாதிரி நாமும் பலரை இழிவாகவே கருதி நடத்துகிறோம். நம்மவர்களில் சிலரை நாமே குரு என்று ஏற்படுத்தினால் இவர்கள் மட்டும் பிற்காலம் தாங்களே உயர்ந்தவர்களென்றும் தங்களுக்கே மத விஷயம் யாவும் தெரியும் என்று கருதி நடத்தமாட்டார்கள் என்பது தான் என்ன நிச்சயம், இவைகள் பண்டாரங்களை ஏற்று பிராமணனை நீக்கி சடங்குகள் செய்பவர்க்கு மட்டுமே தெரிவிக்கிறேன், பண்டாரங்களிலும் பலபேர் சைவர்கள் வீட்டில் கூட சாப்பிடுவது கிடையாது. இவர்களும் நூலணிந்திருக்கிறார்கள். ஆதி சைவன் என்னும் குருக்கள் எப்படி தற்காலம் பிராமணனாக மதிக்கப் படுகிறானோ அதுபோல் இவனும் பிற்காலத்தில் பிராமணனாக மாறி விடுவான். வீணில் ஏமாறாதீர்கள்.இவைகளும் நமதியக் கத்தால் ஒப்புக் கொள்ளக் கூடிய காரியமன்று, பிராமணன் சொல்லும் மந்திரங் களையும் ஏற்படுத்திய முறைகளுமே தான் இவன் ஒன்றையும் நீக்கிவிட வில்லை. நமக்கு இதனால் எவ்வகையிலும் ஆதாயம் கிடையாது, இதுவும் நம்மை ஏமாற்றும் பிழைப்பேயன்றி வேறில்லை, நமதியக்கக் கொள்கைகட்கு
குடி அரசு - 1980 (1) 252
இவைகளும் நேர்மாறானவைகளே. இவர்களையும் நம் இயக்க கொள்கைப் படி நாம் ஆதரித்தல் அறிவுடைமையாகாது. இவர்களும் பிற்காலம் பக்கா பிராமணர்கள் ஆகிவிடுவார்கள். நமது தலைவர்கள் உண்ண உணவின்றி கஷ்டப்படும் ஏழைகட்கு உதவிபுரியுங்கள் என்று சொல்லுகிறார்கள். இப் பாழும் இந்தியாவில் ஒருவகுப்பார் தங்கள் உடலை வருத்தாமல் சாம்ப லையோ நாமத்தையோ போட்டு கொட்டையோ காவடியோ கழுத்தில் சுமந்து கையில் ஓடேந்தி சம்சாரம் குழந்தைகளுடன் பிச்சை யெடுப்பதே தொழிலாக. அலைகிறார். இவர்களால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளோ அளவு கடந்தவைகள். இவர்கட்கு இடும் பிச்சையால் நமக்கோ நாட்டிற்கோ இது காறும் வந்த நன்மை என்ன. இவர்கட்கிடும் பிச்சையால் நாமே நாட்டிற்கு தீங்கு செய்தவர்களாகிறோம். இவ்வளவும் இந்துமதத்தினால் வந்த தீமை
யானால் நன்மை எவையென்று நமக்கு விளங்கவில்லை. நமது கண்களுக்கு புலப்படா நன்மைகள் பண்டிதர்கட்கும் நம் எதிரிகட்கும் மட்டும் எப்படி தோன்றுகிறது என்பது தான் எமக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. வருணாசிரமதருமமும் இந்து மத சாஸ்திர புராணங்களும் நம்மை ஏமாற்ற எழுதப்பட்டவைகள் என்று நாம் நினைக்கையில் பிராமணனை நீக்கிமட்டும் சடங்குகள் செய்வது எதற்கு. பிராமணனை நீக்கிவிட்டதால் மட்டும் நம்மிட முள்ள மூடநம்பிக்கைகள் ஒழிந்து விட்டதா? குடிஅரசிலோ திராவிடனிலோ உங்கள் பெயர் புரோகிதத்தை ஒழித்த வீரர்கள் என்று வெளிவருவதால்
மட்டும் திருப்தி அடைந்து விட முடியுமா? அர்த்தமற்ற சடங்குகளில் நம்பிக்கையற்ற சடங்குகளில் நம்பிக்கையற்றவர்கள் அறவே நீக்கிவிட
வேண்டும். பிராமணனை நீக்குவதால் மட்டும் முழுதும் திருப்தி அடைந்து விட முடியாது. இதனால் நீங்களும் மூட நம்பிக்கையை முற்றும் விட்டு. விட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இந்தியாவில் பிறந்து இந்து மதத்தை பின்பற்றிய எவனும் மூட நம்பிக்கையை அறவே ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, உதாரணமாக, என்னிடத்திலே
குற்றம் பல இருக்கலாம். ஒரு மனிதனுக்கு பிராமணனிடம் மட்டும் வெறுப்பிருக்கலாம், அவன் பிராமணனை மட்டும் நீக்குவான் அல்லது சடங்குகளை மட்டும் செய்யமாட்டான். கடவுளிடம் போனவுடன் அவன் மனநிலை தன்னையும் அறியாமல் மூட நம்பிக்கையென்னும் சேற்றில் சிக்கிக் கொள்ளுகிறது, குடி அரசு கடவுளை தூஷிக்கிறதே அன்றி ராஜீய விஷயங்
கள் ஒன்றுமே வெளிவருவதில்லை என்று குறை கூறுபவர்களும் பலர்: தற்காலம் குடி அரசின் கொள்கைக்கும் ராஜீயங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை இவர்கள் அறிந்து கொள்வது மில்லை. உண்மை கடவுள் என்று
இருந்தால் குடி அரசு அதை தூஷிக்கவே இல்லை.பிறரை ஏமாற்ற மனிதன் சூழ்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுள்களையும் ஏடுகளையுமே தூஷிக்
கிறது. தூஷிக்கவேண்டியும் நேரிடுகிறது. இந்திய மக்களின் திரேகமே மூடநம்பிக்கையால் உருவாக்கப்பட்டது. இந்திய மக்களின் மூட நம்பிக் கையை ஒழிப்பதற்கும் மூளையையும் இரத்தத்தையும் சுத்தி செய்வதற்கும்
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மேனாட்டு மருந்துக்கள் ஏராளமாய் வேண்டும். உண்மையில் சுயமரியாதை
யில் பற்றுள்ளவர்கள் யுக்தி கொள்ளாத அர்த்தமற்ற சடங்குகளை அறவே விட்டொழியுங்கள். இவர்களே நமதியக்கத்தில் பற்றும் தலைவர்களின் அன்புக்கும் பாத்திரமானவர்கள். நமது இயக்கத் தலைவர்களின் கோரிக்கை
யும் இதுவே. ஆளுக்கொருநீதியும் சாதி உயர்வு தாழ்வுகளும் ஏமாற்றும் கொள்கைகளுமே இந்து மத தத்துவங்களானால் இந்து மதம் இந்தியாவை விட்டு ஒழியும் நாள் எந்நாளோ அந்நாளே மக்கட்கு நன்னாளாகும்.
குடி அரசு - கட்டுரை - 15.06.1930
குடி அரசு - 1980 (1) 254
சுயமரியாதையும் சுய ஆட்சிமையரும் பற்றி
ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும்
சுமாமரியாகை யார்ப்பணால்லாதாருக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
சுய ஆட்சி:- என்ன சுயமரியாதை! உன்னை ஒரு வாரமாகக் கண்ணி லேயே காண முடியவில்லை. எங்கு போய் விட்டாய்?
சுயமரியாதை:- ஓ! சுய ஆட்சியே! நான் ஈரோட்டுக்குப் போயிருந்
தேன். & g ஈரோட்டில் ஒரு வாரமாக என்ன வேலை உனக்கு?
ச.மஃஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்ததல்லவா? அதற்காக ஒரு வாரம் முன்னேயே போய் மகாநாட்டு வேலையில் கலந்து கொண்டு என்னால் கூடியதைச் செய்து கொண்டிருந்தேன்.
௯.ஆ:ஃ-ஆமா! ஆமா! நான் கூட கேள்விப் பட்டேன். சுயமரியாதை மகாநாடு நிரம்ப நன்றாய் நடந்ததாகவும் மூன்று நான்கு ஆயிரம் பேருக்கு மேலாகவே வந்திருந்ததாகவும், பெண்களும், ஆண்களும், ஆதி திராவிடர்களும் கூட ஏராளமாய் வந்திருந்ததாகவும் கேள்விப் பட்டேன்.
ச௯.மஃ ஆதி திராவிடர்கள் வந்திருந்தது மாத்திரம்தானா நீ கண்டாய்? சமையல் பரிமாறினதில் கூட ஆதி திராவிடர்கள் கலந்திருந்தார்கள். மற்றொரு சமையல் இடத்தில் 2, 3 ஆதி திராவிடர்களும் ஒரு ஆதி திராவிடப் பெண்ணும் மாத்திரமேதான் சமையல் செய்து பரிமாறினார்கள். மகாநாட்டுத் தலைவர் திரு. எம்.ஆர். ஜெயகருக்கும் அவருடன் கூட இறங்கி இருந்த கனவான்களுக்கும் ஆதிதிராவிட சமையல்தான் நடந்தது.
& - பிரதிநிதிகளுக்கு சமையல் செய்த சமையல்காரர்கள் யார்? மதுரை, கோயமுத்தூர் கான்பரன்சுகள் போல சைவர்கள்தானே?'
௯.ம:- இல்லவே இல்லை. ஒரு சைவனையாவது சமையல் வீட்டிற்குள் விடவே இல்லை.
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
& - பின்னை யார் சமையல் செய்தார்கள். பிராமணனா?
& ம:- சைவனுக்கு இடமில்லையென்றால், பார்ப்பானுக்கு அங்கு
இடம் கிடைத்து விடுமா?
& gy, பின் யார்தான் சமையல் செய்தார்கள்?
௯.ம:- விருது நகரிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த முதல் தரமான நாடார் சமையல்காரர்களே சமையல் செய்தார்கள்.
& ஆ:- அவர்கள் சமையல் நன்றாயிருந்ததா? ஜனங்கள் சாப்பிட்
டார்களா?'
௯.ம-நன்றாயிருந்ததா என்றா கேட்கின்றாய்.மகாநாட்டிற்கு பார்ப்பன சமையற்காரனையாவது, சைவ சமையற்காரனையாவது வைத்திருந்தால் குறைந்தது ஒரு பத்து மூட்டை அரிசியாவது குறைந்திருக்கும். நாடார்களை. வைக்கப் போக மூன்று நான்கு நாளில் 40, 50 மூட்டை அரிசியும் தீர்ந்து விட்டது.
௯.ஆ:- அது என்ன அப்படி சொல்லுகின்றாய்?
& ம:- அனேகமாய் ஒவ்வொரு ஆளும் ஒன்றரை ஆள் சாப்பாடு சாப்பிட்டார்கள். இது நான் சொல்லுவதல்ல, பிரதிநிதிகளே சொன்னது. ஏனென்றால் சாப்பாடு அவ்வளவு சுத்தமாகவும் ருஜியாகவும் இருந்ததோடு. வெகு அன்பாகப் பரிமாறினார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.
௯.ஆ5- எல்லா பிரதிநிதிகளும் சாப்பிட்டார்களா?'
&.10:- எல்லா பிரதிநிதிகளுமே சாப்பிட்டார்கள். இன்னம் ஒரு விசே
ஷம் என்ன தெரியுமா? ஆதிதிராவிட வாலண்டியர்கள் சாப்பாடு பரிமாறி.
னார்கள். மற்றும் மகமதியர் வாலண்டியர்களும், கிறிஸ்தவ வாலண்டியர்களும் பரிமாறினார்கள்.திருப்தியாகவே எல்லோரும் சாப்பிட்டார்கள்.
& ஆ:- அப்படித்தான் இருக்க வேண்டும். எனக்கு இந்த விஷயம்
காதில் கேழ்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாயிருக்கின்றது..
சு.ம:- நீங்கள் எல்லாம் வாயில் சந்தோஷப்பட்டு விட்டு போகின்றவர். களே தவிர காரியத்தில் வரும் போது மறைந்து கொள்ளுகின்றவர்கள் தானே?
௯.ஆ:- அதென்ன அப்படிச் சொல்லுகின்றாய்
௯. ம:- சொல்லுவதென்ன. நீதான் சொல்லேன் பார்ப்போம். எந்த அரசியல் கான்பிரன்சிலாவது இன்றைய வரை பார்ப்பனர்களைத் தவிர வேறு வகுப்பார்களை வைத்து சமையல் செய்திருக்கின்றீர்களா?
முதலாவது சமபந்தியாய் வைத்து சாப்பாடு போட்டிருக்கின்றீர்களா?
ஒத்துழையாமையின் போதுகூட பார்ப்பன சமையற்காரர்கள் தான் -
குடி அரசு - 1980 (1) 256
அதற்கு பிறகு கூட பார்ப்பன சமையற்காரர்கள் தான் - யாராவது கேட்டால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லி ஏமாற்றிவிடுவீர்கள்.
காங்கிரஸ் முதலிய கூட்டங்களுக்கு வேறு மாகாணங்களுக்கு போனால் கூட அவ்விடத்திற்கும் இங்கிருந்தே பார்ப்பன சமையல்காரர். களைக் கூட்டிக் கொண்டு போய் அங்கும் வேறு வேறாக உட்கார வைத்துச் சாப்பாடு போட்டு அவமானப் படுத்துவீர்கள். வாயில் மாத்திரம் சமத்துவம்,
சுதந்திரம், சுயராஜ்ஜியம், பூரண சுயேச்சை பேசுவீர்கள்.
