குழ ௮௬
1928-2
வரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 7
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் - திருவான்மியூர்
சென்னை - 600 041
நூல் விளக்கம்
நூலின் பெயர்.
பொருள்.
மொழி
பதிப்பாளர்.
பதிப்பு
உரிமை
தாள் வகை:
நூல் அளவு
எழுத்து அளவு
பக்கங்கள்.
அட்டை வடிவமைப்பு
கணினியாக்கம்.
விலை
வெளியீடு
குடி அரசு 1928-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தமிழ்
கொளத்தூர் தா.செ.மணி
2008
பதிப்பாளருக்கு
நேச்சுரல் ஷேட்
1/8 டெம்மி
1 புள்ளி
32
ட்ராட்ஸ்கி மருது,
செம்பட்டி இராசா
அசுரன் ஊடகம், திண்டுக்கல்
உர. 200 / -
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் - திருவான்மியூர்
சென்னை - 600 041
“ரிவோல்ட்” பிறந்தது
“நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக்காரர்களின் உழைப்புகள் பயன்
தராததற்குக் காரணமே இவ்விட்டுக்கொடுக்கும் தன்மையும் தாட்சண்யமும்.
ராஜதந்திர செய்கையும்தான்”
“ மூடர்களுக்கு இந்தியா மாத்திரம்தான் சொந்தமா”
“மூடக்கொள்கைகளை வைத்துக்கொண்டு வெள்ளைக்காரர்களையும்
பார்ப்பனர்களையும் அழிக்க நம்மால் முடிந்துவிட்டாலும் மறுபடியும் “வெள்
ளைக்காரர்களும்” “பார்ப்பனர்களும்” வேறு எங்கிருந்தோ அல்லது நமக்
காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத் திக்
கொண்டே வருவார்கள்”
- என்ற பெரியாரின் கருத்தாழமிக்க சிந்தனைகள் இத் தொகுப்பில்
அடங்கியுள்ளன. தென்னிந்திய சீர்திருத்தக்காரர் மகாநாட்டில் பெரியார்
ஆற்றிய உரையும் நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவரான பனகல் அரசர்
மறைவுக்கு பெரியார் எழுதிய இரங்கல் உரையும் இன்றும் வழிகாட்டும்
ஒளிவிளக்குகள்.
காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் எந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவக்
கொள்கைகளுக்காக பெரியார் வெளியேறினாரோ அதே கொள்கை சுப்ப
ராயன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முத்தையா முதலியார்
முயற்சியால் செயல்படத்தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க காலகட்டம்
இது. மறைமலை அடிகளுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இடையே சிறு.
முறுகல் தோன்றி மறைந்தாலும் பெரியார் சைவத்தையும் கேள்விக்குள்ளாக்
கினார். “இந்து மதக் கடவுள்கள்” “புண்ணியஸ்தலங்கள்” என்ற தலைப்பு
களில் கட்டுரைத் தொடர்களும் வெளிவரத் தொடங்கின. “ஆண்களால்
பெண்களுக்கு விடுதலை கிடைக்குமா?
எங்காவது பூனைகளால்
எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?” “உண்மையான பெண் விடுதலைக்கு
பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்தாக வேண்டும்” என்ற புரட்சிகர:
பெரியார் சிந்தனைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அதுவரை
*அக்கிராசனார்” அவர்களே என்று விளித்துப் பேசிய பெரியார் அதைக்
கைவிட்டு சகோதரிகளே, சகோதரர்களே” என்று விளிக்கத் தொடங்கியதும்
இப்போதுதான்.சுயமரியாதைக் கருத்துகளை தமிழகத்தைக் கடந்தும், அரசின்
காதுகளுக்கும் கொண்டு செல்ல விரும்பிய பெரியார் “ரிவோல்ட்” ஆங்கில
வார ஏட்டைரஷ்யப் புரட்சி நாளான நவம்பர்
7 இல் தொடங்கிய ஆண்டும்.
இதுவே.
- பதிப்பாளர்
குடி அரசு - 1928 @)
4
ஐஉஜவததுத
த
உ
வஹொருளடக்கம்
சாமியும், சமயமும், சமயாச்சாரியார்களும்
தாரா சசாங்கம்
தொழிலாளர் துயரமும் சைமன் பஹிஷ்கார வேஷமும்.
திரு. முதலியார் அவர்களின் 'முடங்கல்*
மறுபடியும் பஹிஷ்காரக்கூச்சல்
தொழிலாளர்
இன்னும் ஒரு லோககுரு அவதாரம்
நாடார் மகாநாடு
11
19
30
35
39
42
43
45
தென்னிந்தியரயில்வே தொழிலாளரின் வேலை நிறுத்தம்
49
வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிக்கொண்டது.
சுயமரியாதை பிரசாரங்கள்
பல்லாவரத்துப் பண்டிதர்
ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள்'
ஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை
பார்ப்பனியம்
பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால்
“ஆண்மை” அழிய வேண்டும்
திரு. கண்ணப்பர்.
மதராஸ் கவர்ண்மெண்டு ஆபீசும் பார்ப்பனரும்
தொழிலாளர் வேலை நிறுத்தம்
இந்துமத தத்துவம்
கோவில் பிரவேசம்
சுயமரியாதை போ தணாமுறைப் பாடசாலை
திரு.வேதாசலம்
52
56
57
58
62
65
72
76
78
79
82
84
85
86
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
இந்து கடவுள்கள்
தொழிலாளர் தூது
பார்ப்பனீயம்
இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா?
திரு. வேதாசலம்
வடநாட்டுக் கடவுள்கள்
பஹிஷ்காரப் புரட்டும் சர்வகட்சி மகாநாட்டுப் புரட்டும்
விஸ்வநேசன்.
இந்துகடவுள்கள் சுப்பிரமணியனது பிறப்பு
நாம் செய்த “துரோகம்”
காங்கிரஸ் காரர்களின் துரோகம்
ராமனாதபுரம் ஜில்லாபோர்டு
பழிவாங்கும் குணம்.
“புண்ணியஸ்தலங்கள்”
ஸ்ரீமதிடாக்டர் மார்த்தா வோகளி ஆரியா
திரு சண்முகம் செட்டியாருக்கு டாக்டர் நாயர்
கல்விக் கழகத்தார் அளித்த உபச்சாரம்
சென்னையில் மாபெருங் கூட்டம்
இளம்வயது விவாக விலக்கு மசோதா
புண்ணிய ஸ்தலங்கள்.
சமயம்
பழியோரிடம் பாவமோரிடம்.
சைவ சமயம்
உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்
சர்வ ககஷிமகாநாட்டின் வண்டவாளம்1
சீர்திருத்தமும் இந்து மத ஸ்மிருதியும்
யாகத்தின் ரகசியம்
அந்தோ பரஞ்சோதி சுவாமிகள் பிரிந்தார்
காந்தியும் கடவுளும்
ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் நியமனம்
குடி அரசு - 1928 @)
எ.ராமசாமி முதலியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் 193
பிரசாரப் பள்ளிக்கூடம்.
மந்திரி எஸ். முத்தையா முதலியார் வாழ்க! வாழ்க!
நமது குழந்தைகள் பார்ப்பன உபாத்தியாயர்களால்
படும் கஷ்டம்
திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை
“ரிவோல்ட்”
பாஞ்சால சிங்கம்
அரசியலும் சத்தியமும்
தென்னிந்திய சீர்திருத்தகாரர் மகாநாடு
தஞ்சை ஜில்லாபோர்டாரின் தைரியம்
ரிவோல்ட்'ஆரம்பவிழா
இதற்கு என்ன வால் என்று பெயர்
கோவையில் சர்வ கக்ஷி மகாநாடு
மூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா?
கார்பொரேஷன் தலைவர்
லாலா லஜபதி
சம்மத வயது விசாரணையின் அதிசயம்
திரு. செளந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்து
சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு
சென்னைசட்டசபை
தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு
பிரம்மஞான சங்கமும் பார்ப்பனரல்லாதாரும்
தம்பட்டம்
198
199
203
205
207
210
211
213
216
219
222
223
224
225
226
227
231
233
238
243
263
267
சென்னை தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு
269
சைமன் கமிஷனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்
கிருஷ்ணசாமிப்பிள்ளை மறைந்தார்
நாஸ்திகம்
275
280
281
செங்கல்பட்டில் தமிழ் நாட்டுச் சுயமரியாதை மகாநாடு
286.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
81.
82.
&
R
குடி அரசு - 1928 (2)
மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும்
மனமுடைந்து போகாதீர்
நமது பத்திரிக்கை
காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்
பார்ப்பனரல்லாதார் கவனிக்க வேண்டிய விஷயம்
அருஞ்சொல் பொருள்
289
299
300
306
309
8
1
ரஸ்டன் விக்
1;
%
-‘-U‘-flglfi' பம்புகள்.
ஐ
வியராயத்துக்கு இன்றிகளைவாத
துட
இ
திமிஷல்
1 க்கு 00 கல் dS00 காளன் வாரை:
3
40 அடி உயரத்திற்கு தண்ணீர்
|
ச்ட். ஆவில் இன்ஜின்களும் தவாரில்
இருக்கின்றன.
(னு
மாசி அண்ட் கம்பெணி, L,
இரச ரோ, சவ்பிவ்வ்ள் D’ i,
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 7
குடி அரசு - 1928 (9)
சாமியும், சமயமும், சமயாச்சாரியார்களும்.
தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதாரமென்றும், ரூப
மென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், அதற்காக மதாச்சாரியர்
கள் என்றும் அதற்கு சமயாச்சாரியர்கள் என்றும் கட்டியழுபவர்கள் ஒன்றா
வயிற்றுப்பிழைப்பு புரட்டர்களாயிருக்க வேண்டும். அல்லது பகுத்தறி
வில்லாதவர்களாகவாவது இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயம்
என்பதாக பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றோம்.
அது போலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ,
சொல்லப்படுபவையும் ஒரு “சாமி” என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ
அல்லது
ஒரு உருவமென்றோ
கொள்ளுவதும்
ஞானமற்றவர்
களின் கொள்கை யென்றே சொல்லுவோம்.
உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு
என்பவைகளான மூவகைத் தன்மைகளையும், டி “சாமி”களோ
ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான்
என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப்
பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும்
விசார ஞான மற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
மற்றபடி “மேல் கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட
ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது” என்றும், “அது ஒரு உருவ
மல்ல, ஒரு உருப்படி அல்ல” என்றும், “உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும்
தன்மையையும் அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத் தான் கடவுள்
என்றோ, தெய்வம் என்றோ சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருது
கிறோம்” என்பதாகவும், “தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது தானாக
அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான்” என்றும், “அவ்வியற்கைக்
குத்தான், கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம்”
என்பதாகவும் மற்றும் “இவ்வியற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு
காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டுமே” என்றும் “அந்த
காரணத்திற்கோ சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம்
என்கின்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் சொல்லிக்
11
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக
தகரார் இல்லை என்று சொல்லிக் கொள்ளுகின்றோம்.
ஆனால் அந்தக் கடவுளுக்கு கண், மூக்கு, வாய், கை, கால், தலை,
பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி புருஷன், குழந்தை குட்டி, தாய்
தகப்பன் முதலியவைகளை கற்பித்து, அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும்
என்றும், அதற்கு கோவில்கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை
பூசை செய்ய வேண்டும் என்றும், அச்சாமிகளுக்கு கல்யாணம் முதலிய
வைகள் செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள்
இப்படிச் செய்தார் என்பதான “திருவிளையாடல்கள்” முதலியவைகள்.
செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும்.
அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப்
பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை “வேதமாக” “திருமுறை
யாக” *பிரபந்தமாக” கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாக கொள்ள
வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை *சமயாச்சாரி
யர்”களாக, “ஆழ்வார்”களாக, 'சமயகுரவர்” களாக, “நாயன்மார்”களாக பல
அற்புதங்கள் செய்தவர்களாக கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற
இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்று
வார்கள் என்றும் மற்றும் நாம் செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற எவ்வித
அக்கிரமங்களையும். அயோக்கியத்தனங்களையும், கொடுமைகளையும்
மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூட நம்பிக்கையும்
வயிற்றுப் பிழைப்பு சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது
கவலை. ஏனெனில் இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் மக்களை மக்கள்.
ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும் மற்ற நாட்டார்கள் போல நம்நாட்டு
மக்களுக்கு பகுத்தறிவு விசாலப்பட்டு மற்ற நாட்டார்களைப் போல விஞ்
ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும்.
அன்னிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியாமல் வைத்து பளுவைச்
சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூட
நம்பிக்கையும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும்,
இவை
களினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும் செலவுகளுமேதான் காரணங்
கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கிறோம்.
நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் ஒருவரை ஒருவர்
உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல்
செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம்
நாட்டின் முன்னேற்றத்திற்கு பலன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு
வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் சிறப்பாக மக்களின் ஒழுக்கங்
கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல்
இருப்பதற்கும் மேல்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும் அதன்
சமயமும் சமயச்சாரியர்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறி
குடி அரசு - 1928 @)
12
களுமே முக்கிய காரணம் என்பதைத் தூக்கு மேடையிலிருந்தும் சொல்லத்
தயாராயிருக்கின்றோம்.
நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம்நாட்டில் பூசைக்கும்,
அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும் பஜனை
முதலிய காலக்ஷேபத்திற்கும் இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக
மடங்களுக்கும்,மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய
யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும்,
திருவிளையாடல்களையும், இக்கடவுள்களைப் பற்றிப் பாடின பாட்டுக்
களையும், அச்சடித்து விற்கும் புஸ்தகங்களை வாங்குவதற்கும், மற்றும்
இவைகளுக்காக செலவாகும் பொருள்களிலும், நேரங்களிலும் நம் ஒரு
நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல்
வருஷா வருஷம் பாழாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுவது
மிகையாகாது.
இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல்,
மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான (சையன்ஸ்)
வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ, செலவாக்கப்பட்டு வருமானால் நம்
நாட்டில் மாத்திரம் வாரம் லக்ஷக்ணக்கான மக்களை நாட்டைவிட்டு அன்னிய
நாட்டிற்கு கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்
கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டக்கூடாத - நெருங்கக்கூடாத -
பார்க்கக்கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்
களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடியுமா? 100 - க்கு மூன்று
பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100 க்கு 97 பேர்களை சண்டாளர்,
மிலேச்சர். சூத்திரர், வேசி மக்கள், தாசிமக்கள், அடிமைப்
பிறப்பு என்று
சொல்லிக் கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சிக்
கொண்டும், நம்மையும், நம் நாட்டையும் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்து
நிரந்தர
அடிமைகளாக
இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா?
என்று கேட்கின்றோம். நமக்கு கல்வி இல்லாததற்கு சர்க்கார் மீது குற்றம்
சொல்லுவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும்,
சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப்
பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.
நிற்க, “அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ உப
சாரத்தையோ மாறுபெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன், அதனால்
உனக்கு, என்ன தடை?” என்று யாராவது சொல்ல வருவார்களானால் அதை
யும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்)
பின்பற்றும் படியான குணங்களாகவோ “கடவுள் ”களாகவோ
தான் இருக்க
13
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வேண்டும் என்று சொல்லுகின்றோமே யொழிய வணங்கும்படியான
கடவுளாக இருக்க நியாயமில்லை என்றே சொல்லுவோம்.
இதுபோலவேதான் “மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி
என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய
நடையைப் பற்றிய கொள்கைகளைக் கொண்டது” என்பவர்களிடத்திலும்
நமக்கு அவ்வளவாக தகரார் இல்லை. “அன்பே சிவம், சிவமே அன்பு”
என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை. “அன்பு என்னும்
குணம்தான் சிவம்; அந்த அன்பை கைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு
செலுத்துவதுதான் சைவம்” என்பதானால் நாமும் ஒரு சைவனாகவும் அதன்
மூலம் நாமும் ஒரு சைவன் என்று சொல்லிக் கொள்ளவும் ஆசைப்
படுகின்றோம். அதுபோலவே “ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது,
ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு; அக்
குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம்” என்பதான
விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகரார்
இல்லை என்று சொல்லுவதோடு நாமும் நம்மை ஒரு வைணவன் என்று
சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்
படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்“சைவத் தன்மை”
யும் “வைணவத்தன்மை”யும் ஏற்பட வேண்டும் என்றும் தவங்கிடக்
கின்றோம்.
அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம்
கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகிறவன்தான் சைவன்
என்றும், அப்படி வணங்குகிறவன் இன்னமாதிரியான உடை பாவனை
கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான்
சைவம் என்றும், இன்ன பேருள்ள கடவுள்களைப் பற்றி பாடின எழுதின
ஆசாமிகளையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை: செய்வதும்தான்
சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ பேரோ உள்ள “கடவுள்”
என்பதை வணங்குகிறவர்களையும் வேறு குறி இடுகின்றவர்களையும்
யாதொரு குறியும் இடாதவர்களையும் சைவரல்லாதவர் என்று சொல்லுவது
மான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகரார் இருக்கின்றது என்று
சொல்வதுடன் அக்கொள்கைகளையும் அச்சமயங்களையும் அக்கடவுள்
களையும் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.
அன்றியும் பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்
போது “நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ ஒருகுணமோ
இருப்பதாகச் சொல்லவில்லை” என்றும் “மலைதான் கடவுள், ஆறுதான்
கடவுள், சமுத்திரம் தான் கடவுள், மரம்செடிதான் கடவுள், புஷ்பம்தான்
குடி அரசு
- 1928 (2).
14
கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள்,
அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான்
கடவுள்” என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும். மறுபடியும் “சிவன்தான்
முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும், அவரது பரிவார
தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச் சமயம், அதுதான் முக்தி அளிக்க
வல்லது” என்பதும் அல்லது “விஷ்ணுதான் முழுமுதற் கடவுள், அதுதான்
பரத்துவம் கொண்டது, மற்றவைகள் விஷ்ணுவின் பரிவார தேவதைகள்”
என்பதும், “வைஷ்ணவ சமயம்தான் உண்மைச் சமயம், அதில்தான்
பரத்திற்கு மார்க்கம் உண்டு” என்பதும், “அச்சிவனையோ விஷ்ணுவையோ
முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களையும் அச்சமயங்களையும்
பாடினவர்கள்தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய
பெரியார்கள், சமயாச் சாரியர்கள்'” என்பதுமாக மக்கள் முன் உளறிக் கொட்டி
அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்
கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளியாக்கி
மக்களை குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றுதான்
சொல்லுகின்றோம்.
உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விவரப்
படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும்
தினமும் நடைபெற்று வருகின்றது. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகார
மல்ல என்றுங்கூட சொல்லுவோம்.
எனவே மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும்
படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது
நமது அபிப்பிராயம். ஏனெனில் இந்த விவகாரம் பாமர மக்களிடை
யில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை.
இது
பெரும்பாலும் படித்தவன். ஆராய்ச்சிக்காரன், பண்டிதன், பக்திமான்
என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம் பெற்று
உரம் பெற்றிருக்கின்றது.
கடவுள் அவசியமா?
நிற்க, சர்வ வல்லமையுள்ள என்று சொல்லப்படுவதான ஒரு “கடவுள்”
இருக்கின்றார் என்பதை (அது இன்னது என்று புரியாவிட்டாலும்) விவகார
மில்லாமல் ஒப்புக்்கொள்ளுவதாகவே வைத்துக் கொண்டாலும் மனிதனின்
வாழ்க்கைக்கு அக்கடவுளின் சம்மந்தமோ வழிபாடோ அவசியமா? அல்லது
மனிதனுக்கு சில குணங்களைக் கைக்கொண்டு அதன்படி ஒழுகும் தன்மை
அவசியமா என்பதே நமது கேள்வி. அன்றியும் அப்படிப்பட்ட ஒரு
“கடவுள்” தன்னை மக்கள் வழிபட வேண்டும் என்றாவது, தனக்கு கோவில்
கட்ட வேண்டுமென்றாவது பூசை,
அபிஷேகம், தேர், திருவிழா, உற்சவம்
15
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
முதலியவைகள் செய்ய வேண்டும் என்றாவது ஆசைப்படுமா? அல்லது
மக்கள் சில குணங்களைக்கைக் கொண்டு மற்ற ஜீவன்களிடத்தில் இன்ன
இன்ன விதமாய் நடந்து கொள்ள £ வேண்டும் என்பதை விரும்புமா? என்பதை.
யோசித்துப்பார்த்தால் “கடவுள்” என்பது வாழ்க்கைக்கு வேண்டுமா வேண்
டாமா என்பது விளங்காமல் போகாது. அன்றியும் அச்சர்வ வல்லமை உள்ள
சாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த இவ்வளவு ஆசாமிகளும் சமயங்
களும் வேண்டுமா? என்றும் அந்தச் சாமிகளை இல்லை என்பவர்களுக்கு
ருஜுபடுத்த இவ்வளவு வக்கீல்கள் வேண்டுமா என்றும் கேட்கின்றோம்.
இது போலவே ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமாக உலகத்
திற்கும் மக்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் கற்பிக்கப்பட்டிருந்தாலும்
புத்த மதம் என்பதில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்கங்களைத்
தவிர வணக்கம் என்பதை அம்மதத் தலைவர் ஒரு சிறிதும் வலியுறுத்தி
யிருப்பதாகக் காணப்படவில்லை.
அன்றியும் அவர் கடவுளைப் பற்றியோ, கடவுளை வணங்குவதைப்
பற்றியோ, கடவுள் நெறி உணர்த்திய பெரியார்களை மரியாதை செய்வதைப்
பற்றியோ கவலைகொண்டு ஒரு கடுகளவு நேரமாவது செலவழித்திருப்
பதாகவும் காணக் கிடக்கவில்லை. அன்றியும் அதைப்பற்றிய வார்த்தை
களையாவது அவர் எங்காவது உபயோகித்திருப்பதாக சொல்பவர்களும்
காணக் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவரை மதத் தலைவராகவும்
அக்கொள்கையை, அம்மதத்தை, அச்சமயத்தை இன்றைய தினம் உலகத்
திலுள்ள மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் அதாவது
50 கோடி மக்களுக்கு மேல் தம் மதமாகவும் ஏற்றுக்கொண்டிருப்பதாகச்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றியும் அப்படிப்பட்ட புத்தரை தங்கள் கடவுள்
அவதார மென்றும்
தீர்க்கதரிசி என்றும் பகவான் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிற ஜனங்கள்
இந்துமதம் என்பதிலே, சைவ மதம் என்பதிலே, வைணவ மதம் என்பதிலே
பல கோடிக்கணக்கானவர்கள் இருப்பதோடு அதற்கு பல ஆதாரங்களும்
வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதை யாராவது மறுக்க முன்வருகின்
றார்களா?
“மனிதனுக்கு ஏதாவது ஒரு மதமோ சமயமோ வேண்டியது
அவசியம்” என்று யாராவது சொல்ல வருவார்களானால் புத்த மதம் என்ப
தும், உலகாயுத மதம் என்பதும், சூன்ய மதம் என்பதும், இயற்கை மதம்
என்பதும் மதங்கள் என்று தானே சொல்லப்படுகின்றது.
அப்படி இருக்கை
யில் அம் மதங்களில் ஏதாவது ஒன்றைக் கொண்டவர்கள் பலர் இருக்கலாம்.
எனவே அது எப்படி குற்றமுடையதாகும். எப்படி பல மதங்களுக்கும்
சமயங்களுக்கும் தலைவரும் காலமும் இல்லாமல் இருக்கின்றதோ அது
குடி அரசு - 1928 @)
16
போலவே இம்மதங்களில் சிலவற்றிற்கும் காலமோ தலைவரோ இல்லாம
லிருக்கலாம்..
ஆகவே, ஒரு மனிதன் இன்ன மதக்காரனாகவோ இன்ன சமயக்
காரனாகவோ, இன்ன கடவுளை வணங்குகிறவனாகவோ இருக்க வேண்டும்
என்பதாக கட்டளை இடவும், இன்ன இன்ன மதக்காரனாக இருக்கக்கூடாது
என்று நிர்ப்பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம்.
மனிதனுக்கு மதம் வேண்டும் என்பது அந்தந்த மனிதனின் தனி
இஷ்டத்தைப் பொறுத்ததா அல்லது மற்றொருவனுடைய நிர்ப்பந்தமா என்று
கேட்கின்றோம்.
“துறவிக்கு மதம் ஏது? “ஞானி”க்கு சமயம் ஏது? கடவுள் ஏது?
“வேதாந்தி”க்கு மதம் ஏது? கடவுள் ஏது? சகலத்தையும் துறந்தவர்தானே
துறவி? சகலத்தையும் சரி என்று எண்ணுகிறவர்தானே “ஞானி”?
“சகலமும் மித்தை, பொய், மாய்கை” என்று எண்ணுகிறவன் தானே
“வேதாந்தி” என்பவன்? இவைகளை உலகம் ஒப்புக் கொள்ளுகின்றதா
இல்லையா? அங்ஙனமாயின் இம்மூவர்களும் “நாஸ்திகர்””களா என்று
கேட்கின்றோம்,
உலகத்தில் “துறவி” ஆவதற்கோ, “ஞானி” ஆவதற்கோ “வேதாந்தி”
ஆவதற்கோ எவனுக்கு உரிமை இல்லை என்று கேட்பதோடு எந்த புஸ்
தகத்தை படித்துவிட்டு யாரிடம் உபதேசம் பெற்று அல்லது எந்த சமயத்தை
ஏற்று எந்தக் கடவுளைத் தொழுது “துறவி”யாகவோ, “வேதாந்தி”யாகவோ
ஆகவேண்டும் என்கின்ற நிர்பந்தமுண்டா என்று கேட்கின்றோம்.
இவ்விஷயங்களை நாம் வலியுறுத்துவதால் பல நண்பர்களுக்கு சற்று
மனக்கசப்பு ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும். ஆணாலும் நம் நாட்டின்
விடுதலை கண்டிப்பாய் இந்த விஷயங்கள் விளக்கமாவதில்தான் இருக்
கின்றதேயொழிய வெள்ளைக்காரரிடமும் பார்ப்பனர்களிடமும் நேரில்
முட்டிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்றே சொல்லுவோம்.
வெள்ளைக்கார அரசாங்க முறையும், பார்ப்பனர்களின் ஆதிக்கமும்
நமது மானத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் தரித்திரத்திற்கும் ஆதார
மாயிருக்கின்றது என்பது சத்தியமானாலும் அவ்வக்கிரமமும் ஆட்சியும்
ஆதிக்கமும் இந்த மதம், கடவுள், சமயம் என்பவைகளான மூட கொள்கை
களின் பேரில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது நமது முடிவு. இம்மூடக்
கொள்கைகளை வைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களையும், பார்ப்பனர்
களையும் பூண்டோடு அழிக்க நம்மால் முடிந்து விட்டாலும் மறுபடியும்
17
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
“வெள்ளக்காரர்களும்” “பார்ப்பனர்களும்” வேறு எங்காவதிருந்தோ அல்லது
நமக்காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்
திக் கொண்டுதான் வருவார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய்
ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக தெரிவித்துக்
கொள்ளுகின்றோம்.
வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அன்னிய அரசாங்
கமோ இல்லாமல் நம் நாட்டார்கள் என்போர்கள் அரசாண்டு வந்த காலத்தி
லேயே நாம் அடிமைகளாக, தற்குறிகளாக, தாசிமக்களாக, தீண்டாதார்களாக
இருந்து வந்திருக்கின்றோம் என்பதை தயவு செய்து நம்புங்கள் என்று
வேண்டிக்கொள்ளுகின்றோம்.
நம்புவதற்கு ஏதாவது கஷ்டமாய் இருந்தால் நம் நாட்டு,நம்மக்களால்
“சாமுண்டீஸ்வரி” பேராலும், “பத்மநாபசாமி” பேராலும், “கிருஷ்ணசாமி
பேராலும் ஆளப்படும் மைசூரையும், திருவாங்கூரையும், கொச்சியையும்
தயவுசெய்து சற்று திரும்பிப்பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.
ஆட்சி முறை கொடுமையும், பார்ப்பன ஆதிக்கமும் வெள்ளைக்
கார அன்னிய அரசாங்கத்தைவிட உள்நாட்டு மக்களால் ஆளப்படும்
சுயராஜ்ய அரசாங்கத்தில் அதிகமா? கொஞ்சமா? என்பதை கவனித்தால்
வெள்ளைக்காரரும் பார்ப்பனர்களும் தாங்களாகவே தங்கள் பலத்தால்
அக்கிரமங்களை செய்கின்றார்களா? அல்லது இந்த மதமும், கடவுளும்,
மதவெறியும்
இவ்வித அக்கிரமங்கள் செய்ய இடம் கொடுக்கின்றதா? என்பது
சுலபத்தில் விளங்காமல் போகாது என்றே எண்ணுகின்றோம்.
எனவே நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண்டியது
என்னவென்றால், மூடநம்பிக்கை ஒழியவேண்டும்; அறிவுக்கு சுதந்திரமும்.
விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும்; சுயமரியாதை
உணர்ச்சி ஏற்படவேண்டும். இம்மூன்றும் ஏற்பட வேண்டுமானால் மதமும்,
சாமியும், சமயாச்சாரியார்களும் சந்திக்கு வந்தே தீரவேண்டுமேயல்லாமல்
இதற்கு வேறு பர்த்தியோ, ராஜியோ இல்லை யென்றே சொல்லி இதை
முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.07.1928
குடி அரசு - 1928 @)
18
ந
(காண்டு மாணாக்கர்கள் சம்பாஷணை)
- சித்திரபுத்திரன்
ராமசேஷன் : அடே ஜோசப்! இன்று நல்ல டிராமா என்று நோட்டீஸ்
பார்த்தேன் போகலாமென்றிருக்கிறேன்; நீயும் வருகிறாயா?
ஜோசப்
: அது என்னடா அப்பா அப்பேர்ப்பட்ட நல்ல டிராமா?
கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்?
ராமசேஷன் : அதா? தாரா சசாங்கம்; நல்ல சீன்களும் நல்ல பாட்டு.
களும் உடையது...
ஜோசப் : என்னடா என்னமோ கொசமுசாங்கம் என்று சொல்லுகிறாய்
அதன் கருத்து என்ன?
ராமசேஷன் : உனக்கென்னடா தெரியும்; நீயோ தற்குறி அது உன்
வாயிலேயே நுழைவதில்லை; அதற்கு யாரு என்ன செய்வார்கள்?
ஜோசப் : அந்தக் கிரகமெல்லாம் உன் வாயிலேயே நுழையட்டும்,
நல்ல வேளையாக என் வாயில் நுழையவேண்டாம்.
அதன் கருத்தென்ன
சொல்லு பார்ப்போம்?
ராமசேஷன்
: தாரா சசாங்கம் என்றால் தாரை சந்திரனுக்கு நிர்வாண:
மாய் எண்ணெய் தேய்க்கும் பாகத்தை நாடக ரூபமாய் பிரத்தியக்ஷத்தில்
காட்டுவார்கள்.
ஜோசப் : அப்படியா? தாரை என்றால் என்ன? சந்திரன் என்றால்
என்ன? இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் சொல்லு
அப்புறம் நிர்வாணத்தைப் பற்றியும் எண்ணை தேய்ப்பதைப் பற்றியும்
கவனிக்கலாம்.
ராமசேஷன்
: இனி உனக்கு அஸ்திவாரத்திலிருந்து சொல்லியாக
வேண்டும்போல் இருக்கிறது.
ஜோசப்
: சும்மாதானா ஒருமனிதன் நிர்வாணத்தைப் பார்க்க
வருகின்றது? அது இன்னது என்று கூடத் தெரிய வேண்டாமா?
ராமசேஷன் : சொல்லுகிறேன் கேள்.
19
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ஜோசப் : சொல்லப்பா சொல்லு.
ராமசேஷன் : தேவர்களுக்கெல்லாம் குருவாக பிரகஸ்பதி என்பதாக
ஒரு தேவகுரு உண்டு.
ஜோசப் : பொறு, பொறு, யாருடைய தேவர்களுக்கு?
ராமசேஷன்: எங்கள் தேவர்களுக்கு.
ஜோசப் : சரி, சரி, அதுதான் கேட்டேன், எல்லோருடைய தேவர்
களுக்கு என்று எங்கே சொல்லி விட்டாயோ என்னமோ என்றுதான் கேட்டுப்
பார்த்தேன். அப்புறம்?
ராமசேஷன் : அந்த தேவகுருவுக்கு தாரை என்கின்ற ஒரு பெண்சாதி
உண்டு. தேவர்களுடைய குழந்தைகளையெல்லாம் அந்த பிரகஸ்பதியிடம்
கொண்டுவந்து விட்டுத்தான் கல்வி கற்பிக்கின்றது வழக்கம்.
ஜோசப் :
நிறுத்து நிறுத்து, அப்படியானால் அந்த பிரகஸ்பதி
யென்கின்றவர் ஒரு வாத்தியாரா?
ராமசேஷன்
: ஆமாப்பா, குரு என்றால் என்ன? வாத்தியாரென்றால்
என்ன? இரண்டும் ஒன்றுதானே உனக்கு இது கூடத் தெரிவதில்லையே!
உன்னோடு எப்படி அழுவது?
ஜோசப்:இரப்பா
இரு, அதுக்குள்ளே கோபித்துக் கொள்ள வேண்டாம்.
குரு என்றால் இந்தப் பல்லக்கில் ஆனை, குதிரை, ஒட்டகை, மேளம்,
வாத்தியம் இதுகளுடன் மிரவணை ஊர்கோலம்! வந்து கரண்டியில் தண்ணீர்.
விற்று பணம் கொள்ளையடிக்கிறானே அந்த ஆசாமியோ என்னமோ
அவனுக்குச் சொந்தப் பெண்டாட்டி இல்லையென்று சொல்லுகிறார்களே,
அப்படியிருக்க நீ இந்த குருவுக்கு பெண்டாட்டி இருப்பதாக சொல்லு
கிறாயே, என்னப்பா அதிசயமாயிருக்குது என்றுதான் யோசிக்கின்றேன்.
ராமசேஷன் : அடே இந்த குரு வேறேயடா; நீ ஒன்றும் தெரியாமல்
உளறாதே.
ஜோசப் : அப்படியானால் அந்த குருவுக்கு என்ன பேரு?
ராமசேஷன் : அவர்களுக்கும் குரு என்றுதான் பெயர். அவர்க
ளெல்லாம் சமயாச்சாரியார்கள், மடாதிபதிகள், லோக குரு, குலகுரு, ஆச்சாரி
யார்கள், பண்டார சன்னதிகள், சுவாமிகள் என்றும் பலவிதமாகச் சொல்லப்
படுபவர்கள். நான் சொல்லுகின்ற இவர் தேவகுரு அதாவது தேவர்களுக்கு
உபாத்தியாயர் என்று சொல்லப்படுபவர்.
ஜோசப் : நில்லு நில்லு; அவசரமாகப் போகாதே; எனக்குப் புரிய
வேண்டாமா? முன் நீ சொன்னாயே லோககுரு என்று அந்த லோக குரு
என்பவர் எந்த லோகத்திற்கு குரு.
ராமசேஷன்
: என்னப்பா உன்னோடு பெரிய தொல்லையாய்
இருக்கின்றது? ஒவ்வொன்றும் உனக்குச் சொல்லித் தொலைக்க வேண்டும்
குடி அரசு - 1928 @)
20
போல் இருக்கின்றது.
ஜோசப் : சும்மாதானா நிர்வாணத்தைப் போய் பார்க்கின்றது. அது
இன்ன நிர்வாணம் என்று புரிய வேண்டாமா?
ராமசேஷன் : கேலி பண்ணாதே, விவரமாய்ச் சொல்லுகிறேன் கேள்.
எங்கள் ரிலிஜனை (மதத்தை) நீ படித்தால் தானே தெரியும். நடுவில் புகுந்து
கொண்டு கேட்டால் சுலபத்தில் புரியும்படி சொல்ல முடியுமா?
ஜோசப்:ஓ ஓஹோ! இதெல்லாம் உங்கள் ரிலிஜனை (மதத்தைச் சேர்ந்
ததா? அப்படியானால் கவனமாய் கேட்கின்றேன்; சொல்லு பார்ப்போம்.
ராமசேஷன்
: லோக குரு என்பது ஒரு பட்டப்பெயர். அவர்:
பார்ப்பனர்களில் ஒரு கூட்டத்தார்க்கு மாத்திரம் சாமியார். அந்தக் கூட்டத்
தாரின் செல்வாக்கினாலும் மற்ற மக்களின் அறிவீனத்தினாலும் அவரை
எல்லாருக்கும் குரு என்று சொல்லி பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்திருக்
கின்றார்கள். இப்படிப் பல பேர்வழிகள் உண்டு.
அது போலவே ஒவ்வொரு
கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு சாமியார் என்பவர் உண்டு.
அவர்களை எல்லாம் இம்மாதிரி கவுரவமான பெயர்களால் அழைக்கின்றது
எங்கள் வழக்கம். ஏனென்றால் ஒருவகுப்பு சாமியாரை வேறு ஒரு வகுப்பார்.
பரிகாசம் பண்ணினால் அப்புறம் அந்த வகுப்புச் சாமியாரை மற்ற வகுப்பார்.
பரிகாசம் செய்வார்கள். அப்புறம் ஒருவருக்கும் யோக்கியதை இல்லாமல்
போய்விடும். ஆதலால் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து மரியாதை.
வாங்கிக்கொள்ளுகின்றது வழக்கம். இந்த முறையில் அவர்களுக்கு அந்தப்
பெயர் கிடைத்திருக்கின்றது. ஆதலால் தேவகுரு என்பவர் இதில் சேர்ந்த
வருமல்ல. இந்த லோகத்தில் இருப்பவருமல்ல.
ஜோசப் : சரி இந்த சாமியார்களால் உங்களுக்கு என்ன லாபம்
சொல்லு பார்க்கலாம்.
ராமசேஷன் : லாபம் என்ன; நஷ்டந்தான். வருஷா வருஷம் வந்து
வரிவசூல் செய்வதுபோல் பணம் கொள்ளையடித்துக் கொண்டு போகின்றது
அல்லது மடத்துக்கு முன்னோர்களால் விட்ட சொத்துக்களின் வரும்படிகளை:
அவர்கள் இஷ்டப்படி அனுபவிப்பது ஆகிய காரியங்கள் தவிர அவர்களால்
மக்களுக்கு சாதிக்கப்படுவது ஒன்றும் கிடையாது.
ஜோசப்
: எனக்கு நேரமாய்விட்டது. இந்த சாமியார்களைப் பற்றி
மற்றொரு நாளைக்குப் பேசிக் கொள்ளலாம். இப்போது நிர்வாண காகஷிக்கு
சம்மந்தப்பட்ட அந்த தேவகுரு சங்கதி சொல்லு சீக்கிரம் முடியட்டும்.
ராமசேஷன்
: மேலே சொன்ன அந்த பிரகஸ்பதி என்கின்ற தேவ
குருவுக்கு தாரை என்கின்ற ஒரு பெண்சாதி உண்டு.அந்த அம்மாள் ரொம்ப
வும் அழகு வாய்ந்தவள். யெளவன பருவமுடையவள். இந்த பிரகஸ்பதி
என்கிற குரு தாடியும் மீசையும் முளைத்துப் பார்க்கின்றதற்கு “கிழப்பிசாசு”
போல் இருப்பார். இப்படி இருக்கும் நாளையில் அந்த தேவகுருவிடம்
21
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
படிப்பிக்க சந்திரனை அவன் தாய் தந்தையர்கள் பிரகஸ்பதியிடம் கூட்டி
வந்துவிட்டார்கள்.
ஜோசப்: ஓடாதே ஓடாதே! கொஞ்ச நில்லு சந்திரன் என்று இப்போது
சொன்னாயே அது யாரு.
ராமசேஷன் : அடமுட்டாளே! சந்திரன் என்றால் யார் என்று கூடவா
தெரியாது. வானத்தில் தெரிகின்றதே. ராத்திரியில் வெளிச்சம் கொடுக்
கின்றதே அந்த சந்திரன்தான்.இது கூடவா சொல்லித் தொலைக்க வேண்டும்?
ஜோசப்
: கோபித்துக் கொள்ளவேண்டாமப்பா! சும்மா தானா
நிர்வாணத்தைப் பார்க்க வருகிறது?
மானத்தில் தெரிகின்ற சந்திரனா ஒருவருக்குக் குழந்தையாக பிறந்து
பிரகஸ்பதி என்கின்ற குரு இடம் படிக்கக் கொண்டு போய் விடப்பட்டான்.
ராமசேஷன்
: ஆமாம், ஆமாம், ஆமாம். உனக்கு நூறு தரம்
சொல்லித் தொலைக்க வேண்டுமாக்கும்..
ஜோசப் : தெரியாதவனுக்கு என்னைப் போல் தற்குறிக்கு தெரியும்
படியாய்ச் சொல்ல வேண்டாமா? அப்படியானால்
நீர் சொல்லுகிற சந்திரன்
பிறப்பதற்கு முந்தி மானத்தில் சந்திரன் இருந்ததா இல்லையா?
தவிர பிஸ்பிஸ்பதியிடம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மானத்தில்
என்ன இருந்தது? எப்போதும் அமாவாசையாகவே இருந்ததா? சற்று விளக்கு
பார்ப்போம்.
ராமசேஷன்
: என்னப்பா இழவு, நீ கிருஸ்தவன் என்பது சரியாய்
இருக்கின்றது.
ஜோசப் : திடீரென்று அப்படிச் சொல்லி விடாதே. இதை உன் தம்பி
கேட்பதாகவே நினைத்துக் கொண்டு சாமாதானம் சொல்லி விளங்கப்
பண்ணப்பா..
ராமசேஷன்: என் தம்பி இந்த மாதிரி கேள்விகள் கேட்பானேயாகில்
அப்போதே அவனை நன்றாய் உதைத்து இனிமேல் இம்மாதிரி அதிகப்
பிரசிங்கித்தனமானதும் நாஸ்திகத்தனமானதுமான கேள்விகளை கேட்க
வேண்டாம் என்று சரியானபடி புத்தி கற்பித்திருப்பேன்.
ஜோசப்
: என்னடாப்பா கடைசியாக இப்படிச்சொல்லி விட்டாய்,
நிர்வாண நாடகம் பார்க்கவாவென்று வெகுஒழுங்காய் கூப்பிட மாத்திரம்
உனக்கு அறிவிருக்குது, அந்தக் கதையின் யோக்கியதை என்னவென்று
கேட்டால் இப்படிச் சொல்கிறாயே. இது தானா உன்னுடைய மதத் தத்துவம்.
ராமசேஷன்
: இல்லையப்பா அதற்காக நான் சொல்லவில்லை.இம்
மாதிரியான கேள்விகள் கேட்பதெல்லாம் தப்பு.அதாவது இதனால் ஒரு மத
தத்துவத்தை (இன்சல்ட்) அவமானப்படுத்தியதுபோல் ஏற்படுகின்றது.
இதை
யெல்லாம் அறிந்து தான் பெரியவர்கள், பெரியவாள் சொன்னதையும்
எழுதிவைத்ததையும் அப்படியே நம்ப வேண்டுமென்றும் நம்பாமல் கேள்வி
குடி அரசு - 1928 @)
22
கேட்பது நாஸ்திகம் என்றும் பாவம் என்றும் எழுதி வைத்திருக்கின்றார்கள்.
அதோடு இப்படி தர்க்கம் செய்பவனை சித்ரவதை செய்து கொன்றுவிட
வேண்டும் என்றும் வேதம் சொல்லுகின்றது.
ஜோசப்
: நல்ல வேளையாக வெள்ளைக்கார அரசாங்கம் இருப்
பதால் நீ கூட என்னைக் கொல்லாமல் விட்டாய் போலும். வெள்ளைக்கார:
அரசாங்கம் வேறு வகையில் எவ்வளவோ மோசமானதென்று சொல்லிக்
கொள்ளப்படுவதாயிருந்தாலும் இந்தக் காரியத்துக்காகவாவது இன்னும்
கொஞ்ச நாளைக்கு இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகின்றது.
அதிருக்கட்டும் இதையாவது சொல்லு பார்ப்போம்.
ராமசேஷன் : எதை?
ஜோசப்: அதாவது எப்பொழுது சந்திரன் பிள்ளையாய்ப் பிறந்தான்
எந்த உருவத்தோடு பிறந்தான். எப்படி மானத்திற்கு (ஆகாயத்திற்கு!
போனான். அதையாவது சொல்லு பார்ப்போம்.
ராமசேஷன் : இதுவும் அந்த மாதிரி கேள்விகளை சேர்ந்ததுதான்
தெய்வமூலம், ரிஷிமூலம், நதிமூலம் ஆகியவைககள் ஒன்றும் கேட்கப்படாது
என்பதும் கேட்பதும் அதைத் தெரிய விரும்புவதும் பாவம் என்பதும் எங்கள்
வேதத்தில் சொல்லப்பட்ட கட்டளையாகும். ஆதலால் நான் இவைகளைப்
பற்றி கவலை எடுத்துத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவேயில்லை. மற்றபடி
இவைகளை உனக்குச் சொல்லக் கூடாது என்கின்ற நிர்பந்தம் ஒன்றும் எனக்கு
இல்லை.
ஜோசப் : சரி அப்படியானால் அந்த வேதத்தை நீ பார்த்திருக்கின்
றாயா? அதில் இம்மாதிரி எழுதியிருப்பது உனக்கு நேரில் தெரியுமா?
ராமசேஷன்: அதை நான் பார்க்கவில்லை: எங்கள் வேதத்தை
எல்லோருமே பார்த்து விட முடியாது.
ஜோசப் : அதென்ன அப்படி?
ராமசேஷன் : அப்படித்தான்; அதைச் சிலர்தான் பார்க்கலாம். அவர்
கள் தவிர மற்றவர்கள் பார்த்தால் பார்த்தவர்களின் கண்ணைக்குத்த வேண்:
டும் என்றும் அதில் உள்ளதைக் காதால் கேட்டால் அந்தக் காதில் ஈயத்தைக்
காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் வாயால் படித்தால் படித்த நாக்கை அறுக்க
வேண்டும் என்றும் மனதில் பதிய வைத்துவிட்டால் அந்த நெஞ்சைப் பிளந்து
அதை வெளியாக்கிவிட வேண்டும் என்றும் நிபந்தனை இருக்கின்றது.
ஜோசப் : அது எதில் இருக்கின்றது?
ராமசேஷன் : அதுவும் அந்த வேதத்தில்தான் இருக்கின்றது.
ஜோசப் : அதையாவது நீ பார்த்தாயா?
ராமசேஷன் : நான்தான் பார்க்கக்கூடாது என்று முன்னமே
சொன்னேனே.
23
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ஜோசப் : பின்னை உனக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது?
ராமசேஷன் : பெரியோர்கள் சொல்லித் தெரிந்தது.
ஜோசப் : அப்படியானால் வேதத்தில் உள்ளது உனக்கும் தெரிந்து
இப்போது எனக்கும் தெரிந்து விட்டதே. நீ சொல்கின்ற வேத நிபந்தனைப்
படி பார்த்தால் உன் காதிலும் என் காதிலும் ஈயத்தைக் காய்ச்சிவிட்டு உன்
நெஞ்சையும் என் நெஞ்சையும் பிளந்தல்லவா ஆகவேண்டும்.
ராமசேஷன் : நீ என்னடாப்பா தொட்டதற்கெல்லாம் குதர்க்கவாதம்
பேசுகின்றாய் இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் எந்த
மதமும் எந்த வேதமும் நிலைக்க இடம் இருக்காது. இந்த விஷயங்களை
யெல்லாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஒரு மாதிரியாகத்தான் பார்க்க
வேண்டும்.
ஜோசப்
: மற்ற மதங்களையும் வேதங்களையும் பற்றி நீ ஒன்றும்
கவலைப் படாதே அவைகள் எப்படியோ போகட்டும், அவைகளைப் பற்றி
இது முடிந்தவுடன் கவனிக்கலாம் இப்போது உன் சங்கதியை அதாவது உன்
தலைமேல் இருக்கும் பாரத்தைப் பற்றி நீ உணர்ந்திருப்பதை எனக்குச்
சொல்லு அதாவது நீ இப்போது சொன்ன வேதம் என்பது யாரால் உண்டாக்கப்
பட்டது.
ராமசேஷன்
: அது கடவுளால் உண்டாக்கப்பட்டது.
ஜோசப்: அந்த வேதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று யார்
சொன்னார்கள்?
ராமசேஷன்
: அந்த வேதத்தில் தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஜோசப் : வேதத்தில் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று உனக்கு
யார் சொன்னார்கள்?
ராமசேஷன் : வேதம் பார்த்த பெரியோர்கள் சொன்னார்கள்.
ஜோசப்
: அந்தப் பெரியவர்கள் அந்த வேதத்தில் உள்ளதை
கேட்கவும் பார்க்கவும் படிக்கவும் யோக்கியதை இல்லாத உனக்கு எப்படிச்
சொன்னார்கள்?
ராமசேஷன் : இதெல்லாம் தான் அதிகப்பிரசங்கித்தனம், குயுக்தி
வாதம், தர்க்க வாதம், நாஸ்திகம் என்று சொல்வது.
ஜோசப் : சரி சரி கோபித்துக் கொள்ளாதே, நிர்வாணக் கதையாகிலும்
சொல்லித் தொலை. சந்திரனை அவன் பெற்றோர்கள் பிரகஸ்பதியிடம்
படிப்புச் சொல்லிக் கொடுக்கக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அப்புறம்?
ராமசேஷன் : அப்படிக் கேளு. சொல்லுகின்றேன். கூட்டிக் கொண்டு
வந்தார்களா? சரி கூட்டிக் கொண்டு வந்தார்கள். பிரகஸ்பதியும் சந்திரனை
தனது மாணாக்கனாக ஏற்றுக் கொண்டார்.
ஜோசப் : சரி அப்புறம்?
குடி அரசு - 1928 (3)
24
ராமசேஷன் : சந்திரனுக்கு பிரகஸ்பதி படிப்புச் சொல்லிக் கொடுத்
துக் கொண்டிருக்கும் நாளையில் ஒரு நாள் அவசரமாக தேவர்களுக்கு
அரசனான தேவேந்திரன் பிரகஸ்பதியை கூப்பிட்டனுப்பினான்.
ஜோசப் : சரி. கூப்பிட்டனுப்பினான், அப்புறம்?
ராமசேஷன் : பிரகஸ்பதி தம் சம்சாரமாகிய தாரையைக் கூப்பிட்டு
சந்திரனைச் சரியாகப் பார்த்துக் கொள்ளும் படிக்கும் தன் மாணாக்கனாகிய
சந்திரனைக் கூப்பிட்டு தாரையைச் சரியாகப் பார்த்துக் கொள்ளும்படிக்கும்
கட்டளை இட்டுவிட்டு தேவலோகத்திற்குப் போய்விட்டார்.
ஜோசப்:சரிசரி கொஞ்சம் நில்லு. இங்கே ஒரு சின்ன சந்தேகம் என்ன
வென்றால் அந்த பிரகஸ்பதி தேவலோகம் போய்விட்டார் என்று
சொன்னாயே அப்படியானால் இது அதாவது அப்போது சந்திரன் தாரை
பிரகஸ்பதி ஆகியவர்கள் இருந்து வந்தது எந்த லோகம்?
ராமசேஷன்
: இது தானே அதிகப்பிரசிங்கித்தனம்.நாஸ்திகம் என்பது.
ஜோசப் : சரி சரி கோபித்துக் கொள்ளாதே. பிரகஸ்பதி தேவலோகம்
போய்விட்டார் அப்புறம் சொல்லு.
ராமசேஷன் : அப்புறமா? அப்புறந்தான் உன்னிடம் அதைப்பற்றி
சொல்லுவது சரியல்ல என்று நினைக்கிறேன்.
ஜோசப்: தாரை சந்திரனுக்கு நிர்வாணமாய் எண்ணெய் தேய்ப்பதை
நேரில் பார்க்கலாம் வா என்று கூப்பிடுகிற நீ அந்தக் கதையைச் சொல்ல
வெட்கப்படுகின்றாயே. இது தானா உன்னுடைய மதபக்தி. ஆஸ்திகம்.
என்னைக் கூப்பிட்ட யோக்கியதை.
ராமசேஷன் : சரி சொல்லித் தொலைக்கின்றேன் கேளு!
ஜோசப் : சொல்லப்பா சொல்லு “பிரகஸ்பதி” தேவலோகத்துக்குப்
போய்விட்டார். அப்புறம்?
ராமசேஷன் : போய்விட்டாரா....
ஜோசப் : சரி
போய்விட்டார். அப்புறம் சொல்லு.
ராமசேஷன் : அப்புறமென்ன? அதைகூடச் சொல்ல வேண்டுமா?
சந்திரன் நல்ல அழகு உள்ளவன் என்று உனக்குத் தான் தெரியுமே
ஆகாசத்தைப் பார்த்தாலே தெரியாதா?
ஜோசப்
: ஆகாயத்தில் உள்ள சந்திரன் அழகுக்கும் பிரகஸ்பதி
விட்டில்
உள்ள அழகுக்கும் என்ன சம்பந்தம்?
ராமசேஷன்
: இது தானே அதிகப் பிரசிங்கித்தனம்.
ஜோசப் : இல்லை, இல்லை, சொல்லு, சந்திரன் நல்ல அழகானவன்
அப்புறம்?
ராமசேஷன்
: அதோடு வாலிப பருவம் உடையவன், அது போல
வே தாரையும் நல்லஅழகும் வாலிபபருவமும் உடையவள். இப்படிப்பட்ட
25
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இரண்டுபேர் ஒரு இடத்தில் இருந்தால் அப்புறம் சொல்ல வேண்டுமா?
ஜோசப் : அதையும் சொல்லித் தொலை.
ராமசேஷன் : சந்திரன்மேல் தாரைக்கு ஆசை உண்டாய்விட்டது
ஜோசப் : இது சகஜந்தான்; மாணாக்கன் மீது வாத்தியாரைப் போலவே
வாத்தியார் சம்சாரத்துக்கும் ஆசை இருப்பது வழக்கம்தான். அதனால்
என்ன?
ராமசேஷன்: அந்த மாதிரி
ஆசையல்லடா சந்திரன் மேல் தாரைக்குக்
காதல் உண்டாய்விட்டது..
ஜோசப் : அப்படிச் சொன்னால் எனக்கு விளங்கவில்லையே.
ராமசேஷன் : உனக்கு நன்றாகச் சொல்ல வேண்டுமாக்கும். காதல்
என்றால் சந்திரனைத் தனது ஆசை நாயகனாகக் கொண்டு அவனிடத்தில்
கலவி இன்பம் அனுபவிக்க வேண்டும் என்கின்ற ஆசையும் காமவிகாரமும்
உண்டாய் விட்டது.
ஜோசப்
: தேவர்களுக்கெல்லாம் குருவாயிருக்கும் தேவகுரு
பெண்ஜாதிக்கு தன் புருஷனிடத்தில் படிக்க வந்த மாணாக்கன் மேல் இந்தக்
காமவிகாரம் உண்டாய் விட்டது என்றா சொல்லுகின்றாய்..
ராமசேஷன் : ஆம் ஆம்.
ஜோசப் : அப்புறம் சந்திரன் அதற்குச் சம்மதிக்காமல் அவளைத்
தடுத்துவிட்டான்.
ஜோசப் : அப்புறம்?
ராமசேஷன்: ஒரு நாள் தாரையானவள் தான் குருபத்தினி என்கின்ற
முறையில் சந்திரனை மாணாக்கன் என்கின்ற முறையில் எண்ணை தேய்த்து
குளிப்பாட்டுவதுபோல் ஒரு ஏற்பாடு செய்து சந்திரனை உட்கார வைத்து
எண்ணைக் கிண்ணத்தை தன் காலடியில் வைத்து தனது துகில் எண்ணை
தேய்க்கத் தேய்க்க அவிழ்ந்து விழும்படியாக அவ்வளவு தளர்வாய் கட்டிக்
கொண்டு எண்ணை தேய்க்க ஆரம்பித்தாள்.
ஜோசப் : சரி; ஆரம்பித்தாள் அப்புறம்?
ராமசேஷன் : எண்ணை தேய்க்கும் போது சந்திரன் தலை குனிந்து
கொண்டிருந்ததால் எண்ணைக் கிண்ணத்திற்குள் குருபத்தினியுடைய
அவயவ உருவங்களெல்லாம் நிழலில் தெரியும்படியாக இருந்தது.
அப்படியே இருக்கும்போது சந்திரனுடைய புத்தியும் கொஞ்சம் கொஞ்சமாய்
சபலப்பட்டுக் கொண்டே வந்தது
ஜோசப் : யாருக்கு?
ராமசேஷன் : மாணாக்கனுக்கு.
ஜோசப் : சரி, சபலப்பட்டு விட்டது அப்புறம்?
ராமசேஷன்
: இதே சமயத்தில் தாரைக்கும் மெள்ள மெள்ள
குடி அரசு - 1928 @)
26
அவளுடைய ஆடை அவிழ்ந்து கீழே விழுந்து விட்டது. தாரை நின்று
கொண்டு எண்ணை தேய்த்துக்கொண்டிருக்கும்போது ஆடை கீழே
விழுந்ததைப் பார்த்த சந்திரன் தலை நிமிர்ந்து பார்த்தான்...
இதுவரையில் தான் நாடகக் கொட்டகையில் சீன் நடக்கும். இதற்கு
மேல் கொண்ட சங்கதிக்கு நாடக மேடையில் உடனே திரையைப் போட்டு
விடுவார்கள். இதைத்தான் தாரா சசாங்கம் என்று சொல்லுவது. இதைப்
பார்க்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்; வருகிறாயா இல்லையா? சொல்லு நீ
வராவிட்டால் நானாவது போகிறேன். இன்று நல்ல பாட்டு நல்லசீன் நல்ல
காக்ஷி. மிகவும் வேடிக்கையாய் இருக்கும்.
பெண்கள்கூட அனேகம்
பேர்.
வருவார்கள்.
ஜோசப் : சரி சரி; இந்த கதையைக் கேட்க எனக்கு எப்படியோ வாந்தி
வருகின்றது போல் இருக்கின்றது.
இந்த லக்ஷணத்திற்கு இதைப்பார்க்க பெண்கள்கூட வருவார்கள்
என்றாயே அது வேறையா இந்த அழகுக்கு. அவர்கள் எதற்காக வரு
வார்கள்.
ராமசேஷன் : முதலாவது,
இது எங்கள் மதத்தைச் சேர்ந்த ஒரு பக்தி
மார்க்க கதை. இக் கதையை கேட்டவர்களுக்கு மோக்ஷம் உண்டு என்று
எங்கள் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. இரண்டாவது இது ஒரு
வேடிக்கை கதை.
ஜோசப் : என்ன வேடிக்கை கதை இது?
ராமசேஷன் : தாரை சந்திரனைக் கட்டாயப்படுத்தி இழுப்பது, அவன்
சம்மதிக்கமாட்டேன் என்று வாதாடித் தப்பித்துக் கொண்டு ஓடுவது, சந்தி
ரனை தாரை பலவந்தபடுத்துவதன் மூலம் இருவரும் கட்டிப்புரளுவது
சிற்றின்பமான பாட்டுகள் பாடுவது, கடைசியாக நிர்வாணக் காக்ஷி காட்டுவது
ஆகிய வேடிக்கைகளை பார்க்கக்கூடும். ஆதலால் எங்கள் பெண்களும்
வருவார்களென்று சொன்னேன்.
ஜோசப்
: இவ்வித நடவடிக்கை நடக்கும் இம்மாதிரி காக்ஷிகள்.
காட்டப்படும் இம்மாதிரிப் பாட்டுகள் பாடப்படும் என்கின்ற விஷயங்கள்.
எல்லாம் தெரிந்தபிறகு தானா உங்கள் ஸ்திரீகளும் ஏராளமாய்ப் போகிறார்.
கள் என்கின்றாய்?
ராமசேஷன்
: ஆம் தாரா சசாங்க நாடகம் என்று சொல்லி விட்டால்
நாடகக்காரன் கூட இன்ன இன்ன காக்ஷி, இன்ன இன்ன வேஷம் இன்ன
இன்னார் போடுவார்கள் என்பதைஆண்களைவிட பெண்களுக்கே அதிகம்
தெரியும் படியாக விளம்பரம் செய்வான்.
ஜோசப்
: உங்கள் ஆண்கள் இதெல்லாம் தெரிந்துமா உங்கள்.
பெண்களை அனுப்புகிறார்கள்?
ராமசேஷன்
: ஆம். ஏனென்றால் ஆண்கள் நாடகத்திற்கு புறப்
27
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
படும்போது பெண்களும் அவசர அவசரமாய் தங்களை சிங்காரித்துக்
கொண்டு புறப்படுவார்கள்.
ஆண்கள். இந்த காக்ஷியை பார்க்க வருகிற பல பெண்களைப்
பார்க்கலாம், அவர்களைப்
பார்த்துச் சிரிக்கலாம் என்றே வருவார்கள். இது
எல்லாப் பெண்களுக்கும் தெரியும். ஆதலால் ஆண்கள் தங்கள் பெண்களை
வரவேண்டாமென்று சொன்னால் அவர்கள் இந்த இரகசியத்தைச் சொல்லி
ஆண்களை கண்டித்து விடுவார்கள்.
தவிர சில ஆண்களுக்கு பெண்களை வீட்டில் தனியாய் விட்டு
விட்டுப் போவதற்கும் சந்தேகம். எனவே இருவரும் போவார்கள். அன்றி
யும் இப்படிப் போவதில் இன்னம் ஒரு லாபம் இருக்கின்றது.அதாவது மேல்
கண்ட மாதிரியான காமாதுரமான பாட்டும் காகஷியும் செய்கையும் நாடகத்
தில் காணப்படும் பொழுது பெண்களுக்கும் ஆண்களுக்கும் காமாவிகார
மேற்பட நேரும், அப்போது அவரவர்கள் புருஷனும் பெண் ஜாதியுமா
யிருந்தால் அவரவர்களுடைய சொத்தை அவரவர்கள் பார்த்து ஒரு விதத்
தில் திருப்தி
அடையக்கூடும். அப்படிக்கில்லாவிட்டால் அச்சமயத்தில் வேறு
ஒருவர் சொத்தை ஒருவர் பார்க்க நேரிடும். அதோடு இருவரும் போனால்
ஒருவருக்கொருவர் பயந்து கொண்டு வேறு ஒருவரைப் பார்த்துக்
கொள்ளவும் மாட்டார்கள்.ஆதலால் புருஷனும் பெண்ஜாதியுமாக போவதே
தனியாய் போவதைவிட மேலானது என்பது எனது அபிப்பிராயம்.
ஜோசப் : அது எப்படியோ போகட்டும். மேற்கொண்டு கதையின்
முடிவு என்ன?
ராமசேஷன்
: கதை முடிவு இதுதான். விசேஷ பாகம். மற்றது
சாரமில்லாதது..
ஜோசப் : சாரமில்லாவிட்டாலும் சற்று சொல்லு கேட்போம்.
ராமசேஷன் : பிறகு ஒருவரை ஒருவர் கூடுகிறார்கள். பிரகஸ்பதி
வருகின்ற வரை இதே வேலையாய் இருக்கிறார்கள். இதனால் தாரைக்கு
கர்ப்பம் தரித்து விடுகின்றது. பிறகு தேவகுரு பிரகஸ்பதி வந்து ஞான
திருஷ்டியால் தெரிந்து கோபித்துக் கொண்டு சந்திரனை 15 நாள் தேயும்
படியாகவும் 15 நாள் வளரும்படியாகவும் சபித்து விடுகின்றார். அதுதான்
வளர்பிறை தேய்பிறை என்பது. தாரை மீதும் ஏதோ கோபித்துக் கொள்ளு
கின்றார். தாரைக்கு புதன் என்கிற பிள்ளையும் பிறக்கின்றது. தேவகுருவும்
சந்திரனை சபித்துவிட்டு தன் பெண்சாதியை கடைசியாக மன்னித்து விடு
கிறார். அதோடு கூட தாரையை உலகில் உள்ள கற்புள்ள ஸ்திரீகள் ஐவரில்
ஒருத்தியாக சேர்த்து விடுகிறார். தாரையை நினைத்தால் நினைத்தவர்களுக்கு
சகல பாவமும் உடனே தீரும்படியான சக்தியையும் அவர்களுக்கு
ஏற்படுத்திவிடுகிறார். அதுபோலவே இன்னும் உலகத்தில் தினமும்
கோடிக்கணக்கான பேர்கள் இந்த தாரையை நினைப்பதன் மூலம்
தினந்தோறும் அவரவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு புதிது
புதிதான பாவங்கள் செய்யவும் மக்களுக்கு எவ்வளவோ தைரியம் கொடுக்க
குடி அரசு - 1928 @)
28
உபகாரமாகவுமிருக்கிறது.
இதுதான் தாரா சசாங்கக் கதையின் தாத்பரியம்.
ஜோசப்: இக்கதையினால் உங்கள் குரு பெண்ஜாதிமார்கள் சங்கதியும்
சீஷப் பிள்ளைகளின் சங்கதியும் நன்றாய் தெரிய வந்தது. அதோடு உங்கள்
கற்புக்கும் அர்த்தம் தெரிந்தது.
இவ்வளவே எனக்கு போதும்.நீ சொன்னதி
லிருந்தே இந்த கொசமுசாங்க கதையை நேரில் பார்த்தது போலவே ஆகி
விட்டது. இதை நீயும் உங்கள் பெண்களுமே நன்றாகப் பார்த்து மோக்ஷத்
திற்குப் போங்கள்.
உங்கள் உபாத்தியாயர் பத்தினிமார்களும் இந்த கண்காட்சியை
நன்றாகப் பார்த்து அந்தப்படியே நடந்து மாணாக்கர்களுக்கு கற்றுக்
கொடுத்துவிட்டு பஞ்ச கன்னிகைகளோடு சேர்ந்து அவர்களை நினைத்தவர்
களுக்கெல்லாம் மோக்ஷத்தைக் கொடுத்து வரட்டும்.
மாணாக்கர்களாகிய நீங்களும் அவர்களுக்கு சீஷப் பிள்ளைகளாகச்
சேர்ந்து சந்திரனைப்போலவே தினமும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு
புதன்களைப் பெற்றுக் கொண்டிருங்கள்.
நம்மை மாத்திரம் அந்த மோகக் காட்சிக்கு கூப்பிடாதீர்கள்.
ராமசேஷன் : இதையெல்லாம் நீ எங்கிருந்து படித்துக் கொண்டாய்
என்பது எனக்குத் தெரியும். “குடி அரசு” என்கின்ற அந்த நாஸ்திகப் பத்திரி
கையை நீ தினம் படிக்கின்றதை நான் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்.
அது உன்னை இம்மாதிரி ஆக்கிவிட்டது. நீ என்ன செய்வாய், உன் மீது
தப்பிதமில்லை.
ஜோசப் : குருபத்தினி சீஷப் பிள்ளைக்கு நிர்வாணமாய் எண்ணெய்
தேய்ப்பதை பார்க்க இஷ்டமில்லை என்று சொன்னால் அது “குடி அரசை”
பார்த்ததனால் வந்த கேடாக்கும்? நாஸ்திகமாக்கும்? போதும், போதும்,
உங்கள் ஆஸ்திகத்தை மூட்டை கட்டி வையுங்கள். இனி என்னிடம்
விரிக்காதீர்கள். எனக்கும் நேரமாச்சுது. நான் போய்வருகிறேன். மற்றொரு
நாளைக்கு உங்கள் வேதத்தைப்பற்றி பேசிக் கொள்ளலாம்.
குட்பை - 6௦௦0 bye.
குடி அரசு - உரையாடல் - 08.07.1928.
29
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தொழிலாளர் துமாமும்
சைமண் பஹிஷ்காற 6வேஷமும்
இயற்கை அமைப்பிலேயே கைத்தொழில்களையும், தொழிலாளர்
களையுமே ஜீவநாடியாகவும் அணியாகவும் கொண்டு நிலவிய நம் நாடானது
எந்தக் காலத்தில் ஆரியர்களால் மேல்கண்ட இரண்டுமற்ற அன்னிய
நாட்டாருக்கு காட்டிக்கொடுக்கப்பட்டு அன்னிய நாட்டு நன்மைக்காக
ஆளப்படும் அன்னிய ஆதிக்கத்திற்கு
- அடிமை ஆக்கப்பட்டதோ அன்று
முதலே நம்நாட்டுத் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அருகிப் போக வழி
ஏற்பட்டதல்லாமல் தொழிலாளர்களும் தரித்திரத்திற்கும் துன்பத்திற்கும்
ஆளாக நேர்ந்து வருடா வருடம் லக்ஷக்கணக்கான கைத்தொழிலாளர்கள்.
தொழிலில்லாமல் வேற்று நாடுகளுக்கு மிருகங்களாக ஏற்றுமதி செய்யப்
பட்டும் வருகின்றார்கள்.
எஞ்சியுள்ள தொழில் மக்கள் உள் நாட்டு ஒரு சிறு கூட்டத்தினராகிய
பேராசை கொண்ட முதலாளிகளிடமும், நம்மிடமும் நம் நாட்டிடமும் ஒரு
சிறிதும் அன்பும் இரக்கமும் பற்றுதலும் அற்ற வெளிநாட்டு முதலாளி
களிடமும் கொடுமைப்பட்டு வருகின்றார்கள்.
இதன்பலனேதான், நம்நாட்டில் ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள்.
வேலை நிறுத்தமும், கதவடைப்பும், சத்தியாக்கிரகமும் பெண்டு பிள்ளை
குட்டி களுடன் பட்டினி கிடப்பதும் அடிபடுதலும், உதைபடுதலும், துப்பாக்
கியால் சுடுபடுதலும், ஈட்டியால் குத்தப்படுதலும், சிறையில் அடைக்கப்படு
தலும் ஆன காரியங்கள் நடந்தவண்ணமாகவே இருக்கின்றன.நாம் நன்றாய்
அறிந்த இந்த சுமார் பத்து வருஷம் தொழிலாளர் உலகத்தில் நடந்ததான
கொடுமைகள் நினைத்தால் வயிறு பற்றி எரிகின்றது. இதைப்பற்றி ஏன்
என்றுகூட கேட்க பொதுமக்களிடை எவ்வித இயக்கமும் இல்லை.யாதொரு
உண்மைத் தலைவருமில்லை. தொழிலாளர்கள் பெயரைச் சொல்லிக் கொண்:
டும் அவர்களை காட்டிக் கொடுத்தும் அவர்களது உழைப்பால் பிழைக்கும்
தேசியத் தலைவர்களுக்கும் தேசீய இயக்கங்களுக்கும் மாத்திரம் நம் நாட்டில்
குறைவில்லை.
நம்நாட்டு ஏழைக் கைத்தொழில் மக்களின் கூலிகளின் வாயில்
குடி அரசு - 1928 @)
30
மண்ணைப்போட இதுவரையில் எத்தனைவித இயந்திரப் பிசாசுகள்
வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்திருக்கின்றன என்பதை அறியாதார்.
யார்? இதைப்பற்றி யாராவது கவலை கொண்டு அதற்காக ஏதாவது பரிகாரம்
செய்திருக்கிறார்களா? அர்த்தமற்ற சைமன் கமிஷன் பகீஷ்காரத்திற்காக
கூச்சல் போட மாத்திரம் “தேசீய” இயக்கங்களுக்கு குறைவில்லை. தேசீய
தலைவர்களுக்கும் குறைவில்லை.அதற்கு செலவு செய்ய நம் மூட மக்களின்
பணமும் இருக்கின்றது. அன்றியும் ஏதாவது ஒரு சிறு கிராமத்தில் ஒரு
ஏக்கராவுக்கு இரண்டணா நிலவரி உயர்ந்து விட்டால் உடனே வரிகொடா
இயக்கம் ஆரம்பித்து பொது மக்களிடம் பணம் வசூலித்து பெரியதனம்
செய்து தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் பல இயக்கங்கள் இருக்
கின்றன; அதற்கேற்ற தலைவர்களுமிருக்கின்றார்கள். சைமன் கமிஷனை
பகிஷ்காரம் செய்வதாக கூச்சல் போடுவதால் நாட்டிற்கு என்ன விதமான
நன்மை விளையக்கூடும் என்பதை யாராவது உணர்கிறார்களா? சர்க்காரே
பஹிஷ்காரக் கூச்சலுக்கு பயந்து ஒரு சமயம் இணங்கி வந்து விட்டதாகவே
வைத்துக் கொண்டாலும் நம் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு
விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
சாதாரணமாக இந்தியாவுக்கு சுயராஜ்யத் திட்டம் ஏற்படுத்தும் யோக்
கியதை, உரிமை, அதிகாரம் ஆகிய இவைகள் ஒரு சிறிதும் வெள்ளைக்
காரனுக்கோ பார்லிமெண்டுக்கோ கிடையாது என்பதை பிரிட்டிஷ் சர்க்கா
ராரே ஒப்புக்கொண்டு அவற்றை இந்தியர்கள் தலையிலேயே போட்டு
விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது இந்தியர்களின்
சுயராஜ்யத் திட்டம் என்பது என்ன என்னவாக இருக்க முடியும், யார் யாரால்
கோலப்படுமென்பதை சற்று யோசிக்க வேண்டும். திருவாளர்கள் சீனிவாசய்
யங்கார், இரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, எம்.கே. ஆச்சாரியார்,
பெசன்டம்மை, விஜயராகவாச்சாரியார், மாளவியா ஆகியவர்கள் இப்போது
ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தனித்தனி திட்டமா? அல்லது வர்ணாசிரம
சபையார் என்பவர்களும் பிராமண சபையார் என்பவர்களும் ஏற்படுத்திக்
கொண்டிருக்கும் திட்டங்களா? அல்லது ஆதிதிராவிடர்கள் ஏற்படுத்தும்
திட்டமா? அல்லது இந்து மகாசபையார் போடும் திட்டமா? அல்லது மகமதிய
மகாசபையார்கள் ஏற்படுத்தும் திட்டமா? அல்லது கிருஸ்தவ சங்கத்தார்கள்
ஏற்படுத்தும் திட்டமா? அல்லது காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் திட்டமா?
அல்லது அதற்குள் முளைத்த காங்கிரஸ், சுயராஜ்யக்கக்ஷிக்காரர் திட்டமா?
அல்லது காங்கிரசு சுயேச்சைக்ககஷியார் திட்டமா? அல்லது திருவாளர்கள்.
சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், சாப்ரு ஆகிய தனிப் பார்ப்பனர்கள்
தலைமை கொண்ட மிதவாதிகள் சங்கத்தார் திட்டமா? அல்லது திரு.ஜயக்கர்,
திரு. ஜின்னா போன்ற வக்கீல் கொள்ளைக்காரர்கள் தனித்தனியாக ஏற்படுத்
தும் திட்டமா? அல்லது “ஜஸ்டிஸ்” க௯ஷியார் என்பவர்கள் திட்டமா? அல்லது
அதற்குள் முளைத்த ஒழுங்கு முறைக்காரர் திட்டமா? அல்லது சர்வகக்ஷி
31
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
மகாநாடு என்பதாக ஒரு மகாநாட்டைக் கூட்டி அதில் எல்லாக் கட்சி யாருக்
கும் எல்லாக் கூட்டத்தாருக்கும் இடம் இருப்பதாக வேஷம் போட்டு தங்கள்
கூட்டத்தாரைத் தவிர வேறு யாரும் வருவதற்கு இடமில்லாமல் சூழ்ச்சி
செய்து, அதற்கு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவத் தன்மை இருக்கின்றது
என்பதுகூட அம்மகாநாடு கூட்டுபவர்களுக்கும் அம்மகாநாட் டில் கலந்து
கொள்ளுகின்றவர்களுக்கும் கூட தெரியாமல் ஒரு சிலர் ஒன்று கூடி, அதிலும்
ஒரு முடிவுக்கு வராமல் தங்கள் தங்கள் சுய நன்மைக்கோ அல்லது ஒரு சில
வகுப்பு நன்மைக்கோ ஏற்ற விஷயங்களையே பிரதானமாகக் கொண்டு
விடியவிடியப் பேசி, கடைசியில் ஒரு முடிவுக்கு வராமல் அவரவர்கள்.
வந்தவழி திரும்புகின்றதான அந்தத்திட்டமா? அல்லது திருவாளர்கள்
அண்ணாமலை, குப்புசாமி, அமீத்கான், ஆதிநாராயண செட்டியார், குழந்தை,
முத்துரங்கம், வரதராஜலு, ரத்தினசபாபதி, மாரிமுத்து உன்னியார் போன்
றார்கள் மூலை மூலைக்கு ஜஸ்டிஸ் கட்சியையும் மற்றும் பார்ப்பனரல்லாதார்
களையும் வைதுக் கொண்டு பார்ப்பனர்கள் மீதில் கவிபாடிக் கொண்டு
பார்ப்பனர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டு தலையாட்டி
வரும் திட்டமா?
அல்லது சுத்தி இயக்கம், சங்கதன் இயக்கம் ஆகிய இயக்கத்தார்கள்
தனித்தனியே போடும் திட்டமா? இதுபோன்று மற்றுமுள்ள சங்கங்களின்
இயக்கங்களின் திட்டங்களில் எந்த திட்டம் இந்தியாவுக்காக இந்தியப்
பிரதிநிதிகளால் போடப்பட்டு இந்திய மக்கள் பெரும்பகுதியோரால் ஒப்புக்
கொள்ளப்பட்ட திட்டம் என்று ஒன்றை நிர்ணயிக்கக் கூடும் என்பதால் இந்த
பஹிஷ்கார “வீரர்கள்” நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று யாராலும்
சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
இதுபோலவே தஞ்சையிலோ, பர்டோலியிலோ ஒரு கிராமத்தில்
போடப்பட்ட
அதிக வரி என்பதைக் குறித்து வரிகொடாஇயக்கத்தை நடத்தி
அந்த கிராமத்தார் வெற்றி பெற்று வரிகளை குறைத்துக் கொண்டார்கள்.
என்றே வைத்துக் கொண்டாலும் மற்றபடி நாட்டிலுள்ள பூமிகளுக்கெல்லாம்
போடப்பட்ட அல்லது போடப்போகின்ற அதிக வரி என்பது இல்லாமல்
போய்விடுமா என்று கேட்கின்றோம்.
பர்டோலி விஷயம் முடிவு பெற்றால் பர்டோலிக்கு வெற்றி என்று
சொல்லிக் கொள்ளலாம். பக்கத்து ஊர்க்காரருக்கு என்ன லாபம். உதாரண
மாக வைக்கத்தில் நடைப்பாத்திய வெற்றி ஏற்பட்டது என்று நாம் சொல்லிக்
கொள்ள இடம் ஏற்பட்டது என்பதாகவும், அதனால் சிலருக்கு விளம்பரமும்,
பெருமையும், கீர்த்தியும் ஏற்பட்டதாகவும் வைத்துக் கொள்ளலாம். ஆனால்
அவ்வெற்றி வைக்கத்திற்கு அடுத்த ஆலப்பிழை, அம்பலப்பிழை என்பதான
பக்கத்து கிராமங்களுக்குக்கூட பயன்படாமல் வழக்கம்போல் உள்ள கொடு
மைகள் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
குடி அரசு - 1928 @)
32
இதுபோல் இரண்டு வருஷத்திற்கு முன் சட்டசபைகளிலும் பெரிய
வெளியேற்றமும் நடந்தது. அதை ஒரு பெரிய தியாகம் என்றும் கொண்:
டாடப்பட்டது. முடிவில் அதனால் ஏற்பட்ட பலன் என்ன? எனவே இம்
மாதிரியான பகிஷ்காரத்தாலும் சத்தியாக்கிரகத்தாலும் வெளியேற்றத்தாலும்
வரிகொடா இயக்கத்தாலும், மக்களுக்கோ நாட்டிற்கோ ஏற்படும் வெற்றிகள்
எவ்வளவு பெரியதாயிருந்தாலும் அதனால் ஏற்படும் பலன் எவ்வளவு,
நாட்டிற்கும், நாட்டின் ஏழை மக்களுக்கும் எவ்வளவு பயன்படக்கூடியது
என்பதைத்தான் இங்கு கவனிப்பதற்காக இதை எழுதினோம்.
வங்காளத்தில் நிரபராதிகளான தேசபக்தர்களை யாதொரு காரணமும்
சொல்லாமல் சிறையிலடைத்து வைத்திருப்பதற்காக அத்தேச பக்தர்களின்
தேச பக்தியை பாராட்டியாவது அல்லது அவர்களது கஷ்டத்தைப் பற்றி
யாவது இதுவரை எந்த தேசீயமோ தேசபக்தர்களோ காங்கிரசோ யாராவது
கவலை எடுத்து அதற்காக எந்த பகிஷ்காரமோ சத்தியாக்கிரகமோ வரி
மறுப்போ துவக்கினார்களா என்று கேட்கின்றோம்.
சைமன் கமிஷன் நியமனத்தாலும், பர்டோலி மிராசுதாரர்களின்
பூமிக்கு போடப்பட்டதாகச் சொல்லும் அதிக வரியாலும், நமது நாட்டிற்கு
ஏற்பட்டி ருக்கும் அவமானமும் சர்க்கார் ஆணவமும் நஷ்டமும் பெரிதா?
அல்லது வங்காளத்தில் நிரபராதிகளான மேல்கண்ட தேசபக்தர்களை:
நிஷ்காரணமாய் ஜெயிலில் அடைத்து வைத்திருக்கும் விஷயத்தில் நாட்
டிற்கு ஏற்பட்ட அவமானமும் சர்க்காரின் அக்கிரமமும் நஷ்டமும் அத் தேச
பக்தர்கள் படும் கஷ்டமும் பெரிதா? என்று நடுநிலைமை வாய்ந்தவர்களைக்
கேட்கின்றோம்.
இந்த நிலைகளையெல்லாம் நன்றாய் உணர்ந்த வெள்ளை
முதலாளிகளில் ஒரு பகுதியர்களான தென் இந்திய ரெயில்வே கம்பெனிக்
காரர் இதுதான் சமயமென்று ஒரே அடியாய் ஆயிரக்கணக்கான தொழிலாள
மக்களைப் பட்டினி போட்டு கொல்லத் துணிந்துவிட்டார்கள். அதாவது
“தாங்கள் ரயில்வே வேலைக்கு யந்திரசக்திகள் அதிகமாய் ஏற்படுத்திக்
கொண்டோம்; ஆதலால் எங்களுக்குக் கையால் வேலை செய்யும் ஆட்கள்.
5000 பேர்கள் வரையில் தேவை இல்லை” மற்றும் ஏதேதோ சாக்குகளைச்
சொல்லி கூலிகளைக் குறைக்கவும் இந்திய தொழிலாளர்களை நீக்கி விட்டு
ஒன்றுக்கு நான்காய் கூலி கொடுத்து வெள்ளைக்கார ஆட்களை சீமையில்
இருந்து தருவித்து வைத்துக் கொள்ளவுமான ஏற்பாடுகள் செய்து கொண்டு.
இதை அமுலில் கொண்டு வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தக் கஷ்டத்
திலிருந்து நீங்க நம் தொழிலாள சகோதரர்கள் மேல்படி தென்னிந்திய ரயில்
வே அதிகாரிகளை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள். தேசீயத் தலைவர்.
களிடமும் பொது ஜனங்களிடமும் எவ்வளவோ முறையிட்டுப் பார்த்தார்கள்;
சட்டசபை அங்கத்தினர்களிடமும் சர்க்கார் அதிகாரிகளிடமும் குறை இரந்து
32
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பார்த்தார்கள்; ஒருவர் மூலமாகவாவது ஒரு பரிகாரமும் கிடைக்கவில்லை,
கடைசியாக சாத்வீகமான சத்தியாக்கிரகத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
இதன் பலனாய் ரயில்வேகாரர்கள் பதினான்காயிரம் பேர்களை
வெளியில் தள்ளி தொழிற்சாலையை அடைத்து விட்டார்கள் என்று சமாச்
சாரம் தெரிய வருகின்றது. ஐயோ இந்திய நாடே! சென்னை மாகாணமே!
உனது ஜீவாதாரமான அருமைச் சேய்கள் பதினாலாயிரம் பேர்கள் அதாவது
அவர்கள் குடும்ப அங்கத்தினர்களையும் கணக்கில் சேர்த்தால் ஐம்பதினா
யிரத்துக்கு மேல்பட்ட மக்கள் இம்மாதிரி வதைக்கப்படுகின்றார்களே!
இதற்காக நீ என்ன செய்யப்போகின்றாய்? இவ்விஷயத்தில் உனக்கு ஈவு
இரக்கம் என்பது ஒரு சிறிதும் இல்லையா? என்று கேட்கின்றோம். மலை
இருக்கின்றது; ஆறு இருக்கின்றது; வயல் இருக்கின்றது; தோட்டம் இருக்
கின்றது. துரவு இருக்கின்றது. தங்கம் விளைகின்றது என்று பெருமை பேசிக்
கொள்ளுகின்றாய். நான் வீரர்களைப் பெற்றவளாக்கும், சூரர்களைப் பெற்றவ
ளாக்கும் என்று பெருமை பேசிக் கொள்ளுகின்றாய். இப்பதினாலாயிரம்
மக்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் சேர்ந்து சுமார் 50000 பேர்.
களின் இந்த ஆபத்தான நிலைமைக்கு நீ என்ன பரிகாரம் செய்யப் போகின்
றாய்? அன்றியும் அவர்கள் தங்களது குறைகளைச் சொல்லி முறையிட்டுக்
கொள்ள ஒவ்வொரு ஊர்கள் தோறும் வரப்போகின்றார்கள். அங்குள்ள
பெரியார்களும் சுயமரியாதை மக்களும் அச்சகோதரர்களில் ஒவ்வொரு
வரையும் அன்புடன் வரவேற்று அவர்கள் குறைகளை பொறுமையாய்க்
கேட்டு அவர்கள் எதிர்பார்க்கும் உதவியைச் செய்து அவர்களுக்கு உங்கள்
ஆதரவு இருப்பதாக ரயில்வேகாரர்கள் உணரும்படி செய்ய வேண்டியது
உங்கள் கடமை என்பதை நாம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.
ஏழைத்தொழிலாளர்களே! நீங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டிய
தில்லை; உங்களது சகோதரர்கள் நீங்கள் செல்லுமிடங்களில் உங்களுக்கு
ஆதரவளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கின்றோம். ஆனால் நீங்கள் மாத்திரம்
இந்த நெருக்கடியான நிலைமையை பொறுமையுடனும் அஹிம்சையுடனும்
புத்திசாலித்தனத்தோடும் சமாளியுங்கள் என்று உங்களை வேண்டிக்
கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.07.1928
குடி அரசு - 1928 (3)
34
திரு. முதலியார் அவர்கனிண் “முடங்கல்”
திரு. வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களின் பெயரை தலையாகக்
கொண்ட விஷயம் “குடி அரசில்” தலையங்கமாக வராமல் இப்போது
உபதலையங்கமாக வருவதினாலேயே திரு. முதலியார் தலையங்கத்திற்கு
அருகர் அல்லாமல் போய்விட்டாரோ என்னமோ என்பதாக யாரும்
கருதிவிடக் கூடாது என்பதாக முதலில் வாசகர்களுக்கு தெரிவித்துக்
கொண்டு சில வாக்கியங்களுடன் நாமும் இக்கிளையை முடிக்கின்றோம்..
திரு. முதலியார் அவர்கள் 27.6.28 ௨“நவசக்தி” தலையங்கத்தில்
“தொடர் முடங்கல்” என்னும் தலைப்புக் கொடுத்து நமக்கு ஒரு பகிரங்கக்
கடிதம் எழுதியிருக்கிறார். அதில் 24.628 ௨“குடி அரசில்” அவ்விஷயத்தை
தற்கால சாந்தியாக நாம் நிறுத்தி வைக்கின்றோம்” என்றும், “திரு. முதலியார்.
அவர்களோடு போர் தொடுக்க கவலை கொள்ளவில்லை” என்றும் கண்டி.
ருக்கும் வாக்கியங்களை எடுத்துக்காட்டி அதை ஆதாரமாகக் கொண்டு அதற்
காகத் தாமும் போர் தொடுக்க வரவில்லை என்று எழுதியிருக்கிறார்.
அவைகள் எந்த வாக்கியங்களோடு இணைக்கப்பட்டது என்பதை எடுத்துக்
காட்டி திரு. முதலியார் வாசகர்களுக்கு நியாயம் செலுத்தாமல் போய்விட்டார்.
ஆயினும் நாம் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் திரு. முதலியார் அவர்கள்.
அவ்விரு வாக்கியங்களையும் ஒப்புக் கொண்டு முடங்கலுக்கு முந்தி
நேர்ந்ததான அரிய நன்மைக்காக நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இதை மாத்திரம் தயவு செய்து வாசகர்கள் சற்று கவனமாய்ப் படித்து
மனதில் பதிய வைக்க வேண்டுகின்றோம்.
அதாவது, முதலாவது வாக்கியத்தில் முன் தொடர்பு திரு. முதலியார்.
அவர்கள் “சீர்திருத்தக் கட்டுரையைப் பற்றியது.
அதைப்பற்றி ருஜுக்களை காட்டிவிட்டு “அவ்விஷயத்தை தற்கால
சாந்தியாக நிறுத்தி வைக்கின்றோம்.” என்று எழுதினோம். அவற்றில்
சிலவற்றை திரு. முதலியார் அவர்கள் மறுத்துவிட்டு சிலவற்றை விட்டு
விட்டார்கள். இனி அம்மறுப்புக்கு மறுப்பு எழுதுவதால் நாம் திரு. முதலியார்
அவர்களின் “முடங்கலை” ஒப்புக் கொள்ளாதவராவோம் ஆனதாலும்,
அன்றியும் அவ்விஷயம் என்றைக்கும் கிளம்பக் கூடியதானதாலும், இன்றே
35
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
மறுப்பு வேண்டும் என்கின்ற அவசியத்தில் பட்டதுமல்லவாதலாலும், தற்கால
சாந்தியாக நிறுத்தி வைப்பதில் குற்றம் ஒன்றும் இல்லை.
மற்றபடி எஞ்சிய இரண்டாவது வாக்கியந்தான் மிக முக்கியமானது.
அதாவது, “நாம் திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்கக்
கவலை கொள்ளவில்லை” என்கின்ற வாக்கியத்தின் முன் தொடர்பு.
“எனவே திரு முதலியார் அவர்கள் இயற்கைத் தோற்றம்தான்
கடவுள் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது பற்றியும்,
புராணங்கள் குப்பைகள் என்று எழுதியது பற்றியும்,
அவைகள் (புராணங்கள்) ஆரியர்களால் புகுத்தப்பட்டன
என்று எழுதியதைப் பற்றியும்,
அவைகள் சமய வெறியர்கள் பலரால் பாடப்பட்டவை என்று
எழுதியது பற்றியும்,
அவைகளால் உலகில் மக்கள் ஒழுக்கங்களுக்கு கேடு சூழ்ந்
தது என்று எழுதியது பற்றியும்,
நாம் திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்க கவலை
கொள்ளவில்லை என்பதை திரு. முதலியார் அவர்களுக்கு வணக்க
மாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.”
என்று எழுதியிருந்தோம். ஆதலால் திரு. முதலியாரவர்கள் இவற்றை
அப்படியே ஒப்புக் கொண்டதானது நமக்கு எவ்வளவோ விடுதலையைக்
கொடுத்திருக்கின்றது. இவை இதற்கு முன் பல தடவை பல இடங்களில் திரு.
முதலியாரவர்கள் சொல்லாலும் எழுத்தாலும் இகழ்ந்திருந்தாலும் நாம்
“கடவுளை நிந்தனை செய்ததற்கு” ஆகவே நம்முடன் “அறப்போர்
தொடுக்க”க் கிளம்பிய பெரியார் “இயற்கைத் தோற்றங்கள்”
தான் கடவுள்
என்று ஒப்புக் கொண்டாரானால் அது நமது கருத்துக்கு நன்மையா அல்லவா
என்பதை யோசித்தால் நம் கருத்துக் கொண்டவர்கள் பெரும் மகிழ்ச்சிய
டையாமல் இருக்க முடியாது.
நிற்க! புராண விஷயங்களைப்பற்றி பெரிய புராணம் ஒன்று தவிர மற்ற
புராணங்களையெல்லாம் ஒரே அடியாய் குப்பை என்றும், ஆரியர்களால்
புகுத்தப்பட்டு மத வெறியர்களால் பாடப்பட்டு மக்கள் ஒழுக்கங்களுக்கு
கேடு சூழ்வதாக இருக்கின்றது என்று ஒப்புக் கொண்டதும் நமக்குப் பெரும்
வெற்றியா அல்லவா என்பதை வாசகர்களே உணர்ந்து பார்க்கட்டும்.
குடி அரசு - 1928 @)
36
இவ்வளவும் அல்லாமல், இதுவரை பல இடங்களிலிருந்தும் பல
ஆராய்ச்சிக்காரர், பண்டிதர்கள் என்போர்களிடமிருந்தும் கிடைத்த
வெற்றிகளையெல்லாம் விட பெரும் வெற்றி என்னவென்றால், அதுதான்
பெரிய புராணத்தைப் பற்றியது. திரு. முதலியாரவர்களை பெரிய புராணத்
தைப்பற்றி நாம் எழுதிக் கேட்டிருந்த பல வினாக்களுக்கு - அதாவது பெரிய
புராணம் என்பது,
“இயற்கைக் கடவுளால்” அனுப்பப்பட்டதா? “இயற்கைக் கடவுளின்
திருவிளையாடல்களை உணர்த்துகின்றதா? “இயற்கைக் கடவுளை”
உணர்த்துகின்ற “செயற்கைக் கடவுளை” உணர்த்துகின்றதா? அது வான சாஸ்
திரமா? விஞ்ஞான சாஸ்திரமா? உடல் கூறு சாஸ்திரமா? உலகக் கூறு சாஸ்தி
ரமா? “வேதாந்த” சாஸ்திரமா? “சித்தாந்த” சாஸ்திரமா? தேச சரித்திரமா?
“தெய்வ” சரித்திரமா? “இகத்திற்கு”” சாதனமா? “பரத்திற்கு'” சாதனமா?
“கற்புக்கு” வழியா? களவுக்கு வழியா? அரசியலா? மத இயலா? “கடவுள்”
தன்மைக்கு நெறியா? மனிதத் தன்மைக்கு நெறியா? முடிவாக அதிலுள்ள
தெல்லாம் உண்மைதானா? அன்றி அது ஒரு சமயத்தாரால் மக்களின்
நன்மைக்கென்று கற்பிக்கப்பட்ட கற்பனைக் கதையா அல்லவா? அதை
எல்லோரும் ஒப்புக் கொண்டே தீர வேண்டுமா? ஒப்புக் கொள்ளாத வர்கள்
காரணம் கூட காட்டக் கூடாதா?
எனப் பல கேள்விகளுக்கு திரு. முதலியார் அவர்களை சமாதானம்
கேட்டிருந்ததில் அவைகளுக்கு ஒரே பதிலாக,
“பெரிய புராணத்தின் உள்ளுறையை, இதுவரை கிடைத்துள்ள
கல்வெட்டுக்கள், அகச்சான்றுகள், நமது நாட்டைப் பற்றி இங்கு
வந்துள்ளவர்கள் எழுதி வைத்த குறிப்புகள், சில புறச்சான்றுகள்,
சரித்திரப் பொருள்கள், கால நிலை முதலியவற்றிற்கு அரண் செய்யும்
அளவுக்குக் கொள்ளலாம்.”
என்று தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கு ஆதாரமாகப் பெரியார்கள் சுந்தரம் பிள்ளை. சீனிவாச
பிள்ளை, சுவாமி வேதாசலம் முதலியோர்கள் நூல்களையும் ஆய்ந்து
பார்க்கும்படி கட்டளையிட்டிருக்கின்றார்.
புராணப் பிடுங்கல்களுடையவும் அழுக்கு மூட்டைகளுடையவும்
தொல்லைகளிலிருந்து விடுதலை பெற இது ஒருவாறான ஆதாரம் என்பதே
நமது அபிப்பிராயம்.
இப்பெரியார்களை அறிஞர்களாகக் கொண்ட எவரும், இனி அவ்வ
37
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ளவு சுலபமாக நம்மீது “புராணங்களைக் குற்றம் சொன்னான்” “கடவுளை
வைதான்” “நாயன்மார்களின் கதையைப்பற்றி வாதம் நிகழ்த்துகின்றான்”
என்று பழிசுமத்தி இதனால் “சமயம் போச்சு! நாயன்மார்களுக்கு ஏச்சு
| கடவு
ர்களுக்கு ஆபத்து!” என்று ஆத்திரப் படமாட்டார்கள் என்றும் அப்படி
ஆத்திரப்படுபவர்கள் முதலில் நம் திரு. முதலியார் அவர்கள் மீது பாய்ந்து
விட்டுத்தான் பிறகு நம்மீது பாய வருவார்கள் என்றுமே நினைத்து மகிழ்ச்சி
அடைகின்றோம்.
இந்நிலையில், வாதசபை ஒன்றும் வேண்டியதில்லை என்றும் தானாக
வந்தால், வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றோம்.
இறுதியில் “அன்பு முறையில் ஒருவரை ஒருவர் போர் புரிந்து திருந்த
முயலவேண்டும்; பிடிவாதம் பெரும் பேய்” என்று எழுதியிருக்கிறார்.
ஒழுங்கு முறைப் போருக்கு அன்பு முறைப் போரே புரிவது நமது
கடன். சூழ்ச்சி முறைப் போருக்கு “பிடிவாதப் பேய்” ஆட்டம் ஆடுவதே
நமது குணம். நம்மைச் சிற்றினம் என்று கருதவில்லை என்று சொல்லுவதை
நாம் ஏற்றுக்கொள்வதில் ஏதும் நஷ்டம் இருப்பதாய்த் தோன்றவில்லை.
ஏதாவது ஒரு வசைமொழியை சொன்னவர்கள். சொல்லிவிட்டு இல்லை
என்று சொல்வார்களானால், சொல்லப்பட்டவர்களுக்கு அது ஒரு வெற்றி
யாகும் என்பது ஒரு வழக்கு. அம்முறையில் திரு. முதலியார் அவர்கள்
சொல்லி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதைப்பற்றிய கவலையை
விட்டுவிட்டோம். அப்படி விட்டு விடுவதால் நமக்கு ஒன்றும் குறைந்து போ
காது. ஏனென்றால், திரு. முதலியார் அவர்களாலேயே இனியும் இம்மாதிரி
எத்தனையோ தடவை கேட்கக் காத்திருக்கின்றோம்.
அப்படி திரு. முதலியார் இனியும் இம்மாதிரி சொல்லாவிட்டாலும்
இன்னும் எத்தனையோ பேர் இப்படியும் இன்னும் கேவலமாகவும் நம்மைச்
சொல்லக் காத்திருக்கின்றார்கள் என்கின்ற உறுதி நமக்குண்டு. என்னவெனில்,
நமது தொண்டானது அவ்வளவு உரம் பெற்றதும் வசை மொழி கிடைப்பதா
லேயே அது பலன் பெற வேண்டி இருப்பதால் நமக்கு வசைமொழி இல்
லையே என்றும், அதைப்பற்றிக் கொண்டு நமது கருத்தை தாராளமாய்
வெளியிட்டு வெற்றி பெற சந்தர்ப்பங்கள் இல்லையே என்றும் இப்போது நாம்
கவலைப்படவில்லை.
முடிவாக நமது நலன் கருதி திருவருளை வழுத்துவதாக எழுதி
அக்கட்டுரையை முடித்திருப்பதற்கு நாம் நன்றி அறிதலை காட்ட கடமைப்
பட்டுள்ளோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.07.1928
குடி அரசு - 1928 @)
38
மறுபமுமயும் பஹிஷ்காறக் கூச்சல்
சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பதாக மறுபடியும் கூச்சல் போட
கிளம்பிவிட்டார்கள். இக்கூச்சலின் உள்கருத்து அடுத்து வரப்போகும்
சட்டசபைத் தேர்தலில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழிதேடவேயாகும்.
இதற்காகவே இச்சூழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என்றும்.
அதற்காகவே பார்ப்பனர் அல்லாதாரிலும் சில தேசீய வயிற்றுப் பிழைப்பு
ஆசாமிகளையும் கஞ்சிக்கு வேறுவழியில் பிழைக்க வகையில்லாத ஆசாமி
களையும் பிடித்து கூலி கொடுத்து சைமன் பகிஷ்காரம் என்னும் பேரால்
பார்ப்பனக்ககஷி ஆதிக்கப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதார் கக்ஷிகளை வைது
அதன் முற்போக்குக்கு இடையூறான பிரசாரமும் நடத்த பார்ப்பனர் கள்:
ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி
சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கும் ஒரு வகுப்பாரின்
சுயநலம் என்பதற்கும் பல ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி வந்தோம்.
அவைகளில் ஒன்றுக்காவது எந்த “தேசீயவாதி”யாவது “தேசீய
பத்திரிகையையாவது அல்லது பார்ப்பனர்களின் தேசீயவாதியாவது, தேசீய
பத்திரிகையாவது இதுவரை பதிலுரைத்தவர்கள்
அல்ல. நமது கேள்விகளை
மூடி வைத்துக் கொண்டு பாமர மக்களின் மூடத்தனத்தை தங்களுக்கு ஆதர
வாய் வைத்துக் கொண்டு தங்களால் கூடுமானவரை சூழ்ச்சிப் பிரசாரம் செய்த
வண்ணமாகவே இருந்தார்கள். இச்சுயநலக்கூட்டத்தாரும் வயிறு வளர்ப்புக்
கூட்டத்தாரும் எவ்வளவு சூழ்ச்சிப் பிரசாரம் செய்தும், எவ்வளவு போலி
தேசீய வேஷம் போட்டும். இவர்களது நம்பிக்கைக்கு விரோதமாய்
இப்போலிகளின் பிரசாரத்தால் தாங்கள் ஏமாறவில்லை என்பதைக் காட்டவும்,
போலிகளுக்கு இனி நாட்டில் இடம் கொடுக்க மாட்டோம் என்று முடிவு
செய்ததைக் காட்டவும் பாமர மக்கள் அர்ட்டால் தினத்தை நன்றாய்
உபயோகித்துக் கொண்டு தக்கபடி புத்தி கற்பித்து விட்டார்கள். அதன்
பலனாகவே மறுபடியும் அர்ட்டால் என்கின்ற பேச்சுகூட பேச முடியாமல்
செய்து விட்டார்கள். ஒன்றிரண்டு மாதம் வரை கூட்டம் போட்டுப் பேசவும்
யோக்கியதை இல்லாமல் செய்ததோடு இப்போலி தேசீய வாதிகள் தாங்களே
“நாங்கள் அர்ட்டால் செய்யப் போவதில்லை” என்று சர்க்காருக்குத்
தெரிவிக்கும்படியான நிலைமையில் வைத்து விட்டார்கள். சர்க்கார் இனி
அர்ட்டால் செய்யக்கூடாது என்று போட்ட 144-ஆம் தடை உத்திரவையும்
வாங்கிப் பூஜை வீட்டில் வைத்து அதற்கு கீழ்ப்படிந்து பூஜை செய்து
39
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கொண்டிருக்கும்படியான நிலைமைக்கும் வந்துவிட்டார்கள்.
