Kudi Arasu — 1929, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1929-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 9
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1929-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 344
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
மலேசியாவில் சுயமரியாதை இயக்கம்
பெரியார் மலேசியா பயணத்தைத் தொடங்கினார். காலடி வைப்பதற்கு முன்பே எதிரிகள் பரப்பிய பொய்ப்பிரச்சாரம் பரபரப்பை உருவாக்கி அது வேபயணத்தை வெற்றியாக்கியது. நீதிக்கட்சி நெல்லூரில் கூடிய மகாநாட்டில் பார்ப்பனர்களையும் கட்சியில் சேர்க்க முயன்றதை பெரியார் கண்டித்தார்.
“சாதிமுறை சமூகத்தில் நீடித்து இருக்கும் வரை நீதிக்கட்சியில் பார்ப்பனரைச் சேர்ப்பது என்பதைப் பற்றி நினைப்பதே பயனற்ற வேலை
யாகும்.”
அன்று பெரியார் தந்த எச்சரிக்கையை பிற்காலத்தில் காற்றில் பறக்க விட்ட திராவிடக் கட்சிகள் அதற்கான விலைகளைத் தந்துகொண்டிருப்பதை வரலாறு உணர்த்துகிறது. கடவுள்,மதம், சாஸ்திரங்களைக் காட்டி சமூகமாற்றங் களைத் தடுத்துநிறுத்திய பார்ப்பனர்கள், அதற்குப் பிறகு பழக்க வழக்கங்கள்
((Customs and usages) என்றுகூறி முட்டுக்கட்டை போடுவதை பெரியார் சரியா
கச் சுட்டிக்காட்டி எச்சரித்தார். அதே முட்டுக் கட்டைதான் பிறகு 1950 இல் உருவான அரசியல் சட்டத்தில் ஏற்றப்பட்டு அதன் காரணமாக பல முற் போக்கு சட்டங்கள் இக்காலம் வரை முடக்கப் படுவதைக் காண முடிகிறது.
கோவை சிறையிலிருந்த போது பெரியார் இந்துமதத்திலிருந்து வெளி யேறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டுவரும் முயற்சிகளை: மேற்கொள்ள விரும்பினார். ஆனால் வெளிவந்த பிறகு பார்ப்பனர்களின். நடவடிக்கைகளைக் கண்டு இந்துமதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தான் வந்து விட்டதாக கூறுகிறார். ஈரோடு “உண்மை நாடு வோர் சங்கத்தில் பெரியாரின் ஆற்றிய உரை இத்தகவலைத் தெரிவிக்கிறது.
“என்னுடைய உரிமையைக் கொடுக்கிறாயா அதற்காக உயிர் விடட் டுமா என்கிற கொள்கையுடைய மக்கள்தான் எங்கும் வெற்றி பெற்றிருக் கிறார்கள். இந்தப்படி நடக்கின்றாயா அல்லது ஜெயிலில் பிடித்துப் போடட் டுமா என்று சொல்லும் அரசாங்கம்தான் சீர்திருத்தங்கள் செய்திருக்கிறது”
என்ற பெரியாரின் கட்டுரை வரிகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
- பதிப்பாளர்
ஹைாருணடக்கம்
மரகதவல்லி மணம்
பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்
அனுதாபம்
திரு. சொ.முருகப்பர்
தமிழர் சங்கம்
வரதராஜுலுக்கும் ஒரு கட்சி
திரு. ஆர்.எஸ். நாயுடுவின் பெருந்தன்மை
திருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம்
தமிழ்நாடு மாகாண மகாநாடு ஈரோடு ஆலயப் பிரவேசம்
காங்கிரசின் யோக்கியதை
தேவஸ்தானக் கமிட்டி
சம்மத வயது கமிட்டி சென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு
சென்னை காங்கிரஸ் கமிட்டி
கோவில் பிரவேசம்
ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு
கடவுளும் மதமும் (1)
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
செங்கற்பட்டு ஜில்லாவில் பார்ப்பனீப மகாநாடு
திரு. தண்டபாணியின் தொல்லை.
காந்தியின் கண் விழிப்பு
கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா
23.
குடி அரசு - 1929 @)
வைதிகர்களின் இறக்கம்
கடவுளும் மதமும் ( 2 )
ஒரு பாலிய விதவையின் பரிதாபம்!
மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி
திரு.நடராஜன்
மதிப்புரை - “விமோசனம்”
காங்கிரசும்- தேசியமும்
திரு. மகமது நபி பிறந்த நாள் கொண்டாட்டம் சுயமரியாதை இயக்கம்.
தேசீய இயக்கம்
“சித்தாந்தம்” ஆசிரியரின் கொடுமை
திருவாங்கூரில் கோஷா விலக்கம்
வேதாரண்யத்தில் தேசிய (பார்ப்பனர்) மகாநாடு
கதர் புரட்டு
பார்ப்பனப் புதிய தந்திரம் உஷார்! உஷார்!!
“சித்தாந்தம்” ஆசிரியரின் சூன்ய நிலை சுயமரியாதைத் திருமணங்கள்
ஐய வினாவுக்கு விடை
நெல்லூர் மகாநாடு
மீண்டும் படேல்
சர்க்காருக்கு ஜே!
நமது மாபெருந்தலைவர்களின் உருவப்படத் திறப்பு விழா சுயமரியாதை
கதர்புரட்டு
காந்தி ஜயந்தி புரட்டு
நெல்லூர் மகாநாடு எனது தோல்வி
ஈரோடு உண்மை நாடுவோர் சங்கம்
பார்ப்பனரின் தேசியம்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
53. கார்ப்பொரேஷன் தேர்தல்
223
54. தீபாவளி பண்டிகை பார்ப்பன சூக்ஷி
225
55. பூனாவில் ஆலயப்பிரவேசம்
226
56. இராஜகோபாலாச்சாரியின் தேசீயம்
234
57. விதவா விவாகம்
238
58. இந்தியாவில் மிஷனெரி உலகம்
243
59. மதப்பித்து
244
60. சுயமரியாதை இயக்கத்தின் பலன்
250
61. “இராமாயணத்தின் ஆபாசம்”
253
62. விமல போதம்
255
63. இர்வின் பிரசங்கம்
256
64. புதியசகாப்தம்
263
இந்தியக் கடவுள்கள்
266
2
66. இந்தியாவின் பிரதிநிதிகள் யார்?
270
67. இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்
273
68. பெண்கள் விடுதலைக்கு ஜே! ஜே!! ஜே!!!
278
69. சென்னைமந்திரிகளை பின் பற்றுதல்
285
70. கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தல்.
287
71. மணமுறையும் புரோகிதமும்.
289
72. திருப்பதி வெங்கிடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை
291
73. இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்
292
74. இந்திய ராஜாக்களும் மடாதிபதிகளும்
75. திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ் வாசக சாலை திறப்பு விழா
76. சுயநல வெறியர்கள் மகாநாடு
77. சோமசுந்திரம் செட்டியார்
78. நமது மலாய் நாட்டு விஜயம்
79. திரு.குருசாமி- குஞ்சிதம் திருமணம்
80. துன்பத்தில் துயருறும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்
குடி அரசு - 1929 @)
“தீண்டப்படாதார்”கள் நிலைமை மேயோ கூற்று மெய்யா- பொய்யா?
81.
331
82.
336
விவாகரத்து திரு.வேணுகோபால் நாயுடுவின் மரணம்.
337
&2 8
341
அருஞ்சொல் பொருள்
342
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
குடி அரசு - 1929 ()
ரிஜிஸ்டர். தெ, 2041
உட் விம்பம் அங்கும் 143 8. 3 ன டத்த விணபபாத்துக்க நனி வழ்க
மால 5 சென்னை, சுக்லெணு GRS 86௨ (7--7--29) ஞாயிற். சச்ழெமை: | மலர்.
இல்வாழ்க்கையின் | $ 822 இரகசீயங்கள். ST e Tgsteries of Wedded L. @ ggimreiss
- இல்வாழ்க்கையில் ஈடு ழ்க்கை க
(மக சண், கல்த்
குமசன்
அதினுதனம்! மிக ஆச்சரியம் 11 [தம் 100 கா முதல் 300 கா வசை சபாழிமகங்கடவ சறியசைஸ் தையல் இயத்திசம்
எவள் கனிய சனத அகம் காக த்த களாகப் R e
த்த. ந க்களை ததன் G2l செய்கனம். தைமத்களாச செல்கள் வெட்க சன் s, அைத்கா்கும் 1 S e
ச்சே sraceug = டமில் போட்ட ஜாம்வதையாகப் யாகில் செய்த. அனுப்பப்படும், § கருவும் காரண்கயுள் வில ரூபா 4-12-0, தபால் செலவு வே, வனே எழுதுங்கள் க்ஷ கறட EMPORIUM George Town, Madras.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
குடி அரசு - 1929 @)
மரகதவல்லி மணம்
மறுமணமும் கலபையபு மணமும் கலந்த காதல் மணம்
அருமை மணமக்களே! இங்கு கூடியுள்ள சகோதரிகளே! சகோதரர் களே! இங்கு நடைபெற்ற மணத்தைப் பார்த்த பின்பு சீர்திருத்த மணமென்பது எத்தகையது என்பது இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். பண்டைக் காலத்திலும் நம் நாட்டில் இம்முறையில்தான் மணங்கள் நடை பெற்று வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இடையில் இம்முறை எப்படி மாறிற்று என்பதுதான் அதிசயமாய் இருக்கின்றது. இப்போது நம் நாட்டில் நடைபெற்றுவரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாக கொண்டதுமாய் நடைபெறுகின்றன.
மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காப்பாற்று
தற்குப் பலர் முன் உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மண முறை யானது தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங் களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டுவிட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சி யாலும் ஏற்படவேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய்விட்டது. அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும் மாறிவிட்டது. மணமக்கள் ஒருவரை ஒருவர் தாங்களாகவே தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டியதற்குப் பதிலாக வேறு ஒருவர் தெரிந் தெடுத்து மணமக்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டியதாயிருக்கின்றது. அநேக மணங்களில் மணம் நிகழும்வரை, அதாவது தாலியைப் பெண்: கழுத்தில் கட்டும் வரை ஆண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று பெண்: ணுக்கும், பெண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று ஆணுக்கும் தெரியா மலேயே இருக்கின்றது. சில மணங்களில் தாலி கட்டி சில நாள் வரை கூட தெரிவதற்கில்லாமல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் முன்னைக் கூட்டியே தெரியவேண்டாமா என்று யாராவது கேட்டால், “அன்று பிரமன் போட்ட முடிச்சை இனி அவிழ்த்து வேறு முடிச்சு போடவா போகிறான்” என்று சமாதானம் சொல்லி விடுகின்றார்கள்.
எங்கள் பக்கங்களில் கல்யாணப் பெண்கள் இரண்டு கைகளைக் கொண்டும் கண்களை நன்றாய் பொத்திக் கொண்டும் தேம்பித் தேம்பி அழுது
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கொண்டும் இருக்க, மற்றொரு பெண் கையைப் பிடித்து தரதர வென்று மணவறைக்கு இழுத்துக் கொண்டு வருவது வழக்கம். தாலி கட்டுவதற்குக் கூட கைகளைப் பிடித்து விலக்கித்தான் கட்ட வேண்டும். யார் தாலி கட்டினதென்று பெண்ணுக்கு தெரியவே தெரியாது. இப்படி அழுது கொண்டும் கண்களை மூடிக் கொண்டும் இருக்கும் பெண்கள்தான் நல்ல உத்தமப் பெண்கள் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கு கல்யாணம் என்பது தன்னை மற்றொரு வீட்டிற்கு அடிமையாய் விற்பது என்பது அர்த்தமாயிருக்கின்றதேயொழிய ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு செய்யும் காரியம் என்பது இன்னமும் அநேக பெற்றோர்களுக்குத் தெரியவே தெரியாது.
கல்யாணச் சடங்கு நடந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் போது பெண் வீட்டாரும். நெருங்கின சுற்றத்தாரும் அழுது கொண்டும். பெண்ணும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் தான் அனுப்பப்படுகின்றது, “கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன்”
என்று சொல்லி, புருஷன் சொன்னபடியும், மாமி, மாமன், நாத்தி, கொழுநன் சொன்னபடியும் நட என்று பெண்களுக்கு படிப்பிக்கப்படுகின்றது. இம்மாதிரி. உபதேசத்தில் கட்டுப்பட்ட பெண்கள் தங்களை மாமியின் வேலைக்காரிகள். என்று எண்ணிக் கொள்ளுவார்களே தவிர இயற்கை இன்பத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
வாழ்க்கை, மணம், இன்பம், காதல் என்பவைகள் ஒவ்வொரு தனி மனிதனின் உரிமையாகும். அன்றியும் அவை அவரவரின் தனி இஷ்டத்தைப் பொறுத்ததுமாகும். இவற்றில் அன்னியருக்குச் சற்றும் இடமில்லை. ஆனால் இப்போது இவை மற்றவர்களுடைய திருப்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றபடி நடக்கின்றது. மணமக்களுக்கு தங்கள் தங்கள் காதலின் மேல் ஏற்படும் மணம்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்க முடியும்.
ஆதலால் இன்று நடந்த மணமானது உண்மையான சீர்திருத்த மணமாகும். இங்கு வந்திருக்கும் பெரியார்களையும் அன்பர்களையும் பார்க்கும்போது இம்மாதிரி மணத்திற்கு இதுசமயம் நாட்டில் உள்ள பேராதரவு நன்கு விளங்குகின்றது.
திரு.முருகப்பர் அவர்கள் நாட்டின் நிலையையும் தேவையையும் நன்கறிந்தவர். அவருடைய எழுத்தும் பேச்சுமே அவருடைய தெளிவைக் காட்ட போதுமானதாகும். சென்ற பத்து பதினைந்து வருஷங்களாக இவர்.
சீர்திருத்தத் துறையில் உழைத்து வருபவர். சீர்திருத்த முறையைச் சொல்லில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டிவிட்டார். நாட்டுக்கோட்டை நகரத்தார் களில் திரு.முருகப்பர் - திரு.பிச்சப்பா சுப்பிரமணியம் முதலியவர்கள்.
மிகுதியும் உழைத்து வந்திருக்கின்றார்கள். இப்போது அந்த சமூகம் எல்லாத் துறையிலும் முன்போக்கடைந்து நாட்டுக்கு வழிகாட்டியாய் இருப்பதற்குப் பெரிதும் இவர்கள் போன்றவர்களே பொறுப்பாளிகளாவார்கள். பொது
குடி அரசு - 1929 @) 12
வாகவே நாட்டில் சீர்திருத்தத்திற்கு அதிக ஆதரவு ஏற்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் நிலைமை அனுகூலப்பட்டுக் கொண்டே வருகின்றது. சாதாரணமாக சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் எவ்வளவோ பெரிய மனமாறுதல் ஏற்பட்டு இருக்கின்றது.
சென்ற இரண்டு மாதத்திற்கு முன் நடந்த திரு.அருணகிரி திரு சுந்தரி திருமணமும் இம்மன மாறுதலுக்கு உதாரணமாகும்.
திரு.மரகதவல்லி அம்மாளும் மிகவும் பாராட்டற்குரியவராவார். அவர்களைப் பட்டுக்கோட்டையில் சந்தித்த போது அவ்வம்மையார் தமது அபிப்பிராயத்தை சிலரிடம் தெரிவித்தார்கள். நாம் அதை அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டோம். அதில் அவர்களுக்கு அனுகூலம் கிடைக்காததால் தாமாகவே முயற்சி எடுத்துக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நம்நாட்டு விதவைத் தன்மையின் கொடுமையை நன்றாய் அனுபவித்தவர்களானதாலும்,“குடி அரசு” முதலிய பத்திரிகைகளை பார்த்து வந்ததனாலும், அவர்கள் தைரியமாய் முன்வர: நேர்ந்தது. மற்றபடி உலகத்தில் எத்தனை பெண்கள் இம்மாதிரி கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பதை நினைத்தால் மனம் பதறும். திரு.காந்தி அவர்களைச் சில “விதவைகள்” ஒன்று கூடி தங்கள் கஷ்டத்திற்கு வழி என்ன என்று கேட்டபோது, அவர்கள் “உங்கள் இஷ்டத்தை உங்கள் தாய் தகப்பன்மாரிடம் சொல்லிப் பார்த்து அவர்கள் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்யவில்லையானால் தைரியமாய் வெளிக்கிளம்பி உங்களுக்கு ஏற்ற மணாளனை நீங்களே தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அந்த உபதேசத்தை முறைப்படி திரு.மரகதவல்லியே முதன் முதலாய் நிறைவேற்றி இருக்கின்றார். அதாவது, திரு.மரகதவல்லிக்கு இது இரண்டா வது மணமாகும். முதல் மணக் கணவன் காலமாய்விட்டார். மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இன்று தமது இச்சையை நிறைவேற்றிக் கொண்டார். இதுதான் இயற்கைத் தத்துவம். எப்படி எனில், ஒரு புருஷன் தன் மனைவி இறந்து விட்டாலோ அல்லது அது தனக்கு சரிப்படாவிட்டாலோ உடனே மறுமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறான். மனைவி காயலாவாய் இருக்கும்போதே பிழைக்காது என்று தெரிந்தால் வேறு பெண்ணை மனதி லேயே தேடுகின்றான். மனைவி இறந்து போனவுடன் மறு கல்யாணத் திலேயே கவலையாய் இருக்கின்றான். பந்துக்களிடம் சென்று “அணைந்து போன விளக்கை மறுபடியும் ஏற்றிவைக்க வேண்டியது உங்கள் கடமை”, என்று சொல்லி பெண் கேட்கின்றான். வருஷத்திற்குள் மறு கல்யாணம் செய்து கொள்ளுகின்றான். அப்படியிருக்க, பெண்கள் மாத்திரம் ஏன் அந்தமாதிரி செய்து கொள்ளக் கூடாது? ஆகவே, திரு.மரகதவல்லி மற்ற பெண்களுக்கு ஒரு வழி காட்டியாக துணிந்து மணம் செய்து கொண்டதற்கு
நான் மிகவும் போற்றுகின்றேன். மணமக்கள் இருவரும் நல்ல கல்வியும் அறிவும் உள்ள தக்க ஜதையானதால் இன்று இவ்வைபவத்தைக் கண்டு
12 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஆனந்திக்க முடிந்தது. அன்றியும் இம்மண வைபவம் ஆடம்பரமின்றியும் வீண் சடங்குகளின்றியும் வெகு சிக்கனமாகவும் சுருக்கமாகவும் முடிவு பெற்றது மிகவும் போற்றத்தக்கதாகும். இம்மணமக்கள் இனியும் இவ்வித காரியங்களுக்கு வழிகாட்டியாய் இருந்து ஒத்த இன்பத்துடன் வாழ்ந்து உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றேன்.
குறிப்பு :29.06.1929 ஆம் நாள் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் திரு முருகப்பர் அவர்களுக்கும் திரு மரகதவல்லி அவர்களுக்கும் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களைப் பாராட்டி சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 07.07.4929
குடி அரசு - 1929 @) 14
யார்ப்பணரால்லாத மாணவர் யழப்பிண்
கஷ்டமும் யார்ப்பண உயாத்தியாயர்கணிண் வகா௫ுமையும்
எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமை யானது சகிக்க முடியாத அளவில் பெருகிக்கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்பனரல்லாதாராயிருந்தும் ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங்களின் நிர்வாகஸ்தர்களும் பார்ப்பன ரல்லாதாரராகவே இருந்தும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தியானதாகக் காண்பதற்கில்லை.இனி சீக்கிரத்தில் நிவர்த்தி யாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருதுவதற்கில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளால் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் அவர்களது சலுகைக்குப் பாத்திரமான உபாத்தியாயர்களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும்,
நியாயமாகவும் பேசுவோமேயானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்.
பார்ப்பனர்கள் மூலம் மக்களுக்குக் கல்வி போதிக்க எண்ணுவதை விட கல்விச்சாலைகளை அடைத்துவிடுவது மேலென்று கூடச் சொல்லத் துணிவோம். ஏனெனில் முதலாவதாக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை உயர்ந்த சாதி என்றும், அதாவது வருணாச்சிரமப்படி
தாம் “பிராமண ரென்றும், மற்றவர் “சூத்திர” ரென்றும் எண்ணிக் கொண்டிருப் பவர்கள். எந்த கொள்கைப்படி தன்னை “பிராமணரென்றும்” மற்றவனை “சூத்திர'ரென்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றார்களோ, அதே கொள்கை யின்படி பிராமணன் “சூத்திரனை”ப் படிக்க வைக்கக் கூடாதென்றும், “சூத்திரன்” படித்தால் வருண தர்மம் கெட்டுப் போகுமென்றும், பிராமண னுக்கு ஆபத்தாய் முடியுமென்றும் “சூத்திரனை”ப் படிக்க வைத்தப் பிராமணர் “நரகத்தை அடைவார்” என்றும் கருத்துப்பட ஆதாரங்கள் இருக்கின்றன.
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இந்தக் கொள்கையை மனப்பூர்வமாக நம்பின பார்ப்பனர்கள். உபாத்தியாயராயிருந்தால் பார்ப்பனரல்லாத பிள்ளைகளை அவர்கள் படிக்க விடுவார்களா? படித்தாலும் பாசாக சம்மதிப்பார்களா? என்பதை வாசகர்களே யோசித்து முடிவு கட்டிக்கொள்ள விரும்புகின்றோம்.
கல்வியில் இருக்கும் சூதுகள் அநேகமாக நம்மவர்களுக்குத் தெரியாதென்றே சொல்லலாம். உதாரணமாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் பி.ஏ.பாஸ் செய்வதென்றால் பிள்ளைகளுக்கு 22, 23, 24 வருடங்களாகி விடுகின்றன.ஆனால் பார்ப்பனப் பிள்ளைகள் 18,19,20 வயதிற்குள் பி.ஏ.பாசு செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? என்பது நம்மவர்களுக்கு தெரியுமா? யாரையாவது காரணம் கேட்டால், “அது பிராமணப்பிள்ளை,. அதற்குப் படிப்பு சீக்கிரம் வருகின்றது. நம்ம பிள்ளை ரொம்பவும் மந்தம்... அதனால் சீக்கிரம் வருவதில்லை” என்று ஒரு வார்த்தையால் பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் நம் பிள்ளைகளும் ஒரு வருடமாவது தவறாமல் ஒவ்வொரு வகுப்பிலும் பாசு ஆகிக்கொண்டே போனாலும் எப்படியும் பி.ஏ. பரீட்சைக்குப் போக 22 வயதாய் விடுகின்றது. ஒன்று அல்லது இரண்டு வருடம் தவறினால் இருபத்து நான்கு வயதாய் விடுகின்றது. மூன்று வருடம்
தவறினால் இருபத்தைந்தாய் விடுகின்றது. பிறகு சர்க்கார் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்களாகி விடுகின்றார்கள்.
ஆனால் பார்ப்பனப் பிள்ளைகளோ ஒன்று இரண்டு வருஷம் தவறினாலும் கூட 20, 21-ல் பி.ஏ. படித்து முடித்து விடுகின்றார்கள். இதன் ரகசியம் என்னவென்றால் நம் பிள்ளைகளை 7-வது வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி அரிவரி வகுப்பில் சேர்க்கின்றோம்.7-வது வயதில் அரிவரியில் சேர்ந்தால், அவன் தவறாமல் பாசு செய்தால்கூட 22-ல்தான் பி.ஏ. பரீட்சைக்குப் போக முடியும். ஏனென்றால் அரிவரி வகுப்புக்கும் பி.ஏ. பாசு செய்யும் வகுப்புக்கும் இடையில் 15 வருஷம் வேண்டியிருக்கின்றது. அதாவது அரிவரியில் இருந்து 4-வது வகுப்புக்கு ஐந்து வருடமும், 4- வதிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. அல்லது 6-வது பாரத்திற்கும் 6 வருஷம். அதிலிருந்து பி.ஏ.க்கு 4 வருஷம் ஆகவே தவறாமல் பாசு செய்தாலும் 15 வருஷ சாவகாசம் வேண்டியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் குழந்தைகளை 5-வது முதலே வீட்டில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்து ஆறாவது வயதிலோ அல்லது ஏழாவது வயதிலோ பள்ளிக் கூடத்திற்குக் கொண்டுபோய் முதல் பாரத்தில் சேர்த்து விடுகின்றார்கள். தலைமை உபாத்தியாயர்கள் பார்ப்பனர்களானதால் கணக்கில் சாதாரண 2 கேள்வியும்
இங்கிலீஷில் இரண்டு வார்த்தைக்கு அர்த்தத்தையும் கேட்டுவிட்டு “முதல் பாரத்திற்கு லாயக்கு” என்று சொல்லி விடுகின்றார்கள். இதில் அவர்களுக்கு ஐந்து வருடப் படிப்பும் காலமும் செலவும் மீதியாகி விடுகின்றன.14 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு எடுப்பதில்லை. என்கின்ற நிபந்தனையினால் பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை முதல்
குடி அரசு - 1929 @) 16
பாரத்தில் சேர்க்கின்றார்கள். அந்த நிபந்தனையும் இல்லாதிருக்குமானால் மூன்றாவது பாரத்தில் கூட சேர்த்து விடுவார்கள். தவிர 18, 19-ல் அவர்கள். பி.ஏ.பாசு செய்து விடுவதால் 25-வது வயது வரைக்கும் 5 அல்லது 6 வருட காலம் உத்தியோகம் தேட அவர்களுக்குச் சாவகாசமிருக்கின்றது.ஆகவே அவர்கள் பி.ஏ. படித்து விட்டால் எப்படியும் யாரையாவது பிடித்து என்ன செய்தாவது உத்தியோகம் சம்பாதித்துக்கொள்ள போதிய செளகரியம்
இருக்கின்றது. நம்முடைய பிள்ளைகளோ சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால் தலைமை உபாத்தியாயராயிருப்பவர், “இவன் ரொம்பவும்
சின்னப் பையன். இன்னும் ஒன்று இரண்டு வருடம் பொறுத்து அப்புறம் கூட்டிக் கொண்டுவாருங்கள்” என்று சொல்லுவதும், “குழந்தைகள் நன்றாய் ஆடிப்பாடி விளையாடட்டுமே, நன்றாய் எட்டு வருடம் ஆன பின்பு பள்ளியில் வைத்தால் போதாதா? ஏன் இப்படிக் குழந்தைகளை வதைக்கின்றீர்கள்'” என்று “பரிதாபப் பட்டு” திருப்பி அனுப்பி விடுகின்றார்கள். தவிர, நாம் நிர்ப்பந்தப்படுத்தி சேர்த்தாலும் அவன் தகுதியைவிட ஒரு வகுப்பு கீழாகவே சேர்க்கிறார்கள். அன்றியும் பள்ளிக்கூட பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள்.
பிறகு பல வழிகளிலும் அதாவது உனக்கு படிப்பு வராது, வேறு வேலை பார்த்துக் கொள், வீணாய்ப் பணம் செலவழிக்காதே. பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே என்று பேசி பிள்ளையின் ஊக்கத்தையும் உற்சாகத் தையும் கெடுப்பதிலேயே கவலை கொள்ளுகின்றார்கள். பையன்களைச்
சர்க்கார் பரீட்சைக்கு அனுப்புவதிலும் உபாத்தியாயர்களுக்கே அந்த உரிமை இருப்பதால் சட்டத்தின் மூலம் எவ்வளவோ தகராறு செய்து பார்த்தும் மீறினால் வேறு வழியில் தகராறும் சொல்லி நிறுத்திவிடவே பார்க்கின்றார்கள். இவ்வளவும் தாண்டிப் பரீட்சைக்கு போய் எழுதினாலும் பரீட்சை பரிசோதகர், மார்க்கு கொடுப்பவர், முடிவு சொல்வதில் முக்கியமானவர் ஆகியவர்கள் எல் லோரும் பார்ப்பனர்களே. கடைசியாக பாசானாலும் சர்க்கார் உத்தியோகத்
திற்கு போவதற்கு வேண்டிய வயது தாண்டிவிடுகின்றது. ஒரு சமயம் மீதி
இருந்தாலும் ஒரு வருடம் அல்லது ஆறு மாதமே இருக்குமாதலால். அவசரத்
தில் எங்காவது போய் குழியில் விழுவது போல் சிறிய உத்தியோகந்தான் சம்பாதிக்க முடிகின்றது. பரீட்சையில் தவறிப்போனாலோ அதோ கதிதான். வெளிப்படையாய் இவ்வளவு கஷ்டம் நமக்கு இருப்பதுடன் மறைமுகமாய் செய்யக் கூடிய கொடுமைகள் எவ்வளவோ இருக்கின்றன. எனவே இந்த நிலையில் நமது கல்வி சாதனம் இருந்து வருகின்றது. ஆதலால் சட்டசபையில் இந்த விஷயங்களை விளக்கி இதற்காக ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இக்கஷ்டங்கள் உண்டா, இல்லையா என்று விசாரித்துப் பார்த்து உண்மை என்று பட்டால் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சட்டசபை அங்கத்
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தினர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். பார்ப்பனரல்லாத மாணவர்களும்.
நமக்கு எழுதிக் கொண்டிருப்பதைவிட இதற்காக ஒரு மாணவர் மாகாநாடு ஏற்பாடு செய்து தங்கள் குறைகளை அதில் விளக்கிக்காட்டி பரிகாரத்திற்குச்
சில தீர்மானங்கள் செய்து அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று யோசனை சொல்லுகின்றோம். மற்றபடி பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் இருந்துவரும் கொடுமைகளை மற்றொரு சமயம் விளக்குவோம்.
குடி அரசு - தலையங்கம் - 07.07.1929
குடி அரசு - 1929 @) 18
அணுகாயம்
நாடார் மகாஜன சங்கத்து மாஜி தலைவரும், பிரபல செல்வந்தரும் பழம் பெருங்கீர்த்தி வாய்ந்தவரும் தற்போது நாடார் சங்கத்துத் தலைவர். திரு.கனகசபை நாடார் அவர்களின் சகோதரருமான, பொறையார் பாலகுரு சாமி நாடார் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு தனது 32-ம் வயதில் காலஞ்சென்ற விவரம் அறிந்து துக்கமடைவதுடன் அவரது குடும்பத்தாருக்
கும் சகோதரருக்கும் நமது அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
(பட். )
குடி அரசு - இரங்கல் செய்தி - 07.07.1929.
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
திரு. சொ.முருகப்பர்
உயர்திரு. சொ.முருகப்பர் அவர்களுக்கும் திரு.மரகதவல்லிக்கும் மணம் நடந்த செய்தி மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
திரு.முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையை பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம்.
நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலா
னதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக் கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல. அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்த தியாக புத்தியும் வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கல்யாண ஏற்பாட்டுச் சங்கதியை நாம் முதன் முதல் கேள்விப்பட்டவுடன் சிறிதும் நம்பவே இல்லை. உதாரணமாக எந்த முருகப்பர் என்று தெரிவதற்கு மாத்திரம் நாம் மூன்று. நான்கு தந்திகள் திருச்சிக்கும், மதுரைக்கும், காரைக்குடிக்கும், சென்னைக்குமாக கொடுத்து பிறகு நம் முருகப்பர் என்று பதில் தந்தி கிடைத்த பின்புதான் நம்பினோம் என்றால் மற்றபடி அதில் உள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்பதை நாம் பிறருக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவ்விஷயத்தில் திரு.பிச்சப்பா சுப்பரமணியம் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதியும் போற்றத்தக்கதாகும். திரு.முருகப்பர் அவர்கள். திரு.மரகதவல்லியைப் பெண்கள் விடுதலைக்கான வழியில் உழைக்க
பெரிதும் துணை புரிவாராக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.07.1929
குடி அரசு - 1929 @) 20
தமிழர் சங்கம்
சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர். பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திருமணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு
சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதை அறிந்து, அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும் நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி
சமூக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்கு தற்கால தேவைக் கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மது பானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை: ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம் ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமூக சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.
நிர்வாகஸ்தர்கள்
திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும். திருமணி திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்நாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டி
யார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தின ராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
“சமய”ப் பற்றில் மூழ்கி. “பரலோகத்திற்கும்” “பரலோகக் கடவுளுக்கும்” பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தி யட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும், ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர். சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்கவண்ணம் திருத்தியமைத் தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.07.1929
குடி அரசு - 1929 @) 22
வாதராசுனுக்கும் ஒரு கட்சி
திரு.பி.வரதராஜுலுக்கு தனக்கு ஒரு கட்சி இருக்கவேண்டுமென்று அவர் பொது வாழ்வில் இறங்கினது முதல் வெகுகாலமாய் பிரயத்தனப்
பட்டுக் கொண்டுவரும் விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். இதற்கு ஏற்ப அவரால் அது முதல் இதுவரை பெற்றெடுக்கப்பட்டு சாகக் கொடுத்த கட்சிகள் இவ்வளவென்று அவருக்கே ஞாபகமில்லாமல் இருக்கலாம். திருப்பூரிலும்,
சேலத்திலும், சென்னையிலும் மற்றும் வெளியிடங்களிலும் எத்தனையோ கட்சிகள் அவரால் உற்பத்தி செய்யப்பட்டு அழுவாரற்று அழிந்துபோனது கணக்கு வழக்கிலடங்கக் கூடியதல்ல. கட்சி ஏற்படுத்துவதற்காக திரு.வரத ராஜுலுவால் கூட்டப்படும் கூட்டங்களுக்கே ஜில்லாவுக்கு இத்தனை பேர்தான் வரவேண்டும் என்று பொதுவாக பத்திரிகையில் விளம்பரப் படுத்துவதும், “தமிழ் நாடு” ஆபீசில், ஆபீஸ் சிப்பந்திகளையும், சில பிரசாரக் காரரையும் வைத்து கூட்டம் நடத்தினதாக ஏற்பாடு செய்து தான் தலைவ ராகவும், மற்றும் சிலர் தனது சகா நிர்வாகக் கூட்டத்தார்களாகவும் பத்திரிகை. களுக்குச் செய்தி அனுப்பி பிரசுரிக்கச் செய்வதும் தவிர, இதுவரை ஒரு கட்சியாவது ஏற்பட்டதற்கு மறுநாள் உயிருடனிருந்து எந்த வேலை யாவது செய்ததாக அவராலேயே சொல்ல முடியாது. திரு.வரதராஜுலு கட்சி ஏற்பாடு செய்வதும் விளம்பரப்படுத்துவதும் முக்கியமாய் வேறு ஒருவர் செய்யும் காரியத்தை தடைப்படுத்தவும் அல்லது தன்னை லட்சியம் செய்து எந்தக் கட்சியாராவது வந்து கூப்பிடவும் கருத்துக் கொண்டே செய்வதல் லாமல், இன்ன காரியம் செய்வதற்கென்றோ அல்லது இன்ன கொள்கைக் கென்றோ ஒருநாளும் கட்சி ஏற்படுத்த அவர் நினைத்ததுமில்லை: அந்தப்படி ஏற்பட்டதும் இல்லை.
சென்ற வருடமும் அதே தமிழ்நாடு ஆபீசில் ஏற்பாடு செய்த கட்சியில் சில பார்ப்பனர்களையும் சேர்த்துக் கட்சி யமைத்தார் என்றாலும் அது பிறக்கும்போதே பிரசவ வேதனையால் செத்து பிறந்ததாதலால் பிறந்த உடனேயே புதைக்கப்பட்டாய் விட்டது.இப்போதைய கட்சியோ கர்ப்பத்தில் இருக்கும்போதே செத்துவிட்டதால் உள்ளுக்குள் அழுகி தாய்க்கே ஆபத்து வரும்படியான நிலையில் நிர்ப்பந்தத்தில் ஆபரேஷன் செய்து வெளியாக்கப்பட்டிருக்கின்றது. இந்த பிரசவத்தில் தாய் பிழைத்தாலே போதும் என்கின்ற நிலைமையில் கட்சி செத்து அழுகி வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஆதலால் புதுக்கட்சியின் பிறப்புநிலைமையைப் பற்றி நாம்
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
அதிகம் எழுத வேண்டியதில்லை.திருவரதராஜுலு இவ்வளவு கஷ்டப்பட்டு உண்டாக்கிய கட்சியின் யோக்கியதையை ஒரு வார்த்தையில் பொது ஜனங் களுக்கு தெரிவிக்க வேண்டுமானால் அக்கட்சியின் நிர்வாகசபை அங்கத்தி னர்கள் காரியதரிசிகள் ஆகியவர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். திரு.வரதராஜுலு தலைவர் அதைப்பற்றிக் குற்றமில்லை. ஏனெனில் அவர். தலைவராக இருக்கவே இக்கட்சி உண்டாக்கப்பட்டது. ஆனால், உப தலைவர் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது மிக்க கெளரவமானதாகும். மற்றபடி காரியதரிசியோ திரு. குழந்தை. இவர் அய்யங்கார் சிஷ்யராயிருந்து இப்போது அவரோடு கோபித்துக் கொண்டிருக்கும் சமயம் தெரிந்து திருவரதராஜுலுவால் அழைக்கப்பட்டிருப்பதாய் தெரிகின்றது. எந்த புதுக் கக்ஷியிலும் அவரைக் கூப்பிட்டால் போதும், என்றாலும் அய்யங்காரின் காங்கிரசு கட்சிக்கு திருபஷீர் அகமதும், திரு.சத்தியமூர்த்தியும் காரியதரிசி களாக இருக்கும்போது திரு-வரதராஜுலு கட்சிக்கு திரு.குழந்தை காரிய
தரிசியாய் இருப்பதில் அதிக மோசம் ஒன்றுமில்லை. மற்ற மெம்பர்களோ நமக்கு இன்னார் என்றே தெரியவில்லை.அது மத்திரமல்லாமல் வாசகர்களில் அநேகருக்கும் தெரிந்திருக்காதென்றே நினைக்கின்றோம். அய்யோ பாவம்! இம்மாதிரி நிலைமையில் திரு.வரதராஜுலு, திரு.அய்யங்காருக்குப் போட்டியாய் ஒரு கட்சியை நியமித்ததாக பேர் செய்து தலைவர் பட்டம் தாங்க வேண்டிய அவசியம் வந்துவிட்டதுதான் மிக்க பரிதபிக்கத்தக்க தானாலும் வெளியிடங்களில் இதை விளம்பரம் செய்ய பிரசாரத்திற்கு திரு.அய்யங்காரைப் போல் பணம் செலவு செய்ய வேண்டி இருப்பதற்கு என்ன மார்க்கம் செய்வாரோ தெரியவில்லை. திரு அய்யங்கார் எவ்வளவு பெரிய தேசீயவாதியானாலும், காங்கிரசுவாதியானாலும், பூரண சுயேச்சைவாதியானாலும் வக்கீல் வேலையில் மாதம் 10,000 பத்து ஆயிரம்! ரூபாய் வரும்படிக்குக் குறைவில்லை. வேறு வகையிலும் சொந்த சொத்தினாலும் தக்கவரும்படி வருகின்றது. எப்படி திருகாந்தி அவர்களுக்கு அவர் வசம் பணமும், சஞ்சாரத்தில் வரும்படியும் இருக்கும்வரை எந்த கொள்கையைக் கொண்டானாலும் ஒரு மடமும் சிஷ்யர்களும் இருந்துதான். தீருமோ அதுபோல் திரு.அய்யங்காருக்கும் வக்கீலில் சம்பாதித்த பணமும். வரும்படியும் உள்ளவரை எந்தக் கொள்கையானாலும் ஒரு கட்சியும்,
பின்பற்றுவதற்கும், பிரசாரத்திற்கும் நான்கு ஆள்களும் இருந்துதான் தீரும். அதுபோல திரு.வரதராஜுலுக்கும் ஒரு கட்சி இருக்க வேண்டுமானால் பணத்திற்கு முதலில் வழி செய்து கொள்ள வேண்டும். அஃதில்லையானால் கட்சி ஏற்பட்ட தினத்திலேயே அது இறந்து போனதற்காக அவர் அழுது இருக்க வேண்டும்.
நிற்க, அக்கட்சிக்குக் கொள்கைகள் என்ன என்பதை அவ்விளம்பரத்தில் நிர்ணயிக்க முடியவில்லை. ஒரு சமயம் இனியும் அதில் சேர்க்கப்படும் ஆசாமிகளைப் பொறுத்துக் கொள்கை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று கருதி இருக்கலாம் என்று நினைக்கின்றோம். தவிரவும்
குடி அரசு - 1929 @) 24
பார்ப்பனர்களைச் சேர்க்கலாமா இல்லையா என்னும் விஷயம் இன்னமும். தீர்மானம் செய்து கொள்ளவில்லை என்பதாகவும் தெரிய வருகின்றது. திரு.வரதராஜுலு நிலைக்கு அவர் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்தாலும். கஷ்டம். ஏனெனில் சேர்க்க ஒப்புக் கொண்டால் 3-வது 4-வது வகுப்புப் பார்ப்பனர்கள் தான் இவருடன் வந்துசேரக்கூடும். சேர்க்காவிட்டாலும் கஷ்டம். ஏனெனில் பார்ப்பனர்கள் வெகு சுலபத்தில் இவரை பூ பூ செய்து விடுவார்கள். ஆதலால் அதை ரகசியமாய் வைத்திருக்கின்றார் என்றாலும் எப்படியாவது ஒரு 5-வது வகுப்பு பார்ப்பனரையாவது சேர்த்துத் தான் தீரவேண்டிவரும்.
இந்த லட்சணத்தில் திரு.வரதராஜுலு இந்த மாதிரி கட்சி பேரைச் சொல்லிக் கொண்டு சென்னைக் கார்ப்பொரேஷன் தேர்தலுக்கு ஆள்களை: நிறுத்தப்போவதாய் வெளியிட்டு இருப்பதுதான் மிகவும் வேடிக்கையான விஷயம். “அரைக்காசில் கல்யாணம் அதிலொரு வாண வேடிக்கை” என்பது போல் கட்சிக்கே இன்னும் சரியானபடி ஆள்கள் சேரக் காணோம். அதற்குள்ளாக தேர்தல்களுக்கு ஆள்கள் நிறுத்துவதென்றால் இது கட்சிக்கு ஆள்களைச் சேர்க்க உபாயமே ஒழிய தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற எண்ணமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கார்ப்பொரேஷனில் 10 ஸ்தானம் காலியாகப் போகின்றது. இவரது கட்சியில் இப்போது தலைவர் உள்பட ஐந்து கனவான்கள்தான் இருக்கின்றார்கள். இவ்வைந்து பேரும் தேர்தலுக்கு நிற்பதானாலும் ஐந்து ஸ்தானங்களுக்குத்
தான் நிறுத்தலாம். மற்ற ஐந்தை என்ன செய்வார் என்பது விளங்கவில்லை. சுயராஜ்யம் கட்சியாரும் காங்கிரஸ்காரரும் சென்னைக் கார்ப்பொரேஷன் தேர்தல்களில் போட்டி போட்டுப் பார்த்து சளைத்துப்போன சமயத்தில் திரு.வரதராஜுலு ஜஸ்டிஸ் கட்சியுடன் போட்டி போடப் புறப்பட்டிருப்பது மெச்சத்தக்கதேயாகும்.
குடி அரசு - கட்டுரை - 07.07.1929
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
திரு. ஆர்.எஸ். நாமு௫விண் வருந்தண்மை.
மதுரை முனிசிபல் சேர்மென் திரு.ஆர்.எஸ். நாயுடு அவர்களைத் தமிழ்நாட்டவர்கள் நன்கு அறிவார்கள். அவர் பழம் பெரும் கீர்த்தி வாய்ந்த நாயுடு குடும்பத்தில் தோன்றி மேல் நாட்டுக்குச் சென்று படித்து பாரிஸ்டர் பரீட்சையில் தேறி மதுரை ஜில்லாவில் ஒரு பிரபல வக்கீலாக இருந்தவர். அவருடைய நாணயத்தையும் பெருந்தன்மையையும் சாமார்த்தியத்தையும், அறிந்த மதுரைவாசிகள் அவரை மதுரை நகர முனிசிபல் கவுன்சிலுக்குச் சம்பளம் பெறும் சேர்மெனாகத் தெரிந்தெடுத்து அவரிடம் முனிசிபல் ஆட்சியைப் ஒப்புவித்தார்கள். அவர் சற்று பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியு டையவராதலால் மதுரைப் பார்ப்பனர்கள் அவருக்கு பலவிதத்திலும் தொல்லை விளைவித்து வந்தும் அதாவது சென்னை கார்ப்பரேஷனில் திரு.ஜெ.வெங்கிட்ட நாராயண நாயுடு அவர்களைச் சுயராஜ்ஜியக் கட்சியின் பெயரால் சென்னை பார்ப்பனர்கள் நசுங்குச் சேட்டைகள் செய்து வந்தது போல் செய்து வந்தார்கள். திருஆர்.எஸ்.நாயுடு அவர்கள் அவ்வளவையும் சமாளித்து தைரியமாய் நின்று மேற்படி பார்ப்பனர்களுடைய சூழ்ச்சி
களுக்கும் விஷமங்களுக்கும் சற்றும் சளைக்காமல் ஒரே முகமாய் நின்று அம்முனிசிபாலிட்டியை முன் இருந்த நிலைமையை விட பொருள் வரும் படியிலும், நிருவாக கண்டிப்பிலும், சுகாதாரத்திலும், செலவு சிக்கனத்திலும், இம்மாகாணத்திலுள்ள மற்ற முனிசிபாலிட்டிகளுக்கு ஒரு மாடல் முனிசி பாலிட்டியாக அதாவது, வழிகாட்டி முனிசிபாலிட்டியாக ஆக்கி வைத்தார். என்பதை அவரது விரோதிகளும் ஒப்புக் கொண்டாகவேண்டும். அன்றியும், மதுரையில் உள்ள எந்தப் பார்ப்பனராவது அவர்கள் வலையில் சிக்கிய பார்ப்பனரல்லாதாராவது திரு. ஆர்.எஸ்.நாயுடு அவர்களின் கண்ணியத்தைப் பற்றியோ, நாணயத்தைப் பற்றியோ, நாளது வரையில் ஒரு சிறு வார்த்தை கூட சொன்னதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் திரு. நாயுடு அவர்கள் ஆபீசுநிர்வாகத்தில் பெரிதும் பார்ப்பனரல்லாதார்களுக்கே உத்தி யோகம் முதலானவைகள் வழங்கிவருவதால், பார்ப்பனர்கள் தங்கள். பரம்பரைக்கொள்கைப்படி அவரை கவிழ்க்க சூழ்ச்சி செய்ய வேண்டியதும், பார்ப்பனரல்லாதார்களிலும் சொந்த அதிர்ப்தியும் அபிப்பிராயபேதமும் ஏற்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்கள் காரியத்தை சாதித்துக்
குடி அரசு - 1929 @) 26
கொள்ள அவர்களை உபயோகித்துக் கொள்வதும் சாதாரணமாய் எதிர்பார்க் கக்கூடிய காரியமே ஆகும். ஆகையால் இக்காரணங்களால் திரு. நாயுடு அவர்களுக்கு விரோதமாக அங்கு ஒரு கட்சி இருந்து கொண்டு அவரது நல்ல நிர்வாகத் திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது யாவருமறி
வார்கள். மதுரைப் பட்டணமானது சுமார் 150000 ஜனத் தொகையும் சுமார் 10,
15 - லட்ச ருபாய் வரும்படியுமுள்ளதும் சென்னை மாகாணத்தில் சென் னைக்கு அடுத்தபடி ஜனத்தொகையிலும் வரும்படியிலும் இரண்டாவது முனிசிபாலிடியும் ஆகும். அப்பேர்ப்பட்ட முனிசிபாலிடியை திறமையாக நிர்வாகம் செய்து தக்க அளவுக்கு வரும்படியையும் சிக்கன செலவையும் காட்டி அதன் பயனாக மக்களுக்கு அதிகமான செளகரியத்தையும் செய்யக் கூடிய ஒருவருக்கு அக்கம்பக்கத்திலுள்ள சம்பளம் பெறும் சேர்மெனுடைய
வும் முனிசிபாலிடி களுடையவும் நிலையையும் தன்மையையும் அனுசரித்து அதற்கு தக்கபடி சம்பளம் கொடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காதென்று நினைக்கின்றோம். அன்றியும் அவருக்கு இப்போது கொடுக்கப்பட்டு வரும் மாதம்1000 சம்பளம் நமது நாட்டின் பொது நிலையை பார்த்தால் ஒருக் காலமும் குறைந்ததல்ல வென்று சொல்லுவோம். ஆனாலும் மற்ற முனிசிபாலிடிகளில் இருந்து வரும் சம்பளம் அதே மதுரை முனிசிபாலிடியில் திரு நாயுடு அவர்களின் கீழ் வேலைபார்க்கும் உத்தி யோகஸ்தர்களுடைய சம்பளம் முதலியவைகளைப் பார்க்கும்போது மதுரை முனிசிபாலிடியின் யோக்கியதைக்கு தகுந்தபடியும் சிப்பந்தி சம்பளத்தை விட எஜமான சம்பளம் அதிகமாயிருக்க வேண்டும் என்பதையும் யாவரும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். சம்பளம் இல்லாத கெளரவ சேர்மெனாகயிருந்தால் இந்தக் கணக்கு பார்க்க வேண்டிய தில்லை. சம்பள சேர்மென் என்று வைத்த பிறகு முக்கியமாய் அந்த முனிசி பாலிட்டியிலுள்ள எந்த சிப்பந்தியினுடையவும் சம்பளத்திற்கும் குறையாத சம்பளம் தான் சேர்மெ னுடைய சம்பளமாக இருக்க வேண்டும். நிற்க, மற்ற சம்பளம் முனிசிபாலிடிகளின் யோக்கியதைகளையும், சம்பளத்தையும் கவனித்து அந்த விகிதாசாரம் தமக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர். பார்க்கவும் திரு நாயுடு அவர்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு உத்தியோகஸ்தருக்கு தம்மை விட குறைந்த சம்பளம் வாங்கும் சேர்மெனிடம் தக்க மதிப்பும் மனப்பூர்வமான கீழ்ப்படிதலும் இருக்
கும் என்று எதிர்பார்க்க முடியவே முடியாது. ஒரு சமயம் வார்த்தை அளவில் வேண்டுமானால் தர்க்கம் பேசலாமேயொழிய காரியத்தில் அந்தந்த சம்பளத்
திற்கேற்ற இயற்கைத் தன்மை மாறவே மாறாது. இதை உத்தேசித்தே மதுரை முனிசிபல் மெஜாரிடி கவுன்சிலர்கள் சேர்மென் ஸ்தானத்தின் கவுரவத்தை காப்பாற்றக்கருதி சிப்பந்தி சம்பளத்தைவிட சேர்மேனுக்கு அதிகச் சம்பளம் இருக்க வேண்டும் என்கின்ற நியாயமான எண்ணத்தின் மீது சமீபத்தில் சேர்மெனுக்கு ஒரு சம்பளத் திட்டம் முனிசிபல் கவுன்சில் கூட்டத் துக்குக்
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கொண்டு வந்தார்கள். ஆனால் சில கவுன்சிலர்கள் பார்ப்பன சூழ்ச்சியாலும்
சில கவுன்சிலர்கள் சொந்த அபிப்பிராயபேதத்தாலும் சில கவுன்சிலர்கள். உண்மையிலேயே முனிசிபாலிட்டியின் நன்மையைக் கோரி என்கின்ற எண்ணத்தின் பேரிலும் இத் தீர்மானத்தின் மீது அதிருப்தி கொண்டு தங்களுடைய சம்மதமின்மையைக் காட்டினார்கள். அந்தப்படி காட்டிக் கொள்ள அவர்களுக்கு தாராளமாய் உரிமையுண்டு. என்றாலும் பார்ப்பனர். கள் வழக்கம்போல் இந்த சம்பவத்தைத் தங்களுக்கு அனுகூலமாக கொண்டு. பாமர மக்களிடம் விஷமப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்றாலும் நியாயபுத்தியுள்ள மெஜாரிட்டி கவுன்சிலர்கள் இதைப்பற்றி தீர கவனித்து இவ்விஷமப் பிரசாரத்திற்கு சிறிதும் பயப்படாமல் சேர்மென் ஸ்தானத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டி ஏதாவது சிறிதானாலும் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்கின்ற தீர்மானத்துடன் தயாராய் வந்திருந்தார்கள். ஆனால் இதைச் சேர்மென் திரு. நாயுடு அவர்கள்
நன்றாய்த் தெரிந்திருந்தும் யார் எதிர்த்தாலும் பிரேரேபணை பெருமித ஓட்டு களால் நிறைவேறும் என்பதை உணர்ந்திருந்தும் தாம் அதை ஏற்றுக் கொள்ளாமலும் ஓட்டுக்கு விடாமலும் தைரியமாய் பெருந்தன்மை யுடன் எழுந்து மறுத்துவிட்டதுடன் தீர்மானம் கொண்டு வந்தவர்களையும் வாப்பீசு வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். உடனே அங்குள்ள வர்கள். சேர்மெனுடைய பெருந்தன்மையைப் பாராட்டிக் கரகோஷம் செய்தார் கள். ஆனால் இந்த பெருந்தன்மையான காரியத்தை பாராட்டாமல் சில பார்ப்பனர்
களும் அவர்களது வாலுகளும் மற்றும் சில பொறுப்பற்றவர்களும் இதைப்
பற்றி பரிகாசம் செய்யக்கூடும். அதாவது “சேர்மென் பயந்து கொண் டார்” என்றும் கலகக் காரர்கள் “பொதுஜனங்கள் வெற்றிபெற்று விட்டார்கள்” என்றும் யோக்கிய பொறுப்பற்ற முறையில் பேசவும் எழுதவும் கூடும். ஏனெ னில் நமது நாட்டில் சிலருக்கு இதைத்தவிர வேறு வழியில் பிழைப்பு மார்க்க மில்லாமல் போய்விட்டது. யாரையாவது குத்திவிடுவதும், எவருக்காவது கோபம் வரச்செய்வதும், அப்படிச் செய்யப்பட்டவர்கள் கோபத்தில் ஏதாவது செய்ய மாட்டார்களா அதைப் பிடித்துக்கொண்டு மேலே போகலாமென்
பதும் ஆகியவைகளே இப்போது இவர்களால் செய்யக்கூடுமான நிர்மாண
காரியங் களாக இருக்கின்றன. ஆதலால் மதுரை முனிசிபல் கவுன்சிலர்கள் அப் பொறுப்பற்றவர்களின் எழுத்தையும் பேச்சையும் பிரமாதமாகக் கருதக்கூடா தென்றே சொல்லுவோம். தவிர நாம் மேலே காட்டிய சம்பள வித்தியாசங்களைச் சரிபடுத்தி சேர்மென் ஸ்தானத்தின் கவுரவத்தைக்
காப்பாற்ற மதுரை முனிசிபல் கவுன்சிலர்கள் ஒன்று கூடி ஏதாவது ஒரு மார்க்
கம் செய்தாக வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகின்றோம். இதற்காகச் சேர்மென் அவர்கள் சம்பளத்தை உயர்த்தியே ஆக வேண்டுமென்பதாகவே நாம் சொல்ல வரவில்லை. சேர்மென் அவர்கள் சம்பளத்தை உயர்த்துவதை விடசிப்பந்தி சம்பளத்தைக் குறைப்பது நல்ல காரியமாகும் என்றும் சொல்லு வோம். அது முடியாவிட்டால் உயர்த்தி தான் ஆகவேண்டும் என்பதையும்
குடி அரசு - 1929 @) 28
வலியுறுத்தாமலிருக்க முடியவில்லை. ஆதலால் மதுரை முனிசிபல் கவுன் சிலர்கள் விஷமக்காரர்களின் வீண்கூச்சலுக்குப் பயந்து கொள்ளாமல் ஏதா வது ஒரு மார்க்கத்தை சீக்கிரம் செய்ய வேண்டியது அவசியமான காரிய
மாகும்.
குடி அரசு - கட்டுரை - 07.07.1929.
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
திருவாங்கூறில் பத்மநாய ௬ணாமி ரான்மாம்
திருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராமராஜ்யத்
தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசை யிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்யமாக் கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு போய்க் குடியிருந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், திருவாங்கூர் சமத்தானம் ராம
ராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே சாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் “சாட்சாத் மகாவிஷ்ணு” வினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும். எப்படியென்றால், திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சாமிக்குச் சொந்தமானது. இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும் ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்! அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ “மகா விஷ்ணு'”வாகும். எனவே “மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய ராம ராஜ் யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு அரசாட்சி செய்யும் ராஜ்யமானது ராமராஜ்யத்தைவிட எவ்வளவோ பங்கு மேலானதும், அசல் தேசீயம் நிறைந்த சுயராஜ்யமானதுமாகும். அதோடு வெள்ளைக்கார ஆட்சி சம்பந்தமில்லாத பூரண சுயேச்சை தேசமுமாகும். இந்த முறையில் திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சுவாமி ஆளத் தொடங்கிய பின்னும் ராமராஜ்யத்தைப் போலவே - தேசீய சுயராஜ்யத்தைப் போலவே ஆளத் தொடங்கிய பின்னும் அந்த ராஜ்யத்திற்கு, ஏற்பட்டிற்கும் பெருமை என்னவென்று பார்ப்போமானால் அது மிக்க அதிசயிக்கத்தக்கதாகவே இருக்கும். முதலாவது உலகத்தாரால் திருவாங்கூர். ராஜ்யம் பெற்றிருக்கும் நற்சாட்சிப் பத்திரமென்னவென்றால் “திருவாங்கூர்
ராஜ்யம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிபோல் இருக்கின்றது” என்பதாகும்.
இரண்டாவது இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பாகம் தனது நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட பெருமையுடையதாகும். அதாவது 1881 ஆம் வருஷத்தில் சுமார் நான்கு லட்சம் கிறிஸ்தவர்களை யுடையதாயிருந்த திருவாங்கூர் சமஸ்தானம் இப்போது 16/7, லட்சம் கிறிஸ்துவர்களை உண்டாக்கியிருக்கின்றது. திருவாங்கூர் சமஸ்தானம் 40 லட்சம் ஜனத்தொகை:
குடி அரசு - 1929 @) 30
கொண்டதாகும். இதில் 16 17, லட்சம் கிறிஸ்துவர்களும் சுமார் 4 லட்சம் மகமதியர்களும் இருக்கின்றார்கள். பகுதிக்கு மேலாக பத்மநாத சாமியைப் பரிகாசம் செய்யும் ஜனங்களாக இருக்கின்றார்கள். மீதியுள்ள 19 17, லட்சம் ஜனங்களிலும் பத்து லட்சத்திற்கு மேலாகவே பத்மநாப சாமியைப் பார்க்கவும் பத்மநாபசாமி கோவிலின் திரு மதிலைத் தொடவும் மதில் தெருவிலும் “பத்மநாப சாமி எழுந்தருளும்” தெருவிலும் நடக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இனி, அடுத்த இரண்டாவது அல்லது மூன்றாவது ஜனகணிதத்திற்குள் (சென்சஸ் கணக்கு எடுக்கும் காலத்திற்குள்! இந்த பத்து லட்சம் ஜனங்களும் பத்மநாபசாமியைக் கும்பிடுவதையே விட்டுவிட்டு மேற்கண்ட 20 லட்சம் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள் ஆகியவர்களுடன் சேர்ந்து கொண்டு விடு வார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த நிலையில் திருவாங்கூர். ராஜ்யமானது இப்போது தனது சமஸ்தானத்தில் ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சுதேச தேசீய சமஸ்தானங்களை
நாம் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் கேட்பதும், தேசீய ராஜ்யம் கேட்பதும், பூரண சுயேச்சை கேட்பதும், ராமராஜ்யம் வேண்டும் என்பதும் எவ்வளவு மூடத்தனமும் யோக்கியப் பொறுப்பற்றதுமான காரிய மென்பதை வாசகர் களே தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.
இப்பொழுது நமது காங்கிரசானது அதிலும் சிறப்பாக திருவாளர்கள். கல்யாணசுந்தர முதலியாரும். வரதராஜுலுவும் காப்பாற்றும் நமது தமிழ் நாட்டுக் காங்கிரசானது பெரிதும் ராமராஜ்யத்தையே அடிப்படையாகக் கொண்டு, காங்கிரஸ் தொண்டில் புராண பிரசாரமும்,ராமாயண பாரத பிரசார.
மும், அதை ஆதாரமாய்க் கொண்ட சனாதன இந்து தர்மப் பிரசாரமும் சேர்ந்ததென்று சொல்லித் தங்கள் தங்கள் பத்திரிகையில் எழுதுவதுடன் ஊர். ஊராக செல்லும் இடங்களிலும் இதே பிரசாரம் செய்தும் வருகின்றார்கள். மற்றபடி காங்கிரஸ் தலைவர்களும், பூரண சுயேச்சைத் தலைவர்களும்,
தேசீயப் பத்திரிகைகளும் இவற்றையே எழுதியும் வருகின்றனர். நாளைய தினம் சுயராஜ்யம் வந்துவிட்டதாகவோ, அல்லது வெள்ளைக்காரர்கள் பெண்டு பிள்ளை துப்பாக்கி மருந்து முதலியவை களுடன் ஓடி விட்டதாகவோ வைத்துக் கொள்ளுவோம். அதன் பிறகு நடப் பது எந்த தேசீய ராஜ்யம் என்று தான் தேசீய வீரர்களைக் கேட்கின்றோம்? திருவாங்கூர் சமத்தானத்தைப் போல் சாதியைக் காப்பாற்றும், சனாதன
தர்மமும், ராமராஜ்யமும் நடைபெறுவதைத் தவிர வேறு வழியிருக்கின்றதா என்றுதான் மறுபடியும் கேட்கின்றோம். அல்லது வக்கீல் ராஜ்யமானால் அது பகற்கொள்ளை ராஜ்யமல்லவா? என்று கேட்கின்றோம். அல்லது வியாபாரி
கள் முதலாளிகள் ராஜ்யமானால் அது இப்போதைப் போலவே வழிப்பறிக் கொள்ளை ராஜ்யமா அல்லவா என்று கேட்கின்றோம். எந்தக் காரணத்
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தாலாவது பார்ப்பன ராஜ்யமும், வக்கீல் ராஜ்யமும், முதலாளி ராஜ்யமும் ஒழியும்படியான திட்டம் கொண்ட சுயராஜ்யமோ, தேசீய ராஜ்யமோ ஏற்படுத்த இப்போது நம் நாட்டில் ஏதாவது இயக்கம் இருக்கின்றதா? என்று கேட்கின்றோம். பார்ப்பனர் மோட்சத்தின் பேராலும், காலிகள் ஆதிக்கத்தின் பேராலும், வக்கீல்கள் நீதி வாதத்தின் பேராலும், பண்டிதர்கள் சமயத்தின்
பேராலும் வயிறு வளர்ப்பதுபோல் சில போலிகளும், போக்கற்றவர்களும் இப்போது கயராஜ்யத்தின் பேராலும், தேசீயத்தின் பேராலும், சுயேச்சையின்
பேராலும் வாழ நினைத்துப் பாமர மக்களை ஏய்த்துப் பிழைப்பதல்லாமல் மற்றபடி இவற்றில் கடுகளவாவது உண்மை இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
தாடியில் நெருப்புப் பிடித்து எரியும்போது அதில் சுருட்டுப் பற்ற வைக்க நெருப்பு கேட்கும் கொடிய கிராதகர்களைப்போல் நாடு மானமிழந்து, அறிவிழந்து, செல்வமிழந்து, தொழிலிழந்து, கொடுங்கோன்மையால் அல்லற்பட்டு நசுங்கி சாகக்கிடக்கும் தருவாயில் சற்றாவது ஈவு, இரக்கம்,
மானம், வெட்கம், மனிதத்தன்மை ஆகியவை இல்லாது சாண் வயிற்றுப் பிழைப்பையும் தமது வாழ்வையுமே பிரதானமாக எண்ணிக் கொண்டு
சுயராஜ்யம், ராமராஜ்யம், தேசீயம், புராணம், சமயம், கலைகள், ஆத்தீகம் என்கின்ற பெயர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பது ஒரு பிழைப்பா? என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட மக்களையுடைய நாடு மானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா என்றுங் கேட்கின்றோம்.
குழந்தையைத் துராக்கிருதப் புணர்ச்சி செய்ய வேண்டாமென்றால் ஒரு கூட்டம் மதம் போச்சு என்கின்றதும், பணத்தைப் பாழாக்காதே, கோயிலை விபசார விடுதி ஆக்காதே என்றால் மற்றொரு கூட்டம் கடவுள் போச்சு என்கின்றதும், பொய்யும், புளுகும், ஜாதி மதத்துவேஷமும் கொண்ட புஸ்தகங்களைப் படியாதே என்றால் மற்றொரு கூட்டம் கலை போச்சு என்கின்றதும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கையாளாக இருக்க வேண்டா மென்றால் இன்னொரு கூட்டம் தேசீயம் போச்சுது என்கின்றதும், ஏழை களைக் காட்டிக் கொடுத்து ஏழைகள் வயிறெரிய வரி வசூலிக்க உள் உளவா யிருந்து மாதம் 1000, 2000, 5000 ரூபா உத்தியோகத்திற்கு ஆசைப்படாதே அதுவும் பிள்ளைகுட்டிகளே கொள்ளை கொள்ள வேண்டுமென்று கருதாதே என்றால் ஒரு தனிக்கூட்டம் தேசத்துரோகமென்கின்றதும், மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு, தெருவில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் போகக். கூடாது, குளத்தில் இறங்கக்கூடாது, பக்கத்தில் வரக்கூடாது என்று சொல்லுவது அக்கிரமம், மானக்கேடு, கொடுமை என்று சொன்னால் அதே கூட்டம் ஜாதித் துவேஷம், வகுப்புத் துவேஷம், பிராமணத் துவேஷம் என்கின்றதுமாயிருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இப்போது திருவாங்
கூர் ராஜ்யம் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென் கின்றவர்களைத்
குடி அரசு - 1929 @) 32
தனது நாட்டுக்குள்ளாகவே வரக்கூடாது என்கின்றது. எனவே இந்தியாவின் தேசபத்திக்கும், சுயராஜ்யக் கிளர்ச்சிக்கும், தேசீய உணர்ச்சிக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
குடி அரசு - தலையங்கம் - 14. 071929
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தமிழ்நாடு மாகாண மகாநா௫
தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும், ஆடம்பரங்களும் நடைபெற்றன.தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926-ல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு. ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரசாரமும் செய்யப்பட்டது என்றாலும், அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டு விட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒருபார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரசாரம் செய்து திரு.சத்தியமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்தச் செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக்
கின்றார்கள். வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடு வார்கள். திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள். ஆனால், பார்ப்பனர்களும், காங்கிரஸ் ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரசாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்தெடுக் கப்பட்டிருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு
கமிட்டி தெரிந்தெடுத்தும், திருப்பி அனுப்பி திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்கப்பட வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரிய வருகின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை. எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில்
குடி அரசு - 1929 @) 34
எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929.
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஈரோ௫ ஆமைய் பிரவேசம்
ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டியார் 30-3-29 ல் செய்த தீர்மான மானது இதுவரையில் மாற்றப்படவில்லை. ஆனால் “தமிழ்நாடு” பத்திரி கையாலும், அதன் நிருபர்களாலும் திரு. வரதராஜுலுவாலும் இவ்விஷயத்
தில் தங்களுக்கு ஏற்பட்ட பொறாமையால் எவ்வளவு தூரம் கேவலமான முறைகளில் மேற்படி தீர்மானத்திற்கு எதிரிடையாக விஷமம் செய்யப்பட முடியுமோ அவ்வளவும் விடாமல் செய்யப்பட்டு வருகின்றது. முதலாவதாக இத்தீர்மானம் செய்யப்பட்டபொழுதே இதைத் திரித்துக்கூறி தலையங்கம் எழுதிற்று. பிறகு சென்ற மாதத்தில் திருப்பூரில் கூடின தேவஸ்தான கூட்டத்
தில் இத்தீர்மானம் நீக்கப்பட்டு விட்டதென்றும், சுயமரியாதைக்காரர்கள். குட்டிக்கரணம் போட்டுவிட்டார்கள் என்றும் மனதறிந்த பொய்யை வேண்டு. மென்றே திரு. ராமசாமி மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்க
பிரசாரம் செய்தது. இதை நாம் மறுத்து எழுதிய பிறகும், அது மனிதத் தன்மை முறையில் நடைபெறும் பத்திரிகையாயிருக்குமானால் அது தனது தவறு
தலுக்கு வருந்தியிருக்கும். அப்படிக்கில்லாமல் மேலும் அதே காரியத்தை செய்யும் துறையில் முனைந்து நிற்கின்றது. அதாவது 8-7-29 ல் “தமிழ்நாடு” பத்திரிகையில் “ஆலயப்பிரவேச தீர்மானத்தின் கதி” என்ற தலைப்பிட்டு “பழைய தீர்மானம் ரத்தாகலாம் என்று தெரியவருகின்றது” என்பதாக எழுதி யிருக்கின்றது.
இதிலிருந்து “தமிழ்நாடு” பத்திரிகையும் அதன் ஆசிரியர் திரு. வரதராஜலுவும் ஆங்காங்கு நியமிக்கப்பட்டுள்ள அதன் நிருபர்கள் என்பவர் களும் எவ்வளவு தூரம் சமதர்மத்திற்கும், சமூக விடுதலைக்கும், தீண்டாத வர்கள் என்பவர்களின் நன்மைக்கும் உழைக்கின்றார்கள் என்பதை பொது ஜனங்கள் நன்றாய் அறிந்து கொள்ளலாம் என்றே நினைக்கின்றோம்.
அரசியல் பிழைப்புக்காரர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்குக் கொள்கையோ, நாணயமோ, யோக்கியப்பொறுப்போ ஒன்றும் இருக்க முடி யாது என்பதாக நாம் சுமார் ஆயிரந்தடவை பேசியும், எழுதியும் வந்திருக் கின்றோம். அதற்கிலக்காக திரு. வரதராஜுலுவும் திரு. கல்யாணசுந்தர முதலியாரும் தமிழ்நாட்டில் விளங்குவது கண்கண்ட காட்சியாகும். இவர்:
குடி அரசு - 1929 @) 36
களது விஷமப்பிரசாரத்தால் இவ்வித முயற்சிகளுக்கு ஒரு சிறு இடையூறுகூட விளைவித்துவிட முடியாதானாலும், சமூகத்துறையில் தங்களுக்கு ஏதோ மிக்க கவலையிருப்பதுபோல் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டத்தை வெளிப் படுத்தவே இவைகளை எழுதுகிறோம்.
நிற்க, உண்மையில் ஈரோடு தேவஸ்தான கமிட்டியின் தீர்மானத்தின் தன்மை என்ன என்பதை அறிய பலர் ஆவலாயிருப்பார்கள். ஆதலால் அதைப்பற்றி சிறிது விளக்குகின்றோம்.
ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் திரு.ஈ.வெ.ராமசாமி 25 வருட காலமாய் அங்கத்தினராகவும் “காரியதரிசியாகவும்” ,சிலகாலம் தலைவராகவும் இருந்து வருபவர். அவர் கமிட்டி மெம்பராக வரும்போது
அக்கமிட்டிக்கு யாதொரு மூலதனமும் கிடையாது. ஒழுங்கான நிர்வாகமும் கிடையாது. சர்க்காரிடமிருந்து டிரஸ்டிகள், தஸ்திக (மோகினி தொகையை வாங்குவதும் தங்களின் இஷ்டப்படி செலவு செய்து கொள்ளுவதும் சிப்பந்திகளுக்கு செளகரியப்பட்டபோது ஏதாவது கொடுத்து சம்பளம் தீர்ந்ததாக கையெழுத்து வாங்கிக் கொள்வதும் வழக்கம். (இன்னும் அநேக தேவஸ்தானங்களில் இப்படியே நடைபெறுகிறது). எப்படியெனில் சிப்பந்திகளும் சரியாக வர மாட்டார்கள். பூசைகளும் சரிவர நடக்காது. நடந்ததா இல்லையா என்கின்ற கவலையும் டிரஸ்டிக்கு இருக்காது. டிரஸ்டி என்பவர்கள் அநேகமாக அந்தந்த கிராம பெரியதனக்காரர் அல்லது செல்வாக்குள்ள கலகக்காரர் ஆகியவர் களாகவே பெரிதும் இருப்பார்கள். ஆதலால் இவர்களை யாரும் கணக்கு வழக்கும் கேட்கமுடியாது. கமிட்டி மெம்பர்களுக்கும் இவர்களைக் கண்டிக்க அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் ஏதாவது டிரஸ்டிகளிடம் பங்கு வாங்கிக் கொள்ள மாத்திரம் இடமுண்டு. இந்நிலையில் திரு.ஈ.வெ.ராமசாமி ஈரோடு தேவஸ்தானக் கமிட்டிக்கு மெம்பரானவுடன் தேவஸ்தானத்திற்கு பழைய டிரஸ்டிகள் இருக்க
மற்றும் ஒவ்வொரு தேவஸ்தானத்திற்கு ஒவ் வொரு டிரஸ்டியாக தங்களுக்கு நம்பிக்கை உள்ளவர்களை நியமித்து மோகினி தொகைகளைச் சர்க்காரில் வாங்கி பாங்கியில் வட்டிக்குப் போட்டு விட்டு கெளரவமாயும் சம்பளமாயும் செக்கிங் ஆபீசர்களை வைத்து பூஜை நடக்காத நாள்களையும் சிப்பந்திகள் கோவிலுக்கு வராத நாள்களையும் குறிக்கச் செய்து அவர்களின் சம்பளங்களை பிடிப்பதன் மூலமும் வருஷத் திற்கு இரண்டு தடவை பட்டுவாடா செய்வதன் மூலமும் பணப்பிடித்தமும் வட்டிவரவும் ஏற்பட்டு ஒவ்வொரு வருஷத்தில் ஒன்று இரண்டு கோயில்களை 2000, 3000 ரூபாய்
வீதம் செலவு செய்து பிரித்துக் காட்டியதன் மூலமும் மற்றும் பல செலவுகளும் செய்ததில் சுமார் லட்ச ரூபாய்கள் வரை செலவும் செய்து விட்டு
மீதி ரொக்கமாகவும், பாங்கியில் சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரை இருப்பும் சேர்த்து வைத்து இருந்தார். இவற்றிற்கெல்லாம் தம் கூட இருந்த கமிட்டி
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கனவான்கள் மிக்க நாணயமுள்ளவர்களும் கெளரவமுள்ளவர் களுமாக இருந்ததும் அவ்வப்போது வந்த கலெக்டர்களும் ரிவினியூபோர்டு மெம்பர்களும் அநுகூலமாக இருந்ததுமே காரணமாகும். இந்த அனுபவங் களைக் கொண்டுதான் திரு.ஈ.வெ.ராமசாமியும் தேவஸ்தான மசோதாவை
ஆதரித்ததுமாகும்.
பிறகு புதிய சட்டப்படி கமிட்டி நியமிக்கப்பட்டபோது பழைய மெம்பர் களில் திரு. ஈ.வெ.ராமசாமியையும், மற்றும் இரண்டொருவர்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவர்களைப் புதிதாக நியமித்தார்கள். அதுசமயம் திரு. ராமசாமி தான் கமிட்டியில் இருக்க இஷ்டமில்லாதிருந்தும் போர்டு கமிஷனர் ஒருவரின் இஷ்டத்தின் பேரில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் மேல் பல பார்ப்பனர்கள் ஒன்று கூடி திரு.ராமசாமி பூஜை உற்சவம் முதலியவைகளுக்கு விரோதி என்றும் பார்ப்பனத் துவேஷி என்றும் இரண்டு. முறை சிறைக்குப் போனவரென்றும் எழுதி ஆயிரக்கணக்கான கையெழுத்து வாங்கி போர்டுக்கு அனுப்பினார்கள். அது கமிட்டிக்கு வந்த போது திருராம சாமியே தலைவராயிருந்ததால் அம்மகஜரின் மீது அதில் கண்ட விஷயங் களை ஒப்புக்கொண்டதோடு மேல் கொண்டும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் துவேஷி அல்ல மற்றும் பார்ப்பனீயத்தை ஆதரிக்கின்றவர்களுக்கும் துவேஷி என்றும் இருமுறைமாத்திரம் சிறைக்குப் போகவில்லை. அதற்கு மேலாகவும் போயிருக்கிறார் என்றும் எழுதி இனியும் அந்த கொள்கையைத் தான் அனுசரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டு மகஜர் திருப்பி அனுப்பப் பட்டது. பிறகும் அவர் நியமிக்கப்பட்டதால் அவர் கமிட்டிக்கு வேறு தக்க கன வானைத் தலைவராக வைத்து கோயில்கள் சம்பந்தமாக தனது எண்ணங் களை ஈடேற்றிக் கொள்ள எண்ணி திரு பழைய கோட்டை பட்டக்காரர் அவர். களை அவரது இஷ்டத்திற்கு விரோதமாய்க் கட்டாயப்படுத்தி தலைவராக்கி இதுவரை ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு காரியங்கள் செய்யக்கூடுமோ அவ்வளவு தூரம் கொஞ்சங் கொஞ்சமாய் செய்யப்பட்டு வருகிறதென்றே சொல்லலாம். மற்ற கமிட்டி கனவான்களும் கூடியவரை ஒத்துழைத்து வரு கின்றார்கள் என்றே சொல்லலாம்.
கடைசியாக கோயில் பிரவேசத்தீர்மானம் கொண்டுபோன காலத்தில் இத்தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே கொண்டு போகப்பட்டதாகச் சொல்லிவிட முடியாது. நிறைவேற்றினாலும்
சரி நிறைவேறாவிட்டாலும் சரி, நிறைவேறினால் கமிட்டியில் இருக்கலாம், நிறைவேறாவிட்டால் ராஜிநாமா செய்துவிடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே கொண்டுவரப்பட்டதாகும்.கமிட்டியில் இப்போதும் தலைவர் உள்பட மெஜாரிட்டி மெம்பர்களுக்கு இத்தீர்மானத்தின் கொள்கையைப் பற்றி ஆட்சேபணை இல்லை என்றே சொல்லுவோம். இதற்கு ஆதாரம் இத் தீர்மாணம் வாதத்திற்கு வந்த போது ஒருவர் தவிர வேறு யாரும் வந்து எதிர்க்காததும் எந்த விதத்திலும் தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவிக்
குடி அரசு - 1929 @) 38
காததுமே போதுமானதாகும். ஆனால் அத்தீர்மானத்தை அமுலுக்கு கொண்டு வரும் விஷயத்தில் சிலர் பொறுப்பற்ற தன்மையால் அவசரப்பட்டு விட்டதும், அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு சில பார்ப்பனர் சூழ்ச்சி செய்ததும் அதற்கேற்றார்போல் சர்க்காருக்கும் பார்ப்பனர்களுக்கு ஆக்கம் கொடுக்கும் முறையில் ஒழுங்கற்ற தன்மையில் நடந்து கொண்டதும், தேவஸ்தான போர்டிலிருந்தும் அத்தீர்மானத்தை மாற்றி விடவேண்டும் என்பதாக ஒரு குறிப்பு வந்திருப்பதும் ஆகிய காரியங்கள் இத்தீர்மானத்தை புனராலோசனை செய்ய இடம் கொடுத்து விட்டது. சர்க்கார் நியாமற்ற நடவடிக்கைகளுக்கும், அமலுக்கு கொண்டுவந்தவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கும், இரண்டொரு கமிட்டி மெம்பர்களின் அதிருப்திக்கும் நாம் ஏதாவது சமாதானம் செய்யலா மானாலும் தேவஸ்தான போர்டிலிருந்து வந்திருக்கும் அதாவது “கோயில் பிரவேசத்தில் வழக்கத்திற்கு விரோதமில்லாமல் இருக்கும்படி தீர்மானத்தை மாற்றவேண்டும்” என்கின்ற உத்தரவுக்கு என்ன சமாதானம் சொல்லமுடியும்? என்றுதான் கமிட்டி கனவான்களில் சிலர் இன்னமும் யோசித்துக் கொண்டிருக் கின்றார்கள்.
என்றாலும், திரு.ஈ:வெ.ராமசாமியார் கமிட்டி மெம்பர் பதவியையும், உபதலைவர் பதவியையும் இராஜிநாமா கொடுத்தாய்விட்டது. சில கமிட்டி மெம்பர்கள் தேவஸ்தான போர்டுக்கு மறுபடியும் எழுதிக் கேட்கலாம் என்ப தாகவும் கருதியிருக்கிறார்கள். எனவே “தமிழ்நாடு” பத்திரிகை இந்த நிலையில் மேற்கண்ட தீர்மானம் இன்ன விதமாய்த் தான் முடியும் என்று ஜோசியம் சொல்ல முன்வந்தது அதனின் யோக்கியதையை ஊரார் அறிய போதுமானதாக ஆயிற்றே அல்லாமல் அது உண்மை நிலைமையை உணர்ந்த தாக ஏற்பட்டுவிடவில்லை.
ஒரு சமயம் மேற்படி தீர்மானம் நீக்கப்பட்டு விடுமேயானால் ஒன்றும் முழுகிப்போய்விட்டதாகவோ அல்லது பரிகாசம் செய்யும்படியாகவோ ஒன்றும் ஏற்பட்டுவிடாதென்றும் உறுதி சொல்லுவோம். ஏனெனில் ஆலயப் பிரவேச விஷயம் மிக்க சாமான்யமான காரியமானாலும் அவ்வளவு சுலபத்தில் நிறைவேற்றக்கூடிய காரியம் என்று நாம் நினைக்கவில்லை. அது அநேக பெரிய தியாகங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. அதாவது ஒன்றா சட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். அல்லது வகுப்பு துவேஷங்கள் ஏற்பட்டு பலாத்காரத்தால் மண்டை உடைவதன் மூலம் ஏற்பட வேண்டும். அல்லது ஆயிரக்கணக்கான பேர் சத்தியாக்கிரகத்தின் பேரால் சிறை செல்லுவதன் மூலம் ஏற்பட வேண்டும். இவற்றுள் பலாத்காரத்தைத் தவிர்த்து மற்ற இரண்டு விதிகளையும் நாம் பின்பற்றித்தானாக வேண்டும்.
இதில் திரு. வரதராஜுலுவோ, திரு.கல்யாணசுந்தர முதலியாரோ மற்றும் யார்
குறுக்கே விழுந்தபோதிலும் ஒரு சிறு தூசியையாவது தடுத்துவிடமுடி யாதென்றே தைரியமாய்க் கூறுவோம்.
இப்போது வங்காளத்திலும் காளிகோயிலுக்குள் தீண்டாதவர்கள்.
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
எனப்பட்டவர்கள் பிரவேசிப்பதற்காக சத்தியாக்கிரகம் துவக்கப்பட்டிருப் பதாய்த் தெரியவருகின்றது. இதுவரை ஆறுபேர்கள் கைது செய்யப்பட்டி ருப்பதாய்த் தெரிகின்றது. எனவே நாட்டின் பல பாகங்களிலும் இவ் வுணர்ச்சிதோன்றி இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வீண் விஷமப் பிரசாரத்
தில் இதை அடக்கிவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனமாகுமென்றே சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.07.4929.
குடி அரசு - 1929 @) 40
காங்கிரசிண் யோக்கியதை
இந்திய தேசீய காங்கிரசின் யோக்கியதைக்கும் கட்டுப்பாட்டிற்கும் தேசத்தில் எவ்வளவு மதிப்பும் செல்வாக்கும் பின்பற்றுபவர்களும் இருக்கின்றார்கள் என்பதற்குக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியினுடையவும், திரு.காந்தியவர்களுடையவும் தீர்மானங்களின் கதியும் பின்பற்றுபவர்களின் யோக்கியதையும் பார்த்தால் விளங்காமற் போகாது. முதலாவது சர்வ கட்சி மகாநாட்டு தீர்மானம் என்பதை முஸ்லீம்களில் நூற்றுக்கு 97 பேர் மறுத்தும், தாழ்த்தப்பட்ட மக்களில் 100-க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேர் மறுத்தும், பார்ப்பனர்களில் 100-க்கு 95 பேருக்கு மேலாகவே வைதீகர்கள் என்பவர்களும் மறுத்ததோடு மற்றும் பார்ப்பனரல்லாதவர்களிலும் இந்து மகாசபையின்
மூலமும் பார்ப்பனரல்லாதார் சபையின் மூலமும் அது மறுக்கப்பட்டு விட்டது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் 33 கோடி இந்தியர்களில் அரசியல் பேரால் பிழைக்க இருக்கும் சிலராகிய விரல் விட்டெண்ணத் தக்கவர்கள் தவிர. மற்றவர்கள் எல்லோரும் ஆட்சேபித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் எந்தக் காரணத்தால் மறுத்தார்கள் என்று பார்ப்போமானால் அது எல்லாவற்றையும் விட வேடிக்கையான சங்கதியாகவே தோன்றும்.உண்மையில் அரசியல் திட்டம் என்பதாகிய குடியேற்ற நாட்டு சுதந்திரத்திட்டம் என்பதை யாவருமே மறுத்ததாகக் காணப்படவில்லை. மற்றென்னவென்றாலோ வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வகட்சி மகாநாட்டுத் திட்டத்திற்கே இவ்வளவு எதிர்ப்பும் மறுப்பும் ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் நமது நாட்டுப் பெரிய பெரிய தேசீயவாதியும், காங்கிரசுவாதியும், பார்ப்பனரல்லாதார்கள் பிரதிநிதிகளாகக் காங்கிரசில் இருப்பதாகத் தங்களாலேயே சொல்லிக் கொள்ளப்படும் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தர முதலியார், பஷீர் அகமது சையது சாயபு, குழந்தை, ஜயவேலு ஆகிய கனவான்கள் மாத்திரம் வகுப்பு வாதம் கூடாது என்றும், வகுப்பு வாதத்திற்கு நாட்டில் செல்வாக்கில்லை யென்றும் வகுப்புவாதிகள் தேசத் துரோகிகள் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும் இப்படிப்பட்ட தேசீயவாதிகள் கூட இப்போது காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டித்
தீர்மானத்தையும், திருகாந்தி தீர்மானத்தையும் ஒப்புக் கொள்ள முடியாது என்று சொல்லி காங்கிரசில் ராஜீனாமா கொடுத்துவிட்டு வேறுவேறு கட்சி ஏற்படுத்த தீர்மானித்துவிட்டார்கள்.
மற்றும் இப்போது உண்மையான ஜனப் பிரதிநிதிகள் என்று
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சொல்லப்படும் மாகாண சட்டசபை, இந்திய சட்டசபை, ராஜாங்க சபை அங்கத்தினர்களும் 100 -க்கு 90 பேர்களுக்கு மேலாக காங்கிரஸ் காரியக் கமிட்டித் தீர்மானம் ஒப்புக் கொள்ள முடியாதென்றும், காங்கிரஸ் தீர்மானித் தாலும் ஒப்புக்கொள்ள முடியாது என்றும், அப்படித் தீர்மானித்தாலும் காங்கிரசுக் கட்டுப்பாட்டை மீறி கலகம் செய்வோமென்றும் சொல்லி விட்டார்கள். இனி காங்கிரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் யார் என்று பார்ப்போமானால் காங்கிரசினிடம் பணம்பெற்று பிரசாரம் செய்பவர்கள். என்று சொல்லலாமானாலும், அவர்களும் அதிகக் கூலி கொடுத்தால் எதையும் மீறிக் கலகம் செய்யத் தயாராயிருக்கின்றார்கள்.
“காங்கிரசுதான் தேச மகாஜனங்கள் சபையாகும். அதன் தீர்மானத்
திற்கு விரோதமாயிருப்பது தேசீயத்திற்கு துரோகம் செய்ததாகும்” என்று “ஸ்ரீமுகம் அனுப்பிய பெரியோர்கள்” இனி என்ன சொல்லுவார்கள்?
குடி அரசு - கட்டுரை - 14.07.1929
குடி அரசு - 1929 (2). 42
கேவஸ்தானக் கமிட்மு
ஈ.வவை.ராமசாமியார் ராலிநாமா
திருஈரோடுசர்க்கிள்தேவஸ்தானக்கமிட்டிபிரசிடெண்டுஅவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு. ஈவெராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது-
கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும்4.7.29 ம்தேதிபோடப்பட்டிருக்கும் அஜண்டா நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது. மேற்படி நோட்டீசானதுஎன் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவேஅந்ததேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காகநான்சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட
மீட்டிங்குகளுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகிறேன். நிற்க, மேற்படி 4-ந் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல்மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே. கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படிகான்சல் செய்யப்படுவதானது எனது முக்கியகொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும், மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோதமானதென்றும் நான் அபிப்பிராயப்படுவதாலும் அத்தீர்மானம் கமிட்டியில் ஒரு சமயம் நிறைவேறி விடும்பட்சம் என் போன்றவர்கள் கமிட்டியிலிருந்து விலகிக் கொள்வது தவிர. வேறுவழியில்லாததாலும் அதுகமிட்டியில் விவாதத்திலிருக்கும்சமயத்தில் நான் ஆஜராகி இருந்து எனது அபிப்பிராயத்தை மற்ற கமிட்டி அங்கத்தவர்கள் முன்னிலையில் தெரிவித்துக்கொள்ளவேண்டியது எனது கடமையாகும்.ஆனால் எதிர்பாராத சம்பவங்களால் அந்த சந்தர்ப்பம் எனக்கில்லாமல் போய்விட்டது. ஆதலால், இந்தநிலையில் நான் இந்தக்கமிட்டியில் என்னுடையமெம்பர் பதவி யையும்,வைஸ்பிரசிடெண்டுபதவியையும் ராஜிநாமா கொடுத்து கமிட்டியிலுள்ள. எனது தொடர்பை நீக்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை. எனவே திருபிரசிடெண்டுஅவர்களும்,கமிட்டிமெம்பர் கனவான்கள் அவர்களும் தயவு
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
செய்து எனது ராஜிநாமாவை அங்கீகரித்துக் கொள்ள வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
குறிப்பு : ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் தாம் வகித்து வந்த வைஸ்பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்து எழுதிய கடிதம் .
குடி அரசு - அறிவிப்பு - 14. 07. 1929
குடி அரசு - 1929 @) 44.
சம்மத வயது கமிட்மு
மதமும் சீர்திருத்தமும்
இளங்குழந்தைகளின் கலியாணங்களைத் தடுப்பதற்காக நமது
நாட்டில் வெகு காலமாகவே முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை பயன்படாதிருக்க எதிர்முயற்சிகளும் செய்யப்பட்டு காலம் கடத்திவரும் விஷயம் தமிழ் மக்கள் அறிந்ததாகும். ஆனால் சமீப காலத்தில் மற்ற மேல் நாடுகளின் முற்போக்கைப் பார்த்த சிலர் இப்போது இதுவிஷயமாய் தீவிர கிளர்ச்சி செய்ய ஆரம்பித்ததன் பலனாகவும், தேக தத்துவ சாஸ்திரத்தின்
முறைப்படியும், வைத்திய சாஸ்திர முறைப்படியும், குழந்தை மணங்களினு டையவும், குழந்தைச் சேர்க்கைகளினுடையவும், குற்றங்களை மக்கள். அறியத் தொடங்கியதன் பயனாகவும், பாமர மக்களுக்குச் சற்று கல்வியும் உலக அறிவும் எட்டுவதற்கு இடமேற்பட்டதன் பலனாகவும், குழந்தைகள். விவாகத்தைத் தடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு குழந்தைகளின் சேர்க்கையையும் அதாவது சரியான பருவம் அடைவதற்கு முன் ஆண்: பெண் சேர்க்கை கூடாது என்பதாகவும் கருத இடமேற்பட்டு, அவற்றைத் தடுக்க சட்டங்கள் செய்யவும் முற்பட்டு, சட்டசபைகளில் மசோதாக்கள். கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நமது அரசாங்கத்தார் என்பவர்கள் நம் நாட்டைப் பொறுத்தவரை நமது நாட்டுப் பார்ப்பனர்களைப் போலவே சுயநலக்காரரும் பொறுப்பற்றவர்களுமாய் இருக்க வேண்டியவர்களாய் விட்டதால் அவர்கள் இவ்விஷயத்தில் மனிதத் தன்மையுடன் நடந்து சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரும்படி செய்யாமல் பொறுப்பற்ற தன்மையில் இவ் விஷயங்களில் பொதுஜன அபிப்பிராயத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள்போல வேடம் போட்டு இதற்காக ஒரு கமிட்டியை
நியமித்து அக்கமிட்டியை பொதுஜனங்களை விசாரித்து அறிக்கைச் செய்யும்படி ஏற்பாடு செய்துவிட்டார்கள். அக்கமிட்டியும் மாதக் கணக்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பொதுஜனங்கள் என்பவர்களை விசாரணை செய்து ஏகோபித்து ஒரு முடிவுக்கு வந்து கலியாணம் செய்ய பெண்களுக்கு 14 வயதாக வேண்டுமென்றும் உடல் சேர்க்கை வைத்துக் கொள்ள கலியாணமான பெண்களுக்கு 15 வயதாக வேண்டுமென்றும் கலியாணமாகாத பெண்கள் விஷயத்தில் உடல்சேர்க் கைக்கு 18 வயதாக வேண்டுமென்றும் அறிக்கைச் செய்திருக்கின்றார்கள். இவ்வறிக்கையில் உடல் சேர்க்கை விஷயமாய் செய்திருக்கும் வயது
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கிரமமானது கலியாணமான பெண்ணுக்கு ஒருவிதமாகவும், கலியாணமாகாத பெண்ணுக்கு ஒரு விதமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறிது விவாதத்திற் கிடமானதாயிருந்தாலும் கலியாண வயது 14 என்று குறிப்பிட்டிருப்பதும் அவ்வளவு போதுமானதா இல்லாததாய் இருந்தாலும், ஒரு அளவுக்கு நாம் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம்.
முதலாவதாக, கலியாணமான பெண்ணுக்கும் ஆகாத பெண்ணுக்கும் உடல் சேர்க்கை விஷயத்தில் வித்தியாசம் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் பார்ப்பனர்கள் அந்தக் கமிட்டி முன் சாட்சியம் கொடுத்ததில் அநேகர் தங்கள் சமூகப் பெண்கள் பக்குவமாய்விட்டால் பரிசுத்தமாய் இருக்க முடியாதென்றும், அவர்களுக்குக் கலவி உணர்ச்சி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகின்ற தென்றும் அவர்களைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விடுமென்றும் ஏதாவது சிறிதளவாவது பேர் கெட்டுவிட்டால் பிறகு அதன் வாழ்க்கை கஷ்டமாகிவிடுமென்றும் சொல்லியிருப்பதால் அவர்
களின் குறைகளைத் திருப்தி செய்ய வேண்டி கலியாணமாகாத பெண்களை
18 வயதுக்கு முன் யாராவது கூடினால் கூடின ஆண்களுக்குத் தண்டனை விதிப்பதற்காக இம்மாதிரி விதித்திருக்கின்றதாக நாம் கருதுகின்றோம். ஆனால் இம்மாதிரி நடவடிக்கைக்குக் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தண்டனை ஒன்றுமில்லை. தவிரவும், பெண்கள் மீது வேறு எவ்வித அபவாத.
மும் ஏற்படாமலிருக்கவும் இந்த விதி உபயோகப்படலாமென்று கருதி யிருக்கக் கூடுமென்றும் நினைக்கின்றோம். தவிர 14-ல் கலியாணம் செய்து கொண்டு 15 வயது வரையில் அதாவது ஒரு வருடம் வரை காத்திருக்க முடியுமா? என்றும், ஏன் கலியாண வயதையே 15- ஆக தீர்மானித்திருக்கக் கூடாதென்றும் சிலர் கேட்கலாம். ஏகோபித்த அபிப்பிராயமாக இந்த அறிக்கை இருக்க வேண்டு மென்பதை உத்தேசித்து ஒரு கட்சியார் இதில் ஒரு வருடம் விட்டு கொடுத்திருக்கின்றார்கள் என்பதாகக் கருதுகின்றோம். அதாவது கலியாண வயதை பிரவிடையாவதற்கு முன்னாகவே கலியாணம். செய்யத்தக்கதாய் இருக்கும்படி செய்ய மெஜாரிட்டிகள் விரும்பியிருப் பதாகத் தெரியவருகின்றது. அம்மாதிரி செய்துவிடும் பட்சத்தில் சேர்க்கை. வயது இன்னும் குறைந்தாலுங் குறையும். ஆனால் தங்கள் முக்கிய கொள்கைக்கு விரோதமில்லாமல் ஒரு ஏகோபித்த அறிக்கை அனுப்ப இடங்கிடைத்தால் தனிக்குறிப்பெழுத வேண்டிய அவசியம் வேண்டிய தில்லை என்பதை உத்தேசித்தே மெஜாரிட்டியாரும் இதற்குச் சம்மதித்திருக் கின்றார்கள் போல் காணப்படுகின்றது. அதாவது நமக்கு முக்கியமானது கலியாண வயதே யொழிய சேர்க்கை வயதல்ல. ஏனெனில் 8 வயதிலும் 10 வயதிலும் கலியாணம் செய்து கொள்ள அனுமதித்து விட்டு ஒருவருக் கொருவர் சேரக் கூடாது என்று சட்டம் செய்து ஒருவரையொருவர் சேராமல் காவல் பார்த்துக் கொண்டிருப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பதும்,
குடி அரசு - 1929 @) 46
சாத்தியப்படாதது என்பதும், இயற்கைக்கு விரோதமென்பதுமே நமது அபிப்பிராயம்.ஆதலால் நமக்குக் கலியாண வயதே பிரதானம் என்கிறோம். அதில் கமிட்டியார் 14 வயது என்று தீர்மானித்தது ஒரு சமயம் சிலர் போதாது
என்று கருதினாலும் நாம் அதுவே போதுமென்று சொல்லுவோம் ஏனெனில் கலியாண வயது 10 என்றாலும், 13 என்றாலும் ஒன்றேதான் என்பதுபோல் 14 என்றாலும் 18 என்றாலும் ஒன்று தான் என்பது நமதபிப்பிராயம். எனவே இங்குள்ள முக்கிய விஷயமென்ன வென்றால் பெண்கள் பிரவிடையாகும் முன்புதான் கலியாணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மதத்திற்கு விரோதம், பாவம், நரகம் சம்பவிக்கும் என்கின்ற பூச்சாண்டிகள் கொல்லப் பட்டுவிட்டார்கள். ஆதலால் இந்தக் கமிட்டி அறிக்கையில் மதச் சம்பந்தமான நிர்ப்பந்தமும் கட்டுப்பாடும் ஒழிக்கப்பட்டிருப்பது பெருத்த அனுகூலமாகும். பக்குவமானபின் கலியாணம் செய்வதாயிருந்தால் பெண் விஷயத்தில் யாரும் அவசரப்பட்டுக் கொண்டு கலியாணம் செய்துவிட மாட்டார்கள். செளகரியப்படி எதிர்ப்பார்ப்பார்கள். பெண்களும் தாராளமாய் படிக்கவும், உலகத்தைத் தெரிந்து கொள்ளவும் சந்தர்ப்பமேற்படும். பிறகு தகப்பன் சொன்ன புருஷனைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்கின்ற நிர்ப்பந்தமுமிருக்காது. தனக்கும் புருஷனைத் தேர்ந்தெடுக்கத்தக்க யோக்கியதை உண்டாய் விடும். பிறகு நாள் போகப் போக சுயம்வரமும் காதல் மணமும் ஏற்பட இடமேற்பட்டுவிடும். எனவே 14 வயதுக்கு மேற்பட்டுத்தான் கலியாணம் செய்யப்பட வேண்டுமென்று செய்த அறிக்கையைப் பெண்கள். விஷயத்தில் கவலையுள்ளவர்களும், சீர்திருத்தத்தில் கவலையுள்ளவர். களும் வரவேற்பார்கள் என்றே எண்ணுகின்றோம். தவிரவும், இந்த ஒரு விஷயத்தில் மத நிர்ப்பந்தம் நீங்கினால் மற்ற விஷயங்களிலும் மனித சமூகத்தின் இயற்கைக்கும் அறிவிற்கும் விரோதமான காரியங்களிலுமுள்ள மத நிர்ப்பந்தங்கள் விலகவும் சற்று அனுகூலமாயிருக்குமாதலால் அந்த அளவுக்கு நாம் இதை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கின்றோம். உடன்கட்டை ஏறும் விஷயமும் நீக்கப்பட்டபோது, அது மதக்கட்டுப் பாட்டிற்கு விரோதமென்றுதான் சொல்லிக் கொள்ளப்பட்டதானாலும் தைரியமாய் சட்டம் செய்த பிறகு முன் புருஷனுடன் கட்டையில் வைத்து எரிக்கப்பட வேண்டிய பெண்கள் இப்போது புருஷன் இறந்தபிறகு மறுமணம் செய்து கொள்ள அருகதையுடையவர்களாகச் செய்து கொண்டும் வாழுகின்றார்கள்.அதுபோலவே இப்பொழுது இந்த அளவுக்குச் சட்டம் செய்துவிட்டால் நாளைக்கு உண்மையிலேயே 18 வயது வரையில் கூட கலியாணத்திற்கு காத்திருக்கும் நிலைமை தாராளமாய் ஏற்படும். அன்றியும் பெண்கள் பலர் தங்களுக்கு கலியாணமே வேண்டாம் என்றுகூட சொல்லிக் கொண்டு பெண் பிரமச்சாரிகளும், மடாதிபதிகளும், சந்நியாசிகளும், சுவாமிகளும் ஆகவும் கூடிய நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆகையால் இப்போது சீர்திருத்தக்காரர்கள் செய்ய வேண்டிய வேலை என்ன வென்றால் அறிக்கையைப் பற்றி குணதோஷம் பேசாமல் அவ்வறிக்கை
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
அப்படியே இந்தியா சட்டசபையில் நிறைவேறும்படி செய்ய வேண்டியதே.
முக்கிய கடமையாகும்.
இவ்வறிக்கை சர்க்கார் முறையில் வெளியாவதற்கு முன்பே பார்ப் பனர்கள் இவ்வறிக்கைக்கு விரோதமாய் மதத்தின் பேராலும், வருணாசிரம தருமத்தின் பேராலும் எதிர்ப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சாதாரணமாக இந்த அறிக்கையின் கருத்து வெளியான இந்த 20, 25 நாள்களுக்குள்ளாக தமிழ் நாட்டிலும், ஆந்திர நாட்டிலும் தினம் ஒன்று இரண்டு இடங்களில் கூட்டம் போடப்பட்டதாக ஏற்பாடு செய்து அவ்வறிக் கையைச் சர்க்கார் ஒப்புக் கொள்ளப்படாதென்றும், சட்டசபை பிரதிநிதிகள். ஓட்டு கொடுக்கப்படாது என்றும் தீர்மானங்கள் செய்ததாக பேர் செய்து தீர்மானங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள்.
நமது நாட்டுப் பார்ப்பனர்கள் ஒவ்வொரு சீர்திருத்தத்தின் போதும் இப்படியே கூச்சல் போடுவது வழக்கமானதால் நாம் இவற்றிற்குப் பயப் படாமல் தெரியப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் எதிர்க் கூட்டங்கள் போட்டு அறிக்கையை ஆதரித்து தீர்மானங்கள் செய்து தீர்மானங்களை சர்க்காருக்
கும் சட்டசபை அங்கத்தினர்களுக்கும் தகவல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தேவஸ்தான சட்டத்தின் போதும் இந்தப் பார்ப்பனர்கள் இம்மாதிரி தான் கூச்சல் போட்டார்கள்.ஆனாலும் சட்டம் நிறைவேறி விட்டது. ஆனால், அந்தச் சட்டத்தினால் யாருக்கும் ஒருவித பலனும் இதுவரை ஏற்பட்டதாக சொல்வதற்கில்லாமலிருக்கின்றது. வீணாக கமிட்டிகளும் உத்தியோகங்களும். ஏற்பட்டதுதான் மீதியே ஒழிய மற்றபடி வீணாய் செலவாகும் பணம் ஒரு காசு கூட மீதியாவதற்கு இல்லாமலும், வேறு நல்ல வழியில் செலவிடுவதற்கு இல்லாமலும் இருப்பதுடன் முன் சாப்பிட்டவர்கள், சாப்பிட்டுக் கொண்டும், முன்கோயிலின்பேரால் இழிவுபடுத்தப்பட்டவர்களும், தாழ்ந்த சாதி ஆக்கப் பட்டவர்களும் அதே நிலையில் தான் இருந்து வருகின்றார்கள். ஓட்டு
மூலமும் சட்டசபை மூலமும் நிர்வாகம் செய்யும் அரசாங்கம் நமது நிலைக்குச் சிறிதுகூட பொருத்தமற்றதென்றே சொல்ல வேண்டி இருக்கின்
றது. இதுசமயம் நமக்கு கமால் பாட்சாவுடையது போன்ற ஒரு வீர எதேச்சை அரசாங்கமே வேண்டி இருக்கின்றது. ஏனெனில், மேல் பதவியிலும் முன்னிலையிலும் குறைவற்ற தன்மையிலும் இருக்கின்றவர்களே அநேக மாய் ஓட்டர்களாகவும் பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். இவர்களை: ஆதாரமாகக் கொண்டே அரசாட்சி ஓட்டென்னும் தந்திரத்தாலும் பிரதிநிதித் துவம் என்னும் சூழ்ச்சியாலும் அரசாளப்பட்டு வருகின்றது. இந்நிலையி லுள்ள ராஜ்யபாரத்தில் கஷ்டப்படுகின்ற ஓட்டுரிமை இல்லாத மக்களுக்கு நன்மை கிடைப்பதென்றால் சிறிதும் எதிர்பார்க்கக் கூடியதல்ல என்றாலும், ஒரு பெரிய ஆற்றைக் கடப்பது போன்ற இந்த அறிக்கையை ஒருவாறு சட்டமாக்கிக் கொண்டால் பின்னால் வேலை செய்பவர்களுக்குச் சற்று
குடி அரசு - 1929 @) 48
அனுகூல மேற்படுமாதலால் ஆங்காங்குள்ள மக்களைத் தயவு செய்து பொதுக் கூட்டம் கூட்டி விஷயங்களை விளக்கி அறிக்கையை ஆதரிப் பதாகத் தீர்மானங்களைச் செய்தனுப்பும்படியாக மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.07.1929
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கசைெண்ணை ஆதிதிராவிடர் சுமயமரியாகை மகாநா௫
சகோதரர்களே!
ஆதிதிராவிட சமூகத்தின் பேரால் சுயமரியாதை மகாநாடு கூட்டப் பட்டிருப்பதைக் கண்டு நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றேன். சிலர். சுயமரியாதை என்கின்ற பெயர் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆனால் அதன் கொள்கைகள் எல்லாம் சரியென்றும் மிக்க அவசியமான தென்றும் சொல்லுகின்றார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் அந்த பெயரிலிருந்து தங்களுக்குச் சுயமரியாதை இல்லை என்று அர்த்தம் ஏற்படுகின்றதாம். இதற்கு நான் சொன்ன பதில் என்ன வென்றால் நமக்குச் சுயமரியாதை இருக்கின்றதா இல்லையா? என்பது வேறு விஷயம் என்றும் சுயமரியாதை சங்கம் என்று பெயரிடுவதாலேயே அதில் சேர்ந்தவர்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்கின்ற அருத்தமாகாதென்றும் அப்படியானால் இப்போது பலர் சன்மார்க்க சங்கம் என்பதாக பல சங்கங்கள் ஏற்படுத்து கின்றார்களே அச்சங்கங்களில் அங்கத்தினர்களாயிருப்பவர்களுக்குச் சன்மார்க்கமில்லை யென்பது பொருளா? என்றும், அச்சங்கம் ஏற்படுத்துபவர். கள் துன்மார்க்கர்களா? என்றும்தான் பதில் கேட்டேன். தவிர உண்மை யிலேயே நமக்குச் சுயமரியாதை உணர்ச்சி இருக்கின்றதா என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். முதலாவது உங்களைப் பற்றியே பேசுகின்றேன்.
நீங்கள் சமூகத்தில் மனிதர்களால் கீழ் மக்களாய் கருதப்பட்டு தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்குக் கோயிலில் பிரவேசிக்க உரிமையில்லை.
அநேக தெருக்களில் நடக்கவும் உரிமை இல்லை. அநேக குளங்களில் குட்டைகளில் ஏரி, ஆறு, வாய்க்கால், படித்துறைகளில் தண்ணீர் மொள்ளவோ குடிக்கவோ உரிமை இல்லை. சில பள்ளியில் சேர்ந்து படிக்க உரிமை இல்லை. சிற்சில இடங்களில் நீங்கள் மனிதர்களின் கிட்ட வரவோ, அவர்களின் கண்களில் தென்படவோ கூடாதவர்களாயிருக்கின்றீர்கள். இவை முதலிய கொடுமைகளை மனிதர்களின் கைபலத்தால் என்று மாத்திரம் அல்லாமல், கடவுள், மதம், சட்டம், பழக்கம், வழக்கம் என்பவைகளின் பேரால் அனுபவித்து வருகின்றீர்கள். இந்நிலையில் உள்ள நீங்கள்.
குடி அரசு - 1929 @) 50
சுயமரியாதையுடன் வாழும் சமூகம் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களா என்று கேட்கின்றேன். உங்கள் நிலை இப்படி என்றால் எங்கள். நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.
மனித சமூகத்தில் நாங்களும் இழிமக்களாக அதாவது பிறவி அடிமையாகவும் மற்றொருவனுக்குத் தாசி மகனாகவும் இருக்கத்தக்கதான. “சூத்திரர்” என்னும் பெயரால் அழைக்கப்பட்டு உங்களைப் போலவே நாங்களும் மற்றொரு கூட்டத்தாருக்குத் தீண்டப்படாதவர்களாகவும், சில பொது இடங்களுக்குப் போகக் கூடாதவர்களாகவும், சிலப் படித்துறைகளில் தண்ணீர் மொள்ளக்கூடாதவர்களாகவும், சில பள்ளிக் கூடங்களில் படிக்கக் கூடாதவர்களாகவும், பொதுக் கோயிலிலும் சில இடங்களுக்கு போகக் கூடாதவர்களாகவும், பொது ஓட்டல் முதலியவைகளிலும் உள்ளே போய் சாப்பிட முடியாதவர்களாகவும், கருதப்பட்டும் அநுபவத்தில் அவ்விழிவு களையும், கொடுமைகளையும், அனுபவித்தும் வருகின்றோம். நீங்கள். தீண்டாதவர்கள், தாழ்ந்த ஜாதியார், கடைக்குலத்தார் என்று சொல்லப்பட் டாலும் உங்களுக்கு ஒரு தகப்பன் உண்டு என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டு. நாங்கள் உங்களைவிட சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற மதப் பிரகாரம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குல தர்மங்களுக்கு எங்களுக்குத் தகப்பன் இருக்க நியாயமில்லாமல் தான் இருக்கின்றது. ஆனால் சிற்சில இடங்களில் இது அமுலிலில்லை என்று சொல்லலாமேயொழிய கொள்கையிலும் மத
சட்ட ஆதாரத்திலும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.மலையாளத்தில் உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்களுக்கு இன்னமும் மற்றொரு வகுப்பார். உயர்ந்தார் என்பவரின் தாசி மகனாய், வைப்பாட்டி மகனாய் இருப்பதுதான் அடையாளமாக இருந்து வருகின்றது. ஆகவே எங்கள் சமூகமானது சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றனர்.
தவிர, இன்றைய தினம் நாம் எல்லோரும் எப்படி சமூகத் துறையில் இழிவுபடுத்தப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோமோ, அதற்கு நேர்.
விரோதமாய் நமது நாட்டில் மற்றொரு வகுப்பு சமூகத் துறையில் தாங்கள் மிக்க உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு மேன்மையாகச் சந்தோஷத்துடன் நோகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அன்றியும், நாம் எப்படி இம்மாதிரியான கூட்டங்கள் கூட்டி நம்மீது சுமத்தப்பட்ட இழிவையும் கொடுமையையும் நீக்கிக்கொள்ள இம்மாதிரி மகாநாடுகளால் முயற்சி செய்து வருகின்றோமோ அதற்கு நேர் விரோதமாய் மற்றொரு வகுப்பார் இந்த நிலைமையை எப்போதும் நிலைத்து இருக்கும்படி செய்ய வர்ணாசிரம மகாநாடு, பிராமண தர்ம மகாநாடு, ஆரிய தர்ம மகாநாடு முதலிய மகாநாடுகளின் பேரால் பலமான முயற்சிகள் செய்து வருகின்றார்கள்.
அதோடு மாத்திரமல்லாமல் நம்மீது மனதறிந்த பொய்க்கூற்றுகளை
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கற்பித்தும், அபாண்டமான பழிகளைச் சுமத்தியும், பாமரமக்களிடம் விஷமப்
பிரசாரம் செய்து வருகின்றார்கள். நம்மவர்களிலேயே சிலரைக் கூலியாக அமர்த்தி எதிர்ப்பிரசாரமுஞ் செய்து வருகின்றார்கள். இவைகளை யெல்லாம்
நாம் சிறிதும் லட்சியம் செய்யாமல் தைரியமாகவும் விடா முயற்சியாகவும் இருந்து வேலை செய்தால்தான் நமக்குள்ள கொடுமைகளும் இழிவுகளும் நீங்குமே ஒழிய மற்றபடி சும்மா இருந்து கொண்டு நாம் எடுத்ததற்கு எல்லாம் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று சோம்பேறி ஞானம். பேசிக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் ஆகாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உதாரணமாக “எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்ளுவார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார் பாபம் வந்துவிடும். நரகம் சம்பவிக்கும்” என்று பேசிக் கொண்டிருக்கும் எந்த சாதுவும், தன்னை ஒரு
சிறு எறும்பு கடித்தாலும் உடனே அந்த எறும்பை நசுக்கி விட்டுத்தான் வலிக்காக கஷ்டப்படுகின்றான்.அது போலவே ஒரு தேள் கடித்து விட்டால் உடனே அதைக் கொன்று விட்டுத்தான் பிறகு அழ ஆரம்பிக்கின்றான். கடித்த தேள் கொல்லப்படவில்லையானால் கடிபட்டவனுக்கு வலி அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே அவைகளுக்குக் கஷ்டம் ஏற்படும்போது எவனும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு சும்மா இருப்பதாக நாம் கண்டதே இல்லை. மற்றொருவன் கஷ்டத்திற்கும் தன்னால் முடியாத காரியத் திற்கும் மற்றவர்களை ஏமாற்றுவதற்கும் தான் ஒருவன் கடவுளை இழுக் கின்றானே தவிர காரியத்தில் கடவுளுக்காக எவனும் விட்டுக் கொடுப்பதே இல்லை. நமது சுயமரியாதை இயக்க மேற்பட்டு 2, 3 வருடங்களேயானாலும் அது நமது நாட்டில் ஒருவித உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது. அநேக. விஷயங்களில் கடுமையான எதிர்ப்புகள் மறைந்துவிட்டன. சாமியையும் சாத்திரத்தையும் தொட்டதற் கெல்லாம் முட்டுக்கட்டையாகக் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதை ஒருவிதத்தில் மறைத்துக் கொண்டு பழக்கம் வழக்கம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாமி, மதம், சாத்திரம் என்கின்ற முட்டுக்கட்டைகளை இன்னமும் தைரியமாக உடைத்தெறியத் துணிந்து விட்டோமேயானால் பழக்க வழக்க முட்டுக் கட்டைகளை பஞ்சாய் பறக்கச் செய்துவிடலாம்.
இம்மாதிரி பழக்க வழக்கம் ஏற்படுவதற்கு ஆதாரமாய் இருந்தவைகள்
சாமியும் மதமுமேயாகும். ஆகையால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன வென்றால் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சற்றாவது சாமி, மதம், சமயம், பட்டம், சாத்திரம் ஆகிய பூச்சாண்டிகளுக்குச் சற்றும் பயப்படக் கூடாது. சாமியும் மதமும் பொய் என்று சொன்னால்தான் சமத்துவம் கிடைக்கும் என்பதாகத் தோன்றினால் தைரியமாக சாமியும் மதமும் பொய், நாங்கள் அதை ஒப்புக் கொண்டு கீழ்ஜாதியாக இருக்கச் சம்மதிக்கமாட்டோம் என்று சொல்லுங்கள். உண்மையான சாமியும் மதமுமாயிருந்தால் நீங்களும் நானும் சொல்வதற்குப் பயந்து கொண்டு ஓடிவிடாது. ஒரு சமயம் அப்படி ஓடிப்போகும் சாமியாலும் சமயத்தாலும் நமக்கு ஒரு காரியமுமே
குடி அரசு - 1929 @) 52
ஆகிவிடாது. நமக்குக் கடவுள் பேரிலும் சமயத்தின் பேரிலும் விரோதமோ போட்டியோ சிறிதும் கிடையாது. ஆனால் எந்தக் கடவுள் பேராலும் எந்த சமயத்தின் பேராலும் நீங்களும் நானும் தீண்டாதவர்களாகவும், காணப் படாதவர்களாகவும், தாசி மக்களாகவும் சொல்லப்படுகின்றோமோ, அந்தச் சமயத்தையும் கடவுளையும் ஒழித்தாக வேண்டும் என்கின்றோம். அதனால் நரகமே கிடைப்பதானாலும் இப்போதே சாவதானாலும் அக்கரையில்லை என்று சொல்லுகின்றேனே அல்லாமல் மற்றபடி கோயில்களிலுள்ள கடவுள்களை எடுத்தெறிந்து விட்டு அந்த ஸ்தானத்தில் நான் இருந்து கொள்ளலாம் என்கின்ற எண்ணமல்ல.
கோவிலில் உள்ள சாமிகளுக்கு கடுகளவு சுயமரியாதை கூட கிடை
யாது என்பது எனக்குத் தெரியும். அது இரவும் பகலும் பூட்டிக் கிடக்கின்றது. பூசாரி சோறுபோட்டால் தான் உண்டு. இல்லாவிட்டால் பட்டினிதான்.
ஈரோடு சாமிகள் 2 மாதம் பட்டினிகிடந்ததுகள். யார் என்ன
செய்தாலும் ஏன் என்று கூட கேட்காமல் வாயை மூடிக் கொண்டு தான் இருக்க வேண்டும். இந்த நிலையில் உள்ள சாமிப்பட்டம் எனக்கும் வேண்டாம். இன்னும் நம்முடைய எதிரிகளுக்கும் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். ஆகையால் இம்மாதிரி கடவுள் பூச்சாண்டிகளுக்கு பயப்படாதீர்கள்.
தவிர, இந்த மகாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டுவரப் போவதாகக் குறிப்பிட்டு என்னிடம் கொடுத்து அதன் மீது பேசும்படி தலைவர். கட்டளையிட்டு இருக்கின்றார் அதாவது -
“ஆறரைக் கோடி மக்களடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களா யிருப்பதாலும் அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும் இனி, அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை “இந்துக்கள்” என்று பதியாமலிருக்கும்படிக்கும் சர்க்காரிலும் எங்களை இந்துக்கள் என்கின்ற பதவியிலிருந்து நீக்கிவிடும்படிக்கும் செய்யும்படி சர்க்காரையும் சபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது'” என்ற தீர்மானமாகும். இத் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். நான் அநேக தடவைகளில் இதைப் பற்றி எழுதியும் பேசியும் இருக்கின்றேன். சமீபத்தில் கூட எந்த சமயத்தில் எந்தக் கூட்டத்தில் மக்களுக்கு சமத்துவம் அளிக்கப் படுகின்றதோ, அந்தக் கூட்டத்தில் சமத்துவமளிக்கக் கூடாத மக்களை: கொண்டு போய் சேர்க்க முயற்சி செய்யப் போகின்றேன் என்று எழுதியிருந் தேன். சமத்துவம் வேண்டுமென்கின்ற மனிதனுக்குச் சமத்துவம் உள்ள மதம்
எல்லாம் சம்மதமாகும். சமத்துவமில்லாத மதம் எல்லாம் ஆணவ மதமாகும். ஆதலால் இந்தக் கொடுமையான இந்து மதத்திலிருந்து பிரிந்து கொள்ளுகிறவர்களை நான் மிகுதியும் பாராட்டுகின்றேன். முதலாவது, இந்து
மதம் என்பதாகவே ஒரு தனி மதம் இல்லவே இல்லை. சிலரின் சுயநலத்
திற்கும் வயிற்றுப் பிழைப்புக்குமான ஆதாரமில்லாமல் போலியாய்
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வாயளவில் சொல்லிக் கொள்ளப்படுவதே தவிர மதம், சமயம் என்கின்ற முறைப்படி இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை. இதை வெளியில்
எடுத்துச் சொன்னால் நம்மை மதத்துவேஷி தேசத்துரோகி நாஸ்திகன் என்று கூப்பிடச் செய்ய கூலி கொடுத்து பிரசாரம் செய்விக்கின்றார்கள். நம்மைக் கொன்றுவிடுவதாய்ப் பயமுறுத்திக் கடிதம் எழுதுகின்றார்கள். அப்படி அவர்கள் செய்வதிலோ, கொன்றுவிடுவதிலோ அதிசயம் ஒன்றும் இல்லை. இது ஒரு கூட்டத்தாரின் பரம்பரைத் தொழிலேயாகும். இம்மாதிரி வெகுபேரைக் கொன்றும் இருக்கின்றார்கள். இதனால் நமக்கு ஒன்றும்
முழுகிப் போய்விடாது. நான் செத்துப்போவதால் அவர்களுடைய ஆதி சேஷனுக்கு கூடப் பாரம் குறையப் போவதில்லை. நாம் மனப்பூர்வமாக தேசத்தினுடையவும் எல்லா சமூகத்தினுடையவும் நன்மையை உத்தேசித்தே இவ்வியக்கம் தோற்றியுள்ளோமாகையால் அதற்காக - உயிர் விட நேரு வதை மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். இன்னும் என்னைப் போல அநேகர் இவ்வியக்கத்திற்கு உயிர்விடக் காத்திருக்கின்றார்கள் என்றே நம்புகிறேன். அந் நம்பிக்கை இல்லாவிட்டால் நான் இவ்வளவு தீவிரமாக இருக்க மாட்டேன்.
சுயமரியாதை இயக்கம் ஜனங்களுக்குச் செய்த கெடுதி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? மனிதனை மனிதன் இழிவுபடுத்துவதும் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் ஒழிய வேண்டுமென்பது நாஸ்திகமும் தேசத் துரோகமுமானால், அந்த ஆஸ்தீகமும் தேசமும் எதற்காக உலகத்தில் இருக்க வேண்டும். சாதி வித்தியாசம் இல்லாத அந்நிய ஆட்சியில் நாம் இருக்கும் போதே நமது சமத்துவத்திற்கு விரோதமாய் நம்மில் ஒரு கூட்டம் வருணா சிரம பிரசாரம் செய்து நமது சமத்துவத்தைக் கெடுக்கும் போது சாதி வித்தியாசம் உள்ளவர்களின் ஆட்சி வந்துவிட்டால் நம் கதி என்னாவது? “பசுவை வண்டியில் கட்டினால் பாவம்; சூத்திரனையும் பஞ்சமனையும் வண்டியில் கட்டி ஓட்டு” என்று அல்லவா உத்தரவு போடுவார்கள். இவ்வித உத்தரவு இப்போது பன்றி, நாய், கழுதை, மலவண்டி போகும் வீதியில் நடக்கக்கூடாது என்பதற்கும், பள்ளிக்கூடத்தில் படிக்கக் கூடாது என்பதற்கும், கிணற்றில் தண்ணீர் மொள்ளக்கூடாது என்பதற்கும், சாமியைக் கண்டு கும்பிடக் கூடாது என்பதற்கும் காலில் விழுந்து கும்பிட்டால்தான், காலைக் கழுவி தண்ணீரைக் குடித்தால்தான் மோட்சம் என்பதற்கும் மற்றும் இதுபோன்று இப்போது இருப்பவைகளுக்கும் சற்றும் கடினமானதென்று
நான் நினைக்கவில்லை. மற்றபடி தேசாபிமானிகள் என்பவர்களுக்கு வெள்ளைக்காரர்கள் ஆட்சி நம் நாட்டைவிட்டு நாளைக்குப் போய்விடட்டும் என்றாலும் எனக்கு இன்றே போய்விடுவது சம்மதம்தான். ஆனால் அதற்குப் பிறகு எங்கள் கதி என்ன எங்களை என்ன செய்யப்போகின்றீர்கள்! எப்படி நடத்துவீர்கள் என்பதில்தான் நமக்கும் தேச பக்தர்களுக்கும் இருக்கும் அபிப்பிராய பேதமேயொழிய வேறில்லை. “முதலில் அவர்கள் வெளியில் போகட்டும் பிறகு பார்த்துக் கொள்ளுவோம்” என்றால் அந்தக் காரியம் இனி
குடி அரசு - 1929 @) 54
நம்மிடம் பலிக்காது என்று சொல்லுகின்றோம். இதனால் நாங்கள் தேசத்துரோகியாவதானால் குஷாலாகச் சம்மதிக்கின்றோம்.
இப்போது நமது நாட்டில் எங்கு பார்த்தாலும் ஜனங்கள் வரவர இந்து மதம் என்பதையும், இந்து சமூகம் என்பதையும் விட்டுப் பிரிந்து போகவே துணிவு கொண்டுவருகின்றார்கள்.
சமீபத்தில் திருவாங்கூரில் கூடிய ஈழவ சமுதாய மகாநாட்டில் திரு மாளவியா இந்து மதப் பெருமையைப் பற்றி பேசும்போது அச்சமுதாயத்தார். இந்து மதம் வேண்டாம் அது தொலையட்டும் என்று ஒரே அபிப்பிராயமாகச் சொல்லிவிட்டார்கள். அம்மகா சங்கக் காரியதரிசி திரு.கோவிந்தன் பி.ஏ. பி.எல். மாஜி ஜில்லா ஜட்ஜ் இதோ இங்கே உட்காந்திருக்கிறார் பாருங்கள். அவரை நான் கண்டவுடன் ஆச்சரியப்பட்டு, தாங்கள் எங்கு வந்தீர்கள் என்று கேட்டதும் அவர் நானும் தீண்டப்படாதவன் தானே ஆதலால் இந்தக் கூட்டத்திற்கு வந்தேன். என்னையும் ஆதிதிராவிடரில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எனக்கு அதுக்கேட்டதும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அவர் முனிசீப்பாக இருந்து ஜில்லா ஜட்ஜாகி நாணயமும் பரிசுத்தமும் உள்ள ஜில்லா ஜட்ஜு என்று பேர் பெற்று பென்ஷன். வாங்கினவர். இப்போது அவரும் அநேக தெருக்களில் நடக்க முடியாது. பிறகு கோயிலைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. எனவே இவ்வளவு கொடுமையுள்ள ஒரு கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொள்ள நீங்கள். ஆசைப்படுவது மிகவும் நியாயமும் அவசியமுமாகும். ஆனால் விடாமுயற்சியாய் வேலை செய்ய வேண்டும். இடைவிட்டால் மோசம் போய்விடும்.
குறிப்பு : 13.07.1929 ஆம் நாள் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) நடைபெற்ற சென்னை ஆதி திராவிட மகா ஜனங்களின் சுயமரியாதை மாநாட்டில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 21.07.4929
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
செண்ணை காங்கிரஸ் HL 1P
இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங் களிலெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதா ரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில்
இருந்து தெரிந்திருக்கலாம்.
சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டு. போய் வைத்துக் கொண்டு கூட்டங்கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது. அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள்.திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டிய வர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும்படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்துவிட்டாராம். அதன்
பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை கன்னா பின்னா என்று வையச் சொன்னாராம். கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து தேர்தலை நடத்தி இருக்கின் றார்கள். வழக்கம்போல் அய்யங்கார் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக சபையார் என்கின்ற முறையில் அத்தேர்தலை செல்லுபடி அற்றது என்று சொல்லப் போகின்றார்கள் என்பது உறுதி. எனவே காங்கிரஸ் என்பது
திரு. சீனிவாசய்யங்காருக்கும் அவர்களின் தாசர்களுக்கும் கூலிகளுக்கும் மாத்திரம்தான் சொந்தமேயன்றி மற்றபடி பொது ஜனங்களுக்கு அதில் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இனியும் என்ன சாட்சி வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 21.07.1929
குடி அரசு - 1929 @) 56
கோவில் யிரவேசம்
வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதியானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக் கலாம். இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார். எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்துவிட்டார்கள்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 21.07.1929
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஆஅதிதிராவிடர் சுயமரியாதை மகாநா௫
சென்னை நேபியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாடு கூடிய விபரம் மற்ற பக்கத்தில் வெளியாயிருக்
கின்றது. அதில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதாவது:-
“ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும் இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும்படியும், சர்க்கார் தஸ்தாவேஜுகளிலும் எங்களை இந்துக்கள் என்கின்ற பதவியிலிருந்து நீக்கிவிடும்படிக்கும் செய்யும்படி சர்க்காரையும். சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது.”
என்பதாக தீர்மானித்திருக்கின்றது. திருவாங்கூர் ராஜ்யத்திலும் சுமார்.
3 வருடங்களுக்கு முன்பாக முதுகுளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத்தில் அதாவது ஈழவ சமுதாய மகாநாட்டில் இதை அநுசரித்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது “இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம்மதத்தை விட்டு வேறு மதத்திற்கு போய்விட வேண்டும்” என்பதாகும்.
இத்தீர்மானம் ஒன்று வரப்போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவப்
பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமத பிரமுகர்களும் அக்கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.
திரு. ஈ.வெ.ராமசாமியும், அம்மகாநாட்டிற்கு போயிருந்தார். அந்த சமயத்தில் திரு.ராமசாமி அத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசியபோது இதுசமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை என்றும், இனியும்
சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதமாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லதென்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகமதிய மதத்தைக் கண்டால்தான் பயப்படுகின்றார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர மற்ற வழிகளில் உண்மையான சர்வ
சுதந்திரமும் இருக்கின்றதென்றும், நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவ மதம் வர வர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்றதென்றும், அதிலும் ஜாதி உயர்வு
குடி அரசு - 1929 @) 58
பாராட்டப்படுகின்றதென்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பெளத்த கொள்கைகள் இப்போதுள்ள மற்றயெல்லா மதங்களின் கொள்கைகளைவிட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம் மகமதிய மதத்தால் தான் முடியும் என்றும் பேசினார். பிறகு அவர் சொன்னபடியே. இப்போது மதம் மாற வேண்டிய தில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரியாக அதேபோல் இல்லாவிட்டாலும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்ளுவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் இனிமேல் அவர்கள் என்ன பெயரால் அழைக்கப்படுவது என்று சிலர் கேட்
கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டியதில்லை என்றும், அவசியமா
னால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம். மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால் அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர்களை எப்படி அரசியல் முறையில் மகமதியரல்லாதவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ அதுபோல் 67, கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல் லாதவர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.
பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் முழுகிப் போய்விடாதென்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டு விடா தென்றும் சொல்லுவோம். அப்படி ஒரு இழிவு ஏற்படுவதாயிருந்தாலும் இந்துக்கள் என்கின்ற பெயரை வைத்துக் கொண்டிருப்பதன் மூலம் ஏற்பட்டி
ருக்கும் இழிவைவிட அதிகமான இழிவாய் விடாதென்பதே நமது அபிப்
பிராயம். இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில் அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவதை மிகவும் அக்கிரமமான செய்கையாகும். அப்படி இருக்க அதன் பேரால் மனிதனின் உரிமைகளை மறுத்து கோயில், குளம்,
தெரு, பள்ளிக்கூடம் முதலியவைகளின் உரிமைகளை மறுப்பது எல்லாவற் றையும்விட அக்கிரமமும் அயோக்கியத்தனமுமாகும்..
சாதாரணமாக இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதை பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீதுள்ள துவேஷத்தால் சொல்லுவதாயும் சிலர் சொல்லுகின்றார்கள்.
ஆனால் இப்போது நமது நாட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண்ணிய அறிவுடையவரென்றும் பல்லோரால் மதிக்கப்படும் உயர்திருவாளர் திருநெல் வேலி கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச்செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.
“முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிக்க வேண்டியது யாதெனில் இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும் இந்துமதம் என்பது இந்திய நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப்படும் சிந்துநதிக் கரையில் உள்ளவர்களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீக சொல்லை கிரேக்கர் “இந்து” என வழங்க அவர்களை பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள் ளாரை இந்துக்கள் எனவும் இந்நாட்டை இந்தியா எனவும் வழங்க லாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.
இந்நாட்டிலே சமயங்களைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள். தங்கள் மதத்தை இந்துமதம் என்று கூறுவார்கள்... ஐரோப்பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னோரது சொற்களும் நாகரிகங்களும் குறிக்கப்படுவதே யல்லாது சமயம் குறிக்கப்படாமை போல இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையிலுள்ள மக்களின் நாகரிகத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று. இக்கருத்தை சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றில் சுட்டியுள்ளார்... ஒரு சமயத்திற்குப் பெயர். அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல்,
அருள் நூலை வைத்ததால் எழுதுவது முறை... கிறித்துமதமும் மகம்மதிய மதமும் தங்கள் தலைவரது பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள்ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகதமுமாம். ஆனால்
*இந்து' என்ற சொல்லோ சமயக்கருத்து யாதொன்றையும்
குறித்தில்லை.”
இக்குறிப்பில் திரு.பிள்ளை அவர்கள் சுவாமி விவேகாநந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறி இருக்கின்றார். எனவே இப்படி ஒரு அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற்பித்துக் கொண்டு சமயத்திற்கேற்றபடி யெல்லாம் தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்றபடி யெல்லாம் கொள்கைகளைச் சொல்லிக்கொண்டு 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக்கொண்டிருப்பது என்பது விளங்க. வில்லை.
இதைப்பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்யரான ஒரு பார்ப்பனர் அவர்களை “ காமன்வீல்” என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது :-
“ இந்துக்களின் தற்கால நிலைமையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாக சீர்குலைந்து அலங்கோலப்பட்டு இடிந்து பாழாகக் கிடக்கும்
குடி அரசு - 1929 @) 60
இந்து மதம் என்னும் பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்குபடுத்தி முட்டுக்கொடுத்து பழுதுபார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்ணியமின்றி வெட்டித்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படைகளின் மீது நமது தற்கால அவசியத்திற்கும் உபயோகத்திற்கும் ஏற்றதாகச் சாதாரணமான புதுக் கட்டிடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது” என்று எழுதி இருக்கின்றார்.
இன்னும் அநேக பெரியோர்களும், ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும் மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபசாரித்தனத்தைத் தடுக்கவும், சிறு குழந்தை களைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சி களை இம்மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும்
மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும்.
எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என்கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ அதுபோலவே நாமும். சொல்ல வேண்டியவர்களா யிருக்கின்றோம். ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மை பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால் நமக்கு ஆதிதிரா விடர்களை விட கீழான நிலையான “சூத்திரன்” என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது. அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்த சீர்திருத்தக்காரரோ, சட்டசபை பிரதிநிதியோ, வேறு எந்த சமூகத் தலைவரோ இதுவரை முயற்சித்ததாகத் தெரியவில்லை. “ஆஸ்திகம் போச்சு” “கடவுள் போச்சு” “மதம் போச்சு” “சமயம் போச்சு” “புராணம் போச்சு” “கலை போச்சு” என்று கூப்பாடு போட்டு கூலிபெற நமது நாட்டில் ஆள்கள் மலிந்து கிடக்கின்றதே. யல்லாமல் மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மைபெற யாரையும் காணோம். எனவே நாமும்
ஆதிதிராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தலையில் இருந்து பிரித்து விடுஎன்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருதுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.07.4929
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
10 குடிச்ச வது சய iy அஸியுத்தையோ, பத்திபுமே இங்கு விவரக் கசவனோ செண்டு சாம் கருந்ள்ளேமே phs whp அது பரப கடடச்கவின் தன்மை ல்லை ன் ச விண் வக் சொப்பத்திங் எம் மோ 2, கமல், கஜம், க் எத்பட்டதும் பெளத்த, Pidu, சைல, சர்வா கலு ன்ப வலன்
க ல் வைல் i அப்ப வேப்ப அத்த நசன் வெலை
- இந்தஸ்வங்கத்றில் e அகத்தில் பரலி கட்ட மெத் சத்து சேய்யரை என்! il .. குப்சிலைத்தால் இதை: ey ke செள்ளச்செய்து உர்வா கசானாகன
மரியாதை பகாகாட்டன் முர மற்றமர்கள். காதி அரையின்போது கம்பால் எழு உத் அர கெளெனவும் ர் சொச்சப்பட்டதை 2 மானிக்கப்பட்டு அதலேடு: புஷ் சொகண்பர்கள் அளத முடிலாசவும் சொ த்தங்வம்கமாக எழுதும் வட் தத
8 போதுகட மச்களுச்ப் பீதர் பட்ட சொன்னிக்கொடுத்த மிறருதாள். பபா. அட்டன் என்னத பேச்சல். கிங்யபுல் ஏற்படுத தேதன். சென்ன 1099 ஓடவே 2 எழு
சொன்னதை அணர்த்தும் இருக்தபே துல,
Y தம் என்பு என்
கடவுளும் மதமும்
0) இல்லாதீநிய தரேவங்கம் அவர்களுக்கு. அசி ஆத்த
செனிக்சவமரியாதை இயக்கம் என்பதெ அுக்லெகலான்புமா காப்டன் பால வாம் ததல்றரு கடம் வேக தடலைசனிக்கெளி என்பத அதும் அல்கிறக்கம் எட்ட விட்டிமக்னெறேல், ஆதனம் ன் சத்து செல்லாக்குப் பெறத் uet சமநுடைய. இல்றுவத்9 AR g தொடம்வே பினு மக்க . = i மல என்க / வட் B
பார்ப்பனரல் s sl கடையும். மதத் கொள்கையா ன் மதல என்று சடஷள் என்பது கடவுள், காதார்களில் ரியல் தேரியம் தையும் புத்தி பேசவேண்டும் சொர்கப்படும் . மதத்தைப் தெய்லம், அன்ன, காட் என்ற.
குடி அரசு - 1929 (2) 62
. .
(1)
இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர்: கொடுத்து எழுதப்புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை. இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குள் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோமாத லினாலேயாம். அதோடுகூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில். அரசியல், தேசீயம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர். களும், சமயம், புராணம், பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும் இவ்வியக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தை
யும் பற்றிய பொது மக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரசாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரசாரத்தைக் கண்டு பயப் படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சில பெரியோர்களும், சமய சம்பந்தமாக
மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம் கொண்டுள்ள கருத்தின் நிலையையும் சற்று விளக்கிவிட வேண்டுமென்பதாகக் கருதி இந்தத் தலைப்புக் கொடுத்து எழுதப்புகுந்தோம். இவைகளைப் பற்றி இதற்கு முன்னும் பலதடவை எழுதியுள்ளோம். ஆயினும் அவைகளையும்விட இது சற்றுத் தெளிவாக இருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை எழுதுகின்றோம். வாசகர்கள் தயவு செய்து இதைச் சற்று நிதானமாகவும் கவனமாகவும் படித்துப்பார்க்கும்படி வேண்டுகின்றோம். இக்கட்டுரையானது இதே தலைப்பின் கீழ் திருநெல். வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டின் முடிவுரையின்போது நம்மால் எடுத்துச் சொல்லப்பட்டதை அனுசரித்தும், சில நண்பர்கள் அதை
விளக்கித் தலையங்கமாக எழுதும் படி சொன்னதை அனுசரித்தும் எழுதப்பட்டதாகும்.
முதலாவதாக, நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தைப் பற்றியா வது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம்
நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள
68 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே
முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக் கின்றோம். அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும் மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால் தான் நாம் அதைப்
பற்றி கவலையில்லை என்று சொல்ல வேண்டியதாயிற்றே யொழிய உண்மையில் கடவுளையும் மதத்தையும் பற்றி பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்க வில்லை. அது போலவே தான் சைவ சமயத்தைப் பற்றியும் நாம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் என்போம். எப்படி எனில் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் நமக்கு எதிராகத் தம்மால் கூடிய சூழ்ச்சிகள். எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றிலும் பயன் பெறாததால் கடைசியாகச் சமயமென்றும், சமயப் பெரியார் என்றும் கூறிக் கொண்டு அவ்வார்த்தை களையே தமது ஆயுதமாகவும், சமய சம்பந்தமான சில பைத்தியக் காரர்களைத் தமக்குப் படையாகவும் வைத்துக் கொண்டு அவர்களைத் தெருவில் இழுத்து நம்மீது உசுப்படுத்திவிட்டுச் சூழ்ச்சிப் போர் தொடுக்க ஆரம்பித்ததன் பலனாய் சைவசமயம் என்பதும் சமயாச்சாரியார்கள் என்பவர்களும் சந்திக்க வரவேண்டியவர்களானதோடு சைவப் பெரியார்கள் என்பவர்களின் சாயமும் வெளுக்க வேண்டியதாய் விட்டது. எனவே இன்றைய தினம் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், ராமாயணம், பாரதம் ஆகியவைகளிலுள்ள கதைகளை நம்பி முக்கிய கதாநாயகர்களைக் கடவுள்களாக மதித்து வணக்கம், பூஜை, உற்சவம் செய்ய எவனெவன் சம்மதிக்கின்றானோ அவன் மாத்திரமே கடவுள் நம்பிக்கையும் சமயப் பற்றும் கொண்டவன் என்றும், மற்றவர்கள் நாத்திகர்கள், சமயத் துரோகிகளெனவும் தீர்மானிக்கப்பட்டு அதுவே முடிந்த முடிவாகவும் சொல்லப்பட்டுவிட்டது. இது எப்படி இருந்தபோதிலும், கடவுள் மதம் என்பது என்னவென்பது பற்றியும், இவை எப்படி உண்டாயிற்று என்பது பற்றியும் இவற்றை உண்டாக்கியவர்கள் கெட்ட எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது நல்ல எண்ணத்தோடு உண்டாக்கினார்களா? அல்லது அறியாமையினாலுண் டாக்கினார்களா? என்பவைகளைப் பற்றியும் இவற்றில் நமது அதாவது மக்கள் கடமை என்ன என்பதுபற்றியும் சற்று ஆலோசித்து பார்க்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
முதலாவதாக, இங்கு குணம், உருவம், பெயரற்ற தன்மையுடைய கடவுள் என்பதைப் பற்றியும், மக்களின் வாழ்க்கை நலத்திற்காக ஏற்படுத்தப் பட்ட கொள்கைகள்தான் மதம் என்று சொல்லப்படும் மதத்தைப் பற்றியுமே, இங்கு விவரிக்க கருதியுள்ளோமே தவிர மற்றப்படி பல கடவுள்களின் தன்மையையும், மதப் பிரிவுகளான கிறிஸ்து, மகமதியம், ஜைனம், பெளத்த
சீக்கிய சைவ, வைணவ, நிரீச்சுவாத, உலகாயுத, சாக்கிய, வாம முதலிய பல உள் மதங்களைப் பற்றியும் நாம் இங்கு தனிதனியாகப் பிரஸ்தாபிக்க உத்தேசமில்லை. ஏனெனில், அவற்றிற்கு ஏற்கனவே மறுப்புகள் தாராளமாய்
குடி அரசு - 1929 @) 64
வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் பதில் சொல்ல முடியாமல் தத்துவார்த்தம் என்கின்றதற்குள் அடைக்கலம் புகுந்தும் நம்பித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தத்திற்குள் புகுந்துமே தான் ஒவ்வொருவர்களும் அவரவர்கள் கடவுளையோ, கடவுள் தூதர்களையோ, அவதாரங்களையோ, சமயங்களையோ, சமயாச்சாரிகளையோ காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே ஒழிய அறிவின் மீதோ, ஆராய்ச்சியின் மீதோ, நியாயத்தின் மீதோ, நிலை
நிறுத்த முடியாமல் போய்விட்ட விஷயம் உலகமறிந்ததாகும். ஆதலால் இத்தலையங்கத்தில் நாம் அவற்றில் பிரவேசிக்கவில்லை.
முதலாவது மக்களுக்குக் கடவுள் எப்பொழுது எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வோம். மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கப்பட்ட பிறகுதான் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து நிச்சயம் ஏற்பட்டு இருக்க வேண்டும். அதை யாரும் மறுக்கமுடியாது. ஏனெனில் இப்போது கூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை. எப்படி எனில்,
சிறு குழந்தைகளை நாம் கட்கத்தில் இறுக்கிக் கொண்டு ஒரு உருவத்தையோ, வஸ்துவையோ காட்டி, சாமி என்றும், அதைக் கைக்கூப்பி கும்பிடு என்றும் சொல்லிக் கொடுத்த பிறகே குழந்தை சாமியையும் கும்பிடவும் அறிகின்றது. அதுபோல ஆதியிலும் மனிதன் பிறந்த பிறகுதான் அவன் மனதிற்கு கடவுள்: நினைப்பு தோன்றியிருக்கவேண்டும். அது எப்படி என்றும், எப்போதென்றும் பார்ப்போமானால் சாதாரணமாக மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில் தான் கடவுள் நினைப்பு தோன்றி இருக்க வேண்டும். கடவுள் என்பது - கடவுள், தெய்வம், அல்லா, காட், என்ற தமிழ், சமஸ்கிருதம், துலுக்கு, ஆங்கிலம் முதலிய பல பாஷைகளில் பல சொற் களாக இருந்தாலும் குறியில் அர்த்தத்தில் உலகத் தோற்றத்திற்கும், நடப் பிற்கும், அழிவிற்கும் காரணமாகிய ஒரு சக்தியையே குறிப்பிடுவதாகவும் அதாவது சிலரால் இயற்கை என்று சொல்லப்படுமானால் அவ்வியற்கையின் இயங்குதலுக்கும், பஞ்சபூதக் கூட்டு என்று சொல்லப்படுமானால் அக்கூட்டின் சேர்க்கைக்கும் ஏதாவது ஒரு சக்தி இருந்துதானே ஆக வேண்டும் என்பதுவும், அந்த சக்திதான் கடவுள், எல்லாம் வல்ல ஆண்டவன்- அல்லா,
காட் என்று சொல்லப்படுகின்றதென்று சொல்வதானாலும், அந்த சக்தி என்னும் கடவுளே எப்படி மக்கள் மனத்திற்கு வந்தார் என்பதுதான் இங்கு விசாரிக்கத்தக்கதா யிருக்கின்றது. ஆகவே அந்த சக்தி மனிதனுக்குத் தோன்றிய காலம் எது என்பதாகவும், அது நம் நாட்டைப் பொறுத்தவரை: எப்படியிருந்தது என்பதாகவும் பார்க்க வேண்டுமானால், நம் நாட்டிலுள்ள கடவுள்களைக் கொண்டுதான் அதைத் தாராளமாய் உணர முடியும். அதாவது இப்போது நமது நாட்டிலுள்ள கடவுள்கள் எவை யென்றால் பூமி, மலை, காற்று, நெருப்பு, நதி, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மழை, இடி, மின்னல், மேகம், நோய்கள், அவை தீர்க்க வேண்டியவைகள் முதலிய அநேக விஷயங்கள் கடவுளாகக் கருதப்படுகின்றது, இவைகளெல்லாம் இவற்றின்
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
உண்மையை அறிய ஆற்றல் இல்லாத காலத்தில் கடவுளென்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகள், அதிலும் இமய மலையே கைலையங்கிரியாகவும், அதுவும் வெள்ளிமலையாகவும் அங்கு கடவுள் இருப்பதாகவும், அங்கிருந்து
வரும் நீர் அம்மலையிலுள்ள கடவுளின் தலையிலிருந்து வருவதாகவும், கருதப்பட்டு இமயமலைக்கு அப்பால் ஒரு நாடும் கண்டுபிடிக்க முடியாதிருந்ததும், மேல் நாட்டை மேல் லோகமென்றும், கீழ்நாட்டை பாதாள லோகம், நரகலோகம் என்றும் இப்படி பலவாறாகக் கடவுள் தன்மையைச் சொன்னதற்குக் காரணமென்னவென்று பார்க்கும் போது அவற்றின் உண்மையை அறிய முடியாததாலேயே அவை கடவுளென்றும், அவற்றின் இயங்குதல் கடவுள் சக்தி என்றும் சொல்ல வேண்டிய அவசியம் தானாக ஏற் பட்டது. இப்போதும் மனிதனை தன்னால் முடிந்தவைகள் போக முடியாத வைகளுக்கே கடவுள் சக்தி என்று சொல்லி விடுகின்றான். உதாரணமாக, சிறு குழந்தைகள் ஒரு ஜால வேடிக்கைக்கார னுடைய செய்கையை மந்திர சக்தி என்றும், தெய்வசக்தி என்றும், உபாசனாச் சக்தி என்றும் குட்டிச் சாத்தான் சக்தி என்றும் கருதுகிறார்கள். அப்பையணாயிருந்து அப்படியே கருதியிருந்த
நாம் இப்போது அறிவு வளர்ச்சி பெற்ற பின் அந்த ஜால வேடிக்கைகளை மந்திர சக்தி என்று எண்ணாமல் தந்திரம், கைத்திறம் என்றும் சொல்லுகின் றோம். மற்றும் அந்த ஜால வேடிக்கைக்காரன் செய்யும் ஜாலத்தின் வழி இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் கூட நாம் அவற்றை ஒரு
காலமும் மந்திர சக்தி என்றோ, தெய்வ சக்தி என்றோ சொல்லாமல் “இது ஏதோ தந்திரம் தானே ஒழிய வேறில்லை. ஆனால் அது இன்னது என்று கண்டுபிடிக்க முடியவில்லை” என்று சொல்லி விடுகின்றோம். எனவே, ஒரே
காரியம் நமக்கே ஒரு காலத்தில் மந்திரமாகவும், தெய்வ சக்தியாகவும் தோன்றியது. பிறகு அது தந்திரம் என்று தோன்றக் காரணம் என்ன வென்றால் அது அறிவுவளர்ச்சியும், ஆராய்ச்சிப் பலனுமேயாம். அது போலவே நமக்கு இப்போது தெய்வசக்தி, கடவுள் சக்தி என்று தோன்றுகின்ற காரியமெல்லாம் மேல் நாட்டாருக்கு கடவுள் சக்தியாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக. சூரிய சந்திரகிரகணம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத காலத்தில் நாம் அவைகளுக்கு ஒரு தெய்வ சக்தியைக் கண்டுபிடித்து சூரியன் என்கின்ற தெய்வத்தை ராகு என்கின்ற பாம்பு பிடிப்பதாகவும், அது சூரியன் என்கின்ற கடவுளுக்கு ஏற்பட்ட சாபம் என்றும் சொல்லி அச்சாபம் தீர நாம் மந்திரங்கள் ஜெபித்து அத்தோஷம் தீர ஸ்நானமும் செய்து வருகின்றோம். இது வானசாஸ்திரம் தெரியாத காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட கருத்தாகும். இப்போது வானசாஸ்திரம் தெரிந்தவர்கள் பூமி, சூரியன், இவற்றின் இயங்கு
தல் அதன் கால அளவு ஆகியவைகளைக் கண்டு பிடித்த பின் சூரியனைப் பாம்பு கடிப்பதில்லை என்பதையும் ஒருவாறு நன்றாய் உணருகின்றோம்; அது போலவே எங்கிருந்து எப்படி தண்ணீர் வருகின்றதென்பது தெரிந்தவுடன்
நதிக் கடவுளும், மேகக் கடவுளும், வர்ண பகவானும் சிறிது சிறிதாக நம்மனதில் மறையத் தொடங்கி விட்டன. அது போலவே வியாதிகள் எப்படி
குடி அரசு - 1929 @) 66
வருகின்றன என்கின்றதான சுகாதார ஆராய்ச்சியும், உடற்கூறு ஆராய்ச்சியும்
நமக்கு தெரியப் புறப்பட்ட பின்பு பேதி, மாரி அம்மை முதலிய தெய்வங் களின் உணர்ச்சியும் மதிப்பும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன. இதுபோலவே காற்று, கருப்பு, பேய் முதலியவைகளும் மறைந்து வருகின்றன. இந்த முறையில் இனியும் நமக்குள் மீதி இருக்கும் கடவுள் உணர்ச்சிகள் எவை என்று பார்ப்போமானால் காரண காரியம் முதலிய விவரங்கள். கண்டுபிடிக்க முடியாதவைகளையே கடவுள் செயலென்றும், கடவுள் சக்தி என்றும் சொல்லி வருகின்றோம். இவைகளும் நாளுக்குநாள் மனிதன் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சியும் முதிர முதிர மறைந்து கொண்டே தான் வரும். மேலும் இப்போது ஒருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படும் காரியங்கள் மற்றொருவருக்குக் கடவுள் சக்தி என்று தோன்றப்படாம லிருப்பதையும் பார்க்கின்றோம். அது அவ்விருவருடைய அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றின் வித்தியாசமேயாகும்.
இப்போதும் நம் மனத்திற்கு எட்டாத, காரியங்களை மேனாட்டார்
செய்யும் போது நாம் அதிசயப்பட்டாலும் அதை மந்திர சக்தி என்று நாம் சொல்லத் துணிவதில்லை. இந்த அளவுக்கு நாம் தைரியமாக வந்து விட்டோமென்றாலும் நமக்குப் பூரண அறிவும் ஆராய்ச்சி முடிவும் ஏற்படும் வரை கடவுள் உணர்ச்சி நம்மை விட்டு விலக முடியாது. அன்றியும் வாழ்க் கையின் பக்குவமடையாதவர்களுக்குக் கடவுள் உணர்ச்சி இருந்தே தீர வேண்டியதாயுமிருக்கின்றது. அதாவது கஷ்டப்பட்டு ஏமாற்ற மடைந்த வனுக்கும் ஈடு செய்ய முடியாத நஷ்டமடைந்தவனுக்கும் கடவுள் செயல் என்பதைச் சொல்லித்தான் ஆறுதலையும் திருப்பதியையும் அடையச் செய்ய வேண்டியிருக்கின்றது. நல்ல அறிவும் ஆராய்ச்சியும் உடையவர்களும் தங்களுக்கு காரண காரியம் எட்டாத இடத்திலும், ஈடு செய்ய முடியாத இடத்திலும் கடவுள் செயல் என்பதைக்கொண்டுதான் திருப்தி அடைகின் றார்கள். அப்போது தங்கள் அறிவுக்கு மேல் ஒன்று இருப்பதை எண்ணித்
தீர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் உறுதியான பக்குவ மடைந்தவர்கள் எந்த விஷயத்திற்கும் தங்களுக்குத் தெரிந்த காரணத்தைக் கொண்டு சமாதானமடைவதும் தெரியாததாயிருந்தால் நமக்கு எட்டவில்லை என்றோ அல்லது இதுதான் இயற்கை என்றோ கருதி திருப்தியடைவதுமாய் இருக்கின்றார்கள். எனவே சாதாரண மக்கள் கடவுளுக்கும், சற்று அறிவு டைய மக்கள் கடவுளுக்கும், ஆராய்ச்சிக்காரர்கள் கடவுளுக்கும், பக்குவ மடைந்தவர்கள் எண்ணத்திற்கும் அநேக வித்தியாசமுண்டு. ஒருவொருக் கொருவர் கடவுள் வணக்கத்திலும், கடவுள்மீது சுமத்தும் பொறுப்பிலும் அநேக வித்தியாசமுண்டு.
(மற்ற விவரம் கடவுளும் மதமும் என்னும் இரண்டாவது வியாசத்தில் வரும்!
குடி அரசு - தலையங்கம் - 28.07.1929.
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வகுப்புவாரி பிரதிநிதித்துவ
நமது இந்திய நாடானது சுதந்திரமும் சுயமரியாதையும் பெற வேண்டுமானால் முதலாவது இந்திய மக்களுக்குள் ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பதும், அவ்வித ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்படுவதற்கு இடமில்லாமலிருக்கும்படியான அளவுக்கு இந்தியாவானது பல்வேறு மதங்களாகவும், தேசத்தார்களாகவும், ஜாதி களாகவும், அவற்றுள் அளவற்ற வகுப்புகளாகவும் பிரிந்திருக்கின்றது என்பதும் யாவருமே அறிந்த விஷயமாகும். இவ்வித்தியாசங்களை ஒழிப்ப தற்கென்று வெகு காலமாகவே அநேக பெரியார்கள் அரசியலில் பேராலும், சமூக இயலின் பேராலும் எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தும் சிறிதும் பயன்படாமல் நாளுக்குநாள் புதிது புதிதாக மதங்களும் ஜாதிகளும், வகுப்பு களும் வளர்ந்து கொண்டு போவதல்லாமல் குறைந்து வந்ததாகவோ, அல்லது குறைவதற்குள்ள குறிகள் காணப்படுவதாகவோ சொல்லுவதற்கில்லாமலும் இருந்து வருகின்றது. இவைகளை யாரும் மறைத்துப் பேச முடியாதென்பதே நமது அபிப்பிராயம்.அதிலும் என்று முதல் அரசாங்கத்தாரிடம் இந்தியர்கள் அரசியல் சுதந்தரம் கேட்பதென்றும், அரசாங்கத்தார் நமக்குச் சிறிது சிறிதாய்ச் கொடுப்பதென்றும் ஏற்பட்டதோ, அன்று முதல் அப்படிக் கொடுப்ப தென்பதும் பெருத்த பணவருவாயுள்ள உத்தியோகங்களாகவும், பதவிகளா
கவும் ஏற்பட்டதோடு அவைகள் தந்திரத்திலும் சூழ்ச்சியிலும் வலுத்தவ னுக்கு மாத்திரம் கிடைக்கக் கூடியதாய் போய்விட்டதால் இனி சுலபத்தில் நம்பிக்கையும் ஒற்றுமையும் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதற்கில்லாமலே போய்விட்டது. இவற்றை உணர்ந்தே உண்மையிலேயே நாட்டினிடம் பற்றுக் கொண்ட பல பெரியவர்களும் தொண்டர்களும் நாட்டின் முன்னேற்றத்
திற்குப் பரஸ்பர நம்பிக்கையும் ஒற்றுமையுமே பிரதானமெனக் கருதி பரஸ்பர: நம்பிக்கை ஏற்படுவதற்கு ஒவ்வொருவர் மனதிலுள்ள வேறுபாடான அபிப்பிராய பேதத்தை விலக்கச் சமூகத்துறையிலும் மூடநம்பிக்கைத் துறை
யிலும் எல்லா வகுப்பாருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படுவதற்குக் கூடுமான வரை எல்லோருக்கும் சமசந்தர்ப்பமும் சம உரிமையும் கிடைக்கும் படியாக அரசியல் துறையிலும் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இதைப் பலர் தெரிந்தோ தெரியாமலோ அல்லது தங்கள் சுயநலம் காரண மாகவோ அல்லது எதிரிகளின் கூலிகளாகவோ பலவழிகளிலும் இம்முயற்சியை எதிர்த்து வந்திருக்கின்றார்கள் என்பதும் மறுக்கக் கூடியதல்ல. ஆனாலும் என்ன எதிர்த்தும் இப்போது அவ்வெதிர்ப்புகள் அடியோடு சிறிதுகூட
குடி அரசு - 1929 @) 68
இல்லாமல் பயனற்றுப் போனதுடன் ஓர் அளவுக்கு முன் சொல்லப்பட்ட அப்பெரியார்களின் முயற்சி இவ்வளவு எதிர்ப்புக்களையும் தாண்டி பலன் கொடுத்து வருகின்றதென்றே சொல்லலாம்.
உதாரணமாக, சமூக சீர்திருத்தங்களுக்குச் சட்டங்கள் செய்யக் கூடாதென்றும் சம உரிமைக்கும் சம சந்தர்ப்பத்திற்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவங்கள் கூடாதென்றும் பலர் சொல்லியும் எதிர்ப் பிரசாரமும் செய்து வந்ததும் யாவரும் அறிந்ததேயாகும்.
இப்போது சமூக சம்பந்தமான எல்லாச் சீர்திருத்தங்களுக்கும் சட்டங்
கள் ஏற்படுத்த முயற்சி செய்துவருவதும் பல சட்டங்கள் ஏற்பட்டுவிட்டதும் பிரத்தியட்சத்தில் பார்த்து வருகின்றோம். அது மாத்திரமல்லாமல் சாஸ்திரி
களும் வைதீகர்களும் வருணாசிரமக்காரரும் மகாநாடுகள் கூட்டி சமூகச் சீர்திருத்தத்திற்குச் சட்டங்கள் வேண்டுமென்று தீர்மானிப்பதுவும் பார்த்து வருகின்றோம்.நிற்க வகுப்புவாரி உரிமை - பிரதிநிதித்துவம் ஆகிய விஷயங் களில் சட்டசபை முதலிய ஸ்தாபனங்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை தேர்தல்களிலும் சர்க்கார் நியமனங்களிலும் சட்டப்படி ஏற்படாகி வந்திருப்பதுடன் அவைகள் அனுபோகத்திலும் பயனளித்து மேலும் அதைப் பின்பற்ற உறுதி செய்தும் ஆகிவிட்டது. மற்றபடி சர்க்கார் உத்தியோகங்க ளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை சர்க்காராலும் ஜனப்பிரதிநிதி கள் பெரும்பான்மையாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வரும் படியாக உத்தரவும் போடப்பட்டு இப்போது அவை அமுலிலும் வந்து விட்டன. இந்தத் திட்டம் சரியானதா? சரியில்லாததா? என்கின்ற ஆட்சே பனை சிலருக்கு இருந்தாலும் கொள்கைகள் நமது நாட்டில் ஒப்புக் கொள்ளப் பட்டு வரவேற்கப்பட்டுமாய் விட்டது.
உண்மையில் பொது நலத்திற்காக உழைத்து வந்தவர்கள் அரசாங்க உத்தியோகங்கள் விஷயத்தில் எம்மாதிரியான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டு வந்தார்களோ அது போலவே சர்க்கார் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். அதாவது இப்போது நமது நாட்டைப் பொறுத்த மட்டில் வகுப்புகள் என்பதில் பெரும்பான்மையான வித்தியாசங்கள் அதாவது ஒருவருக்கொருவர் சமூக வாழ்வில் லட்சியத்தில் ஒற்றுமைப்படாத வகுப்பு
கள் சாதாரணமாக 5 பிரிவினைகள் கொண்டதென்றே சொல்லலாம். என்ன வெனில், ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என்கின்ற மூன்று மதப்பிரிவும், இந்துக்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்கின்ற மூன்று பிரிவும் பிரிக்கப்பட்டு இந்தியரல்லாதார் என்கின்ற மூன்று பிரிவுகளுமாக ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அவ்வைந்துக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டாய் விட்டது.விவரம் எப்படியெனில் மொத்தத்தில் சர்க்காருக்கு'2 உத்தியோகஸ்தர்கள் தேவையிருந்தால் அவற்றுள். பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு 5-ம், பார்ப்பனர்களுக்கு 2-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 1-ம் முஸ்லிம்களுக்கு 2-ம், கிறிஸ்தவர்களுக்கு 2-ம்
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
என்கின்ற வீதமாகவும்,முறையில் முதலாவது பார்ப்பனரல்லாதார், இரண்டாவது. முஸ்லீம், மூன்றாவது பார்ப்பனரல்லாதார், நான்காவது கிறிஸ்தவர், ஐந்தாவது பார்ப்பனர், ஆறாவது பார்ப்பனரல்லாதார், ஏழாவது தாழ்த்தப்பட்டவர், எட்டாவது பார்ப்பனரல்லாதார், ஒன்பதாவது முஸ்லீம், பத்தாவது பார்ப்பனரல்லாதார், பதினோராவது கிறிஸ்தவர்.பன்னிரெண்டாவதுபார்ப்பனர் என்கின்ற முறைப்படி உத்தியோகங்கள் கொடுத்து வருவதென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.ஒரு சமயம் தேர்தல் பிரதிநிதித்துவம் விஷயமாக பொது ஜனங்களிடம் பிரசாரம் செய்வதன் மூலம் பிரதிநிதித்துவம் உரிமை பெறலாம் என்று சொல்லுவ தாணலும்சர்க்கார் உத்தியோக விஷயத்தில் கண்டிப்பாக சர்க்கார்சட்டம் மூலமாக. அன்றி வேறு விதமாகப் பெற்று விடக்கூடும் என்று சொல்லுவது சுலபமான காரியமல்ல.ஆகையால் அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய காரியத்தை பலவிதத்
திலும் அதாவது சூழ்ச்சியிலும் விஷமப் பிரசாரத்திலும் கூலியிலுமாகப் பார்ப்பனர்கள் செய்து வந்த பலமான எதிர்ப்புகளைத் தகர்த்து இம்முடிவைப் பொது மக்கள் அடைந்ததற்கு முக்கிய காரணஸ்தராயுள்ளவர் நமது சுகாதார மந்திரியாகிய கனம் திரு.முத்தையா முதலியாரேயாவார்.அவர் முதலில் தமது. ஆட்சிக்குக் கட்டுப்பட்ட உத்தியோகங்களில் இம்மாதிரி முறையைக் கையாளச் செளகரியம் செய்து கொண்டு பிறகு அதையே சர்க்கார் உத்தி யோகம் எல்லாவற்றிற்கும் என்று சட்டம் செய்தார். இதற்கு நமது முதல் மந்திரி, கனம் சுப்பராயன் அவர்களும், முற்போக்கு மந்திரிகனம், சேது ரத்தினமய்யர். அவர்களும் மிகுதியும் பாராட்டக் கூடியவர்களேயாவார்கள். ஆனால், எல்லா வற்றையும் விட நமது மாகாண கவர்னர் மேன்மை தங்கிய கனம் மார்ஷ் பாங்ஸ் துரையும் நாம் பெரிதும் பாராட்டுவதற்கும், நன்றி செலுத்துவதற்கும் உரியவர் என்பதை நாம் மறக்க முடியாது. ஏனெனில், வெள்ளைக்காரர்கள் பெரும்பாலும் நமக்குள் ஒற்றுமையில்லாமல் இருப்பதற்கு ஆதாரமான காரியங்களைச் செய்வதிலேயே கருத்துள்ளவர்கள். ஏனெனில் நமது ஒற்றுமை ஈனத்தினாலேயேதான் அவர்கள் இங்கு வாழக்கூடுமே ஒழிய வேறு யோக்கியமான காரியங்களால் வாழ முடியாது என்று நினைக்கின்றவர்கள். அவர்களுக்குஅவர்களின் குழந்தைப் பருவத்திலேயே இந்தியர்களைப் பிரித்து வைத்தால்தான் வெள்ளைக்காரர்கள் வாழ முடியும் என்கின்ற வார்த்தைகளைக் கரைத்துப் பாலுடன் சேர்த்து பால் பெட்டியில் ஊற்றி பால் கொடுத்து வளர்க்கப்படுகின்றார்கள்.ஆனால் நமது மேன்மை தங்கிய மார்ஷ்பாங்ஸ் துரை. முழுதும் அந்தப் பாலே குடித்தவர் அல்லர். அவர் என்னதான் ஐரோப்பி யரானாலும் இந்தியா விஷயத்தில் மற்ற பெரும்பான்மை வெள்ளைக் காரர்களைப்போல் அவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவரல்லர். ஆதலால் அவர் செய்த காரியத்திற்குத் தகுந்த அளவாவது நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றோம். எனவே, நமது லட்சியம் ஒருவாறு வெற்றி பெற்று விட்டதால் இவற்றிற்கு விரோதமில்லாத அரசியலில் நாம் கலந்துழைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோமானாலும் உண்மையுடன் ஒத்துழைக்கவும், போலியுடன் போர் செய்யவும் கடமைப்பட்டிருப்பதை யும் தெரிவித்துக்
குடி அரசு - 1929 @) 70
கொள்ளாமல் இருக்க முடியவில்லை. முடிவாக பொது ஜனங்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் உறுதியுடனும், பிடிவாதத்துடனும் ஒரே கொள்கையுடன் வேலை செய்தால் மத்தியில் இவ்வளவு இடையூறும் கஷ்டமும் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி பெறலாம் என்பதேயாகும்.
குடி அரசு - தலையங்கம் - 04.08.1929
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ங் கற்யட்டு வில் PR W s
IDBITHITG
செங்கற்பட்டில் மாகாண சுயமரியாதை மாநாடு நடந்த பிறகு சில பார்ப்பன தாசர்களுக்கு அடியோடு செல்வாக்குப் போய்விட்டபடியால் அதை மறுபடியும் சம்பாதிப்பதற்கென்று சமீபத்தில் காங்கிரசின் பேரால் ஒரு மகாநாடு கூட்டினார்கள். அம்மகாநாடு கூட்டுவதற்கு சில நாளைக்கு முன்பிருந்தே திரு.இராஜகோபாலாச்சாரியாரைக்கொண்டு அவர் தனது தாசர்களுடன் அச்சில்லாவில் பல பாகங்களிலும் மதுவிலக்கின் பேரால் சுயமரியாதை இயக்கத்தையும் ஜஸ்டிஸ் கட்சியையும் நினைத்தபடிக்கெல் லாம் தூஷித்தும் பழி சுமத்தியும் விஷமப்பிரசாரம் செய்தும் பார்த்தார்கள். என்னசெய்தும் வழிவழியாக வந்த பார்ப்பனதாசர்களைத் தவிர வேறுயாரும். அம்மகாநாட்டிற்கு செல்லவில்லை என்றே தெரிய வருகின்றது. சென்னையில் இருந்து திரு. எஸ். சீனிவாசய்யங்கார் மாத்திரம் தன் சொந்த செலவில் ஒரு கூலிப்படையைத் திரட்டிக் கொண்டு போனார். மற்றபடி அம்மகாநாட்டில் நடந்த பிரசங்கங்களும் தீர்மானங்களும் பெரிதும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் செங்கற்பட்டு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் திரு. ராவ்பகதூர் எம்.கே. ரெட்டியையும் அய்யங்கார். மெச்சும்படி வைததைத் தவிர வேறு ஒன்றும் செய்ததாக அவர்களாலேயே சொல்ல முடியாது என்று நினைக்கின்றோம்.
பரிசுத்த பார்ப்பன தாசராகிய திரு.முத்துரங்க முதலியார் சுயமரியாதை மகாநாட்டைப்பற்றி நூற்றுக்கணக்கான கேள்விகள் சட்ட சபையில் கேட்டு நல்ல நல்ல பூசை வாங்கித்தோளின் மேல் போட்டுக் கொண்டது யாவருக்கும் தெரியும்.தோளின் மேல் தொண்ணூறு அடி அடித்தாலும் துடைத்துவிட்டால் ஒன்றுமில்லை என்கின்ற பழமொழிக்கு இணங்க அவ்வளவையும் மறந்துவிட்டு மறுபடியும் அதேபாடம் படித்து இருக் கின்றார்.
திரு. முத்துரங்க முதலியாருக்கு இந்த உலகத்தில் ஆக வேண்டிய காரியமெல்லாம் ஒன்றே ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அதுவே
தான் அவரது மோக்ஷமும் சுயராஜ்யமும் பூரணசுயேச்சையுமாகும். அது என்னவென்றால் எப்படியாவது திரு.எம்.கே. ரெட்டியாருக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு பதவி இல்லாமல் செய்து யாராவது ஒரு பார்ப்பன தாசருக்குக்
குடி அரசு - 1929 @) 72
கிடைக்கும்படி அதை செய்வித்து அவருக்கு இவர் சிஷ்யராய் இருந்து பாத
தீர்த்தம் சாப்பிட்டால் அதுவே போதுமானதாகும். ஐயோ பாவம் ஒரு தாலூகா போர்டு மெம்பர் ஸ்தானம் பெறுவதற்குக் கூடச்சக்தியில்லாமல் போன அவ்வளவு “செல்வாக்குடைய இப்பெரியார் மேற்கண்ட காரியத்தைத் தமது முடிவான லக்ஷியமாய் வைத்திருப்பதில் ஒன்றும் அதிசயமில்லை என்றே சொல்லுவோம். ஆனால், அதற்கு ஆக திரு. ரெட்டியார் மீது சொல்லும் புகார்கள் என்னவென்று பார்ப்போமானால் அதுவும் ஒரே காரியம் தான். அதென்னவென்றால் திரு.எம்.கே. ரெட்டியார் ஆட்சிஎல்லையில் உள்ள ஒரு ஆற்றிற்கு அதாவது ஊத்துக்கோட்டை ஆற்றிற்கு பாலம் கட்டியதில் அது கட்டி முடிந்த சில நாட்களில் பழுதாய்ப் போய்விட்டதாம். இதனால் அனேக: ரூபாய்கள் நஷ்டமாய் விட்டதாம். இது வேண்மென்றே செய்யும் விஷமப் பிரசாரம் என்றும் அப்பாலம் பழுதுபட்டதற்கு திரு. ரெட்டியாரோ அவரது ஜில்லா போர்டாரோ பொறுப்பாளிகள் அல்லவென்றும் சர்க்காரே அதற்கு பொறுப்பாளிகள் என்றும் பல தடவை எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றது. அப்படி இருக்க அதைச்சற்றும் கவனிக்காமல் திரும்பத் திரும்பஅதையே சொல்லுவதால் திரு. ரெட்டியார் மீது சுமத்துவதற்கு உண்மையான குற்றம் வேறு ஒன்றும் இல்லை என்பது நன்றாய் விளங்கும்.
இந்த பாலம் பழுதுபட்டதற்குயார் பொறுப்பாளி என்பதை வெளியிட
சர்க்கார் இன்னமும் விழிப்பதைப்பார்த்தாலே அதன் உண்மை விளங்கி விடும். பிரஸ்தாப பாலம் கட்டுவதற்காக ஜில்லா போர்டாரால் போடப்பட்ட ஒரு பிளானையும் எஸ்டிமேட்டையும் சர்க்காரார் அப்படியே ஒப்புக் கொள்: ளாமல் பிளானைத்திருத்தியதுடன் எஸ்டிமேட்டிலும் சுமார் 35000 ரூ. வரை: குறைத்து விட்டார்கள். இதைப்பற்றி ஜில்லா போர்டார் எவ்வளவு வாதாடியும் சர்க்கார் இஞ்சினீர் இலாக்காதாரர்கள் பிடிவாதமாய் இருந்து விட்டதால்
சர்க்கார் உத்திரவுப்படி கட்ட வேண்டியதாயிற்று. அப்படிக் கட்டிய பாலம் எதிர்பாராத வெள்ளம் வந்து விட்டதால் சிறிது பழுதாக வேண்டிய தாய் விட்டது. இவற்றிற்குத்தக்க ஆதாரங்கள் சர்க்காரிலும் ஜில்லா போர் டிலும் இருக்கின்றன. இப்போது வேண்டுமானாலும் உண்மை உணர வேண்டு மென்கின்ற யோக்கியமான எண்ணமுடையவர்கள் யாரும் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். ஜில்லா போர்டாருடைய பழைய பிளான் படியும் எஸ்டிமேட்டின்படியும் இப்போதும் வேலை செய்ய செளகரியமிருக்கின்றது. அந்தப்படி செய்யவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறதாக தெரிய வருகின்றது. புதிதாக கட்டுவதில் பழைய கட்டிடத்தையும் அடியோடு உபயோகித்து கொள்ளலாம். எனவே அப்படிச்செய்வதில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரண்டு செலவும் சேர்ந்து முன்னைய எஸ்டிமேட் செலவுக்கு உள்ளாகவே
தான் வேலை முடிவடையக்கூடும். ஆகவே, அந்தப் பால விஷயமாய்ப் பணம் போச்சு, பணம் போச்சு என்று நீலிக்கண்ணீர் விடுவதெல்லாம் பாமா மக்களை ஏமாற்றச்செய்யும் சூழ்ச்சியே அல்லாமல் அதில் ஏதும் நாணயப் பொறுப்பு இருப்பதாய்ச் சொல்வதற்கில்லை.
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சென்ற வருஷத்திலும் இதேமாதியாகவே ஒரு அபாண்டமான பழியை இக் கூட்டத்தார்களே திரு.எம்.கே. ரெட்டியார் மீது சுமத்தி விஷமப்பிரசாரம் செய்தார்கள். அதாவது ஒரு மோட்டார் பஸ்ஸானது மற்ற
ஒரு ஆற்றுப்பாலத்தின் மீது செல்லுகையில் தவறி ஆற்றில் விழுந்து விட்டதற்கு அந்த பாலத்திற்குச் சரியானபடி அடைப்பு அடைக்கவில்லை
என்றும் அதற்கு ஜவாப்தாரி திரு. ரெட்டி யாரென்றும் இந்து சுதேசமித்திரன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பன தாசர்களும் போலிக் கூச்சலிட்டார்கள். பிறகு உண்மையை விசாரித்த போது அந்தப் பாலமும், ரோட்டும் ஜில்லா போர்டிற்கு சம்மந்தப் பட்டதல்லவென்றும் அதற்கு செங்கற்பட்டு ஜில்லா போர்ட்டும் சிறிதும் பொறுப்பாளிகள் அல்லவென்றும் ஏற்பட்டுவிட்டதுடன். எதிரிகள் வெட்கப் படும்படியாகவும் ஆகிவிட்டது. ஆகவே, இக்கூட்டத்தார்கள் இது போலவே திரு.ரெட்டியார் மீது இம் மாதிரியாகவே வீண்பழி சுமத்தி அவரை ஒழிக்க வேண்டுமென்பதில் கவலை எடுத்துக் கொள்ளுகின்றார்களே தவிர மற்று பொதுஜனங்களுக்கு ஏதாவது நன்மை செய்து அவர்களில் செல்வாக்குப் பெறும் விஷயத்தில் சற்றும் கவலை எடுத்துக்கொள்வதே கிடையாது.
இந்த முறையிலேயே பார்ப்பனர்கள் இது வரை நம் பாமர ஜனங்களை ஏமாற்றிக்கொண்டு வந்திருப்பதால் இனியும் இது போலவே நடத்தலாம் என்கின்ற ஆசையின் பேரில் இம்மாதிரி தங்கள் தாசர்களைவிட்டு விஷமப் பிரசாரம் செய்கின்றார்கள். ஆனால் இனி அந்த வித்தை பலிக்கும் என்று எதிர்பார்ப்பது வீண்கனவேயாகும். நிற்க, திரு.எம்.கே. ரெட்டியார் ஜில்லா போர்டு நிர்வாக விஷயத்தில் இம்மாகாண ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது போல் கிராம சீர்திருத்தங்களும், பாதை போக்கு வரவு சாதனம் முதலிய சீர்திருத்தங்களும் மற்றும் ஜில்லா நன்மையை உத்தேசித்து சர்க்காரிடம் மற்ற ஜில்லா போர்டுகளைவிட அதிகமான உதவித் தொகை பெற்று அநேக முன்னேற்ற வசதிகளும் செய்திருப்பதுடன் மேல் நாட்டு முறைகளை அனுசரித்து ஸ்தலஸ்தாபன நிர்வாகிகள் சங்கம் ஒன்று ஏற்படுத்த வேண்டிய முயற்சி எடுத்து பாடுபட்டு வருவது யாவரும் அறிந்த தொன்றாகும். கடைசியாக திரு. எம்.கே. ரெட்டி மாகாண சுயமரியாதை மகாநாடு கூட்டி அதை இது வரை இந்த மாகாணத்தில் எந்த மகாநாடும் இது போல் நடத்தப்பட்டதில்லை என்று சொல்லும் படியான மாதிரியில் வெற்றி பெற நடத்தினதினால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட பொறாமையானது அவரு டைய நன்மைகளையெல்லாம் வேண்டுமென்றே மறைத்துவிட்டு தப்பான காரியங்களைக் கற்பனை செய்து தங்கள் தாசர்களை.
பிடித்து இம்மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய வேண்டியதாய் விட்டது. என்றாலும் பொது மக்கள் இந்த புரட்டுகளை அறிந்து கொள்வார்கள் என்றே
சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.08.1929
குடி அரசு - 1929 @) 74
திரு. தண்டபாணரிபிண் கால்லை
சென்னை, ஆகஸ்டு, 2
“திராவிடன்” பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுக்கும் ஏஜண்டாயிருந்த திரு.என். தண்டபாணிபிள்ளை திராவிடன் பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுத்ததன் சம்பந்தமாக தமக்கு கமிஷனாகவும் தம் ஏஜண்ஸியை நிறுத்தித் தம்மை நீக்கியதன் சம்பந்தமாகத் தமக்கு மூன்று வருட நஷ்ட ஈடாகவும் மொத்தத்தில் பன்னீராயிரத்துச் சொச்சம் ரூபாய் சேர வேண்டுமென்று ஐகோர்ட்டில் திருஈ.வெ.ராம சாமியார் மீது அசல் தரப்பில் கொண்டு வந்துள்ள வழக்கு சம்பந்தமாய் திரு.ராமசாமியார் திருஸி.ஜெயராம். நாயுடுவுக்கு 13 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டுமென்று பலவாறு
புகார் சொல்லி அவ்வழக்கில் தீர்ப்பு சொல்லுமுன் திராவிடன் ஆபீஸ் சொத்துக்களை உடன் ஜப்தி செய்து வைக்க உத்தரவாக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் சொத்துக்களை பராதீனம் செய்து விட்டு ஊரைவிட்டு ஓடி விடுவாரென்றும் திரு. தண்டபாணி போட்டி ருந்த மனு நீதிபதி பண்டலே முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் சம்பந்தமாக செங்கல்பட்டு ஜில்லா போர்டு உபதலைவரான திரு.ஸி.ஜெயராம் நாயுடு அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண
வாக்கு மூலமொன்றில், திரு. தண்டபாணி பிள்ளை தமது வழக்கில் தீர்ப்பு சொல்லப்படுமுன் ஜப்திக்கு உத்தரவாக வேண்டுமென்று கொடுத்திருந்த மனுவில் கண்ட விஷயங்கள் தமக்கு படித்துக்காட்டப்பட்டதாயும், அதில் தமக்கு திரு.ஈ.வெ.ராமசாமியார் 13ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டி யிருப்பதாய்த் திரு. தண்டபாணி குறிப்பிட்டிருப்பது சரியல்ல வென்றும். தமக்கும் திரு. ராமசாமியாருக்கும் திராவிடன் சம்பந்தமாய் எத்தகைய கொடுக்கல் வாங்கல்களும் கிடையாதென்றும், திரு. ராமசாமியார் தமக்குக் கடன் ஒன்றும் கொடுக்க வேண்டியதில்லை என்றும், திரு.தண்டபாணியின்
புகார் பொய் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மற்றும் திரு. தண்டபாணி தமது ஜப்தி மனுவுக்கு ஆதரவாய் திருராம சாமியார் திராவிடன் சொத்துக்களை சுயமரியாதைச் சங்கத்திற்கு மாற்றப் போவதாய் புகார் சொல்லியிருந்ததன் சம்பந்தமாய் “திராவிடன்” காரியா
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
லயத்தையும் சொத்துக்களையும் திரு.ஈ.வெ. ராமசாமியிடம் ஒப்புவித்து, பத்திரிகையைச் சிறப்புடன் நடத்தும்படி விடுத்துள்ள தென் இந்திய மக்கள். சங்கத்துக் காரியதரிசி திவான்பகதூர் டி.வரதராஜுலு நாயுடு அவர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மற்றொரு பிரமாண பத்திரத்தில் மேற்படி சங்கத்து 8-7-27 ல் கூடிய டைரெக்டர்கள் கூட்டமொன்றில் நிறைவேற்றப் பட்ட தீர்மானப்படி திரு.ஈ.வெ. ராமசாமியிடம் சங்கத்தின் தமிழ் தினசரிப் பத்திரிகையான “திராவிடன்” பத்திரிகையை அத்தீர்மானத்தில் கண்ட நிபந்தனைகளின்படி மூன்றாண்டுகளுக்கு நடத்தி வருவதற்காக அதன் காரியாலயச் சொத்துக்கள் இயந்திரங்கள் முதலியவற்றோடு ஒப்புவிக்கப் பட்டதாயும் திராவிடன் பத்திரிகை சம்பந்தமான இயந்திரங்கள், அச்சு, மரச் சாமான்கள் முதலிய சகல சொத்துக்களும் மேற்படி சங்கத்திற்குச் சொந்த மானவைதான் என்றும், அவற்றைக் கொண்டு பத்திரிகையைச் சிறப்பாய்
நடத்தும் உரிமையைத் தவிர மற்றபடி திரு.ராமசாமியாருக்கு அவற்றின் மீது ஸ்வாதீன உரிமையொன்றும் கிடையாதென்றும் எடுத்துக் காட்டியிருந்தார்.
திரு.ராமசாமியாரின் எதிர்மனு
திருதண்டபாணி பிள்ளையின் மனுவில் என்னைக் குறித்தறிவிக்கப் பட்டுள்ள புகார்களனைத்தும் பொய்யாயும் ஆதாரமற்றதாயும் இருப்பதோடு அவை சமுதாய, ராஜீயத்துறைகளிலுள்ள எனது விரோதிகளின் தூண்டு தலால் பொது உழைப்பாளியாகிய என்மீது இக்கோர்ட்டாருக்கும், பொது ஜனங்களுக்கும் ஒருவித துர் அபிப்பிராய மேற்படச் செய்யும் கெட்ட நோக்கத்தோடு வேண்டுமென்றே விஷமத்தனமாய் சொல்லப்பட்டவை.
நான் 8-7-27-ல் தென்னிந்திய மக்கள் சங்கத்து டைரெக்டர்கள். கூட்டமொன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி திராவிடன் பத்திரிகையை மூன்று வருடங்களுக்கு நடத்தும் பொறுப்பேற்று நடத்து
கின்றேன். அப்பத்திரிகை சம்பந்தமான இயந்திரம் முதலான சகல சொத்துக் களும் அச்சங்கத்தைச் சேர்ந்தவையாயினும் அத்தீர்மானப்படி பத்திரிகையை நடத்தும் செளகரியத்தை முன்னிட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவேயன்றி அவற்றின் மீது எனக்கு எத்தகைய ஸ்வாதீன உரிமையுமில்லை.
மற்றபடி 5-4-28-ல் எனக்கும் தண்டபாணி பிள்ளைக்கும் ஏற்பட்டதாய்ச் சொல்லப்படும் ஒப்பந்தத்தின் சம்பந்தமாகவும், அவரை: ஏஜென்ஸியிலிருந்து நீக்கியதன் சம்பந்தமாயும் அவர்கோரும் நஷ்ட ஈடு முதலிய விவகாரங்களைக் குறித்தமட்டில் சந்தர்ப்பம் ஏற்படும்போது நான். அதற்குச் சமாதானம் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆயினும் தற்போது அவர் தமக்குச் சேர வேண்டுமெனச் சொல்லும் தொகையைக் கொடுக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும், அவர் ஏதோ ஆதாரமின்றி கண்டபடி
குடி அரசு - 1929 @) 76
கணக்குப்போட்டிருப்பதற்கு நான் உத்தரவாதமல்ல என்றும், அவருடைய
புகார்கள் குறும்புத்தனமாக என்னை மற்றவர்கள் முன்னிலையில் கேவலப் படுத்திவிடலாம் என்கின்ற நோக்கத்தோடுதான் செய்யப்பட்டது என்றும்
தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நான் ஒரு சமயத்தில் ஈரோடு முன்சிபல் சேர்மணாயிருந்திருக்கிறேன். என் பேருக்கே சுமார் ஒரு லட்சரூபாய் பெறுமான சொத்துக்களிருப்பதோடு, கோயம்புத்தூரிலும், சேலம் ஜில்லாவிலும் என் தந்தைக்குச் சொந்தமான சுமார்.
10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களிருக்கின்றன.நான் வருடவாரி சராசரியில் 2500 ரூபாய் வீட்டுவரியும். 700 ரூபாய் நிலவரியும், 300 ரூபாய் வருமான வரியும் செலுத்தி வருகின்றேன். நான் ராஜீய, சமுதாயத் துறையிலு மைத்து வரும் பொது ஊழியன். அன்றியும் 9000 சந்தாதாரர்களையுடைய “குடி அரசு” என்னும் தமிழ் வாரப் பத்திரிகைக்கும், “ரிவோல்ட்”” என்னும் மற்றொரு ஆங்கில வாரப் பத்திரிகைக்கும் ஆசிரியனாயுமிருந்து வருகின்றேன்.
திரு.தண்டபாணி பிள்ளை நான் கடனில் மூழ்கியிருப்பதாய்ச் சொல்லியிருப்பதைப் பலமாய்க் கண்டித்து மறுப்பதோடு ஸி.ஜெயராம் நாயுடு உட்பட நான் யாருக்கும் எத்தகைய கடனும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்க விரும்புகின்றேன். வாதி எனக்குக் கடன் கொடுத்ததாய்ச் சொல்லுவதற்குப் பதிலாக நான் வாதியின் கெளரவத்தைக் காப்பாற்றுவதற்கும் அவருடைய கஷ்டகாலத்திலும் பலதடவைகளில் பண உதவி செய்திருக்கின்றேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
கடன் கொடுத்தவர்களை மோசம் செய்யும் கருத்துடன் நான் சென்னையிலுள்ள என் சொத்துக்களை எல்லாம் சுயமரியாதைச் சங்கத்திற்கு எழுதி வைக்கப் போவதாய் சொல்லப்பட்டிருப்பது முழு மோசமான பொய். அத்தகையஆலோசனை ஏதாவதிருந்ததாய் வைத்துக் கொண்டாலும், அது “திராவிடன்”, “குடி அரசு” பத்திரிகைகளின் செல்வாக்கை மிகுதிப்படுத்தி சிறப்புடன் நடத்திவைப்பதன் பொருட்டு செல்வாக்கும் செல்வமுமுள்ள சில கெளரவஸ்தர்களான டைரெக்டர்களடங்கிய கமிட்டியாரிடம் பத்திரிகளை நடத்தப்படுவதற்கு ஒப்புவிப்பதான கருத்தே ஒழிய என் சொத்துக்களின் உரிமையை மாற்றுவதாகவோ, அல்லது சாமான்களை அவர்களுக்குக் கொடுத்து விடுவதாகவோ எத்தகைய உத்தேசமுமிருந்ததில்லை.
வாதிதமது புகார்களெல்லாம் சுத்தப்பொய் என்பதை உணர்ந்திருந்தும் என் பொது ஊழியத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதில் ஊக்கமுள்ள விரோதிகளால் தூண்டப்பட்டு என்மீது இத்தகைய ஆதாரமற்ற வழக்குக் கொண்டு வந்ததோடு, எனது சொத்துக்களை உடன் ஜப்தி செய்ய ஜப்தி மனுவும் தாக்கல் செய்யத் தூண்டப்பட்டிருக்கின்றார் என்பதையும்
தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இத்தகைய பொய்யான சூழ்ச்சி காரணமான மனுப் போட்டிருப்பதனால் என்மீது பொது ஜனங்களிடத்திலுள்ள மதிப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், இதன். சம்பந்தமாக நான் பின்னால் தக்க பரிகாரத்தைத் தேடிக் கொள்ளுகிறேன்.
குறிப்பு:நீதிபுதி பண்டலே முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திரு. தண்டபாணி பிள்ளையின் மனுவை ஆதாரமற்றது எனக் குறிப்பிட்டு நீதிபதி செலவுத் தொகையுடன் தள்ளிவிட்டார்.
குடி அரசு - நீதிமன்ற மனு - 04.08.1929
குடி அரசு - 1929 @) 78
காந்தியின் கண் விழிப்பு
கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படாதென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம் தான்
கூலி கிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப் பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணி களுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசுகொடுத்தால் தான் கட்டுமென்றும். சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங் கொள்ளத் தொடங்கினார்கள். சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம்.
உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரசாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாகவும் உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையை தைரியமாய்
எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு,
இப்போதுதான் திருகாந்தி அவர்கள் கண்விழித்துஇதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார். அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும்படியான புதிய கையந் திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானங்கள் செய்வதற்குஆக ஒருலக்ஷ
ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார். இது பயன்பட்டாலும். பயன்படாவிட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர்நிலை இப்படியே தான் இருக்கவேண்டும் என்றும், இதனாலேயேதான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு “சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல” என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனங்கள் கவனிப்பார்களே ஒழிய “மகாத்மா சொல்லுகின்றார்” என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில்கண் மூடிநம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை
விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத் தனத்திற்கு சற்று உதவி செய்வார்களாக.
குடி அரசு - கட்டுரை - 1.081929
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா
நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக்
கச் செய்ய விரும்பவில்லை. எனினும், நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துக்காட்டிப் பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஓப்புக் கொள்வீர்களென்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சு
களிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயுமிருக்கலாம். மற்றும் உங்களுள். ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந் தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியை யொட்டித் தாழ்மையாகத் தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையே யாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலரு
கிலும் வரக்கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப்பட்டபோதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவதில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு. முனிசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத்தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம்.ஆனால், பிறவியில்
மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டு விடும்போது ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும்
ஆதிதிராவிடர் எனப்படும் முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும் விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக் கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய்ப் பிறந்து விட்டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது, வேதத்தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின் மீது பழியைப் போடுவதோடு, மதத்தையும் தங்கள். கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங்களின் பேராலும், செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை. மற்றும் “பெரியவர்கள்.
குடி அரசு - 1929 @) 80
சொல்லி விட்டார்கள்: கடவுளால் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எழுதி வைக்கப்பட்டுவிட்டது. அதைப் பற்றி அதிகமாய்க் கேட்காதீர்கள்” என்று கொடுமைகளுக்குச் சாக்கு சொல்லிக் கொண்டும், ஆயிரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக்குள்ளாக் கப்பட்டும் வருகின்றது. ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. ஆதிதிராவிடர்களாகிய உங்களைவிட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களைவிட உயர்ந்த ஜாதியார். என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போகவில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும். குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டு மென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பன னுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்களென்ற இழி பெயர்களுமிட்டழைக் கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவுளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென்கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும்
சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில் லாதிருந்து வந்திருக்கின்றது. இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும், வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்ட போதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சி களாலும் அடக்கித் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றனர். ஒவ்வொருவரும் நமக்கென்ன? நம்ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போமென்ற இழிவுக்கிடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்கமேற்படாது என்பது திண்ணம். கேளுங்கள்! (கரகோஷம்) ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. (கரகோஷம்) சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து நமது விரோதி கள் என்ன சொல்லுகின்றார்கள் என்பதைக் குறித்து நமது நண்பர் பால குருசிவம் சிறிது நேரத்திற்கு முன் தெளிவாய் எடுத்துச் சொல்லி யிருக்கிறார். அவர் இவ்வியக்கத்தில் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருக்கின்றதெனக் கூறியது முக்கியமாய்க் குறிப்பிடத் தக்கது. சுய மரியாதைக்காரர்கள் கோயில், குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கிறார்கள்; இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய் விடும் போலிருக்கிறது, சுவாமி போய் விடும் போலிருக் கின்றது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடுகின்றார்கள்.
பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலிகளுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டுமிருக்
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கிறார்கள். அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரசார மோசத்தையுமுணராது அவர்கள் பிதற்றல்களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லுகிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்து கின்றேன். உண்மையில் ஆஸ்திக நாஸ்திகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. உலகத்தில் அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன். என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமை களை நிலை
நாட்டி சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையா யிருக்கும் எந்த சாஸ்திர, புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக் காரர்களாகிய நாங்கள் தயாராயிருக்கிறோம், (கரகோஷம்) மக்கள் முன்னேற்றத்தில் மதம்
வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந்தாலும் அதனை ஒழித்துத் தானாகவேண்டும். (கேளுங்கள்! கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்
தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனை பார்ப்பனணாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமைகளுக்கு ஆதரவா
யும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயுமிருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத் தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. (பெருத்த கரகோஷம்) கொடுமை: செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவுளையும் ஒழிப்பதற்கு பயந்தோ மானால் நாம் நிரந்தரமாய்ப் பறையணாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டுவந்த கடவுளும்
மதமும் போக வேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை... (கரகோஷம்) சமீபத்தில் நேப்பியர் பார்க்கில் கூடிய ஆதிதிராவிடர் சுய மரியாதை மகாநாட்டில் இந்துக்கள் எனச் சொல்லிக் கொள்ளப்படும் 6 கோடி மக்களாகிய ஆதிதிராவிடர்களை ஜாதிக் கொடுமையால் ஆலய உரிமை யின்றி கொடுமைப்படுத்தப்படுவதால் இந்து மதத்தில் அவர்களுக்குச் சம உரிமையில்லாவிட்டால் வேறு மதத்தில் சேருவதுதான் உசிதமென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சம உரிமையில்லாதிருப்பதை விட சாவதே மேல் என்றுநினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாயிருக்க முடியாது.
அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை. ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க நமது பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த கபிலர் காலத்திலும், திருவள்ளுவர் காலத் திலும், அதற்குப் பின்னரும் ஜாதியில்லை. ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக் கொடுமைப்
பேய்கள் ஒழிந்தபாடில்லை. ராமானுஜர் ஜாதியில்லை என்றும், சமத்துவத் திற்காகவும் பாடுபட்டார். தேவாரம் பாடியவர்களும் ஜாதியில்லை என்பதை
குடி அரசு - 1929 @) 82
விளக்கினார்கள் என்று சொல்மாத்திரத்தில் நிற்கின்றதேயன்றி உண்மையில் அக்கொடுமைகள் ஒழிவதற்கு மார்க்கமில்லாமல் தானிருக்கின்றது. நமது
பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக்காகப் பிறரால் வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவேயன்றி செய்கையில் அதனால் ஒரு பலனு மேற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் ஜாதிக் கொடுமையினால்,
இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப்பட்டுவிடும்; அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடு கின்றன. இதற்குச் சாஸ்திரம் இப்படிச் சொல்லுகின்றது: மதம் அப்படி மறுக் கின்றதென்று சாக்குச் சொல்லிக் கொண்டிருப்பதை எவ்வளவு காலத்திற்குத் தான் விட்டுக் கொண்டிருக்க முடியும்? ஒருவர், ஆதி திராவிடர்களை இழிவு
படுத்தப்படுகிறதா? இல்லை, இல்லை. நந்தனாரை நாங்கள் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் பூசித்தும் வரவில்லையா? என்று வாய் வேதாந்
தம் பேசுகின்றார். பறையனாய் இருந்த நந்தனார் திருநாளைப் போவாராகி விடவில்லையா? அப்படியிருக்க புராணத்தை ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்கிறார் அந்த அறிவாளி. அந்த நந்தனுடைய பின் சந்ததி யாராகிய பேரப் பிள்ளைகளை அந்த திருநாளைப் போவாராகிய நந்தனிருக் குமிடத்தைக் கூடப்போய் ஏன் பார்க்க விடுவதில்லை? என்றுதான் கேட்கின் றோம். (கரகோஷம்) அப்படிக் கேட்டால் அந்த நந்தன் வேறு ஜென்மம், இவர்கள் வேறு என்று பல புராணப்புரட்டுகள் பேசுகின்றார்கள். (நகைப்பு) இதுபோலவே தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் ஆழ்வாராக வில்லையாவென்று வைணவர்கள் சாக்குச் சொல்லுகின்றனர். அவர்களையும் அந்த ஆழ்வாரின் பின் சந்ததியாரை அவர் இருக்குமிடத்தையாவது போய் பார்க்க ஏனையா விடவில்லை என்று கேட்டால், அவர்கள் அப்போதுதான் கண் விழித்துக் கொண்டு அந்த ஆழ்வார் வேறு இவர்கள் ஜாதி வேறு என்று மதப்புரட்டுகள் பேசுகிறார்கள். ஆதலால், இத்தகைய புராணப் புரட்டுகளும் மதப்புரட்டுகளும் வயிற்றுப் பிழைப்பு அயோக்கியர்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதென்பதில் என்ன சந்தேகம்? என்னைக் கேட்டால் இவ்
வுலகில் பல மதக் கொடுமைகளுக்கு ஜாதி வித்தியாச இழிவுக்கு முட்பட்டு கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டு பின்னால் மோட்சமடை வதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானமென்று சொல்லுவேன். (பெருத்த கரகோஷம்! ஜாதிக் கொடுமையை ஒழித்து இங்கு சமத்துவத்தைக் கொடுக்காத சாமி அங்கு மோட்சத்தையும், ரம்பை, ஊர்வசி நடனத்தையும், தங்க மெத்தையையும், சுகபோகத்தையும் கொடுக்கிற தென்றால் அதை நம்புகிறதற்கு மடையனாவென்றுதான் கேட்கின்றேன். (பெருத்த கரகோஷம்) உண்மையாகவே அப்படி சாதிப்பதாயிருந்தாலும் இங்கு இழிவையும் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டிருந்து இறந்த பின் அந்தச் சுகங் களைப் பெறலாமென்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது திண்ணம். ஆலயங்களின் பெயரால் செய்யப்படும் அக்கிரமங்களுக்கும் கொடுமை
களுக்கும் எல்லையில்லை. உதாரணமாய் மதுரை மீனாட்சிகோயிலை
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
எடுத்துக் கொள்ளுவோம். அக்கோயிலின் ஒரு கோபுர வாசலிலிருந்து மற்றொரு கோபுர வாசலுக்குக் குறைந்தது அரை மைலுக்கு அதிகமான தூரமிருக்கும். இவ்வழி சாதாரண ரஸ்தாவைவிட அகன்று வண்டிகள் தாராளமாய்ப் போய்வரத் தக்கதாயிருக்கின்றது. இவ்வழியாய்ப் பிற மதத்தின ரான முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மிதியடி போட்டுக்கொண்டும், பீடி
பிடித்துக் கொண்டும், துவஜஸ்தம்பம் வரையிலும் தாராளமாகப் போக அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்துக்களாகிய நாடார்கள் என்னும் வகுப்பாரும், மற்றைய தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் மட்டும் அந்த கோயில் மதில்சுவர் அருகில் வந்தாலும் சாமி செத்துப் போகுமென்கிறார்கள். (நகைப்பு அது சாமியா? போக்கிரித்தனமாவென்று நான் கேட்கின்றேன். (கரகோஷம்) நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனமானது என்றுதான் கேட்கிறேன். தீண்டப்படாதார், தாழ்ந்தவர்கள் என்று கொடுமை யாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கும் உயர்ந்த ஜாதியார் கடவுள் முகத்தில் பிறந்தவர்களென்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் குணத்தி
னாலும், உருவத்தினாலும், அறிவினாலும், ஏதாவது வித்தியாசமிருக்கின்றதா. வென்று கேட்கிறேன். இவ்வாறிருக்க, மக்களில் பெரும்பான்மையோரை:
ஜாதிக் கொடுமைகளுக்கும் இழிவுக்கும்உட்படுத்தி வைக்க மதப்புரட்டுகளும் புராணப் புரட்டுகளும் தான் ஆதாரமாயிருக்கின்றன.மக்கள் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாயிருக்கும் இம்மதத்தையும் புராணங் களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது?
ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்கள் 7 கோடியாயிற்றே இவர்களுக்கு மதம் வேண்டாமாவென்றும் கேட்டார். இவர்கள் வாழ்விற்கும் முன்னேற்றத்திற்
கும் சுதந்தரத்திற்கும் மதம் அவசியமானால் இவர்கள் இந்துக்களல்லா தவர்கள் என்ற மதத்தை வைத்துக் கொள்ளட்டுமென்று சொல்லுகிறேன். இது எவ்வாறு பொருந்தும் என்றும் கேட்கலாம். தற்போது அரசியல் துறையில் கொடுமைகளை ஒழித்துச் சுதந்தரம் பெறுவதற்குப் பார்ப்பனரல்லாதார் என்ற பெயருடன் பெரிய சமூகம் வேலை செய்து பல நன்மைகளைப் பெற வில்லையா? என்று தான் கேட்கிறேன். அவ்வாறிருக்க, சமுதாயக் கொடுமை களை ஒழிக்கப் பரிகாரம் தேடுவதற்கும் சுதந்தரமும் முன்னேற்றமுமடை வதற்கும் மதம் அவசியமெனத் தோன்றினால் அப்போது இந்துக்களல்லா தவர்கள் என்ற பெயர் வைத்துக் கொள்வதும் முற்றும் பொருத்தம்தான். அன்றியும் சட்டசபைக்குத் தேர்தல்களில் நின்று சட்டசபை மெம்பர்களான சீனிவாச அய்யங்கார்களும், வருணாசிரம ஆச்சாரிகளும், வைதீக இந்துக்
களும், மகமதியர் அல்லாத் தொகுதியின் பெயரால் நின்று சட்டசபை களுக்குள் சென்றார்களேயன்றி மற்றபடி முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள். முதலானவர்களைப் போல இந்துக்கள் என்று சட்டசபைக்குள் செல்ல வில்லை என்பதையும் முக்கியமாய் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
குடி அரசு - 1929 @) 84
இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தகைய சுதந்திரமுமில்லா திருப்பதைவிட இந்துக்களல்லாதாராக கோயிலுக்குள் போகும் உரிமையும், குளத்தில் குளிக்கும் சுதந்திரமும் இருப்பது எவ்வளவோ மேலென்று தான் சொல்லுவேன் (கரகோஷம்) நான் சாவதற்குச் சில நிமிஷமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி மத புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடிச் சாகுந் தருணத்தில் முஸ்லீமாகத்தான் சாவேன். (கரகோஷம்) ஏனென்றால், நான் செத்த பிறகு என் சொத்துக்களை என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றி பறிக்கப் படாமலும் அவர்கள். மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும் தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். (கரகோஷம்!
நான் செத்த பிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப் படுமென்ற மூட நம்பிக்கையினால் பார்ப்பனன் காலைக்கழுவிச் சாக்கடைத் தண்ணீரைக் குடிக்காமலிருக்கச் செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லீமாகச் சாவேன் என்கிறேன். (பெருத்த கரகோஷம்! சுமார் 20 வருஷங்களுக்கு முன் வெள்ளைக்காரர்கள் தீண்டப்படாதார், அவர்களைத் தொட்டால் குளிக்க வேண்டுமென்ற ஒரு ஜாதியார் இன்று அவர்களைப் போல பிள்ளைகளைப் பெற்றால் போது மென்கின்றார்கள். (பெருத்த நகைப்பு) மதம் புராணம் முதலிய புரட்டுகளுக்கு ஆளாகி முட்டாள்தனத்
திலும் அடிமைத்தனத்திலும் ஆழ்ந்திருப்பவர் யாரென்றால் இந்துக்கள்தான் என்று சொல்ல வேண்டும்.அதிலும் இந்நாட்டில் இழிவுபடுத்தப்படும் மக்கள். யாரென்றால் நாம்தான். பிறமதங்களில் பல பாராட்டத்தக்க சீர்திருத்தங்க எேற்பட்டு அவர்கள் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றனர். கிறிஸ்து மதத்தில் அவர்களுடைய கிறிஸ்துவைத் தூக்கிப் போட்டு விட்டு சுதந்தரத் திற்குவழியான விஞ்ஞான ஆராய்ச்சியிலிறங்கியிருக்கிறார்கள். மதத்தையும் கடவுளையும் நம்பி இருந்தது போதுமென்று அவர்கள் சுயமுயற்சியிலும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்பதனால் தான் ஆகாசத் தந்திகளையும் இறந்தவர்களை எழுப்பி ஆறு மணி நேரம் நடமாட வைப்பதுமான பல அற்புதங்களைக் கண்டுபிடித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது கடவுள் செயலாகிய மனித சிருஷ்டியையும் செய்யத்தக்க வல்லமை உடையவர் களாயிருப்பது அவர்களுக்கிருந்த மதபுராண மூடக் கொள்கைகளை ஒழித்து ஆராய்ச்சித் துறையிலிறங்கியதினாலல்லவா? (கரகோஷம்) அதுபோலவே மகமதியர்களும் இந்துக்களை விட பல வகையிலும் மேலானவர்களாகத் தானிருக்கின்றார்கள். முஸ்லீம்களுள் ஜாதி வித்தியாசமும் மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வென்ற கேவல உணர்ச்சியும் காணப்படவில்லை. ஆலயத்தில் அரசனாயினும் சாதாரண மனிதனாயினும் சமத்துவமாகத் தானிருந்து தொழுகின்றார்கள். அவனுடைய மதம் அவனுக்கு ஒற்றுமை யையும் வீரத்தையும் கொடுப்பதாயிருக்கின்றது. தென்னாட்டைக்
குறித்தமட்டில் மலையாளத்தில் தான் ஜாதிக்கொடுமை சகிக்க முடியாத தாயிருக்கின்றது. அங்கு மற்ற உயர்ந்த வகுப்பார் இருக்கும் இடத்திற்கு அரை
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மைல் தூரத்திற்கு அப்பால்தான் தாழ்ந்த வகுப்பார் எனப்படுவோரும், தீண்டாதாரும் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சர்க்கார் ரஸ்தாவில்
நடக்கும் சுதந்தமுரமில்லை. அவர்கள் கழனிகளில் விழுந்துதான் போக வேண்டும்.மலையாளத்திலுள்ள 40 லட்சம் ஜனங்களில் 20 லட்சம் பேர் வேறு மதத்தினராயிருக்கின்றனர். மற்ற 20 லட்சத்தில் குறைந்தது 13 லட்சம் தாழ்த்தப் பட்ட வகுப்பார்தான். அங்கு ஆறு ஏழு லட்சம் பேர் இருந்து கொண்டு தங்களைவிட இருமடங்கு ஜனத் தொகையுள்ள சமூகத்திற்கு மதம், புராணம், பழக்க வழக்கமென்பதன் பெயரால் செய்து வரும் கொடுமைக ளுக்கு எல்லையில்லை.திருவாங்கூரில் இந்துக்களை விட அதிகமாய் படித்தவர்கள். கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரிமார்கள் ஜாதி மதக் கொடுமைகளுக்கு உட்பட்டு துன்பமடைந்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பி னரை ஆங்கு கிறிஸ்தவர்களாக்கி கல்வியளித்து விசேஷ முன்னேற்ற மடையச் செய்துவிட்டனர். அவர்கள் போல என்றைக்கும் இந்துக் கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும், இன்றைக்கும் இந்துக்க ளென்று நினைத்
துக் கொண்டுள்ளவர்களுமான ஏழை மக்களோ மதத்தின் பெயராலும், இன்னும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கொண்டும் ரஸ்தாக்களில் வருவதற்
கும் உரிமையின்றி மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்பட்டு வருகின்றனர். திருவாங்கூரில் இந்து ராஜ்யமிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஆங்கு பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள்தான். அதற்குக் காரணம் ஜாதிக் கொடுமையும் சமயப் புரட்டுகளும் தான். இன்னும் கொஞ்ச காலத்தில் திருவாங்கூரும் கிறிஸ்துவ ராஜ்யமாகிவிடுமென்பது திண்ணம். துருக்கியில் மதத்தையும் புராணத்தையும் மூட்டை கட்டி கடலில் போட்டுவிட்ட பின் தற்போது எவ்வளவு முன்னேற்ற மேற்பட்டிருக்கிற தென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மதத்தை நம்பி கிலாபத் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த போது வெள்ளைக்காரன் துப்பாக்கி முனைக்குப் பயந்திருந்த துருக்கி தற்போது வெள்ளையரையும் நடுங்கச் செய்யும் நிலைமைக்கு வந்திருப்பதன். காரணமென்ன? இங்கு முஸ்லீம்கள் இன்னும் மதப்பித்து பிடித்து ஒன்றரை அங்குல தாடி வேண்டுமா, அல்லது இரண்டங் குலமாவென்று அளவு பார்த்து தாடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கும்போது துருக்கியில் முஸ்லிம்கள். மழுங்க சிறைத்து விடவேண்டுமென்றும், இல்லாவிட்டால் தண்டிக்கப்படு மென்றும் சொல்லப்படுகின்றது. இங்கு எந்த வர்ண லுங்கி கட்டுவது, எப்படி குல்லாய் போடுவது என்று விவாதித்துக் கொண்டிருந்தாலும், அங்கு வெள்ளைக்காரர்களைப் போல உடைதரிக்கா விட்டால் அபராதம் விதிக்கப் படுகின்றது. இங்கு கோஷா முறையின் கொடுமை மிகுதிப்பட்டு திரையைக் கனமாகப் போடும்போது துருக்கியில் தங்க விக்ரகம் போன்ற பெண்களைத் தனித்து ஐரோப்பாவுக்குப் படிக்க அனுப்பி வருகிறார்கள்.கரகோஷம்। சுய
ராஜ்யப் பேச்சு வரும்போது மட்டும் ஒற்றுமை சமத்துவம் முதலிய எல்லாம் வருகிறது. ஆனால் அது பெரும் பித்தலாட்டமென்பது தெருவில் நடக்க உரிமையிருக்க வேண்டுமென்னும் போது வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது.
குடி அரசு - 1929 @) 86
மிருகங்களிலும் மிக இழிவான ஜந்துக்களுக்கு இருக்கும் உரிமையுமின்றி மனிதர்களுள் ஒரு சாராருக்கு அம்மிருகங்களைப் போல தெருக்களில் போகும் உரிமையிருக்கக் கூடாதாவென்றால் மதவிஷயத்தில் பிரவேசிப் பதான பித்தலாட்டத்தை என்ன அயோக்கியத்தனமென்று சொல்லுவது? பித்தலாட்டமான மதத்தில் சிக்கி இதனால் பல இழிவுக்கும் துன்பத்திற்கும் கொடுமைக்கும் உட்படுவதை விடஅம்மதத்தை ஒழிப்பதே மேலாகும். மதத்தை அழிக்கச் சுயமரியாதை இயக்கம் வந்ததா என்று சிலர் கேட்கலாம். ஜாதிக் கொடுமைகளையும் விபரீத வித்தியாசங்களையும் நிலைநாட்டுவதா யிருந்தால் அந்த மதத்தை ஒழிக்கத் தான் சுயமரியாதை இயக்கம் இருக்கின்ற தென்றுதான் சொல்லுவேன். (கரகோஷம்) உண்மையில் சுயமரியாதை உணர்ச்சி உங்களுக்கு இருக்குமானால் உங்கள் முன்னேற்றத்திற்கும் சுதந்தி
ரத்திற்கும் தடையாயிருக்கும் மதக் கட்டுப்பாடுகளையும் சுவாமி பூதமென்ப தனையும் உடைத்தெறியப் பின்வாங்க மாட்டீர்களென்பது திண்ணம். (கரகோஷம்) மிருகத்திலும் கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு
நீங்களும் மனிதரோடு மனிதரான சமத்துவ வாழ்வடைந்து மற்றையோரைப் போல சுதந்தரமும் சுகமமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனை
யும் தகர்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்தரத்திற்கு எது தடையா யிருந்தாலும் அதனை ஒழிக்க முற்படுவீர்களானால் தீண்டாமை என்பது அரை நிமிஷத்தில் தானாய் பறந்துவிடுமென்பது திண்ணம். (கரகோஷம்)
வடநாட்டில் மதம் ஒழிந்தாலும் மற்றென்ன ஒழிந்தாலும் ஒழியட்டும், சுதந்தரம் தான் பெரிதெனப் போராட முற்பட்டதனால்தான் நேற்றுகூட ஒரு ஆலயத்
தில் சகல வகுப்பாரும் தாராளமாகச் சென்று கடவுளை வழிபடுவதற்குக் கதவுகள் திறந்துவிடப் பட்டன. உங்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமையும், குளங்களில் குளிக்கும் உரிமையும் கிடைத்து விட்டால் அதனு டன் நீங்கள் திருப்தியடைந்துவிடவும் முடியாது. நீங்கள் சுதந்திரமடைய விரும்புவது போலவே உங்கள் பெண்களுக்கும் சுதந்தரமளிக்க நீங்கள். தயாராக முன்வர வேண்டும். அப்போதுதான் உங்களுள் உண்மையான முன்னேற்றமேற்படும். உங்கள் பெண்களுள் மறுமணத்தை விரும்பும் விதவைகளுக்கெல்லாம் மறுமணம் செய்ய வேண்டும். இவ்வழக்கம் உங்களுள் இல்லாதிருக்க வில்லை. அறுத்துக்கட்டும் ஜாதி இழிந்த ஜாதி என்று சொல்லப்பட்ட போதிலும் அறுத்துக் கட்டுவதால் அறுத்துக்கட்டாத உயர்ந்த
ஜாதியில் நடக்கும் பல கேவலமான சிசுக் கொலைகளும், கழுத்தைத் திருகிக்
கள்ளியில் போடுவதான கொடுமைகளில்லாதிருப்பது எவ்வளவோ உசிதமல் லவா? (கரகோஷம்) ஒழுக்கத்திலும் படிப்பிலும் முன்னேற்றமடைந்திருந்தால் உங்கள் பெண்களை நாங்கள் பெற்றுக்கொண்டு, குணமும், படிப்பும், ஒழுக்க முமுள்ள உங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் பெண்களைக் கொடுக்கவும் பின்வாங்க மாட்டோம். இத்தகைய கலப்பு மணத்தின் மூலமாகத்தான் சாதி வித்தியாசப் பேய் சீக்கிரத்தில் ஒழியும். கரகோஷம்) ஆண்கள் எப்படியிருந்
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத் தான் எல்லாக் கட்டுப்பாடுகளு
மிருக்க வேண்டு மென்ற மூட அறிவீனமான கொள்கைகளிருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கை கழுவினதும், கதவைச் சாத்திக் கொள்ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும் போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, அய்யாவுக்கு மோர் விடு, நான் போய்விட்டு வருகின்றேன் என்று மனைவி சொல்லிவிட்டு வெளியேறினால்தான் ஆண்களுக்கு அறிவு வரும். நகைப்பும் கரகோஷம்! ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண்களுக்குத் தான் பதிவிரதத் தன்மை அவசியமென்ற பல அர்த்தமற்ற கொள்கைகளினால்தான் ஆண்களுக்குள் ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் இடமேற் படுகின்றது. மதத்தின் பெயராலும், மற்றதன் பெயராலும் செய்யப்படும் அநீதிகளையும், அக்கிரமங்களையும் ஒழிப்பதில் அம்மதங்களையே ஒழிக்க வேண்டுவது அவசியமானாலும் அதற்கும் தயங்கக்கூடாது. மக்கள் சுதந்தரமடைந்து சுகமாய் வாழ்வதற்கு வழி என்னவென்று எனக்குத் தோன்றியதைப் பிறர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அஞ்சாது உண்மையை எடுத்துச் சொன்னேன். என் உணர்ச்சிக்குட்பட்டதைச் சொன்னேனே தவிர, இவர் அவருக்குச் சொன்னார், அவர் எனக்குச் சொன்னார், நீங்கள் அதன்படி நடக்காவிட்டால் பாவம், நரகத்திற்குப் போவீர்களென்ற கட்டுப்பாடு ஒன்றும் சொல்லவில்லை. நான் சொன்னவற்றை நீங்கள் ஆராய்ந்து சரி எனப்படு வதைக் கொண்டு, சரி இல்லாததை ஒதுக்கி என் மீது அனுதாபங்காட்டும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். (கரகோஷம்)
(குறிப்பு - 3.8.1929 ஆம் நாள் இராயபுரத்தில் கண்ணப்பர் வாசக சாலைத்
திறப்புவிழா - சொற்பொழிவு..
குடி அரசு - சொற்பொழிவு - 11.08.1929
குடி அரசு - 1929 @) 88
பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவ னையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது என்று சனாதன தருமத்தின் பேராலும், சாஸ்திரத்தின் பேராலும், கடவுளின் பேராலும் இதுவரை கண்மூடித்தனமாகக் கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாகப் புத்தி உதயம். ஆகி வருவதாகத் தெரிகிறது. நமது சுயமரியாதை இயக்கத்தைப் பார்ப்பனர் களும் அவர்களுடைய கூலிகளும், “நாஸ்திக” இயக்கம் என்று கூறி பாமர: மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரசாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேகமில்லை. நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்
கள் செய்தும் போராடி வருவது எல்லாருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடி பெண்மக்கள் முன்னேற்றத்திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர்.அவையாவன :-
1.அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது ஹிந்துக் குடும் பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது ஸம்பாதனத் திலும் அப்படியே ஸ்திரிகளின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும்
புருஷர்களுக்கு சமபாகமும், ஏற்படுத்துவதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்ளுவது அவசியம்.
2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டு மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.
3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே ஸ்திரிகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.
4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகிப் புத்திரனுக்கு
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கல்யாணமாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண்பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனு பவிக்கும்படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வரவேண்டும்.
ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரிகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத்
துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.
குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம்.
இன்னும் கூடிய விரைவில் பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 11.08.1929.
குடி அரசு - 1929 (2) 90
10 சக்கு மள ரிய
த மக்களிடமே தான் ௮௦ காக. தொட்டதத்சென்றாம் மான
சென்னை 19299240 11௨ ன தாண்டவ இலம் அவர்கள்! ந iursapmp @ 'பவச்க்சொண்: முழனாக மனிதன் தஃமசெய்த
| அக தக்க
வின் அத் கவின் & காயித்று என்ப
கிறார் அர்த த ச் எக மாந்த க் கும்போது பாமா மன் ்பிக்கைகின்பானாம் சகல். s ட்டி வற்ற சன்
ன உதாரணமாக அலத்றிதருக் சா » « சிபல் தோன்றிய பின்பு இன்ததென்றுல், மக்கள்
னு சேர்த்சோ
s கள்ளா
D உண்டு... இதன் பாமா மக்கள். கட் எ்வன்ச ச எத்பட்ட வட சனி இ வம் கென்: சகு மிக்வாணதளல்பக்தும் எசா ஒரு பொது க் உல் இகம் உள் s சனம் வால 2 கந்தம் G s கீச் வர்க்க இ
தர்ற. ஏற்புக்றிருந்கும் சரிய/மொன் அமிகலே. எனல கை Bin சன்றடைமி
கஸ். இருச்துவாு... காம் sinigan ங்கள் இனி கண கணம்: இன்னும் அதை ''ஒருசெப் வம் இருந்துதான் நீரேண்டும விட்டது.
9 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
. .
(2)
இத்தலைப்புக் கொண்ட முதலாவது வியாசத்தில் கடவுளைப் பற்றி அதாவது கடவுள் என்கின்ற உணர்ச்சி மக்களுக்கு எப்போது எப்படி உண்டாயிற்று என்பதைப்பற்றியும், அவ்வுணர்ச்சி மக்களுக்கு எதுவரையில் இருக்க முடியும் என்பதைப்பற்றியும் சுருக்கமாகச் சிறிது எழுதி இருந்தோம். அதாவது மனிதன் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்ளுவதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவதும் சகஜம் என்பதாக குறிப்பிட்டு இருந்தோம். இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சையன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விஷயங்களை மனிதன் செயல் என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம். கம்பியில்லாத்
தந்தி ஏற்படுத்தி இருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற சையன்ஸ் உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை “ஒரு தெய்வீக சக்தி” என்றும் பழைய காலத்து ரிஷிகள்
பேசிக் கொண்டிருந்தாய் சொல்லப்படும் “ஞான திருஷ்டி சம்பாஷணை” என்றுமே சொல்லித் தீருவோம். ஆதலால் மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சி
யும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும். இப்போதும் பகுத்தறிவு குறைந்த மக்களிடமே தான் அநேகமாக தொட்டதற்கெல்லாம் கடவுளும், அவர்தம் செயல்களும் தாண்டவமாடு வதைப் பார்க்கின்றோம். அவர்கள் மேலேயே “கடவுள் வருவதை”க்கூடப்
பார்க்கின்றோம். காட்டுமிராண்டிப் பக்குவமுடையவர்களிடமே அநேகமாக கடவுளைப் பற்றிய கதைகள் என்பவைகளும், புராணங்கள் என்பவைகளும்
மதிப்புப் பெற்று இருப்ப தையும் பார்க்கின்றோம்.
கொஞ்ச காலத்திற்கு முன் அக்கதைகளை அப்படியே அதாவது
குடி அரசு - 1929 @) 92
கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள்கூட இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத் தன்மையை மறைத்துக் கொண்டு சையன்சின் மூலம். அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு கஷ்டப் படுகின்றார்கள்.
இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால், மக்கள் வரவர இப்போது சையன்ஸுக்கு பொருத்தமில்லாததை ஏற்க மறுக்கக்கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது விளங்குகின்றது. மழையை வரச் செய்வதும், செத்தவனை மறுபடியும் பிழைக்கச் செய்வதும், பேச்சுகளையும், நாட்டியங்களையும் யந்திரங்களில் பிடித்துக் காட்டுவதும் போன்ற காரியங்
கள் மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு மிக்க பாமர ஜனங்களுக்குக்கூட இவையெல்லாம் கடவுள் செயல் என்கின்ற குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில் ஆச்சரியமொன்றுமில்லை. எனவே ஒரு காலத்தில் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிக் கவலையும் இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள் இனியும் இருந்துதான் தீர வேண்டுமா என்றால், எப்படியும் அது ஒரு அளவுக்காவது இருந்துதான்
தீரும் என்றே சொல்லுவோம்.
ஏனெனில், மனிதன்தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனாதலால் தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ள சுலபத்தில் சம்மதிக்க இஷ்டப்படமாட்டானாகையால், அங்கு அதாவது தனக்கு அறிவு கட்டை யாயப் போனபோது அவனுக்கு கடவுள் நம்பிக்கையும் கடவுள் செயலும் வந்துதான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல. பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும் சிலர் உண்மை அறிந்திருந்
தாலும் சுயநலமோ, மூடப்பிடிவாதமோ காரணமாக தங்களுக்கே புரியாத வற்றைப் பேசி பாமர மக்களை மயக்கிக் கொண்டும் இருப்பார்கள். ஏனெனில் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் பிழைக்கக் கூடியவர்களாய் இருப்பதால்தான். எது எப்படி இருந்த போதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வரவர குறைந்து கொண்டு தான் போகும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக வருத்தப் படுவதிலோ, யார் மீதாவது குற்றம் சொல்லுவதிலோ பயனில்லை ஆனால், அவ்வித குருட்டு நம்பிக்கையும் மூடப்பிடிவாதமும் ஒழிந்த காலத்தில் தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.
மதம்
மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும். மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மாறி குடிசைக்கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்தபோதே அவற்றிற்கு சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படியெனில், எப்படி தனியே இருக்கும்
மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகின்றதோ அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க் கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகிவிட்டது.அக்கொள்கைகள்.
தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி அக்கொள்கைகளைக் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால்தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றைக் “கடவுள் உண்டாக்
கினார் என்றும் அவற்றிற்கு மீறி நடந்தால் “கடவுள் தண்டிப்பார்” என்றும்சொல்ல வேண்டியதாய்விட்டது. (இந்த இடம்தான் முதன்முதலாகமனிதன் தவறுசெய்த இடமாகும்) ஆனால் இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த
ஆதாரங்களைக் கொண்டு? என்றுபார்ப்போமேயானால், அது அந்தக்காலத்திய நிலைமை,சீதோஷ்ண ஸ்திதி,மக்களின் அறிவுநிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித்திறம் முதலாகிய நிலையில் அதாவது காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்பச் செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.
மேலும் ஒரு குறிப்பிட்டகொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ சிலரின்:
சுயநலத்திற்கோ, ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதைமாற்ற நினைக்கும்போது பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்து போய்புதியகொள்கைகள்:
வகுத்து அதாவது முன்னையதைதிருத்தியோ, அல்லது சிலமாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும்போது அது ஒரு புதிய மதமாக
ஏற்பட்டு விடுகின்றதும் உண்டு. இதனால் பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாதமுள்ளவர்கள் “என் மதம் பெரிது” “உன் மதம் சிறிது” என்கின்ற மத. சண்டைக்கு ஆளாகிவிடவும் நேரிட்டு விடுகின்றது.
இந்தச் சண்டையில்லாமல் திருத்தப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள் கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கை களுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆனாலும் அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும் சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய கொள்கை
களின் முக்கியங்களை அறிய முடியாமலேயே போய்விட்டது. இப்படியே
தான் மதங்கள் வெகுகாலமாய் மாறிமாறியும் திரிந்து திரிந்தும் பெருகிக் கொண்டும் வந்ததனாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும் அவசிய
மும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகியும் விட்டது. இன்றைய தினம் எந்த மதக்காரனையாவது
குடி அரசு - 1929 @) 94
கண்டு உன் மதமென்ன? அதன் தத்துவமென்ன? என்றால் சில சடங்கையும் குறிகளையும் மாத்திரம் தான் சொல்லுவானே ஒழிய அதன் உண்மைத்
தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்க மாட்டான். அதோடு அதற்கு நேர் விரோதமாக அறியாமையும் ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும் சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உப யோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய்விட்டது. சிறப்பாக இப்போ தைய
முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம் பறித்து புரோகிதக் கூட்டமும் அரசாங்கமும் செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவே யன்றி பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது. மற்றும் மதத்தினால் ஏற்பட்டுவரும் கெடுதிகள் என்ன என்று பார்ப்போமானால் முதலாவது மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்து விடுகின்றது. எப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும் மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால் அவர்களுக்கு வேறு மதத்தையும் நமக்கு வேறு மதத்தையும் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரா? அப்படி யானால் இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா? என்று எவருமே நினைப்பதில்லை எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானி
கள் என்பவர்கள். முதலாக எவருமே கருதுவதில்லை.
இந்த ஒரு காரணத்தாலேயே மதம் மக்களின் அறிவை எவ்வளவு
தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும் இரண்டாவது, மனிதர்களின்
ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக்காட்டவே மதம் உதவுகின்றது. மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தி யடையச் செய்கின்றதேயொழிய ஒழுக்கத்தில் சிறிதும் கவலை செலுத்த
நிர்ப்பந்திப்பதில்லை. நான்காவது, எந்த மதத்திலும் பகுத்தறிவிற்குச் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவ தொன்றையாவது நமது புத்திக்கும் அறிவிற்கும் கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித் தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்ப தில்லை.அப்படியானால் அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை. ஐந்தாவது மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களை உண்டாக்கி, அத் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பா விதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத் தைவிட மேலானதாக நினைக்கச் செய்கின்றது. அன்றியும் மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது. மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண: காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது நிற்க உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும் ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாபமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்குப் போய்விடலாம் என்கின்றான். சுருக்கமாகச் சொன்னால் வக்கீல் தொழில் செய்பவனும் பொய்ப்புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதிபூசிக்கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால் சைவனின்யோக்கியத்திற்கும் சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா? அது போலவே ஒரு உண்மைவைணவன் என்பவனும் ஒரு தடவை ராமா என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனை விட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான் அதுபோலவே ஒரு உண்மைக் கிறிஸ்தவன் என்கிறவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும் ஏசுவின் மூலம் அல்லாமல் பாவமன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான் அதுபோலவே ஒரு முகம்மதியனும் குரான் வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்ததேசத்திற்கும்
எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கேடாவது மாறினால் இஸ்லாம்மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும் அதுவேதான் உண்மையான மதம்,முறையே-கடவுள்: அவதூரம்,கடவுள் குமாரன்,கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.மற்றது பின் வியாசத்தில்.
குடி அரசு - தலையங்கம் - 11.08.1929.
குடி அரசு - 1929 @) 96
ஒரு பாலிய விதவையின் பரிதாயம்!
“ஹிந்துதருமத்தின் மகிமை"
17.7.29 ந் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங், பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது.
தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5-வது வயதிலேயே மணம் முடிக்கப்
பட்டது. அடுத்து ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அநுமதி இல்லாமையால் பீபியா மரண பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய
புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்து விட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும். அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தி னார்கள்.
பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர சிட்சை விதித்து மாகாண அரசாங் கத்தார் கருணைக்கும் சிபார்சு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே மகிமை!
குடி அரசு - செய்திக் குறிப்பு - 11.08.1929
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மதுவிலக்குப் பிரசாறக் கமிட்மு
சென்னை மாகாணத்தில் மதுவிலக்குப் பிரசாரம் செய்வற்குச் சென்னை அரசாங்கத்தாரைச் சம்மதிக்கும்படியான நிலைமைக்குக் கொண்டு வந்த பெருமை நமது கலால் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்களுக்கே உரியதாகும். அதுபோலவே. அப்பிரசார திட்டத்திற்கு வேண்டுமென்றே துர் எண்ணம் கற்பித்து மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் மதுபானம் அதிகமாகுமென்று சொல்லி அதை நிறைவேறாமல் செய்ய முயற்சித்த “புண்ணிய கைங்கர்ய”த்தின் பெருமை காங்கிரஸ் சுயராஜ்ய கட்சிக்கும் தேசீயக் கட்சிக்குமே முழுவதும் போய்ச்சேர வேண்டியதாகும். அது போலவே இவ்விஷம முயற்சியை வெற்றிபெற வொட்டாது தலையிலடித்து ஒழித்து, மந்திரியின் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை ஜஸ்டிஸ் கட்சியாருக்கே உரித்தானதாகும்.
கலால் மந்திரி கனம் திரு.முத்தையா முதலியார் அவர்கள் மது
விலக்குப் பிரசாரத்திற்காக நான்கு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து அப் பிரசாரத்திற்கென்று மத்திய கமிட்டியைத் தாமாகவே ஏற்படுத்தியிருந்தாலும் அக்கமிட்டி நியமனத்தில் மிக்க கவலையுடனும் பொறுப்புடனும் நடுநிலைமை வகித்து உண்மையான பொறுப்புள்ள கனவான்களாகவும், பொதுநலத்திற்குழைக்கும் சகல ஸ்தாபனங்களுக்கும் வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் உள்ளதாகவும், யாராலும் எவரை பற்றியும் ஆட்சேபனை சொல்ல முடியாததாகவும் பார்த்து நியமித்தவுடன் அவர்கள் வசத்திலேயே பூராப் பணத்தையும் சகல அதிகாரத்தையும் ஒப்புவித்துவிட்டார். மற்றும் கனம் மந்திரியின் நல்ல எண்ணத்திற்கும் மாகாண நிர்வாக கமிட்டியின் நேர்மைக்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால் இக்கமிட்டியினால் நியமிக்கப்பட்ட ஜில்லா கமிட்டிகளில் இத்திட்டத்தை அடியோடு எதிர்த்தவர் களும் இத்திட்டத்திற்கு துர் எண்ணம் கற்பித்தவர்களுமான சுயராஜ்யக் கட்சிக்காரரும், சுயேச்சைக் கட்சிக்காரரும், சகல வித தேசீயக் கட்சிக்காரரும், ஒத்துழையாதாரும் அங்கம் பெற ஆசைப்பட்டதும், நியமனத்தை ஏற்று, கமிட்டியின் தத்துவத்தை நிறைவேற்ற வேலை செய்ய சம்மதித்திருப் பதுமான காரியம் ஒன்றே போதுமானதாகும். மாகாண மதுவிலக்கு பிரசார போர்டிலும் அதன் நிர்வாக சபையிலும் அங்கம் பெற்ற திவான்பகதூர். எம்.ராமச்சந்திரராவ் எம்.எல்.ஏ. அவர்கள் எல்லா இந்திய மதுவிலக்கு கமிட்டி காரியதரிசி ஆவார். அது மாத்திரமல்லாமல் எல்லா இந்திய காங்கிரஸ்
குடி அரசு - 1929 @) 98
மதுவிலக்கு கமிட்டியிலும் அங்கத்தினராவார். மற்றும் திருவாளர்கள். கே.ஆர். வெங்கிட்டராமய்யர் எம்.எல்.சி, சூரியநாராயண ராவ் மற்றும் இரண்டு மூன்று பார்ப்பனர்களும் அதாவது வருணாச்சிரம தர்மம், பார்ப்பன.
ஆதிக்கம், சீர்திருத்தம் ஆகிய சபைகளின் பிரதிநிதிகள் என்றே சொல்ல வேண்டும் என்றாலும், இப்படிப்பட்டவர்களாகவே கமிட்டியில் 100-க்கு 20 வீதத்திற்கு குறையாமல் பார்ப்பன பிரதிநிதித்துவம் கொடுத்தே கமிட்டி நியமிக்கப்பட்டிருப்பதையும், அதுவும் சரியான பார்ப்பன ஆதிக்கத்தில் கவலையுள்ளவர்களாகவே மிகுதியும் நியமிக்கப்பட்டிருப்பதும் காணலாம். மற்றபடி ஜில்லா பிரசாரக் கமிட்டி நியமன விஷயத்திலும் கனம் மந்திரி தாம் எவ்வித எதேச்சதிகாரமும் எடுத்துக் கொள்ளாமல் அதையும் ஒரு சப் கமிட்டிக்கு விட்டு அக்கமிட்டியிலும் திரு.எம். ராமசந்திரராவ் உள்பட பார்ப் பனர் இரண்டு பேரும், பார்ப்பனர்களுக்கு அநுகூலமான அதாவது பார்ப்பனீயத்தில் மிகுந்தப் பற்றும் பார்ப்பனர் அல்லாதார் கட்சிக்கு விபரீத மான மனப்பான்மையும் கொண்ட திரு.வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர். களையும் திரு.குழந்தைவேல் முதலியார் அவர்களையும் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக காங்கிரஸ்காரரான திரு.முனுசாமி நாயுடு அவர்களையும் சேர்த்து இவ்வைந்து கனவான்கள் வசமேவிட்டு அவர்களால் பொறுக்கி எடுத்து சிபார்சு செய்யப்பட்ட கனவான்களையே மிகச் சிறிய திருத்தத்துடன் நிய மனம் செய்யச் செய்திருக்கிறார்.
இந்நியமனங்களிலும் மிக்க ஜாக்கிரதையாய் கூடிய வரையில் ஒரு பார்ப்பனர், ஒரு கிறிஸ்தவர், ஒரு மகமதியர், ஒரு தாழ்த்தப்பட்டவர், ஒரு சர்க்
கார் உத்தியோகஸ்தர் (இவர் பெரும்பாலும் பார்ப்பனரே! இருக்கிறார்களா? எனப் பார்த்துவிட்டு பிறகு தான் மீதி நான்கு பேர்களே பார்ப்பனர் அல்லாத வர்கள் என்னும் வகுப்பு பிரதிநிதித்துவமும் ஒவ்வொரு கமிட்டியிலும் க௯ஷி
பிரதிநிதிதித்துவமும் முக்கியக் கொள்கையாய் வைத்துக் கவனித்தே போடப் பட்டு இருக்கிறதா? என்பதையும் கவனித்து இருக்கிறார். இந்தப்படிசிபார்சு செய்யப்பட்ட கனவான்களின் பெயர்கள் எல்லாம் ஓட்டு எடுக்காமல் ஏகமனதாய் தெரிந்து எடுக்கப்பட்டதேயொழிய மாகாணம் முழுமைக்கும் ஒட்டு மொத்தம் சுமார் 300 கனவான்கள் நியமிக்கப்பட்டதில் ஒன்று, இரண்டு கனவான்கள் பெயர்கூட ஓட்டுக்கு விட்டிருக்கப்பட்டிருக்காது என்று உறுதி கூறலாம்.தவிர ஜில்லா கமிட்டிகளில் சுயராஜ்ய கட்சியார் பெயர்கள் நியமனம் செய்யப்பட்டதைப் பார்த்த கனவான் ஒருவர் அந்தப் பெயர்களை எடுத்து விட வேண்டும் என்றும், அவர்கள் இந்தத் திட்டத்திற்கு விரோதமான மனப் பான்மையைக் காட்டினவர்கள் என்றும், அவர்களை நியமித்தால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றும், ஒப்புக் கொண்ட போதிலும் திட்டத்தின் தோல்விக்கு உதவியைக் கருதுவார்களே ஒழிய வெற்றிக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்றும் எடுத்துச் சொன்ன காலையில் சப்கமிட்டியில் இருந்த ஒரு முக்கியமான பார்ப்பன அங்கத்தினர் சுயராஜ்யக்காரர்கள் இக்கமிட்டி
யில் இருக்க ஆசைப்பட்டதாகவும் தான் இரண்டொருவருடன் கலந்து
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பேசியதில் அவர்கள் இக்கமிட்டியுடன் ஒத்துழைத்து இத்திட்டத்தை நிறைவேற்றச் சம்மதித்ததாகவும் வாக்கு கொடுத்து அக்கனவான்களின் பெயர்களைக் கமிட்டியில் இருக்கச் செய்ததாக தெரிகின்றது. கடைசியாக ஒத்துழையாதார் என்பவரும் எல்லா இந்தியக் காங்கிரஸ் மது விலக்கு
சங்கத்தின் தலைவருமான திரு.சி.ராஜகோபாலாச்சாரியாருடைய பெயரை ஜில்லா கமிட்டியில் பிரேரேபித்த போதும் விளம்பரக் கமிட்டியில் பிரேரே பித்தபோதும் இதேபோல் கேள்விகள் கேட்கப்பட்டதில் அவரும் சம்மதித்தி ருப்பதாகச் சொன்னதின் பேரிலேயே விளம்பரக் கமிட்டியில் அவர்களைப் போட கமிட்டி சம்மதித்திருப்பதாகத் தெரிகின்றது. ஆகவே, மது இலாக்கா மந்திரி மதுவிலக்கு விஷயத்தில் செய்திருக்கும் வேலையானது இந்தியாவில் இதுவரை எந்த சர்க்காரும் மந்திரியும் செய்யாத ஒரு பெரிய காரியத்தைச் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.
இவரது ஆட்சியில் சர்க்கார் உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித் துவ உத்திரவும் சர்க்காரின் மதுவிலக்கு பிரசாரத் திட்டமும் சென்னை மாகாண அரசியல் சரித்திரத்தில் ஒரு முக்கியமான பாகத்தைப் பெற வேண்டியவைகள் என்றே சொல்லுவோம்.
ஜில்லா கமிட்டிக்கு ஒரு விண்ணப்பம்
இத்திட்டத்தை ஏற்பாடு செய்த கனம் மந்திரி அவர்களும், இவர்களால் நியமிக்கப்பட்ட பொதுக் கமிட்டியும் கூடியவரையில் அவர்களது கடமையைச் செய்துவிட்டார்களென்றே சொல்லலாம். ஆனாலும் இத்திட்டத்தின் வெற்றியும், பலனும் இனி ஜில்லா பிரசாரக் கமிட்டியிடம்தான் அதிகமாய் இருக்கிறதென்று சொல்லுவோம். என்னவென்றால், இத்திட்டத்திற்கு ஒதுக்கி வைத்த பணம் பெரும்பாகம் ஜில்லா கமிட்டியாரிடம் ஒப்படைக்கப்படப் போகின்றது.ஆதலால் அவர்கள்தான் தக்கபடி அதைச் செலவு செய்து பிரசாரம் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். இதற்குக் கமிட்டியில் அங்கத்தினர்கள் கூட்டுறவுடன் சரியான பிரசாரகர்களை நியமித்து ஒழுங்கான முறையில் பிரசாரம் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்களென்பது மிகையாகாது. பிரசாரகர்களை: முதலில் தக்கபடி கமிட்டியார் தர்ப்பீத் செய்யவேண்டும். பிரசாரத்தின் போது வார்த்தைகளை அளந்து பேசும்படியும், குடிப்பவர்களையோ கடைக்காரர். களையோ மதுபான வியாபாரிகளையோ, மரம் வைத்திருப்பவர்களையோ அதிக்கிரமவார்த்தைகளால் பேசாமலிருக்கும்படியும் திட்டம் செய்யவேண்டும்.
மறியல் செய்ய வேண்டிய விஷயம் சில சமயங்களில் அவசியமானாலும் முதலிலேயே அதாவது எடுத்த எடுப்பிலேயே அதை ஆரம்பித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.முதலில் கள் சாராயக்கடைகள் சர்க்கார் சட்டப்படி. நடைபெறுகின்றதா? காலா காலங்களில் திறக்கப்பட்டும் மூடப்பட்டும் இருக் கின்றதா? என்பதைக் கவனித்துப்பார்த்து அப்போதைக்கப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மாகாண பிரசார காரியாலயத்திற்கும் அறிக்கை செய்ய
குடி அரசு - 1929 @) 100
வேண்டும் மற்றும் உரிமை இல்லாத இடங்களில் விற்கப்படுகின்றதா? என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். உரிமை இல்லாமல் உற்பத்தி செய்யப்படு கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும். இவைகளினால் மதுவிலக்கு லட்சியத்திற்கு அதிக நன்மையுண்டு என்பது நமது அபிப்பிராயம். இவை சரிவர கவனித்துப் பிரசாரம் செய்த பிறகே மறியல் செய்யவேண்டும். தவிர
வும் மது விலக்குக்காக முழுதும் சம்பளப் பிரசாரகர்களாகவே இல்லாமல் கெளரவ பிரசாரகர்களையும் நியமித்து அவர்களுக்குச் செலவு மாத்திரம் கொடுப்பதாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
இப்பிரசாரத்தில் பெண்களை அதிகமாகக் கெளரவப் பிரசாரகர்களாக நியமிக்க வேண்டும். முனிசிபாலிடி, தாலூகா போர்டு ஆகியவைகளிலுள்ள பெண் உபாத்தியாயர்களை சனி, ஞாயிற்று கிழமைகள் தோறும் பிரசாரம் செய்ய கேட்டுக் கொண்டு கிராமங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு வழிச் செலவு கொடுத்துப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மது இலாகா அதிகாரிகளால் ஏதாவது இடையூறு நேரிடுமானால் பிரசாரகர்கள் அவர் களிடம் நேரில் எவ்வித வர்த்தமானங்களும் வைத்துக் கொள்ளாமல் சாட்சி களுடன் ஜில்லா கமிட்டி மூலம் மாகாண சபை காரியாலயத்திற்கு அனுப்பி விட வேண்டும்.
ஜில்லா கமிட்டியார்களும் தங்கள் பிரசாரகர்கள் பெயர்களைச் சம்பந் தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் மது இலாகா அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட வேண்டும்.ஆகவே, இவை முதலாகிய அநேக விஷயங்கள். பிரசாரக் கமிட்டியார் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்த முறையில் ஒரு ஐந்து வருஷங்களுக்குக் கட்டுப்பாடாகவும், கட்சிப் பிரதி
கட்சி இல்லாமலும் மதுவிலக்குப் பிரசாரம் நடைபெறுமானால் சென்னை மாகாணத்தில் மதுபானத்தில் ஒரு பகுதி பாகத்தையாவது ஒழித்து விடலா மென்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆகவே, ஜில்லா கமிட்டி யார்களும், பொதுஜனங்களும் நமது மந்திரி கனம் முத்தையா முதலியாரவர்களின் இவ்வரிய முயற்சிக்குத் தக்க உதவி செய்வார்களாக.
குடி அரசு - தலையங்கம் - 18.08.1929.
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
திரு.நடரான்
தஞ்சை திரு. த.நா. நடராஜனைத் தமிழ் உலகம் நன்கறிந்திருக்கும். அவர் “எனது திடம்” என்னும் தலைப்பின் கீழ் “நேர்வழிகண்டது” என்ற
உள் தலைப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு பகிரங்க அபிப்பிராயத்தை மற்றொரு பக்கம் வெளியிட்டிருப்பதைப் பார்த்தால், அவரது தேச தொண்டின் ஆர்வமும், பொதுநலத் தியாகமும் நன்றாய் தெரியவரும். சுமார் 20 வருடகாலமாய் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுழைத்திருக்கும் அவர், மற்ற இயக்கங்களோடு கலந்து இருந்து ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்துக் கடைசியாக சுயமரியாதை இயக்கத்தில் ஒருவாறு பற்றுக் கொண்டு அக் கொள்கைகளில் பலவற்றையும் ஏற்றுக் கொண்டு அவற்றிற்காக தனது வாணாளை உபயோகிக்கத் தீர்மானம் செய்து கொண்டிருக்கின்றார் என்பது விளங்கும். இவ்வித உறுதி கொண்ட மக்களையே இதுபோது உலகம் சிறப்பாக நமது நாடு எதிர்பார்ப்பதுடன் லட்சியம் கைகூடும்வரை ஒரே உறுதியுடன் நின்று அதற்காக சகலவிதமான தியாகத்தையும் எதிர்ப்பார்க் கின்றது. நிற்க அவரது கடிதத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும், அரசியல் கொள்கையையும் தம்மால்
ஒப்புக் கொள்ள முடியவில்லை என்கின்ற குறிப்பும் காணப்படுகின்றது. எனினும் அவர் மனதில் உள்ளதை ஒளிக்காமல் வெளியிட்டதற்கு நாம் அவரைப் பாராட்டுவதுடன், அதற்குச் சமாதானமும் சொல்லக் கடமை பட்டிருக்கின்றோம், பொதுவாக இந்தியாவானது எந்தக் காரணத்தாலோ யாருடைய சூழ்ச்சியாலோ பல மதக்காரர்களாகவும், பல ஜாதி வகுப்பார்: களாகவும் உள்ள மக்களைக் கொண்ட தேசமாக இருக்கின்றது என்பதை
யாவரும் மறுக்கமாட்டார்கள். அன்றியும் பல மதமும் பல வகுப்பும் ஒன்றுக் கொன்று மகா கொடூரமான ஏற்றத்தாழ்வு, துவேஷம், வெறுப்பு ஆகிய உணர்ச்சியோடு இருக்கின்றன. பல மதமும் பலஜாதி வகுப்பும், துவேஷமும் வெறுப்பும், உயர்வு தாழ்வும் ஒழிந்து ஒன்றாக வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கையானாலும் - அதுவரையிலும் இந்த மதப் பிரிவுக்கும் ஜாதி வகுப்புப் பிரிவுக்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு வேண்டியது அவசியமா அல்லது அவரவர்கள் தன் தன் கையாலானபடி நடந்து கொள்ள ஒருவருக்கொருவர் துவேஷத்துடனும் வெறுப்புடனும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதுதானா என்பதே நமது முக்கிய கேள்வி.
குடி அரசு - 1929 @) 102
கையில் வலுத்தவன் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று அவர் சொல்ல வருவாரானால் நமக்கு இப்போதைய ஆட்சி முறையே மேலானது என்றுதான் சொல்லுவோம். அப்படிக்கில்லாமல் வலுத்தவனை
யும் இளைத்தவனையும் ஒன்றுபோல் பாவிக்கப்பட வேண்டுமானால் ஒருவனை ஒருவன் மோசம் செய்யாமல் அவனவன் பங்கை அவனவன் அடைய ஒரு ஏற்பாடு செய்துதான் ஆகவேண்டும் என்போம். இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்கு நன்மையா அல்லது இந்த ஆட்சிக்கும் பார்ப்பனருக்கும் நன்மையா என்பதற்கு ஒரே ஒரு பரீட்சை சொல்வோம். என்னவென்றால், அரசியலில் எந்தெந்த காரியம் பார்ப்பனனும் வெள்ளைக் காரனும் கூடாது என்கின்றார்களோ அவையெல்லாம் நமக்கு மிக்க அவசிய மானது என்பது பொதுவாக எல்லாப் பெரியோர்களும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும். ஏனெனில், இந்த நாட்டின் மீது இப்போதுள்ள கொடுமையான ஆட்சி முறைக்கு இந்த இரு கூட்டத்தார்களே அவர்களது சுயநலம் காரணமாக பொருட்டானவர்களாவார்கள்.ஆகவே அவர்கள் ஒரு கொள்கையை வேண்டாம் என்று சொல்வார்களானால் அது அவர்களுக்கு விரோதமும் நமக்கு நம்மையும் என்றுதான் அறிவுள்ளவர்கள் கருதுவார்கள்.
இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. இதுதான் போகட்டும், என்றாலும் திரு. ஜவஹர்லால் நேருவைப் பின்பற்றுவதாகச் சொல்லும் திருநடராஜன் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பிடிக்கவில்லை என்று சொல்வது. மிகவும் அதிசயமாய் இருக்கின்றது. ஏனெனில் திருஜவஹர்லால் அவர்கள். நாட்டில் ஏழை பணக்காரன் என்கின்ற வித்தியாசங்கூட இருக்கக்கூடாது என்றும் பணக்காரனுடைய பூமிகளை ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும் கூட கருதி இருப்பதாக ஜாடைகாட்டியிருக்கின்றார். அப்படி ஒரு சமயம் பங்கிடும் சந்தர்ப்பம் வந்தால் அவர் எல்லோருக்கும் விகிதாச்சாரப்படி பங்கிட்டு கொடுப்பாரா? அல்லது கையில் வலுத்தவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று சண்டை போட்டு மண்டை உடைத்துக் கொள்ள விடுவாரா? என்றுதான் கேட்கின்றோம். அவனவன் உரிமை அவனவன் வகுப்புரிமை - அவனவன் மத உரிமை - அவனவன் நாட்டுரிமை
- அவனவன் தேச உரிமை என்கின்ற முறைப்படி வந்தால்தான் உலகம் உண்மையான உரிமையை காண முடியுமே ஒழிய மற்றப்படி தலைகீழாய் போவதாய் ஒரு உரிமையும் பெற முடியாதென்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஏனெனில் தன்னுரிமை பெற முடியாதவன் தன் வகுப்புரிமை பெற முடியாது.
தன் வகுப்புரிமை பெற முடியாதவன் தன் மத உரிமை பெற முடியாது. தன் மத உரிமை பெற முடியாதவன் தன் நாட்டுரிமை பெற முடியாது. தன் நாட்டுரிமை பெறமுடியாதவன் தன் தேச உரிமை பெற முடியாது. இதுவே நமது முடிந்த முடிவு.ஆதலால் தான் நமது சுயமரியாதை இயக்கம் முதலில் தன் உரிமைக்கும் பிறகு தனது வகுப்புரிமைக்கும் பாடுபடுகின்றதை முக்கிய கொள்கையாய் கொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு முதல் முதலாக தான்
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
என்பதும் பிறகு தனது வகுப்பு என்பதும் பிறகு தனது நாடு என்பதும் பிறகு தனது தேசம் என்பதும் படிப்படியாக மறைந்து கடைசியாக எல்லாம் ஒன்று என்கின்ற சம நோக்குவரும் காலத்தில் தான் பொது உலக உரிமையை நாட
முயற்சிக்க முடியும். அப்படிக்கில்லாதபோது தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் எங்கேயோ நடுவில் புகுந்து கொண்டு தன் உரிமை வேண்டாம் தனது வகுப்பு உரிமை வேண்டாம் தனது நாட்டு உரிமை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தேச உரிமையே பெரிது என்றால் இதில் ஏதாவது அர்த்தமுண்டா? என்றுதான் கேட்கின்றோம்.
உலகத்தில் மற்ற மனிதரைப் போல் திரு.நடராஜனும் ஒரு மனிதராய் இருக்கும் போது உலகத்தில் மற்ற தேசங்களைப் போல் இந்தியாவும் ஒரு தேசமாய் இருக்கும்போது, இந்தியா தேச உரிமையைப் பற்றி மாத்திரம் இவருக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்டால் அதற்கு அவர் என்ன
பதில் சொல்லக் கூடும்? “இந்தியாவென்றும், இங்கிலாந்து என்றும் துருக்கி என்றும் ஏன் பாகுபடுத்த வேண்டும்? தேசவாரி உரிமை என்பது உலகத்தின் ஒற்றுமையைக் கெடுக்காதா? உலக முன்னேற்றத்திற்குத் தேசவாரி ஒற்றுமை
முட்டுக் கட்டையல்லவா?” என்று யாராவது கேட்டால் இதற்கு தேசியவாதி களின் பதில் என்ன என்று கேட்கின்றோம்.
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடு வோம்” என்று பாரதி சொன்னாரே அதுபோலவே தனி ஒரு வகுப்புக்கு உரிமை இல்லை என்றால் எவ்வித தேசீயத்தையும் அழித்திடுவோம் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமாகும்.
வகுப்புரிமை கிடைத்தவுடன் இனி கிடைக்கவேண்டிய உரிமை என்ன என்பது படிப்படியாக சுயமரியாதை இயக்கத்திற்குத் தெரியும் என்றே சொல்லுவோம். ஆதலால் நாட்டின் நலமானது வகுப்புரிமையில் கெட்டுப் போகாதென்றும் அதில்லாவிட்டால் தான் கையில் வலுத்தவன் பாடு என்ப தானால் தான் கெட்டுப்போகும் என்றும் திரு.நடராஜனுக்குச் சொல்லு கின்றோம்.
தவிர அரசியல் கொள்கை பிடிக்கவில்லை என்கின்றார். அரசியல் என்றால் இன்னது என்பதை உணராத காரணத்தாலேயே இவ்விதம் சொல்ல நேரிடுகின்றதே ஒழிய வேறில்லை. திரு.நடராஜன் மாத்திரமல்லாமல் மற்றும் அநேக வாலிபர்கள் இப்படிச் சொல்லுவதைக் கேட்கின்றோம். வெள்ளைக் கார ஆட்சிக்கும் நமக்கும் உள்ள அபிப்பிராய பேதம் இன்னது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் திரு.நடரா ஜனின் அபிப்பிராயம் வெள்ளைக்காரர்களின் ஆட்சி கூடாது என்பது அபிப்பிராயமா? அல்லது உலகத்திற்கு ஒரு அரசாட்சியே தேவையில்லை என்பது அபிப்பிராயமா? என்பது முதலில் விளங்க வேண்டும். உலகத்திற்கு அரசாட்சியே வேண்டாம் என்று சொல்வதானால் சுயமரியாதை இயக்கம் அதை ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.ஏனெனில் மதம் கடவுள் அரசு
குடி அரசு - 1929 @) 104.
முதலியவைகள் எல்லாம் மனிதனின் சுயமரியாதையை ஒழித்து எப்படியாவது அடிமைப்படுத்துவதற்கு ஏதுக்களானவைகளே ஒழிய அவை ஒரு விதத்திலும் சுதந்தரம் அளிப்பவைகளல்ல. அன்றியும் மேற்கண்ட மூன்றும் அயோக்கியத்தனம் ஒழுக்கவீனம் ஏமாற்றல் ஆகிய கல், மண்,மரம் முதலியவைகளால் கட்டப்பட்ட கோட்டைகளாகும். அதற்குள் அகப்பட்ட
வன் சுதந்தரமாக இருக்கவே முடியாது. ஆகவே அம்மூன்றையும் இடித்து எறிவதில் சுயமரியாதை இயக்கத்திற்கு ஆட்சேபணை இருக்க நியாய மில்லை. ஆனால் “இந்தக் கடவுள் வேண்டாம் அந்தக் கடவுள் வேண்டும். இந்த ராஜா வேண்டாம் அந்த ராஜா வேண்டும் என்பது போன்ற வார்த்தைகள்
மாத்திரம் அறிவற்றதும் பயனற்றதுமேயாகும்” என்று சுய மரியாதை இயக்கம் சொல்லுகின்றது. அரச ஆட்சியை அடியோடு விலக்க முடியாத நிலையில்
நாம் இருக்கின்றோம் என்பதை ஒப்புக்கொள்ளு வதானால் வெள்ளைக்கார அரசாட்சி வேண்டாம் என்று ஒரு நிறத்தின் பேரால் ஆட்சேபிப்பதில் அர்த் தமே இல்லை என்று தான் சொல்லுவோம். ஆதலால் அரசியல் விஷயங் களை அவர்கள் மிக்க ஜாக்கிரதையோடும் நுட்பத்தோடும் கவனித்துப் பார்க்க வேண்டும். திரு. நடராஜனோ அல்லது மற்ற நண்பர்களோ இந்த முறையில் பார்த்து பிறகு நமது அரசியல் கொள்கையில் என்ன தப்பு இருக் கின்றது? என்பதை நமக்கு விளக்குவார் களானால் அவசியம் நாம் சமாதா
னம் சொல்ல முயற்சிப்போம். மற்றபடி திரு.நடராஜனை மனமார வர: வேற்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 18.08.1929.
