Kudi Arasu — 1929, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1929-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 8
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1929-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 352
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
சுயமரியாதை முழக்கம்
சுயமரியாதை இயக்க வரலாற்றில் தடம்பதித்த முதல் மாநாடு நடந்த ஆண்டு இது. முதலமைச்சர், இராஜாக்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், தொழிலாளிகள், தாழ்த்தப்பட்டோர், விதவைகள், தாசிகள், தனித்து வாழும் பெண்கள் என அனைத்துப் பிரிவினரும் பங்கேற்ற மாநாட்டு நிகழ்வுகளும் காலத்தால் போற்றப்படும் 34 புரட்சிகரத் தீர்மானங்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துமாறு காந்தியை பம்பாயில் கூடிய ஒரு மாநாடு வற்புறுத்தியபோது, * அது என் கையில் இல்லை, ஈரோட்டில் இருக்கும் இரு பெண்மணிகளின் கையில் உள்ளது” என்று நாகம்மையார், கண்ணம்மையார் ஆகியோரைக் குறிப்பிட்டு காந்தி கூறியது; குடி அரசு விளம்பரத்தைப் பணம் கொடுத்துப் போடச்சொல்லியும்
* சுதேசமித்திரன்” * நவசக்தி” போன்ற நாளேடுகள் மறுத்தது; வகுப்புரிமை ஆணை பிறப்பித்த சென்னை மாகாண அரசு மீது நடவடிக்கை கோரி இந்து நாளேட்டின் முன்னோடி ஏ.ரங்கசாமி அய்யங்கார் டெல்லி இந்திய சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவந்தது; “மன்னும் இமயமலை எங்கள்: மலையே” என்று தொடங்கும் பாரதி பாடலில் “ உன்னத பாரத நாடெங்கள் நாடே” என்ற வரி “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே” என்று திருத்தி பதிப் பிக்கப்பட்டது உள்ளிட்ட வரலாற்றுச் செய்திகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சீர்திருத்தம் வழங்கவந்த சைமன்குழுவை உறுதியாக ஆதரித்த பெரியார் குழம்பிநின்ற நீதிக்கட்சியையும் ஆதரிக்க வைத்தார். ஷெட்டியூல்டு இன மக்களின் தனித்தொகுதியையும் அம்பேத்கரின் செயல்பாடுகளையும் ஆதரிக்கும் அழுத்தமான கட்டுரைகளும் இத் தொகுப்பில் இடம்பெற் றுள்ளன. இராமாயணம், கீதை குறித்த ஆய்வுகளும் தொடங்குகின்றன.
பக்கங்களில் குறிக்கப்பெற்ற தமிழ் எண்கள் விடைபெற்று பொது எண்கள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கின.
- பதிப்பாளர்
பொருளடக்கம்
காங்கிரஸ் ஏமாற்றுத் திருவிழா முடிவு பெற்றுவிட்டது சுயமரியாதை மகாநாடு
சகட
சந்தேகம்
நமது நாடு வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மகாநாடு
6. வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மகாநாடு
7. தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு
8 எது நாஸ்திகமல்லாதது?
8 ஹிந்திப் புரட்டு
10. காக்கை குருவி சம்பாஷணை
11. திருவள்ளுவரின் பெண்ணுரிமை
12. வேலூரில் பொதுக்கூட்டம்
13. செங்குந்தர் சமூக மகாநாடு பொருட்காட்சி திறப்பு
14. புதுச்சேரி- பொதுக்கூட்டச் சொற்பொழிவு
15. புதுச்சேரியில் சுயமரியாதை கிருகப் பிரவேசம்
16. தென்னிந்திய செங்குந்தர் மகாநாடு
17. பார்ப்பனப்பட்டங்களின் இரகசியம்
18. இதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்?
19. இது ஒரு அதிசயமா?
20. திரு. சாமிவெளியாக்கப்பட்டார்.
21. 'கதேசமித்திரனின்' போக்கிரித்தனம்
22. பாரதிப் பாடல் புரட்டு
குடி அரசு - 1929 ()
பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளே யாவார்கள்
T
நாம் பொறுப்பாளியல்ல
79
சென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும் 80
சர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும்
86
கும்பகோணத்தில் பார்ப்பனாதிக்கமும் கிறிஸ்தவர்கள் சுயமரியாதையும்
88
தீண்டாமை விலக்கு மகாநாடு
சுயமரியாதை மகாநாடு
இனிச் செய்ய வேண்டிய வேலை.
ஓர் புதியகோயில்
பகிஷ்காரம் “பொஸ்ஸ்' என்று போய்விட்டது
செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்
ஓர்விஞ்ஞாபனம்
செங்கற்பட்டு மகாநாட்டு தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும்
இராமனுக்கு சீதை தங்கை” “இராவணனுக்கு சீதை மகள்” “இராமனுக்கு பல பெண்டாட்டிகள்”
செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் 17
மதிப்புரை
செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும்
தேவர்களின் முறை
127
திரு. ராஜகோபாலாச்சாரியாரின் பஞ்ச நிவாரணப்புரட்டு
132
பஹிஷ்காரத்தின் இரகசியமும் “தலைவர்களின்” யோக்கியதையும்
134
136
தேர்தல் தந்திரம்
142
மதுவிலக்கு பிரசாரத்திற்கு 400000 ரூ.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
143
144
“ஆஸ்திக சங்கம்”
காங்கிரசும் மதுவிலக்கு பிரசாரமும்
150
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சீர்காழியில் சுயமரியாதை முழக்கம்
152
எதிர்ப்பிரசாரங்கள்
167
“மித்திரன்” புரட்டு வட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா?
172
174
நமது மந்திரிகள்
175
இனியாவது புத்திவருமா? பரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா
181
183
சென்னையில் சுயமரியாதைத் திருமணம்
185
“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி
188
மதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு
190
இரண்டு வகை மகாநாடுகள் வருணாசிரம மகாநாடு
194
200
இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கின்றது?
205
ஈரோட்டில் ஆலயப்பிரவேசமும் அதிகாரிகள்பிரவேசமும்
210
எலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி
213
கண்ணில்லையா?
218
மகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி
225
கடவுளும் மதமும்“காப்பாற்றப்பட்டால்” சுயராஜ்யம் வந்துவிடுமா?
226
பாராட்டுதல்:
230
இந்திய சட்டசபை வர்த்தகத் தொகுதிக்குத் தேர்தல்
231
13-வது நாடார் மகாநாடு கொடியேற்றுவிழாச் சொற்பொழிவு 232
நமது பத்திரிகை ஐந்தாவதாண்டு மூன்றாவது நாடார் வாலிபர் மகாநாடு
233
240
திருவாங்கூரில் SN.D.P யோகம்
246
மலையாளமும் மாளவியாவும்
250
வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!!!
253
கேரளத்தில் சுயமரியாதைப் பிரசாரம்
254
எதுவேண்டும் வகுப்பு வாதமா? சமூக வாதமா?
261
தேர்தல் கவலை:
76.
266
குடி அரசு - 1929 ()
பூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும் 274
மாளவியாவின் பித்தலாட்டம்
275
உத்தியோக ஆசையும் தேசீயப் புரட்டும்
276
மதத்தையும் சாஸ்திரத்தையும் திருத்தப் போகின்றார்களாம் 282
வரதராஜுலுவின் விஷமப் பிரசாரம்
287
ஒத்திபோடுதல்
288
சைவப் பெரியார் மகாநாடு
289
“குடி அரசு” வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு
290
291
காங்கிரசின் யோக்கியதை
294
இப்பொழுது மதம் எங்கே?
295
திருக்கோவிலூரில் சுயமரியாதைப் பிரசாரம்
296
காங்கிரசு கட்டுப்பாடு
301
வட இந்தியாவிலும் “நாஸ்திகம்” தென்ணாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு
302
303
நமதியக்க ஸ்தாபனம்
307
பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை
312
மிஸ்.மேயோ
316
“நாஸ்திக”த்தின் சக்தி பிரம்மஞான சங்கம்
320
321
மறுபடியும் திரு.ராஜகோபாலாச்சாரியார்.
324
ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி?
330
சம்மத வயது முடிவு
334
புரசைவாக்கம் அருணகிரி சபை
335
எது வேண்டும்?
343
ஒரு கொலைக்கு ஒன்பது கொலை:
349
நல்ல வர்க்கம்
350
அருஞ்சொல் பொருள்
351
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
குடி அரசு - 1929 M
குல மளாவிும் விக் வத வ ் ய ன (57180 அமிர்தரஸம்,0 கற | Sp AT ௮ மொய்களும்கும் masse
ன் a மீர், - q......h.ts..""".u."u“' கணக் M| தைவ g க்ஸ் el Pk, வேட்டை க்கைநிகள். ல் சக சன வியாதி: சனக அவையின் ஸ் ய ல் அல் § | AR S R TR Tt e | ண் Tt வ்கோக் குனிகை
ர்க் o கலக் அன் உ ஸிபாயாரவ, நீழ விழி, நஸ்கம்,
9 படட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எ க க னார் பா். காங்கிரஸ் ஏமாற்றுத் திருவிழா
அவை எமை களக் = apipay பெற்றுவிட்டது
நுகம்: Srie நந்தவனம் இதனா சன
G ஒற்றுமைத் தீர்மானத்தின் யோக்கிதை | க்ளா T | P e | i@ LS 43-ம் வருஷத்திய காங்கிரஸ் என்னும் இவ்வருஷத்திய ஏமாற்றுத் க் அகன் கறம இரலை Sl பல் ண் : g.,fi.ff’,, கு e திருவிழா ஒருவாறு முடிவு பெற்று விட்டது. இந்நாடகம் இந்நிலையில் முடிவு த தும த்யல கண்க பெற முக்கிய வேஷதாரியாய் திரு. காந்தியே நடித்திருப்பது மிகுதியும் குதித்த P, வ க ம்ம ந்னு ர்க் ப்பன் குறிப்பிடத்தக்கது. கதத துர்க எனவே அம்முக்கிய நடிகராகிய திரு.காந்தி இந்நாடகத்தில் கலந்து க த்க் கொண்டதற்கு அவர் திரு.காந்தி) சொல்லும் முக்கிய காரணம் என்ன இன் அணில் உவை வென்றால்:- “ஒற்றுமையின் அவசியத்தைக் கோரியே” இம்மாதிரி கலந்து
L] ey, கள கொண்டாராம். உண்மையில் ஒற்றுமை ஏற்பட்டதா? அல்லது ஒற்றுமை ணன் அனை வாசனை சிறிதாவது அங்கு ஏற்பட்டதா? திரு. காந்தியின் ஒற்றுமைத்
- அதிகயுன ட! MR whaig e கலை sy a7 ¢ AR சென ] எவன. இரத நல் காது i e . B எ என்பன கனிக்ககெண்ல், சாவை, B b i, வ . மர i நூழ்னு காகச் தத. வ் winse 73 o i My க தர்ககாணைவதிம் போத எங் | சம்போ நனி
தன்மான ம வத்த விலக அவி, அமி சிலைகு B, arrpari, இங் தங்கள் ன் விப்டன், ிஷ்கவ்கள், B, வர் i
ரது கனு e
குடி அரசு - 1929 () 10 11 வட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
தீர்மானத்திற்கு முன்னும் சர்வ கட்சி மகாநாட்டின் ஒற்றுமைத் தீர்மானத்திற்கு முன்னும் நாட்டில் எத்தனை கட்சியும் வகுப்புப் பிரிவும் இருந்ததோ அதைவிட அதிகமான கட்சியும் பிரிவினைகளும் தீர்மானத்திற்குப்பின் ஏற்பட்டிருப்பது காங்கிரஸ் நடவடிக்கையைக் கவனித்தவர்களுக்கு தெள்ளென விளங்காமல் போகாது. இந்த இடத்தில் நமது (இந்தியர்களின்! லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.
அதாவது, நமது லட்சியம் ஒற்றுமையா, விடுதலையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படாமல் மாறிமாறி பேசப்பட்டே வந்திருக்கின்றது.
சாதாரணமாய் நமக்குத் தெரிந்து 1907-ஆம் வருஷத்திய சூரத்து காங்கிரசில் ஒருவருக்கொருவர் கலகமும் அடிதடியும் நடந்து கலைந்தது முதல் இதுவரையில் அரசியல் ஒற்றுமையைப் பற்றிப் பேசாத நாள்கள் மிக சொற்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒற்றுமையைப் பற்றி பேச ஆரம்பித்தபிறகே மிதவாதி, அமிதவாதி, சுயேச்சைவாதி, சுயராஜ்யவாதி, இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ப்பனர்கள், பார்ப் பனரல்லாதார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய பல கட்சிகள் தோன்றி யதுடன் சமீபகாலத்தில் ஒத்துழைப்பவர்கள், ஒத்துழையாதார்கள், சுயராஜ்யக் கட்சிக்காரர்கள், குடியேற்ற நாட்டு அந்தஸ்துக்காரர்கள், பூரண சுயேச்சைக்
காரர்கள் என்பவர்களாகிய எத்தனையோ வித கட்சிகளும் அபிப்பிராய பேதங்களும் வளர்ந்து கொண்டே வந்தும், வந்து கொண்டும் இருக்கின்றதை
யாரும் மறைத்து விட முடியாது.
இதுதவிர, சமய சமூக இயலிலும் பல கட்சிகளும் அபிப்பிராய பேதங்களும் இருந்து கொண்டு வருகிறது. சுமார் 20 வருஷ காலமாக ஒற்றுமை! ஒற்றுமை! என்று பேசிக் கொண்டு அதற்காக செலவழித்த நேரமும் அறிவும் ஊக்கமும் இதுவரை நாட்டுக்கு என்ன பலனைக் கொடுத்தது அல்லது எவ்வித வெற்றியை அளித்தது என்பதை யோசித்துப் பார்க்கும் படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
ஒற்றுமையைப் பற்றி பேசும் எல்லோரும் அநேகமாய் மனதி லொன்றும் வாக்கிலொன்றும் நடவடிக்கையிலொன்றுமாக யோக்கியப் பொறுப்பற்ற தன்மையில் தங்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு பிறரை, சிறப்பாக இந்திய நாட்டு பாமர மக்களாகிய 100-க்கு 99 பேரை ஏமாற்றித் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள செய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறு என்ன நல்லெண்ணம் இவ்வொற்றுமை முயற்சியில் இருந்து வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா என்று அதட்டியுடன் கேட்கின்றோம்.
இதற்கு ஆதாரம் கண்டுபிடிக்க நாம் அதிக தூரம் போக வேண்டிய தில்லை. உயர்ந்த தத்துவம் என்று கருதப்பட்ட ஒத்துழையாமை இயக்க சம்மந்தமாகவும் உண்மையான மனிதர் என்று கருதப்பட்ட திரு.காந்தி சம்மந்தமாகவும் ஏற்றபட்ட ஒற்றுமைகளின் யோக்கியதைகளைப் பற்றி
கவனித்துப் பார்த்தாலே போதுமானது.
அதாவது திரு.காந்தி சிறையில் இருக்கும்போது டில்லி, அலகாபாத், நாகப்பூர், காகிநாடா முதலிய இடங்களில் ஏற்பட்ட ஒற்றுமைகளும், திரு. காந்தி வெளிவந்த பிறகு சுமார் 4, 5 தடவை ஏற்பட்ட ஒற்றுமை ஒப்பந்தங்
களும், ஒற்றுமைத் திட்டங்களும் அதாவது காந்தி தாஸ் நேரு ஒப்பந்தமும், காந்தி தாஸ் ஒப்பந்தமும் திரு.காந்தி தானாகவே தனியாக ஒற்றுமைக்காக என்று திட்டங்களை மாற்றிக் கொண்ட வகையிலும் பெல்காம் காங்கிரசில் செய்து கொண்ட ஒப்பந்தமும் மற்றும் இந்து முஸ்லீம் ஒப்பந்த ஒற்றுமை
களும், பட்டினி கிடந்ததின் மூலம் செய்து கொண்ட ஒற்றுமைகளும் மற்றும் “எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போகிறேன்”, “இமயமலைக்குப் போய் விடுவேன்” என்று மிரட்டி செய்த ஒற்றுமைகளும், கடைசியாக “ராட்டினம் தான் கதி” என்று சொல்லி அரசியலில் இருந்து விலகிக் கொண்டதாய் விளம்பரப் படுத்தியதின் மூலம் செய்த ஒற்றுமைகளும் இதுவரை என்ன பலனைக் கொடுத்தன?
கொள்ளைக்காரர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒற்றுமை போலவும், போலீசாரும் திருடர்களும் செய்து கொள்ளும் ஒற்றுமை போலவும் கருதி செய்யப்பட்டு வந்திருக்கின்றதே யல்லாமல் நாட்டின்
குடி அரசு - 1929 () 12
நன்மையைக் கருதி இதுவரை எந்த விதமான ஒற்றுமையாவது செய்யப் பட்டிருக்கின்றதா? என்று கவனித்துப் பார்க்க வேண்டுகின்றோம். அது போலவே இவ்வருஷ காங்கிரஸ் ஒற்றுமைத் தீர்மானத்தையும் சற்று கவனிப்போம்.
அது, திரு. காந்தி பிரேரேபிக்கிறார் என்கின்ற சலுகையின் பேரில்
ஏழில் நாலு பங்கு ஓட்டுகளால் நிறைவேறி இருக்கின்றது. இது ஒற்றுமைத் தீர்மானமாகுமா? சாதாரணமாய் ஒத்துழையாமையின் போது இம்மாதிரியும் இதைவிட இன்னும் குறைந்த மைனாரிட்டியுமாக ஏற்பட்டு நிறைவேறிய அநேக தீர்மானங்களை இதே திரு. காந்தி ஏற்றுக்கொள்ளாமல் மைனாரிட்டி யாரின் லட்சியத்தையே மிகுதியும் கவனித்து மைனாரிட்டியாருக்கு இணங்கியே வந்திருக்கின்றார். கடைசியாக ஒத்துழையாமையை சித்திரவதை செய்த பெல்காம் காங்கிரசின்போது கூட ஒத்துழையாமைக்கு விரோதமாய் இப்போது கல்கத்தாவில் இருந்த மைனாரிட்டி விகிதத்தில் நாலில் ஒரு பங்குகூட இல்லாத நிலையில் எப்படியாவது தான் தப்பித்தால் போதும் என்று கருதி அடியோடு விட்டுவிட்டு ஓடிவிட்டார். நாமே நேரில் அதன் காரணம் கேட்டபோது, மூன்று மாதம் வாய்தா கொடுத்திருக்கின்றேன், அது கழிந்த பிறகு மணலைக் கயிராகத் திரித்து விடுகிறேன். பயப்பட வேண்டாம் என்று சொன்னார். மூன்று மாதம் கழிந்த பிறகு இவ்விஷயமே அவருக்கு ஞாபகமில்லாமல் போய்விட்டது. அப்படியிருக்க இப்போது நிறைவேறிய இவ்வளவு பெரிய மைனாரிட்டி உள்ள தீர்மானம் ஒற்றுமைத் தீர்மானமாகுமா?
திருவாளர்கள் சிந்தாமணி, சாப்ரு, சிவசாமி அய்யர், ராமசாமி அய்யர். ஆகிய சென்னை அய்யர் பார்ப்பனர்களும், மாளவியா, நேரு முதலிய வட நாட்டுப் பார்ப்பனர்களும் மற்றும் சில சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்களும், இந்திய மக்களில் பல்வேறு வகுப்புகளையும், வகுப்பு சமத்துவத்தையும், சமசந்தர்ப்பத்தையும் ஒழிப்பதற்கும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள். எனவே அந்தக் கைதான் இப்போது வலுத்த கையாதலால் அவர்களுக்கு நல்ல பிள்ளையாய் நடந் தால்தான் தனது மடாதிபதிப் பட்டம் நிலைக்கும். இல்லாவிட்டால் ஆட்டம் கொடுத்துவிடும் என்கின்ற ஒரே ஒரு எண்ணமில்லாமல் இத்தீர்மானத்தை
பிரேரேபித்ததில் திரு.காந்திக்கு வேறு ஏதாவது எண்ணமிருந்திருக்கக் கூடும் என்று யாராவது முன்வந்து சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்?
உண்மையாக அத்தீர்மானத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை உண்டா? பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை உண்டா? சீக்கியர் ஒற்றுமை உண்டா? அல்லது குடியேற்ற நாட்டு அந்தஸ்து - பூரண சுயேச்சை என்கின்ற கட்சிகள் ஒற்றுமையாவது உண்டா? என்று கேட்பதுடன் மற்றும் புதிதாக எத்தனை மாகாணப் பிரதிநிதிகள் மனவருத்தமும், வகுப்பார்கள் மன வருத்தமும் ஏற்பட்டது என்பதை காங்கிரஸ் நடவடிக்கைகளை படித்தவர் களுக்கு விளங்காமல் போகாது. இதுதவிர, இவ்வொற்றுமைத் தீர்மானத்தால்
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சுயேச்சைக் கட்சிக்காரர்களுக்குள்ளாகவே இரு பிரிவினைகளும், முஸ்லீம்க ளுக்குள்ளாகவே பல பிரிவினைகளும் ஏற்பட்டிருப்பதோடு, மிதவாதி
களுக்குள்ளும், சுயாட்சிவாதிகளுக்குள்ளும் தீர்மானத்தின் பகுதி பாகம் ஒப்புக் கொள்ளவும் பகுதி பாகம் தள்ளப் படவுமாய் ஏற்பட்டிருக்கிறதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்கள்
இது மாத்திரமல்லாமல் “ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்கள்” என்பது போல் காங்கிரசின் பேரால் பாமர மக்களிடம் போய் ஒரு கூட்டம் வெள்ளைக்காரர்களின் ஆட்சியை அடித்துத் துரத்தி ஒழித்துவிட வேண்டும் என்றும், மற்றொரு கூட்டம் வெள்ளைக்காரர்கள் நமக்கு இன்னின்ன விதமான சீர்திருத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பிரசாரம் செய்யவும்,
இதன் மூலம் சிலர் ஜெயிலுக்குப் போகவும் உதைபடவும், சிலர் அவர்கள். பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றவும் தாராளமாய் வேண்டுமென்றே இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வளவு வித அபிப்பிராய பேதக்காரர்களையும் கட்சிக்காரர். களையும் நாம் ஒன்று கேட்கின்றோம். இவ்வபிப்பிராய பேதங்களும் கட்சிகளும் பொது நலத்தை உத்தேசித்தா? அல்லது எந்த அபிப்பிராயம் கொண்டால் எந்தக் கட்சியில் சேர்ந்தால், நமது வகுப்பு நலமோ நமது தனி சுயநலமோ ஏற்படும் என்கின்ற எண்ணத்தைக் கொண்டா? என்று கேட்கின் றோம். உதாரணமாக முகமதியர்களில் ஜனாப்கள் ஜின்னா, மகமதலி, ஷெளக்கத்தலி, சர்அப்துர் ரஹீம், மகமதபாத் ராஜா, டாக்டர் அன்சாரி, சர். ஷாபி, ஆகாகான் முதலியோர்கள் பொதுவாக இந்தியா முழுவதுக்கும் பிரயத்தனப்படுகின்றார்களா அல்லது தங்கள் வகுப்புக்கு மாத்திரம் பிரயத் தனப்படுகின்றார்களா அல்லது தங்கள் சுயநல வாழ்வுக்கே பிரயத்தனப் படுகின்றார்களா அல்லது தங்கள் பெயரும் பொதுவாழ்வில் அடிபட்டும் என்கின்ற ஆசையின் மீது பிரயத்தனப்படுகின்றார்களா என்று பார்த்தால் மகமதிய கனவான்களின் பொதுநல அபிப்பிராய பேதத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது. இதுபோலவே, திருவாளர்கள் மாளவியா, நேரு, சிந்தாமணி, சாப்ரு, சர். சிவசாமி, சர். ராமசாமி, அன்னிபெசண்டு, ஜவாரிலால், சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, C. ராஜகோபாலாச்சாரி, ஏ. ரங்கசாமி அய்யங்கார், சாம்பமூர்த்தி, அரிசர்வோத்தமராவ், பட்டாபி சீதாராமய்யா முதலிய பார்ப்பனர்களின் யோக்கியதைகளை கவனித்துப்பார்த்தால் இந்த
தியாகிகளுக்குள் பொதுநல அபிப்பிராயபேதத்தின் மூலம், கக்ஷியா அல்லது சுயவகுப்பு நலம், சுயவாழ்வு நலம் ஆகியவைகளின் மூலம் அபிப்பிராய பேதமா என்பவைகள் விளங்காமல் போகாது. மற்றபடி காங்கிரசில் அதிகமாக அடிபட்ட பெயர்களில் முக்கியமானவைகள் திருவாளர்கள் காந்தி, போஸ், பெசண்டு அம்மாள் ஆகிய பார்ப்பனரல்லாதார்களாகும். இவர்களில்
குடி அரசு - 1929 () 14
திரு.காந்தியைப் பற்றியோ என்றால், ஏதாவது ஒரு கொள்கை திரு.காந்தியை நடத்துகின்றதா, அல்லது திரு காந்தியால் ஏதாவது ஒரு கொள்கை: நடத்தப்படுகின்றதா என்பதைக் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருப்பதுடன் அவருடைய இப்போதைய கொள்கையாவது என்ன என்பதே நம்மால் கண்டுபிடிக்க முடியாததாயிருக்கின்றது.
திரு.போஸ் அவர்களுக்கு, எந்த விதத்திலாவது தான் ஒரு பெரிய
வீரன் ஆகிவிட வேண்டுமென்கின்ற ஆசையைத் தவிர வேறொன்றும்
இருப்பதாய்க் காணமுடியவில்லை. திரு. பெசண்டம்மையோவென்றால், அவரது கொள்கையும் கண்டுபிடிக்க முடியாததாயிருப்பதுடன் தனது மடமும் மடாதிபதித் தன்மையும் இருப்பதாகக் காட்டிக் கொண்டால் போதும் என்கின்ற கவலையே அதிகமாய் இருப்பதாகக் காண்கின்றது.எனவே இந்தக் கூட்டங்கள், அதாவது உலகத்தில் கஷ்டம் என்ன? தொழிலாளர்கள், கூலிக் காரர்கள் நிலைமை என்ன? தாழ்ந்த ஜாதியார் என்பவர்கள் அனுபவிக்கும் துன்பம் என்ன? என்கின்ற விஷயங்களை ஒரு சிறிதும் அறியாதவர்களும் அறிய சந்தர்ப்பமில்லாதவர்களுமான இவர்கள் இந்திய மக்களுக்காக என்று அபிப்பிராய பேதப்படுவதும் ககஷி பிரிந்து நிற்பதும் மறுபடியும் ஒற்றுமை படுவதுமான காரியங்களால் ஏதாவது பலன் உண்டாக முடியுமா அல்லது பாமரமக்கள் லக்ஷியம் செய்யக் கூடியதாயிருக்குமா என்று கேட்கின்றோம்.
ஒரு வருஷத்தில் ஒத்துழையாமை நிற்க, ஒரு வருஷத்தில் ஒத்துழையாமை ஆரம்பிக்கப்படுமாம். அதாவது சர்க்கார் குடியேற்ற நாட்டு அந்தஸ்து ஒரு வருஷத்தில் கொடுக்கா விட்டால் ஒத்துழையாமை ஆரம்பிக்கப்படுமாம்.
சர்க்கார் ஒரு வருஷத்தில் குடியேற்ற நாட்டு அந்தஸ்து நமக்குக் கொடுக்கப் போவதில்லை என்பது உறுதி. அதில்சிறிதும் சந்தேகமில்லை. ஒரு சமயம் சர்க்கார் பகுதி கொடுத்தாலும் ஒன்றும் கொடுக்காவிட்டாலும் வேறு ஏதாவது சில மாறுதல் செய்தாலும். “அதுதான் நாங்கள் குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்று நினைத்துக் கேட்டோம்” என்று சொல்லிக் கொண்டால் கொள்ளலாமே ஒழிய உண்மையில் இந்த நிலைமையில் அந்த நிலைமை நமக்கு கொடுக்கப் போவதும் இல்லை. அதையடைய நம் நாட்டுக்கு இப்போது சக்தியும் இல்லை.
ஆகவே யோக்கியமான முறையில் நடப்பதாயிருந்தால் அடுத்த வருஷம் அதாவது 1930 ஜனவரி 1- தேதி ஒத்துழையாமை ஆரம்பித்தாக வேண்டும். எனவே, திரு.காந்தி இத்தீர்மானத்தை பிரேரேபிக்கும்போது உண்மையாகவே ஒத்துழையாமை ஆரம்பிக்கலாம் என்று உறுதி கொண்டு இதை பிரேரேபித்தாரா அல்லது சர்க்காரை மிரட்டவோ அன்றி பாமர மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றவோ கருதி இதை பிரேரே
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பித்தாரா என்பதை ஒவ்வொருவரும் நடுநிலையிலிருந்து கவனித்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது.
அன்றியும் அப்படியே ஒரு சமயம் ஒத்துழையாமை ஆரம்பிப் பதாகவே வைத்துக் கொண்டால், திரு. சத்தியமூர்த்தி, சாப்ரூ, சிந்தாமணி, சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், ராமசாமி அய்யர், பெசண்டு, மாளவியா ஆகியவர்கள் ஒத்துழையாமைக்கு தயாராயிருப்பார்களா?
எனவே, காங்கிரசும் ஒற்றுமையும் ஒத்துழையாமையும், எவ்வளவு கேலிக் கூத்தும் நாணயமற்றதும் சூழ்ச்சி நிறைந்ததுமான தன்மைகள் கொண்டதாய் இருக்கின்றது? என்பதை ஞாபகப் படுத்திப் பார்த்தால் நமது நாட்டிற்கு எப்போதாவது விடுதலை உண்டாகுமா என்று கூட எண்ண இடமில்லாமல் போவதாயிருக்கின்றது..
சைமன் பகிஷ்காரம்
அடுத்தபடியாக சைமன் கமிஷன் பகிஷ்காரத்தைப் பற்றி ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது. இது, இதுவரை நடந்த பகிஷ்காரங்கள் தோல்வியுற்றதையும் பகிஷ்காரக் கூச்சல் சைமன் கமிஷன் நடவடிக் கைகளை கிஞ்சிற்றும் அசைக்கச் செய்யாமல் போனதோடு பகிஷ்காரத்தால் பலாத்காரங்கள், உயிர்ச்சேதங்கள் முதலியவை ஆங்காங்கு ஏற்பட்டிருப்ப தையும், பகிஷ்கார வேஷக்காரர்கள் பாமர மக்களை முன்னணியில் தள்ளி விட்டுவிட்டு தாங்கள் ஒளிந்து கொண்டும் பின்னணியில் நின்று கொண்டும் பொது மக்களை ஏமாற்றிய பயங்காளித்தனமான இழி தன்மைகளையும் காட்டவில்லையா? திரு.காந்தியும் காங்கிரசும் இவைகளை நன்றாய்த் தெரிந்து கொண்ட பிறகும், இம்மாதிரியான ஒரு ஏமாற்றுத் தீர்மானத்தை தீர்மானித்த தானது, இந்தியாவில் நடைபெறும் தேசீய அயோக்கியத் தனத்தை வெளிப் படுத்தத் தக்க சான்றாக வில்லையா?
பகிஷ்காரத்தைப் பற்றிப் பேசும் போது “இங்கிலாந்து முதலிய தேசங்களில் இம்மாதிரி பொதுமக்களால் வேண்டப்படாத ஒரு கமிஷன் இவ்வளவு கட்டாயத்துடனும் செல்வாக்குடனும் நடைபெறுமா” என்று சொல்லப்பட்டது.
இங்கிலாந்து முதலான மற்றும் அநேக இடங்களில் இம்மாதிரியான அக்கிரமம் நடவாது என்பது உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் இந்தியா தவிர மற்ற இடங்களில் இம்மாதிரி கீழ் ஜாதி மேல் ஜாதி வித்தியாசமும், கீழ் ஜாதிக்காரரின் மீது மேல் ஜாதிக்காரர் என்பவர்கள். ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக சூழ்ச்சிகளும் நடைபெறு கின்றதா? நடைபெற பாமர மக்கள் விட்டுக் கொண்டிருப்பார்களா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1929 () 16
இந்தியா பராதீனப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்ன? இந்திய மக்களிலேயே ஒருவருக்கொருவர் கீழ் ஜாதி மேல் ஜாதி என்கின்றதான ஒரு அக்கிரமமான கொள்கையாலல்லவா? எனவே அதை ஒழிக்காமல் “இந்தியா பூரண சுயேச்சை அடையப் பாடுபடுகின்றேன்” என்பதும் பாடுபடுவதும் காரியத்தில் ஆகக் கூடிய காரியமா? அன்றியும் அது புத்திசாலித் தனமான காரியமா?
ஒரு நாடோ ஒரு சமூகமோ மாத்திரமல்லாமல் ஒவ்வொரு தனி வகுப்பும் ஒவ்வொரு தனிமக்களும் பூரண சுயேச்சை அடைய வேண்டும் என்பது தான் நமது கருத்தாகும். ஏனென்றால் அதுதான் மனிதவர்க்கத்தின் பிறப்புரிமையாகிய சுயமரியாதை என்று நாம் முடிவு செய்து கொண்டிருக் கின்றோம். ஏனெனில் மானத்தோடு வாழக்கூடியதான அடிமைத் தனத்தைப்
பற்றி நமக்கு ஒரு சிறிதும் கவலையில்லை என்பதோடு மானமைற்றதாயிருக்
கும் படியான பூரண சுதந்திரமானாலும் அதை நாம் சிறிதும் லக்ஷியம் செய்ய மாட்டோம். இக்கருத்தையே முன் ஒரு சமயத்தில், அதாவது கிலாபத் அநீதிகளுக்காக என்று ஒத்துழையாமையை திரு.காந்தி மக்களிடையில் உபதேசித்த காலத்தில் சில சென்னைத் தலைவர்கள் “ஒத்துழையாமையின் லக்ஷியம் சுயராஜ்யம்” என்று குறிப்பிட வேண்டும் என்று சொன்னபோது திருகாந்தி, “பஞ்சாப் அநீதிக்குப் பரிகாரம் கிடைக்காமல் எவ்வித சுயராஜ்யம் வருவதானாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்; ஏனெனில் மானம் என்னும் சுயமரியாதை பெரியதே ஒழிய சுயராஜ்யம் பெரியதல்ல” என்று பிராட்வே 8 நெம்பர் கட்டடத்தில் சொன்னார். சென்னை அய்யர் பார்ப்பனர் கள் தவிர மற்றப்படி அது சமயம் அங்குள்ளவர்கள் எல்லோரும் கை தட்டினார்கள். எனவே பூரண சுயேச்சை விரும்புகின்றவர்களாகட்டும்
குடியேற்ற நாட்டு அந்தஸ்துக்கு குறைந்த எதையும் ஒப்புக் கொள்ளாதவர்: களாகட்டும், சைமன் பகிஷ்காரக் கூப்பாட்டுக்காரர்கள் ஆகட்டும் இதுவரை:
யில் மனிதனின் பிறப்புரிமையாகிய சுயமரியாதைக்காக என்ன ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள் என்று கேட்கின்றோம். பொதுவாகவே சைமன் கமிஷன் நாளை கப்பலிலேயே திரும்பிப் போய் விட்டதாகவோ இந்தியா வுக்குநாளைய தினமே குடியேற்ற அந்தஸ்து வந்துவிட்டதாகவோ அல்லது பூரண சுதந்திரம் வந்து விட்டதாகவோ அதாவது வெள்ளைக்கார ஆதிக் கம்மாத்திரமல்லாமல் அந்த சமூகமே இந்தியாவை விட்டு ஒரே அடியாய் ஓடிப்போனதாகவோ வைத்துக் கொள்ளுவோமானால் இந்திய மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன? அவற்றால் இப்போதைய நிலைமையைவிட வேறு எந்த வித மாறுதல்கள் உண்டாகக் கூடும் என்பதை சற்று யோசிப்போம்.
இந்திய மக்களில் 100க்கு 90 பேர்களைப் பொருத்தவரை அவர்கள் அனுபவிக்கும் இழிவுக்கு-அடிமை நிலைக்கு சுயமரியாதையற்ற தன்மைக்கு
- வெள்ளைக்காரர்களுடைய ஆட்சி காரணமா அல்லது உள்நாட்டு ஆரியப் பார்ப்பனீயமும் அதன் ஆதிக்கமும் காரணமா என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கட்டும். அன்றியும் எந்த
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
விதத்திலாவது வெள்ளைக்கார ஆட்சியே தானா நம்மைப் பிரித்து வைத் திருக்கின்றதென்பதை நடுநிலையில் இருந்து யோசித்துப் பார்க்கட்டும். அப்போது என்ன பதில் கிடைக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டுமா? ஆனால் நமக்குள் ஏற்பட்ட பிளவை வெள்ளைக்காரர்கள் தங்கள் கொடுங் கோன்மை ஆட்சிக்கு அனுகூலமாக உபயோகித்துக் கொள்ளுகின்றார்கள். என்பதை நாம் சிறிதும் ஆக்ஷேபிப்பதில்லை. ஆனால் அதற்கு வெள்ளைக் காரர்களே முழு ஜவாப்தாரிகளாவார்களா? ஏனெனில் நாம் அந்த நிலையில் இருந்தால் வேறு என்ன செய்வோம். அதைத் தான் செய்வோம். சைமன் கமிஷன் பகிஷ்காரத்திற்காக செலவழித்த தந்திரமும் நேரமும் கஷ்டமும் நஷ்டமும் மக்களின் உண்மையின் ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் செலவிட்டிருந்தால் சைமன் கமிஷனுக்கு நமது நாட்டில் வேலை இருந்திருக்குமா? அவர்கள் திரும்பிப் பார்க்க ஆள்கள்தான்
இருந்திருக்குமா?
மக்களின் ஒற்றுமையிலும் சமத்துவத்திலும் பரஸ்பர நம்பிக்கையிலும்
சற்றும் கவலையில்லாது மூன்று வருஷத்திற்கு முன்பிருந்தே “சைமன் கமிஷன் வரப் போகிறது, வரப் போகின்றது; உண்மையான இந்திய தேசீய வாதிகள் அதில் சாட்சி சொல்ல வேண்டும்; ஆதலால் ஓட்டர்களே நீங்கள்.
தக்க தேசீய வாதிகளைத் தெரிந்தெடுங்கள்” என்று ஓட்டுப் பிச்சைப் பிரசாரம் செய்துவிட்டு ஓட்டர்களும் தங்கள் பிரதிநிதிகள் சைமன் கமிஷனிடம் சாட்சி சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே தங்கள் ஓட்டுகளைக்
கொடுத்து தெரிந்தெடுத்திருக்க, இப்போது தங்களைத் தெரிந்தெடுத்த ஓட்டர்களுக்கு விரோதமாய் “சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்கின்றேன்” என்பது ஒரு யோக்கியமான பிரதிநிதிக்கு நாணயமான காரியமாகுமா?' பிரதிநிதிகள் அயோக்கியராக இல்லாமல், ஓட்டர்களின் துரோகியாக இல்லா
மல், நல்ல சுத்த ரத்த ஓட்டமுள்ள நாணயக்காரராயிருப்பார்களானால் உடனே தமது பதவியை ராஜீனாமா கொடுத்துவிட்டு, மறுபடியும் தேர்தலுக்கு நின்று
தாம் பகிஷ்காரம் செய்யப் போவதாய் ஓட்டர்களுக்கு சொல்லி, ஓட்டு கேட்டு, அவர்களால் தெரிந்தெடுத்த பிறகு பகிஷ்காரம் செய்தால் அது ஆண்மையும் நாணயமுமான காரியமாகும். அப்படிக்கில்லாமல் “காணாமல் பேசுபவர்கள் எதற்கோ சமானம்” என்பது போல் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் போய் நின்று கொண்டு உண்மையான விஷயங்களைச் சொல்லாமல் தமிழ்மக்கள்.
மீது வீண்பழி சுமத்துவதில் என்ன லாபம் வரும்? எனவே வீணான பகிஷ்
காரக் கூச்சல் போடுவதும் கமிஷனை பகிஷ்கரிப்பதும் இந்திய தேசீய அயோக்கியத்தனத்திற்கு மற்றொரு உதாரணமாகும் என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.
கதரைப் பற்றியும் ஒரு தீர்மானம் காங்கிரசில் நிறைவேற்றப்
பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இது ஓட்டுப் பறிக்கும் தந்திரமே ஒழிய
குடி அரசு - 1929 () 18
இதனால் நாட்டிற்கு எவ்வித பலனும் உண்டாகப் போவதில்லை என்று துணிந்து சொல்லுவோம்.
காங்கிரஸ் தீர்மானத்தில் கதர் இல்லாமலிருக்கும் போதே கதரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களில் ஒரு பகுதியார் வயிறு வளர்ப் பதோடு மாத்திரம் நில்லாமல் பார்ப்பனரல்லாதாருக்கு பல வழிகளிலும் தொல்லைகள் விளைவித்துக் கொண்டு வருகின்றார்கள் என்பதைப் பற்றி பல தடவை வெளிப்படுத்தி இருக்கின்றோம். இப்போது காங்கிரசில் தீர்மானிக் கப்பட்டுவிட்டதால் இனி முன்னிலும் அதிகமாக வெறும் ஆகாசப் பேர் வழிகள் எல்லாம் வெளியே கிளம்பி கதர்! கதர்! என்று கூச்சல்போட ஆரம்பித்து விடுவார்கள்.
ஆகவே, கதரின் யோக்கியதையைப் பற்றி இந்தச் சமயத்திலேயே
சற்று வெளிப்படுத்தி விடுவது சரியான காரியமாகும்.
அதாவது கதர் இயக்கம் ஏற்பட்டு நமக்குத் தெரிய சுமார் 8 வருஷ மாகின்றது. அதில் இதுவரையில் எத்தனை லக்ஷ ரூபாய்க்கு அல்லது எத்தனை கோடி ரூபாய்க்கு கதர் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றதோ அதில் சரியாக மூன்றில் இரண்டு பங்கு ரூபாய் அதை வாங்கிக் கட்டிய மக்கள் நஷ்டப்பட்டிருக்கின்றார்கள். ஆணால் அவற்றில் 5-ல் ஒரு பங்கோ 6-ல் ஒரு பங்கோ தான் ஏழைகளான நூற்புக்காரர்களுக்குச் சேர்ந்திருக்கும். நெசவுக் காரர்களுக்கு இந்தக் கதரினால் எவ்வித லாபமும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது. நூல் நூற்பவர்களுக்கு மேற் சொன்னபடி சிறிது பாகம்
சேர்ந்திருந்தாலும் அது அவர்களுக்குத் தினம் ஒன்றிற்கு 10 மணி அல்லது சில சமயங்களில் 12 மணி நேரத்திற்கும் குறையாமல் வேலை செய்வதற்கு 6
தம்பிடி முதல் 9 தம்பிடி அல்லது (ரொம்பவும் அதிகமாயிருந்தால்) 10-தம்பிடி.
வீதம் தான் பெரும்பாலும் கிடைத்திருக்கும். ஒரு அணாவுக்கு மேல் அடைந்திருக்கவே முடியாது.
அதாவது ஆறு முழமுள்ள ஒரு ஜதை கதர் வேஷ்டி சாதாரண பஜார் ரகமானால் ரூ.4-2-0 கொடுத்து வாங்க வேண்டும். இதே ஆறு முழ வேஷ்டியை மில் வேஷ்டியாக வாங்கினால் ரூ.1-10-0 அல்லது ரூ. 1-12-0. கொடுத்தால் போதுமானது. ஒரு ஜதை வேஷ்டிக்குக் கதரை உத்தேசித்து வாங்குகின்றவர்கள் குறைந்தது 2-4-0 அல்லது 2-8-0 ரூபாய் நஷ்டப் பட வேண்டியிருக்கிறது. சற்று நல்ல வேஷ்டியாய் பார்த்து வாங்க ஆசைப் படுகின்றவர்கள் சில சமயங்களில் இதற்கு இரட்டிப்பாயும் கொடுக்க வேண்டி வருகின்றது. பொதுமக்கள் இவ்வளவு நஷ்டமடைந்த பணத்தில் நூற்பவர்களுக்குப் போய்ச் சேரும் பணம் எவ்வளவு என்று பார்ப்போ மானால் சற்று விவரமாய் கூறுவோம்.
அதாவது இந்த வேஷ்டி, எடை போட்டுப் பார்த்தால் இரண்டே காலே அரைக்கால் பவுன் எடையாயிருக்கும். இந்த பஞ்சுக்கு நூற்பவர்களுக்கு கூலி
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ராத்தலுக்கு 4-அணா கூலி வீதம் சராசரி 0-9-6 அணா தான் போய்ச் சேரக்கூடும். அதுவும் ஒரு வாரத்திற்கு ஒரு பெண் இரவும் பகலும் வேலை செய்தால் தான் மேற்கண்ட இரண்டே காலே அரைக்கால் ராத்தல் நூலை நூற்று மேல்கண்ட ஒன்பதரை யணா கூலி பெற முடியும். இதற்கு ஒவ்வொரு பெண்மணியும், சராசரி 3 மைல் முதல் 6 மைல் வரை நடந்து வந்து பஞ்சு வாங்கிக் கொண்டு போய் நடந்து வந்து நூலை கொடுத்து கூலி வாங்கிக் கொண்டு போக வேண்டும்.
சாதாரணமாய் 8 வருஷ காலமாய் பல லக்ஷ ரூபாய்கள் பொது மக்களிடமிருந்து வசூல் செய்து பிரசாரம் செய்து ஆராய்ச்சி செய்த கதர் இயக்கத்தின் யோக்கியதை இதுவானால் இதை இனியும் எத்தனை வருஷ காலம் பிரசாரம் செய்வது? இனி எத்தனை லக்ஷம் ரூபாய் பொது மக்களிடமிருந்து பிடுங்குவது? இனி எத்தனை லக்ஷ மக்கள் இம்மாதிரி 100க்கு 200-வீதம் சதா வரி கொடுத்து சதா வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது என்பனவைகளை யோசித்தால் கதர் இயக்கம் ஜீவகாருண்யமும் புத்திசாலித் தனமானதும் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உலகம் புதிய முறைகளையும் புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடித்து அதனாலே மேன்மை அடைந்து வருகின்றது. தினத்திற்குத் தினம் புதுமை புதுமையான சக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் சுகமும் நாகரீகமும் அடைந்து வருகின்ற காலத்தில் நமது நாடும் அப்பதவியை அடைய ஏன் முயற்சிக்கக் கூடாது. இப்படி பொதுமக்களிடம் கோடிக்கணக்காய் பணம் வசூலித்து அவை முழுவதும் ஒரு கூட்டத்தார் வயிற்றில் போய் விழும்படி
- அதுவும் பணம் கொடுத்த கூட்டத்தாருக்கு துரோகம் செய்யச் செய்து கொண்டு ஒரு நாளைக்கு 10 மணி 12 மணி நேரம் வேலை வாங்குவதன் மூலம் முக்கால் அணாவும் ஒரு அணாவும் கூலி கிடைக்கும் படியான வேலைகளை ஆதரித்துக் கொண்டு வருவது ஒருநாளும் இனி பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடிய காரியமல்ல என்பதோடு அவ்வியக்கம் ஒரு பெரிய சமூகத் திற்கு தொல்லை செய்யக் கருவியாயிருக்க விட்டுக் கொண்டிருப்பதும் அதற்காக தொல்லைப்படும் மக்களே 100க்கு 200வீதம் வரி கொடுத்து வரவும் சகித்துக் கொண்டிருப்பது என்பதும் இனி அரை க்ஷணமும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடியதல்லவென்றே சொல்லுவோம்.
ஆதலால் இனி பொதுமக்கள் கதரில் செலுத்தும் நேரத்தையும் பணத்தையும் அறிவையும் பிரயாசையையும் அதற்காக செலுத்தும் வரியை
யும் வேறு ஏதாவது ஒரு தக்க ஆராய்ச்சியில் செலவு செய்து ஏழைகளுக்கு விமோசனம் உண்டாகும்படி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமான
காரியமாகும்.
அன்றியும் பாமர மக்கள் இக்கதர்ப் புரட்டினால் ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் பொது மக்களின் கடமையாகும். இதனா லேயே நாம் கதரைக் கட்டாமலிருக்கப் போகின்றோம் என்றாவது மற்றவர்.
குடி அரசு - 1929 () 20
களைக் கட்ட வேண்டாம் என்று சொல்வதாகவாவது யாரும் நினைத்துவிடக் கூடாது. இந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றும் சூழ்ச்சிக்கு உபயோகப் படுத்தப் படுகின்றது என்றும், சொல்லுவதுடன் இதையே நம்பிக்கொண்டிருக் காமல் ஏழைமக்களின் பொருட்டு வேறு முயற்சி கண்டு பிடிக்கவேண்டும் என்றும் பொது ஜனங்களுக்குத் தெரிவிக்கவும், இந்த எட்டு வருஷகாலம் கதருக்காக பாடுபட்டு கதருக்காக ஜெயிலுக்குப் போய் கஷ்ட நஷ்டப்பட்டு
கதர் இயக்கத்திற்கு ஓரளவு பொறுப்பாளியாய் இருந்து வந்ததின் மூலம் அறிந்த அனுபவத்தையுமே நாம் எழுதுகின்றோம். இப்போது ஏன் இதை எழுத வேண்டியதாயிற்று என்றால் வர வர கதர்புரட்டு சகிக்கக் கூடியதா யில்லை என்பதோடு, தமிழ்நாடு கதர் இலாக்காகாரர்களான திரு.சி. ராஜ கோபாலாச்சாரியாரும் அவர்களது சிஷ்யர்களும் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார்களை ஒழிக்க இக்கதர் புரட்டையே முக்கிய கருவியாய் கருதியிருக்கின்றார்கள் என்றும் அதை உத்தேசித்தே காங்கிரசில் கதர் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள் என்றும் உறுதியாய் நம்புவதால் தான்.
உதாரணமாக சென்ற தேர்தலில் பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க மதுவிலக்குப் புரட்டுகளை ஆயுதமாக வைத்துக் கொண்டு இதே திரு. சிராஜகோபாலாச்சாரியாரும் அவரது சிஷ்ய கோடிகளும் பிரசாரம் செய்த தையும் கோடுகட்டிய குறள்கள் எழுதினதையும் கருப்பாயி சொக்காயி சம்பாஷணைகள் எழுதினதையும் இவற்றை எல்லாம் இதே திரு. காந்தியும் ஆமோதித்து மதுவிலக்குக்காரர்களுக்கே ஓட்டுக் கொடுக்கும்படி சிபார்சு செய்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டால் போதுமானது. எலக்ஷன் நடந்த
பிறகு இந்த திரு. காந்தியாவது திரு. ஆச்சாரியாராவது ஒரு கடுகளவாவது தங்கள் பொறுப்புகளை உணர்ந்தார்களா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.01.1929
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வாருங்கள்! வாருங்கள்!
சுயமரியாதை மகாநாடு
செங்கற்பட்டில் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் நடக்கப் போகின்றது! சைமன் கமீஷனுக்கு என்ன சொல்லுவது என்பதை அங்குதான் தீர்மானிக்கப் போகின்றது. எல்லாரும் வாருங்கள். பதினா யிரக்கணக்கான மக்கள் கூடத் தகுந்த ஆடம்பரமான பலத்த ஏற்பாடுகள் இப்பொழுதிருந்தே நடைபெற்று வருகின்றன. வரத் தவறாதீர்கள்.
குடி அரசு - வேண்டுகோள் - 06.01.1929
குடி அரசு - 1929 () 22
சந்கேகம்
யார்ப்பணால்லாதார் இயக்கம்
1 தங்களை பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாச முமில்லை என்றும் தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர்களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்ற வர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அரு கதையோ உண்டா?
2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது க்ஷத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திர னென்றோ, பஞ்சமன் என்றோ சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?
3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனீயத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?
4 பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால் பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?
5. பார்ப்பனீயத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை குலைத்தாலும், பார்ப்பனீயமானது பார்ப்பனர்களை உண்டுபண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும்
இருக்காதா?
6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கிட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும்
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய்ப் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனீயத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரத்தில் வளர்ந்து விடுமல்லவா?
7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே ஒழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்
கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனீயத்தை ஒழிக்கும் கொள்கையில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங் களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும் சொல்வது சரியா தப்பா? உதாரண மாக, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பலனால் ஏற்கனவே உள்ள பார்ப்பனா திக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கி
லம் படித்தவர்கள் ஆதிக்கம் முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப்போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.01.1929
குடி அரசு - 1929 () 24
நமது நா௫
உலகமெல்லாம் சமூக சீர்திருத்தமும், அபேதவாதமும், சமதர்மமும், சமசொத்துரிமையுமான துறைகளில் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது நமது நாட்டில் வருணாச்சிரம தர்ம மகாநாடுகள் நடந்து கொண்டி
ருக்கிறது.
உலகமெல்லாம் சந்திரமண்டலத்துக்கு போய்வரவும், ஆகாயத்தில்
பறக்கவும், மணிக்கு 100, 200, 300 மைல் வேகம் போகவும், பேசும் யந்திரங் களை உண்டாக்கவும், மழையை வருவிக்கவும், ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆனாக்கவும், செத்தவனைப் பிழைக்க வைக்கவும், ஐயாயிரம் பத்தாயிரம் மையிலுக்கப்பால் நடப்பதையும் பேசுவதையும் காணவும் கேட்
கவும் செய்யவும் மற்றும் இதுபோன்ற அற்புதங்களிலும் ஆராய்ச்சிகளிலும்
புத்தி செலுத்திக் கொண்டிருக்கும்போது நமது நாட்டில் “இந்தக் குளத்தில் “பறையன்” தண்ணீர் மொள்ளலாமா? இந்தக் கோவிலுக்குள் நாடார் போகலாமா? இந்தப் பள்ளிக்கூடத்தில் நாயக்கர் படிக்கலாமா?” என்கின்ற விவாதமும் “சூரியனுக்கு 8 குதிரையா 16 குதிரையா? தீபாவளி புரட்டாசி மாதத்திலா அற்பிசி மாதத்திலா? சாமிக்கு நெற்றியில் நாமம் வடகலையா தென்கலையா? விபூதியை குழைத்துப் பூசுவதா அப்படியே அடித்துக் கொள்வதா? சீதையை ராவணன் தலைமயிரைப் பிடித்து தூக்கிக்கொண்டு போனானா? தரையோடு பெயர்த்து எடுத்துக்கொண்டு போனானா? சுவாமிக்கு தாசி வேண்டுமா வேண்டாமா? பெண்களை 12 வயதில் படுக்கை வீடு கூட்டலாமா 16 - வயதில் கூட்டலாமா ? எந்த புராணம் நிஜமான புராணம் எந்த புராணம் பொய்யான புராணம்? எந்தப் பாட்டு பழைய பாட்டு, எந்தப் பாட்டு இடைச் செருகல்? சமணர்களை கழுவேற்றினதற்கு அகச்சான்று புறச்சான்று இருக்கின்றதா?” என்கின்ற ஆராய்ச்சியே மிகவும் முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படுவதோடு இன்னமும் முடிவு பெற்றதாகவும் தெரியவில்லை.
குடி அரசு - கட்டுரை - 06.011929
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சுமாத்நினிகளும், தேக, 10— ரிம் மணிகள் னைரிக்கபவடலாப்பாட க சம்பள விழெய் ிழ்க்கண்டணறுட
et | wa s
= 1 ௯ சென்டர் ல் வி இட்து
என்ற ண்டர்கோய . L L | 8
l
ரக்கககைககரர் கறுக்க துகை இழப் - வாச கா௪ ராக நிவாரணி, 3 Instant Relief for Asthea. 3 o A
e L T
“பப்பா தார்களே! இன்றே g, i
i டிக்க கக்குகர்வகசிள்ற் et eswean Nyl உஙக] s=sssumssreed ல் b
. » - -] 1] -
ர் » க H .}
3 ஐ B
ட e ட கவன எனு
குடி அரசு - 1929 ()
26
வட ஆற்காடு வில்லா
ஈர்ப்பணரல்லாத வாலியர்கள் முதலாவது மகாநா௫
சகோதர சகோதரிகளே, நமது நண்பரும் சகோதரருமான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்த பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது.
எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல் நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலு மேலும் உற்சாகப்படுத்தி வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது இந்த வாலிப இயக்கமே யாகும்.உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந்திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு
நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசீயத் தலைவனோ, மதத் தலைவனோ, பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித் திருக்கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக்கின்றது. கட்டுப்பாடுகளை: உடைப்பதற்கு வாலிபர்களால்தான் முடியுமே ஒழிய மற்றவர்களால்
சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர் களையே மனப்பூர்வமாக நம்பி இருக்கின்றேன். அவர்கள் இயக்கமும்
கிளர்ச்சியும், வெகு சீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் என்றும். ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன்.
குறிப்பு : 411929 இல் இராயவேலூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத
வாலிபர்கள் முதலாவதுமாநாட்டைத் திறந்துவைத்து உரை
குடி அரசு - சொற்பொழிவு - 13.01.1929
27 ட... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வடஆற்காடு வில்லா யார்ப்பணால்லாத வாலிபர்கன்
முதலாவது மகாநா௫
சகோதரி சகோதரர்களே!
இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும் இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும் நான் நினைக்கவில்லை. ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும், எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன். எனது தொண்டில் உள்ள இடையராத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைப
வங்கள் ஏற்படுவதால் சிலசமயங்களில் பரிகாசமாகவும் சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது.
என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்பார்க்கவில்லை.நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
நாம் பிரவாகமான எதிர் வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரை மறைவிலும் சூழ்ச்சிகளுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில்
வையுங்கள். அவற்றிற்குத் தலைகொடுக்கத் தயாராயிருங்கள்.நமது தலைவர் பனகால் அரசர் காலமான ஒரு நெருக்கடியான சமயமானதால் இந்த சமயத்
தில் உங்கள் விழிப்பும் தியாகமும் அதிகம் தேவை இருக்கின்றது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கும் சிறப்பாக திருமதி மார்த்தா ஆரியா அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றி யறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு :04,05-01-1929 நாட்களில் இராயவேலூர் லட்சுமணசாமி முதவியார். நகர மண்டபத்தில் கூடிய வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள். முதலாவது மாநாட்டில் தமது படத்திறப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய நன்றியுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 13.01.1929
குடி அரசு - 1929 () 28
தமிழ் மாகாண சுயாமரியாகை மகாநா௫
சுயமரியாதை இயக்கம் தோன்றிய சுமார் மூன்று வருஷ காலத்திற்குள். தமிழ்நாட்டில் அது அநேகமாக ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுத்திருப்பதோடு இவ்வியக்க விஷயமாய் அநேகரை கூர்ந்து கவனிக்கும் படிக்கும் கவலைப்படும் படிக்கும் செய்து வந்திருக்கின்றது என்று சொல்லு வது மிகையாகாது.
இவ்வியக்கம் ஆரம்பமானது முதல் இதற்கு அநேக தத்துக்கள் ஒன்றின்பின் ஒன்றாய் வந்து கொண்டே இருந்தாலும் ஒருவாறு அவ்வ ளவையும் சமாளித்து வளர்ந்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.
இதற்கு உதாரணம், இவ்வியக்க ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் துவேஷமென்றும், பிறகு பார்ப்பன துவேஷ இயக்கமென்றும், பின்னால் தேசத்துரோக இயக்கமென்றும், பிறகு சர்க்கார் பிரசார இயக்கமென்றும், பிறகு வைணவ துவேஷ இயக்கமென்றும், பிறகு சைவத் துவேஷ இயக்கமென்றும், பிறகு நாஸ்திக இயக்கமென்றும், பிறகு நிரீச்சுவரவாத இயக்கமென்றும்
மற்றும் அநேகர் அநேக விதமாய் அதன்மீது பழி சுமத்தி அதற்கு பொது ஜனங்களிடம் எவ்வளவு தூரம் வெறுப்பும் துவேஷமும் ஏற்படச் செய்ய வேண்டுமோ அவ்வளவு தூரம் ஏற்பட வேண்டி, பலவழிகளிலும் பெரு முயற்சிகள் செய்தாய் விட்டது என்றாலும் இவ்வளவு செய்தும், இதன் முன்னேற்றம் சிறிதும் குந்தகப்படாமல் மேலும் மேலும் முன்னேறுவதைப் பார்க்கின்றபோது இவ்வியக்க எதிரிகள் வேறு சமாதானம் சொல்ல முடியாமல் “இது இனி எத்தனை நாளைக்கு நிற்கப் போகின்றது, அப்பேர்ப்பட்ட ஒத்துழையாமை இயக்கமே பழங்கதையாய் விட்டது, இதுதானா வாழப் போகின்றது? ஏதோ பார்ப்பனர்கள் மீது நமது நாட்டு மக்களுக்கு இருக்கும் துவேஷத்தினால் சிலர் ஆதரிக்கின்றார்கள். நாயக்கருக்கு இருக்கும் சொந்த செல்வாக்குக்கும் அரசாங்க செல்வாக்குக்கும் பயந்து சிலர் ஆதரிக்
கின்றார்கள், இதெல்லாம் எத்தனை நாளைக்கு நிற்கும்?” என இம்மாதிரியாக சொல்லிக் கொள்வதன் மூலம் தங்கள் பொறாமைகளை ஒருவாறு திருப்தி செய்து கொள்வதோடு இரகசியமாய் தங்களால் கூடிய கெடுதியையும் செய்து கொண்டே வருகிறார்கள் என்பதும் இவ்வளவையும் தாண்டித் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் மற்றும் வெளியிடங்களிலும்
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சுயமரியாதைச் சங்கங்களும் மகாநாடுகளும் பிரசாரங்களும் நடந்து வருவதும் அதன் கொள்கைகளில் பல சற்றும் எதிர்ப்பின்றி காரியத்தில் அனுஷ்டிக்கப்படுவதுமே போதுமான உதாரணமாகும்.
அதுமாத்திரமல்லாமல், இப்போது எந்தவிதமான மகாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களேதான் நிறைவேற்றப்பட்டு வருவதும் சமூக மகாநாடு, சமரச மகாநாடு, பெண்கள்
மகாநாடு, பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு, சீர்திருத்த மகாநாடு ஏன் சில அரசியல் மகாநாடுகள் - ஆகியவைகளில் எல்லாம் மேல்கண்ட தீர்மானங் களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இவ்வியக்கத்திற்கு ஆதாரமாக ரஷியா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கனிஸ்தானம் முதலிய நாடுகள் வழிகாட்டியும் வருகின்றதைப் பார்த்தால் இவ்வியக்கம் தளர்ந்து விடும் என்றோ, மறைந்துவிடும் என்றோ, நினைப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து விடுவார்கள் என்பது தெளிவாகாமல் போகாது. அன்றியும் நமது நாட்டு அரசியல் தலைவர்
கள் என்பவர்களும் அநேகமாக இக்கொள்கைகளை உச்சரிப்பதன் மூலமா கவே செல்வாக்கு பெறுவதையும் பார்க்கும்போது இக்கொள்கைகளின் தத்துவம் எவ்வளவு மேன்மையானது என்பதும் விளங்காமல் போகாது. இவ்வளவும் இருந்தாலும் இவ்வியக்கத்திற்கு ஒரு நிலையான ஸ்தாபனமும்.
பிரசார பலமும் ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான வேலை என்று
நமக்குப் படுகின்றது. மேல்நாடுகளிலும் ஒவ்வொரு தேசத்திலும் இக்கொள்கைகள் கொண்ட இயக்கம் அதிக பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டு வெகு விரிவான முறையில் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. உதாரணமாக,
லண்டனில் 1.2.8. என்னும் பகுத்தறிவாளர்கள் சங்கமும் அமெரிக்காவில் பிரி திங்கர்ஸ் அசோசியேஷன் என்னும் தாராள எண்ணக் காரர்கள் (அறிவு எவ்வளவு தூரம் செல்லுமோ அவ்வளவு தூரம் செலுத்துவது) என்கிற சங்கமும், ருஷியாவில் ஆண்டி காட் சொசைட்டி (கடவுள் உற்சவம் வணக்கம் ஆகியவைகள் அவசியமில்லை! என்கின்ற (ருஷிய கவர்ன்மெண்டாராலும் ஆதரிக்கப்பட்ட) சங்கமும் சைனாவில் யங் சைனீஸ் அதாவது வாலிப சைனாக்காரர்கள் என்கின்ற சங்கமும் மற்றும் ஆப்கானிஸ்தான் துருக்கி முதலிய சர்க்காரால் அநேக இடங்களில் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிக்கும் வேலைகளும். நடைபெற்று வருகின்றன. அதுபோலவே நமக்கும் நமது அரசாங்கம் அடியோடு நமது இயக்கத்தின் சுவாதீனத்திற்கு வருமளவும் அதாவது சுயமரியாதை அரசாங்கம் ஏற்படும்வரை நமக்கு தக்க ஆஸ்பதம் வேண்டியிருக்கின்றது. அநேகமாய் இவற்றை உத்தேசித்தே அடுத்தமாதம் 2-வது 3-வது வார வாக்கில் செங்கல்பட்டில் தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அம்மகாநாட்டுக்கு
குடி அரசு - 1929 () 30
சைமன் கமீஷனும் அழைக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் இம்மகாநாட்டில் அநேக பெரியார்களும் செல்வாக்குக்காரர்களும் உண்மைத் தொண்டர். களும் செல்வந்தர்களும் பங்கெடுத்துக் கொள்ள சம்மதித்தும் இருக்கின் றார்கள். இதுவரை சுமார் 10 ஆயிரம் ரூபாய் போல வசூலும் செய்யப்
பட்டிருக்கின்றது.
திருவாளர்கள் ராவ் பகதூர் எம்.கெ.ரெட்டியார், சி.ஜயராம நாயுடுகார், கே.வி. மேனன், கண்ணப்பர் முதலியவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் இவ்வேலையில் பூரணமாய் ஈடுபட்டு உழைத்தும் வருகின்றார்கள். சுமார். இருபத்தைய்யாயிரம் மக்களுக்குக் குறையாமல் கூடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இம்மகாநாட்டிற்கு வந்து சில தீர்மானங்களை எதிர்க்கவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சிலர் இரகசியமாய் ககஷி' சேர்ப்பதாகவும் தெரிய வருகின்றது. எப்படியானாலும் சரி, நமக்கு அதைப்
பற்றிக் கவலை இல்லை. நமது நிலைமையையும் உண்மை என்று நாம்
நினைப்பதையும் வெளிப்படுத்தி அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் நடத்த ஒரு பலமான ஸ்தாபனமும் பிரசாரமும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நமது கவலை. ஆதலால் நாட்டின் க்ஷேமத்திலும் மக்களின் முன்னேற்றத் திலும் கவலையுள்ள மக்கள் யாவரும் அங்கு வந்து கூடி தங்கள் கடமையைச் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தங்கள் மனைவி மக்களுடனேயே வரவேண்டியது மிகவும் அவசியமானது என்பதை மிகவும் அழுத்தமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். தவிர, அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அதிகாரிகளும் கண்டிப்பாய் வரவேண்டியது மிகவும் அவசியமாகும் என்று தெரிவிப்பதோடு இந்த மகாநாடு எவ்வழியிலும் அரசியல் மகாநாடு என்ப தல்ல என்றும் அவர்களுக்கு உறுதி கூறுகின்றோம். அன்றியும் அரசாங்க சட்டமெம்பர் திவான்பகதூர் கனம் கிருஷ்ண நாயர் அவர்களும் மற்றும் பல பெரிய அதிகாரிகளும் வரச் சம்மதித்து இருக்கின்றார்கள்.
முக்கியமாக இம்மகாநாட்டில் யோசித்து தீர்மானிக்கப்படும் விஷயங்
கள் என்னவென்றால், சமத்துவம், சமஉரிமை, சமசந்தர்ப்பம், சிக்கனம், அன்பு, இரக்கம், ஒழுக்கம் ஆகியவைகள் ஏற்படவும், குருட்டு நம்பிக்கை, மூடப் பழக்க வழக்கம், தீண்டாமை, பெண் அடிமை ஆகியவைகள் எடுபடவும் எளியோரை வலியோர் அடக்கி ஆளாமலும், பாமரர்களை படித்தவர்கள் ஏமாற்றாமலும், ஏழைகளை செல்வந்தர் கொடுமைப்படுத்தாமலும் இருப்ப தற்கும் பகுத்தறிவு வளர்ச்சி பெறவும் தன் முயற்சியில் நம்பிக்கை உண்டாக வுமான தன்மைகள் போன்ற விஷயங்களே தான் அங்கு நடைபெறும். ஆகையால் இவைகளை அரசியல் விஷயமென்று யாரும் சொல்ல முடியாது. அரசியல் விஷயம் என்று ஏதாவது சொல்ல வந்தால் அது மேல்கண்ட
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
விஷயங்கள் நிறைவேறி அமுலுக்குவர அரசாங்கத்தின் உதவி ஏதாவது வேண்டி யிருந்தால் அந்த அளவுக்கு அதுவும் அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏதாவது பேசப்படுமே ஒழிய வேறு ஒன்றும் நடை பெறாது என்று உறுதி கூறுவோம்.
இந்த 34 வருஷத்திய மகாநாடுகளில் இதுவே முக்கியமான மகாநாடாக இருக்கும். அன்றியும் இனி நமது பிரசாரமும் வேலைத் திட்டமும் எப்படி இருக்க வேண்டும் என்பதும் இம்மாநாட்டில் தான் முடிவு செய்யப்
படும். ஆதலால் செங்கற்பட்டு மகாநாட்டிற்கு எல்லோரும் முக்கியமாய் வாலிபர்களும், பெண்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அவசியம் வர: வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.01.1929.
குடி அரசு - 1929 () 32
எது நாஸ்திகமல்லாதது?
ருஷ்யா தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்தே கடவுளைப் பற்றி பிரசங்கங்களோ, உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு அது தாராளமாய் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாகக் கொண்டாடக் கூடாதென்று வெகு பலமான பிரசாரம் செய்யப்பட்டு வந்ததில்
முழுதும் வெற்றியடைய முடியாமல் போனதால் அடுத்துவரும் ஈஸ்டர் உற்சவத்தை அதாவது “கிறிஸ்து மறுபடியும் உயிர் பெற்றெழுந்த நாள்” உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழுதிருந்தே வேண்டிய பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க் காராரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்திரவு போட்டு சர்க்கார் மூலமாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அநேக பிரபுக்கள் லட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக்கின்றார் களாம்.எனவே, கடவுள் பிறந்த நாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும் சர்க்கார் மூலமாகவே அவற்றை பிரசாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப்படுவதில்லை.. நமது நாட்டிலோ, சாமி தாசி வீட்டுக்கு போகும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! குடம் குடமாய் நெய்யையும் வெண்ணையையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்
றால் அது நாஸ்திகம்! வெடி மருந்துக்கும் அடுப்புக்கரிக்கும் காசைப் பாழாக்
கும் தீபாவளி உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! இளங் குழந்தை களை பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு குடம் குடமாய் பால் கொண்டு போய் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! அரசனிடம் குதிரை வாங்க என்று பணம் பெற்று தன்னிஷ் டப்படி செலவழித்து விட்டு அரசன் குதிரை எங்கே என்று கேட்டால் நரியைக் கொண்டு வந்து குதிரை என்று காட்டி அந்நரி அரசனுடைய பழய குதிரை: களையும் கடித்து கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உற்சவம் வேண்
டாம் என்றால் அது நாஸ்திகம்! வேறு ஒரு மதக்காரர் (பெளத்தர் கோவிலை
இடித்து விக்கிரகத்தைத் திருடிக் கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்த வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! எனவே, நமது நாட்டுக்கு எந்த காரியம்தான் நாஸ்திகம் அல்லாததோ நமக்கு விளங்கவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.01.1929
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
e B
e C—Ty இரு சென்ந்தசபாண்டுகா
T , மாட்டைக் G i e ளா 1 o | v rl
[ன்
34 குடி அரசு - 1929 ()
ஹி திப் புரட்டு
சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திர மல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபா யாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.
கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த
சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு திட்டம் போட்டு சில பார்ப்பனர் வெளிக்கிளம்பியிருப்பது பார்ப்பனர்களின் சாமர்த்தியமா அல்லது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள் தனமா என்பது நமக்கு பூரணமாய் விளங்கவில்லை யானாலும் ஒருவாறு இது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள் தனமான இளிச்சவாய்த்தன்மை என்றே சொல்லவேண்டும். பார்ப்பனர்கள் வந்து எதற்காகப் பணம் வேண்டுமென்று கேட்டாலும் நம்மவர்கள் கொடுக்கத் தயாராயிருக்கின்றார்கள். வருணாசிரம மகாநாடு நடத்த பார்ப்பனர்களுக்கு பணம் கொடுக்கும் பார்ப்பனரல் லாதவர்கள் இந்திக்கு பணம் கொடுப்பது ஒரு அதிசயமல்ல..
எனவே, பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்தி யினுடையவும் இந்தி பிரசாரத்தினுடையவும் புரட்டையாவது பொது ஜனங்கள் அறியட்டுமென்றே இதை எழுகின்றோம்.
முதலாவது இந்தி பாஷை என்றால் என்ன? அதற்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்? அதை படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? என்பது போன்றவைகளை முதலில் கவனிப்போம். பிறகு இந்தி பாஷை என்பதை அகில இந்திய பாஷையாகக் கருதவேண்டும் என்பது பற்றிப் பின்னால் யோசிப்போம்.
இந்தி பாஷை படித்த தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் பணத்திலிருந்தும் மற்றும் பொது மக்களிடமிருந்தும் இந்திக்காக செலவு செய்யப்பட்ட பணத்தில்
இத ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எவ்வளவு பார்ப்பறரைல்லாதார்கள் படித்தார்கள்? அதை எதற்கு உபயோகப் படுத்துகின்றார்கள்? என்பவைகளும் கவனிக்கத்தக்கக்கவையாகும். இந்தி பாஷை என்பது தமிழ் மக்களுக்கு விரோதமான ஆரிய பாஷையாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுவதும் ஆரியப் புராணங்களும் மூடப்பழக்க வழக்கங்களும் கொண்டதும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏற்படுத்தப் பட்டதுமாகும். இந்த நாட்டில் இப்போது சமஸ்கிருதம் இருப்பது போலவும் அது உபயோகப்படுவது போலவும் இந்தி ஒரு சிறிதும் தேவையில்லா
ததாகும். அப்படி இருந்தாலும் அது ஏதாவது வடநாட்டுக்குப் போய் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்காவது உதவுமா? என்று பார்ப்போமா னால் அப்படியும் சொல்லுவதற்கில்லாமல் இதுவரை இந்தி படித்தவர்களில் 100க்கு 95 பேர் பார்ப்பனர்களே படித்து அந்த படிப்பைக் கொண்டு வட நாட்டுக்கு உத்தியோகத்திற்கோ பிச்சைக்கோ சென்று அதன் மூலம் பார்ப்பன. ரல்லாதார்களுக்கு துரோகம் செய்யவே உதவப்பட்டு வருகின்றது. அதற்காக சம்பாதித்த பணங்கள் முழுவதும் பார்ப்பன ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்றது. ஒரு சமயம் பார்ப்பனரல்லாதார்களும் இந்தி படித்திருப்பதாக வைத்துக் கொண்டாலும் இந்த நாட்டில் அவர்களுக்கு அது என்ன பயனைக் கொடுக்கக் கூடும். இது வரை ஹிந்தி படித்த பார்ப்பனரல்லாதாரில் எவராவது அதனால் இன்ன பிரயோஜனம் அடைந்தார்கள் என்று ஏதாவது ஒரு சின்ன உதாரணமாவது காட்ட முடியுமா?
இந்தியாவுக்கு ஒரு பொதுப் பாஷை வேண்டுமானாலும் அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொதுப் பாஷை வேண்டுமானாலும் ஆங்கில பாஷையை தெரிந்து எடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப
முயற்சிக்க வேண்டுமேயல்லாமல் வேறு பாஷையைப் பற்றி யோசிப்பது முட்டாள் தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும். இங்கிலீஷ் உலக பாஷை, உலக வியாபாரப் பாஷை, இந்திய அரசாங்க பாஷை. அது மாத்திரமல்லாமல் மூடப்பழக்க வழக்கமும் பார்ப்பனீயமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வசமாக்கிய பாஷையாகும். இவைகள் மாத்திரமல்லாமல் இந்தி, உருது முதலிய பாஷைகளை தாய்ப் பாஷையாகக் கொண்ட துருக்கி பாஷைகூட இங்கிலீஷ் பாஷைக்கும் இங்கிலீஷ் எழுத்துக்குமே மதிப்பு கொடுத்து தனது தாய்ப் பாஷையை மாற்றிவிட்டது. அன்றியும் நமது இங்கிலீஷ் அரசாங்கம் உள்ளவரை-மேல் நாடுகளின் வியாபார சம்மந்தமோ கலை சம்மந்தமோ கல்வி சம்மந்தமோ உள்ள வரை- இங்கிலீஷ் இல்லாமல் முடியவே முடியாது. இப்படியெல்லாம் இருக்க, இதை சற்றும் கவனியாமல் இப்போது தமிழ்நாட்டில் இந்தி பாஷை பரப்ப வந்திருப்பதென்பது தற்காலம் தமிழ்நாட்டில் உள்ள உணர்ச்சியை ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சியேயாகும். ஆதலால் இதற்கு எந்த பார்ப்பன ரல்லாதாராவது பணம் கொடுத்தால் அது பெரிய சமூகத் துரோகமேயாகும்..
குடி அரசு - தலையங்கம் - 20.01.1929
குடி அரசு - 1929 () 36
காக்கை குருவி சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
குருவி:- ஓ, காக்கையே! நீ எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் பார்ப்பனர்களை ஜெயித்து விடலாம் என்றோ அல்லது அவர்களுடைய புரட்டுகளை வெளியாக்கிவிடலாம் என்றோ நினைப்பாயே யானால் அது அவ்வளவும் பகற்கனவுதான். காரியத்தில் சுலபத்தில் முடியும் காரியம் அல்ல. அடியோடு தடியடியாய் அடித்தால் அதுவும் ஒரு சமயம் முடியும்.
காக்கை - என்ன குருவியே! நீ இப்படிச் சொல்கின்றாய்? பார்ப்பான் சங்கதி எடுத்ததெல்லாம் புரட்டாயிருக்கின்றது. அவன் சொல்வதெல்லாம் புழுகாயிருக்கின்றது. இதை வெளிப்படுத்த முடியாது என்கின்றாயே, உனக்கு என்ன அவனிடத்தில் அவ்வளவு பயம்?
குருவி :- எனக்கு பயம் ஒன்றுமில்லை, நீ பார்ப்பன தந்திரத்தை சரியாய் உணரவில்லை. தெரிந்திருந்தால் இவ்வளவு லேசாக அவனை மதித்திருக்க மாட்டாய்.
காக்கை :- சரி, நீ உணர்ந்த விஷயத்தைத் தான் சொல்லு பார்ப்போம்.
குருவி :- சொல்லட்டுமா?
காக்கை :- சொல்லு, சொல்லு.
குருவி :- முதலாவது, பார்ப்பான் எந்த விஷயத்தைச் சொல்ல வந்தாலும் “அது உன் கண்ணுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் எட்டாதது” என்று சொல்லி விடுவான். இரண்டாவது, இந்த லோகத்தில் பிரத்தியக்ஷத்தில் கண்டு பிடிக்கக் கூடியதாகவோ இப்போது நடந்ததாகவோ எந்த விஷயத்தை
யும் அவன் சொல்லி சிக்கிக் கொள்ளாமல் அவன் எது சொன்னாலும் மேல் ஏழு லோகத்தில் உண்டு என்றும் கீழ் ஏழு லோகத்தில் உண்டு என்றும் தான் சொல்வான்.” “கண்ணுக்குத் தெரியாத சூக்ஷும சரீரத்தோடு இருக்கின் றார்கள்” என்றுதான் சொல்லுவான்.
“போன யுகத்தில் நடந்தது.அதற்கு முந்தின யுகத்தில் நடந்தது, பிரளய காலத்தில் நடந்தது” என்றுதான் சொல்லுவான். *அசரீரியாய் சொல்லிற்று,
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மாயாரூபியாய் இருந்தது” என்று தான் சொல்லுவான்.நம்பினால்தான் உண்டு, நம்பாவிட்டால் பாவம்” என்று சொல்லுவான். “இவைகளில் நீ எதைக் கண்டு பிடித்து பார்ப்பானைப் பொய்யன் என்று சொல்லி விட முடியும்? சொல்லு பார்ப்போம்.
காக்கை :- நீ சொல்லுவது ஒரு விதத்தில் வாஸ்தவம் தான். அதனாலேயே எல்லாம் பொய் என்று சொல்லிவிட முடியுமா?
குருவி - அதுதான் நானும் சொல்லுகின்றேன். அதாவது பார்ப்பான் சொல்லுவதில் ஒன்றைக் கூட நீ பொய்யென்று ௬ஜுப்படுத்த முடியாது? உதாரணமாக, இந்த உலகம் எத்தனையோ யோசனை தூரம் விஸ்தீரணம் என்கின்றான். நீ எப்படி அளந்து பார்த்து தப்பு என்று சொல்ல முடியும்? எத்தனையோ மனுக்கள், பிர்மாக்கள், விஷ்ணுக்கள், சிவன்கள் பிறந்து இறந்தாய்விட்டது. ஒவ்வொருவருக்கு எத்தனையோ யுகங்கள் ஆயுள் என்று சொல்லுகின்றான். அதில் ஒரு வினாடி கம்மி என்று உன்னால் சொல்ல
முடியுமா? “எத்தனையோ சிரஞ்சீவிகள் இருக்கின்றார்கள். ஆனால் ஒருவரும் உன் கண்ணுக்கு தென்பட மாட்டார்கள்” என்கின்றான். இவற்றுள் ஒரு சிரஞ்சீவியாவது இல்லை என்று உன்னால் சொல்ல முடியுமா?
நீ இதற்கு முன் இத்தனை ஆயிரம் ஜன்மம் எடுத்தாய் விட்டது. ஆனால் அது உனக்கு இப்போது தெரியாது” என்று சொல்லுகின்றான். அதை
நீ இல்லை இல்லை என்று சொல்ல முடியாது.
‘B எங்களுக்கு கொடுக்கும் சிரார்த்தம் முதலியவைகளை உனது பிதுர்க்கள் சூக்ஷம சரீரத்துடன் வந்து பெற்றுப் போகின்றார்கள். ஆனால் அது உன் கண்ணுக்குத் தெரியாது” என்கின்றான். நீ அவற்றுள் ஒரு கடுகளவாவது போய்ச் சேரவில்லை என்று சொல்லி அவனிடம் தப்பித்துக் கொள்ள முடியுமா? சொல்லு பார்ப்போம்.
பார்ப்பனியம் இத்தனை காலமாய் நமது நாட்டில் இருப்பதற்கு காரணமே இதுதானே. எதை எடுத்தாலும் “உனக்கு தெரியாது, உன் கண்களுக்கு படாது, உன் புத்திக்கும் மனதுக்கும் எட்டாது, நீ அதைப் படிக்க அருகனல்ல, யுக்தி வாதங்களால் தர்க்கம் பண்ணுவது நாஸ்திகம், சூக்ஷம.
சரீரம், இதெல்லாம் சோதனை, சிவன் பார்வதிக்கு சொன்னார், ராமருக்கு வசிட்டர் சொன்னார், சூத புராணிகா நைமி சாரண்ய வாசிகளுக்கு சொன்னார்.
சுசர் சொன்னார், ஜனமே ஜயர் சொன்னார், பகவான் கீதையில் சொன்னார்”, என்றே சொல்லுவார்கள். “யார் சொன்னார்? எப்பொழுது சொன்னார்? யார். ஒண்டிக் கேட்டுக் கொண்டிருந்தது? உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டால், அது நாஸ்திகம் என்று சொல்லி விடுகின்றான். நீயோ நாஸ்திகம் என்றால் நடுங்கி விடுகின்றாய். பிறகு எப்படி நீ அவனை ஜெயிக்க முடியுமென்று சொல்லு பார்ப்போம்.
குடி அரசு - 1929 () 38
காக்கை :- ஆமாப்பா நீ சொல்லுவதெல்லாம் சரியாய்த் தான் இருக்கின்றது. மனுஷனை குண்டா முண்டா கட்டிப் போட்டு விடுகின்றான். ஒன்றையாவது யோசித்துப் பார்ப்பதற்கு இடம் கொடுப்பதில்லை.ஆனாலும் பார்ப்பனர்கள் புத்திசாலிகள்தான் அதில் சந்தேகமில்லை.
குருவி:- அவர்களை புத்திசாலிகள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.தந்திரசாலிகள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்.
காக்கை - ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? அவர்கள் புத்திசாலித்தனம். உனக்கு விளங்கவில்லையா?
குருவி :- அவர்கள் புத்திசாலிகளா என்கிற விஷயத்தை சற்று கவனித்துப்பார். நீ எந்தப் புராணத்தையோ சாஸ்திரத்தையோ வேதத்தையோ வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார். இமயமலைக்கு அப்புறம் அவர்கள் ஒன்று கூடத்தெரிந்து கொண்டிருப்
பதாய்க் காண முடியாது. அது மாத்திரமல்லாமல் பார்ப்பானுக்கு கைலாயமே இமயமலை தானே. அது பனிக்கட்டியில் மூடியிருப்பதால் அதை வெள்ளியங்கிரி என்று சொல்லிவிட்டான். அந்தக் காலத்தில் அங்கு யாரும் போக முடியாமல் இருந்ததால் “சிவன் அங்குதான் இருந்தான், உமை அந்த மலைக்குத்தான் பிறந்தாள், பிர்மா அங்குதான், ரிஷிகள் அங்குதான், தேவர்கள் அங்குதான், சுவர்க்கம் அங்குதான் என்று எல்லாவற்றையும் அந்த மலையின் தலையிலேயே போட்டுவிட்டான்.
அது மாத்திரமா? நதியைப் பார்த்தால் அது ஒரு தேவதை,
சமுத்திரத்தைப் பார்த்தால் அது ஒரு தேவதை, மழை பெய்தால் அது ஒரு தேவதை, காற்றடித்தால் அது ஒரு தேவதை, நெருப்பெரிந்தால் அது ஒரு தேவதை, சூரியன் ஒரு தேவதை, சந்திரன் ஒரு தேவதை, நட்சத்திரம் ஒவ்வொன்றும் தனித்தனி தேவதை. இது போலவே அந்தப் பயல்களுக்கு (சையன்ஸ்! விஞ்ஞான சாஸ்திரம் தெரியாததால் தொட்டதெல்லாம் தேவதை: தேவதை என்று பேர் வைத்து ஒவ்வொன்றின் பேராலும் நம்ம தலையில் கையை வைத்து கொள்ளையடிக்க சவுகரியம் செய்து கொண்டான். அவன் முட்டாள் தனமும் அவனுக்கு உதவியாக இருக்கின்றது.ஆனால் நம்முடைய அறிவோ நமக்கு நாஸ்தீகமாவும் எமனாகவும் இருக்கின்றது.
இதெல்லாம் கிடக்க, உன் தலையில் கையை வைத்திருப்பது உனக்கு தெரியுமா? ஓ காக்கையே! நீ ஒரு காலத்தில் சீதையினுடைய முலைக் காம்பைக் கொத்திவிட்டாயாம்.சீதையின் புருஷனாகிய இராமன் உன் கண் விழிகளில் ஒன்றைப் பிடுங்கிவிட்டானாம். அதனால் நீ ஒற்றைக் கண் குருடாய் இருக்கிறாயாம். இந்தப்படி எழுதி வைத்திருக்கின்றான். உன் பேரில் அவர்களுக்கு இருந்த கோபத்தினால் பெண்களிடம் கூட மரியாதை இல்லா
மல் சீதை, ஒரு காக்கை வந்து கொத்தும்படி அவ்வளவு மெய்மறந்து தனது மார்பைக் காட்டிக் கொண்டு படுத்திருந்தாள் என்று எழுதியிருக்கின்றான்...
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எனவே அவர்கள் சங்கதி சுலபத்தில் சரிபடுத்தக் கூடியதல்ல.
காக்கை:- நேரமாய்விட்டது சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம்.
குருவி - சரி போய் வருகிறாயா?
குடி அரசு - உரையாடல் - 20.01.1929
குடி அரசு - 1929 ()
40
திருவன்ளுவரிண் வபண்ணுரிமை
- சித்திரபுத்திரன்
தற்காலம் நமது தமிழ் நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூற்களிலெல்லாம். திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகிறதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்த பிரிவினர். களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது
குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள் ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.
இவ்வளவும் இருந்தாலும், திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன? என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரை தம் சமயத்தலைவர் என்று பாத்தியதை கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர். அவரை வைணவர் என்று கொண்டாடுகிறார்கள். சமணர்கள் அவரை தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாரராகிய பறையர் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரை தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகின்றார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ, மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த் தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன், பிர்ம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம்,
மேல் லோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களையும் பரக்கக் காணலாம்.
எனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர், தற்காலம் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம். சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள் புராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பார்ப்பனீயம் என்னும் பார்ப்பனக்
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி, கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு, தங்களை வெளியில் சமரச சன்மார்க்க சமயத் தவர் என்றும் உள்ளுக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும், மற்றும் இதுபோல் உள்ளொன்றும் புறம் ஒன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்து கொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள் ளும் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.
இவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளில் உள்ள நீதிகள் ஒருபுறமிருக்க, திருவள்ளுவர் மனைவியாகிய வாசுகி அம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமல் இருக்கமுடியாது. அதாவது வாசுகி அம்மையாரை திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக் கொள்ளுமுன் ஆற்றுமணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரீட்சிக்க, அவ்வம்மையார். அந்தப்படியே மணலை சாதமாகச் சமைத்துக் கொடுத்து திருவள்ளுவருக்கு தமது கற்பைக் காட்டினாராம்.
அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மை யாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்த போது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.
திருவள்ளுவர் ஒருநாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழ உடனே அம்மையாரைக் கூப்பிட்டு “விளக்கேற்றிக் கொண்டுவா நூற்கதிரைத் தேடவேண்டும்” என்று சொல்ல, அம்மையார், “பகல் நேரத்தில் விளக்கெதற்கு” என்று கேட்காமல் - கேட்டால் பதிவிரதா தன்மைக்கும்,
கற்புக்கும் பங்கம் வந்துவிடும் எனக்கருதி - உடனே விளக்குபற்ற வைத்துக் கொண்டு கொடுத்தார்களாம்.
ஒருநாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது “சாதம் சுடுகின்றது” என்று சொன்னவுடன் அம்மையார், “பழைய சாதம் சுடுமா” என்று கூடக் கேட்காமல்; கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதி, உடனே விசிறி எடுத்துக் கொண்டு வந்து வீசி ஆற்றினாராம்.
திருவள்ளுவர் அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும். ஒரு ஊசியும் தனியாக கொண்டு வந்து வைத்துவிட்டு சாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம் - அவ்வம்மையாரும், “இது எதற்காக?” என்று- கேட்காமல் - கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப்படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மை யாரின் நிரியாண காலத்தில் அம்மையார் உயிர் போகாமல் வாதாடிக் கொண்டி ருக்க அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது
குடி அரசு - 1929 () 42
அம்மையார் பயந்துகொண்டு “தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீர்களே, அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டு மென்கின்ற ஆசை முடிவு | பெறாமல் இருப்பதால் உயிர்போகாமல் வாதாடி மரணாவஸ்தைபடுகிறேன்” என்று சொன்னாராம். பிறகு திருவள்ளுவர் தயவு
செய்து பெரியமனது வைத்து அதன் காரணத்தை அதாவது சாப்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மை யாரின் உயிர் நீங்கிற்றாம். இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச்செருகலாகவோ கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால், கற்பனை யல்லாத புராணம் எது? அதற்கு என்ன பரிட்சை? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக.
குடி அரசு - கட்டுரை - 20.01.1929.
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
€வனாரில் வாதுக்கூட்டம்
“சகோதரர்களே! எவனோ ஒரு பைத்தியக்காரன் எங்கோ இருந்து
சத்தம் போட்டுவிட்டால் அதற்காக நீங்கள் இத்தனை பேரும் எழுந்து அவன்
மீது பாய்வது கொஞ்சமும் சரியான காரியமல்ல. யார் எந்தக் கேள்வி கேட்
டாலும், என்ன ஆட்சேபனை சொன்னாலும், அவற்றிற்குப் பதில் சொல்லவும். ஆட்சேபனைகளை சமாளிக்கவும் எங்களுக்கு ஆற்றலிருக்கிறது என்று
நீங்கள் கருத வேண்டுமேயொழிய எங்களுக்குச் சிபார்சுக்காக இத்தனை பேரும் சத்தம் போடுவது எங்களை அவமானப் படுத்தியதாகும் என்றும் அன்றியும் நமது எதிரிகளும் பார்ப்பனக் கூலிகளும் தங்கள் பத்திரிகையில் *வேலூர் கூட்டத்தில் பெரிய கலவரம்” என்று பெரிய தலைப்பு கொடுத்து அற்பத் தனமாகவும் இழிதனமாகவும் பத்திரிகையில் எழுதுவதற்கு இடம் கொடுத்த தாகும் என்றும் எந்தக் கேள்வி யார் கேட்டாலும் என்ன விதமான காலித்தனம் யார் செய்தாலும் நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம்.நீங்கள் அமைதி யாயிருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கூட்டத்தைக் கலைக்கும்படி அக்கிராசனரைக் கேட்டுக் கொள்ளுவேன்” என்றும் அதட்டியிட்டு உட்கார்ந் தார். உடனே கூட்டம் நிஸசப்தமாய் விட்டது. அந்த. சமயத்தில் மறுபடியும் முன் சொன்ன பத்திரிகா நிரூபரின் தூண்டுதலால் ஒருநபர் சந்திலிருந்து கொண்டு “பத்திரிகைக்காரர்களை அயோக்கியர்கள் என்று சொன்னதை வாபீஸ் வாங்கிக் கொள்ள வேண்டு”மென்று சொன்னார். நாயக்கர் தன்னிடம் அந்த வழக்கமில்லை என்று சொல்லிவிட்டு மேலால் திரு-கண்ணப்பரை பேசும்படி கேட்டுக் கொள்ள அவர் முன் பேசியதை ஓட்டிப் பேசிவிட்டு, சமூக சம்மந்தமாக பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை நன்றாய் எடுத்துச் சொல்லி விட்டு உட்கார்ந்தார்.
பிறகு திரு.ஆரியா அவர்களைப் பேசும்படி கேட்டுக் கொள்ள அவர்களும் எழுந்து ஆவேசத்துடன் பேசினார். இந்த சமயத்தில் கூட்டத்தில் இரு சிறு கற்கள் வந்து விழுந்தன. இதை யாரும் லட்சியம் செய்யாமல் இருக்க வேண்டுமென்று திரு.நாயக்கர் கேட்டுக் கொள்ளவே அமைதி ஏற்பட்டது. பிறகு ஆரியா அவர்கள் பேச்சு முடிந்ததும் அக்கிராசனர் திரு.தண்டபாணி பிள்ளை “கேள்வி கேட்கிறவர்கள் கேட்கலாம்” என்று சொன்னதும், ஒருவர்,
தாம் இரண்டே கேள்விகள் கேட்பதாகச் சொன்னார். உடனே திரு.நாயக்கர். அவரை பக்கத்தில் வரும்படி சொல்லி அழைத்து வந்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பொது ஜனங்களைப் பார்த்து, “சகோதரர்களே! இவர்
குடி அரசு - 1929 () 44.
கேட்கப் போகும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுகிறேன். நீங்கள் யாரும் இவரைப் பரிகாசம் பண்ணவோ, கைதட்டவோ, சிரிக்கவோ கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு “என்ன கேள்வி?” என்று கேட்டார். அக்கேள்வி கேட்க வந்தவர் சொன்ன பதிலாவது:-
“ஐயா, நான் உங்கள் “குடி அரசை”ப் படித்த நாள் முதற்கொண்டு என் வீட்டுக்கு எந்தவிதமான சுபாசுப காரியத்திற்கும் பார்ப்பனர்களைக் கூப்பிடுவதில்லை. பார்ப்பனர்களுக்குப் பிச்சையும் கொடுப்பதில்லை. இப்படியிருக்க உங்கள் தலைவர் பனகாலரசு இறந்து போன கருமாதிக்கு பார்ப்பனர்களை வைத்து நடத்தினார்களே, இது நியாயமா?” என்று கேட்டார்.
திரு.நாயக்கர், “அது நியாயமல்ல வென்று நானும் கருதுகிறேன். ஆனால், அந்தக் காரியத்திற்கு பனகால் அரசர் மீது பழி போடுவதற்கு நியாயமில்லை. அவர் இறந்த பிறகு அவர் வீட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெறாதவர்கள் செய்த காரியத்திற்கு யார். பொறுப்பாளியாயிருக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். அம்மாதிரி மூடப்பழக்க வழக்கங்களால் கட்டுப்பட்டுக் கிடப்பவர்கள். விடுதலை அடைய வேண்டுமென்றுதான் நாங்கள் இப்பொழுதும் பிரசாரம் செய்து வருகின்றோம். அன்றியும் யார் தங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு மேலும் இம்மாதிரி நடந்து கொள்கிறார்களோ அவர். களை எல்லாம் நாங்கள் தாராளமாய் கண்டித்துத்தான் வருகின்றோம். உதார: ணமாக, திருவாளர்கள் பாத்ரோ, தணிகாசலம் செட்டியார் முதலியவர் களையும் கண்டித்துத்தான் வந்திருக்கின்றோம்”'
கேள்வி கேட்டவர் “இது சரி, திரு.பத்மநாப முதலியார் தன் வீட்டுக்
கிரகப் பிரவேசத்திற்கு பார்ப்பனர்களைக் கொண்டு சடங்கு நடத்தலாமா” என்று கேட்டார்.
திரு நாயக்கர் “திரு. பத்மநாப முதலியார் கூட்டத்தில் இருப்பதால் அவர் பதில் சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் இக்கேள்விக்கு பதில் சொல்வதின் மூலம் திரு.முதலியார் அவர்களுக்கும் தனது குற்றம் தெரிய இடம் ஏற்படட்டும்” என்று சொல்லி திரு.முதலியாரை:
பதில் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். திரு.பத்மநாப முதலியார் எழுந்து தனக்கு பார்ப்பானை வைத்து நடத்த இஷ்டமில்லை என்றும் தனது மனைவியாரும் மற்றும் இரண்டொரு பெரியோரும் தன்னை நிர்ப்பந்தப் படுத்தினார்கள் என்றும் கண்களில் தண்ணீர் விட்டு அழுதார்கள் என்றும் அதைப்பார்த்துதான் மனமிளகி அவர்களிஷ்டப்படி விட நேர்ந்ததென்றும் தனக்கு பார்ப்பான் உயர்ந்தவன் என்பதிலாவது பார்ப்பானைக் கொண்டு சடங்கு செய்யவேண்டும் என்பதிலாவது நம்பிக்கையில்லை யென்றும் சொன்னார்.
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
உடனே திருநாயக்கர் திரு.முதலியார் அவர்களைப் பார்த்து “நீங்கள் இந்தக் கூட்டத்தில் ஆஜரில்லாத சகோதரிகள் மீது குற்றம் சுமத்துவது தர்மமல்ல” வென்று சிரித்துக் கொண்டே சொன்னார். திரு.முதலியார். அப்படியானால் தாங்கள் எங்களுக்கு மாத்திரம் உபதேசம் செய்வதில் பலனில்லை, ஸ்திரீகளுக்கும் இந்த விஷயத்தை எடுத்துச்சொல்லி அவர்களையும் திருத்தவேண்டுமென்று சொன்னார். திரு.நாயக்கர் அப்படியே ஆகட்டும், அவர்களுக்காகவே நாளை ஒரு மீட்டிங்கு ஏற்பாடு செய்யுங்களென்று சொன்னார். அந்தப்படியே செய்வதாக பலர் வாக்களித்தார்கள். நிற்க கேள்வி கேட்டவர் “ திரு.நாயக்கர் சீதையை தட்டுவாணி என்று சொல்லலாமா? தசரதனையும் ராமனையும் கெட்டவர்கள் என்று சொல்லலாமா? என்று கேட்டார்.
திரு.நாயக்கர், நான் சீதையைத் தட்டுவாணி என்று சொல்லவில்லை
என்றும். ஆனால், சீதை “பதிவிரதை” அல்ல என்று சொல்லியிருப்பதாக தனக்கு ஞாபகமிருப்பதாகவும். அதுவும் அந்தப் புராணக்காரர்களும் தர்ம சாஸ்திரத்தில் பதிவிரதைக்கு என்னென்ன நிபந்தனைகள் விதித்திருக் கின்றார்களோ அந்த நிபந்தனைப்படிக்கு சீதையை பதிவிரதைகளில் ஒன்றாகச் சேர்க்க முடியவில்லை என்று “குடி அரசில்” எழுதியிருந்தது உண்மை என்றும் அதற்கு உதாரணம் சீதை தன் புருஷனாகிய ராமனைப்
பார்த்து “என்னை நீ கண்டவர்களுக்குக் கூட்டிக் கொடுக்கப் பார்க்கிறாயா” என்றும் “உனக்கு பெண்டாட்டியை வைத்து வாழ ஆண்மையில்லையா”
என்றும், தனது கொழுநனான லட்சுமணனை எதிர்த்துப் பேசி, “என் புருஷனை சாகவிட்டுவிட்டு என்னை நீ பெண்டாளலாமென்று நினைக் கிறாயா” என்றும் கேட்டதினாலும், காட்டில் கொண்டுபோய் விட்ட காலத்தில் தன்னைப் பற்றித் தன் புருஷன் சந்தேகப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும்போது தனது கெர்ப்ப வயிற்றை தன் கொழுநனுக்கு காட்டி தன் புருஷனை அவ்வளவு மோசமாக நினைத்திருப்பதாலும் சீதையை பதிவிரதைகளில் சேர்க்க முடியாமல் போய் விட்டதே ஒழிய வேறில்லை என்றும் சொன்னார்.
வேறொரு பட்டை ராமக்காரர், “இதெல்லாம் எங்கிருக்கின்றது” என்று கேட்டார்,
நாயக்கர் “வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றது” என்று சொன்னார்.
மற்றும் “தசரதன் எப்படிப்பட்டவன்” என்று கேட்க திரு.நாயக்கர்,
“தசரதன் தனக்கு பல பெண்கள் இருந்தும் மறுபடியும் கைகேயியை
கட்டிக் கொள்ள ஆசைப்பட்டபோது கைகேயியின் தகப்பனாராகிய கேகய மன்னன் தசரதனைப் பார்த்து, உனக்கு ஏற்கனவே பல பெண்கள் இருப்பதால் மறுபடியும் பெண் கொடுக்க முடியாதென்றும் அப்படிக் கட்டாயமாக வேண்டுமென்றால் என் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு பட்டம்
குடி அரசு - 1929 () 46
கொடுப்பதாய் சத்தியம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை கேட்க, அதற்கு தசரதன் கட்டுப்பட்டு உறுதி கூறி கைகேயியை மணந்து கைகேயி வயிற்றில் பிறந்த குழந்தைக்கு பட்டம் கொடுக்காமலும், அதற்குத் தக்க சமாதானமாவது பரதனுக்கோ கைகேசிக்கோ சொல்லாமலும், பரதன் ஊரில் இல்லாதபோது ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்ததும், ராமனும் இந்த விஷயங்களைத் தெரிந்திருந்தும் தன் தகப்பனாருக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லி யோக்கியமாய் நடந்து கொள்ளும்படி செய்யாமலும், பட்டம் கட்டிக் கொள்ள சம்மதித்ததுமான காரியங்களால் இவர்கள் இருவரை:
யும் அயோக்கியர்கள் என்று சொல்லாவிட்டாலும் யோக்கியர்கள் என்று சொல்ல முடியாது என்றும் சொன்னார். உடனே அந்த பட்டை நாமக்காரர்.
“இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டார். திரு. நாயக்கர்.
வால்மீகி ராமாயணத்தில் ஆரணிய காண்டத்தில் ராமனே பரதனுக்குச் சொல்லுகின்றதாகவும் வால்மீகி சொன்னதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றது என்றும் சொன்னார். உடனே அந்த கேள்வி கேட்டவர், “ஆரண்யகாண்டம்” என்பதைக் குறித்துக் கொண்டார். பட்டை நாமக்காரர்.
நீங்கள் ஏன் ராமன் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டீர்கள் என்று கேட்டார்.
திரு.நாயக்கர் “ராமன் என்கின்ற பெயர் ராமாயண ராமனுக்கு
மாத்திரம் சொந்தமல்ல என்றும் ராமனுடைய பெற்றோர்களுக்கு தம் மகனுக்கு ராமன் என்கின்ற பெயர் வைக்க எவ்வளவு சுதந்திரம் உண்டோ அவ்வளவு சுதந்திரம் தனது பெற்றோர்களுக்கு உண்டென்றும் ராமன் என்றால் மிக்க அழகானவன் என்றுதான் அர்த்தம் செய்யப்படுகின்றது என்றும் தான் ராமனைவிட அழகானவன் என்று என் பெற்றோர்களுக்கு தோன்றியதால் அந்த ராமனுக்கும் மேலாக என்னைக் கருதி ராமசாமி (அதாவது ராமனுக்குச் சாமி) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் அதை மறுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.” என்றும் சொன்னார். உடனே எல்லோரும் கை தட்டி சிரித்தார்கள்.
திருநாயக்கர் மறுபடியும் கூட்டத்தைப் பார்த்து கண்டித்து எல்லோரும். அமைதியாயிருக்க வேண்டும் என்றும் யாரும் யாரையும் பரிகாசம் செய்யக் கூடாதென்றும் கேள்வி கேட்க வருகின்றவர்களை அனுமதிக்க வேண்டும். என்றும் அவர்களை அன்பாய் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் எந்த எண்ணத்தின் மீது கேட்டாலும் அதை நாம் நல்ல எண்ணமாகவே கருதி நல்லவிதமாய் உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். உடனே கூட்டத்தில் ஒருவன் நொண்டிக் கொண்டு வந்து “இதுதான் அன்போ! இப்படி என்னை அடிக்கலாமா? இது நியாயமா” என்று கேட்டார். அதற்கு திரு. நாயக்கர் “நீங்கள் அடிபட்டதற்கு நான் வருந்து கின்றேன் என்றும் அடித்தவர்களையும் நான் கண்டிக்கின்றேன் என்றும் அடிபட்டதாக தயவு செய்து இனிமேல் வெளியில் சொல்லிக் கொள்ளாதீர்கள்” என்றும்
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சொன்னார். மறுபடியும் அவர் தன்னுடைய கைத்தடியை யாரோ பிடிங்கிக் கொண்டு போய்விட்டதாகவும் சொன்னார்.
திரு.நாயக்கர், அவர் கை பிரம்பை எடுத்தவர்கள் கொடுத்து விட வேண்டுமென்று சொன்னார். இந்த நபர்தான் முன் சொன்ன பத்திரிகை நிரூபரின் தூண்டுதலால் சத்தம் போட்டவர் என்று தெரியவந்தது.
குறிப்பு: 05.01.1929 ஆம் நாள் வேலூர் கோட்டை மைதானத்தில் வட ஆர்க்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 20.01.1929
குடி அரசு - 1929 () 48
செங்குந்தர் சமூக மகாநா௫ பொருட்காட்சி திறப்பு
அன்புள்ள சகோதரர்களே!
இன்று தென்னிந்திய செங்குந்தர் முதலாவது சமூக மகாநாட்டின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பொருள் காட்சி சாலையைத் திறந்து வைக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்காக என் மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வெகு சொற்ப கால முன்னறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொருட் காட்சியானாலும், இதில் ஏராளமான சாமான்கள் காட்சிக்கு வந்து குவிந்திருப்பது போற்றத்தக்கதாகும்.
பொருள் காட்சிகள் என்பன மக்களின் முன்னேற்றத்திற்குரிய சாதனமாகும். வியாபாரம், கைத்தொழில், சிக்கனம் ஆகியவைகளின் முன்னேற்றம் பெரிதும் பொருள்காட்சியினாலேயே ஏற்படும். ஒவ்வொரு நாட்டாருடையவும் கைத்தொழில், பொருள் வரவு, மனோபாவம், தொழில் திறம், செய்யும் மாதிரி ஆகியவைகள் தெரியவும் மற்றவர்கள் அதைப் பின்பற்றவும் இன்னும் இம்மாதிரி எத்தனையோ விஷயங்களுக்கு இப்பொருள் காட்சிகள் பயன்படுகின்றன.
எவ்வளவோ கைத் தொழில்களுக்கு நமது நாடு மிகப் பழமை யானதும் பெயர் போனதுமாயிருந்தாலும், நாம் கைத் தொழில் முறையில் ஒரு சிறிதும் முற்போக்கடையவில்லை என்பதை தெரிவிப்பதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. பொருள்காட்சி என்பது (இன்வென்ஷன்! கண்டு
பிடித்தல், மேலும் மேலும் முற்போக்கடைதல் என்கின்ற தத்துவம் அடங்கியது.
ஆனால் நமது நாடு பழமையை கெட்டியாய் குரங்குப் பிடியாய்
பிடித்துக் கொண்டிருப்பதில் உலகத்திலேயே பேர் போனது என்று சொல்ல வேண்டும். மேல்நாட்டார், அவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்கள் எவ்வளவு மேலானதாயிருந்தாலும் மேலும் மேலும் அதிலிருந்து சீர்திருத்தம் கண்டுபிடிப்பதிலேயே கவலை கொள்ளுவார்களே யொழிய, ஓய்வெடுத்துக் கொள்ள சம்மதிக்கவே மாட்டார்கள். உதாரணமாக, ரயில் வண்டி, இரண்டு சக்கரவண்டி, மோட்டார்கார், ஆகாயவிமானம் ஆகிய வாகன சம்மந்த மானவைகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது சீர்திருத்தங்களுடனே
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வெளிவந்து கொண்டிருக்கின்றதைப் பார்க்கின்றோம்.நாளுக்கு நாள் விலை குறைவு, செலவு சுருக்கம், காலம் சுருக்கம், சமான்கள் கெட்டி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள். இதுபோலவே ஒவ்வொரு துறையிலும் அற்புதங்களைக் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இவற்றைத் தாராளமாய் தங்கள் நாடு முழுவதும் பயன டையும்படி பரப்பிக் கொண்டே வருகின்றார்கள். ஒவ்வொரு தொழிற் சாலைக்காரரும் வியாபாரியும் ஆராய்ச்சிக்காகவும், புதியமூறைகள் கண்டு பிடிப்பதற்காகவும், தங்களது வரும்படிகளிலும், சொத்துக்களிலும் தக்க பாகத்தை ஒதுக்கிவைத்து வருகின்றார்கள். நமது நாட்டிலோ ஆராய்ச்சி என்பதோ புதிய முறைகள் என்பதோ மக்களின் காதுகளுக்கு வெறுப்பாகவும், கண்களுக்கு நோவாகவும் கருதப்படுகின்றது.
சாதாரணமாக நம் ஊர்களிலுள்ள ஒத்தைமாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டிகளை எடுத்துக் கொண்டால் எனக்குத் தெரிய 40, 50 வருஷ காலமாக, இதே மாதிரியாகத்தான் இருக்கின்றது. வண்டிக்குள் உட்கார்ந்து ஒரு பத்து மைல் பிரயாணம் செய்துவிட்டால் இடுப்பு ஒடிந்துவிடும், முதுகு வளைந்துவிடும், உடல்வலி நிற்க ஒரு வாரமாகும். கெர்ப்ப ஸ்திரீயாயி ருந்தால் வண்டியிலேயே பிரசவமாகிவிடும். இது 80 அல்லது 100, 200 வருஷம் என்று கூடச் சொல்லலாம். இதுவரையில் ஒரு கடுகளவுகூட அவை
கள் முன்னேற்றமடைந்திருப்பதாய்ச் சொல்ல முடியாது. பணக்காரர்களா யிருந்தால் வெள்ளியில் நுகத்தடி போட்டு தங்கத்தில் பூண்கட்டி இரண்டு வைரமோ செம்போ புதைத்து விட்டால், அதுவே விசேஷ வண்டியாக மதிக்கப்படுகின்றது. இம்மாதிரியே நூல் நூற்பதிலுங்கூட சுமார் 100, 200 வருஷங்களுக்கு முன் செய்த ராட்டினம் எதோ அதுதான் இன்றும்
பூஜிக்கப்படுகின்றது. 200 வருஷத்திற்கு முன் ஒரு நாளைக்கு பத்து ரூபாய் எடை பஞ்சு நூற்று, முக்கால் அணா அல்லது ஒரு அணா கூலி பெற்றிருந்தால் இன்றைக்கும் 9 அல்லது 10 ரூபாய் எடை பஞ்சுதான் நூற்று 8 அல்லது 9 காசு கூலி தான் வாங்க வேண்டும். இந்த முறையைச் சற்றும் மாற்றாமல், குரங்குப் பிடிவாதமாய் பிடித்துக் கொண்டிருப்பது தான் இப்போது நமது முன்னேற்ற வேலை, விடுதலை வேலை, ஏழைகளைக் காப்பாற்றும் வேலை என்று மதிக்கப்படுகின்றது.
இன்னும் நெசவுத் துறையிலும் இதுபோலவே நமது நாட்டில் பெரும் பாலும் 100 வருஷத்துக்கு முன் இருந்த முறைகளேதான் கையாளப்பட்டு வருகின்றன. பொதுவில் கொஞ்சமும் மாறுதல் இல்லை. தென்னிந்தியாவில் உள்ள செங்குந்த சமூகம் ஒரு மதிக்கத்தகுந்த ஜனசங்கியை உடையதாக இருந்தும் இவ்வளவு பேருக்கும் 100-க்கு 99 பேருக்கு மேலாக நெசவுத் தொழிலாக இருந்தும், இதுவரையில் இச்சமூகம் எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கின்றது என்று பார்த்தால், செங்குந்தர்கள் என்பவர்கள் யார், நமது ஜனத் தொகை என்ன என்கின்ற விஷயம் தெரிந்து கொள்ளவே
குடி அரசு - 1929 () 50
இத்தனை காலம் ஆச்சுது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது. மேலும் ஏதாவது முற்போக்கடைந்து இருக்கின்றோமா என்று பார்த்தால் நாம் எப்படி வந்தோம்? நமது ஆதி பெருமை என்ன? என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் கவலை செலுத்தத்தக்க நிலைமையை அடைந்து கண்டுபிடித்து விட்டோம் என்கின்ற சந்தோஷந்தான். எனவே இதுவேதான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினுடையவும், சமூக மகாநாட்டினுடையவும், கடமையாய்
இருந்து வருகின்றது. நான் இதுவரை சுமார் நூற்றுக்கணக்கான சமூக மகா நாடுகள் பார்த்திருக்கின்றேன். அநேகமாய் ஒவ்வொன்றும் தங்கள் ஆதிப் பெருமையை பற்றிப் பேசுவதில் கவலை கொண்டிருக்கக் கண்டேனேயல்
லாமல் இனிமேல் என்ன செய்வது என்பதை முக்கியமாய்க் கவனிப்பதைக் காணவில்லை. நாட்டின் முன்னேற்றமும் தங்கள் சமூக முன்னேற்றமும்,
தங்கள் நாடு ஆதியில் எப்படி இருந்தது என்று கண்டுபிடிப்பதிலும், தங்கள் சமூகம் ஆதியில் எப்படி இருந்தது என்று கண்டுபிடிப்பதிலும் ஒருசிறிதும் அடங்கி இருக்கவில்லை என்பது எனது அபிப்பிராயம். இம்மாதிரி பொருள் காட்சிகளும், நூதன தொழில் முறைகளும், சமூக மக்கள் அனைவரும் குறைந்த கஷ்டத்தில் தாராளமாய் நல்ல ஜீவனத்திற்கு ஏற்ற மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்கும் மானத்துடன் அதாவது ஜீவனத்துக்காக உயிர்வாழ்வதற்காக மானத்தையும் மனச்சாட்சியையும் பறிகொடுக்காமல் மனிதத் தன்மையோடு வாழும் நிலைமை உண்டாக்கிக் கொள்வதற்கும் தற்காலம் நமது நாட்டின் முற்போக்குக்கும் வழிகாட்டியாகும். ஆதலால் இந்த இரகசியத்தை உணர்ந்து இச்செங்குந்த சங்கத் தலைவர்கள் இம்மகா நாட்டுடன் ஒரு பொருள்காட்சி ஏற்பாடு செய்தது மிகவும் அறிவுடைமையும் பொருத்தமானதுமாகும் என்று சொல்லி நான் அவர்களைப் பாராட்டுவதுடன் இதைத் திறந்து வைக்கும் கெளரவத்தை எனக்குக் கொடுத்ததற்காக மறுபடி
யும் ஒருமுறை எனது நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு :19 , 20-01-1929 நாட்களில் ஈரோட்டில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்தர் முதலாவது- சமூக மாநாட்டு - பொருட்காட்சியை திறந்து வைத்து உரை.
குடிஅரசு - சொற்பொழிவு - 20.01.1929
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
புதுச்சேரி - வராதுக்கூட்டச் சாற்வபாழிவு
பெருமைமிக்க அக்கிராசனாதிபதி அவர்களே! பெரியோர்களே! இப்பொதுக் கூட்டமானது, இப்பிராஞ்சு தேசத்தில் இவ்வளவு சிறப்புடனும் முயற்சியுடனும் கூடுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இங்கு கூடியுள்ள உங்களின் பூரண மகிழ்ச்சிக் குறிப்பைப் பார்க்கும்போதும், எனக்குக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பவைகளைப் பார்க்கும் போதும், உங்கள் பெருமுயற்சி நன்கு தெரிகின்றது. நீங்கள் எனக்குக் கொடுத்த பத்திரத்தில் சிறப்பித்துக் கூறும் வார்த்தைகளுக்கு நான் தகுதியுடை யவனல்ல என்றே நான் நினைக்கின்றேன். ஆனால் என்னுடைய நோக்கத் தையும் எனது வேலையின் போக்கையும் இயக்க உண்மையையும் தெரிந்து கொண்டுள்ள உங்கள் கடமைக்கும் வந்தனம் அளிக்கின்றேன்.
நமது இயக்க எதிரிகளால் கடவுள் துரோகி, பிராமண துரோகி, மதத் துரோகி, சமயத்துரோகி, நாஸ்திகன் என்பன போன்ற பூச்சாண்டிகளால் பயமுறுத்தும் முதுகெலும்பு ஒடிந்த வாய்வேதாந்த சீலர்கள் செய்யும் கூழ்ச்சிகளைப் பொருட்படுத்தாதீர்கள்! என்னைப் பொருத்தமட்டில் நான் ஒரு நாஸ்திகன் அதுவும் நன்றாய் கொழுத்த நாஸ்திகன் என்றும் ஒப்புக் கொண்டேதான் இங்குகூட நாஸ்திகப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கின்றேன். மற்றவர்களும் நான் கூறிய நாஸ்திகத்தின் பொருளை நன்குணர்ந்தால் எல்லோரும் நாஸ்திகன் என்று சொல்லிக் கொள்ளவேதான் பிரியப்படுவார்.
கள். நாஸ்திகன் என்றால் ஆபத்தான அருத்தம் ஒன்றும் இல்லை. எவன் பார்ப்பன மதத்தை ஒப்புக் கொள்ளுவதில்லையோ எவன் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிவிட்ட கடவுள்களையும், அவை களின் பெண்டுபிள்ளைகளையும், அவைகளின் 4 கை 2 பெண்டாட்டி 1000 வைப்பாட்டி என்பவைகளையும், அக்கடவுள்கள் செய்த கொலை,கொள்ளை, விபசாரம், கொடுமை, ஏமாற்றம், சூழ்ச்சி ஆகிய இழி தன்மைகளையும், எவன் ஒப்புக்கொள்ளுவதில்லையோ, இம்மாதிரி கடவுளுக்கு, செய்த செய்யும் உத்சவம், பூஜை, அபிஷேகம், கோயில் கட்டுதல், சமாதாரனை செய்தல் வேதபள்ளிக்கூடம் வைத்தல் ஆகிய வழிகளில் பணத்தை எவன் பாழாக்க சம்மதிப்பதில்லையோ, எவன் பார்ப்பான் பிழைக்க அர்த்த மற்ற மூடச் சடங்குகளை செய்வதில்லையோ, எவன் இவைகளுக்கு ஆதார மான வேத புராண சாஸ்திரங்களை ஒப்புக் கொள்வதில்லையோ அவன் தான் நாஸ்திகன். அப்படிப்பட்டவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று எழுதிவைத்து
குடி அரசு - 1929 () 52
அந்தப்படி பார்ப்பனர்கள் பிரசாரமும் செய்து வருகின் றார்கள். ஆனால் நல்ல காலமாய், அப்பார்ப்பன அடிமை ராஜ்யங்களான ராம, கிருஷ்ண முதலிய ராஜ்யங்கள் இல்லாமலிருப்பதால் தப்பி இருக் கின்றோம்.ஆதலால் நாஸ்திகப் பூச்சாண்டிக்குப் பயப்படாமல் ஒவ்வொரு வரும் தங்களை: நாஸ்திகர்கள் என்று தைரியமாய்ச் சொல்லிக் கொள்ள வேண்டும். சொல்லிக் கொள்ளுவது மாத்திரமல்லாமல் மனதிலும் உண்மை யான உறுதி கொண்ட நாஸ்திகனாய் இருப்பதோடு, கொள்கைகளிலும், அனுஷ்டானங்களிலும் நல்ல பரிசுத்தமான உள்ளும் புறமும் ஒத்த நாஸ்திகனாய் இருக்க வேண்டும். வேறு யாராவது நாஸ்திகர் என்கின்ற பதத் திற்கு கடவுள் இல்லை என்கின்ற அர்த்தம் சொல்ல வருவார்களானால் அதற்கும் நீங்கள் பயப்படாதீர்கள். ஏனென்றால் அவர்கள் சொல்லும் கடவுளை முதலாவது ஒரு மனிதன் இல்லை என்று சொல்லவே முடியாது. அப்படி ஏதாவது சொல்ல நேர்ந்தாலும் அதனால் கடவுள் இல்லாமலும் போய்விடாது, அன்றியும் அந்தக் கடவுளுக்காக இம்மாதிரி ஆசாமிகள் வக்கீலாகவும் இருந்து அந்தக் கடவுள்களைக் காப்பாற்றவும் வேண்டியதில்லை. கடவுளைக் கண்டுபிடிக்க அகச்சான்று புறச்சான்று வேண்டாம். யாராவது ஒருவன் உங்களை வந்து, “என்னப்பா, கடவுள் இல்லை என்று சொன்னாயா” என்று கேட்டால், அவன் ஒரு மூடனாகவோ அல்லது அயோக்கியனாக வோதான் இருக்க வேண்டும். ஆதலால் அப்படிப்பட்டவனைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். அன்றி
யும் அப்படிப்பட்ட நபர்களை திருப்தி செய்யக் கவலைப்படாதீர்கள்.
பொதுவாக, நீங்கள் உங்கள் மனதில் உங்கள் பகுத்தறிவின் ஆராய்ச் சிக்கு எது சரி என்று படுகின்றதோ அதை நம்புங்கள். ஒழுக்கத்தைக் கடை
பிடியுங்கள்! ஒழுக்கத்தின் சாரம் ஒரு மனிதன் மற்ற மனிதனுக்கு நியாயம் என்கிற முறையில் துன்பத்தை, விளைவிக்காமல் இருப்பது: ஜீவன்களிடத்தில் அன்பு, இரக்கம், காருண்யம், உபகாரம், சத்தியம் முதலிய குணங்களோடு நடந்து கொள்வது: இவ்வளவு இருந்தால் போதும்! இந்தக் குணப்படி ஒவ் வொரு மனிதனும் நடந்து கொண்டால் இதற்கு எல்லா பலனும் மற்றும் என்ன என்ன பதவி உண்டோ அவ்வளவும் கிடைத்துத் திரும். நீங்கள் எதிர்பார்த்த படியே நீங்கள் ஏமாற்றமடையாமல் அவர்களும் (உயர்திரு. கண்ணப்பர், தெண்டபாணி) வந்துவிட்டார்கள். அவர்களும் பேச வேண்டியிருப்பதால் வாலிபர்களை மட்டும் மீண்டும் வற்புறுத்தி நமது இயக்கமே, சுயமரியாதை யே தேசவிடுதலை, மக்கள் விடுதலை என்பதை ஞாபகத்திலிறுத்தித் தொண்டு ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குற்றமிருந்தால் தள்ளிவிடுங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் செய்கையில் பின்பற்றி நடக்க முற்படுங்கள். உங்களால் முடியாவிடில் முன்வரும் வாலிபர்களின் ஊக்கத்தைத் தடுப்பது கூடாது.
குறிப்பு: 27-07-1929 ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டச் சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு” 27.01.1929
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
புதுச்சேரியில் சுயமரியாதை கிருகப் பிரவேசம்
சகோதரர்களே! பெரியோர்களே!
இப்புதுவை முத்தியால் பேட்டையிலுள்ள உயர்திரு. கி. இராஜ கோபால் செட்டியார் அவர்களின் அழைப்புக்கு இணங்கி இப்புதுமனை திறப்பு விழாவிற்கு வருவதற்கு ஒப்புக் கொண்டேன். இப்பிராஞ்சு தேசத் திலுள்ள நீங்கள் என் வேலையின் அவசியத்தை நன்குணர்ந்து பின்பற்றி ஆதரித்து செய்கையிலும் செய்து காட்ட முன் வந்தது பற்றி மகிழ்கிறேன். S & இராஜகோபால் செட்டியார் அவர்களின் புதுமனை திறப்பில் கலந்து கொள்ள வந்த பெரியார்களாகிய தாங்கள் எனக்கு இத்தகைய சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு உங்கள் அனைவர்க்கும் எனது நன்றியுடையது. இன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் நமது சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி விவரமாய் பேசுகின்றேன்.
குறிப்பு:21-01-1229 திங்கள் காலை திரு.கிஇராஜகோபால் செட்டியார்புதுவை முத்தியால் பேட்டை புதுமனை திறப்பு விழாச் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு- 27.01.1929
குடி அரசு - 1929 () 54
தெண்ணிந்திய வசங்குந்தர் மகாநாடு
தென்னிந்திய செங்குந்தர் முதலாவது மகாநாடு ஈரோட்டில் இம்மாதம் 19,20-ந் தேதிகளில் வெகு சிறப்பாய் நடந்தேறியது. அதோடு கூடவே வர்த்தக மகாநாடும் வாலிப மகாநாடும் நடந்தேறி இருக்கின்றன. மேல்கண்ட மகாநாடுகளைத் திறந்து வைத்த கனவான்களும் மகாநாட்டு வரவேற்புக்
கமிட்டி அக்கிராசனர்களும் மகாநாடுகளின் தலைவர்களும் செய்த சொற் பொழிவுகள் நீண்ட வியாசங்கள் ஆனதால் அவற்றைக் “குடி அரசில் பிரசு
ரிப்பது சாத்தியமற்றதாய் இருந்ததால் பிரசுரிக்க முடியவில்லை, என்றாலும் மகாநாட்டுக்கொடியை உயர்த்திய காஞ்சீபுரம் மாஜிசேர்மென். திரு. ம.த. சாமிநாத முதலியார் அவர்களது உபந்யாசம் செங்குந்த சமூகத்தின் பெருமை: யை எடுத்துக்காட்டும் முறையில் கந்த புராணத்தில் உள்ள முருகன் உற்பவக் கதையாகவே இருந்தது. மகாநாட்டைத் திறந்து வைத்த திரு.திவான் பகதூர்.
எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் சொற்பொழிவில் விவசாயமும் கைத் தொழிலும் நாட்டுக்கு முக்கியமென்று சொல்லி “கைத் தொழிலை விர்த்தி செய்ய வேண்டும், உலக வியாபார பாஷையாகிய ஆங்கிலத்தை விர்த்தி செய்ய வேண்டும், பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும். செங்குந்த வாலிபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நெசவு சம்மந்தமான தொழில் கற்க வேண்டும்” என்றும் இது விஷயத்தில் அபிவிர்த்தி மந்திரி கனம் சேது ரத்தினமய்யரிடம் தாம் சிபார்சு செய்வதாகவும் சொன்னது மிகவும் குறிப்
பிடத்தக்கதும் நன்றி செலுத்தத் தக்கதுமாகும்.