அன்றியும் இந்தியா முழுவதும் பகிஷ்காரத்தில் இருக்கின்றது
என்றும், வெற்றி மேல் வெற்றி என்றும் கத்திக் கொண்டிருந்ததும் மறைந்து
போய், அவர்கள் மாறிவிட்டார்கள்! இவர்கள் மாறிவிட்டார்கள்! அந்த
மாகாண சட்டசபை ஒத்துழைக்கப் போகின்றது! இந்த மாகாண சட்டசபை
ஒத்துழைக்கப் போகின்றது! இனி என்ன செய்வது! என்று கூடி ஒப்பாரி
வைத்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலையில் பகிஷ்காரப் போலிகளினுடையவும் கூலிகளி
னுடையவும் உண்மை வேஷம் வெளிப்பட்டுவிட்டது.
அதாவது, திருவாளர்கள் ஒ. கந்தசாமி செட்டியார், குழந்தை,
அண்ணாமலை, நைனியப்பர், பஷீர் அகமது, அமீத்கான், இரத்தினசபாபதி
முதலியோர்கள் திக்கு விஜயம் செய்ய தமிழ் நாட்டிற்குள் பிரசாரத்திற்கு
அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகைகளையும் கூப்பாடு போட உசுப்
படுத்தி விட்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் வேலைகளை கவனித்துப்
பார்த்து வருபவர்களுக்கு இவர்களின் வேஷம் விளங்காமல் போகாது.
அதாவது, பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சித் தலைவர்களையும்
காரணமில்லாமல் இழிதுறைகளில் வைதுகுரைப்பதும், அவர்களுக்கு அடுத்த
தேர்தலில் ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனக்
கூலிகளுக்கும் அடிமைகளுக்கும் ஓட்டுக் கொடுங்கள் என்றும் எழுதுவதும்
கூப்பாடு போடுவதுமான கூலிக்கு மாரடித்து வரும் காரியங்களாலும்,
எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு தொண்டை கிழிய கத்தினாலும்,
அதை
நம்பி ஏமாந்து போகும் காலமே மலையேறிப் போய்விட்டதால் சென்றவிட
மெல்லாம் தக்க மரியாதை கற்பிக்கப்பட்டும். கூட்டம் கலைக்கப்பட்டும்
கூலிகள் ஓட்டப்பட்டும் நடந்து வரும் காரியங்களாலும் நன்கு உணரலாம்.
நிற்க, பகிஷ்கார விஷயத்தில் பார்ப்பனர்கள் கூலிகொடுத்து பார்ப்
பனரல்லாதாரிடையில் மாத்திரம் பகிஷ்காரப்பிரசாரம் செய்யச் செய்திருக்
கிறார்களே ஒழிய தங்கள் சமூகத்தைப் பொறுத்தவரை பகிஷ்காரத்திற்கு
விரோதமாகவே பிரசாரம் செய்து ஜாக்கிரதையாய் இருக்கின்றார்கள்.
அதாவது,
பார்ப்பன சபையும் வர்ணாசிரம பார்ப்பன சபையும் சைமன்
கமிஷனை பகிஷ்கரிக்கக் கூடாது என்று சொன்னதோடு கமிஷனில் சாட்சி
சொல்லவும் ஒத்துழைக்கவும் தீர்மானங்கள் செய்தும் யாதாஸ்த்து தயார்.
செய்தும் அனுப்பிவிட்டன. திருவாளர்கள் எம்.கே. ஆச்சாரியார், சத்திய
மூர்த்தி சாஸ்திரியார் போன்ற “பிரபல தேசீய வாதிகள்” எல்லோரும் அதில்
அங்கத்தினர்களாகவும் தலைவர்களாகவும் தான் இருந்து வருகின்ற
குடி அரசு - 1928 @)
40
சபைகளாகவே அவைகள் இருக்கின்றன.
தவிர “முதல் வகுப்புத் தேசியத் தலைவர்களான” திருவாளர்கள்
விஜயராகவாச்சாரியார், ஸ்ரீனிவாசய்யங்கார், ௭. ரங்கசாமி அய்யங்கார்
முதலியோர்களும் தங்கள் யாதாஸ்த்தை தனியாக அச்சுப்போட்டு சைமன்
கமிஷனுக்குப் போய் சேரும்படி செய்தாய் விட்டது. அவைகள் கடை
களிலும் விற்க ஏற்பாடு செய்தாய் விட்டது. திருமதி பெசண்டம்மையார்
கூட்டமும் தங்களது யாதாஸ்தை பகிரங்கமாகவே ஒப்படைத்தாகி விட்டது.
இனி பகிஷ்காரம் செய்திருக்கின்றவர்கள் யார் என்று பார்ப்போ
மானால் மேல்கண்ட கூலிப்பிரசாரக் கூட்டத்தைத் தவிர வேறில்லை என்பது
புலனாகும்.அவர்களும்,யார் பகிஷ்காரம் செய்யாததற்காக வைகின்றார்கள்
என்று பார்ப்போமானால், பார்ப்பனரல்லாதார் கட்சியார்களை மாத்திரந்தான்
என்பது வெளியாகும். எனவே, இவ்வித கூலிபகிஷ்காரக் கூச்சலுக்கு இடம்
கொடுக்காமலும் அதைக் கண்டு பயந்து விடாமலும் இருக்கும்படி பார்ப்பன
ரல்லாத மக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.07.1928
41
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தொழிலானணர்
தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் குறைகளை எடுத்துச்
சொல்லவும், அதை நிவர்த்திக்கத் தாங்கள் கொண்டுள்ள முறைகளுக்கு
ஆதரவு தேடவும், ஊர் ஊராய் பிரசாரம் செய்து வருகின்ற விஷயம் யாவரும்
அறிந்ததே.இம்முயற்சிக்கு ஆங்காங்குள்ள
பொது மக்கள் ஆதரவு கொடுக்க
வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறோம். தாடியில் நெருப்பு பற்றி
எரிகின்றபோது ஒருவன் அதில் சுருட்டைப் பற்றவைக்க கொஞ்சம் நெருப்புக்
கேட்டதுபோல், நாட்டின் ஜீவனாடியாகிய தொழிலாள மக்கள் இம்மாதிரி
வேதனைப்பட்டு அலையும்போது சைமன் கமிஷன் பிரசாரமும் பர்டோலி
சத்தியாக்கிரகத்திற்குப் பணம் தண்டலும் வெகு மும்முரமாய் நடந்து
வருவதிலிருந்து நாட்டின் ஏழை மக்களிடத்தில் “தேசீய” இயக்கங்களுக்கோ
“தேசீய தலைவர்கள் என்போர்களுக்கோ எவ்வளவு கவலை இருக்கின்றது
என்பதும் அவைகளால் நாட்டிற்கு எவ்வளவு பலன் ஏற்படும் என்பதும்
தானாகவே விளங்குகின்றது. இனியாவது பொது மக்கள் இம்மாதிரி
போலியும் அவசியமில்லாததுமான காரியங்களில் போலித்தலைவர்களை:
நம்பி மோசம் போகாமல் முக்கியமான காரியங்களில் கவனம் செலுத்த
வேண்டுமாய் வேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.07.1928.
குடி அரசு
- 1928 (2).
42
இன்னும் ஒரு லோககரு அவதாரம்
நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்காக அவதரித்த லோக
குருக்கள் அநேகர் என்பது யாவரும் அறிந்த விஷயம்.அவர்களால் ஏற்பட்டி
ருக்கும் தொல்லைகளும் நமது சுயமரியாதைக்கு இடையூறுகளும் நமது
சீர்திருத்தத்திற்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைகளும் இவ்வளவு
அவ்வளவு என்று சொல்லி முடியாது. இவ்வளவும் போதாமல் திருமதி
பெசண்டம்மையார் அவர்களால் சுமார் 20, 30 வருஷங்களாக “லோககுரு
வருகிறார்! லோக மாதா வருகின்றார்!” என்பதாக கூப்பாடு போடப்பட்டு
வந்து, அநேக டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பி.எ., எம்.ஏ., பட்டம் பெற்
றவர்கள் முதல் நம்பச்செய்து இரவும் பகலும் எதிர்பார்த்து திடீரென்று சீமை
யில் திரு. கிருஷ்ணமுர்த்தி என்ற வாலிபர் லோககுருவாகவும் திருமதி
அருண்டேல் ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு அம்மையார் லோக மாதா
வாகவும் அவதாரம் செய்து உலகோர்கள் ஒப்புக்கொண்டதாகவும் ஏற்பாடு
செய்யப் பட்டு ஒரு பக்கத்தில்
* உலகாகஷிப்பு” நடந்து வருகின்றது.
இவ்வளவும் போதாமல் நமது திரு.திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்
அவர்கள் தமது தவத்தால் இன்னும் ஒரு லோககுரு அவதாரம் செய்யப்
போவதாய் திருநெல்வேலியில் 8-7-28 தேதி வெளியாக்கி விளம்பரப்
படுத்தியிருக்கின்றார். ஆனால் அந்த லோககுரு அவதாரம் செய்யப்
போவதற்கு அப்போது அவர் சொன்ன காரணம்தான் மிக வெட்கக்கேடானது
என்று சொல்லுவோம். என்னவென்றால் மக்களுக்கு கடவுள் எண்ணம்
மறைந்துபோன காலத்தில், கடவுள் அவ்வெண்ணத்தை உண்டாக்க
அவதாரம் செய்வது எப்போதும் வழக்கமாம்.அதுபோலத்தான் முன்பு ஒரு
காலத்தில் சமணர்களால் கடவுள் எண்ணம் மக்களுக்குள் மறைபட்டிருந்த
காலத்தில் திருஞானசம்மந்தர் என்கின்ற பார்ப்பனர் தோன்றி, தனது
மூன்றாவது வயதிலேயே சமணர்களை வென்று, அவர்கள் தத்துவங்களை
அழித்து, கடவுள் பெருமையைக் காட்டி, மக்களை மோக்ஷமடையும்படி
செய்தாராம். “அதுபோலவே இப்போது.......... என்பவரால் மக்களுக்குள்
கடவுள் எண்ணம் மறைபட்டு வருவதால் அதை ஒழித்து அவனை வாதில்
வென்று மக்களுக்கு கடவுள் எண்ணத்தை ஊட்டி மோட்சம் கொடுக்க ஒரு
லோககுரு அவதரிக்கப்போகின்றார்; அவர் தயாராயிருக்கின்றார்; எல்லோ
ரும் தவம் கிடங்கள்” என்று பேசியிருக்கின்றார். அந்த லோககுரு இனிமேல்
43
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பிறக்கப் போகின்றாரோ அல்லது திரு. கிருஷ்ணமூர்த்தி லோககுரு ஆய்
விட்டது போல் நமது திரு.திரு.வி.கல்யாணசுந்தரரே லோககுரு ஆய்விடு
வாரோ அல்லது நமது சுந்தரராலேயே யாராவது காட்டப்படுவாரோ அறி
கிலோம்.
பத்து அவதாரங்களும், பன்னிரண்டு ஆழ்வார்களும், நான்கு சமயக்
குரவர்களும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் அவதரித்து வெகுகாலமாக
யாரும் அவதரிக்கவே இல்லை என்பது யாவரும் அறிந்ததே. இதற்குக்
காரணம் உலகம் க்ஷேமமாய் நீதியாய் சத்தியமாய் நடந்து வந்தாலோ
அல்லது யாராவது 144 போட்டு தடுத்து விட்டதாலோ என்பது நமக்கு விளங்க.
வில்லை. ஆகிலும் நமது முதலியார் அவர்கள் தவத்தால் இப்போதாவது
கடவுளை உணர்த்த ஒரு அவதாரம் வரப்போவதைக் கேட்டு
மிகவும்
மகிழ்ச்சி எய்து கிறோம். ஆனாலும் நமக்கு இதில் ஒரே ஒரு சந்தேகம்
தோன்றுகின்றது. அதாவது கடவுள் உணர்ச்சி மறைந்த மக்களுக்கு ஒருசமயம்
கடவுள் ஒரு அவதாரம் அனுப்பித் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை
விட கடவுள் தானாகவே மக்கள் மனதில் வெளிப்படும்படி செய்து கொள்ள
முடியாதா என்பதுதான். இதற்கு ஒரு கதை உண்டு. அதாவது ஒரு ஊரில் ஒரு
பிள்ளையார் கோயில் இருந்தது. அந்தக் கோயிலின் மேடையில் ஒரு
ராமசாமி பிள்ளையாருக்கு நேரே காலை நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தான்.
இதைப் பார்த்து பிள்ளையாருக்கு மிகவும் அவமானம் ஏற்பட்டுத் தன்னை
வெகு பக்தியுடன் பூசை செய்யும் ஒரு கல்யாணசுந்தரக் குருக்களைக் கூப்
பிட்டு “ஓ குருக்களே! இந்த ராமசாமியை காலை எடுத்து அப்புறம் வைத்துக்
கொள்ளச் சொல்லுகின்றாயா? அல்லது உன் கண்ணை பொட்டை ஆக்
கட்டுமா” என்று கேட்டதாம். அந்தக் குருக்கள் பிள்ளையாரைப் பார்த்து
“என் கண்ணைப் பொட்டையாக்க சக்தியுள்ள பிள்ளையாரே! அவன் காலை
முடமாக்காவிட்டாலும் சற்று மடக்கச் சொல்லக்கூடாதா” என்று கேட்க ஞான
மில்லாமல் ராமசாமியின் காலை எடுக்கும்படி தவம் செய்தாராம். அதுபோல்
இருக்கின்றது நமது திரு.முதலியார் அவர்கள் வெளிப்படுத்தும் அவதார
மகிமை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.07.1928
குடி அரசு
- 1928 (2)
44
நாடர் மகாநா௫
அருப்புக்கோட்டையில் நாடார் சமூக மகாநாடு சென்ற வாரம் 4,58
தேதிகளில் மிகவும் விமரிசையாக நடந்தேறிய விவரங்களை மற்ற பக்கத்தில்
பிரகரிக்கப்பட்டிருக்கும் விஷயங்களிலிருந்து அறியலாம்.
சமூக மகாநாட்டை திறந்து வைத்த டாக்டர். சுப்பராயன் அவர்கள்.
வகுப்பு மகாநாடுகளின் அவசியம் என்றது பற்றியும் ஒவ்வொரு வகுப்பும்
முன்னேறினால்தான் நாடு விடுதலை அடையமுடியும் என்றது பற்றியும் இந்த
விஷயங்களை வெற்றி பெற தன்னால் கூடியதை செய்யக் காத்திருப்
பதாக வாக்களித்ததைப் பற்றியும் நாம் மிகுதியும் பாராட்டுகின்றோம்.
மகாநாட்டு அக்கிராசனர் திரு. கனகசபை நாடார் அவர்கள் தமது
அக்கிராசனப் பிரசங்கத்தில் குறித்துள்ள பல விஷயங்கள் பொன்னே போல்
போற்றத் தக்கன.
“நாம் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றிருந்தும், நமது யோக்கி
யதைக்கு தகுந்த கவுரவம் நமக்கு அளிக்கவில்லை; பகிரங்கமாய் அவர்கள்
(பிற வகுப்பார்கள்) கூறிவரும் கொள்கைகள் யாவையாயிருப்பினும் சரி,
பொதுக்கூட்டங்கள் மூலமாயும் பத்திரிகை மூலமாகவும் அவர்கள் கூறும்
செய்திகள் எவையாயிருப்பினும் சரி, காரியத்தில் மாத்திரம் ஒவ்வொரு
வகுப்பினரும் தாங்கள் விட்டுக் கொடுக்காது வெகு ஜாக்கிரதையாக
இருக்கின்றார்கள்”.
“ஒரு சிறுபான்மையோர் தாங்கள் ஏதோ மேற்குலத்தவர் என்பதை
ஆதாரமாகக் கொண்டு எல்லா உரிமைகளையும் கவர்ந்து லக்ஷக்
கணக்கான மற்றையோரைத் தாழ்மையாக நடத்தி அவர்களை விரோதங்
கொள்வது முறையா? இது நியாயமா? தேசத்தின் பொதுநலத்திற்கு இது
சாதகமாகுமா?”
“இந்தியர்களுக்கு நெட்டாலிலும் கேப் காலனியிலும் நடக்கும்
கொடுமைகளை நாம் வெகுவாகக் கண்டிக்கின்றோம். ஆனால் நாமோ
இவைகளிலும் மேம்பட்ட குற்றம் செய்கின்றோம் என்பதை மறக்கவோ,
அல்லது அசட்டை செய்யவோ செய்கிறோம்”.
45
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
“இந்தியர்களுக்குச் சமத்துவம் அளிக்கப்படவில்லை என்றும்,
முழுதும் ஆங்கிலேயர் நிறைந்த ஒரு கமிஷன் அனுப்பப்பட்டிருப்பது
இந்தியாவை அவமதித்ததாகுமென்றும், ஆகையால் அந்த கமிஷனை
பகிஷ்காரம் செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் செய்யும் நம் தேசத்தாரில்
சிலர் தங்கள் சகோதரர்களுக்கே சமத்துவம் இல்லையென்று மறுப்பது என்ன
விந்தை? நமக்குள்ளிருக்கும் பல ஜனசமூக வித்தியாசங்களையும் வேற்
றுமைகளையும் களைந்தெறிந்தாலல்லாமல் நமது தேசத்தின் முன்னேற்றத்
தில் நாம் அவா வுறுவது நியாயமன்று, இதற்கிடையில் எவ்வித நன் முயற்சி
கள் செய்யப்பட்டிருப்பினும் அவைகள் வீண் முயற்சிகளேயாகும்.”
இன்னோரென்ன பல அருமையான வாக்கியங்கள் திகழ்கின்றன.
தேசீய வாதிகள் என்போர்களையும் சுயராஜ்ய வாதிகள் என்போர்களையும்
இவற்றிற்கு என்ன சமாதானம் சொல்லுகின்றீர்கள் என்று கேட்கின்றோம்.
இதிலிருந்து தேசீயம் என்பதும் கமிஷன் பஹிஷ்காரம் என்பதும் எவ்வளவு
புரட்டும் சுயநலமும் கொண்டது என்பது யாவருக்கும் வெட்ட வெளிச்சமா
யிருக்குமென்றே நினைக்கின்றோம். அன்றியும் அம்மகாநாட்டில் நிறை
வேற்றப்பட்டத் தீர்மானங்களில் பல மிகவும் குறிப்பிடத்தக்கனவும் பாராட்
டத்தக்கனவுமாகும். அவையாவன:-
கல்யாண காலங்களில் வீண் செலவுகளும் அனாவசியமான சடங்கு
களும் இல்லாமல் ஒரே நாளில் திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்
றும், சடங்குகளிலும் கோவில்களிலும் நாடார் வகுப்பார்களையே கொண்டு
முறையே சடங்கு, பூசை முதலியவைகள் நடத்திக் கொள்ள வேண்டு
மென்றும் ஏழை மாணவர் ஸ்காலர்ஷிப்புக்காக ஒரு லக்ஷச ரூபாய் சேகரிக்க
லாட்டரி சீட்டு போட வேண்டுமென்றும் நாடார் காலேஜ் என்பதாக ஒரு
காலேஜ் ஏற்படுத்த வேண்டும் என்றும்,
தென் இந்திய ரெயில்வே தொழிலாளர் கஷ்டத்திற்கு அனுதாபப்
படுவதாகவும், அவர் நடத்தும் சத்தியாக்கிரகத்தை ஆதரிப்பதாகவும்,
இன்னும் இதுபோன்ற பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்
கின்றன.
அன்றியும் இத்தீர்மானங்களை அமுலுக்கு கொண்டு வருவதற்கு தக்க
கனவான்கள் இவ்வருஷ நிர்வாக சபைக்குத் தெரிந்தெடுக்கப் பட்டி
ருப்பதானது மற்றொரு விசேஷம் என்றே சொல்ல வேண்டும். அதாவது
பொரையார் திரு.வி.கனகசபை நாடார் அவர்கள் அக்கிராசனராகவும்
விருதுப்பட்டி திரு செந்தில்குமார நாடார் அவர்கள் உபஅக்கிராசனராகவும்
திருவாளர்கள் பட்டிவீரன்பட்டி சட்டசபை மெம்பர் ஊ. பு. அ. செளந்தர
பாண்டிய நாடார், கூசா.ஃபி. பெரியதம்பி நாடார் ஆகிய கனவான்கள் காரிய
தரிசிகளாகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். மற்றபடி நடைமுதல்
குடி அரசு
- 1928 (2).
46
வருஷத்திற்கு அச்சங்க வேலைகள் நாடார் சமூகத்திற்கு மாத்திரமல்லாமல்
இதர சமூகத்திற்கும் பலனளிக்கத்தக்க
அனேக முற்போக்கான வகையில்
நடைபெறுமென்றே எதிர்பார்க்கின்றோம். தற்காலம் நமது தென்னாட்டில்
உள்ள பல சமூகங்களில் நாடார் சமூகமே தக்க அளவுக்கு முற்போக்க
டைந்தும் பொதுக்காரியங்களில் பகுத்தறிவை உபயோகித்து தக்கது செய்வ
துமான காரியங்களில் தலையிட்டிருக்கிறார்கள் என்று சொல்லுவது
மிகையாகாது. சாதாரணமாக நாட்டுக் கோட்டை நகரத்தார்களும் இது போல
வேமுற்போக்கடைந்து வருகின்றார்கள் என்றாலும் அவர்கள் பணம் சம்பா
திப்பதில் மாத்திரம் பகுத்தநிவை உபயோகித்து எப்படியாவது சம்பாதிக்கப்
பழகியிருக்கின்றார்களேயல்லாமல் இப்படி சம்பாதிக்கிற பணத்தை சரியான
வழியில் செலவு செய்யப் பழகவில்லையென்றே சொல்ல வேண்டும்.
அதாவது பாறைக் கற்களில் இறைத்து கோவில்களை கட்டுவதும், வாகனங்
கள் செய்வதும், உற்சவம் செய்வதும், பார்ப்பனர்களுக்கு இறைப்பதும், வேத
பாடசாலை சமஸ்கிருத பாடசாலை என்பது போன்ற பிச்சை எடுப்பதற்கு
மாத்திரம் உபயோகப்படும்படியானதும், அதுவும் ஒரு கூட்டத்திற்கே
பயன்படுவதும் எந்தக் கூட்டத்தாரிடம் இருந்து கொள்ளை கொள்ளையாய்
இப்படி பணம் சம்பாதிக்கிறார்களோ அந்தக் கூட்டத்தார்களுக்கு ஒரு
பைசாவும் உபயோகப்படாததும் தங்கள் சமூகத்திற்கும் உபயோகப்
படாததுமான ஸ்தாபனங்களுக்குக் கொடுப்பதிலும் வீணாக இறைத்து
வருகிறார்கள்.
ஆணால்நாடார் சமூகத்தார்களோ இவர்களைப்போல் அவ்வளவு கடு
முறைகளாலும் கொள்ளை கொள்ளையாயும் சம்பாதிக்கா விட்டாலும்,
சம்பாதித்த பணத்திலிருந்து பள்ளிக்கூடம் கட்டுவதும், அரைச் சம்பளத்
திலும், கால் சம்பளத்திலும், சம்பளமில்லாமலும் பிள்ளைகளுக்குப் படிப்புச்
சொல்லி கொடுப்பதும் அப்படியே எல்லா வகுப்பாருக்கும் உபயோகப்
படும்படியாக எல்லா வகுப்பு பிள்ளைகளும் சம்பளமில்லாமல் படிக்க இடம்
செய்திருப்பதும் ஆன காரியங்களில் செலவு செய்து வருகின்றார்கள்.
இதிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார் தாங்களும் பள்ளிக்கூடம் கட்டவில்
லையா என்று கேட்கலாம். ஆனால் அது அவர்கள் வீணுக்கிறைக்கும் பணத்
தில் நூற்றில் ஒரு பங்கு என்று கூட சொல்ல முடியாது.இந் நாடார் வகுப்பார்.
களுக்கு இவ்வளவு பலன்தரத்தக்க வேலை செய்ய இடம் ஏற்பட்டதற்குக்
காரணம் எதுவெனில், நமது நாட்டின் நற்காலத்தின் பயனாக நாடார் வகுப்பார்.
கள் கல்லுச் “சாமி” இருக்கும் கோவில்களுக்குள் நுழைந்து மூடர்களாகாமல்
உயிர்ச் “சாமிகள்” இருக்கும் கோயில்களில் நுழைந்து அவைகளுக்குத்
தொண்டு செய்யும்படியான நிலைமை எந்தக் காரணத்தினாலோ அவர்க
ளுக்கு ஏற்பட்டதே தான் முக்கியக் காரணம் என்போம்.
நிற்க, மேல்படி மகாநாட்டை ஒட்டி நாடார் வாலிப மகாநாடு ஒன்றும்
தொழிலாளர் மகாநாடு ஒன்றும் நடைபெற்றது. வாலிப மகாநாட்டில் தலைமை
47
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வகித்த திருவாளர் திரு.கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் புராணத்தைப்
பற்றிய விளம்பரங்களுக்கே அத்தலைமை ஸ்தானத்தை உபயோகித்துக்
கொண்டார் என்று சொல்லுவது மிகையாகாது. எனவே அத்தலைமை
உபந்யாசத்தைப்பற்றி மற்றொரு சமயம் ஆராய்வோம். நிற்க,
தொண்டர் மகாநாட்டில் தலைமை வகித்த திரு. ஈ.வெ. ராமசாமி
நாயக்கரின் தலைமை உபந்யாசம் அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரு புதிய
உணர்ச்சியையும் புதிய உலகத்தையும் உண்டாக்கிற்று என்று சொல்லலாம்.
அது மிகுதியும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் சுயமரியாதையை
பெறுவதும், மக்களுக்குத் தொண்டு செய்வதுமே மனிதப் பிறவியின் பயன்
என்பதுமான கொள்கைகளையே வற்புறுத்தியதாயிருந்தது. மற்றபடி
அம்மகாநாடு நடந்த பெருமையும் ஒழுங்கும் பிரதிநிதிகள் வந்த கூட்டமும்,
பிரதிநிதிகளுக்கு செய்த வசதிகளும், உபசாரங்களும் இதுவரை நமது
நாட்டில் நடந்த மகாநாடுகளில் சுமார் இரண்டொன்றைத் தவிர வேறு எங்கும்
இதுபோல நடந்திருக்காது என்றே சொல்லுவோம். முடிவாக இம்மகாநாட்டின்
பெருமைகளைப் பற்றி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்காமல் அடுத்த
வருஷத்திற்குள்ளாகத் தீர்மானங்கள் அமுலுக்கு வரத்தக்க முன்னேற்றத்
திற்கான வேலைகளை நடத்திக் காட்ட வேண்டுமாய் நிர்வாகக் கனவான்
களைக் கேட்டுக் கொண்டு இத் தலையங்கத்தை முடிக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.07.4928
குடி அரசு
- 1928 (2).
48
தெண்ணிந்திய ரயில்வே
தொழிலானரின் வலை நிறுத்தம்
நீண்ட நாளாக ரயில்வே தொழிலாளர்கள் தங்களுடைய குறை
களைப்பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் கொஞ்சமும்
இணங்காமலிருந்ததினாலும் பதினாயிரக்கணக்கான பேர்கள் திடீரென்று
வேலையை விட்டுப் போக வேண்டியிருந்ததினாலும் வேறு கதியில்லாமல்
தொழிலாளர்கள் சத்தியாக்கிரகமும் வேலை நிறுத்தமும் செய்தே தீர
வேண்டியதாய் விட்டது.
வேலைநிறுத்த விஷயத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வித உதவியும்
இல்லாமல், அதாவது தொழிலாளர் தலைவர் என்று சொல்லிக் கொள்ளு
கிறவர்களும், தேசீயத்தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும்,
தேசீயப்பத்திரிகைகள் என்பவைகளும் பல ரயில்வேக் கம்பெனிக்காரர்
களிடமிருந்து தங்கள் சுற்றத்தார்களுக்கு உத்தியோகங்கள் பெற்றிருக்கும்
முறையிலும், பெற எதிர்பார்த்திருக்கும் முறையிலும், மற்றும் தங்கள் பத்திரிக்
கைகளுக்கு விளம்பரங்கள் பெற்றிருக்கும் முறையிலும் ரயில்வேக்
காரர்களுக்கு அடிமைகளாகி வேலை நிறுத்தத்தை தக்கபடி ஆதரிக்காமல்
வேலை நிறுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும், வேலை நிறுத்தம்
அனாவசியம் என்றும், ஏஜண்டு கூடியவரை நெருங்கி வந்திருக்கிறார்.
என்றும், இன்னும் மற்ற பொது ஜனங்களுக்கும் தொழிலாளருக்கும் அதிகாரி
களின் கொடுமையையும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தையும் சரியானபடி
எடுத்துக்காட்டாமல் எவ்வளவோ மறைத்துக்கொண்டு வந்திருந்தும், சென்ற
19 - ஆம் தேதி தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட வேலை நிறுத்தமானது
ஒருவாறு வெற்றிக்குறியுடனேயே மிக அமைதியாகவும், சமாதானமாகவும்
நடந்து வருவதாகவே சமாச்சாரங்கள் எட்டி இருக்கின்றன.
தொழிலாளர்களின் கடைசி வேண்டுகோள்களாவன :-
1.கதவடைப்பு செய்த காலத்திற்கு கூலி கொடுக்க வேண்டும்.
2 ராஜீனாமாச் செய்தவர்களைத் தவிர மற்றவர்களை வேலைக்கு
வைத்துக் கொள்ள வேண்டும்.
3. கீழ்த்தர வேலையாட்களுக்கு சம்பளம் கூட்ட வேண்டும்.
49
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
4. ரன்னிங்ஸ்டாவ் என்னும் ரயில் போக்குவரத்தில் சேர்ந்த
ஆட்களின் குறைகளை நீக்க வேண்டும்.
இவைகள் ரயில்வே அதிகாரிகளால் சரியானபடி கவனிக்கப்பட
வில்லை. இதனால் வேலை நிறுத்தம் செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
வேலைநிறுத்த விபரம்
சென்னை 20
- ௨ காலையில் சென்னைக்கும் எழும்பூருக்கும்
வரவேண்டிய வண்டிகள் வரவில்லை.
தாம்பிரம் என்னும் இடத்தில் 30 தொழிலாளர்கள் லயினில் படுத்துக்
கொண்டு சத்தியாக்கிரகம் செய்ததாக அரஸ்ட் செய்யப்பட்டார்கள்.
சேத்துப்பட்டுக்கும் எழும்பூருக்கும் ஓடும் ஆபீஷியல் டிரெயின்
ஓடிக் கொண்டிருக்கையில் நெருப்பை அணைத்து விட்டபடியால் வழியில்
நின்று விட நேர்ந்தது.
எழும்பூர் ஸ்டேஷன் கீழ்த்தர சிப்பந்திகள் வேலைக்குப் போக
வில்லை.
19 ௨ யிரவு எழும்பூரைவிட்டுப் புறப்பட்ட போட்மெயில்
முதலியவைகள் விழுப்புறமிருந்து சரியானபடி ஓடாமல் தகராறுபட்டுக்
கொண்டேயிருந்தது.
உயர்தர அதிகாரிகளே வண்டிபோக்குவரத்துக்கு வேலை செய்து
கொண்டிருக்கிறார்கள்.
விழுப்புரம் தோட்டி, போர்ட்டர் எல்லோரும் வேலை நிறுத்தம்
செய்துவிட்டார்கள்.
திருச்சிக்கும் ஈரோட்டிற்கு செல்ல வேண்டிய வண்டிகள் வழியி
லேயே நிறுத்தப்பட்டு விட்டன. ஈரோட்டுக்கு வரவேண்டிய வண்டிகள்
வரவில்லை.
திருநெல்வேலியில் நடுராத்திரியில் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்
பட்டது. அங்கிருந்து செல்ல வேண்டிய வண்டிகளும் தெற்கிலும் வடக்கி
லுமிருந்து வரவேண்டிய வண்டிகளும் போக்குவரத்து நடைபெறவில்லை.
மதுரையில் மணியடிக்கும் சிப்பந்திகள், நிலக்கரி வாரும் ஆட்கள்:
உட்பட பலர் வேலை நிறுத்தம் செய்து விட்டார்கள். மதுரையிலிருந்து
புறப்பட வேண்டிய ஷட்டில் வண்டிகளில் ஒன்றுமே போகவில்லை.
ஈரோடு ஸ்டேஷனில் நடுராத்திரியில் வேலை நிறுத்தம் செய்யப்
பட்டது.
போத்தனூரிலும் நடுராத்திரியில் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது.
ஆங்கிலோ இந்தியர், ஸ்டேஷன் மாஸ்டர் முதலியவர்களின்
பிரயத்தினங்களினாலே சிற்சில மெயில் வண்டிகள் மாத்திரம் ஆங்காங்கு
காலந்தவறிப் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வேலை நிறுத்தத்தை
குடி அரசு - 1928 @)
50
வெற்றியடையாமற் செய்யப் பல சூழ்ச்சிகள் நடப்பதாகவும் தெரிய வருகிறது.
ஏஜண்டின் தந்தி
தொழிலாளர்களுக்குள்ள குறைகளை லக்ஷியம் செய்யாமல் தொழி
லாளர்களுக்கு உதவி செய்யும் கீழ்த்தர சிப்பந்திகளுடையவும் வண்டியில்
போகும் சிப்பந்திகளுடையவும் குறைகளை மாத்திரம் கவனிப்பதாக
ஏஜண்டு சம்மதித்திருப்பதாய் வெளியிட்டிருக்கிறார் எனத்தெரிகிறது.
தொழிலாளர்கள் இதை ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியாகவே கருதியிருக்
கின்றனர். வேலை நிறுத்தம் வளர்ந்து கொண்டும் வலுத்துக் கொண்டும்
போவதாகவே தெரிகிறது. தொழிலாளர்கள் வெற்றி பெற்று தொழிலாளர்
களின் குறைகள் நீங்கி சுகப்படவேண்டும் என்று மனப்பூர்வமாய் ஆசைப்
படுகிறோம். பொது மக்களை வேலை நிறுத்தத்திற்கு எல்லாவுதவியும் செய்ய
வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். தொழிலாளர்களையும் பொறுமை:
யோடும் அமைதியாகவும் பலாத்காரமற்ற தன்மையோடும் உறுதியோடும்.
எவ்விதத் தியாகத்துக்கும் தயாராகயிருந்து முழு வெற்றி யடையவேண்டு
மென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.07.1928
51
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
6வதானம் மறுபமுமும் முருங்க மாம்
ஏறிக்வகாண்டதூ
திரு. வி.கலியாணசுந்தர முதலியார் அருப்புக்கோட்டை வாலிபர்கள்
மகாநாட்டில் வாலிபர்களுக்கு புராணப் பிரசங்கம் செய்கையில், முன் திரு.
நாயக்கருடன் “போர்” நடத்துகையில் முருகனைப்பற்றியும் புராணங்
களைப் பற்றியும் என்ன எழுதினாரோ அவற்றிற்கு நேர் விரோதமாய்
புராணங்களை ஆதரித்து பிரசங்கம் செய்திருக்கின்றார். மற்றும் பெரிய
புராணத்தைப் பற்றி அவர் எழுதிய காலத்தில் “கவியழகுக்கும் இயற்கை.
வருணனைக்கும் கூடவா புராணங்களைப் படிக்கக்கூடாது” என்றும் “பெரிய
புராணத்தின் உள்ளுறையை இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள்,
அகச்சான்றுகள், நமது நாட்டைப்பற்றி இங்கு வந்துள்ளவர்கள் எழுதி
வைத்த குறிப்புகள், சில புறச்சான்றுகள், சரித்திரப்பொருள்கள் காலநிலை
முதலியவற்றிற்கு அரண் செய்யும் அளவுக்குக் கொள்ளலாம்” என்றும்
எழுதியிருந்தார். இப்படி எழுதினவர் அடுத்த வாரத்திலேயே புராணப்
பிரசாரத்திற்காக ஆரம்பித்து மறுபடியும் பழைய உணர்வு கொண்டு அதே
புராணத்தை மூட நம்பிக்கைக்காக மக்களிடை பிரசாரம் செய்யத் திருநெல்
வேலியைக் கண்டுபிடித்து அங்குள்ள மக்களிடம் தமது பழைய மூட்டையை
அவிழ்க்க ஆரம்பித்துவிட்டார். அக் கூட்டத்தில் பேசும்போது அதே பெரிய
புராணத்திலுள்ள ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அவர்முன் எழுதினபடி
கவியழகுக்கோ, இயற்கை வருணனைக்கோ மற்றும் கல்வெட்டுகள்,
நாட்டைப் பற்றிய குறிப்புகள் முதலியவற்றிற்கு “அரண் செய்யும்
அளவு”க்கோ எடுத்துக் கொள்ளாமல் மூட நம்பிக்கைக்கும் மற்ற மதக்காரர்
களை சமய வெறியர்கள் என்று பிற சமய நிந்தனை ஒன்றையே குறிக்
கொண்டு போலிக்கதைகள் புனைகிற தத்துவத்துக்கும் போலிப்புராணங்
களால், “கடவுள் நெறி”க்கும் ஒழுக்கங்களுக்கும், அன்புக்கும், கேடு
விளையும் படியான தத்துவத்திற்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
உதாரணமாக வடி சொற்பொழிவில், “சமண மதம் சிறந்தது. ஆனால் சமண
மதமும் சீர்கெட்டு நாட்டில் கொடுமைகள் அதிகரித்து கடவுள் நம்பிக்கை.
யொழிந்து நாடு அதிகம் சீர்கெட்டிருந்த சமயத்தில் நாட்டு மக்கள் செய்து
வந்த தவப்பயனால் திருஞான சம்பந்தர் சீர்காழியில் அவதரித்தார்” என்றும்
பேசிவிட்டு, “சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லுவது கட்டுக்
குடி அரசு - 1928 @)
52
கதை”யென்றும் “சமணர்களைக் கழுவேற்றிய வரலாற்றுக்குப் போதிய அகச்
சான்றாவது புறச்சான்றாவது இல்லை” என்றும் சொன்னதோடு மற்றும்
ஏதேதோ கொட்டியிருக்கிறார்.
திரு. முதலியார் சமண மதம் சிறந்தது என்று ஒரு தரம் சொல்லிவிட்டு.
மறுபடியும் கீழே சமண மதத்தால் நாட்டில் கொடுமைகள் அதிகரித்தது
என்றும் சொல்லி அதை ஒழிக்கவே திருஞான சம்பந்தர் அவதாரம் எடுத்தார்.
என்றும் சொல்லுகிறார்.
இது பிற சமயக்காரரை நிந்தனை செய்ததாகாதா? என்று கேட்கின்
றோம். இவர்களை ஒழிக்க கடவுள் ஒரு அவதாரம் அனுப்பியிருப்பதாகச்
சொல்வதானால் அது கடவுளுக்கும், கடவுள் நெறிக்கும் ஒழுக்கங்களுக்கும்
கேடு சூழ்ந்ததாகாதா? என்று கேட்கின்றோம்.
சமண மதம் என்பது எந்த விதத்தில் சிறந்தது என்றும், அது
சீர்கெட்டதாகச் சொல்லப்படுவதற்கு என்ன ஆதாரம் என்றும் திரு. முதலி
யாரால் சொல்ல முடியுமா? சமணர்கள் செய்ததாகச் சொல்லப்படும் கொடு
மைகள் என்ன என்பதை திரு. முதலியாராவது மற்றும் எந்த சமயாச்
சாரியார், அவதாரம் என்பவர்களாவது எங்காவது சொல்லியிருக்கிறார்களா?
திரு. முதலியாரால் “இயற்கை இறை உறையுள்” என்று போற்றப்படும்
தேவாரம், திருவாசகம் என்கின்ற புராணங்களிலாவது ஏதாவது குறிக்கப்
பட்டிருக்கின்றதா? அப்படிக்கொன்றுமில்லாமல் சமண மதத்தைப் பற்றி திரு
முதலியார் சமணர்களுக்கு பயந்து கொண்டு பூஜித்தும் சைவர்களுக்கு
பயந்து கொண்டு தூஷித்துமிருந்தாலும் திரு. முதலியாரால் “அவதாரம்”
“பெரியார்” என்று சொல்லப்படுகிற ஆசாமிகள் எல்லாம் சமண மதத்தை
யும். சமணர்களையும் மிகப் புன்மொழிகளால் வைதிருக்கின்றார்கள்
என்பதை முதலியார் மறுக்கிறாரா? என்று கேட்கின்றோம்.
நிற்க, சமணர்கள் கழுவேற்றப்பட்டது பொய் என்றும், அதற்கு
“அகச்சான்று, புறச்சான்று” இல்லையென்றும் சொல்லுகிறார்.
திரு. முதலியாரால் “இயற்கை அன்பு” என்று கூறப்படும் பெரிய
புராணத்திலேயே சமணர்கள் கழுவேற்றப்பட்டது காணப்படுகிறது. திரு.
முதலியார் அவர்கள் பெரியபுராணத்தை அதிலுள்ள அகச்சான்றுகளைக்
கொண்டு கொள்ளலாமென்று ஒப்புக்கொள்வதோடு, அப்பெரிய புராணத்தி
லுள்ள கதைகளில் ஒன்றாகிய திருஞானசம்பந்தர் அவதாரத்தையும் அவரது
அற்புதத்தையும் ஒப்புக்கொண்டிருப்பதோடு, அவரைப்போல் இன்
னொருவர் வருவதாகவும் சொல்லுகிறார்.
இது நிற்க, ஒவ்வொரு வருஷமும், பல கோவில்களில் சமணர்களை
53
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கழுவேற்றுகிற உற்சவமும், கழுவை நட்டு அதில் சைவர்கள் சமணர்களை
கழுவிலேற்றி அழுத்துவதும் நாடகம் போல நடித்துக் காட்டப்படுகிறது. இதை
இன்று வரையிலும் தப்பு என்றாவது, அம்மாதிரி நடத்தக்கூடா
தென்றாவது திரு. முதலியார் சொன்னவருமல்ல; ஏதாவதுமுயற்சி எடுத்துக்
கொண்டவருமல்ல. எனவே திரு. முதலியார் எவ்வித பொறுப்பையும்
உணராமலும் ஒரு சிறிதும் தமது பகுத்தறிவை உபயோகப்படுத்தாமலும்,
நினைத்தது நினைத்தபடியெல்லாம் உளறிக் கொட்டுவதும், சமயத்துக்குத்
தகுந்தபடியெல்லாம் மாற்றிப்பேசுவதும், இவற்றை யாராவது எடுத்துக்
காட்டினால் அவர்கள் மீது பழிசுமத்துவதும், அவர்களைப்பற்றி விஷமப்
பிரசாரங்கள் செய்வதும் தமது சமயத்தொண்டாகவும் ஆஸ்திகத் தன்மை
யாகவும் கொண்டிருக்கிறார் என்பது பொது மக்களுக்கு விளங்கவில்லையா?
என்று கேட்கின்றோம்.
மற்றும் அவர் அதுசமயம் பேசியதாகக் காண்பவைகளை புராணத்
தைப் பற்றி எழுத ஏற்றுக்கொண்டிருக்கிற அறிஞருக்கு விட்டு விடுகிறோம்.
நிற்க, திரு. முதலியார் இவ்விதம் புராணப் பிரசாரத்திற்காகவும்,
அதைக் கண்டிப்பவர்களை எதிர்ப்பதற்காகவும், லஞ்சம் கொடுத்து பல
நண்பர்களிடம் நட்புக் கொண்டிருக்கிறார்.
அதில் ஒருவராய் திரு. வரதராஜு
லுவுக்கு கொடுத்திருக்கும் லஞ்சம் என்னவென்பதை இவ்வார “நவசக்தி”
தலையங்கத்திலிருந்து உணர்ந்திருக்கலாம். என்னவெனில், திரு முதலியார்.
காங்கிரஸைப் பற்றி இதற்கு முன்னால் வெளிப்படுத்தியுள்ள அபிப்பிராயம்
யாவரும் அறிந்ததொன்றே. அதாவது, வகுப்புப் பிணக்குகளும் உயர்வு
தாழ்வுத் தன்மைகளும் உள்ள நாட்டில் அரசியல் இயக்கம் என்று ஒன்று ஏற்
படுவது அந்நாட்டிற்குக் கேட்டை விளைவிப்பதாகும் என்பதாக எழுதியிருப்
பதோடு, தாமும் அக்காங்கிரஸ் என்ற அரசியல் குழுவிலிருப்பது குற்ற
மென்றும் சொன்னதுடன் காங்கிரஸ் நிர்வாக சபையிலிருந்து ராஜீனாமா
கொடுத்து விலகினதல்லாமல் காங்கிரஸ் குழுவில் ஒரு சாதாரண அங்கத்
தினராக யிருப்பதிலிருந்தும், விலகிக்கொண்டதாகவும் சொன்னவர் இப்
போது காங்கிரசை நிலைநாட்ட மிகக் கவலை கொண்டிருப்பதாக எழுதி
யிருக்கிறார். இதற்காக திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் புராணக் குப்
பைகளையும், காங்கிரஸ் புரட்டையும் ஆதரிக்க முன்வந்திருப்பதாக எழுதிக்
கொண்டு அவரைப் பாராட்டி இருக்கிறார். இது எம்மட்டு நிஜமாயிருந்தாலும்.
அதையும் பார்ப்போம்.
நிற்க, சைமன் கமிஷனைப் பற்றி திரு. முதலியார் அதை பகிஷ்
கரிக்கக் கூடாதென்பதாக எழுதி வந்ததும், பகிஷ்கரிப்போர்களின் புரட்டு
களை வெளியாக்கினதும், அதை ஆதரித்தே துண்டு விளம்பரங்களும் சுவர்.
விளம்பரங்களும் வெளியாக நேர்ந்ததும் அவைகளை கண்டித்து திரு. வரத
ராஜுலு எழுதி வந்ததும் அதற்கு மறுபடியும் திரு. முதலியார் எழுதினதும்
குடி அரசு - 1928 (3)
54
யாவருக்கும் நினைவிருக்கலாம். இப்போது திரு. வரதராஜுலு தமது (திரு.
முதலியாரது! புராணப்புரட்டுக்கும் சமயப்புரட்டுக்கும் உதவி செய்வதற்காகக்
காணிக்கையாய் தாம் (திரு. முதலியார் அவரது (திரு. வரதராஜுலுவின்!
பகிஷ்காரப்புரட்டுக்கும் தேசீயப்புரட்டுக்கும் உதவி செய்ய ஒருப்பட்டு
துணிவோடு காங்கிரசையும் பகிஷ்காரத்தையும் ஆதரித்து எழுதியிருக்
கிறார். சைமன் கமிஷனை குறை கூறியும் எழுதியிருக்கிறார். இதன் மூலம்
பார்ப்பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியை தூற்றவும், காங்கிரசைப்
புகழவும் சூழ்ச்சி தேடிக்கொண்டு அத்தொண்டிலும் மறைமுகமாக இறங்கி
யிருக்கிறார். இவைகளெல்லாம் பூனை கண்ணைக் மூடிக்கொண்டு பாலைக்
குடிப்பது போலக் கருதி திரு. முதலியார் மொட்டையாக எழுதி வந்தாலும்
பொதுமக்கள் கண்ணில் இவர்கள் இனி மண்ணைப் போட முடியாதென்பதே
நமது துணிவு.
பொதுமக்கள் உண்மையான க்ஷேமத்தையும், சுயமரியாதையையும்,
விடுதலையையும் அடைய வேண்டுமானால், நல்ல அரசாட்சி என்னும்
பேரால் வெள்ளைக்காரர்கள் அடிக்கும் கொள்ளையையும், அதிலிருந்து
சுயராஜ்யம் என்னும் பேரால் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பார்ப்பனர்கள்
அடையும் பங்கையும், அதிலிருந்து தேசீயம்,
ஆஸ்திகம், மதம் என்பவை
களின் பேரால் மக்களைக் காட்டிக் கொடுத்து நம்மிற் சிலர் அடையும் கூலி
யையும் எப்பாடுபட்டாவது வெளியாக்கி, நிறுத்தினாலொழிய ஒரு கடுகளவும்
நமது நாடும் மக்களும் முன்னேற முடியாது என்கிற உறுதி கொண்டதினால்
தான் இவை எழுதி வர நேரிடுகின்றது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.07.1928
55
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
சுயமரியாதைப் யிரசாறாங்கன்
சுயமரியாதைப் பிரசாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச்
செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவ
தாகவும் அதைக் கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளு
வதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும்
தெரிய வருகிறது. அவ்விபரிதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது பதினைந்து
நண்பர்களை தயார் செய்யும் பொருட்டு ஈரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்
கடுத்த திரு. வெங்கட்ட நாயக்கர் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகையில்
“சுயமரியாதைப் பிரச்சார போதனைக் கூடம்” என்பதாக ஒரு ஸ்தாபனம் ஏற்
படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மாத காலத்திற்கு,
தினமும் இரண்டு காலம் ஒவ்வொரு மணி நேரம் உபந்யாசங்களின் மூலமும்,
மற்றும் சம்பாஷணை, *குடி அரசில்” கண்ட வியாசங்கள் முதலியவை
மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். காலாவதி
யொன்றுக்கு பதினைந்து பேர்களை சேர்த்துக் கொள்ளக்கூடும். அவர்களில்
செளகர்யமில்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். இஷ்டமுள்ள
வர்கள் தெரிவித்துக்கொண்டால் ஏற்றுக் கொண்ட விஷயத்துக்கும் வர
வேண்டிய விபரத்துக்கும் மற்ற நிபந்தனைகள் விபரத்துக்கும் தெரிவிக்கப்
படும்.
- ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - அறிவிப்பு - 22.07.4928
குடி அரசு - 1928 @)
56
பல்லாவரத்துப் பண்மூதர்
திரு.வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில்
கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர்.
நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத்
தாக்கிப் பேசினதாகவும் “சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும்.
இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா” என்பதாக சபையோர்களைக்
கேட்டதாகவும் “தமிழ்நாடு”
“திராவிடன்” பத்திரிகைகளில் காணப்
படுகின்றது.
அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தை திருவாளர்கள் தண்டபாணி
பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்ட
தாகவும் பதில் சொல்ல இயலாமல் திக்கு முக்காடியதாகவும் கடைசியாக
கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது.
அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத் தாக்க
உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்து கொண்டு போனதாகவும்
அதைக் அக்கூட்டத்திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச்
செய்ததாகவும் “திராவிடனி”ல் காணப்படுகின்றது. அவைகள் அடுத்த
வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை “குடி
அரசி”ல் அவைகளை எடுத்து எழுதி தக்க சமாதானங்கள் வெளியாக்
கப்படும்.
குடி அரசு - தலையங்கம் - 29.07.1928
57
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ஈரறோட்மல் வதாழிலானர் மீட்ழங்குகள்
ஈரோட்டில் ரயில்வே ஷ்டேஷனுக்கு அருகாமையில் திரு. வெங்கட்ட
நாயக்கர் சத்திரத்தில் ஈவெழராமசாமி நாயக்கர் அக்கிராசனத்தின் கீழ் ஜூலை
2-ல் ஒரு தொழிலாளர்கள் வேலை நிறுத்த மீட்டிங்கு கூடியது.
மீட்டிங்குக்கு ஏராளமான ஜனங்களும் தொழிலாளர்களும் கூடியிருந்
தார்கள். திருவாளர்கள் தேவ அன்பும், முத்துகிருஷ்ணன், அரூர் வேடி
செட்டியார், மண்டி சி. குமாரசாமி கவுண்டர் முதலியோர்கள் தொழிலாளர்
வேலை நிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டி பேசினார்கள்.
மறுநாள் கோணைவாய்க்கால் டேராகாட்டில் திரு. நாயக்கர் அக்கிராச
னத்தில் ஒரு மீட்டிங்கு கூடியது.
அதற்கும் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள்.
அங்கு இரண்டு
மூன்று நாளாக லைன்களில் நடந்த விஷயங்களை எடுத்துச்சொல்லி
சத்தியாக் கிரக விஷயமாய் பேசப்பட்டது.
மறுபடியும் 25-தேதி புதன்கிழமை கடைவீதி அலிசவுக்கில் “தாஜுல்
இஸ்லாம்” பத்திராதிபர் ஜனாப் நைனாமுகம்மது சாயபு அவர்கள் தலைமை
யில் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டது.
தொழிலாளர்களும் திருவாளர் 14.உஈஸ்வரரும் மற்றும் சில நண்பர்
களும் பேசி சில தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.
27-7-28 ந் தேதி சாயந்திரம் 7-மணிக்கு, ஈரோடு “ காந்திசவுக்'” என்கிற
காரைவாய்க்கால் மைதானத்தில் தொழிலாளருக்கு அனுதாபங்காட்ட EP.
வெங்கிடாசலம் செட்டியார் அக்கிராசனத்தின் கீழ் ஒரு பொதுமக்களின் மகா
நாடு நடைபெற்றது, தொழிலாளர் சகோதரர்கள் ஸ்ரீமான்கள் தேவ அன்பும்,
முத்துகிருஷ்ண நாயுடு அவர்களும் பேசினார்கள்.
பிறகு ஸ்ரீமான்கள் சுப்பண்ண ஆசாரியார் ஈஸ்வரன், ஈ.வெ. ராம
சாமி நாயக்கர் அவர்களும் பேசினார்கள்.
குடி அரசு - 1928 @)
58
தீர்மானங்கள் :- ஸ்ரீமான் நயக்கர் அவர்களால் பிரரேபிக்கப்பட்டு,
அக்கிராசனர் அவர்களால் பொது மக்களின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு,
ஏகமனதாய் நிறைவேறியது.
1.ரயில்வே பொது வேலைநிறுத்த சம்பந்தமாக கவர்ன்மெண்டாரால்
கைது செய்யப்பட்டவர்களுக்கும், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட
வர்களின் குடும்பத்தாருக்கும் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் ஏற்பட்ட
கஷ்ட நஷ்டங்களால் வருந்தும் குடும்பத்தாருக்கும் இக்கூட்டம் அனு
தாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.
2. தொழிலாளர்கள் கோரிக்கைகள் மிகவும் இரக்கமானது என்று
தீர்மானிப்பதோடு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களுக்கு பொது
ஜனங்கள் தங்களால் கூடிய ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்ளுவதாக இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
3. அரசாங்கத்தார், போலீசார், ரயில்வே அதிகாரிகள் ஆகியவர்கள்.
எவ்வளவோ கோபமூட்டத்தக்க செய்கை செய்தாலும் தொழிலாளர்களும்
பொது ஜனங்களும் பொறுமையாகவே இருக்க வேண்டும் என்றும் எந்தக்
காரணத்தை முன்னிட்டும் பொறுமை இழந்துவிடக் கூடாது என்றும்
இக்கூட்டம் வேண்டிக்கொள்ளுகின்றது.
மேல்கண்ட தீர்மானங்கள் தீர்மானிக்கப்படுகையில் திரு. நாயக்கர்
பேசியதாவது -
சகோதரர்களே! தொழிலாளர்கள் குறைகள் உண்மையானவை என்பது
எனது அபிப்பிராயம்.
ரயில்வேக்காரர்கள் திடீரென்று மூன்று நான்காயிரம் பேர்களை
வேலையிலிருந்து விலக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்கள். அது
உண்மையான சிக்கனத்தை முன்னிட்டாவது அல்லது லாபம் கட்டவில்லை
என்பதற்காவது அல்லது ஜனங்களின் நன்மைக்காக ரயில் சார்ஜை குறைப்ப
தற்கென்றாவது இத்திட்டத்தை அனுசரிப்பதானால் எனக்கு சந்தோஷமே.
அப்படிக்கில்லாமல், சீமையில் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்ப
தற்காக அங்கிருந்து யந்திரங்கள் தருவிக்கவும், வெள்ளைக்காரர்களுக்கும்
அவர்கள் சார்பாருக்கும் வேலை கொடுப்பதற்கும் இம்மாதிரி சூழ்ச்சி செய்
கின்றார்கள். தென்னிந்திய ரயில்வேக்காரர் மற்ற எல்லா ரயில்காரர்களைவிட
அதிக கொள்ளை அடிக்கின்றார்கள். மற்ற ரயில்களில் மெயிலுக்குக் கூட
மைலுக்கு இரண்டரைக் காசு சார்ஜ். ஆனால் இவர்கள் நான்கு காசு, நாலரைக்
காசுவாங்குகிறார்கள். வண்டி சவுகரியம் மற்ற வண்டிகளைவிட எஸ்.ஐஆர்.
59
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ரயிலில் மிகக் கொடுமையானது. சம்பளம், கூலி முதலியவைகளும் நம்
மவர்களுக்கு மற்றவர்களைவிட மிகக் கொஞ்சமாகவே கொடுக்கின்றார்கள்.
இந்த நிலைமையில் இவர்கள் சிக்கனமென்பது இந்தியர்கள் வாயில் மண்:
ணைப்போட்டு வெள்ளைக்காரர்கள் வயிறு வெடிக்கச் செய்யும் கொடுமை
யேயாகும்.
நிற்க, ரயில்களில் நடந்த அபாயங்களுக்கெல்லாம் ரயில்வே
அதிகாரிகளே காரணமாவார்கள். ஏனெனில், வேலை நிறுத்தம் செய்வதாக
முன்னெச்சரிக்கை கொடுத்துத்தான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது ரயில்வேக்காரர்கள்
எச்சரிக்கையாய் இருந்திருக்கவேண்டும். ஒரு வேலை நிறுத்தம் என்றால்
என்னென்ன காரியங்கள் நேருமென்பது அதிகாரிகள் அறிந்த விஷயம்
தான். மேல்நாடுகளின் வேலை நிறுத்த அனுபவம் தெரிந்த வெள்ளைக்
காரர்கள் அலட்சியமாய் இருந்தது மிகவும் கண்டிக்கத்தகுந்தது. கலகக்
காரர்களும் காலிகளும் தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்ட வாலிப
ரத்த ஓட்டமுள்ளவர்களும் இன்னமும் என்னென்ன செய்வார்கள் என்பது
நாம் சுலபத்தில் முடிவுகட்டக்கூடியதல்ல. இதற்காக தொழிலாளர்கள் மீது
குற்றம் சொல்லுவது அறியாமையே யாகும்.
உதாரணமாக, திருச்சி பாலக்கரை ஸ்டேஷனுக்கருகில் லயனில் உள்ள
கேட்டில் கதவில்லை என்றும், காவலில்லை என்றும் தெரிந்து வண்டியை விட
எப்படி ரயில்வே அதிகாரிகள் சம்மதித்தார்கள் என்று நான் கேட்கின் றேன்.
அப்படி கவலையின்றி இஞ்சின் விட்டதால் மோட்டார் பஸ் மீது ஏறி 10
பேர்கள் ௧௪ ௧௪ வென்று நசுங்க நேர்ந்தது. இதற்கு யாரை தண்டிக்க வேண்
டும் என்பதை நீங்களே யோசியுங்கள்.நல்ல அரசாங்கமாயிருந்தால் இஞ்சின்
ஓட்ட ஆதாரமாயிருந்தவர்களில் 10 பேரை தூக்கில் போட்டு இனி இம்மாதிரி
நடக்காமல் பந்தோபஸ்து செய்திருக்கும். .அப்படிக்கில்லாமல் மேல் கண்ட
10 பேர் நசுக்கப்பட்டு போனதற்காக விசனப்பட்ட ஜனங்களை சுட்டார்களாம்.
இது என்ன ஒழுங்கு! இது அதிகாரம் இருக்கின்றது என்கிறதும் துப்பாக்கியும்,
குண்டும், மருந்தும் சொன்னபடி கேட்க போலீஸ்படையும் இருக்கின்றது
என்கிறதுமான ஆணவத்தைக் கொஞ்சமாவதும் காட்டுகின்றதா இல்லையா
என்று கேட்கின்றேன். இம்மாதிரி கொடுமைகளும், ஆத்திரம் மூட்டத்தக்க
காரியமும் செய்துவிட்டு பொறுமையா யிருங்கள்! சாந்தமாயிருங்கள் என்று
சொன்னால் அது வார்த்தை அளவில் இருக்குமேயல்லாது காரியத்தில்
பயனளிக்குமா?
தவிர, 144 போடுவதாலும் ஜெயிலில் வைப்பதாலும் என்ன
காரியத்தை சாதிக்க முடியும்? 144ஐ மீறுவது வெகு கஷ்டமான காரியமா
என்று கேட்கின்றேன். பலாத்காரமான காரியங்கள் யாராலானாலும் சரி, நடந்த
தாகக் காணப்படாதிருந்தால் 144ஐ மீறும்படியே கட்டளை இட்டிருப்பேன்.
குடி அரசு - 1928 @)
60
ஜெயிலில் போடுவதால் யாரும் பயந்துவிட மாட்டார்கள். ஜெயில் அனு
போகம் எனக்கு நன்றாய் தெரியும். மூன்று நான்கு தடவை நான் அனுபோகித்
துப் பார்த்தவன். உள்ளே போய் வெளியில் வரும்போது உடல் இடை 10
ராத்தல் அதிகமாகவேதான் வரக்கூடும். ஆதலால் அந்த பூச்சாண்டிக்கு
யாரும் பயப்படமுடியாது. மரியாதையாக தொழிலாளர் கோரிக்கைகளுக்கு
இணங்கியோ அல்லது அவர்களை சமாதானப்படுத் தியோ ஒரு முடிவுக்கு
வருவதுதான் நலமாக முடியும். கடைசியாக நான் பொது மக்களையும் தொழி
லாளர்களையும் கேட்டுக் கொள்வதாவது:-
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பலாத்காரமும் பொறுமை இழத்
தலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பலாத்காரம்
ஏற்படுவது அதிகாரிகளுக்கு நன்மையாகவும் நமக்கு கெடுதியாகவும்
முடியும். ஒத்துழையாமையின் போது கூட திடீரென்று திருவாளர் காந்தி
இயக்கத்தை நிறுத்த நேர்ந்ததற்குக் காரணம் பலாத்காரம் ஏற்பட்டதுதான்.
அதனாலேயேதான் அவ்வியக்கம் தோல்வியடைந்ததாக கருத நேரிட்டது.
ஆதலால் பலாத்காரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது
கடமையாகும். போலீசார் மீது குற்றம் சொல்வதில் யாதொரு பயனும் இல்லை.
அவர்கள் சம்பளத்திற்காக, மேல் அதிகாரி சொன்னபடி கேட்கும் நிபந்தனை
இல்லாத அடிமைகள். அவர்கள் எஜமான் சொன்னபடி நடக்கா
விட்டால் வேலை போய்விடும்.144 போட்ட மாஜிஸ்ட்ரேட்டிடமும் நாம்
குற்றம் கண்டுபிடிப்பது முட்டாள்தனம். வெள்ளை அதிகாரிகள் சொன்னபடி
உத்திரவு போடாவிட்டால் வேலை போய்விடும். அப்புறம் உபாதான மெடுக்க
வேண்டியதோ கருமாந்திர வீட்டில் தக௲ஷிணைக்கு போக வேண்டியதோ
அவர்கள் கடமையாகி விடும்.ஆதலால் பொறுமை இழக்காமல் பலாத்கார
மில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களாலான உதவி கடைசி வரை
செய்யக் காத்திருக்கின்றோம். பலாத்காரம் ஏற்பட்டால், அதுவும் தொழிலாளர்.
களால் நடந்தது என்பதாக தெரிந்தால் நாங்களும் விலகிக்கொள்வோம்
என்பதைக் கண்டிப்பாய் சொல்லுகின்றேன். மற்றபடி இங்கு நடத்தப் போவ
தாய் சொல்லப்படும் சத்தியாக்கிரகத்திற்கு என்னாலான பண உதவியும் ஆள்
உதவியும் செய்யத் தயாராயிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தார்.
குறிப்பு
- 21.6.1928 இல் ஈரோடு தொடர்வண்டி நிலையத்தின் அருகில்
தொழிலாளர் வேலை நிறுத்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை:
ஒட்டிப்பேசியது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.07.1928
61
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ஒரு ஆயிசருக்கும் குழயானவனுக்கும்
சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
குடியானவன் : என்ன சார், தங்களிடம் தனித்து சற்று நேரம் பேச
வேண்டும் என்கின்ற எண்ணம். ஏனென்றால் நாம் இருவரும் வெகு
நாளைய சினேகமல்லவா? ஆதலால் சில விஷயங்களைத் தெரிவிக்க
வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு உண்டு.
ஆபீசர்
: ஆ! ஆ!! பேஷா பேசலாம். இப்பொழுதே வாருங்கள்.
என்ன விசேஷம்!
குடியானவன் : விசேஷம் ஒன்றும் இல்லை; தாங்கள் கோபித்துக்
கொள்ளக்கூடாது. சிநேகித விஷயத்தில் மனம் பொறுக்கவில்லை.ஆதலால்
தங்களிடம் சொல்லித் தீர வேண்டும் என்கின்ற கவலை கொண்டு விட்டேன்.
ஆபீசர் : என்ன இவ்வளவு யோசிக்கின்றீர்கள். கோபம் என்ன
வந்தது? தாராளமாய்ச் சொல்லுங்கள். என்ன விசேஷம்.
குடியானவன்
: கொஞ்சகாலமாகத் தங்களுடைய சம்சாரத்தின்
நடத்தை சரியாய் இல்லை. என்னேரம் பார்த்தாலும் நம்ம வீட்டுக்கு அடுத்த
வீட்டுத் தையல்காரனிடமே சாகவாசம் வைத்துக் கொண்டிருக்கின்றதாகத்
தெரிகின்றது. சில சமயங்களில் அந்த தையல்காரன் அந்த அம்மாளை
அடிக்கின்றதாகவும் தெரிய வருகின்றது. இதைப் பற்றி ஊரிலும் பல
விதமாகப் பேசிக் கொள்ளுகின்றார்கள். இதைத் தங்களிடம் தெரிவித்து
விடவேண்டும் என்று துணிந்து விட்டேன்; மன்னிக்க வேண்டும்.
ஆபீசர்
: இதில் மன்னிக்க வேண்டிய சங்கதி ஒன்றுமில்லையே.
தாங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஏனென்றால் அந்தக்
கழுதையை என் சம்சாரம் அல்ல என்று விலக்கி பல வருஷமாகிவிட்டது.
எப்பொழுது ஒரு கான்ஸ்டேபிளை இழுத்துக் கொண்டு போய் இரண்டு
மாதம் வரையில் காணாமல் இருந்தாளோ அன்று முதலே நான் “இனி அவள்:
என்னுடைய சம்சாரமல்ல” என்பதாக தீர்மானித்து விட்டேனே. இது
தங்களுக்குத் தெரியாதா?
குடியானவன்
: இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியவே
தெரியாது. தாங்கள் சொல்லத்தான் தெரியவருகின்றது.
ஆனால் அந்தம்மாள்
குடி அரசு - 1928 @)
62
தங்கள் வீட்டில் தங்களுடன் தானே இருக்கிறார்கள்?
ஆபீசர்
: அதனாலென்ன? முன்பு அவளை அடித்துக் கொண்டு
போன கான்ஸ்டேபிள் அவளிடம் இருந்த நகையைப் பிடுங்கிக் கொண்டு
விரட்டி விட்டு விட்டான். அவள் இந்த ஊர் சத்திரத்தில் வந்து திண்டாடு
வதாக கேள்விப்பட்டேன். நேரில் போய்ப் பார்த்தேன்.
அவள் அழுதாள்.
அதற்கு நான் “நீ என்றைக்கு ஊரை விட்டு ஓடினாயோ அன்று முதலே
உன்னை என் சம்சாரமல்ல என்று தீர்மானித்து விட்டேன்; இனிமேல்
எனக்கும் உனக்கும் புருஷன் பெண்ஜாதி என்கிற பாத்தியமும் இல்லை”
என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன். பிறகு அவள் வருத்தப்பட்டதைப்
பார்த்து மறுபடியும் “உனக்கு என்னிடம் வர பிரியமிருந்தால் உன்னை நான்
ஒரு தாசி மாதிரியாகக் கருதி உன்னிடம் நேசம் வைத்துக்கொள்ளுகின்றேன்.
இஷ்டமிருந்தால் என்னோடு வா” என்று சொன்னேன். அவளும் அதற்கு
சம்மதித்து என்னோடு வந்தாள். நானும் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு
போய்விட்டேன். இப்போது அவளை ஒரு தாசி மாதிரியாகத்தான் நினைத்துக்
கொண்டிருக்கிறேன். ஆனால் தாசி வீட்டிற்கு நான் போவதற்கு பதிலாக என்
வீட்டிற்கு அவளை வரவழைத்துக் கொள்கிறேன். அடிக்கடி அவள்
போய்விட்டு வருவதற்குப் பதிலாக என் வீட்டிலேயே இருக்கும்படி சொல்லி
விட்டேன். குழந்தைகள் விஷயத்திலும், ஓடுவதற்கு முன் பிறந்த குழந்தை
களை என் சொந்தக் குழந்தைகள் மாதிரிதான் வைத்திருக்கின்றேன். திரும்பி
வந்ததற்குப் பின் பிறந்த குழந்தைகளை தாசிக்குப் பிறந்த குழந்தை மாதிரி
தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.தவிர,
என் குழந்தைகளையும் அவளையே பார்த்துக் கொள்ளும்படியாய்க்
கேட்டுக்கொண்டேன். அவளும் தன் குழந்தைகள் மாதிரியே பார்த்துக்
கொள்ளுகின்றாள். அந்த விதத்தில் அவள் உத்தமி என்றே சொல்ல
வேண்டும்.
குடியானவன் : அப்படியானால் அடிக்கடி டெய்லர் (தையல்காரன்!
வீட்டில் இருக்கக் காண்கின்றேனே, அதன் காரணம் என்ன?
ஆபீசர்: என்னமோ காரணம் இருக்கலாம். அதைப்பற்றி நமக்கு ஏன்
கவலை?
நாமே அவளை
ஒரு தாசி போல் நினைத்து தாசியை வைத்துக்
கொண்டிருக்கிறது போலவே கருதிக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க
நமக்கு அனாவசியமான கவலை எதற்கு? அவள் எங்கு போனால்
நமக்கென்ன? என்று தான் அதில் என் நேரத்தை ஒரு சிறிதும் வீணாக்குவதே
யில்லை.
ஆனால் அந்த டெயிலரிடம் அடிப்படுவதாக சொல்லுகி
அதைக் கேட்க நமக்கு சற்று பரிதாபமாகத்தான் இருக்கின்றது; என்ன
செய்யலாம்? பாவம் அந்த டெயிலர். ஒரு சமயம் இவளை தன் சம்சாரமாக
நினைத்துக் கொண்டிருக்கலாம். அவளும் அவனை தன் புருஷனாக
நினைத்துக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அப்படியிருந்தால் அடிக்க
63
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வேண்டியதும் அடிபட வேண்டியதும் நியாயந்தானே. நானும் அவளை என்
சமுசாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது நன்றாய் உதைத்துக்
கொண்டுதான் இருந்தேன். அதற்கு நாம் என்ன செய்யலாம்.
குடியானவன் : சரி சார், இப்போதுதான் தங்களுடைய கொள்கை
(யிரின்சிபிள்! எனக்கு விளங்கிற்று. அனாவசியமாய் தங்கள் நேரத்தை
கெடுத்ததற்காக மன்னிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்.
ஆபீசர் : சரி போய்விட்டு வாருங்கள். இதைத் தவிர வேறு விஷய
மில்லையே.
குடியானவர் : இல்லை.
குடி அரசு - உரையாடல் - 29.07.1928
குடி அரசு - 1928 (3)
64
பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன உத்தியோகஸ்தர்களும்
தங்கள் ஆதிக்கத்திற்கு ஊனம் வராமல் காப்பதில் கவலை எடுத்துக் கொண்டு
அதற்காக எந்ததெந்த வகையில் மக்களை ஏமாற்றலாமோ அந்தந்த வகை
யில் எல்லாம் இன்னும் துணிவுடன் வேலை செய்து கொண்டேதான் இருக்கி
றார்கள். ஆதலால் இனி அதைப் பற்றியும் சற்று கவனம் செலுத்துவோம்.
என்னவெனில், உதாரணமாக, சென்றவாரத்தில் சென்னை திருவல்லிக்
கேணியில் உள்ள உத்திராதி மடம் என்கின்ற ஒரு வைணவப் பார்ப்பன
மடத்தில் வைத்துப் “பிராமணர்கள் கூட்டம்” என்பதாக ஒரு கூட்டம்
கூட்டப்பட்டது. அதில் ஐகோர்ட் மாஜி ஜட்ஜியும் இப்போது வக்கீலுமான
திரு.வி.வி. சீனிவாசய்யங்கார் அக்கிராசனத்தின் கீழ் மற்றொரு ஐக்கோர்ட்டு
வக்கீல் என். சீனிவாசாச்சாரியார் என்பவரால் “பிராமணர்களின் தற்கால
நிலைமை” என்பது பற்றி ஒரு உபன்யாசம் செய்யப்பட்டிருக்கின்றது.
அது
வைதீகப் பார்ப்பனக் கூட்டம் என்றாலும் எல்லா வகையான பார்ப்பனர்க.
ளுமே அக் கூட்டத்தில் கூடி இருந்திருக்கின்றார்கள். அந்தச் சமயத்தில்
அக்கிராசனரும் உபன்யாசகரும் ஆகிய இருவர்களும் பேசிய பேச்சைக்
கேட்டவர்களுக்கு பார்ப்பனர்களின் தற்கால நிலைமை எப்படிப்பட்டது
என்பது ஒருவாறு தெரியக்கூடுமாயினும் பார்ப்பனரல்லாதாரின் தற்கால
நிலைமை என்னவென்பதும் அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்
என்பதும் அதைவிட நன்றாய் தெரியுமென்றே நினைக்கின்றோம்.
முதலில் அவ்விருவர்களும் பேசிய பேச்சுகளில் உள்ள முக்கிய
விஷயங்கள் சிலவற்றை அதாவது ஜூலை 27-தேதி “மித்திரன்”
பத்திரிகையில் காணுவதின் சாரத்தை குறிப்பிட்டுவிட்டு பின்னால் அதைப்
பரிசீலனை செய்வோம்.
அக்கிராசனர் முன்னுரையில் காணப்படுவது:-
நான் 20 வருஷமாக அரசியல் விஷயத்தில் கவலை வெளிப்
படையாக எடுத்துக்கொள்ளவில்லை.
இப்போது எடுத்துக்கொள்ள நேர்ந்தது.
எனது அனுபவத்தைக் கொண்டு எனக்கு சுயராஜ்யத்தில் நம்பிக்கை
குறைந்துவிட்டது.
65
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பிராமணர்கள் தாங்கள் சிறுபான்மையாய் இருந்தாலும் தேச நன்மை
யையே பிரதானமாக கருதியதால் தங்களுக்காகவென்று ஒன்றும் அரசிய
லில் கேட்டுக் கொள்ளவில்லை.
அப்படி இருந்தும் இது சமயம் பிராமணர் என்ற மாத்திரத்தில் ஒருவித
துவேஷ புத்தி கிளப்பிவிடப்பட்டு வருகின்றது.
பிராமணர்களை தூஷிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து
முன்னுக்குக் கொண்டு வருவதை பிராமணர்கள் எவ்வழியில் தடை
செய்தார்கள்?
பிராமண துவேஷம் 25 வருஷத்திற்கு முன் கிளப்பிவிடப்பட்ட பொழுது
அது நிலைக்காது என்று கருதி பிராமணர்கள் அலக்ஷியமாக
இருந்து
விட்டார்கள்.
இப்போது பிராமண துவேஷம் பரவும் ரீதியைப் பார்த்தால் பிராமண
தத்துவத்திற்கே ஆபத்து வரும்போல் இருக்கின்றது.
இதை எண்ணியேதான் ஸ்ரீமான் சீனிவாசாச்சாரியார் பிராமண இயக்
கத்தை ஆரம்பித்திருக்கிறார்.
இத் தேசத்தில் ஜாதி மத பேத மாச்சரியம் இருக்கும்போது சுயராஜ்ஜி
யத்தால் என்ன பலன் விளையும்.
அநேக பிராமணர்களை நான் விசாரித்துப் பார்த்த வரையில் வெள்ளைக்
கார ராஜ்ய பாரமே மேலானது என்று சொல்லுகிறார்கள்.
இந்நிலையில் பிராமண மகாசபை ஏற்பட்டது மிகவும் நல்ல விஷயம். ஸ்ரீ
சீனிவாசாச்சாரியார் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்கக் கூடாது என்று
சொல்ல தைரியமாய் முன் வந்திருக்கிறார்.
நாம் சுயராஜ்யத்திற்கு அருகரா? நம்மால் பரிபாலனம் செய்ய முடியுமா?
நமக்கு சுயராஜ்ஜியத்தில் இடம் கிடைக்காது என்பது நிச்சயம். இதரர்கள்
(பார்ப்பனரல்லாதார்கள்! ஒற்றுமையாய் இருக்கும் போது பிராமணர்களும்
கட்டுப்பாடாய் இருக்க வேண்டாமா?
மத விஷயத்தில் யாராவது பிரவேசித்தால் பிராமணீயத்திற்கு கெடுதல்
வருமாகையால் மதத்தில் பிரவேசிக்க யாரையும் விடக் கூடாது.
பிராமணர் என்பதற்காக நாம் ஒரு வித்தியாசத்தையும் கற்பிக்கிற
பின்பு உபன்யாசகர் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச்சாரியார் பேசியதின் முக்கிய
பாகம்:-
இந்த பிராமண சங்கம் பல வருஷங்களாகவே வேலை செய்து
வருகின்றது.
எவன் தன் மனதை அடக்கி யோக்கியனாக இருக்கின்றானோ அவனே
பிராமணன்.
குடி அரசு - 1928 @)
66
67
பிராமணர்கள் இந்த மேன்மை
ஸ்திதியில் இருக்கவேண்டு
மென்றேதான் நாங்கள் பிரசாரம் செய்கிறோம். ராஜீய விஷயத்தில்
நாங்கள் தலையிடுவதே கிடையாது.
“குடிஅரசு” கிளர்ச்சி வலுத்துவரும் இச்சமயத்தில் யாவும் வரம்பு மீறிப்
போகின்றபடியால் அதைத் தடுக்க வேண்டுமென்றே ராஜீய விஷயத்தில்
தலையிட முன்வந்திருக்கிறேன்..
பிராமணரல்லாதார் இயக்கம் உத்தியோகம் பெற ஏற்பட்டதென்று எண்ணி
யாவரும் கவலையில்லாமல் அதைச் சும்மா விட்டுவிட்டார்கள்.
இப்போது அது ஒரு உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்கு கிளம்பி.
விட்டது. பிராமணர்கள் தங்களுக்கு சட்டபூர்வமாக பதவி அளிக்கப்
படவேண்டுமென்று ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பிராமணரல்லாதார்
இயக்கத்தினால் துவேஷ புத்தியை ஊட்டி வருகிறார்கள், மத விஷயத்
திலும், கோவில் முதலிய விஷயத்திலும் பிரவேசித்து அடியோடு
கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நாம்
அநுபவித்து வரும் பாத்தியதைகளை பலாத்காரமாய் பிடுங்கிவிட
ஆரம்பித்திருக்கிறார்கள். சுயமரியாதை இயக்கமென்று சொல்லிக்
கொண்டு சிலர் செய்துவரும் கொடுமைகளையும், அவமானங்களையும்
ஊர் ஊராய்ப் போய் சுற்றிப் பார்ப்பவர்களுக்குதான் தெரியும். மேற்கண்ட
துவேஷ புத்தி இயக்கத்தினால் சுயமரியாதை இயக்கத்தால்) பிராமணர்
களுக்கு யாதொருவித கெடுதியும் ஏற்படா வண்ணம், தடுக்க
வேண்டுமென்றே சைமன் கமிஷன் முன் நமது விஞ்ஞாபனத்தைக்
கொடுக்க உத்தேசித்திருக்கிறேன். அதில் இரண்டு விஷயங்கள்தான்
முக்கியமானது. ஒன்று மதவிஷயத்தில் அரசாங்கம் தலையிடாமல்
இருக்க வேண்டுமென்பது மற்றொன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்
தினால் அநர்த்தம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது. இவை வருணாசிரம
தர்ம மகாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்றும் பிராமணர்கள்
யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தேசத்தில் உள்ள பல
கட்சிகளும் நம்மை லட்சியம் செய்யவில்லை. இந்தியாவிலுள்ள சர்வ
கட்சி மகாநாடும், காங்கிரஸ் முதலானவைகள் தங்கள் ரிப்போட்டை பார்லி
மெண்டுக்குத்தான் அனுப்பப்போகிறார்கள். சைமன் கமிஷனும் தாங்கள்
சேகரிக்கும் விஷயங்களை பார்லிமெண்டுக்குத்தான் அனுப்பப் போகி
றது. நம்மை இங்கு ஒருவரும் பொருள்படுத்தாமல் இருக்கையில் நம்
பாத்தியதையை யாரிடமேனும் வற்புறுத்தி வைக்கவே நமது கோரிக்
கையை கமிஷன் முன் ஆஜர்படுத்த வேண்டும். நமது உரிமையை
வற்புறுத்த வேண்டிய காலத்தில் நாம் சும்மா இருந்துவிடக் கூடாது.
பெரும்பாலோர் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்காத காலத்தில்:
100 க்கு மூன்றுபேர் ஆகிய நாம் மாத்திரம் ஏன் பகிஷ்காரம் என்று.
புத்தியில்லாமல் உளறிக் கொண்டிருக்க வேண்டும் என்று பேசி
யிருக்கிறார்கள். இவ் வாக்கியங்களை ஒவ்வொன்றாக கவனித்துப்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பார்ப்பவர்களுக்கு பார்ப்பனர்களின் இரகசியமும், பார்ப்பனரல்லாதாரின்.
நிலைமையும், சைமன் பகிஷ்காரம் என்பதின் யோக்கியதையும், “இரண்:
டொரு பார்ப்பனர்கள் அயோக்கியத்தனமாய் இருக்கிறார்கள் என்ப
தற்காக பார்ப்பன சமூகத்தையே குற்றம் சொல்லலாமா?” என்று சொல்லும்
பார்ப்பனக் கூலிகளின் கூற்றுகளின் யோக்கியதையும் வெட்ட வெளிச்ச
மாகாமல் போகாது.
மேற்படி தென் இந்திய பார்ப்பன பிரதிநிதி சபையாக இரண்டு தக்க
பார்ப்பனர்களை முக்கிய புருஷர்களாக மாஜி ஹைகோர்ட் ஜட்ஜும்,
செல்வாக்குப் பெற்ற வக்கீல் என்பவருமான திரு. வி.வீ. சீனிவாசய்யங்கார்.
என்பவர் அக்கிராசனாதிபதியாகவும், வைதீக பார்ப்பனருக்குப் பிரதிநிதியாக
திரு.என். சீனிவாசாச்சாரி என்பவர் உபந்யாசராகவும். அநேக லெளகீக
உத்தியோகப் பார்ப்பனர்களும் அனேக வைதீகப் பார்ப்பனர்களும் சபை
யோர்களாகவும் இருந்து கூட்டம் நடைபெற்றிருப்பதால் இது பொதுவாக
தென்னாட்டு “லெளகீக வைதீக”ப் பார்ப்பனர்களின் பொறுப்பேற்ற சபை
என்பதற்கு யாரும் ஆட்க்ஷ்பனை சொல்ல முடியாது.
திரு.வி.வி. சீனிவாசய்யங்கார் அரசியல் புரட்டின் பலனாய் 20
வருஷங்களாக மாதம் ஆயிரம் பதினாயிரம் ரூபாய்கள் வீதம் வக்கீல்
தொழிலில் கொள்ளையடித்து விட்டு ஹைகோர்ட் ஜட்ஜி வேலையும் பெற்று
அதிலும் ஒரு கை பார்த்துவிட்டு இன்னமும் மாதம் பதினாயிரக் கணக்காய்ச்
சம்பாதித்துக் கொண்டிருப்பவர். இந்நிலையில் பார்ப்பனரல்லாதார்களும்
இவரைப் போல் ஆகிவிடுவார்களே என்கின்ற பொறாமையால் தனக்கு
இப்போது சுயராஜ்ஜியத்தில் அதாவது அரசியல் சுதந்திரத்தில் நம்பிக்கை.
இல்லை என்றும் ஜாதி மதத் துவேஷமிருக்கும் போது சுயராஜ்யம் பெறுவதில்
பலன் இல்லை என்றும் பார்ப்பனர்களுக்கு சுயராஜ்யத்தில் பங்கு கிடையாது
என்றும் சுயராஜ்ஜியத்தை விட வெள்ளைக்காரரின் ராஜ்ஜிய பாரமே
மேலானதென்றும் சொல்லிவிட்டார். இதையேதான் எல்லாப் பார்ப்பனர்.
களும் இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். (ஆனால் சிலர் ரகசிய
மாய்ச் சொல்லுகிறார்கள்) எனவே தங்களுக்கு அதிகாரமும் பதவியும் உத்தி
யோகமும் கிடைப்பதாயிருந்து அதுவும் நிலைத்திருந்தால் மாத்திரம் சுய
ராஜ்ஜியம் வேண்டும் என்பதும் வேறு யாருக்காவது அதில் பங்கு போய்
விடும் என்று தோன்றினால் உடனே சுயராஜ்ஜியம் வேண்டாம் என்பதும்
பார்ப்பனர்களின் யோக்கியதை என்பதாக நாம் அடிக்கடி சொல்லி வருவதா
னது வெட்டவெளிச்சமாகும்படி வெளியானதற்கு நாம் மகிழ்ச்சியடை
கின்றோம். அடுத்தபடி பார்ப்பனரல்லாதார் படிப்பதை பார்ப்பனர்கள் தடுத்
தார்களா என்கிறார்.
நமது படிப்பு விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு இடையூறாய்
இருந்திருக்கின்றார்கள் என்பது திரு அய்யங்காருக்கு உண்மையிலேயே
குடி அரசு - 1928 @)
68
தெரியாதா? சுருங்கச் சொன்னால் இப்போதும் உபாத்தியாயர்கள் பார்ப்பனர்.
கள்; பரீட்கைஷ அதிகாரிகள் பார்ப்பனர்கள். (அதுவும் நம்மைச் சூத்திரர்கள்
என்றும், சூத்திரர்களைப் படிக்கவிடக் கூடாது என்றும் சொல்லும் மதக்
காரர்கள்! இந்த நிலையில் அப்பார்ப்பனர்களிடம் நம் பிள்ளைகள் எப்படிப்
படித்து பாஸ்செய்யக் கூடும் என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளட்டும்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் வலுப்படுகின்றது என்றும், இதனால்
“பிராமணத்துவம்” கெட்டுப்போகும் என்றும் திரு. அய்யங்கார் முதலைக்
கண்ணீருடன் கவலைப்படுகிறார். வகுப்புவாதத்தை வெட்டிப் புதைத்தாய்
விட்டது. “டிங் டாங் டிங்” என்று பறையடித்த கூட்டத்தார் இப்போது
துவேஷம் வளருகிறது என்று சொல்லுவதின் அர்த்தமென்ன? பார்ப்பனன்
மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு சிறு
பார்ப்பனக் கர உலகத்தில் உள்ள வரை பிராமணத் துவேஷத்தை ஒழிக்க
யாவராலும் முடியாது என்பதையும், அப்படி அது ஒரு சமயம் எந்தக்
காரணத்தாலாவது ஒழிவதானாலும் நாம் உயிர் விடும் வரை அதற்கு
இடையூறாய் இருந்துதான் தீருவோம் என்பதையும் வாசகர்களும், மற்றப்
பார்ப்பனர்களும் ஒன்றாய் உணர்வார்களாக.
மற்றும் பிராமணத்துவேஷத்தால் பிராமண தத்துவத்திற்கு கெடுதி
வரும் போலிருக்கின்றது என்று மிக்க துக்கப்படுகிறார்.
பிராமணத்துவம் என்றால் என்ன? ஊரை ஏமாற்றுவதா? உத்தி
யோகங்களெல்லாம் எந்த வேலை செய்தாவது தாங்களே பார்க்க வேண்டு
மென்பதா? தங்கள் சுயநலத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்து கொடு
முறை அரசாங்கத்துக்கு உளவாய் இருப்பதா? வக்கீல் வேலை செய்வதா?
போலீசு வேலை பார்ப்பதா? லஞ்சம் வாங்குவதா? அதிகாரிகளின் தயவுக்
காக இழிதொழிலில் இறங்குவதா? எல்லாவித அயோக்கியத் தனங்களையும்
இழி தொழிலையும் செய்து கொண்டும் உடம்பினால் ஒரு தொழிலும்
செய்யாமல் பிச்சையெடுத்து வயிறு வளர்த்துக் கொண்டும் சோம்பேறி
வர்க்கமாய்த் திரிந்து கொண்டும் பிராமணன் உயர்ந்தவன் என்று சொல்லு
வதா? பார்ப்பனரல்லாதாரை தலையெடுக்கவொட்டாமல் மதத்தின் பேராலும்
சாமி பேராலும் அரசியலின் பேராலும் அழுத்தி வைத்திருப்பதா?
காப்பிக்கடையில் எச்சில் கிண்ணம் கழுவுவதா? விபசாரத்திற்கு தரகு
வேலை செய்வதா? என்று கேட்பதுடன் அப்படியானால் இவற்றில் எந்தக்
காரியம் கெட்டுப் போகும் என்று திரு. அய்யங்கார் வருத்தப்படுகிறார்.
என்பது நமக்கு விளங்கவில்லை.
மற்றும் “பிராமணர் இயக்கம் பிராமணத் தத்துவத்தை” காப்பாற்றவே
வெகுகாலமாய் இருந்து வருகின்றது என்கின்றார். பார்ப்பனரல்லாதார்.
69
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இயக்கத்தை காட்டிக் கொடுத்து பிழைக்கும் வயிற்றுப் பிழைப்பு தேசீய
வாதிகள் பலர் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆவதற்காக அடிக்கடி
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை குறை கூறி வகுப்பு இயக்கம் கூடாது கூடாது
என்று சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பு ஆகும் என்றே சொல்லுவோம். மற்றும்
“எல்லா பிராமணர்களும் வெள்ளைக்கார அரசாங்கமே மேல் என்று
சொல்லுகிறார்கள்” என்கின்றார். இது உண்மையே. எப்படி என்றால், எப்போ
தும் பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம் போல் தங்கள் ஆதிக்கத்திற்கு ஏற்றபடி
நடக்கக் கூடிய அரசாங்கம் இல்லாவிட்டால் உடனே வேறு அரசாங்கத்தைக்
கொண்டுவந்து நிலைக்க வைக்க முயற்சிப்பது சரித்திர பூர்வமானது:
ஆனதால் நமக்கும் அதிகாரத்தில் சற்று பங்கு கிடைக்கும் என்கின்ற பயம்
ஏற்பட்டவுடன் சுயராஜ்ஜியம் வேண்டாம் வெள்ளைக்கார ராஜ்ஜியமே
இருக்க வேண்டும் என்று சொல்ல வந்து விட்டார்.
மற்றும் மத விஷயத்தில் யாரும் பிரவேசிக்க இடம் கொடுக்கக் கூடாது
என்கின்றார்.
மதவிஷயம் என்றால் என்ன? எல்லோரும் சம்பாதிக்கும் பணம் ஒரு
கூட்டத்தாரின் வயிற்றிலேயே போய் விழுவதற்கு அனுகூலமாயிருக்
கட்டும் என்பதா? அல்லது மத ஆதாரத்தை ஒரு கூட்டத்தார் தவிர வேறு
யாரும் பார்க்கக்கூடாது என்பதா? ஒருவனை ஒருவன் தொடக்கூடாது
என்பதா? தெருவில் நடக்கக் கூடாது என்பதா? சாமி பேரால் பெண்கள்
பொட்டுக்கட்டிக் கொண்டு ஊராருக்கெல்லாம் மேகவியாதி விநியோகித்துக்
கொண்டிருக்க வேண்டும் என்பதா? பார்ப்பானுக்கு வேலை செய்யவே
மற்றவர்களைக் கடவுள் படைத்தார் என்பதா? என்ன அக்கிரமம் செய்
தாலும் “பிராமணன் பிராமணன் தான்” என்பதா? சாமிகளுக்கு பெண்டு
பிள்ளை, வைப்பாட்டி, விபசாரம் முதலிய குணங்கள் கற்பித்து அதற்கு
கோயில் குளம் திருவிழாக்களும் கற்பித்து அதனால் ஒரு கூட்டத்தாரே
பிழைக்க வழி செய்திருப்பதா? 10 வயது பெண்ணுக்கு 60 வயது கிழவனை
கட்டுவதா?
11 வயதுள்ள பெண் குழந்தை மற்றொரு குழந்தையைப்
பெறுவதா?
5 வயது குழந்தையை தாலியறுத்து முண்டைச்சி என்று
மொட்டையடித்து சகுனத்தடையாக்கி முக்காடிட்டு சாகும் வரை மூலையில்
கிடத்துவதா? பெண்ணாய்ப் பிறந்துவிட்டால் ஆண்பிறப்பு இல்லாவிட்டால்
தான் பதிவிரதைகளாக இருக்கலாம் என்பதா? பெண்கள் விபசாரித்தனம்
செய்தால் வீட்டுக்கு விலக்கானதும் அத்தோஷம் தீர்ந்துவிடுகிறது என்பதா?
கடவுளே பெண்களை விபசாரிகளாகச் சிருஷ்டித்து விட்டதால் காவல்
செய்வதில் பிரயோஜனமில்லை, பிராயச்சித்தம் செய்தால் போதும் என்பதா?
ஏதாவது ஒரு கிராமத்தில் ஒரு பார்ப்பான் ஒரு ராத்திரி தன் பக்கத்தில்
போகத்திற்குப் பெண் இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தால் அந்தக்
கிராமத்திற்கே தோஷம், ஆதலால் திண்ணை திண்ணையாய் தேடிப் பார்த்து
தனியாய்ப்படுத்திருந்தால் ஒரு பெண்ணைப் படுக்க வையுங்கள் என்பதா?
குடி அரசு - 1928 @)
70
இந்து மதம் தப்பு என்று பார்ப்பன ஜாதியில் பிறந்து கிறிஸ்துவ மதத்தில்
சேர்ந்து அதில் பெரிய உத்தியோகம் பெற்றுக் கொண்டு மறுபடியும்
பார்ப்பானாகி பார்ப்பனரல்லாதாருக்கு கெடுதி செய்வதா? மறுபடியும்
மகமதிய மதத்தில் சேர்ந்து மறுபடியும் பார்ப்பானாவதா? அண்ணன்
மிதவாதி,
தம்பி சர்க்கார்வாதி, தான் உளவாளி சி.ஐ.டி தகப்பன் பிஞ்சின் வாங்கிய பிறகு
காங்கிரஸ் வாதி, மாமனார் வக்கீல் வேலையில் லக்ஷக் கணக்காய் பணம்
கொள்ளையடித்துக் கொண்ட பிறகு பூரண சுயேச்சைவாதி, கண் தெரியாத
பாட்டனார் ஒத்துழையாவாதி என்பதா? இன்னும் இது போன்ற விஷயங்கள்
பதினாயிரக்கணக்கில், எதை மத தத்துவம் என்கிறார் என்பது நமக்கு
விளங்கவில்லை. மற்றும் நமது நாட்டில் பிராமணன் பிராமணரல்லாதவன்
என்பதற்கு ஒரு வித்தியாசத்தையும் கற்பிப்பதில்லை என்கின்றார். இது
வாஸ்தவமா என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும் என்றாலும், இது
ஒன்றே போதும். இவர் எவ்வளவு பொய்யைப் பேசுகின்றார் என்பதற்கு
ஆதாரம் போதாதா என்று பார்க்க விரும்புகிறோம்.
இதுவரை அக்கிராசனர் சீனிவாச அய்யங்கார் முன்னுரையில்
சிலதைப்பற்றி மாத்திரம் எடுத்து விவரித்திருக்கின்றோம். மற்றபடி உபந்நியா
சகர் திரு. சீனிவாசாச்சாரியார் உபந்யாசத்தைப் பற்றி மறுமுறை எழுதலாம்
என்று நிறுத்திவிடுகின்றோம். இதிலிருந்து சைமன் கமிஷன் பஹிஷ்காரத்
தைப் பற்றிய உண்மை என்ன என்பதும் அது விஷயத்தில் பார்ப்பனர்களின்
குழ்ச்சி என்ன என்பதும் ஒத்துழைப்பும் பஹிஷ்காரமும் எதற்காக என்பதும்
ஒருவாறு திரு. சீனிவாசாச்சாரியார் பேசிய குறிப்புகளிலிருந்தே வாசகர்கள்
உணரலாம் என்றும் நினைக்கின்றோம்.
ஆகவே பார்ப்பனரல்லாதார் இயக்கமும் சுயமரியாதை இயக்கம்
என்கின்ற சீர்திருத்தத் தன்மை கொண்ட இயக்கமும் நமது மக்களுக்கு
வேண்டுமா வேண்டாமா என்பதும், பஹிஷ்காரக் கூச்சலைப் புரட்டு என்று
நாம் இதுவரை சொல்லி வந்தது உண்மையா அல்லவா? என்பதும் ஒருவாறு
வாசகர்களுக்கு அக் குறிப்புகளால் விளங்கக் கூடும் என்றும் நினைக்
கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.08.1928
71
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பெண்கள் உண்மை வி௫கலையடையா
வண்டுமாணால்
“ஆண்மை” அழிய வேண்டும்
பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில்,
அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு
வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக்
கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து
வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை
இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை
அளிக்கமுடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால்
முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல்
போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே.
கட்டுப்பாடுகளை பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப்
பிராயம். எதுபோலவென்றால்,
இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள்
ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின்
பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம்
விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு
ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும் சமூகசீர்திருத்தம், சமத்துவம் என்பதாக
வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர்.
திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமூகக் கொடு
மைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும் மதத்தினாலும் நிலை பெற்று
பலப்பட்டு வருகின்றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.
அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால்
பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை
பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டு கொண்டு வருகின்றன. பெண்
களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காக பாடு
படுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்று
வதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால்
எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு
விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு
குடி அரசு - 1928 @)
72
விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்
களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்
லாதார்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன்
உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம்
டி
விஷயங்களில் விடுதலை உண்டாய் விட்டாலுங் கூட ஆண்களால்
பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம்
உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை
இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு
வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது அந்த ஆண்மை
உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை யென்பதைப்
பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில்
“ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும்.
பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கபட்டாலல்லாது பெண்மை
விடுதலை யில்லை யென்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள்
அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சுதந்தரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை”க்குத்
தான் உரியதாக்கப்பட்டுவிட்டது. ஏன்? “ஆண்மை”க்குத்தான் அவைகள்
உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை
மாத்திரம் பெண்கள் நன்றாய் உணர வேண்டும் என்று வேண்டிக்
கொள்ளுகின்றோம்.
எனவே பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான்
ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும்
கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டி
ருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும், இதை உண்மை என்றே
நினைத்துக்கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால்
பெண் அடிமைக்கு பலம்
அதிகம் ஏற்பட்டிருக்கின்றதென்பதும், நடுநிலைமைப் பெண்களுக்கும்
ஆண்களுக்கும் யோசித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள்
பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால், எப்படி கடவுளாலேயே
மக்களுக்கு பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற
இந்துமதக் கொள்கையைச் சுட்டுப்பொசுக்க வேண்டியது அவசியமோ
அதுபோலவே பெண்மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மை சுதந்திரம்
பெற வேண்டுமானால் “ஆண்மை”யும் “பெண் அடிமையும்” கடவுளால்
உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும்
ஒழிந்தாக வேண்டும்.
பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப்
பெண்களே பெரிதும் தடையாயிருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும்
பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற
73
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின்
தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்தி
ருப்பதின் அறிகுறிகளாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படியெனில்
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல்
பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்
கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ
மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால்
தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜுப்படுத்திக்
கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்த
ரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல
இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும்
தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு
ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய்விடுகின்றது. எனவே உண்மை
யான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு
ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை
நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாகஉண்மைவிடுதலை
அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு
யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்வது
பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று
இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளை:
பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற
மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை
இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதி உடையதாய்
இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்லவரலாம்.
உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை
வாழ்வு நடத்தும்போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு
விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே
வாழ்வு நடத்தி வருகின்றபோது, இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோத
மாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.
தவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம்
விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச்
சிலர் வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன
நஷ்டம்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து
ஏற்பட்டுவிடக்கூடும்? அல்லது இந்த தர்மநியாயம் பேசுபவர்களுக்குத்தான்
என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இது
வரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்
திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.
குடி அரசு - 1928 @)
74
பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்ப
தில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது.
இதைசாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் இவ்விஷயத்தில்
அதைப்பற்றிச் சிறிதும் கவலைகொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே
கவலைகொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்களின்
விடுதலைக்குப் பெண்களே வேறு
எந்த முயற்சி செய்தாலும் அது சிறிதாவது
ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால்
இந்தக்காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற
காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்ப
தோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக்
கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்
காரணாயிருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து
கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவணாய் விடுகிறான். அன்றி
யும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும்
நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும்
முறைகளையும் மற்றொரு சமயம் விரிப்போம்.
குடி அரசு - தலையங்கம் - 12.08.1928
75
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
திரு. கண்ணப்பர்
“திராவிடன்” பத்திராதிபர் திரு. கண்ணப்பர் அவர்கள் தொழிலாளர்:
கள் வேலைநிறுத்தத்திற்கு அனுதாபம் காட்டியது பற்றி கைது செய்யப்பட்ட
விபரம் முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம். திரு. கண்ணப்பர், பார்ப்
பனரல்லாதார் மக்களின் நலத்திற்கு என்று இத்தமிழ்நாட்டில் திருவாளர் நாயர்.
பெருமானும், தியாகராய வள்ளலும் தோற்றுவித்த “தென் இந்தியர் நல
உரிமைச்சங்கம்” என்னும் பார்ப்பனரல்லாதார் சங்கம் துவக்கப்பட்டது முதல்
சுயநலம் கருதாது தொண்டாற்றி வருபவர்.
அச்சங்கத்தில் உழைத்து வந்த மக்களில் திரு. கண்ணப்பர் போன்று
தன்னலம் கருதாமலும் உழைத்ததற்காக கூலி கேட்காமலும் உழைத்த
வர்களைக் காண்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பது நாம் சொல்லா
மலே விளங்கும். திரு. கண்ணப்பர் வெலம நாயுடு வகுப்பைச் சேர்ந்தவ
ராயினும் அவருக்கு ஜாதிமத பேதமோ மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு
என்கின்ற உணர்ச்சியோ ஒரு சிறிதுமில்லாத சமரசவாதியாவார். அவருக்கு
இன்றைய வயது முப்பத்துஒன்றேயாகும். உறுதியும் தைரியமும் பெற்ற வீரர்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் பயிற்சியுள்ளவர்.