& 24 கொஞ்சம் கொஞ்சமாகத் தானே ஆக வேண்டும். ஒரே நாளில் ஆய்விடுமா? அதன் பாட்டுக்கு அதுவும் நடக்க வேண்டியது தான். சுய ஆட்சி பாட்டிற்கு அதுவும் வரவேண்டியதுதான். சரிசமமாய் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும் சுய ஆட்சிக்கும் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தால்
முடியுமா? இது இன்று நேற்று ஏற்பட்ட விஷயமா? ஏதோ ஒரு நன்மைக் காகத்தான் பெரியவர்கள் இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்து வைத்திருக் கிறார்கள். அதை அழிப்பது அவ்வளவு சரியான காரியமாய் விடாது. இருந்தாலும் மெள்ள மெள்ளச்சரிப்படுத்த முயற்சிக்க வேண்டியதுதான்.அது எப்படியோ இருக்கட்டும். இப்பொழுது சாப்பாட்டிற்கு என்ன அவசரம் வந்து விட்டது? மகாநாட்டு மற்ற நடவடிக்கைகளைப் பற்றி பேசுவோம் - மகாநாடு. ரொம்பவும் நன்றாய் நடந்ததென்று தான் சொன்னார்கள். ஆனால் என் அபிப்பிராயத்தில் ஒரே ஒரு தவறு தான் நடந்து விட்டது என்று படுகிறது.
ச.ம:- அதென்ன தவறு?
௯.ஆ:- உப்புச் சத்தியாக்கிரகத்தை பாராட்டியும் கஷ்டப்பட்டவர் களுக்கு அனுதாபம் காட்டியும் ஒரு தீர்மானம் போட்டிருந்தால் மற்ற காரியங்
கள் எல்லாம் எப்படி இருந்தாலும் மறைந்து போயிருக்கும். அதில் தான் சற்றுத் தவறி விட்டீர்கள்.
&.10- அப்படியா நினைக்கின்றாய்! எனக்கு அந்த காரியத்தினால் தான் மகாநாடு ரொம்ப சரியாய் நடந்து கொண்டது என்பதாகப் படுகின்றது. மகா நாடு அந்தத் தீர்மானங்களைச் செய்திருந்ததேயானால் கண்டிப்பாய் மகாநாட்டின் யோக்கியதையும் குறைந்திருக்கும். சுயமரியாதை இயக்கத்
திற்கும் சாவுமணி அடித்திருக்கும்.
& B~ அதென்ன அப்படிச் சொல்லுகின்றாய்?
௬௯. ம:- ஆம், அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்தால் எப்படி அந்தக் கட்சிக்கு சாவு மணியோ அதுபோல் சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் சம்மந்தமான எந்தப் பிரச்சினையை கொண்டு வந்தாலும் இதற்கு சாவு மணியேயாகும். இவ்வியக்கத்தின் நாணயமே அடியோடு போய்விடும்.
௬.ஆ;- இதனால் என்ன கெடுதி வந்து விடும்?
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ச.ம:- சுயமரியாதை இயக்கத்திற்கு எப்படி கடவுளைப் பற்றி கவலை இல்லையோ அதுபோலவே சுய ஆட்சியைப் பற்றியும் கவலையே இல்லை. சுய ஆட்சி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி. ஏனெனில் கடவுள் என்கின்ற வார்த்தையைப் போலவே சுய ஆட்சி என்கின்ற வார்த்தையும் அர்த்தமற்ற தாகும். வயிற்றுப் பிழைப்புக்கும், சுயநலத்திற்கும் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு இருப்பது போலவே சுய ஆட்சி பெயரையும் சிலர்: சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு இல்லை. ஆகையால் சுய மரியாதைக் காரருக்கு எப்படி மக்களுக்கு கடவுள் உணர்ச்சியும் கடவுள். கவலையும் போக வேண்டும் என்கின்ற கவலை இருக்கின்றதோ, அது போலவே சுய ஆட்சி உணர்ச்சியும் கவலையும் போக வேண்டும் என்கின்ற கொள்கையும் உண்டு. ஆதலால் அவைகளைப் பற்றி மகாநாடு கவனிக் காததே நல்ல காரியமாகும்.
& ஆ:- அப்படி ஆனால் மகாத்மா காந்தி கூடவா அர்த்தம் தெரியாமல் செய்கின்றார் என்கின்றாய்?
&.10:- அதென்ன மகாத்மா செய்வதாயிருந்தால் எல்லாக் காரியமும் சரியானதாய் இருக்கும் என்பது உனது அபிப்பிராயமோ? மகாத்மாவை சுய மரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பது உனக்குத் தெரியாதா?
௯.ஆஃ-அதென்ன இந்த சங்கதி எனக்கு அதிசயமாயிருக்கிறது?
ச.ம:- அதிசயமென்ன? மகாத்மா என்கின்ற பட்டத்தை கூட நாங்கள் சேர்ப்பதில்லை. அது உனக்குத் தெரியாதா?
அவர் உலகத்திற்கு பெரியவராய் இருக்கலாம் எங்களைப் பொருத்த வரை நாங்கள் அவர்கள் கொள்கையை ஒப்புக் கொள்ள முடியாது. வெள்ளைக்காரர்கள் வேண்டுமானாலும் அவரை ஒப்புக் கொள்ளும்படியான.
காலம் வரலாம். சுயமரியாதைக்காரரான நாங்கள் அவரை எங்கள் பிரதிநிதி என்று ஒரு காலமும் ஒப்புக் கொள்ளவே மாட்டோம். ஏனென்றால் எங்கள் கொள்கைப்படி அவரும் ஒரு மூட நம்பிக்கைக்காரரே யாவார். சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பன ஆதிக்கத்திற்கு தாசர் ஆவார். அவரது ராமன், சீதை, அரிச்சந்திரன், கிருஷ்ணன், நாராயணன் முதலியவர்கள் எல்லாம் நமக்கு பிடிக்காதவர்கள். அன்றியும் அவரது கடவுள், செயல், ஜாதி உணர்ச்சி, வரு ணாசிரமக் கொள்கை, மனுதர்ம சாஸ்திர பக்தி, கதை உபாசனை முதலான வைகள் எல்லாம் எங்களுக்கு அடியோடு உதவாது. இந்த விஷயங்களில் அவர் எப்படி மூட நம்பிக்கையும் பார்ப்பனீயதாசத் தன்மையும் கொண்டு இருக்கிறாரோ அதே மாதிரிதான் ராஜரீக விஷயத்திலும் மூட நம்பிக்கையும் பார்ப்பன ஆதிக்கதாசத் தன்மையும் கொண்டு இருக்கிறார் என்று எண்ணு கின்றோம். ஆதலால் அவரது கொள்கைகளை யெல்லாம் நாம் ஒப்புக்கொள்
ளவும் முடியாது. பின்பற்றவும் முடியாது. அதோடு அதில் பாமர மக்கள்: ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நமது கடனாகும்.
குடி அரசு - 1980 (1) 258
& ஆ: நீ இப்படிச் சொல்லி விட்டதினாலேயே எல்லோரும் உன் பேச்சை கேட்டு விடுவார்களா?
௬.ம:- அது வேற சங்கதி. ஜனங்கள் கேட்பார்களா இல்லையா என் பதை நாங்கள் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் சொல்வது சரியா தப்பாஎன்பதை யோசிக்க வேண்டியதைத் தவிரமற்றவர்கள் கேட்பார். களா? கேட்க மாட்டார்களா? என்பதல்ல நாங்கள் கவனிக்க வேண்டியது. உதாரணமாகச் சங்கராச்சாரியை நாங்கள் லோக குரு என்று ஒப்புக் கொள்வ தில்லை. இந்து மதம் என்று ஒரு மதம் இருப்பதாக நாங்கள் ஒப்புக் கொள்வ தில்லை. சாமி செயல், கோவில் உற்சவம் இவைகளை யெல்லாம் நாங்கள்
ஒப்புக் கொள்வதில்லை.ஆனால் பத்துலட்சக்கணக்கான மக்கள் இவைகளை ஒப்புக் கொண்டு கூத்தாடுகிறார்கள். அதனாலேயே நாங்கள் ஒப்புக் கொள்ளாதது தப்பிதமாய் விடுமா? அல்லது அவர்கள் ஒப்புக் கொள்வது சரியானதாகி விடுமா?
௯.ஆ:- சுயராஜியமும் வேண்டாம். கடவுளும் வேண்டாம். சங்கராச்
சாரியும் வேண்டாம்.மகாத்மாவும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம். என்கின் நீர்களே பின்னை எதற்காகத் தான் இவ்வளவு ரூபாய் செலவு செய்து மகாநாடு நடத்தினீர்கள்.
& ம: - அப்படிக் கேள். எங்களுக்கு சுயமரியாதை வேண்டும். பகுத்தறிவு வேண்டும். சமத்துவம் வேண்டும்.
& ஆ: - இப்பொழுது சுயமரியாதை இல்லாமல் என்ன விதமான அவமரியாதை அனுபவிக்கிறீர்கள்?
&.10: - என்ன அவமரியாதை என்றா கேட்கிறாய்? உனக்கு உண்மை யிலேயே தெரிய வில்லையா?
௬.ஆ:- தெரியவில்லையே.
௬. ம: - தெரியச் சொல்லுகிறேன் கேள் - முதலில் நீ யார்? சொல்லு
பார்ப்போம்.
௬.ஆ:- நான் ஒரு பிராமணன்.
சு.ம: - நான் யார்? சொல்லு பார்ப்போம்.
௯. ஆ:- நீ ஒரு பிராமணனல்லாதவன்.
& ம: - அப்படிச் சொன்னால் முடியாது. உனக்கு நீ பிராமணன் என்கின்ற பட்டம் வைத்துக் கொண்டது போல் எனக்கு அதே முறையில் இருக்கும் பட்டத்தைச் சொல்லு.
௬௯.ஆ:- அதற்கென்ன சூத்திரன் என்று சொல்லுவார்கள்.
& ம: - நான் சூத்திரனாயிற்று. சரி. திரு. எம். சி. ராஜா யார் சொல்
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
பார்ப்போம்.
& ஆ :- அவர் ஆதி திராவிடர்.
௯ம:- அப்படிச் சொன்னால் முடியாது.நீ பிராமணன். நான் சூத்திரன் என்பது போல் அவருக்குள்ள பட்டத்தையும் சொல்லு.
௯.ஆ:- பறையர் அல்லது பஞ்சமர் என்று சொல்லுவார்கள்.
ச. ம:- சரி எங்களை நீங்கள் தொடுவீர்களா?
௯.ஆ:- தொட்டால் என்ன ஒட்டிக் கொள்ளுமோ?
& ம: - அதெல்லாம் தெரியாது. நீங்கள் அதாவது உங்கள் ஜாதியார் எங்களையும் எம்.சி.ராஜாவையும் தொடுவார்களா?
& gy, - பெரியவர்கள் தொடமாட்டார்கள்.
&. 10: - ஏன் தொடமாட்டார்கள்?
& Y - என்னமோ வெகுகாலமாக அப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டு.
விட்டது. அது நாங்கள் ஏற்படுத்தியதா நீங்கள் ஏற்படுத்தியதா? ௯ம:-யாரோ ஏற்படுத்தி இருக்கட்டும் அதைப் பற்றி கவலையில்லை. ஏன் தொட மாட்டார்கள் அதைச் சொல்லு.
&. ஆ:- பிராமணாள் சற்று மேல் ஜாதி. சூத்திரன் பஞ்மன் என்பது சற்று கீழ் ஜாதி என்று ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் தொடக் கூடாது என்றும், தொட்டால் தீட்டு என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் எனக்கு அந்த வித்தியாசம் இல்லை.
&.10: - உனக்கு இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி முன் சொன்ன அந்தக் கீழ் ஜாதியில் எங்களை சேர்க்கப் பட்டிருப்பதே தான் எங்களுடைய சுயமரியாதைக் குறைவுக்கு முதல் உதாரணம். இப்படி இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சொல்லுவேன்.
௯ஆ5-அப்படியானால் உங்களுக்குள் அந்த வித்தியாசம்இல்லையா?'
&.10: - இருந்தாலும் இருக்கலாம். அதுவும் உங்களால் வந்த வினை தான்.இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தில் அந்த வித்தியாசமே இருக்கக். கூடாது, என்பது தான் முதற் கொள்கை. அதற்கு உதாரணமாகவே தான்
சாப்பாடு விஷயத்தில் எல்லோரும் சமமாயும் மேல், கீழ் என்கின்ற ஜாதி வித்தி யாசம் இல்லாமலும் சாப்பாடு கொடுப்பனை கொள்வனை ஆகிய காரியங்கள்
நடந்து வருகின்றது.
குடி அரசு - உரையாடல் - 22.06.1930
குடி அரசு - 1980 (1) 260
உதிர்ந்த மலர்கன்
1.“கண்ணுக்கும், மனதிற்கும், அறிவிற்கும் எட்டாததும், வாயினால் விவரிக்க முடியாததுமாக ஒன்று உண்டு. அது தான் கடவுள்” என்று சொல்லு வார்களானால் அவர்கள் தான் பகுத்தறிவற்றவர்கள் ஆவார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் சொல்லுவதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாயிருப் பதை அறிகிறார்களில்லை.
2. தான் செய்யும் அக்கிரமங்களுக்கு பரிகாரமும் மன்னிப்பும் கிடைப் பதற்காகவும், அடுத்த ஜன்மத்தில் சுமடைவதற்காகவும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் பக்தி செலுத்துகின்றவர்களும் சமயச் சின்னங்கள். அணிபவர்களும் திருடர்கள் அல்லது மூடர்களே ஆவார்கள்.