வரவேற்பு அக்கிராசனர் திரு.வி.எஸ்.செங்கோட்டையா அவர்களின் வரவேற்பு உபன்யாசம் மிக நீண்டு இருந்ததில் புராணக் கதைகளும், பண்டைப் பெருமைகளும் செங்குந்தர் பிரிவுகளும் சில பாகத்தை ஆக்கிர
மித்துக் கொண்டாலும் ஒற்றுமை, கல்வி, கைத்தொழில், வியாபாரம், கூட்டுறவு முறை முதலிய முக்கிய விஷயங்களைப் பற்றி தெளிவாய் எடுத்துக் கூறி
வற்புறுத்தி இருப்பது மெச்சத்தக்கதாகும்.
கூட்டுறவு பாங்கி விஷயத்தைப் பற்றி அவர் சொல்லி இருக்கும் விஷயம் எல்லாவற்றிலும் முக்கியமானது என்பதோடு அச்சமூகப் பிரமுகர்
கள் உடனே அமுலுக்குக் கொண்டு வர வேண்டிய காரியம் என்றும் கருதக்
கூடியதாகும்.
மகாநாட்டுத் தலைவர் புதுவை திரு. எ.வி.முத்தையா முதலியார் அவர்கள் தலைமைப் பேருரை மிகமிகப் போற்றத்தக்கதாகும். பண்டைப்
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பெருமையைச் சொல்லி மகிழ்வதோ, புராணக் குப்பைக் கதையைச் சொல்லி பெருமை கொள்ளுவதோ ஒரு சிறிதும் அதில் இல்லை. அவர் கூறியவற்றுள் முக்கியமாக “உலகத்தில் இப்போது தோன்றி நிற்கும் உயர் இயக்கத்தில் ஒழுக்க இயக்கத்தில் சேராதவர்கள் தாழ்வடைந்து விடுவார்கள். ஒழுக்கம்
குன்றி, வேஷம் மிகுந்ததாலேயே, குலம் தாழ்ந்தது, இந்தத் தாழ்ந்த நிலைக்கு மக்கள் வர நேர்ந்தது என்றும் சொல்லி “அப்பேர்ப்பட்ட உயர் இயக்கம் நடைபெறத் தடை செய்யாமல் இருப்பதே ஒழுக்கத்தின் உமை”. என்றும் வெறும் ஆசாரங்களால் கட்டுண்டு நிற்பது மனிதத்தன்மை அல்ல என்றும் உண்மையை மறைத்து நிற்கும் இருளைப் போக்க வேண்டும் என்றும் உண்மையான பரிசுத்தத்தை மறந்துவிட்டு வெறும் பழக்கம் வழக்கம் என்கின்ற மூடநம்பிக்கையில் விழுந்து உழலுகின்றோம் என்றும், செங்குந்த மக்களிடை சில உயிரற்ற ஆசாரங்கள் உண்டு என்றும் இந்தக் குல ஆசாரங்களிலேயே பிறர் ஏளனமும் அவமதிப்பும் செய்கிறார்கள் என்றும், ஒரு குலத்தவர்களை அச்சார்பாளரிடம் பரவி இருக்கும் தீய வொழுக்கங் களே தாழ்த்துகின்றன என்றும் மற்றும் பிள்ளைகளை அளவுக்கு மீறிப் பெற்று விடுவதில் உள்ள கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி பிள்ளைப் பேற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,
உண்மையின் பின் சென்றால், போலிச்சாதியார் உண்மைச்சாதியார் என்கின்ற சண்டைகள் நிகழா என்றும், பிறழ்ச்சியான வழியில் வந்தவர்கள், தாங்கள் நேர்வழியில் வந்தவர்கள் என்று சாதிக்க மாட்டார்கள் என்றும், தங்கள் வழி யாதாயினும் தங்களிடையே நல்லொழுக்கத்தை அமைத்துக் கொள்வதே முன்னேற்றத்தின் முதற்படி என்றும், உலகப் போக்கையும் உயர். இயக்கத்தையும் ஒழுக்கத்தின் உண்மையையும், அதன் அமைப்பையும் நன்றாய் அறிந்து கொண்டால்தான் நம்மிடையில் உள்ள கொடிய ஆசாரங்
கள் தொலையும் என்றும். கல்வி விஷயத்தில் மேல்கண்ட ஒழுக்கத்திற்குத் துணை நிற்கும் கல்வியே வேண்டுமல்லாமல், ஒழுக்கமற்ற கல்வி வேண்டாம் என்றும். பெண்கள் விஷயத்தில் எங்கே பெண்கள் முன்னேற்றமடைய வில்லையோ அக்குலத்தவர்கள் தாழ்ந்த குலத்தவர்கள் ஆக இருப்பார்கள். என்றும், ஒழுக்கம் என்பது ஆண்பெண் இரு பாலாருக்கும் சமம் என்றும் சரிபகுதியான பெண்மக்களைச் சேர்க்காமல் ஆண் மக்கள் மாத்திரம் தமது ஜாதியை முன்னுக்குக் கொண்டுவர முயற்சிப்பது காலில்லாமல் நடக்க ஆசைப்படுவது போன்றது என்றும், தொழிலைப் பற்றிச் சொல்லும்போது தொழில் செய்வார்களுக்கு நாணயமும் நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்றும் தேகப்பிரயாசை கொஞ்சமானதும் கூலி அதிகம் கிடைக்கக் கூடியதுமான தொழில்கள் நடைபெற வேண்டு மென்றும், மதவிஷயத்தில் கோயில் கட்டுவதிலும் உத்சவங்கள் செய்வதிலும், பொருள்கள் செலவா கின்றன வென்றும் இதனால் என்ன பயன் என்றும், தற்புகழ்ச்சி தற் பெருமைக்கு என்கின்ற அறியாமை இல்லாவிட்டால் இச் செலவை அறி வாளிகள் செய்யமாட்டார்கள் என்றும், அப்படி ஏதாவது கடவுள்
குடி அரசு - 1929 () 56
கஷ்டநஷ்டப்படுத்தினால் அப்படிப்பட்ட கடவுள் கடவுளாகா தென்றும் கோவிலிலிருக்கும் கடவுளுக்கென்று செய்யும் காரியங்கள் யாதொரு பலனையும் கொடாது என்றும் கஷ்டப்படும் மனிதர்களை கடவுளாக நினைத்து அவர்களுக்கு வேண்டியது செய்வதே நன்மை என்றும் பலதுறைகளிலும் உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
அடுத்தாற் போல், வர்த்தக மகாநாட்டின் வரவேற்புத் தலைவர். திருச்செங்கோடு திரு. கந்தப்ப முதலியார் அவர்களின் வரவேற்பு உபன்யாசத்தில், அச்சமூகத்தாருக்கு மாத்திரமல்லாமல் பொதுவாக இந்திய வர்த்தகத்திற்கே முக்கியமான பல யோசனைகள் குறிப்பிடப்பட்டிருக் கின்றது. கூட்டுறவுத் துறையில் வியாபாரத்தை பெருக்கப் பலவழிகளும் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செங்குந்த சமூகத்திற்கென்று ஒரு தனி கூட்டுறவு இலாக்கா ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதை நாம் மனதார ஆதரிப்பதோடு அதை அரசாங்கத்தாரும் கவனிக்க விரும்புகின்றோம்.
வர்த்தக மகாநாட்டுத் தலைவர் திருவாளர். தென்காசி ப.கு.ஆறுமுக முதலியார் அவர்கள் தலைமையுரையில் வர்த்தகர்களுக்கு சில பொருத்த மான யோசனைகள் காணப்படுகின்றதுடன், நெசவுத் தொழில் நசித்துப் போவதற்குக் காரணம் போதிய ஊதியம் இல்லாததுவே என்றும், பிள்ளை களுக்கு பழையமுறை நெசவுத் தொழிலைக் கற்பிப்பது பயனற்றதென்றும் புதிய முறைகளைக் கற்பிக்க வேண்டும் என்றும் காணப்படுவதோடு, கடைசியாக தனவந்தர்களும் சந்ததி இல்லாதவர்களும் வியாபாரிகளும் கோயில் முதலிய தர்மங்களுக்கும், மறுபிறப்பில் பயன்தருவதாய்ச் சொல்லப்
படும் காரியங்களுக்கும் சில காலத்திற்காவது செலவு செய்யும் பொருள்களை நிறுத்தி இம்மை வாழ்க்கையில் நம் முன்னேற்றத்திற்காக வழங்கி வந்தால் அதைவிட பெரும்புண்ணியத்தை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று சொன்னதோடு நூற்றாண்டுகளுக்கு முன்செய்து வந்த முறையிலேயே தொழில்களைச் செய்யக் கூடாது. நவீனமானதும் அதிக ஊதியம் தருவது மான தறிகளையும் அவசியமான இயந்திரங்களையும் கொண்டு அப்போ தைக்கப்போது புதுமாதிரியான காரியங்களைச் செய்ய வேண்டுமென்று சொன்னவைகள் செங்குந்த சமூகத்தாரும் இதர சமூகத் தாரும் மிகுதியும் கவனிக்கத் தக்கது என்போம்.
வாலிபர் மகாநாடு
பிறகு கூடிய வாலிப மகாநாட்டு வரவேற்பு அக்கிராசனர் திரு.என்.எம். ஷண்முகசுந்தரமுதலியார் வரவேற்பு உபன்யாசத்தின் ஆரம்பத்திலேயே சுய மரியாதை உணர்ச்சியையும் சமூகசீர்திருத்தத்தையும் மக்களின் விடுதலைக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டியதுடன் அவற்றிற்கு வாலிபர்களே தகுந்தவர்கள் என்று வற்புறுத்தி இருப்பது நாட்டின் உண்மை நிலையை நன்றாய் உணர்ந்து
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கூறியதாகும். அன்றியும் விவாதமான அரசியல் துறையில் இறங்கி குழப்பம் முதலான தீயவழியிலிழுக்கப்பட்டு பேராபத்தை விளைவித் துக் கொள்வது
இளைஞரியக்கத்திற்குச் சிறிதும் ஏற்காது என்று குறிப்பிட்டி ருப்பது நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு வாலிபரும் கருத்தில் இருத்தி வைக்க வேண்டிய பொன்போன்ற வாசகமாகும்.
சமூக சமரசமில்லையாயின் நாம் விடுதலையைப் பெற இயலாது: பெற்றாலும் நிலைக்காது என்பது கல்லின் மேலெழுதி வைக்க வேண்டிய சொல்லாகும். முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள எதையும் ஒழிக்க வேண்டும். இத்துறையில் வயதான பெரியோர்களின் மனஸ்தாபத்தை லட்சியம் செய்யக் கூடாதென்றும், பெண் கல்வி, விதவா விவாகம் முதலிய வைகளைத் தாராள நோக்கத்துடன் வலியுறுத்தி, ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விவாகங்கள் செய்து கொண்டு பெண்களுக்கு விதவா விவாகத் தைக் கூட அனுமதிக்க ஆகஷ்பிப்பது பெரிய பாதகமான செயலாகும் என்று சொல்லியிருப்பதும், ஒழுக்கம், தேகப் பயிற்சி ஆகியவைகளை வலியுறுத்தி இருப்பதும் வாலிபர்களுக்கு தக்க உபதேசமாகும்.
மகாநாட்டுத் தலைவர் திருவாளர் குடியாத்தம் மா.வெ. பீமராஜ
முதலியார் அவர்களது தலைமைப் பேருரையில் சமூக இயக்கங்களின் அவசியத்தையும் சமூக சீர்கேட்டிற்குக் காரணம் ஜாதி வித்தியாசத்தை மதத் தோடும் கடவுளோடும் இணைத்திருப்பதே யென்பதையும், சமஉரிமையும் சமசந்தர்ப்பமுமில்லாத நாடு விடுதலையடையாது என்பதையும் முன்னேற்றமடைந்து முதற்படியிலிருக்கும் பார்ப்பனர்களே, பிராமணசபை கூட்டும்போது நாம் நமது சமூக சபை கூட்டி சமத்துவத்திற்குப் போராடுவது குற்றமல்ல என்றும், துருக்கி, ஆப்கான், ரஷியா, சைனா, ஜப்பான் முதலிய தேசங்கள் விடுதலை பெற்றதைக் கவனிக்கும்படிக்கும் குறிப்பிட்டிருப் பதுடன் பொருள் அறியாது தேவாரம் படித்து விபூதி, ருத்திராக்கமணிவதும் அடியார்கள் சரித்திரமும் கடவுள் திருவிளையாடலையும் படிப்பதும் பாடம் பண்ணுவதும், கலாசாலை பட்டம் பெறுவதும் மதமும் கல்வியுமாகிவிடாது என்றும், உலக அனுபவமே சரியான கல்வியாகும் என்றும், புராணப் பெருமை போதாதென்றும், சுய ஆராய்ச்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டு மென்றும், குறிப்பிட்டுவிட்டு கைத்தொழில் விஷயத்தில் இயந்திரங்களோடு போட்டிபோட வேண்டிய இக்காலப் போக்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்குப் போக வேண்டு மென்பது நாடு க்$ணித்துப் போவதற்கு காரணமாகுமென்றும் வெறும் நெசவுத் தொழிலே குலதர்மம் என்று எண்ணி இருந்ததே நமது வறுமைக்குக் காரணமென்றும், ஒவ்வொருவரும் தங்களால் கூடிய எல்லா தகுதியான தொழிலையும் செய்ய முந்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதுடன் கோவில், உத்சவங்களுக்கு பொருள் செலவிடுவது பற்றியும், கோவில்களினால் உண்டாகும் விபரீத பலன்களைப் பற்றியும், மத விஷயத்தில் முரட்டு நம்பிக்கையை விடவேண்டும் என்றும், நமக்குப்
குடி அரசு - 1929 () 58
பொருந்தாததும், விளங்காததுமான நூல்களும் நமக்கு சரியென்று அனுபவத்
திற்குத் தோன்றாத கொள்கைகளும் வேண்டியதில்லை என்றும் நம் மக்க
ளுக்கு குறுகிய புத்தி உண்டானதற்கு நமது சமயத்தில் சொல்லப் பட்டவை களை சத்தியம் என்று நம்பினதே முக்கிய காரணம் என்றும், பெண்களுக்கு சமஉரிமையும் சொத்துரிமையும் வேண்டுமென்றும் குறிப்பிட்டிருப்பதும் எல்லோரும் கவனித்துப் பார்க்கத்தக்கதாகும்.
தீர்மானங்களைப் பற்றிய முழுத் தகவல்கள் இதுவரை தெரியவில்லை. ஆயினும் கூடுமானவரை முற்போக்குள்ள அறிகுறிகளே காணப்படுகின்றன. மகாநாடு நடத்திய திறமையும், பிரதிநிதிகள் முதலியவர்களுக்கு செய்து கொடுத்த சவுகரியங்களும் போற்றற்குரியதே யாகும். பொதுக் காரியதரிசி.
திரு. டி.வி. நடேசமுதலியார் அவர்களும் மற்றும் உள்ளூர் வாசிகளான திருந.மு.ஷண்முகசந்தரம், சென்னியப்பன், மீனாகஷி சுந்தரம், மொட்டயப்ப முதலியார், செங்கோட்டையா பிரதர்ஸ், வி.வி.சி.பிரதர்ஸ் முதலியவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் மகாநாட்டின் இவ்வளவு பெருமைக்கும் காரணமென்று சொல்வது மிகையாகாது. ஆனாலும், புராணக் கூற்றிற்கு அடிமைப்பட்டவர்களும் தங்களை உயர்ந்த ஜாதியென்று நினைத்துக் கொண்டிருக்கும் ஆணவப்பான்மையுடையவர்களுமாய் உள்ள ஒரு சிலரும் தங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொண்டு பகுத்தறிவிற்கு மதிப்புக் கொடுக்க இசைந்து தொண்டாற்ற முன்வந்துவிடுவார்களானால் செங்குந்த
சமூகம் மாத்திரமல்ல; இத்தேச மக்கள் எல்லோருக்குமே சுதந்திர உணர்ச்
சியும் சுயமரியாதையும் திடீரென்று ஏற்பட்டுவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. செங்குந்த சமூகம் ஒரு பெரிய முற்போக்குள்ள சமூகமான தாலும் தக்க செல்வந்தர்களும் ஊக்கமுள்ளவர்களும் தாராள நோக்கமுள்ள வர்களும் பொதுக்காரியங்களுக்கு தாராளமாய் உதவக் கூடியவர்களும் எவ்வித இயக்கத்திற்கும் தயாராயுள்ள வாலிபர்களும் மலிந்துள்ள சமூக மானதால் அது பிராமண மகாநாடு, செளராஷ்டிர பிராமண மகாநாடு, விஸ்கர்மா பிராமண மகாநாடுகள் போன்று ஜாதிப் பெருமையை சொல்லிக் கொண்டு மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற மந்திரத்தில் இல்லாமல் தற்கால நிலைக்கேற்ற வண்ணம் நாட்டின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் உதவ வேண்டுமென்பதே நமது அவா. ஆதலால், இவற்றைப் பற்றி இவ்வளவு விரித்து நமது ஆசையையும் தெரிவித்துக் கொண்டோம்.அடுத்த மகாநாடு இது போல் பதினாயிரக் கணக்கான ரூபாய் களை செலவு செய்யாமலும் இந்த மகாநாட்டுத் தீர்மானங் களைவிட தாராள மனப்பான்மையுடன் ஒருபடி முன்னேறியும் வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்று எதிர்ப்பார்க்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.01.1929.
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
யார்ப்பணப் பட்டங்களின் காகசியம்
- சித்திரபுத்திரன்
பார்ப்பனப் புரட்டுகளின் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் ஆகியவைகளில் மிகுதியும் பொதிந்து கிடப்பது பட்டங்களே ஆகும். அதாவது தேவர், சுரர், அசுரர், ரிஷி, முனி, ராக்ஷதர், ஆழ்வார், நாயனார். போன்ற வார்த்தைகளேயாகும். இவ்வார்த்தைகள் கொண்ட பட்டமுடை யவர்கள் தான் இப்போதும் மக்களுடைய நீதிக்கும் வாழ்க்கைக்கும் ஆதார மானவைகள் என்று எழுதி வைத்திருக்கும் அநேக விஷயங்களுக்கும் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லுவது பெருத்த தோஷங்களாகக் கற்பிக்கப்பட்டும் இருக்கின்றன. எனவே இப்பட்டங்கள் யாருக்கு எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கின்றது என்று பார்த்தால், பார்ப்பனர்களுடைய நன்மைக்கு ஆளாயிருக்கின்றவர்களுக் கெல்லாம் சாதாரணமாய்க் கிடைத்து விடுகின்றது. அவர்களுக்கு விரோத மாய் இருக்கின்றவர்களுக்கும் அசுரன், ராக்ஷதன் என்கின்ற பெயர்கள் கிடைத்து விடுகின்றன.
ஆனால் இவர்களால் உயர்ந்த பட்டங்களாகிய தேவர், முனிவர், ரிஷி போன்ற பட்டம் பெற்றவர்களுக்கும் தாழ்ந்த பட்டங்களாகிய ராக்ஷதர் அசுரர். போன்ற பட்டம் பெற்றவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா என்று பார்த்தால் நடவடிக்கையில் ஒழுக்கத்தில் உயர்ந்த பட்டம் பெற்றவர். களை விட தாழ்ந்த பட்டம் என்பதை பெற்றவர்களே பெரிதும் சிறந்தவர். களாயிருக்கின்றார்கள். ஆனால் உயர்ந்த பட்டத்திற்கும், தாழ்ந்த பட்டத் திற்கும் பார்ப்பனர்கள் சொல்லும் காரணங்கள் என்ன வென்றால், தேவர். களுக்கு இடையூறு செய்தவர்கள் இராக்ஷதர்கள் என்றும் சுரர்களுக்கு இடையூறு செய்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் படுவதைத் தவிர: வேறு காரணங்கள் கற்பித்திருப்பதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை.
சமீப காலத்தில் திலகருக்கு ரிஷிப் பட்டமும் டாக்டர் சுப்ரமணிய அய்யருக்கு முனீந்திரர் பட்டமும் அரசியல் உலகில் பார்ப்பனர்களால் இடப்பட்டது. ஆணாலும் இவைகள் பார்ப்பனச் சட்டப்படி வைதீக உலகத்தில் செல்லாததாக இருக்கலாம். ஆனால் இந்த வாரப்பத்திரிகையில் சங்கராச்சாரி ஆழ்வார் மகாராஜாவிடம் அவரது உடலவ்வளவு எடை வெள்ளி வாங்கிக் கொண்டு அவருக்கு ஒரு ராஜரிஷிப்பட்டம் அளித்திருப்பதாகவும் அதற்காக
குடி அரசு - 1929 () 60
மறுபடியும் ஆழ்வார் ராஜா ஒரு பெரிய மகாவிஷ்ணு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு பதினாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து
லக்ஷப் பிராமண போஜனம் செய்ய ஆழ்வார் மகாராஜா தீர்மானித் திருப்பதாகவும் வெளியாகி யிருக்கின்றது.
ரிஷி என்பது பெரிய பட்டம். அது இந்தியா முழுமைக்கும் “மேல் லோகத்திற்கும்” “கீழ் லோகத்திற்கும் கூட பாத்தியப்பட்டது. அப்படிப்பட்ட பட்டம் பெற்ற ஆழ்வார் மகாராஜாவைப் பற்றி நம் நாட்டு மக்களில் யாருக்கா
வது ஏதாவது தெரியுமா? ரிஷிகளுக்குச் சொல்லப்படும் பெருமைகள் போல ஆழ்வார் ராஜாவிடம் என்ன பெருமைகள் இருக்கின்றன? அவர் யாருக்கு என்ன நன்மை செய்தார்? சங்கராச்சாரிக்குப் பணம் கொடுத்திருப்பார். இவருக்குத் தன்னளவு எடை வெள்ளி கொடுத்திருப்பார்.பார்ப்பனர்களுக்கு வயிறு வெடிக்க சாப்பாடும், கஞ்சாவுக்கும் பூரணாதி லேகியத்திற்கும் தாராளமாய் தக்ஷணையும் கொடுத்திருப்பார், இதைத் தவிர வேறு என்ன செய்தார்?
இதுபோலவே கொஞ்ச காலத்திற்கு முன் தென்னாட்டு சங்கராச் சாரிகளில் ஒருவர் ரூபாய் 10000 பெற்றுக் கொண்டு ஒருவருக்கு தீர்த்தபதி என்ற பட்டம் கொடுத்தாராம். மற்றொரு நாட்டுக் கோட்டையாரிடம் 7000 ரூபாய் பெற்றுக் கொண்டு தர்ம பூஷணம் என்று பட்டம் கொடுத்தாராம். மலையாளத்துப் பார்ப்பனர்கள் தங்கத்தில் மாடு செய்து அதன் வயிற்றில் கொஞ்ச நேரம் மலையாளத்து ராஜாவை இருக்கச் செய்து பிறகு அவரைப் பிராமணராக்கி விட்டு தங்கமாட்டை வெட்டி பங்கு போட்டுக் கொள்ளு கிறார்கள். பிறகு ராஜா கோவிலுக்குள்ளும் விடப்படுகின்றார். பார்ப்பன பந்தியிலிருந்து சாப்பிடவும் அனுமதிக்கப்படுகின்றார். இதுபோல் இன்னமும் எத்தனையோ பட்டங்கள் வழங்கப்பட்டு அவைகள் நம்மவர்களால் வாலாக ஒட்டவைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சர்க்கார் கொடுக்கும் பட்டத்தை மாத்திரம் சர்க்கார் தாசர்களுக்குப் பிரசாதம் என்றும், தேசத் துரோகம் செய்ததற்குச் சன்மானம் என்றும், சிலர் சொல்லுகின்றார்கள்.
சர்க்கார் பட்டம் சர்க்கார்தாசர்களுக்கு சன்மானமானால் பார்ப்பனர்கள் தரும் பட்டத்திற்கு என்னவென்று பெயர் வைப்பது? ராவணன் ராக்ஷதனானைற்கும், விபீஷணன் ஆழ்வார் ஆனதற்கும் காரணம் என்ன? பார்ப்பனப் புராணப் படியேபார்த்தாலும்,ராவணனோ மகா சிவபக்தனாம், வேதம் படித்ததினால் பிராமணன் என்றுகூட சொல்ல வேண்டியவனாம்! ஒழுக்கத்திலும் தவத்திலும்.
சிறந்து விளங்கி கடவுள்களுக்குத் திருப்தி செய்து அரிய பெரிய வரங்கள். பெற்றவனாம். ஆனால் அவன் செய்த தப்பிதம் என்னவென்றால் தேவர்களுக்கு இடுக்கண் செய்ததுதானாம். இதுபோலவே இராக்ஷதர்கள் என்பவர்கள் மீது சுமத்தப்பட்ட தப்பிதங்க ளெல்லாம் மிகுதியும் தேவர்களுக்கு திருப்தியாய் நடந்து கொள்ளுவது தானே ஒழிய வேறு ஒன்றையும் பார்ப்பனப் புராணங்களிலேயே காண முடியவில்லை.
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எனவே, தேவர்கள் என்றால் யார் என்று கவனிப்போமானால் தேவலோகத்தில் உள்ளவர்கள் தேவலோகமோ நமக்குத் தெரியாததும் நமது
புத்திக்கும் அறிவுக்கும் படாததுமாக இருப்பதால் அதைப்பற்றி நாம் எடுத்துக் கொள்ளும் கவலை வீணானதாகும். ஆனால் பூதேவர்களைப் பற்றிய ஆராய்ச்சி அவ்வளவு வீணானது ஆகாது. ஏனெனில் பூதேவர்கள் என்பவர்கள் பிராமணர்கள்; பிராமணர்கள் என்பவர்களை நமது பார்ப்பனர்.
கள் தாங்கள்தான் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.ஆகையால் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமானதல்ல. ஆனதால் நமது பூதேவர்களான பார்ப்பனர்களும் தமது பட்டங்கள் வழங்குவதில் தேவர்கள் என்பவர்: களையே பின்பற்றி தங்களுக்கு இதமாய் இருப்பவர்களுக்கு ராஜரிஷி, பிரம்மரிஷி, ஆழ்வார், முனிவர், நாயன்மார்கள் முதலிய பட்டங்களும்
தங்கள் நலத்திற்கு இடையூறாய் இருப்பவருக்கு ராக்ஷதர், அசுரர், சூரன் முதலிய பட்டங்களும் வழங்குவதைப் பார்க்கின்றோம். இன்றைய தினமும் நம்மவர்களிலேயே பலர் “ரிஷிகள் சொன்னார்கள், முனிவர்கள் சொன்னார்.
கள், ஆழ்வார்கள் சொன்னார்கள், நாயன்மார்கள் சொன்னார்கள்; அப்படிப் பட்டவர்கள் சொன்னதை மறுக்கலாமா? கண்டிக்கலாமா? யுக்தியினால் தர்க்கிக்கலாமா? அப்படித் தர்க்கிப்பது நாஸ்திகமல்லவா?” என்றும் வாது புரிய வருகின்றார்கள். ஆனால் இவர்களை “ரிஷிகள் என்றால் என்ன? முனிகள் என்றால் என்ன? ஆழ்வார்களின் யோக்கியதை என்ன? நாயன் மார்களின் நாணயம் என்ன?” என்று கேட்டு விட்டால் நிலத்தைப் பார்த்துக் கொண்டு தலையைச் சொரிந்து கொள்ளுகின்றார்கள். நாயன்மார்கள் பேராலும், ஆழ்வார்கள் பேராலும், ரிஷிகள், முனிவர்கள் பேராலும் தங்கள். வாழ்க்கையையே ஏற்படுத்திக் கொண்ட சிலர், மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு, தமக்கே புரியாமல் எதையாவது உளறிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றுவதில் வெகு கவலை உள்ளவர்களாய் இருக்கின்றார்கள். நமக்கு இக்கூட்டத்தாரின் எவ்வித ஏமாற்றமான வயிற்றுப் பிழைப்பைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால் இதை நம்பும் பாமர மக்களின் கதி என்ன ஆவது என்கின்ற கவலைதான்! அண்ணனை எதிரிக்கு காட்டிக் கொடுக்காமல் இருந்தால் விபூஷணன் ஆழ்வாராக ஆகியிருக்க முடியுமா? யாகத்தையும் வேதத்தையும் ஆதரிக்காமல் இருந்தால் நால்வர்கள். நாயன்மார்களாக ஆகியிருக்க முடியுமா? புத்தர் விக்கிரகத்தை உடைக்காமல்
இருந்தால் திருமங்கை மன்னன் ஆழ்வாராக ஆகியிருக்க முடியுமா? வர்ணாசிரம தர்மத்தைப் பிரசாரம் செய்யாமலிருந்தால் திரு.காந்திக்கு “மகாத்மா” பட்டம் இன்னமும் நிலைத்திருக்குமா? இந்து மதத்தைப் பிரசாரம் செய்யாமலிருந்தால் நரேந்திரநாதர், சுவாமி விவேகானந்தராயிருப்பாரா? மற்றவர்களைப் பற்றிச் சாவகாசமாய்க் கவனிக்கலாம்.
குடி அரசு - கட்டுரை - 03.02.1929
குடி அரசு - 1929 () 62
இதற்கு எண்ண பதில் வசால்னுகின்றீர்கள்?
உலகத்தின் நாலா பக்கங்களிலும் உள்ள மக்கள் அறிவு வளர்ச்சியும், முன்னேற்றமும் பெற்று, பூரண விடுதலை மார்க்கத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கும் காலத்தில் நமது தேசத்தில் சிறப்பாக நமது நாட்டில் உள்ள
மக்கள் மாத்திரம் இன்னமும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வர பலமான முயற்சிகள் செய்யப்பட்டு வருவதானது மிகவும் கேலிக்கும் இழிவுக்கும் இடமானது என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதமிருக்காதென்றே எண்ணுகின்றோம். சுமார் இரண்டு மூன்று மாதத்திற்குள்ளாக தமிழ் நாட்டில் சோழ மண்டலத்தில் 2 மகாநாடுகள் பிராமண மகாநாடு என்னும் பேரால் நடைபெற்றிருக்கின்றன.
இம்மகாநாட்டில் வெறும் அன்னக்காவடிகளான அல்லது வயிற்றுப் பிழைப்பு பஞ்சாங்கப் பிச்சை ஜீவனக்காரர்களான, பொறுப்பற்ற சில பார்ப்பனர்கள் கூடி மகாநாட்டை நடத்தினார்கள் என்று சுலபத்தில் சொல்லி விட முடியாது.
படித்தவர்கள் என்றும் பொறுப்புள்ளவர்கள் என்றும் நாட்டின் முக்கிய பகுதியார் என்றும் சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகஸ்தர்களும், உபாத்தியாயர்களும், வக்கீல்களும், மிராசுதாரர்களும் மற்றும் பல பொறுப் புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியான பார்ப்பனர்களே பெரிதும் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போதே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும், மக்களின் விடுதலைக்கும் எதிரிகள், விரோதிகள் நமது நாட்டிலேயே இருந்து கொண்டு பெரும்பான்மையான மக்களை கொடுமைப்படுத்தி வதைத்து வருபவர்களாக இருக்கின்றார்கள் என்பதும், அரசாங்கத்தாரோ அல்லது வேறு மதக்காரர்களோ நமக்கு விரோதிகள் அல்ல என்பதும் நன்றாய் விளங்குகின்றது.
எப்படியெனில், நமது நாட்டு சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும், விடுதலைக்கும் என்னென்ன கொள்கைகளும் ஆதாரங்களும் விரோதமாய் இருக்கின்றனவென்று நாம் கருதுகின்றோமோ, நாம் மாத்திரமல்லாமல் நமது நாட்டிலுள்ள அறிஞர்களும், வெளிநாட்டிலுள்ள அறிஞர்களும், கருதுகின்றார்களோ அவர்கள் எவ்வெவற்றை ஒழிக்க வேண்டுமென்று முனைந்து நிற்கின்றாரகளோ அவைகளையே நிலைநிறுத்த இந்தப் பார்ப்பன மகாநாடுகள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றன.
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
உதாரணமாக மதத்தின் பேராலும், வேத சாஸ்திர ஸ்மிருதிகளின் பேராலும் மக்கள் சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும், விடுதலைக்கும்
பகுத்தறிவிற்கும் விரோதமானவைகளை அழிக்க வேண்டுமென்பது நமது கவலையும் முயற்சியும் என்றால் இவைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது இந்தப் பார்ப்பன மகாநாட்டின் கவலையும் முயற்சியும் என்று அவர்களா லேயே வெளிப்படையாய் சொல்லப்பட்டிருக்கின்றது.
அதாவது, சென்ற வாரம் திருச்சியில் கூடிய பார்ப்பன மகாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளில், “எவனொருவன் சுருதி ஸ்மிருதிகளான சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளுகின்றானோ அவன்தான் மகாநாட்டுப் பிரதிநிதியாகலாம்” என்பதாக நிபந்தனை ஏற்படுத்தப்பட்டி ருக்கின்றது. அம்மாதிரியே எல்லோரிடமும் வாக்குறுதியும், கையெழுத்தும் வாங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சுருதி, ஸ்மிருதி, சாஸ்திரங்கள் என்பன என்னவென்று பார்ப்போ மானால், வேதம் சாஸ்திரம் புராணம் ஆகியவைகளும், குறிப்பாக பாராசர்.
ஸ்மிருதியும் மனுதர்ம சாஸ்திரமும் மற்றும் இதுபோன்றவைகளே முக்கியமா னவை. பாராசர் ஸ்மிருதியில் இன்னது இருக்கின்றது என்பதையும் மனுதர்ம சாஸ்திரத்தில் இன்னது இருக்கின்றது என்பதையும் நமது வாசகர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டிய கஷ்டம் இல்லை என்றே நினைக்கின்றோம். அநேக தடவை எடுத்துக் காட்டியுமிருக்கின்றோம். அதோடு மாத்திரமல்லாமல், அநேக கூட்டங்களில் அந்த சாஸ்திரங்கள் கொளுத்தப்பட்டும் இருக்கின்றன.
ஆகையால் அவை நமக்கு எவ்வளவு எதிரானவை என்பது தானாகவே விளங்கும்.
எனவே, அப்பேர்ப்பட்ட, நமக்கு இழிவையும் அடிமைத் தனத்தையும் மானக்கேட்டையும் உண்டாக்கத்தக்கதான ஆதாரங்களைக் காப்பாற்றவே, பிரசாரம் செய்யவே, அதில் கண்டுள்ள கொள்கைகளை நம்மீது சுமத்தவே, அம்மகாநாடுகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டுமா?
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், முன் குறிப்பிட்டபடி நமது முன்னேற்றத்திற்கு எந்தெந்த சாதனங்கள் தடை என்று கருதி, அவைகளை அழிக்க முற்படுகிண்றோமோ அவைகளைக் காப்பாற்றுவதுதான் பிராமண: மகாநாடு என்பதன் முடிவு. இந்தப்படி பார்த்தால் இந்த நாட்டில் வேதம், சாஸ்திரம், புராணம் இவைகளின் மேல் நிற்கும் - இவைகளை ஒப்புக் கொள்ளும் - அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் பார்ப்பனர்களும் அவர்களது சிஷ்யர்களும் நமக்கு, அதாவது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு
கடும் விரோதிகள் என்பது தான் நமது அபிப்பிராயம்.
ஆதலால் இவ்விரோதிகளின் ஆதிக்கத்தை அடியோடு தரைமட்டாய்
குடி அரசு - 1929 () 64
ஒழிக்க வேண்டும் அல்லது இவர்கள் சம்மந்தத்தில் இருந்து அடியோடு விலகி, உலகில் மகமதியர், கிறிஸ்தவர், பாரசீகர், சீக்கியர்கள் முதலியவர்கள். இருப்பது போல் பார்ப்பனர்களையும் நமக்கு சம்மந்தமில்லாத ஒரு கூட்டத்தார் எனக் கருதி அவர்களது கொள்கைகளையும், ஆதாரங்களையும்,
நம்மீது சுமத்தவிடாமல் விலக்கிவிட வேண்டும். இவ்விரண்டிலொன்று செய்வதுதான் பார்ப்பன இரத்த சம்மந்தமில்லாத மக்களுடைய வேலை யாயிருக்க வேண்டும். அப்படிக்கு இரண்டில் ஒன்று இல்லாதவரை கண்டிப்
பாய் பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதையோ சமத்துவமோ விடுதலையோ கிடையாது என்பதே நமது உறுதியான முடிவாகும்.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கானாலும், சுயமரியாதை இயக்கத்திற் கானாலும் ஏதாவது நிபந்தனைகள் ஏற்படுத்துவதாயிருந்தால் அவற்றுள் ஒன்றாக - ஏன் முக்கியமானதாக “பார்ப்பனர்களுடைய அதாவது இந்து மத சம்மந்தமான வேத சாஸ்திர புராணங்களில் நான் நம்பிக்கை இல்லாதவன், என்பதாக ஒரு நிபந்தனையைக் கண்டிப்பாய் ஏற்படுத்த வேண்டும் என்பது நமது கருத்தாகும். தவிர தன்னைப் பிராமணனென்று சொல்லிக் கொள்ளு கின்ற எவரையும் நமது எவ்வித முன்னேற்ற சங்கத்திலும், சீர்திருத்த சங்கங்கள் எதிலும் கண்டிப்பாய்ச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதும் நமது கருத்தாகும். தவிர
“இந்து ராஜாக்கள் அரசாங்கம் இக்காலத்தில் இல்லாததால் மேல்கண்ட வேத சாஸ்திர புராண கொள்கைகளுக்கு கஷ்டம் வந்துவிட்டது” என்பதாக பார்ப்பனர் மகாநாட்டு அக்கிராசனர் கண்ணீர் வடித்திருக்கின்றார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன வென்றால், “அரசியல்” முயற்சியிலும் பிராமணர்களுக்கு அனுகூலமான ராஜியம் ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் அடியோடு கண்டிப்பாய் ஒழித்தாக வேண்டும் என்பதே. ஆதலால் பார்ப்பனக் கொள்கைகள் கொண்ட இந்து அரசாங்கம் என்பவைகளையும் ஒழித்து நடுநிலைமைக் கொள்கைகள். கொண்ட அரசாங்கத்தையே நாம் ஏற்படுத்த முயல வேண்டும். அது எந்த அரசாங்கமானாலும் நமக்குக் கவலையில்லை. ருஷிய அரசாங்கமானாலும் மேள தாளத்தோடு வரவேற்கத் தயாராயிருக்க வேண்டும். அரசாங்கம் என்பது மக்களின் மானத்திற்கும் சமத்துவத்திற்கும் சுவாதீனத்திற்குமே ஒழிய, அரசாங்கத்தினுடையவோ அல்லது ஒரு தனி வகுப்பு நன்மைக்காகவோ அல்ல என்பதை தைரியமாகச் சொல்லுவோம்.
மற்றும் தலைவர், வேத சாஸ்திரக் கொள்கைகளை இந்து அரசர்கள் ஆதரித்ததால் பிராமணீயம் காப்பாற்றப்பட்டு வந்ததாகவும் அப்பேர்ப்பட்ட இந்து அரசர்கள் இந்தியாவில் அடியோடு நசித்துப் போய் விட்டதாகவும், ஆதலால் பிராமணர்கள் மீது தப்பிதமில்லையென்றும் சொல்லி இருக்கின்றார். இவ்வளவு தூரம் வேத சாஸ்திர புராணக் கொள்கைகளை
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஆதரித்து பிராமணர்களை காப்பாற்றி வந்த இந்து அரசாங்கங்கள் அடியோடு ஒழிந்து போனதற்குக் காரணம் என்ன என்று நாம் மகாநாட்டுத் தலைவரைக் கேட்கின்றோம்.
கர்மத்தில் நம்பிக்கை உடையவன் இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால் “மேல் கண்ட இந்து அரசர்கள் வேத சாஸ்திர புராணங்களை ஆதரித்து பிராமணர்களைக் காப்பாற்றியதால் தான் அவர்களும் அவர்களது ராஜ்ஜியமும் அடியோடு நாசமாய்ப் போய்விட்டார்கள்” என்றுதானே சொல்லுவார்கள். இதை மறுப்பதற்கு தலைவருக்கு யோக்கியதை உண்டா என்று கேட்கின்றோம்.
மற்றும் “பிற மதஸ்தர்கள் மதப்பிரசாரத்திற்கு ஏராளமான பணம் செலவழிக்கின்றார்கள்” “நம் மதஸ்தர்கள் தெய்வ ஆராதனம் கூடச் சரி வரச் செய்வதில்லை” என்பதாகச் சொல்லி இருக்கின்றார். எத்தனை கோடி ரூபாய்கள் இந்து மதத்திற்காக இந்துக்கள் என்பவர்களிடமிருந்து செலவாகின்றதென்பது அக்கிராசனருக்குத் தெரியாதா? என்று கேட்கின் றோம். அவர் வாழும் திருவாங்கூர் ராஜியத்தில் திவான் பார்ப்பான் முதல் விபசாரத்திற்கு விதவைப் பார்ப்பனத்திகளைக் கூட்டிவைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கும் பார்ப்பனர் வரை ஏறக்குறைய எல்லாப் பார்ப்பனரும் ராஜாங்கத்தின் பொதுப்பணமான வரிப்பணத்திலிருந்து செலவு செய்யும்
சத்திரச் சாப்பாடு. கோவில் சாப்பாடு ஆகியவைகளை இன்னமும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது அக்கிராசனருக்குத் தெரியாதா? இந்துக்கள் மதப் பிரசாரத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்கின்றார்கள்.
என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா? இதுபோலவே காசியில் நடப்பதும் அக்கிராசனருக்குத் தெரியாதா? மற்றும் தென் இந்தியாவிலுள்ள இந்து கோவில்களுக்கு பூஜை, அபிஷேகம்,
ரிபேர், புதுக்கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம், உற்சவம், யாத்திரை, வேண்டுதல் முதலிய துறைகளில் வருஷம் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு
மேலும் சடங்கு முதலியவைகளுக்கு வருஷம் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமலும் செலவு செய்யப்பட்டு வருவது அக்கிராசனருக்கு உண்மையாகவே தெரியாதா என்று கேட்கின்றோம். மற்றும் சாமியார்கள், சங்கராச்சாரிகள், மடாதிபதிகள், பிராமணர்கள் என்னும் பேரால் தீவட்டிக் கொள்ளைகள் போல, பகற்கொள்ளைகள் போல, வருஷா வருஷம் கோடிக் கணக்கான ரூபாய்கள் கொள்ளை அடிக்கப்படுவது தலைவருக்குச் சத்திய மாகவே தெரியாதா என்று கேட்கின்றோம். எனவே மதப் பிரசாரத்திற்காக இன்னமும் என்ன செய்ய வேண்டும், எவ்வளவு பணம் தொலையவேண்டும் என்று அக்கிராசனர் விரும்புகின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.
தவிர, அக்கிராசனர் முடிவுரையில், தாங்கள் “இந்தியாவுக்கு மாத்திரம் பிராமணனாக இருக்கக் கூடாது, உலகத்திற்கே பிராமணனாக இருக்கத்தக்க
குடி அரசு - 1929 () 66
பிரசாரம் செய்ய வேண்டும்” என்று சொல்லியிருக்கின்றார். இதிலிருந்து பார்ப்பன ஆசைக்கு உள்ள எல்லை எவ்வளவு என்று தெரிகின்றது. ஆனாலும், இந்தியாவைத் தவிர வேறு நாட்டில் மனுதர்ம சாஸ்திரத்தி னுடையவும், பராசரர் ஸ்மிருதியினுடையவும் ராமாயணம், பெரியபுராணம் முதலிய புராணத்தினுடையவும் கொள்கைகள் கொண்ட பார்ப்பனீயம் தலைகாட்ட முடியுமா? அந்தப்படி தலைகாட்டிவிட்டு, பார்ப்பனர்கள் வாழ முடியுமா? என்று கேட்கின்றோம். நமது வேத சாஸ்திர புராணத்தில் ஆயிரத்திலொரு பங்கு கொடுமையும் அயோக்கியத்தனமுமில்லாத நாடுகளான துருக்கி, ஆப்கானிஸ்தானம், ரஷியா முதலிய நாட்டுப் பார்ப்பனர்கள் படுகின்ற பாட்டுக்கு இந்தியப் பார்ப்பனர்கள் கதி அங்கு என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்தால் விளங்காமல் போகாது.
நிற்க, அந்த மகாநாட்டின் தீர்மானங்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை கூறுவோம். அதாவது அங்கு பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருந்தாலும், வேத சாஸ்திரம் உணராதவர்கள் மதத்தில் பிரவேசிக்கக் கூடாது என்றும் மதசம்மந்தமான விஷயங்களில் சர்க்கார் தலையிடக் கூடாது என்றும், சீர்திருத்தங்கள் சட்டத்தின் மூலம் செய்யக் கூடாது என்றும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கூடாது என்றும் மற்றும் இது போன்று செய்யப்பட்ட தீர்மானங்களே முக்கியமானவையாகும். எனவே இவற்றை சற்று கவனிப்போம்.
வேத சாஸ்திரம் (பிராமணர்களைத் தவிர) நாம் படிக்கக் கூடாது என்கின்ற நிபந்தனை இருப்பதால் மக்களும் “மதத்தைப் பற்றியோ, மதத்தி னால் உள்ள கஷ்டத்தைப் பற்றியோ அதில் உள்ள கொடுமைகள், அயோக்கியத்தனங்கள் ஆகியவைகளைப் பற்றியோ பேசக் கூடாது” என்பதும் “சர்க்காரும் அவைகளில் தலையிட்டு ஒன்றும் செய்யக் கூடாது” என்பதுமே மேல்கண்ட தீர்மானத்தின் கருத்தாகும். அப்படியானால் (நமக்கு! மக்களுக்கு வேறு என்னதான் “கதிமோக்ஷம்” இருக்கிறது என்று கேட்கின்றோம்.
உதாரணமாக திரு. நாயக்கர், சடங்கைப் பற்றியும், உற்சவங்களைப்
பற்றியும், பார்ப்பான் மேல் ஜாதி மற்றவர்கள் சூத்திரன், பார்ப்பனரின் தாசி மகன் என்கின்ற சாஸ்திரங்களைப் பற்றியும், சாமிக்குப் பெண்களைப் பொட்டுக் கட்டி விடுவதைப் பற்றியும், சிறு பெண்களைக் கல்யாணம் செய்வதைப் பற்றியும், பெண்களை அடிமைப்படுத்துவதைப் பற்றியும் மக்களுக்கு எடுத்துச் சொல்வது “வேதசாஸ்திரங்கள் தெரியாதவன் அதில் பிரவேசித்த குற்றமாவதால் அவனைத் தண்டிக்க வேண்டியது சர்க்கார் கடமை” என்றும் (இக்கருத்து வரவேற்பு அக்கிராசனர் உபன்யாசத்தில் இருக்
கிறது) திரு. முத்துலக்ஷிமி அம்மாள் மசோதாவையும் திரு. சாரதா மசோதா வையும் சட்டசபையில் எடுத்துச் சொல்லி சட்டம் செய்ய கெஞ்சினால் அது
“சர்க்கார் மதத்தில் பிரவேசித்த குற்றம்” என்றும் ஆகின்றது.”
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எனவே, இந்த நிலையில் நாம் பார்ப்பனரல்லாத மக்களை குறிப்பாக, “இந்து மதத்தையும்” அதன் “உள் சமயங்களையும்” ஆதரிக்கவே கங்கணம்
கட்டிக் கொண்டிருக்கும் “தேசீய வீரர்களையும் “சமயக் காப்பாளர்களையும்” ஒன்று கேட்கின்றோம்.
அதாவது, ஓ அய்யன்மீர்! நீங்கள் இந்து மதத்திற்கு ஆதாரம் என்பதான வேத சாஸ்திர புராணங்களை சுருதி ஸ்மிருதிகளை! ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? முதலாவது உங்களுக்கு அவைகளில் என்ன இருக்கிறது என்பது தெரியுமா? ஒப்புக் கொள்வதனால் அவற்றில் கண்டபடி நடக்கத் தயாராயிருக்கின்றீர்களா? தயாராயிருப்பதானால் அதன் கருத்துப்படி
நீங்கள் யார்? “இந்து” மதத்தில் உங்கள் நிலை என்ன? ஒப்புக் கொள்ள வில்லையானால் இந்து மதத்தையும் உள் சமயத்தையும் காப்பாற்ற வேண்டும். என்பதின் கருத்து என்ன? யாரிடம் கூலி வாங்க இந்த வேஷம்? என்பதுதான்.
மற்றபடி, “திரு. நாயக்கர் பார்ப்பனர்களைத் திட்டுவதில் நமக்கு ஆக்ஷேபணை இல்லை, மதத்தில் கை வைப்பது தான் நமக்கு அதிக
வருத்தமாயிருக்கின்றது. திரு. நாயக்கரால் ஜஸ்டிஸ் ககஷிக்கே ஆபத்து வந்து விடும் போலிருக்கின்றது. நாயக்கர் போகின்ற போக்கைப் பார்த்தால் நானே ஜஸ்டிஸ் கக்ஷியில் இருக்க முடியாது போல் இருக்கின்றது” என்று சொல்லிக் கொண்டு பிரசவ வேதனைப் படுகின்றவர்களையும் ஒன்று கேட்கின்றோம். அதாவது, இந்தக் கேள்வி பாமர மக்களில் இப்படிக் கேட்பவர்களை அல்ல. சட்டசபை மெம்பர்களையும் மந்திரிகளையும் ஜஸ்டிஸ் ககஷி மூலம் பெரிய மனிதர்களான தலைவர்கள், ஜட்ஜிகள், ஜில்லா, தாலூகா போர்ட் முனிசிபா லிட்டி தலைவர்கள், மெம்பர்கள், சைமன் கமிட்டி அங்கத்தினர்கள், இயக்கத் தலைவர்கள் முதலிய பிரமுகர்களையே கேட்கின்றோம்.
அதாவது, நீங்கள் எந்த அளவில் இந்துக்கள்? உங்களுக்குத் தர்மம் என்ன? சமயம் என்ன? இவற்றிற்கு ஆதாரம் என்ன? அவைகளின்படி உங்களால் நடக்க முடியாவிட்டாலும், நீங்கள் அவைகளை ஒப்புக்கொள்ளு கின்றீர்களா? அப்படியானால் உங்களால் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு மானமோ, சமத்துவமோ, உண்டாக முடியுமா? உங்களைத் தலைவர்களாகவும் அங்கத்தினர்களாகவும் ஆதரவுக்காரர்களாகவும் கொண்ட ககஷி உயிருடன் இருக்க வேண்டுமா? என்பவைகளே யாகும்.
எனவே, நாம் மதத்தைப் பற்றியோ, வேதத்தைப் பற்றியோ, புராணங் களைப் பற்றியோ, அப்புராணங்களில் காணும் கடவுள்களைப் பற்றியோ வேண்டுமென்றே குற்றம் சொல்லுகின்றோமா, அல்லது அவற்றால் நாம் என்றென்றைக்கும் தலையெடுக்க முடியாத படிக்கு அழுத்தி வைத்திருப் பதால் குற்றம் சொல்லுகின்றோமா என்பதை உணர்ந்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 03.02.1929.
குடி அரசு - 1929 () 68
குது ஒரு அதிசயமா?
பகத்தறிஷம் அதன் விரோதிகளும்
- சித்திரபுத்திரன்
மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிர்மா, சில்லரைத் தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள். பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.
உதாரணமாக, மேல் நாட்டில் ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (ிஷப்) பேசும் போது, “ஒவ்வொருவனும் தன் தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக்கூடாது” என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து “இந்த பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர்: பெரிய பாதிரியார் வேலைக்கே லாயக்கில்லை” என்று சொன்னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் “ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்?” என்று கேட்டதற்கு, “குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிஸ்துவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோ
கித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்க வேண்டுமானால் நம்பிக்கை இருக்க வேண்டும். பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு விட்டு பகுத்தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாஸ்திகத்தை உபதேசிப்ப தேயாகும்” என்று சொன்ணாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு “பிஷப் சொன்னதை
பின் வாங்கிக் கொள்வதுடன், மன்னிப்பும் கேட்டுக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார்களாம். பிஷப்பும், தான் சொன்ன “அக்கிரமமான' வாக்கி யங்களைப் பின் வாங்கிக் கொண்டு தான் சொன்ன “மகாபாதகமான” வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.”
எனவே 100-க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல்
நாட்டுக் கடவுள்களும், மதமும், வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மேல் நிற்கும்போது 100-க்கு 7ஆண்களும் 1000-க்கு 15 பெண்களும்
படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங்களுக்கும் வேதங் களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்கும் என்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் *நாஸ்திகன்” என்று எழுதி வைத்திருப்பதையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாஸ்திகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?
குடி அரசு - கட்டுரை - 03.02.1929
குடி அரசு - 1929 () 70
திரு. சாமி வைனியாக்கப்பட்டார்
சென்னைக் காங்கிரஸ் கட்சிக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் சட்டசபைத் தலைவராக திரு.சாமி வெங்கடாசலம் செட்டியாரை வைத்திருந்தார்கள். ஆனால், திரு.செட்டியார் பார்ப்பனரின் கைக்களிமண் உருண்டையா யிருந்தவரையில் தங்களுக்கு வேண்டிய மாதிரி எந்தவித பொம்மை வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் அவரைத் *தலைவர்!', “தலைவர்!” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திருவாளர் செட்டியார், முத்துரங்கம், குழந்தை, அமீத்கான் கம்பெனி யார்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் தமது சுயபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள். இது வெகுநாளாகவே
நாம் எதிர்பார்த்ததுதான். திரு சாமியும் தயாராகவே இருந்ததாகத்தான் தெரிகின்றது. கடைசியாக திரு. சாமியைத் தள்ளியதற்குக் காரணம், திரு.சாமி, திரு. பனகால் ராஜாவிடம் அடிக்கடி பேசியதுதானாம்.
பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரச மரத்தையும் பிடித்தது என்பது போல் திரு. சத்தியமூர்த்தியின் உதவித் தலைவர் பதவியும் பிடுங்கப்பட்டி ருக்கிறது. ஆனால், இதற்கு ஏதாவது உள்இரகசியம் இருக்கலாம். அதாவது, திரு.ஸ்ரீனிவாசய்யங்கார், திரு.மூர்த்திக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கூட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பொறுத்திருக்கும் படி கேட்டுக்கொண்டிருக்கலாம். எப்படி ஆனாலும் திரு. சாமி வெளியாக் கப்பட்டுவிட்டார்.
திரு. வரதராஜுலுவும் காங்கிரஸ் கமிட்டியில் ராஜினாமா கொடுத்து விட்டு இந்த 2, 3 நாளாக பார்ப்பனர்களைத் திட்டுவது போல் வேஷம் போடுகின்றார். இதன் இரகசியம் இன்னது என்பதும் தெரியவில்லை. ஒரு சமயம் ராஜினாமா அனாமத்தில் வைக்கப்பட்டு சைமன் கமிஷன் சென்னை யைவிட்டுப்போன பிறகு திருப்பி வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டு, வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வழக்கம் போல் மறுபடியும் திருவாளர் நாயுடு
மெம்பரானாலும் ஆகலாம்.
சென்ற ஆண்டிற்கு முன்னைய ஆண்டில் காங்கிரசை குறைக் கூறிவிட்டுக் காங்கிரசை விட்டு ஓடிய திரு. கல்யாணசுந்தர முதலியாரும்.
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
காங்கிரசை ஆதரிப்பதுடன், செத்துப்போன ஜில்லா தாலூகா காங்கிரஸ் கமிட்டிகளை உயிர்ப்பித்து கிராமப் பிரசாரம் செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கின்றார். இதன் இரகசியம் விளங்கவில்லை. ஒரு சமயம், அய்யங்காரிடம் வியாபாரம் பேசவோ என்பதும் புலப்படவில்லை. நம்மு. டைய பார்ப்பனர்களுடைய வாழ்க்கைக்குத் தக்கபடி அவர்களை விட்டு ஒருவர் போனால் மற்றொருவர் வந்து வலிய விண்ணப்பம் போட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 10.02.1929
குடி அரசு - 1929 () 72
“சுதேசமித்திரணின்” யோக்கிரித்தனம்
திரு.முத்துலட்சுமி அம்மையாரின் தேவதாசி மசோதாவைப் பற்றி சென்னை சட்ட சபையில் விவாதம் நடக்கும் போது, திரு.சத்தியமூர்த்தி அய்யர் பேசிய பேச்சுக்களை “திராவிடனி"ல் பார்த்திருக்கலாம்.
பிறகு அந்த மசோதாவிற்குப் பலமான ஆதரவுகள் இருப்பதைப் பார்த்து திரு.மூர்த்தியும் அவரது சகாக்களும் வாலை அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்கள்.
அம்மசோதாவும் எதிர்ப்பில்லாமல் நிறைவேறிவிட்டது. இதை ஒழிக்கவோ, இதற்கு பதில் சொல்லவோ வேறு மார்க்கம் இல்லாததால்
சுதேசமித்திரன், தனது ஆத்திரத்தைக் காட்டிக் கொள்வதற்கு அந்த அம்மை யாரைக் கேவலப்படுத்தக் கருதி, தனது அயோக்கியத்தனத்தைக் காட்டி
யிருக்கிறது. அதாவது, 2-2-29 தேதி “மித்திரன்” தலையங்கத்தில் *தேவதூசிச் சட்டம்” என்று பெயர் கொடுத்து மனதில் கேலியாக நினைத்துக் கொண்டு எழுதுவதாவது:-
“டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் தாம் பிறந்த குலத்திற்குப் பெரிய உபகாரத்தை செய்துவிட்டார் என்றும், அது என்ன குலம் என்று தெரிவதற் காக அடுத்த வார்த்தையாகவே “தேவதாசி என்று சொல்லப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மசோதா நிறைவேற்றப்பட்டதற்குச் சாதகமோ பாதகமோ சொல்ல வேண்டியிருந்தால் திரு. முத்துலட்சுமி அம்மாள்
தேவதாசிக் குலமென்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. இது, வேண்டுமென்றே அந்த அம்மையாரைப் பொது ஜனங்கள் முன்னால் தப்பாய்க் காட்ட வேண்டுமென்பதைத் தவிர வேறு என்ன எண்ணத்தோடு இருக்க முடியும்? தேவதாசிகள் என்று ஒரு கூட்டம் பெண்கள் இருக்கின்றார்களே ஒழிய தேவதாசிக்குலம் என்று ஒரு குலம் இருக்கின்றதா என்று கேட்கின்றோம். ஒரு வீட்டில் பிறந்த சகோதரிகள். இருவரில் ஒருவர் கோவிலுக்கு விடப்பட்டு, மற்றவர் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டவர் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவராவாரா? அதுபோலவே ஒரு தேவதாசி தன்மகளைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தாலும் அந்த மகள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களாவார்களா? இந்த வித்தியாசம் மித்திரனுக்குத் தெரியாம
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
லிருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
தவிர, அதே வியாசத்தில் “இனிமேல் தேவதாசித் தொழிலில் தம் மக்களைப் புகுத்துவதும், புகுத்தாதிருப்பதும், இப்பொழுது தேவதாசிகளாக இருப்பவர்களின் இஷ்டத்தைப் பொருத்தது” என்று எழுதியிருக்கின்றது. இதன் கருத்து என்ன? இந்த மசோதா காரணமாக சுவாமி பேரால் செய்த விபசாரத் தொழிலுக்கு ஒன்றும் ஆபத்து வந்து விடவில்லை. இஷ்ட மிருக்கிறவர்கள் தாராளமாய்ச் செய்யலாம் என்று *தர்மோபதேசம்” செய் கின்றது. பார்ப்பன மித்திரனுக்கு இவ்வளவு கவலையும் பிரசாரமும் எதற்கு என்று கேட்கின்றோம். யார் யாருக்கு விபசாரத்தனம் செய்யப் பாத்தியம்
, சட்டம் உண்டு என்பதை எடுத்துக் காட்டுவதுதான் “தேசீய பத்திரிகை
கள், கடமை போலும்.
திரு.சத்தியமூர்த்தி, அவர்கள் விவசார மசோதாவைப் பற்றி பேசுகையில், “பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும் அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விவசார ஸ்திரிகளும் நம்மவர்களேயானதால் அவர்கள் விஷயத்தில் அனுகூலமாயிருக்க வேண்டு”மென்று சிபார்சு பேசினதும் “தேவதாசித் தொழில் போய்விட்டால், மதம் போய் விடும்” என்றதும் இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால் திரு.ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்தச் சட்டம் செய்ய வந்து விடுவாரே என்று ஆத்திரப்பட்டதும், “மித்திரன்” தேவதாசி மசோதா வால் தேவதாசித் தொழிலுக்கு ஒன்றும் குந்தகம் ஏற்பட்டு விடவில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கியானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும் தைரியத்தையும் ஆசையையும் ஊட்டுவதையும் பார்த்தவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத்திற்கோ சுயமரியாதைக்கோ, விடுத லைக்கோ இத் “தேசீயப் பத்திரிகைகளும், “தேசீயவீரர்” களும் அனுகூலமாக இருப்பார்களா என்பதும் இவர்களுடன் யோக்கியர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என்பதும் தானாகவே விளங்கும்.
குடி அரசு - கட்டுரை - 10.02.1929
குடி அரசு - 1929 () 74
யாரதிப் பாடல் புரட்டு
யார்ப்பணர்களிண்யோக்கியத் தணத்திற்க ஒரு உதாரணம்
பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு. சுப்ர மணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரஸ் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புஸ்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்.
கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்க படியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அது தன் ஜாதிப் புத்தியை காட்டியேவிட்டது.
எப்படியென்றால்: சாதாரணமாக அப்புத்தகத்தின் பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்கு காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக.
சில இடத்தில் சொல்லியிருந்தாலும் சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும்.
ஆனால் இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்துவிட்டார்கள் எனத் தெரிய வருகின்றது. அதாவது பாரதிபாடல்
முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான “மன்னும் இமயமலை எங்கள். மலையே” என்னும் பாட்டின் அடிகளில் “ உன்னத பாரத நாடெங்கள் நாடே”
என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்த தேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே” என்று திருத்தி பதிக்கப்பட்டிருக்கின் றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வேண்டியதாகவே இருக்கின்றன.
இரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாவதுமன்றி அது நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகிக்கப்படுகின்றது. நிற்க,
இந்த புஸ்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட “யோக்கியர்”களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத் தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும் நாட்டின் “தேச பக்தர்கள்” யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த
மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் முழு மூடர்களுக்கும் கூட உதாரணம் வேண்டுமானால் இந்த “பாரதிப் பாடல் புரட்டே” போதுமென்று நினைக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 10.02.1929
குடி அரசு - 1929 () 76
P o ம் சர்க் o
யான்காணிகளே யாவணார்கன்
டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த “சாரதா பில்” என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்கு சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும். சீர்திருத்த சம்மந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்படவேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றப்படத் தக்க உறுதியான நிலையில் இருக்கும்போது அதை பழைய குப்பையில் போடுவதற்கு சர்க்கார் உடைந்தையாய் இருந்தார்களானால், சர்க்காரின் நாணயத்தையோ யோக்கியப் பொறுப்பையோ நாம் எப்படிமதிக்க முடியும்? இந்த சர்க்கார் இந்த நாட்டில் அரை வினாடியாவது இருக்க வேண்டுமென்று நாம் நினைத்திருந்தால் அது இந்த நாட்டில் உள்ள பார்ப்பனீயக் கொடு மையை அடியோடு ஒழிப்பதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்போமேயொழிய மற்றபடி சர்க்காரில் நடுநிலைமை தவறாத நீதியையோ அல்லது அவர் களுடைய பொதுநல உணர்ச்சியையோ மதித்தல்லவென்று திடமாய்ச் சொல்லுவோம்.
எனவே இந்த யோக்கியதையுள்ள அரசாங்கம் பார்ப்பனீயக் கொடு மைக்கு உதவி புரிவதாயிருந்தால் அதனிடத்தில் எப்படித்தான் மக்களுக்கு நல்லெண்ணம் இருக்க முடியும்? தவிர சட்டசபையில் “கல்யாண மசோதா” விஷயத்தில் சர்க்கார் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டதற்கு காரணம்
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சம்மத வயதுக் கமிட்டி அறிக்கை வந்த பிறகு யோசிக்கலாம் என்று கருதியதுதானாம்.
இது யோக்கியமான சமாதானமல்ல வென்றே சொல்லுவோம். கல்யாண வயது நிர்ணயத்திற்கும் சம்மத வயது நிர்ணயத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. சம்மத வயது நிர்ணயம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கலவி செய்து கொள்ளலாம் என்பது; கல்யாண வயது என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது. கலவி என்பது ஒரு உணர்ச்சி, கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். பார்ப்பனர்கள் சொல்லுவது போல் கலவி உணர்ச்சி பெண்களுக்கு 12-வயதிலும் ஆண்களுக்கு 14-வயதிலும் உண்டாகலாம்.அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளை தனித் தனியாகவே கூட தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே அதைத் தடுக்க சட்டம் செய்வது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. எனவே அதோடு கூட கல்யாண வயது நிர்ணயச் சட்டத்தை யோசிக்கலாமென்று சொல்லுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?
கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதுவும் தற்கால நிலையில், கல்யாணம் என்பது ஏற்பட்ட நாள் முதல் அவரவர்கள் சாகும்வரை கொண்டு செலுத்தித் தீர வேண்டியதான ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்த காரியத்தைச் செய்து கொள்ள மக்களுக்கு எந்த வயதில் உரிமை உண்டு என்பதை யோசிப்பதற்கு ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்? ஒரு மனிதன் தன் சொத்தை அடையவும், ஒரு வோட்டு கொடுக்கவும்,ஒரு பதவியை ஏற்கவும் மற்றும் பல சாதாரண காரியங்களுக்கெல்லாம் வயது நிர்ணயமிருக்கும்போது ஆயுள் வரைகட்டுப்பட வேண்டிய நிபந்தனை கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வயது நிர்ணயம் இதுவரை செய்யாதிருந்ததே மனித வர்க்கத்தின் முட்டாள் தனத்தை அல்லது அயோக்கியதனத்தை காட்டுகின்றது என்று தான் சொல்லவேண்டும். இவ்விஷயங்களில் பார்ப்பனர்கள் என்றைக்குமே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. அதே காரியத்திற்கு அரசாங்கத்தார் துணை இருப்பது என்பது பார்ப்பனர்களுக்கு இவர்கள். பங்காளிகள் என்பதையே காட்டுகின்றது. எப்படியெனில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தார் அரசாக்ஷியின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்களைச் செய்கின்றார்கள் என்பதுதான்.
குடி அரசு - கட்டுரை - 10.02.1929
குடி அரசு - 1929 () 78
நாம் வாறுப்பாணியல்ை
கதர் இயக்கம் நாட்டின் பொருளாதார நிலைமைக்கு போதியதாகாது என்பதோடு அது வெற்றி பெறுவதும் மிகக் கஷ்டமானது என்கிற அபிப்பிராயம் கொண்டிருந்தாலும், கதர் கட்டக்கூடாது என்பதோ கதரைக் கொளுத்த வேண்டும் என்பதோ சுயமரியாதை இயக்கக் கொள்கையில் பட்டதல்ல என்பதையும், திருச்சியில் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் யாரோ கதரைக் கொளுத்தினதாகச் சொல்லப்படும் சங்கதி உண்மை யாயிருந்தால் நாம் அதற்குப் பொறுப்பாளியல்ல வென்றும் அச்செய்கையை வெறுக்கின்றோம் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
(பர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 10.02.1929
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
செண்ணைக் கார்ப்பறரோஷணில்:
சண்மூத்தனமும் காலித்தனமும்
நமது நாட்டில் பார்ப்பனர்கள் சம்மந்தப்பட்ட எந்த ஸ்தாபனமானா
லும் அதில் அவர்களிஷ்டப்படி ஏதாவதொரு காரியம் நடைபெற முடியாது என்பதாக அவர்களுக்குப் பட்டால் உடனே சண்டித்தனமும் காலித்தனமும் செய்வதன் மூலமாகவும் செய்விப்பதன் மூலமாகவும் வெற்றி பெற முயற்சிப்பது சரித்திரக்காலம் தொட்டு அவர்களது பரம்பரை வழக்கம் என்பது உலகானுபவமுள்ள யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். அதே காரியத்தை சைமன் கமீஷன் பஹிஷ்கார விஷயமாய் சமீபத்தில் நடந்த சென்னை கார்ப்பரேஷன் கூட்டத்திலும் காட்டி தங்கள் கையாலானவரை:
முயற்சித்துப் பார்த்தும் முடிவில் வெற்றியில்லாமல் அவமானமடைந்து வெளியேறினது பத்திரிகைகளில் இருக்கின்றது.
சில சமயங்களில் சிறு பிள்ளைகள் எங்காவது சிக்கிக் கொண்டு அடிபட நேர்ந்தால் நன்றாய் அடிபட்டுவிட்டு அழுதுகொண்டு வீட்டுக்குப் போகும்போது, தங்களுடைய போலி மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி தூரத்தில் போய் நின்று கொண்டு உதைத்தவர்களைப் பார்த்து “எங்கள் வீதிக்கு வந்துபார்! உன்னை அங்கு பேசிக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடுவதுண்டு. அது போலவே சென்னைப் பார்ப்பனர்களது சண்டித்தனமும் காலித்தனமும் தோல்வி அடைந்த பிறகு வேறு வழியில்லாமல் தங்கள் வீதி என்று நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதான அடுத்த முனிசிபல் தேர்தலுக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் வரும்போது பேசிக் கொள்ளுகின்றதாக வாய்வலிக்கக் கத்துகிறார்கள்: கை வலிக்க எழுதுகின்றார்கள் . சில பார்ப்பனக் கூலிகளும். இவர்களோடு கூடவே கோவிந்தா போடுகின்றனர். இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் தேர்தல்களில் இனி தங்கள் ஜம்பம் சிறிதும் நடவாது என்பதை நன்றாய் அறிந்து கொண்டே தற்கால சாந்திக்காக இவ்வித கூச்சல் போடுகின்றார்களே ஒழிய உள்ளுக்குள் ஒன்றும் இல்லை என்பதை நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
6-2-29-தேதி சென்னை கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திருவாளர்களான சைமன் கோஷ்டியாருக்கு கார்ப்பரேஷனிலிருந்து ஒரு உபசாரப்பத்திரம் படித்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற தீர்மானம் யோசனைக்கு வந்தது.
குடி அரசு - 1929 () 80
அத்தீர்மானத்தை கார்ப்பரேஷன் மீட்டிங்கில் யோசனைக்கு கொண்டு வரும்படியாக 26 அங்கத்தினர்கள் தங்கள் சம்மதத்தைக் காட்டி கையெழுத்
திட்டு கார்ப்பரேஷனுக்கு விண்ணப்பம் அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அதற்கு விரோதமாக 11 பேர்களே தான் இருந்திருக்கின்றார்கள். ஆகவே பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் எவ்வளவோ விஷமப் பிரசாரம் செய்தும் 11 பேர்களே கமீஷனுக்கு வரவேற்பு கூடாது என்கின்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பெரும் பகுதியார் வரவேற்க ஆசையுள் எவர்களாயிருக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து விளங்கும்.
அன்றியும் வரவேற்புக் கூடாது என்கின்ற 11 கனவான்களின் யோக்கி யதை என்ன என்பதை பொது ஜனங்கள் அறிய அவசியம் ஆவலுள்ளவர் களாயிருப்பார்கள் என்றே எண்ணுகின்றோம்.
அப்பதினொருவர்கள் யாரென்றால் திருவாளர்கள் எஸ்.சத்திய
மூர்த்தி சாஸ்திரி, ஜி.ஏ.நடேசய்யர், புர்ரா சத்திய நாராயணா, டாக்டர் மல்லய்
யர், பஷிர்அகமது சாயபு, ஷாபி மகமது சாயபு, டி.வி. மீனாட்சிசுந்தரம், ஸ்ரீராமுலு நாயுடுகாரு, சாமி வெங்கடாசலம், கெத்தா ரெங்கய்ய நாயுடுகாரு, செல்வபதி செட்டியார் ஆகியவர்களே ஆவார்கள். எனவே முதல் நால்வரும் பார்ப்பனர்கள். அவர்களின் யோக்கிய தையை அதிகம் எழுத வேண்டியதில்லை. அடுத்த இருவர்களும் மகமதிய கனவான்களானாலும் அவர்கள் திரு. சீனிவாசய்யங்கார் பிரதிநிதியாக திரு. சீனிவாசய்யங்கார் பணச்செலவில் கார்ப்பரேஷனுக்கு சீனிவாசய்யங்காரால் கலகம் செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்டவர்கள் ஆவார்கள் என்று சென்னை மகமதிய பத்திரிகைகளே பலதடவை எடுத்துக்காட்டி இருக் கின்றன. ஆதலால் நமது அபிப்பிராயம் தேவையில்லை. அடுத்த இருவ
ரும் அய்யங்கார் பணத்தில் அய்யங்கார் முயற்சியில் அய்யங்கார் பிரதிநிதிய
ஈக அய்யங்காராலேயே கொண்டு வரப்பட்டவர்கள்.
திரு.சாமி வெங்கிடாசலம் செட்டியார், கமிஷனை வரவேற்கின்றவரே கார்ப்பரேஷன் தலைவராக இருக்கவேண்டுமென்று கோரி தலைவர் தேர்தலில் ஓட்டுச் செய்தவர். எனவே அவருடைய அபிப்பிராயத்தில் உள்ளுக்குள் இரகசியமாய் இருக்கும் அபிப்பிராயத்தை மதிப்பதா அல்லது வெளியில் காட்டிக் கொள்ளுமா என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ள விட்டுவிடுகின்றோம். பின்னைய இருவர்களிடம் கமிஷனை வரவேற்கலாம் என்பதற்கு வேண்டுமானாலும் ஓட்டு வாங்கி விடலாம். ஏனெனில் அவர்கள் அவ்வளவு தாக்ஷண்யக்காரர்கள்.
எனவே இந்த பதிணொருவரின் அபிப்பிராயம் சென்னை பொது ஜன அபிப்பிராயமா அல்லது மற்றபடி வரவேற்க வேண்டுமென்று அபிப்பிராயம். கொண்டு கையெழுத்துப் போட்ட 26 பேரினுடையவும் மற்றும் கமிஷனை வரவேற்பதால் தங்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை யென்று கருதி
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அதைப்பற்றிய கவலையே எடுத்துக் கொள்ளாத மீதியுள்ள சுமார் 15 கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுடைவும் அபிப்பிராயங்கள் பொது ஜன அபிப்பிராயமா என்பதை வாசகர்களையே கவனிக்க விரும்புகின்றோம்.
தவிர, உலகமே முழுகிப் போய்விட்டதாக கூச்சல் போட்ட திரு. சத்திய மூர்த்திக்கோ அவரது கூட்டத்தாருக்கோ நமது நாட்டு க்ஷமத்தில் கவலை இருக்க வேண்டிய அவசியம் ஏதாவது இருக்க முடியுமா? என்பதையும், யோக்கியமாய் கோவிலுக்கு தாசிகள் இருக்கும் வரையும், சென்னையில் தாராளமாய் விவசாரிகள் இருக்கும் வரையும், சத்திரங்களில் இலவசமாய் சாப்பாடுகள் போடப்படும் வரையும், பார்ப்பனர்களுக்கு சமாராதனை செய்வதும் அவர்களுக்கு த௲௲ணை கொடுப்பதும் பார்ப்பனரல்லாதாருக்கு மோட்சத்திற்கு மார்க்கம் என்று நினைத்து கொண்டிருக்கும் முட்டாள்கள் நம்மில் இருக்கும் வரையும் நமது சாஸ்திரிக்கும் அய்யருக்கும் வேறு என்ன கவலை இருக்க முடியும் என்பதையும் நமது நாடு எக்கேடு கெட்டால்தான் அவருக்கு என்ன கவலை என்பதையும் யோசிக்க வேண்டுகின்றோம். நிற்க இக்கூட்டத்தார் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் நடந்து கொண்ட யோக்கியதைப்
பற்றி சற்று கவனிப்போம். மீட்டிங் கூடியதும் போலீசார் வெளியே இருந்த தைப் பற்றி ஆட்சேபித்தார்களாம்.
சாதாரணமாக பொதுக் கூட்டங்கள் கூடுகிற இடத்தில் போலீசார் தங்களுக்கு அவசியம் என்று தோன்றினால் வந்து நிற்பது வழக்கம். அது மாத்திரமல்ல, கூடுமானால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர்கள் போக வேண்டியது அவர்களது கடமையாகும். இந்த விஷயம் கூட அறிய முடியாத வர்கள் கார்ப்பரேஷன் கவுன்சிலராயிருப்பதானால் அது அய்யங்கார்.
பணத்தின் பெருமையே ஒழிய ஓட்டர்களின் அறிவீனம் என்று சொல்லிவிட
முடியாது.
தவிர மீட்டிங்கில் கூட்டத்தில் போலீசார் இருக்கக் கூடாது என்றும் இருந்தால் வெளியில் போகவேண்டும் என்றும் திரு சத்தியமூர்த்தி தலைவரைப் பார்த்து சொன்னாராம். பூரண சுயேச்சை விரும்பும் திரு. சத்தியமூர்த்தியின் தைரியத்திற்கு இந்த விஷயமே போதுமான சாக்ஷி யன்றோ? போலீசாருக்கு இவர்கள் ஏன் அவ்வளவு பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை. போலீசார் எதிரில் பேசுவதற்கே பயந்த இந்த “வீரர்கள்” நமக்கு பூரண சுயேச்சை வாங்கித் தரக்கூடியவர்களா என்பதை
நாம் சொல்ல வேண்டியதில்லை...
திரு.மூர்த்தியின் பயத்தை நீக்க அந்தக் கூட்டத்தில் போலீசார் யாராவது இருக்கின்றார்களா? என்று தலைவர் தேடியதில் அய்யரின் “யோகம்” போலீசார் ஒருவரும் காணப்படவில்லையாம். இந்த விஷயம் நன்றாய்த் தெரிந்து கொண்ட பிறகு சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்ட தாம்.ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் தலைவர் திரு.ஏ.ராமசாமி முதலியார். அவர்கள் கேள்வி கேட்டவர்கள் வெட்கித் தலைகுனியும் படியும் மேற்
குடி அரசு - 1929 () 82
கொண்டு மூச்சு விடுவதற்கு வழியில்லாமலும், சாந்தமாகவும் அலட்சிய மாகவும் பதில் சொல்லி வாயடக்கிக் கொண்டே வந்திருக்கிறார். இந்த உண்மை பார்ப்பனப் பத்திரிகையாகிய “இந்து”, *மித்திரன்” முதலியவை களிலேயே காணக்கிடக்கின்றது.
இதுமாத்திரமல்லாமல், கேள்வி கேட்கும் முறையையே திரு.சத்திய மூர்த்தி முதலியவர்களுக்குத் தலைவர் கற்பித்துக் கொடுத்துக் கொண்டே வந்திருப்பதும், மெம்பர்களுடைய அதிகாரத்தையும் ஒழுங்கையும் பற்றி அவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டு வந்திருப்பதும் அந்த இடத்தில் தலைவரின் சாமார்த்தியத்தை நன்றாய் விளக்கி இருக்கின்ற தென்றே சொல்ல வேண்டும். கடைசியாக சட்டத்தின் மூலம் தங்கள் ஜபம் பலிக்கவில்லையென்று தெரிந்தவுடன் காலித்தனம் செய்ய சிலர் ஆரம்பித்
திருப்பதாகவும் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகின்றது. அதாவது, ஒரு அங்கத்தினர் எழுந்து வெளியேபோகும்போது அய்யங்கார் கூட்டத்தைச்
சேர்ந்த ஒரு அங்கத்தினர் தடுத்து மிரட்டியதாகவும் அதற்கு அந்த தடுக்கப் பட்ட அங்கத்தினர் அய்யங்கார் கூட்டத்தைப் பார்த்து, “பெருந் தன்மை யோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அதட்டிச் சொன்னதாகவும் பிறகு அவர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டதாகவும் இன்னும் இதுபோல் பல காலித்தனம் என்று சொல்லப்படக் கூடிய சங்கதிகள் நடந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
நிற்க, கமீஷனுக்கு வரவேற்பு கூடாது என்று சொல்லவந்த கவுன்சிலர். கள் அங்கு சொன்ன சமாதானம் என்ன என்பதையும் கவனிப்போம்.
முதலாவதாக ஆட்சேபித்த கவுன்சிலர், திரு. ஜி.ஏ.நடேசய்யர் “சைமன் கமிஷனர்கள் பெரிய மனிதர்கள், கண்ணியமுள்ளவர்கள் என்ப தையும் அவர்களை சமூக விஷயங்களில் விலக்குவது கூடாது என்பதையும் அவர்கள் வரும்போது வேலை நிறுத்தம், கடையடைப்பு முதலியவைகள் செய்வதும் கூடாது என்பதையும் தாம் ஒப்புக் கொள்வதாகவும் முதலில் சொல்லிவிட்டு, பின்னர், ஆனால் இந்தியாவில் உள்ள பெரிய மனிதர்களும், பெரிய கட்சிகளும் பகிஷ்கரிப்பதால் நானும் பகிஷ்கரிக்க வேண்டியிருக் கிறது” என்று சொல்லியிருக்கின்றார். இதைக் கவனிக்கும்போது சில பள்ளிக் கூடத்துச் சிறுபிள்ளைகள் விஷயம் ஞாபகத்திற்கு வருகின்றது.
அதாவது, சில சமயங்களில், சிறுபிள்ளைகள் விளையாட்டுத்தனமாய் பள்ளிக்கு வராமல் இருந்துவிட்டால், உபாத்தியாயர் “ஏன் வரவில்லை” என்று பையனைக் கேட்டும்போது பிள்ளை, “எனக்கு நேற்று வயிற்றுவலியாய் இருந்தது அதனால் வரவில்லை!” என்று சொல்லுவதும், உபாத்தியாயர், “உனக்கு வயிற்றுவலி என்று எப்படித் தெரிந்தது” என்று கேட்டால், “எங்க அம்மா சொன்னாங்கோ,” என்று சொல்லுவதும் போல நமது திரு. ஜி.ஏ. நடேசய்யர் “ஊரார் எல்லோரும் பகிஷ்கரிக்க வேண்டும் என்கின்றார்கள்.
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அதனால் நானும் பகிஷ்கரிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்களுடன் விருந்துண்பதிலோ, பழகுவதிலோ தனக்கு ஆஷேபணை இல்லையாம்! அவர்கள் வரவுக்காக, பகிஷ்கார அறிகுறியாய் கடையடைப்பதிலும் தாம் சம்பந்தப்படப் போவதில்லையாம். எனவே, இது எவ்வளவு சரியான காரணம் என்பதை வாசகர்களே அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
அடுத்தாற்போல், திரு. சத்தியமூர்த்தி அய்யரும் “கமிஷன் மெம்பர்கள் உபச்சாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டிய அவ்வளவு பெரியவர்கள் அல்ல” என்று சொன்னதைத் தவிர, வேறொரு சரியான காரணமும் சொல்லவில்லை. திரு.சாமி வெங்கடாசலம் செட்டியாரும்,
*கக்ஷிப் பிரதிகக்ஷி விஷயம் கார்ப்பரேஷனில் கூடாது” என்பதைத் தவிர. வேறுசரியான காரணம் ஒன்றும் சொல்லவில்லை. இந்த உணர்ச்சி அவருக்கு இப்போதாவது வந்ததைப் பற்றி சந்தோஷமே.
பிறகு, ஜனாப் பவீர் அகமது சாயபு பேசியிருப்பதில் முக்கியமாக, “வெள்ளைக்காரர்கள் துருக்கியை சின்னா பின்னப்படுத்தி “கிலாபத்"தை. அழித்துவிட்டார்கள்”” என்றும், இதுவரையில் “முஸ்லீம்கள் ஒத்துழைத் ததற்கு யாதொரு கூலியும் கிடைக்கவில்லை,” யென்றும், “ஆதலால் வெள்ளைக்காரர்களைச் சேர்ந்த சைமன் கோஷ்டிக்கு உபசாரம் கூடாது” என்றும் சொல்லியிருக்கிறார், “கிலாபத்” ஒழிந்ததற்கு வீரர் கமால்பாக்ஷா காரணமா? வெள்ளைக்காரர் காரணமா? என்பதையும், முஸ்லீம்களுக்கு
சர்க்கார் கொடுத்த கூலிக்கு உதாரணம், திரு. பஷீர் அகமது சாயபு போன்றவர்கள் சட்டசபை மெம்பராவதற்கு இடம் கொடுத்ததே போதாதா என்பதையும் யோசித்தால் யாருக்கும் விளங்காமல் போகாது.
முடிவாக, இத்தீர்மானத்தின் மீது நடத்திய கலகத்தால் பார்ப்பனர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு மார்க்கமும் அவர்களது கூலிகள் பார்ப்பனர்க்கு உதவியாக பிரசாரம் செய்வதற்கு ஒரு ஆதாரமும் கிடைத்தது. இதைத்தவிர, வேறு முக்கியமான சங்கதி ஒன்றும் நடந்துவிடவில்லை.
பொதுவாக, சைமன் கமிஷனை பகிஷ்கரிப்பதில் எத்தனை பேருக்கு சம்மதம் என்றும், ஆதரிப்பதில் எத்தனை பேருக்கு சம்மதம் என்றும் அறியவேண்டுமானால், பொதுவாகப் பார்த்தால் முதலாவது இந்தியாவில் உள்ள மாகாண சட்டசபைகள் எல்லாம் ஆதரிக்கின்றன என்பதை யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. இரண்டாவதாக இந்தியா சட்டசபை ஆதரிப்பதையும்,
யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. மற்றபடி இந்தியாவில் உள்ள மதமுறைப்படி பார்த்தால் கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், “இந்துக்கள்” ஆகியவர்களில்
முக்கிய சபைகள் ஆதரிக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. கடைசியாக, வகுப்பு முறைப்படி பார்த்தாலும் பார்ப்பனர் சபை முதற்கொண்டு ஒவ்வொரு வகுப்பு சபையும் ஆதரிக்கின்றன.
குடி அரசு - 1929 () 84
எனவே, இனி ஆதரிக்காத மக்கள் யார் என்று கேட்கின்றோம். அன்றியும், மற்றவர்கள் விஷயம் எப்படிச் சொல்லப்படுவதானாலும் பார்ப்பனரல்லாதாருக்கு என்று ஏற்பட்ட பொது இயக்கங்களும், பொது சபைகளும், அவர்களுக்குள் உள்ள தனித்தனி வகுப்பு இயக்கங்களும் ஒன்றுவிடாமல் கமிஷனை ஆதரித்து வரவேற்று, தங்கள் குறைகளைச் சொல்லிக் கொள்ளத் தீர்மானித்திருக்கின்றன என்பதில் யாரும் ஆக்ஷே பணை சொல்ல முடியாதென்றே சொல்லுவோம்.
அது மாத்திரமல்லாமல், இந்த ஒரு வருஷகாலமாய் நடைபெற்ற ஒவ்வொரு வகுப்பு மகாநாடுகளிலும், வகுப்பு சபைகளிலும், பார்ப்பனர்களும் அவர்தம் கூலிகளும்பிரவேசித்து, கலகம் செய்ய ஆட்களை ஏவிவிட்டும் கூட, எவ்வளவு முயற்சி செய்தும்கூட ஒரு வகுப்பிலாவது ஒரு இயக்கத்திலாவது, சரியானபடி தங்களுக்கு அனுகூலமான கக்ஷியையோ அபிப்பிராய பேதத்தையோ கூட கொண்டுவந்து போட முடியாத அளவுகமிஷன் ஆதரவு பலப்பட்டிருக்கின்றது என்பதையும் கவனித்துப் பார்க்கும்படி ஞாபகப் படுத்துகின்றோம். கடைசியாக, சைமன் விஷயத்தை ஆதாரமாய் வைத்துக் கொண்டு தேர்தலில் விஷமம் செய்யலாமென்று நினைத்துக் கொண்டிருக்கும் கனவான் களுக்கும் ஒன்று ஞாபக மூட்டுகின்றோம். அதாவது எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனி பாமர மக்களை இந்த தந்திரங்களின் மூலம் ஏமாற்றலாம் என்கின்ற எண்ணத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஜீவனத்திற்கு வேறு வழிபார்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.02.1929.
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சர்க்காரிண் மணப்பாண்மையும்
நமது நோக்கமும்
இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார்,
“திரு. ராமசாமி நாயக்கர் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்து, பிரசாரம் செய்தது, சர்க்காருக்குத் தெரியுமா? அந்தப்படி அவரைப் பிரசாரம் செய்ய விடலாமா” என்பதாக சர்க்காரை ஒரு கேள்வி கேட்டிருப்பதாய் தெரிய வருகின்றது. அதற்கு சர்க்கார் “திரு. நாயக்கர் மதத்தையும், சமூகத்தையும் தூஷித்து பிரசாரம் செய்தது எங்களுக்குத் தெரியாது” என்பதாகப் பதில் சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த விஷயத்தில் சர்க்கார், உண்டு அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றைச் சொல்லாமல் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லியிருப்பது சர்க்காரின் தந்திரத்தன்மையைக் காட்டுகின்றது. ஏனெனில், திரு.நாயக்கர் சென்ற மாதத்தில் வேலூரில் சுமார் 5, 6 கூட்டங்களில் பேசி இருக்கின்றார். வேலூர். மகாநாட்டிலும், சுமார் 15, 20 தீர்மானங்களுக்கு மேலாகவே நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இவ்வளவு சங்கதிகளையும் சர்க்கார் உத்தியோகஸ்தர். களான சுமார், 4, 5 தமிழ் சுருக்கெழுத்துப் போலீஸ் அதிகாரிகள் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டு போயிருக்கின்றார்கள். அவைகள் சர்க்கார். குப்பைத் தொட்டியில் இன்னமும் இருக்கக் கூடுமென்றே நினைக்கின்றோம். அப்படியிருக்க, திரு. நாயக்கர் பேசியவைகள் சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டது நாணயமான பதிலாகாது என்றே மறுபடியும் சொல்லுவோம்.
அன்றியும், திரு.சத்தியமூர்த்தி கேள்வி கேட்ட பிறகாவது சர்க்கார், சி.ஐ.டி.ரிப்போர்ட்டுகளைப் பார்த்து பதில் சொல்லியிருக்கலாம். அப்படிக் கொன்றுமில்லாமல் ஒரேயடியாய் தங்களுக்குத் தெரியாது என்று சொன்ன திலிருந்து சமயம் வரும்போது, அதாவது திரு. நாயக்கர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் வரும்போது திடீரென்று அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் தெரிந்தவர்கள் போல் பாவனை காட்டி பிடித்து உள்ளே போட சவுகரியம் வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயேதான் இப்படித் தந்திரமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பதைத் தவிர அதற்கு நம்மால் வேறு காரணங்கள் கண்டு
பிடிக்க முடியவில்லை. ஆனாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. திருசத்தியமூர்த்தி சாஸ்திரிகளும் கூட, திருநாயக்கர் வேலூரில் மதத்தையும்
குடி அரசு - 1929 () 86
சமூகத்தையும் தூஷித்தார் என்பதைப் பற்றிச் சட்டசபையாரிடம் போய்
முட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் நேராகவே அவருக்கு நமது கருத்தை வெளிப்படுத்தி விடுகிறோம். இதன்மேல் அவர் என்ன வேண்டு மானாலும் செய்து கொள்ள அவருக்குப் பூரண சுதந்திரம் உண்டு என்ப தையும் அவருக்கு ஞாபகப் படுத்துகிறோம்.
மத விஷயம்
மதவிஷயத்தில் நாம் இந்து மதமென்பதாக ஒரு மதமே கிடையாது என்பதோடு இந்துமதம் என்பதாக ஒன்று உண்டு என்றும் தாங்கள் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்ச்சியையே அடியோடு ஒழித்து, மனித சமூகத்தின் வாழ்வு, அறிவு, மானம், அன்பு, இரக்கம், பரோபகாரம் முதலிய ஒழுக்கங்கள் ஆகிய வைகளே முக்கியமானவை என்பதை உணரச் செய்ய வேண்டும் என்பதும், இதற்கு விரோதமாக போலி விதமான இந்து மதம் மாத்திரமல்லாமல், வேறு எந்தமதம் தடையாயிருந்தாலும் அவற்றையும் வெளியாக்குவதே நமது முக்கிய நோக்கமாகும்.
சமூக விஷயம்
சமூக விஷயங்களில். எந்த சமூகம் மற்றொரு சமூகத்தை விட தாங்கள் பிறவியால் உயர்ந்தவர்கள் என்றும், எந்த சமூகமும் பொது வாழ்க்கையில் மற்ற சமூகத்தை விடத் தங்களுக்குச் சற்றாகிலும் உயர் பதவியும் அதிக சுதந்திரமும் அடைய பிறவியால் உரிமை உண்டு என்று பாத்தியம் கொண்டாடுகின்றதோ, எந்தச் சமூகம் மற்றொன்றின் சுய மரியாதைக் கிடையூறாய் இருக்கின்றதோ அதைத் திருத்திச் சமநிலையை ஒப்புக் கொள்ளச் செய்வதும், அது முடியாவிட்டால் அவற்றை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுமே எல்லாவற்றையும் விட முக்கிய நோக்கம் என்பதை வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்றியும் இம்முயற்சியில் ஈடுபடுவதில் கெஞ்சுவதையோ, அன்னியர் மனம் நோகுமே என்பதான கவலை கொள்வதையோ, கொள்கையாய்க் கொள்ளாமல், உண்மையுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்ட யாரும் சற்றும் பின் வாங்கக் கூடாது என்பதுவும் நமது முக்கிய நோக்கமாகும்.நன்மைகளிடத்தில் விருப்பும், தீமைகளிடத்தில் வெறுப்பும் கொள்ளவேண்டியது பரிசுத்தமான மனித உணர்ச்சியெனக் கருதுவதால் அதையும் வலியுறுத்துவது அவசியமாகும். ஆனால் இவைகள் வெற்றிபெற பலாத்காரத்தையோ, குரோதத் தையோ உபயோகிக்கக் கூடாது என்பது என்னிலையிலும் ஞாபகக் குறிப்புக் கொள்கையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.02.1929
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கும்பகோணத்தில் பார்ப்பணாதிக்கமும்
கிறிஸ்தவர்கன் சுயமரியாதையும்,
கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் என்கின்ற ஒரு பார்ப்பன மடாதிபதி குடியிருக்கின்ற வீதியில் கிறிஸ்தவர்கள் பஜனை செய்து கொண்டு போகக் கூடாது என்று தடுத்துவிட்டார்களாம்.ராயல் கமீஷனை வரவேற்பது இந்தியாவின் சுயமரியாதைக்குக் குறைவு என்று நினைக்கும் திரு. குழந்தை. போன்ற “தேசீய வீரர்களுக்கு” கும்பகோணத்து சந்நியாசிப் பார்ப்பான்
குடியிருக்கும் ஒரு வீதியில் அதுவும் நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் தாராளமாய் நடமாடும் வீதியில் தன் இனத்தார்கள் பஜனை பாடிக் கொண்டு நடக்கக் கூடாது என்று சொன்னது தன் சமூகத்தின் சுயமரியாதைக்குக் குறைவு என்று தோன்றவில்லையா? அல்லது தோன்றினாலும் வயிற்றுக் கொடுமை அதை மறைத்துவிட்டு, சைமன் கமிஷனிடமும் இதைச் சொல்ல வேண்டாம் என்று அடக்கி “சைமன் பஹிஷ்காரக்” கூச்சல் போடும்படி செய்கின்றதா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 10.02.1929
குடி அரசு - 1929 () 88
இரண்டாவது சண்ணை மாகாண தீண்டாமை விலக்கு மகாநா௫
வெகுகாலமாகவே தீண்டாமை என்பது நியாயமானதல்ல என்பதை எடுத்துக் காட்டி அக்கிரமமானதென்பதையும் விளக்கிப் போராடி வந்திருக் கின்றோம். ஆயினும் இத்தொல்லை காரியத்தில் நீங்கியதாய்த் தெரிய வில்லை. எங்கு நிர்ப்பந்தமிருக்கின்றதோ, அங்கு கொஞ்சம் நீங்கியிருக்கின் றது. அதாவது உதை கொடுக்குமிடத்தில் தீண்டாமை நீங்குகிறது (நகைப்பு மனிதத் தன்மையினாலும் ஜீவகாருண்யத்தை முன்னிட்டும் இத்தீமையை ஒழிக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது இத்தீண்டாமை பலமாய் உட்கார்ந்து கொள்வதைக் காண்கிறோம். (நகைப்பு). இத்தகைய தீண்டாமை என்னும் தீமைக்கு யாதொரு ஆதாரமும் கிடையாது என்பதை
எடுத்துக் காட்டுவதற்கு நாம் ஒரு சிறிதும் யாரையும்விட இளைத்தவர்களல்ல..
நம் நாட்டில் தீண்டாமைக்கு இடம் கொடுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் சாமியும் மதமும் தான் என்று சொல்லவேண்டும். “சொல்லுவ தெல்லாம் நியாயம் தான், கடவுள் அல்லவா அப்படி படைத்துவிட்டார்... அதற்கு என்ன செய்வது?” என்று சிலர் கடவுள் மீது பழியைச் சுமத்து கின்றனர். மற்றும் சிலர், “என்ன செய்வது? மதம் இதற்கு இடம் கொடுக்க. வில்லையே?” என்று மதத்தின் மீது பழிபோடுகின்றார்கள். ஆதலால் இத்தீண்டாமையைத் தைரியமான போராட்டத்தினால் தான் ஒழிக்கக் கூடிய தாயிருக்கின்றது. “கடவுள் எங்கும் நிறைந்த சர்வசக்தியுள்ளவர், பட்ச பாதக மற்றவர்” என்று சொல்லிக் கொண்டு “கடவுள் தான் தீண்டாதவர்கள் என்ற கொடுமைக்குட்படும் மக்களுக்கு ஆதார” மென்பது எவ்வளவு கேவல மானது.அநேகமாக அவர்தான் இந்த தீண்டாமையைப் படைத்தவர் என்றும் சொல்லப்படுகின்றது. அது உண்மையாயின் அத்தகைய கடவுளை எப்படியாவது ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும். (கர கோஷம்! இந்த அநியாயமான சங்கதி அவருக்குத் தெரியாதென்றால் அதற் காக அவரை இன்னும் சீக்கிரமாய் ஒழிக்க வேண்டும். கரகோஷம்) அவரால் இத்தகைய அநீதியை விலக்கவோ அல்லது அக்கிரமம் செய்பவர்களை அடக்கவோ முடியாதென்றால் அவருக்கு எந்த உலகத்திலும் இருக்க வேண்டிய வேலையே இல்லை. ஒழிக்க வேண்டியது தான் நியாயம் நகைப்பு
கடவுளை முட்டாளும் அயோக்கியனும் சக்தியற்றவனும் என்று
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கேவலப்படுத்துவதற்கு என்ன மாறுபாஷையோ அதுதான் கடவுள் படைப்பினால் தீண்டாமையிலிருந்து வருகின்றதென்று சொல்லப்படுவ தென்பதே எனது அபிப்பிராயம். கடவுள் பேரில் பழிபோட்டுவிட்டு தப்ப முயலுபவர்களின் செய்கை மிகக் கேவலமானது. அவர்களையும் எவ்வளவு
சீக்கிரத்தில் ஒழிக்கின்றோமோ அவ்வளவு நன்மையுண்டு. அது போலத் தான் மதத்தின் மீதும் பழிசுமத்துவதும், எந்த மதத்தை எந்தக் கடவுள் அல்லது யார். நேரில் வந்து சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், எந்தச் சமயாச்சாரி எவ்வளவு அற்புதங்கள் செய்திருந்தாலும் தீண்டாமை என்னும் கொடு மைக்கு இடம் கொடுத்துக் கொண்டுள்ள மதத்தை உடனே ஒழிக்க வேண்டும்.
கடவுளும் மதமும் இத்தீண்டாமை விலக்கப்படுவதற்கு இடம் கொடுக்கவில்லை என்று சொல்லப்படுவதற்கு ஏதாவது ஆதாரங்களிருந்தால் அவையார் சொன்னாலும், எப்படிப்பட்டதானாலும் அவற்றை நெருப்பைப் போட்டுப்பொசுக்க வேண்டும்.கரகோஷம் காரியத்தில் உறுதியாய் நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத் தனத்தினால் ஒரு போதும் நாடு முன்னேற முடியாது.புண் கண்ணில் பட்டால் அதை உடனே தொலைக்க மருந்து முதலியன போட்டுச் சிகிச்சை செய்யவில்லையா? ஆனால் அது வலிக்கக் கூடாது. எரியக்கூடாது என்று மூடி வைத்துக் கொண்டு வாய்ச் சமாதானம் சொல்வது புழுத்துச் சாவதற்கு வழிதான்.
தீண்டாமை விலக்கு என்பது பிறருக்காகச் செய்யப்படும் பரோப காரமான செய்கை எனக்கருதுவது அறிவீனம். அதுமனிதத் தன்மையை நிலைநாட்ட, சுயமரியாதையைக் காக்க நாட்டின் விடுதலைக்கு அவசியமான தென்று கருத வேண்டும்.கரகோஷம்! நம்மைப் பொருத்த மட்டில் நமக்குக் கீழாகக் கருதப்படும் மக்களை நாம் கொடுமைப்படுத்துகின்றோம். இதற்கு
நாம் வெட்கப்பட வேண்டும். நமக்கு மேலாகக் கருதப்படும் ஒரு இனத்தார். நம்மைக் கொடுமைப்படுத்துகின்றனர். பஞ்சமர்கள் எனப்படுபவர்களுக்
கிருக்கும் பழியைவிட நம்மிடத்திலிருக்கும் பழியை முதலில் ஒழிக்க முயல வேண்டும். அப்பொழுது அது தானாய் மறையும்.
பெண்களையும் ஒரு தீண்டாத சமூகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
(நகைப்பு) தீண்டாமைவிலக்கு என்பது நமது கடமையான காரியம். நாம் அது நன்மையை உத்தேசித்த காரியம் என்பதை உணர்வதில்லை. குருட்டுத் தனமாக அவர்கள் சொன்னார்கள், அதில் எழுதியிருக்கிறது என்பதை நம்பிக்கொண்டு அறிவைப் பொருத்தமட்டில் தீண்டாமைக்கு ஏதாவது ஆதாரமுண்டாவென்று ஆராய்ந்து முடிவு செய்யாமல் இன்னும் மூடப் பழக்கங்களை பின்பற்றுவதைவிட கேவலச் செய்கை வேறு ஒன்றுமே இல்லை. தீண்டாமை என்பது அறிவைப் பொருத்தும் ஆதாரங்களைப் பொருத்துமிருக்கவில்லை. ஆனால், முட்டாள்தனத்தையும், ஆணவத்தை
யும் அயோக்கியத்தனத்தையும் பொருத்துத்தானிருக்கிறது (கரகோஷம்!
குடி அரசு - 1929 () 90
மலத்தைத் தொட்டால் கழுவினால்போதும். மனிதனைத் தொட்டால் குளிக்கவேண்டும் என்பது சுகாதாரத்தின் பெயரிலா? அல்லது ஆணவத்தை முன்னிட்டா என்றுதான் கேட்கிறேன். (பெருத்த கரகோஷம்) சுயநலத்தை உத்தேசித்தோ அல்லது முட்டாள்தனத்தை உத்தேசித்தோ இந்த அயோக் கியத்தனத்தை வைத்துக் கொண்டிருப்பது மிகக் கேவலமானது. அவர் அப்படிச் சொன்னார்; இவர் இப்படிச் சொன்னார்; அதற்கு ஆதாரங்க ளிருக்கின்றனவென்றால் இன்னமும் அவற்றிற்கு இடம் கொடுக்கலாமா என்று தான் கேட்கிறேன்? நந்தனை நாயன்மார்களுள் ஒருவராக்கி பாணனை திருப்பாணாழ்வாராக்கிய புராணத்தை நம்பினால் நந்தன் அண்ணன் தம்பி பேரப்பிள்ளை முதலானவர்களை ஏன் அவர்களைப் பார்க்க கோவிலில் போக விட்டு, கும்பிடுவதற்கு அனுமதிக்காமல் கொடுமை செய்யவேண்டும்? அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் ஒருவரெனக் கருதப்படும் ஒருவர் தன் குலத்தவரை கோவிலிலும் வரக் கூடாதென்று தடுத்து 63 குழவிக் கற்களை வைத்துப் பொங்கலும், புளியோதரையும் சாப்பிடுவதற்கென்று நாயன்மார்கள் பெயரையும் நந்தன் பெயரையும் ஆழ்வார்கள் பெயரையும் சொல்லிக் கொண்டு திரிவது எவ்வளவு கேவலமானது? (கரகோஷம் தவிர அவர்கள் அருகில் வந்தால் நாற்றமடிக்கின்றது என்பதற்கு யார் ஜவாப்தாரி? குளிக்க இடமில்லை: ரஸ்தாவில் வரக்கூடாது: பொதுக்கிணறு, குளத்திற்கு வரக்கூடாது; வண்ணான் இல்லை; அம்பட்டனில்லை என்றால் இத்தகைய அநியாயங்களுடன் நாற்ற மடிக்காமல் மற்றபடி மணக்குமா என்றுதான் கேட்கிறேன். “சங்கராச்சாரியை 15 நாட்களுக்கு ஒரு ரூமில் போட்டு மூடிவைத்து குளிக்காமலிருக்கச் செய்து பாருங்கள்! பிறகு நாற்றமெ டுக்கிறதா? மணக்கிறதாவென்று தெரியும் நகைப்பும் கரகோஷமும் “சுவாமி” யையும் பத்து நாள் தண்ணீர் கொட்டி, அபிஷேகம் செய்து கழுவாதிருந்தால் அதுவும்தான் நாற்றமெடுத்துக்கொள்ளும் (நகைப்பு
பின்னும், அவர்கள் சாராயம், கள் முதலியவற்றைக் குடிக்கின்றனர்; மாம்சம் தின்னுகின்றனர் என்றும் சொல்லப்படுகின்றது. சாராயம் யார்: குடிப்பதில்லை? மாம்சம் யார் தின்பதில்லை? உற்பத்தியாகும் சாராயம், கள் முதலிய எல்லாவற்றையும் அவர்கள்தானா குடித்துவிடுகின்றார்கள்? (நகைப்பு) குடித்துவிட்டுத் தெருவில் உருளுபவர்கள் மூக்கில் கள் ஒழுகக் கோவிலுக்குப் போகலாம். பிற மதஸ்த்தரான கிறிஸ்தவர்களும் முஸ்லீம் களும் பாதிவழி போகலாம். ஆனால் இந்துக்கள் எனப்படும் அவர்கள்.
மட்டும் கோபுரத்துக்கு வெளியில் நிற்க வேண்டும். இத்தகையக் கொடுமை யைவிட நமது சமயத்தில் வேறு என்ன இருக்கிறது. விடிய விடியத் தெருவில் பன்றியும் கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக் கின்றோம் (நகைப்பு) அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால் பச்சைப்புல்லையும் பருத்திக் கொட்டையும் தின்னும் மாட்டைத் தின்பவர்களுக்குத்தானா தீண்டாமை? நியாயத்திற்கும் அறிவுக்கும் பொருந்துவதாயிருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டுமேயன்றி முட்டாள்
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
தனமான அர்த்தமற்ற விஷயங்கள் எவற்றையும் எதன் பெயராலும் ஒரு போதும் ஒப்புக் கொள்ளக்கூடாது! கேளுங்கள்! கடவுள் பெயராலோ மதத்
தின் பெயராலோ பழி போட்டுச் செய்யப்படும் அக்கிரமங்களை மற்ற நாடு களில் அலட்சியம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள் அறிவுக்கும் நியாயத்திற்கும் பொருத்தமற்ற தீண்டாமை என்னும் திமையை அடியோடு ஒழிப்பதில் நீங்கள் எதற்கும் பின் வாங்க மாட்டீர்களென்று நம்புகிறேன். (கரகோஷம்!
குறிப்பு : சென்னை பச்சையப்பன் அரங்கில் 9, 10.02.1929 இரு நாளில். நடைபெற்ற இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை” முன்மொழிந்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 17.02.1929
* தீண்டாமை விலக்குத் தீர்மானம்
“மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும் ஜீவகாருண். யத்தை முன்னிட்டும் தேசமுன்னேற்றத்தைப் பொறுத்தும், நம் நாட்டின் பெரும்பகுதியினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை உடனே விலக்க வேண்டுமென்று இம்மகாநாட்டார் அபிப்பிராயப் படுவதால் சமுதாய ஊழியர்களும் தேசபக்தர்களும் சங்கங்களை ஸ்தாபித்து தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில் வெற்றி பெறும் பொருட்டு பொது ஜனங்களிடை இடைவிடாத பிரசாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றனர்.”
குடி அரசு - 1929 () 92
சுயாமரியாகை மகாநா௫
சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கல்பட்டில் இந்த வாரம் இன்றைய தினம் நடைபெறுகின்றது. அதைப் பற்றிப் பலவாறாக பழிப்புரை களும் விஷமக் கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது அரசாங்கத்தார் ஆதரவில் இம்மகாநாடு நடத்தப்படுவதாகவும் பார்ப்பன துவேஷத்தின் மீது நடத்தப்படுவதாகவும், மற்றும் போல்ஷ்விசம் பரப்ப அவர்கள் உதவிக் கொண்டு நடத்தப்படுவதாகவும், இதைப் பற்றி அரசாங்கத்திற்கும் சிலர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுவதுடன் சிலர். கவர்னரிடம் தூது சென்றதாகவும் தெரிகின்றது.
அரசாங்கத்தாரும் இவற்றிற்கு காது கொடுத்து சற்று துடிக்கின்ற தாகவும் தெரிய வருகின்றது. எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு வேண்டியது சுயமரியாதை என்பதுதான். உலகத் திலே உயிரையுங் கூட கொடுத்துப் பெற வேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுள்ளது சுயமரியாதையே ஆகும். என்றாலும் சிலர் தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும், சிலர் ஜஸ்டிஸ் ககஷி இருக்கும் போது சுயமரியாதை இயக்கம் ஒன்று தனியாக எதற்கென்றும்
மதத்திலும் மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும் கை வைப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், சுயமரியாதை இயக்கத்தால் நாஸ்திகம் பரவுவதாகவும், அரசியல் கெட்டுப் போவதாகவும், தேசீயம் தடைப்படு வதாகவும் இன்னும் பல மாதிரியாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இவற்றிற்கு நமக்குத் தோன்றிய பதில் சொல்ல ஆசைப்படுகின்றோம்.
ஒரு இயக்கத்திற்கு ஒரு பெயரை எதற்காக இடுவது என்றும் அது காதுக் கினிமையாக விருப்பதற்காகவா அல்லது இயக்கத்தின் தத்துவத்தையும் கொள்கைகளையும் உணர்த்துவதற்காகவா என்று கேட்கின்றோம். “சுய மரியாதை இயக்கம் என்றால், சுயமரியாதை இல்லாதவர்களின் இயக்கம் என்று பிறர் கருதமாட்டார்களா” என்கின்றார்கள். அப்படியானால் நாம் அவர்களை “சன்மார்க்க இயக்கம் என்றால் அது துன்மார்க்கர்களுடைய இயக்கமாகிவிடுமா? ஜீவகாருண்ய இயக்கம் என்றால் அது ஜீவ காருண்யமில்லாத “கசாப்புக் கடைக்காரர்கள்” இயக்கமென்றாகிவிடுமா? சைவ சித்தாந்த இயக்கம் என்பது “அசைவர்கள்” கூட்டமாகிவிடுமா? அது போலவே ஜஸ்டிஸ் இயக்கம் என்பது இன்ஜஸ்டிஸ்காரர்கள் இயக்கம்
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
என்றாகிவிடுமா?” என்று கேட்கின்றோம். ஒரு சமயம் அப்படியே அர்த்த மாகிவிடும் என்று சொல்வதானாலும் கூட சுயமரியாதை இயக்கம் என்பதற்கு பொருள் சுயமரியாதை இல்லாதவர்கள் அதை அடைய ஏற்படுத்திக்கொண்ட இயக்கம் என்பதில் நமக்கு ஆக்ஷபனை இல்லை என்றே சொல்லுவோம். இதற்கு உதாரணம், முதலாவது சுயமரியாதை இயக்கம் என்கின்ற பெயர்கள் பிடிக்கவில்லை என்று சொல்லுகின்றவர்கள் தங்களையே அதாவது தங்கள். உருவத்தை கண்ணாடியில் பார்த்து “உனக்கு சுயமரியாதை இருக்கின்றதா” என்பதாக ஒரு கேள்வி கேட்டுக் கொண்டு, தனது உருவம், நடை, உடை, குறி. கொள்கை இவைகளை வெளிப்பார்வையிலும் தனது எண்ணம், நம்பிக்கை,
தான் நடந்து கொண்டமுறை, நடந்து கொள்ள இருக்கின்ற கருத்து ஆகிய வைகளை உள்ளுக்குள்ளாகவும் தான் கட்டுப்பட்டிருக்கும் ஆக்ஷி, தான்
பின்பற்றிவரும் மதம், மத உணர்ச்சி, மதச் சடங்கு, மதக்கொள்கை ஆகிய வைகளை அனுபோகத்தைக் கொண்டும் மற்றும் தங்களைப் பற்றி மற்ற வர்கள் என்ன பேசிக் கொள்ளுகின்றார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவோ மோசமானவர்களாகவும் எவ்வளவோ சுயநலக் காரர்களாகவும் இருப்பவர்களுக்குங்கூட தங்களின் சுயமரியாதையற்ற தன்மை சூரிய வெளிச்சம் போல் விளங்காமற் போகாது என்றே நினைக் கின்றோம்.
மற்றும் “ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது இது எதற்கு” என்பவர்கள், ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் 10 வருஷ காலமாய் விளைந்து வந்த உணர்ச்சிகளையும் சுயமரியாதைக் கிளர்ச்சியில் இந்த இரண்டு வருஷத்தில் விளைந்த உணர்ச்சியையும் கவனித்துப் பார்க்க வேண்டுகின்றோம். சமீப காலம் வரை ஜஸ்டிஸ் கக்ஷி அரசியலில் மாத்திரம் மிதவாதம் அமிதவாதம். என்கின்ற முறையில் மிதவாதிகளின் கொள்கைகள் என்பனவற்றைப் பின்பற்றிக் கொண்டு பார்ப்பனரிடமிருந்த உத்யோகங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வேலையில் மாத்திரம் ஒருவாறு வெற்றிபெற்று வந்ததே ஒழிய மற்ற வகைகளில் தாராளமாய் முன்னேற முடியாதபடி தடைப்படுத்தப்பட்டே வந்திருந்தது. சுருக்கமாகச் சொல்வோ மானால் பார்ப்பனரல்லாதார் என்கின்ற ஒரு குறிப்பிடத்தகுந்த சமூகம் தமிழ் நாட்டில் இருக்கும் சங்கதியை வெளி மாகாணங்களுக்குத் தெரிய முடியாமல் இருந்தது என்றும், கொஞ்சநஞ்சம் தெரிந்தாலும் அது “தேசத்துரோகிகள், முட்டாள்கள், காட்டு மிராண்டிகள்” என்று பிறர் கருதும் படியாகச் செய்து வந்த எதிரிகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததும்
யாரும் மறுக்க முடியாது. அன்றியும் அரசாங்கத்தாராலும் இது ஒரு தனி வகுப்புவாதக் கட்சியென்று மாத்திரம் மதிக்கப்பட்டு அவர்களால் தங்கள் சுய நலத்திற்காக இது உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவே கருதியும் வந்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இதே ஜஸ்டிஸ் கட்சியை மதித்திருக்கின்றார்கள் என்பதற்கும், அதற்கு எவ்வளவு கட்டுப்பட்டு
குடி அரசு - 1929 () 94
இருக்கின்றார்கள் என்பதற்கும், இது வெளி மாகாணங்களில் எவ்வளவு மதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் இந்த வருஷத்திய அதாவது 27 - 28ஆம் வருஷத்திய இந்தியா கவர்மெண்ட் ரிப்போர்ட்டைப் பார்த்தால் விளங்காமல் போகாது. சமூக விஷயத்திலும் மக்களின் உணர்ச்சி எவ்வளவு முற்போக்கடைந்திருக்கின்றது என்பதற்கும் மதுரை மகாநாடு முதல் இதுவரை நடந்துவந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியை சர்க்கார் தாசர்கள் என்று நமது எதிரிகள் சொல்லி வந்ததை கோயமுத்தூர் தீர்மானத்தின் மூலமாகவும் அதற்குப்பின் அரசாங்கத்தில்
ஜஸ்டிஸ் கட்சிக்குள்ள மதிப்பின் மூலமாகவும்தான் பொது ஜனங்களுக்கு பொய்ப்பித்துக் காட்ட முடிந்தது. ஆகவே சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு ஆதரவைத் தந்திருக்கின்றது என்பதைக் கவனித்தால் எந்த வகையிலும் அது அவசியமில்லாதது என்று சொல்ல முடியவே
முடியாது என்று சொல்லுவோம்.
மத விஷயத்தில் பிரவேசிப்பதாய் சொல்லுவது:-
மதம் என்பது மனிதனின் வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத்
திற்கும் தேவையானதே ஒழிய மதத்திற்கு மனிதன் தேவையில்லை என்றே சொல்லுவோம். ஆதலால் இப்போது வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும்
ஒழுக்கத்திற்கும் ஆதாரமான எந்த மதத்தில் அது பிரவேசித்து என்ன கெடுதியைச் செய்தது அல்லது அதனால் என்ன விளைந்தது என்று யாராவது எடுத்துக்காட்ட முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் கூட்டுறவு நலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சமரச உணர்ச்சிக்கும் விரோதமாக எது இருந் தாலும் அதை அழிக்க வேண்டுமா வேண்டாமா என்றும் நாம் அவர்களைக் கேட்கின்றோம்.
மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியை கெடுக்கின்றது என்று சொல்லப்படுவது:-
எந்த விஷயத்தையும் மனிதன் தன் அறிவைப் பொருத்து ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமா அல்லது குருட்டு நம்பிக்கையால் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்று கேட்கின்றோம். அதுபோலவே நாஸ்திகம் என்பதும் அர்த்தமற்ற வார்த்தையேயாகும் என்பதே நமது அபிப்ராயம். கடவுள் உண்டா இல்லையா என்பதைப் பற்றி வாதம் செய்து முடிவு கட்டுவது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை அல்லவே அல்லவென்பதையும் அதற்காக அனாவசியமாய் நேரம் செலவழிக்காது என்பதையும் பொது ஜனங்கள் உணரவேண்டுகின்றோம். ஆனால் நமது இயக்கக் கொள்கைகளை நடைபெறவொட்டாமல் தடுப்பதற்காக கடவுள் என்பதைக் கொண்டுவந்து தடையாகவோ முட்டுக்கட்டையாகவோ போடச் சூழ்ச்சி செய்தால் அதற்குச்
சற்றும் இடம் கொடுக்கமுடியாது என்பது தான் சுயமரியாதை இயக்கத்தின்
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
உறுதியான கொள்கையாகும். அறிவையும் தன்னம்பிக்கையையும் தன் முயற்சியையும் அன்பையும் ஒழுக்கத்தையும் தன்னகத்தில் கொண்ட எந்த சமயத்தினுடையவும் ஒத்துழைப்பை சுயமரியாதை இயக்கம் வலிய வரவேற்கும் என்றும் உறுதி கூறுகின்றோம்.
பின்னும் அரசியல், தேசீயம் ஆகியவற்றிற்கு சுயமரியாதை இயக்கம். தடையாயிருக்கின்றது என்பது:-
மக்களின் சுயமரியாதைக்காகத் தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற்
காகத்தான் அரசாங்கமும் தேசீயமும் வேண்டுமேயொழிய மற்றபடி கேவலம் இவைகள் மனிதன் வயிறுவளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால் அதற்காக
எந்த அரசாங்கமும் அரசியலும் தேசீயமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை. என்றே சொல்லுவோம். இதுவரை நமது நாட்டில் ஏற்பட்டிருந்த ஏற்பட்டி ருக்கின்ற, எந்த அரசியல் இயக்கமாவது தேசீய உணர்ச்சியாவது மக்கள் சுயமரியாதைக்கேற்றதான திட்டங்களுடன் அமைக்கப்பட்டிருந்ததா யென்று அரசியல்வாதிகளையும் தேசீயவாதிகளையும் கேட்கின்றோம்.
எனவே, உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால், அதுவே அரசியலையும் தேசீயத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு, அரசியல் வேறு, தேசீயம் வேறு,மதஇயல் வேறு, ஒழுக்க இயல் வேறு, அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும்.
உதாரணமாக, நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால் அந்த வார்த்தையிலேயே நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்பது தானாக உதயமாகிவிடும். அதுபோலவே நமக்கு மேலாகவோ கீழாகவோ ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதும் தோன்றிவிடும். பொதுவாக சுய மரியாதை என்கின்ற ஒரு இஞ்சினை பலப்படுத்தி சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கிவைத்து விட்டால் பிறகு அதில் எந்த இயந்திரத்தை (மிஷினை! கொண்டு வந்து அத்தோடு இணைத்து தோல்பட்டையைமாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தகுந்ததுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடம் இருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் லட்சியம். ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறுவேகம் போல் இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது. மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக
குடி அரசு - 1929 () 96
மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மைச் சக்தியும் பெருமையும் வெளியாகும்.
அன்றியும் இது கிளம்பிவிட்டால் யாராலும் இதை அழிக்கவோ அல்லது சற்றாவது அடக்கி வைக்கவோ கண்டிப்பாய் முடியாது என்பதுடன் அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல் எதிர்க்க எதிர்க்கவளர்ந்து கொண்டே போகும் சக்தி உடையது என்பதே நமது உறுதி. அன்றியும் எந்த விதத்திலும் எல்லோரும் எவ்வித அபிப்ராயமுடையவர்களும் இது இன்றைக் கில்லாவிட்டாலும் நாளைக்காவது சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பதுவும் நமது பலமான உறுதியாகும். அன்றியும் இவ்வியக்கம் ஒவ்வொன்றையும் பெரிதும் வேண்டாம் என்று சொல்லும் விரக்தியைப் பற்றி இருக்கின்றதே ஒழிய, வேண்டும் என்று சொல்லும் படியான ஆசையைப் பற்றவில்லை. ஆதலால் இது யாரும் ஏமாற்றமடைவதற்கு இடமேயில்லை. அன்றியும் இதற்குள் போட்டிகளுக்கும் இடமில்லை.
மற்றபடி இதைப்பற்றி சர்க்கார் எப்படி நினைத்துக் கொண்டாலும்
நமக்கு அதைப்பற்றி சற்றும் கவலையில்லை. உலக வாழ்க்கையில் இறங்கி ஆசையிலீடுபட்டு உழலும் சம்சாரவாளிகளிடமிருந்து நமக்கு யாதொரு உதவியும் ஒத்துழைப்பும் தேவையில்லாததாலும், பெரிதும் பரிசுத்தமானதும் சுயநலமற்றதும் எதற்கும் எவ்வித தியாகத்திற்கும் தயாராயிருக்கும் இளங்காளைகளிடத்திலும் இளம் கன்னிகைகளிடத்திலும் திக்கற்றவர். களிடத்திலும் நமது இயக்கத்திற்கு பெரிதும் உதவி எதிர்பார்க்கின்ற படியாலும் அவர்களும் தாராளமாய் உதவி அளிக்கத் தயாராய் மேல்விழுந்து வருவதாலும் நாமும் இதன் முடிவைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் கடமையையே பின்பற்றிக் கொண்டிருப்பதாலும் இவ்வியக்கத்தின் மூலம் எவ்வித நஷ்டமாவது கஷ்டமாவது அடைய வேண்டி வருமோ என்கின்ற எண்ணமே சிறிதும் கொள்ளாமல் இருக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.02.1929.
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
இணிச் சய்ய 6வேண்முய வலை றிகனோல்ட” கத்தின்
மொழி வயர்ப்பு
சுயமரியாதை இயக்கமானது, பன்னெடுங்காலமாக இந்திய சமூகத் தைப் பாழ்படுத்தி அதன் இரத்தத்தை கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சி உயிரை வாங்கிக் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்க வழக்கங்களையும் அடியோடு ஒழித்துவிடுவான் வேண்டி தங்கள் உயிர். பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யக்கூடிய பலரைத் தன்னிடம்
ஈர்த்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அறியாமையை அனுகூலப்படுத்திக் கொண்டு அவர்களைப் பல வகைகளில் அடிமைப்படுத்தலை ஒழித்து பகுத் தறிவை வளரச் செய்வதற்காகவே இவ்வியக்கம் பாடுபட்டு வருகிறது. அதன் பலன்களும் திருப்திகரமானவைகளாகவே யிருக்கின்றன. வெகுகாலமாக சுயநலவாதிகளால் அழுத்தப்பட்டு அறியாமையில் ஆழ்ந்திருந்த பாமர
மக்கள் மனித உரிமையை உணர ஆரம்பித்து விட்டார்கள். பரம்பரை வழக்
கம் என்பதற்காகவோ “பெரியோர் வாக்கு” என்பதற்காகவோ விசேஷ மதிப், புக்கொடுப்பதில்லை. சுயநலமிகள் கொஞ்சங்கொஞ்சமாக ஒழிந்து கொண்டி ருக்கிறார்கள். இந்தியமக்கள் தமது நிலையை உணர்ந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது. காலப்போக்கும் சீர்திருத்தக்காரர்களுக்கே ஆதரவாயிருக்கிறது, பகுத்தறிவுக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாயிருப் பவைகளெல்லாம் மடிந்துகொண்டே இருக்கின்றன.
யாவராலும் விரும்பப்படும் ஒரு பெரிய இலக்ஷியத்தைக் குறித்து இதுவரை தன்னந்தனியாகவும் புகழை இச்சிக்காமலும் தமக்குத் தோன்றிய முறையில் போராடிவந்ததொண்டர்களெல்லாம் முதன் முதலாக செங்கல் பட்டில் கூடப்போகிறார்கள். ஆகவே செங்கல்பட்டு மகாநாடானது சமூகச்
சீர்திருத்த இயக்கத்தில் மிக முக்கியமானதாகும். இங்கு நம் முழு ஆற்ற லையும் திரட்டி ஒருங்கே எதிர்க்க ஆயத்தமாக வேண்டும். இனி நாம் தனிப் பட்ட ஒரு மனிதனின் முயற்சியிலாவது சில்லரை வெற்றிகளிலாவது திருப்தி யடைந்துவிடக்கூடாது. இனிச் செய்யவேண்டிய காரியங்களை ஜாக்கிர
குடி அரசு - 1929 () 98
தையாக ஓர்ந்து நமக்கிருக்கும் ஆள்வலி, தோள்வலி, பொருள்வலி ஆகிய வைகளைச் சரியாகக் கணக்கெடுத்து எல்லா அம்சங்களையும் கொண்ட சரியான ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும். மகாநாட்டுக்கு வரும் பிரதிநிதி களை, முறட்டுத்தனமான பயனற்ற விவாதங்களில் பொழுது போக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். வாய் வேதாந்தமானதும் வார்த்தைகள் நிரம்பியதுமான தீர்மானங்கள் செய்வதில் பயனில்லை. வாய் வேதாந் தங்களினாலும் இனிய வசனங்களினாலும் ஏமாந்து மோசம் போனவர்களைப் பார்த்து நாம் பயனடைவோம். நம் தீர்மானங்கள் எல்லாவித இயற்கை உணர்ச்சிகட்கும் தத்துவங்கட்கும் ஏற்ற முறையில் குறிப்பாகவும் துரித மாகவும் நடைபெறக்கூடியவாறு வகுக்கப்பட்டு இருக்க வேண்டும். இக் காலத்தில் நம் நாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் இவ்வுணர்ச்சி தலைசிறந்து விளங்குகிறது. எனவே இவ்வுணர்ச்சியை முறையாகவும் சீராகவும் தொடர்ச்சியாகவும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய வழிகளைக் கவனிப்போம்.