அவரது 22, 23 வது வயதிலே
பிரசாரத்தில் புகுந்தவர். ஒத்துழையா இயக்கம் என்பதாக நமது நாட்டில் 7, 8
ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கோடி ரூபாயை மூலதனமாகக் கொண்டு
மேளதாளம், ஊர்வலம், பூமாலை, ஜே கோஷம் முதலியவைகளோடு
பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத சிலரும் பாமர மக்களிடையில் பெரிதும்
செல்வாக்குப் பெற்று பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் பிரசாரம் செய்து
கொண்டிருக்கையில் திரு. கண்ணப்பர் கல்லடியும் மண்ணடியும் பெற்றுக்
கொண்டதுடன் காலிகளின் உபத்திரவங்களையும் சமாளித்துக் கொண்டு
வெகு தீரத்துடன் பார்ப்பனரல்லாதார் நலத்தின் பொருட்டு காங்கிரஸ் புரட்டை
யும் பார்ப்பனப் புரட்டையும் அவர்களது கூலிகளின் யோக்கியதையையும்
வெளியாக்கி வெற்றிமாலை சூடிக்கொண்டு வந்தவர். சுமார் 4,
5 வருஷ
காலமாக “திராவிடன்” பத்திரிகைக்கு யாதொரு ஊதியமும் இல்லாமல் தனது
வாழ்க்கைக்கு மாத்திரம் வேண்டிய ஒரு சிறு அலவுன்சைப் பெற்றுக் கொண்டு
இரவும் பகலும் இடைவிடாமல் உழைத்து வந்தவர்.
திரு. கண்ணப்பர் “திராவிடன்” பத்திரிகை ஆசிரியத் தன்மையை
ஏற்றுக் கொள்ளும்போது அப்பத்திரிகை ஆயிரம் பிரதிகளுக்கு கீழாகவே
குடி அரசு - 1928 @)
76
வெளியாகிக் கொண்டிருந்ததோடு அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு
பிரதிகளைப் பிரித்துக் கூடப் பார்ப்பவர்கள் இல்லாமல் குப்பைக்கு போய்க்
கொண்டேயிருந்தது என்று சொல்வது ஒரு சிறிதும் மிகையாகாது. அப்
பேர்ப்பட்ட “திராவிடன்” இன்று தினம் 6000 பிரதி வெளியாவதும் அதுவும்
ஒவ்வொரு பத்திரிகையை 5,10 பேர்கள் கூடி வாசிப்பதும் “திராவிடன்”
பத்திரிகை படிக்குமிடங்களில் தெருக்கூத்துபோல் ஜனங்கள் கூடிக்
கேட்பதும் ஆகிய இன்றைய நிலைக்கு திரு. கண்ணப்பர் அவர்களின்
அஞ்சா நெஞ்சமும், பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு உயிரை ஒப்படைத்
திருக்கும் தியாக உணர்வுமே பெரிதும் காரணமானது. அதுமாத்திரமல்லாமல்
அவர் டைரக்டராகவும் முக்கிய மெம்பராகவும் இருக்கும் ஜஸ்டிஸ் s
தலைவர்களின் அபிப்பிராய பேதங்களுக்கும் ஒரு சிறிதும் பயப்படாமல்
சுயமரியாதை இயக்கக் கொள்கையையே தமது கொள்கையாகவும் தமது
“திராவிடன்” பத்திரிகையின் கொள்கையாகவும் கொண்டு அரசாங்கத்
திற்கும் சட்டத்திற்கும் சமய சமூக கட்டுப்பாட்டிற்கும் தனது ககஷிக்கும் தனது
மனச்சாககியையோ கொள்கையையோ ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்
காது மனிதத்தன்மையோடு போர் முனையில் நின்று கொண்டிருக்கின்றவர்.
இப்பேர்ப்பட்ட ஒரு சுயமரியாதை வீரர் இன்றையதினம் பார்ப்பனரல்லாத
ஏழைத்தொழிலாள சகோதரர்களின் நெருக்கடியான சமயத்தில் தனது
கடமையைச் செலுத்தியதன் மூலம் சிறைவாசம் செய்ய ஏற்பட்டது அவரது
பாக்கியமேயாகும்.
அவர்
அடைந்த இவ்வொப்பற்ற பாக்கியத்திற்காக தமிழ்
மக்கள் அவரைப் பாராட்டாமலிருக்க முடியாது. அவரை 5 நாள் சிறையில்
அடைத்து வைத்திருந்து ஜாமீனில் விட்டுச் சென்ற 6 தேதி அவர் மீதுள்ள.
இன்டியன் பினல் கோட் 143, 1886) பிரிவுப்படி கேஸ் விசாரணை நடந்தது.
விசாரணையில் நடந்த பல ஊழல்களாலும் அதிகாரிகளின் மனோபாவத்
தாலும் பார்ப்பன ஆதிக்கமே இக்கேசுக்கு ஆதாரம் என அவர் உணர்ந்த
தாலும் இதை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். இம்மாதம் 22 தேதி வரை வாய்தா கொடுக்கப்பட்டி
ருக்கிறது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.08.1928
77
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
மதறாஸ் கவர்ண்வமண்டு ஆயிசும்
192ஹு ஆகஸ்ட் மாதம் 5 ௨ சென்னை சட்டசபையில் கனம் திவான்
பகதூர் ஓ.தணிகாசலம் செட்டியார் கொண்டு வந்து பாஸ் செய்த தீர்மானங்
களுள் முக்கியமானது சென்னை கோட்டைக்குள் கொரடுபோட்டுக்
கொண்டிருக்கிற பிராமணர்களுடைய கோட்டையை தகர்த்து, டிகோட்டை
யாகிய கவர்மெண்டு ஆபீசாகிய கோட்டைக்குள் பிராமணரல்லாதாரும்
சூப்பிரண்டுகளாகவும் உயர்தர கிளார்க்குகளாகவும் செய்விக்க வேண்டு
மென்பதும், அதுவும் மூன்று வருஷ காலத்திற்குள் நூற்றுக்கு ஐம்பதுக்கு
குறையாமல் பிராமணரல்லாதாரை டி வேலைகளில் நியமிக்க வேண்டு
மென்பதும், அந்த கவர்ன்மெண்டு ஆபீசில் இருக்கும் பிராமணருக்குப்
பிரண்டுகள், கிளர்க்குகள் வெளிப்படுத்தப்படவேண்டு மென்பதுமான இந்த
தீர்மானத்துக்கு என்ன மதிப்பு தந்தனர் கவர்ன்மெண்டார்? இந்த நிலைக்கு
யார் உத்தரவாதம்? பிராமண உத்தம சீலர்களும். தீர்மானத்தை நிறைவேற்றக்
கூடிய மனத்திடமில்லாத மினிஸ்டர்களும் அல்லவா? இதில் அதிக அக்கிரம
முடையது. சர்.சி.பி. ராமசாமி அய்யருடைய லா டிபார்ட்டுமெண்டு ஒரு
பிராமண சூப்பிரண்டு கூட கவர்மெண்டு ஆபீசை விட்டு வெளிப்படுத்தவே
இல்லை. பிராமணர்களுக்கே லா டிபார்ட்டுமெண்டு காணியாட்சியா? புது லா
மெம்பர் இதைக்கவனிக்கும் படியாக வேண்டுகின்றோம். கனம் நாப்பு துரை
தாம் கவனித்து ஏற்பாடு செய்வதாக கவுன்சிலில் வாக்களித்தார். அவரும்
போய் விட்டார். திரு. தணிகாசலம் செட்டியாரும் சட்டசபையில் தற்போது
இல்லை. இந்த நிலையில் இனியாவது சரியான நிலைமையிலுள்ள எல்லா
அதிகாரிகளும், பிராமணரல்லாதாருக்கு நியாயம் நடத்துவார்கள் என்பது
எங்கள் பூரண நம்பிக்கை. லா டிபார்டுமெண்டில் 100 -.க்கு 50க்கு மேல்
பிராமணரல்லாதாரை சூப்பிரெண்டுகளாகவும் கிளர்க்குகளாகவும் அலிஸ்
டெண்டு செக்ரிடரிகளாகவும் ஆக்கி வைக்க வேண்டுமென்பது ஜஸ்டிஸ்
கட்சிக்காரருடைய வேண்டுகோள். புது லாமெம்பர் கட்டாயம் இந்த அக்கிரம
மான நடவடிக்கையை மாற்றி நியாயம் செய்ய வேணும். இனிமேல் புது லா
மெம்பர் கவனித்து அக்கிரமத்தைக் குறைத்து மற்ற வகுப்பினரையும் லா
டிபார்ட்மெண்டில் அதிகமாக சேர்க்கும்படி உத்திரவு உடனே பிறப்பிப்பார்.
என நம்புகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டாமா? - நியாய
வேண்டுகோள்.
குடி அரசு - கட்டுரை - 12.08.1928.
குடி அரசு - 1928 @)
78
தொழிலானர் வேலை நிறுத்தம்
தென் இந்திய ரயில்வெ தொழிலாளர் வேலை நிறுத்தமானது தொழி
லாளர்களுக்கு பலன் கொடுக்காமல் போனதாக சிலர் சொல்வதானாலும்
அந்த வேலை நிறுத்தம் பல “தலைவர் களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும்.
கொழுத்த பலனைக் கொடுத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது
என்றே சொல்லுகின்றோம். என்னவென்றால் தொழிலாளர் வேலை நிறுத்தம்
செய்யப்போவதாக பல நாளாகவே எச்சரிக்கை செய்தும் ரயில்வே அதிகாரி.
கள் இணங்காமல் பிடிவாதமாயிருப்பதற்கும், வேலைநிறுத்தம் ஏற்பட்ட
பிறகும் வேலைறிறுத்தத்திற்கு கேடு நேரிடுவதற்கும் உண்மையற்ற சமாசாரங்
களை வெளிப்படுத்தியும், தொழிலாளர்கள் மீது பழிசுமத்தியும் எழுதிவந்த
தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நல்ல ஆதாயம் ஏற்பட்டதென்றே
சொல்ல வேண்டும். ரயில்வே அதிகாரிகளும் தங்கள் அனுதாபிகளுடனும்
சில பத்திரிகைக்காரர்களுடனும், சில தலைவர்களுடனும் இது விஷயமாய்
தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டுதான் வேலை நிறுத்தத்தைச் செய்து
தீர வேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்து விட்டார்களே ஒழிய
வேறில்லை.
இந்த உண்மையானது ஏஜண்டின் முரட்டுத்தனத்தாலேயே ஒருவாறு
ருஜுவாகாமல் போகாது. அதாவது திருவாளர் கோவை சி.எஸ். ரத்தின
சபாபதி முதலியார் ஏஜண்டுக்கு மிகவும் அனுகூலமானவர் என்று சிலரால்
சொல்லப்படுபவர். அவர் வேலைநிறுத்தத்தின் போது மக்களின் சுகா
தாரத்தைப் பொறுத்தவரை அதாவது கக்கூஸ் சுத்தம் செய்வதற்கு ஆள்
கொடுத்து உதவினவர். இதனால் சில தொழிலாளர்களுடைய மன வருத்
தத்தையும் பெற்றவர். அப்படிப்பட்டவரே “தொழிலாளர் போராட்டத்தை ஒரு
விதமாக முடிவு செய்யலாம் போலிருக்கின்றது. ஆதலால் இது விஷயத்தில்
நான் ஏதாவது சேவை செய்ய ஆசைப்படுகின்றேன். அதற்கு இடம்
கொடுக்கின்றீர்களா?” என்று ஏஜண்டைக் கேட்டதற்கு “உமது சேவை
எனக்கு வேண்டியதில்லை, எனக்கு அவசியமுமில்லை” என்று மனிதத்
தன்மைக்கேற்ற மரியாதை கூட இல்லாமல் தந்தி அடித்துவிட்டார். இம்மாதிரி
மரியாதை கூட இல்லாமல் நடந்து கொண்டீர்களே என்று கேட்டால் அதற்கு
பொருத்தமற்ற பதிலைச் சொல்லிவிட்டு, நீர் ஏதாவது சேவை செய்ய வேண்டு
மென்கிற ஆசையிருந்தால் தொழிலாளர்களை என் காலில் கொண்டு வந்து
79
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கும்பிட வையும் என்பது போன்ற வன்னெஞ்சமான கடிதம் எழுதினார். இதை
உத்தேசித்து அவர் அந்த ரயில்வே அட்வைசரி போர்டில் தனக்குள்ள
மெம்பர் ஸ்தானத்தை ராஜீனாமா கொடுக்கக்கூடத் தீர்மானித்தார்.
அவரது
உண்மை நண்பர்கள் சிலரின் வேண்டுகோளால் அது தடுக்கப்பட்டது. இதன்
மேல் திரு. முதலியார் அடுத்துக் கூடப்போகும் சட்டசபைக் கூட்டத்தில் ஒரு
அவசரத் தீர்மானம் கொண்டுவந்து தொழிலாளர் நிலையைப் பற்றிப்
பேசப்போவதாக அறிகிறோம். இதனால் என்ன பலன் ஏற்படும் என்பது
நமக்கு விளங்கவில்லை. சட்டசபை மண்டபத்திலுள்ள சுவர்களும் தூண்:
களும் திரு. முதலியார் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதால் என்ன பலன்
விளையுமோ, அதுதான் அங்குள்ள சட்டசபை மெம்பர்களும் சர்க்கார்.
அதிகாரிகளும் கேட்டுக் கொண்டிருப்பதாலும் விளையுமே ஒழிய
வேறில்லை...
அரசாங்கம் என்பதும், ரயில்வே முதலாளிகள் என்பதும், ஜனப்
பிரதிநிதிகள், தலைவர்கள், காங்கிரசு, சுயராஜ்யம், தேசீயம் என்பதும்,
ஏழைகள் தலையில் கையை வைத்துக் கொள்ளையடித்துத் தங்களுக்குள்
பங்கு போட்டுக் கொள்ளும் ஒரே தன்மைமையுடைய கொள்ளைக் கூட்டமே
ஒழிய வேறில்லை என்று நாம் கோபுரத்தின் மீதிருந்தும் கூவுவோம். இதற்கு
உதாரணம் வெகு தூரம் போகவேண்டியதில்லை. ஒவ்வொரு தன்மையிலும்
தலைவர்களின் ஜீவிய சரித்திரத்தை சற்று ஞாபகப்படுத்திக் கொண்டால்
போதுமானதாகும்.
எனவேரயில்வெ அதிகாரிகளின் ஆணவத்திற்குக் காரணம் இன்னது
என்பது இப்போதாவது பொது ஜனங்களுக்கு விளங்கியிருக்கும். இந்த
மாதிரிப் பத்திரிகைகளினுடையவும் தலைவர்களினுடையவும் உதவி
ஏஜண்டுக்கு விலை கொடுக்காமல் கிடைத்திருக்குமென்று யாராவது நம்பக்
கூடுமா? ஆதலால்தான் இவ்வேலை நிறுத்தத்தால் பலருக்கு லாபம் என்று.
சொன்னோம்.“குதிரை கீழே தள்ளினதல்லாமல் குழியும் பறித்தது” என்பது
போல் வேலை நிறுத்தத்தை தோல்வியடையச் செய்தது போதாமல்
தொழிலாளர்களை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தவும் பலமான
காரியங்கள் செய்யப்பட்டும் வருவது மிகவும் வெறுக்கத்தக்கதென்றே
சொல்லுவோம். கடலூர் சிறையில் சில தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டு
எண்ணெய்ச் செக்கு ஆட்டுவதாக கேள்விப்படுகின்றோம்.பல தொழிலாளர்.
கள் மீது பல வருஷம் தண்டிக்கத்தக்க கேசுகளை ஜோடினை செய்வதாக
கேள்விப்படுகின்றோம். போலித் தலைவர்களுக்கு அடிமைப்படாத தொழி
லாளர் சங்கங்களை அடியோடு அழிக்க முயற்சிப்பதாகவும் கேள்விப்
படுகின்றோம். இன்னமும் இதில் எழுதமுடியாத கொடுமைகளும் நடை
பெறுவதாகத் தெரியவருகின்றது.
இதனாலெல்லாம் தொழிலாளர் வேலை
நிறுத்தத்தை ஒருக்காலும் தோல்வியடையச் செய்துவிட முடியாதென்றே
சொல்லுவோம்.
குடி அரசு - 1928 @)
80
தொழிலாளர்கள் தாங்கள் செய்தது தப்பு என்பதாக உணர்ந்து ரயில்வே
அதிகாரிகளின் காலில் போய் விழுந்தால்தான் தொழிலாளர்கள் வேலை
நிறுத்தம், அதுவும் காலில் விழுந்தவர்களைப் பொறுத்தவரையில் தோல்வி
அடைந்ததாகுமே யொழிய மற்றப்படி அவர்கள் எந்த லட்சியத்தை உத்தே
சித்து வேலை நிறுத்தம் செய்தார்களோ அந்த லட்சியம் நிறைவேறினா
லொழிய என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தொழிலுக்குப் போவதில்லை என்று
முடிவு செய்து கொண்ட சுயமரியாதையுடைய தொழிலாளர்களுக்கு எந்த
விதத்திலும் தோல்வி ஏற்படுமென்று சொல்லமுடியாது.
உதாரணமாக இதுவரை சுமார் 5000 தொழிலாளர் தங்கள் வேலையை
ராஜீனாமா கொடுத்துவிட்டு வேறு கெளரவமான வேலையில் தங்கள்
வாழ்க்கையை நடத்திக் கொள்ளுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். இந்த
மன உறுதியையும், சுயமரியாதைத் தன்மையையும் கெடுக்கவே மறுபடியும்
சில பத்திரிகைகளும் சில தலைவர்கள் என்போர்களும் சூழ்ச்சி செய்வதோடு
சர்க்கார் ஆட்சியும் அதற்குத் துணைபோய்க்கொண்டு கண்டபடி அரஸ்ட்
செய்வதும், தண்டிப்பதும், வழக்கு ஜோடிப்பதும், ஜெயிலில் கொடுமைப்
படுத்துவதுமான அக்கிரமங்களைச் செய்து கொண்டு வருகின்றது.
இவைகளால் நாம் ஒரு சிறிதும் அதிசயப்படவில்லை.இந்த நாட்டின் தற்கால
நிலை இதுதான் என்று நாம் கொஞ்சகாலத்திற்கு முன்னாலேயே முடிவுசெய்து
கொண்டுதான் இந்தத் தொண்டில் இறங்கியிருக்கின்றோம்.
இதிலிருந்து தேசீயம் என்பதும், அரசியல் என்பதும், சீர்திருத்தம்
என்பதும், சுயராஜ்யம் என்பதும், தொழிலாளர் நன்மை என்பதும், காங்கிரஸ்
என்பதும், சைமன் பகிஷ்காரம் என்பதும் தொழிலாளர்கள், தலைவர்கள்
என்பதும், தேசீயத் தலைவர்கள் என்பதும் தேசீயப் பத்திரிகைகள் என்பதும்,
தொழிலாளர்கள் நன்மைக்குப் பாடுபடும் பத்திரிகைகள் என்பதும், ஏழை
களிடத்தில் அன்புள்ள முதலாளிகள் என்பதும், ஏழைகள் நன்மைக்குப் பாடு
படும் அரசாங்கம் என்பதும் ஆகியவைகளின் புரட்டுகளை மக்கள் அறிந்து
கொள்ள ஒருவாறு வசதி ஏற்பட்டதென்றே நினைக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.08.1928
81
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இந்துமத தத்துவம்
திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு
பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரண வகுப்பில் பார்ப்பனரல்லாத
பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட
அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதைப்பற்றி தேவஸ்
தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது
என்று சொல்லி விட்டாராம்.
மிஸ். மேயோ, இந்திய மக்கள் கல்வியறிவில்லாமல் இருப்பதற்கு
பார்ப்பனர்களே காரணம் என்று தமது “இந்தியத் தாய்” என்ற புத்தகத்தில்
எழுதியதற்கு “தேசீயத் தலைவர்களான” திரு. சத்தியமூர்த்தி பனக்கால்
ராஜாவை சமூகத் துரோகி, தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி என்ற
பொருள்படக் கூறினார். மற்றொரு “தேசீயத் தலைவர்” மிஸ் மேயோவை
“குப்பைக்காரி” என்று கூறினார்.
இவர்கள் திருப்பதி பள்ளிக்கூட நடவடிக்கைகளுக்கு என்ன பதில்
சொல்லப்போகிறார்கள் என்று கேட்கின்றோம்.
சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை, அறிவு
பாஷை என்று சொல்லி அதற்கு பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்
கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க
ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ
கண்டிக்கவோ இதுவரை எந்த தேசீயத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று
கேட்கின்றோம்.
பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்கு பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு
முத்தமிட்டு வரும் “தேசீய வீரமுழக்கம்”” இப்போது எங்கே போய் ஒளிந்து
கொண்டது என்று கேட்கின்றோம்.
செத்த பாம்பை ஆட்டுவது போல் “செத்துச் சுட்டுச் சாம்பலாக்கி
ஆற்றில் கரைத்து விட்டுக் காடாற்றிக் கருமாதியும்” நடந்து விட்ட சைமன்
கமிஷன் பகிஷ்காரத்தைப்பற்றியும் சூழ்ச்சியும் தந்திரமும் பார்ப்பன
ஆதிக்கமும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் பிழைப்புக்கு மார்க்கமும்
குடி அரசு - 1928 @)
82
நிறைந்த தேசீயத் திட்டத்தைப் பற்றியும் கூக்குரலிட்டு கூலி வாங்குகின்றார்.
களேயொழிய இந்த விஷயத்தில் யாராவது கவலை செலுத்தி வருகிறார்களா
என்று கேட்கின்றோம்.
வேதம்தான் “சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும் பார்ப்பனர் தாசி
மகனுமாகிய” பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம்
என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக்
கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை
நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பை பார்ப்பனரல்லாதார் படிக்கக்
கூடாதோ அந்தப் படிப்புக்கு பார்ப்பனரல்லாதார் பணத்தை உபயோகப்படுத்
தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுய
மரியாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம்
செய்யமுடியுமா என்று கேட்கின்றோம்.
இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ
அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி.
பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான
காரியங்களுக்கு பொதுமக்களின் பணத்தை உபயோகப்படுத்தாமல் பார்த்துக்
கொள்ளக்கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன
என்று விழிப்பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா
வாதிகளுக்கு இதிலிருந்தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா
என்று கேட்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 19.08.1928.
83
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
uG
i'li
&
33.
தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும்,
பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது
என்பதும், உள்ளே போய் சுவாமி தெரிசனம் செய்வதாலோ தொட்டுக்
கும்பிடூுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ
கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளு
கின்றோம்.
அக் கோயில்களின் நிபந்தனைகள் மக்கள் சுயமரியாதைக்கு இடை
யூறாகவும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு ஆதாரமாகவும் இருப்பதால் இவை
களுக்கு ஆதாரமான சகலத்தையும் ஒழிக்க வேண்டுமென்றே கருதி இதை
செய்யத் தூண்டுகின்றோமேயல்லாது சாமி என்று ஒன்று இருந்தால் அங்கு
தான் இருக்கக்கூடுமென்றோ, அந்தக் கல்லுச்சாமிக்கு பக்கத்தில் போவதால்
அதிக லாபம் கிடைக்குமென்றோ நினைத்திருக்கும் படியான அவ்வளவு
முட்டாள்தனத்துடன் நாம் கோவிலில் எல்லோருக்கும் சம உரிமை
கேட்கவில்லை.
குடி அரசு - செய்தி விளக்கம் - 19.08.1928
குடி அரசு - 1928 (3)
84
சுயமரியாதை யபோதணாமுறைப் பாடசாலை
ஈரோட்டில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு போதனாமுறைப் பாட
சாலை ஏற்படுத்துவதாய் “குடி அரசிலும் *திராவிடனி'லும் வெளியிட்டிருந்த
படி நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருப்பவைகளில் சுமார்
20 பேர்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் கண்டு தனித்தனியாக
கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் தயவு செய்து உடனே
அதில் கண்ட விபரங்களுக்கு பதில் எழுதிவிட்டு இவிடமிருந்து வரும்
படி கடிதம் வந்தால் ஆவணி மாதம் 15 ம் தேதி வாக்கில் இவிடம் இருக்கத்
தயாராயிருக்க வேண்டும். படுக்கை, புராணம், சாஸ்திரம் என்பதான புஸ்த
கங்கள் முதலிய அவரவர்களுக்கு வேண்டிய சவுகரியமான சாமான்களுடன்'
வரவேண்டியிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - அறிவிப்பு - 19.08.1928.
85
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
திரு. வேதாசலம்
திரு. வேதாசலம் அவர்களின் சென்னை ராயபேட்டை குகாநந்த
நிலைய ஆண்டு விழா வைபவத்தின் அக்கிராசனப் பிரசங்கத்திலும் திரு
வாளர் தண்டபாணிபிள்ளை, கண்ணப்பர், ராமனாதன் ஆகியோர்களின்
வாதங்களின் போதும் பேசிய விஷயங்களைப்பற்றி வெளியான “தமிழ்நாடு”
“திராவிடன்” பத்திரிகையில் கண்ட விஷயங்களுக்கு திரு வேதாசலம்
அவர்களின் சமாதானமோ மறுப்போ ஒரு வாரத்தில் வராத பக்ஷத்தில் நாம்
அதன் ஆராய்ச்சியை தெரிவிப்பதாக எழுதியிருந்தோம், அந்தப்படி
இதுவரை அவரால் யாதொரு மறுப்போ சமாதானமோ இதுவரை வராததால்
திரு. வேதாசலம் என்னும் தலைப்பில் அவற்றை ஆராய்ந்து எழுதி
வருவோம் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்த
நிலையில் மற்றவர்கள் எழுதும் வியாசங்களுக்கு போதிய இடமளிக்க
முடியாமைக்கும் வருந்துகின்றோம்.
குடி அரசு - அறிவிப்பு - 19.08.1928
குடி அரசு - 1928 @)
86
இந்து கடவன்கன்
- சித்திரபுத்திரன்
1. பின்னையார்
இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை “எண்ணித்
தொலையாது. ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத
கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம்,
கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி
இருப்பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல
கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடிரூபாய் பெரும்படியான நேரங்
களும், பல கோடி ரூபாய் பெரும்படியான அறிவுகளும் வெகுகாலமாய்
பாழாய்க்கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக்கூடிய
காரியமல்ல.
இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்
வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்பவர்களில் ஏறக்குறைய எல்லோ
ராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.
இதனைக் கணபதி என்றும் விநாயகர் என்றும் விக்கினேஸ்வரன் என்றும்
இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி
அழைப்பதும் உண்டு.
நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்
பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து
வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக
இப்போது அமுலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும்
மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்
கூடியதும் அதிசெல்வாக்குள்ளதும் முதற் கடவுள் என்பதுமான பிள்ளை
யாரின் சங்கதியைப் பற்றி சற்று கவனிப்போம். ஏனெனில் கடவுள்களின்
சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதற் கடவுளைப்பற்றித்
தெரிவதுதான் நன்மையானதாகும். ஏனெனில் முதல் கடவுள் என்று
சொல்லப்படுவதின் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால் மற்ற
87
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாயிருக்கலாம். அன்றியும்
எந்தக் காரியம் ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தைக்
கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால் நாமும்
கடவுள்களின் கதைகளைப் பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப்
பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ. இல்லாவிட்டால்
“அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு எடுத்த இக்காரியத்திற்கு
விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும்” அன்றியும் சமீபத்தில் அக்
கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி ஒன்றும் வரப்போவதால் இந்தச்
சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால்
தொடங்குதும்.
யிண்னையார் யிறப்பு
1 ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப்
போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்
படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கு
களைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே
போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும்,
அந்த ஆண் குழந்தையைப் பார்த்து “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்
வரை வேறு யாரையும் உள்ளே விடாதே” என்று சொல்லி அதை வீட்டு
வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும் அந்தச் சமயத்தில் பார்வதி
புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான
வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து “பார்வதி
குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது” என்று தடுத்ததாகவும்,
அதனால் பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளா
யுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளி
விட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து
“காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்” என்று கேட்டதாகவும்
அதற்குச் சிவன் “காவல்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன்”
என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி தான் உண்டாக்கின குழந்தை
வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின்
துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து
மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக்கருதி உடனே வெளியில்
வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு
யானையின் தலையை வெட்டி முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில்
ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்த
தாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த
புராணத்திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.
குடி அரசு - 1928 @)
88
2 ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவ
னும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்
துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்
கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச் சிசுவின் தலையை
வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்குப் பரிகாரமாகப் பார்வதி யானையின்
தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்ட
தாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த
குமாரணாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை
வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிர
மணியனை அனுப்பினதாகவும்,
அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்
படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின்
தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்
படுகின்றது. இது தக்கயாகபரணி என்னும் புஸ்தகத்தில் இருக்கின்றதாம்.
இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப் பற்றியும்
இப்பிள்ளையாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம்
கவனிக்கலாம்.
எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ
மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத்
தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய
விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்
பலவிதமாகச் சொல்லப்படுவதும்.அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர்
பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும்
ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்றக் கடவுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்க
வும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத்
தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே
தீரும். (இவைகளைப் பார்க்கும்போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள்
என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும்
உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க
வேண்டியதாயிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்!
கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தேகங்களோ ஏற்படும் போது
மாத்திரம் “கடவுள் ஒருவர்தான்,
அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்
89
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
றவர், பிறப்பு இறப்பு அற்றவர். தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும்
மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும்
பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரி
கடவுள்களைக் கோடிகோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற
பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து அவற்றை யெல்லாம்
மக்களை நம்பவும் வணங்கவும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன
செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும்
நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரக்
கோவிலில் யானை முகங்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன்
தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு
இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக்
காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண்:
பெண் பக்தர்கள் அதைத் தரிசித்துக் கும்பிட்டும் வருகின்றார்கள்.
சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு
பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக்
கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக்
கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது.
இவைகளைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால்,
இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்
படுகின்றது.
அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்த
தாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்தக் கடவுள்.
கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர
ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது
போல் பல லக்ஷக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும்,
இதை அறிந்த.
அந்தக் கடவுள், பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும்
உடனே பிள்ளையாரானவர் ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவது
போல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு
அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச்
சொல்லப்படுகின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான
ஆபாசங்களுக்கு, கண்டதையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்
கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.
“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று
பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றையத் தினமும்
அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும்
குடி அரசு - 1928 @)
90
பல கோவில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ
ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால் இவைகளுக்குத் தினமும்
பெண்டுபிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க
வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி
வாசகர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.
சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும்” “இப்படி இருக்க
வேண்டும்” என்றும் “மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து, கடவுள்
களுக்கு ஆபத்து” என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும்
காப்பாற்றவென்று அவைகளிடம் “வக்காலத்துபெற்று” மற்ற மக்கள்
துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை
விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.
இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு
சிறிதும் கவலையில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம்
என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை
என்று சொல்வதோடு இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல்
சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக்
கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள்
என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத்தையும்
காப்பாற்றிவிட முடியாதென்றே சொல்லுவோம். இனி அடுத்த முறை அடுத்த
கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.
குடி அரசு - கட்டுரை - 26.08.1928
91
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தொழிலானர் தூது
பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை
சட்டசபை அங்கத்தினரான ராவ் பகதூர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார்.
அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன்
அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும் தென்
இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர்.
துரை அவர்களை பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக்
கொண்டதற்கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப்
பேசினார்கள்.
தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக்
காரர்கள் கொடுமைப்படுத்திய விஷயங்களையும், சர்க்கார் அதிகாரிகள்
அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்குச் செய்த அநீதிகளையும் பற்றி
விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றை
யும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில்
தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகின்றது.
பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்
களின் அனுதாபிகள் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு
பிரயோகித்து அடக்கினதைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில்
வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக
சகாக்களும் மனவருத்தமடைந்ததாகவும் தெரியவருகின்றது. பலாத்காரமான
செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ௬ஜு கிடைக்கப்பெற்று
நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி
தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரசாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள்.
விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும்
வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுகவனத்தைச் செலுத்தி அவைகளுக்குப்
பரிகாரம் தேடுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட
மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள்
பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும்
தெரிகின்றது.
குடி அரசு - 1928 @)
92
போலீஸ் இலாக்கா மெம்பரின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்தல
போலீஸ் அதிகாரிகளின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளை பின்வாங்கிக்
கொள்ளச் செய்யவேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது.
பொதுவாக இந்தத் தூதுக்கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி
கண்டதின் பயனாக அவசரமானதும் அனாவசியமானதுமான அடக்கு
முறைகள் ஸ்தல அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே
ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வதாகத் தெரியவருகிறது.
ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப் புத்தியாலும் அறியாமை
யாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை
உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு
சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினாலெல்லாம் தொழி
லாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று
நாம் நினைப்பதற்கில்லை. ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும்
காரியமேயொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது.
மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள்
ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப்பற்றி மாத்திரம்
நாம் திருப்தியடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை
அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக்
கூடிய காரியமல்லவென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய்
துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரைகளும் பிரிட்டிஷ் என்ப
தான ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும்
மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வருவார்களா? அன்றியும்
அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது
மார்க்கமிருக்கின்றதா?
தேசீய இயக்கங்கள் என்பதும் தேசீயதலைவர்கள் என்பவர்களும்
ரயில்வேக்காரர்களுடையவும், சர்க்காருடையவும் சிப்பந்திகளாகவும் உள்
உளவுக்காரர்களாகவும் இருக்கத்தக்கவர்களாகிவிட்டார்கள். எனவே
என்றைக்காவது தொழிலாளர்களும் கூலிக்காரர்களும் இந்த நாட்டில் சுய
மரியாதையோடும் சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி
போலி இயக்கங்களையும் போலித்தலைவர்களையும் நம்பாமல் அவர்கள்
காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி
நிலைமை பெறுவதில் சில தடவை நழுவி விழுந்தாலும் குற்றமில்லை.
மற்றபடி சுயமரியாதையில் மாத்திரம் கவனம் இருந்துக் கொண்டு வந்தால்
போதுமானது என்றே சொல்லுவோம்.
குடி அரசு - கட்டுரை - 26.08.1928
93
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான “குடி அரசு”
அதாவது 5.8.28 ௨ மலரில் பார்ப்பனீயம் என்பது
பற்றி எழுதிய
தலையங்கத்தில், சென்னை திருவல்லிக்கேணி உத்திராதி மடத்தில் நடந்த
வைதீக பார்ப்பனர் கூட்டத்தில் தலைமை வகித்த திருவாளர் வி.வி. சீனி
வாசய்யங்கார் அவர்களின் அக்கிராசன உபன்யாசத்தைப் பற்றி விரித்து
விட்டு உபன்யாசகரான திரு. என். சீனிவாசாச்சாரியாரின் உபன்யாசத்தைப்
பற்றி பின்னர் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படி இவ்வாரம்
அதைப்பற்றி எழுதுகின்றோம்.
திரு. சீனிவாசாச்சாரியார் அவர்கள் தமது சொற்பொழிவில் சொல்லி
யிருக்கும் விஷயங்களைச் சுருக்கி ஷே முதல் வியாசத்திலேயே வெளியிட்டி
ருக்கின்றோம்.
அதில் திரு. ஆச்சாரியார் “பிராமண சங்கம் பல வருஷங்களாக இந்த
நாட்டில் வேலை செய்து வருகின்றது” என்றும், “எவன் தன் மனதை அடக்கி
ஆண்டு கொண்டு யோக்கியனாக இருக்கின்றானோ அவனே பிராமணன்”
என்றும் சொல்லியிருக்கின்றார்.
அப்படியானால் இப்போது பிராமணர் என்று தங்களைச் சொல்லிக்
கொள்ளும் பார்ப்பனர்கள் எல்லாம் தம் மனதை அடக்கி ஆண்டு கொண்டு
யோக்கியர்களாக இருக்கின்றவர்களா அல்லது பிறர் மனதை அடக்கி அவர்.
களை ஆண்டு கொண்டு அயோக்கியர்களாக இருக்கின்றவர்களா என்று
கேட்பதுடன் வெகு நாளாக இந்த நாட்டில் நடந்து வரும் பிராமண சங்கங்கள்
என்பவைகளெல்லாம் தங்கள் மனதை அடக்கி ஆண்டு யோக்கியமாய்
இருந்து கொண்டு வரும் பிராமணர்களுடைய சங்கமா என்றும் கேட்
கின்றோம்.
யார் பிராமணன்? என்று கேட்கும் போது மாத்திரம் “தன் மனதை
அடக்கி ஆண்டு கொண்டும் யோக்கியனாக இருந்து கொண்டும்
இருக்கின்றவன் பிராமணன்” என்று சொல்லுவதும், மற்ற சமயங்களில் மான
ஈனமின்றி உலகிலுள்ள சகல அயோக்கியத்தனங்களையும் அதாவது
கொலை, களவுகள், திருட்டு, புரட்டுகள் செய்வதும் சாமி தரிசனைக்கும், தாசி
குடி அரசு - 1928 @)
94
தரிசனைக்கும் தரகு பெறுவதும், போலீசு வேலை செய்வதும், வக்கீல் வேலை:
செய்வதும், இஷ்டமில்லாத பெண்களைக் கூட்டிக் கொடுத்தாவது
உத்தியோகம் பெறுவதும், அவ்வுத்தியோகத்தில் லஞ்சம் வாங்குவதும்,
தங்கள் வகுப்பாரைத் தவிர மற்ற வகுப்பார் தலையெடுக்காமல் அழுத்து
வதும், தங்கள் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை படிக்க விடாமல்
தடுப்பதும், தேசத்தையும், ஏழை மக்களையும் காட்டிக் கொடுத்து உயிர்.
வாழ்வதுமான காரியங்களையெல்லாம் செய்து கொண்டு தங்களை
பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டும், இந்தப் பிராமணத் தன்மைக்
காக கள்ளுக்கடை வேசி வீடு முதல் கடவுள் சன்னிதானம் என்பது வரையில்
தங்களுக்கு வேறு உரிமையும் மற்றவர்களுக்கு வேறு உரிமையும் இருக்க
வேண்டுமென்று சொல்லிக்கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்
கின்றதுமான அக்கிரமங்களை இனியும் எத்தனை காலத்திற்கு மறைக்கலாம்
என்று திரு. ஆச்சாரியார் கருதிக்கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு
விளங்கவில்லை.
தவிர “ராஜீய விஷயத்தில் நாங்கள் (பிராமணர்கள்! தலையிடு
வதே கிடையாது” என்று சொல்லி யிருக்கின்றார்.
இது உண்மையா? அப்படியானால் திருவாளர்கள் எஸ். சீனிவாசய்
யங்கார், சக்கிரவர்த்தி அய்யங்கார், சத்தியமூர்த்தி, கஸ்தூரி ரங்கய்யங்கார்,
ரங்கசாமி அய்யங்கார், ராமாநுஜ ஆச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார்,
மாளவியா, நேரு, திலகர், சாஸ்திரி, சர்மா, சாப்ரூ, வி.வி.சீனிவாசய்யங்கார்,
மணி அய்யர், சிவசாமி அய்யர், சர்.சி.பி.ராமசாமி அய்யர், சரோஜினி தேவி,
பாலாம்பாள், இதே உபன்யாசகர் திரு. என். சீனிவாசாச்சாரியார் முதலிய
வர்கள் அரசியல் விஷயத்தில் தலையிடவில்லை என்கின்றாரா? அல்லது
இவர்களை இந்த “பிராமணர்”களோடு சேர்க்காமல் பேசுகின்றாரா? என்று
திரு.ஆச்சாரியாரைக் கேட்கின்றோம்.
பிச்சைக்கும் புரோகிதத்துக்கும் வரும்போது மாத்திரம் தாங்கள்.
அரசியலில் பிரவேசிக்காதவர்கள் என்று சொல்லுவதும், உத்தியோகத்திற்கு
வரும்போது வெள்ளைக்காரர்களிடம் பிராமணர்கள்தான் அரசியலில்
தலைமை வகிக்கவும் சீர்திருத்தத்தில் பெரிய உத்தியோகம் வகிக்கவும்
யோக்கியர்கள் என்றும்வெள்ளைக்காரர்களுக்கு தகுந்தபடி
சகல விதத்திலும்
நடந்து கொள்ளும் திறமையும், சவுகரியமும், பிராமணர்களுக்குத்தான்
உண்டு என்றும் சொல்லி சகல அரசியல்களிலும் இந்த பிராமணர்களே
புகுந்து கொண்டு வெள்ளைக்கார ராஜ்யத்தை நடத்துவதும் இந்த உபன்யா
சகருக்கு உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கின்றோம்.
“பிராமணர்கள் தங்களுக்கு சட்டபூர்வமாய் எவ்வித உரிமையும்
ஏற்படுத்திக் கொள்ளவில்லை” என்கின்றனர். இது அவர் மனதாரச் சொல்லும்
95
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பேச்சா அல்லது தங்களைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள் என்று கருதிக்
கொண்டு சொல்லும் பேச்சா என்று கேட்கின்றோம். வேதம், சாஸ்திரம்,
ஸ்மிருதி, ஆகமம், புராணம், மனுதர்மம், இந்துலா, பழக்கவழக்கம்
முதலியவைகளின் பேரால் தங்களுக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும்
பதவிகளும், தனி உரிமைகளும் சட்டபூர்வமாக ஏற்படுத்திக்கொண்டதாகாதா
என கேட்கின்றோம். மற்றும் கக்கூசுகளில் போர்ட் பலகை போட்டு ஆண்
பெண்களுக்கு பிரித்திருப்பதுபோல் இன்றைக்கும் அனேக இடங்களில்
(போர்டு பலகை போட்டு பிராமணர்களுக்கு மாத்திரம் என்று பிரித்திருப்பது
சட்டபூர்வமா அல்லது பலகைப் பூர்வமா என்று கேட்கின்றோம்.
“பிராமணரல்லாதாரியக்கம் உத்தியோகத்திற்கு ஏற்பட்டது என்று
எண்ணி கவலை இல்லாமல் இருந்துவிட்டோம்; அது குடி அரசு இயக்கத்தில்
சேர்ந்து கொண்டு (சுயமரியாதை! உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்கு
என்று சொல்லிக்கொண்டு மத விஷயத்திலும் கோவில் விஷயத்திலும்
புகுந்து நம்மை அடியோடு கவிழ்க்க ஆரம்பித்து ஆயிரக்கணக்கான
வருஷங்களாய் நாம் (பிராமணர்கள்) அனுபவித்து வந்த உரிமையை
இப்போது பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
உதாரணமாய், சுயமரியாதைக்காரர்கள் செய்து வரும் பிரசாரத்தின்
கொடுமை ஊர் ஊராகச் சுற்றிப் பார்ப்பவர்களுக்குதான் தெரியும்” என்பதாகச்
சொல்லி இருக்கின்றார்.
இந்த வாக்கியங்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் உண்மையும்,
சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமும் விளங்காமல் போகாது. வெறும்
உத்தியோகத்தைப் பற்றி பார்ப்பனரல்லாதார் இயக்கம் பாடுபடுவதாக பார்ப்ப
னர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இதைப்பற்றி ஒரு
சிறிதும் கவலை இருக்க நியாயமில்லை. ஏனெனில் எவ்வளவு பிரயத்தனப்
பட்டாலும் சர்க்கார் உத்தியோகங்களிலிருந்து பார்ப்பனர்களை சுலபத்தில்
விரட்டிவிட முடியாது. ஏனெனில் வெள்ளைக்காரர்களிடமிருந்து உத்தி
யோகம் பெறும் யோக்கியதையும், சவுகரியமும் அவைகளுக்கேற்றபடி
நடக்கும் தன்மையும் பார்ப்பனரல்லாதார்களுக்கு இல்லை என்பது பார்ப்பனர்.
களுக்கு நன்றாய் தெரிந்த விஷயம். அன்றியும் பார்ப்பனரல்லாதாருக்கு
விரோதமாய் எதிர்ப்பிரசாரம் செய்ய பார்ப்பனரல்லாத பல கூலிகள் தங்க
ளுக்கு சுலபமாய் கிடைப்பார்கள் என்கின்ற தைரியமும் இருந்தது. ஆதலால்
அவர்கள் இதை லட்சியம் செய்யவில்லை.
ஆனால் இப்போது சுயமரியாதை
இயக்கமானது பார்ப்பனச் சூழ்ச்சிகள் பலிக்க விடாமல் செய்வதோடு
பார்ப்பனரல்லாத கூலிகளும் பார்ப்பனர்களோடு முன் போல அவ்வளவு
தாராளமாய் சேருவதற்கில்லாமல் செய்வதால் இப்போது பார்ப்பனர்கள்
பயந்து தீர வேண்டியதாய்விட்டது. அன்றியும் சுயமரியாதைக் கொள்கைகள்
பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதாரமானதும் ஆணி வேரானதுமான பார்ப்பன
குடி அரசு - 1928 @)
96
மதத்தையும், பார்ப்பன சாமி கோயில்களையும் கழுத்துப் பிடியாய் பிடித்துக்
கொண்டதால் பார்ப்பனர்கள் திமிருவதற்கு இடமில்லாமல் கண் பிதுங்க
விழிக்கின்றார்கள். மேலும் இவ்வியக்கம் வெற்றி பெற்றது என்று
சொல்லுவது, பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்காக அனுபவித்து வந்த தனி
உரிமைகளைப் பிடுங்கி எல்லா மக்களையும் சமமாக்கித் தீரவேண்டிய
தாதலால் சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது
பிராமண மகாசபையின் கடமையாகப் போய்விட்டது என்பதில் அதிசய
மொன்றுமில்லை.
“கிராமங்களில் கூட இவ்வியக்கம் பரவிவிட்டது” என்று திரு
ஆச்சாரியார் சொல்லுவதிலிருந்து நாம் சந்தோஷப்படவேண்டியதானாலும்
அது பரவவேண்டிய அளவுக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்னும்
பரவவில்லை என்பது நமது கருத்தாகும்.
தவிர உபன்யாச முடிவில் “சுயமரியாதை இயக்கம் பிராமணத்
துவேஷ இயக்கமானதால் அவ்வியக்கத்தால் பிராமணர்களுக்கு கெடுதி
ஏற்படாமல் தடுப்பதற்காக சைமன் கமிஷனை தஞ்சமடைய வேண்டும்”
என்பதாக சொல்லி இருக்கின்றார்.
தாங்கள் மாத்திரம் எவ்வளவு இழிவானதும் அயோக்கியத்
தனமானதுமான காரியங்களைச் செய்தாலும் பிராமணர்கள் என்பதும்,
தங்களைத் தவிர மற்றவர்கள் எவ்வளவு யோக்கியர்களானாலும் அவர்கள்
தங்களது வைப்பாட்டி மக்கள் என்றும், சூத்திரர்கள் என்றும், சண்டாளர்கள்
என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும், தெருவில் நடக்ககூடாதவர்கள்
என்றும் பல மாதிரியான இழிவான வார்த்தைகளால் அழைப்பதும் கொடு
மைப்படுத்தி வதைப்பதும் துவேஷமாகாமல் போவதும், இம்மாதிரி செய்வது
யோக்கியமானதல்ல வென்று நாம் சொல்லுவது மாத்திரம் துவேஷ
மாவதுமானால் இந்த துவேஷம் உலக முழுமையும் ஏற்படவேண்டும் என்றே
ஆசைப்படுவதோடு இந்த துவேஷமில்லாத தமிழ் மக்கள் சுயமரியாதை
அற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
திரு. ஆச்சாரியார் எந்தக் காரணத்துக்காக தங்கள் மீது துவேஷம்
ஏற்படுவதாக சொல்லுகின்றாரோ அல்லது சுயமரியாதைக்காரர்கள் எந்த
விஷயங்களைச் சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் மீது துவேஷம்
உண்டாகும்படி செய்கின்றார்களென்று நம்புகின்றாரோ அந்தக் காரணங்
களைப் பற்றி ஒரு சிறிதாவது கவனித்தாரா என்றும் அல்லது அதற்கு ஒரு
சிறிதாவது சமாதானம் சொல்ல முற்படுகின்றாரா என்றும் கேட்கின்றோம்.
திரு. ஆச்சாரியாரின் கூட்டம் ஆயிரக்கணக்கான வருஷங்களாய்
ஒரு உரிமையை அனுபவித்துக் கொண்டு வந்ததாலேயே அவர்களுக்கு அது
97
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
நிரந்தரப்பாத்தியமாய் விடுமானால் அதனால் மனிதத்தன்மையை இழந்து
கஷ்டப்படுகின்ற மக்கள் அவ்வுரிமையை பலாத்காரத்தால் பிடுங்கிக்
கொள்வதல்லாமல் வேறு என்ன வழி அவர்களுக்கு இருக்கின்றது என்று
கேட்கின்றோம். தங்களுடைய ஆயிரக்கணக்கான அனுபோக பாத்தியதை
யைச் சொல்லாமல் வேறு யோக்கியமான நியாயத்தைச் சொல்லி தங்கள்
உரிமையை காப்பாற்றிக் கொள்ள வந்தால் அதற்கு நாம் தாராளமாய் இடம்
கொடுக்கத் தயாராயிருக்கின்றோம். அப்படிக்கில்லாமல் வெறும் அனுபோக
பாத்தியம் மாத்திரம் சொல்லுவதானால் அதையார் ஒப்புக் கொள்ள முடியும்?
ஏனெனில் பார்ப்பனர்கள் மீது நாம் சொல்லும் குற்றமே அதுதானேயல்லாமல்
வேறு என்ன? அதாவது இந்தப் பார்ப்பனர்கள் வேதம் என்றும், மதம் என்றும்
சாமி என்றும், பூதமென்றும் புரட்டுகள் கற்பித்து அவைகளின் பேரால் நம்மை
ஏமாற்றி, நம்மைத் தாழ்த்தி, நம்மீது ஆயிரக்கணக்கான வருஷங்களாய்
ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்களாதலால் அவ்வாதிக்கத்தை ஒழித்து நாம்
விடுதலை பெற வேண்டும் என்றுதான் சொல்லி வருகின்றோம். இந்
நிலையில் இருக்கின்ற நாம் எப்படி காலாவதி தோஷத்தை ஒப்புக்கொள்ள
முடியும்?
அன்றியும் இவ்வாதிக்கத்தையும் உரிமைகளையும் நிலைநிறுத்திக்
கொள்ள சைமன் கமிஷனை தஞ்சமடைந்து விஞ்ஞாபனம் செய்து கொள்ள
வேண்டும் என்கின்றார்.
இதை, தான் மாத்திரம் தனியாய் சொல்வதாக இல்லாமல் பிராமண
சபை, வருணாசிரம பரிபாலன சபை, வைதீக பிராமண சபை ஆகியவை
களும் இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லுகின்றார்.
இதிலிருந்து சைமன் கமிஷனின் சக்தி இவ்வளவென்பது விளங்காமல்
போகாது.
எனவே சுயமரியாதை இயக்கத்தை குற்றம் சொல்லுகின்றவர்களும்
சைமன் கமிஷனைப் பஹிஷ்கரிக்க வேண்டும் என்று கூலிப்பிரசாரம்
செய்கின்றவர்களும் இதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொள்ளுவார்களாக!
குறிப்பு £ 05.08.1928 குடி அரசு தலையங்கத்தின் தொடர்ச்சி.
குடி அரசு - தலையங்கம் - 26.08.1928
குடி அரசு - 1928 @)
98
இதைவிட வேறு சாக்றி 6வண்டுமா?
தென்நாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு.
காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில்
ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும்
செல்வாக்கையும் உபயோகப்படுத்திக்கொண்டும், அவர்களுடைய பெயர்
களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல்
களிலும் ஜில்லா, தாலூக்கா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தல ஸ்தாபனத்
தேர்தல்களிலும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்
திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள்
செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள். இதற்கு சில பார்ப்பனரல்லாத
வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள்
மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்து
கொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ
அவ்வளவும் செய்தார்கள். அந்த சமயத்தில் “குடி அரசு” ஒன்றுதான்
தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம்
வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்க
லாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் “குடி
அரசும்” அதன் ஆசிரியரான திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய “தேசத்
துரோகி” களானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.
ஆனால் “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்
விடும்” என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே,
பார்ப்பனர்களுடையவும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேச
பக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளி
யில் தலைகாட்டுவதற்குக் கூட யோக்கியதையில்லாமல் முக்காடிட்டு மூலை
யில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.
உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கெளன்சிலர் தேர்தல்களிலும்
வெளி முனிசிபல் கெளன்சிலர்கள் தேர்தல்களிலும் “சுயராஜ்யக் கட்சிக்கு
வெற்றி! காங்கிரசுக்கு வெற்றி” என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள
எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த “தேசீய பத்திரிகை.
களும்” “தேசீய தலைவர்களும்” இப்போது இருக்குமிடம் கூட தெரிய
99
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வில்லை. ஒரு தேர்தலிலாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ்
சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.
தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலி
களாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும்
நின்றவிடமெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக
ஆட்களை நிறுத்துவதற்குக் கூட காங்கிரஸுக்காரருக்கு தைரியமில்லாமல்
போய்விட்டது.
இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார்
அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில்
அபேகஷகராய் நின்றதில் மேல்கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டி
யில்லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம்
வேண்டும்.
நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில்
அவர் மிகப்பெருமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற
வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற
முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து
அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார்.
இவ்வருஷம்
காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ்
தலைவர்களாகியவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு.
முத்துரங்க முதலியார், திரு. கல்யாணசுந்தர முதலியார் முதலியவர்களும்
மற்றும் பல “தேசீய வீரர்களும்” பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்
கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே
காங்கிரஸ் புரட்டும் தேசீயப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்
விட்டதற்கு இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.08.1928
குடி அரசு - 1928 @)
100
திரு. வேதாசலம்
திரு. வேதாசலம் அவர்கள் சென்னை பாலசுப்பரமணிய பக்த சபை
ஆண்டு விழாவில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையில்
சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் அதன் கொள்கைகளைப் பற்றியும்
திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கரைப் பற்றியும் வசை மொழிகளும் கடுமொழி
களும் மொழிந்ததாகவும் அதுபற்றி அதுசமயம் அங்கு வரநேர்ந்த திரு
வாளர்கள் கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ராமநாதன் ஆகியோர்
களுக்கும் திரு. வேதாசலம் அவர்களுக்கும் வாக்குவாதப் போர் நடந்த
தாகவும் “திராவிடன்” முதலிய பத்திரிகைகளில் காணப்பட்டதோடு பல
நிரூபர்களும் நமக்கு எழுதி வந்தார்கள்.
ஆகிலும் திரு. வேதாசலம் அவர்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கும்
மதிப்பும் பெற்ற பண்டிதர் என்பதாக நாம் கருதி வந்ததால் பத்திரிகை
களிலும் நிரூபங்களிலும் கண்டவற்றிற்கு சமாதானம் எழுதுவது என்பது
நமக்கு சற்று சங்கடமாகவே இருந்தது. ஏனெனில், முதலாவது, இவ்வளவு
மோசமாக அவர் பேசியிருப்பாரா என்பது.
இரண்டாவது, அப்படியே பேசி
இருக்கலாமென்றாலும் அது அவர் மனதாரப் பேசியதாக இருக்காது
என்பதும், மற்றபடி ஏதோ சமய சந்தர்ப்பங்கள் இம்மாதிரி பேச வேண்டிய
நிலைக்கு அவரை கொண்டு வந்து விட்டிருக்கலாம் என்றும் கருதியதோடு
இதை அனுசரித்து திரு. வேதாசலம் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு தகவல்
கிடைத்தால் அதை ஆதாரமாக வைத்தே அவ்விஷயங்களை நழுவ
விட்டுவிடலாம் என்றும் கருதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அது
போலவே திரு. வேதாசலம் அவர்களுக்கும் நமக்கும் பொதுவான
இரண்டொரு நண்பர்கள், நாம் மேலே நினைத்த இரண்டு விதமாகத்தான்
விஷயம் நடந்ததென்றும் அதற்காக திரு. வேதாசலம் அவர்கள்கூட சற்று
வருத்தப்பட்டாரென்றும், எப்படி இருந்தாலும் இனி அதைப்பற்றி கிளராமல்
அப்படியே விட்டுவிடுவது எல்லோருக்கும் நன்மை பயப்பது என்றும்
சொன்னார்கள். அதை ஆதாரமாய் வைத்து ஒரு சிறு குறிப்புடன் அவ்
விஷயத்தை முடித்துவிடலாம் என்றே இருந்தோம்.
ஆனால் அடுத்த ஒன்று இரண்டு வாரம் திரு. வேதாசலம் அவர்களின்
சிஷ்யர்கள் பெயரால் பல துண்டு பிரசுரங்கள் திரு. வேதாசலம் அவர்கள்
பேசியதாகக் காணப்பட்டவைகளை மறுக்கின்றது போலவும் மற்றும் சில
101
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
துவேஷங் கொண்ட வார்த்தைகளுடனும் வெளியாக்கப்பட்டன. மற்றும்
சிற்சில இடங்களில் அவர் பேசியதுபோலவே நமது இயக்கத்தை தாக்கியும்
விஷமப் பிரசாரங்கள் செய்யப்பட்டும் வந்ததாகவும் தகவல்கள் கிடைத்தன.
இந்நிலையில் நாம் எவ்வித சமாதானமும் சொல்லாமல் ஒளிந்து கொள்ளுவது
சரிஅல்ல என்று தோன்றியதுடன் நமது நண்பர்கள் பலரும் தூண்டியதுடன்
பல நிரூபங்களும் வந்த வண்ணமாய் இருந்தன.
இந்நிலையில் நாம் ஏதாவது சமாதானம் எழுதித்தீர வேண்டிய
தாகவே ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் எழுத மனமும் இசையவில்லை,
கையும் ஓடவில்லை.
ஏனெனில் நமக்கு அவரது பெயரைக் கேட்க நேரிட்ட சமயம் முதலே
அவரிடம் (காரணம் சொல்ல முடியாது) ஒருவித விஸ்வாசம் ஏற்பட்டதுடன்
நமது நண்பர்களிடம் அவரைப் பற்றி பேச நேர்ந்த சந்தர்ப்பங்களிலெல்லாம்.
நமது உணர்ச்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் அவர் ஒரு உற்ற துணை:
வராயும் பின்பலமாகவும் இருக்கின்றார் என்பதாக ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்வதுமாகவே இருந்து வந்ததால், இச்சமயம் யாராவது மத்தியில்
அவரது மனதை விஷப்படுத்தி இருக்கலாமோ என்கின்ற எண்ணம்
தோன்றியதனால்தான் மறுபடியும் ஒருமுறை “திரு.வேதாசலம் அவர்களின்
சமாதானம் வரவில்லை:ஆதலால் அடுத்த வாரம் எழுதப்படும்” என்று எழுதி
எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு சென்றவாரம் ஒரு“சமாதானக் கடிதம்
நண்பர் திரு. விஸ்வநாதம்பிள்ளை அவர்கள் மூலமாய் திரு. வேதாசலம்
அவர்கள் எழுதி அனுப்பியது கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது என்ன
என்பது பற்றிக்கூட நாம் கவனிக்க இஷ்டப்படவில்லை. தவிர அவர் எப்படி
எழுத வேண்டும் என்றுகூட நாம் நினைத்ததும் கிடையாது. ஏனெனில்
ஏதாவது ஒரு வழியில் அச்சம்பவத்தை மறக்க வேண்டும் என்கின்ற கவ
லையே ஒழிய வேறில்லை. அக்கடிதமானது நண்பர் திரு.விஸ்வநாதபிள்ளை'
அவர்களால் தப்பாய் வினியோகிக்கப்பட்டதால் அது “திராவிடன்” பத்
திராதிபரிடம் போகவும்,
அவர் அதை “மன்னிப்புக் கடிதம்” என்கின்றதாக
பெயர் கொடுத்து பிரசுரிக்கவும் நேர்ந்தது நமக்கு மிகவும் வருத்தத்தைக்
கொடுத்தது என்றாலும் அதன் குற்றத்தையும் நாமே ஏற்றுக் கொள்ளு
கின்றோம். ஏனெனில் ஒரு விஷயத்தில் நமது நண்பர்கள் எல்லோருக்கும்
ஒரே விதமான பொறுப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நண்பர்.
களிடம் பழகுவது எப்போதும் சரியாகவே இருப்பதில்லை. ஆதலால் அக்
குற்றத்திற்கு நாம் பொறுப்பாளி ஆவதுடன் இம்மாதிரி சந்தர்ப்பங்களில்
இனிமேலாவது நமது நண்பர்களும் துணைவர்களும் இம்மாதிரி நடந்து
கொள்ளாமல் இருப்பதற்காக நாம் விலை கொடுப்பதின் பொருட்டு நம்
மையே நாம் தண்டித்துக் கொள்ளக் கருதி “திராவிடன்” பத்திரிகையில்
“மறைமலை அடிகள் மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்”
குடி அரசு - 1928 @)
102
என்கின்ற வார்த்தை காணப்பட்டதற்காக நாம் நிபந்தனையில்லாமல்
திரு வேதாசலம் அவர்களை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகின்
றோம். அன்றியும், அக்கடிதத்தில் அவ்வளவு கூட இல்லாமல் இன்ன
மும் எவ்வளவு சாதாரணமாய் எழுதியிருந்தாலும்
கூட
அதை ஒரு
சாக்காகக்
கொண்டே அவர் பேசியதைப் பற்றிய விவகாரத்தை நிறுத்
தியே யிருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
மற்றபடி அபிப்பிராய பேதத்தைப்பற்றிய விஷயத்தில் அவர்.
எவ்வளவு இணங்கி வருவதாயினும் நாம் நமது கொள்கையிலோ அபிப்
பிராயத்திலோ ஒரு சிறிதளவு கூட விட்டுக் கொடுக்கவோ, திரு வேதாசலத்
தினுடையவோ அல்லது வேறு யாருடையவோ நட்பைக் கருதியானாலும்
கடுகளவு மாற்றிக் கொள்ளவோ நாம் சிறிதும் தயாராயில்லை. ஏனெனில்
ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக்
காரர்களின் உழைப்புகள் பலன் தராததற்கு காரணமே இவ்விட்டுக் கொடுக்
கும் தன்மையும் தாக்ஷண்ணியமும் ராஜதந்திரச் செய்கையும்தான் என்பது
நமது முடிவு.
இன்று கூட நமது இயக்கத்தின் எதிரிகளும் சில சுயநலக்காரர்களும்
“மகாத்மா காந்தி இப்படியா சொன்னார்” “சுவாமி விவேகாநந்தர் அப்படியா
சொன்னார்” “திருவள்ளுவரை விடவா இவர்கள் புத்திசாலிகள்?” “பெரிய
புராணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் மேலாகவா இவர்கள் தத்துவம்
இருக்கின்றது?” என்கின்றது போன்ற பல சமாதானங்களையும் பாட்டி
கதைகளையும் சொல்லுவதை நாம் பார்க்கின்றோம்; கேட்கின்றோம்.
ஆனாலும் இப்படி சொல்லப்படுபவைகள் ஏமாற்ற உபயோகப்படுகின்றன
வேயன்றி காரியத்தில் ஏதாவது பலனுண்டா என்று கேட்கின்றோம்.
ஜாக்கிரதையாகவும், ராஜதந்திரமாகவும் பேசியதால் பார்ப்பனர்கள்.
தயவு சற்று கிடைத்தது. அதனால் பெரியோர்கள் என்றும் பூசிக்கத்தக்க
வர்கள் என்றும் சொல்லிக் கொள்ள நேர்ந்தது. அவர்களுக்கு சரித்திரங்
களும் படங்களும் உலவுகின்றன. ஆனால் மக்கள் உண்மை அறிந்து
கொள்ள முடியாமல் “பெருமாள் பெத்த பெருமாளானது” போல் “மகாத்மா
காந்தியும் சுவாமி விவேகாநந்தரும் கூட பார்ப்பனர்களையும் புராணங்
களையும் புகழ்ந்து பேசியிருக்கின்றார்கள்; அவர்களுக்கு நன்றி செலுத்த
வேண்டுமென்று சொல்லி இருக்கின்றார்கள்” என்று இன்றும் பலர் எடுத்துப்
பேசி பார்ப்பனர்கள் காலுக்குள் போய் புக இடங் கிடைத்ததல்லாமல் மற்றபடி.
ஆன காரியம் இன்னதென்பது விளங்கவில்லை.
அது போலவே, சைவ வைணவ புராணங்களிலும் “பறையரிலே
நந்தன் திருநாளைப் போவார் ஆனார்; பள்ளரிலே பாணன் திருப்பாணாழ்
வார் ஆனார்” என்று சொல்லுவதாலும் நமக்கென்ன பலன் உண்டு என்று
கேட்கின்றோம்.
103
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
திருநாளைப் போவார் என்று ஒரு கல்லுருவமும் திருப்பாணாழ்வார்.
என்று ஒரு கல்லுருவமும் செய்து அறுபத்து மூவர் என்கின்ற அறுபத்து
மூன்று கல்லுருவங்களோடு சேர்த்தும் பன்னிரண்டாழ்வார் என்கின்ற
பன்னிரெண்டு கல்லுருவங்களோடு சேர்த்தும் நட்டு வைத்து அதற்கு
பொங்கலும் புளியோதரையும் வைத்து பூசை பண்ணி பார்ப்பான் சாப்பிட்டு
விட்டதினாலேயே பறையர் என்பவர்களும் பள்ளர்கள் என்பவர்களும் “ஈன.
ஜாதிக்காரர்கள்” என்று சொல்லப்படுவதும் மறைந்து போயிற்றா? அல்லது
அந்த சாமிகளைச் சேர்ந்த ஆசாமிகளுக்காவது அந்த கல்லுரு
வத்தைப் பார்க்கவாவது இடம் கிடைக்கின்றதா என்று கேட்கின்றோம்.
இந்த சாக்கை சொல்லிக்கொண்டு புஸ்தகக் கடைக்காரன் புஸ்தகம்
அச்சுப் போட்டு பணம் சம்பாதிக்கவும், புராணப் பிரசங்கக்காரர் பிரசங்கம்
பண்ணி பணம் சம்பாதிக்கவும், பார்ப்பான் பூசை உற்சவம் செய்து பணம்
சம்பாதிக்கவும் உபயோகப்பட்டதேயல்லாமல் மற்றபடி அவைகளால்
விளைந்த நன்மை என்னவென்று கேட்கின்றோம்.
முடிவாக திரு. வேதாசலம் அவர்களுக்கும் அவரது குழாத்தினர்
களுக்கும் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது நாமும் நமது இயக்கமும்
புராணங்களுக்கும், அப்புராணங்களில் காணப்படும் சமயங்களுக்கும்
அச்சமயத்தில் காணப்படும் சமய ஆச்சாரிகளுக்கும், அச்சமய ஆச்சாரி
களால் காணப்படும் சாமிகளுக்கும், அச்சாமிகளது பெண்டு பிள்ளை
களுக்கும் வெளிப்படையான விரோதிகள் தான்.இதில் ஒளிமறைவு ஒன்றும்
இல்லை என்பதோடு
“இதற்கு அப்படி அருத்தம்” “அதற்கு இப்படி
அருத்தம்” என்கின்ற பண்டிதப் புரட்டுகள் ஒன்றும் இனி கூடாது என்றும்
கண்டிப்பாய்ச் சொல்லுகின்றோம்.
இதைப்பற்றி எச்சமயவாதியாயினும் எப்பண்டிதராயினும் செய்யும்
அறப்போருக்கும் அறிவுப் போருக்கும் தலைகொடுக்க மகிழ்ச்சியுடன்
தயாராயிருக்கிறோம்..
அதைவிடுத்து குறுக்கு வழியில் வஞ்சகப் போருக்கும் மூட
நம்பிக்கைப் போருக்கும் தலைகொடுப்பதானால் சற்று சங்கடமாகத்தான்.
இருக்கின்றது.
ஆயினும் வேறு வழியில்லாவிட்டால் அதையும் வரவேற்க
வேண்டிய நிர்ப்பந்தத்திலே தான் இருக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.09.1928.
குடி அரசு - 1928 @)
104
* திரு. வேதாசலம் அவர்களின் கடிதம்
பல்லாவரம் திரு. வேதாசலம் அவர்கள் திரு.ஈ.வெ. இராமசாமி
நாயக்கருக்கு திரு.விஸ்வநாதம் பிள்ளை அவர்கள் மூலம் எழுதிய கடிதம்:-
அன்புள்ள ஐயா,
நலம், தங்கள் நலத்தைத் தெரிவித்தல் வேண்டும். என்னைப் பற்றிய
ஒரு குறிப்பு “குடி அரசு” பத்திரிகையில் வெளிவந்திருப்பதாக திருச்சி திரு.
விஸ்வநாத பிள்ளை வாயிலாக இன்று அறிந்தேன். சென்னை குகானந்த
நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி முறையைப்பற்றித் “திராவிடன்” “தமிழ்
நாடு” பத்திரிகைகளிற் போந்துள்ள சிலவுரைகளை நம்பி, அக்குறிப்புத்
தங்களால் வரையப்பட்டதென அறிகின்றேன். தங்களுக்காவது, தங்கள் இயக்
கத்தைச் சார்ந்த அன்பர்கட்காவது எவ்வகையான தீங்கும் செய்ய அல்லது
செய்விக்க வேண்டுமென்று யான் எண்ணியதுமில்லை, யாண்டும் சொல்லி
யதுமில்லை. தாங்கள் என்னை வேறாக நினைத்து என்மீது வருந்துதல் வேண்
டாம். என்றாலும், கடவுளைப்பற்றியும் அடியார்களைப் பற்றியும் தாங்கள்
கொண்டுள்ள கோட்பாடுகளில் மட்டும் யான் கருத்து உடன்பாடுடை
யேன்னல்லேன். பத்திரிகைகளில் வெளிவந்த சிலவற்றைப் பார்த்து தாங்கள்
வருந்தியிருந்தால், அவ்வருத்தத்தை தாங்கள் அன்பு கூர்ந்து நீக்கிவிடல்
வேண்டும். தமிழ்மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும்
நன் முயற்சிகள் இனிது நடைபெறுக.
அன்புள்ள,
24-8-28
சு.வேதாசலம்
105
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
டநாட்டுக் கடஷன்கன்
கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும்,
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன.
சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி,
ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில்
யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு பூசை
செய்யவும், கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும்
உரிமைபெற்ற சாமிகளாகவே இருக்கின்றன. ஆனால் தென்னாட்டிலோ
அதே சாமிகளைத் தொடாத போதிலும் கிட்டப் போய் கும்பிட்டாலும்
அல்லது சிலர் கோயிலுக்குள்ளே புகுந்துவிட்டாலும் உடனே அச்சாமிகள்.
செத்துப்போய்விடுகின்றன. ஆனால் பார்ப்பானுக்குப் பணமும் சோறும்
கொடுத்தால் மறுபடியும் அவைகள் உயிர்பெற்று விடுகின்றன. எனவே நமது
தென்னாட்டுச் சாமிகளின் சக்திகள் கூட நமது பார்ப்பனர்களிடம் எவ்வளவு
அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல்
போகாது.
இப்போது மத்திய மாகாணத்தில் வார்தாவென்னுமிடத்தில் உள்ள
சாமிகள் காசி முதலியவைகளிலுள்ள சாமிகளைப் போலவே தங்கள் சக்தி
யை பிராமணனிடமிருந்து விடுதலை செய்து கொண்டதாகத் தெரியவரு
கின்றது. அதாவது, வார்தாவில் உள்ள லக்ஷிமி நாராயணசாமி கோவிலுக்குள்
தீண்டாதவர்கள் எனப்படுபவர்கள் போய் கும்பிடலாம் என்று அங்குள்ள
மக்கள் தீர்மானித்து அந்தப்படியே இந்த ஒரு வாரமாக எல்லோரும் உள்ளே
போய் கும்பிட்டு வருகிறார்களாம்.
இதுவரை அந்தக் கோவிலில் உள்ள ஒரு சாமி கூட சாகவில்லையாம்.
இன்னும் சில இடங்களிலும் இது போலவே நடைபெற்றும் வருகின்றதாம்.
ஆனால் நம் தென்னாட்டு சாமிகளுக்கு மாத்திரம் பார்ப்பனர்கள்
கையிலிருந்து தப்பிக்க இன்னும் சக்தியேற்படவில்லை என்கின்றதானது
நமக்கு மிகவும் வெட்கக் கேடான காரியமாய் தோன்றுகின்றது.
“கடவுள் நெறியையும், கடவுள் தன்மையையும் ராமசாமி நாயக்கனும்
சுயமரியாதைக்கூட்டத்தாரும் பாழாக்குகின்றார்கள்'” என்று சொல்லுவதற்கு
குடி அரசு - 1928 @)
106
மாத்திரம் நமது நாட்டில் ஆட்கள் ஏராளமாய் இருக்கின்றார்களே யொழிய
மற்றபடி இக் கூட்டத்தாருக்குள் பார்ப்பானைத் தவிர கடவுள்களின்
கோவிலுக்குள்ளே மற்றவர் போனாலும் அதைத் தொட்டாலும் கடவுள்
செத்துப் போவார் என்கின்ற கொள்கை கடவுள் தன்மைக்கும் கடவுள்
நெறிக்கும் ஏற்றதா என்பதை ஒருவராவது கவனிக்கின்றாரா என்று பார்த்தால்
அடியோடு இல்லையென்றேதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
இனியாவது நமது தென்னாட்டுக் கோவில்களின் நிர்வாகிகள் கவனித்து
தங்கள் தங்கள் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் இருக்கும் கடவுள்களை
பார்ப்பன அடிமைத்தனத்திலிருந்து வடநாட்டு சாமிகளைப்போல விலக்கி
சுதந்திரமுள்ள சாமிகளாகவும், எல்லோருக்கும் சமமான சாமிகளாகவும்
இருக்கத்தக்கதான நிலையில் இருக்கும்படி செய்வார்களா? என்று கேட்
கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.09.1928
107
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
e
e
@i
சர்வககூஷி மகாநாட்டுப் புரட்டும்
சர்வகக்ஷியாரும் சேர்ந்து ஒரு சுயராஜ்யதிட்டம் போட்டுவிட்ட
தாகவும் அதை எல்லோரும் சேர்ந்து ஒப்புக் கொண்டதாகவும் இனி பொது
ஜனங்களும் சர்க்காரும் அதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி
யென்றும் அரசியல் வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைகள் ஊளையிடு
கின்றன. இது ஒரு அன்னக் காவடி, “இராஜா மகளுக்கும் எனக்கும்
கல்யாணம் தீர்மானம் ஆகிவிட்டது. ஆனால் ராஜாவும் அவனது மகளும்
சம்மதம் கொடுக்க வேண்டியது மாத்திரம்தான் பாக்கியாய் இருக்கின்றது”
என்று சொல்லிக் கொண்டது போலிருக்கிறது. சர்வ கக மகாநாடு என்பது
என்ன? அதில் யார் யார் இருந்து “திட்டம்” செய்தார்கள்? அவர்களுக்கும்
நாட்டின் ஏழை மக்களுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா? இந்தியாவில் உள்ள
எந்த ஜாதியாருக்கு அல்லது எந்த மதக்காரருக்கு அல்லது எந்த தொழில்
காரர்களுக்கு இவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளக்
கூடும்?
மகமதிய சபையார்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவ சபை
யார்கள் ஒப்புக் கொள்கின்றார்களா? இந்து சபையார் ஒப்புக் கொள்
கிறார்களா? பார்ப்பன சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? பார்ப்பன
ரல்லாதார் சபையார் ஒப்புக்கொள்ளுகிறார்களா? ஆதி இந்துக்கள் ஆதி
திராவிடர்கள் என்கின்ற சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? எனவே
இந்தியாவில் இத்திட்டத்தை யார் ஒப்புகொள்ளுகின்றார்கள் என்பது
விளங்கவில்லை. ஒரு சமயம் உத்தியோகம் சம்பாதிக்கும் சபைகளாகிய
காங்கிரஸ், சுயராஜிய, மிதவாத சபைகளின் பேரால் உள்ள சிலர் ஒப்புக்
கொள்ளுகின்றார்கள் என்று சொல்ல வருவார்களேயானால்,
காங்கிரஸ் தலைவர் ஒப்புக்கொள்ளுகின்றாரா? அல்லது சுயராஜியக்
கக்ஷி உபத் தலைவர் ஒப்புக்கொள்ளுகின்றாரா? தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவர் ஒப்புக்கொள்ளுகின்றாரா? மற்றும் யார் ஒப்புக்கொள்ளு
கின்றார்கள் என்பது விளங்கவில்லை.
மேல்கண்ட இத்தனை பேர்களும் ரெ சுயராஜ்ஜியத்தை ஒப்புக்
குடி அரசு - 1928 @)
108
கொள்ளவில்லை என்பது தெரிந்து ஒப்புக்கொள்ளாத மேற்படியார்களை ஒரு
பக்கம் திட்டிக் கொண்டு மறுபக்கத்தில் “சர்வகக்ஷி மகாநாட்டுத்
தீர்
மானத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள்”” என்று எழுதுபவர்
களை பொதுமக்கள் இப்போதாவது வயிற்றுப் பிழைப்பு பத்திரிகைக்காரர்கள்
என்று தீர்மானிப்பதற்கு ஏதாவது ஆக்ஷேபனை உண்டா என்று
கேட்கின்றோம்.
தவிர இதற்கு முன் திட்டங்கள் போட்ட பல கனவான்களின் சங்கதி
யும், அத்திட்டங்களின் சங்கதியும் அதாவது ஸ்ரீமதி பெசண்டம்மை, திரு
வாளர்கள் விஜயராகவாச்சாரியார், மதன் மோகன் மாளவியா, சீனிவாசய்
யங்கார், ரங்கசாமி அய்யங்கார், மோதிலால் நேரு மற்றும் அநேகர்கள்.
போட்ட திட்டங்கள் என்ன ஆயின என்பதும் “சிதம்பர இரகசியமாய்”
இருக்கின்றது.
நிற்க, இந்த சர்வககடி மகாநாட்டார் என்பவர்கள் புதிதாக செய்து
முடித்திருக்கும் வேலைகளிலெல்லாம் குறிப்பிடத்தக்கது ஒரே ஒரு
வேலைதான். அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் சமத்து
வத்தை ஒழிப்பதற்கு செய்துள்ள சூழ்ச்சிதான்.
இந்த சூழ்ச்சியை சர்வ ககஷி மகாநாடுதான் புதிதாக செய்திருப்பதாக
அவர்களது கூலிகள் பெருமை பாராட்டிக் கொள்ளலாமானாலும், வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஏற்பட்டது முதலே இதே கூட்டத்தார்
அதாவது இப்போது சர்வகக்ஷி மகாநாடு என்பதில் ஆதிக்கம் கொண்டுள்ள
கூட்டத்தாரும் அவர்களுக்கு ஆதி முதலே அடிமைகளாகவும் கூலி
களாகவும் இருந்து வரும் கூட்டத்தாரும் இந்த சூழ்ச்சிகள் செய்து வருவது
யாவருக்கும் தெரியாது என்பதாக நினைத்து, இப்போது வேறு போர்வை
போர்த்துக் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகின்றது. இதே காரணத்
தினாலேயே சைமன் கமீஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று பார்ப்பனக்
கூலிகளாய் இருந்து கூவினதும் பொது ஜனங்களுக்குத் தெரியாது என்று
இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகின்றது. எது எப்படி
யிருந்தாலும் பகிஷ்காரக் கூச்சலில் தாங்கள் தோற்றுவிட்டதை நன்றாய்
அறிந்து அதே சைமன் கமிஷனின் பாதத்தில் வைத்து விழுந்து கும்பிட ஒரு
திட்டத்தையும் தயார் செய்துகொண்டு அதற்கு சர்வசக்ஷி மகாநாட்டுத் திட்டம்
என்பதாக பெயரையும் கொடுத்து முக்காட்டை விலக்கிக் கொண்டு
வெளியில் வந்தாய் விட்டது.
எனவே இதனால் ஒவ்வொருவரும் அவரவர்கள் திட்டத்தை சைமன்
கமிஷனுக்கு தெரிவிப்பதற்காக விரைந்து போட்டி போட வேண்டிய
அவசியம் ஒன்று புதிதாய் ஏற்பட்டதே ஒழிய வேறு ஒரு காரியமும் ஏற்பட்டு
விட்டதாய்ச் சொல்வதற்கில்லை.
109
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கடைசியாக நாம் குறிப்பிடுவது என்னவென்றால், கமீஷன் பகிஷ்
காரம் என்கின்ற புரட்டை பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும்
கூலிகளும் என்றைக்கு ஆரம்பித்தார்களோ அந்த வினாடி முதல் அதைப்
பற்றி நாம் என்ன என்ன எழுதியும் பேசியும் வந்தோமோ அவைகள் எல்லாம்
ஒன்று விடாமல் நடந்து வருகிறதா இல்லையா என்பதை மாத்திரம் ஞாபகப்
படுத்திப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.09.1928
குடி அரசு - 1928 @)
110
திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந.நல்லய்ய
ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து “விஸ்வநேசன்” என்பதாக ஒரு
புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத்
தெரிகின்றது.
அது
சீக்கிரத்தில் வெளியாகலாமென்றும் நினைக்கின்றோம்.
அப்பத்திரிகையானது ஏனைய சில சமூகப் பத்திரிகைகள் போலவும்
அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகை.
கள் போலவும் “அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது”
என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர்களையும் அவர்களது
சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய்
நடப்பதாக இல்லாமல், சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை
கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டியதான வழிகளில் செல்லும்
என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம். அன்றியும் அதன்
பத்திராதிபராக இருக்கப்போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியாரவர்கள்
ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி
சிறை சென்றவர்.
இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில்
சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப்
பட்டு, திரு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணையிலிருப்
பவர். எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை
நடைபெறும் வரையில் அது பெரிதும் சுயமரியாதைக் கொள்கைகளையே
ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால்
இத்தகைய பத்திரிகையை பொது மக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.
குடி அரசு - மதிப்புரை - 02.09.1928
111
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இந்து கடவன்கள்
“சித்திரபுத்திரன்
ஊ.௬ப்பிரமணியனது பிறப்பு
விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக்
கூறியது:
1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து.
மோகங்கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல
யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி
கர்ப்பம் அடையவில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள்
சிவனிடத்தில் வந்து, “இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்
ஸாகிய விந்து வெளிப்படுமானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய
விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும்” என்று வேண்டவும்,
அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு
விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல,
அந்தப்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்க
மாட்டாமல் பூமி முழுதும் கொதிகொண்டு எழ, தேவர்கள் அந்த வீரியத்தை
பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட, அக்கினி
வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரம தேவன்
கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப்
பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டுமென்று கங்கையை வேண்ட,
கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற,
அவ் வீரியமானது
கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல்
மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி
“ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தை தாங்க முடியாவிட்டால்
பனிமலை அருகில் விட்டுவிடு” என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே
அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத்
தோன்ற அதை இந்திரன் பார்த்து அக்குழந்தைக்கு பால் கொடுத்து வளர்க்க
கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து
வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக்
குழந்தை உற்பத்தியானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா
குடி அரசு - 1928 @)
112
தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும்,
மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில்
பால்குடித்ததால் ஷண்முகன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் “சிவன் பார்வதியை புணர்ந்
தது” என்று தலைப்பெயர் கொண்ட 36 - வது சருக்கத்திலும் “குமாரசாமி
உற்பத்தி” என்கின்ற 37வது சருக்கத்திலும் காணப்படுகின்றது.
இரண்டாவது வரலாறு, தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை
அழிப்பதற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையை பெற்றுத்தர வேண்டு
மென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது ஐந்து முகங்களுடன் மற்றும்
ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள
நெற்றிக்கண் ஆறிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் வெளியாக, அப்
பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட,
பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்ப
டியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவைகளைக்கொண்டு சரவ
ணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தை
களையும் கிருத்திகைப் பெண்கள் அறுவர்களும் பால் கொடுத்து வளர்த்து
வந்தார்கள். பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தை
களையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில்
அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட
ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன்
என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப்
பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.
குறிப்பு-சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல்கண்டபடி இரண்டு கதைகள்
காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே வால்மீகி
ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும்
மேல்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில் கந்தபுராணத்திலும்
பார்வதியானவள் தன்மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக
தேவர்கள் மீது கோபித்து தேவர்களை “பிள்ளையில்லாமல் போகக் கடவது”
என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணி
லிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும்
பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட
நியாயம் இல்லை. இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி
ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன்
பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும்
சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி
கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன்
113
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்தலிதமாக்கும்
சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்தது, அதாவது
தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளை
யில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது
நியாயமாக இருக்கின்றது.
அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி
பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து
அவளையும் (பூமியையும்) பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும்
அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும்
வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.
கந்தப்புராணமோ மேல் கண்ட சிவன்100 வருஷம் புணர்ந்த விஷயம்
ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.
ஆகவே சுப்பிரமணியன் என்றும் சண்முகன் என்றும் கார்த்திகேயன்
என்றும் ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி
ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும்
சைவப் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்த
சுப்பிரமணியனுடைய கடவுள் தன்மையையும் செய்கைகளையும் வேறு
தலைப்பின் கீழ் விரிக்கலாம்.
குடி அரசு - கட்டுரை - 02.09.1928.
குடி அரசு - 1928 @)
114
உ
ங்க “துரோகம்”
சுயமரியாதை இயக்கத்தின் பலனாய், அரசியலின் பேரால் வாழ்ந்து
வந்தவர்களுக்கெல்லாம் இந்தச் சமயம் நமது நாட்டில் சகல கவுரவங்களும்
செல்வாக்குகளும் அடியோடு போய்விட்டதுடன், இது சமயம் அரசியல்
என்பதில் சம்மந்தப்பட்டிருக்கின்றவர்கள் என்பவர்களெல்லோரும்
சுயநலக்காரரும் வயிற்றுப் பிழைப்புக்காரரும் சிறிதும் நாணயமும் யோக்கி
யதையும் அற்றவர்கள் என்ற சங்கதியும் பாமரமக்கள் யாவருக்கும் தெரிந்து
விடவே அரசியல் பிழைப்புக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்ச
நாளாகவே நமது நாட்டில் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் போய்
விட்டது என்பது யாவரும் அறிந்ததேயாகும். உதாரணமாக இது சமயம்
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் யார் என்பதையும் அரசியல் பிரதிநிதிகள்
யார் என்பதையும் அவர்களுக்கு நாட்டில் உள்ள யோக்கியதை என்ன
என்பதையும் கவனித்தால் இவ்விஷயம் யாருக்கும் சுலபத்தில் விளங்காமல்
போகாது.
தவிர, இப்பொழுது எங்கு அரசியல் மீட்டிங்கு போட்டாலும் எங்கு
அரசியல் மகாநாடு கூட்டினாலும் அங்கு தலைவர்களும் பேசுபவர்களும்
அபிப்பிராயம் கொடுப்பவர்களும் யார் என்று பார்ப்போமேயானால் திரு
வாளர்கள் குழந்தை, அமீத்கான், பஷீர் அஹம்மது, குப்புசாமி முதலியார்,
அண்ணாமலை பிள்ளை முதலியோர்கள் ஆகிய இவர்களோடேயே சகல
அபிப்பிராயங்களும் சகல பிரதிநிதித்துவங்களும் நின்றுவிடுகின்றன. சில
சமயங்களில் வழக்கம் போல் மற்றும் இரண்டொரு ஆசாமிகளின் பெயர்.
களும் அடிபடுகின்றன. அந்த இரண்டொரு ஆசாமிகளும், பொதுஜனங்கள்
தங்கள் பெயரை மறந்துவிடாமல் இருப்பதற்காக ஏதாவது ஒருவகையில்
விளம்பரம் ஆக வேணுமே என்கின்ற கவலையின் பேரில் எங்கு கூட்டம்
நடந்தாலும் அங்கெல்லாம் தாங்களும் இருப்பதாக தங்கள் பெயர்களை:
உபயோகித்துக் கொள்ள மாத்திரம் உத்தரவு கொடுத்துவிட்டு, எந்தக் கூட்டத்
திலும் தலைகாட்ட வெட்கப்பட்டுக் கொண்டு தலைமறைவாகவே திரிய
வேண்டியவர்களாகி விட்டார்கள்.ஆகவே நமது நாட்டு அரசியல் வாழ்வின்
யோக்கியதைக்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டியிருக்காது என்றே
நினைக்கின்றோம்.
அரசியலில் சம்பந்தப்பட்ட ஆசாமிகளின் யோக்கியதைதான் இப்படி
116
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
என்றால், அரசியலில் அடிபடும் சங்கதிகளைப் பற்றியோவென்றால்,
அது
இதைவிட மோசமானதும் வெட்கக்கேடானதுமென்றே சொல்லித்
தீரவேண்டும். ஏனெனில் எந்த சங்கதியை அரசியல் விஷயமாக எடுத்துக்
கொண்டால் பாமர மக்களை ஏமாற்றலாமோ - எந்தச் சங்கதியை எடுத்துக்
கொண்டால் யோக்கியர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்களோ - எந்தச் சங்கதி
யை எடுத்துக் கொண்டால் பார்ப்பனரல்லாதார்கள் கலந்துகொள்ள
முடியாதோ - அந்த நாணயமற்றதும் யோக்கியதையற்றதும் உபயோகமற்றது
மான சங்கதிகளை எடுத்துக்கொண்டு,
அதை ஒரு பிரமாதமான சங்கதி போல்
செய்து, அதன் மூலமாய் பாமர மக்களை ஏமாற்றி எலக்ஷன்களில் தாங்கள்
வெற்றி பெற்று பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்பதாகவும்,
அப்பார்ப்பன ஆதிக்கப் பிரசாரகர்களாகவும் கூலிகளாகவும் இருந்து வயிறு
வளர்க்க மார்க்கம் கிடைக்கும் என்பதாகவும் கருதி அதற்கேற்ற வண்ண
மான சூழ்ச்சிகள் தயாரிப்பதாக இருக்கின்றதேயல்லாமல் வேறு யோக்கிய
மானதும் பொது மக்களுக்கு உபயோகமானதுமாக ஒன்றுமே கிடையாது
என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
உதாரணமாக இன்றையத்தினம் அரசியல் துறையில் முக்கிய
மானதும் செல்வாக்கு பெற்றதுமான பிரசினை என்பது சைமன் கமிஷன்
பகிஷ்காரம் என்கின்றதான பொருளற்றதும் நாணயமற்றதுமான ஒரு
விஷயம். அதைப் பற்றி சுமார் 5,
6 மாத காலமாக நடந்து வரும் கலவரங்
களை அறியாதாரில்லை. தேசீயத் தலைவர்கள் என்பவர்களும் தேசீய
பத்திரிகைகள் என்பவைகளும் எல்லாம் ஒரே அடியாய் கூடி பேசிக்
கொண்டு “சைமன் கமிஷன் பகிஷ்காரத்திற்கு நாடு முழுவதுமே அனுகூல
மாயிருக்கின்றது. ஏதோ இரண்டொரு சர்க்கார் பிரசாரகர்கள் மாத்திரந்தான்
சைமன் கமிஷனுக்கு அனுகூலமாயிருக்கின்றார்கள்” என்று எழுதியும்
பேசியும் வந்தார்கள்.
கடைசியாக இப்போது அந்த ஆசாமிகளும் பத்திரிகைகளும்
தாங்களாகவே தங்களின் புரட்டு பலிக்கவில்லை என்று தெரிந்து கொண்டு
“சீ இந்தப் பழம் புளிக்கும்” என்பது போல் “சைமன் கமிஷனை பகிஷ்
கரிப்பதால் லாபம் ஒன்றும் இல்லை.பகிஷ்கரிக்காவிட்டால் நஷ்டம் ஒன்றும்
இல்லை” என்று சொல்ல வந்து விட்டதுடன் “சைமன் கமிஷன் பகிஷ்காரம்.
என்பது பெரிய தொல்லையாகிவிட்டது” என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
ஆகவே இதை திடீரென்று விட்டு விட்டாலும்
அக் கூட்டத்தார்களின்
வாழ்க்கைக்கும் வேறு வழியில்லை. ஆகையால் செத்தப் பாம்பை ஆட்டுவது
போல் மேலும் மேலும் சைமன் பகிஷ்காரம் என்பதைப் பற்றி பேசிக்
கொண்டாவது இருக்க வேண்டியிருக்கின்றது. இப்பேர்ப்பட்ட சைமன்
பகிஷ்காரம் இந்தியாவிலுள்ள ஏறக்குறைய எல்லா மாகாண சட்டசபை
களிலும், அதாவது பொது ஜன பிரதிநிதித்துவ சபை என்று இது சமயம் எல்லா
குடி அரசு - 1928 @)
116
அரசியல்வாதிகள் என்பவர்களும் சொல்லிக் கொள்வதான சட்டசபை
களிலும், சைமன் கமிஷனுடன் ஒத்துழைப்பதென்றும், அதற்கு கூடவே
இருந்து உதவி செய்ய பொது ஜனப்பிரதிநிதி என்பவர்களுக்குள்ளாக
இருந்தே ஒவ்வொரு மாகாணத்திற்கு ஒவ்வொரு கமிட்டி இருக்க வேண்டும்
என்றும் ஏற்பாடாகி அந்தப்படிக்கே கமிட்டிகளும் தெரிந்தெடுக்கபட்டாய்
விட்டது. இனி கமிஷனை பகிஷ்கரிப்பவர்களோ, ஆட்சேபிப்பவர்களோ
யார் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய காரியமாகிவிட்டது. ஒரு
சமயம் காங்கிரஸ்காரர்கள்தான் ஆட்சேபிக்கின்றார்கள் என்று சொல்லப்
படுமானால், அக் காங்கிரஸ்காரர்களுக்கு நாட்டில் செல்வாக்கில்லை
என்பதற்கும் அக் காங்கிரஸ் அபிப்பிராயத்தை நாட்டு மக்கள் லட்சியம்
செய்யவில்லை என்பதற்கும் இதைவிட வேறு சாட்சி தேவை இல்லை
யென்றே சொல்லுவோம்.
இவ்வாரம் சென்னையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில், அதாவது
காங்கிரஸ்காரர்கள் தேசீயவாதிகள் என்பவர்கள் அதிகமாக இருக்கின்
றார்கள் என்று காங்கிரஸ்காரர்களாலும் தேசீயக்காரர்களாலும் அவர்களது
பத்திரிக்கைகளாலும் காங்கிரசுக்கு வெற்றி தேசீயத்திற்கு வெற்றி என்று
சொல்லிக் கொண்ட சட்டசபையில் சைமன் கமிஷனுடன் ஒத்துழைக்கவும்
உதவி செய்யவும் ஒப்புக் கொண்டு கமிட்டியும் (அதிலும் போட்டியுடன்?
நியமிக்கப்பட்டாய் விட்டது.
இதற்கு அரசியல் பிழைப்புக்காரர்கள் ஒரு சமாதானம்தான் சொல்லக்
கூடும். அதாவது “ஜஸ்டிஸ் கட்சியின் துரோகம்” என்பதுதான். அப்படிச்
சொல்வதானால் அவர்களை நாம் ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது
இந்தியாவிலுள்ள மாகாணங்கள் எல்லாம் கமிஷனுடன் ஒத்துழைக்க
சம்மதித்து கமிட்டி நியமித்துக் கொண்டதற்கு யாருடைய துரோகம் காரணம்
என்று கேட்கின்றோம்.
தவிர இந்தியாவிலுள்ள “சர்வகட்சி” யாரும் பார்லிமெண்டுக்கு
அனுப்ப என்று ஒரு திட்டம் தயாரித்து விட்டார்களே, இதற்கு யாருடைய
துரோகம் காரணம் என்று கேட்கின்றோம்.
இந்து சபையார்கள், மகமதிய சபையார்கள், கிறிஸ்துவ சபையார்கள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பு சபையார்கள், வருணாசிரம வகுப்பு சபையார்கள்,
பார்ப்பன சபையார்கள் ஆகிய எல்லோரும் சைமன் கமிஷனிடம் ஒத்து
மைக்க சம்மதித்து ஏறக்குறைய எல்லோரும் ஒவ்வொருதிட்டம் தயாரிக்கின்
றார்கள். இதற்கு யாருடைய துரோகம் காரணம் என்று கேட்கின்றோம்.
“காங்கிரஸ்” தலைவர்கள் என்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
திட்டம் தயாரித்து வைத்துக்கொண்டு அவற்றை சைமன் கமிஷனுக்கு
117
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அனுப்பவில்லை என்று சொல்வதானாலும் சைமன் கமிஷனுடைய அப்ப
னான பார்லிமெண்டுக்கு போய்ச் சேரும்படி செய்துவருகின்றார்களே,
இதற்கு யாருடைய துரோகம் காரணம் என்று கேட்கின்றோம். எனவே,
சைமன் கமிஷனையோ அதன் தகப்பனான பார்லிமெண்டையோ பஹிஷ்
கரிக்கின்றவர்கள் யாராவது இந்த நாட்டில் இருக் கின்றார்களா என்று எந்த
யோக்கியனாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
ஒரு சமயம் யாராவது ஒன்று இரண்டு “துறவி” இருக்கலாம்.
அதைப்
பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில், “துறவிக்கு வேந்தன் துரும்பு” எது
போல் என்றால், ஒரு காலத்தில் நாணயவிகித மாறுபாடுகள் ஏற்பட்ட
போது மக்கள் எல்லோரும் ஒவ்வொரு பாங்கியின் நிலைமையைக் குறித்தும்
கவனித்து வந்தார்களாம். ஏனெனில் அவர்கள் ஜீவநாடியான செல்வங்களை
எல்லாம் பாங்கியில் போட்டு வைத்திருக்கின்றவர்களானதால் எந்த பாங்கி
முறிந்து விடுமோ என்று ஒவ்வொருவரும் கவலைப்பட்டுக் கொண்டு பாங்கி
வர்த்தமானத்தை கவனித்த வண்ணமாகவே இருந்தார்களாம். அந்த
சமயத்தில் ஒரு மனிதன் “எந்த பாங்கி முறிந்து போனாலும் நான் மாத்திரம்
சிறிது கூட கவலைப்பட மாட்டேன்” என்று பெருமை பேசிக்கொண்டானாம்
இதைப் பார்த்த பலர் “இவன்” ஒரு பெரிய பிரபுவாக இருக்கலாமோ அல்லது
கஷ்டம் வந்தாலும் கலங்காத வீரனாக இருக்கலாமோ என்று கருதிக்கொண்டு
அவனுடைய யோக்கியதைகளை அறிய ஆசைப்பட்டு விசாரித்ததில்,
அவன் பரமபாப்பர் என்றும், எந்த பாங்கியிலும் அவனுக்கு ஒரு காசு கூட
இருப்பு இல்லை என்றும், அதனால்தான் அவன் அவ்வளவு “தைரியமாயும்”
“வீரமாயும்” “எந்த பாங்கு முறிந்தாலும் நான் ஒரு சிறிதும் கவலைப்பட
மாட்டேன்” என்றும் சொன்னான் என்பதாகத் தெரிந்து கொண்டார்களாம்.
எனவே, இப்போது சைமன் கமிஷனை பஹிஷ்கரிப்பதாக ஏதாவது
ஒன்று இரண்டு ஆசாமிகளாவது இருக்கிறதாகச் சொல்ல ஏற்படுமானால்
அவர்கள் மேற்கண்ட தைரியவானைப் போன்ற “துறவி” யாகத்தான் இருக்க.
வேண்டும்.
சைமன் கமிஷனை பஹிஞஷ்காரம் செய்யாத எவரும் இப்பேர்ப்பட்ட
“துறவிகளின் அபிப்பிராயத்தை லட்சியம் செய்து தாங்கள் ஏதாவது துரோகி
களாகி விட்டோமா என்பதாக சந்தேகப்பட வேண்டியதில்லை என்பதே
அறிவுடமை என்பதை எடுத்துக்காட்டுகின்றோம். மற்றபடி இதில் ஏதாவது
துரோகம் உண்டா என்பதாக கேட்பார்களானால், ஆம் ஒரு வழியில் துரோ
கம் என்றே சொல்லுவோம்.
அதென்னவெனில், பார்ப்பன ஆதிக்கத்திற்கும்,
பார்ப்பன ஆதிக்கக் கூலிப் பிரசாரத்திற்கும் சந்தேகமில்லாத துரோகம்தான்.
ஆனால் இந்த துரோகத்தை ஒவ்வொரு உண்மைப் பார்ப்பனரல்லாதாரும்
செய்யவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
குடி அரசு - தலையங்கம் - 09.09.1928
குடி அரசு - 1928 @)
118
ரஸ்
ர்களின்
காரோகம்
தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்த சம்மந்தமாக
சர்க்காரார் ரயில்வே அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களை
இம்சைப்படுத்தி வருவதைப் பற்றி சென்னை சட்டசபையில் விவாதிப்
பதற்காக மற்ற விஷயங்களை ஒத்திப்போட வேண்டுமென்று ஒரு அவசரப்
பிரேரேபணைக் கொண்டு வரப்போவதாக கோயம்புத்தூர் திரு.சி.எஸ்.
இரத்தினசபாபதி முதலியார் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தது யாவரும்
அறிந்த விஷயமேயாகும். இதை அறிந்த காங்கிரஸ்காரர்கள் என்னும்
அரசியல் பிழைப்புக் கூட்டத்தார்கள் திரு. முதலியார் இந்தப் பிரேரேபணை
யைக் கொண்டு வந்து பேசுவார்களேயானால் பார்ப்பன சூழ்ச்சியும் தேசீய
புரட்டும் காங்கிரஸ் குட்டும் வெளியாகிவிடுமே என்பதாகக் கருதி திரு.
சத்தியமூர்த்தி மூலம் திரு. முதலியாரால் இப் பிரேரேபணை பிரேரேபிக்கக்
குறிப்பிட்டிருந்த காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் பிரேரேபிக்கப்
போவதாக நோட்டீஸ் கொடுத்தார்கள். இதை உண்மை என்று நம்பிய
முதலியாரும் மற்றும் தொழிலாள அனுதாபிகளும் அதில் கலந்து கொள்ளத்
தீர்மானித்துத் தங்கள் பிரேரேபிப்பதற்கென்று தனிச்சமயம் கேட்காமல்
இருந்து விட்டார்கள். இந்த நிலையில் திரு. சத்தியமூர்த்தி அவர்கள்.