3. “மோட்சத்திற்காக நாமம், விபூதி தரித்து தாரகம், பஞ்சாட்சரம் ஜெபிப்பவர்களும், சுயேச்சையாக கதர் உடுத்தி, கதர்க் குல்லாய் போட்டுக் கொண்டு இராட்டினம், தக்ளி, நூல் நூற்பவர்களும் ஒரேவிதமான மூட நம்பிக்கையின் பாற்பட்டவர்களும், சுய அறிவற்ற செம்மறியாட்டுக் கூட்டத்
தில் சேர்ந்தவர்களுமேயாவார்கள்”.
4. “கடவுள் தங்களுக்கு “நன்மை” செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டுமென்று சிலர் சொல்லுவதனால் கடவுள் பலருக்குத் “தீமை” செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்?”
5.“கடவுள் தன்னை பணக்காரனாகப் பிறப்பித்ததற்காக ஒரு பணக் காரன் கடவுளுக்குக் கோயில் கட்டினால் ஏழையாகப் பிறப்பித்ததற்காக அந்த. ஏழைமகன் அக்கோயிலை இடித்துத் தகர்க்க வேண்டாமா? அல்லது அந்தச் சாமியை ... வேண்டாமா?”
6. “நமது நாட்டில் வெள்ளைக்கார ஆதிக்கம் பார்ப்பனனின் தயவிலி ருக்கின்றது. பார்ப்பன ஆதிக்கம் மதத்தின் தயவில் இருக்கின்றது. மத ஆதிக்கம் சாஸ்திரத்தின் தயவிலிருக்கின்றது. சாஸ்திரத்தின் ஆதிக்கம் கடவுள் தயவிலிருக்கின்றது. ஆகவே கடவுளின் ஆதிக்கத்தை முதலில் ஒழித்தால்தான் மற்ற ஆதிக்கங்கள் குறைந்து நாட்டை நலமடையச் செய்ய
முடியும்”.
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
7. “அரசாங்க வரியையும், மதவரியையும் கணக்குப் பார்த்தால் அரசாங்க வரியைவிட மதவரியே அதிகமாகும்”.
8.“வெள்ளைக்காரர்களின் கொள்ளையையும், நமது கடவுள்களின் கொள்ளையையும் கணக்குப் பார்த்தால் நமது கடவுள்கள் கொள்ளையே வெள்ளைக்காரர்கள் கொள்ளையைவிட பல மடங்கு அதிகமாகும்”
9.“இந்த வைகாசி மாதத்தில் மாத்திரம் தென்னாட்டில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மூன்று கும்பாபிஷேகங்கள் நடந்திருக்கின்றன. இந்தக் கோயில்கள் மூன்றும் சுமார் 10 அல்லது 12 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டவைகளாகும்”..
10. “இன்றைய தினம் நமது தமிழ்நாட்டில் மாத்திரம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் எஸ்டிமேட்டுகள் திட்டம்) போடப்பட்ட பல கோவில்களின் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன”.
இவைகளுக்கு பல லட்ச ரூபாய் முதலாக வைத்து பல கடைகளில் லேவாதேவி முதலிய வியாபாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
N “பணக்காரர்களிடம் போய்ச் சேரும் பணங்கள் பெரும்பான்மை
யும், கோயில் கட்டுதல் கும்பாபிஷேகம் செய்தல், உத்சவம் செய்தல், லட்சம் பார்ப்பன போஜனம் செய்தல் முதலாகிய இந்த தேசத்தின் நாச வேலைக்கே போய்ச் சேருவதால், பணக்காரர்களின் மீதும் போர் தொடுக்க வேண்டியது அவசரமான அவசியமாகின்றது”.
12. “பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ள “கற்பு”த் தான் ஆண்களின், ஒழுக்கக் கேட்டிற்கும், மிருக சுபாவத்திற்கும் முதற்காரணமாயிருக்கிறது”.
13. “இந்தியாவில் சரியான கல்வி இல்லாமல் போனதற்குக் காரணம்
மதக் கொள்கையும், கடவுள் செலவுமேயாகும்”.
14. “புருஷர்கள் தாசி, வேசி, வைப்பாட்டி வைத்துக் கொள்வது சகஜ மாயிருப்பது போலவே, ஒவ்வொரு பெண்ஜாதிகளும் ஆசை நாயகன் வைத்துக் கொள்வது சகஜமென்று ஆகிவிட்டால் புருஷர்கள் தாசி முதலியன வைத்துக் கொள்வதை உடனே நிறுத்தி விடுவார்கள்”.
15. “தீண்டாமையை ஒழிக்கும் படி மேல் ஜாதியார் என்பவர்களிடம்
40 வருஷம் பணிந்து பணிந்து செய்த வேலையை விட “நீங்கள் தீண்டாத வர்கள்” அல்ல என்பதாக “தீண்டப்படாதவர்கள்”” என்பவர்களிடம் ஒரு வருஷம் செய்த வேலையானது எத்தனையோ பங்கு அதிகமான பலனைக் கொடுத்திருக்கின்றது”.
குடி அரசு - 1980 (1) 262
16. “பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கும்படி ஆண்களிடம் 40 வருஷம் கெஞ்சிக் கெஞ்சி வேலை செய்ததின் பலனை விட பெண்களிடம்.
“நீங்கள் அடிமைகள் அல்ல, ஆண்களைப் போலவே உங்களுக்கும் எல்லா வித சுதந்திரமும் உண்டு” என்று ஒரு வருஷம் செய்த வேலையால் எவ்வளவோ பயன் விளைந்திருக்கின்றது”..
17. “இந்தியாவின் ஈன நிலைமைக்கு அர்த்தமற்ற முறையில் சமய சந்தர்ப்பமில்லாமல், தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தையே வைது கொண்டி ருக்கும் வரை நாங்கள் பெரிய தேச பக்தர்களாகவும், தியாகிகளாகவும் கருதப் பட்டோம். ஆனால் இப்போது அந்த ஈன நிலைமைக்கு உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து அதன் அஸ்திவாரத்தில் கையை வைத்து அடி யோடு சாய்க்க ஆரம்பித்தவுடன், பார்ப்பனர்களாலும், அவர்கள் தாசர்களான சமயப் பிழைப்புக்காரர்களாலும் நாங்கள் பார்ப்பன துவேஷிகளாகவும், நாஸ்திகர்களாகவும், மதத் துரோகிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கருதப்படுகிறோம்”.
18. “இந்து மதம் என்பதற்கு ஆங்கில அகராதியில் “மகமதியர்கட்கு விரோதமானது” என்று அர்த்தம் எழுதப்பட்டிருக்கின்றது”.
தமிழ் அகராதியில் மகமதியர்கள் என்பதற்கு “மிலேச்சர்” என்று
அர்த்தம் எழுதப் பட்டிருக்கின்றது.
வட மொழி நூல்களில் “ஒரு மகமதியனைத் தொட்டால், தொடப்பட்ட நமது பாகத்தை வெட்டித் துண்டித்து விட வேண்டும்” என்று குறிப்பிட்டிருப் பதாகச் சொல்லப்படுகிறது.
மகமதிய மத ஆதாரங்களில், ஒரு கடவுளுக்கு மேல் வணங்குகிறவர்.
களையும், கடவுளுக்கு உருவம், பெண்டு பிள்ளைகளைக் கற்பிக்கின்றவர்: களையும் “காபர்” என்றும், அவர்களைக் கொன்றால் கூடக் குற்றமில்லை
என்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது..
இந்த நிலைமையில் இரு மதத்தையும் வைத்துக் கொண்டு இந்து - முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்த முடியுமா?”
19. “கோவில் கட்டவும் தேர் செய்யவும் உத்சவம் நடத்தவும் பணம் கொடுக்கும் ஜனங்கள் எவ்வளவு பகுத்தறிவுடனும் நல்ல காரியம் என்கின்ற பிரதிபலன் உணர்ச்சியுடனும் கொடுக்கின்றார்களோ அந்த அளவு பகுத்தறி
வும் அந்த அளவு பிரதிபலனுடைய உணர்ச்சியோடு தான் தேசீய காரியத்திற்
கும் ஜனங்கள் பணம் கொடுக்கிறார்கள்”.
20. “கோவில் டிரஸ்டிகளின் உண்டிகையில் போடும் பக்தர்களின் காணிக்கைகள் என்ன பலன் அடைகின்றதோ அந்த பலன் தான் தேசீய
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
“டிரஸ்டிகள் வைத்திருக்கும்” தேசிய நிதி” உண்டிகையில் போடும் காணிக்
கைப் பணங்களும் அடைகின்றன”.
21. “சாமி பேரால் கோவில் பூசாரிகளின் தட்டத்தில் போடப்படும் பணம் என்ன பலனடைகின்றதோ அந்தப் பலன் தான் தேசீயப் பூசாரிகளின்
தட்டத்தில் (கையில்) போடும் பணமும் அடைகின்றது.”
22. “கோவில் உர்ச்சவத்திற்கு என்றும், அபிஷேகத்திற்கென்றும், பஜனைக்கென்றும், கட்டளைக்கென்றும், வேல், மணி செய்வதற்கென்றும் பணம் கேட்கவும் வசூலிக்கவும் யாருக்கு வேண்டுமானாலும் எப்படி உரிமை யுண்டோ அப்படியே தான் தேசீயத்திற்கு பணம் வசூலிக்கவும் யாருக்கும் உரிமையுண்டு”.
- ஈவெரா.
குடி அரசு - துணுக்குகள் - 22.06.1930
குடி அரசு - 1980 (1) 264
யார்ப்பணால்லாதார் கட்சிக்கு சாஷமணரி
தென்னாட்டில் வெகுகாலமாக பார்ப்பனராதிக்கத்தினால் உத்தியோக விஷயத்திலும் சமூக விஷயத்திலும் கஷ்டமனுபவித்து வந்த பார்ப்பன ரல்லாதார்களில் சில பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து சுமார்10,13 வருஷங்களுக்கு முன்பாக தென் இந்தியர்களின் நல உரிமைச் சங்கம் என்னும் பேரால் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு சமூக சமத்துவத் தையும் உத்தியோக வகுப்புவாரி பிரநிதித்துவத்தையும் முக்கிய கொள்கை: யாய் வைத்து பார்ப்பனர்களை அந்த ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொள்வ தில்லை என்கின்ற விதிகளையும் ஏற்படுத்தி பார்ப்பனரல்லாத பொது ஜனங்க. ளின் ஆதரவையும் பெற்று “ஜஸ்டிஸ்” என்கின்ற ஒரு ஆங்கில பத்திரிகை:
யையும் “திராவிடன்” என்கின்ற ஒரு தமிழ் பத்திரிகையும் அந்த ஸ்தாபனத்
தின் சார்பாக நடத்தி, காங்கிரசின் பேராலும் தேசீயத்தின் பேராலும் பார்ப்பனர்.
களும் அவர்கள் தாசர்களும் செய்துவந்த தொல்லைகளை எல்லாம்
சமாளித்து அறிவாளி மக்களிடத்திலும் அரசாங்கத்தினிடத்திலும் ஒத்துழைத் ததின் பயனால் நாட்டில் அந்த ஸ்தாபனத்திற்கும் பத்திரிகைகளுக்கும் பெரும் பான்மையான பார்ப்பனரல்லாத மக்களின் சரியான பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்கின்ற கவுரவமும் பெற்று விளங்கி வந்ததானது யாவரும் அறிந்த விஷயமேயாகும்.
அப்படிப்பட்ட ஒரு நியாயமான ஸ்தாபனம் அதன் முக்கியஸ்தர். களுக்குள் ஏற்பட்ட சுயநல உத்தியோக வெறியினால் பிளவுபட்டு செல்வாக்
கையும் அதிகாரப் பதவியையும் யிழந்துவிட்ட காலத்தில் சுயமரியாதை இயக்கத்தாருடையவும் வாலிபர்களுடையவும் முயற்சியாலும், மறுபடியும் அக்கட்சிக்குள் ஒற்றுமை ஏற்பட்டதின் பலனாகவும் பழைய நிலைமையை அடைந்தது என்றாலும் இப்போது சிலரின் அதாவது ஒரு கைபிடிக்குள் அடங்கக்கூடிய தலைவர்கள் என்பவர்களின் சுயநலத்திற்காக அப்பேர்பட்ட ஒருஸ்தாபனத்தின் கொள்கைகளும், விதிகளும், கெளரவங்களும் அழிக்கப் பட்டு இன்று சந்தி சிரிக்கக்கூடிய நிலைமைக்குப் போய் அந்த ஸ்தாபனமே அடியோடு மறையக் கூடிய நிலைமைக்குப் போகக் கூடிய மாதிரியில் சாவு மணி அடித்தாகி விட்டது.ஆகவே இவ் விஷயத்தைக் கேட்ட எந்த பார்ப்பன
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
ரல்லாதார் மனமும் சிறப்பாக வாலிபர்கள் மனமும் சுயமரியாதை இயக்கத்
தார்கள் மனமும் பதறாமல் இருக்க முடியாதென்றே சொல்லுவோம்.