நம் லட்சியம் இன்னது என்பது வெள்ளிடைமலை. எனவே நாம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. நடைமுறையின் முற்போக்கு நடத்துவிப்பவருக்கு தக்கபடியும் கால தேசவர்த்தமானங்களுக்கு ஏற்றபடியும்
இருக்கும். எனினும் முன்னேற்றத்தின் போக்கு ஸ்திரமானதே. அதாவது ஜாதி
பேதம், பிறவியினால் உயர்வு தாழ்வு, சமஸ்காரம், மறுபிறவி, அவதாரம், சிலை வணக்கம், அதன் அண்ணனான புரோகிதம், மதச்சின்னம், சடங்குகளா கியவைகளை நாம் சீர்திருத்தமாகிய புதுக்கட்டடத்தைக் கட்டுமுன்னரே இடித்துத் தள்ளிவிட வேண்டும். பிறவியினால் உயர்வு உண்டு என்னும் எண்ணம் மக்கள் மனத்தினின்று நீங்கினாலொழிய தீண்டாமையை யொழித்
தலும் பெண் மக்கள் முன்னேற்றமும் முடியாதவை. பிறவியினால் உயர்வு தாழ்வு என்னும் பொய்க் கொள்கையே ஜாதிப் பாகுபாட்டிற்கு இடங்கொடுத் தது. ஆண், பெண்ணிலும் மேம்பட்டவன் என்னும் அகம்பாவமானது பெண்களைக் கோஷாக்களாகவும் சொத்துரிமையற்றவர்களாகவும் ஆண்க ளுடைய சொத்துக்களாகவும் ஆக்கியிருக்கிறது. சம்ஸ்காரங்கள் கலியாணத்
தைக் கேலிக்கூத்தாக்கி இளமையின் சிறப்பை நாசமாக்கி விட்டது. மறுபிறவி, அவதாரங்கள் என்னும் கொள்கைகள் மக்களை நிரந்தரமான சோம்பேறி களாக ஆக்கிவிட்டன. எனவே நம் மக்களுக்குள் மனித உணர்ச்சியை எழுப்ப வேண்டுமானால் நாம் அக்குருட்டு நம்பிக்கைகளின் மூலகாரணங் களை வேரோடு களைய வேண்டும். நம் மக்கள் பழைய சின்னங்களையும் சடங்குகளையும் மந்திரங்களையும் பின்பற்றி நம்பிக்கொண்டிருக்கும் வரை:
எந்த இந்தியனும் பிறநாட்டாருடன் சம உரிமைக்குப் போராட முடியாது. இந்த அறிவு ததும்புங் காலத்திலுங்கூட அறிவாளிகள் என்பவர்களும் சர்வகலா சாலைப் பட்டதாரிகள் என்பவர்களுங்கூட வெட்கமின்றித் தம் நெற்றிகளில் மதச்சின்னமணிவதைப் பார்க்க விந்தையாயிருக்கின்றது. உயர்வைக் குறிப்பதாகச் சொல்லப்படும், தோள்களில் தொங்கும் பூணூலானது அணிந்
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
திருப்பவனின் மனிதத்தன்மை அற்றத்தன்மையைத் தெளிவாய்க்குறிக்கிறது. ஓமமும், திவசம், பிறப்பு இறப்பு முதலிய காலங்களில் சொல்லப்படும்
மந்திரங்களும் மனக் கண்ணைக் கெடுத்து மனிதனை அஞ்ஞான இருளில்
ஆழ்த்துகிறது. ஒரு நாகரீகமுற்ற சமூகமென்றால் சடங்குகளுக்குத் தண்: டனை விதித்தாக வேண்டும். இந்த மாதிரிக் கொடிய மோசம் செய்கிறவர். களைத் தீயிலிட்டுக் கொழுத்தினாலும் தக்க தண்டனையாகாது. நம் உற்சவ காலங்களில் நடக்கும் குடிகாரக் கலகங்களும், அசிங்கங்களும், ஆபாசங்
களும் எந்தக்காலத்திலும் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. திரு விழாக்கள் தொலைந்து உடல் நலத்திற்கும் மனோநலத்திற்கும் வேண்டிய வசதிகள் ஏற்பட வேண்டும்.
சிலை வணக்கந்தான் எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடமாயிருப்பது. நாட்டின் மதிப்பைக் காப்பாற்ற எண்ணமுடைய ஒவ்வொருவனும் கற்சிலை களைத் தகர்த்து சிலைகளையுருக்கி அவ்வுலோகத்தைக்கொண்டு ஆயுதங் களும் இயந்திரங்களும் செய்விக்க வேண்டும். மத சம்பந்தமாக விடப்பட்ட சொத்துக்களெல்லாம் நாட்டின் நலத்திற்கு உபயோகப்படுத்தப்பட வேண்டும். மடங்களைப் பள்ளிக்கூடங்களாகவும் கல்லூரிகளாகவும்மாற்றவேண்டும். கோவில்கள் ஆஸ்பத்திரிகளாக வேண்டும். புரோகிதரை நீக்க வேண்டும். “நரகத்திற்கு” அஞ்சக்கூடாது. சோதிடர், குறிகாரர், மந்திரவாதி முதலியவர் களைத் தண்டிக்க வேண்டும். சமஸ்கிருதத்தையொழித்து வேதங்களையும் புராணங்களையும் படிப்பதைத் தடுக்க வேண்டும். இப்போது நடைமுறை யிலுள்ள மொழிகளை விருத்தி செய்து விஞ்ஞான அறிவையும் தொழில் ஞானத்தையும் பெருக்க வேண்டும். சோம்பேறிப் பாப்பானுக்குச் சோறு போடு வதைத் தடுத்து, வேலையற்றவருக்கு வேலை கொடுத்து, கிழவர்களுக்கு ஜீவ னோபாயம் அளித்துக் காப்பாற்றவேண்டும். ஒருவனே உழைப்பது என்பதை
நீக்கி நாட்டின் வருவாயை நீதியாக அனைவருக்கும் பங்கிட வேண்டும். ஏக போக உரிமைகளையொழித்து தன்னாட்சி முறையில் கைத்தொழில்கள் தாராளமாக விருத்தியாக ஏற்ற சாதனம் ஏற்படும்படியான பொருளாதார நிலையையொட்டியே ஒரு திட்டம் நிறுவ வேண்டும்.
இதில் குறிப்பிட்டுள்ளவை மட்டும் போதுமான தென்று நான் சொல்ல வில்லை. ஆனால் நம் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள முக்கிய மான அம்சங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டிருக்கிறோம். நம் முன்னேற்றத்.
திற்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும் அனைத்தையும் தடுத்து ஓங்கக் கூடிய தைரியமும் உறுதியுமுள்ள ஒரு அமைப்பை உண்டு பண்ணுமானால் தான் இச்செங்கற்பட்டு மகாநாட்டின் நோக்கம் பயன்பெற்றதாகும்.
குடி அரசு - மொழிபெயர்ப்புக் கட்டுரை - 17.02.1929
குடி அரசு - 1929 () 100
ஓர் புதிய கோயில்
மேட்டூரில் ஓர் புதுக்கோவில் கட்டி, அங்கு பிள்ளையாரையும் ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்யும் நோக்கத்தோடு 11-2-29 காலை 10 மணிக்கு அஸ்திவாரம் நாட்டினார்கள். இக்கோஷ்டிக்குத் தலைவர் திரு.மகா தேவய்யரவர்கள் பி.ஏ.பி.இ.எக்ஸிக்யூடிவ் இஞ்சினீர். ஆராய்ச்சித்திறமுள்ள இஞ்சினீர்களுக்கு கோவில்களைப் பெருக்கக் கருத்தோடியதின் அர்த்த மென்ன? ஏழைக்கூலிகளுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் உபயோகப் படும் இராப்பள்ளிக்கூடம் வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா? கோவில் கட்டு
வது பார்ப்பனரல்லாத ஏழைப் பாமர மக்களைப் பிரித்து வைத்து ஏமாற்றித் தம்மினத்தவர்கள் பார்ப்பனரல்லாதார் செலவில் உண்டு கொழுப்பதற்
கல்லவா?'
குடி அரசு - செய்தி விளக்கம் - 17.02.1929
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
Qsarmanic சைமண் கமீஷனுக்கு
ஆடம்பரமான வாவேற்பு.
பகிஷ்காரம் “வபாஸ்ஸ்” எண்று போய்விட்டது.
ராயல் கமிஷனுக்கு பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட சைமன் கமிஷன் அங்கத்தினர்களும் இந்திய பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் கமிட்டி அங்கத்தினர்களும் ரங்கூனிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18-தேதி காலை 6-மணிக்கு “டிறா” என்னும் கப்பலில் சுகமே வந்து சேர்ந்தார்கள். அவர்களை சென்னை மாகாண மக்களின் பிரதி நிதிகளால் சைமன் மாகாணக் கூட்டுக் கமிட்டிக்கு தெரிந்தெடுத்த பொது ஜனப் பிரதிநிதி அங்கத்தினர்களும் சென்னை அரசாங்க பிரமுகர்களும் கப்பலிலிருந்து இறக்கி துறைமுக மேடையில் வெகு அலங்காரமாய்ப் போடப்பட்டிருந்த பந்தல்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.
பந்தலில் சென்னை நகர மக்கள் சார்பாக சென்னை கார்ப்பரேஷன் சபைத் தலைவரும் கார்ப்பரேஷன் அங்கத்தினர்களும் மற்றும் சென்னைப் பிரமுகர்களும் தென் இந்திய மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய மிராஸ்தார். சங்க அங்கத்தினர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் மற்றும் வெளி ஜில்லா மக்களின் பிரதிநிதிகளாக ஜில்லா போர்டு மெம்பர்களும், மகமதிய சமூகப் பிரதிநிதிகளும், ஆதிதிராவிட சங்கப் பிரதிநிதிகளும், வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும், மாகாண இளைஞர் சங்கப் பிரதிநிதிகளும், பொது ஜனங்கள். சார்பாக அரசாங்கத்தில் மந்திரிகளாக நியமிக்கப்பட்ட மந்திரிமார்களும்
மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சகல திறப்பட்ட மக்களின் கூட்ட
மும் ஏராளமாக வந்திருந்து ஒவ்வொரு பிரதிநிதி ஸ்தாபனங்களும் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுத்து அநேக வகுப்பு மகாநாடுகளில் கமிஷனை வரவேற்கச் செய்த தீர்மானங்களையும் தெரியப்படுத்தி வரவேற்றார்கள்.
சைமன் துரையவர்களும் கமீஷன் சார்பாக இவ்வாடம்பரமானதும் பிரதிநிதித்துவமானதுமான வரவேற்பை ஏற்று அதற்குத்தக்க பதிலளித்த தோடு தங்களது நன்றியறிதலையும் தெரிவித்து அரசாங்க விருந்தினராய்ச் சிலரும் மந்திரிகள் விருந்தினராய் சிலரும் தனிப்பிரபுக்களின் விருந்தினர். களாகச் சிலரும் அவரவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவைதவிர மற்றும் அநேக பிரதிநிதித்துவ சபைகளினுடைய பத்திரங்களும்
குடி அரசு - 1929 () 102
அழைப்புகளும் கமீஷனுக்கு ஏராளமாக இருந்தது என்றாலும் அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள கமீஷனர்களுக்கு போதிய சாவகாசம் இல்லை என்பதை முன்னமேயே அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்ட தின் மீது பல ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. எனவே, சென்னையில் தாங்கள் தான் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்றும் தங்கள் கருத்துத்தான் தேசமக்கள் கருத்தென்றும், தாங்களேதான் தேசத் தலைவர்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே விளம்பரம் செய்து கொண்டும் தங்களுக்குள் ளாகவே ஒருவருக்கொருவர் தலைவர் பட்டங்களை பரிமாரிக் கொண்டும் இருந்த - இருக்கின்ற - ஒரு சில ஆசாமிகள் கூடிக் கொண்டு சுமார் ஒரு வருஷகாலமாக பஹிஷ்காரக் கூச்சல் போட்டும் எவ்வளவோ சூழ்ச்சிகளும் விஷமப் பிரசாரங்களும் செய்தும் கடைசியாக சைமன்பஹிஷ்காரம் பொஸ் லென்று காலி வேட்டாய் போய் விட்டதுடன் சைமன் கமீஷன் வரப் போவ தில்லை என்று தெரிந்த ஒரு தெருவில் நின்று தங்கள் செலவில் போட்டோ படம் பிடித்து தங்கள் தங்கள் பத்திரிகையில் போட்டுக் கொண்டதோடு பகிஷ்காரம் முடிவு பெற்றுவிட்டதென்றே சொல்லுவோம்.
ஒரு சமயம் பஹிஷ்காரக் கூச்சல்காரர்கள் இதை ஒப்புக் கொள்ளு வதில்லை என்று சொல்ல வருவார்களானால் அவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பஹிஷ்காரக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்களில் அதாவது, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஷாபிமகமது, குழந்தை, வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரம், இரத்தினசபாபதி, அமீத்கான்,ஜெயவேலு முதலிய கூட்டத்தார்களை விட எந்த விதத்திலாவது அதாவது, தேசீயப் பொறுப் பிலோ ஒழுக்கத்திலோ தியாகத்திலோ செல்வத்திலோ குறைந்த யோக்கியதை உடையவர்கள் ஒருவராவது சைமன் கமிஷனை வரவேற்ற பதினாயிரக் கணக்கான கூட்டத்தில் இருந்தார்களா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 24.02.1929.
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
செங்கல்பட்டு மகாநாட்மண்
தீர்மாணங்கள்
இரண்டு மூன்று மாத காலமாய் தென்னிந்தியா முழுவதும் ஒரே பேச்சாயிருந்த முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் இம்மாதம் 1718ஆம் தேதிகளில் வெகுவிமரிசையாகவும் மிக்க ஆடம்பர
மாகவும் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்துவிட்டது. வெகு சொற்ப நாட்களுக்குள்ளாகவே செங்கல்பட்டில் இந்த மாகாண மகாநாடு நடத்த தீர்மானித்ததால் போதுமான சாவகாசமில்லாதிருந்தும்கூட செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் ராவ்பகதூர் கே.கிருஷ்ணசாமி யவர்கள் முயற்சியாலும் செங்கற்பட்டு சேர்மன் திரு.வேதாசலனாரவர்கள் ஊக்கத்தாலும் செங்கற்பட்டு பிரபுவும் ஜமின்தாரருமான அப்பாசாமி வள்ளலாரின் வள்ளல் தன்மையாலும் “திராவிடன்” பத்திராதிபர் திரு. கண்ணப்பரின் இடையறா உழைப்பாலும் மற்றும் அநேக கனதனவான்களின் உதவியாலும் தென்னிந்தியாவில் இதுவரை எங்கும் நடந்திராத மகாநாடு போல் இம்மகாநாடு நடந்தேறிவிட்டதும் மகாநாட்டின் பிரதிநிதிகளிலும் இதுவரை எந்த மகாநாட்டிலும் கூடாதமாதிரி எல்லா தரத்தவர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்ததும் குறிப்பிடத்தக்கதேயாகும். முதலாவதாக வைதீகர்கள் கூட்டமும் இரண்டாவதாக பண்டிதர்கள் கூட்டமும் மூன்றாவதாக ராஜாக்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், உத்தியோ கஸ்தர்கள், ஆங்கிலம் படித்தவர்கள், செல்வந்தர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களின் கூட்டமும் எதிர்பாராத அளவில் விஜயம் செய்திருந்தது மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும். மற்றபடி பெண்மணிகள், தொழிலாளர்கள், ஏழைமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொடுமை செய்யப்பட்டவர்கள் ஆகியவர்கள் மற்ற எல்லாரையும் விட அதிகமாகக் கூடியிருந்ததாலும் அவர்களே மகாநாட்டுக்குச் சொந்தக்காரர்களானதினால் அவர்கள் வந்திருந்ததில் நாம் ஒன்றும் அதிசயப்படுவதற்கில்லை. எனவே இம்மாதிரி குறிப்பிடத்தகுந்த அளவு மகாநாட்டின் பெருமைகள் ஒரு புறமிருக்க மகாநாட்டின் தீர்மானங்களைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.
இம்மகாநாட்டில் சுமார் இருபது தீர்மானங்கள் வரை நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. அவைகளில் சைமன் கமிஷன் பகிஷ்காரம் கூடாது என்றும் நேரு கமிட்டி ரிப்போர்ட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும்
குடி அரசு - 1929 () 104.
செய்யப்பட்ட தீர்மானங்களைப் பற்றி அரசியல் துறையில் இருப்பவர்கள் என்பவர்களில் ஒரு சிறு சாரருக்கு அபிப்ராய பேதமிருக்கலாம். அதற்கு நம்முடைய சமாதானம் என்ன வென்றால், முதலாவதாக நமது சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் நிர்வாக சம்மந்தமான சீர்திருத்த விஷயங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கு இடமில்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் திட்டங்களும் நிறை வேற்றப்படும்போது ஜனங்களின் உதவியை எப்படி எதிர்பார்க்க வேண்டி யிருக்கின்றதோ அதுபோலவே அரசாங்க உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஆதலால் அந்த அளவுக்கு அரசியல் தீர்மானம் இருந்துதான் தீர வேண்டியிருக்கின்றது. இன்றைக்கும் சுயமரியா
தைக் கொள்கைகளில் அநேக விஷயங்களை நிறைவேற்ற வொட்டாமல் செய்ய நமது எதிரிகள் அரசாங்கத்தின் துணையை எதிர்பார்க்கின்றதை நாம் பார்க்கின்றோம். அநேக விஷயங்கள் அரசாங்க சட்டத்தின் மூலம் செய்யப் படவேண்டியிருக்கின்றதையும் உணர்ந்து அவைகளுக்கு சட்டசபைகளின் மூலம் சட்டம் செய்ய முயன்று கொண்டுமிருக்கின்றோம்.
உதாரணமாக, ஆண்களுக்கொரு சட்டம், பெண்களுக்கொரு சட்டம் என்பதாகவும், பார்ப்பனருக்கொரு சட்டம், பார்ப்பனரல்லாதாருக்கொரு சட்டம் என்பதாகவும் உயர்ந்த சாதி என்பவர்களுக்கொரு சட்டம், தாழ்ந்த சாதி (தீண்டப்படாதவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்! என்பவர். களுக்கொரு சட்டம் என்பதாகவும் இருந்து வருவதையும் அவற்றை நாம்
தினமும் அனுபவித்து வருவதையும் மாற்றி எல்லோருக்கும் சமமான நீதி ஏற்படுத்த வேண்டுமானால், நமக்குள்ளாகவே நாம் செய்து கொள்ளும் படியாக எந்தக்காரியம் செய்தாலும் சரி, எந்தத் தீர்மானம் செய்தாலும் சரி, அவைகளினால் நமது லட்சியத்தை நிறைவேற்ற முடிவதில்லை என்பதும், அவைகளுக்குக் கண்டிப்பாய் அரசாங்கத்தின் மூலம் பழய சட்டங்களை: மாற்றி புதிய சட்டங்கள் செய்தே தீரவேண்டும் என்பதும் யாராலும் மறுக்கப் படமுடியாத உண்மைகளாகும். அல்லாமலும், அவைகளில் அநேகவற்றிற்கு சட்டம் செய்யக் கூட நம்மவர்கள் ஏகமனதாய் ஒப்புக் கொள்வதாயிருந் தாலும்கூட முதலில் அரசாங்க அனுமதியையும் பெற வேண்டியதான நிபந்தனைகளும் இருக்கின்றன.
இஃதொருபுறமிருக்க, அரசாங்கம் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் அரசாங்க உத்தியோகங்களும் பதவிகளும் எல்லோ
ருக்கும் பொதுச் சொத்து என்பதையும் அதுபோலவே அரசாங்க வரிப் பணமும் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் யாராவது
மறுக்க முடியுமா? அது போலவே அப்பணத்திலிருந்து செலவு செய்யப்படும். ஒவ்வொரு காரியமும் எல்லாருக்கும் பொது என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே அப்பொதுக் காரியங்கள் உரிமைகள் எல்லாருக்கும் சமமாய் அனுபவிக்க சம சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டு
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மல்லவா. ஆதலால் இதற்கு நாம் அரசாங்க உதவி எதிர்பார்க்காமலிருக்க முடியுமா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.
உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும் பொது உரிமைகளில் அதிகமான பங்கை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மற்றவர். களை முன்னேறவிடாமல் தடுத்து சூழ்ச்சி செய்து முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரம் இக்காரியங்களுக்காக அரசாங்கத்தை எதிர்பார்ப்பது என்பது ஒரு சமயம் தங்களது சுயமரியாதைக்குப் பங்கமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய வெகுகுறைந்த உரிமைகளை அனுபவிப்பவர்களுக்கும் வெகு தாழ்ந்த பதவியில் தாழ்த்தப்பட்டிருப் பவர்களுக்கும் தங்கள் பதவிகளைக் கேட்பதும் விடுதலை பெறமுயற்சிப் பதும் ஒருக்காலும் அவர்களது சுயமரியாதைத் தத்துவத்திற்கு விரோதமானது
என்று எவரும் சொல்ல முடியாதென்றே கூறுவோம்.
ஆதலால் இந்தமுறையில் சைமன் கமிஷனிடம் கொடுமைப்படுத்தப் பட்டவர்களும் பிறரால் ஏமாற்றப்பட்டுப் பின்னணியில் தள்ளப்பட்டவர். களும் தங்கள் கஷ்டங்களையும் தேவைகளையும் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவது என்கின்ற முறையில் கமீஷனிடம் எடுத்துச் சொல்வதிலும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் ஏற்படுவதற்கு மார்க்க மில்லாத நேரு திட்டம் என்னும் அரசியல் திட்டத்தை சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இதுவரை அனுபவியாத மக்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பதிலும் குற்றமொன்றுமில்லையென்றே சொல்லுவோம். ஆகவே இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்த தல்லவென்றும் ஒருசமயம் இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்தவைதான் என்று சொல்லப் படுவதா னாலும், அவை உண்மையான சுயமரியாதைத் தத்துவத்திற்கு தள்ளப்பட முடியாத விஷயமேயாகும் என்றும் சொல்லுவோம்.
நிற்க, மக்கள் பிறவியில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்பது. இது இந்நாட்டு மக்களில் பல துறைகளில் உள்ள எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுவதானாலும் அதற்கு விரோத மாயுள்ள ஆதார விஷயங்களில் உள்ள பிடிப்பை விட்டுவிட அநேகர் சம்மதியாமல் இருப்பதையும், மற்றொரு புறம் அக்கொடுமைகள் நிலைத் திருக்க மதத்தின் பேரால் மகாநாடுகளும் பிரசாரங்களும் அரசாங்கத்தினிடம் தூதுகளும் நடைபெறுவதையும் பார்க்கும்போது நம் நாடு சுலபத்தில் அக்கொடுமைகளை ஒழிக்கத் தயாரில்லை என்பதும் உயர்வு தாழ்வுக் கொடுமையின் அஸ்திவாரம் இன்னதென்று பலருக்குப் புலப்படவில்லை என்பதுமே விளங்குகின்றது. அதுபோலவே வர்ணாசிரமப் பிரிவுப் பாகு பாடுகள் விஷயத்திலும் தேசாபிமானி, மகாத்மா, சீர்திருத்தக்காரர் என்பவர்.
கள் முதல் கொண்டு அவற்றை ஆதரிப்பதும் அதற்காதாரமான மதம், வேதம் முதலியவற்றைப் பற்றிப் பிரசாரம் செய்வதும், அவற்றிற்கு வேறு வியாக்கியானங்கள் செய்வதுமான நிலையிலேயே இன்னும் இருப்பதை சற்று
குடி அரசு - 1929 () 106
கூர்ந்து பார்த்தால் இது சம்மந்தமாக மகாநாட்டில் செய்யப்பட்ட தீர்மானங் களின் அவசியம் யாவருக்கும் நன்றாய் விளங்கும். நிற்க, அடுத்த படியாக,
வகுப்புப் பட்டங்களும் குறிகளும் விடப்படவேண்டும் என்னும்
தீர்மானத்தின் அவசியமும் அதுபோலவேதான். எப்படியெனில் மக்களு டைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்று பட்டு ஒரே லக்ஷியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங் களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும். மற்ற தீர்மானங்களைப் பற்றிய கருத்துகள் தொடரும்.
குடி அரசு - தலையங்கம் - 24.02.1929
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஓர்வில்
செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக்
கர், நாயுடு, செட்டியார். முதலியார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும்,
ராமம், விபூதி, பூணூல் முதலிய மதச்சின்னங்களையும் நீக்கிவிட்டவர்களின் ஜாபிதாவையும் இனி “குடி அரசுப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித் திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர்களும், மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப்படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
நிற்க, இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெயரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின்னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டுகின்றோம்.
(ப-ர்?)
குடி அரசு - அறிவிப்பு - 24.02.1929
குடி அரசு - 1929 () 108
செங்கற்பட்டு மகாநாட்டு தீர்மாணங்களும்
ஐஸ்முஸ் பத்திரிகையும்
செங்கற்பட்டு சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி சென்னை ஜஸ்டிஸ். பத்திரிகை ஒருவாறு புகழ்ந்து எழுதியிருப்பதாகக் காணப்பட்டாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி தனது அபிப்பிராயத்தை தெரிவித் திருப்பதில் மிக முக்கியமான தீர்மானங்கள் என்று பொது ஜனங்களால் கருதப்படும் தீர்மானங்கள் விஷயத்தில் அது தனக்கு உள்ள அபிப்பிராய பேதத்தை காட்டியிருக்கின்றதை நாம் மனப்பூர்வமாக வரவேற்று சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனெனில் அவரவர்களுக்குத் தோன்றும் எந்த விஷயங்களைப் பற்றியானாலும் அபிப்பிராய பேதங் களையும் அதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்களையும் எடுத்துச் சொல்ல யாவருக்கும் உரிமை உண்டு என்பதையும் ஒவ்வொரு அபிப்பிராய பேதத்தையும் கண்ணியமாய் வரவேற்று சமாதானம் சொல்ல வேண்டியது மிகவும் நியாயமானது என்பதையும் நாம் எப்போதும் வலியுறுத்தி வந்திருக் கின்றோம்.
ஆதலால் அம்முறையிலேயே ஜஸ்டிசின் சில தீர்மானங்களைப் பற்றிய அபிப்பிராய பேதத்தையும் அதன் நியாய விளக்கத்தையும் கவனிப்
போம். அதாவது,
கலியாண சம்மந்தமாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள உரிமை சம்மந்தமாகவும் செய்த ஒரு தீர்மானத்தைப் பற்றியும் கடவுளுக்கு வணக்கத்திற்கென்று பணம் செலவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத் தைப் பற்றியும் ஜஸ்டிஸ் எழுதுகின்றபோது, பொது ஜனங்கள் அத் தீர்மா னங்களுக்கு ஏகமனதாய் அபிப்பிராயம் கொடுக்கவில்லை என்றும் அன்றி
யும் அவர்கள் ஏகமனதான சம்மதத்தைப் பெற முடியாது என்றும் எழுதி இருக்கின்றது. இந்த இடத்தில் ஜஸ்டிஸ் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்ட வருத்தப்படுகின்றோம். ஏனெனில் கலியாண சம்மந்தமான தீர்மானத்திற்கு அவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு சிறு ஆட்சேபனை கூட கிளம்பவேயில்லை. ஒரே ஒரு வாலிபர் புருஷனும் பெண்ஜாதியும் பிரிந்து கொண்டால் குழந்தை யாரைச் சேர்ந்தது என்று மாத்திரம் கேட்டார். உடனே ஒருவர் தகப்பனைச் சேர்ந்தது என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்தவிதமான ஆக்ஷபனையாவது, ஆக்ஷ்பனைக்
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
குறியாவது அங்கு நிகழவேயில்லை. அப்படியிருக்க மகாநாட்டு கூட்டத்தில் அதற்கு ஒரு வித சம்மதமில்லை என்று எழுதியிருப்பது வருந்தத்தக்கதே
ஆகும். தவிர கோவிலில் கடவுளை வணங்கும் விஷயத்தில் பணம் செலவழிக்கக் கூடாது என்கின்ற தீர்மான விஷயத்தில் சிலர் ஆட்சேபனை இருந்தது மெய்தான். அதுவும் ஜஸ்டிஸ் கட்சி மாஜி பத்திராதிபரும் ஜஸ்டிஸ் பத்திரிகை காரியதரிசியும் ஜஸ்டிஸ் கட்சிக்காக நடத்தப்படும் தெலுங்கு பத்திரிகையாகிய “சமதரிசினி' பத்திரிகை ஆசிரியரும் ஆகிய மூவர்களே ஆட்சேபித்து பேசினர். அப்படிப் பேசியதிலும் சிலவு செய்ய வேண்டும் என்கின்ற கட்சிக்காக அவர்களில் யாராவது ஒரு நியாயமும் சொல்லவே யில்லை. அவர்களில் ஒருவர் நியாயமான சிலவு செய்யலாம் என்றார். மற்றவர் கல்பூரம் மாத்திரம் கொளுத்தலாம் என்றார். இன்னொருவர் இந்தியா வின் சிற்ப வேலை அலங்காரத்திற்கு கோயில்களை மீத்துவைக்க வேண்டி யிருப்பதால் சிலவு செய்துதான் தீரவேண்டும் என்றார்.
எனவே ஆக்்ஷ்பித்துப் பேசிய மூன்று கனவான்்௧ளுடைய பேச்சிலிருந்தும் இம்மாதிரி விஷயங்களில் ஜஸ்டிஸ் மனப்பான்மை எப்படி இருக்கின்றது என்பதை உணர மட்டும் முடிந்ததே தவிர வேறு சரியான காரணங்கள் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவே இல்லை.
“அவசியமான செலவை செய்ய வேண்டும்” என்றால் என்னவித மான செலவு என்று கண்டுபிடிக்க தெர்மா மீட்டர் எங்குபோய் கண்டு பிடிப்பது. அதை நிர்ணயமாக்க என்ன அவசியமும் ஆதாரமும் இருக்கின் றது? உலக ஜனத் தொகையில் மிக்க அதிகமான பாகத்தைக் கொண்ட கிறிஸ்தவர்கள் மகமதியர்கள் கோவில்களில் கடவுள் வணக்கத்திற்கு என்றும் கடவுளை வணங்கும்போது எவ்வளவு பணம் செலவு செய்கின்றார்கள் அல்லது எவ்வளவு பொருமான சாமான் செலவு செய்கின்றார்கள் என்பதை யோசித்தால் இந்தத் தீர்மானம் எப்படி மக்களுக்கு நாஸ்திகத்தை போதிக்கக் கூடியதாகும் என்பது விளங்காமல் போகாது. அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் பிரயத்தனத்தால் தேவஸ்தானச்சட்டம் நிறைவேறி இன்றைக்கு 3,4 வருஷங்களாயின. எந்தக் கோவில் செலவுகள் சுருக்கம் செய்யப்பட்டது அல்லது யாத்திரைக்காரர்கள் செலவை மட்டுப்படுத்த முடிந்தது. அல்லது கடவுளுக்காக பொது ஜனங்கள் கொடுத்த பணங்களில் எந்தப் பாகம் மீதி செய்யப்பட்டது. வருகின்ற பணம் “கிரமப்படி” “முறைப்படி” செலவாகின் றதா என்று பார்க்கின்ற அதிகாரம் தவிர தினம் எத்தனை வேளை பூஜை எத்தனை பிடி அரிசி எத்தனை விளக்கு எத்தனை எண்ணை எத்தனை பால்விட்டு அபிஷேகம் என்பதை தணிக்கைப் பார்த்து சரியாய் கொஞ்சமும் இறையாமல் செலவு செய்யப்படுவது தவிர வேறு காரியமோ அதிகாரமோ சுதந்திரமோ அந்தச் சட்டத்தில் இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
இவ்வளவு கோடி ரூபாய்கள் நமது கடவுள்களுக்கென்று நாம்
குடி அரசு - 1929 () 110
செய்தும் இன்றையத் தினம் நமது நாட்டில் கண் ஆஸ்பத்திரி மருத்துவ ஆஸ்பத்திரி பேர்போன உயர்தர கலாசாலை தீண்டாதார் பள்ளிக் கூடம் அனாதைகள் ரக௲ஷண ஆஸ்ரமம் ஆகியவைகள் எல்லாம் முக்கியமாக கடவுளைத் தொழ கோயிலில் ஒரு காசு கூட செலவு செய்ய வேண்டியில்லாத மதத்தை சாமியை சேர்ந்த மக்களால் அவர்கள் இனத்தாரின் தர்ம பணத்தில் தானே நடைபெறுகின்றது. அன்றியும் நாமும்கூட சற்றும் “தேசிய சுயமரியாதை” என்பது ஒரு சிறிதுமில்லாது அவைகளில் போய் சிகிச்சை செய்து கொண்டும் படித்துக் கொண்டும் இருந்துவிட்டு நம்முடைய சுவாமிக்கு பூஜைக்கும் வணக்கத்திற்கும் செலவு செய்வதை மாத்திரம் நிறுத்த முடியாது என்றால் இதில் ஏதாவது அறிவு இருக்கின்றதா என்று கேட் கின்றோம். தவிர “கற்பூரமாவது பற்றவைக்க வேண்டாமா” என்பது. இதை இந்த மகாநாட்டில் பேசியது ஒரு சிறிது கூட ஞானமில்லாமல் பேசிய வார்த்தைகள் என்றுதான் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம். இவ்வார்த்தைகள் வர்ணாசிரம சனாதனதர்ம மகாநாடுகளில் பேசுவது ஒரு
சமயம் கிரமமும் அவசியமுமான வார்த்தைகளாயிருக்கலாம்.அப்படிக்கின்றி
சீர்திருத்தம் பகுத்தறிவு தன்மானம் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்ட சுயமரியாதை மகாநாட்டில் சாமிக்குக் கற்பூரம் பற்ற வேண்டு மென்றால் இது எவ்வளவு வெட்கக் கேடான காரியம். பழமோ தேங்காயோ பொங்கலோ புளியோதரையோ செலவு செய்தாலாவது சுவாமி தின்கா விட்டாலும் சூட்சிக்காரச் சோம்பேறிப் பார்ப்பானுக்கு ஒரு மூடியும், வைத்துப் பூசை செய்த முட்டாளுக்கு ஒரு மூடியாவது கிடைக்கும். மற்றும் அவர்கள் தின்னவாவது உதவும். வெறும் கற்பூரத்தை வாங்கி கொளுத்தி அதன் கரிப்புகையை மூக்கிலும் வாயிலும் ஏற்றிக் கொண்டு அதன் கிரயத்தை சைனாக்காரனுக்கும் ஜப்பான்காரனுக்கும் போய்ச் சேரும்படி செய்வதில் யாருக்கு என்ன லாபம். கற்பூர வெளிச்சம் எதற்காக வேண்டும்? சுவாமி குருடா அல்லது நாம் குருடா அல்லது கற்பூரம் பற்றி வைத்து கும்பிட் டால்தான் நான் அந்தக் கும்பிடை ஏற்பேன் என்று சாமி சொல்கின்றதா? எதற்காக கல்பூரம் அவசியம்? அதில் எவ்வளவு கொழுப்பு கலந்திருக்கின்றது என்பது யாவருக்கும் தெரியாதா? இவற்றை சற்றும் கவனியாமல் “சாமிக்கு
கற்பூரம் கூட வேண்டாம் என்கின்றார்களே இது என்ன அநியாயம்” என்று பேசுவதில் என்ன லாபம்? இதில் பகுத்தறிவு உண்டா அல்லது சீர்திருத்தம் உண்டா அல்லது மானம் வெட்கம் உண்டா என்று தான் கேட்கின்றோம். “இந்தியாவில் சிறந்த புண்யபூமி”யாகிய காசியில் உள்ள விஸ்வேஸ் வரசுவாமி வணக்கத்துக்குகூட கற்பூரம் பழம் தேங்காய் ஒன்றும் கிடையாது. தண்ணீரை அதன் தலையில் கொட்டி ஏதாவதொரு இலைகளை அதன் தலையில் போட்டு கையால் தொட்டுக் கண்ணில் ஒத்திவைத்துக் கொள்வதை இன்றைக்கும் யாரும் பார்க்கலாம். அப்படியிருக்க இத்தீர்மானம் ஜஸ்டிஸ்:
கட்சி பிரமுகர்களுக்கு அதிலும் பார்ப்பனரல்லாதார் பணம் வீணாகாமல்
பார்த்துக் கொள்பவர்களுக்கு சுவாமிக்கு செலவு செய்ய வேண்டும் என்ற
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அவசியம் இவ்வளவு பலமாக பதிந்திருப்பது நமக்கு வேடிக்கையைத்
தருகின்றது. தவிர பழய ஞாபகச் சின்னத்தை காப்பாற்றவாவது சாமி வணங்கு முறையில் பணம் செலவு செய்ய வேண்டும் என்று மகாநாட்டில் மற்றொரு கனவான் சொன்னது நமக்கு இன்னமும் அதிசயமாய் இருக்கின்றது. பழய சின்னத்தைக் காப்பாற்றுவதற்கும் சாமி வணக்கத்திற்குச் செலவு செய்வதற்
கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது என்பது நமக்கு ஒரு சிறிதும் விளங்க வில்லை.பழய சின்னங்கள் இப்போது அநேகம் காப்பாற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம். அவர்கள் சுவாமி வணக்கத்தின் பெயரால் செய்யும் செலவைக் கொண்டு காப்பாற்றப்படவில்லை என்பது நாம் சொல்ல வேண்டியதில்லை. சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து இன்ன இன்ன சித்திர வேலைப்பாடுள்ள கட்டடங்களை சாமிகளை சர்க்கார் பழய சின்னங்களை காப்பாற்றும் திட்டத்தில் சேர்த்துப் பொதுப் பணத்திலிருந்து மற்றவைகளைப் போல் பாதுகாத்து வரவேண்டியது என்று உத்திரவுப் போட்டு விட்டால் தானாக காப்பாற்றப்பட்டுப்போகும். அப்படி இருக்க கட்டடத்தைக் காப்பாற்ற சாமி கும்பிடுகின்றவர்கள் எதற்காக செலவு செய்ய வேண்டும் என்றுதான் கேட்கின்றோம். பொதுவாக சென்னை நாகரீகம் பெற்ற
நகரம் என்று சொல்லுவது வழக்கமாயிருந்தாலும் அது வெளிவேஷத்தில் நாகரீகம் பெற்றிருக்கின்றதே தவிர உள்ளுக்குள் பகுத்தறிவிலும் மூட நம்பிக்கைகளிலும் பட்டிக்காடு என்பவைகளைவிட மோசமான புத்தியையும் மனப்பான்மையையும் உடையது என்றே சொல்லுவோம். சென்னை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூட பக்தியில் மிகுதியும் நம்பிக்கை உண்டு. அதாவது ஒரு கிழவி கழுத்தில் மொத்தமாக மஞ்சள் நூலை போட்டுக். கொண்டு கையில் நெருப்புச் சட்டியை ஏந்திக்கொண்டு இரண்டு மூன்று மாரியாயி பாட்டுப் பாடிவிட்டால் ஐக்கோர்ட்டு ஜட்ஜி வீட்டுப் பெண்கள் முதல் கொண்டு ஷெரீப் வீட்டுப் பெண்கள் முதல் கொண்டு நகர சபைத் தலைவர் வீட்டுப் பெண்கள் முதல் கொண்டு அக்கிழவி காலில் தண்ணீரைக் கொட்டி சாம்பிராணிப் புகை போட்டு கற்பூரம் பற்றவைத்து காலில் விழுந்து வரங் கேட்பதை இன்றும் பார்க்கலாம். ஆண்களும் மேல் வேஷ்டியை இடுப்பில் வரிந்துகட்டி கீழே விழுந்து கும்பிட்டு வரம் கேட்டு வேப்பி லையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொள்வதையும் பார்க்கலாம். எனவே இவர்கள் கற்பூரம் பொருத்தி வைப்பதற்கு வாதாடுவதில் அதிசயமில்லை. ஆனாலும் இவர்கள் வார்த்தைக்காக கூட்டத்தில் இருந்தவர்களில் 100க்கு 99 பேர் என்ன மதிப்பு கொடுத்தார்கள் என்பது அங்கிருந்தவர்களுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். நிற்க அடுத்த தீர்மானமாகிய கலியாண விஷயத்தைப் பற்றியும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருக்கும்படி செய்த
அடுத்தத் தீர்மானத்தைப் பற்றி மறுமுறை எழுதுவோம்.
குடி அரசு - கட்டுரை - 03.03.1929
குடி அரசு - 1929 () 112
6 & Y சீதை து - 33.
“ராவணனுக்கு சீதை மகன்" “ராமனுக்கு பல வபண்டாட்முகன்””
இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக் கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டன வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே
நேரில் பார்த்ததாகவும் தாம் எழுதிய “இந்துமதம்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் “இராமாயண விலாசம்” என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுர கர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் “இதர இராமாயணங்கள்” என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கின்றன. (அப்புஸ்தகத்தின் விலை ரூ. அவையாவன :- ஜைன
ராமாயணம், பெளத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் என்பவைகளாகும்.
இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும். கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம். இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்ப வில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பெளத்த ராமாயணங்கள்
பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறு பட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாற்றுப் புத்தக சாலையில் வைக்கப்பட்டிருப்பதாக பதிப்பாசிரியரே
113 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்
பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1 அபரா ஜிதை, 2. சுமத்ரை, 3-கைகேயீ, 4.சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே
குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லக்ஷ்மணன் பிறந்ததாகவும் கையேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்கு
சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது..
இதுபோலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லகஷமணனுக்கு 18 பெண் சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டாளென்றும் சொல்லப்
பட்டிருக்கின்றது.
மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர் 1.சீதை, 2.பிரபாவதி,3.ரதினிபா,
4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.
பெளத்த ராமாயணத்திலும், தசரத ராஜனுக்கு பதினாயிரம்மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லக்ஷ்மணன் என்பவர்களான இரண்டு ஆணும் சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்கு பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்கு பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப் படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளை பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக் கனுப்பிவிட்டான் என்றும் பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன்
தகப்பனார் இறந்த பிறகுதான் நான் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரகைஷயையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும், பன்னிரண்டு வருடமான பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து
குடி அரசு - 1929 () 114
பட்டம் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது. இவைகளை மெய்ப்பிக்க திரு. அய்யங்கார், அந்த காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10.12 -சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும். அவளை தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந் தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள். தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லை யென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட
புராணத்திலும் ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட் டிருக்கின்றார்.
அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், “எவனொருவன் தன்னு டைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத்
தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு'” என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணனானவன்ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போனதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவணனுக்கு உண்மையில் ராமன் தன் தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும், தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.
மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்துவிட்ட
தாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும் குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகின்றார். அதாவது, “சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒரு வரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார்.
எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 45 - ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற ராமாயணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக் கூடவில்லை.
குறிப்பு:-ஆனந்த விகடன் வருஷ அனுபந்தத்திற்கு எழுதியது.
குடி அரசு - கட்டுரை - 03.03.1929.
குடி அரசு - 1929 () 116
செங்கல்பட்டு மகாநாட்முண் தீர்மாணங்கன்
11
ஜாதி வகுப்பு வித்தியாசத்தைக் காட்டும் பட்டங்களையும் சமய வித்தியாசத்தைக் காட்டும் குறிகளையும் விட்டுவிடவேண்டும் என்று செய்த தீர்மானம் நாட்டின் ஒற்றுமைக்கு மிகுதியும் அத்தியாவசியமானது என்பதைப் பற்றி முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
இத்தீர்மானத்தில் பொறாமை கொண்ட சில விஷமக்காரர்கள்: வகுப்புப் பட்டம் நீக்க வேண்டும் என்கின்றவர்கள் வகுப்பு மகாநாடுகளில்
கலந்து கொள்ளலாமா என்கின்ற ஒரு பிரசினையை கிளப்பிவிட்டிருக் கின்றார்கள். இதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்பு மகாநாடுகள் கூட்டி அவற்றில் இவ்விதத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றி அவற்றை முதலில் தங்கள் தங்கள் வகுப்புகள் என்பவைகளுக்குள் அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வகுப்பு வித்தியாசங்களை ஒழியுங்கள் என்றுதான் கேட்கின்றோம். அதற்காகத்தான் வகுப்பு மகாநாடுகள் கூட்டுங்கள் என்கின்றோமே ஒழிய வேறில்லை. உதாரணமாக ஒரு வாணிய வைசிய மகாநாட்டில் நாம் பேசும் போது அவர்களுடைய பூணூலை எடுத்து விடும்படியும் தங்களை வைசியர்
கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றே கேட்டுக் கொண்டோம், அது போலவே நாடார் க்ஷத்திரிய வகுப்பார் கூட்டத்தில் பேசும் போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் பூணூலை எடுத்து விடும்படியும் பேசினோம். அதுபோலவே நாயுடுமார்கள் மகாநாட்டில் பேசும்போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட்டுவிடும்படியே கேட்டுக் கொண்டோம். இம்மாதிரி சிறிதாவது விட்டுவிடவும் செய்தோம். ஆதலால் வகுப்புப் பிரிவுகள் எத்தனை உண்டோ அத்தனை வகுப்பும் மகாநாடுகள் கூட்டி வித்தியாசங்களை ஒழிக்க தீர்மானங்கள் செய்து கொள்ளாவிட்டால் எப்படி இந்தக் கொள்கைகள் ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் போய்ப் புகுந்து வகுப்பு நோயைத் தீர்க்க முடியும் என்பது நமக்கு விளங்காது. மற்றும் இப்போது ஆதிதிராவிட மகாநாடுகள் கூடுவதால் எவ்வளவு தூரம் அச் சமூகத்திற்கு உணர்ச்சி வந்து அவைகள் முன்னேற இடமேற் பட்டிருக் கின்றது என்பதை கவனித்தால் வகுப்பு மகாநாட்டின் அவசியம் விளங்கும்.
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால் அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும் சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த உண்மை உலகத்திலுள்ள எந்த யோக்கியனுக்கும் விளங்கியே தீரும்.
உதாரணமாக தென்னாட்டில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட்டப் படாமல் இருந்திருக்குமானால் பார்ப்பனர்களின் கொடுமை நாடு அறிந்து, அதிலிருந்து விடுதலையடைய மார்க்கம் ஏற்பட்டிருக்க முடிந்தே இருக்காது என்று சொல்லுவோம். அன்றியும் வகுப்பு மகாநாடுகள் அடிக்கடி கூடுவதால்
தாங்கள் மற்ற வகுப்பார்களால் அடையும் துன்பமும் அதிலிருந்து விடுபட்டு மற்ற வகுப்பார்களும் தாங்களும் ஒற்றுமையாயிருக்க மார்க்கமும் அவசி யமும் தானாகவே ஏற்பட்டுவிடும். எனவே வகுப்பு வித்தியாசங்களால் வயிறு வளர்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலச் சோம்பேரிகளைத் தவிர பொதுநலத்தில் கருத்துள்ள மற்ற யாவருக்கும் வகுப்பு வித்தியாசங் களை ஒழித்து ஒற்றுமைப்பட வகுப்பு மகாநாடுகள் கூட்டப்படுவது எந்த
விதத்திலும் ஆபத்தாய் தோன்றாது.
ஜாதி பேதத்தை ஆதரிக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.
இந்தத் தீர்மானத்தை எந்தவிதமான தீர்மானத்தைக் கொண்டும் யாரும் எதிர்க்க முடியாதானாலும் சமயத்தின் பேராலும் வேத சாஸ்திர புராணத்தின் பேராலும் தங்களது நித்திய வயிறு வளர்ப்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும் இத் தீர்மானம் ஒருக்காலும் திருப்தியை அளிக்காது என்பதோடு அவர்களது சூகஷி விஷமப் பிரசாரம் இரகசியமாய் நடந்துதான்
தீரும்.
இத்தீர்மானத்தின் கருத்துப்படி பார்த்தால் முக்கியமாக இந்து மதக் கொள்கைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் பின்பற்றக் கூடாது என்பதாகக் காணப்படுகின்றது என்றுதான் ஒவ்வொருவருக்கும் தோன்றும். ஏனெனில் உலகத்திலுள்ள எல்லா முக்கிய மதங்களைவிட இந்து மதம் என்பதிலும் அதன் ஆதாரங்கள் என்பதான வேத சாஸ்திர புராணங்களில் தான் ஜாதி வகுப்பு பிரிவும் பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது. ஆதலால் இத்தீர்மானம் மிகுதியும் இவற்றை குறை கொள்வதாக நினைப்பதில் அதிசயமில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை உண்மையில் இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், இருப்பதாக கருதிக் கொண்டிருப்பதும் அதன் ஆதாரங்கள் என்று சொல்லப்படுவதும் ஒரு சிலருடைய சுயநலத்தாலும் நமது மக்களு டைய அறியாமையினாலும் வழங்கி வரும் ஒரு வெறும் மயக்க உணர்ச்சியே தவிர வேறில்லை என்றும், அம்மயக்க உணர்ச்சி ஒழியவே இந்துமதமும் அதன் ஆதாரங்களும் ஒழிய வேண்டுமென்கின்றோமே ஒழிய வேறில்லை.
குடி அரசு - 1929 () 118
உதாரணமாக இந்துமதம் என்பதாக ஒருமதம் இல்லை என்று சொல்லி வந்திருக்கும் புஸ்தகங்களுக்கும் விஷயங்களுக்கும் இதுவரை யாரும் பதில் சொன்னவர்களே கிடையாது. ஞான சூரியன் புஸ்தகத்தில் காணப்படுவது போல ஒரு நாட்டின் இழி மக்களுக்கு அந்நாட்டு பாஷையில் சொல்லப்பட்ட
ஒரு இழிவான பெயரே இந்து என்பது.
அப்பெயர் பெரும்பாலும் மகமதியர்களால் தங்கள் மதஸ்தர்கள் அல்லது தங்கள் நாட்டவர்கள் அல்லாத இந்தியா நாட்டவர்களுக்கு அளிக்கப் பட்டது. எப்படி ஐரோப்பியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடு கிறார்களோ அதுபோலவே மகமதியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடு வதற்கு பதிலாக இந்தியன் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லுவது போல இந்தி, அரபி, உருது முதலிய பாஷைகளில் இந்து என்று சொல்லி அழைத்தார்கள். இந்த நிலையில் இந்திய மக்கள் எல்லோரையும் குறிப்பிட வேறு பெயர் சமயத்தின் பேரிலோ நாட்டின் பேரிலோ ஜாதியின் பேரிலோ ஒரு குறிப்பும் இல்லாதிருந்தால் இந்து என்கின்ற பெயரே எல்லோரையும் சேர்ப்பதற்கு ஒரு பொதுப் பெயராகவும் ஏற்பட்டதோடு ஆரியர்கள் கொள்கைகளுக்கே இந்து சமயம் என்னும் பெயர் தரப்பட்டு அது இந்தியர்.
கள் எல்லோர்கள் தலையிலுமே சுமத்தப்பட்டுவிட்டது. உதாரணமாக இந்து மதம் என்கின்ற வார்த்தை உச்சரிப்பு கூட சுமார் ஒரு 400, 500 வருஷங்க
ளுக்கு முன்னால் இருந்ததாக எண்ணுவதற்கு ஒரு ஆதாரத்தையும் காணோம். சைவம் என்கின்ற பெயரும் சிவன் என்றால் அன்பு என்கிற வியாக்கியானமும் கூட ஆரியக் கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங் களையும் வேள்வி கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும் அழிக்கவும் வந்த புத்த இயக்கத்தை எதிர்த்து அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்டதே தவிர மற்றப்படி அச்சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும் தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதச் சம்மந்தமும் இருப்பதாகவோ இதுவரையெவ்வித ஆதாரமும் வெளிப்படுத்தப்படவில்லை. நாளாக நாளாக சைவ ஆரியக் கொள்கை கொண்ட சமயம் தமிழ் மக்களுக்குப் பொருத்தமில்லாமல் போவதை அறிந்த
சில தமிழர்கள் ஆரியர் சைவ சமயம் என்பது வேறு தமிழர் சைவ சமயம் என்பது வேறு என்று பிரித்து ஆரியக் கொள்கைகளை கண்டித்து ஒதுக்கி அதற்கு பதிலாகத் தமிழ் மக்களுக்கு பொருத்தமானது என்பதாக சிலவற்றை தாங்களே நினைத்து, வேறு சில கொள்கைகளையும் வியாக்கியானங் களையும் புகுத்தித் தமிழ்ச் சிவன், தமிழ்வேதம், தமிழ்க் கடவுள் என்பதாக வெள்ளரிக்காய்க்கு பூண் போடுவது போல் இழுத்துப் பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அன்றியும் சைவ சமயத்திற்கு ஜாதி மத வகுப்பு பேதங்கள் கிடையாது என்று சொல்லி சமரசத்தைப் பற்றி பேசுவதிலும் குறைவில்லை. ஆனால் உட்புகுந்து பார்த்தால் சமயாச்சாரிகள் எல்லோருக்கும் ஜாதி உண்டு,
இது மாத்திரமல்ல. சைவக் கடவுள்கள் எடுத்த மனித ரூபங்கள் எல்லாவற்
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
நிற்கும் ஜாதி உண்டு. இதுமாத்திரமல்ல. சைவ புராணங்கள் எல்லாவற்றிலும். அவற்றை செய்தவர்கள், செய்யப்பட்டவர்கள் உள்பட ஜாதி உண்டு. எனவே சைவ சமயம் ஜாதிகள் ஏற்பட்டதற்கு பின்பு உண்டானதென்றும் அதுவும் ஜாதி மத பேதங்களை ஒழிக்கப் புறப்பட்ட பவுத்த சமண கொள்கை களுக்குப்பின் உண்டானதென்றும் சொல்லித் தீர வேண்டியிருக்கின்றது. அது போலவே வைணவ சமய மென்பதும். அது போலவே ஆரியக் கொள்கைகள். நாட்டில் பெரும்பாலோரால் வெறுக்கப் பட்ட காலத்தில் அதனுடைய அடிப்படைகளை மாத்திரம் நிறுத்திக் கொண்டு சற்று திருத்தப்பட்ட கொள்கைகளை வைத்து வெளியாக்கப்பட்ட சமயமாகும். ஆனாலும் அதுவும் வார்த்தை அளவில் சில நல்ல கருத்துக்கள் சொல்லப் பட்டாலும் வைணவப் புராணங்களும் கடவுள்களும் ஆச்சாரியார்களும் ஆழ்வார் களும் சகலமும் ஜாதி வித்தியாசம் கற்பிக்கக் கூடியதாகவே தான் இருந்து வருகின்றது.
இச்சமயத்தைச் சேர்ந்த சில பெரியார்கள் என்பவர்கள் மாத்திரம் ஜாதி வித்தியாசமில்லை என்று சொன்னதாகக் காணப்பட்டாலும் அதற்கும் பல நிபந்தனைகள் சொல்லப்பட்டிருப்பதையும் காணாமல் இருக்க முடியாது. எனவே ஜாதி வித்தியாசம் இயற்கை என்பதும் அதை ஒழிப்பதற்கு நிபந்தனைகள் வேண்டியிருப்பதால் அவ்விரு சமயங்களும் சமரசம் செயற்கை என்றும் விளங்குகின்றது.
குடி அரசு - தலையங்கம் - 03.03.1929
குடி அரசு - 1929 () 120
மதிப்புரை
“முன்னேற்றம்” என்னும் பத்திரிகை திரு.வெ.சி. நாராயணசாமியவர் களை ஆசிரியராகவும் திரு.ஜி.எஸ். சாரங்கபாணியவர்களை வெளியிடுவோ ராகவும் கொண்டு மலாய் நாட்டில் சிங்கப்பூரிலிருந்து வெளிவருவதாகும். இப்பத்திரிகையின் ஐந்து மலர்களைப் பார்த்ததில் இதன் கொள்கைகள். முற்றிலும், மக்களைத் தொன்று தொட்டுள்ள மூடப்பழக்க வழக்கங்களாகிய படுகுழியினின்றும் ஜாதி மதங்கள் என்கின்ற கொடிய விலங்குகளினின்றும், பார்ப்பனீயக் கொள்ளைக்காரர்களின் பெருந்துன்பங்களினின்றும் மீட்டு வாழ்விக்கும்படியானதும் ஒப்பற்ற சுயமரியாதைத் தத்துவங்களையும் கொண்டதாகவே இருக்கின்றன. இப்பத்திரிகையானது தன் பெயருக்கேற்ப மக்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களையே கொண்டு விளங்குவதால் இப்பத்திரிகையானது நம்மக்களுக்கு இன்றியமையாதவோர் நற்றுணை: யாகும் என்பது எமதபிப்பிராயம்.
ஆனால், தற்காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஜனங்களெல்லாம் பத்திரிகை பத்திரிகை என்பதாக ஏற்படுத்திக் கொண்டு மக்களை உபத்ரவிக் கிறார்கள் என்று சிலர் எண்ணவோ சொல்லவோ செய்யலாம். ஆனால் நாம் அதை புத்திசாலித்தனமானவைகளென்று மதிக்க மாட்டோம். ஏனெனில், ஒரு நாடோ ஒரு சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அதன் பரப்பெங்கும் பத்திரிகைகளும் பாடசாலைகளுமாகவே மிளிர வேண்டும். இதை யுத்தேசித்தே தான் சில அறிவிற் சிறந்த பெரியார்கள் எந்தச் சமூகத்தை யேனும் எந்த நாட்டையேனும் முன்னேற்றமடைந்திருக்கிறதா? இல்லையா? என தெரிந்து கொள்ளவேண்டுமானால் அவர்கள் அந்த நாட்டினரையோ சமூகத்தினரையோ கண்டால், உங்களுக்கென எத்தனை பத்திரிகைகள்? எத்தனை பாட சாலைகள்? எத்தனை கலாசாலைகள் இருக்கின்றனவென்னும் கேள்வி கிளத்துகின்றனர். ஆகவே, பத்திரிகைகளின் எண்கள் மிகுவதைத் தாழ்வாக நினைக்கவோ சொல்லவோ சற்றும் இடமில்லை. ஏனெனில் -
பத்திரிகைதான் முன்னேற்றமடையக் கருதும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஆசான். பத்திரிகைதான் மக்களுக்கு அறிவையூட்டி வளர்க்கும் தாயினுமினியது. பத்திரிகைதான் புத்தி புகட்டும் ஓர் நற்றந்தை. பத்திரிகைதான் ஆபத்துக்குதவும் நற்புதல்வன். பத்திரிகைதான் உண்மைத் தோழன். அதுவே ஐம்புலன்களையுமொருமித்து இன்பம் நுகரச் செய்யும்
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
உத்தம மனைவி. அதுவே பெருஞ்செல்வம். அதுவே நெருங்கிய சுற்றம். அதுவே இன்பந்தரு பெருவீடு. அதுவே நோயகற்றும் சஞ்சீவி, அதுவே இன்னமுது, அதுவே உண்மைச்சேவகன். அது மக்கள் வசிக்கும் ஒவ்வொரு இல்லந்தோறும் வந்து, சுயேச்சையும் சுவாதீனமற்று அஞ்ஞானத்திலும் சோம்பலிலும் பசியிலும் தரித்திரத்திலும் உறங்கிக் கிடக்கும் மக்களை யெழுப்பி உய்விக்கும் நற்றுணைவன்.
வெறும் நாட்டுச் செய்திகளையே தமக்கணியாகத் தாங்கியும் ஒரு சில தொகையினரான கூட்டத்திற்கு மட்டில் நலத்தைத் தருவதாகவும், ஆசிரியர் களின் கியாதி, லாபப் பூஜைகளுக்காகவும், மக்களின் பொருள்களையும், அவர்களின் அருமையான பொழுதுகளையும் கொள்ளை கொண்டு தமது ஒரு சாணை நிரப்பிப் பெருமைச் சின்னங்களை பரிமாறி காலத்தைக் கழித்து வரும் சில போலிப் பத்திரிகைகள் போன்றல்லாமல், ராயல் 1க்கு 16ல் 20 பக்கங்கள் கொண்டு மலர்கள் தோறும் கண்கவரும் தலைவர்களின் சித்திரப் படங்களாலும் நல்ல பதிப்புள்ள நல்ல தமிழில் பண்டித பாமர ரஞ்சனமான முறைகளில் உயர்ந்த அனுபவமும் பரோபகாரமுள்ள அறிவாளிகளால்
எழுதப் பெற்றக் கட்டுரைகளைக் கொண்டதோடு ஒவ்வொரு மலர்களிலும் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு வாக்கியங்களிலும் சுயமரியாதைத்
தத்துவத்தின் தேன்றுளிகள் கசிந்தொழுகும் மாதிரியிலமைந்து ஒளிர்வதால் இக்காலத்துக்கேற்ற ஓர் நற்பயனை மக்கள் யாவருமிதை யாதரிப்பார்களென நம்புகிறோம்.
இதன் வருட சந்தா
உள் நாட்டிற்கு 2௦5 இந்தியா சிலோனுக்கு ரூ5
கிடைக்குமிடம்.
மானேஜர், “ முன்னேற்றம் ஆபீஸ்”
125, சிலிகி ரோடு, சிங்கப்பூர்
குடி அரசு - மதிப்புரை - 03.03.1929.
குடி அரசு - 1929 () 122
கல்பட்டு L. தீர்மாணங்களும் எஸ்முஸ் பத்திரிகையும்
செங்கற்பட்டுத் தீர்மானங்களைக் குறித்து ஜஸ்டிஸ் பத்திரிகை எழுதிய அபிப்பிராயத்தைப் பற்றி, சிறிது சென்றவாரம் அதாவது கடவுள் வணக்கத் திற்கு பணம் செலவு செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி எழுதிவிட்டு, கல்யாணம், கல்யாண ஒப்பந்தவிலக்கு என்கின்ற விஷயங்களைப் பற்றி இவ்வாரம் எழுதுவதாய்க் குறிப்பிட்டிருந்தோம்.
கல்யாணம்
கல்யாணம் என்பது என்ன? அது மக்களின் வாழ்விற்கும் இயற்கை: உணர்ச்சிகளுக்கும் அவசியமான ஒரு காதனமே ஒழிய மற்றபடி வேறு ஏதாவதான அதாவது “தெய்வீகத்தன்மை” கற்பிக்கக் கூடியதான விஷயங்
கள் அதில் என்ன இருக்கின்றது என்பதை நாம் அறிய முடியவில்லை. ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கும் திருப்திக்கும் இன்பம் அனுபவிப்பதற்கும் என்று எப்படி சொத்து, உத்தியோகம், கீர்த்தி, நல்ல துணிமணிகள், அழகும்.
அறிவும் உள்ள குழந்தைகள், அதிகமான சவுகரியமும் பெருமையும் தரத்தக்க வீடுகள், மனமொத்த நண்பர்கள் ஆகியவைகளை அடைய விரும்புகின்றானோ அதுபோலவே ஒரு ஆண் ஒரு பெண்ணையும் ஒரு பெண் ஒரு ஆணையும் வாழ்க்கைத் துணையாக விரும்புவதும், அவ்
விருப்பப்படி ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்து தங்களுக்குள் திருப்தி உண்டானபின் தங்கள் இருவருடைய வாழ்க்கைக்கும் இன்பத்திற்கும் ஒத்தபடி செய்து கொள்ளும் ஒப்பந்தந்தான் கல்யாணம் என்று சொல்லப் படுவதாகும். எனவே இதில் “தெய்வீகத்திற்கோ” “ஆத்மார்த்தத்திற்கோ” என்ன வேலை இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.
சொத்து, வீடு ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளிடம் கொஞ்சுதல், சிநேகிதர்களின் மூலம் மகிழ்ச்சி அடைதல் ஆகியவற்றிலும் ஆத்மார்த்தமும்
தெய்வீகமும் இருக்கின்றது என்றால் அந்த அளவுக்கு ஆத்மார்த்தத்தையும் தெய்வீகத்தையும் கல்யாணத்திலும் வைத்துக் கொள்வதில் நமக்கு அதிக. கவலையில்லை. ஆனால் “அவைகள் எல்லாம் மானுவீகத்தில் சேர்ந்தது, கல்யாணம் மாத்திரம் தெய்வீகத்தில் சேர்ந்தது” என்றால் அதை நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியவே முடியாது என்கின்றோம். அன்றியும்
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மற்றெல்லா விஷயங்களையும் விட மானுவீக வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஆண்பெண் இருபாலருக்கும் மிகவும் தெளிவானதாகவும் மற்றெல்லாவற்றையும்விட அதிக சுதந்திரமும் சுயேச்சையும் உடையதா கவும் இருக்க வேண்டுமென்றும் சொல்லுவோம். ஏனெனில் கல்யாணம் என்பதில் ஆண்பெண் இருவருக்கும் அதிக நம்பிக்கையும் ஒற்றுமையும் வேண்டியிருப்பதால் இருவருக்கும் தெளிவும் சுதந்திரமும் அதிகம் வேண்டி யிருக்கின்றதென்கின்றோம். ஆனால் இப்போதைய பெரும்பான்மையான கல்யாணங்கள் என்பவைகள் ஒரு சிறிதும் மனிதத்தன்மைக்குப் பொருந்தி னவையல்லவென்றே சொல்லுவோம். முதலாவது ஆணும் பெண்ணும் அல்லது ஆணோ பெண்ணோ அறியாமைப் பிராயத்தில் இருக்கும்போதே கல்யாணங்கள் வேறு ஒருவரால் நடத்தப்படுவது. இரண்டாவது தாலி கட்டும் சடங்கு வரையில் சில சந்தர்ப்பங்களில் தாலி கட்டி சிலநாள் ஆகும் வரையில் கூட ரூபத்தைப் பொறுத்த வரையில் கூட பெண் எப்படிப்பட்டது என்று ஆணுக்குத் தெரியாமலும் ஆண் எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குத் தெரியாமலும் இருக்க நேரிடுவதோடு, குணங்களைப் பற்றியோவென்றால் கல்யாணமாகி 2, 3,4- வருஷங்களுக்குக் கூட இருவர் குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள முடியாமலும் சில சந்தர்ப்பங்களில் சரீர சம்மந்தமாகி 3, 4 - வருஷங்கள் வரையில்கூட ஒருவரை ஒருவர். நன்றாய் தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதோடு ஆண் பெண்ணைப்
பற்றி சிறிதும் கவலை இல்லாமல் இருப்பதும், பெண் ஆணின் தாய், தகப்பன்மாருக்கும் அடிமையாக வாழ்க்கைப்பட்டதாக கருதிக் கொண்டு ஒரு வேலையாளாகவே இருக்க வேண்டியதோடு வெறும் ஒருவனுடைய புணர்ச்சி உணர்ச்சிக்காகத்தான் தயாராய் அவனுடைய சமயத்தை எதிர்ப்
பார்த்துக் கொண்டு காத்திருக்க வேண்டியதான ஒரு நகரும் யந்திரம்போல் இருப்பதும் பெண் தனக்கு தன் தேவைக்குத் தேவையான சமயத்திற்கு எந்தவிதமான பரிகாரமும் கிடையாது என்பதாகத் தீர்மானித்து தனக்கும் இயற்கை உணர்ச்சி என்று ஒன்று இருப்பதாகவே கருதக் கூடாது என்றும் நிர்ப்பந்தப்படுத்தி வருவதுபோலாகவும் இருக்கின்றது. இதை யாராவது மறுக்கமுடியுமா? என்று கேட்கின்றோம்.
அன்றியும் ஒரு பொதுமகள், அல்லது விலைமகள் என்பவள் தனக்குள்ள இயற்கை உணர்ச்சியைத் தன் இஷ்டம் போல் அனுபவிக்கவும் அதற்கும் தன் இஷ்டம்போல் விலை பெறவும் வாழ்க்கையில் தன் இஷ்டம் போல் சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் இருக்கவும் நமது சமுதாயத்தில் தாராளமாய் இடமளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வாழ்க்கையில் ஈடுபடுத் தப்பட்ட “தெய்வீகம்” என்று சொல்லத்தக்கதான கல்யாணம் செய்து கொண்ட நமது பெண்கள் வெறும் வயிறு வளர்ப்புக்காகவும் உடலை மறைக்கும் துணிக்காகவும் மாத்திரம் வேறு மனிதனுக்குத்தான் ஒரு அறிவும் உணர்ச்சியும் அற்ற நகரும் யந்திரம்போல் இருந்து கொண்டு இருக்க வேண்டியதாயிருக்கின்றது. பெண்ணுக்கு புருஷனிடமிருந்து எவ்வித
குடி அரசு - 1929 () 124
ஒப்பந்தமும் வாங்க உரிமையில்லை. அவன் தன் கையால் தாலி கட்டிய பெண்ணை அன்று முதலே வேண்டாம் என்று சொல்லி விடலாம். (சொல்லி விடுகிறார்கள்) தாலி கட்டும் முன்பும் தனக்கு வேறு பல பெண்களிடம் சாகவாசமும் ஒப்பந்தமும் இருக்கலாம்.
மற்றும் சில பெண்களையும் பெண்டாட்டியாகக் கட்டிக் கொண்டு வாழலாம்.அல்லது தான் முறைப்படி தாலிகட்டி கல்யாணம் செய்து கொண்ட பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணை வைப்பாட்டி யாக அதே வீட்டில் வைத்துக் கொண்டு அந்த வைப்பாட்டியையும் பெண் டாட்டியையும் ஒன்றுபோலவே நடத்துவதும், சில சமயங்களில் வைப்பாட்டி யைப் பெண்டாட்டியை விட உயர்வாக நடத்துவதும், சில சமயங்களில் பெண்டாட்டியை வைப்பாட்டிக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி செய்து வீட்டு நிர்வாக அதிகாரத்தை வைப்பாட்டிக் கையில் ஒப்புவித்து விடுவதும், இவ்வ ளவும் செய்வதோடு மாத்திரம் நின்றுவிடாமல் ஆண் அந்த வைப்பாட்டி இடமே காதல் வைத்து அவளுடன் கூடவே இன்பம் அனுபவித்துக் கொண்டு பெண்டாட்டியை வேலைக்காரி போலாகவும் தொடக்கூடாதவள் போலவும் கருதி நடத்திக் கொள்ளுகின்றான். இவை யாவையும் பிரத்தியக்ஷத்தில் பார்க்கின்றோம். இவைகள் ஜஸ்டிஸ் பத்திரிகைக்குத் தெரியாதா என்று கேட்பதோடு இவற்றிற்கு, இப்போதுள்ள மதக் கொள்கைகளும் கல்யாண முறையும் அல்லவா காரணம் என்றும் கேட்கின்றோம். சுயமரியாதையின் பேரால் சீர்திருத்த நோக்கத்தோடும் சமத்துவ நோக்கத்தோடும் கூட்டப்பட்ட ஒரு மகாநாட்டில் இவ்விதக் கெடுதிகள் ஒழியத் தகுந்த மாதிரியான ஒரு தீர்மானம் அதுவும் ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையாகவும் காதலர்களாகவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களைத் தாங்கள் தாங்களாகவே தங்கள் இஷ்டப்படி தெரிந்தெடுத்துக் கொள்ள ஒரு தீர்மானம் தீர்மானிப்பது தகுதியற்றது அல்லது ஒப்புக் கொள்ள முடியாதது என்று சொல்வதானால் மற்றென்ன காரியம்தான் மக்கள் முன்னேற்றத்திற்கோ,மனித சுதந்திரத்திற்கோ பெண்கள் முன்னேற்றத்திற்கோ உரிமைக்கோ ஏற்றது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தத் தீர்மானம் கூட இந்நாட்டு மக்க
ளுக்கு கஷ்டமாயிருக்குமானால் அதற்கு பதிலாக மக்களுக்குள் கல்யாணம் என்கின்ற ஒரு முறையே கூடாது என்றுதான் நாம் சொல்லித் தீர வேண்டியவர். களாக இருக்கின்றோம். ஏனென்றால் இன்பத்திற்காக கல்யாணம் என்றால் அதற்கேற்றமுறையில் கல்யாணத்திட்டம் அமைக்கப்படவேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்து
வதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலென பிள்ளைகளைப் பெறுவ
தற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதானால், அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண்
மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வ
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
தையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். சம சுதந்திரத்தில் இயற்கை உணர்ச்சியில் சமசந்தர்ப்பம் அளிக்கப்படாத. முறையைக் கொண்ட கல்யாணங்களை நாம் விபசார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில் நாம் விபச்சாரம் என்பதற்குக் கொள்ளும் பொருள் என்னவென்றால் தங்கள் ஆசைக்கும் மன உணர்ச்சிக்கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதையேதான் இங்கு நாம் விபசாரம் என்று கொள்ளுகின்றோம்.
எப்படியெனில் கல்யாணமில்லாத ஒரு பொதுமகள் பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்கு இஷ்டமில்லாத நிர்ப்பந்தத்திற்கு சில சமயங்களில் உடன்பட வேண்டியிருப்பதாக வைத்துக் கொண்டாலும் கல்யாணமான குடும்பப் பெண் என்பவள் வெறும் ஆகாரத்திற்கும் துணிக்குமாக மாத்திரம் எப்போதும் தனக்கு சற்றும் சுதந்திரமில்லாமலும் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் மனித உரிமைக்கும் உணர்ச்சிக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாகவும் நிர்பந்தத்திலேயே ஜெயிலில் உள்ள கைதிபோல் இருக்க வேண்டியிருக்கின்றது. இத்தன்மை பொருந்திய மணம் பொறுப்புள்ள மணமா, காதல் மணமா, இன்ப மணமா அல்லது பொறுப்பற்ற மணமா? விபசார மணமா? அடிமை மணமா? நிர்ப்பந்த மணமா? என்பதை யோசித் துப்பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன். கல்யாணத்தின் விஷயமாகப் பின்னால் எழுதுவோம்.
குடி அரசு - கட்டுரை - 10.03.1929
குடி அரசு - 1929 () 126
€தேவர்கனிண் முறை
- சித்திரபுத்திரன்
லண்டன் மாநகரமாகிய வைகுண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகா விஷ்ணுவானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கின்றார்:-
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கே.நடராஜன், சி. ராஜகோபாலாச்சாரி, வி.எஸ். சீனிவாச
சாஸ்திரி, எஸ். சீனிவாசய்யங்கார், சிவசாமி அய்யர், வெங்கிட்டரமண: சாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், டி.ரங்காச்சாரி, டி.ஆர். ராமச்சந்திரய்யர்,
எம்.கே. ஆச்சாரி, சத்தியமூர்த்தி முதலாகிய அநேக பூதேவர்கள் போய் கால்மாட்டில் நின்று கொண்டு தவம் செய்கின்றார்கள்.
மகாவிஷ்ணு :- (தேவர்கள் தவத்திற்கிரங்கி) ஹே பூதேவர்களே!
எங்கு வந்தீர்கள்?
பூதேவர்கள் :- ஆபத்பாந்தவா! அனாதரக்ஷகா! தங்களிடம்தான் வந்தோம்.
ம.வி.-- என்ன விசேஷம்?
பூதே-- தேவர்களுக்கு ஏதாவது இடுக்கண் வந்தால் அதைத் தடுக்கத் தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவே தங்களிடம் வந்தோம்.
ம.வி. என்ன விசேஷம்?
பூ.தே - மகாப்பிரபூ. பழையபடி ராக்ஷதர்களுடைய ஆதிக்கம் வலுத்துவிட்டது.பூதேவர்களாகிய எங்கள் நிலை இருப்பதா? இறப்பதா? என ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது இந்தச் சமயம் தாங்கள் அருள்புரிய வில்லையானால் பூலோகமே சாம்பலாய்ப் போய்விடும். பூலோகமே இல்லை யானால் மகாவிஷ்ணுவாகிய தாங்கள் பாடு கூட திண்டாட்டமாய்விடும். தங்களை வணங்கவோ, தங்களுக்கு பூஜை, ஆராதனைகள், உற்சவம்முதலிய வைகள் செய்யவோ கூட யாரும் இருக்க மாட்டார்கள் வணங்காததும் பூஜிக்காததுமான பகவான் இருந்தென்ன ஒழிந்தென்ன? எனவே இந்தச் சமயம் தாங்கள் கிருபை கூர்ந்து எங்களைக் கடாக்ஷித்தருள வேண்டும்.
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ம.வி:- என்ன! என்ன!! உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம் என்ன வந்தது? சங்கதியைச் சொல்லுங்கள்.
பூ.தே.:- பிரபுவே! முன்யுகங்களில் தேவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் போல இப்போது பெரிய ஆபத்துகள் வந்திருக்கின்றது.
ம.வி.:- எப்படி வந்திருக்கிறது? சீக்கிரம் விவரமாய்ச் சொல்லுங்கள்.
பூதே:- எப்படியோ வந்துவிட்டது! பெரிய உபத்திரவமாயிருக்கின் றது! ஒவ்வொரு யுகங்களிலும், தேவர்களுக்கு இடர்கள் செய்ய அசுரர் களாகவும், அரக்கர்களாகவும், ராக்ஷதர்களாகவும் வந்து எங்களை இடர்கள் செய்யும் போது பகவானாகிய தாங்கள் தான் பல அவதாரங்களாக வெளிக் கிளம்பி, இராக்ஷதர்களையெல்லாம் அழித்து எங்களையும் எங்கள் உயர்வா கிய வேதங்களையும் உத்தியோகங்களாகிய யாகத்தையும் காத்தருளி வருகிறீர்கள்.
ம.வி:- ஆம்! அது உண்மைதான்!
பூ.தே- பிரபுவே! இந்த யுகத்திலும் அதுபோலவே ஒரு ராக்ஷதன் தோன்றிவிட்டான். அவன் எங்களுடைய பெரிய பெரிய உத்தியோமாகிய
யாகத்திலும் வேதத்திலும் கையை வைத்து அவைகளை யெல்லாம் அடியோடு ஒழிக்கப்பார்க்கிறான்.
ம.வி:- அப்படிப்பட்ட ராக்ஷதன் யார்?
பூ.தே:- பிரபுவே! அவன்தான் சுயமரியாதை என்று சொல்லப்பட்ட இராக்ஷதன். அவன் இப்போது தேவர்களாகிய எங்களுக்கு மாத்திரம் துன்பம் விளைவிக்கின்றான் என்றோ, எங்களுடைய உத்தியோகங்களாகிய யாகத்தை. மாத்திரம் அழிக்கின்றான் என்றோ கவலையீனமாய் இருந்து விடாதீர்கள். நாங்கள் ஒழிந்தால் பகவானாகிய தாங்களும் ஒழிந்து போவது நிச்சயம். ஏனென்றால் எங்களை ஒழித்தால்தான் தங்களை ஒழிக்க முடியுமென்று நினைத்து முடிவு செய்து தங்களை ஒழிப்பதற்காகவே முதலில் எங்களை ஒழிக்கின்றானாம்.
ம.வி-- அப்படியா! அப்பேர்ப்பட்ட ராக்ஷஷனா அவன்? அவனுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது?
பூதே:- அவன் மகா தவசிரேஷ்டன். பெரிய பெரிய தவங்கள் செய்து அதன் மூலம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுவிட்டான். அன்றியும் தக்க ஆயுதங்கள் அவனிடமிருக்கின்றன. அவ்வாயுதங்களுக்குப் பயந்து கொண்டு சில்லரை தேவதைகளும், தங்கள் பரிவாரங்களும் கூட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக் கண்டால் நடுங்காத முனிகள் இல்லை. ரிஷிகள் இல்லை.
ம.வி.:- அப்படியா அவன் செய்யும் கொடுமை என்ன?
குடி அரசு - 1929 () 128
பூதே:- மதம் பொய் என்கிறான்; வேதம் பொய் என்கின்றான். புராணம் பொய் என்கின்றான். பராசர் ஸ்மிருதி பொய்யாம் மனுதர்ம சாஸ்திரம் பொய்யாம் எல்லாம் பொய் என்கின்றான்; ராமாயணம் பொய்யாம் பாரதம். பொய்யாம் திருவிளையாடல் புராணம் பொய்யாம் பெரியபுராணம்கூட பொய்யாம் தேவர்களைக் கண்டதார் விஷ்ணுவைக் கண்டதார் சிவனைக் கண்டதார் எல்லோரும் பொய் என்கின்றான். இருக்கின்றதாக அகச்சான்று, புறச்சான்று காட்டினாலோ காட்டுகின்றவர்கள் எல்லோரையும் அயோக்கியர்.
கள், அன்னக்காவடிகள் என்கின்றான். அவனுடைய உபத்திரவத்தினால் புராணங்களே விற்பனை ஆவதில்லை. காலக்ஷேபங்களே நடைபெறுவ தில்லை இவைகள் போனாலும் போகட்டும் எங்கள் யாகங்கள் நடைபெறு வதில்லை அவனால் எங்களுக்கு வெகு நஷ்டமாயிருக்கின்றது.
ம.விஃ- அப்படியா, சொல்லுகின்றான்?
பூதே.- ஆமாம் பகவானே!
ம.வி:- இன்னம் என்ன செய்கிறான்?
பூதே:- நாள் பொய் என்கின்றான், திதி பொய் என்கிறான், சடங்கு பொய் என்கின்றான், தேர் பொய் என்கிறான், திருவிழா பொய் என்கிறான்!
ம.வி: சரி: இவ்வளவையும் பொய் என்கின்றானா?'
பூதே: ஆம் பிரபூமற்றும் இவனுடைய உபத்திரவத்தினாலே புஸ்தகக் கடைக்காரன் பட்டினி, புராணக் கடைக்காரன் பட்டினி, புராணப் பிரசங்க பண்டிதன் பட்டினி, புரோகிதன் பட்டினி, அர்ச்சகன் பட்டினி, குருமார் பட்டினி, சமயப் பிரசாரகன் பட்டினி, நல்ல ஆங்கிலம் படித்த சாஸ்திரிகள், சாதுக்கள் எல்லாம் பட்டினி கிடக்கும் படியாகிவிட்டது! இதைப்பற்றிக் கேட்டால் மூட்டை தூக்கி மண்வெட்டி வயிறு வளர்க்கச் சொல்லுகிறான்; கொடுமை! கொடுமை! சகிக்க முடியவில்லை.
ம.வி:- நமது கடவுள் தன்மையைப் பற்றி என்ன சொல்லுகின்றான் அதையாவது ஒப்புக் கொள்ளுகின்றானா இல்லையா.
பூதே:- கடவுளைப் பற்றிச் சொன்னால் எனக்கு அவசியமில்லை என்கின்றான். கடவுள் உண்டா? இல்லையா? என்றால் நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது என்கின்றான். கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதைப்பற்றி உனக்கென்ன கவலை என்கின்றான்.
ம.வி:- பின்னை, அவன் எதைத்தான் ஒப்புக்கொள்ளுகின்றான்?'
பூதே:- அவன் மனிதனுக்கு மனிதன் அன்பு, இரக்கம், உதவி, ஒழுக்கம் இவற்றைத்தவிர மற்றொன்றையும் மதிப்பதில்லை என்கின்றான்.
ம.வி:-அப்படியானால், இவற்றை எல்லாம் உலகம் ஒப்புக் கொள்ளுகிறதா?
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பூ.தே:- ஒப்புக் கொள்ளுகிறதே, இதுதானே ஆச்சரியமாயி ருக்கின்றது. ஒப்புக் கொள்ளுவது மாத்திரமா? இந்த சமயம் நாங்கள் தெருவில் ஒண்டியாய் போகிறதே ஆபத்தாய் இருக்கிறது!
ம.வி:- நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்களும் எதிர்த்துப் போர் செய்வதுதானே!
பூ.தே:- நாங்களும் எங்களால் கூடியவரை பார்த்தோம். எங்கள் ஆயுதங்களாக அந்த ராக்ஷதக் கூட்டத்திலிருந்தே சில ஆட்களைக் கைப்பற்றி. அதன் மூலமாகவும் போரிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஆயுதங் களும் எங்கள் ஆயுதங்களும் நாங்கள் ௯லிக்குப் பிடித்த ஆயுதங்களும், எல்லாம் அவன் ஆயுதங்களுக்கு முன்னால் முனை மழுங்கிப் போய்விட்டது.
ம.வி: அப்பேர்ப்பட்ட அந்த ரா்ஷதனுடைய ஆயுதந்தான் என்ன?
பூதே:- குடி அரசு, திராவிடன், குமரன், நாடார்குலமித்திரன், தமிழன், விஸ்வநேசன், சிங்கப்பூர் முன்னேற்றம், சுயமரியாதைத் தொண்டன் முதலிய அநேக ஆயுதங்களின் வலிமை எங்கள் ஆயுதங்களின் முனைகளை
எல்லாம் மழுங்கவைத்துவிட்டன. எங்கள் கூலி ஆயுதங்களும் உறை இல்லாமல் வெளியே தலைநீட்ட முடியவில்லை.இப்போது நாங்கள் செத்த பாம்பை ஆட்டுவதுபோல் பொய் வேஷம் போட்டுக் கொண்டு திரிந்து பார்த்தும், வேறு மார்க்கமில்லாததால் தங்கள் பாதத்தில் வந்து விழுந்து விட்டோம். தாங்கள்தான் எங்களைக் காப்பற்ற வேண்டும். தங்கள் பரிவாரங் களான சைமன் கமீஷன் என்னும் உபதேவர்களை நாங்கள் அறியாமல் பகிஷ்காரம் செய்துவிட்டோம். அதைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்.
ம.வி:- இதற்காக என்னை என்ன செய்யச் சொல்லுகின்றீர்கள்.
பூதே.:- தங்களிடமுள்ள சில பாணங்களைக் கேட்க வந்திருக்கின்
றோம்.
ம.வி:- என்ன பாணம்?
பூதே:- 124-ஏ,153ஏ ஆகிய பாணங்கள் வேண்டும்.
ம.வி:- ஏன் 144- பாணம் வேண்டாமா?
பூ.தே:- 144 அவனிடம் செல்லாது. அது சரமாரியாய் அவன்மேல் விடப்பட்டும் அவைகள் அவனிடம் போய் போய் அவன் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு வந்தவிட்டதோடு மாத்திரமல்லாமல் திரும்பிவந்து எய்தவர்கள் மீதும் கூட சில சமயங்களில் பாய்ந்து விடுகின்றது.
ம.வி சரி, நாம் நமது தூதர்களை முதலில் உங்கள் லோகத்திற்கு அனுப்புகிறோம். அவர்களைக் கொண்டு பூலோக நிலை அறிந்து பிறகு வேண்டியது போல் செய்வோம்!
குடி அரசு - 1929 () 130
பூதே:- பிரபுவே! தங்கள் தூதர்கள் யார்? தயவு செய்து அதைக் கொஞ்சம் தெரிவித்துவிட்டால் நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க அனுகூல
மாயிருக்கும்.
ம.வி.- நமது தூதர்கள் சைமன் கமிஷனர்கள். அவர்களிடம் முறைகளை மெய்ப்பியுங்கள்.
பூதே- நாங்கள் அறியாத புத்தியினால், தங்கள் தூதர்களை ஆதியில் அலகஷிமாய்க் கருதிவிட்டோம். அதனால் வந்த வினைப் பகுதி என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் இப்போது அவர்களிடம் சொல்லிக் கொள்ளுவது எங்களுக்குக் கொஞ்சம் அவமானமாயிருக்கின்றதே.
ம.வி.:- நேரில் தெரிவிக்காவிட்டால் பாதகமில்லை மறைமுகமாக வேறு ஏதாவது வழிகளில் தெரிவித்து விடுங்கள்!
பூதே: அப்படியே ஆகட்டும், பிரபுவே! எப்படியாவது இந்தச் சமயம் எங்களைக் காப்பாற்றுங்கள்! இல்லாவிட்டால். தங்களுக்கும் எங்களுக்கும் இரண்டு பேருக்குமே ஆபத்து வந்துவிடும். இதை நன்றாய் மனதில் வையுங்
கள்.
ம.வி - நம்மைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் காரி யத்தை நீங்கள் ஜாக்கிரதையாய் பார்த்துக்கொள்ளுங்கள். சரி போய் வாருங்கள்.
குடி அரசு - உரையாடல் - 10.03.1929.
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
திரு. ராகோயாலாச்சாரியாரின்
யஞ்ச நிவாரணப்பூட்டு
சேலம் ஜில்லா திருச்சங்கோட்டிற்க்கு பக்கத்தில் புதுப்பாளையம் என்கின்ற கிராமத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதரின் பெயரால் ஒரு ஆசிரமம் வைத்துக் கொண்டு மதுவிலக்கு பிரசாரம் செய்வதாகவும், பஞ்ச நிவாரண வேலை செய்வதாகவும் அங்குள்ள ஏழை மக்களுக்கு கூலி கொடுப்பதாகவும் தானியம் கொடுப்பதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் திரு.காந்தியைவிட்டு தன்னை விளம்பரம் செய்யச் செய்தும் இதன் பலனாய் திரு.காந்தி சிபார்சின் மீது வெளி இடங்களி லேயிருந்து பணம் வரும்படியாகச் செய்து கொண்டும் சூழ்ச்சிகள் செய்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்.
இந்த சூழ்ச்சியும் ஆர்ப்பாட்டமும் அடுத்த சட்டசபைத் தேர்தலில்
சேலம் ஜில்லா மக்கள் பூராவையுமே ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வைத்தே செய்து வருகின்றார்கள்.
இவர் சென்ற தேர்தலின்போதும் இதே மாதிரி மதுவிலக்கின் பெயரால் செய்த பிரசாரங்களும் அவற்றின் மூலம் திருசி.வி.வெங்கிட்டரமணய்யங்கார். போன்ற பல பார்ப்பனர்களுக்கு வாங்கிக் கொடுத்த ஓட்டுகளும் மற்றும் திரு.காந்தியைவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லுகின்ற நபர் களுக்கே ஓட்டு கொடுங்கள் என்று எழுதச் செய்த சூழ்ச்சியும் மக்கள் அறிந்த தேயாகும். ஆனால் அந்த தேர்தல் நடந்த பிறகு அச்சூழ்ச்சிகளால் ஓட்டுப் பெற்ற சுயராஜ்ஜியக் கட்சியாரோ அல்லது காங்கிரசுக்காரரோ அல்லது
சுதந்திரக் கட்சியரோ செய்த வேலை என்ன என்று கேட்கின்றோம்.
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பெரிய பூசாரி ஆய்விடுவதைப் போல், திரு.காந்தியைக் கொண்டு பணம் வசூலிப்
பதும், அப்பணத்தைக் கொண்டும் மாதம் 50, 100, 150, 200 என்பதாக பார்ப்பனர்களுக்குச் சம்பளம் கொடுத்து பல பார்ப்பனர்களை வளர்ப்பதும், பார்ப்பனரல்லாதாரில் ஏதாவது ஒன்று இரண்டு பேர்களை அதுவும் முட்டாள் களாகத் தேடிப்பிடித்து அவர்களை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார். களையும் தான் சேர்த்துக் கொண்டிருப்பதாக பொது ஜனங்களை ஏமாற்று
குடி அரசு - 1929 () 132
வதும் ஆகிய இந்த பித்தலாட்ட காரியத்தினாலேயே பார்ப்பனரல்லாதாரை: நிரந்தரமாய் ஏமாற்றலாம் என்று கருதியிருக்கின்றார். ஆதியில் இந்த ஆச்சிரமம் பெரிதும் பஞ்சமர்கள் என்பவர்களையே பிரதானமாகக் காட்டி ஏற்படுத்தியதாகும். அந்தப் பெயராலேயே பொது ஜனங்களிடம் பணமும் வசூலிக்கப்பட்டது. எனவே அப்பேர்ப்பட்ட ஒரு ஆச்சிரமத்தில் தீண்டாதார் என்பவர்கள் எத்தனை பேர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றார் என்பதும், பார்ப்பனரல்லாதார் என்பவரிடமிருந்தே கொடுக்கப்பட்ட பூமியால் பார்ப்பன ரல்லாதாரிடமிருந்தே வசூலிக்கப்பட்ட பணத்தில் நடைபெறும் ஆச்சிரம மான புதுப்பாளையம் ஆச்சிரமம் என்பதில் இப்போது இருக்கும் பார்ப்பனர். எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவு? பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் மாதச் சம்பளம் எவ்வளவு? ஆகிய இவைகளைக் கவனித்தால் ஆச்சிரமப் புரட்டும் ஆச்சாரியாரின் பஞ்ச நிவாரணப்புரட்டும் தீண்டாமை விலக்குப் புரட்டும் கதர்த் தொண்டு புரட்டும் தானாகவே ஒரு மூடனுக்குக் கூட விளங்கிவிடும். நிற்க, இச்சூக்ஷிகள் நடக்கும் இவ்வாச் சிரமத்திற்காக திரு.காந்தியின் சிபார்சை கேட்டுக் கொண்டு வடநாட்டிலும் தென்னாட்டிலும் சில பைத்தியக்காரர்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதைப் பற்றியோ அவைகளை பொது நலத்தின் பெயரால் சில பார்ப்பனர்களை தின்று கொழுக்கச் செய்யும் சிரமங்களைப் பற்றியோ நமக்குச் சிறிதும் கவலை இல்லை.ஆனால் இந்த புரட்டுகளும் யோக்கியப் பொறுப்பற்ற காரியங்களும் சமீபத்தில் வரப்போகும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிப்பதற்கு என்று செய்யப்படும் சூக்ஷிசி என்பதை அறியாமல் எங்கு பார்ப்பனரல்லாத மக்கள் ஏமாந்து போய் பார்ப்பனர்களுக்கும் அவர். களது கூலிகளுக்கும் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுவார்களோ என்கின்ற விஷயத் தில்தான் நாம் கவலைப்படுவதோடு பொது மக்களையும் உஷாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 10.03.1929.
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
யபஹிஷ்காறத்திண் ரகசியமும் “தலைவர்களின் கயாக்கியதையும்
சென்ற வருஷம் சென்னையில் சைமன் கமிஷன் வந்திறங்கிய போது சில பார்ப்பனர்களின் பகிஷ்காரப் புரட்டு வெளியாய் விட்டதின் பலனாய் சென்னையில் சும்மாயிருந்த பார்ப்பனர்களுக்கு எல்லாம் அடிவிழும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டதாலும், அதனால் சில பார்ப்பனர்கள் ஊரைவிட்டே ஓடவேண்டியதாய் ஏற்பட்டு விட்டதாலும். சென்னைப் பார்ப்பனர்களில் பலர் பார்ப்பன சமூகத்தின் பேரால் தாங்கள் சைமன் கமிஷனை வரவேற்கின்றோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, சில அரசியல் பார்ப்பனத் தலைவர்களான திருவாளர்கள் எஸ்.சீனிவா சய்யங்கார் முதலியவர்களிடமும் சண்டைக்குப் போய் விட்டார்கள். அதாவது “பஹிஷ்காரம் என்று வாயில் சொல்லிவிட்டு நீங்கள் டெல்லிக்குப் போய் பங்களா நிழலில் உட்கார்ந்து கொள்ளுகின்றீர்கள்! நாங்கள் அடிபட வேண்டியிருக்கின்றது”” என்றும் “இந்தப் பட்டணத்திலேயே இருந்து பஹிஷ்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றீர்களா? அல்லது நாங்கள் ஊரைவிட்டுப் போய்விடுவதா” என்று கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு ஆகவே, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நாங்கள் கடை அடைக்கப் போவதில்லை என்றும் கூட்டம் போடுவதில்லை என்றும் சர்க்கார் உத்திரவில்லாமல் தெருவில் தலைகாட்டு வதில்லை என்றும் மற்ற பார்ப்பனர்களுக்கு வாக்கு கொடுத்ததுடன் சர்க்காருக்கும் போலீஸ் கமிஷனர் மூலம் தெரிவித்துவிட்டுப் பொதுமக்களை ஏமாற்ற வேண்டி சைமன் கமிஷன் நடக்காத ஏதாவது ஒரு தெருவில் சில குறிப்பிட்ட நபர்களுடன் ஊர்வலம் செல்ல மாத்திரம் அனுமதி கேட்டுக் கொண்டார்கள். போலீஸ் கமிஷனர் “சைமன் கமிஷன் வரும் வீதியில் வேண்டுமானாலும்
நீங்கள் ஊர்வலம் போகலாம் நான் பந்தோபஸ்து கொடுக்கின்றேன்” என்று சொல்லியும் கண்டிப்பாய்க் கமிஷன் போகாத வீதியிலேயே ஊர்வலம் போக உத்திரவு பெற்றதோடு அதற்கும் பந்தோபஸ்தும் பெற்றுக் கொண்டார்கள்.
இதை அறிந்த ஆந்திர தேசத்துப் பார்ப்பனர்கள் போலீஸ் கமிஷன ரோடு சென்னை பார்ப்பனர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்து தாங்கள் நேரில் பஹிஷ்காரம் நடத்துவதாய் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சர்க்காரார் அவர்களைப் பிடித்து அரஸ்டு செய்தவுடன் அவர்களும் தங் களை வெளியில் விட்டால் உடனே ஊருக்கு போய்விடுகின்றோம்
குடி அரசு - 1929 () 134
என்கின்றதாக வாக்குக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்கள். இந்த இரண்டு விஷயங்களும், சென்னை பார்ப்பனர்களும் ஆந்திரப் பார்ப்பனர்.
களும் பத்திரிகைகளுக்கு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய சேதிகளிலேயே அறியக் கிடக்கின்றது. பகிஷ்காரத்தின் யோக்கியதை இப்படி இருக்க வேறு பல பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்தின் பேரால் தாராளமாய் சைமன் கமிஷனி
டம் சென்று தங்கள் சமூக நன்மைக்குத் தேவையான காரியங்களை எடுத்துச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் விஷயங் களை அடுத்த வாரம் வெளிப்படுத்துவோம்.
பொதுவாகச் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தங்கள் சங்கதியை அவர்களிடம் எடுத்துச் சொல்லாதவர்கள் யார் என்பதும், சைமன் கமிஷனர். கள் உத்தேசித்து வந்த காரியங்களில் எது தடைபட்டுப் போய் விட்டது என்பதும் முக்கியமாக யோசித்துபார்க்க வேண்டியதோடு காங்கிரஸ் மகா சபை என்பதின் யோக்கியதை எப்படிப்பட்டது, அதை மக்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் நமது நாட்டில் ஏற்றபட்ட அந்த நிமிஷம் முதலே இக்கூச்சல் வடநாட்டில் மகமதியர்களுக்கு விரோதமாக அவர்களு டைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை பிடுங்கிக் கொள்ளவும் தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் சிறப்பாக தீண்டப் படாதார் என்று கொடுமைப் படுத்தப்பட்ட மக்களைத் தலையெடுக்க வொட் டாமல் செய்வதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்று நாம் எழுதியும் பேசியும் வந்ததோடு, மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கண்டிப் பாய்த் தங்கள் நிலைமையையும் தேவைகளையும் அவசியம் கமிஷன் முன் சொல்லியே ஆகவேண்டுமென்று வற்புறுத்தியும் வந்தோம். அந்தப்படியே விஷயங்கள் நடந்ததோடு முக்கியமாய்த் தீண்டப்படாதவர்கள் எனப்பட்ட
வர்கள் இமயம் முதல் குமரிவரையில் ஒரே மாதிரியாகத் தங்கள் நிலைமை களையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லியிருப்பது குறித்தும் அவற் றைக் கமிஷனர் கனவான்கள் நன்றாய் உணர்ந்து வேண்டியது செய்வதாய் வாக்குறுதி கொடுத்திருப்பதைக் குறித்தும் நாம் அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்தக் கமிஷன் அறிக்கையின் மீது வழங்கப்படும் சீர்திருத்தம் என்பது எத்தன்மையதுவாக இருப்பினும் நமக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை.ஏனெனில் அச்சீர்திருத்தம் என்பதில் இப்போது தெரிவிக் கப்பட்ட குறைகள் நீங்கும் படியான மார்க்கங்கள் இல்லாதிருக்குமானால் இந்தச் சர்க்காரின் கண்களில் கோலை விட்டு ஆட்டக்கூடியநிலைமையைச் சாதாரணமாக வெகு சுலபத்தில் உண்டுபண்ணிக் கொள்ளக் கூடிய செளகரி யங்கள் தாராளமாக கிடைத்துவிடும் என்கின்ற உறுதிதான். ஆதலால் சைமன் கமிஷன் விஷயத்தில் நாம் நமது கடமையைச் செய்து விட்டோம்.
குடி அரசு - கட்டுரை - 10.03.1929
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கேர்தல் தந்திரம் அண்ணிய அடை பகிஷ்காறப் புரட்டு
சூக்ஷிகளிலும் வஞ்சகத்திலும் சிறந்த ஒரு கூட்டத்தார் சமுதாய வாழ்க்கையில் தங்களது சுயநலத்திற்கென்று எப்படி மதம், சமயம், வேதம், சாஸ்திரம், கோவில், பல சாமிகள், அவைகளுக்குப் புராணங்கள், குளங்கள்,
தீர்த்தங்கள், சடங்குகள், பூசைகள், உற்சவங்கள், பிராயச்சித்தங்கள், மோக்ஷம் நரகம், மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலியவைகளைக் கற்பித்து, தங்களையும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்டு இவைகளுக்கு சமயத்திற்குத் தகுந்தபடி வியாக்கியானம் (அர்த்தம்) சொல்லிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்களைப் படிக்கவிடாமலும் செய்ததோடு, மற்றவர்கள் உழைப்பில்
தாங்கள் நோகாமல் பிழைக்கவும் வழி செய்து கொண்டது போலவே நமது நாட்டில் படித்தவர்கள் என்கின்ற ஒரு கூட்டத்தார் சிறிது காலமாய் அதாவது
40,50 வருஷ காலமாய் தங்கள் சுயநலத்திற்கென்று அரசியலிலும் தேசியக் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் என்பதாகப் பல பெயர்களை உற்பத்தி செய்து அதன் மூலமாகவும் அரசாங்கத்தில் உத்தியோகங்களும் அதிகாரங்களும் பெற எண்ணம் கொண்டு பாமர மக்களைக் கூட்டி, ஏமாற்றி, பல தீர்மானங்கள் செய்து, ஒன்றுக்கு இரண்டு மூன்று நான்கு, சில சமயங்களில் பத்து என்பதாக உத்தியோகங்களையும் இலாக்காக்களையும் உற்பத்தி செய்து சம்பளங் களையும் அதுபோலவே நாளுக்கு நாள் கோடிக்கணக்காய் உயர்ப்பித்துக் கொண்டு அவைகளுக்காக பொது ஜனங்கள் மீது வரியையும் தாறுமாறாய் உயர்த்தி நாட்டையும் ஜனசமூகத்தையும் பாழ்ப்படுத்திவரும் விஷயத்தை
இதற்கு முன் பல தடவைகளில் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். இதற்கு உதாரணங்களைச் சுருக்கிக் காட்ட வேண்டுமானால் நம் நாடு காங்கிரசுக்கு
முன் இருந்த நிலைமையும் அதற்குப்பின் ஏற்பட்ட நிலைமையும் ஒன்று இரண்டு விஷயங்களில் பார்த்தாலே விளங்காமல் போகாது. நமது மாகாண அரசியல் நிர்வாகத்தில் காங்கிரசுக்கு முன் மீ 5500 ரூபாயில் 2 மந்திரிகள். 2000 ரூபாயில் 2 காரியதரிசிகள் இருந்தது, காங்கிரசுக்குப் பின் 5550 ரூபாயில்
7 மந்திரிகள் 2500 ரூபாயில் 5 காரியதரிசிகள் ஏற்பட்டதும், நீதி நிர்வாகத்தில் காங்கிரசுக்கு முன், 15 2500 ரூபாயில் 5 ஹைகோர்ட் ஜட்ஜிகள் இருந்தது, காங்கிரசுக்குப் பின் 1573000 ரூபாய் சம்பளத்தில் 15 ஜட்ஜிகள் இருப்பதும், காங்கிரசுக்கு முன் இந்தியா பூராவுக்கும் 30 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு வந்தது, இப்போது 150 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதும்
குடி அரசு - 1929 () 136
ஆகியவைகளைக் கவனித்தால் போதுமானதாகும். இன்னமும் இதுபோன்ற விஷயங்கள் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் காட்டலாம்.
இந்தநிலையில் பாமர மக்கள் வஞ்சிக்கப்பட்டு வதைக்கப்பட்டதோடு. நில்லாமல் இந்த அதிகாரங்களையும், உத்தியோகங்களையும், சம்பளங் களையும் நமது நாட்டில் ஒரு கூட்டத்தாரே, அதாவது பார்ப்பனர்களே அடைய வேண்டும் என்பதற்காகக் கருதி அதற்காகவும் பல சூகஷிகள். செய்யப்பட்டும் வருகின்றது. அந்த சூக்ஷிகளின் பலனாகத்தான் நமது மாகாணத்தில் சமீபகாலம் வரையில் சட்டசபை, ஜில்லா போர்ட், தாலுக்கா போர்ட், முனிசிபாலிட்டி முதலிய பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள் எல்லா வற்றிலும் பார்ப்பனரல்லாத ஓட்டர் என்பவர்களே 100-க்கு 75 பேர்களுக்கு மேலாக இருந்தும், பார்ப்பனர்களே தெரிந்தெடுக்கப்பட்டு அங்கத்தினர் களாகவும் தலைவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள். அதுபோலவே பொதுஜன எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் 100-க்கு மூன்று பேர்வீதமே இருந்து வந்தும், அதிகாரப் பதவியிலும் பெருத்த அதாவது, 100, 200, 500,
1000, 2000, 3000,5000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்களில் 100-க்கு 90
வீதமும் 95 வீதமும் சிலவற்றில் 100-க்கு 100 வீதமும் இருந்து வந்தார்கள். சிலவற்றில் இன்னமும் இருந்து வருகின்றார்கள். இவைகளை உணர்ந்த சிலர் இக்கொடுமைகளை ஒழிக்க முயற்சித்ததில் அவர்களை இப்பார்ப்பனர்கள். தேசத்துரோகன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டதால் கடைசியாக இந்த பதவிகளையும் உத்தியோகங்களையும் சம்பளங்களையும் அப்பார்ப்பனர் களே ஏகபோகமாய் அனுபவித்து வருவதையாவது ஒழித்து எல்லா மக்க ளுக்கும் அதில் பங்கு கிடைக்கட்டும் என்று முயற்சி செய்து தீரவேண்டி யதாயிற்று. இம்முயற்சியின் பலனாய் பார்ப்பனரல்லாதார் ஒருவாறு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பலனடைந்து வருவதன் மூலம் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கமும் உரிமையும் ஆட்டம் கொடுக்கவேண்டியதாய்ப் போய் விட்டதால் அதற்காக பார்ப்பனர்கள் வேறு பல சூட்சிகளும் கண்டு பிடிக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.அந்த சூட்சிகள் தான் தேர்தல் சமீபிக்கின்ற காலங்களில் சுயராஜ்யக் கட்சி, முட்டுக்கட்டைக் கட்சி, பூரண சுயேச்சை கட்சி என்பது போன்ற “தீவிரவாதிகள்” கட்சிகளும் அவைகளுக்குள் தீண்டாமை விலக்கு, உத்தியோக விலக்கு, பதவி விலக்கு, சைமன் கமிஷன் விலக்கு, அரசாங்கங்க விருந்து விலக்கு, அன்னியத்துணி விலக்கு என்பது போன்ற பல விலக்குத் திட்டங்களையும் வார்த்தை அளவில் கற்பித்துக் கொண்டு அவைகளுக்காக அறிவுக்கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் பொருந் தாத முறைகளில், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் யோக்கியர்களும் அறிவாளிகளும் நாணயமும் சுயமரியாதையும் உள்ளவர்கள் பின்பற்ற முடியாத ஒப்புக் கொள்ளாத, ஒத்துழைக்க முடியாத முறைகளில் அவை களைப் பிரசாரம் செய்வதன் மூலம் பாமர மக்களின் செல்வாக்கையும் ஓட்டு களையும் பெற முயற்சித்து வருகின்றார்கள். இந்த சூட்சிகள் சாதாரணமாக ஒவ்வொரு தேர்தல்களிலும் கையாளப்பட்டு வருவதையும் பார்க்கலாம்.
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
உதாரணமாக அதிக தூரம் கூடப் போக வேண்டியதில்லை. தீண்டாமை விலக்கு என்பது காங்கிரஸ் திட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானமாக இருந்தும் அது காரியத்தில் வருவதானால் பார்ப்பனர்கள் உயர்வு அடியோடு போய்விடும் எனக் கருதினதைப் பற்றி எல்லா காங்கிரஸ் திட்டத்திலும் நழுவ விட்டுக் கொண்டே வந்துவிட்டார்கள். சென்னைக் காங்கிரசிலும் அக்கொள்கையைக் காங்கிரஸ் கொள்கையில் ஒன்றாக இருக்கும்படி சேர்க்க வேண்டும் என்று திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் தீர்மானம் அனுப்பியிருந்தும், அதை யோசனைக்குக் கூட எடுக்காமலே சூட்சி செய்து அடக்கி விட்டார்கள்.
தவிர, சென்ற சட்டசபைத் தேர்தலுக்கு முந்தின சட்டசபைத் தேர்தலின் போது சுயராஜ்யக் கட்சி என்று ஒன்றைக் கற்பித்து அரசாங்கம் நடைபெற ஒட்டாமல் முட்டுக்கட்டை போடுவது என்ற கொள்கையைச் சொல்லிக் கொண்டு தேர்தல் வேட்டை ஆடினார்கள்.
இதைக்கண்டு பல பாமர மக்களும் ஏமாந்தார்கள் தேர்தல் நடந்த பின்பு வெற்றிபெற்ற சுயராஜ்யக் கட்சியாரும் முட்டுக் கட்டையாரும் அரசாங்க சட்டசபைகளில் கலந்து கொண்டு தீர்மானங்களை பிரேரேபிக் கவும் எதிர்க்கவும், கிடைத்த உத்தியோகங்களையும் பதவிகளையும் வருமானங்களையும் நாணயக் குறைவான முறையில் பெறவும் செய்ததன் மூலம் அரசாங்கத்தை ஒருவாறு நடத்திக் கொடுத்தார்கள்.
அது மாத்திரமல்லாமல், இரண்டு வருஷ காலம் சட்ட சபையிலிருந்து சகல போகமும் அனுபவித்துவிட்டு அந்த சட்டசபை காலாவதியாகும் தருணத்தில் கொஞ்சமும் மானம், ஈனம், நாணயம் ஆகியவைகள் ஒருசிறிதும் இல்லாமல் “இந்த சட்டசபைக்கு வந்ததே தப்பு இதில் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. இந்த சர்க்கார் எங்களை ஒரு மனிதர்கள் என்றுகூட ஒரு
சிறிதும் மதிக்கவே இல்லை. ஆகையால் இதில் இனி அரைவினாடி நேரம் கூட இருப்பது எங்களுடைய சுயமரியாதைக்கு இழிவு. ஆதலால் நாங்கள். இந்த சட்டசபையை விட்டு வெளியில் போகின்றோம்” என்று சொல்லிவிட்டு. வெளிவந்துவிட்டு மறுபடியும் அந்த சர்க்கார் இவர்களை மதிக்காமலும் லக்ஷியம் செய்யாமலும் கூப்பிடாமலும் இருக்கும்போதே அந்த சட்ட சபைக்குள் போய் சிறிது கூட மானம் வெட்கம் இல்லாமல் தீர்மானங்களைப் பிரேரேபிப்பதும் எதிர்ப்பதும் ஆன காரியங்கள் செய்து விட்டு மறுபடியும் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கும் நின்றார்கள்.
அப்படி நிற்கும்போது முன்போல் முட்டுக்கட்டைபோடுவது என்கின்ற வார்த்தையை அடியோடு விட்டுவிட்டு புதிதாக ஒரு சூட்சி செய்தார்கள். அதாவது:- தாங்கள் மந்திரி பதவி, உத்தியோகம் முதலிய வைகள் பெற்றுக் கொள்வதில்லை என்றும் மந்திரிப் பதவிகள் வேறு யார். பெற்றுக் கொண்டாலும் அந்த மந்திரிசிபைகளை அழித்து விடுவதாகவும் சொல்லி பிரசாரம் செய்து ஓட்டுப்பெற்று மறுபடியும் சட்டசபைக்குப்
குடி அரசு - 1929 () 138
போனார்கள். அந்தப்படி போனபின்பு மந்திரி பதவி பெறுவதில் தங்களுக்
குள் போட்டி இருந்தபடியால் வேறு ஆசாமிகளைப் பிடித்து, மந்திரிகளாக இருக்கச் செய்து அவர்களுக்கு உதவியும் செய்து சட்டசபைத் தலைவர். பதவியும், தங்கள் கட்சித் தலைவர் ஒப்புக்கொண்டு அரசாங்கத்தை நன்றாய் நடத்திக் கொடுத்தார்கள். இதற்கு காங்கிரஸ் என்கின்ற ஒழுக்கம் கெட்ட இயக்கமானது சற்றும் நாணயமும் யோக்கியப் பொருப்பும் இல்லாமல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி மந்திரி சபை அமைக்கவும், மந்திரிசபையை நடத்திக் கொடுக்கவும் உதவி செய்ததற்காக அதைப் பாராட்டுவதாக ஒரு தீர்மானமும் செய்துவிட்டது. இது இப்படி இருக்க ஒத்துழையாதார் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றும் நாணயம் கெட்ட கூட்டமாகிய திரு.காந்தி கூட்டமும் இந்த நாணயமும் யோக்கிய தையும் அற்ற கட்சியின் வெற்றிக்கு மதுவிலக்கின் பேரால் திருட்டுத் தனமாகவும் வெளிப்படையாகவும் உதவி செய்ததோடு “வேதவாக்கு” என்று சொல்லக் கூடிய“யங் இந்தியா” பத்திரிகையும் காந்தி சிஷ்யர் என்கின்ற திரு. ராஜகோபாலாச்சாரியாலும் கோடு கட்டிய குறள்களும் கிராமப்பிரசாரமும் செய்து இக்கூட்டத்திற்கு ஓட்டுகளும் வாங்கிக் கொடுத்தார்கள். கடைசியாக விளைந்த பலன் என்ன என்று பார்த்தால் சட்டசபையின் மூலம் எவ்வளவு தூரம் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்குத் தடை செய்யலாமோ அதைத்தவிர வேறு ஒரு காரியமும் செய்ததாக அவர்களே சொல்லிக் கொள்ள முடியாமல் போய் விட்டது. போதாக்குறைக்கு இந்த வருஷத் தேர்தலுக்கும் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டாய்விட்டது.
அவைகளில் முதலாவது, சைமன் கமிஷன் பகிஷ்காரம். இது அழுவாரற்ற பிணமாய் நாற்றமெடுத்து புழுத்து சருசாகக் காய்ந்துவிட்டது.
இரண்டாவது, பூரண சுயேச்சை கட்சி என்பது. இதன் யோக்கியதை இப்பொழுதே வெளியில் எடுத்துப் பேசுவதற்கு இடமில்லாமல் போனதோடு. கூடிய சீக்கிரத்தில் இக்கட்சியில் சேர்ந்து பயந்து கொண்டு ஓடிப் போய்விட்ட இரண்டொருவரைத் தவிர மற்றும் மீதியுள்ள இரண்டொருவர்களும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப்பட்டு விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
போக மூன்றாவதாக ஸ்லேத்துமம் கட்டி, சாகப் போகும் மனிதனுக்குத் “துளசி தீர்த்தமாக” விளங்குவதுபோல் “அன்னிய ஆடை பகிஷ்காரம்” என்கின்ற ஒரு பித்தலாட்டம் பிரசாரமேயாகும். இந்த பித்தலாட்ட மூட்டை யைத் தூக்கி திரு.காந்தியின் தலையில் வைத்து அவருக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையையும் ஒழிக்க முடிவு செய்து கொண்டு வெளியில் புறப்பட்டாய்விட்டது. இதன் பேரால் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சொந்த பொருப்பில் வெளிவந்தும் ஆய்விட்டது. இதை இனி பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் பத்திரிகையில் கலம் கலமாய் எழுதுவதின் மூலமும்
கிராமங்களில் போய் கத்துவதின் மூலமாகவும் பார்ப்பனர்களுக்கு ஓட்டு
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வாங்கி கொடுக்க பிரசாரங்கள் செய்து பார்ப்பனர்களிடம் இருந்து கூலி
வாங்கப் போகின்றார்கள் என்பது நிச்சயம். ஆனால் இவர்கள் பேச்சைக்
கேட்டு ஏமாறுவதற்கு இனி எந்தக் கிராமத்திலும் முன்போல முட்டாள்கள் இல்லை என்பதும் நிச்சயம்.
ஏனெனில், இப்போது நமது நாட்டில் தீண்டாமை விலக்கைவிட மது விலக்கைவிட அன்னிய துணி விலக்குக்கு என்ன அவசியமும் அவசரமும் நியாயமும் இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தியாவில் எவ்வளவோ மில்லுகள் இருந்தும் இந்தியாவுக்கு வருஷா வருஷம் வெளிநாட்டில் இருந்து வரும் துணியின் கிரயம் ரூ.60,00,00,000 அறுபது கோடியே ஆகும். இந்த அறுபது கோடிரூபாய்க்கு ஈடு செய்வதற்கு இந்தியா வில் உற்பத்தியாகும் கதர் வருஷம் ஒன்றுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கதர் துணியேயாகும். இதுவும் வெளிநாட்டுத் துணிகளும்
மில் துணிகளும் கஜம் ஒன்றுக்கு 4 அணா முதல் ஆறு அணா வரையில் விலையானால் கதர் துணிகள் 10 அணா முதல் கொண்டு 12 அணா வரையில் விலை ஆகக் கூடியதாயிருக்கின்றது. இவற்றில் பெண்களுக்கு என்று கதர்
50,000ரூ பெறுமானமுள்ள துணிகள்கூட உற்பத்தி ஆவதில்லை. ஆனாலும் அன்னியத் துணி ஒரு சேலை இரண்டரை ரூபாய் அல்லது மூன்று ரூபாய் அடங்கினால் கதரில் அதைப்போல் ஒரு சேலை 8 ரூபாய் அல்லது 10 ரூபாய் அடக்கமில்லாமல் கிடைப்பதில்லை.
ஆகவே இன்றையதினம் நமது நாட்டில் உள்ள அன்னியத் துணிகளை எல்லாம் நெருப்பில் கொளுத்திவிட்டால் சுமார் 5992 லக்ஷ ரூபாய் துணிகள் கட்டும்படியான ஆண்களும் பெண்களும் என்ன கதி அடை வார்கள்? ஒரு சமயம் எல்லோரும் திரு.காந்தியை போல் முழங்காலுக்குமேல் துணி கட்டிக் கொள்வதன் மூலம் சுமார் 10, 20 கோடி ரூ. பெருமான துணி வேண்டியதில்லாமல் போய்விட்டாலும் அதற்குப் பதிலாக திரு.காந்தி உபயோகிப்பதுபோல் மெத்தைத் தலையணை துப்பட்டி கொசுவலை ஆகியவைகளையும் பார்த்து, ஜனங்கள் அதையும் பின்பற்றுவதானால் மேல் கண்ட 10, 20 கோடி ரூபாய் துணி மீதியாவதற்கு பதிலாக 20,30 கோடி ரூபாய் துணி அதிகமாகத்தான் வேண்டியிருக்கும். தவிர ஏழைகளுடைய துணிகளை வாங்கிக் கொளுத்தினால் அவர்கள் அதற்குப் பதிலாக வேறு எதை வாங்க யோக்கியதை உடையவர்கள் ஆவார்கள் என்பதை யாராவது யோசித்துப் பார்த்தார்களா? கதர் வாங்குவதானால் பணம் ஒன்றுக்கு இரண்டு
மூன்று அதிகமாய் செலவு செய்ய வேண்டும். அப்படி செலவு செய்வ தானாலும் கிடைக்குமா? கடைசியாக உள்நாட்டு மில் துணியானாலும் வாங்குவதாயிருந்தாலும் அதுவும் போதாமல் தானே மேல்கொண்டு அறுபது கோடி ரூபாய் துணி வெளிநாட்டிலிருந்து வரவேண்டியிருக்கின்றது.
அப்படி இருக்க, இந்த கணக்கை எப்படி சரிசொல்ல முடியும்? எல்லோருமே நூல் நூற்க ஆரம்பித்தால் ஒரு சமயம் துணி கிடைக்கக்கூடும்
குடி அரசு - 1929 () 140
என்று சொல்லலாமானாலும் நூல் நூற்பவர்களுக்கெல்லாம் மணிக்கு ஒரு (சல்லி) பை தானே கூலி கிடைக்கின்றது. அந்தப்படி மணிக்கு ஒரு தம்பிடி கூலி கிடைப்பதானாலும் அந்த நூலில் நெய்த வேஷ்டிக்கு ஒன்று இரண்டாக மூன்றாக கிரயம் கொடுத்து வாங்கினால்தானே கிடைக்கக்கூடியதாயிருக் கின்றது. இதுவரை கதருக்காக என்று பாழாக்கின ரூபாய்களை நூல் நூற்பு மில்லாகவும் நெசவு செய்யும் மில்லாகவும் கட்டி இருந்தால் சுமார் ஒரு 50மில்
கட்டியிருக்கலாம். இந்த ஐம்பது மில்லில் உற்பத்தியாகும் நூலுக்கும் துணிக்கு கொடுக்கக்கூடிய கூலிகளில் இப்போது மணிக்கு ஒரு தம்பிடி சம்பாதிக்கும் கூலி ஆண்களைவிட இரண்டு மூன்று பங்கு ஆட்கள் மணிக்கு ஒரு அணா
முதல் ஒரு ரூபாய் வரை சம்பாதிக்கக் கூடிய யோக்கியதை அடைவார்கள்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களை ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டத்தாரின் வயிற்று வளர்ப்புக்கென்றே- தேர்தல் சூழ்ச்சிக்கென்றே போலி இயக்கங்களை வைத்துக் கொண்டு மக்களின் பணங்களையும் நேரங்களையும் ஊக்கங்களையும் அறிவுகளையும் கெடுத்துக் கொண்டும்
இருக்கும்படி இனியும் எத்தனை காலத்திற்கு நாம் இடங்கொடுத்துக் கொண்டு இருப்பது என்பதை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.03.1929
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மதுவிலக்கு யிரசாறத்திற்க 400000 ரூ.
நமது மாகாணத்தில் உள்ள சுமார் 4 கோடி பார்ப்பனரல்லாத மக்களும். ஏறக்குறைய ஏகமனதாய் இருந்து பல நாட்களாகக் கிளர்ச்சி செய்து வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை சென்னை அரசாங்க உத்தியோகத்தில் ஒருவாறு அமுலுக்கு கொண்டுவர முயற்சித்து தைரியமாய் வாதாடி வெற்றி பெற்ற நமது சுகாதார மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார். அவர்கள் மதுபானத்தில் பெரிதும் கஷ்டமும் நஷ்டமும் அடையும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் நன்மையை உத்தேசித்து மது விலக்கு பிரசாரம் செய்வதற்கு என்று இவ்வருஷத்திய வரவு செலவு திட்டத்தில் நான்கு லட்சம் (4,00,000) ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதைக்கண்ட நமது எதிரிகளான கன்மனப் பார்ப்பனர்கள் மதுபானம் நின்றுவிட்டால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமே எனக் கருதி சட்டசபையில் அத்தீர்மானம் நிறைவேறாமல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களான கனவான்கள் இப்பார்ப்பனர்.
களின் சூட்சிக்கும் விஷமத்திற்கும் பயந்து ஏமாந்து போகாமல் தைரியமாய்
உறத்து நின்று பிரசாரத் துகையை அனுமதித்து நிறைவேற்றி வைப்பதுடன் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்களும் நம் மதுபானத்தினால் கஷ்டப்படும் மக்கள் சார்பாக நன்றி செலுத்தவும் கடமைபட்டிருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.
குடி அரசு - அறிவிப்பு - 10.03.1929.
குடி அரசு - 1929 () 142
நம்பிக்கையில்லாத் தீர்மாணம்
தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரிசிடெண்ட் திருவாளர் ராவ்பகதூர். சீதாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகத் தெரிய வருகின்றது. திரு.ரெட்டியார். பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர். ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதைப் பிரசாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவைப் பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கியும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்கு கூட வொட்டாமல் செய்தவர். முயற்சி செய்தவர்களையும், பொறுப்பற்றவர்கள் என்று சொன்னவர். பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்க கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ்
கட்சி தலைவருக்கு வலக் கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப் படுத்திக் கொண்டவர். ஐயோ பாவம். இவ்வளவும் இருந்தும் கோழிக்குஞ்சை ராசாளி தூக்கிக் கொண்டு போவது போல் கண்மூடி கண் திறப்பதற்குள்ளாக திரு.ரெட்டியாரின் நம்பிக்கை பறந் தோடிவிட்டது. 'தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, அது சுழி மாறிப் போனாலும் போச்சு” என்கின்ற பெரியார் வாக்கியப்படி திடீரென்று சுழிமாறிப் போய் தனக்கு 11 ஓட்டுகளும் தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு 23 ஓட்டுகளும் கிடைத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஒன்றும் முழுகிப் போகவில்லை, குறைந்த பட்சம் திரு.ரெட்டியார் உலகம் என்பது என்ன என்பதை கற்றுக் கொள்ளவாவது இந்த முடிவை ஒரு தக்க சந்தர்ப்பமாக கொண்டாரானால் அவசியம் அவருக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமே அனுகூலமான பயனை கொடுத்தாலும் கொடுக்கலாம். மேலும் திரு.சீதாராம ரெட்டியார் போன்ற மற்றும் சில ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும் இது ஒரு படிப்பினையாகவும் ஆகலாம்.
குடி அரசு - கட்டுரை - 17.03.1929
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
“ஆன் ற் ப் ம்
சுயமரியாதைக்கு எதிர்பிரசாரம்
சமீப காலத்தில் சென்னையில் ஆஸ்திக சங்கம் என்பதாக ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதன் தத்துவம் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்பிரசாரம் செய்வது என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இச்சங்கத் தலைவர்களும் சூத்திரதாரர்களும் யார். என்று பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு உபயோகப் படுத்தப்பட்டு வரும் காங்கிரசின் பேரால் வயறு வளர்த்து வந்த நபர்களே
யாவார்கள். எனவே பிழைப்புக்கு ஆபத்து வந்த ஒரு கூட்டம் தானாகவே ஒன்று சேர நேர்ந்தது ஒரு அதிசயமல்ல, ஆனாலும் அப்படிச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அனுகூலமாக புத்திசாலித்தனமாய் ஒருவழி கண்டுபிடிக்காமல் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போல சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்பிரசாரம் செய்ய ஒரு சங்கம் ஏற்படுத்து வதாகவும் அதற்கு “ஆஸ்திக சங்கம்” என்று பெயர் வைத்துக் கொண் டதாகவும் வெளிப்படுத்திக் கொண்டது ஒன்றே போதுமானது இவர்களது முட்டாள்தனத்தை விளக்குவதற்கு. சுயமரியாதை சங்கத்தில் எந்த பாகத்தை அல்லது எந்த கொள்கையை இவர்கள் எதிர்க்கப் போகின்றார்கள் என்று கேட்கின்றோம்.
இவர்கள் காங்கிரசின் புரட்டு வெளிபட்டுவிட்டதால் வேறு வழி கண்டுபிடிக்க வேண்டிய நிமித்தம் சுயமரியாதை இயக்கத்தை “நாஸ்திகம்” என்று சொல்லிக் கொண்டு தாங்கள் அதற்கு எதிர்பிரசாரம் செய்யப் போவ தாக சொல்லிக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்யப்புறப்பட்டு விட்டார்கள். இவர்களின் யோக்கியதையைப் பற்றி மற்றொரு சமயம் யோசிப்போம்.