பொறுப்பில்லாமல் தாங்கள் சூழ்ச்சிக்கு ஏற்றவிதமாய் ஒரு தீர்மானத்தை
எழுதிக் கொடுத்துவிட்டு அதைப் பிரேரேபிக்கும்போது அதற்கு விரோத
மாய் பேசத் தொடங்கினார். அப்போது சட்டசபை அக்கிராசனர் திரு. சத்திய
மூர்த்தியைத் தீர்மானத்தை அனுசரித்துப் பேச வேண்டுமென்று சொன்னா
ராம். இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு திரு. சத்தியமூர்த்தி உடனே
நாம் இத்தீர்மானத்தைப் பிரேரேபிக்கின்றதில்லை என்று சொல்லி உட்கார்ந்து
கொண்டார். உடனே தலைவர் அடுத்த விஷயத்திற்கு போய்விட்டார். அடுத்த.
நாள் திரு.சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் தாம் முன் தெரிவித்திருந்த ஒரு
தீர்மானத்தை அனுப்பினார். இதை சட்டசபைத் தலைவர் “இத்தீர்மானம் திரு.
சத்தியமூர்த்தியால் நேற்றே கொண்டுவரப்பட்டு அவரால் பின் வாங்கிக்
கொள்ளப்பட்டதால் அதே காரியத்திற்கு இன்று மறுபடியும் இடங்கொடுக்
கப்படமாட்டாது” என்றும் வேறு இரண்டு அவசரப் பிரேரேபணைகள்
கொண்டுவரவேண்டியிருக்கின்றதென்றும் ஆதலால் சமயம் இல்லை
யென்றும் சொல்லிவிட்டாராம்.
இந்தக் காரணங்களால் நல்ல ஒரு சமயம் வீணாகப் போய்விட்டது.
119
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பொது நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால், திரு. சத்தியமூர்த்தி அவர்.
கள் தீர்மானம் கொண்டு வந்ததும் அவர் அதை பின்வாங்கிக் கொண்டதும்
முன் ஏற்பாட்டுடன் செய்த சூழ்ச்சியென்றே சொல்ல வேண்டும்.
சட்டசபைத் தலைவர் “தீர்மானத்திற்கு கட்டுப்பட்டுப் பேசுங்கள்”
என்று சொன்னால் இதில் தப்பிதம் என்ன என்றும் அதற்காக திரு.
சத்தியமூர்த்தி தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு பேசாமல் தீர்மானத்தையே வாபீசு
வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்னவென்பதையும் யோசித்தால்
விளங்காமல் போகாது.
ஒரு சமயம் அக்கிராசனர் அப்படிச் சொன்னதில் ஏதாவது குற்ற
மிருந்தாலோ அல்லது வேறு காரணங்கள் இருந்து தீர்மானத்தை அனுசரித்
துப் பேச திரு. சத்தியமூர்த்திக்கு முடியாமல் போயிருந்தாலோ திரு. சத்திய
மூர்த்தியவர்கள் பேச்சு ஒன்றும் இல்லாமல் தான் ஏற்கனவே எழுதிக்
கொடுத்து அக்கிராசனரால் ஒப்புக்கொண்டபடி தீர்மானத்தை படித்துச்
சொல்லி அதைப் பிரேரேபிப்பதில் உள்ள ஆக்ஷேபணை என்ன என்று
கேட்கின்றோம். தவிர “அப்படியானால் நான் பேசவில்லை” என்றாவது
சொல்லிவிட்டு தான் சும்மா உட்கார்ந்து கொள்ளாமல் “நான் தீர்மானத்தைக்
கூடபிரேரேபிப்பதில்லை” என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று
கேட்கின்றோம். எனவே இச்சம்பவம் “தானும் குடிக்காமல் வேறு யாரையும்
குடிக்கவொட்டாமல் வீணாய் கீழே கவிழ்த்து விட்ட துரோகக்காரன்”
செய்கைக்கு ஒப்பாக இருக்கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
அன்றியும் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை எப்படியாவது கெடுத்து
அவர்களை அடியோடு தொலைக்க வேண்டும் என்கின்ற கருத்துடனே
காங்கிரஸ்காரர்களும் தேசீயக்காரர்களும் அவர்களது பத்திரிகைகளும்
ஏஜண்டிடம் விலை பேசிக்கொண்டு தொழிலாளர்களுக்கு பரிகாரம் செய்ய
முடியாத துரோகம் செய்து விட்டார்கள் என்பதை திரு.சத்தியமூர்த்தி
அவர்களின் செய்கை ஆதரிக்கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
முதலாவது, யாரோ பல போக்கிரிகளும் காலிகளும் சேர்ந்து ரயில்
வண்டியைக் கவிழ்த்து விட தென் இந்தியா ரயில்வே தொழிலாளர்கள் செய்து
விட்டார்கள் என்று அவர்கள் மீது பழி சுமத்தி தொழிலாளர்களை
அக்கிரமமாகப் பிடித்து அடைக்கச் செய்தது ஒரு குற்றம்.
இரண்டாவது, வேலை நிறுத்தம் தோல்வி அடைந்துவிட்டது என்று
பொய்யான செய்தியை கட்டிவிட்டது ஒரு குற்றம்.
மூன்றாவது, இவ்விஷயம் தெரிந்தே வேண்டுமென்றே தொழிலாளர்.
வேலை நிறுத்தத்தை கெடுக்கக் கருதி “வேலை நிறுத்தம் முறிந்துவிட்டது”
குடி அரசு - 1928 @)
120
என்று பத்திரிகைகளில் போட்டு கட்டுப்பாட்டை உடைத்து சின்னாபின்னப்
படுத்தியது ஒரு குற்றம். இன்னும் இது போல் பல குற்றங்களும் செய்து விட்டு
இவ்வளவும் போதாமல், இதைப்பற்றிய அக்கிரமங்களைப் பற்றி பொது
ஜனங்கள் அறியும்படி செய்ய சட்டசபையில் பேசி ஏதாவது ஒரு காரியம்
செய்யலாம் என்றால் அங்கு விவரிக்கும் போது இந்த துரோகங்கள் எல்லாம்
வெளியாகிவிடுமே என்கின்ற காரணத்தைக் கொண்டு வேறொருவர்
தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்காக, ஒரு தீர்மானம் கொண்டு வருவது
போல வேஷம் போட்டு, மற்றவர்களுக்குள்ள சந்தர்ப்பங்களைக் கெடுத்து
இம்மாதிரி மோசம் செய்வதென்றால் இதற்கு என்ன பெயர் கொடுப்பது
என்பது நமக்கு விளங்கவில்லை.
தங்களாலேயே “உபயோகமற்றது”” என்று சொல்லப்படும் சைமன்
கமிஷனுடனும், “யார் ஒத்துழைத்தாலும் ஒன்றும் முழுகிப் போய்விடாது”
என்று சொல்லப்படும் சைமன் கமிஷனுடனும், இந்திய மக்கள் பிரதிநிதிகள்.
என்பவர்களால் ஒத்துழைக்க தீர்மானித்த சைமன் கமிஷனுடனும் ஒத்து
ழைப்பது என்பதற்கு துரோகம் என்றும் சர்க்கார் தாசத்தனம் என்றும் சொல்வ
தானால் இந்த மாதிரி அயோக்கியத்தனமும் கொலைபாதகத்தனமும்
பொருந்திய இப்பெரு மோசத்திற்கு என்ன பெயர் கொடுப்பது என்பதுதான்
நமக்கு விளங்கவில்லை. மனப்பூர்வமாய் 30000, 40000 ஜீவன்கள்
கஞ்சியில்லாமல் தவிப்பதும், சாதுக்களும், நிரபராதிகளுமுள்பட 200, 300
பேர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு 10 வருஷம் 20 வருஷம் தண்டிக்கப்
படத்தக்க குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரணையில்லாமலும் ஜாமீனில்
விடாமலும் கொடுமைப் படுத்தப்படுவதுமாயிருக்கும் இச் சமயத்தில் இதைப்
பற்றி யாருக்கும் எவ்வித கவலையுமில்லாமல், கவலைப்படுகின்றவர்களை'
யும் அவர்களால் கூடியதைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கொண்டும் இருப்
பதானால் இந்தக் கூட்டத்தார் “காங்கிரஸ்” காரர்கள் என்றும் “சுயராஜ்யக்”
காரர்கள் என்றும் “தேசீயக் காரர்கள் என்றும் “பூரண சுயேச்சைக் காரர்கள்
என்றும் சொல்லிக் கொள்ளுவதானால், இந்த நாட்டில் சூட்சிக்காரர்களுக்கும்,
வஞ்சகக்காரர்களுக்கும், ஏழைகளைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும்
துரோகிகளுக்கும் இன்னமும் இடமிருக்கின்றது என்கின்றதாக ஏற்படு
கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
அன்றியும் இந்தக் கூட்டத்தார்கள் தானே தங்களோடு சேராத
மற்றவர்களைப் பார்த்து தேசத் துரோகிகளென்று சொல்லுகிறவர்களாக இருக்
கின்றார்கள் என்பது தெரிகின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
எனவே முடிவாக இனியாவது பாமர மக்கள் உண்மையை உணர்
வார்களா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.09.1928
121
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
நாமணாதபூரம் வில்லாகபோர்ட௫
ராமனாதபுரம் ஜில்லாபோர்டு பிரசிடெண்டாயிருந்த ராமனாதபுரம்
ராஜா அவர்கள் காலமானதின் மூலம் இப்போது அந்த பிரசிடெண்ட்ஸ்தானம்
காலியாக இருந்து வருகின்றது.
சர்க்காரார் அந்த ஸ்தானத்தை பூர்த்தி
செய்வதற்கு இதுவரை யாதொரு முடிவும் செய்திருப்பதாகத் தெரியவில்ல.
ஆனாலும் அந்த ஸ்தானத்தை தேர்தலுக்கு (எலக்ஷனுக்கு விட்டுவிடலாமா
அல்லது தாங்களே ஒருவரை பிரசிடெண்டாக நியமனம் ( நாமிநேஷன்!
செய்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
தற்கால நிலைமையில் அதுவும் ராமனாதபுரம் ஜில்லாவைப் பொருத்தவரை:
அந்த ஸ்தானத்தை எலக்ஷனில் விடுவதைவிட நாமிநேஷனில் தக்க
ஒருவரை நியமனம் செய்வதே யோக்கியமும் அறிவுடைமையுமான காரியம்
என்று சர்க்காருக்கு யோசனை கூறுவோம். மதுரையில் சில பாகம், திருநெல்
வேலி, இராமனாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும் ஜாதிக்
கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்த ஒன்றாகும்.
உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்துகொள்ள
வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேளாள சமூகத்
தாரின் கொடுமையோ பார்ப்பனல்லாதார் சமூகமே வெட்கப்படத்தக்கதாகும்.
இவ்விரு சமூகக் கொடுமைகளுக்கும் மத்தியில் அங்குள்ள மற்ற வகுப்பார்
கள் படும் கஷ்டம் நினைக்கமுடியாததென்றே சொல்லுவோம்.
சாதாரணமாக சென்னை மாகாணத்தில் வேறு எங்குமே இல்லாத
கொடுமைகள் பல மேல்கண்ட ஜில்லாக்களில் தாண்டவமாடிக்கொண்டு
வருகின்றன.
திருச்செந்தூரில் இருக்கின்ற ஒரு சைவக் கோவிலில் வைசியர்கள்
என்கின்ற வாணியச் செட்டியார் சகோதரர்களுக்கு உள்ளே செல்ல உரிமை
இல்லை. அதுபோலவே மதுரை, ராமேஸ்வரம் முதலிய அனேக கோவில்
களில் க்ஷத்திரியர்கள் என்கின்ற நாடார் சகோதரர்கள் பிரவேசிக்க உரிமை
இல்லை.
ஆனால் பக்கத்து ஊர்களாகிய பழனி முதலிய இடங்களில்
கோவிலுக்குள் செல்ல அவர்களுக்கு உரிமை உண்டு.
இதுமாத்திரமல்ல. இச்சில்லாக்களில் உள்ள அனேக தெருக்களில்
குடி அரசு - 1928 @)
122
நடக்கக்கூட சில ஜனங்களுக்கு உரிமை தடுக்கப்பட்டிருக்கின்றது. ஏதோ
இரண்டொரு பார்ப்பனரோ சைவ வேளாளரோ சில நாடார் சகோதரர்களிட
மும் வாணியச் சகோதரர்களிடமும் மற்றும் சிலருடனும் அளவளாவுதாலோ,
குடித்தல், உண்ணல் வைத்துக் கொண்டிருப்பதாலோ இக்கொடுமைகள்
மறைந்து போனதாகச் சொல்லிவிட முடியாதென்றே சொல்லுவோம்.
வாணியச் சகோதரர்களுக்கும் நாடார் சகோதரர்களுக்கும் இக்கோவில்
பிரவேசமும் தெருப் பிரவேசமும் கிடைத்து விட்டதினால் அவர்களுக்கு
ஏதாவது பெரிய ஆதாயம் கிடைக்கும் என்பதாகக் கருதியோ அல்லது
அவர்கள் இதை லக்ஷியம் செய்கின்றார்கள் என்றோ நாம் இதை இங்கு
குறிப்பிடவில்லை.
மற்றபடி ஒரு பொது ஸ்தலமானது அந்நாட்டு மக்களுக்கே அதுவும்
அறிவு, ஆற்றல், ஒழுக்கம், செல்வம், செல்வாக்கு, பரோபகாரம் முதலிய உயர்.
குணங்கள் ஒருங்கே அமையப் பெற்ற சகோதரர்களை மனித உரிமைக்கு
அருகதை அற்றவர்கள் என்று சொல்வது எவ்வளவு கொடுமையானதாகவும்,
சகிக்க முடியாத இழிவை உண்டாக்குவதாகவும் இருக்கின்றதென்பதைக்
காட்டவே இதைக் குறிப்பிடுகின்றோம்.
அன்றியும், இக்கொடுமைகள் கடவுளின் பேரால், மதத்தின் பேரால்,
தர்ம சாஸ்திரத்தின் பேரால் செய்யப்பட்டு வருவதுடன் அரசாங்க ஆட்சி
யின் பேராலும் சட்டங்களின் பேராலும் கோர்ட்டு தீர்ப்புகளின் பேராலும்
நிலை நிறுத்தப்படுவதுமானால் இனி வேறு எந்த வழியில் இதிலிருந்து விலக
முடியும் என்பதுதான் நமது கேள்வி.
இச்சமூக மக்களில் ஏதோ சில பேர் அறியமையாலோ, அயோக்கியத்
தனத்தாலோ அல்லது தங்களுக்குள் உள்ள உள்மாச்சரியத்தாலோ சுய
மரியாதையில் கவலையற்று உதைத்த காலுக்கு முத்தமிடுவதுபோல் இக்
கொடுமைக்கும் இழிவுக்கும் அடிப்படையான கடவுளையும் மதத்தையும்
சாஸ்திரத்தையும் கட்டிக் கொண்டு அழுவதுடன் அதைக் கற்பித்த
பார்ப்பனர்களின் வாலைப் பிடித்து திரிவதுடன் இதைத்திருத்த முயலாத
அரசியல் இயக்கத்துடனும் அரசாங்க முறையுடனும் ஒத்துழைத்துக் கொண்டு
இருக்கிறார்கள்.
ஆயினும் இனியாவது இவற்றை ஒழிக்க முற்பட
வேண்டியதவசியமாகும்.
கொடுமைப் படுத்தப்பட்ட இச்சமூகத்தாருக்கு இதில் போதிய கவலை
இன்னும் ஏற்படவில்லையே என்று யாராவது சொல்வதானாலும் அதை ஒரு
சாக்காக வைத்துக்கொள்ளாமல் பொதுநலத்தை உத்தேசித்து நாட்டின் பொது
சுயமரியாதையில் கவலையுள்ள மற்றவர்களாவது நாட்டின் க்ஷமத்தையும்
மனித சமூகத்தின் பிறப்புரிமையையும் உத்தேசித்து வேண்டுவன
செய்யவேண்டியதே முதற்கடமை என்போம். இதை உத்தேசித்தேதான்
123
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இராமநாதபுரம் ஜில்லாபோர்டு தலைவர் பதவியைத் தேர்தலில் விடாமல்
நியமன மூலமாய் பூர்த்தி செய்ய வேண்டுமென்கின்றோம். ஏனெனில்
தேர்தல் மூலமாய் பூர்த்தி செய்வதானால் இக்கொடுமைகளை ஒழிக்கும்
மனப்பான்மையும் சந்தர்ப்பமும் உள்ளவர்களுக்கு அந்த ஸ்தானம் கிடைக்க
முடியாது. நியமனம் செய்வதானால் மாத்திரம்தான் இது சமயம் சர்க்கார்
தேடிப்பார்த்து அதற்க ஏற்ற ஒருவரை நியமிக்கக்கூடும்.
கொடுமைப் படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் விடு.
தலை பெற்று சமத்துவமடைய வேண்டுமானால் அச்சமூகத்தாருக்கு அதி
காரமும் பதவியும் வழங்கப்பட்டாலொழிய வேறு வழியில் சரிப்படுத்து
வதென்பது சுலபமான காரியமல்ல, வெள்ளைக்காரர்களை “நீச்சர்கள்”
என்றும், மகமதியர்களை “மிலேச்சர்கள்” என்றும் கிறிஸ்தவர்களை “இழிந்த
வர்கள்” என்றும் இன்றைக்கும் மத ஆதாரம் வைத்துக்கொண்டிருக்கும்
இந்துக்கள் என்போர்களும் இந்துக்களில் உயர்ந்த ஜாதியார் என்போர்களும்
அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டு இன்றைய தினம் அவர்களும்
சமத்துவம் பொருந்தியவர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் தவவை
யும் எதிர்பார்த்துக் கொண்டு திரிவதற்கு காரணம் அச்சகோதரர்களுக்கு
அதிகாரமும் பதவியும் கிடைத்ததின் பயனா அல்லவா என்று கேட்கின்றோம்.
அதிகாரத்தையும் பதவியையும் உத்தியோகத்தையும் கண்டால் சாமியும்
மதமும் சாஸ்திரமும் இடம் கொடுத்து விட்டு ஒதுங்கி நிற்பதை நாம் தினமும்
அனுபவத்தில் பார்க்கின்றோம்.
பொதுவாக இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார் ஒரு 20 வருஷத்திற்கு
முன் இருந்ததை விட இப்போது சற்று உணர்வும் சுயமரியாதை உணர்ச்சியும்
பெற்றிருப்பதற்குக் காரணம் சிறிதாவது அதிகாரமும் பதவியும் கிடைத்ததன்
பயனா அல்லவா என்று கேட்கின்றோம். அதுபோலவே இப்போதும்
எந்தெந்த சமூகம் பிறரால் கொடுமைப்படுத்தப்படுகின்றது என்று கருதுகின்
றோமோ அந்தச் சமூகங்களுக்கு அதிகாரமும் பதவியும் உத்தியோகமும்
தாராளமாய்க் கிடைக்கும்படி செய்து விட்டால் அச்சமூகங்கள் தாமாகவே
விடுதலை அடைந்து சமத்துவமடைந்து விடும் என்பது நமது துணிபு.
இதற்கு உதாரணமாக, இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட
ஆதிக்கங்கள் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் உள்ள ஆதாரத்தின்
பேரால் என்று சொல்லுவதானாலும் இந்த விழிப்புக் காலத்திலும் அதை
அசைக்க முடியாமல் செய்து வந்தது அப்பார்ப்பனர் கைப்பற்றிக் கொண்ட
அதிகாரங்களாலும் பதவிகளாலும் உத்தியோகங்களாலுமே தவிர வேறல்ல.
ஆதலால் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் அச்சமூகங்களுக்கு
அதிகாரமும் பதவியும் உத்தியோகமும் தாராளமாய் வழங்கிட வேண்டியது
நேர்மையான சர்க்காரின் முக்கிய கடமையாகும். அப்படிக்கில்லாமல்
“இந்தியாவுக்கு நாங்கள் தான் தர்ம கர்த்தாக்கள், இந்தியாவை காக்க எங்க
குடி அரசு - 1928 @)
124
ளைக் கடவுள் அனுப்பினார். இங்கு உயர்வு தாழ்வு கொடுமைகள் அதிகம்,
அதை நாங்கள் தான் கவனித்து சமன்செய்து ஆள முடியும்” என்று வாயில்
மாத்திரம் சொல்லிக்கொண்டு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோது கவனிக்காமல்
அச்சமூகங்களை அன்று பார்த்த காட்சிக்கு அழிவில்லாமல் வைத்திருப்ப
தானால் அதை பார்ப்பன சூழ்ச்சிபோல் மற்றொரு வெள்ளைக்கார சூழ்ச்
சியோ அல்லது அரசாங்க சூழ்ச்சியோ என்றுதான் சந்தேகப்பட வேண்டுமே
ஒழிய மற்றபடி வார்த்தைகளில் நாணயமுடையவர்கள் என்று சொல்லிவிட
முடியாது.
எனவே, அரசாங்கத்தார் இத்தத்துவவ்களை நன்றாய் கவனித்து
தெற்கு ஜில்லாக்களில் உள்ள
ஜாதிக் கொடுமையையும் ஜாதி
அகம்பாவத்தையும் ஒழிக்க தைரியமாய் முன்வந்து வெகு காலமாய்
கொடுமைப் படுத்தப்பட்ட சமூகத்தினர்களுக்கு தக்க அதிகாரமும் பதவியும்
உத்தியோகமும் கொடுத்து ஆதரித்து அவர்களுக்கு நியாயமான
செல்வாக்குண்டாக்கி அவர்களை கொடுமைப்படுத்தப்படுவதிலிருந்து மீளச்
செய்வார்களாக.
நிற்க, சென்றவாரம் சென்னையில் கவர்னர் துரையவர்களையும் ஸ்தல
ஸ்தாபன இலாக்கா மந்திரியவர்களையும் இது சம்மந்தமாகவே நாடார் சமூக
பிரமுகர்கள் அதாவது திருவாளர்கள் நாடார் மகாஜன சபைத் தலைவர் வி.
கனகசபை நாடார், உபதலைவர் செந்தில்குமார நாடார், காரியதரிசி பெரிய
தம்பி நாடார், கவுன்சிலர் புன்னையப்ப நாடார், இராமசாமி நாடார், சிதம்பர:
நாடார் வக்கீல் நடராஜன் முதலிய பல தக்க கனவான்கள் பேட்டிகண்டு
பேசிய தாகவும் தெரிய வருகின்றது. ஆகையால் இது விஷயத்தை சர்க்கார்
அலக்ஷி யமாகக் கருதி விடாமல் வினயத்துடன் கவனித்து அச்சமூகப்
பிரமுகர்களில் ஒருவரையே அந்த ஸ்தானத்திற்கு நியமிக்க வேண்டுமென்று
யோசனை சொல்லுகின்றோம்.
தக்க கனவான் கிடைக்கவில்லை என்று சர்க்கார் சாக்கு சொல்லி
தப்பித்துக் கொள்ள முடியாதென்பதையும் எச்சரிக்கை செய்கின்றோம்.
ஏனெனில் சட்டசபை அங்கத்தினர் பதவிக்கும் ஜில்லா போர்டு மெம்பர்
பதவிக்கும், சேர்மன் பதவிக்கும் மற்றும் உத்தியோக பதவிக்கும், அதிகார
உத்தி யோக பதவிக்கும் அச்சமூகத்தில் தக்க கனவான்கள் இருக்கும்போதும்
வருஷம் ஐம்பதினாயிரம்
ரூபா லக்ஷம் ரூபா வரும்படியுள்ள பெரிய
எஸ்டேட்டுகளையும் வியாபாரங்களையும் சொந்தமாய் நிர்வகித்து நடத்தக்
கூடியவர்களும் இருக்கும் போதும் இந்த வேலைக்கு மாத்திரம் ஆள்
கிடைக்கவில்லை என்றால் அரசாங்கத்தின் நாணயத்தில் யாருக்கும்
நம்பிக்கை இருக்காதென்றே சொல்லுவோம்.
ஆகையால் கவர்னர் துரையவர்களும் ஸ்தல ஸ்தாபன மந்திரிய
125
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வர்களும் தங்களின் யோக்கியதையை காட்டிக் கொள்ள நேர்ந்த தக்க
சமயத்தை இழந்துவிடமாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.09.1928.
குடி அரசு - 1928 @)
126
திருச்சி ஜில்லா நியாயாதிபதியவர்கள் திரு. ஞானப்பிரகாசம் என்கின்ற
ஒரு தொழிலாளருக்கு 10 வருஷம் கடின காவல் தண்டனை விதித்ததாக
தெரியவருகின்றது.
இந்த வழக்கில் நியாயம் வழங்கப்பட்டதா அல்லது பழிவாங்கும்
பேய்தன்மை நியாயம் வழங்கப்பட்டதா என்பது நமக்கு விளங்கவில்லை.
என்ன சமாதானம் சொன்னபோதிலும் இத் தீர்ப்பு எழுதிய நியாயாதி
பதி மனிதத்தன்மையுடன் நடந்துக்கொன்டிருக்கிறாரா என்பதை வாசகர்
கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வேலைறிறுத்தத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் பலனாக சற்றும் ஈவு
இரக்கமற்று பழி வாங்கும் தண்மையோடு வழக்குகள் ஜோடிக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் விஷயங்கள் யாவருக்கும் வெட்டவெளிச்சமாய் தெரிந்
திருக்கும்.
நியாயாதிபதிகள் என்பவர்கள் தங்களுக்கு கிரமமாய் இருக்க வேண்
டிய மனிதத்தன்மையை மறைத்துவிட்டு ஏதோ சில சுயநலப் பத்திரிகை:
காரர்கள் சுமத்திய அநியாயப் பழியையும் சில சுயநல அதிகாரிகள் ஜோடித்த
விஷயங்களையும் ஆதரவாய் கொண்டு இம்மாதிரி நடப்பதென்றால் பிறகு
வாயில்லா பூச்சிகளுக்கு எங்குதான் விடுதலை இருக்கின்றது என்பது நமக்கு
விளங்க வில்லை. அஸெஸர்கள் ஏகோபித்து எதிரி குற்றவாளியல்ல என்று.
சொல்லியும் தண்டித்திருப்பதாய் தெரிகின்றது.
சட்டத்திற்கும் நீதிக்கும் பொறுப்பானவர்கள் இதற்கு என்ன பரிகாரம்.
செய்வார்களோ தெரியவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.09.1928
127
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
“சித்திரபுத்திரன்
இதிகாசங்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் கடவுள்களை
பற்றியும் தனித் தனி மகுடமிட்டு “குடி அரசில்” எழுதிக் கொண்டு வருவதை
வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணு
கின்றேன். அவற்றை எழுதி வருவதின் நோக்கமெல்லாம், ஒரு சில சுயநலக்
காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவை
களையும் அசம்பாவிதமானவைகளையும் வெகு சாதாரணமானவை
களையும் எழுதிவைத்துக்கொண்டு பிரமாதப்படுத்தி, அவற்றையே மதம்
என்றும் பக்தி என்றும் மோக்ஷத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை
நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும் சுதந்திரத்தையும் சுயமரியாதை.
யையும் ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு
எடுத்துக்காட்டி மக்கள் யாவரும் சமம் என்பதையுணர்ந்து சுயமரியாதை
யோடு வாழ வேண்டுமென்பதுதான்..
ரெசுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம்
என்பதாக பெயர் கொடுத்து அவற்றிற்கு ஏராளமான யோக்கியதை
களைக் கற்பித்திருப்பதை பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணியஸ்தல
யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு
அந்தந்த ஊர்களுக்குப் போய் புத்தியையும் தங்கள் காலத்தையும்
பணத்தையும் வீணில் பறிகொடுத்துவிட்டு வருவதுடன் தாங்கள் இதுவரை:
செய்த அக்கிரமங்களும் அயோக்கியத்தனங்களும் இந்த யாத்திரையில்
மன்னிக்கப்பட்டு விட்டதாகக் கருதி மேலும் மேலும் புதிய அக்கிரமங்
களையும் அயோக்கியத்தனங்களையும் செய்ய தைரியமுடையவர்களாக
ஆக இடம் கொடுத்து வருகிறது.
ஸ்தல யாத்திரை என்று சொல்லப்பட்டு வந்ததானது ஒரு காலத்தில்
மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கும் உலக அனுபவப் பயிற்சிக்கும்
அனுகூலமாகத் கக்கினதாய் இருந்திருக்கலாம். எப்படியெனில் ரயிலும்
போக்குவரத்து வசதியும் இல்லாத காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் இருந்து
குடி அரசு - 1928 @)
128
கொண்டிருந்ததால், உலக அனுபவம் தெரிந்து கொள்வதன் பொருட்டு
வெளியிடங்களைச் சுற்றிப் பார்த்து வருவதற்காக ஸ்தல யாத்திரை என்பதின்
பேரால் போய் வரும் வழக்கம் அனுகூலத்தைக் கொடுத்திருக்கலாம்,
ஆனால் இப்போது ரயில் வசதி ஏற்பட்டு விட்டதாலும் சுலபத்தில் ஒவ்
வொரு இடத்து சங்கதிகளும் தன்மைகளும் பத்திரிகைகளின் மூலமாய்
தெரிந்து கொள்ளுவதற்கு அனுகூலமாய் இருப்பதாலும் இப்போது புண்ய
ஸ்தல யாத்திரை என்பதின் பேரால் அனாவசியமாக மக்கள் கஷ்டப்பட
வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். தற்காலத்திய புண்ணியஸ்தல
யாத்திரைகளின் யோக்கியதைகளைப் பற்றியும் யாத்திரைக்காரர்களின்
யோக்கியதைகளைப் பற்றியும் புண்ணியஸ்தலங்களிலுள்ள பண்டாரங்கள்,
பூசாரிகள், குருக்கள் முதலியவர்களின் யோக்கியதைகளைப் பற்றியும் அத
னால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைப் பற்றியும் நாம் அதிகமாக
விவரிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அது பல தடவை *குடி அரசி”
லேயேபல தலைப்பின் கீழ் வந்திருக்கின்றது. இன்னும் வர இருக்கின்றது.
ஆதலால் அந்த ஸ்தலங்களின் பெருமைகள் என்பவைகளைப் பற்றி
மாத்திரம் எழுதலாம் என்று இந்த வியாசம் தொடங்குகின்றேன் :-
பண்டரிபுரம்
முதல் முதல் பண்டரிபுரம் என்பதின் யோக்கியதையைப் பற்றி எழுத
துணிகின்றேன்.
பதும புராணத்தில் உமா தேவியின் அறிவு பிரகாசிக்கும் பொருட்டு
சிவபெருமான் சொல்லியருளிய பண்டரிபுரத்தைப் பற்றிய கதையை ஸ்ரீதர்.
விஸ்தரிக்கிறார்-
கைலாச பர்வதத்தில் ஓர் காலத்தில் எழுந்தருளியிருந்தபோது உமா
தேவியார் சிவ பெருமானை நோக்கி. “நிலவுலகில் பண்டரிபுரத்தில் திருமால்
நித்யவாசம் செய்வது யாது காரணத்தால்” என்று கேட்டதாகவும், அதற்கு
சிவபெருமான் சொல்வதாகவும் கதை ஆரம்பிக்கப்படுகிறது.
1.கொடி போல்பவளே! திருமாலானவர் வைகுந்தத்தில் வீற்றிருக்கும்
காலத்தில் இந்திராணி அவரைக் கண்டு மோகித்து
“ இறைவனே! நான் உமது
மடியில் இருக்க வேண்டுமென்று அபேகஷிக்கிறேன்” என்று பிரார்த்திக்க,
திருமால் இரக்கங்கொண்டு “நீ பூலோகத்திற்குப்போய் 60000 வருஷம் தவம்.
செய்தால் நான் துவாரகாபுரியில் கிருஷ்ணாவதாரம் செய்து உன் விருப்பத்
தைப் பூர்த்தி செய்வேன்” என்று சொல்ல, இந்திராணி அப்படியே நிலவுலகில்
சென்று 60000 வருடம் தவம் செய்து கோகுலத்தில் ராதையாகப் பிறந்து
வளர்ந்து, திருமால் கிருஷ்ணனாக அவதரித்து எழுந்தருளியிருக்கும்
துவாரகாபுரிக்குச் சென்று அவரை வணங்க, கிருஷ்ணன் ராதையை
129
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இன்னாளென்று அறிந்து வாரியெடுத்து தன் மடிமீது வைத்துக் கொள்ள,
இதைக் கண்ட கிருஷ்ணனின் மனைவியான ருக்குமணி கோபங் கொள்ள,
அதைக் கண்டு ராதை கிருஷ்ணனை விட்டு நீங்கி திண்டீரவனத்திற்குப்
போய் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டுமென்று தவம் செய்ய,
கிருஷ்ணன் ருக்குமணியை விட்டு விட்டு துறவி வேடம் பூண்டு ராதையைத்
தேடித்திரிந்து கடைசியாக திண்டீரவனம் என்கின்ற ஓர்வனத்தில் அவளைக்
கண்டு, பிராண நாயகி! என்னை தனியே விட்டு இக்கொடிய வனத்திற்
கெவ்வாறு வந்தனை” என்று கேட்க, ராதையானவள் கிருஷ்ணனைப் பார்த்து
“உன்னைப் பார்த்தாலே நீ ஒரு வஞ்சகனென்று தோன்றுகிறது.
ஆதலால்
நீ
இங்கு நில்லாமல் ஓடிப்போ” என்று சொல்ல கிருஷ்ணன் மதி மயங்கி தன்
கைத்தடியை முழங்கால்களினால் இடுக்கிக் கொண்டு இடுப்பில் கையை
வைத்து மூக்கின் முனையில் தன் பார்வையை வைத்து விருப்பத்தோடு
இன்றையவரையும் அதாவது
28 துவாபரயுக காலம் ராதையின் முன்:
நிற்கின்றான். மேலும் பார்வதி!
2. திண்டீரனென்ற கொடிய அசுரன், சூரியனைத் தன் தேர்மீது ஏறிச்
செல்லவொட்டாமல் தடுத்து தொந்திரவு செய்து கொண்டிருந்தான்.ஆகவே
தேவர்கள் திருமாலை அடைந்து இந்தச் செய்தியை விண்ணப்பம் செய்ய
திருமால் மல்லிகார்ஜுனனாக சந்திரன் என்னும் அரசனிடம் பிறந்து வளர்ந்து
வேட்டையாட ழை திண்டீரன் என்னும் அசுரன் வசித்த திண்டீரவனம் சென்று
அவனோடு ஆயிரம் வருஷம் போர் செய்தும் அவன் தோற்காமலிருக்க
கடைசியாக லோகதண்டம் என்னும் கதாயுதத்தை கைக்கொண்டு அவனை
யடித்து பூமியில் வீழ்த்தினார்.
அவன் உயிர்விடுபோது “ஸ்ரீஹரி” என்று
உச்சரிக்க மல்லிகார்ஜுனன் உடனே திருமாலாக மாறி அவ்வசுரனை நோக்கி
“உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்டுக்கொள்” என்று அருள அவ்வசுரன்
“இவ்வனம் லோக தண்டமென்று விளங்கவும் இதில் அழகிய நகர் ஒன்று
உண்டாக்கி, நான் இறந்த இடத்தில் என் பேரால் ஒரு தீர்த்தமுண்டாக்கி
அதனிடத்தில் உன் கதாயுதத்தை நிறுத்தி, அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி அக்கதா
யுதத்தை ஆலிங்கனம் செய்வோர்களுடைய பாவங்களை நிவர்த்திக்க
வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, திருமாலும் அவ்வரத்தைக் கொடுத்து
அசுரனுக்கு வைகுண்டலோகத்தை அளித்தார். அன்றுமுதல் அந்த வன
மானது “லோகதண்டம்” எனவும் பெயர் பூண்டு விளங்கிக் கொண்டிருக்கிறது.
3. மேலும் கேளும் பார்வதி! அவ்வனத்தில் ஜன்ஹு என்ற ஒரு
வேதியர் ஸாத்யகி என்பவனோடு இல்லறம் செய்து கொண்டு வரும் காலத்
தில், புத்திரரில்லாமையால் நெடுங்காலம் தவம் செய்து, “புண்டலீகர்” என்ற
ஒரு அழகிய மைந்தனைப் பெற்றார். புண்டலீகன் வயதடைந்த பின்
அவனுக்கு மணம் செய்வித்து மகிழ்ந்திருந்தனர். புண்டலீகனோ வெகு
துஷ்டனாகி தாய் தந்தையரை வைது, அடித்து, துரத்திவிட்டு தன் மனைவி
யோடு தனியே வாழ்ந்திருந்தனன். துரத்தப்பட்ட தாய், தந்தையர் காசிக்குப்
குடி அரசு - 1928 @)
130
போக எண்ணிப் புறப்பட்டனர்.புண்டலீகனும் அவனது மனைவியும் குதிரை
மீதேறிக் கொண்டு பின் தொடர்ந்தனர். தாய் தந்தையர் நடக்க மாட்டாமல்
தள்ளாடிக் கொண்டு போவதைப் பார்த்தும் புண்டலீகனுக்கு மனமிரங்காமல்
பார்த்துக்கொண்டே போய் காசிக்கருகில் ஒரு சோலையில் குக்குடர் என்னும்.
ஒர் முனிவரது ஆசிரமத்தின் அருகில் இறங்கினான்.
அந்தக் குக்குட முனிவர் தம்தாய் தந்தையரையன்றி வேறு தெய்வ
மில்லை என்று துணிந்து இரவும் பகலும் அவர்களுக்கு சேவை செய்பவர்.
இப்படிப்பட்ட அவரது ஆசிரமத்தில் புண்டலீகன் அன்றிரவு தங்கி
யிருந்தான். அப்படியிருக்கையில், கோர ரூபங்கொண்ட மூன்று பெண்கள்
நள்ளிரவில் அவ்வாசிரமத்திற்குள் புகுந்து அதிலுள்ள குப்பைகளைக் கூட்டி
தரையை மெழுகி கோலமிட்டு அலங்கரித்து, ஒரு கணத்தில் தம் கோர ரூபம்
நீங்கி செளந்தரியவதிகளாய் வெளிவந்தனர். இதைக் கண்ட புண்டலீகர்.
இவர்களை பேய்களோ தேவதைகளோ என எண்ணி ஆச்சரியமும் பயமும்
கொண்டு கடைசியாக ஒருவாறு பயந்தெளிந்து அம்மாதர்களிடம் அணுகி.
“நீங்கள் யாவர்” என்று கேட்க, அவர்களில் ஒரு மாது “அடா பாவி! நீ
முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனே உன்னை இம் முனிவரிடம்
கொண்டுவந்து விட்டது. அவரைக் கண்ட புண்ணியத்தால் எங்களையும்
கண்டாய்.
இனி
நீ எந்தப் பாவமும் தொடரப் பெறாதவனாய் பரிசுத்தனாகக்
கடவை! நாங்கள் கங்கை, காளிந்தி, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இந்த
உருக்கொண்டு வந்திருக்கின்றோம். எங்களிடத்தில் மூழ்குவோருடைய
பாவங்களையெல்லாம் நாங்கள் ஏற்று அதனால் கோர ரூபங்கொண்டு, அந்த
ரூபத்தை பரிசுத்த ஆத்மாவாகிய இந்த குக்குட முனிவருக்கு ஊழியம்
செய்வதனால் மாற்றி நல்ல ரூபங்கொண்டு போகிறோம்.
இவர் தமது தாய்
தந்தையரை வழிபடுகிற புண்ணியமே எங்கள் பாவத்தைப் போக்கிற்று”
என்று சொல்லிச் சென்றுவிட்டனர்.
பின்பு புண்டலீகர் குக்குடரிடம் விடைபெற்றுக்கொண்டு தாய்
தந்தையரைத் தேடினார். தேடிக் கண்டு அவர்களைத் தமது குதிரை மீதில்
ஏற்றிக் கொண்டு, புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிவித்து, தம் ஊருக்கு வந்து
தாமும் தம் மனைவியும் அத்தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து
கொண்டிருந்தார்கள்.
இப்படியிருக்க பூர்வயுகத்தில், “விருத்திரன்” என்பவன் தேவ
ராஜனாகிய இந்திரனைக் கொல்ல நினைத்து பாதாள லோகத்தில் தவம் செய்து
கொண்டிருந்தான். இதையறிந்த இந்திரன் பாதாள லோகம் சென்று தன்
வஜ்ஜிராயுதத்தால் அவன் தலையை சேதித்து வீழ்த்தினான். அப்பொழுது
விருத்திரன், “தவஞ் செய்யும்போது தலையை அறுத்த பாவத்தால் நீ
செங்கல்லாய் பூமியில் விழக்கடவை” என்றான்.
131
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இந்திரன் செங்கல்லாய் விழுமுன்னே திருமால் மகிழும்படி
தோத்திரம் செய்ய, திருமால் மகிழ்ந்து “தேவராஜனே நான் புண்டலீ
காஸ்ரமத்தில் வந்து செங்கல்லுருவாய்க் கிடக்கிற உன் மேல் அடிவைத்து
உன்னைப் பூர்வ ரூபமாய்ச் செய்கிறேன். அஞ்ச வேண்டாம்” என்றனர்.
அன்று முதல் இந்திரன் புண்டலீகர் வசிக்கும் திண்டீரவனத்தில் செங்கல்
லுருவாய்க் கிடந்தான்.
இப்படியிருக்க திருமால், புண்டலீகர் தாய் தந்தையர் வழிபட்டுக்
கொண்டிருக்குஞ் சமயம் அவருக்குப் பின்புறம் வந்து நின்றார். அப்போது
திருமாலின் ஒளி புண்டலீகரின் தந்தையாரின் பாதத்தில் படவே புண்ட
லீகன் திரும்பிப் பார்த்து அருகிற் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்தெறிந்து
“இதன் மீது சற்றுநேரம் நில், என் வேலையை முடித்து வருகிறேன்” என்று
சொல்லி விட்டு தாய்தந்தையருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச்
செய்து விட்டு திருமாலிடம் வந்து வணங்கினான். திருமால் “உனக்கு என்ன
வரம் வேண்டும்” என்று புண்டலீகனைக் கேட்க அவன் *தேவரிர்' இந்த
இடத்தை என் பெயர்ச் சார்பினால் பண்டரிபுரமென்ற பெயருடையதாய்ச்
செய்து இத்தலத்தில் எல்லாவற்றிலும் சிறந்த தீர்த்தமொன்றையுமுண்டாக்கி,
அதில் மூழ்கி உன்னை வணங்குவோர் யாவரும் பாவ விமோசனம்
அடைந்து பரிசுத்தராகும்படி இத்தலத்தில் தேவரீரும் பாண்டுரங்கன் என்னும்
நாமத்துடன் நித்யவாசம் செய்யவேண்டும்” என்று வேண்ட திருமாலும்
அவ்வரத்தை யருளினார்.
திருமாலின் அடியில் செங்கல்லாகக் கிடந்த இந்திரன் நற்பதவி
யடைந்து தேவதச்சனை வரவழைத்து அத்தலத்தில் ஒரு அழகிய நகரமும்
விமானமும் செய்யச் செய்து திருமாலை மகிழ்வித்தான். அந்நகரமே
இப்பண்டரிபுரம், திருமாலே இப்பண்டரிநாதன்; சந்திர பாகை என்னும் நதியே
இத்தீர்த்தம் என்று சிவபெருமான் சொன்னாராம்.
மேல்கண்ட வரலாறுகளிலிருந்து, திண்டீரவனமென்ற ஒரு வனம்
எப்படி லோகதண்டமென்றும் பண்டரிபுரமென்றும் பேர் பெற்றன என்பதும்
திருமால் பாண்டுரங்கன் என்று பேர் பெற்றனர் என்பதும் காணக்கிடக்
கின்றதுடன் திருமால், தேவராஜனாகிய இந்திரன், இந்திராணி முதலிய நம்
இந்து தெய்வங்களெனப்படுபவைகளின் யோக்யதையும் வெளியாகின்றது.
*தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய இந்திரனுடைய மனைவி இந்திராணி”
தன் கணவனை அலட்சியம் செய்துவிட்டு திருமாலைக் கண்டுமோகிக்கிறாள்..
“லோக ரக்ஷகராகிய திருமாலும்” தமது மனைவி லக்ஷிமியை அலட்சியம்
செய்து விட்டு பிறன் மனையாளாகிய இந்திராணியைத் தம்மடி மீது எடுத்து
வைத்துக் கொள்கிறார். அவளுக்காக மாறுவேடம் பூண்டு காமப் பித்தேறி
அலைகிறார்.அப்பித்தால் 28 துவாபரயுக காலம் இந்திராணியின் முன்னிலை
யில் மதிமயங்கி நிற்கிறார். என்னே “பரம் பொருளாகிய திருமால்” “தேவ
குடி அரசு - 1928 @)
132
ராஜன் மனைவி இந்திராணி” இவர்களின் ஒழுக்கம்!
கேவலம் ஒரு அசுரனைக் கொல்ல திருமால் ஆயிரம் வருடம் போர்
செய்தும் வெல்லமுடியாமல் கடைசியாக சூழ்ச்சியாக தம்மிடமுள்ள லோக
தண்டத்தால் அவனைக் கொன்றார் என்றால் எல்லாம் வல்ல திருமாலின்”
சக்தியும் நேர்மையுந்தான் என்னே!
ஆயிரம் வருடம் போர் செய்தும் தம்மால் வெல்ல முடியாத ஒரு
வருக்கு திருமால் வைகுண்ட பதவி அளித்தார் என்பது கொஞ்சமும்
பொருந்தாது என்பதை நாம் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய
தில்லை.
கங்கை, காளிந்தி, சரஸ்வதி ஆகிய நதிகளில் குளித்தவர்களுடைய
பாவங்களையெல்லாம் அந் நதிகள் ஏற்றுக் கொள்கின்றனவென்பதும்
அப்படி குளித்து தம்மை புகழ்ந்தவர்களுக்கெல்லாம் திருமால் முக்தி
அளித்தார் என்பதும் உண்மையென்று நம்பினவர்கள், என்ன பாவம்
செய்தாலும் கங்கையில் மூழ்கி திருமாலைப் புகழ்ந்து விட்டால் அப்
பாவங்களெல்லாம் ரத்தாகி முக்தி வந்து விடும் என்று மேலும் மேலும்
அக்கிரமங்கள் செய்வார்களா மாட்டார்களா?
நிற்க, தேவராஜனாகிய இந்திரனுடைய யோக்கியதையைப் பாருங்கள்.
அவன், விருத்திரன் கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிற
போது அவனை வறஜ்ராயுதத்தால்அடித்துக் கொல்கிறான். இப்படிப்பட்ட
கொடும் பாதகன் திருமாலைப் புகழ்ந்து விருத்திரன் கொடுத்த சாபத்தைப்
போக்கிக் கொள்கிறான்!
ஆச்சரியம்! பாவமன்னிப்பு டிக்கட்டும் மோட்சலோக டிக்கட்டும் இவ்
விந்து மதத்தில் கிடைப்பதுபோல வேறு எந்த மதத்திலும் இவ்வளவு
சுலபமாகக் கிடைப்பதில்லை. செங்கல், நதி முதலியவைகள் மனிதர்
களாகவும், மனிதர்கள், நதி, கல் முதலியவைகளாகவும் திடீர் திடீரென்று
மாறுகின்றனர். இவைகளெல்லாம் ஆதாரமாகக் காட்டப்படும். *.இந்து மத
கடவுள்கள், புராணங்கள் முதலியவைகளெல்லாம் - நம்பாவிட்டால் நாஸ்தி
கமாம்! மேற்கண்ட கதைகளை ஆதாரமாகக் கொண்ட பண்டரி
புரத்
திற்குத்தான் நம் பாமர மக்கள் - பகுத்தறிவில்லா மக்கள்- லக்ஷக்கணக்காக
ஒவ்வொரு வருஷமும் பிச்சையெடுத்துக் கொண்டாவது போய் விடு
கிறார்கள். இப்படிப் போய் வருவதில் இவர்கள் செலவிடும் காலமும் பணமும்
கணக்கிடப்படமுடியாது. அரிய காலத்தையும் பொருளையும் செலவிடு
வதின்றி ஆண் பெண் என்ற வித்யாசமின்றி ஒருவரை யொருவர் தழுவிக்
கொள்ளலாகிய ஒழுக்கக் குறைவுகளுக்கும் உட்பட்டு, சீதோஷ்ண
மாறுதலினாலும் ஆகார மாறுதலினாலும், நோய்வாய்ப்பட்டு, ரயிலில்
132
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இடிபட்டு, எல்லா உணர்ச்சியுமற்று கோவிந்தா! கோவிந்தா! என்ற வாய்
வார்த்தையோடு ஊர் வந்து சேருகிறார்கள்.
அந்தோ! இப்பண்டரிபுர யாத்திரைக்குச் செலவிடும் காலத்தையும்
பணத்தையும் ஏழைமக்களின் அறிவு வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கு
மான கல்விக்கு செலவழித்தால் பண்டரிநாதன் நம் கண்ணைக் குத்தி
விடுவானா? பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - கட்டுரை - 16.09.1928
குடி அரசு - 1928 @)
134
ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா ோகனணி ஆரியா
வீரர்திரு.ஆரியா அவர்களின் வாழ்க்கைத்துணை நல்லார் (பாரியை!
ஆகிய ஸ்ரீமதி டாக்டர் மார்த்தா வோகளி ஆரியா 11.8.8.0,14.0 சர்ஜன் அன்
பிசிஷன் அவர்கள் குழந்தை வைத்திய விஷயத்திலும் ஸ்தீரிகள் வைத்திய
விஷயத் திலும் சிறப்பாக மருத்துவ விஷயத்திலும் தேர்ச்சி பெற மேல்நாடு
சென்று ஜெர்மனி முதலிய இடங்களில் உள்ள உயர்தர வைத்திய
காலேஜுகளில் படித்து டாக்டர் பட்டம் பெற்று இந்தியாவுக்கு இரண்டு
மாதத்திற்கு முன் வந்திருக்கிறார்கள். அவர்கள் இது சமயம் அரசாங்க உத்தி
யோகம் பெற சம்மதிப்பார்களானால் தக்க பதவியும் உத்தியோகமும் கிடைக்
கக்கூடுமானாலும் தேசத்திற்கும் ஏழைமக்களுக்கும் தொண்டு செய்ய
வேண்டுமென்கின்ற அவாவின் பேரில் தனியே சொந்தத்தில் ஒரு வைத்திய
சாலை ஏற்படுத்தி இருப்பதுடன், யாவருக்கும் வைத்திய உதவி செய்யவும்
தயாராயிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட தயாளகுணமும் தாராள நோக்கமும்
உள்ள அம்மையார் அவர்களை
நாம் மனமார பாராட்டுவதுடன் அவர்கள்
எடுத்த காரியம் சித்தி பெற்று யாவருக்கும் பபன்படவேண்டுமென்று மனதார
ஆசைப்படுகிறோம்.
குடி அரசு - செய்திக்குறிப்பு - 16.09.4928
135
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
திரு. சண்முகம் கசட்முயாருக்கு
டாக்டர்
நாயர்
கல்விக்
..
திரு.செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல
வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்
களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு
விரோதமாக நடப்பவரல்லர்(நகைப்பு). பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு
சூரியனை பூமி சுற்றுகின்றது.
அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று
பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும்
மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால்
தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு.
மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர்.
காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று
ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க்
கூறினார்.
நம்நாட்டு மூட பழக்க வழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து,
மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு
வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டிப்பதற்கும் அவர் ஒரு
போதும் பின் வாங்கியதில்லை. கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார்.
மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த
பத்திரத்திற்குப் பதிலளிக்கும்போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன
சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பா
ரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த
முயன்றது பாராட்டத் தக்கதேயாம். சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா
சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதை
யும்மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தத்
தீர்மான மொன்று கொண்டுவர உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அக்
கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று
நான் கேட்டுக் கொண்ட போது அவர் அதற்கு ஒப்புக்கொண்டு தம்மாலான
வகையிலெல்லாம் அவ் வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார்.
குடி அரசு - 1928 @)
136
திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளுகின்றார்.
கள் என்பதைப் பொருட்படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர்.
என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும்
பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார்.
முக்கியமானவர். நீங்கள் அவர் அந் நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள
வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதை விட அவருடைய அபிப்பிராயத்தை
அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும். இன்று திரு.
செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு
சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறித.
லையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:06.09.1928 ஆம் நாள் சென்னை டாக்டர் நாயர் கல்விக்கழகத்தார்
பச்சையப்பன் மண்டபத்தில் திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களுக்கு
உபசாரப் பத்திரம் வழங்கிய நிகழ்வில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 16.09.1928
137
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
செண்ணையில் மாலபைருங்கூட்டம்
“து -
ல
யா த்
33.
சகோதரர்களே!
இன்று நான், இன்ன விஷயத்தைப் பற்றித்தான் பேச வேண்டுமென்று
நான் முடிவு செய்யவில்லை, ஆகிலும் கமிஷன் பகிஷ்காரம் என்னும்
பொருள் பற்றிச் சிறிது பேச விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் இப்போது
அரசியல் உலகத்தில் முக்கியமாக அடிபடுகிறது. அதாவது நமக்கு
இதற்குமுன் சர்க்காரால் அளிக்கப்பட்டு நாம் அனுபவித்து வருகிற சீர்திருத்
தத்தைக் குறித்தும், இந்தியர்களுக்கு இன்னும் அதிகப்படியான சீர்திருத்தம்
கொடுக்கலாமா, அவர்கள் அவற்றை அடைய லாயக்குதானா என்பவை
களைக் குறித்தும் விசாரித்து அறிவிக்கும்படி பிரிட்டிஷ் பார்லிமெண்டு
இப்போது ஒரு கமிஷனை அனுப்பியிருக்கிறது என்பதைப் பொருத்தவரை:
அரசியல் வாதிகள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். எனவே, நாம் இதை இப்போது
பகிஷ்கரிக்க வேண்டுமா அல்லது அதனிடம் நமது குறைகளைச் சொல்ல
வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒத்துழைப்
பதால் நாட்டுக்கு நன்மையுண்டா அல்லது பகிஷ்கரித்தால் நன்மையுண்டா
என்பதை முதலில் கவனிக்க வேண்டும். நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு சிலர்.
ஆரம்பித்திருக்கும் கமிஷன் பகிஷ்காரம் வெறும் புரட்டென்றும், ஏதோ சில
பார்ப்பனர்கள் கமிஷனால் தங்களுடைய ஆதிக்கம் போய்விடுமோ என்னும்
பயத்தால் பகிஷ்காரம் பகிஷ்காரம் என்று வெறும் கூச்சல் போட்டுக்
கொண்டிருக்கிறார்களென்றும், அவர்கள் மற்றவர்களை ஏமாற்றி தங்கள்
காரியம் கொண்டுபோகவே இவ்வியக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்களென்
றும்,ஆகையால் இழிவையும் கொடுமையையும் அனுபவித்துக் கொண்டிருக்
கும் பார்ப்பனரல்லாதார் இத்தகைய ஏமாற்று வார்த்தைகளுக்கு ஆளாகாமல்
கமிஷனிடம் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை தெரிவித்தால்தான்
அவர்களுக்கு ஏதாவது நன்மை உண்டாகலாமென்றும் நான் அடிக்கடி கூறி
வந்திருக்கிறேன். சைமன் கமிஷன் பிரச்சினையின் ஆரம்பத்தில் ஜஸ்டிஸ்
கட்சியும் கூட முதலில் திணறிவிட்டது. அது நமக்கும் கமிஷனுக்கும்
என்னென்ன சம்பந்தங்களிருக்கின்றன, நமக்கு அதனால் நன்மை ஏதாவது
கிடைக்குமாவென்றெல்லாம் கவனிக்காமல் பகிஷ்கரிக்கத் தீர்மானித்து
விட்டது. ஏனெனில் அவர்கள் அடுத்த தேர்தல் எப்படி எப்படி வந்து
குடி அரசு - 1928 @)
138
முடியுமோ வென்று பயந்துவிட்டார்கள்.நம் ஓட்டர்களுக்கோ ஓட்டை எப்படி
உபயோகிப்பது என்கிற அறிவு இன்னும் வரவில்லை. அவர்களை
ஏமாற்றி
வயிறு வளர்க்க ஒரு சாரார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அக் கூட்டத்தில்
ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்க வேண்டிய கூலிகளெல்லாம் சேர்ந்து
கொண்டார்கள். ஆனால் சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபடுகிறவர்களும்,
உத்தியோகத்தை விரும்பாதவர்களும், சுயமரியாதையுள்ளவர்களும்,
பகிஷ்காரம் புரட்டு, அதில் ஒன்றுமேயில்லை, பகிஷ்காரம் என்று கூச்சல்
போடுகிறவர்களின் யோக்கியதை நமக்குத் தெரியும் எனச் சொல்லி மக்களை
எச்சரிக்கை செய்து கொண்டு வந்தார்கள். சுயமரியாதை இயக்கத்தைச்
சேர்ந்தவர்களும், பகிஷ்காரம் புரட்டு என்று கூறி வந்தார்கள். நானும் எனது
பத்திரிகையில் அவ்வாறே எழுதி வந்தேன். நமது மதத்திலுள்ள
ஊழல்களையும், புரட்டுகளையும் எடுத்துக்காட்டினால் நம்மை நாஸ்திக
மதத்தைப் பரப்புவர்களென்று சொல்வது போல் அரசியல் புரட்டுகளை
எடுத்துக்காட்டினால் தேசத் துரோகிகள், சர்க்கார் பூசாரிகள், உத்தியோக
வேட்டைக்காரர்கள் என்றெல்லாம் நம்மை ஒரு சாரார் தூற்றிவந்தார்கள்.
அந்தக் காலத்தில் நாம் எக்காரணத்தைக் கொண்டு கமிஷன் பகிஷ்காரம்
புரட்டென்றும், அதனிடம் நமது குறைகளைச் சொல்லிப் பார்த்து விட
வேண்டுமென்றும் கூறி வந்தோமோ அந்தக் காரணங்களைக் கொண்டே
முன்பு பகிஷ்காரத்தில் சேர்ந்திருந்தவர்கள் இப்போது வந்துவிட்டார்கள்.
முன்பு பகிஷ்கரிப்பதென முடிவு செய்த ஜஸ்டிஸ் கட்சியும் கமிஷனுடன்
ஒத்துழைக்க முடிவு செய்து விட்டது. ஏனெனில் அவர்கள் கமிஷனுடன்
ஒத்துழைப்பதற்கு தடையாயிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் ஒரு கூட்டத்தார் கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று
கூச்சலிட்டதுமன்றி சைமன் இந்தியாவுக்கு வந்திறங்கிய தினத்தில்
ஹர்த்தாலும் நடத்தினார்களே, அது என்னவாயிற்று. இரண்டொருவர்
ஹைகோர்ட்டு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டதோடு அது நின்றது. அவர்களில்
சிலர் இப்போது சட்டசபை கமிட்டித் தேர்தலுக்கும் அபேட்சகர்களாக
நிற்கிறார்கள். அவர்கள் அடுத்த தேர்தலை எண்ணியே பகிஷ்காரத்தில்
சேர்ந்தார்கள். ஒரு மாகாணத்திலும் பகிஷ்காரம் பலிக்கவில்லை. அவர்கள்
கூறும் பகிஷ்காரத்துக்கு நம்முடைய குறைகளை சர்க்காரிடமும், கமிஷ
விடமும், பார்லிமெண்டாரிடமாவது சொல்லிக் கொள்ளக்கூடாதென்பது
தான் அர்த்தமா? பகிஷ்காரமென்று கூச்சல் போடுகிறவர்களுக்கு உள்ளுக்
குள் ஒத்துழைக்க வேண்டுமென்பது தான் எண்ணம். ஆனால் மக்களை
ஏமாற்றி வாழ்வதற்கே அவ்வாறு சொல்லிக் கொண்டார்கள். அவர்களுடைய
நடவடிக்கைகளை நன்கு கவனித்தால் அவர்களுடைய யோக்கியதை இன்ன
தென்பது நமக்குத் தெரியவரும். பகிஷ்காரம் வெறும் கூச்சலாக இல்லா
விட்டால் ஒவ்வொருவரும் தனித் தனியாக சுயராஜ்யத் திட்டம் தயாரித்து
அனுப்புவானேன்?
139
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ரகசிய திட்டங்கள்
ஸ்ரீ எஸ்.சீனிவாசய்யங்கார் தயாரித்த திட்டம் பார்லிமெண்டு குப்பைத்
தொட்டிக்குப் போயிற்று. அம்மட்டோ? அவர் இங்கு பகிஷ்காரம், பகிஷ்
காரம் என்று சொல்லி விட்டுச் சீமைக்கு தேகசுகத்தை முன்னிட்டுச் செல்வ
தாகச் சொல்லிப் போய் அங்கு பல ஆங்கிலேயர்களையும், அரசியல்வாதி
களையும் ஒருவர் பாக்கியில்லாமல் நேரில் கண்டு பேசி தம்முடைய
திட்டத்தை அவர்களிடம் கொடுத்து அதை ஒப்புக் கொள்ள வேண்டு
மென்று கெஞ்சினார். இதெல்லாம் பகிஷ்காரமா அல்லது ஒத்துழைப்பா? இனி
“ஹிந்து” ஆசிரியர் ஸ்ரீ. எ.ரெங்கசாமி அய்யங்கார் ஒரு திட்டம் தயாரித்து
அனுப்பினார்.அதுவும் பார்லிமெண்டு குப்பைத் தொட்டிக்கு இரையாயிற்று.
அன்னிபெசண்டு அம்மையார் குடியாட்சி மசோதா ஒன்று தயாரித்து
அனுப்பினார். அது ஒன்றரை வருஷமாகப் பார்லிமெண்டில் தொங்கிக்
கொண்டிருக்கிறது. அந்த மாது இந்தியாவில் கதவு வைத்த வீடு வீடாகச்
சென்று அதற்கு சம்மதம் வாங்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரர்கள்.
தாங்கள் கெட்டுப்போனதல்லாமல் மற்றக் கட்சிகளையும்கெடுக்கும்
பொருட்டு சர்வகட்சி மகா நாடொன்று கூட்டி கமிஷனை பகிஷ்கரிக்க
வேண்டுமென்று தீர்மானம் செய்துவிட்டு மற்றொரு அரசியல் திட்டத்தைத்
தயாரித்து கமிஷன் கால்களில் வைத்துப் பூசை செய்யக் காத்துக் கொண்டி
ருக்கிறார்கள். பண்டித நேரு ஒரு திட்டம் தயாரித்திருக்கிறார். அதுவும்
கமிஷனுக்கு அனுப்பவே தயாரிக்கப்பட்டிருக்கிறதென்று நான் திட்டமாகக்
கூறுகிறேன். ஆகவே அவர்கள் ஒவ்வொருவரும், தலைவரும், தனித்
தனியாக திட்டங்களும், அபிப்பிராயங்களும் கொடுத்துக் கொண்டிருக்
கிறார்கள். இனி பார்ப்பனர் சபையொன்று ஒரு யாதாஸ்து தயாரித்து அனுப்பி
வருகின்றது. பார்ப்பனர்களெல்லாம் இவ்விதம் ரகசியமாக தங்களுடைய
குறைகளையும், அபிப்பிராயங்களையும் கூறிக்கொண்டு வருகையில்,
பார்ப்பனரல்லாதாராகிய நாம் ஏன் நமது குறைகளை சர்க்காரிடம் சொல்லிக்
கொள்ளக்கூடாதென்பது எனக்கு விளங்கவில்லை.
இனி மற்ற மாகாணங்
களெல்லாம் கமிஷனை பகிஷ்கரித்துவிட்டதென்றும், சென்னை மாகாணம்
மட்டும்தான் கமிஷனை பகிஷ்கரிக்க மறுக்கிறதென்றும் அதற்குப் பார்ப்பன
ரல்லாதார் தான் காரணமென்றும் பார்ப்பனர்கள் இப்போது பறைசாற்றி
வருகிறார்கள். நமது குறைகளை சர்க்காரிடத்தில் உள்ளபடி கூறுவதிலோ,
அரசியல் புரட்டுகளை எடுத்துக்காட்டுவதினாலோ நாம் தேசத் துரோகிகளாக
மாட்டோம். இதுவரை நாம் பார்ப்பனர்களிடம் இருந்து ஒத்துப்பாடியும்
அவர்கள் நம்மை லட்சியம் செய்தார்களா? இதிலிருந்து அவர்கள் நம்மை
ஏமாற்றுவதற்கே பகிஷ்காரக் கூச்சல் போடுகிறார்களென்பது தெரியவரும்.
நாம் இதுவரை ஏமாந்து வந்தது போதும். கோயமுத்தூர் மகாநாட்டில் கவர்னர்
மீது நம்பிக்கையில்லை என்ற ஒரு தீர்மானம் செய்யப்பட்டபோது இந்தப்
பார்ப்பனர்கள் கவர்னரிடம் ஓடிப்போய் இதுவரை ஜஸ்டிஸ் கட்சிக்
குடி அரசு - 1928 @)
140
காரர்களை நல்லவர்களென்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். பாருங்கள்,
இப்போது உங்களையே விரட்டவேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கின்
றார்கள்? என்று கூறினார்கள். இப்படிப்பட்டவர்களை நம்பலாமா? இதுவரை:
நாம் அவர்களுடைய பேச்சைக்கேட்டு ஏமாந்து வந்ததுபோதும். ஆகையால்
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் குறைகளை சர்க்காரிடம் சொல்லிக்
கொள்வதில் குற்றமில்லை. கடைசியாக நான் என்ன சொல்கிறேன் என்றால்,
பார்ப்பனரல்லாதார் அரசியல் விஷயத்தில் தனித்து நின்றால்தான் உண்மை
யான விடுதலைபெற முடியுமேயல்லாமல் பார்ப்பன ௬டன் கலந்தால் அவர்:
கள் நம்மை அரசாங்கத்திற்குப் பலிகொடுத்துக் கூலி பெற்றுக் கொள்வார்கள்.
குறிப்பு : 06.09.1928 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில்:
நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் பொதுக்கூட்டச் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 16.09.1928
141
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இனம் வயது விவாக விலக்கு மசேோஈதா
தேசீய வாதிகள் யோக்கியதை
மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும்
இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக
வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை
நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க
வேண்டுமென்பதாகவும் முயற்சி எடுத்தும் வருகின்றோம்.
இதைப்பற்றி பல சமூக மகாநாடுகளிலும், பல சீர்திருத்த மகாநாடு
களிலும் பேசி தீர்மானங்களும் செய்து வந்திருக்கின்றோம். ஆனால் அதை.
அனுசரித்து அது அமுலில் வரத் தக்க ஏற்பாடுகள் ஏதாவது செய்ய ஆரம்
பித்தால் உடனே அங்கு மதம் வந்து குறுக்கே விழுந்து அம்முயற்சிகளை
அழிப்பது வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றதும் நாம் அறிவோம்.இதன்
காரணமாகவே பெரிதும் நாம் மனித இயற்கைக்கு விரோதமான மதங்களும்
கண்மூடிக் கொள்கைகளும் மண்மூடிப் போக வேண்டுமென்று முயற்சித்து
வருகின்றோம். இம்முயற்சிக்கு யார் எதிரிடையாக இருந்தபோதிலும் நாம்
ஒருசிறிதும் லக்ஷியம் செய்யாமல் இடையூறான மதங்களையும் அதற்கு
ஆதாரமான சாமிகளையும் கூட ஒழித்தாக வேண்டும் என்றே சொல்லு
கின்றோம். சமீப காலத்தில் சென்னை சட்ட சபையில் இது விஷயமாய் சட்டம்
செய்வதைப் பற்றி வாதம் நடைபெற்ற சமயத்தில் பார்ப்பனரல்லாதார்.
ககஷியைச் சேர்ந்த மாஜி மந்திரி சர். ஏ:பி.பாத்ரோ அவர்கள் சற்று மாறுதலாய்
பேசியதற்காக அவரை, “பார்ப்பனரல்லாதார் ௧௯9 ஸ்தானத்தை ராஜிநாமா
கொடுத்துவிட்டு பார்ப்பனர் கடிக்கு போய்விட வேண்டுமென்றுகூட
எழுதியிருந்தோம்.
அவரை, “இனி பார்ப்பனரல்லாதார் க௯தியைச் சேர்ந்தவர்.
என்று சொல்வது பார்ப்பனல்லாதார் சமூகத்திற்கே அவமானம்” என்று கூட
எழுதியிருந்தது வாசகர்களுக்குத் தெரியும். இந்நிலையில் சென்ற வாரம்
இந்தியா சட்டசபையில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போது தமிழ் நாட்டு
பார்ப்பனர்கள் பெரிதும் இம்மசோதாவிற்கு விரோதமாய்ப் பேசியிருப்ப
தாகவும், பலர் தனி விண்ணப்பம் கொடுத்து இருப்பதாகவும் அதில் சில
மகமதிய அங்கத்தவர்களும் கையொப்பமிட்டிருப்பதாகவும் தெரிய
வருவதுடன் பல சங்கராச்சாரிகளும் சாஸ்திரிகளும் “ராமராஜ்யம்” நடத்தும்
குடி அரசு - 1928 @)
142
மகாராஜாக்களும் இம் மசோதாவுக்கு விரோதமாய் அரசப் பிரதிநிதியிடம்
தூது போனதாகவும் தெரியவருகின்றது.
இந்த வருணாச்சிரமக்காரரோடு சில மகமதியர்களும் சேர்ந்து
கொண்டதானது அச்சமூகத்திற்கே அவமானத்தை விளைவித்த காரிய
மென்பதோடு மனித சமூக உரிமைக்கே கேடு விளைவித்ததாகுமென்றே
கருதுகிறோம். அவர்களைப் பற்றிய மற்ற விஷயங்களையும்,
அதில் இவர்
பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து வாழவேண்டிய அவசியத்தில்
இருக்கிற விஷயங்களையும் வெளிப்படுத்தவும், அவர்களைக் கண்டிக்
கவும் ஆன காரியங்களை அச்சமூகத் தலைவர்களுக்கும் அச்சமூக
பத்திரிகைகளுக்குமே விட்டுவிட்டு நமது பிரதிநிதி என்னும் உரிமையின்
பேரால் நடந்து கொண்டவர்களைப் பற்றி சற்று விசாரிப்போம்.
இது விஷயமாய் இந்திய சட்டசபையில் நடந்த முழு விபரத்தையும்
எழுத நமக்கு போதிய இடமில்லாவிட்டாலும் அம் மசோதாவிற்கு
விரோதமாய்ப் பேசிய தமிழ்நாட்டுப் பிரதிநிதியும் இந்துமத வருணாசிரமப்
பிரதிநிதியும் ஆகிய திரு. எம்.கே.ஆச்சாரியார் அவர்களின் போக்கை சற்று
கவனிப்போம்.
திரு. ஆச்சாரியார் அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில்,
“பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு என்பது சாத்திய
மில்லை” என்றும், “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்து விடும்” என்றும்,
“குடும்ப வாழ்க்கை துக்கமயமாகி சதா ஆபத்திற்குள்ளாகி இருக்கும்”
என்றும் “புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்துவிடுவதால் பெண்கள்.
நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும்” என்றும் “பாலிய விவாகம்
இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது
அசாத்தியம்” என்றும் பேசி இருக்கின்றதாக தெரியவருகின்றது. இவைகள்.
(சு-மி, த - நா) பத்திரிகைகளில் காணப்படுகின்றதுடன் சுதேசமித்திரன்
நிரூபரும் திரு.ஆச்சாரியாரை ஆதரித்தும் புகழ்ந்தும் எழுதி இருக்கின்றார்.
பாலிய விவாகமில்லாவிட்டால் பெண்கள் கற்பு கெட்டுப் போகும்
என்று சொல்வதும் வாழ்க்கையில் துக்கம் ஏற்படும் என்று சொல்வதும்
எவ்வளவு மனந்துணிந்து சொன்ன அயோக்கியத்தனமான வார்த்தை
களாகும் என்பதை வாசகர்கள்தான் யோசித்துப்பார்க்கவேண்டும். இது
பார்ப்பனர்களுக்காக என்றோ அல்லது அய்யங்கார் கூட்டத்திற்காக என்றோ
திருவாளர் ஆச்சாரியார் பேசி இருப்பாரானால் நமக்கு அதைப்பற்றி
அவ்வளவு கவலை இல்லை. ஆனால் நம்மெல்லோருக்குமே பிரதிநிதி
என்கின்ற முறையில் பேசியிருப்பதால் நாம் அதைக் கண்டிக்காமல் இருக்க
முடியவில்லை. நம்மில் அனேகர்கள் இதுவரை பெண்களை சுமார் இருபது
143
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வயது வரை கூட வைத்திருந்து விவாகம் செய்து கொடுக்கின்றார்கள்
என்பதும், இப்போதுதான் வர வர பார்ப்பனீயத்திற்கு அடிமைப்பட்டு பார்ப்
பனர்களைப் பார்த்து காப்பியடித்து தாங்களும் உயர்ந்த ஜாதிக்காரர் என
மதிக்கப்படவேண்டும் என்கின்ற ஆசையில் பலர் சிறுபிராயத்திலேயே
கலியாணம் செய்து விடுகின்றார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. திரு.
ஆச்சாரியாரின் வாக்குமூலப்படிக்குப் பார்த்தால் பக்குவமான பின்னோ
பக்குவமாகி 2 வருஷம் 4 வருஷம் பொறுத்தோ விவாகம் செய்யப்பட்ட
பெண்கள் கற்பில்லாமல் விபசாரிகளான பிறகுதான் விவாகம் செய்து
கொடுக்கப்பட்டிருப்பதாக ஏற்படுகிறது. திரு. ஆச்சாரியார், ஒரு சமயம் தாம்
மற்றவர்களைப் பற்றி அப்படிச் சொல்லவில்லையென்றும் தம்முடைய
சமூகத்தைப் பற்றித்தான் தாம் சொன்னதாகச் சொல்வாரானால் தம் சமூகத்
துப் பெண்களும் பக்குவமடைந்து விட்டால் அவர்கள் கல்யாணமில்லாமல்
கற்புடனிருக்க முடியாதென்று கருதிச் சொன்னவராகவே நினைக்க வேண்டி
யிருக்கிறது. இதனால் அவர் எப்படியும் பெண்கள் சமூகத்தையே இழிவு
படுத்தியாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
திரு.ஆச்சாரியார் இப்படிச் சொல்ல நேர்ந்தது அந்தப் பார்ப்பனியத்
தன்மையே யொழிய வேறல்ல. ஏனெனில் பார்ப்பனியத் தன்மையான இந்து
மதம் என்பதில் பெண்கள் காவலில்லாமல் கற்புடனிருக்க முடியா
தென்றே சொல்லப்படுகிறது. உதாரணமாக இந்துக்கள் என்பவர்கள் கல்யாண
காலத்தில் கல்யாணப் பெண்களுக்கு கற்புக்கு உதாரணமாகக் காட்டி
உறுதிவாங்க வழங்கும் மகா பதிவிரதையென்று சொல்லப்படும் அருந்ததி
என்னும் “உத்தம ஸ்திரீயின் யோக்கியதையைப் பார்த்தால் மற்ற
பெண்களுடைய நிலைமை தானாகவே விளங்கும். அதாவது ஒரு சத்தியம்
சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் அருந்ததி சொல்வதாவது:-
“ஸ்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும்
வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாயிருக்க முடியுமாதலால் பெண்:
களை வெகு ஜாக்கிரதையாகக் காவல் காக்க வேண்டும்”.
என்பதாக தேவர்களிடத்தில் சொல்லி சத்தியத்தைக் காப்பாற்றினதாக
இந்துமதம்
- அதிலும் சைவர்களுக்கு ஆதாரமான மகாசிவபுராணம்
சொல்லுகிறது. இதற்கு ஆதாரமாக மற்றொரு இடத்திலும் அதாவது
திரெளபதையும் அருந்ததி சொன்னதைதான் சொல்லி சத்தியத்தை
நிரூபித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:-
“ஆண்கள் இல்லாதிருந்தாலொழிய பெண்கள் கற்புடையவர்களாக
இருக்கமுடியாது” என்பதாக பாரதத்தில் இதைப்பற்றிச் சொல்லும் போது
“வசிஷ்டர் நல்லற மனைவியை அணையாள்” அதாவது அருந்ததிக்
கொப்பானவள் சொன்னாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
குடி அரசு - 1928 @)
144
இந்தக் கொள்கைகளையுடைய இந்த இந்துமதப் பிரதிநிதியிடம்
அதிலும் வருணாசிரம தர்மியிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும். இதே.
யோக்கியர் தான் மூன்று வருஷத்திற்கு முன் திருச்சியில் கூடிய காங்கிரஸ்
கமிட்டி கூட்டத்தில் “ஒரு பார்ப்பனரல்லாத பையனுடன் ஒரு பார்ப்பனப்
பையன் ஒரு வேளை சாப்பிட்டால் ஒருமாதம் பட்டினியிருப்பேன்” என்று
சொன்னவர். இப்படிச் சொன்னபிறகுதான் செங்கல்பட்டு வடஆற்காடு
தென்ஆற்காடு ஜில்லாக்களின் பிரதிநிதியாக அச்சில்லாவாசிகள் அவரை:
இந்தியா சட்ட சபைக்கு அனுப்பினார்கள். இவருடைய தேர்தலுக்காகத்தான்
பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள், காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள்
தொண்டை கிழியப் பிரசாரம் செய்தார்கள்.
எனவே இதிலிருந்தே நம்நாட்டு ஓட்டர்களின் யோக்கியதையையும்
தேசியவாதிகளின் யோக்கியதையையும் ஒருவாறு தெரிந்துகொள்ளலாம்.
தவிர, இப்படிப்பட்ட ஆசாமிகளையும் இவர்களுக்கு ஆதாரமா
யுள்ள மதங்களையும் இவர்களை இந்திய சட்டசபைக்கனுப்பிய காங்கிர
ஸையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் யோக்கியர்கள்தான் மிஸ் மேயோ
வைக் குற்றஞ் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் என்பதை வாசகர்களே
தெரிந்து கொள்வார்களாக.
நிற்க, திரு. ஆச்சாரியார் சொன்ன மற்றொரு விஷயத்தைப் பற்றி
கவனிப்போம். அதாவது பால்ய விவாகம் செய்யாவிட்டால் குடும்ப
வாழ்க்கையில் துக்கம் ஏற்படுமென்கிறார்.
என்ன துக்கமேற்படுமென்பது நமக்கு விளங்கவில்லை. அதைப்
பற்றி விரிக்க நமக்கு வெட்கமாயிருக்கிறது. அன்றியும் புருஷர்கள்
சிறைக்குப் போய்விட்டால் பெண்களின் நடத்தை கேவலமாய் விடு
மென்றும் சொல்லுகிறார். இவை எவ்வளவு தூரம் பெண்களை இழிவு படுத்து
வதாகிறது. இந்து மதமும், வேதமும், புராணமும், வைதீகமும், வருணா
சிரமும் பெண்களை அடிமைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும்
அஸ்திவாரமாகக் கொண்டதாதலால் இம்மாதிரியான வார்த்தை நமது இந்திய
சட்டசபைப் பிரதிநிதிகளிடத்திலிருந்து வருவது ஒரு அதிசயமல்ல.
உதாரணமாக கடவுளுடைய அவதாரமாக சொல்லப்படும் ராமனே,
கடவுள் பெண் சாதியின் அவதாரமென்று சொல்லப்படும் சீதையின் கற்பில்
சந்தேகப்பட்டு அவள் நெருப்பில் பொசுக்கப்படவும் பூமியில் புதைக்கப்
படவும் செய்ததிலிருந்தும், சீதையும் ஒரு சமயத்தில் புருஷனை விட்டுப்
பிரிந்தபோது, “இதோ பார் நான் இப்பொழுதே கர்ப்பமாயிருக்கிறேன்”:
என்றும், “இது புருஷனிடத்திலேயே உண்டான கர்ப்பம்” என்றும் வயிற்றைத்
திறந்து காட்டியதோடு, தான் கொஞ்சகாலம் புருஷனைவிட்டு நீங்கி இருக்க
145
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
நேருவதாலேயே தான் விபசாரத்தனம் செய்து கர்ப்பந்தரித்து விட்டதாக தன்
புருஷன் கருதக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருப்பதிலிருந்தும்
(வால்மீகி ராமாயணம்) திரு. ஆச்சாரியார் மற்ற பெண்கள் புருஷனை விட்டு
நீங்கியிருந்தால் ஒழுக்கம் கெட்டுவிடுவார்கள் என்று சொல்வதில் ஆச்சரிய
மொன்றுமில்லை.
ஆனால் இவைகள் மனிதத்தன்மைக்கு ஏற்றதான வார்த்தை
களாகுமா என்றும் நமது பெண் சகோதரிகளுக்கு நியாயம் செய்ததாகுமா
என்றும் கேட்கின்றோம். இதைக் கேட்ட அன்னிய நாட்டார்கள் என்ன
நினைப்பார்கள். எனவே நமது மக்களின் முன்னேற்றத்திற்கும் மனிதத்
தன்மைக்கும் ஏற்றதான சீர்திருத்தங்கள் செய்யப் புறப்படும் போதெல்லாம்
இப்படி ஒரு கூட்டத்தார் இருந்து கொண்டு நம்மை இழிவுபடுத்தி முட்டுக்
கட்டை போட்டுக் கொண்டு வருவதை இனி எத்தனை காலத்திற்குத்தான் நாம்
பொறுத்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. இவை
இப்படியிருக்க இவ்விஷயங்களில் ஒரு சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளா
மல் தேசத்தின் பேராலும், சாமியின் பேராலும், சமயத்தின் பேராலும்,
சமயாச்சாரியாரின் பேராலும், புராணங்களின் பேராலும் உலகத்திற்கு நன்மை:
யைச் செய்கிறவர்களைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு மக்களை
ஏமாற்றி வயிறு வளர்த்து வருகிறவர்களைப் பார்க்கும்போது திரு, ஆச்சாரி
யாரை விட இக் கூட்டத்தார்களே அதிகமான அயோக்கியர்களும் கொடு
மைக்காரர்களும் மனித வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு எதிரிகளுமாவார்
கள் என்று தோன்றுகிறது.
ஆதலால் பொது மக்கள் இதிலிருந்தாவது அறிவு பெற்று தேசீய
மென்றும், சைமன் பகிஷ்காரமென்றும், சமயப் பாதுகாப்பென்றும், தேசீயத்
திட்டமென்றும், முழு சுதந்திரமென்றும் சொல்லிக் கொண்டு திரியும் சுய நல
வீணர்களின் வலையில் சிக்கி ஏமாந்து போகாமல் உண்மையான
சீர்
திருத்தத்திற்கும் சுயமரியாதைக்கும் ஏற்ற கொள்கைகளில் ஈடுபட்டு அரசிய
லையும் சமூக இயலையும் கைப்பற்றி அதை தக்க வழியில் திருப்ப
வேண்டியது அவசியமென்று மற்றுமொரு முறை தெரிவித்துக் கொள்ளு
கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.09.1928
குடி அரசு - 1928 @)
146
“புண்ணிய ஸ்கனங்கள்”
-சித்திரபுத்திரன்
“புண்ணிய ஸ்தலம்” என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள்
என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி
முந்தின வியாசத்தின் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப்
பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரிபுரம் என்னும்
“புண்ணிய ஸ்தலத்தின்” யோக்கியதையையும் விளக்கி இருக்கிறது.
பண்டரிபுரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்தலம். அந்த
ஸ்தல புராணத்தில் ஒரு சமயம் அந்த முக்கியத்துவத்திற்கு ஏற்ற காரணம்
ஏதாவது குறிப்பிட்டிருக்கக்கூடுமோ என்பதாக சந்தேகப்படகூடுமானாலும்
வைணவ பக்தர்களின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்லும் பக்தவிஜயம்
என்னும் புஸ்தகத்தின் சுருக்கமாகிய பக்தலீலாமிர்தம் என்னும் புத்தகமானது
சைவர்களுக்கு எப்படி சைவ பக்தர்களின் சரித்திரத்தைச் சொல்லக் கூடிய
தான சைவபுராணமாகிய பெரிய புராணமோ, அதுபோல்
- ஏன்? ஒரு
விதத்தில் அதைவிட முக்கியமானதென்று கூட சொல்லலாம்.எப்படி எனில்,
பெரிய புராணம் என்பது சுந்தரமூர்த்திசுவாமி என்கிற ஒருவர் பாடிய ஒரு
பாட்டிலிருந்த பக்தர்களின் பெயரைத் தெரிந்து அதற்கு ஆதாரமாக
நம்பியாண்டார் நம்பி என்பவர் பாடிய ஒரு சில - அதாவது ஒரு நூறு
பாட்டைக் கொண்டு நாலாயிரத்துச் சில்லரைப் பாட்டுகளாக்கி அவற்றிற்கு
வேண்டிய சங்கதிகளை தமது சொந்த அபிப்பிராயமாக நுழைத்து பாடிய
புஸ்தகமாகும். அதுவும் சமணர்களுக்கு விரோதமாய் அவர்கள் மீதும்
அவர்களது குற்றமற்ற நூல்களின்மீதும் உள்ள துவேஷத்தாலும் தமது சமய
வெறியாலும் கற்பிக்கப்பட்டது என்று கூடச் சொல்ல இடமுள்ளதாகிய நூல்.
பக்தவிஜயமோ அப்படிக்கில்லாமல் ஏதோ ஒரு முனிவர் ஏதோ ஒரு
ஆசாமிக்கு எல்லா சங்கதிகளும் சொன்னதாகவும் சிவன் பார்வதிக்குச்
சொன்னதாகவும் எழுதிய புஸ்தகம்
. ஆனதால் சேக்கிழார் என்கின்ற ஒரு
மனிதன் சொன்னதை விட சிவன் முனிவர் என்கின்றவர்கள் சொன்னது
என்பது உயர்ந்தது என்பதில் இவற்றை நம்பும் பக்தர்களுக்கு சிறிதும்
சந்தேகமிருக்க நியாயமில்லை.
147
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
எனவே இப்பேர்ப்பட்ட புஸ்தகத்தில் உள்ளதையேதான் எடுத்து
எழுதி இருக்கிறதே ஒழிய மற்றபடி நமதபிப்பிராயம்
என்பதல்ல. அதாவது:-
தேவர்களுக்கு அரசனான தேவேந்திரன் பெண்ஜாதியான இந்திராணி
திருமால் என்கின்ற சாமியின்பேரில் காதல் கொண்டதாகவும், சாமியும்
அதற்கு சம்மதித்து பூலோகத்திற்கு போய் அங்கு 60000 வருடம் தவம்
செய்யச் சொன்னதாகவும், அதற்குப் பிறகு சாமி கிருஷ்ணனாக அவதரித்
ததாகவும், இந்திராணியும் ராதையாகப் பிறந்ததாகவும், பிறகு இருவரும்
கூடினதாகவும், இதைக்கண்ட கிருஷ்ணனின் சொந்தப் பெண் ஜாதியாகிய
ருக்குமணி கோபங்கொண்டதாகவும் அதன் நிமித்தம் ராதை கிருஷ்ணனை
தனக்கே புருஷனாக்கிக் கொள்ள காட்டிற்கு தவத்திற்குப் போனதாகவும்,
இந்த சமயத்தில் கிருஷ்ணன் ராதையை பிரிய நேர்ந்ததால் துறவி வேஷம்
பூண்டு காடு காடாய் திரிந்து ஏதோ ஒரு காட்டில் ராதையைத் தவக்கோலத்தில்
கண்டு பிடித்ததாகவும், ராதை கிருஷ்ணனைப் பார்த்து, “நீ ஒரு வஞ்சகன்,
என் முன் நில்லாதே” என்று கோபித்ததாகவும், கிருஷ்ணன் மதிமயங்கி
மூக்கில் கைவைத்துக் கொண்டு 28 துவாபரயுக காலமாய் நின்று கொண்டிருக்.
கின்றதாகவும், அந்தக் காக்ஷியே பண்டரிநாதன் என்றும், மற்றும் இதுபோல
சில ஆபாசக் கதைகளும் எழுதப்பட்டு பண்டரிபுரத்திற்கு ஆதாரமாக
சொல்லப்படுகிறது.
எனவே, இம் மாதிரி ஆபாசமும் புளுகும் கொண்டதான
பண்டரிபுரத்தை ஒரு பெரிய புண்ணியஸ்தலமாகக் கருதி மக்கள் ஏராளமாக
பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு யாத்திரை போவதுடன் பட்டை
பட்டையாய் நாமமும் போட்டுக் கொண்டு, “பண்டரிநாதா விட்டல்லே!
பாண்டுரங்கா விட்டல்லே” என்று கூப்பாடு போட்டுக் கொண்டு குதித்துக்
கொண்டு போவதையும் கருதினால் எவ்வளவு பைத்தியக் காரத்தனமாகவும்
கஷ்டமாகவும் இருக்கும் என்பது சுலபத்தில் வெளிப்படுத்தக் கூடியதா
யில்லை என்பது பற்றியும் முன்னமேயே எழுதப்பட்டி ருக்கின்றது. ஜகநாதம்
என்பதைப் பற்றி சிறிது ஆராயலாம்.
ஜகநாதம்
ஜகநாதம் என்பது இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களி
லெல்லாம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுவது,. இந்துக்கள்
என்போர்களில் தென்னாட்டில் உள்ள சைவர்களில் யாரோ ஒரு சிலரால்
மதத்துவேஷம் காரணமாக ஜகநாதம் ஒரு சமயம் அலட்சியமாகக் கருதப்
பட்டாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலோரான இந்துக்கள் என்பவர்கள்
எல்லோராலுமே முக்கியஸ்தலமாகக் கருதப்படுவது. அந்த ஸ்தலத்தின்
முக்கியத்துவத்திற்கு உதாரணம் என்னவென்றால், அந்த ஜகநாதம் என்கின்ற
ஊரின் எல்லைக்குள் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லு
வார்கள். அதற்கு உதாரணமாக அந்த கோவில் பூசை பண்ணுகின்றவர்கள்
அந்தப் பக்கத்திய நாவிதர்கள். அவர்கள் குளத்தருகில் அடைப்பத்துடன்
குடி அரசு - 1928 @)
148
நின்று கொண்டு க்ஷவரம் செய்வார்கள். பிறகு கோவிலில் பூசாரிகளாகவும்
இருப்பார்கள். அந்த கோவிலில் பூசை செய்யும் உரிமையே அந்த ஊரி
லுள்ள நாவித வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்டு என்கின்றார்கள்.
அங்கு சுவாமிக்கு முன்னால் சாப்பாட்டை மலைபோல் குவித்து ஆராதனை
செய்வார்கள். அந்தச் சாதத்தைப் பூசாரிகள் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டு
வெளியில் வந்து விற்பார்கள்.யாத்திரிரைக்காரர்கள் யாராயிருந்தாலும் அதை
வாங்கிச் சாப்பிடவேண்டும். மற்றபடி கடையிலும் சாதத்தை சட்டியில் வைத்து
விற்பார்கள். ஜாதி வித்தியாசம் என்பதில்லாமல் யாரும் வாங்கிச் சாப்பிடு
வார்கள். தவிர அந்த ஸ்தல எல்லைக்குள் எச்சில் வித்தியாசம் பார்க்கக்
கூடாது என்பார்கள். இலையில் உள்ள சாப்பிட்ட மீதியை எடுத்து திரும்பவும்
சட்டிக்குள்ளேயே போட்டுக் கொள்ளுவார்கள். கடைகளில் விற்பனைக்காக
வைத்திருக்கும் சாதச் சட்டியில் யாரும் கைவிட்டு சாதத்தை எடுத்து வாயில்
போட்டுப் பார்த்து மீதியை சட்டியிலேயே போட்டுவிடலாம். அதையாரும்
ஆட்சேபிக்கமாட்டார்கள்.
ஜெகநாதத்திலுள்ள அந்த ஜெகநாதர்கோவிலுக்குள் யாரும்
போகலாம். சாமியைத் தொடலாம், சாமியைச் சுற்றலாம், காலைத் தொட்டுக்
கும்பிடலாம். இது மாத்திரமில்லாமல் அந்த எல்லைக்குள் யாரும் திதி, விரதம்
தர்ப்பணம் முதலிய அனுஷ்டானங்கள் ஒன்றும் செய்யக்கூடா
தாம். செய்தால் பாவமாம். அன்றியும் அங்குள்ள சாமிகள் கிருஷ்ணன்,
பலராமன், சுபத்திரை ஆகிய மூவர்கள். அதாவது மற்ற இடங்களைப்போல்
சாமி புருஷன் பெண் ஜாதியுடன் இல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை
ஆகிய மூன்று பேர்களும் தங்கையாகிய சுபத்திரையை நடுவில் வைத்து
அண்ணன்மார் இருவர்களும் இருபக்கத்தில் நிற்கின்றார்கள். இதுவும்
மரக்கட்டையில் அரைகுறையாய் செய்த உருவங்கள்தான் விக்கிரகங்கள்.
இந்த ஊரைப் பற்றிச் சொல்லும்போது “சர்வம் ஜகநாதம்” என்று
சொல்லுவது ஒரு வழக்கம். அதாவது எந்த விதமான வித்தியாசமும்,
அதாவது ஜாதி, மதம், எச்சில், விரதம்முறை முதலிய வித்தியாசம் அந்த
எல்லைக்குள் இல்லை என்பதை காட்டுவதற்காகச் சொல்லுவது. இதற்கு
ஆதாரமாக இரண்டுவிதமான கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒன்று, இப்படி
விஷ்ணு என்னும் முழுமுதற் கடவுளின் அவதாரமாகிய கிருஷ்ணன்
என்னும் கடவுள் இறந்த பிறகு அந்தக் கடவுளின் பிணத்தை துவாரகைச்
சுடுகாட்டில் வைத்து தகனம் செய்து அது எரிந்து கொண்டிருக்
கையில் திடீரென்று சமுத்திரம் பொங்கியதால் துவாரகை முழுவதும் தண்ணி
ருக்குள் ஆழ்ந்துவிட்டபோது இந்த கடவுளின் பிணமும் எரிந்து கொண்டி
ருந்த சுடுகாடும் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டதால் அரைகுறையாய் வெந்த
பிணக்கட்டையானது தண்ணீரில் மிதந்து கரைஓரமாய் ஒதுங்கியதாகவும்,
அந்த ஊருக்கு ஜகநாதம் என்று சொல்லப் பட்டதாகவும், அந்த ஊரார் அந்தக்
குறைபிணத்தை எடுத்து அதன் சக்தியை ஒரு மரக்கட்டையில் ஏற்றி
149
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அம்மரக்கட்டையில் இருந்து குறை பிணம் போலவே ஒரு உருவம் செய்து
அதை வைத்து பூசித்து வருவதாகவும் அந்த ஸ்தலத்தின் சரித்திரம்
சொல்லுகின்றது.
மற்றொன்று, கிருஷ்ண பகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய
கோபிகளுடன் கூடி குலாவி வருவதை கிருஷ்ண பகவானின் தங்கையாகிய
சுபத்திரை பார்த்து பொறாமைப்பட்டு ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் சென்று “ஓ
அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும் பெருமை உள்ளவனாகவும்
இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள்.
எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள்.ஆனால் நானோ உனக்கு
தங்கையாக பிறந்து விட்ட காரணத்தினால் அந்த சுகபோகத்தை அடைய
யோக்கியதை இல்லாதவளாய்ப் போய் விட்டேனே” என்று துக்கப்பட்ட
தாகவும், கிருஷ்ணபகவான் பார்த்து, “உலகத்திலேயே மிகவும் புண்ணிய
பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது; அங்கு எந்த
விதமான வித்தியாசமும் கிடையாது; எந்த விதமான செய்கைக்கும் பாவம்
கிடையாது. ஆதலால் அந்த ஜெகநாதத்திற்குப் போய் எல்லா விதமான
சுகங்களையும் அனுபவிக்கலாம்” என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து
கிருஷ்ணன் சுபத்திரை பலராமர் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று
சேர்ந்திருப்பதாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமை
யைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு.
எனவே இந்தக் கதையும் பொறுத்தமானதாயிருக்கலாம் என்கின்ற
மாதிரியில்தான் அங்கு மற்ற விஷயங்களும் இருக்கின்றன.அதாவது தீட்டு
இல்லை; ஜாதி வித்தியாசமில்லை; விரதாதி அனுஷ்டானம் இல்லை; எச்சில்
வித்தியாசமில்லை என்பது போன்ற பல விஷயங்கள் இருப்பதுடன் அண்
ணன் மாரும் தங்கையும் ஒன்றாய் இருந்தாலும் இருக்கலாமாம். அன்றியும்
அந்த ஸ்தலத்திற்கு அதிகமான யோக்கியதை கொடுக்கவேண்டும். என்கின்ற
எண்ணத்தின் பேரில் இப்படி ஒரு கற்பனை செய்து இருந்தாலும் இருக்கலாம்.
சாதாரணமாக சைவ சமயத்திலும் ஒரு ஸ்தலத்தையோ தீர்த்தத் தையோ ஒரு
சாமியையோ பெருமைப் படுத்துவதில் இது போன்ற அல்லது இந்த தத்துவம்
கொண்ட கதைகள் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். அதாவது
திருவிளையாடல் புராணத்தில் ஒருவன் தன் தாயைப் புணர்ந்த துடன்
தகப்பன் கண்டு கோபித்ததற்கு தகப்பனையும் கொன்றுவிட்ட பாவத் தை
சிவன் போக்கியிருப்பதாகவும் அந்த ஸ்தலத்திற்கும் தீர்த்தத்திற்கும் அந்த
கடவுளுக்கும் இன்னமும் அந்த சக்திகள் இருப்பதாகவும் கருதும்படி
சொல்லப்படுகிறது. ஆதலால் இப்படிப்பட்ட கதைகள் கட்டுவது ஒரு
அதிசயமல்ல. எனவே இந்தக் கதை எப்படி இருந்தாலும் முதல் கதையைப்
பற்றி யோசிப்போம்.
கடவுள் அவதாரமாகிய கிருஷ்ண பகவான் எவ்வளவோ
குடி அரசு - 1928 @)
150
அற்புதங்களைச் செய்தவர். கடவுளான அவர் செத்துபோனார் என்பதும்,
அவர் பிணம் கொளுத்தப்பட்டது என்பதும், நெருப்பில் வெந்து
கொண்டிருக்கும் போது ஜலப்பிரளய மேற்பட்டு அந்தப் பிணம் சரியாய்
வேகாமல் தண்ணீரில் மிதந்துகொண்டு வந்து ஜெகநாதத்தைச் சேர்ந்த
கடற்கரையில் ஒதுங்கியது என்பதும் ஆகிய விஷயங்களை யோசித்துப்
பார்த்தால் கிருஷ்ணனிடத்தில் கடவுள் தன்மை இருந்திருக்கும் என்று நம்ப
இடமுண்டா? நம்புவதானாலும் செத்த பிறகு அந்தப் பிணத்திற்கு அதுவும்
நெருப்பில் கருக்கப்பட்ட அரைகுறைப் பிணத்திற்கு ஏதாவது சக்தி
இருந்திருக்குமா? அந்த சக்தியை மரக்கட்டையில் ஏற்றமுடியுமா? அந்த
மரக்கட்டையும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்ற போதெல்லாம் அந்த சக்தி
மாறிமாறி அதில் வருமா?
தவிர மற்றும் ஒரு அதிசயம் சொல்லுகிறார்கள். அதாவது கோவிலில்
இருக்கும் மரக்கட்டைக்கு சக்தி குறைந்து போனால் அந்த சமயம் அதாவது
10 அல்லது 20 வருஷத்திற்கு ஒருமுறை மறுபடியும் சமுத்திரத்தில் ஒரு
கட்டை முன்பு பிணம் மிதந்து வந்தது போல் மிதந்து வருமாம். அதை எடுத்து
மறுபடியும் விக்கிரகம் செய்து வைத்து விடுவதாம். இதன் யோக்கியதைகளை
வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்கவேண்டும்.
முன்பு வந்த குறைப்பிணம் ஜலப்பிரளயத்தால் வந்தது என்று
சொல்லப்படுகின்றது. அதுபோல் இப்போது வந்துகொண்டிருக்கும்
மரக்கட்டைக்கும் ஏதாவது ஜலப்பிரளயம் கற்பிக்கப்படுகிறதா? எனவே
புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் சிறந்த புண்ணியஸ்தலமான ஜகநாதத்தின்
நிலையை அந்த ஸ்தல சரித்திரப்படியே யோசித்துப்பாருங்கள்.
இந்த லக்ஷணத்தில் அங்கு ஒரு தீர்த்த மகிமையும் சொல்லப்படுகிறது.
அதைப்பற்றி பின்னால் ஆராய்வோம்.
இவ்வளவையும் ஒப்புக்கொண்டு அந்த ஸ்தலத்திற்கு யாத்திரை
போகின்றவர்களுக்கு ஏதாவது விசேஷஞானம் ஏற்படுகிறதா? அல்லது
அந்த ஸ்தல சரித்திரத்தின் யோக்கியமான கற்பனையையாவது மதித்து
ஏதாவது ஒழுக்கத்தைப் பெறுகின்றார்களா? ஒன்றுமேயில்லாமல் ரயில்
சார்ஜு செலவும், பூசாரி, பார்ப்பான் முதலியவர்களுக்கு செலவும் செய்த
தல்லாமல் வேறு பலன் என்ன என்பதுதான் இது எழுதியதின் கருத்து.
குடி அரசு - கட்டுரை - 30.09.1928.
151
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
சமயம் என்பதைப் பற்றி இவ்வாரம் ஒரு நீண்ட வியாசம் எழுத
வேண்டிய அவா ஏற்பட்டதின் காரணம் என்னவென்பதை முதலில்
குறிப்பிட்டுவிட்டு பின்னால் சமயத்தைப்பற்றி எழுதுவோம். இதுசமயம்
சமயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து
பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையை தங்களுக்கு
அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டு
பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள் மூலமாகவும் விஷமப் பிரசாரம்
செய்து வருவதோடு சமயத்திற்குத் தகுந்த விதமாய் பேசிக் கொண்டும்
யோக்கியப் பொறுப்பற்ற முறையில் நமது முயற்சிக்கு இடையூறு
விளைவிப்பதெனவே முடிவு கட்டிக் கொண்டுமிருக்கின்றார்கள்.
இக்கூட்டத்தார் யாவர் என சிலராவது அறிய விரும்பலாம். இக்கூட்
டத்தவருள் பெரும்பாலானவர் சமயத்திற்கென ஒரு வினாடி நேரமோ ஒரு
அம்மன் காசோ செலவழிக்காத “தியாகிகளும்”” அதுமாத்திரமல்லாமல்
தங்களது வயிற்றுப் பிழைப்புக்கும் பணம் சம்பாதிக்கும் தொழிலுக்கும் இந்த
விஷமப் பிரசாரத் தொழிலைத் தவிர வேறு ஒரு மார்க்கமும் அடியோடு
இல்லாதவர்களும் என்றே சொல்லலாம். இக்கூட்டத்தார், கோர்ட்டு
விவகாரங்களில் நீதியை எடுத்துச் சொல்லுவதற்கு என்று ஏற்பட்டிருக்கும்
நியாயவாதிகள் எனப்படும் வக்கீல்களின் நாணயம் எவ்வளவோ, அதை விட
மோசமான யோக்கியதையுடையவர்கள் என்றே சொல்லவேண்டும்.