அதென்னவென்றால் இம்மாதம்15 ௨ சென்னையில் கூடிய பார்ப்பன ரல்லாதார் கட்சி (தென் இந்திய நலவுரிமைச் சங்கி நிர்வாக சபைக் கூட்டத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ திட்டக் கொள்கையையும் ஆட்டம் கொடுக்கச் செய்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பார்ப்பனர்களையும் அங்கத்தினர். களாகச் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானமாகி இருக்கின்றது. ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் ஆட்டம் கொடுத்து பார்ப்பனர்களையும் அந்த இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுவது என்று ஏற்பட்டுவிட்டால் பிறகு பார்ப்பனரல்லாதார் என்கின்ற கட்சியோ அல்லது அதனுடைய கொள்: கையோ ஏதாவது மீதி இருக்கமுடியுமா? என்றும் அப்படி ஏதாவது இருந்தா
லும் அக்கட்சிக்கு இனி பார்ப்பனரல்லாதார் (Non - Brahmin Party) கட்சி என்று பேர் சொல்லத்தகுமா? என்றும், அப்படியே ஒரு சமயம் சொல்லிக் கொண்டி ருப்பதனாலும், வெறும் பெயரளவில் மாத்திரம் அப்படி ஒரு ஸ்தாபனம் இருக்க வேண்டுமா? என்றும் ஒரு சமயம் இருக்கச் செய்யலாமானாலும் அதனால் பார்ப்பனரல்லாதார் மக்களுக்கு ஏதாவது பயன் விளையுமா?' என்றும் யோசித்துப் பார்க்கும்படி பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் அக் கட்சிக்குப் புத்துயிர் கொடுத்த வாலிபர்களையும் வேண்டிக் கொள்ளு கின்றோம்.
அன்றியும் இனிமேல் அக்கட்சியானது அதன் தலைவர்கள் என்பவர். கள் பொதுமக்களை ஏமாற்றிப் பார்ப்பனரல்லாதாருக்கு நன்மை செய்யப் போகிறோம் என்று சொல்லி பார்ப்பனரல்லாத பாமர மக்களிடம் ஓட்டுப் பெற்று சட்டசபை முதலிய ஸ்தாபனங்களில் அங்கத்தினர்களாகி தங்கள். சொந்த வாழ்வுக்கு மந்திரியாவதும் அல்லது மற்ற ஏதாவது லாபகரமான பதவி பெறுவதுமான காரியங்களுக்கு அவற்றை உபயோகப்படுத்தப்படுவதைத் தவிர அதனால் மக்களுக்கு எவ்விதமான பலனும் கண்டிப்பாய் உண்டாகப் போவதில்லை என்பது உறுதியான காரியமாகும்.
பார்ப்பனர்களை இக்கட்சியில் சேர்க்கலாமா வேண்டாமா என்னும் விஷயமும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தளரவிட வேண்டுமா என்னும் விஷயம் ஒருபுறமிருக்க; இவ்விஷயத்தில் தலைவர்கள் என்பவர். களின் நாணையம் எவ்வாறு இருக்கின்றது என்பது இதில் முதலாவதாக கவனிக்கத்தக்க விஷயமாகும் என்பதை வாசகர்களுக்கு முதலில் ஞாபக மூட்ட விரும்புகின்றோம்.
அதாவது பார்ப்பரைல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பது என்பதும் தள்ளுவது என்பதும் பற்றிய பிரச்சினை அடிக்கடி கிளப்பப்படு வதும் கட்சியின் நன்மையைக் கோரின நல்ல எண்ணத்துடனா? அல்லது சுயநலத்தைக் கோரி சமயத்திற்கேற்றார் போல் நடப்பது என்கின்றதான புரட்டு
குடி அரசு - 1980 (1) 266
எண்ணத்தைக் கொண்டா? என்பதே முக்கியமாய் யோசிக்கத்தக்கதாகும்.
சென்ற அதாவது 1926-ம் வருஷக் கடைசியில் நடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலில் பார்ப்பனரல்லாத கட்சிப்பிரமுகர்கள் பலர் தோல்விய டைந்து மந்திரி ஸ்தானம் தங்கள் கையை விட்டுப் போக நேர்ந்தவுடனே மதுரையில் கூடிய மகாநாட்டின் போதே பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டுவந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். அது சமயம் சிலர் போட்ட கூச்சலினால் அப்போது அது வலியுறுத்தப்படாமல் மறைந்து போயிற்று.
மறுபடியும் அடுத்தார்ப் போல் கோயமுத்தூரில் கூடின ஸ்பெஷல் மகா நாட்டின் போதும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர முயற்சி செய்து பார்த்து பிரயோஜனப்படாது என்று தெரிந்த பிறகு அதை விட்டு விட்டு காங்கிரசி லாவது போய்ச் சேரவேண்டுமென்று அதாவது பார்ப்பனர்களைத் தாங்கள்.
சேர்த்துக் கொள்ள இடம் கிடைக்காமல் போனாலும் பார்ப்பனர்களுடனாவது தாங்கள் போய்ச் சேர்ந்து விடலாம் என்று கருதி அதற்காக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தச் சமயத்தில் திருவாளர்கள் வரதராஜுலு கல்யாணசுந்தரம் முதலியவர்கள் தங்களுக்கு பார்ப்பன சூட்சி விளங்கி விட்டதாகவும், இனிமேல் ஞானம் வந்து விட்டதாகவும், பார்ப்பனர்களை: காங்கிரசைவிட்டு விரட்டி விடலாம் என்றும் சொல்லிக்கொண்டு அவர்களும் இதில் வந்து சேரும் தீர்மானத்துடன் வந்திருந்தபடியால் அவர்கள் ஆசைக் காகவும் அத்தீர்மானம் அனுமதிக்கப் பட்டது என்றாலும் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் மூன்றே மாதத்தில் தங்கள் தங்கள் குற்றங்களை உணரும்படி யாக ஏற்பட்டு அதாவது தாங்களும் காங்கிரசில் சேர முடியாமலும் பார்ப் பனர்களையும் அதைவிட்டு விரட்ட முடியாமலும் போய் விட்டது கண்டு தங்கள் தவறுதலுக்காக வருந்தவும் செய்தார்கள். ஆனாலும் அதுமுதல் இதுவரை இவ்வியக்கத் தலைவர்கள் என்பவர்களின் புத்தி ஒரு நிலையில் இல்லாமல் என்ன செய்தால் மந்திரி ஆகலாம் என்கின்ற ஒரே கவலையின்
மீது வகுப்புவாரி பிரதிநிதித்துவமே வேண்டாம் என்று ஒரு தடவையும், பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஒரு தடவையும், சேர்க்க வேண்டாம் என்று ஒரு தடவையும், கவுன்சில் நடவடிக்கைகளில் மாத்திரம் சேர்க்கலாம் என்று ஒரு தடவையும், கமிட்டி ஏற்படுத்தி சேர்க்கலாம் என்று ஒரு தடவையும், சுவற்று மீது பூனையாக ஒரு தடவையும், இம்மாதிரியாக சமயத்
திற்குத் தகுந்தபடி யெல்லாம் பேசிக் கொண்டே ஒரு நிலையும் இல்லாமல் இருந்து விட்டு இப்போது தேர்தல் சமீபித்து விட்டதினாலும், உப்புச் சத்தியாக்கிரகத்தின் பயனாய் பார்ப்பனர்களுக்கு ஆதிக்கம் வந்திருக்கும் என் கின்ற எண்ணத்தினாலும் பார்ப்பனர்களுக்கு பயந்து கொண்டு இப்போது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் வகுப்புவாரி பிரதிநிதி திட்டத்தையும் தளர்த்தி பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டு அதை அமுலுக்கு கொண்டு வர மகாநாடும் சமீபத்தில் தஞ்சாவூரில்
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கூட்டத் தீர்மானிக்கப்பட்டு மாய் விட்டது. அந்த மகாநாடும் கூட நாணைய மான முறையில் கூட்டப்படுவதானால் கண்டிப்பாய் இந்த தீர்மானம் அதில் தோல்வியடைந்தே தீரும் என்றும், சூட்சி முறையில் கூட்டப்படுவதானால் அவர்களின் இஷ்டப்படி நிறைவேற்றப்பட்டு விடவும் கூடும் என்றும் கருதுகிறோம்.
எது எப்படியானாலும் இதன் பயனாய் இனிமேல் பார்ப்பனரல்லா தாரின் சமூக சமத்துவத்திற்கும் தீண்டாத மக்களின் கொடுமை நீங்குவதற்கும், முகமதியர் கிருஸ்தவர்கள் ஆகிய குறைந்த துகையினர் பாதுகாப்பிற்கும் பார்ப்பனரல்லாதார் கட்சியை நம்புவதில் பலனில்லை என்று ஏற்பட்டு விடுவ தோடு அத்தலைவர்களின் நாணையத்திலும் ஜனங்களுக்கு அடியோடு நம்பிக்கையற்றுப் போய் விடுமென்பதே நமது அபிப்பிராயமாகும். காரணம் என்னவென்றால் நெல்லூர் மகாநாட்டிற்கு முன்னும் இவ்விதமான ஒரு முயற்சி ஏற்பட்டு இதே தலைவர்களில் பலர் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கும் அனுகூலமாயிருந்து சுயமரியாதை இயக்கத்தாரின் பலமான ஆக்ஷேபனைகளுக்கு பயந்து மந்திரிகளுடைய தாட்சண்ணியத் திற்காகவும் சிநேகத்திற்காகவும் பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கை. யிலாவது சேர்த்துக் கொள்ள அனுமதி கோரி மந்திரி கட்சியும் பார்ப்பனரல் லாதார் கட்சியும் ஒன்றாக வேண்டும் என்கின்ற சமாதானத்திற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி அக்கமிட்டியில் ராஜித் தீர்மானமாகச் செய்து நிர்வாக சபை யிலும் இராஜியை உத்தேசித்து ஏகமனதாய் தீர்மானம் செய்யச் செய்து மற்றவர்களையும் ஒப்புக் கொள்ளச் செய்த பிறகு சிறிது நாள் பொருத்து அடுத்த தேர்தலுக்கு பிறகு நியமனம் செய்யப்படும் மந்திரி சபையில் யார்
முதல் மந்திரியாயிருப்பது? என்கின்ற தகராரின் பேரிலேயே சிலருக்குள் ராஜி
முறிந்து நெல்லூர் மகாநாட்டில் அத்தீர்மானத்திற்கு அதாவது சட்டசபை நடவடிக்கைகளில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று செய்து கொண்ட ராஜி ஒப்பந்த தீர்மானத்திற்கு விரோதமாய் பிரசாரஞ் செய்து ஒரே
ஒரு ஓட்டில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக தீர்மானிக்கப்பட்டு விட்டது. இதைப் பற்றி சுயமரியாதை சங்கத் தலைவர் திரு. செளந்தரபாண்டியன் அவர்கள் கூட “அரசியல் சூதாட்டத்தின் பலனாக இப்படி செய்ய நேர்ந்தது” என்று கண்டித்து அப்போதே எழுதியிருக்கிறார். இது ஒரு புறமிருக்க,
சட்டசபை நடவடிக்கையில் கூட பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளக். கூடாது என்று தீர்மானித்து 4 மாதம் ஆவதற்குள் நெல்லூரில் அத் தீர்மா னத்தை யார் எதிர்த்தார்களோ அந்த கனவான்களாலேயே (சென்னை கன வான்களால்) மறுபடியும் “தற்கால நிலைமையை உத்தேசித்து பார்ப்பனர்களை: பார்ப்பனரல்லாதார் கட்சியிலேயே அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு 2, 3 மாதமாய் அதை: தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து இப்போது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் சட்ட சபை தேர்தல் வருவது நிச்சயம் என்கின்ற சங்கதி தெரிந்த வுடன் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்கின்ற
குடி அரசு - 1980 (1) 268
தீர்மானம் ஒரு சிறு எதிர்ப்புக் கூட இல்லாமல் நிறைவேறும் படியாகச் செய்து கொண்டாய் விட்டது. எனவே இவற்றை யெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் நடவடிக்கைளைப் பார்க்கும் போதும் தமிழ்நாட்டில் பார்ப்பன. ரல்லாத மக்களின் “தலைவிதி” இதுவரை எப்பேர்ப்பட்டவர்கள் கையில் இருந்தது, இருக்கின்றது என்பதை நினைக்க நினைக்க மனம் கொதிக்கத்தக்க விஷயமாய் இருக்கின்றது.
இந்த சமயத்தில் பார்ப்பனப் பத்திரிக்கைகள் பரிகாசமாக பார்ப்பனரல் லாத கட்சியைப் போற்றுவதுபோல் எழுதுகின்றன. அதாவது கோயமுத்தூர். மகாநாட்டில் பார்ப்பனரல்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேரலாம். என்றவுடன் புகழ்ந்து எழுதிவிட்டு எப்படி காங்கிரசில் மெம்பராகவே சேர்க்க வொட்டாமல் செய்து எந்தப் பார்ப்பனரல்லாதாருக்கும் காங்கிரசில் மரியா தையும் இல்லாமல் செய்தார்களோ அது போலவே இப்போதும் போற்றி எழுதி விட்டு எந்த பார்ப்பனரும் விதியை திருத்தும்படி கேட்டுக் கொள்ள வில்லை வென்றும் யாரும் வந்து சேருதற்கு தயாராயில்லை என்றும் கேவல மாக இழிவு படுத்தி மற்றொரு பக்கத்தில் எழுதுகின்றன.