பொதுவாக, தங்கள் கடவுளைப் பற்றி சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகின்றது என்று பார்த்தால், கடவுளை வணங்க தரகன் வேண்டாம், வணக்கத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டாம் என்று தான் இப்போது சொல்லுகிறது; முதலாவது இதை எதிர்க்க மகமதிய ஷாபி சாயபுக்கும் கிருஸ்தவக் குழந்தைகளுக்கும் அங்கு வேலையே கிடையாது. அவர் களுக்கு தரகர்களும் இல்லை. பூசாரியும் இல்லை. அன்றியும் உருவக்
குடி அரசு - 1929 () 144
கடவுளே இல்லை. மற்றபடி ஜெயவேலு என்பவரோ தீண்டாதவர் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டவர். அவருக்கு கோவிலுக்குள் இடமே இல்லை என்று தள்ளிவிட்டார்கள். எனவே, அவருக்கு பூசைக்கு சிலவைப்பற்றியும் பூசாரியைப் பற்றியும் கவலையே இல்லை. திரு.கல்யாணசுந்தர முதலியாரோ கோவிலில் சாமி கிடையாது என்பவர். அது மாத்திரம் அல்ல. தான் கோவிலுக்குப் போகும் வழக்கமே இல்லை என்று சொல்லுபவர். அவருக்கும்
செலவும் தரகனும் தேவையில்லை.
ஒரு சமயம் சுயமரியாதை இயக்கம் சாமியே இல்லை என்று சொல்லுகின்றது என்று யாராவது சொல்ல வருவார்களானால் எங்கு எப்போது யாரால் சொல்லப்பட்டிருக்கின்றது என்று யாராவது சொல்லக் கூடுமா? அந்த விசாரணையே அறிவுக்கு பொருத்தமற்றது என்றும். அதைப்பற்றி கவலைக்கொள்ள வேண்டாம் என்றும் ஒருவன் தன் சொந்த அறிவைக் கொண்டு ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியாமல் போகுமானால் அவனை பயப்படுத்தி ஒழுக்கத்தில் திருப்புவதற்கு சாமியோ, பூதமோ, எதை வேண்டுமானாலும் கற்பித்துக் கொள்ளுவதில் கவலையில்லை யென்றும், ஆனால் அதுவும் அப்படிக் கற்பித்துக் கொண்ட பிறகும் மனிதன் ஒழுக்க மாக நடக்க முடியவில்லையானால் அதற்கு மேல் என்ன சமாதானம் சொல்லு
கின்றீர்கள் என்றுதான் கேட்கின்றதே ஒழிய வேறு என்ன கேட்கின்றது?
மேலும் கடவுளைப் பற்றி வீண் கவலைப் படாதீர்கள் என்றுதான் சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றது. ஏனென்றால், அது வெகு காலமாகவே முடிவடைய முடியாத விவகாரத்திற்கு இடமான விஷயம். அநேகர் அநேகவிதமாய் சொல்லி இருக்கின்றார்கள், எழுதி இருக்கின்றார்.
கள், சொல்லியும், எழுதியும் வருகின்றார்கள். உதாரணமாக ஒருவர் கடவுள் என்பதாக வேறு ஒன்று இல்லை, தானே தான் கடவுள் என்று சொல்லி
இருக்கின்றார். ஒருவர் அது ஒரு ஜோதி என்றார். மற்றும் ஒருவர் அது ஒரு சக்தி என்றார். மற்றும் ஒருவர் அது ஒரு தத்துவம் என்றார். மற்றும் ஒருவர். அது இயற்கைத் தோற்றம் என்றார். ஒருவர் கண்ணுக்கும் மனதிற்கும் எட்டாதது என்றார். ஒருவர் வேதங்களும் அறியப்படாதது என்றார். ஒருவர். அது ஒரு மயக்கம் என்றார். ஒருவர் அது ஒரு உணர்ச்சி என்றார். ஒருவர். அது நம்பிக்கை என்றார். ஒருவர் ஒரே கடவுள் என்றார். ஒருவர் பல கடவுள் என்றார். ஒருவர் மனித உருக்கொண்டவர் என்றார். ஒருவர் உருவமே இல்லாதவர் என்றார். ஒருவர் சிவனே கடவுள் என்றார். ஒருவர் விஷ்ணுவே கடவுள் என்றார். ஒருவர் அதை அறிந்தவர்கள் யாரப்பா என்றார். ஒருவர். நம்பினால் தான் உண்டு நம்பாவிட்டால் இல்லை என்றார். ஒருவர்
சூனியத்தில் முடிந்தது என்றார். ஒருவர் அன்பு என்றார். ஒருவர் அறிவு என்றார். இப்படி பலவாறாக சொன்ன இவர்கள் எல்லோரும் பெரியோர்கள் தானே தவிர வேறு சாதாரணமான ஆஸ்திக பிரசாரகர்களின் யோக்கியதை
மாத்திரம் உடையவர்களல்ல என்று மதிக்கப்படுகின்றார்கள்.ஆதலாலேயே
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
நாம் அதைப்பற்றிய கவலை எடுத்துக் கொள்ளவில்லையே ஒழிய வேறில்லை...
மற்றபடி சுயமரியாதை இயக்கம் சமயத்தை குறை கூறி இருக்கின்றது. என்று சொல்வதாயிருந்தால் எந்தச் சமயத்தை என்று கேட்கின்றோம்.
இந்து சமயத்தை என்றால் ஆம் கண்டிப்பாக ஆம் என்றே சொல்லுவோம். ஏன் என்றால் அப்படி ஒரு சமயமே இல்லை. அந்த வார்த்தையே பொருளற்றது. அதற்கு ஏதாவது கொள்கைகள் இருக்குமானால் அது பார்ப்பன ஆதிக்கத்திற்காக கற்பிக்கப்பட்டது. அதை நாம் கண்டிப்பாய்
ஒப்புக் கொள்ள முடியவே முடியாது. இந்து சமயம் என்பதை ஒழித்தால் ஒழிய மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது.
ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம் ஆதாரமாம். அதை எல்லோரும். கேட்கவோ, படிக்கவோ, பார்க்கவோ கூடாதாம். ஆனால் அந்தப் படிக்கவோ, பார்க்கவோ, கேட்கவோ கூடாத ஒன்றை நம்புகின்றவனும் ஒப்புக் கொள்ளு கின்றவனுந்தான் இந்துவாம். முதலாவது இந்தக் கொள்கையை ஒப்புக் கொண்டு எவர்கள் தன்னை இந்து சமயக்காரனென்றும் இந்து சமயத்தைக் காக்க ஆஸ்திகப்பிரசாரம் செய்பவனென்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்களே அவர்கள் எல்லோரையும் ஒன்றா முட்டாள்கள் என்றோ, அயோக்கியர்களென்றோ தான் நாம் சொல்லித் தீர வேண்டியவர்களா யிருப்பதற்கு வருந்துகின்றோம்.
தவிர, இந்து சமயக்காரர்கள் என்பவர்களுக்கு தர்ம சாஸ்திரங்களாயும் வேதங்களின் சாரமாயும் (கொள்கைகளாய்) விளங்குவது மனுதர்ம
சாஸ்திரமும், பராசர ஸ்மிருதியும் புராணங்களுமேயாகும். உலகத்தில் கடு களவு சுயமரியாதை உணர்ச்சியும் பார்ப்பனக் கலப்பற்ற சுத்த ரத்தமும் ஓடுகின்ற மனிதன் இவற்றை ஒப்புக் கொள்ளக்கூடும் என்று எதிர்பார்ப்பது மடமையேயாகும்.
அப்படி வேறு யார் ஒப்புக் கொள்ளுவதானாலும் நாம் கண்டிப்பாய் அவ்வுணர்ச்சிகளை ஒழிக்கவே உயிர்விட நிச்சயத்திருக்கின்றோம். இதில் சிறிதளவாவது ராஜியோ ரகசியமோ ஒன்றும் கிடையாது என்றே சொல்லு வோம்.
மற்றபடி சைவ சமயத்தையோ, வைணவ சமயத்தையோ நாம் தாக்குவதாக சொல்வதானால், வேதத்தையும் சாஸ்திரத்தையும், புராணங் களையும் தள்ளிவிட்டால் சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடம் எங்கே என்று கேட்கின்றோம். முதலாவது இந்து மதத்தைச் சேர்ந்த அறிவாளிகள் கற்றவர்கள் என்னும் பெரியோர்களாலேயே இழித்துக் கூறப்பட்ட புராணங் களை மாத்திரம் தள்ளிவிட்டாலே சைவனுக்கும், வைணவனுக்கும் இடம் எங்கே? அவர்களுக்கு தெய்வங்கள் எங்கே? வைணவத்திலும், சைவத்திலும் உள்ள சமயாச்சாரிகள் எல்லோரும் பாடி இருக்கின்ற பாட்டுகள் பெரிதும்
குடி அரசு - 1929 () 146
புராணங்களை திருப்பியும் விளக்கியும் சொன்னதோடு கடவுள் கண்ணையும், மூக்கையும், குறிகளையும் வர்ணித்து சொன்னதல்லாமல் வேறு என்ன அதிசயத்தை அற்புதத்தை சொல்லிப் பயன் உண்டாக்கினார்கள் என்று கேட்கின்றோம். ஒரு சமயம் சமயாச்சாரிகளை வைகின்றார்கள் என்று சொல்வதானால் சுயமரியாதை இயக்கத்தார் எந்த சமயாச்சாரியை வைகின்றார்கள். முதலாவது அனேக சமயாச்சாரிகளைப் பற்றி அவரவர்கள் கதைப்படி அவரவர்கள் இருந்திருக்க முடியாதென்றே சுயமரியாதை இயக்கத்தார் கருதுகின்றார்கள். 3 வயதில் ஒருவருக்கு கடவுள், கிண்ணியில்
பால் கொண்டுவந்து ஊட்டியதையும், அதைக்குடித்த குழந்தை பாடினதையும் போன்ற கதைகளை ஒருக்காலமும் சுயமரியாதை இயக்கத்தார் ஒப்புக் கொள்ள முடியாது. முடிந்தாலும் அந்தக் கதை இப்போது எந்தக் காரியத்
திற்கும் மக்களுக்குத் தேவையில்லை. அன்றியும் அதை நம்புவதால் எவ்வித பலனும் உண்டாகப் போவதில்லை என்று சொல்லுகின்றார்கள். அன்றியும் அப்படிப்பட்ட சமயாச்சாரிகள் மீது சுயமரியாதைக்காரருக்கு யாதொரு குரோதமும் இல்லை. ஆனால் அவர் செய்ததாகவும், சொன்னதாகவும் சொல்லும் அநேக விஷயங்கள் ஒழுக்கம் என்று சொல்லப்படுவதற்கு விரோதமாகவும், நீதிக்கு விரோதமாகவும் ஒரு சமூக மக்கள் சுயமரியாதைக்கு ஈனமாகவும் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்கவே மாட்டார்கள். அன்றியும் அதற்கு சுயமரியாதை இயக்கத்தார் காரணஸ்தர்கள் அல்ல. அவர்களைக் கற்பித்து அவர்கள் மீது இம்மாதிரி ஆபாசங்களை ஏற்றின சமயவெறியர்களே பொறுப்பாளிகளாவார்கள்.
மற்றும் ஒரு சமயம் சுயமரியாதை இயக்கத்தார் கலைகளை அழிக்கப் பார்க்கின்றார்கள் என்று சொல்ல வருவார்களானால் எந்தக் கலைகளை அழிக்கின்றார்கள் என்று கேட்கின்றோம்.
உதாரணமாக திரு.கல்யாணசுந்தர முதலியாரைப் பற்றியே கேவல மான முறையில். அவரது ஒழுக்கத்தையும், நாணயத்தையும் கண்டித்து
இழித்துக் கூறி “கம்பரைவிட”” மேலான கற்பனைகளை அமைத்து இலக்கிய, இலக்கணங்களுக்கு ஆதாரமாகவும், மேற்கோளாகவும் கருதும் படியாக அவ்வளவு அற்புதமாய் ஒரு வித்துவான் பாடியிருப்பார்களானால் கலையில் கவலையுள்ள திரு. முதலியார் அதனை பிரசங்கம் செய்வாரா அல்லது அச்சுப் போட்டு விற்பாரா அல்லது குறைந்தபக்ஷம் அக்கலையைப் பற்றினவையாலும் சங்கடப்படாமல் அதை இருக்க வேண்டுமென்று சொல்லுவாரா என்று கேட்கின்றோம்.
அதுபோலவே ஒரு நல்ல ஓவியக்காரன் திரு. முதலியார் மனம் புண்படத்தக்க முறையில் திரு.முதலியாரைப் பற்றியே ஒரு அருமையான ஓவியம் எழுதிக் கொண்டு வந்தால் அந்த ஓவியத்தைக் காப்பாற்ற திரு.முதலியார் ஆசைப்படுவாரா என்று கேட்கின்றோம்.
தவிரவும் அந்தக் கலையும், ஓவியமும் படிக்கும் பார்க்கும் மக்கள்
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
100-க்கு 99 பேருக்குமேலாக கலை அறிவும் ஓவிய அறிவும் சிறிதும் இல்லாமல் படித்தபடியும் பார்த்தபடியும் அப்படியே நம்பி நடவடிக்கையில் கொண்டுவருவதாயிருந்தால் அவர்களிடம் கூட அக்கதையின் யோக்கிய தையை எடுத்துச் சொல்ல வேண்டாமா என்று கேட்கின்றோம். உதாரணமாக திருமுதலியார் ராமாயணக் கதையைப் படிக்கின்றார், பிரசங்கம் செய்கின்றார், ராமாயணத்தில் வரும் கதாநாயகர்களைப் பற்றி அதில் கற்பிக்கப்பட்டி ருக்கிறபடியே கருதி விருப்பும் வெறுப்பும் கொள்கிறார். இதைப்பற்றி திருமுதலியாரை ஒரு அறிவாளி கேள்வி கேட்கும்போது, அது நடந்த சங்கதி யல்ல; அது ஒரு கலை என்று சொல்லி மழுப்புகிறார்.
ஆனால், பாமர மக்களிடம் நின்று கொண்டு பேசும் போது, “என் ஆண்டவன் ராமன்” “என் தெய்வம் சீதை” “அயோக்கிய ராக்கதன் ராவணன்” என்று கண்ணில் தாரை தாரையாய் நீர் வடிக்கிறார். எனவே, திரு. முதலியார் ராமாயணத்தைக் கலையாகக் கண்டாரா கற்பனை கதையாகக் கண்டாரா கடவுள் நெறியாகக் கண்டாரா என்று கேட்கின்றோம். அது போலவே பெரிய புராணத்தைப் பற்றிப் பேசும்போது அறிஞர்களிடத்தில் அது ஒரு சையன்ஸ் என்பதும், அது ஒரு சீர்திருத்தக் கொள்கை என்பதும், அது ஒரு கலை என்பதும், இடைச்செருகு என்பதும், அகச்சான்று புறச்சான்று இல்லை என்பதும், பாமர மக்களிடம் புராணப் பிரசங்கம் செய்யும்போது “என் அப்பன்,” “எனது குருநாதன்” உடனே அங்கு சிவபெருமான் ரிஷபாரூடராய் வந்து காக்ஷியளித்தார் என்பதும், தவடை தவடையாய்ப் போட்டுக் கொண்டு கண்ணீர் வடிப்பதும், இரு கையையும் கூப்பிக் கண்களை மூடிக்கொண்டு வாயில் முணுமுணுப்பதும் பார்க்கின்றோம். எனவே இங்கு திரு.முதலியார் பெரிய புராணத்தை கலையாகக் கண்டாரா? கற்பனைக் கதையாகக் கண்டாரா? கடவுள் நெறி உணர்த்த வந்த பெரியார் வாக்காக கண் டாரா அல்லது வயிற்றுப் பிழைப்பிற்கு இதை ஒரு ஆஸ்பதமாகக் கண்டாரா என்று கேட்கின்றோம்.
கடைசியாக, திரு. முதலியாருக்கோ அல்லது அவரது ஆஸ்திக குழாங்களுக்கோ உண்மையில் கடவுளிடத்திலாவது, கடவுள் நெறியிடத்தி லாவது, கடவுள் ஒழுக்கத்திலாவது, கடுகளவு நம்பிக்கையோ பக்தியோ இருக்கின்றதா என்றும், தங்கள் தங்கள் சொந்தத்திலாவது குறைந்த அளவு நாணயமோ, ஒழுக்கமோ இருக்கின்றதா என்றும், அவ்வாஸ்திகக் குழாங்க ளைக் கேட்பதற்கு முன்னால் அவ்வாஸ்திகக் குழாம் யாரை ஏய்க்க இவ்
வேடம் பூண்டார்களோ அவர்களைக் கேட்கின்றோம்.
இவ்வாஸ்திகப் பிரசாரம் தவிர இச்சூழ்ச்சியும் சுயமரியாதை இயக் கத்தை அழிக்கவேண்டும் என்கின்ற சூழ்ச்சியும் இவர்களுக்கு உண்மை யிலேயே ஆஸ்திகத்தில் அன்பு கொண்டு செய்ய வேண்டியதாயிற்றா அல்லது அக்குழாத்தின் வயிற்றுப் பிழைப்பில் சுயமரியாதை இயக்கம் மண்போட்டு விட்ட வயிற்றெரிச்சலாலும், பார்ப்பனர்கள் அந்தத் தேர்தலுக்கு
குடி அரசு - 1929 () 148
இதை ஒரு ஆயுதமாக உபயோகித்துக் கொள்ளலாம் எனக்கருதி, கூலி கொடுத்து இக்குழாங்களை உசுப்படுத்திவிட்டதினாலும் செய்ய வேண்டியதாயிற்றா என்று பொது ஜனங்களைக் கேட்கின்றோம்.
தவிர, இக்கூட்டத்தினர்களின் கூச்சலைக் கண்டு ஜஸ்டிஸ் கட்சி யாரிலும் சிலருக்குத் தங்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டுக் கிடைக்காமல் போகுமோ என்கின்ற பயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. அதைப்பற்றி நமக்குச் சிறிதும் கவலையில்லை. நமது இயக்கம் யாருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்கு அல்ல, எல்லோருக்கும் மானமும் அறிவும் உண்டாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதில் ஆரம்பிக்கப்பட்டது. சென்ற தேர்தல் தோல்விபோல் இன்னம் 2, 3 தோல்வி கிடைத்தால் கட்டாயம் மானமும் அறிவும் வந்துவிடும் என்றே நினைக்கின்றோம். ஆதலால், நாம் தோல்வியையே வரவேற்கின்றோம். எங்கு வெற்றி தோல்வி ஏற்பட்டாலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு சிறப்பாக சென்னையில் நல்ல கண்ணியமான தோல்வி ஏற்படுமானால் அது சுயமரியாதை இயக்கத்திற்கு மாத்திரமல்ல, ஜஸ்டிஸ் கட்சிக்கு கூட நன்மையைப் பயப்பதாகும். வெளியிடங்களிலும் இரண்டொரு இடங்களில் தோல்வியே விரும்புகின்றோம். ஏனெனில் தோல்விதான் புத்தி கற்பிக்கிறது, வெற்றி ஆணவத்தையும் மயக்கத்தையுமே கற்பிக்கின்றது. ஜஸ்டிஸ் கட்சியின் வெற்றி தோல்விக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக இன்றைய நிலையில் ஜஸ்டிஸ்: கட்சியைச் சேர்ந்த அக்கட்சியின் மூளை என்னும் திருவாளர் ஏ.ராமசாமி முதலியாரும் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த திரு. ஆர்.கே. ஷண்முகமும் ஒரு பகுதிக்கு நிற்பார்களானால் திரு.ஷண்முகம் செட்டியாருக்குத்தான் நமக்கு ஓட்டு இருந்தால் கொடுப்போம். அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த அதன் காரியதரிசியும் அக்கட்சிக்காக தள்ளாத வயதில் யாதொரு பிரதிபலனும் கோராமல் உழைக்கும் திவான்பகதூர் டி.வரதராஜுலு நாயுடு அவர்களும், சுயராஜ்யக் கட்சியைச்சேர்ந்த திரு.திருகூட சுந்தரமும் ஒரு தொகுதிக்கு நிற்பார்களானால் நமக்கு ஓட்டு இருந்தால் திருகூட கந்தரத் திற்குத் தான் கொடுப்போம்.
அரசியல் அபிப்பிராயமே நமது இயக்கத்திற்கு முக்கியமானதல்ல என்பதை பொது ஜனங்கள் நன்றாய் உணர வேண்டும். அவர்கள் யாராயிருந்தாலும் சரி- குணங்குடி கொண்டால் உயிர்க்குயிர்தான் - என்ன குணம் சுயமரியாதை உணர்ச்சிக்குணம். ஆகையால் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டு இல்லாமல் போகும் என்கின்ற காரணத்திற்காக சுயமரியாதை இயக்கம் ஒரு மயிர்க்கால் அளவுகூட தனது உறுதியை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதை ஆஸ்திகப் பூச்சாண்டிகளும் அவர்களுக்குப் பணம் கொடுத்து வேலை செய்பவர்களும் அவர்களைக் கண்டு நடுங்குபவர்களும் கண்டிப்பாய் உணர வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.03.1929.
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
காங்கிரசும் மதுவிலக்கு பிரசாரமும்
நமது இலாக்கா மந்திரி கனம் முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய சிறிது பணம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் உபதலைவரும் கோவை ஜில்லா பிரதிநிதியும் கள்ளு உற்பத்தி செய்யக் கூடிய சுமார் ஆயிரம். தென்னை மரங்களை உடையவரும் வருஷம் கள்ளில் 5000, 10000 சம்பாதிப்பவரும் அய்யங்கார் பார்ப்பனருமான திரு.சி.வி.வெங்கட்டரமண அய்யங்கார் அவர்கள் எழுந்து சர்க்கார் மது விலக்குப் பிரசாரம் செய்யக் கூடாது என்றும், மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் குடிக்காத மனிதனுக்குக் கூட இவர்கள் ஏன் குடிக்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள் என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக குடித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாக்கிவிடும் என்றும் சொல்லி அதை ஆட்சேபித்தார். (இவர்தான் சென்ற தேர்தலில் திரு.2 ராஜகோபானாச்சாரியாரால் மதுவிலக்குப் பிரசாரத்
தின் பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்கப்பட்டு சட்டசபை மெம்பர் ஆவார்? உடனே கோவை திரு.சி.எஸ்.இரத்தினசபாபதியார் எழுந்து திரு. அய்யங்கார். அவர்கள் சொல்லுகின்ற கொள்கைப்படி பார்த்தால் ஒத்துழையாமை காங்கிரசின் போது பத்துலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து மது விலக்குப் பிரசாரம் செய்ததால் தான் நாட்டில் குடி அதிகரித்து விட்டது என்பதாக அர்த்தமாகின்றது. இதைத் திரு.அய்யங்கார் ஆம் என்று ஒப்புக் கொள்வாரானால் அய்யங்காருடன் சேர்ந்து ஓட்டுக் கொடுக்கின்றேன் என்று சொன்னாராம். உடனே சபையிலுள்ளவர்கள் “அய்யங்காருக்கு, வெட்கம், வெட்கம்” என்று கைதட்டிச் சிரித்தார்களாம். அய்யங்கார் திருடனைத் தேள் கொட்டியது போல் விழித்தாராம். நிற்க, மது விஷயத்தில் தென்னை மரத்தினால் வருஷம் 10000, 5000ம் சம்பாதிக்கும் நபர். அதிலும் பார்ப்பனக் கனவானிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இது கோவை ஜில்லா ஓட்டர்கள் இவரைத் தெரிந்தெடுத்ததின் மூலம் செய்த பெரிய தவறு என்று உணர்வதற்கு வேறு என்ன உதாரணம் தேடுவார்களோ தெரிய வில்லை.
தவிர, முன்னுள்ள மது மந்திரி, அம்மை குத்தும் இலாகா அதிகாரிகள் கிராமங்களில் மதுவிலக்கு பிரசாரம் செய்யும் வேலையில் தங்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது என்று சுற்று உத்திரவு போட்ட காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் தான் சர்க்கார் அதிகாரிகள் மதுவிலக்குப் பிரசாரம் செய்யக்
குடி அரசு - 1929 () 150
கூடாது என்று உத்திரவு போடலாமா என்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தவர்கள். இப்போது இதே பார்ப்பனர்கள் சர்க்கார் மதுவிலக்குப் பிரசாரம் செய்வதை எதிர்த்துச் சண்டைபோடுகின்றவர்கள். எனவே இதிலிருந்து காங்கிரசினுடையவும் பார்ப்பனர்களின் மதுவிலக்குப் பிரசாரத்தன்மையினுடையவும் யோக்கியதையை பொது ஜனங்கள் உணர்ந்து கொள்வார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.03.1929
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சீர்காழியில் சுயமரியாதை முழக்கம்
சகோதரர்களே! பெரியோர்களே!
சில வருஷங்களுக்கு முன் ஒத்துழையாமைக் காங்கிரஸ் பிரசாரத்தின் போது இவ்வூருக்கு வந்திருக்கிறேன். ஆனால், இன்றோ சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துக்கூற வந்திருக்கிறேன்.சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் எதிரிகளும் அவர்களது ஆள்களும், தப்பும் தவறுமாகத் திரித்துக் கூறி வருகின்றார்கள். உங்கள் ஊரிலும் அதே காரியம் சற்று அளவுக்கு மீறிச் செய்து விட்டதால் வெகுபேர் ஆச்சரியப்பட்டு பார்க்கலாம் என்றே நான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இங்கு கூடியிருக்
கின்றீர்கள். இது நமது இயக்க எதிரிகள் தங்களுக்குத் தெரியாமலே நமக்குச் செய்த உதவியாகும். மற்றும் என்றுமே இப்படிப்பட்ட பொதுக் கூட்டங் களுக்கு வராத அரும்பெரும் கனவான்களும் விஜயம் செய்திருப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. என்னை அன்னிய மதப் பிரசாரகன் என்றும், சர்க்கார் பிரசாரகன் என்றும் எழுதப் பட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நான் இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்தைத் துவேஷம் செய்து, அன்னிய மதங்கள் என்று அழைக்கப்படும் மதங்களை ஆதரிப்பதாகவும் அவர்களிடம் பிரதிபலன் பெறுவதாகவும் உங்கள் ஊரில் சிலர் கட்டுகட்டி விட்டிருக்கின்றதாக கேள்விப்பட்டேன். எங்கள் ஜில்லாவிலும் ஆலயங்களும் தேவஸ்தான போர்டும் உண்டு.அதில் காரியதரிசியாகவும், பிரசிடெண்டாகவும், வைஸ்பிரசிடெண்டாகவும் 20, 30
- வருஷகாலமாய் இருந்து வருகின்றேன். எங்கள் குடும்பத்தாரிலும் பல கோவில்கள் கட்டப்பட்டும், உற்சவங்கள் செய்யப்பட்டும் வருகின்றன.
எனவே, என்னுடைய இந்தச் சுமார் 25 வருஷ நிர்வாகத்திற்குள்ளாக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பல கோவில்கள்ரிப்பேர் செய்தும், நிர்வகித்தும் வந்ததின் பயனாக அவற்றின் பயனின்மையையும் அவற்றால் ஏற்படும் தீமைகளையும் நான் நன்றாய் அறிந்திருக்கின்றேன்.
இந்து மதத்தை எப்படிக் கண்டிக்கின்றேனோ அதே கண்ணுடனேயே தான் மற்ற சமயங்களையும் பார்த்துக் கண்டித்து வருகின்றேன். மற்ற சமயக்காரர்களுக்கும் என்மீது சிறிது அபிப்பிராய பேதம் இருக்கலாம்.
குடி அரசு - 1929 () 152
பிறவியில் உயர்வு தாழ்வு ஏமாற்றம் ஆகியவைகளுக்கு மதத்தின் பேரால் இடம் கொடுக்க முடியாது. ஆதலால் இதுவரை ஏமாற்றி வந்தவர்களுக்கு நமது பிரசாரம் கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக அவர்கள் எதையும் சொல்லவும் துணிவார்கள். அதற்கு நாம் பயப்படக்கூடாது.
அதுபோலவே, நான் சர்க்காரை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. எனக்கு எந்த சர்க்கார் தயவும் தேவையில்லை. எனது வாழ்க்கையில் ஸ்தல ஸ்தாபன சம்பந்தமாக என் சக்திக்கியன்றவரை எவ்வளவு உயர்ந்த பதவியி லிருந்து பார்க்க வேண்டுமோ அதெல்லாம் பார்த்தாகிவிட்டது. தாலூகா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, ஆனரரி மேஜிஸ்டிரேட்டு, ஆகிய வேலைகளில் இருந்து பார்த்தாய் விட்டது. முனிசிபல் சேர்மனாகவும் இருந் தாய்விட்டது. இவைகளையெல்லாம் நானே ஒரே நிமிஷத்தில் ஒன்றாய் ஒரே காகிதத்தில் ராஜிநாமாக் கொடுத்துவிட்டு வெளிவந்து விட்டேன். மற்றபடி
சர்க்கார் உத்தியோகம் ஏதாவது எதிர்பார்க்கிறேன் என்பதற்கோ முதலில் எனக்கு ஆங்கிலம் தெரியாது, இவ்வளவு கிழ வயதான நான் இனி எந்த உத்தியோகத்திற்கு லாயக்காயிருக்க முடியும்.
அன்றியும், மூன்று நான்கு தடவை சிறைவாசம் தண்டனை அடைந்த வனுக்கு சர்க்காரில் உத்தியோகம் தான் கொடுப்பார்களா? என்னை சர்க்கார் தங்கள் அடிமையாக ஏற்றுக் கொள்ள நம்புவார்களா? இன்னமும் சி.ஐ.டி. போலீசார் என்கூடவே இருக்கிறார்கள். இதோ இந்தக் கூட்டத்திலும் சி.ஐ.டி. நான் பேசுவதை எழுதுகின்றார்கள், பாருங்கள்.
ஒரு சமயம் நான்தான் பலவிதத்தும் உத்தியோகத்திற்கு லாயக்கில்லை. யானாலும் எனது பிள்ளை குட்டிகளுக்காவது உத்தியோகம் வாங்கிக் கொடுக்க, சர்க்காருடன் ஒத்துழைக்கக் கூடுமென்றாலோ, எனக்குப் பிள்ளை
யும் இல்லை; குட்டியும் இல்லை; என் சகோதரருக்கு சென்ற வாரத்தில் தான்
ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன் எனது அண்ணன் குழந்தை ஒன்றைச் சீமைக்கு அனுப்பி அங்கு சில வருஷகாலம்
படிக்க வைக்கப்பட்டான். மறுபடியும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தேன்.பாதி வழியில் “இன்புளூயென்சா” ஜுரம் கண்டு இங்கு வந்து மதனபள்ளியில் இறந்துவிட்டான். என் பந்துக்களிலும் உத்தியோகத்திற்கு லாயக்கானவர்கள் எவரும் இல்லை. ஆகவே, எனக்கு எவ்விதத்திலும், சர்க்கார் கூட்டுதவோ, தயவோ வேண்டியதில்லை. எனக்கு ஜீவனத்திற்கும், என் தகப்பனார் சம்பாதித்து வைத்துவிட்டுப் போயிருக் கின்றார். அது எனக்குப் போதும், மற்றும் பலருக்கு உணவளிக்கவும் உதவும். ஆதலால் ஜீவனத்திற்கும் யாருடைய தயவும் தேவையில்லை, மற்றபடி காங்கிரசுக்கு நான் விரோதி என்றும் அதை நான் திட்டுகிறேன் என்றும்
கூறப்படுகின்றது.
ஆம், இப்பொழுதும் அதையே கூறுகிறேன். காங்கிரஸ் என்ற சபை
திரு.காந்தியின் தலைமையின் கீழ் இரண்டு மூன்று வருடம் தேசமக்களின்
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
நன்மைக்குப் பாடுபட்ட காலத்தில் அதிலிருந்த தேசீய வீரர்களில் பெரும் பாலோர் இன்று அதில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அக்காலத்
தில் நான் காங்கிரசிற்கு எவ்வளவு உழைத்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியாததல்ல. ஒத்துழையாத் திட்டத்தில் அதி தீவிரமாக நின்று உண்மையில் பாடுபட்ட ஒரு சிலரில் நானும் ஒருவன் என்பதுடன், நான் மாத்திரமல்லாமல் எனது குடும்பத்தாரும், அக்காலத்தில் திரு.காந்தியின் தலைமையில் காங்கிரசைப் போற்றி அத்திட்டம் வெற்றியுறப்பாடுபட்டோம். காங்கிரசானது, தியாகம், கஷ்டம், சிறை என்பவைகளுடன் பிணைக்கப் பட்டிருந்த போது, இந்நாட்டிலுள்ள எல்லா அரசியல் சங்கங்களும், சர்க்காரும் காங்கிரசை எதிர்த்த காலத்தில், அக்காங்கிரசின் இம்மாகாணக் கமிட்டியில் தலைவர், காரியதரிசி என்ற பதவிகளைப் பெற்று நான் ஊழியம் செய்ததுடன், என் குடும்பத்தாரும் அவ்விதமே வேலை செய்தார்கள் என்பதற்கும் ஒரு உதாரணம் கூறி அதை முடித்து விடுகிறேன்.
ஒத்துழையாமை மும்முரமாய் நடந்து நான் சிறையில் இருக்கும்போது
சர்.சங்கரன் நாயர் தலைமையில் பம்பாயில் ரவுண்ட் டேபிள் கான்பரன்ஸ்
ஒன்று நடந்தது. அதன் பிரதிநிதியாய் திரு.காந்தியும் போயிருந்தார். அப் பிரதிநிதி கூட்டத்தில் முக்கியஸ்தர்கள், திரு.காந்தியைப் பார்த்து, மற்ற சகாக்களான அங்கத்தினர்கள் சொல்லும் திட்டங்கள் இருக்கட்டும். தாங்கள். (திரு.காந்தியை! சமாதானத்திட்டங்களைப் பற்றிப் பேசுமுன் ஒத்துழையாமை யைச் சற்று நிறுத்திவையுங்கள் என்று கேட்டார்கள். அதற்குத் திரு. காந்தி கூறிய பதில் என்ன? “அது முடியாத காரியம். ஏனென்றால் அது என் இஷ்டமல்ல, மற்ற காங்கிரஸ்காரர்களையும் குறிப்பாக, தமிழ் மாகாணத்தில் ஈரோடு என்ற நகரில் உள்ள இரு பெண்மணிகளையும் கேட்டுக் கொண்டு தான் ஒத்துழையா திட்டத்தைத் தள்ளிவைப்பதைப் பற்றி யோசிக்க முடியுமேயன்றி, நானாக எதுவும் சொல்லுவதற்கில்லை” என்று கூறினார். அவ்விரு பெண்களும் யார் தெரியுமா? எனது மனைவி ஒன்று; எனது தங்கை ஒன்று. ஆக இவ்விரு பெண்களேயாகும் (கரகோஷம்) இந்த விஷயம் 1922-ல் ஜனவரி 19 முதல் 22 தேதிக்குள் “இந்து” பத்திரிகையில் இருக்கின்றது. வேண்டுமானால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பெருமைக்காகச் சொல்ல வரவில்லை. மற்றெதற்காக என்றால், திரு.காந்தியும், காங்கிரசும் நாட்டிற்கு உண்மையில் பலனுடைய நல்லதிட்டத்தையும் கொள்கையையும் கொண்டிருந்த காலத்தில் நான் மாத்திரமல்லாமல், என் குடும்பமும் பெண் களும் கூடச் சற்றும் சலிப்பின்றி அதில் பாடுபட்டவர்களே யன்றி, இன்று என்னைக் குறைகூறும் நண்பர்களைப்போல் தியாகம் செய்ய வேண்டிய காலத்தில் ஓடி ஒளிந்தவன் நானல்ல என்பதற்காகவேயாகும். இதுவே என் னைப் பற்றி முதலில் உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டிய வார்த்தை.
இதில் தற்பெருமைக்காக ஏதாவது சொல்லப்பட்டதாகக் கருதாதீர்கள். உங்க ளுக்கு என்னைப் பற்றி பார்ப்பனர்களும் அவர்கள் கூலிகளும் செய்திருந்த விஷமப் பிரசாரத்தின் உண்மையை நீக்கவே இதைச் சொன்னேன்.
குடி அரசு - 1929 () 154
அரசியல் புரட்டு
நிற்க. அரசியல் உலகில் இன்று விளம்பரப்பட்டிருப்பவர்கள் 1காங்கிரஸ்காரர்கள், 2 பூரணசுயேச்சைக்காரர்கள். இவர்களின் யோக்கியதை யாது இவர்கள் அரசியல் என்பதின் பெயரால் செய்யும் - செய்து வரும் செய்கைகள், இவர்கள் முன்பின் செய்த தியாகங்கள் என்பவைகள் என்ன வென்பதைச் சற்று ஞாபகப்படுத்திப்பாருங்கள். ஒரு காங்கிரஸ் தலைவர், மேடையில் பேசும்போது “ஆங்கில அரசாங்கம் மிகவும் மோசம், அதை அழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்.” என்று கூறுவார்; நீங்களும் கைதட்டுவீர்கள். அவர் மகனும், அண்ணனும், தம்பியும் சம்மந்தியும் சர்க்காரில் மாதம் ஒன்றுக்கு 500,1000,2000, 3000 ரூபாய் வாங்கும் படியான முன்சீபு. ஜட்ஜ், கலெக்டர் ஆகிய உத்தியோகத்திலிருப்பார்கள். இவர் பேசும் “வீரப்பேச்சு' அவர் உறவினர்களின் உத்தியோகத்தை வலுப்படுத்தவும் உயர்த்தவும் தான் உதவுமே தவிர உங்களுக்கோ, நாட்டிற்கோ கடுகளவு நன்மையுண்டாவதற்கு அதில் ஒன்றுமே இருக்காது. மற்றொரு காங்கிரஸ் காரியதரிசி, ரெங்கசாமி அய்யங்கார், இங்கு பேசும் போது, “சர்க்காரை முட்டுக்கட்டை போட்டு திக்குமுக்கலாடச் செய்ய வேண்:
டும். சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் தாடியைப் பிடித்து ஆட்ட வேண்டும்” என்று பேசுவார். அங்கு அவர் தம்பி சர்க்கார் என்கின்ற குகைக்
குள் புகுந்து வெள்ளைக்காரர் என்கின்ற சிங்கத்தின் தயவுக்கு வாலைத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பதற்கு அதிகார வர்க்கத்தின் காலடியில் கிடந்து சர்க்கார்வாதியாயிருப்பார். திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் வெள்ளைக்கார சம்பந்தமே கூடாது என்பார். ஆனால் காலையில் எழுந்ததும் வெள்ளைக் காரர்கள் கோர்ட்டுகளில் போய் அவர்கள் காலடியில் நின்று கொண்டு “அப்பா! அய்யா! பிரபுவே! துரையே! சாமியே! என்று கெஞ்சி, மாதம் 5000, 10000 சம்பாதித்துக் கொண்டிருப்பார். அவர் சம்மந்தி மாமன் மைத்துனன் எல்லோரும் சர்க்காரிடம் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அடிமைகளா யிருப்பார்கள். அவர்கள் பிரமோஷனுக்கு இவர்கள் பூரண சுதந்திரம் உதவியாகவும் இருக்கும். மற்றும் மகாகனம் சீனிவாச சாஸ்திரி ஒரு பெரிய தேசியவாதி. அவர்கள் மகன் சர்க்காரில் மீ” 1க்கு ஆயிரம் ரூபாய் சம்பள வாதி. திருரங்காச்சாரி ஒரு பெரிய தேசியவாதி, அவர்கள் மக்கள் தற்குறிகள், எல்லாம் மீ” 1க்கு 500, 1000 ரூபாய்கள் வாங்கும்படியான சர்க்கார் சம்பள வாதிகள், திருமணி அய்யர் பென்ஷன் பெற்றபின் ஒரு பெரிய தேசியவாதி. அவர்கள் மக்கள் டெ சர்க்கார் சம்பளவாதி, திரு.கிருஷ்ணசாமி அய்யர். பெரிய தேசியவாதி, அவர் மக்கள் சகோதரர்கள் 51000, 500 சம்பளவாதி,
சர் சி.பி. ராமசாமி அய்யர் ஒரு பெரிய தேசியவாதி. காங்கிரஸ் காரியதரிசி, உத்தியோகக் காலத்தில் மீ£2000, 5000 சம்பளவாதி, உத்தியோகம் போய் விட்டால் மறுபடியும் தேசியவாதி, திரு.விஜயராகவாச்சாரியார் ஒரு பெரிய கிழ தேசியவாதி. அவர் சகோதரரும் மருமகனும் சர்க்கார் சம்பள வாதிகள். பார்ப்பனர்களில் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்களும் உத்தியோகம்.
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பார்த்து பென்ஷன் வாங்கினவர்களும் பெரிய தேசீயவாதிகள், அவர்கள் பிள்ளைகுட்டி பந்துக்களான மற்றவர்கள் சர்க்கார் சம்பளவாதிகள். இதை நீங்கள் யாராவது மறுக்க முடியுமா? காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு காங்கிரசின் பலனாக இந்த 30, 40 வருடங்களாக சமீபகாலம் வரை எல்லா ஸ்தல ஸ்தாபனங்களையும் சர்க்கார் உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்றும் படியாகிவிட்டது. அதற்குமுன் எல்லா உத்தியோகங்களிலும் பார்ப்பனரல்லாதாரே இருந்தார்கள். ஆனால் “தேசீய ஸ்தாபனமாகிய” காங்கிரஸ் ஏற்பட்டபிறகு ஓட்டு ஜனத் தொகையில் நூற்றுக்கு மூன்று வீதமுள்ள பார்ப்பனர்களே நூற்றுக்கு தொண்ணூற்றேழு உத்தியோகங்களை கைப்பற்றி வாழ முடிந்தது என்றால் காங்கிரசின் தேசீயம் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் சம்பாதிக்கும் ஸ்தாபனம் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்? காங்கிரஸ் தீர்மானம் ஆக ஆக, பொறுப்பாட்சி கேட்கக், கேட்க,
சீர்திருத்தம் வழங்க வழங்க உத்தியோகங்கள் அதிகமாயிற்றே அல்லாமல் கந்தாயம், வரிவட்டம் குறைந்தபாடில்லை. சர்க்காருக்கு படித்த கூட்டத்தின் தொந்திரவையடக்க எப்படியாவது உத்தியோகங்களை உற்பத்தி செய்து அவர்களுக்கு லஞ்சமாக அவற்றை கொடுத்துத் தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இதை சர்க்கார் செய்யாவிட்டாலோ, நாட்டில் பாமர: மக்களின் பேரால் பார்ப்பனர்களின் கிளர்ச்சி அதிகமாகின்றது. இந்த மாதிரி காங்கிரசாலும் அதனால் உண்டாகும் உத்தியோகங்களாலும் அவற்றைப் பார்ப்பனர்களுக்கே கொடுப்பதினாலும் சர்க்காருக்கு நாளுக்கு நாள் அதிக சவுகரியம் ஏற்படுகிறது. அதனால் தான் காங்கிரசு என்றால் சர்க்காராரும் அதற்கு உதவி செய்து வந்தனர். வெள்ளைக்காரர்கள் சுகமும், சம்பாத்தியமும் பெறவே அவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆங்கில சர்க்காருக்கும், அவர்களது கொள்ளைக்கும், ஏமாற்றத்துக்கும் உடனிருந்து ஏமாற்ற நம்மை
காட்டிக் கொடுத்தும் உளவாளாக இருந்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்களே யாகும். இந்த காங்கிரஸ்காரர் என்னும் படித்த கூட்டத்தார் நமது நாட்டில் பாமரர்களை சர்க்கார் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதாக மேடைகளில் பேசிவிட்டு நம்மை சர்க்காருக்கு காட்டிக் கொடுத்து அதிக அடிமைத்
தனத்திற்கு ஆளாக்கியதோடு நமது தலை மீது சுமக்க முடியாத அதிக வரியை விதிக்கவும் யேதுவாயிருந்திருக்கிறார்கள். இன்னும் காங்கிரசால் சுயேச்சை, சுயராஜ்யம், விடுதலை, பூரண சுயராஜ்யம், ஹோம்ரூல் என்ற எண்ணற்ற அரசியல் கட்சிகள் நாட்டில் தோன்றின. இவைகள் ஒவ்வொன்றின் பேச்சும்,
பிரசாரமும், தீர்மானமும், கிளர்ச்சியும் ஆகிய எல்லாம் பாமர ஜன சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற பல்லவியைப் பாடிக்கொண்டு புதிது புதிதான உத்தியோகங்களும், கமிட்டிகளும், அங்கத்தினர் பதவிகளும், தனித்தனி இலாக்காக்களும், வெளிநாட்டுக்குப் பிரதிநிதிகளாகச் செல்லும் பெருமை களும் மற்றும் இத்தகைய புதுப்புது சனியன்கள் தோன்றி நன்மையும், நாட்டையும் கெடுத்து, அதிக பளுவான வரியை சுமத்தி ஜனசமூகத்தை
குடி அரசு - 1929 () 156
பாழ்படுத்தி வந்திருக்கின்றனவேயன்றி வேறு என்ன பலன் உண்டாயிற்று, உதாரணமாக காங்கிரசுக்கு முன் இருந்த தாசில்தார்கள், மாஜிஸ்ட்ரேட்டுகள், கோர்ட்டுகள், போலீஸ் ஸ்டேஷன்கள், ரெவின்யூ இலாகாவின் அளவுகள், ஹைக்கோர்டு ஜட்ஜுகள், சர்க்கார்நிர்வாக உத்தியோகஸ்தர்கள், இவைகளின் எண்ணிக்கை என்ன? இன்றைய எண்ணிக்கை என்ன? மூன்று மடங்கு அதிகமாயிருக்கின்றதா? இல்லையா? இவ்விதம் அதிகமானதற்கு அன்று. இருந்ததைவிட இன்று மூன்று மடங்கு ஜனங்கள் அதிகமாக அபிவிருத்தி யடைந்திருக்கின்றார்களா? இல்லை. முன் இருந்த ஜன சமூக யோக்கியப் பொறுப்பு, கண்ணியம் இவைகள் கூட ஆயிரம் மடங்கு குறைந்துவிட்டது என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் சொல்லக் கூடும்? உங்களிடம் வந்து “ஆங்கில பாஷை”, “அன்னிய பாஷை” “நீச பாஷை” அதைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட்டு, உங்களை மோகஷத்திற்கு அனுப்ப
வும் உங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும்படி செய்யவும் என்று சொல்லி உங்களிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு தங்கள் பிள்ளை குட்டிகளை மட்டும் அவ்வாங்கில பாஷையைப் படிக்கச் செய்து உங்கள் நன்மைக்கென்று காங்கிரசின் மூலம் உத்தியோகங்கள் உண்டாக்கி அவை களை அவர்களே பெற்று வருகின்றார்கள்.அதன் ரகசியம் என்ன என்பதை
நீங்கள் சற்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? காங்கிரஸ் ஏற்பட்டதின் பலனாய் சத்திரத்தில் சாப்பிட்டு முனிசிபல் லாந்தர் வெளிச்சத்தில் படித்த பஞ்சாங்கப் பார்ப்பனர்கள், சாஸ்திரிகள் ஆகியவர்களின் வீட்டுப்பிள்ளைகள்தானே இன்று “நீச்ச” அரசாங்கத்தில் - “கொடுங்கோல் அரசாங்கத்தில்'- “அன்னிய அரசாங்கத்தில்” உள்ள உயர்ந்த உத்தியோகம் முதல் தாழ்ந்த உத்தியோகம். வரையில் நிரம்பி யிருப்பதுடன், ஜாதி ஆணவமும் கொண்டு நமக்கு எவ்வளவு கொடுமையும், அவமானமும், இழிவும் உண்டாக்க முடியுமோ, அவ்வளவையும் சற்றும் ஈவும் இரக்கமன்னியில் செய்து வருகின்றார்களா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். சமீபகாலத்திற்கு முன்வரையில் ஹைகோர்ட் ஜட்ஜிகளாகவும் மாகாண நிர்வாக உத்தியோகஸ்தர்களாகவும் இருந்தது யார்? நம்மவர்களில் படித்தவர்களா? அல்லது பிரபுக்களாகவும் பெரும் பண்ணைகளாகவும் உள்ளவர்களா? அல்லது நம்மிடம் வாழ்வுக்கும் சாவுக்கும் சடங்குகள் பேரால் பிச்சை பெற்று வயிறு வளர்த்து வந்த பார்ப் பனக் கூட்டத்தார்களா என்பதை யோசித்துப் பாருங்கள். காங்கிரஸ் ஏமாற் றத்துக்கு முன் அதாவது வெள்ளைக்காரர்கள் பார்ப்பனர்களுக்கு உத்தி யோகத்தின் பேரால் லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியத்திற்கு முன்,நமது தேசத்தில் வருஷம் ஒன்றுக்கு 25 அல்லது 30 கோடி ரூபாய்தான் சர்க்காருக்கு வரும்படி வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. காங்கிரசின் 50 வருஷ வேலை
யின் பயனாய் இன்று 140, 150 கோடி ரூபாய் வருஷா வருஷம் குடிகளிட
மிருந்து வசூலிக்கப்படுகின்றது. ஒன்றுக்கு ஐந்து மடங்கு அதிகவரி ஏற்பட்ட தால் கஷ்டப்படுவதும் கொடுமைப்படுவதும் விவசாயமும் வியாபாரமும்
செய்யும் குடிகளாகிய நாமும் ஏழைகளும், கூலிகளும் அல்லாமல் பிச்சை
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எடுத்து வந்த கூட்டத்தாராகிய இன்றைய “பூரண சுயேச்சை” வாதிகளல்ல;
ஒருபுறம் மாதம் லக்ஷக்கணக்கான சகல ஜனங்கள் இந்நாட்டில் வேலை இல்லாமல் வெளி நாடுகளுக்குக் கூலிகளாய்ச் செல்லவும் மற்றொரு புறம் சர்க்கார் இவ்விதம் ஒன்றுக்கு ஐந்து மடங்காக அதிகவரி வாங்கவும் என்ன அவசியம் ஏற்பட்டது. காங்கிரசுக்கு முன்,ஆள் ஒன்றுக்கு மாதம் 2500 ரூபாய் சம்பளத்தில் 5 ஐகோர்ட்ட் ஜட்ஜிகள் இருந்தார்கள், இன்று மாதம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 4000 ரூபாய் சம்பளத்தில் 15 ஐகோர்ட்டு ஜட்ஜிகள் இருக்கிறார்கள்.
எனவே, முன்வருஷம் 1-க்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் ஹைகோர்ட்டு ஜட்ஜிகள் சம்பளமென்றால் இன்று 15 பேருக்கு பதினைந்து- நான்கு- அறுபது, அறுபதாயிரம், ஆறு - பன்னிரண்டு- எழுபத்திரண்டு! வருஷம் ஒன்றுக்கு ஏழு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் செலவு ஆகிறது. முன்பு அரசியல் நிர்வாக அங்கத்தினராக 5,500 ரூபாயில் இரு மந்திரியும் அவர்களுக்குள்ள 2 காரியதரிசிக்கு 2000 ரூபாய் சம்பளமென்றால் இன்று 5500 ரூபாயில் 7 மந்திரிகளும் ஏற்பட்டு அவர்களுக்கு ஒரு பிரசிடெண்டு, வைஸ்பிரசிடெண்டு, மந்திரிகளுக்கு 5 காரியதரிசி, இவர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் சம்பளம் எத்தனை லட்சம் ரூபாய்கள் ஆகின்றது என்று பாருங்கள். முன்பு மாகாண சட்டசபையில் 8 பிரதிநிதிகள் என்றால் இன்று
150 பெயர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அக்கால படிச்செலவைவிட இன்று 15 மடங்கு அதிக படிச்செலவு ஆகிறதல்லவா? இவ்விதமாகவே, இனியும் “விடுதலையும், “சுயராஜ்ஜியமும்”, “சீர்திருத்தத் திட்டமும்” “பூரண சுயேச்சையும்” வளர்ந்து கொண்டே போனால் நமது கதி என்ன ஆவது? இதைச் சற்று சுயபுத்தியோடு யோசித்துப் பாருங்கள். இவ்விதம் பலவிதத்தும் அரசியல் பேராலும் மதத்தின் பேராலும் நம்மை ஏமாற்றிச் சகல பொறுப்புடைய பதவிகளிலும் உத்தியோகங்களிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு நம்மை இழிவும் செய்ய ஆரம்பித்த பின்புதான் நாம் சகிக்காது பாமர மக்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்றும், இருக்கும் உத்தியோகங்களிலும், இனிஆகும் உத்தியோகங்களிலும் நமக்கும் சரியான பங்கு விகிதம் கிடைக்க வேண்டுமென்றும் கேட்கத் தொடங்கி விட்டோம். நாம் இப்படிச் செய்தால், இனி பார்ப்பனர்கள் உத்தியோகத்தை ஒருநாளும். அதிகரிக்கமாட்டார்கள். இது பிராமணத் துவேஷமா? தேசத் துரோகமா? என்று தான் உங்களைக் கேட்கிறேன். காங்கிரசின் பேரால் தேசியத்தின் பேரால் உங்களிடம் வந்து கூச்சல் போடும் நபர்களுக்கு நமது வரிகள் இன்னமும் ஒன்றுக்கு பத்து வீதம் உயர்ந்தாலும் அவர்களுக்கு ஒரு அம்மன் காசு நஷ்டம்வராது. ஆதலால் அவர்களுக்கு வரி உயர்வைப் பற்றி சிறிதும் கவலையில்லை. பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி இங்கு வந்து பேசிவிடுகின்றார்கள். எனக்குப் பொதுவாக எந்தத் தனிப்பட்ட நபரிடமும் துவேஷமில்லை. எல்லோரிடமும் நான் நேசமாய்த்தான் இருக்கின்றேன். திரு.சீனிவாசய்யங்கார் முதல் எல்லாக் காங்கிரஸ்வாதிகளும் மற்றும்
குடி அரசு - 1929 () 158
அவர்களது பிரசாரகர்களும் இப்போது என்னை வந்து காங்கிரசை நடத்துங்
கள் என்று தான் கூப்பிடுகின்றார்கள். எத்தனையோ பேர் என்னைப் பற்றி எவ்வளவோ விஷமப் பிரசாரம் செய்தும், என் மீது அல்லது எனது சொந்த வாழ்க்கையில் ஒரு குற்றமாவது கண்டுபிடித்து எடுத்துக் காட்டினவர்கள் அல்ல; மற்றபடி புகழ்ந்தும் பேசிக்கொண்டு தான் வருகின்றார்கள்.
உதாரணமாக சென்ற வாரம் கூட திரு.சீனிவாசய்யங்கார் சென்னை
யில் ஒரு பிரசங்கம் செய்தபோது, திரு. ராமசாமி நாயக்கர் வந்து காங்கிரஸ்
நிர்வாகப் பதவியை ஏற்றுக் கொண்டு நடத்தினால் நான் அவரைப் பின்பற்றத் தயாராயிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஒருக்காலமும் இந்தக் காங்கிரசின் பக்கம் திரும்பிப் பார்க்கவே மாட்டேன். ஒரு சமயம் காங்கிரசை ஒழிக்க என்னால் என்வாழ்நாளில் முடியாமற் போனாலும் போகலாம். ஆனாலும் எனது வாலிப வீரர்கள் ஆயிரக்கணக்காய் அதை ஒழிக்கக் காத்திருக்கின்றார்கள். அந்த தைரியத்தில்தான் நான் உயிர்விடு வேன்; அதில் எனக்குச் சந்தேகமில்லை.
மந்திரிகள் விஷயம்
இன்றைய மந்திரிகளான திருவாளர்கள் டாக்டர். சுப்பராயன் அவர்
களும், எஸ்.முத்தைய முதலியார், சேதுரத்தினமய்யர் ஆகியவர்களும் காங்கிரஸ்காரர்களால் கண்டிக்கப்படுகிறார்கள். விசேஷமாய் கனம் எஸ்.முத் தைய முதலியார் அவர்கள் அடிக்கடி கண்டிக்கப்படுகிறார். துரோகம் விளை வித்ததாகத் தூற்றப்படுகிறார். இதன் ரகசியம் என்ன, “இரட்டை ஆட்சி பயனில்லை,” என்பதும் மந்திரிகளை, ஆதரிக்கவோ ஆதரிப்பவர்களுக்கு ஆதரவு காட்டவோ கூடாதென்பதும் அக்காங்கிரசின் திட்டமும் தீர்மானமும் ஆகும். சென்ற சட்டசபை தேர்தல் முடிந்ததும் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களின் மந்திரி சபையை அமைத்துக் கொடுத்தது இந்தக் காங்கிரசின்
“வீரர் "களா அல்லவா? என்று கேட்கின்றேன். இவர்கள் சொன்னபடி ஆடுவ தாக ஒப்புக் கொண்டதின் மீது திருவாளர்கள் ரெங்கனாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் காங்கிரசுக்காரர்களால் ஆதரிக்கப்பட்டார்
கள். காங்கிரசுக்காரர்களின் இந்த அயோக்கியத்தனத் தைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் கமிட்டியிலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், சென்று திரு.எஸ். முத்தைய முதலியார் வாதாடினார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பேசுவதற்குக் கூட சந்தர்ப்பம் அளிக்க
மறுத்துவிட்டு, தாங்கள் மந்திரிசபை ஏற்படுத்தினதையும் அதை ஆதரித்த தையும் பற்றியும் தங்களையே பாராட்டி ஒரு தீர்மானமும் செய்து கொண்டார்.
கள். இதற்குக் காரணம் என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார் க்ஷி ஆகிய ஜஸ்டிஸ் ககஷியை அழிக்க இப்படிச் செய்ய நேரிட்ட தாம். இதை அறிந்த
பின் உண்மையான பார்ப்பனரல்லாத ரத்தம் ஓடும் எந்தப் பார்ப்பன ரல்லாதாராவது காங்கிரசில் இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
எனவே திரு.எஸ். முத்தைய முதலியார் காங்கிரஸ் கமிட்டியை விட்டு விலகிவிட வேண்டியது அவசியமாயிற்று? எனவே விலகின முதலியார். தனிக்கக்ஷி அமைத்து மந்திரி வேலை ஒப்புக் கொண்டு பார்ப்பனரல்லா
தாருக்குத் தம்மால் கூடிய நன்மை செய்ய வேண்டியதாயிற்று. பழய மந்திரி
கள் 7 வருஷமாய்ச் செய்ய முடியாத வேலையை, திரு. முத்தைய முதலியார். மந்திரியானவுடன் செய்து முடித்தார். அவர்தான் சர்க்கார் உத்தியோகங்களை இதுவரை பார்ப்பனர்கள் மாத்திரம் கொள்ளை யடித்து வந்ததுபோல் இல்லா
மல் எல்லா மக்களுக்கும் சமசந்தர்ப்பமும் சமஉரிமையும் இருக்கும்படி செய்துவிட்டார். இதனாலேயே பார்ப்பனர்கள் திரு.முத்தையா முதலியாரை: அதிகமாக வைகின்றார்கள்; வையவும் கூலி கொடுக்கின்றார்கள். பார்ப்பனர். களுக்கு அவர்களின் ஏகபோக அனுபவத்தில் ஒரு சிறு நஷ்டம் வருவதானா
லும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள். ஒரு சிறு மாறுதல் செய்ய ஆரம்பித்தால் கூட உடனே காங்கிரஸ் துரோகிகள் என்று சொல்லி விடுகிறார்கள். இப்படிப்பட்ட காங்கிரஸ் நமக்கு வேண்டாம். இப்படிப்பட்ட தேசாபிமானமும் நமக்கு வேண்டாம். இதனால் என்ன வந்தா
லும் வரட்டும், நீங்கள் காங்கிரஸ் துரோகப் பூச்சாண்டிக்கோ தேசத்துரோகப் பூச்சாண்டிக்கோ பயப்பட்டு விடாதீர்கள். அடுத்துவரும் தேர்தலில் திரு. முத்தைய முதலியாருக்கு விரோதமாய்ப் பார்ப்பனர்கள் வெகுபாடுபடுவார்.
கள். அநேக கூலிகளை அமர்த்தி உங்களை ஏமாற்றப்பார்ப்பார்கள். நீங்கள். ஏமாந்து போகாதீர்கள். நன்றாய் உங்கள் சுயபுத்தியைக் கொண்டு யோசித்துப் பார்த்து எதையும் செய்யுங்கள், இதனால் பெரும்பாலான சமூகம் ஏமாற்றப் படுவதுடன் அநீதியும் நடைபெறுகிறதே என்று வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை அனுஷ்டிக்க எஸ்.முத்தையா முதலியார் கிளம்பினால் உடனே
பெரும் ராக்ஷஸனாகவும் ஜனசமூகத் துரோகியாகவும் மாறிவிடுகிறார். இவ்விதம் ஒவ்வொன்றிலும் நீண்ட நாளாய் ஏமாற்றப்பட்டோம். இன்று அதை. உணர்ந்து ஒரு வழியைத் தேட முயலுகிறோம்.இதைத்தான் என்னென்னவோ என்று உங்களுக்கு கூறி ஏமாற்ற முயலுகிறார்கள்.
சகோதரர்களே!
இன்றைய மந்திரி ககஷியைத் தூற்றும் “தேசீய வீரர்கள்” சொல்லும் காரணம் என்ன? “இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்பது. அப்படியானால் தேர்தல் முடிந்ததும், இரட்டை ஆட்சியை நிலை நிறுத்தியது மந்திரி கட்சியை அமைத்தது காங்கிரஸ் வீரர்கள் தானே! என்று கேட்டால்,
நாம் காங்கிரஸ் துவேஷியா? நீட்டின காகிதத்தில் கையெழுத்துப் போட்ட கனம் ஆரோக்கியசாமி முதலியார் நல்லவராக இருந்ததற்கும் கையெழுத்துப் போடு என்று கேட்கப் பயப்படக்கூடிய நிலையில் உள்ள கனம் எஸ்.முத் தையா முதலியார் பார்ப்பனக் கண்ணுக்குத் தேசத்துரோகி போல் தோன்று வதற்கும் காரணம் விளங்கவில்லையா? இதைப் பார்த்தபின்பும் கூட நம்ம வர்கள் கண் விழிக்க வில்லையானால் கெதி மோக்ஷம் இந்த நாட்டுக்கு எப்பொழுது கிட்டப்போகிறது?
குடி அரசு - 1929 () 160
சைமன் கமிஷன்
சைமன் கமிட்டியை நான் ஆதரிப்பதைப் பற்றி என்மீது பெரிய குற்றம் சுமத்தப்படுகின்றது. சென்ற தேர்தலில் உங்களிடம் ஓட்டுக் கேட்ட காங்கிரஸ் வாதிகள் (ராயல் கமிஷன்! சைமன் கமிஷனிடம் சாட்சி சொல்வதாய் ஒப்புக் கொண்டு அதற்காக வேண்டியே தங்களுக்கு ஓட்டு கொடுக்க வேண்டு மென்று கேட்டார்கள். இப்போது அக்கமிட்டியில் பார்ப்பனர்களையும், பார்ப்பனதாசர்களையும் சேர்க்காததால் அதைப் பகிஷ்கரிக்கவேண்டு மென்று கூச்சல் போடுகிறார்களே ஒழிய வேறில்லை. உண்மையில் பகிஷ் கரிக்கும் யோக்கியர்கள் தங்கள் மெம்பரை ராஜிநாமா கொடுத்துவிட்டு கமிஷனைப் பகிஷ்கரிப்பதாய்ச் சொல்லி ஓட்டு வாங்கி மெம்பராகி பிறகு தான் பகிஷ்கரிக்க வேண்டும். இதுதான் நாணயமாகும். நிற்க, வைஸ்ராய் நிர்வாக சபையில் மெம்பராயிருந்த திருவாளர் எஸ்.ஆர்.தாஸ் பார்லி மெண்டை மிரட்டிவிட்டாராம்! அதாவது ஏதாவது ஒரு பார்ப்பானை ராயல் கமிஷன் கமிட்டியில் போட்டால் பார்ப்பனல்லாதார் கிளர்ச்சி செய்வார்கள். ஆதலால் போடுவதாயிருந்தால் சென்னை மாகாணத்திய ஒரு பார்ப்பன ரல்லாதாரைப் போடும்படி சொன்னாராம். வைஸ்ராய் சபையிலுள்ள மற்றொரு கனவான் பார்ப்பனரல்லாதாரைப் போட்டால் பார்ப்பனர்கள் கிளர்ச்சி செய்வார்கள். ஆதலால் மகமதிய கனவானைப் போடும்படி சொன்னாராம். எனவே, பார்லிமெண்டார் பயந்து கொண்டு யாரையும் போடாமல் வெள்ளைக்காரர்களாகவே பார்த்துப் போட்டுவிட்டார்கள். இதனால் எந்த விதத்தில் இந்தியாவின் சுயமரியாதைக்கு ஆபத்து வந்துவிட்டது. மேல்கண்ட மூவரில், யாரையாவது ஒருவரைப் போட்டிருந்தால் மற்ற இருவருக்கும் இதைவிட சுயமரியாதைக்கு அதிகமான பங்கம் வந்துவிட்டதாகக் கூப்பாடு போட்டிருப்பார்கள். இந்தப் போலி பகிஷ்காரக் கூச்சலினால் இப்போதும் சைமனுக்கு வேண்டிய தகவல்களில் எது தடைப்பட்டுவிட்டது. நேரு ரிப்போர்ட், காங்கிரஸ் ரிப்போர்ட், எல்லாக்கட்சி ரிப்போர்ட், திருவாளர். பெசண்ட் திட்டம், விஜயராகவாச்சாரி திட்டம், ரங்கசாமி அய்யங்கார் திட்டம், சீனிவாசய்யங்கார் திட்டம், வர்ணாஸ்ரமத் திட்டம், பார்ப்பனத் திட்டம், பார்ப்பனரல்லாதார் திட்டம், மகமதியர் திட்டம், கிறிஸ்தவர்கள் திட்டம், ஆதிதிராவிடர்கள் திட்டம், ஜமீன்தார் திட்டம், வியாபாரிகள் திட்டம், நிலச் சுவான்தார்கள் திட்டம், நூற்றுக் கணக்கான உள்பிரிவு ஜாதிகள் திட்டம்,
சர்க்கார் உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர்கள் - பார்ப்பனரல்லாதார்கள், வெள்ளைக்காரர்கள் ஆகியவர்கள் திட்டம் இன்னமும் என்னென்னமோ திட்டம் வண்டி வண்டியாக அவர்கள் முன் குவிந்து இருக்கின்றது. எனவே சைமன் பகிஷ்காரம் என்பது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது? எந்த
அர்த்தத்தில் செய்து, எந்த அர்த்தத்தில் நிறைவேற்றப்பட்டது? என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மதம்
கனவான்களே! முதலாவது மதம் என்றால் என்ன? அது கால, தேச, வர்த்தமானத்திற்கும், அக்காலத்திய அறிவின் தன்மைக்கும் தக்கபடி மக்களின் வாழ்க்கைக்கென்று ஏற்படுத்திக் கொள்ளும் சில கொள்கை யேயாகும். அக்கொள்கைகள் எப்போதும் எல்லா இடத்திற்கும் ஒன்று போலவோ அல்லது மாற்ற முடியாததென்றோ சொல்வது சுத்த மடமை
யேயாகும்.
உதாரணமாக, விளையாட்டுச் சங்கத்திற்கோ அல்லது ஒரு ஓய்வு சங்கத்திற்கோ, அச்சங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் சங்க காரியங்கள் கிரம மாய் நடைபெறுவதற்கு என்று சில கொள்கைகள் வகுத்துக் கொள்ளுவதை நாம் பார்க்கின்றோம். நாளாக நாளாக அதன் நிலைமைக்கும் தேவைக்கும் தக்கபடிஅவற்றை மாற்றிக் கொண்டு வருவதையும் பார்க்கின்றோம்.
அதுபோலவே, மக்கள் சமூக வாழ்க்கைக்கும் சில நிபந்தனைகள் ஏற்படுத்திக் கொள்வதும், நாளாக நாளாக அவைகளைத் தேவைக்குத் தக்கபடி, காலத்திற்குத் தக்கபடி மாற்றிக் கொள்ளுவதும் அவசியமான தேயாகும். இந்நிபந்தனைகள் சில சமயங்களில் மக்கள் அறிவுக்குத் தக்கபடி சுயலநலக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்கு ஏற்ற வண்ணமாயும் செய்து விடுவதுமுண்டு. உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு வெள்ளைக்காரர்கள் நிபந்தனை ஏற்படுத்துவது போல, கையில் வலுத்த வனோ, அறிவில் வலுத்தவனோ, ஏமாற்றத்தில் வலுத்தவனோ தன் தன் செளகரியப்படி நிபந்தனைகள் அமைத்துக் கொள்கிறான். இதையுணராமல்
மதம் என்பது ஒரு சர்வ வல்லமையுள்ளது என்று சொல்லப்பட்ட “கடவுள்” கட்டளை யென்றும் அதை எப்போதும் சிறிதுகூட மாற்றக் கூடாது என்றும், அதிலுள்ளவைகள் எல்லாம் கடவுள் வாக்கு என்றும் சொல்லுவதானால், அது எந்த மதமானாலும் சரி, அவற்றை அடியோடு ஒழிக்கத்தான் வேண்டும். அதனிடத்தில் மக்களுக்குள்ள குருட்டு நம்பிக்கையும் குரங்குப் பிடி வாதத்தையும் மாற்றத்தான் வேண்டும்.
அராபிப் பாலைவனத்திலுள்ள மக்களுக்கு அவர்கள் மதம் தினம்
மூன்று வேளை குளிக்கும்படி கட்டளையிட முடியவே முடியாது. ஐரோப் பியகுளிர் தேசத்திலிருக்கும் மக்களுக்கு அவர்கள் மதம் ஜலமல பாதை களுக்குப் போனால் அடிக்கடி தண்ணீர் விட்டுச் சுத்தி செய்யச் சொல்லாது. அது போலவே, வடதேசத்தின் மலைச்சார்புப் பகுதிகளில் குளிரில் அவஸ் தைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு, அவர்கள் மதம் எப்போதும் நெருப்புக்கனல் இல்லாமல் இருக்கும்படி சொல்லியிருக்காது.
அதுபோலவே தென்னாட்டில் உஷ்ண தேசத்து மக்களுக்கு எப்போதும் நெருப்புக் கனல் இருக்க வேண்டுமென்று அவர்கள் மதம் சொல்லியிருக்க முடியாது.
குடி அரசு - 1929 () 162
வெள்ளைக்காரர்கள் ஆதிக்கத்தினால் எப்படி அவர்களது கொள்கை: களையும், அவர்களுக்கு அனுகூலமானதையும் சிலவற்றை நம் மீது சுமத்தியிருக்கின்றார்களோ, அதுபோலவே நமது நாட்டில் முன் காலத்தில் பூர்ண ஆதிக்கம் செலுத்த சந்தர்ப்பம் அடைந்தவர்கள் அவர்களது கொள்கைகளையும், அவர்களுக்கு அனுகூலமான கொள்கைகளையும் நம் மீது சுமத்திவிட்டார்கள். ஏகபோக ஆதிக்கத்தின் பலனாய் அவற்றிற்கு ஆதாரங்களும் எழுதிவைத்து அவற்றை எல்லாம் மதக் கொள்கைகள் என்றும் அவைகள் கடவுள் கட்டளை என்றும், கடவுள் வாக்கு என்றும் சொன்னால் நாம் நிரந்தரமாய் ஒப்புக் கொண்டு பின்பற்ற முடியுமா? நமக்கு பகுத்தறிவு என்கின்ற தன்மை எதற்காக இருக்கின்றது? இப்பேர்ப்பட்ட விஷயத்திற்கு உபயோகப்படுத்திப் பார்க்காத பகுத்தறிவு வேறு என்ன வேலை செய்ய உபயோகப்படும்? ஆதலால், கண்டிப்பாய் மத விலங்கி லிருந்து விடுதலையடைய வேண்டும். பிறகுதான் நாட்டை விடுதலை யடையச் செய்யலாம். நாடு வெறும் வெள்ளைக்கார ஆட்சியிலிருந்து மாத்திரம் விடுதலை அடைந்தால் போதும் என்பது அர்த்தமற்ற வார்த்தை. நாடு வெள்ளைக்காரர் ஆட்சியிலில்லாதபோதுதான் நாம் மத அடிமைத் தன்மையில் மூழ்கினோம். நாடு முகமதியர் ஆட்சியில் இல்லாத காலத்தில் தான் மக்கள் மிருகப் பிராயத்தில் காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள். நாடு சுயராஜ்யத்திலும் ராமகிருஷ்ண அரிச்சந்திராதி கடவுள்கள் ஆட்சியிலும் இருக்கும் போதுதான் பார்ப்பனரல்லாதார்கள் சூத்திரர்களாகவும், வேசி மக்களாகவும், குரங்குகளாகவும், அரக்கர்களாகவும், படிக்கக் கூடாதவர்களா
கவும், கடவுள் வணக்கத்திற்கும் தவத்திற்கும் லாயக்கில்லாதவர்களாகவும் நடத்தப்பட்டதுடன் வேற்று அரசர்கள் கைக்கு நாடும் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றது. இந்நாட்டில் வெள்ளைக்கார அரசாங்கமும் மகமதிய அரசாங்கமும் இல்லாத காலத்தில் தான் சம உரிமை, ஜீவகாருண்யம் ஆகிய வைகளைக் கொள்கைகளாகக் கொண்ட பவுத்தமதம் அழிக்கப் பட்டது. சமணர்களைக் கழுவேற்றிச் சமணமதம் ஒழிக்கப்பட்டது. இப்பவும் வெள்ளைக்கார ஆட்சி இல்லாததும் சுய ஆட்சியும் இந்து அரசர்கள் ஆட்சியும் உள்ள மைசூர், திருவாங்கூர், கொச்சி முதலிய சுதேச அரசர் நாடு
களில்தான் மனிதர்களை மனிதர்கள் நாய், கழுதை, பன்றி,மலம், மூத்திரம்,
எச்சில், நாறிப் புழுத்த வஸ்துகளுக்கும் கீழாக மதிக்கின்றனர். எனவே இந்த நிலையில் இந்த வெள்ளைக்கார ஆட்சி போனால் இன்னும் ஒரு மஞ்சள்காரர். அல்லது சிகப்புக்காரர் ஆட்சி தான் ஏற்படுமே ஒழிய கருப்புக்காரர் (இந்திய மக்கள்! ஆட்சி உண்டாகவே உண்டாகாது. ஏனெனில் நமது நாட்டில் எந்தெந்த குணங்களும் கொள்கைகளும் நம்முள் ஒற்றுமையைக் கெடுத்து அன்னிய ஆட்சியை வலியக் கூவி அழைத்ததோ அந்தக் கொள்கைகளும், குணங்களும் மாறினால் ஒழிய இனி எந்தக் காலத்திலும் நமது நாட்டை விட்டு அன்னிய ஆட்சியை விரட்டி விடமுடியாது.
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கடவுள்
நிற்க, கடவுள் என்பது பற்றியும் சிலவார்த்தைகள் சொல்ல விரும்பு கின்றேன். கடவுள் இல்லையென்று சொன்னதாகவும் அதனால் நாஸ்திகப் பிரசாரம் செய்கின்றதாகவும் சொல்லப்படுகின்றது. அது உண்மையானாலும், பொய்யானாலும் இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டிக் கொடுக்க இந்த மாதிரியான விஷமப் பிரசாரங்கள் அனுகூலமாயிருந்ததால் ஒரு விஷயத்தில் நான் நாஸ்திகனாதைற்கு மகிழ்ச்சியடைகின்றேன்.
சுயமரியாதை இயக்கம் கடவுள் உண்டா இல்லையா? என்கின்ற விஷயத்தில் சற்றும் கவலையெடுத்துக் கொள்வதேயில்லை. மற்றபடி நமது மக்கள் கடவுளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் குணங்களைப் பற்றியும், கடவுள்களுக்கு என்று செய்யப்படும் பூசை, அபிஷேகம், உத்சவம் முதலிய செலவுகளைப் பற்றியும்தான் நான் மிகுதியும் ஆட்சேபிக்கின்றேன். கடவுளுக்கு இவ்வளவு பெரிய கோவில் எதற்கு? உத்சவத்திற்கு லக்ஷசக் கணக்கான ரூபாய்கள் செலவு எதற்கு? மேல்நாட்டார் நம்மைவிடக் காட்டு மிராண்டிகளாயிருந்தவர்கள். இப்போது உலகத்தில் பெரும் பகுதியை ஆளச்
சக்தி கொண்டுவிட்டதற்கு இம்மாதிரியான பெரிய கோவில்களும், உத்சவமும் செய்வதிலும் பணம் செலவழித்ததாலா? அல்லது இவற்றிற்குப் பணம் செலவழிப்பதை நிறுத்திக் கொண்டு அவற்றைக் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் செலவழித்ததாலா? என்பதை யோசித்துப்பாருங்கள். நமது நாட்டிலுள்ள கற்கள் எல்லாம் சாமிகள்: மரம், செடிகள் எல்லாம் சாமிகள்: ஆறு, மலை,
குளம், குட்டை, இடி, மின்னல், மழை, நட்சத்திரம், வானம், சந்திரன், சூரியன், காற்று, நெருப்பு, தண்ணீர், பிளேக்கு, பேதி, அம்மை முதலிய காணப்படும் பொருள்கள் குணங்கள் எல்லாம் சாமிகளாய்க் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இது மக்களுக்கு அறிவு வளர்ச்சி இல்லாத காலத்தில், காரண காரியங்களை அறிய முடியாத காலத்தில் “சையின்ஸ்' என்னும் விஞ்ஞான அறிவு இல்லாத
காலத்தில், காட்டுமிராண்டி பருவத்தில் ஏற்பட்ட நிலைமையாக இருக்கலாம்.
உதாரணமாக, வேதகாலம், புராணகாலம் என்று சொல்லப்பட்ட காலம் மனிதனுக்கு சற்றுக் கூட அறிவு வளர்ச்சியும் பகுத்தறிவு விசாரமும் இல்லாத காலமென்பதற்கு உதாரணம் வேண்டுமானால் எனக்குத் தோன்றுவதைச் சொல்லுகின்றேன்- உலகம் என்பதைப் பற்றிச் சொல்லும்போது இந்தியா விற்கு அப்புறம் ஒன்றையுமே வெகுவாய்க் கண்டதாக எவருமே எதிலும் குறிக்கவே இல்லை. வேதகாரர்களுக்கு இமயமலையோடு உலகம் முடிந்து விட்டது. அதன் மீது செல்ல முடியாததால் அதுவே கையிலாயமாகிவிட்டது. இம்மலையின் மீது பனிக்கட்டிகள் உறைந்து கலந்து மலையையே அடியோடு
மூடிக் கொண்டதாலும் சூரிய வெளிச்சத்திற்கு அது வெள்ளையாய் பளிங்கு போல் காணப்பட்டதாலும், அதை வெள்ளியங்கிரி என்றும், அங்கிருந்து நதி
(கங்கை) வருவதால் சிவனின் தலையிலிருந்து வருவதாகவும் இம்மாதிரி சிறு
குடி அரசு - 1929 () 164
குழந்தைகளுக்குச் சோறு ஊட்ட பாட்டிகள் கதை சொல்லுவது போல் மூடக் கதையாய் உளறிக் கொட்டிவிட்டார்கள். வெள்ளைக்காரர்கள் வந்தபிறகுதான், இமயமலை மீது ஏறிப் பார்த்து வருகின்றார்கள்.இமயமலை இன்னது என்று உணர முடியாத, சென்று பார்க்க முடியாத முடங்கள், மேல் ஏழு லோகம், கீழ் ஏழு லோகம் இருக்கின்றது என்பதும் கங்கையின் உற்பத்தியைக் கண்டு பிடிக்காத முடங்கள் பாற்கடல், தயிர்க்கடல் இருப்பதாகச் சொல்லுவதும் எவ்வளவு மடமை என்பதும் அதை நம்புவது அதைவிட எவ்வளவு முட்டாள்தனம் என்பதும் நான் உங்களுக்கு எடுத்துக்கூற வேண்டியதில்லை.
மற்றும் கல்வியைக் கடவுளாக மதித்து அதற்காக கோடிக்கணக்காய்ப் பணம் செலவு செய்து வரும் நாட்டில் ஆண்களில் 100-க்கு 10 பேர் கூட பெண்களில் 1000-க்கு 10 பேர் கூட படித்தவர்கள் இல்லையானால் உண்மையிலேயே கல்வி என்பதாக ஒரு கடவுள் இருந்து நமது பூஜையை ஏற்றுக் கொண்டு வருகின்றது என்று நம்புகின்றீர்களா? காளி, கருப்பன், வீரன் என்று வீரத்தன்மைக்குக் கூடக் கடவுள்களைச் சிருஷ்டித்து அதை வணங்கி வரும் மக்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டவுடன் காய்ச்சல் வருவதானால் ஒரு வீரக்கடவுள் இருந்து பூஜைகளை ஏற்கின்றது என்று நம்புகின்றீர்களா?'
வியாதிகளையெல்லாம் தெய்வமாகக் கும்பிட்டு, அவற்றிற்கு கோவில், பூஜை, உற்சவம் செய்து வந்தும் நமது நாட்டில் வியாதிகளும் சாவுக் கணக்குகளும் மற்ற நாட்டாரை எல்லாம்விட ரெட்டிப்பாய் இருந்து வருகின்றது. இந்த வியாதி தெய்வங்கள் என்பவைகள் உண்மையிலேயே நமது பூஜை, உத்சவம், செலவு ஆகியவைகளை ஏற்றுக் கொண்டது உண்மை யானால் இப்படி நடக்குமா? என்று கேட்கின்றோம்.
மற்றும் இதுபோலவே, தொட்டதற்கெல்லாம் கடவுளை ஏற்படுத்தி அதற்குப் பூஜை, உத்சவம் செய்வதில் நமது புத்தியும், பணமும் நேரமும், ஊக்கமும் பாழாகின்றதேயல்லாமல் காரியத்தில் ஏதாவது கடுகளவு பயனுண்டா? என்று கேட்கின்றேன்.
விவசாய விஷயத்திலும், மாடு கடவுள், ஏர் கடவுள், உழவு கடவுள் ஆகிய கடவுள்களுக்கு பூஜை, உத்சவங்கள் செய்து பணம் செலவழிக் கின்றோமே யொழிய காரியத்தில் என்ன பலனடைகின்றோம். ஏரும், உழவும் மாடும் கடவுளாகக் கருதப்படாத ஆஸ்திரேலியா தேசத்தில் ஒரு ஏக்கராவில் 3000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வெள்ளாண்மை எடுக்கின்றார்களாம். நாம் இன்னும் ஏர்பூட்ட அய்யரைக் கூப்பிட்டு நேரம் பார்த்துக் கொண்டிருக் கின்றோம். இன்னும் எவ்வளவோ வழிகளில் நாம் மூடர்களாகவே, காட்டு மிராண்டிகளாகவே இருக்கின்றோம். நாம் எந்த அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்கின்றோமோ அந்த அரசாங்க தேசபக்தர்கள் தங்கள் தேசங் களில் ஆராய்ச்சித் துறையில் இறங்கி, அநேக அற்புதங்களைக் கண்டு பிடித்து இரசவாதம் போல் செல்வத்தைப் பெருக்கி பிரஜைகள் எல்லோரும் அரச போகத்தை அடைய ஏற்பாடு செய்து உலகத்தில் பெரும்பாகத்தை
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஆட்சி புரிகின்றார்கள். அன்றியும் அவர்களது தர்மம் நம்மைப் போன்று உத்சவத்திலும், பூஜையிலும், வாகனத்திலும், கும்பாபிஷேகத்திலும், தடிராமன்களுக்கு அன்ன சத்திரத்திலும், திதியிலும், அறுபதாம் கல்யாணத்திலும் செலவாக்கப்படாமல் அவர்கள் நாட்டு ஆராய்ச்சிக்குச் செலவு செய்தது போக மீதியை நமது நாட்டில் நமது மக்களுக்கு நன்மைக் கான பிரசவ ஆஸ்பத்திரி. குஷ்டரோக ஆஸ்பத்திரி, கஷியரோக ஆஸ்பத்திரி, கண் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், அனாதை ஆஸ்ரமம், கைத்தொழிற்சாலை, புஸ்தகசாலை முதலான விஷயங்களுக்குச் செலவு செய்யப்படுகின்றது.. எனவே, எந்த நாட்டார் முன்னுக்கு வருவார்கள் என்பதை நீங்களே யோசி
யுங்கள்.
ஒரு மனிதனுடைய ஒழுக்கத்தை திருத்துப்பாடு செய்வதற்கு மாத்திரம் அதுவும் அறிவில்லாதவனுக்கு பயத்தை உண்டாக்கி அவனுடைய நடவடிக்கைகளைத் திருத்த என்று கடவுள் என்கின்ற உணர்ச்சி வேண்டு
மானால் எனக்கு ஆக்ஷேபணையில்லை. மற்றபடி மக்களின் பணத்தையும் நேரத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டுவிட்டு யாதொரு பயனும் இல்லாமல் கல்லைப் போல் நெட்டுக்குத்தாய் நின்று கொண்டிருக்க மாத்திரம் கடவுள் உணர்ச்சியும் வேண்டுமானால் அதை நான் அரை வினாடியும் ஒப்புக் கொள்ள முடியாது. எனவே, இதுதான் எனது நாஸ்திகம் என்பது. இதைப்பற்றி நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. என் அபிப்பிராயத்தை உங்களுக்குத் தெரிவித்துவிட்டேன். ஏற்கவும் தள்ளவும் உங்களுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. மற்றபடி பார்ப்பனர்களைப் போல் “சிவன் பார்வதிக்குச் சொன்னார், நாரதர் விசுவாமித்திரருக்குச் சொன்னார்”. பராசரர் சொன்னார், நம்பாவிட்டால் நரகம், நம்பினால் மோட்சம் என்று சொல்லி உங்களை நாம் ஏய்க்கவில்லை. ராமசாமி என்னும் பெயர் கொண்ட- ஒரு மனிதன் அதுவும் எழுத்து வாசனை இல்லாதவன், பள்ளிக் கூடத்தில் படிக்காதவன் சொல்லுகின்றான் என்பதாகக் கருதி நான் சொன்னவற்றை உங்கள் சொந்த புத்தியைக் கொண்டு அலசிப் பார்த்து சரி என்று தெரிந்தால் நடவுங்கள்.நேரம் அதிகமாய் விட்டதால் மற்றும் பல விஷயங்களைப் பற்றிப் பேச போதிய சாவகாசம் இல்லை. சமீபத்தில் இந்த ஊரில் சுயமரியாதை மகாநாடு கூட்டுவதாக உங்கள் ஊர் பிரமுகர்கள் தெரிவித்தபடியால் அது சமயம் வந்து மற்ற விஷயங்களையும் செங்கற்பட்டுத் தீர்மானங்களைப்
பற்றியும் விளக்க இருக்கின்றேன்.
குறிப்பு: 11.03.1929 இல் சீர்காழி சட்டநாத சாமி கோயிவில் திரு ஆர். சின்னையா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சுயமரியாதைப் பிரசார: சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 24.03.1929
குடி அரசு - 1929 () 166
எதிர்ப்பிரசாறாங்கள்
தமிழ்நாட்டில் பார்ப்பனர்களில் திரு.சத்தியமூர்த்தியும் பார்ப்பனரல்லா
தார்களில் திரு.வரதராஜுலுவும் இரண்டிற்கும் நடுவில் அதாவது பண்டிதக் கூட்டத்தில் திரு.கலியாணசுந்தர முதலியாரும் ஆக மூவர்கள் எப்படியாவது ஒரு வழியில் தினம் தங்களை விளம்பரம் செய்து கொண்டும் எப்படியாவது ஒரு வழியில் நாடோறும் சூரிய உதயமும் அஸ்தமனமுமாகி இன்றைய நாள் கழிந்ததா என்கின்றதுமான கவலையே வாழ்க்கையாகக் கொண்டவர்களே யல்லாமல் மற்றபடி “நேற்று என்ன சொன்னோம், என்ன எழுதினோம், எப்படி நடந்தோம், இன்று என்ன சொல்லுகின்றோம், எப்படி நடக்கப் போகின்றோம், நாளை நமது கதி என்ன” என்கின்ற கவலையே அணுவளவும் இல்லாதவர் களாய் அவ்வளவு பெரிய “துறவிகள்” முற்றும் துறந்த “ஞானிகள்” என்று சொல்லத்தக்கவண்ணம் நடந்து வருகின்றார்கள். இம் மூவருக்கும் கொஞ்ச காலமாய் தமிழ்நாட்டில் ஒன்று போலவே நாணயம் குறைந்து வெளியில் தலைநீட்ட யோக்கியதை இல்லாத அளவு செல்வாக்கு ஏறிவிட்டது. இவர். களில் திரு.சத்தியமூர்த்தியோ வெளிப்படையாய் காலித்தனத்தில் இறங்கி விட்டார். இவர் கொஞ்சநாளைக்கு முன் சென்னை கார்ப்பரேஷன் பிரசி டெண்டு திரு.எ.ராமசாமி முதலியாரை நாய், கழுதை, பன்றி, மடையன் என்பது போன்ற மொழிகளைக் குடி வெறியில் உளறுவது போல் உளறி கலகம் செய்துவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டுக் கொண்டது யாவருக்கும் தெரியும். அது போலவே இந்த வாரத்திலும் சட்டசபைக் கூட்டத்தில் கனம்
டாக்டர் முகமது உஸ்மானைப் பார்த்து “உமக்கு சீனிவாசய்யங்காருடைய கால்பூட்சு கழற்ற யோக்கியதை உண்டா” என்று கேட்டுவிட்டு உடனே வாபீசு
வாங்கிக் கொண்டார்.
திரு.சத்தியமூர்த்தியின் இம்மாதிரியான அயோக்கியத்தனங்கள். நாட்டில் பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளான காங்கிரஸ்காரர்கள். என்பவர்களாலும் பாராட்டப்பட்டே வருகின்றது. காங்கிரஸ்காரர்கள் சென்ற பக்கமெல்லாம் உதைபட்டுக் கொண்டு வருகிறார்கள். இழிவாய் நடத்தப் படுகிறார்கள் என்றால் அவர்கள் உதைபடுவதிலும் இழிவாய் நடத்தப் படுவதிலும் ஏதாவது அதிசயமிருக்க முடியுமா? ஒரு வேடிக்கைக் கதை சொல்லுவார்கள் அதாவது ஒரு பெரியார் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டி ருந்தார், ஒரு அயோக்கியன் போகும் போதும் வரும் போதும் தனது கால் அவர் மீது படும்படி ஆணவமாக நடப்பதும் உடனே “தெரியாமல் கால்
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பட்டுவிட்டது மன்னிக்க வேண்டும்” என்று சொல்லி கால்பட்ட இடத்தை தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வதுமாயிருந்தான். அப்பெரியவர் பார்த்தார். இவன் ஆணவத்தையும் மானம் கெட்ட தன்மையையும் பார்த்து இவனுக்கு சரியானபடி புத்தி கற்பிக்க எண்ணி அவ்வயோக்கியன் உட்கார்ந்திருக்கும் போது பிடரியில் ஒரு சரியான உதை கொடுத்து கழுத்து முறியும்படி செய்துவிட்டு “தெரியாமல் கால்பட்டுவிட்டது” என்று சொல்லி இரண்டு கையாலும் அவன் கழுத்தை தொட்டு இரு கண்களிலும் நன்றாய் ஒத்திக் கொண்டாராம். உடனே உதைப்பட்டவனுக்கு புத்திவந்து “என் கால் அவ்வளவு தடவை பட்டதற்கும் தங்கள் கால் ஒரு தடவை பட்டதற்கும் தங்கள் கால் சற்று பலமாய் பட்டுவிட்டதால் நம் இருவர்களுக்கும் கணக்கு சரியாய் விட்டது. இனி யார் மீதும் பாக்கியில்லை, ஆதலால் தயவுசெய்து
மீதி எண்ணிக்கைகளை மறந்து விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டானாம்.
இக்கதைப் போல் இவர்கள் விடிந்தெழுந்தால் ஏதாவது பேசுவதும் பிறகு பல்லைக்காட்டுவதும் மன்னிப்பு கேட்பதும் காணாமல் மற்றும் தங்களைப் போலுள்ள காலிகளுடன் இதைப் பெருமையாய்ப் பேசி மகிழ்ந்து கொள்ளுவதும், பிறகு இவர் காலித்தனத்திற்கும் சூத்திரர்களாய் இருக்கின்ற அயோக்கியரிடம் போய் கூலி பெற்றுக் கொள்ளுவதும் நித்திய கர்மமாய் போய்விட்டது.
இம்மாதிரி பொறுப்பற்ற காலிகளின் நடவடிக்கைகள் வெகு சீக்கிரத்
தில் நமது நாட்டு மக்களை ராணுவச் சட்டத்தின் கீழும் தண்டப் போலீஸ்
அதிகாரத்தின் கீழும் வாழவேண்டிய நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டு விடும் என்று வெகு அழுத்தமாய் எச்சரிக்கை செய்கின்றோம். இதன் உண்மையை அறிய வேண்டுமானால் இதை எழுதி வைத்துக் கொள்ளட்டும். தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட காலித்தனம் இந்திய சட்டசபைக்கும் பரவி அங்கும் கை கலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் திரு.நேரு என்கின்ற ஒரு பார்ப்பனர் இந்திய தேசீயத் தலைவர் என்னும் பேரால் அங்கும் காலித் தனமாய் நடந்து கொண்டதும் நமக்கு இந்த எண்ணத்தை
உறுதிப்படுத்துகின்றது.
நிற்க, தன்னை சதா தேசீயவாதி என்று சொல்லிக் கொள்வதன் மூலம்
வாழும் திரு.வரதராஜுலுவுக்கு நமது நாட்டுப் பார்ப்பனர்களின் இந்த விதமான காலித்தனமான காரியங்களில் கவலையில்லாமல் “நாயக்கர் பிரசாரத்தால்” உலகம் முழுகிப் போவதுபோல் நீலிக் கண்ணீர் விட்டு பார்ப்பனர்களின் காலுக்குள்ளாக புகுவதற்கே புத்திபோய் கொண்டிருக் கின்றது. இதுவரை “நாயக்கர் பிரசாரத்தை” பற்றி இவ்வளவு ஆபத்து வந்துவிட்டதாய் ஊளையிடும் எவராவது “நாயக்கரின்” எந்த பிரசாரத்திற்கு
எந்தக் கருத்துக்கு எந்த வாக்கியத்திற்கு தாங்கள் கவலைப்படுகின்றார்கள் என்று பொது ஜனங்களுக்கு எடுத்து காட்டி சமாதானம் சொல்லி கூப்பாடு போட்டிருக்கின்றார்கள்? மொத்தத்தில் “நாயக்கர் பிரசாரம்” “நாஸ்திக
குடி அரசு - 1929 () 168
பிரசாரம்” “சுயமரியாதைப் புரட்டு” “மதம் போச்சு” “சமயத்திற்கு ஆபத்து” என்று எழுதியும் பேசியும் பாமர மக்களை ஏமாற்றி வாழப் பார்ப்பதைத் தவிர: இவர்கள் நம்மீது கண்டுபிடித்த குற்றம் என்ன என்று கேட்கின்றோம்.
16-3-29 உதமிழ்நாடு பத்திரிகை தலையங்கத்தில்: -
“தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு கண்ணாயிருந்த ஸ்ரீ ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சமய சமூக அரசியல் விஷயங்களில் கண்ணிழந்த குருடர்போல் மனம்போன போக்கில் பிரசாரம் செய்ததின் பயனாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு சக்தி தோன்றியிருப்பதை யாரும் மறுக்க
முடியாது”.
“சமதர்மக் கொள்கைகளில் நமக்கும் நாயக்கருக்கும் பேத மிருப்பதாக ஒருவரும் சொல்ல முடியாது.”
“செங்கல்பட்டில் செய்த தீர்மானத்தை நாம் ஒப்புக் கொள்ள
முடியாது.”
என்று எழுதியிருக்கின்றார்.
சமய சமூக விஷயங்களில் திரு.வரதராஜுலுக்கு இஷ்டமில்லாத நமது. கொள்கை எது? கண்மூடித்தனமாக நாம் செய்த பிரசாரக் கருத்து எது? என்று
திரு. வரதராஜுலுவால் எடுத்துக் காட்ட முடியுமா? என்று கேட் கின்றோம். நம்மைவிட “மோசமாகவும் கண்மூடித்தனமாகவும்” உத்திரவு போட்டும், எதிர்த்தவர்களை: சிறையில் போட்டும் நிர்ப்பந்தம் செய்த திருஆப்கன் அமீர் அமானுல்லாவுக்கு “பணமும் படையும்” திரட்டியும் தயாராய் வைத்துக் கொண்டு அங்கு செல்வதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்திரவை
எதிர்பார்த்துக் கொண்டிருந்த “சமூக சமூதாய சீர்திருத்த வீரருக்கு” நம்மிடம் என்ன குறை காணப்பட்டது? என்று கேட்கின்றோம்.
தவிர, செங்கல்பட்டு தீர்மானத்தில் இவர் எதை ஆக்ஷேபிக்கிறார். என்று கேட்கின்றோம். ஜாதிப் பட்டத்தையும் சமயக் குறிகளையும் எடுத்து விடுவதைப் பற்றியா? பெண்கள் தங்கள் இஷ்டப்படி கணவனை தேடிக் கொள்வதைப் பற்றியா? இஷ்டமில்லாத போது விலகிக் கொள்வதைப் பற்றியா? கடவுள் பூசைக்கு பணச் செலவும் தரகனும் கூடாது என்பதைப் பற்றியா? என்று கேட்கின்றோம்.
திரு.வரதராஜுலு வெகுகாலத்திற்கு முன்பே ஜாதிப் பட்டத்தையும் சமயக் குறிகளையும் எடுத்துவிட்டதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்
கிறார் என்பதை நாம் ருஜுப்பிக்க முடியும். பெண்கள் விஷயத்தைப் பற்றியும் தனது மனைவியார் அவர்களது கழுத்தில் இருந்த தாலியைக் கூட அறுத்
தெறிந்துவிட்டதாகவும் சர்வ சுதந்திரத்துடன் இருக்க அனுமதித்திருப்பதாக வும் தானும் எழுதியதோடு தனது மனைவியார் பேராலும் வெளிப்படுத்தி இருக்கின்றார். கடவுள் விஷயத்திலும் தான் கோவிலுக்கே போவதில்லை
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
என்றும் விக்கிரக வணக்கமே செய்வதில்லை என்றும் அநேக இடங்களில் சொல்லி இருக்கின்றார்.
அன்றியும்.இவர் விக்கிரக ஆராதனை இல்லாத ஆரிய சமாஜத்தில் சேர்ந்து கொஞ்சம் காலம் இருந்தார். இப்பேர்ப்பட்டவருக்கு செங்கல்பட்டு தீர்மானத்தில் எது பட்டுக் கொண்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
நிற்க, திரு.கலியாணசுந்தர முதலியாரின் விஷயம் வரவர மிக இழிவான துறையில் போய்கொண்டிருக்கின்றது. இவருக்கும் திரு.சத்திய மூர்த்திக்கும் கடுகளவு வித்தியாசமாவது இருப்பதாகக் கண்டுபிடிப்பதற் கில்லை. ஆனால் முந்தினவர் மன்னிப்பு கேட்டு கொள்வார், இவரோ தான் சொல்லவில்லை என்று பொய் சொல்லிவிடுவார். இது இரண்டிலும்
பிந்தினவர் குணமே மிகவும் இழிந்துரைக்கத்தக்கது. இவரும் தனது பத்திரி கையில் “நாயக்கர் எனது அன்பர் அவர் சிங்கக்குட்டி” என்று எழுதுவதும் திருவாளர்கள் பாவலர், குழந்தை, ஷாபி முதலிய ஆசாமிகளுடன் கூடிக் கொண்டு இழித்தன்மையில் விஷமப் பிரசாரம் செய்வதும், “சுயமரியாதை இயக்கம் நல்லதுதான்; ஆனால் அது ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்து கெட்டுப்போய் விட்டது” என்று சொல்லுவதும், ஜஸ்டிஸ் க௯ஷி நல்லதுதான்; ஆனால் அது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து கெட்டுப்போய் விட்டது என்பதும், கூட்டத்தில் எங்காவது சிக்கிக் கொண்டால் பல்லை காட்டி கெஞ்சுவதும் தனது அறையில் இருக்கும்போது அவன் முட்டாள், இவன் எட்டன், படியாதவன் என்பதுமான முறையில் பேசுவதுமாய் நடந்து கொள்கின்றார். எனவே இம் மூவரும் சேர்ந்துதான் “இந்திய நாட்டு தேசீய” காங்கிரசை காப்பாற்றுகின்றவர்களாக பறை அடித்துக் கொள்ளுகின்றவர்கள். என்பதை பொது ஜனங்கள் உணர ஆசைப்படுகின்றோம்.
நிற்க, ஆஸ்திகச் சங்கம் ஸ்தாபித்தவர்களும் அதன் மூலம் “கடவுளைக் காப்பாற்றவும் சமயங்களைக் காப்பாற்றவும் வேலை செய்கின் றோம்” என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டிருப்பவர்களுமான திருவாளர்.
கள் பாவலர், குழந்தை, ஷாபி சாயபு, ஜயவேலு, கல்யாணசுந்தர முதலியார். முதலிய கனவான்களுக்கு முதலாவது “கடவுள் பக்தியோ” “சமய” ஒழுக்க மோ நாணயமோ உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். சிஷ்யர்களு டைய யோக்கியதை அறிய வேண்டுமானால் குருவின் யோக்கியதையி லிருந்து தெரிந்து கொள்ளலாம். இவர்களின் குருவான திரு. கல்யாணசுந்தர முதலியாரின் கடவுள் எது? அதற்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்கம் எது? என்று அவராவது மற்றும் யாராவது சொல்லமுடியுமா? அதுபோலவே திரு.முதலி யாருக்கு அவரது சமயம் எது? அதன் கொள்கைகள் எவை? அவற்றுள் அவர்.
பின் பற்றுவது எது? என்று அவராவது மற்றும் யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.
திரு.முதலியார் சிஷ்யர்களில் ஒருவர், “நாயக்கருக்கு” ஒரு பகிரங்கக்
கடிதம் எழுதி இருக்கிறாராம். அதாவது அதில் திரு.நாயக்கர் அந்த
குடி அரசு - 1929 () 170
சிஷ்யருடன் வாதுக்கு வரவேண்டுமாம், எதைப்பற்றி என்றால் திரு.நாயக்கர். வாதம் வியர்க்காத தோஷமுடையதாம். ஆதலால் “நாயக்கர்” இலக்கிய இலக்கண தர்க்க சமய சாஸ்திர அனுபவ ஞானம் இல்லாதவரென்று நிரூ பணம் செய்யத் தயாராயிருக்கின்றாராம். இதைத்தான் பத்திரிகைகளுக்கு பகிரங்கக் கடிதம் என்று எழுதி இருக்கின்றார்.
திரு. “நாயக்கர்” தனக்கு இலக்கண இலக்கியம் தெரியுமென்று எப்போதாவது சொன்னாரா? தர்க்க சமர சாஸ்திரம் பார்த்திருப்பதாய் எப்போ தாவது சொன்னாரா? மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கின்றதா? இல்லையா என்றும், அந்த அறிவு என்ன சொல்லுகின்றது என்றும், தான் சொல்லுவது அந்த அறிவுக்குப் பொருத்தமானதா விரோதமானதா என்றும் தான் கேட்கின்றாரே ஒழிய வேறு என்ன? இதற்கு சமாதானம் சொல்ல முடியாமல் இலக்கணத்தில் வெல்லுவேன்; இலக்கிய சாஸ்திரத்தில் வெல்லுவேன்: அதுவும் “இலக்கிய இலக்கண தர்க்க சாஸ்திர பண்டிதர்” களான தமிழ் பேசத் தெரியாத திருவாளர்கள் ஏ. ராமசாமி முதலியாரும் தணிகாசலம் செட்டியாரும் தான் இதற்கு மத்தியஸ்தராயிருக்க வேண்டுமாம்.
எனவே இந்த அறிவாளிகளின் தீரத்தை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம். இந்த “பண்டிதர்களை” மத்தியஸ்தமாக வைத்துக் கொள்ளும் பண்டிதருக்கு எவ்வளவு இலக்கண இலக்கிய அனுபவ ஞானம் இருக்கும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
எனவே, இதிலிருந்தே ஆஸ்திக பிரசாரர்களின் அறிவு எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆஸ்திகர்கள் தங்களின் காலித்தனத்தாலும் தேசத்துரோக பூச்சாண்டியாலும் நாஸ்திக பூச்சாண்டியாலும் சுயமரியாதை இயக்கத்தை அசைத்துவிட முடியாது என்பதையும், அசைக்கப் புறப்பட்டி ருப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் நபர்களும் வெறும் கூலிக்கு மாரடிப்பவர்.
கள் என்றும் தெரிவித்து கொள்வதோடு இதற்காக சுயமரியாதைக்காரர்கள் மெனக்கெட்டு அவர்களுக்கு எதிர்பிரசாரம் செய்வதற்கென்று காலத்தையும் எண்ணத்தையும் வீணில் செலவழிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.03.1929.
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
“மித்திரன்” புரட்டு
நிருபர்களிண் அயோக்கியத்தனம்
தஞ்சைக்கு அடுத்த திருவையாற்றில் 28-2-29 தேதியில் நடந்த பனகால் வாசகசாலைத் திறப்பு விழாவின்போது தஞ்சை உயர்திருவாளர்.
டி.வி. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திய காலை
யில் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேசியதாகவும் “குடி அரசையும்” *திராவிடனை” யும் படித்துப் பிள்ளைகள் கெட்டுபோகக் கூடாது என்று சொன்னதாகவும் இந்த ஊருக்குச் சுயமரியாதை இயக்கத்தார் வந்தால் அவர். களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சொன்னதாகவும், மற்றும் பல விபரீதமான விஷயங்கள் பேசியதாக சுதேசமித்திரன் “நிருபர்” பெயரால் 4-3-29 தேதி “மித்திரனில்” வெளியாயிருந்ததற்கு திரு.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் மறுத்து தான் பேசாத விஷயங்களையும் நினைக்காத விஷயங்களையும் “மித்திரனில்” எழுதி இருப்பதாகக் குறித்து “மித்திரன்” யோக்கியதையை வெளியிட்டிருப்பதுடன் அன்று தான் பேசிய விஷயம் இன்னது என்பதையும் சென்ற மலரில் வெளியிட்டிருக்கின்றோம்.
எனவே சுயமரியாதை இயக்க விஷயத்தில் பார்ப்பனப் பத்திரிகை களும் அதன் நிருபர்களும் அவர்களை நத்தித் திரியும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நிருபர்களும் எவ்வளவு இழிவாய் நடந்து கொள்ளு கிறார்கள் என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாய்க் கொள்ள வேண்டு கின்றோம்.
தவிர, திரு. பிள்ளையவர்களிடம் நமக்குக் குழந்தைப் பருவம் முதல் பழக்கமுண்டு அவர் சுபாவத்தில் தன்னை அடிக்கடி தாழ்த்திப் பேசிக் கொள்ளுகின்ற பெருமையான குணமுடையவர். மற்றவர்களிடம், உண்மை யிலேயே குற்றம் கண்டு பிடித்தாலும் அதையும் தன்னைத் தாழ்த்திப் பேசிக் கொள்ளுவதன் மூலமே வெளிப்படுத்தவும் கண்டிக்கவும் ஆற்றலுடையவர். நாமறிந்தவரை அவர் அன்னியரை இகழ்ந்தோ தாழ்த்தியோ பேச நாம் கேட்டதில்லை.
இதைப் பற்றி நாம் ஏன் இங்கு இவ்வளவு எழுத நேரிட்டது என்பதைப்
பற்றிச் சிலர் ஐயுறக் கூடும்..அதாவது பிள்ளையவர்கள் இனியாவது குற்றம் கூறாமலிருக்க வேண்டி நாம் அவரைப் புகழ்வதாகச் சிலர் கருதக் கூடும்! உண்மையில் நாம் அதைப் பற்றி (பிள்ளையவர்கள் வசவைப் பற்றி) கவலை
குடி அரசு - 1929 () 172
கொள்ளவில்லை. முதலாவது பிள்ளைக்கு வையத் தெரியாது. அப்படி மீறி எங்காவது இரவல் வாங்கிக் கொண்டு வைதாலும் எத்தனையோ பேரின் வசவை நித்தியமும் சகஸ்ர நாமமாகக் கொள்ளும் நமக்கு பிள்ளையவர்' களின் வசவு அதிக பாரமாய் போய்விடாது. மற்றபடி என்னவென்றால் திரு.பிள்ளையவர்கள் “மித்திரன்” கூற்றை மறுத்தெழுதிய தனிக்குறிப்பில் கண்டுள்ள விஷயமும் நமக்கும் பிள்ளைக்கும் பொதுவாழ்வு சம்மந்தமாக மாத்திரமல்லாமல் குடும்ப சம்மந்தமாகவும் பெரியோர்கள் காலம் முதல் 30,
40 வருஷமாக உள்ள நெருக்கமான பழக்கமும் மித்திரனின் பொய் நிருபத்தைக் கண்டு எம்மிருவர்களுடையவும் பல நண்பர்களுக்குள் அபிப்பிராய பேதம் நிகழ்ந்ததாகத் தெரிய வந்ததாலும் இக்குறிப்பு எழுத வேண்டியதாயிற்று.
குடி அரசு - குறிப்புரை - 31.03.1929.
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
L ரற்காட்டை மற்ற வில்லா யோர்ட௫கள்
பிண்பற்றுமா?
வடஆற்காடு ஜில்லா போர்டின் 27-3-29 ஆம் தேதி மீட்டிங்கில் ஜில்லா போர்டின் ஆதிக்கத்தில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100-
க்கு 80 உபாத்தியாயர்களைப் பார்ப்பனரல்லாதார்களாகப் பார்த்து நியமிக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றிருக்கின்றது. அந்த மீட்டிங்கில் நான்கு பார்ப்பன கனவான் மெம்பர்கள் இருந்து விவாதத்தில் கலந்து எதிர்த்துப் பேசி கடைசியாக தீர்மானத்திற்கு சாதகமாகவே தங்கள் ஓட்டுகளையும் கொடுத்தது பாராட்டத்தக்கதாகும்.
வடஆற்காடு ஜில்லாபோர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மானத்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப் பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திருநாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர். களுக்கு வேண்டியவராயிருந்ததின் உண்மையை வெளிப்படுத்திவிட்டார். போலும், இதிலிருந்து திரு. நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா? பார்ப்பனர்கள் திரு. நாயுடுகாருக்கு வேண்டியவர்களா? என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.
நிற்க, வட ஆற்காடு ஜில்லா போர்டை மற்ற ஜில்லா போர்டு பின் பற்றுமா என்று அறிய ஆசையுடையவர்களாயிருக்கின்றோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 31.03.4929
குடி அரசு - 1929 () 174
நமது மந்திரிகள்
சென்னை அரசாங்க மந்திரிகளின் பெருமைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் சுருக்கமாக ஒரு வார்த்தையில் விளங்கவைத்துவிடலாம். அதென்னவென்றால், மந்திரிகள் மூவரும் பொதுஜன நன்மைக்கு விரோதிகளான பார்ப்பனர்களால் வெறுக்கப்பட்டவர்கள்.
எனவே இவர்கள் பார்ப்பனரல்லார்களுக்கு எப்படிபட்டவர் களாய் இருக்கின்றார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
ஏனெனில், பொது ஜனங்களின் நன்மைக்கு நடுநிலையில் இருந்து பாடுபடுபவர்களோ வேலை செய்கின்றவர்களோ அவர்களுக்கு உதவி செய் கின்றவர்களோ ஆகிய எவரும் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் இருக்க முடியவே முடியாது. அதுபோலவே பார்ப்பனர்களால் மதிக்கப்பட்ட- புகழப்பட்ட- எவரும் பொது மக்களுக்கு “துரோகம்” செய்யாதவர்களாக இருக்க முடியவே முடியாது. இது இன்றைய அனுபவமாக மாத்திரம் இல்லாமல் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கண்ட முடிவும் இதுவாகவேதான் விளங்குகின்றது. இன்றைய தினம் யார் யார் பார்ப்பனர்களால் வையவும் தூற்றவும் படுகின்றார்களோ அவர்களில் அநேகமாய் எல்லோருமே பொதுஜனங்களின் நன்றியறிதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்களாக இருப்பதை அனுபவத்தில் காண்கின்றோம். அதிகாரிகளில் கூட ஏறக்குறைய யோக்கியப் பொறுப்பும் நாணயப் பொறுப்பும் ஒழுக்கப் பொறுப்பும் இல்லாத வெள்ளையர்கள் யார் யார் ஹைகோர்ட் ஜட்ஜி முதல் போலீஸ் சேவகன் வரை உள்ள உத்தியோகங்களில் உண்டோ அவர்கள் எல்லோரும் இன்றைய
தினம் பார்ப்பன பத்திரிகைகளிலும் பார்ப்பன மேடைகளிலும் புகழப் படுவதோடு அநேகமாய் அப்படிப்பட்ட வெள்ளையர்களின் படங்கள் பார்ப் பனர்களின் படுக்கை வீடுகளிலும் தொங்கிக் கொண்டிருப்பதையும் காணலாம்.
வெள்ளைக்காரர்கள் விஷயங்களே இப்படியானால் இந்தியர்கள்
விஷயத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதை நாம்
எடுத்துக்காட்ட வேண்டுமா?
சென்ற தேர்தலின் போது பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறுவது கஷ்டமாயிருக்கும் என்கிறதும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமை களுக்கும் தான் வெற்றியேற்படக் கூடும் என்கின்றதுமான சந்தேகம் நமது
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கவர்னர் துரையான லார்ட் கோஷனுக்குத் தோன்றியவுடன் அவர். வகுப்புவாதம் கூடாது; அதனால் தேசத்துக்கு நன்மையில்லை என்று சொன்னார். அந்தப்படி அவர் சொன்னவுடன் அவரைப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் புகழ்ந்ததற்கு அளவே இல்லை, அந்த சமயத்தில்
நாம் கோஷன் பிரபுவை பலமாக கண்டித்தோம். அதோடு “அவர் மீது நம்பிக்கை இல்லை” என்றும் “அவரைத் திருப்பி அழைத்து கொள்ள வேண்டும்” என்றும் கோயமுத்தூர் மகாநாட்டில் தீர்மானமும் கொண்டுவந்து பலர் வேண்டுகோளின் பேரில் திருப்பி அழைத்துக் கொள்ளவேண்டும்” என்பதை விட்டுவிட்டு “நம்பிக்கை இல்லை, என்கின்ற பாகத்தை ஏகமனதாக நிறைவேற்றினோம். அந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பன பத்திரிகைகள். திரு.கோஷன் பிரபுவை வானமளாவப் புகழ்ந்ததுடன் அவருக்கு இந்தப்
பார்ப்பனர்கள் சங்கராச்சாரிக்கு செய்யும் உபசாரம்போல் உபசாரம் செய்தார்.
கள். கோஷன் பிரபுவும் இப்பார்ப்பனர்களை நம்பிக் கொண்டு கோவைத் தீர்மானத்தை பற்றி பரிகாசமாய் நினைத்து கொண்டு “இனி நான் மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேறத் தயாராய் இருக்கவேண்டியது தானா” என்று இறுமாப்பாய் பேசினார். ஆனால் வெகுசீக்கிரத்தில் உண்மை நிலை உணரப்
பட்டு தனது தப்பிதத்திற்காக வருந்த வேண்டியும் ஏற்பட்டு கிரமமாய் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தார். இந்த நிலை ஏற்பட்ட வுடன் மறுபடியும் பார்ப்பனர்களால் வழக்கம்போல் தூற்றவும் பட்டார். எனவே யோக்கியமாகவும் நாணயமாகவும் நடக்கக் கூடிய யாரும் பார்ப்பனர்களால் மதிக்கப்பட முடியவே முடியாது. அதுபோலவே நமது மந்திரிகளும் பார்ப்பனதாசர்களாய் இருந்தால் மாத்திரம் தான் பார்ப்பனர்.
களாலும் அவர்களது கூலிகளாலும் புகழப்படுவார்கள் சற்று கோணலாக நடக்க ஆரம்பித்துவிட்டால் உடனே அவர்களை தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். அன்றியும் அவர்களை ஒழிப்பதற்கும் எவ்வளவு இழி தொழிலில் வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்யத் துணிந்துவிடு
வார்கள், மற்றபடி ஒழுக்கமோ நாணயமோ ஆகியவற்றைப் பற்றி ஒரு
சிறிதும் கவலை கொள்ளமாட்டார்கள்.
கனம் சேதுரத்னமய்யர்
உதாரணமாக இன்றைய மந்திரிகளில் ஒருவரான கனம் சேதுரத்தின மய்யர் அவர்களிடம் பார்ப்பனர்கள் என்ன குற்றம் கண்டுபிடித்துவிட்டார். கள்? அவருடைய ஆட்சியில் ஒரு பார்ப்பனன் கூட இதுவரை குற்றம் சொல்ல முன் வந்ததாகச் சொல்லமுடியாது. அப்படி இருக்க பிராமண மகா நாட்டில் கனம் சேதுரத்தினமய்யர் மந்திரி வேலை ஒப்புக் கொண்டதற்காக கண்டித்து ஒரு தீர்மானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே உத்தியோகம். திரு.வி.சி. வெங்கிட்டரமணய்யங்காரோ அல்லது திரு. கே.ஆர். வெங்கட் ராமய்யரோ ஒப்புக் கொண்டிருந்தால் அவரை வானமளாவப் புகழ்ந்து திரிவார்கள்.
குடி அரசு - 1929 () 176
கனம் முத்தையா முதலியார்
தவிர கனம் முத்தையா முதலியாரவர்களைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகள் தூற்றுவதும் பழிசுமத்துவதும் கூலிகளைவிட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்வதும் கணக்கு வழக்கில்லை. இதுவரையில் பார்ப்பனர்கள் அவர்மீது குறிப்பிட்டு என்ன குற்றம் சொன்னார்கள் என்று பார்த்தால் ஒன்றையுமே காணோம். காங்கிரசைத் துரோகம் செய்ததாக சொல்வதானாலும் “இதே குற்றம் செய்த” திரு கனம் சேதுரத்தன மய்யரவர்கள் மீது இதைப்பற்றி ஒன்றுமே சொல்வதைக் காணோம்.
நிற்க, கனம் முத்தையா முதலியார் அவர்கள் சென்னைக் காங்கிரஸ் காரர்கள் மந்திரி சபை அமைத்த காரியமான “பெருந்துரோக”த்தைப் பற்றி காங்கிரசில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்பாரற்று போனதினாலும். அந்த துரோகங்கள் காங்கிரசினால் ஆதரிக்கப்பட்டதினாலும் அவர். காங்கிரஸ் தீர்மானத்தின் உண்மையான கருத்தை உணர்ந்து அதன்படி நடந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி அவர் மந்திரி உத்தியோகத்தில் பார்ப்பனர்களுக்கு என்ன கெடுதி செய்து விட்டார் என்று
பார்த்தால், உத்தியோகங்களில் பார்ப்பனர்களுடைய ஏகபோக உரிமைக்கு ஆபத்தை கொண்டுவந்து விட்டுவிட்டார். அதாவது அவரது இலாகாவில் உள்ள உத்தியோகங்கள் எல்லா வகுப்பாருக்கும் கிடைக்கும்படி செய்து விட்டார். இது பார்ப்பனர்களுக்கு பெரிய ஆபத்தான காரியம். ஏனென்றால் இந்த உத்திரவு மாத்திரம் எல்லா இலாக்காக்களிலும் சரியாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டு விடுமானால் இனி 10 வருஷத்தில் “பார்ப்பான் உயர்ஜாதி” என்கின்ற பேச்சே கண்டிப்பாய் இல்லாமல் போய்விடும். இன்றைய தினம் நமது நாட்டில் உள்ள அரசியல் இயக்கத்தின் தத்துவம்கூட பார்ப்பன ஆதிக்கத்தையும் பார்ப்பான் உயர்ந்தவன் என்பதையும் நிலை
நிறுத்தவே ஒழிய மற்றபடி ஜனங்களுக்கு ஒரு காதொடிந்த ஊசியளவு நன்மைக்குமல்ல என்பதோடு அவற்றால் அநேக ஆபத்துகளும் உண்டாகி வருகின்றது என்பது சத்தியமான விஷயம். எனவே அப்பேர்ப்பட்ட காரியத்தின் தலையில் கனம் முதலியார் கை வைத்து விட்டதோடு, மது விலக்குப் பிரசாரம் செய்யவும் 4 லக்ஷம் ரூபாயும் வைத்துவிட்டதின் மூலமும். பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு இடமில்லாமல் போய்விட்டதால் பார்ப்பனர்கள். எப்படியாவது அவரை ஒழித்து மறுபடியும் சட்டசபைக்கும் மந்திரி பதவிக்
கும் வரவொட்டாமல் தடுத்து அவர் செய்த வேலையையும் அழித்து மறு
படியும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திகொள்ள வேண்டியது பார்ப்பன வேதத்தின் கட்டளையாகிவிட்டது. ஆதலால் அவர்கள் தூற்ற வேண்டிய வரும் பொது ஜனங்கள் போற்ற வேண்டியவருமாய் விட்டார்.
கனம் சுப்பராயன்
அதுபோலவே கனம் திரு.சுப்பராயன் அவர்கள் மீதும் பார்ப்பனர்.
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
களுக்கு ஆத்திரம் இருப்பதில் அதிசயமில்லை. அது மாத்திரமல்ல கனம் முத்தையா முதலியாரவர்கள் மீது உள்ள ஆத்திரத்தைவிட அதிகமான ஆத்திரம் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மீது இருக்கப் பல காரணங்கள் உண்டு. ஏனென்றால் கனம் சுப்பராயன் அவர்களின் இடுப்பில் கயிறுகட்டி தங்கள் இஷ்டப்படி ஆட்டலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். ஒத்துழையாதாரான திரு.சி.ராஜகோபாலாச்சாரி, கிழ தேசீயவாதியான திரு. சி.விஜயராகவாச்சாரி, சர்.சி.பி.ராமசாமி அய்யர் ஆகிய இவ்வளவு பேராலும்
மற்றும் அரசாங்கத்தை “முட்டுக்கட்டை போடுவதன் மூலம் பணியச்செய்யச் செய்பவர்களான தேசீயவாதிகளும்” சுயராஜியக் கக்ஷியாரும் காங்கிரஸ் காரருமான இவ்வளவு பார்ப்பனர்களாலும் பிரதிஷ்டை செய்து கும்பா பிஷேகம் செய்யப்பட்ட ஒரு மந்திரியானவர், கனம் முத்தையாவைவிட ஆபத்தான காரியத்தில் பார்ப்பனர்களின் தலையில் கையை வைக்கத் தொடங்கிவிட்டதால் இனி ஒன்றா, அவரை மறுபடியும் எந்த விஷத்திலாவது தங்கள் சுவாதீனம் செய்து கொள்ளப்பார்க்க வேண்டும். அல்லது அவரையும் சட்டசபைக்கு வராமலும் மந்திரியாகாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டால் ஆபத்துத்தானென்பதில் சிறிதும் அவர்களுக்குச் சந்தேகமில்லை. ஏனெனில் கனம் முத்தையாவோ உத்தி யோகத்தின் வாயில் மண்ணைப் போட்டார் என்றால், கனம் டாக்டர் சுப்ப ராயனோ அடியோடு அவர்கள் பஞ்சாங்கப் பிச்சைப் பிழைப்பிலும்கூட மண்ணைப் போட்டுவிடப் பார்க்கின்றார். அவர்களின் உபன்யாசங்க ளிலிருந்தும் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி சட்டசபையில் பார்ப்பனக் கூலிகளாகிய திரு.முத்துரங்கம் கம்பனியார்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கனம் சுப்பராயன் அவர்கள் சொன்ன மறு மொழிகளிலிருந்தும் பார்ப்பனர்களுக்கு கனம் சுப்பராயனை விட கனம் முத்தையாவே சற்று தேவலாம் என்று நினைக்கும்படியாக ஏற்பட்டுவிட்டது. என்னவென்றால், முதலாவது “கல்வி விஷயத்தில் இனி உயர்தரக் கல்விக்கு நான் அதிகம் பணம் செலவழிக்க மாட்டேன்” என்றும் “ஆரம்பக் கல்விக்குதான் செலவு செய்யவேண்டும்” என்றும் “கூடிய சீக்கிரத்தில் சென்னை மாகாணத்தில் படியாத மக்களே இல்லை என்று சொல்லும் படியாக செய்துவிடுவேன்” என்றும் சொல்லி இருக்கின்றார். மறுபடியும் “கல்வி என்பதில் ஜாதி வித்தியாசத்தையும் பிறவியில் உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாசத்தையும் ஒழிப்பதுதான் முக்கியமான கல்வி” என்றும் “அதைச் செய்யும் முறையில் கல்வியை திருப்பப் போகின்றேன்” என்றும் சொல்லி இருக்கின்றார், “ஆரம்பக் கல்விக்கு பெண்மக்களையே உபாத்தியாயர்களாக இருக்க ஏற்பாடு செய்யப் போகின்றேன்” என்றும் சொல்லி இருக்கின்றார். பெண்களுக்கு பூரண உரிமை அளிக்கபோவதாயும் சொல்லி இருக்கிறார். கிராமப்புணருத்தாரண வேலைப் பிரசாரம் என்பதில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதும் சேர்ந்தது என்றும் சொல்லி இருக்
கின்றார், அதோடு மாத்திரமல்லாமல் சமுதாய விஷயத்தில் பார்ப்பனரின்
குடி அரசு - 1929 () 178
ஆதிக்கமும் மூடநம்பிக்கையும் ஒழிந்தால்தான் அரசியலிலும் அன்னிய ஆதிக்கமும் மூடநம்பிக்கையும் ஒழியும் என்றும் சொல்லிவிட்டார். எனவே இந்த மந்திரிகள் தங்களை ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும் 6 வருஷகாலம் மந்திரியாயிருந்தும் 5500 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கி வந்தவரும் தற்காலம் ஜஸ்டிஸ் கட்சிக்கு சட்டசபையில் தலைவராயிருப்பவருமான ஜஸ்டிஸ் கட்சியான மந்திரி சர்.ஏ.பி. பாத்ரோவை விட மேலானவர்கள் என்று மாத்திரம் சொல்வ தோடல்லாமல் முடிவாகச் செய்ய வேண்டிய வேலையின் பக்கம் திரும்பி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
நிற்க, இவர்களில் கனம் முத்தையா அவர்கள் தான் செய்ய வேண்டிய காரியங்களை காரியத்தில் செய்து காட்டி விட்டார்கள். கனம் டாக்டர் சுப்ப ராயனவர்களின் திட்டங்கள் வாய் வார்த்தைகளில் இருக்கின்றன. ஆனாலும் இனியும் அவருக்கு இந்தத் தடவை 8 மாத காலம் சாவகாசமிருக்கிறது. இந்த
8 மாதத்தில் அவர்கள் உத்தேசங்களைக் கூடுமான அளவு காரியத்தில் கொண்டு வந்துவிடுவார் என்றே நினைக்கின்றோம்.
அதாவது பெண்கள் போதனை முறைப் பள்ளிக் கூடங்கள் தாராள
மாய் ஏற்படுத்தப்பட வேண்டும். விதவைகள் பள்ளிக்கூடங்கள் சென்னைக்கு வெளியிலும் மதுரை, கோயமுத்தூர், வேலூர் ஆகிய ஜில்லாக்களின் தலைமை ஸ்தானங்களிலோ இடவசதியான ஸ்தானங்களிலோ ஏற்படுத்தி அவர்களை வெகுசீக்கிரத்தில் உபாத்தியாயினிகளாக ஆக்கிவிட வேண்டும். தீண்டப்படாத மக்கள் என்பவர்களின் மக்கள் படிப்புக்கும் உணவுக்கும் புஸ்தகங்களுக்கும் சர்க்காரிலேயே செலவு செய்து படிப்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக சில இடங்களில் போர்டிங் ஸ்கூல் ஏற்படுத்த. வேண்டும்.