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
fl. _“dc ௨33
திரு.ராஜகோபாலாச்சாரியவர்களால் புதிதாக வெளியிடப்படும் “விமோசனம்” என்னும் மாத வெளியீட்டு முதற்பகுதி ஒன்று நமது பார்வைக்கு வந்திருக்கிறது. அதைப் பற்றி “திராவிடன்” எழுதியிருக்கும். தலையங்கமே “விமோசன”த்தைப் பற்றிய மதிப்புரையாகக் கொண்டு கீழே
எடுத்துக் காட்டுகின்றோம். (பர்)
திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் காந்தி ஆச்சிரமத்தில் இருந்து “விமோசனம்” என்னும் ஒரு மாதப் பத்திரிகையை ஆரம்பித்திருக் கிறார். அதன் இப்போதைய உத்தேசம் மதுவிலக்கையே உறுதி கொண்டதாய் காணப்படுகின்றது. ஆனாலும் மிஸ் மேயோ அம்மையார் இந்தியத்தாய் என்னும் புத்தகத்தை எழுதியிருப்பதில் அதில் உள்ள விஷயங்கள் எவ்வளவு சரியாயிருந்தாலும், இந்தியாவின் மீது வெளிநாட்டார் தப்பர்த்தம் கொள்ள
வும், இந்தியா “சுயராஜ்ஜியத்திற்கு” அருகதை இல்லை என்று பிறர் நினைக்
கவும் கருதி எழுதப்பட்டதாய் எப்படி சொல்லப் படுகின்றதோ, அப்படிப் போலவே, திரு ஆச்சாரியாரின் “விமோசனம்” என்னும் பத்திரிகையையும் அதில் உள்ள விஷயங்களை எல்லாம் சரி என்றே வைத்துக் கொள்வதா னாலும் - அது பார்ப்பனரல்லாதார் சிறிதளவாவது இப்போது அரசியலில்
பெற்று இருக்கும் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்து மறுபடியும் பூரண பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத் துடனேயே பாமர ஜனங் களை ஏமாற்ற ஒரு ஆயுதமாக உபயோகிப்பதற்காகச் செய்யப்படும் முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், குடிகாரர்களானாலும், கள் உற்பத்தி செய்கின்றவர்களா னாலும் அவர்கள் பார்ப்பனர்களாயிருந்தால் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க முயற்சி செய்வதும், அவர்களை அரசாங்க ஆதிக்கத்தில் வைக்க முயற்சிப்பதுமான காரியங்கள் செய்வதும், மேலும் சட்டசபை தேர்தல் நெருங்குகின்ற காலங்களில் மாத்திரம் மதுவிலக்கு என்று கூச்சல் போட்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாத மந்திரிகளின் ஆட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து தேர்தல்களில் தோல்வி உண்டாக்கப்பார்ப்பதும், தேர்தல்கள். முடிந்தவுடன் சிறிதும் கவலையற்று வேறுவழியில் தொல்லை விளைவிப்
பதும் கொஞ்ச காலமாக நமது திரு.ஆச்சாரியாரிடம் பார்த்து வருகின்றோம். தவிர, இப்போது ஒரு பார்ப்பனரல்லாத மந்திரியினால் சர்க்காரையே
குடி அரசு - 1929 @) 106
மதுவிலக்குப் பிரசாரம் செய்யும்படி சம்மதிக்கச் செய்திருப் பதை மக்களிடம்
திரித்துக் கூறி. அது நடைபெறாமல் செய்ய தந்திரம் செய்து கொண்டு. மற்றொரு புறத்தில் தங்கள் இனத்தார்களுக்கே மதுவிலக்குப் பிரசாரப் பெருமை ஏற்பட்டு அதனால் அவர்கள் ஓட்டு சம்பாதிக்க வேண்டு மென்று காங்கிரசின் பேரால் சூழ்ச்சி செய்வதும் பார்த்து வருகின்றோம். எப்படி இருந்தபோதிலும் மிஸ் மேயோவின் புத்தகத்தை அலட்சியஞ் செய்யாமல், அதை வாங்கிப் படித்து அந்தம்மையின் எண்ணத்தைப் பற்றிச் சிறிதுங் கவலைப்படாமல் அந்தம்மாளால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும். நம் நாட்டிடை உள்ள குற்றங்களை ஒழிக்க நாம் எப்படி முயற்சி செய்கின் றோமோ, அதுபோலவே திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் எந்த எண்ணத்தைக் கொண்டு “விமோசனம்” என்னும் பத்திரிகையை போட்டாலும் அவரின் எண்ணத்தைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படாமல் அப் பத்திரிகையை ஒவ்வொருவரும் வாங்கி அவர் கூறும் குற்றங்கள் ஒழிய பாடுபட வேண்டியது அவசியம்.
குடி அரசு - மதிப்புரை - 18.08.1929.
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
காங்கிரசும் - தேசியமும்
சென்னை மாகாணத்தில் காங்கிரசின் யோக்கியதையும், தேசியத்தின் யோக்கியதையும் எவ்வளவு தூரம் வெளியாகிவிட்டது என்பதும் அதை: பொதுஜனங்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் சமீப காலமாக சென்னை நகரிலும் வெளியிடங்களிலும் நடந்துவரும் நடவடிக்கை களிலி
ருந்து நன்றாய் அறியலாம். உதாரணமாக “காங்கிரசின் முக்கிய கொள்கைகள் எல்லா ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதுதான்” என்பதாக இருந்தும்
மற்றும் எல்லாக் கட்சிகளும் அதாவது சுயராஜ்ஜியக் கட்சி, சுயாட்சி கட்சி, தேசப் பிரதானக் கட்சி, உத்தியோகப் பிரதானக் கட்சி, தேசியக் கட்சி, சுயேச்சை கட்சி என்கின்ற இத்தனை கட்சிகளும் கூட இதையே அதாவது தேர்தல் ஸ்தாபனங்களை கைப்பற்ற வேண்டியதே முக்கிய கடமை என்பதாக. இருந்தும் கூட இவ்வளவு கட்சிகளும் சேர்ந்து ஒரே அடியாய் ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்றும் அதன் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்றும் இரவு பகலாய் எழுதியும் தொண்டை கிழிய கத்தியும் போதாக் குறைக்கு கூலி ஆட்களையும் காலி ஆட்களையும் விட்டு கத்தும்படி செய்தும் கலகம் செய்யும்படி செய்தும் மற்றும் எவ்வளவோ சூழ்ச்சிகள். செய்தும் அதாவது ஜஸ்டிஸ் கட்சி சுயமரியாதைக் கட்சியில் அடங்கிவிட்டது என்றும் சுயமரியாதைக் கட்சி நாஸ்திகம் பரப்பி நாட்டைக் கெடுக்கின்றது என்றும் இவை இரண்டும் சேர்ந்து சாமிக்குப் பணம் செலவு செய்ய வேண் டாம் என்றும் ஜாதி இல்லை என்றும் கோயில் கட்ட வேண்டாம் என்றும் கடைசியாக சாமியே இல்லை என்று சொல்லுகின்ற தென்றும் மற்றும் எவ் வளவோ விஷமப் பிரசாரம் செய்தும் கடைசியாக தேர்தல்கள் வரும் சமயங்களில் காங்கிரஸ் அடியோடு மறைந்து கொள்ளுவதும் போலீசாரை வைத்துக் கொண்டு பொதுக் கூட்டம் நடத்துவதும், காலிகளை வைத்துக் கொண்டு கமிட்டிக் கூட்டம் நடத்துவதுமான நிலைமைக்கு வந்துவிட்டதை: அறியாதாரில்லை, உதாரணமாக சென்னையில் மகாஜன சபை மண்டபத்தில் நடந்த மாகாணக் கமிட்டி கூட்டமும் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி கூட்டமும் நடத்தப்பட்ட வைபவங்கள் “தமிழ்நாடு” “சுதேசமித்திரன்” முதலிய தேசீயப் பத்திரிகைகள் என்பனவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். இன்னமும் தெளிவாய் யாருக்காவது அவற்றின் யோக்கியதைகள் தெரிய வேண்டுமா னால் அக்கமிட்டிகளிலும் மற்றும் வெளியிடங்களில் உள்ள கமிட்டிகளி லுமுள்ள அங்கத்தினர்களைப் பற்றி அறிவதன் மூலமும் தெரிந்து கொள்ள
குடி அரசு - 1929 @) 108
லாம். அன்றியும் இந்த ஒரு வருஷ காலமாக எங்காவது காங்கிரஸ் கமிட்டி எந்த தேர்தலுக்காவது அபேட்சகர்களை நிறுத்தி இருக்கின்றதா என்பதன் மூலமாகவும் நிறுத்தி எங்காவது வெற்றி பெற்றிருக்கின்றதா என்பதன் மூலமாகவும் நன்றாய்த் தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் சென்னை நகரில் காலமான காங்கிரஸ் கட்சி சட்டசபை அங்கத்தினர் திரு.பக்தவச்சலம் அவர்களுக்கு பதிலாக ஒரு அபேட்சகரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முதலியவைகள் தங்களால் கூடுமான வரை பாடு
பட்டுப் பார்த்தும் அக்கட்சித் தலைவர்கள் செலவுக்குப் பணம் கொடுப்பதாய் சொல்லியும் ஒருநபர் கூட கிடைக்காமல் போய்விட்டதும் பிறகு ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் பேரால் நிறுத்தப் பாடுபட்டுப் பார்த்து, அதற்கும் ஆட்கள் கிடைக்காமல் போய்விட்டதும், கடைசியாக ஜஸ்டிஸ் கட்சி ஆட்களிலாவது ஒருவரைப் பிடித்து தங்கள் கட்சி பேரால் நிறுத்த முயற்சித்து எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தும் ஒன்றும் முடியாமல் கடைசியாக ராவ்பகதூர் சி.நடேச முதலியார் அவர்களைப் போய் “நீங்கள் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் நிற்காதீர்கள். தனியே நில்லுங்கள் நாங்கள் உதவி செய்கின்றோம்” என்று சொல்லிப் பார்த்தும் ஒன்றும் பிரயோசனப் படாமல் முக்காடு போட்டு மூலையில் உட்கார்ந்து கொண்டார்கள். ஆனாலும் சிலருக்கு ஜஸ்டிஸ் கட்சியில் ஏதாவது பிளவு ஏற்பட்டு அக்கட்சியின் பேரால் யாரையும் நிறுத்தாமல் போனால் அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு மற்றபடி வேறு யார் நின்றாலும் அவர்களை தங்கள் கட்சிக்காரர் என்று சொல்லிக் கொள்ளலாமா என்றும் பார்த்தார்கள். இந்த முயற்சியில் திரு.வரத ராஜுலு வெகு பாடுபட்டு பார்த்தார். திரு. ராமசாமி முதலியார் வீட்டுக்கு டஜன் கணக்கான முறை நடந்தும் பார்த்தார். கடைசியாக திருநடேச முதலி
யார் தாம் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகராய் நிற்பதாக வெளிப்படுத்தினவுடனும் ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்கள் கட்சிக்காக திரு.நடேச முதலியாரை ஒப்புக் கொண்டு திருராமசாமி முதலியாரால் பிரேரேபிக்கப்பட்ட நியமனச் சீட்டை தாக்கல் செய்தவுடனும் மற்ற எல்லாக் கட்சிகாரர்களுக்கும் சுவாசம் அடங்கி விட்டது. திரு.நடேச முதலியார் அவர்களும் போட்டியன்னியில் சென்னை நகரத் தொகுதிக்கு சட்டசபை அங்கத்தினராகத் தெரிந்தெடுக்கப்பட்டாய் விட்டது.
காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கென்று வேறு மார்க்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்திக சங்கத்தின் பேரால் செய்யும் விஷமப் பிரசாரக் கூட்டத்திற்கு திருநடேச முதலியாரை தலைமை வகிக்கச் செய்து பார்த்தும்கூட, திரு. முதலியார் கடைசியாக அதன் யோக்கியதை யையும், சூழ்ச்சியையும் தெரிந்து அவர் முகத்தில் கரியைப் பூசிவிட்டது மிகவும் பாராட்டத்தக்கதாகும். என்றாலும் மறுபடியும் காங்கிரஸ்காரர்களும். அவர்களது உட்கட்சிகாரர்களும் தங்களுக்கு நாட்டில் செல்வாக்கு இல்லை என்பதையும் தங்களிடம் நாட்டின் நன்மைக்கு ஏற்ற எவ்வித கொள்கையும்
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இல்லை என்பதையும் நன்றாய் அறிந்திருந்தாலும் இனியும் அவர்களுக்கு சிறிதாவது நம்பிக்கை எதனால் இருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒரே ஒரு விஷயம் தான் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். அதென்னவெனில் ஜஸ்டிஸ் கட்சியாருக்கும் சுயமரியாதைச் சங்கத்தாருக்கும் ஏதாவது மனஸ். தாபம் வந்ததா என்பதிலும் அல்லது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக் குள்ளாகவோ ஏதாவது பிரிவினை ஏற்பட்டதா என்கின்ற நம்பிக்கையிலுமே அவர்கள் உயிர்: வைத்திருக்கின்றார்கள்.
சுமார் ஐந்து மாத காலமாக சென்னை நகர் முழுவதும் ஆஸ்திகப் பிரசாரம் செய்து கடவுள்களையும் புராணங்களையும் தெருத் தெருவாய், திண்ணை திண்ணையாய்க் காப்பாற்றியும் காங்கிரசின் யோக்கியதையும் தேசியத்தின் யோக்கியதையும் அதன் தலைவர்களின் யோக்கியதையும் ஐயோ பாவம்! அழுவாரற்ற பிணமாய் போனதைத் தவிர வேறொன்று மில்லை. இனியும் பார்ப்போம்.
குடி அரசு - கட்டுரை - 25.08.1929
குடி அரசு - 1929 @) 110
இரு. மகமது நபி பிறந்த நாள்
கொண்டாட்டம்
எனது அன்பார்ந்த இந்து முஸ்லீம் சகோதரர்களே! இன்றைய தினமானது ஒரு பெரிய மகானின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும்
தினமாகும். ஆனால், அம்மகான் முகமதியர்களுக்கு மாத்திரம் சொந்த மானவர் என்றும், ஆதலால் அவர்கள் மாத்திரம்தான் அம்மகானின் பிறந்த நாள் கொண்டாட உரிமையுடையவர்களென்றும் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம்.அவ்வளவோடு மாத்திரமல்லாமல் அக்கூட்டத்தில் ஒரு இந்து என்பவனாகிய நான் எப்படித் தலைமை வகிக்கக் கூடுமென்றுகூட பலர். கருதலாம். மேலும் இவற்றிற்கு நான் சமாதானம் கூறும்போது எனது இந்து சகோதரர்கள் என்பவர்கள் பலர் என் மீதும் சந்தேகப்பட்டு நான் மகமதியர். களுக்கோ, மகமதிய மதத்திற்கோ வக்காலத்து வாங்கிப் பேசுவதாகவும் கருதலாம் என்றாலும் இந்துக்கள் என்பவர்கள் என்னைப் பற்றி எப்படிக் கருதுகிறார்கள் என்பதைப் பற்றி நான் சற்றும் கவலைப்படாமல் எனது மகமதிய சகோதரர்கள் என்னை இவ்விழாவில் கலந்து கொள்ள சந்தர்ப்ப மளித்ததுடன், மிகப்பெருமையான இவ்விழாவிற்குத் தலைமை வகிக்கும் கெளரவத்தையும் எனக்களித்ததற்கு முதன் முதலாக நான் என் மனப்பூர்வ மான நன்றியறிதலை எனது முஸ்லீம் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மதம்
சகோதரர்களே! நான் மதங்கள் என்பவைகளை யெல்லாம் மக்களின் இவ்வுலக வாழ்க்கை நலத்திற்கும், இன்ப அனுபவத்திற்கும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு அவ்வக்காலத்திய அறிஞர். களால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் என்றுதான் கருதுகின்றவனேயல்
லாமல், அவற்றை ஒரு “ஆத்மார்த்த சாதனம்” என்றோ, “தெய்வீகத் தன்மை” யுடைய தென்றோ, இவ்வுலக வாழ்க்கைக்கு மேற்பட்ட ஏதோ ஒரு கதிக்கு மார்க்கமென்றோ நான் சிறிதும் கருதுவதும் இல்லை; அதைப் பற்றி நான்
சிறிதும் கவலை கொள்ளுவதுமில்லை.அப்படி வேறு யாராவது கருதுவதாய் இருந்தாலும் கூட இவ்வுலக வாழ்க்கையின் அனுபவத்தைப் பொறுத்துத்தான்
அத் “தெய்வீக கதிகள்” என்பவைகளின் பலன்களும் இருக்கக் கூடுமே
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஒழிய அதற்கு விபரீதமாய் இருக்க முடியாது. ஆதலால் அதற்கென்று வேறு முயற்சிகள் வேண்டாம் என்றே அப்படிப்பட்டவர்களுக்கு நான் சொல்லுவது
வழக்கம். மற்றும் அது போலவே தான் எந்த மதக் கொள்கைகளையும் ஒரு கடவுள் உண்டாக்கினார் என்றோ அது எப்போதைக்கும் பொருத்தமான தென்றோ, அவற்றில் ஒரு சிறிது கூட கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து மாற்றக்கூடாதது என்றோ நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளுவதுமில்லை. அது போலவே எல்லா மதத் தலைவர்கள் என்பவர்களைப் பற்றியும் கூட
நான் அவர்களை ஒரு பொதுநல சேவைக்காரர் என்றும்.மக்களிடம் அன்பும் இரக்கமும் கொண்ட பெரியார் என்றும் உலக நன்மைக்காக தன்னலம் விடுத்து பிறர் நலத்திற்காகவே உழைத்த உத்தமத் தியாகிகள் என்றும்தான் நான் கருதுவதே தவிர, மதத் தலைவர்களை எல்லாம் கடவுள் என்பவர் என்றோ, கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றோ, கடவுள் அவதாரம் என்றோ,
நான் சிறிதும் கருதுவதில்லை. ஏனெனில், உலகில் பல மதங்களும், பல மதக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாகவும், ஒருவருக்கொருவர் ஒப்புக் கொள்ள முடியாமலிருக்கும்போது ஒரே கடவுள் இத்தனை மதங்களையும் உண்டாக்கி இருப்பாரென்று எப்படி ஒப்புக் கொள்ள முடியுமென்று தோன்று வதாலேயேதான், இது ஒருபுறமிருந்தாலும், மற்றொரு புறத்தில் இந்துமதத் தலைவர்கள் மாத்திரம் கடவுளாலேயே அனுப்பப்பட்டவர்களென்று கருதுகின்றவர்களுக்கு வேறு சமாதானம் என்ன வென்றால், “எல்லா
படைப்பும் எல்லா தோற்றமும் எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப் பட்டது” என்று சொல்லப்படுகையில் ஒரு சிலருக்கு மாத்திரம் கடவுள் அவதாரம், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கின்ற பேர் எப்படிப் பொருந்தும் என்பதே நமது பதிலாகும். இப்படி இருக்க ஒரு சிலரை மாத்திரம் மக்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்றும், அவதாரபுருஷர்கள். என்றும். கடவுளால் அனுப்பியவர்கள் என்றும் ஏன் சொல்லுகின்றார்கள் என்று பார்ப்போமானால், அதற்கும் ஒரு சமாதானம் இருக்கின்றதென்பதே. நமது அபிப்பிராயம். என்னவெனில் நாம் பொதுவாக மக்களின் சக்தியும் குணமும் இவ்வளவுதான் என்று ஒரு அளவுக்குட்படுத்தி நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றோம். அந்த அளவுக்கு மேற்பட்ட சக்தியையும் குணத்தை.
யும் எங்காவது கண்டு அது மனிதத்தன்மைக்கு மீறியது என்பதாக நாம் முடிவு செய்யும்போது, சாதாரணமாக நமது வாழ்வில் மனிதத்தன்மைக்கு மீறினதாகக் கருதும் எதையும் நாம் “தெய்வத்தன்மை” என்று கருதுகின்ற வழக்கமாய் விட்டதால் இதையும் “தெய்வத்தன்மை” என்று சொல்ல வேண்டியவர்களாகிவிடுகின்றோம். எப்படியானாலும் அப்படிப்பட்டவர்கள். பெரியார்கள் என்பதிலும், பாராட்டப்படவும், கொண்டாடவும், மரியாதை: செய்யப்படவும் உரியவர்கள் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அவர்களைக் கொண்டாடுவது என்பது அவர்களைப் போன்ற உருவத்தை ஊர்வலம் செய்வதற்கோ, பூஜை, அபிடேகம், உற்சவம் செய்வதற்கோ, அவர்கள் மீது பாட்டு, பஜனை பாடுவதற்கோ, கொண்டாட்டம் செய்வது
குடி அரசு - 1929 @) 112
என்பது பைத்தியக்காரத்தனம் என்பதே நமது அபிப்பிராயம். மற்றபடி வேறு எதற்கு என்போமானால் நாம் பெரியார் என்றும், மனிதத்தன்மைக்கு மீறினவர். என்றும் ஒப்புக்கொண்ட ஒருவரை பின்பற்றவும், அவரது உபதேசப்படி நடக்கவும் மற்றும் அந்தப்படி மக்களை நடப்பிக்கச் செய்ய முயற்சிக்கவுமான. காரியங்களுக்கேதான் அவ்வித பெரியாரின் கொண்டாட்டங்களை உபயோ கிக்க வேண்டும் என்பேன்.
எனவே, இன்று நாம் கொண்டாடும் திரு.மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன்சொன்ன முறையில் கொண்: டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால் இப்போது நம்மால் மதத்தலைவர்:
கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு.மகமது நபி அவர்கள். மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாய்ச் சொல்லுவேன். ஏனெனில் திரு.மகமது நபி அவர்களின் மதமே (கொள்கைகளே) மற்ற எல்லா மதத்தைவிட பிந்தியதும் சமீபமானதுமான மதமாகும். ஆதலால் அது மற்ற மதங்களில் உள்ள குற்றம் குறைகளை எல்லாம் நீக்கிச் சற்றேறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவு சீர்திருத்தமுடையதென்றும் சொல்லுவேன். எப்படியெனில் சுமார் இரண்டு மூன்று ஆயிர ஆண்டுக ளுக்கு முன்பு உலகத்தில் எங்கும் இந்து மதக் கொள்கைகள், அதாவது, ஆரிய
மதக் கொள்கைகளே பரவி வந்திருந்ததாகத் தெரிய வருகின்றது. அது எப்படியெனில், பல தெய்வ வணக்கமும், விக்கிரக வணக்கமும், ஜீவபலி
யிடுவதும் முதலான காரியங்களே ஒரு காலத்தில் உலகத்தில் மதக் கொள்கை:
யாய் இருந்து வந்திருக்கின்றது. அதிலிருந்து ஒருபுறம் புத்தரும் மற்றொரு புறம் கிறிஸ்துவும், மற்றும் பல பெரியாரும் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டு
மிகக் கஷ்டத்துடன் முயற்சி எடுத்து வந்திருக்கின்றார்கள்.
அவர்கள் முயற்சியானது அந்தக் காலத்திற்குப் புதியதாய்த் தோன்றிய தாலேயே அவர்கள் நாத்திகர்கள் என்று பழிக்கப்படவும், துன்பத்திற்காளா கவும் நேர்ந்ததுடன், கிறிஸ்து நாதர், சாக்கரடீஸ் முதலியவர்கள் கொல்லவும் பட்டார்கள். அதற்கும் வெகுகாலத்திற்குப் பிறகு அக்கொள்கைகளிலிருந்தும் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டவரே நமது திரு.மகமது நபி அவர்களா வார்கள். எனவே, நபி அவர்கள் உயரிய புதுக்கொள்கைகளை, அதாவது மிக்க மனிதத்தன்மை வாய்ந்ததாகவும், மனித வர்க்கத்திற்கு ஏற்றதும், அவசியமானதும், பெரிதும் அறிவிற்குப் பொருந்தியதாகவும் கண்டுபிடித்துப் பரப்பினார். இவ்வித உயரிய கொள்கைகள் அவருக்கு மாத்திரம் எப்படி தோன்றிற்று என்போமானால், அவர் மற்ற மதங்களின் குணதோஷங்களை எல்லாம் நன்கு அறிந்து கடைசியில் பிந்திய காலத்தில் ஏற்படுத்தின மதமாதலால் அது கூடுமானவரை திருத்தத்துடன் செய்ய முடிந்தது. ஆனால் அப்பொழுதும் பழைய கொள்கைக்காரர்கள் திரு.நபி அவர்களையும்
113 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
நாஸ்திகர் என்றும், கடவுள் துரோகி என்றும் சொல்லி பலவிதத்திலும் துன்புறுத்தி இருக்கின்றார்கள்: கொல்லவும் முயற்சித்திருக்கின்றார்கள். என்றாலும், திருநபி அவர்கள் எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் நின்று தமது கொள்கையை மக்களிடம் நன்றாய் பதியும்படி செய்திருக்கிறார். எனவே, அவரை அக்காலத்திற்கேற்ற ஒரு பெரிய சீர்திருத்தக்காரர் என்றும், தன்னல மற்ற பெரிய தியாகி என்றும், தீர்க்கதரிசி என்றும் சொல்லியாக வேண்டும். நான் இப்படிச் சொல்லுவதற்கு ஆதாரமாக இன்றையதினம் அப்பெரியாரின் கொள்கைகளின் பெருமைகளைப் பற்றியும், அவற்றிற்கும் நமது இந்து மதக் கொள்கைகள் என்பவற்றிற்கு முள்ள தாரதம்மியத்தைப் பற்றியும் தங்கள்முன் எனக்குத் தோன்றியதை எடுத்துச் சொல்வதில் நீங்கள் சற்று கவனம் செலுத்தி நடு நிலைமையில் இருந்து கேட்க வேண்டும் என்று இந்து முஸ்லீம் சகோதரர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தத்துவார்த்தமும் பிரத்தியட்ச அனுபவமும் சகோதரர்களே! நான் அந்தப்படி சொல்லுவதில் குரானில் என்ன சொல்லியிருக்கின்றது என்பதைப் பற்றியோ, இந்து வேதம் என்பதாகிய நான்கு வேதங்களில் என்ன சொல்லி இருக்கின்றது என்பதைப் பற்றியோ சொல்லப் புறப்பட்டு அவ்வம்மத ஆதாரங்களான புத்தகங்களில் எழுதப் பட்டவைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஏனெனில், நான் அவைகளை எல்லாம் படித்தவனல்ல; அன்றியும் புத்தகங்களில் இருப்பதாகச் சொல்லும் பெருமைகள் நமக்கு ஒரு பலனையும் தரமுடியாது. ஒரு காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிக் கொண்டு நக்கினால் இனிக்குமா? அன்றியும் அவற்றிற்கு எப்படி வேண்டுமானாலும் “தத்துவார்த்தம்” செய்யக்கூடும். ஆதலால் அதைப்பற்றி பிரஸ்தாபிக்காமல், இரண்டு மதத்தின் பேராலும், பிரத்தியட்சத்தில் நாம் காணும் விடயங்களைப் பற்றியும் அவ்வம் மதக்காரர்கள் அனுபவிக்கும் பலனைப் பற்றியும் எடுத்துப்பேசுகின்றேன். ஏனெனில், எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு நாட்டிற்கு உண்டாக்கி இருக்கும் பலன்களைக் கொண்டுதான் நிச்சயிக்க வேண்டுமேயல்லாமல், அது ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் கதைகளைக் கொண்டோ, அம்மதத் தலைவர்கள், ஒரு காலத்தில் செய்ததாக சொல்லப்படும் அற்புதங்களைக் கொண்டோ, வியாக்கியானம் செய்வதால் ஏற்படும் அழகிய கருத்துக்களைக் கொண்டோ நிச்சயித்து விடமுடியாது. அப்படி நிச்சயிப்பதால் உலகத்திற்கு ஒரு பலனும் ஏற்பட்டு விடாது. ஆதலாலேயே தான் பிரத்தியட்ச அனுபவத்தைச் சொல்லுகின்றேன்:-
மகமதிய மதம் என்பது ஒரு தேசீய மதமாகும். அம்மதத்தின் முக்கிய தத்துவம் என்னவென்றால், அம்மதத்தைப் பின்பற்றும் சமூகம் கொண்ட தேசங்களை அச்சமூக நன்மைக்கேற்றதான, ஆட்சிக்குள் இருக்கச்
குடி அரசு - 1929 @) 114
செய்வதென்பது முக்கியமானதாகும். அன்றியும் அம்மாதிரியான ஆட்சி நன்மைக்கே மதத்தைக் காப்பதுமாகும். மேலும் அது ஒரு சமத்துவக் கொள்கைக் கொண்ட மதமாகும். அதாவது மகமதிய மதத்தில் மக்களுக்குள்: பிறவியில் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது. பணக்காரன், ஏழை, படித்தவன் படியாதவன்; இளைத்தவன் பலசாலி என்கின்ற வித்தியாச
மில்லாமல் சகலருக்கும் வாழ்வில் சகல உரிமையும் அளிக்கின்றது. மேலும் மகமதிய மதம் ஒற்றுமையையே அதிகமாய்க் கொண்டிருக்கிறது. அதாவது
அந்த மதத்தைச் சேர்ந்த ஒரு தனி மனிதனுக்கு ஒரு சிறு தீங்கு அந்நியனால் செய்யப்பட்டாலும், உடனே அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, தங்களுக்கு வந்ததுபோல் கருதி அவனுக்கு உதவி செய்ய அவசரமாய் முந்துகின்றார்கள். அன்றியும், அது அன்பையும் சகோதரத்துவத்தையும், அடிப்படையாகக் கொண்ட மதமாகும். என்னவென்றால், ஊர்பேர் தெரியாதவர்களானாலும், மகமதியர் என்று தெரிந்தால், ஒரே இலையில் சாப்பிடும்படியான அன்பும் சகோதரத்துவமும் கொண்டிருக்கிறது. அது “சண்டாளர்களையும்” ரட்சிக்கும் சமயமாகும். ஏனெனில் நம்மால் சண்டாளர்கள் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட மக்களைத் தங்கள் சமயத்தில் சேர்த்து அவர்களுக்குச் சகல உரிமையையும் கொடுக்கின்றார்கள். மற்றும் மகமதிய மதமானது வீரத்தையும் ஆண்மை யையும் கொடுக்கும் மதமாகும். எப்படியெனில் அவர்களுக்கு மற்றவர். களைவிட துணிவு அதிகம்; அவர்களைக் கண்டால் மற்றவர்கள் பயப்படு கின்றார்களே ஒழிய அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.
மகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. அதாவது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு; விதவா விவாகம் உண்டு; கணவனும் மனைவியும் ஒத்துக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ளச் சுதந்தரம் உண்டு: படிக்கச் சுதந்தரம் உண்டு: ஆனால் கோஷா முறையைப் பற்றி குற்றம் சொல்லலாம். ஆனாலும் வரவர அதுவும் விலக்கப்படுகின்றது. உதாரணமாக துருக்கியில் பெண்கள் உத்தியோகம் வகிப்பதும், ஆப்கான் தேசத்திலிருந்து பெண்களை வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பி இருப்பதும், ஹைதராபாத், நைசாம் அவர்கள், தனது புத்திரிகளுடன் தாராளமாய்ச் சென்னையில் உலவினதுமான காரியங்களைக் கவனித்தால் அதுவும் சீக்கிரத்தில் மாற்ற மடையக் கூடும். மகம்மதிய மதம் தெய்வ வணக்கத்தில் மிக்க கண்டிப் பையும் செலவு சுருக்கத்தையும் உடையதாகும். அதாவது, ஒரே கடவுள். என்பதும் அதுவும் நாமம், ரூபம், குணம், குறி முதலியவைகள் அற்றது
என்பதும், அதற்கு விரோதமாய்ப் பல கடவுள்களை சொல்லுவதோ, அல்லது கடவுளுக்கு ரூபம், பெண்டு, பிள்ளை, வைப்பாட்டிகளை ஏற்படுத்துவதோ, பூசை, உற்சவம் முதலியவைகளில் செலவு செய்வதோ மிக்கதோஷம் என்றும் அப்படி கருதுகின்றவர்களையும் செய்கின்றவர்களையும் தங்கள் எதிரிகள் என்றும் கருதும்படி கற்பிக்கின்றது. மகம்மதிய மதம் தர்ம விஷயத்தில் மிக்க பிரயோஜனமான காரியத்தைச் செய்விக்கிறது. அதாவது ஒரு முஸ்லிம் தனது. சொத்தில், அல்லது தனது வரும்படியில் இன்ன பாகம் தர்மத்திற்குக்
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கொடுக்கவேண்டும் என்று இருப்பது அமுலில் இல்லாவிட்டாலும், கொடுக்கும் பணத்தை ஏழைகளுக்கும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சாப்பிட முடியாதவர்களுக்கும் அநாதைப் பிள்ளைகளைக் காப்பாற்றி, கல்வி, தொழில்
கற்றுக் கொடுப்பதற்கும் உபயோகப்படுத்தப் படுகின்றதே ஒழிய தர்மத்தின் பேரால் சோம்பேறிகளை உற்பத்தி செய்வதில்லை. மகமதிய மதம் மற்ற மதங்களை விட, மிகவும் நாகரிகம் கொண்டது என்றுகூட சொல்லலாம். அதாவது மகமதியர்கள் உணவில் சத்துள்ள உணவு கொள்ளுகின்றார்கள். ஒரே வகை சாப்பாடு ருசி, பலம், சத்து, திருப்தி ஆகியவைகளைக் கொடுக் கும்,நல்ல நல்ல பழ வர்க்கங்களும், சத்துள்ள விதை வர்க்கங்களும் பெரிதும் அவர்களாலேயே நமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. வைத்தியத்தில்
மிக்க மேன்மையான முறையையுடையவர்கள். அல்வா விலும் சர்ப்பத்தி லுமே எம்மாதிரியான வியாதிக்கும் மருந்து உண்டு. சங்கீதமோ மற்ற சங்கீ தத்தை விட மேன்மையானது. கட்டிடங்கள் கட்டுவதிலோ மற்றவர்களைவிட அலங்காரமாக சித்திர வேலைகளமைந் ததாகவும் கட்டுவார்கள். வாசனைத் திரவியங்களில் மற்றவர்களை விட சிறந்தவர்கள். அரசியல் ஆட்சிமுறையில் அவர்கள் மிக்க ஞானமுடைய வர்கள்; நீதி உடையவர்கள் என்றும் சொல்ல
லாம். எப்படி எனில், அரசியல் அதிகாரங்களுக்கு அநேகமாய் மகமதிய பெயர்களே இப்போதும் வழங்கு கின்றது. அன்றியும் அவர்களுடைய மூர்தண்ணியமான ஆதிகாலத்திலும் இந்தியாவின் செல்வத்தை அந்நிய நாட்டிற்குச் சுறண்டிக் கொண்டு போகவில்லை. அந்நியர் கொண்டு போக இடம் கொடுக்கவும் இல்லை. மற்றபடி ஏதாவது இரண்டொரு விஷயங்கள்.
மாறுபட்டதாகக் காணப்பட லாமாயின், அவைகள் மகமதிய கொள்கைகள் ஏற்படுத்தப்பட்ட அந்தக் காலத்திற்கும் இடத்திற்கும் இப்போதைய நிலை மைக்கும் உள்ள தார தம்மியத்தைப் பொறுத்திருக்கலாமே ஒழிய வேறில்லை...
மற்றும் முல்லாக்களால் ஏதாவது சில மூட நம்பிக்கைகளைப் புகுத்தியிருக் கலாம். ஆனாலும் அது அவர்கள் தேசீயத்தையாவது வாழ்க்கைச் சுதந்த ரத்தை யாவது கெடுக்கக்கூடிய அவ்வளவு கேடானதாக இல்லை.அன்றியும், அது இப்போதைய நிலைமைக்கு காலதேசவர்த்தமானத்திற்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்து மாற்றிக் கொள்ளத் துணிந்தும் இருக்கின்றது. உதாரண மாக, துருக்கி சீர்திருத்தமும் ஆப்கான்ஸ்தான் சீர்திருத்தமும், அச்சீர்திருத்தம் செய்த அவ்வரசாங்கங்களை இந்திய மகமதியர்கள் ஆதரிப்பதும், ஆகிய வைகளைக் கவனித்தால் அதன் பெருமை விளங்கும்.
மேலும் மகமதிய மதம் மிக்க சுயமரியாதை உணர்ச்சியுடையது என்றும் சொல்லுவோம். எப்படி என்றால், அது இனி உலகத்திற்கு கடவுள் அவதாரங்களோ, நபிமார்களோ, தீர்க்கதரிசிகளோ வரக்கூடும் என்பதை
ஒருக்காலும் ஒப்புக் கொள்ளுவதில்லை. மனிதனை மனிதன் வணங்கு வதையோ, அவன் காலில் விழுவதையோ, அதுசிறிதும் சம்மதிப்பதில்லை.. இனியும் இதன் பெருமைகள் அனந்தம் உண்டு. இவ்வளவு பெருமை களுக்கும் காரணம் என்னவென்றால், முன் சொன்னபடி இது சமீபகால
குடி அரசு - 1929 @) 116
சீர்திருத்த மதமானதாலும், மகமது நபி அவர்கள் நல்ல அனுபவ மும், ஞானமும், தீர்க்க தரிசனமும், உறுதியும் கொண்டவரானதாலும், உலகத்தில் உள்ள மதங்களில் எல்லாம் சிறந்த மதம் என்று சொல்லத்தக்க தாயிருக்
கின்றது. இதற்கு நேர் விரோதமாக நமது மதம் என்பதில் உள்ள குறைகளை எடுத்துச்சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள எனக்கு இஷ்டமில்லாததால் அவற்றை மற்றொரு சமயம் சொல்லலாம் என்று இருக்கின்றேன். கடைசியாக, நான் இந்து மகம்மதிய சகோதரர்களுக்குச் சொல்லுவதென்னவென்றால், மதத்தின் காரணமாக இந்து முஸ்லீம்களுக்குத் துவேஷம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதேயாகும். எக்காரணத்தை முன்னிட்டோ, மதங்கள் என்றாலே முதலாவது, மற்றொரு மதத்தினிடத்தில் துவேஷம் கொள்ளுவதே முக்கிய கடமையாயிருக்கின்றது. உதாரணமாக இந்துக்கள் என்பவர் மகமதியர்களை வெகு இழிவாய்க் கருதுவது எனக்குத்
தெரியும். அதாவது மகமதியனைத் தொட்ட அளவுக்கு சரீரத்திலுள்ள தசையை அறுத்தெறிய வேண்டும் என்று இந்துக்கள் சொல்லிக் கொண்டி ருந்தது எனக்குத் தெரியும். இப்போதும் துலுக்கர் என்றால் மிலேச்சர் என்று சமஸ்கிருதங்களிலும் அதைச் சார்ந்த தமிழ் அகராதிகளிலும் அர்த்தம் எழுதப்பட்டிருக்கின்றது. துலுக்க பாஷையைக் கூட தமிழ் பாஷையைப் பார்ப்பனர்கள் சொல்லுவதைப் போலவே மிலேச்சபாஷை என்றே பார்ப்பன நிகண்டுகளிலும் அகராதிகளிலும் இன்னமும் இருக்கின்றது. இவ்வித துவேஷ உணர்ச்சி உள்ளவர்களிடம் மகமதியர்கள் எப்படி ஒற்றுமையாய் இருக்க முடியும்? ஆதலால் இந்துக்கள் தான் முதன் முதலாக மகமதியர் களிடம் சகோதரபாவம் காட்டி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும். கூட்டத்தில் ஒன்றாய் உட்காந்திருப்பதாலேயே ஒற்றுமை இருக் கின்றது என்று நினைத்துவிடக் கூடாது. இந்நாட்டில் உள்ள 8 கோடிமகமதியர். களை அலட்சியம் செய்தோ, அவர்கள் கூட்டுறவில்லாமலோ, நமது நாட்டிற்கு நல்லரசாட்சியை உண்டாக்கிவிடவோ திருப்திகரமான வாழ்க் கையை ஏற்படுத்தவோ முடியவே முடியாதென்றே சொல்லுவேன்.அன்றியும் அவர்களை இருந்த நாட்டைவிட்டுத் துரத்தி விட முடியாதென்றும் சொல்லுவேன். இந்த நாட்டிலுள்ள 8 கோடி மகமதியர்களின் பலமானது 16 கோடி இந்துக்களின் பலத்திற்குச் சசானமானதென்றுகூட சொல்லுவேன். எப்படியென்றால், இந்துக்களிடத்தில் மகம்மதியர்களுக்கு அவநம்பிக்கை. இல்லாமலிருந்திருந்தால் இந்தியாவுக்கு ஜவாப்தாரியான ஆட்சி வெகு காலத்திற்கு முன்பே ஏற்பட்டு அனுபவித்துக் கொண்டிருக்குமென்பதில்
சிறிதும் எனக்குச் சந்தேகமில்லை.
இப்பொழுதும் நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்னும் ஆறரைக் கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் நாளைக்கு மகமதியர்களாகிவிட்டால் மறுநாளே இந்தியாவின் நன்மைக்கேற்ற அரசாங்கம் ஏற்பட்டுவிடும் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். நிற்க, இந்தியாவுக்கு ஏதாவது ஒரு காலத்தில் பொறுப்பாட்சி ஏற்பட யோக்கியதை உண்டாகிவிட்டது என்று சொல்லப்படும் காலம்
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வருமானால், அந்தக் காலத்தில் இந்தியாவில் 15 கோடி மகம்மதியர்களாவது இருப்பார்கள். ஏனெனில், அந்தப்படி 15 கோடி மகம்மதியர்கள் இருந்தால் தான் இந்தியாவுக்கும் பொறுப்பாட்சி அடைய யோக்கியதை வரக்கூடும் என்பதாகவும் சொல்லுவேன். ஏனெனில் பொறுப்பாட்சி அடைவதற்கு விரோதமான கொள்கைகள் மகமதிய மதத்தில் கிடையவே கிடையாது என்பதுதான் நான் இவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னதன் தத்துவமாகும். அது போலவே மகமதியர்களும் கவனிக்க வேண்டிய விடயமும் உண்டு. மகமதியர்கள் இனி இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றோ, அல்லது இந்துக்களை இந்தியாவில் இல்லாமல் இருக்கும்படி செய்யலாம் என்றோ கருத முடியவே முடியாது. எப்படியானாலும் இந்த நாட்டில் இருவர்களும் இருந்துதான் ஆக வேண்டும். பொதுவாக இந்தியாவுக்கு ஏற்பட்ட லாப நஷ்டத்தில் இருவர்களுக்கும் பங்கு உண்டே தவிர மகம்மதி யர்கள் எவ்விதத்திலும் விலக்கப்பட்டவர்கள் அல்ல.நாட்டின் நன்மையைக்
கருதி இந்துக்களுடன் ஒத்துழைத்துத் தீர வேண்டிய அவசியம் அவர்களுக் கும் உண்டு. கூடிய சீக்கிரத்தில் இந்துக்கள் என்பவர்களுக்குள் இருக்கும் அநேக குறைபாடுகள் விலகிவிடக்கூடும் என்றே நினைக்கின்றேன். அப்பொழுது இந்துக்கள் முஸ்லீம்கள் என்கின்ற வித்தியாசம் இவ்வளவு காணப்படமாட்டாது. இந்து யார்? முஸ்லீம் யார்? என்று சுலபத்தில் பிரித்துக் காண முடியாத அளவு ஒற்றுமை ஏற்படப் போகின்றது என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை இருக்கின்றது. மதத்தின் பேரால் உள்ள வெளி வேடங்கள் எல்லாம் மறைந்து மனிதவர்க்கத்தின் நன்மைக்கு ஏற்ற அவசியமான ஒழுக்கங்களுடன் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாய்க் காணப்படும் காலம். அதிக தூரத்தில் இல்லை என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆதலால் மகம்மதிய சகோதரர்கள் மதத்தைவிட, தேசத்தைவிட முதலாவது நாம் எல்லோரும் மனிதர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மனித சமூகத்தின் நன்மைக்கு ஏற்ற மார்க்கத்தில் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். மூடப்பழக்கவழக்கங் களையும் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விரோதமானவைகளையும் உதறித் தள்ள மனிதர்கள் என்பவர்கள் எல்லாம் தயாராயிருக்க வேண்டும்.கொள்கை:
கள்தான் மதமே ஒழிய, சடங்குகள், வேடங்கள் மதம் அல்ல என்கின்ற உணர்ச்சி தாராளமாய் ஒவ்வொருவருக்கும் ஏற்படவேண்டும். இவைகளே இப்போது எனக்குத் தோன்றிய கருத்துக்களாகும். இவற்றை ஒளிக்காமல் உங்கள் முன்னிலையில் சொல்லிவிட்டேன். ஏதாவது தவறுதல்கள் இருந்தால் அதை தள்ளிவிட்டு தங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு :18.08.1929 ஆம் நாள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மகமது நபி
பிறந்தநாள் விழா சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 25.08.1929.
குடி அரசு - 1929 @) 118
சுமாமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டி லுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மை யான விடுதலையையும், சமத்துவத்தையும் தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கை: யெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம். இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்
கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானே யானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும். சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும் கூட, இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும். நிற்க,
தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க
முடியாமல் அன்னியர்களின் முட்டாள் தனத்திலேயே பிழைத்துக் கொண்டி ருந்தவர்களான அரசியல் தேசீயக் கூட்டத்தார்கள் என்பவர்களும் சமய இயல்பில் வைதீகப் பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும், இவ்வியக்கத்
தால் தங்களுடைய வாழ்விற்கும் பெருமைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி இவ்வியக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேசத்துரோக இயக்கம் என்றும், சமயத் துரோக இயக்கம் என்றும், நாத்திக இயக்கமென்றும், சொல்லிக் கொண்டு, எவ்வ ளவோ முயற்சியும் கட்டுப்பாடுமான சூழ்ச்சிகள் செய்துங்கூட, இவ்வளவுக்
கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க அடிக்க பந்து எழும்புவதுபோல், விஷமப் பிரசாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேச முழுவதும் பஞ்சில் நெருப்பு பிடிப்பது போல் மக்களிடம்
பரவிக் கொண்டே போகின்றது.
இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும்
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த “சுதேச
மித்திரன்”, “இந்து”, “சுயராஜ்யா', “தமிழ்நாடு”, “நவசக்தி”, “லோகோபகாரி”, “ஊழியன்” முதலிய தேசீயப் பத்திரிகைகள் என்பவை களும், மற்றும் பல
குட்டிப் பத்திரிகைகளும், கூலிப் பத்திரிகைகளும் மனதார நடந்தவைகளைத்
திரித்துக் கூறுவதும், கருத்துக்களை மாற்றிக் கூறுவதும், பொதுமக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன. மற்றும் பிரசாரம் செய்வதிலும், தேசீயத் தலைவர்கள், பிரசாரகர்கள் என்பவர்கள் எல்லோரும் ஒரே முகமாய் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார், கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு, குழந்தை, ஷாபி முகம்மது, அண்ணாமலை, குப்புசாமி, பாவலர் என்பவர்களும் மற்றும் தேசீயம் என்பதன் பேரால் நாட்டில் பாமர மக்களிடம் செல்வாக்குள்ள அனைவரும் அடியோடு பார்ப்பனக் கூட்டமும், காப்பிக்கடை தாசி வீடு வரையில், சட்ட சபை முதல் சந்து பொந்துகள் எல்லாம் சென்று சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கமென்றும், நாத்திக இயக்கமென்றும் இதைக் கொல்வதற்கு “ஆண்டவன் அருள் கொண்டு” துணிந்து விட்டோம் என்றும், “கடவுள் துணை கொண்டு இறங்கிவிட்டோம்” என்றும். “கிருஷ்ண பகவானே துணை” என்றும் கர்சித்துக்கொண்டு தொண்டை கிழியப் பேசியும், பார்த்தார்
கள். அவர்களுக்குள் வர்ணாசிரம மகாநாடு, சைவ மகாநாடு முதலிய மகா நாடுகள் கூட்டி தீர்மானித்தும் பார்த்தார்கள். மற்றும் புராணப் பண்டிதர்கள்,
புத்தகக் கடைக்காரர்கள், பூசாரிகள், குருக்கள், மடாதிபதிகள் முதலிய கூட்டத்
தார்களும் தேசீய மேடையிலும், சமய மேடையிலும் “சுயமரியாதை இயக்கம் சமயத்தைப் பாழ்பண்ணி வருகின்றது, இதை ஒழிக்க வேண்டும்” என்று கூட்டங்கள் போட்டுக் கூவிப்பார்த்தார்கள்.
இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரசாரம் செய்தும் பார்த்தார்கள். இனியும் இரகசியமாகச் செய்த இழிதகைப் பிரசாரத்திற்கு அளவே இல்லை. என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும், நடவடிக்கைகளைப் பற்றியும், ஒழுக்கங்களைப்
பற்றியும், எவ்வளவோ கேவலமாகப் பேசியும் கூலி கொடுத்து காலிகளை ஏவிவிட்டு பேசச் செய்தும், செய்யப்பட்ட இழி பிரசாரத்திற்கும் அளவே இல்லை. இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்றுவிடுவதாகவும், குத்தி விடுவதாகவும், சுட்டுவிடுவதாகவும், மற்றும் பலவிதமாய் அவமானப் படுத்துவதாகவும், கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும், பொய்க் கையெழுத்திட்ட கடிதங்களுக்கும் கணக்கே இல்லை. மற்றும் நமக்குள்: இருந்த தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவே இல்லை. இவ்வளவு தொல்லைகளையும் சங்கடங்களையும் தாண்டி இவ் வியக்கம் இன்றையதினம் ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசீயத் தலைவர்கள் என்பவர்களை
குடி அரசு - 1929 @) 120
எல்லாம் முக்காடிட்டு மூலையில் உட்கார வைத்தும் பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்டப் பிரசண்டவாதிகள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்
கில்லாமல் செய்தும் விட்டதுடன், ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப் பையும், பண்டித இறுமாப்பையும் கசகசவென்று நசுக்கிக் கொண்டு வருகின்
றது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது இயக்கத்திற்கு விரோதமாக ஏதா வது ஒரு அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக் கின்றதா என்று யாராவது பரீட்சை பார்க்க விரும்பினால் இப்போது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களையும், அவற்றின் முடிவுகளையும் கவனித்துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.
உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் நடந்த தேர்தல்கள் பெரிதும் “தேசீயத்திற்கும்” “ஆஸ்திகத்திற்கும்'” நல்ல தோல்வியைக் கொடுத்து, “தேசத்துரோகத்திற்கும்” “நாஸ்திகத்திற்கும்'” நல்ல வெற்றியைக் கொடுத் திருப்பதானது யாவரும் அறிந்ததாகும். அது மாத்திரமல்லாமல், தேசீயத்தின் பேராலும் ஆஸ்திகத்தின் பேராலும் தேர்தல்களுக்கு நிற்க ஆள்களே கிடைக்காமற் போனது. “நாஸ்திகத்தின்” செல்வாக்குக்கும் வெற்றிக்கும் ஒரு பரீட்சையாகும். “காங்கிரசே பெரிது” என்ற காங்கிரஸ் தலைவர் திரு. அய்யங்கார் தேர்தலைப் பற்றித்தான் ஒன்றுமே கவனிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். “தேசமே பெரிது” என்ற கட்சித் தலைவர், வேலை போன திரு.வெங்கிட்டராம சாஸ்திரியார். வேலை போன மந்திரிகள். ஆகியவர்கள் இருக்குமிடமே தெரியவில்லை. உத்தியோகமே பெரிது என்று பின்பற்றுவோர் இல்லாத குட்டி தேசீயக் கட்சி ஸ்தாபகரும் தானே தலைவரு மான திரு.வரதராஜுலு, காங்கிரஸ் தோல்வியுற்ற சந்தோஷத்திலும் அய்யங்
கார் மூலையில் அடங்கிய சந்தோஷத்திலும் மூழ்கிக்கிடக்கின்றாரே அல்லாமல், தன்னைப் பற்றி நினைக்கவோ, உலகம் என்ன பேசிக் கொள்ளு கின்றது என்பதைக் கேட்கவோ, நாட்டில் தனது நிலைமை என்ன என்பதை பார்க்கவோ, தனது கட்சியின் யோக்கியதை என்ன என்பதைப் பற்றி கவனிக்கவோ, சிறிதும் நேரமில்லாமல் இருக்கின்றார்.மற்றும் “சைவ சமயமே பிரதானம், சமய ஆச்சாரிகளே தனது உயிர் என்ற திரு.கல்யாண சுந்தர முதலியார் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் சென்று சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு ஓட்டு கிடைக்காது என்று மிரட்டுவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஓட்டர்கள் வீட்டுக்கு இரகசியமாய் நடந்து “நாஸ்திகக் கட்சிக்கு ஓட்டுச் செய்யாதீர்கள்” என்று சொல்லி பார்ப்பனர் களுக்கு சில ஓட்டுகளை வாங்கிக்கொடுத்துவிட்டதுடன் அவர் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். மற்றபடி ஆஸ்திகக் கூலிகளோ வாங்கின பணம் சரிவர ஜீரணமாயிற்றா இல்லையா என்பதைக் கூட கவனிக்காமல் இனியும், பணம் பணம் என்று கூவிக்கொண்டு கொடுக்கின்றாயா அல்லது எதிர்க்கட்சியில் சேர்ந்து கொள்ளட்டுமா என்று திரு.ஐயங்காரை மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த நிலையில் இன்றைய தினம் நமது
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
நாட்டில் சுயமரியாதை இயக்கமும் அதன் எதிர்ப்புகளும் இந்நிலையில் இருந்து வருவது ஒரு புறமிருந்தாலும், அவ் வியக்கத்தின் உண்மையான கொள்கைகள்தான் என்ன என்பதைப் பற்றிச் சற்று கவனிப்போம். சுய மரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்காய் இருக்கின்றது, மற்றபடி சமூக. சீர்திருத்தத் துறையில் எல்லாம் சரி என்று பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள் என்பவர்கள பலர் நமக்கு எழுதியிருக் கின்றார்கள். அதாவது, அரசியலில் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்காததும், சட்டசபையில் ஒத்துழைப்பதும் அரசியலுக்கு விரோதம் என்பது அவர்கள் கருத்து. ஆனால் இப்போது சைமன் கமிஷனை பகிஷ்கரித்தது பைத்தியக் காரத்தனம் என்று அவர்: களுக்கே தோன்றிவிட்டதைப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தீர்க்க தரிசனமுள்ளது என்பது விளங்கும். அதாவது காங்கிரசைச் சார்ந்த திருஆர்.கேஷண்முகம் எம்.எல்.ஏ. அவர்களும், சுயாட்சி சங்கத்தைச் சார்ந்த
டாக்டர் பெசண்ட் அம்மை அவர்களும், நமது குறைகளை பார்லிமெண்டு. முன்பாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் பார்லிமெண்டை நம்ப வேண்டுமென்றும், அதைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்றும் சொல்லி விட்டார்.
கள். இதை எந்த காங்கிரஸ்வாதியும், சுயாட்சிவாதியும், தேசீயவாதியும் நாளிதுவரை ஆட்சேபிக்கவில்லை. தவிர, காங்கிரஸ்காரர்களும் இவ்வரு ஷத்திய காங்கிரஸ் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் சீமைக்குப் போய் பார்லிமெண்டாரிடம் நமது குறைகளை எடுத்துச் சொல்லி வாதம் செய்து அவர்களிடம் சுயராஜ்ஜியம் பெறத் தகுதியுடையவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் பேசி இருக்கின்றார்கள். இதையும் எந்த பகிஷ்கார
வாதியும் இதுவரை ஆட்சேபிக்கவே இல்லை. எனவே, பார்லிமெண்டிடம் நமது கட்சியையோ குறைகளையோ சொல்லிக் கொள்ள நமக்கு இஷ்டம் இருக்கும்போது, சீமைக்குச் சென்று பார்லிமெண்டிடம் போகச் செளகரியமும் சக்தியும் இல்லாத ஜனங்கள் பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்டு இவ்விடத்
திற்கு அனுப்பி இருக்கும் பார்லிமெண்டு பிரதிநிதிகளிடம் நமது கட்சி யையோ, குறைகளையோ எடுத்துச் சொன்னதில் தேசீயத்திற்கோ, தேசீய சுயமரியாதைக்கோ என்ன கெடுதி நேர்ந்துவிட்டது என்று கேட்கின்றோம். அடுத்தாற்போல் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகச் சொல்லுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்று பார்ப்போம். முதலாவது, இப்போது ஒத்துழை யாமை என்பது எவ்வித தேசீயத் திட்டத்திலும் இல்லவே இல்லை. சட்ட சபையில் ஏதாவது செய்வதற்கு இடமிருப்பதாகச் சொன்னாலும் அதுவும் ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு மாத்திரம் தான் சொல்லி கொள்ள முடியுமே
ஒழிய மற்றபடி சட்டசபைக்குள் புகுந்துவிட்டால் எந்த விதத்திலும் ஒத்துழை யாமையோ, முட்டுக் கட்டையோ சிறிதும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். ஏனெனில் சட்டசபைக்குப் போனவர்களுக்கு சில நிபந்த னைகள் இருக்கின்றன. அந்நிபந்தனைப் படி அவர்கள் கண்டிப்பாய் இருக்க. வேண்டியவர்களாயிருக்கும்போது அங்கு எவ்விதத்தில் ஒத்துழையாமை செய்ய முடியும்? நமக்கு வேண்டிய எவ்வித அரசியல் சட்டங்களும், சமூக
குடி அரசு - 1929 @) 122
சீர்திருத்தச் சட்டங்களும், சமத்துவ சட்டங்களும் சட்டசபைகளின் மூலம்
தான் செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கின்றது. அப்போது
சர்க்காரிடம் போகாவிட்டால், சர்க்கார் சம்மதமில்லாவிட்டால் எப்படி சட்டங்கள் செய்து அவைகளை அமுலுக்குக் கொண்டு வரமுடியும்? அன்றியும், சர்க்காரால் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு
சர்க்கார் தயவை எதிர்ப்பார்ப்பதற்குத் தகுந்த படி நடந்து கொள்ளாமல் இருக்கச் சட்டசபையில் எப்பேர்ப்பட்ட தேசீய அமிதவாதிக்கும் சிறிதும் இடமே இல்லை.இப்போதும் திரு.நேரு உட்பட ஒவ்வொரு தேசீயவாதியும் அப்படித்தான் நடந்து கொள்ளுகின்றார்கள். உதாரணமாக, இப்போது
சர்க்கார் செய்யும் மதுவிலக்குப் பிரசாரத்தில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் திருவாளர்கள் சாமி.வெங்கடாசலம் செட்டியார், வெங்கிடபதிராஜு, நாகேஸ்வரராவ் பந்துலு ஆகியவர்களெல் லாம் சர்க்கார் நியமனம் பெற்றுச் சர்க்காருடன் ஒத்துழைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள். சென்னை மாகாண ஒத்துழையாமை தலைவர் என்பவர், அதாவது காந்தியார் கண்ணுக்கு இந்தியா முழுவதற்கும் ஒத்துழையாமை தத்துவத்தை உள்ளபடி உணர்ந்த ஒரே ஒரு உண்மை ஒத்துழையாதாராகத் தோன்றும் திரு.சி.ராஜ கோபாலாச்சாரியாரும், மதுவிலக்குப் பிரசாரம் சம்பந்த மாய் சர்க்கார். நியமனத்தைப் பெற்று சர்க்காருடன் ஒத்துழைக்க சம்மதித் திருக்கின்றார். எனவே, இனி யார் எவ்விதத்தில் சர்க்காரை பகிஷ்கரித்திருக் கின்றார்கள். என்பது விளங்கவில்லை.வேண்டுமானால், திரு.சத்தியமூர்த்தி போன்றவர்.
கள், குடிகாரர், வெறிகாரர்போல் காலித்தனமாய் சட்டசபை பார்ப்பனரல்லாத அங்கத்தினர்களையும், மந்திரிகளையும், நிர்வாகசபை அங்கத்தினர்களையும் வைதுவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். ஆகவே, இவ்வித நிலைமையில் பகிஷ்காரத்திற்கும் ஒத்துழையாமைக்கும் என்ன அர்த்தம் என்பது விளங்காதவர்களோ, அல்லது வேண்டும் என்றே பாமர மக்களை: ஏமாற்ற வேண்டுமென்பவர்களோதான் சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்கானதென்றோ, தேசீயத்திற்கு விரோதமான தென்றோ சர்க்காருடன் ஒத்துழைக்கின்றதென்றோ சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, மற்றபடி அறிஞர்களும் யோக்கியர்களும் ஒருக்காலும் சொல்ல முடியாது என்று உறுதி யாய்ச் சொல்லுவோம். அடுத்தாப்போல் சுயமரியாதை இயக்கம் தேசீயத் திட்டம் என்னும் நேரு திட்டத்தை ஏற்றுக் கொள்ளாதது ஒரு பெரிய காங்கிரஸ் துரோகம் என்று யாராவது சொல்ல வரலாம். ஆனால் நேரு திட்ட மானது இதுபோது இந்தியாவில் அழுவாரற்ற பிணமாய் அழுகி நாறிக் கிடப்பதை யாரே மறுக்கவல்லார். அதன் நாற்றம் இந்தியா மாத்திரமல்லாமல் இங்கிலாந்திலும் நாறுவதும், வெள்ளையர்கள் இந்த நாற்றம் பொறுக்க மாட்டாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு இந்தியா வைப் பற்றி நினைப்பதும் இரகசியமா என்று கேட்கின்றோம். நேரு திட்டத் திற்கு அதை ஆட்சேபிக்கும் விரோதிகள் யார் யார் என்று எண்ணுவதை விட, அதை ஆதரிக்கும் அனுகூலமானவர்கள் யார் என்று எண்ணுவதே சுருக்கமான வேலை
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
என்போம். ஏனெனில் அதை அப்படியே ஒப்புக் கொள்ளுகின்ற கட்சியோ, மதமோ, வகுப்போ எது என்று பார்த்தால் ஒரு சுண்டுவிரலை மடக்குவதற்குக் கூட ஒன்றையும் காணவே முடியவில்லை. இந்து மகாசபை, முஸ்லீம் சபை, கிறிஸ்தவ சபை ஆகிய மத சபைகள் தீண்டப்படாதார் முதலியவர்கள் என்கின்ற சமூக சபைகள் ஆகிய எல்லாம் ஆதி முதலிலிருந்தே ஆட்சேபித்
துக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் என்பவர்களுக்குள் பார்ப்பன சமூகசபை, பார்ப்பனரல்லாத சமூக சபை ஆகியவைகளும் எதிர்க்கின்றன. எனவே, நேரு திட்ட விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் மீது பழி சுமத்த ஏதாவது இடமிருக்கின்றதா? என்று கேட்கின்றோம். அதுபோலவே சமய சமூக விஷயங்களிலும் சுயமரியாதை இயக்கம் எந்த விதத்தில் நாத்திகமும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு விரோதமானதென்பது அடுத்தாப் போல் யோசிக்க வேண்டிய விஷயமாகும். சுயமரியாதை இயக்கத்தின் சமய சமூக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்கு செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மானங்களே போதிய அத்தாட்சியாகும். அதைக் கொண்டேதான் தேசீயவாதிகள், மத வாதிகள் என்பவர்களும் கூட்டம் போட்டு பேசிவருகின்றார்கள். ஆகவே அதைப் பற்றி சிறிது யோசிப்போம்.
1செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் சாதிபேதம் கிடையாது என்பது.
2. சாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணம் முதலியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.
3. வருணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.
4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொதுக்குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெருவு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்பது.
5. இவை பிரசாரத்தால் நிறைவேற்றிவைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமுலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
என்பது,
6.ஜாதிமத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும் பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து சாதிமத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக் காமலிருக்க மக்களைக் கேட்டுக் கொள்ளுகின்றது என்பது,
7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு
குடி அரசு - 1929 @) 124 128.
மேல் இருக்க வேண்டும், மனைவிக்கும் புருடனுக்கும் ஒற்றுமையின்
றேல் பிரிந்து கொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்து கொள்ளலாம். ஆண் பெண் தாங்களே ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்துக் கொள்ள
லாம் என்பது.
8.சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும், அதிக செலவில்லாமலும், ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும், ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.
9.கோயில் பூசை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூசைக்கென்றும் வீணாகக் காசைச் செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது
கூடாது.
புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்பதற்கு என்று விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களை கல்வி ஆராய்ச்சி கைத் தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க. முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.
உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும், நேரத்தை
யும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.
10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோத மான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களை பஹிஞஷ்கரிப்பது என்பது.
11. பெண் உரிமை விஷயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது: உபாத்தியாயர் வேலை
முழுதும் அவர்களுக்கே கிடைக்கும்படி பார்ப்பது என்பது.
12.“தீண்டப்படாதார்”” விஷயத்தில், “தீண்டப்படாதவர்” களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது: தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.
13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும், தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்கு பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்கு தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந் தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.
15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.
மேலும் இவைகளும் அநேகமாக சிபார்சு செய்வது, கேட்டுக் கொள்ளுவது, முயற்சிக்க வேண்டியது என்கின்ற அளவில் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப் படவில்லை.எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆதரிப்பது என்றும் எவை எவை தேசீயத்திற்கும், காங்கிர
சிற்கும் விரோதமானவை என்றும் எந்த யோக்கியமான தேசீயவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறை
கூவி அழைக்கின்றோம். உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப்பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும்.
பிறவி அடிமையைப் போலும், கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்றும், சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழிதகைமையது என்றும் அறிவினர்க்கு தெற்றென விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். எது எப்படி இருந்த போதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்கள் ஒழிதல், கோவில் கட்டுவதையும் உற்சவங்கள் செய்வதையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்
கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக் கின்றது, வருகின்றது என்பதும், இவ்விஷயங்களில் பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்ப
தும்; இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க்கையைக் கவனித்து வருபவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கிவருகின்றது.. அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆதரவை பரீட்சிப்பதற்கும் இவ்வியக்க சம்பந்தமான பத்திரிகைகள். வளர்ச்சியையும், ஜில்லாக்கள் தோறும் தாலூக்காக்கள் தோறும் நடைபெறும். மகாநாடுகளும், அங்கு கூடும் கூட்டங்களும், அக்கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும், அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்.
குடி அரசு - 1929 @) 126
மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்கள்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்ற தென்பதைச்
சிறு குழந்தையும் அறிய முடியும்.
நிற்க, தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்ட கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக்காரர்களாலும் சொல்லப் பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்தது தானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம். பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாசமெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்: புத்தகங்களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவைகளைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமுலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம். அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப் படுகின்றது. இவைகளைத் தவிர வேறு எவ்வித வித்தியாசங்கள் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம். ஆகவே, பொது ஜனங்கள் தயவு செய்து இவைகளை எல்லாம் நன்றாய் கவனித்து, தங்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, இதன் குணதோஷங்களை உணர்ந்து, ஒரு
முடிவுக்கு வரவேண்டுமாயும், வந்த முடிவை காலந்தாழ்த்தாமல் அமுலுக்குக் கொண்டு வர வேண்டுமாயும் ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 25.08.1929.
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தேசீய இயக்கம்
சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை, செல்வாக்கு, அது இதுவரை செய்திருக்கும் வேலை ஆகியவைகளைப் பற்றியும் ஒருவாறு விவரிப்போம்.
அதன் பொருள்
சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால் இந்தியாவில் தேசீயம் என்கின்ற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றி பிழைக்க ஒரு கூட்டத்
தார், அதாவது மேல் ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள். என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தாரின் சூட்சியாலும் பாமர மக்களை ஏமாற்றி சிலர் பிழைக்க உபயோகப்பட்டு வரும் ஒரு பாதக
மும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் தேசீயம் என்பது மக்களின் “ஆத்மார்த்த - இயல்” என்பதில் கடவுள், மோட்சம், நரகம் என்கின்ற வார்த்தைகள் எப்படி அர்த்தமற்றதாகவும் புரோகிதக் கூட்டமும்,
பாதிரிக் கூட்டமும், முல்லாக் கூட்டமும், சன்யாசிக் கூட்டமும், பாமர
மக்களிடம் சமயத்திற்கு ஒரு அர்த்தமும் சந்தர்ப்பத்திற்கு ஒரு கருத்துமாய்ச் சொல்லி அவர்களை ஏமாற்றி பிடுங்கித்தின்று சோம்பேறிகளாய் இருந்து நோகாமல் வாழ்வதற்காகச் செய்து கொண்டிருக்க உபயோகிக்கப்பட்டு வருகின்றதோ, அதேபோல் தேசீயமென்னும் பதமும் சரீரப் பிரயாசை ஒரு
சிறிதும் எடுத்துக் கொள்ள இஷ்டமில்லாமல் நெஞ்சத்தில் அழுக்குப் படாமல் பாமரர்களை ஏமாற்றிப் பிழைக்கவும் கீர்த்தி பெறவும் கண்டு பிடிக்கப்பட்ட
சாதகமாகும்.
இந்தப் பதமானது ஆங்கில பாஷையில் “நேஷனல்” என்கின்ற பதத்தின் மொழி பெயர்ப்பு என்கின்ற முறையில் ஏற்பட்டதே தவிர மற்றபடி
குடி அரசு - 1929 @) 128
அது இந்தியாவின் வேறு எந்த பாஷையிலும் எந்த கருத்திலும் இருந்ததல்ல வென்றே சொல்லலாம்.
அன்றியும் ஒரு சமயம் பத அர்த்த உணர்ச்சியானது தேசத்தின் பொதுவான நன்மைகளை உத்தேசித்ததாகக் காணப்படுவதாயிருந்தாலும் அப்பதத்தின் பேரால் நடைபெற்று வரும் முயற்சிகள் முழுவதும் அரசியல் சம்பந்தமான துறையில் சில உத்தியோகங்களையும், அதிகாரங்களையும்
மாத்திரம் கருதி அவைகளை அரசாங்கத்தாரிடமிருந்து அடைவதற்காக
செய்யும் முயற்சிகளாகவே இருந்து வருகின்றதேயல்லாமல் வேறில்லை. உதாரணமாக தேசியம் (அதாவது இந்திய தேசியக் காங்கிரஸ்! ஏற்பட்டு இன்றைக்குக் கிட்டத்தட்ட 50, 60 ஆண்டுகளாகி, அது இன்றைய தினம் செய்திருக்கும் வேலை என்ன வென்று பார்த்தால், அரசாங்க சம்பந்தமான உத்தியோகங்களை ஒன்றுக்கு 10 ஆகப் பெருக்கி அவ்வுத்தியோகங்களுக் கெல்லாம் சதா வேலை இருக்கும்படியாக அநேக புதிய புதிய அதிகாரங் களை உண்டாக்கி அவ்வுத்தியோகங்களும் அதிகாரங்களும் மக்களுக்கு சதா தேவையாய் இருக்கும்படியாக, மனித வாழ்க்கையையும் குணங்களையும், ஒழுக்கங்களையும் திருப்பி இதன் பயனாய் முன் சொல்லப்பட்ட உயர்ந்த ஜாதியார் என்னும் எல்லாப் பார்ப்பனர்களும் படித்தவர்கள் என்றும் பார்ப்பனரல்லாதாரும் போட்டி போட்டு வாழும் படியாக ஏற்பட்டதல்லாமல், நாட்டிற்கோ, நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்கோ ஏதாவது நன்மை ஏற்பட்டிருக்கின்றதா என்பதை சிறிதாவது கவனித்தால் நாம் கூறுவதில் உண்மை நன்றாக விளங்கும். அன்றியும் இன்றைய தினமும் தேசியம் என்பதின் பேரால் உள்ள காங்கிரஸ் என்னும் கூட்டத்திற்கோ இயக்கத் திற்கோ தேசியம் என்னும் தேச சம்பந்தமான நன்மைகளைப் பொறுத்த கொள்கைகள் என்ன என்று பார்ப்போமானால் கூட அவை பெரிதும் உத்தி யோகங்களையும், அதிகாரங்களையும் பொறுத்ததாகவே இருக்கின்றதே
தவிர, வேறு என்ன என்று பார்த்தால் அதன் மூலமும் உண்மை விளங்கும். ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டும் என்று பார்ப்போமானால் குறைந்த பக்ஷம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும் மனசாக்ஷியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாகவாவது இருக்க வேண்டும். ஈதன்றி அதற்கு மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும், கல்வி வேண்டும், ஆராய்ச்சி வேண்டும், கண்ணியமானத் தொழில் வேண்டும், சமத்துவம் வேண்டும், ஒற்றுமை வேண்டும், தன் முயற்சி வேண்டும், உண்மை உணர்வு வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும், சோம்பேறிகள் இருக்கக்கூடாது, அடிமைகள். இருக்கக் கூடாது, தீண்டாதவர்கள் தெருவில் நடக்கக் கூடாதவர்கள் முதலிய வர்கள் இருக்கக்கூடாது, இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள். செய்யப்பட வேண்டும்.
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தேசியம் செய்ததென்ன?
ஆனால் இவைகளில் எதனையேனும் இந்த ஐம்பது வருஷத்திய தேசியம் செய்திருக்கின்றதா? என்று பொது தேசியத் தலைவர்களையும், தனித்தனி தேசியக் கட்சித் தலைவர்களையும் இவைகளில், சம்பந்தப்பட்ட தேச பக்தர்களையும், தேசத் தொண்டர்களையும் கேட்கின்றோம். இந்த ஐம்பது வருஷ காலமாக உத்தியோகப் பெருக்குக்கும், அதிகாரப் பெருக்குக்
கும் அவற்றிற்கு ஏற்பட்ட யோக்கியதா பட்ச பெருக்குக்கும், சம்பளப் பெருக்குக்கும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான திட்டங்கள். கொண்டசட்டங்கள் தேசியத்தின் பேரால், நிறைவேற்றப் பட்டிருப்பது போல், உண்மையாகவே தேச நன்மைக்கேற்றதான மேலே குறிப்பிட்டவைகள் விஷயத்தில் ஏதாவது சட்டம் செய்ய இந்த தேசிய இயக்கமோ, தேசியத் தலைவர்களோ, ஒரு சிறிது முயற்சியாவது செய்து சட்டம் செய்தார்களா? செய்ய முற்பட்டார்களா? என்று கேட்பதுடன், அவ்வித சட்டம் செய்ய முன் வந்த வேறு கனவான்கள் முயற்சிக்காவது முட்டுக்கட்டை போடாமலிருந்தார். களா? என்று கேட்கின்றோம். பட்டினங்களில் உள்ள பொதுக்கிணறுகளில் சக்கரவர்த்தியின் குடிகளும், இந்நாட்டுப் பழங்குடிகளும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு மிக்க அவசியமான சமூகமுமான ஆதித்திராவிட மக்கள் என்போர் தாகத்திற்குத் தண்ணீர் மொள்ளுவதற்கு இந்த நாட்டில் இனியும் சட்டம் செய்துதான் அமுலில் கொண்டுவர வேண்டியிருப்பதுடன் அவ்வித. சட்டம் இதுவரை எந்த தேசியவாதியாலும் கொண்டு வரப்படாமல் இருப்ப துடன் தேசியவாதி அல்லாதவர் என்பவரால் (திரு.வீரையன் அவர்களால்! கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு தேசியவாதிகளின் எதிர்ப்பில்லாமலும் இருக்க முடியவில்லை. சென்ற மாதத்திலும் சென்னை சட்டசபையில் கிராமப் பொதுக் கிணறுகளில் பொதுமக்கள் யாவருக்கும் தாகத்திற்கு தண்ணீர். மொண்டு குடிக்க உரிமை வேண்டுமென்று ஒரு தேசியவாதி அல்லாதார் என்கின்றவரால்தான் சட்டம் கொண்டுவர முடிந்ததே தவிர வேறில்லை. அப்படியிருந்தும் அந்த சட்டத்தையும் தேசியவாதிகள் எதிர்க்காமலிருக்க வில்லை. தேசியவாதிகள் தயவால் மந்திரியாகி தேச மக்கள் பணத்தில் தேச மக்கள் பேரால் மாதம் ஒன்றுக்கு 5000 ரூபாய் சம்பளம் வாங்கினவரும், சுயாட்சி சங்கத்தைச் சேர்ந்தவரும், ஜாதி வித்தியாசமே இல்லாததும் “தினம்.
தினம் கடவுள் களுடனும் மகாத்மாக்களுடனும் சம்பாஷனை செய்து கொண்டிருக்கும்” சங்கமாகிய பிரம்மஞானச் சங்கத்தைச் சேர்ந்தவருமான திரு.ரங்கநாத முதலியாரால் ஆட்சேபிக்கப்பட்டதுடன், அவ்வாட்சேப னைக்கு அவர் சொன்ன காரணம் என்னவென்றால் இந்தச் சட்டம் நிறை வேறினால் தேசத்தில் அடிதடி கொலைகள் முதலியவைகள் ஏற்பட்டுவிடும், ஆதலால் கூடாது என்று சொன்னாராம். இதைத் திருவாளர் சத்தியமூர்த்தி முதலிய பச்சைத் “தேசியவாதிகள்” ஆதரித்தார்களாம். தேசிய இயக்க யோக்கியதைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்றுதான் கேட்கின்றோம்.தவிரவும், குழந்தைகள் விவாகங்களையும், குழந்தைகளைப்
குடி அரசு - 1929 @) 130
புணர்ச்சி செய்வதையும் தடுக்க இதுவரை எந்த தேசியவாதியும் சட்டம் செய்யவே இல்லை. தேசியவாதி “அல்லாதவரால்”தான் இதற்கும் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தும் அந்த சட்டத்தையும் எதிர்க்க பச்சைத் தேசியவாதிகளான திருவாளர்கள் சத்தியமூர்த்தி, சீனிவாச அய்யங்கார், வெங்கிட்டரமணய்யங்கார், சேஷய்யங்கார், எம்.கே.ஆச்சாரி
யார், துரைசாமி அய்யங்கார் முதலாகிய “இந்திய தேசிய பிரதிநிதிகளே” இன்று கச்சை வரிந்து கட்டிக் கொண்டு முன்னணியில் நிற்கின்றார்கள். மக்கள் ஜாதிப் பேதத்தையும். மத பேதத்தையும் ஒழிக்க தேசியவாதிகள் கவனிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல் அவற்றை நிலை நிறுத்தவும் வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதில்லை. இன்றைய தேசிய வாழ்வில் தேவஸ்தான மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? சாமிகள் பேரால் பெண்: மக்கள் விபசாரத்தைத் தடைபுரியும் மசோதாவை எதிர்த்தவர்கள் யார்?
மக்கள் எல்லோருக்கும் சமப் பிரதிநிதித் தத்துவமும் சமசந்தர்ப்பமும் அளிக்கவேண்டும் என்னும் கொள்கைகளை எதிர்ப்பவர் யார்? இவைகளை முந்தியவர்கள் யார்? என்ற விவரங்களைக் கவனிப்போமானால் “தேசத்துரோகி” கள் என்பவர்களால் மசோதாக்கள் கொண்டு வரப்படுவதும், “தேசியவாதிகள்” என்பவர்களால் எதிர்க்கப்படுவதுமாயிருக்கின்றதே. யல்லாமல் வேறு என்னவென்றுதான் கேட்கின்றோம்.
*தேசியம்' ஓர் முட்டுக்கட்டையே
கடைசியாக செங்கற்பட்டு மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் யாரால் கொண்டுவரப்பட்டது? இப்போது அவைகள் யாரால் எதிர்க்கப் படுகின்றது? என்று பார்த்தால் அவ்வளவும் தேசியவாதிகள் என்பவர்களா லேயே எதிர்க்கப்படுவதைக் காணலாம். இவைகள்தான் போகட்டுமென்று
பார்த்தாலும் இந்திய தேசிய முன்னேற்றத்திற்கு ஒத்துழையாமையைத் தவிர வேறு வழியில்லை என்று திரு.காந்தியால் சொல்லப்பட்டு இந்திய தேசீய இயக்கங்களும், ஒப்புக் கொள்ளப்பட்டு நடைமுறையில் கொண்டுவந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் ஜெயிலுக்கும் போய் தங்கள் உடலையும், பொருளை
யும், ஆவியையும் விடத்தயாராயிருந்த காலத்தில் அதைப்பாழ்படுத்தினவர்கள். யார்? என்று கேட்கின்றோம்.
இன்றைய தினம் தேசியத் தலைவர்களாயிருக்கும் திருவாளர்கள். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு முதலிய இந்தியத் தலைவர்களும் சென்னை தேசியத் தலைவர்கள் என்னும் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், கலியாணசுந்தரமுதலியார், வரத ராஜுலு முதலாகியவர்களும், ஒத்துழையாமை சட்ட விரோதமென்றும் ஒத்துழையாமை அசட்டுத்தனமென்றும் இராட்டையைச் சுழற்றினால் சுயராச்சியம் வந்துவிடாதென்றும், வகுப்பு வித்தியாசமுள்ள இடத்தில் ஒத்து ழையாமை பலியாதென்றும், காந்திக்கு மூளையில்லை, காந்தி தேசியத்திற்கு
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
லாயக்கில்லையென்றும் சொல்லிக் கொண்டு, ஒத்துழையாமையை அழிப்பதற்கென்றே தோற்றுவிக்கப்பட்ட சுயராஜ்யக் கட்சியை ஆதரித்து, அதில் சிலர் திருட்டுத்தனமாய் சேர்ந்து கொண்டு, சிலர் கைக்கூலி வாங்கிக் கொண்டு ஆதரித்து ஒத்துழையாமையை ஒழித்துவிடவில்லையா என்று கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட யோக்கியவர்கள் தானே இன்று நம்மையும் சுய மரியாதை இயக்கத்தையும் சர்க்காருடன் ஒத்துழைப்பவரென்றும் தேசியத்
திற்கு விரோதமான கட்சியென்றும், சொல்லுகின்றார்களேயொழிய வேறு உண்மையான யோக்கியர்கள் யாராவது சொல்லுகின்றார்களா? அன்றி யும் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் தேசத்தின் பேரால் தேசீயத் தின் பேரால் ஏதாவது ஒரு ஒத்த யோக்கியமான தலைவர் இருக்கின்றாரா? என்று கேட்கின்றோம்.
தலைவர்களின் “பெருமை”
திரு.காந்தியின்நிலைமையோ அவர்தானே தன்னை மனப்பூர்வமாக
யோக்கியர் என்று சொல்லிக் கொள்ள முடியவே முடியாது. தேசியம் என்பதின் பேரால் அவர் போட்ட குட்டிக்கரணங்கள் எண்ணித் தொலையாது.அவருடைய வியாக்கியான வித்தியாசங்கள் கணக்கிலடங்காது. இன்றையத் தினம் எந்த விதமான அயோக்கியத்தன்மையும் நாணய மற்றதுமான தீர்மானங்களைக்
காங்கிரசிலும், மற்ற கூட்டங்களிலும் நிறைவேற்ற வேண்டுமானாலும் தேசியத் தலைவர்களுக்கு திருகாந்தியைத்தான் உபயோகப்படுத்திக்கொள்ள முடிகின்றது. ஆனால், அவர் பேச்சையும் கேட்க ஆட்களைக் காணோம். திரு.மோதிலால் நேருவோ அரசியலை சூதாட்டம் என்றே கருதி இருப்பதோடு சட்டசபைகளில் காலிகளைவிட மோசமாய் நடந்து கொள்ளுகின்றவர். எந்தக் காரியம் செய்வதானாலும் அவருக்கு உத்தியோகத்திலும் அதிகாரத்திலும், கட்சித் தலைமையிலும் கண்ணே தவிர நாட்டின் நன்மைக்கேற்ற திட்டம் இன்னது என்பதைஅவர் தேசியத்தில் கிடையாது. அவர் குமாரர் ஜவகர்லால் நேருவோ வாயளவில் பூரண சுயேச்சை, காரிய அளவில் காங்கிரஸ் தலைமை, மற்றபடி நடைமுறைக்கு அவரிடம் யாதொரு கொள்கையும் கிடையாது. பம்பாய் மாகாணத்துத் தலைவர்களான மராட்டியப் பார்ப்பனர்கள் சங்கதி யாவருக்கும் தெரிந்ததேயாகும். கல்கத்தா மாகாணத்துத் தலைவர்கள் திருவாளர்கள். சென்குப்தா, போஸ் முதலியவர்கள் நம் நாட்டுத் திரு. ஆதிநாராயணஞ் செட்டியாரை தோற்கடிக்கக்கூடியதேசியவாதிகளாவார்கள்.பஞ்சாப் மாகாணத் தலைவர்கள் யோக்கியதை காங்கிரஸ் வரவேற்புக் கூட்டத்தில் தலைவர்:
தேர்தலில் நடந்து கொண்ட மாதிரியிலேயே அவர்கள் யோக்கியதையும் அவர்களுக்கு அங்கிருக்கும் மதிப்பும் நன்றாய் விளங்கும்.மற்றும் சென்னை மாகாணத் தேசியத் தலைவர்கள் யோக்கியதை சொல்லவே வேண்டியதில்லை. வகுப்புவாரியாக தலைவர்கள் இருந்தாலும் அதாவது பார்ப்பனரில்;
குடி அரசு - 1929 @) 132
அய்யங்காருக்கு பிரதிநிதி திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், ஏ.ரங்கசாமி அய்யங்கார், அய்யருக்கு திரு.எஸ்.சத்தியமூர்த்தி: பார்ப்பனரல்லாதாருக்கு திருவாளர்கள் திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஓ.கந்தசாமி செட்டியார், பி.வரதராஜுலு, முத்துரங்க முதலியார், மயிலை ரத்தினசபாபதி முதலியார்; மகமதியர்களில் ஜனாப்கள் அமித்கான் சாயபு, ஷாபி மகமது சாயபு; கிறிஸ்து
வர்களுக்கு திரு. குழந்தை, தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு திருஜயவேலு ஆகிய இவ்வளவு பேர்களுடனேயே சென்னை தேசியத் தலைமை அடங்கிவிட்ட போதிலும் இவர்கள் ஒவ்வொருவர்களின் யோக்கியதையும் நிலைமையும் நாம் சொல்லுவதைவிட அவர்கள் ஒருவருக் கொருவர் சொல்லிக் கொள்வதைக் கொண்டு அறிவதே கூடுமானவரை உண்மை யாகவும் சுலபத்தில் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்குமென்றே கருதி
விட்டு விடுகின்றோம். இவர்களது கொள்கைகளோ, திரு.சீனிவாசய்யங் காருக்குப் பூரண சுயேச்சை; அதற்குள் உத்தியோகம் வேண்டாமென்பதற்கு ஒரு கட்சியும், உத்தியோகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்ற ஒரு கட்சியும் வேண்டும். ஆனால் தானும் தன் மகனும் வக்கீல் வேலையில் மாதம் 15,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதித்துக் கொண்டுமிருக்க வேண்டும். திரு.ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கோ நேரு திட்டத்தை ஆதரிப்பது என்பது வாய் வார்த்தையில்; எப்படியாவது பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் தொலைய வேண்டுமென்பது; உள் எண்ணத்தில் “இந்து” பத்திரிகையும் “சுதேசமித்திரன்” பத்திரிகையும் தேசியத்தின் பேரால், பார்ப்பனப் பிரசாரமும் செய்து மாதம் 1-க்கு ஐயாயிரம், ஆறாயிரம் ரூபாய் சம்பாதிப்பதுடன், தங்கள் பிள்ளைகுட்டி, அண்ணன், தம்பி, மாமன், மருமகன், எல்லோருக்கும் பெரிய பெரிய உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பது ஆகியவைகள் காரியத்தில்.
திரு.சத்தியமூர்த்திக்கோ திரு.சீனிவாசய்யங்கார் சொற்படி ஆறுமாதம்,
திரு.ரங்கசாமி அய்யங்கார் சொற்படி ஆறு மாதம்; ஓய்வு நாட்களில்
பார்ப்பனீயத்திற்குக் கெடுதி இல்லாமல் பார்த்துக் கொண்டு மற்றபடி பணம் கொடுப்பவர்கள் சொற்படியெல்லாம் நடப்பதேயாகும். மற்றும் பணத்தின் அளவுக்குத் தகுந்தபடி யாரையும் காலித்தனமாக வைதுவிட்டு அடிக்கடி மன்னிப்புக் கேட்டு கொள்வதும் ஆகியவைகளைத்தவிர வேறொன்றும் கிடையாது.
திரு.கலியாணசுந்தர முதலியாருக்கு வாயில் காந்தியடிகள் திட்டம், மனதில் புராண புஸ்தக விற்பனை, காரியத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு இடையூறாக பார்ப்பனருக்கு பிரசார வேலை செய்வதுமேயாகும்..
திரு.வரதராஜுலுவுக்கோ வாயில் (குறிப்பிட்ட கொள்கையில்லாத! தேசியம் என்கின்ற கூச்சலும் அதற்கு சகல உத்தியோகத்தையும், கைப்பற்ற வேண்டும் என்கின்ற திட்டமும் மனதில் தான் ஒரு மந்திரியாக வேண்டும் என்கின்ற கனவும், காரியத்தில் பத்திரிகையும், மின்சார ரசம் விற்பனையில் பணம் தேடுவதுமேயாகும். மற்றவர்களுக்கோ சொந்தத்தில் ஒரு அபிப்பிராய
132 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
முமில்லாமல் திருஅய்யங்கார் வீசிய கல்லை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருப்பது. இவர்கள் இத்தனை பேர்களும் தனித்தனி யாகவோ சேர்ந்தோ சுயமரியாதை இயக்கத்தையும், சீர்திருத்தத்தையும் எதிர்த்து பொதுவில் பார்ப்பன பிரசாரம் செய்வதில் மாத்திரம் அபிப்பிராய பேதமே கிடையாது என்று சொல்லலாம். மற்றபடி நாட்டில் தேசியத்திற்கு யோக்கியதையோ; அகில இந்திய காங்கிரசுக்கு தலைவர் தேர்தல்களில் ஏற்பட்ட சம்பவங்களும், தலைவர் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் யோக்கிய தையும் அவர்கள் மறுப்பதும் ஆகியவைகளோடு திரு.காந்தி தலைமைப் பதவி வேண்டாம் என்பதற்குச் சொல்லும் காரணங்களும், ஆகியவைகளைக் கவனித்தால் அதன் யோக்கியதை விளங்காமல் போகாது. திரு.காந்தியவர்கள் காங்கிரசு யோக்கியமான நிலையில் இல்லை என்றும், தான் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்றும், காங்கிரசு விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டமாகவும் நடவடிக்கையாகவும் போய்விட்டதென்றும், தான் தலைமை வகிப்பதால் யாதொரு பலனும் ஏற்படாதென்றும் சொல்லி இருக்கிறார்.மற்றபடி
திரு.காந்தியால் சிபார்சு செய்யப்படும் தலைவர் திரு.ஜவகர்லாலோ மூன்றா. வதாக குறைந்த ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்றியும் மற்றொரு காங்கிரசிற்கு தலைமை வகித்தவரும், சென்னைக் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எல்லா இந்தியத் தலைவர்களில் ஒருவருமான திரு.சீனிவாச அய்யங்காரால் முட்டாள் என்றும், அதிகப் பிரசங்கி என்றும் பட்டம் பெற்றவர். அடுத்தாப்போல மாகாண காங்கிரஸ் மகாநாடுகளைப் பற்றியோ வென்றால், தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு மூன்று வருடங்களாய் கூட்டப்படுகின்றது.
இன்னும் முடிந்தபாடில்லை. இந்த வருடம் நடத்துவதிலும் அதற்கு இந்த மாகாணத்தில் தலைவர் கிடைக்கவில்லை. சட்டத்திற்கு விரோதமாக வெளி மாகாணத்திலிருந்து கொண்டுவரப்பட வேண்டியதாகி விட்டதென்றாலும் அதற்கும் ஆள் கிடைக்காமல் திரு.சிராஜகோபாலாச்சாரி சூட்சியின் பேரில், திரு.காந்தியின் பிரயத்தனத்தின் பேரில் திரு.பட்டேல் அனுப்பப்பட்டிருக் கின்றார் என்றாலும் அவரும் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று மறுத்துவிட்ட பிறகு தங்களது சொந்த கெளரவம் போய்விடுமே என்று தனிப்பட்ட முறையில்
சிலர் கெஞ்சி கூத்தாடி அழைத்து வந்திருக்கிறார். ஆனால், மகாநாட்டிற்கு மற்ற “தேசியத் தலைவர்கள்” போவதில்லை என்று இப்போதே சொல்லிவிட்டார்கள். அப்படியிருந்தும் தலைவர்கள் வந்தால் தக்க மரியாதை கிடைக்குமே என்று “தேசியத் தொண்டர்கள்” எச்சரிக்கையும் செய்து மிரட்டியிருக்கின்றார்கள். காங்கிரசுக்குத் தலைமை வகிக்க திரு.காந்தியால் பிரேரேபிக்கப்பட்ட திரு.ஜவஹர்லாலின் கொள்கையான பூரண கட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு தேசியமகாநாட்டில் யாரும்பிரேரேபிக்கக் கூடாது என்று தலைவர் திருபடேல் வாக்குத்தத்தம் வாங்கிக் கொண்டு பிறகுதான் வந்திருக்கின்றார். இதனால் திரு.சீனிவாசய்யங்கார் மகாநாட்டுக்கு வருவதில்லை என்று சொல்லிவிட்டார். திருவரதராஜுலு ஆதலால் நானும் வருவதில்லை என்று சொல்லிவிட்டார்.இந்த நிலைமையில்தான் இன்றைய தமிழ் மாகாணம் இருக்கின்றது. இவ்வளவும்
குடி அரசு - 1929 @) 134
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தும் திருகாந்தியோ 1929 வருஷம் டிசம்பர்.
மாதம் 31 ந் தேதி இரவு பன்னிரெண்டு மணி ஒரு நிமிஷத்திற்கு மறுபடியும் ஒத்துழையாமை ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லுகின்றார் Il எனவே, இந்த விவரங்களுக்கு மேல் தேசியத்தினுடைய, தேசிய இயக்கத்தினுடைய, தேசியத் தலைவர்களுடைய நிலைமை செல்வாக்கு ஆகியவைகளினுடைய யோக்கியதையை அறியவேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால் அவைகளை மறுபடியும் ஒரு முறை எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.09.1929.
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
Rl “m . .
ஆசிரியாரிண் கை௱௫மை
சென்னை மணலி விடுதியில் நடந்த அக்கிரமம் நம் மனத்தைப் புண்படுத்துகின்றது. இவ்விடுதியிலுள்ள ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் தன்னை அறியாமல் ஒரு பார்ப்பன மாணவன் சாப்பாட்டுப் பேழையை டிபன் பாக்ஸ்த் தொட்டுவிட்டான். உடனே பார்ப்பனரல்லாதார் தருமத்திலிருந்து தெண்டச் சோறு சாப்பிடும் அப்பார்ப்பன மாணவனுக்கு கோபம்வந்துவிட்டது. என் சாப்பாட்டைத் தொடவா நேர்ந்தது என்று பலவாறு அரற்றி சாப்பாட்டை கீழே கொட்டிவிட்டு, பிராமண சூப்பரின்டெண்டெண்டிடம் போய் முறை யிட்டான். அவர் பார்ப்பனரல்லாத மாணவனைப் பார்ப்பனச் சாப்பாட்டைத் தொட்ட குற்றத்திற்காக வாயால் வசை புராணம் பாடி அனுப்பிவிட்டார். ஆனால், இது அப்பார்ப்பன மாணவனுக்கு ஒப்பவில்லை.தன் சாப்பாட்டைத் தொட்டபார்ப்பனரல்லாத மாணவனுக்கு வெறும் வசை புராணம்மட்டுமா என்று ஆத்திரம் அவனுக்கு அடங்காது கிளம்பிவிட்டது.ஆகையால் அப் பார்ப்பன சூப்பரின்டெண்டெண்டுக்கு மேல் அதிகாரியாய் உள்ள “சித்தாந்தம்” ஆசிரியரும் ஒரு வக்கீலுமான திரு “பாலசுப்ரமண்யம்” அவர்களிடம் சென்று முறையிட்டான், முறையிட்டதுதான் தாமதம். நம் பார்ப்பன முதலியாராய திரு.பாலசுப்பிரமணியத்திற்கு பெரும் சீற்றம் உண்டாய்விட்டது. அவருடைய பெருத்த கொழுத்த உடம்பு துடித்தது. “கொண்டுவா பார்ப்பன மாணவனின்
சாப்பாட்டுப் பேழையைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனை” என்றார். பழைய காலத்து அயோத்தி ராமன் காட்டில் தவம் செய்த சூத்திரனை எவ்வாறு கொன்றானோ, அவ்வாறே சித்தாந்தப் பார்ப்பன முதலியாரும் பார்ப்பன மாணவன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனைக் கடிந்து வெருட்டி ஆறு அடி அடித்தாராம்.பாவம் ஏழைப் பார்ப்பனரல்லாத மாணவன் என்ன செய்வான்? அடி பொறுத்துக் கொண்டான்; கோர்ட்டிற்குச் சென்று
சித்தாந்த ஆசிரியர் மேல் கிரிமினல் வழக்குத் தொடுக்கலா மென்றாலோ, வயிற்று சாப்பாட்டில் இடி விழுந்துவிடும், கையிலோ பணம் இல்லை, ஆகையால் சித்தாந்த ஆசிரியர் தப்பித்துக் கொண்டார். இல்லாமல் போனால் ஒருகை பார்த்து விடலாம்.
சித்தாந்த ஆசிரியர் பி.ஏ.பி.எல். படித்திருந்தும், தமிழில் பெரிய புலவர் என்று சொல்லிக் கொண்டு இருந்தும் என்ன பயன்? சிறிதாவது
குடி அரசு - 1929 @) 136
சுயமரியாதையாவது, உணர்ச்சியாவது அன்றி பகுத்தறிவாவது இருந்தால் இவ்வண்ணம் செய்வாரா? ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் பார்ப்பான் சாப்பாட்டுப் பேழையைத் தொட்டால் என்ன தீட்டு வந்து விட்டது? இதை ஆய்ந்து நோக்கினாரா? சித்தாந்த ஆசிரியர் சரியான பார்ப்பனரல்லாதாராய் இருந்தால் அப்பார்ப்பனரல்லாத மாணவனுக்கு நேர்ந்த அவமானம் தனக்கும்
தன் வகுப்பாருக்கும் நேர்ந்ததென்று கருத வேண்டாமா? இத்தகைய சுயமரியாதையற்ற அறிவுகெட்ட பார்ப்பனரல்லா பாலசுப்பிரமணியங்கள். இருந்தால் ஏன் பார்ப்பனர்கள் வருணாச்சிரமக் கொழுப்பு பிடித்தாட மாட்டார்கள்? என்று தான் இவருக்கு சுயமரியாதை உணர்ச்சி உண்டாகுமோ? அன்றுதான் இவரை நாம் அசல் பார்ப்பனரல்லாதார் என்று கருதுவோம்.
இனி மணலி விடுதியில் மட்டுமல்ல. எங்கும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் இவ்வாறுதான் துன்புறுகின்றார்கள்.இவர்கட்கு எப்பொழுதுதான் விடுதலை பிறக்குமோ? நம் சுயமரியாதை அரசாங்கம் வந்தால் விடுதலை! விடுதலை! என்று திராவிடன் 28. 8. 29 வெளியீட்டிற் கூறப்பட்டுள்ளது.
பார்ப்பனனின் சோற்றைத் தீண்டிய பார்ப்பனரல்லாத மாணவர். இந்நாகரிக காலத்தில் சைவசித்தாந்தப் பேராசிரியர் சட்டதுரந்தரர் திருவிலாப் பாலசுப்பிரமணியத்தின் கசையடிக்கிலக்காயினார். இவரது சித்தாந்தமும், சட்டப்பயிற்சியும், ஒரு மாணவரை இச்செயல் பொருட்டுக் கசைகொண்டடிக்
கும் முடிவைப் பற்றியதெனில், அந்தோ, இவரது சைவசித்தாந்தத்திற்கு நாம் மிகவும் இறங்குகின்றோம். மாட்டு மலத்தை உண்டு, மாட்டுச் சிறுநீர் பருகி, மாட்டு மலத்தைச் சாம்பராக்கி அங்கம் முழுதும் பூசி, கொட்டையணிந்து, லிங்கத்திற்குப்பூசை புரியும் இச்சித்தாந்த ஆசிரியரிடம்,வயிற்றுக்குச் சோறின்றி இவ்விடுதியில் அபயம் புகுந்த ஒரு மாணவர் மீது, கருணையினையும், நீதியினையும் நாம் எதிர்பார்ப்பது மிகவும் மடமையே. பூணூல் தரித்த பார்ப்பனனிலும், பூணூல் தரியா இப்பார்ப்பனனை நாம் கல்லென்போமா, மரமென்போமா,இரும்பென்போமா, அல்லது காடு வாழ் விலங்கென்போமா? என்னென்போம்? மதவெறிகொண்ட சித்தாந்திகளிடம் நாம் கருணையை எதிர்பார்க்கவில்லை. ஆயின் சட்டம் பயின்ற ஓர் மனிதரிடம், ஆண்பிள்ளை யினிடம்,நற்குடும்பத்தில் உதித்தாரிடம் நடுநிலைமையை எதிர்பார்க்கின்றோம். நடுநிலைமையற்று, ஆண் தன்மையற்று தன் பயிற்சியெல்லாம் இரண்டு எழுத்துக்கள் என்னும் முடிவிற்கே ஒப்படைத்துவிட்டதன் பயனாய், பரவிய எண்ணம் அற்று, பார்ப்பனியத்தையும், அதனைப் பாதுகாக்கக் கசை அடியையும் கைக்கொண்ட, “சித்தாந்தம்” ஆசிரியர் இனியேனும் தம் மூளையில் சிறிது அறிவும்,மனதில் கருணையும் பிறக்குமாறுஇவர் தன் வழிபடு கடவுளாகியலிங்கத்தைவணங்கித்துதிப்பாராக. பார்ப்பனரல்லாத ஒரு மாணவர். கசையடியேற்ற ஒரு கொடுமையை ஏனைப் பார்ப்பனரல்லாத மாணவர்கள். கண்டும் வாளாவிருந்திருக்கின்றனர். பொறுமை கடலினும் பெரிதென்பர். ஆயினும் சுயமரியாதை இவ்வண்டத்தினும் பெரிது; சித்தாந்தத்திலும்
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பன்மடங்கு பெரிது;இவ்வாசிரியர் அறிவிலும் ஒழுக்கத்திலும் ஓராயிரம் மடங்கு பெரிது என்பதை நாம் நம் வகுப்பு மாணவர்கட்கு நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம். இக்கொடுமையை எண்ணுந்தொறும் எண்ணுந்தொறும், நாம் அமைதியை இழப்போம் என்றஞ்சுவதனால், இதைப் பற்றி விரித்துரை: வரையாது விடுக்கின்றோம். பார்ப்பனரல்லாதார்கள் இத்தகைய செயல்களைக் கண்டும், கேட்டும் எத்துணை நாட்கள்தாம் சும்மாவிருக்கப் போகின்றனர் என்று கேட்கின்றோம்.
(ப-ர்,)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 01.09.1929
குடி அரசு - 1929 @) 138
திருவாங்கூரில் கோஷா விகைகம்
வைதீகச் செருக்கும். பார்ப்பனீயக் கொடுமையும் இராமராச்சிய பரிபாலனமும் தலைவிரித்தாடும் திருவாங்கூரில்,முதற்றரப்பார்ப்பனர்களாகிய நம்பூதிரிகளின் பெண்டிர் படுதாவைக் கடந்து வெளியேறி இருக்கின்றனர். படுதா என்பது ஒரு சமூகத்தின் மடமைக்கும் அம் மடமைக்கு அடிப்படையாய் உள்ள மதக் கோட்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள். இவைகளின் அறிகுறியாய் நிலவுகின்றது. ஆடுமாடுகளும் வெளிச் செல்லும் உரிமை பெற்றிருக்கையில் மானுடப் பெண்கள் தம் கொழுநர்தம் வீடுகளில் சிறகிலாப் பறவைகளைப்போல் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதனைக்
கடந்து வெளிச் செல்வதென்றால், மடமையே உருவமாக விளங்கும் ஒரு சமூகத்தில் எளியதோர் செயலன்று. நம் இயக்கத்தின் நற்பயனாக நம் தலைவர். அடிக்கடி அந்நாட்டுக்குச் சென்று சமத்துவக் கொடியை பறக்கச் செய்துவரும். அரும்பெரும் அறிவுரை மாரிகளின் பயனாக நம்பூதிரிப் பெண்களின் சமூகத்தில் சுயேச்சையும், சமத்துவமும் காட்டுத் தீப்போல் பற்றிக்கொண்டது. நம்மியக்கக் கதிரொளியால் அறியாமைப்பனி அக்கணமே அகன்று வருகின்றது.ஏனைப் பெண்டிரும் இதனைத் தமக்கோர் வழி காட்டி என மதித்து முன்வருமாறும், ஆடவர்கள் தடைபுரியினும், அதற்கிடம் கொடாமல் தமது சுயமரியாதையை நிலைநாட்டுமாறும் நாம் மகிழ்வுடன் எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.09.1929
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கேசிய (யார்ப்பணர்) மகாநா௫
கிரு. பட்டேலின் யோக்கியதை
கடந்த மூன்று வருட காலமாக நமதுபார்ப்பனர்கள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட்டு வந்த தமிழ் மாகாணத் தேசிய மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி வேதாரண்யம் என்னும் ஓர் கிராமத்தில் கூடிக் கலைந்ததாக பேர் செய்து விளம்பரமும் செய்தாய்விட்டது.
ஆனாலும் அம்மகாநாடு நடைபெற்றதன் யோக்கியதைதான் என்ன என்று பார்ப்போமானால், சுருங்கக் கூறுமிடத்து பார்ப்பனரல்லாதார். பணத்தையே இரண்டு பார்ப்பனத் தலைவர்கள் செலவு செய்து, பார்ப்பன ரல்லாதாருக்கு விரோதமாய் இருவரும் படை திரட்டிக் கொண்டு போய் ஒருவருக்கொருவர் தங்கள் சாமர்த்தியத்தை வெளியாக்கிக் கொண்டதுதான் வேதாரண்ய மகாநாட்டின் தத்துவம் என்று சொல்ல வேண்டும். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள். காங்கிரசின் பேரால் பொதுப் பணத்தை அள்ளிக் கொடுத்துச் சேர்த்து வைத்திருக்கும் படைகளான திருவாளர்கள் பழனியாண்டி பண்டாரம், சாமிநாத செட்டியார், அண்ணாமலை பிள்ளை, சத்தியமூர்த்தி, கிருஷ்ண சாமிப் பாவலர். முதலிய தேசீயத் தொண்டர்களாகிய திரு.அய்யங்கார் படைகள் ஒருபுறமும்; கதரின் பேரால் பார்ப்பனரல்லாதார் கொடுத்தப் பொதுப்பணத் தையே பார்ப்பனர்களுக்கே அள்ளிக் கொடுத்து சேர்த்து வைத்திருக்கும் படைகளான திருவாளர்கள் சந்தானம்,என்.எஸ்.வரதாச்சாரி முதலிய “கதர் தொண்டர்'களான. திரு.சி.ராஜகோபாலாச்சாரியாரின் படைகள் ஒருபுறமும் இருந்து போர் செய்து
முடிவில் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் வெற்றி மாலை சூடி இப்போதிக்கு விஜயமும் செய்து வருகிறார். திரு. அய்யங்காரை விட திரு. ஆச்சாரியார். குழ்ச்சியில் தேர்ந்தவர் என்பதை அய்யங்கார் தெரிந்திருந்தும் தனது பணத்திமிறினாலும் பேராசையினாலும் ஆணவம் கொண்டு வேதாரண்யத்தில் ஆச்சாரியாரிடம் நல்ல அடிபட்டுத் திரும்பிவிட்டார். இது ஒரு புறமிருக்க, தமிழ்நாடு என்னும் 14 ஜில்லாக்களின் பேரால் மூன்று வருடம் பொறுத்துக் கூட்டப்பட்ட இந்த மாகாண மகாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதிநிதிகள். எத்துணை பேர்கள் என்று பார்ப்போமானால் சுமார் நூறு பேர்களேதான் இருக்கக்கூடும் என்று தெரிகின்றது. அதாவது பூரண சுயேச்சை தீர்மானம்
குடி அரசு - 1929 @) 140
சம்பந்தமாய் இரண்டு கட்சியிலும் தீவிரப் பிரசாரம் செய்து சேகரித்த ஓட்டுக்களின் எண்ணிக்கை 240 என்பதாக மித்திரன் பத்திரிகையில் தெரிய
வருகின்றது. இதில் வரவேற்புக் கழக அங்கத்தினர்களும் ஓட்டு கொடுத்திருப்
பதாயும், அவர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டதாயும் கண்டிருக்கின்றது. இதில் வரவேற்புக் கழகத்தினர் நூறு கனவான்களுக்கு மேலாகவே இருந்திருக்
கிறார்கள். பிறகு தஞ்சை ஜில்லா பிரதிநிதிகள் என்று சுமார் 50,60 கனவான்க ளுக்கு மேலாகவே அந்த ஜில்லாக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். இவைபோக. வெளி ஜில்லாக்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் சுமார் 70, 80 பேர்களே இருந்திருக்கக் கூடும் என்பதாக நன்கறியலாகும். அந்த 70, 80 பேர்களும் அய்யங்கார் தன் பணமும் காங்கிரசு பணமும் போட்டு டிக்கட் வாங்கிக் கொடுத்து, சாப்பாடும் போட்டு அழைத்துக் கொண்டு போன கூட்டம் முக்கால்
பகுதியும் ஆச்சாரியாரால் கதர் பணத்தைச் செலவு செய்து டிக்கட் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு போகப்பட்ட திரு. ஆச்சாரியர் கூட்டம் கால்
பகுதியும் சேர்ந்ததாகத்தானிருக்க முடியும்.
ஈதன்றித் தனிப்பட்ட முறையில் மகாநாட்டிற்கு (வேடிக்கை பார்க்க வாவது) தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து போயிருந்தவர்கள் சுமார். 56 பேர்களாவது இருக்க முடியுமா? என்று தீர்மானிப்பதுகூட கஷ்டமா யிருக்கின்றது. எனவே, இந்தக் கூட்டம்தான் இப்போதைய தமிழ்நாடு தேசிய வாதிகள் கூட்டமென்றும் அதிலும் பூரண சுயேச்சைக் கூட்டமென்றும், ஒத்துழையாதார் கூட்டமென்றும் சொல்லிக் கொள்ளப்படுவதாகும்.நிற்க;
காங்கிரசுக்காக உழைக்கவே உடலை விடுவேன் என்று சொல்லும் காங்கிரஸ் பக்தர் திரு.வி.கலியாணசுந்தர முதலியாருடையவும் தேசியத்திற் காகவே உடல், பொருள், ஆவி மூன்றையும் விடுவேன் என்று சொல்லும் “தேசிய வீரரும், தேசியக் கட்சித் தலைவருமான திருவரதராஜுலு உடையவும் அவர்களைப்பின்பற்றுபவர்கள் (இருந்தால் அவர்களுடையவும் வாசனையே “மகாநாட்டில்” இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில், காஞ்சிபுரம் மகாநாட்.
டில் மேற்கண்ட இருகனவான்களும் அய்யங்காருக்கும், ஆச்சாரியாருக்கும் நல்ல பிள்ளைகளாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை கொண்டுவர வொட்டாமல் செய்த “புண்ணிய காரியத்
திற்கு”ப் பிறகு இருகனவான்களையும் எந்த மாகாண மகாநாட்டாரும் மதித்த தாகவாவது இவர்களாக அங்கு போனதாகவாவது தெரியவில்லையாதலால் இவ்விரு கனவான்களைப் பொறுத்தவரை, மாகாண மகாநாட்டைப் பொறுத்த அளவுக்கு அவரவர்கள் “கருமத்தின் பலனை” அவரவர்கள் அடைந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். மகாநாட்டுத் தலைமைக்கு தமிழ் மாகா ணத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற போட்டியில் திருவாளர்கள் சத்திய மூர்த்தியும், வரதராஜுலுவும் ஆகிய இருவர்களும் தாங்கள் தாங்கள். வர வேண்டும் என்று இரு கட்சிகளுக்கும் பல சூட்சி பிரசாரம் செய்தும் கடைசியாக ஒருவரும் வர முடியாமல் போனதோடு வடநாட்டிலிருந்து ஒரு
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பொம்மையைக் கொண்டு வந்து ஆட்டிவைத்து, அதன் மூலம் வழக்கம் போல் பார்ப்பனப் பிரசாரம் செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது. இது எப்பொழுதும் இந்தமாகாணப் பார்ப்பனர்கள் செய்து கொண்டு வரும் வழிவழிச் சூட்சியேயாகும். அதாவது, தமிழ்நாட்டில் பார்ப்பன சூட்சிகள் வெளியாகி அவர்களுடைய யோக்கியதை குறைந்துவிட்டால் வெளிமாகாணத்தில் இருந்து ஒரு பார்ப்பனரல்லாதாரைக் கூட்டி வந்து அவர் வாய் மூலம் பார்ப்பனப் பிரசாரம் செய்வதாகும். வெளியில் இருந்துவரும் பார்ப்பனரல்லாதாரும் அநேகமாய் பார்ப்பனர் கைக்குழந்தைகளாகவே இருந்து அவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கிராம போன் மிஷின் மாதிரி ஒப்புவித்துவிட்டு அவர்கள் ஆட்டின படி பயாஸ்கோப் மிஷின் போல் ஆடிவிட்டு போய் விடுவது வழக்கம்.அதுபோலவே இப்போதும் திருபட்டேலைக் கூட்டி வந்து ஆட்டுகின்றார்கள்.
திரு. பட்டேல் பார்ப்பன தாசராய் இருந்து பாடினார், ஆடினார் என்ப தற்கு நாம் அதிகமாகக் கஷ்டப்பட்டு ஆதாரம் தேட வேண்டியதில்லை.அவர் வேதாரண்யத்தில் பார்ப்பனரல்லாதாரைப் பற்றிப் பேசி இருக்கும் பேச்சுக் களைப் பார்த்தாலே தெரியவரும். அதாவது, இங்கு “பிராமண வகுப்புக்கே விரோதமாய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பிரசாரமானது பிராமணர்களைத் தாக்குவதாக மாத்திரமல்லாமல் நம்முடைய ஆரிய நாகரிகத்
தில் சிறந்த வற்றையெல்லாம் தாக்குவதாக இருக்கின்றது. பிராமணரல்லாதாரில் ஒரு சிலர் சுயநலத்தினால் அறியாத ஜனங்களைக் குத்திவிட்டு குரோதத்தை. உண்டாக்கி உத்தியோக வேட்டையாக இந்த இயக்கத்தை செய்துவிட்டார்கள்.
கதர் இயக்கத்தின்மேலும் பிராமண இயக்கமென்று தோஷம் கூறப்படுகிறது. மாசற்றவரும்பார்ப்பனீயப் பிற்போக்கில் எதுவும் தம்மிடம் காணப்படாதவரும், பிராமணரல்லாதாருக்கு ஊழியம் செய்யவென்றே தமது ஆயுள்காலம் முழுவ
தையும் அர்ப்பணம் செய்துவிட்டவருமான ஒரு பிராமணரை (திருராஜகோபா: லாச்சாரியாரை! “சைத்தான் சொரூபம்” என்று ஒரு சாரார் தூஷிக்கின்றார்கள். இது தேசிய தற்கொலையே யாகும். வகுப்பு துவேஷத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதைக் காட்டிலும் சிறந்த தேசிய வேலை வேறு கிடையாது” என்பதாகும்,
மற்றும் அவர் தனது முடிவுரையில்,
“இந்த மாகாணத்தில் சுயராஜ்யக் கட்சியினருக்கு அவர்கள். கோரும் உதவியைசெய்துவரும்படிமாறுதல் வேண்டாதவர்களை நான்
கேட்டுக் கொள்ளுகிறேன்”
என்றும், மற்றும் பூரண சுயேச்சைத் தீர்மானத்தை தான் எதிர்த்துப் பேசு கையில், “நான் வைதீக ஓத்துழையாதாராயினும் இந்த மாகாணத்தின் நிலையைக் கவனிக்கும்போது அதிகாரத்தைக் கொடுக்கக் கூடிய எல்லாப் பதவிகளையும் சுயராஜ்ஜிய கட்சியார் கைப்பற்றிக் கொள்வது சாத்தியமாகும்படி இங்கு ஒரு தனி வழியைப் பின்பற்ற வேண்டும்
குடி அரசு - 1929 @) 142
என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்கு மாறாக நீங்கள் சொல்வது தற்கொலைக்கு ஒப்பாகும்”
என்றும் சொல்லி இருக்கிறார். பின்பு மிராசுதார் மகாநாட்டில் பேசும்போது,
“உங்களுடைய அரசியல் பிரசினைகள் எனக்குப் புரியவில்லை.
இங்கு பிராமணர் பிராமணரல்லாதார் தகராறுக்கு காரணம் என்ன வென்று இன்னும் நான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்”
என்று சொல்லி இருக்கிறார். இவைகளிலிருந்து திரு.பட்டேல் கிராமபோன் மிஷினாயிருந்திருக்கின்றாரா இல்லையா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம்.
முதலாவதாக, இங்கு பிராமணர்களுக்கு விரோதமாக பிரசாரம் செய்யப் பட்டு வருவதாகச் சொல்லி வருவதற்கு திரு.பட்டேல் தனது பிரசங்கத்தில் என்ன ஆதாரம் கூறியிருக்கிறார்? அல்லது என்ன ஆதாரம் கூறக்கூடும்?' என்பதை யோசித்தால் இது பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாதார்மீது சுமத்தும் யோசனையற்றதும் அக்கிரமமுமானதுமான வீண் பழிஅல்லவா? என்று கேட்கின்றோம். அன்றியும் பார்ப்பனர்கள் மீதுள்ள. துவேஷத்தால் ஆரிய நாகரிகத்தில் எது எது சிறந்ததோ அதை எல்லாம் பார்ப்பனரல்லாதார் தாக்குவதாக சொல்லி இருக்கிறார். இதில் எந்த சிறந்த ஆரிய தர்மமானது தாக்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தையாவது திரு. பட்டேல் எடுத்துக் காட்டியிருக்கிறாரா? அல்லது காட்டக்கூடுமா? திருபட்டேல் எதைச் சிறந்த ஆரிய தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் நமக்கு சிறிதும் விளங்கவில்லை. திரு.ராஜகோபாலாச்சாரியின் பூநூலையும்,
உச்சிக் குடுமியையும், கொண்டி நாமத்தையும், சிறந்த ஆரிய தர்மமென்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா? அல்லது புராணங்களையும், இதிகாசங்களை
யும் மநுதர்ம சாஸ்திரம், பராசர ஸ்மிருதிகளையும் அவற்றினால் ஏற்பட்ட கோயில்களையும் உற்சவங்களையும், பார்ப்பன பூசாரிகளையும், சிறந்த ஆரிய தர்மமென்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? அல்லது விக்கிரகங்களையும் அதன் பூஜை உற்சவங்களுக்காக பல கோடி ரூபாய்கள் செலவு செய்யப் படுபவைகளையும் சிறந்த ஆரிய தர்மமென்று கருதிக் கொண்டிருக்கிறாரா?' அல்லது வர்ணாச்சிரம தர்மத்தையும், சமஸ்கிருத பாஷை “உயர்வையும்” சிறந்த ஆரிய தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? என்பது நமக்கு விளங்கவில்லை. திராவிட தேசத்துக்கு வந்த இவருக்கு ஆரிய தர்மத்தைப் பற்றிய பிரசாரத்தில் கவலை எதற்காக ஏற்படவேண்டும்? திராவிட தர்மம் இன்னது என்று இவர் அறிந்தாரா? திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன? ஆரியர்கள் திராவிடர்களை எவ்விதம் மதித்திருக் கிறார்கள், எவ்விதம் நடத்துகிறார்கள் என்பது இவருக்குத் தெரியுமா? ஆரிய பிரசாரம் என்பது அரசியல் தர்மத்துடன் சேர்ந்ததா? பார்ப்பன தர்மத்துடன்
சேர்ந்ததா? என்பதையாவது இவர் உணர்ந்தாரா? இந்த நாட்டில் ஏற்பட்டிருக்க வேண்டிய சீர்த்திருத்தங்கட்கு எல்லாம் இதுவரையில் முட்டுக் கட்டையாக.
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இருந்து வந்திருப்பது ஆரிய பிரசாரமா? அல்லது “பார்ப்பனத் துவேஷ” பிரசாரமா? முதலாவது இந்த நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாதார் யோக்கியதையும், அந்தஸ்தும், இன்னது என்பது இவருக்குத் தெரியுமா? பார்ப்பனர்களில் திருவாளர்கள் சி.ராஜகோபாலாச்சாரி, சீனிவாசய்யங்கார், சந்தானம், சத்திய மூர்த்தி, வரதாச்சாரி, ஏ.ரெங்கசாமி ஐயங்கார், எம்.கேஆச்சாரியார் முதலியோர். களுடைய யோக்கியதை திரு.பட்டேலுக்குத் தெரிந்தது சரியாயிருக்குமா? அல்லது திரு.ராமனாதன், திரு.ராமசாமி முதலியோர்களுக்குத் தெரிந்தது சரியாயிருக்குமா? தேசாபிமானம் என்பதும், தேசியமென்பதும் தென்னாட்டுப் பார்ப்பனருக்கும், வடநாட்டுப் பார்ப்பனரல்லாதார்களுக்கு மட்டும் தான் சொந்தமா? அல்லது திரு.பட்டேலுக்குத் தெரிந்த தென்னாட்டுப் பார்ப்பனரல் லாதார் யாருக்கும் சொந்தமாயிருக்க முடியாதா? தென்னாட்டில் வந்து திரு.பட்டேல் பார்ப்பனரல்லாதாரைப்பற்றி பேசுவதற்கு முன்பு, எந்த பார்ப்பனரல்லாதாரிடத்திலாவது பேசி எந்த விஷயத்தையாவது தெரிந்து கொண்டாரா? ஒன்றுமில்லாமல் அங்கிருந்து தடதட என்று வந்தவுடன் மேளத்தையும், தாளத்தையும், பாண்டையும், மாலையையும் பார்த்ததும் திடீரென்று பார்ப்பனர்கள் மகா உத்தமர்கள், பார்ப்பனரல்லாதார்கள் சுயநலக். காரர்கள், துவேஷக்காரர்கள் என்று சொல்லி விடுவதென்றால் இது ஒரு யோக்கியப் பொறுப்புடைய தலைவருக்கு ஏற்றதாகுமா? இவர் சத்தியாக் கிரகமோ,வரிகொடா இயக்கமோ ஆரம்பித்தால் இவரை நம்பி எந்த பார்ப்பன ரல்லாதாராவது பின்பற்ற முடியுமா? தவிர, பார்ப்பனரல்லாதார் இயக்கம் சுயநலக்காரர்கள் செய்யும் உத்தியோக வேட்டை இயக்கமென்று சொல்லி
இருக்கிறார். இது யோக்கியமான பேச்சாகுமா? இந்த மாகாணத்தில் பெரும் பான்மையான உத்தியோகத்தில் இருப்பவர்கள் யார் என்றும் பரம்பரையாக. உத்தியோக வேட்டையாடிக் கொண்டிருப்பது யார் என்றும் கடுகளவாவது புத்தியையும் நேரத்தையும் செலவு செய்து பார்த்திருப்பாரானால், இம்மாதிரி சொல்லி இருக்க முடியுமா? இதிலிருந்தாவது வடதேசத்திலுள்ள அரசியல் தலைவர்களென்பவர்கள் எவ்வளவு தூரம் புத்தியிலும், பொறுப்பிலும் கட்டையானவர்கள் என்பது விளங்கவில்லையா? அன்றியும், மற்றோர். இடத்தில் இந்த நாட்டின் அரசியல் பிரச்சினை தனக்குப் புரியவில்லை என்றும், இங்கு பிராமணர் பிராமணரல்லாதாருக்கு இடையிலுள்ள தகராறுக்கு மூல காரணம் இன்னதென்று தனக்கு இன்னும் தெரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் இவர் எப்படி பார்ப்பனரல்லாதாரை: உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்வதுடன் பார்ப்பனரல்லாதார். இயக்கத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்ய வேண்டியது அவசியம் என்று சொல்லக்கூடும்? இதிலிருந்தாவது இவர் வேண்டுமென்றே இந்த நாட்டுக்கு பார்ப்பனர் பேச்சைக் கேட்டுக்கொண்டு பார்ப்பன பிரசாரம் செய்ய வந்தவரே யல்லாமல் வேறல்லவென்பது விளங்கவில்லையா? தவிர,இந்த மாகாணத்தில் சுயராஜ்யக் கட்சியாருக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்ய வேண்டுமென்றும்,
குடி அரசு - 1929 @) 144
இந்த மாகாணத்து நிலைமையை பொறுத்தவரையில், அதிகாரம், பதவிகள் ஆகியவைகளையெல்லாம் சுயராஜ்யக் கட்சியாரே கைப்பற்றும்படி ஒரு தனி வழி ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அப்படிச் செய்யாவிட்டால் அது தேசத் துரோகம் என்றும் சொல்லி இருப்பது எவ்வளவு தூரம் பார்ப்பனர். மாய்கையில் சிக்கி, அவர்களால் ஊட்டப்பட்டதை அப்படியேகக்கி இருக்கிறார். என்பது வாசகர்களுக்கு விளங்கவில்லையா. இதற்குமுன் திருவாளர்கள். எஸ்.சீனிவாச ஐயங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள்
சேர்ந்து “ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காக மந்திரி பதவியை கைப்பற்றவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டி இருக்கிறது என்று சொல்லி, ஒரு (பினாமி!
மந்திரி சபையை உற்பத்தி செய்து, அதை இவர்கள் சுயநலத்திற்கு ஆட்டி வைத்துக்கொண்டிருந்ததைச் சரி என்று ஒப்புக்கொள்வதோடு, இனியும் அப்படியே செய்யவேண்டும் என்பதற்கு இவர் ஒரு தூண்டுகோலாஅல்லவா? வாயில் வைதீக ஒத்துழையாதார் என்று பேர் சொல்லிக் கொண்டு காரியத்தில்
சர்க்கார் அதிகாரங்களையும்,பதவிகளையும் கைப்பற்ற வேண்டியது அவசியம் என்று சொல்லுகிற ஒத்துழையாதார்கள் திருகாந்தியுட்பட எவ்வளவு யோக்கியர். களாக இருக்கக்கூடுமென்பதும் ஒத்துழையாமை தோற்றுப் போனதற்குக் காரணமென்ன வென்பதும் தாராளமாக இதிலிருந்து விளங்கவில்லையா என்று கேட்கிறோம். இந்த மாகாணத்தில் சுயராஜ்யக்கட்சி என்பதும் ஜஸ்டிஸ் கட்சி என்பதும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் கட்சியே தவிர வேறல்ல என்று ஆயிரம் தடவை திருகாந்தியுட்பட வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களுக் கெல்லாம் பலமுறை விளக்கப்பட்டிருந்தும், மறுபடியும் சுயராஜ்யக் கட்சிக்காரர்களுக்கு ஓத்துழையாதார்கள் உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு உதவி செய்ய வேண்டியது தேசிய தர்மமென்று சொல்லவந்தால், ஒத்துழையாமைக் கட்சியை பார்ப்பனக் கூலிக்கட்சி என்று சொல்லாமல் வேறு என்னவென்றுதான் சொல்லுவது? இவைகளிலிருந்து அரசியலின்பேரால், எந்தக்கட்சி ஏற்பட்டாலும், எந்தக் கனவான் புறப்பட்டாலும்,அவை அயோக்கிய கட்சி என்றும், அயோக்கியர்களின் கூட்டமென்றும், இதற்கு முன் சொல்லிக் கொண்டுவந்தவர்களெல்லாம் பெரிய தீர்க்கதரிசிகள் என்றும், அநுபவசாலிகள். என்றும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. முடிவாக, திரு.பட்டேல் அவர்களின் தென்னாட்டு விஜயம் ஆரிய தர்ம பிரசாரமும், சுயராஜ்யகட்சி பிரசாரமும் பார்ப்பன ஆதிக்க பிரசாரமும் ஆகியவைகள் தான் என்பதோடு
முடிவுகட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறோம். சென்ற ஆண்டில் திருகாந்தி தென்னாட்டுக்கு வந்த பிறகு “வர்ணாச் சிரமம்” இருக்க வேண்டும் என்றும், பிறவியிலேயே “பிராமணர்கள்” “சூத்திரர்கள்” உண்டென்றும், மநுதர்ம சாஸ்திரப்படி அவரவர்கள் அவரவர்களுக்கேற்பட்ட வேலையை செய்ய வேண்டுமென்றும், பிரசாரம் செய்துவிட்டுப் போனார். அதற்குப் பிறகு திரு. மாளவியா வந்து, ஜாதி இருக்கவேண்டுமென்றும், கோயிலில் அந்தந்த ஜாதிக்குத் தகுந்த இடம் பிரிக்க வேண்டுமென்றும், சொல்லி “ராமாயண: பிரசங்கம்” செய்து விட்டுப்போனார். இப்பொழுது திருபட்டேலோ வந்தவர்.