அதாவது வக்கீல்களுக்கு அவர்கள் எடுத்துச்சொல்லும் வாதத்தில் எவ்வளவு
மனச்சாக்ஷி உண்டோ, அதைவிட மோசமான மனசாக்ஷியும் வக்கீல்களுக்கு
அந்த வாதங்களில் எவ்வளவு கவலை (தங்களது வரும்படியைப்
பொருத்தவரையில் மாத்திரம்! உண்டோ அதைவிட பிரசங்கம் நடக்க
வேண்டிய அளவையும் பத்திரிகை செலவாகும் அளவையும் புஸ்தகம்
விற்கும் அளவையும் பொருத்தவரையில் மாத்திரம் கவலை உடையவர்கள்
என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் நாம் காட்டித் தெரிந்து கொள்ள
வேண்டிய அளவில் இல்லை என்பதே நமதபிப்பிராயம். ஆனாலும் சில
பத்திரிக்கைக்காரர்களையும், சில பண்டிதர்களையும் சில புஸ்தகக் கடைக்
காரர்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டால் இந்த யோக்கியதை தானாகவே
விளங்கிவிடும்.
குடி அரசு - 1928 @)
152
அதாவது, எப்படி தேசீயத்தைப் பற்றி தேசத்தின் பேரால் வாழ்வு
நடத்துகிறவர்களும் வயிறு வளர்க்கிறவர்களும் தங்களைத் தவிர மற்றவர்.
களுடைய அபிப்பிராயத்தை பலனற்றது என்றும், தேசத் துரோகமான
தென்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்களோ அது
போலவே இந்த சமயத்தின் பேரால் வாழ்வு நடத்துகிறவர்களும் வயிறு
வளர்க்கின்றவர்களும் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர மற்ற
அபிப்பிராயங்கள் சரியானதல்லவென்றும், மத விரோதமானதென்றும்
நாஸ்திகமென்றும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
அப்படி இருப்பதிலும் பொதுவாக மக்கள் ஏமாறும் படி பேசுவதும்
எழுதுவதுமாயிருக்கின்றார்களே ஒழிய விவகாரத்தை எதிர்ப்பதில் தக்க சமா
தானம் சொல்லி தங்களது கக்ஷியை நிலைநிறுத்த வலியுறுத்துகிறவர்
களாகவும் இல்லை. உதாரணமாக இக்கூட்டத்தவர்களின் மனப்
பான்மையையும் வாழ்க்கையையும் அறிந்தவர்களுக்கு, இவர்களது வார்த்
தைக்கும் எழுத்துக்கும், மனப்பான்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது
சம்பந்தம் உண்டா என்பதை ஒருவாறு அறியலாம். அது எப்படியோ
இருந்துபோகட்டும் என்றாலும் இந்தச் சைவமும் வைணவமும் சமயாச்சாரி
களும் மக்களுக்கு எதற்காக வேண்டும் என்பதைப்பற்றி சற்று யோசித்துப்
பார்க்கும்படி பொதுமக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். தேசமோ
மக்களோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அறிவும் சயன்ஸ் என்று
சொல்லும்படியான விஞ்ஞான தத்துவமும் ஒழுக்கமும் முன்னேற்ற
மடைந்தாக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் முதலில் ஞாபகப்
படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் இவைகளில் முன்னேற்றமடைந்த
தேசமும் மக்களுந்தான் இதுவரையில் உண்மையில் முன்னேறி வந்திருக்
கின்றார்கள்; வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை வாசகர்கள் நாம்
சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தெரிய வேண்டிய அவசிய
மிருக்குமானால் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளை சற்று ஞாபகப் படுத்திப்
பார்த்தால் தானாக விளங்கும். எனவே மேல்கண்ட அறிவு ஆற்றல் ஒழுக்கம்
ஆகியவைகளுக்கு ஏற்றதாக நமது மதமோ மதாச்சாரியார்களோ அல்லது
சாமிகளோ இருக்கின்றனவா என்பதைத் தனியே இருந்து பாரபக்ஷம்
விருப்புவெறுப்பு இல்லாமல் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
நமது மதமென்பதோ வேதமென்பதோ சாமிகள் என்பதோ சமீப
காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்வதற்கில்லை. யுகம், சதுர்யுகம், மகாயுகம்,
கற்பம் என்பவைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு சரித்திர ஆராய்ச்சிப்படி
பார்த்தாலும் 5000, 6000 வருஷ காலத்திற்கு குறையாதது என்று சொல்ல
இடமிருக்கின்ற தென்பதில் ஆராய்ச்சிக்காரர்களுக்குள் அபிப்பிராய
பேதமில்லை. உலகத்தில் தோன்றி இப்போது ஜீவனுடனிருக்கும் மற்ற
சமயங்கள் எல்லாம் அதைவிடக் குறைந்த காலத்தைக் கொண்டதாகவே
இருக்கின்றது
153
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அப்படி இருக்க pid தேசம் மாத்திரம் இன்னிலையில் இருக்கக் காரண
மென்ன என்பதற்கு மேல் கண்ட சமயவாதிகள் என்ன பதில் சொல்
கின்றார்கள்?
இதற்காக அரசாங்கத்தைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லி
அரசாங்கத்தை வைது விட்டால் அதுவே போதுமான சமாதானமாகுமா என்று
கேட்கின்றோம்.
மற்றும் சமயத்தையே ஆதாரமாகக் கொண்ட ராமன், கிருஷ்ணன்
போன்ற விஷ்ணு அவதார அரசர்களும், மீனாக்ஷி, சொக்கலிங்கர் போன்ற
சிவ அவதார அரசர்களும், மற்றும் சேரன், சோழன், பாண்டியன் போன்ற
தெய்வத் தன்மை தாண்டவமாடிய அரசர்களும் ஆண்ட காலத்தைவிட
இப்போதைய அரசாங்கமோ அல்லது ஜனப்பிரதிநிதி அரசாங்கமோ எந்த
விதத்தில் மோசமானது என்பதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சிறு உதாரணம்
சொல்லக்கூடுமோ என்று கேட்கின்றோம்.
எனவே ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்களின் நிலை
குலைந்து வருவதையும் தேசம் அடிமைப்பட்டு வருவதையும் தொடர்ச்சி
யாக கேட்டும் பார்த்தும் வந்தும் கொஞ்சமாவது அறிவு என்பதை உபயோ
கப்படுத்தி இதன் காரணங்கள் என்ன என்பதை கவனிக்காமலும் அக்கம்
பக்கம் எப்படி இருக்கின்றது என்பதை ஒரு சிறிதும் திரும்பிப் பாரா மலும்
மக்களை பாழும் சமயம், சமயாச்சாரி, சாமி என்பதையே குரங்குப் பிடியாய்
பிடித்துக் கொண்டே நாசமாய்ப் போகும்படி செய்வதால் யாருக்கு என்ன
நன்மை விளையக்கூடும் என்று கேட்கின்றோம்.
சாமியின் மூலமும் சமயத்தின் மூலமும் சமயாச்சாரிகளின் நடத்தை
யின் மூலமும் மக்களுக்கு ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்பிக்கலாம்
என்று யாராவது சொல்ல வருவார்களேயானால் அவற்றையெல்லாம் விட்டு
விட்டு நேரே ஒழுக்கத்தையும் வாழ்க்கை நலன்களையும் கற்பிப்பதால் என்ன
நஷ்டம் விளைந்து விடக்கூடும் என்று கேட்கின்றோம்.
இதுகால பரியந்தம் அதாவது குறைந்தது 5000 ஹு காலம் இந்த
வேலையைச் செய்து பார்த்தாய் விட்டதல்லவா? இனி ஏன் புதுமுறை
கண்டுபிடிக்கக் கூடாது? சாதாரணமாக வைத்திய சிகிச்சையில், வியாதிக்கு
தக்க மருந்தை இரைப்பைக்கு அனுப்பி அங்கு அது ஜீரணக்கருவி மூலம்
ஜீரணிக்கச் செய்து சக்கையை மலத்தின்மூலம் கழித்து, சத்தை இரத்தத்தோடு
கலரும்படி செய்து வியாதியைக் குணமாக்க முயற்சிப்பதைவிட மருந்தின்
உண்மையான சத்தை எடுத்து நேரே ரத்தத்தில் சேர்த்து வேலை செய்யும்படி
(இன்ஜெக்ஷன்! செய்வது போல ஒழுக்கங்களையே கற்பிப்பதில் என்ன
நஷ்டம் என்று கேட்கின்றோம். ஒரு சமயம் அந்த தொழில் பழகாத சில
குடி அரசு - 1928 @)
154
வைத்தியர்களுக்கு வேறு தொழில் கற்றுக் கொள்ளும் வரையில் வயிற்றுப்
பிழைப்புக்கு கஷ்டமாயிருக்கலாம். இதற்காக மக்கள் வியாதியோடு
கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதா என்பதை யோசித்துப் பார்த்தால் சிலரது
வயிற்றுப்பிழைப்புக் கஷ்டம் அவ்வளவு பெரிதாகத் தோன்றாது. நிற்க,
பொது ஜனங்களில் சிலர் இக் கூட்டத்தினர்களின் யோக்கிய
தையையும் உண்மையையும் அறியாமல், நாம் ஏதோ சற்று அளவுக்கு மீறி
சற்று வேகமாய்ப் போவதாக கருதுகிறார்கள் போல் தெரியவருகின்றது.
ஆனால் அவர்கள் அப்படி கருதுவதற்கு ஆதாரமோ நியாயமோ ஒன்றும்
எடுத்துக்காட்டாமல் “இருந்தாலும் இவ்வளவு எடினமாக போகலாமா”
என்கின்ற ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்
தான் நாமும் அவற்றை ஒரு சிறிதும் லக்ஷியம் செய்வதில்லை. ஏனெனில்
நேற்றுவரை அமிதவாதிகளாக இருந்தவர்கள் அந்தக் கொள்கையுடனேயே
நம்மால் மிதவாதிகள் என்று சொல்லப்படுபவர்களாகி விட்டார்கள். காரணம்
என்னவென்றால் நாம் அவர்களைவிட சற்று வேகமாய்ப் போவதாக
ஜனங்கள் நினைப்பதுதான்.
இதே முறையில் வெகு சீக்கிரத்தில் நாமும் மிதவாதிகள் என்று
கருதப்படக்கூடியவர்களாக ஆனாலும் ஆகலாம் என்பதே நமது முடிவு.
நம்மைவிட வேகமாகப் போகக்கூடிய வாலிபர்கள் முளைப்பதை
வளருவதை நாம் நேரிலேயே பார்க்கின்றோம்.
அதாவது, எவ்வளவு கொடுமையை அனுபவிப்பதானாலும்
பலாத்காரம் என்றால் இன்னமும் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கின்றது.
நியாயத்தையும், வாதத்தையும் எடுத்துச் சொல்லி மெய்ப்பித்து பார்க்கலாம்.
முடியாவிட்டால் இன்னமும் பொறுக்கலாம் என்கின்ற எண்ணமே
தோன்றுகிறது.
ஆனால் நமது இளவல்களுக்கோ “இன்னமும் எத்தனை நாளைக்கு
இந்தப் புரட்டுகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், சுயநலத்திற்கும்
கொடுமைகளுக்கும் இடம் கொடுத்துக் கொண்டிருப்பது, இரண்டில் ஒன்று
பார்க்க வேண்டியதுதான்” என்கின்ற துடிதுடிப்பு கொழுந்து விட்டெழு
வதைப் பார்க்கின்றோம். அவர்கள் காலத்தில் நாம் அவர்களால் மாத்திர
மல்லாமல் பொதுமக்களாலும் “மிதவாதிகள்” என்றும் “பழம்பிடுங்கல்கள்”
என்றும் குற்றம் சொல்லப்படுவோம் என்கின்ற உறுதி நமக்குண்டு. எனவே
இவ் விஷயத்தில் அதிகமாகப் போவதும் நிதானமாகப் போவதும் அவரவர்:
கள் மன உணர்ச்சியைப் பொறுத்ததே தவிர வேறல்ல.
உதாரணமாக பண்டிதர் திரு. வேதாசலம் அவர்கள் ராயப்பேட்டை
155
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
யில் காந்தி நிலைய ஆண்டுவிழா தலைமைச் சொற்பொழிவில் அவர்
நிகழ்த்தியதாக காணப்பட்டவைகளில் ஒன்று “சைவத்தை குற்றம்
சொல்பவனை இன்னமும் விட்டுவைத்திருக்கின்றீர்களா? உங்கள் சரீரத்தில்
சைவரத்தம் ஓடவில்லையா?” என்பதாகச் சொன்னதாக காணப்பட்டது. (அது
ஒருவாறு மறுக்கப்பட்டது) அவர் அப்படியே சொன்னதாக வைத்துக்
கொண்டாலும் அதுசட்டப்படி குற்றம் என்று சொன்னால் சொல்லாமே ஒழிய
அவரது உணர்ச்சிப்படி
அது எப்படிக் குற்றமாகும்?
ஒருசமயம் அதிலிருந்து பண்டிதர் சரீரத்தில் சைவ ரத்தம் ஓடிற்றா
இல்லையா என்கின்ற கேள்வி வேண்டுமானால் கேட்கலாமே ஒழிய
அவ்வுணர்ச்சி மக்களுக்கு தோன்றுவது இயல்பு என்பதே நமதபிப்பிராயம்.
தற்கால நிலையில் இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்கள் அமிதமாக அதாவது மிக்க
வேகமாக சிலருக்கு பட்டால் படலாம். அதற்காக மக்களின் உணர்ச்சி
காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது
அவ்வளவும் பயனளிக்காதென்றே சொல்லுவோம்.
மக்களின் சுதந்திரத்திற்கும் அறிவிற்கும் சகயமரியாதைக்கும் உலகம்.
போகின்ற போக்கில் நாம் இருக்கும் நிலை எவ்வளவு பிற்பட்டது என்ப
தையும், நமது போக்கு எவ்வளவு அசைவற்றதும் நிதானமுமானது என்பதை
யும் யாராவது கவலையுடன் சிந்தித்துப் பார்த்தால், கடுகளவு கவலை இருந்தா
லும் மதமும் சாமியும் மத ஆச்சாரிகளும் அவர்கள் கதைகளும் நம்மை ஒரு
சிறிதும் தடைப்படுத்தவே மாட்டாது என்றே துணிந்து சொல்லுவோம்.
ஆனால் அவற்றில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் தங்கள் வாழ்வும்
அறிவுமே பிரதானம் என்பவர்களுக்கு உலகம் தெரியாதென்றே சொல்ல
வேண்டும்.
ஆதலால் பொதுமக்கள் இனித்தான் சற்று ஜாக்கிரதையுடன் இருக்க
வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.09.1928
குடி அரசு - 1928 @)
156
பழியோ௱ரிடம் பாவமோரிடம்
காலஞ்சென்ற தமிழ் தேசீயகவி சி. சுப்பிரமண்ய பாரதியவர்களின்
தேசீய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தார்.
அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள்
பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று
“தமிழ்நாடு” பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது.
சென்னை அரசாங்கத்தார் ஷே நூல்களை பறிமுதல் செய்வதற்கு முன்னரே
பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று
“தமிழ்நாடு” கூறுமா? பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புஸ்தகத்தை
சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு
அரசாங்க முறை இருந்து வருவதால் டெ நூல்களை சென்னையில் பறிமுதல்
செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன்
பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு
ஜஸ்டிஸ் கக்ஷியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட ரெ ஸ்ரீசுப்பிரமண்ய பாரதியாரின் நூல்களில்
ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டி
ருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டதற்கு யார் காரணமாயிருந்
திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை
“தமிழ்நாடு” தாக்குவதைப் பார்த்தால் அதைக் “கோடாரிக்காம்பு” என்று
சொல்லுவதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற
தென்பதா?'
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.09.1928
157
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
சைவ சமயம்
சமயம் என்பதைப்பற்றி சென்ற வாரம் ஒரு தலையங்கம் எழுதி
யிருந்தோம். இவ்வாரம் சைவ சமயம் என்பது பற்றி எழுதுகின்றோம்.
கொஞ்ச காலமாக சைவ சமயத்தின் பேரால் சிலர் போடும் கூச்சல்
அளவுக்கு மேல் போகின்றது. சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக
வேண்டும் என்று கட்சி சேர்க்கின்றார்களாம். அரசியல் பிழைப்புக்காரர்கள்
சிலர் அப்படித்தான். அதாவது, “சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக
வேண்டும்
, அதை ஒழிக்காவிட்டால் சுயராஜ்யம் தடைபட்டுப் போகும்”
என்று கூச்சல் போட்டார்கள். கூலி கொடுத்தும் கூச்சல் போடச் சொன்னார்.
கள்.அவ்வளவு கச்சல்களையும் அடக்கிக்கொண்டு இப்போது நமதியக்கம்
தலைநிமிர்ந்து நிற்கின்றதையும் அரசியல்காரர்களில் பெரும்பாலோரும்
இதை ஆதரிப்பதையும் பார்த்து ஒருவாறு அடங்கிவிட்டார்கள். இப்போது
சைவ சமயத்தார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலர் கிளம்பி
சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டுமென பிரசாரம் செய்து வருகின்
றார்கள். இச்சைவ சமயத்தார்கள் என்பவர்கள், சுயமரியாதை இயக்கம்
பார்ப்பனீயத்தையும், பார்ப்பனர்களையும் கண்டிக்கும் பொழுதும், வைணவ
சமயத்தையும் வைணவர்களையும் கண்டிக்கும் பொழுதும் ஆனந்தக்
கூத்தாடிக் கொண்டு நம்மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் புகழ்
புராணமும் கவியும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அதாவது, பார்ப்பன ஆதிக்கத்தை கண்டித்து சங்கராச்சாரியாரை
தாக்கி வரும் போது நமக்கு உதவியும் செய்தார்கள். பிறகு வைணப்
புராணங்களின் வண்டவாளங்களை வெளியாக்கும்போதும் நமக்கு உதவி
செய்து வந்தார்கள். இதுமாத்திரமல்லாமல், இந்து மதம் என்பதாக ஒரு மதம்
இல்லையென்றும் இந்துமதம் என்று சொல்லப்படுவது பார்ப்பனாதிக்கக்
கொள்கைகள் கொண்டது என்றும் சொல்லும் போதும் அதை ஆதரித்து
அதற்கும் வேண்டிய ஆதாரங்கள் உதவி வந்தார்கள்.
கடைசியாக சைவ மதப் புராணங்கள் என்பவைகளின் முறையில்
அவற்றின் யோக்கியதைகளை வெளியாக்க நேரிட்டபோது மாத்திரம்
*சுயமரியாதை இயக்கம் சமயங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது;
மோகஷத்திற்குத் தடையாய் நிற்கின்றது” என்று சொல்ல வந்து விட்டார்கள்.
குடி அரசு - 1928 @)
158
எனவே சைவ மதம் என்றால் என்ன? அது பார்ப்பன மதமல்லாமல் வேறு
தனி மதம் என்றோ அல்லது தமிழ் மக்கள் மதம் என்றோ யாராவது சொல்ல
முடியுமா? என்பதை முதலில் கவனிக்க விரும்புகின்றோம்.
நம் நாட்டு சைவர்கள் பெரும்பாலும் தாங்கள் “பார்ப்பன மதத்தை
வெறுக்கின்றோம்” என்கின்றார்கள். அன்றியும் பார்ப்பனர்களது மத ஆதாரம்
என்பவைகளாகிய நான்கு வேதங்கள் என்பதையும் சைவர்கள் தங்களுக்கு
சம்பந்தப்பட்டதல்ல என்கின்றார்கள். பார்ப்பனர்களின் “மோக்ஷ”சாதனமான
வேள்விச் சடங்குகளையும் தாங்கள் ஒப்புக்கொள்ளுகின்றதில்லை என்கின்
றார்கள். மற்றும் புராணங்கள் என்பவைகளையும் ஆரிய சாஸ்திரங்கள்.
என்பவைகளையும் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்பதுடன் அவை
கள் பொய் என்றும் கற்பனை என்றும் சொல்ல முன் வந்திருக்கின்றார்கள்.
பார்ப்பன ஆச்சாரியார்களும் அதாவது சங்கராச்சாரி போன்றார்களும்
தங்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் அல்ல என்றும் சொல்லுகின்றார்கள்.
மற்றும் எவ்வளவோ, அதாவது, “ஆரியன் கண்டாய்! தமிழன்
கண்டாய்!” என்று ஆரியத்தையும் தமிழையும் பிரித்து ஆரியத்திற்கும்,
தங்களுக்கும் தங்கள் சைவ மதத்திற்கும் சிறிதும் சம்மந்தமில்லை என்றும்.
தாங்கள் தனித்தமிழ்ச் சமயத்தார் என்றும் சொல்லிக்கொள்ளுவதுடன்
அதற்கு வேண்டிய ஆதாரங்களையும் கண்டு வைத்திருக்கின்றார்கள்.
உதாரணமாக “தென்னாட்டு சிவனே போற்றி” என்றும் பிரித்துச் சொல்லு
கின்றார்கள். எனவே இந்நிலையில், சைவ மதம் என்றால் என்ன?
முதலாவதாக, கற்பனை என்றும் பொய் என்றும் ஆபாசமென்றும்
அசம்பாவிதம் என்றும் சொல்லும்படியான கந்தபுராணம், சிவமகா புராணம்
முதலாகிய புராணங்களை ஒதுக்கி விட்டு பார்த்தால் சிவனுக்கோ,
சைவத்திற்கோ ஏதாவது கடுகளவு இடம் இருக்கின்றதா என்பதை கூர்ந்து
நோக்கும்படி வாசகர்களை கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இரண்டாவதாக, இந்து மதத்தையோ, வைணவ மதத்தையோ, சைவ
மதத்தையோ தனித்தனியாகவோ பொதுவாகவோ எடுத்துக் கொண்டு
பார்ப்போமேயானால் அவைகளிலுள்ள பொதுவான கடவுள்களும்,
வைணவ, சைவ கடவுள்களும், சுரர்கள் என்னும் “தேவர் களின் வேள்வி
என்னும் யாகத்தை அழித்து வந்த அசுரர்கள் என்னும் “அரக்கர்களை”
கொன்று வென்று யாகத்தைக் காக்க வந்தது என்கின்ற அஸ்திவாரம் தவிர:
வேறு மார்க்கத்தில் வந்த கடவுள்கள் ஏதாவது எங்காவது இருக்கின்றனவா?
என்று பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
அல்லது பார்ப்பனர்கள் என்னும் ஆரியர்களின் வேதத்தை ஒப்புக்
கொள்ளாததினாலோ, நிந்தித்தினாலோ உலகம் “நீதியும் ஒழுக்கமும்
159
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கெட்டுப் போய்விட்டது” என்று சொல்லிக் கொண்டு அவதாரம் செய்த
தாகவோ தோன்றியதாகவோ அல்லாமல் வேறுவழியில் வந்த ஏதாவது
கடவுள்கள் உண்டா? இருக்கின்றனவா?
இந்து, வைணவ, சைவ சமய சம்மந்தமான எந்த புராணமும் இதைத்
ர வேறு
என்ன காரணங்களாவது
கற்பிக்கின்றனவா?'
று
து
கறு
ற
உதாரணமாக, சைவ சமயச்சாரியார்கள் என்பவர்களும், “வேத
வேள்வியை மக்கள் நிந்தனை செய்ததால் தோன்ற வேண்டியவர்களா
னார்கள். வேத வேள்வியை நிந்தனை செய்த மக்களையும் அழித்து வேத
வேள்விச் சமயத்தையும் கடவுள்களையும் ஆதரிக்க வேண்டியவர்களானார்.
கள்” என்பதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் வேதத்தையும் வேள்வியையும் தள்ளிவிட்டு அவற்றைக்
காப்பாற்ற வந்த கடவுள்களையும் தள்ளிவிட்டு ஆரியர்களால் புனையப்
பட்டது என்கின்ற புராணங்களையும் தள்ளிவிட்டால், தேவாரத்திற்கோ,
திருவாசகத்திற்கோ மற்றும் “தமிழ் மறை”க்கோ எங்காவது இடமிருக்கிறதா
என்று கேட்கிறோம்.
சிவம், சைவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்ற வார்த்தை
களும் ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்னும் வழக்கை
சுலபத்தில் தள்ளிவிட முடியாது. மற்றும் சைவக் கடவுள்கள் பெயரும் அக்
கடவுள்களின் பெண்ஜாதி பிள்ளைகளின் பெயரும் அனேகமாய் முழுதும்
ஆரியபாஷைப் பெயர்களே தவிர வேறில்லை. மற்றும் அப்பெயர்களுக்கு
ஏற்ற காரணங்களும் அக்காரணங்களுக்கு ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட
கதைகள்தான் ஆதாரமே ஒழிய வேறில்லை. மற்றும் அப்பெயர்களுக்கும்
கதைகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட புராணங்கள் என்பவைகளும் பெரிதும்
ஆரிய மூலத்திலிருந்து மொழி பெயர்த்ததாகச் சொல்லப்படுப்பவைகளேயல்
லாமல் வேறல்ல.
நிற்க. சைவ சமயம் தென்னாட்டில் பரவி இருக்கின்ற அளவு மற்ற
நாட்டில் அதாவது வடநாட்டில் பரவி இருப்பதாக சொல்ல முடியுமா? வட
நாடு முழுவதும் ஏறக்குறைய வைணவ மதம் என்றே சொல்ல வேண்டும்.
தென்னாட்டில் மாமிசம் சாப்பிடாதவனுக்கு எப்படி சைவன் என்று
சொல்லப்படுகின்றதோ அதுபோல வடநாட்டில் மாம்சம் புசிக்காதவனுக்கு
வைஷ்ணவன் என்று சொல்லுவதுண்டு.
தென்ணாட்டிலும் சமயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சிலர் என்றுதான்
சொல்லவேண்டும். அதிலும் சைவ சமயத்தார்களோ சைவ சமயம் இன்னது
குடி அரசு - 1928 @)
160
என்று அறிந்தவர்களோ வெகு சிலர் என்றுதான் சொல்லவேண்டும்.
பாக்கியுள்ள மக்கள் அதாவது 100 - க்கு 90 - பேர்கள் மாரி. கருப்பன், மாடன்,
மதுரை வீரன், பேச்சி என்பது போன்ற கடவுள் வணக்கக்காரரும் மற்றும் ஒரு
சிலர் சைவ வைணவக் கடவுள்களையும் இக்கூட்டத்தில் சேர்த்துக்
கொண்டிருக்கின்றவர்களுமே தவிர வேறல்ல.
ஏதோ பழைய காலத்து அரசர்கள் தங்கள் மடமையினால் கட்டி
வைத்த கோவில்களும் அவர்கள் விட்ட சொத்துக்களால் நடக்கும்
உற்சவங்களும், இப்போது சில கொடுமைக்காரர்கள் மக்களிடைத்திலிருந்து
அனியாய வழிகளில் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு
கீர்த்திக்கும் தங்களை உயர்த்திக் கொள்வதற்கும் சிலர் தாங்கள் செய்த
கொடுமையினால் ஏற்படும் பாவத்தைத் தொலைப்பதற்கும் என்று பழுது
பார்ப்பதும் புதுப்பிப்பதும் இல்லாவிட்டால் இவ்வளவு பெருமைகள் கூட
சொல்லிக் கொள்ள வகை இருக்காது என்றே சொல்லலாம்.
சமயம் என்பதும், வைணவம் என்பதும், சைவம் என்பதும் என்ன
என்று பொதுவாக யோசிக்குமிடத்தில் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து
வாங்கிக்கொண்டு தங்களை அறியாமல் பார்ப்பனியத்திற்கும் பார்ப்பன
ஆதிக்கத்திற்கும் உழைக்கும் சாதனங்களா அல்லவா என்பதை நிதானித்து
நடுநிலைமையில் இருந்து பார்த்தால் யாருக்கும் விளங்காமல் போகாது.
எனவே இப்படிப்பட்ட சைவத்தைப்பற்றியோ சமயத்தைப் பற்றியோ
ஏதாவது எழுத நேரிடுவதால் “நாட்டின் க்ஷேமத்திற்கோ மக்களின்
மோட்சத்திற்கோ” எவ்விதமான ஆபத்துக்கள் எப்படி நேரிட்டு விடும்
என்பதைப்பற்றி விருப்பு வெறுப்பின்றி நிதானமாய் யோசித்துப் பார்க்கும்படி
வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 07.10.1928
161
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
உகைவமங்கும் சுமாமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர்
கருதிக் கொண்டு இருக்கின்றார்கள்! இதை தப்பான எண்ணம் என்றே
சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை
உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின்
றார்கள்- இந்த இயக்கத்தினால் தான் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள்.
நாட்டை விடுதலை அடையச்செய்தும் வருகின்றார்கள். ஆனால் இது
கஷ்டப்படவும், நஷ்டப்படவும் துணிந்தவர்களாலும், உண்மை வீரம்
உடையவர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமானதால்
சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம்
போடுகின்றவர்கள் இக் காரியத்தைச் செய்ய முடியாததுடன் வேறொருவர்.
செய்வதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில்
மக்களுக்கு உண்மையான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம்
செலுத்த ஆரம்பித்து விட்டால் போலிகளுக்கு இடமில்லாமல் போவதுடன்
அவர்களது வாழ்க்கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால்
அப்படிப்பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டியவர்
களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ்
வியக்கம் தாக்கப்பட்டாலும், ஒழிக்க எவ்வளவு தான் சூழ்ச்சி முறைகள்
கையாளப்பட்டாலும் அம்முயற்சிகள் சூரியனை கைகொண்டு மறைத்து
உலகத்திற்கு வெளிச்சம் இல்லாமல் செய்து விடலாம் என்கின்ற முட்டாள்
தனமான முயற்சிக்கு சமானமாக முடியுமே அல்லாமல் வேறல்ல,
சுயமரியாதை இயக்கம் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் வீறு
கொண்டு எழுந்து தாண்டவமாடுகின்றது. பம்பாய் மாகாணத்தில் கொஞ்ச
காலமாக பெருத்த கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அதாவது சென்ற
இரண்டு வருஷத்திற்கு முன்பே அங்கு புரோகிதக் கொடுமையை ஒழிக்க
சட்ட சபைக்குப் பல தீர்மானங்கள் வந்தன. ஜாதித்திமிரை ஒழிக்க பூனாவில்
பெருத்த கிளர்ச்சிகள் நடந்து பல கேசுகளும் ஏற்பட்டு பல பெரியார்களும்
சிறை சென்றனர். பம்பாயில் சென்ற வருஷத்தில் பாதிரிகளையும்
முல்லாக்களையும் குருமார்களையும் ஒழிக்க வேண்டும் என்று வாலிப
மகாநாடுகளில் பேசினார்கள். மற்றும் ஜாதித்திமிர் கொண்டவர்களுக்கு
வண்ணார், நாவிதர் என்பவர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில்லை
குடி அரசு - 1928 @)
162
என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள்
எல்லோரும் அதாவது எல்லா வகுப்புக்காரர்களும் ஒரே பாத்திரத்தில்
தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்
கொண்டார்கள்.
மத்திய மாகாணத்தில் கோவிலுக்குள் இந்துக்கள் என்பவர்களில்
உள்ள எல்லா வகுப்பாரும் போகலாம் என்று தீர்மானித்து அந்தப்படியே சில
இடங்களில் நடந்து வருகின்றார்கள்.
கல்கத்தாவில் மகமதிய மாணவர்கள் தாடி வளர்ப்பதை மத சம்மந்
தத்தில், இருந்து பிரித்து விடவேண்டுமென்று பலாத்கார சண்டை போட்டுக்
கொண்டார்கள்.
சமீப காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்கள் தத்களுடைய மத
ஆரம்பகால முதல் வெகு முக்கியமானதாகக் கருதி வந்த காரியங்களில்
ஒன்றாகிய க்ஷவரம் செய்து கொள்ளக்கூடாது, தலைமயிரைக் கத்தரிக்கக்
கூடாது என்கின்ற கொள்கையை அடியோடு மாற்றி தலைமயிர் வெட்டிக்
கொள்ளவேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
கடைசியாக கல்கத்தாவில் நம் நாட்டு சுயமரியாதை இயக்கத்தைப்
போலவே
- ஏன் இதைவிட அதிவேகமானது என்று கூட சொல்லும்
படியான - ஒரு பெரிய இயக்கத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதன்
கொள்கைகள் நமது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைவிட
வேகமுள்ளதாய் காணப்படுகின்றன. அதாவது,
ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது,
மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது,
குருமார்கள், ஆச்சாரியார்கள், புரோகிதர்கள் முதலியவர்களின்
ஆதிக்கங்களை ஒழித்து பகுத்தறிவை விளக்குவது.
பெண்கள் அடிமையை ஒழித்தும் ஜாதிக்கட்டுப்பாட்டை ஒழித்தும்
கலப்பு விவாகம் முதலியவைகளை ஆதரிப்பது,
முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்து தொழிலாளர்களுக்கு உரிமை
அளிப்பது,
மிராசுதாரர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு உரிமை
அளிப்பது.
163
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பொது வாழ்வில் ஏழை பணக்காரன் என்கின்ற பாகுபாட்டையும்,
உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஒழித்து
யாவருக்கும் சமத்துவத்தை அளிப்பது.
இவ்வளவும் போதாமல் நாட்டின் சொத்துக்களை எல்லோருக்கும்
சரிசமமாய்ப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையையும்
ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அதோடுமாத்திரமல்லாமல் அதன் தலைவர் திரு சுபாஷ் சந்திரபோஷ்
என்பவர் இவற்றை நிறைவேற்ற அரசியல் சங்கங்களிலிருந்து பிரிந்து
தனியாய் நின்று முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டதுடன்
இவைகள்தான் உண்மையான விடுதலைக்கு மார்க்கம் என்று சொல்லி
இவ்வியக்கத்திற்கு உண்மையான பூரண விடுதலை இயக்கம் என்று பெயரும்.
கொடுத்திருக்கின்றார்.
வெகு சீக்கிரத்தில் இதன் பிரசாரம் ஆரம்பிக்கப்படுமாம். இதைப்
பார்த்தவர்கள் நமது சுயமரியாதை இயக்கத்தை மிதவாத இயக்கம் என்று
தான் சொல்லுவார்கள். இப்படி இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தை
மிக மோசமான இயக்கம் என்றும் மிக வேகமான இயக்கம் என்றும்
சொல்லுவதுடன் நம் மீது பழி சுமத்துகின்றவர்களுக்கும் குறைவில்லை.
மத விஷயங்களில் கல்கத்தா இயக்கத்தைவிட வேகமாக
ஆப்கானிஸ்தானமும் துருக்கியும் போய்க் கொண்டிருப்பது எல்லோரும்
அறிந்ததேயாகும்.
அதாவது ஆப்கன் அமீர் அவர்கள் தம் சீர்திருத்தக் கட்டளைக்கு
விரோதமாய் பேசுகின்றவர்களையெல்லாம் மாஜி கவர்னர் உள்பட
மெளல்வீகள் உள்பட சிறையில் எல்லோரையும் அடைக்கின்றார்.
துருக்கியோ அரசாங்கத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று
விளம்பரப்படுத்தி விட்டது.
ருஷியாவோ வைதீக கொள்கைகளை உடையவர்களை யெல்லாம்
கைது செய்து வருகின்றது. அதாவது சமீபத்தில் அங்கு சூரியனையும்
சந்திரனையும் தெய்வமாக வணங்குபவர்களையெல்லாம் போலீசார் கைது
செய்து வருகின்றார்கள்.
இதே ரஷியாவில் கொஞ்ச காலத்திற்கு முன்பு பள்ளிக்கூடங்களில்
மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கக்
கூடாது என்று உபாத்தியாயர்களுக்கு உத்திரவு போட்டது எல்லோருக்கும்
ஞாபகம் இருக்கலாம்.
குடி அரசு - 1928 @)
164
அதுமாத்திரமல்லாமல் அங்குள்ள கோவில்களை இடித்ததும்
ஞாபகமிருக்கலாம்.
நமது நாட்டைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வளவு காரியங்கள்
நடக்கின்ற போது நமது நாட்டில் இன்னமும் புராணக்காரரும், புரோகி
தர்களும், பூசாரிகளும், பொதுநலத்தின் பேரால் வாழ்வை நடத்தும் வயிற்றுப்
பிழைப்புக்காரர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்றால், நம் நாட்டு
வாலிபர்களுக்கு கண்ணும் காதும் இருக்கின்றதா இல்லையா என்று
கேட்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 07.10.1928
165
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ண்டவானம் I
சர்வககூறி மகாநாட்முண்
6
சர்வககி மகாநாடு எனப் பெயர் வைத்துக்கொண்டு சிலர் கூடி
செய்துவரும் ஜெகஜாலப் புரட்டுகளையும் சூழ்ச்சிகளையும் மக்கள்
ஏமாறத்தக்கவண்ணம் வேண்டுமென்றே நம் நாட்டில் சில தேசீயப்
பத்திரிகைகள் என்னும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் செய்து வந்த
புரட்டுகளெல்லாம் இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டதை யாவரும்
அறிந்திருக்கலாம். இதன் காரணம் அப்பத்திரிகைகள் தங்களுக்கென
யாதொருவித கொள்கையும் இல்லாமல், சற்றும் விவகார ஞானமும் இல்லா
மல் சமயத்திற்குத் தகுந்தபடியும் காசு கொடுப்பவர்கள் சொல்கின்ற
படியும் நடக்க வேண்டியிருப்பதால், சற்றும் மானம் ஈனம் வெட்கமின்றி
தினத்திற்கு ஒரு குட்டிக்கரணம் வீதம் போட்டு மாறி மாறி எழுத வேண்டிய
வைகளாகவே இருக்கின்றன.
உதாரணமாக சர்வகக்ஷி மகாநாட்டைப் பற்றியும் அதன் தீர்மானங்
களைப் பற்றியும் இக்கூலிப் பத்திரிகைகள் ஒரே அடியாக வானமளாவப்
புகழ்ந்தும், அதை உலகமே ஒப்புக் கொண்டாய் விட்டது என்றதும்,
இனி
தேசத்திற்கு விடுதலை ஒரு விரக்கடை தூரம் தான் இருக்கின்றது என்றதும்,
அதில் கலந்து வேலை செய்தவர்களையெல்லாம் பாராட்டி எழுதி வந்ததும்
போய் இப்போது அதில் உள்ளவர்களையும் அதன் முக்கியஸ்தர்களையும்
வைவதைப் பார்த்தால் ஒருவரிடம் கூலி வாங்கிக் கொண்டு மற்றவர்களை
வைவதாகவோ அல்லது கூலி கொடுக்காததற்காக வைவதாகவோ நன்றாய்
விளங்கும். நிற்க,
முதலில் சர்வகக்ஷி மகாநாட்டுத் தீர்மானங்கள் என்பது மக்கள்
எல்லோருக்கும் பொதுவான உரிமையும் நலமும் அளிக்கக்கூடியதா
என்பதைக் கவனிப்போம். ஏனெனில் எந்த சீர்திருத்தமோ, சுயராஜ்யமோ,
விடுதலையோ, பூரண விடுதலையோ என்பவைகள் ஒரு நாட்டுக்கு
கிடைப்பதானால் அது அந்த நாட்டு மக்கள் எல்லோரும் சம உரிமை
அனுபவிக்கக்கூடிய யோக்கியதையில் இருக்கின்றதா என்பதைத்தான்
பார்க்கவேண்டும். இந்த முறையில் நமது நாட்டை எடுத்துக் கொள்ளுவோம்.
எந்தக் காரணத்தை முன்னிட்டானாலும் சரி, எந்தக் காலம் முதற்கொண்
டானாலும் சரி, நமது நாடு அதாவது நாம் சுயராஜ்யமோ விடுதலையோ
கோரும் நாடாகிய இந்திய நாடானது பல்வேறு மதம் ஜாதி வகுப்புகளாக
குடி அரசு - 1928 @)
166
பிரிக்கப்பட்டது என்பதும், அதனாலேயே மக்கள் ஒருவருக்கொருவர்.
உயர்வு தாழ்வு பாராட்டுகின்றார்கள் என்பதும் ஒருவருக்கொருவர் நடை,
உடை, பழக்கவழக்கம், வாழ்க்கை முதலியவைகளில் ஜாதியின் பேரால்,
மதத்தின் பேரால், மோக்ஷத்தின் பேரால், கடவுளின் பேரால் மாறுதல்
அடைந்திருக்கின்றார்கள் என்பதும், இந்தக் காரணங்களால் ஒருவரிடம்
ஒருவர் ஒற்றுமையில்லாமல் நம்பிக்கை கெட்டு வெறுப்புக்கும்,
துவேஷத்திற்கும், பழிவாங்கும் தன்மைக்கும் ஆளாகியிருக்கின்றார்கள்
என்பதும் இதற்கு அரசாகூஷியும் சட்டமும் கடவுளும் மதமும் வேத
சாஸ்திரங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றன என்பதும் யாராலும்
மறுக்கக்கூடிய காரியம் அல்ல.
இந்த நிலையிலுள்ள மக்களைக்கொண்ட நாட்டிற்கு ஏதாவது ஒரு
கடுகளவு முன்னேற்றத்திற்கோ விடுதலைக்கோ முயற்சி செய்வதானால்
முதலில் மேல்கண்ட கெடுதிகளை ஒழிக்கும்வழி இருக்கும்படியான
ஏற்பாட்டுடன் முயற்சிக்க வேண்டியது நியாயமும் யோக்கியமும் நாணயமும்
ஆகும். அதை வேண்டுமென்றே மூடிவைத்துக் கொண்டோ அல்லது
அதைப்பற்றிக் கவலை இல்லாமலோ இருந்துகொண்டு வேறு வழியில்
பிரவேசிப்பதென்பது ஒரு சிறிதும் பயனளிக்காத காரியம் என்பதல்லாமல்,
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரிதும் கேட்டை விளைவிப்பதாகும்
என்றே சொல்லுவோம். ஏனெனில் இந்த முக்கியமான குற்றங்கள் நமது
நாட்டில் இருப்பதினாலேயே நமது நாடு வெகுகாலமாகவே அடிமை
வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திலும் இருக்க வேண்டி இருக்கின்றது.
எனவே இவைகளை ஒழிக்கத்தக்க கொள்கைகளோ முறைகளோ ஏதாவது
ஒரு சிறிது மேல்கண்ட சர்வககஷி மகாநாட்டில் இருக்கின்றதா என்று
பார்த்தால் அடியோடு இல்லாததோடு ஏற்கனவே உள்ள ஒரு சிறிதும்
பிடுங்கப்பட்டிருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.
அதாவது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள்,
ஆங்கிலோ இந்தியர்கள் ஆகிய பிரிவினர்களுக்கு தனித்தனி தேர்தல்
தொகுதியும், இந்துக்களில் தென்னாட்டில் உள்ள பார்ப்பனர்கள்
பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவுகளுக்கு தேர்தல் மூலம் ஒதுக்கி
வைக்கும் முறையும், தீண்டாதவர்கள் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்புக்கு
சர்க்கார் மூலம் நியமனம் செய்வதற்கு ஒதுக்கி வைத்துக்கொண்டு வருவதும்.
ஆகிய முறைகள் கொஞ்ச காலமாக இருந்து வந்தது. இந்த முறைகள் 20
வருஷத்திற்கு முன்னும் 10 வருஷத்திற்கு முன்னும் இந்து முஸ்லிம் மகாநாடு
என்னும் பேராலும் சீர்திருத்தம் என்னும் பேராலும் காங்கரஸ் என்னும்
பேராலும் சர்வகக்ஷி மகாநாடு என்னும் பேராலும் கூட்டங்கள் கூட்டி
இந்தியப் பொது மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டத் திட்டம் என்கின்ற
முறையில் சர்க்காருக்கு அறிக்கை செய்து அதன் மூலமாக அடைந்த
சாதனங்களாகும். அன்றியும் இந்த சாதனங்களின் பலனாக சமூக வாழ்க்கை.
167
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
யில் தாழ்த்தப்பட்டவர்களும் கல்வியில் பிற்பட்ட வகுப்பார் என்பவர்களும்
ஒரு விதத்தில் தங்கள்நிலைமையையும் யோக்கியதையையும் உணரவும் ஒரு
சிறிதாவது மனிதத் தன்மையடைய வேண்டும் என்கின்ற ஆசை பிறக்கவும்
மார்க்கம் ஏற்பட்டது. இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டிய
தில்லை என்றே நினைக்கின்றோம்.
இப்படி இருக்க, இப்போது சர்வகக்ஷி மகாநாட்டின் பேரால்
ஏற்படுத்தப்பட்ட சுயராஜ்ய திட்டத்தில் வேண்டுமென்றே இந்த சாதனங்
கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்.
களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் இல்லை.
பிற்பட்ட வகுப்பாருக்கு என்று ஒதுக்கி வைக்கும் முறையும் இல்லை.
தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு என்று சர்க்கார் நியமனமும் இல்லை.
இவ்வளவும் இல்லாததோடு இவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்
பதற்கு வேறு எந்த விதமான மார்க்கமும் செய்யவும் இல்லை.
வங்காளம், பஞ்சாப்பு ஆகிய மாகாணங்களுக்கு மாத்திரம் இந்து
முஸ்லிம்களைப் பொறுத்தவரை சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்து கொள்ள
சம்மதித்திருப்பதாக மாத்திரம் காணப்படுகின்றது.
தென்னாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரி
வினையும், தீண்டக்கூடாதார், கண்ணில் பார்க்கக்கூடாதார், தெருவில் நடக்கக்
கூடாதார் என்கின்ற பிரிவினையும், இந்த வகுப்புகள் ஒன்றுக்கொன்று
நம்பிக்கையின்மையும், ஒற்றுமையின்மையும், துவேஷமும் கொண்டு
ஒன்றுக்கொன்று சம உரிமை அற்று கொடுமையாய் நடந்து வருவதும்
மறுக்கக்கடாத விஷயமாகும். இதற்கு மேல்கண்ட சர்வகக்ஷி மகாநாட்டில்
எவ்வித விமோசனமும் இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு தனித்
தேர்தல் தொகுதியோ, ஒதுக்கி வைத்தலோ, சர்க்கார் நியமனமோ ஆகிய
ஒன்றுமே இல்லாவிட்டால் அவர்கள் மற்றபடி வேறு எந்த வழியில் பிரதி
நிதித்துவத்தை அடைய முடியும்?
அதுபோலவே முஸ்லீம்களுக்கும் தனித்தேர்தலோ, ஒதுக்கி
வைத்தலோ, நியமனமோ இல்லாதவரை அவர்கள் எந்த விதத்தில் பிரதி
நிதித்துவம் பெற முடியும்? அதுபோலவே பார்ப்பனர் பார்ப்பனரல்லா
தார்களும் - பொதுத்தேர்தலாலேயே ஒருவருக்கொருவர் அபிப்பிராய
பேதமும், கட்சியும், துவேஷமும் ஏற்பட்டிருப்பதற்கு தனித் தேர்தல்
ஏற்படுத்தாத பக்ஷம் வேறு எந்த மார்க்கத்தில் இவர்கள் ஒற்றுமைப் பட
முடியும்?
குடி அரசு - 1928 @)
168
ஒரு நாட்டில் 5ல் ஒரு பங்காகிய 6-கோடி மக்கள் தீண்டாதாராக
பாவிக்கப்பட்டு கல்வி, அறிவு, மனிதத்தன்மை, சுயமரியாதை முதலிய
வைகள் அடைவதற்கு மார்க்கமில்லாமல் அநேக காலமாக அழுத்தி
வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு எவ்வித விமோசனமும் செய்யப்படாமல்,
ஒரு திட்டம் தயாரித்திருப்பதாகச் சொன்னால் அந்தத் திட்டம் யோக்கிய
மான திட்டமாகுமா? அந்த சமூகத்தார் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள
சம்மதிப்பார்களா? அன்றியும் பொதுத்தேர்தலில் இவர்களுக்கு ஒரு
ஸ்தானமாவது கிடைக்குமா? எனவே எல்லோருக்கும் சமமான பிரதிநிதித்
துவம் கிடைக்கும்படியான முறை அதில் இல்லை என்றே சொல்லுவோம்.
தவிர, எல்லோருக்கும் ஓட்டுரிமை அதாவது 20 வருஷத்திற்கு
மேற்பட்ட
ஆண் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்படவேண்டுமென்று
சர்வ கட்சி மகாநாடு திட்டத்தில் கேட்கப்பட்டிருக்கின்றது.
எல்லா மக்களும் தங்களது ஓட்டுரிமையை சரியானபடி உபயோகிக்க
கற்பிக்கப்பட்டிருக்கின்றார்களா? என்பது நமது முதல் கேள்வி. ஓட்டுரிமை
இன்னதென்றும் அதை எப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்பதைப்
பற்றியும் பாமர மக்களுக்கு ஒரு சிறிதும் கற்பிக்காமலும் கற்பிக்க கவலை
கொள்ளாமலும் இருந்துகொண்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக்
கொடுப்பதால் அந்த நாட்டுக்கு என்ன பலன் கிடைக்கக்கூடும்? பாமர
மக்களை ஏய்க்கவும், அவர்கள் கையைக் கொண்டே அவர்கள் கண்ணைக்
குத்திக் கொள்வதற்குமே உதவுமேயல்லாமல் வேறு என்ன பலன் ஏற்படும்.
இப்பொழுது நமது நாட்டின் தேர்தல்களின் யோக்கியதைகளைப் பற்றி
யோசிப்போமேயானால் அதன் தன்மையை வெளியிட முடியாத
நிலைமையில் இருக்கின்றோம். வெளியிடுவதானாலும் இதில் இடம் போதாது.
எவ்வளவு ஒழுக்க ஈனங்களும், புரட்டுகளும், பித்தலாட்டங்களும்,
ஏமாற்றல்களும், நாணயக்குறைவான காரியங்களும் நடைபெறுகின்றன!
என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா?
இந்த நிலையில் இவைகள் திருத்தப்பட எவ்வித முயற்சியும்
செய்யாமல் மேலும் மேலும் இம்மாதிரியான காரியங்கள் அதிகமாவதற்கு
தக்க மாதிரியாகவே ஓட்டர் தொகுதிகளை ஏற்படுத்தினால், அதனால்
நாட்டிற்கோ மக்களுக்கோ என்ன நன்மைகள் கிடைக்கக்கூடும்? மிராசு
தாரன், முதலாளி, பணக்காரன், படித்த பித்தலாட்டக்காரன், கையில் வலுத்த
வன் முதலியவர்கள் போன்ற சுயநலக்கூட்டத்தாருக்கு இம்முறைகள்
பயன்படுமே ஒழிய பாமர மக்களுக்கோ தொழிலாளிக்கோ விவசாயிக்கோ
ஏதாவது ஒரு சிறிது அனுகூலமாவது ஏற்பட வழியுண்டா என்று யோசித்துப்
பார்க்க விரும்புகிறோம்.
169
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தவிர, எல்லா மக்களுக்கும் பொதுவுடைமையில் சமஉரிமை
அளிக்கப்படும் என்பதாக ஒரு வாசகம் அத்திட்டத்தில் காணப்படுகின்றது.
இது பொது ஜனங்கள் கண்களில் மிளகாய்ப் பொடியை அள்ளிப்
போடுவதற்காகவே கண்டுபிடித்து எழுதப்பட்டதாகும். ஏனெனில் மத
சம்மந்தமான காரியங்களிலும் பழமையான பழக்க வழக்க அனுபோகங்
களிலும் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்பதாக ஒரு நிபந்தனை ஏற்கனவே
இருப்பதாகவும் அது மகாராணியால் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும்
உறுதிப்படுத்தப் பட்டாய் விட்டது.
அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டே எந்த விதமான உரிமை
களோ சீர்திருத்தங்களோ தலைகாட்டினாலும் ஒரே அடியாய் மண்டையில்
அடித்துக் கொன்று விடுவதாயிருக்கின்றது.
அந்த நிபந்தனைகள் இருக்கும்போது மக்களுக்கு புதிதாக வேறு எந்த
வழியில் சம உரிமை கொடுக்க முடியும்?
சமிபத்தில் சட்டசபை முதலியவைகளில் சீர்திருத்த சம்மந்தமாய்
கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் மசோதாக்களும் மத ஆச்சாரி
களாலும் உயர்ந்த ஜாதிக்காரர்களாலும் பட்ட பாட்டிலிருந்தும் அவை
களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பிலிருந்தும் அவ்வுரிமையின் பயன் நன்றாய்
விளங்கும். ஆதலால் அந்த வாசகம் மக்களை ஏய்ப்பதற்கு கண்டுபிடிக்கப்
பட்டதே தவிர வேறில்லை.
எனவே சர்வகட்சி மகாநாடு என்பது ஒரு ஏமாற்றும் மகாநாடே ஒழிய
வேறில்லை. அதில் கலந்திருப்பவர்களிலும் அதை ஆதரிப்பவர்களிலும்
பெரும்பான்மையோர் கடைந்தெடுத்த மோசக்காரர்களும், சுயநலக்
காரர்களும் தங்களது சமூகத்தையும், தேசத்தையும் விற்று வாழ்க்கை நடத்தும்
இழிகுணம் படைத்தவர்களுமானவர்களேயொழிய வேறில்லை என்றே
சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.எனவே அத்திட்டத்தை
பொதுமக்களும் சிறப்பாக பிற்பட்டவர்களுமே ஒப்புக்கொள்வது என்பது
தற்கொலை என்றே சொல்லுவோம்.
மற்றபடி அதன் சூழ்ச்சிகளைப்பற்றியும் இந்த சமயத்தில் அது
எதற்காக செய்யப்பட்டது என்பதைப்பற்றியும் சென்னையில் கூட்டிய சர்வ
கட்சி மகாநாடு என்பதின் புரட்டைப்பற்றியும் அதில் கூடியுள்ளவர்களின்
தனித்தனி யோக்கியதைகளைப் பற்றியும் பின்னால் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.10.1928.
குடி அரசு - 1928 @)
170
PR
இந்துமக ஸ்மிருதியும்
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும்
கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை
மசோதாவைக் கண்டித்து ஒரு “ஸ்ரீமுகம்” வெளியிட்டிருக்கின்றார். அதை
“சுதேசமித்திரன்” பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப்
போட்டிருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு.
சத்தியமூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப்
படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம்.
திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு
சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லிவிடலாமானாலும் அவருக்கு இம்
மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த
ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர்.
இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே.
அதாவது “தேசீய அரசியல்” இயக்கம் என்று சொல்லப்படுவதில் ஒரு குறிப்
பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப்பிரதிநிதி
அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது
யூனிவர்சிட்டி பிரதிநிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு
அங்கத்தினராகவும், மற்றும் பொது ஜனசேவை செய்கின்றவர் என்று
சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் சேர்ந்தவராகவும் இருக்கின்றார் என்பதே.
அன்றியும், தன்னை ஒரு சீர்திருத்தக்காரர் என்றும் மதம், சமூகம் முதலிய
வைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்தான் என்றும்
சொல்லிக் கொள்பவர்.
எனவே, இப்படிப்பட்ட ஒருவர், குழந்தைகள் புருஷன் பெண்:
ஜாதியான வாழ்வு நடத்தாதிருப்பதற்கும், குழந்தைகள் தங்கள் குழந்தைப்
பருவம் மாறாததற்கு முன்பே பிள்ளை பெறும்படியான நிலைமையை
உண்டாக்காமல் இருப்பதற்கும், மற்றும் மனித சமூகத்தின் அறிவு, சரீர
வளர்ச்சி,பலம் முதலியவைகள் விர்த்தி அடைவதற்கும் அவசியமானதான
மேல்கண்ட குழந்தை விவாகத் தடுப்பு மசோதா என்பதை எதிர்த்து போராட
171
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
முன்வந்து அதற்கு ஆதாரமாக பெரிதும் மதசம்மந்தமான ஆக்ஷ்பனை
களையே எடுத்துக்காட்டி இருக்கிறார்.
இது மாத்திரமல்லாமல், மற்றும் இதுபோன்ற பல சீர்திருத்தங்
களையும், மதத்தை சாக்காகக் கொண்டே ஆக்ஷேபித்து வந்திருக்கின்றார்.
இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுகின்றோம்.
அதாவது கொஞ்ச நாளைக்கு முன் சென்னை சட்டசபையில் திரு.
முத்துலக்ஷிமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட சாமி பேரால் விபசாரத்
திற்கு பொட்டுக் கட்டும் வழக்கத் தடுப்புமசோதாவையும் மதத்தை சாக்காகக்
கொண்டே தடுத்து நின்றதும் யாவருக்கும் தெரிந்ததாகும். அந்த சமயத்தில்
திரு. சத்தியமூர்த்தி அய்யர் சொன்ன ஆக்ஷேபனை என்னவென்றால்
பொட்டுகட்டுகின்ற வழக்கம் கேட்டைத் தரத்தக்க தானாலும் அதை நிறுத்தச்
சம்மதிப்பது மதத்தில் பிரவேசிப்பதாகும் என்றும், இன்று பொட்டுக்
கட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டால் நாளை மற்றொரு சீர்திருத்தம் வரும்
என்றும், ஆதலால் அதற்கு சம்மதிக்க முடியாதென்றும் சொல்லி விட்டார்.
பிறகு சென்ற வாரத்தில், சென்னையில் நடைபெற்றுவரும்
விபசாரங்களை தடுக்க ஒரு மசோதா கொண்டுவர முயற்சித்த போதும்
இதுபோலவே தடைகல்லாய் நின்றதுடன் அவர் சொன்ன சமாதானம்
என்னவென்றால், “விபசாரிகள் எவ்வளவுதான் ஒழுக்க ஈனமாக நடந்து
கொண்டாலும் அவர்களும் நமது சமூகத்தார் அல்லவா?
அப்படியிருக்க
அவர்களின் விபசாரத் தொழிலை நிறுத்தி விட்டால் பிறகு அவர்கள்.
ஜீவனத்திற்கு என்ன செய்வார்கள்” என்று சொல்லி ஆட்சேபித்தாராம்..
இம்மாதிரியாகவே எவ்விதமான சீர்திருத்தங்கள் வந்த போதிலும்
மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் ஆக்ஷேபித்து அவைகள்.
நிறைவேற்றப்படாமல் போவதாயிருந்தால் பிறகு எந்த விதத்தில் தான் நமக்கு
கதிமோட்சம் ஏற்படக்கூடும்? அன்றியும் பராசர் ஸ்மிருதியும் மனு
ஸ்மிருதியும் நமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் ஆதாரமென்பதை நாம்
சகித்துக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்றால்,
அதை விட ஈன வாழ்க்கை
வேறு எங்காவது ஏதாவது உண்டா என்று கேட்கின்றோம். இப்பேர்ப்பட்ட
இந்துமதம் என்பதும் அதனுட்பிரிவுகள் என்பதான சைவ வைணவ முதலிய
சமயங்கள் என்பதும், அதன் ஆதாரங்களான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி,
ஆகமங்கள் என்பவைகளும், நமது மோக்ஷ சாதனத்திற்கு ஏற்பட்டவை
என்றும், உலகத்திலுள்ள மற்ற மதங்களுக்கெல்லாம் சிறந்தது என்றும்
சொல்லிக்கொண்டு அச்சமயங்களைக் காப்பாற்ற வெளி வந்திருக்கும்
வீரர்கள், “சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தைக் கெடுக்கின்றது, வைணவ
மதத்தை வைகின்றது, சைவ சமயத்தை ஒழிக்கின்றது” என்று ஊளையிட்டு
குடி அரசு - 1928 @)
172
கொண்டிருக்கின்றார்களே ஒழிய இம்மாதிரி சீர்திருத்தத்தைப் பற்றியாவது
இதை எதிர்க்கும் ஆதாரங்களைப் பற்றியாவது கடுகளவு கவலையாவது
கொள்ளுகின்றார்களா என்பதை பொது ஜனங்களை யோசித்துக் கொள்ளும்
படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
அன்றியும் மத சமயக்காரர்கள் என்பவர்கள் “சம்மந்தன் சமணர்
களைக் கழுவேற்றினது பொய்யா மெய்யா? முதலைதான் உண்ட பாலகனை
14 வருஷம் வரை வயிற்றில் வளர்த்து வெளியில் கக்கினதை ஒப்புக் கொள்
ளுவாயா? மாட்டாயா?” “ ராமன் கடவுளா மனிதனா” “ராவணன் யோக்கி
யனா? ராமன் யோக்கியனா?” “சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா?”
“விஷ்ணுவுக்கு வடகலை ராமமா, தென்கலை ராமமா?” “சூரியனுடைய
ரதத்திற்கு எட்டு குதிரையா பதினாறு குதிரையா?” “விதி பெரியதா மதி
பெரியதா?” இதுபோன்ற விசயங்களில் “மதபக்தி”யையும் அறிவு
சக்தியையும் காண்பித்துக் கொண்டு “சமயத் தொண்டையும், தெய்வத்
தொண்டையும்” செய்துகொண்டும், இம்மாதிரியான விஷயங்களி
லெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதே “தெய்வாக்கு” என்பதாகவும், அதை
மறுத்தால் தங்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லாமல் போய்விடும்
என்று பயந்துகொண்டும் பாமர மக்களை மிருகங்களாக்கி விடுகின்றார்கள்.
ஆதலால் இம்மாதிரி மதமும் சமயமும் நமக்கு எதற்காக வேண்டும்? இவை
மக்களுக்கு நன்மையளிக்கும் சமயமாகுமா? என்பதாக கேட்க ஆரம்
பித்தால் அதை நாஸ்திகம் என்று சொல்லிவிரட்டியடிக்கப் பார்க்கின்றார்.
களே யொழிய மனிதத் தன்மை அறிவுத் தன்மை என்பதை ஒரு சிறிதும்
காட்டுவதே கிடையாது.
தவிர திரு. சத்தியமூர்த்தி, “பால்ய விதவைகளின் கொடுமையையும்
சிறு குழந்தைகள் பிள்ளை பெற்று தாயாகி விடுவதால் நேரிடும் கெடுதியை
யும் நான் அறிவேன்” என்று கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஒப்புக்
கொள்ளுகின்றார்.
ஆனால் கூடவே அதன் கீழ் “12 வயதுக்குள் பெண்களுக்கு
கல்யாணம் செய்யாவிட்டால் பாபம் வரும் என்று பராசர் ஸ்மிருதியில்
சொல்லி இருக்கின்றது” என்கின்றார். கொடுமையையும் கெடுதியையும்
நீக்குவது பாபமாகுமானால் அந்தப் பாபத்திற்கு பயப்படவேண்டுமா?
என்றுதான் கேட்கின்றோம்.
அன்றியும் திரு. சத்தியமூர்த்தி ஆதாரம் காட்டும் பராசர் ஸ்மிருதியின்
விவாகப் பிரகரணத்தில், “8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து
கொடுத்தவன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப் பெண்ணை விவாகம்
செய்து கொடுத்தவன் வைகுண்டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம்
செய்து கொடுத்தவன் பிரம்மலோகத்தையும் அடைகிறான்; அதற்கு
173
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரெளரவாதி நரகத்தை
அடைகின்றான்” என்று எழுதியிருக்கின்றது.
ஆனால், திரு.சத்தியமூர்த்தி “10 வயதுக்கு முன் கல்யாணம் செய்யும்
வழக்கம்
இப்போது நின்றுபோய்விட்டது” என்று சொல்லுகின்றார்.
இந்தப்படி, பார்த்தால் இப்போது பெண் பெற்றவர்கள் எல்லோரும்
ரெளரவாதி நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தானே
சொல்லவேண்டும். எனவே இனி 16 வயதில் கலியாணம் செய்பவர்களுக்கு
புதிதாக பாவம் ஏது என்று கேட்கின்றோம்.
தவிர திரு. சத்தியமூர்த்தி பயப்படுவதாக வேஷம் போடும் பராசர்:
ஸ்மிருதியின் யோக்கியதையை கவனிப்போம்.
“40 வயதுக்கு மேல்பட்ட பெண்ணுக்கு கலியாணம் செய்யாவிட்டால்
ரெளரவாதி நரகத்தை அடைய வேண்டும்” என்று சொல்லும் அதே
ஸ்மிருதியானது அதே ஸ்திரீகள் விஷயத்தில் சொல்லுவதென்னவென்றால்,
“ஸ்திரிகள் பூமிக்கு சமானமானவர்கள்; அவர்கள் குற்றம் செய்தால் தூஷிக்
கக் கூடாது. அவர்கள் என்ன தவறுதல் செய்தாலும் அவர்களை விலக்கி
விடக் கூடாது. சண்டாளன் வசித்த பூமியை எப்படி சில சுத்திகள் செய்து
அதில் நாம் வசிக்கின்றோமோ, அது போல் ஸ்திரீகள் சண்டாள சம்பந்தம்
வைத்துக் கொண்டாலும் அவர்களை சுத்தி பிராயச்சித்தம் செய்து ஏற்றுக்
கொள்ளவேண்டும்” என்று சொல்லியிருக்கின்றது. அந்த பிராயச்சித்தம்
என்னவென்று பார்ப்போனால் அதாவது “ஒரு பிராமண ஸ்திரி தன்
மனதறிந்து ஒரு சண்டாளனுடன் சம்மந்தம் வைத்துக் கொண்டால்
சாந்திராயண கிருச்சிரம் செய்துவிட்டால் சுத்தியாகிறாள்” என்று
சொல்லியிருக்கின்றது. இது பராசர் ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7-வது
அத்தியாயம் 23-வது சுலோகம்.
சாந்திராயண கிருச்சிரம் என்பது “கிருஷ்ண பட்சம் முதல் அமா
வாசை வரையில் தினம் ஒரு பிடி சாதமாக குறைத்துக் கொண்டு வந்து ஒரு
நாள் பட்டினி விரதமிருந்து, மறுபடியும் ஒவ்வொரு பிடி விருத்தி செய்து
சாப்பிட வேண்டியது” இது 7-வது காண்டம் 2- வது சுலோகம்.
“ஒரு பிராமண ஸ்திரீ பாவசீலர்களான சூத்திரர்களால் அனுபவிக்கப்
பட்டால் அவள் பிரஜாபத்திய கிருச்சிரம் செய்வதாலும் ருது ஆவதாலும்
சுத்தி அடைகின்றாள்” என்று சொல்லுகின்றது (இது மேல்படி காண்டம்
மேல்படி அத்தியாயம் 24-வது சுலோகம்)
பிரஜாபத்திய கிருச்சிரம் என்பது 3 நாள் காலையிலும் 3
நாள்
மாலையிலும் புசித்து 3 நாள் யாசிக்காமல் வந்ததை புசித்து 3 நாள் உபவாச
குடி அரசு - 1928 @)
174
மிருத்தல். (இது பராசர் ஸ்மிருதி 7-வது காண்டத்தில் 9-வது அத்தியாயத்தில்
சொல்லப்படுகின்றது?
இதுவும் செய்வதற்கு கஷ்டமாயிருக்குமானால் 12 பிராமணர்களுக்கு
சாப்பாடுபோட்டால் போதும். (இதுவும் மேற்படி அத்தியாயம்)
இன்னும் இதுபோலவே மகாபாதகம் என்று சொல்லும்படியான
“குருபத்தினியைப் புணர்ந்தவன் ஒரு பசுவையும் எருதையும் பிராமண
னுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான்” (ஷி காண்டம் டி
அ. ச. 13)
இன்னும் இதைவிட மகாபாதகமான அனேக காரியங்களுக்கும் ஒரு
வேளை இரண்டு வேளை பட்டினி கிடப்பதும் பிராமணனுக்குக் கொடுப்ப
துமே பிராயச்சித்தமாய்ச் சொல்லப்படுகிறது. அதிலும் பிராமணன் சூத்திரன்
என்பதாகப் பிரித்து அதற்குத் தகுந்தபடி பிராயச்சித்தம் சொல்லப்பட்டி
ருக்கின்றது. அதாவது “ஒரு வேதம் ஓதின ஒரு பிராமணன் ஒரு பசுவைப்
புணர்ந்தால் ஒரு பசுவை பிராமணனுக்கு கொடுத்தால் சுத்தனாகிறான்.
இதே
காரியத்தை ஒரு சூத்திரன் செய்தால்
4 பசுவையும், 4 எருதையும்
பிராமணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான்'” என்று சொல்லுகிறது.
( டி
அத்தியாயம் 14வது சுலோகம் )
எனவே இப்பேர்ப்பட்ட காரியங்களுக்கெல்லாம் இவ்வளவு சுலபமாக
பிராயச்சித்தம் சொல்லி இருக்கும்போது ஒரு பெண்ணை 12 வயது ஆண்.
பிறந்து கலியாணம் செய்வதால் ஏற்படும் பாபத்திற்கு மிகவும் சுலபமான
பிராயச்சித்தம் தானே இருக்கக்கூடும். ஆதலால் பராசர் ஸ்மிருதியை கடவுள்.
வாக்கு என்றே நம்புகின்றவர்களுக்குக் கூட குழந்தை விவாகத்தடுப்பு
மசோதாவில் பிரமாதமான கெடுதி ஒன்றும் வந்துவிடாது என்றே
சொல்லுவோம்.
அதிகமான தண்டனை விதித்திருந்தாலும் அது “பாலும்
பழமும் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை பட்டினி கிடக்க
வேண்டும்” என்றுதான் இருக்கக் கூடும். ஆதலால் உண்மையானதும்
அவசியமானதுமான சீர்திருத்தங்களை விரும்புகிறவர்கள் மதம், சமயம்,
சாஸ்திரம், சாமி என்கின்ற பூச்சாண்டிகளுக்கு ஒரு சிறிதும் பயப்படக்
கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 2110.1928
175
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
யாகத்தின் ரகசியம்
ஓர் சம்பாஷணை
சங்கரன் : ஏது நண்பனே, இன்று அவசரமாய்ச் செல்கின்றாய். வயிறு
பசித்துவிட்டதோ?'
கிருஷ்ணன்
: அப்படியில்லை. நாளையத்தினம் எங்கள் கிராமத்
தில் ஓர் யாகம் நடக்கப் போகிறது; இன்று மாலையிலேயே ஆரம்பம்,
அதற்காகப் போகிறேன்.
சங்கரன் : யாகம் என்றால் எனக்குப் புரியவில்லை. அதை எப்படிச்
செய்வார்கள்?
கிருஷ்ணன் : அதை எல்லாம் உனக்குச் சொல்வது கூடாது, அந்தரங்
கமானது; அது எங்கள் பரம்பரை பரம்பரை வழக்கமாயுள்ளது; யாகம்
செய்தால் ஊர் செழிக்கும். பிராமணர்களுக்குச் செல்வம் வளரும்.
சங்கரன் : நண்ப, எவ்வளவு அந்தரங்கமானாலும் பலர் சேர்ந்து
செய்தால் எப்படியும் வெளிவந்துதானே தீரும். அன்றியும் நீ சொல்வதைப்
பார்த்தால் நல்ல காரியமாகத்தானே தெரிகிறது. அதை நான் தெரியும்படி
சொல்லவேண்டுகிறேன்.
கிருஷ்ணன்: ஏது என்னைச் சீக்கிரம் போக விடமாட்டாய் போலிருக்
கிறது. எனக்கு முக்கிய நண்பனாதலால் சுருக்கமாகக் கூறுகிறேன். மற்றவர்க.
ளிடம் சொல்லாதே.
சங்கரன் : அப்படியே
கிருஷ்ணன்
: எங்களூர் சிவன் கோவிலின் வடபாகத்தில் யாக
குண்டம் வெட்டிப் பந்தலிட்டு அதற்கு வேண்டிய சமித்துக்கள் , நெய், பால்,
தயிர், தானியம், தேங்காய், பழம் முதலிய சாமான்கள் தருவித்து அயலூர்
களிலுள்ள உபாத்தியாயர்கள், கனபாடிகள், சடாவல்லவர்கள், தீக்ஷதர்கள்
முதலியோரை எல்லாம் வருவித்து யாகத்தை முடித்துத் தேவர்களுக்கு
அவிர்ப்பாகங் கொடுத்து பிராமண போஜனம் செய்து முடிப்பார்கள்.
சங்கரன் : நண்ப, இவ்வளவு அவசரமாகச் சொல்லிவிட்டால் நான்
தெரிந்து கொள்ளவேண்டாமா? உபாத்தியாயர்கள் என்றாயே, நம்முடைய
குடி அரசு - 1928 @)
176
பள்ளிக்கூட உபாத்தியாயர்களெல்லாம் வருவார்களா?
கிருஷ்ணன் : அட மூடமே, இது கூடத் தெரியாதா? இந்த உபாத்தி
யாயர்களுக்குஅங்கென்ன வேலை? வேதஅத்யயனம் செய்த உபாத்தியாயர்.
களாகிய வைதீகர்களாக்கும்.
சங்கரன்
: அந்த உபாத்தியாயர்களைக் கொண்டு நம் பள்ளிக்
கூடத்தில் அவ்வேதத்தைக் கற்றுக் கொடுக்கும்படி செய்தால் இந்த விஷயங்
களெல்லாம் எங்களுக்கும் தெரிய வழியிருக்குமே?'
கிருஷ்ணன்
:
நீ என்ன பைத்தியக்காரனாயிருக்கிறாயே! நீங்க
ளெல்லாம் அவ்வேதத்தைக் காதாலும் கேட்கப்படாதாம் அப்படியானால்
பிராமண தர்மம் கெட்டுவிடுமாம். உதாரணமாக கல்லிடைக் குறிச்சி சமஸ்
கிருதப் பாடசாலையைத் தாலூக்கா போர்டார் வகித்து நடத்தும் போது,
உங்களவர்களைச் சேர்க்கும்படிசெய்ய அவர்களுக்கு எங்கள் உபாத்தியா
யர்கள் கற்றுக் கொடுக்க மறுத்து விட்டதால் அப்பாடசாலையை போர்டு
நிர்வாகத்திலிருந்து நீக்கி விட்டார்கள். இப்போது அது ஆற்றங்கரையில்
ஆற்றங்கரைப் பிழைப்பாகவே காலத்தை எதிர்ப்பார்க்கிறது.
சங்கரன் : ஐயோ! அப்படிப்பட்ட வேதம் ஒன்றிருக்கின்றதா? அதில்
அப்படி சொல்லியிருக்குமா? அதை யார் செய்தது?
கிருஷ்ணன் : அது கடவுள் பிராமணர்களுக்காகச் செய்து கொடுத்
தாராம். அவர்களே கற்று அதன்படி காரியங்களை அவர்களே செய்ய
வேண்டும். மற்றவர்கள் கேட்டாலும் பார்த்தாலும் கற்றாலும் தண்டனை
உண்டு.
சங்கரன் : படிப்புக்குத் தண்டனையா! வெகு அழகு! உண்மையான
கடவுள் இப்பாஷையைச் செய்திருக்கமாட்டார். அப்படிச் செய்திருந்தால்
எல்லோருக்கும் பொதுவாகயிருக்கும். உலக பாஷைகள் கற்பவருக்
கெல்லாம் பொதுவாகும். இது தன்னலம் போற்றும் பிராமணக் கடவுள்தான்
செய்திருப்பார். அவருக்கு கடவுள் பட்டம் தகுதியன்று.
கிருஷ்ணன் : உனக்கென்னடா தெரியும், அப்பாஷை தேவ பாஷை
யாக்கும். சாதாரண மனிதர்கள் அறியப்படாதென்றும் அது அவ்வேதத்
திலேயே சொல்லியிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
சங்கரன்
: தண்டணையுண்டென்றாயே, இதற்குமுன் அப்படி
எங்கேயாவது நடந்திருக்கிறதா?
கிருஷ்ணன் : இக்காலத்தான் ஆங்கில அரசாட்சியாய் போய்ச்சே!
அக்காலத்து ஆரிய அரசர்களாகிய மனு, மந்தாதா, தசரதன், இராமன், தருமர்
முதலியவர்கள் ஆட்சியானால் நீ இதைப்பற்றி இவ்வளவு பேசினதற்கே
நீ
படும்பாடு வேறாகும்.
சங்கரன் : அம்மம்மா! அவ்வநியாய அரசர்கள் வேண்டாமப்பா!
யாகத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரிக்க வேண்டும்.
177
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கிருஷ்ணன்: சீக்கிரம் போக வேண்டும். கேட்பதை சுருக்கமாகவே
கேள்.
சங்கரன் : நண்ப இந்த யாகம் எதற்காக யாரை உத்தேசித்து?
கிருஷ்ணன் : உலக க்ஷேமத்துக்கும் பிராம்மண அபிவிருத்திக்கும்
இந்திரனை உத்தேசித்து செய்வது.
சங்கரன்
: இந்திரன் வருவானா? மந்திரம் செய்பவராவது காணு
வார்களா?
கிருஷ்ணன்:
அது முடியாது. அவனுக்கு உரிய மந்திரத்தாலழைத்து
மந்திர பூர்வமாய் ஆகுதி செய்து அவிர்ப்பாகம் கொடுப்பதை அவன் ஏற்றுத்
திருப்தியடைவான் என்பது வேதாந்தம்.
சங்கரன்
: இந்திரனுக்கு எதை எப்படி ஆகுதி செய்து அவிர்ப்பாகம்
கொடுப்பது.
கிருஷ்ணன் : உன்னிடம் நான் சிக்கிக் கொண்டேன். இதற்குமேல்
சொன்னால் என்னை ஏளனம் செய்தாலும் செய்வாய்.
சங்கரன் : நண்ப, உன் கூட்டத்தார் செய்கைக்கு உன்னை ஏளனஞ்
செய்வது நன்றாய் இருக்குமா? விஷயம் தெரிய கேட்கிறேன்.
கிருஷ்ணன் : இப்போது சொல்லப் போகிற விஷயத்தில் எனக்கும்
ஒரு விதத்தில் அதிருப்திதான். வைதீகாள் காரியம் - அதை உனக்கும் தெரி
வித்து விடுகிறேன். அதாவது தீ யாககுண்டத்தில் பலவித சமித்துக்களை
யிட்டு, ஆவின் நெய் சொரிந்து எரித்து, தானிய வகைகள், பஞ்ச கவ்வியங்
கள், பழந்தேங்காய், பட்டு முதலியவைகளைப் போட்டு கடைசியாய்
கொழுத்த ஆட்டை தீட்சதரென்பவர் குரல் வளையை நெருக்கி உயிரைப்
போக்கி அதை அறுத்து வவை என்னும் இரத்தாசயத்தை எடுத்து மந்திரஞ்
சொல்லி ஒம குண்டத்தில் அவிர்ப்பாகம் கொடுப்பார். இதுதான் யாகம் இதன்
ரகசியம் தெரிந்ததா?
சங்கரன்: சிவ சிவா, தெரிந்து
கொண்டேன். ஆட்டின் மாமிசத்தை
என்ன செய்வார்கள்?
கிருஷ்ணன்
: அதைக் கேளாதே; சொல்லத் தயாரில்லை. நீயே
யூகித்துக் கொள் அது பலவிதம்.
சங்கரன் : நண்ப, இது விஷயத்தை பலர் பலவிதமாகப் பேசினர்.
அதனுண்மை தெரியவே உன்னைக் கேட்டுத் தெரிந்தேன். நீயும்
பலவிடங்களில் புதையல் செய்துவிட்டுச் சிறிது தெரிவித்தாய். ஆகிலும் சில
வார்த்தைகள் சொல்லியபின் போகக் கடவாய்.
தமிழ் வேதமென்னும் திருக்குறளில் உங்கள் விஷயங்களைக்
கண்டித்துத் தமிழ் மகனாகிய தெய்வப் புலமை திருவள்ளுவர் கூறுவதைக்
கேள்.
குடி அரசு - 1928 @)
178
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை தன்று”
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை”
“உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்”
“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்”
என்ற முதுமொழியின் கருணையை கண்டனையோ? இப்படிப்பட்ட ஆபாச
மான யாகங்கள் சிறு தெய்வ வழிபாடுகள் கூறுங் கூற்றுகளைத் தமிழ் மக்கள்
கற்றால் உமது நூல்களை கையால் தொடவும் விரும்புவாரோ! இதற்காகத்தான்
வேதத்தைப் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் படிக்க கூடா தென்ற கட்டுபாடு
போலும்
- நண்பனே, நீ அந்த அநியாயமான கொலைக் களத்திற்குப்
போகாதே
கிருஷ்ணன் :அன்ப, உன் போதனை கேட்டதும் அவசியம் போக
வேணுமென்ற ஈர்ப்பு என்னை விட்டு நீங்கி நின்றது - உனக்கு ஒன்றுந்
தெரியாதென்றும் உங்களவர்களுக்கு சாஸ்திரங்கள் கிடையாதென்றும்
எங்களவர்கள் சொல்வதைக் கேட்டு மயங்கினேன் - உங்களுக்குரியதெனக்
கொண்டிருக்கும் தமிழ் வேதத்தின் ஆழ்ந்த நோக்கின் பெருமையை
இந்நான்கு செய்யுட்களாலேயே கண்டு கொண்டேன். உன்னோடு பேசியதன்
பயனாய் அவ்விடத்திற்குப் போக அருவருப்பாயிருக்கின்றது. மற்றவை
நாளை பேசுவோம். வந்தனம்,
குடி அரசு - உரையாடல் - 21.10.1928
179
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அரந்கதோ!
யராஷ்கசோதி சுவாமிகள் பிரிந்தார்
சிதம்பரம் பொன்னம்பல மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள்
சிலநாள் உடல் நலங்குன்றியிருந்து நிகழும் அக்டோபர் மாதம் 10 ம் நாள்
புதன் கிழமையன்று, அந்தோ! இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்-
சுவாமிகள் தென்மொழியிலும் வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். தாம்
மடாதிபதியானதும் கால நிலைமைக்குத் தக்கபடி மடத்து வேலைகளுடன்'
பொது நலத்திற்கான வேலைகளையும் கவனித்து உழைத்து வந்தார். கதர்,
மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு முதலியவைகளை பல இன்னல்களுக்
கிடையிலும் உபதேசித்து வந்தவர். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து
சிதம்பரம் தச்சன் குளத்தையும் ஞானப்பிரகாசர் குளத்தையும் வெட்டியும்
படிகட்டியும் சிதம்பரவாசிகளுக்கு உதவினவர். சிதம்பரம் நகர பரிபாலன
சபையில் ஓர் ஆதிதிராவிட சகோதரிக்கு ஸ்தானம் வாங்கிக் கொடுத்ததும்
நம் சுவாமிகளே. ஆதலின் இத்தகைய பெரியாரின் பிரிவாற்றாது தவிக்கும்
தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பாக சிதம்பரவாசிகளுக்கும் தாழ்த்தப்
பட்ட மக்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளு
கிறோம்.
குடி அரசு - இரங்கல்செய்தி - 21.10.1928
குடி அரசு - 1928 @)
180
திரு. காந்தியவர்கள் சென்ற வாரத்திய தமது “யங் இந்தியா” வில்
தம்மை ஒரு நண்பர் கடவுளைப்பற்றிக் கேட்ட சில கேள்விகளை பிரசுரித்து
அவைகளுக்கு தமது அபிப்பிராயத்தையும் எழுதியிருக்கின்றார்.
கேள்விகளின் சுருக்கம் யாதெனில்:-
“கடவுளைத் தவிர மற்றதெல்லாம் நிச்சயமற்ற தென்றும்,
சத்தியம் தான் கடவுள் என்றும்,
துன்பத்தை சகித்துக் கொண்டு பொறுமையாயிருப்பதே கடவுள்
என்றும்,
அயோக்கியர்களை எச்சரிக்கை செய்து அவர்கள் தமக்குத்தாமே
கேடு விளைவித்துக்கொள்ளும்படி செய்து விடுகிறார் என்றும், “யங்
இந்தியா” வில் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
ஆனால் கடவுள் இருக்கின்றார் என்கின்ற உறுதி எனக்கு இல்லை.
ஏனெனில் அப்படி கடவுள் என்பதாக ஒன்று இருக்கும் பக்ஷத்தில்
உலகத்தில் சத்தியத்தை நிலை நிறுத்துவதே அவரது லக்ஷியமாகவல்லவா
இருக்கவேண்டும்.
ஆனால், உலகம் எங்கு பார்த்தாலும் பலவிதமான அயோக்கியர்
களாலும் கொடுமைக்காரர்களாலும் நிரப்பப்பட்டிருப்பதுடன் ஒழுக்க நடவ
டிக்கைகளைப்பற்றி சிறிதும் கவலையே எடுத்துக்
கொள்ளாத அயோக்கியர்.
களான அவர்கள் செளகரியமாகவும் க்ஷமமாகவும் வாழ்கின்றார்கள்.
அயோக்கியத்தனம் என்பது ஒருவித தொத்துவியாதி போல் உலகில்
தாராளமாய்ப் பரவிக் கொண்டும் வருகிறது.
இது இப்போதிருக்கும் மனித வர்க்கத்துடன் மறைந்து போவதாக
181
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இல்லாமல் இனிவரப்போகும் பின்சந்ததியார்களும் ஒழுக்கமற்றவர்
களாகவும் நாணயமற்றவர்களாகவும் நடக்கும்படி செய்கின்றது.
கடவுள் சகலத்தையும் தெரிந்தவரும் சர்வ வல்லமையும் உள்ள
வரல்லவா?
அப்படி இருந்தால் தனது சகலத்தையும் அறியும் சக்தியைக் கொண்டு
கெடுதியும் கொடுமையும் எங்கெங்கிருக்கின்றது என்பதை அறிந்து தனது
சர்வவல்லமையைக் கொண்டு அவைகளை ஒழித்து அயோக்கியர்களை
வளர விடாமல் ஏன் செய்யக் கூடாது?
அன்றியும் கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதித்துக் கொண்டு
பொறுமையாய் இருக்கும்படி செய்யவேண்டும்,
அயோக்கியத்தனத்துடனும், நாணயக் குறைவுடனும்,மகா கொடுமை
யுடனும் உலகம் நடந்து கொண்டே இருப்பதை அனுமதித்துக் கொண்டே
இருப்பாரானால் பிறகு கடவுளுக்கு என்னதான் யோக்கியதை இருக்கின்றது?
தாங்கள் சொல்லுவது போல் கொடுமை செய்கின்றவர்கள் தாங்க
ளாகவே கெட்டுப்போகவும் தங்களுக்குத் தாங்களாகவே குழி வெட்டிக்
கொள்ளவும் கடவுள் செய்வது உண்மையானால் அவர் ஏன் அக்
கொடியவர்களைக் கொடுமை செய்வதிலிருந்து விலக்கி கொடுமைகளை
முளையிலேயே கிள்ளியெறிந்து விடக்கூடாது?
அப்படிக்கில்லாமல், ஒருவனுக்கு கெட்ட காரியம் செய்ய தாராள
மாய் இடம் கொடுத்து விட்டு, அக்கெட்ட காரியத்தால் உலகமும் பதினா
யிரக்கணக்கான மக்களும் துன்பமும் அடையும்படி செய்துவிட்டு அதன்
பிறகு கேடு செய்தவனை தானாக கெட்டுப் போகும்படி செய்துகொண்டிருப்
பது எதற்காக?
உலகம் நாளுக்கு நாள் கெட்ட தன்மையிலேயே போய்க்கொண்:
டிருக்கின்றது. ஆதலால் உலகத்தை யோக்கியமாகவும் அயோக்கியர்களை
அழித்து யோக்கியர்களை உண்டாக்கவும் செய்வதற்கு தனது சக்தியை
உபயோகிக்காத ஒரு கடவுளிடத்தில் மனிதன் ஏன் நம்பிக்கை வைக்க
வேண்டும்?
அயோக்கியர்கள் தாங்கள் அயோக்கியத்தனத்துடன் செளக்கியமாகத்
தீர்க்காயுளுடன் வாழ்வது எனக்கு நன்றாய்த் தெரியும். அப்பேர்ப்பட்ட
வர்களால் மக்களுக்கு துன்பம் இல்லாமல் இருப்பதை முன்னிட்டாவது
அவர்கள் ஏன் சீக்கிரம் அழிந்து போகக்கூடாது?
குடி அரசு - 1928 @)
182
எனக்கு கடவுளை நம்பவேண்டும் என்கின்ற ஆசை உண்டு.ஆனால்
நம்புவதற்குக் கொஞ்சமும் ஆதாரம் இல்லவே இல்லை. தயவுசெய்து
தங்களுடைய “யங் இந்தியா” பத்திரிகை மூலம் இவற்றுக்குச் சமாதானம்
சொல்லி எனக்கு நம்பிக்கை உண்டாக்க வேணுமாய் கோருகிறேன்.” இக்
கேள்விகளுக்கு திரு. காந்தியின் சமாதானமாவது:-
இந்தக் கேள்விகள் மிகப் பழைய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு
நான் சொல்லக்கூடிய பதில் ஒன்றும் என்னிடத்தில்
இல்லை. ஆனால் நான்
ஏன் கடவுளை நம்புகிறேன் என்பதற்கு மாத்திரம் சமாதானம் சொல்லக்கூடும்.
அதாவது:-
விவரித்துச் சொல்ல முடியாத ஒரு மறைவான சக்தி இருக்கிறது
என்பதை நான் காணமுடிவதில்லை; ஆனாலும் ஒருவாறு உணருகிறேன்.
ஆனால் அதை எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு ௬ஜுபித்துக் காட்ட
முடியாததாயிருக்கிறது. ஏனென்றால் அது எனது புலன்களின் சக்திக்கு
மீறினதாய் இருக்கின்றது.
வேண்டுமானால் ஒரு அளவுக்கு கடவுள் இருக்கிறார் என்பதற்கு
ஆதாரம் காட்டலாம்.
அதாவது ஒரு சாதாரண மனிதனுக்கு தன்னை ஆளுகிற அரசன்யார்.
என்பது தெரியாத போதிலும் ஒரு அரசன் இருந்து ஆண்டு கொண்டுதான்
இருக்கவேண்டும் என்பது மாத்திரம் அவனுக்குத் தெரியும். எனவே ஒரு
சாதாரண மனிதனுக்குச் சாதாரண சங்கதிகூட தெரியாமலிருக்கின்றது போல
நம் போன்றவர்களுக்கு மகா பெரிய சங்கதியான கடவுள் விஷயம் புலப்
படுவது என்பது சாத்தியமான காரியமல்ல.
ஆனாலும், இந்த பிரம்மாண்ட
மான உலகத்தைப் படைத்து ஆட்சி செலுத்தும் சட்டம் ஒன்று இருக்கின்றதாக
நான் அறிகிறேன்.அந்தச் சட்டம்தான் கடவுள்.அதை நான் மறுக்கமுடியாது.
ஆனால் அந்த சட்டத்தைப் பற்றியாவது அச்சட்டத்தை வழங்கு
பவரைப் பற்றியாவது எனக்கு ஒன்றுமே தெரியாது.
ஒருராஜ்ஜியத்தை ஆளும் அரசனை
மறுப்பதால் அந்த ராஜ்ஜியத்தில்
உள்ளவன் எப்படி அந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெற
முடியாதோ அதைப்போல் கடவுளை மறுப்பதால் கடவுள் ஆட்சியிலிருந்து
விடுதலை பெற்றுவிட முடியாது.
மொத்தத்தில் தெய்வீகமான சட்டம் ஒன்று இருக்கிறது என்பதை
மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அதற்குப் பணிந்து நடந்து வந்தால் வாழ்வு சுலப
மாக நடைபெறும்.
கடவுளை உணர விரும்புபவன் உறுதியான நம்பிக்கை கொண்
182
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
டால் தான் முடியும். அந்நம்பிக்கைக்கு வெளி ஆதாரங்கள் தேடப்
புறப்பட்டால் அது முடியாத காரியமாய் விடும்.
கடைசியாக மேற்கூறிய கேள்விகளுக்கு ஒழுங்கு முறையில்
காரணங்கள் காட்டி மேல்கண்ட கேள்விகள் கேட்டவரை திருப்தி செய்ய
தக்க நியாயங்கள் ஒன்றும் என்னிடம் இல்லை என்பதை நான் ஒப்புக்
கொள்ளுகிறேன்.
கடவுள் நம்பிக்கை காரணகாரிய ஆராய்ச்சிக்கு எட்டாதது. ஆனதி
னால் நான் இக்கேள்விகள் கேட்பவருக்கு கடைசியாக சொல்லுவதென்ன
வென்றால், சாத்தியப்படாத காரியத்தில் பிரவேசிக்கவேண்டாம் என்பதுதான்.
உலகத்தில் இருக்கும் கெடுதிகளுக்கும் கொடுமைகளுக்கும்
அறிவினால் காரணம் காட்டமுடியாது.
ஆனால் கெடுதிகள் இருப்பதையும்
அதன் தன்மை அறிய முடியாதது என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
கடவுள் பொறுமை உள்ளவர் என்பதற்கு காரணமே அவர் கொடுமை
உலகத்தில் நடக்க அனுமதிக்கிறதினால்தான். கடவுளிடத்தில் கெட்டகுணம்.
இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உலகில் ஏதாவது கெடுதி
யிருந்தால் அதற்கு அவரே கர்த்தா. ஆனால் அவருக்கு அதில்
சம்மந்தமில்லை.”
*இதற்கு அவருடைய இங்கிலீஷ் வாசகமாவது”
I call God long suffering and patient precisely because He
permits evil in the world.
I know that He has no evil in Him, and yet
if there is evil, He is the author of it and yet untouched by it
.
.
.
.
.
என்று எழுதியிருக்கின்றார்.
எனவே அவர் சொன்ன பதில்களிலிருந்தாவது அவர் காட்டி
இருக்கும் நியாயங்களிலிருந்தாவது கேள்வி கேட்ட நண்பருக்கு ஏதாவது
பதில் இருக்கின்றதா என்பதைக் கவனித்துப் பார்க்கும்படி வாசகர்களைக்
கேட்டுக் கொள்ளுகிறோம்.
இக்கேள்விகளை எப்படி திரு. காந்தி பழைய கேள்விகள் என்று
சொன்னாரோ அதேபோல் அவருடைய சமாதானங்களும் பழைய கதைகள்
என்றுதான் சொல்ல வேண்டும்.
என்னவென்றால், “கடவுளை அறிவது அசாத்தியம்”
“அசாத்தியமான காரியத்தில் பிரவேசிக்காமல் இருப்பது நல்லது.”
குடி அரசு - 1928 (3)
184.
“கடவுள் நம்பினால் தான் உண்டு”
“அதுவும் உறுதியான நம்பிக்கையாக இருந்தால்தான் முடியும்”
என்பன போன்ற சமாதானங்கள்.
ஆனால் ஒரு புதிய உதாரணம் காட்டியிருக்கிறார். அது என்ன
வென்றால்:-
சாதாரண மனிதனுக்கு தங்கள் அரசர்கள் யார் என்பது தெரியாதாம்.
அதுபோல் தங்களுக்கு கடவுள் என்பது தெரியவில்லையாம். இது எவ்வளவு
அசட்டுத்தனமான சமாதானம் என்பதை வாசகர்கள் யோசித்துப்
பார்க்கவேண்டும்.
ஏனெனில் அரசன் எல்லோரும் தன்னை அறியும்படி செய்து கொள்:
ளத்தக்க சக்தி உடையவன் அல்ல. கடவுள் என்பவரோ சர்வ சக்தி உள்ளவர்.
என்பதை கேள்வி கேட்ட நண்பர் முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
தவிர மற்றொரு புதிய விஷயம் கண்டு பிடித்திருக்கிறார். அதாவது,
கடவுள் இருக்கிறார் என்பது விளங்காமல் போனாலும், இருக்கிறார்.
என்று வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் முடியுமாம்.
வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் முடிகின்றதற்காக ஒரு விஷயத்தை-தனக்கு
எட்டாததை-தெரியாததை-நம்ப வேண்டும் என்று சொல்வதானால்,
வாழ்க்கை பிரயாணம் எளிதில் நடைபெற வேண்டியதற்கு சவுகரியமான
வேறு அநேக காரியங்கள் செய்யக் கூடுமானால் அவைகளையும் செய்யச்
சொல்லுகிறாரா என்பது விளங்கவில்லை.
ஏனெனில் பலவிதமான புரட்டு, பித்தலாட்டம், திருட்டு முதலிய
காரியங்கள் செய்து ஏராளமான பணம் சம்பாதித்தவர்களின் வாழ்க்கைப்
பிரயாணம் சுலபமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
தனக்குத் தெரியாததான கடவுளை நம்பாமல் நிறைய கள்ளையும்,
சாராயத்தையும் குடித்து போதை ஏற்றிக் கொண்டு வாய்க்குளறிப் பாடிக்
கொண்டு தள்ளாடி நடந்து போகிறவனுக்கு இதைவிட வாழ்க்கை யாத்திரை:
சுகமாகவும், சுலபமாகவும் கழிக்கின்றதை நாம் நேரில் பார்க்கிறோம்.
வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் கழிவதே முக்கியமானால் நாம் ஏன்
இவனைப் பின்பற்றக் கூடாது. இந்த மாதிரி போதையில் மூழ்கியிருக்கும்
போது எவ்வித இன்ப துன்பமும் தோன்றாமல் வாழ்க்கை கழிந்து விடுகிறதா
இல்லையா? நிற்க,
185
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தீமைகளும் கொடுமைகளும் கடவுளால் அனுமதிக்கப்படுகின்ற
தென்றும் அதனாலேயே அவர் பொறுமைசாலி ஆகிறார் என்றும் சொல்லு
வதை கவனித்தால் இது எவ்வளவு கவலை அற்ற பதில் என்பது விளங்காமல்
போகாது.
ஏனெனில், கடவுள் பொறுமையால் மற்ற ஜீவன்களுக்கு எவ்வளவு
கஷ்டம் இருக்கின்றது என்பதை உணர்ந்து பார்த்தால் விளங்கும்.
மற்றும் கொடுமைகளும் கெடுதிகளும் கடவுளிடம் இல்லை என்றும்
ஆனாலும் அக்கெடுதிகளை கடவுளே உண்டாக்குகிறார் என்றும் ஆனால்
அவைகளில் கடவுளுக்கு சிறிதும் சம்மதமில்லை என்றும் சொல்லுவது
அறியாமையால் சொல்லும் வாக்கியமா அல்லது ஏதாவது ஒரு சமாதானம்
சொல்லி கேள்வி கேட்டவர்களை ஏமாற்றிவிடலாம் என்பதாகக் கருதிச்
சொன்ன வாக்கியமா என்பது நமக்கே விளங்கவில்லை.
உலகில் மிகப் பெரியார் கூட்டத்திலும் மேதாவிகள் கூட்டத்திலும்
சேர்ந்த ஒருவரும் சதா சர்வகாலம் கடவுள் பேரைச் சொல்லிக் கொண்டு
இருப்பவரும் கடவுள் செயலை அடிக்கடி உணர்ந்து அதன் பயனை
அனுபவித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்லுபவருமான ஒருவரே
கடவுளைப் பற்றி சொல்லுவது இதுவானால் மற்றவர்களிடம் அதாவது
கடவுள் பெயரையும் சமயத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு வயிறு
வளர்ப்பவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
அன்றியும் கடவுளைப் பற்றி பேசுகின்ற ஒவ்வொருவர்களும்
“கடவுள் பெயரற்றவர், ரூபமற்றவர், குணமற்றவர்” என்பதையும், “அவர்.
மனதிற்கெட்டாதவர், இந்திரியங்களுக்கு அகப்படாதவர்” என்பதையும்
அவருக்கு லக்ஷணமாகச் சொல்லும் போது, அதற்கு மேல் கடவுள் உண்டா
இல்லையா என்கின்றது போன்ற கேள்விகளே அனாவசியமானதும்
பலனற்றதும் என்பது நமது முடிவு.
ஏனெனில் இது ஆகாயத்தில் ஒரு கோட்டை இருப்பதாக வைத்துக்
கொண்டு அதற்கு ஜன்னல் எவ்வளவு கதவு எவ்வளவு என்று சண்டை
போடுவதைப் போன்றது. அன்றியும் அவ்வேலையில் ஈடுபடுவது போன்ற
முட்டாள் தனமும் அசட்டுத்தனமுமாகிய காரியம் வேறு இல்லை என்பதும்
நமது முடிவு.
அல்லாமலும் அப்படிப்பட்ட ஒரு கடவுள் இருந்தாலும் சரி,
இல்லா
விட்டாலும் சரி,
அதைப்பற்றி நமக்கு கவலை வேண்டுவதில்லை என்பதும்
நமது முடிவு.
ஆனால் கடவுளைப் பற்றிய விஷயங்கள் வரும்போது நாம்
குடி அரசு - 1928 @)
186
கவலைப்படுவது எதைப் பொறுத்தவரையில் என்றால், கடவுள் இருக்கிறார்.
என்று ஒருவன் ஒப்புக்கொள்ளுவதின் மூலம் அவனுடைய அறிவு
வளர்ச்சியும் முயற்சியும் கெட்டு சோம்பேறித்தனம் உண்டாகக்கூடாது
என்பதைப் பொறுத்த வரையில்தானே ஒழிய வேறில்லை.
உதாரணமாக பாதாள லோகம் என்று ஒரு லோகம் இருக்கின்றது
என்றும் அதில் நாகராஜன் என்கின்ற ஒரு அரசன் இருக்கின்றான் என்றும்
ஒருவன் சொல்லிக்கொண்டு திரிவானானால்,
அந்த லோகம் எங்கே. அந்த
அரசன் வீடு எங்கே, என்று கேட்டுக் கொண்டு திரிய வேண்டியது ஒவ்வொரு
வனுடையவும் வேலை அல்ல.
அதுபோலவே இல்லாத பட்டணம் என்று ஒரு பட்டணம் ஆகாயத்
த்தில் இருக்கின்றது என்றும் அதற்கு அரூபி என்கின்ற ஒரு அரசன்
இருக்கின்றான் என்றும் அவனுக்கு அனங்கள் என்கின்ற பூஜ்ஜியம் 0 சைபரி
பெண்கள் இருக்கின்றார்கள் என்றும், ஒருவன் சொல்லிக்கொண்டு
திரிவானானால், அதை காட்டு என்று கேட்டுக் கொண்டு திரிய வேண்டியதும்
ஒவ்வொருவனுடையவும் வேலையல்ல. மற்றென்னவென்றால்,
இம்மாதிரி அரசர்களையும் பெண்களையும் பற்றி எல்லாமக்களும்
நம்பாவிட்டால் அதற்காக தண்டனை என்று நிபந்தனை ஏற்படுத்தி, “அந்த
நாகராஜாவே உனக்கு சோறு போட்டுவிடுவார், ஆகாய கன்னிகையே
உனக்கு பெண்ஜாதியாய் இருந்து விடுவாள், மற்றபடி நீ, ஒன்றுக்கும் கவலைப்
படாதே” என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ளச் செய்து மக்களது
அறிவையும் நேரத்தையும் பொருளையும் பாழாக்கி அவர்களை வெறும்
அர்த்தமற்ற அடிமைப்படுத்தி பட்டினி போட்டு வதைப்பதில் தான்
கவலையேயொழிய வேறில்லை,
ஒரு மனிதன் கடவுள் இல்லை என்று சொல்வானேயானால் அவன்
உலகம் முழுவதும்.“அதற்கு அப்பாலும் இப்பாலும்” என்பவைகளெல்லாம்
அறிந்து நேரில் தேடித்தேடி பார்த்து காணாவிட்டால்தான் சொல்ல
வேண்டும் என்பது முழுதும் தப்பல்ல.