மதச் சம்மந்தமான இலாகாவிலும் தீண்டாமை ஒழிய சட்டத்தின் மூலமாகவோ அல்லது ஒரு மகாநாடு கூட்டி எல்லோருடைய சம்மதத்தின் மூலமாகவோ அல்லது அதைப்பற்றி பொதுஜன அபிப்பிராயம் தெரிய ஒரு கமிட்டி நியமித்து அந்த ரிப்போர்ட்டின் மீதிலோ ஏதாவது விதாயம் செய்ய வேண்டும். இன்னும் இது போன்ற அநேக காரியங்கள் இருந்தாலும். சிலவற்றையாவது இக்காலாவதிக்குள் செய்ய வேண்டும். கல்வி, பெண்
மக்கள், தீண்டப்படாதார் ஆகிய இம்மூன்று விஷயங்களிலும் அவசரமாக
முதலில் ஏதாவது செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
வாய்ப்பேச்சில் பலனில்லை.
திரு. காந்தி கூட தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று வாயினால் சொல்லி “மகாத்மா” ஆனார். மகாத்மா பட்டம் நிலைத்ததும் “வருணாசிரம தருமம்” இருக்கவேண்டும். பிறவியில் ஜாதி வித்தியாசம் உண்டு.அவனவன் ஜாதித் தொழிலையே அவனவன் செய்து தீரவேண்டும். அந்தப்படி
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
செய்யாதவன் கீழ்ஜாதிக்காரன் ஆகிறான் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். எனவே கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அது போலில்லாமல்
மீதி உள்ள 8 மாதக் காலத்தில் தைரியமாக காரியத்தில் ஏதாவது செய்து தீரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். தீண்டாதவர்கள் எனப்பட்டவர். களுக்கு தனி தேர்தல் தொகுதியையும் சீக்கிரத்தில் கொடுக்கவேண்டியதும்
மிக அவசியமாகும்.
அன்றியும், இந்தப்படி செய்துவிட்டால் அடுத்த தேர்தலுக்கு எந்த ககதியின் பெயரையும் சொல்லிக் கொண்டு நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது. அப்படி சொல்லிக் கொண்டு நிற்கவும் வேறு யோக்கியமான கக்ஷியையும் காணோம். ஆதலால் சமுதாயச் சீர்திருத்த சம்மந்தமான கொள்கையின் பேரிலேயே தேர்தலுக்கு நிற்கலாம்.அதற்கேற்றாற்போலவே
மக்களும் அது சம்மந்தமான கொள்கைகளுக்கு மாத்திரமே ஓட்டுக் கொடுக்கும் நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆதலால் அந்தக் கொள்கையின் மீதே கூடிய சீக்கிரத்தில் தேர்தலிலும் வெற்றிபெற்று அரசாங்கத்தையும் நடத்தக் கூடிய நிலைமையை சீர்த்திருத்தக்காரர்கள். அடையலாம் என்றே உறுதிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே, இந்தத் தடவையில் நமது மந்திரிகள் பொதுவாக சமுதாய விஷயத்தில் சரித்திரத்தில் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க அளவு வேலைகள் செய்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். கனம் டாக்டர். சுப்பராயன் அவர்களால் குறிப்பிடப்பட்ட வேலைகள் எல்லாம் நிறைவேறுமானால் இந்த மாகாணத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் தீர்ந்தது என்று சொல்லி விட்டு வேறு மாகாண சட்டசபைகளையும் கைப்பற்றி அங்கு வேலை செய்யப் போய்விடலாம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்தத் தடவை மந்திரிகளுக்கு எதையும் செய்வதற்குத் தக்கபடி தாராளமாக ஆதரவு
இருந்திருக்கின்றது; இருந்தும் வருகின்றது. ஆதலால் மீதி நாட்களை வீணாக்காமல் துரிதத்தில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய வேணுமாய் விரும்புகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 31.03.4929
குடி அரசு - 1929 () 180
இணியாவது புத்திவருமா?
இந்திய சட்டசபையில்
யார்பணர்கணிண் விஷமம்
“சுதேசமித்திரன்” “இந்து” பத்திரிகைகளின் பத்திராதிபரும், தஞ்சாவூர். திருச்சினாப்பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தவரும் இந்தியாவின் 33 கோடி பொது மக்களுக்கு சுயராஜியம் வாங்கிக் கொடுக்க “உயிர் விட்டுக் கொண்டு” பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு.
எ. ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம். அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்பு வாரி உரிமை
ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்ட விரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய
அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார். விசாரித்து அந்த உத்திரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம்,
இதற்கு பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பன ரல்லாத ஒரே ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. ஷண்முகம்) தவிர மற்ற எல்லோரும் பார்ப்பனர்களானதால் யாரும் ஒன்றும் பேசாமல் கேள்விக்கு அனுகூலமா யிருந்தார்களாம். அரசாங்க மெம்பர் பதில் சொல்லுகையில் இதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும் சென்னை அரசாங்கத்தை விவரம் கேட்டுப் பதில் சொல்லுவதாயும் சொல்லிக் கொண்டிருக்கும் போது
திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்கள் எழுந்து அதைப்பற்றி சர்க்கார் மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்றும் மேலும் அநேகருக்கு திருப்தி என்றும் சொன்னாராம். உடனே திரு.எ.ரங்கசாமி அய்யங்கார் இது உண்மை யல்ல என்றாராம்.உடனே திருஷண்முகம் எழுந்து “சென்னை சட்டசபையில் இதைப்பற்றி விவாதம் கிளப்பி அங்கத்தினர்கள் எல்லோராலும் வகுப்புவாரி உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டும் அநேக பொதுக்கூட்டங்களில் அரசாங்கத் தையும் மந்திரிகளையும் ஆதரித்தும் பாராட்டியும் தீர்மானங்களும் செய்யப் பட்டும் இருக்கின்றது” என்று சொன்னாராம். இந்த சமயம் அரசாங்க
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மெம்பரும் சட்டசபை மெம்பர்களும் அய்யங்கார் முகத்தைப் பார்த்தார் களாம்.அய்யங்கார் முகம் பூமியை பார்த்ததாம். உடனே அரசாங்க மெம்பர்.
எழுந்து நல்ல சமயத்தில் தனக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி உதவி செய்ததற்காக திரு. ஷண்முகத்திற்கு வந்தனம் செலுத்துவதாய்ச் சொன்னா
ராம். இந்திய சட்டசபை அங்கத்தினர்கள் கைத் தட்டினார்களாம்.
இவற்றை அசோசியட்பிரஸ் பிரீபிரஸ் பிரதிநிதியும் பார்த்து கொண்டே இருந்தும் கூட இதை எந்தப் பத்திரிகைக்கும் தெரியப் படுத்தவே யில்லை. எனவே பார்ப்பன ஆதிக்கம் பத்திரிகைகளுக்கு விஷயங்கள் அனுப்புவதில் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கின்றது என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அன்றியும் இந்திய சட்டசபை ஸ்தானங் களை பெரிதும் பார்ப்பனர்களே கைப்பற்றி இருப்பதால் அவர்களால் நமக்கு எவ்வளவுதுரோகங்கள் நடைபெறுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ள
லாம். இனியாவது இந்திய சட்டசபை ஓட்டர்களுக்கு புத்திவருமா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.03.1929
குடி அரசு - 1929 () 182
பரோடா சமஸ்தானத்தில் கல்யாண ஈத்து மசோதா
செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பிறகு உலகமே முழுகிப் போய்விட்டதாக தமிழ்நாட்டில் சில அழுக்கு மூட்டைகள் போடும் கூச்சல்களையும் இதைப் பார்ப்பனர்கள் தங்கள் தேர்தலுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூலிகளையும் காலிகளையும் விட்டு கூப்பாடு போடச் சொல்வதையும் பொது ஜனங்கள் கவனித்திருக்கலாம். அத் தீர்மானங்களில் மிகவும் ஆபத்து என்று சிலரால் கருதப்பட்ட கல்யாண: ஒப்பந்த ரத்து தீர்மானத்தைப் பற்றி வெளிப்படையாய் பேசுவதற்கு தைரிய
மில்லாத சில பயங்கொள்ளிகள் இரகசியமாக விஷமப் பிரசாரம் செய்வதும்
பலர் அறிந்திருக்கலாம்.
ஆனால், செங்கல்பட்டு தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவர பரோடா அரசாங்கத்தார் முந்திவிட்டார்கள் என்பதாக 29-3-29 -ந் தேதி “இந்து” “சுதேசமித்திரன்” “சுயராஜ்ய” “ஜஸ்டிஸ்” முதலிய பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது பரோடா சமஸ்தானத்தில் நடந்த- இனி நடக்கப் போகும் கல்யாணங்கள் எவையாயினும் அவற்றை தம்பதிகள் இஷ்டப்பட்ட போது ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதை கொண்டுவந்தவர்கள் அம் மசோதாவின் ஒவ்வொரு பிரிவுக்கும் “சாஸ்திர” ஆதாரங்களை காட்டியிருக்கின்றார்களாம். இனி இதைக் கேள்விப்படும் தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகள் பெண்களை “காப்பாற்ற” “பரோடா சமஸ்தானத்திற்கு ஓடுவார்களா? அல்லது இங்கேயே மூலையில் உட்கார்ந்து கொண்டு “பெண்ணின் பெருமையை”
பேசிக் கொண்டு வயிறு வளர்ப்பார்களா? என்பது பொறுமையுடன் எதிர்பார்க் கப்பட வேண்டிய விஷயமாகும். பெண்களின் சுதந்திரத்திற்கு முதலாவது அவர்களுக்கு கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை அளிப்பதே முக்கியமானதாகும். இது விஷயமாய் நமது செங்கற்பட்டுத்
தீர்மானத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இம்முறை சில பாகங்களில் நடைபெறுவதையும், ஜர்மனி பார்லிமெண்டில் ஒரு மசோதா கொண்டுவந்தி ருப்பதையும், ஜப்பான், பிரான்ஸ், இட்டாலி, ஸ்காண்டிநேவியா, ஜெக்கோஸ் லோவியா, ஹாலண்டு, நியூஜிலந்து, ரஷ்யா, டென்மார்க், கனடா முதலிய தேசங்களிலும் கல்யாண ரத்துக்கனுகூலமாக உள்ள சட்டங்களையும்
182 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஆதாரமாக எடுத்துக் காட்டி பரோடா சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வந்திருப்பதையும் பார்த்துவிட்டோம். இனியும் நமது தமிழ் நாட்டிலும் பழந்தமிழ் மக்களில் ஏறக்குறைய அநேக வகுப்புகளில் இவ்வழக்கம் இன்றும் இருந்து வருவதையும் நடைபெற்று வருவதையும் பார்க்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 31.03.1929
குடி அரசு - 1929 () 184
செண்ணையில் சுயமரியாதைத் திருமணம்
நான் மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்பு கின்றார்கள். ஆசீர்வாதம் செய்யும் வழக்கம் என்ன என்பதைப் பற்றி யோசித் ததில் இப்பொழுது வழக்கத்தில் ஆசீர்வாதம் செய்கின்ற மாதிரியானது,
சிறிதும் பொருளற்றது என்பதோடு, நம்மிடம் பிச்சை வாங்கி உண்பவர்கள் தங்கள் வயிறு வளர்ப்பதற்காகச் செய்யும் காரியமாக இருக்கிறபடியால், இம்முறையில் ஆசீர்வாதம் செய்வது என்பது எனக்கு இஷ்டமில்லாத காரியமாகும். ஏனெனில் ஆசீர்வாதம் செய்யும்படி விரும்புகின்றவர்களும் எதிர்பார்க்கின்றவர்களும் இவ்வாசீர்வாதத்தால் உண்மையான பலனை எதிர்பார்க் கின்றார்கள். ஆனால் ஆசீர்வாதம் செய்கின்றவர் ஆசீர்வாதம் செய்யப் படுகின்றவர்களைப் பற்றி ஒரு கவலையுமில்லாமல் ஆசீர்வாதம் செய்வது என்பதை ஒரு பெருமையாக நினைத்து, தமக்கும் மற்றவர் களுக்கும் பொருள் விளங்காத ஏதோ ஒன்றின் மீது பழியைப் போட்டு அது உன்னைக் காப்பாற்றட்டும் இது உங்களைக் காப்பாற்றட்டும் என்று கை காட்டிவிட்டுப் போவதில் யாதொரு பலனும் இல்லை. அதுவும் இதுவும் மணமக்களை காப்பாற்ற ஆசீர்வாதம் செய்பவருடைய தயவு வேண்டிய தில்லை. அப்படிக் காப்பாற்றும் ஒரு வஸ்துவோ, அல்லது ஒரு சக்தியோ வேறு ஒருவர் காப்பவருக்கும் காக்கப்படுபவருக்கும் இடையில் தரகரா யிருந்து வக்காலத்துப் பேச வேண்டியதுமில்லை.அன்றியும் அப்படிக்காக்க வல்லமையுள்ள பொருளோ சக்தியோ மத்தியில் வக்கீலையும் தரகரையும் எதிர்பார்க்காது. ஆதலால் அந்த முறை அசட்டு முறை என்பதுதான் எனது அபிப்பிராயம். ஆனால் இப்படி ஒரு வழக்கம் ஏன் இருக்கிறது? என்று பார்த்தால் ஆசீர்வாதம் பெறுவது என்பது ஆதரவு பெறுவது என்பதற் காகத்தான் ஏற்பட்டதாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. யாதானு மொருவர் ஒரு கனகவானையோ மணமக்களையோ அல்லது ஏதாவது ஒரு ஸ்தாபனத்தையோ ஆசீர்வதிப்பது, வாழ்த்துவது என்பதானால், அவ்வா சீர்வதிப்பவர் மீது பொறுப்பு விழுகக் கூடியதாய்த்தானிருக்கும். எப்படி யெனில் வாழ்த்தினவர் வாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வுக்குப் பொறுப்பாளி யாவார். அப்படிக் கில்லாமல் வாழ்த்துவது ஏமாற்றுவதுதான் ஆகும். அதுபற்றியே அறிஞர்களா யுள்ளவர்கள் பெரியோர்களாகவும், செல்வாக்கும் பொது ஜனமரியாதையும், பெற்றவர்களையே வாழ்த்துதலுக்கு விரும்பு கின்றதும், வழக்கமாயிருக்கின்றது. ஆனால் இங்கு இது சமயம் என்னை
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
விரும்பியது எது பற்றி என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் எனது தலை நரையைப் பார்த்து இங்குள்ளவர்களில் நானே பெருங்கிழவனென்று எண்ணி அழைப்பதாக நினைக்கின்றேன். இம்மாதிரி வாழ்த்துதலுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. இந்த மணமக்களை வாழ்த்த கிரமமாக நான் எதிர்பார்க்க வேண்டியவர்கள் இங்கு விஜயம் செய்திருக்கும் உயர்திரு. ராஜா
சர். அண்ணாமலையாரின் குமாரர் குமாரராஜா மு.அ.முத்தையா அவர்களே ஆவார். மணமக்கள் அவர்களின் வாழ்த்தைப் பெற்றுவிட்டால் அப்புறம் மணமக்களின் வாழ்வுப் பெருக்கம் குமாரராஜாவையும், குமாராஜா அவர்களைப் பின்பற்றும் மற்றவர்களுடைய பொறுப்புமாகும். ஆனதால் எனக்கு இட்டகட்டளையை மீறாமல் உங்கள் எல்லோருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நான் இம்மணமக்களின் வாழ்வு இன்பமாகவும், சுதந்தரமாகவும் மற்றும் பொது ஜனங்களுக்கு உதவுவதாகவும் கழிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நிற்க, இந்தத் திருமணத்தைப் பற்றியும், இரண்டொரு வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்பதாகச் சிலர் ஆசைப்படுகின்றார்கள். நான் சுருக்கமாகச் சொல்வதென்ன வென்றால், திருமணங்களை அதாவது விவாகங்களை நமது மக்களில் அநேகர் பொறுப்பற்ற முறையில் விவாகம் என்பது தெய்வீகமானது என்கிறார்கள். தெய்வீகம் என்பது குழந்தைகளைப் பெறுவதும் மாமனார் மாமியார் முதலியவர்களுக்கடங்கி நடப்பதும், புருஷனையே தெய்வமாகக் கொண்டு அவர் அடித்தாலும் உதைத்தாலும் மற்றும் எவ்வித அக்கிரமம் செய்தாலும் அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு அவருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டியது என்றும், மற்றும் இதுமாதிரி எவ்வளவோ அதாவது மனிதத்தன்மை சுதந்திரம் சுயமரியாதை ஆகியவை ஒன்றும் இல்லாமல் அடிமைப் போல் இருக்க வேண்டும் என்பதாக சொல்லப்படுகின்றன. இந்த லட்சணமுள்ள மணம் தெய்வீக மணமானால் கண்டிப்பாய் அதை ஒழித்துச் சுதந்தரமும் சுயமரியாதையும் உள்ள மனுஷ்ீக மணமே நடைபெறவேண்டும்.
எனவே, தெய்வீக மணமென்பது அடிமைமணம்; சந்தையில் காம நுகர்ச்சிக்கு வாங்கிய நுகரும் யந்திரமணம் அல்லது வைப்பாட்டி வாழ்க்கை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. புருஷனுக்கு பெண் அடங்கித்தான் நடக்க வேண்டுமென்றால் பெண்ணுக்குப் புருஷன் அடங்கித் தான் நடக்கவேண்டும் என்பதானால் மாத்திரம்தான் அந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ளலாம். பெண் மாமியார், மாமனாருக்குக் கீழ்ப்பட்டு அவர். களுக்கு ஏவல் செய்துதானாக வேண்டுமென்றால் புருஷன் தனது மாமியார். மாமனாருக்கு ஏவல் செய்யத் தயாராயிருந்தால்தான் அந்த நிபந்தனையை ஒப்புக் கொள்ள முடியும். அப்படிக்கில்லாமல் வீட்டு வேலைக்கு ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினது போல இருக்க கல்யாணம் செய்வதும், அந்த மாதிரி கல்யாணத்தில் தெய்வீக சக்தியும் தன்மையும்
குடி அரசு - 1929 () 186
இருக்கின்றது என்பதை இனி அரைவினாடி கூட நமது நாட்டில் செல்லும் படியாக விடாமல் செய்துவிடவேண்டும். அதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும். மற்றபடி நாட்டுக்கோட்டை நகரப் பிரமுகர்களுக்கு இவ்வுணர்ச்சி தோன்றியிருப்பதும் அதிமுக்கியமான நாட்டுக்கோட்டை நகரத் தலைவர்கள் இங்கு விஜயம் செய்திருப்பதும் எனக்கு அளவிலாத மகிழ்ச்சியை விளைவிப்பதோடு இந்நாட்டின் விடுதலைக்கும் சுயமரியாதை வளர்ச்சிக்கும் ஒரு அறிகுறியாகும்.
குறிப்பு : 31031929 இல் சென்னையில் நடைபெற்ற சென்னை சட்டசபை துணைத் தலைவர்டாக்டர்: எஸ். முத்துலட்சுமிஅம்மாள் அவர்களின்வளர்ப்புமகள்
திருமணத்தில் வாழ்த்துரை.
குடி அரசு - வாழ்த்துரை - 07.04.1929.
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
“நாஸ்திகத்' திற்க முதல் வற்றி
நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீகைஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது.
அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது “சுதேசமித்திரன்” “இந்து” ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்ட
தால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத் திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும் திருஃபுர்ரா சத்தியநாராயணா அய்யர் என்ற பார்ப்பனரை நிறுத்தி வேலைசெய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக திரு.ஏ. இராமசாமி முதலி
யார் நின்றார். இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பார்ப்பனர்களே பெரும் பான்மையான ஓட்டர்களாயிருந்தும், ஒருபக்கம் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவரான திரு.சி. டாக்டர். நடேச முதலியாரும் அவரது சகபாடிகளும் திரு.புர்ரா அய்யருக்கே தங்கள் ஓட்டுச்செய்தும் மற்றவர். களின் ஓட்டுகளைச் சேகரித்துக் கொடுத்தும், மற்றொரு பக்கம் சில பார்ப்பனர்கள் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களைப் பற்றிக் காலித் தனமாய்க் கூலிகளை விட்டு, திரு. ராமசாமி முதலியாருக்கு எதிரியாய் இழிபிரசாரம் செய்தும் கடைசியாக திரு.ராமசாமி முதலியாரே வெற்றி பெற்றார். ஏனென்றால் இந்தக் காலிப் பிரசாரத்தையும் சூழ்ச்சியையும் சென்னைக் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் திரு.புர்ரா நடந்து கொண்ட மாதிரி யையும் பார்த்த பிறகே சில பார்ப்பனர்கள் தைரியமாக வெளிவந்து வெளிப் படையாகவே திரு.ராமசாமி முதலியாருக்குத் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்தார்கள். இதிலிருந்து சுயமரியாதைப் பிரசாரமும் அதன் எதிர்.
குடி அரசு - 1929 () 188
பிரசாரமும் அநேக பார்ப்பனர்களை யோக்கியர்களாகும்படி செய்து கொண்டும் வருகின்றது என்பதும் வெளிப்படை.
எனவே சுயமரியாதை இயக்கத்தாலும் செங்கற்பட்டு மகாநாட்டுத் தீர்மானங்களாலும் “நாஸ்திகம் ஏற்பட்டுவிட்டது,” “கடவுள்கள் ஒழிந்து போய்விட்டன” என்று சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கக் கூலி வாங்கிக் கொண்டு புறப்பட்ட வீரர்களும், அவர்களுக்குக் கூலி கொடுத்த தலைவர்களும், இதிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கவும், அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் “ஜீவநாடி” என்பவராகிய திரு.ராமசாமி முதலியார். அவர்கள் பார்ப்பனத் தொகுதி என்று சொல்லப்பட்ட, “செனட்” தொகுதியில் ஒரு சரியான பார்ப்பனரோடு நின்று பல பார்ப்பனரல்லாதார் விரோதமாய்
நடந்தும், வெற்றி பெற்றார் என்றால் “நாஸ்திக”த்திற்கு, அதாவது செங்கற்
பட்டுத் தீர்மானத்திற்கு முதல் வெற்றி அதுவும் சென்னையிலேயே ஏற்பட்டுவிட்டது என்பதிலிருந்து ஆஸ்திகப் பூச்சாண்டியின் மிரட்டல் இனிப் பலிக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
குடி அரசு - கட்டுரை - 07.04.1929.
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மதுவில்கிண் ரால் காங்கிரஸ் புரட்டு
சட்டசபைத் தேர்தல் சமீபிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் பேய்க்கு திருராஜகோபாலாச்சாரியாரால், திரு.காந்தியின் மூலம் உச்சாடனம் செய்யப் பட்டு, அது கண் கொண்டபடி நமது நாட்டில் தலைவிரித்து ஆடுவது வழக்கம். இதை நாம் கொஞ்சகாலம் கூடவே இருந்து பார்த்தவர்களில் ஒருவராதலால் இந்தப் பேயாட்ட உபத்திரவத்தை எப்படி ஒழிப்பது என்பது
நமக்கு அதிக கஷ்டமான வேலையல்ல.
இந்தப் பேய் உச்சாடனத்திற்காக 27-3-29 தேதியில் டில்லியில் காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது கூடி சில தீர்மானங்கள் செய்திருப்பதாகப்
பத்திரிகைகளில் தெரிய வருகிறது.
அதாவது, மறுபடியும் முன்போல் (ஒத்துழையாமைக் காலம்) போல கள்ளுக்கடை மறியலும் மரத்தின் பாளைகளை வெட்டுதல் போன்ற காலித்தனத்திற்கு மக்களைத் தூண்டும் படியான தன்மையுடையதான தென்னை மரத்துக்காரர்களை மரம் கள்ளுக்கு விடாமல் செய்யும் பிரசாரமும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் உண்டாக்கும்படியானதாகிய குத்தகைக் காரர்களை ஏலத்தில் கோராமல் இருக்கும்படி செய்யும் பிரசாரமும் செய்வ
தற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றை நடத்துவதற்கும் திரு.ராஜ கோபாலாச்சாரியார் தம்மையே நியமித்து கொண்டும், அதற்காகச் செலவுக்
கும் மாதம் 500 வீதம் கிடைக்கும்படி செய்து கொண்டிருப்பதாய்த் தெரி கின்றது. இதை ஒன்பது மாதத்திற்கு (அதாவது தேர்தல் வரை) செய்ய வேண்டுமாம். அதோடு தீண்டாமை விலக்கு பிரசாரமும் அனுமதித்து அதை நடத்த பண்டித மதன் மோகன மாளவியா நியமனம் பெற்று அந்த செலவுக்கும் மாதம் 200 ரூபா அனுமதி பெற்றுக் கொண்டிருக்கிறார்.
எனவே இந்தப் பிரசாரங்களை இப்போது அதுவும் சட்டசபையைக்
கலைத்து மறுதேர்தல் ஏற்படுத்துவது உறுதி என்று ஏற்பட்டவுடன் இவ்வளவு அவசரமாய் இதை நடத்தக் காரணம் என்ன? என்பதை யோசித்தால் ஒரு
முழு மூடனுக்கும் இதன் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் யோக்கியப் பொறுப்பற்ற சூழ்ச்சிகளும் விளங்காமற் போகாது. சென்ற தேர்தலின் போது இதே மாதிரிதான் திருராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கும் அவர். களுடைய அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க வேண்டி 1000
குடி அரசு - 1929 () 190
கணக்கான தென்னை மரங்களைக் கள்ளுக்கு விட்டு வருஷம் பதினா யிரக்கணக்கான ரூபாய்களைக் கள்ளினால் சம்பாதிக்கும் திரு. வெங்கட்ரமண அய்யங்கார் போன்றவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு இந்த இரண்டரை வருஷ காலம் “உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனி”யைப் போல் மதுவிலக்கில் மவுனம் சாதித்துவிட்டு, கதரின் பேரால் லக்ஷக் கணக்கான ரூபாய்களையும் மூட மக்களிடமிருந்து கொள்ளையும் அடித்து விட்டு இப்போது தேர்தல் வருகின்றது என்று தெரிந்தவுடன் மறுபடியும் பழைய பல்லவியை பாடத்தொடங்கி இருப்பதில் ஏதாவது நாணயமிருக் குமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க, இந்த இரண்டு வருஷகாலம் இந்தக் காங்கிரஸ் என்ன செய்தது? என்பதைப் பற்றியும், அது ஏன் மதுவிலக்குப் பிரசாரம் செய்யவில்லை என்பதைப் பற்றியும், சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பேரால் மது விலக்குத் திட்டத்தை ஒப்புக் கொண்டவர்கள் சட்டசபையில் 50 அங்கத் தினர்களுக்கு மேல் தெரிந்தெடுக்கப்பட்டிருந்த காலத்திலும், தங்கள் இஷ்டப்படியே மந்திரிகளை நியமித்து அவர்களைத் தங்கள் இஷ்டப்படி ஆதரித்து ஆட்டிக் கொண்டு வந்த காலத்தில் இந்த மதுவிலக்குப் பிரசாரமும், சட்டசபையில் சட்டத்தின் மூலம் சாதிப்பதும் ஆகிய காரியங்கள் எங்கு போய்விட்டன?
தவிர,1927-ம் வருஷத்தில் காங்கிரஸினால் ஆதரிக்கப்பட்டு வந்த மது,
மந்திரிகள் முதலாவதாக ஜனங்கள் மதுவை வெறுக்கின்றார்களா?' இல்லையா? என்பதே தமக்குச் சரியாகத் தெரியவில்லை என்றும், மதுபானம் மக்களுக்கு நன்மையா? கெடுதியா? என்பதைத் தாம் இன்னமும் பூரணமாய் அறிந்து கொள்ளவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தது உலகமறியும். அப்பேர்ப்பட்ட மந்திரிகளை ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது
மறுபடியும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகிறோம்; மதுவிலக்கு ஒப்புக் கொண்டவர்களை சட்டசபைக்கு அனுப்பப்போகிறோம் என்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கமுடியுமா? என்று கேட்கின்றோம்.
மது இலாக்கா மந்திரி கனம் திரு.முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த பிறகும், தமிழ் நாட்டில் மதுவிலக்குக்காக ஒரு
கமிட்டி நியமித்து அதன் மூலம் மதுவிலக்குப் பிரசார ஏற்பாடு செய்ய உத்தேசித்த பிறகும், வேண்டுமென்றே சூழ்ச்சிக்காக தேர்தலை உத்தேசித்து அதுவும் பார்ப்பனர்களுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்ய இந்தக் குயுத்தி செய்து காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு பொதுப்பணத்தில் மாதம் 500 ரூபாய் திரு. ராஜகோபாலாச்சாரியாருக்கும் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏய்க்க முடிவு செய்துவிட்டார்கள்.
காங்கிரஸ்காரர்களின் மதுவிலக்குப் பிரசாரத்தின் யோக்கியதை யையும், நல்ல எண்ணத்தையும் பொது ஜனங்கள் உணரவேண்டுமானால் ஒரு உதாரணம் எடுத்துக்காட்டுகின்றோம். சட்டசபையில் மதுவிலக்குப்
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்ய மந்திரிகள் திட்டம் கொண்டு வந்த காலத்தில் காங்கிரஸ் மெம்பரானவரும் கோயமுத்தூர் ஜில்லா பிரதிநிதியானவரும்
9 வருஷம் தொடர்ந்து சட்டசபையில் இருப்பவரும் கோயமுத்தூர் ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான திரு.சி.வி.வெங்கட்டரமணய்யங்கார். பிரசார திட்டத்தை எதிர்த்துப் பேசுகையில் என்ன காரணம் சொன்னா ரென்றால்.
“மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் ஜனங்களுக்குள் மதுக்குடி அதிகமாய்விடும். ஏனெனில் இவர்கள் ஏன் நம்மை கள்ளுக்குடிக்கக் கூடாது என்று சொல்லுகின்றார்கள் என்று நினைத்து ஒவ்வொருவனும். அதைக் குடித்துத்தான் பார்ப்போமே என்பதாகக் கருதி குடிக்க ஆரம்பித்து விடுவான். ஆதலால் பிரசாரம் கூடாது”
என்பதாகச் சொன்னாராம்.
இதிலிருந்து காங்கிரஸ்காரரின் மதுவிலக்கு யோக்கியதையை உணர்ந்து கொள்ளலாம். காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளின் மதுவிலக்குப் பிரசாரத் திட்டத்தை ஒப்புக் கொள்ளாததற்காக இப்படிச் சொன்னார்கள் என்று யாராவது சமாதானம் சொல்லக் கூடுமானால் அதை நாம் மற்றொரு புரட்டும் நாணயக் குறைவுமான காரியம் என்று சொல்லுவோம். ஏனெனில் காங்கிரஸ்காரருக்கு உண்மையிலேயே திட்டத்தில் ஆக்ஷபணை இருந்தால் அதைத் தாராளமாய் வெளியிலெடுத்துச் சொல்லி அதற்காக ஏதாவது திருத்தம் கொண்டு வந்து பேசுவதோடு திட்டத்தில் உள்ள குறைகளைக் கண்டிப்பதற்குத் தாராளமாய் முயற்சித்திருக்கலாம். அதைவிட்டு விட்டு “குடிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தால் குடி அதிகரிக்கும்” என்று சொல்லுவதின் கருத்து என்ன? என்று தான் கேட்கின்றோம். இதன் உண்மை தெரிய வேண்டியவர்கள் மேற்படி சட்டசபை நடவடிக்கைகளை வர வழைத்துப் பார்த்தால் விளங்கும்.
இனி மதுவிலக்கு விஷயமாய் காங்கிரஸ்காரர்கள் செய்யும் பிரசாரத்
தில் ஏதாவது நாணயமிருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். காங்கிரஸ் ஏற்கனவே செய்து பார்த்தாய்விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அந்த முறை தப்பென்றும், உணர்ந்து நடுவேளையில் திடீரென்று நிறுத்தும்படியும் செய்து அதில் ஈடுபட்ட உண்மைத் தொண்டர்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது. இப்படியிருக்க இப்போதும் அதே முறையில் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப் போகின்றோம் என்று அதுவும் தேர்தல் சமயத்தில் அதுவும் கள்ளினால் வருஷம் பதினாயிரக் கணக்கான ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் அங்கத்தினர்களும் மதுவில் முழுகி எழுந்திருக்கும் நபர்களும் சேர்ந்து கொண்டு முன்போலவே மறுபடியும் சுயராஜ்ஜியத்திற்கு ஒரு @ 6 153 மீ£ஒரு மீ£ஆகிய வாய்தாக் களையும் அதோ தெரிகின்றது இதோ தெரிகின்றது என்கின்ற செப்பிடு வித்தைகளையும் செய்துகொண்டு புறப்பட்டிருப்பதன் இரகசியத்தை
குடி அரசு - 1929 () 192
உணர்ந்து காங்கிரஸ் பேயையும், மதுவிலக்குப் பிரசாரப் புரட்டையும்
தமிழ்நாட்டுக்குள் அண்டவிடாமல் தலையிலடித்துத் திருப்பி அனுப்பி விடும் படியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். உண்மையிலேயே மதுவிலக்குப் பிரசாரத்திற்கு தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரம் செய்வதற்கென்று சமீபத்தில் ஈரோட்டில் ஒரு பெரிய கூட்டம் கூட்டுவித்துத் தமிழ்நாடு மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி என்பதாக ஒரு பொதுக் கமிட்டி தெரிந்தெடுக்கப்பட்டிருக் கின்றது. அந்தக் கமிட்டியில் உள்ள அந்தந்த ஜில்லா கனவான்கள் முயற்சியால் அந்தந்த ஜில்லாவில் ஒரு ஜில்லாக் கமிட்டி ஏற்பாடு செய்யப் படும். அதன் மூலம் ஜில்லா முழுவதும் பிரசாரம் செய்யப்படும். இந்தப் பிரசாரத்தில் பலாத்காரம் செய்வதோ, பலாத்கார மறியல் செய்வதோ, பாளைகளை வெட்டுவதோ, ஏலத்தின் போது காலித்தனம் செய்வதோ முதலாகிய காரியங்கள் ஒரு சிறிதும் இல்லாமல், மதுவிலக்கின் தோஷங்களை எடுத்துச் சொல்லுவதன் மூலமும், பெண்களால் புருஷர்களின் குணங்களைத்
திருத்தப்பாடு செய்வதன் மூலமும் மற்றும் ஓட்டர்களுக்கு மதுவிலக்கு எப்படி சட்டத்தின் மூலம் செய்யப்படும் எப்படிப்பட்டவர்கள் மதுவிலக்குச் சட்டம் செய்யச் சவுகரியம் உடையவர்கள் என்பது போன்றவைகளை
எடுத்துச் சொல்லுவதின் மூலமும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் காங்கிரஸ் தேர்தலுக்காகச் செய்யும் சூழ்ச்சியில்
விழுந்து விடாமலும் தேர்தலில் மோசம் போகாமலும் இருக்க வேண்டுமாய் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 07.04.1929.
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
காண்டு வகை மகாநாடுகன்
சுயமரியாதை இயக்கம் தோன்றியபிறகு நமது நாட்டில் ஒருவிதக் கிளர்ச்சி உண்டாயிருப்பதோடு அவ்வியக்கத்திற்கு சில எதிர்ப்புகள் தோன்றியிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.
இவ்வெதிர்ப்புகளில் காங்கிரசின் பேரால் வயிறு வளர்க்கும் சில கூலிகளுடையவும், வயிற்றுப் பிழைப்புக் காலிகளுடையவும், சமய புராண: வியாபாரிகள், வயிற்றுப் பிழைப்புப் பிரசங்கிகள், பண்டிதர்கள் ஆகியவர். களுடையவும், எதிர்ப்புக் கூச்சல்களை லட்சியம் செய்து எவரும் பதில் சொல்ல வேண்டியதில்லையானாலும், வருணாசிரமத்தின் பேரால் பார்ப் பனர்களும், சைவசமயத்தின் பேரால் சில சைவர்கள் என்பவர்களும் வருணாசிரம மகாநாடுகளும், சைவ சமயக் கூட்டங்களும் கூட்டி அதில் செய்யப்பட்டிருக்கும் தீர்மானங்களைப் பற்றிக் கவனித்துத் தீர வேண்டிய வர்களாக இருக்கின்றோம்.
ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவற்றை விலக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்ட காலம் முதல் பார்ப்பனர்கள் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு கூட்டி, தீண்டாமை இருக்க வேண்டும்; அது கடவுளால் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டுதான் வந்திருக்கின்றார்கள். அதுபோலவே, பால்ய விவாக விலக்குக்கும், விதவா விவாக ஆதரிப்புக்கும் சிலர் தோன்றிய காலம் முதல் கொண்டும் பார்ப்பனர்.
கள் வருணாசிரம மகாநாடுகள் கூட்டி “பால்யவிவாகம் செய்யாவிட்டால் பாபம்; அது மதத்திற்கும் வேதத்திற்கும் விரோதம்” என்றும், “விதவா விவாகம் செய்வதால் மதமும் ஒழுக்கமும் கெட்டுப் போகும்” என்றும் சொல்லி ஆக்ஷேபித்துத் தீர்மானங்கள் செய்து கொண்டு வந்திருப்பதுடன் இதுவிஷயங்களில் சட்டத்தின் மூலம் ஏதாவது செய்யலாம் என்று யாராவது முயற்சித்தால், “அரசாங்கத்தார் மத விஷயங்களில் தலையிடக்கூடாது” என்று தீர்மானங்கள் செய்து கொண்டும் வந்திருக்கின்றார்கள். பொது ஜனங்களுக்கு சீர்திருத்த விஷயங்களில் எவ்வளவுதான் அறிவும் ஆசையும் இருந்தாலும், காரியத்தில் வரும்போது பார்ப்பனர்களும் பண்டிதர்களும் மதப்பூச்சாண்டியைக் கிளப்பிவிட்டு விடுவதால் பாமர மக்கள் உடனே மதத்திற்குப் பயந்து மூலையில் ஒடுங்கி விடுகின்றார்கள். இந்த காரணத் தாலேயே தான் மதத்தை வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய வேண்டும்
குடி அரசு - 1929 () 194
என்று புறப்பட்ட ஒருவர்கூட இதுவரையில் ஒரு சிறிதும் வெற்றி பெற முடியாமலே போய்விட்டது. இந்த அனுபவத்தைக் கண்டபிறகேதான் மதத்தின் யோக்கியதை என்ன என்பதாக அதைக் கிளரப் புறப்பட்டோம். எனவே அதைக் கிளரக்கிளர நாவிதன் குப்பையைக் கிளர்வது போல் உபயோகமற்ற குப்பைகளையே காணமுடிந்ததே யல்லாமல். ஒரு சிறிதாவது பயன்படத்தக்கதாக ஒன்றையுமே காண முடியவில்லை!
உதாரணமாக மதங்கள் என்பவைகள் பல பல. அவற்றுள் உள்
மதங்கள் பல பல. உள்மதங்கள் ஒவ்வொன்றனுள்ளும் பிரிவுகள் பல பல; அப்பிரிவுகளுக்கும், வியாக்கியானங்கள், அகச்சான்றுகள், புறச்சான்றுகள். தத்துவார்த்தங்கள் ஆகியவைகள் பல பல. இப்படி கரைகண்டு முடிவு செய்ய முடியாத மாதிரியில் கையில் வலுத்தவன், வாயில் வலுத்தவன், செல்வத்தில் வலுத்தவன், சூழ்ச்சியில் வலுத்தவன், மானமற்ற தன்மையில் வலுத்தவன் என்கின்றதை அனுசரித்து மக்களை மக்கள் ஏமாற்ற மாத்திரம் பயன்படு கின்றதே ஒழிய, எதற்காக அவைகளை ஸ்தாபிக்க வேண்டுமென்று சொல்லப் படுகின்றதோ, அதற்கு ஆக அவை சற்றாவது பயன்படாமல், ஒரு சில சோம்பேறிகளுக்கும் சுயநலமுள்ள நாணய மற்றவர்களுக்கும் மாத்திரம் பயன்பட்டு வருவதை நன்றாய்ப் பார்த்து வருகின்றோம். ஆதலால் அவை களை அழிப்பதைத் தவிர வேறு வேலையின் மூலம் ஒருக்காலமும் இப்போது மதங்களின் மூலம் நாட்டிற்கும், மக்கள் வாழ்க்கைக்கும், ஒழுக்கத்
திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள இடையூறுகளை ஒழிக்கமுடியாது என்று கருதி அவற்றைத் தைரியமாக வெளியாக்கி விட்டோம் - வெளியாக்
கிக் கொண்டும் வருகின்றோம்.
இதைக் கண்டபிறகுதான் பார்ப்பனர்களும் அவர்களின் எதிரிகளாகிய சைவசமயிகளும் இது சமயம் தங்கள் இருவர்களின் அடிப்படையான வித்தியாசத்தைக் கூட மறந்துவிட்டு எப்படியாவது அடியோடு அழிக்க வந்திருக்கும் ஆபத்திலிருந்து தப்புவித்துக் கொண்டால் பின்னால் அவரவர்.
கள் தனித்தனிக் காரியத்தைப் பார்த்து கொள்ளலாம் என்று கருதி தினம் ஒரு வருணாசிரம மகாநாடும், வாரம் ஒரு சைவசித்தாந்த மகாநாடும் கூட்டிய வண்ணமாகவே இருக்கின்றார்கள். இவ்விரண்டு வகை மகாநாடுகளுக்கும் இரண்டு வகை மடாதிபதிகள் என்பவர்களும் உள் ஆதரவாய் இருந்து பணசம்பந்தமான உதவிகளைத் தாராளமாகச் செய்தும் வருகின்றார்கள். ஏனெனில், அப்படிச் செய்யவில்லையானால் முதல் பிடிமண் அவர்கள் வாயில்தான் விழுகவேண்டிவரும். ஏனெனில் பார்ப்பன மடாதிபதிகள் சுமார். 2.3 டஜன் உலக குருக்களான சங்கராச்சாரியார்களும் 2,3 டஜன் மகந்துகள்,
ஜீயர்கள் மற்றும் பல மடச்சுவாமிகள் ஆகிய பார்ப்பனர்களும், ஒருடஜனுக்கு மேற்பட்ட பார்ப்பனரல்லாத சைவ மடாதிபதிகளும் சேர்ந்து வருஷத்தில் கோடிக் கணக்கான ரூபாய்களின் வருவாய்களால் அனுபவித்துக் கொண்டு வரும் அதிகாரங்களையும், போக போக்கியங்களையும் துறக்க வேண்டிவரும்.
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அன்றியும் இவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டும் இவர்களது போக போக்கியத்திற்கு உதவி செய்து கொண்டும். இருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களது அனுபவமும் வயிற்றுப் பிழைப்பும் ஒழிந்துபோகும். அன்றியும் இவர்கள் ஆதீனத்தில் உள்ள பல கோயில்களின் வரும்படிகளும் ஆதிக்கங் களும் ஒழிந்து போகும். ஆதலால் பிரிட்டிஷ் கவர்ன்மென்ட்டார் நமது நாட்டை விட்டுத் தாங்களாகவே ஒதுங்கிப் போவதற்கு ஒரு காலம் யோக்கிய மாக வந்தாலும் வரக்கூடுமே தவிர, இந்தக் கூட்டங்கள் ஒழிந்து போக ஒருக்.
காலும் சம்மதிக்கவும் மாட்டார்கள், அல்லது யோக்கியமான முறையில் ஒழிக்கப்படுவதற்கும் இலக்காகவும் மாட்டார்கள். ஆதலால்தான் இவர்கள் இம்மாதிரி கூட்டங்கள் கூட்டவும், கூட்டச் செய்யவும், கூட்டுபவர்களுக்கு உதவி செய்யவும் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
எனவே, இந்த மாதத்தில் மாத்திரம் 3, 4 வருணாசிரம மகாநாடுகளும்,
3,4 சைவசமாஜக் கூட்டங்களும், ஒரு பெரிய சைவ சித்தாந்த மகாநாடும். கூட்டப்பட்டுவிட்டது அதிசயமல்ல. ஆகவே அதன் யோக்கியதைகளைச்
சற்றுக் கவனிப்போம்.
முதலாவதாக சைவப் பெரியார் மகாநாட்டைப் பற்றிக் கவனிப்போம்.
இம்மகாநாடு கூடிக் கலைந்த விவரம் “திராவிடன்” பத்திரிகையில் உள்ளபடி வேறு பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம். சைவப் பெரியார். மகாநாட்டுத் தீர்மானங்கள் என்னவென்றால், முதல் தீர்மானமாவது:-
“நல்ல ஒழுக்க வாழ்க்கைக்கு கடவுள் உண்டு என்னும் கொள்கை இன்றியமையாதது” என்பதாகும்.
இந்தத் தீர்மானம் மலையைத் தோண்டி எலியைப் பிடித்தது போன்ற
தாய் இருக்கின்றது. சைவ சமய மகாநாடு கூட்ட முயற்சித்த போது கடவுள் இல்லை என்னும் நாஸ்திகம் நாட்டில் வளர்ந்துவிட்டதாகவும் கடவுளை: நிர்த்தாரணம் செய்யவேண்டிய அவசியத்திற்கும் நாஸ்திக இயக்கத்தை ஒழிப்பதற்கும் என்று வெகு அவசரமாக மகாநாடு கூட்டி எவ்வளவோ
பேர்கள் இரண்டு மூன்று நாள் மெனக்கெட்டு, பல பொருளும் செலவிட்டு பலரை மகாநாட்டில் கலந்து கொள்ளாமலும் செய்து கடைசி கடைசியாக கடவுளைப் பற்றிய தீர்மானம் என்னவென்றால், கடவுள் உண்டு என்ற கொள்கை நல்ல ஒழுக்கத்திற்கு அவசியமானது என்பதோடு நின்றுவிட்டதே ஒழிய கடவுள் உண்டு என்றாவது இல்லை என்றாவது யாதொரு முடிவும் கட்ட முடியாமல் போய்விட்டது.
எனவே, இந்த விதமான கடவுள் முடிவு சுயமரியாதை இயக்கத்தின் முடிவை விட, புத்த சமண இயக்கங்களின் முடிவைவிட எந்தவிதத்தில் மேலானது என்று கேட்கின்றோம்.
மேல்கண்ட இயக்கங்களும் எல்லாவற்றையும் விட ஒழுக்கத்தையே
குடி அரசு - 1929 () 196
பிரதானமாய்ச் சொல்லுகின்றனவே ஒழிய அவற்றுள் ஏதாவது விட்டுக் கொடுக்கின்றதா? ஒழுக்கம் எது என்னும் விஷயத்தில் அபிப்பிராய
பேதமிருந்தால் அதற்காக ஒழுக்க மகாநாடு கூட்டி ஒருமுடிவுக்கு வருவதில் யாருக்கும் ஆக்ஷேபனை இல்லை. அதற்காகக் கடவுளை ஏன் பொருத்த வேண்டும்? நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை
சுடும் தொடாதே! என்று அனுபவமுறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதன் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கை களை உண்டாக்க முடியாதா? என்று கேட்கின்றோம்.
வியாதியை மருந்து சாப்பிடுவதன் மூலம் சவுகரியம் செய்வதைவிட நேராய் ரத்தத்தில் கலரும்படி மருந்தை (இன்ஜக்ட்) ஊசி வழி ஏற்றுவதன்
மூலம் சவுக்கியப்படுத்துவது சீக்கிரமாகவும், சுலபமாகவும் முடியக் கூடியதா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.
அன்றியும் கடவுள் உண்டு என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் மக்களில், மடாதிபதிகளில், பண்டிதர்களில் 1000-ல் எத் தனை பேர் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கின்றார்கள்? என்பதையும்
ஒழுக்கத்திற்குக் கடவுளை சம்பந்தப்படுத்தாமலும் ஒழுக்கத்தையே ஒழுக்கத் திற்காகக் கொண்டவர்களில் அதாவது புத்தர்கள், சமணர்கள், நிரிச்சுரவாதிகள் என்பவர்களில் ஆயிரத்திற்கு எத்தனை பேர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கேட்கின்றோம்.
எனவே, சைவப் பெரியோர்கள் தாமாக, தாங்கள் ஒழுக்கமாக நடக்க
முடியாதவர்கள் என்றும், கடவுள் உண்டென்ற கொள்கை மூலம்தான் தாங்கள் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்த முடியும் என்னும் முடிவைக் கொண்ட
வர்கள் என்றும் தான் இத்தீர்மானத்தால் விளங்குகின்றது.
இரண்டாவது தீர்மானம் “சைவசமயம் அறிவு ஆராய்ச்சிக்குப் பொருத்தமுள்ளதாகவும் அன்பு நெறியையே அடிப்படையாகக் கொண்ட தாகவும் இருத்தலினால் அது எக்காலத்திற்கும் எச்சமூக நிலைக்கும் இசைந்ததாயிருக்கின்றது'” என்பதாகும்.
இது சுத்தப் பயித்தியக்காரத் தீர்மானம் அல்லது மதப்பித்துக் கொண்ட தீர்மானம் என்றுதான் சொல்லவேண்டும். முதலாவது சைவ சமயம்
அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாயிருந்தால் அறிவும் ஆராய்ச்சியும் பெற்ற மக்கள் என்று நம்மாலேயே ஒப்புக் கொள்கின்றவர்களிடம் சைவ சமயம் இருக்கின்றதா? உலகத்தில் இருக்கும் சுமார் 150 கோடி மக்களில் பெளத்தர்களும் பெளத்த சமயச் சார்புடையவர்களும் 54 கோடி மக்களாவார் கள்.அடுத்தாற்போல் கிறிஸ்துவ மதத்தவர்கள் சுமார் 50 கோடி மக்களாவார்.
கள். மகமதியர்கள் 20 கோடியாவார்கள். இந்துக்கள் என்பவர்களும் 21 கோடி மக்களாவார்கள். மற்றபடி 2,3 கோடி மக்கள் சில்லறை மதங்களை சேர்ந்தவர். களாக இருக்கக் கூடும். இவற்றுள்.
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மேல்கண்ட 21 கோடி இந்துக்களில் 56 கோடி மக்கள் தீண்டாதவர்கள். இவர்கள் சைவக் கொள்கைப்படி சைவர்களாக இருப்பதாக சைவர்களே.
ஒப்புக் கொள்ளமாட்டார்கள். மீதி பதினைந்து கோடி மக்களில் அநேக மதங்கள் உண்டு. அநேகமாக வடநாட்டில் தானே கடவுள் என்கின்ற சங்கர:
மதமும், விக்கிரக வணக்கமில்லாத ஆரிய சமாஜமும், வேத புத்தகத்தை வணங்கும் சீக்கிய மதமும், வைணவ மதமுமே சிறப்பாக உள்ளவை. எனவே, தென்பாகத்தில், அதுவும் தென்னாட்டில் உள்ள மக்களில் “பேய்த் தெய்வ” வணக்கக்காரர்கள், சமணர்கள், ஜெயினர்கள், இதுபோன்ற மற்றும் மத வித்தியாசமில்லாதவர்கள், ஸ்மார்த்தர்கள் ஆகியவர்களை எல்லாம் கழித்து மீதிஉள்ள விபூதி பூசாதவர்களையும், விபூதி பூசுபவர்களிலும் மாமிசம் சாப்பிடுபவர்களையும், இயற்கை வணக்கக்காரர்களையும் கழித்துக் கணக்குப் பார்த்து, இதில் சைவர்கள் எவ்வளவுபேர் இருக்கக் கூடும் என்பதை யோசித்துப் பார்த்தால், உமியை ஊதினால் என்ன மீதி யாகுமோ அது தான்
மீதியாகலாம். இந்த மாதிரியான ஒரு சிறு கூட்ட மக்கள், ஒரு இடத்தில் கூடி ஒருவரை ஒருவர் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, சாப்பிடாமல் இருந்து கொண்டு “சைவ மதம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒத்த மதம்; எத்தேசத்திற்கும், எக்காலத்திற்கும், பொருத்தமானது” என்று தீர்மானிப்பதில் ஏதாவது அர்த்தமிருக்க முடியுமா? என்பதை யோசித்து முடிவு கட்டும்படி பொது ஜனங்களுக்கே விட்டுவிடுகின்றோம்.
மூன்றாவதாக, சாதாரணமாய் இந்த நாட்டில் சைவர்களது குறுகிய புத்தியும் அவர்களது சமய அகம்பாவமும் சமீப காலத்தில்தான் அதாவது திரு.வேதாசலம் அவர்களது ஆராய்ச்சியும் திரு.சுப்பிரமணிய பிள்ளை: அவர்களது ஆராய்ச்சியும், மேனாட்டு முறையை ஓட்டிச் செய்து கொண்டு போனதின் பலனாய் சைவர்கள் கண்ணுக்கு மற்ற மனிதர்களைப் பார்த்தால், அவர்களும் மனிதர்கள் தான் என்று எண்ண முடிந்தது. இதற்கு முன்: அவர்களது குறுகிய புத்திக்கும், ஆணவத்திற்கும், அநேக உதாரணம் சொல்லலாம். அவர்களது தீட்சையும், பஞ்சாட்சர மகிமையும், ஜபமும், மற்றவர்களை நாயினும் கடையாய் மதிக்கச் செய்தாலும் சுமார் 20 வருடத்திற்கு முன் அவர்களை மனிதப் பிறவி என்று சொல்லுவதற்குக் கூட யோக்கியதை இல்லாமலிருந்தது என்பதை நாம் நேரில் அறிவோம். ஏன்? இப்போது கூட எத்தனையோ பதர்கள் தங்களைச் சைவர்கள் என்று சொல்லிக்கொண்டு மனிதனைத் தொட்டால் பாவம் என்றும், ஒரு மனித னோடு வேறு ஒரு மனிதன் கூட இருந்து உணவு கொண்டால் அது உணவு அல்லவென்றும் மற்ற சமயக்காரர்கள் எல்லாம் மக்கள் அல்லவென்றும், சாம்பலும் கொட்டையும் தவிர வேறு கொள்கை சைவத்திற்கு இல்லை என்றும் கருதும்படி நடப்பவர்களையும் தாராளமாய்க் காணலாம்.
நான்காவதாக, சைவ சமயத்திற்கு ஆதாரம் 12 திருமுறைகளும், 14 மெய்கண்ட சாத்திரங்களும், வேதசிவாகமப் பகுதிகளும் என்று தீர்மானித்
குடி அரசு - 1929 () 198
திருக்கின்றார்கள். சைவ சமயம் மிகுதியும் மோசமானது என்பதற்கு இதைப் போல வேறு உதாரணம் தேவையில்லை. திருமுறைகளில் அநேகம் எல்லாம் புராணக்குப்பைகளை ஆதாரமாகக் கொண்டவையே ஒழிய வேறில்லை. அவற்றுள்ளும் அநேகம் பிற சமயக்காரர்களைப் பார்ப்பனர்களைப்போல் இழிமுறையில் வையும்படியும் கொல்லும்படியும் வைததாகவும், கொன்ற தாகவும், ஒவ்வொரு பதிகத்திலும் மிதக்கக் காணலாம். ஆகமங்களோ, எந்த அளவில் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் பொருத்த மானவை என்று கருதினார்களோ தெரியவில்லை!
இவ்வளவும் போதாமல் வேத, சிவாகம பகுதிகளும் ஆதாரமாம். எனவே சைவ சமய ஆராய்ச்சி “பிள்ளையார் பிடிக்க அது குரங்காய்
முடிந்தது” என்பது போல் முடிந்தது.
ஐந்தாவதாக சைவச் சின்னம் சிவன்தான் பதி.சரியை, கிரியை யோகம் ஞானம் என்பவைகள் எப்படி ஆராய்ச்சிக்குள் அடங்கின என்பது விளங்கவில்லை.இதை விளக்கினால் 10 பக்கம் போதாது.
வருணாசிரம மகாநாடுகள்
இது இப்படி இருக்க வருணாசிரம மகாநாடுகளின் தீர்மானங்களோ சைவப் பெரியார் மகாநாட்டிற்குக் கொஞ்சமும், பின்வாங்கியவை அல்ல. உருண்டைக்கு நீளம் புளிப்பிற்க வளப்பன் என்பது போல் சைவப் பெரியார்.
கள் தீர்மானங்களை தோற்கடித்துவிடக் கூடியவையாகவே இருக்கின்றன. இவற்றைப்பற்றி அடுத்தவாரம் விளக்குவோம்.
குடி அரசு - தலையங்கம் - 07.04.1929.
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வருணாசிரம மகாநா௫
சென்ற வாரம் “இரண்டு மகாநாடுகள்” என்னும் தலைப்பின் கீழ் நமது முன்னேற்றத்திற்கு விரோதமான கிளர்ச்சிகளைப் பற்றி எழுதி முதலாவதாக சைவப் பெரியார் மகாநாட்டைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு இந்த வாரம் வருணாசிரம மகாநாடு, பார்ப்பனர்கள் மகாநாடு ஆகியவைகளைப்பற்றி எழுதுவதாகக் குறிக்கப்பட்டிருந்தோம். அதோடு இந்த வாரம் சென்னையில் திரு.எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கக்ஷியைச் சேர்ந்த முக்கியத் தலைவரான திரு.சாமி வெங்கடாசலம் செட்டியார் சீர்திருத்த சம்மந்தமாகவும் சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள் சம்மந்தமாகவும் தமது அப்பிப்பிராயத்தை ஒரு உபன்யாசம் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார்.
அதுவும் ஏறக்குறைய பார்ப்பனர்கள் மகாநாடு, வருணாசிரம மகாநாடு, சைவப் பெரியார் மகாநாடுகள் போன்றவைகளின் அபிப்பிராயத் தையே வர்த்தக யுத்தி முறையில் பேசியிருக்கின்றார். அதன் சாரமும் அதற்கு
திரு. எ.ராமசாமி முதலியார் அவர்களின் விளக்கமான சமாதானமும் வேறு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம்.
திரு.சாமி வெங்கிடாசலமவர்கள் வவ்வாலைப்போல் பார்ப்பனர் களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும் என்னும் முறையில் எவ்வளவோ சாமர்த்தியமாகப் பேசியிருந்தாலும் தன்னைப் பொறுத்தவரை தான் சூத்திரன் அல்லவென்ற எண்ணத்தினால் வருணாசிரமத்தை காப்பாற்ற எண்ணி அதை மக்களிடம்
புகழ்ந்து பேசியிருக்கிறார்.
திரு.சாமி அவர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனீயத்தை ஆதரித்தாலும் பார்ப்பனர்கள் திரு.சாமியையும் சூத்திரர்கள் என்பவர்களின் கணக்கில்தான் சேர்த்து வாழ்க்கையில் கோவில், ஓட்டல் முதலியவைகளில் “சூத்திரன்” மரியாதைதான் கொடுத்து வருகின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. அன்றியும் திரு.சாமி வெங்கிடாசலம் அவர்களின் வருணம் என்பதான வைசிய வருணத்திற்கு வருணாசிரம தர்ம வியாக்கியானமொன்றில் “பிராமண ஆணும், க்ஷத்திரிய பெண்ணும் சேர்ந்து பிறந்த பிள்ளை வைசியனாகின்றான்” என்று எழுதி இருப்பது தெரியுமா? தெரியாதா? அல்லது தெரிந்தே வருணாசிரமத்தை ஆதரிக்கின்றாரா? என்பது விளங்கவில்லை.
குடி அரசு - 1929 () 200
நிற்க, மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி முதலிய பார்ப்பன மகாநாடுகளில் அதன் தலைவர்கள் பேசியிருப்பதை பார்த்த பிறகாவது திரு.சாமிவெங்கிடாசலம் செட்டியாரவர்களுக்கு ஏதாவது மாறுதல் உண்டா குமோ அல்லது பழைய எண்ணமேதான் இருக்குமோ என்பது குறிப்பிட
முடியாதது. மேற்படி மகாநாட்டுத் தலைவர்கள் பேசியிருப்பதின் சாரமாவது:-
பிராமண மகாநாட்டு வரவேற்பு அக்ராசனர் சொற்பொழிவுச் சாரம்
மோட்சத்திற்கு ஆதாரம் வேதம், வேதத்தை அப்யசிக்கின்றவர்கள். பிராமணர்கள்; கிரேக்கர், பார்சி,டச்சு, போர்ச்சுகீசு, பிரஞ்சு, மகமதியர் ஆகிய
நம் மத, துவேஷ, ராஜாக்கள் காலத்திலும் இம்மாதிரி ஒரு மகாநாடு கூட்ட வேண்டிய அவசியமல்லாமல் நமது மதம் நிலைநின்றிருக்கின்றது.
நாம் தினமும் செய்துவரும் பிரார்த்தனை பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் க்ஷமம் உண்டாக வேண்டும்: ராஜா (இதற்கேற்றபடி) நீதியாய் நடக்கவேண்டும் என்பவைகளாகும். இம்மாதிரி பிரார்த்தனை எந்த மதத்திலாவது உண்டா? இப்பொழுது நாடார், சுயமரியாதைக்காரர், ஸ்திரீகள், விதவைகள், யுவர், யுவதிகள் முதலியவர்கள் சங்கங்கள் விருத்தியடைந்து வருகின்றது. நமது அப்பிராமணர்கள் (சூத்திரர்கள்) நம்மீது துவேஷம் கொள்ளுகின்றார்கள். இவைகள் எல்லாம் நாம் ஈடேற விடாமல் செய்யத்தக்கதல்லவா?
சூத்திரர்கள் அவர்களுடைய கடமைகளை கடந்ததால் பிராமணர்கள் சுய நலக்காரர்களாக வேண்டியதாயிற்று.
மத விஷயங்களிலும் சமூக விஷயங்களிலும் சட்டசபைகள்
பிரவேசிக்கக்கூடாது அவர்கள் யார்!
சதிகாப்பு, விதவாவிவாகம், ஜாதி பேதவிலக்கு தர்மசொத்து ஆகியவைகளைப் பற்றி சட்டம் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
இன்னும் ருதுமதி, கல்யாண ரத்து, பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவைகளுக்கும் சட்டம் வேண்டுமாம்.
தேவதாசிகளைத் தூஷிக்கவும், பாலியவிவாகத்தை தடுக்கவும் வந்துவிட்டார்கள். இவைகள் எல்லாம் இந்து மதத்தையே வேரறுக்கச் செய்வதே தவிர இதனால் ஒரு பலனும் விளையாது.
(இவைகள் இந்து மதக் கொள்கையானால் இந்துமதமிருக்க வேண்டுமா?)
பெண்களை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி கற்பித்தல் கூடாது.
அப்படிச் செய்வதால் அவர்களும் ஆண்களாகி விடுவார்கள். பெண்களுக்கு குடும்ப காரியம், கற்பு, புத்திராபிவிர்த்தி செய்வதற்கும்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ராமாயண பாரதம் கற்பித்தல் ஆகியவைகளே போதுமானது.
சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்பதை பற்றியும் சூத்திரன், பஞ்சமன் என்று அழைப்பதை பற்றியும் ஆட்சேபித்து சிலர் கிளர்ச்சி செய்துவருகின்றார்கள்.
சூத்திரன் என்ற சொல் மிகப் பரிசுத்தமானது.
யாக எக்யாதிகளுக்கு சூத்திரன் அவசியமானவனாகிறான்..
பஞ்சமர், தீண்டாதார் என்று வித்தியாசப்படுத்திக் கொண்டு அப்படி ஒரு ஜாதி இருப்பதாய் வித்தியாசம் கற்பிப்பது கொடிதான காரியமாகும்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் ஆகியவர்கள் அவரவர்கள். கடமையிலிருந்து தவறும் போதுதான் பஞ்சமர்களாகின்றார்கள்.
அப்படி தன் வருண தர்மத்திலிருந்து தவறினவன் மறுபடியும் அந்த வருணத்தை அடைய முடியாது.
தினமும் ஸ்நானம் செய்யாததினாலேயே தீண்டாதவர்களாகின்றார்
கள். தீண்டாமையை விலக்க தீண்டாதவர்களே சம்மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் தீண்டாதவர்களிடம் உயர்குணமிருக்கிறது. உள்ளது போதும் என்று திருப்தியடைகின்றார்கள்.
தலைவர் உபன்யாசத்தின் சாரம்
“துவேஷமும் தெய்வ தூஷணையும் ஏற்பட்டு விட்டதால் பிராமண சபை கூட்டவேண்டியதாயிற்று. ஒவ்வொரு வர்ணத்தாரும் அவரவர்கள் தர்மப்படி நடந்தால் எல்லோரும் நன்மையடையலாம்.
சூத்திரர்கள் வேதம் படிக்காததால் ஒன்றும் முழுகிப் போய்விடாது. அவர்களுக்குப் புராணங்கள் இருக்கின்றது. சூத்திரன் என்ற பதம் நல்ல பதம்.
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தர்மம் இருக்கின்றன. அதுபோல் இங்கும் அவனவன் தர்மப்படி நடக்கவேண்டும்.
பிராமணர்களை அப்பிராமணர்கள் (சூத்திரர்கள் ஏன் தூஷிக்க
வேண்டும். சூத்திரர்களில் நாயக்கர், வேளாளர் ஆகியவர்கள் எவ்வளவோ
ஆச்சாரமாயிருக்கின்றார்கள்.
சூர்ப்பனகை எதிரில் வந்ததால் சீதை அக்கினிபிரவேசமாக நேர்ந்தது. ஸ்திரீகளை பத்திரமாக காப்பாற்ற வேண்டியது ஆண்கள் கடமை. ஸ்தீரீகள் உத்தியோகத்திற்கு லாயக்கில்லை. மேலதிகாரிகளுக்கு என்னவெல்லாம் செய்ய நேரிடுமோ?”
எனவே பிராமணன்தான் இந்து மதத்திற்கு ஆதாரமானதென்றும் வேதம் படிக்கலாம் என்பதும். தாங்கள் தான் பிராமணர் என்பதும், இந்துமத
குடி அரசு - 1929 () 202
தத்துவப்படி மற்றவர்களை சூத்திரர்கள் என்பதும், வெகுகாலமாக அநேக இந்து மகமதிய ராஜாக்கள் காலத்தில் கூட தாங்கள் அவர்களை ஏமாற்றி தங்களது ஆதிக்கங்களை நிலைநிறுத்தி வந்திருப்பதும் பிராமணனும் அவனதும் ஆதாரத்திற்கு மாடுகளும் கூஷமமாக இருந்தால்போதும்;
மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை என்பதும், இதை நிலை நிறுத்தத்தக்கவன்தான் அரசனாக இருக்க வேண்டுமென்பதும், நாடார். முதலிய சமூக மகாநாடுகளும் சுயமரியாதை மகாநாடுகளும் தங்கள் ஆதிக் கத்திற்குவிரோதமானவை என்பதாகக் கருதி இருக்கின்றார்கள் என்பதும், சூத்திரன் பிராமணனுக்கு அடிமையாயிருக்க வேண்டியதும், சூத்திரப் பெண்கள் அவர்களுக்கு தாசிகளாயிருக்க வேண்டியதுமான சூத்திரத் தர்மம் தவறினதாலேயே பிராமணர்கள் சுயநலக்காரர்களாக இருக்கின்றார் என்று சொல்லுவதன் மூலம் பார்ப்பனர் தங்கள் சுயநலத்திற்கு சமாதானம் சொல்லுவதும், சமத்துவம் இருக்கக் கூடாது, தர்ம சொத்துக்களின் கணக்கு கேட்கக் கூடாது, குழந்தைப் பெண்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும், பெண்களுக்கு சொத்துக்கள் இருக்கக் கூடாது, படிப்புக்கூடாது, சுதந்திரம் கூடாது, தாசிகள் இருக்க வேண்டும், விதவைகள் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பது போன்ற கொள்கைகளே இந்துமதம் என்பதும் மேல் கண்ட கொள்கைகளில் எதைத் திருத்துவதானாலும் இந்துமதத்தை அழித்ததாகுமாதலால் சர்க்கார் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதும், பெண்கள் வீட்டு வேலை செய்வதும் பிள்ளை பெறுவதும் தவிர வேறு உரிமைக்கு லாயக்கில்லை என்பதும், கற்பு பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்கள் விஷயத்தில் கவலை இல்லை என்பதும் ராமாயணம் பாரதம் ஆகியவைகளே தர்மத்திற்கு ஆதாரமானதென்பதும், சூத்திரன், பஞ்சமன்,
என்று அழைப்பது மிகவும் சரியானதென்றும், அவை அவர்களுக்கு மிகவும் மேன்மையானதென்பதும் சூத்திரன் என்ற சொல் மிகவும் பரிசுத்தமான தென்பதும், பிராமணர்களின் யாகத்திற்கு பயன்படவே சூத்திரன் இருக் கின்றான் என்பதும் சூத்திரன் அவனுக்குள்ள கடமையை செய்யாததால் பஞ்சமனாக வேண்டியதாகின்றதென்பதும் தினமும் ஸ்நானம் செய்யாததால் தீண்டாதவர்களானார்கள் என்பதும், தீண்டாதவர்கள் அப்படியே இருக்க விரும்புவதுதான் உயர்குணமென்பதும், சூத்திரர்கள் புராணங்கள் படித்து அதன்படி நடந்தால் அவர்கள் வேதம் படித்ததற்கு சமான மென்பதும், வேளாளர்கள் நாயக்கர் முதலியவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்பதும் ஆகிய விஷயங்கள் வியக்தமாகவும் நன்றாகவும் பொருள்படும்படி பேசி இருக்கின்றார்கள். இதற்கேற்ற தீர்மானங்களும் செய்திருக்கிறார்கள்.
சைவமத சைவப்பெரியார் மகாநாடு தீண்டாதவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுப்பதன் மூலம் தீண்டாமையை நிலைநிறுத்தப் பாடு
படுகின்றது, வருணாசிரம மகாநாடும் பிராமண மகாநாடும். ஒரே அடியாய் இருக்கின்றபடியே இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டன.
இதிலிருந்து வாசகர்களை நாம் ஒன்று கேட்கின்றோம்.
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அதாவது “மேற்கண்ட கொள்கைகளையுடைய இந்து மதமும் அதற்கு
ஏற்ற கடவுள்களும் சைவ மதமும் அதற்கு ஏற்ற சிவனும் இருக்க வேண்டுமா? அல்லது அவற்றைக் குழித்தோண்டிப் புதைக்க வேண்டுமா?” என்பதேயாகும். இதுவரை எந்த ஆஸ்தீக சிகாமணியும் தேசீய வீரர்களும் மேற்கண்ட இந்துமத ஆதாரத்தையும் சைவ சமய ஆதாரத்தையும் மறுத்துப் பேசவோ வேறு ஆதாரம் காட்டவோ சிறிதாவது முற்பட்டவரல்ல; ஆனால்
இந்துமதத்தையும் வேதத்தையும் ஆகமத்தையும் தர்மத்தையும் புராணங் களையும் காப்பாற்ற மாத்திரம் வரிந்து கட்டி கொண்டு முன்வந்திருக் கின்றார்கள்.
சிலர் தங்களை சூத்திரன் என்று சொல்லிக் கொள்ளப்போவதாகவும் தாங்கள் உண்மையிலேயே சூத்திரர்கள் தான் என்றும் அதிலும் சற்சூத்திரர்.
கள் என்றும் சொல்லி ஆனந்தபடுகிறார்களாம். பார்ப்பன செல்வாக்கும் அவர்களது பணமும் நமது மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யதக்க வலுவுடையதாக இருக்கின்றது என்பதை நாம் சுலபத்தில் மறுக்க முடியாத வர்களாயிருக்கின்றோம். பார்ப்பனரல்லாத மக்கள் பலருக்கு சுயமரியாதை
மகாநாடு விஷயமாய் இருக்கும் ஆத்திரத்தில், அதிருப்தியில் ஒரு பங்குகூட இந்த வருணாசிரம மகாநாட்டிலும் பிராமண மகாநாட்டிலும் ஏற்படாதிருப்
பதற்கு நமக்கு காரணமே விளங்கவில்லை. எப்படியானபோதிலும் இந்த மகாநாடுகளும் எதிர்ப்பிரசாரங்களும் நமது கொள்கைகளையும் உத்தேசங் களையும் முயற்சிகளையும் உறுதிப்படுத்துகின்றதே தவிர சற்றாவது தளர்ச்சி யாக்கவில்லை என்பதையும் நமது வாலிபர்கள் மேற்கண்ட கொள்கைகள் கொண்டமதங்களையும் சாமிகளையும் ஒழிக்கத் தயாராயிருக்க வேண்டியது
தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.04.1929
குடி அரசு - 1929 () 204
இந்தியாவில் எப்பமு பார்ப்பணீயம் லைத்திருக்கின் 2
உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற
காலத்தில், குறிப்பாக எல்லா சமூகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆகூஷவி செய்யும் நாடுகளும் கூட அரசுரி மையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில் இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
நிற்க பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதர பாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது - இருப்பது - மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களுமாகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமூகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்மந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது எனலாம்.
வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கியருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய எந்தக் காரணத் தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ ஒரு சமூகத்தையோ அடியோடு கொன்று ஒரு தேசத்தார் வாழத்துணியும்படியான பிரிவுகளாகவும் மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமூக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவு களாகவும் ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும். கிறிஸ்தவர்களுக்குள்' பலபிரிவுகள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரிகளாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதை தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின்
பேராலும் சமூகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும் போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள். அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மதவிஷயங்கள் என்பவை களில் மகமதியர்கள் கிறிஸ்தவர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச்சி களை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத் தக்கவர்களாகி விடுகின்றார்கள்.
இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச்சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை:
விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு அம்முயற்சிக்கு எதிரிடையாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமூகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம் முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகிறார்கள்.
உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக்கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அதுபோலவே, இரண் டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில் அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களைபோல் பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற
சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கை:
யில் மகமதியர்களையும் மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக நடை உடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின்
குடி அரசு - 1929 () 206
பேரால் கட்டுபட்டுக் கிடந்தாலும் இப்போது தைரியமாய் அக் கட்டுப்பாடு களில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திர மல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீர அரசர்களான அமீருக்கும் பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.
மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேச குடிஜனங்கள் பெரும்பாலோர். அத்திருத்தங்களுக்கு தாராளமாய் ஆதரவளித்துப் பின்பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால் புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலியுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள். இந்தியாவில் உள்ள மகமதிய சமூகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாக்ஷாவுக்கும் அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும் மற்றொரு புறம் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும் அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும்
மறுக்க முடியாது. இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால் கூடுமான வரை அந்த சமூக நன்மை சம்மந்தமான கவலையும் ஒற்றுமையுமேயாகும்.. ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமூக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால் இதிலுள்ள மதப்பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும் ஜாதிப்பிரிவுகளும் அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும் அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே
காரணமாகும். இந்த உள் பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் மற்ற மதங்களைவிட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றது என்பதேயாகும்.
அவையாவன முதலாவது இந்துக்களுடைய மதக்கொள்கைகளின்படி
மக்கள் படிக்கக்கூடாது. ஆனால் ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள்.
என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக் கூடாது. மத சம்மந்தமான எந்த விஷங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
100-க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்கு சொந்த அறிவை உபயோகிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ
சற்றும் உரிமை கிடையாது.
படிப்பு மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரியான நிர்ப்பந்தம் இருப்பதோடு மாத்திரமல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்ததோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல் காண முடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவைகளையேதான் அவ்வவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீரவேண்டும். என்றும் அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனை ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.
ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குத்தக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத் தக்கதாக பதினாயிரக்கணக்கான கடவுள்களை சிருஷ்டித்து ஆயிரக்கணக் கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம் அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத்தாருக்கு வேண்டியவைகளையெல்லாம் அவசியமாக்கி அவர்கள் கேட்டதையெல் லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப்பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமான தென்றும் நாஸ்திகமென்றும் அப்படிப்பட்ட நாஸ்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்ப்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல் யாராவது துணிந்து இக்கட்டுப்பாட்டையும் கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராக்ஷதர்கள், துஷ்டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரசாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றைய தினமும்
மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும் அவைகளைக் கொண்ட புஸ்தகங்களே மத ஆதாரங்களாகவும் அவைகளை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.
உதாரணமாக இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடை உடை ஆச்சாரம் போகம் போக்கியம் முதலியவைகளில் பழய கொள்கைகளையும் பழய
குடி அரசு - 1929 () 208
அனுபவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்தி கொடுத்து அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும் ஆணவமும் இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.
உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள், பெரியோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள், சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும் ஒழிக்க வேண்டும் என்றும் அந்தப்படி ஒழிக்காவிட்டால்
நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை, சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.
உதாரணமாக சமீபத்தில் பல இடங்களில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி “பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்
களின் வைப்பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப் பட்டவர்கள்” என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானித்திருப்பதும் போதுமான உதாரணமாகும். எனவே இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும் இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனீயம் ஒழிய
முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?
எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும்? என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.
எனவே, இந்தியாவில் பார்ப்பனீயமற்ற மதமே இல்லை என்றும் இந்து மதமென்னும் தலைப்பின் கீழ் எந்த மதமானாலும் சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லாது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாதென்றே சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.04.1929
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஈரோட்மல்
ஆஅயைப்பிரக6வேசமும் அதிகாரிகன்யிரவேசமும்
ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும் ஆசாரமாகவும் ஆலயத்திற்குட் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டி விட்டுப் போய்விட்டதும், பிறகு வெகுநேரம் குருக்கள் வராததால் கோவி லுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும் பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 297,109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு. பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன்,
பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமீனில் விடப்பட்டது.பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசாரணை தொடங்கு வதாய் மாஜிஸ்ரேட் சொன்னதாகவும், எதிரிகள் தங்கள்மீது சுமத்தப்பட்ட
குற்றம் இன்னது என்று தெரியக்கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை. ஆகையால் வாய்தா கொடுத்தாலொழிய விசாரணையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு மாஜிஸ்ட்ரேட். கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரியவேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும் நாளையே விசாரணை செய்து கேஸ் முடிக்கப்படும் என்றும் சொன்ணாராம்.எதிரிகள் மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத் தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கனவே விரோத மாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றதாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் எதிர்பார்க்க முடியாதென்றும், வழக்கை: வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம்.
குடி அரசு - 1929 () 210
உடனே மேறிஸ்ட்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ
சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்திருப்பதாக தாமே உத்திரவிட்டுவிட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லிவிட்டார்களாம். திங்கட்கிழமைய தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள். என்பதாகத் தெரியவருகின்றது. ஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய்கைக்கும், அனுகூலமாகவும் குதூகலமாகவும் இருக்கின்றது. கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்தவண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியாக்கிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும் எதிர். வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா? இல்லையா? என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாக சிலரும் கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. எதற்கும் திரு. ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிலேயே இருந்திருப்பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்
களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங்களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்டபடியும் போக வேண்டியிருந்ததால் இக் காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும். எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன்ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சமயம் தாராளமாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டுவிட்டால் சட்டசபை தேர்தல்களைப்
பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்களே எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும் மற்றும் சீர்திருத்தக் கொள்கைக்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரசாரம் செய்வதும் பொது ஜனங்களுடைய மனப்பான்மையை
இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மையாகும். ஆலயப்பிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக்கின்றன. அதாவது சமய சம்மந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்மந்தமாக காங்கிரஸ்கள் சுயராஜிய
கட்சி, சுதந்திர தேசிய கட்சி, பூரண சுயேச்சை கட்சி, ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ்கட்சி என்னும் தென்னிந்திய நலஉரிமைக் கட்சி மற்றும் சமூக சம்மந்தமான எல்லா இயக்கங்கள் மகாநாடுகள் இந்து மகாசபை மார்வாடி சபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக் கட்சியார்.
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மகாநாடு என்பதும் நேரு திட்டம் என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யாதாஸ்துக்களும் மற்றும் எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் “பிராமணன்” என்கின்ற பத்திரிகை தவிர. மற்றபடி எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பாக பிரஸ்தாப கோவில் சம்பந்தப் பட்ட தேவஸ்தான கமிட்டியும் அனுகூலமாக இருப்பதோடு அல்லாமல் தேவஸ்தான இலாகா மந்திரியினுடையவும் என்டோமெண்ட் போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப்பிராயமும் கடைசியாக கவர்மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்துவருகின்றது. இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வருகின்றது. எனவே இம்மாதிரியான முயற்சிக்கு இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
குடி அரசு - கட்டுரை - 21.04.1929
குடி அரசு - 1929 () 212
எலக் குங் புதிய ௯ம்ச்சு
வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
வாசர்:- என்ன மூர்த்தி! இந்தத் தடவை சட்டசபை எலக்ஷன் நிரம்பவும் மோசமாய் முடியும் போலிருக்கின்றதே என்ன செய்வது?
மூர்த்தி - ஏன் இந்த மாதிரி நினைக்கின்றீர்கள்? நமக்கென்ன குறைவு? காங்கிரசு இருக்கின்றது. காந்தி இருக்கின்றார். தவிர எல்லோரையும் விடவெகு தீவிரக்காரர்களாக வேஷம் போட்டுக் கொண்டு பூரண சுயேச்சை கேட்கின்றோம். இவைகள் தவிர சைமன் பகிஷ்காரத்தின் மூலம் நாம் பெரிய அமிதவாதிகளாகி இருக்கின்றோம். இவ்வளவு சங்கதிகள் நமக்கு அனுகூல மாயிருக்கும்போது நாம் ஏன் எலக்ஷன் விஷயத்தில் பயப்பட வேண்டும்?
வாசர்:- இதெல்லாம் இனி நடவாது. காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சுது. இனி யாரும் காங்கிரஸின் பேரால் ஏமாறுவார்கள் என்று எதிர்பார்ப்
பது முதுகில் ஒரு கை முளைக்க வைத்தியம் செய்து கொள்ளுவது போல் தான் முடியும். உதாரணம் வேணுமானால் ஒரு இரகசியம் சொல்லுகின்றேன் கேள்! நமது மிஸ்டர் சி.வி. வெங்கட்டரமணய்யங்கார் அசம்பளிக்கி நிற்கிறார். அவர் காங்கிரஸ் பேரால் நிற்கமுடியாது என்று சொல்லிவிட்டு தனியாக
நிற்கிறார் பார். நான் நேரில் கேட்டுக் கொண்டு கூட அவர் காங்கிரஸ் பேர். சொன்னால் இனி ஓட்டுக் கிடைக்காது என்று வெளிப்படையாய்ச் சொல்லி விட்டு ஜஸ்டிஸ் ககஷிக்காரர்களிடம் போய் தொங்கிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்தே காங்கிரசிற்கு எவ்வளவு யோக்கியதை என்பதைத் தெரிந்து கொள்.
மூர்த்தி:- சரி காந்தி இருக்கின்றாரல்லவா?
வாசர் :- அதுவும் இனி நடவாது. அவருக்கு ஆந்திர நாட்டில் ஏதாவது செல்வாக்கு இருக்குமோ என்னமோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் அவர் பாச்சா இனி பலிக்காது. ஆதலால் அவரை நம்புவதிலும் பயனில்லை.
மூர்த்தி :- பூரண சுயேச்சை, சைமன் பகிஷ்காரம் இவைகள் இருக்கின்றனவே?
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வாசர் :- பூரண சுயேச்சை நாறிப்போய்விட்டது, சைமன் பகிஷ்காரமோ உதையும் அடியும் படாமல் தப்பித்துக் கொண்டால் போதும் என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. இவையெல்லாம் உனக்குத் தெரியாதா என்ன?
மூர்த்தி:- சரி, இவைகள் தான் போகட்டும், வழக்கம்போல் நம்மகூட ஆள்களும் பத்திரிகைகளும் உண்டல்லவா? அவர்கள் எப்படியும் நம்முடன் இருந்து நமக்கு வெற்றி சம்பாதித்துக் கொடுக்க வேண்டியது அவர்களது சுமையல்லவா?'
வாசர்:- எல்லா பத்திரிகைகளின் யோக்கியதையும் போய்விட்டது. எல்லா கூலி ஆட்களின் யோக்கியதையும் கெட்டுப் போய்விட்டது. இனி எவன் இருக்கின்றான், முன் போல நமக்கு பாடுபடுவதற்கு? எல்லோரும்
திருட்டுப் பயல்களாகிவிட்டார்கள். அங்கும் வாங்கிக் கொள்ளுகின்றார்கள். இங்கும் வாங்கிக் கொள்ளுகின்றார்கள். நம்மிடம் ஒன்று பேசுகின்றார்கள். அவர்களிடம் ஒன்று பேசுகின்றார்கள். யாரையும் நம்புவதற்கில்லை பத்திரிகைகாரர்களும் ஒரு நாளைக்கு அவர்களை வைவதும் ஒரு நாளைக்கு நம்மை வைவதுமாகி யாதொரு நிலையும் இல்லாமல் போய் செல்வாக்கும் இல்லாமல் போய்விட்டது. நாமாவது ஒரு பத்திரிகை வாங்கி நடத்தலாம் என்றால் அதற்கும் நாட்டில் ஆதரவு கிடைப்பது கஷ்டமாயிருக்கின்றது. எப்படியும் இந்தத் தடவை நமது பாடு சற்று கஷ்டம் தான் என்று எனக்கு தோன்றுகின்றது.
மூர்த்தி - நீங்கள் இப்படி எல்லாம் நினைத்து மனதை விட்டு
விடாதீர்கள் தைரியமாயிருங்கள். எப்படியாவது வேலை செய்யலாம்.
வாசர் :- எப்படி வேலை செய்வது? நான்தான் எல்லாவற்றையும் பார்த்துதானே சொல்லுகின்றேன். இந்த ஒரு வருஷமாய் எல்லாத் தேர்தலிலும் அவர்களே வெற்றிபெற்று வருவதும், அவர்களுக்கு எதிரிடையாக கேண்டிடேட் போடக்கூட நமக்கு ஆளில்லாமல் திண்டாடி அன்அப்போஸ்டாய் விட்டுவிட்டதும் அவர்களுக்குள்ளாகவே கட்சி உண்டாக்கலாம் என்று பார்த்தாலும் முடியாமல் போவதும் நாம் பார்த்துத்தானே வருகின்றோம்.
மூ: என்ன இருந்தாலும் தாங்கள் பயப்பட வேண்டியதில்லை. நான். சில ஆசாமிகளிடம் கலந்தேன். அவர்கள் நமக்குத் தைரியம் சொல்லி இருக்கின்றார்கள்.
வா: அதுயார் சொல் பார்ப்போம்.
மூ: மிஸ்டர் நமது அருமை முதலியார் மற்றும் அவர் மாதிரியே இன்னும் ஒன்று இரண்டு ஆசாமி ஆகியவர்களைப் பார்த்தேன்.
குடி அரசு - 1929 () 214.
வா:- அவர்கள் என்ன சொன்னார்கள்?
மூஃடஅவர்களும் தாங்கள் சொன்னது போல்தான் காங்கிரசு முதலிய நமது பழைய சூழ்ச்சி ஸ்தாபனங்களுக்கு மதிப்புப் போய் விட்டதென்றும். ஆனாலும் வேறு வழியில் ஏதாவது வேலை செய்யலாம் என்றும், ஆனால் அதற்குக் கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்குமென்றும், முன் போன்ற கூலிகளைப் பிடித்தால் முடியாதென்றும் வேறு மாதிரி ஆட்களைப் பிடிக்க
வேண்டும் என்றும் சொன்னார்கள்.
am:- அது என்ன? சொல் பார்ப்போம்.
@ - அதுவா? சென்ற தேர்தலில் ஒரு தந்திரம் செய்தோமே. அதாவது அவர்கள் தேவஸ்தான சட்டம் செய்ததால் மதத்தில் கை வைத்து விட்டார்கள், மதத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்து விட்டார்கள் என்று கூப்பாடு போட்டோமே, அதுபோல் இந்தத் தேர்தலுக்கும் ஏதாவது தந்திரம் செய்யலாம் என்றும் அதாவது சுயமரியாதை இயக்கம்தான் ஜஸ்டிஸ் இயக்கம் என்றும் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம், அது மதத்தையும், மதப் பெரியார்களையும் வைவதுடன் “கடவுள் இல்லை” என்று சொல்லுகின்றது
என்றும் பிரசாரம் செய்வதன் மூலம் பாமர மக்களை ஏமாற்றி ஒரு விதத்தில் ஓட்டு வாங்கிவிடலாம் என்றும், ஆனால் அதற்கு, முன்னைய கூலிகள் மாதிரி ஆட்களை வைத்தால் பொது ஜனங்கள் காது கொடுக்கமாட்டார்கள் என்றும், சற்றாவது தமிழ், புராணம், கதை முதலியவைகளில் பரிச்சயமுள்ள வர்களாக பார்த்துப் பிடித்து அவர்களுக்குப் பண்டிதர்கள், பக்திவான்கள், சமய அபிமானிகள் என்று பெயர் கொடுத்து பிரசாரத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் முன் போல் மாதம் 20, 30க்கு வரமாட்டார்கள் என்றும் குறைந்தது 50 ரூபாயும் செலவும் கொடுக்க வேண்டும் என்றும் இந்தப்படி செய்வதானால் தம்மிடத்தில் சில ஆட்கள் இருப்பதாகவும் தாமும் ஊர் ஊராய்ச் சுற்றுவதாகவும் தமது பத்திரிகையையும் இதற்கே விட்டு விடுவதாகவும் சொன்னார்கள்.
- செலவைப் பற்றி கவலையில்லை காங்கிரஸ் பணந்தானே.. நமக்கு என்ன நஷ்டம்? வேண்டுமானால் மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வேண்டியது காங்கிரசின் கடமை என்று காங்கிரஸ் கமிட்டியில் வர்க்கிங் கமிட்டியில்) ஒரு தீர்மானம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த ஆசாமிகள் பிரளாமல் கட்டுப்பாடாய் இருப்பார்களா? என்பதுதான் பயமாயிருக்கின்றது. ஏனெனில் இவர்களை நான் நன்றாய் அறிந்தவன்.
மூ- அதைப்பற்றி தாங்கள் பயப்படவேண்டியதில்லை. ஏனென்றால், இந்த ஆட்களை இனி அவர்கள் கண்டிப்பாய் சேர்க்கமாட்டார்கள். ஆதலால் இவர்களுக்கு நம்மைவிட வேறு கதியில்லை. அதோடு அவர்களது சுயநலத்திற்கும் அனுகூலமாகின்றது. ஆகையால் இதுதான் நமக்கு அனுகூலம். வேறு யாதொரு மார்க்கமும் இல்லை.
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வா:- சரி, அப்படியே செய்வோம். அந்த ஆட்களை நான் வரச் சொன்னதாக உடனே ஒரு ஆள் அனுப்பு. மேலும் சுயமரியாதை இயக்கத்தை வைத்துக் கொண்டு அவர்கள் நமக்கு எப்படி வேலை செய்யமுடியும்?
மூ:- எப்படி இது தங்களுக்கு தெரியாதா? சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள் மீது ஏதாவது பழியைப் போட்டு “ஆதலால் ஜஸ்டிஸ்
கட்சிக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள்” என்று சொல்ல வேண்டியதுதானே! அதெல்லாம் அவர்களைச் சேர்ந்தது. நமக்கு ஏன் அந்தக் கவலை. நாம் ஒப்பந்தம் பேசிக் கொள்ள வேண்டியது, அவர்கள் எப்படியாவது வேலை செய்ய வேண்டியது அவ்வளவுதான். ஏனென்றால் சென்ற தேர்தலில் மிஸ்டர். கல்யாணசுந்தர முதலியார், மிஸ்டர் ராமசாமி முதலியாருக்கு விரோதமாய் செங்கற்பட்டு ஜில்லாவில் நமக்காகப் பிரசாரம் செய்யும் போது “குழந்தைகள் சாகின்றன; அரிசி ரூபாய்க்கு இரண்டு படியாகிவிட்டது. இந்தியரின் சராசரி. வயது 23 ஆகிவிட்டது. ஆதலால் ராமசாமி முதலியாருக்கு ஓட்டு செய்யாதீர்கள்” என்று சொல்லவில்லையா? அதுபோல் ஏதோ அவர்கள் பாமர மக்களை ஏமாற்றத் தக்கபடி சொல்லிக் கொள்ளுவார்கள். அவர்க ளுக்கு இம்மாதிரி காரியங்களில் எவ்வளவோ அனுபோகம் உண்டு. ஆதலால் அவர்களை நாம், நம்பித்தான் ஆக வேண்டும் வேறு கதியில்லை. நிற்க, இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்று கருதித்தான் முன்னமேயே மிஸ்டர் கல்யாணசுந்தர முதலியாரைப் பிடித்து “ஆஸ்தீக சங்கம்” என்று ஒன்று ஏற்படுத்தி, அதற்கு நமது பழைய ஆசாமிகளையே அதாவது மெஸ்ஸர்ஸ் ஜயவேலு, குழந்தை, பாவலர், ஷாபி மகமது, சாயபு முதலிய ஆசாமிகளையும் மற்றும் சில புதிய நபர்களையும் சேர்த்துவிட்டு வேலையும் துவக்கி ஆய்விட்டது. இதை அனுசரித்து சட்ட சபையிலும் சரமாரியாக கேள்விகளும் கேட்டாய் விட்டது. ஆதலால் இதுதான் சரியான
மார்க்கமாகும். நாமும் இனிமேல் வீண் சங்கதி அதாவது சுயராஜ்ஜியம், பூரண சுயேச்சை ஆகிய பேச்சுகளைப் பேசாமல் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கத்த வேண்டியதுதான். அதற்கேற்றபடி தேவாரம், திருவாசகம் ஆகியவைகளிலும் சில பாட்டுகள் பாடம் செய்து கொண்டேன். தாங்களும் பிரபந்தத்தில் சில பாட்டுகள் பாடம் செய்து கொள்ளுங்கள். மீட்டிங்கில் இவைகளைச் சொல்லிக் கண்களில் நீர் வடியவைத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டுதான் இனி பிரசங்கம் செய்ய வேண்டும். ஆதலால் தயவு செய்து மனதை விடாமல் தைரியமாயிருங்கள்.
வா:- என்னமோ அப்பா! இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.. அப்துல்காதர் சாயபுக்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று ஜனங்கள் கவனிக்கமாட்டார்களா? சுயமரியாதை இயக்கத்திற்கும் சட்டசபை ஓட்டுக்கும் என்ன சம்பந்தம் ஏற்படும்? எப்படி ஆனாலும் சரி, அதையும் பார்த்து விடுவோம், அந்த ஆசாமிகள் வந்தார்களா?
மூ: இராத்திரிக்கு வருகிறார்களாம்.
குடி அரசு - 1929 () 216
வா:- ஏன் இப்பொழுது வருவதற்கென்ன?
மூ:- வீதியில் யாராவது பார்த்து கொள்வார்களாம். ஆதலால் இராத்திரிக்கு முக்காடு போட்டுக்கொண்டு வருவார்கள்.
வா: சரி அவர்கள் வரும்போது நீயும் வா பேசலாம்.
மூ:- ஆகட்டும் போய்வருகிறேன்.
குடி அரசு - உரையாடல் - 21.04.1929.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
217
கண்ணில்லையா?
இந்திய சட்டசபைக்கு இன்னும் எத்தனை யைங்கார்கள்?'
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும், சுயமரியாதை இயக்கம் என்னும் சமரசமும் சன்மார்க்கமுங் கொண்ட இயக்கமும் தமிழ்நாட்டில் எவ்வளவோ பெரிய கிளர்ச்சியையும், புத்துணர்ச்சியும் உண்டாக்கியிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை
முக்கியமாய்ச் செய்ய வேண்டிய காரியங்களில் முக்கியமானதான துறை களில் இன்னமும் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
மேற்கண்ட இரண்டு இயக்கங்களும் வெற்றிபெற வேண்டுமானால், அவற்றின் கொள்கைகளில் பெரும்பான்மையானவைகள் அரசாங்க
சட்டத்தின் மூலமும், அரசாங்க நடுநிலைமை மூலமும், சில அரசாங்க உதவியின் மூலமுமே வெற்றிபெற வேண்டியிருக்கின்றதென்பது யாவரும் அறிந்ததாகும். அரசாங்க சட்டங்களில் முக்கியமானவைகள் பல இந்திய சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதும் இந்திய அரசாங்க நிர்வாக சபையின் ஆதரவு பெற வேண்டியிருப்பதும் யாரும் அறியாததல்ல.
அப்படியிருக்க தென் இந்தியாவில் சிறப்பாக தமிழ்நாட்டின் சார்பாக இந்தியா சட்டசபைக்குள்ள பிரதிநிதிகள் 7 பேர்களில் 6 பேர்கள் நமது சமுதாயத்திற்கும், சமரசத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் பரம்பரை விரோதி களான பார்ப்பனர்களே - சிறப்பாக ஐயங்கார் பார்ப்பனர்களே, நமது பிரதிநிதிகளாக இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டு நமது முற்போக்கிற்கு முட்டுக் கட்டைகளாக அங்கு (இந்திய சட்டசபையில்) உட்கார்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அதாவது, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களுக் கென்று திரு.எம்.எஸ்.சேஷையங்காரும், திருச்சி, தஞ்சை ஜில்லாக்களுக்கு என்று திரு.ஏ.இரங்கசாமி ஐயங்காரும், செங்கல்பட்டு தென் ஆற்காடு ஜில்லாக்களுக்கு என்று திரு.எம்.கே. ஆச்சாரியாரும், சென்னைக்கு என்று திரு.எஸ்.சீனிவாசய்யங்காரும், சித்தூர் வகையரா ஜில்லாக்களுக்கு என்று திரு.துரைசாமி ஐயங்காரும், தென்கன்னடம் மலையாளம் ஜில்லாக்களுக்கு என்று திரு.கே.வி. இரங்கசாமி ஐயங்காரும் ஆக ஆறு பேர்கள் ஐயங் கார்களாக அமர்ந்து கொண்டார்கள்.
குடி அரசு - 1929 () 218
கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு ஆகிய ஒரு தொகுதிக்கு மாத்திரம் கோயமுத்தூர் திருஆர். கே. ஷண்முகம் அவர்கள் ஒருவர்.
மாத்திரம் இருந்து வருகின்றார்.
இதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால் ஐயங்கார்களின் ஆதிக்கமும் அவர்களின் காங்கிரஸ் புரட்டும், அவர்களது கூலிகளின் தேசீயப்புரட்டும் என்று சொல்லிவிடலாமானாலும் பார்ப்பனரல்லாதார். தலைவர்கள் என்பவர்களின் மீதும் குற்றம் சொல்லாமலிருக்க முடியவில்லை.
என்னவெனில், பார்ப்பனரல்லாத தலைவர்களுக்கு பெரிதும் சென்னை சட்டசபையின் மீது ஆவல் இருக்கின்றதேயல்லாமல் இந்திய சட்டசபையைப் பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலை உண்டாவதில்லை.
ஏனெனில், சென்னை சட்டசபைக்குப் போனால் மந்திரி ஆகலாம்,
மந்திரி ஆக முடியாதவர்கள் மந்திரிகளுக்கு வால் பிடித்துக்கொண்டோ அல்லது பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு மந்திரிகளை கவிழ்த்து விடுவதாய் மிரட்டிக் கொண்டோ ஜில்லா, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி ஆகியவைகளின் ஆதிக்கங்களை கைப்பற்றவும் உத்தியோகங்கள் சம்பாதிக் கவும் இன்னும் வெளிப்படையாய்ச் சொல்லுவதென்றால் பலவழிகளில் சிலர். பணம் சம்பாதிக்கவும் ஆன காரியங்களில் சித்திபெறக் கூடும் என்கின்ற ஆசையும், இந்திய சட்டசபைக்குப் போவதால் பிரயாணப்படியில் ஏதோ இரண்டு பிச்சைக்காசு மீதி ஆவதைத்தவிர வேறுபலன் உண்டாகாது என்கின்ற அலட்சியப் புத்தியும் முக்கிய காரணமாகும்.
ஆனால், பார்ப்பனர்கள் தங்களுக்குத் தமிழ்நாட்டில் செல்வாக் கில்லை என்பதும், சட்டசபை ஸ்தானம் கிடைக்காதென்பதும் தீர்மானமாகத் தெரிந்தவுடன் இதை விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார் அலட்சியமாய்க் கருதும் இந்தியா சட்டசபையில் ஸ்தானத்திற்கு நின்று வெற்றி பெற்று பார்ப்பன ஆதிக்கத்திற்கு வேண்டிய காரியங்களை நோகாமல் சாதித்துக் கொண்டு வருகின்றார்கள். அதோடு இந்திய சபைக்கு வெறும் பார்ப்பனர். களாகவே தமிழ்நாட்டுக்கும் ஆந்திரநாட்டுக்கும் பிரதிநிதிகளாக ஏற்பட்டுவிட்டதாலும், திருவாளர்கள் நேரு, மாளவியா, கேல்கார், கோஸ்வாமி முதலிய பார்ப்பனர்களே பம்பாய், அலகாபாத், வங்காளம் முதலிய மாகாணத் தலைவர்களாகவும் ஏற்பட்டுஅவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அம்மாகாணங் களின் பிரதிநிதிகளாய் இந்தியா சட்டசபையில் உட்கார்ந்து கொண்டிருப் பதாலும் இந்திய சட்டசபை பார்ப்பனக்கோட்டை என்றும் அதனாலேயே பெரிய பெரிய இந்திய உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாகவும் பரம்பரை பாத்தியமாகவும் அனுபவிக்க வசதியாகவும் இருந்து வருகின்றது. இதைப் பற்றி பல தடவைகளில் எடுத்துக்காட்டி
வந்திருக்கின்றோம்.
இப்படிக்கெல்லாம் இருந்தும் இப்போது அதாவது சமீபத்தில்
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வரப்போகும் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு இத்தனை ஐயங்கார். பார்ப்பனர்கள் இருப்பது போதாமல் இன்னமும் ஒரு ஐயங்கார் - அதுவும் வருணாசிரம ஐயங்கார் - மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் மதுபானம் அதிகமாகிவிடும். ஆதலால் மதுவிலக்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று சொல்லும் ஐயங்கார் ஆயிரக்கணக்கானத் தென்னை மரங்களின் கள்ளினால் பல ஆயிர ரூபாய் சம்பாதிக்கும் ஐயங்கார் - ஒத்துழையாமையின் போது பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தாம் மாத்திரம் காங்கிரசைவிட்டு ஓடிப்போய் காங்கிரசுக்கு விரோதமாய் பிரசாரமும் செய்து காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாய் சட்டசபைக்கும் போய் உட்கார்ந்து கொண்டு இருந்த ஐயங்கார்- சென்ற தேர்தலில் காங்கிரசின் பேரால் நின்று வெற்றிபெற்று காங்கிரசுக்கு விரோதமாய் மந்திரி சபைகளை ஏற்படுத்தி அதற்கு ஆதரவளித்துவிட்டு “இது சரிதானா” என்று கேட்டவர்களுக்கு “ஜஸ்டிஸ் கட்சி”யை அழிப்பதற்காக மந்திரி சபையை ஆதரித்தேன் என்று சொன்ன ஐயங்கார் - மற்றும் சென்னை சட்டசபையில் இருந்த 9 வருஷ காலமாக பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நேர். விரோதமாயிருந்ததுடன் பார்ப்பனரல்லாதார் மந்திரிகளைக் கவிழ்க்கவே வெளிப்படையாயும், இரகசியமாயும் சூழ்ச்சிகளும் வேலைகளும் செய்துவந்த ஐயங்கார் இன்னும் எத்தனையோ வழிகளில் பார்ப்பன ரல்லாதாருக்கு இடையூறு செய்துவரும் ஐயங்காரான திருவாளர் கோவை. சி.வி.வெங்கட்டரமண ஐயங்கார் அவர்கள் இந்திய சட்டசபைக்கு ஒரு அபேட்சகராக நிற்கப் போவதாகத் தீர்மானித்து ஆகாயத்திற்கும், பூமிக்குமாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதில் ஒரு அதிசயம் என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பனகாலரசருக்குப் பின் தலைவராகக் கருதப்படும் ராஜா. சர். அண்ணாமலைச் செட்டியாரவர்கள் உதவி இருப்பதாகவும் - பார்ப்பனரல்லாதார்களுக்குள் சிறந்த அறிவாளியும் இயக்கப் பிரமுகர்களில் முதன்மையானவருமான திரு.ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் ஆதரிப்பதாகவும் மற்றும் கோவை பிரமுகரான திரு.ராவ்பகதூர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்கள் ஆதரிப்பதாகவும் சுயமரியாதை இயக்கத்தின் பிரதான பிரமுகரான திரு.ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் ஆதரிப்பதாகவும் பிரஸ்தாபத்தை கிளப்பிவிட்டு ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் மயக்கி வருவதும், அதற்கு ஏற்றாற்போல் பல பார்ப்பனரல்லாத கனவான்களின் கையொப்பமும் பெற்றிருப்பதாகச் சொல்லிக் கொள்ளுவதுமேயாகும். திருராஜா சர் அண்ணாமலையாரின் பெயரை திரு. அய்யங்கார் சொல்லிக் கொள்வதில் பொதுஜனங்கள் நம்பி ஏமாந்துபோகும் படியான ஒரு சந்தர்ப்பம் திரு.அய்யங்கார் ஏற்படுத்தி கொண்டது மிகவும் மதிக்கத்தகுந்த தந்திர மேயாகும். அதென்னவென்றால் ராஜா சர் அண்ணாமலையாரின் உருவச் சிலை சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு கமிட்டியில் திரு.சி.வி.வெங்கட்டரமண ஐயங்கார் அவர்கள் தந்திரமாக தம்மை ஒரு முக்கிய புருஷராக ஆக்கி
குடி அரசு - 1929 () 220
கொண்டதால் பொது ஜனங்கள் ராஜா சர். அவர்களின் உருவச்சிலை கமிட்டிக்கு திரு.ஐயங்கார் காரியதரிசியாக யிருப்பதால் திரு.ராஜா சர். அவர்கள் திரு. ஐயங்காருக்கு உதவி செய்தாலும் செய்யக்கூடும் என்று சகஜமாக நினைப்பதற்கு இடமேற்படுவதுதான். ஆனால் நமது ராஜா சர் அவர்கள் இதைப் போல் ஆயிரத்தெட்டு ஐயங்கார்களின் யோக்கியதைகளை அறிந்தவர். ஆகையால் இந்தப் பெயரைக் கொண்டு யாரும் அவரை:
சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாதென்றே சொல்லுவோம், தவிர கோயமுத்தூர் பிரமுகர்கள் திரு ஐயங்காருக்கு ஆதரவளிப்பதாய்ச் சொல்லிக் கொள்வதிலும் உண்மை இருக்கலாமோ என்னமோ என்பதாக சிலர் சந்தேகப்படவும் இடமிருக்கின்றது.
என்னவெனில், கோவைப் பிரமுகர்கள் திருவாளர்கள் சி.எஸ். ரத்தின சபாபதி முதலியார், ஆர்.கே.ஷண்முகம், டிஏ.இராமலிங்கள் செட்டியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், பட்டக்கார எஜமானர் ஆகியவர்கள் எப்படியாவது கோயமுத்தூர் ஜில்லாவைப் பொறுத்தவரை ஐயங்காரின் தொல்லை ஒழிந்தால் போதும்! அவர் வேறு எந்தத் தொகுதியிலாவது நின்று கொள்வதின் மூலம் தங்களுக்கு உபத்திரவமில்லாமல் இருப்பதானால் சரி என்று நினைத்து திரு.ஐயங்காருக்கு உதவி செய்வதாக ஜாடை காட்டி இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அந்த ஜாடைகள் திரு. ஐயங்காரை கோயமுத்தூர் ஜில்லாவை விட்டு வெளியாக்கத்தான் உதவுமே ஒழிய உண்மையிலேயே அக்கனவான்௧களுடைய ஆதரவு பெற முடியுமா என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும். திருஆர்.கே. ஷண்முகம் அவர்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள செய்திகளில் காணப்படுவதென்ன வென்றால் திரு.வெங்கட்டரமண ஐயங்கார் காங்கிரஸ் அபேக்ஷகராக நிற்க வில்லை என்றும் காங்கிரஸ் திரு. ஐயங்காரை ஏற்றுக் கொள்ள போகின்றதா? என்பது தெரியவில்லை என்றும் ஆதலால் தாம் சி.வெங்கிட்டரமண ஐயங்காருக்கு உதவி செய்ய முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.
அது போலவே திரு.இரத்தினசபாபதி முதலியாரும் ஜஸ்டிஸ் கட்சி திரு.வெங்கட்டரமண ஐயங்காரை ஆதரிப்பதானால் மாத்திரம்தான் திரு. ஐயங்காருக்கு உதவி செய்ய முடியுமென்றும் இல்லாவிட்டால் முடியாது என்றும் தெரிவித்துவிட்டார்.
(இது “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடத் தடையில்லை” என்பது போன்ற உதவி!
திரு.ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் திரு வெங்கட்டரமண ஐயங்கார் அவர்களின் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு உதவி செய்ய முன் வருவார்களானால் ஒன்றா திரு.இராமசாமி முதலியார் இராமசாமி ஐயங்காராக மாறி பூணுல் போட்டுக் கொள்ள வேண்டும். அல்லது திரு.வெங்கட்டரமண ஐயங்கார் பூணூலை அறுத்துவிட்டு வெங்கட்டரமண முதலியார் ஆக வேண்டும். இவ்விரண்டும் இல்லாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கொண்டதாகச் சொல்லப்படுமானால் இரண்டு பேருக்கும் நடுவில் ஏதாவது இரகசியம் இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் இந்தக் காரியம் ஆவதல்ல என்றே உறுதி கூறுவோம்.
நிற்க, திரு. ஐயங்கார் நிற்கும் தொகுதியைப் பற்றி சற்று யோசித்தால் திரு.ஐயங்கார் அபேக்ஷ்கராக நிற்பதாக வெளிப்படுத்தியிருக்கும் தொகுதி சென்னை மாகாண இந்திய வர்த்தகர்கள் தொகுதியாகும். இத்தொகுதிக்கு ரூ.350க்கும் மேல்பட்டு வருமானவரி செலுத்துபவர்கள் ஓட்டர்களாக பதிவு செய்யப்படுவார்கள், இத்தொகுதிக்கு சுமார் 2000 ஓட்டர்கள் உண்டு. இதில் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சுமார் 500 அல்லது 600 பேர்களாவார்கள்.
மற்றபடி, மீதி உள்ளவர்கள் வியாபாரிகளும், லேவாதேவிக்காரர்களும் ஆவார்கள். இந்த தொகுதிக்கு ஒரு பிரபலமானவரும் பெருத்த வியாபாரியும் வியாபார அனுபவமும் வியாபார சம்பந்தமான விஷயங்களில் ஆராய்ச்சி அறிவும் உள்ளவர்களும் நிற்க வேண்டியது நியாயமும் அவசியமுமாகும்.
அப்படியிருக்க திருவெங்கட்டரமண ஐயங்காருக்கு அத்தொகுதியில் என்ன வேலை என்பது நமக்கு விளங்கவில்லை. “இரும்பு அடிக்கும் களத்தில் ஈக்கு என்ன வேலை” என்பது போல் வியாபாரத் தொகுதியில்
வருணாச்சிரமப் பார்ப்பனருக்கு என்ன வேலை? பிராமணன் வியாபாரம் செய்வதும், இந்தியன் கப்பலேறுவதும் பாவம், சண்டாளத்துவம், பிராமணியத்திற்கு விரோதம் என்று வேதமும், மனுதருமமும், வருணாசிரமும்
சொல்லுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே திரு காந்தியும். திரு. லஜபதியும் சண்டாளர்களாகக் கருதப்பட்டு கோவிலுக்குள் விடப்படவில்லை. எனவே வியாபாரத் தொகுதிக்கு நிற்கும் அபேட்சகருக்கு வெளிநாட்டுக்குப் போய் வந்த அனுபவமும், வெளிநாட்டு வியாபார: இரகசியமும், வெளிநாட்டு நாணய மாறுதல்களின் தத்துவ நிபுணத்துவமும், வியாபாரத்தில் அபார பரிச்சயமும் வேண்டியதாகும். அதற்காகவே இந்த ஸ்தானம் ஒதுக்கப்பட்டதாகும். அப்படியிருக்க விவசாயிகளின் ஸ்தானங்களாகிய பொது ஸ்தானங்களையும் பார்ப்பனர்களே அதாவது ஐயங்கார் பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொண்டதோடல்லாமல் வியாபார: ஸ்தானங்களையும் ஐயங்காரே கைப்பற்றுவதென்றால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் முட்டாள் தனத்திற்கு இனியும் ஒரு புதிய உதாரணம் தேடப் புறப்பட்டுவிட்டாற்போல இருக்கின்றதே தவிர இதற்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
நிற்க, திரு.வெங்கட்டரமண ஐயங்கார் இப்போது யாருக்கு எதிராக நிற்கின்றார் என்று பார்ப்போமானால் அதுவும் ஒரு பெரிய அதிசயமாகவே
தான் கருதக் கூடியதாகும். அதாவது “மர்ச்செண்ட் பிரின்ஸ்” என்று சொல்லத்தக்கவரான இந்தியவர்த்தக முடிசூடா மன்னரும் தென்னிந்திய வர்த்தக சங்கத் தலைவரும் கோடீஸ்வரரும், வருஷம் 75000 ரூபாய் வருமானவரி செலுத்துபவரும் மேல்நாடுகளில் லண்டன் முதலிய
குடி அரசு - 1929 () 222
இடங்களில் வர்த்தகக் கிளை உடையவரும் இங்கிலாந்து, ஜர்மனி, ஜப்பான், அமெரிக்கா முதலிய இடங்களுக்கு வர்த்தக சுற்றுப்பிரயாணம் செய்தவரும், நாணய மாற்று விஷயத்தில் அனுபவஞானமுள்ள நிபுணரும் தென் இந்தியாவின் முக்கிய பட்டணங்களிளெல்லாம் வர்த்தகக் கிளை உள்ள வருமான ஜனாப் எம்.ஜமால் முகம்மது சாயபு அவர்களுக்கு எதிரிடை யாகவும் போட்டியாகவும் நிற்கின்றார் என்றால் திரு. ஐயங்கார் அவர்களின் வர்த்தக அபிமானம் எவ்வளவு என்பதற்கு வேறு சாட்சியம் வேண்டிய தில்லை.
தவிர, ஐயங்காரின் வியாபார அனுபவம் எவ்வளவு என்று பார்ப்போ மானால் கோயமுத்தூரில் மால்மில் என்பதாக ஒரு நெசவு மில் ஏற்படுத்தி அதைத் தாமே நடத்துவதாக அதற்கு ஏராளமாக பங்கும் வசூல் செய்து மில்
நடத்தத் தெரியாமல் நஷ்டமடைந்து பிறகு தம்மால் முடியாமல் ஒரு வெள்ளைக்கார கம்பெனியாரிடம் நிர்வாகத்தை ஒப்புவித்து மில்லுக்கும் பங்குக்காரர்களுக்கும் மத்தியில் வெள்ளைக்கார கம்பெனிக்கு ஒரு லாபமும் தமக்கு ஒரு லாபமும் ஏற்பாடு செய்துகொண்டு பங்குக்காரர்கள் தக்கபடி லாபமடைய முடியாமல் கஷ்டப்பட்டுவரச் செய்யத்தக்க வியாபார அறிவுள்ளவராவார்.
மற்றபடி, ஐயங்கார் ஏன் காங்கிரசின் பேரால் நிற்கவில்லை? என்று பார்ப்போமானால் சில சமயத்தில் இந்திய சட்டசபையில் காங்கிரசுக் கட்சி சமுதாயச் சீர்திருத்தங்களில் தலையிட்டுவிட்டால் அதற்கு எதிரிடையாக வேலை செய்வதற்கென்றே தம் சொந்த பொறுப்பில் நிற்க வேண்டியிருக்
கின்றதாகும். ஜனாப் ஜமால் மகம்மது மேல் கண்டபடி பெரிய வியாபாரி, பிரபு. வியாபார அனுபவமும், தர்மசிந்தையும் உள்ளவர் என்பதோடு மல்லாமல் “சுதேசமித்திரன்” என்னும் பார்ப்பனமித்திரன் பத்திரிகை லிமிடெட்டில் ஒரு டைரக்டராக இருந்தும் திரு. வெங்கிட்டரமணய்யங்கார் அவர்கள் அப்பத்திரிகைக்குள்ள ஓட்டர் பாத்தியதையை கொண்டு நிற்பதற்கு அப்பத்திரிகை நிர்வாகஸ்தர்கள் சிபார்சு செய்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சென்னை மாகாண வியாபாரத் தொகுதிக்கு ஜனாப் ஜமால்
முகமது அவர்கள் நிற்பது தெரிந்தும் அவருடைய தகுதியை அறிந்தும் அவரை ஒரு டைரெக்டராகக் கொண்டிருக்கும் “சுதேசமித்திரன்” பத்திரிகை.
திரு சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரை அத்தொகுதிக்கு அனுமதித் திருப்பதையும் அவரையே விளம்பரப்படுத்துவதையும் பார்த்த பிறகு, மித்திரனின் வர்த்தக அனுதாபமும் பொது நலத்தன்மையும் எவ்வளவு என்பதற்கு அளவுதேட வேறு எங்கும் போக வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.
எனவே, சென்னை மாகாணத்தில் உள்ள பெரியோர்கள், சிறப்பாக பார்ப்பனரல்லாத வியாபார ஓட்டர்கள் தங்கள் கடமையையும் வியாபார அபிவிருத்தியையும் பார்ப்பனரல்லாத மக்களின் சமத்துவத்தையும்,
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சுயமரியாதையையும் உத்தேசித்து இந்திய சட்டசபைக்கு இனிமேலாவது ஒரு பார்ப்பனரை அதுவும் ஒரு வருணாசிரம அய்யங்காரை அனுப்பாமல் இருக்கச் செய்யவேண்டுமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஒரு சமயம் அய்யங்கார் எப்படியாவது சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றாலும் பெறலாம். அல்லது அவரது சூழ்ச்சி சொல்லுபடியாகாமல் உட்கார்ந்தாலும் உட்காரலாம். ஆனால் உண்மைப் பார்ப்பனரல்லாதார் இவ்விஷயத்தில் கண்டிப்பாய் அவரவர்கள் கடமையைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.04.1929
குடி அரசு - 1929 () 224
மகமதிய வாலியர்களுக்கன் சுயமரியாதை
உணர்ச்சி
வங்காள மாணவர்கள் தங்கள் சமூகத்திலும் புரோகிதக்கொடுமை இருப்பதையும், அதனால் தங்கள் சமூக முன்னேற்றமும் சுயமரியாதையும் உணர்ச்சியும் தடைபட்டுவருவதையும் உணர்ந்து முல்லா வர்க்கத்தையே அதாவது இப்பொழுது உள்ள புரோகித வர்க்கக்தையே அடியோடு ஒழிக்க வேண்டுமென்கின்ற எண்ணத்துடன் சமூக முன்னேற்றத்திற்கு அனுகூலமான சட்டங்களியற்றுவதற்கு எதிரிடையாயிருக்கும் எல்லா முல்லா வர்க்கத்தையும் ஒழிப்பதற்கு என்று புரோகித விலக்கு சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். சென்ற வருஷத்திலும் வங்காளம், பம்பாய், மத்திய மாகாணம் முதலிய இடங்களில் உள்ள வாலிபர்கள் இம்மாதிரியாக ஒரு கிளர்ச்சி செய்தது ஞாபகமிருக்கலாம். எனவே எந்த முற்போக்குக் கிளர்ச்சி களும் அவசியம் என்பது முதலில் வாலிபருக்குத்தான் படும் என்பதும், அவர்கள் தான் இம்மாதிரி சமூகத்திற்குள் நுழைந்து அழுகி நாறிப்போன பழைய பழக்க வழக்கங்களை தக்க தியாகத்தை கைம்மாறாகக் கொடுத்து ஒழிக்க சக்தியுடையவர்களாயிருப்பார்கள் என்பதும் நமது அபிப்பிராய
மாகும். ஆதலால் நமது நாட்டு வாலிபர்களும் உலகமெல்லாம் கண் விழித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தை கைவிட்டுவிடாமல் முனைந்து நிர்ப்பார்கள் என்று நம்புகின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 21.04.1929.
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கடஷளும் மதமும்
கோய்பாற்றப்பட்டால்”
சுயராஜ்யம் வந்துவி௫மா?
சென்னை சட்டசபை இவ்வருஷக் கோடியில் அனேகமாய் கலைக்கப் பட்டுவிடும் என்கின்ற விஷயம் வெளியானதும் பார்ப்பனர்கள் வழக்கம்போல் இப்போதிருந்தே தேர்தல் நாடகம் நடிக்கத் தீர்மானித்து, திருவாளர்கள் எஸ். சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தி முதலிய அவரு டைய சிஷ்யர்களும் ஒருபுறமும் ஜனாப்கள் பவீர் அகமது, அமித்கான், ஷாபிமகமது ஆகியவர்கள் ஒருபுறமும் திருவாளர்கள் குழந்தை, ஜயவேலு, அண்ணாமலை, பாவலர், கல்யாணசுந்தரமுதலியார் ஆகியவர்கள் ஒரு புறமும் கிளம்பி இப்பொழுதிருந்தே ஊர் ஊராய்ச் சுற்றி தெருக்கூத்தாடிகள் போல தேர்தல் நாடகம் ஆடத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தார். சென்ற தேர்தல்கள் வரையில் பாமர மக்களிடம் தாங்கள் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுப்பதற்காகப் பாடுபடுவதாயும், பார்ப்பனரல்லாதார் கட்சியாய ஜஸ்டிஸ்கட்சியார் சுயராஜ்ஜியத்துக்கு விரோதமா யிருப்பதாகவும், ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக்கொடுக்காமல் காங்கிரஸ்காரர்களாகிய தங்களுக்கே. ஓட்டுக் கொடுத்து தங்களையே சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சொல்லிவந்தார்கள். ஆனால் சுயராஜ்ஜிய புரட்டுகள் முழுவதும் இப்போது பொதுஜனங்களுக்கு வெட்ட வெளிச்சம்போல் வெளிப்பட்டுப் போனவுடன் இப்போது பரராஜ்ஜியம் அதாவது மோக்ஷ ராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் அதற்கு ஜஸ்டிஸ் ககஷியார் விரோதமாயிருந்து கொண்டு சாமியையும் மதத்தையும் வைகின்றார்கள் என்றும் ஆதலால் தாங்கள் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற சட்டசபைக்கு போக வேண்டியிருப் பதாகவும், அந்தப்படி தங்களை சட்டசபைக்கு அனுப்பினால்தான் கடவுளும்,
மதமும் காக்கப்பட்டு மக்களுக்கு பரராஜ்ஜியமாகிய மோக்ஷ ராஜ்ஜியம் கிடைக்குமென்றும் பேசி ஓட்டுக்கேட்டு வருகின்றார்கள். இந்த மாதிரி ஓட்டு வேட்டையை பார்ப்பனர்கள், தங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சில கூலிகளை மாத்திரம் ஏவிவிட்டு அவர்கள் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுவதுபோல் வேஷம் போட்டு ஜஸ்டிஸ் கட்சியை வைது கொண்டே இருக்கும்படி செய்து, அதனால் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்கும்படி செய்து
குடி அரசு - 1929 () 226
பார்த்தார்கள். ஆனால் நாம் ஆரம்பத்திலேயே இதன் இரகசியத்தை தெரிந்து “இது ஐயங்கார் கூலிப்பிரசாரமே தவிர இதில் கடவுளைக் காப்பாற்றக் கவலை கொண்ட பிரசாரம் ஒன்றும் இல்லை, ஐயங்காரைக் காப்பாற்ற அவர்களது கூலிகள் சென்ற தேர்தலில் சுயராஜ்ஜியப் பிரசாரம் செய்தது போல் இந்த தேர்தலுக்கு மோக்ஷ ராஜ்ஜியப் பிரசாரம் செய்கின்றார்கள்” என்று சொன்னோம். இதற்கு அக்கூலிகள் தங்களது மோக்ஷ ராஜ்ஜியப் பிரசாரத்திற்கும் ஐயங்காருக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள். ஆனால் சமீபத்தில் திரு. சீனிவாசய்யங்கார். வாயாலேயே இதன் உண்மை தாராளமாய் வெளியாய்விட்டது.
அதாவது, சமீபத்தில் திரு.எஸ்.சீனிவாசய்யங்காரும் அவர்களது வால்களும் கூலிகளும் கடலூர் கும்பகோணம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்கு நடத்திய தேர்தல் கூத்துகளில் ராமசாமி நாயக்கர் கடவுளையும் மதத்தையும் கோவில்களையும் குற்றம் சொல்லுகின்றார். ஜஸ்டிஸ் கட்சியார்கள் அவரை ஆதரிக்கின்றார்கள். ஆதலால் ஜஸ்டிஸ் கக்ஷியாரை: சட்டசபைக்கு அனுப்பாதீர்கள் என்று சொல்லி இருக்கின்றார். எனவே ஐயங்கார் சங்கமும் “ஆஸ்தீக” சங்கமும் ஒரே உட்கருத்தைக் கொண்டு தான் வேலை செய்கின்றன என்பதும் ஐயங்கார்கள் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்க வேண்டி கடவுளையும் மதத்தையும் காப்பாற்றமுற்பட்டால் அவர்களது கூலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு கூலி கிடைக்க கடவுளையும், மதத்தையும் காப்பாற்றப் புறப்பட்டிருப்பதாய்ச் சொல்லிக் கொள்ள வேண்டியவர். களாயிருக்கின்றார்கள் என்பதும் விளங்கவில்லையா? எனவே, இந்தத் தேர்தல் நாடகத்திற்குப் பயந்து ஜஸ்டிஸ் க௯ஷி பிரமுகர்களில் சிலர் நம்மிடம் வந்து சுயமரியாதை இயக்கத் தத்துவத்தை ஐயங்கார் கூலிகள் திரித்துக் கூறுவதன் மூலம் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து சற்று அதை நிறுத்திவைக்க வேண்டுமென்று தெரிவித்தார்கள். நாம் அதற்கு சொன்ன பதில் என்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஓட்டு கிடைப்பதே நமது லட்சியமல்ல வென்றும் நமது கொள்கைகள் நிலை பெற்று அவைகள் அமுலில் வரவேண்டியதே நமது கவலை என்றும், இக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளும் முறையிலும் நடத்தி வைக்கச் சம்மதிக்கும் முறையிலும் தான் ஜஸ்டிஸ்கட்சிக்கு ஓட்டுக்கிடைக்க நாம் ஆசைப்படுவோமே ஒழிய பெயரளவில் எக்கட்சியையும் பற்றி நமக்கு அதிக கவலை இல்லை என்றும், சுயமரியாதை இயக்கத் தத்துவத்தைப் பற்றி பார்ப்பனர்கள் கூலிகளைப் பிடித்து திரித்துக் கூறி விஷமப் பிரசாரம் செய்து ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டில்லாமல் செய்து விடுவார்களே என்று உண்மையாகவே உங்களுக்கு பயமிருக்குமானால், அதே கூலிகளைப் பிடித்து மேலால் நாலோ, ஐந்தோ சேர்த்துக் கொடுத்து அவர்களைக் கொண்டே ஐயங்கார்களின் யோக்கியதையை வெளியாக்கும் உண்மைப் பிரசாரம் செய்விக்க நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது? என்றும் நீங்களும் வெளி இடங்களுக்குச் சென்று ஆங்காங்கு ஏன் உண்மையை எடுத்துக்
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கூறக்கூடாது என்றும்தான் நாம் மறு மொழி சொன்னோம். அதன் மீது அவர்களும் பிரசாரத்திற்குக் கிளம்புவதாகத் தெரிகின்றது. எனவே, நம்மைப் பொறுத்தவரை நம்மை எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குற்றம் கூறிப் பிரசாரம் செய்வதைப் பற்றி நமக்கு பயமில்லை. அன்றியும் நமக்கு ஓட்டுக் கிடைக்காமல் போவதால் பெரிய நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை. நம்மை எவ்வளவு பெரிய நாஸ்திகர் என்று அழைத்தாலும் கவலை இல்லை. ஒரு காரியத்தில் இறங்கினால் அதன் எதிரிகளால் சொல்லப்படும் பழிகளை ஏற்கவும், அவைகளுக்கு சமாதானம் சொல்லி சமாளிக்கவும், அதற்கு உயிர் கொடுக்கவும் சக்தி இல்லாதவர்கள் பெரிய காரியங்களைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுவது பைத்தியக் காரத்தனமாகும். ஆதலால் எவ்வளவு பழிப்புகள் வந்தாலும் சமாதானம் சொல்ல அவைகளை மனதார வரவேற்கின்றோம்.