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
களையெல்லாம் விட ஒரு அடி முன்னால் வந்து பார்ப்பனரல்லாதார் சுயநலக்காரர்கள் என்றும், அவர்களது கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி என்றும் சொன்னதோடு, பார்ப்பனர் கட்சியாகிய சுயராஜ்யக்கட்சிக்கு உத்தியோ கங்களும் அதிகாரங்களும் பதவிகளும் கிடைக்கும்படி செய்ய வேண்டியதே தேசிய வேலை என்று சொல்லி ஆரியதர்ம பிரசாரம் செய்துவிட்டுப் போகிறார். எனவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும், தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதார். “சுயராஜ்யம்” “தேசீயம்”, “காங்கிரஸ், “ஒத்துழையாமை” ஆகிய பார்ப்பனீய விஷயங்களில் கலந்து கொள்ளக் கூடாதென்றும், அப்படிக் கலந்து கொள்வது பார்ப்பனரல்லாத சமூக முன்னேற்றத்தின் தற்கொலையும், பார்ப்பனரல்லாத
சமூகத்துரோகமும் ஆகுமென்றும்தான் நாம் கூற வேண்டி இருக்கின்றதே தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
குடி அரசு - தலையங்கம் - 08.09.1929
குடி அரசு - 1929 @) 146
கதர் புரட்டு
கராட்முண் இரகசியம்
கதர் இயக்கம் என்பது பார்ப்பனர்கள் தங்கள் பிழைப்புக்கும் ஆதிக்கத்திற்கும் மோட்சம் என்றும், சுயராஜ்ஜியமென்றும், தேசியம் என்றும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வாழ்ந்து வருவது போலவே, ஏழைகளுக்கு மொத்த உதவி செய்கின்றவர்கள் போல் வேஷம் போட்டுக் கதர். என்னும் பெயரால் பாமரமக்களை ஏமாற்றி வருகின்றதற்கு உபயோகப் படக்கூடியதே தவிர அதனால் உண்மையான பலன் ஒன்றும் கிடைக்காதென்று பலதடவை புள்ளி விவரங்களுடன் எழுதியும் பேசியும், மெய்ப்பித்தும் வந்திருக்கின்றோம். ஆனால் பார்ப்பனரல்லாதார்களிலேயே பலர் நாம் எழுதி வந்ததைச் சரிவர பகுத்தறிவை உபயோகித்துக் கவனித்துப் பார்க்காமல் மேலாக
நுனிப் புல்லை மேய்வதுபோல் அலட்சியமாய் இருந்து கொண்டு பார்ப்பனர் களும் அவர்களது பத்திரிகைகளும் சொல்லுவதையே கிளிப்பிள்ளைபோல்
திருப்பிச் சொல்லிக் கொண்டு மிக்க பொதுநலக் கவலை இருப்பவர்கள்போல் வேஷம் போட்டு நம்மைக் கண்டித்து வந்தார்கள்.இப்பொழுது வேதாரண்யம் மகாநாட்டில் திருராஜகோபாலாச்சாரியார் கதர் கண்காட்சியை திறந்து வைக்கும் போது அவர் செய்த பிரசங்கத்தில் நமது அபிப்பிராயம் முழுதினையும் தாராளமாய் ஒப்புக் கொண்டுவிட்டார். அதாவது “இராட்டினால் கிடைப்பது
தினம் ஒரு அணா கூலிதான்” “இதில் கிடைக்கும் வருமானம் சொற்பம்தான்”.. “ஓரு அணாகூட சம்பாதிக்க முடியாதவர்கள் இந்த வேலை செய்யட்டும்; மேற்கொண்டு சம்பாதிக்கக் கூடியவர்கள் வேறு வேலை செய்யட்டும்; வேறு வேலையில் அதிகக்கூலி கிடைக்கும் வரை இதைச் செய்வோம்” என்று சொல்லி இருக்கின்றார். இதிலிருந்து “இராட்டினமே சுயராஜ்யம் சம்பாதித்துக் கொடுக்கக் கூடியது, அதை தான் எல்லோரும் செய்ய வேண்டியது. சுயராஜ்ஜியத்திற்கு மார்க்கம் ராட்டினம் சுற்ற வேண்டியது என்று சொல்லிக் கொண்டிருந்த “அருள்வாக்கு” இப்போது திரு.ராஜகோபாலாச்சாரியார். சொல்வதிலிருந்தே மருள்வாக்காய் விட்டதை நன்றாய் உணரலாம். தவிரவும்,
கதர் சம்பந்தமான புள்ளி விபரங்கள் காட்டி அதனால் பொதுஜனங்களுக்கு ஏற்பட்ட நன்மையை எடுத்துச் சொல்லி இருப்பதில் 1928ம் வருஷத்தில் 60. லட்சம் சதுரகெஜம் கதர் துணி உற்பத்தி செய்து சுமார் 25 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக எடுத்துக்காட்டி மிக்க பெருமை பாராட்டிக் கொண்டிருக்கின்றார்.
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இதன் யோக்கியதையை சற்று கவனிப்போம். 60 லட்சம் ச. கஜம்
25 லட்ச ரூபாய் ஆனால் ஒரு சதுர கஜத் துணி 0-6-8. ஒரு ச. கஜம் 0-6- 8பை.ஆனால் ஒன்றரை கஜ அகலமுள்ள துணி கஜம் ஒன்றுக்கு 0-10-0 அணா ஆகின்றது. எனவே இந்த அறுபது லட்சம் சதுரகஜம் துணிக்குப் பதிலாக இந்தியாவில் இந்தியக் கூலிகளைக் கொண்டு யந்திரத்தில் நூற்கப்பட்ட நூலால் நெய்த மில் துணியை வாங்கினால், கஜம் ஒன்றுக்கு 0-3-4 பை வீதம் கிடைக்கும். அதாவது ஒன்றரை கஜ அகலமுள்ள மில் துணி கதரைவிட நல்ல நைசும் கெட்டியும் உள்ள துணி கஜம் ஒன்றுக்கு 0-5-0 அணாவுக்கு கிடைக்கும். இதற்குக் கிரையம் 12 1/, லட்சம் ரூ. தான் ஆகிறது. எனவே, 1928 வருஷம் உற்பத்தி செய்த 60 லட்சம் & கஜம் கதர்த் துணியை பொது ஜனங்கள் வாங்கினதின் பயனாய் ஒரு வருடத்தில் பன்னிரண்டரை லட்சம் ரூ. நஷ்மடைந்திருக்கின்றார்கள் என்பதை திரு. ராஜகோபாலாச்சாரியாரும் திரு.காந்தியும் மற்றும் “கதர் தொண்டர்களும் அன்பர்களும்” எந்தக் காரணத்தைக் கொண்டு ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் அந்த நஷ்டப்பட்ட ரூபாய் ஏழைகளுக்குப் போய் சேர்ந்தது என்று ஒரு சமாதானம் சொல்ல வருவார்கள். அதன் யோக்கியதையையும்
சற்று கவனிப்போம். அதை பிரசங்கத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார்.
1928-ம் வருடத்தில் கதர் நூல் நூற்றதற்கு கூலியாக 98000 பேருக்கு 6 லக்ஷம் ரூபாய் நூற்புக் கூலி கொடுத்ததாக சொல்லி இருக்கின்றார். இதில் நெசவுக் காரர்களைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில், நெசவுக் காரர்கள் கதர் நெய்வதால் சரியான கூலி கிடைப்பதில்லை என்றும் மில் நூலினால் அதிகக்கூலிக் கிடைக்கின்றதென்றும் சொல்லுகின்றார்கள். அவர்களுக்கு எப்படியும் வேலை கிடைத்துத்தான் தீரும். ஆதலால் அவர்.
கள் விஷயத்தை விட்டுவிட்டு நூற்புக்காரர் விஷயத்தைக் கவனிப் போமானால் 98000 அல்லது ஒரு லட்சம் பேர் ஒரு வருடத்திற்கு ஆறு லட்சம் ரூபாய்க் கூலி சம்பாத்தியத்திற்காக அதுவும் தினம் ஒன்றுக்கு ஒரு அணா - ஒரு மணிக்கு ஒரு பைசா வீதம் சம்பாத்தியத்திற்காக பொது ஜனங்களிடமிருந்து அதிகக் கிரயம் 12 1/, லட்ச ரூபாயும், இவ்வியக்கத்தை நடத்தப் பொது ஜனங்களின் வசூல் பணம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 14 லட்ச ரூபாயும் செலவு செய்து, மேல் கொண்டு இந்த தொண்டுக்காக “மகாத்மா” காந்தி “உத்தமப் பிராமணர்” ராஜகோபாலாச்சாரி.
மற்றும் சர்தார் பட்டேல் முதலிய “மகான்களும்” மாதம் 150, 200, 250 வீதம் “குறைந்ததொகை” வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பல “உத்தமப் பிராமணர்” கதர் தொண்டர்களும் வருடமெல்லாம் தியாகம் செய்தாக வேண்டியிருக்கிறது என்றால், கதரினால் இந்தியாவுக்கு ஏற்பட்ட லாபம் என்ன என்றுதான் கேட்கின்றோம்.மேலும் கதர் இயக்கம் இனியும் சற்றுவெற்றி பெற்று இன்னும் ஒரு லட்சம் பேருக்கு இன்னும் ஒரு ஆறு லட்ச ரூபாய் ஒரு வருடத்திற்குக் கிடைக்க வேண்டுமானால், பொது ஜனங்கள் இனியும் மேற்கொண்டு ஒரு 12, லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டாமா என்றும்
குடி அரசு - 1929 @) 148
கேட்கின்றோம். அன்றியும் நமது கிராமத்துப் பெண்மணி ஒருவர் ஒரு மணிக்கு ஒரு பைசா கூலி கிடைக்கும்படி இரவும் பகலும் வேலை செய்து மொத்தத்தில்
வருடத்திற்கு ஆறு ரூ. சம்பாதிக்கும், இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் “உத்தமப் பிராமணர்கள்” மாதம் ரூபாய் 250 முதல் 50 ரூபாய் வரையில் குறைந்த சம்பளத்திற்கு ஈடுபட்டிருந்து கொண்டு, நம்மை என்ன கேட்கின்றார்கள். என்றால், “இந்த மணிக்கு ஒருபைசா கூலியாவது கிடைக்கும்படி வேறு வேலை காட்டு பார்ப்போம்” என்று கேட்கின்றார்கள். அப்படியாவது உண்மையிலேயே இந்தத் தொண்டில் மணிக்கு ஒரு பைசாவாவது கிடைக்கின்றதா என்று. பார்ப்போம். நூற்புக்காரர்கள் இந்தக் கரை வாங்கி கட்டிவிட்டார்களேயானால் அவர்கள் கொடுத்த அதிக விலைக்கும் அவர்களுக்குக் கிடைத்த கூலிக்கும் சரியாய் போகின்றது. மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டால் வேலை செய்த பணமும் போய் மேல் கொண்டும் கையிலிருந்த பணமும் போய் விடுகின்றது. ஆனால் இந்தத் தொண்டில் ஈடுபட்ட “தியாகி களான” உத்தமப் பிராமணர்களுக்கு மாதம் 250 முதல் 50 ரூபாய் வரை மீதியா வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எனவே சில “உத்தமப் பிராமணர்: களின்” வயிற்றுப் பிழைப்புக்காக எத்தனை ஏழை மக்கள் நஷ்டமடைவது என்று கேட்கின்றோம். ஒருவனிடம் தேச மென்றும், ஏழை என்றும், தர்மம் என்றும் சொல்லி மனதாற ஏமாற்றி அடித்துப் பிடுங்கி மற்றொருவனிடம் நன்றாய் வேலை வாங்கிக் கொண்டு அரைக்கூலி கொடுப்பதென்றால், இதில் தேசியமோ, கைத்தொழில் லாபமோ என்ன இருக்கின்றது என்றுதான் கேட்கின்
றோம். இதற்காக வேலை வாங்காமல் இந்தக் கூலிகொடுப்பதாயிருந்தால்கூட பொது ஜனங்களுக்கு இவ்வளவு நஷ்டம் உண்டாகாதென்றே சொல்லுவோம். இந்தப் பெரிய தர்ம கைங்கரியத்திற்கு ஆச்சிரமம் வேண்டியதில்லை; மகாத்மாக்கள் வேண்டியதில்லை; உத்தமப் பிராமணத் தொண்டர்களும் வேண்டியதில்லை என்பதோடு இது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையைவிட மோசமானதா இல்லையா? இந்தக் காரியம் என்றுதான் பொது ஜனங்களை கேட்கின்றோம். ஆகவே கதர் இயக்கமென்பது சிலர் தங்களுக்கு ஆதிக்கமும், சிலர் தங்களுக்கு வயிற்றுப் பிழைப்பும் இருக்கட்டும் என்று கருதிப் பொது ஜனங்கள் பணத்தில் அனுபவிக்கும் ஒரு பதவியே தவிர, அதனால் உண்மையான வருமானமோ, தர்மமோ ஒன்றும் இல்லை என்றும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதாருக்குத் தொல்லை விளைவிக்கப் பார்ப்பனர்களால் உபயோகப் படுத்தப்படும் ஒரு சாதனமென்றும் தைரியமாய்ச் சொல்லுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.09.
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
யார்ப்பணப் புதிய தந்திரம்
உஷார்! உஷார்!
பார்ப்பனர்கள் பொது ஜனங்களை ஏமாற்றி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்காக பொது ஜன நன்மைக்குப் பாடுபடுகின்றவர்கள் போல் வேஷம் போட்டு, பொதுமக்களுக்குப் பயன்படாத அற்ப காரியங்களை:
பிரமாதப்படுத்திப் பேசி, அதுவே மகா முக்கியமானதென்று நம்பும்படி செய்து, அதுதங்களால்தான் முடியுமே தவிர மற்றவர்களால் முடியாதென்றும், கடவுள் தங்களை அதற்காகவே படைத்திருக்கிறாரென்றும் சொல்லிக் கொண்டு, அந்த “பொதுத் தொண்டு” தொழிலையே தங்கள் ஜீவனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் உபயோகப்படுத்திக்கொண்டு, நகத்தில் சிறிதுகூட அழுக்குப் படாமல் செளக்கி யமாயிருந்து வாழ்ந்து வருவது யாவரும் அறிந்த விஷயமாகும். மேலும், இம்மாதிரியான ஏமாற்றும் பிழைப்பை யாராவது தெரிந்து அதை வெளிப்படுத்தி ஒழிக்க முயற்சி எடுத்துக் கொண்டால் உடனே நமது பார்ப்பனர்கள் அவர்கள்.
மீது சற்றும் ஈவு இரக்கமில்லாமல் பாய்ந்து கடுமையான பழிகளைச் சுமத்தி அவர்களை இராட்சதரென்றும், நாத்திகரென்றும், தேசத்துரோகி என்றும் சொல்லி, பொதுமக்களிடம் அவர்கள் மீது வெறுப்புண்டாகும்படி செய்து எப் பாடு பட்டாவது அவர்களது செல்வாக்கையும் ஒழித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளுவது பரம்பரை வழக்கமாக இருந்துவருவதை சுருதி மூலமாகவும் அனுபவ மூலமாகவும் தினமும் பார்த்து வருகின்றோம்.
உதாரணமாக, கடவுளை இன்ன இன்ன மாதிரி இன்ன இன்ன பதார்த்தங்களால் பூஜை செய்தால் இன்ன இன்ன புண்ணியம் என்றும்; ஆனால், அந்தப் பூஜை தங்கள் மூலியமாகத்தான் செய்து தீரவேண்டும் என்றும்; இன்ன இன்ன குளத்தில், நதியில், குளித்தால் புண்ணியம் என்றும்; ஆனால், இந்த குளிப்பும் தங்கள் மூலமாக குளித்தால்தான் புண்ணியம் என்றும்: இறந்தவர்க ளுக்கு என்று இன்ன இன்னது செய்தால்,கொடுத்தால், அவர்களுக்கு மோட்சம். கிடைக்குமென்றும்: ஆனால் அவைகள் முழுவதும் தங்களுக்குச் செய்தால், கொடுத்தால் தான் அந்த மோட்சம் கிடைக்கும் என்றும்; கல்யாணம், பிள்ளைப் பேறு வாழ்வு, நோவு, சாவு ஆகியவைகளுக்கு இன்ன இன்ன சடங்குகள் செய்தால் தான் அவைகள் செல்லுபடியும் பலனும் நன்மையும் உண்டாகும் என்றும்; ஆனால் அவைகள் முழுவதும் தங்களைக் கொண்டு செய்தால் தான் பலிக்குமென்றும் சொல்லி வெகுகாலமாக ஏமாற்றி வருவதுடன், இவற்றையும் ஒன்று பத்து நூறு ஆயிரமாக, அதாவது, ஆயிரக்கணக்கான கடவுள்களும்
குடி அரசு - 1929 @) 150
ஆயிரக்கணக்கான தீர்த்தங்களும், பல உலகங்களும், சடங்குகளும், பலன்
களும், பதவிகளும் கற்பித்து அவைகளை அப்படியே நம்பும்படியும் செய்ய, வேதமென்றும், சுருதி என்றும், சாஸ்திரமென்றும், புராணமென்றும், இதிகாச
மென்றும் எழுதி, அவைகளை எழுதியவர்கள் ரிஷிகளென்றும், முனிவர்க ளென்றும், தேவர்களென்றும், கடவுள்களென்றும் சொல்லியும்; அவைகளை அப்படியே நம்பி பின்பற்றி நடந்து அநேகர் முக்தி பெற்றதாகவும் கதைகள் கட்டி, அப்படி முக்தி பெற்றவர்கள் ஆழ்வார்கள் என்றும், நாயன்மார்கள் என்றும், சிரஞ்சீவிகள் என்றும் சொல்லி, அவற்றிற்கும் கதைகள் எழுதி, இவைகளுக்கு ஆத்மார்த்தம் என்று பெயரும் கொடுத்து பாமரமக்களை நம்பச் செய்து அதன் பேராலும் தங்களுக்கு வரும்படியும் வாழ்வும் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதையும், இவைகளையெல்லாம் இன்றைய தினமும் “மகாத்மாக்கள்” உட்படகோடிக்கணக்கான மக்கள் மூடத்தனமாய்நம்பிஅவை களுக்குக் கட்டுப்பட்டு நடந்து வருவதோடு அவற்றை பல பார்ப்பனரல்லா தார்களும் பிரசாரம் செய்து வருவதையும் பார்த்து வருகின்றோம்.
ஆத்மார்த்தம், பரலோக சாதனம் என்பவைகளாகிய, அதாவது, நமக்கு பிரத்தியட்சத்தில் தெரியக் கூடாத விஷயங்களில்தான் இந்தப்படி மூடத்தனமாக
நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், லெளகீகம் என்பதாக,அதாவது, இந்த உலகத்திலேயேநாம் பிரத்தியட்சமாக அனுபவிப்பது என்பதாக சொல்லிக் கொண்டு ஜோசியம், பேய், பிசாசு, மந்திரம், சூனியம், பிராயச்சித்தம், சாந்தி, ஓமம், இன்னும் பல்வேறுபட்ட எத்தனையோ விஷயங் களைக் கற்பித்து மக்களுக்குப் பேராசையையுண்டாக்கி அவைகள் மூலமாக
வும் ஏமாற்றிப் பிழைத்து வருவதையும் பார்த்து வருகின்றோம்.
இவ்வளவும் போதாமல் அரசியல் என்றும், சுயராச்சியம் என்றும், தேசியம் என்றும், ஒத்துழையாமை என்றும், இம்மாதிரி பல அர்த்தமற்ற வார்த்தைகளைச் சொல்லி, அவற்றின் மூலமும் தங்களோடு சில பார்ப்பனரல் லாதார்களையும் சேர்த்துக் கொண்டு, பொதுஜனங்களை ஏமாற்றிப் பிழைத்து வருவதையும் நேரில் பார்த்து வருகின்றோம். இவைகள் தவிர, மேற்கொண்டு இதே கூட்டத்தார்கள் தேச சேவை செய்கின்றோம் என்பதாகச் சொல்லிக் கொண்டு கதர் என்றும், மதுவிலக்கு என்றும், தீண்டாமை ஒழித்தல் என்றும், ஜனங்களுக்குப் பிடித்தமான சில காரியங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு அதன் மூலமும் பாமர மக்களை தங்கள் வயப்படுத்திக் கொள்வதன் மூலமும் தங்களுக்கு வேண்டிய காரியங்களை நிலை நிறுத்திக் கொள்ளலாம். என்பதாகக் கருதி, புதிய புதிய சூட்சிகள் செய்து கொண்டு வருவதையும் பார்க்கின்றோம். ஆனால், இவ்வளவு புரட்டுகளும், சூட்சிகளும்,தந்திரங்களும் சமீபத்தில் நமது நாட்டில் ஏற்பட்ட சுயமரியாதை இயக்கத்தாலும் மற்றும் பல காரணங்களாலும் நமது நாட்டில் ஏற்பட்ட கண்விழிப்பால் ஒருவாறு வெளியாக
நேர்ந்துவிட்டதால் இனி இதிலிருந்து சமாளிக்க இப்போது புதிதாக ஒரு தந்திரம் கண்டு பிடித்து அதைக் கொண்டு கரையேறப் பார்க்கின்றார்கள். அதுதான் “நிலத்தீர்வைகுறைத்தல்” என்னும் ஒரு பெரும் சூழ்ச்சி! இந்தப்புதியசூட்சியை
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இவ்விடத்துப் பார்ப்பனர்களோ அல்லது அவர்களுடைய வால்களோ கூலிகளோ கைக்கொண்டால் செல்லுபடியாவது முடியாத காரியம் எனத் தீர்மானித்து, இதற்கு வழக்கம்போல் வடநாட்டிலிருந்து ஒரு ஆசாமியைப்
பிடித்துக் கொண்டுவந்து அவர் மூலம் பிரசாரம் செய்விக்கக் கருதி, சுற்றுப் பிரயாணமும் செய்கின்றார்கள். அந்த வடநாட்டு ஆசாமி யார் என்றால் அவர் தான்திரு. வல்லவபாய்படேல் என்பவர். இவர் திரு.காந்தியின் அந்தரங்க சபை சிஷ்யர்களில் ஒருவர்.திரு.காந்தியைப் போலவே இவரும் சுயராஜ்ஜியத்திற்கு ஒவ்வொரு வருஷ வாய்தா போடுபவர். ஆனால் திரு.காந்தி ராட்டினத்தில் சுயராஜ்யம் என்றால் இவர்நிலத்தீர்வையில் சுயராஜ்யம் என்பவர். ராட்டினத்தில் சுயராஜ்யம் என்பதின் யோக்கியதை நமது நாட்டில் வெளியாகி இப்போது ராட்டினத்திற்கும் ஜீவநாடி அடங்கிவிட்டதால் இனி ராட்டினப் புரட்டால் யாரையும் ஏமாற்ற முடியாது என்று நமது பார்ப்பனர்கள் கருதி, “ராட்டின வீரரை” விட்டுவிட்டு புதிய தந்திரமாகிய நிலவரியில் சுயராஜ்யம் என்கின்ற
புரட்டால் நம்மை ஏமாற்ற இப்போது “நிலத்தீர்வை வீரரை” கூட்டி வந்திருக் கின்றார்கள்.இந்த நிலத்தீர்வை வீரர் தென்னாட்டில் கால் வைத்தது முதல் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற வேண்டிய பிரசாரத்தையும், சுயமரியாதை இயக்கத்தை. அழிக்கவேண்டிய பிரசாரத்தையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத் தைக் குறைகூறும் பிரசாரத்தையும் தான் சென்ற இடமெல்லாம் செய்து வருகின் றார். இதே மாதிரி இவருக்கு முன்னால் வந்த திரு.மாளவியாவும் இதே போல் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும், சுயமரியாதை இயக்கத்தையும் நன்றாய் வைதுவிட்டு, ஜாதி இருக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, ராமாயணப்
பிரசாரம் செய்து ராமருக்கு ஜே போடும்படி சொல்லிவிட்டுப் போனார். அதற்கு முன்வந்த திரு.காந்தியோ கதரின் பேரால் பார்ப்பனரல்லாதாரை வைதுவிட்டு. வருணாச்சிரம பிரசாரம் செய்துவிட்டு, வருணாச்சிரமத்தைக் காப்பாற்றும் கீதையை எல்லோரும் படிக்க வேண்டுமென்றும் சொல்லிவிட்டுப் போனார். ஆனால் கடைசியாக வந்த திருபடேல் முந்தியவர்களையெல்லாம் விட ஒரு படிதாண்டிசுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கம் என்றும்,பார்ப்பன ரல்லாதார் இயக்கம் உத்தியோக வேட்டை இயக்கம் என்றும் சொன்னதோடு, திருமாளவியாவைப்போல் ராமாயணப் பிரசாரம் செய்யாமலும், திருகாந்தியை போல் கீதை பிரசாரம் செய்யாமலும், இவர் ஒரே அடியாய் ஆரிய தர்மப்பிரசார
மும், திருவாளர்கள் ராஜகோபாலாச்சாரி, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரி ஆகியவர்களை பெரியார்கள் என்றும், உத்தமப் பிராமணர்கள் என்றும், பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தியாகிகள் என்றும் சொல்லி பார்ப்பனர்கள் பிரசாரமேசெய்து வருகிறார். இந்தக் கனவான்களைப்பற்றி தென் இந்தியாவில்
ராமநாதபுரத்திலும், வலங்கைமானிலும், சேலத்திலும் பிறந்த இந்தப் பார்ப்பனர் களின் யோக்கியதையைபம்பாய் மாகாணத்திலிருந்து வேதாரண்யத்திற்கு வந்த. ஒருவர் அதுவும் தென் இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதென்றால் சொல்லப் புறப்பட்டவரின் புத்திசாலித் தனத்தை கூட்டிக் கொண்டு வந்தவர்கள். தான் மெச்சிக் கொள்ளவேண்டும். இதற்கு எதை ஒப்பிடலாமென்றால் தன் தகப்பன் வீட்டுப் பெருமையைப் பற்றி அண்ணனுக்கு தங்கை எடுத்துச்
குடி அரசு - 1929 @) 152
சொல்லவருவது எவ்வளவு புத்திசாலித்தனமுடையதோ அதுபோலவே சாஸ்திரிகளையும், அய்யங்கார்களையும், ஆச்சாரியார்களையும் பற்றி திரு.படேல் சொல்வது என்று கூற வேண்டியிருக்கிறது. இதிலும் மற்றொரு விசேஷம் என்னவென்றால், திரு.படேல் “சுயமரியாதையைவிட நிலவரி. முக்கியமானது” என்று சொல்லுவதேயாகும். எனவே, இது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான வாசகம் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். இந்த மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பதினாயிரக் கணக்கான ஏக்கர் பூமிகள் வைத்துக் கொண்டு, பதிணயிரக்கணக்காக லட்சக் கணக்காக ரூபாய்கள் நிலவரி கொடுத்துக் கொண்டிருக்கின்றவர்களைவிட திரு.படேல் நிலவரியை பற்றின கஷ்டம் அதிகம் அனுபவிப்பவர்போல் கண்ணீர் விடுகின்றார். ஆணால் அவர் அந்தப்படி எதற்காக கண்ணீர் விடுகின்
றார் என்றால், ஒரு வருஷத்திற்கு சுயமரியாதை இயக்கத்தை மூட்டைக் கட்டி ஒரு வீட்டில் போட்டுப் பூட்டி வைத்துவிட வேண்டுமாம். அப்படிச் செய்தால் ஒரு வருஷத்தில் நிலவரி குறைந்துவிடுமாம். பிறகு இதுவே சுயராச்சியமாய் விடுமாம்! என்னே திருபடேலின் புத்திசாலித்தனம்! சாதாரணமாய் நமது நாட்டில் பார்ப்பனர்க்களிக்கும் வரிகளில் பத்தில் ஒரு பங்குகூட இருக்காது நமது நிலவரிக்கொடுமை என்று கோபுரத்தின் மீதிருந்து கூவுவோம். அன்றியும் இந்த பார்ப்பனப் புரட்டிலும், பார்ப்பனக் கொடுமையிலும் பதினாயிரத்தில் ஒரு பங்குகூட இருக்காது இந்த அரசாங்கப் புரட்டும் கொடுமையும் என்று ஆங்
காங்கு எழுதி வெற்றி ஸ்தம்பம் நட்டு வைக்க நம்மால் முடியுமென்று உறுதி கூறுவோம்.மேலும் இந்தப் பார்ப்பனர்களால் நமக்கு தினமும் ஏற்படும் சுயமரி. யாதைக் குறைவுகளில் லட்சத்திலொரு பங்குகூட வெள்ளைக்காரர்களால் நமக்கு சுயமரியாதைக் குறைவு இல்லையென்று தூக்குமேடையிலிருந்து கொண்டும் சொல்லுவோம். வெள்ளைக்கார அரசாட்சியால் வரிப்பளுவும்,
புரட்டும், கொடுமையும், மரியாதைக் குறைவும் உண்டென்பதை நாம் மறுக்கவில்லையானாலும் இவைகளுக்கும் காரணம் இந்தப் பார்ப்பனர்களின் சுயநலமும் தேசத் துரோகமுமென்றுதான்சொல்லுவோம்.என்றாலும்,இவைகள் பார்ப்பனர்களால் ஏற்படும் வரிப்பளுவு, புரட்டு,கொடுமை, மரியாதைக்குறைவு, இழிவு ஆகிய இவைகளுக்கு உரை போடக்கூட கட்டாது என்று சொல்லு வோம்.எப்படியானாலும் ஒரு மனிதன் அரசாங்கத்திற்கு வரிக்கொடுத்தேயாக வேண்டும்.ஆனால், ஒரு சமயம் அரசாங்கம் வசூல் செய்யும் வரி அதிகமென்று சொல்லலாம். ஆனால், அந்த அதிகவரி எப்படி, யாரால் உயர்ந்தது என்பதைக் கவனித்தால் இதே பார்ப்பனர்கள் தங்களுக்கு L5 க்கு 5500 ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டதினால்தான் சர்க்கார் குடியானவர்கள் தலையில் கையைவைத்து நிலவரி முதலியவைகளை உயர்த்தி வசூல் செய்து பார்ப்பனர்களுக்கு அழுது வந்தார்கள். ஆனால், இப்போது அந்தப் பணம் முழுவதும் பார்ப்பனர்கள் கைக்குப் போகாமல் இருக்கும்படியான மார்க்கத்தை பார்ப்பனரல்லாதார் இயக்கம் செய்யப் புறப்பட்ட உடனே, பார்ப்பனர்களுக்கு “நில வரிப் பளுவு” அதிகமாய்ப் போய்விட்டதுடன் பார்ப்பனரல்லாதார். இயக்கம் உத்தியோக வேட்டை இயக்கமாகவும் போய் விட்டது. திருவாளர்கள்
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வி.கிருஷ்ணசாமி அய்யரும், சிவசாமி அய்யரும், ராஜகோபாலாச்சாரியும், சிபி.ராமசாமி அய்யரும், வெங்கிட்டராம சாஸ்திரியும், பி.என்.சர்மாவும் மாதம் 5,500, 6,500 ரூபாய்கள் வீதமும், பாஷ்யம் அய்யங்காரும், மணி அய்யரும், சதாசிவஅய்யரும், சுந்திரமய்யரும், குமாரசாமி சாஸ்திரியாரும் ஆகிய அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மாக் கூட்டங்கள் மாதம் 1-க்கு 4,000, 5000 ரூபாய்கள். வீதம்வாங்கிக்கொண்டிருந்தபோது இந்த “நில வரிப் பளுவு” எங்கு போயிருந்
தது என்று கேட்கின்றோம்.அன்றியும்,திருகாந்தியை அராஜகரென்றும், அவரை ஜெயிலில் பிடிக்காவிட்டால் இந்தியா முழுகிப் போய்விடுமென்றும் சொல்லி ஜெயிலில் அடைக்க உதவி செய்து மகாகனம் பட்டம் வாங்கிய திரு.சீனிவாச சாஸ்திரி இந்தப் படேல் கண்களுக்கு உத்தமப்பிராமணராயும், தியாக புருஷராயும் காணப்படுகின்றார்! அன்றியும், திரு.காந்திக்கு மூளை இல்லை
என்றும், ஒத்துழையாமை சட்டவிரோதமென்றும், திரு.ஜவகரிலால் முட்டாள், அதிகப்பிரசங்கி என்றும் சொன்ன திரு.சீனிவாசய்யங்கார் இந்த திரு. படேல் கண்களுக்கு உத்தமப்பிராமணராகவும், தியாகப் புருஷராகவும் காணப் படுகின்றார்! கடைசியாக மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்று ஒரு தீர்மானம் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியில்நிறைவேறியவுடன் தனது மெம்பர் ஸ்தானத்தை ராஜிநாமா கொடுத்ததோடு திருவாளர்கள் சந்தானம், வரதாச்சாரி, டாக்டர் ராஜன் ஆகியவர்களையும் கமிட்டியிலிருந்து ராஜிநாமா செய்யச் செய்ததுடன், இது சரியா என்று திரு. காந்தி கேட்டதற்கு, அது என் சொந்த அபிப்பிராயம் என்று சொன்னவரும், மற்றும் பார்ப்பனரல்லாதாருக்கு..... எவ்வளவோ மோசமாய் நடந்து கொண்டவருமான திருராஜகோபாலாச்சாரியார் திருபடேல் கண்ணுக்கு உத்தமோத்தம பிராமணராயும், பெரிய தியாகியாயும், பிராமணரல்லாதாருக்கே உழைக்கப் பிறந்தவராயும் காணப்படுகின்றார் என்றால், நமது திருபடேலின் கண்கள் எவ்வளவு பரிசுத்தமானவை என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று நாம் கேட்கின்றோம். நிற்க, இப்போது
எப்படியாவது நமக்கு ஒரு அரசன் இருந்துதான் ஆக வேண்டும், அவனுக்கு நாம் வரிகொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபமிருக்காது. ஆனால், பார்ப்பனீயம் இப்போது நமக்கு அவசியமா? அதற்கு நாம் வரிக்கொடுக்க வேண்டியது அவசியமா என்று திருபடேலை
கேட்கின்றோம். அன்றியும், ஆரிய தர்மத்திலுள்ள ஏதாவது ஒரு புரட்டுக்கும், மனு தர்மத்திலுள்ள ஏதாவது ஒரு புரட்டுக்கும் சமானமாக அரசாங்கப் புரட்டில் எதையாவது சொல்ல முடியுமாவென்றும் திரு.படேலைக் கேட்கின்றோம். மேலும் பார்ப்பான் தன்னை பூதேவன் என்றும், நம்மை அவனது அடிமை, தாசிமகன், சூத்திரன் என்றும் சொல்லுவது போல் எங்காவது அரசாங்கத்தார்கள் சொல்லுகின்றார்களா? அல்லது எழுதிவைத்திருக்கின்றார்களா என்று திரு.படேலைக் கேட்கின்றோம். தவிர, பார்ப்பனர்கள் நமக்கு யாதொரு உபகாரமும் செய்யாமல் நம்மை இழிவு படுத்தி, தங்கள் காலிலும் நம்மைப் பெண்டு பிள்ளைகளுடன் விழச் செய்து நம்மிடம் கொள்ளையும் அடித்து அதனால் நமக்கு யாதொரு பிரயோசனமும் செய்யாமல் இழிவுபடுத்திக்
குடி அரசு - 1929 @) 154
கொண்டு இருப்பதுபோல் அரசாங்கம் நம்மிடம் வரி வசூலிப்பதில் அவ்வளவு கொடுமையாயும் வசூலித்த பணம் அவ்வளவையும் சுயநலமாயும் உபயோகித்துக் கொள்ளுகின்றார்களா என்றும் கேட்கின்றோம். ஆகவே முதலில் நாம் எந்த வரிப்பளுவைக் குறைக்க வேண்டும் என்றும். எந்தப்புரட்டை ஒழிக்க வேண்டும் என்றும், எந்த அவ மரியாதையில் இருந்து மீள வேண்டுமென்றும் திருபடேலை கேட்கின்றோம்.
கடைசியாக, நமக்கு சுயமரியாதை பெரிதே ஒழிய, மோட்ச ராச்சியம். சுயராச்சியம் ஆகியவைகள் பெரிதல்லவென்றும்; பார்ப்பனப்புரட்டும், பார்ப்பனக் கொடுமையும், பார்ப்பன வரியும் ஒழிய வேண்டியதைவிட அரசாங்கப்புரட்டும், அரசாங்கக் கொடுமையும், அரசாங்க வரியும் ஒழிய வேண்டியது அவ்வளவு அவசரமல்லவென்றும் திரு. படேலுக்கு வெளிப் படையாயும், தைரியமாயும் சொல்லுவதோடு, எந்தக் காரணத்தை முன்னிட்டா வதுநிலவரிப் புரட்டை தமிழ்நாட்டிற்குள் கால்வைக்க இடம் கொடுத்துவிடக் கூடாது என்று பார்ப்பனரல்லாத மக்களுக்கு எச்சரிக்கையும் செய்கிறோம். பார்ப்பனீயத்தை ஒழித்து, பார்ப்பனக் கொடுமையிலிருந்து மீண்டு, சுயமரி யாதை பெறுவதற்கு நாம் உயிர், பொருள், ஆவி, தேசம், “தேசியம்”,
“சுயராச்சியம்””, “நிலத்தீர்வை” ஆகிய எதையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். உதாரணமாக இதே அரசாங்கம் நம்மிடம் வந்து “ இனியும் அதிகமாக ஏக்கராவுக்கு. பத்து ரூபாய் அதிகவரி கொடுக்கின்றாயா அல்லது
பார்ப்பான் காலில் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றாயா” என்று கேட்டால் அதிக வரியாவது கொடுப்போமே ஒழிய, இனி பார்ப்பான் காலில் விழுவதைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டோம் என்றுதான் சொல்லுவோம். இதனால் நம்மை யார் என்ன சொன்னாலும் நாம் பயப்படமாட்டோம். எனில், இதற்குப் பெயர்தான் சுயமரியாதையே ஒழிய, பிச்சைக்காரப் பார்ப்பான் காலில்
விழுந்து கும்பிட்டு அவனுடைய அழுக்குப் பிடித்த காலைக் கழுவிய தண்ணீரைத் தலையில் தெளித்துக் குடித்து மோட்சத்திற்குப் போவதோ,
சுயராச்சியம் பெறுவதோ, நிலவரி குறைவு படுவதோ சுயமரியாதை அல்ல வென்று மறுமுறையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகின்றோம்.ஏனென்றால் உண்மையான சுயமரியாதையை அடைந்தோமானால் சுயராச்சியமும், நில வரிக்குறைவும் தானாக ஏற்பட்டுவிடும் என்கின்ற உறுதி நமக்கு இருக்கின்றது. எனவே திரு.படேல் அவர்கள் நிலவரி குறைவதற்காக சுயமரியாதை இயக்கத்தை கட்டிவைக்கும் படி சொல்லுவது “புருஷனைப் பலி கொடுத்தால் பிள்ளைவரம் கிடைக்கும்” என்கின்ற பழமொழிபோல் இருக்கின்றது. ஆகையால் இந்த நிலவரிப்புரட்டுக்கு யாரும் ஏமாந்து விடக்கூடாது என்றும், இது நமது நாட்டுப் பார்ப்பனர்களுடைய ஒரு புதிய சூட்சி என்றும் சொல்லி மறுபடியும் உஷார்ப் படுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.091929.
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சிக்காந்கம்?
ஆசிரியாரிண் ஷண்ய நிலை
மணலி விடுதியில் தருமச் சோறு உண்ணும் ஒரு பார்ப்பனரல்லாத மாணவர் குற்றம் செய்ததாகக் கருதி, அத்தகைய குற்றத்திற்குக் கசை கொண்டு தாக்கிய சைவம் பழுத்த “சித்தாந்தம்” ஆசிரியனார் பாலசுப்ரஹ்மண்யம் “சைவக் குறும்பு” என்னும் தலைப்பொடு தம் அழகிய சித்தாந்தம்” என்னும் மாசிகையில் ஓர் கட்டுரை வரைந்திருக்கின்றார்.
இவ்வாசிரியனார் மரக்கறி தின்று மகாதேவனைத் தினம் இறைஞ்சி
நிற்கும் ஓர் சைவம் பழுத்த திருமேனியுடையார். சீவகாருண்ய வள்ளல். பிறரை: தன்வழிப்படுத்த அருனெறியில் தண்டனை புரிவதில் சிறிதும் பின்னடையார்.
சட்டம் கற்றவர்; பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர்; மரக்கறி உண்டு உடல் பருத்தவர்; அறச்சாலையை மேல் பார்த்தும், உள்பார்த்தும் வருபவர். இவர் கட்டுரையை ஆராய்வோம்:
(0 “* “திராவிடன்” “குடி அரசு' பத்திரிகைகளில் வெளிவரும்...... பொருந்தாமை பொய்மை முதலியவற்றை ஆராய்ந்து நாம் சித்தாந்தம்! வெளியிடத் தொடங்கிய நாள்தொட்டு நமது பத்திரிகை தமிழ்
நாட்டுக்குச் செய்துவரும் பணியைப் போற்றி நூற்றுக்கணக்கான
சந்தாதாரர்கள் நமது பத்திரிகையை வாங்கத் தொடங்கி ஆதர வளித்து வருகின்றனர்
என வரைகின்றார்.
ஆராச்சியில் வலிமை மிக்க ஆசிரியர் கூற்றை நாம் மேம்போக்காக நோக்குவது நேர்மையல்ல. எனவே, இதனைத் துருவியே ஆராய்வோம்”
திராவிடனும், குடிஅரசும், பொருந்தாமையும் பொய்ம்மையும் கூடிய கட்டுரைகளை வெளியிடுகின்றன. இதற்குச் சான்று இப்பொய்மையின்மையும் பொருந்தாமையின்மையும் தெள்ளத் தெளிய மக்கட்கு விளக்கிக் காட்டும் பேரறிவுறுத்துகின்ற “சித்தாந்தம்” பத்திரிகையை நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் வாங்கி ஆதரிக்கின்றார்கள் என்பதே. நாம் வெளியிடும் கட்டுரைகள் மெய்மையைப் பற்றி நிற்கின்றனவாகவே நாம் இற்றைக்கும் கருதுகின்றோம்.நமது பொய்யை விளக்கி மெய்யைநிலைநாட்டிஅறிவுச் சுடர் கொளுத்தும் “சித்தாந்தம்” பத்திரிகைக்கு எத்தனை சந்தாதாரர்கள் உள்ளனர்.
குடி அரசு - 1929 @) 156
என்பதை இவ்வாசிரியர் நமக்கும் பொது சனங்கட்கும் அருள் கூர்ந்து எடுத்துரைத்தல் வேண்டும். செங்கற்பட்டு மகாநாட்டு நிகழ்ச்சியின் பின்னர், இவ்வாசிரியர் கூற்றுப்படி “சித்தாந்தம்” இவ்வாறுமாத காலத்தே குறைந்த தொகையில் 500 சந்தாதாரர்களால் மிகுந்தும் பரவி இயங்குதல் வேண்டும்.500 ஏன்? “தன் பத்திரிகைக்கு ஒரு சிறிய நூறு சந்தாதாரர்களாயினும் சேர்ந்திருக் கின்றனரா என்பதை இவ்வாசிரியர், இவர் நாள்தோறும் வணங்கியேத்தும் மகாதேவன் மீது ஆணையிட்டு மெய்ப்பிக்க முன் வருகின்றனரா” என்று கேட்கின்றோம்.மேலும் இப்பத்திரிகைக்கு ஒரு தொள்ளாயிரம் சந்தாதாரரும் மொத்தத்தில் உளரோ? யார் பொய்யர்? பொய்ம்மை இருக்கும் இடமும் மெய்ம்மை இருக்கும் இடமும் இவர் கூறும்விடையில் இனிது புலனாகும்.
@) நாஸ்திகத்தையும் உண்மைச் சைவத்தையும் பரப்பு வதற்காக ஏனைய உயரிய பத்திரிகைகளோடும் ஆசிரியன் மாரோடும்
நாம் ஒத்துழைக்கத் தலைப்பட்ட நாள் முதல்........ அழுக்காறு உண்டாயிற்று.
நாத்திகத்தையும் உண்மைச் சைவத்தையும் பரப்பும் ஏனைய உயரிய பத்திரிகைகள் யாவை? நாத்திகமும் உண்மைச் சைவமும் ஒன்றே என்று நிலைநாட்ட “சித்தாந்தம்” பேராசிரியர் முன் வந்தமை வியத்தற் பாலதே! இவர்: நா,நாவென்றுநாத் தடமாறி “*ஆவை', *நாவாகத்' தம் பத்திரிகையில் வெளியிட
இவர் நாத்திகத் தியானத் தடிப்பு எத்துணை நிறை பெற்று நிற்கின்றது என்பதை இவர் நம்மைத் தூற்றப்புறப்பட்ட கட்டுரையே நன்கெடுத்துக் காட்டுகின்றது. குடியன் மயக்கெய்துவான்: வெறியன் மயக்கெய்துவான்; “சைவத்” திருமேனிகள் இவ்வாறு மயங்கித் திரிவடைதல் ஏனைய உயரியபத்திரிகைகள்
தம் வாசனையின் பலன் போலும்! அற்றன்று; சினம் பொங்கி. அதன் வயப்பட்டு
நாம் கருத்தழிந்தோம் என்பரேல், இத்தகைய சீர் குலைவை இவரது மகாதேவ வழிபாடு காப்பாற்றவில்லையே என்று நாம் வருந்துகின்றோம்.திராவிடனையும், குடியரசையும் ஆராய்ச்சியென்ற ஓர் செயலின் பேரில் படித்துப் பொருமை
படைத்துத் தட்டழிந்த இவரை நாம் என்னென்போம்? அழகிய, அரிய அறிவின் வினை முற்றிய ஆராய்ச்சிக்கு நாத்திகத்தையும் உண்மைச் சைவத்தையும் பரப்ப முற்பட்ட இவ்வாசிரியர் குழு இத்தமிணாடு எங்கணும் மலிக!
(3) “குடிஅரசு” “திராவிடன்” பத்திரிகைகளைப் படிப்பதின் பயனாக அவ்விடுதியில் உள்ள பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன மாணவர்களைப் பெரிதும் உபத்திரவப்படுத்துகின்றார்கள்.
குடியரசும், திராவிடனும் பார்ப்பன மாணவர்கள் மீது பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குப் பகைமை விளைக்கின்றது என்பதாம். இவ்விடுதியிலுள்ள பார்ப்பனரல்லாத மாணவர்கள் எல்லோருமாகவே இத்தகைய பகைமைப் பயன்
நம் பத்திரிகைகளைப் படித்துக் காண்கின்றனராம்! இவ்வாசிரியர் சில மாணவர்.
கள் என்றாயினும் பல மாணவர்கள் என்றாயினும் கூறாது விடுதியிலுள்ள பார்ப்பனரல்லாத மாணவர்கள் (அனைவருமே! என்றார். அவ்விடுதியில்
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பார்ப்பனரல்லாத இம்மேற்பார்வையாளரும் பார்ப்பனரல்லாத மாணவர்களும்
தாம் பார்ப்பனரல்லாதார். இவ்வகுப்பு மாணவர் அனைவரும் குடியரசுத் திராவிடனால் வேறுபட்டனர் என்பது முழுப் பொய்யாக இருத்தல் வேண்டும். இல்லையேல் நமது பத்திரிகைகளின் சிறப்பை இவர் தன்னறிவின்றியே ஒப்புக் கொள்ளுகின்றார். இவ்விடுதியில் 40 பார்ப்பனரல்லாத மாணவர்கள் இருப்ப
ரேல் அவர்கள் அனைவரும் ஒருங்கே குடியரசு திராவிடன் வயப்பட்டனர். எனில் யாம் எய்தும் உவகை அம்மம்ம! மிகப் பெரிதே!! இவ்வுண்மை அறிவுடையவர் யாவர் என்பதை விளக்கிக்காட்டி குடியரசு, திராவிடனின் நற்பணியை நிலைநாட்டிப் போதருகின்றது. பகைமை என்பது தீயதன்றோ எனின்? நாஸ்திகம் பழுத்த சைவப் பேராசிரியர் கண்களில் உரிமை நாடல் பகைமையாகத் தோற்றுகின்றது போலும்!
(4) “பார்ப்பன மாணவர்களையும் பார்ப்பனரல்லாத மாணவர்களையும் நாம் தண்டித்த துண்டு” என்றனர்.
குறும்புகள் செய்தமைக்கு “டசன்” கணக்கில் பிரம்பு கொண்டிருக்கும் இக்கருணாகரவள்ளல், திருஞான சம்பந்தன் கழுவேற்றிய செயலை நம் மனத்தோற்றத்திற்கு முன் கொண்டு வருகின்றனரே யன்றி பிறிதொன்றில்லை.. சமணரையும், உலகையும், நல்வழிப்படுத்த முன்வந்த அஞ் ஞானசம்பந்தனை உபாசனாமூர்த்தியாகக் கொண்ட இவர் மணலி விடுதியில் தம் ஆசிரியரைப்
பின்பற்றிச் செல்லத் துணிந்திருக்கின்றார். இதன் கொடுமை விலங்குகளிடத்தும் காண்பதரிது என்று நாம் முன்னரேயே விளக்கிக் கூறியுள்ளோம். எனினும் சித்தாந்தத்தின் போக்கைப்பற்றி மீண்டும் கூர்ந்து நோக்குதல் ஈண்டு கடணாயின்றது.
௫) “இத்தகைய பொய்ப் பிரசாரப் பலனாற்றான் சுயமரியாதைத் தலைவர் பிறந்து வளர்ந்த ஈரோட்டை விட்டு “தரும மிகு” சென்னையில்
தஞ்சம் புகுந்தனர் போலும்! தமிழ் நாடெங்கணும் பேசித் திரிந்தவர் ஒரு மூலையில் உட்கார நேர்ந்தது போலும்!
என்றனர்.
*தருமமிகு சென்னை” என்னும் பதங்களை எடுத்தாள இவர் நெஞ்சும் துணிவு கொண்டதே;மண்கட்டி ஒன்றுசிதைந்தமை கேட்டு மூர்ச்சையடைவான் ஒருவன் எவனோ அவனே சீவகாருண்யம் பழுத்தான் என்று கூறிய சீவகாருண்யவள்ளல் எச்சிலையும் நுகர அருகராகசித்தாந்த ஆசிரியர் வடலூர் இராமலிங்க சுவாமிகளின் பதப்பிரயோகத்தைக் கொண்டு தம் கட்டுரைக்கு வலிமை ஊட்டத் துணிந்தார். வடலூரார் தன் இளம்பிராயத்தே,மாணவர்கட்குக் கல்வி பயிற்றிய காலத்து அவர்களைச் சிலகால் அடித்தமைப்பற்றிப் பிற்காலத்தே அழுதழுது கண்ணீர் உகுத்திருக்கின்றார். சித்தாந்த ஆசிரியர் தனது தடித்த உடலையும் தடித்த மனதையுங்கொண்டு சிறு பிள்ளைகளை சோற்றுக்குத் தஞ்சம் என்று அடைக்கலம் புகுந்தபிள்ளைகளை; அபயம் கூறாது
குடி அரசு - 1929 @) 158
கசை கொண்டு தாக்கி “ஏம” தண்டனை அளிக்கின்றார். மேற்புல்லைக்கடிக்கும் இவரது ஆராய்ச்சியும் மேற்கோளும் இனிதினிதே!
நிற்க ஈரோடு என்ற பெரும் பட்டினத்தைவிட்டு சுயமரியாதைத் தலைவர் சென்னையெனும் ஓர் மூலையில் ஏன் வந்தார் என்பது கடா. இவர் பூகோள
சாத்திரத்தையும் சிறிது பயிலுதல் வேண்டும். இத்தகைய மதியிலார்க்கு மதி கொடுக்கும் பொருட்டே சுயமரியாதைத் தலைவர் தமிணாட்டுத் தலைமைப் பட்டினத்தில் வீற்றிருந்து சுயமரியாதை என்னும் சமரச சன்மார்க்க தனிச் செங்கோல் ஒச்சுகின்றார். வேற்றுமைத் துன்மார்க்க சித்தாந்திகள் நடுக்குறின்
நாம் என்ன செய்வோம்?
மேலும் மந்திரிகளும் மதிக்கும் பெருமைத்து நம் பத்திரிகை என்பதை இவர் ஒப்புக்கொள்கின்றார். நாமும் உவக்கின்றோம்.
(6) “மாமிசத்தை உண்டுமந்திரி வழிபாடு செய்யும் சுயமரியாதை வீரர்கள்மரக்கறி உண்டு மகாதேவனை வழிபடும் சைவர்கட்கு 6) இரக்க மில்லை என்பது எள்ளிநகையாடுதற்கே உரியது” என்றார் -
நகையாடி இவரும் ஓர் திரிபுரம் எரிக்கும் விரிசடைக் கடவுளாயின் ஆகுக. ஆனால் மாமிசத்தை உண்டு மந்திரி வழிபாடு செய்வதும் மரக்கறி உண்டு மகாதேவ பூசை செய்வதும் என்பன பற்றி சிறிது நோக்குவாம். புலால் உணவு மேன்மையைப்பற்றியும்,மரக்கறி உணவு மேன்மையைப் பற்றியும்,நாம் இக்கட்டுரையில் சீர் தூக்கிப் பார்க்கப் போவதில்லை என்றாலும் இச்
“சித்தாந்தம்” பத்திரிகை வெளியிடப்படும் கடிதங்களை கண்டுபிடித்தவர்; அதற்குரிய மை, அச்சியந்திரம் முதலியவைகளைக் கண்டு பிடித்தவர்: இவருக்கு பி.ஏ.ஃபி.ஏல்.பட்டமளித்தவர் அனைவரும் புலால் உண்டவர்களே! மேலும் ஆகாய விமானம், ஆகாயத் தந்தி, ஆகாய ரயில் முதலியனவும்;
உலகத்தில் உள்ள பல அரிய விஞ்ஞான உண்மைகள் பலவும் புலால் உண்பவர். களாலேயே கண்டுபிடிக்கப் பெற்று நிற்கின்றன. சுவாமி விவேகாநந்தர், ராமகிருஷ்ணர் முதலியவர்களெல்லாம் புலால் புசித்திருக்கின்றனர். இவர். வணங்கும் மகாதேவன் புசித்த புலால் மலையனவெனப் புராணங்கள். கூறுகின்றன. எனவே புலால் உண்பது இழுக்கென்பது இவர் வாய்ப்பிறப்பில்
அறிவுறுத்தும் தரத்தன்று. பன்றி ஓர் மரக்கறி, மரக்கறியிலும் உயர்ந்ததென்னக்
கருதப் பெற்ற கந்த மூலங்கள் உண்டு. உயிர் வாழ்வது. மரக்கறி உண்ணுவதால், புலாலையே புசிக்கும் சிங்கம், புலி முதலிய அழகிய, வீரம் வாய்ந்த, பெருந் தன்மை உள்ள விலங்கினங்களைப் பார்க்கிலும் பன்றி உயர்வுபடுவதின்றே! இப்புலால் புசிக்காத திருவிலாச் சுப்ரஹ்மண்யம் இம்மெய்ம்மையை ஊன்றிச் சிந்திப்பாராக. பன்றியும் திருவிலாச் சுப்ரஹ்மண்யம் போன்ற ஓர் சித்தாந்த சைவப் பெரியார் போலும்! இவரை நாம் உண்மைச் சைவர் என்றே ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும் இம்மாமிச பிண்டம் மாமிசத்தை உண்ணாமல் மாமிசமே
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
உணவாய் விலங்குகளிலும் கொடுமையைச் செய்யத் துணியுமேல், புலால் உண்ணாமைக்குச்சிறப்பு உளதேல், அச்சிறப்பு இவர் ஓம்புதலினாலேயே இவர்: மட்டில் சீர்குலைகின்றது என்பது திண்ணம். மகாதேவனை வழிபட்டு, நாம் இக்கட்டுரையில் விளக்கிய அளவில் இவர் அறிவிழந்து, ஆராய்ச்சி இழந்து, உண்மை இழந்து, பொறுமை இழந்துநிற்பாராயின்,மகாதேவ வழிப்பாட்டினும் மந்திரி மதியின் மிக்கார்! வழிபாடு பன்மடங்கு சிறப்புடையதன்றே!
மகாதேவனை வழிபட்டு வழிபட்டு சூன்யநிலையடைந்தாராயின், இனி அறிவுடைமையில் உயர்வு பொருந்திய குடியரசு, திராவிடனின் வளர்ச்சியில் அழுக்காறு கொண்டு குடிவெறியில் புலம்புவது போல் ஓலமிடுவது சித்தாந்
தத்தின் சீரிய செயல் போலும்!
நிற்க இவர் சுயமரியாதை இயக்கம் முக்காற்பங்கு ஒடுங்கிவிட்டது என்று கூறுகின்றார்; எஞ்சிய காற்பங்கையும் துகைக்கக் கங்கணம் புனைய சுற்றம் சேர்க்கின்றார். இச்சுயமரியாதை இயக்கம் சூரியமண்டலத்தை மட்டும் எட்ட வில்லை; இவரது இச்சித்தாந்தப் பேராசிரியரது மதி மண்டலத்தையும் (அறிவு மண்டலம் எட்டி, அங்கு கேவல இருளே காணப்படுவதால் அம்மண்டலத் தையும் துளைத்துச் சென்று அங்கும் அறிவுச்சுடர் கொளுத்துகின்றது! கொளுத்துகின்றது!! கொளுத்துகின்றது!!! அக்கொளுத்துதலில் இவர்: அறியாமையும், போலிச் சைவமும் “பிரப்பம் பழம்” பூசையால் இவர் ஆற்றும் மகாலிங்க வழிபாடும் கடிதில் அழியும்! அழியும்! அழியும்!
இவர் கட்டுரையின் பொருந்தாக் கூற்றை அறிவிலாக் கூற்றை நாம் மேற்கொண்டும் விளக்க விரிவஞ்சி விடுக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 15.09.1929
குடி அரசு - 1929 @) 160
சுமாமரியாதைத் திருமணங்கள்
சமீப காலத்தில் எங்கும் சுயமரியாதைத் திருமணங்கள் நூற்றுக்கணக்
காய் நடந்ததாக செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி யடைகின்றோம். அவைகளைப் பூரணமாய்ப் பிரசுரிக்கமுடியா
மைக்கும் வருந்துவதுடன் அனேக திருமணங்களுக்குப் போகமுடியாமைக்
கும் விசனிக்கின்றோம். ஒவ்வொரு திருமணத்திற்கும் நம்மை அழைத்த தற்காக நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அவ்வளவுக்கும்
நம்மால் போகக்கூடியது சாத்தியமின்மையால், வராமைக்கு மன்னிக்கும்படி
யும் கேட்டுக்கொள்ளுகின்றோம். இவ்வியக்கம் தோன்றிய இவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்பனர்களை நீக்கிய திருமணங்களும், மூடச்சடங்கை நீக்கிய செய்கைகளும் சந்தோஷமடையத்தக்க அளவு நடந்து வந்தாலும், விதவா விவாகம், கலப்பு மணம் முதலியவைகள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு 100ற்கு1- பங்கு கூட நடத்தப்பட்டதாய் சொல்வதற்கில்லை. ஆதலால், நமது நண்பர்கள் ஆங்காங்கு முயற்சித்து விதவைகளுக்கு மணம் செய்விக்க
முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டிக்கொள்ளுகின்றோம். மணமக்களுக்கு உத்தியோகங்கள் சம்பாதித்துக்கொடுக்கக் கூட பல நண்பர்கள் முன்வந்தி ருக்கின்றார்கள். சுயமரியாதைத் தொண்டார்கள் இந்தாண்டில் சற்று கவலை செலுத்த விரும்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.09.1929.
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மய விணாவக்கு விடை
மோட்சம், நாகம் எண்பண யாவை?
ஸ்ரீரெங்கநாதபுரம் அவெசுப்பையா அவர்கள் மோட்சம் நரகங்களைப்
பற்றிக் கூறுவதின் உண்மையை அறிய விரும்புகின்றார். மோட்சம் என்பது இன்ப வீடும், நரகம் என்பது துன்ப வீடுமாம். இவைகளை இவ்வுலகத்தில் இவ்வாழ்க்கையில் நாம் என்றும் அநுபவிக்கின்றோம். இதற்கு மாறுபாடாக எங்காயினும் மோட்சம் நரகம் உளவோயின், அவைகளை அநுபவிக்க. விரும்புபவர்கட்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நாளை கிரகம் என்று ஒன்றுள்ளது என்று ஒரு நூலில் நாம் காண்போமாயின், அது எங்குள்ளது என்று தேடப் புறப்படுவது, கிரகம் என்ற ஒன்றை புகுத்திய அறிவிலாச் செயலிலும் தேடப்புறப்படுவோர் செயல்மிக்க அறிவிலாததாகும்.
(பார்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 15.09.1929
குடி அரசு - 1929 @) 162
வல்லூர் மகாநா௫
தென் இந்திய நல உரிமைச் சங்க, அதாவது ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அக்டோபர் மாதம் 5,8 தேதிகளில்
சனி, ஞாயிறு கிழமைகளில்) நெல்லூரில் நடத்தப்படப்போகின்றது. இம்மகா நாடானது1927-ம்வருஷம் ஜனவரி மாதத்தில் மதுரையில் கூட்டப்பட்ட பிறகும், அதே வருஷம் மத்தியில் கோயமுத்தூரில் விசேஷ மகாநாடாகக் கூட்டப்பட்ட பிறகும், சுமார் இரண்டு வருஷம் கழித்து இப்போது கூட்டப்படுகின்ற
தென்றாலும், இவ்வியக்கத்தலைவர் திரு.பனகல் அரசர் காலமாகி சுமார் 9
மாதத்திற்குப் பிறகு தலைவர் தேர்தலையே முக்கியக் காரியமாய்க் கொண்டு கூட்டப்படுகின்றதாகும். தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கமானது ஆதியில் மக்களின் எல்லா சமூக சமத்துவத்தையும், சம உரிமையையும் சம சந்தர்ப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். எனினும் இவ்வியக்கம் வெற்றி பெற்றால் இந்தியாவில் சமூகத்துறையிலும், அரசியல் துறையிலும் உயர்வு பெற்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும்பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்து விடுமே என்ற ஆத்திரத்தால் பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இவ்வியக்கத்தின் கொள்கைகளை திரித்துக் கூறி, இவ்வியக்கத்தினிடம் பாமர: மக்களுக்கு துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி செய்து இவ்வியக்கத் தலைவர்களுக்கும் பலவித தீங்குகள் செய்து மிக்கத் தொல்லை விளைவித்து வந்தார்கள்: வருகிறார்கள். ஆன போதிலும் இவ்வியக்கத் தலைவர்கள் எதற்
கும் பயப்படாமல் உறுதியுடன் நின்று இயக்கத்தை அழியவிடாமல் காப்பாற்றி வந்ததுடன் அதன் மூலம் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியையும் ஊட்டிவந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வியக்கம் வெறும் அரசாங்க உத்தியோகத்தை மாத்திரம் கைப்பற்றுவதற்காக ஏற்பட்ட உத்தியோக வேட்டை இயக்கம் என்றும். தேசத் துரோக இயக்கம் என்றும், சர்க்கார் தாசர்கள். இயக்கம் என்றும் எவ்வளவோ தூற்றப்பட்டும் தென்னிந்தியாவிலுள்ள பாமர: மக்களினுடையவும் மற்றும் பொது ஜனங்களுடையவும் செல்வாக்கையும் மதிப்பையும் பின்பற்றுதலையும் பெற்று விளங்கி வருகின்றது. இதற்கு உதாரணம் வேண்டுமானால் தென்னாட்டில் சட்டசபை மந்திரிகள் முதல் ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள் தலைவர்கள் ஆகியவர்களும், கிராம பஞ்சாயத்து கூட்டுறவு முதலிய சாதாரண ஸ்தாபனங்களும் இவ்வியக்கம் ஏற்படுத்தப் படுவதற்கு முன் எல்லாம் பார்ப்பன மயமாகவே இருந்ததானது, இப்போது
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இவ்வியக்கத்திற்குப் பிறகு பார்ப்பனரல்லாதார்கள் அதாவது மகமதியர்கள் கிறிஸ்துவர்கள் ஆதிதிராவிடர்கள் ஆகிய எல்லோரும் அவரவர்கள் ஜனத் தொகை விகிதாச்சாரப்படிக்கு இல்லையானாலும் சற்றேறக்குறையவாவது பங்கு பெற்று ஆதிக்கம் பெற்றிருப்பதே போதுமானதாகும். இதிலிருந்து அரசாங்க தயவிலேயே இந்த இயக்கம் இருப்பதாக நமது எதிரிகள் சொல்லுவது எவ்வளவு புரட்டு என்பது இனிது விளங்கும்.
எப்படியெனில், அரசாங்கத் தயவால் அரசாங்க உத்தியோகம் மாத்திரம் தான் கிடைக்குமே ஒழிய தேர்தலில் பொது ஜன ஓட்டுக்கள் பெற்று அடையும் படியான பதவிகள் பெற ஒருக்காலமும் முடியவே முடியாது. அன்றியும் இவைகள் தாராளமான பொதுஜன ஆதரவும் அனுதாபமும் இருந்தால் தான் கிடைக்கும். எனவே இவ்வியக்கம் இப்படிப்பட்ட பொதுஜன தேர்தல் ஸ்தாபனங்களைப் பெற்று அந்த ஸ்தாபனங்களையெல்லாம் கைப்பற்றி இருப்பதிலிருந்தே பொது ஜன ஆதரவு முழுவதும் இவ்வியக்கத்திற்கு இருப்பது தானாக விளங்கும். ஆகவே ஜஸ்டிஸ் இயக்கம் அதன் எதிரிகள் சொல்வதுபோல் சர்க்கார் தாசர் இயக்கமாயிருந்தால் இவ்வித பொதுஜன. ஆதரவு கிடைத்திருக்குமா என்பதையும் இவ்வளவு பொது ஸ்தாபனங்களைக் கைப்பற்றி இருக்குமா என்பதையும் யோசித்தால் அறிவாளிகளும் யோக்கியர். களும் இதை சர்க்கார் தாசர் இயக்கம் என்று சொல்ல ஒரு போதும் முன் வரமாட்டார்கள். சென்னை மாகாணத்து 25 ஜில்லா போர்டுகளில் உள்ள 25 ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளும் இது சமயம் பார்ப்பனரல்லாதார் களாகவே இருக்கின்றார்கள். நூற்றுக்குத்தொண்ணூறு தாலூக்கா போர்டு பிரசிடெண்டு களும் நூற்றுக்குத் தொண்ணூறு முனிசிபல் சேர்மென்களும் நூற்றுக்குத் தொண்ணூறு மேல் கண்ட ஸ்தாபன அங்கத்தினர்களும் பார்ப்பனரல் லார்களாகவே இருக்கின்றார்கள்.
பார்ப்பனரல்லாதார் என்பதிலும் இவ்வியக்கத்தின் கொள்கைப்படி இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முகமதியர்கள் ஆதிதிராவிடர்கள், ஐரோப்பியர்கள் ஆகிய எல்லா மதவகுப்புப் பிரிவுகளும் சற்று ஏறக்குறைய எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் பெற்றும் இருக்கின்றார்கள். இவ்வியக்கத்திற்குப் பிறகு ஆதிதிராவிடர்களும் மற்றும் பிற்பட்ட வகுப்பார்களும் குறிப்பிடத் தகுந்த அளவு அரசியலிலும் சமுதாயத்திலும் முன் வந்திருப்பதையும் யாராலும்மறுக்க முடியாது. மற்றும் இவ்வியக்கம் தோன்றி பார்ப்பனரல்லாத மக்களைத் தட்டி எழுப்பி அவர்களது சுயமரியாதை உணர்ச்சியை கிளப்பிவிட்டிருக்காதிருந்
தால், சமத்துவத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மக்களை ஊக்கப்படுத்தாமல் இருந்தால், இன்றைய தினம் சென்னை ஹைகோர்ட்டு ஜட்ஜிகளில் நான்கு கனவான்களும் சென்னை சர்க்கார் நிர்வாக சபையில் இரண்டு கனவான்களும், மந்திரிகளில் இரண்டு கனவான்களும், ரெவினியூ போர்ட் மெம்பர்களில் ஒரு கனவானும் இடம்பெற்று இருக்கமுடியுமாஎன்பதை யோசித்தால் இவ்வியக்கத் தின்பலன் இனிது விளங்கும்.மேலும் இவ்வியக்கமானது சர்க்காரிடம் அரசியல்
சுதந்திரம் கேட்பதிலும் அதன் மூலம் கிடைத்ததைப் பெற்று, அரசாங்கத்திற்கும்
குடி அரசு - 1929 @) 164
நாட்டிற்கும் திருப்தி உண்டாகும்படி அவைகளை நடத்திக்காட்டி மேற் கொண்டும் சுதந்திரம் கேட்பதிலும் இந்தியாவில் வேறு எந்த மாகாணத்திற்கும் சமூகத்திற்கும், இயக்கத்திற்கும் இவ்வியக்கம் எந்த விதத்திலும் பிற்பட்ட தல்லவென்றே சொல்லுவோம்.மற்றும் வெள்ளைக்கார அரசாங்க மேற்பட்டு
150 வருஷ காலத்தில் நமது பார்ப்பனரல்லாத மக்களில் எவ்வளவு பேர்:
படித்திருந்தார்களோ அந்த எண்ணிக்கையை ஒரு பத்து வருஷத்தில் நமது இயக்கம் இரட்டிப்பாக்கி இருக்கின்றது. பெண்கள் விஷயத்திலும் அது போலவே கல்வி விஷயத்தில் பன்மடங்கு அதிகமாக்கி இருக்கின்றது. இவைகள் மற்றெல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.இவ்வியக்கமானது. ஏற்பட்டு 10 வருஷ காலத்திற்குள்இவ்வளவு பலனையும் சகலத் துறைகளிலும் முன்னேற்றத்தையும் கொடுத்து எவ்விதத்திலும் அசைக்க முடியாமல் மேற் போய்க் கொண்டிருப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் மற்ற காரணங்கள் எல்லாவற்றையும் விட ஒரே ஒரு காரணம் தான் மிகமிக முக்கிய மானதாகும் என்போம். அதென்னவெனில் இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர விடாமல் வெகு ஜாக்கிரதையாக கவனித்துப் பாதுகாத்துக் கொண்டு வந்ததும் பார்ப்பனர்களை. சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று இவ்வியக்கவிதிகளில் ஒரு விதியை முக்கிய விதியாக ஏற்படுத்திக் கொண்டிருப்பதுமேயாகும். இவ்வியக்கம் தோற்றுவித்த தலைவர்களை இவ்வியக்க சம்பந்தமாக எதற்காகப் போற்ற வேண்டுமென்
றால் இவ்வியக்கம் ஆரம்பித்தபோதே பார்ப்பனர்களை இதில் சேர்க்கக் கூடா தென்று கருதியதற்கும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சேர்த்துக் கொள்ளா திருக்கும்படி சட்டம் செய்ததற்கும் தான் முக்கியமாய் போற்றிப் பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட அருமையான ஒரு காரியம் இப்போது சில தலை வர்கள் என்பவர்களால் மாற்றப்படப் போவதாகத் தெரிய வருவதைக் கண்டு
நாம் மிகவும் வருந்துகின்றோம்.
இவ்வளவு காலம் இவ்வளவு எதிர்ப்பையும் சமாளித்து நிலைத்து இவ்வளவு உச்ச ஸ்தானம் பெற்று முற்போக்கடைந்து வரும் இவ்வியக்கத்திற்கு, இப்போது பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தத் தலைவர்கள் என்பவர்கள். வேறு எந்தக் காரணத்தைக் கொண்டு பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாக சொல்ல வந்தாலும், பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுவது என்கின்ற முடிவுக்கு வந்தால் அன்றே இந்த இயக்கம் தோல்வி அடைந்துவிட்டது. செத்து போய் விட்டது என்பதை மாத்திரம் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.நமது நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இப்போது இந்த மகாநாட்டில் தலைவர் யார் என்பதைப் பற்றிய கவலை சிறிதும் வேண்டிய தில்லை என்பதே நமது அபிப்பிராயம், ஏனெனில் எந்தத் தலைவர் வந்தாலும் பொது ஜனங்களை மீறி அவர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் ஒன்றையும் செய்து விடமுடியாது. ஆதலால் அதைப் பற்றி அதிகக் கவலைப்பட
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வேண்டியதில்லை...
ஆனால்,பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளுவது என்கின்ற விஷயம் நிறைவேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் மிகவும் முக்கியமான தாகும். இந்த ஆபத்தான பிரச்சனை வருகின்ற முக்கியமான காலத்தில் இம்மகாநாடு தெலுங்கு நாட்டில் கூடுவது நமக்கு மிக்க பலவீனமென்றே தோன்றுகின்றது. ஏனெனில் தெலுங்கு நாட்டு மக்களுக்கு இவ்விஷயம். அவ்வளவு தூரம் கவலைப்படத்தக்கதாக இல்லை. அவர்களுக்கு இன்னும் சரியானபடி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயம் அர்த்தமான தாகவே சொல்வதற்கில்லை. இதற்கு முக்கிய உதாரணம் என்னவென்றால்.
ஆந்திரதேசத்தில் இன்னும் காங்கிரசுக்கு மதிப்பும் ஆதரவும் இருப்பதேயாகும். காலம் சென்ற தலைவர் பனகல் அரசர் மதுரை மகாநாட்டில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்ததும் கோயம்
புத்தூர் மகாநாட்டில் பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் சேரவேண்டும் என்கின்ற தீர்மானம் கொண்டு வந்ததும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் விஷயத்தின். உண்மைத் தத்துவத்தை உணராததேயாகும். காரணம், என்னவெனில், மத சம்பந்தமான வலையில் சிக்கியிருந்ததுடன் புராணங்களிலும், மூடப்பழக்க வழக்கம் ஆகியவைகளிலும் அவருக்கு குருட்டு நம்பிக்கை இருந்து வந்ததேயாகும். அன்றியும் அவர் தன்னை க்ஷத்திரியர் என்று நம்பிக் கொண்டிருந்தவர்! ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தை உணர்ந்த பிறகும் பார்ப்பனரல்லாத வாலிபர் இயக்கத்தின் தத்துவத்தை உணர்ந்த பிறகுமேதான் பார்ப்பன பார்ப்பனரல்லாத வித்தியாசத்தையும் அறிந்ததுடன் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு தக்க காரணங்கள் இருப்பதையும் ஒருவாறு உணர்ந்தார். ஆந்திர தேசத்து பார்ப்பனரல்லாதார்கள் இனியும் மதசம்பந்தமான புராணங் களிலும் குருட்டு நம்பிக்கைகளிலும் ஈடுபட்டவர்களாவார்கள். எவ்வளவுக் கெவ்வளவு குருட்டு நம்பிக்கையிலும் புளுகுப் புராணங்களிலும் ஈடுபட்டிருக் கின்றார்களோ: அவ்வளவுக் கவ்வளவு அவர்களை மேதாவிகள் என்றும் பெரியவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மதசம்பந்தமாய் எப்படி அவர்கள் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டு பார்ப்பனர்களையும் அவர்களது கட்டுப்பாடான சூட்சி இயக்கங்களையும் வழிகாட்டியாகவும் ஆதாரங்களாகவும் கொண்டு பின்பற்றுகின்றார்களோ: அதேபோல் அரசியல் விஷயத்திலும் குருட்டு நம்பிக்கை உடையவர்களாகி அவர்களது கட்டுப் பாடான கொள்கைகளிலும் சூழ்ச்சி இயக்கங்களிலும் நம்பிக்கை வைத்து அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகின்றார்.
கள். எனவே மூடநம்பிக்கைகளிலிருந்தும், கண்மூடி பின்பற்றும் குருட்டு நடவடிக்கைகளிலிருந்தும் என்று ஆந்திர தேசத்தார்கள் விடுதலை பெறுகின் றார்களோ அன்றுதான் அவர்கள் பார்ப்பனர் களின் மதப்புரட்டுகளிலிருந்தும் அரசியல் புரட்டுகளிலிருந்தும் விடுதலைய டையமுடியும். ஆதலால் அது
குடி அரசு - 1929 @) 166
வரையில் நாம் எந்த வகையிலும் ஆந்திர தேசத்தார்களை பின்பற்றுவது
மறுபடியும் குழியில் போய்விழுவதையே ஒக்கும்.
பத்துப் பன்னிரண்டு வருஷமாக எவ்வளவோ ஆபத்துக்களினிடை
யிலும் தொல்லைகளினிடையிலும் காப்பாற்றப்பட்ட இந்த அருமையானதும், ஒப்பற்றதானதும் இன்றியமையாததானதுமான இயக்கத்தை நெல்லூரில் சாவடிக்காமல் காப்பாற்றவேண்டியது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களின்.
முக்கிய கடமையாகும். இந்த பத்து வருஷகாலமாய் இவ்வியக்கத்தை
தோற்றுவித்து அதிலேயே இரவும் பகலும் உழைத்து வந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட இந்த நான்கைந்து வருஷமாக இவ்வியக்கத்தில் மேல்
மினுக்கியாய் கலந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு எப்படி அதிகமாகத் தெரியக் கூடும் என்றும் எப்படி உபதேசம் செய்ய யோக்கியதை உண்டாகும் என்றும் சில நண்பர் நம்மை கேள்வி கேட்கலாம். அது சரியான கேள்வியேயாகும்.
ஆனாலும், அதைப் பற்றி நாம் இங்கு அதிகம் விவரிக்கும் வேலையில் ஈடுபடாமல் நமக்குச் சிறிதளவாவது பாத்தியமுண்டு என்று பொதுவாக சொல்லிக் கொள்வதுடன், எந்தக்காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை. இவ்வியக்கத்தில் சேர்த்தால் இவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டதுபோல் இயக்கம் செத்து பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் மாறிவிடும் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக உறுதியாய்ச் சொல்லுவோம். பார்ப்பனரல்லாத தலைவர்களில் சிலர் இவ்வியக்கத்தில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டியதற்கு பல விதமான அரசியல் காரணங்களைச் சொல்லி நம்மை வசப்படுத்த முயற்சிக்கக் கூடும். அரசியல் காரணங்களே நமக்கு முக்கியமல்ல. அன்றியும் பார்ப்பனர்களுக்குள்ள. அரசியல் பங்கை மோசம் செய்ய வேண்டும் என்றும் நாம் சொல்வதில்லை.நமது கொள்கைக்கும் நன்மைக்கும் விரோதமில்லாத பார்ப்பனர்களுக்கு அவர்களது பங்கைக் கொடுக்கநாம் தயாராகவே இருக்கின்றோம்.அரசியலில் நன்மையான. காரியங்களுக்கு அவர்களுடன் ஒத்துழைக்கவும் அவர்களது ஒத்துழைப்பை
ஏற்றுக் கொள்ளவும் தயாராயிருக்கின்றோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் நமதியக்கத்தில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளாததாலேயே அரசியல் தத்துவம் கெட்டுப் போவதாயிருந்தால் நமக்கு அதைப் பற்றி சிறிதும் கவலையில்லை. அவர்கள் இல்லாமல் அரசியலைக் கைப்பற்ற முடியுமா முடியாதா என்பதை ஒரு கை பார்த்துவிடலாம்.
வெள்ளைக்காரன் இல்லாமல் அவர்களுடைய சம்பந்தமே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தலாம், நடத்த வேண்டும் என்கின்ற கொள்கை உடையதான காங்கிரசில் சேர வேண்டும் என்று கருதுகின்ற பார்ப்பனரல்லாத தலைவர்கள், பார்ப்பனர்கள் இல்லாமல் அவர்களைச் சேர்க்காமல் அரசியலை நடத்த முடியாது.அரசியலைக் கைப்பற்ற முடியாது என்று சொல்ல வருவார்களானால் அதை நாம் எப்படிநம்பவோ ஏற்கவோ முடியும் என்று கேட்கின்றோம்.அன்றி.
யும்12 வருஷ காலமாக இந்தக் கொள்கையுடனேயே இந்த மாகாணத்தில் எவ்வ
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ளோ எதிர்ப்புக்கிடையில் அரசியலை சரிவர நடத்தியாய் விட்டது. அன்றியும் இந்தமாகாணத்தைப் போல் இந்தியாவில் வேறு எந்த மாகாணமும் அரசியலை நடத்தவில்லை என்கின்ற பெருமையும் பெற்றாய்விட்டது.இதற்கு விரோதமாய் இருந்த இயக்கங்களின் சமூகங்களின் ஆதிக்கங்களையெல்லாம் அடக்கியுமாய் விட்டது.
இன்னிலையில் இனி வரப்போகும் காலத்தில் இதற்கு மேற்கொண்ட எதிரியும் சூட்சியும் யாராலாவது செய்ய முடியும் என்று நினைப்பதற்கில்லாத மாதிரியான எதிர்ப்பை அனுபவித்து தேர்ச்சியும் பெற்றாய் விட்டது. எனவே இனி எதற்காக பயப்படவேண்டும் என்பது நமக்கு புலனாகவில்லை. ஆகை
யால் இது விஷயத்தில் இனி விவாதித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.
தமிழ்நாட்டு மக்கள் நெல்லூர் மகாநாட்டுக்கு பிரதிநிதிகளாக தாராளமாய் ஆயிரக்கணக்காய் செல்ல வேண்டியதும், அங்கு சென்று இவ்விஷயத்தை தலைகாட்டாமல் ஒரே அடியாய் அடிக்க வேண்டியதும் தவிர வேறு எவ்வித. யோசனையும் செய்ய வேண்டியதில்லை என்றே தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
இப்போது அலட்சியமாய் ஏமாந்து இருந்துவிட்டு பிறகு கவலைப்படு. வதிலேயோ, அப்படி மீறித் தீர்மானிக்கப்பட்டு விட்டால் இயக்கத்திலிருந்து
பிரிந்து போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பதிலேயோ எவ்வித புத்திசாலித்தனமும் ஏற்பட்டுவிடாது. ஏனெனில், இப்போதே அந்தத் தொல்லை ஏற்படாமல் தடுக்க சவுகரியமான வழி இருக்கும்போது அதைவிட்டு நாளைக்கு ஒருவழியைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று கருதுவது மிக்க மதியீனமான காரியமாகும்.
கடைசியாக நாம் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது பார்ப்பனரல்லா
தார் இயக்கத்தில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக் கப்பட்டுவிட்டால் அது தென் இந்திய நலவுரிமைச் சங்கத்தை மாத்திரம் பாதிப்பதென்பதல்லாமல் சுயமரியாதை இயக்கத்தையும் பார்ப்பனரல்லாத வாலிபர் இயக்கத்தையும் சிறிதாவது பாதிக்காமல் போகாது என்பதே. மேற்கண்ட இவ்விரண்டு இயக்கங்களிலும் பற்றுள்ளவர்களும் நெல்லூர். மகாநாட்டுக்குச் சென்று பார்ப்பனர்களை சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுவது டன்மேற்கண்ட இரண்டு இயக்கக்கொள்கைகளையும் அதாவது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் வாலிப இயக்க கொள்கைகளையும் இதில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டியது முக்கிய கடமையாகும்.
நெல்லூர் மகாநாட்டில் ஜில்லா வாரியாக ஓட்டு எடுக்கப்படுமாதலால் ஒவ்வொரு ஜில்லாவிலும் நூற்றுக்கணக்கான அங்கத்தினர்கள் இப்பொழுதே. தங்களை அங்கத்தினர்களாக பதிவு செய்து கொண்டு கூட்டம் கூட்டமாக வர வேண்டியது அவசியத்திலும் அவசியமே.
குடி அரசு - தலையங்கம் - 22.09.1929
குடி அரசு - 1929 @) 168
நண்டும் படேல்
திருபடேல் அவர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்து செய்துவந்த பார்ப்பனப்
பிரசாரத்தைப்பற்றி “ஜஸ்டிஸ்” “திராவிடன்” “குடி அரசு' “குமரன்” “தமிழ்நாடு” “தமிழன்” “சென்னை வர்த்தமானி” “நாடார் குலமித்திரன்' முதலிய பல பத்திரிகைகள் கண்டித்தெழுதி இருந்தது வாசகர்களுக்குத் தெரிந்த விஷய மாகும். ஏறக்குறைய இவைகளெல்லாம் நமது பார்ப்பனர்கள் திரு.படேல் தகவலுக்குக் கொண்டு போகப்படாமல் சூழ்ச்சிகள் செய்திருந்தாலும் ஆங்காங்கு சென்ற இடங்களிலெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளாலும் ஆங்காங்கு இவருக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளாலும் ஒருவாறு
அறிந்துதான் இருக்க முடியுமென்று சொல்லுவோம்.எப்படியெனில் திருபடேல் மேற்கண்ட பத்திரிகைகள் மீது பாய்ந்து தனது முழு விஷத்தையும் கக்கி அவைகளை யாரும் படிக்கக் கூடாதென்று சொல்லி வருவதால் அவற்றிலுள் ளது இன்னது என்பதை உணராமல் இப்படிச் சொல்லியிருப்பாரென்று நினைப்பதற்கில்லை.தவிரவும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு தனது வருத்
தத்தை தெரியப்படுத்தியிருப்பதாலும் ஒருவாறு விஷயங்கள் தெரிந்திருக்கலாம். தவிரவும் மதுரையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பல நண்பர்களைக் கண்டு சம்பாஷித்திருப்பதுடன், சுயமரியாதை இயக்கத்தின் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்” பத்திரிகையின் பிரதிகளில் 10,15 வாரப் பிரதி களையும் வாங்கிப் பார்த்ததாகவும் தெரியவருகிறது. இவ்வளவும் தெரிந்த பிறகு தமிழ்நாட்டைவிட்டு வெளியேறி மைசூர் ராஜ்யத்திற்குச் சென்றதும். பெங்களூரில் ஒரு பெரிய கூட்டத்தில் பழையபடியே பேசியிருக்கின்றார்.
“தாழ்த்தப்பட்டவர்களின் நன்மைக்கு உழைப்பதாகச் சொல்
லிக் கொண்டு ஒரு சிலர், சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்றை ஆரம்பித்து இந்திய நாட்டிற்குப் புனிதமானவைகளை அழிப் பதும், ஸ்திரீகளின் மேன்மைக்குப் பங்கம் விளைவிப்பதும் இந்து மதத்தைத் தாக்குவதும், கோடிக் கணக்கான மக்களால் பூஜிக்கப்படும் இராமனை
யும் சீதையையும் குற்றம் சொல்லுவதும், பிராமண சமூகத்தின்மீது துவேஷம் உண்டு பண்ணுவதுமான காரியங்களைச் செய்து வருகிறார் கள். இதை யோக்கியமான அரசாங்கம் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது.”
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
என்றும்,
“பிராமணர் மற்றும் பிராமணரல்லாதார் பிளவுகளை சர்க் காரே உண்டாக்கி யோக்கியதையும் சக்தியுமற்றவர்கள் தலையில் சுயராச்சியப் பொறுப்பு பெறுமாறு செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலை
நிறுத்திக் கொள்ளப் பார்க்கின்றார்கள்”'
என்றும்,
“தற்போது தென்னிந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பிராமண - பிராமணரல்லாத சச்சரவுக்கு மேற்கண்ட இரு சமூகத்தாரைச் சேர்ந்த வர்களின் அதிகாரப் பதவி போட்டியே மூல காரணம்”
என்றும்,
“ஜனத் தொகையில் சிறுபான்மையான பிராமணர்களைக் கொண்டு பெரும்பான்மை ஜனத் தொகையாளரான பிராமணரல்லா
தார் அச்சப்படுவது அவமானம்”
என்றும்,
“பிராமணரல்லாதார் இயக்கம் தென் இந்தியாவில் முதல் முதல் மைசூரில்தான் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது”
என்றும்,
“சர்க்கார் ஊழியம் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல”
என்றும்,
“யோக்கியதையும், திறமையுமுடையவர்கள் சர்க்கார் உத்தி யோகம் பெறவேண்டும்”
என்றும், மற்றும் ஏதேதோ உளறியிருக்கின்றார். இவைகள் அநேகமாக திரு.படேல் தமிழ் நாட்டில் இருக்கும்போதே சொன்ன வார்த்தைகளே தவிர, பெங்களுருக்குச் சென்ற பிறகு புதிதாகச் சொன்னவைகளல்ல. இவைகளுக் கெல்லாம் முன்னமேயே பதில் சொல்லப்பட்டிருப்பதை திரு.படேல் சிறிதாவது கவனித்து அதற்கு எவ்வித சமாதானமும் சொல்லாமல் திருப்பித் திருப்பி அதையே சொல்லிக் கொண்டிருப்பது யோக்கியப் பொறுப்புடைய செய்கையாகுமா? என்பதைக் கவனித்து செய்யக்கூடிய முடிவை வாசகர். களுக்கே விட்டுவிடுகின்றோம்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் இன்னது என்பது செங்கற் பட்டு மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களாலும், ஆங்கு நிர்ணயிக்கப் பட்டு எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளினாலும் யாவரும். தெளிவாக உணர்ந்திருக்கலாம்.அப்படியிருக்கும்போது சுயமரியாதை இயக்கத்
திலுள்ள குற்றம் இன்னது என்பதாக ஏதாவது ஒன்றை திரு.படேல் குறிப்பிட்டுக்
குடி அரசு - 1929 @) 170
காட்டி தூஷித்து வந்திருக்கின்றாரா? என்று கேட்கின்றோம்.
இவ்வியக்கம் இதுவரை தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில் எவ்வித கவலையும் எடுத்துக் கொள்ளவில்லையா? என்று கேட்கின்றோம். இதை திருபடேல் அறிய முடியாமற்போனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்ந்திருப் பார்களென்பது மாத்திரம் உறுதி. அதாவது தென்ணாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் இது சமயம் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள மறுத்து தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பதும், வேறு மதத்தில் சேர: வேண்டுமென்பதாக தீர்மானித்துக் கொண்டிருப்பதும் சுயமரியாதை இயக்கத்தினாலல்லவா? என்பதைப் பொது ஜனங்களே சிந்தித்துப் பார்க்கட்டும்.
மற்றும் இந்து மதத்தையும், இந்திய நாட்டிற்குப் புனிதமானவை களையும், ஸ்திரீகளின் மேன்மைகளையும், இராமனையும் சீதையையும் தாக்குவதாக அவர் சொல்லுவதற்கு ஒரு ஆதாரத்தையும் அவர் எடுத்துக் காட்டவே இல்லை.
“இந்து மதம் என்றால் என்ன?”
“இந்து மதம் என்றால் என்ன?”
“இந்து மதம் என்றால் என்ன?”
என்று மும்முறை திரு.படேலைக் கேட்கின்றோம். இதற்கு திருபடேல்
பதில் சொன்னாலும் சரி அல்லது அவர்தலைவர் திருகாந்திபதில் சொன்னாலும்
சரி, இதைப் பற்றி திரு.காந்தியையே பெங்களூரில் நேரில் கேட்டதற்கு, “இந்து மதம் என்பதாக குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றும் இல்லையானாலும், இந்துமதம் என்று சொல்லிக் கொண்டு நமக்கு வேண்டியபடி சீர்திருத்தங்கள் செய்வதற்கு வசதி இருப்பதால் அப்படி ஒன்றை வாயளவில் சொல்லிக் கொள்வது நல்லது” என்று அவரே பதில் சொன்னார். இதைச் சொல்லும்போது திரு.எஸ்.இராமநாதன் அவர்களும் பக்கத்தில் இருந்ததுடன் திரு.காந்தி ஆங்கிலத்தில் சொன்னதை திரு.ராமனாதன்தான் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார். அப்பொழுதே நாம், அப்படியானால் இந்துமதம் என்பதாக ஒரு போலி பெயரைச் சொல்லிக் கொண்டு திரு.காந்தி ஒரு சீர்திருத்தத்தைச் செய்வ தும்,கொஞ்சநாள் பொறுத்து அதே இந்து மதம் என்பதாகச் சொல்லிக் கொண்டு, திருவாளர்கள் சத்தியமூர்த்தி, எம்.கே.ஆச்சாரி போன்றவர்கள் மற்றொரு “சீர்திருத்தத்தைச் செய்வதுமாயிருந்தால், மக்களுக்கு என்றைக்குத்தான் உண்மைச் சீர்திருத்தம் ஏற்படுவது? ஆதலால் இந்து மதம் என்று சொல்லிக் கொண்டுயாரும் எவ்வித புரட்டும் செய்யாமலிருக்கச் செய்வதற்காக இந்துமதப் புரட்டையேவெளியாக்கிஅதை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்பதாக
பதில் சொன்ன காலத்தில் திரு.காந்தியவர்கள் ஒன்றும் மறுமொழி பேசாமல் “மறுபடியும் சந்தித்துப் பேசலாம்” என்று சொன்னார். இதை உடனே அங்கேயே திருசி.இராஜகோபாலாச்சாரியாரிடம் சொல்லிவிட்டு வெளிவந்ததுடன் இனியும் இதைப் பற்றி திரு.காந்தியுடன் பேசுவதில் பயனில்லை என்று திரு.எஸ்.இராம
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
னாதனிடமும் சொல்லி விட்டு ஈரோட்டிற்குத் திரும்பி விட்டோம். அவர்களை இன்றும் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம். ஆகவே, அன்று முதல் இன்று வரை:
திரு.காந்தி முதல் வேறு யாரும் பதில் சொல்லாமலே இருந்துவிட்டு “சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தை தாக்குகின்றது” என்று சொல்வதில் கடுகளவாவது யோக்கியப் பொறுப்போ நாணயமோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். மற்றும் “இந்தியாவுக்கு புனிதமான” எதை நாம் காப்பாற்ற முயற்சிக்கின்றோம் என்பதைப் பற்றியாவது திருபடேல் ஆதாரம் எடுத்துக் காட்டியவரல்ல. திரு.காந்தி இந்தியாவுக்கு வந்தபோது வருணாசிரம தர்மம் இந்தியாவுக்குப் புனிதமானது என்றார். திருமாளவியா ஜாதி வித்தியாசமும், அதற்கேற்ற இட வித்தியாசமும் இந்தியாவிற்குப் புனிதமானது என்றார்.
டாக்டர் மூஞ்சி “வைத்திய சாஸ்திரப்படி 18 வயதில்தான் பெண்களுக்குக் கலியாணம் செய்ய வேண்டியது அவசியமானாலும் பெண்களை 12 வயதில் கலியாணம் செய்வதுதான் இந்தியாவுக்குப் புனிதமானது” என்றார்.
திருவாளர்கள் எம்.கே. ஆச்சாரியாரும் சி.ராஜகோபாலாச்சாரியாரும் “மனுதர்ம சாஸ்திரமே இந்தியாவுக்குப் புனிதமானது” என்றார்கள்.
“திரு.எஸ்.சத்தியமூர்த்தி சாஸ்திரியோ பராசர ஸ்மிருதியும், பெண்க ளுக்கு பொட்டுகட்டி சாமிகள் பேரால் விபசாரத்திற்கு விட்டு அதன் தரகு மூலம் கோயில் குருக்கள் வயிறு வளர்ப்பதுதான் இந்தியாவுக்கு புனிதமானது” என்றார். எனவே இவைகளில் திரு.படேலுக்குத் தெரிந்தவரையில் இந்தியாவுக்குப் புனிதமானது என்ன என்று கேட்கின்றோம்.
திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார் மகாகனம் சீனிவாசசாஸ்திரி, சிராஜகோபாலாச்சாரி ஆகிய மூவர்களும்இந்தியாவுக்குபுனிதமானது என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்கிறாரா?என்று கேட்கின்றோம்.
இந்தப் புனிதங்களைத் தவிர வேறு எந்தப் புனிதத்தை சுயமரியாதை: இயக்கம் தாக்கிற்று; அல்லது தகர்க்குகின்றது என்று திருபடேல் தைரியமாய் வெளியிலெடுத்துச் சொல்வாரானால் அவருக்கு திரு.காந்தியால் அளிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் சர்தார் பட்டத்திற்கு உண்மையான யோக்கியதை: உண்டு என்று சொல்லுவோம். தவிர இராமனையும் சீதையையும் சுயமரியாதை இயக்கம் இழித்துச் சொல்லுகின்றது என்று திருபடேல் சொல்லி இருக்கின்றார். எந்த இராமனையும் சீதையையும் என்று திருபடேல் சொல்லி இருந்தால் யோக்கியமாக இருந்திருக்கும். பார்ப்பனன் காலில் விழுந்த ராமனையா -
மாமிசம் சாப்பிட்ட ராமனையா - கொலை செய்த ராமனையா-பார்ப்பனரல்லா தவனாகிய “சம்பூகன் என்னும் சூத்திரன்” கடவுளை தோத்திரம் - தபசு செய்ததற்காகக் கொன்ற இராமனையா? சுயநலத்திற்காக தம்பி பேச்சைக் கேட்டுக்கொண்டு நியாய அனியாயம் பார்க்காமல் பாரபட்சமாய் அண்ணனைக் கொன்ற ராமனையா? வருணாசிரமத்தை ஆதரித்த ராமனையா? தன் பெண் ஜாதியைஒரு பாமரன் பேச்சைக் கேட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டுபோய்
குடி அரசு - 1929 @) 172
விட்டு விட்டுவந்த ரா மனையா? கடைசியாக பெண் ஜாதி நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு நெருப்பிலும், குழியிலும் இறக்கிய இராமனையா? எந்த ராமனை? எந்தராமனை? என்றுதிருபடேலைக் கேட்கின்றோம். திரு.காந்தி ஒரு
சமயத்தில் மேற்கண்ட ராமன்களையெல்லாம் ஒப்புக் கொள்ளுவதில்லை என்றும் தன்னுடைய ராமன் வேறு என்றும் சொன்னார். ஆனால் திருபடேல்
சொல்லும் ராமன் மேல் கண்டராமாயண ராமனா அல்லது திரு.காந்தி சொல்லும் வேறு ராமனா? என்று சொல்லிவிட்டாரானால் ராமனைப் பற்றிய தகராறு ஒரு வார்த்தையில் ஒழிந்து போகும். அதுபோலவேநாம் குற்றம் சொல்லும் சீதையும் ராமாயண சீதையா? அல்லது திருகாந்தியுடைய “வேறு சீதையா” என்பதையும் சொல்லி விட்டால் சீதை விஷயமும் ஒரு வரியில் தீர்ந்து போகும்.அது வரை
ராமர் இழிவும் சீதை குற்றமும் மூடிவைக்க முடியாதென்று கண்டிப்பாய்ச் சொல்லுவோம். இதைச் சொல்லிப் பாமர மக்களை கிளப்பி விடுவதற்காக சுயமரியாதை இயக்கம் சிறிதும் பயப்படாது என்றும் சொல்லுவோம். சுயமரியாதை இயக்கம் கோயில்களை இடிக்கவேண்டுமென்று சொல்வதாக ஒரு இடத்தில் சொன்னதாகத் தெரிகின்றது. எந்தக்கோயிலை சுயமரியாதை இயக்கம் இடிக்க வேண்டுமென்கின்றது என்பதைச் சொன்னாரா? திரு.காந்தியே கோயில்களை விபசாரிகள் வீடுகள் என்று சொல்லியிருக்கிறார். திரு.காந்தியால் போற்றப்படும் இயேசுநாதர் கோயில்களை கள்ளர் குகை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள். மற்றும் மகமது நபி விக்கிரகங்கள் வைத்து வணங்கும் கோயில்களை இடித்தால் புண்ணியமுண்டு என்று சொல்லி இருக்கிறாராம்.
இன்னும் எத்தனையோ பெரியோர்கள் சித்தர்கள் ஞானிகள் என்பவர்:
கள் கோயில்களைப் பற்றி எவ்வளவோ கண்டித்திருக்கின்றார்கள். அப்படி யிருக்க திரு.படேல் காப்பாற்ற ஆசைப்படும் கோயில் எது? சுயமரியாதை இயக்கத்தால் இடிக்கும் கோயில் எது? என்று சொன்னால் நலமாயிருக்கும்.நிற்க,
சர்தார் படேல் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க சர்க்காரை தஞ்சமடைகிறார்.
சர்தார் படேலின் வீரமே வீரம்! இவர் சர்தார் படேலா அல்லது கோழை, பேடி படேலா என்பதை முடிவுசெய்யும் பொறுப்பைஅவரை இங்கு அழைத்துவந்த பார்ப்பனர்களுக்கே விட்டுவிடுகின்றோம். இது முன் ஒரு சமயம் இதே மாதிரி பேசிய திருவாளர்கள் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்கார் ஆகியவர்களின் செய்கைக்கு ஒரு உதவி படேலின் செய்கையாயிற்றே ஒழிய மற்றபடி இதில் சர்தார்தனம் எங்கே என்று கேட்கின்றோம். தவிர, ஒரு இடத்தில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் சண்டைக்கு இரு வகுப்பாரினுடையவும் உத்தியோகப் போட்டியே காரணம் என்று சொல்லிவிட்டு மற்றொரு இடத்தில் பார்ப்பன ரல்லாதார் சுயநலத்தினால் ஏற்பட்ட இயக்கம் என்றும், மற்றொரு இடத்தில் சர்க்காரால் பார்ப்பனரல்லாதாரை தூண்டிவிட்டு ஏற்படுத்தப்பட்ட இயக்க.
மென்றும், முன்னுக்குப்பின் விரோதமாய் உளறிக் கொட்டி இருக்கிறார். இதிலி ருந்து இவ்வியக்கத்தைப் பற்றி திரு. படேல் எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருக்கின்றார் என்பது விளங்குகின்றது. கடைசியாக திரு.படேல் தன்னை, பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனரல்லாதார்.
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
அரசியலை நடத்தவும், உத்தியோகம் பெறவும் யோக்கியதை இல்லையென்று சொல்லிவிட்டதுடன் இந்த மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் பார்க்காமலும் அரசியலை நடத்த விடாமலும் தாங்கள் பார்த்துக் கொள்வதாய் பந்தயம் கூறுகிறார். இதிலிருந்து அவரது பார்ப்பனரல்லாதார் தன்மையும் அவருக்கு இருக்கும் பார்ப்பனரல்லாதார் வகுப்பு அக்கரையும் தானாகவே விளங்கும். இதுவே வடநாட்டுத் தலைவர்களின் யோக்கியதையை தாராளமாய்
விளக்குகின்றது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.09.1929
குடி அரசு - 1929 @) 174
சர்க்காருக்கு கே!
சீர்திருத்தம் வாழ்க! பார்ப்பணீயம் வீழ்க!
இந்திய நாட்டில் சற்றேறக் குறைய ஐம்பது வருட காலமாக சீர்திருத்தக் காரர்கள் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்ததும் அந்நிய நாட்டு மக்களால் இந்திய சமூகத்தையே ஏளனம் செய்துகொண்டிருக்க இடம் தந்து கொண்டிருந்ததுமான “குழந்தை மணம்” என்னும் நகரும் பொம்மைக் கலியாணக் கொடுமையானது கடைசியாக இந்தியாவை “ஏக போகமாய் ஆட்சி
புரியும் அந்நிய அரசாங்கமாகிய” பிரிட்டிஷ் அரசாங்க உதவியாலேயே அதுவும் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு விட்டதற்கு பிரிட்டிஷ் சர்க்காருக்கு சந்தோஷத்தோடு மனப்பூர்வமாய் ஜே! சொல்லித் தீர வேண்டியநிலைமையில் இருக்கின்றோம். எனவே இந்திய சர்க்கார் நீடூழி வாழ விரும்புகின்றோம். சர்க்காரின் ஒத்துழைப்பும் அவர்களது மனப்பூர்வமான ஆதரவும் உதவியும் இல்லாதிருக்குமானால் சாரதா மசோதாவானது கண்டிப்பாய் நிறைவேறி இருக்காது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஆனால் சிலர் தேசியம் சுயராச்சியம் என்பவைகளின் பேரால் சர்க்காருடன் ஒத்துழைக்கக்கூடாது என்றும்; சர்க்கார் தயவை எதிர்பார்க்கக் கூடாது என்றும்; சீர்த்திருத்தங்களுக்கு, சட்டம் செய்யக் கூடாது என்றும்; வெகுசுலபமாய் பேசி மக்களை ஏமாற்றி வீரர்கள் ஆகிவிடலாம் ஆனால், இந்த சாரதாமசோதா விஷயத்தில் சர்க்கார். தயவு, சர்க்கார் ஒத்துழைப்பு, சர்க்காரால் கையாளப்பட வேண்டிய சட்டம் ஆகியவைகள் இல்லாமல் ஏதாவது ஒரு சிறிய விஷயத்தையாவது அமுலுக்குக் கொண்டுவரச் செய்ய முடியுமா என்று கேட்கின்றோம்.
சுயராச்சியம் பெற்ற பிறகு நமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை யெல்லாம் செய்து கொள்ளலாமென்றும், இப்போது இந்த சர்க்காருடன் ஒத்துழைத்து சீர்த்திருத்தம் பெறுவது அவமானமென்றும் சொல்லும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த மசோதா விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்களென் பதை யோசித்துப்பார்த்தால் இந்த சர்க்கார் இருக்கும்போது சீர்த்திருத்தமடைய
முடியுமா? அல்லதுஇது “ஒழிந்த” பிறகு அடைய முடியுமா? என்பது விளங்கா
மற் போகாது. உதாரணமாக இந்தக் குழந்தைமணத் தடுப்பு விஷயமானது சுமார். 20 வருடத்திற்கு முன்பிருந்து சட்டசபைகளில் பிரஸ்தாபித்து வந்திருப்பது யாவருக்கும் தெரியும். ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் வைதீகர்கள். என்பவர்களும், இந்து மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பவர்களும்
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தேசியவாதிகள் என்பவர்களும், ஆட்சேபனை செய்து கொண்டேதான் வந்திருக்கின்றார்கள். இந்த சமயத்திலும் தேசியவாதிகளே பெரும் முட்டுக் கட்டையாய் நின்று எவ்வளவோ சூட்சிகளுடன் ஆட்சேபித்துப் பார்த்திருக்
கின்றார்கள்.
“பழுத்த தேசாபிமானிகளும் பிரபல தேசியத் தலைவர் ”களுமாகிய திருவாளர்கள் மாளவியா, கேல்கார், மூஞ்சி, எம்கேஆச்சாரியார், கேவி.ரங்க சாமி ஐயங்கார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார், மோதிலால் நேரு ஆகியவர்கள். எல்லோருமே இந்த இருபதாவது நூற்றாண்டில் இடையூறாயிருந்திருக் கின்றார்கள் என்றால், இனி எந்த தேசியவாதியின் ஆதரவை எந்தக் காலத்தி லாவது எதிர்பார்க்கக்கூடுமா என்பதுதான் கேள்வி. இதில் மற்றொரு விஷய மென்னவென்றால், மேல் கூறிய எல்லா தேசியவாதிகளும் மசோதாவின் தத்துவத்தை ஒப்புக் கொள்வதாகச் சொல்லிக்கொண்டே ஆட்சேபித்திருக்கின் றார்களென்றால் இனி ஒப்புக் கொள்ள முடியாத விஷயத்தில் இவர்கள் ஆட்சேபனை எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
திரு.மாளவியா அவர்கள் தனது ஆட்சேபனைக்கு சொல்லப்பட்ட காரணமென்ன வென்றால் “14-வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லது தான்.ஆனாலும், ராஜியை முன்னிட்டு 2 வயதாக இருக்க வேண்டும்” என்றார். திரு.மூஞ்சே சொன்ன ஆட்சேபனையைக் கவனிப்போம். இவர். பார்ப்பனர் - பார்ப்பன மாணவர்களை மாமிசம் சாப்பிடவேண்டுமென்று சொல்பவர் - வைத்தியர் - இத்துடன் வைத்திய சாஸ்திரப்படியும் உடற்கூறு சாஸ்திரப்படியும் பெண்களுக்கு 18 வயதுக்கு முன் விவாகம் செய்வது கெடுதி என்கின்ற அபிப்பிராயம் கொண்டவர். அப்படி இருந்தும் இந்த மசோதா விஷயத்தில் 2 வயதுக்கு மேல் கலியாண வயது இருக்கக்கூடாது என்று வாதம் செய்தவர். திரு.மோத்திலால் நேரு எந்த மாமிசமும் சாப்பிடுவார், எந்தப் பானமும் செய்வார், 20 வயதுக்கு முன்னால் தங்கள் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வதில்லை என்றும் சொன்னார். அப்படி இருந்தும் அந்த மசோதாவின் ஜீவநாடியை பிடுங்கி விடக்கருதி சூட்சி செய்தவர். அதாவது அவசியமிருக்கின்றவர்கள் 14 வயதுக்குள்ளாகவும் கல்யாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு திருத்தம் கொண்டு வந்து மசோதாவை அடியோடுகவிழ்த்து விடப்பார்த்தார். திருகேல்கர், திருதிலகரின் ஸ்தானத்துக்கு வந்தவர்.அவரோ மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்ளுவதாய்ச் சொல்லி, ஆனால் வைதீகர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் சட்டம் செய்யக்கூடாது என்றனர். இனி சென்னைத் “தலைவர்களைப்” பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமிருக்காதென்றே நினைக்கின்றோம். எனினும் திருவாளர்கள் சேஷய்யங்கார், கே.விரங்கசாமி அய்யங்கார், எம்.கே.ஆச்சாரியார், எரங்களாமி ஐயங்கார் போன்ற “பரம்பரை தேசியவாதி” களின் யோக்கியதை இம்மசோதா. விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைக்கூர்மையாய் கவனித்து
குடி அரசு - 1929 @) 176
வந்தவர்களுக்கு விளங்காமல் போகாது. எனவே, நமது நாட்டிற்கென்றோ சமூகத்திற்கென்றோ எவ்வித திருத்தம் கொண்டு வந்தாலும் இந்தக் கூட்டத்தவர்களே அதாவது பார்ப்பனர்களே ஒருபுறம் தேசியத்தின் பேராலும், மற்றொரு புறம் மதத்தின் பேராலும், மற்றொரு புறம் சாஸ்திரத்தின் பேராலும், மற்றொரு புறம் மனச்சாட்சியின் பேராலும் தொல்லை விளைவித்து வருவதை வெகுகாலமாக பார்த்து வருகின்றோம். சாதாரணமாய் வினாவறியாக் குழந்தைகளை கடவுள் பேரால் பொட்டுக்கட்டி விபசாரிகளாக்குவதையும், மக்களை விபசாரத் தொழிலால் ஜீவனம் செய்யக்கூடாதென்றும் கருதி கொண்டு வரப்பட்ட சட்டங்கள் கூட மதத்தின் பேராலும், சாஸ்திரங்களின் பேராலும், சாமிகளின் பேராலும் ஆட்சேபிக்கப்படுமானால், அதுவும் பூரண சுயேச்சை விரும்பும் சங்க காரியதரிசியும் கற்ற பண்டிதர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட வருமான திரு.சத்தியமூர்த்திப் பார்ப்பனராலேயே எதிர்க்கப்படுமானால், இனி சாதாரண பார்ப்பனர்களாலும் அவர்கள் கலந்த இயக்கங்களாலும் நாம் எந்த விதமான சீர்திருத்தத்தை சுயராஜ்யத்தில், ராம ராச்யத்தில் எதிர்பார்க்கக் கூடுமென்பது நமக்கு விளங்கவில்லை. பொதுவாக இந்த பார்ப்பனர்கள். சர்க்காருக்கு விரோதமாகவும் சர்க்காருடன் ஒத்துழைக்கக்கூடாது; சர்க்காரை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுவதின் இரகசியம் எல்லாம், எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தசர்க்கார் பார்ப்பனரல்லாதமக்களுக்கு வசமாகக் கூடாதென்றும், பார்ப்பனரல்லாத மக்களுக்கு அனுகூலமாக ஏதாவது நன்மையோ சீர்திருத்தமோ செய்யஇடம் கொடுத்து விடக்கூடாது என்பதுமான கெட்ட எண்ணமே தவிர மற்றபடி சர்க்காரோடு ஒத்துழைக்கக் கூடாது என்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்போ, தேசியமோ, நாணயமோ இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
ஒத்துழையாமை என்பதற்கும், சர்க்கார் தயவு என்பதற்கும் ஏதாவது ஒரு
குறிப்பிட்டதும் நிலையானதுமான கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு பிறகு அதை யோக்கியமாய் அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதானால், அதைப்
பற்றி யோசிக்க வேண்டியது அவசியமாகும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு இஷ்டமானதும். தேவையானதுமான காரியமெல்லாம் ஒத்துழையாமையில் சேர்ந்ததென்றும் தேசியத்தில் சேர்ந்தது என்றும் சொல்லுவதும் நமது மக்க
ளுக்கு இஷ்டமானதும், தேவையானதுமான காரியங்கள் எல்லாம் சர்க்கார் தயவானதும் தேசதுரோகமானதுமான காரியங்கள் என்று சொல்லப்படுவதுமா னால் அம்மாதிரி தேசியத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தேசியத்திற்கும் ஒத்துழையாமைக்கும் சர்க்கார் தயவுக்கும் இந்த உலகத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் தான், பாஷ்ய கர்த்தாக்களா, மற்றொருவருக்கும் இவற்றில் உரிமை இல்லையா? என்றுதான் கேட்கின்றோம்.
முன் காலத்தில் அதாவது “இந்து” மூட) ராஜாக்கள் அரசாங்கத்திலும் இப்படியே செய்துவிட்டு இப்பொழுது வெள்ளைக்கார (அறிவாளிகள்? அரசாங்கத்திலும் இப்படியே செய்து நமது சமூகத்தை மிதித்துவைத்துக்
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கொண்டிருக்க கருதுவதை இனி அரை நிமிஷமும் நம்மால் சகித்திருக்க முடியாது என்பதை வெளிப்படையாயும் உறுதியாயும் சொல்லித் தீர வேண்டி இருக்கின்றது. அதற்காகவே சர்க்காருக்கு ஜே என்றும், பார்ப்பனீயம் வீழ்க! என்றும் சொல்லுகின்றோம்.
எந்தவிதமான அரசியல் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டானாலும் நமது நாட்டில் பார்ப்பனீயம் அடியோடு ஒழியுமட்டும் இந்த பிரிட்டிஷ்
சர்க்காருக்கு “அன்னிய” சர்க்காருக்கு பகுத்தறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி அறிவு வளர்ச்சியும் பெற்ற “நாஸ்திக” சர்க்காருக்கு “ஜே” சொல்லித்தீருவோம். இதனால் நாம் தேசத்துரோகியானாலும் சரி.சிலுவையிலும் அறையப்பட்டாலும்
சரி, கழுவில் ஏற்றப்பட்டாலும் சரி அவற்றிற்கு சிறிதும் கலங்க மாட்டோம். என்பதையும் தைரியமாய்ச் சொல்லுகிறோம். அஃதோடு இந்த சர்க்கார் எந்த நிலைமையில் எந்தக் காலத்தில் எப்படியானால் எந்த முறையில் எதிர்ப்பது என்பதுவும் நமக்கே தெரியும் என்று உறுதி கூறுவோம். நிற்க.
சாரதா மசோதாவானது இப்போது இந்திய சட்டசபையில் நிறைவேறி விட்டதாலேயே இந்தியாவுக்கு வேண்டிய சீர்த்திருத்தங்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்பதாகக் கருதி நாம் மகிழ்ச்சிப் பெருக்கடைவதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம். மற்றென்ன வென்றால் எந்த விதமான சீர்திருத்தத்திற்கும் வழக்கமாய் முட்டுக்கட்டையாய் உபயோகித்து வந்த மதம், சாஸ்திரம், கடவுள், கோபம் என்கின்ற புரட்டுகளும் பூச்சாண்டிகளும் இம்மசோதா விஷயத்தில் குப்பைத் தொட்டிக்குப் போக நேர்ந்ததையே எண்ணி எண்ணி மகிழ்ச்சிப் பெருக்கடைகின்றோம். ஏனெனில் இதன் மூலம் இந்தப் பார்ப்பனர்கள் மேற்கண்டமதப்பூச்சாண்டிக்கும் சாஸ்திரப்
புரட்டுக்கும் எவ்வளவு மரியாதை வைத்திருக்கின்றார்கள் என்பதையும் இவைகளைக் காப்பாற்ற என்ன தியாகமோ வீரமோ காட்டப்போகின்றார்கள் என்பதையும் பார்க்கப் போகின்றோம்.
தவிர, சில பார்ப்பனர்கள் இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் சத்தியாக்
கிரகம் செய்து சட்டத்தை மீறித் தண்டனை அடைந்து இந்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றார்களாம். இந்த செய்தியைக் கேட்ட மாத்திரத்தில், இந்த சட்டம் நிறைவேறிய சேதியைக் கேட்ட மாத்திரத்தில் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ அதைவிட எண்மடங்கதிகமான மகிழ்ச்சியை அடைந்தோம்.
ஏனென்றால் அவர்களது சத்தியாக்கிரகத்தையும் தியாகத்தையும்பார்த்து அவை வெற்றிபெற்றால் நம்முடைய தேவைகளுக்காக நாமும் அதுபோலவே நடந்து வெற்றி பெறலாம் என்றும், அந்தபடி அவர்கள் வெற்றி பெறாவிட்டால் இப்போதைப் போலவே சர்க்காருக்கு “ஜே” போட்டு அதன்மூலம் வெற்றி பெறலாம் என்றும் கருதியே மகிழ்ச்சியடைகின்றோம்.
நிற்க; இனி சம்மத வயதைப் பற்றிய விஷயம் ஒன்றுண்டு, ஆனால் நமக்கு அதைப் பற்றி அவ்வளவு கவலையில்லை.அது வயித்தியர்களுடைய
குடி அரசு - 1929 @) 178
விஷயமும் அவர்களது கடமையுமாகும். ஆனால் குழந்தை மணமே சுயமரியாதையை பொறுத்ததாகும். தவிர பார்ப்பனர்களும், சம்மத வயதைப்
பற்றி தங்களுக்கு அதிக கவலை இல்லையென்று சொல்லிவிட்டார்களாதலால் அது எக்கதியை வேண்டுமானாலும் அடையட்டுமென்றே சொல்லுவோம். அன்றியும் அது ஒரு இயற்கை உணர்ச்சியாகும். அதை எப்படி நடத்துவதென்று மனோதத்துவ ஆராய்ச்சியை சேர்ந்த விஷயமுமாகும்.அதை வைத்தியர்களும் அரசாங்கமும் கவனித்து ஒழுக்கத்திற்கும் சுயமரியாதைக்கும் உண்மையான. சுதந்திரத்திற்கும் மாறுபாடில்லாத வகையில் எப்படிச் செய்து கொண்டாலும். நமக்கு ஆட்சேபனை இல்லை.
இளி அடுத்தாற்போல் சட்டம் செய்ய வேண்டிய விஷயம் பிறவியில் ஆண் பெண், ஆகிய பல வித்தியாசம், உயர்வு, தாழ்வு ஆகிய ஜாதி வித்தியாசங் களையும் ஒழிப்பதற்கு வேண்டிய சட்டம் ஏற்படுத்த வேண்டியதேயாகும். இதை எல்லாவற்றிற்கும் முன்பாகவே செய்திருக்க வேண்டியதானாலும்
இதற்கும் மதமும் சாஸ்திரமும், கடவுளுமே முட்டுக் கட்டையாய் இருந்து வருவதால் ஏதாவது ஒருவகையில் மேற்கண்ட முட்டுகட்டை ஒழிந்தால் மற்றவைகளுக்கும் அவைகளை ஒழிப்பது சுலபமாகி விடுமாதலால் அதையும்
ஒருவிதத்தில் நன்மையாகவே கொள்ளலாம். பெண்களுக்கு வாழ்க்கையிலும் சொத்துக்கள் அனுபவத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டியது அறிவும் மனிதத்தன்மையுமுள்ள மக்களுக்கு மிகவும் யோக்கியமான காரியமாகும். ஆகையால் அதை உடனே கவனிக்க வேண்டுமாயும் தீண்டாமையைப் பற்றிக் கவனிக்க வேண்டுமாயும் இந்திய சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்வதுடன் சர்க்காரையும் சாரதா மசோதாவுக்கு அனுகூலம் செய்தது போலவே நல்ல பெயர் வாங்க வேண்டுமாகவும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.09.1929.
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
நமது மாவருந்தணைணர்கனின்
உருவன்படத் திறப்பு விழா
தியாகராயர் ஞாபகக் கட்முடத்தில் வபருங்கூட்டம்
தலைவரவர்களே! சகோதரர்களே! பெரியோர்களின் கட்டளையை ஏற்று கெளவவமடைய மனம் ஆசைப்படுகிறது. சர். தியாகராயருடன் நான் நட்பு பாராட்டியிருக்கவில்லை. ஆயினும் அவரையே தக்க பெரியார் எனக் கொண்டு அவர்பால் பக்தி கொண்டுள்ளேன். அவரை உண்மைத் தியாகி, வீரர். என்றே கூறுதல் பொருந்தும். உண்மையான தலைவர் என்று ஒருவரை: குறிக்கவேண்டுமானால் அது செட்டியாரையே குறிக்கும் என்று நான் சொல்லுவேன். உண்மைத் தியாகி, தேசத் தொண்டர், தலைவர் என்று கூறுவதற்கு என்ன அடையாளம் என்றால், சாபங்களையும், வைதல்களையும், இழிவுரைகளையும் பார்த்து பயப்படாமலும் தங்கள் கொள்கைகளை வாபஸ் வாங்காமலும் தைரியத்துடன் தங்கள் காரியங்களை நடத்துபவர்களே. உண்மைத் தலைவர்கள். சர். தியாகராயரை இங்கு தமிழ்நாட்டு “டயர்” என்று கூட எதிரிகளால் கூறப்பட்டது. அவரை தேசத்துரோகி என்றெல்லாம் கூறினர். அவரின் வீடு புகுந்தும் அடிக்கத் தலைப்பட்டனர். இவ்வளவு கஷ்டங்களை
யும் அவர் நேரில் அனுபவித்தனர். தேசத்துரோகி, டயர் என்ற இழிவுரை கட்கும், அடித்தல் போன்றவைகட்கும் சர். தியாகராயர் பயப்படாமல், பின் வாங்காமல், சிரித்துக் கொண்டே தம் காரியாதிகளை நடத்திக் கொண்டு போனார். இவ்வித தலைவர் தோன்றுவது அரிது. ஆனால் இப்படியில்லாமல் சமயத்துக்கேற்றபடி நடக்கும் தலைவர்களும் உண்டு. அவர்கள் தோன்றுவது சாதாரண இயற்கை. அவர்கள் வசவு வந்த காலத்தில் ஒளிவதும், புகழுரை: வந்த காலத்தில் தலையை யசைத்தசைத்து அநுபவிப்பதும் சாதாரண இயற்கையே. இவர்களின் பேர் இவர்கள் காலமானதற்குள் காற்றோடு காற்றாகி விடும். ஆனால், மேற்கண்டபடி எதற்கும் பயப்படாமல் தான் கொண்டகருமத்தை முடிக்கும் செயலானது இறந்த பின்னர் கூட இத்தகைய திறப்பு விழா போன்ற ஞாபகார்த் தக் காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது.
குடி அரசு - 1929 @) 180
மக்களின் முன்னேற்றத்திலும், நாட்டின் நலனிலுமே அவர் தன் காலத்தைக் கடத்தினார். எவரும் தமக்கு வரும் பிரதியுபகாரங்களை ஒதுக்கித் தள்ளுவது வெகு கடினம்: ஆனால், அவர் அத்தகைய பிரதியுபகாரங்களைத் தள்ளி அதையும் தம் நண்பர்கட்கே அளித்து வந்தார். பிரதியுபகாரங்களை அலட்சியம் செய்வதும் தியாக புத்தியேயாகும். தென்னாட்டு மக்களுக்கென எடுத்த முயற்சியில் அவரைப் போன்றவர்கள் எவருமேயில்லை.அத்தகைய பெரியாரின் உருவப் படத்தைத் திறந்து வைக்கக் காரணம் என்ன? கற்பூர
தீபம் காட்டி பூஜை செய்வதற்காகவாகவோ, அவரின் நன்மைக்கென பிரார்த்தனை கள் செய்வதற்காகவாவோ அன்று. அதையும் மூட பழக்க வழக்கம் என்றே நான் கருதுகிறேன்.அப்படியிருக்க இவ்விழா ஏன்? அவரை நினைப்பதற் கும், அவரைப் பார்த்து நாம் முன்னேறவும், அவரின் பெருந்தொண்டுகளை ஞாபகத்திற்குக் கொணர்ந்து அவரைப் பின்பற்றி பாக்கி விட்ட வேலைகளைச் செய்வதற்கு மேயாகும். எனவே அத்தகைய பெருந்தியாகியின் படத்தை திறந்து வைக்கின்றேன்.
குறிப்பு:- 24.09.1929 ஆம் நாள் தியாகராயர் ஞாபகக் கட்டிடத்தில் முப்பெருந் தலைவர்களாகிய சர்தியாகராயர், பனகால் அரசர், நாயர்பெருமான் ஆகியவர்களின். உருவப்படத் திறப்புவிழாவில் சர்தியாகராயர் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 29.09.1929
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
௬சமாமரியாதை
ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர்களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகு காலமாக ஒருஉயர்தரப் பாடசாலை நடந்துவரும் விபரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற
நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார் கள்.சில மாதங்களுக்கு முன்புதிரு. செளந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட்தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டைமகாஜனங்களும். மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள். அவ் வுபசாரப் பத்திரங்களுக்கு திரு.செளந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதேஇது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமூகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி, உதாரணமாக. அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளுவதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான். முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கம டைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்வித கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமூகத்தாருக்குள் இருக்கும் கொடுமை களை நீக்கும் படிசொல்ல தனக்கு எப்படி தைரியமுண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக் கெவ்வளவுீக்கிரத்தில் இவ்வருப்புக்கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகு மென்றும் அவசியம் செய்யவேண்டும் என்று தனது சமூகத் தலை வரை அடிபணிந்து கேட்டுக் கொள்ளுவதாகவும் சொன்னார். அதற்கிசைய அன்றுஅப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதி திராவிட மக்களை அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வுதாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும்.இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 29.09.1929.
குடி அரசு - 1929 @) 182
கதர் புரட்டு
கதர் துணியின் விலை விஷயமாகவும், கதர் போர்டார் அதிக விலை வைத்துக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதின் மூலமாகவும் “தமிழ்நாடு” பத்திரிகையில் ஒரு கதர் தொண்டருக்கும், திரு.ஸிராஜகோபாலாச்சாரிக்கும்
வாதம் நடந்து வருவதை, ஒரு நண்பர் நமக்கு அனுப்பிநமது அபிப்பிராயத்தை கேட்டிருக்கின்றார். நமக்குத் தெரிந்த வரையில் மேற்படி இரு கனவான்கள் கணக்கிலும் பிசகு இருக்கின்றதென்பதே நமது அபிப்பிராயம். அதாவது இரண்டு பேர்களுக்கும் உண்மையான அசலுக்கு மேல் அதிகப்படுத்தி கணக்கு போடப்பட்டிருக்கின்றது. அதாவது பஞ்சு நூல் நூற்பதற்கு ராத்தல் ஒன்றுக்கு 5 அணா தான் கூலி கொடுக்கப்பட்டு வருகின்றது. சில இடங்களில் 4 அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. நெய்வதற்கும் 54 இஞ்சுக்கு கெஜம் ஒன்றுக்கு
2 3], முதல் 3 அணாவே கொடுக்கப்பட்டு வருகின்றது. கெஜத்திற்கு 211, அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. 27, அணா அல்லது 27, அணா
வீதம் கொடுப்பதாயிருந்தால் இப்பொழுது ஈரோட்டைச் சுற்றிலும் கோபியைச்
சுற்றிலும் சுமார்1000,2000 தரிகள், தரி ஒன்றுக்கு 5 ரூபாய் வீதம் அட்வான்ஸ். கட்டிவிட்டு வருஷக்கணக்காக நெய்து கொடுக்க ஒப்பந்தம் பேசிக் கொள்ள காத்திருக்கின்றார்கள். இந்தப்படிக்கே சுமார் இரண்டு வருஷம் நெய்து கொண்டும் வந்தார்கள்.
கரூருக்கு பக்கத்தில் சில கிராமங்களில் ராத்தல் ஒன்றுக்கு 4-அணா வீதம்
நூற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். லாபம் அதிகமாய் வருவதை உத்தேசித்து நெசவுக்குக் கூலி அதிகமாய் கொடுத்து வருகின்றார்கள். சாதாரணமாக 54 இஞ்சு கதர் 10 கெஜம் கொண்ட பீசு அதிக கஞ்சி இல்லாமல் கண்டிப்பாய் 4 ராத்தல் இடைக்குமேல் இருக்கவே இருக்காது. இதற்கு ஆதார மாக படியூர் புளியம்பட்டி, ஊத்துக்குளி முதலிய இடங்களில் நெய்யப்படும். துணிகளை இன்றும் பார்க்கலாம்.
இன்று கருங்கண்ணி சாதாரண பஞ்சு விலை அதாவது திருப்பூர் கதர் வியாபாரிகள் வாங்கும் விலை 520 ராத்தல் பாரம் 1-க்கு, 215, 220-க்கு மேல் போவதே இல்லை. அப்படியானால் ராத்தல் ஒன்றுக்கு ரூ. விலை 0-6-8'/,
அடக்கமாகும். எனவே 54 இஞ்சு 10 கெஜம் பீசு ஒன்றுக்கு பஞ்சு சேதாரம் உள்பட
ராத்தல் 411, க்குக் கிரயம் ரூ. 1-12-6 மேல்படி நூலுக்கு நூற்புக்கூலி ராத்தல்
182 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
PG 5 அணா ரூ.வீதம்1-5-3. நெசவுக்கூலிகெஜம்1-க்கு 2 %/, 111-6 அணா
வீதம் ஆக ரூ.4-13-3. கெஜம்1-க்கு 3அணா கூலி வீதமானால் 1-14-0. எனவே
54 இஞ்சு அகலம் 10 கெஜம் பீசு ஒன்றுக்கு ரூ. 4-13-3 அல்லது ரூ. 4-15-9 அசலாகும்.ஒரு சமயம் ஆள் கூலி, கணக்குப்பிள்ளைக் கூலி மற்றும் சில்லரை: செலவு போட்டாலும் கண்டிப்பாய் பீசு ஒன்றுக்கு ரூ.5-4-0 மேல் அடங்குவதற்கு நியாயமே கிடையாது. ரூபாய்க்கு ஒரு அணாவீதம் செலவு போட்டு வெளி ஊர்களில் விற்பதானாலும் ரூ.5-9-0 அல்லது அதிகலாபம் வைத்தாலும் ரூ.5- 2-0க்கு மேல் விற்க வேண்டிய அவசியமே இல்லை.ஆனால் சென்ற வாரத்தில்
நாம் ஈரோட்டில் கதர் இல்லாமல் சேலத்திற்கு சொல்லியனுப்பி கதர் வாங்கிக் கொண்டு வந்ததில் 54 இஞ்சு அகலம் 5 கெஜம் ஒரு ஜதை வேஷ்டிக்கு சேலம் காங்கிரஸ் கதர் டிப்போவில் ரூ.3-1-0 கொடுத்து வாங்கிவர வேண்டியதாயிற்று அப்படியானால்10 கெஜத்திற்கு ரூ7-6-0 வீதம் விற்கின்ற விலையாகின்றது.ரூ5- 12-0க்கு விற்க வேண்டிய வேஷ்டி ரூ.7-6-0 வீதம் விற்றால் ஒரு பீசுக்கு ரூ.1- 10-0க்கு மேல் மனதார அதிக லாபம் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது. ஏற்கனவே மில் துணி 54 இஞ்சு கெஜம் 5 அணாவுக்கும் 6 அணாவுக்கும் தாராளமாய் கிடைக்கும் போதும் இந்தப்படி விற்றும் இந்திய மில் வியாபாரிகள் தங்கள் முதலுக்கு 100-க்கு 20, 25 வீதம் லாபம் சம்பாதிக்கும் போதும் கதருக்கு ஊரார் பணங்களை 10, 20 லட்சக்கணக்காக வசூல் செய்து அவற்றிற்கு வட்டியில்லாமலும் அசலிலும் கதர் இலாகா நிர்வாகத்திற்கென்று வருஷம் ஒரு லட்சம் 50 ஆயிரம் ரூபாய்கள் என்று கைமுதல் நஷ்டமுமடைந்து கொண்டு மக்களை கெஜம் ஒன்றுக்கு 11 அணா12 அணா வீதம் கிரயம் போட்டு வாங்கிக் கட்டும்படி சொல்வதென்றால் இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றோம். நூற்கின்றவர்களுக்கு கூலி கட்டவில்லை என்று ரூபித்தால், அப்போது “கூலிக்கு நூற்பதுவல்ல கதர் திட்டம். ஒவ்வொருவரும்.