ஆதலால் அதைப்பற்றிய முடிவைப்
பற்றி நமக்கு இப்பொழுது ஒன்றும் அவசரமில்லை. ஆனால் அதற்கும்
மனிதன் வாழ்க்கைக்கும் உள்ள சம்மந்தம் எவ்வளவு? அதற்காக மனிதனின்
அறிவையும் நேரத்தையும் பொருளையும் ஏன் செலவு செய்து கொண்டே
இருக்கவேண்டும்? இதுவரையில் அநேகர் அப்படிச் செய்து வந்ததின் மூலம்
அடைந்த நன்மைகள் என்ன? அப்படிச் செய்யாததின் மூலம் ஏற்பட்ட
அல்லது ஏற்படப்போகும் கெடுதி என்ன? என்பன போன்றவைகளே
இந்நிலையில் முக்கியமாக ஆராயத்தகுந்த விஷயமாகும். இந்த சந்தர்ப்பத்
தில் வாசகர்கள் தயவு செய்து கடவுளைப்பற்றிய நம்பிக்கையும் கவலையு
மில்லாத புத்தர் நடந்து கொண்டதையும் கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து
187
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அவரது அருள் பெற்றவர் என்பவரான சம்மந்தருடைய நடவடிக்கையையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் கடவுளை நம்பினால் தான் யோக்கியனாக இருக்க
முடியுமா என்பதும் நம்பாதவன் எல்லாம் அயோக் கியனா என்பதும்
விளங்காமல் போகாது.
இதை ஏன் வலியுறுத்த நேரிடுகிறது என்றால் நம்மைச் சுற்றியுள்ள
மக்கள் படும் கஷ்டங்களும் நமக்கு வெளியில் உள்ள நாடுகளில் உள்ள
மக்கள் நிலையும் நடவடிக்கையும் அவர் கண்ட அற்புதக் காக்ஷியையும்
அறிந்து அந்நிலை பெற்று கஷ்டப்படுகிறவர்களை விடுதலை செய்ய
வேண்டுமென்கின்ற கருத்துக் கொண்டே ஒழிய வேறில்லை.
இந்த நிலையில் குட்டிச் சமயக்காரர்கள் தங்கள் நிலை என்ன?
அவைகளின் அவசியம் என்ன? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன?
என்பவைகளை தாங்களே சற்று தங்களது நடுநிலைமை அறிவைக் கொண்டு
யோசிப்பார்களானால் அவர்களது மடமையும் இதுவரை தங்கள் வாழ்வு
வீணானதும் ஒரு சிறிதாவது அவர்களுக்கு புலப்படாமல் போகாது.
குடி அரசு - தலையங்கம் - 28.10.1928
குடி அரசு - 1928 @)
188
ராமநாதபுரம் வில்லா 6போர்௫ தணைணர்
நியமணம்
ராமனாதபுரம் ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு. ராமநாதபுரம்
ராஜா பாஸ்கர சேதுபதியவர்கள் காலமான பிறகு அந்தஸ்தானத்திற்கு அந்த
ஜில்லாவில் கொடுமைப்படுத்தப்பட்டவரும் சமூகப்பிரமுகர்களில் ஒருவரை:
நியமனம் செய்ய வேண்டுமென்று நியமன அதிகாரங்களை சர்க்கார்.
தங்களுக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பதே அதற்காகத் தான்
என்பதையும் சர்க்காருக்கு கொஞ்சநாளைக்கு முன்பாக பல பத்திரிகைகள்
மூலம் எடுத்துக்காட்டப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
அன்றியும் அச்சில்லாவில் செல்வாக்கும் நாகரீகமும் செல்வமும்
அறிவு வளர்ச்சியும் பெற்ற சமூகங்களில் ஒன்றாகிய நாடார் சமூகப் பிரதிநிதி
களான பல கனவான்கள் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவையும் ஸ்தல
ஸதாபன இலாக்கா மந்திரியையும் தூது சென்று கண்டு தங்கள் குறைகளை
தெரிவித்ததும் அதற்கு அவர்கள் நம்பிக்கையான பதில் அளித்ததும்
வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
எனவே சர்க்கார் இது விஷயத்தில் பிரதிநிதித்துவப் பத்திரிகை
களினுடைய யோசனைகளை ஏற்றும் பிரதிநிதித் தூதுக் கூட்டத்தாரினுடைய
ஆசையைவமதித்தும் அந்த ஸ்தானத்திற்கு தென்னிந்திய நாடார் சமூகத்தில்
ஒரு பிரமுகரான திருவாளர் ॥111.&.செளந்திரபாண்டிய நாடார் அவர்களை
நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
திரு. நாடார் அவர்கள் ஒரு பெரிய செல்வந்தர். ஆங்கில பாஷா
ஞானமும் உடையவர். இரண்டு தடவை சென்னை சட்டசபைக்கு அங்கத்
தினராக நியமனம் செய்யப்பட்டவர். தற்கால சீர்திருத்த முறையின்படி
ஏற்பட்ட அரசாங்க முறையில் பொதுஜனங்களின் பேரால் ஆதிக்கம் பெற்ற
ககஷியான சுயேச்சைக் கக்ஷியின் முக்கிய பொறுப்பாளியானவர். எனவே
இப்பேர்ப்பட்ட கனவான் ஒரு ஜில்லா போர்டுக்கு தலைவராக நியமனம்
பெற்றதில் யாதொரு அதிசயமும் இல்லை.
189
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இந்நியமத்தினாலேயே நாடார் சமூகத்திற்கோ அல்லது திரு. செளந்திர
பாண்டிய நாடாருக்கோ பெரிய அனுகூலம் ஒன்றும் ஏற்பட்டுவிட முடியாதா
னாலும் சர்க்கார் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் விஷயத்தில் நேர்மையான
கவனம் செலுத்த தங்கள் கண்களைத் திருப்பி இருக்கிறார்கள் என நம்புவ
தற்கு ஒருவாறு இடம் உண்டாயிருக்கின்றது. இந்த முறையை சர்க்காரார்.
பின்பற்றுவார்களேயானால் இந்திய நாட்டிற்கு பிடித்த உள்நாட்டுச் “சனி”
ஒருவாறு சீக்கிரத்தில் தொலைந்து விடும் என்று நம்பலாம்.
இவ்விஷயத்திலும் பல இடையூறுகள் ஏற்பட்டு சிறிதுகாலம் சர்க்கார்.
கையைப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
இதற்கு உதாரணம் “சுதேசமித்திரன்” என்னும் ஒரு பார்ப்பன
பத்திரிகையின் வயிற்றெறிச்சலை பார்த்தாலே தெரியவரும். அது 26-10-28
தேதிபத்திரிகையில் எழுதுவது என்னவென்றால் -
“திரு. சவுந்திரபாண்டிய நாடார் சாமான்ய நிலைமையில் இந்தப் பதவி
பெற்றிருந்தால் இதைப்பற்றி தோஷங்கூற இடம் ஏற்பட்டிருக்காது.”ஆனால்
இதை “மந்திரி கோஷ்ட்டியினர் தங்களுடைய ககஷிக்கு பலம் தேடிக் கொள்
வதற்காக செய்த காரிய மென்று பொது ஜனங்கள் நினைப்பார்கள்.” அன்றி
யும் “யார் யாருக்கு எந்தெந்த வேலையை கொடுக்க வேண்டும் என்கின்ற
சிபாரிசு செய்ய வேண்டிய பொறுப்பு ஏற்பட்ட கொரடாவானவருக்கு அப்
பதவி கொடுத்ததில், கொடுத்தவருக்கும் ஏற்றுக்கொண்டவருக்கும் கெளரவ
மில்லை”
“ஸ்தல ஸ்தாபனத்தில் நெருங்கிய பழக்கமும் அந்த ஜில்லாவில் நேரடி
யான சம்மந்தமும் அவருக்கு இல்லை.” எனவே இந்த நியமனம் ஆக்ஷே
பிக்க தக்கதாம்.
இது எவ்வளவு முன்னுக்கு பின் முரண் என்பதையும் இதில் பார்ப்ப
னர்கள் தங்கள் ஆத்திரத்தை காட்டிக்கொள்ள எத்தனை விஷம யுக்தியை
உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும் இவர்கள் உள்ளுக்குள்
எவ்வளவு இடைஞ்சல்கள் செய்திருப்பார்கள் என்பதையும் இதிலிருந்தே
ஒருவாறு அறிந்துகொள்ளளாம், அதாவது திரு நாடார் தமது சாமன்ய நிலை
யில் இந்தப் பதவி அடைந்திருந்திருந்தால் தோஷம் கூற இடமிருக்காது
என்று சொல்லுகின்றார். சாமான்ய நிலையில் அடைந்ததாக வைத்துக்
கொண்டால் அப்போது திரு நாடாருக்கு ஸ்தலஸ்தாபன அனுபோகக் குறை
வும் அந்த ஜில்லாவின் நேரிட சம்மந்தமற்ற தன்மையும் மாறிவிடுமா என்று
கேட்கின்றோம். முன்பின் பழக்கமில்லாததும் பாஷை தெரியாததுமான ஒரு
நாட்டிற்கு திடீரென ஒரு பார்ப்பானை திவானாகவோ மந்திரியாகவோ
போட்டு அவனுககு மாதம் 3000, 4000 ரூபாய் கிடைப்பதானால் இந்த
குடி அரசு - 1928 @)
190
பார்ப்பனர்களுக்கு அது நல்ல நியமனமாகிவிடும்.
எந்த ஜில்லாவிலோ பஞ்சாங்கம் சொல்லி பிச்சை யெடுத்து எந்த
ஊரிலோ முனிசிபல் லாந்தர் வெளிச்சத்தில் படித்து எந்த காரியம்
பண்ணியோ பாசானாதாக பெயர் வாங்கி விட்டு எந்த ஊருக்கு போய்
எவ்வளவு பெரிய உத்தியோகம் பார்ப்பதானாலும் அது பார்ப்பனருக்கு
மாத்திரம் பொருத்த மானதும் திருத்தமானதுமான நியமனமாகிவிடும்.
உதாரணமாக மகாமகாகனம் சீனிவாச சாஸ்த்திரிக்கும் 33 கோடிமக்களுக்கும்
தென் ஆப்ரிக்காவுக்கும் 4000 ரூ. சம்பளத்திற்கும் அவர் செய்த வேலைக்கும்
பலனுக்கும் உள்ள சம்பந்தத்தை நினைத்தால்,
2 தடவை சட்டசபையில்
இருந்தவரும், வருஷம் ஏராளமான வருமானமுள்ள செல்வத்தை
உடையவராயிருந்து அதைநிர்வா கம் செய்து வருபவரும், சமீபகாலம் வரை:
மதுரையும் ராமநாதபுரமும் ஒரே ஜில்லாவாய் இருந்தபோதும் இப்போதும்
மதுரையையே தலைமை ஸ்தான மாக உடையதுமானதாகியதில் அனுபோகம்
பெற்றவரும் மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கத்தவராக இருந்தவரும்,
இந்த ஒரு சாதாரண வேலைக்கு பொருத்தமில்லை என்று இந்த பார்ப்பனர்கள்
சொல்லுவது ஒரு அதிசயமல்ல.
அன்றியும் வேறு யாரையாவது நியமித்து இருக்கக்கூடாதா? என்பதன்
மூலம் இவர்கள் வேறு சில ஆசாமிகளுக்கும் வக்காலத்து வாங்கி முயற்சித்
துப் பார்த்திருக்கின்றார்கள் என்பதும்
இவர் இதை அடைந்ததில் தங்களுக்கு
இஷ்டமில்லை என்பதும் நன்றாய் விளங்கும்.
எப்படியும் இந்த உலகம் உள்ளவரை இந்த மாதிரி ஒரு பார்ப்பனக்
கூட்டம், தங்களுடைய அடிமை அல்லாதவர்களும், தங்களுடைய வைப்
பாட்டி மக்கள்தான் மற்றவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளாதவர்களும்,
மற்றும் பார்ப்பனீயத்திற்கு அடிமையாக மறுப்பவர்களும், சுயமரியாதையில்
கவலை உள்ளவர்களும் எந்தப் பதவிக்கு வருவதானாலும் அவர்கள்
விஷயத்தில் ஏதாவது ஒரு குற்றத்தை கற்பனை செய்தும் அவர்களுக்கு
எதிரிகளையும் உள் கலகங்களையும் உற்பத்தி செய்தும் உபத்திரவித்துக்
கொண்டே வருவார் கள் என்பது கல்லுப் போன்ற உறுதி.
நிற்க, பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டோ அல்லது தாங்களாக
ஆசைப் பட்டோ இந்தப் பதவிக்கு முயற்சி செய்த கனவான்௧ளோ
எதிர்பார்த்த கனவான்களோ யாராவது ஒருவர் இருவர் இருக்கலாம்.
என்றாலும் அவற் றைப்பற்றி இனி கவனம் செலுத்தாமல் ராமநாதபுரம் ஜில்லா
போர்ட் மெம்பர் கள் திரு. நாடார் அவர்களுடன் ஒத்துழைத்து அவரது
தலைமைப் பதவியை நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும் முறையில்
நடத்திக் கொடுக்க உதவி புரிய வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
எவ்வளவு பெரிய கூட்ட மானாலும் அதில் ஒரு பார்ப்பனர் இருந்துவிட்டால்
191
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
எப்படியாவது கலகத்தை மூட்டிக் காரியத்தைக் கெடுத்துக்கொண்டே
இருப்பார்கள் என்பது பழ மொழியும் அனுபவமும் ஆகும்.
ஆதலால் அப்பழமொழியையும் அனுபவத்தையும் ராமநாதபுரம்
ஜில்லா போர்டு மெய்ப்பிக்காமல் இருக்க வேண்டுமாய் ஆசைப்படு
கின்றோம்.
கடைசியாக இந்நியமனத்திற்காக தமது உறுதியை உபயோகித்த
மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
திரு. நாடார் அவர்கள் உறுதியுடன் நின்று அந்தப் பதவியை வெற்றி
யுற நடத்துவதில் கொடுமைபடுத்தப்பட்ட மக்களுக்கும் தக்கபடி பயன்
படுத்துவார்கள் என்று நம்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.10.1928
குடி அரசு - 1928 @)
192
எஃர௱ாமசாமி முதலியாரும் வகுப்புவாரிய்
யிரதிநிதிக்துவமும்
திருவாளர் ௭. இராமசாமி முதலியார் அவர்கள் வகுப்புவாரித்
தொகுதியைப் பற்றி தமது அபிப்பிராயத்தை பத்திரிக்கைகளில் ஒரு
அறிக்கையின் மூலம் வெளியிட்டிருக்கிறார். அவ்வறிக்கை வருமாறு:-
“நான், சைமன் கமிஷன் முன்பாக பார்ப்பனரல்லாதார் கொடுத்த
சாட்சியங்களை கவனத்துடன் கவனித்து வந்தேன். பம்பாய் மாகாண
பார்ப்பனரல்லாதாரின் குறைகளைப் பற்றி நான் முடிவாக ஒன்றும் கூற
முடியாத நிலைமையில் இருக்கிறேன். தனித் தொகுதிகள் பார்ப்பன
ரல்லாதார் அடைவதற்கு 1919ல் பாராளுமன்றக் கமிட்டியினர் அனுகூலமாக
இருக்கவில்லை. என்றாலும் அதைப் பார்ப்பனரல்லாதார் சமாதானத்துடன்
சகித்து வந்தனர் என்று எனக்கு நினைவிருக்கிறது. சென்ற பத்து
வருடங்களின் நடவடிக்கைகளை ஆய்ந்து பார்க்கையில் முன் செய்த
தீர்மானம் இப்போது சைமன் கமிஷனால் மாற்றமடைதல் வேண்டு
மென்பதற்கு முதிர்ந்த காரணங்களைக் காட்டியதாக எனக்குத் தென்பட
வில்லை.
எங்களுடைய கட்சியாவது, நானாவது எவ்வகுப்பேனும் வகுப்பு
வாரித் தேர்தலடையும் நோக்கத்திற்கு மாறுபட்டிருக்கவில்லை.வகுப்புவாரித்
தொகுதித் தேர்தல்களால், பல கெடுதிகள் விளையுமென்ற கூற்றினை நான்
நம்பவில்லை.ஐக்கியத்தேர்தலாலும் பிரத்தியேக ஸ்தானங்கள் வழங்கப்படும்.
உரிமையாலும் வகுப்புப்பேதம் நீங்கி அமைதியும் திருப்தியும்
உண்டாகுமென்றும் நான் கருதவில்லை; இப்பொழுது பொது தொகுதியும்
ஒதுக்கி வைத்தலும் ஆகியவைகளை பார்ப்பனரல்லாதார் மீது சுமத்தப்
பெற்றிருக்கும் சென்னை மாகாணத்தின் நிலைமையே நான் கூறுவ
தற்குப் போதிய சான்றாகும். நான் இந்த அபிப்பிராயங்களை ஏற்கனவே
டில்லி சர்வ கட்சி மகாநாட்டின் முன்பாக எடுத்துரைத்திருக்கின்றேன்.
சென்னைப் பார்ப்பனரல்லாதாரைப் பற்றிய வரையில், நான்
அவர்களைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கு உரிமையில்லாவிட்டாலும் கூட,
சென்னைப் பார்ப்பனரல்லாதார்களின் எந்தப் பிரசித்திபெற்றதும் பொது
193
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ஜனங்களால் ஒத்துக் கொண்டதுமான மதிப்புள்ள சங்கங்களும் தங்களுக்குத்
தனித்தொகுதி
வேண்டுமென்று
எவர்கள்
முன்னிலையிலாவது
வேண்டுவரேல் அது ஆச்சரியப்படத்தக்கதாகும். இப்பொழுது சென்னை
யில் வழங்கி வருவது போல் பிரத்தியேக ஸ்தானங்கள் அளிக்கப்பட்ட
கொள்கையினையாவது அளித்த முறையினையாவது சென்னைப் பார்ப்பன
ரல்லாதார்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பார்ப்பனரல்லாதார் இதைப் பற்றி
லக்ஷியம் செய்யமாட்டார்கள்.
என்றாலும் பார்ப்பனரல்லாதாருக்குச் சென்னையிலாவது பம்பாயி
லாவது உரிமைப்பாதுகாப்பு அவசியமில்லையென்று நான் கூற முன் வர
வில்லை. இவர்களின் நலத்தினைக் குலைக்கும் எதிரிகளைப் பற்றி நாம்
பூனாவில் நடந்த விபரமான சாட்சியங்களில் கவனித்திருக்கின்றோம்.நான்
சென்ற சின்னாட்களாக பம்பாய் நிலைமையைப் பற்றி அறிந்து வந்த
வரையில், பார்ப்பனரல்லாதார்களுக்குள் கட்டுப்பாடும், பரஸ்பர நம்பிக்
கையும், உணர்வும் இன்னும் மிகுதியாய் இருக்கவேண்டுமென்னும் முடி
வான அபிப்பிராயத்தைக் கொள்ளுகின்றேன். நான் இவ்வாறு மறைக்காமற்
கூறுவதை என் பார்ப்பனரல்லாத நண்பர்கள் மன்னிப்பார்கள் என்று
நம்புகிறேன்.”
இவ்வறிக்கையில் எவ்வளவுதான் சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும்
வார்த்தைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இரண்டு விஷயங்கள் தெளிவாக
அமைந்துவிட்டன. அதாவது ஒன்று “செல்வாக்கும் மதிப்பும் பெற்று பொது
ஜனங்களால் ஒப்புக்கொள்ளகூடியதுமான சென்னையில் உள்ள எந்த
பார்ப்பனரல்லாதார் சங்கமும் தனித் தொகுதிகளைக் கேட்டால் நான்
மிகுதியும் ஆச்சரியப்படுவேன்” (அதாவது கேட்க மாட்டார்கள் என்று
நினைக்கிறேன் என்பது) மற்றொன்று, “பொது தொகுதிகளின் மூலம் சில
ஸ்தானங்களை ஒதுக்கி வைப்பதையும் சென்னை மாகாணத்தார் லக்ஷியம்.
செய்யமாட்டார்கள்” என்பதாகும்.
எனவே இந்த ஸ்டேட்மெண்டிலிருந்து தனித்தொகுதியும் வேண்டாம்
ஒதுக்கி வைப்பதும் வேண்டாம் என்பதே அவரது அபிப்பிராயத்தின்
சாரமெனக் கொள்ளவேண்டியதாகும். இப்படிச் சொன்னவர் வேறு
வழியும்
காட்டவில்லை. எனவே பார்ப்பனரல்லாதாராகிய நாம் இவ்விரண்டும்.
வேண்டியதில்லை என்று முடிவு செய்து விட்டோமானால் பிறகு பார்ப்பன
ரல்லாதார் இயக்கம் என்பதாக ஒரு தனி அரசியல் இயக்கம் எதற்காக
இருக்கவேண்டும்? மற்றபடி பார்ப்பனரல்லாதார் பூண்டு உள்ளவரை உத்தி
யோகத்திற்காகவும் உத்தியோகமற்ற பிரதிநிதித்துவத்திற்காகவும்
சதாசர்வகாலம் அரசாங்கத்தின் காலடியில் தொங்கிக் கொண்டிருப்
பதற்காகவா என்று கேட்கின்றோம். நிற்க “வகுப்புவாரித் தொகுதி எந்த
பார்ப்பனரல்லாத செல்வாக்கும் பொதுஜனப் பிரதிநிதித்துவமும் மதிப்பும்
குடி அரசு - 1928 @)
194
கொண்ட சங்கங்களும் கேட்காது” என்பதானது பொறுப்புள்ள வார்த்
தையா என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுமாய்க் கோருகிறோம்.
முதலாவதாக, திரு முதலியார் அவர்கள் மகமதியர்கள், கிறிஸ்தவர்
கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலிய சகோதரர்களை பார்ப்பனரல்லாதார்.
என்கின்ற கூட்டத்தில் சேர்த்திருக்கிறாரா அல்லது அவர்களை ஒதுக்கி
விட்டாரா என்பது இதிலிருந்து சந்தேகமாயிருக்கின்றது. எனவே ஒரு சமயம்
அவர்களை ஒதுக்கி அந்த ஸ்டேட்மெண்டில் இந்த வார்த்தைகளை வழங்கி
இருப்பாரானால் இதுவரை பார்ப்பனரல்லாதார் என்னும் பேரால் அரசியலில்
நடத்தி வந்த காரியங்களும் எழுதியும் பேசியும் வந்த காரியங்களும்
உண்மையல்ல வென்றுதான் ஏற்படும்.
ஒரு சமயம் அவர்களையும் சேர்த்துதான் சொல்லப்பட்டது என்று
சொல்வாரானால், கண்டிப்பாய் திரு. முதலியாரின் இந்த ஸ்டேட்மெண்டு
முக்கியமாக அச் சமூகத்தாருக்கு பெரும்பாதகத்தையும் அச்சமூகத்தாரின்
பிரதிநிதித்துவ சங்கங்களுக்கு அவமானத்தையும் விளைவிப்பதாகும்.
எப்படியெனில் “எந்த செல்வாக்கும் மதிப்பும் பெற்ற சங்கமும்
தனித்தொகுதியையோ ஒதுக்கி வைப்பதையோ கேட்காது” என்று அவர்
சொல்வதால் விளங்கும். பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாகச் சென்னை
மாகாணத்திலும் உள்ள மகம்மதிய கிருஸ்தவ, ஆதி திராவிட சங்கங்கள்,
சபைகள், அவற்றின் பிரதிநிதிகள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை
வலியுறுத்திக் கொண்டே வருகின்றன.
அதுமாத்திரமில்லாமல் மீதியுள்ள பார்ப்பனரல்லாதார்களான
முதலியார், செட்டியார், நாயக்கர், நாயுடு முதலாகிய பட்டங்கள் கொண்ட
ஒவ்வொரு தனித்தனி வகுப்புச் சங்கங்களும் மகாநாடுகளும் பார்ப்பன
ரல்லாதார் என்கின்ற பெயரால் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தையும் ஒதுக்கி
வைப்பதையும் கேட்டுத் தங்கள், தங்கள் சமூக மகாநாடுகளில் தீர்மானங்
களும் செய்து கொண்டு வருகின்றன. எனவே திரு. முதலியார் அவர்கள்.
தயவு செய்து எந்த சமூகத்தாராவது தனித்த முறையிலாவது பிரதிநிதித்துவ
முறையிலாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவமோ ஒதுக்கி வைப்பதோ வேண்
டாம் என்று சொல்லிவிட்டதாக தயவு செய்து எடுத்துக்காட்டுவாரா என்று
கேட்கின்றோம்.
அன்றியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமோ ஒதுக்கி வைத்தலோ
இல்லாவிட்டால் மகமதியர், ஆதித்திராவிடர் ஆகியவர்களின் கதி என்ன
வாக முடியும் என்பதைப்பற்றி திரு. முதலியார் அவர்கள் சற்றாவது யோசித்து
அதற்கு ஏதாவது சமாதானம் அந்த ஸ்டேட்மெண்டில் கூறி இருக்கின்றாரா
என்று கேட்கின்றோம்.
195
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அரசியல் உலகில் பார்ப்பனப் பத்திரிகைகளின் செல்வாக்கு காரணத்
தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கின்ற பேச்சு பேசுபவர்.
களுக்கு செல்வாக்கு கிடைப்பது கஷ்டம் என்கின்ற காரணம் ஒன்று தவிர.
வேறுவிதமாக வகுப்புவாரி முக்கியத்துவத்திற்கோ ஒதுக்கிவைப்பதற்கோ
விரோதமானதும் அவசியமில்லாததுமான காரணம் ஏதாவது ஒன்றை
எடுத்துக் காட்டமுடியுமா? என்று கேட்கின்றோம்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட
இயக்கத்திற்கு தலைவர்களாயிருந்த - ஒருகை விரலை விட்டு எண்ணிவிடக்
கூடிய - சில தலைவர்களுக்கு மாத்திரம் உயர்பதவியும் யோக்கியதையும்
மதிப்பும் கிடைத்துவிட்ட காரணத்தினாலேயே இனிமேல் அந்த சமூகத்
திற்கே எந்த வித குறைவும் இல்லையென்று தீர்மானித்து விட்டார்களா?
அல்லது சர்க்கார், எப்படி நமக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்டு
விட்டால் மக்கள் தங்களை வந்து தொங்கிக் கொண்டும் தங்களுக்கு சதா
சர்வகாலம் அடிமையாய் இருந்து கொண்டும் இருக்கும் தன்மை போய்
விடுமே என்று பயப்படுகிறார்களோ அதுபோல் இந்த வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம் ஏற்பட்டுவிட்டால் இந்தத் தலைவர்கள் வீட்டு வாசலில் அதிகா
ரத்திற்கும் பதவிக்கும் ஆள்கள் வந்து தொங்கிக் கொண்டும் பல்லைக்காட்டி
கெஞ்சிக் கொண்டும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்தார்களா என்று
கேட்கின்றோம்.
சாதாரணமாக திரு. முதலியாரவர்கள், இந்துக்கள் என்பவர்களுக்
குள்ளாகவே ஆதித்திராவிடர்கள் என்பவர்களுக்கு அரசியலில்மேல்கண்ட
இரண்டும் இல்லாமல் வேறு என்ன வழி சொல்லக் கூடும் என்று கேட்கின்
றோம். தவிர, ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் திராவிடன் பத்திரிகையிலும்
அடிக்கடி எழுதி கணக்கு காட்டி வரும் “ஏகபோக” உரிமையை தடுத்து
எல்லோருக்கும் “சமசந்தர்ப்பம்” கொடுக்க இந்த இரண்டு வழியுமில்லாமல்
வேறு என்ன மார்க்கம் காட்டக்கூடும் என்று கேட்கின்றோம்.
திரு. முதலியாரவர்களின் ஸ்டேட்மெண்டானது, பார்ப்பன
ரல்லாதார் இயக்கம் இதுவரை அரசியலில் செய்து வந்த வேலையை
அடியோடு குழி தோண்டிப் புதைப்பதற்கு இடம் கொடுப்பதுடன் அந்த
சமூகத்திற்கே நிரந்தர அரசியல் அடிமைத்தனத்தை நிலைநாட்டுவதற்கு
உதவி செய்வதுமாகும் என்றே நாம் சொல்லுவோம்.
இது மாத்திரமல்லாமல் மகமதியர்களையும் ஆதிதிராவிடர்களையும்
நசுக்கிவிட ஏதுவானதாகவும் முடியும்.அன்றியும் பார்ப்பனர்களும் அவர்தம்
கூலிகளும் இரண்டொரு சுயநலக்காரர்களும் போடும் போலி
கூப்பாடுகளை மெய்ப்பிக்கவும் உற்ற துணையாகவும் இருக்கும். முடிவாக
குடி அரசு - 1928 @)
196
வகுப்பு வித்தியாசம் நீங்கி எல்லோரும் ஓற்றுமையாய் இருக்கவேண்டும்
என்கின்றதைவிட எல்லோருக்கும் சம உரிமை இருக்கவேண்டும் என்பதே
நமது முக்கிய கொள்கை. ஏனெனில் சமஉரிமை கிடைத்துவிட்டால்
தானாகவே ஒற்றுமையும் வந்துவிடும். சமஉரிமை இல்லாத இடத்தில்
உண்மை ஒற்றுமை இருக்கமுடியாது. ஆகவே சமஉரிமைக்காக எவ்வளவு
பெரிய கலகமும் ரத்தக் களரியும் ஏற்படுவதானாலும் அதைப்பற்றி யாரும்
கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் சுதந்திரமும் சமத்துவமும்
இல்லாத ஒற்றுமை வேறு; அவைகள் உள்ள ஒற்றுமை வேறு, ஆதலால்,
சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்குமாக எவ்வளவு ஒற்றுமையை தியாகம்
செய்தாலும் அச்சுதந்திரமும் சமத்துவமும் கிடைத்த பிறகு தானாகவே
உண்மையான ஒற்றுமை தோன்றிவிடும். ஆதலால் எந்த முறையிலாவது
எவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்டாவது ஒவ்வொரு வகுப்பும் சமத்துவமும் சம
உரிமையும் பெறமுயற்சிப்பதே பொறுப்புள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்
லாதாரினுடையவும் கடமையாகும்.
குடி அரசு - தலையங்கம் - 04.11.4928.
197
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பிரசாரப் பன்னிக்கூடம்
ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரியாதைப்
பிரசார பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31-தேதியில் ஆரம்பிப்பதாய்
தீர்மானித்திருந்ததில், அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக்
கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு
அவசரத்தினால் அந்த தேதிக்கு வர செளகரியப்படவில்லை என்றும் ஒரு
வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதன் பேரில்
தள்ளிவைத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. ஆனாலும் அந்தப்படி ஒரு
வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று
சமிபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களில் சிலராவது
தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும்
நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும்
அசெளகரியமும் ஏற்படக்கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த
பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டியதாயிற்று.
திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட
ஆரம்பவிழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப்
பட்டு முன் தெரிவித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்தவுடன் வரத் தயாரா
யிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - அறிவிப்பு - 04.11.1928
குடி அரசு - 1928 @)
198
மந்திரி 5.முத்தையா முதலியார்
வாழ்க! வாழ்க! வாழ்க!
யோகத்தில் வகுப்புவாரி ரதிறிதித்துவர்
நமது மந்திரி திரு.5 முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத்
தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை
நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு
நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து
நியமிக்கவேண்டும் என்பதாக ஒருவிதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபு
வாலும், மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும்.
சம்மதம் பெற்று அமுலுக்கு கொண்டு வரவேண்டியதான சட்டமாக்கி
விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நியமிக்க
வேண்டிய ஸ்தானங்கள் 12 இருக்குமானால் அவைகளில்
பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களிலிருந்து
5
பார்ப்பனர்களிலிருந்து
மகம்மதியர்களிலிருந்து
ஐரோப்பிய ஆங்கிலோ இந்தியர்கள்
அடங்கிய கிறிஸ்தவர்களிலிருந்து
2
தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து
1
ஆக
|
நபர்களை வகுப்புவாரி முறையில் தெரிந்தெடுத்து நியமிக்க
வேண்டும் என்கின்ற சட்டம் செய்திருக்கிறார். எனவே மேல்படி இலாக்
காவுக்கு எவ்வளவு பேர் தேவை இருந்தாலும் இந்த விகிதப்படியே
நியமிக்கப்படவேண்டும் என்பதாகும். இந்த திட்டத்தின் விகிதங்களில் 100-
க்கு 3 வீதம் ஜனத்தொகை உள்ள பார்ப்பனருக்கு 100-க்கு 16 உத்தியோகம்
வீதமும், 100-க்கு 20 வீதத்திற்கு மேல்பட்ட மகம்மதியர்களுக்கு 100-க்கு 16
விதமும், 100-க்கு 20 வீதம் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற
வகுப்பாருக்கு 100-க்கு 8 வீதமும் உத்தியோகங்கள் பங்கு பிரித்துக்
கொடுத்திருப்பதானது மிகவும் அநியாயமானதென்றே சொல்லுவோம்.
199
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ஒருசமயம் உத்தியோகத்திற்கு ஏற்ற நபர்கள் குறைவான பங்கு கொடுக்
கப்பட்டிருக்கும் வகுப்புகளில் கிடைக்கவில்லை என்று யாராவது சமாதானம்.
சொல்ல வருவார்களானால் அது அந்த வகுப்பார்களுக்கு உத்தியோகங்கள்.
கொடுப்பதில் அவர்களுக்கு செய்திருக்கும் கொடுமையை விட பல மடங்கு
மேல்பட்ட கொடுமையாகும். என்னவெனில், உத்தியோகப் பங்கில்
மண்ணைப் போட்டதல்லாமல் அந்த வகுப்புகளை உத்தியோகத்திற்கு
லாயக்கில்லை என்று அவமானப் படுத்தியதாகும். இந்த திட்டத்தை
மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒப்புக் கொள்வதானது “பிச்சை
போடாவிட்டாலும் கவலையில்லை. தயவு செய்து நாயை பிடித்துக்
கட்டுங்கள்” என்றபடி ஒரு வீட்டில் பிச்சைக்கு போன ஒருவர் மீது
வீட்டுக்காரர் நாயை அவிழ்த்துவிட்டு கடிக்கக் சொன்னபோது எஜமானனைப்
பார்த்து அந்தப் பிச்சைக்காரர் கெஞ்சினது போல்தான் ஆகும்.
எனவே, யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை தீர்மானித்துக்
கொள்ளும் விஷயத்தில் சற்று கஷ்டமோ அதிருப்தியோ இருந்தாலும்
சர்க்கார் உத்தியோகம் என்பவைகள் பொது சொத்தென்பதையும் அதில்
எல்லோருக்கும் பங்குண்டு என்பதையும் ஒப்புக்கொண்டு பங்கு பிரித்துக்
கொடுக்கவும் பங்கு பிரித்துக் கொள்ளவும் ஒரு ஆதாரம் ஏற்படுத்திக்
கொள்ள இடம் கிடைத்ததே இது சமயம் நமக்கு ஒரு பெரும் வெற்றியாகும்.
இதுபோலவே மற்ற இலாக்காக்களுக்கும் ஒரு விதி ஏற்பட்டு விடுமானால்
நமது நாட்டைப் பிடித்த கேட்டில் பெரும் பாகம் தொலைய மார்க்க மேற்பட்டு.
விட்டதென்றே சொல்லுவோம். இந்த முறைக்கு ஒரு சமயம், அதிகப்
பங்குகளுக்கு பல வழிகளிலும் முயற்சித்து கொள்ளை அடித்து அனுபவித்து
வரும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்டாலும், நமது அரசாங்கத்தார் ஒப்பு
கொள்வது என்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான காரியம் என்பதே
நமது அபிப்பிராயம்.நமது நாட்டில் வெள்ளைக்கார ஆட்சியானது இந்நாட்டு
மக்களின் இவ்வளவு அதிருப்தியின் மீதும் கவலையற்று பொருத்தமற்ற
கொடுங்கோன்மைமுறையில் நடைபெற்று வருவதற்கு காரணமே ஒரு
வகுப்பை ஒரு வகுப்பார் ஏய்த்து கையில் வலுத்தவன் காரியம் என்பது போல்
வலுத்தவன் ஏக போக உரிமை அடையும் படியான மாதிரியில்
அமைக்கப்பட்டிருக்கும் தன்மை தான் என்றே சொல்லுவோம்.
இத்தன்மையே உள் கலகங்களுக்கும் வகுப்புச் சச்சரவுகளுக்கும்
ஒற்றுமையின்மைக்கும் இடமாய் இருந்து வருகின்றது. எனவே அவர்.
களுக்குள்ள இந்த சவுகரியமான தன்மையை மாற்றிவிடக் கூடியதும் அடி
யோடு கவிழ்த்துவிடக் கூடியதுமான வகுப்பு உரிமைக் கொடுத்து விட்டால்
எப்படி ஏக போக உரிமைபோய்விடுமோ அதைப்போல் ஏக போக ஆட்சி
யும் போய்விடும். ஆதலால் ஏக போக ஆட்சியை எதிர்பாக்கும் எந்த
அரசாங்கத்தாரும் இந்த வகுப்புவாரி உரிமையை ஒப்புக் கொள்ளவே
மாட்டார்கள். இருந்தாலும் எப்படியோ சாமர்த்தியமாகவோ தந்திரமாகவோ
குடி அரசு - 1928 @)
200
நமது திரு.எஸ். முத்தையா முதலியார் அவர்கள் விதி ஏற்படுத்திக் கொண்டது
போல் மற்ற மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் ஒருவிதி செய்து
கொண்டார்களானால், அதிலும் முக்கியமாக திருவாளர்கள் கிருஷ்ணன்
நாயர் அவர்களும் மகமது உஸ்மான் அவர்களும் தங்கள் தங்கள் இலாக்கா
வுக்கு திரு. முத்தையா முதலியாரைப் பின்பற்றி இம்மாதிரி ஒரு ஏற்பாடு
செய்து வைப்பதில் கவலை எடுத்து வெற்றி பெறுவார்களானால் அதுவே
அவர்களது உத்தியோக காலத்தை வெற்றி பெற நடத்தியதாகும் என்பதை
அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம். அப்படிக்கில்லாமல் 30
நாளை எண்ணிக் கொண்டிருப்பதும் அது எண்ணி முடிந்தவுடன் ரூபாய்
5333-5-4 ஐ எண்ணுவதும் ரூ 5333-5-4-ஐ எண்ணி ஆனவுடன் மறுபடியும்
30 நாட்களை எண்ணுவதும், மீதி ஏதாவது கொஞ்ச நஞ்சம் நேரமிருக்கு
மானால் தங்கள் அண்ணன், தம்பி,மாமன், மைத்துனன், சிநேகிதன் அடிமை
முதலியவர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதிலும் மறுபடியும்
தங்களுக்கு மேல் உத்தியோகங்கள் கிடைப்பதற்கு தந்திரமும் சூழ்ச்சியும்
கண்டுபிடித்துக் கொண்டிருப்பதில் செலவழிப்பதுமான காரியத்தை செய்து
கொண்டிருந்தால் அவர்கள் என்னவென்றழைப்பது என்பதை பொது
ஜனங்களுக்கே விட்டு விடுகிறோம்.
இந்த நிலையில் பச்சைப் பார்ப்பனப் பத்திரிகையாகிய “சுதேச
மித்திரன்” 8-11-28 தேதி தலையங்கத்தில் “வகுப்புப்பித்தம் தலைக்கேறி
விட்டதா?” என்கின்ற தலைப்புக் கொடுத்து தனது ஆத்திர விஷத்தைக்
கக்கியிருக்கின்றான்.
அதாவது, எடுப்பிலேயே “ ஜஸ்டிஸ் ககஷியார் மந்திரிகளாக இருந்த
காலத்தில் செய்யத் துணியாத அக்கிரமத்தை ...கனம் எஸ்.முத்தையா
முதலியார் செய்யத் துணிந்து விட்டார்” என்று ஆரம்பித்து “இது சட்ட
விரோதமான காரியமாகும்” என்று முடித்திருக்கிறான்.
“மித்திரனின்” ஜாதிப்புத்தி இதுதான் என்பது ஏற்கெனவே எல்லோ
ரும் அறிந்ததுதான். என்னவெனில் பார்ப்பனருக்கு இஷ்டமில்லாத எந்தக்
காரியமானாலும் அதைப்பற்றி உலகமே முழுகிப் போய்விட்டது போல
முதலில் கூப்பாடு போடுவார்கள். அது பலிக்கவில்லையானால் பிறகு
சட்டத்தைக் கொண்டு வந்து சட்டம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.மனுதர்ம
சட்டத்தைப்போலவே வெள்ளைக்கார சட்டமும் பார்ப்பனர்கள் பிழைப்
புக்குத் தக்கபடி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்கின்ற தைரியம் அவர்க
ளுக்கு இருப்பதால் அவர்களுக்கு சட்டம் என்கிற ஆயுதத்தைக் கொண்டு
எப்படியும் பேசலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி இந்த
நினைப்புக்கு இடம் கொடுக்கக்கூடாது. நாம் நியாயத்திற்கு விரோதமாய்
இருக்கும் எந்த சட்டத்தையும் மண்டையில் அடித்து உடைத்து சுட்டு
பொசுக்கத் தயாராகயிருக்க வேண்டும்.
201
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
“மித்திரன் ஜஸ்டிஸ் கக்ஷியை புகழ்ந்ததற்கும் ஆதாரம் இல்லாமல்
போகவில்லை. ஏனெனில் சென்ற தேர்தலில் பார்ப்பனர்களின் விஷமப்
பிரசாரத்தால் ஜஸ்டிஸ் ககிக்கு நல்ல சூடு கிடைத்துவிட்டதால் இந்தத்
தேர்தலிலும் அப்படி ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தில் சூடுபட்டவர்கள்
பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆகலாம் என நினைத்து குட்டிக் கரணம்.
அடித்து வருகின்றார்கள். இதன் பலன்களில் ஒன்றுதான் திரு. ராமசாமி
முதலியாரவர்கள் தலை ஒருவருக்கும் வால் ஒருவருக்கும் காட்டுவது. இதன்
பலன்தான் திரு. பாத்ரோ அவர்கள் சமூக சீர்திருத்தத்திற்கு சட்டம்
செய்யகூடாது என்றது. இதன் பலன்தான் இப்பேர்பட்ட திரு. பாத்ரோ
அவர்களை பனகால் அரசர்சைமன் கமிட்டி மெம்பராக்கினதும்
அவரை அக்
கமிட்டிக்குத் தலைவராக்கினதும் ஆகும். இதன் பலன் தான் தொழிலாளர்கள்.
கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில் சற்று கவலை கொள்ளாமல் தங்கள்
ஆதிக்கத்தின் பெருமையில் அலட்சியமாயிருந்ததும் இன்னும் இது போன்ற
பல இரகசியங்களும் ஆகும். எனவே இதன் சக்தியில் இன்னும்
நடப்பதைப்பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம். எது எப்படியானாலும்,
“மித்திரன் ஜாதி என்ன சொன்னாலும், ஜஸ்டிஸ் ௧௯9 எப்படி அந்தர்
அடித்தாலும் நமது மக்கள் தைரியத்தை விடாமல் அதிகாரத்திலும் பதவி
யிலும் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நமது வீரர் முத்தைய்யா முதலியார்
அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.
குடி அரசு - தலையங்கம் - 11.11.1928
குடி அரசு - 1928 @)
202
நமது குழந்தைகள் பார்ப்பண
உயாத்தியாயர்கனால் ப௫ம் கஷ்டம்
“திராவிடன்” பத்திரிக்கை 26.10.28ல் தலையங்கத்தில் எழுதுவதாவது:-
“நம் மாகாணத்தில் பார்ப்பன ஆசிரியர்களின் கொடுமையால்
பார்ப்பனரல்லாத மாணவர்கள் படுந்துயரை என்னவென்று எடுத்து
ரைப்பது?பார்ப்பன ஆசிரியர்கள் பார்ப்பனரல்லாத மாணவர்களை
வகுப்புகளில் சரியாய் நடத்துவது கிடையாது; பாடம் செவ்வனே
சொல்லிக் கொடுப்பதும் கிடையாது. ஒரு மாணவன் “குடி அரசு”
படிக்கின்றவனாகவோ அன்றி “திராவிடன்” படிக்கின்றவனாகவோ
அல்லது “ஜஸ்டிஸ்” படிக்கின்றவனாகவோ இருந்து விட்டால் அவன்
பாடும் திண்டாட்டந்தான். அதுவும் இராமசாமி நாயக்கர் பிரசங்கத்திற்
குப் போய்விட்டால் இன்னும் திண்டாட்டம். அவன் எவ்வளவு
கெட்டிக்காரனாக விருந்தபோதிலும் அவனை பரிகைஷையில்
மொட்டையடித்து விடுவார்கள். இத்தகைய கொடும் நிகழ்ச்சிகள்
இம்மாகாணத்தில் பல இடங்களில் நேர்ந்துள்ளனவென்பதை நாம்
அறிவோம். இன்று லால்குடி போர்டு ஹைஸ்கூலில் அப்பள்ளிக்
கூடத்துப் பார்ப்பன ஆசிரியர்களால் பார்ப்பன ரல்லாத மாணவர்கள்
எவ்வளவு கொடுமையாக நடத்தப்படுகின்றார்கள் என் பதை ஒரு
கமிட்டியார் விசாரணை செய்வார்களாயின் திரு. நாவேல் அவர் கள்
சைமன் கமிஷன் முன்பு கூறியது உண்மையென்பது புலனாகிவிடும்.”
இந்த வாக்கியங்களை நாமும் முழுமனதோடு ஆதரிக்கக் கடமைப்
பட்டிருக்கின்றோம். ஏனெனில் நாமும் லால்குடிக்கும் அதுபோன்ற பல ஊர்.
களுக்கும் சென்றிருந்த காலையில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் அவ்வப்
பாட சாலையில் பார்ப்பன உபாத்தியாயர்களால் படும் துன்பங்களைக்
கேட்டதில் நமது நெஞ்சமும் குமுறுகிறது.
லால்குடி பள்ளிக்கூடத்தின் கொடுமைக்கு ஒரு சிறு உதாரணம்
மாத்திரம் கூறி மேலே சொல்லுவோம். அதாவது லால்குடி பள்ளிக்கூடத்தைச்
சேர்ந்த வாசக சாலைக்கு “இந்து” “சுதேசமித்திரன்” முதலிய பார்ப்பனப்
203
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பத்திரிகைகள் போர்டார் செலவில் வரவழைக்கப்படுகின்றன. “திராவிடன்”
“ஜஸ்டிஸ்” பத்திரிகையும் வரவழைக்க வேண்டுமென்று நூற்றுக்கணக்கான
மாணவர்கள் கையொப்பமிட்டு தலைவர்களுக்கு அனுப்பியும் பல
வேண்டுகோள்கள் பல மாதக்கணக்காகியும் மதிக்கப்படாமலிருப்பதோடு
சுயமரியாதையில் பற்றுள்ள மாணவர்கள் உபாத்தியாயர்களால் வெறுக்கப்
பட்டு வருகின்றனர்.
எனவே ஜில்லா தாலூக்கா போர்டு தலைவர்களும் முனிசிபல்
தலைவர் களும் தாங்களும் தங்கள் மக்களும் தலைவர்கள் பதவியை
அனுபவிப் பதற்கு மாத்திரம் அந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றதாகக் கருதி
அதற்கேற்ற காரியங்களுக்கே தங்கள் முழு நேரத்தையும் அறிந்து
செலவழிக்காமல்
சத்தியத்திற்கும் நாணயத்திற்கும்
ஒரு
சிறிது
பாகத்தையாவது செலவிடும்படி வேண்டுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.11.1928
குடி அரசு - 1928 @)
204.
திரு.எ.ராமசாமி முதலியாரின் அறிக்கை
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி நாம் பத்திரிகைகளுக்கு
அனுப்பிய சேதிக்கும் சென்றவாரக் “குடி அரசு” “திராவிடன்” கட்டுரை
களுக்கும் திரு.எ. இராமசாமி முதலியாரவர்கள் பதில் அளித்திருப்பதாவது..
“நான் தனித்தொகுதி சம்மந்தமாக வெளியிட்ட அறிக்கையைப்பற்றி.
எனது மதிப்பிற்குரிய நண்பரும் தலைவருமான திரு. ராமசாமி நாயக்கரின்
அபிப்பிராயத்தை நான் படித்துப் பார்த்தேன்.
நான் வெளிப்படுத்திய அபிப்பிராயம் என் சொந்த அபிப்பிராயம்
என்று நான் அசோசியேட் பிரஸ் நிரூபரிடம் சொல்லியிருந்தும் அதை அது
வெளிப்படுத்தாததற்கு காரணம் இன்னது என்பது எனக்கு தெரிய வில்லை.
தற்கால நிலைமையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரண்டு
சமூகங்களுக்கும் உள்ள பலமான மனக்கசப்பானது தனித்தொகுதி ஏற்படுத்து
வதன் பயனாய் ஒரு அளவுக்கு பாதுகாப்பளிக்கக்கூடியதாகவும் சமநிலைமை
உண்டாக்கத்தக்கதாகவும் இருக்குமென்று சொல்லியிருந்தேன்.
ஆனாலும் இந்தசமயத்தில் அதை வற்புறுத்துவது பார்ப்பனரல்லாதார்.
நன்மைக்கு அனுகூலமானதல்ல என்று நம்புகின்றேன். ஏனெனில் மேல்
கண்ட தனித்தொகுதித் தேர்தல் முறை ஏற்பட்டால் இனி ஏற்படப்போகும்
பார்ப்பனர்கள் எவ்வளவு அடையக்கூடுமோ அதை விடவும் அவர்கள்
எத்தனை ஸ்தானங்களுக்கு உரியவர்களோ அந்த ஸ்தானங்களை விட அதிக
மாகவும் அடைந்துவிடக்கூடுமென பயப்படுகின்றேன்.
இந்த காரணங்களாலேயே நாம் தனித்தொகுதித் தேர்தல் முறைகேட்ப
தானது பார்ப்பனர்களுக்குக்கூட அனுகூலமானதும் ஆசையுள்ளதுமாக
இருக்குமென்றே நான் கருதுகிறேன்.
நான் பம்பாய் மாகாணத்தின் நிலைமையை நன்கு தெரிந்தபிறகுதான்
தைச்சொல்ல
முன்வந்தேன் என்பதை
எனது
நண்பர்கள்
அறியவேண்டும்.
தச்
முன்வந்
த
எனது ந
205
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இந்தமாதிரி நான் சொல்வதற்கு எனக்கு தைரியமேற்பட்டதற்கு
காரணம் என்னவென்றால் திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்துவருகின்ற
அபாரமான வேலையின் பயனாய் ஏற்படப்போகும் பலனில் எனக்கு
ஏற்பட்ட உறுதியான நம்பிக்கையேதான்.
எப்படியிருந்தபோதிலும் நான் எனது தலைவர்களுடைய அபிப்பி
ராயப்படி நடக்க எப்போதும் தயாராயிருக்கிறேன். மற்றபடி உத்தியோக சம்
மந்தமாக வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயத்தில் என்னுடைய அபிப்பி.
ராயங்கள் எல்லாருக்கும் தெரிந்ததாகும். அதிலிருந்து நான் ஒரு சிறிதும்
மாற்றமடையவில்லை.
பம்பாயைப் பொருத்தவரையில் நான் கவலைப்படுவது நல்ல
விஷயங்களை சரியான படி எடுத்துச்சொல்லாததால் கெட்டுப்போய்
விடுகிறதே என்பது தான்.”
என்பதாக தமது பதிலில் தெரிவித்திருக்கின்றார். இதைப்பற்றிய நமது
அபிப்பிராயத்தை பின்னால் வெளிப்படுத்தலாம் என்பதாக எண்ணி
யுள்ளோம்.
குடி அரசு- குறிப்புரை - 1111928
குடி அரசு - 1928 @)
206
“ MGameor”
“ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றை சென்ற
ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டிவீரன்பட்டி திரு. செளந்திர
பாண்டிய நாடார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தி 7ஆம் தேதி
புதன் கிழமை முதல் இதழ் வெளிப்படுத்தி விட்டோம். இனி அதை ஆதரித்து
அதன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்து வைக்க வேண்டியது பொது
மக்களின் கடமையாகும்.
“ரிவோல்ட்” பத்திரிகையின் ஆரம்பத்தின் உத்தேசமெல்லாம் நமது
நிலைமையையும் கொள்கையையும் தமிழ் மக்கள் தவிர மற்ற மக்களுக்கும்
தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும்.
நமது நிலைமை சென்னை
மாகாணத்திலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷை
களை நாட்டு பாஷையாகக் கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை
என்றால் வெளி மாகாணங்களுக்கும் வெளி தேசங்களுக்கும் எப்படித்
தெரிந்திருக்க முடியும்? உதாரணமாக ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன்
திரு. டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது,
“சென்னை பார்ப்பனரல்லாதார்களுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப்
படவில்லை” என்று சொன்னபோது “திரு. 8.11. சர்மா என்பவர் இந்திய
அரசாங்கத்தில் நிர்வாக சபை மெம்பராயிருந்து 6500 ரூபாய் சம்பளம்
வாங்குகிறாரே, அது
போதாதா” என்று இந்தியா மந்திரி சொன்னாராம்.
“அதற்கு திரு.டாக்டர் நாயர் அவர்கள் நான் இந்தியாவை விட்டு புறப்படும்
வரை திரு.13.?1. சர்மா அவர்கள் பார்ப்பனராயிருந்தார், நான் புறப்பட்ட பிறகு
அவர் ஏதாவது பார்ப்பனரல்லாதாராய் விட்டாரோ என்னமோ எனக்குத்
தெரியவில்லை. ஆதலால் தயவு செய்து அவர் பார்ப்பனரல்லாதாராக
ஆயிருப்பதாய் தங்களுக்கு வந்த செய்தியை காட்டுகிறீர்களா” என்று
கேட்டாராம். அதன் பிறகு அந்த இந்தியா மந்திரி திடுக்கிட்டு,
“நான்
இத்தனை நாளாக அவரை பார்ப்பனரல்லாதார் என்றுதான் நினைத்துக்
கொண்டிருக் கிறேன்; இப்போது தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாய்
இருக்கின்றது” என்று சொன்னாராம்.
அதுபோலவே சென்னையில் சென்ற வருடம் நடந்த காங்கிரசுக்கு
கல்கத்தாவிலிருந்து வந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு. கோஸ்வாமி
207
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
என்கின்றவரோடு நாம் பேசிக் கொண்டிருந்தபோது, “சென்னை மாகாணத்
தில் தெருவில் நடக்கக் கூடாதவர்களும், கோவிலுக்குள் போகக் கூடாதவர்.
களும், தொடக்கூடாதவர்களும், நிழல் மேல் படக்கூடாதவர்களும்
இருக்கின்றார்களே, அவர்களைப் பற்றி தங்கள் அரசியல் திட்டத்தில் என்ன
கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கேட்டபோது, அவர்
ஆச்சரியப்பட்டு, “அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு இதுவரை தெரியவே
தெரியாது. இது உண்மையா” என்று பக்கத்தில் இருந்த திரு.ஆர். கே.
ஷண்முகம் செட்டியாரைக் கேட்டார். அதற்கு திரு.ஷண்முகம் செட்டியார்
அவர்கள் சிரித்துக் கொண்டே, “இதற்கு சாக்ஷிக்காக அதிக தூரம் போகா
தீர்கள். நானே சில கோவிலுக்குள் போகக்கூடாத ஜாதி என்பதைச் சேர்ந்த
வன்.ஹைக்கோர்ட்டு வரையில் விவகாரம் செய்து பார்த்தும் எங்களை அந்த.
கோவிலுக்குள் போகக்கூடாத ஜாதியிலேயே சேர்த்து தீர்ப்பு பெற்று
விட்டார்கள். எனவே இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் உண்டா” என்று
கேட்டார். பிறகு திரு. கோஸ்வாமி பட்ட ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
இதுபோலவே பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். எனவே நம்
நிலையையும் தேவையையும் வெளி நாட்டார்களுக்கு உள்ளங்கை
நெல்லிக்கனி போல் தெரியப்படுத்த வேண்டுமானால் தாக்ஷண்யமும் பய
மும் சுயநலமும் அற்ற தன்மையில் தைரியமாய் வெளிப்படுத்தக் கூடிய ஒரு
சாதனம் இருந்தாக வேண்டும் என்ற கருத்தைக் கொண்டே “ரிவோல்ட்”
ஆரம்பித்து விட்டோம். அதன் கொள்கையைப் பற்றி நாம் அதிகமாக
சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.
முக்கியமாக அரசியல் துறையில் உழைக்க வேண்டும் என்பது அதன்
கவலையல்ல. ஆனால் அரசியல் அயோக்கியத்தனங்களை தைரிய
மாயும் தாராளமாயும் வெளியாக்கி விடவேண்டும் என்பதே “ரிவோல்ட்” டின்
பெருங்கவலைகளில் ஒன்றாகும். அதுபோலவே சாமியைப் பற்றியும்
சமயத்தைப் பற்றியும் அதற்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அவற்றின்
பேரால் நடைபெறும் அயோக்கியத்தனங்களையும் கொடுமைகளையும்
அடிமைத்தன்மைகளையும் அறியாமையையும் வெளியாக்குவது எல்லா
வற்றையும் விட முக்கியமானது ஆகும். சுருக்கமாகவும் மொத்தமாகவும்
கூறுமிடத்து இதற்கு முன் ஒரு தடவை அதாவது,
“ரிவோல்ட்” பத்திரிகையை அரசாங்கத்தாரிடம் பதிவு செய்து
கொண்ட சமயத்தில், அதன் கொள்கை என்ன என்பதாக அரசாங்கத்தார்
அறிய விரும்பிய போது தெரிவிக்கப் பட்டதையே மறுமுறையும் தெரிவித்து
இதை முடித்து விடுகின்றோம். அதாவது
-
“ரிவோல்ட்” என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து,
இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடி அரசு” என்னும் தமிழ்
குடி அரசு - 1928 @)
208
வாரபத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு
நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. “ரிவோல்ட்” என்கின்ற
வார்த்தைக்கு எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல்
என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக
அரசியலிலானாலும் சரி,
மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும்
சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி, மற்றும்
எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும்
அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன்
இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பது
மான கொள்கையை மனசாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம்
செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.
இதற்கு முக்கிய பத்திராதிபராக திரு. எஸ். ராமநாதன் எம்.ஏ.பி.எல்
அவர்கள் இருந்து வருவார். நாமும் அதில் பங்கு எடுத்து வருவோம்.எனவே
இதை வாலிப உலகம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்
றோம். எம் வாலிப நண்பர்கள் ஆங்காங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும்
தாங்கள் சந்தாதாரராய்ச் சேருவதுடன் ஒவ்வொருவரும் இது சமயம் மூன்று
சந்தாதாரர்களுக்கு குறையாமல் சேர்த்து விட்டு மறு காரியம் பார்ப்பது
என்கின்ற உறுதியைக் கொள்ள வேண்டுகின்றோம்.
சந்தா விபரம்
வருட சந்தா
ரூ4-0-0
மாணாக்கர்களுக்கு
ரூ3-0-0
வெளிநாட்டிற்கு
ரூ5-0-0
மாதிரி காப்பி வேண்டியவர்கள் ஒரு அணா ஸ்டாம்பு அனுப்ப
வேண்டும்.
விலாசம்
மேனேஜர் “ரிவோல்ட்”
ஈரோடு.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11111928
209
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
யாஞ்சால சிங்கம்
நமது பத்திரிகை முடிந்து கடைசித்தாள் அச்சுக்குப் போகுந்
தருவாயில் பாஞ்சாலசிங்கம் முடிசூடா மன்னர் உண்மைத் தலைவர் லாலா
லஜபதிராய் அவர்கள் திடீரென்று மாரடைப்பு வியாதியால் மரணமடைந்தா
ரென்று தந்தி கிடைத்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம். சுருங்கச்
சொல்ல வேண்டுமானால் இந்தியாவில், இருந்த - இருக்கிற - தலைவர்.
களில், லஜபதியவர்கள் சொல்லும் வார்த்தைக்குத் தப்பு எண்ணம் அவரது
எதிரியாலும் கற்பிக்க முடியாத உத்தம வீரர் இவர் ஒருவர்தான் என்றே
சொல்லவேண்டும். இவரது மரணத்தால், தனது மனத்திற்குப்பட்டதை
தைரியமாயும் ஒளிக்காமலும் வெளியிடக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர்:
இந்தியாவில் இல்லை என்றும் சொல்லும்படியான நிலைமை உண்டாகி
விட்டது. சுயராஜ்யக் ககஷியாரைப்பார்த்து, “பஞ்சாப் மாகாணத்தில் உள்ள
எல்லா தொகுதிகளில் வேண்டுமானாலும் நான் ஒருவனே தேர்தலுக்கு
நிற்கின்றேன். யாராவது வந்து என்னுடன் போட்டி போடுவதாயிருந்தால்
வாருங்கள் ஒரு கை பார்க்கலாம்” என்று சொன்ன தீரர், திரு. மோதிலால்
நேருவின் வாடையே பஞ்சாப் நாட்டிற்குள் அடிக்கவிடாமல் செய்த தனி
வீரர்.
சமீபத்தில் தமிழ் நாட்டையும் மலையாளத்தையும் பார்த்து விட்டுப்
போனபிறகு தமிழ் நாட்டின் நிலையை பயப்படாமல் சிறிதும் ஒளிக்காமல்
வெளியிட்டவர். தமது ஆயுள் காலமெல்லாம் தமது உடல் பொருள் ஆவி
மூன்றையும் மக்களுக்கு என ஒதுக்கி வைத்து விட்ட உண்மைத் தியாகி
தேசத்துக்காக முதல் “சீர்திருத்தத்” தின் போது 20 வருஷத்திற்குமுன் நாடு
கடத்தப்பட்டவர். இரண்டாவது, “சீர்திருத்தத்
"தின் போது 15 வருஷத்
திற்குமுன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரவிடாமல்
தடைசெய்யப்பட்டவர். ஒத்துழையாமையின் போது
2 வருடம் சிறை
சென்றவர். 3வது “சீர்திருத்தம்” வரப்போவதற்கு முன் சர்க்காரால் அடியும்
பட்டவர்.
அதாவது அதனாலேயே உயிர்விட நேர்ந்ததோ என்று எண்ணத்
தக்க அளவு அடியும் பட்டவர். இப்பேர்ப்பட்ட ஒப்பற்ற ஒரு மகான் உண்
மைத் தியாகி இறந்தது ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும்.
குடி அரசு - தலையங்கம் - 18.11.1928
குடி அரசு - 1928 @)
210
அரசியனும்
சத்தியமும்
திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை
திரு. லாலா லஜபதிராய் அவர்கள்
“பூரண சுயேச்சையே வேண்டுமென்று கேட்பவர்களான தாங்கள் ராஜபக்திப்
பிரமாணம் செய்யலாமா” என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு.
அய்யங்கார் “நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை:
நினைத்துக்கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக
செய்யவில்லை” என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால்
“பொய்ச்சத்தியம் செய்தேனே ஒழிய உண்மையாக சத்தியம் செய்யவில்லை”
என்று சொன்னாராம். உடனே திரு. லாலாஜி “அப்படியானால் மற்றபடி நீர்
இப்போது என்னிடம் பேசியதாவது உண்மைதானா அல்லது இதிலும்
ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில்
பேசுகிறீரா என்ன” வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித்
தலைகுனிந்து கொண்டாராம்.
நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர்களானவரிடத்தில்
சத்தியத்திலேயே இரண்டு விதம். அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம்
என்பதான வித்தியாசங்கள் இருந்தால் இனி சாதாரணமாக அதாவது சத்தியம்
என்று எண்ணாமல் பேசும் விஷயங்களில் எத்தனை வித வித்தியாசங்கள்
இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வல்லவர்கள் யார் என்பது நமக்கு
விளங்கவில்லை. ஆனபோதிலும் இந்த பொய் சத்திய முறைகூட தற்காலத்
தில் அனேக கனவான்களுக்கு மிகவும் யோக்கியமான முறை யென்றேற்
பட்டு திரு.அய்யங்காருக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் கொடுக்க முன் வந்திருக்
கின்றார்கள்.
அதாவது திருவாளர்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலுவும் முறை
யே இந்தியாவின் அரசியலை நடத்த திரு. சீனிவாசய்யங்காரே தக்க
பெரியாரென்றும் இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களும் இந்த திரு.
சீனிவாசய்யங்காரையே நம்பி இருக்கின்றார்கள் என்றும் சொல்லி அய்யங்
காரை குஷால் படுத்தினார்கள். போதாக்குறைக்கு திருவாளர் சி. ராஜகோபா
லாச்சாரி என்கின்ற சத்தியகீர்த்தியும் “திரு. சீனிவாசய்யங்காரை விட்டால்
சென்னை மாகாணத்தில் காங்கிரசை நிர்வகிக்க வேறு தக்க நபர் கிடையாது”
என்று பம்பாயில் சொன்னார். இவர்களே இப்படி சொல்லியிருக்க மற்றபடி
211
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இதே கூட்டத்தில் இருக்கும் திருவாளர்கள் குழந்தை, குப்புசாமி, அண்ணா
மலை, கந்தசாமி, அமித்கான் முதலிய தலைவர்கள் சொல்லுவதைப் பற்றி நாம்
இங்கு குறிப்பிட வேண்டுமா என்று கேட்கின்றோம். எனவே அரசியல்
என்பது எவ்வளவு அயோக்கியத்தனம் என்பதையும் எந்த விதத்திலும் இந்த
அரசியல் ஸ்தாபனங்கள் மானம் வெட்கம் ஒழுக்கம் நாணையம் முதலிய
வைகள் இல்லாதவர்களுக்கே சொந்தமாக இருக்கின்றது என்பதையும் பொது
ஜனங்கள் உணருவதற்காகவே இதை எழுதுகின்றோமேயல்லாமல் மேற்
கண்ட கனவான்களின் யோக்கியதையை பொது ஜனங்களுக்கு எடுத்துக்
காட்டுவதற்காக இதை எழுதவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.11.1928
குடி அரசு - 1928 @)
212
தென்னிந்திய
ச்ர்ஜருத்
தென்னிந்திய சமூகச் சீர்த்திருத்தக்காரர்கள் மகாநாடு இந்த மாதம்
26,27 தேதிகளில் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையில் சென்னை
யில் கூடப்போகிறது.
இம் மகாநாடானது தென்னிந்திய சமூகத் தொண்டர்
சபையாரால் கூட்டப்படுவதாகும். தென் இந்தியாவில் இருந்து வரும் சமூக
ஊழல்களை நினைக்கும் போது இம்மாதிரி மகாநாடுகள் தினமும் கூட்டப்பட
வேண்டும் என்றும், சுயநலப்பிரியர்களாக மாத்திரம் இருந்து செத்தால்
போதும் என்ற கொள்கைக்கு அடிமையாகாத மனிதர்களும் கடுகளவு
உண்மையான ஜீவகாருண்யமுடையவர்களும் தங்கள் வாழ்நாட்களை
இதற்காகவே செலவிட வேண்டியது மனிதத் தன்மையில் முக்கியமான
கடனென்றும் சொல்லுவோம்.
நிற்க, சீர்திருத்த மகாநாடென்று, ஒன்றைக் கூட்டி சிலர் மாத்திரம்
முன்னணியில் நின்று வெறும் வாய்ப்பந்தல் போட்டு வேஷத் தீர்மானங்கள்
செய்து தங்கள் தங்கள் பெயரை விளம்பரஞ்செய்து தங்களை அன்னியர்
பெரிய தேசாபிமானியென்றும் சமூக சீர்திருத்தக்காரன் என்று சொல்ல பெயர்
பெற்றுக் கொண்டு காரியத்தில் வரும்போது மதத்தின் பேராலும் சாஸ்திரத்தின்
பேராலும் சமயத்தின் பேராலும் மதத்தின் பேராலும் வருணாசிரமத்தின்
பேராலும் சங்கராச்சாரிகளின் பேராலும் “மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்
கூடாது” என்பதான திருட்டு தேசியத்தின் பேராலும் நாணயப் பொறுப்பில்
லாமலும் போக்கிரித்தனமாகவும் கிளம்பி முட்டுக்கட்டை போடுவதும்,
வெளிக்கு யோக்கியர்கள் போல் காட்டிக் கொண்டு உள்ளுக்குப் பணச்
செலவு முதலியவைகள் செய்து தடங்கல் செய்யச் செய்வதும், லஞ்சமும்
கூலியும் கொடுத்து ஆட்களைச் சேர்த்து தேசீயத்தின் பேராலும் சமயத்தின்
பேராலும் கூப்பாடு போடச் செய்வதுமான காரியங்கள் நடந்து வருகின்றன.
இக்கொள்கைகளுடனேதான் இதுவரை அநேக சீர்திருத்த மகாநாடுகள்.
கூட்டப்பட்டிருக்கின்றன.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் தென்னிந்தியாவில் சீர்
திருத்தத் தலைவர்களுக்குள் மிகவும் சிறந்து விளங்குபவர்களில் திருவாளர்
கள் எஸ்.சீனிவாசய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி,.
213
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
சிராஜகோபாலாச்சாரி, டாக்டர் எஸ்.எஸ்.ராஜன் முதலியோர்களான இவர்கள்
பெரிதும் சீர்திருத்த ஸ்தாபனத் தலைவர்களும் சீர்திருத்த மகாநாடுகளுக்குத்
தலைமைவகித்தவர்களும் சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளு
பவர்களுமே ஆவார்கள். இவர்களின் சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம்
பெரிதும் எதையும் குடித்தால் சீர்திருத்தக்காரர்கள் ஆகிவிடலாம் என்பதும்,
எதையும் சாப்பிட்டால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும், யாருடனும்
சுகித்தால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும் எங்கும் சாப்பிடுவதாக
காட்டிக் கொண்டால் சீர்திருத்தக்காரர்களாகி விடலாம் என்பதுமான கொள்
கைகள் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய மற்றபடி உண்மையான
சீர்திருத்தக்
கொள்கைகள் அமுலில் வருவதானால் தங்களால் கூடியவரை:
முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.
உதாரணமாக சமூக சீர்திருத்த சங்கத் தலைவரும் சர். சங்கரன்
நாயருடைய சிஷ்யர் என்று சொல்லிக் கொள்பவருமான திரு. சீனிவாசய்
யங்கார் பொதுப் பணத்தில் நடந்ததும் பொது ஸ்தாபனமாக இருந்ததுமான
குருகுல விவகார சம்பந்தமான விஷயத்தில் பார்ப்பனனேதான் சமையல்
செய்தாக வேண்டும் என்று சொன்னதும், பார்ப்பனக் குழந்தை சாப்பிடு
வதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்க்கக் கூடாது என்பதற்கு வக்காலத்து
வாங்கிப் பேசினதும், பிரபலமும் பிரக்யாதியும் பெற்ற தேசீயவாதியும் சமூக
சீர்திருத்தக்காரரும், சீமைசென்று வந்தவரும் மற்றும் பல சீர்திருத்தப்
பெருமைகள் படைத்தவருமான திரு. சத்தியமூர்த்தி அய்யர் என்பவர்.
கோவிலில் சுவாமிகள் பேரால் விபசாரத்திற்கு சிறு பெண்களுக்கு முத்திரை
போடக்கூடாது (பொட்டு கட்டக் கூடாது) என்பதையும் நகரத்தில் விபசாரி
களின் தொல்லையை ஒழிக்கவேண்டும்-என்பதையும் முக்கியமாகக்
கொண்டதான சட்டங்களை எதிர்த்ததும், அவ்விழிதொழில் காரியங்களுக்கு
வக்காலத்து வாங்கிக்கொண்டு எதிர்பிரசாரம் செய்ததுமே போதுமான
சாட்சியாகும்.
மற்றும் தென்னாட்டு காந்தி என்றும் காந்தியடிகளின் சிஷ்யர்
களுக்கு சட்டாம் பிள்ளை என்றும் திரு. காந்திக்கு அடுத்த வாரிசுதாரர்.
என்றும் சீர்திருத்தமே உருவாய் வந்தவர் என்றும் சொல்லப்பட்டு வந்த
வரான திரு. ராஜகோபாலாச்சாரியாரும் அவரது உற்ற நண்பரும் பின்பற்று
வோருமான திரு. திருச்சி டாக்டர் ராஜனும் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்
கூட்டத்தில் - தேசீய சம்மந்தப்பட்ட வரையிலாவது மக்கள் பிறவியால்
உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது - என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்
பட்டவுடன் அக்கமிட்டியிலிருந்து ராஜீனாமாக் கொடுத்து விட்டதும், மற்றும்
சில சமரச சன்மார்க்கிகளும் அவர்கள் போன்றவர்களும் இதற்கு
விரோதமாய் ஓட்டுக் கொடுத்ததுமான காரியங்களே நாம் முன்குறிப்பிட்ட
வைகளுக்கு தக்க சான்றாகும். ஆனால் மேல்கண்டவர்கள் மேல்கண்ட
விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிகள் தங்கள் பகுத்தறிவுக்கும் மனச்
குடி அரசு - 1928 @)
214.
சாக்ஷிக்கும் சரி என்று பட்டமுறையில் அந்தப்படி நடந்து கொண்டிருப்
பார்களானால் நாம் குற்றம் சொல்ல இடமிருந்திருக்காது.
ஆனால் தங்கள்
தங்கள் சுயநலத்தையும் வகுப்பு நலத்தையும் முக்கியமாகக் கருதி நடந்த
வர்கள் என்று சொல்லும்படியாகவே இவர்கள் நடந்து கொண்டார்கள் என்று
தைரியமாய் சொல்லலாம்.
எனவே சமீபத்தில் சென்னையில் கூட்டப்போகும் சீர்திருத்தக்
காரர்கள் மகாநாடும் சீர்திருத்த வேஷக்காரர் மகாநாடு போலல்லாமல்
உண்மையான பலனைக் கொடுக்கும் உண்மையான மகாநாடாக இருக்க
வேண்டும் என்று ஆசைபடுவதுடன் தென் இந்தியாவின் நாலா பக்கங்
களிலுமுள்ள உண்மைத் தொண்டர்கள் தவறாமல் வந்து தாராளமாய் கலந்து
வேண்டிய உதவி செய்யக்கோருகின்றோம். அம்மகாநாட்டை நடத்தும்
பொறுமையை மேற்போட்டுக் கொண்டிருக்கும் திரு.ஆரியா, திரு.எம்.கே.
ரெட்டியார் மற்றும் சில நண்பர்கள் ஆகியோர்கள் தாராள நோக்க
முடையவர்களும் இவ்வேளையில் உள்ளும் புறமும் ஒத்தவர்கள் என்பதும்
நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமல்ல. மற்றும் இம்:
மகாநாட்டுக்கு கொடியேற்றம் செய்யும் அம்மையார் திரு. தேவி கமலாக்ஷி
பண்டலே அவர்கள் மிகவும் தாராள நோக்கமும் பரிசுத்த மனமும்
கொண்டவர்கள். மகாநாட்டை திறந்து வைக்கும் சென்னை அரசாங்கமந்திரி
கனம் திரு. எஸ். முத்தையா முதலியாரவர்களும் சமூக சீர்திருத்த விஷயத்
திலும் மக்கள் எல்லோருக்கும் சமசுதந்திரமும் சமசந்தர்ப்பமும் இருக்க
வேண்டும் என்கிற விஷயத்திலும் உண்மையான கருத்தும் உழைப்பும்
கொண்டவர். மகாநாட்டுக்கு தலைமை வகிப்பவரைப் பற்றி நாம் ஒன்றும்
இங்கு எழுத வரவில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் எழுதவேண்டிய
அவசியமும் இல்லை. ஆதலால் இம்மகாநாடானது தென் இந்தியாவின்
அவசியமான சீர்திருத்தத்திற்கு வழிகாட்டியாகவும் அஸ்திவாரம் போடுவ
தாகவும் இருப்பதோடு நமது நாட்டின் நிலையையும் தேவையையும் அறிவ
தற்கென்று அரசியலின் பேரால் சீமையிலிருந்து வரும் பார்லிமெண்ட்
கமிட்டியாகிய சைமன் கமிஷனுக்கும் உண்மையான நிலையையும் தெளி
வையும் தெரிவிக்கக் கூடியதான ஒரு அறிக்கையாகவும் ஆகலாம் என்றும்
நினைக்கின்றோம்.நம்நாட்டுசெல்வந்தர்களும் சீர்திருத்த அபிமானிகளும்.
இம்மகாநாடு விமரிசையாயும் செவ்வையாயும் நடைபெற தங்கள் தங்களால்
கூடிய பொருளுதவியும் செய்ய வேண்டுமென ஞாபகப்படுத்த
கடமைப்பட்டிருக்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.41.1928
215
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
.
P
யோர்டாரிண் தைரியம்
தஞ்சை ஜில்லா போர்டுக்கு சம்மந்தப்பட்ட ரயில்வே லைனை
ரயில்வே போர்டாருக்கு கொடுத்துவிட சம்மதிப்பதாக இவ்வளவு காலம்
பொறுத்தாவது ஒரு தீர்மானம் செய்ய முன் வந்ததைப்பற்றி அதன்
தைரியத்தை நாம் பாராட்டுகின்றோம். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்த
விஷயம் தஞ்சை ஜில்லா போர்டின் யோசனைக்கு வந்ததில் ஜில்லா போர்டார்.
ரயில்வே லைனை ரயில்வே போர்டாருக்கு கொடுக்க முடியாது என்று
தீர்மானித்து விட்டார்கள். அது சமயம் அவர்கள் அப்படிச் செய்தது தப்பு
என்ற சொன்னதுடன் ஜில்லா போர்டு தலைவரையும் சில அங்கத்
தினர்களையும் நேரிலும் கண்டு பேசினோம். அப்படிப் பேசியதிலிருந்து
லைனை ரயில்வே போர்டாருக்கு ஒப்புக் கொடுக்க மறுத்ததின் காரணம்
எல்லாம் அப்போர்டிலுள்ள பார்ப்பன விஷமத்திற்கு பயந்தும் கட்சிப்
பிரதிகட்சி ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதைக் கருதியுமே அப்படிச்
செய்ய வேண்டியதாக ஏற்பட்டது என்பதை அறிய நேர்ந்தது.
முதலாவதாக இதுவரை எந்த ஸ்தாபனமாவது சர்க்காரார் நடத்தி
வந்ததை விட யோக்கியமாகவோ திறமையாகவோ பொது ஜனங்களின்
பிரதிநிதித்துவ சங்கத்தால் நடத்திவருவதாக நாம் ஒப்புக்கொள்ளவே
முடியாது. சர்க்கார் ஆட்சி முறை மோசமானதும் நம்மால் சகிக்க முடியாததும்
ஆனது என்பதைப் பொருத்தவரையில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால் அவர்களிடமிருந்து நமது கைக்கு மாற்றப்பட்ட எந்த ஒரு சிறு
முறையும் அதைவிட மோசமானதாகவும் பொறுப்பற்றதாகவும் நாணயக்
குறைவானதாகவுமே நடைபெற்று வருகின்றதே ஒழிய வேறில்லை.இது நாம்
எந்த இலாக்காவைப் பொருத்து வேண்டுமானாலும் ருசுச் செய்ய
முடியும், அதிலும் ஸ்தல ஸ்தாபன இலாக்காக்களில் நடைபெற்று வரும்
அயோக்கியத்தனங்களும் நாணயக்குறைவுகளும் ஒழுக்க ஈனங்களும்
எழுதி முடியாததும் எல்லோருக்கும் தெரிந்ததுமான இரகசியமாகவே
இருக்கின்றது. இதைப்பற்றி முன்னும் பல தடவை எழுதியும் பேசியும்
இருக்கின்றோம்.
எனவே முதலாவதாக இக்காரணங்களாலேயே ரயில்வே போன்ற
குடி அரசு - 1928 @)
216
பெரிய பொறுப்புள்ள காரியங்களை ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி,
தாலூக்கா போர்டு போன்ற ஜனப்பிரதிநிதி சபை என்னும் பொறுப்பற்ற
ஸ்தாபனங்களின் சுவாதினத்தில் விடுவது என்பது பெரிதும் ஆக்ஷேபிக்கத்
தக்கது என்று தைரியமாய் சொல்லுவோம். ஆனால் எந்த நிலையிலா
னாலும் பார்ப்பனர்கள் கையில் இருப்பதைவிட பார்ப்பனரல்லாதார் கையில்
இருப்பது மேல் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. உதாரணமாக திருவாளர்
இராமானுஜாச்சாரியார் நிர்வாகத்தையும் திருவாளர் பன்னீர்செல்வம்
அவர்களின் நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது தெரியவரும்.
எனவே அரசாங்கத்தாரும் ரயில்வேக்காரரும் செய்வது மிகவும்
மோசமாயிருக்கின்றதே என்று சொல்வதானால், நம்முடைய ஒற்றுமை
யையும் பரஸ்பர நம்பிக்கையையும் கட்டுப்பாட்டையும் சுயநலமற்ற
தன்மையையும் பலப்படுத்திக் கொண்டு அரசாங்கத்தின் தலையில்
பொறுப்பை சுமத்தி அதை நெருக்கி நம்மிஷ்டம்போல் செய்கின்றனையா
இல்லையா என்று அதிகாரத் தோரணையில் கட்டளையிட்டு யோக்கிய
மாகவும் நாணயமாகவும் நடக்கச் செய்ய வேண்டும்; அப்படிக்கில்லாமல் “நீ
போனால் கலகமாகிவிடும் நான் போய் செருப்பிலடித்து விட்டு வந்து
விடுகிறேன்” என்று ஒரு சமாதானக்காரன் சொன்னான் என்கின்ற பழமொழி
போல் அரசாங்கத்தைப் பார்த்து, “உன்னால் அதை நடத்த முடியாது,
என்னிடம் ஒப்புவி, நான் அதை பாழாக்கி விடுகிறேன்” என்பதாகச் சொல்லி
அதன் தலையில் சுமத்த வேண்டிய பொறுப்புகளையெல்லாம் நம்ம தலையில்
சுமத்திக்கொண்டு, காரியமும் சரியாய்ச் செய்ய முடியாமல் நாணயமாயும்,
நடக்க முடியாமல் நிர்வாகத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் மாத்திரம் தம் தம்
சுயநலத்திற்கு அவ்வுரிமைகளை உபயோகப்படுத்தி கொண்டு மக்கள்
பணத்தையும் நலத்தையும் பாழாக்குவதில் என்ன பலன் என்றுதான்
கேட்கின்றோம்.
இப்படி எழுதுகின்ற நாம் அனுபோகமில்லாமலாவது இது பெரும்
பான்மையான விஷயமல்ல என்றாவது கருதி எழுதுகின்றோமில்லை
முனிசிபல் சேர்மன் பதவி, ஜில்லா போர்டு மெம்பர், தாலூக்கா போர்டு
மெம்பர்,
ஆனரரி மாஜிஸ்திரேட்டு மற்றும் சில சர்க்கார் சம்மந்தான பொது
ஸ்தாபனம் ஆகியவைகளில் இருந்து கொண்டிருந்த போதும் சர்க்கார்
அதிகாரிகள் அனாவசியமாயும் நாணயமற்ற தன்மையாயும் நமது
ஆதிக்கத்தில் பிரவேசிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கண்டித்து
அரசாங்கத்திற்கு எழுதியும், அரசாங்கத்தார் கவனிக்கவில்லை என்கின்ற
காரணத்திற்காக மேல்கண்ட அவ்வளவு பதவிகளையும் ஒரே துண்டுத்
தாளில் இராஜினாமா கொடுத்தோமானாலும், அந்த சர்க்கார் ஆக்கிரமிப்பு
முதலிய அக்கிரமங்களைவிட ஜனப்பிரதிநிதிகளின் பெரும்பாலான
நடவடிக்கைகள் குறிப்பிடதக்க அளவு மோசமாகவே இருக்கிறது.
ஆதலால்
217
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ரயில்வே லைனின் நன்மையை பொருத்தவரையிலும் ஜனங்களின்
நன்மையைப் பொருத்தவரையிலும் தஞ்சை ஜில்லா போர்டார் லைனை
ரயில்வே போர்டுக்கு ஒப்புக்கொடுத்து விட்டதானது மிகவும் பாராட்டதக்க
விஷயமேயாகும். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இதனால்
போர்டாருக்கு பொருளாதார விஷயத்திலும் எவ்வித கஷ்டமும் ஏற்பட
வில்லை என்பது தெரிய வருவதால் தஞ்சை ஜில்லா போர்டார் பார்ப்பன
விஷமப் பிரசாரத்திற்கும் பார்ப்பன பத்திரிகைகளின் அயோக்கியத்
தனத்திற்கும் சற்றும் பயப்படாமல் தைரியமாய் இத்தீர்மானம் செய்ததை நாம்
பாராட்டுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 18.11.1928
குடி அரசு - 1928 @)
218
றிவோல்ட்” ஆரம்ப விழா
ஈரோட்மல் எண்றுமில்லாத குதூகமைம் உணர்ச்சியும்
சகோதரர்களே! நம் பிராமணரல்லாதார் கக்ஷி எவ்வளவோ முக்கிய
அடிப்படையான நோக்கங்களைப் பற்றி ஆரம்பிக்கப்பட்டிருப்பது நம்
மாகாணத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்ததே.
ஆனால் வடநாட்டில்
உள்ளவர்களுக்கு இந்த இயக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள போதிய ஏது
இல்லாததும் வட நாட்டினர் இவ்வியக்கத்தைப் பற்றிச் சிறப்பாக அறிந்து
கொள்ளாமலிருப்பதும் அவ்வளவு ஆச்சரியமல்ல. சிறிது நாட்களுக்குமுன்
இப்பக்கங்களுக்கு வந்திருந்த வடநாட்டுத் தலைவரில் ஒருவராகிய திரு
வாளர் கோஸ்வாமி அவர்கள் சில நண்பர்களுடன் பேசிகொண்டிருக்கும்
பொழுது திரு. கோஸ்வாமி கேட்டதாவது:- “என்ன, இம் மாகாணத்தில்
முக்கியமாக 23 பேர்கள் சேர்ந்துகொண்டு, பிராமணரல்லாதார் ககஷி என்று
வைத்துக் கொண்டு இருக்கிறார்களாமே? அதன் அர்த்தமென்ன? அது
வேண்டியது அவசியம் தானா” என்று கேட்டார். ஏனென்றால் அவருக்கு
தென்னாட்டின் சமாச்சாரமே தெரியாது.
உடனே நான் (ஈ.வெ.ரா! திரு. ஷண்முகம் செட்டியார் எம்.எல்.ஏ.
அவர்களைக் காட்டி “இவர்களை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்.
டேன். அதற்கு அவர் “ஆகா! நன்றாகத் தெரியும். நானும் அவரும் ஒரே
கவுன்சிலில் மெம்பராக இருக்கின்றோம். தென்னிந்தியாவிலிருந்து வரும்
கவுன்சிலர்களில் பேச்சு வன்மையிலும், அரசியல் ஞானத்திலும் திறமை
பெற்றவர்” என்றார்.
நான் உடனே கோஸ்வாமியிடம் “இவர், இப்பக்கங்களில் உள்ள சில
கோயில்களில் உள்ளே செல்லமுடியாத ஒரு தீண்டாதவராக கருதப்பட்டவர்”
என்று சொன்னேன்.
உடனே கோஸ்வாமி பிரமித்து விட்டார்கள். இது உண்மைதானா
வென்றும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு எல்லா விவரங்களையும்
நம் இயக்கத்தின் நோக்கத்தையும் சொன்னோம். அவர்களும் அதை
219
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அங்கீகரித்தும் தங்களுக்கு இவ்விவரங்களெல்லாம் தெரிய வராது என்றும்
எங்கள் வடநாட்டில் இப்படி எல்லாம் இல்லையென்றும் இவ்வியக்கம்
அவசியம் என்றும் தாங்களும் ஒத்துழைப்பதாகவும் சொன்னார்கள். வட
நாட்டிலுள்ளவர்களுக்கு நம்மியக்கம் இன்னதென்று தெரியமுடியாமல்
இருப்பதால் நம் இங்கிலிஷ் வாரப்பத்திரிகை அவர்களுக்கு நம்இயக்கத்தின்
நோக்கத்தை ஊட்டும், அந்த நோக்கமாகவே “ரிவோல்ட்” வெளியாகிறது.
நமது எதிரிகள்
முக்கியமாக நமக்கு எதிரிகள் பிராமணர்கள் என்று எண்ணி
யிருந்தோம். ஆனால் அவர்கள் கூடுமானவரை எதிர்த்துப் பார்த்தார்கள், பின்
தங்கள் பித்தலாட்டக் காரியம் இங்கே செல்லாது என்று கண்டு அவர்களே
இவ்வியக்கம் அவசியம் வேண்டியது
தான்
என்று வெளியள
விலாவது சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
ஆனால், நமக்கு எதிரிகள் நமக்குள்ளாகவே இருக்கிறார்கள்.
ஏறக்குறைய தென்ணாட்டிலும், முக்கியமாக தமிழ் மக்களிடை நமது நோக்கம்
எல்லாருக்கும் பிடித்திருக்கும்.
ஆனால் இது பிடியாதது யாருக்கு என்றால்,
நம்மவர்களிலே மதப் பைத்தியம் பிடித்தவர்களுக்கும், பண்டிதர்.
என்பவர்களுக்கும் 100 க்கு 90 பங்கு பிடியாது.
ஆனால் இப்பொழுது பிராமணர்கள் எவரும் நம்மை எதிர்க்க நேரில்
வருவதே கிடையாது.ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள சில பிரமுகர்களும், தங்கள்
கக்ஷியானது பிராமணர்களை உத்தியோகத்துக்கு வரவொட்டாமல் தடுத்து
அந்த உத்தியோகங்களை நாம் வகிக்க வேண்டும் என்ற நோக்கங் கொண்:
டிருக்கின்றது என்று நினைக்கிறார்கள். அது மாதிரியே திரு. ஏ. ராமசாமி
முதலியார் அவர்களும் தனக்கு ஒரு உத்தியோகமும், தன்னால் சிலருக்கு
உத்தியோகவும் வாங்கிக் கொடுக்கக்கூடிய யோக்கியதையும் செல்வாக்கும்
வந்தவுடன் தம் கக்ஷியின் முக்கிய நோக்கமாகிய வகுப்புவாரிப் பிரதிநிதித்
துவமே (தனித்தொகுதியே! வேண்டாம் என்கின்றார்கள். நம் இயக்கத்தின்
முக்கிய நோக்கமானது பழைய மூடபழக்க வழக்கங்களை அடியோடு
ஒழிப்பது, வேதம், புராணம்,
இவைகளின் புரட்டுகளை வெளியிடுவது,
நம்
பகுத்தறிவை உபயோகித்து மேல் நாட்டார்களைப் போல் அநேக முன்னேறத்
தக்க அற்புதங்களை கண்டு பிடிப்பதுமேயாகும். இந்த நோக்கக்தோடேயே
இன்று ரிவோல்ட் பத்திரிகையைத் திறப்பதற்கு நம் இயக்கத்துக்கு ஒரு
மணியாகிய திரு. நாடார் அவர்கள், அவர்களுடைய அநேக சிரமங்
களுக்கிடையே இவ்விடம் விஜயம் செய்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி
நான் முன்பே முனிசிபல் வரவேற்பின் போதே சொன்னேன். அத்துடன்
இவ்விழாவை நடத்திக் கொடுப்பதற்கு தலைமை வகிக்கும்படி நமது ஜில்லா
குடி அரசு - 1928 @)
220
தலைவரும் நம் நண்பருமான திரு. சி.எஸ்.ரத்ன சபாபதி முதலியார் எம்.எல்.சி
அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 06111928 ஆம் நாள் ஈரோட்டில் *ரிவோல்ட்' ஆரம்ப விழா
சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 18.11.1928
221
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
S5 எண்ண வால் எண்று வயர்
திரு. நேரு, திரு சீனிவாசய்யங்கார் ஆகிய இருவரையும் ஆதரிப்
பவர்களுக்கு வெளவால் என்கின்ற பெயரானால், திரு. நேருவும், திரு
சீனிவாசய்யங்காரும், திரு. பெசண்டம்மையும் ஆகிய மூவரை திருட்டுத்
தனமாக ஆதரிப்பதற்கு என்ன வால் என்று சொல்லுவது?
குடி அரசு -
சிறு குறிப்பு - 18.11.1928
குடி அரசு - 1928 @)
222
கோவையில் சர்வககூறி மகாநா௫
கோயமுத்தூரில் இம்மாதம் 23-ஆம் தேதி அகில இந்திய சர்வககஷி.
மகாநாட்டு அரசியல் திட்டம் என்பதைப் பற்றி யோசிக்க ஒரு சர்வகக்ஷி
மகாநாடு கூடப் போகின்றது. அதற்கு காரியதரிசி திரு. RK. ஷண்முகம்
செட்டியார் ॥4.ட%. அவர்களாவார்கள். அதன் வரவேற்புத் தலைவர் திரு. 0.5.
இரத்தினசபாபதி முதலியாரவர்கள் MLC. ஆவார்கள். மகாநாட்டு தலைவர்
சென்னை திரு. சாமி வெங்கிடாசலம் செட்டியார் M.LC. ஆவார்கள்.
எனவே மேல் கண்ட மூன்று கனவான்களும் பார்ப்பனரல்லாதார்
என்பதில் நாம் எவ்வித ஆக்ஷேபனையும் சொல்ல முடியாது. ஆனால்
பார்ப்பனர்களுக்கும் பாமர ஓட்டர்களுக்கும் பயப்படாமல் தைரியமாய்
தங்கள் சமூகத்திற்கும் தங்கள் நாட்டின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகத்திற்கும் உண்மையான யோக்கியமான
பிரதிநிதிகளாய் இருந்து அவர்களின் கஷ்ட நஷ்டம் முதலிய கொடுமை
களை தைரியமாய் எடுத்துச் சொல்லி அதற்கு வேண்டியதை வலியுறுத்து
வார்களா? என்பவைகளை மாத்திரம் மகாநாட்டின் நடைமுறைகளுக்குப் பின்
முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் இன்னிலையில் அம்மூன்று
கனவான்களையாவது உத்தேசித்து மகாநாட்டுக்கு எல்லோரும் போய் தங்கள்
தங்கள் அபிப்பிராயத்தை தாராளமாய்ச் சொல்வதற்கும் வலியுறுத்துவதற்கும்
முடியாமல் போனாலும்கூட சாக்ஷியினராகவாவது சென்று அக்கனவான்
களை கெளரவப்படுத்த வேண்டுகின்றோம்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 18.11.1928.
223
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ik
கு
அந்தி
மாத்திரந்தான் சாந்தமா?
மேல்நாட்டில் கூட சிலர் சுவாமி என்றும் மோக்ஷம் என்றும் நரகம்
என்றும் சூக்ஷம சரீரம் என்றும் சொல்லுகின்றார்களென்றும் ஆதலால்
அவைகள் நிஜம் என்றும் ஒரு “சூக்ஷம சரீரக் காரர்” தனது பத்திரிகையில்
எழுதுகிறார். நாம் அதற்கு ஒரு பதில்
தான் சொல்லக்கூடும். அது,
முட்டாள்களுக்கும் அயோக்கியர்களுக்கும் இந்தியாவும் சிறப்பாக தமிழ்
நாடும் மாத்திரம் சொந்தமா? என்பதுதான்.
குடி அரசு -
சிறு குறிப்பு - 18.11.1928
குடி அரசு - 1928 @)
224.
க௱ர்வபாறரோஷண் தணைவர்
சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலில் திரு. ஏ. ராமசாமி
முதலியார் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற சேதியைக் கேட்டு மகிழ்ச்சி
யடையாத உண்மைத் தமிழ் மக்கள் இந்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்றே
நினைக்கின்றோம். தவிர இந்த முடிவானது சென்ற வருஷம் முதலே
உறுதியாய் எதிர்பார்த்த முடிவாகும். மேலும் இந்த முடிவானது, சென்னை
பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளாகவோ தங்கள் அடிமைகளுக்குள்ளாகவோ
காங்கிரஸ் வேஷத்தாலோ தேசீய வேஷத்தாலோ யாரையும் நிறுத்த
முடியாமல் போனதைப் பொருத்தவரையில் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு
பெரிய வெற்றியானாலும் ஜஸ்டிஸ் கட்சியில் கட்சிப் பிளவை உண்டாக்கும்
வேலையில் கரும் பார்ப்பனர்களும் வெள்ளைப் பார்ப்பனர்களும் ஒருவாறு
வெற்றிபெற்று விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். திரு. ராமசாமி
முதலியாருக்கு ஏற்பட்ட வெற்றியின் சந்தோஷத்தைவிட ஒரே கட்சியில்
ஏற்பட்ட அபிப்பிராயபேதம் வருந்தத்தக்கதேயாகும் என்றாலும் திரு.
ராமசாமி முதலியார் அவர்களை தலைவராகக்
கொண்ட சென்னை
கார்ப்பொ
ரேஷனை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. சென்னை கார்ப்பொ
ரேஷனுக்கு இதுவரை இருந்த கெட்ட பெயரும் இழிவும் திரு முதலியார்
காலத்தில் மாறி அதற்கு ஒரு கெளரவம் ஏற்படும் என்று எதிர்பார்க்
கின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 18.11.4928
225
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
லாலா லனையதி
திருவாளர் பஞ்சாப் லாலா லஜபதிராய் அவர்கள் தமிழ்நாட்டை வந்து
நேரில் பார்த்து விட்டு போன பிறகு சென்னை உலகம் என்று “தியாக
பூமியில் ஒரு வியாசம் எழுதியதை சோழவந்தான் திரு. முனகால் பட்டா
பிராமய்யர் அவர்கள் மொழிபெயர்த்து பிரசுரிக்க அனுப்பியிருந்ததை எளிய
நடையில் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம். அதில் சென்னை
அரசியலைப் பற்றியும் கோயில், குளம், புராணம், பண்டிதர்கள், தலைவர்கள்.
ஆகியவைகளின் யோக்கியதைகளைப் பற்றியும் நன்றாய் விளக்கியிருக்
கின்றார். எனவே வாசகர்கள் தயவு செய்து பொறுமையுடன் ழி விஷயம்
முழுதையும் படித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 18.11.1928.
குடி அரசு - 1928 @)
226
சம்மத வயது விசாரணையின்
அதிசயம்
ஆண் பெண் மக்களின் கல்யாண வயதைப் பற்றியும், கலவி வயதைப்
பற்றியும் சட்டத்தின் மூலம் ஒரு நிபந்தனை ஏற்படுத்த வேண்டி பொது
மக்களின் கருத்தை அறிவதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அது பல
மாகாணங்களில் விசாரணை செய்து விட்டு இப்போது நமது மாகாணத்தில்
விசாரணை நடைபெறுகின்றது.
இவ்விசாரணையின் மூலம் முடிவில் ஏற்படப் போகும் நன்மையை
விட விசாரணை நடுவில் வெளிப்படும் பல அதிசயங்கள் மக்களின் பொது
அறிவிற்கு மிகவும் பயன்படுமென்று கருதுகின்றோம். விசாரணை
துவக்கத்திலிருந்து நாம் மேல் வாரியாகத்தான் கவனிக்க முடிந்தது. அநேக.
சாக்ஷிகள் வாக்குமூலத்தை நாம் படிக்கவே இல்லை. என்றாலும் சில
விஷயங்கள் வெளியானது நமது தகவலுக்கு வந்தது. அவைகளில் மிகவும்
கவனிக்கத்தக்கவை என்னவெனில், பெண்கள் பக்குவமடைந்த பிறகு
வீட்டில் வைத்திருந்தால் அவர்களது கற்புக்கு இடையூறு ஏற்படும் என்றும்
பூப்பு அடைந்தவுடன் பெண்களுக்கு கலவி இச்சை ஏற்பட்டு விடுகின்றது
என்றும், அதற்கு உடனே பரிகாரம் செய்யாவிட்டால் மோசம் வந்துவிடும்
என்றும் சொல்லியிருக்கின்றார்கள்.
இவர்கள் யார் என்று பார்த்தால் வருணா
சிரம பார்ப்பனர்கள். அதாவது திரு. டி.ஆர். ராமச்சந்திர அய்யரும், திரு.
எம்.கே. ஆச்சாரியாரும் மற்றும் இவர்கள் போன்றவர்களுமாவார்கள்.
ஆனால் இவர்களால் சொல்லப்பட்ட
இந்த விஷயங்கள் ஒரு சமயம் தப்பா
யிருக்கலாம் என்பதாக அவர்களாலேயே
ஒப்புக்கொள்ளச் செய்தாலும் கூட
மற்றொரு விஷயத்தைப் பொருத்து பெண்களுக்கு கட்டாயம் பூப்புக்கு
முன்புதான் விவாகம் செய்தாக வேண்டும் என்று வாதிக்க வேறு காரணங்
களையும் கொண்டவர்கள். அதாவது இந்துமத சம்பிரதாயப்படி ஏற்பட்ட
வேத சாஸ்திர ஸ்மிருதிகளின் படிதான் நடந்தாக வேண்டுமே ஒழிய வேறு
எந்த புது மார்க்கத்துக்கும் அது எவ்வளவு மேன்மை தரத்தக்கதானாலும்
அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்கின்ற கொள்கைகளாகும். மற்றும்
பெண்கள் விஷயத்தில் ஆண்களைப் பொறுத்த விஷயமாக மாத்திரம்
அல்லாமல் பெண்கள் ஆண்களைப் போல் சொத்து உடையவர்களா
யிருப்பதும், கல்வி உடையவர்களாயிருப்பதும், வாழ்க்கையில் சுதந்திரம்
227
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
உடையவர்களாயிருப்பதும் ஆகிய அநேக விஷயங்களிலும் மாறுபட்ட
அபிப்ராயமுடையவர்கள் - இம்மாறுபாடான அபிப்பிராயத்தையும் மேல்
கண்ட மதம், வேதம், சாஸ்திர ஸ்மிருதி ஆகியவைகளை ஆதாரமாகக்
கொண்டே வற்புறுத்துகின்றவர்கள்.