ஏனெனில் நமது நாட்டு நிலைமைக்கு நாம் கொண்டிருக்கும் கடவுள் உணர்ச்சியும் சிறப்பாக பார்ப்பனரல்லாதார் இருந்துவரும் இழிநிலைக்கு அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மத தத்துவங்களுமே காரணம் என்பதை
நாம் ஒருகாலமும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்பதையும் அவ் விரண்டையும் தலைகீழாக மாற்றி அவற்றின் உண்மையை வெளியாக்கு வதையே நமது முக்கிய கடமையாய்க் கொண்டிருக்கின்றோம் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகின்றோம். இதனால் நமக்கு எவ்வளவு பெரிய நாஸ்திகப்பட்டம் வருவதானாலும் எவ்வளவு காலம் மீளாத “நரகம்” ஏற்படுவதானாலும் அன்றியும் அதனால் அக்காலத்தில் உயிர்போவ தானாலும் ஒரு சிறிதும் கவலை இல்லை. மற்ற நாட்டினர்களின் கடவுள் உணர்ச்சியைவிட நமது கடவுள் உணர்ச்சியும் பக்தியும் பூசையும் நம்மை ஓட்டாண்டிகளாக்கி அறிவிலிகளாக்கி நம்மை நமது நாட்டை விட்டுத்
துரத்திக் கொண்டு வருகின்றது. அதுபோலவே மற்ற நாட்டினர்கள் மதத்தை விட நமது மதம் நம்மை பிரித்துவைத்து இழிமக்களாக்கி அன்னிய ஆட்சிக்கு உட்படுத்தி மனிதத்தன்மை இல்லாமல் வாழச் செய்கின்றது. இவை நேற்று இன்று என்றில்லாமல் ஆராய்ச்சிக்கு எட்டும் சரித்திரகாலம் தொட்டு இப்படியே இருப்பதாய்க் காணப்படுகின்றது. இதற்கு, அர்த்தமில்லாமல் வெள்ளைக்காரர்கள் மீது பழி போடுவதிலும் சுயராஜ்ஜிய சாக்கு சொல்லு வதிலும் பயன் என்ன? என்று தான் கேட்கின்றோம். ஏனெனில் சுயராஜ்ஜிய
மும் அதற்கு மேற்பட்ட ராம ராஜ்ஜியம் கிருஷ்ண ராஜ்ஜியம் முதலிய ராஜ்ஜியங்களும் இருந்த காலத்தில் இருந்த நிலையைவிட வெள்ளைக்காரன் ராஜ்ஜிய காலம் எப்படி இந்நிலைக்கு அதிகமான பொறுப்புடையது என்பதுதான்.
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தெருவில் நடக்கவிடாதது ஆப்பிரிக்கர்களுடைய அகம்பாவமாக இருக்கலாம். அமெரிக்காவில் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களை அவமரியாதை செய்தது அமெரிக்கர்.
குடி அரசு - 1929 () 228
களுடைய ஆணவமாக இருக்கலாம். திரு.காந்தியை தண்டித்தது இங்கிலீஷ்காரருடைய இறுமாப்பாக இருக்கலாம். ஆனால் இந்தியனை இந்தியாவில் தெருவில் நடக்க விடாததும் இந்துக்கடவுள் கோவிலுக்குள். செல்ல இந்துவை விடாததும் யாருடைய அகம்பாவம், ஆணவம், இறுமாப்பு என்று கேட்கின்றோம்.
திருவாளர்கள், காந்தியும் லஜபதியும் கோவிலுக்குள் சென்று அவர்களது கடவுளை வணங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய கொடுமையையும் அவமானத்தையும் இழிவையும் விடவா திரு தாகூரை அமெரிக்கர்கள் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று யோசித்தால் இந்தியர்கள் அயோக்கியர்களா முட்டாள்களா என்பதும், அமெரிக்கர்கள். அயோக்கியர்களா முட்டாள்களா என்பதும் இந்திய அரசர்கள் ஆட்சி ஐரோப்பிய அரசர்கள் ஆட்சியைவிட மேலானதாயிருக்குமா என்பதும் விளங்காமல் போகாது. எந்த நாட்டிலாவது குளத்தில் தண்ணீர் மொள்ள உரிமையில்லாதவனும் தெருவில் நடக்க உரிமையில்லாதவனும் தங்களது உரிமையை மறுக்கின்றவர்களுடன் சேர்ந்து சுயராஜ்யம் அடைய முயற்சிப் பார்களா என்று யோசித்துப் பார்த்தால் சுயராஜ்ஜியத்திற்கு யார் முட்டுக் கட்டை போடுகின்றார்கள் என்கின்ற உண்மை ஒரு மூடனுக்கும் விளங்காமல் போகாது. கடவுளையும் மதத்தையும் கோவில்களையும் காப்பாற்றுகின்றோம் என்று வேஷம் போட்டுக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து பார்ப்பனக் கட்சியை சாதிக்கப் போவதாக வெளிவந்திருக்கும் ஆஸ்திக கனவான்கள்
கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் கோவில்களின் பேராலும் நடக்கும் கொடுமைகளை ஒழிப்பதற்கு ஏதாவது செய்கின்றார்களா, நினைக் கின்றார்களா, செய்தார்களா, நினைத்தார்களா என்றுதான் கேட்கின்றோம். எனவே பார்ப்பனர்கள் தேர்தலுக்கு ஏற்படுத்திக் கொண்ட நாடகத்தில் வரும் வேஷங்களைக் கவனிக்காமல் அந்த வேஷக்காரர்கள் யார்? அவர்களின் அறிவு, ஒழுக்கம், லக்ஷியம், பிழைப்பு, யோக்கியதை ஆகியவைகள் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால் கண்டிப்பாய் ஒவ்வொருவருக்கும் அவர்கள்
கூற்றின் உண்மை விளங்காமல் போகாது.
குடி அரசு - தலையங்கம் - 28.04.1929.
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
யாராட்௫ுதல்
திருவாளர் சென்னை பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் அவர்களை சென்னை கார்ப்பரேஷன் அங்கத்தினராக நியமித்த அரசாங்க ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம்டாக்டர் சுப்பராயன் அவர்களை நாம் மனமார பாராட்டுவதுடன் நமது வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கு நமது நன்றியறிதலையும் செலுத்துகின்றோம். வெகு காலத்திற்கு முன்னமேயே இந்நியமனம் பெற்றி ருக்க வேண்டிய பண்டிதர் ஆனந்தம் இப்பொழுதாவது நியமனம் பெற்றி
ருப்பதற்கு மகிழ்ச்சி அடைவதுடன் மேலுக்கு மேலும் உயர்பதவி நியமனம் பெற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைக்க வேண்டுமாய் ஆசைப்படு
கின்றோம்.
குடி அரசு - குறிப்புரை - 28.04.1929
குடி அரசு - 1929 () 230
இந்திய சட்டசபை வர்த்தகத்
தொகுதிக்குத் கேர்தல்
இந்தியா சட்டசபைக்கு சென்னை வர்த்தகத் தொகுதிக்காக ஒதுக்கப் பட்ட ஸ்தானத்திற்கு கோவை வருணாச்சிரம ஐயங்கார் பார்ப்பனராகிய திரு. சி.வி.வெங்கிட்டரமண ஐயங்கார் அவர்களும் சென்னை பிரபல வியாபாரி யாகிய ஜனாப் ஜமால் மகமதுசாயபு அவர்களும் போட்டி போடுகின்றார்கள். திரு அய்யங்காருக்கு அதிகமான பின்பலமும் ஆதரவும் ராஜா சர். அண்ணா மலைச் செட்டியார் அவர்களால் இருப்பதாகத் தெரியவருகின்றனது. இத் தொகுதியில் சுமார் 500 பேர் வரை நாட்டுக்கோட்டை நகரத்தார் கனவான்கள். ஓட்டர்களாயிருப்பதும் ராஜா சர். அவர்கள் வர்த்தக உலகத்தில் தக்க செல்வாக்குடையவராக இருப்பதுமே திரு.அய்யங்கார் அவரைப் போய் பிடித்ததற்கு முக்கிய காரணமாகும். திரு.ராஜா சர். அவர்களின் செல்வப் பெருக்கும் செல்வாக்கு வன்மையும் உலகத்தில் யாராலும் மறுக்கக்கூடிய தல்ல என்பதை நாம் வலியுறுத்திக் கூறுவோம். ஆனால் அதைமக்களுக்குப் பயன்படும் முறையில் உபயோகப்படுத்தாமல் எதேச்சாதிகார வழியில் உபயோகிக்கத் துணிந்து கொண்டே போனால் யாரால் தான் சங்கடப்படாமல் இருக்க முடியும்? அவர்களது சிதம்பரம் காலேஜ் பார்ப்பன அக்கிராரமா யிருக்கின்றது என்று கொஞ்சகாலத்திற்கு முன் எழுதினோம். அதை ஒருவாறு வேறு அவசரத்தில் மறந்தோம் - பிறகு சிதம்பரம் யூனிவர்சிட்டிக்கு வைஸ் சான்சலராக பார்ப்பனப் பித்துப்பிடித்த ஒரு சாஸ்திரியை நியமித்தார்கள். போதாக் குறைக்கு சட்டசபை வர்த்தகர் தொகுதிக்கு ஒரு பிரபல வர்த்தக
ருக்கு விரோதமாய் அதுவும் மகமதிய வர்த்தகருக்கு விரோதமாய் ஒரு பார்ப்பனரை அதுவும் அய்யங்கார் பார்ப்பனரை அதுவும் ஏற்கனவே எல்லோரும் அய்யங்கார் பார்ப்பனராக அடைந்து கிடக்கும் இடத்திற்கு மறுபடியும் ஒரு வருணாச்சிரம அய்யங்கார் பார்ப்பனரை ஆதரிப்பது என்று சொன்னால் நாம் எப்படித்தான் சமாதானமடையமுடியும்? எனவே நமது ராஜா
சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் தயவு செய்து புளராலோசனை செய்து தம்மிடம் அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் மக்களுக்கு நியாயம் வழங்குவார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.04.1029
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
18-வது நாடார் மகாநாடு
கொழு€யேற்றுவிழாச் வாற்வமாழிஷ
“இந்தக் கொடியில் குறிக்கப்பட்டிருக்கும் பெரியோர்களினாலேதான்
நீங்கள் முன்னுக்கு வந்தீர்கள். மகாநாட்டில் சுயமரியாதை அடையக் கூடிய பல தீர்மானங்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். நாடார் சமூகத்
திற்குத் தனி மகாநாடு எதற்கு என்ற சந்தேகம் கிளம்பலாம், இருந்தாலும்
நாம் இதற்குப் பயப்படாமல் நமது மகாநாடுகளை நடத்த வேண்டும். இம்
மாதிரி மகாநாடுகளில் நாமும் கலந்து கொண்டு அவர்களுக்குள் உள்ள கெடுதிகளை களைந்தெறிந்து சுத்தப்படுத்தி தேசத்தாருடன் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் கொள்கை. மகாநாடு வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்று நம்பி இக்கொடியினை உயர்த்துகின்றேன்.”
குறிப்பு: 29.04.1029 ஆம் நாள் பிறையாற்றில் நடைபெற்ற 13-.ஆவது நாடார் மாநாட்டில் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 05.05.1929.
குடி அரசு - 1929 () 232
நமது பத்திரிகை
ஐந்தாவதாண்டு
“குடி அரசு” அபிமானிகளே!
நமது “குடி அரசு” தோன்றி நான்காவதாண்டு கடந்து, ஐந்தாவதாண்
டின் முதல் இதழ் வெளியாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்வெய்துகின்றோம். அது தோன்றிய நாள் தொட்டு இற்றைய நாள்வரை மக்கள் முன்னேற்றத்
திற்கும், நாட்டின் விடுதலைக்கும் தன்னால் இயன்றதைச் சிறிதும் ஒளிக்காமல் தொண்டாற்றி வந்திருக்கும் விஷயம் நாம் எடுத்துக் காட்டாமலே அன்பர்கள் உணர்ந்திருக்கலாம்.
இதன் ஆசிரியராகிய யாம் சுமார் 30 ஆண்டு உலக வாழ்க்கை அனுபவம், அதாவது வியாபாரம், விவசாயம் அனுபவமும் சுமார் இருப தாண்டு பொது நலவுழைப்பு என்பதின் பேரால் அதாவது உள் ஊர் அக்கப்போர்கள், ஜில்லா பொதுநல சர்க்கார் சம்பந்தமில்லாத ஸ்தாபனங்கள்,
சர்க்கார் சம்பந்தமுள்ள ஸ்தல ஸ்தாபனம் முதலியவைகளில் நிர்வாக விஷய அனுபவமும் அரசர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் கூட்டுறவு அனுபவ
மும், ஜமீன்தார்கள், பிரபுக்கள், ஏழைகள், காலிகள் ஆகியவர்களின் நெருங்
கிய நேச அனுபவமும், இவைகளெல்லாம் அல்லாமல் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு துறவறம் கொள்ள எண்ணம் கொண்டு வெளிக் கிளம்பி சன்னியாசி வேஷமிட்டு காவி தரித்து சாமியாராகி இந்தியா முழுவதும் சுற்றி அலைந்த பிறகு அதையும் விட்டு, வெறும் கோவணத் துடன் தெருப்பிச்சை எடுத்து பிறகு அதையும் விட்டு எச்சிலையில் கிடப்பதை எடுத்து உண்டது ஆகிய வாழ்க்கைகளிலும் ஈடுபட்ட அதன் அனுபவமும், கடைசியாக அரசியலுக்கும் சமூக இயலுக்கும் என்று சென்னை மாகாண சங்கம் உபதலைவராகவும், தேசீயவாதிகள் சங்க காரிய தரிசியாகவும், காங்கிரஸ் இயக்கம் என்பதில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு மாகாணத் தலைவர், காரியதரிசி ஏக தலைவர் ஆகிய பதவிப் பேறும், வைதீக ஒத்துழையாமை கொள்கைக்கு முக்கிய தலைமையும் மற்றும் சத்தியாக்கிரகம்,
சர்க்கார் உத்திரவு மீறுதல், உண்மையை ஒளிக்காமல் பேசுதல் ஆகியவை களுக்கு ஆக பல தடவை அரசாங்க தண்டனைக்கு ஆளாகி சிறைவாசம் அடைதல் ஆகிய பல பேறுகளும் பெற்றதன் மூலம் சிறிது சிறிதாய் உலக அனுபவம் பெற்று, அவைகளின் பயனாய் நமது நாட்டின் உண்மை
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
விடுதலைக்கு விரோதியாயிருப்பது பார்ப்பனீயமே என்பதையும், அதன் ஆதிக்கம் வலுத்திருப்பதற்குக் காரணம் நமது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியும், அறிவு வளர்ச்சிக்கு இடமும் இன்மையே என்பதையும் அதற்கு முக்கிய காரணம் மூட நம்பிக்கையே என்பதையும் உணர்ந்து, சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி அறிவை வளரச் செய்து மூட நம்பிக்கைகளை ஒழித்துப் பார்ப்பனீயத்தை அடியோடு அழித்து மக்களை அடிமைத் தனத்
திலிருந்து மீட்கவேண்டும் என்கின்ற ஒரே ஆசையின் மீதே இக் “குடிஅரசு” பத்திரிகையை ஆரம்பித்த நாம் அதற்கேற்ப இத்தமிழ்நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றிச் சுற்றி அலைந்து திரிந்து சொற்பொழிவாற்றிக் கொண்டுமிருப்பவராவோம்.
எனவே இப்படிப்பட்ட நிலையில் இதன் கொள்கை என்ன என்ப தையும் இது என்ன செய்தது என்பதையும் உலகமே அறிந்ததாதலால் இதைக் குறிப்பிட வேண்டிய தில்லை என்றே நினைக்கின்றோம்.நிற்கஇக் கொள்கை யைக் கடைபிடித்து நடந்து வந்த சென்ற நான்கு வருஷகாலமாய் “குடி அர”சானது முதலில் யாருடைய உதவியும் இன்றி பிரவாக வெள்ளத்தில்
எதிர்நீச்சல் நீந்த வேண்டியது போன்ற மிகக் கஷ்டமான காரியத்தில் இறங்கி இருந்ததோடு செல்வமும் செல்வாக்கும் பெற்ற பெரியோர்கள் என்பவர்கள். முதற்கொண்டு மானமும் ஈனமும் அற்ற காலிகள் என்பவர்கள் வரையும், அறிவும் ஆராய்ச்சியும் உள்ளவர்கள் என்று சொல்லப்படும் பண்டிதர்கள்
முதல் தனக்கும் அறிவில்லாமலும் பிறர் சொல்வதையும் கேட்க இயலாமலும் உள்ள பிடிவாத சுயநலக்காரர்கள் வரையிலும் உள்ளவர்களின் இரக்கமும் மனிதத் தன்மையும் அற்ற எதிர்ப்புக்கு ஆளாகி வந்தும், மேற்கூறிய எவ்வித.
எதிர்ப்பும் இடையூறும் இல்லாமல் தாராளமாய் விடப்பட்டிருந்து மேற்கண்ட வர்கள் எல்லாம் நேசமாயிருந்து உதவி செய்து வந்திருந்தாலும் கட அது உத்தேசித்துள்ள காரியங்களில் எவ்வளவு செய்திருக்க முடியுமோ அவற்றை எல்லாம் விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகவே செய்திருக்கின்ற தென்றே நாம் மனப்பூர்வமாக உணருகின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் முதலாவதாக “குடி அரசு” இன்றைக்கு வாரம் ஒன்றுக்கு 9500 பிரதிகள் வெளியாகின்றதும், அடிக்க அடிக்க பந்துகிளம்புவது போல் எதிர்க்க எதிர்க்க வாசகர்கள் அதிகமாவதும் மற்றும் “குடி அரசு” கொள்கை களை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கும் இதுபோலவே பல ஆயிரக்கணக் காக பிரதிகளும் வாசகர்களும் பெருகிக் கொண்டு போதலும் இக்கொள்கைக் காக என்றே புதிதுபுதிதாகப் பத்திரிகைகள் துவக்கப்படுதலும் அவைகளுக்
கும் ஆரம்பத்திலேயே செல்வாக்கு பெருகுதலும், இரண்டாவதாக இக் கொள்கைகளை அனுபவத்தில் ஏற்றுக் கொண்ட மக்களுக்கும், இக் கொள்கைகளை உபதேசிக்கும் மக்களுக்கும், இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டஸ்தாபனங்களுக்கும் நாட்டில் செல்வாக்கும் மதிப்பும் வளர்தலும், மூன்றாவதாக இக்கொள்கைகளுக்கு எதிரிடையாக உள்ள பத்திரிகை களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் மதிப்பும்
குடி அரசு - 1929 () 234
செல்வாக்கும் குறைந்து போதலும் முதலாகிய காரணங்களால் உணரலாம். அன்றியும் எங்கு பார்த்தாலும் அடிக்கடி இக்கொள்கைகளைப் பரப்புவதற் காக மாகாண ஜில்லா, தாலூக்கா, சுயமரியாதை மகாநாடுகள் நடப்பதும், இக்கொள்கைக்கு விரோதமான ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் காங்கிரஸ், தேசீயம் முதலிய அரசியல் புரட்டு ஸ்தாபனங்களுக்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கற்று இரண்டு மூன்று வருஷமாக நமது நாட்டில் அரசியலின் பேரால் மாகாண மகாநாடு கூட நடத்த முடியாமலும், ஜில்லா தாலூக்கா மகாநாடுகள் என்பதுகள் கூட நடப்பதென்பது மிக அருமையாயும் போய்விட்டதோடு சுயமரியாதைக் கொள்கைக்கு விரோதமான கூட்டத்தார் வெளியில் தலைகாட்டவோ மேடை ஏறுவதற்கோ லாயக்கில்லாத முறையில் அடங்கிக்கிடக்கவேண்டிய நிலைமையை உண்டாக்கியிருக்கின்றது. சுருங்கச் சொன்னால் அரசியல் சமுதாய இயல் ஆகிய புரட்டுகளை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி அதன் பேரால் ஏமாற்றி வயிறு வளர்த்தவர்களையும் ஆதிக்கம் பெற்று வந்தவர்களையும் ஒருவாறு ஓடுங்கச் செய்துவிட்ட தென்றே சொல்ல வேண்டும். நிற்க, சமயப் புரட்டுத் துறைகளிலும் எதிர்பாராத அளவு அவைகளை வெளியாக்கி அவற்றின் போலி ஆதிக்கத்தை ஒருவாறு அழித்துக் கொண்டு வருகின்றது என்றும் சொல்லலாம். உதாரணமாக ஆயிரக்கணக்கான சாமிகளுக்கு இருந்த மதிப்புகள் எல்லாம் மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்ட உருண்டைக் குன்றுபோல் வேகமாக இறங்கி வருகின்றது. அவற்றின் பூசைகள் உற்சவங்கள் ஆகியவைகளின் யோக்கிய தைகளுக்கும் முன்னிருந்த மதிப்பில் பகுதி மதிப்புக் கூட இல்லாமல் இருந்து வருகின்றது. சில இடங்களில் வெகுகாலமாய் நடந்து வந்த உற்சவங்களும் பூஜைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன, சாமிகளும் அவற்றின் பூசைகளும் உற்சவங்களும் இக்கதியனால் சடங்குப் புரட்டைப் பற்றி நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்றே நினைக்கின்றோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் சடங்கை நிறுத்தினவர். களும் சாதிப் பட்டத்தை எடுத்துவிட்டவர்களும் சமயக் குறியைத் தள்ளி விட்டவர்களும் ஆயிரவாயிரக் கணக்காகத் தைரியமாகப் பெயர் கொடுத்து வருகின்றார்கள். இவ்வளவும் அல்லாமல் இத்தனைக் காலம் ஏமாற்றியதைப் போல் தேசத்தையும் தேசீயத்தையும் சுயராஜ்யத்தையும் சொல்லிக் கொண்டு தேர்தலுக்கு நிற்க யாருக்கும் யோக்கியதை இல்லாமலும் செய்துவிட்டது.
உதாரணம் பாமர மக்களுக்குள்ள மற்றொரு மூடநம்பிக்கையை ஆதாரமாய் வைத்துக் கொண்டு அதாவது மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கப் போவதாய் வெளியிட வேண்டியதாய் விட்டதே போதுமானது.
சமுதாய புரட்டுத் துறையிலும் தீண்டாமை விலக்கைப் பற்றி எங்கும் வெகுதாராளமாய்ப் பேசப்படுகின்றது. சமபந்தி போஜனம் அதிசயிக்கத்தக்க வண்ணம் முன்னேறி வருகின்றது. பொதுவாக இவைகளுக்கு ஒரு கடுகளவு
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அறிவுள்ள கூட்டத்திலும் அணுவளவு ஆட்சேபமாவது அதிருப்தியாவது கிளம்புவதாக யாருமே சொல்ல முடியாத நிலைமை எய்திவிட்டது என்று
உறுதியாய்ச் சொல்லலாம். ஆனால் பொறாமைக்காரர்களுடையவும் சுயநலக் காரர்களுடையவும் அவர்களது கூலிகளுடையவும் எதிர்ப்பும் அதிருப்தியும் சிறிதாவது இல்லையென்று சொல்ல முடியாது என்றாலும் அவர்களையும் இக்கொள்கைகளை நேரான முறையில் வெளிப்படையாய் எதிர்ப்பதற்கு தைரியமற்றவர்களாக்கி சூழ்ச்சியிலும் பித்தலாட்டத்திலுமேதான் மறைமுக
மாய் தலைகாட்ட முடியும்படியாகச் செய்திருக்கின்றது..
இதுபோலவே கல்யாண முறையிலும் சாதாரணமாய் எதிர்பார்க்க முடியாத அளவு சீர்திருத்தமும், கலப்புமண உணர்ச்சியில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ஆவலும், பெண் உரிமையில் ஆண்களைவிட அதிகமான உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று பெண்களே கருதத்தக்க வண்ணமும் ஆண்கள் சிறிதும் ஆட்க்ஷேபிக்க முடியாமல் தலை குனிந்து
ஒப்புக் கொள்ள வேண்டியதான உணர்ச்சியும் உண்டாயிருக்கின்றது.
இவைகள் தவிர சாஸ்திரம் புராணம் இதிகாசம் என்பவை முதலிய வற்றின் யோக்கியதைகளும் புரட்டுகளும் சந்தி சிரிக்கத் தக்கவண்ணம் வெளியாகி முக்கிய சாஸ்திரங்கள் இதிகாசங்கள் என்பவைகளை அதாவது வருணாசிரமக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளை ஆயிரம் பதினாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் நெருப்பு வைத்துக் கொளுத்தத்தக்க ஆவேசமும் உணர்ச்சியும் ஏற்பட்டு விட்டது. தினம் தினம் வருணாசிரம மகாநாடுகளும் அடிக்கடி சைவ சமய மகாநாடுகளும் மூலை முடுக்குகளில் கூட்டி “குடி அரசையும் அதன் கொள்கைகளையும் கண்டிப்பதும் சட்டசபைகளில் சரமாரியாக கேள்விகள் கேட்பதும் ஆகிய பல அவசியத்தைக் கொண்டு வந்தும் விட்டுவிட்டது.
இந்த சொற்ப காலத்திற்குள் இவ்வளவு காரியங்கள் நடைபெற்றதற்கு காரணம் என்னவென்று பார்ப்போம். நாம் இத்தொண்டில் இறங்கிய காலம்
முதல் இதுவரை யாருடைய வாக்குச் சகாயமாவது பண சம்பந்தமான உதவியாவது கடுகளவு கூடக்கிடையாது. இதற்கு விரோதமாய் எதிர்ப்புகள்
மாத்திரம் மலிந்து கிடந்தன. பள்ளிக் கூட படிப்பில்லாமலும் பத்திரிகை: அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிகை ஆரம்பிக் கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன. உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக் கூட எவ்வளவு பணம் கொடுத்தாலும் விளம்பரப் படுத்த “சுதேசமித்திரன்” “நவசக்தி” போன்றவைகள் மறுத்துவிட்டன. பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலுங்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. எங்கு சென்றாலும் ஆங்காங்குள்ள ஸ்தல அதிகாரிகளின் தொல்லையும் வெகு தொல்லையாயிருந்தது. இவ்வளவு மல்லாமல் நமது எழுத்துக்களையும்
குடி அரசு - 1929 () 236
சொற்களையும் நமது எதிரிகள் பாமர மக்களுக்கு திரித்து எழுதியும் கூறியும் வந்த தொல்லைகள் எல்லாவற்றையும் விட அதிகமாக இருந்தன. அதோடு மாத்திரமல்லாமல் பத்திரிகை ஆரம்பித்தவுடன் நம்மை தேசத்துரோகி என்று தீர்மானித்து காங்கிரசிலிருந்து வெளியாக்கிவிட்டதாக “நவசக்தி” முதலிய பத்திரிகைகளின் பிரசாரமும், நாம் காங்கிரசிலிருந்து பணம் திருடிக் கொண்டதாக “தமிழ்நாடு” முதலிய பத்திரிகைகளின் பிரசாரமும் பறை அடிப் பதுபோல் மூலை முடுக்குகளில் எல்லாம் செய்து வந்ததல்லாமல் மலேயா முதலிய வெளிநாடுகளுக்கும் ஆட்களை அனுப்பி அங்கும் விஷமப் பிரசாரம் செய்தும் சில சந்தாதாரர்களிடம் “குடி அரசு” வரவழைப்பதை நிறுத்திவிட்டால் “தமிழ்நாடு “வை இலவசமாய் அனுப்புகின்றோம் என்று சொல்லியும் “குடி அரசை” நிந்தித்து தாங்களே கடிதம் எழுதி அதில் பாமர: சந்தாதாரர்கள் கையெழுத்து வாங்கி நமக்கனுப்புவதும் “குடி அரசு”க்கு விளம்பரம் கொடுத்திருப்பவர்களிடமெல்லாம் சென்று “குடி அரசுக்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது என்று சகல செல்வாக்கையும் செலுத்தி பலவந்தம் செய்தும் கடைசியாக *குடி அரசு” விளம்பரத்தை நிறுத்திக் கொண்டால் “தமிழ்நாடு”வில் இலவசமாய் விளம்பரம் போடுவதாகச் சொல்லி “குடி அரசுக்கு வந்த விளம்பரங்களை நிறுத்தியும், மற்றும் ஒவ்வொரு சமூகத்தாரையும் நமக்கு விரோதமாய்க் கிளப்பிவிடக் கருதி நாம் சொல்லாதவைகளையும் எழுதாதவைகளையும் எழுதியும் தங்கள் நிருபர் களைவிட்டு உட்கலகம் செய்யும்படி செய்தும். உதாரணமாக விருதுநகர் நாடார் சமூகத்தை நமக்கு விரோதமாகக் கிளப்பிவிட சூழ்ச்சி செய்ததும் ஆகிய எத்தனையோ இழித் தகைமையான எதிர்ப்புகள் எல்லாம் இருந்தும் இன்று “குடி அரசும் அதன் கொள்கையும் வெற்றியில் இருப்பதற்கு காரணம். என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? அப்படி யோசித்தால் என்ன
பதில் கிடைக்கும்? ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும். அதாவது “குடிஅர'சோ அதன் ஆசிரியரோ ஆரம்பகாலம் முதல் மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லுவதும் கொள்கைகளில் சமயத்திற்குத் தகுந்தபடி சுயநலத்தையே கருதி அடிக்கடி குட்டிக்கரணம் போடாமல் இருந்ததும் வேறு யாருடைய தயவையும் கையையும் எதிர்பாராமல் தன் காலிலேயே நின்று தன்னுடைய
சொந்தச் செலவிலேயே இயக்கத்தை நடத்தினதுமே முக்கிய காரணமாகும் என்பதே. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமானால் விளக்குவதற்கு வெளிப்படையாகவே சொல்லுகின்றோம்.அதாவது “குடிஅரசு” ஆரம்பித்த காலம் முதல் இன்றையவரை ஏதோ சிலர் கல்யாண காலத்திலும் “கருமாதி”
காலத்திலும் 4 அணா, 8 அணா ஒரு ரூபாய் வீதம் நன்கொடையாக அளித்து
வந்ததில் மொத்தம் சுமார் 100 அல்லது 120 ரூபாய்கள் தவிர மேற்கொண்டு ஒரு அம்மன் காசாவது கொடுத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லு வோம். ஆனால் குடி அரசின் கொள்கையையும் தொண்டையும் ஒப்புக் கொண்ட சில நண்பர்கள் “குடி அரசுக்கு சில சமயங்களில் பண உதவி செய்ய தாங்களாகவே முன்வந்த போதும் அதை திருப்பி விட்டு வேண்டு
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மானால் தயவு செய்து “திராவிட னுக்கு உதவுங்கள் என்று கேட்டு கொண்ட
தன் மூலம் “திராவிட”னுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டிருக்கின்றது என்றாலும் “திராவிடன்” “குடி அரசுக்கு உதவியாய் நின்றதன் பயனாக “குடி அரசு”க்கு ஏற்பட்ட உதவிக்கு நாம் நன்றி செலுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
இதுதவிர அதுபோலவே, நமது சுற்றுப் பிரயாணங்களுக்கும் நமது பிரசாரர்களுக்கும் நண்பர்களுக்கும் இன்றைவரை யாரும் எவ்வித பண உதவியும் செய்யப்பெறவில்லை என்றும், தைரியமாய்ச் சொல்லுவோம். பத்திரிகை நடத்துவதிலும், “குடி அரசு” ஆரம்பித்த காலம் முதல் இது ஒரு வருஷம் தவிர அதாவது மலேயா நாட்டுக்கு நமது சகோதரர் சந்தா சேர்க்கச் சென்றுவந்த வருஷம் தவிர, மற்றபடி நஷ்டத்திலேயே நடைபெறுகின்ற தேயல்லாமல் வேறில்லை.
உடல்நிலையும் முதலாவது கண்பார்வை சற்றுக் குறைவு, தலைவலி, அடிக்கடி மயக்கம், ஜீரண குறைவால் மார்பு வலி, பல்வலி, சிறிது காதிலும் தொல்லை, குடல்வாதம், அதிக வேலை செய்யக் கூடாது என்று பிரபல வைத்தியர்களின் கண்டிப்பான அபிப்பிராயம் முதலிய நெருக்கடியான
கஷ்டத்தில் இருக்கின்றது.
தினப்படி வரும் தபால்களில் நூற்றுக்கணக்காய் வெறுக்கத்தக்க வண்ணம் புகழ்ந்தெழுதுபவை ஒருபுறமிருந்தாலும், வைதும் மிரட்டியும் எழுதப்பட்டு வரும் மொட்டைக் கடிதங்களுக்கும் குறைவில்லை. இவ்வளவு நிர்ப்பந்தங்களுக்கிடையில் நமது இயக்கம் ஒருவித நன்னிலை அடைந்து மேற்செல்லுவதையும், இவைகள் நமக்குப் பேரூக்கத்தை விளைவித்து வருவதையும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் நம்மைத் தாங்கி நிற்பதையும்,
நாம் மனமார உணருகின்றோம். முடிவாக நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது சொற்களிலாவது நமக்கு சிறிதளவும் சந்தேகமோ மயக்கமோ இல்லாத அளவு தெளிவாயிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
கடைசியாக நமக்கு உதவியாக இருக்கும். “குமரன்”, “நாடார்
குலமித்திரன்”, “தமிழன்” “முன்னேற்றம்”, “விஸ்வநேசன்”, “சுயமரியாதைத் தொண்டன், “லட்சுமி”, *ரிவோல்ட்”, *திராவிடன்', “முத்தமிழ்நாட்டின் பள்ளி உதயம்”, “பிரசண்ட மகாவிகடன்”, மலையாளமொழி பத்திரிகைகளாகிய “சகோதரன்”, “மிதவாதி”, “தேசாபிமானி” முதலாகியவைகள் மொத்தம் சுமார் நாற்பதினாயிரம் சந்தாதாரர்களைக் கொண்டு நமக்காக உழைத்து வருவதற்
கும் தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கும், பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்திற்கும், நாடார் மகாஜன சங்கத்திற்கும் மற்றும் சில, சைவ சமாஜம் சன்
மார்க்க சங்கம் முதலாய சங்கங்களுக்கும் சிறிதும் தன்னலமின்றி தங்களது முழு நேரத்தையும் தங்களது உடல் பொருள் ஆவி ஆகியவைகளை யெல்லாம் இவ்வியக்கத்திற்கே உவந்தளிக்கக் காத்திருக்கும் எமது அருமை
குடி அரசு - 1929 () 238
வாலிப இளஞ்சிங்கங்களுக்கும், அவசியமானபோது எவ்வித உதவியும் புரியத் தயாராயிருக்கும் செல்வமும் செல்வாக்கும் உண்மை ஆசையும் கொண்ட செல்வ நண்பர்களுக்கும், எமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டு நான்காவது ஆண்டைக் கடந்து ஐந்தாவது ஆண்டிற்குச் செல்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.05.1929
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மூண்றாவதூ நாடார் வாலியர் மகாநா௫
சகோதரர்களே!
நமது நாட்டினுடைய முன்னேற்றத்தைக் கருதிய விஷயங்களிலே வாலிப மகாநாடுகளைப் பற்றி ஒருவிதமான அபிப்பிராய பேதமும் கிடையாது. ஏனென்றால் உலக முன்னேற்றத்திற்கே காரணம் வாலிபர்கள்
தான். அதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவர். ஒவ்வொரு நாட்டிலும் பல
வகையிலும் அடிக்கடி கஷ்டம் நிகழ்ந்திருக்கின்றது.அவை விடுதலைப் பெற சுயமரியாதை அல்லது விடுதலை உணர்ச்சி வாலிபர்களுக்கு ஏற்பட்டதின்
மூலம் உலகத்தின் பெரும்பான்மையான நாடுகள் விடுதலை யடைந் திருக்கின்றன. இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளும் முன்னேறி வருகின்றன. ஏன் நமது நாடுமட்டும் தூங்குகிறது? வாலிபர்கள் கவலை எடுக்காததினால்தான். நாம் இதுகாறும் பாடுபட்டும் பிரயோஜனமில்லாமல் முன்னிருந்த நிலையில்தான் இருக்கின்றோம். எப்படி மற்ற நாட்டு வாலிபர்கள் தத்தம் நாடு முன்னேற உயிர்விட்டுக்கூட உழைத்தார்களோ அதுபோல் நமது வாலிபர்களும் உழைக்க முன் வரவேண்டும்.
சுயமரியாதை உணர்ச்சியை வாயளவில் மறுக்கின்றார்களேதவிர சுய மரியாதைக் கொள்கைகளையும் திட்டத்தையும் எல்லோரும் ஒப்புக் கொள் கின்றார்கள். சுயமரியாதை உணர்ச்சி தப்பிதமானது என்று சொல்லுகின்ற வர்கள் எவரும் இதுவரை நமது கொள்கைகளில் இன்ன இடத்தில் இன்ன பிசகு இருக்கிறது என்று சொல்ல யாரும் முன்வரவில்லை. அவர்கள் இவ்வளவு வேகம் கூடாது, சுமாராயிருக்க வேண்டுமென்கிறார்களே ஒழிய அடியோடு தப்பு என்று கூறுபவர்கள் கிடையாது. ஆனால், சில சுயநல
வாதிகள் எலக்ஷன் சமயத்தில், “சுயமரியாதை இயக்கம் உலகத்தையேபாழ் படுத்தப்போகிறது,” “நாஸ்திக பிரசாரம் செய்கின்றது” என்று கூறி விஷமப் பிரசாரம் செய்கின்றனர். இதைப் பற்றி கண்ணியமாய் அபிப்பிராயப் பேதப்படுபவர்கட்கு நாம் சமாதானம் சொல்லலாம். மற்றவர்கட்கு நாம்
நியாயம் சொல்ல வேண்டியதில்லை. அவர்களைச் சமாதானப்படுத்த முடி யாது. நாம் ஒற்றுமையுடனும், விடா முயற்சியுடனும் பாடுபடுவதுதான் அவர். கட்குத் தக்கபதில் ஆகும். சுயமரியாதை இயக்கமானது நம் நாட்டிற்கும் உலகத்திற்கும் புதிதல்ல. முக்கியமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்
குடி அரசு - 1929 () 240
கிறவர்கட்கும் அடிமைப்படுத்தப் பட்டவர்கட்கும் தாழ்த்தப்பட்டவர்கட்கும் சுயமரியாதை இயக்கந் தவிர வேறு இயக்கம் கிடையாது. ஒவ்வொரு நாடும் சுயமரியாதைக் கிளர்ச்சினால்தான் முன்னுக்கு வந்திருக்கின்றன. சுயமரியாதை உணர்ச்சியே சமயம், சமூகம், ஆத்மார்த்தம், அரசியல், பொருளாதாரம் ஆகிய எல்லாத் துறைக்கும் மார்க்கமாகும். ஐரோப்பா தேசத்திலே, ஆத்மார்த்த சம்பந்தமாக அடிமைப்பட்டு அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த மக்கள் மார்ட்டின் லூத்தர் போன்ற பெரியார்களின் சுயமரியாதைக் கிளர்ச்சியினால்தான் கண்விழித்து எழுந்து இப்போது உலகத்திலே தலைசிறந்து விளங்குகின்றனர். காட்டுமிராண்டிகளாக இருந்த அவர்கள் இப்போது முன்னேற்றப் போட்டியில் முன்னணியிலிருக்கின்றனர். அவர்கள் மத சம்பந்தமான மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்த பிறகே சயன்ஸ் முறைகளைக் கண்டுபிடித்து முன்னேறி வருகிறார்கள்.நம் புரோகிதக் கொடுமையைவிட அவர்கள் புரோகிதர்களால் பட்ட கொடுமையும் பழக்கக் கட்டுகளுக்கு கட்டுப்பட்ட அடிமைத்தனமும் இப்போது பறந்து போய்விட்டன. அதுபோலவே ரஷியா முதலிய இடங்களில் பொருளாதார விஷயத்தில் சுயமரியாதை உணர்ச்சி உண்டானதினால்தான் அவர்கள் பொது உடைமை இயக்கம் தோற்றுவித்தனர். நமது அரசாங்கம் அவ்வியக்கத்தை (போல்ஸ்விக் மசோதா! நமது நாட்டில் பரவவிடாமல் செய்ய சட்டம் செய்ய முயலுகின்றார்கள். மேலும் துருக்கியில் சமுதாய சுயமரியாதை உணர்ச்சி உண்டானதினால் வெள்ளைக்காரர்கள்கூட பயப்படுகின்ற முறையில் அவர்கள் முன்னேறி வருகின்றார்கள். அயர்லாந்துக்காரர்களுக்கு அரசியல் சுயமரியாதை உணர்ச்சி உண்டான பிறகுதான் அவர்கள் விடுதலை பெற்றார்கள். ஜப்பான், சைனா முதலிய நாடுகள் முன்னுக்கு வந்திருக்கின்றன. சமுதாயம், அரசியல், பொருளாதாரம், ஆத்மார்த்தம், அறிவு ஆகிய எல்லாவிஷயத்திலும் நாம் சுயமரியாதை அற்று இருக்கின்றோம் என்பதில் சந்தேகமில்லை. பொருளாதார விஷயத்தில் சுயமரியாதை அற்றதன்மைக்கு நற்சாட்சி வேண்டுமானால் கூலிகள் வெளிநாடுகட்குச் செல்லுவதே போதும். அதாவது ஒவ்வொரு வாரமும் பதினாயிரக்கணக்கான நமது சகோதரர்கள். மோரிசு, நேட்டால், தென் ஆப்பிரிகா ஆகிய இடங்களுக்குப் பிள்ளைகுட்டி பெண்டுகளுடன் சென்று மானங்கெட்டுச் சாகிறார்கள். ஆத்மார்த்த விஷயத்தில் சுயமரியாதையற்ற தன்மைக்குச்சாட்சி வேண்டுமானால் மோக்ஷத்திற்கென்று பார்ப்பான் காலில் விழுந்து அவன் காலைக்கழுவின தண்ணீரைப் “பாத தீர்த்தம்” என்று பருகுவதினாலேயே விளங்கும்.அரசியல் சுயமரியாதை அற்றத் தன்மைக்கு ஆதாரம் வேண்டுமானால், நமது அரசியல் பிரதிநிதிகளாக பார்ப்பனர்கள் இருந்து கொண்டு சில வயிற்றுப் பிழைப்புக் கூலிகள் நம்மை ஏமாற்றி வருவதே போதுமானது சமூக விஷயத்தில் நமக்குச் சுயமரியாதை இல்லை என்பதற்கு நாம் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுவதும், கோயில், தெருவு, குளம், பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் நமக்குச் சமவுரிமை இல்லாததே
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
போதுமானதாகும். ஆகவே, நமக்கு எந்தத் துறையிலும் சுயமரியாதை இல்லை. ஆதலால் இவைகளில் சுயமரியாதை அடைய ஓர் இயக்கம் அவசியமா? இல்லையா? என நீங்களே யோசியுங்கள். சுயமரியாதை வேண்டும் என்ற அளவில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை, அதை என்றும் எல்லோரும் விரும்புகின்றார்கள் என்பதும் எனக்கு தெரியும். அதனால்தான் எனக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்தும், இந்த இயக்கத்திலேயே பிராணனை விடவேண்டும். (கை தட்டுதல்) என்ற எண்ணத்துடன் தான் இடைவிடாமல் உழைக்க முன்வந்தேன். அதற்கு உங்களைப் போல பல வாலிபர்கள் உயிர்விடவும் தயாராயிருப்பதாகவும் எனக்கு நன்றாகத் தெரியும். என்னைவிட அவர்கட்கு நன்றாக இந்த உணர்ச்சி பிடித்துவிட்டது. ஆதலால் நான் வாலிபர்கட்கு இதைப் பற்றி ஒன்றும் அதிகமாகக் கூற வேண்டியதொன்றுமில்லை. ஒற்றுமையாக இருங்கள். பதட்டம் கூடாது, நமது எதிரிகள் மீது ஆத்திரப்படாதீர்கள்! என்றுதான் நான் சொல்ல வேண்டி யவனாக இருக்கின்றேன். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி பலர். பலவிதமாகச் சொன்னாலும், நாடார் குலத்திலேயே சில எதிர்ப்புகள் இருப்ப தாகச் சொல்லப்படுகின்றது. எப்படி இருக்க முடியும்? என்பது எனக்கு விளங்கவில்லை. இன்றைய மகாநாட்டில் காலையில் நாடார் பிரமுகர்களும் மற்றவர்களும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையெல்லாம் தீர்மானமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதாவது அறிவுக்கும் இயற்கைக்கும் நியாயத்திற்கும் ஒத்தவற்றைத்தான் ஒப்புக் கொள்ளுவது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.நான் சொல்லுவதில் செய்வதில் ஏதாகிலும்
ஒரு சிறிய விஷயமாவது அறிவிற்கும் இயற்கைக்கும் நியாயத்திற்கும் விரோதமாயிருக்கிறது என்று எடுத்துக் காட்டினால் நான் தூக்குப் போட்டுச்
சாகத் தயாராயிருக்கிறேன். சுயமரியாதை இயக்கமானது அறிவு, ஆராய்ச்சி, இயற்கை, நியாயம் ஆகியவைகளையே அடிப்படையாகக் கொண்டது. எனவே, அறிவு, ஆராய்ச்சி இயற்கை தத்துவத்திற்கு இடம் கொடுத்தால் வேறு மூடபழக்கங்கட்கு தானாகவே இடம் இல்லாமல் போய்விடும். அடுத்த படியாக நாடார் மகாநாட்டில் நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் இடையூறாக இருக்கும்படியானதை நீக்க பெண்கட்கு ஆண்களைபோல் சமவுரிமை கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறார்கள். இது சுயமரியாதை இயக்கத்தின் ஜீவாதாரமான கொள்கையாகும். செங்கற்பட்டு மகாநாட்டுப் பெண்கள் சம்பந்தமான தீர்மானம் இதுதான். புருஷன் தாசி வீட்டுக்கு போவது குற்றமில்லையானால் ஸ்திரீகள் ஆசைநாயகன் வீட்டுக்குப் போவது குற்றமில்லை. புருஷன் பல பெண்களை மணந்தால்
ஸ்தீரீகள் பல புருஷர்களை மணப்பது குற்றமில்லை என்பதுதான் சமவுரிமை என்பதில் அடங்கியது. எனவே நாடார் மகாநாட்டுத் தீர்மானங்கள் சுய மரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கட்குச் சற்றும் இளைத்தவையல்ல வென்றே சொல்லுவேன். மற்றும் சுயமரியாதை இயக்கம் கடவுளை மதத்தைப் புராணங்களைப் பழக்க வழக்கங்களை குற்றம் சொல்லுகிறது என்று
குடி அரசு - 1929 () 242
சொல்லுகிறார்கள். ஆனால் அவைகளை எந்த அளவில் குற்றம் கூறுகிறது என்று யோசிக்க வேண்டும்.யாராவது இன்றுவரை நான் கடவுளைப் பற்றியும்,
மதத்தைப் பற்றியும், புராணத்தைப்பற்றியும் எழுதி வருவதைப் பற்றியாவது பேசிவருவதைப் பற்றியாவது குறிப்பிட்டு எடுத்துக்காட்டி சமாதானம் சொல்ல முன்வந்திருக்கிறார்களா? அல்லது இனியாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். எனக்குத் தெரிந்தவரை யாரும் இதுவரை எடுத்துக்காட்டக் காணோம். கடவுள் இருக்கின்றது அல்லது இல்லை என்று வாதிடுவது
அர்த்தமற்றதாகும். அன்றியும் அது சுலபமான விவகாரமல்ல. இருக்கிறது என்று நிரூபிப்பதைவிட இல்லை என்று நிரூபிப்பவர்களுக்கு கஷ்டம் அதிகம்.
சகோதரர்களே! இதுவரை நம்மைப் பற்றி குற்றம் கூறுகின்றவர்களை ஒன்று கேட்கின்றேன். அதாவது “நான் கடவுள் இல்லை என்று சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற சிகாமணிகளே! கடவுள் என்றால் என்ன? நீங்கள் எதைக் கடவுள் என்கிறீர்கள்? அதற்கு நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் குணமும், தன்மையும் என்ன? என்பதை முதலில் சொல்லுங்கள். பிறகுநான் அப்படிப்பட்ட கடவுள் உண்டா? இல்லையா? என்பதைப் பற்றியும். அதற்கும் உங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? என்பதைப் பற்றியும், அதனால் உங்களுக்கு என்ன பயன் உண்டாகும் என்பதைப் பற்றியும் சொல்லுகிறேன்” என்பதுதான். சகோதரர்களே! என்னை நாஸ்திகன் என்று சொல்லுகின்ற சில “ஆஸ்திகக்” குடுக்கைகளைப் பற்றி எனக்கு நன்றாய்த் தெரியும். இவர்களில் கடவுளுக்கு அர்த்தம் சொன்ன ஒருவர் சமுத்திரந்தான் கடவுள், ஆறுதான் கடவுள்,மலைதான் கடவுள், மரம் தான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், துளிகள்தான் கடவுள் என்று கூறுகிறார். அப்படியானால் நான் இந்த மாதிரிக் கடவுள் இல்லை என்று சொன்னால் மரம் வளராதா? மலை மண்ணாய் விடுமா? ஆறு மேடாய் விடுமா? புஷ்பம் வாசனை இருக்காதா? இந்தக் கடவுளைக் காப்பாற்ற வக்கீல் வேண்டுமா? ஆஸ்தீகச் சங்கம் வேண்டுமா? 63 நாயனார் அவதாரம் வேண்டுமா? என்று கேட்கின்றேன். சைவப் பெரியார் கூட்டத்திலுங்கூட மனித வாழ்க்கைக்கும் ஒழுக்கத்திற்கும் கடவுள் உணர்ச்சி வேண்டுவதுதான் என்று தீர்மானித் தார்களேயன்றி, கடவுள் உண்டு இல்லை என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஆதாரமும் தைரியமும் உண்டாகவில்லையே. ஒழுக்கத்திற்கு வேறு சாதனம் இருந்தால் கடவுள் உணர்ச்சி எதற்காக? என்றால் இவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள்.பணம்திருடக் கூடாததற்கு கடவுள் பேரைச் சொல்லி ஒழுக்கம் உண்டாக்கி இருப்பதைவிட, போலீசுக்காரனை வைத்து இருப்பதாலும் திருடினவனைத் தண்டிப்பதாலும் திருட்டுக் குறைந்திருக்கின்றது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா? இல்லையா என்று கேட்கிறேன். நமது நாட்டில் ஒழுக்க ஈனத்திற்கு காரணம் அர்த்தமற்ற முறையில் கடவுளைக் கட்டிக் கொண்டழுவதுதான். உண்மைக் கடவுள் ஒழுக்கம் மற்ற ஜீவன்களை இம்சைபடுத்தக்கூடாது என்பதுதான் என்று உணர்வானானால் நாட்டில்
ஒழுக்கமும் அன்பும் இரக்கமும் எவ்வளவு தாண்டவமாடுமென்பதை
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
நினைத்துப் பாருங்கள். குழந்தைப் பருவத்தில் அக்குழந்தை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத காலத்தில் பெற்றோர்கள் அதைக் காப்பாற்றுவதற்காக வெளியில் போகாமல் இருக்கச் செய்வதற்காக அதற்குச் சற்று பயம் கொடுக்க வேண்டி பூச்சாண்டி இருக்கிறது என்று சொல்வதுபோல் கடவுள் உணர்ச்சியும் வேண்டும் என்றால், நான் அடியோடு கூடாது என்று சொல்லப் போவதில்லை. ஆனால் அது 6 வயதாகிய பின் நாம் அதைப் பள்ளிக்கூடத்திற்குப் போகச் சொன்னால் அது பூச்சாண்டி பிடித்துக் கொள்ளுவான், நான் வெளியில் போகமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு அழுதால் நாம் என்ன சமாதானம் சொல்லுவோம்? தலையைப் பார்த்து இரண்டு. குட்டுவைத்து கையைப் பிடித்து இழுத்து, பூச்சாண்டி இல்லை,ஒன்றும் இல்லை என்று சொல்லி வெளியில் தள்ளிவிட மாட்டோமா? என்பதை நினைத்துப் பாருங்கள். அதுபோலவே ஒரு காலத்தில் மக்களைப் பயப்படுத்த பொய் மிரட்டிலும் பயமும் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் அறிவு வளர்ச்சி பெற்றபின் கடவுள் பயத்தை நீக்கி உண்மையும் ஒழுக்கமும் ஆகிய தத்துவங்களைச் சொல்லிக்காட்ட வேண்டாமா? என்று கேட்கிறேன். அன்றியும்கடவுள் பக்தியும், கடவுள் தன்மை அறிந்த ஞானமும் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு திரியும் ஆயிரத்தில் ஒருவன்கூட யோக்கியனாகவும், ஒழுக்க முள்ளவனாகவும் இருப்பதை நான் பார்க்கவேயில்லை. உதாரணமாக மடாதிபதிகளையும், ஆஸ்தீக பிரசாரகர்களையும், சைவப் பண்டிதர்களையும், வைணவ பாகவதர்களையும் சற்று ஞாபகப்படுத்திப்பாருங்கள்.அவர்களிடம் இதுவரை: கடவுள் பெயரால் கணக்கற்ற ஒழுக்கவீனங்கள் இருப்பது கண்கூடு. ஒவ்வொரு துறைகளிலும் அவர்களது கூடா ஒழுக்கம் சொல்லித் தீராது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. தவிர எது செய்தாலும் கடவுள் செயல் என நினைப்பதினால் ஒருவனுடைய சொந்த முயற்சி குன்றி சோம்பேறியாவதற்கு இடமுண்டாய்விடுகின்றது. தன் முயற்சி உடைய உலகம் தான் முன்னேற்றமடையும். முயற்சி இல்லாத காரணத்தினாலேயே நம் தேசம் இந்நிலையிலிருக்கிறது.
குறிப்பாக நமது நாடு மிகவும் கேவல நிலையிலிருக்கின்றது. பொறுப்பற்ற வீணர்கள் வீண் வார்த்தையாடவே சுயமரியாதை இயக்கத்தை தூஷிக்கின்றனரே அன்றி நாட்டின் முன்னேற்றத்திற்கோ அறிவின்
முன்னேற்றத்திற்கோ ஒழுக்கத்தின் முன்னேற்றத்திற்கோ இதுவரை ஒரு சிறு காரியமும் செய்தவர்களல்லர். ஒரு சிறு தியாகமும் செய்தவர்களல்லர், தவிர. பூசைக்காகக் கடவுளுக்கு காசு செலவு செய்யாதவர்கள் எல்லாம் நாஸ்திகர். என்று சிலரால் சொல்லப்படுகின்றது. அப்படியானால் மகமதியர்கள் எல்லாம் நாஸ்திகர்களா? அவர்களைக் கடவுள் காப்பாற்றவில்லையா? கடவுளுக்குக் காசு செலவு செய்யும் பூசை எதற்கு? அதற்கு வயிறு, பெண்டு, பிள்ளை, கல்யாணம், சாந்திமுகூர்த்தம் முதலியவைகள் உண்டா? அவசியமா? அவசியம் என்பீர்களானால் அப்படிப்பட்ட சாமி நமக்கு கண்டிப்பாக வேண்டாமென்பதோடு அப்படிப்பட்ட சாமி இருக்க முடியாது என்றும்
குடி அரசு - 1929 () 244
இருந்தாலும் நாம் அதைக் காப்பாற்ற முடியாது என்றுமே சொல்லுகின்றோம். ஏனெனில், இப்படிப்பட்ட தேவையும் சுயநலமும் உள்ள சாமிகள் நமக்கு என்ன நன்மைகளைச் செய்துவிட முடியும்? இவ்வளவு பணச்செலவில் பூசையும் உற்சவமும் பெற்ற கடவுள்கள் இதுவரை நமது மக்களில் 100-க்கு
6 பேரைக்கூட படிக்கவைக்கவில்லையே. கிறிஸ்துவர்களும் வெள்ளைக் காரர்களும் கடவுள் பூசைக்கு தேங்காய் பழம் உற்சவம் செய்யாமல் எவ்வளவு தர்மம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
நமது நாட்டில் உள்ள பிரசவ ஆஸ்பத்திரியும் ஷயரோக ஆஸ்பத்
திரியும், குஷ்டரோக ஆஸ்பத்திரியும், கண் ஆஸ்பத்திரியும், கைத்தொழில் பள்ளிக்கூடமும், சர்வகலாசாலையும், அநாதை ஆஸ்ரமமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாப்பாடு, கல்வி, கைத்தொழிற் கற்பிக்கும் ஆஸ்ரமங்களும் இவை போன்ற சிறந்த வகைகளெல்லாம் அவர்களுடையவையாகவே இருக்கின்றன. நாம் அவர்களை வைது கொண்டும், பழித்துக் கொண்டும் அவற்றின் பலன்களை மாத்திரம் அனுபவித்துக் கொண்டே வருகின்றோம். ஆனால், நாம் அதைவிட அதிகமான பொருள்களைச் சாமி பூசைக்குச் செலவழித்துவிட்டு அந்தச் சாமிகளால் ஒரு பலனும் அடையாமல் நாமும் மூடர்களாயிருக்கின்றோம். அந்தச் சாமிகளும் கல்லுபோல் அசையாமல் அதே இடத்தில் இருந்துகொண்டு ஒரு நற்பலனும் உண்டாக்காமல் இருக்கிறது. தவிர, நாம் புராணங்களையும் மத ஆதாரங்களையும் குற்றம் சொல்லுகின்றோமாம்.
நாம் மனிதனின் ஒழுக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் அறிவுப் பொருத்தத்திற்கும் உதவி செய்யக் கூடிய எந்தப் புராணங்களையும் வேண்டாமென்று சொல்லவில்லை.
நமது நாட்டையும், அறிவு வளர்ச்சியையும், ஒழுக்கத்தையும் பாழ்படுத்தியது நமது புராணங்களும், அவற்றைப் பிரசங்கம் செய்வதையும்
அச்சுப் போட்டு விற்பதையும் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட
பண்டிதர்களும் புஸ்தகக் கடைக்காரர்களுமே ஆவார்கள்.
குறிப்பு: 30.04.1929 பிறையாற்றில் /பொறையாற்றில்) நடைபெற்ற நாடார். வாவிபர்களின் 3-ஆவது மாநாடு தலைமையுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1929.
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
திருவாங்கூரில் S.N.D.P யோகம்
சுயமரியாதை மகாநாடு ஆயைப்பிரவேச மகாநா௫ சுயமரியாதை லகான்கைகள் ஒப்புக்வளான்னப்பட்டண
இப்போது உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை என்பது ஆகாயத்திலிருந்தோ மக்கள் பிறக்கும்பொழுது தாய் வயிற்றிலிருந்தோ உண்டாய்விடவில்லை. மதத்தினாலும், கடவுளினாலும், கோவிலினாலும் வேத புராணங்களினாலுமே உண்டாயிற்று. தீண்டாமை ஒழிய வேண்டு மானால் அதை வலியுறுத்தும் மதங்களும் கடவுள்களும், கோவில்களும்
அவற்றிற்கு ஆதாரமான வேத சாஸ்திர புராணங்களும் அடியோடு ஒழிந்தாக வேண்டும். இவைகளில் ஒரு சிறிது மீதி இருந்தாலும் மறுபடியும் அது வளர்ந்துவிடும். இதுவரையில் தீண்டாமையை ஒழிக்கப் பிரயத்தனப் பட்டவர்கள் யாரும் தீண்டாமைக்கு அஸ்திவாரமான காரியத்தை அறியாம
லும், சிலர் அதைப் பற்றி அறிந்தும் கவலை கொள்ளாமலும், சிலர் வேண்டு மென்றே தெரிந்து மறைத்துவைத்தும் மக்களையும் ஏமாறச் செய்துவிட்டுப் போய் விட்டார்கள், இப்பொழுதும் சில போலித் தீண்டாமை விலக்கு பிரசாரக்காரர்கள் அதை வலியுறுத்தும் மதத்தையும் கோவிலையும் சாமி களையும் அது சம்பந்தமான ஆதார புராணங்களையும் வைத்துக் கொண்டே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உங்களை ஏமாற்றுகின்றார்கள். உதாரணமாக பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பெயர் கொண்ட வர்ணாச்சிரமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் வேதம் மனுதர்ம சாஸ்திரம் என்பவைகள் உள்ள வரையிலும், தீண்டாமை ஒழியாது.
சூத்திரன் கடவுளை வணங்கியதற்காக பிராமணன் குழந்தை செத்துப் போனதாகவும், கடவுள் அவதாரமாகிய ராமன் என்பவன் அந்த சூத்திரனைக் கொன்ற பின் அந்தப் பிராமணக் குழந்தை உயிர் பெற்றெழுந்ததாகவும்
சொல்லும் இராமாயணமும் இராமன் என்னும் கடவுளும் உள்ளவரையிலும் தீண்டாமை ஒழியாது,
அது போலவே “பறையன்” என்னும் நந்தன் நெருப்பில் விழுந்த பிறகுதான் கடவுள் தரிசனை கிடைத்தது என்கின்ற பெரியபுராணமும் அதிலுள்ள கடவுள்களும் உள்ளவரையிலும் தீண்டாமை ஒழியாது!
குடி அரசு - 1929 () 246
ஜீவகாருண்யமும் அன்பும் ஒழுக்கமுமே பிரதானம் என்று சொன்ன பெளத்தரையும் சமணர்களையும் நாஸ்திகர்கள் என்னும் ஜீவ இம்சையும் இரக்கமற்ற தன்மையும் ஒழுக்கங்கெட்ட நிலைமையும் கொண்டுள்ளவர்: களை பெரியோர்கள் சமயாச்சாரிகள், ஆழ்வார்கள் என்று கொண்டாடும். புராணங்களும் சமயங்களும் உள்ளவரையிலும் தீண்டாமை ஒழிந்து, ஒழுக்கமும் அன்பும் மக்களுக்குள் ஏற்படாது.
உண்மையிலேயே கஷ்டப்படும் மக்களாகிய தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு இப்போதிருக்கும் “நரகத்தை”விட இனி வேறு நரகம் இல்லை. ஆத
லால் இந்த நரகத்திலிருந்து மீள வேண்டும் என்கின்ற ஆசை உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் கட்டாயம் உங்கள் மீட்சிக்கு விரோதமாய் இன்றும் உங்கள் முன் தோன்றும் மதத்தையும் அதன் ஆதாரங்களையும் அடியோடு வெறுத்துத்தள்ள வேண்டுமென்றும், சில மதப் புரட்டர்களும், அதனால் வயிறு வளர்ப்பவர்களும், அவர்களால் அமர்த்தப்பட்ட கூலிகளும் உங்களிடம் வந்து “மதத்தின் தத்துவம் அதுவல்ல” வென்றும் “புராணத்தின் கருத்து இதுவல்ல” வென்றும் அது “இடைச்செருகல்” “உட்கிடக்கை வேறு” *அதற்கு அகச்சான்று இல்லை” “இதற்கு புறச்சான்று இல்லை” “என் வருணாசிரமம் வேறு” *என் இராமன் வேறு” “என் கிருஷ்ணன் வேறு” என்றும் பேசி உங்களை மயக்கி ஏமாற்ற வருவார்கள் என்றும் அதை நீங்கள். கண்டிப்பாய் நம்பக் கூடாதென்றும் சொல்லிவந்து, உதாரணமாக சூத்திரன் கடவுளை ஸ்மரித்ததற்காக ராமன் அவனை கொன்றது என்கின்ற விஷயம் மத்தியில் பார்ப்பனர்களால் சேர்க்கப்பட்ட கதை என்று சொல்லி உங்களை:
சிலர் ஏமாற்றுவார்கள். ஆனால் அவர்களை நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேளுங்கள், அதாவது “சம்பூகனைக் கொன்ற இராமா! என்னைக் காப்பாற்று” என்று ஆழ்வார்கள் பாடின பாட்டு நாலாயிர பிரபந்தத்தில் இருக்கின்றதே. அதற்கு என்ன சொல்லுகின்றீர்கள்? என்றும், அந்த ஆழ்வாரையும், பிரபந்தத்தையும் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும், அந்த ஆழ்வார். புரட்டாழ்வாரா? அல்லது அந்த பிரபந்தம் புரட்டா என்றும் தைரியமாக கேளுங்கள்! அதோடு புத்தர் கடவுள் உண்டு என்று சொன்னார் என்றும்,
புத்தர் கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றும் சொல்லுபவர்கள். நாஸ்திகர்கள் என்றும் சில தற்குறிகள் உங்களிடம் பேசி விட்டுப் பார்ப்பனர் களிடம் கூலி பெறுகிறார்கள். ஆணால் அப்படிப்பட்டவர்களை நீங்கள் ஒன்று கேளுங்கள். அதாவது புத்தர் நாஸ்திகர், கடவுள் இல்லை என்று சொன்ன
பாதகர் என்று சொல்லி இருக்கும், இராமன் முதலிய கடவுள்களும், சமயாச்
சாரிகளும், நாயன்மார்களும், ஆழ்வாராதிகளும் ஆராய்ச்சி அற்றவர்களா அல்லது பொய்யர்களா அல்லது அயோக்கியர்களா? அல்லது அவர்களின் அவ்வித இராமாயணம், பாரதம், தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் முதலிய “வணங்கத் தகுந்த” புஸ்தகங்கள். பொய்யா? அல்லது இடைச்செருகலா?அல்லது அகச்சான்று புறச்சான்றுகள். அற்றவையா? அல்லது நீவிரும் நும் குழாங்களும்......ளா என்று கேளுங்கள்.
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கடைசியாக உங்களை யார் நாஸ்திகர் என்றாலும் பயப்படாதீர்கள் “ஆஸ்தி
கர் "களைப் போல் கூலிக்காக நாம் நாஸ்தீக பிரசாரம் செய்யவில்லை என்றும்,
நாஸ்தீகர் என்றால் வேத சாஸ்திர புராணங்களின் புரட்டுகளை வெளிப்படுத்து வதைத் தவிர வேறில்லை.ஆதலால் நானும் நீங்களும் மற்றும் சுயமரியாதை யையும், சமத்துவத்தையும் விடுதலையையும் வேண்டும் ஒவ்வொருவரும். கண்டிப்பாய் நாஸ்திகர்களே ஆகவேண்டும். அதில்லாமல் வேறுவழி யில்லை. யாராவது வந்து உங்களிடம் நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வதாகும் என்று சொல்லவந்தால் அதற்கும் நீங்கள் பயந்து ஏமாந்து போகாமல் தைரியமாக அவர்களை ஒன்று கேட்க வேண்டும். அதாவது கடவுள் என்றால் என்ன? நீ எதைக் கடவுள் என்று நினைத்துக் கொண்டு பேசுகின்றாய் என்று முதலில் கேட்க வேண்டும். இந்தக் கேள்வி கேட்டால் முதலில் எவனும் விழிப்பான். ஒருவன் சக்தி என்பான்; ஒருவன் ஜோதி என்பான்; ஒருவன் அருள் என்பான்; ஒருவன் அன்பு என்பான்; ஒருவன் அறிவு என்பான்; ஒருவன் உயிர் என்பான்; ஒருவன் ஆன்மா என்பான்; ஒருவன் சித்து என்பான்; ஒருவன் சத்து என்பான்; ஒருவன் சைதன்னியமென்பான்; ஒருவன் பதி என்பான்; ஒருவன் அழகு என்பான்; ஒருவன் இன்பம் என்பான்; ஒருவன் சைபர் என்பான், ஒருவன் நாமரூப குணம் இல்லாதது என்பான், ஒருவன் அது உன் மனதுக்கும் அறிவுக்கும் எட்டாதது என்பான், கடைசியாக சர்வசக்தியும் சர்வ வியாபகமும் சர்வ
தயாபரத்துவமும் அவனன்றி ஒரு அணுவும் அசையாத அதிகாரமும் பெற்ற ஒரு வஸ்து என்பான்;
இப்படியாக ஊமையன் கனாக்கண்டு சொல்வது போல் அவனுக்கும்
புரியாமல் நமக்கும் தெரிய மார்க்கமில்லாமல் உளறிக்கொட்டுவான். கடைசியாக இந்த பயித்தியக்காரனுடன் இவ்வளவு நேரம் ஏன் பேசினோம்?
நேரம் வீணாகப் போயிற்றே என்று தான் உங்களுக்குத் தோன்றும். ஆனாலும் சோர்வடைந்துவிடாமல் அப்பேர்ப்பட்ட கடவுளை பரப்ப உன்னை அனுப்பினது யார்? நீ நினைத்துக் கொண்டிருக்கும் கடவுளா? அல்லது நீயாகவே வந்தாயா? என்று கேளுங்கள், அவன் கடவுள் அனுப்பித்தான் வந்தேன் என்றால், அந்தக் கடவுள் இது தன்னால் ஆகாத காரியம் என்று கருதி உனக்கு வக்காலத்துக் கொடுத்து எம்மிடம் அனுப்பினாரா? என்று கேளுங்கள்! அல்லது “நானாகவே வந்தேன்” என்றால் அப்பொழுது உனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லையா அவர் தன்னை எல்லோரும் அறியும்படி செய்து கொள்ளமாட்டாரா? அன்றியும் கடவுள் திருவுளம் இல்லாமல் ஒருவன் கடவுளை இல்லை என்று சொல்லிவிடமுடியுமா? என்று கேட்பதோடு “பைத்தியக்காரா! உனக்குக் கடவுளைப் பற்றி இப்போதுதான் அ.ஆ தெரியும், எங்களுக்குக் கடவுளைப் பற்றி நாங்கள் என்று தீண்டாதவர்கள் என்று சொல்லப்பட்டோமோ அன்று முதலே தெரியும், ஆதலால் வேறு எங்காவது போய் உன் வயிற்று பிழைப்புக்கு இடம் பார்த்துக் கொள்” என்று மரியாதையாய்ச் சொல்லி அனுப்பிவிடுங்கள் என்றும்
குடி அரசு - 1929 () 248
சொன்னதோடு நாஸ்தீகம் என்கின்ற பழிப்புக்கு பயந்து கொண்டோ கலைகள் ஓவியம் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு பயந்து கொண்டோ தீண்டாமை கடவுள் செயல் என்பதாக முட்டாள்தனமாக கடவுளை நம்பிக்கொண்டோ நீங்கள் உங்கள் சுயமரியாதை முயற்சியில் அதாவது உங்கள்மீது கடவுள்.
பேராலும் மதத்தின் பேராலும், வேத சாஸ்திர புராணங்கள் பேராலும் - சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் இழிவிலிருந்து விடுதலை பெற ஒரு நிமிஷமும் தயங்காதீர்கள், கடவுள் அல்ல, மதம் அல்ல, வேத சாஸ்திர புராணமல்ல; சமயச்சாரியார்; நாயன்மார்கள்; ஆழ்வார்கள் அவதாரங்கள். அல்ல, மற்றும் உங்கள் உயிர்கள் அல்ல எதுவானாலும் சரி, அவைகளை யெல்லாம்விட சுயமரியாதையே பிரதானம் என்று எண்ணினீர்களானால் கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள்; அதில்லாதவரை இப்படியே இருப்பீர்கள்.
குறிப்பு : 08.05.1929 திருவாங்கூரில் நடைபெற்ற சுயமரியாதை - ஆலயப்பிரவேச மாநாடு - சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1929
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மலணையானமும் மானவியாவம்
தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசியலிலாவது மத இயலிலாவது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்துவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரசாரம் செய்வது வழக்கம். அது மாத்திரமல்லாமல் தாங்களாக தனித்து வெளியில் புறப்பட்டு பிரசாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடை மேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம். இதுவும் சமீபகாலம்வரை பாமர மக்கள் முழு மோசமா யிருந்த காலம் வரையில்தான் செல்லாய்க் கொண்டு வந்தது. இப்போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செலாவணி ஆவதற்கில்லாமல் செல்லுமிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல் அவர் சாயமும் வெளுத்து “என் ராமன் வேறே; என் வருணாச்சிரமம் வேறே” என்று சொல்லி கொண்டு தப்பித்துப் போகப் பட்டபாடு வெகு பாடாய்ப் போய்விட்டதும்; பிறகு திரு பஜாஜ் அவர்களை தருவித்து அவர்களுடன் திரிந்ததில் உள்ள யோக்கியதையும் போய் அவர் தலையில் கைவைத்துக் கொண்டு திரும்பியதும் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள்
தாங்கள் தனித்து போக முடியாமல் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாண:
சுந்தரம், முத்துரங்கம், ஓ.கந்தசாமி, பாவலர், ஜயவேலு, ஷாபிமுகமது, பஷீர் அகம்மது முதலிய நபர்களை கூட்டிக் கொண்டு வெளியில் போவதும், அங்கும் இப்போது எந்த ஊருக்கு போனாலும் எவ்வளவு பயந்து ஒடுங்கி அடக்கமாகப் பேசினாலும் இவர்களைப் பேசவொட்டாமல் திருப்பி அனுப்பிக்கப்படுவதும் பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிப் பத்திரிகைகளும் எவ்வளவுதான் மறைத்தாலும் தாராளமாய் வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றது. இந்த இரண்டு மூன்று வாரமாய் திரு.சீனிவாசய்யங்கார். கம்பெனி செல்லுமிடங்கள் பலவற்றில் கூட்டம்போட முடியாமல் திரும்புவதும், கூட்டம் கலைக்கப்பட்டு வருவதும் அவர் கூடச் செல்பவர்களுக்கு நடக்கும் மரியாதைகளும் சேலம், திருச்சி, கோயமுத்தூர்
குடி அரசு - 1929 () 250
முதலிய ஊர்களில் நடந்த சம்பவங்களே போதுமானது. இவ்வளவும் போதாமல் இந்த வருஷத்திற்கு திரு பண்டிட் மாளவியா அவர்களைத்
தருவித்து கடவுளுக்கும் கோயிலுக்கும் மதத்திற்கும் ராமாயணத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதென்று சொல்லி பிரசாரம் செய்யச் செய்ததில் அவர். சென்றவிடங்களிலெல்லாம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுத் திணற வைத்து கடைசியாகக் கூட்டம் கலைந்து வீட்டுக்குத் திரும்பும் படியாகி விட்டது. பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் பண்டிதரைப் பிடித்து அவர் தலையில் வருணாசிரமத்தையும் கோவிலையும் மதத்தையும் இராமனையும் இராமாயணத்தையும் தூக்கி வைத்து எவ்வளவோ விளம்பரம்.
செய்தும் ஒரு காசுக்குக் கூட விற்க முடியாமல் போனதோடு திரு.மாளவியா
வுக்கு கொஞ்சநஞ்சம் இருந்த யோக்கியதையும் அடியோடு கவிழ்ந்து விட்ட தென்றே சொல்லலாம்.
உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில்பிரவேச மகாநாட்டில் தலைமைவகித்து பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம். ஆனால் அந்த விஷயங்களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது.
அதாவது 11- ௨ இந்து பத்திரிகை வேண்டுமென்றே அயோக்கியத் தனமாய் அடியோடு மறைத்துவிட்டு “உணர்ச்சியுள்ள வாதங்கள் நடந்தன”
என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.
10- ௨ “சுயராஜ்ஜியா”வில் “மாளவியாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆக்ஷேபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களிலிருந்து புறப்பட்டன” என்றும் “கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டாயிற்று” என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது.
12-ந் தேதி “மித்திர” னில் திரு.மாளவியா பேசின கான்பரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர்மானம் செய்திருப்பதாகவும் பிரீ பிரசின் பேரால் போடப்பட்டிருக்கிறது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும்
பதில்களும் இன்னவையென்று ஒரு பத்திரிகையாவது எழுதவில்லை என்றாலும் திருமாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்கமாட்டார் என்றே சொல்லலாம். திரு.மாளவியா ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம். எனக்கு சாஸ்திரம் தெரியும் என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிருஸ்தவனையோ முகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன் மாளவியாஜி அதற்கு சாஸ்திரம் பார்த்துதான் சொல்ல வேண்டுமென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜீ “நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா?” என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவியாஜியை மூர்ச்சையடையச் செய்துவிட்டது. எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர்.
எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக்கூடும்.
குடி அரசு - தலையங்கம் - 12.05.1929
குடி அரசு - 1929 () 252
வாழ்க! வாழ்க!!
டாக்டர் சுப்பராயண் வாழ்க!!!
முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நாம் எதிர்பார்த்தது போலவே தமது ஆதிக்கத்தில் உள்ள இலாக்காக்கள் மூலம் நமது பெண்மணிகளுக்கு மூன்றாவது பாரம் வரையில் இலவசமாய்க் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைந்து போற்றுவதுடன் மனமார வாழ்த்துகின்றோம். மற்றும் தீண்டாதவர்கள் என்பவர்களுக்கும் விதவைகள் என்பவர்களுக்கும் கல்வி விஷயத்தில் ஏதாவது உதவி செய்வதுடன் பெண்கள் உபாத்தியாயர் களாவதற்குத் தகுந்தபடி ஏராளமான போதனாமுறைப் பாடசாலைகளையும் ஏற்பாடு செய்யவேண்டுமாய் விழைகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.05.1929
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
கோனனத்தில் சுயமரியாதைப் பிரசாரம்
சகோதரர்களே!
இங்கு கூடியிருக்கும் உங்களில் பெரும்பாலோர் எனக்குப் பழைய நண்பர்களாகவே காணப்படுகின்றீர்கள்.வியாபார முறையில் இந்த ஊர் குமார்.
30 வருஷத்திய பழக்கமும் அதிகமான பரஸ்பர விஸ்வாசமும் உள்ள ஊராகும். நான் வியாபாரம் நிறுத்திய இந்த 10 வருஷ காலத்திற்குள்ளும் இந்த ஊருக்கு பல தடவை வந்து பல விஷயங்களைப் பற்றிச் சொற்பொழிவுகள்
நிகழ்த்தியிருக்கின்றேன். ஒத்துழையாமை பற்றியும் தீண்டாமை விலக்கு விஷயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை தெருவில் நடக்க விட வேண்டும் என்பது பற்றியும் இதே இடத்தில் பலதடவை பேசியிருப்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். சுமார் இரண்டு வருஷத்திற்குள்ளாக இந்த ஊரில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கல்பாத்தியில் பார்ப்பனர்கள் குடி இருக்கும் வீதிகளில் ஈழவர்கள் தீயர்கள் என்று சொல்லப்பட்ட சகோதரர்கள் நடக்க பாத்தியம் ஏற்பட்டிருப்பதும் கடைவீதியில் செரமாக்கள் என்னும் மக்கள் நடக்கவிடப்பட்டிருப்பதும் ஒரு பெரிய மாறுதல் என்று சொல்லக் கூடுமானாலும் இன்னமும் அநேகக் காரியங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. சில இடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று சொல்லப்படுபவர்களே அத்தெரு வழிகளில் நடக்க சம்மதிப்பதில்லை என்று சொல்லப்படுகின்றது. ஏன் என்றால் அவர்கள் நடக்க பயப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களுக்கு தைரியமூட்டி பயத்தை தெளிவிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு நம்முடையதென்பதை நாம் உணருவதில்லை.
இன்று நான் பேசுவதற்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் தற்கால தேசீய நிலைமை என்பதாகும். தேசீய நிலைமை என்பதற்கு நமது தேசத்தினுடையவும் தேச மக்களுடையவும் நிலைமையைப் பற்றியும் அக்கம் பக்கமுள்ள தேசங்களின் நிலைமைக்கும் நமது தேசத்தின் நிலைமைக்கும் என்ன வித்தியாசம் என்பது பற்றியும் அதற்கு காரணங்கள். என்ன என்பது பற்றியுமே நான் பேச வேண்டும் என்று நீங்கள் கருதுவதாக நான் நினைக்கின்றேன். சகோதரர்களே! ஒவ்வொரு நாடும் இது சமயம் தனது பழைய நிலைமையில் இருந்து விடுபட்டு புதிய முறையில் முன்னேற வேண்டும் என்கின்ற ஆசை கொண்டு அதிலேயே ஈடுபட்டிருக்கின்றன. இவ்வழியில் சில நாடுகள் கொஞ்ச நாளைக்கு முன்பே இறங்கி வெற்றி பெற்று
குடி அரசு - 1929 () 254
பழமையைச் சற்றும் லக்ஷியம் செய்யாமலும் வெறுத்தும் அழித்தும் புதுமைகளில் இறங்கி எவ்வளவோ முற்போக்கடைந்துவிட்டன. சில நாடுகள் பழமையை அழிக்கும் வேலையில் இப்போதுதான் இறங்கி அதிலேயே வெகு கஷ்டத்துடன் ஈடுபட்டு வேலை செய்வதன் மூலம் வெற்றியடைந்தும் வருகின்றன. ஆனால் நமது நாடோ பழமையிலிருந்து ஒரு சிறிது கூட மாற்றமடையக்கூடாது என்னும் குரங்கு பிடிவாதத்தில் இறங்கி பழமையைக் காப்பாற்றப் பாடுபடுவதோடு அதற்கும் முந்தின பழமையை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கி வெகு தீவிரமாய் வேலை செய்கின்றது. இந்த உபயோகமற்றதும் பிற்போக்கானதுமான காரியத்திற்குச் சிலர் நமது மக்கள்
முன் பெரிதும் பொருளற்ற விதத்தில் மதத்தையும் கடவுளையும் கொண்டு வந்து போட்டுக் கொண்டு வெகு பாடுபட்டு குழப்பி வருகின்றார்கள்
இவர்கள். பாமர மக்கள் முன்னிலையில் “மதத்திற்காக எதையும் - தியாகம் செய்வேன் உயிரையும் விடுவேன்” என்று வெறும் ஆவேசப் பேச்சு பேசுவதன் மூலமே மக்களின் அறிவைக் கெடுத்து நாட்டின் முற்போக்கை: நாசப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றார்கள். “கடவுளுக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆஸ்தீக மகாநாடு கூட்டுங்கள்” என்பவர்களும் “தர்மங்களுக்கு ஆபத்து வந்து விட்டது கூட்டுங்கள் வருணாசிரம மகாநாடு” என்பவர்களும் “புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் ஆபத்து வந்துவிட்டது, கூட்டுங்கள் சமய மகாநாடு” என்பவர்களும் இப்போது
மிகுதியும் மலிந்து விட்டார்கள்.இந்தப்படியே அடிக்கடி மகாநாடுகள் கூட்டித் தீர்மானங்கள் செய்து கொண்டுமிருக்கிறார்கள். நாட்டின் நிலையைப் பற்றிய கவலையில்லாத சோம்பேறிகளினுடையவும் சுயநல பண்டிதர்களுடையவும் தொழில் இதுவென்றால் ஆங்கிலம் படித்தவர்களென்னும் ஒரு கூட்டத்தார். மற்றொரு பக்கத்தில் “தேசத்திற்கு இது சமயம் சுயராஜ்ஜியம் மிகவும் அவசியம்” என்று கூப்பாடு போட்டுக் கொண்டு அதற்கேற்றபடி பல ஆள்களை கூலிக்குப் பிடித்து ஏவிவிட்டு தேசம் போச்சுது என்றும் தேசீயம் போச்சுது என்றும் தேசமே பிரதானம் என்றும் கூப்பாடு போடச் செய்து அரசியல் என்றும் காங்கிரசென்றும் தேசீயமென்றும் மகாநாடுகள் கூட்டி பொது மக்கள் பேரால் தீர்மானங்கள் செய்யத் திரிகின்றார்கள். ஆனால் இக்கூட்டத்தார் யார் என்று பார்த்தால் தங்கள் குழந்தை குட்டிகளுக்கு வெள்ளைக்காரர்கள் பெயர் வைத்துக் கொண்டும் வெள்ளைக்கார ஆதிக்கத்
திற்கு உதவி செய்து பிழைப்பதற்கு தங்கள் பெண்டு பிள்ளைகளைத் தயார் செய்து கொண்டும், வெள்ளைக்காரர் பூட்சு துடைப்பதில் தங்கள் வாழ்க் கையை நடத்திக் கொண்டும் “வெள்ளைக்காரர்களை விரட்ட வேண்டும்” “வெள்ளையர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று கூப்பாடு போடு கின்றவர்கள் ஒரு சிலரும், தொட்டதெற்கெல்லாம் வெள்ளைக்காரர்கள் மீதே பழி போட்டு “வெள்ளைக்கார ஆட்சியிலேயே நமது நாடு அநியாயமாய் பாழாய்விட்டது” என்றும் “என்ன கஷ்டப்பட்டாவது அதை ஒழித்துவிட்டால் பிறகு நமக்கு எல்லாம் சரிபட்டுப் போகும்” என்றும் ஆதலால் இன்ன
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
இன்னாருக்கு ஓட்டுக் கொடுங்கள் என்றும் சொல்லிக் கொண்டு உண்மை யான காரணத்தை மனதார மறைத்து கூலிக்கு கூப்பாடு போடுகின்றவர்கள் ஒரு சிலரும் ஆவார்கள்.எனவே இம்மாதிரியான சூழ்ச்சிகளிலேயே நாட்டின் கவனம் முழுவதையும் ஈடுபடச் செய்து விட்டு அவசியமான காரியத்திற்கு இடையூறுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றதே இது சமயம் நமது
நாட்டின் தற்கால தேசநிலைமையாக இருக்கின்றது. இந்த நிலைமையை அடியோடு மாற்றி மக்களை உண்மையான தேசீய முன்னேற்றத்தில் ஈடுபடச் செய்வதற்கென்றுதான் தேசீய சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது. எனவே இம்மாதிரி கொள்கையில் ஈடுபட்டிருக்கும் இவ் வியக்கம் முன் சொல்லப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் கூட்டத் தார்களுக்கு பெரிதும் அடியோடு விரோதமாயிருப்பதும் அவர்களால் பழிக்கப்பட்டு திரித்துக் கூறி எதிர்பிரசாரம் செய்யப்படுவதும் உண்மை உணர்ந்தவர்களுக்கும் அறிஞர்களுக்கும் சிறிதும் அதிசயமாகத் தோன்றாது. இப்போது மேற்கண்ட இரண்டு மூன்று கூட்டத்தார்களும் தனித்தனியே புறப்பட்டு ஊர் ஊராய் திரிந்து பிரசாரம் செய்து வருவதை நீங்கள் தினம் பத்திரிகையில் படித்திருக்கலாம்.
வருணாசிரமக்காரர்கள் கூட்டம் கூட்டி அங்கு பேசுவது என்ன என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.
“இந்து மதமே உலகத்தில் சிறந்த மதம், இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம், வேதத்தின் சாரம் மனுதர்ம சாஸ்திரம், மனுதர்ம சாஸ்திரத்தின்
முக்கியம் வருணாசிரம தருமம், வருணாசிரமத்தின் தத்துவம் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன் ஆகிய பிறப்பில் ஜாதி
பிரிக்கும் கொள்கை, ஜாதிக் கொள்கையின் உண்மை பிராமணன் கடவுள். முகத்தில் பிறந்தவன், க்ஷத்திரியனும் வைசியனும் கலியுகத்தில் கிடையாது.
சூத்திரன் கடவுள் பாதத்தில் பிறந்தவன்.அவன் பிராமணர்களுக்கு அடிமை யாயிருந்து தொண்டு செய்யவே கடவுளால் இழிவான ஸ்தானத்திலிருந்து பிறப்புவிக்கப்பட்டவன். பிராமணனுக்கு அடிமையாயிருந்து தொண்டு செய்து வரவேண்டியவன். அவனது பிறவித் தொழில் தர்மத்தைச் செய்யா விட்டால் சண்டாளனாகின்றான்.
சூத்திரன் படிக்கக் கூடாது: பணம் சேர்க்கக் கூடாது; சுதந்திரமாய் நடக்கக் கூடாது. சூத்திரன் மேற்கண்ட தனது கடமையிலிருந்து விலகியதால் பிராமணனும் தன் கடமையிலிருந்து விலகி சுயநலக்காரனாகவே வேண்டிய தாயிற்று. பெண்களும் விதவைகளும் நாடார்களும் சங்கங்கள் வைத்து சுவ தந்திரியம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் சொல்வதோடு உடன்கட்டையேறும் வழக்கம் ஒழிந்ததைப் பற்றி வருத்தப்படுவதும், “பெண்கள் படிக்கக் கூடாது, விதவைகள் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது, அவர்களுக்குச் சொத்துரிமை இருக்கக்கூடாது. குழந்தை பருவத்தி லேயே கல்யாணம் செய்ய வேண்டும், சூத்திரன் என்ற சொல் மிகவும்
குடி அரசு - 1929 () 256
பரிசுத்தமானது, சூத்திரன் பிராமணனுக்கு அவசியமானவன்” என்றும்
மற்றும் ஆதலால் “சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டும்” என்றும் இது போன்றவைகளையே பேசுகின்றார்கள். இதை அனுசரித்த தீர்மானங்களும் செய்து பொது ஜனங்களுக்கும் சர்க்காருக்கும் அனுப்புகிறார்கள். வருணாசிரமக்காரர்கள் நிலை இப்படியானால், சமயக்
காரர்கள் என்பவர்களோ “சைவ சமயமே உண்மை மதம். சிவனே முழு முதற்கடவுள். வேத ஆகமமே அதற்கு ஆதாரம் என்பதும்.
புராணக்காரர்களோ “சமயம் போச்சுது” “சமய பெரியாருக்கு ஆபத்து” “சமய நூல்களுக்கு ஆபத்து” “கலைகளுக்கு ஆபத்து” என்பதும்
மற்றும் “10 வருஷத்துக்கு முன்னால் அவினாசியில் முதலை விழுங்கிய குழந்தையை முதலை வயிற்றிலேயே வளரச் செய்து 14 வருஷ வாலிபனாய் அந்த முதலை வாயிலிருந்தே கக்கும்படி செய்த 3-வயதுள்ள பெரியோர். களையும், எலும்பை பெண்ணாக்கிய 4-வயதுள்ள பெரியோர்களையும் ஒரு பாட்டில் ஊமைப் பெண்ணை பேச வைத்த 5- வயதுள்ள பெரியோர் களையும், பனை ஓலை நறுக்கை பிரவாக வெள்ளத்தில் எதிர்நீந்திப் போகும் படி செய்த 6-வயதுள்ள பெரியோர்களையும், எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் தோல்வியுறச் செய்து கழுவேற்றக் காரணமாயிருந்து சைவத்தை காப்பாற்றிய ஜீவகாருண்ணிய சீலர்களாகிய சைவ பெரியோர்களையும்
குற்றம் சொல்கின்றார்களே! இவைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக் கலாமா” வென்றும் “ஆதலால் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வேண்டும்” என்றும்.
“60 ஆயிரத்து மூன்று பெண்டாட்டிகளை மணந்து 60 ஆயிரம் வருஷம் வாழ்ந்தும் பிள்ளையில்லாமல் யாகத்தில் பக்குவம் செய்த பாயசத்தை குடித்தவுடன் கர்ப்பமாகி பெற்ற பிள்ளையாகிய ராமனான மகா விஷ்ணுவை குற்றம் சொல்கின்றார்களே, உழும்போது கலப்பையில் பட்டு பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பரிசுத்த சீதையாகிய மகா லட்சுமியை குற்றம் சொல்லுகிறார்களே” என்றும் “ஆதலால் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க வேண்டும்” ஆதலால் “ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டு கொடுக்கக் கூடாது” என்றும் பிரசாரம் செய்வதும் வருணாசிரம சமய
புராணக் காரர்கள் தொல்லை இவைகளானால் இனி,
அரசியல், தேசீய காங்கிரஸ்காரர்கள் என்பவர்களோ “தேசம் பிரதானம், வகுப்பு வித்தியாசங்களையும் உயர்வு தாழ்வு கஷ்டங்களையும் மறந்துவிடுங்கள். முதலில் வெள்ளைக்காரனை ஒழித்துவிட்டு அப்புறம் நாம் நமக்குள் இருக்கும் தகராறுகளை தீர்த்துக் கொள்ளலாம், ஜஸ்டிஸ் கட்சியார். கள் வகுப்புவாதம் பேசுகின்றார்கள், சர்க்கார் உத்தியோகத்தை ஒப்புக் கொள்ளுகின்றார்கள்,மந்திரிகளை ஆதரிக்கின்றார்கள், சர்க்காருக்கு உதவி செய்கின்றார்கள், சைமன் கமிஷனை வரவேற்று அவர்களிடம் குறைகளைச் சொல்லி தேசத்தின் மானத்தைக் கெடுத்துவிட்டார்கள். இந்த காரணங்களால்
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அவர்கள் தேசத் துரோகிகளாய்விட்டார்கள். அன்றியும் கடவுளையும் மதத்தையும் கண்டிக்கும் சுயமரியாதை இயக்கத்துடன் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் நாஸ்திகர்களாகி விட்டார்கள், மதத் துரோகிகளாகி விட்டார்கள். ஆதலால் தேசத்துரோகத்தையும், மதத் துரோகத்தையும் நாஸ்திகத்தையும் மேற்கொண்டுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு
ஓட்டுச் செய்யாதீர்கள்” என்றும்,
“சுயமரியாதை இயக்கம் காங்கிரசை வைகின்றது. மதத்தை அழிக்க வேண்டும் என்கின்றது. கோயில்களை கெடுக்க வேண்டும் என்கின்றது. ஆதலால் அந்த நாஸ்திக இயக்கத்தில் யாரும் சேராதீர்கள், அதை வளர்க்க விடாதீர்கள்” என்றும் பிரசாரம் செய்கின்றார்கள்.
சகோதரர்களே!
இந்த இருபதாவது நூற்றாண்டில் அதாவது உலக அனுபவமும் அறிவு வளர்ச்சியும் மக்களுக்கு தாராளமாய் கிடைக்கக் கூடியதும் சையன்ஸ் அறிவும் மின்சார சக்தியின் வேலையும், பழைய உலகத்தையே தலைகீழாய் கவிழ்த்துக் கொண்டிருப்பதுமான இந்த காலத்திலேயே இக்கூட்டங்கள் இவ்வளவு தைரியமாய் வெளிக்கிளம்பி உலகத்தை ஏமாற்றத் துணிந்திருப் பதை நினைக்கும்போது அய்யோ! பாவம்! என்று கருதத்தக்க ஆயிரம் இரண்டாயிரம் வருஷத்திற்கு முன்னிட்ட பழங்காலமாகிய புத்தர், சமணர் காலத்தில் இக்கொடும்பாவிகளான பாதகர்கள் என்ன என்னவெல்லாம் செய்திருக்கமாட்டார்கள்? என்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள். கடவு ளைப் பற்றிப்பேசும் ஒவ்வொரு அயோக்கியனும் கடவுள் சர்வசக்தி உள்ளவர் என்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு மாத்திரம்தான் கடவுள் மற்றவனுக்கு இல்லையென்றும், தான்தான் மற்றவனுக்கு காட்டிக் கொடுத்து அக்கடவுளை காப்பாற்ற புறப்பட்டவன் என்றும் நினைத்துக் கொண்டு பேசுவதை பார்க்கும்போது அத்தகையவர்களை எவ்வளவு அறிலீலிகள் அல்லது அயோக்கியர்கள் என்று நினைக்க வேண்டி இருக்கின்றது.
கடவுளைக் காப்பாற்றுவதும் கடவுள் இருப்பதாக உலக மக்கள் அறியச்செய்வதும் என்கின்ற ஒரு தொண்டை ஒருவன் ஏற்றுக் கொண்டு தன்னை மகா புத்திசாலி என்றும் தான் ஒரு பெரிய பரோபகாரியென்றும் சொல்லிக் கொண்டு எவனாவது வெளியில் புறப்பட்டு உங்களுக்கு உபதேசம் செய்யவந்தால் நீங்கள் அதைக் கடவுள் தொண்டென்று நினைக்கிறீர்களா? அல்லது கடவுளை பரிகாசம் செய்து பிழைக்க வேண்டிய நிலையில் உள்ள வயிற்றுப் பிழைப்புத் தொண்டு என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கின்றேன் ஒரு சமயம் யாராவது தங்கள் அறிவீனத்தால் இது கடவுள் தொண்டாயிருக்கலாம் என்று நினைப்பார்களேயானால் அவர்கள் கடவுளைப் பற்றி நினைத்திருக்கும் எண்ணம் தான் என்ன என்று யோசித்துப் பாருங்கள். திரு.சீனிவாசய்யங்கார் தலைவர் என்பதைப் பரப்ப ஒருகூலிக் கூட்டம் அவர் பின்னால் திரிந்து கொண்டு சென்றவிடங்களிலெல்லாம்
குடி அரசு - 1929 () 258
“சீனிவாசய்யங்கார் என்று ஒருவர் உண்டு:அவர் இந்தியாவுக்கே தலைவர்” என்று கூப்பாடு போட்டு வயிறு வளர்ப்பது போல் கடவுள் என்று ஒருவர். உண்டு அவர் சர்வசக்தி உள்ளவர் என்று சொல்வதன் மூலம் தான் கடவுளை: நிலை நிறுத்தவோ அல்லது மக்கள் உணரும்படி செய்யவோ வேண்டியது அவசியமா? என்று கேட்கின்றேன்.
அன்றியும் அதற்காக மனிதன் பூசை உற்சவம் வேண்டுதலை ஆகியவைகளுக்கு ஆக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியது அவசியமா? என்று கேட்கின்றேன். பெரும்பான்மையான
மக்கள் மழைக்கும் வெய்யிலுக்கும் ஒதுங்கக் கூட இட நிழலும் மறைவும் இல்லாமலும் இரண்டு நாளைக்கு ஒரு வேளை ஆகாரமில்லாமலும் வாடி நடுங்கும்போது இந்த கடவுள்களுக்கு லக்ஷம் பத்து லக்ஷம் கோடி இரண்டு கோடி ரூபாய்களில் ஏழு சுற்று மதில் சுவர்களும் நூற்று இருபது உயர அடி கோபுரங்களும் ஆயிரங்கால் மண்டபங்களும் பத்து நூறு ஆயிரம் லக்ஷம்
தீபங்களும் தினம், மூன்று வேளை நான்கு வேளை, நடு ஜாம வேளை பூஜைகளும் வேண்டுமா என்று கேட்கின்றேன். வேலை செய்ய
சக்தியிருந்தும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாமலும் தொழில் இல்லாமலும் பெண்டுபிள்ளைகளுடனும் கிழடு கிண்டுகளுடனும் கர்ப்பத்துடனும்
சிங்கப்பூர், பினாங்கு, மோரீசு, தென் ஆபிரிக்கா, நெட்டால், ஆஸ்ட்டி ரேலியா,
பிஜி முதலிய இடங்களுக்கு நமது நாட்டிலிருந்து கும்பல் கும்பலாய் கூலிகளாக தூத்துக்குடி, பாம்பன், நாகப்பட்டணம், சென்னை, காக்கிநாடா, மசூலிப்பட்டணம், ரங்கூன் முதலிய துறைகளில் வாரம் பதினாயிரம் இருபதினாயிரம் கணக்காக கப்பல் ஏறிக்கொண்டிருக்கையில் இந்த கடவுள்களுக்கு வருஷம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவுசெய்து அபிஷேகம், அர்ச்சனை, கல்யாணம், கருமாதி, உற்சவம், ஊர் கோலம், தேர், திருவிழா, தாசி வேசிகள் ஆட்டம், அதிர் வேட்டு, பாணம், முத்தங்கி, வைரக்
கிரீடம், மரகத மாலை, தங்கப் பல்லக்கு, வெல்வெட்டு, சரிகை மெத்தை, திண்டு, தலையணை, வைப்பாட்டி, படுக்கை அறை ஆகியதுகளில் செலவு செய்து கொண்டிருக்க வேண்டியது அவசியமா என்று கேட்கின்றேன்.
இந்த மாதிரி வயிறெரிந்து யாராவது எடுத்துக் காட்டினால் அவர்களைப் பார்த்து பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் வெகு சுலபத்தில் நாஸ்திகர் என்று ஒரு வார்த்தையில் சொல்லி மக்களை ஏமாற்றி விடுவார்கள். எனக்கு அதைப்பற்றி கடுகளவுகூட பயமில்லை. இப்படிச் சொல்லுவது நாஸ்திகமானால் தூக்கு மேடையில் இருந்து கொண்டுகூட நான் நாஸ்திகன்தான் அதுவும் நல்ல பரிசுத்தமான நாஸ்திகன்தான் என்று கூப்பாடுபோட்டுச் சொல்லிக்கொள்ள தயாராயிருக்கின்றேன். என்னைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். ஆனால் இப்படி ஒரு கூட்டம் கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்ப்பதன் மூலம் நாடும் நாட்டு மக்களும் மூடர்களாகி பாழாக இன்னும் எத்தனை நாளைக்குப் பார்த்துக் கொண்டிருக்க போகின்றீர்கள் என்பதுதான் எனது கவலையும் சங்கடமுமாகும்.
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
இது போலவேதான் மதத்தைப் பற்றியும் நான் சொல்வதை சிலர் மதத்
துரோகம் என்கின்றார்கள். பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு
நீதியும் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி அது “கடவுளை நேரே கொண்டுவந்து காட்டி மோக்ஷத்
திற்கு அழைத்துச் செல்ல செய்யும் மதமாயிருந்தாலும் சரி அல்லது அது நம்மையே கடவுளாக்கும் மதமாயிருந்தாலும் சரி, அதை அழிக்க வேண்டி
யதும் அழிக்க முடியாவிட்டாலும் அந்த அழிக்கும் வேலையில் உயிரைவிட வேண்டியதும் உண்மையான மனிதனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றேன். இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை. என்பதை கண்டிப்பாய் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அது போலவே காங்கிரஸ் என்பதும் தேசீயம் என்பதும் சுயராஜ்யம் என்பதும் அக்கூட்டத்தாரின் சுயநலத்திற்கும் ஒரு கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்பிற்கும் ஏற்பட்டு நாட்டையும் ஏழை மக்களையும் பாழ்படுத்தி வரும் தொல்லைகள் என்றே சொல்லுவேன். தேசத்தின் பேரைச் சொல்லிச் சத்தம் போடும் ஒவ்வொருவரும் சுயநலத்திற்கும், சுயஜாதி நலத்திற்கும் குறி
வைத்துக் கொண்டு வேறு வழியில் பிழைக்க முடியாதவர்களை பிடித்து கூலி கொடுத்து கூப்பாடுபோடச் சொல்லும் சூழ்ச்சியே தவிர வேறில்லை. சுய ராஜ்யம் என்றால் என்ன என்று இதுவரை இவர்களில் யாராவது எடுத்துச் சொல்லி இருக்கிறார்களா? இவர்கள் கேட்கும் சுயராஜ்ஜியத்தால் ஏழைகளுக்
கும் தொழிலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் ஏதாவது பலன் காட்டி யிருக்கின்றார்களா? அல்லது இதுவரை போட்ட சுயராஜ்யக் கூப்பாட்டினால் ஏதாவது அவர்களுக்கு பலன் உண்டாக்கி இருக்கின்றார்களா? என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
எல்லாக் கூப்பாடுகளும் யாரை ஏமாற்றி யார் மந்திரியாவது? யார்: உத்தியோகம் பெறுவது? யார் பணம் சம்பாதிப்பது? யார் யாரை அழிப்பது? என்பதைத் தவிர சர்க்காரைப் பற்றியோ ஏழை மக்களைப் பற்றியோ நாட்டின் கதியைப் பற்றியோ யாருக்காவது கடுகளவு கவலையுண்டு என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்.
ஆதலால் தான் இப்போது சிலர் வெகு பிரயாசையுடன் தங்கள் தங்கள் சுயநலத்திற்கும் கூலி பிழைப்பிற்குமாக காப்பாற்ற முற்பட்டிருக்கும் போலிக் கடவுள்களையும் கோவில்களையும் மதங்களையும் சுயராஜ்யங்களையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின்றேனே ஒழிய மற்றபடி என் சொந்தத்தில் மேற்கண்டவைகளிடம் எனக்கு யாதொரு வெறுப்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு பாலக்காட்டில் 09.05.1929 ஆம் நாள் நடந்த பொதுக்கூட்டத்திலும் தொடர்ந்து பிற இடங்களிலும் பேசிய சொற்பொழிவுகளின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 19.05.1929
குடி அரசு - 1929 (M) 260
உங்களுக்கு
எது வேண்டும்
வகுப்பு வாதமா? சமக வாதமா?
வகுப்பு வாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும் சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது.
ம் பார்ப்பனரல்லாதார்களில் வேறுவழியில் அரை வயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழிதேடிக் கொள்வதற்கு முடியாதவர்களும் பார்ப்பனர்களுக்கு கூலிகளாயிருந்தும் அடிமைகளா
யிருந்தும் சமூகத் துரோகம் செய்தாலொழிய பிழைக்கவும் பெருமை பெறவும் முடியாதவர்களுமே பெரிதும் அவர்கள்கூட இருக்கின்றார்களே ஒழிய மற்றபடி யோக்கியமும் பொறுப்பும் சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ளவர்களில் எவரும் பார்ப்பனர்கள்கூட இல்லை என்றும் நாம் பலதடவை களில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம்.
இதன் உண்மைகள் முக்கியமாக இந்த இரண்டு மூன்று வருஷத்திய காங்கிரஸ் நடவடிக்கைகளினால் தாராளமாய் வெளியாயிருப்பதும் இதனால் நமது நாட்டில் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு எவ்வளவு மானங் கெட்டானாலும் பார்ப்பன அடிமைகளும் கூலிகளும் தவிர வேறு பொறுப்
புள்ள யாரும் வெளியில் வர யோக்கியதை இல்லாமல் போயிருப்பதுமே போதுமான உதாரணமாகும்.
மேலும் இன்றைய தேதியில் நமது நாட்டில் காங்கிரஸ் தலைவர்
களாகவும் காங்கிரஸ் முக்கியஸ்தர்களாகவும் காங்கிரஸ் பிரசாரகர்களாகவும் விளங்குபவர்கள் யார் என்று பார்ப்போமானால் திருவாளர்கள் எஸ்.சீனி வாசய்யங்காரும் சத்தியமூர்த்தியும் முதல் வரிசையிலிருப்பவர்களாவார்கள்.
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அதாவது காங்கிரசின் அபிப்பிராயம் இன்னதுதானென்று சொல்வதற்கும், காங்கிரஸ் அபிப்பிராயம் இன்னதாகத்தான் இருக்க வேண்டும் என்று அதிகார தோரணையில் சொல்லி திட்டம் ஏற்படுத்துவற்கும் உரிமை யுள்ளவர்கள் இந்தக் காரியத்தில் மாத்திரம் வேறு எந்த பார்ப்பனரல்லா தாரையும் அவர்கள் சேர்த்துக் கொள்ளவும் முடியாது. மற்றபடி யாருக்கும் இந்த காரியங்களில் அதிகாரம் கொடுக்கவும் முடியாது.
அவர்களுக்கு அடுத்தாற்போல் திருவாளர்கள் ஓ.கந்தசாமி
செட்டியார், முத்துரங்க முதலியார், வரதராஜுலு, கல்யாணசுந்தர முதலியார், மயிலை முதலியார், ஏவலர் என்கின்றவர்கள் பார்ப்பனரல்லாத சமூகத்தின் பிரதிநிதிகளாகவும், திருவாளர் ஜயவேலு என்பவர் தீண்டப்படாதவர்கள் என்கின்ற சமூகத்தின் பிரதிநிதியாகவும், திருவாளர் குழந்தை என்பவர். கிருஸ்தவ சமூகத்தின் பிரதிநிதியாகவும், ஜனாப்புகள் ஷாபிமகமது சாயபு, அமித்கான் சாயபு, பஷீர் அகமட் சாயபு என்பவர்கள் மகமதிய சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் காங்கிரசின் இரண்டாவது அணியில் இருப்பவர்கள். இவர்களுக்கு திருவாளர்கள் அய்யங்காரும் அய்யரும் சொல்வதற்குப் பின்னாலிருந்து ஆமா சாமி போடவும் ஆடு என்று சொல்லுகின்றபடி ஆடவும் “ஸ்ரீனிவாசய்யங்கார்தான் நமது அரும்பெரும் தலைவர்” என்று சொல்லி மேடைகளிலும் பத்திரிகைகளிலும் பேசவும் எழுதவும் தவிர காங்கிரசின் பேரால் வேறு எவ்வித அதிகாரமும் கிடையாது என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும்.
மேலும் இக்கூட்டத்தில் காங்கிரசிலும் தேசீயத்திலுமே உடல் பொருள். ஆவி வாழ்க்கையாகியவையெல்லாம் வைத்துக்கொண்ட உயர்திருவாளர்கள் பி.வரதராஜுலு வி.கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் மாத்திரம். தங்களுக்கு இஷ்டமில்லையானால் காங்கிரசில் ராஜீனாமாக் கொடுக்கவும் வேறு வழியில்லையானால் மறுபடியும் தாங்களாகவே போய்ச் சேர்ந்து கொள்ளவும் மாத்திரம் பூரண சுயேச்சை உரிமை வைத்துக் கொண்டிருக்கின்றவர்கள். மறு படியும் இவர்கள் சேரப்போகும் போது அவர்கள் ஆக்ஷேபணை சொல் லாமல் சேர்த்துக் கொள்வதே தங்களுடைய மதிக்கத்தகுந்த சொல்வாக் கென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள்.
மற்றபடி பிரசாரக்காரர்கள் என்பவர்களைப் பற்றி நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இங்கு ஒருவருமிருக்க மாட்டார்கள் என்றே நம்பி அதை விட்டு விடுகிறோம்.
நிற்க, இக்கூட்டத்தவர்களின் கொள்கையும் பிரசாரமும் என்ன என்று பார்ப்போமானால் “தேசீயவாதிகளுக்கு ஓட்டுக் கொடுத்து முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டு, சட்டசபை ஆகிய ஸ்தானங்களுக்கு அனுப்ப வேண்டும், வகுப்புவாதிகளுக்கு ஓட்டு கொடுக்காமலும், ஆதரிக்காமலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டும்” என்பதே தற்கால கொள்கையும் பிரசாரமும் ஆகும். இவர்களுக்கு இதற்குமுன் அநேக விஷயங்கள்
குடி அரசு - 1929 () 262
வார்த்தையளவிலாவது கொள்கையாகவும் பிரசாரமாகவும் இருந்தன.
அதாவது, ஒத்துழையாமை, முட்டுக்கட்டை, பரஸ்பர ஒத்துழைப்பு, சிங்கத்தின் குகைக்குள் போய் அதைப் பிடித்து ஆட்டுவது, சர்க்காரைத் திணறச் செய்வது, பூரண மதுவிலக்கு, இரட்டை ஆட்சியை அழிப்பது கடைசியாக உத்தியோகமேற்காதது முதலாகியவைகளாக இருந்தன. நமது “குடி அரசு” தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி இவைகள் எல்லாம் மறைந்து இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர. வேறு எவ்வித கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார்? அல்லாதவர்கள் யார்? என்று பார்த்தாலோ அது இவைகளை யெல்லாம் விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது
வகுப்பு வித்தியாசம், ஜாதி உயர்வு தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யவேண்டும் என்பவர்கள் தான் இக்கூட்டத்தாருக்கு வகுப்பு வாதிகளாகத் தென்படுகின்றார்கள்.
உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்து இருக்கவேண்டும், பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு, சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசமிருக்க வேண்டும். இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. எவ்வித சட்டமும் செய்யக் கூடாது என்பவர்கள். இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால் அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் அவர்களது கூலிகளும் வகுப்பு வாதிகள் அல்லாதவர்களாவார்கள். மற்றபடி இவர்களும் வெள்ளைக் காரர்களும் தவிர மற்றவர்கள் எல்லாரும் அதாவது பார்ப்பனரல்லாதவர்கள். எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள். எனவே இந்த வகுப்புவாதிகளை அழிப்பதற்கு காங்கிரஸ்வாதிகளும் தமிழ் மாகாண காங்கிரஸ்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மதுரையில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருப்ப தோடு எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியாலும் அதிகாரம் பெறப் போகின் றார்களாம். தமிழ் மாகாணக் கமிட்டியில் நிறைவேறிவிட்டால் பிறகு எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஆக்ஷபிக்க யாருக்கு அதிகாரம் இருக்க
முடியும்? ஏன் என்றால் அந்தந்த மாகாண நிலையை அறிந்து நடந்து கொள்ள அந்தந்த மாகாணத்துக்காரருக்குத்தான் உரிமை இருக்கவேண்டுமே ஒழிய வேறு ஒருவர் அதில் பிரவேசிப்பது “மாகாண சுயாட்சிக்கு விரோதமான காரியமாய்விடும்” என்பது அவர்களுக்குத் தெரியும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் சென்ற தேர்தலின்போது நடந்த நடவடிக்கைகளே போதுமானது. அதாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரிசபை அமைக்கக்கூடாது
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
என்றும் மந்திரிகளை ஆதரிக்கக்கூடாது என்றும் இந்திய தேசீய காங்கிரஸ் தீர்மானம் இருந்தும், சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்காரர்கள் மந்திரி சபை அமைத்து மந்திரிகளுக்கு உதவியாயிருந்ததை தமிழ் மாகாண: நிலையை உத்தேசித்து எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புக்கொண்ட தோடு தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டியும் சிறப்பாக காங்கிரஸ் தலைவரும். பாராட்டப்பட்டதே போதுமானது. அதுபோலவேதான் இப்போதும் மந்திரிசபையை அமைத்து மந்திரிகளை ஆதரிப்பது மாத்திரம் போதாது என்பதோடல்லாமல் வகுப்புவாதிகளை அடியோடு அழிக்க அவசியமானால் மந்திரி வேலையையும் ஒப்புக் கொள்ளவேண்டும் என்று வெகு கஷ்டமா னதும் அதாவது வேப்பெண்ணெய் சாப்பிடுவது போன்ற “கசப்பானதும்” பெரிய “தியாகம்” செய்ய வேண்டியதுமான காரியத்தையும் செய்து தீர வேண்டுமாய் தீர்மானம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். காங்கிரஸ் காரர்களின் “தன்னலமறுப்புக்கும் தியாகத்திற்கும்” இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? என்பது நமக்கு விளங்கவில்லை. இதில் நாம் மகிழ்ச்சியடைவதென்ன வென்றால் சர்க்காரை ஒழிக்கவோ தேசாபிமானத் திற்கோ மந்திரி வேலையை ஒப்புக் கொள்வதாயிருந்தால் அது வேறு விஷயம். வகுப்புவாதிகளாகிய பார்ப்பனரல்லாதார்களை அழிக்க மந்திரி வேலையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், மற்றும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் தீர்மானித்திருப்பதானது அதாவது சர்க்காரும் தேசமும் பின்னால் பார்த்துக் கொள்ளுவோம் முதலில் இவர்களை ஒழிப்போம் என்று தீர்மானித்திருப்பதானது நமது கொள்கைக்கு பலத்தையும் நமது செய்கைக்கு ஊக்கத்தையும் கொடுக்கின்றது.
எப்படி என்றால் நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது சர்க்காரையும் தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டுமென்பதேயாகும். இந்த தேசம் பாழாய்ப் போவதற்கும் இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்
கும் சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்த சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்த சமூகத்தார். முதலில் அழிக்கப்பட்ட வேண்டும் என்பதேயாகும். இதற்காக நாம் காங்கிரஸ்காரர்களைவிட ஒருபடி அதிகமாகக் கூட போகத் தயாரா யிருக்கின்றோம்.அதென்னவென்றால் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளுகின்ற கஷ்டம் மாத்திரமல்லாமல் கிடைக்குமானால் கவர்னர் வேலை ஒப்புக் கொள்ளுகின்ற அளவு தியாகம் செய்தாவது சமூக வாதத்தை அடியோடு ஒழிக்க ஆசைப்படுகின்றோம். எனவே எல்லா வகுப்பாரும் சமமாய் இருக்க வேண்டும்; எல்லா வகுப்புக்கும் சம சுதந்திரமும் சந்தர்ப்பமும் அளிக்க வேண்டும் என்கின்ற வகுப்பு வாதம் ஒழிய வேண்டும் என்கின்றவர்கள் பார்ப்பனர்களாகிய காங்கிரஸ் வாதிகளுக்கே ஓட்டுச் செய்யட்டும். ஒரு வகுப்பு உயர்வாகவும் ஒரு வகுப்பு தாழ்வாகவும் இருப்பதை எப்போதும்
எந்த விதத்திலும் சட்டத்தின் மூலமும் மாற்றக்கூடாது என்கின்ற சமூக வாதம்
குடி அரசு - 1929 () 264
ஒழிய வேண்டும் என்று கருதுகின்றவர்கள் பார்ப்பனரல்லாதாராகிய வகுப்பு வாதிகளுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று தான் நாம் கேட்டுக் கொள்கின்றோம். மற்றபடி சமூகவாதம் வகுப்புவாதம் இரண்டையும் விட்டுவிட்டு தேசத் தையும் சுயராஜ்ஜியத்தையும் விரும்பி யாராவது ஓட்டுச் செய்வதாயிருந்தால் அவர்கள் ககஷிகளைக் கவனிக்காமல் கொள்கைகளையும் திட்டங்களையும் அவைகளுக்காக அவரவர்கள் இதுவரை நடந்து கொண்டு வந்திருப்பதையும் நாணயத்தையும் கவனித்து ஓட்டுச் செய்வதில் நமக்கு யாதொரு ஆக்ஷேப ணையும் இல்லை. ஏனெனில் சமூகவாதிகளான பார்ப்பனர்களுடைய காங்கிரசும் “சுயராஜ்யம்” கேட்கின்றது.
வகுப்பு வாதிகளான பார்ப்பனரல்லாதாருடைய ஜஸ்டிசும் “சுயராஜ்
யம்” கேட்கின்றது. அவர்களும் “குடியேற்ற நாட்டு அந்தஸ்து” கேட்கின்
றார்கள். இவர்களும் அதையே கேட்கின்றார்கள்.
அவர்களும் “இரட்டை ஆட்சி கூடாது” என்கிறார்கள். இவர்களும் “அது கூடாது” என்கிறார்கள். அவர்களும் “கதர் மதுவிலக்கு தீண்டாமை” என்கின்றார்கள். இவர்களும் “தீண்டாமை மதுவிலக்கு கதர்” என்கின்றார்கள். அவர்களும் “சுயராஜ்ஜியத் திட்டம்” தயாரித்து புஸ்தகங்கள் பத்திரிகைகள். மூலம் சைமனுக்கும் பார்லிமெண்ட்டுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள். இவர்களும் நேரிலும் பத்திரிகைகள் மூலமும் சைமனுக்கும் பார்லி மெண்டுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள்.
ஆனால் சமூதாய விஷயத்திலும் சீர்திருத்த விஷயத்திலும் வகுப்பு வாதம் சமூகவாதம் ஒழியும் விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களாகிய செங்கற்பட்டு தீர்மானங்களில் அநேகத்தை வகுப்பு வாதிகள் என்னும் பார்ப்பனரல்லாதாராகிய ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆனால் வகுப்புவாதிகள் அல்லாதவர்களான காங்கி ரஸ்காரர்கள் எனும் சமூக வாதிகளான காங்கிரசுக்காரர்கள் ஒப்புக் கொள்ளா
மல் அதை அடியோடு எதிர்த்து பிரசாரம் செய்கின்றார்கள். இது தான் வித்தியாசமாகும். ஆதலால் ஓட்டர்கள் கவனித்து தங்கள் இஷ்டப்படி நடக்க உரிமை உள்ளவர்கள் ஆவார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 19.05.1929
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
தேர்தல் கவலை
மூர்த்திக்கும் - வாசருக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
வாசர்: என்ன மூர்த்தி, இந்த தடவை தேர்தலில் நமது ஜபம் செல்லாது போல் இருக்கின்றதே.
மூர்த்தி: எதனால் இவ்வளவு சந்தேகப்படுகின்றீர்கள்.
வாசர் : எதனால் என்று கேட்கின்றாயே, ஒவ்வொன்றும் நீ நேரில் பார்க்கவில்லையா? நாம் போகின்ற இடங்களில் எல்லாம் மீட்டிங்கு போடக் கூட முடியாதபடி கலவரங்கள் நடக்கின்றதே: எவ்வளவோ கஷ்டப்பட்டு மிதவாதிகளிடம் இருந்த மேடைகளை நமது சுவாதீனம் செய்தோம். பிறகு அதை ஒத்துழையாமைக்காரர்கள் வந்து பிடுங்கிக் கொண்டார்கள். அதற்கும் எவ்வளவோ பாடுபட்டு அவர்களையும் விரட்டி அடித்து அவர்களிடமிருந்து சுவாதீனம் செய்து கொண்டோம். கடைசியாக அது ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் சுயமரியாதைக்காரரிடமல்லவா போய்விட்டது.
மூர்த்தி: அதென்ன ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் என்று அவர்களுக்காக வருத்தப்படுகின்றவர் போல் பேசுகின்றீர்களே.
வாசர் : ஜஸ்டிஸ்காரரிடம் போகாததால் எனக்கு வருத்தமில்லை. ஜஸ்டிஸ்காரரிடம் இருந்தால் நாம் அவர்களை சுலபத்தில் விரட்டியடித்து பிடுங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்களும் நம்மைப் போலவே ஓட்டர்களிடம் போய் பொய்யும் புளுகும் அடித்து ஓட்டுப்பெற முயற்சிக் கின்றவர்கள். ஆதலால் நாம் கொஞ்சம் அதிக கூலி ஆள் வைத்து விரட்டி னால் மேடையை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். சுயமரியாதைக்காரருக்கு ஒரு கவலையும் இல்லை. ஒருவர் தயவும் வேண்டியதில்லை. உள்ளதை உள்ளபடி கூப்பாடு போடுகின்றார்கள். அதனால் மேடைகள் எல்லாம் அவர்கள் வசமாய்விட்டன. அவர்களை விரட்டுவதென்றால் பெரிய கஷ்ட மாக இருக்கின்றது. எங்கு போனாலும் அவர்கள் தொல்லை நம்மை தலைகாட்ட விடாமல் செய்கின்றது பார்.
மூர்த்தி என்ன மகா பிரமாதம். திருச்சி, சேலம், கோயமுத்தூர், மதுரை இந்த ஜில்லாக்களில் தானே அவர்கள் ஜபம் செல்லும், மற்றபடி தஞ்சாவூர்.
குடி அரசு - 1929 () 266
நம்முடையது. அங்கு சில ஆட்கள் மாத்திரம் கூப்பாடு போடுவார்களே ஒழிய மற்றபடி ஓட்டர்களை ஒன்றும் செய்துவிடமுடியாது.
வாசர் : என்ன சொன்னாலும் இந்த தடவை எலக்ஷனில் தமிழ் நாட்டை பொறுத்தவரை நமக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் போலிருக் கின்றது. வேண்டுமானால் கணக்கு சொல்கின்றேன் கேள். திருநெல்வேலியில் திரு.ரெட்டியார் எப்படியும் வந்துவிடுவார். மற்றொரு ஸ்தானம் யாராவது சைவ பிள்ளைமார்தான் வரமுடியும். எப்படியும் பிராமணன் வர முடியாது. அந்த சைவப்பிள்ளையும் நம்முடன் சேரமாட்டார்.டவுன் தொகுதிக்கும் இந்த தடவை சாவடிப் பிள்ளை வருவது கஷ்டம். வந்தாலும் நமக்கு ஒன்றும் இலாபமில்லை. ஆதலால் அந்த ஜில்லாவையும் மறந்துவிடவேண்டியதுதான்.
மூர்த்தி : ராமநாதபுரம் ஜில்லாவோ?
வாசர் : அதுவும் அப்படித்தான்: எப்படியும் திவான் பகதூர் முருகப்ப செட்டியார் வந்துவிடுவார். திரு. அள.அரு. நாராயண செட்டியார் சந்தேகம் வந்தாலும் நமக்குப் பிரயோஜனப்படமாட்டார். திரு.டி.சி.சீ. அய்யங்கார். வருவது இந்த தடவை கஷ்டமாகிவிடும். நாட்டுக் கோட்டைச் செட்டியார். போட்டியில் ஏதாவது நமக்கு கிடைத்தால்தான் உண்டு. அவர்கள் ஏதாவது ராஜியாய் போய்விட்டால் நம்ம பாடு ஆபத்துதான். ஆதலால் அதையும் விட்டுவிட வேண்டியதுதான்.
மூர்த்தி : சரி, அப்படியே வைத்துக்கொள்ளுவோம். மதுரை ஜில்லாவோ?
வாசர்:மதுரையை நினைக்காமலிருப்பதே மேலானது. ஏனென்றால் திரு.கே.ஆர்.வெங்கிடராமய்யர் தான் மாத்திரம் இனிமேல் சட்டசபைக்கு நிற்பதில்லை என்று அல்ல, தனது பின் சந்ததிகளையும் நிற்க வேண்டாம். என்று திட்டம் செய்ய தீர்மானம் செய்து கொண்டார். சென்ற தடவை நமது சி.பி.அவருக்கு பொய் நம்பிக்கை கொடுத்து எலக்ஷனால் 40, 50 ஆயிரம் ரூபாய் கடன் உண்டாக்கிவிட்டார். அது சூடுகண்ட பூனை ஆதலால் இனி தலை காட்டாது.
சேத்தூர் ஜமீன்தாரும் இந்த ஜில்லாவில் நிற்பதில்லை என்று சொல்லிவிட்டாராம். எனவே திருவாளர்கள் பி.டி.ராஜனும், செளந்திர பாண்டியனும், போடிநாயக்கனூர் செட்டியாரும் மாப்பிள்ளைகள் போல எதிரிகள் கூட இல்லாமல் வந்து விடுவார்கள் போல இருக்கின்றது. இதை நினைக்கும்போது என் வயிறு பற்றி எரிகின்றது. யாரையாவது போட்டிக்கு பெயருக்காவது நிறுத்தாவிட்டால் நமது யோக்கியதையே போய்விடும் போலிருக்கின்றது. ஆதலால் நாம் பணம் கொடுத்தால் கூட ஆள்களைக் காணோமே என்கின்ற கவலையில் இருக்கின்றேன்.
மூர்த்தி : சரி மதுரை டவுன்சீட்டு (Seat) ஒன்று இருக்கின்றதல்லவா. அது நமது திரு. துளசிராமுக்குத் தானே அதில் என்ன ஆக்ஷ்பம்?
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வாசர்: அது அநியாயமாய்ப் போகின்றது. ஏன்? போய்விட்டதென்றே சொல்லலாம்.
மூர்த்தி: ஏன் அப்படிச் சொல்லுகின்றீர்கள்? அதில் கூடவா சந்தேகம்.
வாசர் : அதில் சந்தேகம் ஒன்றுமில்லை. தீர்மானமேதான். நமது துளசிராம் நிற்கவேமாட்டார். நின்றாலும் அவர் வகையார்களே ஓட்டு
செய்யமாட்டார்கள்.
மூர்த்தி :ஏன் ஓட்டு செய்யமாட்டார்கள்?
வாசர்:ஏன் என்றா கேட்கின்றாய். அவர்கள் முன் போல கண்மூடித் தனமாக இல்லை. இப்போது காரியம் தெரிந்து கொண்டார்கள். முக்கால் வாசிப்பேர்கள் திரு.ஆர்.எஸ்.நாயுடுவுக்கே போடுவதாக இப்போதே தீர் மானம் செய்து கொண்டார்கள் என்பது அந்த வகைக்காரர்களாலேயே சொல்லத் தெரிந்து கொண்டேன். அந்த ஸ்தானம் கண்டிப்பாக ஆர்.எஸ். நாயுடுவுக்குத்தான். அதைவிட்டு வேறே பேச்சுப் பேசு.
மூர்த்தி : சரி அதுவும் தொலைந்து போகட்டும். திருச்சி ஜில்லாவோ?