நிற்க இம்மாதிரியாக இப்போது ஒரு தீர்மானம் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? என்பதைப் பற்றி மறுபடியும் சற்று யோசிப்போம். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருக்கும் மந்திரிக்கட்சித் தலைவர். ஒருவருக்கும் அடுத்த தடவை யார் முதல் மந்திரியாக வருவது என்ற விஷயத்தில் தகராறு ஏற்பட்டவுடன் இரண்டு கட்சியிலுமிருந்த பின்பற்றுகிற வர்கள் தங்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போகுமே என்கின்ற கவலையின்
பேரிலும் பொறாமையின் பேரிலும் இவ்விரு தலைவர்களையும் இந்த சமயத்தில் பிரித்து வைத்து விட்டால் பிறகு இருவரும் நம்மை வந்து கெஞ்சு வார்கள், அப்போது நாம் மெதுவாய் உள்ளே புகுந்து பங்கு பெற்று விடலா மென்று கருதி முதல் மந்திரி ஆசைக்காரத் தலைவர்களைப் பிரித்து வைக்க தந்திரம் செய்து அதற்கு மார்க்கமென்ன என்று யோசித்துக் கடைசியாக முன்குறிப்பிட்ட ஒப்பந்தமாகிய அதாவது பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்ளுவது என்கின்ற இரு கட்சித் தலைவர்.
கள் செய்து கொண்ட இராஜி ஒப்பந்தத்தை முறித்து விடுவதின் மூலம் இருவருக்கும் விரோத முண்டாக்கி இருவரையும் ஒன்று சேர விடாமல் செய்து விடலாமென்று கருதி சூட்சி செய்யப்பட்டதின் பயனாய் நெல்லூர். மகாநாட்டில் ஒப்பந்தம் முறிந்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவருக்கும் மந்திரிக்
கட்சி தலைவருக்கும் வெளிப்படையான விரோதமேற்பட நேர்ந்தது. இந்த
மத்தியில் இம் மூன்று கட்சியும் தவிர அதாவது மந்திரிகட்சி, ஜஸ்டிஸ் கட்சி, இவற்றைப் பிரித்து வைத்த சூட்சிக் கட்சி) வேறு ஒரு கூட்டம் தங்களுக்குள்
யார் யார் எந்தெந்த பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்வது என்கின்ற ஒப்பந்தத்தின் பேரில் வேறு கூட்டம் ஒரு கட்சியாக முளைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் ஜஸ்டிஸ் கட்சிக்கு பயம் ஏற்பட்டு அந்தப் புதுக் கட்சி
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
மந்திரிக் கட்சியுடன் சேர்ந்து விடாமல் இருப்பதற்காகவும், பார்ப்பனர்கள். மந்திரிக்கட்சியில் சேர்ந்து விடாமல் இருப்பதற்காகவும் யோசனை செய்து அவ்விருவர்களுக்கும் பயந்து கொண்டே பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதான நிர்பந்தம் ஏற்பட்டுப் போய் விட்டது. ஆகவே பார்ப்பனரல்லாதார் தலைவர்களுக்குப் பார்ப்பனர்களைத் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாமென்பதும், சட்டசபை நடவடிக்கைகளிற் பார்ப்பனர்களுடன் கலந்து கொள்ளலாமா வென்பதும் அடுத்த தடவை மந்திரி உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பொறுத்துத்தான். இருக்கின்றதே தவிர கட்சி நன்மையையோ பார்ப்பனரல்லாதார் சமூக நன்மையையோ பொறுத்ததல்லவென்பதே நமது அபிப்பிராயம். பார்ப்பனர் களிலும் பலர் இந்த சண்டையில் தங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்கின்ற ஆசையின் மீது பலர் வாலை ஆட்டி வாயைத் திறந்து கொண்டு
வரலாம் என்பதில் சந்தேகமில்லை.ஆனாலும் இந்த சூகஷியானது இதுவரை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட சிறிது நன்மையும் பாழாய்ப் போய்விடும். படிசெய்துவிடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆகவே இந்தவிதமாக யாரோ சில கனவான்களின் மந்திரிப் பதவி சூதாட்டத்திற்காகப் பார்ப்பனரல்லாதார் கட்சியின் அடிப்படையானதும் ஜீவநாடியானதுமான கொள்கைகளை அடியோடு ஒழிக்க விட்டு விடுவதா? என்றுதான் பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் வாலிபர்களையும் கேட்கி றோம். இந் நிலையில் பொதுவாக பார்ப்பனரல்லாத பொது மக்கள் தங்கள். மனதில் ஒரு காரியத்தை மாத்திரம் நன்றாய் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டியது. அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் இன்றைய போக்கை பார்க்கும் போது அது இனி பாமரமக்கள் கட்சியாய் இருக்க முடியாது என்பதையும் பார்ப்பனருக்கு அடுத்த நமது எதிரியாகிய பணக்காரக் கூட்டத்தின் ஆதிக்க
மாகிப் பார்ப்பனரும் பணக்காரரும் சேர்ந்த பார்ப்பனரல்லாதாரை வதைக்கும். மற்றொரு பெரும் கொள்ளை நோயாய் மாறப்போகின்றது என்பது மாத்திரம் கருத்தில் நன்றாய் ஊன்றி வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும். இனி இதோடு மாத்திரம் இல்லாமல் சமய பிழைப்புக்காரர்களும் பண்டித பிழைப்புக் காரர்களும் கண்டிப்பாய் அக்கட்சியில் சேர்ந்து உத்தியோக வேட்டையோடு. புராண பிரசாரமும் தொடர்ந்து நடைபெறும் என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமாய் குறிப்பிடுகின்றோம். மற்ற விஷயங்களை பின்னால் விவரிப்போம்.
குடி அரசு - தலையங்கம் - 22.06.1930
குடி அரசு - 1980 (1) 270
சைமண் கமிஷண் யாதாஸ்தூ
சைமன் கமிஷன் யாதாஸ்த்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் இப்போது எவ்வித அபிப்பிராயமும் கூற முற்பட வில்லை.
அன்றியும் அதிலிருந்து இந்தியர்களுக்கு எம்மாதிரியான அரசியல் உரிமை கிடைக்கப் போகின்றது என்பதைப் பற்றியும் நாம் சிறிதும் கவலைப் படவில்லை. ஏனெனில் அதெல்லாம் உத்தியோகமும் பதவியும் அனுபவிக் கக்கருதி அதற்காகவே பலஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு காத்திருப் பவர்களுக்கே விட்டு விடுகின்றோம். நம்மைப் பொறுத்தவரை சைமன் கமிஷன் முடிவான யாதாஸ்த்தில் தீண்டப்படாதவர்கள், பெண்கள், ஜாதி வித்தியாசத்தினால் இழிவுபடுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் விடுதலை விஷயத்திலும் முகமதியர்களும், கிருஸ்தவர்களும் “இந்துக்களிடம் அவநம்பிக்கை கொண்டு எதிரிகளாயில்லாமல் ஒற்றுமையாய் வாழவும் பொதுவாக எல்லோருக்குமே சமமாக கல்வி கிடைக்கும்படி செய்யவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி யும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் தீண்டாதார்கள், பெண்கள், கிருஸ்துவர்.
கள், மகமதியர்கள் ஆகியவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகள் செய்யப்பட் டிருக்கின்றது என்கின்ற விஷயத்திலுமே தான் கமிஷனின் சிபார்சை அறிந்து அதன் மேல் அது மக்களின் சமத்துவத்திற்கும், விடுதலைக்கும், முன்னேற் நத்திற்கும் ஏற்றதா, அல்லவா என்பதைப்பற்றி யோசிக்கக்கூடும். அன்றியும் இந்தியாவில் உள்ள சகல அரசியல் ஸ்தாபனங்களும் சைமன் கமிஷனை எதிர்த்தும், நாம் மாத்திரமே ஆரம்பத்தில் இருந்தே அவ்வெதிர்ப்புகளை எதிர்த்து ககிஷனை வரவேற்றதுடன் மற்ற மக்களையும் வரவேற்றுத் தங்கள். குறைகளைத் தெரியப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது இக் கருத் தைக் கொண்டேயாகும். ஆதலால் முடிவு யாதாஸ்த்தை எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.06.1930
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
கண்ணனூர் ATl தரும சமாலத்தின்
எட்பாவது ஆண்டுவிழா
தெய்வம்
இனி அடுத்தாற்போல் திரு. கையாலக்கேல் அவர்கள் பேசிய கடவுள். என்னும் விஷயத்தைப் பற்றி இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவன் என்ற முறையில் சில வார்த்தைகள் நான் சொல்ல வேண்டியது அவசியமாகும். திரு. கையாலக்கேல் அவர்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசியதில் இந்து மதக் கடவுள்களை எடுத்துக் கொண்டு அவைகளின் உருவங்களைப் பற்றியும், பெயர்களைப் பற்றியும், குணங்களைப் பற்றியும், குடும்பங்களைப் பற்றியும், ஒரு கடவுளுக்கும் மற்றொரு கடவுளுக்குமுள்ள சொந்தங்களைப் பற்றியும், அதன் பூசை உத்சவம் முதலியவைகளைப் பற்றியும், அதைச் செய்கிற தரகர்களின் யோக்கியதையைப் பற்றியும், செய்விக்கிற பக்தர்களின் மனோ பாவத்தைப் பற்றியும் வெகு விபரமாகவும், ஆரம்பமுதல் கடைசிவரை: நீங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே இருக்கும் படியாக அவ்வளவு வேடிக்கையாகவும் பரிகாசமாகவும் பேசினார். அது அவ்வளவையும் விநய மாகவே எடுத்துக் கொண்டு பார்ப்போமானாலும், அவர் சொன்னவற்றுள் ஏதாவது ஒன்றை ஆட்சேபிக்கவோ மறுக்கவோ இடம் இருந்ததா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். திரு.கையாலக்கேல் அவர்கள் கடவுளைப்
பற்றிப் பேசிய பரிகாசங்களை எல்லாம் வெகு காலத்திற்கு முன்னிருந்தே நம்மவர்களில் சில பண்டிதர்களும், பக்திமான்களும் பாட்டாகவும் வசன மாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவைகளெல்லாம் சிலேடைப் படுத்துவதிலும் தத்துவார்த்த வியாக்யானஞ் செய்விப்பதிலும் அவைகளை சொன்னவர்களை பெரிய ஞானிகள் என்றும், சித்தர்கள் என்றும் சொல்லுவ
தின் மூலமும் உண்மையை மக்கள் அறிய முடியாமல் மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் மனிதனுக்குத் தைரியமும், அறிவும் வரவர இன்னும் அதிக மான துணிவோடும், யுக்தியோடும் தானாகவே உண்மைகள் வெளியாய்க் கொண்டேதான் இருக்கும். திரு. கையாலக்கேல் அவர்கள் இந்துமதக் கடவுளைப் பற்றியே பெரும்பாலும் சொன்னார்களானாலும் உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுள்களைப் பற்றி கவனித்துப் பார்த்தாலும் இவ்வளவு ஆபாசமாக இல்லாவிட்டாலும் யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க
குடி அரசு - 1980 (1) 272
முடியாமல் அவைகளும் பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய் தான் இருக்கின்றது. அதாவது உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொறுத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன. உதாரணமாக இந்து மதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் சொல்லுகிற போது கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி அதன் மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மாஅந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றை சுவர்க்கமாகவும் மற்றொன்றை பூலோகமாகவும் செய்து அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களை யுண்டாக்கி பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதி களைச் சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக்கடுக்காக எப்படி சொல்லிக் கொண்டே போகின்றதோ, அதுபோலவேதான் கிருஸ்து முதலிய இதர மதங்களிலும், கடவுள் முதல் ஒன்றை சிருஷ்டித்தார், இரண்டாவது நாள் மற்றொன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன் றைச் சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக் கொண்டு போகப்படு கின்றன. ஆகவே அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப் பற்றிச் சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்றுபோலவே தானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால் கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும் போது உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப் பட்டவைகளென்பதை முதலில் இன்னதை உண்டாக்கினார். இன்னார் என்பதாகச் சில மதமும், முதல் நாள் இன்னதை உண்டாக்கினார்; இரண்டாவது நாள் இன்னதை உண்டாக்கினார் என்பதாகச்
சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்று போலாகவே தானிருக்கின்றன.இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா
மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும்.
கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று பார்ப்போமானால் முதன் முதலாக ஆரிய மதத்
திலிருந்தே சீர்திருத்தமாக கிருஸ்துவ மதம் ஏற்பட்டதும் அதிலிருந்து சீர்திருத்தமாக மகமதிய மதம் ஏற்பட்டதும், நமக்கு காணப்படுகிற படியால் எல்லா மதமும் அதையே பின்பற்றிக் கொண்டு வருவதாயிற்றே தவிர. வேறில்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்
பற்றி ஆராய்ச்சி செய்வோமானால் “கடவுள்” என்கின்ற பதமே கட * உள் - (கடவுள்! என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே. தவிர வடமொழியினும் ஆங்கில மொழியினும் இருப்பதுபோன்று பகவான். (லே காட், அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான வாக்கியமோ தமிழில் இல்லை என்பதை உணரவேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் “கடவுள்” உணர்ச்சி இருந்து
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமில்லாமல் ஆங்கில முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம் - எத்தீஸ்ட்டு நாஸ்திகம்
- நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்னனவோ அவை போலவே தமிழிலும் “கடவுள்” இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கு “கடவுள்” இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப் பொருள்.
கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே அவைகளி லிருந்தே தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கு) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்மந்தமும் இருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும். இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்குள்ள தமிழ் பதம் என்று பண்டிதர்.
கள் சொல்லக்கூடுமானாலும் அது அரசனுக்கும் தலைவனுக் கும் ஏற்பட்டதே தவிர கடவுளுக்காக ஏற்பட்டத் தனிப் பொருள் அமைந்த சொல் அல்ல வென்றே சொல்லுவோம். ஆனால் “கடவுள்” என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன் பெரியவன் எனினும் பொருந்தும் என்று அப்புக்கட்டலாமேயொழிய அது அதற்கே ஏற்பட்ட தனிவார்த்தை ஆகாது.