ஓய்ந்த நேரத்தில் சொந்தத்தில் நூற்கவேண்டும் என்றும் அந்த அர்த்தத்தில்தான் கதரில் சுயராச்சியம் இருக்கின்றது” என்றும் சொல்லுவதும், சொந்தத்தில் நூற்க. முடிவதில்லை என்று ரூபித்தால் “ஒரு அணா கூலியாவது கிடைப்பதற்கு வேறு வேலையில்லை.ஆகையால் நடந்தவரை நடக்கட்டும்” என்பதும், இம்மாதிரி சமயத்திற்கேற்ற விதமாகப் பேசி மக்களை ஏமாற்றுவதாயிருக்கின்றதே ஒழிய வேறில்லை. அன்றியும் திரு.காந்தியும் திருபஜாஜும் தென் இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது சில சோம்பேறிப் பார்ப்பனர்களை சாஸ்திரிகள் என்னும் பேரால் ஒன்று சேர்த்துக் கூட்டி திரு.காந்தி முன் உட்காரவைத்து அவர்களுக்கு சாஸ்திரி என்றும், கனபாடிகள் என்றும் பெயர் சொல்லி கையினால் துடையில்
நூல் திரித்துக் காட்டி “சாஸ்திரிகள் எல்லாம் காந்தியின் கதர் திட்டத்தைப் பின்பற்றுகின்றார்கள்” என்று திரு.காந்தியையும் பஜாஜையும் நினைக்கும்படி செய்து வசூலான தொகைகளை இங்கேயே தட்டிப் பிடுங்கிக் கொண்டதல்
லாமல், வேறு ஏதாவது அனுபோக சாத்தியமான காரியமோயுத்திக்கு பொருத்த மான கருத்தோ இதில் இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றோம். தவிர திரு. காந்தியவர்கள் இனியும் தனக்கு கதரிலும் ராட்டினத்திலும் நம்பிக்கை
குடி அரசு - 1929 @) 184
இருக்கின்றது. அதன் மூலம்தான் சுயராச்சியம் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பதைப் பார்த்தால் இனியும் இந்த மாதிரி எத்தனை நாளுக்கு மக்கள் 5 அணா துணிக்கு 12 அணா விலை கொடுத்து வாங்கிக்கட்டிக் கொண்டு இருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. தேசிய நேரமும், தேசிய பணமும், தேசிய ஊக்கமும் இந்தக் கதர் திட்டத்தினால் பாழாய்ப்போய்க் கொண்டிருப் பதை இனியும் எத்தனை நாளைக்கு பார்த்துக் கொண்டிருப்பது என்பதுவும் நமக்கு விளங்கவில்லை. விலையில் 5 அணா துணிக்கு 11 அணாவும் துணி நயத்தில் 40 நெம்பருக்கு பதில் 10 நெம்பரும் உபயோகத்தில் 5 மாதம் வருவ தற்கு பதில் 3 மாதத்தில் கிழியும் மாதிரியாகவும், சுமையில் ஒன்றுக்கு மூன்றாக
வும், பிரயாணத்திற்கு பெருத்த அசெளகரிய மாகவும் இருப்பதை ஆதரிப்பது
தான் தேசியம் என்றால் திரு.காந்தியைப் போலும், திருராஜகோபாலாச்சாரியைப் போலும் உள்ள “மகாத்மாக்களும், மகான்களும்” தவிர மற்றபடி வேறு யாராலாவது இந்த தேசியத்தை பின்பற்ற முடியுமா என்றும் கேட்கின்றோம். நம்மைப் பொருத்தவரை பழக்கத்தினாலும் உயர்ந்த வேஷ்டி வாங்கும்படி நேரிடுவதில் ஏற்படும் செலவினாலும் கதரை விடமுடியாத நிலைமையில் இருக்கின்றோம். ஆனாலும் நம்மைப் போன்ற மற்ற நடுத்தர மக்களுக்கும் மூன்றாந்தர மக்களுக்கும் இது சாத்தியமாகுமா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம். இதில் உள்ள பொருளாதாரத் திட்டமும், வேலையில்லாத வர்களுக்கு வேலை கிடைக்கின்றதென்பதும் இந்த இலாகா நிர்வாகத்தில்
கலந்திருக்கும் ஆசாமிகளுக்கு பொருளாதார வரவும் வேலையில்லாத பார்ப்பனர்களுக்கு வேலை கிடைத்துத் தின்று கொழுப்பது மல்லாமல் வேறு.
ஒன்றும் இல்லை என்பது நமது உறுதியான அபிப்பிராயமாகும். எனவே
திரு.காந்தி அவர்களும் அவரது பிரதம சிஷ்ய கோடிகளும் கண்ணியமாய்
இந்த மாதிரி கதர் இலாக்காவை மூடிவிட்டு இந்தப் பணச் செலவைக் கொண்டும். நேரச் செலவைக் கொண்டும் வேறுஏதாவது பொது மக்களுக்கு நஷ்டமில்லாத கைத் தொழில் வளர்ச்சியில் ஈடுபடவோ அல்லது தீண்டாமை ஒழிவு, விதவைகள் துயரம் ஒழிவு என்பது போன்ற துறைகளில் ஈடுபடவோ செய்தால்
நாட்டிற்கும், மனித சமூகத்திற்கும், நாணயத்திற்கும் நல்ல பயனை அளிக்கும். அப்படிக்கில்லாமல் எல்லா குற்றமும், பலவீனமும், நஷ்டமும் மனதாரத் தெரிந்தும் மேற்கொண்டும் அதையே செய்து கொண்டு இருப்பதென்றால் இவ்வியக்கத்தை வேண்டுமென்றே செய்யும் வெறும் புரட்டு என்று சொல்லு வதுடன் கதர் இயக்கம் என்பதை சங்கராச்சாரி மடம் பண்டார சன்னதி மடம் என்றும் சோம்பேரி மடங்கள் போன்ற திரு.காந்தி மடம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றுசொல்லுவதற்கு வருந்துகின்றோம்.ஏனெனில் 1922 முதல் 1925
முடிவு வரையில் கதரில் முழுநம்பிக்கை வைத்து திரு.காந்தி சொன்னவை களையெல்லாம் அப்படியே நம்பி நாமும் சென்ற விடங்களுக்கெல்லாம் ராட்டினத்தைத் தூக்கிக் கொண்டு இரவும் பகலுமாய் நூற்றதுடன் படுக்கைக்குப் பக்கத்தில் இராட்டினத்தையும் மெழுகு திரி விளக்கையும் வைத்துக் கொண்டு மத்தியில் விழிப்பானால் மறுபடியும் தூக்கம் வரும்வரை நூற்றதுடன் நூல்
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சந்தாவையும் தவறாமல் அனுப்பிவந்ததோடு அதிகமாக நூற்றதால் கையில்
இரத்த ஓட்டம் கெட்டு வலியெடுத்து அதற்காக திருகாந்தியவர்களுக்கெழுதி, 2,3 மாதத்திற்கு நம்மை நூல் சந்தா மெம்பரிலிருந்து விதிவிலக்கு செய்யும்படி கேட்டு அந்தப்படியே விதிவிலக்கும் வாங்கி சென்னைக்குச் சென்று டாக்டர். குருசாமியிடம் வைத்தியம் செய்து மறுபடியும் ஊரெல்லாம் சுற்றி சர்க்கார். சங்கங்கள் ஏற்படுத்தி கதர் கடைகளும் ஏற்படுத்தி உற்பத்தி சென்டர்களும் கண்டுபிடித்து ஏற்படுத்தி, திருப்பூர் காங்கிரஸ் காதி வஸ்திராலயத்தையும் நாமே. உண்டாக்கி நேரில் மேற்பார்வை பார்த்து மற்றும் புதுப்பாளையம் காந்தி ஆச்சிரமத்தையும் நமது கையாலேயே திறந்து வைத்து அதற்கு வேண்டிய உதவியையும் கூடுமான அளவு செய்து, மற்றும் தனிப்பட்ட நபர்களுக்காக பல
கதர் ஸ்தாபனங்களையும் கதர் கடைகளையும் திறந்து வைத்து, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை எல்லாம்அதாவது பனகல் அரசர், ராமசாமி முதலியார், எம்.டி. சுப்பிரமணிய முதலியார் முதலியவர்களையெல்லாம் கதர் கட்டச் செய்து மற்றும் இது போன்ற பல காரியங்களை கதருக்காகவென்றே செய்து கதர் விஷய பிரசாரத்தால் 124 6 முதலியபிரிவுகள்படி சர்க்காரால் வழக்கும் தொடரப்பட்டு
மற்றும் எவ்வளவோ விதத்தில் மனதார உழைத்துப் பார்த்த பிறகே அதிலுள்ள பலனற்ற தன்மையையும் சிலர் தங்கள் சுய நலத்திற்காக அந்த ஸ்தாபனத்தை: உபயோகித்துக்கொண்டிருப்பதுடன் பொதுவில் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு நேர்விரோதமாக அந்தஸ்தாபனத்தை உபயோகப்படுத்தப்பட்டு வருவதையும், இவ்வளவிற்கும் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணமே வீணாவதையும் மனதாரப்பார்த்த பிறகே கதர் புரட்டைப்பற்றி வெளியில் தைரியமாய் எடுத்துச் சொல்லத் துணிந்தோமே தவிர, மற்றபடி ஒன்றும் அறியாமலோ, பிறர்: சொல்வதைக் கேட்டுக்கொண்டோ அனுபவமில்லாமலோ, ஒன்றும் சொல்ல வரவில்லை என்பதையும் பொதுஜனங்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
ஆனால் இதைப் பார்த்தவுடன் பார்ப்பனரல்லாத சில கிளிப்பிள்ளை தேசியவாதிகள் ஆத்திரம் பொங்கி நம்மீது பாய்ந்தாலும் பாய்வார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயபுத்தியை கொண்டு நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்க்கும் சந்தர்ப்பத்தை. அடையும்போது நாம் சொன்னது சரி முற்றும் சரி என்பதை உணர்வார்கள் என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. எப்படி எனில் முதன்முதல் ஒத்துழை யாமையை அழிக்க ஆரம்பித்த- சுயராஜ்யக் கட்சியையும் அதற்காக பார்ப்பனர் கையாளாக இருந்த திரு.சி.ஆர்தாசையும் மற்றும் சில பார்ப்பனர்களையும் நாம் தாக்கும்போது பலருக்கு வெகு ஆத்திரம் வந்ததானாலும் ஒரு வருஷம் பொறுத்து யோக்கியர் எல்லோரும் நாம் சொன்னது முற்றிலும் சரியென்று உணர்ந்தார்கள். பிறகு பெல்காம் காங்கிரசில் ஒத்துழையாமையை காங்கிரஸ்: கைவிட்டதிலிருந்து காங்கிரசை தாக்க ஆரம்பித்த போதும் “காங்கிரஸ் இருப்பதா? இறப்பதா?'” என்று பெரிய எழுத்தில் விளம்பரம் செய்து பார்ப்பனர்:
கள் நம் மீது பாமர மக்களை ஏவி விட்டதும் பிறகு ஒரு வருஷத்திற்குள். முக்கியமான மனிதரெல்லாம் நாம் சொன்னது சரியென்று ஒப்புக்கொண்டு
குடி அரசு - 1929 @) 186
காங்கிரசை விட்டு ஓடிவிட்டார்கள். மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைநாம் ஆதரிக்கத் தொடங்கிய போதும் இதே மாதிரிநம்மை “ஜஸ்டிஸ்” கட்சியில் தேசத் துரோக
கட்சியில் சேர்ந்துவிட்டதாகத் தூற்றி கடைசியாக திருவாளர்கள் கலியாணசுந்தர முதலியார்.வரதராஜுலு, சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் எல்லாம் ஜஸ்டிஸ். கட்சியில் சேர்ந்து விட்டதாக பொதுக் கூட்டத்தில் சொன்னதும் மற்றும் அநேகர். படல் படலாய் சேர்ந்து வருவதும் மற்றும் திரு.காந்தி தென்னாட்டில் வருணாச்
சிரமப் பிரசாரம் செய்த காலத்தில் அவரைத் தாக்கின காலத்திலும் இதே மாதிரி நம்மீது பலர் குற்றம் சொல்லியதும் இப்போது வெகுபேர் நாம் சொன்னதை ஒப்புக்கொண்டதோடு தாங்களும் அதைப் போல சொல்லி வருவதும் கடைசியாக மதவிஷயத்திலும் இந்து மதம் என்பதின் புரட்டையும் அது சம்பந்தமான சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகியபுரட்டுகளையும் வெளியாக் கினபோதும் கடவுள் போச்சு, கடவுளைக் கண்டவர் போச்சு, மதம் போச்சு,மத ஆச்சாரிகள் போச்சு சமயம் போச்சு, சமய ஆச்சாரிகள் போச்சுஎன்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது வாய் திறவாமல் மூலையில் பதுங்கி யிருப்பதும், லட்சக்கணக்கான மக்கள் அதையே சொல்லுவது வகுப்புவாரி பிரதிநிதித்து வத்தைப் பற்றி சொன்ன காலத்திலும், தேசம் போச்சுது, தேசியம் போச்சுது, ஒற்றுமை போச்சுது என்று கத்தினவர்கள், இப்போது வகுப்பு வாரித் தொகுதி
களில் தேர்தலுக்கு நிற்க ஆசைப்படுவதும், உத்தியோகத்திலும், வகுப்பு விகித சுதந்திரத்தில் உத்தியோகம் பெறுவதும் அதுவேசர்க்கார் கொள்கையாயிருப்ப
தும் மற்றும் செங்கல்பட்டு மகாநாட்டைக் கண்டு பயந்தவர்கள் அம் மகாநாட்டுத்
தீர்மானங்களில் பலவற்றை தங்கள் தங்கள் சொந்த காரியங்களில் நடத்தி வைக்க.
முயற்சிப்பதும், சிலவற்றை பிரசாரம் செய்வதும் சில சுதேச அரசாங்கங்கள் அவற்றிற்காக சட்டம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பதும் செய்ததைப் பார்த்து பாராட்டுவதையும் பார்த்து வருகின்றோம்.
எனவே, இதுவரை நாம் சொல்லிவந்த எவற்றையும் ஆரம்பத்தில்
தப்பாய் கருதியிருக்கலாமானாலும் மொத்தத்தில் பொது மக்கள் ஆட்சேபித் ததாகவோ தள்ளிவிட்டதாகவோ எதிர்பிரசாரம் செய்து மக்களிடை நம்மீது வெறுப்பை உண்டாக்குவதில் வெற்றி பெற்றதாகவோ சொல்வதற்கில்லாமல்
இருந்து வந்திருக்கின்றோம். ஆகவே இதே முறையில் கூடிய சீக்கிரத்தில் இந்த
கதர் புரட்டையும் மக்கள் மனமார அறிந்து நாம் சொல்லுவதை ஒப்புக் கொள்ளுவதுடன் இதுவரை தாங்கள் ஏமாந்து இருந்ததற்கும் வருந்துவார். களென்றேநினைக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.10.1929.
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
காந்தி யைந்தி புரட்டு
இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில்
திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும் காந்தி ஜயந்தி புரட்டு ஒன்று பார்ப்பனர்களால் வெகு அக்கரை உள்ளவர்கள் போல் கொண்டாடப் பட்டது. அவைகளை ஒன்றுக்கு இரண்டு பத்து வீதம் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இரகசியம் என்ன வென்று பார்த்தால் கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் உண்மை விளங்காமல் போகாது. அதாவது இந்தப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தியை திரு.காந்தி மீதுள்ள அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக கொண்டாடினார்களா அல்லது திரு.காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்திற்கு
ஆதாரமாக பார்ப்பன விஷயத்தை பாராட்டக் கொண்டாடினார்களா? என்பது விளங்காமல் போகாது. தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு.காந்தியிடம் மரியாதையோ பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? எந்தப் பார்ப்பனர் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் அடைக்கும் படிக்கும் அந்தப்படி அடைக்காவிட்டால் அராஜகம் பெருகி நாடும் சர்க்காரும் அழிந்துபோகும் என்று சர்க்காருக்குச் சொல்லி சர்க்காரிடம் மகாப்பட்டம் வாங்கினாரோ, அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனிவாச சாஸ்திரியாரும், எந்தப் பார்ப்பனர் காந்தி அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சத்தியமூர்த்தியும், எந்தப் பார்ப்பனர் திரு.காந்தியை பயித்தியக்காரர் என்று சொன்னதோடு அவரது இயக்கம் சட்டவிரோதமானது என்று சர்க்காருக்கு யோசனை சொன்னாரோ அந்தப் பார்ப்பனராகிய திரு.சீனி வாசய்யங்காரின் உண்மை சிஷ்யராகிய திரு. முத்துரங்கமும், திரு.காந்தியின் கொள்கையை ஒழிக்கப் புறப்பட்ட எதிரிகளுக்கு அடிமையாயிருந்தவரும் திருகாந்திக்குமண்டையில் மூளையில்லை என்று சொன்னவருமான திரு.வரத
ராஜுலுவும் மற்றும் இவர்களது சிஷ்யகோஷ்டிகளும் முக்கியமாயிருந்து காந்தி ஜயந்தியை சென்னையில் கொண்டாடி இருப்பதுடன் வெளியிடங்களிலும் மேல்கண்ட கூட்டத்தைச் சேர்ந்த வக்கீல் பார்ப்பனர்களும் அவர்களது குமாஸ்தாக்கள் கட்சிக்காரர்களுமே முக்கியமாயிருந்திருக்கின்றார்கள். இந்த கூட்டத்திற்கு இப்போது திரு.காந்தியிடம் ஏற்பட்ட அபிமானத்திற்கும் பக்திக்கும் காரணம் என்ன என்பது வேடிக்கை விஷயமாகும்.
இவர்கள் ஒன்றாய் திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின்பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும்
குடி அரசு - 1929 @) 188
அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப்போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையை யாவது பின்பற்றுகின்றவர்களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.
அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜயந்தி கொண்டாடுவது எதற்கு சமானம் என்று
பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் “மகா விஷ்ணு”வின் பத்தாவது அவதாரம் என்று புராணங்கள் எழுதிவைத்து வணங்கி வந்ததைத்தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளுகின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந்தா லல்லாது நமக்கு சுயராச்சியம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு ஒழிக்காவிட்டால் நாம் சுயராச்சியத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை
எந்தப் பார்ப்பனராவது ஒப்புக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப்போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில் களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே, அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயிலுக்குள். விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள். என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.
மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பயித்தியக்காரத்தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும்,கோயில்கள் விபசார விடுதிகள் என்றும்்சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப் போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை; ஆதலால்நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திருகாந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில்தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதையாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்டசபையை விடவோ,
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம்.திருகாந்தி சொல்வதில் ஒன்றைக்கூட கேட்காமல் அவரைபயித்தியக்காரரென்றும், முட்டாள் என்றும்,மூளை இல்லை.
என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்ட விரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூட்சியும் வேறு உண்டா என்றுதான் கேட் கின்றோம்.
ஒரு காரியத்திற்காக காந்திஜயந்தி கொண்டாடப்பட்டது என்றால், அதை
நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரசாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் “சூத்திரன்” தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜன்மத்தில் “வைசியனாக”, அடுத்த
ஜன்மத்தில் “க்ஷத்திரியனாக”, அடுத்த ஜன்மத்தில் “பிராமண”னாகலாம் என்று சொன்னதற்கும், மற்றும்ராமாயண,பாரத பிரசாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக்கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்துவிட்டுப் போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாதார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இன்றைய தினமும்
நமது நாட்டில் நடக்கும் அனேக ஜயந்திகளும் பண்டிகைகளும் திருநக்ஷத் திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார்
இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப்படுகின்றது என்பதை பலர் அறிந்தும் அவ்விதபண்டிகைகளையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச்சி யுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அது போலவே காந்தி ஜயந்தியும் கொண்டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத் துடன் சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூட்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.10.1929
குடி அரசு - 1929 @) 190
வல்லூர் மகாநா௫
இம்மாதம் 5, 6-ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லூரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்னும் தென் இந்திய நல உரிமைச்சங்க இயக்கத்தின் 11-வது மாகாண மகாநாடு, கூடிக்கலைந்து விட்டது. இந்த மகாநாடானது 1927வது வருடம் ஜனவரியில் மதுரையில் கூடிய 10-வது மகாநாட்டுக்குப் பிறகும், அதையடுத்து கோயமுத்தூரில் கூடிய மாகாண: விசேஷ மகாநாட்டிற்கு பிறகும், இரண்டு வருஷ காலம் பொறுத்து நெல்லூரில் கூட்டப்பட்டதாகும் என்றாலும் இந்த இரண்டு வருஷம் பொறுத்தாவது இம்மகாநாடு இப்போது கூட்ட வேண்டிய அவசிய மேற்பட்டதின் காரணம். முக்கியமாக இரண்டு விஷயத்தைப் பொறுத்ததாகும். அதாவது ஒன்று; பார்ப்பனரல்லாதார்களுக்குள் பிரிந்துநிற்கும் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துக் கொண்டு மந்திரி கட்சியாராகிய இன்டிபெண்டெண்டு என்னும் சுயேச்சைக் கட்சியையும், கான்ஸ்டிடியூஷனிலிஸ்ட் என்னும் டாக்டர் நடேசன் கட்சியாரையும் ஒன்று சேர்க்கவும்; இரண்டாவதாக: கட்சிக்குத் தலைவராய் இருந்த பனகால் அரசர். இறந்து போய்விட்டதால் அவருக்கு பதிலாக ஒரு தகுதியான தலைவரை ஏற்படுத்தவும் கருதி மகாநாடு கூட்டப்படவும் வேண்டியதாயிற்று. மேலும் பனகால் அரசர் காலமானதும், கட்சியின் தலைவர் காலமாய்விட்டதால் இனி
கட்சிக் கொள்கையை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனரல்லாதார் எல்லோரும்.
தங்களுக்குள் இருக்கும் அபிப்பிராய பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் சற்று விட்டுக்கொடுத்து (அதாவது தங்களுடைய முக்கிய கொள்கைக்கு விரோதமில்லாமல் ஒன்று சேர வேண்டும் என்று கருதி மந்திரி கட்சியாரையும், திரு.நடேசன் கட்சியாரையும் கூப்பிட்டு பேசுவது என்கின்ற எண்ணத்தின் மீது தியாகராய ஞாபகக் கட்டிடத்தில் எல்லாக் கட்சியாரும் கொண்ட ஒரு பொதுக் கூட்டம் கூட்டி அவரவர்கள் கட்சிக் கொள்கைளையும் குறைகளையும் அறியவும், அவற்றிற்கு பரிகாரம்தேடி ரிபோர்ட்டு செய்யவும் என்று கட்சி ஒன்றுக்கு மூன்று பேர்கள் வீதம் மூன்று கட்சிக்கு ஒன்பது பேர்களைத் தெரிந்தெடுப்பதென்றும், அவர்கள் விசாரித்து அறிக்கை செய்ய ஒரு மாதம் வாய்தா கொடுப்பதென்றும் தீர்மானித்து 3 கட்சியின் சார்பாக ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டது. அந்தக் கமிட்டி அவரவர்கள் கட்சிக்குறைகளை
விசாரித்தறிந்து ஒரு முடிவுக்கு வந்ததின் பேரில் கயேச்சைக் கட்சியார் என்னும், மந்திரிக்கட்சியார் நம்முடன் சேர்வதானால் பார்ப்பனர்களை நமது கட்சியில்
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அது முடியாவிட்டால் குறைந்த அளவு இப்போது அவர்களுடன் கூட இருக்கும் பார்ப்பன மந்திரியாகிய கனம் சேது ரத்தினமய்யர், தாங்கள் மந்திரியாய் இருக்கும்வரை தங்களுடன் மந்திரி யாயிருப்பதற் கனுகூலமாகவாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதா வது சட்டசபை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை பார்ப்பனர்களுடன் கலந்து இருக்கும் படியான மாதிரியில், சட்டசபைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி இடம் கொடுக்க வேண்டும் என்றும், திருநடேசன் கட்சியார் நம்முடன்
இருப்பதானால் அவர்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பு இருக்கும்படியாகநிர்வாக சபையில் போதிய பிரதிநிதித்துவம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு அவற்றை தென் இந்திய நல உரிமை நிர்வாக சபை கூடி கவனித்து சட்டசபைக் கட்சியில் மாத்திரம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள சம்மதிப்பதாய் ஒப்புக்கொண்டு அதற்காக நிர்வாக சபையில் ஏக மனதாக ஒரு தீர்மானமும் செய்வித்து அதை மந்திரி கட்சியாருக்கு தெரிவித்து, அதைஅடுத்தமகாநாடு கூட்டி நிறைவேற்றிக் கொடுப்பதாயும் ஒப்புக்கொள்ளப் பட்டது. இதை நம்பியே மந்திரிகளும் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் நூறு நூறு ரூபாய் கொடுத்து ஆயுள் மெம்பராகவும் சேர்ந்தார்கள். இந்த நிலையில் இந்த மகாநாட்டை நெல்லூரில் போடப்பட்டது. ஆனால் சட்டசபைத் தேர்தல் ஒத்திப் போய்விட்டதாலும், வேறு ஏதேதோ காரணங்களாலும் மகாநாடும் ஒத்திப் போட்டுக் கொண்டே வரப்பட்டது. என்றாலும் கடைசியாக ஊராரின் பழிப்புக்கு பயந்து மகாநாட்டை நடத்தியே காட்டப்பட்டுவிட
வேண்டியதாயிற்று.
மகாநாட்டுத் தலைவர்
மகாநாட்டுத் தலைவராய் தெரிந்தெடுக்கப்பட்ட திரு.முனிசாமி நாயுடு அவர்கள் காங்கிரஸ் உணர்ச்சி உள்ளவர் என்பதையும்,பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற மனப்பான்மை கொண்டவர் என்பதையும் தவிர மற்ற எந்த விதத்திலும் தகுதியானவரும் பனகால் அரசர் காலமானவுடன் இவரே அடுத்தபடியாக தலைவராகலாம் என்று பலரால் சொல்லப்பட்டவருமாவார். ஆனால், அவர் சித்தூரிலிருப்பதனாலும், “பெரீய பணக்காரராக இல்லை” என்பதனாலும்
வக்கீல் தொழிலில் இருக்கிறபடியாலும், கட்சிக்குத் தலைவராயிருக்க மறுத்து விடுவார் என்று சிலர் பேசிக்கொண்டதும் உண்டு. அது எப்படி இருந்த போதிலும் திரு. முனிசாமி நாயுடு அவர்களின் மகாநாட்டு அக்கிராசனப் பிரசங்கமானது பொது ஜனங்கள் நினைத்தது போலவே பார்ப்பனீய காங்கிரசு சார்பாகவும், பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே பூராவாகக்கொண்டதாகவும் தான் இருந்ததே. தவிர பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தத்துவத்தை அனுசரித்தோ அல்லது இப்போது உலகமெங்கும் கொழுந்துவிட்டெரியும் சமத்துவ உணர்ச்சியையும்
குடி அரசு - 1929 @) 192
சீர்திருத்ததத்துவத்தையும் அனுசரித்தோ ஒருவார்த்தையும் காணக்கிடைக்காத தாயிருப்பதற்கு எவரும் வருந்தாமல் இருக்க முடியாது. உபன்யாசக் கடைசி பக்கத்தில் ஒரு வரியில் யதீந்தரதாஸ் மரணத்திற்கு அனுதாபம், கிராம
புனருத்தாரணம், கதர்,நிலத்தீர்வை,மதுவிலக்கு என்கின்ற காங்கிரஸ்காரர்களின் பரிபாஷைப் புரட்டு வார்த்தைகள் மாத்திரம் காணப்படுகின்றதே தவிர, இவற்றிற்கான வேலைத்திட்ட முறைகள் ஒன்றுகூட சொல்லப்படவே இல்லை. அன்றியும் தீண்டாமை விலக்கு, ஜாதி வித்தியாசம் விலக்கு, ஆலயப்பிரவேசம், பெண்மக்கள் கொடுமை நீக்கம், தொழிலாளர் கஷ்டம், நிவாரணம் முதலாகிய முக்கியசீர்திருத்த விஷயங்களான எதுவும்பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கே. உயிராய் உள்ள கொள்கைகளைப் பற்றி ஒரு சிறிதும் குறிப்பிடவே இல்லை. எனவே இவ்வளவு மோசமான அபிப்பிராயங் கொண்ட தலைமைப் பேருரை: தென் இந்திய நல உரிமைச் சங்கம் தோன்றிய நாள் முதல் இதுவரை எந்த மகாநாடும் வழங்கி இருக்காதென்றே தைரியமாய்ச் சொல்லலாம். இந்தக் காரணத்தைக் கொண்டுதான், "இந்து". 'கதேசமித்திரன்' “சுயராஜ்ஜியா' முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் தலைவர் பிரசங்கத்தை வானமளாவப் புகழ்ந்திருக் கின்றதென்பதே நமது முடிவு. ஆயினும் திரு. முனிசாமி நாயுடு அவர்கள் பெருந்தன்மையும், யோக்கியப் பொறுப்பும் உடையவர் என்பதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றே சொல்லுவோம்.ஆதலால் இவரது தலைமைப் பதவி காலத்தில் எப்படியாவது தீண்டாமை விலக்கு, ஆலயப் பிரவேசம், பெண்ணுரிமை, தொழிலாளர் கஷ்டம்,நிவாரணம், மூடப்பழக்க வழக்கங்கள். ஒழிதல் ஆகியவைகளுக்கு அனுகூலம் ஏற்படவேண்டும் என்கின்ற ஆசையின் பேரிலும் நம்பிக்கையின் பேரிலும் மனப்பூர்வமாய் பின்பற்றவும் ஒத்துழைக்கவும் தயாராயிருக்கின்றோம். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டாவது பார்ப்பனர்களைக் கொண்டுவந்து இச்சங்கத்தில் சேர்த்து விடலாம் என்கின்ற எண்ணத்தை மாத்திரம் அடியோடு மறந்து விடும்படியும் அதற்காக தலைமைப் பதவியை உபயோகிக்கக் கூடாது என்பதையும் பலமாக எச்சரிக்கை செய்கின்றோம்.
வரவேற்புத் தலைவர்
திரு.ராமச்சந்திர ரெட்டியவர்கள் தன்னால் கூடியவரை பிரயாசை எடுத்து மகாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுத்ததுடன் மகாநாட்டைப் பெருமையாய் நடத்திய பெருமையும் அவருக்கே உரியதாகும். அவரது வரவேற்பு உபன்யாசம் சுருக்கமாயிருந்தாலும் கட்சிக் கொள்கையை தைரியமாக நன்றாக விளக்கிக் காட்டிபல இடங்களில் உண்மையை எடுத்துக்
காட்டி இருக்கின்றதற்கு நாம் அவரைப் பாராட்ட வேண்டும். அதாவது:-
“இந்தியாவில் எல்லா சமூகமும் சமூக விஷயத்திலும் அரசியலிலும் சமத்துவம் பெறவேண்டும். அரசியல் ஆதிக்கத்தை நேராய் பாமர மக்களுக்கு
பிடுங்கிக் கொடுக்கவேண்டும். அதற்கேற்ற உணர்ச்சியையும் அறிவையும்
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
அவர்களுக்கு உண்டாக்க வேண்டும். ஏகபோகமாய் எல்லா அதிகாரத்தையும்
அனுபவிக்கும் கூட்டத்தாரின் ஆதிக்கத்தை அடியோடு அழித்து, எல்லோரை யும் சமமாக்க வேண்டும். ஆகிய இவைகளே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் கொள்கைகள்” என்றும், “சமுதாய சீர்திருத்தத்தில் பம்பாயில் திரு.ஜோதி ராவ்பூலே ஏற்படுத்திய சத்தியசோதக இயக்கக் கொள்கைகளும், சென்னையில் திரு.ஈ.வெ.ராமசாமி ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் சிலருக்கு அபிப்பிராய பேதமேற்பட இடந்தந்த போதிலும் அவ்விரு இயக்கங்களிலும் மக்களுக்குள் அன்பை உண்டாக்கி இருக்கின்றன” என்றும்,
“வகுப்பு நியாயம் கேட்பதாலும் வாழ்க்கையில் ஒரு பார்ப்பனனுக்கு உள்ள உரிமை ஒரு பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கவேண்டும் என்று சொல்வதாலும் சுயராச்சியம் ஒருக்காலும் தடைபட்டு விடாது. அதிலும் பார்ப்பனரல்லாதார் தங்கள் மனித உரிமையைக் கேட்பது கூட தேசியத்திற்கு விரோதமென்றால் அவ்வித தேசியத்தின் தன்மையை என்னால் அறிய வில்லை” என்றும் பேசியிருக்கின்றார்.
இவ்வார்த்தைகள் பொன்னே போல் போற்றத்தக்கதாகும்.
தீர்மானங்கள்
தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சர்.பாத்ரோ கொண்டுவந்த தீர்மானமானது, திரு.ஆர்.கே.ஷண்முகத்தாலும், திருஈ.வெ.ராமசாமியாலும் எதிர்த்துக் “கச கச'வென்று நசுக்கிக் கொல்லப்பட்டுவிட்டதானது, மிகவும் பாராட்டக்கூடிய
தாகும். பார்ப்பனர்களை தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்க்கப் போகின்றார்கள் என்கின்ற விஷயம் பரப்பப்பட்டதாலேயே மகாநாட்டிற்கு
தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு பிரதிநிதிகள் வந்து சேர நேர்ந்ததே ஒழிய மற்றபடி மகாநாட்டை உத்தேசித்தோ, தலைவர் தேர்தலை உத்தேசித்தோ பெரும்பாகம் அதாவது நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்கள் வரவில்லை என்றே சொல்லலாம்.திருபாத்ரோ அவர்கள் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்கின்ற தீர்மானத்தை இங்கிலீஷில் பிரேரேபித்து, தெலுங்கில் ஒருவரை: ஆமோதிக்கச் செய்து பின்பு தமிழில் ஆதரிக்க ஒரு தமிழரை அக்கிரா சனாதிபதி கூப்பிட்டபொழுது ஒரு தமிழராவது எழுந்து வரவேயில்லை.இந்தச் சாட்சியானது மகாநாட்டில் இருந்த எல்லோருக்கும் வெகு ஆச்சரியமாகவே இருந்தது. ஆகவே இதிலிருந்து பார்ப்பனர்களை பார்ப்பனரல்லாதார் கட்சியில் அங்கத்தினர்களாய் சேர்த்துக் கொள்வது என்கின்ற பேச்சு இனிவெகு
காலத்திற்கு மூச்சு காட்ட முடியாதென்ற உறுதி ஏற்பட்டுவிட்டது.
அடுத்த தீர்மானம்
திரு.பாத்ரோ அவர்களின் தீர்மானம் அடைந்த கதியினால் ஜனங் களுக்கு ஏற்பட்ட உற்சாகமானது அடுத்தத் தீர்மானமாகிய முதலில் சொல்லப்
குடி அரசு - 1929 @) 194
பட்ட ராஜித் தீர்மானமானது அதாவது நிர்வாக சபையில் ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானமும், காரியத்தில் எவ்வித குந்தகமில்லாததும், இப்போதும் அமுலில் இருப்பதும் இதற்கு முன்னும் தனி ஜஸ்டிஸ் ககஷி
மந்திரிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அமுலில் இருந்ததுமான தீர்மானமும், மற்றும் பார்ப்பனரல்லாத தலைவர்கள், பிரமுகர்கள் ஆகிய எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு வாக்குக் கொடுத்திருந்த ஜஸ்டிஸ் பத்திரிகையில் கலம் கலமாய் ஆதரித்து எழுதிவந்த தீர்மானமும் ஆகிய “பார்ப்பனர்களை சட்டசபைக் கக்ஷியில் சேர்த்துக் கொள்வது” என்கின்ற தீர்மானத்தை யோசித்துப் பார்த்து முடிவு சொல்வதற்கில்லாமல் செய்துவிட்ட
துடன், அளவுக்கு மீறின உற்சாகம் சில சமயங்களில் அறிவை மழுங்கச் செய்து விடுகின்றது என்பதற்கும் உதாரணமாயிருந்தது. அன்றியும் இத்தீர்மானம் தோற்றுப்போனதானது தென்னிந்தியநல உரிமைச் சங்க நிர்வாக மெம்பர்களின்
மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றியதாக ஏற்பட்டு விட்ட தோடு பொதுவாக தலைவர்கள் என்பவர்களின் நாணயப் பொறுப்பையே அடியோடு பாதித்துவிட்டது. எப்படியெனில், சங்கத்தின் அங்கத்தினர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட நிர்வாக சபையாரால் சங்கத்தின் நன்மையைக்கோரி சங்கத்தின் பிரதிநிதிகளாக மற்றக் கட்சித் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்து சங்க மெம்பர்களின் ஆமோதிப்பை எதிர்பார்த்து அமுலில் கொண்டு வந்துவிட்ட ஒரு தீர்மானத்தை சங்க அங்கத்தினர்களால் ஒப்புக்கொள்ள மறுத்துவிடுவதென்பது நிர்வாகச் சபையின் மீது அங்கத்தினர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதேயாகும். மேலும் மற்றக் கட்சியாருடன் ராஜி பேசி
வாக்குக் கொடுத்து அவர்களைச் சேர்த்துக் கொண்ட தலைவர்கள் ராஜி நிபந்தனையை நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் போனதும், அதற்கு அனு கூலமாயில்லாமல் போனதும், இவ்வளவும் போதாமல் எதிரிடையாய் பிரசாரம் செய்ததுமான காரியங்கள் அவர்களது நாணயத்தையே பாதிக்கத்தக்கதாகும்.
நிற்க, நாம் ஏன் பிரதிநிதிகளின் அறிவு மழுங்கிபோய் விட்டது என்று மேலே சொன்னோம் என்றால், பிரஸ்தாபத் தீர்மானத்தில் உள்ள கெடுதி என்ன என்பதையோ நமது உண்மையான கொள்கைக்கும் நடந்துவரும் அனுபவத்திற்
கும் இதனால் விரோதம் என்ன என்பதையோ யாரும் உணர முடியாமற் போனதேயாகும். எப்படியெனில், பார்ப்பனர்களை கவுன்சில் பார்ட்டியில்
சேர்த்துக் கொள்ளுவது என்பதில் உள்ள நிபந்தனைகள் என்ன யென்பதைப்
பற்றி வெளிப்படையாகவும் விளக்கமாகவும் மகாநாட்டிலும் வெளியிலும் நன்றாக எடுத்துச் சொல்லப்பட்டது, எப்படியென்றால், பார்ப்பனர் களைச்
சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்க்கக் கூடாது என்பது ஒன்று; பார்ப்பனர்களைச் சங்கத்தின் சார்பாக சட்டசபைக்கு நிறுத்தக் கூடாது என்பது இரண்டு:பார்ப்பனர். களை சங்கத்தின் சார்பாக சட்டசபை தேர்தலில் ஆதரிக்கவும் கூடாது என்பது மூன்று ஆகிய இம்மூன்று நிபந்தனைகளுக்கு அடங்கியது என்றும் சொல்லப் பட்டது. மேலும். இப்போது திரு.சேதுரத்தினமைய்யர் மந்திரியாய் இருப்பதை
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை அங்கத்தினர்கள் ஒன்றரை வருஷ காலமாய் ஆதரித்துவருவதுபோலவும் முதல் ஆறு வருஷம் ஜஸ்டிஸ் மந்திரிகளே முழு ஆதிக்கமாயிருந்து வந்த காலத்தில் திரு.டி.எம். நரசிம்மாச்சாரியார், திரு.டி.சி.தேசிகாச்சாரியார் முதலிய பார்ப்பனர்களைத் தங்களுடன் சேர்த்து ஓட்டு வாங்கிக் கொண்டு அவருக்கும் ஜில்லா போர்டு பிரசிடெண்டு முதலிய பதவிகள் கொடுத்துக் கொண்டும் வந்தது போலவும் இருக்குமென்றும், இப்போது இருந்து வந்த நிலைமையைவிட வேறு எந்த விதத்திலும் மாற்றமுடையதல்ல என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது. இன்னும் தெளிவாய் விளக்குவோமானால் ஒரு பார்ப்பனர் தனது தனி ஹோதாவில் சட்டசபைக்கு நின்று நாமும் அவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தி அவருடன் போட்டியும் போட்டு அதற்காகஅவர் வேண்டியபணம்தன் சொந்தத்தில் செலவழித்து நமது போட்டியையும் சமாளித்து வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தபிறகு சட்டசபை
யில் ஒத்துழைப்பதாகவோ நமக்குப் பின்னாலிருந்து கைதூக்குவதாகவோ அந்த பார்ப்பனர் சொல்லுவதாக இருந்தால் அதை ஒப்புக் கொள்வதில் நமது கொள்கைக்கோ, கட்சிக்கோ அல்லது நமது விரதத்திற்கோ ஏற்பட்ட அல்லது ஏற்படும் பங்கம் என்ன என்பதுதான். இதை ஏன் நாம் இவ்வளவு விளக்கி எழுதுகின்றோம் என்றால், மகாநாடு முடிந்து நாம் சென்னைக்கு வந்தவுடன் “என்ன அய்யா! நீர் பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று பத்திரிகையில் கலம் கலமாய் எழுதிவிட்டு, மேடையில் வாய்வலிக்குமட்டும் சண்டப்பிரசண்டமாய் பேசிவிட்டு நெல்லூருக்குப் போய்ப் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமாய்ப் பேசினீர்களாமே! இது சரியா? இதன் இரகசியம் என்ன?” என்று கேட்பதுடன் நமது மரியாதைக்கும் பக்திக்கும் உரியவருமான பெரியார் ஒருவர் வந்து நம்மீது கோபித்துக் கொண்டதாலும், இதைப் பொது ஜனங்கள் அறிய வேண்டிவிளக்க வேண்டியதாயிற்று.
கடைசியாக நாம் இது விஷயத்தில் சொல்வதென்னவென்றால், இவ்வளவு சங்கதியும் தெரிந்து எந்த விதத்திலும் பார்ப்பனர் சங்காத்தமே கூடாது என்பதாகக் கருதி யாராவது எதிரிடையாக ஓட்டுக் கொடுத்திருப்பார் களானால், அவர்களையெல்லாம், நாம் பாராட்டுவதுடன், இவ்வித உணர்ச்சிப் பெருகி இருப்பதற்கு நாம் மகிழ்ச்சியடைவதோடு அவ்வுணர்ச்சி அவ்வளவு
தூரம் பரவி இருப்பதற்கு உண்டான பெருமையில் நமக்கும் ஒரு சிறு பங்காவது இருக்கட்டும் என்று பெருமையும் அடைகின்றோம். ஆனால், அர்த்தம் தெரியாமலும் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டும் அலட்சியம், அசூயை, பொறாமை முதலிய வேறு காரணங்களைக் கொண்டும் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டதாயிருந்தால் அது விசனப்பட வேண்டிய காரியமேயாகும்.
தலைவர் தேர்தல்
இந்த இயக்கத்திற்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மகாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இயக்கத்தை நடத்த ஒரு
குடி அரசு - 1929 @) 196
கமிட்டி நியமிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திருத்தமானது காலநிலைமையை உணர்ந்து ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வரப்பட்ட
தாகும். ஏனெனில், தலைவர் தேர்தலில் யாரையும் ஏகமனதாய் தெரிந்தெடுக்க முடியவே முடியாதநிலைமையில் இருந்ததோடு, யார் தெரிந்தெடுக்கப்பட்டி ருந்தாலும் சிலர்தலைவர் தேர்தல் காரணத்தைச் சொல்லிக் கொண்டே கட்சியை விட்டு வெளியேறி கட்சிக்குக் கெடுதி செய்யக்காத்துக் கொண்டிருந்தார்கள். என்பதும் நாம் நன்றாய் அறிந்திருந்ததோடு, தலைவர் தேர்தலுக்கு ஆசைப்
பட்டவர்களில் பெரும்பான்மையோர் தங்களுக்கு தலைமைப் பதவி கிடைக்கா விட்டாலும், வேறு ஒருவருக்கு ஆகக்கூடாது என்பதிலேயே அதிகக் கவலை வைத்திருந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். இவைகளையெல்லாம் உத்தேசித்தே கமிட்டியை வலியுறுத்தப்பட வேண்டிய தாயிற்று. ஆனால், திரு.பி.டிராஜன் அவர்கள் தலைவர் ஸ்தானத்திற்கு அபேட்சகராய் தான் நிற்பதில்லை என்றும்,மகாநாட்டுத் தலைவர் என்கின்ற முறையில் திரு.முனிசாமி. நாயுடுவை தலைவராய் இருக்கட்டும் என்றும் மிக்க பெருந்தன்மையோடும்,
கட்சியின் நன்மையில் கவலை கொண்டும் சொல்ல முன் வந்ததே தலைவர்:
தேர்தல் சம்பந்தமாக ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்த கஷ்டங்கள் எல்லாம் திடீரெனமறைந்ததற்கு முக்கிய காரணமாகும். அந்த விஷயத்தில் திருராஜன் அவர்களை யாரும் பாராட்டியே ஆக வேண்டும். பிறகு டாக்டர். சுப்பராயன்
முதல் கொண்டு மற்ற தலைவர்களும் அந்த முடிவை ஒப்புக் கொண்டதும் போற்றக் கூடியதேயாகும். இவற்றால் மகாநாட்டுத் தலைவர் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதினாலும் எல்லாத் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாலும் பிரதிநிதிகள் எல்லோரும் இதை ஏகமனதாய் ஒப்புக் கொண்டு தீர்மானித்த
தாலும், நெல்லூர் மகாநாட்டின் முடிவு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்ததோடு, நெல்லூர் மகாநாட்டில் ஏற்படப் போகும் பிளவினால் தமது காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்று கருதி எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நமது இயக்க எதிரிகளுக்கும் சுயநலக்காரர்களுக்கும் ஜீவ நாடி ஓடுங்கிப் போய் விட்டதுடன் இன்னது செய்வது என்று தோன்றாமல் ஸ்தம்பித்து போகும்படி நேரிட்டுவிட்டது. எனவே நெல்லூர் மகாநாடானது பார்ப்பனரல்லாதார். இயக்கத்திற்குப் பல விதத்திலும் ஒரு பெரிய வெற்றிக் குறியேயாகும்..
எல்லாவற்றையும் விட நமது கட்சிக்கு ஒரு பெரிய கவுரவம் என்னவென்றால், இதுவரை நமது கட்சியைப் பற்றி குறை கூறி ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோக கட்சியென்றும் அதை எப்போதும் எதிர்த்தாக வேண்டும் என்றும் எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று எழுதி வந்த “தேசிய பத்திரிகை” களாகியபார்ப்பனப் பத்திரிகைகளும் “தேசிய வீரர்களாகிய” பார்ப்பனர்களும்
மற்றும் அவர்கள் வால்களும் இன்று நமது கட்சியில் பார்ப்பனர்களைச்
சேர்த்துக் கொள்ள வக்காலத்துப் பேசுவதும் கட்சியின் கொள்கைகளைப் பற்றி பேச்சு மூச்சுக் காட்டாமலிருப்பதும் கட்சியின் வெற்றியாகும். ஒரு சமயம் பார்ப்பனர்களில் சிலர் “எந்தப் பார்ப்பனன் ஜஸ்டிஸ் கட்சியில் சேரப் போகிறான். இவர்கள் கூப்பிட்டால்தான் யார் வரப்போகிறார்கள்” என்று
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சொல்லக்கூடும். அப்படியானால் இந்து பத்திரிகை முதல் திரு.சத்தியமூர்த்தி வரை பார்ப்பனர்களை இக்கட்சியில் சேர்த்துக் கொள்ளாததற்கு வருத்தப் படுவானேன்? மற்ற “தேசீயப் பத்திரிகைகளும் தலைவர்களும் பார்ப்பனர்:
களுக்கு வக்காலத்துப் பேசுவானேன்? என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.
குடி அரசு - தலையங்கம் - 130.1929
குடி அரசு - 1929 @) 198
எனது தோல்வி
நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டசபைக்கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்கின்ற தீர்மானம் தென் இந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக்கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்துவிட்டது. ஒரு ஓட்டில் தோல்வியடைந்தாலும் அது சரியான தோல்வியே என்பதில் யாதொரு ஆட்சேபனையுமில்லை. ஓட்டு சேகரித்த முறை எவ்வளவு
ஒழுங்கற்றதென்று சொல்லுவதானாலும் முடிவை மாற்றிக் கொள்வதற்கு அந்த சமாதானம் சிறிதும் பயன்படாதாகையால் அது உபயோகமற்ற சமாதானமாகும். அன்றியும், ஒரு கட்சியார் மாத்திரம் தான் ஓட்டு சேகரிக்கும் முறையில் சரியாக நடக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. தீர்மானம் ஒரு சமயம் வெற்றி பெற்றிருந்தாலும் தோல்வியுற்றவர்களும் இதே சமாதானத்தைத்தான் சொல்லக்கூடும்; ஆதலால் தோல்விக்கு சரியான சமாதானம் சொல்ல வேண்டியது எமது கடமையாகும்.
முதலாவது இந்தத் தீர்மானமானது அவசியமில்லாததும் அர்த்த மற்றதுமான தீர்மானமாகும். எப்படியெனில் இத்தீர்மானம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் தீர்மானத்தின் உண்மையான தத்துவம் அமுலில் தானாகவே நடந்துதான் தீரும். அதாவது, இது நிறைவேறினால்தான் பார்ப்பனர். சட்டசபையில் நம்முடன் இருக்கக் கூடுமென்றோ நிறைவேறாவிட்டால்
நம்முடன் இருக்க முடியாமல் போகுமென்றோ சொல்லிவிட முடியாது. மந்திரிசபையை நாமாகவே நடத்திக் கொண்டு போக முடியும் என்கின்ற உறுதியான பலம் கொண்டநிலைமை நமக்கு வரும்போது பார்ப்பனர்களை நாம் சேர்க்கவே மாட்டோம்.நமக்கு பலமில்லை என்று தெரியும்போது பார்ப்பனர். களை சேர்த்துக்கொள்ளவும் அவர்களுக்கு உத்தியோகம் கொடுக்கவும்,சிறிதும்
பின் வாங்கவும் மாட்டோம். சில சமயத்தில் நமக்குப் பலமும் கட்டுப்பாடும். இருந்தாலும் தைரியக்குறைவு ஏற்பட்டால் பார்ப்பனர்களை நாமாகவே தேடிக் கொண்டும் போகின்றோம். இதுதான் ஜஸ்டிஸ் கட்சியின் அனுபவமுமாகும்.
உதாரணமாக, எத்தனையோ பார்ப்பனர்கள் தேவஸ்தான சட்டத்தை
எதிர்த்தும் மற்றும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தும் அது நிறைவேறிய பின்
ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் தேவஸ்தான போர்டு தலைமைப்பதவியை ஒரு பார்ப்பனருக்கும் தேவஸ்தானக் கமிஷனர் பதவிகளில் ஒன்றை ஒரு
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பார்ப்பனருக்கும் வலிய கொண்டுபோய் கொடுத்தார்கள். இதன் காரணம் என்னவென்றால் அந்தப் படிசெய்திருக்காத பட்சம் அதுசமயம் கக்ஷி நிர்வாகம் கஷ்டமானதாயிருந்திருக்கும் என்பதுதான். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்து பார்ப்பனக் கட்சி மந்திரி அதிகாரத்திற்கு வந்த சமயத்தில் அதே போர்டு தலைவர் பதவி காலியானதும் பார்ப்பனக் கக்ஷி மந்திரிகளா லேயே அதை ஒரு பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுக்கப்பட்டது. இதைக் குறித்து ஒரு பார்ப்பனராவது சத்தம் போடவே இல்லை.இதன் காரணம் என்ன? இந்தப்படி செய்திருக்கவில்லையானால் அந்த மந்திரிகளின் நிர்வாகமானது அப்போது சற்று கஷ்டமானதூயிருந்திருக்கும். தவிர, காங்கிரசின் சார்பாக பார்ப்பனரல்லாத மந்திரிமார்களே மூவர் இருந்த காலத்தில் தான் ஜஸ்டிஸ் கட்சி அந்தமந்திரிகளை கவிழ்க்க முயற்சி செய்தது. காரணமென்னவென்றால், அந்த மந்திரிகளின் நிர்வாகமானது பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு கஷ்டத்தை உண்டாக்கும் என்பதுதான். தவிர, அந்த பார்ப்பனரல்லாத மந்திரி சபையை கவிழ்த்த பார்ப்பனரல்லாதார் கட்சியானது ஒரு பார்ப்பனரல்லாத மந்திரியை
ஒழித்து அந்த ஸ்தானத்தில் ஒரு பார்ப்பன மந்திரியை வைத்து ஆதரித்து அதற்கு எவ்வித ஆபத்தும் நேரிடாமல் இன்றும் காப்பாற்றிக் கொண்டுதான் வருகின்றது. இதன் காரணமென்னவென்றால் இந்தப்படி செய்யாவிட்டால் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு போதிய அனுகூலம் கிடைக்காது என்கின்ற கவலைதானே ஒழிய, கனம் சேதுரத்தினம் அய்யரைக் காப்பாற்றாவிட்டால் பார்ப்பனரல்லாதார் கட்சியே அடியோடு அழிந்து போகும் என்கின்ற பயம் அல்லவே அல்ல. அன்றியும் சென்னைஅரசாங்கநிர்வாக சபையில் மெம்பரா யிருந்த திரு.கே.சீனிவாசய்யங்கார் காலம் சென்றதும் அந்த ஸ்தானத்திற்குத் திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்காரும், சர்.சி.பிராமசாமி அய்யரும் சர்.தியாக
ராயர் வீட்டிற்கு நடந்ததில் சர்.தியாகராயர், சர்.சி.பி.அய்யரையே சர்க்காருக்கு சிபார்சு செய்தார். அந்தக் காலத்தில், சர்.தியாகராயர் செல்வாக்கு அவ்வளவு பலமாயிருந்தும் ஏன் ஒரு பார்ப்பனரை சிபார்சு செய்தார் என்றால், அந்த
காலத்தில் அது ஒரு பார்ப்பனருக்குக் கொடுத்துத்தான் தீர வேண்டிய நிலையில் சர்க்கார் இருந்ததுதான். அதே வேலை மறுபடியும் காலியானதும் பார்ப்பன
ரல்லாதார் கட்சி அபிப்பிராயத்தை எதிர்பாராமலே ஒரு வருணாச்சிரம சாஸ்திரிக்குக் கொடுக்கப்படுவானேன்? அவர் கோபித்து வேண்டாம் என்ற பிறகுகூட அந்த வேலைபார்ப்பனரல்லாதார் கட்சியைத் தேடிக் கொண்டு வந்து சரண் புகுவானேன்? அன்றியும் அந்த சமயம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு அவ்வளவு பலமிருந்தும் கனம் சேதுரத்தினமாகிய ஒரு பார்ப்பனருக்கு மந்திரி பதவியை கொடுப்பானேன்? நம்மில் ஆள்கள் இல்லையா? அல்லது யாரும் ஆசைப்படவில்லையா? எனவே, மேற்கண்ட இந்த நடவடிக்கைகளை யெல்லாம் கவனித்துப்பார்த்தால் மேலே சொல்லப்பட்ட தீர்மானத்தின் தத்துவம் என்ன? என்பது ஒரு சாதாரண மனிதருக்கும் விளங்காமல் போகாது. நிற்க, இதற்காக நான் ஏன் இந்தத் தீர்மானத்தில் இவ்வளவுகவலை கொண்டுஆமோ தித்தேன்? நான் ஏன்நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன்? என்று
குடி அரசு - 1929 @) 200
பொதுஜனங்கள் அறிய ஆவல் கொள்வார்களானதால் அதற்கும் பதில் சொல்லியாக வேண்டியவனாக இருக்கின்றேன். அதாவது பனகால் அரசர். இறந்த காலத்தில் மந்திரி கட்சியார் நம்முடன் சேர வேண்டுமென்று ஆசைப்
பட்டதற்கு அவர்கள் நம்மைக் கேட்டுக் கொண்ட குறைந்தநிபந்தனை இதுவாக இருந்ததும், அதாவது சட்டசபைக் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதும், இந்தக் குறைந்த நிபந்தனையும், அது சமயம் தென் இந்திய நல உரிமைச் சங்க பிரமுகர்களும் அடியேனைக் கேட்டே முடிவு சொல்ல வேண்டியிருப்பதாக சொன்னதாலும், மந்திரி கட்சியாரும் அடியேன். ஒப்புக் கொள்ளும் தைரியத்தாலேயே நம்பி சம்மதிக்கப் போவதாக சொன்னதாலும், அடியேனும் ஒப்புக்கொண்டு சம்மதமும் வாக்குத்தத்தமும் செய்ய வேண்டியதாய்விட்டதால் அதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனது தலையிலும் சிறிது விழுந்துவிட்டது. எதிர்பாராத கஷ்ட சம்பவம். இரு கட்சியின் தனித்தனி நன்மையோ அல்லது இருகட்சியில் உள்ளவர்களின் தனித்தனி நன்மையோ நெல்லூர் மகாநாட்டில் இந்த நிபந்தனையின் முடிவைப் பொறுத்தே இருப்பதாக இரு கட்சியாரும் தெரியா
மல் நினைத்துக் கொண்டதால் இத்தீர்மானத்தை நிறைவேற்ற ஒரு கட்சியும்,
தோற்கடிக்க ஒரு கட்சியும் முனைந்து முயற்சி செய்யவேண்டியதாய் ஏற்பட்டு விட்டது. ஆகையால் முனிசிபல் தேர்தல்களில் ஓட்டு சேகரிப்பது போலவே சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படடுவிட்டது என்றாலும் இந்த நிலையில் எனது கடமை என்ன என்பதை பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்க வேண்டுமாய் ஆசைப்படுகின்றேன்.நடுநிலைமை வகிக்க முடியாத கஷ்டத்தில்
சிக்கிக் கொண்டதால் ஏதாவது ஒரு கட்சியின் நிஷ்டூரத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாய்ப் போய்விட்டதில் எந்தப்படி நடந்தால் நிஷ்டூரம். வந்தாலும் நாணயத்தைப்பாதிக்காது என்றுநினைத்தேனோ, அந்தப்படி செய்ய வேண்டிய தொண்டில் இறங்க முடிவு செய்துவிட்டேன். அன்றியும் இந்த முடிவானது என்னை நன்றாய் அறிந்த எனது நண்பர்களின் கருத்துக்கு விரோதமாயிருந்தாலும் என்னை அன்னியனாய்க் கொண்டு இருந்து பிறகு துணிந்து நம்பியவர்களுக்கு தாங்கள் நம்பின நபரிடத்தில் மோசமில்லை என்று கருதும் படியாகவும் இருந்ததால் நிறைவேற்றி வைக்க மனதார முயற்சி செய்தேன். ஆனால் முயற்சி பலிக்கவில்லை: தோல்வியே அடைந்தேன். என்றாலும் இந்த தோல்வி எனது நாணயத்தையாவது நான் செய்த முடிவையாவது சிறிதும் பாதிக்கவில்லை. ஏன் தோல்வி அடைந்தேன் என்றால் முதலாவது மகாநாட்டுத் தலைவர் ஒழுங்காய் காரியங்களை நடத்தவில்லை. விஷயாலோசனைக் கமிட்டி நியமன விதியை அடிக்கடி மாற்றிக் கொண்டார். அவர் வாக்குக்கொடுத்தது போல் நடக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
ஆதலால் தலைவருக்கு மன உறுதி போய்விட்டது.அப்படி இருந்தாலும் இந்தத் தீர்மானம் விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோற்றுப் போயிருந்தும் அந்த முடிவை மகாநாட்டிற்குக் கொண்டு வர காலையில் சம்மதித்தவர், பிறகு கொண்டு வரவில்லை. அன்றியும் இத் தீர்மானத்தைப்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பற்றியும் ஓட்டுச் சேகரித்தவர்கள் செய்வித்தக் குழப்பங்களால் ஏற்பட்டக் குழப்பங்களையும் விளக்க சந்தர்ப்பம் கொடுப்பதாய் வாக்குக் கொடுத்து அதற்காகவே கமிட்டியை ஒத்திப்போட்டவர். மறுபடியும் கமிட்டிக் கூடினதும் அக்குழப்பத்துடனேயே ஓட்டு எடுத்து விட்டார். இவைகள் ஒருபுறமிருக்க, இத்தீர்மான விஷயத்தில் எனக்கு உள் எண்ணம் கற்பித்து பிரசாரம் செய்ததும் என்னை “குரு” என்றும் “தலைவர்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தவர்களே இவ்விதப் பிரசாரத்தில் பலமாக ஈடுபட்டிருந்ததும், அதிலும் சிலருக்கு
தீர்மானத்தைப் பற்றிக் கவலையே இல்லாமல் எனக்கு விரோதமாய் முயற்சி செய்வதை தங்களுக்கு ஒரு பெரிய உற்சாகமாய்க் கொண்டதும் ஆகிய காரியங்கள் எனது நம்பிக்கைக்கு விரோதமான பலனைக் கொடுக்க நேர்ந்துவிட்டது. இந்தத்தீர்மானத்தில் தமிழ் ஜில்லாக்கள் 13-ல் 10 ஜில்லாக்கள். எனக்கு விரோதமாக ஓட்டு செய்ததும், அனுகூலமாக ஓட்டு செய்த 3 ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா நமது சம்பந்தமில்லாமல் எதிர்க்கட்சிப் பிரசாரத்தால் ஓட்டுச் செய்ததும், ஒரே ஒரு ஜில்லா அதுவும் கோயமுத்தூர். ஜில்லா மாத்திரம் எனக்கு அனுகூலமாய் எனது சொந்த தாட்சண்யத்திற்காக ஓட்டு செய்ததுமான நடவடிக்கையைப் பார்க்கும்போது எனக்குத்தமிழ்நாட்டில் உள்ள செல்வாக்கு எவ்வளவு என்பதும் எனது “தலைமை” ஸ்தானத்தின் யோக்கியதை எவ்வளவு என்பதும் குருடனுக்கும் விளங்காமல் போதாது.
மேலும், “குதிரை கீழே தூக்கிப் போட்டது மட்டுமல்லாமல் புதைப்பதற்குக்
குழியும் பறித்தது” என்கிற பழமொழிபோல், நமது தீர்மானத்தையும் விருப்பத் தையும் இக்கெதியாக்கியதுமல்லாமல் “ஈ.வெ.ராமசாமியும், கண்ணப்பரும்
மந்திரிகளுடன் சேர்ந்து கொண்டு பார்ப்பனர்களை தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள நெல்லூர் மகா நாட்டில் முயற்சி செய்தார்கள்.
நாங்கள் ஒரே அடியாய் அடித்து விட்டோம்” என்றும் மற்றும் சில கற்பனை களைக் கொண்டும் திண்ணைப் பிரசாரமும் செய்வதில் சிலர் ஊக்கமாக
இருப்பதைப் பார்த்தால், அவர்களைப்பற்றி ஒரு புறம் வேடிக்கையும் மற்றொரு புறம் பரிதாபமும் படவேண்டியிருக்கின்றது. ஏனெனில் கட்சியின் நலத்தைத் தவிர வேறு எந்தக் காரியத்தை உத்தேசித்தும் பார்ப்பனர்கள் சம்பந்தம் நமக்கு வேண்டியதில்லை என்றும், அதனால் எனது சொந்தத்திற்கு எவ்வளவு கெடுதி ஏற்படுவதாயிருந்தாலும் நமக்கும் கவலை இல்லை என்றும் நினைத்துக் கொண்டிருக்கும்நான்,பார்ப்பனர்களைத் தென்னிந்திய நலஉரிமைக் கட்சியில் சேர்க்க வேண்டுமென்று நினைத்து விட்டால், கட்சியின் நன்மை தீமைகளைப்
பற்றி கவலை இல்லாமல் தமது சொந்த நன்மை தீமையை உத்தேசித்தே
சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கும் தலைவர்களும் பின்பற்றுபவர்களும் பெரும்பான்மையாய் உள்ள கட்சியில் அது எப்படி நிறைவேறாமல் போகும் என்பது பரிகாசமாயிருப்பதுடன், இம்முயற்சியில் எவ்விதம் வெற்றி அடைவார்கள் என்பதில் பரிதாபமாயுமிருக்கின்றது.நானும் திருராஜன் அவர்களும் தமிழ் ஜில்லாக்களில் சமீபத்தில் சுற்றுப் பிரயாணம். செய்த காலத்தில் ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் இவ்விஷயத்தில் அவர்கள்.
குடி அரசு - 1929 @) 202
கொண்ட அபிப்பிராயம் நமக்கும் நான் கொண்ட அபிப்பிராயம் அவர்களுக்
கும் நன்றாய் தெரிந்ததும், பிறகு கடைசியாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட முடிவும்,நடுநிலைமையில் உள்ள யாவருக்கும் இதற்குள் மறந்து போயிருக்காது. ஏதோ சமய சந்தர்ப்பத் தினால் இம்மாதிரி நடக்க முடிந்தது என்றும், இவ்வித முடிவு ஏற்பட வேண்டியிருந்ததென்றும் உண்மையை ஒப்புக்கொண்டு இருப்ப வர்களைப் பற்றி எவ்விதத்திலும் நமக்கும், நம்மைப் பற்றி அவர்களுக்கும். கடுகளவு அபிப்பிராய பேதமும் ஏற்பட நியாயம் கிடையாது என்பதும்; இவ் விதம் ஒரு சம்பவம் நடந்ததாகவே ஒருவருக் கொருவர் மறுபடியும் ஞாபகத் திற்கே கொண்டுவர வேண்டியதில்லை என்பதும் முடிவான காரியமாகும். ஆனால் இந்த விஷயத்தை பொறுப்பற்ற சிலர்கள் ஆயுதமாக வைத்துக் கொண்டு கூலிப்பிரசாரம் செய்வதாக தெரிய வருவதால் பாமர மக்களுக்கு இதை விளக்காமல் இருக்க முடியவில்லை. ஆதலால், இதை இவ்வளவு தூரம்
எழுதித்தீர வேண்டியிருந்ததற்கு நானே வருந்துகின்றேன். மற்றபடி நான் ஏன் தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கு ஒரு தலைவரை நியமிப்பதற்குப் பதிலாக கமிட்டி நியமிக்கவேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தேன் என்பதற்கு உள்ள காரணத்தை பின்னால் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஈ.வெ.ரா
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.40.1929.
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
BTG உண்மை நா௫வோர் சங்கம்
மதம் மாறுதல் சரஸ்வதி பூசை
தலைவரவர்களே!சகோதரர்களே!இன்று மூன்று விஷயங்களைப்பற்றி பேச நான் தலைவரால் கட்டளை இடப்பட்டிருக்கின்றேன். ஒன்று சீலையம் பட்டியில் 69 பேர்கள் மகம்மதியரானது, இரண்டு சரஸ்வதி பூஜை, மூன்று நெல்லூர் மகாநாடு.
முதலாவது விஷயமாகிய ஆதிதிராவிடர்கள் மதம் மாறி மகம்மதியரான விஷயத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன்.
முதலில் மத சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்தமதமானாலும் அதன் கொள்கைகள் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராய முடையவையானாலும் அம் மதமும் கொள்கைகளும் மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கைக்கு அவனுடைய பிரத்தியட்ச அனுபவத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளுடையவைகள் என்றால் அதைப்பற்றி யோசிக்கநான் எப்போதும் தயாராயிருக்கின்றேன். அப்படிக்கின்றி மதமும் அதன் கொள்கைகளும் “மேல் லோகத்திலோ'” அல்லது “கீழ் லோகத்திலோ' அல்லது செத்தபிறகு “சூட்சும” சரீரத்துடனேயோ அனுபவிக்கும் அனுபவத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டது
என்றால், அது எப்படிப்பட்ட மதமானாலும் யார் செய்ததானாலும் அதற்கு என்ன ஆதாரம் சொல்லுவதானாலும் அதனால் என்ன விளைவதானாலும்
நான் அதைக் கடின நேரம் கூடத் திரும்பிப்பார்க்கமாட்டேன்.இது விஷயத்தில் என்னைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்லை, ஏனெனில் இந்தப்படி நினைப்பதற்கு எனக்குப் பூரண:
சுதந்திரம் இருக்கின்றது என்று நினைத்திருகிறேன். அதோடு எந்த லோகத்திலானாலும் இந்த உலகவாழ்க்கை அனுபவத்திற்கு விபரீதமான பலன் இருக்க முடியாதென்றுங் கருதுகின்றேன். இதை அனுசரித்தே தான் இவ்வாரத்தில் சீலையம்பட்டியில் 69 பேர்கள் மகமதியரான விஷயத்தைப் பற்றி எனது மகிழ்ச்சியை தெரிவிக்க சில வார்த்தைகள் பேசப் போகின்றேன், சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் மகம்மதியர்களாகி விட்டதால் அவர்க ளுடையபாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு “மோட்சலோகம்” கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ “கடவுளோடு. கலந்துவிட்டார்கள்” என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்கள் நம்பும்படி
குடி அரசு - 1929 @) 204
சொல்வதும் இல்லை.அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாச முண்டென்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை. எந்த மதக்காரணாயிருந்தாலும்
தனதுசெய்கைக்குத் தகுந்தபலன் ஒன்றாகவேதான் இருக்கும்.இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும் மகம்மதியனாயிருந்து பசுவைக் கொன்று
தின்றால் பாவமில்லை என்றும் மதத்தின் காரணமாகக் கருதுவது மூடநம்பிக் கையே ஒழிய இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூடநம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. ஆகையால் பாவபுண்ணியத்தையும் மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை மற்றென்னவென்று கேட்பீர்களேயா
னால் இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாக சொல்லப்படும் 69- அதிதிராலிடர்களும் பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு பாமரத்தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான
மிருகப் பிராயத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.
அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களை பறையன்,சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை “சாமி” “சாமி” “புத்தி” என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு. வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல் குடிக்க தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.வண்ணான் நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும் கரடி போல் மயிர் வளர்த்துக் கொண்டும் பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழ வேண்டியதில்லை. இனி எந்தபொது தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மதசம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போகத் தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.
இவ்வளவையும் விட, இனி அவர் கல்லையும், செம்பையும், கூடை யையும், முறத்தையும்: விளக்குமாற்றையும் கடவுள் என்று வணங்க வேண்டியதில்லை.
மற்றும், அவர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த சிறிது பணத்தையும் கடவுளுக் கென்றும், கல்லுக்கென்றும் கருமாதிக்கென்றும் செலவு செய்யவேண்டிய தில்லை. எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும் அறிவு வளர்ச்சித் தடையிலும் சமூக இழிவிலும் சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்கு குறைவிலிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்ற வைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை.
ஏனெனில், தீண்டாமை நெருங்காமை,பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது. இம்மாதிரி சுமார் ஆயிரம் வருஷங்களாக நினைத்துக்காரியத்தில் நடந்த பெரியவர்கள்தான் இன்றைய தினம் இந்தியாவில் 8 கோடி மகமதியர்களாகவும் ஒரு கோடி கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு மகம்மதியர்களும் கிறிஸ்தவர்களும் எங்கிருந்து வந்தார்கள்? இந்த எண்ணிக்கையை பார்த்து பயந்தே நானும் திருவாளர்கள், தங்கபெருமாள், ஈஸ்வரன், மாரியப்பன் முதலியவர்களும் கோயம்புத்தூர் ஜெயிலிலிருக்கும் போதே ஜெயிலில் இருந்து விடுதலையானதும் தீண்டாமையை அடியோடு ஒழித்து விடுவதுடன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்துக்களாக்கும் முயற்சியில் வேலை செய்வது என்று முடிவுகட்டிக் கொண்டு வந்தோம்.
நாங்கள் வெளிவந்ததும் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சிறைசென்று விட்டதால் இந்த சமயத்தில் ஒத்துழையாமை விட்டுப் போகக் கூடாது என்று சில பார்ப்பனத் “தலைவர்கள்” கேட்டுக் கொண்டதால் மறுபடியும் காங்கிரஸ் வேலையைசெய்தோம்.பிறகு “குருகுல நடவடிக்கையையும்அது சம்பந்தமாக பார்ப்பனத் தலைவர்கள் மனப்பான்மையையும் அவர்களது உள் எண்ணத் தையும் தெரிந்த பிறகு “இந்து” மதமே அடியோடு அழிக்கப்படவேண்டும்.
என்கின்ற முடிவுக்கு வந்துவிட நேர்ந்தது. அதன் பேரில் இந்து மதத்தை விட்டாலும் பிறகு தங்களுக்கு ஏதாவது ஒரு மதம் இருந்துதான் தீர வேண்டு மென்று கருதும் மக்களுக்குக் கிறிஸ்துவ மதத்தை சிபார்சு செய்யலாமா? மகம்மதிய மதத்தைச் சிபார்சு செய்யலாமா என்று கருதி யோசித்து பார்த்தேன். கடைசியாக கிறிஸ்தவ மதமும் நமது நாட்டில் நான் பார்த்தவரை அதுவும் மற்றொரு பார்ப்பனீய மதமாகவே காணப்பட்டது. கிறிஸ்துவமதப் பிரசாரத்தின் கருத்தெல்லாம் அரசியல் விஷயத்தை அடிப்படையாகவும், அந்தரங்க லட்சிய மாகவும் கொண்டு செய்யப்படுகின்றதே ஒழிய மக்கள் சமத்துவத்தையோ ஒற்றுமையையோ கொண்டதாகத் தெரியவில்லை என்கின்ற முடிவிற்கு வரவேண்டியதாயிற்று. எப்படியென்றால் இன்றைய தினமும் கிறிஸ்துவ
மதத்தில், “பறக் கிறிஸ்தவன்”, “சக்கிலிக் கிறிஸ்தவன்”, “வேளாளக் கிறிஸ்தவன், “உடையார் கிறிஸ்தவன்”, “நாயுடு கிறிஸ்தவன்”, “நாடார் கிறிஸ்தவன்”, “பார்ப்பனக் கிறிஸ்தவன்” என்கின்ற பாகுபாடுகளும் குடியிருப்பு வசதி வித்தியாசங்களும் சர்ச்சு முதலிய பிரார்த்தனை இடங்கள் வித்தியாசம் காணப்படுவதைப் பார்த்தால் நன்றாய் தெரியவரும். ஆகையால் மகம்மதிய மதத்தை தழுவுவதினால் தான் தீண்டாதவர்களுக்கு இதுசமயம் சீக்கிரத்தில் உடனேயே சமூக சமத்துவத்தை அளிக்க முடியும் என்று கருதுகிறேன். இந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தேன்.
குடி அரசு - 1929 @) 206
ஈரோடு தேவஸ்தானத்தில் சகல இந்துக்களுக்கும் கோயில் நுழைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் பேரில் சில மேல் ஜாதிக்காரர்கள் என்பவர். களும், வெள்ளைக்கார அதிகாரிகளும் பார்ப்பன அதிகாரிகளும் கொண்ட மாதிரியானது எனக்குத் தீண்டப்படாத மக்களுக்கு சமத்துவம் கொடுப்பதற்கு அவசரமாய் இதைவிட வேறு வழியில்லை என்கின்ற முடிவு ஏற்படுத்தச் செய்துவிட்டது. நமது நாட்டில் ஜாதி வித்தியாசம் ஒழியவும் சமத்துவம் ஏற்படவும் வெள்ளைக்காரர்களும் சிறப்பாக பாதிரிமார்களும் சுலபத்தில் சம்மதிக்கமாட்டார்கள்.
ஆகையால் தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும் ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்து உள்ளவர்களுக் கும்மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்து உள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை முதலில் தீண்டப்படாதவர்கள் மகம்மதியாராவதை ஆக்ஷேபியாதிருப்பதேயாகும் என்பது எனது தாழ்மையானதும் கண்ணியமானதுமான அபிப்பிராயம். நிற்க, சிலர்மகம்மதிய மதம் முரட்டுச் சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி யிருக்கிறார்கள். அது வாஸ்தவமானால் தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழியமகமதியமதத்தை சிபார்சு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்று கருதுகிறேன்.
இப்பொழுது நமது தீண்டப்படாதவர்கள் தங்கள் தீண்டாமை நிலை நிற்கும்படி தாங்களாகவே அளவுக்கு மீறி ஒடுங்குகிறார்கள். காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அடிக்க அடிக்க ஓடுகிறார்கள். கீழ்ப்படியவே தங்களை: கடவுள் பிறப்பித்திருப்பதாய் கருதுகிறார்கள்; எவ்வளவு திட்டினாலும் ரோஷப்படுவதே இல்லை; கோபிப்பதேயில்லை; “முரட்டு சுபாவம் இல்லாத இந்துமதம்” இவர்களை இப்படிச் செய்துவிட்டதால் தங்களைப் பிறர்
இழிவுபடுத்துவது தங்களுக்குத் தெரிவதில்லை.
ஆதலால், மகம்மதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால் அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவுதாழ்மை யாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற் படும் அல்லவா? அன்றியும்,மகம்மதியர்களைப் பற்றி இந்து மதத்தின் சார்பாய் இந்துக்கள் நினைத்துக் கொண்டிருந்ததென்னவென்றால், துருக்கியர். மிலேச்சரென்றும் மிக்க தாழ்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டிருந்தார்கள்.
அதற்கு ஆதாரமாய் இப்போதும் இந்து சாஸ்திரமும் நிகண்டும் இருக்கிறது. ஆனால், தீண்டப்படாதவர்களைப் போலவே மகம்மதியர்களும் ஒடுங்கி இருந்திருப்பார்களானால் இந்தியாவில் இந்திய தீண்டப்படாதார் 6 கோடியும், மகம்மதியர் தீண்டப்படாதார் 8 கோடியும் என்று சொல்ல வேண்டியதாய் இருந்
திருக்கும். இப்போது அந்தநிலை மாறியிருப்பதற்கு மகம்மதியர்களின் முரட்டு
சுபாவம் என்று சொல்லக் கூடாதானாலும், ஒடுங்க முடியாத, தாழ்மையையும்
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம் என்றாவது சொல்லியாக வேண்டும். அந்த சுபாவம் இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள். என்பவர்களுக்கு வந்துவிட்டால் கூடப் போதுமானது என்றும், மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்த சுபாவம் வராது என்பதோடு மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வர விடமாட்டார்.
கள் என்றே சொல்லுவேன்.
ஆகையால் இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும் வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் மகம்மதியர் ஆவதை: தவிர வேறு மார்க்கமில்லையாதலால் நாம் அதை ஆக்்ஷேபிக்க முடியாதவர் களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ, இந்து சமூகத்தினிடத் திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதா யிருந்தால் அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கிருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன் வரட்டும்: அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.மற்றபடி வீண்: சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டிருப்பதனால், இனி யாதொரு நன்மையும் அடைய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது.ஆதலால் “உண்மை நாடுவோர் சங்கத்”தின்இன்றைய கூட்டமானது சீலையம்பட்டியில் இந்துக்களில் உயர்ந்த வகுப்பார் என்பவர்களின் கொடுமையைச் சகிக்க மாட்டாமல், மகம்மதிய மதத்தை தழுவினதின் மூலம் தங்கள் இழிவிலிருந்து விலகிய 69 ஆதிதிராவிடர்களை மனமாரப் பாராட்டுகின்றது என்கின்ற தீர்மானத்தை நான் பிரேரேபிக்கின்றேன்.
பிறகு திருமதி. இலட்சுமி அம்மாள் அவர்கள் மகமதிய மதத்தில் பெண்களுக்கு உள்ள பெருமையையும் சுதந்திரத்தையும் எடுத்துச் சொல்லி ஆமோதித்தார்கள். மத்தியில் ஒருவர் மகம்மதிய மதத்தில் உள்ள கோஷா முறையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று ஒரு சீட்டு எழுதி அனுப்பினார்கள்.அதற்கு திருஈவெ. ராமசாமி தான் பதில் அளிப்பதாக முன் வந்து “கோஷா முறையைதான் ஒப்புக்கொள்ளுவதில்லை என்றும் சில படித்த மகம்மதிய கனவான்கள் கோஷா முறை குரானில் இல்லை என்று சொன்னார் கள் என்றும், தான் இங்கு குரானைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவரவில்லை என்றும், தனக்கு அதைப் பற்றி தெரியாது என்றும், இந்த நாட்டில் கோஷா இல்லாத மகம்மதிய பெண்கள் அநேகர் இருக்கிறார்கள் என்றும், மலையாளத்தில்100-க்கு 75 மகம்மதியபெண்களுக்குகோஷா இல்லை என்றும், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் இந்த பக்கங்களில் காடுகளில் வேலை செய்வதைப் பார்த்ததாகவும் தனக்குத் தெரிந்தவரை கோஷா ஒரு அந்தஸ்தாக கருதப்படுகின்றதே தவிர முழுதும் மதக் கட்டளையாகக்
கருதுவதாகச் சொல்ல முடியாது என்றும், இப்பொழுது அந்த மதத்தில் சேர்ந்த பெண்கள் கோஷாவாயில்லாவிட்டால் தள்ளிவிட மாட்டார்கள் என்றும்,
குடி அரசு - 1929 @) 208
விதவாவிவாகம்,கல்யாணரத்து, பெண்கள் படிப்பு, சொத்துரிமைஆகியவைகள்.
பெண்களுக்கு அந்த மதத்தில் இருப்பதால் கோஷா ஒரு சமயம் இருந்தாலும் அந்த கஷ்டத்தை விடபல பங்கு மேல்பட்டஅதிக லாபமிருக்கின்றது என்றும், அன்றியும், துருக்கியைப் போலும் ஆப்கானிஸ்தானத்தைப் போலும் இங்கும் சமீபத்தில் சீர்திருத்தம் ஏற்படலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றதென்றும். சொன்னார். கரகோஷத்தினிடையே தீர்மானம் நிறைவேறியது.
சரஸ்வதி பூசை
சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர்: கொடுத்து அதை பூஜைசெய்தால் கல்விவரும்,வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக்கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவ பிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்
ததாக சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையேமணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள். எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் டெ பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின்
பயன் தொழிலென்றும்,தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக்
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக்
குறித்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்து பூசை செய்கிறார்கள். இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திரா,
படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழி லாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும்,மாணாக்கர்கள் புத்தகங்களையும்,குழந்தைகள் பொம்மை
களையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத்தியக்கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொரு
வர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான் களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்ததினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை ஒய்வு முதலிய ஆடம்பரங் களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு
செய்தும் போராவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயு தத்தை வைத்து பூசை செய்து வந்த வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட்ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களை காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்கு பயந்து பொய்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிருக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி சந்தனம் குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டுவிழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவதுநாணய மாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின். றார்கள்.அதுபோலவே புஸ்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூசை செய்கின்றார்களே. அல்லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடு கின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக் குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள். அடிமைகளாக இருக்கின்றார்கள்.நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு ஐந்து பேரே
படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு
குடி அரசு - 1929 @) 210
ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்த மில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.
வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டேமலம்:
துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்விவான்களாகவும் செய்யுமா என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாடாரமற்றும், கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கவும்,சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்
கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாக்ஷியுடனும் தொழிலாளர். ஆதிக்கத்துடனும்இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்த பூஜையின்மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவுவெளியாகின்றது பாருங்கள்.
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள்
கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடைமேளவாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாரா: தனை,கர்விட்டு ஊர்போகரயில் சார்ஜு ஆகியஇவைகள் எவ்வளவு செலவா கின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப்பணம்?
தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேழ்க்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த
ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்த பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
புரட்டாசி சனிக்கிழமை
இனி அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும்,
திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள்.
வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்.
களையும் மெனக்கட்டுத் தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறுநிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல் கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போராமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்த சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேழ்க்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள். தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு சொம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த சொம்புக்கு
சுத்திக் கொண்டு “வெங்கிடாசலபதி கோவிந்தா” என்றும் “நாராயணா கோவிந்தா” என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு. போவதில் ஏதாவது பலனுண்டா என்றுதான் கேட்கின்றேன்.
மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெரும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார். களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக்கொள்வதும்ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளி கம்பியை குத்திக் கொண்டு போதாக்குறைக்கு தெருவில் கூட்டமாய் “கோவிந்தா” “கோவிந்தா” “கோவிந்தா” என்று கூப்பாடு போட்டுவிட்டு வீட்டு வீட்டுக்கு, கடைகடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்கு கொடுத்து திருப்பதி போவதும். அங்கு முழங்கால் முறியமலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்த மலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்தபட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தை கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக்கடியில் இடுபடுவதும்,
குடி அரசு - 1929 @) 212
பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேக வியாதிகாரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டையிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக்காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூசை “பிராமண: சமார்த்தனை” செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்த வனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ, நாட்டுக்கோ, ஒழுக்கத்திற்கோ, மதத் திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்கு போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங் களையோ கெட்ட செய்கைகளையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது
திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாக வாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம்மாதிரி. அறிவீனமான காரியத்திற்காக நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி
ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசீய நிபுணராவது கணக்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன்.
தீபாவளி
இனி அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித்தனமானது மாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவதாரத்தில் கொன்றாராம்.அந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.
சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோமனிதத் தன்மையோ
இருக்கின்றதா என்று பாருங்கள். விஷ்ணு என்னும் கடவுள் பூமியைபுணருவது என்றால் என்ன என்றாவது, அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது, இவைகள் உண்மையா? என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ்வளவு பிரயாணச் செலவு? என்பவைகளை ஒரு சிறிதுகூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப்பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்டபணம் செலவுசெய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்;
கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம்
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஏற்பட்டுவிடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு. தவிர சுத்தமுட்டாள் தனமான பட்டாசுக்கொளுத்துவது எவ்வளவு? மற்றும் இதனால் பலவிதநெருப்புஉபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல்
கருகி கண், மூக்கு, கை, கால், ஊஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக “இனாம் இனாம்” என்று எத்தனை பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு பணம் செலவாகின்றது என்று கணக்குப் பாருங்கள். இவைகளை எல்லாம் எந்த இந்திய பொருளாதார தேசீயநிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேழ்க்கின்றேன். துலாஸ்
தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்நானமென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம். காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப்படுவதும் இதற்காக ஊரைவிட்டுவிட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும்.ஒன்றுஇரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப்படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அரிசி பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள். செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டு விட்டு பார்ப்பானுக்கு சீலைவேஷ்டி சாமான் பணம் கொடுத்து காலில் விழுவது மான காரியம் செய்கின்றோம். காவேரியை பெண் தெய்வமென்பதும் அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?'
கார்த்திகை தீபம்
இனி அதற்கு அடுத்த மாதமாகிய கார்த்திகை மாதம் வந்தால் கார்த்திகைப் பண்டிகை என்று வீணாக ஆயிரக்கணக்கான தீபம் கொளுத்துவ
தின் மூலம் எண்ணெயையும், நெய்யையும் பாழாக்கிபுகைப்பதும், மலைகளின் பேரில் கட்டைகளையும் விறகுகளையும் போராய் குவித்து அதில் நெய்யையும் வெண்ணெயையும் டின்னு டின்ணாய், குடம் குடமாய் கொட்டி கொளுத்துவதும், இந்த வேடிக்கை பார்க்க திருவண்ணாமலை, திருச்செங்கோடு முதலிய மலைக் கோயில் உள்ள ஊர்களுக்கு ஜனங்கள் லட்ச லட்சமாய் பணம் செலவுசெய்து
ரயில் சார்ஜ் கொடுத்து நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்பட்டு கண்ட ஆகாரத்தை புசித்து வயிற்றைக் கெடுத்துக் கொண்டு ஊர் வந்து சேருவதும் விளக்கு நெருப்பில்பல பெண் குழந்தைகள் துணியில் நெருப்புப் பிடித்து உடல் வெந்து
சாவதும் ஆகிய காரியங்கள் இல்லாமல் அவைகளால் வேறு ஏதாவது பலன் உண்டா என்று கேழ்க்கின்றேன். முன் போலவே இந்தப் பண்டிகை மூலமும்
குடி அரசு - 1929 @) 214
வருஷம் ஒன்றுக்கு இந்த நாட்டில் எவ்வளவு ரூபாய்கள் செலவாகிறது என்றும் எவ்வளவு நேரமும் அதிலும் செலவாகின்றது என்றும் எந்த இந்திய தேசீய பொருளாதார நிபுணர்களாவது கணக்குப் பார்த்தார்களா? என்று கேழ்க்
வைகுண்ட ஏகாதசி பூசம்
இனி அதற்கு அடுத்த மார்கழி மாதம் வந்தால் வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணம் செலவு செய்து கொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகை:
யும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும் மீனும் கோழியும் உயிர் பெற்றுவிட்டது என்பதும், மண்ணு சர்க்கரையாகி விட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று எழுந்துவிட்ட தென்பதும், இன்னும் இதுபோல பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்லுவ
தும், அழுக்கு குளங்களில் குளித்து அழுக்கு தண்ணீரை சாப்பிட்டு பஞ்சாமிர்தம் என்னும் ஒரு அசிங்கமான வஸ்துவை கண்டபடி சாப்பிட்டு வயிற்றுப் போக்கெடுத்து காலரா ஏற்பட்டு திரும்பிப் போகும் போது வழியில் சாவதும், சிலர் அந்த கால்ராவை தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய் பரவவிட்டு அங்குள்ளவர்களை கொல்லுவதும், அவர்கள் நதி வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால் அந்த கால்ரா அசிங்கம் வாய்க்கால்களில் கலந்து கரை ஓரங்களில் இருக்கும் ஊர்களிலெல்லாம் பரவி மக்கள் நூற்றுக்கணக்காக சாவதுமான காரியங்கள் வருஷந்தோறும் நடைபெறுகின்றது. சாதாரணமாக
சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும் பழனி தைப்பூச உற்சவத்திலுமே ஏற்பட்ட சுகாதாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும் முதல் முதல் அங்கு கால்ரா உற்பத்தியாகி பிறகு இரண்டு மூன்று மாதம் தென்னாடெல்லாம் பரவி @ 166 இரண்டு, மூன்று ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் கொள்ளை. கொண்டு போகின்றது. இதன் உண்மையை ஒருவரும் அறியாமல் “பேதியாயி” “மாரியாயி” “ஓங்காளியாயி” ஊருக்கு ஒருகுடம் எண்ணெய் கொண்டு வந்து ஆளுக்கு அரை கரண்டி கொடுத்துவிட்டாள் என்று சொல்லி ஊரிலுள்ள மக்களில் சில பாகம் செத்து கால்ரா தானாக ஒடுங்கியபின் ஓங்காளியின் பொங்கலும் காளி பூசையும் செய்து பேதியை நிறுத்திவிட்டதாக வெட்கமில்
லாமல் பேசிக் கொள்வதும், அன்றியும்,
கிராம தேவதை
கிராமங்களிலெல்லாம் மார்கழி, தை மாதங்களிலேயே மாரியம்மன் பண்டிகை கொண்டாடி வெந்தும் வேகாதப் பொங்கலும், பச்சைமாவும், சரியாய்
சுத்தம் செய்யாத வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம், கால்ரா முதலிய வியாதிகள் உண்டாவதையும் பார்க்கின்றோம். பொதுவாகவே நமது
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
நாட்டில் கூட்டம் சேர்ந்தாலே அசுத்தம் உண்டாகி வியாதிகள் ஏற்படுவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம்.
சிவராத்திரி
இனி அதற்கடுத்த மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி
கிழங்கு வகைகளையும், தானியவகைகளையும், பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக்கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதையாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா?' என்று கேழ்க்கின்றோம். இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும் பண்டிகை. களும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு மொத்தத்தில் வருஷத் தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வ ளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள். இந்தப் பணம்
எல்லாம் தேசீய பணமல்லவா? ஏழைதேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம்
வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல்
கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டு பிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு கூலிக்காக கப்பலேறும் தேசம் என்று சொல்லி கொண்டிருக் கின்றநாம்,எத்தனை நாட்களை,எத்தனை ரூடாய்களை, எத்தனை ஊக்கங்களை' இந்தப் பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூசைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொருவரும் செலவுசெய்கின்றோம் என்பதை. கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
இது யார் சூட்சி
எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப் பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன்.மற்றப்படியோ, என்றால் பெரும்பாலும் அவர்கள் சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடையவர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்லுவேன்.
என் புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவை கள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும் ஆகஷிக்காரர்களான அரசர். களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள்.
சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக்காரர்களும் சூக்ஷிக்காரர்: களுமாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களா
குடி அரசு - 1929 @) 216
கவும் கொள்ளைக்காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள்.
இவ்விருவர்களும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டியஅவசியமுடையவர்கள்.
அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால், அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால்தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப்பானா னால் புரோகிதனுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக்குமானால் அரசனுக்கு பயப்படமாட்டான்.ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும் படியாகவும் மேல்கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமூகத்திற்கே பயன்படும்படி யாகவும் மற்றும் மேல்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்கு தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசைஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும். இவைகளை வைத்துக் கொண்டுமலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங் களையெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல் கண்ட உற்சவம் சடங்கு கோவில் பூசைபண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண்: செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.
குறிப்பு : ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்திலும் வளையக்காரத் தெரு பார்ப்பனரல்லாதார் வாசக சாலையிலும் நடைபெற்ற வாராந்தரக் கூட்டத்தில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 20.10.1929.
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
யார்ப்பணரிண் தேசீயம்
குழந்தை விவாகத்தை தடைப்படுத்தும் சாரதா மசோதா இந்திய சட்டசபைக்கு வந்தது முதல் அது நிறைவேறும் வரை நமது பார்ப்பனர்கள். செய்த தடைகளும் சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது யாவரும் அறிந்ததாகும். இவ்வளவு தடைகளையும் சமாளித்து சர்க்கார்தயவவினாலேயே அதுநிறைவேற்றப்பட்டு ராஜப் பிரதிநிதி அனுமதியும் பெற்று சட்டமான பிறகு மறுபடியும் நமது பார்ப்பனர்கள் ஊர் ஊராய் கூட்டங் கூடி அச்சட்டத்தைக் கண்டித்து கூட்டம் போட்டு பேசி வருகின்றார்கள். நூற்றுக்கு தொண்ணூறு பார்ப்பனர்களுக்கு இனிமேல் தாங்கள் இவ்விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும் கூட அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் ஒன்று சேர்வதற்கும் தேர்தல் கிளர்ச்சிக்கு ஒரு வழிகண்டுபிடிப்பதற்கும் இதை. உபயோகித்துக் கொள்ளலாமா என்கின்ற சூழ்ச்சியின் பேரிலேயே இந்த சாரதா மசோதா கண்டனம் என்னும் செத்த பாம்பை ஆட்டி வருகின்றார்கள். தங்க
ளுக்கு உதவியாக மகமதியர்களையும் கிளப்பிவிட்டு அடுத்த தேர்தலுக்கு அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாமா என்றும் சூழ்ச்சி செய்கின் றார்கள். இதுகடைசியாக கிலாபத்து கமிட்டியினால் பார்ப்பனர்கள் எவ்வளவு
லாபம் அடைந்தார்களோ. அதுபோலவும், அது கிலாபத்திற்கு எவ்வளவு பயனளித்ததோ அதுபோலவும் தான் முடியுமே ஒழிய, ஜாக்கிரதையும் முன்: யோசனையும் உள்ள மகமதிய மக்கள் இதினாலெல்லாம் ஏமாந்து போக மாட்டார்கள்.இவர்களாகவே வேண்டுமானால் கூட்டங்கள் கூடி வானமளாவப் பேசியதாகவும், அபிப்பிராயங்கள் கொடுத்ததாகவும், சத்தியாக்கிரங்கள். செய்வதாக தீர்மானித்ததாகவும் பத்திரிகையில் எழுதிக் கொள்ளலாமே தவிர, மற்றப்படி இவர்களுக்கு காரியத்தில் ஒரு காரியமும் செய்ய யோக்கியதை இல்லை என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். ஏனென்றால், இந்தக் கூட்டத்தார்
களும் திரு.சத்தியமூர்த்தி முதலிய சாஸ்திரிகளும் மூன்று வருடத்திற்கு முன் இந்து தேவஸ்தான சட்டம் செய்யப்படும்பொழுது “மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டது” “மதத்தில் சர்க்கார் பிரவேசித்துவிட்டார்கள்" “இந்த சர்க்காரை ஒழித்துவிட வேண்டும்” ஆதலால் “எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்று கூக்குரல் போட்டு, அந்த சட்டத்திற்கு விரோதமாக பாமர மக்களின் கையெ முத்து வாங்கி அனுப்பும்படி அச்சுப் பாரங்களை பார்ப்பனப் பத்திரிகைகள். மூலம் ஊர் ஊராய் அனுப்பி, பொய்க் கையெழுத்துகள் லட்சக்கணக்காய் போட்டு வைசிராயிக்கனுப்பி மடாதிபதிகள் பணத்தையும் லட்சக்கணக்காய்
குடி அரசு - 1929 @) 218
கொள்ளையடித்து வயிறு வெடிக்கத் தின்றுவிட்டு மேடைமீது ஏறி எவ்வளவோ
வீரம் பேசிய கூட்டத்தார், இப்போது அந்த சட்டத்திற்கும் அந்த இலாக்கா
வுக்கும் குலாம்களாய் இருப்பதோடு சிறிதும் மான வெட்கமில்லாமல் நேற்றைய சட்டசபை கூட்டத்தில் திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியாரே “தேவஸ்தானக் கமிட்டிக்கு ஏன் பார்ப்பனர்களை நியமிக்கவில்லை” என்று அந்த இலாக்கா மந்திரியை கேள்வி கேட்டு, தகுந்த யோக்கியதையுடைய பார்ப்பனர்கள். கிடைக்கவில்லை என்று மந்திரி பதிலும் சொல்லி, இந்தக் கேள்வி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தத்துவத்தைக் கொண்டு கேட்கப்படுகின்றதா? என்று கேட்டதற்கும் பதில் சொல்லாமல் மந்திரியைக் கொண்டு ஆம் என்று சொல்லச் செய்த வீரராகிய திருசத்தியமூர்த்தி அவர்கள் மறுபடியும் சாரதா மசோதாவைப் பற்றி சென்னையில் பேசியிருப்பதைப்பார்க்கும்போதுநாளைக்கு இவரே ஏன் அதுசம்பந்தமான உத்தியோகங்கள் தங்கள் கூட்டத்தாருக்கு கொடுபடவில்லை என்று கேட்பதில் சந்தேகப்பட இடமுண்டா? என்று கேட்கின்றோம். எனவே, இப்பொழுது இவர் என்ன பேசியிருந்த போதிலும் இந்த சத்தியமூர்த்தி கூட்டத்தாரே ஆண், பெண் அடங்கலும் நாளைக்கு இந்த சட்டத்தைஅமுலில் கொண்டுவரும் உத்தியோகங்களுக்கு பல்லைக் கெஞ்சப் போகிறார்கள். என்பதிலும் இவர்களே சட்டத்தை சரிவர நடத்திவைக்கப் போகிறார்கள். என்பதிலும் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை.
நிற்க.திருசத்தியமூர்த்திசாரதாமசோதா விஷயமாகப் பேசியிருப்பவை களை கவனிப்போம்.
அதாவது. சர்க்கார் சமூக சம்பந்தமான சட்டம் செய்யக் கூடாதென்றும், பார்ப்பனர்களின் ஒத்துழைப்பைசர்க்கார் இழந்துவிடக்கூடும் என்றும்,பார்ப்பனர்.
கள் இச்சட்டத்திற்கு பணிந்து விடாமல் மீறி சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்றும் பேசி இருக்கின்றார். இந்தப் பேச்சுக்கு தலைமை வகித்தவர் சென்னை மாகாண வருணாசிரமகமிட்டி தலைவர் திருடி ஆர். ராமச்சந்திர அய்யர் ஆவார். திருசத்தியமூர்த்தியோ பூரண கயேச்சைக்கட்சி காரியதரிசியாவர். எனவே,பூரண சுயேச்சைக்கும்வருணாசிரமதருமத்திற்குமுள்ளஇரகசியசம்பந்தமும் சூழ்ச்சியும் இந்தக்கூட்டுறவால் நன்குவிளங்கும்.தவிரவும் திரு.சத்தியமூர்த்திபேசும்பொழுது அதுவும் ஒரு கட்டிடத்திற்குள் பேசும்பொழுது கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு. போலீசுக்கு சொல்லி அனுப்பி இரண்டு போலீஸ் சேவகர்களைத் தருவித்து வைத்துக்கொண்டு பேசி இருக்கிறார். இதிலிருந்து இவருடைய சமுக சீர்த்திருத் தமும்தேசியமும் சுயராச்சியமும் வெள்ளைக்காரர் நீங்கியசுயேச்சையும் எவ்வ ளவு வீரமுள்ளது என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம்.
மிருகப் புணர்ச்சியைவிட மிகக் கேவலமான குழந்தை புணர்ச்சியைத் தடுக்க இவர்களாலும், இவர்கள் மதத்தாலும், இவர்கள் காங்கிரசாலும் தேசியத்தாலும், பூரண சுயேச்சைப் பிரசாரத்தாலும், ஆயிரக்கணக்கான வருஷங்களாக செய்துவரும் சீர்திருத்தத்தாலும், முடியாத ஒரு காரியத்தை
சர்க்கார் செய்தால், சர்க்கார் செய்யக் கூடாதென்றும், அதற்கு மக்கள் கீழ்ப்படியக்
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கூடாதென்றும், அந்தச் சட்டத்தை By வேண்டும் என்றும்,சர்க்காரோடு பார்ப்ப னர்கள் ஒத்துழைக்கக் கூடாதென்றும் சொல்லும் இவரின் ஒத்துழையாமையும் தேசியமும் என்ன கருத்துக் கொண்டது என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்கவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இந்தக் கூட்டத்தாரின் தேசியத்தின் கீழும் காங்கிரசின் கீழும் இந்திய
மக்கள் என்றைக்காவது மனிதத் தன்மையை அடைய முடியுமா என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவதாசிகளை ஒழிக்கும்மசோதா. மதவிரோதம், விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம், பச்சைக் குழந்தைகளைப் புணரும் கொடுமையை ஒழிக்கும் மசோதா மத விரோதம் என்பதானால் அப்படிப்பட்ட அயோக்கிய ஒழுக்க ஈனமான இழிவான மதங் களை இந்த பிரிட்டிஷ் சர்க்கார் தயவில்லாமல் அழிக்கவோ ஒழிக்கவோ முடியுமாஎன்றுதான் தேசீய வீரர்களையும், காங்கிரஸ்பக்தர்களையும், ஒத்துழை யாமை தியாகிகளையும், சீர்திருத்த மகாத்மாக்களையும் கேட்கின்றோம்.
உலகம் போய் கொண்டிருக்கின்ற வேகத்தில் அதாவது ஆகாயத்தில் பறப்பதற்கு சட்டமும், தண்ணீருக்குள் பறப்பதற்கு சட்டமும் செய்து கொண்டி ருக்கின்ற காலத்தில், மனிதனையும் குதிரைகளையும் யந்திரத்தினால் செய்து கொண்டிருக்கும் காலத்தில், ஒரு அவுன்சு எடை சூரணத்தினாலும் ஒரு அவுன்சு எடை திராவகத்தினாலும் பதினாயிரக்கணக்கான மக்களை கொல்ல வழி கண்டு. பிடித்திருக்கின்ற காலத்தில், பதினான்காயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து மத்தியில் கம்பி இல்லாமல் பேசவும் கம்பியில்லாமல் விளக்கு எரிய வைக்கவும் வேலைசெய்து கொண்டிருக்கும் காலத்தில்,ஆணை பெண்ணாக்கி, பெண்ணை ஆணாக்கி பரீக்ஷை பார்க்கின்ற காலத்தில், நமது நாட்டில் குழந்தைகளை புணரக்கூடாது என்று சட்டம் செய்யும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபடவும், அதை மீறி நடக்க ஒரு கூட்டம் வீரர்கள் அதுவும் “தேசீய வீரர்கள்” ஒத்துழையாமைக்குத் தயாராகவும் இருந்தால் நமது நாட்டின் பெருமையை என்ன என்று சொல்லுவது? என்பது நமக்கே விளங்கவில்லை! இந்தவீரர்களை எப்படிமதிப்பது? எப்படி பின்பற்றுவது என்பதும் நமக்கு விளங்கவில்லை.
நம்மைப் பொறுத்தவரை இந்த மாதிரி வீரர்களைப் பற்றி கவலை இல்லையா னாலும் “சுயமரியாதை இயக்கத்தின் எல்லாக் கொள்கைகளையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் சர்க்காரோடு ஒத்துழைப்பதாக மாத்திரம் ஒப்புக் கொள்ள முடியவில்லை” என்று சொல்லும் ஒத்துழையாமை தியாகிகளு
டையவும்,
“தயமரியாதை இயக்கக் கொள்கையெல்லாம் சரிதான்: ஆனால் அதில் தேசியமில்லை' என்கின்ற தேசீய வீரர்களுடையவும்,
“சுயமரியாதை இயக்கம் நாட்டுக்கு நல்லதுதான்; ஆனால், அது மதத்தை எதிர்க்கின்றது” என்கின்ற மதப் பக்தர்களுடையவும்,
குடி அரசு - 1929 @) 220
“சுயமரியாதை இயக்கம் வேண்டியதுதான்; ஆனால் அது தனது கொள்கையை நிறைவேற்ற சர்க்கார் தபவை எதிர்ப்பார்க்கின்றது'” என்கின்ற தேசீயசீர்த்திருத்தமகான்களையும் உடைய அறிவையும் யோக்கியதையையும் எண்ணத்தையும்நினைக்கும்போது தான் நமது நாட்டின் அயோக்கியத்தனமும். வெளியாவதோடு, இந்த மாதிரியான கூட்டத்தாரை விட திருவாளர்கள் சத்தியமூர்த்தி. எம் கேஆச்சாரி, ஏ.ரங்கசாமி அய்யங்கார்.சி.இராஜகோபாலாச்
சாரி, டி.ஆர்.ராமச்சந்திரய்யர் முதலியவர்கள் யோக்கியர்கள் என்றே தோன்று
கின்றது.ஏனெனில் சர்க்கார் இல்லாமல் சட்டம் செய்ய முடியுமா? சட்டமில்லா
மல் காரியம் நடக்குமா? காரியம் நடக்கும்போது மதங்களையும் மனுதர்ம சாஸ்திரங்களையும் பராசர ஸ்மிருதிகளையும் கொண்டு வந்து குறுக்கே
போட்டால் எடுத்து எறியாமல் சும்மா இருந்தால் அனுபவத்தில் நடத்த முடியுமா என்று கேட்கின்றோம். அது மாத்திரம் அல்லாமல் திரு.சத்தியமூர்த்திஅவர்கள் இந்த சட்டம் கொண்டு வந்த சாரதா அவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பேசி இருக்கிறார். எனவே திரு.சாரதா அவர்கள் திருசத்திய
மூர்த்தியின் கடவுளுக்கு பயந்து இருந்தால் இந்த சட்டம் முடிந்து இருக்குமா என்றும் கேட்கின்றோம் நிற்க,
இது விஷயத்தில் “பச்சை தேசிய” பத்திரிகையாகிய அதாவது சர்க் காரை கண்ணால் பார்த்தால் கண்ணை லோஷன் போட்டு கழுவ வேண்டும்.
என்றும், சர்க்காரைப்பற்றி காதில் கேட்டால் காதில் புருஷை விட்டுத் துடைக்க வேண்டும் என்றும் மனதில் நினைத்தால் மனதை விளக்குமாற்றால் தேய்த்து கழுவ வேண்டும் என்றும் கருதிக் கொண்டு இருக்கும் தேசீய பத்திரிகையாகிய
தமிழ்நாடு பத்திரிகை திரு.த்தியமூர்த்தியின் இந்த தேசீயப் பிரசங்கத்தை பற்றி எழுதுவதாவது:-
“சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளை நீக்க சர்க்கார் சட்டமும் சவுக்கடியும் இல்லாமல் முடியாது.”
“புத்தபகவான் சர்வத் தியாகங்கள் செய்து நாடெங்கும் சுற்றிப் பிரசாரம் செய்தும் முடியாமல் போன அநேக காரியங்கள் சர்க்கார் சட்டத்தினாலேயே நடத்த முடிந்து இருக்கிறது.” “விதவைகளை உயிருடன் நெருப்பிலிட்டுக் கொளுத்தியதும், உயிர் இருக்கும்போதே கங்கையில் தூக்கிப் போட்டதும், குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கோயிலில் நரபலியிட்டதும்,கீழ் ஜாதியாரை மேல் ஜாதியார் கொன்றாலும் கேள்வியில்லை என்று இருந்த சாஸ்திர நீதியும் பிராமணனைத் தவிர மற்றவன் படித்தால் பாபம் என்று இருந்த தடையும் சர்க்கார் சட்டம் செய்த பிறகே நீங்கின”.
“வழக்கங்களிலும் மதக் கொள்கைகளிலும் சர்க்கார் தலையிடக் கூடாது என்று வைதீகர்கள் வாதிப்பது முற்றிலும் தவறாகும்.”
“இந்தியா சுயராஜ்ஜியம் அடைய வேண்டும் என்பதில்
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
முன்னிலையில் இருக்கும் சத்தியமூர்த்தி சமூக தர்மத்தை தடுக்க அடிக்கடிகிளம்பிவிடுவது ஆச்சர்யமாயிருக்கின்றது”
என்பதாக எழுதி இருக்கின்றது. இனி மற்ற தேசீய வீரர்களுக்கும் தேசாபி மானிகளுக்கும் ஒத்துழையாமை தியாகிகளுக்கும் என்று இந்த மாதிரி. புத்திவருமோ தெரியவில்லை. முடிவாக நாம் ஒன்று சொல்லுகின்றோம். அநேகமாக இந்த பிரச்சினையையே ஒரு சமயம் அடுத்த தேர்தல் பிரச்சினை யாகக் கொண்டு வரலாமா என்று நமது பார்ப்பனர்கள் கருதிக்கொண்டு இருப்ப தாக தெரிகின்றது. ஏனெனில், இது சமயம் அவர் கைவசம் எவ்வித திட்டமும் இல்லாமல் போய்விட்டது. அதாவது கதர் சங்கதியும், தீண்டாமை சங்கதியும், மதுவிலக்கு சங்கதியும் வெறுத்துப் போய்விட்டது. சர்க்காரை எதிர்ப்பதும் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளாததும் முட்டுக்கட்டை போடுவதுமான சங்கதி களும் போன தேர்தல் முடிவில் அதாவது மந்திரிகளை நியமித்ததில் வெளியாய் விட்டது.
சைமன் கமிஷன் பகிஷ்காரமும், திருவாளர்கள் காந்தியும், நேருவும், எல்லோரையும் சட்டசபையை விட்டு வெளியேறும்படி கேட்டும் எல்லா இந்திய
காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தும் யாரும் வெளியேறாததினாலும் சென்னையில் தேசீய பூசை நடந்ததினாலும், அதற்கும் யோக்கியதை இல்லாமல் போய் விட்டது. மற்றப்படி வகுப்புவாதத்தைப் பற்றிச் சொல்வதற்கும் யோக்கியதை. இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், பார்ப்பனர்களே வகுப்புவாதம் பேச வேண்டிவந்துவிட்டதால் அதுவும் போய்விட்டது. கடைசியாக சுயமரியாதை இயக்கம், நாஸ்திக இயக்கம், மத துரோக இயக்கம், சாஸ்திர மறுப்பு இயக்கம் என்று சொல்லிவெளியில் புறப்படலாம் என்று கூலி கொடுத்து ஆஸ்திகசங்கம் ஏற்படுத்தி காங்கிரஸ் பணம் இரண்டு மூன்று ரூபாயும் கொடுத்து பிரசாரம். செய்து பார்த்து, அதுவும் நரிதின்ற கோழி கூப்பிடுவது போல் ஆகிவிட்டது.
இனி அவர்களுக்கு இதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. ஆகையால் பொது ஜனங்கள் ஜாக்கிரதையாய் தேர்தலில் இந்த கூப்பாடு.
பலிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாய் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.10.1929
குடி அரசு - 1929 @) 222
கார்ப்வராறோஷன் கேர்கல்
ஜஸ்டிஸ் கட்சி முனிசிபல் கவுன்சில் பார்ட்டியின் கூட்டம் ஒன்று16:0.29 தேதி இரவு8 மணிக்கு தியாகராய மெமோரியல் கட்டிட மேல் மாடியில் கூடிற்று.
19 அங்கத்தினர்கள் விஜயமாயிருந்தார்கள். திருவாளர்கள் ஜி.நாராயண சாமி செட்டியாரும், அவர் குமாரரும் மற்றுமிரண்டொருவரும் வரவில்லை,
என்பதாகத் தெரிகின்றது. கூட்டத்தில் இரகசியமாய் ஓட்டு எடுத்ததில் திரு.ராம சாமி முதலியாருக்கு 15 ஓட்டும், டாக்டர் நடேச முதலியாருக்கு 2 ஓட்டும் கிடைத்தன. அப்படி இருந்தும் இருவரும் தேர்தலை போட்டிபோடப் போவ தாகவே முடிவு செய்து கொண்டு போயிருக்கிறார்கள்.ஏறக்குறையஇருவருமே சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்களின் ஓட்டுகளை நம்பிக் கொண்டிருப்பதோடு சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்கள் வீட்டுக்கும் தலைவர்கள் வீட்டுக்கும் இரு அபேட்சகர்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றார்கள். வெள்ளைக்காரர்கள் ஓட்டுகளையும் இருவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சி
கவுன்சிலர்கள் ஓட்டு அநேகமாய் சரிசமமாய்ப் பிரியாவிட்டாலும் இரண்டு பேருக்குமாகத்தான் பிரியக் கூடும் போல் தெரிகின்றது. சுயராஜ்ஜியக் கட்சி ஓட்டுகளும் அதேமாதிரிதான் பிரியும் போல் தெரிகின்றது. வெள்ளைக்காரர் களின் ஓட்டுகள் நாலில் மூன்று பாகம் ஒருவருக்கும் ஒரு பாகம் ஒருவருக்கு
மாகப் பிரியலாம். மற்ற ஓட்டுகளும் சரிசமமாகப் பிரியலாம்.எனவே, தேர்தலில் இருவர் போட்டியும் பலமாக இருக்கக் கூடும் நம்மைப் பொறுத்தவரை: முடிவைப் பற்றி கவலையில்லாவிட்டாலும், அதன் பயனாய் ஏற்படக் கூடிய கக்ஷிப்பிளவு பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சியின் அடுத்த சென்னை சட்டசபைத் தேர்தல்களையும் பாதிக்காமல் இருக்க முடியாதென்றே
கருதி கவலைப்படுகின்றோம். தேர்தல்கள் வரும்போதெல்லாம் நிலைமையை யும்நியாயத்தையும் உரிமையையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் பலத்தையும்
தந்திரத்தையும் சண்டித்தனத்தையும் ஆதாரமாக வைத்தே முடிவு செய்வதா யிருந்தால், அந்தக்கட்சிக்கு எந்த விதத்தில் யோக்கியதையும் நம்பிக்கையும் இருக்க முடியும் என்பது நமக்குப் புரியவில்லை. அநேகமாக5, 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வரக்கூடுமாதலால் திருராமசாமி முதலியாரைப் போன்றவர்.
கள் கார்ப்பொரேஷன் தலைவராயிருந்தால் கக்ஷி தேர்தலுக்கு அனுகூலமா
யிருக்கக் கூடும் என்னும் காரணம் திருராமசாமி முதலியாருக்கு அனுகூலமாக சொல்லிக்கொள்ளப்படுகிறது.டாக்டர்.நடேச முதலியார் இந்த கட்சியில் சேர்ந்த காலம் முதல் கொண்டு கஷ்டப்படுகின்றவரானதினாலும் ஒவ்வொரு
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சமயத்திலும் இம்மாதிரி சாக்குகள் வந்தே அவருடைய உரிமை நழுவ விடப்படுவதாலும் அவரும் இதனாலேயே அடிக்கடி கோபித்துக் கொண்டு.
கட்சியில் கலகம் விளைவிப்பதும் வெளியில் போவதும் மறுபடி சமாதானமும் ஆசையும் சொல்லி அழைக்கப்படுவதாலும், ஏதாவது ஒரு தடவை அவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டியது ஒற்றுமையை உத்தேசித்தாவது அவசியம் என்கின்ற விஷயம் டாக்டர்.நடேச முதலியாருக்கு அனுகூலமான காரணமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது. இரண்டு காரணங்களும் சரி என்று வைத்துக் கொண்டாலும் திருநடேச முதலியாருக்கு விட்டுக்கொடுப்பது இந்தத் தடவையா அல்லது அடுத்த தடவையா என்பதை வேண்டுமானால் மற்ற தலைவர்களும். சேர்ந்து யோசனை செய்து ஒரு முடிவு கட்ட வேண்டியதான விஷயம். அப்படிக்கில்லாமல் எப்படியோ போகட்டும் என்று மற்ற தலைவர்களும்
இயக்கத் தலைவரும் அலக்ஷியமாயிருப்பதும் சிலர் இருவருக்கும் நல்ல பிள்ளைபோல் நடந்து கொள்ளுவதும் உள்ளுக்குள் அவர்களுக்கு இஷ்டமானவர்களுக்கு வேலை செய்வதுமான காரியங்களானது அவற்றின் பலன் எப்படியானாலும், அவை தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையையும் கோழைத் தனத்தையும் கயநலத்தையும் காட்டுவதாகும்.நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கை ஒருவாறு நமது இயக்கத்தில் உள்ள கட்சிகள் இவ்வளவு என்ப தைக் காட்டிவிட்டது. ஆனால் அடுத்துவரும் கார்ப்பொரேஷன் தலைவர். தேர்தலானது அக்கட்சிகளின் தனித்தனி வேலை துவக்கத்தை காட்டக் கூடியதாகிவிடுமோ என்றே பயப்படுகின்றோம்.
ஆகையால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் உடனே ஒரு கூட்டத்தைக் கூட்டி. இருவரையும் தருவித்து இன்னார்தான் நிற்கவேண்டும் என்று தீர்மானம் செய்ய வேண்டியது அவருடைய முக்கியமானதும் கஉமையானதுமான வேலையாகும். அப்படிக்கில்லாமல் அலட்சியமாயிருப்பதோ அல்லது தனது தலைவர்: ஸ்தானம் கவுரவிக்கப்படமாட்டாது என்பதோ காரணம் கொண்டு சும்மா இருப்பதானால் அவரும் பொறுப்பை உணராத தலைவர் என்றுதான் சொல்லித்
தீரவேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.10.1929
குடி அரசு - 1929 @) 224
தீயாவனி பண்முகை யார்ப்பண 3550
தீபாவளிப்பண்டிகை என்பது அர்த்தமற்றதென்றும்,அதற்கு ஆதாரமான கதைகள் பொய்யும் புளுகும் ஆபாசமுமானதென்றும், அதற்காக பண்டிகை கொண்டாடுவது பார்ப்பனனுக்கு நம்மை அடிமை ஆக்கவும் பார்ப்பனனின் ஆதிக்கத்தை பலப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டதென்று சொல்லி வந்திருக்கின் றோம். அன்றியும் புராணங்களை பொய்யென்றும் ஆபாசமென்றும், பார்ப்பன சூகஷி என்றும் தீர்மானித்துவிட்ட மக்கள் மறுபடியும் அதே புராணக் கதையாகிய தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதென்பதும், பட்டாசு வாங்கி சுடுவதென்
பதும், அறியாமையும் மூட நம்பிக்கையும், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு
விரோதமுமாகும்.
உஷார்! உஷார்! உஷார்!!!
குடி அரசு - அறிவிப்பு - 20101929
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பூணாவில் ஆயைப்பிரவேசம்
கமிழ்நாட்மனும் சத்தியாக்கிரகம்
துவக்க கயாசணை
சகோதரர்களே! நமது தமிழ் நாட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்து 8,9
மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த பம்பாயில் சுயமரியாதை மகாநாடு நடந்து 3,
4 மாதமே ஆயின. ஆனால் பம்பாய்காரர்கள் இதற்குள் சத்தியாக்கிரகம் துவக்கிவிட்டார்கள். சத்தியாக்கிரகம் அன்றியும் வடநாட்டில் இல்லாமலும் பல கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுவிட்டன.நாமோ மற்றொருவர்: செய்த சத்தியாக்கிரகத்தைப் பாராட்டுவதில் முனைந்திருக்கின்றோம். இதை: நினைக்கும்போது நம்மை நாம் வாய்ப்பேச்சு வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். நிற்க, சிலர் நம்மை “உங்களுக்குத் தான் இந்தமாதிரி கடவுள்களிடத்தில் நம்பிக்கையே இல்லையே, அப்படி இருக்க எதற்காக கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும்” என்று கேட்கின்றார் கள்.ஆனணால் சகோதரர்களே! நாம் மாத்திரமல்ல; இப்போது எங்கு பார்த்தாலும் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட நம்மைப்போலவேதான். அதாவது, கோயில் இருப்பது கல்லும் செம்புமே ஒழிய அவை கடவுள்கள் அல்லவென்பதைதாராளமாய் ஒப்புக் கொள்ளுகின்றார்கள்.ஆனால் கடவுளை: மனிதன் நினைக்க ஞாபகம் வருவதற்காகவே கோயிலும் அதனுள் இருக்கும்
கல், செம்பு, காரை, மரம், படம் முதலிய சிலை உருவங்களும், பெரியோர்களால் செய்துவைத்த ஏற்பாடுகளாகும் என்றும் பாமர மக்களுக்கு இதைச் சொன்னால் புரியாதென்றும். அதையே கடவுள் வீடு என்றும், உள்ளிருப்பவைகளே' கடவுள்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது என்பதாக தத்துவார்த்தம் சொல்லுகின்றார்கள். இந்த தத்துவார்த்தம் சொல்லுகின்றவர்களைப் பற்றி நான் என்ன நினைக்கின்றேன் என்றால் ஒன்று இவர்கள் கடவுளை மிகக் கேவலப்படுத்துபவர்களாயிருக்க வேண்டும்; அல்லது கடவுள் தன்மை இன்னது என்பதை அறியாத மூடர்களாயிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் பொதுஜனங்களை ஏமாற்றும் அயோக்கியர்களாயிருக்க வேண்டும் என்பதேயாகும்.
ஏனெனில், எல்லாம் வல்லவரும் எங்கும் இருப்பவரும். சர்வ இயங்கு
தலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்
படுத்த மற்றொரு மனிதன் முயற்சி வேண்டுமென்றால், அதுவும் அதற்கு ஒரு
குடி அரசு - 1929 @) 226
கட்டடமும்கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால். அவன் கடவுள் என்பதற்கு மேல்கண்ட எல்லாம் வல்ல சக்தியும் எங்கும் உள்ள சக்தியும் ஒப்புக்கொண்டவனாவானா என்று கேட்கின்றேன். சிரிப்பும் கரகோஷமும்) ஆதலால் ஒரு சமயம் கோயில்கள் மூடர்களால் கட்டப்பட்டது என்று சொல்வ தானால் நமக்கு ஆட்சேபனை இல்லை. அப்படிக்கில்லாமல் கோயில்கள் அறிவாளிகளால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் கண்டிப்பாய் அந்த அறிவாளி என்பவர்கள் சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்தவர்களாகத் தானிருக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கோயில்கள் இப்போது அந்த பெரியோர்கள் என்பவர்களின் ஆதாரப்படி(ஆகமப்படி) நடந்து வருவதாகவே இருக்கின்றது. அந்த ஆகமங்கள் என்பவைகளே மனிதன் அந்தக் கோயிலுக்குள் போகவும் அங்குள்ள சாமியை வணங்கவும் பல நிபந்தனைகளைக் கொண்டதாக இருக் கின்றது. அந்தநிபந்தனைகள் மனிதத் தன்மைக்கு சிறிதும் பொருத்தமில்லாததா.
யிருக்கின்றன.
அதில் ஒரு சிறிதும் ஒழுக்கத்திற்கும் பக்திக்கும் ஆதாரமானதும் கடவுள் ஞாபகம் வருவதற்கு ஆதாரமானதுமான காரியங்கள் இல்லவே இல்லை. அங்குள்ள கடவுள்களைப் பார்த்தால் கடவுள் ஞாபகம் வருமென்றால் அங்குள்ள தாசிகளைப் பார்த்தால் தாசிகள் ஞாபகம் வராதா என்று கேட்கின் நேன்.மற்றும் அங்கு கடவுளை வணங்க வரும் மற்ற பெண்களை பார்த்தால் பெண்கள் ஞாபகம் வராதா என்று கேட்கின்றேன். உணர்ச்சியற்ற குழவிக் கல்லை பார்த்த மாத்திரத்தில் கடவுள் ஞாபகம் வருவதானால், உயிருள்ள ஜீவன்கள், பெண்கள், தங்களை பிறர் பார்க்கவேண்டுமென்று அலங்கரித்துக் கொண்டுவந்து நின்றால் ஏன் அந்த ஞாபகம் வராது? அன்றியும் அங்கு கடவுளுக்கு நடக்கும் மற்ற காரியங்களையும் பார்த்தால் ஏன் பார்க்கின்ற மனிதனுக்கு மற்ற ஞாபகமும் வராது என்று கேட்கின்றேன். கோயிலைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாக பாதைக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டது அல்லவென்றும்மக்களை மூடர்களாக அடிமைப்படுத்தவும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும் ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டு சோம்பேறித்தனமாய் வயிறு வளர்க்க வேண்டி பொதுஜனங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதாகும். முன் காலத்தில் இருந்த அரசர்கள் மூடர்களும் அயோக்கியவர்களுமாயிருந்ததால் இம்மாதிரி கோயில் சூழ்ச்சிக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக்கின்றார்கள். சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆகஷியும் அனுகூலமும் ஏற்பட்டிருக் கின்றது.ஆகையால் கோயில்கள் என்பது சோம்பேறிக் கூட்டமும் அரசர்களும்
சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காகபாமர மக்களை ஏமாற்றுவதற்கு செய்த சூழ்ச்சி யேயாகும். அவ்வித சூழ்ச்சியை ஒழிக்கவே நாம் எல்லோருக்கும் கோயில் பிரவேசம் கேட்கின்றோம். இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவைகள் எல்லாம் ஒரு விதமாக
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மாற்றப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் இந்த கோயில்கள்தான் சிறிது மாற்றுவதற்கு இடம் தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப் பட்டு வருகின்றது.ஆதலால்தான்,நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோவிலுக்குள் போய்த் தீர வேண்டுமென்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவ மன்னிப்புக்காகவோ அல்லவே அல்ல. கோவிலில் சமத்துவமடைந்து விட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது. கோவிலில் பிரவேசிக்க நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை. இன்றைய தினம் எல்லோரும் கோவிலுக்குள் ஜாதி வித்தியாசமின்றி விடப்பட்டு விட்டார்கள் என்று ஏற்பட்டு விட்டால், நாளையதினமே நான் அங்கு எதற்காகப் போகின்றீர்கள்? அங்கு என்ன இருக்கின்றது? அங்கு போனதால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படுகின்றது? ஏன் உங்கள் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் அறிவையும் பாழாக்குகிறீர்கள்? என்று சொல்லி தடுக்கவே முயற்சிப்பேன். ஏனென்றால் கோவிலில் உள்ள ஜாதி வித்தியாசம் காரண: மாகவே சில மூடர்கள் கோயில்களை புனிதமான இடம் என்று கருதிக் கொண்டு. தங்கள் பணத்தையும் புத்தியையும் பாழாக்கி வருகின்றார்கள். நம் நாட்டின் வறுமைக்கும் முட்டாள் தனத்திற்கும் கோயில் வரியும் புரோகிதர்கள் வரியும் ஆகமங்களுமே காரணமாகும் என்பது எனது உறுதியான எண்ணம். தரித்திர
மும், ஜாதி வித்தியாசமும் ஒழிந்து நமது நாட்டில் அறிவும் செல்வமும், பெருக வேண்டுமானால் இந்தக்கோலில்களும் புரோகிதர்களும் அடியோடு அழிக்கப் பட்டாக வேண்டும்.எனவே,இம்முயற்சிகள் பலாத்காரத்தின் மூலம் துவக்குவது என்பது எனக்கு ஒரு சிறிதும் நம்பிக்கை இல்லாததும் பிடிக்காததுமான காரியமாகும். ஏனெனில், நூற்றுக்கு தொண்ணூறு மனிதர்கள் உண்மையாகவே தீண்டாமையைநம்பிக் கொண்டு ஆட்சேபிக்கும்படியான பாமரத்தன்மையில் இருக்கின்றார்கள். அவர்களிடம் பலாத்காரம் செய்வது நியாயமற்றதும் பாதகமானதுமாகும். சத்தியாக்கிரகத்தின் மூலம் இவர்களுக்கு தானாகவே தீண்டாமை என்பது புரட்டு என்று வெளிப்பட்டுவிடும். பிறகு பொதுஜன அபிப்பிராயம் நமக்கு அனுகூலமாக திரும்பிவிடும். அப்போதுதான் எதிரிகள் பலாத்கார மேற்பட்டுவிடுமோ என பயந்துவிடுவார்கள். நாம் இப்போது பலாத்காரமாரம்பித்தால் பாமர மக்கள் தொல்லையும் சர்க்கார் தொல்லையும் எதிரிகள் சூழ்ச்சியும் நம்மை தோல்வியிலேயே கொண்டுபோய் விட்டுவிடும்.