வாசர்: அது மாத்திரம் என்ன வாழுமா? எப்படியும் திரு.நாராயண: சாமிப்பிள்ளை வந்து விடுவார். நம்ம சேதுவுக்கு பதிலாக யாரையாவது போடலாம் என்றுதான் தோன்றுகின்றது. ஏன் என்றால் நம்மை ஏமாற்றி விட்டார். ஆனால் வேறு யாரைப் போடுவது என்று பார்த்தால் எல்லாம் அவரைவிட மோசமான ஆள்களாகத்தான் இருக்கின்றார்கள். அன்றியும் வேறு ஒரு பிராமணனை நிறுத்தினால் இரண்டு பிராமணன் சண்டையில் ஒரு பிள்ளைக்கோ, தேவருக்கோ, ரெட்டிக்கோ போய்விட்டால் அது இதைவிட கேவலமாய்விடும். பிராமணன் என்கின்ற பெயருக்காவது ஒரு ஆள்
இருக்கட்டும். அவர் வந்தாலாவது மறுபடியும் மந்திரியாக்கி மாதம் 4,000 ரூ. வாங்கிக் கொண்டு ஏதோ 4 பிராமணனுக்கு வேலை கொடுத்துக் கொண்டி ருக்கட்டும். அவரை தொந்திரவு செய்ய வேண்டாம். ஆனால் நம்ம கணக்கிலும் சேர்க்க வேண்டாம்.
மூர்த்தி : சரி, திருச்சி, சீரங்கம், டவுன் சீட்டு இருக்கின்றதே. அதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்.
வாசர்: சரி, அது கண்டிப்பாய் இப்போது இருக்கும் திருயூ.ராமசாமி அய்யருக்கு கிடைக்காது. தவிரவும் முன்போல் இரண்டு பிராமணரல்லாதார். சண்டை போட்டுக்கொண்டால் மாத்திரம் ஒரு பிராமணனுக்குக் கிடைக்கும். ஆனால், இந்த தடவை அவர்களுக்குள் சண்டை வராது என்றே நினைக்கின்றேன்.
மூர்த்தி : சரி, இனி நம்முடைய தஞ்சாவூரில் மூன்றும் நம்முடையது தானே?
குடி அரசு - 1929 () 268
வாசர் : சரிசரி, நன்றாகச் சொன்னாய். மூன்றும் நம்முடையதென்றா சொல்லுகின்றாய்? மூன்றும் ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கே போய்விட்டாலும் சரி அல்லது சுயமரியாதை கட்சிக்காரருக்கே போய்விட்டாலும் சரி. எப்படியாவது
இந்த முத்தையா முதலியாருக்கு இல்லாமலிருந்தால் அதுவே பத்து ஸ்தானம் நமக்கு கிடைத்தது போலாகும்.
மூர்த்தி :இந்த தடவை கண்டிப்பாய் அவருக்கு ஆகப்போவதில்லை. நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள். காரணம் சொல்லட்டுமா?
வாசர் : நீ ஏன் அந்தக் கனவு காண்கின்றாய். உன்னுடைய காரணத்தைத்தான் சொல்லு பார்ப்போம்.
மூர்த்தி: சொல்லுகின்றேன் கேளுங்கள். ஒன்று சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்ததால் மடாதிபதிகள் உதவி செய்யமாட்டார்கள்.
இரண்டு திருவாளர்கள் சாமியப்பா, பன்னீர் செல்வம் ஆகியவர்கள் முத்தையா முதலியாருக்கு விரோதிகள். மூன்று நம்முடைய ஆட்கள். கண்டிப்பாய் அவருக்கு ஓட்டு செய்ய மாட்டார்கள். இந்த மூன்று முக்கிய காரணங்கள்தான்.
வாசர்: இதுதானா பெரிய சங்கதியாய் கருதிவிட்டாய். மடாதிபதிகள் திரு.முதலியாரை சட்டசபைக்கு நிற்கும் படிக்கும் செலவும் போட்டுக் கொள்ளுவதாகவும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நான் மடாதிபதி களுக்கு என்ன என்னமோ சொல்லிப் பார்த்தேன். அவர்கள் அத்தனையும் கேட்டுக்கொண்டு கடைசியாக அதையெல்லாம் முதலியாரிடமும் சொல்லி விட்டார்கள். அந்த மடாதிபதிகளுக்கு முத்தையா ரொம்பவும் நம்பிக்கை யுள்ளவர். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி மடாதிபதிகளுக்கு ஒன்றும் தகராறில்லை. அது எப்படியாவது பிராமணர்களைத்தான் ஒழிக்கக் கிளம்பி இருக்கின்றதே அல்லாமல் பிராமணரல்லாத மடாதிபதிகளுக்கு ஒன்றும் அதனால் ஆபத்தில்லை என்பது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.
சுயமரியாதைக்காரருக்கும், சைவர்களுக்கும் இருக்கும் தகரா றெல்லாம் ஒன்றே ஒன்றுதானே. அதாவது கோவில்களுக்குள் எல்லோரையும் விடவேண்டும் என்பது. இதில் சைவ மடாதிபதிகள் யாருக்கும் தகராறு இருப்பதாய் தெரியவில்லை..சீக்கிரத்தில் அவர்கள் எல்லாம் ராஜியாய் போய் நம்மீது திரும்பப் போகின்றார்கள். அதெல்லாம் முத்தையா முதலியார். இரண்டு பேருக்கும் தக்கபடி சொல்லி, கூடிய சீக்கிரத்தில் ஒரு விதத்தில் முடிவு செய்துவிடுவார்.
அடுத்தபடியான திருவாளர்கள் பன்னீர் செல்வம், சாமியப்பா இவர்கள் விரோதம் ஒன்றும் நிலைக்காது. அதெல்லாம் வெளிக்குத் தானே யொழிய காரியத்தில் ஒருவொருக்கொருவர் முட்டிக் கொள்ளமாட்டார்கள். தவிர திரு.சாமியப்பாவும் அசெம்பளிக்கு நிற்பதாய்த் தெரிகின்றது. ஆதலால்
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
அவர் விரோதத்திற்குப் போகமாட்டார். போனாலும் இருக்கின்றவர்கள் விட மாட்டார்கள். எப்படியாவது இருவரையும் சரிப்படுத்தி விடுவார்கள். திரு. சாமியப்பாவை சரிக்கட்டிவிட்டால் திரு.பன்னீர்செல்வம் தகராறு இருக்கவே
இருக்காது.
அன்றியும் திரு.முத்தையா சென்ற தேர்தலில் “சுதேசமித்திரனும்”
மற்றும் சில பிராமணர்களும் உள்ளுக்குள் விரோதமாக வேலை செய்தும் இந்த மாகாணத்திலேயே அதிகப்படியான ஓட்டு வாங்கினவர். பிராமணர்கள். வெகுபேர் இந்த தடவை அவருக்கு வெளிப்படையாகவே அனுகூலமாக வேலை செய்வார்கள் என்று கூடத் தெரிகின்றது.
தவிர, அவரும் இந்த தேர்தலுக்கு முப்பது நாற்பது ஆயிரம் ரூபாய் எடுத்து வைத்து விட்டார். போதாக்குறைக்கு நாகப்பட்டினம் திரு.காயா ரோகணமும் சட்டசபைக்கு நின்று அவரோடு சேர்ந்து வேலை செய்யப் போகின்றாராம். அவரும் முப்பது நாற்பது ரூபாய் ஆறு மாத வரும்படியை இப்போதே ஒதுக்கி வைத்துவிட்டாராம். இரண்டு பேரும் சேர்ந்துவிட்டால் பிறகு சொல்லக்கூட வேண்டுமா? மூன்றாவது ஸ்தானம் தானாக வந்தால் வரட்டும் இல்லாவிட்டால் வேண்டியதில்லை என்று அவ்வளவு அலட்சிய
மாய் சொல்லுகின்றார்களாம். அப்படிஅவர்கள் அலட்சியமாய் விட்டால்கூட நம்மில் யாருக்காவது வருமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. ஏனெனில்
திரு. மருதவாணம் பிள்ளைக்கு ஒன்று நாம் விடவேண்டாமா? தவிர திரு. நாடிமுத்து பிள்ளை ஆசைப்பட்டால் அவருக்கு விட வேண்டாமா? எப்படியாவது கஷ்டப்பட்டால் இந்த ஜில்லாவில் வேண்டுமானால் ஒரு ஸ்தானம் கிடைக்கலாம்.
மூர்த்தி : அப்பாடா! இது வரையில் ஐந்து ஜில்லாவுக்கு கணக்கு போட்டதில் ஒரு ஸ்தானம் கிடைத்தது. மற்றபடி தென் ஆற்காடு ஜில்லாவோ?
வாசர் : அதில் ஒன்று திரு.வேணுகோபால் நாயுடுவுக்கு கிடைக்கும் மற்றொன்று திரு.குமாரராஜா முத்தையா செட்டியாருக்கு கிடைக்கலாம். ராஜா
சர். அண்ணாமலையாரின் குமாரர்) மற்றொன்று திரு.சீதாராம ரெட்டியாருக் காவது மற்றும் வேறு யாருக்காவது கிடைக்குமே ஒழிய எந்த விதத்திலும் இத்தடவை பிராமணனுக்கு கிடைப்பதற்கு மாத்திரம் இடம் இல்லை.
மூர்த்தி : சரி, அந்த ஜில்லாவிலும் உள்ளதும் போச்சுதா? தொலைந்து போகட்டும். வடஆற்காடு ஜில்லாவின் சங்கதி என்ன?
வாசர் : அதுவும் அநேகமாய் அப்படித்தான் ஆகும். ஒன்று திரு.மாணிக்கவேலுக்கும், மற்றொன்று திரு.கிருஷ்ணசாமி நாயுடுவுக்கும் உறுதி. மூன்றாவது ஸ்தானம் திருவாளர்கள்.வெங்கிட்டரங்கமும் ஆதிநாரா யண செட்டியாரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தான். வெங்கிட்டரங்கம் தனக்கு வேண்டாமென்று சொல்லுகின்றாராம். ஆதி நாராயண செட்டியாரோ என்ன என்னமோ குள்ளநரி தந்திரம் செய்கின்றார்.
குடி அரசு - 1929 () 270
கடைசியில் எப்படியாகுமோ தெரியவில்லை. ஒரு சமயம் 100-க்கு 25 பங்கு ஆதி நாராயண செட்டியார் வந்தால் வரலாம். ஒரு சமயம் வன்னியகுல
க்ஷத்திரியர்களுக்கும் நாயுடு க்ஷத்திரியர்களுக்கும் புத்தி வந்து ஒன்று சேர்ந்து செட்டியார் யோக்கியதை தெரிந்து கொண்டார்களானால் மற்றும் ஒரு படையாச்சியோ நாயுடோ கடைசி பக்ஷம் முதலியாரோ தான் வரக்கூடும். ஆனால் செட்டியார் வருவதுகூட அவ்விரு சமூகத்திய முட்டாள்தனத்தைப்
பொறுத்திருக்கிறது.
மூர்த்தி: சரி! ஆதிநாராயண செட்டியார் வருவதைவிட வராமல் இருப்பதே மேல். ஏனென்றால், வந்துவிட்டால் அதுவேண்டும் இது வேண்டும் மக்களுக்கு உத்தியோகம் வேண்டும் என்றும் மற்றும் பல விதத்தில் நம் உயிரை வாங்கி விடுவார்.
வாசர்: அப்படிச் சொல்ல வேண்டாம். அவர் பார்ப்பனரல்லாதாரை: பொய்யும் புளுகும் சொல்லி வைவதற்கும், விஷமப் பிரசாரம் செய்வதற்கும், பிறத்தியார் நம்பும்படி தந்திரமாய் பேசுவதற்கும் அவர் நல்ல ஆசாமி
தெரியுமா?
மூர்த்தி : சரி, தொலைந்து போகட்டும். வந்த காலத்து நல்லவரா கெட்டவரா பார்த்துக் கொள்ளலாம். செங்கற்பட்டு ஜில்லாவைப் பற்றி என்ன சொல்லுகின்றீர். அதிலுள்ள இரண்டு ஸ்தானமும் நம்முடையது தானே?
வாசர் : சரியாய் போய்விட்டது. முதலாவது திரு.முத்துரங்கமும் கிருஷ்ணசாமி நாயக்கரும் இந்தத் தடவை சட்டசபைக்கு நிற்பதில்லை என்று சொல்லிவிட்டார்கள். வேறு ஆள் பிடிப்பது வெகு கஷ்டமாய் இருக்கிறது. ஆனாலும் சூனாம்பேட்டைக்கும் அப்பாசாமிக்கும் இருக்கும் விரோதத்தினால் யாரையாவது போட வேண்டுமென்று சூனாம்பேட்டைக்கு
ஆத்திரம் மாத்திரம் இருக்கின்றது. நிற்பதற்குத்தான் ஆட்களைக் காணோம். அவைகள் அநேகமாய் ஒன்று திரு. வேதாசலத்திற்கும் மற்றொன்று திருஜெயராம நாயுடுவுக்காவது அல்லது வேறு ஒரு ரெட்டியாருக்காவதுதான் போய்விடும். அதை நம்புவதில் பிரயோஜனமே இல்லை.
மூர்த்தி: சரி, நம்முடைய மதராஸ் 4 ஸ்தானங்கள் இருக்கின்றதே அவைநான்கும் நம்முடையதுதானே?
வாசர் : நான்குக்கும் நமக்காக நிற்பதற்கு ஆள்கள் எங்கே முதலில்
சொல் பார்ப்போம். முதலாவது திருவாளர்கள் கோவிந்தராஜு முதலியார் பெயரையும் பக்தவத்சலத்தின் பெயரையும் சென்னை ஓட்டர்களிடம் சொன்னால் அடிதான் கிடைக்கும். அவர்கள் யோக்கியதை ஓட்டர்களுக்கு அவ்வளவு தூரம் தெரிந்து போய்விட்டது. திரு.மல்லையாவையோ பிராமணன் என்கிற முறையால் தள்ளிவிடுவார்கள். ஒரு சமயம் திரு.சாமி.. வெங்கிடாசலத்திற்கு கிடைத்தால் கிடைக்கலாம். ஆனால் அவரே அந்த தொகுதியில் நிற்க பயந்து கொண்டு வேறு தொகுதிக்கு நிற்க பிரயத்தனப்
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
படுவதாய்த் தெரிகிறது. அவர் நின்று ஜெயித்தாலும் முன்போல நமக்கு உதவியாய் இருக்கமாட்டார். நமக்கு தலையும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு வாலையும்
காட்டிக் கொண்டிருக்கிறார். ஆதலால் அதை நம்புவதில் பயனில்லை.
மூர்த்தி ஜஸ்டிஸ் ககஷியில் யார்தான் நிற்பார்கள்?
வாசர் : திரு டாக்டர் சி. நடேச முதலியார் இஷ்டப்படி அவர் யாரை: நிறுத்துகின்றாரோ அவருக்குத்தான் ஆகக்கூடும். கொஞ்சம் நஞ்சம் நமக்கு இருந்த நம்பிக்கையும் “ஆஸ்தீக” சங்க காலிகளால் கெட்டுப் போய் விட்டது. அன்றியும் அதனால் நமது யோக்கியதையும் வெளியாய் விட்டது. இதனால் ஜஸ்டிஸ் ககஷிக்காரர்கள் தங்கள் பெருமையைச் சொல்லிக் கொண்டுகூட ஓட்டுக் கேட்க வேண்டியதில்லை. நம்ம யோக்கியதையையும் காங்கிரஸ் யோக்கியதையையும் சொல்லிக் கேட்டாலே அவர்களுக்கு கண்டிப்பாய் ஜெயம் கிடைத்துவிடும்.
மூர்த்தி : சரி, சேலம் ஜில்லா என்ன ஆகும்?
வாசர் : ஒன்று திரு. எல்லப்ப செட்டியாருக்கு கிடைத்துவிடும். மற்றொன்று டாக்டர் சுப்பராயனுக்குக் கிடைக்கும்.
மூர்த்தி : ஏன் திரு. ராஜகோபாலாச்சாரி நிற்கக் கடாதோ?
வாசர்: நிற்கலாம். அவருக்கும் ஆசைதான்; ஆனால் திரு. வரதராஜுலு ஒரு பக்கம் உபத்திரவம் செய்கின்றார். என்ன வென்றால் ராஜகோபாலாச்சாரி நின்றால் தானும் நிற்பேன் என்று சொல்லுகின்றாராம். ஆதலால்,ராஜகோபாலாச்சாரி தனக்கு வேண்டாம் என்பதுபோல் பேசுகிறார். ஆனாலும் ஜில்லா முழுவதும் இதற்காகத்தான் மதுவிலக்கின் பேரால் சுற்றுகின்றார். கடைசியாக அவர் நின்றாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. மேற்கண்ட இருவரும் தான் வருவார்கள். ஒரு சமயம் டாக்டர் சுப்பராயன் நிற்கவில்லையானால் திரு.ராஜமாணிக்க பண்டாரத்திற்காவது, தருமபுரி செட்டியாருக்காவது ஆகும்.
மூர்த்தி : கோயமுத்தூர் ஜில்லாவோ?'
வாசர்: அதுவும் அப்படித்தான். ஒரு கவுண்டர், ஒரு முதலியார், ஒரு செட்டியார் வருவார்கள்.
மூர்த்தி : ஏன் நாயுடுமார் வரமாட்டார்களோ?
வாசர் : ஒரு சமயம் அவர்களிலும் யாராவது ஒருவர் வந்தாலும்
வரலாம். ஆனாலும் எந்தவிதத்திலும் திரு.வெங்கிட்டரமணய்யங்கார்
மாத்திரம் வரமாட்டார் என்பது உறுதி.
மூர்த்தி: அப்படியானால் அங்கு யாரோ வந்துவிட்டுப் போகட்டும். நமக்குக் கவலையில்லை. ஏனென்றால், அய்யங்காரைத்தவிர யார் வந்தாலும் நம்முடன் சேரப் போவதில்லை.
குடி அரசு - 1929 () 272
வாசர் : இதுதான் பொதுத் தொகுதியின் நிலை. இனி கிறிஸ்தவத் தொகுதியில் நம்ம குழந்தை வந்தால்தான் நமக்கு உதவும். ஆனால் அவருக்கு கட்டின பணம் கூட வராது. மற்றபடி யார் வந்தாலும் திரு. ஆரோக்கியசாமி வந்தாலும் நமக்குப் பயனில்லை. மகம்மதியர்களிலும்
ஜனாப்புகள் ஷாபிமகமது, அமித்கான், பஷீர் அகமது ஆகிய இந்த மூன்றே மூன்று கனவான்களைத் தவிர வேறு யார் வந்தாலும் பயன்படாதென்றே சொல்லலாம். ஆனால் இந்த மூன்று பேரும் வருவது கஷ்டமான வேலை. ஏனென்றால், ஜனாப் ஜமால் முகம்மது விஷயத்தில் நாம் நடந்து கொண்ட மாதிரி அப்படிச் செய்து விட்டது. மீதி உள்ளது ஜமீன்தார் தொகுதி. இந்த தடவை ஒரு ஜமீன்தாராவது நமக்கு அனுகூலமாய் நிற்கின்றவர்களைக் காணோம். எந்த விதத்திலும் நமக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்பது மாத்திரம் உறுதி. மற்ற தொகுதிகளைப் பற்றியும் இந்திய சட்டசபையைப்
பற்றியும் மற்றொரு சமயம் பேசலாம்.
எதற்கும் இந்த தேர்தலுக்கு சுயமரியாதை இயக்கத்தையும், கடவுளையும்,மதத்தையும், கோவிலையுமே பிடித்துக் கொள்ளுவோம். வேறு வழி ஒன்றையும் காணோம்.ஆதலால்,நம்மஆட்களை யெல்லாம் இனிமேல் இதைப் பற்றியே பேசச்சொல்லு.
மூர்த்தி : சரி, அப்படியே ஆகட்டும்.
குடி அரசு - உரையாடல் - 19.05.1929
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பூரண சுயேச்சை இயக்கமும்
திரு. சீணிவாசையங்காரும்
திரு.எஸ்.சீனிவாசையங்கார் இந்த வருஷத்திய தேர்தலுக்கு ஒரு புதிய தந்திரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தின் மீது எல்லா அரசியல் கொள்கைகளையும்விட தீவிரமாய் இருக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத்
தின் மீது பூரண சுயேச்சையே தமது அரசியல் கொள்கை என்று வெளிப் படுத்திக் கொண்டார். கல்கத்தா புரட்சி இயக்க உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.சுபாஷ் சந்திரபோசும் சமீபத்தில் ரஷியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ததின் பயனாய் சமத்துவ உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.ஜவாரிலால் நேருவும் திரு.சீனிவாசய்யங்காரையும் அவரது பூரண சுயேச்சைக் கொள்கையையும் நம்பி இவருடன் சேர்ந்தார்கள்.
ஆனால் திரு.சீனிவாசையங்கார் பூரண சுயேச்சைக் கூப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் யோக்கியதை இல்லை என்பதையும் அரசாங்க அடக்குமுறையின் வேகத்தையும் தெரிந்துதான் பூரண சுயேச்சை இயக்கத் தலைமைப் பதவியை ராஜீனாமா செய்துவிட்டார். அதோடு கூடவே இனியும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இவர் தொட்டது துலங்காது, என்றிருந்தாலும் என்றைக்கிருந்தாலும் ஓட்டர்களை ஏமாற்ற ஏதாவது ஒரு புரட்டு வேண்டியிருப்பதால் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தரம் ஆகியவர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு கொள்கையை வெளிப்படுத்துவார். ஏனென்றால் சீனிவாசையங்கார் கூப்பிட்டபோது ஓடவும் வேண்டுமென்று கூப்பிட்டவுடன் ஓடிவரவும் அய்யங்கார் வார்த்தையை “வேதவாக்காக”க் கொண்டு பிரசாரம் செய்யவும் தமிழ்நாட்டில் இந்த இரண்டு கனவான்கள்தான் உண்டு. மற்றபடி, இப்போது அய்யங்கார்கூட இருக்கும் எந்தப்பார்ப்பனரல்லாதாரும்அய்யங்காரை விட்டு.
பிரிந்து மறுபடியும் அவருடன் சேருவதானால், மானம் ஈனம் சுயமரியாதை என்பவைகளைப் பற்றி சற்றாவது யோசித்துப் பார்ப்பார்கள். ஆனால், மேல்கண்ட இரண்டு கனவான்களுக்கும் இந்த விஷயங்களில் சிறிது கூட கவலை கிடையாது. ஏனென்றால் முற்றத்துறந்த ஞானியிடம் மானம் ஈனம்
இருக்க இடமேது?
குடி அரசு - கட்டுரை - 26.05.1929
குடி அரசு - 1929 () 274
மானவியாவின் யித்தனைட்டம்
திரு.பண்டிதர் மமன்மோகன மாளவியா சென்னை மாகாணத்திற்குள்
கால் வைத்தது முதல் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி ஜனங்களை ஏமாற்றி வந்ததும் அந்த புரட்டுகளை பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களும் வெளிப்படுத்தியதும் “மித்திரனிலும்” “திராவிடனிலும்” பார்த்திருக்கலாம். அவர் சென்ற இடங்களிலெல்லாம் கோவிலுக்குள் தீண்டத்தகாதவர். என்கிறவர்கள் போவதற்கு இந்து சாஸ்திரங்கள் இடங்கொடுக்கிறதென்று சொல்லிக் கொண்டே வந்துவிட்டு தாம் அதிக சாஸ்திரம் பார்த்திருப்பதாயும் சொல்லிவிட்டு கடைசியாக சென்னையில் 22 தேதி கூடிய சாஸ்திரிகள் கூட்டமொன்றில் சிக்கி தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கு சாஸ்திரத்தில் இடமில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாராம். எனவே திரு.மாளவியாவின் பித்தலாட்டம் பார்ப்பனர்களின் அசல் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணமாகும்.
குடி அரசு - கட்டுரை - 26.05.1929
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
உத்தியோக ஆசையும் தேசீயப் புரட்டும்
திரு வரதராஜுலுக்கு கொஞ்சகாலமாய் உத்தியோகப் பைத்தியம் தலைக்கேறி விட்டது. தேசீயமெல்லாம் இப்போது உத்தியோகத்திற் குள்ளாகவே ஐக்கியமாய் விட்டது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் கூட சேருவதற்கு சுயேச்சையுள்ள பார்ப்பனரல்லாதார் ஒருவருமில்லாமல் போனதையும் தமது கக்ஷிக்கு எந்த விதத்திலும் கூலிகளையும் காலிகளையும் விட வேறு யாருடைய அனுதாபமும் இல்லாமல் போவதையும் பார்த்து நாங்கள் உத்தியோகங்கள் ஏற்றுக் கொள்ள சம்மதித்து உத்தியோகங்கள் சம்பாதிக்கப் போகின்றோம், யாராவது வருகின்றீர்களா? என்று கேட்டவுடன்
திரு. வரதராஜுலுவைப் போன்ற ஆள்கள் கூட அப்படியானால் தமக்கும் ஏதாவது கிடைக்காதா என்ற எண்ணத்தின் மீது இப்போது அய்யங்காருடன் சேர்ந்து கொண்டு உத்தியோகம் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசிய மென்றும் “நான் வெகு காலமாக இதைச் சொல்லிவந்திருக்கிறேன்” என்றும் சொல்லிக் கொண்டு அய்யங்கார் பின்னால் கடற்கரைக்குச் சென்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டார். ஆனால் திரு. வரதராஜுலு உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் ஒப்புக் கொள்ளுவதற்கும் சொல்லும் காரணம் தான் நம்மை இந்த வியாசம் எழுதச் செய்கின்றது.
அதாவது:-
“ஜஸ்டிஸ் கட்சியாரை ஒழிப்பதற்குத் தாம் மந்திரி வேலை ஒப்புக் கொண்டாக வேண்டும்” என்கின்றார். காங்கிரஸ்காரர்களுக்கோ அல்லது திரு.வரதராஜுலுவுக்கோ மந்திரி வேலை ஒப்புக் கொள்ள என்றைக்காவது யோக்கியதை இருந்து இவர்கள் ஒப்புக் கொள்ளாமல் தியாகம் செய்திருந்தால் இவர்கள் பேச்சு யோக்கியமானதாயிருக்கும். ஒத்துழையாமை ஆரம்பத்தில் முதல் சட்டசபையில் திரு.சீனிவாசையங்கார் காங்கிரசுக்கு விரோதமா யிருந்து காங்கிரசையும் வைது கொண்டு சட்டசபைக்குப் போய் அங்கு தமக்கு எவ்வித யோக்கியதையும் கிடைக்காததால் விட்டுவந்து “சீ! இந்தப் பழம் புளிக்கு மென்று கருதி கூப்பாடு போடுகின்றவர். இரண்டாவது சட்ட சபைக்கு எல்லோரும் போகவேண்டுமென்று திரு.வரதராஜுலுவும் கூட
சத்தம் போட்டு சுயராஜ்யக் கட்சியை ஆதரித்து ஊர் ஊராய்ப் பார்ப்பனர்கள். பின் திரிந்து, அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்தவர். அப்பொழுதும் காங்கிரஸ்காரருக்கு உத்தியோகம் ஒப்புக்கொள்ளகூடிய பலமும்
குடி அரசு - 1929 () 276
யோக்கியதையும் கிடைக்கவில்லை என்றும் அதோடு சட்டசபையில் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், சட்டசபைக்குப் போனது மானக்கேடு என்றும் சொல்லிக் கொண்டு சட்டசபை கலையுமுன்பே முகத்தில் துணியைப் போட்டு மறைத்துக் கொண்டு அழுது கொண்டே வந்தார்கள். பிறகு மூன்றாவது சட்டசபைக்கும் திருவாளர்கள் சீனிவாசையங்கார், கல்யாணசுந்திர:
முதலியார், வரதராஜுலு, ஷாபிமுகம்மது சாயபு, ஜயவேலு, குப்புசாமி, அண்ணாமலை ஆகிய எல்லோர்களுமே ஊர் ஊராய்த்திரிந்து காங்கிரஸ் காரர்களுக்கு ஓட்டு வாங்கி கொடுத்தார்கள். கடைசியாக “காங்கிரஸ்காரர்களே எல்லா ஸ்தானங்களையும் கைப்பற்றி விட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியை அழித்தாய்விட்டது” என்று விளம்பரப்படுத்தினார்கள். இதைத் திரு.வரத
ராஜுலு, திரு.சத்தியமூர்த்தியை முதல் மந்திரி ஸ்தானத்தை ஒப்புக் கொள்ளும் படி தந்தியிற் சொன்னார். திருவாளர்கள் விஜயராகவாச்சாரி.ராஜகோபாலாச்
சாரி, சி.பி.ராமசாமி அய்யர், சீனிவாசய்யங்கார் முதலிய எல்லாப் பார்ப்பனர். களும் தங்கள் கையாலானவரை பார்த்தார்கள். கடைசியாக ஒன்றுமே
முடியாமல் ஒரு புதுக்கட்சியை சிருஷ்டித்து அதன் பெயரால் மந்திரி ஆதிக்கத் தைப் பெற்று *தேசீயத்தை' நடத்த ஆரம்பித்தார்கள்.
அதுவும் மூன்று நாளைய வாழ்வாய் முடிந்தது. அதுமுதல் இதுவரை என்ன என்ன தந்திரமோ செய்து பார்த்தாய் விட்டது. ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு சுள்ளாணியையும் அசைக்க முடியவில்லை. காங்கிரசுக்கு சில படித்த பணக்காரர்களிடமும் பாமர மக்களிடமும் மதிப்பு இருந்த காலத்திலேயே ஒரு காரியமும் செய்ய முடியாமல் போன இவர்கள் காங்கிரஸ் யோக்கியதை
சந்தி சந்தியாய்ச் சிரிப்பாய் சிரிக்கும்போதும், காங்கிரசு தேசீயம் என்றால் காலி களுடையவும், கூலிகளுடையவும், வயிற்றுப் பிழைப்பு தேசீயக்காரர்களு டையவும் கூட்டம் என்று வெளிப்படையாய் அகராதியில் அர்த்தம் ஏற்பட்டிருக்கும் இக்காலத்திலும் காங்கிரசென்று சொல்லி ஒரு மூடனை யாவது ஏமாற்ற முடியுமா? என்று கேட்கின்றோம் - காங்கிரஸ், மந்திரி வேலையையும் உத்தியோகத்தையும் ஏற்றுக் கொள்ளப் போகின்றது, ஜனங் களுக்கெல்லாம் - மந்திரி பிச்சையும் உத்தியோகப் பிச்சையும் கொடுக்கப் போகின்றோம் என்று “ஒரு முதலை, தெருவில் போவார்களைக் கூப்பிட்டு பொன் காப்பு கொடுப்பதாய்ச் சொன்ன கதைபோல்” கூப்பிடுவதானாலும், திருவாளர்கள். வரதராஜுலுவையும் கல்யாணசுந்தரத்தையும் ஆமாசாமி போட்டு பின்பாட்டு பாடச் சொல்லுவதினாலும் யார் மயங்கிவிட முடியும்? எனவே, இனி கல்யாண சுந்தரமும் வரதராஜுலுவும் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி சென்ற வருஷத்தில் பேசியிருக்கும் பேச்சும் இப்போது பேசும் பேச்சும் என்ன என்பதை சற்று கவனித்துப் பார்ப்போம்.
சென்ற வருஷ கோயமுத்தூர் மகாநாட்டில் பேசும்போது திரு. கல் யாணசுந்தரம் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தையும் காங்கிரசின் அக்கிரமத்தையும் குறிப்பாய் திரு.சனிவாசையங்கார் அயோக்கியத் தனங்களையும் எடுத்துச் சொல்லி காங்கிரஸ் தலைவரான சீனிவாசையங்
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
காரைத் தலைவர் என்று சொன்ன நாக்கை அறுத்து சாணியில் போட்டு பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதாகவும், இனிமேல் ஜஸ்டிஸ் கட்சித் தலைவரையே தாம் தலைவர் என்று மதித்துக் கூப்பிடப் போவதாகவும் சுமார். 5000 பேர்கள் முன்னிலையில் சொல்லி ஜனங்களுடைய கைத்தட்டலைப் பெற்றவர். தீண்டாமையும் வகுப்புப் பிணக்கும் உள்ள நாட்டில் அரசியல் இயக்கம் (காங்கிரஸ்) கூடாது அதை ஒழிக்க வேண்டும் என்றும் சொன்னவர். அது மாத்திரமல்ல “காங்கிரஸ் உத்தியோகமேற்றதால் நான் காங்கிரசிலிருந்து விலகிக் கொள்ளுகிறேன்” என்று ராஜினாமா செய்தவர். இன்னமும் அவர்: காங்கிரசையும் திரு.சீனிவாச ஐயங்காரையும் உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதையும் பற்றி கண்டித்தும் வைதும் எழுதின எழுத்துக்கள் நமது குப்பையில் வண்டி வண்டியாய்க் கிடக்கின்றன. இப்படிப்பட்டவருக்கு இப்போது காங்கிரசும், உத்தியோகமேற்பும், சீனிவாசய்யங்கார் தலைமையும், ஜஸ்டிஸ் கட்சியை வைவதும், அவர்களுக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்பதும் என்ன அவசியத்திற்காக? அதுவும் தேர்தல் பிரசாரம் வரும்போது
மாத்திரம் ஏன் வந்தது? என்பது விளங்கவில்லை. அது போலவே திரு.வரத ராஜுலுவின் யோக்கியதையையும் சற்று கவனிப்போம். திருவரதராஜுலுவும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆரம்பித்தவுடன் திரு.கல்யாணசுந்தரத்தைப் போலவேபார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் பின் ஊர் ஊராய்த் திரிந்து கொண்டு டாக்டர், நாயரையும், சர்.தியாகராயரையும், பார்ப்பனரல்லா
தார் இயக்கத்தையும் மிக்க கேவலமாய் வைவதின் மூலம் பார்ப்பனர்களா னாலும் அவர்களது பத்திரிகைகளினாலும் விளம்பரம் செய்யப்பட்டு மனிதரானவர். அதுமுதல் இதுவரை பார்ப்பனர்களுக்கே நல்ல பிள்ளையாய் இருப்பதுடன் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் அவர்களது நலத்திற்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடையூறும் துரோகமும் செய்து கொண்டும், ஏதாவது ஒரு சமயத்தில் பார்ப்பனர்கள் இவரை லட்சியம் செய்யாவிட்டால் மாத்திரம் மறுபடியும் பார்ப்பனர்களைப் பயப்படுத்துவதற்காகப் பார்ப்பனரை: வைதுகொண்டு பார்ப்பனரல்லாதாரைப் பற்றியும், அவர்களது இயக்கத்தைப் பற்றியும் புகழ்ந்துபேசி, அதில் சேருவதாய் வேஷம் போடுவதும், பிறகு அவர்கள் சரிப்பட்டுவிட்டால் மறுபடியும் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொள்வதும், அவர்கள் இவரை லக்ஷியம் செய்யாவிட்டால் ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு தாமாகவே அவர்களுள் போய் நுழைந்து கொள் வதும் வழக்கமாயிருந்து வருவதை அநேக உதாரணங்களால் அறிந்
திருக்கலாம்.
கொஞ்ச காலத்திற்குமுன் சில ஸ்தல ஸ்தாபன தேர்தல்களின் போது திரு.வரதராஜுலு பார்ப்பனர்களுக்காக எவ்வளவோ பாடுபட்டும், அவர்கள் பல இடங்களில் தோல்வி அடைய நேரிட்டவுடன் தாம் ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர ஆசைப்பட்டு, “தமிழ்நாடு” பத்திரிகையில் பார்ப்பனர்களை வைதும், ஜஸ்டிஸ் ககஷியைப் புகழ்ந்தும், டிபத்திரிகையில் எழுதிய ஒரு தலையங்கத்
தின் குறிப்புகளாவன:-
குடி அரசு - 1929 () 278
“சமீப தேர்தல்களில் சுயராஜ்ஜியக் கக்ஷியாருக்கு ஒரு ஸ்தானம் கூட கிடைக்காமல் போதைற்குக் காரணம் சென்ற ஒருவருஷ காலமாக பிராமணர்கள் செய்துவரும் சூழ்ச்சிகளை ஜனங்கள் அறியத் தொடங்கினமைதான். அதனாலேயே பிராமணர்களுக்குத் தோல்வி கிடைத்து வருகின்றது. பிராமணரல்லாதாரை நசுக்கிவிட பிராமணர்கள் கட்டுப்பாடாக செய்துவந்த குழ்ச்சிதான் தேசிய பிராமணரல்லாதார்கள் கூட ஜஸ்டிஸ் ககஷியிடம் அநுதாபம் காட்டும்படி செய்துவிட்டது.எத்தனையோ பிராமணர்கள் உத்தியோகத்திற்காக காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷார் இந்நாட்டில் நிலை பெற்றது முதல் பிராமணர்கள் உத்தியோக வேட்டை ஆடி வருகிறார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியார் இந்த ஆறு வருஷமாகத்தான் உத்தியோகம் வேண்டும் என்று கேட்கின்றார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது? இது இயற்கைதானே? உத்தியோகம் கூடாது என்றால், எல்லாவகுப்பாருக்கும் கூடாது தானே. ஜஸ்டிஸ் ககஷியாருக்கு மாத்திரம் உத்தியோகம் கூடாது என்று சொல்ல யாருக்கு அதிகாரமிருக்கிறது? யார் உத்தியோகத்திற்குப் போனாலும், காங்கிரஸ் பிராமணருக்கு ஏன் இவ்வளவு கவலை? சுயராஜ்ஜியம் வேண்டுமென்று போராடும் கூட்டத்தாருக்கு அவர் உத்தியோகத்திற்குப் போகிறார் இவர்.
உத்தியோகத்திற்குப்போகிறார் என்கிற ஆத்திரம் ஏன்? ஆறுவயதாகிய ஜஸ்டிஸ் ககஷிக்காரரை உத்தியோக வேட்டைக்காரரென்றால் 150-வருடங்களாக உத்தியோக வேட்டை ஆடிவரும் இந்த பிராமணர்களை என்னவென்று அழைப்பது? உத்தியோகங்களிலிருக்கிற பிராமணர்கள் தங்கள் பதவிகளி லிருந்து வெளியில் வந்து பிறகு ஜஸ்டிஸ் ககஷியாரை நீங்களும் உத்தியோகங் களை விட்டு வெளியில் வந்து விடுங்கள் என்று சொன்னால் மாத்திரம் அதை நியாயம் என்று நாம் ஒப்புக் கொள்ளுவோம். இப்போது ஜஸ்டிஸ் ககஷிக்காரரை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று அழைக்கும் பிராமணர்கள் உத்தியோகங் களை துறந்த முனிவர்கள் அல்ல. தங்கள் ஜாதியார் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கும் உத்தியோகங்களை பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஜஸ்டிஸ் கக்ஷியாரைப் பற்றி மாத்திரம் தூற்றிப் பேச இந்த அன்னக் காவடி களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
ஜஸ்டிஸ் ககஷியார் பிராமணரல்லாதார் என்கிற பாவத்திற்காக
காங்கிரஸ் பிராமணர், மிதவாதப் பிராமணர், ஒத்துழையா பிராமணர், குமாஸ்தா பிராமணர் முதலிய சகல பிராமணர்களும் அபிப்பிராய பேத மின்றி ஒன்று சேர்ந்து ஜஸ்டிஸ் ககஷியை எதிர்த்து வருகின்றனர். குருகுலப் போராட்டத்திலும், இந்து மத பரிபாலன சட்ட விஷயத்திலும், தேசீய பிராமணரும், வைதீகப் பிராமணர்களும் நடந்து கொண்டதே பார்ப்பனர்
களின் யோக்கியதையை அறியப் போதுமானது. சின்ன காந்தி என்று. ஏமாற்றிவந்த ஸ்ரீராஜகோபாலாச்சாரி முதல் ஆசாரத்திருத்தம் பேசிவந்த ஸ்ரீச்னிவாசய்யங்கார் வரை ஒன்று சேர்ந்து கொண்டு தங்கள் ஜாதி, “மேல் ஜாதி” என்று பேச ஆரம்பித்து விட்டார்கள், அன்று முதல் பிராமணர்கள். மீதிருந்த நம்பிக்கை தொலைந்துவிட்டது. தேசீய கிளர்ச்சியில் உள்ள
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
பிராமணர்கள் நியாய புத்தி உள்ளவர்களாயிருந்திருந்தால் இன்றுள்ள பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற சண்டை ஏற்பட்டிருக்காது.
பிராமணர்கள் சில அயோக்கியர்களை ஏவிவிட்டு பிராமணரல்லாதாரை திட்டச் சொன்னதாலும் தேர்தல்களில் கையாளப்படும் சூழ்ச்சிகளைக் கண்ட
தாலும், ஸ்ரீமான்கள் நாயுடுவும் முதலியாரும் காங்கிரசிலிருந்து விலகிக் கொண்டார்கள். சில பிராமணரல்லாத அன்னக் காவடிகளை ஏவிவிட்டு பிராமணரல்லாத தலைவர்களைத் திட்டும்படியும் பத்திரிகைகளில் தாக்கி எழுதும்படியும் செய்தார்கள். பணத்தைக் கொண்டு எல்லாம் செய்துவிடலாம் என்று நினைத்து ஸ்ரீ. சீனிவாசய்யங்கார் பிராமணரல்லாத அன்னக் காவடி களை திட்டும்படி செய்தால் பிராமணரல்லாதார் எப்படி பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? இதன் பலனாக எல்லோர் மனமும் மாறிவிட்டது. ஒரு
தேசீயப் பிராமணனைவிட ஒரு ஜஸ்டிஸ் கட்சி பிராமணரல்லாதார் எவ்வளவோ சிலாக்கியம்.
ஸ்ரீ சீனிவாசய்யங்கார் மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்வதாய் பேசிய பேச்சுகள் வெளியாய்விட்டன. ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் போன்றவர்களின் மனத்துயரத்தை யாரும் அலக்ஷியம் செய்துவிட முடியாது. பிராமணரல்லாதாரை நசுக்கிவிடலாம் என்ற எண்ணமும்,பணத்தால் எதுவும் செய்துவிடலாம் என்கிற எண்ணமும், அன்னக்காவடிகளுக்குக் கூலி கொடுத்து ஏவிவிட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிற எண்ணமும் இனி பலிக்காது.
பிராமணர்கள் சுயராஜ்ஜியம் கேட்பது உண்மையானால் அரசியல் விஷயத்தில் இன்னவர்களுக்கு இத்தனை ஸ்தானங்கள் என்பதை நிர்ணயித்து எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்ற கொள்கையை ஒப்புக் கொண்டு பிராமணர்கள் அல்லாதார் முன்னேற்றத்திற்கு பிராமணர்கள் இடையூறு செய்யாமல் இருக்கும்படி தங்கள் ஜாதியாரைக் கேட்டுக் கொண்டு. பிரபல பிராமணர்கள் கையெழுத்திட்டு உடனே ஒரு அறிக்கை வெளியிட் டால்தான் இப்பொழுது பரவிவரும் ஜாதித் துவேஷத்தை அடக்க முடியும். இல்லாதவரை கர்மத்திற்குத் தக்கபலன் கிடைக்கும்” என்று எழுதியிருக்கிறார்.
தவிர கோயமுத்தூர் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் வந்து காங்கிர சின்பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை அடக்கவும் பார்ப்பனர். களை காங்கிரசை விட்டு விரட்டவும் பார்ப்பனரல்லாதார் காங்கிரசுக்கு வரவேண்டுமென்று சொல்லித் தாமும் ஜஸ்டிஸ் ககஷியில் சேர்ந்து கொண்ட தாக பெரிய கூட்டத்தில் விளம்பரப்படுத்தினார்.
சமிபத்தில் சைமன் மதராசுக்கு வந்த போதும் காங்கிரஸ் நடவடிக்கை பிடிக்காமல் காங்கிரசில் ராஜினாமா செய்தார். இன்னும் இதுபோல் இரண்டு
மூன்று வண்டி எழுதலாம். இப்படியெல்லாம் உண்மை இருக்க இப்போது மறுபடியும் ஜஸ்டிஸ் க௯ஷி உத்தியோக வேட்டைக் க௯ஷி, அதையும் மந்திரி கள் கனம் சுப்பராயனையும் கனம் முத்தையா முதலியாரையும் ஒழிக்க
குடி அரசு - 1929 () 280
வேண்டும். ஆதலால் உத்தியோகமேற்க வேண்டும் என்று திருவரதராஜுலு கடற்கரையில் கூப்பாடு போடுவதின் இரகசியம் என்ன? என்பதை வாசகர்களே யோசித்துத் தெரிந்துகொள்ள விட்டுவிடுகின்றோம்.
தவிர, அன்றைய தினம் பார்ப்பனர்களை அவ்வளவு திட்டிய திரு.வரதராஜுலுக்கு இன்றையதினம் கனம் சேதுரத்தினமைய்யர் மந்திரி வேலை பார்ப்பதை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மற்ற மந்திரிகளை மாத்திரம் திட்டுவானேன்? இவையெல்லாம் பார்ப்பன தயவுக்கும் உத்தியோகங்கள் கிடைப்பதானால் தமக்கும் ஒரு எலும்பு கிடைக்கட்டும் என்கின்ற சுயநலமும் பேராசையும் அல்லவா? என்று கேட்கின்றோம்.
வெளியே வர யோக்கியதை இல்லாதபோதும், பதில் சொல்ல யோக்கியதை இல்லாத போதும், தம் பெயரை வெளிப்படுத்த வேறு சந்தர்ப் பமில்லாதபோதும் உடம்பு காயலா என்று சொல்லிக் கொண்டு காயலாவின் பேரால் பலனடைவதும், கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தாலும் பார்ப்பன ரல்லாதாரை வைது பலன் பெறுவதுமாயிருந்துவிட்டு இப்போது சட்டசபைப் பைத்தியமும் உத்தியோக பேராசையும் கொண்டு பழயபடி பார்ப்பனத் தரகனாய் வெளிவந்தால் யார் இவரை நம்ப முடியும்? பார்ப்பனரல்லாதார். ககஷியை அழிக்கவும் பார்ப்பனரல்லாதார் மந்திரிகளை ஒழிக்கவும் ஒருவர். சட்டசபைக்கு போவதாயிருந்தால் அது திரு.காந்தி நிற்பதானாலும் கூட கடுகளவு பார்ப்பனரல்லாதார் இரத்தம் சரீரத்தில் ஓடுபவன் கூட ஓட்டுச் செய்யமாட்டான் என்பது உறுதி.
பார்ப்பனரல்லாதார் மந்திரிகள் இதுவரை இந்த மாகாணத்தில் மந்திரி. தோரணையில் செய்த காரியங்களில் இன்ன காரியம் தப்பு என்று குற்றம் சொல்லி அவர்களை ஒழிக்க வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால் அவன் மனிதத் தன்மையுடையவன் என்று சொல்லலாம். சைமன் கமிஷனை வரவேற்றது ஒரு தப்பு என்று சொல்வதானால் சைமன் கமிஷனை இந்தியாவில் எந்த மந்திரி வரவேற்கவில்லை? வரவேற்று அவர்களிடம் இந்தியாவின் நன்மைக்கு விரோதமான எந்தக் காரியத்தைச் சொல்லி விட்டார்கள்? அதனால் என்ன தீமை விளைந்தது? என்று சொல்லி ஆட்சேபிப்பது யோக்கியமானதாகும். அப்படிக்கில்லாமல் அய்யங்கார் சொல்வதற்கெல்லாம் ஆமா சாமி போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லா தார்களை வைவதின் மூலமே தேசீயவாதியாகவும் சட்டசபை மெம்பராகவும் அதன் மூலம் ஏதாவது பலனடையலாமென்றும் நினைத்தால் அது இனி ஒருகாலமும் கைகூடாது என்று தைரியமாய்ச் சொல்லுவோம். மற்றபடி திருஅய்யங்கார் யோக்கியதையை மற்றொரு சமயம் வெளிப்படுத்துவோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.05.1929.
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
இணிமேல்தாண்
மதத்தையும் சாஸ்திரத்தையும்
திருத்தப் போகிண்றார்கனாம்
நல்லதனமாகவும், நயமாகவும், கெஞ்சியும் கேட்பவர்களைப் பற்றி சாதாரண மனிதர்கள் சற்றும் லக்ஷியம் செய்வதில்லை. எவ்வளவுக் கெவ் வளவு நயமும் கெஞ்சுதலும் ஏற்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு ஆணவமும் பிடிவாதமும் மிரட்டுதலும் ஏற்படுவது நடுத்தர மனிதர்களிடம் காணும் சுபாவம். சாதாரண நடுத்தர மக்களின் குணமே இப்படி இருக்கு
மானால் மற்றபடி கீழ்த்தர மக்கள் அதாவது சமய சமூக வித்தியாச சேற்றில் உழன்று கொண்டு அதன் மூலம் ஆதிக்கமும் வயிற்றுப் பிழைப்பும், ஏற் படுத்திக் கொண்ட இழி மக்களிடம் கெஞ்சுதலுக்கும் நல்லதனத்திற்கும் செவிசாய்ப்புக்கும் எதிர்பார்ப்பது எங்ஙனம் கூடும்?
உதாரணமாக, சமயக்கட்டுப்பாட்டுக் கொடுமைகளும், சமூகக் கட்டுப் பாட்டுக் கொடுமைகளும், நமது நாட்டைப் பாழாக்கி அன்னியர் வசம் ஒப்புவித்து மானமிழந்து நிற்கச் செய்கின்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்ட பிறகும், நாடு மானத்துடன் அவைகளை ஒழித்தாலல்லது வாழ முடியாது என்பதை அறிந்தும் அவைகளை ஒழித்து, விடுதலையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதுடன் மக்களின் வறுமையையும் எளிமை யையும் ஒழிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு ஆயிரக் கணக்கான வருஷங்களாகவே பல பெரியோர்கள் முயற்சித்து வந்திருப்பதும் நாம் எல் லாரும் அறிந்ததாகும். அப்படி முயற்சித்த அவ்வளவுபேரும் “ஆண்டவன் அருள்பெற்றவர்களாகவும்”, “ஆண்டவனால் அனுப்பப் பட்டவர்களாக
வும்”, “முத்திநிலை, மோக்ஷ நிலை அடைந்தவர்களாகவும்” கருதப்பட்டும் வருகின்றார்கள் என்பதிலும் ஆக்ஷ்பணை இல்லை.
ஆனாலும் அவர்களது அபிப்பிராயங்களுக்கும் வார்த்தைகளுக்கும் மாத்திரம் வெவ்வேறு வித பாஷ்யங்களும் வியாக்கியானங்களும், செய்யப் பட்டு காரியத்தில் கடுகளவுகூட அப்பெரியார்களது கருத்துக்கள் நிறைவேற முடியாமலும், செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
உதாரணமாக, சங்கரர் என்னும் ஒருபார்ப்பனர்பறையணால்ஞானோதயம் பெற்று, அவன் காலில் விழுந்தார் என்றும், “பறையன் என்பதாக ஒரு தனிபிறப்பு
குடி அரசு - 1929 () 282
இல்லை” என்று ஒத்துக் கொண்டார் என்றும் சொல்லப்படுவதை எல்லோரும். ஒப்புக் கொண்டதுடன் அவர் சிவன் அவதாரம் என்றும் ஒப்புக் கொண்டும், கடைசியாக, சங்கரர் வேதாந்த தத்துவத்தைக் காட்டுவதற்காகப் பறையன் காலில் விழுந்தார் என்றும், விழப்பட்ட பறையன் ஜாதியில் பறையனல்ல வென்றும், சிவனேதான் அந்தப்பறையன்வடிவமாகவுழ்வந்தார் என்றும்,சொல்லிமறு டியும் பழையபடியேபறையனைக் கண்டால்பாவம் என்றும்,அதற்காகப்பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகின்ற சாஸ்திரத்தை நிலைபெறச் செய்து, அதன் கொள்கைகளை இன்றைக்கும் அமுலில் இருக்கவும் செய்தாய் விட்டது.
மற்றும், அதே சங்கரரின் பேரால், கடவுள் என்று ஒரு தனி வஸ்து இல்லை என்றும், ஒவ்வொரு மனிதனுள் இருக்கும், ஜீவனே, ஜீவ ஆத்மாவே கடவுள் என்றும் சொல்லிப் போனார் என்றும் சொல்லி அதற்காக அவரை: *லோககுரு” என்றும் - லோக மக்கள் எல்லோருக்குமே ஆச்சாரியார் என்றும் சொல்லப்பட்டு அதே மாதிரி மக்கள் மனதில் பதியவைத்தும் ஆய்விட்டது. ஆனால் எண்ணிக்கைக்கு அடங்காத தனித்தனி கடவுள்களுக்கு கோவில் கட்டி வணங்குகின்றவர்கள் இன்றைக்கும் சங்கராச்சாரி சிஷ்யர்களாகவே தான் பாவிக்கப்பட்டு வருகின்றார்கள்.
அதுபோலவே, ராமானுஜர் என்னும் ஒரு பார்ப்பனர் மக்களில் ஜாதி பேதமில்லை என்றும், மந்திர ரகசியங்களை அறியக் கூடாத மனிதர்கள் இல்லை என்றும், எல்லா மக்களும் அதாவது எவனெவன் நாமம் வைத்துப் பூணூல் போட்டுக் கொள்கின்றானோ அவனெல்லாம் வைணவனாவான் என்றும் சொன்னதுடன் அந்தப்படியே கோடிக்கணக்கான மக்களை வைணவ
ராக்கினார் என்றும், பார்ப்பனனல்லாதவன் சாப்பிட்ட எச்சில் இலையை எடுக்காததற்கு ஆக பெண் ஜாதி மீது கோபங்கொண்டு வெளிக்கிளம்பினார்.
என்றும், இன்றைய வைணவ மதம் ராமானுஜருடைய மதம் என்றும் வைணவ ரெல்லாம் ராமானுஜருடைய சிஷ்யர் என்றும் சொல்லிக் கொண்டு அவரையும் கடவுளாக்கி அவருக்கும் கோவில் முதலியவைகள் கட்டி, பூஜை, உற்சவம் முதலியவைகள் செய்து கொண்டும் பட்டை நாமங்கள் போட்டுக் கொண்டும் அவரைப் பற்றிப் பாடிக் கொண்டும் இருக்கும் மக்கள் இன்றைய தினம் சம்பந்தி வீட்டில் சாப்பிடாமலும், ஒருவர்க்கொருவர் திரை போட்டுக் கொண்டு சாப்பிடுவதையும் பார்க்கின்றோம்.
அதுபோலவே, திருவள்ளுவர் என்று சொல்லப்பட்டவர், குலத்தில் பறையர் என்றும், அவர்பாடிய குறள் என்னும் நூல் அய்ந்தாம் வேதம் என்றும், தெய்வப் புலவர் என்றும், பிரம்மாவின் அவதாரம் என்றும், அப் பேர்ப்பட்டவரால் செய்யப்பட்ட குறளை ஒப்புக் கொள்ளாத மனிதன் அறிவுடையவனாக மாட்டான் என்றும், மற்றும் சங்கரர், ராமானுஜர். பார்ப்பனர் என்றும் வள்ளுவர் பார்ப்பனரல்லாதார் என்றும், ஆகையால் அதுதான் தமிழ் மக்களுக்கு நீதி என்றும் சொல்லும் மக்கள் தங்களைக்
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
குறளில் வல்லவர், புலவர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதோடு. வள்ளுவருக்குக் கோவில் கட்டிப் பூஜிப்பதல்லாமல் வள்ளுவர் குறளில் சொன்னபடி நடப்பவர்கள் யாரும் இல்லை. அன்றியும் குறளானது “வள்ளுவர் போன்ற ஞானிகளுக்கு உகந்ததே ஒழிய நமக்கல்ல” என்று சமாதானமும் சொல்லிவிடுகிறார்கள்..
அது போலவே சைவர்கள் என்னும் ஒரு கூட்டமும் தங்கள் மதத்திற்கு என்று ஆதியோ, ஆச்சாரியரோ ஒரு தமிழ் ஆதிநூலோ ஒன்றும் இல்லை யாயினும் பார்ப்பனர்களால் தாங்கள் இழிவுபடுத்தப் பட்டிருக்கும் காரணத்
தால் எப்படியாவது தங்களைப் பார்ப்பனரைவிட்டுப் பிரித்துக்காட்ட எண்ணி, அப்பார்ப்பனர்களிடமிருந்தே சிலவற்றைப் பொறுக்கிக்கொண்டு அதையே ஆதாரமாகவும் வைத்துக் கொண்டு தாங்களுக்கு ஒரு தனிமதம் உண்டென்
றும். அதுதான் சைவம் என்றும், அதற்கு சிவனே கடவுள் என்றும், சிவன் என்றால் அன்பு என்னும் குணம் என்றும், எல்லோரும் சிவசொரூபம் என்றும் சொல்லி பிறகு, பார்வதி, பரமசிவன், கைலாயம், ரிஷபவாகனம், லிங்கம், ஆவுடையார் என அர்த்தமற்றதும் கேவலமானதும் பொருந்தாததுமான கண்டவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டு உலகத்தில் அது ஒரு பிரமாத மான விஷயம் போல் கருதி, மக்களை மக்கள் பார்க்க முடியாமலும், ஒன்று சேர்க்க முடியாமலும், பிரித்துவைத்துக் கொண்டிருக்கத்தக்க வண்ணத்தில் நிபந்தனைகளையும், நிர்ப்பந்தங்களையும் வைத்துக் கொண்டு இருப்ப தையும் பார்க்கின்றோம்.
இம்மாதிரி இன்னும் எத்தனையோ விஷயங்களை அறிவிற்கும் எண்ணத்திற்கும், வார்த்தைக்கும், செய்கைக்கும் அனுபவத்திற்கும் ஒன்றுக் கொன்று பொருத்தமில்லாத பல விஷயங்களும் ஆதாரங்களும் மனித
தத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும், தடைகல்லாய் இருப்பதை யாரும் மறைத்துவிட முடியாது. இவைகளைப் பற்றி யாராவது எடுத்துச் சொல்லி அதன் துன்பங்களை நீக்க வேண்டுமென்று நயமாகவும் கெஞ்சியும் கேட்ட போதெல்லாம் அவைகளால் பிழைத்து வருபவர்கள், “மதம் இடம் கொடுக்க வில்லை”, “சமயம் இடம் கொடுக்கவில்லை”, “கடவுளுக்கு விரோதம்”, “பெரியார்களுக்கு விரோதம்”, “வேதத்திற்கு விரோதம்”, “சாஸ்திரத்திற்கு விரோதம்”, “ஆகமத்திற்கு விரோதம்” என்று சொல்லி அவர்களை எதிர்த்து வாயெடுக்கவொட்டாமல் அடக்கிக் கொண்டே வந்துவிட்டார்கள். இப்பொழுது அப்பேர்ப்பட்ட மதம், சமயம், கடவுள். பெரியார், வேதம்,
சாஸ்திரம், ஆகமம் முதலிய எல்லாவற்றையும் ஒருகை பார்த்துவிடுவதென்று தீர்மானித்து அவைகளின் ஆபாசங்களையும், அயோக்கியத்தனங்களையும் வெளியாக்கி அடியோடு ஒழிக்கத் துணிந்த பின்பு, தங்களால் கூடியவரை என்னமோ சூழ்ச்சிகள் செய்து எதிர்த்துப் பார்த்தும் முடியாது போகவே, இனி தங்கள் பாடு ஆபத்து என்று உணர்ந்து ஒருவாறு வழிக்கு வந்திருக்கின்றார்கள். அதாவது இவ்வாரத்தில் பம்பாய் மாகாணத்தைச்
குடி அரசு - 1929 () 284
சேர்ந்த பூனாவில் உள்ள வருணாசிரமப் பார்ப்பனர்களும், அதிகாரப் பார்ப்பனர்களும் அரசியல் பார்ப்பனர்களும், எல்லாரும் ஒன்று சேர்ந்து,
இந்து மத சாஸ்திர ஆராய்ச்சியும், திருத்தமும், என்பதாக ஒரு மகாநாடு கூட்டிப்பேசி இருக்கின்றார்கள். அதில் வரவேற்புத் தலைவர் திரு.கேல்கர். தமது சொற்பொழிவில் “காலத்திற்குத் தக்கபடி சாஸ்திரங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட தர்மசாஸ்திரம் எக்காலத்திற்கும் பொருத்தமானதென்று கருதுவது சரியல்ல” என்று சொல்லி, ஆராய்ச்சியும் திருத்தமும் அவசியமென்று பேசினார். மகாநாட்டுத் தலைவரான மற்றொரு ஹைகோர்ட்டு ஜட்ஜி பார்ப்பனர். “சாஸ்திரங்களைத் திருத்தியாகவேண்டிய காலம் வந்துவிட்டது” என்றும், “திருத்தங்களுக்கு ஒப்புக் கொள்ளாதவர்கள் சாஸ்திரங்களை அறியாதவர்.
கள்” என்றும் சொல்லி இருக்கின்றார்.
தவிர, இந்த விஷயங்களை ஆதரித்து, 28-05-1929 ௨“சுதேச
மித்திர”னிலும், “தர்மசாஸ்திர ஆராய்ச்சியும் திருத்தமும்” என்று ஒரு தலையங்கமும் எழுதப்பட்டிருக்கின்றது. இது ஒரு சமயம் உண்மையான எண்ணத்தோடு பேசப்பட்டும் எழுதப்பட்டும் இருந்தாலும் சரி, அல்லது தற்சமயம் பொது ஜனங்களுக்கு தோன்றியிருக்கும் உணர்ச்சியின் வேகத்தைத் தணிக்கக் கருதி, சூழ்ச்சி எண்ணத்துடன் எழுதியிருந்தாலும் சரி, எப்படியாவது சாஸ்திரங்கள் எல்லாக் காலத்திற்கும் ஆதாரமல்ல என்ப தையும் காலத்திற்குத்தக்கபடி புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதையும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்தது நமக்கு ஒரு வெற்றி என்றே சொல்லவேண்டும்.
நிற்க, சாஸ்திரத்தைத் தங்கள் சொந்த சொத்தாகக் கொண்ட பார்ப்பனர் களே இந்த மாதிரி வேத சாஸ்திரங்களையே புதுப்பித்தாக வேண்டுமென்று
ஒப்புக் கொண்டபிறகு அதிலிருந்து திருடிக் கொண்டும் பிச்சை வாங்கிக் கொண்டும் அவர்களிடம் கூலி பெற்றுப் பிரசாரம் செய்து கொண்டும். இருக்கின்ற குப்பைப் புராணச் சமயவாதிகளும், புராணக் கடவுள்களை ஸ்தாபிக்கும், ஆஸ்திக பிரசாரவாதிகளும், இனி என்ன செய்யப் போகின்
றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.ஒரு சமயம் அவர்களும் பார்ப்பனர் களைப் பின்பற்றி தங்கள் புராணங்களையும், சமயங்களையும், கடவுள். களையும், புதுப்பிக்க வேண்டும் என்பார்களோ அல்லது ஒரு எழுத்துக் கூட மாற்றக் கூடாது, ஒரு கடவுளைக்கூட தள்ளக்கூடாது, எல்லாம் உண்மை, எல்லாம் சத்தியம் என்று தத்துவார்த்தம் சொல்லிக் கொண்டே திரிவார்களோ தெரியவில்லை.
எப்படியானாலும் சட்டசபைத் தேர்தல் ஒரு வருஷம் ஒத்திப்போட்டு விட்டதாலும், அதன் காரணமாய் “ஆஸ்திக ஸ்தாபன அவதாரமான” திரு. சீனிவாசய்யங்கார் ஓய்வெடுத்துக் கொள்ளுவதாய்ச் சொல்லிவிட்டபடியா
லும், அநேகமாக சமய மகாநாடுகளும், ஆஸ்திக பிரசார மிஷினும் சற்று
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஓய்வு எடுத்துக் கொள்ள நேரிடும் என்றே கருதுகின்றோம்.
ஏனெனில், இனி ஒன்றரை வருஷம் பொறுத்து வரப்போகும் தேர்தலுக்கு ஆக இப்பொழுதிருந்தே சமயப் பிரசாரமும் ஆஸ்திகப் பிரசாரமும் செய்வதென்றால், பணம் கொடுப்பவர்களுக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரியுமே ஒழிய, சும்மா நின்று கத்திவிட்டு கூலிவாங்குகிறவர்
களுக்குத் தெரிய முடியவே முடியாது. ஆதலால் நமக்கும் சற்று தானாகவே ஓய்வு கிடைத்துவிடும் போலவே தெரிகின்றது. ஏனெனில் நமக்கு எதிரிகள்: என்று நான்கு பேர் தோன்றி அவர்கள் ஏதாவது நமது இயக்கத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தால்தான் நாமும் அதற்குப் பதில் சொல்லும்
முறையில், நமது பிரசாரமும் மேலும் மேலும் வளருவதற்கு அனுகூலமாக இருக்குமே ஒழிய எதிர்ப்பு இல்லாதபோது உணர்ச்சியும் வேகமும் இருக்கவே முடியாது.
உதாரணமாக, திரு.கல்யாணசுந்திர முதலியார் கடவுள் போச்சுது, கலைகள் போச்சுது, கடவுளைக் கண்ட பெரியார்கள் போச்சுது அவைகளைக் காப்பாற்ற அவதாரம் வேண்டும், அறப்போர் செய்ய வேண்டும் என்று கூப்பாடு போடாமலிருந்தால் கடவுள்கள் யோக்கியதையும் பெரிய புராணம் முதலிய கலைகள் யோக்கியதையும், அதில் உள்ள கடவுள்களைக் கண்ட பெரியார்கள் யோக்கியதையும் இவ்வளவு தூரம் மக்களுக்கு வெளியாக்கப் பட்டிருக்க முடியவே முடியாது என்று துணிந்து கூறுவோம். அன்றியும் அநேக பெரியார்கள் யோக்கியதையும் வெளியாயிருக்காதென்று கூடச் சொல்லுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.06.1929
குடி அரசு - 1929 () 286
வாதராச-னுவிண் விஷமப் பிரசாரம்
“தமிழ்நாடு” பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சில் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டுவிட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத் தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார். திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும் முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும்
நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். எனவே இதனால் “தமிழ்நாடு” பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்துவந்த மாதிரி
யையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதைத் தவிர, வேறு எவ்வித நஷ்டமும் உண்டாகிவிடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தவிர அம்மாதிரி ஏதாவது, ஒரு சமயம் தேவஸ்தானக் கமிட்டியார் அத் தீர்மானத்தை ரத்து செய்வார்களானால் கண்டிப்பாய் திருஈவெராமசாமியார், கமிட்டி வைஸ்பிரசிடெண்ட் ஸ்தானத்தையும், மெம்பர் ஸ்தானத்தையும் ராஜீநாமாக் கொடுத்துவிட்டு அத்தீர்மானத்தின் தத்துவத்தை சட்டத்தின் மூலமோ, சுயமரியாதை சத்தியாக்கிரகத்தின் மூலமோ அமுலில் கொண்டு
வரும் வேலையில் இறங்குவாரே ஒழிய “உடம்புக்குச் சவுகரியமில்லை” என்று சாக்குச் சொல்லிக் கொண்டு முதுகு காட்டி ஓடிவிடமாட்டார் என்பதை திரு.வரதராஜுலுவுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1929
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஒத்திகோ௫ட௫தல்
இந்திய சட்டசபை மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷகாலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரசாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்தி போட்டு விட்டார்கள். அதுபோலவே, திரு. கல்யாண
சுந்தர முதலியாரது ஆஸ்திகப் பிரசாரமும், சைவப் பெரியார்கள் மகா நாடுகளும் அநேகமாக ஒத்திபோடப்பட்டுவிடும். திரு.வரதராஜுலுவின் உத்தியோகமேற்கும் பிரசாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன்
மூலம் ஒத்திபோடப்பட்டாய்விட்டது. இதுமாத்திரமல்லாமல் திரு.சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்கு பிரசாரமும், திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரசாரமும், திரு.சங்கர்லால் பாங்கரின் அன்னியத் துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்படலாம். அன்றியும் “தேசமே பிரதான” மென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமானப் பிரசாரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்பட்டுவிடும்.
இவற்றையெல்லாம் விட, 1929-ம் வருஷம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு 12 மணி 5 நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாய் ஒத்துழையாமை நடத்துவது என்கின்ற திரு.காந்தியின் வாய்தாவும் கண்டிப்பாய் யார் தடுத்தாலும் நிற்காமல் ஒத்திபோட்டாய்விடும்.
குடி அரசு - அறிக்கை - 02.06.1929
குடி அரசு - 1929 () 288
சைவப் வாரியார்
மகாநா௫
திருநெல்வேலியிலும், திருப்பாப்புலியூரிலும் சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர்கள் அண்ணாமலை பிள்ளை, சாமிநாதசெட்டியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிருஷ்ண சாமிபாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும்
மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டுக் கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர் செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவ சமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரசாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும் அதைப்பற்றி நாம்
முன் எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாக பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன் மகாநாட்டைக் கூட்டிய
பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1929
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
“குழ அரசு வாசகர்களுக்கு
ஓர் வண்டுகோன்
இந்த இரண்டு மூன்று வாரமாய் தெரிவித்து வந்தபடி நமது பத்திரிகாலயத்தை சென்னையில் நிறுவவேண்டிய ஏற்பாடு செய்து வருகின்றோம். இதனால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் நமது பத்திரிகை தடைப்படலாம். பிறகு சென்னையிலிருந்து மேல்காகிதத்துடனும் 20 பக்கங்களு டனும் வெளிவரும்.
குறிப்பு :- “குடி அரசு” ஆரம்பித்த இந்த ஐந்து வருஷகாலத்தில், இரண்டாவது வருஷ முதலில் ஒரு தடவை ஒரேவாரமும், இப்போது ஒரு தடவையும் தான் அதுவும் அபி விர்த்தி காரணமாகவேதான் தவக்கப்பட்டிருப்பதால், வாசகர். கள் அவசியம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கின் றோம்.
(ப-ர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 02.06.1929
குடி அரசு - 1929 () 290
சுயமரியாதைத் வதாண்டர்கள்
மகாநா௫
சகோதரி சகோதரர்களே!
இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர் களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர். மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப் பட்ட மகாநாட்டிற்கு திருகுருசாமியாரை வரவேற்புக் கமிட்டியார் தெரிந் தெடுத்ததற்கு நாம் அவர். களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர். களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.செளந்திர பாண்டியனார், சொ. முரு
கப்பர், எஸ். குருசாமி ஆகிய முக்கியமானவர்களில் ஒருவராவார். ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடுகூடவே, செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக்கொள்கையையே பின்பற்றுகிற வருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்”க்கு பெயரளவில் நான் பத்திராதிபனே ஒழிய காரியத்தில் அவரேதான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர். அவரது எழுத்துக்களும், கருத்துக்
களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளிமாகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத் தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக் கிறது. இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாதாரர்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர, திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும்
அறிவும் இருப்பதின் நிமித்தம் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக்கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவதென்றும், அதிலும் விதவையாயிருத்தலே மேலென்றும் தீர்மானித்துக் கொண்டிருப்பவர். எனவே இப்பேர்ப்பட்ட, அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
யான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும்
ஆகும்.
குறிப்பு-பட்டுக்கோட்டையில் 24.05.1929 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டுத்தலைவரை வழிமொழிந்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 02.06.1929
குடி அரசு - 1929 () 292
அனிப்பிரதி வில [95 தகை ரிஜிஸ்டர் தெ- 2041 அள்
வரப்பதிப்பு ள்கள் Gt சல் ததக
3 ண்ட் விம்பம் சுங்கம் 143 த. 8, oo க வெ.ரவராசி, @ படத்த விபத்துக் ஐ தி விற்தம்।
சென்ன, சக்லெணு ஆனிமி 8௨ (16--6--20) ஞாயிந்தர்ழெமை மலர்
ட டானை க குடு அரசு” “ரிவொல்ட்” |
பத்திரிகைகளின் காரியாலயம்
சென்னைக்கு வந்துவிட்டது.
1௨6 2ந்தேதி முதல் சென்வளயினின்றும் வெளிவரும்
விலாசம்
மானேஜர், " wQangi, [ காரியாலயம், வால்ட் காரியாலயம்,
| 14, மவுண்ட்ரோப், சென்னை. 14, மவுண்ட்சோட்,
| ட —— யை ன
i
293 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
காங்கிரசிண் யோக்கியதை
காங்கிரசைப்பற்றி நாம் அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்ல வென்றும் இவர்களுக்கு, கெடுதியை தரத்தக்க தென்றும் 4, 5 @ காலமாக விடாமல் சொல்லி வருகின்றோம். இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத்துரோகி என்று சொல்லி விஷமப் பிரசாரமும் செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார். பத்திரிகையானது தனது தலையங்கத்தில், “காங்கிரசு பணக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய்விட்டது. உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப் பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகிவிட்டார்கள். காங்கிரசுக்கு எதிரி களாய்விட்டார்கள். முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள்” என்று
எழுதி இருக்கின்றது.
இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா?' எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929
குடி அரசு - 1929 () 294
இப்வபாமுது மதம் எங்கே?
திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாடசாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று “மகந்து£வும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல்லாதார்களை விலக்கிவிட்டார்கள். இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு
வித்தியாசமும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லா பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே இப்போது அந்த மதம் இருக்கிறதா போய்விட்டதா? என்று கேட்கின்றோம். பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் “பேய்” இருக்குமானால்
3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப் போகும் என்
பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவதாகத் தெரிகிறது.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
திருக்கோவினூரில் சுயமரியாதைப் பிரசாரம்
நமது முன்னேற்றம்
சகோதரர்களே! நான் உங்கள் ஊருக்கு இதற்கு முன் இரண்டொரு தடவைகள் வந்திருக்கின்றேன். ஒரு தடவை ஒத்துழையாமையின்போது உங்கள் ஜில்லாவாகிய தென் ஆற்காடு ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்த. காலத்தில், இந்த மண்டபத்துக்கெதிரில் பேசியிருப்பதாக எனக்கு ஞாபகமிருக்கின்றது. இன்னொரு தடவை காலஞ்சென்ற நமது நண்பர் திரு.ம.ரா. குமாரசாமி பிள்ளையவர்கள் இருக்கின்ற போழ்து திரு.பிள்ளை. யவர்களால் அழைக்கப்பட்டு உங்களூர்வாசிகளாகிய திரு.லட்கமணசாமி முதலியார், திரு.கிருஷ்ணசாமி பிள்ளை முதலியவர்களாலும் கடைவீதிக் காரர்களாலும் பெரிய ஆடம்பரத்துடன் வரவேற்கப்பட்டு, இவ்வூருக்கு வந்து இதே இடத்தில் பேசியிருக்கிறேன். நான் இங்கு காலஞ்சென்ற எனது நண்பர் குமாரசாமியாரவர்களின் குடும்பத்தாரைக் கண்டு எனது அனுதாபத்தைத் தெரிவித்து விட்டுப் போகலாமென வந்த இடத்தில் ஞானியார் ஆசிரமக்
காரியஸ்தர் திரு.வடிவேலு செட்டியாரும் அவரது நண்பர்களும் இன்று இங்கு ஒரு சொற்பொழிவுநிகழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் நானும் சம்மதித்து ஏதோ சில வார்த்தைகள் இன்று இங்கு பேச வந்திருக்கின்றேன்.
நான் எடுத்துக் கொண்ட விஷயம் பேசத் தொடங்கு முன் காலஞ் சென்ற திரும.ரா.குமாரசாமியாரவர்களைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல அனுமதிக்க வேண்டுகின்றேன்.
திரு.குமாரசாமியார் சுமார் 10 வருஷமாக எனக்கு தெரிந்தவர். அவர்
சற்றும் சுயநலம் கருதாத ஒரு உண்மைத் தொண்டராவார். நான் செல்லும் அநேக இடங்களுக்கு அவரும், அவர் செல்லும் அநேக இடங்களுக்கு
நானும் செல்வதன் மூலம் அடிக்கடி பொது மேடைகளில் சந்தித்து வந்திருக்கின்றோம். என்னிடத்தில் அவருக்கு அதிக அன்புண்டு. என்னு டைய கொள்கைகள் பெரிதும் அவரால் ஒவ்வொரு கூட்டத்திலும், நான் இல்லா காலங்களில் கூட ஆதரிக்கப்படுவதுண்டு. அதனாலேயே எனக்கு அவரிடம் அதிகமான விசுவாசம் இருந்துவந்தது. அவரைப் பிறந்த இடமாகக் கொண்டதால் இந்த ஊருக்கு வெளியிடங்களில் அதிகமதிப்பு உண்டென்றே சொல்லுவேன். அப்பேர்ப்பட்ட பெரியார் தொடங்கிய ஆசிரம விஷயத்தில் நீங்கள் அதிக கவலை எடுத்து அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய
குடி அரசு - 1929 () 296
முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டியது உங்கள் முக்கிய கடமையாகும். திரு.வடிவேலு செட்டியாரும் அதற்கு மிகுதியும் ஏற்றவர் என்றே சொல்வேன்.
நிற்க, நான் இன்று பேச வேண்டிய தலைப்பு விஷயம், “நமது முன்னேற்றம்” என்பதாகும். இந்த தலைப்பின் கீழ் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும் நான் நமது நாட்டு மக்கள் முன்னேற்றம் என்பதைப் பற்றி சொல்லும் முறையில் மற்ற நாட்டிற்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் சொல்லி பிறகு நாம் செய்ய வேண்டியவைகள் என்று எனக்குத் தோன்றுவதை சொல்லுகின்றேன். நான் சொல்லுவது பெரும்பாலும் என்னுடைய சொந்த கருத்தும் நான் மனப்பூர்வமாய் சரி என்று உணர்ந்ததுமே சொல்லுகின்றேன். நமது நாட்டைப் பற்றி முற்காலத்தில் இருந்த நிலை என்பதாக அதற்கு பிரத்தியக்ஷ சாக்ஷியம் இல்லாத இக்காலத்தில் எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொண்டாலும் இன்றைய பிரத்தியக்ஷ நிலையை உணர்ந்து இது நமது முற்போக்கா? பிற்போக்கா? என்பதை முதலில் உங்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். நமது நாடு இன்றைய நிலைமையில் விளை பொருளிலும் மூலப் பொருளிலும் வியாபாரத் துறையிலும் கைத் தொழில் வசதியிலும் இன்றைய தினம் நாமறிந்த எந்த நாட்டிற்கும் பிற்பட்டதல்ல என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள். அதுபோலவே மக்கள் வாழ்வில் செல்வத்திலும் அறிவிலும் ஆராய்ச்சி
யிலும் சமூக உரிமையிலும் அரசியல் உரிமையிலும் பிற்பட்டு அடிமைபட்டு இருக்கின்றோம் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்றுநினைக் கின்றேன். உதாரணமாக செல்வத்தில் நாம் பிற்பட்டவர்கள் என்பதற்கு மற்றநாட்டு சாதாரண பெண்மணிகளிடம் இருக்கும் செல்வம் நமது நாட்டு
பிரபுக்கள் என்பவர்களிடம் இல்லை. அதுமாத்திரமல்லாமல் மற்ற நாட்டு ஒவ்வொரு தனிமனிதனுடைய சராசரி மாத வரும்படி 35 ரூபா வீதம் என்றால் நம்நாட்டு மனிதனின் சராசரி வரும் படி 3, ரூபா ஆகின்றது. மற்றும் பிழைப்பு வசதியோ நமது நாட்டில் வேலைக் கிடைக்காமலும் கூலி கிடைக்கா
மலும் வாரம் ஒன்றுக்கு பதினாயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கு கூலிகளாகக் கப்பலேறுகின்றார்கள்.ஆனால், வெளிநாடுகளிலிருந்து நமக்கு முதலாளிகளாகவும் எஜமானர்களாகவும் அதிகாரிகளாகவும் பலர் தினம் இறங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டால் நாம் நடுங்குகின்றோம்.
மற்றபடி அறிவிலும் நமது மக்களின் சராசரி அறிவு தெரிய வேண்டுமானால் 100-க்கு 7 பேரே கையெழுத்துப் போட தெரிந்தவர்கள். பெண்களிலோ 1000-க்கு 172 பேர் கையெழுத்துப் போட தெரிந்தவர்கள். அதிலும் சிறந்த மூடர்கள் என்பவர்கள் பண்டிதக் கூட்டங்களிலேயே பெரும்பான்மையோராக இருந்தால் மற்றவர்களைப் பற்றி நாம் யோசிக்கவும் வேண்டுமா? ஆராய்ச்சி விஷயத்தில் ஆனால் வெளிநாட்டார்களின்
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஆராய்ச்சியோ மின்சாரத்தின் மூலமும் தண்ணீர் ஆவியின் மூலமும் எண்ணெயின் சூட்டின் மூலமும் அவர்கள் செய்கின்ற அற்புதங்களுக்கு அளவே இல்லை. ஒவ்வொருத் துறையிலும் நாளுக்கு நாள் முன்னேறு கின்றார்கள். செத்தவனை பிழைக்க வைக்க முயற்சித்து பலன் கண்டு கொண்டு வருகின்றார்கள். நக்ஷத்திர மண்டலத்திற்கு போக முயற்சிக் கிறார்கள். மணிக்கு 500 மைல் வேகம் பறக்கப் பார்க்கிறார்கள். ஒரு வாரத்தில் 6000 மைல் தூரமுள்ள சீமைக்குப் போகிறார்கள். ஒரு மணி நேரத்தில் 10000 மைல்களுக்கப்பாலுள்ள செய்தியை அறிகின்றார்கள். ஒரு பீரங்கி வெடியில் பதினாயிரக்கணக்கான மக்களை உயிர் வாங்கும்படியான யுத்த முறைகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள். கண் மூடி திறப்பதற்குள் மின்னி மறையும் மின்னலிலிருந்து மின்சார மெடுக்கின்றார்கள். தண்ணீர் வீழ்ச்சியிலிருந்தும் சூரிய வெப்பத்திலிருந்தும் மின்சாரம் உண்டாக்குகிறார்கள்.
எண்ணெய் இல்லாமல் நெருப்பில்லாமல் தண்ணீர் இல்லாமல் கடிகாரத்திற்குச் சாவி கொடுத்தால் அது ஓடிக் கொண்டிருப்பது போல் தானாக சாவி கொடுப்பதின் மூலம் ஓடும்படியான மாதிரியில் இயந்திரங்களையும் வண்டிகளையும் செய்ய முயற்சித்து வருகின்றார்கள். ஆனால், நமது நாட்டு ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களுக்கோ என்றால் புல்லிலும் பூண்டிலும்
கல்லிலும் மண்ணிலும் கடவுளைத் தேடி அவைகளுக்கு எப்படி பக்தி செலுத்துவது என்கின்ற வேலையே இன்னமும் முடிவு பெறாமல் இருக்கின்றது. மோக்ஷத்திற்குப் போகின்ற வழிகளைப் பற்றியே இன்னமும் பலருக்கு ஆராய்ச்சி முடிவு பெறவில்லை.
கடவுள்களுடைய எண்ணிக்கைகளும் பெயர்களும் அவர்களுடைய லீலைகளும் பெண்டு பிள்ளை வைப்பாட்டிகளும் இன்னமும் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டி இருக்கின்றது. நாமத்தின்
நடுவிலும் மஞ்சள் திருச்சூரணத்திற்கும் சிவப்புத் திருச்சூரணத்திற்கும் உள்ள பெருமை சிறுமை வித்தியாசங்களுக்கும் பாதம் வைத்து இடும் நாமத்திற்கும் வளைவாய் இடும் நாமத்திற்கும் உள்ள பிரதானங்களுக்கும் உள்ள வித்தியாசம் கண்டுபிடிக்க நமது ஆராய்ச்சியால் முடியாமல் வெளிநாட்டு ஆராய்ச்சி நிபுணர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. நம்மை மோக்ஷத்திற்கு அனுப்ப அவதாரம் செய்த சமயாச்சாரிகள். சரித்திரமும் எண்ணிக்கையும் எப்படி நமக்குக் கிடைத்தது? என்னும் விஷயம் யாரோ ஒருவர் சொல்வதை நம்புவதன் மூலம்தான் அறியக் கூடும் என்கின்ற நிபந்தனைகளை ஒப்புக் கொண்டாலும் என்ன சொல்லுவது
என்கின்ற விஷயம் இன்னும் ஆராய்ச்சியில் இருந்து வருகின்றது. எந்த எந்த பாஷை, எந்த எந்த புஸ்தகம், யார் யார் படிக்கலாம் என்கின்ற விஷயமும், எந்த எந்த ஊரில், எந்த எந்த கடவுளை யார் யார் எவ்வளவு எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கலாம், கும்பிடலாம் என்கின்ற விஷயமும், எந்த எந்த வீதியில் யார் யார் நடக்கலாம், எந்த எந்த ஜாதியார் எந்த எந்த ஜாதியாருக்கு
குடி அரசு - 1929 () 298
எவ்வளவு எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்கின்ற விஷயமும். எந்தளந்த மாதிரிக் குடுமி யார் யார் வைத்துக் கொள்ள வேண்டும், எந்த எந்த மாதிரி வேஷ்டி யார் யார் கட்டிக் கொள்ள வேண்டும், யார் யார் எங்கெங் கிருந்த சாப்பிட வேண்டும் என்கின்ற விஷயமும் இன்னமும் ஆராய்ச்சி
யிலும் தர்க்கத்திலுமே இருந்து வருகின்றது.மற்றும் ஒரு ஜாதி ஆணும் ஒரு ஜாதிப் பெண்ணும் கூடினால் என்ன ஜாதி மனிதன் பிறப்பான்? என்பது இன்னமும் ஆராய்ச்சியில் இருக்கின்றது. நம்மைப் போன்ற யாராவது என்ன ஐயா! மற்ற நாட்டார்கள் எவ்வளவோ முற்போக்கடைந்திருக்கும்போது நாம். இன்னமும் இந்த ஆராய்ச்சியில் இருப்பது சரியா என்று கேட்டால் உடனே கோபம் வந்து, உடனே அட போ! உனக்கென்ன தெரியும்? நீ எவ்வளவு படித்திருக்கின்றாய்? எங்களுக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டாய்! மேனாட்டு ஆராய்ச்சி இரண்டு நாளைய வாழ்வு. அது இகத்தைப் பொருத்தது. இன்றைக்கிருப்பவர் நாளைக்கு இருக்க மாட்டார்கள். இதெல்லாம் வாவென்
றால் வரும் போ என்றால் போகும். மனிதன் எதற்காகப் பிறந்தான்? அவன் வந்த வேலையை அல்லவா அவன் கவனிக்க வேண்டும்? அதுதான் ஆத்மார்த்தம் மோக்ஷ சாதனம் என்று சொல்லி ஏதோ ஒன்றை தனக்கும்
புரியாமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகிறார்கள். யாராவது தட்டிப் பேசினால் உடனே “தோஷம் தோஷம்” என்று கன்னத்தில் அடித்துக் கொள்ளுகின்றார்கள்.
எனவே, நமது நாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கின்றது, மற்ற நாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கின்றது என்பதை இதிலிருந்து யோசித்துப்
பாருங்கள். பொதுவாக நமது மக்கள் முதலாவதாக 100க்கு ஏழுபேர்தான் படித்திருக்கின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? இரண்டாவ தாக நமது மக்கள் சாப்பாட்டிற்கில்லாமல் வேலையும் கூலியும் கிடைக்காமல் வெளிநாட்டிற்கு பதினாயிரக்கணக்கான குழந்தை குட்டி கர்ப ஸ்திரீகளுடன் கப்பலேறி கண்காணாததும் முன்பின் அறியாததுமான நாட்டிற்குப் போய் கஷ்டப்பட்டு மடிகின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? மூன்றாவது மனிதனுக்கு மனிதன் இழிவாகவும் அவமானமாகவும் கருதத் தக்கபடி கீழ்மேல் ஜாதி பிரித்து பஞ்சமன் என்றும் மிலேச்சன் என்றும் சூத்திரன் என்றும் அழைக்கப்படுவதும் சமூக வாழ்வில் சுயமரியாதைக்கு ஈனமான நிலையில் தாழ்த்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா?
நான்காவதாக அதுபோலவே ஒரு வகுப்பு மனிதர் தங்களை உயர்ந்த பிறவிகள் என்றும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு மற்ற மக்களைத் தாழ்த்தி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா?
ஐந்தாவதாக நாட்டுச் செல்வத்தில் பெரும்பாகம் ஏழைகளுக்கும் கையாலாகாதவர்களுக்கும் தொழிலுக்கும் கல்விக்கும் உபயோகப்படாமல்
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
வெறும் கோயில் கட்டவும் கல்லைக் கடவுளாக்கவும் அதற்கு கல்யாணம் உற்சவம், தேர், திருவிழா, தினம் பலதடவை பூஜை, அபிஷேகம், நகை, வாகனம், தீவட்டி, விளக்கு, சதுர் மேளம், ஊர்கோலம் ஆகியவைகளுக்கு செலவாகின்றது என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா?
அப்படியானால் இந்த நிலைமை இப்படியே வைத்துக் கொண்டிருப்பதால் நமது நாடு முற்போக்கடைய முடியுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். இவைகளைத் திருத்தி இந்தவழியில் வீண் ஆகும் செலவுகளை மற்ற நாடுகளைப் போல் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் செலவிட வேண்டுமென்று சொன்னால் அதை நாத்திகம், மததர்ம விரோதம் என்று சொல்லுகிறார்கள். இது நாத்திகமா மத விரோதமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
மற்ற நாட்டாரின் ஆதிக்கமும் மததர்மமும் அவர்கள் நாட்டில் 100-
க்கு 100பேரையும் படிக்க வைத்து அவர்கள் அத்தனைப் பேருக்கும் தாராளமாய் தொழில் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு பிச்சைக்காரர். என்பவர்களே தங்கள் நாட்டில் இல்லாமல் செய்து ஆராய்ச்சியின் மூலம் நாம் இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் அற்புதங்களைக் கண்டுபிடித்து வெளிநாட்டுச் செல்வங்கள் எல்லாம் தங்கள் நாட்டிற்கே வரும்படி செய்து கொண்டு மத தர்மமாக நமது நாட்டில் பள்ளிக்கூடமும் ஆஸ்பத்திரிகளும் மருத்துவ உதவிச் சாலையும் அனாதைப் பிள்ளைகள் பாதுகாப்பு நிலையமும் “தீண்டாதார்கள்” சட்டசபை மெம்பராக்கவும், மந்திரிகளாக்கவும் தக்க மாதிரியில் கல்வியும் உத்தியோகமும் கிடைக்கத்தக்க மதமாற்ற ஸ்தாபனங்களும் ஏற்படுத்தி அதற்காக கோடிக்கணக்காக செலவு செய்தும் வருகின்றார்கள். இதை நீங்கள் தயவு செய்து நன்றாய் கவனித்துப் பாருங்கள். நாம் இப்படியே இருந்தால் முன்னேற முடியுமா? மற்ற
நாட்டார்கள் முன்னிலையில் மானத்தோடு வாழ முடியுமா? நமது எதிரிகள்: பழக்க வழக்கம் என்பதையும், பெரியோர்கள் போன வழி என்பதையும், கடவுள் கட்டளை என்பதையும் ஆயுதமாக வைத்துக் கொண்டு நம்மை முன் னேறவொட்டாமல் தடுத்து வருவதற்கு நீங்கள் இனியும் இடங் கொடுக்கா
தீர்கள். உங்கள் புத்திக்கு சரி என்று பட்டதை தைரியமாகச் செய்யுங்கள் அது நாஸ்திகமானாலும் மகாபாதகமானாலும் நரகம் கிடைப்ப தென்பதனாலும் கடைசியாய் ஒரு சிறிது கூட அந்த பூச்சாண்டிகளுக்குப் பயப்படாதீர்கள்.
குறிப்பு: திருக்கோவிலூரில் 13.06.1929 ஆம் நாள் பெண்ணையாற்றில்: தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நமது முன்னேற்றம் என்ற தலைப்பில்.
ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 16.06.1929
குடி அரசு - 1929 () 300
காங்கிரசு கட்௫ப்பா௫
சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டு விட்டதி னால் காங்கிரசுக்காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூடப்படப் போகும் சட்டசபை மீட்டிங்குகளுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசு கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைபடி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்வு செய்தாய் விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால், சென்னை மாகாண தமிழ் நாட்டு காங்கிரஸ்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கின்றார்கள். காங்கிரஸ் சட்டசபைக்கு போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்ட ளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929.
301 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ட இந்தியாவினும் நா o B 33.
இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ரஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம்
12ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் “போல்ஷ்விக்காரர்கள் (எதிரிகள்! கடவுள் நம்பிக்கையை ஒழிப்பவர்கள். இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள், பெளத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்து மதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துபட வேண்டும். இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள். கடவுளுக்கு எதிர்ப்பிரசாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்... இக் கொள்கைக் காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அநுசரித்து அதற்கேற்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும், லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர்” என்று எடுத்துக் காட்டினார்.
அப்போது எதிரிகளின் வக்கீல் எதிரிகள் மீது தப்பெண்ணம் கற்பிப்பதற்காக இந்த விஷயங்களைப் புகுத்திப் பிரசாரம் செய்யப்படு
கின்றது என்று கூறினார். வழக்கின் தத்துவம் எவ்விதமாயினும் உலகமெங்
கும் கடவுள் மத சம்பந்தமான இத்தகைய உணர்ச்சி பரவியிருக்கிற தென்பதற்கும் அதிகமாகப் பேசப்படுகிறது என்பதற்குமே இதை எடுத்துக் காட்டினோம்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929
குடி அரசு - 1929 () 302
தெண்ணாற்காடு வில்லா
ஆதிதிராவிடர் மகாநா௫
கன்னக்குறிச்சி கானூகா ஆஃதி: மகாநாடு
சகோதர சகோதரிகளே!
இந்த ஜில்லா ஆதிதிராவிடர்கள் மகாநாட்டுக்கு நான் இதற்கு முன் நான்கைந்து தடவை அழைக்கப்பட்டிருந்தாலும், அப்போது பல காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய் விட்டதால், இந்தத் தடவை கட்டாயமாய் எப்படியாவது வரவேண்டுமென்று கருதியே வந்து சேர்ந்தேன். வரவேற்பு கழகத் தலைவர் என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறினார். அவ்வளவு புகழ்ச்சி எனக்கு வெட்கத்தை கொடுத்ததேயல்லாமல் மற்றபடி அதில் உண்மை இல்லை என்று சொல்லுவேன்.
தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற
நாங்களும் ஒரு வகுப்பாருக்கு - அதாவது கடவுள் முகத்திலிருந்து பிறந்ததாகவும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர். களுக்கு நாங்கள் தீண்டாதவர்களாகவே இருக்கின்றோம். கோயில் பிரவே ஷம் என்பதிலும் உங்களைவிட சற்று முன்னால் போக மாத்திரம் அனுமதிக் கப்படுகிறோமே தவிர மற்றபடி பார்ப்பனர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் தான் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீங்கள் கோயிலுக்குள் வந்தால் எப்படிக் கோயிலும் சாமியும் தீட்டுப்பட்டு விடுகின்றதோ, உங்கள்
எதிரில் சாப்பிட்டால் உங்களுடன் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் சாப்பிட்டால்
எப்படித் தோஷமும் பாவமுமான காரியமாகி விடுகின்றதோ அப்படியே எங்கள் வீட்டிலே எங்கள் முன்னாலே எங்கள் பக்கத்திலே சாப்பிட்டாலும் தோஷம், மோசம் பாவமென்று தான் சொல்லப்படுகின்றது.
நமது சமூகத்திற்கு பெயர் சொல்லி அழைப்பதிலும் உங்களைவிட
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மிக இழிவாகவேதான் அழைக்கப்படுகின்றோம். உங்களைப் பறையர்: என்றும், பள்ளர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் பறையர், பள்ளர். என்கின்ற வார்த்தை தொழிலையும், வசிப்பு இடத்தையும் பொறுத்து ஏற்படுத்தப்பட்டது. பறையனும் பள்ளனும் அந்த பெயரால் சுதந்திரமான வராகவும் இழிவுபடுத்தத்தகாதவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களை அழைக்கும் பெயராகிய சூத்திரன் என்று சொல்லப்படும் பேரானது பிறவி யிலேயே இழிவை உண்டாக்கத்தக்கதும், ஒருவனுக்குப் பிறவி அடிமை யாகவும், பிறவி தாசி மகனாகவும் மற்றும் மிக்க இழிவான கருத்துக் கொண்டதாகவுமே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தங்களும் சகிக்க முடியாத இழிவை கொடுக்கக்கூடியதாகவே இருக்கின்றது. பறையன் என்றால் சொந்தத்தாய் தந்தைக்கே பிறந்தவன் என்கின்ற கருத்து உண்டு. ஆனால் சூத்திரன் என்றால் - தாசிமகன், வேசிமகன், வைப்பாட்டி மகன், பிறவி அடிமை, விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்பது போன்ற பல இழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கின்றது.
தவிர, உங்களைப் போன்ற ஒருவகுப்பு. அதாவது பஞ்சமர்கள் என்று சொல்லப்படுவதற்கும், அப்படி ஒன்று இருப்பதற்கும் பார்ப்பன மதத்தில் அதாவது இந்து மதத்தில் இடமே இல்லை. இந்து மதத்தில் சூத்திரன் என்பதற்கும் கீழாக ஒரு ஜாதியே பிறவியில் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் நான்கு வருணக்காரர்களும் நடந்து கொள்ளுகின்ற முறையில் சண்டாளர்கள் என்று ஒரு வகுப்பு உண்டாகின்றது. அதாவது, பார்ப்பன ஆணுக்கும் பார்ப்பனரல்லாத பெண்களுக்கும் பிறக்கும் பிள்ளைகள், பார்ப்ப னிக்கும் பார்ப்பனரல்லாதவனுக்கும் பிறக்கும் பிள்ளைகள், பார்ப்பனர்களில் வேதம் படிக்காதவன், நெருப்பு வளர்க்காதவன், சந்தியா வந்தனம் செய்யா தவன் மற்றும் இதுபோல் பார்ப்பனீய கருமங்கள் என்பதுகளைச் செய்யாத வன் முதலானவர்கள் சண்டாளர்களாகின்றார்கள்.
இது தர்க்க பார்ப்பனப் பண்டிதர்களும், வேதசாத்திர நிபுணர்கள். என்பவர்களுமே சொல்லி உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். ஆதலால் உங்களை யாராவது சண்டாளர்கள் என்று சொல்வார்களானால் அவர்கள் உங்களை பார்ப்பனிக்கும் பார்ப்பனரல்லாதவருக்கும், அல்லது பார்ப்பனருக்
கும் அல்லாத பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியில்லையானால் ஒழுக்கந் தவறிய பார்ப்பனர்கள்தான் நீங்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியானால் இன்றைய
தினம் பார்ப்பனச் சமூகத்தில் உள்ள 100க்கு 99 “7, பெயர்வழிகள் சண்டாளர்களாகத்தான் இருக்கவேண்டும். எனவே, இந்த முறையில் உங்களுக்காவது தர்க்க ரீதியில், ஒரு வழியில் குற்றம் சொல்லாமலிருக்க ஆதாரங்களும் இடமுமிருக்கின்றன. ஆனால் எங்கள் நிலை நினைக்கவே முடியாதபடி பெரிய இழிவாயிருக்கின்றது. ஆதலால் தான் சமூக வாழ்வில் உங்களை விட நாங்கள் தாழ்ந்த - இழிவான - தன்மையில் இருக்கின்றவர்கள்
குடி அரசு - 1929 () 304
என்று சொல்லுகின்றதுடன் இவ்விழிவு நீங்க முயற்சிக்கும் வேலை முக்கியமாக எங்கள் வகுப்புக்காகச் செய்யப்படும் வேலையென்றும் சொல்லு கின்றேன்.தவிர, உங்களுக்கோ எங்களுக்கோ இப்போதிருக்கும் இழிவுகள். ஒழிய வேண்டும் என்கின்ற கவலை சிறிதளவாவது யாருக்காவது இருக்கு மானால், அவர்கள் இவ்விழிவு நிலைக்கு ஆதாரமாயுள்ளதை அழிக்கத் தைரியங்கொண்டு தயாராயிருந்தாலொழிய கண்டிப்பாய் முடியவே முடியாது. ஏனெனில், இவ்விழிவுகளை ஏற்படுத்தியது மனிதனுடைய அயோக்கியத் தனமாய் இருந்தாலும், அதை நிலை நிறுத்தக்கருதி அதையே ஒரு மதத் தத்துவமாகவும், அத்தத்துவம் எல்லாம் வல்ல கடவுள் என்பவரால்
ஏற்படுத்தப்பட்ட தென்றும் கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தி அமுலில் நடத்தி வரப்படுகின்றது.
இந்நிலை சிறிது மாற்றப்பட வேண்டுமென்றாலும் மேற்கண்ட மதமும் கடவுளும் வந்து குறுக்கிடுகின்றது. ஆதலால் இந்நிலைக்கு ஆதாரமான தென்று சொல்லப்படும் மதத்தையும், அம்மதத்தை உண்டாக்கினதாகச் சொல்லப்படும் கடவுளையும் எதிர்த்து நின்று அவற்றை அழித்தாலொழிய வேறு மார்க்கமில்லை என்று பதில் அளிக்கவும் ஒழிக்கவும் தைரியமாகவும் தயாராகவுமிருந்தாலொழிய, வேறு மார்க்கத்தில் முடியவே முடியாது. அன்றியும் உங்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். நாம் ஏன் தாழ்ந்தவர்கள்? நாம் ஏன் ஒருவரைச் சாமி என்று கூப்பிடவேண்டும்? நாம் ஏன் ஒருவனுக்குப் பாடுபட வேண்டும்? என்கின்ற உணர்ச்சி வரவேண்டும். நீங்களும் மற்றவர்களைப் போல் மனிதர்கள்தான் என்று கருத வேண்டும்.
உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால் இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்க. ளுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லா விட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்கு போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத்துணியவில்லையானால். உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன். கஷ்டப்படவும், கட்டுப்பாட்டை உடைத்தெரியவும், உயிரைவிடவும் தயாராயில்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. அன்றியும், வேறு ஒருவன் வந்து உங்களுக்கு உதவி செய்வானென்று எதிர்பார்ப்பதும் பெரிய முட்டாள்தனமாகும். உங்களையே நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளத் துணிவு கொள்ள வேண்டும். படிப்பினாலும், பணஞ் சம்பாதிப்
பதாலும் குளிப்பதனாலும், குடிக்காமலிருப்பதாலும், மாமிசம் சாப்பிடா திருப்பதனாலும் இவ்விழிவு போய்விடுமென்று சிலர் உங்களுக்கு உபதேசம் சொல்லுகின்றார்கள். நான் அவைகளை ஒப்புக் கொள்ளமாட்டேன். உங்களு டைய இழிவுக்கு இவைகள் தான் காரணம் என்றால், இந்தத் தன்மைகள்
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
உள்ளமற்றவர்கள் இவ்வழியை அடையாமல் “பிராமணர்”களாகவே எப்படி இருக்கின்றார்கள். உங்களுடைய இழிவுக்குக் காரணம் உங்களுக்கு மானம், சுயமரியாதை உணர்ச்சி ஏற்படாதது தானேயொழிய வேறில்லை.ஆகையால்
நீங்கள் உங்களைத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளாமல் நீங்களும் மற்றவர்களைப் போல் மனிதர்கள் தான் என்று எண்ணிக் கொண்டு அதற்கு ஏற்றவிதமாக நடந்து கொள்ளத் துணிவு கொள்ளுங்கள். அதனால் ஏற்படும். கஷ்டங்களைச் சகிக்க தைரியங் கொள்ளுங்கள்! சீக்கிரத்தில் விடுபடுவீர்கள்.
குறிப்பு : 12.06.1929 இல் சின்ன சேலம் சிறுவத்தூரில் நடைபெற்ற தென்னார்க்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மாநாட்டைத் திறந்து வைத்து உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 16.06.1929
குடி அரசு - 1929 () 306
நமதியக்க ஸ்தாயணம்
சுயமரியாதை இயக்க ஸ்தாபனமானது சென்னையில் பொது ஸ்தாபன
பதிவுச் சட்டபடி சென்னையில் பதிவு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரப்படுகின்றன. அது முடிந்தவுடன் “குடி அரசு' *ரிவோல்ட்” ஆகிய வாரப் பத்திரிகைகளும் “பகுத்தறிவு” என்னும் மாதப் பத்திரிகையும் சுயமரியாதை சங்கச் சார்பாகவே பிரசரிக்கப்படும். “திராவிடன்” தினசரிப் பத்திரிகையும் அதன் நிர்வாகப் பொறுப்பும் நம்மிடம் இருக்கும்வரை: இச்சங்கச் சார்பாகவே பதிப்பித்து வரப்படும்.
சுமார் இரண்டு வருஷ காலமாகவே பத்திரிகைகள் நடத்தும் பொறுப்பை யார் வசமாவது ஒப்புவித்து விடுவதற்கு நாம் மிகுதியும் முயற்சி செய்து வந்தது நாம் பல நண்பர்களிடம் நேரில் தெரிவித்து கொண்டதாலும் பத்திரிகையின் ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்தில் எழுதிவரும் தலையங்கத்தாலும் நன்றாய்த் தெரிந்திருக்கலாம். பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டம், அதுவும், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தின் பிரசாரத்திற்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு இருக்கும் கஷ்டம் அதை அனுபவித் தவர்களுக்குத்தான் தெரியவரும். உதாரணமாக “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் தென்னிந்திய நலஉரிமை சங்கச் சார்பாக சுமார் 12 வருஷத்
திற்கு மேலாகவே நடந்து வருகின்றன. அதற்கு இந்த மாகாணத்திலுள்ள பெரிய பெரிய பிரபுக்களும் ராஜாக்களும் ஜமீன்தாரர்களும் மற்றும் 100-க்கு வீதம் உள்ள பொது ஜனங்களும் ஆதரித்தும் பதினாயிரக்கணக்காக பணம் கொடுத்தும் வந்திருக்கின்றார்கள். அச்சங்கத்தார் அதிகார ஆதிக்கம் பெற்றக்
காலத்திலும் அதாவது மந்திரிகள் இருந்த காலத்திலும் மாதம் 1-க்கு 3000
ரூபாய் வீதம் உதவி வந்தார்கள். இந்த மாதிரி உதவி செய்ததின் மூலம் சுமார் 2உலக்ஷ ரூபாய்கள் வரை இப்பத்திரிகைகளுக்கு பணவுதவி கிடைத்தும், இன்றைக்கும் தன் காலில் நிற்க முடியாமல் மாதம் 2000 ரூபா போல் நஷ்டத்தில் நடைபெற வேண்டியிருக்கின்றது. இவ்வளவு ஜனக்கட்டும் பணக்கட்டும் செல்வாக்கும் இருக்கும் பத்திரிகைகளின் கதியே இப்படியா னால் நம்போன்றவர்கள் அதிலும் செல்வாக்குள்ள கொள்கைகளுக்கு எதிரா
கவும் ஆதிக்கமும் அதிகாரமும் சூழ்ச்சியுமுள்ள சமூகங்களுக்கு விரோத மாகவும் ஒரு பத்திரிகையைத் துவக்கினால் அதில் எவ்வளவு கஷ்டம்
இருக்கும் என்பதை யோசித்தால் தெரியும். அதோடு மாத்திர மல்லாமல் சந்தாவும் வெகு சுருக்கமான தொகை, அதாவது வருஷத்திற்கு மூன்றே
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
LM, 20 பக்கமுள்ள பத்திரிகையின் காகித கிரயம், அச்சுக்கூலி, ஸ்டாம்பு ஆகியவைகளுக்கே சந்தா தொகை போதும் போதாத நிலையில் இருக் கின்றது. இதில் நிலுவை பாக்கி வீண் செலவு ஆகியவைகளும், ஆசிரியக் கூட்டத்திற்கும், கணக்கு நிர்வாகத்திற்கும் கைப்பொறுப்பு என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் பத்திரிகை ஆரம்பித்த 4 வருஷ காலத்தில் ஒரே ஒரு தலையங்கம் மாத்திரம் அதுவும் காயலாவாய் படுத்த படுக்கையில் இருந்த சமயம் தவிர பாக்கி எல்லா தலையங்கமும் நம்மாலேயே எழுதப் பட்டு வந்திருக்கின்றது. ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் 12 பக்கமும் நாமாகவே எழுதி வந்திருக்கின்றோம். இந்த நிர்ப்பந்தத்தில் வாரம் 2, 3 நாள்களுக்கு குறையாமல் வெளிப் பிரயாணமும் செய்து வந்திருக்கின்றோம். இதனன்றி பிரசாரகர்களையும் பல இடங்களுக்கு அனுப்பியும் வந்திருக் கின்றோம்.
இம்மாதிரி எவ்வளவோ கஷ்டமும் நஷ்டமும் அடைந்து கொண்டு இப்பத்திரிகையை நடத்தி வந்திருக்கின்றோமென்றாலும், சாதாரணமாக இந்தத் தொண்டில் எனக்குப் பெருத்தலாபம் இருப்பதாகவும் மாதம் 1000,2000 வரும்படி வருகின்றதென்றும் உண்மையாகவே பலர் நம்பி இருக்கின்றார்கள். சமீபத்தில் எமது குடும்பத்தில் கட்டப்பட்ட வீட்டைப் பார்த்து பெண்கள் குழந்தைகள் எல்லாம், பத்திரிகை லாபத்தாலும் பிரசாரத்திற்குப் போகிற இடத்தில் கிடைக்கும் லாபத்தாலும் கட்டப்பட்டதென்றே நமது காதுக்கு எட்டும் படியாகப் பேசிக் கொண்டு போகின்றார்கள். இதை எதற்காக எழுதுகின்றோம் என்றால், பொதுநல சேவையில் உண்மையாக கஷ்டமும் நஷ்டமும் கெட்ட பேரும் பழியும் அடைகின்ற மக்களை பார்த்தால் பெருத்த லாபமடையும் சுயநலக்காரர்களைப்போலத் தோன்றுவதும், பொது வாழ்க்கை: யின் பேரால் பணலாபமும் சுகமும் கீர்த்தியும் பெறுகின்றவர்களைப் பார்த்தால் பெரிய தியாகிகள் போலவும் கஷ்ட நஷ்டம் அனுபவிப்பவர்கள் போலவும் காணப்படுவதும் உலக இயற்கைகளில் ஒன்றாயிருக்கின்றது என்பதைக் காட்டவே எழுதினோம்.எது எப்படி இருந்தபோதிலும் எவ்வளவு
கஷ்டமும் நஷ்டமும் பழியும் ஏற்பட்டிருந்த போதிலும் மொத்தத்தில் நமது தொண்டினால் நாம் நமது யோக்கியதைக்கு மேலான லாபத்தை அடைந்திருக். கின்றோம் என்பதை மனதார ஒப்புக்கொள்ளுகின்றோம். அதாவது நமது இயக்கம் பரவி இருக்கின்ற அளவுக்கு நாம் கொடுத்த விலை மிகமிகக் கொஞ்சமென்றுதான் சொல்லுவோம். நிற்க, இதுவரை அதாவது நஷ்டமும் கஷ்டமும் உள்ளவரை நாம் நமது சொந்த பொறுப்பில் நடத்தி வந்து இப்போது இனிமேல் எந்த விதத்திலும் இதற்கு நட்டம் வராது என்பதோடு கவனித்து நடத்தினால் சகல லாபமும் கிடைக்கும் என்கின்ற நிலையில் அதுவும் 9000 பிரதிகளுக்கு மேல் வெளியாகத் தக்க நிலைமையில் அதை ஒரு பொது ஸ்தாபனத்தின் பொறுப்பில் விடுவதைப் பற்றி யாரும் எவ்வித தப்பபிப்ராயத்தையோ பலக் குறைவையோ கற்பிக்க முடியாதென்றே சொல்லுவோம். மற்றபடி இப்படி நாம் ஒப்பி விட்டதற்கு முக்கியக் காரணம்
குடி அரசு - 1929 () 308
என்னவென்றால், சுயமரியாதை இயக்கம் ஒரு தனிப்பட்ட மனிதனுடைய இயக்கமாக இருக்கக்கூடாது என்கின்ற ஒரே எண்ணமே தவிர வேறில்லை. ஏனெனில், ஒத்துழையாமை இயக்கம், திரு-காந்தியின் தனி இயக்கமாக
இருந்ததாலும் ஒத்துழையாமைக்கும் சத்தியாக்கிரகத்திற்கும் திரு.காந்தி ஒருவரே பாஷியக்காரராயிருந்ததினாலும் அது அவர் காலத்திலேயே ஏதோ ஒரு காலத்தில் நடந்தது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. எந்த இயக்க மானாலும் இயக்கத்தைத் தொடங்கினவர் பலக் குறைவுடையவராக ஆகி விட்டாலும் அல்லது செத்தே போய்விட்டாலும் அவருக்குப் பிறகும் நடக்கும்படியான நிலைமையில் அதை வைத்துவிட்டு போனால்தான் அது ஏதாவது பலனைக் கொடுக்க முடியும். அப்படிக்கில்லாமல் தன் கையிலேயே வைத்துக் கொண்டு தன்னிஷ்டப்படி தன்னைச் சுற்றிக் கொண்டே திரியும் சிஷ்யர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழ்நாளைக் கடத்தி வந்தால் அவ்வியக்கத் தலைவன் இறந்தவுடன் அத்தலைவனது பிணத்தைச் சுட்ட இடத்தை மடமாகவோ கோயிலாகவோ கட்டி அதில் ஒரு படத்தையும் உருவத்தையும் வைத்து பூஜை செய்கின்ற வேலையோடு அவ்வியக்கத்தின்
பலன் முடிவெய்திவிடும்.
ஆதலால் தான் அதை இப்போதே சர்வ சுதந்திரமாய் பொது ஜனங்கள் வசம்விட்டுவிட்டோம். ஆனால் இப்பத்திரிகைகளை நடத்தும் கொள்கை களை மாத்திரம் நாம் வைத்துக் கொண்டு இருக்கின்றோம். தவிர நமது இயக்கத்தைப் பற்றி நமது எதிரிகளும் அவர்களது கூலிகளும் பலவாறான கெட்ட எண்ணத்தோடு பொது ஜனங்களுக்குத் திரித்துக் கூறி இதுவரை: எவ்வளவோ விஷமப் பிரசாரம் செய்து வந்தும், ராமாயணக் கதையில் வாலிக்கு அவனை எதிர்ப்பவர்களுடைய பலத்தில் பகுதி அவனுக்கு போய் சேருகின்றது என்றதுபோல் இவ்வியக்கத்தின் எதிரிகளுடைய பிரசாரத்தால்
நமதியக்கம் பாமர மக்களிடை பரவவும், அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்
கள் விளங்கித் தெளிவடையவும் பெரிதும் உபயோகப்பட்டு வந்திருக்கின்றது. அன்றியும் வெளியிடங்களிலும் பரவத்தலைப்பட்டு விட்டது.
தவிர, நமது இயக்கத்தை அழிக்க எதிரிகள் கைக்கொண்ட சூழ்ச்சி
ஆயுதம் இரண்டே இரண்டுதான். அதாவது நாம் மதத்திற்கு விரோதி என்பதும் மக்களுக்கு கடவுள் உணர்ச்சியைக் கெடுக்கின்றோம் என்பவை களே. இவ்விரண்டு காரியங்களையும் நாம் செய்கின்றோமோ இல்லையோ என்பது ஒரு பக்கமிருந்தாலும் அவர்கள் சொல்லும் மேற்படி இரண்டு காரியங்களும் இப்போது உலகத்தில் காட்டுத்தி போல் பரவி வருகின்றது. இன்றைய மலரில் வேறு ஒரு பக்கம் வெளியிட்டிருக்கும் வெளிநாட்டு செய்தி “ஒன்று ஐரோப்பா நாட்டிலுள்ள மாஸ்கோ என்கின்ற நகரில் கடவுள்
மறுப்பு மகாநாடு ஒன்று கூடி உலகத்தில் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான பிரதிநிதிகளும் காட்சியாளர்களும் வந்து கடவுளையே மறுத்து தீர்மானங்கள்: செய்திருக்கின்றார்கள். கடவுள் மறுப்புக்கு ஆதாரமாய் அனேக கண்காட்சி
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
களையும் வைத்துக் காட்டி அதை உலகமெல்லாம் பிரசாரம் செய்ய கமிட்டிகள் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.
அது மாத்திரமல்லாமல் அந்த தேசத்தில் உற்சவங்கள்கூட நடத்தக் கூடாது என்று அரசாங்கத்தின் மூலம் உத்திரவுகள் போடச் செய்ததோடு அதைப் பிரசாரமும் செய்து வருகின்றார்கள்.இவை நிற்க, நமது நாட்டிலேயே பம்பாய் மாகாணத்தில் சென்ற வாரத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு கூட்டி ஐயாயிரக்கணக்கான மக்கள் கூடி கடவுள் பூசைக்காக சர்க்கார் கொடுத்து வரும் மோகினித் தொகையை (தஸ்தி தொகை) நிறுத்திவிட வேண்டுமென்று தீர்மானம் செய்திருப்பதுடன் ராமாயணம், பாரதம், மனுஸ்மிருதி முதலிய மத ஆதாரங்கள் என்பவைகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் தீர்மானித்திருக்கின்றார்கள். இவ்வளவும் ஒரு புறமிருந்தாலும், மீரத் சதி வழக்கில் எதிரிகளின் பேரில் சர்க்கார் வக்கீல் குற்றம் சாட்டுகின்ற முறையில் எதிரிகள் கடவுளை நம்பாதவர்கள் என்றும், கடவுள் நம்பிக்கையை ஒழிக்கப் பிரசாரம் செய்கின்றவர்கள் என்றும் சொல்லியிருக்கின்றார். எதிரிகளுடைய வக்கீலும் கடவுளை மறுப்பதும் கடவுள் நம்பிக்கையை ஒழிக்கப் பிரசாரம் செய்வதும் குற்றமாகாதென்றும் அதற்கும் இக்குற்றத்திற்கும் சம்பந்தமில்லை
என்றும் வாதாடினாரே ஒழிய அது உண்மை அல்லவென்று சொல்லவே இல்லை, இதுவும் தவிர, ஆப்கன் அரசர் அமானுல்லா அவர்கள், அவர் நாட்டு முல்லாக்கள் சூழ்ச்சியால், நாத்திகர் என்றும் இஸ்லாம் மத விரோதி என்றும் மதத் துரோகி என்றும் பழி சுமத்தப்பட்டு அரசைத் துறக்கச் செய்திருந்தாலும், நமது மாகாணத்தில் ஹைகோர்ட் ஜட்ஜாகவும் வங்காள மாகாண மந்திரியாகவும் இருந்த சர்.அப்துர் ரஹீம் அவர்கள் மேற்படி அமீரைப் பற்றி வெகு பரிதாபப்பட்டு என்ன சொல்லுகின்றார் என்றால் “அமீரின் தத்துவங்களை ஆப்கானியர்கள் ஒப்புக் கொள்ளாததிலிருந்து அத்தேசத்தில் தேசிய உணர்ச்சி சிறிதும் இல்லை என்பதாகத் தெரிகிறது. அமீருக்கு விரோதமாயிருந்தவர்கள் தேசத் துரோகியும் ராஜத் துரோகி யுமாவார்கள். அமானுல்லாவைப் போன்ற தேச பக்தர் வேறு எந்த தேசத்தி
லும் பிறக்கவில்லை. பண்டைய மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டியது அவசியம். அவ்வெண்ணம் கொண்டவர்கள் மிகவும் ஊக்கமாகவே இருப்பார்கள். அமீரின் கொள்கைகள் வெற்றி பெற்றால் முஸ்லீம் நாடு உலகத்தில் ஒரு சிறந்த நாடாய் இருக்கும்” என்று பேசியிருக்கின்றார்.
எனவே, இந்த மாதிரியாக அநேக இடங்களிலிருந்து நமது இயக்கத்
திற்கு ஆதரவுகள் தாராளமாய்க் கிடைத்து வருவதைப் பார்க்க நாம் எய்தும்
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஆதலால், நமது வாலிப நண்பர்கள் நமது வேலையை ஒப்புக் கொண்டு நமக்கு வேண்டிய உதவி புரிய கேட்டுக் கொள்வதற்காகவே இந்த நீண்ட கட்டுரை எழுதினோம். அதாவது “குடி அரசு” இந்த இதழிலிருந்தே, சுயமரியாதைச் சங்கத்திற்கு அங்கத்தினர்களைச் சேர்க்கும் உத்தேசத்துடன்
குடி அரசு - 1929 () 310
அங்கத்தினராய்ச் சேருவதற்கு ஒரு விண்ணப்ப ரூபமாக ஒரு துண்டு விளம்பரம் * * பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. அதைக் கண்ணுறும் வாலிபர்கள் தயவு செய்து கத்தரித்து அங்கத்தினர்களாகச் சேர்வதோடு, மற்றவர்களின் கையொப்பத்தையும் சந்தா அணா இரண்டையும் பெற்று நமக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுகின்றோம். இந்த வருஷ முடிவிற்குள் தமிழ் நாட்டில் ஏராளமான அங்கத்தினர்களைச் சேர்க்க வேண்டிய பொறுப்பை நமது வாலிபர்களுக்கே விட்டிருக்கின்றோம். அங்கத்தினர்கள் சேர்க்கும் ரசீது புத்தகங்களும் அச்சாகின்றன.சீக்கிரத்தில் வேண்டியவர்களுக்கு அனுப்பிக் கொடுக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.06.1929
* ௬ுஷியாவிலும் “கடவுளுக்கு ஆபத்து” மாஸ்கோவில் கடவுள் மறுப்பு மகாநாடு
10-6-29 உயில் மாஸ்கோ நகரத்தில் கடவுள் மறுப்பு மகாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு சோவியத் ராஜ்யம் முழுவதிலுமிருந்து 700 பிரதிநிதிகளும், ஜர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன் முதலிய ஐரோப்பிய
நாடு முழுவதிலுமிருந்து பல பிரதிநிதிகளும் அன்பர்களும் விஜயம் செய்தி ருந்தார்கள். இம்மகாநாட்டின் சார்பாக கடவுள் மறுப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடவுள் மறுப்புக் கொண்டாட்டங்களும் நடை பெற்றன.
* * சுயமரியாதை மாகாணச் சங்கம்
காரியதரிசி,
சுயமரியாதை மாகாணச் சங்கம்,
“ திராவிடன்” பதிப்பகம்,
14, மவுண்ட் ரோடு, சென்னை.
ஐயா,
என்னைத் தங்கள் சங்கத்தின் அங்கத்தினராய்ச் சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளுகின்றேன். இத்துடன் ஓர் ஆண்டுக் கட்டணம் 0-2-0 அனுப்பி யிருக்கின்றேன்.
பெயர்
விலாசம்
(இதில் கையொப்பமிட்டு வெட்டி அனுப்பவும்!
311 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
யார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
சைவன் :- ஓய்! என்னாங்காணும்! அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப் போய்விட்டீர்.
பார்ப்பனன் :- வாரும், வாரும், பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ ஹிம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்கு சாகின்றோமோ, நாளைக்கு சாகின்றோமோ; இதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள். சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிட துணிந்துவிட்டேன்.
சைவன் - என்னங்காணும் பார்ப்பனர் ஜீவ இம்சை கூடாது என்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன, போக்கிரித்தனமா அல்லவா?
பார்ப்பனன்: கோபித்துக் கொள்ளாதீர் ஐயா! நீர் சைவர் அல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமேயொழிய விஷயம் புலப்படுவதுதான் கஷ்டம்.
சைவன்:- என்ன பார்ப்பனக் குறும்பு நம்மிடம் காட்டுகிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது.
பார்ப்பனன் :- இந்த நாடுதான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது, சரி வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லா ஆச்சுது? தவிரவும், இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்.
கள் எத்தனைப் பேர்? சாப்பிடாதவர்கள் எத்தனையோ பேர் என்பது உமக்குத் தெரியுமா? 7 கோடி மகமதியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள்! ஒரு கோடி கிறிஸ்த வர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாதார் என்கின்றவர்கள் மாமி.
சம் சாப்பிடுகிறார்கள். க்ஷத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு க்ஷத்திரியர்கள். மராட்டா க்ஷத்திரியர்கள் நாடார் க்ஷத்திரியர் வன்னிய க்ஷத்திரியர், நாயுடு
க்ஷத்திரியர், செங்குந்த க்ஷத்திரியர் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். டெவகுப்பார்களில் வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடு கிறார்கள். நாட்டுக் கோட்டை தன வைசியர் வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வேளாளர். களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்.
கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளாளர்கள், வடுக வேளாளர்கள்,
குடி அரசு - 1929 () 312
நாட்டார் வேளாளர்கள் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல் வேலி தஞ்சாவூரில் உள்ள சில வேளாளர்கள் அவர்களைச் சேர்ந்த வெளியில் உள்ள சிலர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக, பிராமணர்கள் என்பவர்களிலோ செளராஸ்டிர:
பிராமணர்கள், விஸ்வ பிராமணர்கள், தேவாங்க பிராமணர்கள், சாலிய
பிராமணர்கள், கொங்கிணி பிராமணர்கள் கவுடப் பிராமணர்கள், காஷ்மீரப்
பிராமணர்கள், மச்சப் பிராமணர்கள், அம்பஷ்ட்டப் பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுகின்றார்கள். இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைகளை வெல்லாம் சேர்த்தால் குறைந்தது 15 கோடிக்கு குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் ஒரு கோடி இருக்கலாமா என்பது சந்தேகம். 35 கோடியில் 1 கோடி அதாவது 100-க்கு 3 பேராகலாம். தவிர, இந்தியர் தவிர உலக மக்கள் எல்லோரும் மாமிசம் சாப்பிடுகின்றார்கள். எனவே மொத்த ஜனத் தொகையில் 100-க்கு 99 '/, பேர்களை ஜீவ காருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா? சொல்லும்
பார்ப்போம்.
சைவன்:- என்னங்காணும்! பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றிரே இது யோக்கியமா? என்றால் ஊர் கதையெல்லாம் பேசுகிறீர்!
பார்ப்பனன் :- சொல்லுவதை கவனமாய் கேளும் சைவரே, வெறும் கோபம் ஒரு காசுக்கும் உதவாது. அதெல்லாம் அந்த காலம். இது அறிவு ஆராய்ச்சி சைன்சு காலம் தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக் கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு. அது எதற்காக என்றால் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறு இல்லை. பிறகு இத்தனை பேர்கள் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100-க்கு 99, பேருக்கு ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்குமா? இப்படி ஒரு கடவுள் மக்களை பிறப்பித்து இருப்பார் என்று யோசித்து, யோசித்து மயங்கிக் கிடந்தேன்.
கடைசியாக திரு.ர்.ஜகதீச சந்திரபோஸ், மரம் செடி கொடி புல் பூண்டு ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவைகள் தொட்டாலும், நாடினாலும், முறித்தாலும், பறித்தாலும் கஷ்டப்படுகின்றன என்பதைக் கண்டு பிடித்தபிறகுதான் சரி, எது ஜீவ காருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.
காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால், உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே, ஒரு செடியின் தழைகளை கிள்ளிப் பிடுங்கும் போதும், காய்களை அறுக்கும்போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும்போதும் அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார். எனவே ஒரு ஜீவனை தினம் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்து கின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால்
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடுவதனால் ஒரு தடவைக்குமேல் யாரும் தொந்திரவு செய்யமாட்டார்கள். அதுவும் க்ஷணத்தில் முடிந்து போகும். ஆதலால்தான் கிழங்கு, கீரை, காய், கறியைவிட மாமிசம் சாப்பிடுவது ஜீவகா ருண்யமாகும் என்று சொன்னேன். ஆதலால் ஓய்! சைவரே நான் உம்மை விட குறைந்த ஜீவகாருண்யம் உடையவன் என்று எண்ணிவிடாதீர்.தவிர,திரு.போஸ் காய், கறிகளுக்கு உயிர் இருப்பதை இன்று கண்டுபிடித்தார். ஆனால் மாமிசம் சாப்பிடும் மக்கள் வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடித்துத் தான் மாமிசம். சாப்பிடுகின்றார்கள் என்பதாகத் தெரிகின்றது. அன்றியும், வேதமும் மனுதர்ம சாத்திரமும் கண்ணப்ப நாயனாரை ஒப்புக் கொண்ட சைவப் புராணங்களும். இதை அறிந்துதான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை
மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலைமுறைக்கு நரகத்தை அடைவான் என்று மனுதர்ம சாஸ்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா? சைவரே.