எனவே இந்த நிலைமையில் நமது கடமை என்ன என்று பார்ப்போ
மானால் இப்படிப்பட்ட விஷயத்தில் அதாவது மதம், சாஸ்திரம், ஸ்மிருதி
என்னும் விஷயத்தில் உண்மையான விஸ்வாசம் கொண்டு அவைகளை
பக்திபூர்வமாய் அனுசரித்து வருகின்றவர்கள் விஷயத்தில் நாம் நிர்ப்பந்தப்
படுவதைப் பற்றி சற்று நிதானிக்க வேண்டியது தான். அதுவும் அந்த
விஷயத்தின் தன்மையைப் பொறுத்ததேயாகும்.ஆனால் இந்த கனவான்கள்
திருவாளர்கள் டி.ஆர்.ராமச்சந்திர அய்யர், எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்.
கள் எவ்வளவு தூரம் மதம், வேதம், சாஸ்திரம் ஸ்மிருதி ஆகியவைகளில்
விசுவாசம் உடையவர்கள் பக்தி உடையவர்கள் என்பதை வாசகர்கள்தான்
உணரவேண்டும். திரு.டி.ஆர்.ராமச்சந்திரய்யர் ஒரு வக்கீல். வக்கீலுக்கு
எவ்வளவு தூரம் வேதம், மதம், சாஸ்திரம் ஸ்மிருதிகட்கு கட்டுப்பட்டு
யோக்கியமாய் நடந்து கொள்ள செளகரியம் உண்டு என்பதைப் பற்றி நான்
அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அன்றியும் அவர் தன்னை ஒரு
வருணாசிரம பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்ளுபவர். பிராமணன்
என்பவனுக்கு அவர் குறிப்பிடும் வேத சாஸ்திர ஸ்மிருதிகள் எவ்வளவு
நிபந்தனைகள் விதித்திருக்கின்னனவோ அவைகளை திரு ராமச்சந்திர
அய்யர் எவ்வளவு தூரம் அனுசரிக்கின்றார் என்பதையும் வாசகர்களுக்கே
விட்டுவிடுகின்றோம். அதுபோலவே திரு. எம். கே. ஆச்சாரியாருடைய
பார்ப்பனத் தன்மையையும் நாணயத்தையும் யோக்கியப் பொறுப்பையும் நாம்
வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. சுருக்கமாய்ச் சொன்னால்
திரு. ஆச்சாரியார் யோக்கியமாகவோ நாணயமாகவோ நடந்து கொண்ட
சமயத்தைப் பார்க்கும் பாக்கியமே நமக்கு வாய்க்கவில்லை. எனவே வேத
சாஸ்திர ஸ்மிருதிகளில் தாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.
என்பதைப் பற்றி கவலை ஒரு சிறிதும் இல்லாமல் மற்றவர் தங்களிடத்தில்
நடந்து கொள்ள வேண்டிய நிபந்தனையை மாத்திரம் வலியுறுத்தலுக்கு
மதிப்பு கொடுக்க வேண்டுமா? அல்லது அவர்களின் யோக்கியப் பொறுப்பில்
மற்றவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா? என்று கேட்கின்றோம், நமது
நாட்டில் வேதப்பிராமணர்கள், தெய்வ பிராமணர்கள் என்கின்ற பாத்தியதை
கொண்டாடும் பார்ப்பனர்களிடத்தில் இல்லாத எந்த அக்கிரமமாவது வேறு
ஒருவரிடம் தனியாகக் காணக்கூடியது ஏதாவது இருக்கிறதா என்று
கேட்கின்றோம்.
ஆதலால் எந்தப் பார்ப்பனர்களானாலும் சரி, வேதம், மதம், சாஸ்திரம்,
ஸ்மிருதி என்பதாக சொல்லிக் கொண்டு நம்மிடம் வந்தோ அல்லது அதைக்
கொண்டு வந்து நம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகப்
குடி அரசு - 1928 @)
228
போட்டுவிட்டோ நிற்பார்களானால், அவர்களை லக்ஷியம் செய்யாமல்
உதறித் தள்ளிவிட்டு லக்ஷியம் நாம் செய்யவேண்டியவைகளை செய்து
கொண்டு போக வேண்டியது என்பது தான் நமது யோசனையாகும்.
பெண்களுக்கு சொத்தும் உரிமையும் பருவம் வந்தபிறகு தன்னிஷ்டப்படி
காரியங்களை தெரிந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் வேண்டுமா
வேண்டாமா என்பதைப்பற்றி பெண்களைக் கேட்டால் நியாயம் தெரிய
முடியுமா அல்லது அவர்களை அடிமையாக்கி வைத்திருப்பவர்களிடமும்
அவர்களை தங்கள் சுயநலத்திற்காக உபயோகப்படுத்திக் கொண்டிருக்
கின்றவர்களிடமும் கேட்டால் நியாயம் தெரிய முடியுமா என்பதை
யோசித்துப் பாருங்கள். எனவே அவர்களின் சொத்துரிமையை பற்றியும்
கணவனை தெரிந்தெடுப்பதைப் பற்றியும் இப்பொழுது இந்த வியாசத்தில்
விவரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதி இதை விட்டு விட்டு மற்ற
விஷயங்களை ஆராய்வோம்.
“ஒரு பெண்பூப்பு நிகழ்ந்த உடன் புருஷ இச்சை அடைகிறாள்”
என்றும் “பூப்பு நிகழ்ந்த பிறகு புருஷனில்லாவிட்டால் கற்பு இழக்கின்றாள்”
என்றும் சொல்லுவதானால் பூப்பு நிகழ்ந்து 2,3,4,5 வருஷமாக கல்யாணம்
இல்லாமல் இருக்கும் பெண்கள் எல்லாம் கற்பு இழந்திருப்பவர்கள் என்று
தானே கொள்ளவேண்டும்.
அப்படியானால் கல்யாணம் ஆகி பூப்பு நிகழும் முன்போ பூப்பு
நிகழ்ந்து புருஷனுடன் கொஞ்சகாலமோ அதிக காலமோ வாழ்ந்த பிறகோ
புருஷனை இழந்த பெண்கள் விஷயத்தில் என்ன நினைப்பது என்பதற்கு
இவர்கள் என்ன சமாதானம் சொல்லுவார்கள் என்றுதான் கேட்கின்றோம். ஒரு
சமயம் மேல் குறிப்பிட்ட விதவைகள் என்பவர்களை இவர்கள் கற்பு இழக்க
முடியாமல் பந்தோபஸ்தாக வைத்திருப்பதாக சொல்லுவார்களானால்
அந்தப்படியே இந்த இளங் குழந்தைகளையும் பந்தோபஸ்தாக வைத்
திருப்பதில் என்ன கஷ்டம்? விதவைகளை பற்தோபஸ்தாக வைப்பதை விட
குழந்தைகளை பந்தோபஸ்தாக வைப்பது வெகு சுலபம் என்றே
சொல்லுவோம், ஏனெனில் “கற்பைக் கெடுத்துக் கொள்ள” விதவைகளுக்கு
இருக்கும் சவுகரியம் குழந்தைகளுக்கு இல்லை. அன்றியும் அவர்களை:
பந்தோபஸ்தாக வைத்திருக்கவேண்டிய அத்தனை காலம் அதாவது அவர்.
கள் சாகும்வரை வைத்திருப்பதை விட குழந்தைகளை 2,3 வருஷம் மாத்தி
ரம் வைத்திருந்தால் போதுமல்லவா? அப்படிக்கில்லாமல் ஒருசமயம்
விதவைகள் விஷயத்தில் எப்படியோ போனால் போகட்டும் என்று விட்டு
விட்டு இருக்கின்றோம் என்பார்களானால் இவர்களுக்கு இந்த குழந்தைகள்
விஷயத்தில் அந்த நியாயம் ஏன் பாதிக்குமோ தெரியவில்லை. விதவைகள்.
என்பவர்களும் குழந்தைகள் சகோதரிகள் என்கின்ற முறையுள்ளவர்கள்
தானே? இவைகளை எல்லாம் எடுத்துச் சொல்லுவது மிகுதியும் ஆபாசமான
விஷயங்கள் என்றாலும் நம் நாட்டில் பார்ப்பனர்கள் என்பவர்கள் எவ்வளவு
229
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தூரம் மனிதத்தன்மைக்கும் முற்போக்குக்கும் இடையூறான கொள்கைகள்
கொண்டவர்களாய் இருக்கின்றார்கள் என்பதை தெரிவிக்க வேண்டியே
இவற்றை குறிப்பிட்டுத் தீரவேண்டியிருக்கிறது. இவர்கள் தங்கள் நடவடிக்கை
களைப் பற்றி கவனம் செலுத்தாமல் பெண்கள் விஷயத்தில் மாத்திரம் இப்படி
அநியாயமான நிர்ப்பந்தங்கள் சுமத்தப்படுவதைப் பார்க்கும் போதும்
பெண்களை அடிமைப்படுத்திக் கொடுமைப் படுத்த மாத்திரம் வேதமும்
சாஸ்திரமும் கையாளப்படுவதை பார்க்கும் போதும் இதற்கு சமாதானமாக
நியாயங்கள் சொல்லிக் கொண்டிருப்பது வீண் கால தாமதமும் உபயோகமற்ற
வேலையும் ஆகும் என்பதுதான் நமது முடிவான அபிப்பி ராயம். ஏனெனில்
எந்தக் காரணத்தைக் கொண்டும் இக்கூட்டத்தாரைத் திருத்த முடியவே
முடியாது. ஏன் என்றால் எல்லாம் தெரிந்தே வேண்டுமென்றே செய்பவர்கள்.
மற்றபடி ஏதாவது செய்ய வேண்டுமானால் எதேச்சாதிகாரத்துடன் சட்டம்
செய்யும் சக்தி உள்ள ஒரு அரசாங்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படி
செய்யமுடியாவிட்டால் எல்லாவிதக் கட்டுப்பாட்டையும் அடியோடு
உடைத்தெறிய ஏற்பாடு செய்ய வேண்டும் அப்படிக்கில்லாமல் செய்யும்
முயற்சிகள் எல்லாம் வீண் “கொக்கு பிடிக்கும்” முயற்சியேயாகும்.
கொஞ்ச நாளைக்கு முன்பு பெண்கள் விடுதலையைக் குறிக்கொண்டு
சித்திரபுத்திரனால் “கற்பு” என்னும் ஒரு வியாசமும், “பெண் விடுதலை
வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும்” என்று ஒரு வியாசமும்
எழுதப்பட்டதை வாசகர்கள் படித்திருக்கலாம். அதைப் பற்றி பல நண்பர்கள்
தங்கள் கசப்பையும் தெரிவித்தார்கள். ஆனால் அதில் கண்ட ஒரு
அபிப்பிராயத்தையே இப்போது சர். பி. சிவசாமி அய்யர் என்கின்ற ஒரு
பார்ப்பனர் ஒருவாறு தெரிவிக்கின்றார். அதாவது “பெண்கள் பிள்ளை
பெறுவதை மட்டுப்படுத்த வேண்டும்-என்பதைப்பற்றி இவர் சமீபத்தில்
பெங்களூரில் சர், விஸ்வேஸ்வரய்யாவின் தலைமையில் பல பெரியோர்கள்
முன்னிலையில் செய்த ஒரு உபன்யாசத்தில் பேசியிருக்கின்றார்.
ஆனால்
பெண்கள் பிள்ளை பெறுவதை கட்டுப்படுத்துவதற்கு அவர் சொல்லி
யிருக்கும் சாதனம் என்னவென்றால் கலவியில் பெண்களை ஒருவித
கருவியை உபயோகப்படுத்திக் கொள்ளும்படி யோசனை சொல்லியிருக்
கின்றார். நாம் சொல்லும் விஷயங்கள் சிற்சில சமயங்களில் சிலருக்கு
அதிசயமாகவோ அல்லது வேறு பொறுப்பற்றதாகவோ காணப்படுவதை நாம்
ஒருவாறு உணருகின்றோம்
. ஆனாலும் அப்பேர்ப்பட்டவர்கள் கண்:
களுக்கு நாம் ஒருவர் மாத்திரம் தனியாய் தோன்றிக் கொண்டிருக்கும்படி
இல்லாமல் அவர்களாலேயே மதிக்கத்தக்க வேறு சிலரும் நம்மோடு சேர்ந்து
தோன்றி விடுகின்றார்கள் என்பது நமக்கு சில சமயங்களில் ஆறுதலை
உண்டாக்கிவிடுகின்றது.
குடி அரசு - தலையங்கம் - 25.11.1928
குடி அரசு - 1928 @)
230
திரு. வனந்திர மாண்மய நாடாருக்கு
oo
எண்றும் கண்மாாத காக்ஷி
கனவான்களே,
சில உபசாரப் பத்திரங்களிலும் திரு. செளந்திரபாண்டிய நாடார்.
அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி அவருக்குக் கிடைத்ததற்கு திரு.
ராஜனும் நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான்
ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு.ராசன் அவர்கள் பொறுப்பாளி
என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. உங்களோடு சேர்ந்து நானும்
அவருக்கு நன்றி செலுத்துகின்றேன்.
ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்பு
டையவன் என்றால் திரு. செளந்திரபாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய
மற்ற காரியங்களையும் தொண்டுகளையும் கெடுத்துவிடும் எனக்கருதி
தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான்
கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற
முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன். அதைத்தவிர:
எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு.
ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார்
அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை
நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது
எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக வேண்டு யென்றாவது கருதிக்கொண்டு
ஒரு காரியமும் செய்ய வேண்டாமென்றே சொல்லுகிறேன்.
ஏனெனில், அது முடியாத காரியம் - ஒரு சமயம் முடிவதாயிருந்
தாலும் அது யோக்கியமான மனிதனின் காரியமாகாது. ஒரு சமயம் யோக்கி
யமான மனிதனுக்கும் சாத்தியப்படுமானாலும் அதனால் நன்மையை விட
கெடுதியே அதிகமாகும்.மக்களில் பலதிறமுண்டு - யோக்கியனும் அயோக்
கியனும் உண்டு - இருவரையும் திருப்தி செய்யக் கருதுவது நாணயமாகாது.
ஆதலால் அடியோடு கஷ்டப்படுகின்றவர்களுக்கு நன்மை செய்வதின்
மூலம் சுகப்படுபவர்களுடைய ஆசையும் அனுபவமும் சற்று குறைந்தாலும்
குற்றமில்லை. நான் பொதுவாக இம்மாதிரி பதவி பெறுபவர்களை பாராட்டுகிற
231
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வழக்கமில்லை. ஆனால் திரு.நாடாரைப் பாராட்டுகின்ற காரணம் எல்லாம்.
அவர் கொடுமைப்படுத்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரிலும்
அதிகமாய்க் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் ஏராளமாய் நமது நாட்டில்
வதைக்கப்படுகின்றார்கள் என்றும் அவர்களுக்கு விடுதலையும் சாந்தியும்
ஏற்பட கொடுமையை அனுபவித்த ஒருவருக்கு பதவி கிடைப்பது
அனுகூலமானதென்றும் அந்த வழியில் நாடார் மன உறுதியோடு உழைப்பார்.
என்றும் நம்பி
அவர் அடைந்த பதவியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படப்
போகும் நன்மையை உத்தேசித்து அவர்களைப் பாராட்டும் முறையில்
இவர்களைப் பாராட்டுகின்றேன் என்றும் திரு. நாடார் அந்தத் துறையில்
உறுதியுடன் நின்று இந்தக் காரியத்தை நடத்தத் தாட்சண்யமோ பயமோ
சுயநலமோ பொது ஜனங்களிடம் கீர்த்தி பெற முடியாதே என்கின்ற
சந்தேகமோ தோன்றுமானால் தயவு செய்து அந்த க்ஷணமே அந்த
வேலையை இராஜீனாமாக் கொடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது
செய்கின்ற தொண்டே செய்ய வேண்டுமென்றும் சொல்லுகின்றேன்.
குறிப்பு:
23111928
@6 இராமநாதபுரம் ஜில்லா போர்டுக்குத் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஊஃபு.அ.செளந்திரபாண்டியனார் அவர்களுக்கு
விருதுநகர் பொதுமக்களால் நடத்தப் பெற்ற பாராட்டுக்கூட்டத்தில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 25.1.1928
குடி அரசு - 1928 @)
232
PP
;
தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு சென்னை விக்டோரியா
மண்டபத்தில் திருவாளர் ஈவெ.ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்தேறிய
விபரமும் தலைவர் உபன்யாசமும் மற்றும் பல விபரங்களும் நிறைவேற்
றப்பட்ட தீர்மானங்களும் இத்துடன் வரும் அநுபந்தத்தில் காணலாம்.
அக்கிராசன உபன்யாசத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களில்
சீர்திருத்தக்காரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களும்,
சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய விஷயங்களும், செய்யவேண்டிய
முறைகளும், தெளிவாய் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன.
முதலாவதாக, அக்கிராசனர் தாம் சீர்திருத்தத்தில் நம்பிக்கையுடைய
வரல்ல வென்றும் அழிவு வேலையிலேயே நம்பிக்கையுடையவ
ரென்றும், அதாவது ஒன்றை மாற்றியோ அல்லது யெடுத்துவிட்டோ அந்த
ஸ்தானத்தில் மற்றொன்றை வைக்க வேண்டுமென்கிற விஷயத்தில் கவலை
யில்லாதவரென்றும், அவசியமில்லாததும் கொடுமை விளைவிப்பதுமான
விஷயங்களை அழித்து விட வேண்டியது என்கின்ற கருத்தின் பேரில்
கவலை கொண்டிருக்கும் அழிவு வேலைக்காரரென்றும் சொல்லியிருக்
கிறார்.
அதற்கேற்ப இப்போது சமுதாய முற்போக்குக்கும் சமத்துவத்திற்கும்
விடுதலைக்கும் புதிதாக நாம் கைக்கொள்ளவேண்டியது என்னவென்றால்,
அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாய் இருப்பவைகளை
அழித்து விட வேண்டுமென்பதேயாகும்.
இவ்விதம் அழிவு வேலை மூலம்
தடைகளை நீக்கிவிட்டால் தானாகவே முற்போக்குக்கு சரியான பாதை
ஏற்பட்டு விடும் என்பது அதில் நன்றாய் அறியக்கிடக்கிறது. இந்தக் குறிப்
பானது “இருப்பதை எடுத்துவிட்டால் வேறொன்று வேண்டாமா?” என்று
ஆலோசனை இல்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிற விதண்டாவாதிகளுக்கும்
பாமர மக்களை ஏய்ப்பதற்குச் சில சுயநலவாதிகள் “நாய்க்கர் எல்லா
வற்றையும் அடியோடு அழிக்க வேண்டுமென்கிறாரே, அப்படி அழித்து
விட்டால் மக்களுக்கு வேறு கதியென்ன?” என்று நீலிக்கண்ணீர் விட்டுக்
கொண்டிருக்கும் பாஷாண்டிகளுக்கும் தக்க பதிலாகும்.
233
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
மற்றும் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் நடந்து வந்த
சீர்திருத்தங்கள் பலிக்காமல் தடைபட்டு போனதற்குக் காரணம், மேல்
குறிப்பிட்டதான தடைகளாயிருப்பவைகளை சரியானபடி வேருடன்
களைந்தெறிவதான அழிவு வேலை செய்யாததுதான் காரணம் என்றும்
தற்காலத்தில் செய்யப்படுவதாய்ச் சொல்லப்படுவதெல்லாம் புரட்டும்
சுயநலமும் அடிப்படையாய் கொண்டதென்றும், சீர்திருத்தத்திற்கு விரோதிக.
ளாய் உள்ள உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களாலும் “சித்தாந்தக்காரர்
களாலுமே நடைபெற்று வந்ததென்றும் தெளிவாய் எடுத்துக் கூறியிருப்ப
திலிருந்து நமது நாடு உண்மையான சீர்திருத்தமடையாமல் போனதற்குக்
காரணம் விளங்கும் மற்றும்.
“கபிலரை ஏமாற்றி விட்டோம், புத்தரை ஏமாற்றி விட்டோம் கூன்
பாண்டியனை ஏமாற்றி விட்டோம், மூவேந்தர்களை அழித்து விட்டோம்,
மகமதிய அரசாங்கத்தை ஒழித்து விட்டோம், நாயக்கர் அரசாங்கத்தை பாழ்
படுத்தி விட்டோம், கம்பனைக் கொண்டே எங்களைக் கடவுளாகவும் தேவர்.
களாவும் செய்து கொண்டோம். இப்படிப்பட்ட எங்களுக்கு சில பார்ப்பன
ரல்லாத கூலிகளைப் பிடித்தே இப்புதிய சீர்திருத்த இயக்கத்தை ஒழித்து
எங்கள் ஆதிக்கத்தை பழையபடி நிலைநிறுத்திக் கொள்ளச் செய்வதுதானா
ஒரு பிரமாதமான காரியம்” என்று மனப்பால் குடித்துக் கொண்டு இறுமாந்து
ஆணவமாய் பிதற்றித் திரிபவர்களுக்கு, அக்கிராசனர் உபந்நியாசத்தில்
“அந்தக் காலமும் சவுகர்யமும் அப்போதைய அரசாங்கத்தின் யோக்
கிதையும் வேறு, இந்தக் காலமும் இப்போதைய அரசாங்கமும் சீர்திருத்தம்
செய்யவோ அழிவு வேலை செய்யவோ விருப்பம் கொண்டவர்களுடைய
சவுகரியமும் வேறு” என்று சொல்லியிருப்பது தக்க பதிலாகும். இப்
போதைய இயக்கம், அடிக்க அடிக்க எழும்பும் பந்து போலவும், வெட்ட
வெட்ட தளிரும் கொடிகள் போலவும் பரவிவிட்டது, கொஞ்ச காலத்திற்கு
முன் ஒருவர் எழுதியது போல், அதாவது “எங்களுக்கு இச்சுயமரியாதை
இயக்கம் கண்களை திறந்து விட்டது. இனி எவர் தடுத்தாலும், இந்த இராமசாமி
நாயக்கரே மாறி விட்டாலும், இந்த உணர்ச்சியை அடக்கிவிடமுடியாது”'
என்று எழுதியதுபோல் இனி என்றைக்கும் இவ்வியக்கமும் இந்த உணர்ச்சி
யும் மறையாது என்பதையும் யாரும் அழிக்க முடியாது என்பதையும்
வெள்ளிடை மலைபோல் விளக்கி விட்டது.
மற்றபடி பெண்கள் விடுதலைக்கு தடையான அர்த்தமற்ற கற்பும்,
சம்மதமற்ற விதவைத்தன்மையும் அழிக்கப்படவேண்டும் என்றும்,
அவைகள் அழிக்கப்படத்தக்க முறைகளும், அதாவது புருஷன் என்பவன்,
“பழைய சாதம் சுடுகிறது, விசிறி கொண்டு வீசு” என்றால் உடனே பெண்ஜாதி
என்பவள் விசிறிகொண்டு வீச வேண்டியதுதான் கற்பு என்றும், பெண் ஜாதி
என்பவள், கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது புருஷன்.
என்பவன் கூப்பிட்டால், திடீரென்று சேந்தும் கயிற்றை விட்டு விட்டு
குடி அரசு - 1928 @)
234
ஓடிவரவேண்டுமென்றும், ஒடி வந்தால் மாத்திரம் போதாது கிணற்றில் கயிறும்
பாத்திரமும் அந்தரமாய் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும்,
அப்படி தொங்கிக் கொண்டிருந்தால் தான் கற்பு உள்ளவள், பதிவிரதை
யானவள் என்றும் சொல்வதான கற்பையும் பதிவிரதா தன்மையையும்
அடியோடு ஒழித்தாக வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதும், விதவை
களுக்கு அவர்கள் தாய் தகப்பன்மாரோ அல்லது சுற்றத்தார்களோ மறு
கல்யாணம் செய்து வைக்காவிட்டால்,
அவ்விதவைகள் தங்களுக்கு இஷ்ட
மான கணவரை தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டியது என்றும், புருஷ
னுடன் வாழும் மற்ற பெண்களும் இதற்கு உதவி செய்து விதவை களை
கணவனுடன் வாழச் செய்ய அனுகூலமாகயிருக்க வேண்டும் என்றும்
சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி,
குறுகிய நோக்கங்கொண்டோ அல்லது விஷம புத்தி கொண்டோ,
“பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஒழுக்க ஈனமாய் நடந்து கொள்ள
லாமா” என்று கேட்பவர்களுக்கும் சமாதானமாக, அதாவது “கணவன்
மனைவி என்பதாக இருவர் சேர்ந்து இல்வாழ்க்கை நடத்துவதற்காக செய்து
கொண்ட ஒப்பந்தத்தின் பலனாகவோ காதலன் , காதலி என்கின்ற முறையில்
இருவர்களின் காதல் இன்பத்தின் பயனாகவோ இருவரையும் சம நிபந்தனை
கொண்ட கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு இருக்கக்கட்டினாலும் அது
எவ்விதத்திலும் பெண்கள் விடுதலைக்கு இடையூறாக இருக்காது” என்று
சொல்லியிருப்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
மற்றபடி, விதவைகள் என்னும் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்.
விஷயத்திலும் “ அவர்கள் தங்கள் துக்க நிவர்த்திக்கு இனி பெற்றோர்களை:
யோ உறவினர்களையோ எதிர்பாராமல் தாங்களாகவே தக்க கணவனை
தெரிந்தெடுத்து வெளிப்படுத்தி விட வேண்டியதுதான்” என்று குறிப்
பிட்டதும், மற்றப்படி “புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்:
களும் விதவைகளின் மேற்கண்ட முயற்சிக்கு உதவி செய்ய வேண்டியது”
என்றும் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதேயாகும்.
மற்றபடி ஜாதி வித்தியாசம், தீண்டாமை, மூடப் பழக்க வழக்கங்கள்
ஆகியவைகளை ஒழித்தலைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் குறிப்பிடப்
பட்டிருப்பவைகளும் ஊன்றிக் கவனிக்கத்தக்கவைகளாகும்.
மகாநாட்டிலும் அக்கிராசனரின் உபன்யாசத்திற் கண்டபடியே சில
தீர்மானங்களேயானாலும் மிக முக்கியமான தீர்மானங்களாகவே தீர்மானிக்
கப்பட்டிருப்பதானது குறிப்பிடத்தக்கது.
அதாவது, பெண்கள் சுதந்திரத்திற்குப் பெரிதும் இப்போது இடை
யூறாயிருப்பது அவர்களுக்கு சொத்துரிமை இல்லாமையால்தான் என்பதை
235
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
உணர்ந்து இனிமேல் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமையும்,
விதவைகள் விதவைத் தன்மையுடன் இருந்து கொண்டு கஷ்டப்பட
வேண்டியதற்கு காரணமாயிருப்பது அவர்களுக்கு புருஷன் இறந்தவுடன்
மற்றவர்களிடம் ஜீவனாம்சத்திற்கு தொங்கிக் கொண்டிருக்க வேண்டியிருப்ப
தால்தான் என்பதை உணர்ந்து அது மாறும்படி புருஷன் சொத்து பாத்தியம்
முழுவதும் சர்வ சுதந்திரத்துடன் விதவைகளுக்கு அளிக்கப்பட்டு விட
வேண்டும் என்றும் தீர்மானித்திருப்பதானது சரியான பரிகாரமாகும்.
மற்றும் தீண்டாதார்கள் என்பவர்கள் கல்வி இல்லாத காரணத்தால்
முன்னேற முடியாமல் இருப்பதால், அவர்களுக்கு சாப்பாடு போட்டு
கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்திருப்பதும், மூட
பழக்கவழக்கங்களை ஒழிப்பதற்காக பள்ளிக் கூடங்களில் குருட்டு பக்தி மூட
நம்பிக்கைகளுக்கு இடந்தரும்படியான கல்வி கற்பிக்கக்கூடாது என்றும்,
மூடநம்பிக்கையும் குருட்டுப் பக்தியும் உள்ள உபாத்தியாயர்களை பள்ளிக்
கூடங்களில் பிள்ளைகளை படிப்பிக்க சேர்க்கக்கூடாது என்றும்,
உபாத்தியாயர்களைத் தயார் செய்யும் பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகள்
படிக்கும் பள்ளிக் கூடங்களிலும் மூட நம்பிக்கையும் குருட்டு பக்தியும்
உண்டாக்கத்தக்க எந்த புஸ்தகங்களையும் பாடபுஸ்தகமாக வைக்கக் கூடா
தென்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதும், மற்றும் சில தீர்மானங்களும்,
முக்கியமாக மதத்தின் பேரால் பெண்களுக்கு பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு
விடும் வழக்கத்தை ஒழிக்கச் சட்டம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீமதி டாக்டர்
வோகளி ஆர்யா அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு ஸ்ரீமதி அலமேலு
மங்கைத் தாயாரவர்களால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாய் நிறைவேற்றப்
பட்ட தீர்மானமும் குறிப்பிடத்தக்கவை,
எனவே இவ்வளவு முக்கிய தீர்மானம் செய்ததில் மகாநாட்டு
பிரதிநிதிகள் காட்டிய ஆரவாரத்திற்கும் ஊக்கத்திற்கும் அளவே இல்லை.
மகாநாட்டிற்கு விஜயம் செய்து தீர்மானங்களில் கலந்து கொண்ட பெரி
யோர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் என்றே சொல்லவேண்டும்.
அவர்கள் அரசாங்க இலாகா இப்போதைய மந்திரிகளும், மாஜி மந்திரி
களும், இனி வரப்போகும் மந்திரிகளும், சட்டசபை பிரதிநிதிகளும், பல ஸ்தல
ஸ்தாபனத் தலைவர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர்களும், மதச்
சம்மந்தமான ஆராய்ச்சியுள்ளவர்களும், சீர்திருத்தத்தில் பெரிதும் கவலை
கொண்டவர்களும், தக்க கல்வியும் அறிவும் உள்ள பெண்மணி
களும், பண்டிதர்களும், வாலிபர்களும், முதியோர்களும் ஆகிய பலதிறப்
பட்ட தக்க பிரதிநிதிகளேயாவர்கள். அவர்களில் வெளியூர்களிலிருந்தும்
அனேகர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் மேல்கண்ட
மகாநாட்டை திறம்படவும் சிறப்புடனும் நடத்திய பெருமை மிகுதியும் திரு
சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும் ராவ்பகதூர் எம். கே. ரெட்டி அவர்.
களையும் சேர்ந்தது என்றே சொல்லுவோம். இதுவரை சீர்திருத்த சம்மந்தமாக
குடி அரசு - 1928 @)
236
எத்தனையோ மகாநாடுகள் நடந்திருந்தாலும் இது போன்ற பிரதிநிதித்
துவமும் பலன் தரத்தக்க தீர்மானங்களும் கொண்ட மகாநாடு மிகச் சுருக்க
மாகத் தானிருக்கும்.
நிற்க தீர்மானங்கள் எவ்வளவோ முன்னேற்றமுடையதானாலும்
அவைகளை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்க சம்மந்தமான சட்ட
உதவிகளும் தேவையிருப்பதால், பொது ஜனப் பிரதிநிதிகளைத் தெரிந்
தெடுப்பதில் பொது ஜனங்கள் மேல்கண்ட அபிப்பிராயமுடைய
கனவான்களையே சட்டசபை லோக்கல் போர்டு முதலிய ஸ்தாபனங்களில்
போய்ச் சேரும்படி பார்க்க வேண்டியதே முக்கிய கடமையாகும் என்பதைப்
பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.
குடி அரசு - தலையங்கம் - 02.12.1928
237
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
செண்ணை சட்டசயை
இந்த வாரம் சென்னையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் மந்திரி
கனம் முத்தய்யா முதலியார் அவர்கள் தமது இலாக்காவில் உள்ள
உத்தியோகங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தியது பற்றி
அவரைக் கண்டிப்பதற்காக சட்டசபையை ஒத்தி வைக்கவேண்டும் என்று
ஒரு அவசரப் பிரேரேபனை பார்ப்பனர்களால் திரு. சாமி வெங்கிடா
சலத்தைப் பிடித்து சுயராஜ்யக் கட்சி தலைவர் என்கிற முறையில் கொண்டு
வரப்பட்டது.
காங்கிரஸ் ககஷி என்றும், சுயராஜ்யக் க௯ஷி என்றும், தேசீயக் க௯ஷி
என்றும், அவைகளுக்கு சட்டசபையில் ஒத்துழையாமை செய்வதும்,
முட்டுக்கட்டை போடுவதுதான் கொள்கைகள் என்றும் சொல்லி பார்ப்பன
ரல்லாதாரிலேயே சில கூலிகளை விட்டு பிரசாரம் செய்யச் செய்து பாமர
மக்களை ஏமாற்றி சட்டசபைக்குப்போய் உட்கார்ந்து கொண்டு, பார்ப்பன
ரல்லாதார் சமூகத்திற்கே விரோதமாய் பல கெடுதிகள் செய்து வந்திருப்
பதுடன் இப்போது தைரியமாய் வெளியில் வந்து உத்தியோகப் பிச்சை
கேட்கவும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு அளிக்கப்படும் சம சந்தர்ப்
பத்தை ஒழித்து தங்கள் ஆதிக்கத்தையே எப்போதும் நிலை நிறுத்திக்
கொள்வதற்குமே இது உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த
பார்ப்பனர்கள் காங்கிரசுக்குள் சுயராஜ்யக் 55 என்பதாக ஒரு சூழ்ச்சிக்
கக்ஷியை எப்போது ஆரம்பித்தார்களோ அன்று முதலே சுயராஜ்யக் கக்ஷி
பார்ப்பனக் ககஷி என்றும், அது சமயம் அதை ஆதரித்து பார்ப்பனர்களின்
காலை நக்கிக் கொண்டு அவர்கள் பின் திரிந்து கொண்டிருந்த பார்ப்பன
ரல்லாதார்கள் எல்லாம் வயிற்றுச் சோற்று பிரசாரகர்களும் பார்ப்பனக் கூலி
களும் பார்ப்பனரல்லாத சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க
வேண்டிய நிலையில் இருக்கும் இழிமக்கள் என்றும் ஒவ்வொரு நாளும்
ஓயாமல் சொல்லி வந்தோம். அந்த சமயம் அநேக பார்ப்பனக் கூலிகள்
நம்மை சர்க்கார் தரகரென்றும் தேசீய விரோதிகள் என்றுங்கூட தூற்றி வந்த
ததுடன் நில்லாமல் சுயராஜ்யக் கக்ஷி ஒன்றுதான் சர்க்காரரோடு யுத்தம்
செய்யும் க௯ி என்றும், சுயராஜ்யக் கட்சிகாரர் சொந்தத்தில் எவ்வளவு
அயோக்கியர்களாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஓட்டுக் கொடுக்க
வேண்டும் என்றும் பார்ப்பனர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு எழுதியும்
பேசியும் பிரசாரம் செய்தார்கள்.
குடி அரசு - 1928 @)
238
ஆனால் நாம் சொல்லி வந்தது அப்பொழுதே அநேகருக்கு
சரியென்றுபட்டிருந்தாலும் இப்போது ரெ கூலிகளும் ஒப்புக்கொள்ளத்தக்க
மாதிரியில் அது வெளியாகிக் கொண்டு வருவதும், அக்கூலிகள் அது
விஷயத்தைப் பொருத்தமட்டிலும் திருடனைத் தேள் கொட்டியதுபோல் வாய்
மூடிக் கொண்டிருப்பதும் வெட்டவெளிச்சமாய் விட்டது. மந்திரி கனம்
முத்தய்யா முதலியார் அவர்கள், தமது ஆதிக்கத்தில் உள்ள பத்திரப் பதிவு
இலாக்காவில் உள்ள உத்தியோகங்களில் ஒவ்வொரு பன்னிரண்டு
உத்தியோகத்திற்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கு பத்தும், பார்ப்பனர்களுக்கு
இரண்டும் என்பதாக பிரித்து பார்ப்பனரல்லாதாரிலும் உள்ள முக்கிய
பிரிவுகளான மகமதியர்களுக்கு
2ம்
, கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்,
ஆங்கிலோ இந்தியர் ஆகியவர்களுக்கு 2ம், ஆதி திராவிடர்களுக்கு 1ம்
இவர்கள் நீங்கிய பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு 5ம்
என்பதாக கணக்கு பிரித்து அந்தப்படி உத்திரவும் போட்டுவிட்டார். எனவே
இந்தக் கொள்கையையும் அவருடைய தைரியத்தையும் நாம் பாராட்டிய
துடன் பிரிவினை செய்த விகிதாச்சாரத்தைப்பற்றி நமக்குள்ள அதிருப்தி
யையும் முன்னமே குறிப்பிட்டிருக்கின்றோம் ஏனெனில் மகமதியர்களுடைய
எண்ணிக்கைக்காவது கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கைக்காவது பார்ப்
பனர்களுடைய எண்ணிக்கைக்காவது ஆதிதிராவிடர்களின் எண்ணிக் கை
குறைந்து எண்ணிக்கையுடையதல்ல.
பார்ப்பனர்களையும் கிறிஸ்தவர்களையும் பார்க்கிலும் சற்றேறக்
குறைய ஆதிதிராவிடர்கள் 5 மடங்கு அதிகமானவர்கள் என்று சொல்லலாம்.
எனவே இந்த திட்டம் ஆதி திராவிடர்கள் விஷயத்தில் நியாயம் செய்யப்
பட்டதாகாதானாலும் திட்டம் ஏற்படுத்த முனைந்ததைப் பற்றியும் இதை ஒரு
வழிகாட்டிக் கொள்கையாக உபயோகித்துக் கொள்ளவாவது சந்தர்ப்பம்
கிடைத்ததென்பதைப் பொருத்த வரையிலும் நாம் வரவேற்றதுடன் கனம்
முதலியார் அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்தினோம்.
காங்கிரசுக் கட்சியாரும் சுயராஜ்ய கட்சியாருமாகிய யோக்கியவர்கள்.
இப்போது இதை எதிர்க்க வேண்டிய அவசியமென்ன என்பதே நமது
கேள்வி.
“உத்தியோகத்தை இந்தியமயமாக்க வேண்டும்” என்பதுதான்
காங்கிரசின் முக்கிய கொள்கையாயும் லக்ஷியமாயும் இருந்து வந்திருக்
கின்றது. அந்தப்படி பல உத்தியோகங்கள் இந்திய மயமாக்கப்பட்டதுடன் பல
சிறு உத்தியோகங்கள் அளிக்கும் அதிகாரமும் இந்திய மயமாக்கப்
பட்டிருக்கின்றது.
இதன் பயனாய் ஏற்படும் உத்தியோகங்களை இந்தியர்கள் என்பவர்
கள் எல்லோரும் அடையும்படி செய்யத்தக்க ஒரு திட்டம் போட்டால் இதில்
239
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
ஏன் ஒரு கூட்டத்தாருக்கு அதிலும் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களுக்கு
அதிலும் சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் என்னும் சட்டசபையில் முட்டுக்கட்டை
போடப் போனவர்களுக்கு இத்தனை ஆத்திரம் உண்டாக வேண்டும்? தேசீய
பத்திரிகைகள் என்று சொல்லும் “இந்து” “சுதேசிமித்திரன்”” முதலிய
பத்திரிகைகளும் அவைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு வயிறு
வளர்க்கும் குட்டிப் பத்திரிகைகளும் ஏன் இந்தப்படி ஊளையிடவேண்டும்?'
என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம். இந்தப்
பார்ப்பனர்களும் அவர்கள் கூலிகளும் இந்த மாதிரியான காரியங்களுக்கு
முக்கியமாய்ச் சொல்லும் ஆக்ஷேபங்கள் என்னவென்று பார்ப்போமானால்,
“எல்லா வகுப்பாருக்கும் உத்தியோகங்களில் பங்கு இருக்கும்படி
செய்துவிட்டால் நிர்வாகத்தில் ஊழல்கள் ஏற்பட்டு விடும்” என்கின்ற ஒரே
பல்லவிதான் பாடப்பட்டு வருகிறது. இதையேதான் கோவை திரு. சி.வி.
வெட்கிட்டரமணய்யங்கார் சட்டசபை வாதத்தில் சொல்லி இருக்கின்றார்.
இதைப் பொது ஜனங்கள் சற்று கவனிக்க வேண்டுமென விரும்புகின்றோம்.
ஒவ்வொரு வகுப்பாருக்கும் உத்தியோகத்தில் பங்கு இருக்க வேண்டு
மென்று சொல்லுவதற்கும் நிர்வாக ஊழலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?
இப்பொழுது கனம் முத்தையா முதலியார் அவர்களால் பிரித்துக்
காட்டப்பட்ட எந்த ஒரு வகுப்பாரையாவது சுட்டிக்காட்டி பெரிதும் நிர்வாகத்
திறமையற்றவர்கள் என்று யாராவது மெய்ப்பிக்க முடியுமா? என்று
கேட்கின்றோம். மந்திரி கனம் முதலியாரவர்கள் பிரித்திருப்பதும், இதுவரை
அரசியலில் பிரிக்கப்பட்டு வந்திருப்பதுமான வகுப்புகள் அதாவது,
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், பார்ப்பனரல்லாதார்களில் மகமதியர்,
கிறிஸ்துவர், இந்துக்கள், கிறிஸ்தவர்களில் ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர்,
தீண்டிக் கொள்ளக்கூடியவர்கள் என்று கருதும்படியானவர்கள், தீண்டாதவர்.
கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என இந்தப்படி
வெகுகாலமாகவே பிரிவினையாக்கப்பட்டிருக்கும் வகுப்புகளில் எந்த
வகுப்பாரை இந்த சுயராஜ்ய கட்சிக்காரர்களான திரு. சி.வி.வெங்கிட்டரமண
அய்யங்கார் போன்ற பார்ப்பனர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பது நமக்கு
விளங்கவில்லை.
திரு. அய்யங்கார் குறிப்பிடும் நிர்வாகத் திறமை என்ன என்பதும்,
இங்கு நமக்கு விளங்கவில்லை.
அதை
சிறிதாவது குறிப்பிட்டிருப்பார்களா
னால் நிர்வாகத் திறமையைப் பற்றிப் பேசியதானது யோக்கியப் பொறுப்பான
தாய் இருந்திருக்கும். அல்லது இதுவரை உத்தியோகம் பார்க்க நேரிட்ட
வகுப்புகளில் எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிலாவது திறமைக் குறைவை
கண்டுபிடித்து சுட்டிக்காட்டி இருந்தாலாவது அது யோக்கியப் பொறுப்புள்
ளதாய் இருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் வெறும் கூப்பாடு போடுவதானது
குடி அரசு - 1928 @)
240
வெறும் அயோக்கியத்தனமா அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒரு உத்தியோகத்திற்கு வேண்டிய திறமை என்ன என்பதை அந்த
உத்தியோகத்தின் விளம்பரத்தின் கீழேயே குறிப்பிட்டிருக்குமே யொழிய
வேறில்லை. அதில் யாருக்காவது ஆகேஷபனை இருந்தால் திறமை
இன்னதென்று குறிப்பிடும் போது மாத்திரம் அதைப்பற்றி பேசி திறமையை
தீர்மானித்துக்கொள்ளலாமே யல்லாமல் அத்திறமையை வகுப்பில்
கொண்டுவந்து புகுத்துவதில் எவ்வளவு அயோக்கியத்தனமும் கெட்ட
எண்ணமும் இந்தக் கூட்டத்தாருக்கு இருக்கின்றது என்பதை வாசகர்களா
கவே தெரிந்து கொள்ள விட்டு விடுகின்றோம்.
தவிரவும், முதலாவதாக ஒரு உத்தியோகத்திற்கு அவசியமாக
வேண்டியிருக்கும் கல்வியின் யோக்கியதாபக்ஷமோ அல்லது நிர்வாகத்
திறமையோ இன்னது என்று தீர்மானித்து விட்டால் உத்தியோகத்திற்கு தெரிந்
தெடுக்கும்போது அந்த இரண்டும் இருக்கின்றதா இல்லையா என்று பார்த்துக்
கொள்வதைப்பற்றி நமக்கு ஆக்ஷபனை இல்லை. ஆனால், அந்த
உத்தியோகத்திற்கு வேண்டிய யோக்கியதையைவிட மற்றொருவன் அதிக
யோக்கியதாபட்சம் பெற்றிருப்பதாய் சொல்ல வந்தால் அதை உத்தியோகம்
கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூட நாம்
சொல்லுவோம். ஏனெனில் கலாசாலைக் கல்வியே யோக்கியதாபட்சத்திற்கு
போதுமானது என்பதானால் அது திறமையைக் கவனிப்பதாகாததாய்ப்
போய்விடும். ஏனெனில் இப்போது கருதப்படும் கலாசாலை யோக்கிய
தாம்சம் என்பது சில கிராமபோன் பிளேட்டுகளுக்கு கூட கிடைத்துவிடும்.
அதாவது ஏதாவது ஒன்றை நெட்டுரு போட்டு பாடம் பண்ணி ஒப்புவித்து
விட்டவரே யோக்கியதாம்சம் பெற்றவர் என்றால், யோக்கியதாம்சத்தின்
கேவலத்திற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. சர்வகலாசாலை
பரீக்ஷைகளால் “இவன் பரீகை்ஷையில் தேரிவிட்டான்” என்று கால் கெஜ
கடிதத்துண்டு வாங்கிவிட்டால் அது நிர்வாகத் திறமைக்குகூட போதுமான
தென்று சொல்லவருவார்களானால் உடனே அந்த கலாசாலைகளை ஒழித்து
விடவேண்டும் அல்லது அக்கலாசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கும்
போதே நிர்வாகத் திறமையை சோதித்து விடவேண்டும் அல்லது சேர்க்கும்
போதே வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி சேர்த்து யோக்கியதை உண்டாக்கி
வைக்க வேண்டும்.
நாம் ஏன் இப்படிச் சொல்லுகின்றோம் என்றால் கலாசாலைகள்
உத்தியோக யோக்கியதைக்காக படிப்பிக்கின்ற ஸ்தாபனம் என்று இதனால்
தெரிகின்றபடியால்தானேயொழிய வேறில்லை. அன்றியும் நிர்வாகத் திற
மைக்கு வகுப்புகளைக் கவனிக்கக்கூடாது என்று யாராவது சொல்ல வருவார்.
களானால் நிர்வாகத் திறமைக்கு நெட்டுருவைக் கண்டிப்பாக கவனிக்கக்
கூடாது என்று சொல்லுவோம்.
241
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கனம் முத்தையா முதலியாரை மற்ற மந்திரிகளும் நிர்வாக சபை
மெம்பர்களும் இன்னும் பின்பற்றாமல் இருப்பதைப்போன்ற பொறுப்பற்ற
தன்மை அவர்களுக்கு வேறில்லை என்றே சொல்லுவோம். அது மாத்திர
மல்லாமல் சட்டசபையில் மேற்கண்ட ஒத்திப்போடும் தீர்மானம் வந்த
காலத்தில் சட்டசபை மெம்பர்கள் அதை சீக்கிரம் முடித்து ஓட்டுக்கு விட்டுத்
தோற்கடிக்காமல் சட்டசபையில் வெறும் பேச்சிலேயே இருந்து விட்ட தானது
மெம்பர்களுடைய பொறுப்பற்ற தன்மையையும் காட்டுகின்றது. என்றாலும்,
இனி அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திலாவது சட்டசபை மெம்பர்கள்.
இம்மாதிரிப் பொறுப்பற்ற தன்மையாய் இராமல் உத்தியோகத்தில் வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவ ஏற்பாடு செய்ததற்காக கனம் முத்தையா முதலியார்.
அவர்களைப் பாராட்டும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்று வதுடன்
அந்தப்படி செய்யாத
மந்திரிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் நிர்வாக
சபை மெம்பர்கள் மீது கண்டனத் தீர்மானமும்கொண்டு வந்து நிறைவேற்றி
வைக்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.12.1928
குடி அரசு - 1928 @)
242
தெண் இந்திய
ச்ர்த்கிரக்கக்காரர்கள்
சகோதரிகளே! சகோதரர்களே!
இந்த பெரியதும் முக்கியமானதுமான மகாநாட்டிற்கு என்னை தலைவ
னாக தெரிந்தெடுத்ததன் மூலம் தாங்கள் எனக்களித்த கெளரவத்திற்காக
எனது மனமார்ந்த நன்றி அறிதலை தங்கள் எல்லோருக்கும் தெரிவித்து
கொள்கிறேன்.
இம்மகாநாடு சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு என்று சொல்லப்படுகிறது.
எனவே, இத்தகைய ஒரு மகாநாட்டுக்கு சீர்திருத்தத்தில் மிகுதியும்
நம்பிக்கையுள்ள ஒருவரைத் தலைவராக தெரிந்தெடுத்திருப்பீர்களானால்
அது மிகவும் பொருத்தமுடையதாக இருந்திருக்கும் என்று நான் சொல்
வதற்காக என்னை மன்னிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஏனெனில் வரவர எனக்கு சீர்திருத்தம் என்பதில் உள்ள நம்பிக்கை மறைந்து
கொண்டே போகின்றது. அன்றியும் நமது நாட்டை முன்னுக்கு கொண்டு
வரவேண்டும் என்பவர்களுக்கும், நமது நாட்டு பெரும்பான்மையான
மக்களுக்கு சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச்
செய்ய வேண்டும் என்பவர்களுக்கும், எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த
வேலை அல்ல என்பதே எனது அபிப்பிராயம். மற்றென்னை யெனில்
உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையே ஆகும். அளவுக்கு மீறின
பொறுமை கொண்ட யோசனையின் மீதே நான் இந்த முடிவிற்கு வந்திருக்
கிறேன். உதாரணமாக ஒரு பெரிய கிணறு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்
கள்; அந்தக் கிணற்றிற்கு மிகப் பழமையானதும் விசேஷமானதுமான ஒரு
புராணம் இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; அதாவது அந்தக்
கிணற்று தண்ணீரில் ஒரு துளி தண்ணீரை சாப்பிடுவதனாலோ, அல்லது
மேலே தெளித்துக் கொள்வதினாலோ நம்முடைய எல்லாப் பாவமும் - மகா
பாதகமான காரியம் என்று சொல்லப்பட்ட செய்கைகளைச் செய்தாலும்
மன்னிக்கப்படுவதுடன் மோட்சலோகம் என்பது கிடைக்கும் என்று எழுதி
இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது அந்தக்
கிணற்றுத் தண்ணீரில் ஒரு சிறிது சாப்பிட்டால் விஷபேதி காணக்கூடிய
தாகவும், அதில் ஸ்நானம் செய்தால் சரீரமெல்லாம் சொரி சிரங்கு
243
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வருவதாகவும் இருந்தால் அதற்காக நாம் செய்ய வேண்டிய வேலை என்ன?
அந்தத் தண்ணிரில் விஷப் பூச்சிகள் உண்டாகி தண்ணீரைக் கெடுத்துவிட்டது
என்று கருதி அந்த விஷப் பூச்சிகள் சாகத்தக்க மருந்தை அந்த கிணற்றுக்குள்
போடுவோம்.
அப்படிப் போட்ட பிறகும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே
முன்போலவே இருக்குமானால் மேல் கொண்டு என்ன செய்வோம்;
மருந்துக்குக் கட்டுப்படாத அளவு கெடுதி அந்தத் தண்ணீரில் உண்டாய்
விட்டதாகக் கருதி அந்தக் கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இரைத்து
வெளியில் ஊற்றி அந்தக் கிணற்றையும் நன்றாய்க் கழுவி விடுவோம்.
அந்தப்படி செய்த பிறகும் மறுபடியும் அந்தத் தண்ணீரின் குணம் அப்
படியே இருக்குமானால் அதனுடைய காரணம் என்ன? அந்த கிணற்றுக்குத்
தண்ணீர் வரும் ஊற்றே விஷத்தன்மை பொருந்தியது. அதாவது விஷ நீர்
ஊற்றுக் கிணறு என்றுதானே ஏற்படும். அப்படிப்பட்ட விஷநீர் ஊற்றுக்
கிணற்றை என்ன செய்வீர்கள்? பழைய புராணத்தையும் அதில் உள்ள அந்தக்
கிணற்றுப் பெருமையையும் மதித்து, அதிலேயே குளித்து அந்த நீரையே
சாப்பிட்டு விஷபேதியையும் சொரி சிரங்கையும் அடைந்து கொண்டிருப்
பீர்களா? அல்லது அந்தக் கிணத்தை மண்ணைக் கொட்டி மூடி விடுவீர்களா?
என்பதை யோசித்துப் பாருங்கள்.
எனவே, மருந்து போட்டு தண்ணீரைச் சுத்தம் செய்வதும், தண்ணீர்
பூராவையும் இரைத்து கிணற்றைக் கழுவுவதும் சீர்திருத்த வேலையாகும்.
அடுத்தபடியான மண்ணைப் போட்டு நிரவி மூடிவிடுவதே அழிவு
வேலையாகும். இந்த முறையில் தான் நான் ஒரு அழிவு வேலைக்காரன்
என்பதாகத் தெரிவித்துக் கொண்டேன்.
நமது நாட்டைப் பொறுத்த வரையில் சீர்திருத்தம் என்பதெல்லாம்
செய்து பார்த்தாய் விட்டது. நான் பார்த்தாய் விட்டது என்று சொல்வது
இப்போது நடைபெற்று வரும் சீர்திருத்தம் என்பதைக் குறித்தல்ல. ஏனெனில்,
இது உண்மையான சீர்திருத்தமல்ல. இப்போதைய சீர்திருத்தம் என்று
சொல்லப்படுவதுகளெல்லாம் பாமர மக்களை ஏய்த்து அவர்களிடம்
செல்வாக்குப் பெறுவதற்காக படித்த கூட்டத்தார்களோ பணக்காரர்களோ
தங்களில் ஒருவருக்கொருவர் போட்டி போடுவதற்காகக் கண்டுபிடிக்கப்
பட்ட அநேக
சூட்சி ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும். இது மேல்நாட்டா
ரைக் கண்டு பழகிய செய்கையாகும். இம்முறைகள் எல்லாம் சீர்திருத்தம்
செய்யப்பட வேண்டியவர்களுடைய நன்மையைக் கருதி கண்டுபிடிக்கப்
பட்டதல்ல. சீர்திருத்தம் செய்பவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்தே
பெரிதும் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனாலும், சீர்திருத்தம் பெற
வேண்டிய மக்கள் இதை உண்மையாகவே நம்பி வந்திருக்கின்றார்கள்.
ஆனாலும், அதன் முடிவுகள் எல்லாம் மேலும் மேலும் மோசமான
குடி அரசு - 1928 @)
244
நிலைமைக்கே, அதாவது இனிமேல் சுலபத்தில் சீர்திருத்தம் செய்யமுடியாத
நிலைமைக்குப் போய்க்கொண்டிருக்கின்றார்கள்.
இதன் முக்கிய காரணம்
என்னவெனில், எந்தக் கூட்டத்தாரால் - எந்த மனப்பான்மை உடையவர்.
களால் மக்கள் கெட்டு சீர்திருத்தமடைய வேண்டிய நிலைமைக்கு வந்தார்
களோ, யாருடைய எந்தக் கூட்டத்தாருடைய சுயநலத்திற்காக மக்கள்
பெரிதும் நிலை குலைய வேண்டியதாயிற்றோ
அந்தக் கூட்டத்தார்களே தான்
மிகுதியும் சீர்திருத்தம் என்கின்ற துறையை உபயோகித்துப் பயன்பெற்று
வந்திருக்கின்றார்கள். இனியும் அவர்களே
தான் பெரும்பாலும் இத்துறையில்
இருக்கின்றார்கள். அதனால்தான் நான் நமது மக்களின் நிலை சீர்திருத்த
முடியாத நிலையை அடைந்து விட்டது என்று சொல்லுகின்றேன்.
சீர்திருத்தம்
சமுதாய சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு
மாதிரியாக இருக்கின்றது. உதாரணமாக மேல்நாடுகளில் எல்லாம் சமுதாய
சீர்திருத்தம் என்பது எல்லா மக்களையுமே பொறுத்தது. அதாவது, சீர்திருத்தம்
செய்யப்படவேண்டிய சமூகப்பழக்க வழக்கம் முதலியவைகள்
எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவே இருப்பவைகளாகும்.
நமது நாட்டில்
பெரும்பாலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியவைகள் என்று சொல்லப்
படுபவைகள் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு வகையானதாகும்.
நமக்குள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சீர்திருத்தம் பொது
மனித சமூகத்தில் மக்களின் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு கற்பிப்ப
தாகும். இந்த முறை நமது இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும்
இவ்வளவு மோசமான கற்பனையின் மீது கையாளப்படுவதே இல்லை.
அடுத்தபடியானது வாழ்க்கையில் இருந்து வரும் பழக்க வழக்கம், மூட பக்தி,
குருட்டு நம்பிக்கை ஆகியது போன்ற வகைகள்; இவைகள்
எல்லாம் நமது
நாட்டில் விசேஷமாய் மதம், கடவுள், மோட்சம் என்பதன் பெயர்களாலேயே
அவைகளை ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருகின்றது. என்றாலும்,
இவைகளை சீர்திருத்தம் செய்யவேண்டும் என்கிற கவலை வெகுகாலத்திற்கு
முன்னதாகவே ஏற்பட்டது என்று சொல்லலாம்.அதாவது புத்தர், இராமானுஜர்,
திருவள்ளுவர் முதலிய பல பெரியோர் காலத்திலேயே ஏற்பட்டதாகச்
சொல்லலாம்.
ஆனாலும், மேற்கண்ட துறைகளில் அதுமுதல் இதுவரை ஒரு
சிறு காரியத்திலாவது வெற்றியேற்பட்டு அது நமக்குப் பயன்பட்டது என்று
சொல்லுவதற்கு இல்லை. இப்போது ஏதாவது ஒரு சிறிதளவு மாறுதல் ஏற்பட்டு
இருக்கின்றது என்று யாராவது சொல்லவருவார்களானால் அது வெளி
நாடுகளில் நடைபெறும் சமூக சீர்திருத்தத்தின் சாரல் அல்லது “வெளிநாட்டார்.
தங்கள் சுயநலத்திற்காகச் செய்யப்பட்ட வேலைகளின் பலன்” என்றுதான்
சொல்லவேண்டும்.
245
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
நம் நாட்டில் நம் நாட்டு மக்களால் சமூக சீர்திருத்தம் என்பது ஒரு
சிறிதும் செய்வதற்கு சாத்தியமே இல்லை. ஏனெனில், அவற்றிற்குத்
தடையாய் கடவுள் உணர்ச்சியையும், மத உணர்ச்சியையுமே நிறுத்தப்பட்டு
இருப்பதால் முடியாததாய் இருக்கின்றது அன்றியும் இந்நிலை சிலருக்குப்
பயன்படுவதாயுமிருக்கின்றது.
இதுவரை செய்து வந்த காரியங்கள் எல்லாம்
பயன் படாமல் போனதற்குக் காரணமே இதுதான் என்றே சொல்லுவேன்.
இதற்கு சமாதானம் சொல்ல வேண்டியவைகள் எல்லாம் சொல்லி
யாய்விட்டது. செய்யவேண்டியதெல்லாம் செய்து ஆய்விட்டது. அதாவது
புத்தர், கபிலர், திருவள்ளுவர் முதலியவர்கள் சொன்னவைகளுக்கு
மேலாகவும், இராமானுஜர் செய்ததற்கு மேலாகவும் இனி ஒருவர் வந்து புதிய
ஞானத்தை போதித்தோ, புதிய காரியத்தைச் செய்தோ விடமுடியும் என்பது
இலேசான காரியம் அல்ல. அன்றியும் சமூக சீர்திருத்தத்திற்கு இப்போது
விரோதிகளாயிருப்பவர்களுங்கூட தங்களுடைய தடை வேலையில்
நம்பிக்கை வைத்திருப்பதன் காரணமும் இதுவேதான். ஆனாலும் அப்
போதைய நிலைமையும், செளகரியமும், அரசாங்கமும் வேறு இப்போதைய
நிலைமையும், செளகரியமும் அரசாங்கமும் வேறு என்பதான ஒரு சிறிய
திருப்தி சமூக சீர்திருத்தக்காரர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதா
யிருந்தாலும், கடவுள் உணர்ச்சியும், மத உணர்ச்சியும், ஒரு சிறிதும் மாறு
பாடடையாமல் இருப்பதால் இந்த நிலையில் நமது நாட்டுச் சமுதாயத்திற்குச்
சீர்திருத்தம் என்பது முடியாத காரியம் என்றே முடிவு கட்ட வேண்டி
யிருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டையுமே மனிதனின் மூடபக்தியும்,
குருட்டு நம்பிக்கையும் என்கின்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்
கின்றது. ஏனெனில், குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட கடவுளி
னிடத்தில் தான் பெரிதும் மூட பக்தியால் ஏற்பட்ட மதத்தின் மூலம் கொள்கை
களை வகுத்து வாழ்க்கை நடத்துகிறோம். இம் மூட பக்தியையும், குருட்டு
நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவது சீர்திருத்த வேலையின்
பாற்பட்டதல்ல; அது மனித சமூகத்தின் நன்மைக்காக அழிக்கப்பட
வேண்டிய வேலையின் பாற்பட்டதாகும். ஏனெனில், அடியோடு அழித்துத்
தரைமட்டமாக்கி புதுப்பிக்க
வேண்டி இருக்கும் வேலை சீர்திருத்த வேலை
யாகாது, வேண்டுமானால் புனருத்தாரண வேலை Reconstruction என்று
சொல்லலாம்.
இவ்வேலையில் ஈடுபடுபவர்களுக்கு மகத்தான மன உறுதியும்
சந்தேகமற்ற தெளிவும் இருக்கவேண்டும். அஃதில்லாமல் ஆவேசத்தில்
தலையிட்டுவிட்டால் தற்கொலையாகவே முடியும். ஏனெனில் பலமானதும்
இடையறாததுமான எதிர்ப்புகளிற்கிடையே இவ்வேலை செய்ய வேண்டி
இருக்கிறது. காரணம் என்னவென்றால் வெகு காலமாக மனித சமூக இருதயத்
தில் கலந்து ஊறி விட்டதும், இந்நிலை வெகு பேரினுடைய சுயநலத்திற்கு
அனுகூலமாகயிருப்பதும் ஆகிய இரண்டு காரணங்களால்தான்.
குடி அரசு - 1928 @)
246
எந்த காரணங்களால் உண்மையான சீர்திருத்தம் வெற்றி பெற
வில்லையோ, என்ன என்ன சாதனங்கள் அச்சீர்திருத்தத்திற்குத்தடையோ
அவைகளை வேருடன் அழிக்கத் தயாராயிருக்க வேண்டும். அவைகளில்
ஒரு சிறு தாரையாவது கிளை வேரையாவது மீத்தி வைத்துக் கொண்டு
சீர்திருத்தம் செய்யலாம் என்று எந்தவிதமான சீர்திருத்தக்காரர்கள்
நினைத்தாலும் அவர்கள் ஒருக்காலமும் வெற்றி பெறமாட்டார்கள் என்பது
எனது உறுதி.
அன்றியும் சிலர் சொல்லுவது போல் சீர்திருத்தக்காரர்களுக்கு
நிதானமும் சாந்தமும் அளவுக்கு மீறி வேண்டும் என்பதையும் நான் ஒப்புக்
கொள்ளுவதில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் வெறுப்பும் பிடிவாதமும்
அடியோடு கூடாது என்பதையும் நான் ஒப்புக் கொள்வதில்லை.
நான் இப்படிச் சொல்லுவதால் அநேக பெரியோர்களுடைய
அபிப்பிராயத்திற்கு முரண்பட்டவனாக பலருக்குக் காணப்படலாம்.
ஆம்,
இவ்வித அபிப்பிராயங்களில் நான் நன்றாக முரண்பட்டவன்தான். மேற்
கண்ட விதம் சொல்லப்பட்டவர்களின் பொறுமையையும், நிதானத்தையும்
சாந்தத்தையும், துவேஷமற்ற தன்மையையும் நான் என்னறிவுக்கு எட்டிய
வரை கவனித்துப் பார்த்தேன். அவைகள்
மிகுதியும் பயத்தாலும், ஒருவிதப்
பலக்குறைவினாலும் இவ்விஷயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை
கள் என்றே கண்டேன்.
அன்னியர்கள் நம்மை மதிக்கமாட்டார்களே, பழிப்பார்களே, எதிர்ப்பு
பலமாய் விடுமே என்கிற பயமும் பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கின்றதோ
அவர்கள் ஒருக்காலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவவே
மாட்டார்கள். அன்றியும் அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும்
சீர்திருத்தம் ஒரு காலமும் பயனளிக்கவே முடியாது; அன்றியும் சீர்திருத்தம்
செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருத்தல் கூடாது.
சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகள் எல்லாம் உடைத்தெறிவதைக்
கைக்கொள்வதுதான் சீர்திருத்தத்திற்கு முதன்மையான பாதையாகும்.
கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது அதிலும் நம் நாட்டைப்
பொருத்தவரை சிறிதும் பயனற்றது.
நிதானமும், சாந்தமும், பொறுமையும், கட்டுப்பாடும் கொண்டு
வெறுப்பில்லாமலும், துவேஷமில்லாமலும் நல்ல வார்த்தையும் கூட்டுற
விலும், நயமாகவும், கெஞ்சியும் நமது நாட்டில் எத்தனை காலமாக செய்து
வந்திருக்கிறது? இதுவரை செய்து வந்த சீர்திருத்தங்கள் என்ன ஆயிற்று?
இன்னும் எத்தனை நாளைக்குப் பரீட்சைப் பார்ப்பது என்கிற விஷயங்
களை யோசித்தால் மேற்கண்ட வார்த்தைகள் சீர்திருத்தத்திற்கு விரோதி
களாயுள்ளவர்களிடம் மரியாதை பெறுவதற்காகவும், தங்களது சொந்த
247
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
புகழுக்காகவும், பெருமைக்காகவும் பேசப்பட்ட வார்த்தைகள் அல்லது
பலவீனத்தின் தோற்றம் என்று ஏற்படுமே ஒழிய வேறொன்றுமே இருக்காது.
சிலர்
இம் மாதிரியான நமது அபிப்பிராயத்திற்கு விரோதமாய் சில பெரி
யோர்களான விவேகானந்தர், காந்தி முதலியோர்களுடைய வார்த்தைகளை
எடுத்துக் காட்டுவார்கள். இம்மாதிரியான அப்பெரியோர்களுடைய வார்த்
தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதை நான் கண்ணியமாய் ஒப்புக்
கொள்ளுகிறேன். காரணம், அவ்வார்த்தைகள் சொன்ன பெரியோர்களை
சுவாமியாகவும், மகாத்மாவாகவும் மக்கள் கொண்டாடினார்கள்; கொண்
டாடுகிறார்கள்: படம் வைத்து பூசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இவ்வார்த்தைகளால் சீர்திருத்தம் வேண்டிய மக்கள் அடைந்த
கதியென்ன? எந்த ஒரு அபிப்பிராயத்தையும் அதனால் ஏற்படும் பலனைக்
கொண்டுதான் மதிக்க வேண்டுமே ஒழிய வார்த்தையினுடைய இனிப்பைக்
கொண்டும், அழகைக் கொண்டுமே மதிப்பது அறிவுடைமை ஆகாது என்று
சொல்லுவேன். சீர்திருத்தம் வேண்டியவர்கள் இதுவரை காட்டின பொறு
மையும், கெஞ்சின கெஞ்சும் பேசின இனிமையான வார்த்தையும் போதாது
என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேழ்க்கின்றேன்; அல்லது மக்கள்
படும் கஷ்டம் அவர்கள் அறிவு அடைந்த தன்மை அதனால் நாடு கெட்ட
நிலைமை ஆகியவைகள் இப்பொறுமையினுடையவும், சாந்தத்தினு
டையவும் கெஞ்சுவதனுடையவும் பரிகைஷகுப் போதாது என்றாவது
யாராவது சொல்ல முடியுமா? எனவே, பொறுமையும், சாந்தமும், சகிப்புத்
தன்மையும், இவ்விஷயத்தில் காரியத்தின் அனுகூலத்தை உத்தேசித்துக்
காட்டப்பட வேண்டியதே அல்லாமல், வெறும் பொறுமைக்கும், சாந்தத்திற்
கும் உருவாம் என்கின்ற பெயர் பெறுவதற்கல்ல.
அன்றியும் சிலர் சீர்திருத்தம் செய்வதன் மூலம் பழைய சின்னங்
களையும், ஓவியங்களையும், கலைகளையும் அழித்து விடாதீர்கள் என்கின்
றார்கள். இந்தக் கூட்டத்தார்கள் எந்தப் பழைய சின்னம் ஓவியம், கலை
முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு சொல்லுகிறார்களென்று
நான் கண்ணியமாய் நினைக்கின்றேனோ அந்தச் சின்னமும் ஓவியமும்
கலைகளுமே தான் நம்மையும் நம் மக்களையும் நமது நாட்டையும் பாழாக்
கியதுடன், ஒவ்வொரு அறிவாளி மனதிலும் சமுதாய சீர்திருத்தம், செய்து
தீரவேண்டும், இல்லாவிடில் வேறு எந்த விதத்திலும் நமக்கு கதி மோஷம்
இல்லை என்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டது.
உதாரணமாக இராமானுஜர் நாமத்தையும், பூணூலையும் பழைய
சின்னம் என்பதாகக் கருதி அதை வைத்துக் கொண்டு “பறையன்” என்பவர்.
களை யெல்லாம் பிடித்து நாமமும், பூணூலும் போட்டு மக்களைச் சமத்துவம்
அடையச் செய்வது என்பதான சீர்திருத்தம் செய்தார் என்பதாகச் சொல்லப்
படுகின்றது. இதனால் பழைய சின்னம் காப்பாற்றப்பட்டதே தவிர, மக்களுக்கு
சமத்துவம் கிடைத்ததா? சமத்துவ உணர்ச்சி உண்டாயிற்றா?. நாமமும்
குடி அரசு - 1928 @)
248
பூணூலும் உடையவர்களுக்குள்ளாகவே உயர்வு தாழ்வும், அதுகள் இல்லாத
வர்களை தாழ்மையாய்க் கருதுவதும் இன்று சூரியன் போல் துலங்குகிறது.
மற்றும் பழைய சின்னங்கள் என்பதான கோயில்களை எடுத்துக் கொள்வோம்.
கோயில் என்றால் சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ தயாபரத் தன்மை
யும் கொண்ட கடவுள் என்பவர் இருக்குமிடம் என்றும், அவரை வணங்க
வேண்டிய இடம் என்றும் சொல்லப்படுகின்றது. அதை மக்கள் உணர்ந்து
உய்வதற்கே உண்டாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிச்
சொல்லப்படும் கோயில்களின் நிலைமை என்ன? அதனால் மக்களுக்கு
ஏற்படும் பலன் என்ன? தற்காலம் என்ன காரியங்களின் கொடுமைகள்.
சகிக்கமாட்டாமல் சீர்திருத்தம் வேண்டும் என்று மக்கள் கருத இடம்
கொடுத்ததோ அந்தக் காரியங்களுக்கு எல்லாம் இந்த சர்வ சக்தியும், சர்வ
வல்லமையும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்டதாக கடவுள் என்பது குடி
இருப்பதாகச் சொல்லும் கோயில்களே காரணமாயிருக்கின்றது என்பதை
யாராவது மறுக்க முடியுமா? பழைய ஒவியங்கள் என்பதுகளை எடுத்துக்
கொண்டால் அதுவும் உண்மையான சீர்திருத்தத்திற்கு எவ்வளவு தடையாய்
இருக்கின்றது என்பது விளங்காமல் போகாது. அது போலவே பழைய
கலைகள் என்பதுகளை எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு மலையாக
இருக்கும்.
உதாரணமாக வேதம் என்றும், சாஸ்திரம் என்றும் புராணம், என்றும்
சொல்லப்படுவனவாகிய மனித வர்க்கத்தின் வாழ்க்கை நலத்திற்கு இலக்காக
உண்டாக்கப்பட்டது என்று சொல்லும்படியான ஆதாரங்களும், அவை
களுள் முக்கிய கலைகளாகக் கொண்டாடப்படும் பல புராணங்களும் இது
வரை மக்களுக்கு என்ன நன்மையைக் கொடுத்து வந்திருக்கின்றது என்று
யோசித்துப் பாருங்கள். அதிலும் தென் இந்திய வாசிகளும், அவர்களுள்
சிறந்த பண்டிதர்கள் என்பவர்களும் பக்தி விசுவாசத்துடனும், கலா ஞானத்
துடன் கொண்டாடும் புராணங்கள், இதிகாசங்களாகிய பாரதம், இராமாயணம்,
சிவபுராணம், விஷ்ணு புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம்
என்பவைகள் போன்ற கலைகளால் இதுவரை மக்களுக்கு ஏற்பட்ட பலன்
என்ன? அவைகளில் காணப்படாத மனித தத்துவத்திற்கும், ஒழுக்கத்திற்கும்
விரோதமான காரியங்கள் வேறு எந்தக் கலைகளிலாவது, கலைகள் அல்லாத
வெறுக்கப்பட்ட புஸ்தகங்களிலாவது, வெகு கீழ்த்தர மக்கள் கூட்டத்தின்
நடவடிக்கையிலாவது காண்கின்றோமோ என்பதைச் சற்று கவனித்துப்
பாருங்கள்.
அன்றியும் எவ்வித சீர்திருத்தத்தையும் தடைசெய்யும் படியான
முட்டுக்கட்டைகள் அக்கலைகள் என்பதற்குள் மலிந்து கிடக்கின்றதா
இல்லையா என்பதைச் சற்று பொது நோக்குடன் யோசித்துப் பாருங்கள்.
249
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இன்றைய தினம் அறிவாளிகள் வெகு கவலையுடன் செய்ய ஆசைப்
படும் சீர்திருத்தங்களுக்கு எதிரிகளாயிருப்பவர்கள் தங்களுடைய அதிக
பலம் பொருந்திய ஆயுதங்களாக இந்தப் பழைய சின்னங்கள், ஒவியங்கள்,
கலைகள் என்பதையே உபயோகித்துக் கொண்டு அதாவது அவைகளி
லிருந்தே ஆதாரங்கள் எடுத்துக்காட்டி சீர்திருத்தக்காரர்களை எதிர்த்து
தடையுத்தம் செய்கின்றார்களா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்
பாருங்கள்.
ஆனால், அச்சின்னங்களுக்கும் கலைகளுக்கும் வக்காலத்து
பேசுபவர்களால் சீர்திருத்தக்காரர்களுக்கும் அனுகூலமான ஆதாரங்கள்
அவைகளில் எங்கேயோ இருப்பதாக சொல்லப்படுகின்றது. அது வெறும்
மயக்கம் என்பதும் நம்மை ஏமாற்றுவதற்கு உபயோகப்படுத்தக் கூடியது
என்பதும் எனது அபிப்பிராயம்.
ஏனெனில், அவைகள் எல்லாம் கடவுள் வந்து நேரில் செய்ததாகவும்,
மற்றும் நம்மால் தாங்க முடியாத நிபந்தனைகள் கொண்டதும் மனிதன்
நம்பமுடியாததும், மனிதத் தன்மைக்கு மீறினதுமான சம்பவங்கள் கொண்டது
மாக இருக்கின்றனவேயன்றி, அனுபோகத்தில் இருக்கின்றாகவோ அனு
போகத்திற்கேற்றதாகவோ எடுத்துக் கையாளக் கூடியது அதில் ஒன்றும்
காணக்கூடுவதில்லை. அப்படி காணக்கூடியது என்பதாக எதையாவது
எடுத்து வியாக்கியானம் செய்யக் கூடியதாகயிருந்தாலும் அதை யாரும்
ஒப்புக்கொண்டாக வேண்டும் என்று நிர்பந்திக்கவோ அமுலில் கொண்டுவரச்
செய்யவோ அது உபயோகப்படுவதுமில்லை.
உதாரணமாக, பறையன், பள்ளன் என்பவர்கள் (கொடுமை செய்யப்
பட்டவர்கள்) எல்லோரும் கோயிலுக்குள் போனதாகவும் கடவுள் ஏற்றுக்
கொண்டு தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுவதை
பழைய கலைகளாக உபயோகிக்கின்றார்கள். ஆனால், அவை இப்போது ஏன்
அனுபோகத்தில் இல்லையென்றால் அந்தப் பறையன் வேறு, இந்தப்
பறையன் வேறு என்று சொல்லி வெளியே தள்ளி விடுகின்றார்கள். இந்த
கலையை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்? மனிதருக்குத்தான் பறையனில்
வித்தியாசமிருக்குமே ஒழிய சாமிக்குக் கூடவா வித்தியாசம் என்றால், கலை
களுக்கு ஆபத்து வந்து விட்டது என்கிறார்கள்.
ஆகவே இந்நாட்டிலுள்ள பழைய சின்னங்களையும், ஓவியங்
களையும், கலைகளையும் காப்பாற்றிக் கொண்டு சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் என்றைக்குமே வெற்றி பெற
மாட்டார்கள் என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இதுவரை நமது நாடு சீர்திருத்
தப் பலன் அடையாததற்கு இந்த உணர்வுக்காரர்களேதான் முக்கிய காரண
கர்த்தர்கள் என்றும் சொல்லுவேன். எனவே இந்த சில உரைகளால்
குடி அரசு - 1928 @)
250
சீர்திருத்தக்காரர்கள் நிலைமையைப் பற்றிப் பேசினேன்.
சீர்திருத்தப்பட வேண்டிய விஷயங்கள்
முதலாவது கடவுளும், மதமுமே முக்கியமாய்க் கவனிக்கப்பட
வேண்டியிருக்கின்றது. ஏனெனில், முன்பு நான் சொன்னது போல நம்முடைய
சீர்திருத்தத்திற்கு இவ்விரண்டுமே விரோதமாய் உபயோகப்படுத்தப்பட்டு
வருகின்றது.
கடவுளைப் பற்றி இங்கு நான் அதிகமாகப் பேசவரவில்லை. அதைப்
பற்றி எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவும் நல்லதென்றே
சொல்லுவேன். ஏனெனில் அது ஓட்டைக் குடத்தில் தண்ணீர் சேந்துகின்ற
மாதிரி இழுக்கும்போது குடம் நிறைய தண்ணீர் மொண்டு பாரமாய் வரும் -
மேலே வந்து சேரும்போது வெறுங் குடமாயிருக்கும். எத்தனை நாளைக்கு
இதை வேலையில் இருந்தாலும் தண்ணீர் வந்து கரை சேராது. அதைப்
போலவே கடவுள் என்பது வீண் தர்க்கத்திற்கேற்ற பேச்சே ஒழிய
காரியத்திற்கேற்ற பேச்சல்ல. இதுவரையில் வாதம் செய்தவர்கள் கண்ட
முடிவுகளில் மிகவும் முக்கியமானது நமது கண்ணுக்கும், மனதிற்கும்,
அறிவின் உணர்ச்சிக்கும் எட்டாத ஏதோவொன்று இருக்கின்றது என்றும்,
அதிலும் தேர்ந்த முடிவாக நம்பினால்தான் உண்டு என்றும் சொல்லும்
படியானதுகளே ஆகும். இதற்காக மனத்திற்கும், கண்ணுக்கும், அறிவுக்கும்
எட்டாத ஒன்றை ஏற்றுக் கொண்டு தக்க ஆதாரம் இல்லாவிட்டாலும்
நம்பித்தான் ஆக வேண்டும். நாம் யாரைத் தொந்திரவு செய்வது? அல்லது
அம்மாதிரியான தொந்தரவினால் யாருக்குத்தான் என்ன லாபம்? அடுத்தாற்
போல் மதம் என்பதைப் பற்றியோவென்றால் அது ஒரு பொருளற்ற
தன்மையது. என்னவெனில், இது வரை மதமானது உலகத்திற்கு எவ்வித
மான பலனையும் கொடுத்திருப்பதாய் விளங்கவில்லை. எந்த மதக்காரனுக்
காவது ஒரு சாந்தி ஏற்பட்டிருப்பதாய்த் தெரியவில்லை ஆனால் மதச்
சண்டைக்கும் மதப் பிரசாரத்திற்கும் குறைவில்லை.
ஒவ்வொரு மதக்காரனும் தன் மதமூலமாகத் தான் மக்கள் முழுவதும்
மோட்சத்திற்குப் போக முடியுமென்றும், தன் தன் மதத் தலைவன்தான்
கடவுள் மகனென்றும், கடவுள் தூதன் என்றும், கடவுள் அவதாரம் என்றும்,
அவரவர்கள் சொன்னதுகள் எல்லாம் கடவுளால் சொல்லப்பட்டது தான்
என்றும் சொல்லுகின்றார்கள். இவர்களுக்குள்ளும் கிளைகள் பல இருக்
கின்றன. இதில் யார் மெய்யர்களாகயிருக்க முடியும் என்று கண்டுபிடிக்க
முடிவதில்லை. ஒவ்வொரு மதக்காரனும் அவனவன் மதத்தை நம்பாதவ
னுக்குப் பாவம் என்றும் நரகம் என்றும் சொல்லுகிறான். மனிதனாகப்
பிறந்தவன் இந்த மதத்திற்காக எத்தனை நரகத்திற்குத்தான் போய் வருவது?
பொதுவாக மனிதர்களை கடவுளிடத்தில் அனுப்புவதற்கு இத்தனை ஏஜண்
251
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
டுகள் வேண்டுமா? இவர்களுக்குள் இத்தனைப் போட்டிகள் வேண்டுமா?
இந்த மனிதர்கள் கடவுளை அடைய இந்த மதத் தலைவர்களுக்கு இவ்வளவு
கவலையா என்பவைகளை நிதானமாய் நடுநிலையிலிருந்து யோசித்துப்
பார்ப்பீர்களானால் மதத்தின் அசம்பாவிதமும ஆபாசமும் விளங்காமற்
போகாது.
எப்படி ஒரு மனிதன் மக்களின் நலத்திற்காகவும் பாதுகாப்புக்
காகவும் தான் அரசனாக வேண்டும் என்று கருதி ஒரு அரசாங்கத்தை
ஸ்தாபித்து, பிறகு மக்கள் நலம் மறைந்து தான் அரசாட்சியை விஸ்தரிப்பதில்
கவலைகொண்டு, கொலை முதலியவைகளைச் செய்து,
அயல் நாடுகளைப்
பிடிக்கும் கவலையில் மூழ்கியிருக்கின்றானோ அதுபோலவே மக்கள்
நலத்திற்கு மதம் என்று சொல்லி மதத் தலைவனாகி, கடவுள் மகனாகி,
தூதனாகி, அவதாரக்காரனாகி, உலகத்திலுள்ள மக்களை எல்லாம் தன்:
மதத்தில் சேர்க்கும் ஆசைகொண்டு, ஆள் பிடிக்கும் கவலையில் மூழ்கி
இறக்கின்றான் என்பதே மத சம்பந்தமான எனது அபிப்பிராயமேயொழிய
மதத் தலைவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றாவது, அவர்கள்
சொன்னதெல்லாம் கடவுளால் சொல்லப்பட்டவைகள் என்றாவது அவர்களி
டத்தில் கடவுள் தன்மைகள் இருந்தது என்றாவது ஒப்புக்கொள்வது முடியாத
காரியமாயிருக்கின்றது. ஏனெனில் இவைகளையெல்லாம் ஒப்புக் கொள்வ
தானால் பல கடவுள்களையும், பல ஏஜண்டுகளையும் ஒப்புக் கொள்ள
வேண்டியிருக்கின்றது. ஒரு கடவுள்பாடே திண்டாட்டத்தில் இருக்கும் போது
பல கடவுள்கள் சங்கதி எப்படி நிலை நிற்க முடியும்? ஆதலால் மதம் என்ப
தை கடவுள் என்பவனிடத்தில் சம்பந்தப்படுத்துவது பொருத்தமற்றதாகும்.
மற்றப்படி மதம் என்பது மனித வாழ்க்கைக்கான கொள்கைகளை
வகுத்து அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி ஏற்படுத்தப்பட்டது அல்லது
வகுக்கப்பட்டது என்று சொல்வதானால் ஒருவாறு அதைப்பற்றி
யோசிக்கலாம். அதுவும் அந்தந்த கால நிலைமைக்குத் தக்கபடி கொள்கை
களை மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மையை உடையது என்பதானால்
மாத்திரம் தான் மதத்தைப் பற்றி
யோசிக்கலாம். அப்படிக்கில்லாமல் மாற்ற
முடியாதது, கடவுளின் மகனோ, தூதனோ,அவதாரமோ சொன்னது, கடவுள்
தன்மைபொருந்தியது, அதனருகில் வேறுயாரும் நெருங்ககூடாதென்று
சொல்வார்களானால் அந்த மதங்களை மதங்களாகவே (ஆணவம்) கருதி
அவற்றை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய சீர்திருத்தக்காரர்களின்
முக்கிய கடமைகளில் முதன்மையான கடமையாகும். ஏனெனில், சமுதாயச்
சீர்திருத்தம் என்பது காலத்திற்கு ஏற்ற வண்ணம் அறிவுக்கு ஏற்றவண்ணம்
மாறுபாடுகளைச் செய்ய ஒப்புக் கொள்ளுவதேயாகும். எனவே அத்தகை
யவர்கள் முன்னால் “எக்காலத்திலும் எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது”
என்கின்றதான மதத்தடைகள் வந்து குறுக்கிடுமானால் எந்த விதத்தில்
அவற்றை வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்க முடியும்? கொஞ்சமும்
குடி அரசு - 1928 @)
252
கலங்காது உறுதியுடனும் தைரியத்துடனும் தகர்த்தெறிய எவன் முன்னுக்கு
வருகின்றானோ அவன்தான் சமுதாய சீர்திருத்தத் துறையை அணுக முடியும்
என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். சமுதாய சீர்திருத்தகாரர்கள்
அடுத்தபடி கவனம் செலுத்த வேண்டியது.
ஆண், பெண், தன்மைகள்.
பொது மக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்பவர்கள் மிக
மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள் - புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்
தப்பட்ட உணவு என்பது போலவும் - பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்
பட்ட உணவு என்பது போலவும்
- ஆணுக்குப் பெண் கடவுளால்
ஏற்படுத்தப்பட்ட அடிமை என்பதாகக்கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள்.
உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரானால்
முதலிலேயே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க
வேண்டும். ஐயோ பாவம்! “ஏழைக் கடவுள்” மீது எத்தனை பழிதான்
போடுவது என்று தோன்றினாலுங்கூட, அந்தக் கடவுளுக்கு இவ்வளவையும்
சகித்துக் கொண்டு உயிர் வாழும்படியான அவசியம் என்ன வந்தது என்பது
நமக்குத் தெரியவில்லை; கஷ்டமாயிருந்தால் ஒழிந்து தொலையட்டுமே
என்றுதான் தோன்றுகின்றது.
உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் எல்லாவற்றையும் விட பெண்:
கள் நிலையே மிக மோசமானது. அதிலும் அவர்கள்
மீது சுமத்தப்
பட்டிருக்கும் பதிவிரதைத் தன்மையை நினைக்கும்போது மனம் குமுறு
கின்றது. அதாவது பதிவிரதம் என்கிற கற்புதான் அவர்களுடைய கடமை
யாம்
- அதுவும் எத்தகைய பதிவிரதம் என்றால் தன்னைக் கொண்ட
வனாகிய புருஷன் பழைய சாதம் சுடுகின்றது என்றால் விசிறி எடுத்து விசிற
வேண்டுமாம்- தண்ணீர் சேந்தும் போது கணவன் கூப்பிட்டால் அப்படியே
கயிற்றை விட்டுவிட்டு ஓடிவர வேண்டுமாம் - ஓடி வந்தால் மாத்திரம்
போதாதாம் - அந்தக் கயிறும் பாத்திரமும் கிணற்றின் நடுவே திரும்பி
வருமளவும் இராட்டினத்தில் தொங்கிக் கொண்டிருக்கவேண்டுமாம்
-
இல்லாவிடில் அந்தப் பெண் கற்புடைய பதிவிரதை அல்லவாம். எனவே,
சகோதரர்களே! பெண்களுடைய நிலைமைக்கு வேறு என்ன உதாரணம்
வேண்டுமென்கிறீர்கள்? அன்றியும் ஆண்கள் பிறவி மூர்க்கப் பிறவி
அல்லது தூர்த்தப் பிறவி என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டு
மென்கிறீர்கள்? உங்கள் கடவுள்கள் தங்கள் மனைவிகளை இப்படியா
நடத்துகின்றன? தலையிலும், நாக்கிலும், மார்பிலும், தோளிலும் துடைகள்:
மீதும் தங்களது மனைவிகளை வைத்துக் கொண்டிருக்கிற கடவுள்களைக்
கற்பித்துக் கொண்ட உங்கள் புத்தி இவ்விதம் சென்றதற்குக் காரணம் என்ன
என்பது நமக்கு விளங்கவில்லை. பெண்களை அடிமைகளாக்கியதின்
பலனாய் மக்கள் அடிமைகளால் வளர்க்கப்பட்டார்கள்; அடிமைகளால்
253
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
வளர்க்கப்பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திற்கும் அடிமைகளானார்க
ளெனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டுமானால்
பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!
முக்காலமும்
பெண்கள் அடிமை
நீங்க வேண்டும்!!!
பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால் முதலாவதாக அவர்
களைக் கற்பு என்னும் சங்கிலியில் கட்டிப் போட்டிருக்கும் கட்டை
உடைத்தெறிய வேண்டும்; கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும்
கற்பு ஒருக்காலமும் கூடாது! கூடாது! கூடவே கூடாது! வாழ்க்கை - ஒப்பந்தத்
திற்காகவும், காதல் - அன்பிற்காகவும் இருவர்களையும் கற்பு என்னும்
சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டப்படட்டும்; அதைப்
பற்றி நமக்குக் கவலையில்லை. ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு
அடிமைப்படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில்
கடுகளவு யோக்கியமும் பொறுப்பும் இல்லை.
இந்த விஷயங்களில் பெண்களுக்கு ஆண்கள் உதவி புரிவார்கள்
என்று எதிர்பார்ப்பது வீண் வேலையே ஆகும். வீரப்பெண்மணிகள் தாங்க
ளாகவே தான் முன் வந்துழைக்க வேண்டும். அரசாங்கத்திலும் அனேகம்
செய்யப்படவேண்டி இருக்கின்றது. ஆனால் பெண் அரசாக்ஷியால்
(விக்டோரியா மகாராணி) ஆகாத காரியம் ஆண் அரசாக்ஷியால் ஆகுமா
என்பது சிலருக்கு சந்தேகமாயிருக்கலாம். பெண்களின் உறுதியான
ஊக்கமும், உழைப்பும் இருந்தால் கண்டிப்பாய் முடியும். ஆனாலும் சமுதாய
சீர்திருத்தக்காரர்கள் இதை மிகவும் முக்கியமாய்க்கருதவேண்டியது என்ப
தாக முன்னமேயே சொன்னேன். பழக்கத்தையோ, வழக்கத்தையோ, மதத்
தையோ, வேதத்தையோ கருதிக்கொண்டு பயப்பட்டுவிடாதீர்கள்; காலதேச
வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும்,
சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண்களுடைய காலுக்கு விடுதலை
ஏற்பட்டுவிட்டது என்பதை நினையுங்கள்.
விதவைத் தன்மை
அடுத்த விஷயமாக உலக வாழ்க்கையில் இருந்து உயிருடன்
பிரிக்கப்பட்ட சகோதரிகளான விதவைகள் என்பவர்களைப் பற்றி சில
வார்த்தைகள்
குறிப்பிட விரும்புகின்றேன்.
ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான ஒரு நிபந்தனையை நமது
சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப்படுத்துவதான விதவைத்தன்மை
என்பது எந்த விதத்திலாவது. பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்து
பாருங்கள். இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது
மாத்திரமல்லாமல் நம்மை போன்ற மனிதஜீவன்களிடத்தில் நாம் எவ்வளவு
குடி அரசு - 1928 @)
254
கொடுமையாய் அறிவீனமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர்களாய்
இருக்கின்றோம் என்பதற்கு அறிகுறியாகும்.
உலகத்தையும், நதியையும், சக்தியையும் பெண்ணாய் கருதும் இரண்டு
பெண்டாட்டிக்குக் கம்மியில்லாத கடவுள்களையுடையதும் 1000, 10000, 60000
பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்ட ராஜாக்கள் ஆண்டதுமான இந்த
நாட்டில் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள்!! உதைக்கப்படுகின்றார்கள்!!
அதிலும் விதவைத் தன்மையால் மிகவும் வதைக்கப்படுகின்றார்கள்.
பெண்கள் சம்பந்தமான வேறு எந்த காரியத்திற்காவது ஆண்கள்.
தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப்படுத்துகிறார்கள் என்று
சொல்லுவதானாலும் இந்த விதவைத் தன்மையை எதற்காக கற்பித்தார்கள்
என்பதே நமக்கு விளங்கமாட்டேன் என்கிறது.
இதில் எவ்வித அறிவுடைமையும் இருப்பதாக நமக்கு விளங்க
வில்லை. இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதும் அறியக்
கூடவில்லை. ஒரு சமயம் சந்நியாசிகளையும் அதிதிகளையும் உத்தேசித்து
இப்படி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதாகக் கருதினார்களா அல்லது
பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது ஆதலால் இம்மாதிரி செய்வதன்
மூலம் மற்றப் பெண்களுக்கு புருஷன் கிடைக்கட்டும் என்று செய்தார்களா
அல்லது வேறு என்ன காரணத்திற்காக இப்படிச் செய்தார்கள் என்பதைக்
கண்டுபிடிப்பதற்கே முடியாதாயிருக்கின்றது. எப்படி இருந்தாலும் இதைப்
போன்ற முட்டாள்தனமானதும், சித்திரவதைக் கொப்பான கொடுமை
யானதும், இனி அரைக்ஷணமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாததுமான
காரியம் வேறு இல்லை என்றே சொல்லவேண்டும்.
இந்த விதவைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க
தைரியமாகப் பாடுபடவேண்டும்; இது விஷயத்தில் மானம் இன்னது
அவமானம் இன்னது என்பதாகவோ, அவர்கள் என்ன சொல்லுவார்கள்,
இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரிய
மாய் வெளிக்கிளம்பிவிட வேண்டும்; தங்களுக்கு இஷ்டமான கணவன்
மார்களைத் தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திவிட
வேண்டும்; இவ்விஷயத்தில் சற்று செளகரியக் குறைவு இருந்தாலும் அதை
வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்து வரும் சகோதரிகளுக்கு
மிகுதியும் பலனளிக்கும். அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருந்து வருகின்
றது. நமது நாட்டிலேயே சில வகுப்புகளில் இவ்வழக்கம் நடைபெறுகின்றது.
ஆகையால் இதில் இனி தாட்சண்ணியம் பார்ப்பதென்பது சற்றும் பொருந்தா
தெனவே சொல்லுவேன். இதற்கு விதவைகள் அல்லாத ஸ்திரீகளும்
கொடுமைப்படுத்தப்பட்ட ஸ்திரீகளுக்குப் புருஷன் சம்பாதித்துக் கொடுப்ப
திலும், அவர்களுக்குத் தைரியமூட்டி கொடுமைப்படுத்தப்பட்ட குடும்பங்
255
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
களிலிருந்து வெளிப்படுத்தித் தனியாகவும் சுயேச்சையாகவும் வாழச்
செய்யத் தக்க வழியில் கவலை எடுத்துக் கொண்டு உதவி செய்ய வேண்டு
மென்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.நான் ஏன் இப்படிச் சொல்லு கிறேன்
என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால்தான்.
ஜாதி வித்தியாசம்
ஜாதி வித்தியாசம் என்பது கற்பிக்கப்பட்டதே ஒழிய வேறில்லை.
வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைப்பது என்பதற்கு ௬ஜு ஜாதி
வித்தியாசமேயாகும். இது இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு
மிருகப்பிராயத்தில் இருந்து மனிதப்பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை
என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும்
மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு
ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? பிறவியிலாவது வாழ்க்கையிலாவது
ஒழுக்கங்களிலாவது அறிவிலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றதா?
ஒன்றுமே இல்லையே. அப்படி ஏதாவது ஒரு வழியில் பிரித்திருந்தாலும்.
அதற்குச் சமாதானமாவது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லா
மல் பிறவி மாத்திரத்தில் எதேச்சாதிகாரமாய் செய்யப்படும் கொடுமையாகத்
தானே விளங்குகின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர்.
விரோதமாக இருக்கவில்லையா?
சகோதரர்களே! இந்தக் கொடுமையை ஒப்புக் கொள்ளாதவர்கள் யார்?
இதை ஒழிக்கவேண்டுமென்று சொல்லாதவர்கள் யார்? இதற்காக எத்தனை
காலமாக முயற்சி செய்யப்பட்டு வருகின்றது? ஜாதி வித்தியாசம் உயர்வு
தாழ்வு கூடாது அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சொல்லாத பெரியார் யார்?
ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக்கின்றதா? ஒரு சிறிதும் காணப்
படவில்லையே. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும்.
எனவே இதற்குச் சரியான வழி அறிவினாலோ ஞானத்தினாலோ போதனை
யினாலோ ஏற்பட்டுவிடும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது
பெரிதும் அரசாங்கச் சட்டத்தினாலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதிநிதித்து
வத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு தாழ்வு வித்தியாசத்தை!
ஒழிக்க முடியும்.
ஆனாலும் இது அரசியல் கூட்டமல்ல. இங்கு நான் அரசியலைப்
பற்றிப்
பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப்
பலவித சட்டம் வேண்டும் என்று கேட்பதுபோல எல்லோருக்கும்
பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்
கிறோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை
நசுக்காமல் பார்த்துக் கொள்ள
வேண்டும் என்பதற்காகவேதான். இது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதா
இல்லையா என்பதைத் தாங்களே யோசித்துப் பாருங்கள். இன்னும் ஓர்.
குடி அரசு - 1928 @)
256
அவசியமும் சொல்லுகின்றேன். அரசியல்காரர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்
துவம் கேட்கும்போது எதற்காக வகுப்பு வித்தியாசத்தைக் கற்பிக்க வேண்டும்.
எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாமே என்கின்றார்கள். இதை நம்பி,
இந்தப்படியே சமுதாய வாழ்க்கையில் இருக்கலாம் என்றாலோ மத
இயல்காரர்கள் அது மதத்திற்கு விரோதம் என்கின்றார்கள். அம்மதத் தடை
யை நீக்க சட்டம் செய்யலாம் என்றாலோ மத ஆச்சாரியர்கள் “மதத்தில்
சர்க்காரோ சட்டசபையோ பிரவேசிக்கக் கூடாதெ”ன்கிறார்கள். எனவே இப்
போதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க
வேண்டிய அவசியம் என்று சொல்லுவது சரி என்று தோன்றவில்லையா?
அடுத்தபடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால்
ஜாதி வித்தியாசம் என்பதற்கு தீண்டாமை என்பதாகும்.
தீண்டாமை
கனவான்களே!
தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும்
என்பதாக நீங்கள் யாரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன்.
மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில்
நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்
கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை
பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால்
எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச்
செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங் கூட கடவுள் ஒருவர்
இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால்
அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய
மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும்,
சாந்தத்தோடும், அகிம்சாத் தர்மத்தோடும் இருக்கவேண்டுமென்று
விரும்புகின்றீர்கள் என்பதும் இம் மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு
நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில்
உயிர்
துறப்பதை
உண்மையிலேயே
தப்பு
என்று
யாராவது
நினைக்கின்றீர்களா என்பதும் எனக்கு விளங்கவில்லை.
இம்மாதிரி ஒரு பெரிய மனித சமூகத்தை கொடுமைப்படுத்தி அடக்கி
வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு சுயராஜ்யம் என்றோ, அரசியல்
சுதந்திரம் என்றோ, பூரண விடுதலை என்றோ வாயினால் உச்சரிக்கவாவது
யோக்கியதை உடையதாகுமா என்று கேட்கின்றேன். சிலர் சுயராஜ்யம்
வந்துவிட்டால்-பூரண சுயேச்சை வந்துவிட்டால் இவைகள் ஒழிந்து போகும்
என்று சமாதானம் சொல்லக்கூடும். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன்.
257
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
சுயராஜ்யம் மட்டுமல்ல; தர்மராஜ்யமும், அவதார ராஜ்யமுமாகிய
ராமராஜ்யமும் சத்திய சந்தன் ராஜ்யமாகிய, அரிச்சந்திர ராஜ்யமும் மற்றும்
கடவுளே அரசாண்டதாகச் சொல்லும் அரசாட்சிகள் உள்ள காலத்தில் தானே
இவைகள் உண்டாக்கப்பட்டதாகவும் இவற்றைச் சரிவர பரிபாலித்து
வந்ததாகவும் இவை மகாக்கிரமமாக நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்
படுகின்றது. எனவே மறுபடியும் அந்த ராஜ்யங்கள் வருமானால் இந்தக்
கொடுமைகள் குறையுமா? அதிகமாகுமா? என்று கேட்கின்றேன். ஆதலால்
இக்குற்றங்கள் நமது நாட்டை விட்டு ஒழிக்க முயற்சிக்க வேண்டியது சமுதாய
சீர்திருத்தக்காரர்கள் கடமை மாத்திரமல்லாமல் அரசியல் சீர்திருத்தக்காரர்கள்
என்பவர்களுடையவும் முக்கியமான கடமையேயாகும்.
கல்வி
இனி கல்வி என்பதைப் பற்றியும் சீர்திருத்தக்காரர்கள் கவனம்
செலுத்த வேண்டியது அதிகமுண்டு. “கல்” என்பதற்கு “அறி” என்று பொருள்.
கல்வி என்றால் அறிவி, தெரிவி என்பது தான் பொருளாயிருக்க வேண்டும்.
எனவே, எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையும்
மனிதத்தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும். மற்றவைகள் வித்தை
யாகும். இதற்கு உதாரணமாக
“ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள்வைக்கப்படும்”
“உலகத்தோடு ஓட்ட ஒழுகார் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”
என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது.
ஆதலால் உலக நிலையை
யும் அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத் தன்மையுமே
முக்கியமாய்க் கொண்டு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும்,
இப்போதைய கல்வி என்பது மனிதத் தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும்
பொறுத்தமானதல்ல. குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற
அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் தேசத்துரோகிகளுமாக ஆக்கி
தனது காலடியிலேயே அமுக்கி வைத்துக் கொண்டு நிரந்தமாய் தன்
இச்சைப்படி ஆக்ஷி புரியவேண்டும் என்று கருதுகின்ற ஒரு அரசாங்கத்திற்கு,
அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகின்றது. அது மாத்திரமல்லாமல்
ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதும் அயோக்கியர்களின்
ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, இது அடியோடு மாற்றப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல
வேண்டுமானால் கடவுள் பக்தி, மதபக்தி, இராஜபக்தியாகிய அறிவுத்
குடி அரசு - 1928 @)
258
தடையும், அடிமை புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்விச் சாலை
களுக்குள் தலைகாட்டவே விடக்கூடாது. ஏனெனில் கடவுளிடத்திலும்,மதத்
தினிடத்திலும் அரசனிடத்திலும் பக்தியாய் இருக்கும்படி அவ்வவைகளே
செய்து கொள்ள வேண்டுமே ஒழிய இதற்காக ஒரு பள்ளிக்கூடம் வைத்து
மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத்தனத்தின்
முதல் பாகமாகும். கல்வி கற்பிக்கும் வேலை இது சமயம் முக்கியமாய்ப்
பெண்களுக்கும் தீண்டாதார் ஆக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட
வர்களுக்குமே செய்ய வேண்டும்.