நாம் சத்தியாக்கிரகம் செய்வதில் கூட மிக்க ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில் நாம் எந்தக் கோவிலிலாவது சத்தியாக்கிரகம் ஆரம்பித்தால், அந்தக் கோயிலால் பொறுக்கித் தின்னும் படியான அர்ச்சகர்கள் கோயிலைப் பூட்டி சாவியைக் கொண்டுபோய் நமது மூட சிகாமணிகளாகிய தர்மகர்த்தாக்களிடம் கொடுத்து “உங்கள் பெரியவர்களால் கட்டப்பட்டு எவ்வளவோ சக்தியுடன் இருந்து வந்த கோயிலின் பெருமையை அழிக்க வந்துவிட்டார்கள்: அதை
நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும், இல்லாவிட்டால் உலகமே முழுகிப்போகும்” என்று சொல்லி அவனுக்கும் நன்றாக சாவி கொடுத்துவிட்டுப் போய் விடு
குடி அரசு - 1929 @) 228
வார்கள், கடைசியாக தர்மகர்த்தாவாயிருப்பவன் பாமர மக்களை ஏவிவிடுவான். அவர்கள் முரட்டுத் தனமாய் பலாத்காரத்தில் இறங்கும் ஆத்திரத்துடன் வருவார்கள். அந்த சமயத்தில் நாம் ஜாக்கிரதையாய் இருந்து சிறிதும் பொறுமையை இழக்காமல் அவர்களால் ஏற்படும் துன்பங்களை சகித்துக் கொண்டு இருந்துவிட்டோமானால் நாம் வெற்றி அடைந்துவிடுவோம் என்பது உறுதி. நல்ல வேளையாய் நம்மில் ஒருவர் இருவர் பாமர மக்கள் பலாத்காரத்
தூல் உயிர்விட நேர்ந்துவிட்டால் கண்டிப்பாய் நமக்கு வெற்றி என்பது திண்ணம், வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக்கு முக்கிய காரணம் எல்லாம் நமது பொறுமையும் சகிப்புமேயாகும். அங்குள்ள பாமர மக்கள் நம்மை அடித்தார்கள், கத்தியால் குத்தினார்கள், கண்களில் சுண்ணாம்பு பூசினார்கள், 2, 3 தடவை தண்டித்தார்கள். இவ்வளவுக்கும் சத்தியாக்கிரகிகள் பொறுமையாய் இருந்து சகித்துக்கொண்டிருந்ததால் நாம் வெற்றியடைந்தோம். ஆதலால் பொறுமையும்
சகிப்பும் இல்லாத சத்தியாக்கிரகம் வெற்றி தராது. நாம் சாத்வீகத்துக்கும் உறுதியுடனிருந்தால் சர்க்காரும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்கள் எத்தனை பேர்களை ஜெயிலில் வைக்க முடியும்? நம்மில் ஒரு ஆள் பாமர மக்களால் அடிபட்டு இறந்தவுடன் சர்க்கார் நூற்றுக்கணக்கான போலீஸ் காரர்களைக்கொண்டு வந்து போட்டு நமக்கு அடி விழுகாமல் காப்பாற்ற அங்கு காவல் காப்பார்கள். இல்லாவிட்டால் நம்மை கைதி செய்வார்கள். எத்தனை பேரைதான் கைதி செய்ய முடியும் என்பதை பார்த்து விடலாம். ஆகையால்,
நாம் சாத்வீகத்துடன் சத்தியாக்கிரகம் தொடங்கினால் நமக்குப் பணமும் ஆள்களும் வந்து குவிந்தவண்ணமாய் இருக்கும். திருவாளர்கள் சவுந்திர பாண்டியன், சிவராஜ், பாலகுருசிவம், முனிசாமிப்பிள்ளை முதலியவர்கள்
எல்லாம் இதில் முனைந்துநிற்பதாக வாக்குக் கொடுத்திருக்கையில் உங்களுக்கு பணத்திற்காவது ஆள்களுக்காவது பஞ்சம் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.ஆகையால் பம்பாய் மாகாண நமது சகோதரர் பூனாவில் சத்தியாக்
கிரகம் ஆரம்பித்து நம்மைத் தட்டி எழுப்பியதற்காக நாம் அவர்களுக்கு நம்முடைய நன்றியறிதலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு ஊக்கமும் தைரியமும் வரும்படி நாம் அவர்களை மனமார பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம் என்று பேசி முடித்தார். உடனே தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பெருத்த கரகோஷத்துடன் நிறைவேறிற்று. அக்கிரா சனர் யாருக் காவது ஆக்ஷேபனை உண்டா என்றுக் கேட்டார். ஒருவர்கூட ஆக்ஷேபிக் கவே இல்லை.
பிறகு அக்கிராசனர் தனது முடிவுரையாக சில வார்த்தைகள் சாத்வீகத் தைப் பற்றி பேசினார்.
பிறகு கடைசியாக திரு.சாமி சகஜாநந்தம் தலைவருக்கும் உபன்யாச கர்களுக்கும் வந்தனோபசாரம் சொல்லுகின்றேன் என்று எழுந்து, சத்தியாக்
கிரகம் உயர்ந்த சாதி இந்துக்களால் செய்ய வேண்டுமே ஒழிய நாம் செய்ய வேண்டியதில்லை என்றும், ஜெயிலுக்குப் போனால் பெண்டு பிள்ளை
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
களுக்கு யார் சாப்பாடு போடுவார்கள் என்றும், திருராமசாமி பல தடவை ஜெயிலுக்குப் போய் அனுபோகமிருப்பதாலும், அவருக்கு சாப்பாட்டிற்கு இருப்பதாலும், அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் என்றும், வைக்கம் முதலிய சத்தியாக்கிரகத்தில் ஜெயிலுக்குப் போனவர்கள் இன்னமும் கஞ்சிக்கு அலைகின்றார்கள் என்றும், நாம் நன்றாகப் படித்த பிறகு
தான் இவ்வித உரிமைக்கு யோக்கியதை உடையவர்களாவோம் என்றும், இவர்களுக்கு அக்கரை இருக்குமானால் சட்டசபையில் ஒரு சட்டம் செய்யட்
டும் என்றும், சட்டசபையில் தனக்குப் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதார்.
களும் ஆதரவாயில்லை என்றும், ஆதலால் முதலில் பார்ப்பனர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் போய் பிரசாரம் செய்யட்டும் என்றும் சொன்னார். அக்கிராசனர் இதற்கு விடை அளிக்கும்படி திரு.ஈ.வெ.ராமசாமியைக்
கூப்பிட்டார்.
இறுதியில் பேசிய சாமி சகஜாநந்தம் அவர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் பேசியது:-
“சகோதரர்களே! சாமி சகஜாநந்தம் பேசி இருப்பது எனக்கு ஆச்சரிய
மாய் இருக்கிறது. உங்கள் சமூகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் இழிவை நீக்க
வேறு சமூகத்தார், அதிலும் உங்களை கொடுமைப்படுத்தி அதினால் வாழும் சமூகத்தார் பாடுபட வேண்டும் என்று சொல்லுவது பரிகசிக்கத்தக்கதாகும். அந்தப்படி நீங்கள் எதிர்பார்ப்பதும் மிக்க அறியாமையேயாகும். மேல் ஜாதிக்காரர் என்பவர் எப்போதும் உங்களுக்கு நன்மை புரிய வரமாட்டார்கள். அன்றியும் உங்கள் முன்னேற்றத்தில் தடை செய்யாமல் இருக்கவும் மாட்டார்.
கள். தவிரவும் உங்கள் சுயமரியாதைக் குறைவுக்கு நீங்கள் பாடுபடாமல் வேறு யார்பாடுபடுவார்கள் 2
தவிர.நீங்கள் ஜெயிலுக்குப் போனால் உங்கள் பெண்டு பிள்ளைகளை
யார் காப்பாற்றுவார்கள் என்று சொல்லுவது கோழைத்தனமே யாகும். தனது பெண்டு பிள்ளையைக் காப்பாற்றவே உலகத்தில் இருக்கும் மனிதன், ஒரு
நாளும் சுயமரியாதை அடைய முடியாது. நமது நாட்டுப் பொது அடிமைத் தனத்திற்கே இதுதான் காரணம். “நாம் செத்துப் போனால் நமது பெண்டு பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள்'” என்று எண்ணுவது அடிமைத்தனத்தி லெல்லாம் முதலாவது அடிமைத்தனம். நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் வாழ வேண்டியது முக்கியமா அல்லது உங்களை ஈனஜாதி
என்றும் சொல்லி கழுதைகளும் நாய்களும் மலம் தின்னும் பன்றிகளும் நடக்கும் தெருவில் உங்களை நடக்கக் கூடாதென்றும், மலம் கழுவும் குளங்களில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்றும், மலத்தை தொடுவதைவிட உங்களைத் தொடுவது கேவலமென்றும் பிறர் சொல்லுவதிலிருந்தும் அந்தப்படி இன்றும் நீங்கள் நடத்தப்படுவதிலிருந்தும் மீளுவது முக்கியமா என்றுதான் உங்களைக் கேட்கின்றேன். மேல்கண்ட இழிவை நீக்கிக் கொள்வதற்கு உதவாத. உயிரும் அறிவும் எதற்காக உங்களுக்கு வேண்டும்? இந்த நிலையில் உள்ள
குடி அரசு - 1929 @) 230
உங்களுக்கு பெண்டுபிள்ளைகள்தான் எதற்காக வேண்டும்.நீங்கள் ஒவ்வொரு வரும் என்ன இழிவும் அவமானமும் உங்களுக்கு இருந்தாலும் இருக்கட்டும். உங்கள் பெண்டு பிள்ளைகள் மாத்திரம் சவுக்கியமாய் இருந்தால் போதும் என்று நினைத்தீர்களானால் என்றுதான் நீங்கள் மனிதர்களாகப் போகிறீர்கள். சுயமரியாதை உணர்ச்சி கடுகளவாவது இருந்தால் பெண்டுபிள்ளைகளோடு வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுமா என்று கேட்கின்றேன். தவிர, ஜெயிலுக்குப் போகின்றவர்களின் பெண்டுபிள்ளை களுக்கு வேறு ஒருவன் சாப்பாடு போடுவதாயிருந்தால் இன்றையதினம் நமது நாட்டில்100க்கு தொண்ணூறு பேர்கள் ஜெயிலிலேயே வசிக்க விரும்புவார்கள். பெண்டு பிள்ளைகளுக்கு வேறு ஒருவரின் சாப்பாட்டை எதிர்பார்த்து ஜெயிலுக்குப் போவதில் தியாகமென்ன இருக்கின்றது என்று கேட்கின்றேன். தவிர, நீங்கள் நன்றாகப் படித்த பிறகுதான் இவ்வித உரிமைக்கு அருகர்களா வீர்கள் என்று அவர் சொல்லுகிறார். இதைக் கேட்க எனக்கு மிகவும் வருத்தமா யிருக்கின்றது. இந்த நாட்டில் 100-க்கு 90பேர் கொஞ்சம் கூட படிக்காதவர்கள், அப்படியானால் அவர்கள் எல்லாம்நாயிலும் பன்றியிலும் கடையாய் இருக்கின். றார்களா என்று கேட்கின்றேன். இன்றைய தினம் உங்களை தெருவில் நடக்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு நடக்கும் மற்றவர்கள் எல்லாம் படித்தவர்களா?'
அன்றியும் உங்களைத் தவிர மற்றபடி நடக்கும் நாய் பன்றிகள் படித்தவைகளா என்று கேட்கின்றேன். தவிர உங்களில் ரிக்ஷாவண்டி இழுப்பவர்கள் முதல் மலம் எடுத்து ஜீவிக்க நிர்ப்பந்தப்பட்டிருப்பவர்கள் வரை எந்தக் காலத்திற்குப் படித்து முடிவது? நீங்கள் எந்த காலத்தில் தெருவில் நடப்பது? கோயிலுக்குள். போவது? எந்தக் காலத்திற்கு இழிவை விலக்கிக் கொள்வது என்பது எனக்குச் சிறிதும் விளங்கவில்லை. தவிரவும், ஒருவன், படித்ததினாலேயே யோக்கியனாய் விடுவானா? மேல்ஜாதியாய் விடுவானா? என்றே கேட்கின்றேன். என்னைப் பொறுத்த வரையில் நான் படித்தவர்களில் அநேகரை அயோக்கியர். கள் என்றே அறிகிறேன். பெரிய பண்டிதர்களும் பெரியவித்வான்களும். தேவாரபிரபந்தம் ஆகமம் சாஸ்திரம் திருக்குறள் முதலியவைகள் படித்த மதப் பித்தர்களும் அயோக்கியர்களாகவே காணப்படுகின்றார்கள். பெரிய பெரிய ஆங்கிலேயர் பட்டம் பெற்றவர்கள் அதைவிட மோசமாயிருக்கிறார்கள். மதப்படிப்போ ஆங்கிலப் படிப்போ சாஸ்திரப் புராணப் படிப்போ படித்தவர். களில் யாராவது ஒரு யோக்கியர் இருக்கிறார் என்று சாமி சகஜாநந்தம் அவர்கள். சொல்லுவாராஎன்று வணக்கமாய்க் கேட்கின்றேன். படிப்புக்கும் சுயமரியாதைக்.
கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றேன்.மனிதன் சுயமரியாதை பெறுவதற்கு எதைப் படிக்கவேண்டும் என்று சாமி சகஜாநந்தம் சொல்லுகின்றார் என்பது எனக்கு விளங்கவில்லை.இந்தநிலையில் கணக்குப் போடவும் கையெழுத்துப் போடவும் தெரிந்துவிட்டால் வயிறு வளர்க்க அது ஒரு வழியாகுமே தவிர, இழிவை ஒழித்து விடுமா? சுயமரியாதையில் கவலையும் உணர்ச்சியும்
இருந்தால் எந்தப் படிப்பு இல்லாவிட்டாலும் மனிதனாக இருக்க முடியும். அதில்லாதவன் எந்தப் படிப்பு படித்தாலும் நடைப்பிணமாகத்தான் சுயநலக்
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
காரனாய்த்தான் வாழ முடியும். இதில் ஒன்றும் சந்தேகமில்லை. என்னுடைய அனுபவத்தையே நான் சொல்லுகின்றேன். தவிர தமக்கு அக்கரை இருக்கு மானால் சட்டசபையில் ஒரு சட்டம் செய்யட்டுமே என்கிறார்.
சட்டசபையின் யோக்கியதையை அறிந்த இவர் இப்படிப் பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சட்டசபையில் யார் இருக்கிறார்கள்? சர்க்காருக்கும், அதிகாரிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும், நம்பிக்கை உள்ள. அடிமையாக எவர் நடந்து கொள்ளுகின்றார்களோ அவர்களே பெரிதும் நியமனம் பெறுகிறார்கள். 22 ஆயிரம் 30 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய் எவர் செலவுசெய்கின்றார்களோ அவர்களே பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு சுயபுத்தியோ, சுயமரியாதை உணர்ச்சியோ, பொதுநல ஆசையோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். சாமி சகஜானந்தம் இந்தத் தடவை ஒரு சட்டம் கொண்டு போனால் அடுத்தத்தடவை இவரை சர்க்காரும். பார்ப்பன அதிகாரிகளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதியார் என்னும் அதிகாரி. களும் கண்டிப்பாய் நியமிக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.இவ்வள வையும்மீறியாராவது சட்டம் கொண்டு போவதாயிருந்தாலும் அச்சட்டத்தை சட்டசபைக்குக் கொண்டுவர ராஜப்பிரதிநிதி அனுமதி கொடுப்பாரா என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் மக்கள் பல ஜாதிகளாய் உயர்வு
தாழ்வாய் ஒருவரோடு ஒருவர் போராடிக்கொண்டு இருந்தால்தான் நமது சர்க்கார். நிம்மதியாய் இருக்க முடியும். இல்லாவிட்டால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து சர்க்காரின் மீது பாய்ந்து விடுவோம் என்கின்ற பயம் சர்க்காருக்கு எப்போதும். உண்டு.ஆகையால், சுலபத்தில் சர்க்காரார் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். நாம் தகுந்த கிளர்ச்சி செய்து, தக்க தியாகம் செய்வதின் மூலம் பொதுஜன அபிப்பிரா யத்தை நம்பக்கம்திருப்பிக் கொண்டு செல்வாக்குடன் இருக்கின்றோம் என்றால் சர்க்கார் ஒரு சமயம் இணங்கிவரக் கூடும்.25 வருஷமாய் விவகாரத்தில் இருந்த சாரதா மசோதாவுக்கு இதுவரை சாக்குப் போக்கு சொல்லி வந்த சர்க்கார் இன்று இணங்கியதின் கருத்து நம்முடைய கிளர்ச்சியேயாகும்.மிஸ்.மேயோ எழுதின புஸ்தகமும் சிவா என்கின்ற புஸ்தகமும் சைமன் கமிஷனை ஆதரித்ததற்கு கூலியும், வெளி அரசாங்கங்கள் நமது அரசாங்கத்தைப் பார்த்து நகைக்குமே என்கின்ற பயமும் “இனிமேல் நீங்கள் எங்களுக்கு விரோதமாயிருந்தால்
உங்கள் சாஸ்திரத்தில் இதுவரை கை வைக்காமல் இருந்து உங்களுக்கு அனுகூலம் செய்து கொண்டு வந்ததிலிருந்து விலகிக் கொள்வோம்” என்பதை பார்ப்பனர்களுக்கு காட்டி, அவர்களை மிரட்டுவதற்காகவுமே சர்க்கார் அனுகூலமாயிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஆகையால் சட்டம் செய்வது என்பது சுலபமான வேலையல்ல.இன்றைய சர்க்கார் வெள்ளைக்காரர்,
பார்ப்பனர், பணக்காரர் ஆகிய மூவர்களுடைய கூட்டு வியாபாரமாய் நடை பெறுகின்றது. இம்மூன்று கூட்டமும் ஏழைகளுக்கு நன்மை செய்யவோ தீண்டாமையை விலக்கவோ சுலபத்தில் சம்மதிக்குமா என்று கேட்கின்றேன். தவிரவும் சீர்திருத்தமும் சுயமரியாதையும் சட்டம் கொண்டுவந்து ஓட்டு வாங்கி நிறைவேற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒருநாளும் முடியாத காரியம்.
குடி அரசு - 1929 @) 232
ஓட்டு என்பது கூட்டுக் கொள்ளையே தவிர வேறில்லை. என்னுடைய உரிமையை கொடுக்கின்றாயா அதற்காக உயிர்விடட்டுமா என்கின்ற கொள்கையுடைய மக்கள் தான் எங்கும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இந்தப் படி நடக்கின்றாயா? அல்லது ஜெயிலில் பிடித்து போடட்டுமா என்று சொல்லும்
அரசாங்கம் தான் சீர்திருத்தங்கள் செய்திருக்கின்றது.அதை விடுத்து இம்மாதிரி காரியங்களுக்கு ஓட்டும் சட்டசபையும் ஜாலவேடிக்கையும் வேடிக்கை பார்க்கும் விளையாட்டுப் பிள்ளை நிலையங்களேயாகும்.
தவிர, இங்கு செய்யும் பிரசாரத்தைப் பார்ப்பனர்களுக்கும் அல்லாதவர். களுக்கும் போய் செய்யட்டும் என்று சொல்லுகின்றார். பார்ப்பனர்கள் நமது பிரசாரத்தினால் புத்தி திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சுத்தப் பயித்தியக்காரத்தனமாகும். அவர்கள் தெரியாதவர்களாய் இருந்தால் நியாயம் சொல்லலாம். நன்றாய் தெரிந்தே எங்கு தங்கள் ஆதிக்கமும் சோம்பேறிப் பிழைப்பும் போய் விடுகின்றதோ என்று சுயநலங்கருதி குரங்குப் பிடிவாதமாய் இருப்பவர்களை நாம் எந்தப் பிரசாரத்தால் எப்படி மாற்றக் கூடும்? பார்ப்பன ரல்லாதவர்களோ முக்கால் வாசிப்பேர் பார்ப்பனரைப் பின்பற்றுபவர்களாகவும் பார்ப்பனருக்கு தாசிமகணாயிருந்தாலும் சரி நாம்பறையனுக்கு மேலாயிருந்தால் போதும் என்றுமுட்டாள் தனமாய் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும் நம்மால் கூடியதை செய்துதான் வருகின்றோம். எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது.தவிரவும் இத்தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கம் தான் என்று நான் சொல்லவரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால் மதத்தைவிட்டு
விடுங்கள், அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால் தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம். உதாரணமாக மகமதிய மதத்தில் மனிதனில் உயர்வு தாழ்மையும் தீண்டாமையும் இல்லை. இனியும் உங்களுக்குத் தோன்றுகின்ற மதத்தை தழுவலாம். ஆகவே நீங்கள் தயவு செய்து நான் சொல்லுவதையும் சாமி சகஜானந்தம் சொல்லுவதையும் பொருமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு சரி என்று தோன்றியபடி நடவுங்கள்.
குறிப்பு : 22101929 இல் சென்னை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் - சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 27.10.4929
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ாகோயாலாச்சாரியின் தேசீயம்
சென்ற வாரம் பார்ப்பனர்களின் தேசியம் என்று தலையங்கமிட்டு
திரு.சத்தியமூர்த்தி அய்யர் முதலிய பூரண சுயேச்சைவாதிகளுடையவும், காங்கிரஸ் வாதிகளுடையவும் தேசியத்தின் யோக்கியதையைப் பற்றி எழுதி இருந்தோம். இந்த வாரம் திரு.சிஇராஜகோபாலாச்சாரி போன்ற “ஒத்துழையா தியாகிகளின்” தேசியத்தைப் பற்றி எழுத வேண்டி நேரிட்டுவிட்டது. அதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் தாஜூக்கா காங்கிரஸ் மகாநாட்டிற்கு அக்கிராசனம் வகித்த திருசி.ராஜகோபாலாச்சாரியார் தமது தலைமை உபன்யாசத்தில் வழக்கம் போல்
தேசியப் புரட்டு பரிபாஷையாகிய தீண்டாமை, கதர், மதுவிலக்கு ஆகிய மூன்று வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, பார்ப்பன தேசிய சூழ்ச்சி பரிபாஷை யாகிய சாதித் துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என்னும் வார்த்தையைச் சொல்லிவிட்டு சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாகச் சொல்லி பாமர மக்களை கிளப்பிவிடப் பார்த்து இருக்கின்றார். சமீபத்தில்
இவரால் வடநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட திருபட்டேல் அவர்களுக்கு இவர் எதைச் சொல்லிக் கொடுத்து நம்மையும் சுயமரியாதை இயக்கத்தையும் வையச் சொன்னாரோ அதே வார்த்தைகளை அப்படியே, சற்று மெருகு கொடுத்து இப்பொழுது இவரும் சொல்லி இருக்கிறார். திருராஜகோபாலாச்சாரி.
யார் தீண்டாமை விலக்கு தத்துவம் நாம் அறியாததல்ல.அவருடன் நாம் காங்கிர
சிலும் ஒத்துழையாமையிலும் இருக்கும்போது அவரது தீண்டாமை விலக்கை நேரில் கண்டிருக்கின்றோம். அதாவது, தீண்டாமை ஒழிப்பதற்கென்று காங்கிரசில் ஒதுக்கிவைத்த பணத்தை முழுதும் தன்பேரில் பிரித்துவைத்துக் கொண்டு அதனால் ஒரு காரியமும் செய்யாமல், செய்யவும் விடாமல் காப்பாற் நிய வீரராவார். செய்கைதான் இப்படி என்றாலோ, காரியத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் பிறவியில் ஜாதி வித்தியாசம் கூடாது என்று தீர்மானித்த உடன் ராஜினாமா எழுதிக் கொடுத்து தனது சினேகிதர்களையும் ராஜினாமா கொடுக்கச் செய்தவர். கதர் விஷயத்தில் இவர்களது ஏழைகளைக்
காப்பாற்றும் நாணயமும் கதரால் நாட்டிற்கு க்ஷமமுண்டாகும் நாணயமும் கதரின் பேரால் பார்ப்பனரல்லாதார்களிடத்தில் பத்து லட்சக்கணக்காய் ரூபாய் வசூலித்து கதர் திட்டத்தில் 100க்கு 90பேர் திரு ராஜகோபாலாச்சாரியின் ஜாதியாரே உட்கார்ந்து கொண்டு வயிறு வளர்ப்பதும், தாங்கள் என்ன அக்கிரமம். செய்தாலும் தங்களை விலக்க முடியாமலும், யாரும் கணக்கு கேட்க
குடி அரசு - 1929 @) 234
முடியாமலும் இருக்கும்படி செய்து கொண்ட சூழ்ச்சியும், அதில் நடக்கும் அக்கிரமங்களை அன்னியர் எழுதிக் கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் பதிலும் திரு.ராஜகோபாலாச்சாரிக்கும் திரு.எஸ்.ராமனாதனுக்கும் இந்த ஒருவாரமாக நடக்கும் கடிதப் போக்குவரத்தை கவனித்தவர்களுக்கே நன்றாய் விளங்கும். மற்றபடி இவரது மதுவிலக்கு கவலையைப்பற்றி தெரிய வேண்டுமானால், தேர்தல் வரும்போதெல்லாம் கள்ளுக்கு மரம் பதினாயிரக் கணக்காய் விட்டுக் கொண்டிருக்கும் திருசி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு மதுவிலக்குப் பேரைச் சொல்லி ஓட்டு வாங்கிக் கொடுத்ததும் தனது இஷ்டப்படி நியமிக்கப்பட்ட மந்திரிகள் இருக்கும் காலத்தில் மதுவைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பதும், மறுபடியும் தேர்தல் வரும்போது மாத்திரம் பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் மாத்திரம் சட்டசபைக்கு வரும்படியாகச் செய்வதற்கு மது விலக்கை ஒரு சூழ்ச்சியாக உபயோகிப்பது மான தந்திரங்களைப் பார்த்தால் விளங்காமல் போகாது. தவிர, ஜாதித் துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என்பது.
“திறந்த தேசத் தொண்டர்களில் சிலர் சமூக சீர்திருத்தம் செய்ய துவேஷத்தை சாதனமாகக் கொண்டது தேசத்தின் துரதிர்ஷ்டம்” என்கின்றார்.
இதில் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்பவர்களிடத்தில் ஜாதித் துவேஷம் இருக்கக் கூடுமா? தீண்டாமை ஒழிக்க இணங்காதவர்களிடத்தில் ஜாதித் துவேஷம் இருக்க முடியுமா என்பதை வாசகர்கள் தான் உணரவேண்டும். தீண்டாமையை ஒழிப்பதானாலும் சமூகத்தில் ஏதாவது சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் தீண்டாமையினால் பலன் அனுபவிப்பவர்களுக்கும் சமூகக் கொடுமையினால் நலமனுபவிப்பர்களுக்கும் நஷ்டமாவது மனத்தாங்கலாவது இல்லாதிருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். இந்த மனத்தாங்கலுக்குப் பயந்தால் ஒரு சிறு காரியத்தையாவது நடத்த முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம். அயோக்கியர்களையும் சுயநலக்காரர்களையும் சூழ்ச்சிக்காரர்களையும் மக்கள் வெறுப்பதும், அவர்கள் மீது மக்களுக்கு துவேஷமேற்படுவதும், உலகம் அவர்களை நிந்திப்பதும் இயற்கை என்பதையும், “இயற்கையை வெல்ல யாராலும் முடியாது” என்று சொல்லும் திரு இராஜகோபாலாச்சாரியாரே உணராமல் போனது “தன் குற்றம் தனக்குத் தெரியாது” என்கின்ற பழமொழிக்கு இரும்புப் பூண்போட்டது போலாகின்றது. “சீர்திருத்தக்காரர்கள் அந்தரங்க சுத்தியோடு வேலை செய்தால் யாருக்கும் எவ்வித தீமையும் விளையாது” என்கின்றார். இது பயனற்ற வார்த்தை என்றே சொல்லுவோம். ஏனெனில், எவ்வளவு நல்லெண்ணத்தோடானாலும் ஒரு கேட்டை விலக்க முயற்சித்தால் அக்கேட்டினால் பிழைப்பவனுக்கு கெடுதி ஏற்பட்டுத்தான் தீருமே ஒழிய அது கேட்டை விலக்குபவனின் நல்ல எண்ணத்தினால் மறைந்துவிடாது. ஒரு சமயம் அந்தக் கெடுதி அவன் நியாயமாய் அனுபவிக்க வேண்டிய கெடுதிதானா? அல்லது அநியாயமாய் அனுபவிக்கும் கெடுதியா? என்று வேண்டுமானால் யோசிக்கக் கூடியதாயிருக் கும். அதாவது, எவ்வளவு நல்லெண்ணத்தோடு காத்திருந்து ஒரு திருடனைப்
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பிடித்தாலும் பிடிபட்ட திருடன் நம்மை குத்திவிட்டு ஓடவோ, முடியாவிட்டால் வசைபாடவே செய்வானே ஒழிய நமது நல்லெண்ணம் அவனை “என்னைப் பிடித்துவிட்டாயே புண்ணியவானே” என்று புகழச் செய்யாது என்பதை உறுதியாய்ச் சொல்லுவோம். தவிர “ஜாதித் துவேஷம் ஒழிய வேண்டும் என்று எல்லோரும் தினந்தோறும் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்” என்று உபதேசம் செய்கின்றார். திருராஜகோபாலாச்சாரிக்கு உள்ள கடவுள் பக்தியும் அவருடைய இருதய சுத்தமும் நமக்கு நன்றாய்த் தெரியும். ஆதலால், இது விஷயத்தில் அவருக்கு நாம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஆனால், அவர். யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாரோ அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கின்றோம். அதாவது கடவுளால் துவேஷத்தை ஒழிக்கக் கூடும் என்பதில் கடுகளவு நம்பிக்கையாவது திருராஜகோபாலாச்சாரியார் முதலிய யாருக்காவது இருக்கு மானால் திருராஜகோபாலாச்சாரியார் எதை துவேஷம் என்று கருதி இருக்கின்றாரோ அது சிறிது கூட துவேஷமல்லவென்றும், அறியாமை யினாலோ தந்திரத்திற்காகவோதான் இந்தப்படி சொல்லப்படுகின்றதென்றும், உண்மையாய் - உண்மையாய் - உண்மையாகவே சொல்லுகிறோம். ஏனெனில் துவேஷத்தை அழிக்க சக்தியுள்ள கடவுள் அறிவுடையவராய் இருந்தால் மக்களுக்கு கெடுதியைத் தரும் துவேஷத்தை உற்பத்தி செய்திருக்கவே மாட்டார். அவரில்லாமல் துவேஷம் ஏற்படவே முடியாது என்பதுதான்.தவிர “மனிதன் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாகக் கருதி அகம்பாவப் படக் கூடாது என்கின்றார்.இது எதற்கு ஆக சொல்கிறார் என்பது ஒருபுறமிருந்தாலும் மனிதன் தனக்கு “ஒன்றும் தெரியாது” “எல்லாவற்றிற்கும் வேறு காரண:
மிருக்கும்” என்று கருதுகிற காரணமே அடிமைத் தனத்தின் ஜீவநாடி என்பது நமது அபிப்பிராயம்.அன்றியும் தனக்கு எல்லாம் தெரியும் என்றுநினைப்பதை விடதனக்கு ஒன்றுமே தெரியாது என்பதினால் அதிகக் கெடுதியே உண்டாகுமே தவிர சிறிதும் நன்மை உண்டாகாது.
ஆதலால் இவைகள் எல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகளே தவிர காரியத்திற்கானவைகள் அல்ல. தவிர தெய்வங்களையும், அவதார
புருஷர்களையும், புனித ஸ்தலங்களையும், குற்றம் கூறுவதாகவும் அது பெரிய பேடித்தனமென்றும் சொல்லுகின்றார்.
இங்கு வாசகர்களுக்கு ஒன்று சொல்லுகின்றோம். அதாவது, எவை தெய்வங்கள், அவற்றுள் எந்த தெய்வங்களை என்ன குற்றம் சொன்னோம்? யார் அவதார புருஷர்கள், அவர்களின் எந்த குணத்தை குற்றம் சொன்னோம்? எது புனிதஸ்தலம், அதை எப்படி குற்றம் சொன்னோம்? என்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது கூறாமலும்நாம் சொன்னதாகச் சொல்லப்படும் குற்றங்களுக்கு
ஒரு சமாதானமும் சொல்லாமலும் சும்மா பாமர மக்களின் முட்டாள்தனத் தையும் வெறியையும் தனக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டு தனது மனதார
சூதாய் பேசி பாமர மக்களை நம்மீது ஏவிவிட முயற்சிப்பது பேடித்தனமா? அல்லது நாம் உள்ளதை உள்ளபடி நினைத்து நினைத்தபடி வெளியில் ஆதாரங்
குடி அரசு - 1929 @) 236
களுடன் எடுத்துச்சொல்லுவது பேடித்தனமா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகின்றோம். தவிர,“பிராமணர்- பிராமணரல்லாதார் சண்டை இல்லாவிட்டால் தென்னாட்டு பிராமணர்கள் பாலிய விவாகத்தடைமசோதாவை எதிர்த்திருக்க மாட்டார்கள்” என்று சொல்லுகின்றார். இது உண்மையாய் இருக்குமானால், “பிராமணர்கள் மனப்பான்மையின் யோக்கியதையை அறிவதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா” என்று கேட்கின்றோம். அதாவது, நமது நாட்டில் என்ன காரியத்திற்காக பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் சண்டை இருக்கின்றதோ அதற்காகத்தான் பார்ப்பனர்களுடைய சீர்திருத்த எதிர்ப்பும் இருக்கின்றது என்று சொல்லுகிறார். நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். பார்ப்பனரல்லாதார் பார்ப்பனருடன் போராடுவதின் முக்கிய தத்துவம் பார்ப்பனரல்லாதாரை விட பார்ப்பனன் பிறப்பினால் மேலானவன் என்கின்ற ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவே ஒழிய வேறல்ல. திரு.ராஜ கோபாலாச்சாரியார் சொல்லுகின்றபடியேபார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே அதாவது, பார்ப்பனரல்லாதாருக்கு விரோத மாகவே எவ்வித சீர்திருத்தங்களையும் எதிர்க்கிறார்கள் என்றாகின்றது. இது தன்னை அறியாமல் சொன்ன உண்மை என்றே கருதுகிறோம். கடைசியாக பொது ஜனங்களுக்கு ஒன்று சொல்லுகின்றோம்.
நாட்டில் எந்த சீர்திருத்தமோ சீர்த்திருத்த இயக்கமோ புறப்பட்டாலும் பார்ப்பனர்கள் அதை நாஸ்திகம் என்றும், தெய்வ நிந்தனை என்றும், சாஸ்திர நிந்தனை என்றும், அவதார நிந்தனை என்றும், புண்ணியஸ்தல நிந்தனை
என்றும், தேசத்துரோகம் என்றும், மதத் துவேஷம் என்றும், ஜாதித் துவேஷம்
என்றும் பழிகளைச் சுமத்தி பாமர மக்களை ஏய்த்தே இதுவரை தங்கள்.
ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்திருக்கின்றார்கள். அந்தமுறையையே நமது திருராஜகோபாலாச்சாரியார் பின்பற்றியது சிறிதும் அதிசயமல்ல. ஏனெனில் திருராஜகோபாலாச்சாரியார் வருணாசிரம தர்மத்தில் மிக்க நம்பிக்கைக் கொண்டவர். பெரியவர்கள் செய்ததெல்லாம் நன்மையானதே என்று சொல்லு பவர்.மூடர்களுக்கு மூடப்பிள்ளையும், புத்திசாலிக்குப் புத்திசாலிப் பிள்ளையும், யோக்கியனுக்கு யோக்கியப்பிள்ளையும், அயோக்கியனுக்கு அயோக்கிய பிள்ளையும் தான் பிறக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். ஆக தனது முன்னோர்களுடைய குணமே தனக்கு இருப்பதாகவும், குணமே மிகவும் மேலானதென்றும் கருதிக் கொண்டிருப்பவர். இப்படியெல்லாம் சொன்னதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இவர் சொன்னதை யெல்லாம் பொது ஜனங்கள் நம்பி விடுவார்களா என்பதுதான் நாம் முடிவுகாட்ட வேண்டிய விஷயவமாகும்.முடிவாக பார்ப்பனர்கள் காங்கிரசும் தேசியமும் பூரண சுயேச்சை
யும் ஒத்துழையாமையும் என்ன தத்துவத்தைக் கொண்டது என்பதை பொது மக்கள் அறிய வேண்டியே இதை எழுதினோம்.
குடி அரசு - தலையங்கம் - 27101929
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
விதணா விவாகம்
சகோதரிகளே! சகோதரர்களே!! உலகமானது இப்போது எம்மாதிரியான முன்னேற்றத்தில் போய்க் கொண்டிருக்கின்றதென்பதை நாம் பார்த்து வருகின்றோம். மனிதனது புத்திக்குப்படாத அற்புத சக்திகளெல்லாம் மனிதனிடமிருந்து வெளியாகிக் கொண்டு வருகின்றது. சையன்ஸ் அதாவது வஸ்து தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியின் பயனாகமகா அதிசயங்களை யெல்லாம் மனிதன் செய்கின்றான்.சமீப முயற்சி என்னவென்றால், சந்திர மண்டலத்திற்குப் போக முயற்சிக்கத் தொடங்கி செவ்வாய் மண்டலத்திலிருந்து சமாச்சாரப் போக்குவரத்துகள் நடத்தப்பட்டு விட்டன. மற்றும் அடுத்த 500 வருடத்தில் மனிதன் அடையக்கூடிய முற்போக்கை இப்போதே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, நம்மைச் சுற்றியுள்ள உலகம் இந்நிலையிலிருக்க நாமோ நமது ஆராய்ச்சிக்காரர்களால் 3000 வருஷத்திற்கு முன்னால் நாம் இருந்த நிலையை அடையவேண்டுமென்று தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்பட்டு பெருமைப் படுகின்றோம். அப்படிப்பட்ட தொல்காப்பியம் 2000 வருஷத்திற்கு முந்தியதா 3000 வருஷத்திற்கு முந்தியதா என்கின்ற ஆராய்ச்சி இன்னமும் நமக்குள் முடியவில்லை. ஆராய்ச்சிக்காரர்கள் யோக்கியதை இப்படி என்றால், நமது பண்டிதர்களுடைய யோக்கியதையோ சமணர்கள் கழுவேறப்பட்டார்களா அல்லது தானாக கழுவேறினார்களா என்பதற்கு சமயம் போல் பேச ஆதாரம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் தேசீயப் பண்டிதர்களின் யோக்கியதையோ தேசீய மேடையில் ஏறி தாயைப் புணர்ந்தும் தகப்பனைக் கொன்றும் மோட்சத்திற்குப் போன புராணத்தையும் பெண்ஜாதியைக் கூட்டிக் கொடுத்து மோட்சத்திற்குப் போன புராணத்தையும்படித்தால் சுயராச்சியம் வந்து விடுமென்று தேசியப் பிரசாரம் செய்கின்றார்கள்.
இவ்வளவும் போதாமல் இந்த 20வது நூற்றாண்டின் இன்றைய தினத்தில்
நாம் கூட்டம் கூடி விதவைகள் கலியாணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்கின்றதற்கு உள்ள மதத்தின் தடைக்கும் சாஸ்திரத்தின் ஆட்சேபத்திற்கும் பதில் சொல்ல இங்கு உட்கார்ந்திருக்கின்றோம்.
சகோதரர்களே! நமது நாட்டுநிலையைக்குறிக்கநமக்கு இதைவிட வேறு யோக்கியதை என்னவேண்டும்..
நமது ஆராய்ச்சியும், அறிவும், ஊக்கமும், முயற்சியும் நமது காலமெல்லாம் இந்த மாதிரி காரியங்களுக்கே உபயோகித்துக் கொண்டிருந்
குடி அரசு - 1929 @) 238
தோமானால் நாம் என்றுதான் மனிதர்களாவது?
விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா என்பதற்கும் சாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை.ஒரு சமயம் விவாகம் எந்த மாதிரி செய்வது என்பதைப் பற்றி யோசிப்பது என்றாலும் சமாதானம். சொல்லலாம்.அப்படிக்கின்றி விவாகம் செய்யலாமா? வேண்டாமா? என்பதற்கே சமாதானம் சொல்லுவதென்றால் அது சுத்த முட்டாள்தனமென்று தோன்றவில்லையா? என்னைக் கேட்டால் இந்தக்கொடிய நாட்டில் விதவைக ளுக்குதுன்பத்தை இழைத்தவர் நமது ராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்பிராயம்.ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும் கஷ்டப்படவும் ஏற்பட்டுவிட்டது. எப்படியென்றால், ராய் மோகன் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருந்திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்த உடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் “மாங்கல்ய ஸ்திரீ "யாகவே உயிருடன் கட்டையில் வைத்து சுடப்பட்டு “கற்பு லோகத்தை” அடைந்து “மோட்சத்தி”லிருந்திருப்பாள். கற்பு லோகமும்
மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் ஒன்றுமாத்திரம் நிச்சயம். அதாவது உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டமிருந்திருக்
கக்கூடும். ஆனால் அந்தப்படி சுடாமல் காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு அதன் ஆயுள் கால முழுவதும் அங்குல அங்குலமாக சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை வினாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா இல்லையா என்றுதான் கேட்கின்றேன். இப்பொழுதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும். மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் கொஞ்சகாலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண்யத்தை உத்தேசித்து பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை யாவது புதுப்பிக்கவேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது: நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்கு தன் பெண்ஜாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களை கொண்டு அவ்விச்சை தணிக்க வேண்டியதும், மிருகங்களுக்கு ஏற்படும் தினவை தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொரி கல் நட்டு வைக்க வேண்டியதும், 32 தர்மங்களில் இரண்டு தர்மமாகக் கொண்டு கோயில்களில் தாசிகளை வைத்தும் கிராமங்கள் தோறும் நத்தங்களில் சொரி கல் நட்டு வைத்தும் இருக்கிறார்கள். ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்டமுடியாமல் போய்விட்டது? என்பதை நினைக்கும்போது ஜிவகாருண்ய
புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.
அதோடு மாத்திரமல்லாமல் அம்மாதிரி ஜீவகாருண்யம் கூடாது என்பதற்கு சாஸ்திரம் இருப்பதாயும், அந்த சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட்ட தாகவும் மனிதர்கள் என்பவர்கள் சொல்ல வருவார்களானால் அப்படிப்பட்ட சாஸ்திரத்தையும் கடவுளையும் மனிதர்களையும் என்ன செய்வது என்பதை நீங்கள்தான் யோசித்து முடிவு கட்டவேண்டும்.
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஒரு பெண்ஜாதியை இழந்த ஆண், கலியாணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம் சொல்ல வருகிறார்களா? அப்படிக்கிருக்க புருஷனை இழந்தவள் கலியாணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல புருஷனுக்கு என்ன பாத்தியம்? என்பது நமக்கு விளங்கவில்லை. நாட்டில்
சிறப்பாக, நமது சமூகத்தில் விதவைகள் கர்ப்பமடைந்து கர்ப்பத்தை அழிப்பதும், பிள்ளைகளைப்பெற்று கொலை செய்வதும், வீடுகளைவிட்டு பெற்றோர். அறியாமல் நினைத்த புருடர்களுடன் ஓடுவதும், பிறகு பொது விபசாரிகளாகி
குச்சுகள் மாறுவதும் முதலான காரியங்களை தினமும் கண்ணால் பார்த்தும் தாங்களாகவே துன்பங்கள் அடைந்தும் வரும்போது விதவா விவாகம் சாஸ்திர சம்பந்தமா? ஜாதி வழக்கமா? என்று பார்க்கும் மூடர்கள் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா என்று கேட்கின்றேன். சாஸ்திரத்தில் இடம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஜாதியில் வழக்கம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதைப்பற்றி கவனிப்பதில் பலன் என்ன? புருஷனிழந்த பெண்ணுக்கு புருஷ இச்சை இருக்குமா? இருக்காதா? அவளுக்கு புருஷன் வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தானே கவனித்து முடிவு கட்ட வேண்டும். அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்திலிருந்து விட்டால் அந்த பிள்ளை திருடின திருட்டையெல்லாம் ஜோசியம் நம்புகிறவன் சும்மாவிட்டு விடுவானா? என்று கேட்கின்றேன்.
தினம் புருஷனுடன் வாழ்ந்து கொண்டு புருஷன் என்பதாகதனக்கு ஒரு எஜமான் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அடிமைத்தனத்தில் இருந்து குழந்தை குட்டிகளைப் பெற்று கொண்டு இருக்கும் மாங்கலியப் பெண்களின் போக உணர்ச்சியைவிட மேல்கண்ட கவலையில்லாத பெண்களின் உணர்ச்சி எத்தனை மடங்கு அதிகமாயிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்! ஒரு ஜீவனை பட்டினியாகப் போட்டு கொல்லுவதிலும், ஒரு பெண்ணை விதவையாக வைத்து சாகாமல் காப்பாற்றுவது கொடுமை அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள்! ஒரு பெண் எதற்காக விதவையாய் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவரை யாராவது காரணம் சொன்னார்களா? அல்லது எந்த மதமாவது, எந்த ஜாதியாவது காரணம் சொல்லியிருக்கின்றதா? காரணமில்லாமல் இவ்விதக் கொடுமையான ஜீவஹிம்சையை செய்து கொண்டிருக்கும் சமூகம் வடிகட்டின முட்டாள்தனமுடையது என்பதற்கு என்ன ஆட்சேபனைகள் சொல்லப் போகின்றீர்கள்.
விதவைகளாயிருப்பது கடவுள் கட்டளை என்று கருதுவீர்களானால் விதவைகளுக்குப் போக உணர்ச்சியும், அதனால் ஏற்படும் கவலையும், சில சமயங்களில் கர்ப்பமுண்டாக்கப்படுவதும், அது அழிக்கப்படுவதும், பெற்ற குழந்தையை கழுத்தைத் திருகுவதுமான காரியங்கள் நடைபெறமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1929 @) 240
விதவைத் தன்மை நாட்டில் இருப்பதாலேயே சாஸ்திரங்களும் கடவுள் செயல் என்பவைகளும், சோதிடம் என்பவைகளும் பொய் என்பதாக உங்களுக்கு விளங்குகின்றதா? இல்லையா? ஏனெனில், நம்மில் ஒவ்வொரு வனும் கலியாணம் செய்வது கடவுளை பூவைத்தோ, கருடதரிசனமோ,குறியோ கேட்டுத் திருப்தி அடைந்தும், ஜோசியம் பொருத்தம் பார்த்து திருப்தி அடைந்தும் சாஸ்திர விதிப்படியும் செய்கிறான். அப்படியிருக்க இந்த கதி
நேர்ந்தால் மேற்கண்டவைகள் நிஜமாயிருக்க முடியுமா? இந்த அஸ்திவாரப் புரட்டை நாம் நம்பி மதம், ஜாதி, வழக்கம் என்று சொல்லுகின்றோமே? நமக்கு வெட்கமில்லையா? அல்லது புத்தியில்லையா? என்று கேட்கின்றேன்.
பெரும்பாலும் மதப்படியும் ஜாதி வழக்கப்படியும்நடக்காதவர்களேதான் மதம் என்றும், சாஸ்திரமென்றும், ஜாதி வழக்கம் என்றும் தொல்லைபடுத்துகிறார்கள்.
தங்களைப் பொறுத்தவரை தாங்கள் நம்பும் மதக்கொள்கைப்படியும் சாஸ்திரப்படியும் நடக்க முடியாதவர்களேதான் நாம் செய்யும் காரியத்திற்கு இடையூறாக மதத்தையும் சாஸ்திரத்தையும் வழக்கத்தையும் கொண்டு வந்து போடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களால் தங்களுக்காக கொண்டு வந்து
போடப்படும் மதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் கடுகளவு புத்தியுள்ள எந்த மனிதனாவது மதிப்பு கொடுக்க முடியுமா? என்று பாருங்கள்.
உதாரணமாக, சாரதா மசோதாவை எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் பருவமடைந்ததற்குப் பின்னால் கல்யாணம் செய்தால் சாஸ்திரம் விரோதமாம்! பாவமாம்! நரகம் கிடைக்குமாம்! இதற்காக சத்தியாக்கிரகம் செய்து உயிர்விட வேண்டுமாம்! நீங்கள் இந்த வீரர்களை உண்மையானவர்கள் என்று நம்புகிறீர்களா?
இந்த வீரர்களின் ஆண் பெண் கடவுள்களுக்கும் அவர்களது சொந்த காருக்கும் எப்போது கலியாணம் நடந்தது? கல்யாணம் நடந்ததை இவர்கள். பார்க்காவிட்டாலும் எப்போது நடந்ததாக இவர்கள் சாஸ்திரம் கூறுகின்றது என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.
சீதைக்கும், ருக்குமணிக்கும், சத்தியபாமைக்கும், பார்வதிக்கும் வள்ளியம்மாளுக்கும், தெய்வயானைக்கும், மீனாட்சிக்கும், ஆண்டாளுக்கும்,
நாச்சியாருக்கும், திரெளபதைக்கும் எப்போது கல்யாணம் நடந்தது? இவர்கள் பருவமடைந்த பிறகா? அதற்கு முந்தியா? என்று கேட்கின்றேன். பழைய
ராஜாக்கள் என்பவர்கள் காலத்திலும் மதசம்பந்தமான புராணங்களிலும் எங்காவது மைனர் பெண்களையோபத்து வயதுக்குட்பட்ட பெண்களையோ கலியாணம் செய்து கொடுத்ததாக இவர்கள் சொல்லக்கூடுமா? என்று கேட்கின்றேன்.தவிரவும், மேற்கண்ட ஆண்பெண் கடவுள்கள் தாங்களாகவே கலியாணம் செய்து கொண்டார்களா அல்லது அவர்களின் தாய் தகப்பன்மார். கட்டு சாத மூட்டையை தோளில் சுமந்து திரிந்து மாப்பிள்ளை தேடி சகுணம்,
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
குறி, சோதிடம், பொருத்தம் முதலியவை பார்த்து கலியாணம் செய்து கொடுத்தார்களா என்று யோசித்துப்பாருங்கள்.
இந்து சாஸ்திரத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள் “சாஸ்திரத்தில் பருவமடைந்த பிறகு கலியாணம் செய்வதற்கு இடமில்லை” என்று சொல்ல வருவார்களானால் அதிலும் அதற்காக இவர்கள் சத்தியாக்கிரகம் செய்வே னென்று சொல்வார்களானால், இவர்கள் நம்மை எவ்வளவு முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எனவே, சகோதரர்களே! உங்களுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டால் அது சாஸ்திர சம்மதமா? விரோதமா என்று எதிர்ப்பார்ப்பது அறியாமையும் அடிமைத்தன
முமாகும். இந்த லோகத்திற்கு அவசியமான காரியம், மேல் லோகத்தில் என்ன
பலனைத்தரும் என்பது மற்றொரு அடிமைத்தனமாகும்.
இவ்வளவும் தவிர இப்படிச் செய்தால் அவர்கள் என்ன பேசுவார்கள் இவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பது எல்லாவற்றையும் விட சுய அறிவும் சுய உணர்ச்சியும் அற்ற அடிமைத்தனமாகும்.
சகோதரர்களே! கடைசியாக உங்களுக்கு ஒன்று சொல்லுகின்றேன். அதாவது எந்தக்காலத்திலோஎங்கிருந்தோயாராலோஎதற்காகவோ யாருக்கோ எழுதிய ஒரு புஸ்தகத்தை இந்தக் காலத்திற்கு இந்த இடத்திற்கு நமது நன்மைக் காக நமது நன்மையில் கவலை கொண்டவர்களால் எழுதப்பட்டதென்றும், அதன்படி நடந்து தீர வேண்டுமென்றும் கருதுகின்றவன் மனிதனல்ல என்பது தான் எனது மாற்ற முடியாத உறுதியான அபிப்பிராயமாகும்.
குறிப்பு - விதவா விவாக சகாய சபையின் ஆதரவில் சென்னைபிரம்மசமாஜ கட்டடத்தில் 19:0.129ல் நடந்த கூட்டத்தில் ஆற்றியதலைமைச் சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 27.10.1929
குடி அரசு - 1929 @) 242
இந்தியாவில் மயிஷவணரி ௨உகைம்
திருவாளர் ஏ.ஜே.அன்பையன் அவர்களால் வெளியிடப்பெற்ற இந்தியாவில் “மிஷனெரி உலகம்” என்னும் பெயரிய நூலொன்று எம் மதிப்புரைக்கு அனுப்பப் பெற்றோம்.
மிகப்பரந்த நோக்கத்துடன் வரையப் பெற்ற இந்நூலின் கண், இந்தியா விலுள்ள மேனாட்டுக் கிறிஸ்துவப் பிரசாரகர்களின் நிலைமையைப் பற்றித் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் செந்நெறியில் செல்லாது, தீநெறியாம் சூழ்ச்சியிலும், சுயநலத்திலும், பிரித்தாளும் வழியிலு. மேயே செல்லுகின்றனர் என்று, இம்மேணாட்டு மதப் பிரசாரகர்களின் புரட்டை திரு. அன்பையன் பிறர் மனதில் எளிதிற் பதியுமாறு கூறியிருக்கின்றார். ஆங்காங்கே எல்லா மனிதர்களும் வேறுபாடின்றி பாராட்டற்குரிய அரிய உண்மைகள் மிளிர்கின்றன.
ஒரு உண்மையை ஒருமதம் என்று பெயரிட்டு வரையறுக்கும் போதே,
அம்மதம் பொது மதமாய் இருப்பதற்குரிய இலக்கணத்தை இழந்து விடுதலால், எம்மதத்திற்கும் புரோகிதப்புரட்டு வேண்டுவது அவசியமாயிருக்கின்றது. இதுபோலவே வரையறுக்கப்பட்ட இக்கிறிஸ்துவ மதத்திலும் இப்புரோகிதர்கள் செய்யும் புரட்டை திரு. அன்பையன் வெளிப்படுத்துவதனால், மிஷெனரி களைத் தெய்வங்கள் என்று கருதி ஏமாற்றமடையும் அநேகர் நல்வழிப்படுதல் கூடும் என்று கருதுகின்றோம்.
“நம்மிடம் பெருமை, அறியாமை, தன்னலம் என்னும் வியாதிகள் இருந்து வரும் வரை நாம் சகோதர ஐக்கியம் பெற முடியாது” என்றும், “கிறிஸ்துவைப் போலிருந்து உன்னையே முற்றிலும் அறிந்து உலகத்துக்குப் பயன்படு என்னும் உண்மையை அறிந்திருப்பரேல் மேனாட்டுப் பாதிரிகள். 70,000 பேர்கள் இருந்தும் பெரும் போர் நடக்கச் சும்மாயிருந்திருப்பரோ” என்று திரு அன்பையன் அவர்கள் கிறிஸ்துவின் அடிப்படையான கொள்கைகட்குப் பாதிரிகளின் கொள்கைகள் எவ்வாறு முரண்படுகின்றனவென்பதை எடுத்துக் காட்டிப்போதருவது பெரிதும் பாராட்டற்குரியதே. இந்நூலைக் கிறிஸ்துவர்கள். மட்டுமின்றி எல்லா மக்களும் படித்து இன்புற வேண்டுகின்றோம்.பொதுநலம் பற்றித் துணிவுடன் வெளிவந்த திருஅன்பையனுக்கு இக்கிறிஸ்துவ உலகம் மிகவும் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்பது எமது துணிபு.
குடி அரசு - மதிப்புரை - 03.11.1929
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
il
நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படி பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும் பட்டு அந்த மனிதனும் அதைஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ, அதுபோலவே மதமும் ஒரு மனிதனுக்கும் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு, அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன மதத்தான் என்றே எண்ணிக்கொண்டு வருகின்றான்.
ஆனால், ஜாதியானது பிறவியின் காரணமாக ஏற்படுகின்றதென்று, ஜாதியைக் கற்பிக்கும் சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவ
தால், பிறவியின் காரணமாக ஜாதி நிர்ணயிக்கிறவர்களுக்கு மேல்கண்ட ஆதாரங்களை சொல்லிக்கொள்ள இடமுண்டு.ஆனால் மதமானது பிறவியின். காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும் அது சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே இல்லை. மதம் என்பது கொள்கை என்றும், அந்தக் கொள்கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும், தள்ளவும் உரிமையுடையது என்றுமே தான் சொல்லப்பட்டு வருவதுடன், அந்தப்படியே அநேக மனிதர்கள் அடிக்கடி மதம் மாறிக் கொண்டும் வருகிறார்கள். அதாவது இந்துக்கள் என்பவர்கள் கிறிஸ்தவர்களா கவோ, மகமதியர்களாகவோ, பெளத்தர்களாகவோ, பிரம்ம சமாஜிகளாகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும்; ஒரு கிறிஸ்தவர் மகமதியராகவோ, இந்துவாகவோ, பெளத்தராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு மகமதியர் கிறிஸ்துவ ராகவோ, இந்துவாகவோ, பெளத்தராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு பெளத்தர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்துவராகவோ, நாஸ்திக ராகவோமாறுவதும்; ஒரு நாஸ்திகர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்து. வராகவோ, பெளத்தராகவோ மாறுவதும் இவர்கள் அடிக்கடி உள்பிரிவு மதக்காரர்களாக அதாவது சைவன் வைணவனாகவும், வேளாளன் சைவ
னாகவும், சைவன் சமணனாகவும், சமணன் சைவனாகவும், மற்றும் இது போலவே அடிக்கடி மாறுவதும், சர்வ சாதாரணமாக பார்த்து வருகின் றோம். இந்த முறையில்தான் இன்றைய தினம், உலகத்தில் சுமார் 2000 வருஷத்திற்கு முன் ஏற்பட்டதான பெளத்தமதத்தில் 55 கோடி மக்களும், 2000 வருஷத்திற்கு முன் ஏற்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு 50 கோடி
மக்களும், 1300 வருஷத்திற்கு முன் ஏற்பட்ட மகமதிய மதத்திற்கு 23 கோடி
குடி அரசு - 1929 @) 244
மக்களும் காலமே குறிப்பிட முடியாததான அவ்வளவு பழைய இந்து
மதத்திற்கு 20 கோடி மக்களும் பெளத்த, கிறிஸ்தவ, மகமதிய ஆகிய மதங்களுக்கு முன்னால் இருந்து வந்த யூத மதத்திற்கு ஒரே ஒரு கோடி மக்களும், மதம் குறிப்பிட இயலாத மக்கள் 17 கோடியுமாக இருந்து வருகின்றார்கள். இவர்கள் இந்தப்படிஎப்படி உண்டாயிருக்க முடியும்? அநேக. மாக இவ்வளவு ஜனங்களும் ஏதோ ஒரு மதத்திலிருந்தோ, அல்லது மதமே இல்லாதவர்களாயிருந்தோதான் புதிதாக ஏற்பட்ட மதப்பிரசாரங்களின் மூலமாக, அந்தந்தமதத்தைச் சேர்ந்தவர்களாக இன்றையதினம் இருக்கவேண்டும். இந்தக் கொள்கைப்படி பார்த்தாலே, மக்களுக்கு மதம் பிறவியின் காரணம் அல்ல வென்றும்,அவரவர்கள் மனப்பான்மையும், மற்றவர்கள் பிரசாரமும் காரண மென்றும் விளங்கும்.அன்றியும் இந்தக்கொள்கைப்படியே இனியும் உலகத்தில் எத்தனை மதம் வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம் என்பதும் அவை களுக்கெல்லாம் இப்போதிருக்கும் மக்களே தான் பெரும்பகுதியும் போய் அப்புது மதங்களில், சேர்ந்தாக வேண்டுமென்பதும் நன்றாய் விளங்கும். எனவே, மதத்தையும் ஜாதியையும் இரண்டையும் பார்க்கும் போதுமதத்தைவிட ஜாதியே அதிக பலமுடையதாகும். ஏனெனில் ஜாதி பிறவியில் உண்டாவது, அது மாற்றமுடியாதது என்று சொல்லப்படுவது. ஆனால் மதமோ கொள்கை:
யின் மூலம் ஏற்படுவது: அது மன உணர்ச்சிக்கும், அறிவு உணர்ச்சிக்கும் தக்கபடி அடிக்கடி மாற்றிக்கொள்ள உரிமை உடையது என்பதாகும். ஆகவே, பிறவியினால் ஏற்படுகின்றது என்று சொல்லும்படியான ஜாதியை அடியோடு அழித்து எல்லா மக்களையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமையையும் சகோதரத் தன்மையையும் உண்டாக்க வேண்டுமென்பதாகக் கூறப்படும் மக்களின் முயற்சியை ஒப்புக்கொண்டுஆதரவளிக்கச் சம்மதிப்பதாகச் சொல்லும் மக்கள், கேவலம் கொள்கையாலும் அறிவு உணர்ச்சியாலும் இருக்கும் மதத்தை அழித்து, மக்களை ஒன்று சேர்க்க முயற்சிப்பதில் என்ன ஆட்சேபணை இருக்கக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.மனிதன் அறிவு வளர்ச்சியின் மூலமும் ஆராய்ச்சித் தெளிவின் மூலமும், அசெளகரியத்தின் மூலமும்,
சுயநலத்தின் மூலமும் அடிக்கடி மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும் மதத்தைப் பற்றி பிடிவாதம் காட்டுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதும்
நமக்கு விளங்கவில்லை. அநேகமாக மதங்களை இன்றைய தினம் வலியுறுத்து பவர்களில் அநேகர் தங்கள் மதத்திற்குச் சொல்லும் ஆதாரங்கள் எல்லாம், மதத்தை உண்டாக்கின மதத் தலைவர் பெரியார் என்றும், அவர்கள் அநேக அற்புதங்கள் செய்த பெரியார்கள் என்றும், தங்கள் தங்கள் மதம் இன்ன இன்ன பரீட்சைக்கு நின்று வெற்றிபெற்றது என்றும் சொல்வதன் மூலம் அவைகளைப் பெருமைப்படுத்திப் பேசுகின்றார்களே அன்றி, அவைகளில் ஏதாவது ஒன்று இன்றைய தினம் நடைபெறமுடியுமா? என்பதைப் பற்றி கேட்போமானால், கோபித்துக் கொள்ளுகின்றார்களே ஒழிய வேறு சமாதானம் கிடையாது. அதுதான் போகட்டும் என்றாலோ,அம்மதக் கொள்கைகளைப் பற்றியும் அதே மாதிரி மதத்திற்காக கொள்கைகள் என்று சொல்லப்படுவதல்லாமல்
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கொள்கைக்காக மதமென்றோ, செளகரியத்திற்காகக் கொள்கைகள் என்றோ,
பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா என்றோ ஒருக்காலமும் சொல்ல முடியாதவை களாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் மதத்திற்காக கொலைகளும், கொள்ளைகளும், யுத்தங்களும், உயிர்விடத்தக்க வீரங்களும், நாட்டில் மலிந்து கிடக்கின்றன. அதுதான் போகட்டுமென்றாலோ, மதத்திற்காக செலவாகும் பணங்களும், நேரங்களும், அறிவுகளும், ஊக்கங்களும், கணக்குக்கடங்காதவைகளாகவே இருக்கின்றன.
இந்துமதம் என்பதைப் பொறுத்தவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததாயிருப்பதோடு அதனால் நாட்டிற்கு ஏற்படும் தொல்லைகள். அளவிடமுடியாததாகவும் இருக்கின்றன.
மற்ற மதக்காரர்கள் எல்லாம் மதத்தின் பேரால் பணங்களை வசூல் செய்து, மதத்தில் உள்ள மக்களுக்கு ஒற்றுமை, கல்வி, தொழில், ஒழுக்கம், ஆகியவைகளை உண்டாக்குவதற்கும், மேற்கொண்டு அன்னிய மதத்தில் இருக்கும் மக்களை தங்கள் மதத்தில் சேர்ப்பதற்கும் உபயோகப்படுத்துகின்றார்.
கள். ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர்களோ, மற்ற மதக்காரர்கள். எல்லோரையும் விட அதிகமான பணம் சம்பாதித்து ஒற்றுமையில்லாமலும், கல்வியில்லாமலும், தொழில் இல்லாமலும், ஒழுக்கமில்லாமலும் செய்து வந்திருப்பதுடன், அன்னிய மதத்தில் போய் சேரவும் தாராளமாய்நிர்ப்பந்தமும்
இடமும் தந்து வந்திருக்கிறார்கள்.
உதாரணமாக இன்றைக்கு 50 வருஷ ஜனகணிதப்படி இந்துக்கள்
50 வருஷத்திற்கு முன்னுள்ள ஜனத் தொகைப்படி 100க்கு 10 பேர்கள் வீதம்
ஜனத் தொகையில் குறைந்திருக்கிறார்கள். மற்ற மதக்காரர்களோ நூற்றுக்கு 25 முதல் 40 வரை உயர்ந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் யாரென்று பார்த்தால், “தெய்வீகத் தன்மை பொருந்தியதும், ஆத்மார்த்தம் நிரம்பியதும், தெய்வத் தன்மை பொருந்திய ரிஷிகளாலும், முனிவர்களாலும், ஆச்சாரி யர்களாலும், சமய குரவர்களாலும், அவதார புருஷர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்ட ஒப்புயர்வற்ற சனாதன வேத இந்து மதத்திலிருந்து இதர மக்களால் இழைக்கப்பட்ட தங்களுடைய கொடுமை களிலிருந்து தப்புவிப்பதற்காக என்றே ஓடிப் போனவர் களாவார்கள்”.
எந்த மத ஆச்சாரியனும், மத பக்தனும், இது விஷயத்தைப் பற்றி கிஞ்சிற்றாவது ஆலோசித்து கடுகளவு கண்ணீராவது கொட்டினவன் இல்லை. இப்படிப்பட்ட தானாகவே தேய்ந்து போய்க்கொண்டிருக்கும் மதத்திற்காக ஏற்படும் செலவுகளையும், மேனிக் கேட்டையும், அறிவுத் தடையையும் நீக்கவோ, கடுகளவாவது குறைக்கவோ எவனும் வெளிவந்தவனுமல்ல. ஆனால், இப்படிப்பட்ட, இந்து மதத்திலிருந்து இப்படிப் பட்ட இந்துக்களின் கல்நெஞ்சம் படைத்த ஒழுக்க ஈனங்களிலிருந்து விலகிக் கொள்ளக் கருதி.
குடி அரசு - 1929 @) 246
சென்ற காலத்தில் சிலர் மகமதியர்களாகி விட்டதாலும்,கிறிஸ்தவர்களாகிவிட்ட
தாலும் அவற்றை நாம் பாராட்டியதாலும் சில நண்பர்களுக்குமிக்கமனத்தாங்கல் ஏற்பட்டு நம் மீது காய்ந்து விழுந்து சுமார் 15 -ம் கடிதம் வரையில் எழுதியிருக். கின்றார்கள். அவைகள் மலேசியா நாட்டி லிருந்தும், பர்மா தேசத்திலிருந்தும், கொழும்புச் சீமையிலிருந்தும், இந்திய உள்நாட்டிலிருந்தும் வந்தவைகளாகும். அப்படி எழுதியிருப்பவர்களில் அநேகம் பேர், “நீர்தான் மதம் வேண்டிய தில்லை என்று பேசவும் எழுதவும் செய்கின்றீரே? அப்படியிருக்க மகமதிய மதத்தை ஏன் ஆதரிக்கிறீர்? அதில் போய்ச் சேர்ந்தவர்களை ஏன் பாராட்டுகிறீர்?” என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் இப்படி எழுதியவர்கள் எல்லோரும் மதமே வேண்டாம் என்கின்ற கொள்கையை ஒப்புக் கொண்டு,
நமக்குப் புத்திமதி கூறினவர்களா? அல்லது இந்துமதத்தை விட்டு மக்கள் வேறு மதத்திற்குப் போகின்றார்களா என்கின்ற மதப்பித்துக் கொண்டு எழுதினவர். களா? என்று பார்ப்போமானால் ஏறக்குறைய அதிகம் பேர் மதப் பித்துக் கொண்டு இந்துமதம் போய்விடுமே என்றோ அல்லது மகமதிய மதம் மாத்திரம் என்ன உயர்ந்தமதம் என்றோ, கருதித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பதாகவே நினைக்கின்றோம்.
அவர்களுக்கு ஒரு பதில் சொல்ல விரும்புகின்றோம். அதாவது இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே. ஏனென்றால், அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிரக ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றது. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானம், ஈஜிப்டு முதலிய நாடுகளை ஆட்சி கொண்டு வருகின்றது.துணிகரமான சீர்திருத்தத்திற்கு முனைந்துநின்று வெற்றி பெற்று வருகின்றது. இவைகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளுவதா னாலும்,இந்துவாக இருப்பதின் காரணத்தால் தீண்டப்படாதவராகவும், காணப் படாதவராகவும், தெருவில் நடக்கப்படாதவராகவும் “கடவுள் சன்னிதானத்தில்”
நிற்கப்படாதவராகவும், இருக்கின்ற ஆறறிவு படைத்து “ஆண்டவனு டைய தூய திருக்கோயிலாக உடைய” சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தைவிட்டு மகம்மதியமதம் புகுந்தானானால் அப்போதே சூரியனைக் கண்ட குமரி இருட்டுப்பறந்தோடுவதைப் போல் மறைந்து போகின்ற தென்பது மட்டும் உறுதி! உறுதி! உறுதி!
இதை யாராவது மறுக்கின்றார்களா என்று கேட்கின்றோம். மற்றபடி
*மேல் லோகமும்” “ஆண்டவன் சன்னிதானமும்”, “பாவமன்னிப்பும்” இந்து மதத்தைவிட, மகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ, மிக்க சுலபமென்றோ
நாம் ஒரு சிறிதும் ஒப்புக்கொள்ளுவதில்லை.தவிர இந்துமதத்திலிருக்கின்ற ஒரு *சக்கிவியோ” “பறையனோ” *பள்ளனோ” இன்றைய தினம் இந்து மதத்தை விட்டுவிட்டேன் என்று சொல்லுவானானால் அவனை ஒருக்காலமும் தொட்டுக் கொள்ளவோ, தெருவில் நடக்கவிடவோ, பக்கத்தில் வர சம்மதிக்கவோ எவரும்.
ஒப்புக் கொள்ளுவதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தைவிட்டு விடுவதினால் மாத்திரம் எப்படி சுதந்தர:
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மடையக் கூடியவர்களாகி விடுவார்கள்? ஆனால் மகமதியர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ ஆகிவிடாமல் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபணை: இல்லை என்பதுடன் சிறப்பாக மகமதியர்களாகிவிட்டால் சட்டத்தில் ஆட்சே பனை இல்லாததோடு, அனுபவத்திலும் ஆட்சேபணை இல்லாமல் போய் விடுகின்றது. பொதுவாக நமது லட்சியம் ஜாதிமத, வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென் பதாகும். மத வித்தியாசம் ஒழிகின்ற வரையிலும், ஜாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால், மத வித்தியாசம் ஒழியப் பாடுபட்டுக் கொண்டிருப்பதுடன், ஜாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்க ளையும் கூடச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கின்றது. ஆகவே அம்முயற்சியிலொன்று தான், நாம் இப்போது மகமதிய மதத்தைத் தழுவியவர் களை ஆதரிப்பதும், பாராட்டுவதுமே ஒழிய வேறில்லை. பார்ப்பனர்கள் சமிபகாலமாய்ச் செய்துவரும் சூழ்ச்சிகளை உணர்ந்தவர்கள், இந்து மதத்திற் காகவோ, இந்துக்கள் பிறமதம் புகுவதற்காகவோ, சிறிதும் அதிருப்தி அடைய முடியாதென்பதே நமதுநம்பிக்கை.
குழந்தைமணங்களைத்தடுக்கும்மசோதாவிற்கு இந்துமதத்தின் பேரால் ஆட்சேபணையும், சாஸ்திரத்தின் பேரால் சத்தியாக்கிரகமும் செய்வதற்கு புதிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு, பிரசாரமும் பத்திரிகையும் நடத்த பணமும் சேகரித்து வருகின்றார்கள்.
இதுமாத்திரமல்லாமல் இந்துக்களுக்கு சிறப்டாக பார்ப்பனர்களுக்கு தங்கள் ஆதிக்கத்திற்குஆதாரமான( ப-ர்) மதத்தைக்காப்டாற்ற காங்கிரசேநல்ல சாதனம். என்றுதிருஎஸ்சத்தியமூர்த்திஅய்யரவர்கள்பார்ப்பனர்களுக்குச் செய்தி விடுத்து எல்லோரையும் காங்கிரசில் சேரும்படி அழைக்கிறார்.அதாவது,அவர் சர்க்காரை மதசம்பந்தமானகாரியங்களில்பிரவேசிக்க வொட்டாமல் செய்யவேண்டுமானால் காங்கிரசைக் கைப்பற்றியாகவேண்டும் என்று வியாக்கியானமும் செய்திருக்கிறார். இதிலிருந்து என்ன விளங்குகின்றது என்று பார்த்தால் மதத்தின் பேரால் உள்ள கொடுமைகளை ஒழிக்க சமூகத் துறையிலும்,சம்மதிக்கமாட்டோம்: அரசியல் துறையிலும் சம்மதிக்கமாட்டோம் என்றுபார்ப்பனர்கள் வைதீககோலத்துடனும், தேசீயக் கோலத்துடனும் சொல்லுவதாக ஏற்படுகின்றதா இல்லையா என்று கின்றோம்
தவிரவும், நாமும் இந்த ஜாதி வித்தியாசத்தைப் போக்க பிறமதம் புகுவது என்பதையே பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை. அப்படிச் செய்பவர்களை. ஆதரிப்பது ஒருபக்கமும், கோயில் பிரவேசம் ஒரு பக்கமும், கோர்ட்டுகளில் விவகாரம் இன்னொரு பக்கமும், சமபந்தி ஒருபக்கமும், கலப்பு மணம்:
பக்கமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமஉரிமையும், சமசந்தர்ப்பமும் கிடைக்க வேறொரு பக்கமும் இப்படிப் பல வழிகளிலும் முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இவைகளுக்குஇடையூறாகஏற்பட்டுள்ளஎதிர்ப்புகள் தொல்லைகள்:
குடி அரசு - 1929 @) 248
விஷமப் பிரசாரங்கள், பழிகமத்தல்கள், மிரட்டல்கள், ஆபத்துக்கள்,மொட்டைக் காகிதங்கள் முதலாகிய தடைகளின் பக்கத்திலிருந்து கவனித்துப் பார்க்கின்றவர். களுக்குத் தெரியுமே ஒழிய, தூரத்திலிருந்து கொண்டு பத்திரிகைகளை மேல் வாரியாய் பார்த்துக்கொண்டு குற்றம் சொல்லப் புறப்படுபவர்களுக்கு அவ்வளவு
நன்றாய் உண்மை முழுவதும் ளுவிளங்கி விடமுடியாதென்றேசொல்லுவோம்.. தவிர,கடைசியாகஒன்று சொல்லிஇதை முடிக்கின்றோம்.
இனி சமீப காலத்திற்குள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின், இப்போது இந்துக்களாயிருக்கின்றவர்கள், கண்டிப்பாய் இந்துக்களாக இருக்க முடியவே முடியாதென்பதை ஒவ்வொருவரும் மனதில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சூழ்ச்சிக்காரர்களும் சோம்பேறிகளும் இதை ஒப்புக் கொள்ளாமல் வெறும் வாய் வேதாந்தம் பேசக் கூடும். அதாவது
“புத்தரால் அழிக்க முடியாத இந்துமதம், மகமதியரால் அழிக்க முடியாத இந்துமதம், வெள்ளைக்காரர்களால் அழிக்க முடியாத இந்துமதம், எத்தனையோ
ஆயிரம் வருடங்களாக எத்தனையோ ஆபத்துகளுக்கு தப்பிவந்த இந்துமதம் இனிதானா அழியப் போகின்றது?” என்று பஞ்ச கச்சத்தையும், உச்சிக்குடுமி யையும், தொந்தி வயிற்றையும் கொண்ட ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம்பேறிகள், கால் மேல் கால் போட்டுக் கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டு பேசலாம். ஆனால் அதில் சிறிதும் உண்மை இருக்க முடியாது. ஏனெனில் அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு: என்னவென்றால் அப்போதைய சவுகரியம் வேறு, இப்போதைய சவுகரியம்வேறு என்பதையும், அது மூடநம்பிக்கைக்காலம் இது அறிவு ஆராய்ச்சிக்காலம் என்பதையும் கவனித்தால் விளங்கும். அவ்வளவிற்கு கூட நாம் போக வேண்டியதில்லை. நம்மில் அநேகர் இன்றைக்கு ஐந்து வருஷங்களுக்கு முன் 70, 50, 20 வருஷங்களாக என்ன மனப்பான்மையில் இருந்தோம்: படிப்படியாக 5.6 வருஷத்திற்குள் இன்றைக்கு என்னமனப்பான்மையில் இருக்கின்றோம்? இந்த விதாசாரத்தை இன்னும் ஒரு இருபத்தைந்து வயதுக்குப் பின் வட்டியுடன்
வட்டிக்கு வட்டியுடன் சேர்த்துப் பங்கிட்டுக்கொடுத்தால் என்ன பலன் ஏற்படும். என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே மதத்தை நேர்முகமாகக் கட்டிக் கொண்டழுதாலும்,மறைமுகமாகக் கட்டிக்கொண்டழுதாலும், விளையும் பலன் ஒன்றே யாகும். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் பின்னால் ஏற்படப்போகும் லாபத்தைப் பார்க்கச் சம்பளம் வாய்ந்தவர்கள் தாங்களும் முயற்சி செய்யாததற்கு வருந்துவார்கள் என்றே நம்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 03.11.1929
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சுயமரியாதை இயக்கத்திண் பன்
சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர்களும் புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர்களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரசாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களை:
யும் பற்றி, இரண்டொரு நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றோம்.
பார்ப்பனர்களை எந்தக் காரணங்கொண்டும் நம்புவதென்பதோ, அவர்களோடு ஒத்துழைப்பதென்பதோ, அவர்கள் கலந்துள்ள கூட்டங்களில் சேர்வதென்பதோ, தேர்தல்களில் அவர்களுக்கு ஓட்டுச் செய்வதென்பதோ முதலாகிய காரியங்கள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றது. கோயில்கள். சம்பந்தமான விஷயங்களில் பூஜைகள் அபிஷேகங்கள் உற்சவங்கள், புதுக்கோயில்கள் கட்டுதல் ஆகிய காரியங்களில் அலகஷியம் காட்டப்பட்டு வருவதுடன், பல கோயில்கள் அரைகுறை வேலையில் இருந்தவைகளும்
நிறுத்தப்பட்டுவிட்டன.
பண்டிகைகள், விரதங்கள், சடங்குகள் முதலியவைகள் அநேகமாக, சில இடங்களில் அடியோடு விடப்பட்டும், சில இடங்களில் மிக்க அலக்ஷியமாக ஏதோநிர்பந்தத்திற்கு நடத்துபவைகளாகவும் காணப்படுகின்றன.
விதவைகள் மணம் என்பதும், கலப்பு மணம் என்பதும், தினம் தினம் நடக்கும் விஷயங்களும், நடத்தத் தேவை விளம்பரங்களும் வெளியான வண்ணமாய் இருந்து வருகின்றன. ஜாதி வித்தியாசம் ஒழித்தல், தீண்டாமை
ஒழித்தல் முதலிய வித்தியாசங்கள் குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பயன்கொடுத்து வருகின்றன. அதாவது தினமும் மக்கள் மகமதியராவதும், கிறிஸ்தவராவதுமான செய்திகள் வெளியாகின்றன. கோயில் பிரவேசம் பல இடங்களில் நடக்கின்றன.
புரோகித விலக்கு சங்கங்கள் புதிது புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன.
மதத்தைப் பற்றிய புரட்டுகள் வெகுதாராளமாய் வெளிப்படுத்தப் படுவதோடு மதப் புரட்டர்கள் எல்லாம் மூலையில் முக்காடிட்டு ஒடுங்கி உட் கார்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டன. அன்றியும் அவர்களின் உண்மை யான தோல்வியைக் காட்ட அறிகுறி என்னவென்றால் தாங்கள் வாய் திறக்க
குடி அரசு - 1929 @) 250
யோக்கியதை அற்றுப்போய், புத்தியில்லாத பாமர மக்களை ஏவிவிட முயற்சியில் இறங்கியிருப்பதேயாகும்..
இந்துமதப் புரட்டு தேசமெல்லாம் பரவி வருவதுடன், அடுத்த ஜனகணித்தில் ஒவ்வொருவரும் இந்தியன் அல்லது இந்துவல்லாதவன் என்று சொல்ல வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் ஜாதியையும், ஜாதிப் பட்டத்தையும் சொல்லக் கூடாதென்றும், நூற்றுக்கணக்கான சங்கங்களும் மகாநாடுகளும், தீர்மானங்கள் செய்தனுப்புவதுகளுமேயாகும்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், தேசத்துரோகம், தேசியத்திற்கு விரோதம் என்று எவ்வளவோ தூரம் பார்ப்பனர்களும் அவர்களது வால்களும், கத்தியும் இப்போது சட்டசபையிலும், சர்க்கார் உத்தியோகத்திலும் ஏற்பட்டு நிலைத்து அனுபவத்திற்கு வந்துவிட்டதோடு. பார்ப்பனர்களே தங்கள் வகுப்புக்குள்ள உரிமையைகெஞ்சி கேட்கவேண்டிய அளவுக்கு, தைரியமாய் வெளியில் வந்து விட்டார்கள். உதாரணமாக சர்க்கார் மதுவிலக்குப் பிரசார ஜில்லா கமிட்டிகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்ப்பனர் என்கின்ற கணக்கு வைத்து நியமிக்க வேண்டும் என்று திவான்பகதூர் திரு. ராமச்சந்திரராவே முயற்சி எடுத்துக் கொண்டதோடு தேவஸ்தானக் கமிட்டிகளில், பார்ப்பனர்களுக்கு உண்டான பங்கு ஏன் கொடுக்கவில்லை? என்று சட்டசபையில் திருசத்தியமூர்த்தியே பல கேள்விகள் கேட்கவும், இந்தக் கேள்வியை திரு.சத்தியமூர்த்தி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை ஒப்புக்கொண்டு கேட்கின்றாரா? என்று திரு.சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் கேட்கவும் சர்க்காரார் ஆம் என்று பதில் சொல்லவுமான நிலைமைக்கு வந்துவிட்டது.
மற்றும் ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம்பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் “சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனி வரும்படி எதிர்பார்க்க முடியாது” என்று காணப்பட்டிருக்கின்றது.
மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாக்கா வருஷாந்திர ரிபோர்ட் ஒன்றில் “இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கலியாணங் களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரர்களை நியமிக்க வேண்டும்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.
வைதீகக் குடுக்கைகளுக்கும் புராண அழுக்கு மூட்டைகளுக்கும் வருணாச்சிரம புராணங்களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்துவிட்டது.
காஞ்சீபுரம் சங்காராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் “தண்டப்படாத”வர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது.
சென்னை பச்சையப்பன் காலேஜில் “தீண்டப்படாதவர்களை' சேர்த்துக்
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக்கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது. திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பள்ளிக்கூடத்தில் பார்ப்பனரல்லாதார்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமாய்
சர்க்கார் உத்திரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.
பெண்களுக்கு மூன்றாவது பாரம் வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப் படி அமுலிலும் வந்துவிட்டது.
பெண்களுக்குப் போதனா முறை பாடசாலைகள் முக்கிய தாலூக்காக் கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.
விதவைகள் ஆச்சிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனை களும் ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றது.
இவ்வளவும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக் கிணறுகளில் “தீண்டப்படாதார்”” உள்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம். என்றும் யாராவது ஆக்ஷேபித்தால் ஆக்ஷேபிப்பவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. ஜில்லா போர்டு, தாலூக்கா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுவருகின்றது.
பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கல்யாணம் செய்யக் கூடாது என்றும் பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது.
விதவைகள் சொத்துரிமைக்கும் பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.
சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரிகளாக்கப் பட்டுவருவதை நிறுத்த சட்டங்கள் செய்யப்பட்டுவிட்டன. பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்க சட்டம் செய்யப்படுகின்றது. இப்படியாக இன்னும். அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள். புறப்படுவதுபோல் தினத்திற்குதினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டுவருகின்றதை கண்ணில் பார்த்துக்கொண்டு வருகின்றோம். இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத்தில், சில விஷயங்களுக்கு சத்தியாக்
கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம். அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்குமானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03111929
குடி அரசு - 1929 @) 252
“a o தன் > nab”
உலகத்தில், ஒரு சமூகத்தைமற்றொரு சமூகம் ஆழ்த்தி வைப்பதற்குரிய சான்றுகள் ஆழ்த்தும் சமூகத்திற்றான் காணப்படுவது வழக்கம். ஆனால் தமிழ் மக்களை மிருகங்கள், குரங்குகள், பேய்கள், இராக்கதர்கள், கொடியவர்கள், குடிகாரர்கள், சோரம் புரிபவர்கள், கொலை நிகழ்த்துபவர்கள், அநாகரிகர்கள், வரன்முறையற்றவர்கள்,தாசி மக்கள், அடிமைகள், குரூபிகள் என்ற வகையில்
திரித்துக் கூற ஆரியர்கள் இராமாயணம் என்னும் ஒரு கட்டுக் கதையை வரைந்து, அது ஒரு மதியின்மிக்க ஆரிய முனிவனால் எழுதப்பட்டது என்று அதனைப் போற்றி, அண்டமுகடு முட்டும் வரையிற் புகழ்ந்து, அதற்கோர் மொழி பெயர்ப்பு போன்ற கம்பராமாயணத்தையும் வரைந்து இத் தென்னிந்தி யாவில் புதுக்கியதும், இத்தென்னிந்திய மக்கள் தம் இழிவையே அடிப்படை யாகக் கொண்டு வரையப் பெற்ற இராமாயணத்தை ஒரு இதிகாசம் என ஏற்று அதனை மெய் என்று நம்பி அவ்விதிகாச கதாநாயக, நாயகிகளை தெய்வங்களாக ஏற்றதும் வருந்தத்தக்கதோர் உண்மையாகும். அறிவுடைய திராவிட மக்கள் சூழ்ச்சியில் மிகுந்த ஆரியக் கதையாம் இராமாயணத்தை நம்பி பார்ப்பனர் வலையிற் சிக்கியதற்குக் காரணம், சிந்திக்குந்தோறும் சிந்திக்கும். தோறும் எளிதில் தோற்றக் கூடியதாயில்லை.
என்றாலும் பொருள் காப்பாளன் அறிவிலும் வலிவிலும் மற்றும் உள்ள எல்லாத் துறைகளிலும் மிகுந்த ஆற்றல் உடையவனாய் இருப்பினும், அறிவிலும் சீலத்திலும் குன்றிய ஓர் கள்வன், அப்பொருளை ஏகதேசம் கவர்ந்து செல்லுவது போல, அறிவுடைய நம் திராவிட மக்கள் இப்பார்ப்பன ஆபாசக் கதையாகிய இராமாயணக் கதையை ஏற்று மதிமோசம் போயினர். பார்ப்பனர்.
சூழ்ச்சியை பத்து கோடி முறை வலியுறுத்தினும் நாம் ஏமாற்றம் அடைந்தது அடைந்ததுதான். எனவே,நம்மை இப்பார்ப்பனர்கள் இற்றை வரையில் ஆழ்த்தி அவர் நாகரிகத்தையும், ஒழுக்கத்தையும், கடவுள்களையும் நம்மவை என்று ஏற்று நடக்குமாறு செய்ததற்கு இத்தகைய கதைகளே சீவநாடிகளாய் இருக்கின்றன.
பார்ப்பன வேதங்களையும் வேதாந்தங்களையும் பார்ப்பனரே அறியாத. வர்களாய் இருக்க,நம்மவர்கள் பெரும்பாலும் அறிவதற்கு இல்லை.நம்மவர்கள்
தெய்வங்கட்கும்; சமூக ஒழுக்கங்கட்கும்; மற்றும் எல்லாவிதமான இயல்கட்கும் இப்பொழுது நமக்கு ஆதாரமாய் உள்ளவை பார்ப்பனப் புத்தகங்களேயாம்
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
என்பதில் தடையுளதோ? இல்லை.
எனவே, நாம் நம்முடைய உண்மை நிலைமையை அறியவும், பார்ப்பனர்கள் நம்மை தாழ்மைப்படுத்த இன்றுவரை நம்மை அடர்ந்தரசு புரியும் சூழ்ச்சி முறையை தெரிந்து அதனை கத்தரித்து சுயமரியாதை உணர்ச்சிப் படைக்கவும், இராமாயணத்தில் உள்ள ஆபாசங்களை “இராமாயணத்தின் ஆபாசம்” என்னும் நூல் நமக்கு கண்ணளிக்கும் என்பதில் ஐயமின்று.
இந்நூலில் நம் அறிய குடியரசில் வாரந்தொறும் வெளிப் போந்த கட்டுரைகளே மிளிர்வதனால், கட்டுரை ஆசிரியர்திருசந்திரசேகரப் பாவலரின் ஆராய்ச்சிக்கு, நாம் ஒரு ஆராய்ச்சி வெளியிடுதல் மிகையாகும்.
ஆதலின் உண்மை திராவிட மக்கள் தொடர்ச்சியாக நம் பதிப்பகத்தால் வெளியிடப்படும் “இராமாயணத்தின் ஆபாசம்” என்னும் அரிய ஆராய்ச்சி நூலை வாங்கிப்படித்து உண்மை உணர்ந்து எதிரிகட்குத் தக்க ஆப்பிறுத்துவது இன்றியமையாததாகும்.
குடி அரசு - நூல் மதிப்புரை - 03111929
குடி அரசு - 1929 @) 254
விமல 6யோதம்
ஸ்வாமி விமால நந்தா அவர்களால் தொகுக்கப்பெற்ற “விமல போதம்” என்னும் நூலொன்று கிடைக்கப் பெற்றோம். இந்நூலின்கண் சித்த மதத்தை விளக்கி உரைப்பதற்கு, நூலாசிரியர் அவர்கள் அரும்பாடு பட்டிருப்பர் என்றே
யாம் கருத வேண்டி இருக்கின்றது. இதிற் காயசித்தி,மணேசித்தி, அறிவு சித்தி என்னும் மூவகைச் சித்தியின் தன்மைகளையும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஓட்டிய பல ஆராய்ச்சிகளையும் தெள்ளத் தெளிய, மந்த தரத்தாரும் உணரும் வண்ணம் ஆசிரியரவர்கள் பரந்த விஷயங்களை சுருங்க விளக்கியிருப்பது பாராட்டற்பாலதாம்.
நூலிற் கூறும் உண்மைகள் உண்மைகளா என்பதைப் பற்றி நூலை வாங்கிப் படிப்பவர்களே தங்கடங்கள் அறிவைச் செலுத்திப் படித்துத் துணி
புறுதல் சிறப்புடைமையாதலால், இவ்விடயத்தைப் படிப்பவர்கட்கே விட்டு விடுகின்றோம்.
நூல் மிகத் தெளிவாகப் பதிக்கப் பெற்றுள்ளது என்றும் நூலைப் பதிப்பிக்க ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி சிறிதன்று என்றும், இதன் விலை அணா இரண்டே என்றும் மட்டும் வாசகர்கட்கு எடுத்துரைக்க விழை கின்றோம்.
நூல் சென்னை கோல்டன் கம்பெனி அச்சியந்திர சாலையில் மிக அழகுபடப் பதிக்கப் பெற்றுள்ளது.
குடி அரசு - நூல் மதிப்புரை - 03.11929
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இர்விண் பிரசங்கம்
ராஜப்பிரதிநிதியாகியலார்ட் இர்வின் அவர்கள் சீமைக்குப் போய்விட்டு வந்து வெளியிட்ட அரசியல் அறிக்கையை இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் வாதிகளும் ஒப்புக்கொண்டு பாராட்டி இருப்பதோடு,பலர் அதற்காக தங்களுடைய நன்றியறிதலையும் காட்டிவிட்டார்கள்; காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றாலும் இதிலிருந்து முக்கியமாக இரண்டு காரியங்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்பது உறுதியான செய்தியாகும். அதாவது 1929 வது வருஷம் டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு ஒரு மணிக்கு திரு.காந்தியார் மறுபடியும் துவக்கப்படத் “தயாராயிருந்திருக்கும்”” ஒத்துழையாமையையும். அதற்கொரு மூன்று நாளைக்கு முன் அதாவது டிசம்பர் 28-ந் தேதி லாகூர் காங்கிரசில் திரு.ஜவகரிலால் நேருவால் வெளிப்படுத்த இருக்கும் பூரண: சுயேச்சை விளம்பரமும் நிறுத்தப்பட்டு போகும் என்பதேயாகும். எனவே, வைசிராய் அறிக்கை அவ்விரு கனவான்களுக்கும் பெரிய விடுதலையையும் வெற்றியையும் கொடுத்தது என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. மற்றபடி அவ்வறிக்கையில் உள்ள விஷயம் என்னவென்று நிதானமாய் நடுநிலையிலிருந்து பார்ப்போமானால், எவ்வளவு சிறுகண் உள்ள சல்லடை. யைப் போட்டு சலித்துத் தேடிப்பார்த்தாலும் சத்துள்ள வார்த்தை ஒன்றுகூட அதில் இருப்பதாக நமக்குப் புலப்படவில்லை.
அதாவது, அதிலுள்ள விஷயங்கள் என்னவென்று பார்ப்போமானால் “எந்தவித நெருக்கடி ஏற்பட்டாலும், யார் என்ன கூப்பாடு போட்டாலும், இந்தியாவில் ராஜிய நோக்கமில்லாத ராஜவிசுவாசிகள் எல்லா வகுப்பிலும், எல்லா மதத்திலும், எல்லா கட்சியிலும் தாராளமாய் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாய் தெரியும்.சைமன் கமிஷன் நியமனத்தைப்பற்றியும் அதணால் ஏற்பட்ட பலனைப் பற்றியும் இனி பேசுவதில் யாதொன்றும் பயன்படாது. சைமன் விசாரணையும் முடிந்து போயிற்று. இந்திய கமிட்டி விசாரணையும் முடிந்து போயிற்று. எவ்விதத்திலும் அவர்களுடைய ரிபோர்ட்டு பார்லி மெண்டுக்கு வந்துதான் தீரும்.அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப்பற்றி இப்போது சொல்லுவது சாத்தியமல்ல. சாத்தியமானாலும் நாங்கள் இப்போது சொல்லமாட்டோம். பார்லிமெண்டார் தங்கள் இஷ்டப்படிதான் செய்வார்கள்.
மற்றும் தக்க ஆதாரத்துடனும் அதிகாரத்துடனும் இந்தியாவின் அபிப்பிரா யத்தை எடுத்துச்சொல்ல யோக்கியதையுடையவர்களின் ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறோம். இதைப்பற்றி இந்திய சட்டசபையில் 8- மாதத்
குடி அரசு - 1929 @) 256
திற்கு முந்தியே பேசியதைத்தான் இப்போதும் பேசுகின்றேன். இந்தியாவுக்கு சுயராஜ்யம் கொடுப்பதைப் பற்றி பார்லிமெண்ட்டுக்கு இருக்கும் சுயேச்சை அதிகாரத்தை நீங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். அதை மறுப்பது பயனற்றதாகும். ஆனால், இந்தியாவின் அதிகாரம் பெற்ற தலைவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிய பார்லிமெண்டு முயற்சி செய்யும். படிப்படியாக இந்திய சீர்திருத்தம் பெற்று பொறுப்பாட்சி பெற வேண்டுமென்பதே 1917 வருஷத்திய அறிக்கையின் கருத்தாகும்.1919 - ம் வருஷத்திய சீர்திருத்தத்தின் கொள்கையே குடியேற்ற நாட்டுப் பொறுப்பாட்சி பெறுவதற்கு ஏற்றதாகும். சைமன் கமிஷன் வகுக்கும் திட்டம் தான் குடியேற்ற நாட்டுப் பொறுப்பாட்சிக்கு, ஏற்றதாகும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்கள் தீர்மானித்திருக்கின்றார்கள்.
சைமன் அறிக்கையும் இந்திய தலைமைக் கமிட்டி அறிக்கையும் கிடைத்த பிறகு இந்திய சர்க்காரை ஆலோசித்துக் கொண்டு இந்திய பிரதிநிதிகளை அழைத்து தனியாகவோ சேர்ந்தோ விவாதிக்க ஒரு மகாநாடு கூட்டுவார்கள். அந்த முடிவையும் பார்லிமெண்டுக்கு அனுப்புவார்கள்” என்பது போன்று “ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாட்பாள்” என்கின்ற பழமொழிப்படி முன் சொன்னவைகளையே சற்று மெருகு கொடுத்த பாஷையில் பேசி இருக்கிறார். எனவே, இந்த அறிக்கையிலிருந்து இந்திய அரசியல் தலைவர்களும் ஒத்துழையாதாரும் பூரண சுயேச்சைக்காரரும் ஆனந்தக்கூத்தாட என்ன அற்புதம் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. நன்றாக கவனித்து பார்த்தால், லார்ட் இர்வின் முன்னைவிட இப்போது மிக்க நிமிர்ந்து பேசி இருக்கின்றார் என்றுதான் கொள்ளவேண்டுமேஒழியவேறில்லை. என்ன வென்றால், இந்தியாவின் பெரும்பாகம் மக்கள் அரசியல் நோக்கமென்பதே இல்லாமல் சர்க்காரையே நம்பிக் கொண்டிருப்பவர்கள் என்றும் நிபந்தனை இல்லாத ராஜ விசுவாசிகள் என்றும் கூப்பாடு போடுபவர்கள் மிக்க சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்கள் என்றும் சொல்லி, எடுத்த எடுப்பில் எல்லா அரசியல் வாதிகளையும் ஒரே அடியாய் மண்டையில் அடித்து அவமானப்
படுத்தி இருக்கிறார். இரண்டாவதாக, சைமன் கமிஷன் நியமனத்தைப்பற்றி ஒன்றும் பேசக்கூடாது; அதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கின்றார்.
மூன்றவது, இந்தியாவுக்கு சீர்திருத்தமோ சுயராஜ்யமோ வழங்க பார்லிமெண்டுக்குத்தான் அதிகாரமுண்டு என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கின்றார்.
நான்காவதாக, சைமன் கமிஷன் ரிப்போர்ட்டின் மீதுதான் பார்லி மெண்டு யோசனை செய்யும் என்றும் சொல்லிவிட்டார். வேண்டுமானால் இந்திய தலைவர்களைக் கூட்டி அவர்கள் அபிப்பிராயம் கேட்கப்படும் என்றும் ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறார். ஆனால், அதுவும் நிபந்தனை மீதே சொல்லுகின்றார். அதாவது, இந்தியாவின் அதிகாரம் பெற்ற
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பிரதிநிதிகளாகவும் தக்க ஆதாரத்துடன் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதில் தான் ஜீவ நாடி இருக்கின்றது. இந்தியாவின் அதிகாரம் பெற்றவர்கள் யார் என்பது நமது கேள்வி. இந்திய ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி மகமதியர்களும் தீண்டப்படாதவர். களும் ஆவார்கள். இவர்களுக்குப் பிரதிநிதியாக யார் போகக்கூடும்? காங்கி ரஸ்காரர்களும் மிதவாதிகளும் இவர்களுடைய பிரதிநிதிகளாகி விடுவார். களா? நேரு திட்டமானது காங்கிரசு மிதவாதி, ஒத்துழையாவாதி, சுயேச்சை வாதி, தேசியவாதி ஆகிய எல்லாவாதிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று எவ்வளவோ பறையடித்தும் அதை மறுத்த இயக்கம் எத்தனை? வகுப்பு எத்தனை? மனிதர் எத்தனை? என்பது உலகம் அறியாததா? அல்லது சர்க்கார் தெரியாததா? என்று கேட்கின்றோம்.
நிற்க, சைமன் கமிஷனை பகிஷ்காரம் பண்ணினதாக மேற்கண்ட இத்தனை கட்சியின் பேராலும், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகமே இருட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்: டது போல் ஒரேயடியாய் “பகிஷ்காரம்”, “பகிஷ்காரம்” என்று கத்தினார்களே, அதற்கு இந்திய மக்கள் எவ்வளவு மதிப்பு கொடுத்தார்கள் என்பது உலகமறி யாததா? அல்லது சர்க்கார் தெரியாததா? என்று கேட்கின்றோம். அன்றியும் காங்கிரசு தனது யோக்கியதையை இழந்து விட்டதென்றும், அது விளை யாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், காங்கிரசு இந்திய பொதுஜனப் பிரதிநிதித்துவ முடையதல்ல வென்றும், அது தனக்கே குழிவெட்டிக் கொண்டதென்றும் திரு.காந்தி உள்பட, திரு.பெசண்டம்மை உள்பட, தலைவர்கள் என்பவர்கள் எல்லோரும் சொன்னதை இதற்குள் உலகம் மறந்திருக்குமா? என்று கேட்கின் றோம். இந்தியாவின் அதிகாரம் பெற்றது என்பது ஒரு பக்கமிருந்தாலும் தக்க ஆதாரத்துடன் வரவேண்டும் என்பதற்கு இந்தியத் தலைவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. உதாரணமாக, சைமன் கமிஷன் ராஜாங்க சபை பிரதிநிதி களுடனும் இந்திய சட்டசபை பிரதிநிதிகளுடனும், மாகாண சட்டசபை பிரதிநிதிகளுடனும் இந்தியாவெல்லாம் சுற்றித் திரிந்து இந்திய பிரமுகர்கள், பிரதிநிதிகள் என்பவர்களை எல்லாம் விசாரித்து வைத்து இருப்பதோடு அந்தந்த மாகாண அரசாங்கத்தார் மூலமும் மாகாண மக்களின் பிரதிநிதி சபையாகிய சட்டசபைகளின் மூலமும் நிறைவேற்றியதும் தனித்து எழுதிக் கொடுத்திருப்பதுமான ஆதாரங்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதா? அல்லது நாங்கள் தான் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் காலைத் தாங்களே தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு என்னைக் கூப்பிடு! உன்னைக் கூப்பிடு! என்று கெஞ்சி உள்போகும் யாரோ நான்கு பெயருடைய வார்த்தை களை தக்க ஆதாரம் என்று ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று கேட்கின் றோம். தவிரவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்கள் பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி என்றும், சைமன் கமிஷன் மூலமும், சட்டசபை பிரதி நிதிகள் மூலமும், சர்க்கார் ஸ்தாபனங்கள் மூலமும், சேகரித்து வைத்திருக்கும்
குடி அரசு - 1929 @) 258
உண்மைகளுக்கு விரோதமாய் இப்போது ஒரு புதிய “இந்தியப் பிரதிநிதிகள்” வந்து ஏதாவது ஒன்றைச் சொல்லி, இதுதான் இந்தியாவின் அபிப்பிராயம் என்று திரு.காந்தியே சொல்வதானாலும், சர்க்கார் எதை நம்புவார்கள் என்று பொது ஜனங்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். அன்றியும் ஒரு சமயம் இதே சர்க்காரே தாங்கள் விசாரித்து அறிந்த உண்மைகளுக்கு விரோதமாகவும் சட்டசபைப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட உண்மை களுக்கு விரோதமாகவும் ஏதோ தங்களால் அழைக்கப் படுகின்றவர்களுடை யவோ அல்லது தாங்களாகவே தலைவர்கள் என்று வருகின்றவர்களு டையவோ வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்களே யானால், இந்த சர்க்காரி
டத்தில் நாளைய தினம், பொது ஜனங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கக்
கூடும் என்பதையும் நாளையும், பின்னையும் இந்த சர்க்காருக்கோ, சட்டசபை பிரதிநிதிகளுக்கோ மதிப்பு இருக்க முடியுமா என்பதையும் யோசித்தால் எந்த அபிப்பிராயம் மதிக்கப்படும் என்பது இப்பொழுதே விளங்கிவிடும்.
பொதுவாக சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பதன் மூலமாகவும், நேரு அறிக்கை என்பதன் மூலமாகவும், இந்திய அரசியல் ஸ்தாபனங்களு டையவும் அவற்றின் தலைவர்களுடையவும் யோக்கியதையும் செல்வாக்கும் நன்றாய் விளங்கிவிட்டது. ஏதோ தலைவர்களுடைய மானத்தைக் காப்பாற் றிக்கொள்ள வேண்டி “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று சொல்லிக் கொள்ளும் வஸ்தாதிபோல் லார்ட் இர்வினின் அறிக்கையை இந்தத் தலைவர்கள் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர, மற்றபடி அதனால் அவர்களுக்கு எவ்வித யோக்கியதையும் வந்துவிடவில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
தவிர இந்த அறிக்கையின் மீது தலைவர்கள் அறிக்கை என்று திருகாந்தி அவர்களால் சில நிபந்தனைகள் குறிப்பிட்டு ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு. அதில் “தலைவர்கள்” கையொப்பம் வாங்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கேலிக்கூத்தேயாகும். அவைகளில் 1 சமரச நோக்கத்தை உண்டாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது.2 அரசியல் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது 3.முற்போக்கான ராஜீய ஸ்தாபனங்களுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும். குறிப்பாக காங்கிரசுக்கு அதிக ஸ்தானம் கொடுக்க வேண்டும் என்பவைகளாகும். இவற்றுள் முதலாவது நிபந்தனை யானது அர்த்தமற்றதாகும். இரண்டாவது நிபந்தனை பிரமாதமான நிபந்தனை அல்ல. இதை சர்க்காரே ஏற்றுக் கொள்ளவும் கூடும் அல்லது “தலைவர்”களே தள்ளிவிடவும் கூடும். இதனால் இலாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. ஏனென்றால் இதை எதிர்பார்த்து எந்த தேச பக்தரும் ஜெயிலுக்குப் போக வில்லை.எனவே, இவற்றுள் மூன்றாவது நிபந்தனைதான் சற்று விஷமத்தன மான நிபந்தனையாகும். அதாவது, முற்போக்கான ராஜீயஸ்தாபனம் என்றால் என்ன என்பதும், காங்கிரசுக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டுமென்பது எதற்காக என்பதுவும் சூழ்ச்சியை உள்ளடக்கிக் கொண்டிருப்பவைகளாகும்.
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
நமது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்த்தாலுமே காங்கிரசின் யோக்கியதை என்ன என்பதை நாம் எடுத்துக் காட்டவேண்டுமா என்று கேட்கின்றோம்.
அதாவது தமிழ்நாட்டுக் காங்கிரஸ் திருவாளர்கள் முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி, குழந்தை, பீர் அகமது. ஏ.ரங்கசாமி அய்யங்கார், ஐயவேலு, எம்.கே.ஆச்சாரியார் போன்றவர்களுக்குள் அடங்கி விட்டதாகும். இவர்களு டைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை அறிந்தவர்களுக்கு இந்திய மக்களிடம் எந்தவிதமான கவலை இவர்களுக்கு இருக்கக்கூடும் என்பதும், இவர்கள்
எப்படி தமிழ்நாட்டு இரண்டரைகோடி மக்களுக்கு பிரதிநிதிகளாவார்கள் என்ப தையும் நாம் எடுத்துக் காட்டாமலே தெரிந்து கொள்வார்கள் ஆகவே, இதைக் கவனித்தால் காங்கிரஸ் பிரதிறிதித்துவத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது. மற்றபடி “தேசம் முதல்” கட்சி, “தேசியம் முதல்” கட்சி முதலாகிய உத்தியோகம் முதல் என்கின்ற தத்துவம் கொண்ட கட்சிகளின் யோக்கியதை யைப்பற்றி நாம் சிறிதும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கின்றோம். இன்னிலையில் இவைகளிலிருந்தே எந்தக்கட்சி உண்மையான இந்தியப் பிரதிநிதிக் கட்சியாக இருக்க முடியும் என்பதையும் எந்தத் தலைவர் உண்மை யான இந்தியத் தலைவராக இருக்க முடியும் என்பதையும் யோசித்தால் விளங்காமல் போகாது.
பொதுவாகப் பார்க்கப் போனால் லார்ட் இர்வின் அறிக்கையானது திரு.காந்திக்கும், திருஜவகர்லால் நேருக்கும் ஆபத்தின் நெருக்கடியான
சமயத்தில் எதிர்பாராத ஒரு பெரிய உதவி செய்ததாக மாத்திரம் ஏற்பட்டதே அல்லாமல் மற்றபடி இந்தியா அரசியல் தன்மையின் தாழ்மையை விளைக்க ஏற்பட்டது என்றுதான் சொல்லி ஆகவேண்டும். ஏனெனில் எந்த விதத்திலும் தலைவர் மகாநாடு உண்மையான பிரதிநிதித்துவம் பெற்ற ஸ்தாபனமோ தலைவர்களையோ கொண்டதாக ஏற்படப் போவதில்லை என்பதும் அப்படி யாவது ஏற்பட்டதாக வைத்துக் கொண்டாலும் அதை இந்திய பொதுமக்கள். ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பதும் உறுதியான விஷயமாகும்.
நம்மைப் பொறுத்தவரை திரு.காந்திக்குக் கூட இந்தியாவின் பிரநிதியாக இருக்க யோக்கியதை இல்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். ஏனெனில், திரு.காந்தி அவர்கள், பிறவியிலேயே “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன்,
சூத்திரன் "என்பதான ஜாதிகள் உண்டு என்கின்ற வருணாசிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளுவதோடு, அந்தந்த வருணக்காரன் அவனவனுக்கு சாஸ்திரத்தில் ஏற்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்று சொல்லி பிரசாரமும் செய்து கொண்டிருப்பவர். அது மாத்திரமல்லாமல் “இந்த ஜன்மத்தில் சூத்திரனாய் பிறந்தவன் அவனது ஜாதிக் கேற்றதான பிராமண பணிவிடை செய்வதாலேயே அடுத்த ஜன்மத்தில் படிப்படியாய் மேலாகி கடைசியாக பிராமணனாகப் பிறப்பான்” என்று சொல்லுபவர். அன்றியும் ராமாயணமும பாரதமும்
நடந்ததாகவும், அதுவே மேலான தர்ம சாஸ்திரமென்றும், அந்த ஆட்சியே, அதாவது இராமராஜ்ஜியமே வேண்டுமென்றும் சொல்லுபவர்.எனவே இப்படிப்
குடி அரசு - 1929 @) 260
பட்டவர் நமக்கு நம் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதிநிதியாய் இருக்க முடியுமா என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம். தவிர இந்திய தேசம் விவசாயிகளுடையவும், தொழிலாளிகளுடையவும், கூலிக்காரர்களுடையவும் தேசமாகும். ஏனெனில், நூற்றுக்கு 95-மக்கள் இந்த இனங்களைச் சேர்ந்தவர்களே யாவார்கள். அன்றியும் ஜாதியினாலும் மதத்தினாலும் கொடுமை அனுபவிக்கும் மக்களாவார்கள். ஆகவே, இவர்களுக்கேற்ற பிரதிநிதிகள் இப்போது வெளிவந்திருக்கும் தலைவர்களில் யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.
திரு.மோதிலால் நேருவுக்கும், திரு.ஜவகர்லால் நேருவுக்கும், திரு. முகமதபாத் ராஜாவுக்கும், திரு.ஜின்னாவுக்கும் இவர்கள் போன்ற மற்றவர். களுக்கும் விவசாயிகள் என்றால் என்ன? ஏழைகள் என்றால் என்ன? தொழிலாளிகள் என்றால் என்ன? என்பது தெரியுமா என்று கேட்கின்றோம். இவர்களுக்குள் பொதுமக்கள் கஷ்டம் இன்னது என்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கக்கூடும்?
பொதுவாக, இந்தத் தலைவர்கள் எல்லாம் சர்க்காரிடமிருந்து என்ன உத்தியோகம் பெறலாம்? என்ன அதிகாரத்தை பிடுங்கி நாம் அனுபவிக்கலாம்? என்கின்ற கருத்தல்லாமல் இந்த ஏழை மக்களுக்கு என்ன செய்யலாம் என்று கருதுகின்றவர்கள் எத்தனை பேர்கள் இருக்கக்கூடும்? என்று கேட்கின்றோம். இப்போது சர்க்கார் கூட்டும் இந்திய தலைவர்கள் மகாநாடு என்பது உண்மை யிலேயே பிரதிநிதித்துவம் பொருந்திய மகாநாடாய் இருக்க வேண்டும் என்று
சர்க்கார் கண்ணியமாய் கருதுவார்களானால், விவசாயம், வியாபாரம், கைத்
தொழில் ஆகிய மூன்று சமூகத்தின் பிரதிநிதிகளை மாத்திரம் அழைத்து அவர் களுடன் கலந்து யோசித்து, இவைகளுக்கேற்ற சீர்திருத்தத்தையும், சமூக விஷயத்தில் தாழ்த்தப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட மக்களையும், பிறவி அடிமையாய் கருதும் பெண் மக்களையும், கல்வியில் பிற்பட்டிருக்கும் மக்களையும் கவனித்து, அவர்களுடைய உண்மையான பிரதிநிதிகளையும் அழைத்து அவர்கள் முறைகளையும் கேட்டு அதற்கேற்ற சீர்திருத்தத்தையும் செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையாகும். இரண்டும் இல்லாமல் ஏழைகள் என்றால் அது ரூபாய்க்கு எத்தனை படி என்று கேட்பவர்களாகிய மாதம் ஆயிரம் பத்தாயிரம் ரூபா வீதம் வக்கில் வேலையில் கொள்ளை யடித்து அரசபோகம் அனுபவிப்பவர்களையும், சங்கராச்சாரி போல் ஊர் ஊருக்கு லட்சக்கணக்காய் ஏழைகளின் பேரால் ரூபாய் வசூலித்து மடாதிபதிகள் போல் சுகமனுபவித்துக் கொண்டிருப்பவர்களையும், பொதுமக்கள் பேரால், மாதம் நாலாயிரம், ஐயாயிரம் சம்பளம் பெற்று சுகவாழ்வு வாழ்ந்து கொண்டும் நெல்லு காய்க்கிற மரம் எது என்று கேட்டுக் கொண்டிருப்பவர்களையும், வேறு வேலையில் தினம் காலணா கூட சம்பாதிக்க யோக்கியதையில்லாமல் தேசம், தேசியம், சுயராஜ்யம் என்று கத்திக் கொண்டு மேற்கண்ட கூட்டத்தாரிடம் கூலி வாங்கியும் பாமர மக்களை ஏய்த்தும் வயிர் வளர்த்துக் கொண்டிருப்பவர்.
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
களையும் இந்தியாவின் 25 கோடி ஏழைமக்களின் பிரதிநிதியாக அழைத்துப் பேசுவதென்றால் இது உண்மையானதும் நாணயமானதுமான பிரதிநிதித்துவமா குமா என்று கேட்பதுடன், இதனால் விளையும் சீர்திருத்தமோ சுதந்திரமோ குடியேற்ற நாட்டு அந்தஸ்தோ பொதுமக்களுக்கு பயன்படக் கூடியதாயிருக். குமா என்பதையும் நினைத்தால் சர்க்கார் புரட்டும் தலைவர்கள் புரட்டும் ஒன்றுக்கொன்று இளைத்ததல்லவென்றே கருத வேண்டியதாயிருக்கின்றது. எந்தக் காரணத்தை முன்னிட்டாவது இங்கிலாந்து வெள்ளைக்கார அரசாங்கத்தைவிட இந்தியபார்ப்பன அரசாங்கமோ,ஜமீன்தார் அரசாங்கமோ, முதலாளி அரசாங்கமோ, ஆங்கிலப் படிப்பு அரசாங்கமோ எந்த விதத்திலாவது மேலானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை நமக்கு சிறிதுகூட இல்லைஎன்பதை
மாத்திரம் தைரியமாய் சொல்லுகின்றோம். எனவே, எதற்கும் ஏழை மக்களும்,
கூலிக்காரர்களும்,தாழ்த்தப்பட்டவர்களும், பெண்மக்களும்எதையும்தலைகீழாய்க் கவிழ்ப்பதற்குதயாராயிருந்தா லொழியஅவர்கள்கஷ்டம்நீங்காது என்பதேநமது
முடிவு
குடி அரசு - தலையங்கம் - 10.11.1929
குடி அரசு - 1929 @) 262
புதிய சகாய்தம்
திருகோகலே,ரானடே, தாதாபாய் நெளரோஜி முதலிய தலைவர்கள் நம் இந்தியாவில் ஒரு சுதந்திர தாகத்தை உண்டுபண்ணிவிட்டார்கள் என்று பொதுவாக நாமறிவோம். இது முதற்கொண்டுதான் நம் நாட்டில் சுதந்திர கிளர்ச்சியும் ஒரு பொது உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் அது செயற்கைக் கிளர்ச்சியாகவும், இயற்கைக்கு மாறுபாடானதாகவும் இருந்ததனாற்றான், இருப்பதனாற்றான் இன்று வரையில் இவ்விந்தியா சுதந்திரம் அடையமுடியாமல், பெர்க்கன் ஹெட் பிரபுவின் இழிதகையான பழிச் சொற்கட்கும், ஆதிக்க வெறிச் சொல்லுக்கும் இலக்காய் இருக்கிறது.
ஏனெனில், நம்மிடை பிரசாரத்தின் பயனாய் பரவுதல் செய்யப்பட்ட சுதந்திர உணர்ச்சியானது “தேசியம்” என்று கூறப்பட்ட போதிலும்கூட ஒரு மிகக் குறுகிய வகையில் இயக்கப்பட்டு வந்தது உண்மையானதாகும். என்னை? இதுவரையில் நடைபெற்ற கிளர்ச்சி, சுதந்திரப் போராட்டம், ஒத்துழையாமை, வரிகொடாமை, பகிஷ்காரம் இவைகட்கு எல்லாம் அடிப்படையாய் இருந்தது நிறவேற்றுமை என்பதில் ஐயமில்லை.
எப்பொழுது வெள்ளையர்கள் நம்மை அதிக ஈனமாய் நடாத்துகின்றார்கள் என்று நாம்நினைக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் ஒரு கிளர்ச்சி செய்வதும், பின்னர் இக்கிளர்ச்சி ஓய்ந்து விடுவதும் வழக்கமாகவே இருந்து வந்ததே யொழிய, சுதந்திரத்தாகம் தைல தாரையைப் போல்
நம்மக்களின் மனத்தில் நிலவவே இல்லை...
இதுதான் நமது இந்தியாவின் பரிதாபிக்கத்தக்க நிலைமை; இதை மாற்றி நினைத்தாலும் நினைவளவில் ஏற்படும் சுதந்திரக் கனவு கூட நிலவரமாய் இருக்காது என்பதும் உண்மை.
இதற்குக் காரணம், நம்மக்களின் அறியாமையே என்று கூற வேண்டும். அறிவு உதயமாய்,உச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற மேனாட்டு மக்கள் கையில் சிக்குண்டிருக்கும் நாம், அவர்களிடமிருந்து நமது நாட்டை அடைய
நமக்குத் தலைமையாக வேண்டியது அறிவுடைமையே தவிர சுதந்திரத்
தாகமன்று, அறிவுடைய மக்கட்குச் சுதந்திரத் தாகம் ஏற்பட்டிருப்பின் அத்தாகம் நிலவரமாக ஒரேமுறையாக ஓங்கிப்படர்ந்து செழித்து சுதந்திரக் கனி உதவியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அறிவில்லாத மக்கள் கையில் உள்ள
சுதந்திரத் தாகம், பேடி ஒருவன் மணந்த பெண்ணையே ஒக்கும். இதனாற்
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பயனில்லை. அதனாற்றான் தாதாபாய் நெளரோஜி காலத்தில் துவக்கப்பட்ட நமது சுதந்திரப்போராட்டம் வெள்ளையர்களின் நகைப்புக்கும் கேலிக்கும் ஏமாற்றுப் பேச்சுக்கும் இலக்காயிற்றே தவிர, ஒரு சிறிய துறையிலும் வெற்றி அளிக்கவில்லை. இச்சுதந்திர தாகம் பழைய மூட வைதிக சகாப்தத்தின்
இறுதியில் எழுந்தது.
ஆனால், இப்பழைய சகாப்தம் அழிந்துவிட்டது என்றே சொல்லலாம். இனிமேல்தான் இந்தியாவின் சுதந்திர உணர்ச்சிக்கு வெற்றி ஏற்படும் காலம் அணுகிவிட்டது. இப்பொழுதுதான் மக்கள் மனதில் பண்டைய மூடப்பழக்க. வழக்கங்களும், உயர்வு தாழ்வுக் கற்பனைகளும் தகர்க்கப்படுதல் அவசிய
மென்றும், பகுத்தறிவுக்கு முரணாக மதம் வந்து எதிர் நின்றாலும், முதலில் அந்த மதத்தை ஒழித்துவிட்டு மறுவேலை பார்ப்பதும் என்றும் தோன்றி விட்டது. இதன் அறிகுறியாய் தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கம் என்னும் பெயர்கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பம்பாய் மாகாணத்தில் புரோகித எதிர்ப்பு இயக்கம் என்னும் பெயர் கொண்டு ஒரு அறிவு இயக்கமும், பஞ்சாப் மாகாணத்தில் யுக்தி வாத சங்கம் என்னும் ஒரு அறிவு இயக்கமும் தோன்றி இப்பொழுது அந்தந்த மாகாணங்களில் இவ் வியக்கக் கொள்கைகள் காட்டுத்தீ போல்பரவி வருகின்றன.வங்காளத்திலும் முல்லாக்கள் எதிர்ப்புச் சங்கம் என்று ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இவ்வியக்கத் தலைவர்களெல்லாம் பழுத்த தேசிய அமிதவாதிகளாய் இருப்பதும் மிகவும் குறிப்பிடற்பாலது. உதாரணமாக நமது சுயமரியாதை இயக்கத் தலைவர்களின் தேசிய உணர்ச்சியும் அவர்கள் தேசியத்திற்கு ஆற்றி வந்த தொண்டும் இம்மாகாணம் அறியும்- பார்ப்பனரறி யாவிடினும் இதேபோல் பம்பாயில் புதிதாகத் தோன்றி இருக்கும், “புரோகித
எதிர்ப்புச்” சங்கத்துத்தலைவராக,திருநாரிமன் அவர்களே இருந்து வருகின்றார். மற்றும் திரு.டயர்சி, அம்பேத்கார் முதலான முதிர்ந்த அறிவாளிகளும் இச்சங்கத்தில் சார்புகொண்டிருப்பதும் கவனித்தற்பாலது.எனவே, இப்பொழுது இந்தியா முழுதும் அறிவு இயக்கங்கள் தோன்றி வருவதும், இவ்வியக்கங்கள் தேச பக்தி உடைய பெரியார்களையே தலைவர்களாகக் கொண்டிருப்பதும், இவ்வியக்கங்கள் தீவிரமிக்க மன எழுச்சி படைத்த இளைஞர்களைக் கவர்ந்து
ர்ப்பதுவும், இந்தியாவில் உதயமாயிருக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் அறிகுறி களாகவே தோன்றுகின்றன. இச்சகாப்தத்தில் நமது மக்களின் சுதந்திரக் கோரிக்கை ஈடேறும் என்பதை நாம் மீண்டும் எடுத்துக்கூற வேண்டுமோ?
ஆனால், பழைய மூட மதி புதிதாகத் தோன்றிய அறிவு இயக்கத்தைப்
பார்த்து, “நான் நெடுநாளாக, பன்னூற்றாண்டுகளாக கடவுள், மதம், புரோகிதம், சடங்கு, கலை இவைகளின் பேரால் இவ்விந்தியாவில் வளர்ந்து வந்தேனே; நீ தோன்றியதும்; என் விருத்தாப்பிய திசையில் என்னை மக்கள் கைவிட்டு விட்டனரே; நான் இறந்துதான் போவேன்;பழைமை பொருட்டு, கிழவன் என்று என்மீது மனமிரங்கி என்னைக் காப்பாற்ற மாட்டாயா?” என்கின்றது. நமது அறிவியக்கம் “கிழப்பிணமே! நீ இது வரையில் இழைத்த கொடுமைகளுக்கும்
குடி அரசு - 1929 @) 264
தீமைகளுக்கும் அறிகுறி இவ்விந்தியாவின் அடிமைத் தன்மைதான், அதை நினைக்குந்தோறும் உன்னை ஏன் இன்றே கழுத்தை முறித்துக் கொன்று விடக்கூடாது என்று நாங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.இந்த சமயத்தில் உன்னைக் காப்பாற்றுவதாவது. செயற்கை மரணம் நேரிடுவதற்கு முன்பாக நீயாகவே தற்கொலை செய்து கொள்” என்கின்றது. இந்நிலையில் பண்டைய சகாப்தத்தின் பிரதிநிதிகளாய காசி கிருஷ்ணமாச்சாரி, எம்.கே, ஆச்சாரி, சத்திய மூர்த்தி,சேஷ அய்யங்கார், சங்கராச்சாரிகள் முதலானவர்களின் கதி என்னாகும். என்பதையும், உண்மைத் தேசியமும் இத்தேசியத்திற்கு உண்மை வெற்றியும் யாரால் ஏற்படக்கூடும் என்பதையும் நம்மக்களே உணர்ந்து கொள்ளக்கடவர்.
குடி அரசு - கட்டுரை - 10.11.1929
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இந்தியக் கடஷன்கன்
இந்த வாரம் அதாவது நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியான “சுதேசமித்திர” னின் பதினோராவது பக்கத்தில் “திருப்பதி வெங்கிடாசலபதி” என்கின்ற கடவுளின் தேவஸ்தான வருஷாந்திர வரவு செலவு பாலன்ஸ் ஷீட்) கணக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதில் இந்த ஒரு வருஷத்திற்கு, அதாவது, 1537ம் பசலிக்கு மேற்படி தேவஸ்தானத்திற்கு ஒட்டு மொத்தம் இருபத்திரண்டே முக்காலே அரைக்கால் லட்ச ரூபாய் வசூலாயிருக்கின்றது. இந்த ரூ.22,82,695 - 8-9 பைசாவுக்கும் செலவும் காட்டப்பட்டிருக்கின்ற விவரமென்ன வென்றால், ஆறு லட்சத்துச் சில்லறை ரூபாய் நிலுவை மொத்தம் என்று காட்டப்பட்டிருப்பது போக மீதி பதினாறுலட்சத்து சில்லறை ரூபாய்க்கும் காட்டப்பட்டிருக்கும் செலவுகளைப் பார்த்தால், இந்து மதமும், இந்துமதக்
கடவுள்களும் நமது இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது என்பது முழு மூடர்களுக்கும் எளிதில் விளங்கும்.
அதாவது:
கோயில்களுக்குக் கொடுத்தது @ 235௩
படித்தர சாமான் வாங்க ரூ. 138,932
பழுதுகள் ரூ. 455701
சமஸ்கிருத ஆங்கில வித்யாசாலை ரூ. 107941
சிப்பந்திகள் @ 251045
எஸ்டேட்நிர்வாக செலவு ரூ. 357229
இந்த கோயில்களுக்கு கண்டிரிபியூஷன் ரூ 6600
எண்டோமெண்ட் போர்டுக்கு ரூ 65
இதர சில்லரைச் செலவு ரூ. 121360
டிரஸ்ட் பண்டு செலவு @ 37
இதர சில்லரைச் செலவு ரூ. 70838
என்றவாறு, பதினாறு லட்ச ரூபாய்களுக்குச் செலவு காட்டப்பட்டிருக்
கின்றது.
குடி அரசு - 1929 @) 266
தவிர திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்துக்களை காட்டும்
ஜாப்தாவில் மேற்படி தேவஸ்தான சொத்து பெறுமானம், ஏழு கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தையாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது ரூபாய், மூன்று அணா, பத்துபைசா என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த 7.89,85,980
ரூபாய் பெறுமான சொத்துக்களில் ஆறரைக்கோடி ரூபாய்க்கு கட்டிடங்களும்
நிலங்களும் நகைகள், துணிகள் வாகனங்களுமாக 21 லட்ச ரூபாயும், இரும்பு
சாமான் முதலியவை 4 லட்சரூபாயும், டிக்கிரி மொத்தம் 9 லட்ச ரூபாயும் கடன்
பத்திரங்கள் 33 லட்ச ரூபாயும், கிஸ்திபாக்கி 7, லட்சரூபாயும் மற்றும் ஏதேதோ சில்லரை வகையில் மீதியுமாய், கணக்குக் காட்டப்பட்டிருக்கின்றது. இந்த ஒரு
கோயில் கணக்கை மாத்திரம் பார்த்தால் நமது நாடு தரித்திரமடைந்து கல்வியற்று சுதந்திரமற்று அடிமைத்தனத்தில் ஆழ்ந்திருப்பதற்குக் காரணம் வெள்ளைக்கார அரசாங்கமா அல்லது நமது மதமும் கடவுள்களுமா என்பது விளங்காமல் போகாது. இந்தக் கோயிலுக்கு வரும் வருஷ வருமானத்தின் மேற்கண்ட பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் எத்தனை மக்கள், எவ்வளவு தொலை தூரங்க ளிலிருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போகிறார்கள் என்பதையும், அவர்களுடைய போக்குவரவு செலவையும் மற்ற செலவுகளையும் சேர்த்துப் பார்த்து, அது எத்தனைலட்சரூபாய் ஆகுமென்பதையும் வாசகர்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால், இதைப் போன்று இன்னமும் பத்துப் பதினைந்து லட்ச ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லுவோம்.அன்றியும் இந்த தேவஸ்தான மொத்த சொத்தாகிய ஏழு கோடியே இருபது லட்ச ரூபாயை ரொக்கமாக்கி நூற்றுக்கு ஆறு வட்டிக்கு போட்டு கணக்குப் பார்த்தால் வருஷத்திற்கு வட்டி மாத்திரம் 43,20,000 ரூபாய் ஆகின்றது. இந்த நாற்பத்தி மூன்று லட்சத்து இருபதினாயிரம் ரூபாயும்யாத்திரைக்காரர்கள் காணிக்கை வரும்படியான சுமார். பதினைந்து லட்சரூபாயும் இதற்காக ஏற்பட்ட யாத்திரைக் காரர்களின் ரயில்
சார்ஜ், வழிப்பயணச் செலவு குறைந்தது ரூபாய் பத்து லட்சமும் சேர்த்தால் மொத்தம் 65 அல்லது 70 லட்ச ரூபாய் ஆகும். இந்த ஒரு கோயில் சொத்தும் வரும்படியும் இவ்வளவானால், இன்னும் இது போன்ற ஸ்ரீரங்கம், மதுரை, இராமேஸ்வரம், திருவாரூர், அழகர்மலை முதலிய கோயில்களுடைய சொத்தும் வரும்படியும் மற்றும் சில்லரை கோயில்கள் ஒரு கோடி முதல் ஐம்பது லட்சம் வரை சொத்துக்கள் உள்ளவைகளும், வருஷம் பதினாயிரம் முதல் ஒரு லட்சம் வரும்படிஉள்ளவைகளுமான நூற்றுக்கணக்கான கோயில்களின் வரும்படியும் அதற்காக மக்களுக்கு ஏற்படும் செலவுகளும் கணக்குப் போட்டால் தென்
இந்தியாவில் மாத்திரம் நம் சராசரி வருஷம் குறைந்தது மூன்று கோடி ரூபாய் களுக்கு குறையாது என்றே சொல்லலாம். இந்த மூன்றுகோடி ரூபாய்களுக்கு எத்தனை சர்வ கலாசாலைகள், எத்தனை ஆராய்ச்சி சாலைகள், எத்தனை தொழிற்சாலைகள் ஏற்படுத்தக்கூடும். இந்தமாதிரி ஒரு இருபத்தைந்து வருஷங் களுக்கு நடத்தினால் இந்தியாவில் கையெழுத்துப் போடத் தெரியாத தற்குறி களாவது, வேலையில்லாத ஒரு தொழிலாளியாவது கூலி கிடையாமல் கப்ப லேறும் ஒரு கூலியாவது தென்னாட்டில் இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்க்கும்படிவேண்டுகின்றோம்.