நிற்க, தமிழ் நாட்டில் பலர் காலஞ்சென்ற பிதுர்க்களையும் செல்வாக் குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும், வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றப்படி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிர்மா,பிள்ளையார், சுப்ரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்மந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந் தார்கள் என்றாவது சொல்லுவதற்கு கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்கு தோன்றும் ஆதாரம் என்னவென்றால் இப்பொழுது உள்ள
கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட “நீச்சக் கடவுள்கள்” தவிர மற்ற “கடவுள்”கள் பெயர்கள் எல்லாம் வடமொழியிலேயே இருக்கின்ற தென்பதே போதுமானதாகும்.
ஆனால் வடமொழிப் பெயருள்ள சில “கடவுள்” களின் பெயர்களை தமிழில் மொழி பெயர்த்து அந்த கடவுள்களைத் தமிழில் அழைப்பதை பார்க்கின்றோம். என்றாலும் இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன்வருவதை நான் பார்க்க வில்லை. இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களை பிடித்த நோய்களான சைவ வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வடமொழி பெயர்களை உடையதாகவும் அவைகளின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திரப் புராண இதிகாசங்க ளாகவும் தானே இருக்கின்றதே அல்லாமல் தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக் கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை. இவைகளுக்கு செய்யப்படும் பூசை முதலியவைகளும் வடமொழி நூல்கள்
குடி அரசு - 1980 (1) 274
ஆதாரப்படி வடமொழி பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமா கவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவைகளாகும்.தவிரவும் மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும் பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலாகியவைகள் பாடினதும் மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும் ஆகிய எல்லாம் வடமொழிப்
பேர் கொண்ட கடவுள்களை பற்றியும் அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழி புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றி யுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவைகள் தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை. மற்றும் சமயக்குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது
அபிப்பிராயம். வேண்டுமானால் அதை தமிழில் விபூதியை திருநீறு என்றும் திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும் அது சரியான மொழிபெயர்ப்பல்லவென்று சொல்வதோடு விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும் பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன். விபூதி என்றும் நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துக்கள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்த பெயரையே அதாவது சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும் மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம்
என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது. ஆகவே தமிழில் காட், அல்லா, பகவான் என்பவைகளைக் குறிப்ப தற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும் அதன் சின்னங்க ளையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும் அனுப வத்திலுள்ள கடவுள்களும் பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும் கூட தமிழில் இல்லை என்பதும் மற்றபடி இப்போது இருப்பவைகள் எல்லாம் வடமொழியிலிருந்து தமிழர்கள் எடுத்துக் கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன். இனி கடவுள் உண்டு - இல்லை என்பதைப் பற்றியாவது பொது ஜனங்க ளுடைய அபிப்பிராயந்தான் என்ன என்பதைப் பற்றியாவது விசாரிப்போம்.
(08.06190 குடிஅரசு- சொற்பொழிவு தொடர்ச்சி)
குறிப்பு- 0106.1930 கண்ணனூர்தர்ம சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா- .தலைமை- நிறைவுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 29.06.1930
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
சைமண் ரிய்யோர்ட்டு
சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு வெளியாகி விட்டது. இதன்பேரில் ஏதாவது ஒரு அபிப்பிராயம் தெரிவிக்காதவர்களை பொது ஜனங்கள் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ கருதுவதில்லை.
அன்றியும் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ ஆக வேண்டும் என்கின்ற ஆசை இருப்பவர்களும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அபிப்பிராயங்கள் சொல்லுவதன் மூலமே தங்கள் ஆசை நிறைவேறும் என்று கருதுவதும் சகஜம். இவை ஒரு புறம் நிற்கப் பொது காரியங்களில் உழன்று கொண்டு இருப்பவர்கள் யாராவது இம்மாதிரி விஷயங்களில் அபிப்பிராயம் சொல்லாவிட்டால் அவர்களை பயங்காளி என்று சொல்லுவதும் வழக்கம். சுவற்று மேல் பூனை போலிருந்து வாழ வேண்டுமென்கின்றவர்களான, தங்களுக்கென்று யாதொரு கொள்கையுமில்லாத சிலர் சற்று சங்கடமான நிலைமையில் யாதொரு அபிப்பிராயமும் சொல்லாமல் நழுவவிடுவதும் சகஜம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை நாம் எந்த காரணத்தைக் கொண்டா வது ஏதாவது சொல்லித்தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
அந்தப்படி இப்போது ஏதாவது ஒரு அபிப்பிராயம் சொல்லுவதில் சைமன் கமிஷனை உபயோகமற்றது என்று ஒரே வார்த்தை சொல்லி விட்டால் அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் தேசீயவாதிகள் லிஸ்டில் தாக்கல் ஆகிவிடுவான்.அதை எவனாவது ஆதரித்து விட்டாலோ அவன் எப்படிப் பட்டவனாய் இருந்தாலும் அவன் சர்க்கார் மனுசனாகவோ அல்லது பிற் போக்காளனாகவோ ஆகி விடுவான்.ஏனென்றால் நமது ஜனங்கள் “கங்கா தரா மாண்டாயோ” என்று ஒரு கிழவி அழுதக் கதையைச் சேர்ந்தவர்கள். ஆவார்கள். அதாவது விஷயம் இன்னது என்று தெரிந்தாலும் தெரியா விட்டாலும் அவர்கள் (தேசீயவாதிகள்”) என்ன சொன்னார்கள் என்பதைப் பார்த்து பின்பாட்டுப் பாடுகின்றவர்களே ஆவார்கள். ஏனெனில் பெரும் பாலோர் சொந்த அறிவை உபயோகிக்க முடியாமலும் பிறர் அறிவை கேட்கச் செளகரியமில்லாமலும் இருப்பவர்கள். ஆதலால் இவர்களுக்கு கமிஷனை அடியோடு நிராகரிக்காதவர்கள் எல்லாம் தேசத்துரோகிகளே யாவார்கள்.
இந்த நிலைமையில் நாம் நமது அபிப்பிராயம் சொல்லுவதற்கு
குடி அரசு - 1980 (1) 276
முன்பே பொது ஜனங்களை, நம்மை “தேசத்துரோகி” லிஸ்டிலேயே தாக்கல் செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டே நமது அபிப்பிராயத்தை சொல்லுகின்றோம்.
ஏனெனில் நாம் அந்த ரிப்போர்ட்டில் அரசியல் சம்மந்தமாக என்ன சுதந்தரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, எவ்வித சவுகரியம் அளிக்கப் பட்டிருக்கின்றது என்பன போன்றவைகளைப் பற்றி சிறிதும் கவலை எடுத்துக் கொண்டு கவனிக்கவில்லை. கவனிக்கவும் இஷ்டப்படவில்லை. ஏனெனில் அது சட்டசபைக்கு போகின்றவர்களுக்கும் மந்திரியாவதற்கும், பெரிய உத்தியோகம் பெறுவதற்கும் ஆசை உள்ளவர்களுக்கும் அவர்களது கூட்டுறவாளர்களுக்கும் விட்டு விடுகின்றோம். அதில் 8 மந்திரி இருந்தாலும்.
10 மந்திரி இருந்தாலும் அவர்களை கவர்னர் நியமித்தாலும் சட்டசபை மெம்பர்கள் நியமித்தாலும் அவர்கள் தீர்மானங்களை எல்லாம் கவர்னர்.
ஏற்றுக் கொண்டாலும் தள்ளிவிட அதிகாரம் வைத்துக் கொண்டாலும் மற்றும் இதுபோன்ற விஷயங்களில் எப்படி ஆனாலும் நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஏனெனில் “ஜனப்பிரதிநிதிகள்” என்பவர்களை விட சர்க்கார் யோக்கியமானவர்கள் என்றாவது சர்க்காரைவிட “ஜனப்பிரதிநிதிகள்”' யோக்கியமானவர்கள் என்பதாகவாவது எல்லா அதிகாரங்களையும் சர்க்கார் “ஜனப்பிரதிநிதிகள்” வசம் கொடுத்துவிட்டுப் போய்விட்டால் நல்லது என்றாவது எல்லா அதிகாரங்களையும் சர்க்காரே வைத்துக் கொண்டு நடத்தி னால் நல்லதென்றாவது நாம் இந்த நிலையில் கருதுவதில்லை. தவிர ஜனப் பிரதிநிதிகள் நடத்தும் நிர்வாகங்களும் அவர்களது அபிப்பிராயங்களும்
சர்க்கார் நடத்தும் அதிகாரங்களும் அவர்களது அபிப்பிராயங்களும் பொது
ன ர உத்தேசித்ததா? சுயநலத்தை உத்தேசித்ததா? என்பது நமக்கும் சற்று
யும்.
ஆதலால் அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல் சைமன் கமிஷனைப் பற்றி பார்ப்போமானால் சைமன் கமிஷன்ரிப்போர்ட்டு நிராக
ரிக்க வேண்டியது அல்லவென்றும் எந்த “தேசியவாதி” யாலும் நிராகரிக்கப் போவதில்லை என்றும் நிராகரிக்கப்பட முடியாததென்றுமே நாம் சொல்லு வோம்.எப்படி என்றால் இந்து தேவஸ்தான பரிபாலன மசோதாவை எதிர்த்த வருணாசிரம தர்மசபை காரியதரிசியான திரு. என். சீனிவாசாச்சாரியார் அம் மசோதாவை எதிர்க்கவும் அதை அழிக்கவும் சங்கம் ஏற்படுத்தி அதற்காகப் பணமும் வசூல் செய்து எதிர் பிரசாரமும் செய்து விட்டு இப்போது அச் சட்டத்தை நடத்திக் கொடுக்கத் தனக்கு வேலை கொடுக்கும்படி கெஞ்சினதும் எவ்வளவோ உள்தரமான வேலைகள் எல்லாம் செய்து அந்த வேலையை அடைந்து சட்டத்தின் திட்டத்தை இன்றைய தினம் நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம்.
ஆகவேநமது தேசீயவாதிகள் இன்று சைமன் ரிப்போர்ட்டைபலமான
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
வார்த்தைகளால் மறுப்பார்கள் - நிராகரிப்பார்கள் - வைவார்கள். ஆனாலும் நாளை அதனால் ஏற்படும். “உபயோகமற்ற” “பிற்போக்கான,” “சுயமரியாதையற்ற” பதவிகளுக்கும் உத்தியோகங்களுக்கும் நாக்கில் தண்ணீர் சொட்ட விடுவார்கள் என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். நமது அசல் பார்ப்பன “தேசீயவாதிகளோ சிங்கத்தின் குகைக்குள் போய் அதன் பிடரியைப் பிடித்து ஆட்டுவதற்காக” என்றாவது சீர்திருத்த உத்தியோகத் தையும் பதவியையும் லாபத்தையும் கண்டிப்பாய் அடையப் போகிறார்கள். என்பதும் நமக்கு நன்றாய்த் தெரியும்.
அன்றியும் இப்போது சைமன் கமிஷனை ஆட்சேபித்து குற்றம் சொல்லுகின்ற “தேசீயவாதிகளில்” நூற்றுக்கு ஒருவர் கூட நாளைக்கு அத
னால் லாபமடைய மறுக்க மாட்டார்கள் என்று உறுதியாய் சொல்லுவோம். ஆகவே இன்றையதினம் கமிஷனை வைவதெல்லாம் நாளைக்கு பாமர மக்களிடம் ஓட்டு வாங்கவே ஒழிய அதை நிராகரிப்பதற்கோ அல்லது அதனால் பயனில்லை என்று கருதியோ அல்ல என்பதே நமது அபிப்பிரா
யம். நம்மை பொறுத்த வரையில் என்றாலோ நமக்கு ஓட்டுக்குப் போக ஆசையும் இல்லை, யோக்கியதையும் இல்லை. ஆதலால் அவ்வேஷக் காரர்களுடன் சேர வேண்டிய அவசியமில்லாத நிலைமையிலிருக்கின்றோம்.
ஆகவே சைமன் கமிஷனில் நாம் கவனிக்கத் தக்கதாய் உள்ள சில விஷயங்களைப் பற்றிய குறிப்புகளை வெளியிடுகின்றோம்.
முதலாவது முகமதியர்களுக்கு அதில் பெருத்த வெற்றி ஏற்பட்
டிருக்கின்றது. எப்படி என்றால் முகமதிய சமூகம் இந்த பத்து இருபது வருஷ காலத்தில் எவ்வளவோ தூரம் முன்னேறி இருப்பதற்கு ஆதாரமான அவர்களது வகுப்பு வாரி பிரதிநிதித்துவ கொள்கையை அடியோடு அழிக்க “இந்திய தேசீய காங்கிரஸ் வாதிகள்” பட்ட பாடு வீணாகி பழையபடியே இருக்க ஏற்பட்டது குறித்து அவர்கள் சைமன் கமிஷனுக்கு முதலில் நன்றி செலுத்தி தீருவார்கள். ஆகவே இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்த.
4-ல் ஒரு பங்கு ஜனங்களின் விஷயத்தில் சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு வரவேற்கப்பட்டதாகும். இனி அடுத்தாற்போல் தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் சைமன் கமிஷன் ரிப்போர்ட்டானது கூடுமானவரை திருப்தி கரமானதென்றே சொல்லலாம். அதாவது தேசீயவாதிகளின் எவ்வளவோ எதிர்ப்புகளை மீறி அவர்களுக்கு அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுவும் ஜனத்துகையை அனுசரித்தே கொடுக்கப் பட்டிருக்கின்றது. ஆனால் இந்துக்கள் என்பவர்களின் ஜனத்துகையில் 100000 ஜனங்களுக்கு ஒரு ஸ்தானம் வந்தால் தீண்டப்படாதார் என்பவர் களின் ஜனத்துகையில் 100000 பேருக்கு முக்கால் ஸ்தானம் வீதம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சிபார்சு செய்திருக்கிறார்கள்.