சைவன் - ஓய், ஓய், பார்ப்பனரே சரி தான், கடையைக் கட்டுங்காணும்
உம் ஆராய்ச்சியையும், சயன்சையும், சாஸ்திரத்தையும், வேதத்தையும், புராணத்தையும் கொட்டை அடுப்பில் வைத்துக் கொளுத்தும். என்றைக்கு ஆராய்ச்சியும் சயன்சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம்
கெட்டுது. கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கைவைக்க வந்து விட்டது. இந்தப்பாழும் அறிவும், ஆராய்ச்சியும், சயன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும். ஆதலால், இவை ஒழிய தவம் கிடப்போம். போம், போம், பார்ப்பானே! போம் உம்மைப் பார்த்ததற்கும், உம் பேச்சைக் கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவ வேண்டும்.
பார்ப்பான் :- அய்யா சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும்
திரு. ஜகதீஸ் சந்திரபோசும் இயற்கை ஆராய்ச்சியும் சுயமரியாதை இயக்கமும் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானாலும் உங்கள் சைவ
மும், உங்கள் ஜீவ காருண்யமும் சிறிதுகூட நிலைக்காது. தவிர, என்னைப்
பார்த்ததற்கும், என் பேச்சுக்களைக் காதில் கேட்டதற்கும் மகா பாதகம் தீர்த்த குளத்தில் போய் குளியுங்கள். கழுவினால் மாத்திரம் போதாது.
குடி அரசு - உடையாடல் - 16.06.1929
குடி அரசு - 1929 ) 314
20 குடி அசசு சசவனு அனி வே
ல்
ழு g பால்பரை மன்ற கவனியுங்கள் 1 கததி எ சாவ கனிந்த பேட த்தி ஆரியர் பட்டமும் வெறில?! e பணம் தீபக் சிங்கள் என்றுகழியாச 3 அகடயவேன் 8 எம்: சாமி மகா விரிய தங்க பஸ்பம். எலிகள், g6 மன்மனுபகெப்பாவிகள்.
ப சொப்பவும் குறைந்த வில ரூபா 8--15
பத்த, மகான் agari கை பு அச்தில், மனம்
இததிெப்பதால் இதன் அரிய. வர்கள் ஒருக்க தத ந ல் என் பன்பம் கு. 20. 24 என் பல்பம் 6 10
L தங்கள் சசாவிரியுதல்கபன் பத்தைப்பத்தீத் ரிய மட்டில் இத்து errw மந்த வெ கப்பூர்மாயச் சொன்ன சரன், தாம்கள் மானேஜர், gy புத்தகாலயம்,
Lhgangde e, மதல் பத்க் ன. ௪ அலல ந் e 0 ர - o 8 இங்கிலீஷ் கங்க அக கண்னை | Sl வ பழக ம் பெரும் வரகும் எழும் | அண ணவ — தொரியுக?
ர், 535 நப்பம்த்கள் இகுப்இஙடைர், G4 it “mum“, கயம் பன்னக | ஸ்பெஷல் இங்கிலிஷ் Geriave g | மகா மன்மத இந்தாமணி லேயெம்; : அயர், இனிய பாஸ் செய்து
பதத்்சன்ட யக்
i updrias. தகா வாதி e P | i, k எல்ல கடம் விய்மான மெரி Grars ண்ட?! Ly . G hunghe B AP u கேம்பிர்ட்ஜ் இன்ஸ்டிடியூட் தண்டபாணி sy s, 202, அரு பார், மதர் சேக் (சென் Qi) § லல்ல லல்ல ல பவல் வவ இனற னள ன ணன் நன்னா சென்னை யன அதத் பத்
கு, 30-00.
35 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மிஸ். மோ
மிஸ்.மேயோ என்னும் ஓர் அமெரிக்க மாதால் இந்தியாவிலுள்ள சமூக மத ஆபாசங்களைப் பற்றி எழுதப்பட்ட “இந்திய தாய்” என்னும் புத்தகத்
தில் உள்ள விஷயங்களை அநேகமாகப்பத்திரிகை உலகத்தில் கலந்திருக்கும் மக்கள் எல்லோரும் அறிந்திருக்கக் கூடும். அதோடு சீர்திருத்த உலகத்திலும் வைதீக உலகத்திலும் நடந்துள்ள சாதக பாதகமான அபிப்பிராயமுடைய வர்கள் எல்லோரும் அநேகமாக அறிந்திருக்கலாம். ஆனால் அப் புத்தகங்களிலுள்ள விஷயங்களை நம் நாட்டிள்ள எல்லா பத்திரிகைக்காரர். களும், அரசியல்காரர்களும், எல்லாச் சீர்த்திருத்தக்காரர்களும், எல்லா வைதீகர்களும், எல்லா மேடைப் பிரசங்கிகளும் வெளியிட்டு மிஸ்.மேயோ அம்மையை கைவலிக்க வாய்வலிக்க இழி மொழிகளால் வைதார்களே ஒழிய இன்றையவரையில் இனிமேலாவது இதைப்போல் இனியுமொரு புத்தகம் ஒருவரும் எழுதாமலிருப்பதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்தார்கள் இல்லை. அன்றியும் அவ்வம்மை எழுதிய விஷயங்களை தைரியமாய் மறுத்துக் கூறி வாதுக்கழைத்தார்களும் இல்லை. ஆனால் அப்புத்தகத்திற்கு
“பதில்” என்பதாக ஏதேதோ பொருத்தமற்ற குப்பைக் கூளங்களையும் பழி வாங்கும் நோக்கம் கொண்ட இழிவான எதிர்வாசகங்களையும் நிரப்பி புத்தக ரூபமாய் அச்சுப்போட்டு அதனால் பலர் பணம் சம்பாதித்துக் கொண்டார்கள். அன்றியும், அப்படிப்பட்ட பதில் புத்தகங்களில் காணப்படும் விஷயங்கள். தான் என்ன என்று பார்ப்போமானால் மிஸ் மேயோ தனது புத்தகத்தில் இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட ஆபாசமான விஷயங்களைப் போல் “அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடப்பதில்லையா?” என்பதும் “இதை விட அதிகமாக நடப்பதில்லையா?” என்பதும் அவைகளுக்கு ஆதாரமாய் மேல்நாடுகளில் நடக்கும் ஏதோ இரண்டொரு விஷயங்களையுமே எழுதி
சரி செய்து விட்டார்கள். மற்றபடி நம் நாட்டில் உள்ளவைகளை ஒழிக்கவோ அல்லது திருத்தவோ இன்றைய வரையில் யாரும் வேறு எவ்வித பிரயத் தனமும் செய்தார்கள் இல்லை.
உதாரணமாகமிஸ். மேயோவின் புத்தகத்தில் இந்தியர்களில் அநேகர் மாட்டு மலத்தையும் மூத்திரத்தையும் சாப்பிடுகின்றார்கள் என்று எழுதியிருக் கின்றார்கள் என்றால் அதற்கு பதில் சொன்ன கவி.ரவீந்திரநாதர் “மதத்தின் பேரால் ஆத்மார்த்தத்தை உத்தேசித்து நாங்கள் மாட்டின் மலத்தையும் மூத்திரத்தையும் சாப்பிடுகின்றோமே ஒழிய வயிற்றுக்கில்லாமல் சாப்பிடுவ
குடி அரசு - 1929 () 316
தில்லை” என்றுதான் சொன்னார்களேயொழிய சாணியும் மூத்திரமும் நாங்கள் சாப்பிடுவதில்லை என்று சொல்லவே இல்லை.மற்றும் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சிகளால் தங்களைத் தவிர மற்ற பார்ப்பனரல்லாதார்களை படிக்கவொட்டாமல் கொடுமை செய்து விட்டதோடு அதையேமதக் கட்டளையாகவும் கடவுள் கட்டளையாகவும், செய்துவிட்டார்
கள். இதனால்தான் இப்போதுகூட இந்தியாவில் பார்ப்பனர்கள் நூற்றுக்கு நூறுபேர் படித்தவர்களாகவும், பார்ப்பனரல்லாதார்களில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பேர் படிக்காதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று எழுதி இருப்பதற்குப் பதில் சொல்ல வந்த திரு.எஸ்.சத்தியமூர்த்தி சாஸ்திரி என்ன சொன்னார் என்றால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை: வேதமும் சாஸ்திரமும் தான் படிக்கக் கூடாது என்று சொன்னார்களே ஒழிய வேறில்லை, அதுவும் மதக்கட்டளையால் சொல்லப்பட்டதே தவிர தாங்கள். சுதாவாய்ச் சொல்லப்பட்டதல்ல என்று சொன்னாரேயொழிய அந்தப்படி இல்லை என்று சொல்லவே இல்லை. மனிதன் படிக்க வேண்டியது என்பது நீதிகளும் தர்மங்களும் அடங்கியது என்று சொல்லப்படும் வேத சாஸ்திரங்களே அல்லாமல் வேறு என்னமாயிருக்கக் கூடும்? இம்மாதிரி யாகவே அந்தம்மாள் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ள ஆபாசங்கள். ஒன்றைக் கூட அடியுடன் மறுப்பதற்கு யோக்கியதையில்லாத நிலையில்தான் இன்றைய இந்து மதமும் வைதீகமும் லெளகீகமும் அனுபவமும் இருந்து
வருகின்றதே அல்லாமல் வேறு என்ன? அந்தம்மாள் இந்த புஸ்தகத்தை எந்த எண்ணத்தோடு எழுதினார்கள் என்பது வேறு விஷயம். அது அரசியல் புரட்டர்கள் கவனிக்க வேண்டியதாகும். சுயமரியாதை உள்ள இந்திய மக்கள். கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதேதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஏனெனில் இதே அபிப்பிராயத்தை மிஸ்.மேயோ வுக்கு முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பேர்கள் எழுதி இருக்கின்றார்கள். திரு.காந்தி அவர்கள் கூட இந்த புத்தகத்தைப் பார்த்து என்ன பதில் எழுதி இருக்கின்றார் என்று பார்ப்போமானால், அவர்: அதிலுள்ள விஷயம் ஒன்றைக் கூட மறுக்காமல் “மிஸ் மேயோ எழுதி யிருப்பவை எல்லாம் இந்தியாவின் சாக்கடைகளில் காணப்படும் விஷய
மாகும்” என்று சொன்னார்.அதோடு கூட, அநேக தடவைகளில் மிஸ்.மேயோ போன்றவர்கள் எழுதியிருக்கும் “குறைகள் இந்தியாவை விட்டு நீங்கினா லொழிய இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் கிடைக்கும் என்று நினைப்பது முட்டாள்தனமும். அல்லது அயோக்கியத்தனமும் ஆகும்” என்றும் எழுதி இருக்கின்றார். இவற்றால் என்ன ஏற்படுகின்றது? இந்தியாவில் அம்மாதிரி. விஷயங்கள் இல்லை என்று எழுதியதாக ஏற்படுகின்றதா? இருக்கின்றது என்றும், அது சாக்கடைபோல் இழிமக்களிடம் இருக்கின்ற வழக்கம் என்றும்தான் ஏற்படுகின்றது. அந்தப்படி பார்ப்போமானால் இந்தியா முழுவதும் தான் சாக்கடையாக இருப்பதாக முடிவு செய்ய வேண்டுமே யொழிய வேறில்லை. அதிலும் “உயர்ந்த ஜாதியார்”, “மேல் வகுப்பார்”,
317 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
“வைதீகர்கள்”, “படித்தவர்கள்” என்பவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங் களே சாக்கடையானால், இன்னும் மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்கள். கக்கூஸ் என்றுதானே சொல்லியாக வேண்டும். மேலும், திரு.காந்தி
அப்புத்தகத்தைப் பற்றி முடிவுரை கூறுகையில் இந்தியர்கள் அப்புத்தகத்தை மறக்காமல் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும். வெளிநாட்டார் உடனே மறந்துவிட வேண்டும் என்றும் எழுதியிருக்கின்றார். இதனுடைய அர்த்தம் என்ன? இந்தியர்கள் இதை எப்போதும் ஞாபகத்தில் இருத்தி இவ்வாபாசங்களில் இருந்தும் இழிவுகளிலிருந்தும் இந்தியா மீளுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றுதானே கொள்ள இடமிருக்
கின்றது. இப்படி இருக்க எந்த சமூக சீர்த்திருத்தக்காரரோ இந்து மத சீர்திருத்தக்காரரோ, ஆஸ்தீகவாதியோ, பூரண சுயேச்சைக்காரரோ, சுயராஜ்ய வாதியோ, தேசீயவாதியோ இதுவரை அவற்றுள் ஒரு சிறிதாவது விளக்க. முயற்சித்தார்களா? என்று கேட்கின்றோம். மேன் மேலும் வருணாசிரம மகா நாடுகள் கூட்டி மேயோ புத்தகத்திற்கு மேெலொப்பம் போட்டார்களேயொழிய வேறு என்ன செய்தார்கள்? என்று கேட்கின்றோம்.
ஒருவன் நம்மைப் பார்த்து! “அயோக்கியனே” “கீழ் மகனே” என்று
கூப்பிட்டால், “நீ மாத்திரம் வாழ்கின்னனையோ” என்று நாம் திருப்பிக் கேட்டு விட்டால் நாம் அயோக்கியர்கள் அல்ல, கீழ் மக்கள் அல்ல என்று நிரூபித்ததாக ஏற்பட்டு விடுமா? ஒருக்காலும் ஆகாதே. அன்றியும் நாம் திருப்பிக் கேட்டதில் இருந்து நம்மிடம் இருக்கும் கீழ்மையையும். இழிவையும் நாம் ஒப்புக் கொண்டதாகவும், அதை மறுக்க முடியாததற்காக நமது மனசமாதானத்தின் பொருட்டு நாமும் திருப்பிச் சொன்னதாகவும் தானே ஏற்படும். இதனால் நம்மை அவர்கள் சொன்ன சங்கதிகள் உறுதியாய் விட்டது என்பதும் அவர்களை நாம் சொன்னவைகள் அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றவரை அனாமத்தில் வைக்க வேண்டியது என்பதுமாய் விட்டது. அதனால் நமக்கு என்னலாபம்? ஒரு சமயம் பதில் சொல்லாமலும்
திருப்பிச் சொல்லாமலும் அவற்றை அலட்சியமாய்க் கருதி இருப்பதாகக்
காட்டிக் கொண்டிருந்தாலாவது மற்றவர்கள் ஒரு சமயம் சந்தேகப்படவாவது
கூடும். இப்போது அதற்குக்கூட இல்லாமல் முழுவதையும் நாம் ஒப்புக் கொண்டதாக முடிவு கட்டிக் கொண்டோமே, இதற்கென்ன செய்யப் போகின்றோம் என்பதுதான் இப்போது நம்முடைய கேள்வி? அன்றியும் மிஸ் மேயோ இந்தியாவின் நிலைமைபற்றி எழுதிய புத்தகத்தினால் உலகில் இந்தியாவின் யோக்கிதையைப் பற்றி வெகு இழிவாய்க் கருதப்பட்டு போய்விட்டதன் பலன் இந்தியர்கள் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் திருப்பி வைவதால் தீர்ந்து விடுமா? அல்லது அதில் கூறப்பட்ட - நமது நாட்டில் உள்ளதான குறைகள் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம். நிற்க,
அப்புத்தகத்தில் கண்டுள்ள ஏதாவது ஒரு சிறிய விஷயத்திற்காவது மகம்மதி யர்களோ வெள்ளைக்காரர்களோ மகம்மதிய அரசாங்கமோ வெள்ளைக்கார: அரசாங்கமோ காரணம் என்றாவது அல்லது அச்சமூகங்களும்
குடி அரசு - 1929 () 318
அவ்வரசாங்கங்களும் ஒழிந்தால்தான் முடியும் என்றாவது எந்த ஒரு யோக்கியமான சீர்திருத்தவாதியோ,மதவாதியோ, தேசீயவாதியோ, அரசியல் வாதியோ, ஆஸ்தீக வாதியோ சொல்ல முடியுமா? என்று பந்தயம் கூறிக் கேட்கின்றோம். எனவே இந்தியாவின் சுயமரியாதையிலோ, விடுதலை யிலோ, சுயராஜ்ஜியம் என்பதிலோ யாருக்காவது ஒரு சிறிது கவலை இருந்தா
லும் அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் திரு.மேயோவின் இந்தியத் தாய் என்னும் புத்தகத்தையும் மற்றும் அது போன்ற புத்தகங்களையும் கையில் வைத்துக் கொண்டு அதில் சொல்லப் பட்டுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து, அது சிறிதா
னாலும், பெரிதானாலும் பெரிதுபடுத்திச் சொன்னதானாலும் கவலையோடு தேடிப் பிடித்து அவைகளை அடியோடு ஒழிக்க வேண்டியதே முக்கிய கடமையாகும். கோபத்தையும் வெறுப்பையும், தந்திரங்களையும் சூழ்ச்சி களையும் காட்டி அவைகளை மறைக்க முயற்சித்தோமானால் ஒரு சமயம் இன்று நாம் வெற்றியடைந்தாலும் நம்மால் மறக்கப்பட்ட விஷயங்கள். அழுகிப் புழுத்துப் புரையேறி மற்ற எல்லா விஷயங்களையும் நாசமாக்கி விடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 23.06.1929.
319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
“நாஸ்திக த்தின் சக்தி
ரஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர்.
பிரசாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டி வரு கின்றனர். அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கின்றது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு
உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை. என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரியவில்லை. அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார். போலும். “நாஸ்திக”த்தின் சக்தியே சக்தி!
குடி அரசு - செய்தி விளக்கம் - 23.06.1929
குடி அரசு - 1929 () 320
பிரம்மலான சங்கம்
தியசாபிகல் சொசைட்டி என்பதாகவும் பிரம்மஞான சங்கம் என்பதாக ஒரு சங்கம் நமது நாட்டில் பார்ப்பனீய மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு 30 - 40 வருஷ காலமாக இந்தியாவில் செல்வாக்குப் பெற்றுவரும் விஷயம் யாவருக்கும் தெரிந்ததாகும்.பார்ப்பன மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு வேறு எவ்விதக் கொள்கையுடன் ஏற்படுத்தும் சங்கமோ, இயக்கமோ ஆனாலும் பார்ப்பனர்கள் அதை எவ்விதத்திலும் ஆதரித்தே தீருவார்கள். ஏனெனில் பார்ப்பன மதத்திற்கு மற்றொரு ஆதரவும் உபகரணமும் கிடைத்தது என்கின்ற எண்ணத்தோடு அதை வரவேற்பார்கள். அவர்கள் மதத்திற்கும் ஆதாரத்திற்கும் ஆட்சேபணையோ மறுப்போ கொண்டதான ஏதாவதொன் றைச் சொல்லி விட்டோமேயானால், அது எவ்வளவு நன்மையும் உயர்ந்த தத்துவத்தையும் கொண்டதானாலும் அவற்றை எப்பாடுபட்டாவது ஒழித்துவிட முயற்சி செய்ய வேண்டியது பார்ப்பனர்கள் கடமையும் வழிவழிச் செய்கையுமாகும். உதாரணமாக, புத்தமதம், சமணமதம் போன்ற ஒழுக்கமும் ஜீவ காருண்யமும் முதன்மையாகக் கொண்ட பிரத்தியட்ச அறிவு மதங்கள் எல்லாம் நமது நாட்டில் இருக்கின்ற இடம் தெரியாமல் போனதும், கொலையும், கள்ளும், பொய்யும், புளுகும், ஜீவஹிம்சையும், மூட நம்பிக்கையும், முட்டாள் தனமும் கொண்ட மதங்கள் எல்லாம் தலைவிரித்து ஆடுவதுமே போதுமான உதராணமாகும். இவற்றுள் மேற்கண்ட பிரம்மஞான சங்கம் என்னும் மதமும் ஒன்றாகும்.
சாதாரணமாக பிரம்மஞான சங்கத்திற்கு வேதம், கீதை, புராணம் இவைகளில் உள்ள தேவர்கள், ரிஷிகள், மகாத்மாக்கள் முதலியவர்கள்.
எல்லாம் முக்கிய ஆதாரமாகும். அதோடு அவதாரம், மறுபிறப்பு, மகாத்மாக்
கள் அவர்களுடன் சம்பாஷித்தல் ஆகியவைகளும் முக்கியக் கொள்கையும்
தினப்படி அனுபவமுமாகும். இந்த இருபதாவது நூற்றாண்டில் அதுவும் சயன்ஸ் என்னும் விஞ்ஞானத் தத்துவம் இவ்வளவு தூரம் முற் போக் கடைந்திருக்கும் இக்காலத்தில் சாதாரண மனிதர்கள், அதிலும் ஒழுக்கம் - உண்மை ஆகியவைகளில் சராசரி மக்கள் நிலைக்கு எவ்விதத்திலும் உயர்வு இல்லாதவர்கள் உதாரணமாக வக்கீல் முதலியவர்கள்! இந்தக் கொள்கை: களை அனுபவிப்பதாகச் சொல்லிக் கொண்டு அவற்றை மக்களுக்குள் பரப்புவதையும், பார்ப்பனர்களில் பெரிய பெரிய படிப்பாளிகள் என்று
321 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சொல்லத்தக்கவர்கள் எல்லாம் இவற்றை நம்புவதாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கின்ற ஒருவன் இதன் ரகசியம் என்னவாயி ருக்குமென்று யோசித்தால் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எவ்வளவு கீழான மக்கள் பரப்புவதானாலும் பிரசாரம் செய்வதானாலும் அதனால் எப்படியும் தங்களுக்கு லாபந்தானே என்கின்ற ஒரே கருத்தால்தானே அல்லாமல் வேறல்ல என்பது நன்றாய் புலப்படும்.
இதன் பலனாக பார்ப்பன மதக்காரர்கள் அல்லாமல் அநேக கிறிஸ்தவர்களும் மகம்மதியர்களும் மற்றும் பலரும் அப்பார்ப்பன மதத்தை ஒப்புக் கொண்டு அதை ஆதரிக்க முடிந்ததேயொழிய இதனால் பார்ப்பனர்களுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடவில்லை. மேலும், இந்தச் சங்கம் இவ்வளவோடு நிற்காமல் ஒரு புதிய அவதாரத்தை உற்பத்தி செய்ய ஆசைப்பட்டு பல நாளாக முன் ஜாக்கிரதையுடன் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு திடீரென்று ஒரு பார்ப்பனரை கடவுள் அவதாரமாகவும், லோக குருவாகவும், ஒரு பார்ப்பனியை மேரி அவதாரமாகவும் ஆக்கி வெளிப் படுத்திவிட்டார்கள். அந்த அவதாரத்தையும், லோக குருவையும் பார்ப்பன வகுப்பில் இருந்தே. பொறுக்கி எடுத்து ஏற்படுத்திவிட்டதால் எந்தப் பார்ப்பனரும் சங்கராச்சாரி” போல் மதித்து) அதை எதிர்க்காமல் ஒப்புக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அவற்றை வேறு ஒரு பார்ப்பனரல்லாத வகுப்பில் இருந்து வெளிப்படுத்தி
இருந்தால் இந்நேரம் அச்சங்கமே பறந்து போயிருக்கும். அன்றியும், அந்த “லோக குருவின்” கொள்கைகள் அநேகம் நமது கொள்கையை யொட்டி யதும் பெரிதும் நாமறிந்தவரை குற்றம் சொல்லத் தகாததாகவும் காணப் படுகின்றது என்பதோடு பிரம்மஞான சங்கத்தின் முக்கிய கொள்கைகளைக்
கூட ஒரு ஆட்டம் ஆட்டி விட்டது. ஆனாலும் அந்த அவதார லோக குரு வுக்கு பகலில் கண் தெரியாமல் வண்டியில் இடித்து மோதிக் காயம் ஏற்பட்டும் அநேகப் பார்ப்பனர்கள் வாய்மூடிக் கொண்டுதான் இன்னமும் அவர். லோககுரு என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட லோககுருவுக்கு இப்போது ஆபத்து வந்துவிட்டது. ஆனால் அந்த ஆபத்து பார்ப்பனர்களாலல்ல. மற்று யாரால் என்றால் பார்ப்பனரல்லாத ஒரு பார்ஸி கனவானால். அவரும் இந்தச் சங்க பிரதானிகளில் முக்கியஸ்தராய் இருந்து
தினமும் ரிஷிகளுடனும் மகாத்மாக்களுடனும் பேசிக் கொண்டிருந்தவர்.
ஆனாலும் இந்த பார்ப்பனர்களின் புரட்டுக்களைக் கண்டு இதிலிருந்து
பிரிந்து போய் இந்த லோக குருவையும், கன்னிமேரியையும் ஒப்புக்கொள்ள
மறுக்கிறார். பார்ப்பனர்கள் மறுத்தாலொழிய மற்றும் யார் மறுத்தாலும் மறுப்பில் வெற்றி பெற முடியாது. ஏனெனில் ஏதாவது ஒரு பார்ப்பனன் அவர்கள் காலில் விழுந்து அவரைச் சங்கராச்சாரியைப் போல் விளம்பரப்
படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.
என்றாலும், இனி அந்தப் புரட்டுகள் பலிப்பது என்பது சற்று சந்தேகந்தான், ஏனெனில், ஜனங்களுக்கும் விழிப்பு ஏற்பட்டு விட்டதுடன்
குடி அரசு - 1929 () 322
கோட்டைக்குள்ளாகவே பிரிவினை ஏற்பட்டு விட்டது. அதாவது, திரு.பி.பி. வாடியா என்பவர் எதிர்ப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றார். மற்றபடி வேதங்களுக்கும் கடவுள்களுக்கும் குருமார்களுக்கும் இப்போது ஆபத்துக்
கள் வந்ததுபோல் விகிதாசாரம் பிரம்மஞான சங்கத்திற்கும் வந்திருப்பதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இத்தனை காலம் பொறுத்து வந்ததே என்பதுதான் அதிசயப்படத்தக்கதாகும்.
குடி அரசு - கட்டுரை - 23.06.1929.
323 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
மறுபமுமும் திரு.ராககோயாலாச்சாரியார்
திரு.ராஜகோபாலாச்சாரியார் தேர்தலுக்காக கள்ளின் பேரால் வழக்கம்போல் அவருடைய சூழ்ச்சி விஷமப் பிரசாரத்தைத் துவக்கி விட்டார். சேலம், வடஆற்காடு ஜில்லாக்களில் இப்போது செய்து கொண்டும் வருகின்றார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பன ஆதிக் கத்தை நிலை நிறுத்த அவர் எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யலா மென்கின்ற முடிவு கொண்டவர். அவருடைய மனச்சாட்சி என்பது கொலை, கொள்ளை, புரட்டு, நம்பிக்கை துரோகம், சித்திரவதை முதலிய எவ்வளவு கடினமான காரியத்திற்கும், சற்றும் அசையாது; எந்த வேடம் போடுவதற்கும்
சற்றும் பின்வாங்கார். இப்பேர்ப்பட்ட ஒரு மகா புருடருக்கு, மகாத்மா என்னும்
உலகப் பிரசித்தியும், மதிப்பும், மரியாதையும் பெற்ற திரு.காந்தி தமது சிஷ்யக் கோடிகளுடன் கையாளாகவும் கிடைத்திருக்கின்றார். இவ்வளவும் போதாமல் மேற்கண்ட பெருமையுடைய திரு.காந்தியார் இந்திய மக்களிடமிருந்து கொள்ளை போல் வசூலிக்கப்பட்ட பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொண்ட பொக்கிஷமும் அவர் வசமிருக்கின்றது. இவ்வளவும் போதாமல்
ஈவு இரக்கமற்றதும் சூழ்ச்சியும், தந்திரமும், விஷமமும் பொருந்தியதுமான மனோ சக்தியும் ஏற்பட்டிருக்கின்றது. தம் காரியத்தை நடத்துவதற்கு இனி அவருக்கு என்னவேண்டும்? ஒன்றுமே வேண்டிய தில்லை. ஏதோ நான்கு கூலிகளும், காலிகளும் மாத்திரம் வேண்டும். அதுவும் எதற்கென்றால், கூட்டம் ஏற்பாடு செய்யவும், ஆள்களைச் சேர்க்கவும், மேடையில் நின்று பேசுவதற்கு வேண்டிய செளகரியம் செய்து கொடுப்பதற்கும் மாத்திரமே
யாகும். பிறகு தமது விஷப்புகையைக் கக்குவதன் மூலம் பாமர மக்களை ஏமாற்றிவிடலாம் என்கின்ற முரட்டுத் தைரியம் அவருக்கு உண்டு.
சாதாரணமாக, ஒத்துழையாமை ஆரம்பித்த காலத்தில் தீண்டாமையும்,
கதரும், மதுவிலக்கும் முக்கிய கொள்கையாக வைத்துக் கொண்டு வேலை செய்தது யாவருக்கும் தெரியும். அக்காலத்தில் திருராஜகோபாலாச்சாரியார். இவைகளில் ஒரு காரியமும் காரியத்தில் செய்வதற்கில்லாமல் வெறும் ஆர்ப்பாட்டத்தால் மாத்திரம் இயக்கத்தைத் தளுக்காக நடத்திப் போகக் கருதிக் கொண்டிருந்தவர். ஆனாலும் அவருடைய சகாக்கள், அவரது இஷ்டம் போல் விடாமல் காரியத்தில் நடத்த ஏற்பாடு செய்துவிட்டதன் பலனாய் அவரும் கூடவே “கோவிந்தா”ப் போட வேண்டிவந்துவிட்டது. குறிப்பாகத் தீண்டாமை விலக்கிலும், மது விலக்கிலும் எவ்வளவு
குடி அரசு - 1929 () 324
முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டுமோ, அவ்வளவு முட்டுக்கட்டையாய் இருந்தவர். உதாரணமாக, காங்கிரசில் தீண்டாமைக்காக ஒதுக்கிவைத்த பணங்கள் அவ்வளவையும் தம்பேரால் பிரித்து வைத்துக் கொண்டதோடு அவ்வியலில் செய்யவேண்டிய காரியப் பொறுப்பு முழுவதையும் தமக்கே. வைத்துக் கொண்டு கடைசிவரையில் யாதொரு காரியமும் செய்யாமல் இருந்து கொண்டு சிலர் கண்டித்துக் கேட்டபின், பொறுப்பில் இருந்து மாத்திரம் விலகிக் கொண்டு முட்டுக்கட்டையில் மேலும் பலமாக இருந்து
வந்தார். அதுபோலவே மதுவிலக்கிலும் ஆங்காங்கு நூற்றுக் கணக்கான தொண்டர்கள் சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும் போதும் மேலும் மாதம் நூற்றுக்கணக்காய் சிறைக்குப் போவதற்கு 2 - 3 மாதத்திற்குத் தொண்டர்கள். தயாராயிருந்தும் சர்க்காரும் இணங்கி வருவதற்கு யோசித்துக் கொண்டிருக்
கும் பொழுதும், திடீரென்று மறியலை நிறுத்தும்படி செய்து மறுபடியும் தொண்டர்களுக்கு அது விஷயத்தில் உற்சாகமே ஏற்படுவதற்கில்லாத
மாதிரியில் அதை அடியோடு அழித்துவிட்டார். முதன்முதலாக திரு.ஈ.வெ. ராமசாமியார், திரு.எஸ். ராமநாதன் முதலியவர்கள் திரு. ஆச்சாரியாரிடம் அபிப்பிராய பேதமும் அவநம்பிக்கையும் கொள்ள வேண்டி வந்ததற்கு முக்கிய காரணமே இந்தச் சம்பவமாகும். அதுமுதல் இதுவரை தீண்டாமைக் காவது மதுவிலக்குக்காவது காரியத்தில் பயனுண்டாகும்படி, ஒரு சிறு காரியத்தையும் செய்தவரல்லர். அதோடு ஒத்துழையாமை இயக்கம் அழிந்து பட்டதற்கும் முக்கிய கர்த்தாவாய் இருந்தவர் திரு. ஆச்சாரியாரே ஆவார். ஏனெனில், மற்றவர்கள் அதாவது, சுயராஜ்ய கட்சியார் தேசீயக்காரர்கள் என்பவர்கள் போட்ட கூச்சல்களால் ஒத்துழையாமை என்னும் கட்டிடத்தை அசைக்கவே முடியவில்லை; கட்டிடமும் ஒரு சிறிதும் பழுதாகவும் இல்லை. ஆனால் திரு. ஆச்சாரியார் காகினாடாவில் வைத்த டைனாமெட் (அதாவது பூமியின் கீழ் வைக்கும் வெடிகுண்டு தான் அடியோடு அழித்து காங்கிரசைப் பழையபடி பார்ப்பனர்களிடமும் அவர்களுடைய கூலிகளிடமும் ஒப்படைக்கச் செய்தது. ஆனாலும், தாம் மாத்திரம் அதில் சேராதவர் போல் வேடம் போட்டுக் கொண்டே மக்களை ஏமாற்றிவந்தார். இந்நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது நிபந்தனையில்லாத கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்கு மது விலக்கையும், தீண்டாமையையும் பேச்சளவில் உபயோகப்படுத்திக் கொண்டு வருவதில் அவர் தவறினதே இல்லை. சென்ற தேர்தலின் போது காங்கிரஸ்காரர்கள் கூட திரு. சீனிவாச ஐயங்கார், திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரி உட்பட “சட்டசபையின் மூலம் கள்ளை ஒழித்துவிட முடியாது” என்று சொல்லியும் 10 வருஷத்தில் ஒழித்தாலே பெரிய காரியம் என்று சொல்லியும்,
திரு. ஆச்சாரியார் ஒரு வருஷத்தில் ஒழித்துவிடுகின்றேன் (திரு.காந்தி சுயராஜ்யத்திற்கு ஒரு வருஷ வாயிதாவே வைத்துக் கொண்டு வருவதுபோல்! ஆனால் பார்ப்பனர்களுக்கு ஓட்டுச் செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்து ஓட்டுச் சேகரித்தார். அவர் பிரசாரத்தின் யோக்கியதையின் உண்மை
325 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
தெரிய வேண்டுமானால், தென்னை மரத்தில் கள்ளுக்கு முட்டிகட்டி வருஷம் பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஓர் ஐயங்கார் பார்ப்பனருக்கு (திரு.சி.வி.வெங்கிட்டரமண ஐயங்கார்! அவர் தோட்டத்தில்- அவருடைய மரத்தில் கள்ளுமுட்டி தொங்குவதைப் பார்த்துக் கொண்டே அவருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பிரசாரம் செய்தது ஒன்றே போது மானது. தவிர தேர்தலான பிறகு மறுதேர்தல் வரும்வரை கள்ளைப் பற்றி ஏதாவது ஒருபேச்சாவது பேசினாரா? என்பதும், தேர்தலுக்குப் பிறகு இவரால் ஓட்டு வாங்கிக் கொடுக்கப்பட்ட மெம்பரிடமாவது, இவரால் சிருடிக்கப்பட்ட மந்திரிகளிடமாவது மதுவைப் பற்றி ஏதாவது பேசினாரா? அல்லது செய்யும் படியாவது சொன்னாரா? என்பதும் அவர்கள் செய்ததைப் பற்றியோ, செய்யாததைப் பற்றியோ ஏதாவது இதுவரையில் வெளியிட்டாரா? என்பதும் யோசித்துப் பார்த்தால் ஆச்சாரியாரின் மதுவிலக்குக் கொள்கையின் யோக்கியதை விளங்காமற்போகாது. இந்தக் காலத்திலும் ஒரு பார்ப்பனர். இம்மாதிரி வேடம் போட்டுக் கொண்டு இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய பார்ப்பனரல்லாதாரை அழிக்க இவ்வளவு வெளிப்படையாய் - பித்தலாட்ட
மாய் வேலை செய்கின்றார் என்றால் அது பாராட்டக்கூடிய செய்கையாகுமே யொழிய வேறில்லை. அதுபோலவே இதை நம்பி ஏமாறும் பார்ப்பனரல்
லாதார் நிலையும் பரிகசிக்கத்தக்கதே ஒழிய வேறில்லை. திரு. ஆச்சாரி யாருக்கு மதுவிலக்கு விஷயமாய் ஏதாவது கொள்கையுண்டா? திட்டம் உண்டா? என்று பார்த்தால் அதுவும் இல்லை என்பதையும் அவரால் இது வரை வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும் பலர் ஒப்புக் கொள்ளத் தக்கதாய்க் காரியத்தில் வெற்றி பெறத்தக்கதாய் ஒன்றும் கொள்கை இல்லை என்பதையும் பொதுஜனங்களே அறிவார்கள். எனவே, வெறும் தேர்தலுக்காக மாத்திரம் திருவாளர் சீனிவாச ஐயங்கார் பூரண சுயேச்சை என்பது போலும், திரு.காந்தி ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் அல்லது ஒத்துழையாமை என்பது போலும், தேசம் பிரதானக் கட்சியும், உத்தியோகப் பிரதானக்காரரும் எல்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பது போலவும், ஆத்திகக்
காரர் கடவுளையும், புராணங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது போலவும், திரு. ஆச்சாரியார் மதுவிலக்கு என்று சொல்லுவதும், கோடு
கட்டிய குறள்களுக்குப் பதிலாக எதுகை, மோனை கொண்ட வாக்கியங்களை எழுதுவதும் திருவாளர்கள் அண்ணாமலைப் பிள்ளை, ஆதிநாராயண:
செட்டியார் போன்றவர்களுடன் சென்று மதுவிலக்கு பிரசாரம் செய்வதுமா யிருக்கின்றதைத் தவிர, மற்றபடி இவற்றில் ஏதாவது நாணயமோ, உண்மை யோ, கவலையோ இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். சுமார் 25 அல்லது 30 லட்ச ரூபாயுடன் கதர் ஸ்தாபனத்தை
ஒப்புக் கொண்டு மாதம் 100, 150, 200, 250 வீதம் பல பார்ப்பனர்களுக்குச் சம்பளங்களைக் கொடுத்துக் கொண்டு பழைய காலத்து மூட ராஜாக்களின் தர்ம சத்திரம் போல் கதர் இலாகா முழுவதும் 100-க்கு 100 பார்ப்பனர்களைச் சிஷ்யர்களாக அமர்த்திக் கொண்டு தம் இஷ்ட பிரகாரம் ஏகபோகமாய்
குடி அரசு - 1929 () 326
சங்கராச்சாரி மகந்துக்கள் பண்டார சன்னதிகள் போல இரண்டு லட்சம், மூன்று லட்சம் செலவு செய்து நடத்தி வரும் கதர் மடத்தில் இதுவரை என்ன முற்போக்கான அல்லது பலன் கொடுக்கத்தக்ககான வேலையை இவர் செய்திருப்பதாகச் சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம். பொதுஜனங் களுக்கு கதர் விற்பனை காட்டுவதில் “திருப்பூரிலிருந்து பம்பாய்க் கதர் டிப்போக்களுக்கு அனுப்பிய கதர் 2 லட்ச ரூபாய், பம்பாய், கதர் டிப்போக்களில் விற்பனையான கதர் 2 லட்ச ரூபாய் ஆக இந்த இனத்தில் மொத்தம் 4 லட்ச ரூபாய்க்குக் கதர் விற்பனை ஆகி இருக்கின்றது” என்று
இரட்டித்து உற்பத்திக்கு மேல் விற்பனையைக் காட்டுவதும், சீமை ஜவுளியும், உள்நாட்டு மில் ஜவுளியும் கஜம் 0-4-0, 0-5-0 அணாவுக்கு விற்றால் தேசாபிமானி என்று பேர்வாங்க விலை கொடுப்பதுபோல் கதருக்கு கஜம் ஒன்றுக்கு 1-அணா,11-அணா,12-அணா வீதம் ஒன்றுக்கு இரண்டு மூன்று பங்கு விலை கொடுத்து வாங்கச் செய்வதும் தவிர வேறு என்ன அனுகூலம் ஏற்பட்டிருக்கின்றது? இவர் ஆதிக்கத்தில் எவ்விதத்தில் கதர் முற்போக் கடைந்தது? அந்த ஸ்தாபனம் பார்ப்பன அக்கிரகாரமாகவும் தர்ம சத்திரமாகவுமானது தவிர மற்றப்படி விலையிலா? துணி நயத்திலா?' ஜனங்களிடம் அதுபெறும் செல்வாக்கிலா? எதிலென்று சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம். இவ்வளவும் போதாமல், இப்பெரியார் மது விலக்குக்கும் நமக்கு ஞானம் போதிக்க வந்துவிட்டார். தேர்தலை உத்தேசித்து காங்கிரசிலிருந்து மதுவிலக்குப் பிரசாரத்திற்கு மாதம் 500 ரூபாய் திருஆச்சாரியார் வசம் கொடுக்கப்படுவதினாலும், திரு.ஆச்சாரியார் அந்த பணத்தை வைத்துக் கொண்டு, முதலை பொன் காப்பைக் காட்டினதுபோல் காட்டுவதாலும், இதுசமயம் மதுவிலக்குப் பிரசாரம் மும்முரமாய் இருப்பதாக ஜனங்களுக்குத் தெரியக் கூடும். ஆனால் அதற்கு ஏதாவது நமது ஜனங்கள் ஏமாந்து கதரைப்போல் அதற்கும் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கி அதன்
பேராலும் திரு.காந்தி பல லட்சம் நம்மவர்களிடமிருந்து வசூல் செய்து அவரிடம் ஒப்புவித்து விட்டால் பிறகு கதரைப்போலவே காரியத்தில் ஒன்றுக்கு மூன்றாய் கதர் கட்டுபவர்கள் நஷ்டப்படவும் அவற்றுள் 16ல் ஒரு பங்கு ஏதோ கிராமத்தில் உள்ளவர்கள் லாபமடைவதாய் காணப்படுவதும் மற்றபடி லட்சக்கணக்கான ரூபாய்கள் பார்ப்பனர்கள் வயிற்றில் போய் விழும்படியாக இலாக்கா முழுவதும் தரும சத்திரமாகவும் அக்கிரகாரமாகவும் ஆவதைத் தவிர வேறு ஒரு காரியமும் ஆகப் போவதில்லை என்பது நமது உறுதி. பார்ப்பனர்களின் கதர் தொண்டிற்கும் ஏழைகளிடம் உள்ள அன்பிற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டுவோம். அதாவது ஒரு மணிநேரம் ஒரு பெண்ணோ ஒரு ஆணோ நூல் நூற்றால் ஒரு சின்னக் காசுதான் கூலி கிடைக்கின்றது. இந்த மாதிரி தொழிலால் நமது நாட்டு மக்களுக்குள்: கைத்தொழில் தரித்திரம் தீர்ந்து விடுமா? இதற்கு மேல் சம்பாதிக்கும்படியான நிலைமை தேடவேண்டாமா? என்றால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் என்னவென்று பார்த்தால் “அதாவது கிடைப்பதற்கு வேறு வேலை சொல்”
327 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
என்பதுதான். இது யார் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் அதே கதர். தொண்டில் அதாவது ஒரு மணி நேர வேலைக்கு ஒரு சல்லி கிடைப்பதற்குத்
தகுந்த வேலையில் மாதம் 200 ரூ. சம்பளமும் 100 ரூ. போல் படியும் வாங்குகின்ற ஒரு “தேசபக்தர்” இந்த ஒரு மணிக்கு ஒரு சல்லி கூலியாவது எங்கிருந்து சம்பாதித்துக் கொடுத்தார்கள்? வேஷ்டி வாங்குபவனிடம் ஒன்றுக்கு மூன்றாய் அபராதம் வாங்கி ஒன்றுக்கு வீசமாய் கூலி கொடுத்து விட்டு மாதம் 200 ரூ. தாங்கள் சம்பளம் பெறுகின்றார்கள். ஆனால், கனம்
மந்திரி முத்தையா முதலியாரவர்கள் மதுவிலக்கு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தால் அது மாத்திரம் இவர்களுக்கு புரட்டும் பித்தலாட்டமுமான காரியமாய் விடுகின்றதாம். அதன் காரணம் என்ன?
திருராஜகோபாலாச்சாரியார் வாயால் அவர் கையில் கொடுக்கப்பட்ட பணத்தால் பிரசாரம் செய்தால் மாத்திரம் அது சரியான மதுவிலக்குப் பிரசாரமாவதும், மற்றவர்கள் செய்தால் அது புரட்டாவதுமானால், பார்ப்பனப் புரட்டுக்கு இது ஒன்றே சாட்சி போதாதா? என்று கேட்கின்றோம்.
திரு.ராஜகோபாலாச்சாரியாரால் சிருஷ்டிக்கப்பட்ட முன் இருந்த மந்திரிகள் மதுபானம் கெடுதியா? நல்லதா? என்பது கூடத் தெரியாதென்றும், அதை ஒழிக்க வேண்டியது அவசியமென்று ஜனங்கள் கருதுகின்றார்களா?' இல்லையா? என்பது கூட இன்னும் தெரியவில்லை என்றும் சொன்ன மந்திரிகளை ஆதரித்துக் கொண்டு அப்போது எவ்விதப் பிரசாரமும் செய்யாமலிருந்த இந்த பார்ப்பனர்களுக்கு இப்போது மதுபானம் தப்பு
என்றும் மதுவிலக்கு அவசியமென்றும் சொல்லி மதுவிலக்கு பிரசாரம் செய்ய பொதுஜனங்களை அனுமதித்ததோடு அதற்காக 4- லட்ச ரூபாயும் பொதுஜனங்களிடம் கொடுக்க முன் வந்த மந்திரியைப் பற்றி குறை கூறிக் கொண்டு திரிவதோடு அவர் மறுபடியும் சட்டசபை மெம்பராகக் கூடாது, மந்திரி ஆகக்கூடாது என்று பிரசாரம் செய்வார்களானால் இவர்களின் அயோக்கியத்தனத்திற்கும் சூழ்ச்சிக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும். என்று கேட்கின்றோம். அன்றியும் இதாவது இதுவரை யார் செய்தார்கள் என்றும் சர்க்காரை இவ்வளவு தூரம் யார் வசப்படுத்தினார்கள் என்றும் கேட்கின்றோம். இந்த மாதிரி பிரசாரம் ஒழுங்கானதல்ல என்பதையும் நாணயமானதல்ல என்பதையும் திரு.ராஜகோபாலாச்சாரியார் உண்மை யாகவே மனபூர்த்தியாகவே நம்பியிருப்பாரானால் கனம் மந்திரியை அந்தத் தொகையில் நாலில் ஒரு பாகமான ஒரு லட்ச ரூபாயை தமக்குக் கொடுக்கும் படி கேட்டிருப்பாரா? என்று கேட்கின்றோம். எனவே இப்போது அந்தப் பணம் முழுவதும் பார்ப்பனர் தொப்பைக்குப் போய்ச் சேர முடியாததினா லேயே அந்த மந்திரி கெட்டவரா? என்றும் அந்த பிரசாரம் சூழ்ச்சியா?
என்றும் கேட்கின்றோம். உண்மையிலேயே திருஆச்சாரியார் யோக்கியமான மதுவிலக்கு பிரசாரகராயிருந்தால் மந்திரியின் காரியத்தைப் புகழ்ந்து அவருக்கு குடியினால் கெட்டுப் போகிறவர்கள் சார்பாய் நன்றி பாராட்டி
குடி அரசு - 1929 () 328
அதை ஒவ்வொரு இடத்திலும் புகழ்ந்து சொல்லிக் கொண்டும் சர்க்காரும்
நம் வழிக்கு வந்துவிட்டார்கள், ஆதலால், மதுவிலக்குப் பிரசாரம்
சர்க்காருக்கு விரோதமல்ல; ஆதலால் எல்லோரும் தைரியமாய் பிரசாரம் செய்யலாம்; இந்த வருஷம் பிரசாரம் செய்ய நமது மந்திரியின் சாமர்த்தியத்
தால் இசைந்த சர்க்கார் அடுத்த வருஷம் இதைவிட பலமாக அதாவது ஒரு 10 கடைகளையாவது மூடத்தக்க அளவுக்கு முற்போக்கான காரியங்கள். செய்வார்கள் என்று சொல்லக் கடமைப்பட்டவராவார். அப்படிக்கு இல்லாமல் மந்திரி கெட்டவர் அவர்கூடாது, வேறு யாராவது ஒரு பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுங்கள், இல்லாதவரை பார்ப்பனக்கூலிக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொன்னால் இவர்கள் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்து இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.06.1929
329 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஆஸ்திகர்களே இதற்க யார் வாறுப்பானி?
- சித்திரபுத்திரன்
இந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் கொடுமை! கொடுமை! கொடுமை!!! மயமாகவே செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோவில் எரிமலை வெடித்துத் தீப்பொறிகளும், தீக்குழம்புகளும், புகைகளும் கிளம்பி அநேக கிராமங்களை சாம்பலாக்கி விட்டதென்றும், அதனால் அநேக பொருள்களுக்கும் உயிர்களுக்கும் நஷ்டமேற்பட்டுவிட்டதென்றும் நியூசிலாண்டிலும் ஆஸ்டீரியாவிலும் பூகம்பங்கள் ஏற்பட்டு அநேக கட்டிடங்கள் இடிந்து விழுந்தும் அநேக உயிர்கள் மடிந்தும் பலத்த சேத மேற்பட்டு வருகின்றதென்றும், இங்கிலாந்
திலும் லண்டனிலும் புயல் காற்றும் மழையும் வெள்ளமும் அடித்து அநேக பட்டிணங்களும் உயிர்களும் சாமான்களும் தொழிற்சாலைகளும் அழிந்து சேதமும் நஷ்டமுமுண்டாய்விட்டதென்றும், வங்காளம், அஸ்ஸாம், சைல்சாட் பிரதேசங்களில் ஐந்நூறு சதுர மைல்கள் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு அநேக கிராமங்களையும் அநேக மனித உயிர்களையும், ஏராள மான கால் நடை ஜீவன்களையும் அடித்துக் கொண்டு போய்விட்டதென்றும், திருவாங் கூரிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதென்றும் பம்பாய், சைனா முதலிய இடங்களில் நெருப்பு பிடித்து அநேகக் கட்டிடங்களும் பொருள்
களும் வெந்து சாம்பலாகிவிட்டதென்றும், மற்றும் பல பெரிய பட்டணங் களில் பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்களை அழுத்திக் கொன்றுவிட்டதென்றும், இவைகளாலும் மற்றும் பல காரணங்களாலும் பல இடங்களில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாமல் பட்டினியால் வாடி மயங்கி சொத்துப் பொத்தென்று விழுந்து சாகின்றார்கள்
என்றும், மற்றும் இவை போன்ற கொடுமையும் பரிதாபகரமானதுமான
செய்திகள் தினப்படி வந்த வண்ணமாகவே யிருக்கின்றன.இது நிற்க, முகரம் பண்டிகைக் கொண்டாட்டத்தால் பல இடங்களில் இந்து, முஸ்லீம் கலகங்
களும், முஸ்லீம் - முஸ்லீம் கலகங்களும், அடிதடிகளும் கொலை களும் நடந்து பலர் காயப்பட்டதாகவும்,பலர் உயிர் துறந்ததாகவும் செய்திகள் ஒரு
புறம் வந்த வண்ணமாயிருக்கின்றன.
குடி அரசு - 1929 () 330
இவைகள் தவிர பல இடங்களில் முதலாளிமார்கள் கொடுமையால் தொழிலாளர்கள் வயிற்றுக்கு போதாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை நிறுத்தம் செய்து பட்டினி கிடப்பதாகவும் செய்திகள் மற்றொரு புறம் வந்த வண்ணமாயிருக்கின்றன.மற்றும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்றும் சுதேசி பரதேசி என்றும், வெள்ளையர் கறுப்பர் என்றும் ஜாதிமத தேசபிரிவுகளால் ஒருவரையொருவர் துன்புறுத்துவதும் ஒருவொருக்கொருவர் கலகம், அடிதடி, கொலை, கொள்ளை முதலியவைகள் செய்து கொண்டு இறப்பதும் கஷ்டப்படுவதாயிருப்பதாகவும் சமாசாரங்கள் பறந்த வண்ணமாயிருக் கின்றன. மற்றும் பெண்ணை ஆண் துன்பப்படுத்தினான், ஆணைப் பெண் துன்பப்படுத்தினாள் இதனாலும் மற்ற காரணங்களாலும் உலக வாழ்க்கை. பிடிக்காமல் தற்கொலை புரிந்து கொண்டார்கள் என்கின்ற செய்திகளும் ஒருவனுடைய மனைவி மற்றொருவனை இச்சிக்கிறதனாலும், ஒருவன் மனைவியை மற்றொருவர் அடித்துக் கொண்டு போய்விட்டதாலும் நடைபெறும் கொலைகளின் விவரமும் இடையறாமல் வந்த வண்ண மாயிருக்கின்றன. மற்றும் புருஷன் பிடிக்காமலும், விதவை, புருஷனை வேண்டியும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக உலகறிந்த ரகசியங்கள் எங்கும் பேசிய வண்ணமாக இருக்கின்றது. மற்றும் மழையில்லாக் கொடுமையால் உஷ்ணத் தாக்கு ஏற்பட்டு டில்லியில் 125 பேர்கள் இறந்ததாகவும், மழையில்லாததாலும் வெய்யில் கொடுமையாலும் சில இடங்களில் கிணறுகளில் குடிக்கக்கூட தண்ணீரில்லாமல் வரண்டு போனதாகவும், வேளாண்மை விளையாமல் கருகிப் போனதாகவும், கஷ்டப்படுவதாயும், மற்றொரு இடத்தில் அதிக மழை பெய்து வேளாண்மை நாசமாய் போய்விட்ட தாகவும், குளிரினால் நடுங்குவதாகவும், செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. இதைப்போல் ஒரு இடத்தில் கால்நடைகளுக்குத் தீவனமில்லாமல் கஷ்டப்பட்டு பட்டினியால் இறப்பதாகவும், மற்றொரு இடத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தாராளமாக இருந்தும் கால்நடைகள் தொத்து வியாதியால் தினம் நூற்றுக்கணக்காய் மடிவதாகவும் மற்றும் “கடவுள்” கோவில்களில் நெருப்புப் பற்றிக் கொண்டதாகவும், “அம்மன்” நகைகள் திருட்டுப்போய் விட்டதாகவும் சமாச்சாரங்கள் வருகின்றன.
இவை ஒருபுறமிருக்க, ஒரு நாட்டில் நூற்றுக்கு 90 பேர் படித்திருக் கின்றார்களென்றும், ஒரு நாட்டில் நூற்றுக்கு 5 பேர் படித்திருக்கின்றார். களென்றும் நமக்குச் சந்தேகமறத் தெரிய வருகின்றது.
ஒருநாட்டில் பெரும்பான்மையான மக்கள் தினம் நான்கு வேளை சமைத்துச் சாப்பிடுகின்றார்களென்பதையும், ஒரு நாட்டில் தினம் ஒரு வேளைக்குக் கூட மார்க்கமில்லாமல் கஷ்டப்படுகின்றார்களென்பதையும் பார்க்கின்றோம்.
ஒரு நாட்டில் “ஜீவஹிம்சை” என்பது ஜீவன்களுக்குச் சிறிது கூட சரீரப் பிரயாசையோ மனநோயோ இருக்கக் கூடாதென்பதும், மற்றொரு நாட்டில்
331 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
ஜீவகாருண்யம் என்பது உயிருடன் ஜீவனைக் கட்டிப்போட்டு வாயையும், கால்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு, பலமணி நேரம் விரைகளைப் பிடித்து நசுக்கிக் கொல்வதாக இருப்பதையும் பார்க்கின்றோம். அதையே வேதக்கட்டளை கடவுள் பிரீதி என்று சொல்லுவதையும் காதால் கேட்கின்
றோம்.
ஒருநாட்டில் மத ஆச்சாரியார்கள் பாதிரிகள்! என்பவர்கள் பிரபுக்களி டமும், படித்தவர்களிடமும் பணம் வாங்கி ஏழைகளுக்குச் சாப்பாடு, தொழில்,
படிப்பு முதலிய உதவிகளுக்குச் செலவு செய்வதும், மற்றொரு நாட்டில் மத ஆச்சாரியார்கள் (சங்கராச்சாரி) ஏழைகளின் பணத்தை மதத்தின் பேரால் கொள்ளையடித்து, தம் இனத்தார், உயர்ந்த ஜாதியார், படித்தவர்கள். என்பவர்களுக்கே உபயோகப்படுத்துவதும் நேரிலேயே பார்க்கின்றோம்.
ஒருபக்கம் மக்கள் கஞ்சிக்கில்லாமல் வாடிவதங்குவதும், மற்றொரு பக்கம் சீரங்கம் ரங்கநாதசாமிக்கு மற்றும் ஒரு நெய்க்கிணறு வெட்டுவதும் மற்றும் ஒரு வேளை அதிகப் பூஜைக்கு நெல் விளையும் கிராமங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிவிடுவதும் பார்க்கின்றோம். எனவே, இவைகளுக்கு யார் பொறுப்பாளி? இந்த விஷயங்கள் கடவுளால் நடக்கின்ற னவா? அல்லது தானாகவே நடக்கின்றதா? இவை கடவுள்களுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா? ஒரு சமயம் தெரிந்தும் அலட்சியமாய் சும்மா இருக்கிறாரா? அல்லது இவைகளை கவனித்து தக்கது செய்ய தமக்கு சக்தியில்லையா? அல்லது இவைகள் கடவுளுக்கு திருவிளையாடலா? அல்லது இச்செய்கை களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லையா? ஒரு சமயம் அந்தந்த
தேசத்தினுடையவும், அந்தந்த தேச மக்களுடையவும் அல்லது நெருப்பு, நீர், காற்று, மண்ணினுடையவும் (இயற்கை) கர்மபலனா? கடவுள் கவலைக் காரர்களே! இவற்றிற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள். இதில்தான் “எல்லாம் கடவுள் செயல்” என்றும் “அவனன்றி ஓரணுவுமசையாது” என்றும் திண்ணை ஞானம் பேசி ஏழைகளை வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம் 'பேறிகளுடையவும், ஏமாற்றுக்காரர்களுடையவும் யோக்கியதை வெளியாகும்.
ஒரு மனிதன், தனக்கு மற்றவர்களைவிட அதிகமான பகுத்தறிவு இருப்பதாய் ஒப்புக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பாளி என்கின்ற உணர்ச்சியுடன் தன் அறிவின்படியே காரியங்களைச் செய்ய ஒவ்வொரு வினாடியும் முயன்று கொண்டிருக்கும்போதே அதற்கு நேர் மாறாய் வாயால் “எல்லாம் கடவுள் செயல்”, “அவனன்றி ஓரணுவும் அசை யாது என்று சொல்லிக் கொண்டு திரிவானானால் மற்றபடி அறிவற்ற நிலை யிலிருக்கும் பாமர மக்களுக்கு எப்படி பொறுப்பும் தன் முயற்சியும் உண்டா
கும். எனவே இனி மேலாவது நமது நாட்டில் “கடவுள்” கவலை கொண்ட பெரியோர்கள் உலகத்தை இனியும் அதிகமான கடவுள்களை உற்பத்தி செய்து அவைகளைக் கொண்டு நிரப்பாமலும் இன்னும் “கடவுளுக்கு புதுப்புது குணங்களை கற்பிக்காமலும், இன்னும் புதுப்புது மதங்களை உற்பத்தி
குடி அரசு - 1929 () 332
செய்யாமலும், இப்போது உள்ளதாகக் கருதும் மதங்களுக்கும் புதுப்புதுக் கொள்கைகளையும் தத்துவார்த்தங்களையும் வியாக்கியானங்களையும் செய்யாமல் இருக்கும்படி தெரிவித்துக் கொள்ளு கின்றோம். ஏனெனில், இன்றைய தினமே இந்தியாவில் இந்துக்கள் ஜனத் தொகை 22 கோடி என்றால், இவர்களுக்குள்ள கடவுள் தொகை 33 கோடி தேவர்களாகும். இந்தக் கணக்குப்படி பார்த்தால், குழந்தை குஞ்சு முதல், கிழடு கிண்டுவரை உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் சராசரி உருப்படி ஒன்றுக்கு) ஒன்றரைக் கடவுள் வீதமாகின்றது. மேலும், நாட்டின் அழகான பாகங்களை யெல்லாம் கடவுள்கள் தங்கள் குடியிருப்புக்கென்று கைப்பற்றி அவைகளை அசிங்கமும் அக்கிரமங்கள் நடப்பதுமான இடங்களாக்கிவிட்டன. மற்றும் அக்கடவுள்கள். வெளிப்போக்குவரத்தானது தெருக்களில் வண்டிகளும், மக்களும், தாராளமாய் நடமாடுவதற்குக்கூட இடமில்லாமல் நெருக்கடி உண்டாக்கித் தடைப்படுத்தப்பட்டு வருகின்றது. அக்கடவுள்களின் உற்சவங்கள் சுகாதாரங்
கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு தொத்து நோய்கள் பிறப்பிக்கும் பருவமாகின்றது அக்கடவுள்களின் தீர்த்த ஸ்தல யாத்திரைகளெல்லாம் வழிப்பறிக் கொள்ளைகள் நடக்கும் பாதை பிரயாணமாயிருக்கிறது. இவ்வளவும் போதாமல் இனியும் மக்களுக்கும் நாட்டிற்கும் என்ன பலன் உண்டாக வேண்டும் என்று இந்த “கடவுள் கவலை”க்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்களென்பது நமக்கு விளங்கவில்லை.மற்றும் கடவுளைப் பரப்புகின்றவர்கள் எங்கும் கடவுள் இருக்கின்றாரென்று சொல்லுவதும், ஆனால் அதை வணங்க வேண்டுமானால் குறிப்பிட்ட இடங்களில்தான் போய் வணங்க வேண்டுமென்பதும், எல்லா வஸ்துக்களிலும் கடவுள் இருக்கிறார் என்று பிரசங்கிப்பதும், பிறகு சிலை கல் அல்லது உலோகம் ஆகியவைகளில்தான் இருக்கின்றார் என்பதும், பிரசங்கிக்கும் போது கடவுள் எல்லா ரூபமாயும் இருக்கின்றாரென்பதும் காரியத்தில் வரும்போது அவர். மனித ரூபமாய்தான் இருக்கின்றார் என்பதும் பிரசங்கிக்கும் போது எல்லா மக்களும் கடவுள் பிறப்பு என்றும், எல்லா மக்களும் சகோதரர்கள் என்றும் சொல்லுவதும் காரியத்தில் வரும்போது எட்டிநில், தொடாதே, நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்பதும், இப்படி ஆயிரக் கணக்கான விஷயங்களில் முன்னுக்குப்பின் முரணாகவும் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருக்கும் படியான மதத்தையும் கடவுள்களையும் பரப்புவது யோக்கியதையா என்ப
தாகக் கடவுள் கவலைக்காரர்களைக் கேட்கின்றோம்.அன்றியும், பொது ஜனங் களையும் இம்மாதிரி பொய்யும் பித்தலாட்டமுமான கடவுள்களையும் மதங் களையும் இனியும் நம்பாமலிருக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 23.06.1929.
333 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சம்மத வயது முமுஷ
பெண்களின் சம்மத வயதை நிர்ணயிக்க நியமிக்கப்பட்ட கமிட்டி யாரின் விசாரணை முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தக் கமிட்டி பெண்களுக்கு 14 - வயதுக்கு முன் கலியாணம் செய்யக்கூடாதென்றும் கலி யாணமான பெண்கள் விஷயத்தில் சம்மத வயது 15 - ஆகவும், கல்யாண மாகாத பெண்களின் சம்மத வயது 18 - ஆகவும் இருக்க வேண்டுமென்றும் சிபார்சு செய்திருக்கிறது. இந்தக் கமிட்டியை நியமனம் செய்தபோதும் இது ஆங்காங்கு விசாரணை நடத்தியபோதும் பார்ப்பனர்கள் எல்லோரும் சனாதன தருமத்துக்கு ஆபத்து ஸ்மிருதிகளுக்கு ஆபத்து என்று வெறுங் கூச்சல் கிளப்பி தங்களால் என்ன என்ன இடையூறுகள் செய்ய முடியுமோ அவ்வளவையும் தங்கள் முழுச் செல்வாக்கையும் உபயோகித்துச் செய்து பார்த்தனர். பெண்களின் விடுதலைக்கும் முற்போக்குக்கும் முக்கிய தடை யாக இருந்த இந்த விஷயத்தில் வைதீகப்பார்ப்பனர்களின் எதிர்ப்புக்களையும் கூச்சல்களையும் லட்சியம் செய்யாமல் இந்தமட்டில் ஒரு வித நல்ல முடிவுக்
குக் கொண்டு வந்த பெருமை சிறப்பாக திரு. ஏ.ராமசாமி முதலியாருக்கே.
உரியதாகும். இனிமேல் சனாதன தருமங்களும் பராசர மனுஸ்மிருதிகளும் என்ன தான் செய்யப்போகின்றனவோ தெரியவில்லை.
குடி அரசு - செய்தி விமர்சனம் - 23.06.1929
குடி அரசு - 1929 () 334
புரசைவாக்கம் அருணகிரி சயை
தர்மத்தின் உண்மை விளக்கம்
நாடும் சமூகமும் நண்மை வறும் வழிகன்
நான் பேசுவதற்கு முன்னே அக்கிராசனர் என்னைக் குறித்து வெகு வாகப் புகழ்ந்து கூறிவிட்டார்கள்; அதனால் பேச வேண்டியதையும் மறந்துவிட்டேன். அவர் என்னைக் குறித்து அவ்வளவு பெருமையாக எடுத்து சொன்னதை நான் ஒப்புக்கொள்ள முடியாதாயினும், அக்கிராசன ருக்கு என்னிடத்திலுள்ள அதிக அன்பினால் பலவாறு புகழ்ந்து பேசியிருக் கின்றார். நான் இன்று பேசக்கூடியது உங்கள் மனதுக்கு வருத்தத்தைக் கொடுக்கக் கூடுமெனக்கருதித்தான் அக்கிராசனர் முன் எச்சரிக்கையாகச் சிலவார்த்தைகள் கூறினார். நான் யாருக்காகப் பேச வந்தேனோ அவர்களை வருத்தமுறச் செய்வதில் என்ன பயன்? முரட்டுத் தனமாகப் பிறர் உணர்ச்சி யைப் புண்படுத்தக் கூடியவாறு பேசுவதில் யாதொரு பயனும் இல்லை என்பதை அறிவேன். ஆயினும் எனக்குச் சரி எனத் தோன்றுவதை நான் வெளியிட்டுப் பேசுவதில் பின்வாங்குவதில்லை யாதலால்தான் அக்கிராசனர். அதை யாரும் குற்றமாகக் கொள்ளக்கூடாதெனக் குறிப்பிட்டுப் பேசினார். எனக்கு முன் பேசிய நண்பர் குருசாமி தர்மத்தைக் குறித்தும் அருணகிரி நாதரைப் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னார். அவர் வாலிபராதலால் தமக்கு உண்மையாகப்பட்டதை எடுத்துச் சொன்னார். நான் வாலிபர்களின் உண்மைக் கருத்தை வெளியிடுவதைப் பாராட்டுபவன்தான் அதற்கு முலாம் பூசி மறைப்பது நாட்டுக்குத் திமையைதான் விளைக்கும் பரோபகார சிந்தையோடு கஷ்டப்படுபவர்களுக்கு உதவி புரிவோரிடத்துள்ள அசூசையி னால் அவ்வாறு பேசவில்லை. நமக்கு தர்மம் என்பது இதுதான் என்று வரையறுத்துக் கற்பிக்கப்பட்டிருப்பதனால்தான், கண் மூடித்தனமான செய்கைகள் இன்னும் செழித்து வருவதற்கிடமாயிருக்கின்றது. இதன் சம்மந்தமாக நமது மதமும் கோட்பாடுகளும் தர்மமும் ஒரு எல்லை ஏற்படுத்தியிருப்பதனால் அவ்வளவுக்குச் செய்யத்தான் யாருக்கும் மனம் வருமே தவிர அதைத் தாண்டிப்போக யாருக்கும் மனம் வராது. ஒரு அடி யாருக்கு அன்னமளித்தால் இவ்வளவு புண்ணியம் என்று கணக்கு வாரியாக அதன் பலனாய் இவ்வளவு காலத்திற்கு மோட்சத்திலிருக்கலாமென்று வகுத்தெழுதியிருக்கிறார்கள். இதைக் கேட்ட பிறகு, இத்தகைய தர்மம் சம்பந்தமான எண்ணம் வருகிறதே தவிர வேறல்ல. இம்மாதிரியான
335 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
காரியங்களினால் உண்மையான பரோபகாரமான காரியங்களுக்குக் குந்தகமேற்படுகின்றதென்பதை நீங்கள் நன்றாய்க் கவனிக்க வேண்டும். இவற்றால்தான் நாடு முன்னுக்கு வருங்காரியங்கள் தடைப்படுகின்றன. எந்த தேசத்திலும் தர்மமில்லாமலிருக்கவில்லை. வெள்ளைக்காரன் தேசத்தின் தர்மம் நம்நாட்டுத் தர்மத்தைவிட பன்மடங்கு உத்தமமாயும் தேசத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையான நன்மையளிப்பதாயுமிருக்கின்றது. வெள்ளைக் காரன் நாட்டு தர்மம் கிணறு நிரம்பி வழிவது போல அவன் ராஜ்யம் நிரம்பி
நம் நாட்டிலும் வழிந்தோடுகின்றது. அத்தகைய தர்மம் நிறைந்த நாட்டில் என்னவழக்கமென்றால் ஒருவன் தெருவில் பிச்சைக்கு வந்தால் உடனே போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போவான். அங்கு பிச்சையிடுவது சோம்பேறிகளை வளர்க்கும் முறை என்பதை நன்கறிந்து கொண்டார்கள். வெள்ளைக்காரன் நாட்டில் படிக்காத வன் என்றால் அவன் வெட்கித் தலைகுனிந்து விடுவான். நம்நாட்டிலோ
தர்மம் என்று வந்தால் நமக்கென்ன நம்மாலான சாப்பாடு போட்டு விடுவோம்; பிறகு அவன் தலைவிதி போலாகிறது. சரஸ்வதி நாக்கிலிருந்தால் எப்படியும் படித்துவிடுவான் என்ற தர்மந்தான் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் முன்னேறும்போது நாம் இக்கதிக்காளாக்கியிருக்கக் காரண மென்ன? நமது மதங்கள், தர்மங்கள் என்ற பலத் தத்துவங்கள் தான் நம்மை இந்நிலையில் வைத்திருக்கின்றன. அவர்கள் முன்னேற்றத்திற்குப் பலமும் பீரங்கியும் மட்டும் காரணமல்ல.சென்னை மாகாணத்தில் உயர்ந்த குஷ்டரோக, கஷியரோக, மருத்துவ ஆஸ்பத்திரிகளும், உயர்ந்த கலாசாலைகளும், கல்லூரி. களும் அவர்களுடையதாகத்தானிருக்கக் காண்கின்றோம். தப்பான வழி களில் பிள்ளைகளைப் பெற்று கள்ளியில் போட்டுவிட்டால் அவற்றை எடுத்து வளர்த்து சம்ரட்சிக்கும் அனாதை ஆசிரமங்களும் அவர்களுடைய தாகத் தானிருக்கின்றது. தெருவிலும் நடக்கக்கூடாது, அருகிலும் வரக்கூடா தென்று மிருகங்களிலும் கேவலமாய் நம்மால் நடத்தப்படுபவர்களையும் அவர்கள் சேர்த்துக் கல்வி அளித்து சமத்துவம் பாராட்டி மாக்களெனக் கருதப்பட்டவர்களையும் அவர்கள் மக்களாக்கி வருவதைக் காண்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் எளிதில் மறக்க முடியாது; அல்லது மறைக்கவும் முடியாது. அவர்கள் நொண்டி, முடம், குருடர்களைக் கொன்றுவிடு கிறார்களா? அத் தகையவர்களுக்கும் தம் சுய உதவியினால் எவ்வளவுக்கு ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு உதவிபுரிந்து வழிகாட்டி வருகின்றார்கள். இதனால் வெள்ளைக்காரன் தான் புத்திசாலியா? நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? என்ற கேள்வியும் கிளம்பக்
கூடும். இதற்காக நாம் நமது முன்னோர்கள் பேரிலும் சுலபமாகக் குற்றம் சொல்லிவிட முடியாது.எந்தக் கொள்கையும் நீதியும், தர்மமும் காலத்திற்கும்
இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறுதானிருக்கும். ராமேஸ்வரத்தில் ஒரு செட்டியார் தர்மம் செய்வதற்காகச் சாணியும், பாலும் சுக்கு மட்டும் கொடுக்கிறார் என்றால் அதுபோல நாமும் இங்குச் சாணியை குவியலாய்க்
குடி அரசு - 1929 () 336
கொட்டிக் கொண்டு வாரிக் கொடுப்பது தகுதியாகுமா? அந்தவிடத்திற்கு அவசியத்திற்கேற்றவாறு அது முக்கிய தர்மமாகவிருக்கலாம்.அதற்காக நாம் அந்த செட்டியார் மீது குறை சொல்ல முடியுமா? முந்நூறு நானூறு வருடங்களுக்கு முந்திய காலத்துத் தர்மமென்ற காரியங்கள் இப்போது செய்ய முடியாதவைகளாகத் தானிருக்கும்.அப்போது அவை அவசியமாகச் செய்யவேண்டியவைகளாகத் தானிருந்திருக்கும். அக்காலத்தில் தற்போ திருப்பது போன்று துரிதமான போக்குவரத்து சாதனங்களோ மற்ற வசதி களோ கிடையாது. அவ்வந்த நாட்டு மக்களுக்கு அவ்வந்த ஊரே சுவர்க்கம். அக்காலத்தில் அவர்கள் கிணற்றுத் தவளைகளைப் போலத்தானிருந்திருக்க
முடியும். அப்பேர்பட்டவர்களுக்கு விளைச்சலும் அபரிமிதமாய் விளைந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் மழை பெய்வதற்கு அவசியமான காடு முதலியவை அடர்ந்திருந்ததால் பருவ மழைகள் தப்புவதில்லை. இதனால் உழுதாலும் உழாமல் விட்டாலும் அறுவடைக்குக் குறைவில்லை. அப்போது அதிகமாக விளைந்ததாலும் தற்போதைப் போல விளைந்த தானிய முழுதும் வெளி ஊருக்குக் கொண்டு போகப் படாமல் பெரும் குழிகள் வெட்டி அவற்றில் புதைத்து வைப்பதும் வழக்கமாயிருந்து வந்தது.
அன்றியும், அக்காலத்தில் பிச்சைக்காரர்களும் மிக அரிதென்றே சொல்லலாம். எவ்வளவு விளைந்தாலும் வாரி வெளிநாட்டுக்கு அனுப்புவது என்ற முறை அக்காலத்தில் அதற்கு சாதனமும் கிடையாது. அதனால்தான் இவ்வளவு பேருக்கு அன்னமிட்டால் இவ்வளவு புண்ணியமென்றும் எழுதிவைக்க இடமிருந்தது, அதனால் நம் நாட்டில் காலக்கிரமத்தில் பிச்சை எடுக்கும் சாதிகளென்றே பல ஜாதிகளும் தோன்றிவிட்டன. ஏதோ சாம்பலையும் மண்ணையும் பூசிக்கொண்டு வந்தாலும் சாமி என்று விழுந்து கும்பிடும் முட்டாள்கள் அதிகமிருக்கின்றார்கள் என்பதையறிந்து தான் பிச்சைக்காரர்களும் நாளுக்கு நாள் விருத்தியாகி கொண்டு வருகின்றனர். இத்தனைக் கோயில்களிருக்கையில் இன்னும் புதிதாகக் கோயில் கட்டுவது அவசியமாவென்று கேட்டால் “பாவி தடுக்கிறான் அவன் சொல்லைக் கேட்ட காதை லோஷன் போட்டுக் கழுவ வேண்டு” மென்கிறார்கள். (நகைப்பும், கர கோஷமும்! அக்காலத்தில் செல்வமிகுதியினால் செலவிடுவதற்கு வழியின்றி இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். தங்கள் விளைபொருள். களுக்கு செலவு வேண்டுமென்ற முறையில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு மேன்மேலும் தர்மம் என்னும் பெயரால் பலவாறு செலவிட்டு வந்தார்கள். அக்காலத்தில் எத்தனைக் கடவுளிருந்தாலும் பூசை போட்டு எவ்வளவு பேர் வந்தாலும் சோறுபோடும் செல்வமும் செழிப்பு மிருந்தது. அதனால்தான் இவ்வளவு கடவுள்களும் அடியார்களும் ஏற்பட இடமிருந்தது. ஆனால் இப்போதைய கொள்கையும் மதக்கோட்பாடுகளும் காலதேசவர்த்தமானத்திற்கு ஏற்றபடியும் மனிதன் அறிவுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறுமிருக்கவேண்டும். மகமதியர்களும், கிறிஸ்துவர்களும், இந்துக்
337 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
களும் எல்லா மதஸ்தர்களும் தான் பாவம் செய்யக்கூடாதென்கிறார்கள். ஆனால் பாவம், சுத்தம் முதலான தத்துவங்களுக்கு அவ்வந்த மதத்தினருக்
கும் அர்த்தம் வேறாகத்தானிருக்கின்றது. பாலைவனத்தில் தோன்றிய இஸ்லாம் மதத்தில் சுத்தமென்றால் மூன்று வேளையும் குளிப்பதுதான் சுத்தமென்று எழுதி வைக்க முடியாது. அங்கு மணல் உடம்பில் தேய்த்துக் கொண்டாலும் குளித்து சுத்தமாவதற்கு ஒப்பாகத்தான் கருதப்படக்கூடும். அதனால் அந்த சுத்தம் தப்பு என்று சொல்லிவிடமுடியாது. நமக்குள். வெளிக்குப் போனால் நான்கு செம்பு தண்ணீர் விட்டு கழுவுபவர்களும் போதாக்குறைக்கு தலைமுழுகுபவர்களுமிருக்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் அதனைச் சுத்தமெனக் கருதப்படுகிறது. ஆனால் இவர்களைவிட பன்மடங்கு கடுமையான சுகாதாரமுடைய வெள்ளைக்காரன் காகிதத்தில் பாதியும் கால்சராயில் பாதியுமாக துடைத்துவிட்டு போகிறான். அவன் நாட்டில் அவ்வளவுதான் வசதி. இங்கு குளிக்காவிட்டால் பாவி என்கிறார்கள். அங்கு குளித்தாயாவென்று கேட்பதே மரியாதைக் குறைவாகக் கருதப்படுகின்றது. இங்கு சிற்சிலர் வியர்வையினால் குளிக்க வேண்டிய அவசியமுண்டு.அங்கு குளிரினால் அத்தகைய அவசியமில்லை.அவ்வாறே நமக்கு பாவம் என்பது எறும்பை மிதித்துவிட்டாலும் பாவம்.அவன் சங்கதி அதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. இங்கு நாம் பசுவை அடித்தாலும் மகா பாவமென்கிறோம். அங்கு அவன் அதைக் கொன்று தின்னாவிட்டால் மார்க்கமில்லை. ஒருவன் சிற்றப்பன் மகளைக் கட்டலாமென்கிறான். மற்றவன் அதைப் பாவம். என்கிறான். இப்படி செளகரியத்திற்கும் பழக்கத்திற்கும் ஏற்றவாறு தான் கொள்கைகளும் கோட்பாடுகளுமிருக்கக் கூடும். ஆதலால் அனைத்தும் காலதேசவர்த்தமானத்திற்கேற்றவாறிருக்க வேண்டுமென்பது நன்கு விளங்கும், அன்றியும் அவ்வந்தக்காலத்தில் திறமைக்கேற்றவாறு ஏமாற்ற, ஏதேதோ எழுதி வைத்திருக்கலாம். அவற்றைக் குறித்து இப்போது கவலையில்லை.ஆனால் நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டியது இன்றைய நிலைமையில் எப்படியிருக்க வேண்டுமென்பதேயாகும். அதிலிருந்து தப்ப வழியுண்டாவென்றும் பார்க்கவேண்டும். நாம் நமது செல்வம், அறிவு, ஒழுக்கம் முதலியவை பிரயோசனமான வழியில் செலவிடப்படவேண்டு மென்பதனால் அது தர்மத்திற்கு விரோதமானதென்று சொல்ல முடியாது. இப்போது நாமிருக்கும் நிலையில் தர்மத்தின் பெயரால் சத்திரமும் சாவடி களும் கட்டிக் கொண்டு போவோமானால் நம் சமூகத்தின் கதி என்னாகும்? நமது நாட்டின் நிலைக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்றவாறு தான் எந்த தர்மமும் ஏற்பாடும் செய்யப்பட வேண்டும். இனி நமக்குப் புதிதாகச் சாமிகள் வேண்டியதில்லை. இப்போது இந்துக்கள் கணக்கின்படி 22 கோடி இந்துக் களிருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடவுள்களோ புராணங் களின் கணக்குப்படி 33 கோடி கடவுள்களாயிருக்கின்றன. இதனை பங்கிட்டால் ஒரு ஆசாமிக்கு ஒன்றரைக் கடவுள் வீதம் மக்களைவிட கடவுள்தான் அதிகப்படுகிறது. (நகைப்பும் கரகோஷமும்) இவ்வளவு
குடி அரசு - 1929 () 338
கடவுள்களை நாம் காப்பாற்றினால் போதும்.நாட்டின் பெருமையை வளர்க்க மக்கள் கஷ்டத்தைப் போக்க அறிவை வளர்க்க கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும் சுகமாயும் வாழ்வதற்குத் தொழிலபிவிருத்தி அவசியம். எந்தத் தேசத்திலும் இவையிரண்டும் இன்றியமையாத அவசியமான அம்சங்கள். நம்நாட்டிலோ நூற்றுக்கு 93 பேர் படிப்பில்லாத தற்குறிகளாயிருக்கிறார்கள். இதைவிட அவமானமான காரியம் ஒரு தேசத்திற்கு வேறு என்ன இருக்கிறது? அதுபோலவே சாப்பாட்டிற்கு கஷ்டப் பட்டு வெளிநாடுக்கு பிழைப்புக்காக துறைமுகங்கள் தோறும் கப்பல்கள் தோறும் ஆயிரக்கணக்கான ஜனங்களை பெண்டு பிள்ளைகளுடன் ஏற்றுமதி செய்யப்படுவதான கோரக் காட்சியைத் துறைமுகங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும். இவ்வாறு பிழைப்பின்றியும் சாப்பாட்டுக்கு வகை யின்றியும் கடல் கடந்து ஜீவிக்கச் செல்லும் ஏழை மக்கள் தொகைகளை இச்சென்னை மாகாணத்தில் மட்டும் மாதமொன்றுக்கு லட்சத்திற்கு அதிகமாகக் கூடும். இவர்கள் குழந்தை குட்டிகளுடனும் வயோதிகர்கள். கர்ப்பிணிகளுடனும் செல்வதான பரிதாபத்தை என்ன வென்றுசொல்வது? இங்குள்ள கஷ்டத்தைவிட அங்குபோய் சாகலாமென்று தான் மனம் முறிந்து போகிறார்கள். இக்கொடுமைகளைக் கவனித்து பரிகாரம் தேடப்படுவதில்லை. இத்தகைய நாட்டில் நடக்கும் விஷயங்களோ விபரிதமாகத்தானிருக்கின்றன. இங்கு சாமிகளுக்கும் சடங்குகளுக்கும் உற்சவ வேடிக்கைகளுக்கும் லட்சக்கணக்காகத்தான் செலவிடப்படுகின்றது. திருப்பதி முதலிய தேவஸ் தானங்களுக்கும் முக்கியமான மடங்களுக்கும் சுமார் 20 லட்சத்திற்கு அதிகமாக மாதாமாதம் வருமானம் கிடைக்கிறது. ஒரு சாமிக்கு ஒரு வேளைச் சாப்பாடாகிய சட்டி அரணைப் பூசைக்கு சுமார் 20 ரூபாய்க்கு அதிகம் செலவிடப்படுகிறது. இவ்வாறிருக்க அச்சாமியின் பிள்ளைகள், சாமியே கதி என்று கருதிக் கொண்டிருக்கும் மக்கள் கஞ்சிக் கலைந்து கொண்டு பிழைக்க வழியில்லாது ஆயிக்கணக்காகக் கப்பலேறி வெளிநாடு சென்று துன்புறுகின் றார்கள். இவையிரண்டினையும் சேர்த்துப் பார்த்தால் அந்த சாமிக்குத்தான். அதிக அவமானமென்பது நன்கு விளங்கும். அத்தகைய சாமிகளுக்கிருக்கும் சொத்துகளுக்கும் ஆடம்பரங்களுக்கும், வாண வேடிக்கைகளுக்கும் சதுர்
கச்சேரிகளுக்கும் ஒரு விதமான அளவில்லை. ராஜாவுக்குகூட அவ்வளவு ஆடம்பரமில்லை. ராஜாவாயினும் கொடுங்கோன்மையினால் அந்த சுகங்களை ஜனங்கள் படும் கஷ்டத்தைப் பாராமல் அனுபவிக்கின்றான் என்று சொல்லலாம். ஆனால் கருணை வள்ளல் என்ற கடவுள் இப்படி வீணாக்கு வதற்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கலாமாவென்று தான் உங்களை கேட்கிறேன். இதனால் நாம் கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. அது என்ன செய்யும். இன்றைக்கு யாராவது தங்கக் காரை போட்டால் பேசாமல் போட்டுக் கொள்ளுகிறது. யாராவது கழற்றிக் கொண்டு போனாலும் கல்லுப்போல் பேசாமல் சும்மா இருக்கிறது. சமீபத்தில் ஆண்டாள் தாலியையும் யாரோ கழற்றிக் கொண்டு போய் விட்டதாயும் இப் பத்திரிகைகளில் வாசித்திருப்
பீர்கள். ஏன் இந்த நாட்டில் நூற்றுக்கு 93 வீதமானவர்கள் தற்குறிகளா
339 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
யிருக்கவேண்டும்? இதற்கும் வறுமைக்கும் காரணமென்ன? ஆனால், நான் உங்களை சந்தோஷப்படுத்த ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். வெள்ளைக்கார நீச்ச அரசாங்கத்தார். நம் பணத்தைக் கொள்ளையிட்டுப் போவதாகச் சிலர் கூச்சலிடுகின்றனர். அந்த நீச்ச அரசாங்கத்தால்தான் சரஸ்வதியும் நம் நாட்டை விட்டு ஓடி விட்டாள் என்கின்றனர் மற்றும் சிலர். ஆனால் நம் நாட்டை விட்டோடிய சரஸ்வதி அந்த நீச்ச நாட்டுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறாள். வெள்ளைக் காரன் கொள்ளையிட்டு போவதையும் சாமிகளுக்கும் சடங்குகளும் செலவிடுவதையும் கணக்குப் பார்த்தால் சாமிகளுக்கு செலவாவது தான் பன்மடங்கு அதிகமாகும். சாமிகள், மதம், சடங்குகள் முதலியவற்றின் பேரால் செலவாகும் பணமும் கஷ்டமும் அசெளகரியங்களும் கணக்கிட முடியாது. பணம் சம்பாதிப்பதில் எத்த னையோ தந்திரமும் சூழ்ச்சியும் செய்யும் அறிவாளிகளும் கூட இவ்வாறு செலவிடுவதில் அந்தத் தந்திரமொன்று மில்லாமல் முட்டாள்களாகத்தான் நடந்துக் கொள்கின்றனர்.(கரகோஷம்) அபிஷேகத்தில் 150 ரூபாய் கொடுத்தா லென்ன?10 ரூபாய் கொடுத்தா லென்ன? வித்தியாசமென்னவென்று யாராவது சிந்திப்பது உண்டா? சென்னை மாகாண சர்க்காருக்கு வரும் கணக்குப்படி சாமிகளுக்கு வருமானம் 2 கோடிக்கு அதிகமாகிறது. இது தவிர கணக்கில் வராத கொள்ளைகளும் போக்குவரத்து தரகர் செலவும் சொல்ல வேண்டிய தில்லை. கணக்குப் பார்த்தால் சாமிகளுக்கு நாம் கொடுப்பது சர்க்கார் வரி வருமானத்தை விட அதிகமாகுமேயன்றி ஒருவிதத்திலும் குறையாது. தர்மமென்றால் சாப்பாடு போடுவது தானாவென்று கேட்டால் பாவம் என்ற தர்ம முறையைத்தான் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய வீணுக்குச் செலவாகும் பணம் மூன்று ஜில்லாவுக்குச் சாப்பாட்டுடன் கல்வி போதிக்கப் போதுமானதாகும். இந்த மாதிரி, சுமார் 25 வருடங்களுக்கு நம் சாமிகள் சிறிது வயிற்றை இழுத்துக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தால் பிறகு நம் நாட்டில் ஒருவன்கூட மருந் துக்கும் தற்குறியாய் இருக்கக் காண முடியாதென்பது திண்ணம். (பெருத்த கரகோஷம்) உள்ளது உள்ளபடி உண்மையைச் சொன்னால் அவன் தப்பு சொன்னான் இவன் நாத்திகப் பேச்சுப் பேசு கின்றான் என்று வீண் கூச்சலிடும் கூட்டத்தாருக்கும் குறைவில்லை. மேடை மீதேறி வெள்ளைக்காரர்களைத் துரத்தி விடூவோமென்று பயமுறுத்தலாம், மிரட்டினாலும் அர்த்தத்தோடல்லவா மிரட்ட வேண்டும்? ஜோபில் எலிக்குஞ்சு இருக்கிறது. எடுத்துவிட்டால் செத்துப் போவாய் என்றால் எவன் பயன்படுவான்? எடுத்துவிடு ஒரு கை பார்ப்போமென்றுதான் சொல்வான். ( நகைப்பு) முற்போக்குக்கான மார்க்கத் துக்கும் அது வெற்றி பெறத்தகுந்த வழிக்கும் நமது அறிவையும் செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது. ஒரு கூட்டத்தார் நம்மைத் தாழ்ந்த நிலையிலேயே அடக்கி வைத்துக் கொண்டிருக்க முயல்வது சரித்திர பூர்வமாயும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. மத விஷயத்திலும் மற்ற விஷயங்களிலும் வெள்ளைக்
காரன் நம்மைவிடக் கேவலமாக விருந்திருப்பதை அவர்கள் தேச சரித்திரமே
குடி அரசு - 1929 () 340
நன்கு விளக்குகிறது. ஆங்கிருந்த புரோகிதமும் சாமிகளும் இப்போது எங்குபோயின? எல்லாம் இங்கு வந்து சேர்ந்துவிட்டன. நகைப்பு) அவர்கள் எல்லாவற்றையும் இங்கு மூட்டை கட்டி செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கு விஞ்ஞான ஆராய்ச்சியிலிறங்கியிருப்பதால் நாளுக்கு நாள் அந்நாட்டார் முன்னேற்றமடைந்து வருகிறார்கள். அவர்கள் சாமிக்கு உற்சவமில்லை, தேர் இல்லை, திருவிழா இல்லை. அப்படியிருந்தும் அந்த சாமி அவர்களைப் பல அற்புதங்கள் கண்டுபிடிக்க வழியாயிருக்க, நம் சாமிகளுக்கு லட்சக் கணக்கான பணம் செலவிட்டு தேர் திருவிழா நடத்தியும்
நாம் இந்தக் கதியிலிருக்கின்றோம். நம் நாட்டுப் பொருள்கள் வெளிநாட்டுக்கு போகின்றது என்று கூச்சலிடுவதனால் பயன் என்ன? கடுகளவாவது நாம் முன்னேறும் முயற்சி செய்வதில்லை. நேற்றுதினம் ரஷ்யாவில் செத்தவர் களைப் பிழைக்க வைக்கும் நூதன முறையை ஒருவர் கண்டுபிடித்ததாகத் “திராவிட"னில் படித்திருப்பீர்கள். இத்தனைக்கும் அது நாத்திகம் நிறைந்த நாடு. நாத்திகருக்கு நரகம் வேண்டுமானால் ருஷியாவிலிருப்பவர்களுக்கே. இருக்குமிடம் சரியாய் போய்விடும். ஆதலால், வேறு எந்த நூத்திகர்களுக்கும், நரகத்தி லிடமிராது. அவ்வளவு நாத்திகமாயிருக்கும் ஊரில் செத்தவனைப் பிழைக்க வைத்து சாமியோடு போட்டி போடுகிறார்கள். வெள்ளைக்காரன் நாட்டில் சாமிக்கு முக்கால் துட்டுக்கட செலவில்லை. மகமதியனும் அப்படித் தான் வெள்ளைக்காரன் கோவிலுக்குப் போனால் துணி அழுக்கை வெளுப்ப
தற்குச் செலவிடுவதைவிட வேறு செலவில்லை. விவசாயத்திலும் அவர்கள் எந்தப் பழத்தை எந்த நிறத்துடன் எந்தச் சுவையில் பயிரிடவேண்டுமென்னும் ஆராய்ச்சி செய்து அதற்குத் திராவகங்கள் ஊற்றிப் பயிரிட்டு வெளிநாடு களுக்கு அனுப்புகிறார்கள். நாம் உழவுகட்ட வேண்டுமானாலும் பார்ப்பன னைக் கூப்பிட்டு நல்ல வேளை பார்த்து அந்தந்த ஏருக்கும் மாட்டுக்கும் பூசை போட்டு உழுவதனால் தான் இக்கதியிலிருக்கிறோம். (கரகோஷம்! நமக்கு இவ்வளவு கோடி சாமிகளும், இவ்வளவு பணச் செலவுமிருந்தும், நாம் கடுகளவாவது முன்னேற முடியாதிருக்கிறோம். பூகோள சாத்திரம் போதிக்கும் ஆசிரியரின் தகப்பனும் கிரகணத்தன்று தர்ப்பையை எடுத்துக் கொண்டு சமுத்திரக்கரைக்கு தர்ப்பனம் செய்துவைக்க வந்து விடுகிறான். இவன் பேச்சைக் கேட்டுக் குளிக்கப்போனால் நம்மை முதலை இழுத்துக் கொண்டு போய்விடுகிறது. கிரகண ஸ்நானத்துக்குப் போவோம் என்று சொல்லும் எம்.ஏ.க்களும், பி.ஏ.க்களும் இன்னுமில்லாமல் போகவில்லை. இக்காலத்திலும் சந்திரகூரியனை ராகுகேதுவென்னும் பாம்புகள் விழுங்கும் கதைகளும், அதன் மூலமான புரட்டுகளும், பணம் பறிக்கும் சூழ்ச்சிகளும் ஒழிந்த பாடில்லை. தேச முன்னேற்றத்திற்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, ஒழுக்கத் துக்கோ முட்டுக்கட்டையாயிருக்கும் எவற்றையும் ஒழிக்க முயல வேண்டும். அம்மாதிரி செய்யும் தேசமும் மதமும் சமூகமும் தான் முன்னுக்கு வரும்.
கிலாபத் மதப்பித்துப் பிடித்திருந்த துருக்கி தற்போது அதனை இருந்தவிடம். தெரியாமல் மூட்டைக் கட்டியனுப்பி விட்டு முன்னேற்றத்துக்கு வழி
341 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
தேடியதனால் தான் தற்போது ஐரோப்பாவில் மற்றைய நாடுகளை போல நல்ல நிலைமையடைந்து வருகிறது.நாம் தர்மம் வேண்டாமென்று சொல்லவில்லை.
நம் மதத்திலுள்ள அர்த்தமற்ற தத்துவங்களை ஒழித்து, பிறருக்கு எவ்விதத்தில் உபகாரமோ, அதை செய்து மக்களுள் சமத்துவமுவம், சகோதரத்துவமும், சத்தியமும், ஜீவகாருண்யமும் பரவச் செய்வதற்கு வழி தேட வேண்டு மென்றுதான் சொல்லுகிறோம். வீண் செலவிடும் பணங்களை உண்மையாகக் கஷ்டப்படுவர்களுக்கு உபகாரம் செய்வதில் செலவிடுங்கள் என்றுதான் சொல்லுகின்றோம். பழைய குருட்டு நம்பிக்கைகளைத் தம் சூழ்ச்சிகளுக்கு ஆதாரமாகக் கொண்டு சுகமாயிருந்த கூட்டத்தார் இப்போது கூலிகளை,
குறும்புப் பிரசாரத்தில் ஏவிவிடுகின்றனர். எந்தக் காலத்திலும் நன்மைக்கும் பரோபகாரத்திற்கும் விரோதமாக நம் நாட்டில் ஒரு கூட்டத்தார் இருந் திருப்பது சரித்திர மூலமாகவும் நன்கறியப்படும். அர்த்தமற்ற கொள்கைகளை ஒழித்து ஒழுக்கமே பிரதானமென்று சீர்திருத்தி மற்றவனுக்கு உபகாரம் செய்வதுதான் மோட்சமென்று புகட்ட வேண்டுவது அவசியம். கஷ்டப் படுபவர்களுக்கு உதவியளித்து திருப்தி செய்வது தான் மேலான புண்ணியம். இவற்றைச் சொன்னால் என்ன நாத்திகம் வந்துவிட்டது? வீணாக மக்களைக் குழப்பி அவன் அறிவை கட்டிப் போட்டு நான் சொல்வதை நம்பு. இல்லா விட்டால் பாவம் என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும்.அப்போது தான் நம் நாடு முன்னேற்றமடையுமேயன்றி, என் பாட்டன், முப்பாட்டன் போனபடி போகிறேன் என்ற மூடக் கொள்கை களால் நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை நான் சொன்னேன். அதில் சரி எனத் தோன்றியதை ஒப்புக் கொண்டு அதன் படி நடக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நான் சொல்வதில் பிசகிருந்தால் என் அறியாமைக்கு பரிதாபப்படும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். (பெருத்த கரகோஷம்)
குறிப்பு : 23.06.1929 ஆம் நாள் அருணகிரி நாதர் சபையின் ஆதரவில் புரசைவாக்கம் அன்னதான சமாஜத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற்
பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 30.06.1929
குடி அரசு - 1929 () 342
எது வேண்டும்?
இந்திய நாடு பார்ப்பனர் என்னும் ஆரியர்களால் சமூகத்துறையில் அடிமைப்படுத்தப்பட்ட காலம் முதல் இன்றைய வரை அரசியலிலும் சமூகத்துறையிலும் நாம் அடிமைப்பட்டிருக்கும் அளவுக்கு அடிமைப்பட்டி ருக்காவிட்டாலும் அதனால் செல்வத்துறையில் மிகுதியும் அடிமைப் பட்டிருக்கின்றோம் என்பதை எவரும் ஒப்புக் கொண்டுதானாகவேண்டும். இதற்குக் காரணம் என்னவென்றால் சமூகத் துறையில் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் அவ்வடிமைத் தன்மையை என்றென் றைக்கும் தங்களுக்கு அனுகூலமாய் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது இந்திய உள்நாட்டு மக்கள் ஆட்சி செய்வதை அழியச் செய்து அவைகளுக்கு பதிலாக வெளிநாடுகளிலிருந்தே ஆட்சிகளைக் கொண்டுவந்து அவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்ட முறையில் நாட்டைப் பழாக்கி வந்திருக்கின்றார்கள். உதாரணமாக இன்றைக்கு ஆயிர வருஷகாலமாக இந்தியாவை ஏகபோகமாய் அரசாட்சி புரிந்த அரசர்கள் வருணாச்சிரமத்
திலும் சாதி வித்தியாசத்திலும் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர்களாயிருந்தும், தங்கள் தங்கள் நாட்டில் உள்ளதையும் ஒழித்து வந்தும் கூட தாங்கள் இந் நாட்டிலிருந்து அடித்துக் கொண்டு போகும் கொள்ளை பார்ப்பனர்களுக்கு லஞ்சம் கொடுப்பதுபோல் வருணாச்சிரமத்தையும் ஜாதி வித்தியாசத்தையும் அழிப்பதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல் பார்ப்பனர்களுக்கு அனு கூலமாகவே இருந்து வந்திருக்கின்றார்கள். அரேபியா, ஆப்கானிஸ்தானம், துருக்கி முதலிய இடங்களில் இருந்து இங்கு வந்த மகமதிய அரசர்களைப் போலவும் ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவ அரசர்களைப் போலவும் பார்ப்பனர்கள் என்கின்ற ஆரியர்களும் இந்த நாட்டிற்கு வந்தவர் களே. ஆனதால் நாட்டின் நலத்தைப் பற்றியும் மக்களின் க்ஷமத்தைப் பற்றியும்
சிறிதும் கவலை இல்லாது தங்கள் ஆதிக்கத்தையும், க்ஷேமத்தையும் மாத்திரம் கவனித்துக் கொண்டு நாட்டை முழுதும் காட்டிக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள். உதாரணமாக மகமதிய அரசாங்கம் பாழ்பட்ட தற்குக் கூட இப்பார்ப்பனர்களே பலவிதத்தில் பொறுப்பாளிகள் என்பதாக இப்போதும் பெரும்பாலான மகமதிய அறிவாளிகளால் சொல்லப்படுவதை
நாம் தினமும் கேள்விப்படுகின்றோம். ஏனெனில் மகமதியர்கள் மத சமூகத்துறையில் மக்கள் எல்லோரையும் ஒன்று படுத்தவும் எல்லோரையும்
343 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
சமமாக பாரபட்சமில்லாமல் கவனித்து நடத்தவும் முயற்சித்ததனாலேயே பார்ப்பனர்கள் மகம்மதிய அரசாங்கத்தை வெள்ளைக்காரர்களுக்குக் காட்டிக் கொடுக்க நேர்ந்தது என்றும் சொல்லுகின்றார்கள். இது எப்படி இருந்தாலும் இப்பொழுதும் பார்ப்பனர்கள் வெள்ளைக்கார அரசாங்கத்திற்கு உதவி செய்வதும் விரோதம் செய்வதும் வெள்ளைக்கார அரசாங்கம் பார்ப்பனர். களின் தனி ஆதிக்கத்திற்கு எவ்வளவு தூரம் உதவி செய்கின்றதோ அதைப் பொறுத்துத்தான் இருக்கின்றதே ஒழிய சிறிதும் நாட்டைப் பொறுத்தல்ல. இதற்கு உதாரணம் வேண்டுமானால், திரு.சாஸ்திரி கொஞ்ச நாளைக்குமுன் பிரிட்டிஷாருக்குக் கொடுத்த எச்சரிக்கையைப் பார்த்தாலே தெரியவரும். அதாவது “பார்ப்பனர்களாகிய நாங்கள் இல்லாவிட்டால் பிரிட்டிஷ் அரசாங்
கம் இந்தியாவில் இவ்வளவு பலமாய் நிலைகொண்டிருக்க முடியுமா” என்பதாக எழுதியிருந்தார். அதே மாதிரி சென்னைச் சட்டசபையில் ஒரு ஆச்சாரியார் “பார்ப்பனர்களைப் பகைத்தால் அவர்கள் மறுபடியும் ஒத்துழை யாமையில் சேர்ந்து கொள்ளுவார்கள்” என்றார். வெள்ளைக்கார அரசாங்க
மும் இந்த சூழ்ச்சியை அறிந்தே சமூக சம்பந்தமான பிரச்சினைகளில் இந்நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டுமென்றால் எல்லாப் பொறுப்பையும் பார்ப்பனர்கள் மீதே போட்டுவிட்டு தாங்கள் ஏதோ நமக்கும் பார்ப்பனர். களுக்கும் மத்தியஸ்தக்காரர்கள் போல் வேஷம் போட்டு ஒவ்வொரு சமயத்திலும் நம்மை ஏமாற்றி விடுகின்றார்கள். இதற்கு ஆகவேண்டிய வெள்ளைக்காரர்கள் பார்ப்பனர்களுக்கு ஆதியிலேயே சமூகமத விஷயத்
தில் தாங்கள் பிரவேசிப்பதில்லை என்று ஒரு வாக்குக் கொடுத்திருப்பதாய் அடிக்கடி பல்லவி பாடுவதற்கும், பார்ப்பனர்களும் அதை அடிக்கடி எடுத்துக் காட்டி நோகாமல் அடிப்பதுபோல் வெள்ளைக்காரர்களை வைவதற்கும் இடம் செய்து வைத்து கொண்டிருக்கின்றார்கள். இந்த பார்ப்பனர்களும் வெள்ளைக்கார அரசாங்கத்தினிடம் அரசாங்கம் “மத சமூக விஷயத்தில் பிரவேசிக்கக்கூடாது”' என்று வாக்கு வாங்கினார்களே ஒழிய, இந்நாட்டு செல்வத்தைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகக்கூடாது என்று ஒரு சிறு வாக்காவது வாங்கினவர்கள் அல்லர். எவ்வளவு கொள்ளை போவதா யிருந்தாலும் பக்கத்தில் இருந்து, அனுப்பிக் கொடுத்து வருகின்றார்கள். இதுவரை பல பார்ப்பனர்களே அரசியல்வாதிகள் என்கின்ற பேர்வைத்துக் கொண்டு வேறு யாரையும் அத்துறையில் பிரவேசிப்பதற்கு இடமில்லாமல் செய்து கொண்டு இருந்ததாலும், பாமர ஜனங்களும் இவர்களையே நம்பி விட்டுவிட்டதாலும், ஒரு சிறிதாவது இந்திய செல்வப் பொருளாதார விஷயத்
தில் அதாவது வெளிநாட்டு வியாபாரம் நாணயபரிவர்த்தனம், வரி விதித்தல் ஆகிய விஷயங்களில் சிறிதும் கவலை கொள்ளாமல் வெள்ளைக்காரர்களை அவர்கள் இஷ்டப்படியெல்லாம் செய்து கொள்ள பொது ஜனங்கள் பேரால் இடங்கொடுத்துவிட்டு தங்கள் ஆதிக்கத்தை - அதாவது தாங்கள் மாத்திரம் படித்தவர்கள் என்கின்றவர்களாகவும் தங்களுக்கே எல்லா உத்தியோகங் களும் கிடைக்கவும் அவ்வுத்தியோகங்களுக்கும் வெள்ளைக்காரர்கள்
குடி அரசு - 1929 () 344
பெறும் சம்பளத்திற்குச் சமமான சம்பளங்கள் மாதம் 1000, 2000, 3000 ரூபாய்கள் வீதம் கிடைக்கவும், அவைகள் அவ்வளவையும் தாங்களே வம்சபாரம்பரியமாக அனுபவிக்கவும் ஏற்பாடு செய்து கொண்டார்கள்; செய்து கொண்டும் வருகின்றார்கள். எனவே இவர்கள் இருவரின் கூட்டுக் கொள்ளையாலும் கஷ்டமும் நஷ்டமும் அடைந்து பட்டினியால் வாடி வதங்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சாகும் மக்கள் மேற்கண்ட வெள்ளைக்காரர்களும் பார்ப்பனர்களுமல்லாத இந்திய மக்களாகவே இருக்
கிறார்கள். வெள்ளைக்காரர்களும் பார்ப்பனருமல்லாத மக்களிலும் ஏதோ
மிகச் சிலரின் ஈன வயிற்றுப்பிழைப்பும் இழிந்த பேராசையும் வெள்ளைக் காரரையும் பார்ப்பனர்களையும் பின்பற்ற ஏற்பட்டுவிடுவதை நாம் மறைக்க வில்லை. ஆனாலும் அது ஆங்கிலத்தில் “எந்த கூட்டத்திலும் கறுப்பு ஆடுகள் உண்டு” என்கின்ற பழமொழிக்கு இலக்காக்கிவிட்டு விட்டு அதற் காக சமூகத்தையே குற்றஞ்சொல்லிவிட முடியாதென்றே சொல்லுவோம்.
சமூகத் துறையில் பார்ப்பனரல்லாத இந்திய மக்களுக்கிருக்கும் இழிவுக்குப் பார்ப்பனர்கள் எவ்வளவு பொறுப்பாளிகளோ அதைவிட வெள்ளைக்கார ஆட்சி பொருளாதாரத் துறையிலிருக்கும் தரித்திரத்திற்குச் சிறிதும் குறைந்ததல்லவென்றே சொல்ல வேண்டும். பார்ப்பனன் தன் சமூக சுயநலத்திற்குத் தானாகவே செய்கின்றான் என்று சொல்லலாம். ஆனால், வெள்ளைக்கார ஆட்சியோ தன்தேச சுயநலத்திற்குப் பார்ப்பனனுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணத்தில் ஒரு பங்கும், ஆதிக்கத்திற்கு இடமும் கொடுப்
பதில் பார்ப்பனனின் சூழ்ச்சிக்கும் கொடுமைக்கும் இளைத்ததல்லவென்று சொல்ல வேண்டும். இந்த உண்மையையறிந்து நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வெள்ளைக்காரர்களை நிர்ப்பந்தப்படுத்தி நமது சமூக அடிமைத் தனத்தை விலக்கிக் கொள்ள முயற்சி செய்யும்போது அவன் நம்மீது பார்ப்பனர்களை ஸ்கேபடுத்திவிட்டு கவலையற்று இருந்துவிடுகின்றான். அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வெள்ளைக்காரன் மீது இருக்கும் ஆத்திரத்தைப் பார்ப்பான் மீது விட ஆரம்பித்தால் பார்ப்பனன் நம்மவர்களிலேயே சிலரை: நம்மீது உசுப்படுத்தி விட்டு விட்டு வெள்ளைக்காரனிடம் போய்க் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருவருமாய்ச்சேர்ந்து நம்மைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். உண்மையை ஒளிக்காமல் பேசுவதென்றால் இந்நிலையில் இருவரும் நமக்கு விரோதிகளென்றே சொல்ல வேண்டும், இருவருடைய தொல்லையிலிருந்து நாம் விலகினாலொழிய இந்திய நாடும்
சமூகமும் அடிமைத்தனத்திலிருந்தும் தரித்திரத்தில் இருந்தும் மீளுவது முடியாத காரியமென்றே சொல்லுவோம். ஆனால் இருவருடைய கொடுமை:
களிலிருந்தும் ஏக காலத்தில் விடுபட முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். அது கண்டிப்பாய் முடியாத காரியமேயாகும். பார்ப்பனர்களும் வெள்ளைக்காரர்களும் ஒன்று சேர்ந்து கொண்டார்களேயாகில் நம்மால், ஒன்றுமே செய்ய முடியாதென்றே உறுதி கூறுவோம். ஒரு சமயம் பார்ப்பனர்களிடம் சேர்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுமையிலிருந்து தப்ப
345 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
முயற்சித்தோமானால் முடியவே முடியாது. ஒரு சமயம் முடிவதானாலும் பார்ப்பனன் முன்னிலும் அதிகமான லஞ்சத்தை வாங்கிக் கொண்டு கண்டிப்பாய் நம்மைக் காட்டிக் கொடுத்து முன்னிலும் அதிகமான ஆபத்தில் கொண்டு வந்து வைத்து விடுவான். ஆதலால் இந்தச் சமயத்தில் நாம் செய்ய வேண்டியதென்ன? நமக்கு அவசரமாயும் முக்கியமாயும் வேண்டியது என்ன? என்பதை இப்போது ஜாக்கிரதையுடன் நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு யோசனை செய்து பார்த்தாலும் பார்ப்பனனிடமிருந்து விடுபட வேண்டியது தான் முக்கியமானதாகத் தோன்றும். ஏனெனில், அவன் நமது சுயமரியாதைக்கு அதாவது மனிதத் தன்மைக்கு விரோதமாகவும், மற்ற நாட்டு மக்கள் நம்மைக் காட்டு மிராண்டிகள் என்று நினைக்கும் படியாகவும், மிருகத்திலும் கேவலமாய் அடிமைப்படுத்தியிருப்பதோடு வெள்ளைக்காரக் கொள்ளைக்கும் பெரிதும் காரணமாயிருக்கின்றான். ஆதலால் இவன் வேலையைத் தான் முதலில் பார்க்க வேண்டியது அறிவாளிக்கும் தன்
மதிப்பில் கவலையுள்ளவர்களுக்கும் முதலாவது காரியமாகத்தோன்றும், ஆனால் இது சுலபமான காரியமென்று யாரும் கருதி விடமுடியாது. ஏனெனில், பார்ப்பனன் நம்மை அடிமை கொண்டு நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டிடமானது மதம் என்னும் சிமெண்ட் சுண்ணாம்பினால் கடவுள் கற்களைக் கொண்டு என்றும் அழியாத மாதிரியில் பலமாகக் கட்டி வேதசாஸ்திரபுராணம், மறுபிறவி,
சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூச்சு பூசப்பட்டிருக்கின்றது. சுலபத்தில் நம்மால் தனியாய்நின்று இடிக்க முடியாத தாகவும் இருக்கின்றது. இதில் ஒரு சிறிது பாகம் இடிபடாமல் நின்றாலும் மறுபடியும் அச்சூழ்ச்சிகள், அச்சிறிதுபாகம் மீதி ஆதாரத்தைக் கொண்டே மலையாய் வளர்ந்து விடும். ஆதலால் நாம் என்ன செய்வது? இங்குதான் சற்று ஆழ்ந்து பொறுமையுடன் யோசனை செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். வெளியிலிருந்து வேடிக்கையாய் பேசுபவர்களும் எழுது பவர்களும் அதன் தத்துவத்தையும் பொறுப்பையும் உணராமல் இரண்டு காரியத்தையும் ஏக காலத்தில் செய்ய வேண்டுமென்கிறார்கள். இது அவர்.
களின் கவலையற்ற தன்மையையோ உணர முடியாத தன்மையையோதான்' காட்டுகின்றது என்றே சொல்லியாகவேண்டும். எப்படி எனில், ஒரு மனிதன் ஏககாலத்தில் இரண்டு எதிரிகளுடன் சண்டைபோடுவானேயானால் எதிரிகள்: இருவரும் செய்யவேண்டிய முதல் வேலை என்னவென்று பார்ப்போமானால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அந்த ஒரு மனிதனை எதிர்ப்பதுதான். ஆகையால் இந்த எதிரிகள் ஏற்கனவே ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர். அந்நியோன்ய மாய் இருப்பவர்கள். ஆதலால், எவ்வளவுக்கெவ்வளவு இவர்களுடன் தனித்து எதிர்த்து, வெற்றி பெறச் சந்தர்ப்பம் செய்து கொள்ள முடியுமோ அதைத் தாராளமாகச் செய்ய முன்வரவேண்டும்.அப்படிப் பார்ப் போமானால் பார்ப்பனன் கொடுமையிலிருந்து விடுதலை பெறும் வேலை யைத் தான் நாம் இப்போது செய்ய யோக்கியதை உடையவர்களாகவும்,
குடி அரசு - 1929 () 346
அவசியம் உடையவர் களாகவும் இருக்கின்றோம். இதில் வெள்ளைக்கார ஆட்சியினுடைய உதவி யை எதிர்பார்க்க முடியாது. ஆனால் எவ்வளவு உப யோகித்துக் கொள்ளலாமோ அவ்வளவையும் உபயோகித்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். குறைந்த அளவு உதவி கிடைக்காவிட்டாலும் அவனு டைய விரோதத்தையாவது வலுவில் சம்பாதித்துக் கொள்ளாமலாவதிருக்க. வேண்டும். இந்த மார்க்கத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் பிறகு வெள்ளைக்காரனிடம் நமக்குத் தகராறு செய்து கொள்ள இடமேயிருக்காது. ஏனெனில் வெள்ளைக் காரன் மிக புத்திசாலி, ஆனதால் தானாகவே ராஜிக்கு வருவதுடன் நம்மிஷ் டம் போல் ராஜிநிபந்தனையை அவனே பிரேரேபித்து விடுவான். நாம் இங்கு வந்திருக்கும் வெள்ளைக்கார தனிமனிதன் நிலை மையை உத்தேசித்துப் பேசவில்லை: பொதுவாக வெள்ளைக்கார தேச மக்களின் யோக்கியதையைப் பார்த்துப் பேசுகின்றோம்.
தேசீயமும் அரசியலும் வேண்டுமென்பவர்கள்
இவ்வளவு தூரம் நாம் ஏன் எழுதினோமென்றால். தேசீயவாதிகள், தேசபக்தர்கள் என்கின்றவர்கள் இப்போது எங்கு பார்த்தாலும் பாமர: மக்களிடம் “சமூக சமத்துவமும் வேண்டும், அரசியல் முன்னேற்றமும் வேண்டும் .ஆதலால் இரண்டு காரியமும் ஏக காலத்தில் செய்ய வேண்டும்” என்று சொல்லி மக்களின் ஊக்கத்தையும், லட்சியத்தையும் இரண்டாகப்
பிரித்து அர்த்தமற்றதான தேசீய முன்னேற்றமென்பதற்கே கொண்டு போய் விடுகின்றார்கள். இதிலும் நமக்கு சிறிது வெற்றி ஏற்பட்டிருக்கின்றதென்றே சொல்லலாம். இதற்கு முன் “இத்தேசீயவாதிகளும் தேச பக்தர்களும்” முதலில் அரசியல் சுதந்தரம் கிடைத்துவிட்டால் பிறகு 100க்கு 3 பேர் களாயுள்ள இப்பார்ப்பனர்களிடம் சமூக சுதந்தரம் பெறுவது வெகு சுலப மானதால் சமூக விஷயத்தைப் பற்றி பேசி, அரசியல் சுதந்திரத்தை - சுய ராஜ்யத்தை கெடுத்துவிடக் கூடாதென்றும், அப்படி செய்பவர்கள் தேசத் துரோகிகளென்றும் பேசியும் எழுதியும் வந்தார்கள். ஆனால் இப்போது இரண்டும் ஏககாலத்தில் செய்ய வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள். அன்றியும் ஆப்கானிஸ்தான் அமீர் அமானுல்லாக் கான் நிகழ்ச்சியைப் பார்த்த பின்பும் அந்நாட்டு முல்லாக்களாகிய புரோகிதர். களின் யோக்கியதையைப் பார்த்த பின்பும் சில தேசீயவாதிகள் என்பவர். களுக்கு புத்திவந்திருப்பதாகக் காணப்படுகின்றது. 24.6.1929 ௨ “தமிழ்நாடு” பத்திரிகையில் திரு.வரதராஜுலுவே “சுயராஜ்யம் கிடைத்த பிறகு சீர்த்திருத் தங்கள் செய்து கொள்ளலாம் என்று சில தேசியவாதிகள் நினைப்பது தவறு”
என்றும், இதற்கு “அமானுல்லாவின் கதையே தக்க எடுத்துக்காட்டு” என்றும் எழுதி இருக்கின்றார். ஆனால் எந்த அபிப்பிராயம் அவருக்கு 24 மணி நேரம். கூட நிலைக்காது என்று நாம் எண்ணினதுண்டு.அது போலவே அடுத்த நாள் பழையபடியே “ஜஸ்டிஸ் கட்சி”யார் சமய சமூகவேற்றுமைகளைப் போக்க முற்பட்டிருந்தாலும் அரசியல் விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியினர் மிகவும் பிற்போக்கான கொள்கையுடையவர்களாகயிருக்கின்றார்கள்” என்று எழுதி
347 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
இருக்கின்றார். அதோடு “சமய, சமூக அரசியல் விஷயத்தில் சம உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும் என்றும் தெளிவான நோக்கத்தோடு தேசீயக்கட்சி ஒன்று அமைக்க வேண்டியது அவசியம்” என்றும் எழுதி விட்டு “அதில் காங்கிரசும், ஜஸ்டிஸ் கட்சியாரும் வந்து சேர வேண்டும்” என்றும் கேட்டுக் கொள்வதாக எழுதி இருக்கின்றார். காங்கிரசிடமும் ஜஸ்டிஸ் கட்சியாரிடமும் இல்லாத தேசீயக் கொள்கை இன்னது என்று இவர் தெளிவு படுத்துவாரா? காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் இன்னது என்பதையாவது தெரியப்படுத்துவாரா? எனவே “தொம்பன் 60 அடி கம்பம் ஏறி விளையாடினாலும் கீழிறங்கி வந்து தான் காசு கேட்டாக வேண்டும்” என்பது போல் திரு வரதராஜுலு எவ்வளவு பெரிய “தேசீய வாதம்” பேசினாலும், சமய சமூக சீர்திருத்தத்தைத் தவிர இனிமேல் அவருக்கு வேறு சொல்லுவதற்கோ எழுதுவதற்கோ வார்த்தைகளும், காரியத்தில் செய்வதாயிருந்தால் அதைத் தவிர வேறு காரியமும் கண்டிப்பாய் இல்லை என்றே சொல்லுவோம், பார்ப்பனர்கள் திருப்திக்காக தேசீய பல்லவியோ ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கான கட்சி என்கின்ற பல்லவியோ பாடுவதாயிருந்தாலும் இனி அதை உபாதனப் பார்ப்பனரும் தட்சணைப் பார்ப்பனரும் தான் இவரிடம் வந்து நம்பினதுபோல் வேஷம் காட்டி காசு வாங்கி போவாரே தவிர உண்மையில் நம்புவதற்கு இனி தென்னாட்டில் பார்ப்பனரில்லையென்றே சொல்லுவோம். ஆதலால், இனியாவது இந்த “புண்ணிய கைங்கரியத்தை”விட்டு விட்டு உண்மையைத் தாராளமாக எடுத்து சொல்லி கட்சி சேர்ப்பதோ, அல்லது வேலை செய்வதோ என்கின்ற கொள்கைக்கு வந்து சேரும்படி வேண்டுகின்றோம்.
பொது ஜனங்களுக்கு
நிற்க, பொது ஜனங்களும் இம்மாதிரி தேசீயக்காரர்களையும் சீர் திருத் தக்காரர்களையும் நம்பிக்கொண்டே இருந்தால் கடைசியாக மனம் குழப்பத்
தில் தான் போய் சேருமே ஒழிய உண்மையைக் கண்டுபிடித்து நடந்து கொள்ளவோ ஏதாவது ஒரு தக்க பலனடையவோ ஒருக்காலமும் முடியா மலே போய்விடுமாதலால் சமய சமூக சீர்திருத்தம் என்பது என்ன? தேசீய முன்னேற்றம் - அரசியல் சுதந்திரம் - சுயராஜ்யம் என்பவைகள் என்ன? என்கின்றவைகளைத் தாங்களாகவே கவனித்துப் பார்ப்பதுடன் இதுவரையில் எந்த தலைவர்களாவது இவைகளை விளக்கியோ, தெளிவாயோ சொல்லி யிருக்கின்றார்களாவென்றும், இம்மாதிரி கூச்சல் போட ஆரம்பித்த காலமுதலாய் இதுவரை ஏற்பட்ட பலன் என்னவென்றும் ஒவ் வொருவரும் தங்களுக்குள்ளாகவே யோசனை செய்து பார்க்க வேண்டும். அப்படிக் கில்லாமல் கூடவே கோவிந்தம் போடுவதனால் யாரோ சில சுயநலக் காரர்கள். பிழைக்க முடியுமே தவிர வேறு ஒரு பிரயோஜனமும் கண்டிப்பாய் உண்டா காதென்றே எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.06.1929
குடி அரசு - 1929 () 348
கடவன் திருவினையாடல்
ஒரு காலைக்கு ஒண்பது காலை
மத்திய ஆசியாவில் உள்ள ஆஸ்பெக் என்னும் ஊரில் ஒரு புஸ்தக ஆசிரியர் நாஸ்திக பிரசாரம் செய்ததற்காக அவரைச் சில மதக் குருக்கள்கள் கொன்று விட்டதற்காக நியாயஸ்தலத்தில் ஒன்பது குருக்களுக்கு தூக்கு தண்ட னையும், ஏழு பேர்களுக்குக் காவல் தண்டனையும்,19 பேர்களுக்குத் தேசப் பிரஷ்டத் தண்டனையும், கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே கடவுள் இல்லையென்று சொன்னவனைக் கொன்று கடவுளைக் காப்பாற்றி புண்ணிய கைங்கரியத்திற்காக 9 பேர் கொல்லப்படுவதென்றால் கடவுளுக்கு ஏதாவது
நன்றி விசுவாசம் இருக்கின்றதா? மேலும் கடவுள் கட்டளை இல்லாமலும், கடவுள்சம்மதமில்லாமலும் அந்தப் பாதிரிகள் நாஸ்திகனான கடவுள் விரோதி
யைக் கொன்றிருக்க முடியுமா? அதுபோலவே அவ்வரசாங்கத்தாரும் நீதிபதி
யும் கடவுள் சித்தமில்லாமல் கடவுள் பக்தர்களைக் கொலை செய்ய தீர்ப்புக்
கூறி இருக்க முடியுமா? கடவுள் இல்லை என்பதற்காக ஒருவன் சாவதும், உண்டு என்பதற்காக ஒன்பது பேர் தூக்கிலிடப்படுவதும் என்றால் கடவுள் திருவிளையாடலின் பெருமைதான் என்னே? என்னே?
குடி அரசு - செய்தி விமர்சனம் - 30.06.1929.
349 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
நல்ல வர்க்கம்
- சித்திரபுத்திரன்
நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை:
களுக்கு பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்ல வர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்மந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப் படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாகவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாக வுமே முடிந்து விடுகின்றது. அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசி களிடமுமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை.ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் ஐயோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலை மீதும், தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல்காரனுடனேயோ, அல்லது மோட்டார். டிரைவருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்மந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும் தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து “சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்
றாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணுகின்றான். என்னே! கடவுளின் திருவிளையாடல்” என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்ற தனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்றுநினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.
குடி அரசு - கட்டுரை - 30.06.1929
குடி அரசு - 1929 () 350
அருக்கால் வாருன்
அப்யசிக்கின்றவர்கள்
பயிலுகின்றவர்கள்
ரூபாயில் 320 இல் ஒரு பங்கு மதிப்புள்ள
அம்மன்காசு
காசு (1 ரூபாய் = 16 அணா ;1அணா-20
அம்மன் காசு
அந்நியோன்யம்
ஒற்றுமை, ஒன்றிப்பு ஆதரவற்றோரைப் பாதுகாப்பவன்
அனாதரக்ஷகன் ஆபத்பாந்தவன் ஆப்த ஆஸ்பதம் இகத்தை (இகம் ) இரசவாதம்
இடரில் உதவுவோன்
நம்பகமான
இடம், பற்றுக்கோடு.
இவ்வுலகம் (பரம் - மறு உலகம் )
இரும்பு போன்றவற்றை தங்கமாக
மாற்றுதல் அரிசி பிச்சை
உபதானம்.
உபத்ரவித்தல் உயிர்பித்துக்கொண்டு கடாகஷித்து கண்டனை கனதனவான்கள்
தொல்லை படுத்தல்
உயர்த்திக்கொண்டு
அருள் பாலித்து
கண்டித்தல், எச்சரித்தல்
செல்வந்தர்கள்
கன்மனம்
கல் மனம்
மெச்சத் தகுந்தது தானாக, தன்விருப்பமாக.
சிலாக்கியம்
சுதாவாய்
சுதந்திரம்
சுவதந்திரியம் செரமாக்கள்
செரமர் எனப்படும் மலையாள நாட்டு தீண்டாத வகுப்பினர்
சைத்தன்னியம்
பேரழிவு தடைகள், ஆபத்துகள்
தத்துக்கள். தவக்கப்பட்டிருப்பதால் நாணய பரிவர்த்தனம்
தாமதமாகி இருப்பதால் நாணய மாற்று விகிதம்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 8
351
நிரியாண காலம்
இறப்பு காலம்
நிர்த்தாரணம்
நிலையிடுகை:
பந்துத்துவம் பராதீனப்பட்டதற்கு
உறவு தன் சொத்தை பிறர் வயப்பட விடுதல்
ஒருதலை சார்பு விரிவுரை
பாரபட்சம் பாஷ்யம்
பெருவெள்ளம் பெரு முயற்சி, வருந்தி உழைத்தல்
பிரவாகம்
பிரயாசை
புகிது புகிதாக
புதிது புதிதாக பிள்ளை பெறுதல் பிணை ஆவணம், உடன்படிக்கை காளை வாகனராய், காளை மீதேறி
புத்திராபிவிர்த்தி முச்சலிகை ரிஷிபாரூடராய்
வம்ச பாரம்பரியமாக. விதாயம்
வழிவழியாக, பரம்பரை பரம்பரையாக
ஏற்பாடு, வழிவகை வெளிப்படையாக விளக்கவுரை
வியக்தமாக
வியாக்யானம். ஜீவனோபாயம்
வாழ வழி தேடல் நினைத்தல்
ஸ்மரித்தல் ஸ்லேத்துமம்
சளி மிகல், கோழை அதிகமாக கட்டி
இருத்தல்
குடி அரசு - 1929 ()
352