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஓ! மதப்பித்தர்களே! இப்பொழுதாவது யோசித்தப் பாருங்கள்! இந்தியரை மூடர்களாக்கியது யார்? தரித்திரர்கள் ஆக்கியது யார்? அடிமைகளாக்கினது யார்? அன்னிய ஆட்சிக்கு உள்படுத்தியது யார்? மக்களை தொழிலில்லாமல் அன்னிய நாட்டிற்கு ஓட்டினது யார்? நமது மதமும் கடவுள்களும் அல்லவா என்று கேட்கின்றோம். நமக்கு என்ன சுயராஜ்ஜியம். வந்துதான் என்ன பயன்? நமது செல்வத்தையும் நேரத்தையும் அறிவையும் இந்த மாதிரி மதமும் கடவுள்களும் கரையான்கள் போலவும் க்ஷயரோகங்கள். போலவும் நமது நாட்டின் இரத்தத்தையும் சதையையும் உறிஞ்சிக்கொண்டு. இருப்பதிலிருந்து மீள வகையறியாமல் இருக்கும் நிலையில் இன்றையத் தினமே வெள்ளைக்காரர்கள் ஓடிவிட்டாலும் நாம் எந்த வகையில் முன்னுக்கு வரக்கூடும்? சென்ற வாரத்தில் கூடின தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டத்தில் மத விஷயத்தில் சாக்கார் பிரவேசிக்கக் கூடாதென்றும், அது மாத்திரமல்லாமல் காங்கிரசும் பிரவேசிக்கக் கூடாதென்றும் தீர்மானங்கள். செய்யப்பட்டிருக்கின்றன.இது தவிர, பூரண சுயேச்சை விரும்பும் திருவாளர்கள். சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தி சாஸ்திரியும் சேர்ந்தே மதத்தில் சர்க்காரும்.
காங்கிரசும் பிரவேசிக்கக் கூடாதென்றும், பிரவேசித்தது தப்பென்றும் பேசி முடித்திருக்கின்றார்கள். வாசகர்களே! இது திரு.சத்தியமூர்த்தியின் தனி அபிப்பிராயமென்று கருதுகிறீர்களா? ஒருக்காலமும் கருத முடியாததே! அவர். சென்னை மாகாண கல்வியாளர்களின், அதாவது, ஆங்கில பண்டிதர்களின்
பிரதிநிதி அல்லவா? திரு.சத்தியமூர்த்தியின் அபிப்பிராயம் தானே அவரது தொகுதியாளர்களின் அபிப்பிராயமாக இருக்கவேண்டும்? எனவேநமதுநாட்டு கல்வியாளர்களும் பூரண சுயேச்சை விரும்பும் அரசியல் தலைவர்களுமா யிருக்கின்றவர்களின் அபிப்பிராயமே, இப்போது நமக்கு இருந்துவரும் மதக் கொடுமையிலும் சமூகக் கொடுமையிலும் கடவுள்கள் கொள்ளைகளிலும் கைவைக்கப்படாது என்ற தீர்மானம் ஆயின், பிறகு நமக்கு எங்குதான் விடுதலை இருக்கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள். எந்தக்காரணத்தைக் கொண்டாவது இந்தக் கடவுள்களின் கொள்ளைகளையும் மதக்காரர்களின் கொடுமைகளையும் ஒழிக்காமல் எந்த விதத்திலும் நமது நாட்டுக்கு விடுதலையும் விமோசனமும் இல்லை என்றே உறுதி கூறுவோம்.
நிற்க, இந்த விதத்தில் நமது பணம் கொள்ளை போவதோடு மத சம்பிரதாயத்தின் மூலம் நமது அறிவு எவ்வளவு கொள்ளைபோகின்றது என்பதையாராவது கவனிக்கின்றார்களா? ஒரு சிறிதும் இல்லையே? நமது குறை களுக்கும் கஷ்டங்களுக்கும் நமது ஆத்திரங்கள் எல்லாம் அர்த்தமில்லாமல்
கல்லில் முட்டிக்கொள்வது போல், வெள்ளைக்காரன் மேல் செல்லுகின்றதே. அல்லாமல் உண்மைக் காரணமாயிருக்கின்ற புரோகிதன் மீதோ, மதச்சாரியர்கள் என்பவர்கள் மீதோ, மத சாஸ்திர புராணங்களின் மீதோ யாருக்காவது புத்தி செல்லுகின்றதா என்று கேட்கின்றோம்.
இந்த நாட்டுக்கு இந்த கடவுள்களும் மதங்களும் தானே பெரிய ஆபத்தாய் இருக்கின்றதென்பதை ஒருவருமே உணருவது இல்லையென்றால்,
குடி அரசு - 1929 @) 268
எப்படித்தான் நாம் மற்ற நாட்டாரைப் போல் முன்னுக்கு வரமுடியும் என்று கேட்கின்றோம்? மதக்கொடுமைகளையும், கடவுள் கொள்கைளையும் பார்க்கும்போது, கள்ளுக்கடையும், சாராயக்கடையும், தாசி வீடுகளும், சூதாடு மிடங்களும், கள்ளர் குகைகளும் நமக்கு ஒரு கெடுதியென்றோ, கஷ்டமான தென்றோ சிறிதுகூட தோன்றுவதில்லை.
ஒரு கோயில் ஒழிவதன் மூலம் இனியும் நூறு கள்ளுக்கடைகள்' வைப்பதானாலும், தாராளமாய் சம்மதிக்கலாம் என்றும், ஒரு உற்வசம் ஒழிவதின் மூலம் நூறு தாசி வீடுகள் இருப்பதானாலும், தாராளமாய் அனுமதிக்கலாம் என்றுமே தோன்றுகின்றது. ஏனெனில், இந்தக் கோயில்களும் உற்சவங்களும் நமது மக்களை அவ்வளவு மூடர்களாகவும், தரித்திரர்களாகவும் ஆக்கிவிடு கின்றன.நம்மில் அநேகர்நம் நாட்டில்தான் இம்மாதிரிபெருந்தொகை தர்மங்கள். நடைபெறுகின்றன: மற்ற நாடுகளில் இல்லை என்று கருதுகின்றார்கள். நம்மைவிட எத்தனையோ மடங்குஅதிகமான தொகைகளை மேல் நாட்டார்கள்
தருமம் செய்கின்றார்கள். ஆனால், இந்த மாதிரி, செலவு கேட்காமலும் பணம் என்ன ஆகின்றது என்று யோசிக்காமலும் சமுத்திரத்தில் கொண்டு போய் கொட்டுவது போல் மூடத்தனமாய் செலவு செய்வது கிடையாது. உதாரணமாக இந்த நாட்டில் இருக்கும் பல காலேஜுகளும், பல மருத்துவ சாலைகளும்
மற்றும் பல உபயோகமுள்ள ஆராய்ச்சி சாலைகளும் மேல் நாட்டார் தர்மத்தாலேயே நடைபெறுகின்றதை பார்க்கின்றோம். நாமும் அதன் பயனை அனுபவிக்கின்றோம். ஆனால், நமக்கு மாத்திரம் சிறிது கூட இதைப் பார்த்த
பின்பும் புத்தி சீச்பெறுவதில்லை. சமீபத்தில் வெளியான ஒரு பத்திரிகையால் அமெரிக்கா தேசத்தில் ஒரு கனவான் சுமார் பத்து கோடி பவுன்களுக்கு மேலாகவே, கல்விக்காகவும், சயன்சு ஆராய்ச்சிக்காகவும், மருத்துவ சாலைக்காகவும் தர்மம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒரு காசாவது கோயில் கட்டவோ, சாமிக்கு உற்சவம் செய்யவோ, பூஜை செய்யவோ, அவர் கொடுக்க வில்லை. இதனால் மேல் நாட்டவர்கள் தர்ம எண்ணம் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? அல்லது மேல் நாடுகளில் “கடவுள் கடாட்சம்” இல்லை என்றாவது சொல்லிவிட முடியுமா என்று கேட்கின்றோம். எனவே நமது நாட்டில் நாடு விடுதலை அடைய வேண்டும் என்றும் உண்மையாய்க் கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு முக்கியமான வேலை எல்லாம், மதக் கொடுமைகளையும் கடவுள்கள் கொள்ளைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே ஒழிய, பூரண கயேச்சையோ, குடியேற்ற நாட்டு அந்தஸ்தோ, மாகாண சுயாட்சியோ அல்ல என்பதாக உறுதி கூறு
கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.11.1929
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இந்தியாவின் பிரதிநிதிகள் யார்?
மேன்மைதங்கிய ராஜப்பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அறிக்கை யானது இந்தியாவுக்கு முதன் முதல் செய்த நன்மை என்னவென்றால், இந்தியாவின் உண்மையான பிரநிதிதித்துவம் பொருந்திய தலைவர் யாரும் இல்லை என்பதை நன்றாய் வெளிப்படுத்தி விட்டமையே.
லார்ட் இர்வின் அறிக்கை வெளியாகாதிருந்திருக்குமானால், இந்தியா வின் கவுரவம், (இல்லையானாலும்), சற்றாவது காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெளியான பிறகு இப்போது மிகவும் கேவல நிலைமைக்கு வந்துவிட்டது. அறிக்கை வெளியானவுடன் வெகு அவசர அவசரமாய் “தலைவர்” ஒன்று கூடி அதை பாராட்டுவதாகவும், ஒப்புக் கொண்டதாகவும் தீர்மானித்து பல “தலைவர்”களிடம் அவசர அவசரமாக கையெழுத்தும் வாங்கி ஆய்விட்டது. இவ்வறிக்கையை லண்டனுக்கு அனுப்பி இருந்தாலும் அவர்களும் குப்பைத் தொட்டியில்தான் போட்டிருப்பார்கள்.ஆனால், நல்ல சம்பவமாய், அது இந்தியக் குப்பைத் தொட்டிக்கே போய்ச் சேரும்படி ஆகி விட்டது. என்னவென்றால், வழக்கம்போல் அறிக்கைக்கு கையெழுத்தான
மறு நாளிலிருந்தே ஒவ்வொரு தலைவர்களும் வியாக்கியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திரு.காந்தி, நான் இன்ன கருத்தின் மேல்தான் அறிக்கையை தயார் செய்தேன் என்று சொல்லி வெளிவந்துவிட்டார். கையெழுத்துப் போட்டவர்களோ, “நான் இன்ன கருத்தின் மேல்தான் கையெழுத்துப் போட்டேன்” என்று சொல்ல வந்துவிட்டார்கள். பலர் வாபீசு வாங்கிக் கொள்ளவும் முன்வந்து விட்டார்கள். பலர் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லி விவகாரம் பேசுகிறார்கள், இந்தியா மந்திரியோ வைசிராய் அறிக்கைக்கு இதுதான் அர்த்தம் என்று வியாக்கியானம் சொல்லி விட்டார். சர். சைமனோ வைசிராய் அறிக்கைக்கு யார் என்ன அர்த்தம் சொன்னாலும் எனக்கு அக்கரை இல்லை: நான்தான் இந்தியாவுக்கு “ஜாதகம்” எழுதப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். எனவே இந்திய அரசியல் தலைவர்கள் என்பவர்களும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் மெம்பர் என்பவர். களுக்கும் இந்தியாவைக் கொள்ளையடிக்கும் கூட்டுக் கொள்ளைக்காரர்களே. தவிர, இந்தியாவைப் பற்றின கவலையுள்ளவர்கள் என்று சிறிதும் சொல்ல முடியாதென்றே சொல்லுவோம். சாதரணமாக, நமக்கு வினா தெரிந்தது முதல், இந்திய காங்கிரசின் யோக்கியதை, டிசம்பர் மாதத்தில் கூட்டம் கூடி ஏதாவது ஒரு தீர்மானம் செய்வதும், ஜனவரி முதல் அடுத்த டிசம்பர் வரை:
குடி அரசு - 1929 @) 270
அத்தீர்மானத்திற்கு வியாக்கியானம் செய்து கொண்டு ஆளுக்கொருவித மாய் தங்கள் தங்கள் நன்மைக்கு ஏற்றவிதமாய் நடந்து கொள்ளுவதும் வழக்கமாகவே வந்திருக்கின்றது. இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சி
கள் என்பவையும் ஏறக்குறைய காங்கிரசையே பின்பற்றி வந்திருக்கின்றன. அரசியல் தலைவர்கள் என்றால் நாணயமற்றவர்கள் என்றும், சுயநலக் காரர்கள் என்றும், அகராதியில் எழுதிவிட வேண்டிய நிலையில் வந்து விட்டது. ஏற்கனவே, அரசியல் என்றால் பித்தலாட்டம் என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொள்ளப்பட்டிருந்தாலும், தமிழில் தெளிவாய் நாணயமற்றவர்கள். என்றும், சுயநலவாதிகள் என்றும் பொதுமக்களுக்கு தெரிந்துவிடவேண்டியது
மிகவும் முக்கியமான காரியமாகும். இந்தியாவின் வட மாகாணத்து அரசியல் மகமதியர், மகமதியரல்லாதார் என்கின்ற விஷயத்தையும், தென்னாடானது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயத்தையுமே அடிப்படை
யாகக் கொண்டே, அதற்கேற்ற காரியங்களை அரசியல் என்னும் போர்வை யைப் போட்டுக்கொண்டு நடைபெறுகின்றதே அல்லாமல், வேறுகாரியங்கள். சிறிதாவது இருப்பதாக நமக்கு விளங்கவில்லை. இந்து முஸ்லிம் தகராறும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகராறும் இந்தியநாட்டு அரசியல் லட்சியமாக இல்லாமலிருந்திருக்குமானால் இன்றைய தினம் இந்தியாவின் நிலைமை வேறாய் இருக்கும் ஒரு வகுப்பை அழுத்தி அதன்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே அரசியல் போர் நடத்துவதும், அவ்விதம் ஆதிக்கம் செலுத்த முற்பட்டவர்களின் கொடுமையில் இருந்து தப்புவதற்கு மற்ற வகுப்பார்கள் அதற்கு எதிரிடையாயிருப்பதும், இவ் விரண்டுவித சம்பவத்தின் பயனாய் அன்னிய அரசாங்கம் தனது ஆதிக் கத்தை நிலைநிறுத்திக்கொள்ளுவதும் இந்தியாவுக்கு இயற்கையாகவே
இருந்துவருகின்றது.
இந்தியாவுக்கு இதுவரை வெளிநாட்டில் இருந்துவந்த படைஎடுப்பு களும், அரசாங்கங்களும் இந்த தத்துவத்தின் மீதுதான் வரப்பட்டதே அல்லாமல் மற்றபடி வேறுவழியில் அல்ல என்பது சரித்திரம் படித்தால் நன்றாய் விளங் கும். இன்றைய தினம் அரசியல் பிரச்சனைகளாய் இருக்கும் நேரு ரிப்போர்ட்டும், சைமன் ரிப்போர்ட்டும் எதை ஆதாரமாய்க் கொண்டிருக்கின்றது என்பதைப் பார்த்தாலே நாம் சொல்லுவதின் உண்மை விளங்காமல் போகாது.
அதாவது, நேரு ரிப்போர்ட்டை மகமதியர்களும், “தீண்டாதார்களும்” நம்நாட்டில் பார்ப்பனரல்லதாரும் ஆட்சேபிப்பதன் காரணமும், வடநாட்டு மகமதியரல்லாதாரும் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் நேரு ரிப்போர்ட்டை ஆதரிப்பதன் காரணமும், வகுப்பு பிரச்சனையே அல்லாமல் மற்றபடி வேறு எவ்வித அரசியல் விஷயமான ஆட்சேபனையோ சமாதானமோ இதுவரை
யாரும் சொல்லவே இல்லை. அதுபோலவே, சைமன் கமிஷனைப்பற்றியும் உள்ள ஆட்சேபனைகள் எல்லாம் நேரு ரிப்போர்ட்டை அப்படியே
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஒப்புக்கொள்ளாமல் நேருக்கு நேராக பொது மக்களை விசாரித்து அவர்களு டைய கஷ்ட சுகங்களை சர்க்கார் அறிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டதே என்
கின்ற ஆத்திரமல்லாமல் வேறு சரியான காரணம் எதாவது சொன்னார்களா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. தவிர, இந்திய நாட்டில் பெரும்பான்மை. யான மக்களின் கஷ்டத்திற்கும் தரித்திரத்திற்கும் முக்கிய காரணமாய் இருப்
பது மதக்கொடுமைகளும், சமூகக்கொடுமைகளுமேயாகும் என்பது இப் போது எல்லா அறிவாளிகளாலுமே ஒப்புக்கொள்ளப்பட்டாய்விட்டது.
ஆனால், அந்த விஷயத்தில் மாத்திரம் இந்திய அரசியல் தலையிடுவதென் றால் ஒரே பிடிவாதமாக மறுத்துவருகின்றார்கள். ஆகவே, வட்டமேஜை மகாநாடோ, தலைவர்கள் மகாநாடோ கூடினாலும் ஒன்றுதான்; கூடாமல் சைமன் கமிஷன் அறிக்கைப்படியே சீர்திருத்தம் வந்தாலும் ஒன்றுதான். இந்த இரண்டிலும் இந்தியாவின் உண்மையான தேவைக்கு எவ்வித மார்க்கமும் ஏற்படாதென்பது நமது உறுதியான முடிவாகும்.
குடி அரசு - கட்டுரை - 17.11.1929
குடி அரசு - 1929 @) 272
இர௱ாமாமணாமும் யார்ப்பண்ய தந்திரமும்
இராமாயணம் என்னும், ஒரு பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான புராணத்தை பார்ப்பனர்கள் சர்வ வல்லமையுள்ள “கடவுளாகிய” மகாவிஷ்ணு என்பவரின் அவதாரமாகியராமன் என்னும் ஒரு கடவுளின் சரித்திரமென்றும், அதில் கண்ட விஷயங்கள் எல்லாம் அப்படியே நிகழ்ந்தது என்றும், அந்த ராமன் நடந்து கொண்டதாக அப்புராணத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள். எல்லாம் கடவுளால் உலக நன்மையின் பொருட்டு துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனத்திற்காக நடத்தப்பட்ட உண்மையான நடவடிக்கைகள் என்றும், இந்தியமக்களுக்குப்பார்ப்பனர்களால் போதிக்கப்பட்டு பழைய காலத்தில், ஒரு பார்ப்பனரல்லாத வித்துவானைக் கொண்டு அந்த புராணத்தை அதுபோலவே, அதாவது ராமன் கடவுள் அவதாரம் என்ற கொள்கைப் படியே. ஒரு காவியம் பாடச்செய்து, அதை வழக்கத்திலும், நித்திய வாழ்க்கையிலும் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் “புண்ணியம்” என்றும், “மோட்சம்” தரத்தக்கதென்றும் சொல்லி ஏமாற்றி, இந்திய மக்களைத் திண்ணைகள்தோறும் இராமாயண காலட்சேபமும், சீதா கல்யாண உற்சவமும், பட்டாபிஷேக உற்சவமும் செய்யச் செய்து, அதனால் ஏற்படும் வருமானம் எல்லாம் பார்ப்பனக் குதிருக்கே போய்ச் சேரும் படியும் செய்துக்கொண்டு வந்திருப்பதுடன், அந்த இராமாயணக் கதையில் சொல்லியுள்ளபடியே இராமாயணத்தில் வரும் ராமனுக்கு ஒரு ஆயிரம் கோயில்களும், சீதைக்கு ஒரு ஆயிரம் கோயில்களும், லட்சுமணன், பரதன், சத்துருக்கன் ஆகியவர்களுக்கு ஆளுக்கொரு ஆயிரமாயிரம் கோயில்களும், அனுமாராகிய “குரங்குக்கு” ஒரு பதினாயிரம் கோயில்களும், மற்றும் இவைகளுக்கு நகை என்றும், வாகனம் என்றும், மண்டபம், சப்பரம்,
தேர் என்றும், மேளம், தாளம், தாசி, பூசை உற்சவம் என்றும், மற்றும் இவை போன்ற வைகளுக்கு என்றும் முதலாகியவைகளுக்கு வருஷம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதும் இவற்றில் பெரும்பகுதி பார்ப்பனத் தொந்தியில் விழும்படியாகவும் செய்து, மற்றும் வீடுகள் தோறும் ராமன் படமும், சீதை படமும், அனுமான் படமும், சுவர்களில் தொங்கவிட்டு, அதற்கு புஷ்பம், கர்ப்பூரம், தேங்காய்,பழம் பூசையும் நடந்து வரும்படியாகவும் செய்யப்பட்டு இன்றைய தினமும் வழக்கத்தில் நடந்தும் வருவதை எவரும் மறுக்க முடியாது. இது மாத்திரமல்லாமல் ராமன் பிறந்த ஊர் என்றும், அவன் ஆண்ட ஆட்சிகள், தர்மம் என்றும், அவன் கட்டின பாலமென்றும், அவன் கும்பிட்ட சாமி என்றும், பல இடங்களையும் கற்பனை செய்து, அவற்றிற்கும்
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மகத்துவம் கொடுத்து மக்கள் அணுகிச் செல்வதும், அவைகளைப் பார்ப்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் என்றும் இஷ்ட சித்தியாகும் என்றும் சொல்லி
நம்பச் செய்து, அதன் மூலமாகவும்,மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயும் செலவு உண்டாக்கப் பட்டு வருகின்றதையும் யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இவை மாத்திரமல்லாமல், ராமன், லட்சுமணன், சீதை முதலியவர் களுக்கு பார்ப்பன அடையாளமும், மற்ற, அதாவது இராவணன், கும்பகர்ணன், தாடகை, சூர்ப் பனகை முதலியவர்களுக்கு பார்ப்பனரல்லாதார் அடையாளமும். பெயர்களும், அதுபோலவே, அருவருக்கத்தக்கதாவும் கெட்ட கருத்துக்கள். கொண்டதாகவும் கற்பித்து அவற்றை “தேவர்” “அசுரர்” என்பது போலவும்,
“பிராமணர்” “சூத்திரர்” என்பது போலவும் கருத்துக்களையும் ஏற்றி, அதாவது இப்போதுபார்ப்பனர்கள் என்பவர்கள் எல்லாம் தேவர்களாகக்கருதும் படியும், இப்போது அவரொழிந்தவர்கள் அசுரர்களாகக் கருதும்படியும் சூழ்ச்சி செய்து, அதையும் மக்கள் மனத்திற்கு புகுத்திவிட்டார்கள், எனவே இப்பேர்ப்பட்ட புரட்டுகளையும் அயோக்கியத் தனங்களையும் பெரும்பான்மையான நம்மக்களுக்கு ஏற்பட்ட இழிவையும் ஒழிக்கக் கருதி, மேற்கண்ட மாதிரியான மூடநம்பிக்கையிலும், பாமரத் தன்மையிலும் ஈடுபட்டு நஷ்டமடைந்து மானமற்று மிருகங்களிலும் கேவலமாய்பிழைக்கும்மக்களின் மடமையை நீக்க வேண்டுமென்பதாய் இராமாயண ஆராய்ச்சி என்றும், இராமாயணப்புரட்டு
என்றும், இராமாயண ஆபாசமென்றும், இராமாயண இரகசியமென்றும் மற்றும் பலவிதத் தலைப்புகளின் கீழ் அப்புரட்டுகளை சுயமரியாதை உணர்ச்சியுள்ள. பல பெரியோர்களும் அறிஞர்களும் கொஞ்சகாலமாய் வெளிப்படுத்தி வரும் விஷயங்கள் யாவரும் அறிந்ததாகும்.
இவ்வித வெளியீடுகளுக்கு நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகளும், தடை
களும் கொஞ்சமல்லவென்பதும் பொதுமக்கள் உணர்ந்ததேயாகும்.
அவர்கள் இதுவரை இராமாயணத்தினால் ஆதிக்கம் பெற்று வயிறு வளர்த்து வரும் பார்ப்பனர்களும் அவர்களது புல்லுருவிகளும் கூலிகளும் செய்து வந்த எதிர்ப்புகள் என்ன என்றால், “இராமாயணத்தைக் குற்றம் சொல்லுவது மகாபாதகம்” என்றும், அது “கடவுள் நிந்தனை” என்றும் மதத்துரோகம் என்றும், இராமனை கடவுளாக வணங்கும் இந்துக்கள் மனம் புண்படுகின்றது என்றும், மற்றும் பலவிதமான தந்திரவார்த்தைகளையும்,
மருட்டு வார்த்தைகளையும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றிவந்தார்கள். இந்நிலையில் அவைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டுமென்று கருதியே இராமாயணம் நடந்த கதை என்று நம்புபவர்களுக்கு அப்படி நடந்திருக்க முடியாது என்பதற்குள்ள பல காரணங்களையும், இராமன் கடவுள் என்று நம்புபவர்களுக்கு, அவன் கடவுளாயிருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும், இராமாயணம், தேவர்கள், அசுரர்கள் சண்டை என்று நம்பு கின்றவர்களுக்கு அது தேவர்கள் அசுரர்கள் கதை அல்லவென்பதற்கு பல காரணங்களையும், சொல்லி வருவதோடு, எதற்கும் அசையாமல், குரங்குப்
குடி அரசு - 1929 @) 274
பிடியாய் இராமன் கடவுள், இராவணன் அசுரன் என்றும், மற்றும் அதில் கூட ராமன் வடதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், இராவணன் தென்தேசத்துக்காரன் என்றும், வடக்கே இருந்து தெற்கே வந்து சண்டைபோட்டான் என்றும், மற்றும் இதிலிருந்து வடதேசத்து ஆரியர்கள் தேவர்களாயிருக்கக்கூடும் என்றும், தென்தேசத்துத் திராவிடர்கள் அசுரர்களாயிருக்கக்கூடும் என்றும், நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி, அவர்களது மடமை யைப் போக்க வேண்டி அதற்குத் தகுந்தபடி பல காரணங்களையும் காட்டிப் பேசியும் எழுதியும் வரப்படுகின்றது. அன்றியும், ராமனையும் அவனைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களையும் வட தேசத்தியராகவும், ஆரியராகவும் கடவுள்களின் தனித்தனி அவதாரங்களாகவும், அவர்கள் எல்லாம் தர்மத்தைக் காட்டவந்த தர்ம தேவதைகளாகவும் போற்றப்பட வேண்டியவர்களாக கற்பித்து, இராவணனையும் அவனது கோஷ்டியாரையும் ராட்சதர்களாகவும், தென் தேசத்தியர்களாகவும்,திராவிடர்களாகவும், அதர்மம், கொடுமையுமே உருவாய் வந்தவர்களாகவும் அவர்கள் அழிக்கப்படவேண்டி யவர்களாகவும், இழித்தும், பழிக்கப்பட வேண்டியவர்களாகவும் கற்பித்து,
உலகில் உள்ள நன்மைகள் உயர் குணங்கள் ஆகியவை எல்லாம் ராமனுடைய தாகவும் அவனது கோஷ்டியாருடையதாகவும், அவற்றிற்கு எல்லாம் அவர். களே உருவமென்றும், தீமைகளும், தீக்குணங்களும், ராவணனுடையதும் அவனது கோஷ்டியாருடையதும் என்றும், தீமைக்கும், தீக்குணத்திற்கும் இவர் களே உருவமென்றும் கற்பித்து இருக்கின்றதை அடியோடு ஒழிப்பதற்கு, அதற்குத் தகுந்த பல காரணங்கள் காட்டியும் எழுதியும் பேசியும் வரப் படுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பனர்கள் இராமாயணத்தை மக்க.
ளுக்கு எந்த விதத்திலாவது புகுத்தி அதன் பயனாய் தங்கள் ஆதிக்கத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆதரவு தேடிக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி இழிவுபடுத்தி வருகின்றார்கள் என்று கருதி அதை எந்த விதத்திலும் மக்கள் மதிக்காமல் இருக்கவேண்டும் என்கின்ற எண்ணத்துடனேயே இராமாயணம். இப்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது என்பதேயாகும்.
ஆகவே, இது சம்பந்தமான எல்லாவித எதிர்ப்புகளுக்கும் அநேகமாக சமாதானம் சொல்லி, பார்ப்பனர்களின் வாய்க்கும் புராணீகர்கள் வாய்க்கும் ஒருவாறு ஆப்புக்கடாவின பிறகு இப்போது சில பார்ப்பனர்கள் தோன்றி வேறு விதமான தந்திரத்துடன் இராமாயணத்தை நிலைக்கவைக்க வெளிப்பட்டிருக் கிறார்கள். அதாவது “இராமாயணம் என்பது அடியோடு பொய்க் கதையா யிற்றே.அதை ஏன் கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்? அதில் உள்ள பாத்திர அழகு, வர்ணனைஅழகு, கவி அழகுஆகியவைகளுக்கு மாத்திரம்மதிப்புக் கொடுத்து
எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், மற்றபடி அதை கவனிக்காதீர்கள்; அப்படி
மீறி கவனிப்பது மடமை மூடநம்பிக்கை என்றும், சுயமரியாதை அற்ற தன்மைகள் என்றும் சொல்லி நம்மை வேறு வழியில் ஏய்க்க வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தார்களை நாம் ராமனையும் இராமாயணத்தையும் கடவுள் என்றும் கடவுள் நடவடிக்கை என்றும் சொல்லுகின்றவர்களைவிட மூடர்கள்.
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
என்றும், பித்தலாட்டக்காரர்கள் என்றுமே தான் சொல்லுகிறோம். ஏனென்றால், ராமனை கடவுள் என்று சொல்லுகின்றவர்கள் எல்லாம் ராமனை பூஜித்துக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலராவது உண்மையில் மூடநம்பிக்கையில் ஈடுபட்ட யோக்கியர்களாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால், ராமன் கடவுள் அல்ல; இராமாயணம் நடந்ததல்ல;என்று சொல்லிக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்லுகின்றவர்களில் ஒருவராவது யோக்கியர்களாக இருக்க முடியாது என்றே சொல்லுவோம்.இதற்கு என்ன காரணம் என்றால், இவர்கள் உண்மையிலேயே இராமாயணம் நடந்த கதை அல்ல என்று மற்ற மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதை மெய்ப்பிக்கின்ற வர்களாயிருந்தால் இவர்களுக்கு இப்போது நம்மிடத்தில் சிறிதும் வேலை இல்லை.மற்று யாரிடத்தில் என்றால்,ராமனைக் கடவுளாக வைத்து கும்பிடுகின்ற வர்களிடத்திலும், பூசை உற்சவத்திற்கு கோடிக்கணக்கான பொருள்களை: பாழாக்குபவர்களிடத்திலும், கோடிக்கணக்கான பொருள்களைப் பாழாக்கி கோயில்களை கட்டுபவர்களிடத்திலும், முதலில் போய் இவர்களது புத்திசாலித் தனத்தையும் ஆராய்ச்சித் திறத்தையும் மூடநம்பிக்கையை ஒழிக்கும் தன்மையையும், மடமையை நீக்கும் தன்மையையும் சுயமரியாதை உணர்ச் சியை ஊட்டும் வேகத்தையும், காட்டியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இராமாயணப் புரட்டை வெளியாக்குபவரிடத்தில் வந்து முட்டிக் கொள்பவரி
டத்தில் கடுகளவாவது உண்மையோ, யோக்கியமோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். உதாரணமாக நாட்டுக் கோட்டை செட்டி நாட்டில் உள்ள ஒரு புராணப் பிரசார பத்திரிகையில் காரைக்குடி விநாயகர் மண்டபத்தின் ஹிந்துமத அபிமான சங்க சார்பாய் திரு.பி. ஆச்சாரியார் என்கின்ற ஒரு பார்ப்பனர் “இராமாயணத்தின் இரகசியம்” என்று ஒரு பிரசங்கம் செய்ததாக காணப் படுகின்றது.அதில் உள்ள விஷயங்கள் இந்துமத அபிமானத்தின் மீது செய்யப் பட்ட பிரசங்கமாகவே வைத்துக் கொள்ளப்பட்டாலும், இராமாயணத்தைக் காப்பாற்றுவதற்கு திருட்டுத் தனமான முறையில் தந்திரம் புரிகின்றார் என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது. இப்படி செய்வது பார்ப்பனர்களுக்கு குல தர்மம் என்று ஒருபுறம் சொல்லக் கூடுமானாலும் நாம் அதை அந்தப்படியே குலதர்மம் என்று விட்டுவிட முடியாததற்கு வருந்துகின்றோம். ஏனெனில், அது பாமர மக்களை ஏய்க்கவே நமது முயற்சிகளுக்கு இடையூறாக செய்யப்படும்
சூழ்ச்சி என்று நாம் கருதுவதால் அதன் புரட்டை வெளியாக்கவேண்டியதுநமது கடமையாகின்றது. அதாவது, திருஆச்சாரியார் அதில் இராமாயணம் ஆரியர்: திராவிடர் என்கின்ற பாகுபாட்டிற்கு உடையதல்ல என்கின்றார். ஆனால்,கம்பர். ராமனை ஆரியன் என்றும் இராவணனை தென்னாட்டவன் என்றும் பல இடத்தில் சொல்லி இருக்கிறார் என்பதற்கும், வால்மீகியும் வடக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் தேவர்கள் என்றும் தென் பாகத்தில் உள்ளவர்களை அரக்கர்கள். என்றும் சொல்லி இருப்பதாக மொழி பெயர்ப்புக்களில் இருக்கின்றது என்பதற்கும், இவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம். அதுமாத்திரமல்லாமல் இராமன் பார்ப்பனர்களின் காலில் விழுந்து
குடி அரசு - 1929 @) 276
கும்பிட்டதாகவும், அவர்களுக்கு பொருள்கள் தானங்கள் செய்ததாகவும், பார்ப்பனருக்கு திதி கொடுத்து தனது தந்தையை மோட்சத்திற்கு அனுப்பிய
தாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. அது மாத்திரமல்லாமல், “சூத்திரன்” தவம் செய்ததற்காக (கடவுளை வணங்கியதற்காக! அவன் ராமனால் கொல்லப் பட்டதாகவும் சொல்லப் பட்டிருக்கின்றது. அது மாத்திரமல்லாமல், மாமிசம் சாப்பிடுபவனும் குடிகாரர்களுடைய நேசம் கொண்டவனுமான ராமன் செய்த கெட்ட காரியங்களையெல்லாம் கூட நல்ல காரியங்களாகவும் வேதம் படித்து கோடிக்கணக்கான வருஷம் தவம் செய்து, கடவுள் அருள் பெற்றவனை எது செய்தாலும் கெட்டவனாகவே பாவிக்கப்பட்டிருக்கின்றது. இவைகளில் எதற்கு திரு.ஆச்சாரியார் சமாதானம் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம். (தொடரும்)
(தொடர்ச்சி 24111929 குடி அரசு?
குடி அரசு - கட்டுரை - 17.11.1929.
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வெண்கன் வி௫தலைக்கு 6! 6௫! 6!!! ாத்தினம்
உலகத்தில் எங்குமே பெண்கள் தாழ்த்தப்பட்டிருக்கின்றார்கள்.நமது
நாட்டில் அவர்கள் மனிதப் பிறவியாயிருந்தும் மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்படுவதும் அவர்கள் ஆண்களின் காம இச்சை தணிக்கும் கருவி யாகவும், பிள்ளைபெறும் யந்திரமாகவும், ஆண்களுடைய சொத்துக்களில் ஒன்றாகவும், தகப்பன் என்பவனாலும் சகோதரன் என்பவனாலும் புருஷன் என்பவனாலும் பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கவோ விற்கவோ வாடகைக்கு விடவோ தனது சுயநலத்துக்காக மற்றவர்களுக்குக்
கூட்டிக் கொடுக்கவோ கூட சுவாதந்தரியமுள்ள வஸ்துக்களாகவும் பாவிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களை விலைக்கு வாங்கியவர்கள் மற்றவர்க்கு கூலிக்கு விபசாரத்திற்கு விட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு யந்திரமாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இத்தகைய கொடுமைகள் அநேகமாய்
மதத்தின் பேராலும் தர்ம சாஸ்திரத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடை:
பெற்றுவருவதும்மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஆனால் நமதுநாட்டைத்தவிர மேல்நாடுகளில் இக்கொடுமைகள் வரவரக்குறைந்து அவர்களுக்குச் சுதந்திரம் வளர்ந்து வருகின்றது. உதாரணமாக அமெரிக்க நாட்டில் பெண்கள் ஆண்: களைப்போலவே கோடிக்கணக்கான ரூபாய்கள் சொத்துக்களுடனும் சுதந்திரத் துடனும் ஆயிரக்கணக்காக வாழ்கின்றார்கள். இவைகளை அறிந்த இந்திய நாட்டு பெண்மணிகள் தங்கள் சுயமரியாதையை எண்ணி இப்போது விடுதலை அடைந்து முற்போக்கடைய முயற்சித்துவிட்டார்கள். உதாரணமாக சென்ற
வாரத்தில் சென்னையில் கூடிய பெண்கள் முன்னேற்ற மகாநாட்டில் நடைபெற்ற விஷயங்களும் அங்கு செய்யப்பட்ட தீர்மானங்களும் மற்றொரு பக்கத்தில் பிரகரிக்கப்பட்டிருக்கின்றது. அதை பார்க்கின்றவர்கள் பெண்கள் விடுதலை விஷயத்தில் கடுகளவும் கவலை உள்ளவர்களாயிருந்தாலும் ஆனந்தக் கூத்தா டாமல் இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் அம்மகாநாட்டுத் தீர்மானங்களில் முக்கியமாக அய்ந்து தீர்மானங்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் பாராட்டக் கூடியவைகளாகும். அவ்வைந்தையும் பஞ்சரத்தினம் என்றே சொல்ல வேண்டும். அதாவது.1. பெண்களுக்கு விவாக சுதந்திரம், 2. சொத்து சுதந்திரம்,
குடி அரசு - 1929 @) 278
3 கண்கள் சுதந்திரம் (கோஷாமுறை) 4. ஒழுக்க சுதந்திரம், 5. விவாக விலக்கு
சுதந்திரம் ஆகிய ஐந்து விஷயங்களைப் பொறுத்த தீர்மானங்களேயாகும். இப்போது நமது நாட்டு விவாக சுதந்திரமானது மிருகங்களை உடையவனிடம் சென்று விலைக்கு வாங்குவது போல் பெண் பிள்ளைகள் உள்ளவர்களிடம். சென்று “உன்னுடைய பெண்ணை எனக்குக் கொடுக்கின்றாயா” என்று கேட்பதும், தகப்பன் பெண்ணின் கையைப் பிடித்துக் கொடுக்க புருஷன் பெண்ணின் கழுத்தில் கயிறு கட்டி அழைத்துக் கொண்டு போவது மாயிருக்கின்றது. மேலும் புருஷன் வீட்டிற்குப் போகும்போது பெண்ணுக்குத் தாய் தகப்பன் சொல்லி அனுப்பும் புத்திமதியோ ஒரு மிருகத்திற்குக் கூட சொல்லியனுப்ப யோக்கியதை யில்லாததானதாகும்.அதாவது “ஓ பெண்ணே! இன்று உன்னை இன்னாருக்குக் கொடுத்து விட்டேன். நீ அங்கு போய் மிக்க
கீழ் படிதலாய் நடந்து கொள்ள வேண்டும்; மாமன், மாமி, நாத்தி, மைத்துனர் மார்களுக்கு அடங்கி நடக்கவேண்டும்.கல் என்றாலும் கணவன் புல் என்றாலும்
புருஷன்;அவன் அடித்தாலும் உதைத்தாலும் பட்டினி போட்டுக் கொன்றாலும் அவனை தெய்வம் போல் கருத வேண்டும். புருஷனுக்கு மிஞ்சிய தெய்வம் கிடையாது. நீ ஏதாவது உன் இச்சைப் படி நடந்து எனக்கு கெட்ட பெயரைக் கொண்டு வந்து விட்டுவிடாதே; ஆனால் உன் புருஷன் என்ன சொன்னாலும் கிணற்றில் விழு என்றாலும் உடனே விழுந்துவிடவேண்டும். புருஷன் என்ன சொன்னாலும் அந்தப்படி நடப்பது தான் கற்பு. அவன் என்ன செய்தாலும் நீ அதைப்பற்றி ஒன்றும் கேட்காதே” என்று சொல்லி பெண்ணின் கையைப்
பிடித்து புருஷன் கையில் கொடுத்து புருஷனைப் பார்த்து “இன்று முதல் இது உன்னுடைய சொத்தாய் விட்டது. நீ இதை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்; அதற்கு தகுந்தபடி எல்லாம் அடங்கி நடப்பாள்” என்று ஒப்படைக்கின்றான். அநேகமாக இதுவே கல்யாண மந்திரமாகவும், சடங்காகவும், சாஸ்திர சம்மதமாகவும், கடவுள் நீதியாகவும் இருந்துவருகின்றது. அன்றியும் எந்தப் புருஷனுக்கு தன்னைக் கொடுக்கின்றார்கள் என்கின்ற விஷயம் பெண்ணுக்கு கழுத்தில் கயிறு கட்டும் வரை தெரிவதே கிடையாது. அன்றியும் புருஷன் தன்னை தனது உபயோகத்திற்கு வாங்கிக் கொண்டு போகின்றானா மற்றவர்கள் உபயோகத்திற்கு வாங்கிக்கொண்டு போகின்றானா. என்பது கூடத் தெரியாது! நமது நாட்டில் அநேக இடங்களில் இன்றும் பெண்களை கல்யாணம் செய்வது என்பது புருஷனுக்கு என்ற அர்த்தம் இருந்தாலும் மாப்பிள்ளையின் தகப்பன் உபயோகத்திற்கும் தமையன் உபயோகத்திற்குமே பெண் ஜாதியாய் இருக்க கல்யாணங்கள் நடைபெறு கின்றது. மற்றும் சில இடங்களில் புருஷனின் உத்தியோகத்திற்கும் தொழில் விருத்திக்கும் அந்நியருக்கு உபயோகப்படுத்த என்றே கவனித்து கல்யாணம். செய்யப்படுகின்றது. பெண் மிக்கசிறுபருவமுடையதாதலால் அதுவும் இதுதான் கல்யாணத்தின் தத்துவமோ என்று கருதி சிறிதும் யோசனை கூட இல்லாமல் எதற்கும் கட்டுப்பட்டு நடக்கின்றது. இதுவே தாய் தகப்பன் செய்விக்கும் கல்யாணத்தினுடையவும் ஸ்மிருதி சுருதிகளினுடையவும் தெய்வீகத்தினு
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
டையவும் உயர்ந்த தத்துவங்களாய் இருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கல்யாணப் பெண்ணை விலைபேசி தகப்பனிடம் விலைகொடுத்து கயிறு கட்டி இழுத்து போவதாகவும் இருக்கின்றது. இன்னும் சில இடங்களில் ஒரே பெண்ணை மாற்றி மாற்றி இரண்டு மூன்று பேருக்கு விலைக்குக் கொடுத்து ஏமாற்றி பணம் வாங்குவதுமாயும் இருக்கிறது. மற்றும் சில இடங்களில் விபசாரத்தின் மூலம் வயிறு வளர்க்கவும் பணம் சம்பாதிக்கவும் உபயோகப்படவுமே பெண்களை வளர்க்கப்படுகிறது. எனவே, இதிலிருந்து கல்யாண விஷயத்தில் பெண்களுக்கு இப்போது இருக்கும் வழக்கம் மேலானதா. அல்லது பெண்கள் சீர்திருத்த மகாநாட்டில் பெண்களுக்கு கல்யாண விஷயங்களில் தாங்களாகவே புருஷர்களை தெரிந்தெடுத்துக் கொள்ள கேட்கும் சுதந்திரம் மேலானதா என்பதும் இது பெண்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத முதல் படியல்லவா என்பதும் விளங்காமல் போகாது.கல்யாண விஷயத்தில் இவ்வித சுதந்திரம் அளிக்க நமது சமூகமோ மதமோ சாஸ்திரமோ
எந்தக் காரணத்தைக் கொண்டாவது மறுக்குமானால் இனி நாம் கண்டிப்பாய் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் அந்தப்படி மீறி பெற்றோர்களால் செய்யப்படுமானால் அவ்வித கல்யாணங்களை விலக்கிக் கொள்ள சட்டத்தில் இடமேற்படும் வரை தங்களை “தாங்கள் இனிமேல்
குடும்பப் பெண்கள் அல்ல” என்றாவது விளம்பரப்படுத்திக்கொண்டு விடுவது மேலேன்றுமே சொல்லுமாறு நிர்பந்தப்படுவதற்கு மிகவும் வருந்துகிறோம். ஏனெனில் மேல் கண்ட “தெய்வீக” கல்யாண முறையானது நமது நாட்டில் உள்ள “குடும்பப்பெண்” அல்லாதவர்களுடைய நிலைமையைவிட மிக்க மோசமானதாயிருக்கிறது எப்படியெனில் ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்வதை விட “குடும்பப் பெண் அல்லாதவராக” இருக்க சம்மதிப்பதிலோ அல்லது இம்மாதிரி கல்யாணமான புருஷனிடமிருந்து விலகி வெளிப்பட்டுப்
போய் தனியாக வாழ்வதிலோ அதிக சுதந்திரமும் சவுகரியமும் இருக்கின்றதைப் பார்க்கலாம். அதாவது ஒரு பெண் குடும்பப் பெண் அல்லாதவள் ஆகி விட்டால் அந்தப் பெண்ணுக்கு ஒழுக்கமுடன் வாழ உரிமையுண்டு.இஷ்டப் பட்ட கணவனைமாத்திரம் சேர்த்துக் கொள்ள உரிமையுண்டு. இஷ்டமில்லாத. போது எந்தக் கணவனையும் விலக்கவோ மறுக்கவோ சுதந்திரம் உண்டு. தன் இஷ்டப்படி தொழில் செய்து பணம் சம்பாதிக்க சுதந்திரம் உண்டு. அந்தப் பணத்தை தன் இஷ்டப்படி செலவு செய்ய உரிமையுண்டு. இயற்கை: இன்பங்களை இயற்கை உணர்ச்சிக்கேற்ப அனுபவிக்க சுதந்திரமுண்டு. தனது பிள்ளைக்குட்டிகளை இஷ்டப்படி வளர்க்க சுதந்திரமுண்டு தனக்கு வேண்டிய அளவுமாத்திரம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள சுதந்திரமுண்டு. தனது நியாயமான இஷ்டப்படி நகைகள் அணியவும் ஆடைகள் அணியவும் உரிமை உண்டு.ஆனால் நமது “தெய்வீக கல்யாணத்தில்” இவை ஒன்றுமே கிடையாது.
வெறும் சாப்பாட்டிற்கும் துணிக்கும் அதுவும் தனது இஷ்டத்திற்கு ஒத்ததாக இல்லாத சாப்பாட்டிற்கும் துணிக்கும் மாத்திரம் அவன் (புருஷன்) ஆயுள் அளவும் ஒரு புருஷனின் காம இச்சையை அவனுடைய தேவைக்கும்
சமயத்திற்கும் தகுந்தபடி தணிக்கக் கூடிய ஒரு கருவியாய் இருப்பதைத் தவிர
குடி அரசு - 1929 @) 280
வேறு ஒன்றுமே இல்லை. ஒருபெண் சரீர சவுக்கியத்தில், தான் எந்த நிலையில் இருந்தாலும் எவ்வளவு தேவை இல்லாத உணர்ச்சியுடன் இருந்தாலும்
புருஷனுக்கு இஷ்டப்பட்ட போது சம்மதித்துத் தான் ஆக வேண்டும். அவன் மூலமாய் அவன் வேறு எங்கெங்கே சம்பாதித்துக் கொண்டு வந்த வியாதிகளையும் தனது சரீரத்தில் ஏற்றுமதி செய்து கொள்ள வேண்டும்.ஆனால் பெண்ணுக்கு இஷ்டமேற்பட்ட போது தனது உணர்ச்சியை வெளியில் காட்டுவது கூட “உத்தமப் பெண்களின் தர்மத்திற்கு” விரோத மானதாகும். இதுவேதான் இப்போது இந்தியாவில் உள்ள பெண்மணிகளில் நூற்றுக்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட நிபந்தனைகளின் பேரில் கடவுள் கட்டளையாக சுமத்தப்பட்டு வருகின்றது. ஆகவே இவ்வித கொடுமையை ஒழிக்க முதற்படியாக பெண்கள் சீர்திருத்த மகாநாட்டில் கல்யாண சுதந்திரம் கேட்டு.
தீர்மானித்திருப்பது நல்ல அறிகுறியே ஆகும்.
இரண்டாவதாக சொத்துரிமை, இது இப்போது இந்திய நாட்டில் இந்து மதத்தில் மாத்திரம் இல்லாமலிருக்கின்றது.இந்து மதப்படி பெண்கள் தாங்களே தங்களுக்குச் சுதந்திரமல்லாதவர்கள் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு மதத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்குச் சொத்துரிமை என்று பேசுவது பிறவிக்
குருடன் சித்திரமெழுதப் புறப்பட்டது போலவேயாகும். என்றாலும் இவ் விஷயத்தில் துணிந்துத் தீர்மானம் செய்தது போற்றற்குரியதே யாகும்.
மூன்றாவதாக கண்கள் சுதந்திரம்,அதாவது கோஷாமுறை விலக்கு.இது இந்துக்கள் என்பவர்களுக்குள் நம் நாட்டில் இல்லையானாலும், மற்றவர்.
களிடமும் வடமாகாணத்தில் பல வகுப்பு இந்துக்களுக்குள்ளும் இருக்கின்றது. நம் நாட்டில் கோஷா என்பதான பெண்களுக்குத் தலையணை உறை போல அடியோடு உறை போட்டு மூட்டை மாதிரிக் கட்டிவிட்டாலும், அநேகம் பேர்கள் மேல்மக்கள் என்பவர்களில் நூற்றுக்கு 90 பேர்களும் படித்தவர்கள். என்பவர்களில் நூற்றுக்கு 75 பேர்களும் பெண்களை வெளியில் போகாமலும்
மற்ற மக்களுடன் பழக முடியாமலும், வீதிக்குக் கூட வர முடியாமலுமே சிறை வாசம் போல் அடைத்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே இந்த கோஷா முறையும் சிறைவாசமும் பெண்களின் சுயமரியாதைக்கு மிகவும் கேடானது என்பதே நமது அபிப்பிராயம். பெண்கள் தாங்களாகவே தங்கள் புருஷனிட முள்ள உண்மைக் காதலினால் புருஷனைத் தவிர வேறு எந்த வஸ்துக்களைக் கூடப்பார்க்கமாட்டேன் என்று சொல்வதானாலும், நமக்கு அதில் அதிக கவலை இல்லை. புருஷன் நிர்ப்பந்தத்திற்காகவும், பயத்திற்காகவும் உறைபோட்டுக் கொள்வதும், அவர்களை அடைத்து வைப்பதும் மகா கொடுமையானது என்றே சொல்லுவோம். இதற்கு ஜீவ இம்சை நிவாரண சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒரு சமயம் நாம் இப்படிச் சொல்வதால் பலருக்கு வருத்தமுண்டாகலாம். அதாவது, பெண்களை மிருகம் போல், ஆடு மாடுகள் போல், ஆணும் பெண்ணும் ஒன்றாய்த் திரிய விடும்படி சொல்வது யோக்கியமா என்றும், முறை துறைவரையறையில்லாமல் மிருகங்கள் போல் நடந்து கொள்ள விடுவது சரியா என்றும் கூட கேட்கலாம்.
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
உலக சுபாவத்தில் நூற்றுக்கு 80 பெண்களுக்கு மேலாகவே கோஷா இல்லை. சிறை அடைப்பும் இல்லை என்பதையாரும் மறுக்க முடியாது. எனவே இந்த நூற்றுக்கு 80 பெண்கள் மிருகங்கள்போல நடக்கின்றவர்களா அல்லது நடத்தப்படுகின்றவர்களா என்று கேட்பதுடன் மேல் கண்ட100-க்கு 80 பெண்: களுடைய காதலர்களும் நாயகன்மார்களும் தாய் தந்தை சகோதரன்மார்களும் மிருகங்கள்போல நடக்க சம்மதிக்கிறவர்கள் என்றோ சொல்லக் கூடுமா என்றும் கேட்கின்றோம்.ஆகவே கோஷா முறையை நீக்க மகாநாட்டில் தீர்மானித்ததை
நாம் பாராட்டுகின்றோம். அதோடு இதே சமயத்தில் கோஷா முறை உள்ள
நாடுகளிலும் அங்குள்ள அரசாங்கத்தார் சட்ட பூர்வமாயும்நீக்கிஇருப்பதையும் மேலும் நீக்க முயற்சித்து வருவதையும் இச்சமயத்தில் ஞாபக மூட்டிப்
பாராட்டுகின்றோம்.
நான்காவதாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஒழுக்கம் சுதந்திரம்.
ஒழுக்கம் என்னும் பேரால் பெண்களை கொடுமைப்படுத்துவது மாத்திரமல்லா.
மல், ஆண்களில் நூற்றுக்கு தொண்ணூறுபேர்கள் அயோக்கியர்களாகவும் கொடுமையாளர்களாகவும் ஏற்பட இடமேற் பட்டுக் கொண்டு வருவதே இங்கு
மிகவும் குறிப்பிடத்தக்கது. அதாவது மனித வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதே எல்லாவற்றிலும் உயர்வு என்ற கொள்கை ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவ்வொழுக்கத்திற்கு போடப்பட்டிருக்கும் திட்டங்கள் மிகவும் இயற்கைக்கும் அறிவிற்கும் நியாயத்திற்கும் நேர் எதிர் மறையானதென்றே சொல்ல வேண்டி யிருக்கின்றது. உதாரணமாக ஆண் பெண்களின் மாற்ற முடியாத இயற்கை உணர்ச்சியில் பிரவேசித்து ஒழுக்கம் என்பது நிர்பந்தத்திற்குக் கட்டுப் பட்ட காதலும் பலவந்தத்திற்கு கட்டுப்பட்டாலும் அன்பும் கொண்டது என்றும்,
அதுவும் புருஷர்களுக்கு ஒரு விதம் பெண்களுக்கு ஒரு விதம் என்று பாரபட்சமாகவும் வழக்கத்தில் புருஷன் எவ்வளவு ஒழுக்க ஈனமாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டாலும் பெண்கள் அதைப் பற்றி சிறிதுகூட
சிந்திக்கக் கூடாதென்றும், அந்தப் படிசிந்திக்காமல் இருப்பது மாத்திரமல்லாமல் தான் ஒருசிறிதுகூட அப்படிப்பட்ட அவனைப் போல் நடக்க எண்ணக் கூடாது
என்றும், அந்தப் படி நடந்தால் பாவம் நரகம் அடுத்த ஜன்மத்தில் இழிபிறப்பு என்பவைகளோடு உலகத்தில் இழிவு, அவமானம், சமூக பஹிஷ்காரம், அடி, உதை, இம்சை முதலியவற்றிற்கும் கட்டுப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டும் சில விஷயங்களில் அதன்படி செய்யப்பட்டும் வருகின்றது. இந்த திட்டங்களின் தன்மை எப்படிப்பட்டது என்பதைப்பற்றி யோசிக்கும் முன், இதனால் ஏற்படும்பயன் என்ன என்றுபார்த்தால் இவ்விஷயங்களால் ஆண்கள் ஒழுக்கத்தவறுதலாக நடந்து தீர வேண்டியதற்கு இந்த திட்டமே காரணமா யிருக்கின்றது என்றும் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஏனெனில் ஒரு ஆண், தான் என்ன செய்தாலும் குற்றமில்லை என்று நினைத்துவிடச் செய்கின்றது. அதனால் விபசாரப் பெண்கள் ஏற்பட இடமுண்டாகின்றது. அன்றியும் இம்மாதிரி தைரியமுள்ள புருஷர்களின் நிர்ப்பந்தத்தால் பலாத்காரத்தால் பலபெண்கள் விபசாரிகளாக வேண்டி நேரிடுகின்றது. இன்னும் அநேக
குடி அரசு - 1929 @) 282
கெடுதிகள் ஏற்படுகின்றது. ஆதலால் மேல்கண்ட புருஷனுக்குள்ள ஒழுக்க
சுதந்திரம் போலவே பெண்ணுக்கும் ஒழுக்க சுதந்திரம் என்று சொல்லி விட்டால் பெண்களில் ஒழுக்க ஈனமாக எத்தனை பேர் ஏற்பட்டுவிடும் என்று மக்கள். கருதுகின்றார்களோ, அதைவிட இரட்டிப்பான ஆண்கள் ஒழுக்க ஈனம்
என்பதிலிருந்து திருந்துவார்கள் என்பது நமது உறுதியான முடிவு. ஆதலால் இதைப் பற்றி பொது ஒழுக்கம் என்பதில் கவலையுள்ள யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே சொல்லுவதுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டதற்கு பாராட்டுகின்றோம்.
கடைசியாக கல்யாண ரத்துக்கு சட்டம் செய்ய வேண்டும் என்பதாகும். இது எல்லாத தீர்மானத்தைவிட மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், கல்யாணக் கொடுமையைப் பற்றி முன்னமேயே சொல்லி இருக்கின்றோம். அன்றியும் பெண்ணின் பெற்றோரும் மாப்பிள்ளையின் பெற்றோரும் சேர்ந்து செய்து கொண்ட ஒரு காரியத்திற்காக யாதொரு தகவலுமில்லாத தம்பதிகள் என்பவர்கள் தங்களுக்கு இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவரால் ஒருவர் கொடுமைபடுத்தப்பட்டாலும், இழிவுபடுத்தப்பட்டாலும், வதைக்கப் பட்டாலும் பிரிந்து போக மார்க்கமில்லாமல் கட்டுப்பட்டுக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்பது என்ன நியாயம் என்று நமக்கு விளங்க வில்லை. கலியாணம் என்பதை ஒரு ஒப்பந்தமாகக் கொண்டு இருவரும் சம்மதித்து செய்து கொண்டதாயிருந்தால் ஒப்பந்தத்தையும் கட்டுப்பாட்டையும் காப்பாற்ற வேண்டியது தம்பதிகளின் சமமான கடமையாகும். அப்படிக் கில்லாமல்யாரோ செய்த காரியத்திற்கு யாரோ எதற்காக கட்டுப்படுவது என்பது நமக்கு விளங்கவில்லை.அன்றியும் ஒரு புருஷனுக்குஅவனுடைய பெண்ஜாதி வியாதியுடையவர்களாகவோ, அழகில்லாதவளாகவோ, பிள்ளை பெறாத வளாகவோ, இஷ்டமில்லாதவளாகவோ போய்விட்டால் அவள் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுவிடவும், அவளை விபசாரி என்று பேராக்கி அச்சிலவு கொடுப்பதிலிருந்து கூட தப்புவித்துக் கொள்ளவும் செய்துவிட்டு, சில சமயங்களில் சிலவுக்கு பணமும் கொடாமல் தள்ளிவிட்டு, சில சமயங்களில்
அடித்தும் உதைத்தும் அடக்கி அடைத்துவைத்து தனது இஷ்டப்படிமறுபடியும் ஒரு பெண்டாட்டியோ, பல பெண்டாட்டிகளோ, அல்லது தாசிகளோ, வைப் பாட்டிகளோ வைத்துக் கொள்ளத்தக்க விதமாக ஆண்களுக்கு கல்யாண உரிமை இருக்கும்போது: பெண்களுக்கு புருஷன் கொடுமை சகிக்க இஷ்ட மில்லையானால், சோறும் சேலையும் கூட கேட்காமல் வேறு ஒரு புருஷனைக்
கட்டிக் கொள்ளவோ அல்லது அதுகூட இல்லாமல் சும்மா இருக்கவோ ஏன் உரிமை இருக்கக் கூடாது என்று கேட்கின்றோம். உண்மையாய் கல்யாணமான பெண்களில் நூற்றுக்கு ஐம்பத்தொரு பெண்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தால் விதவைத் தன்மை மேலென்றே தோன்றுகின்றது. விதவைகளுக்கு இன்ப
நுகர்ச்சிக்கு மாத்திரம் இடமில்லாமல் போகலாமே தவிர, அடி உதை ஆகிய கொடுமைகள் கிடையாதென்றே சொல்லலாம். இதற்கு உதாரணங்கள் ஆயிரக்கணக்காக நாம் பார்த்து வருகின்றோம். ஒரு நாட்டில் பெண்களுக்கு
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
எந்த வழியிலாவது முன்னேற்றம் என்பது சிறிதாவது ஏற்படவேண்டுமானால் கல்யாண ரத்துக்கு மார்க்கமிருந்தால்தான் முடியுமே ஒழிய வேறில்லை.
அன்றியும் உண்மையான அன்பும் காதலும் அப்பொழுது தான் இருக்க முடியும். அஃதில்லாமல் “கல்யாணம் செய்தாய்விட்டது ஆதலால் சாகும் வரை ஒருவருக்கொருவர் கட்டி அழுதுதான் தீரவேண்டும்” என்கின்ற நிலைமை: அறிவீனமுள்ள வாழ்வேயாகும். இயற்கை இன்பம் ஒருக்காலும் கட்டுப்பாட்டினாலும் நிர்பந்தத்தினாலும் ஏற்படவே ஏற்படாது. ஆண் பெண் என்பது இயற்கை இன்பநுகர்ச்சிக்கே ஒழிய புருஷன் பெண்ஜாதியாய் குடும்பம் நடத்த பிள்ளைகள் பெற்று சொத்துக்கள் சம்பாதித்து பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு போவதற்கு அல்ல என்பதை உணர்ந்தவர்களே உண்மை இன்பம் நுகருகின்றவர்களாவார்கள்.மனிதன் பாடுபட்டு சம்பாதிக்கப் பிறந்தான்
என்றும், அந்த சம்பாதனைக்கு அதிக செளகரியம் செய்ய பெண்கள் பிறந்தார் களாதலால் செய்து கொடுக்க ஒரு பெண் ஜாதி வேண்டுமென்று நினைத்தே கல்யாண காரியங்கள் நடக்கின்றன. மக்கள் வாழ்வின் பயனை உயர்த்த வேண்டுமானால் இந்த எண்ணத்தையும் இந்த முறையையும் ஒழித்தே தீர வேண்டும். ஆகையால் கல்யாண ரத்து சட்டம் செய்த இத்தீர்மானமானது மிகமிக போற்றற்குரியதாகும்.
இத்தீர்மானங்கள் எல்லாம் சென்ற வருஷம் கூடிய செங்கற்பட்டு சுயமரியாதை மகாநாட்டில் செய்யப்பட்டவைகளேயாகும். அன்றியும் ஐரோப்டா, அமெரிக்கா, ஜெர்மனி முதலிய நாடுகளில் நடைபெறும் சட்டங்களும் வழக்கங்களுமாகும்.நமது இந்தியாவிலும் பரோடா அரசாங்கத்தில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டமேயாகும். நமது மாகாணத்திலும் அநேக வகுப்புக்
களிலும் மலையாள தேசத்தில் எல்லோருக்குள்ளும் இருந்துவரும் வழக்கமே யாகும். ஆதலால் இதில் ஏதும் அதிசயம் இருக்க நியாயமில்லை. ஆனால் செங்கல்பட்டு மகாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேறியவுடன் பலர் இந்த காரணத்தாலேயேமகாநாட்டைக்குற்றம் சொன்னார்கள். கயமரியாதை இயக்கத் தையும் குற்றம் சொன்னார்கள். அப்படிச் சொன்னவைகளில் முக்கியமான காரணம் இத்தீர்மானத்தை பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இது பெண்களுக்கு மிக்க ஆபத்து என்றும் சொன்னார்கள்.ஆனால் இப்பொழுது பெண்களே தாங்கள் மகாநாட்டில் தீர்மானித்துவிட்டார்கள். அதுவும் மிக்க கல்வியும் அறிவும் ஆராய்ச்சியும் பொறுப்புள்ள உத்தியோகங்களும் பெற் றுள்ள பெண்மணிகள் ஒன்று கூடிய கூட்டத்திலேயே நன்றாய் எடுத்துப் பேசி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆகவே, அம்மகாநாட்டில் இத்தீர்மானங்கட்கு,
ஆதரவாயும் இருந்த பெண்மணிகளாகிய திருமதிகள் மாலதி பட்டவர்த்தன. அம்மாள்,லட்சுமி அம்மாள், ருக்மணி லக்ஷிமிபதி அம்மாள் முதலியவர்களை'
நாம் மனதாரப் பாராட்டுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 24111929
குடி அரசு - 1929 @) 284
செண்ணை மந்திரிகளை யின் பற்றுதல்
சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன்மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும் மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும் வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்ததாகும். அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும் வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய்
ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும் மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம்
கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக்கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரசாரம் நடை பெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். தவிர, காந்தி மடத்தின் சட்டாம் பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கை யையும் பிரசாரத்தையும் தூற்றிக் கொண்டு வருவதும் யாவருக்கும் தெரியும். மந்திரி கனம் முத்தையா முதலியார் அவர்களின் இந்தக் கொள்கையை இப்போது இந்தியாவில் பல பாகங்களும் மேல்நாடுகளில் பல பாகமும் பின்பற்ற துடங்கிவிட்டன. அதாவது, ஐக்கிய மாகாணமாகிய அலகாபாத் மாகாண: அரசாங்கத்தால் இந்தக் கொள்கையைப் பின்பற்றி அந்த மாகாணம் முழுதும் இப்பிரசாரம் செய்யத் துடங்கிவிட்டார்கள். மைசூர் அரசாங்கத்தாரும். இக்கொள்கையை பின்பற்றி பல ஆயிரம் ரூபாய்கள் ஒதுக்கிவைத்து பிரசாரம் துவக்கி விட்டார்கள். அமெரிக்கா அரசாங்கத்தார் இதைப் பின்பற்றி ஐம்பதா யிரம்டாலர்கள் ஒதுக்கிவைத்து பிரசாரம் துவக்கிவிட்டார்கள்.
நியூசிலெண்ட் தீவு அரசாங்கத்தாரும் இதே முறையில் மதுவிலக்குப் பிரசாரம் துவக்கிவிட்டார்கள். இவ்வளவு பேர்கள் ஒப்புக் கொண்டாலும் நமது நாட்டு பார்ப்பனர்களுக்கும். அவர்கள் சிஷ்யர்களுக்கும், காந்தி சிஷ்யர்களுக் கும்மாத்திரம்இது பிடிக்கவில்லையாம்.ஏன்? மதுவிலக்குப் பிரசாரத்தின் பெயர். சொல்லி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதும் மதுபானத்தால் பிழைக்கும் பார்ப்பனர்களின்
வயிற்றில் மண் விழுவதாலும் தான்.
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஆகவே இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பொதுமக்கள். இந்த அருமையான சந்தர்ப்பத்தை விட்டுவிடாமல் மதுவிலக்குப் பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து கூட்டம் கூட்டியும் மற்றும் பல விதத்திலும் பிரசாரம் செய்வதற்கு வேண்டிய ஆதரவுகளளிக்க வேண்டுவ
துடன் ஜில்லா தாலூகா போர்டு தலைவர்களும், முனிசிபல் சேர்மென்களும், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் திருசெளந்தர பாண்டியன் அவர்களை. பின்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்
பட்ட அங்கத்தினர்களும் இந்த பிரசாரத்துடன் ஒத்துழைத்து ஆதரவு செய்து கொடுக்க வேண்டுகின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 24111929
குடி அரசு - 1929 @) 286
கார்ப்வாறரோஷண் தலைவர் தேர்கல்
சென்னை கார்ப்பொரேஷனுக்கு இம்மாதம் - தேதி நடந்த தலைவர். தேர்தலில் திருவாளர் ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது கேட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். சென்ற வருஷத்தேர்தல் போலவே இவ்வருஷமும் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளாகவே இரு கனவான்கள் போட்டி போட்டு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குள்ளும் பிரிவினை ஏற்பட்டு அவர்களில் இரு கட்சிக்கு வேலை செய்யப்பட்டு தேர்தல் நடந்தேறியதை குறித்து விசனப்படாமலிருக்க நம்மால் முடியவில்லை. தேர்தலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னால் நாம் எழுதியது போல ஜஸ்டிஸ் கட்சிக்கு நெல்லூரில் புதியதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இவ்விஷயத்
தில் சிறிது தலையிட்டு யாராவது ஒருவர் தான்நிற்க வேண்டுமென்பதாக முடிவு செய்தோ அல்லது மற்ற பிரமுகர்களையும் சேர்த்து ஒரு முடிவு செய்தோ இருப்பாரானால் இச்சம்பவம் நேர்ந்திருக்காதென்பதுநமது துணிபு. அபேட்சகர். கள் இருவரும் தலைவருடைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்பதற்காக தலைவர் தனது முடிவை தெரியப்படுத்தவில்லை என்பதாக சொல்லப்படு வதானாலும்இம்மாதிரியான முக்கிய விஷயங்களில் நெருக்கடியான நிலைமை: யைக் காப்பாற்ற தலைவர் தானாகவேனும் முயற்சித்திருக்க வேண்டியது பொறுப்புள்ள தலைவர் என்பவரின் கடமை என்பதை நாம் சொல்லித் தீரவேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம். இத்தேர்தலானது அபேட்சகர் களுக்கும் சென்னையில் உள்ள சில தனிப்பட்டவர்களுக்கும் தங்கள் தங்கள் தனிப்பட்ட வெற்றி தோல்வியாகக் காணப்படினும் சென்னைக்கு வெளியிலுள் எவர்களுக்கு தோல்வியைவிட கஷ்டமான பலனையும் வருத்தத்தையும் தரக் கூடியது என்பது நமது அபிப்பிராயம்.
ஏனெனில், வெற்றி தோல்வியை விட அதனால் ஏற்படும் பலனேதான் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஆகவே, இத்தேர்தலின் வெற்றி தோல்வியைப்
பற்றி கவனிப்பேயில்லாமல் இதனால் ஏற்பட்ட கட்சிப் பிரதிக்கட்சியார்பலனே. ஜஸ்டிஸ் கட்சியில், புதிதாக வெளிப்படையாய், மேலும் அதிகமான பிளவு ஏற்பட்டு அது வெளி ஜில்லாக்கள் எல்லாம் தொத்து நோய் போல் பரவ ஆரம்பித்துவிட்டது. அன்றியும், நாம் தேர்தலுக்கு முன் எழுதியது போலவே அதாவது நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கை ஒருவாறு நமது இயக்கத்தில் உள்ள கட்சிகள் இவ்வளவு என்பதை காட்டி விட்டது. ஆனால் “அடுத்து வரும் கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தல் அக்கட்சியின் தனித்தனி வேலைத் துவக்
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
கத்தை காட்டிவிடக் கூடியதாகிவிடுமோ என்று பயப்படுகின்றோம்” என்று எழுதியது போலவே ஏற்பட்ட கட்சிகளின் வேலைகள் துவக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக அவைகளில் முதலாவது வேலையாக திரு.கண்ணப்பர், தியாகராய மிமோரியல் கட்டிடத்தின் மேல்மாடியில் இதுவரை ஜாகை வைத்துக் கொண்டு இருந்த ஒரு சிறு அறையை 30-ந் தேதிக்குள்ளாக காலி செய்யும்படி வக்கீல் மூலமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டாய்விட்டது. (அது மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது) இதில் இரண்டு உண்மையை நாம் மறைக்க முயலவில்லை. அதாவது திரு.கண்ணப்பர் (திருகண்ணப்பர் மறுப்பதானாலும்
சரி) கார்ப்பொரேஷன் தேர்தலில் ஒரு கட்சியில் சேர்ந்தாரோ இல்லையோ
என்பதில் ஆட்சேபனை இருந்தாலும் திருநடேச முதலியாருக்கு அனுகூலமாக வேலை செய்தார் என்பதையும் தேர்தல் நடந்த மூன்றாம் நாளிலேயே நேரில் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வக்கீல் மூலமாக நோட்டீசு கொடுக்கப்பட்டது என்பதையும் நாம் மறைக்க முயலவில்லை.இந்த நிலைமையானது இவ்வியக்
கத்தைச் சேர்ந்த இங்கிலீஷ் தமிழ்பத்திரிகைகளையும் பாதிக்கக் கூடும் என்றும் தோன்றுகின்றது. இதற்குமேல் நடக்கக் கூடியவைகளை நாமாக ஊகத்தின் மூலம். எழுதிய காரணத்தாலேயே அவைகள் உண்மையாய் நடக்க இடம் கொடுத்து விட்டது என்று சொல்லப்பட்டு விடுமோ என்கின்ற எண்ணத்தாலும், அவை களை இந்த அளவிலே அதாவது, வெளியில் உள்ள மற்றவர்களுக்கு தெரியா
ததற்கு முன்னமே அடக்கிவைக்க முயலலாமா என்கின்ற எண்ணத்தின் மீதும் வெளிப்படுத்தாமல் விட்டுவிடுகின்றோம். முடிவாக நாம் இரு கட்சி யாருக்கும் எச்சரிக்கை செய்வது என்னவென்றால், முக்கியமாக காங்கிரசின் ஊழல்கள் வெளியாக நேரிட்டதாலாயேதான் ஜஸ்டிஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் கிடைத்துவந்தது. ஆகையால் இது போலவே ஜஸ்டிஸ் கட்சியின் ஊழல்களால் காங்கிரசுக்கும் மற்றும் அது போன்ற ஸ்தாபனங்களுக்கும் நமது நாட்டில் மக்களின் செல்வாக்கும் ஆதரவும் இருக்கும்படி செய்துவிடக் கூடாதென்று எச்சரிக்கை செய்கின்றோம். கடைசியாக திரு.இராமசாமி முதலியார் அவர்கள் சென்ற வருஷம்போலவே யாரும் எவ்வித குற்றமும் சொல்வதற்கில்லாமல் கார்ப்பொரேஷன் வேலையில் மிக நெருக்கடியான சமயங்களில் கூடமிக்க பொறுமையாயும் சாமர்த்தியமாயும் நடந்து வெற்றி பெற்றது போலவே இவ்வருஷமும் கார்ப்பொரேஷன் வேலையில் பொதுஜன செல்வாக்கையும் ஆதரவையும் பெறுவார் என்று உறுதியாய் நம்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.11.1929
குடி அரசு - 1929 @) 288
மணமுறையும் புறரோகிதமும்
ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விருபாலார்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமூகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது. மனித சமூகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும், மனித சமூகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை, வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள். உட்புகுந்துவிட்டமையாலும் பொதுசனங்கள் அறிய இவ்விருபாலர்க்கும் மணவினை ஏற்படுதல் அவசியமாயிற்று. இன்றேல், பெண்கள் ஏமாற்றப் படுவார்கள் என்பது திண்ணம். மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொது வாதலால், குழந்தைகளைப் பொறுத்தவரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள். அறியநிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று. எனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண்: இணக்கம்மணம் என்ற பெயருடனும், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமூகங்களால் கையாளப்பட்டு வருகின்றன. ஆதித்தமிழர். கள்தங்கள் மணவினைகளை காதல் வயப்பட்டு நடாத்தினார்கள். ஆண் பெண்: இணக்கம் ஏற்பட்ட பின்னரேயே தாய் தந்தையர்கட்கும் ஊர்த் தலைவர்கட்கும் தெரியப்படுத்தி விழாச் செய்வது வழக்கமாய் இருந்தது. இவ்வொப்புயர்வற்ற அறிவுடைய மணமுறையைப் பற்றி நாம் நமது சங்க நூல்களில் பரக்கக் காண்பதுடனின்றி, இற்றைக்கும் பர்மா தேசத்திலும், இந்தியாவுடன் ஒரு
காலத்தில் ஒன்றுபட்டிருந்த சுமத்ரா, ஜாவா, வாலி முதலிய தீவுகளிலும்
காணக்கூடும். ஆதலின் மணமுறைக்குப் புரோகிதருக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் புரோகிதத்தைப் புகுத்திய, பிறந்தது முதல் இறக்கும் வரையில் பார்ப்பனரல்லாத குடும்பங்களில் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் காசைப் பறிக்க சூழ்ச்சி செய்த பார்ப்பனர்கள். மணவினையினையும் தமது மகசூலில் சேர்க்காமலாயிருப்பார்கள் எனவும்
தமிழர் மணவினையிலும் பார்ப்பன புரோகிதர் புகுந்து கொண்டனர். இது சொற்ப காலமாக அனுசரிக்கப்படும் ஒரு வழக்கமாகும். ஆனால் பார்ப்பன புரோகிதனோ வேறு எந்த புரோகிதனோ இல்லாமல் மணவினை நிகழ்த்தக் கூடுமா? அவ்வாறு நிகழ்த்தினால், அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா? என்பது கேள்வி. இத்தகைய கேள்விக்கே நாம்
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வருந்துகின்றோம். இத்தகைய கேள்வி ஏற்படும் ஒரு நிலைமைக்கும் நாம் மிகவும் துக்கிக்கின்றோம். பார்ப்பனர் அர்த்தமற்ற, தனக்கே விளங்காத. சிலவார்த்தைகளை மந்திரம் என்னும் பெயரால் உச்சரித்து;மணமக்கள் முகத்தை
சுட்டுப் பொசுக்கி கண்களிலிருந்து நீர்வடியச் செய்து அம்மியை மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதுமான மூடச் சடங்குகள் சிலவற்றைப் புரிவித்து, ஒவ்வொரு
சடங்கிற்கும் “சுவர்ண புஷ்பம்” பெற்று மூட்டை கட்டிக்கொண்டு போனாற்றான். விவாகம் முடிந்ததாக அருத்தம் என்று மதியுள்ளவர்கள் கூறுவார்களா? இடைக்காலத்தில் சில காலம் மாறுதற்கேற்ப ஒரு குருட்டு வழக்கம் பீடித்ததா னால் இவ்வழக்கத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பது ஒரு அறிவுடைய நிர்பந்தமா? இந்தநிர்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும்? அரசாங்கச் சட்ட மூலமாக பார்ப்பனரை வைத்துத்தான் விவாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வரையறையை வற்புறுத்துவது, மூடச் சடங்காகிய புரோகிதத்தை அரசாங்கமே ஆதரவு செய்வதாகும். பெரும்பான்மையான தமிழ்மக்கள் பார்ப்பனர்களையே வைத்து விவாகம் செய்து கொள்ளுவது இல்லை. சில காலமாய் நடைபெறும் சீர்திருத்த விவாகங்களிலும் பார்ப்பனர்
களும் பார்ப்பனீயமும் நீக்கப் பெற்றுள்ளது. மேலும் தமிழர்களில் பிரம்ம சமாஜம் போன்ற இயக்கங்களைத் தழுவி நிற்பவர்களும் புரோகித முறையை அநுட்டிப்பவர்களன்று. எந்த விதத்தாலும் புரோகிதம் என்ற ஒரு விலாசம் இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, விவாக முறையில் புரோகிதர்கள் குறுக்கிடுவதை தமிழ் மக்கள் சுயமரியாதை. யுடன் நீக்குவார்களாயின், இம்முறையில் நிகழ்ந்த மணங்களை இவ்வரசாங்க.
மும் சரி, எவ்வரசாங்கமாயினும் சரி அங்கீகாரம் செய்துதான் ஆக வேண்டும். இதை ஒழித்து மலாய் நாட்டில் பார்ப்பனரின்றி செய்த ஒருமணத்தைமணமாக அங்கீகரிக்கமறுத்த செயலை நாம் வன்மையாய் கண்டிப்பதுடனின்றி திரு.எஸ். வீராசாமி அவர்கள் மேற்கூறிய முறையில் தமிழரின் மனப்பான்மையை எடுத்துக் காட்டி, தமிழர் மணங்கட்கு புரோகிதன் அவசியமில்லை என்று குறிப்பிட்டதையும், நாம் பாராட்டுகின்றோம்.திரு.எஸ்.வீராசாமி அவர்களைப் போன்றே நமது கூற்றை ஆதரித்து புரோகிதத்தைக் கடிந்து வெளியிட்டுள்ள திருசுப்பையா நாயுடுவின் செயலையும்,நாம் மும்முறையும் போற்றுகின்றோம்.
இந்நிலையில் மலாய் நாட்டுக்குச் சென்று தமிழர் உதவியால் வயிறு. வளர்க்கும் ஒரு ஐயங்கார் பத்திரிகையாய “தமிழ்நேசன்” புரோகிதத்தை ஆதரிப்பதும், சுயமரியாதை கொள்கைக்கு எதிராகப் பிரசாரம் புரிவதும் வியப்பன்றே.
குடி அரசு - கட்டுரை - 24111929
குடி அரசு - 1929 @) 290
திருப்பதி வணங்கிடாசபைதியினண்
நண்றி ஊட்ட தண்மை
திருப்பதிவெங்கிடாசலபதி என்னும் கடவுளால் நமதுநாட்டிற்கு உள்ள
நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு வதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி
இருந்தோம்.
தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூசையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங்களையும், பூமியையும், கட்டிடங் களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும் நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள் தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும், மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்கு பைத்தியம் பிடிக் கச்செய்து அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலி சாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச்சைக்கு பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கிடாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்னவேண்டும்?
குடி அரசு - கட்டுரை - 24.11.1929
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இராமாயணமும் யார்ப்பண்ய தந்திரமும்
முதலாவது திருஆச்சாரியார் இராமாயணத்தை ஒரு மத சம்பந்தமான புஸ்தகமாய் கருதுகின்றாரா? அல்லது இலக்கிய சம்பந்தமான ஒரு பொது கதை:
புஸ்தகமாய் கருதுகின்றாரா? என்பதே நமது கேள்வி. ஒரு சமயம் அவர் அதை இலக்கிய நூலாகக் கருதுவதாயிருந்தால் அந்தப்படி கம்பராமாயணத்தை
மாத்திரம் கருதுகிறாரா? அல்லது வால்மீகி இராமாயணத்தையும் சேர்த்து கருதுகிறாரா? அல்லது இரண்டையுமே கருதுகின்றாரா என்பதே இரண்டாவது கேள்வியாகும். நிற்க, திரு.ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் “இராமாயணம் நடந்த கதை அல்ல” என்று ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அதைப் பற்றி மற்றவர்கள் விவகரிப்பது தப்பு, மூடத்தனம் என்கின்றார். இந்த புத்தி இவர்களுக்கு இவ்வளவு நாளாக எங்கு போயிற்று என்று கேட்கின்றோம். இராமாயணம் பொய் என்றுநாம் சொன்ன காலத்தில் நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்ன இந்தக் கூட்டத்தார்கள் இப்போது தாங்களாகவே இராமாயணம் பொய், அதைப்பற்றி ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இப்போது இவர்களுக்கு ஏன் வந்தது? என்று பார்ப்போமானால். இராமாயணக் கதை பூராவையும் வெளியில் இழுத்து, அதன் வண்டவாளத்தை வெளிப்படுத்த தைரியம்கொண்டதால் இப்போது “போதும் போதும் இராமாயணம் நடந்ததல்ல பொய்” என்று சொல்ல வந்துவிட்டார். ஏன் அப்புத்தகத்தில் இருப்பதாக நாம். வெளிப்படுத்தி வந்த விஷயங்களில் ஒரு வார்த்தையைக் கூட ஆக்ஷேபிக்க முடியாமல் போய்விட்டதேதான் என்பதை மாத்திரம் இனி யாரும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாய்விட்டது.
“காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வொஸ்துரு” என்கின்ற ஆந்திரப் பழமொழிப்படி பத்துக்கு அடிப்போட்டால் தான் அய்ந்துக்காவது வருவார்கஸ் இராமாயணம் ஆரியர் திராவிடர் சரித்திரம் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்ல வந்த பிறகே தான் இராமாயணம் பொய் என்று பார்ப்பனர்கள் சொல்லித் தீரவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டார்கள். இல்லாவிட்டால் இராமாயண: ஆராய்ச்சியால் பார்ப்பனக்கொடுமை வெளியாகி விடும் என்கின்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. தவிரவும் திரு.ஆச்சாரியார் “ராமனை போற்றுகின்றவர்களை எப்படி மூடர்களாகக் கொள்ளுகின்றேனோ அவ்வாறே இராவணனை போற்றுகின்றவர்களையும் மூடர்களாக கருதுகின்றேன்” என்று
சொல்லுகின்றார்.அப்படியானால் இந்தப் புத்தியும் இவருக்கு இத்தனை நாளாக
குடி அரசு - 1929 @) 292
எங்கு போய் இருந்தது என்று கேட்கின்றோம். இராவணனை யாரும் கடவுள். என்று சொல்லிப் போற்றுவதே இல்லை.ஆனால், இராமனை கடவுள் அவதாரம் என்றும், கடவுளே என்றும் சொல்லிபோற்றி வணங்குகின்றார்கள். அதுவும் வெகுகாலமாய் அப்படிச் செய்து வருகின்றார்கள். இராவணனையோ என்றால்
நேற்று முதற்கொண்டுதான் போற்ற ஆரம்பித்தார்கள். அதுவும் ஏனென்றால் ராமன் கடவுள் அவதாரமல்ல என்று சொன்னவர்களை நாத்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும் திருஆச்சாரியார் கூட்டம் சொன்னதால், “சரி அப்படியானால் இராமாயணக் கதைப்படியேஇராவணன் யோக்கியன், அவன் போற்றப் பட வேண்டியவன். இராமன் அயோக்கியன், அவன் இழித்துப் பழிக்கப்படவேண்டியவன்” என்று மெய்ப்பிக்க மக்கள் துணிந்து ஆரம்பித்த பிறகே இப்போது திரு ஆச்சாரியார் “பிச்சைபோடாவிட்டாலும்பரவாயில்லை. நாயை பிடித்துக் கட்டு” என்கின்ற பழமொழிப்படி யார் ராமனை வணங்கா விட்டாலும் பரவாயில்லை ராவணனைப் போற்ற வேண்டாம் என்று சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார். மற்றும், இராமனுக்கும் இராவணனுக்கும்பெயரளவில் வியாக்கியானம் செய்வதில் இராமன் என்கின்ற பெயரை விட இராவணன் என்கின்ற பெயருக்கு அதிக மதிப்பு கொடுக்கவும்
வந்துவிட்டார். ஆனால் அதை பித்தலாட்டமான முறையில் சொல்லுகின்றார். என்னவென்றால் இராமன் என்பது இரா - மன் - இராமன் - இல்லாத அரசன்
என்றும் இராவணன் என்பது இராமனின் அண்ணன் என்றும் பொருள்படுவதாக வடமொழியை தென்மொழியில் அர்த்தப்படுத்தி காட்டி ஏய்க்கப்பார்க்கிறார்.
தவிரவும் “இராமாயணம் பொய்க்கதை ஆகையால் இராவணன் பெருமையைப் பற்றிப் பேசுவது மூடநம்பிக்கை” என்கின்றார்.
உண்மையிலேயே திரு. ஆச்சாரியார் மூட நம்பிக்கைக்காக பரிதாபப் படுபவரானால் அவருடைய முதல் வேலை இராமாயண ஆராய்ச்சிக்காரரை
யும் இராமாயண இரகசியம் வெளிப்படுத்துபவர்களையும் திருத்துவதல்ல என்றும், மற்றென்னவெனில் ராமாயணத்தின் பெயரையும் ராமன் பெயரையும் சொல்லிக் கொண்டு செட்டிநாட்டில் கொள்ளை அடிக்கும் சோம்பேறி அயோக்கியர்களையும், இராமாயணத்தையும் ராமனையும் உண்மை என்று நம்பிக்கை கொண்டு மேற்படி அயோக்கியர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் முழு மூடர்களையும் திருத்த வேண்டியதே முதல் வேலையாகும். என்று மறுபடியும் திரு. ஆச்சாரியாருக்கு சொல்லுகிறோம். மற்றபடி அந்த வேலையை விட்டுவிட்டு “இராமனுக்கு கொடுத்தால் இராவணனுக்கும் கொடுங்கள்” “இராமன் யோக்கியனென்றால் இராவணன் அவனை விட யோக்கியன்” என்று சொல்லுகிறவர்களிடம் வந்து இவர் பரிதாபப்பட வேண்டியதில்லை என்பதே நமது கருத்து. தவிரவும் “ராமன் க்ஷத்திரியனே தவிர பிராமணன் அல்ல” என்கின்றார். இராமன் பிராமணனானாலும், க்ஷத்திரியனானாலும் தவம் செய்ததற்காக ஒரு சூத்திரனைக் கொன்றான் என்று எழுதியிருப்பதால் அவன் பிராமணத் தன்மை கொண்டவனும் பிராமணனை
293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
&l அதிகமான அயோக்கியனும் என்று தான் கொள்ள வேண்டியதே தவிர அதில் ஒன்றும் விதிவிலக்கு இருப்பதாகவும் நமக்கு சிறிதும் தோன்றவில்லை.
இனி கம்பரைப் பற்றி திரு. ஆச்சாரியார் மிகப் புகழ்ந்து அவருக்கு வக்காலத்து பேசுகிறார். திருவள்ளுவரை தலைகாட்டாமல் அடித்த இந்தப் பார்ப்பனர்களுக்கு கம்பர் மீது இவ்வளவு கருணை வந்ததற்குக் காரணம். என்னவென்றுப் பார்த்தாலே கம்பர் யோக்கியதை நன்றாய் விளங்கும். கம்பரை: ஷேக்ஸ்பியர், ஹோமர், ஷெல்லி முதலிய மேல்நாட்டு கவிகளுக்கு ஒப்பிட்டு ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இந்தியா வேண்டுமா? என்று ஒரு ஆங்கிலேயனைக் கேட்டால் அவன் ஷேக்ஸ்பியர் வேண்டுமென்றுதான் சொல்வான் என்று இதற்கு உதாரணங்காட்டி கம்பராமாயணம் என்கின்ற காவியம் இந்திய நாட்டை விடசிறந்தது என்று சொல்லுகின்றார். அதாவது இந்தியாவை இழந்தாவது ராமாயணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். இது சிறிதாவது பொருத்தமுள்ள உதாரணம் என்றோ அறிவுள்ள உதாரணம் என்றோ யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் ஆங்கிலேயர்களில் எந்த முட்டாளும் கடவுளாகக் கும்பிடுவதில்லை என்பதையும் ஷேக்ஸ்பியரிலும்ஷெல்லியிலும், வரும் நாடக பாத்திரர்களுக்கு ஆங்கிலேயரில் எந்தமடையனும் கோயில்கட்டி, கல்யாண உற்சவமும், தெப்ப உற்சவமும், வைரத்திலும் செகம்பிலும் நாமமும் நகையும் போடுவதில்லை என்பதையும் திரு ஆச்சாரியார் அறியாரா? அல்லது அறிந்தே ஏய்க்கிறாரா? என்று கேட்கின்றோம்.
தவிரவும் நமக்கு இராமாயணத்தில் உள்ள தகராரெல்லாம் ராமனையும் சீதையையும் அநுமாரையும் கடவுளாகக் கும்பிடுவதிலேயே ஒழிய கவி
நயத்தில் அல்ல என்பதை திரு ஆச்சாரியார் தெரிந்து கொள்ளாதது விசனிக்கத்
தகுந்ததேயாகும். தவிரவும் திரு ஆச்சாரியார் கம்பரானவர் உலக நன்மையை கோரிபொருள், போகம், வேகம் ஆகியவைகளை மக்களுக்கு ஊட்டுவதற்காக ஒரு வீரனது கதையை எழுதியதாக சொல்லுகின்றார். இந்த இடத்தில் திருஆச்சாரியாரின் கருத்து கம்பராமாயணமானது மக்கள் ஒழுக்கத்திற்கேற்ற கதைச்சுவை உடையது என்பதேயாகும். இங்குதான் கம்பஇராமாயணத்திற்கும்
நமக்கும் தகராறு இருக்கின்றது என்கின்றோம். அதாவது ஆச்சாரியார் கருத்தில் கம்பர் ராமனை வீரனாகக் கொண்டு எழுதினாரா அல்லது இராவணனை வீரனாகக் கொண்டு எழுதினாரா என்றும் கேட்பதோடு கம்பர் ராமனைத் தான் வீரனாக்க கொண்டு எழுதி இருப்பார் என்றே எண்ண வேண்டியிருக்கின்றது என்றும் ஏனெனில் அதற்கு பெயர் ராமாயணம் என்று ஏற்பட்டிருப்பதால் இராவணனைக் கொண்டல்ல என்பது வெள்ளிடை மலையாகும். திரு.
ஆச்சாரியாரின் இராமாயண ஆராய்ச்சி அறிவுப்படி இராமாயண இராமன் வீரனாவானா? என்பதே நமது கேள்வி.சரி கம்பர்தான் ராமாயணத்தை வீரர். கதையாகக் கொண்டெழுதினார் என்று வைத்துக் கொண்டாலும் வால்மீகி உலக. நன்மைக்காகராமாயணத்தை வீரர் கதையாக எழுதினாரா? அல்லது பார்ப்பனர்
குடி அரசு - 1929 @) 294
களின் வயிற்றுப் பிழைப்பு கதையாக எழுதினாரா என்று கேட்கின்றோம்.
தவிர திருஆச்சாரியார் “ஷேக்ஸ்பியர் ஆங்கிலேயராயிருந்தும் டென்மார்க்குஅரசரைப் பற்றி ஒரு நாடகம் எழுதினது போல் கம்பரும் இராமர். கதையை எழுது முறையா” என்று சொல்கின்றார்.
இதை எதற்காக எடுத்துச் சொன்னார் என்பதற்கு ஆதாரம் அப்பிரசங்கத்தில் காணப்படவில்லையானாலும் ஒரு திராவிட கவி ஆரிய (வடநாட்டு) அரசன் கதையை ஏன் எழுதினார் என்பதற்கு சமாதானம் சொல்லவே இதைச் சொல்லி இருக்கின்றார். ஆகவே, அக்கதை வடநாட்டு அரசன் கதை என்பது திருஆச்சாரியாரை அறியாமலே வெளியாய்விட்டது பற்றி மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், ஆச்சாரியார் விஷயத்தில் பரிதாபப் படாமலுமிருக்க முடியவில்லை. கம்பர் ஒரு வீரன் கதை எழுதுவதாக கருதி எழுதியிருப்பாரானால் இந்து மத வருணாச்சிரம தர்மங்கள் அதில் புகுந்திருப் பதற்கு என்ன காரணம் என்பதற்கு திரு.ஆச்சாரியார் ஒரு சமாதானமும் சொல்லவே இல்லை.தவிர ராமன் உண்மை, நன்மை, அழகு என்கின்ற மூன்று லட்சியங்களின் பிரதிநிதி என்று சொல்லுகின்றார். ஆனால் ராமனிடம் என்ன உண்மை, என்ன நன்மை, என்ன அழகு இருந்தது என்று மாத்திரம் எடுத்துச் சொல்லவில்லை. ஆகவே, திருஆச்சாரியார் கூட்டத்தினிடம் உள்ள இந்த மனப்பான்மையின் யோக்கியதையை வெளிப்படுத்தத்தான் இராமாயண: ஆபாசம், இராமாயண இரகசியம், இராமாயண ஆராய்ச்சி ஆகியவைகள் வெளியாக வேண்டியிருக்கின்றது என்பதை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம். தவிரவும் ராமன் என்பதற்கு மகிழ்விப்பவன் என்றும் ராவணன் என்பதற்கு அழச் செய்பவன் கஷ்டப்படுத்துபவன்! என்றும் பொருள். கூறுகின்றார். இது எந்த அகராதியில் இருக்கின்றதோ தெரியவில்லை.எப்படி இருந்தாலும் இராமாயணக் கதைப்படி இராமன் யாரை மகிழ்வித்தான்?' இராவணன் யாரை அழ வைத்தான்? என்பது வெளியாக வேண்டாமா என்று கேட்கின்றோம். தவிரவும் இராவண ராஜ்யத்தில் பொருள் செருக்கு, கல்வி செருக்கு இருந்ததாக திரு ஆச்சாரியார் சொல்லுகின்றார். இதற்கு ஆதாரம். இலங்கை 700 யோசனை தூரமும் உலகில் உள்ள உயர்ந்த பொருள்கள் எல்லாம் அங்குஇருந்தனவாம்.ஆனால்ராமராஜ்யத்தில் என்ன இருந்தது என்பதேஇவர் காட்டவே இல்லை. அங்கிருந்த பார்ப்பன செருக்கையும், அறுபது ஆயிரம் பெண்டாட்டியை கட்டிக் கொண்டு பிள்ளையில்லாமல் யாகம் செய்து பிள்ளை: பெற்ற ஆண்மையற்ற பார்ப்பனியச் செருக்கையும், பெண்டாட்டி மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டு போய் விட்டுவிட்ட அற்ப புத்தி செருக்கையும்,கொடுமைப்புத்திச்செருக்கையும் அடியோடுமறைத்து விட்டார். மொத்தத்தில் ராமாயணம் நடந்த கதையா? பொய்க்கதையா? என்பது நமது கவலையே அல்ல.ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டாவது ராமாயணக் கதை மனிதத்தன்மையும் ஒழுக்கமும் படிக்கத்தகுந்ததுமான கதையா என்பதே நமது கேள்வி.இதற்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லுவதற் கில்லாமல் வெறும்.
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தந்திரமும் சூழ்ச்சியும் பித்தலாட்டமும் செய்வதில் என்ன பலன் அடையக்கூடும் என்று இந்தக் கூட்டத்தார்கள் நினைக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
தவிர கம்பராமாயணத்தை கவி அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்கின்றார். அப்படியானால் வால்மீகி ராமாயணத்தை என்ன அழகுக்காக காப்பாற்ற வேண்டும் என்றோ அல்லது அதை ஒழிக்க வேண்டுமென்றோ திருஆச்சாரியார் ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லை.
சாதாரணமாக இந்தக் கூட்டத்தார் நாம் வால்மீகிராமாயணத்தைக்குற்றஞ் சொல்லும்போது கம்பர் “கவிநயத்தைக்”” கொண்டு வந்து போட்டுத் தப்பித்துக் கொள்ளுவதும் கம்பர் கவிநயத்தைக் குற்றம் சொல்லும் போது வால்மீகி ராமாயணத்தின் “தத்துவார்த்தத்தை”ச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் குலதர்மமாகப் போய்விட்டது.
தவிர கம்ப ராமாயணத்தை உண்மைக் கதை என்று நினைத்திருந்தால் வால்மீகி எழுதியிருப்பதற்கு மாறுபாடாக எழுதி இருப்பாரா என்று திருஆச்சாரி
யார் கேட்கின்றார். நாமும் கம்பராமாயணத்தை உண்மைக் கதை என்று நம்பினார் என்று சொல்ல வரவில்லை. ஆனால் கம்பரும் பார்ப்பனர்களும்
சேர்ந்து மற்ற மக்களை ராமாயணம் உண்மைக் கதை என்றும் ராமன் கடவுள் என்றும் நம்பச் செய்வதற்காக செய்த சூழ்ச்சி என்று தான் சொல்கின்றோம். தவிரவும் கம்பருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்றும், வால்மீகி ராமாயணத்தை பார்ப்பனர் மொழி பெயர்த்துச் சொல்ல அதை அனுசரித்து கவி உண்டாக்கியதாகவும், நினைத்தபடி சிலபுரட்டுகள் இருப்பதால் கம்பருக்கு வால்மீகி ராமாயணத்தில் இன்னது இருந்தது என்று தெரியுமா என்று நினைப்பதற்கில்லாமல் இருக்கின்றது என்று சொல்லி சில கம்பதாசர்கள் தப்பித்துக்கொள்வதையும் பார்த்திருக்கிறோம்.தவிர திருஆச்சாரியார் கடவுள் உண்டா இல்லையா என்கின்ற விவகாரமே இந்து மதத்தில் இல்லை என்றும் ஒவ்வொருவனும் தன்னைத் தானே கடவுள் என்று நினைத்துக் கொள்வதே. வேதத்தின் முடிவான கொள்கை என்றும் ஒவ்வொருவருடைய உயர்ந்த. லட்சியங்களே கடவுள் என்றும் சொல்லுவதோடு மற்றும் அதற்கு நேர். விரோதமாய் ரசாயன ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும், வான சாஸ்திர ஆராய்ச்சியில் கடவுள் இல்லையென்றும் இதை ஒப்புக் கொள்ளாதவர்களே நாஸ்திகர்கள் என்றும் சொல்லுகின்றார். இது கடவுள் சம்பந்தமாக மக்களை குழப்பத்திற்குள்ளாக்குவதையும் சமயம் போல் பேசத் தக்கபடியான
முன்னுக்குப் பின் முரணையும் காட்டுகின்றது. இதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில், சயன்சுக்கும் அதாவது விஞ்ஞான சாஸ்திரத்திற்கும் கடவுளுக்கும் சண்டை துடங்கியாய் விட்டது.
கடவுளை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய அவதாரங்கள் வந்தாலும், மதங்களை நிலை நிறுத்த எவ்வளவு பெரிய கடவுள் தன்மை வாய்ந்தவர்கள்.
குடி அரசு - 1929 @) 296
வந்தாலும் யார் தவங்கிடந்தாலும் அதுவே பார்த்துக் கொள்ளும். கடைசியாக,
ராமாயணம் என்பது எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் நாட்டுக்கு மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதை எடுத்துக்காட்டவும் இதற்கு விரோதமாய்
கிளம்பும் எதிர்ப்புகளுக்கு சமாதானம் சொல்லவும், இந்த வியாசமானது இவ்வளவு நீட்டி எழுதப்பட்டது என்பதோடு இதை முடிக்கின்றோம்.
குறிப்பு - 17.111929 குடிஅரசு தொடர்ச்சி
குடி அரசு - கட்டுரை - 24.11.1929
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சென்ற வாரத்திற்கு முந்திய வாரத்தில் “இந்தியக் கடவுள்கள்” என்ப தைத் தலையங்கப் பெயராகக் கொண்டு ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். அதாவது இந்தியாவில் உள்ள பதினாயிரக்கணக்கான கோயில்களில் ஒன்றாகிய திருப்பதி கோயில் என்கின்ற ஒரு கோயிலுக்கு மாத்திரம் வருடம் ஒன்றுக்கு 20 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வரும்படி உள்ளதென்றும், இந்த வருமானம்
பெரிதும் யாத்திரைக்காரர்களால், அதாவது, இமயமலை முதல் கன்னியாகுமரி. வரையிலிருந்து செலவு செய்து வரும் யாத்திரைக்காரர்களால், காணிக்கையா கவும்வேண்டுதலை என்னும் பெயரால், தங்கம், வெள்ளி,ரத்தினங்கள் ஆகிய நகைகள் முதலிய அரும் பொருள்களாகவும் மற்றும் பலவாறாய் கொடுக்கப்
படுகின்றதென்றும், மேலும் திருப்பதி என்கிற இந்த ஒரு வேதஸ்தானத்திற்கு மாத்திரம் கட்டிடம், நகை, வாகனம், சாமான், பூமி ஆகியவைகளில் ஏழு கோடி ரூபாய்க்கு மேல்பட்டும் மதிப்பிடக்கூடிய சொத்துக்கள் முடக்கமாய் இருக்கின்ற தென்றும், இவைகளால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு ஒருகோடி ரூபாய் போல் திருப்பதி வெங்கிடாசலபதி சாமியால் மாத்திரம் ஏழை இந்திய தேசப்பணம் வீணாகின்றதென்றும், இன்னும் இதுபோல் இந்தியாவில் எத்தனையோ கடவுள்களும், புண்ணியஸ்தலங்களும் இருக்கின்றன வென்றும் அவைகளுக்கும் இது போலவே வரவு செலவுகணக்குகள் போட்டுப் பார்த்தால் மேற்கொண்டும் இத்துடன் இனி எத்துணையோ கோடி ரூபாய்களாகும் என்றும் அதாவது இப்போது நாம் கொடுமையான அரசாங்கம் என்று சொல்லும்
பிரிட்டிஷ் அரசாங்கத்தார் நம்மிடம் “மிகக் கொடுமையாய்” வசூலிக்கும் வரியைவிட குறையாத தொகையாகும் என்றும், ஆகவே இந்தியாவின்
தரித்திரத்தையும், கல்வி, பகுத்தறிவு, தொழில்திறம், ஆராய்ச்சி ஆகியவைகள். இல்லாமையையும், அடிமைத்தனத்தையும் ஒழிக்க வேண்டுமானால், முதலாவது இவ்வித கடவுள்களும், புண்ணியஸ்தலங்களும் பூகம்பத்தின் மூலமோ, புயல் காற்றின் மூலமோ, சமுத்திரம் பொங்கி வருதல், மண்மாரி,
கல்மாரி, பேரிடி, எரிமலைக் கொந்தளிப்பு இவைகள் மூலமோ, அடியோடு. அழிந்து பாழாகி மண்மூடிப் போனாலொழிய வேறு மார்க்கமில்லை என்பதாகவும் பொருள்பட எழுதி இருந்தோம்.
ஆனால், அந்த வியாசம் எழுதி எழுதுகோலை கீழேவைக்கும் முன்னரேயே, வியாசம் எழுதிய எழுத்துக்களின் இங்கியின் ஈரம் புலர்வதற்குள்ளாகவே, இந்திய மடாதிபதிகள், அரசர்கள் என்னும் தலைப்புப்
குடி அரசு - 1929 @) 298
பெயர்கொடுத்து ஒரு தலையங்கம் எழுத நேர்ந்ததற்கு நாம் மிகவும் வருந்து கின்றோம். என்னை? திருப்பதிக் கடவுளுக்கு அடுத்தபடியாக திருவாங்கூர். அரசாங்கம் என்பது பற்றியும், சங்கராச்சாரிகள் என்பது பற்றியும் நாம் எழுத நேர்ந்ததால் திருவாங்கூர் அரசாங்கம் என்பது சுதேச சமஸ்தானங்கள் என்று இந்திய அரசர்களால் ஆளப்படும் தேசங்களில் இது ஒரு நடுத்தர அரசாங்க
மாகும். இந்த அரசாங்கத்தின் எல்லை சென்னை மாகாண ஜில்லாக்களில் இரண்டு ஜில்லாக்களுக்கு அதாவது சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களுக்கு சமானமானதாக இருக்கும். இதன் சனத்தொகை சுமார் நாற்பது லட்சமாகும். இதன் பரப்பு7500 சதுரமைல்களாகும். இந்த நாற்பது லட்சம் சனத்தொகையில் ஏறக்குறைய சரி பகுதி சனங்கள், அதாவது இருபது லட்சம் பேர்கள் இந்துக்
கள் அல்லாதவர்களான கிறிஸ்துவர்களும், மகமதியர்களுமே யாவார்கள். எஞ்சி உள்ள இருபது லட்சத்திலும் சுமார் பன்னிரண்டு லட்சம்பேர்கள். தீண்டக்கூடாதவர்கள், தெருவில் நடக்கக்கூடாதவர்கள், கண்ணில் தென் படக்கூடாதவர்கள் ஆகிய மிருகங்களிலும் கீழானவர்கள் ஆவார்கள். இப்படியாக முப்பத்தியிரண்டு லட்சம் சனங்கள் போக எஞ்சியுள்ள சுமார். எட்டு லட்சம் பேர்களே, “ஜாதி இந்துக்கள்” அதாவது, மனித உரிமை யுடையவர்கள் ஆவார்கள். இதில் 50,000 பேர்கள் பார்ப்பனர்கள். இப்படி யாக 40 லட்சம் சனத்தொகை கொண்ட இந்த அரசாங்கத்திற்கு வருஷாந்திர. (ரிவினியூ) வருமானம் சுமார் எழுபது லட்ச ரூபாயாகும். எனவே, இந்த நிலையில் உள்ள மேற்படித் திருவாங்கூர் ராச்சியத்தில் தேவஸ்தான சம்பந்தமாக செலவு செய்யும் தொகையோ பதினேழு லட்ச ரூபாயாகும். இந்த
17 லட்ச ரூ. தொகையானது இந்து மத சம்பந்தமான தேவஸ்தானங்களில் செலவு என்று சொல்லப் பட்டாலும், இவைகள் ஏறக்குறைய, ஏன் முழுவதும், மேலே காட்டப்பட்ட 50 ஆயிரம் பார்ப்பனர்களுக்கே அவர்களது சாப்பாட் டிற்கே செலவு செய்யப்பட்டு வருகின் றது. ஒரே அரசன் தனதுராச்சியத்தில் உள்ள எல்லா மக்களிடத்திலிருந்தும் வரிவசூலித்து ஒரு “ஜாதி'க்குமாத்திரம் அதுவும் அநேகமாக வரி கொடுக்கக் கூடாத ஜாதியும், கஷ்டப்படாமல் பிறர். உழைப்பில் தேகம் நோகாமல் வாழ் கின்ற ஜாதியும், தங்களைத் தவிர மற்ற மக்களெல்லாம் கீழ்ஜாதி, இழிகுலத்தவர் கள்,தங்களது வைப்பாட்டி மக்களாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜாதியுமாகிய பார்ப்பனர்களுக்கே போய் சேருகின்றது என்றால், அந்த ராச்சியத்தின் நீதிக்
கும் புத்திக்கும் வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை. அந்தராச்சியத்தில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும் மற்றும் வெளி நாட்டிலிருந்து அந்நாட்டுக்குச் சென்று குடியேறும் பார்ப்பனர்கள். எத்தனை பேர்களானாலும் அவர்கள் அத்தனைப் பேருக்கும் ஆண், பெண், குழந்தை, குட்டிகள் சகிதம் அவர்கள் எந்த வேலையில் எவ்வளவு சம்பாதித்தாலும், எந்த உத்தியோகத்தில் எவ்வளவு சம்பளம் பெற்றாலும், எந்த வியாபாரத்தில் எவ்வளவு லாபம் அடைந்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பனர் என்கின்ற பேருக்கு மாத்திரம் தினம் இரண்டு
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வேளை கோயிலிலும் ஊட்டுப்பரை என்னும் சாப்பாட்டு சத்திரங்களிலும் தாராளமாகவும் நிரந்தரமாயும் சாப்பாடு போடப்பட்டு வருகின்றது. இது நிற்க: மற்றபடி, “பண்டிகை நாட்களிலும் “புண்ணியநாள்”கள் “விரதநாள்கள்”' என்பவைகளிலும் சிரார்த்த நாள்களிலும் மிகுதியும் விசேஷமான சாப்பாடும், தவிர பணமும் கால், அரை, ஒன்று என்பதாக தட்சணையும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர, மாதம் தவறாமல் உற்சவங்களுக்கும் இப்படியே நடக்கின்றது. இவைகள் தவிர அந்த நாட்டு பார்ப்பனரல்லாத உயர்ந்த ஜாதிபெண்கள் என்பவர்கள் பார்ப்பனர்களை புணருவது மோட்ச சாதனம்
என்றும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இதை தவிர ஆறு வருஷத்திற்கு ஒரு முறை ஜபம் என்னும் பெயரால் சுமார் எட்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு சடங்கும் கொண்டாடப்படுகின்றது. இச்சடங்கானது 56 நாள்களுக்கு தொடர்ச்சியாய் நடத்தப்படுவதாகும். இந்த ஐம்பத்தியாறு நாள்களுக்கும்
சுமார் பதினையாயிரம் பார்ப்பனர்கள் வரை மூன்று வேளை உணவுகளும், ஒவ்வொரு வேளைக்கும் பத்து இருபது வகை காய்கறிகளுட னும், 5, 6 வகை: பலகாரங்களுடனும், 2, 3 வகை பாயாசங்களுடனும், 2, 3 வகை அப்பளங் களுடனும் விருந்துகள் நடக்கும். இவ்விருந்து செய்வதற்காக சமையல் காரர்கள் மாத்திரம் தினம் ஆள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று ரூபா கூலியில் 600, 700 பேர்கள் அமர்த்தப்படுவார்கள். தவிரவும் மேற்கண்ட பதினை யாயிரம் பேர்களுக்கும் தினம் இவ்வித விருந்தளிப்பதுடன் நபர் ஒன்றுக்கு நாலணா எட்டணா ஒரு ரூபாய் வீதம் தட்சணையும் கொடுப்பார்கள். மற்றும் ஆயிரக்கணக்கான பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை உடன் கூட்டிக் கொண்டு போய் அவைகளையும் பார்ப்பன பிள்ளைகள் என்று காட்டி அவைகளுக்கும் தட்சணை வாங்கிக் கொள்ளுவார்கள். அன்றியும் தூர தேசங்களில் இருந்து வரும் பதினாயிரக்கணக்கான நம்பூதிரி பார்ப்பனர்க ளுக்கு போக வர பிரயாணச் செலவும் சாப்பாடு, தட்சணையும் கொடுத்து ஆள் ஒன்றுக்கு ஒவ்வொரு கட்டில் மெத்தை, இரண்டு தலையணை, சால்வை நான்கு, நான்கு ஜோடி வேஷ்டிகள் முதலியவைகளும் கொடுப்பார்கள்.
மற்றும் இவை போன்ற பல செலவுகளுக்காக மேற்கண்ட எட்டு லட்ச ரூபாயும் 56 நாள்களில் பஞ்சு பஞ்சாய்ப் பறந்து செலவாகிவிடும்.
இப்படி செலவு செய்து நடத்தப்பட்டும். இந்த முறை ஜபமானது எதற்காக என்றால், சுமார் 200 வருஷத்திற்கு முன் இருந்த ஒரு ராஜா அந்நாட்டில் செய்த ஏதோ ஒரு சிற்றரசர்கள் யுத்தத்தில் சில பார்ப்பனர்கள் இறந்து போனதால் அந்தப் பாவம் தீர்ந்து தங்களுக்கு சந்ததி விர்த்தியா
வதற்கு பிராயச்சித்தமாக இப்படி இந்த இருநூறு ஆண்டுகளாக ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு லட்ச ரூபாய் (அதாவது, அந்த பார்ப்பனர் களின் குடும்பத்திற்கு போய் சேரும்படி) செலவு செய்து முறை ஜபம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான முட்டாள்தனமான கொள்கை:
கள் உடையவர்களாகிய இந்து அரசர்களால் இந்தியா ஆளப்பட்டு வந்து இருந்ததினால்தான் இன்றைய தினம் இந்தியா ஆயிரக்கணக்கான
குடி அரசு - 1929 @) 300
வருஷங்களாக அந்நியநாட்டு நன்மையின் பொருட்டு அன்னியர்களால் ஆளப்படுவதில் ஏதாவது ஆச்சரியமிருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
நிற்க இந்தப்படி ஆறு ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து முறை ஜெப பிராயசித்தம் செய்து வந்தும், அந்த ராஜாங்கத்திற்கு சந்ததி இல்லாமல் அடிக்கடி சுவீகாரம் செய்துதான் பிள்ளைகள் உண்டாக்கி பட்டம் கட்டி ஆளப்பட்டு வருகின்றது. இதை அந்த ராஜியத்திலுள்ள ஒவ்வொரு ராஜாக்களும் ஆண்டு வந்திருந்தும், இம் மாதிரியான மூடநம்பிக்கை இவர்களை விட்டுப் போகவில்லையானால், இவர்கள் ஒரு நாட்டை ஆள யோக்கியதை உடையவர்களா என்று கேட்கின் றோம். நமது இந்து கடவுள்களைவிட இந்து ராஜாக்களால் இந்திய நாட்டு செல்வங்கள் இம்மாதிரி மதத்தின் பேராலும், சடங்கின் பேராலும் வருஷம் வருஷம் பல கோடிக்கணக்கான ரூபாய்களாக பாழ்படுத்தப் பெறுகின்றன.
திருவாங்கூர் ராஜாங்கம் வருஷம் வருஷம் இந்தப்படி இவ்வளவு லட்சரூபாய்கள் மத சம்பந்தமாகவும், சடங்கு சம்பந்தமாகவும் செலவு செய்து வந்தும் இன்றைய தினம் தோட்டத்தில் பகுதி கிணறு என்பது போல் அந்த ராஜாங்கத்தில் உள்ள மக்களில் அரைவாசிப்பேர் கிறிஸ்துவர்களும் மகமதியர். களுமாக இருக்கவும், மீதியிலும் அரையே அரைக்கால் வாசிப்பேர் “சண்டாளர் அதாவதுநிழல் கூட மேல்படக்கூடாதவர்களாக இருக்கவும்,ஆன நிலையில் இருக்கின்றதென்றால் இந்த மதமும் சடங்கும் ஒரு காதறுந்த ஊசிக்காவது உபயோகப்பட்டிருக்கின்றதா என்று தான் கேட்கின்றோம். கடந்த ஒரு ஆயிர வருஷ காலமும் இந்தியாவின் மற்றபாகமும், சுதேச அரசர்களால் ஆளப்படும் சுயராஜ்ஜிய தேசமாய், ராம ராஜ்ஜிய தேசமாய் இருந்திருக்கு
மானால், இந்தியாவிலுள்ள மலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு கோயில் களாகவும், பாறைகள் எல்லாம் உடைக்கப்பட்டு சாமிகளாயும், சொத்துக்கள். எல்லாம் அந்த சாமிகள் பேரில் எழுதிவைக்கப்பட்ட மானியங்களாகவும், பெண்களில் அரை வாசிப் பேருக்கு மேலாக அந்த சாமிக்கு பொட்டுக்கட்டி விடப்பட்டு தாசிகளாகவும்,மற்றும் அரைவாசிப்பேர் பார்ப்பனர்களைப் புணர்ந்
தால் மோட்சம் என்று கருதிக் கொண்டிருக்கின்றவர்களாகவும், இருப்பதோடு, இன்றையதினம் காப்பிக்கடையில் எச்சில் கிண்ணம் கழுவும் பார்ப்பனர் முதல்
தாசித் தெருவில் தரகுக்கடை வைத்திருக்கும் பார்ப்பனர் வரை ஒருவர் தவறா மல்,ரிஷிகளாகவும், முனிவர்களாகவும் சங்கராச்சாரிகளாகவும், மடாதிபதி களாகவும், ஜீயர்களாகவும் குலகுருக்களாகவும்,மகந்துகளாகவும் இருந்திருப்ப தோடு பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எல்லாம் அந்தப் பார்ப்பனர்களுக்கு தொண்டு செய்து கொண்டு அவர்கள் எச்சிலையில் மீதி விட்டதைப் பொறுக்கி சாப்பிட்டு கொண்டும், அவர்கள் கட்டி கிழித்து தெருவில் எறிந்து விட்ட கந்தைகளை கட்டிக்கொண்டு பார்ப்பனர்கள் வீட்டு வாயில்களில் மேல் வேஷ்டியில்லாமல் முழங்காலுக்குக் கீழாக துணி தொங்காமல் சுருட்டிக்கட்டிக் கொண்டு, இடதுகையை மடக்கி வலது கச்சத்தில் வைத்து வலது கையால் வாயைப் பொத்தி நின்று கொண்டிருக்க வேண்டி இருக்குமா? அல்லவா
301 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
என்பதை இன்றையதினம் திருவாங்கூரைப் பார்த்த எந்த தேசியவாதியாவது, மதத்தைக் காப்பற்ற தவம் கிடக்கும் மிதவாதியாவது, சடங்கைக் காப்பாற்ற உயிரைவிடும் ஆஸ்திகவாதியாவது ஆட்சேபிக்க முன்வரக் கூடுமா என்று கேட்கின்றோம்.இந்த இருபதாவது நூற்றாண்டில் உலகமே விஞ்ஞான சாஸ்திர
ஆட்சியில் இருக்கும்போதுநமது, நாட்டை இம்மாதிரி கடவுள்களும், சுயராஜ்ய அரசர்களும் பாழாக்குவதைப் பற்றியும் இழிவு படுத்துவதைப் பற்றியும், ஒருவருக்காவது வயிறுபற்றி எரியவில்லையானால்,நெஞ்சம்குமுரவில்லையா னால், இந்நாட்டுக்குத் தேசிய உணர்ச்சியோ தேசியச் சுயமரியாதையோ கடுகளவாவது இருக்கின்றதா என்று கேட்கின்றோம். தேசியம், தேசியம் என்று கடந்த அய்ம்பது வருடகாலமாய் அடிப்பட்ட நாய்கள் தங்கள் வீட்டு வாசற் படியில் நின்று கொண்டு குரைப்பது போல், நாம் எல்லோரும் தான் குரைத்து வருகின்றோம். சந்து பொந்துகளில் எல்லாம் தேசீய உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்று வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளித் துள்ளி குதித்து நமது தேசீயவீரத்தைக் காட்டுகின்றோம். பூரணசுயேச்சை வேண்டுமென்கின்றோம். எப்படி இருந்தும் இந்து சாமிகளின் கொள்ளைகளையும், இந்து அரசர்களின்
முட்டாள் தனங்களையும், இந்து மதத்தின் அயோக்கியத்தனங்களையும், ஒரு மயிர்க்கால் கூட அசைக்க நம்மால் முடியவில்லையே என்றால், இப்படிப்பட்ட
நம்மால் இனி எப்படி 20 மைல் பீரங்கியையும், மணிக்கு 500 மைல் வேகம் போகும் ஆகாயக்கப்பல் வெடிகுண்டையும், விஷப்புகைத் துப்பாக்கியையும் சிறிதாவது அசைக்க முடியும் என்றுதான் கேட்கின்றோம்.
பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்து ராணுவச் செலவைப் பற்றி பிரமாதமாய்ப் பேசுகின்றோம்: செலவு சற்று அதிகமென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனாலும் அந்த ராணுவ பலத்தின் ஒரு பாகத்தால்தான் இன்று நாம் “எமது சொத்து”, “எமது பெஞ்சாதி”, “எமது அபிப்பிராயம்” என்று சொல்லிக் கொள்ள வசதியுடையவர்களாய் இருக்கின்றோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கின்றது. அன்றியும், அது இல்லாவிட்டால் இன்றைய தினம், நமது ஜமீன்களும் பாளையங்களும் மற்றும் அதுபோன்ற பாச்சா சாக்கோக்களும் மனுதர்மிகளும் நம்மை என்ன செய்திருப்பார்கள். என்பது நமக்குத் தெரியும்.எஎனவே இப்படியேயின்றியமையாத செலவைக்கூட அடியோடு கண்டித்துராணுவமே வேண்டியதில்லை என்கின்ற நமது தேசியம், இந்த சாமிகள் கொள்ளையையும் மதத்தின் கொள்ளையையும், இந்திய அரசர்கள் முட்டாள்தனக் கொள்ளையையும் சிறிதுகூட கண்டிக்க முன் வருவ தில்லையே. அன்றியும் இவற்றைப் பற்றிப் பேசுவது தேசியமல்ல என்பதாக நமது பூரண கயேச்சைவாதிகளால் வேதக்கட்டளையும், வெளிப்படுத்தப்பட் டாய்விட்டது.நிற்க; இம்மாதிரி முட்டாள் அரசாங்கத்தையும், அக்கிரமத்தையும் அயோக்கிய தேசியத்தையும் இனியும் வைத்துக் கொண்டு வெறும் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்வதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா என்றும் கேட்க வேண்டி இருப்பதற்கு வருந்துகின்றோம். இன்றைய தினம் திருவாங்கூர் பார்ப்பனர்களுக்கு நாம் என்ன புத்திமதி கூறுவது என்பது
குடி அரசு - 1929 @) 302
நமக்கு விளங்கவில்லை இதற்காக அவர்கள் மீது, என்ன குற்றம் சொல்லுவது என்று நமக்குத் தோன்றவில்லை. உதாரணமாக, “ஓ பார்ப்பனர்களே! எங்கள் ராஜா பைத்தியக்காரர் ஆதலால் அவர் ஏதாவது பணம், கட்டில், மெத்தை, வேஷ்டிகள் கொடுத்தால் வாங்காதீர்கள், சாப்பாடு போட்டால் சாப்பிடாதீர்கள், எங்கள் பெண்கள் அறிவில்லாதவர்கள் ஆதலால் அவர்கள் கூப்பிட்டால் போகாதீர்கள் என்று சொல்ல முடியுமா” என்று கேட்கின்றோம். அப்படிச் சொல்லுவதாணாலும் அது ஒருவன் மற்றொருவனைப் பார்த்து “ஓ! அய்யாவே! எங்கள் வீட்டுப் பெண் சற்று ஒரு மாதிரி நடவடிக்கை உள்ள பெண் ஆதலால் தங்கள் வீட்டுப் பையன் எங்கள் வீதிப் பக்கம் நடக்கவிடாமல் அடக்கி வையுங்கள்” என்று சொல்லுவது போல்தான் இருக்கும்.
இன்னும் அநேக பார்ப்பனர்கள் நம்மை இதே கேள்விகள் தான்
கேட்கின்றார்கள். பல மொட்டைக் கடிதங்களும் எழுதுகின்றார்கள் அதாவது!
“ஓய் குடி அரசு ராமசாமியாரே! நீர் ஏங்காணும் பார்ப்பனர்களை வீணாய் திட்டுகின்றீர்? உங்கள் ஜனங்கள் புத்தி இல்லாமல் முட்டாள் தனமாய் எங்கள்
வீடு தேடிவந்து கூப்பிட்டுக் கொண்டுபோய் எங்கள் காலில் விழுந்து, பணம் காசு வேஷ்டி கொடுத்து சோறும் போட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வோம்? நீர்தானாகட்டும்யாராவது சும்மாஒருகாசு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவீரா? அப்படி இருக்கும்போது எங்கள் காலிலும் விழுந்து
காசும் கொடுத்தால் வேண்டாம் என்றால் அது எங்கள் முட்டாள்தனமாகாதா”' என்று எழுதி இருக்கிறார்கள். திருவாங்கூர் போன்ற அரசாங்கத்தை வைத்துக் கொண்டு இதற்கு என்ன பதில் சொல்வது என்பது நமக்கு புலனாகவில்லை.நமது நாட்டு ஏழைகள் கூலிகள் முதல் செல்வவான்கள், கற்றவர்கள்,பெரும் அதிகாரி
கள், அரசர்கள் ஆகிய எல்லோருமே பெரிதும் இப்படிப்பட்ட மூடர்களா யிருப்பதோடு “தேசீய வீரர்கள்” “பூரண சுயேச்சைக்காரர்கள்” ஆகிய“பொது
நலத்தொண்டர்கள்” என்பவர்களும் அவர்களுக்கு உதவியாய் இருந்தால் இந்த நாட்டுக்கு எப்படிதான், என்றுதான் விடுதலையும் சுயமரியாதை யும் உண்டாக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. மனிதர்கள் பணம் சம்பாதிக்கும் போது எவ்வளவு தந்திரமாய், எவ்வளவு புத்திசாலித்தனமாய், எவ்வளவு
சாமர்த்தியமாய், எவ்வளவு கன்னெஞ்சமாய் எவ்வளவு புரட்டு பித்தலாட்டம், அயோக்கியத்தனம் ஆகியவைகள் செய்து ஒன்றுக்கு இரண்டு விலை,
ஒன்றுக்கு இரண்டு கூலி,ஒன்றுக்கு இரண்டு சம்பளம், ஒன்றுக்கு இரண்டு வட்டி ஆகிய முறையில் நாட்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து சம்பாதித்து அந்தப் பொருளை சிறிதாவது கவலை இல்லாமலும் அறிவில்லாமலும் ஆராய்ந்து
பார்க்காமலும் சிக்கனமில்லாமலும் கண்ணை மூடிக் கொண்டு குடிகாரன் தனது அதிக போதையினால் கையிலிருந்தும் மடியிலிருந்தும் கீழே விழும் பணங் களை கவனிக்காமல் அந்த போதையை அனுபவிப்பது போல் இந்த மாதிரி சாமி என்றும் சடங்கு என்றும் பாழாக்குவதாயிருந்தால் எப்படி ஒரு நாட்டின் பணம் ஒரு நாட்டின் ஏழைகளின் நம்மைக்கு உபயோகப்படும் என்பது நமக்கு விளங்கவே இல்லை.இந்த நாட்டுக்கு தொழிலாளிகள் முன் வரவேண்டுமானால்
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஏழைகளின் கஷ்டம் நீங்க வேண்டுமானால் நாட்டின் தரித்திரம் தொலைய வேண்டுமானால் - முதலில் இந்த நாட்டு பணக்காரர்களும் பெரும் பணம் சம்பாதிக்கின்ற முதலாளிகளும் அதிகாரிகளும் அரசர்களும் யோக்கியர்களாக வேண்டும். அறிவாளிகளாக வேண்டும் இல்லாதவரை இவர்கள் அடியோடு முதலில் அழிக்கப்படவேண்டும். அந்தப்படி இவர்கள் யோக்கியர்களாகவோ அழிக்கப்படவோ, வேண்டுமானால் முதலில் இந்த மாதிரியான கடவுள்களும், மதமும் ஒழிந்தாக வேண்டும், அப்படிக்கில்லாமல் எந்தப் பேராலாவது எந்த மாதிரியிலாவது இப்படி கடவுள்களையும் மதங்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றவரையில் என்ன தேசீயம் பேசினாலும் ஒருக்காலும் நமது நாடு நாடாகாது என்றுதான் சொல்லுவோம். அதாவது காடுபோல் வலுத்து இளைத்ததை ஆதாரமாய்க் கொள்ளும் இடமாகுமென்றுதான் சொல்லு வோம். நிற்க, இனி இந்திய மடாதிபதிகள் என்று சொல்லிக் கொண்டு இந்திய செல்வங்களை கொள்ளை யடித்து பாழாக்குகின்றவர்கள் எத்தனை பேர்கள். என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுகின்றோம். சங்கராச்சாரிகள் என்று ஒரு ஏழு எட்டு பார்ப்பனர்கள் இந்தியாவிற்குள் தினமும் கிராமம் கிராமமாய் பட்டணம் பட்டணமாய்ச் சுற்றிசுற்றி அடிக்கும் பகற்கொள்ளைக்கு ஏதாவது அளவு கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கின்றதா? ஒவ்வொரு சங்கராச்சாரி களும் அரண்மனை போல் மடமும், யானை, குதிரை, பல்லக்கு,படைகள்,நகை.