அடுத்த சீர்திருத்தத்திற்குள் தங்கள் ஜனத்துகைக்கு சரியான
குடி அரசு - 1980 (1) 278
விகிதாசாரமும் தனித் தொகுதித் தேர்தலும் அடையக் கூடிய நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வந்து விட இந்த சிபார்சு உதவிசெய்யும் என்றே நினைக்கின்றோம். ஆகவே ஒட்டு மொத்த ஜனத்துகையில் ஐந்தில் ஒரு பங்கு. ஜனத்துகையினரான தீண்டப்படாதார்களும் சைமன் கமிஷன் ரிப்போர்ட் விஷயத்தில் அதை வரவேற்று நன்றி செலுத்தக் கூடியவர்களேயாவார்கள்.
பெண்கள் விஷயத்திலோ அவர்கள் எண்ணிக்கையை லக்ஷியம் செய்யாமல் மொத்த ஸ்தானங்களில் 100க்கு 5 அல்லது 10 வரையில் ஸ்தானங்கள் கொடுக்கலாம் என்று சிபார்சு செய்யப்பட்டிருக்கின்றது. இது போதுமானதா இல்லாமலிருந்தாலும் அவர்களது உரிமை ஒப்புக் கொள்ளப்
பட்டதாய் விட்டதால் இதன் மூலம் இனி அடுத்த சீர்திருத்தத்திற்குள் முழு உரிமையை வாங்க சக்தி உடையவர்களாகி விடுவார்கள்.ஆகவே மொத்த ஜனத்தொகையில் சரி பகுதிப் பேர் கொண்டதும் ஜாதி இந்துக்கள் என்பவர். களின் ஜனத்துகையாகிய 15 கோடியில் சரி பகுதி ஏழரைக் கோடி மக்களா கிய பெண்கள் விஷயத்திலும் சைமன் கமிஷன் வரவேற்கப்படவேண்டியதே. யாகும்.ஆகவே ஏழரைக் கோடிமகமதியர் 6 கோடி தீண்டப்படாதார் ஏழரைக் கோடிபெண்கள் ஆக 21கோடி ஜனங்களுக்கு அவர்களது முக்கிய கோரிக் கைகள் கமிஷனால் கவனிக்கப்பட்டு ஒருவாறு திருப்தி செய்யப்பட்டிருக் கின்றன. இனி பாக்கி இருக்கும் ஏழரைக்கோடி மக்களிலும் 100க்கு 10 வீதம் உள்ள படித்தவர்களும், பணக்காரர்களும், பார்ப்பனர்களும் தான் “சைமன் கமிஷன் திருப்தியற்றது.போதாது, ஏமாற்றமானது” என்று சொல்லுவார்கள். இதன் கருத்து இன்னதென்றோ, சைமன் கமிஷன் இன்னதென்றோ 100க்கு 90பேருக்கு மேலாகவே தெரியாதவர்களும் தெரிய செளகரியமில்லாதவர்: களுமாக இருப்பவர்கள்.
எனவே இந்த நிலைமையில் சைமன் கமிஷனைப் பற்றி நாம் என்ன சொல்வது என்பதை யோசித்து முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே. விட்டு விடுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.06.1930
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
யார்ப்பணால்லாதார் கட்சி
பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை மூன்று காரணங் களே சொல்லப்படுகின்றன.
அவை ஒன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி ஒரு அரசியல் கட்சியாக இருக்க வேண்டுமானால் அது எந்த வகுப்பாரையும் தள்ளிவைத்த கட்சியா யிருக்கக் கூடாது என்பது.
மற்றொன்று, பார்ப்பனரல்லாதார் கட்சி எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கும் உத்தேசத்துடன் ஏற்படுத்திய கட்சியானதால் எல்லா வகுப்பாருக்
கும் அதில் இடம் இருக்கவேண்டு மென்பது. வேறு ஒன்று பார்ப்பனரல்லாதார். கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளா விட்டால் அக் கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லாம் போய் விடுவார்கள். பிறகு கட்சிக்குத் தலைவர்: களே இருக்கமாட்டார்கள்; இதனால் கட்சியே செத்துப் போய்விடும் என்பது. ஆகிய இம்மூன்று காரணங்களே இப்போது பார்ப்பனரல்லாதார் கட்சியின் முக்கிய தலைவர்களாய் பாவிக்கப்பட்டு வந்த கனவான்களால் சொல்லப்பட்ட சொல்லி வருகின்ற காரணங்களாகும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய காரியம் என்னவென்றால் மேற்கண்ட
மூன்று காரணங்களும் உண்மையானவைகளா? அல்லது சுயநலத்தை உத்தேசித்து பொதுமக்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது சொல்லப் படுபவைகளா? என்பதைப் பற்றியதேயாகும்.
ஏனெனில் நமது அபிப்பிராயத்தில் இக்காரணங்கள் ஒன்றும் அதன் தலைவர்களுக்கு உண்மையான காரணங்கள் அல்லவென்றே சொல்லுவோம். ஏனெனில் மேற்கண்ட மூன்று காரணங்களையும் கண்டித்து திரு. 8. முனுசாமி நாயுடு தவிர மற்றவர்கள் எல்லாம் அவ்வப்போது தங்கள் தங்கள் அபிப் பிராயங்களை பத்திரிகைகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பேசியும் எழுதி
யும் இருப்பவைகளே போதுமானதாகும்.
ஜஸ்டிஸ் பத்திரிகையில் திரு. ஏ. இராமசாமி முதலியார் எழுதிவந்த
குடி அரசு - 1980 (1) 280
கண்டனங்களுக்கு மேல் இனி யாராலும் எடுத்துக் காட்ட முடியாது. நெல்லூர். மகாநாட்டில் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்கள் பேசியதற்கு மேல் பார்ப் பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதால் ஏற்படும் கெடுதியைப் பற்றி இனி
யாராலும் பேச முடியாது என்றே சொல்லுவோம். மேலும் திரு.பி.முனுசாமி நாயுடு அவர்கள் ககஷியை விட்டுப்போய் விட்டாலும் பாதகமில்லை என்றும், அவர் காங்கிரஸ் கொள்கை உடையவராதலால் போய் விடுவதே மேல் என்றுமே கருதித்தான் அவ்வளவு தைரியமாகவும் முரட்டுத்தனமாகவும் அத்தீர்மானம் தாக்கப்பட்டே வந்திருக்கின்றது. ஆனால் உப்பு சத்தியா கிரகத்தின் பலணாய் திரு. முனுசாமி நாயுடுவுக்கு ஆந்திரமெம்பர்களின் பலம் ஏற்பட்டு விட்டதாலும் ஜஸ்டிஸ் ககஷியில் உள்ள சிலரின் சூக்ஷிக்கு பயந்து அக்கக்ஷியிலுள்ள மற்றும் சிலர் திரு.முனுசாமி நாயுடுவுடனும் திரு.டாக்டர்' சுப்பராயன் உடனும் சேர ஏற்பாடு செய்து கையெழுத்து முதலியவை கள். போட்டு விட்டதாலும் தங்களுக்கு எவ்வித யோக்கியதையுமே இல்லா மல் போய் விடுமே என்று கருதி இப்போது பல்ட்டி அடித்து எந்தக் கொள்கை: யையோ விட்டுக் கொடுத்தானாலும் யாரையாவது தங்களுடன் சேர்த்து
மந்திரி பதவி பிரைஸ் அடிக்க வேண்டியது இவர்களுக்கு அவசியமாய் விட்டது.
இந்த நிலையில் பார்ப்பனரல்லாத கக்ஷியில் பார்ப்பனர்களைச்
சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இப்போது இவர்கள் சொல்லுவது மந்திரி வேட்டைக்காகப் போடப்பட்ட ஒரு வலையே அல்லாமல் நியாயத்தையோ
கட்சியின் நன்மையையோ கோரியது அல்லவென்பதே நமது முடிவான அபிப்பிராயம்.
மந்திரி வேலை அடைய ஆசைப்பட எல்லோருக்கும் பாத்தியமுண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் அதற்காக காங்கிரசுக்
காரர்கள் பாமரஜனங்களை பலி கொடுத்து மந்திரி வேலை முதலிய உத்தி யோகங்கள் அடையப் பார்ப்பது போல் ஜஸ்டிஸ் 58 தலைவர்கள் என்பவர்.
களும் பார்ப்பனரல்லாத மக்களை பலி கொடுத்து மந்திரி வேலை அடையப் பார்ப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை.
எந்தக் காரணத்திற்காக நாம் காங்கிரசிலும் ஒத்துழையாமையிலும் கலந்து இருந்து எவ்வளவோ வேலைகள் எல்லாம் அதில் செய்தும் நம்மை நம்பி - நம்மை பின்பற்றி சிலரையாவது அதில் சேரும்படி செய்து அவர்க ளையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவிக்கச் செய்து கடைசியில் அதை விட்டு வெளியில் வந்து அதன் சூக்ஷிகளையும் சுயநலங்களையும் வெளிப் படுத்தினோமோ, அந்தக் காரணங்களையே நாம் இப்போது ஜஸ்டிஸ் ககஷி என்பதில் காண நேருமானால் எப்படி அவைகளைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்க முடியும்? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
திரு காந்தியை விட்டு நமது ஆயுட்காலம் வரை பிரிய சமயம் வாய்க்காதென்றே கருதி இருந்தோம். அவரது கட்டளையை தட்டிப் பேசுவது பெரிய தோஷம் என்று கூட எண்ணி இருந்தோம். அவர் காரியத்திற்காக உயிரை விட நேர்ந்தால் அதுவே நமது முடிவான பேறு என்றும் கருதி இருந்தோம். காங்கிரசைத் தவிர வேறு ஸ்தானபங்களே உலகில் இருக்கக் கூடாது என்றும் எண்ணி இருந்தோம்.
அப்படி யெல்லாம் கருதி இருந்தவைகளை அடியோடு விட்டு விட்டு வெளியேறி வந்து இப்போது தாராளமாய் அவை எல்லாவற்றையும் எதிர்க் கின்றோம். அவைகளின் சூட்சிகளையும் குற்றங்களையும் அறியாமை களையும் தாராளமாய் வெளிப்படுத்துகின்றோம்.
அப்படி இருக்க இந்த சூட்சிகளை மாத்திரம் நாம் எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்? என்பதை யோசித்து பாருங்கள். இதனால் நமக்கு கெட்ட பேர் வரலாம். தப்பெண்ணங்கள் கற்பிக்கப்படலாம். இவைகளைப் பற்றியெல்லாம் நமக்குச் சிறிதும் கவலை இல்லை. ஏனென்றால் நமது
லட்சியம் இவைகளில் எதுவுமல்ல என்பதேயாகும்.
ஜஸ்டிஸ் கட்சிக்கும் சுயமரியாதைக் கட்சிக்கும் ஏதாவது சம்மந்த மிருக்க வேண்டுமானால் எதை உத்தேசித்து இருக்க வேண்டும் என்பது
முதலில் கவனிக்கத்தக்கது. முதலாவது சுயநல சூக்ஷி இல்லாமல் இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் சூட்சிக்கும் ஜஸ்டிஸ் தலைவர் சூட்சிக்கும்
கால்மாத்துக் கூட வித்தியாசமில்லாமல் இருக்கத்தக்க நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றதானாலும் காங்கிரசை விட இதில் சற்று நமக்கு அவசிய மான கொள்கைகள் இருக்கின்றது என்கின்ற சமாதானமும் இருந்தது. ஆனால் இப்போது அதன் கொள்கையே அழிக்கப்படும் போது அதன் தலைவர்கள் எவ்விதமான தாட்சண்யத்திற்கும் பாத்திரமானவர்களாவார்கள்?'
ஜஸ்டிஸ் கட்சி இப்போது போகின்ற நிலைமையில் அதன் மூலம் ஜாதி வித்தியாசம் ஒழியும் என்கின்ற நம்பிக்கையைக் கொள்ள சிறிதும் இட மில்லை. ஏனெனில் தாழ்த்தப்பட்ட ஜாதியார் சமத்துவமடைவதற்கு அவர்க
ளுக்கு அதிகமான சலுகை காட்டா விட்டாலும் அவர்களுக்கு உரிய உரிமை யாவது கொடுக்க வேண்டும் அல்லவா? அதற்கும் ஆபத்து வரும் படியாக வகுப்பு வாரிப் பிரதி நிதித்துவக் கொள்கையில் கையை வைத்தாகி விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அதை ஒழிப்பதற்கு பார்ப்பனர்கள் சொல்லும் காரணத்தையே சொல்லப்பட்டாய் விட்டது.
பணக்காரர்கள் ஆதிக்கமாவது குறையுமா என்று பார்த்தால் அதற்கும்
சிறிதும் இடமில்லாமல் இருக்க இருக்க பெரிய பணக்காரர் இடமே தலைமை ஸ்தாபனம் போகப் பார்க்கின்றது. படித்தவர் ஆதிக்கமாவது குறைகின்றதா என்று பார்த்தால் அதுவும் அதாவது ஜாதியும் பணமும் உள்ளவரிடம்
குடி அரசு - 1980 (1) 282
இருக்கும் படிப்புக்கார ஆதிக்கமேதான் வளரும்படியான நிலைமையில் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரி படிப்புக்காரர்கள் ஆதிக்கமானது மற்ற சாதாரண படித்த மக்களுக்கு பெரிய ஆபத்தாவதோடு பார்ப்பனர்.