கள், கூட்டங்களுடனும் தளங்களுடனும் சுற்றுப் பிராயணங்கள் நடப்பதைப் பார்த்தால் மனம் பதைக்கின்றது. இரத்தங் கொதிக்கின்றது. இவர்களுக்கு ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பணக்காரர்கள் பதினாயிரம், ஐயாயிரம், ஆயிரம், ஐந்நூறு. இருநூற்றைம் பது ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி காணிக்கைகளும்108-1008 ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி பாதபூசைகளும், தினம் ஒரு வேளை பிச்சைக்கு என்று 427-436 ரூபாய்களும் கொடுக்கப்பட்டு வருகின்றது.அத்தோடு அவர்கள் காலிலும் விழுந்து கால் கழுவின பாத தீர்த்தம் அருந்தப்படுகின்றது. இப்படியாக ஆயிரக் கணக்கான வருஷங்களாக நாளெல்லாம் நடந்து வருகின்றது.ஆனால் இப்படிப்பட்ட சங்கராச்சியாரிகளைப் பற்றி பணம் கொடுக்கின்றவர்களில் எந்த மூடர்களாவது சிந்தித்துப் பார்த்து பணம் கொடுக்கின்றார்களா! என்று பார்த்தால் அது ஒரு சிறிதும் தென்படுவ தில்லையேசங்கராச்சாரி என்றால் என்ன? அவர் யார்? யாருக்கு குரு? எதற்காக குரு? அவரால் யாருக்கு என்ன பிரயோஜனம்? எதற்காக பணம் கொடுக்க. வேண்டும்? அந்தப்பணம் என்ன ஆகின்றது? என்பது போன்ற விஷயங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றி கவனித்துப் பார்த்து யாராவது பணம் கொடுக்கின் றார்களா? ஒரு சிறிதும் இல்லவே இல்லையே. அந்தோ! அந்தோ! வெகுபணம் வீணாய்ப் போகின்றதே. இதனால் நமது மானமும், மனிதத் தன்மையும் வீணாய்ப் போகின்றதே. உதாரணமாக எந்த சங்கராச்சாரியும் ஸ்நானம் செய்வதற்கு முன்தான் நம்மைப் பார்ப்பார். ஏனெனில் நம்மை பார்த்தால்
சூத்திரனைப் பார்த்த தோஷமும், நமது நிழல் பட்டால் சண்டாள நிழல் ஸ்பரிசமும், நம்முடன் பேசினால் நீச்ச பாஷை உச்சரித்த பாதகமும், அவரை:
குடி அரசு - 1929 @) 304
சூழ்ந்து கொள்ளுகின்றன. ஆதலால் இவற்றிற்காக அவர் தோஷப்பரிகார பிராயச்சித்தம் செய்யவேண்டி இருக்கிறது. இதன் நிமித்தம் அவர் ஸ்நானம் செய்வதற்கு முன்பாகவே நம்மை பார்த்து, நம்மிடம் பேசி நமக்கு தீர்த்தம் கொடுத்து, பணம் பெற்று, அந்தப் பணத்தைக் கொண்டே மேல்கண்ட பிராயச்சித்தங்களும் செய்துவிட்டு பிறகு பூஜை செய்து சாப்பிடு கின்றார். தவிரவும் இந்தப் பணங்களால் சமையல் செய்து ஆயிரக்கணக்கான வெறும் பார்ப்பனர்களுக்கே சாப்பாடு போடுகின்றார். எஞ்சியதை ஊருக்கு அனுப்பு
கின்றார். இந்தப்படி இனியும் குட்டி ஆச்சாரிகள் மடம் எத்தனையோ? ஆகவே இப்படிப்பட்ட சங்கராச்சாரிகள் கொள்ளை எத்தனை கோடி என்பதை வாசகர் கள்தான் கணக்குப்போட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்றபடி ஜீயர்கள், பட்டர்கள், சுவாமிகள், குலகுருக்கள் என்கின்ற சில்லரைப் பார்ப்பனக்குருக்கள். கொள்ளைகள் ஒரு புறமிருக்க, இனி பார்ப்பனரல்லாத பண்டார சன்னதிகள். என்ற மடாதிபதிகள் கொள்ளைக்கும் கணக்கு வழக்கில்லை. சாதாரணமாய் தஞ்சை சில்லாவில் மாத்திரம் உள்ள இரண்டு மூன்று பண்டார சன்னதிகளின் வரும்படி ஆண்டு ஒன்றுக்கு 24 லட்ச ரூபாய்களுக்கு குறையாது என்று சொல்லலாம். இது போல் மற்றும் நம் நாட்டில் எத்தனையோ மடாதிபதிகளும் பண்டார சன்னதிகளும் ஆயிரக்கணக்கான பேர்கள் நமது கண்களுக்கு தென்படாமல் இருக்கின்றார்கள். இவர்கள் சொத்தும் வரும்படியும் எவ்வளவு ஆகும்? அது என்ன ஆகின்றது? யாருக்கு பலன் கொடுக்கின்றது? இவைகளால் நாட்டிற்கு என்ன பலன்? என்று யாராவது எந்த தேசியவாதி களாவது,மதவாதிகளாவது, ஆஸ்திகவாதிகளாவது கவனிக்கின்றார் களா என்று
கேட்கின்றோம். எனவே, நமது நாட்டின் தேசியமும் மதவாதமும் ஆஸ்திகமும் எவ்வளவு புரட்டின் பேரிலும் அயோக்கியத்தனத்தின் பேரிலும் கட்டப் பட்டிருக்கின்றன என்பதை இப்போழ்தாயினும் மக்கள் உணர முடிந்ததா என்று
குடி அரசு - தலையங்கம் - 01121929
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
திருவல்லிக்கேணியில் மாதீந்திரதாஸ் ணாசக சாலை திறப்பு விழா
தலைவரவர்களே! அன்புள்ள நண்பர் அவர்களே! இன்று திறப்பு விழா கொண்டாடும்படி இந்தபல பாஷை சொல்லிக் கொடுக்கும் முதலிய காரியங்கள்
செய்யும் வாசக சாலையைநான் திறந்து வைக்கவேண்டும் என்று எனது பழைய நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெருமையாய்க் கருதி அத் தொண்டாற்றவே இங்கு வந்துள்ளேன். எனினும் இத்திறப்புக் கொண்டாட் டத்தை நான் நடத்துவதின் மூலம் எனக்குக் கிடைத்த பெருமையைவிட நான் இங்கு வந்து எனது பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்ததே எனக்கு மிகுதியும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கத்தக்கதாகும் இந்த விழாவிற்கு இன்னார் வந்து சொற்பொழிவாற்றுவார்கள் என்று சொன்னவுடன், யான் எவ்வித யோசனையும் செய்யாமல் உடனே வருவதாக ஒப்புக் கொண்டேன். இந்தப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே என்கின்ற ஆசை எனக்கு வெகு நாளாகவே இருந்து வந்தது. என்னுடைய ஆசையும் அக்கிராசனர் ஆசையும் இவ்விழாவுக்கு முக்கியஸ்தர்களான திருவாளர்கள்
ராமச்சந்திர சர்மா, மதுரை சுப்பிரமணிய அய்யர் ஆகியவர்கள் ஆசையும் ஒன்றுபட்டு வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்கும் போது சிருங்காரரசத்தில் உள்ள
ஒரு இடம் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. அதாவது ஒரு நாயகியும் நாயகனும் தங்களது ஒத்த காதலின் பெருக்கினால் ஏற்பட்ட ஊடல் பிரிவைச் சகிக்கமாட்டாமல் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து கொள்ள ஒருவருக்
கொருவர் முந்த வெட்கத்தினால் தடைபட்டிருந்தவர்களை சந்திர உதயம் வந்து இன்னார்தான் முதலில் சமாதானத்துக்கு வந்தார்கள் என்பதை இருவர்களும் அறிய முடியாதபடி கூட்டிவைக்கும்இடம் ஒன்று உண்டு அதுபோலவே தேசத் தொண்டு வேகச் செருக்கால் ஏற்பட்ட ஊடலினால் பிரிந்து இருந்தவர்களை இப்போது நாட்டில் தோன்றி இருக்கும் உண்மை விடுதலை அவா உணர்ச்சி
என்னும் சந்திர உதயமானது நம்மில் யார் முதலில் சமாதானத்திற்கு முயற்சித்தார்
கள் என்று சொல்ல முடியாத மாதிரியில் இன்று இங்கு கூடி இருக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தை நான் எனது தொண்டுக்கு அனுகூலமாக அதை
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையால் இவ்விழாவில் ஏதாவது
அபிப்பிராயத்திற்கு இடம் ஏற்பட்டு ஒழுங்காக நடைபெற முடியாமல் போவதன் மூலம் அபிப்பிராய பேதத்திற்கு அதிக இடம் ஏற்பட்டு விடுமோ என்கின்ற
குடி அரசு - 1929 @) 306
எண்ணம் தோன்றிற்று. எனினும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் எப்படியாவது உபயோகித்துக்கொள்ளப் பார்ப்போம் என்கின்ற ஆசையுடனும் உறுதியுடனுமே எப்படியாவது உள்ளே நுழைந்து கொள்ளலாம் என்று வந்து விட்டேன்.
நண்பர்களே! அக்கிராசனரவர்களே! நான் காங்கிரசை விட்டு விலகி விட்டதாகத் தோன்றினாலும் நான் உண்மையிலேயே விலகவில்லை என்று
தான் நினைத்திருப்பதாகச் சொன்னார். காங்கிரசை நான் விடவில்லை என்பது உண்மையே. ஆனால் காங்கிரசு என்னைவிட்டுவிட்டது என்பதை நான் மறைக்க முயலவில்லை. காங்கிரசு என்பது ஒரு கூட்டம் என்கின்ற அர்த்தமா னால் இப்போது காங்கிரசின் பேரால் கூடும் கூட்டம் என்னை சேர்த்துக்கொள்ள
முடியாது. மற்றபடி காங்கிரசு என்பது தேசிய முற்போக்கு, தேசிய விடுதலை, தேசிய சுயமரியாதை என்றால் அது என்னை ஒருக்காலும் விட்டுத் தனித்திருக்க முடியவே முடியாது.நான் எங்கு சென்றாலும் அது என்னை தொடர்ந்தே தீரும். எனக்கு அந்த தைரியமும் நம்பிக்கையும் உண்டு.
நான் காங்கிரசை விட்டுவிட்டதாகத் தலைவர் நினைக்கவில்லை யானாலும் அநேகர்கள் அந்தப்படியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொது வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வளவு அபிப்பிராய பேதமுடைய கொள்கைகளை உடையவர்களாயிருந்தாலும் அவ்வபிப்ராய பேதமுடையவர். களின் உட்கருத்தை கவனித்து இவ்வித அபிப்பிராயம் அவர்கள் கொள்ள காரணமென்ன? இதனால் அவருக்குள்ள லாபம் என்ன? எந்த சுயநலத்திற்கு எதிர்ப்பார்த்து இப்படி செய்கின்றார்? முன்பின் இந்த மனிதனுடைய நட வடிக்கை என்ன? என்கின்ற விஷயங்களைக் கவனித்துப் பார்த்து பிறகு ஒரு வித அபிப்பிராயம் கொள்ளுவதானால் உண்மையான தொண்டர்களுக்குள். அபிப்பிராய பேதம் காரணமாக பிரிவினையோ மனஸ்தாபமோ விரோதமோ ஒருக்காலமும் ஏற்படவே ஏற்படாது.
எவ்வளவு அபிப்பிராய பேதமிருந்தாலும் இருவர்களும் ஒன்றுபட்டே தீருவார்கள்.
இந்தப்படி ஒன்றுபட முடியாமல் பொதுத் தொண்டர்கள் என்பவர். களுக்குள் ஏதாவது சொந்த மனஸ்தாபமிருக்குமானால் அது கண்டிப்பாய் அபிப்பிராய பேதத்தால் ஏற்பட்டதல்லவென்றும் தேசத்தொண்டு என்னும் போர்வையைப் போட்டுக் கொண்டு சுயநலத்தொண்டு செய்கின்றார்கள் என்று கருதி அந்நபர்கள் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகமும் அல்லது தீர்மானமுமே அல்லாமல் வேறில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதிரியின் நல்ல எண்ணத்தில் சந்தேகமில்லாவிட்டால் வெறும் அபிப்பிராய பேதத்திற்காக யாரும்பிரியமாட்டார்கள். சொந்த மனஸ்தாபமும் கொள்ளமாட்டார்கள் என்பது
உறுதி.
ஆதலால், நாம் சுயநலமில்லாதவர்களாயிருந்தால் நமது அபிப்பிராயங்
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
களைக் கொட்டி கலந்து ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் கொள்கைக்குச்
சற்றுவிட்டுக் கொடுத்தோ அல்லது விரோதமில்லாதவைகளை ஏற்றுக் கொண்டோ அந்த அளவுக்கு இருவரும் கலந்து ஏன் வேலை செய்யக்கூடாது? ஆதலால் ஒத்து வருகின்ற கொள்கைகளில் கலந்துவேலை செய்ய ஒருவருக் கொருவர் முந்துவது மேலான குணமாகும். அவ்வித குணத்திற்கு இன்றைய சம்பவம் ஒரு அறிகுறியாக இருக்குமென்று நினைக்கின்றேன்.
நண்பர்களே! யதீந்திரதாஸ் பெயரால் இன்றைய வாசக சாலை திறக்கப் படுவதை நான் பாராட்டுகின்றேன். ஆனால், இதன் மூலம் நாம் அவருக்கு பெருமையும் மரியாதையும் செய்கின்றோம் என்று கருதினால் இப்பாராட்டிற்கு அர்த்தமே இல்லை; அல்லதுஇவ்வாசக சாலையில் அவரது படத்தை வைத்து அதற்கு தேங்காய் பழம் உடைத்து கற்பூரம் கொளுத்தி வைத்து கும்பிடுவ தென்றால் அது மிகவும் மூடத்தனம் என்று தான் சொல்லுவேன். ஆனால் மற்றென்ன செய்வது அறிவுடைமையானது என்று கேட்பீர்களானால் அவர். விட்டுப்போன வேலையைச் செய்வதும் அவரது தியாகத்தையும் கொள்கை: களையும் பின்பற்ற அடிக்கடி ஞாபகப்படுத்த அவரது பெயரை உபயோகிப் பதும்தான். திட்டத்தில் அபிப்பிராயபேதமிருக்கலாம். வாசக சாலைகள். இப்போது எங்கும் அதிகமாக ஏற்பட்டுக் கொண்டு வருவதானது நமது நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு அறிகுறி என்றே கருதுகின்றேன். கொஞ்ச காலத்திற்கு முன்பாக நமது நாட்டில் வாசக சாலைகள் அதிகம் இல்லை. காரணம் என்ன வென்றால் அப்போது மக்களுக்கு எழுத்து வாசனை கிடையாது. ஆனால் இப்போது அதிகம் மக்கள் படித்திருப்பதால் இன்னும் அதிகமாக படித்துக் கொண்டு வருவதால் நாளுக்கு நாள் வாசக சாலைகள் அதிகரிக்கின்றன.
இம்மாதிரி வாசக சாலைகள் எங்கும் ஏற்பாடு செய்வது மிகவும் மேலான தேசத்தொண்டாகும். இதனால் மக்களுக்கு உலக அனுபவம் ஏற்படும்.
ஏனெனில், உலக அனுபவம்தான் உண்மையான கல்வியாகும்.அதுவே அறிவின் திறவுகோலாகும். பண்டித பரீட்சையில் தேறுவதும் மகாமகோ உபாத்தியாயராகிவிடுவதும் அரசாங்கத்தில் டாக்டர் அதாவதுபண்டிதப்பட்டம் பெறுவதும் ராஜாக்களிடத்தில் வித்வான்௧ளாயிருப்பதும் உண்மையான கல்வி ஆகிவிடாது. ஏனெனில் செருப்புத் தைத்தல், க்ஷவரம் செய்தல், சலவை செய்தல், சித்திரம் எழுதுதல், வியாதிக்கு மருந்து கண்டுபிடித்தல், கவிபாடுதல், கதை எழுதுதல், ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லுதல், ஒரு சுலோகத்திற்கு இருனூறு தத்துவார்த்தம் செய்தல், பெரும் பெரும் கணக்குப் போடுதல், உலகத்தை எல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளுதல் முதலியவை எல்லாம் வித்தைகளாகுமே தவிர வேறில்லை. அதாவது ஒவ்வொரு தொழிலில் ஒவ்வொருவர் கெட்டிக்காரர்கள் என்று தான் சொல்லலாம். எனவே முன் சொல்லப்பட்ட உலக அனுபவத்திற்கு முக்கிய கல்வியாக முன் காலத்தில் தீர்த்த யாத்திரையை வசதியாக இருந்தது.
ஒரு அரசன் அல்லது ஒரு பிரபு தன் மகனுக்கு உபாத்தியாயர்களிடம்
குடி அரசு - 1929 @) 308
விட்டு “நாலு வேதம் ஆறு சாஸ்திரம், பதினெண்புராணம், அறுபத்தி நாலு கலைக்யானம்,யானை ஏற்றம்,குதிரை ஏற்றம், வில்வித்தை, கத்தி விளையாட்டு
மற்றும் கூடுவிட்டுக் கூடுபாய்தல்” என்பனவாகிய வித்தைகள் எல்லாம்
கற்பிக்கப்பட்ட பிறகு தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி திரும்பிவந்த பிறகுதான் அம்மக்களிடம் பொறுப்பை ஒப்பித்துவிடுவது வழக்கம் என்று சொல்லப் படுவதை நாம் பார்க்கிறோம்.ஆணால் தீர்த்தயாத்திரை என்பது புராணங்களில் சொல்லப்படும் குளங்கள் நதிகள் ஆகிய குழந்தை குட்டி, மூட்டை முடிச்சு களுடன் போய் அழுக்குப் பிடித்த தண்ணீரில் எருமைமாடும் தவளையும்
முழுகுவது போல் வெறும் முழுக்குப் போட்டு நோயுடன் வீட்டுக்குத் திரும்பி வருவதல்ல. மற்றென்னவென்றால் உலகமெல்லாம் சுற்றி ஆங்காங்கு நடை பெறும் விஷயங்களையும் உள்ள இயற்கை குணங்களையும் அறிந்து வந்து
தனது வாழ்வை அந்தப்படி நடத்துவதுதான். அதனால்தான் இக்கருத்தையே “உலகத்தோடு ஓட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவிலாதார்” என்று திருவள்ளுவர் சொல்லியும் இருக்கின்றார். ஆனால் இதுவும் அக்காலங்களில் யாரோ ஒருசிலருக்குத்தான் சாத்தியமாக இருந்ததாக பார்க்கின்றோம். ஆனால் இப்பொழுதோ மேல்கண்ட உலக அனுபவம் என்பதற்கு வாசக சாலைகள் மற்றெல்லா வசதிகளைவிட மேன்மையானதாக இருக்கின்றன. யாவருக்கும் சாத்தியமானதாகவும் உலகத்தில் உள்ள செய்திகளையெல்லாம் பத்திரிகைகள். கொண்டுவந்து கொட்டுகின்றன. பலமனிதர்களுடன் தாராளமாய் பழகி அவர:
வர்கள் சுபாவம் அறியலாம்.ஆதலால் வாசக சாலை நிருவுதல் மிகவும் நன்மை யான பொது தர்மம் என்று சொல்லுவேன். தவிர, இங்கு பல பாஷைகள்: கற்பிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. பல பாஷைகள் கற்பது நன்மைதான். ஆனால் அது ஒவ்வொருவருடையவும் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பிக்கப்படுவதென்றால் அவ்வளவு சுலபமான காரியமென்று நமக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் ஒரு பாஷையே கற்காத மனிதர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் இருக்கும்போது அதற்குள் நாம் பல பாஷைகள் கற்றுக் கொடுப்பது என்பது சுலப சாத்தியமானதல்ல. ஆனால் பொதுநலத் தொண்டு. செய்பவர்களுக்கு பயன்படும் மாதிரியாக பல்வேறு பாஷை பேசும் தேசத்து சங்கதிகளை அறிந்து அதை தாங்கள் பொது நலத்திற்கு உபயோகித்துக் கொள்வதற்காக என்றால் அப்படிப்பட்டவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சிப்பது நல்ல காரியமாகும். அந்த முறையில் நான் இதைப் பாராட்டுகின்றேன்.
தேசீயம்
தவிர, தேசியப் போராட்டத்திற்கு பல பாஷைகள் கற்பது அத்தியா வசியம் என்று தலைவர் கூறினார். இந்த இடத்தில் தேசியம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது பொருத்தமற்றதாகாது என்று எண்ணுகின்றேன். ஏனெனில் இப்போதைய பொதுத் தொண்டில் அநேக தொண்டர்களின் மனவேறுபாட்டிற்கும் தப்பபிப்பிராயத்திற்கும் இந்த வார்த்தையே முக்கிய
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
காரணமாயிருக்கின்றது. முதலில் தேசீயம் என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் நன்குணரவேண்டும். இதைப் பற்றி உள்ள அபிப்பிராய பேதங்களில் இன்னது சரி இன்னது தப்பு என்று நான் முடிவு கட்டவரவில்லை. ஆனால் என் அபிப்பிராயத்தைச் சொல்லுகின்ற முறையில் சொல்லுகின்றேன். இப்போது மிகுதியும் ஊக்கமுள்ள தொண்டர்கள் பலரின் மனதில் அரசியல் சம்பந்தமான பேச்சுக்கள் தான் தேசிய வேலையாக கருதப் படுகின்றது.தேசீயம். வேறு, இப்போதைய அரசியல் வேறு என்பதை நாம் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை ஒரு தேசமாக்க வேண்டியதுவே இப்போதைய தேசபக்தர்களின் முதல் வேலையாகும். இப்போது இந்தியா பல
தேசமாய் இருக்கின்றது. அதாவது பல பாஷை, பல மதம், பல ஆச்சாரம், பல ஜாதி வகுப்பும், பல வித வித்தியாசமும், பல வகுப்புகளுக்கு பலவிதமான தனித்தனி லட்சியம் ஆகியவைகளாகப் பிரிந்து, அன்னியர்களே, அதாவது இந்தியாவின் லட்சியத்தைக் கருதாதவர்கள் என்னும்படியான அன்னியர்களே ஆளுவதற்கு அனுகூலமான முறையில் இருந்து வருகின்றது.ஆதலால் முதலா வதாக நாம் நமது நாட்டை மேல்கண்ட பிரிவினைகளையும் வித்தியாசங் களையும் தனித்தனி இலட்சியங்களையும் போக்கி ஒன்றுபடுத்தி அன்னிய ஆட்சிக்கு கஷ்டமான மாதிரியில் கொண்டு வந்து விட்டுவிட வேண்டும். பிரிவினைகளைப் போக்க சற்று கஷ்டமாயிருந்தாலும் தனித்தனி இலட்சியங் களை மாற்றி ஒரு லட்சியத்திற்கு ஒன்றுபட்டுழைக்கும்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கையையும் கூட்டுப் பொறுப்பையும் ஏற்படுத்தித் தீரவேண்டியதே முக்கியமான வேலையாகும். முக்கியமாக நாம் இந்நாட்டு மக்கள் என்பவர் களுக்குள்ளாக எவ்வளவு வித்தியாசத்தையும் உயர்வு தாழ்வையும் நம்பிக்கை. யின்மையையும், ஒற்றுமையின்மையையும் பார்க்கின்றோம். இதில் ஏதாவது அதிகப்படுத்தியோ கூட்டியோ குறைத்தோ சொல்வதாக நீங்கள் நினைக் கின்றீர்களா? வித்தியாசமும் உயர்வு தாழ்வும் பரஸ்பர நம்பிக்கைக்கும் கூட்டுப் பொறுப்புக்கும் எவ்வளவு இடையூறாய் இருக்கின்றது என்பதை சற்று
சிந்தித்துப் பாருங்கள்.
மேற்கண்ட குணமுள்ள இவர்கள் அதாவது சமூக வாழ்வில் உயர்ந்த வர்கள் என்று சொல்லப்படுபவர்களும் தாழ்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர். களும் ஒன்றுபடுவதென்றால் ஒருவருக்குப் பெரிய நஷ்டமும் மற்றவர்.
களுக்குப் பெரிய லாபமுமாயிருப்பதால் சுலபத்தில் ராஜி செய்யமுடியாமல் இருக்கிறது. ஏனெனில் வகுப்பு உயர்வு என்பது யாதொரு பொருளும் ஆதாரமும் இல்லாமல் தங்களுடைய வெறும் சுயநலத்தையே ஆதாரமாய்க் கொண்டிருப்பதால் அதாவது பிறர் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு சுகமாயிருக்க அனுகூலமாயிருப்பதால் எவ்வித நீதியும் தர்மமும் இங்கு பயன்படுவதில்லை.
தாழ்வு என்பதும் எவ்வித ஆதாரமும் பொருளும் இல்லாமல் வைக்கும் கஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டதாயிருப்பதால் அதாவது பாடுபடு
குடி அரசு - 1929 @) 310
வதைக் கடமையே ஒழிய, அப்பாட்டின் பலனை வேறு ஒருவர் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பதால் அங்கும் எவ்வித பொறுமையும் சமாதானமும் சிறிதும் பயன்படுவதில்லை.ஆதலால், இதை எவ்வித அரசியலாய் நினைக்க முடியும்? எந்தவித நம்பிக்கை மீது இம்மாதிரியாக மக்கள் இருவருக்கும் கூட்டுப் பொறுப்பு ஏற்படுத்த முடியும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.
மற்ற நாடுகளிலும் இவ்வித தனித்தனி லட்சியம் இருக்கக்கூடும் என்று
நீங்கள் சொல்ல வரலாம்.
ஆனால் அங்கெல்லாம் ஏதோ ஒரு தொழில் முறையை ஆதாரமாய்க் கொண்டு லட்சியம் பிரிக்கப்படுகின்றதே தவிர ஜாதியையோ வகுப்பையோ பிறவியையோ கொண்டு பிரிக்கப்படுவதில்லை. ஆதலால் நாம் முதலில் இந்நாட்டு மக்களுக்கு கூட்டுப் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும். அதுதான் தேசீயம் என்பது. இவ்விரு வகுப்பாரையும் சமநிலைக்குக் கொண்டுவர: வேண்டியதுதான்.இது மிகக் கஷ்டமானது என்று இப்பொழுது தோன்றினாலும் மற்ற வேலைகளை கட்டி வைத்துவிட்டு தேசத் தொண்டர்கள் தியாகத்திற்கு தயாராயிருந்தால் வெகுசீக்கிரத்தில் சரிப்பட்டுப் போகும். அந்த சமயம் தானா கவே அன்னிய ஆட்சிக்குக் கஷ்டம் ஏற்பட்டு விடும். ஆதலால் அப்பேர்ப் பட்ட தேசியத்திற்குப் பல பாஷை கற்று வைப்பது அவசியம் தான் என்று கருதுகிறேன்.
நூல் நூற்றல்
நூல் நூற்றல் தொழிலும் இங்கு கற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்லப்
பட்டது. இது மக்களுக்கு அவசியமானதே. ஏனெனில், அது ஒரு நாட்டுக்கு இன்றியமையாத தொழிலாகும். தொழிலில்லாமல் கஷ்டப்பட்டு தரித்திரத்தில்
மூழ்கி இருக்கும் மக்களுக்கு ஜீவனத்திற்கு மார்க்கத்தைக் கொடுக்கும். ஆனால் அது என்றைக்கும் எல்லோரும் கைராட்டினத்தால் நூற்றுக் கொண்டிருப்பதற்கு என்று சொல்லுவதானால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில் இதைவிட தரித்திரத்தைப் போக்க வேறு வித கருவி களும் தொழில்களும் ஸ்தானங்களும் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தும் கை. ராட்டினம் சுற்றித்தான் ஆக வேண்டும் என்று சொன்னால் இதை யார் ஒப்புக் கொள்ளுவார்கள்? மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டுபோவதே இயற்கையாய் இருப்பதால் முற்போக்குக்கு அவசியமான மார்க்கங்களை கைப்பற்றவும் கண்டு பிடிக்கவும் முயலவேண்டும்.
தேகாப்பியாசம்
தேகாப்பியாசமும் இந்த வாசக சாலையில் கற்றுக் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுவும் நல்ல காரியம் தான். ஆனால் தேகாப்பியாசத்தின் லட்சியத்தை இங்கு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் தேகாப்
3n பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
பியாசம் என்பது போர் வீரர்களுடன் சண்டை செய்து தேசத்தைக் கைப்பற்று
வதற்கு என்றால் இது உதவாது.ஏனென்றால் இப்போது நமது நாட்டை ஆளுகிற வர்கள் ஒரு பீரங்கி குண்டு மூலம் 20 மைல் தூரத்தில் உள்ள ஊரைத் தூளாக்க. முடியும்படியானவர்களும் ஒரு வெடிகுண்டின் மூலம் ஒரு பெரியபட்டணத்தை சாம்பலாக்க முடியும்படியானவர்களும், ஒரு துப்பாக்கி புகையின் மூலம் பதினாயிரக்கணக்கான மக்களைக்கொன்றுவிட முடியும்படியானவர்களுமாய் இருக்கின்றார்கள்.இன்னும் மேலும் மேலும் இது விஷயத்தில் அற்புதங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்டவர்களுடன் சண்டைபோட நாம் வெறும் தேக பலத்தை எவ்வளவு ஏற்படுத்திக்கொண்டா
லும் இதற்கு என்ன பயன் விளையும்? நமது தேகாப்பியாசத்தால் ஒரு யானையை தூக்கி மூன்று பர்லாங்கு தூரம் வீசி எறியும் படி செய்து கொண்டா
லும் பாக்கி 19 மயில் 5 பர்லாங்குக்கு நாம் என்னசெய்ய முடியும்? ஆதலால்
யுத்த வீரர்களுடன் போர் புரிவதற்கு என்று கருதுவது அர்த்தமற்றதாகும். ஆனால் மனிதனுக்கு தேகாப்பியாசத்தால் சரீர சுகம் ஏற்படும், மன உறுதி ஏற்படும், ஊக்கம் முயற்சி முதலியவைகள் ஏற்படும் என்கின்ற லட்சியத்தில் அது பயிலப்பட வேண்டியதேயாகும். அன்றியும் மேல் கண்ட அதிசய பலம் பொருந்திய ஆட்சியின் கொடுமையை ஒழிக்க மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டி எவ்வித தியாகத்திற்கும் தயாராகும் படியான உபதேசங் களைச் செய்ய ஊர் ஊராய்ச் சுற்றவும், மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொள்ளவும் தேகபலம் அவசியமானதே. உதாரணமாக, நூற்றுக்கணக்கான நாள்: பட்டினி கிடக்கவும், ஜெயிலில் கஷ்டப்படவும் வேலை செய்யவும் உதவும். நமது தேசத்தொண்டர்கள் அநேகருக்கு மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்ய சரீரத்தில்பலமில்லை. கைப்பெட்டியைக் கூட தூக்க முடிவதில்லை. ஒரு வேளை சாப்பாடு சற்று நேரமாய் விட்டால் பிறகு அந்த பக்கமே போவதில்லை. ஒரு அரைபர்லாங்கு கூட நடக்க முடிவதில்லை.ஆனால் கால அட்டவணைப்
படி வேலை செய்வதாக சொல்லிக் கொள்ளுகின்றார்கள். 6 மணிக்கு எழுந் திருப்பது 6.30 மணிக்கு பஸ்கி எடுப்பது, 7 மணிக்கு நடப்பது, 7.30 மணிக்கு தண்டால் எடுப்பது, 8 மணிக்கு காப்பி சாப்பிடுவது, 9 மணிக்கு பிரசங்கம் என்று அட்டவணை போட்டுக் கொள்வார்கள். இவர்களுடைய அட்டவணை பஸ்கியானது ஒரு பர்லாங்கு நடக்க முடியவில்லையானால் இந்த பஸ்கியும் தண்டாலும்வெள்ளைக்காரனிடம் என்ன செய்ய முடியும் என்பதையோசித்துப் பாருங்கள்.ஆதலால் தேகாப்பியாசமானது சரீர கஷ்டம் பார்க்காமல் உழைப்ப தற்கும் மனோதிடத்திற்கும் என்கின்ற லட்சியத்தின் மீது செய்ய வேண்டும். என்று சொல்லுகின்றேன்.
பாரதி பாடல்
பாரதியார் பாட்டுகளில் பல மனஉற்சாகத்தையும் சுயமரியாதை உணர்ச்சி யையும் முற்போக்கான கருத்துக்களையும் கொண்டதாகும். ஆதலால் அவை களைப் படிப்பது மிக்க நன்மையாகும். அன்றியும் ஒரு கொள்கையை பாட்டு
குடி அரசு - 1929 @) 312
மூலமாக பதியவைப்பது நன்மையானதாகும்.நன்றாய் ஞாபகத்தில் இருக்கும்படி இப்புஸ்தகம் இல்லாத காலத்தில் பல பண்டிதர்கள் இருந்ததற்குக் காரணம் பாட்டு முறையேயாகும். எனக்குக் கூட 40 வருடங்களுக்கு முன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்த கோலாட்டப் பாட்டு இன்னும் ஞாபகமிருக்கின்றது. அப்பாட்டில் ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தால் முன் உள்ளதையும் பின் உள்ளதையும் தானாக இழுத்துக் கொண்டு வந்து விடும். ஆதலால் பாட்டு படித்து ஞாபகத்தில் வைக்கும் முறை மிகவும் நல்லதாகும்.
ஆகவே, இத்தியாதி காரியங்கள் கொண்ட இந்த வாசக சாலையை தேச
முன்னேற்றத்தைக் கருதி இன்று ஆரம்பித்தது மிகவும் பாராட்டத்தக்கதென்றும் இதை நான் இருந்து நடத்த ஏற்பட்ட சம்பவம் எனக்கு பெரு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கக் கூடியது என்றும் கொள்வதோடு வாசக சாலையை ஏற்படுத்தியவர்களுக்கு நன்றியறிதலை தெரிவித்து இந்த வாசக சாலையைத் திறந்து வைக்கிறேன்.
குறிப்பு:20029 ஆம்நாள் சென்னை திருவல்லிக்கேணியைகிறாப்ட்சாலை திரு கடுவூர் துரைசாமி அய்யங்கார் வீட்டு மேல் மாடியில் யதீந்திரதாஸ் இலவய வாசக சாலையை திறந்து வைத்து சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 01.12.1929
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சுயநல வைறியர்கள் மகாநா௫
சென்னை ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் சென்ற மாதம் 30-ந் தேதியன்று சனாதனதர்மிகள் மகாநாடு என்பதாக சுயநல வெறியர்கள் மகாநாடு. ஒன்று கூட்டப்பட்ட விஷயத்தை யாவரும் தெரிந்திருக்கலாம். அதில் முக்கிய
மாய் மனு தர்ம சாஸ்திரத்தை நிலைநாட்டுவதையே கவலையாகக் கொண்டு. அதற்கு வேண்டிய முயற்சிகளும் செய்யப்பட்டு அதை அனுசரித்த பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இதைநினைக்கும் போது இன்றைய தினம் நாம் வெள்ளைக்காரர்களுடைய அரசாட்சியிலும் அவர்களுடைய ராணுவக் காப்பிலும் இருப்பதற்குநம்மை நாமே பாராட்டிக் கொள்ள கடமைப் பட்டவர்கள் ஆவோம். இந்தப்படி நாம் சொல்லுவதைப் பற்றி பொறுப்பும் கவலையுமற்ற சிலர் நம்மீது ஆத்திரப்பட்டாலும் படுவார்கள். ஆனால், உண்மையிலேயே துணிந்தவர்கள் யாரோ சில பொறுப்பற்றவர்களுடைய ஆத்திரத்துக்குப் பயப்படுவார்களேயானால் அது முன்னுக்குப்பின் முரணாகத்
தான் முடியும். ஆகையால், அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நிற்க; மேற்படி மகாநாட்டுக்குத் தலைமை வகித்த கல்கத்தாவிலுள்ள ஒரு “தேசியவாதி” யாகிய திரு.சியாம்சந்திர சக்கரவர்த்தி என்னும் ஒரு வங்காளத்துப் பார்ப்பனர் செய்திருக்கும் அக்கிராசனப் பிரசங்கத்தைப் பார்த்தால் இந்தியப் பார்ப்பனர்களுடைய யோக்கியதையும், அவர்களது மதபக்தி தேசியம் என்பதான சுயநல வெறியும் தாராளமாய் விளங்கிவிடும். ஆதலால் அவற்றை
முதலில் சுருக்கமாக எழுதி பிறகு தீர்மான சுருக்கத்தையும் எழுதி பிறகு அதைப் பற்றிக் கவனிப்போம்.
அக்கிராசனர் உபந்தியாசமாவது
“மதம் கெட்டுப்போய்விட்டது! நமது பழைய சனாதன தர்மத்தை மறுபடியும் நிலை நிறுத்த வேண்டும். ஒரு உண்மையான ஹிந்து என்பவனுக்கு அடையாளம் சனாதன தர்மத்தை நம்புவதேயாகும்.
வேதத்தை நம்பி அதன்படி நடப்பதுதான் ஆஸ்திகனுக்கு
அறிகுறியாகும். நமக்கு வேதமே ஆதாரமானது.
வேதத்தின் தத்துவமும், உள்பொருளுமே மனுதர்ம சாஸ்திரமாகும். மனுதர்ம சாஸ்திரம் பகவானால் சொல்லப்பட்டதாகும்.
கடவுள் உண்டாக்கிய சட்டம்தான் மனுதர்ம சாஸ்திரமென்பது.
குடி அரசு - 1929 @) 314
விஞ்ஞான சாஸ்திரமும் இயந்திர சக்திகளும் மனித சமூகத்திற்கு மிகவும் கேடானது. மேல்நாட்டு கொள்கை நமக்கு உதவாது.
சாரதா சட்டம் சோதனை காலமாகும்.அதை ஒழித்தாக வேண்டும்.
சிறு வயதில் கல்யாணம் செய்தால் தான் பெண்கள் ஆண்களுக்கு
ட்டிருப்பார்கள்.
வணங்கிக்
அதனால்தான் சாஸ்திரங்களில் பாலிய விவாகம் வற்புறுத்தப் பட்டிருக்கிறது. பெண்கள் பூப்பு ஆனபிறகு அவர்கள் உடனே கருத்தரிப்பதை.
தடுத்தால் அது சிசுக் கொலைக்கு சமானமாகும்” என்று பேசி இருக்கிறார்.
தீர்மானங்கள்
1சாரதா சட்டத்தை ஒழித்துவிட வேண்டும்.
2. அதற்காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும்.
3.சனாதான தர்மத்திற்காக ஒரு பத்திரிகை நடத்த வேண்டும்.
4.மதத்தில் அரசாங்கமாவது அரசியல் ஸ்தாபனங்களாவது பிரவேசிக்கக் கூடாது.
5 சட்டசபையில் வர்ணாச்சிரம தர்மத்திற்கு விரோதமாகவும் எவ்வித சட்டமும் செய்யக் கூடாது.
6. மனுதர்மத்தைக் காப்பாற்றுகிறதாக வாக்களிப்பவர்களுக்கே சட்ட சபைக்கு ஓட்டுக் கொடுக்க வேண்டும்.
7. கலப்பு விவாக சட்டத்தையும் சம்மத வயது சட்டத்தையும் கண்டிப்ப தோடு சட்டங்களையும் மாற்றிவிட வேண்டும்.
8. விவாகங்களை ரத்து செய்யக் கூடாது.
என்பவை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மகா
நாட்டில் இருந்தவர்கள் திருவாளர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, கோவை சி.வி.வெங் கட்டரமணய்யங்கார், டி. ஆர். ராமசந்திர அய்யர், வி.வி. ஸ்ரீனிவாசய்யங்கார். முதலிய “தேசியவாதி”களாவார்கள்.
இந்த இருபதாவது நூற்றாண்டில் இந்திய தேசத்தில் மாத்திரம் இந்திய ஜனத் தொகையில் 100-க்கு 3வீதம் ஜனத் தொகையுள்ள ஒரு சிறு கூட்டத்தாரர்கள் இவ்வளவு தைரியமாக சுமார் 2000 - வருடத்திற்கு முன் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கொள்கைகளை இன்றைய தினம். புதுப்பித்து மக்களின் மீது சுமத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பார்களேயானால் அவர்களது மூடத்தனத்திற்கும் பேராசைக்கும் வெட்கம் கெட்டதனத்திற்கும் எதை உதாரணமாய்ச் சொல்லுவது என்பது நமக்கு, விளங்கவில்லை. மேல்கண்ட நூற்றுக்கு மூன்று பேர் கொண்ட பார்ப்பனர்கள்
315 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தங்கள் சமூகத்திற்கு மாத்திரம் எந்த விதமான கொள்கைகளையோ சாத்திரங்களையோ மதங்களையோ வைத்துக் கொள்ளுவதானால் நமக்கு அதைப்பற்றி சிறிதும் கவலை இல்லை, அப்படிக்கில்லாமல் எங்கோ நாடோடிகளாகவும், மிலேச்சர்களாகவும் காட்டு மிராண்டிகளாகவும் மலைச்
சார்பில் வரன் முறை இல்லாமல், லம்பாடிகள் போல் திரிந்து கொண்டிருந்த ஒரு
சிறு கூட்டத்தார்கள் வயிறு வளர்ப்பதற்காக நமது நாட்டிற்குள் வந்து குடியேறி இந்நாட்டுமக்களை ஏமாற்றி மதம் என்றும், வேதம் என்றும், சாஸ்திரம் என்றும்,
தர்மம் என்றும், தங்கள் ஆதிக்கத்திற்கும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்றபடி என்ன என்னமோ ஏற்பாடுகளை செய்து கொண்டு அவைகளுக் கெல்லாம் தாங்களே அதிகாரிகள் என்றும், தங்களுக்குத்தான் அவ்வித யோக்கியதை உண்டென்றும், ஆதலால் தாங்கள் மேன்மையான ஜாதியார்கள். என்றும், மற்றவர்கள் இழிவான ஜாதியார்கள் என்றும், தங்களுடைய வாழ்வுக் காகவே உலகத்தில் மற்றவர்கள் அடிமைகளாக சிருஷ்டிக்கப்பட்டிருக் கின்றார்களென்றும், இவை அனைத்தும் கடவுள் கட்டளை, கடவுள் செயல் என்றும் சொல்லிக் கொண்டு வாழ்ந்து வந்ததல்லாமல், இனியும் அந்தப்படியே இருக்க வேண்டு மென்பதாகவும் முயற்சி செய்வதென்றால், கடுகளவு சுயமரியாதையோ, அறிவோ உள்ள மக்கள் இதை சகித்துக் கொண்டிருக்க முடியுமாவென்று கேட்கின்றோம். முதலாவது, மதம் என்பதில் இந்து மதம் என்றால் என்ன என்கின்ற கேள்விக்கு ஒரு சனாதன தர்மியாவது, சாஸ்திரியாவது பதில் சொன்னவர்களே அல்ல எனவே,அஸ்திவாரத்திலேயே அடியோடு வெறுமையாய் இருக்கின்ற மதத்தைச் சொல்லி ஏமாற்றுவதல்லாமல் அந்த மதத்திற்கு ஆதாரம் வேதம் என்று ஒரு ஆபாசக் களஞ்சியத்தை சொல்லிக் கொண்டு அதை அவர்களை (அந்தப் பார்ப்பனர்களை! தவிர மற்றவர்கள் பார்க்கவோ, படிக்கவோ, கேட்கவோ கூடாதென்று சொல்லிக் கொண்டு இருப்பதுடன் அதை எவன் நம்புகின்றானோ எவன் ஒப்புக் கொள்கின்றானோ அவன்தான் இந்துவென்றும், அப்படிப்பட்ட இந்துவுக்கு ஏற்பட்ட கொள்கைகளே சனாதன தர்மமென்றும், அச்சனாதன தர்மமே மனுதர்ம சாஸ்திரமென்றும், அம்மனுதர்ம சாஸ்திரமே வேதத்தின் தத்துவமும்
உள் பொருளுமாகு மென்றும் சொல்லி அதற்கு 20 கோடி மக்களை கட்டுப் படுத்தி அதில் 6 கோடிமக்களை கண்ணில் காணக்கூடாதவர்கள், தெருவில் நடக்கக்கூடாதவர்கள்,தீண்டாதவர்கள் என்கின்ற கொடுமைக்கு உள்ளாக்கிமீதி
14 கோடியில் 13 கோடி மக்களை சூத்திரர்கள் என்று அதாவது, பார்ப்பானின் தாசி மகன், பரம்பரை அடிமை, படிக்கக் கூடாதவன், சொத்து வைத்திருக்க கூடாதவன். பார்ப்பனர்களின் எச்சிலை சாப்பிட்டுக் கொண்டு அவன் கிழித்து கழித்தகந்தலை கட்டிக் கொண்டிருக்க வேண்டியவன் என்பதாக இழிவு படுத்தி வைத்துக் கொண்டு இருப்பதுடன் இந்தக் கொள்கையை நிலை நிறுத்த இன்றையதினம் மகாநாடு கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றுவதென்றால் இந்த நாட்டில் கடுகளவு சுயமரியாதை உடையவர்கள் கூட ஒருவரும் இல்லையென்று தானே பொருளாகின்றது.இவ்வளவு கொடுமையுள்ள மக்கள் ருஷியா போன்ற
குடி அரசு - 1929 @) 316
நாட்டில் இருப்பார்களேயானால் சாலை மரங்களில் கழுத்துக்கு சுருக்கு போட்டு. தொங்கவிட்டு உயிருடன் கழுகுகளும் காக்கைகளும் கொத்தி, கொத்தி தின்னும் படியாக அல்லவா செய்யப்பட்டிருப்பார்கள் என்பதில் சிறிதாவது சந்தேகம் கொள்ள முடியுமா? என்று கேட்கின்றோம். மனுதர்ம சாஸ்திரம்தான் வேதம் என்றும், வேதம் தான் இந்து மதத்திற்கு ஆதாரம் என்றும், இப்போது இந்துக்கள் என்று சொல்லப்படும் 20 கோடி மக்களில் தங்களைத் தவிர பாக்கி
19 கோடி மக்களும் மனுதர்ம சாஸ்திரப்படிக்கு தான் நடக்க வேண்டும் என்றும் இந்த படிக்கே சட்டமும் ஆட்சியும் இருக்க வேண்டுமென்றும் கோரு கின்ற ஒரு கூட்டத்தார்களைவிட உலகில் அயோக்கியர்களும் கொள்ளைக்
கூட்டத்தார்களும் கொலைபாதகர்களும் வேறு யாராவது இருக்க முடியுமா என்பதை யோசித்தால் சனாதன மகாநாட்டின் யோக்கியதை இன்னதென்று தெளிவாய் விளங்கும். இந்து மதத்தின் அயோக்கியத்தனமான கொள்கைகள். இப்பார்ப்பனர்களால் இந்நாட்டில் அமுல்படுத்தாமல் இருந்திருக்குமானால் இந்துக்களில் பார்ப்பனர்களில் மாத்திரம் 100க்கு 22 1, பேர்கள் ஆங்கிலபாஷை கற்றவர்களாகவும், பார்ப்பனரல்லாதவர்களில் 100க்கு ¥, பேர்கள் மாத்திரம் ஆங்கிலம் கற்றவர்களுமாக இருக்க முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.
அதுபோலவே இந்துமதம் இந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாதார்களை எவ்வளவு இழிவுத் தன்மையிலும் ஈன ஸ்திதியிலும் வைத்திருக்கின்றது என்பதை மற்ற இந்நாட்டு பொது மக்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்த்தால் விளங்காமல் போகாது. சனாதன தர்மம் அழிவுப்பட்டதற்கு காரணம் விஞ்ஞான அறிவும் (அதாவது, சைன்ஸ் அறிவும் இயந்திர சக்தி தொழிலுமே காரணம் என்றும் அவைகளை வளரச் செய்யக் கூடாதென்றும், தலைவர் சொல்லுவ தென்றால் அக்கூட்டத்தின்வஞ்சக தனத்திற்கும் கெடுதல் புத்திக்கும்நாம் வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை. விஞ்ஞான சாஸ்திரமும்
இயந்திர சக்தி தொழில்முறையும் உள்ள அமெரிக்கா தேசத்தி லுள்ள ஜனங்கள் சராசரி நபர் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு 2000 ரூபாய் வீதம் வரும்படி சம்பாதிக்கின்றார்கள். அதாவது, நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 166 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள். சனாதன தர்மம் தோன்றிய இந்த நாட்டில் வருஷம் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு சராசரி 72 ரூபாய் அதாவது மாதம் ஒன்றுக்கு நபர். ஒன்றுக்கு 6 ரூபாய் வீதம்தான் சம்பாதிக்கின்றார்கள்.மற்றும் உயர்ந்த தத்துவங் களும் பகவானால் வேத கட்டளைகளும் மனுதர்ம சாஸ்திரங்களும் உண்டான இந்த நாட்டில் 100-க்கு 7 பேர்களே படித்திருக்கின்றார்கள். ஆனால் “நீச்ச நாடாகிய” மேல் நாட்டில் நூற்றுக்கு நூறுபேரும் படித்து நமது நாட்டிலும் சிலர். படிக்க மேல் நாட்டார்ப் பணமும் முயற்சியும் மதமும் வேலை செய்கின் றது. அன்றியும், அங்கு மக்களின் சராசரி ஜீவிய வயது 52ஆக இருக்கின்றது.
பகவான் தர்மத்தை நேரில் வந்து உபதேசித்த இந்த நாட்டில் சராசரி ஜீவிய வயது 25 ஆக இருந்து வருகின்றது. எனவே, பகவானின் சனாதன தர்மம் உள்ள இந்திய நாட்டிற்கும் அதில்லாத மேல் நாட்டிற்கும் கல்வியிலும் செல்வத்திலும்
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
ஜீவவாழ்விலும் மாத்திரம் இவ்வளவு வித்தியாசமிருக்குமானால் மற்றவை களைப்பற்றி நாம் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம்.ஆகவே, இவ்வித வித்தியாசத்திற்கு இச்சனாதன தர்மிகள் என்ன காரணம் சொல்லுகின்றார்கள் என்பதே நமது முக்கிய கேள்வியாகும்.
ஒரு பகவானும் ஒரு மதமும் ஒரு தர்மமும் அப்பகவானையும் தர்மத்தையும் மதத்தையும் சேர்ந்த எல்லா மக்களுக்கும் ஒன்று போன்ற கொள்கையையோ, நீதியையோ, பயனையோ கொடுக்கவில்லையானால், அப்பகவானும் மதமும் தர்மமும் யோக்கியமானதா அல்லது அயோக்கிய மானதா என்பதைப்பற்றி வாசகர்களே அறிந்து கொள்ளவிட்டு விடுகின்றோம்.
அன்றியும் அப்பகவானையும், மதத்தையும், தர்மத்தையும் அடியோடு அழிக்க வேண்டியதா அல்லது ஒருசிறு வேளையாவது விட்டுவைக்க வேண்டியதா என்பதையும் முடிவு செய்யும் பொறுப்பையும் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.
இனி அம்மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பற்றி சிறிது கவனிப்போம்.
முதலாவதாக சாரதா சட்டம் ஒழிக்கப்படவேண்டுமாம். அதாவது பெண்கள் புருஷர்களுக்கு அடங்கி நடப்பதற்காகவே சிறுவயதில் குழந்தைப் பருவத்திலேயே கல்யாணம் செய்யும் வழக்கத்தை பெரியோர்கள் ஏற்படுத்தி னார்களாம். ஏனெனில், பெரிய பெண்களான பிறகு கல்யாணம் செய்தால் புருஷர்களுக்கு அடங்கி நடக்க மாட்டார்களாம்.ஆகவே பெண்களை ஆண்
கள் அடிமை கொள்ளவே இம்மாதிரியான சாஸ்திரங்களை எழுதி வைத்துக் கொண்டு அவைகளை “பகவான் சொன்னார் “ரிஷிகள் கேட்டுக் கொண்டிருந் தார்கள்” “பாராசர் பரப்பினார்” என்று சொல்லி இதுவரை மக்களை ஏமாற்றி
வந்திருக்கிறார்கள் என்பது இப்போதாவது மக்களுக்கு விளங்கி இருக்கும்.இந்த சூதை எப்படியோ தன்னை அறியாமல் தலைவர் கக்கிவிட்டார் என்றாலும் பாலியவிவாகம் கூடாது என்பதற்கு காரணமாக தவிர பெண்கள் பக்குவமான வுடன் புணர்ச்சிக்கு அனுமதிக்காவிட்டால் அதனால் அநேக குழந்தைகள். உற்பத்தியாவது தடுக்கப்பட்டு சிசுக் கொலையாகிவிடுமாம். ஒரு பெண் 14 வயதில் பூப்பு எய்தி 45 வது வயதில் சாந்தி முகூர்த்தமாவதற்குள் குழந்தை பிறப்பது தடைப்படுவதால் சிசுக் கொலை ஏற்படுமானால் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள விதவைகள் என்னும் பேரால் பத்து லட்சக்கணக்கான பெண்களை கர்ப்பமுண்டாகாமல் தடுப்பதாலும் தப்பித் தவறி தெரியாமல் கர்ப்பமுண்டாகி விட்டால் ஒரு மாதம் முதல் பத்து மாதம் வரை அக்கர்ப்பங் களை அப்பெண்களும் தாய் தகப்பன்மார்களும் அழிப்பதாலும் பெற்ற குழந்தைகளை கழுத்தை திருகுவதினாலும் எத்தனை சிசுக் கொலை ஏற்படுகின்றது என்பதை உலகம் அறியாதா? என்று கேட்கின்றோம். தவிர, சனாதன தர்மத்திற்கு சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்றும், பத்திரிகை: ஆரம்பிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள். இவ்விரண்டையும்
குடி அரசு - 1929 @) 318
நாம் மேள தாளத்துடன் வரவேற்கின்றோம். ஏனெனில், நாம் இதைதான் சொல்லி வந்திருக்கின்றோம். அதாவது, பெண்களுக்கு உண்மையான விடுதலை ஏற்பட வேண்டுமானால் பாலிய விவாகம் கூடாது என்பதும். பெண்ணுக்கும் ஆணுக் கும்அதிக வயது வித்தியாசம் கூடாது என்பதுமேயாகும். சனாதன தர்மத்தை நாம் பத்து வருஷத்தில் ஒழிப்பதானால் பார்ப்பனர்கள் சத்தியாக்கிரகமும்
பத்திரிகையும், நடத்துவதினால் சனாதன தர்மம் ஐந்து வருஷத்திலேயே ஒழிந்து போகும் என்கின்ற தைரியம் நமக்கு இருக்கின்றது.தவிர மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரிக்கின்றதாக வாக்குக்கொடுக்கின்றவர்களுக்கே சட்டசபை ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்கின்ற தீர்மானமும் நமக்கு மகிழ்ச்சியையே கொடுக் கின்றது.ஏனெனில்,சுயராஜ்யம் என்பதும் தேசியம் என்பதும் பார்ப்பனராஜியம் தான் என்றும், அதுவும் மனுதர்ம ராஜியம்தான் என்றும் நாம் சொல்லி வந்ததின் உண்மை இந்த சனாதன மகாநாட்டின் இந்த தீர்மானத்தால் வெளியானதற்கு யாரால்தான் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்? அன்றியும் தீவிர தேசிய வாதியும் பூரண சுயேச்சைவாதியும் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என்ற கொள்கையுடையவருமான திருசத்தியமூர்த்தி அவர்களின் சுயராஜ்ஜியமும் தேசியமும் பூரண சுயேச்சையும் பிறப்புரிமையும் இன்னதுதான் என்றும், அவரை சட்டசபைக்கு தெரிந் தெடுத்தனுப்பும் யோக்கியர்களின் கருத்து இன்னதுதான் என்றும் நன்றாய் விளங்க சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.
தவிரவும், மனுதர்மவாத தேசீயவாதிகளே சட்டசபைக்கு போகும் படியான ஒரு காலம் வருமானால் அந்த சந்தர்ப்பமானது ஒரு ஐந்து வருஷத்திற்குள் நம் நாட்டிற்கு பொது உடைமைக் கொள்கையும் அபேதவாதக் கொள்கையையும் சம சொத்துக் கொள்கையையும் கொண்டு வந்து விட்டு விடவோ, அல்லது இராணுவ ஆட்சியை கொண்டு வந்து விடவோதான் செய்யுமே ஒழிய, ஒருக்காலமும் நமது நாட்டில் மனுதர்ம ஆட்சி ஒரு ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாது என்று தைரியமாய் உறுதி கூறுவோம்.
கடைசியாக நமது நாட்டிற்கு சுயமரியாதை இயக்கம் எவ்வளவு அவசி
யம் என்பதும் வேதங்களும், மனுதர்ம சாஸ்திரங்களும் அவைகளை மக்களுக்
குக் கொடுத்த பகவான்களும் அழிந்து தீரவேண்டியது எவ்வளவு அவசிய மென்றும் பொதுமக்கள் உணர ஒரு அருமையான சந்தர்ப்பத்தைக் கொடுத்த சுயநல வெறியர்கள் மகாநாடான சனாதன தரும மகாநாட்டிற்கு நமது நன்றி யறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 08121929
319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
€சோமசந்திரம் வசட்முயார்
கோயமுத்தூர் காளிஸ்வர மில்லை ஏற்படுத்தினவரும், மற்றும் பல பெரிய மில்லுகளையும் நிர்வாகம் செய்து வந்தவருமான திருவாளர் தேவ கோட்டை திவான் பகதூர் பி.சோமசுந்திரம் செட்டியார் அவர்கள் திடீரென்று மரண மடைந்ததைக் கேட்டு நாம் மிகுதியும் துயர் உறுகின்றோம். திருசோம
சுந்தரம் அவர்கள் தென் இந்தியாவில் ஒரு ஒப்பற்ற மனிதராவார். அவருக்
குள்ள நிருவாக சக்திவேறு ஒருவரிடமும் காணமுடியாது. மேல்நாட்டு நிருவாக நிபுணர்களை விட சிறந்தவர் என்றே சொல்லலாம். ஒரு இந்தியர் எவ்வளவு பெரியதொழில் வேண்டுமானாலும் செய்ய சக்தி உள்ளவர் என்பதை தென்னிந் தியாவுக்கு அவரே வெளிப்படுத்தினர். ஆகவே, அவரது பிரிவால் தென் இந்தியா ஒரு பெரிய வியாபார நிர்வாக நிபுணரை இழந்ததென்றே சொல்ல
வேண்டும். அவரது குமாரரான திரு.சாத்தப்ப செட்டியாருக்கு நமது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடி அரசு - இரங்கல் செய்தி - 08121929
குடி அரசு - 1929 @) 320
நமது மரறைய் நாட்டு alzsunb
நாம் இவ்வாரம் மலாய் நாடு போகும் விஷயம் பத்திரிகைகள் மூலம் வெளிவந்திருப்பதைவாசகர்கள் அறியலாம்.மலாய் நாட்டிலுள்ள சுயமரியாதை. இயக்கத்திலீடுபட்ட அன்பர்களும் தொண்டர்களும் வெகுநாட்களாக விரும் பியதற்கும் நாமும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள். உலகிலுள்ள எல்லா மக்களிடையிலும் பரவி நன்மை பயக்க வேண்டுமென எதிர்பார்த்திருந்ததற்கும் ஏற்ப, நாம் மலாய் நாடு செல்கிறோம்.நாம் இப்போது அங்கே போவது நமது நாட்டிலுள்ள வேலைகளைவெல்லாம் நாம் முடித்து விட்டோம் என்ற கருத்திலல்ல. பின் என்னவெனில், இந்த 5, 6 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கத்தின் மூலமாய், மக்களிடையிலிருக்கின்ற புரட்டு களையும் மூடநம்பிக்கைகளையும் எப்படி இங்கு எடுத்துரைத்தோமோ அதே.
போல், மலாய் நாட்டில் குடியேறியுள்ள தமிழ் மக்களிடத்திலும் நமது இயக்கத்தின் கொள்கைகளை நேரில் எடுத்துச் சொல்ல வேண்டுமென்னும் ஆசையினால்தான் நாம் இப்போது மலாய் நாடு செல்கின்றோம். தாய் நாட்டி
லிருந்து இதர இடங்களாகிய மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலான அயல் நாடுகளுக்கு ஜீவனத்திற்காகக் குடியேறிய நமது ஏழை மக்களோடு கூடவே பார்ப்பனீயமும் குடியேறியிருக்கிறது என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் வைக்கும்படி கோருகிறோம்.தேக உழைப்பினால் பாடுபட்டு சம்பாதித்தும்பாமர: மக்களுடைய ஊதியத்தை மதம், கடவுள், வேதம், சாஸ்திரம், புராணம் என்ற பெயர்களினால் கொள்ளையடித்து நகத்தில் அழுக்குப்படாமல் ஏமாற்றி வயிறு வளர்க்கக் கூடிய பார்ப்பனர்கள் நமது நாட்டில் எவ்வளவு தீங்குகளை இழைத் திருக்கின்றார்களோ அதேமாதிரி ஏனைய நாடுகளில் குடியேறிய மக்களையும் முன்னேறவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறார்களென்பதை நாம் நன்கு அறிவோம்.
உதாரணமாக, நாம் இப்போது போகக்கூடிய மலேயா நாடுகளில் மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக பார்ப்பனர்கள் செய்துவரும் இடைஞ் சல்களை நாம் அடிக்கடி கடிதங்கள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் தெளிவாய் அறிந்திருக்கிறோம். சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களையும் அதன் முற்போக்கான கருத்துக்களையும் மக்கள் நன்குணர்ந்து அதன் படி நல்லறிவு பெற்று மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்கங் களையும் கொஞ்சங்கொஞ்சமாய் ஒழித்து சகல சாதிமக்களும் ஒற்றுமைப்பட்டு வருவதைப் பொறாதபார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் சிலமாதங்களாக
321 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தவறான முறைகளிலெல்லாம் சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்க ஆரம்பித்
திருக்கிறார்கள். உதாரணமாக,பார்ப்பனீயமும் புரோகிதமும், அர்த்தமற்ற சடங்கு களும் இல்லாமல் சுயமரியாதை இயக்கத்தின் முறைப்படி நடக்கும் எண்ணிறந்த திருமணங்கள் சட்டப்படி சொல்லாதவைகள் என்று ருசுப்படுத்துவதற்கும் தங்களுடைய ஆதிக்கத்தை எப்போதும் போல மக்களிடத்தில் நிலை நாட்டு வதற்கும் பார்ப்பனர்கள் செய்துவரும் முயற்சிகள் கொஞ்சமல்ல; அவர்க ளுடைய முயற்சிகள் பலன் பெறலாம் என்று எதிர்பார்த்த நாட்களெல்லாம் போய் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதால், இத்தகைய சூழ்ச்சிகளை மக்களே எதிர்த்துப் போராடி வென்று விடுவார்கள் என்ற பூரண நம்பிக்கைநமக்குண்டு.ஏனெனில், வெகு நாட்களாக ஏமாற்றிக்கொண்டே வந்த ஒருவன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னுங் கூட, மேலும் ஏமாறிக் கொண்டே, இருப்பதற்கு அவனது அறிவு இடங்கொடாது என்பது நமக்குத்
தெரியும்.
இந்த மாதிரி சூழ்ச்சிகள் ஒரு பக்கமிருக்க, சுயமரியாதை இயக்கத்தை. அழிப்பதற்கென்றே சில “இந்துமத சங்கங்கள்” எனப்படுபவைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றனவென்றால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தூரம் மலாய்
நாட்டுப் பார்ப்பனர்களையும் அவர்களது கூலிகளையும் பாதித்திருக்கிறது என்பதை நன்கு உணரலாம். இதர தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகளை விட
மிகவும் அதிகமாக நமது “குடிஅரசு ” மலாய் நாடுகளில் பரவியிருந்தாலும்கூட, அது மாத்திரம் போதாமல் அவ்விடத்திலேயே “முன்னேற்றம்” போன்ற பத்திரிகைகளை நமது அன்பர்கள் ஆரம்பித்து, அவைகளும் ஏற்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே ஆயிரக்கணக்காய் பரவ ஆரம்பித்திருக்கின்றன வென்றால், சுயமரியாதை உணர்ச்சிமக்களிடத்தில் எவ்வளவு தூரம் செலாவணி ஆகியிருக்கிறது என்பதை வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம்.
நமது இயக்கத்திற்கு இத்தகைய எதிர்ப்புகள் வருவதால் நமக்கு சற்றும் கவலையில்லை.அவைகளினுடைய கதி என்னவாகும் என்பது நமது நாட்டில் செவ்வாய்க்கிழமை தாலிகட்டி புதனன்று அறுத்துப் போன “ஆஸ்திக
சங்கத் “தை உணர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். செங்கற்பட்டில் கூடிய முதலா
வது சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்களையும் அவைகளை நடை முறையில் நடத்தி ஆதரவளித்த எண்ணிறந்த மக்களையும் பார்த்துத் திகில டைந்த பார்ப்பனர்கள் சில கூலிகளைப் பிடித்து “ஆஸ்திக சங்கம்” என்பதாக ஒன்று ஸ்தாபித்து அவர்களது கைகள் ஓயும் வரையும் நம்மையும் நமது அன்பர்களையும் கண்டவாறெல்லாம், தூஷித்தும், தூற்றியும் பார்த்து ஒருவாறாக அடங்கி ஒடுங்கி அமிழ்ந்துவிட்டார்கள். “கடவுள்” உண்டு என்பதை ஸ்தாபிப்ப தற்காக ஏற்படுத்தபட்ட ஒரு சங்கத்தின் நிலைமை இவ்வாறு ஆயிருக்கிறது. என்பதை வாசகர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்குமாறு விரும்பு
கிறோம். இதே மாதிரியாகத்தான் மலாய் நாட்டிலும் “இந்து மதம்” என்பதைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சங்கங்களைப் பற்றியோ
அவைகளின் கர்த்தாக்களைப் பற்றியோ நமக்குச் சற்றேனும் கவலையில்லை.
ஏனெனில், “இந்துமதம்” யாருக்காக ஏற்பட்டது, யார் ஏற்படுத்தியது, எப்போது எந்தக் கருத்தினால் ஏற்படுத்தப்பட்டதென்பதை நமது மக்கள். வெட்ட வெளிச்சமாக அறிந்து விட்டார்களாதலால், “மதம் போச்சு” என்ற
பொய்க் கூச்சலின் மூலியமாய் இனி மக்களை ஏமாற்றவோ அடிமைப் படுத்தவோ ஒருவராலும் முடியாது என்ற உறுதியான நம்பிக்கை நமக்குண்டு. பராசர ஸ்மிருதி.மனுஸ்மிருதி முதலியவைகளிலும் “இந்து மதத்திற்கு” ஆதார மான வேதங்களிலும் தற்காலத்திற்கு ஏலாததும், மனிதனது பகுத்தறிவுக்கு முரண்பட்டதுமான கருத்துக்களே அடங்கியிருக்கின்றன என்பதைநிச்சயமாய் அறிந்து கொண்ட நமது மக்களிடம் “இந்து மதம்” என்ற பூச்சாண்டியைக் காண்பித்து இனியும் ஏமாற்றலாம் என்று யாராவது எண்ணியிருப்பார்களானால், அவர்களுக்காக நாம் பெரிதும் இரங்குகின்றோம். “இந்து மதம்” என்பதற்கு அடிப்படையாகச் சொல்லப்படுகின்ற வேதங்கள், ஸ்மிருதிகள் இவைகளின் நிலைமையே தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, அவைகளின் மேற்கட்டிட மாகிய “இந்து மதத்”தின் கதி என்னவாகுமென்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.ஆகையால் இந்து மதத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறுவளர்க்கப் புறப்பட்டிருக்கும் கூட்டத்தார்கள் இனியாகிலும் காலதேச வர்த்தமானத்தை உணர்ந்து, யோக்கியமான முறை
களில் உழைத்து தங்கள் வாழ்க்கையைப் பரிசுத்தமான வழிகளில் நடத்தத் தவறுவார்களானால், மக்களுக்குள் அனாவசியமான வேறுபாடுகளும் மதப்
பூசல்களும் சாதிச் சண்டைகளும் உண்டாகி அதனால் மனித சமூகத்தின் முன்னேற்றமும் தடைப்படும் என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.
கடைசியாக, நமது மலாய் நாட்டுப் பிரயாணத்தைப் பற்றிய விஷமப் பிரசாரங்களைப்பற்றியும் சிறிது உறுதியாய்க் கூற விரும்புகிறோம். நாம் மலாய் நாடு போவதாலும் அவ்விடத்தில் நமது இயக்கத்தின் கொள்கைகளை எடுத்து
மக்களுக்குச் சொல்வதாலும் சில சுய நலக் கூட்டத்தாருக்கு ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த சிலர் தங்களுடைய ஆதிக்கத்திற்கு அழிவு காலம் கிட்டிவிட்டதென்று பயந்து நம்மை அவ்விடம் வர வொட்டாது தடுக்க வேண்டிய முயற்சிகளை பல வழிகளிலும் செய்யத் தொடங்கியிருப்பதாகவும் அறிகிறோம். இந்த நாட்டிலுள்ளது போலவே அங்கும் சர்க்காருக்கு உள் உளவாயிருக்கின்ற பார்ப்பனர்கள் சர்க்கார் மூலமாக நம்மைப் பற்றி பொய்யும்
புரட்டும் சொல்லி நம்மை தடுப்பதற்கு வேண்டிய சூழ்ச்சிகளெல்லாம் செய்து வருகிறார்களென்றும் கேள்விப்படுகின்றோம். இவைகளெல்லாம் உண்மையா யிருக்குமாயின், இத்தகைய வீண் மிரட்டல்களால் நமது இயக்கத்தின் லட்சியங்களை நாம் சொல்லாமலோ, அல்லது அதன் நன்மைகளைமக்களுக்கு விளக்காமலோ இருக்க போவதில்லை என்பதை மாத்திரம் உறுதியாய்க் கூறுவோம்.ஆனால்,நாம் வெகு நாட்களாகச் சொல்லிவந்தபடிஅரசியலைவிட சமூக மத விஷயங்களையே பிரதானமாகக் கொண்டு நமது சுற்றுப்
பிரயாணத்தை முடித்து வருவதாக நாம் உத்தேசித்திருக்கிறோம். அரசியல் சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றி நமக்குத் தற்போது அதிகக் கவலையில்லையாதலால் அது சம்பந்தமாக நாம் ஒன்றும் பேசப் போவதும் இல்லை.ஆனால் சமூக மத சீர்திருத்தங்கள் சம்பந்தமாக செய்யப்போகும் நமது பிரசாரத்திற்கு மாத்திரம் பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு மலேயா: கவர்ன்மெண்டார் ஏதேனும் முட்டுக்கட்டையாக இருக்க முயலுவார்களேயா னால், அதற்காக நாம் நமது வேலையில் சற்றேனும் பின்வாங்கப் போவ தில்லையென்பதை மாத்திரம் நிச்சயமாய்க் கூறுவதோடு அதனால் ஏற்படக் கூடிய எவ்வித கஷ்ட நஷ்டங்களுக்கும் நாம் தயராகவே இருக்கின்றோம். என்பதையும் வாசகர்களுக்கு வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 15121929
திரு. குருசாமி - குஞ்சிதம் திருமணம்
சென்ற ஞாயிற்றுக்கிழமை 8-ம் தேதியன்று ஈரோட்டில் எமது இல்லத்தில் நடைபெற்ற “ரிவோல்ட்” உதவி ஆசிரியர் திரு.குருசாமியின் திருமணத்தைப்
பற்றியமுழு விவரங்களை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.இந்தத் திருமணமானது பல வழிகளிலும், ஏனைய திருமணங்களைவிட சிறந்தது என்பதற்கு சற்றும் சந்தேகமில்லை. முதலாவதாக இது ஒரு காதல் மணம். மணமகனும் மணமகளும் ஒத்த கல்வியும், ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த உடல் நலனும் உடையவர்களாகையால் அவ்விருவரும் ஒருவரையொருவர்: காதலித்து செய்து கொண்ட திருமணமாகையால் இதைக் காதல் திருமணம் என்றோம். இரண்டாவதாக ஒரு வகுப்பிலுள்ள மணமகன் மற்றொரு வகுப்பைச் சார்ந்தமணமகளை மணந்து கொண்டதால் இது ஒரு கலப்புமணமாகும். இந்தச்
சீர்திருத்த மணத்திற்கு முக்கியமாய்மணமகன் திருகுருசாமி அவர்களுக்கு பல இடையூறுகள் நேர்ந்தன. இந்தத் திருமணத் தின் சிறப்பைக் கூறுமுன் மண: மகனது சாதியாராகிய “முதலியார்” எனப்படு வோர்கள் இவ்விதக் காதல் மணங் களுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிது
கூறாமல் இருக்க முடியவில்லை. திருமணத்தின் முதல் நாளன்று அவரது தங்கையார் கிணற்றில் விழுந்து விட்டதாகவும், இன்னும் இது போன்ற பலவாறான பொய்த் தந்திகளையனுப்பியதோடும் சாதியை விட்டு விலக்கி
விடுவதாகவும் பல பயமுறுத்தல் கடிதங்களையும் எழுதினார்களென்றால், இந்த சீர்திருத்த உலகத்தில் இந்த வகுப்பாரது மனப்பான்மை எவ்வளவு தூரம் தாழ்ந்த நிலையிலிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துக் கொள்ளும்படி விட்டு விடுகின்றோம். ஆனால், இந்த சமூகத்திலுங் கூட முற்போக்கான அபிபிராயங் களைக் கொண்டசில பிரமுகர் களைக் குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது.. உதாரணமாக, இந்தத் திருமணத்தை ஆதரித்து வாழ்த்துச் செய்திகளனுப்பிய திருவாளர்கள் சீர்காழி சிதம்பரநாத முதலியார், பி.டி, ராஜன், கனம் மந்திரி முத்தையா முதலியார், திருநெல்வேலி சிதம்பரநாத முதலியார் போன்றவர்: களின் ஆதரவானது நமக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதோடு அந்த சமூகத்திற்கே முற்போக்கடையும் படியான சந்தர்ப்பமும் கிட்டியிருக்கிறது என்று உறுதியாய்க் கூறுவோம்.
இரண்டாவதாக, மணமகள் செல்வி குஞ்சிதம் அவர்களின் கல்விய நிவையும்,அவர்களது சீர்திருத்தகொள்கைகளையும், அவர்கள் “ரிவோல்டில்”
ஆங்காங்கு எழுதிவந்திருக்கின்ற கட்டுரைகளிலிருந்து இனிதறியலாம்.
மேலும் குஞ்சிதம் அவர்கள் திருமணத்தன்றைய தினமே மாலையில் கூடிய ஒரு பொதுகூட்டத்தில் மேடையின் மீதே முதன்முதலாக செய்த ஆங்கிலப் பிரசங்கமே எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நேரில் பார்த்த அன்பர்களுக்கு அவர்களது பிற்கால ஆற்றலைப் பற்றி நாம் சற்று அதிக மாகவே எதிர்பார்க்கக்கூடியவர்களாயிருக்கிறோம். மேலும் மணமகள் தெலுங்
கிலும் சொற்பொழிவாற்றக்கூடிய தேர்ச்சி பெற்றிருப்பதால் நமது சுயமரியாதை இயக்கம் தெலுங்கு நாடுகளிலும் பரவவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்து விட்டதற்காக நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் பெண் கல்வியின் உயர்வை நன்குணர்ந்து மணமகளை உயர்ந்த கல்வி பயிற்றுவித்த அவரது பெற்றோர்களை வாழ்த்தாமலிருக்க முடியவில்லை.இதர: தாய் தந்தைமார்களும் இவர்களைப் பின்பற்றி தங்கள் பெண்களையும் பல துறைகளிலும் தேர்ச்சிபெறக் கூடிய கல்விகளைப் போதிப்பார்களானால், இத்தகைய காதல் மணங்கள் நம் நாட்டில் பெருகும் என்பதற்கு ஐயமில்லை. மணமகனும் மணமகளும், சுயமரியாதை இயக்கத்துக்குத் தக்கஊளன்று கோலாக இருந்து தங்களது சந்தோஷமான வாழ்க்கையாலும் நடத்தையாலும் பிற் போக்குள்ள மக்களுக்கு ஒருவழி காட்டிகளாக இருந்து இத்தகைய திருமணங் கள் நமது நாட்டில் பெருகி மக்களது அறிவும் வளர்ச்சி பெற்று, தங்களைப் போலவே பிறரும் கலக்கமற்ற வாழ்க்கை வாழ்வதற்கு உதவி புரிவார்களென்று நம்புகிறோம். இளைஞர் உலகத்துக்கு ஒரு பேரூக்கம் அளிக்கத்தக்க செயலை
தம் மணவினையால் நிகழ்த்திக் காண்பித்த திரு.குருசாமி அவர்களையும் திருமதி. குஞ்சிதம் அவர்களையும் நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.
குடி அரசு - வாழ்த்துரை - 15.12.1929
குடி அரசு - 1929 @) 326
துண்பத்தில் துயருறும் வபண்கள்
வீட்டை விட்டு௭வைளியேற வேண்டும்
சகோதரிகளே! சகோதரர்களே! சீர்திருத்தம் என்பது பற்றி இதற்குமுன் நண்பர்கள் பேசினார்கள். அவர்கள் பிரசங்கத்தில் உற்சாக மிகுதியினால் சொன்ன மிக உயர்ந்த பொருள்களையெல்லாம் பெரும்பாலும் நீங்கள். விளையாட்டாக எண்ணக் கூடும். இதுவரையில் அவர்கள் நமதியக்கத்தின் முற் போக்கின் பொருட்டு பட்ட கஷ்டங்களையும் எடுத்துக் கொண்ட சிரமங்க ளையும் அவர்கள் எண்ணி இன்றைய சீர்திருத்த மண வைபவத்தின் உற்சாகத்
தில் பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கூறிய சொற்பொழிவுகளிலும் மிக உயர்ந்த பொருள்கள் விளங்கியது. இவைகளை எல்லாம் கேட்ட நீங்கள் சில மாறுதல்களை அடையக்கூடும்.
இதுவரையில் பார்ப்பனனையும், அவன் கொள்கைகளையும், அவனது பழக்கவழக்கங்களையும் கண்டித்து வந்தோம். நீங்களும் பார்ப்பனனை திட்டுகிறவர்கள் என்று எங்களை எண்ணி இருந்தீர்கள்.பார்ப்பனனை திட்டிய
காலம் மலையேறி போய்விட்டது. ஏனெனில் முதலில் பார்ப்பனனை திட்டிய பின்பே புத்தி சொல்லக் கூடிய நிலையில் இருந்தீர்கள். பார்ப்பான் இன்னின் னவை செய்கிறான், அதில் தீது இவைகள் என்பதை எடுத்துக் காட்டி பின்பு நீங்கள் அவனது ஏமாற்றத்தில் சிக்கக்கூடாது என்பதை எச்சரிக்கை செய்ய வேண்டிய காலம் இன்றில்லாமல் போய்விட்டது.
இனிமேல் உங்கள் முட்டாள் தனத்தைப் பற்றியே பேசவேண்டும். இதுவரையில் பார்ப்பனனை எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டி அதன் மூலிய மாய் சொன்னதில் உள்ள உண்மையான உங்கள் நிலையை நீங்கள் நன் குணர்ந்து விட்டீர்கள். உணர்ந்ததிற்கு உதாரணமாகவே இன்று காரியத்தில் செய்ய காலம் வந்துவிட்டது. இன்றுவரை தமது நாட்டையும் நம்மையும் பாழ்படுத்தி வந்த பார்ப்பனனைப் பற்றி நான் கூறியதற்கு, பார்ப்பனனை நான் திட்டுவதால்தான் எனக்கு பிள்ளை குட்டி இல்லை என்றும், சிலர் பிள்ளைக் குட்டிஎதுவும் இல்லை, அவனுக்கு பொறுப்பேது, அதனால்தான் பார்ப்பானைத்
திட்டுகிறான், சாமியை பழிக்கிறான் என்றவர்களும், நாட்டிற்குக் கெட்டகாலம் பொல்லா காலத்துக்கு பிராமண தோஷமும் ஆகாத வேளைக்கு அன்ன துவேஷமும் என்று சொல்லி வந்தவர்களும் இன்று இதுவரை நம்மால்
327 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
சொல்லப்பட்டது யாவும் சரிதான் என்று ஒப்புக் கொண்டது போலவே, இத்திருமணத்தை பார்த்த பின்பும் இதுவரையில் நண்பர்கள் பேசியதின் அருமையான உரைகளைக்கேட்ட பின்பும், சிலஉண்மைகளை உணர்ந்திருக்க
கூடும். சென்னையில் இத்திருமணத்தை நடத்த முதலில் முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால், இத்தகைய சீர்திருத்த மணம் நடைபெறுவதால் உண்டா
கும் உற்சாகத்தை இங்கு உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடிய அளவு சென்னையில் பயன்படாது போகும் என்பதாலேயே இத்திருமணத்தை இங்கு
நடத்த நேர்ந்தது. அங்கு எத்தகைய உண்மை உணர்ச்சியையோ, உற்சாகத்தையோ, காணமுடியாது. எதுவும் வெறும் வெளி வேஷமாகத்தான் மாறக்கூடும்.நகரங்
களில் எழும் எந்த ஊக்கமும் மக்களுக்கு உண்மையை உணர்த்தக் கூடிய தாகவோ, நல்ல பலனை உண்டாக்கக் கூடியதாகவோ இருக்க முடியவில்லை... ஆதலால் தான் கலியாணத்தை இங்கு நடத்தினோம்.
காலையில் நடந்த திருமணத்திற்கு 50, 60 - க்கு மேற்பட்ட தந்திகளும், 150,200க்கு மேற்பட்ட கடிதங்களும் வாழ்த்துச் செய்திகள் மூலமாய் கிடைத்தன. இதை அனுப்பியவர்கள் வேஷக்காரர்களல்ல.பொறுப்பற்றவர்களும் சாதாரண: மானவர்களுமல்ல. நமது மாகாணத்தில் அறிவாளிகள் என்பவர்களாலும், பொறுப்புள்ளவர்கள் என்பவர்களாலும் அச்செய்திகள் அனுப்பப்பட்டது. உதாரணமாக திவான், மந்திரி, இவர்களிடமிருந்தும், ஜில்லா போர்டு தலைவர்
கள், கட்சி தலைவர்கள் இவர்களிடமிருந்தும், இன்றைய திருமண முறையை ஆதரிக்கு முறையில் வாழ்த்துச் செய்திகள் கிட்டியது. அவைகள் காலைமணம் நடைபெறும் போது படித்துக் காட்டியதும் உங்களுக்குத் தெரியும். மைசூர்
திவான் ஜனாப் மகமத் மிர்ஸா இஸ்மாயில், நமது மாகாண மந்திரிகள் கனம்: எஸ்.முத்தையா முதலியார்,டாக்டர் சுப்பராயன், கவர்ன்மெண்டு நிர்வாக மெம்:
பர் பெரியார் ஜனாப் ஸர் முகமது உஸ்மான், செளந்திரபாண்டியன் இவர்களிடமிருந்து வாழ்த்துத் தந்திகள் கிடைத்தது. இது எதைக் காட்டுகிறது?
இதுவரையில் நாம் சொல்லி வந்த நமது லட்சியங்கள் காரியத்திலும் நடத்த ஆரம்பித்து விட்டதால் மிக பெரியவர்கள் எல்லாம் இதை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்றவாரம் குடி அரசில் பெண்களைப்பற்றியவரை கூறும்போது சமூகக் கட்டால் கஷ்டப்படும் பெண்கள் தங்கள் கஷ்டத்தை நிவர்த்தித்துக்கொள்ள விரும்பினால் வீட்டைவிட்டு ஓடிப்போக வேண்டு மென்று கூறினேன். ஒன்றைப் பற்றி நன்கு சிந்தித்து அதன் லாப நஷ்டங்களை அனுபவ முறையிலும் சிந்தித்து பின் முடிவு செய்த பின் அதை அனுபவ முறையில் செய்து காட்ட பின்வாங்கக் கூடாது. காதல், காதல் என்று பேசப் படுகிறது, காதலைப் பற்றியும் அதை வளர்ப்பதைப் பற்றியும் நமது நாட்டில் உள்ள நூல்கள் அளவு கடந்ததாகும். ஆனால் காதல் என்பதில்லை. என்னைப் பொறுத்தளவில் கூறுகிறேன்; கலியாணமாகிய 5 - 6 வருடங்களுக்கு பின்பே எனது மனைவியுடன் நிற்பயமாய் என்னால் பேச முடிந்தது.
குடி அரசு - 1929 @) 328
கலியாணமென்பது, வேஷ்டி தோய்ப்பது போலவும், குளிப்பது போலவும்,பல் விளக்குவது போலவும் இன்று கருதப்பட்டுவருகிறது.ஆனால். இந்த அளவுக்கு அனுபவத்தில் கலியாணத்தை நடத்துபவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் மிக அதிகமாகும். 10-18 பொருத்தங்களும், 18.9 -வீடு கட்டிய ஜாதகங்களும் இவைகளுக்காக பார்ப்பானுக்கும் ஜாதகக்காரனுக்கும் கொடுக்
கும் பணங்களும், இவைகளுக்கெல்லாம் செலவிடப்படும் காலம், அறிவு இவைகளும் சொல்ல முடியாதனவேயாகும். இத்தகைய மனிதத் தன்மையற்ற மனப்பான்மை தொலைய வேண்டும்.
குருசாமி தனது திருமணத்தைப் பற்றி பேசும்போது கஷ்டமில்லை என்று சொன்னார்.அது தவறு அவருக்கு கலப்புமணம் நடத்த வேண்டும் என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து வந்த கஷ்டங்கள் சொல்லக் கூடியதல்ல. கடைசியாக அவர் மணக்காலம் நெருங்க ஆரம்பித்ததும் அவரது டிரஸ்டி
அவருக்கு சேர வேண்டிய இவ்வருட நெல் விற்ற பணம் அனுப்பாதிருக்குமாறு அவர் ஜாதியார்கள் தடுத்தார்கள். அவருக்கு நெருங்கிய பந்துக்களில் ஆண்: களும் பெண்களும் பலர் சென்னைக்கு வந்து அவருக்கு இனியேற்பட விருக்கும் கஷ்டங்களை கூறினார்கள். அவரின் தங்கை கிணற்றிலிருந்து விழுந்து மிகஅபாய நிலையில் இருப்பதாகவும், வந்தால் முகதரிசனம் கிடைக் குமென்றும் ஒரு தந்தி 7-தேதி அவருக்குகிட்டியது. இன்னும் வெளியில் சொல்வதற்கில்லாத பல கஷ்டங்களுக்கு இடையிலேயே அவர் இத் திருமணத்தை நடத்திக் கொள்ள முடிவு செய்தார்.
அடுத்தபடியாக தனக்கு தனது சமூகத்தில் தக்கபடிப்பும் ஒத்த வயதும் உள்ள பெண் கிடைக்கவில்லை என்றார். அது தவறு அவருக்கு 50 ஆயிர ரூபாய்க்கு மேல் சொத்துடன் ஒரு பெண் கிடைக்க இருந்தது. அதை அவர். விவாகம் செய்து கொண்டிருக்கலாம். பணத்துடன் ஓர் பெண் கிட்டிவிட்டால் இவர் பின் ஒத்த வயது ஒத்த படிப்பு இவைகளுக்காக கஷ்டப்பட வேண்டிய தில்லை.இதற்கு எத்தனையோ வழிகளுண்டு, இன்றைய ஜன சமூக வாழ்க்கை:
யில் பெரும் தனவந்தர்களில் பலர் இதற்கு உதாரண புருடர்களாகவும் விளங்கு கிறார்கள். ஒரு நாடு சுபிக்ஷமுற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டு மக்கள். ஒரே ஒழுக்க முள்ளவர்களாக இருத்தல் அவசியம். ஒழுக்கமென்பதோ, கற்பென் பதோ, ஆண் பெண் இருபாலருக்கும் சொந்தமானதேயன்றி பெண்களுக்கு மட்டுமல்ல. இன்றைய சீர்கேடான நிலைக்கு பெண்மக்கள் மிருகங்களிலும் கேவலமாகக் கருதப்பட்டதும், அவர்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களாக எண்ணப்பட்டதும், மனித ஜென்மத்துக்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லையென ஆண்கள் மதித்து வந்ததும், இவைகளின் சவுகரியத்தினால் இவன் ஒழுக்கம் என்பதைவிட்டு நாளாவட்டத்தில் வெகு தூரம் விலகி அதற்கும் இவனுக்கும் சம்பந்தமில்லாது இன்று வாழ்வதே காரணமாகும். இவைகட்கெல்லாம் தெய்வீகம், மதக்கட்டளை என்ற விவாக முறைகள் இருந்ததே காரணமாகும். இன்றுநடந்த கலியாணத்தில் பழைய பழக்க
329 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வழக்கங்கள் என்பது கூடுமானவரையில் அறவே நீக்கியே நடைபெற்றது.
இதில் தெய்வீகத்துக்கு இடமில்லை. ஆனால், ஒழுக்கத்திற்கும் ஒத்த குடும்ப வாழ்க்கைக்கும் இதிலிடமுண்டு.
ஒரு கடவுளும், அதன் மதமும் அதன் மேல் பின்பற்றும் மக்களை சரிசமமாக பாவிக்க வில்லையானால், அம் மதமும் அக்கடவுளும் யோக்கிய முடையதாக இருப்பதற்கில்லை. அதைச் சொல்லி பிழைப்பவர்களும், அதை நம்பி கட்டி அழுபவர்களும் கூட யோக்கியர்களாக இருப்பார்களா? இருக்க முடியுமா? என்பதை நீங்களே யோசித்து முடிவுசெய்யுங்கள். மற்றும் கலப்பு மணங்களும், விதவா மணங்களும் நாட்டில் வரவர மிக அதிகமாகி வருவது பற்றியும், சாரதா சட்டத்தின் அவசியத்தை நன்குணர்ந்த பார்ப்பனர்கள், அது நல்லதேயானாலும் அதனால் இதுவரையில் சாத்திரத்தின் பேரால் ஏமாற்றிய மதப்புரட்டுக்கு ஆபத்து வந்துவிடுமே என்ற பயத்தினால்தான் அதை எதிர்க்கிறார்கள்.
குறிப்பு : 08.12.1929 இல் ஈரோடு காரைவாய்க்கால் கரையில் நடைபெற்ற
குருசாமி - குஞ்சிதம் திருமண ஆதரவு கூட்டம் - சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 22.12.1929
குடி அரசு - 1929 @) 330
எத | o டா. ர் கன்றி
“இந்து மதத்தில்” தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் பரிதாபகரமான நிலமையைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். இன்றைய தினம்.
நமது நாட்டில் தாழ்த்தப்பட்டமக்கள் தங்களது கேவலமான நிலையை உணர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாதவர்களாகவும் நெருங்கக் கூடாதவர்களாகவும், தொடக் கூடாதவர்களாகவும் இதர “இந்திய” மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருவதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் பூனாவில் கோயில் பிரவேசம் சம்பந்தமாக சத்தியாக்கிரகம் நடைபெற்று அதன் வேகம் இன்னும் குறையாமல் அவ்விடத்திய மக்களது உணர்ச்சியைத் தட்டி யெழுப்பியிருக்கிறது. வட இந்தியாவில் காசி முதலிய பல இடங்களிலும் இதேமாதிரியாக தாழ்த்தப்பட்டவர்களின் கிளர்ச்சி அதிகமாகும் அடையாளங்களும் காணப்படுகின்றன. தென் இந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழ் நாட்டில் நமது சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து வேரூன்
றிய சில வருஷங்களுக்குள்ளாகவே, சிறிது காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள்: விஷயத்தில் பொது ஜனங்களுக்கு சிறிது கவலை ஏற்பட்டிருப்பதோடு கூட அவர்களுக்கும் தங்கள் கேவலமான நிலைமையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் உண்டாயிருக்கிறது.
“தண்டாதார்” விஷயத்தில் சைவர்கள் என்போர்களும் வைஷ்ணவர்:
கள் என்போர்களும் இதுகாறும் மக்களை ஏமாற்றி நந்தனார் கதையையும், திருப்பாணாழ்வார் கதையையும் மாத்திரம் காண்பித்து விட்டுத் தப்பித்துக் கொண்டது போல் இனி செய்ய முடியாதென்பதையும் நன்கு உணர்ந்து
கொண்டார்கள்.மேலும் ஆதிதிராவிடர்களும் ஏனைய தாழ்த்தப்பட்டமக்களும் அவரவர்கள் சமூக மகாநாடுகள் கூடி தங்களது அபிவிருத்திக்கு வேண்டிய எற்பாடுகளையும் செய்துகொண்டே வருகிறார்கள். ஆகவே, தற்போது தமிழ்
நாட்டிலும் சிதம்பரம், ஈரோடு, விழுப்புரம்,திருச்சி போன்ற இடங்களில் கோயில் நுழைவு சம்பந்தமான கிளர்ச்சிகளோ, அல்லது உணர்ச்சியோ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அறிகிறோம். திருவாங்கூர் சமஸ்தானத்திலும் தீண்டப்படாதார் என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் லட்சக்கணக்கான “ழுவர்களும்” “புலையர்களும்” கோயில் நுழைவு சம்பந்தமாக மிகப் பிடிவாதமான கிளர்ச்சிகள் செய்து கொண்டு வருவதாகவும் அறிகிறோம். இவர்களது கிளர்ச்சிகள் முழுதும் வெற்றி பெறுவதும் இயலாததும் வேறு
331 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
விஷயமானாலும், இவர்களது முயற்சியின் தத்துவத்தை கூர்ந்து கவனிப்போருக்கு நமது “இந்து மதத்திற்கு” முடிவு காலம் நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பம் நெருங்கிக்கொண்டு வருகிறது என்பதை மாத்திரம் யாரும் மறுக்க
முடியாது.
கோயில் நுழைவு சம்பந்தமாக நமது அபிப்பிராயத்தை அடிக்கடி தெரிவித்திருக்கிறோம். “தீண்டப்படாதவர்கள்” கோயிலுக்குள் போய் விடுவதால் உடனே அவர்களுக்கு “மோட்சமோ” அல்லது “கடவுள் அனுக் கிரகமோ” கிட்டிவிடும் என்பதல்ல. பின் என்னவெனில், கோவில்களில் தான நமது கடவுள்கள் என்பவைகள் வசிப்பதாக “இந்து மதம்” கூறுகிறது. அதேதான் நடவடிக்கையிலும் மக்கள் சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். “தீண்டப்படாதவர்கள்'” கோயிலுக்குள் நுழைவதாலோ, அல்லது “கடவுள் களின்” சிலைகளின் பக்கத்தில் போவதாலோ, அந்தக் “கடவுள்கள்” செத்துப்
போகுமென்றும், அதனால் “இந்து மதத்”திற்கே அழிவு வந்து விடுமென்றும் கூக்குரல் போடுகின்ற சனாதன தர்மக் கூட்டத்தார்களுக்கும், சைவக் கூட்டத் தார்களுக்கும், வைஷ்ணவக் கூட்டத்தார்களுக்கும், அவ்விதம் அது உண்மை யானால் அத்தகைய லேசான உயிரை வைத்துக் கொண்டிருக்கிற “கடவுள்கள்” இருப்பதைவிட ஒழிந்து போவதே நலம் என்பதையும், இதைப் பொறுக்க
முடியாத “இந்து மதமும்” இருப்பதைவிட அழிவதே மேல் எனவும்நிரூபித்துக் காண்பிக்க வேண்டியே இந்தக் கோயில் நுழைவு இயக்கம் தோன்றியிருக்கிறது. என்று சொல்வோம். இதர பொது இடங்களைவிட கோயில்களை முக்கியமாக எடுத்துக் கொண்ட கருத்தின் உண்மையை இது சமயம் வெளியிட்டு விடவேண்டுமென்று நினைக்கிறோம். தாழ்த்தப்பட்டவர்கள், “இந்து மத”க் கோயில்களுக்குள் செல்ல உத்தேசிப்பது “கடவுள்” மேலிருக்கும் பக்திப் பெருக்கினால் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஏனெனில், அவரவர்களை அடிமைப்படுத்துவதற்கும், அவரவர்கள் பகுத்தறிவை உபயோகத்திலிருந்து தடுப்பதற்கும் போதுமான “கடவுள்களும்” தரகர்களும்,
பூசாரிகளும், அவரவர்கள் சமூகத்திலேயே போதுமானவரையில் இருப்பதால் மேலும் நம்முடைய “கடவுள்களும்” தரகர்களும் வந்துதான் அவர்களை வீணாக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அல்லது அவர்களது “கடவுள்க ளுக்கு” இருக்கும் சக்தியை விட நமது “கடவுள்களுக்கு” அதிகமாக இருக் கிறது என்ற நம்பிக்கையுமல்ல. பின் என்ன வெனில், கோயில்கள்தான் நமது தேசத்தில் சாதிப்பிரிவையும் சமயப் பிரிவையும் உண்டாக்குவதற்குக் காரணமா யிருந்தன வென்பதற்கும், இன்றும் அவைகள் தான் காரணமாயிருக்கின்றன வென்பதற்கும் அத்தாட்சிகள் தேட வேண்டிய அவசியமில்லை. சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பொது இடங்களாகிய தபால் ஆபீஸ், ரயில்வே ஸ்டேஷன், கோர்ட்டுகள் முதலானவைகள் எப்படி “தீண்டப்படாத” மக்களை ஒன்றுபடுத்த உபயோகப்பட்டு வருகின்னனவோ அதேபோல் “இந்துமதத்” தினால் ஏற்படுத்தப்பட்ட கோயில்களும், சத்திரங்களும் தீர்த்தங்களும், ஸ்தலங்களும்தான் தீண்டாமையை நிலை நிறுத்தவும் அதிகப்படுத்தவும்
குடி அரசு - 1929 @) 332
உபயோகப்பட்டு வருகின்றன. ஆதலால்தான் இதர பொது இடங்களை விட கோயில்களிலேயே முதன் முதல் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது உரிமையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம்.
அதுவுன்றி, பார்ப்பனப் புரட்டை அப்படியே கண்ணுக்கெதிராகக்
காட்டக் கூடியது கோயில்களே என்பது நமது அபிப்பிராயம். எப்படியெனில், எங்கோ மூலையில் கிடக்கும் கல்லை எடுத்து வந்து உருவமாக்கி, அதை நட்டு வைத்து, அதற்கு மந்திரம் மூலமாக உயிர் உண்டாக்கி வெறும் கல்லை “கடவுளாக்”கக் கூடிய சக்தியானது, ஆறறிவுடைய மக்களின் ஒரு பெரும் பகுதியாரை, அவர்களுடைய தீண்டப்படாத தன்மையிலிருந்து விலக்கி இதர மக்களோடு சமமாகச் சேர்க்க முடியவில்லையென்றால், அந்த சக்தியோ, அல்லது மந்திரமோ எவ்வளவு தூரம் புரட்டு என்பதும், இந்த அயோக்கியத் தனமான புரட்டு எத்தனை ஆயிர வருஷங்களாக நமது நாட்டில் கேட்பாரில்
லாமல் நடந்து வந்திருக்கிறதென்பதும் பொது ஜனங்களுக்கு நன்கு விளங்கும். இன்னும் கடவுள் என்பதற்கும், அதை வணங்குகிறவனுக்கும் மத்தியில் தரகர்கள் இருந்து கொண்டு பாமர மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து சோம்பேறித் தனமாக வயிறு வளர்த்துவரும் கூட்டத்தாரினுடைய சூழ்ச்சிகளும். கோயில் நுழைவு மூலியமாய் பொது ஜனங்களுக்கு வெட்ட வெளிச்சமாக
விளங்கிவிடும் என்பதும் நமது கடைசி முடிவு.மேலும் “இந்து” மதமானது ஆதி முதல் இதுவரையில் சாதிப் பாகுபாட்டின் மீதே நடைபெற்று வருகிறது என்பதையும் நிரூபிக்க வேண்டிய காலமும் கிட்டிவிட்டது. சாதியையும், சில்லரை சமயப்பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்ட “இந்து” மதமானது சாதிவேரையும், பார்ப்பனீய வேரையும் வெட்ட ஆரம்பித்தவுடனேயே
உச்சியிலிருக்கும் இலை, தழைகளோடு அடிமரமும் சேர்ந்து ஆட்டங்காண ஆரம்பிக்கும் காட்சியையும் மக்கள் காண வேண்டிய காலமும் கிட்டிவிட்டது.
இன்னும் “ஸ்ரீராமானுஜர் சகல ஜாதியாரையும் ஒன்றுபடுத்தியதும் திருப்பாணாழ் வாரை வணங்கக் கூடியதுமான எங்கள் வைஷ்ண மதத்தில் தீண்டாமை வித்தியாசம் கிடையாது. அது மிகவும் உயர்ந்தது” என்று வாய் வேதாந்தம் பேசி
தப்பித்துக் கொண்டு வந்த வைஷ்ணவர்களும், “நந்தனாருக்கு மோட்சம் கொடுத்ததும் அவரையும் 63 நாயன்மார்களுள் ஒருவராய் வணங்கி வருவது மாகிய எங்கள் சைவ மதத்தில் தீண்டாமை வித்தியாசம் கிடையாது” என்று வீண்வாய்மிரட்டல் மிரட்டி ஏமாற்றி வந்த சைவர்களும் இனி இந்த விஷய மானது நடைமுறையில் வந்தபின் எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறார்கள். என்பதையும் நேருக்கு நேர் பார்க்க வேண்டிய சந்தர்ப்பமும் கிட்டிவிட்டது.. மேலும் காங்கிரஸ் என்பதின் பெயரால் தீண்டாமை விலக்குக்காக கோடிக்கணக். கான ரூபாய்கள் வசூலித்து இதுவரையில் மேடையின் மீது கர்ஜித்து வந்த கூட்டத்தார்களும் “சுயராஜ்யம்”, “சுயராஜ்யம்” என்று கூக்குரல் போடும் “தேசபக்தர் "களும் இனி இவ்விஷயத்தில் எவ்வளவு தூரம் உண்மையாக நடந்து கொள்ளப்போகிறார்கள் என்பதையும் பொது மக்கள் அறியவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் தீண்டாதார் விஷயத்தில் பாடுபடு.
333 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
வதாக வாக்களித்து சட்டசபை முதலிய பொது ஸ்தாபனங்களில் “தீண்டாதா
ரின்” பிரதிநிதியாக இடம் பெற்றும் இன்னும் அதே காரணமாக பட்டங்கள். உத்தியோகங்கள் பெற்றும் உள்ளவர்களாய் தீண்டப்படாதார்களுக்காகவே பத்திரிகைகள் நடத்தி வருபவர்களும் ஆகிய இவர்களெல்லாம் இத்தகைய நெருக்கடியான நிலைமையில் எவ்வளவு தூரம் முன்னணியிலிருந்து ஊக்கத் துடன் வேலை செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டிய சந்தர்ப்
பம் கிடைத்திருக்கிறது. ஆகவே, இப்போது நமது நாட்டில் வீறு கொண்டெழுந்
திருக்கும் இவ்வுணர்ச்சியானது - அதன் வெற்றி தோல்வி ஒரு பக்கமிருக்க, அதற்கு உண்மையில் தடையாக இருப்பவர்கள் யார் யார் என்பதையும், என்னென்ன காரணங்களினால் தீண்டப்படாதவர்கள் நிலைமை கேவலமாய்
இருக்க நேர்ந்தது என்பதையும், அக்காரணங்களை எந்தெந்த வழிகளில் ஒழிக்க வேண்டும் என்பதையும் ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டிய
சந்தர்ப்பத்தையும் அளித்திருக்கிறது. இந்தக் கோயில் நுழைவு இயக்கத்திற்கு ஆதாரமாக அநேக சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வரு வதையும் நாம் பார்த்து வருகின்றோம். உதாரணமாக திரு.ஜெயகர் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டசபையில் சமீபத்தில் கொண்டு வரப் போவதாகவும் அறிந்து மகிழ்கின்றோம். அந்தத் தீர்மானத்திற்கு டாக்டர் அம்பேத்கார் போன்ற பிரமுகர்கள் உதவியாயிருந்து வேலை செய்வார்களெனவும் தெரிகிறது.
இவர்களுடைய முயற்சி வெற்றிபெற்று சட்டமும் செய்யப்படுமே யானால், பெண்கள் சமூகத்திற்கு சாரதா சட்டம் எவ்வித பலத்தையளித்திருக் கிறதோஅதே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் இந்த சட்டமும் பெரிய பலமாக இருக்கும் என்பதற்கு ஐயமில்லை. பம்பாய் மாகாணத்தைப் பார்த்தாகிலும் நமது மாகாண சட்டசபையில் உள்ளவர்கள் தங்கள் கடமையைச்
சிறிது நினைத்துப் பார்க்க ஆரம்பிப்பார்களா என்பது நமக்கு சந்தேகமாகவே
இருக்கிறது.
இந்த நிலைமையில், பொதுமக்களின் கடமை என்ன என்பதை மாத்திரம்
நாம் விளக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கின்றோம்.
“இந்து மதத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லுபவர்களெல்லாம் இந்த விஷயத்தில் அதிக சிரத்தையெடுத்து தங்கள் கடமையைச் செய்யாவிடில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான “தீண்டப்படாதவர்கள்” முஸ்லிம்களாகவும் கிறிஸ்துவர்களாகவும் மாறிக் கொண்டிருப்பது மேலும், மேலும் பெருகிக் கொண்டே வரும் என்பதற்குக் கொஞ்சமும் சந்தேகமில்லை. பெண்கள். விதவைகளாயிருந்து கஷ்டப்படுவதைவிட உடன்கட்டை ஏறுவதாயிருந்த பழைய வழக்கங்கூட எவ்வளவோ மேலானது என்று சொல்லுகிறோமோ அதேபோல், மக்கள் தீண்டப்படாதவர்களாயிருந்து, குளம், ரஸ்தா முதலிய பொதுஇடங்களின் செளகரியத்தை அனுபவிக்க முடியாமல் கஷ்டப்படுவதைப்
பார்க்கிலும், முகம்மதியர்களாகவாவது மாறிமனிதர்களாக வாழ்வது மேலானது
குடி அரசு - 1929 @) 334
என்று தைரியமாய் கூறுவோம். அவ்வித அவசியம் நேர்ந்து அதைத் தவிர. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு வேறு மார்க்கம் இல்லையென்று முடிவாய்க் காண்போமானால் நாம் அதை வற்புறுத்திக் கூறியாவது அவர்களது துன்பங்களை இந்த கஷனமே ஒழிக்க வேண்டிய மார்க்கத்தில் இறங்கிவிட வேண்டியதாகத்தான் வரும். இதில் ஒன்றும் இரகசியமோ மறைபொருளோ கிடையாது மனிதனுக்கு ஒரு மதமுமே அவசியமில்லை யென்ற கொள்கையை யுடையோமாயினும் கொடுமைப்பட்டு அறியாமையில் அழுந்திக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு கைகண்ட பலனாக விடுதலையளிக்கக் கூடியது முகம்மதிய மதம் என்ற கருத்தில்தான் சொல்கிறோமே யொழிய இதர மதங்களில் இல்லாத “மோட்சமோ” “புண்ணியமோ” முகம்மதிய மதத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தினால் அல்ல. அப்படிச் செய்வதால் பிறகு எல்லோரையும் சேர்த்து மதம் என்ற சேற்றிலிருந்து விடுவிப்பதற்கு ஏற்படும் கஷ்டத்தையும் நாம் உணராமலில்லை. ஆனால், “தீண்டப்படாதவர்கள்”' நிலைமையில் இதர ஜாதி இந்துக்கள் எனப்படுவோரும் இருந்தால் இந்த நிலையில் வேறு என்னதான் செய்யக் கூடும் என்பதை வாசகர்கள் சற்று பொறுமையோடு யோசித்துப் பார்க்கும்படி கோருகிறோம். ஆகவே, இத்தகைய நிலையை நமது நாட்டில் உண்டாக்கிவிடாமல் தீண்டாமைக் கொடுமையை உடனே தாமதமன்னியில் ஒழிப்பதற்குப் பொது ஜனங்கள் எவ்வளவு கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அறிவுறுத்தும் பொருட்டே இதை எழுதினோம். ஆதலால் கோயில் நுழைவு விஷயத்தில் பொது மக்கள் தங்கள் கடமையைச் செய்வதோடு முக்கியமாக சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட அன்பர்கள் அனைவரும் தீவிரமாக வேலை செய்யக் கடமைப்பட்டிருக் கின்றார்கள் என்பதை ஞாயகப்படுத்துகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 22121929
335 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
மமோ கூற்று ஹய்யா- வாய்யா?
கோவை திருவாளர் அஅய்யாமுத்து அவர்களால் இயற்றப் பெற்ற மேற்கண்ட நூலின் பிரதி ஒன்று வரப் பெற்றோம்.
கன்னி மேயோ கருத்தைப் பற்றியோ, அவர் கூறியது இன்சொல்லா புன்சொல்லா என்பது பற்றியே நமக்கு கவலையில்லை. கூறிய கூற்று மெய்க்கூற்றா பொய்க்கூற்றா என்பதை நாம் அறிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.சிலர் மேயோ ஆதிக்க வெறி கொண்ட வெள்ளையர்களால் கூலிக்கு வேலை செய்ய வந்த குப்பைக்காரி என்கின்றனர். குப்பைக்காரி என்றால் என்ன? மேயோவின் கூடையில் குப்பை நிறைந்ததா? இல்லையா? குப்பை திரட்ட வந்து வெறுங்கூடையுடன் சென்றாளா? வெறுங்கூடையுடன் சென்றுதான்நிறை கூடையுடன் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததாகத் திரித்துக் கூறினளா? என்பன நமது கடா.
இக்கடாவிற்கு, வைக்கம் வீரர், மாசற்ற நெஞ்சுடையார், தூய வாழ்க்கையினர், துகளிலாப் பொது நோக்குடையார், தேசத்தொண்டில் திளைத்த. திண்மையினார், அத்தேசத் தொண்டை கதர்தொண்டில் ஈடுபடுத்தித் திகழும் திருவுடையார், திராவிடன், குடியரசு பத்திரிகைகளில் பழந்தமிழ் மக்களிடை பாரறிய மெய்ஞ்ஞானக் கட்டுரைகள் வரைந்த பயிற்சி மிக்கார், கோவை திருவாளர் அ.அய்யாமுத்துஅவர்கள் “மேயோ கூற்று மெய்யா- பொய்யா?” என்னும் தலைப்போடு ஒரு நூலை வெளியிட்டு தக்க விடையிறுத்துகின்றார். இதனைப் படிக்குந்தோறும் இப் பெருந்தகையாரின் மதிநுட்பமும் மனத்திலு
தித்த கருத்தை உதித்தவாறு எடுத்தியம்பும் திறனும், நடு நிலைமையும் இனிய செந்தமிழ்ச் சுவையோடு பால், தேன், பழம் கலந்தவாறு இனிப்ப தென்பதில் ஐயமின்று, உண்மையைஅறியஅவாக்கொண்டவர்கள் இந்நூலை அவசியம்
ஒரு முறையேனும் படித்தல் தகைமையாகும். இத்தகைய நூலை வெளியிட்ட அறிஞர்க்கு இத்தமிழுலகம் எஞ்ஞான்றும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. குமரன் அச்சு நிலையத்தில் அழகு பெறப் பதிப்பிக்கப் பெற்ற இந்நூல் விலை அணா-0-4-0
குடி அரசு - மதிப்புரை - 22121929
குடி அரசு - 1929 @) 336
விவாகாத்து
சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப் பட்டதீர்மானங்களை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.அவைகளில் முக்கியமாக
இரண்டு தீர்மானங்கள் மாத்திரம் அதிகமான விவாதத்திற்குக் காரணமாயிருந் தன. “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமானமான ஒழுக்க முறைகள் ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. “கலியாணமானப் பெண்கள்.
தகுந்த காரணமிருப்பின் தங்களுக்கிஷ்டமான போது தங்கள் விவாகத்தைரத்து செய்து கொள்ளலாம்” என்பது இரண்டு. இந்த இரண்டு தீர்மானங்களும் பெரிய படித்தமனிதர்கள் என்பவர்களையும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுகிற வர்கள் என்பவர்களையும் சரியான பரீட்சை பார்த்துவிட்டது என்றே சொல் வோம்.நமது தென்னிந்தியாவிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் “விவாகரத்து” தீர்மானத்தை கண்டித்துவிட்டன.
இத்தீர்மானம் சம்பந்தமாக பத்திரிகைகளில் நடந்த வாக்குவாதங்களும்,
மறுப்புகளும், கண்டனங்களும் அவைகளுக்கு எழுதப்பட்ட பதில்களும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். வயது சென்ற ஸ்திரீகள் என்று சொல்லக்கூடியவர்களில் சிலர் தீர்மானத்தின் உண்மையை உணராமல் இதை எதிர்த்த விஷயம் நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.
ஸ்திரீகள் மகாநாடு நடைபெற்ற அன்றைய தினமே, இவ்விதமான தீர் மானங்கள் கொண்டு வருவது தனக்கு இஷ்டமில்லையென்று சொல்லி, அக்கி ராசனர் ஸ்ரீமதி சீனிவாசய்யங்கார் அவர்கள் தன்னுடைய அக்கிராசனப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்கள். பிறகு வேறு ஒருவருடைய அக்கிரா சனத்தில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு மேற்சொன்ன தீர்மானங்களும் இன்னும் இதர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பிறகு இது சம்பந்தமாக பிரபல ஸ்திரீகள் சிலருக்குள் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு பத்திரிகைகள். மூலியமாக இரு சாரார்களுடைய அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வந்தார்கள். இன்னும் அத்தீர்மானங்களின் சம்பந்தமான அபிப்பிராயங்கள். பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால்தான் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் வெளியிட விரும்புகிறோம். மேலும் சென்னை மாகாணத்தின் முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட இதே இரண்டு தீர்மானங் களுக்கு இப்போதிருக்கும் எதிர்ப்புக்களைவிட பலமான எதிர்ப்புகள்
337 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
தோன்றியதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் இதைவிட “வேகமானதும்” “புரட்சியானதும்” என்று பிறரால் அநாவசியமாக தூற்றப்பட்ட சில இதர தீர்மானங்களைப் பற்றி நாம் எழுத வேண்டியதா யிருந்தால், ஸ்திரீகளைப் பற்றி மேற்கண்ட இரண்டு தீர்மானங்களைப் பற்றி அதிகமாக விவரித்து எழுத அவகாசமில்லாது போயிற்று. ஆகையால் இந்த சந்தர்ப்பத்திலாவது இது சம்பந்தமாக நமது கருத்தை விளக்கிவிட வேண்டு மென்று எண்ணுகிறோம்.
முதலாவதாக, ஆண், பெண், இருபாலாருக்கும் சமமான ஒழுக்க முறைகள் இருக்க வேண்டுமென்பது, இது விஷயமாக அபிப்பிராய பேதமே இருக்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதில்கூட படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட மாறுபாடான அபிப்பிராயத்தைக் கொண்டி ருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் நமக்கு, பெரிய அதிசயமாகவே இருந்தது. உதாரணமாக பார்ப்பனரல்லாதாருக்காக உழைக்கும் “ஜஸ்டிஸ்” பத்திரிகையில் ஆண், பெண்ணுக்கு சமமான சட்டம் இருக்க வேண்டு மென்று சென்னை ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியிருந்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம் ஏழை மக்களுக்காகவும், நியாயத்திற்காகவும், சகோதரத்துவத்திற்
காகவும், சமத்துவத்திற்காகவும் உழைப்பதாகச் சொல்லும் “ஜஸ்டிஸ்” பத்திரி கையானது சாஸ்திரங்களை உதாரணமாகக் காட்டி இத்தீர்மானத்தை கண்டித்த தானது நாம் என்றும் எதிர்பாராததும், ஏமாற்றமுமான விஷயமேயாகும்.. பகுத்தறிவுக்கு ஏற்றதான காரணங்களைச் சொல்லாமல் “ஜஸ்டிஸ்” பத்திரிகையானது, “பொதுவாகவே பெண்கள் இயக்கம் சரிவர நடத்தப்படுவ தில்லை” என்ற பெரும் குற்றத்தைச் சுமத்துகிறது. இந்த அபிப்பிராயம் உண்மையா? இல்லையா என்பதைப் பற்றி நமக்கு அதிகக் கவலையில்லை... ஆனால், நமக்கு வேண்டியதெல்லாம் இது மாதிரி விஷயங்களில் பெண் பாலருடைய முடிவான அபிப்பிராயம் என்னவென்பதே. ஏனெனில், பெண்
கள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி ஆண்கள் முடிவு செய்வதை விட பெண்களது அபிப்பிராயத்தையே பின்பற்றுவதுதான் முறையான வழியாகும். இன்று நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் பெண்கள் நிலைமை சற்று தாழ்மை யாகவே இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விதிகள் சட்டதிட்டங்களெல்லாம் பெண்மக்கள் படித்திராத காலத்தில் ஆண்: மக்களால் ஏற்படுத்தப்பட்டதால் தான். பார்ப்பனரல்லாதார் படிக்காத காலத்
தில் எப்படி நம்மைப் பற்றி தூஷித்து நம்மை “அடிமைகள்” என்பது புராணம். முதலானவைகள் எழுதி வைத்தார்களோ அதே மாதிரியாகத்தான் ஆண் மக்களும் தங்களுக்கு ஏற்றவாறு பாரபட்சமான சட்ட திட்டங்களை ஏற்படுத்தி னார்கள். உதாரணமாக புருஷன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டுமென்ற கட்டாயத்திற்கு பெண்கள் சம்மதித்திருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். அப்படி சம்மதித்திருந்தாலும் அதே மாதிரி மனைவி இறந்த புருஷனையும் உடன்கட்டை ஏற்ற வேண்டு மென்றாவது கேட்டிருக்க
குடி அரசு - 1929 @) 338
மாட்டார்களா என்பதும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயமாகும்.
ஆகவே, இம்மாதிரியாக பலவழிகளிலும் பெண் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பதற்கு ஆண்களுடைய சுயநலமே காரணம் என்பது “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகளுக்கு இன்னும் இவை தெரியாமலா இருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை, ஒழுக்கம் முதலிய விஷயங்களில் சமமான சட்டங்கள் இருத்தலே அவசியம் என்பதை “ஜஸ்டிஸ்” போன்ற பத்திரிகைகள் மறைத்தாலும் அல்லது எதிர்த்தாலும் நமது நாட்டுப் பெண்கள். ஆயிரக் கணக்காய்ப் படிக்க ஆரம்பித்து விட்ட இக்காலத்தில் ஆண் மக்களது சுயநல அபிப்பிராயங்களுக்கு எவ்வித செல்வாக்கும் மதிப்பும் இருக்காது என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆகவே இந்த அடிப்படையான முக்கிய கொள்கையிலேயே நமது சகோதரப் பத்திரிகையின் அபிப்பிரா யத்துக்கு நாம் மாறுபட வேண்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.
இரண்டாவதாக உள்ள “விவாகரத்து” விஷயந்தான் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமாகும். இது சம்பந்தமாக செங்கற்பட்டு சுய மரியாதை மகாநாட்டிலும் சென்னை ஸ்திரீகள் மகாநாட்டிலும் நிறைவேற்றப் பட்ட தீர்மானமானது பொறுப்பற்றவர்களால் செய்யப்பட்டதல்லவென்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆண் மக்களே நூற்றுக்கு 95க்கு மேல் கூடி யிருந்த செங்கற்பட்டு மகாநாடும், பெண்மக்களே நூற்றுக்கு நூறு கூடியிருந்த சென்னை ஸ்திரீகள் மகாநாடும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றியிருக் கின்றனவென்றால் இதில் ஏதாவது தவறு இருப்பதற்கு மார்க்கமிருக்கிறதா என்று கேட்கின்றோம்.
இதைப் பற்றி ஆராய்வதற்கு முன்பு இது சம்பந்தமாக அநேக தப்ப பிப்பிராயம் கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டியது அவசியமா கின்றது. “விவாகரத்து” சட்டமானால் உடனே எல்லாப் பெண்களும் தங்கள். கணவர்களை விட்டு ஓடிப்போவார்கள் என்றும், “கற்புநிலை” அடியோடு கெட்டுப் போகுமென்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்
பிற்கும், அவசியத்திற்கும் ஒரு சட்டம் செய்தால் ஜனங்கள் எல்லோரும். அதே வேலையாயிருப்பார்களென்பதே நியதியல்ல. அவசியமான சந்தர்ப் பங்களில் மாத்திரம்தான் ஜனங்கள் அதனைக் கையாளுவார்கள். ஏனெனில், அதனால் ஏற்படக்கூடிய கஷ்டநஷ்டங்களுக்கு தாங்களே பாத்தியப்பட்டவர்
கள் என்பது அநுபவத்தினால் மக்களுக்கு நாளடைவில் விளங்கிவிடும். ஆகவே “விவாகரத்து” அனுமதிக்கப்படுமானால் ஏதோ ஆபத்து வந்துவிடு மென்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களது சுயநலத்தினால் ஏற்படக்கூடிய பயம் என்றுதான் சொல்லுவோம்.
“விவாகரத்து” சட்டமாவது பெண்கள் சமூகத்திற்கு ஒரு இன்றியமையாத: பாதுகாப்புக்கருவி என்பது நமது முடிவான அபிப்பிராயம். புருஷனுக்கும் மனைவிக்கும் பரஸ்பர அன்பும் சமமான வாழ்க்கையும் ஏற்படவேண்டுமானால்
339 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
இருவருக்கும் தவித்தனியாகஉரிமையிருந்தால்தான் முடியும். இப்போதிருக்கும் “இந்திய” சமூகத்திலுள்ள மணவாழ்க்கையானது பல வழிகளிலும் பெண் மக்களுக்கு பாதகமான முறையிலேயே நடைபெற்று வருகிறது. ஒரு புருஷன்:
தனக்குத் தேவையில்லாதபோது தனது மனைவி அளித்திருக்கும் நமது சட்டமானது, பெண்களுக்கு அதே உரிமையைக் கொடுக்காமலிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். இந்த உரிமை மனிதனுக்கு இருப்பதால், எல்லாப் புருஷர்களும், இதே வேலையாகவா இருக்கிறார்கள் என்று தான் கேட்கி
றோம். ஆகவே, இதே உரிமையை பெண் மக்களுக்கும் அளிக்கவேண்டியது நியாயமும் சமமும் ஆகும் என்பதை இன்னும் ஏன் ஆண்மக்களில் சிலர் அறியவில்லை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. இந்த விவாகரத்துத் தீர்மானத்தை வைதீகப் பத்திரிகைகள் தான் கண்டித்தனவென்றால், நமது “ஜனநாயக”த் தினசரியான “ஜஸ்டிஸ்” பத்திரிகையும் கண்டித்ததுதான் நமக்கு விளங்கவில்லை. எது எப்படியாயினும், இந்தத் தீர்மானத்தின் அவ சியத்தை நமது சுயமரியாதை இயக்கத்து அன்பர்கள் நன்கு அறிவார். களாகையால், இம்மாதிரி சமத்துவமான நோக்கமுடைய விஷயங்களில் எவ் வளவு எதிர்ப்பு இருந்தாலும், அதற்காக நாமோ அல்லது நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ எங்கள் கடமையினின்றும் பின்வாங்க மாட்டோம் என் பதை மாத்திரம் உறுதி கூறுகிறோம். கடைசியாக “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு ஒன்று கூற விரும்புகிறோம். பொது மக்களின் உணர்ச்சிக்காக ஏற்படுத்தப் பட்ட அப்பத்திரிகையானது இனியாகிலும் மக்களின் அபிப்பிராயத்தை ஒட்டி
சீர்த்திருத்தத்தில் முன்னணியில் நின்று தனது பழைய குருட்டு நம்பிக்கைகள். ஏதேனும் மிஞ்சி இருக்குமானால் அவைகளை உடனே ஒழித்து சமூகத் தொண்டையே பிரதானமாகக்கொண்டு வேலை செய்யும் என்று எதிர்பார்க் கிறோம். மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுசம்பந்தமாக இன்னும் விவரமாக எழுதுவோம்.
(சா.கு3
குடி அரசு - தலையங்கம் - 29.12.1929.
குடி அரசு - 1929 @) 340
திரு.வேணுககோயால் நாமர௫விண் மாரணம்
பட்டுக்கோட்டையில் திரு, வேணுகோபால் நாயுடு அவர்கள் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் எமது மனம் துடித்த துடிப்பைச் சொல்லிவிட முடியாது. சில நிமிஷங்கள் வரை நிம்மதியில்லாமல் மனது தத்தளித்துக் கொண்டிருந்தது. இப்போதும் இச்சம்பவத்தை நினைக்குந் தோறும் மனம் திடுக்கிடுகிறது. திரு.வேணுகோபால் நாயுடு அவர்கள். பார்ப்பனீயம் நிறைந்த பட்டுக்கோட்டையில், நமது மக்களுக்கு, அதுவும் முக்கியமாக இளைஞர்களுக்கு எவ்வளவு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தார்கள் என்பது அவ்விடத்தில் இன்று இளைஞர்கள் படும் துயரத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். மாணவர்களுக்கு நற்புத்தி புகட்டக்கூடிய பிதாவும், ஏழைமக்களுக்கு வேண்டுவன அளித்து அவரது துயர்நீக்கி வந்த அண்ணலும், பார்ப்பனீயமும் புரோகிதப்புரட்டு கண்டு அஞ்சும்படியான சுயமரியாதை வீரரும், வக்கீல் தொழிலில் ஒரு பிரபலஸ் தரும், பொதுவாக, பார்ப்பனரல்லாதார்களுக்கே தஞ்சை ஜில்லாவிற்கு ஒரு தலைவருமாக விளங்கிய திரு.வேணுகோபால் அவர்களை இழந்தது நமக்கு ஒரு பெரியநஷ்டம் என்றே சொல்வோம். அவர்களது முற்போக்கான கொள்: கைகளும், தன்னலமற்ற சமூகத்தொண்டும், தைரியமாய் தனது அபிப்பி ராயத்தை யாரிடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடக்கூடிய தைரியமும்
நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வளவு பக்க பலமாயிருந்தது என்பதை நினைக்குந்தோறும் அற்றொணாத் துயரம் மேலிடுகிறது. இனி பொதுவாக தஞ்சை ஜில்லாவாசிகளும் குறிப்பாக பட்டுக்கோட்டைவாசிகளும் செய்ய வேண்டியது யாதெனில், காலஞ்சென்ற நமது அன்பர் திரு.வேணுகோபால் அவர்களைப் பின்பற்றி, அவர்கள் செய்துவந்த வேலையை நாமும் செய்வ தோடு, அவர்களது ஊக்கமும் உற்சாகமும் என்றும் நமக்கும் இருக்குமாறு நமது சமூகத் தொண்டை செய்வதுதான். திருவேணுகோபால் அவர்களின் குடும்பத்தாருக்கும், இதர பார்ப்பனரல்லாத சமூகத்தார்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.12.1929.
341 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
அருஞ்ணசால் வாருன்
அதிக்கிரம அவிபக்தம்
நெறி தவறிய, வரம்பு மீறிய பிரியாதது (கூட்டுக்குடும்பம்)
அளவற்றது, எல்லையற்றது நடைமுறை, ஒழுக்கம், வழக்கம்
அனந்தம் அனுஷ்டானம் ஆப்புக்கடாவின
ஆப்பு வைத்தல், ஆப்பு அடித்தல் விரும்பியது கைகூடல், எண்ணிய வண்ணம் நடைபெறல் அமைவு, இருப்பு, நிலைமை:
இஷ்டசித்தி
ஓதா (ஹோதா?
கன்னி இருட்டு, விடியற்கு
குமரி இருட்டு
முன் உள்ள இருள்
கெம்பு
சிவப்பு இரத்தினக்கல் தோழமை, இணக்கம் தண்டனை நல்லோரைக் காத்தல்
சங்காத்தம்
சிட்சை
சிஷ்ட பரிபாலனம். சீதோஷ்ண ஸ்திதி சுவாதந்திரியம்
தட்பவெப்ப நிலை
சுதந்திரம், தன்விருப்பம், விடுதலை, விடுபாடு
தங்கடங்கள்.
தங்கள் தங்கள்
தர்க்காஸ்து தாரதம்மியம்
தரிசு
ஏற்றத் தாழ்வு பயிற்சி வல்லாந்த கற்பழிப்பு, பலாத்கார கற்பழிப்பு
தர்ப்பீத்
துராக்கிருதம் துவஜ ஸ்தம்பம்
கொடிமரம் பொறுப்பாளி, தாளாளர்.
துரந்தரர் துஷ்டநிக்கிரகம் தேசவர்த்தமானம்
தீயோரை அழித்தல்
நாட்டு நடப்பு பயமில்லாமல் கொடுமை, வெறுப்பு
நிர்பயமாய்
நிஷ்டூரம்
242 242
குடி அரசு - 1929 @)
- முடிசூட்டுதல்
- எல்லை
- பூப்படைதல்
- சொல்லுதல், தெரியப்படுத்துதல்
- புரவலர், காப்பாளர்.
- முதுமைக்காலம்
- மிகுந்தது (தனிக்குடும்பம்)
- இணை, ஜோடி
- ஊறு, கேடு
- தூண்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 9
குடி அரசு - 1929 (2) 344