படிப்புக்காரர் ஏகபோக உரிமைகளைவிட இவர்களது ஆதிக்கம் தலைமுறை தலைமுறை ஏகபோக உரிமையாக நிலைநிற்க ஏற்பாடுகள் பலப்பட்டுவிடும். ஆகவே இதானது விலங்கைத் தரித்து குட்டையில் மாட்டிக் கொண்டது போலவேயாகும். பார்ப்பனர்கள் இக் கட்சியில் இல்லாமலிருந்தாலாவது இக் கட்சியார் பார்ப்பனர்களுக்கு பயந்து கொண்டாவது சற்று ஏழைகளையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் கிருஸ்தவ முகமதிய சமூகத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டியதாக இருக்கும். இனி ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பணக்காரனும், பார்ப்பானும், படித்தவனும் ஒன்று சேர்ந்து விட்டால் பிறகு எதற்காக இவர்கள் மற்றவர்களைக் கவனிக்க. வேண்டிய அவசியம் வரும்? என்பதை கவனித்துப் பாருங்கள். சீக்கிரத்தில் சர்க்காரும் இக் கக்ஷியில் சேர்ந்து விடப்போகின்றது. எப்படி என்றால் பல வெள்ளைக்காரர்களும் கவர்னரும் இந்த சூட்சிக்கு ஆசி கூறியாய் விட்டது. வயிற்றையும் வாயையும் கட்டிபார்ப்பனரல்லாத ஏழை மக்களும் தாழ்த்தப் பட்டவர்களும் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவும் வைத்து தங்கள் நன்மை யையும் கவனிக்கப்படும் என்று கருதி பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து அதற்கு ஒரு யோக்கியதையும் உண்டாக்கி ஏதோ சற்று எல்லா, வகுப்புக்காரர்களுக்கும் சம சுதந்திரமும், சம அரசியல் பங்கும் சமத்துவமும் கிடைக்கும் படியான நிலைமை தேர்தல்
களிலும் உத்தியோகத்திலும் ஏற்பட்டவுடன் தங்களுக்கே முழுவதும் கிடை யாமல் எங்கு எல்லோருக்கும் பங்கு போய் விடுகின்றதோ என்று கருதி அடியோடு அவர்கள் வயிற்றிலும் வாயிலும் மண்ணும் போடத் தீர்மானித்து இப்போது பார்ப்பனர்களுடன் உறவாடத் துணிந்தால் இக் கூட்டத்தாரிடம் இனி இதை விட வேறு சமூகத் துரோகமும் நம்பிக்கைத் துரோகமும் என்ன எதிர்ப்பார்க்க முடியும்? என்பதை வாசகர்களையே ஊகித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
தவிர இக்கட்சிக்கு ராஜா சர். அண்ணாமலை செட்டியாரை தலைவ ராக்க சென்னைத் தலைவர் ஆகாயத்திற்கும் பூமிக்கும் சூட்சி செய்வதாக பத்திரிகைகளிலும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களிடமிருந்தும் தெரியவருகின்
றது. இதானது குதிரை தள்ளினது மல்லாமல் புதைக்க குழியும் தோண்டிற்று என்ற உதாரணத்திற்குச் சரியான அத்தாட்சியாகும்.ராஜா சர்.அண்ணாமலை அவர்கள் பெரிய இந்து தர்மப் பிரபு - பணக்காரர் - பரம்பரை ராஜா பட்டம் பெற்றவர். இவற்றில் நமக்கு ஆட்சேபனை இல்லை. பார்ப்பனரல்லாதார்.
கட்சித் தலைமைக்கு இந்த யோக்கிதையே தான் அவசியமானதா? என்று கேட்கின்றோம்.
அவருக்கு மகாராஜா பட்டம் வருவதிலாவது செட்டி நாட்டு ஆளுகை
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
யின் பூரா சுதந்திரமும் அவருக்கு கொடுக்கப்படுவதிலாவது அவரது சிலையை முக்கியமான இடங்களில் எல்லாம் நிறுத்துவதிலாவது நமக்குச் சிறிதும் ஆட்சேபனை இல்லை.அதற்குத் தகுந்த அறிவும் யோக்கியதையும் அவரிடம் உண்டு என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.
ஆனால் பார்ப்பனரல்லாத ஏழைமக்கள், இழிவு படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் நன்மைக்காக ஏற்பட்ட ஸ்தாபனங் களை அப்பேர்பட்டவர்கள் வசம் ஒப்புவிக்கிலாமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.பார்ப்பனருக்கு விரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா?
இந்து மதத்திற்கு விரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா?
பணக்காரர்கள் நன்மைக்கு விரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா? சர்க்காருக்குவிரோதமாக ஏதாவது செய்ய அவரால் முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். நமது நாட்டு பணக்காரர்கள் பார்ப்பனர்களைவிட இளைத்தவர்கள் அல்ல என்பதே நமது அபிப்பிராயமாகும். நமது நாட்டு ராஜாக்கள் பார்ப்பனர்களை மந்திரியாகக் கொண்டவர்கள்: நமது நாட்டு பணக்காரர்களோ பார்ப்பனர்களை மந்திரிகளாயும் ஆத்ம சினேகிதர்களாக
வும் கொண்டவர்கள். நாட்டுக்கோட்டை பணக்காரர்களுக்கோ பார்ப்பனர்கள். இன்றியமையாதவர்கள். இப்படி இருக்கையில் பார்ப்பனரையும் இக் கட்சியில் சேர்த்துக் கொண்டு பணக்காரர்களையும் தலைவர் ஆக்கி அந்த ஸ்தாபனத் தையும் அவர்கள் கையில் ஒப்புவித்தும் விடுவதாய் இருந்தால் இதை பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு பார்ப்பனரை சேர்த்துக் கொள்ளுவது என்னும். நெருப்பை வைத்து பணக்காரரை தலைவராக நியமிப்பது என்னும் நெய்யை ஊற்றி ஓமம் வளர்த்து கட்சியை சாம்பலாக்கி அந்த சாம்பலை நெற்றியில் வைத்துக் கொண்டது போலத்தானே ஆகிவிடும். மற்றபடி இதனால் வேறு என்ன பலன் யாருக்கு ஏற்படப் போகிறது என்று கேட்கின்றோம்.
நிற்க, நாம் ஏதோ நெல்லூரில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவும் சில தலைவர்கள் பிரசாரம் செய்வதாகவும் கேள்விப்படுகின்றோம். இது மிகவும் இழிவான செய்கையாகும் என்று வருத்தத்துடன் சொல்லுகின்றோம்.
பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இவர். களுக்கு எப்போதும் சொன்னதில்லை என்பதை உறுதியாக சொல்லுகின் றோம். மனிதத் தன்மை உடையவர்களானால் நிரூபிக்க முன்வரட்டும்.
நாம் பார்ப்பனர்களை கவுன்சில் நடவடிக்கைகளில் மாத்திரம் கலந்து கொள்ள சம்மதம் கொடுத்ததுண்டு. ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சி தலைவர். களுடைய வேண்டுகோளுக்காகவே சம்மதம் கொடுத்ததே ஒழிய மற்ற எந்த காரியத்தையும் உத்தேசித்தல்ல..
அதுவும் எந்த நிபந்தனையின் மீது என்றால்:-
குடி அரசு - 1980 (1) 284
1. எப்படிப்பட்ட பார்ப்பனர்களையும் ஜஸ்டிஸ் கட்சியில் அங்கத்தி னர்களாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
2. எந்த பார்ப்பனரையும் கட்சியின் பேரால் எந்த தேர்தலுக்கும்
நிறுத்தக் கூடாது.
3. பார்ப்பனர்களுக்கு ககஷியின் சார்பாய் ஓட்டு சேகரிக்கக் கூடாது.
என்பனவாகிய நிபந்தனைகளின் பேரிலேயே ஒழிய வேறில்லை. இவை 13-10-29 தேதி மாலை 5, மலர் 23 குடி அரசில் காணலாம். நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்பதாக சர். எ. பி. பாத்ரோ தீர்மானம் கொண்டு வந்த பொழுது திரு. ஈ.வெ.ராமசாமி பேசியதாவது:-
“பார்ப்பனர்களை தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்க்க முடியாதென்றும் கமிட்டி வைத்து இஷ்டப்பட்டவர்களை மாத்திரம் கமிட்டியின் மூலம் தெரிந்தெடுக்கலாமென்பது அர்த்தமற்ற
தென்றும் இப்பொழுது இருப்பது போலவும் முன் நாம் ராஜியை முன்னிட்டு மந்திரி கட்சியாரிடமும் திரு. நடேசன் கட்சியாரிடமும்
ஒப்புக் கொண்டு நிர்வாக சபை கூட்டத்திலும் ஏகமனதாய்ச் செய்த தீர்மானத்தின் படியும் மற்றவர்களுக்கு நமது இயக்கத்தின் சார்பாக வாக்குக் கொடுத்திருக்கின்ற படியும் சட்டசபையில் மாத்திரம் சேர்த்
துக் கொள்ளலாம் என்றும், அப்படி சேர்த்துக் கொள்வதிலும் உறுதியா னதும் வெளிப்படையானதுமான நிபந்தனை இருக்க வேண்டு மென்றும், அதாவது எந்தக் காரணம் கொண்டும், தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் சேர்ப்பதில்லை என்பதும், எந்த காரணத்தைக் கொண்டும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பாக சட்டசபை தேர்தல்களில் பார்ப்பனர்களை நிறுத்தக் கூடாது என்றும் விவரமாய் தெரிவித்து விடவேண்டும் என்றும் தான் அந்த நிபந்தனையின் மேல் தான் இதை ஆமோதிப்பதாகவும், மற்றபடி சர். பாத்ரோ தீர்மானத்தை யாரும் கண்டிப்பாய் ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும், ஏனெனில் மக்கள் பிறவியில் ஜாதி உண்டென்கின்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்த பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்வது முடியவே முடியாது என்றும், அதுவரை எந்த பார்ப்பனர் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் நமக்கு பயன்படாதென்றும் பல காரணங்களையும் உதாரணங்களையும் எடுத்துக் காட்டினார். உடனே தலைவர் ஓட்டு எடுத்ததும், சர். பாத்ரோ தீர்மானத்திற்கு சுமார்
5,7 ஓட்டுக்களும் எதிரிடையாக நூற்றுக்கணக்கான ஓட்டுக்களும் இருந்ததால் அது தோல்வியுற்றது என்று பேசி இருக்கின்றோம்.
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
இதுவும் கூட சில தலைவர்கள் மந்திரிகளைத் தங்கள் ககஷியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசையின் பேரில் தான் அவர் களிடம் ராஜி பேசி ஜஸ்டிஸ் பத்திரிகை நடைபெற வேண்டிய பொறுப்பை அவர்கள் மீது சுமத்தி அந்தக் காரணங்களை எல்லாம் நமக்குச் சொல்லி நமது கடி விதிகளுக்கும் ஆதி கொள்கைகளுக்கும் எவ்வித விரோதமும் இல்லை என்று தெரிவித்துக் கொண்டதின் பேரில் நாம் சம்மதித்ததே தவிர வேறில்லை. என்று உறுதி கூறுவோம். மறுப்பதனால் யாராவது வந்து மறுக்கட்டும், சமாதானம் சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
இந்த நிலையில் நம்மிடம் இஷ்டப்படி வேலை வாங்கிக் கொண்டது மல்லாமல் இப்போது இதை திருத்திக் கூறி நம்மீது குற்றம் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதாய் இருந்தால் நாம் சும்மாய் இருப்பதா? என்று கேட்கின் றோம். இது சம்பந்தமாக இன்னும் பல இரகசியங்கள் கூட உண்டு. ஆனால் அவை இப்போது தேவையில்லை. நம் தலையில் அடிக்கப் பார்ப்பதால் இரண்டு கையையும் தூக்கி அடியை தடுத்துக் கொள்வதற்காக இதைச் சொல்லுகின்றோம்.
தவிர நம்மைப் பற்றி மற்றொரு பழிப்புப் பிரசாரம் செய்யப் படுகின் றது. அதைப் பற்றி பின்னால் விளக்குவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.06.4930
குடி அரசு - 1980 (1) 286
அருஞ்கால் ALITIHET
அப்பிராமணர்: - பார்ப்பனர் அல்லாதார்
அப்புக் கட்டல் - சப்பைக்கட்டு பேச்சு
கிருத்திரம் - வஞ்சனை, பொய்
குச்சுக்காரிகள் - விலைமகளிர்
சர்வ தயாபரத்துவம் - மிக்க அருளுடைய
சுவாதந்திரியம் - சுதந்திரம், தன்விருப்பம், விடுதலை தாக சாந்தி - நீர்வேட்கையைப் போக்குதல்
தாஷ்டீகம் - உடல் நலம், உடல் உறுதி
துராசாரம் - அறநெறிக்கு எதிராக நிர்தாட்சண்யம் - இரக்கமின்மை
பிதுராஜ்ஜித - தந்தை வழி சொத்து, முன்னோர் சொத்து போஷகர் - புரவலர், காப்பாளர். மூர்த்தண்ணியமாக - ஊக்க மிகுதி
யாதாஸ்து - அறிக்கை, குறிப்பு விநயமாக - பணிவாக, அவையடக்கமாக
விரோதபாவம் - எதிர்ப்பு மனப்பான்மை
க்ஷணம் - நொடி
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 10
குடி அரசு - 1930 (1) 288