ஏற்கனவே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்கின்ற சமூகத்திற்கும்,
பாரம்பரியமாகவே கல்வி அறிவோடு இருப்பதாகச் சொல்லப்படுபவர்
களுக்கும் பிறவியிலேயே தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக்
கொள்பவர்களுக்கும் இப்போது சிறிதும் கல்வி கற்பிக்க வேண்டிய
தேயில்லை. எனவே குறைந்தது ஒரு பதினைந்து வருஷத்திற்காவது உயர்தர
கலா சாலைகளையும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் பள்ளிக் கூடங்க
ளையும் காலி செய்து, கதவைச் சாத்தி மூடிவிட்டு முன் சொன்ன கல்வியும்,
அறிவும் இல்லாதவர்கள் என்கிற கூட்டத்திற்கே பள்ளிக்கூடம் வைத்துக்
கற்பிக்க வேண்டும். யோக்கியமான அரசாங்கம் இதைத்தான் முதலில்
செய்யும். உண்மையான சீர்திருத்தக்காரர்களும் கல்வித் துறையில் இதைத்
தான் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
மூடப்பழக்க வழக்கங்களும் சடங்குகளும்
சீர்திருத்தக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில்
மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் ஒழிப்பது
என்பது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி நான் சொல்ல
வேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் இந்த விஷயமே
இப்போது எங்கும் பேச்சாயிருக்கின்றது. இந்த மூடப்பழக்க வழக்கங்களால்
பிழைக்கின்ற கூட்டம் தவிர மற்றவர்கள் எல்லோரும் இதன் அறியா
மையை நன்றாய் உணர்ந்திருக்கின்றார்கள்.
ஆனாலும் அவர்களுடைய
தைரியமற்ற தன்மையினால் அதை மாற்றிக்கொள்ள முடியாதவர்
களாயிருக்கின்றார்கள்.
கடவுள், மதம், பக்தி, வேதம் முதலாயதுகள் மாத்திரம் அல்லாமல்
உற்சவம், சுபம், அசுபம் என்பது சம்மந்தமான சடங்குகள், நோன்பு, விரதம்
மாத்திரம் அல்லாமல் வேண்டுதல் தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம்: காணிக்கை
ஆகியவைகள் போன்ற அநேக விஷயங்களில் நாம் நடந்துகொள்ளும்
நடவடிக்கைகள் முழுவதும் மூடப்பழக்க வழக்கங்கள் குருட்டு நம்பிக்கை
கள் ஆகியவை களின் பாற்பட்டதேயாகும்.
259
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இந்த மூடப்பழக்க வழக்க குருட்டு நம்பிக்கையும் செய்கையும் நம்
முடைய அறிவு, ஆராய்ச்சி, பணம், நேரம், முயற்சி, முற்போக்கு முதலியவை
களையெல்லாம் அடியோடு கெடுத்துவிடுகின்றது.நல்ல காரியங்களுக்குப்
பணமும் அறிவும் இல்லாமல் செய்துவிடுகிறது. உலகத்திலுள்ள நாடுகள்
எல்லாவற்றையும் விட, இயற்கையிலேயே எல்லா வளமும் செளகரியமும்
பொருந்தியதான நமது நாடு மட்டும் உலகத்தில் உள்ள மற்ற எல்லா நாடு
களையும் விட மிக மோசமான நிலைமையில் என்றுமே விடுதலை அடைய
முடியாத அடிமைத்தன்மையிலும், அறியாமையிலும் ஆழ்ந்து கிடப்பதற்
குக்காரணமே. இந்த மூடப்பழக்க வழக்கங்களுக்கு நமது மக்கள் கண்மூடித்
தனமாக அடிமையாகியிருப்பதுதான்..
நமது நாட்டைவிட மிகவும் பின்னணியிலிருந்த மற்ற நாடுகள்
இன்றைய தினம் எல்லா நாடுகளையும் விட முன்னணியில் இருப்பதற்கு
காரணம் அந்நாட்டார்கள் மூடப்பழக்க வழக்கங்களையும் குருட்டு நம்பிக்
கைகளையும் அறவே ஒழித்து அவர்களது பகுத்தறிவுக்கு மதிப்புக்கொடுத்து
ஆராய்ச்சித்துறையில் அவர்களது அறிவையும் பணத்தையும் நேரத்தையும்
ஊக்கத்தையும் முயற்சியையும் செலவு செய்வதன் பலனே ஒழிய வேறில்லை.
நம் மூடப்பழக்க வழக்கம் என்று சந்தேகமற நன்றுயறிந்த ஒரு சிறு
விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமானாலும் நடுங்குகின்றோம்.
தைரியமாய் ஏதாவது செய்வதாயிருந்தால் அதை சாமியும், மதமும்,
ஸ்மிருதியும், புராணமும் வந்து தடைக் கல்லாய் நிறுத்திவிடுகின்றது.
இவைகளையெல்லாம் கூட ஒரு விதத்தில் சமாளித்துவிடலாம். ஆனாலும்
“பெரியவர்கள் நடந்த வழி” என்கின்ற பொறுப்பற்றதும் அர்த்தமற்றதுமான
தடை பெரிய தடையாய் இருக்கின்றது. எனவே இவ்விஷயத்தில் சிறிதும்
தாக்ஷண்ணியமில்லாததும் தயங்காத துமான அழிவு வேலையே மிகவும்
தேவையானது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லுவேன்.
இந்த மூட நம்பிக்கை குருட்டு பக்தி என்கின்ற துறையில் நமது மக்கள்
பணம் வருஷம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வீணாகின்றது.
நமது தென்னாட்டில் மட்டும் வருஷத்தில் ஒரு லக்ஷம், இரண்டு லக்ஷம், ஐந்து
லக்ஷம், பத்து லக்ஷம், இருபது லக்ஷம் வரும்படியுள்ள கோயில்கள் பல
இருக்கின்றன. வருஷத்தில் பத்து லக்ஷம், இருபது லக்ஷம், ஐம்பது லக்ஷம்
செலவுசெய்து கூட்டங்கூடும் யாத்திரை ஸ்தலங்கள் நமது தேசத்தில் அநேக.
மிருக்கின்றன: இவைகள் யாவும் ஒருசில கூட்டத்தாரின் சுயநலத்திற்காக
வஞ்சகக் கருத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட மோசடியே அல்லாமல்
வேறல்ல. இதற்காக எழுதி வைத்த புராணங்களும், ஆகமங் களும், சமயாச்
சாரியர்கள் என்பவர்களின் சரித்திரங்களும், ஸ்தல மான்மி யங்கள் தீர்த்த
விசேஷங்கள் என்பதுகளும், புண்ணிய தினங்கள், திதி, திவசம் என்பது
குடி அரசு - 1928 @)
260
களும் சுயநலம் கொண்ட அயோக்கியர்களாலேயே பாமர மக்களை ஏமாற்றச்
செய்த கூழ்ச்சியேயாகும்.
உதாரணமாக இரயில்வேக்காரர்களை எடுத்து கொள்ளுங்கள்.
அவர்களுக்கு நமது தெய்வங்கள் என்பவைகளிடத்திலாவது, புண்ணிய
ஸ்தலம், தீர்த்தம், சிரார்த்தம், புண்ணியதின ஸ்நானம், தேர்த்திருவிழா,
உற்சவம், தீபம், மேளம் என்பவைகளிடத்திலாவது கடுகளவு நம்பிக்கை
யாகிலும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அல்லது அவர்கள்
உண்மையிலேயே நம்மைப் போன்ற அவ்வளவு முட்டாள்களா? ஒருக் கால
மும் இல்லை என்றும் அல்லவென்றும் வெகு தைரியமாய்ச் சொல்லுவேன்.
ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள்.
(“தவிர ஸ்நானத்திற்குப் போகவில்லையா” “வைகுண்ட ஏகாத
சிக்குப் போகவில்லையா”
“ஆடி அமாவாசைக்கு தனுஷ்கோடிக்கு
போகவில்லையா” “பிரயாகைக்கு
சிரார்த்தம் கொடுக்கப் போக
வில்லையா” “கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்குப் போக
வில்லையா” “கும்பமேளாவுக்கு அரித்துவாரத்திற்குப் போகவில்லையா?”
“மாமாங்கத்திற்குக் கும்பகோணம் போகவில்லையா” “ஆருத்திராவுக்குச்
சிதம்பரம் போகவில்லையா”) என்று விளம்பரம் செய்கின்றார்கள். கூலி
கொடுத்துப் பத்திரிகைகளில் போடச் செய்கிறார்கள். படம் எழுதி சுவர்களில்
ஓட்டுகிறார்கள். நல்ல நல்ல பெண்களின் உருவத்தைப் படத்தில் எழுதி
மக்களுக்குக் கவர்ச்சி உண்டாகும்படி செய்கின்றார்கள். இவைகளெல்லாம்
எதற்காக? நாம் மோக்ஷம் அடைவதற்காகவா? நமக்கு புண்ணியம்
சம்பாதித்துக் கொடுப்பதற்காகவா? ஒருக்காலமும் இல்லை என்பதை
நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். ஆனால் மற்றெதற்கு? நம்மை ஏமாற்றிப்
பணம் சம்பாதிப்பதற்காக நம்மிடத்தில் சற்றும் அன்பும் காதலும் இல்லாமல்
தங்களை நன்றாய் அலங்கரித்துக் கொண்டு நம்முன் நின்று கண் ஜாடை
காட்டும் கீழ்த்தர விபசாரிகளின் மனப்பான்மையை ஒத்ததான ஏமாற்ற
மல்லவா இது? இதன் மூலம் இரயில்வேக்காரர்களுக்குப் போகும் பணம்
எவ்வளவு? இதுபோல்தானே புராணமும், ஆகமமும், ஸ்மிருதிகளும்
எழுதினவர்கள் மனப்பான்மையும் இருந்திருக்கும் என்று எண்ண
வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் நம்முடைய மோட்சத்தைப் பற்றி
இந்த கூட்டத்தாருக்கு இவ்வளவு அக்கறை எதற்கு? எனவே நமது
மூடப்பழக்கம், குருட்டு நம்பிக்கையாகியதன் மூலமாக நமது பணங்கள்
எத்தனை கோடி பாழாய்ப் போகின்றது என்பதைப் பாருங்கள். சர்க்கார்
நம்மிடம் அரசாக்ஷியின் பேரால் வசூலிக்கும் வரி என்னும் கொள்ளையை
விட இந்த மூடநம்பிக்கையாலும், குருட்டு பக்தியாலும் செலவிடும் பணமும்
இதன் பேரால் பலர் கொள்ளையடிக்கும் பணமும் குறைந்த தொகை:
கொண்டதெனக் கருதுகின்றீர்களா? சர்க்கார் இதைச் செய்யவில்லை,
261
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அதைச்செய்யவில்லை என்று கத்தும் பொருளாதாரத் திட்ட நிபுணர்கள்.
இந்தப் பகல் வழிப்பறிக் கொள்ளைக்கு ஏதாவது கவலை கொள்ளுகின்
றார்களா? இதைப் பற்றி பேசவாவது அனுமதிக்கின்றார்களா? இந்தப் பக்கம்
சற்று தலை வைத்தாவது படுக்கின்றார்களா? அனுகூலமான துறையில்
ஒன்றும் செய்யாமலிப்பதோடு இந்த ஒழுக்கமற்ற கொள்ளைக் கூட்டத்
தாருக்கு தரகர்களாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்துக் குழியில் தள்ளு
வதற்கு உடந்தையாய்த் தானே இருக்கின்றார்கள்.
இந்தப் பணங்களும் நேரங்களும் கல்வியிலாவது ஆராய்ச்சித்
துறையிலாவது செலவு செய்யப்பட்டிருக்குமானால் நமது நாட்டில் 100-க்கு
93-ஆண்கள் தற்குறிகளாயிருப்பார்களா? 1000-க்கு 999 பெண்கள் தற்குறி
களாயிருப்பார்களா? என்பதுகளை யோசித்துப் பாருங்கள். நமது நாடு
தரித்திரமாயிருப்பதற்குக் காரணம் விளைவில்லையா? விளைவுக்கு விலை
யில்லையா? போதிய பண புழக்கம் இல்லையா? எல்லாப் பணமும் சாமிக்கும்
மதத்திற்கும் கோயிலுக்கும் உற்சவத்திற்கும் சடங்குகட்கும் மூடநம்பிக்கைக்
கும் சோம்பேறிகளுக்கும் ஏமாற்றுகின்றவர்களுக்கும் அழுவதற்கே
செலவாகிவிடுகின்றது. சூதாட்டத்தில் எப்படி சீட்டு மேஜை வாங்கின
வனுக்கே எல்லாப் பணமும் போய் சேர்ந்துவிடுகிறதோ அதுபோல் நம்மை
மூடநம்பிக்கையில் அழுத்தி வைத்திருப்பவர்களுக்கே எல்லாப் பணமும்
போய்ச் சேர்ந்து விடுகின்றது.
எனவே, நமக்கு செல்வமோ, கல்வியோ, அறிவோ, ஆராய்ச்சியோ,
வேண்டுமானால் இந்த மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும்.
இந்தத் துறையும் மற்றெல்லாத் துறைகளைவிட மிகுதியும் அழிவு வேலை
செய்யப்படவேண்டியதாகும். மற்றதை முடிவுரையில் சொல்லுகின்றேன்.
குறிப்பு : 26.11.1928 சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் தென்
ந்திய சமுதாய சீர்திருத்தக்காரர்களின் மாநாடு
- தலைமையுரை
சொற்
ட
முதாய
சீர்திருத்த
ளின்
மாநாடு
- த
யுரை
சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 02.12.1928
குடி அரசு - 1928 @)
262
பிரம்மஸான சங்கமும்
..
ல
னைதாரும்
உலகத்திலுள்ள மக்கள் மனித சக்தியை உணராததற்கும்,
அறிவின்
அற்புதத்தின் கரைகாணாததற்கும் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து ஒற்று
மையை கெடுத்திருப்பதற்கும், சுயநலம் பிற நல
அலக்ஷியம்,
துவேஷம்
முதலியவைகள் ஏற்பட்டு பரோபகாரம், இரக்கம், அன்பு முதலியவைகள்.
அருகிப் போனதற்கும், இயற்கை இன்பங்களும் சுதந்திர உரிமைகளும் மாறி
துக்கத்தையும், நிபந்தனை அற்ற அடிமைத் தனத்தையும் இன்பமாகவும்,
சுதந்திரமாகவும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள
செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்க
வேண்டியதற்கும் முக்கிய காரணம் மதங்கள் என்பதே எமது அபிப்பிராயம்.
இந்த மதங்களேதான் மக்களுக்கு கொடுங்கோன்மையான ஆட்சியை
ஏற்படுத்துவதற்கும் காரணமாயிருந்ததென்றுகூட சொல்ல வேண்டியிருக்
கின்றது.
உலகத்தில் பல காரணங்களால் ஏற்படும் பூகம்பம், எரிமலைக் குழம்பு,
பூமிப்பிளவு, மண்மாரி, மழை, வெள்ளம், புயல்காற்று, இடி, மின்னல்
ஆகியவைகள் போலவும், காலரா, பிளேக்கு முதலிய ரோகங்கள் போலவும்
மனித சமூக வீழ்ச்சிக்கு அடிக்கடி வேறு வேறு வேஷத்தின் பேரால் மதங்கள்
என்பவைகளும் தோன்றிக் கொண்டே வருவதுமுண்டு.
இம்மதக்கேடுகளை உணர்ந்த அனேகரும் உண்மையிலேயே
அக்கெடுதல்களை ஒழிப்பதற்கென்று வேலை செய்தவர்கள் அநேகரும்
அந்த மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு கொள்கைகளுக்கு வேறு வித
வியாக்கியானம் செய்தும், மற்றும் அம்மதத்திற்கு வேறு கொள்கைகளைப்
புகுத்தியும், மற்றும் வேறு மதத்தை ஏற்படுத்தி பழய கொள்கைகளையே
வேறு ரூபத்தில் வைக்கும் பலவித மாயவேலை செய்தும் வந்து ஒரு விதத்
திலும் வெற்றி பெறாமல் பழய நிலையிலேயே இருந்திருக்கின்றார்கள்..
மற்றும் சிலர் சுயநலம் கொண்டு தங்கள் சமூக உயர்வுக்கும் வகுப்பு
ஆதிக்கத்திற்கும் ஆதாரமாக சூழ்ச்சிகள் செய்து மக்களை ஏமாற்றி பல
263
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தந்திரங்கள் மூலம் பழய கொள்கைகளையே நிலைநிறுத்தி வஞ்சித்து
வருகின்றார்கள். இந்த இரண்டிற்கும் தோற்றத்தில் வித்தியாசமிருந்தாலும்
காரியத்தில் ஒரே பலனைத்தான் கொடுத்து வந்திருக்கின்றன.
இந்த நிலையிலேயே, அதாவது மக்களை அறியாமையில்
ஆழ்த்தவும் சிலரின் ஆதிக்கத்தை வலுப்படுத்தவுமாக இது சமயம் நமது
நாட்டில், சிறப்பாக தமிழ் நாட்டில், கற்றறிந்த கூட்டத்தார் என்னும் பார்ப்
பனரது உதவி கொண்டு ஒருவாறு நாட்டில் உலவுகின்ற புதிய மத தோற்றங்
களில் பிரம்மஞான சங்கம் அல்லது தியாசபிகல் சொசைட்டிஎன்பதும் ஒன்று
அது தலைமைப் பேராசையும் கீர்த்தி வெறியும் கொண்ட ஒரு ஐரோப்பிய
மாதின் ஆதிக்கத்திலும் வெள்ளைக்காரர்களின் பண வலிமையிலும்
ஒருவாறு செல்வாக்குப் பெற்று உலவுவதுடன் ஏற்கனவே பல காரணங்களால்
உயர்வு தாழ்வு கொள்கையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மூடநம்பிக்கை
யால் அறிவு வளர்ச்சி பெறாத மக்களுக்கும் பெரிதும் இடையூறாக தோன்றி
இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இச்சபை செல்வமும்
செல்வாக்கும் கொண்ட ஒரு ஸ்தாபனமாயிருப்பதால் மேல் கண்ட இரண்டி
லும் ஆசையுடையவர்களான பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு இதை
ஒரு சாதனமாய் உபயோகித்துக் கொள்ளக்கருதி ஒருவாறு அதில் போய்
குவிந்து கொள்ளுகின்றார்கள்
- அதனால் பலனும் அடைந்து வருகின்
றார்கள்.
நிற்க, இதன் கொள்கைகள் என்ன என்று பார்ப்போமானால், சத்தியம்,
சகோதரத்தன்மை ஆகியவைகள் முக்கியமானவையாம்.
அன்றியும் கடவுள்கள், ராம, கிருஷ்ணாதி அவதாரங்கள், தேவர்கள்,
மகாத்மாக்கள், தேவாத்மாக்கள், உலகத்தை ரக்ஷிக்க உலக குரு தோன்றப்
போகிறார் என்பது, மகாத்மாக்களுடனும், தேவர்களுடனும் சம்பாஷனை
நடத்துவது என்பது, புராணம், இதிகாசம், கீதை ஆகியவைகளில் சிலவற்றை
முழுதும் சிலவற்றை ஒரு அளவுக்கும் ஒப்புக் கொள்வது, முன் ஜென்மம்,
அதன் நடவடிக்கைகளை அறிவது, மற்றும் இது போன்றவைகளில்
நம்பிக்கையுடையவர்களும் இதை நேரில் தினம் அனுபவிக்கின்றவர்கள்.
என்பவர்களும் இம்மதஸ்தராவார்கள் என்று சொல்லப்படுகின்றது.
ஆனால், காரியத்தில் இவர்கள் நடவடிக்கை எப்படிப்பட்டது என்று
பார்க்க வேண்டுமானால், அதை இந்த சங்கத்தில் சேர்ந்து இருக்கும்
நபர்களைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இதில் சேர்ந்திருப்பவர்களில்
பார்ப்பனர்களே முக்கியமானவர்கள். அதிலும் வருணாசிரமக்காரரும், வேத
சாஸ்திர, இதிகாச, புராண முதலியவைகளில் நம்பிக்கையும் பக்தியும் உடைய
வர்களாம்.அவர்கள் நடவடிக்கைகளை கவனிப்போமானால் போக்குக்கும்
நடவடிக்கைக்கும் சிறிதும் சம்பந்த மற்றவர்கள் என்பதும் மக்களை ஏய்க்க
குடி அரசு - 1928 @)
264
வெளியில் ஒரு கொள்கையும் தங்கள் ஆதிக்கத்துக்கு உள்ளுக்குள் ஒரு
கொள்கையும் உடையவர்கள் என்பதும் விளங்காமல் போகாது.
சுமார் இரண்டு வருஷத்திற்கு முன்பாக திருநெல்வேலியில் கூட்டப்
பட்ட திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் கொண்டுவரப்
பட்ட “எல்லா இந்துக்களுக்கும் கோவில் பிரவேசம் கொடுக்க வேண்டும்”
என்கின்ற தீர்மானத்தை உரமாய் எதிர்த்தவர் பிர்ம்ம ஞானசங்கத்தில் அதிக.
பக்தியும் நம்பிக்கையும் பற்றுதலும் யுடையவரான நண்பர் திருவாளர்.
நெல்லையப்ப பிள்ளையே ஆவார்கள். அவர்கள் சொன்ன ஆட்சேபம்
என்னவென்றால்,
“ஆதி திராவிடர்கள் முதலியவர்கள் அசுத்தமுள்ளவர்களானதால்
கடவுளின் அருகில் செல்லவோ பூஜை முதலியவைகள் புரியவோ அருகதை
அற்றவர்கள்” என்றும் “கடவுளின் அருகில் அவர்களைச் செல்லவிடக்
கூடாது என்றும் சொன்னார்கள். அதை ஆக்ஷேபித்து அவ்வூர் பிரபல சைவ
மக்களும், சைவ தேசிகர்களும் தக்க காரணம் காட்டி மறுத்தார்கள். முடிவில்
ஓட்டு எடுக்கும் போது பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த பிரபலஸ்தரான
திருவாளர் பென்ஷன் தாசீல்தார் நெல்லையப்ப பிள்ளை அவர்கள் ஒருவர்.
மாத்திரமே எதிரிடையாக கைதூக்கினார். இந்த விஷயத்தில் அச்சங்கத்தின்
ஏக தலைவரான ஸ்ரீமதி பெசண்டம்மாள் அவர்களும் அதே அபிப்பிராயத்
தையே சொல்லி இருக்கின்றார்கள். அதாவது,
“ஆதிதிராவிடர் முதலியவர்கள் பரிசுத்தமற்றவர்களானதால் அவர்.
கள் தீண்டப்படாதவர்கள் ஆனார்கள்” என்று சொன்னார்.
அது மாத்திரமல்லாமல் இவர்கள் சமீபத்தில் காசியில் பல்கலைக்
கழகத்தில் மாணாக்கர்களின் முன்பு பேசிய காலத்தில் ஜாதிப்பிரிவுகளை
அதாவது வருணாசிரமத்தை ஆதரித்து “தேச நன்மையை உத்தேசித்து அது
அவசியம்” என்றும் பேசியிருக்கின்றார்கள்.
ஆகவே வருணாசிரம தர்மமும் தீண்டாமையும் ஆதரிக்கப்பட்ட ஒரு
ஸ்தாபனத்தால் நாட்டுக்கு எந்த விதத்தில் சகோதரத்தன்மையும் ஒற்றுமையும்
அன்பும் சத்தியமும் உண்டாக்கக் கூடும் என்பதை அறிவாளிகள் யோசித்துப்
பார்க்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.
மற்றப்படி இந்த ஸ்தாபனத்தில் நடைபெறும் மற்ற விஷயங்களை நாம்
இந்த வியாசத்தில் புகுத்த இஷ்டப்படவில்லை.ஆதலால் அதைப் பற்றி நாம்
எழுதவரவில்லை. அரசியல் துறையில் பார்ப்பனரல்லாதார்களுக்கு இந்த
சங்கத்திலுள்ள வருணாசிரமப் பார்ப்பனர்களின் தொல்லையும் வகுப்பு
ஆதிக்கப் பேராசையும் தலைவியால் பார்ப்பனரல்லாதார்களுக்கு ஏற்படும்
265
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கொடுமையும் அளவிடற்பாலதல்ல..
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பிரம்ம ஞான சங்கம் என்பது
ஆரிய தர்மப்பிரசாரம், வருணாசிரம தர்ம பரிபாலனம், பிராமண மகா சபை
என்பன போன்ற பார்ப்பனாதிக்க பிரசார சபைகளில் ஒன்றே ஒழிய வேறல்ல,
அதில் மேல் கண்ட சபைகளாவது வெளிப்படையாய் நம்முடன் போர்.
புரிகின்றன என்று ஒருவாறு சொல்லலாம்.ஆனால் இந்த பிரம்மஞான சங்கம்
என்பதோ சூழ்ச்சியின் மூலம் நம்மைக் கழுத்தறுத்து வருகின்றது. ஆதலால்
பார்ப்பனரல்லாதார் பிரம்மஞான சங்கத்தில் சேருவது தற்கொலைத் தன்மை
பொருந்தியது என்றே சொல்லுவோம்.
சமத்துவக் கொள்கையை அழித்துப் பார்ப்பனீயத்தைப் புகுத்தி
திருஞானசம்பந்தர் என்ற பார்ப்பனர் உதித்து “சைவத்தைக் காப்பாற்றிய
கதையைப் போலவே நமது பார்ப்பனரல்லாதார். இயக்கத்தை அழித்துப்
பார்ப்பனீயத்தை பரப்ப இரன்பம்மை என்னும் “லோக மாதா” வந்து
பிரம்மஞான சங்கத்தால் “மக்களுக்கு பிரம்மஞானம் புகட்டுகின்றார்”
என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சமயம் அந்த ஸ்தாபனத்திற்கு
ஏற்பட்டிருக்கிற செல்வாக்கால், தங்களது சுயநலத்திற்கு ஏதாவது வழி செய்து
கொள்ளலாம் எனக்கருதி பார்ப்பனரல்லாதாரில் சிலர் அதில் சேருவ
தானாலும் சுயமரியாதைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுபவர்கள் அதில்
கலந்து கொள்ளுவது சிறிதும் பொருந்தாததாகும். அதில் உள்ளவர்களில்
பெரும்பான்மையோர்களின் மனப்பான்மையும் முக்கியஸ்தர்களில்
தனித்தனி நபர்களின் மனப்பான்மையையும் அறிந்தே நாம் இந்தப்படி
எழுதுகின்றோம். மற்றொரு சமயம் இதைப் பற்றி விரிவாய் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.12.1928
குடி அரசு - 1928 @)
266
- சித்திரபுத்திரன்
ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு
வைதீகர்களுக்கும், பண்டிதர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் புத்திவராது
என்பது உறுதி. இந்த நாட்டில் பார்ப்பனீயம் இருக்கும் வரையும், மனுதர்ம
சாஸ்திரம் இருக்கும் வரையும், இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும்
இருக்கும் வரையும், விஷ்ணு புராணமும் சிவமகாபுராணமும் சிவ பராக்கிரம
புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும் பாராசர் ஸ்மிருதியும்
இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே
கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து
கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும், சுவாமி தாசி
வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த
சமணர்களை கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன்
பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர்
களையும் திருட்டுத்தனமாக விபசாரம் செய்தவர்களையும் சுவாமியாக
வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ளவரையும், 2 பெண் ஜாதி 3 பெண்
ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில்
இருக்கும் வரையும், சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும் கல்,
செம்பு,பித்தளை பொம்மைகளுக்கு பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும்
பெயருள்ளதும் ஆயிரம் பேர், ஐயாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும்
அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோக்ஷ
முமாயிருக்கும் வரையிலும், பட்டினி கிடந்து சாகப் போகிறவனுக்கு கஞ்சி
ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறிகளுக்கு ஆக்கிப் படைப்பதே
புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவரையிலும், குடிக்கப்
பாலில்லாத குழந்தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப்
போலவும் தொத்திக் கொண்டும் எலிக்குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும்,
சாவதை கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலை கல்லுருவத்தின்
தலையிலும் பாம்புப் புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும், ஏழை
மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும்
267
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாத குருடர்கள்
என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை
என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதை சற்றும்
கவனியாமல் கோவிலென்றும் குளங்களென்றும் கும்பாபிஷேகமென்றும்
வேதபாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு
மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும்
அறிவிலிகள் மிகுந்திருக்கும் மட்டும், சாணியையும் மூத்திரத்தையும் கலக்கி
குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும், அறியாத பெண்களுக்கு சாமி பேரைச்
சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர்களை பொது ஜனங்கள் அனுபவிப்ப
தற்காக முத்திரை போட்டு விபசாரிகளாக விட்டுக் கொண்டி ருக்குமட்டும்,
அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்சவத் திற்கும் சேவை
செய்யும் முறைகளை வைத்துக் கொண்டிருக்குமட்டும், மனிதனுக்கு மனிதன்
தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற
கொடுமைகள் இருக்கும் வரையும், மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச்
சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது கேட்கக்கூடாது என்கின்ற கொள்கையைக்
கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும், இனியும் அமெரிக்
காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும்
இந்தியாவிலிருந்தே ஆயிரக்கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல்
புலபுலென கலகலெனப் புறப்படுவார்கள் என்பதை பார்ப்பனர்களும்
பண்டிதர்களும் உணர்வதோடு பார்ப்பனர்களுக்கும் வெள்ளைக்காரருக்கும்
முறையே சமூகத்தையும் தேசத்தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும்
“தேசீய” முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.
குடி அரசு - கட்டுரை - 09.12.1928
குடி அரசு - 1928 @)
268
செண்ணை
தெண் இந்திய சீர்திருத்தக்காறர்கன் மகாநா௫
சகோதரர்களே! சகோதரிகளே!
நமது மகாநாட்டின் நடவடிக்கைகள் எல்லாம் அநேகமாய் முடிவு
பெற்றுவிட்டன. மகாநாடுகளின் வழக்கப்படி பார்த்தால் மகாநாட்டுத் தலைவர்
என்கின்ற முறையில் எனது முடிவுரை என்பதாக சில வார்த்தை
களையாவது நான் சொல்லியாக வேண்டும். நீங்களும் அதை குறிப்பாய்
எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை உணருகிறேன். மகாநாட்டு நடவடிக்கை
களில் ஆதி முதல் இதுவரை ஊக்கத்தோடும் உணர்ச்சியோடும் இடையறாக்
கவனத்தோடும் கலந்திருந்த உங்களுக்கு இனி நான் அதிகமாய் ஒன்றையும்
சொல்ல வேண்டியதில்லையென்றே நினைக்கின்றேன். ஆயிரக்
கணக்கான வருஷங்களாகவே சீர்திருத்தம் என்பதைப் பற்றி பேசப்பட்டு
வருகிறதாய் அறியக் கிடக்கின்றது. எவ்வித சீர்திருத்தத்தைப் பற்றி பேசப்
பட்டு வந்ததோ அது ஒரு சிறிதும் காரியத்தில் வெற்றிபெறவில்லை.
சீர்திருத்தக்காரர்களும் தங்கள் சீர்திருத்தங்களைப் பற்றி வாயளவில்
பேசிக் கொண்டு வந்திருக்கிறார்களே யொழிய காரியத்தில் கொண்டு
வருவதில் வெற்றியடையவே இல்லை. ஆனாலும் இப்போதும் அம்மாதிரி
யாகவேதான் வாய்ப்பேச்சிலும் வெறும் தீர்மானத்திலும் நடைபெறுகின்றதே
யொழிய காரியத்தில் நடைபெறச் செய்யும் மார்க்கத்திற்கு கொண்டுபோய்
விடும்படியான சீர்திருத்தம் செய்வதற்கு ஆட்களைக் காணோம்.
இந்த மாதிரியான வாய்ப்பேச்சு சீர்திருத்தத்திற்கும் எதிர்ப்புச்
சீர்திருத்தங்கள் வெளிப்படையாயும் மறைமுகமாயும் சூழ்ச்சியாயும் நடந்து
கொண்டே வந்திருக்கின்றன. இன்றைய தினமும் பல இடங்களில் நடந்து
கொண்டிருக்கிறது. அவைகளில் ஒன்றுதான் அரசியல் இயக்கம் என்பதும்
திரு. காந்தியின் வருணாச்சிரமப் பிரசாரம் என்பதும், மற்றும் வருணாச்சிரம
தர்மபரிபாலன மகாநாடு, பிராமண மகாநாடு, இந்து
மகாநாடு, ஆரிய தர்ம
பரிபாலன மகாநாடு, சைவசித்தாந்த மகாநாடு, வைணவ சித்தாந்த மகாநாடு,
ஆஸ்திகர்கள் மகாநாடு என்று சொல்லப்படுபவைகள் போன்றவைகளும்,
ராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம்
269
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
முதலிய புராண இதிகாச காலக்ஷேபங்களும், வேத சாஸ்திரப்புராணப்
பாடசாலைகள் முதலியவைகளும், இவைகளுக்கு அடிக்கடி பாஷியங்கள்'
கிளப்புவது முதலியவைகளுமாகும்.
ஆதலால் வெறும் சீர்திருத்தங்கள் எப்பேர்ப்பட்ட வீரர்களால்
செய்யப்படினும் அவைகளை மேற்கண்ட கரையான்கள் அடியோடு அழித்
துக் கொண்டே வந்துவிடுமேயொழிய ஒரு சிறு பாகத்தையும் மீதியிருக்க
விடாது என்பதை தயவுசெய்து உணருங்கள்.உண்மையான சீர்திருத்தத்தை
நமது நாட்டிற்கு விரும்புபவர்கள் முதலில் மேற்கண்ட புல்லுருவிகளையும்
கரையான்களையும் அழிக்க தைரியமாய் முற்படவேண்டும். பழக்க வழக்கம்
என்கிற பிசாசுகளை முதலில் ஓட்டி விட வேண்டும். பழக்க வழக்கங்களை
விடவேண்டுமானால் மனிதன் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கத் தயாரா
யிருக்க வேண்டும்.அப்படி பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் கேள்வி
மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே
ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாக தெரிய
வருவதினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. அநேகர் பின்பற்றுவதா
லேயேநம்பிவிடக்கூடாது, கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது
என்பதினாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவதொரு விஷயம் நம்முடைய
புத்திக்கு ஆச்சரியமாய் தோன்றுவதாலேயே அதை தெய்வீகம் என்றோ
மந்திரசக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்ட விஷய மானாலும்
நடுநிலைமையில் இருந்து பகுத்தறிவிற்கு தாராளமாய்விட்டு ஆலோசிக்கத்
தயாராய் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் கண்மூடித்தனமான
பழக்க வழக்கம் முதலியவைகளை ஒழிக்க முடியும்.
அப்படிக்கில்லாமல் “எதையும் நம்பித்தானாக வேண்டும்” “பெரிய
வர்கள் நடந்தபடி தான் நடக்க வேண்டும்” என்று நினைப்போமானால் எதை
நம்புவது? யார் சொன்னது சரி? யார் சொன்னது தப்பு? எந்த எந்த புஸ்தகம்
கடவுள் சொன்னது? அதில் எதெது மத்தியில் மனிதனால் நுழைக்கப்பட்டது?
அவைகளில் அறிவாளிகளுக்கு எழுதியது எது? புத்தியில்லாத பாமர:
மக்களுக்கு எழுதியது எது? பெரியவர்கள் யார்? என்கின்றவை போன்ற
விஷயங்களுக்குச் சமாதானம் எங்கே இருக்கிறது? நமது சீர்திருத்த
வேலையின் ஜீவநாடி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இங்குதான் மனிதன்
தைரியமாயும் உறுதியாயுமாயிருக்க வேண்டும்.
தவிர சீர்திருத்தங்களைப் பற்றிப் பிரசாரம் செய்வதன் மூலம்
மக்களுக்கு எடுத்துச் சொல்லி முழுவதையும் சரிப்படுத்திவிடலாம் என்று
எண்ணுவதும் மிகுதியும் பைத்தியக்காரத்தனமாகும்.
ஏனெனில் நமது பிரசாரத்தை செய்வதற்கு நமக்குள்ள சந்தர்ப்
பத்தைக் காட்டிலும் நமது சீர்திருத்தத்திற்கு எதிரிகளான வைதிகர்கள்,
குடி அரசு - 1928 @)
270
பண்டிதர்கள், சுயநலப் பார்ப்பனர்கள். அவர்களது கூலிகள் ஆகியவர்
களுக்கே மிகுதியும், சந்தர்ப்பங்களும் செளகரியங்களும் அதிகமாய்
இருக்கின்றன. எப்படியெனில் கோவில்கள், புராணங்கள், சித்திரப்படங்கள்.
ஆகியவைகளும், உற்சவம், காலக்ஷேபம், பஜனை ஆகியவைகளும்
பழக்கம், வழக்கம், நடை, உடை, பாவனை, சம்பிரதாயம் ஆகியவைகளும்,
பள்ளிக்கூடம், படிப்பு, பாடபுஸ்தகம் முதலியவைகளும் யாருடைய
பிரயத்தனமும் இல்லாமல் மக்களுக்குள் சீர்திருத்தத்திற்கு விரோதமான
விஷத்தை புகுத்தி விடுகின்றன. இது தவிர கோடிக்கணக்கான ரூபாய்
கள் வருவாய் கொண்ட மடங்களும் மடாதிபதிகளும், ஸ்தாபனங்களும்
வெட்டி ஆட்களும் இருக்கின்றன.
அன்றியும் ஜனப்பிரதிநிதித்துவமான ஓட்டுகள் பெற்று. அதன் மூலம்
பிரதிநிதிகள் தெரிந்தெடுத்து, அவர்களால் சட்டங்கள் செய்து முழு சீர்
திருத்தங்களையும் செய்துவிடலாம் என்று எண்ணுவதும் அறியாமையே
ஆகும். ஏனெனில் ஜனப்பிரதிநிதித்துவமான ஓட்டுகள் என்பது பெரிதும்
பாமர மக்களிடையே இருக்கின்றது. பிரதிநிதிகளாக வருபவர்களும் பெரிதும்
சீர்திருத்த விரோதிகளுக்கு பயந்தவர்களும், சரியான சீர்திருத்த
அறிவில்லாதவர்களாகவுமே இருக்கிறார்கள்.
சர்க்காரும் நம்முடைய கேவல நிலையினால் வாழவேண்டியவர்
களாகவே இருக்கின்றார்கள்.ஆதலால் உண்மையானதும் முடிவானதுமான
சீர்திருத்தம் ஒரு நாட்டிற்கு வரவேண்டுமானால் ஏகசக்ராதிபத்தியத்
தன்மைகொண்ட ஒரு வீரனின் ஆட்சியால்தான் முடியும். அதாவது “இந்தப்
பொதுக் கோவிலுக்குள் எல்லோருக்கும் செல்ல உரிமை உண்டு” என்று
விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆக்ஷேபித்தால் அவர்களை:
சிறையிலிட வேண்டும்.
இதை பொது ஜனங்கள் கூட்டம் போட்டு கண்டிக்க
ஆரம்பித்தார்களானால் உடனே கோவிலை இடித்தெறிந்து விடவேண்டும்.
ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புஸ்தகங்களை
படிக்கக் கூடாது என்று சொல்லிவிடவேண்டும். மீறி படிக்க ஆரம்பித்தால்
அவற்றை பறிமுதல் செய்யவேண்டும். உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலி
யவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட
வேண்டும். பொதுஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளை தீவாந்திரத்
திற்கு அனுப்பிவிடவேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள்,
பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்று படிப்பில்
லாதவர்களுக்கு படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலும் ஜீவனமும்
ஏற்படுத்த உபயோகப்படுத்தி விடவேண்டும்.
இது போன்ற காரியங்கள் செய்யத்தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு.
நாட்டைக் கொண்டுவர வேண்டும். அப்பேர்ப்பட்ட வீரர்களின் ஆட்சிக்குட்
271
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பட்ட நாடுகள்தான் இன்று சுயமரியாதையும் சீர்திருத்தமும் பொலிந்து
விளங்குகின்றன.
இப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டுவர வேண்டு
மானால் அநேக சீர்திருத்தக்காரர்கள் உயிர் துறக்கத் தயாராயிருந்து கொண்டு
பாமர மக்களிடையில் உண்மையைப் பரப்ப முன்வர வேண்டும். நம்நாட்டுப்
பார்ப்பனர்கள் நம் சீர்திருத்தங்களை எதிர்க்க வெளியில் வருவதில்லை. ஒரு
விதத்தில் ஒளிந்து கொண்டார்கள். ஆனாலும் நம்மவர்களிலேயே சில
கூலிகளையும் ஏமாந்த சோணகிரிகளையும் பிடித்து அவர்களை நம்மீது
ஏவிவிட்டு தடைவேலை செய்யச் செய்துவிட்டு, தங்களுக்குள் ஒற்றுமையும்
கட்டுப்பாடும் செய்து கொள்ள வர்ணாசிரம தர்ம மகாநாடு, ஆரிய தர்ம
பரிபாலன மகாநாடு, பிராமணர்கள் மகாசபை, சனாதன தர்மிகள் மகாநாடு,
வேத வித்துக்கள் மகாநாடு, புரோகிதர் நன் மகாநாடு, பண்டிதர்கள், சாஸ்திரி
கள் கனபாடிகள் சம்மேளனம் ஆகிய பல மகாநாடுகள் திருட்டுத் தனமாகவும்
சூழ்ச்சியாகவும் கூட்டி அதற்குள் பல இரகசிய தீர்மானங்கள் செய்து இரகசிய
சமாச்சாரப் போக்குவரத்து மூலம் தெரிவித்துக் கொண்டு கட்டுப்பாடாய்
வேலை செய்து வருகிறார்கள்.
இவ்வளவும் செய்துவிட்டு சீர்திருத்த இயக்கத்திற்கு நாஸ்திக இயக்கம்
என்ற பெயரைக் கொடுத்து அதற்குப் பல தப்பர்த்தங்களையும் பழிப்பு
களையும் கற்பித்தும் வருகிறார்கள். இதை சில பார்ப்பனரல்லாதார்களும்
நம்பிக்கொண்டு அர்த்தமில்லாமல் குற்றம் சொல்லுகின்றார்கள். ஆனாலும்
சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் நாஸ்திக மதம் என்கின்ற பூச்சாண்டிக்குப்
பயப்படக்கூடாது. அது ஒரு அர்த்தமற்ற வார்த்தை. அதன் உண்மை
அர்த்தமும் உண்மைப் பிரயோகமும் என்னவென்றால் “பார்ப்பனீயத்தில்
அதாவது பார்ப்பனர்களுடைய வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம்
ஆகியவைகளில் நம்பிக்கை இல்லாதவன், பார்ப்பனர்களின் புரட்டுக்களைக்
கண்டுபிடித்து வெளிப்படுகின்றவன்” என்பதுதான். இந்நிலையில் நாம்
எல்லோரும் நல்ல உறுதியான நாஸ்திகர்களே
ஆவோம். ஆகையால்
நாம்
ஒவ்வொருவரும் தைரியமாய் நம்மை நாஸ்திகர் என்றே சொல்லிக் கொள்ள
வேண்டும் சீர்திருத்தக்காரர்கள் தங்களுடைய பெயரின் இறுதியில் நாஸ்திகன்.
என்ற பட்டத்தையே சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான்
நாஸ்திகப் பூச்சாண்டியை கொல்ல முடியும்.
நமக்கும் வேதத்திற்கும் என்ன சம்மந்தம்? அதை யார் உண்டாக்
கினவர்கள்? யாருக்காக உண்டாக்கப்பட்டது? என்ன பாஷையில் செய்யப்
பட்டது? அதில் நமது நிலைமை என்ன? என்பவைகளாகிய விஷயங்களை
யோசித்துப் பார்த்தால் அதை நம்பலாமா? நாம் ஒப்புக் கொள்ளலாமா? அது
நமது மக்களிடை பரவுவதற்கோ, இருப்பதற்கோ இடம் கொடுக்கலாமா?
என்பது விளங்கும்.
குடி அரசு - 1928 @)
272
கடைசியாக சீர்திருத்தக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய
விரும்புகின்றேன்.
மதவெறியும் சமயவெறியும் பிடித்தவர்களும் பொதுவாக பார்ப்பனர்
களும் சமத்துவம், சுதந்திரம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவைகள்.
கொண்டச்ர்திருத்தத்திற்கு எப்போதுமே விரோதிகள் என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் “எங்கள் மதத்தில் மேல்கண்ட சீர்திருத்த
முண்டு” என்பார். “ஆனால் எங்களைப் போல் வேஷம் போட்டுக் கொள்ள
வேண்டும், எங்கள் வேதத்தை நம்ப வேண்டும், எங்கள் சாமியையும்,
தூதனையும் வணங்க வேண்டும்” என்று சொல்லுவார்கள். மற்றொருவர்:
“எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு, ஆனால் எங்களைப்போல் வேஷம்.
போட்டுக் கொண்டு எங்கள் சாமிகளையும் புராணங்களையும் நம்ப
வேண்டும்” என்பார்கள். நம்பாவிட்டால் “நாஸ்திகர், அஞ்ஞானி, பாவிகள்,
சமயத் துவேஷி” என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் எல்லோரும் ஒரே
இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இவர்கள் உண்மை சீர்திருத்தத்திற்கு
விரோதிகள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், பார்ப்பனர்களில் சிலர் சீர்திருத்
தக்காரர்கள் என்று சுலபத்தில் பட்டம்பெற்றுப் புறப்பட்டுவிடுவார்கள்.
அதாவது கள்ளும் சாராயமும் குடித்தால் அதனாலேயே அவர் ஒரு சீர்திருத்
தக்கார் ஆய்விடுவார்; ஒருவர் ஆடு, மாடு, பன்றி சாப்பிட்டால் அதனா
லேயேஅவர் ஒரு சீர்திருத்தக்காரர் ஆகிவிடுவார்; மற்றொருவர் வெட்டிச்
சோறாக யார் வீட்டிலும் கிடைத்ததையெல்லாம் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்
கொண்டு திரிந்தால், அதனாலேயே அவர் ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்.
ஆகிவிடுவார்; மற்றொருவர் ஒழுக்கமில்லாமல் யாரையும் எந்தப்
பெண்ணையும் கல்யாணமாகவோ, வைப்பாட்டியாகவோ, வேசியாகவோ
அனுபவித்துக் கொண்டு திரிந்தால் அதனாலேயே அவர் ஒரு பெரிய
சீர்திருத்தக்காரர் ஆகிவிடுவார்; ஜனங்களும் முட்டாள்தனமாக அவர்களை
வித்தியாசமற்றவர் என்றும் சீர்திருத்தக்காரர் என்றும் நம்பிவிடுவார்கள்.
ஆனால் அவர்களால் சீர்திருத்தத்திற்கு மாத்திரமன்றியில் பார்ப்பனரல்லாத
சமூகத்திற்கே பெரிய ஆபத்து என்பதை மறந்துவிடாதீர்கள்.
மற்றும் எந்த விஷயத்திற்கும் சாமியையும் மதத்தையும் குறுக்கே
கொண்டு வந்து போட்டுவிடுகின்றார்கள்.ஆகவே உங்களுடைய முன்னேற்
றத்திற்குத் தடையாக எந்த மதமாவது கடவுளாவது குறுக்கிட்டால் அவற்
றைத் தைரியமாக எதிர்க்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகின்றேன்.
இனி பார்ப்பனர்கள் வித்தியாசம் காட்டுவதுடன் பார்ப்பனரல்லாதார்களுக்
குள்ளும் பற்பல ஜாதியார் ஒருவருக்கொருவர் வித்தியாசம் பாராட்டுகின்ற
னர். “மேல்ஜாதியார்கள்” நீங்கள் உங்களுக்கு சமமாக இருக்கவேண்டு
மென்று விரும்புவீர்களானால், உங்களுக்குக் “கீழேயுள்ள ஜாதியார்”
273
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
களுக்கும் நீங்கள் சமத்துவம் அளிக்க வேண்டும். நம்மிடமிருக்கும்
கொடுமை பார்ப்பனர்கள் காட்டும் கொடுமைகளை விட சற்று அதிகம்
என்றே சொல்ல வேண்டும். ஆனால் நாம் பார்ப்பனர்களை ஏன் அதிகமாகச்
சொல்லுகிறோமென்றால், அவர்கள் வைத்த தீ தான் நம்முடைய வீடுகளிலும்
பிடித்துக் கொண்டது. நாம் மேல் ஜாதி என்பாரோடு சண்டை செய்து
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற
கொள்கையில் வெற்றி பெற்றால் கீழ் ஜாதியார்களென சொல்லப்படு
கிறவர்களுக்கும் அவர்களுக்குரிய பங்கை நாம் கொடுக்க வேண்டும். சர்வ
கட்சி மகாநாட்டுத் திட்டத்தில் எல்லா வகுப்பாருக்கும் சமத்வம் கொடுக்க
வேண்டும் என்ற விஷயமே காணப்படவில்லை. பார்ப்பனர்களுக்குப்
பயந்தே எல்லோரும் அதில் கையெழுத்துப் போட்டு விடுகிறார்கள். முதலில்
எல்லா வகுப்பாருக்கும் சமத்துவம் கொடுப்பதைவிட வேறு என்ன
சீர்திருத்தம் வேண்டுமென்று நினைக்கின்றீர்கள். பிச்சை எடுப்பதற்கு
உபயோகமாயிருக்கும் வேதப் படிப்பிற்காக கொள்ளை கொள்ளையாக
லாபம் சம்பாதிக்கும் நாட்டுக் கோட்டை செட்டிமார்கள் சோறும் போட்டு
படிக்கும்படி செய்கிறார்கள். இம்மாதிரியான உதவி ஆதிதிராவிட பிள்ளை
களுக்கு அளிக்கப்படுமானால், அவர்களில் வயிற்றுப்பிழைப்பிற்கு
வழியின்றி சிறு வயதிலேயே கூலிக்குச் செல்லும் எத்தனையோ பிள்ளைகள்
பள்ளிக்கூடம் சென்று படித்து மந்திரி வேலைக்குத் தயாராக விருப்பார்.
களென்பதை நினைத்துப்பாருங்கள்.
இனி
சிலர், வேதங்களும், புராணங்களும் பழங்கதையென்று
சொல்லிக் கொண்டு பண்டிகை, திதி, திவசம், கிரகணம் ஆகியவைகள்.
வரும்போது அவர்கள் அப்புத்தகங்களையே முதலில் திறந்து பார்ப்
பார்கள். ஆனால் அவர்களைக் கேட்டால் வழக்கத்துக்கு விரோதமாக
நடக்கலாமாவென்று கூறுகிறார்கள். இவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது.
கடைசியாக சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கங்கள் கற்பிக்கவும்,
அறிவை விசாலப்படுத்தவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும்
காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப்
படுத்தவுமே வேண்டும். ஆகையால் நீங்களெல்லோரும் இம்மகாநாட்டில்
நிறைவேறிய தீர்மானங்களைத் தைரியமாக நடத்தையில் கொண்டுவர
வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
குறிப்பு : 26.71.1928 - சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில்
நடைபெற்ற தென்னிந்திய சமுதாய சீர்திருத்தக்கரரர்கள்
மாநாடு - நிறைவுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 0912-1928
குடி அரசு - 1928 @)
274
சைமண் கமிஷனும் வகுப்புணாரிப்
பிரதிநிதித்துவமும்
நமது நாட்டில் தற்சமயம் உண்மையானதும் சுயநலமற்றதுமான பொது
நல சேவை செய்கின்றவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டியது நமது
நாட்டு மக்களுக்குள் கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பு-உயர்வு-தாழ்வை
ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை சுயமரியாதையுடன்
வாழச்செய்ய வேண்டியதேயாகும்.
இதை நாம் பலதடவைகளில் எடுத்துக்
காட்டி வந்திருக்கின்றோம்.
எனினும் மக்களுக்குள் சமத்துவமும் சுயமரியாதை உணர்ச்சியும்
ஏற்பட்டுவிட்டால் வாழமுடியாத நிலையில் நமது நாட்டில் சில சமூகமும் சில
தனிப்பட்ட மக்களும் இருப்பதால், அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையை
இவ்வித்தியாசத்தின் மீதே நிலைநிறுத்திக் கொண்டதால், அவர்கள் மற்ற
வர்களின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமாக இருந்தே
தங்கள் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டியதான நிலைமை அவசியம்
அவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை நாம் மறைத்துப் பேசுவதில் பயனில்லை.
எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் இப்படிப்பட்டஒரு கூட்டம்
இருந்தே வந்து தங்கள் சுயநலத்தின் பொருட்டு மக்களின் நலத்தை
பாழ்படுத்தி வந்திருப்பது சரித்திர வாயிலான உண்மையேயாகும்.
எனினும் சமத்துவமும் சுயமரியாதையும் பெற்று முன்னேற்ற
மடைந்து வரும் நாடுகளின் சரித்திரங்களைப் பார்ப்போமானால், முதலில்
இக்கூட்டத்துடன் போர்புரிந்து அவர்களை அழித்தபிறகுதான் நாட்டினு
டைய மக்களுக்கு சமத்துவம் கொடுத்து சுயமரியாதையைக் காப்பாற்றி
தங்கள் தங்கள் நாட்டை முன்னுக்கு கொண்டு வந்திருப்பதாக அறியக்
கிடக்கும்.
ஆதலால் நம் நாட்டிலும் பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்கள்
இக்கூட்டத்தின் தொல்லைக்கு தலைகொடுத்துத்தான் ஆகவேண்டியவர்.
களாயிருக்கின்றார்கள் என்பதில் ஆக்ஷபனை இல்லை.
அநேகமாக மற்ற நாட்டின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும்
தடை வேலைக்காரர்களாயிருந்து தீர வேண்டியவர்கள் பெரிதும் மதத்தின்
275
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பேரிலேயே தங்கள் தடை வேலைகளை செய்து வந்ததாக காணலாம்.
ஆனால் நமது நாட்டின் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் எதிர்த்து
நிற்பவர்கள் பெரிதும் அரசியலின் பேரால் தடைகல்லாய் நிற்கின்றார்கள்.
மதக்காரர்கள் என்பவர்களைவிட அரசியல்காரர்கள் என்பவர்களே
தொல்லை கொடுக்கின்றார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், நமது
நாடு இப்போது மதத்திற்கு கட்டுப்பட்டிருப்பதை விட அரசாங்க சட்டத்திற்கே.
அதிகமாய் கட்டுப்பட்டிருப்பதேயாகும்.
எனவே எந்த சமத்துவமும் சுயமரியாதையும் இப்போது பெரிதும்
அரசாங்க சட்டத்தைக் கொண்டே செய்யப்படவேண்டிய நிலையில்
இருக்கின்றது.
அதனால் நாம் அரசாங்க சட்டமுறையில் சமத்துவம் கேட்கும்
போது எதிரிகள் அரசியலின் மூலமாகத்தான் எதிர்த்தாக வேண்டும். எனவே
அதை அரசியலின் பேரால் வாழ்பவர்கள்தான் எதிர்த்தாக வேண்டும்.
அன்றியும் மதக்காரர்களின் எதிர்ப்புக்கு நமது நாட்டின் மதிப்பும் குறைந்து
விட்டதால் அரசியலின் பேரால் தடைவேலை செய்பவர்களுக்கு மதக்
காரர்களின் பின்பலமும் தாராளமாய் இருக்கும் என்பதில் சந்தேகமிருக்காது.
நிற்க, நம்முடைய நாட்டிலுள்ள உயர்வு தாழ்வு முதலிய வித்தி
யாசங்களைப் போக்க நம்மவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும்
அதற்காக பட்ட கஷ்டங்களும் இந்நாட்டில் உள்ள யாவரும் அறிந்ததே
யாகும். அவர்கள் வேறு எந்த விதத்திலும் முயற்சி செய்து முடியாததனா
லேயேதான் நம் நாட்டு முதிர்ந்த அனுபவசாலிகளும் சுயநலமற்ற
பெரியார்களுமாகிய பலர் சேர்ந்து சமத்துவத்தையும் சமசந்தர்ப்பத்தையுமே
முக்கியக் கொள்கைகளாய்க் கருதி, அதற்காக நமது நாட்டு அரசியல்
தொகுதிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெறுவதே முக்கிய நோக்கமாகக்
கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயருடன் ஒரு ஸ்தாபனம் கண்டு,
அதற்காகவே பலர் தங்கள் தங்கள் உயிரையும் கொடுத்து வேலை செய்து
வந்தார்கள் என்பதும் பலர் உயிரைக் கொடுக்க இருக்கிறார்கள் என்பதும்
வெள்ளிடை மலை.
அதுபோலவே அவ்வியக்கத்தை, நாம் மேலே சொன்னது போல்
உயர்வு தாழ்வு வித்தியாசத்தாலேயே தங்கள் வாழ்வையும் பிழைப்பையும்
நிலை நிறுத்திக்கொண்ட சமூகமும் அவர்களுக்கு அனுகூலமாய் இருந்து
வாழ வேண்டியவர்களான சில தனி நபர்களும் சேர்ந்து அக் கொள்கைகளை
ஒப்புக் கொண்டது போல வேஷம் போட்டு பல சூழ்ச்சிகள் செய்து எதிர்த்த
தும் இப்போது நேராகவே வெளிவந்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை
அரசியலின் பேராலும் எதிர்ப்பதும் வெள்ளிடைமலை. இவ்வளவு
எதிர்ப்புகளையும் தாண்டி அவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது
ஒருவாறு வெற்றிபெற்று இந்தியா முழுவதிலும் அமுலில் இருப்பதும்
வெள்ளிடைமலை.
குடி அரசு - 1928 @)
276
அதனால் அவ்வுரிமை பெற்ற சமூகங்கள் ஒவ்வொன்றும் ஒருவாறு
சமத்துவமும், சம சந்தர்ப்பமும், சுயமரியாதை உணர்ச்சியும் பெற்றிருப்பதும்
வெள்ளிடை மலையேயாகும். ஆனாலும் இப்போது அதை மேலும்
கேட்பதை மறுப்பதற்கும் உள்ளதையும் ஒழிப்பதற்கும் மேல் கண்ட கூட்டமே
அரசியலின் பேரால் அதாவது சர்வ கட்சி மகாநாட்டின் பேராலும் தேசத்தின்
பேராலும் செய்யும் சூழ்ச்சியும் வெள்ளிடை மலையேயாகும்.
நிற்க, தற்காலம் இந்தியாவுக்கு அளிக்கப்படப்போகும் அரசியல்
சுதந்திரம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என்பதை விசாரித்தறி
வதற்கென்று பிரிட்டிஷ் பார்லிமெண்டாரால் நியமித்தனுப்பிய சைமன்
கமிஷனைப் பஹிஷ்கரிப்பது என்கின்ற ஒரு சூழ்ச்சியையும், குறிப்பாக இந்த
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம்
கொண்டே ஆரம்பித்து மக்களை ஏமாற்றுவதும் தாங்கள் மாத்திரம்
தங்களுடைய இஷ்டப்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை ஒழிந்த ஒரு
அரசியல் சுதந்திர சட்டத்தை ஏற்பாடு செய்து
கொண்டு,
அதைப் பொது
ஜனங்களின் பேரால் சைமன் கமிஷனுக்கு தெரியப்படுத்துவதுமான
வேலையில் ஈடுபட்டிருப்பதும் வெள்ளிடை மலையேயாகும். இந்த
நிலையில் இந்திய மக்களின் பொது அபிப்பிராயம் என்ன என்பதை அக்
கமிஷனுக்கு வெளிப்படுத்த பொது ஜனங்களும், குறிப்பாக மகமதியர்களும்.
கிறிஸ்தவர்களும் பார்ப்பனரல்லாதார்களும் தாழ்த்தப்பட்டவர்களும்
ஒடுக்கப்பட்டவர்களும் தீண்டப்படாதவர்கள் என்று விலக்கப்பட்ட மக்களும்
மிகுதியும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
எனவே மேற்படி கமீஷன் சென்னைக்கு வரும்போது இக்கூட்டத்
தவர்களுக்கு மனமார்ந்ததும் ஆடம்பரமும் பெருமையும் கொண்டதுமான
வரவேற்பு அளித்து அவர்களை தங்கள் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டி
யதுடன் தங்கள் தங்கள் குறைகளை தாராளமாய் அவர்களுக்கு எடுத்துச்
சொல்ல வேண்டியவர்களாகின்றார்கள் என்பதை நாம் எடுத்துச் சொல்ல
வேண்டியதில்லை...
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்பவர்களில் யாரும்
இதுவரை அது கூடாது என்பதற்கு சரியான காரணமோ அல்லது எல்லா
மக்களுக்கும் சமத்துவமும் சம சந்தர்ப்பமும் கிடைக்கும் படியான வேறு
மார்க்கமோ எடுத்துச் சொன்னவர் யாரும் இல்லை.
பல கூலிகள் மாத்திரம், மக்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
கேட்பதைப் பற்றி “தென்னாட்டில் ஒரு பகுதியில் பார்ப்பனரல்லாதார் என்
கின்ற பேரால் யாரோ சிலர் மாத்திரம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
கேட்கின்றார்கள். அதுவும் சர்க்கார் தாசர்கள் கேட்கிறார்கள். பொது ஜனங்கள்
277
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கேட்கவில்லை” என்கின்ற ஒரு மந்திரத்தையே சொல்லிக்கொண்டு இதை
பொது ஜனங்கள் நம்பும்படி பிரசாரம் செய்து இதனாலேயே சைமன் கமிஷன்
கண்ணிலும் பொதுஜனங்கள் கண்ணிலும் மண்ணைப்போட்டுத் தெரியாமல்
செய்து விடலாம் என்பதாக மனப்பால் குடித்துக் கொண்டு நமது நாட்டில்
ஒருவாறு வயிற்றுப் பிழைப்புப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். ஆனால்
இவர்களுக்குத் தக்கபதில் கீழ்க்கண்ட வார்த்தைகள் தான். அதாவது,
எட்டு கோடி ஜனம் கொண்ட மகமதியர்கள் வகுப்புவாரி பிரதி
நிதித்துவம் கேட்கின்றார்களா இல்லையா? என்பதும்,
ஐந்து கோடி சன சமூகங்கொண்ட தீண்டாதவர்கள் என்கிறவர்கள்
எல்லோரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கின்றார்களா இல்லையா?
என்பதும்,
பார்ப்பனரல்லாதார் இயக்கம் வகுப்புவாரி இயக்கத்தை ஏற்படுத்த
வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டதா இல்லையா? என்பதும்,
கிறிஸ்தவர்களும் ஐரோப்பியரும் ஆங்கிலோ இந்தியரும் வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவம் கேட்கின்றார்களா இல்லையா என்பதுமேயாகும்.
குறிப்பாக மகமதியரில் மெளலானாக்கள் ஷவ்கத்தலி மகமதலி
போன்ற வீரர்கள் சர்க்கார் தாசர்களா என்பதும், தீண்டாதவர்கள் என்று
ஒதுக்கித் தள்ளப்பட்ட சுமார் 5 ', கோடி மக்கள் சர்க்கார் தாசர்களா என்ப
தும், பார்ப்பனரல்லாதார்களில் பெரும்பாலோர் அதாவது திருவாளர்கள் எஸ்.
ராமநாதன் எம்.ஏ.பி.எல், ஆரியா, எம்.ஏ. தண்டபாணிபிள்ளை, ஈ.வெ.ராமசாமி
நாயக்கர், சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போன்ற கோடிக்
கணக்கானவர்கள் அதாவது 1 வருஷம் 2 வருஷம் 10 வருஷம், ஒரு தடவை
இரண்டு தடவை மூன்று தடவை நான்கு தடவை ஐந்து தடவை தேசத்திற்காக
ஜெயிலுக்குப் போனவர்களும், பல வருஷம் இந்த மாகாண காங்கிரஸ்:
தலைவர்களாகவும், காரியதரிசிகளாகவும், மாகாண காங்கிரஸ், ஜில்லா
காங்கிரஸ், தாலூகா காங்கிரஸ் மகாநாடுகளின் தலைவர்களாகவும்
இருந்தவர்களும், ஒரு கோடி, இரண்டு கோடி, ஐந்து கோடி, பத்து கோடி
ரூபாய் மதிப்புள்ள பெரிய ஜமீன்தாரர்களும் 1 லக்ஷம், 2 லக்ஷம் கிஸ்து
கொடுக்கக்கூடிய மிராசுதார்களும், ஐம்பதினாயிரம், அறுபதாயிரம் ரூபாய்
வருமானவரி கொடுக்கும் வியாபாரிகளும், பெரிய தலைவர்கள் என்று
மதிக்கத்தக்கவர்களும், சாதாரண குடியானவர்களுமாகிய மக்கள் கூடிச்
செய்யும் தீர்மானமும் மற்றும் அனேக சமூக மகாநாடுகள் செய்யும்
தீர்மானமும் சர்க்கார் தாசர்களாலா? என்பதும்,
இதற்கு எதிரிடையாய் இதன் மூலம் தவிர வேறு மூலத்தில்
குடி அரசு - 1928 @)
278
ஜீவனத்திற்கு மார்க்கமே இல்லையென்று சொல்லக் கூடியவர்களும்,
சமயம்போல் பேசுகின்றவர்களும், காசு கொடுத்த பக்கம் பேசுகின்றவர்.
களும், தங்கள் சுயநலத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யக்
கூடியவர்களும்,
இதுவரை ஆயிரக்கணக்கானக் குட்டிக்கரணம் போட்டவர்
களும் அவர்களாலேயே மேல்படி நிலையை மறுக்க முடியாதவர்களும்
பொது ஜனங்களாகிவிடுவார்களா? என்பதும்தான்.
வார்த்தைகளைப் பேச கிளிப்பிள்ளைக்கும் மைனா குருவிக்கும்
கூடத் தெரியலாம். அது இன்ன வார்த்தை என்று உணர்ந்து தன் புத்தியைக்
கொண்டு தனக்காகப் பேசுகின்றதா என்பதுதான் கவனிக்கத்தக்க விஷய
மாகும். ஆதலால் பொது ஜனங்கள் தங்கள் அறிவை இவ்விஷயத்தில்
நிதானமாக உபயோகித்து சைமன் கமிஷனிடம் நடந்து கொள்ள வேண்டிய
தைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும், சமீபத்தில்
செங்கல்பட்டில் கூடப்போகும் மகாநாட்டில் எல்லோரும் கலந்து உண்மை
யான முடிவைச் செய்து, அதை சைமன் கமிட்டிக்கு தெரியப்படுத்த
வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
பகிஷ்காரக் கூட்டத்திற்கு சென்னைதான் முதல் முதல் புத்தி கற்பித்த
இடமாதலால் அதைப் பற்றி நாம் அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே
கருதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.12.1928.
279
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
கிருஷ்ணசாமி பின்னை மறைந்தார்!
நமது இயக்கத்திற்கு ஆரம்ப முதல் ஆதரவளித்து வந்தவரும் இயக்
கத்திற்கு பணம் காசு தாராளமாய் செலவு செய்து வந்தவரும் கோயமுத்தூர்.
மகாநாட்டுக்கு காரியதரிசியாய் இருந்தவரும் தென்னிந்திய நலவுரிமைச்
சங்கத்திற்கு காரியதரிசியும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இயக்கத்
திற்கும் உண்மையான உள்ளன்போடு கூடிய உதவியாளருமான நமது
உண்மை நண்பர் திரு. கோவை, நெய் மண்டி கிருஷ்ணசாமிபிள்ளை
அவர்கள் காலம் சென்றது மிகவும் துக்கப்படத்தக்க சம்பவமாகும். குறிப்
பாகச் சொல்ல வேண்டுமானால் அம்மாதிரியான உள்ளன்போடு உழைக்கும்
மற்றொரு நண்பரை கோவையில் காணுவது மிகக் கடுமையென்றே சொல்ல
வேண்டும். அவர்களின் அருமை மனைவியாருக்கும் தாயாருக்கும்
தம்பிமார்களான நமது நண்பர்கள் திருவாளர்கள் சுப்பு, பஞ்சலிங்கம்
ஆகியவர்களுக்கும் நமது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்
கொள்ளுகின்றோம்.
குடி அரசு - இரங்கல் செய்தி - 16.12.1928
குடி அரசு - 1928 @)
280
நாஸ்திகம்
(தூய ஊவழிமைகனார் எழுதி சித்திரபுத்திரன்
திருத்தியது
மகன்
- அம்மா! இதென்ன
விபரீதம்? நமது தந்தை சதா சர்வகாலம்
“குடி அரசு” “குடி அரசு” என்று “குடி அரசு”ம் கையுமாகவே இருந்து
சதாகாலமும் படித்துக் கொண்டு வந்தது போதாமல் இப்போது “குடி அரசு”
ஆபீசுக்கே போய்ச் சேர்ந்து விட்டாரே இதென்னம்மா! அநியாயம்!
அவருக்கு நாஸ்திகம் தலைக்கேறிவிட்டது போல் இருக்கின்றது.
தாய் - மகனே! இவ்வாறு கேட்பதற்குக் காரணமென்ன? “குடி அரசு”
பத்திரிகை நாம் இழந்த சுயமரியாதை, அறிவு, செல்வம், நாடு ஆகியவை
களை மறுபடியும் பெறுவதற்கு வேண்டிய வேலை என்ன? என்ன
செய்யவேண்டுமோ அவைகளை உயிர்க்கு துணிந்து செய்து கொண்டும்.
மனிதர்களுக்குள் பரவி நிற்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே
இவ்வுலகமெங்கணும் வெற்றிக் கொடியோடு உலவிக் கொண்டும்
வருகின்றது. உமது தந்தை அக் குடி அரசின்” கொள்கைகளை நன்கு
அறிந்தவராதலால், நான்தான் அங்கே போய் அதற்கு ஏதாவது உதவி
செய்யலாமே எனக்கருதி போகும்படி சொல்லி அவரை அங்கு
அனுப்பினேன். இதிலென்ன அநியாயம்?
மகன் :- என்னம்மா!
அக் “குடி அரசை” இவ்வளவு மேன்மையாய்
சொல்லிப் புகழ ஆரம்பித்துவிட்டாய். வெறும் நாஸ்திகத்தையே போதிக்கும்
*குடி அரசைப் பற்றி இப்படிப் புகழுவதோடு அப்பாவையும் அங்கு
அனுப்பி விட்டாயே?
தாய் :- மகனே! நாஸ்திகத்தைப் போதிப்பது “குடி அரசு” அல்ல,
நானும் அல்ல, நீயும் அல்ல, உமது தந்தையுமல்ல, நாம் ஒருவரும்
நாஸ்திகரல்ல; இதற்கு யாதொரு சந்தேகமும் படவேண்டாம்.
மகன்:- அம்மா! “குடிஅரசை” நாஸ்திகமல்ல என்று எப்படி அம்மா
சொல்லுவது? சாமியே இல்லை என்று வாரந்தோறும் வெளிவரு
கின்றதேயம்மா? நீங்கள் படித்ததே இல்லையோ? உலகமெங்கணும் எங்குப்
பார்த்தாலும் “குடி அரசு நாஸ்திகத்தைப் பரப்புகின்றது” என்று சொல்லப்
படுகின்றதே.
281
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தாய் :- அப்பா குழந்தாய்! நீ நல்ல புத்திசாலி, பகுத்தறிவு உள்ளவன்.
அப்படியிருக்க “குடி அரசை நாஸ்திகமென்று சொல்லுதே அம்மா” என்று
சொல்லுகின்றாயே ஒழிய நீ எப்போதாகிலும் எங்காகிலும் “குடி அரசில்” சாமி
இல்லை என்று எழுதியிருந்ததைப் பார்த்ததுண்டா? நீயும் வாரந்
தோறும் படித்துக் கொண்டுதானே வருகின்றாய். நானும் இடைவிடாது
படித்துக் கொண்டுதான் வருகிறேன். ஒரு நாளும் சாமி இல்லை என்ற
கட்டுரையைக் “குடி அரசு' கொண்டு வந்ததே இல்லையே! யாரோ
சொல்லுவதைக் கேட்டுக்கொண்டு “அம்மா உலகம் சொல்லுகிறதே”
என்கின்றாயே உனக்கு அமைந்த அறிவு எதற்காக இருக்கிறதோ தெரிய
வில்லையே? அய்யோ, இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு இப்படித்தானே
படிப்பிக்கின்றார்கள்.
மகன் - நான் ஒன்றும் சந்தேகப்படவில்லை. உனது இட்டப்படியே
வருகிறேன், சற்று பொறு, நீயும் “குடி அரசை” படிக்கின்றாயே. சாமி உண்டு
என்கிறாயா, இல்லை என்கிறாயா? சற்று சொல்லு பார்ப்போம். பிறகு குடி
அரசைப் பற்றி பேசுவோம்.
தாய் - மகனே, எனது இட்டப்படி ஒன்றும் வேண்டாம். உன்
இட்டப்படியே எது வேண்டுமானாலும் கேள். ஆனால் இப்போது கேட்ட
கேள்வி உண்டே, இது ஒரு நல்ல கேள்விதான். இதற்காக நான் மெத்த
சந்தோஷிக்கிறேன். என்னப்பா! சாமி உண்டா இல்லையா? என்ற
கேள்விதானே கேட்கிறாய்? வேறு ஏதாகிலும் உண்டா?
மகன் :- அம்மா! வேறு யாதும் இல்லை. குடி அரசைப் படிக்கின்ற
வர்களின் மனப்பான்மையை அறிய இது ஒன்றே போதும்.
தாய்
:- ஆஹா, அப்படியா! சரி பதில் சொல்லுகிறேன். பதில்
சொல்லுவதற்கு முன்பு கேள்வியை நன்றாய் விளக்கிக் கொள்ள வேண்
டாமா? அவசரப்படாதே; நிதானமாய்ப் பேசு; சந்திக்கடைப் பேச்சிலேயே
உனது கவனம் சென்றுவிட்டதே ஒழிய உன் அறிவுக்கு நீ சற்றும் மதிப்புக்
கொடுக்கவில்லை என்று தெரிகின்றது. ஆனாலும் குற்றமில்லை. உனது
கேள்வி என்ன? சாமி உண்டா இல்லையா என்பது தானே?
மகன் :- ஆம் அம்மா.
தாய் :- அப்பா மகனே, சாமி என்றால் என்ன? அதை முதலில்
சொல்லு பார்ப்போம். அதாவது அதற்குப் பெயர் என்ன? ரூபம் என்ன? நிறம்
என்ன? குணம் என்ன? அது என்ன சொல்? சற்று புரியும்படி சொல்லு
பார்ப்போம். பிறகு, அது உண்டா இல்லையா? என்பதைப் பற்றி பேசலாம்.
மகன் :- என்ன அம்மா உனக்கு இது கூடவா நான் சொல்லிக்
கொடுக்க வேண்டும்?
பெயரும் உருவமும் குணமும் தோற்றமும் அற்றவனும், புத்திக்கும்
மனத்திற்கும் எட்டாதவனும், எங்கும் வியாபித்து சகல உலகங்களையும்
படைத்துக் காக்கும் சர்வ வல்லமையும், சர்வமும் அறியும் சக்தியும்
குடி அரசு - 1928 @)
282
உள்ளவனும், அவனன்றி ஓரணுவும் அசைய முடியாத ஆதிக்கம் கொண்
டவனும் ஆகிய ஏக பரம் பொருள் என்றும் அது ஒரு பெயர்ச்சொல் என்றும்
நீ அறிந்ததில்லையா? என்தாயே, இந்தக் கேள்வியிலேயே நாஸ்திக வாடை
வீசுகின்றதே.
தாய்
:- குழந்தாய்! பொறு பொறு, அவசரப்படாதே. கிளிப்
பிள்ளையைப் போல யாரோ சொல்லிக் கொடுத்ததை மனதில் வைத்துக்
கொண்டு அர்த்தமில்லாமல் கஷ்டப்படுகின்றாய்.
“சாமி” என்றால் என்ன என்று கேட்டேன். அதற்கு ஒரு வண்டி சங்கதி
சொல்லி விட்டாய். அவைகளில் ஒவ்வொன்றாக கவனிப்போம். நீ நல்ல
பிள்ளை ஆனதினால் கேள்விப்பட்டவைகளையும் மற்றவர்கள் சொல்லிக்
கொடுத்ததையும் எதிலாவது படித்ததையும் மறந்து விட்டதாக நினைத்துக்
கொள். குருட்டு நம்பிக்கை முரட்டுப் பிடிவாதம் முதலிய அறிவுக்கு
விரோதமான குணங்களை விட்டுவிட்டு மாசு மறுவற்ற பரிசுத்தமான
மனதோடு நான் சொல்வதை சற்றுக் கூர்ந்து கவனமாய்க் கேள்.
மகனே! நீ உண்டா இல்லையா என்று என்னைக் கேட்ட சாமி
பெயரில்லாதது, உருவமில்லாதது, குணமில்லாதது, ஆனால் எங்கும்
வியாபித்தது, புத்திக்கும் மனதிற்கும் எட்டாதது என்று முதலில் சொல்லி
முடிவில் அது ஒரு பெயர்ச் சொல் என்றும் சொல்லி இருக்கின்றாய். மத்தியில்
உள்ளதை பற்றி பிறகு பேசுவோம். பெயர்ச் சொல் என்றால் நாமமோ,
ரூபமோ, குணமோ இருந்தாக வேண்டும்-சரி அதுதான் போகட்டும் வஸ்து
என்றால் அதற்கும் ஒருபெயர் வேண்டும், ரூபம் வேண்டும், குணமும்
வேண்டும். அதுதான் போகட்டுமென்றால், எப்பேர்ப்பட்ட ஒரு தன்மையைப்
பற்றியதானாலும் அது மனதிற்காவது புத்திக்காவது எட்டினதாக இருக்க
வேண்டும். எனவே “பேர் இல்லை, குணமில்லை, மனதிற்கும் புத்திக்கும்
எட்டவும் முடியாது, அப்படி ஒரு வஸ்து இருக்கின்றது, அதை உண்டு
என்கிறாயா இல்லை என்கின்றாயா?” என்று நீ என்னைக் கேட்டால் நான்
என்ன பதில் சொல்லக்கூடும் என்பது உனக்குத் தெரிய வேண்டுமானால்,
நான், அந்த மாதிரி ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீ என்ன பதில்
சொல்லுகிறாய் என்று பார்க்கிறேன். அதாவது என்னருமைக் குழந்தாய்! நம்ம
வீட்டுப் பெரிய பெட்டிக்குள் ஒரு வஸ்து இருக்கின்றது. அதற்குப் பெயர்
இல்லை, ரூபமும் இல்லை, குணமும் இல்லை, அது உன் புத்திக்கும்
மனதிற்கும் எட்டாதது. அது இப்போது இருக்கின்றதா? இல்லையா? என்று
சொல்லு பார்ப்போம்.
மகன் :- என்னம்மா இப்படி கேட்கின்றாய்? நீ சொல்லுகின்ற மாதிரி
ஒரு சாமான் இருந்திருக்க முடியுமா அம்மா? அப்படியானால் பெட்டிக்குள்
ஒன்றுமில்லை என்று தானே அர்த்தமாகின்றது?
அம்மா - ஏனப்பா அப்படிச் சொல்லுகின்றாய்? பெயரும் உருவமும்
இல்லாததாலேயே ஒன்றும் இல்லை என்று சொல்லி விடலாமா? குழந்தாய்!
நன்றாய் யோசித்து பதில் சொல்லு.
283
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
மகன் :- பெயரும் உருவமும் இல்லாமல் ஒரு வஸ்து இருக்கக் கூடும்
என்று என் புத்திக்கும் படவில்லை. மனதிற்கும் எட்டவில்லையே.
எப்படியம்மா அப்படி ஒரு வஸ்து இருக்க முடியும்?
தாய் - உன் புத்திக்கும் உன் மனதிற்கும் எட்டாததினாலேயே ஒரு
வஸ்துவை நீ இல்லை என்று சொல்லிவிடலாமா? குழந்தாய்!
மகன் == அந்தப்படி சொல்லி விடக் கூடாது என்றே வைத்துக்
கொண்டாலும், நீ கேட்கின்ற வஸ்து யாருடைய புத்திக்கும் மனதிற்கும்
படாதது என்று மேலே சொல்லி இருக்கின்றாயே. ஆதலால் வேறு யாருடைய
புத்திக்கும் மனதிற்கும் படக்கூடியதாக இருக்கும் என்று நினைத்தாலும் கூட
அது நீ சொல்லும் வஸ்து அல்லாததாய் விடுமே. ஆகையால் நீ கேட்கும்
கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமானால் நீசொல்லுகின்ற குணங்கள்
கொண்டே ஒரு வஸ்து இருக்க முடியாது என்று சொல்வதுடன் அந்தக்
கேள்வியை அர்த்தமற்றதும் (கோபித்துக் கொள்ள வேண்டாம்) முட்டாள்
தனமுமான கேள்வி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச்
சொல்வதற்காக அம்மா! தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும்.
தாய் : மகனே நீ அப்படி கடுமையாக சொல்வதைப் பற்றி எனக்கு
மிகவும் சந்தோஷமே: தயவுசெய்து இன்னம் ஒரு நூறு தடவை சொல்லு
பார்ப்போம், என் காது குளிரட்டும்.
மகன் : என்னம்மா ஒருவர் உன்னை முட்டாள் என்று சொன்னால்
அது உனக்கு மகிழ்ச்சியாய் இருக்கின்றது என்றால் அது எனக்கு அதிசய
மாயிருக்கின்றதே?'
தாய் : இதில் அதிசயம் ஒன்றுமில்லை: நீ என்னையா சொன்னாய்?
அந்த மாதிரி கேள்வி கேட்டவர்களைத் தானே சொன்னாய்? அந்த மாதிரி.
கேள்வி நானா கேட்டேன்? கேட்டவர்களைத்தானே அந்த முட்டாள்
பட்டங்கள் போய்ச்சேரும். நான் எதற்காக வருத்தப்படவேண்டும்?
மகன் :(சற்று யோசித்துப்பார்த்து) நீ சொல்லுவது ஒன்றும் எனக்குப்
புரியவில்லையே, நீ தானே அந்த மாதிரி கேள்வி இப்பொழுது என்னைக்
கேட்டாய்?
தாய்
: மகனே! நன்றாக யோசித்துப் பார்: முதலில் நீ அந்த மாதிரி.
என்னை ஒரு கேள்வி கேட்கவில்லையா?
மகன் : என்னம்மா நான் சாமியைப் பற்றிக் கேட்ட கேள்விக்கும் நீ
பெட்டியில் இருக்கும் வஸ்து என்பதைப்பற்றி கேட்கும் கேள்விகளுக்கும்
வித்தியாசமில்லையா?'
தாய்
: என்ன வித்தியாசம் வேண்டுமென்கிறாய்? நீ கேட்ட வஸ்துக்கு
என்ன குணங்கள் கற்பித்து “உண்டா இல்லையா” என்று கேட்டாயோ,
அதே
குணங்களைத் தானே கற்பித்து நானும் ஒரு வஸ்துவைப் பற்றிக் கேட்டேன்.
நான் கேட்டது முட்டாள் தனமானால் நீ கேட்டது என்ன சொல் பார்ப்போம்?
குடி அரசு - 1928 @)
284
தவிர நீ பெயர் இல்லை என்று சொல்லிவிட்டு சாமி என்று முன்னுக்
குப்பின் முரண் பேசினாய்: நான் அப்படிச் சொல்லவில்லை; பெயர்இல்லாத
வஸ்து என்றேன். ஆகவே நான் கேட்டதில் நீ கேட்டதை விட அதிகமானத்
தப்பு என்ன?
மகன் : என்ன அம்மா இப்படி நீ பேசுகின்றாய்? கேட்ட வஸ்துக்கு
சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் படைத்துக் காத்து அழித்தல்
ஆகியவைகள் உண்டா அம்மா?
தூய்:மகனே சர்வ சக்தி முதலிய விஷயங்களைப் பற்றியும், படைப்பு,
காப்பு. அழிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றியும் பிறகு பார்த்துக்
கொள்ளுவோம். வஸ்து நிச்சயம் செய்து கொண்டு குண நிச்சயத்திற்கும்
போவோம்.
மகன் :- சற்று பொறு அம்மா. நான் போய் வாத்தியாரைக் கேட்டு
விட்டு வருகின்றேன்.
தாயார்
:- மகனே, நான் முன்னமே சொன்னேன், கிளிப்பிள்ளையைப்
போல் வாத்தியார் சொன்னதையே நம்பிக் கொண்டு அவஸ்தைப்
படவேண்டாம் என்று. ஆனாலும் குற்றமில்லை. அப்படியே ஆகட்டும்,
போய் கேட்டுவிட்டு வா, எனக்கு ஆட்க்ஷபணை இல்லை. அவர் உனக்கு
இன்னும் என்ன என்ன மூடபக்திகளைப் பற்றி சொல்லி வைப்பாரோ
பார்ப்போம். நான் அப்பொழுதே இந்த மாதிரி மூடநம்பிக்கைகளைப்
போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு நமது பிள்ளைகளை அனுப்பக் கூடாது
என்று சொன்னால், உன் தந்தை அதைக் கவனிக்கவில்லை. இருந்தாலும்,
குற்றமில்லை. போய் உன் வாத்தியாரை நன்றாய்க் கேட்டு தெரிந்து கொண்டு
வா. வாத்தியார் புத்திசாலித்தனத்தையும் பார்க்கலாம்.
(தொடரும்!
குடி அரசு - உரையாடல் - 16.12.1928
285
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
சொெங்கலபைட்மூல
தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநா௫
தமிழ்நாட்டு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில்
கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்தி
ருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்
ராயத்தை வரவேற்கின்றோம்.
தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்
பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும்,
பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும்
சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு.
நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும்.
அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம்,
மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி
ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும், அடிக்கடி ஆங்காங்கு
மகாநாடுகள் கூட்டி குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின்
உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரசாரம் செய்யவும்
வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள
தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் ககமையானதுமான காரியம்
என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.
இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக்களிலும் ஜில்லா, தாலூகா
மகாநாடுகள் கூட்டப்பட்டிருக்கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ்
மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்படவில்லை. இதற்காக சுமார் 4,5
மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும்
நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு
மேல் வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி
வரவேற்பு சபை அக்கிராசனரையும் தெரிந்தெடுத்தாய்விட்டதாகத் தெரிய
வருகின்றது.
மகாநாட்டுக்கு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவனம் செலுத்தி
சுயமரியாதையியக்கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட
குடி அரசு - 1928 @)
286
கனவான்களாகவும், சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக்
கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே
விரும்புகின்றோம்.
திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ணன் நாயர், பி.
சுப்பராயன், சர். கே. வி. ரெட்டி நாயுடு. எம்.கே. ரெட்டி, பன்னீர் செல்வம்,
குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார் முதலியவர்களைப்
போன்றவர்களையே தெரிந்தெடுத்தால் மிகுதியும் பொருத்தமானதாக
இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த
முயற்சிப்பதாய்த் தெரிகின்றது. தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில்
செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மை
யுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்கு
காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது
ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாக பாடுபடுவதே போதிய
தாகும்.பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர்களைப் பற்றி
தூற்றாத - விஷமப் பிரசாரம் செய்யாத நாட்களை காண்பது மிகவும்
அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு
நமது பனக்கால் அரசர் எப்படி ஒரு பெரிய “இராக்ஷதராக” காணப்படு
கின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு
நமது திருவாளர்கள் டி பன்னீர் செல்வம் அவர்களும் திரு. எம்.கே. ரெட்டி
அவர்களும் “இராக்ஷதர்”களாகக் காணப்படுகிறார்கள். இராக்ஷதர்கள் என்
றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்து
வார்த்தம்) இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்
வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது.
தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும்
முயற்சியில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டை
செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு
ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்கு தாராளமாய் வெளியில் வந்து
வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 16.12.1928
287
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
KUDI 4RASU.
Reg. No. M. 2041
குடிஅரசு
ர்கள் கா கா் s
1
டக்னு சன்
வாரப்படிப்பு.
இமய கெட காமி,
8) துமிந்துக்றெ ௯
வர்
95
லைக்
|
கரோ
வீட 3 மார்கழி 9
( 83--12.
ISR RS
UL BRSNS
S SRS
"“;;
L_@‘!
நீல
நமக வெடங்கும் ஒவியம்
சம் பெற்ற s
தான்.
S
அறிவிப்பு டி
ர்தாதாரர்கள் கிளைம் மாந்த
(க 180 அமிர்தரஸம்,0௦ 14002 களன்
களுக்கும் கைகண்ட ஒளவுதம்.
அல் பது காவல் எழுதல்
சான் சத்தினுகல் சழ்சிளீனல், என்னன 2
த
வெல்க
பதர் எ்பிடாஷ் வட் மாகம் 930 முரச
பன்பது சக்தா கம்பர் அன்ன
என்பது சக்தாதாரின்
விள
சத்
அப்படம் சப்பசேயா கனல்
அர்
ல் R
அமிர்தம்
2
” இத்தத்தால் ஏற்பட்ட ஸிபாடுகள்
அக்
- ம் முல் சகல i
58 வருவித்து.
பால் செக்கப்
i இநின வின்
க்க கருட ச்சா
பறக்குது
அளந்த த
ஆபிஸ்,
வைங்க சஸ்
வத,
100 வக்தில o ்
திக்கா
டட!
டல கிள்ளை, காக்தி தர் Rovi,
சொர விற, சவ்
2
e
ச்சா முதலியார் கதர் ஸ்டோர்
'சகடைத்தெரு மாவலாம்.
ஆ இதுக்கு பது
மெ Sbuge சிகண் பககம் மன்று
.
5,
ஞ்ச
சேடு
B
3
H
B A
e
A
R
ப
கும்
ன
ள்ள
அவனக்
ன
2
b, நே 3, தம்பம்,
[ gt v
இரா வேளியுப்களக்கு ண்டும் சேலை:
ற்கு வட
தண்டபாணி வைத்தியசாலை,
னாவ தென்ம் வளவில் ன்.
292, சைனாபஜார்,
மதராஸ்
களது எழ்தனம். எல கு 10ல்.
லவ-லை௰௰ ௦௦௦000. அந்த நிலைக் சக்கி ததி o
குடி அரசு - 1928 @)
288
மறைந்தார்
நமகருமைத் தனைனர்!
எணினும் மணமுடைந்து போகாதீர்
தேடற்கரிய ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம் பனகால்
ராஜா சர். ராமராய நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு
1மணிக்கு பிரிந்துவிட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக
இந்திய மக்களுக்கும் சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும்
ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்றதால்
பெரியதும் திறமையானதுமான ஒரு யுத்தம் முனைந்து வெற்றி குறியோடு
நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள் சேனாதிபதியின்
ஆக்ளையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாதிபதி இறந்து போய்
விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில் அப்போர் வீரர்.
களின் மனம் எப்படி துடிக்குமோ அதுபோல் நமது தமிழ் மக்கள் துடித்திருப்
பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. திரு. ராஜா சாஹேப்
அவர்கள் நம் தேசத்தில் உள்ள மற்ற பெரும்பான்மையான தலைவர்கள்.
என்பவர்களைப் போல் கவலையும் பொறுப்பும் இல்லாமல் கூட்டத்தில்
கோவிந்தா போட்டுக் கொண்டு பாமர மக்களின் அறியாமையை ஆதரவாய்க்
கொண்டு வெறும் வார்த்தைகளை மாத்திரம் அடுக்காகவும் அழகாகவும் பேசு
வதும் எழுதுவதும் சமயம், சந்தர்ப்பம், அவசியம் ஆகிய ஒன்றையும் கவனி
யாமல் சர்க்காரை எதிர்த்தும் கண்டித்தும் பேசுவது போல் காட்டுவதும் ஆகிய
காரியங்களாலேயே பெரிய தலைவர் பட்டமும், கீர்த்தியும், பெருமை யும்
பெற்று வாழக் கூடியதான ஒரு சுலபமான முறையைக் கைக்கொண்டு
தலைவரானார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. அன்றியும் மற்றொரு
விதமாகவும் அதாவது பத்திரிகைகாரர்கள் தயவால் அதாவது, பத்திரிகை
காரர்களை திருப்தி செய்து அவர்களது லட்சியங்களுக்கு ஆயுதமாய்
இருந்து அவர்களால் கை தூக்கி விடப்பட்டு, தலைவரானவரும் அன்று.
அன்றியும் மற்றொரு விதமாகவும், அதாவது ஆங்காங்கு கூலி ஆட்கள்
பிடித்து கூலி கொடுத்து அவர்களைக் கொண்டு நாடு முழுவதும் தங்களை
தலைவர்கள் எனக் கூச்சலிடச் செய்து அதனாலேயே தலைவரானவரும்
அன்று. அன்றியும் பார்ப்பனர்களின் அடிமையாய் இருந்து உலக நலத்தின்.
289
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பேரால் கலை நலத்தின் பேரால் “மோட்ச” நலத்தின் பேரால் சுயராஜ்யத்தின்
பேரால் என்று பார்ப்பன ஆதிக்கத்திற்கும் நலத்திற்கும் ஆளாயிருந்து
அவர்களால் தலைவர் பட்டம் பெற்ற வரும் அன்று.
மற்றென்னையோவெனில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவாய்க்
கருதப்பட்ட மக்கள் அதாவது தீண்டாதார், கீழ்சாதியார், ஈன சாதியார், சூத்திரர்.
என்பனவாகிய “பிறவி இழிவும்” “பிறவி அடிமைத்தனமும்” சுமத்தப்பட்ட
சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும்
சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும்
கொண்டவெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக்
கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர்.
அவ்வேலையில் அவர்
பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாத தாய்
இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற அரசியல்
இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு
விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி,
ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரசார கூலிகளுக்கு
விரோதி, இவ்வளவு
மல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான பாமர:
மக்களுக்கும் விரோதி என்று சொல்லும்படியான நிலையில் நெருப்பின் மேல்
நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகுகஷ்டமான துறையில்
வேலைசெய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள்
வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கி
னார் நமது தலைவர் பனகால் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும்
மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்.
அது மாத்திரமல்ல, நமது தலைவரின் தொண்டில் அவருக்கு உற்ற
துணையாகவாவது உதவியாகவாவது யாராவது இருந்தார்களா என்று
பார்ப்போமானால், ஒருவரைக்கூட உறுதியாய்ச் சொல்லமுடியாது. இவருக்கு
முன்னைய தலைவர்களான டாக்டர். நாயர், சர். தியாகராயர் ஆகியவர்க
ளுக்கு நமது ராஜா போன்ற உள்ளன்போடு மனப்பூர்வமாய் பின்பற்றுகின்ற
வர்கள் அநேகர்கள் இருந்தார்கள். ஆனால் நமது ராஜாவுக்கு யார் இருந்
தார்கள்? ஒருவரும் இல்லை என்று சொல்லுவதுடன் மாத்திரம் நில்லாமல்
உள்ளுக்குள்ளாகவே எதிரிகள் சதா குற்றம் சொல்லிக் கொண்டும் பழி
சுமத்திக் கொண்டும் அவரது தலைமையைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்து
கொண்டும் அவரைச் சுற்றிலும் அவரது சொக்காய்ப் பையிலும் இருந்
தார்கள்.பின்னை எப்படி ராஜாவுக்கு கட்சியும் ஆள்பலமும் இருந்தது என்று
யாராவது கேட்பீர்களானால், அதற்கு பதில்,
அவருடைய
தனி சாமார்த்தியத்
தால், புத்திசாலித்தனத்தால், இராஜதந்திரத்தால், சிலரை தான் சொல்லு கின்ற
படி கேட்டுத் தீரவேண்டிய நிலையில் வைத்துக் கொண்டிருந்தார் என்றுதான்
சொல்ல வேண்டும். அன்றியும் பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்னும்
கூட்டத்தாரில் பனகால் அரசரால் அதிருப்தி அடையாதவர்களோ
குடி அரசு - 1928 @)
290
ஏமாற்றமடையாதவர்களோ அவர் மீது வெறுப்பு கொள்ளாதவர்களோ
ஒருவர் இருவராவது உண்டு என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
ஏனெனில் அவர் ஒரு அருமையான சாதனத்துக்கு பாடுபட்டதினால் அது
ஏதாவது கடுகளவாவது பயன் அளிப்பதானாலும் அந்தப் பலன்,
அனுபவிப்பதில் ஏற்படும் சண்டைகளும் போட்டிகளும், அபிப்பிராய
பேதங்களும் ராஜா சாஹேபை அனேகருக்கு விரோதியாகவும் அதிருப்தி
கொள்ள வேண்டியவராகவும் செய்து விடுகிறது. இந்த நிலையில் அவர் மேல்
கண்ட தொண்டில் ஒரு தனி வீரராய் நின்று போர் புரிந்தார் என்றுதான்
சொல்லியாக வேண்டும்.
அப்படியிருந்தாலும் எதிரிகளால் அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட
இடையூறுகளை சமாளிப்பதில் வழிதவறி போயாவது மனிதத் தன்மைக்கு
விரோதமாகவாவது ஒரு சிறு காரியத்தையும் செய்யாமல் ஒரு சுத்த வீரனைப்
போலவே நின்று கருமம் ஆற்றியவர். எந்த சமயத்திலும் மனம் கலங்கியோ
அல்லது யாருக்காவது பணிந்தோ அல்லது தலை குனிந்தோ நின்றவரல்ல..
எக்காலத்திலும் வீரரே
உதாரணமாக அவரது தலைமை வாழ்வு இந்த 10 வருஷத்திற்கு
உள்ளாக மூன்று வித பரீகைஷக்கும் ஆளாகிற்று. அதாவது ஒரு சமயத்தில்,
முதல் மூன்று வருஷத்தில் அவருக்கு அதிகாரமும் செல்வாக்கும், அதாவது
மந்திரி அதிகாரமும் கக்ஷி செல்வாக்கும் இருந்தது. இரண்டாவது, மூன்று
வருஷத்தில் உள்ளுக்குள்ளாகவே க்ஷி ஏற்பட்டதால் செல்வாக்கு இல்லாத
அதிகாரம், அதாவது ககஷி செல்வாக்கில்லாத மந்திரி அதிகாரம் மாத்திரம்
இருந்தது. மற்றொரு சமயத்தில் மூன்றாவது மூன்று வருஷத்தில், உள்
கலகத்தை எதிரிகள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்ட
தால் அதிகாரமும் செல்வாக்கும் இரண்டும், அதாவது ௧௯௮ செல்வாக்கும்
மந்திரி அதிகாரமும் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் முக்
காலத்திலும் அவர் செய்ய வேண்டியதை தைரியமாகவும் ஒரே மாதிரி
யாகவுமே செய்து வந்தார் என்று சொல்லியாக வேண்டுமேயொழிய
எப்போதாவது களைத்துப் போயோ மனமுடைந்து போயோ விட்டார் என்று
சொல்ல முடியாது. மேலும், அதிகாரமும் செல்வாக்கும் இல்லை என்று
சொல்லும் படியான மூன்றாவது மூன்று வருஷமான நிகழ்காலத்தில் மந்திரி
வேலையுமில்லாமல் கக்ஷி செல்வாக்குமில்லாமல் முன் ஆறு வருஷத்தில்
செய்ய முடியாத காரியங்கள் அனேகம் செய்து முடித்திருப்பதை யாரும்
மறுக்க முடியாது. அதனாலேயே நமது பனகாலரசரின் பெருமையும்
சாமார்த்தியமும் விளங்கும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டே வந்தன.
திரு. பனகாலரசருக்கு மந்திரி அதிகாரமும் கக்ஷி செல்வாக்கும்
இருந்த காலத்தில் நம் நாட்டில் பார்ப்பன ஆயுதமான காங்கிரசுக்கு இருந்த
291
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
செல்வாக்கும் மதிப்பும் இப்போது பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும்
கிடைக்க முடியாத மாதிரி வக்கீல் குமாஸ்தாக்களின் தோட்டங்களிலும்
வக்கீலுக்குக் கக்ஷிக்காரர்களைக் கூட்டிக் கொண்டு வந்துவிடும் தரகர்களின்
புழக்கடைகளிலும் புகுந்து மறைந்து கொண்டது.
இந்த இரண்டு வருஷ காலத்தில் நமது தமிழ்நாட்டில் காங்கிரசு, ஒரு
மாகாண மகாநாடுகூட கூட்ட முடியாத அளவு முறியடிக்கப்பட்டதற்கு
முக்கிய காரணம் நமது தலைவருக்கு “அதிகாரமும் செல்வாக்கும்” என்
பவைகள் “போய் விட்டதின்” பலன்தான் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
இவ்வளவினும் பொறுக்கியெடுத்த மணிபோன்ற அதிசயம் என்ன
வென்றால், அவர் எந்தக் காலத்திலும் சர்க்காரிடத்திலோ மற்றும் யாரிடத்
திலோ தனது கொள்கையை சிறிதாவது விட்டுக் கொடுக்க சம்மதிக்காததும்
யாருக்கும் தலைவணங்காததுமேயாகும்..
முக்காலத்திலும் சர்க்காரை நடத்தக்கூடிய ஒற்றைத் தலைவராகவே
(டிக்டேட்ராகவே! இருந்தார். அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத காலத்தில்
தான் நமது தலைவரானவர் பெருமை தங்கிய கவர்னர் பிரபுவான
லார்ட்கோஷன் அவர்களை - சென்னை அரசாங்கத் தலைவரை - அரசரின்
பிரதி காவலரை - மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேறும்படி உத்திரவிட்டார்.
“பெரிய தலைவர்கள்”, “33 கோடி மக்களின் பிரதிநிதிகளான” காங்கிரஸ்
காரர்களும் அவர்கள் முன்னோர்களும் முன்பு இதைவிட அதிகமாக
சொன்னபோதெல்லாம் சிறிதும் லக்ஷியம் செய்யாத அரசாங்கம்- அரசாங்கத்
தலைவர்கள் நமது அரசர் பனக்கால் வீரர் “உம்மீது நம்பிக்கையில்லை; கட்டு
மூட்டை” என்று சொன்னவுடன் லார்டு கோஷன் மாத்திரமல்ல, சென்னை
அரசாங்கம் மாத்திரமல்ல, இந்திய அரசாங்கம் மாத்திரமல்ல, பார்லிமெண்டு
கூட நடுங்கின நடுக்கம் யாரே அறிவார். சர்க்கஸ்காரன் குதிரைகளையும்
யானைகளையும் சிங்கங்களையும் ஆட்டுவது போல் இந்த அதிகாரமும்
செல்வாக்கும் இல்லாத காலத்தில் அவர் அரசாங்கத்தை ஆட்டி வைத்த
ஆட்டம் அறிஞர்களுக்கு மாத்திரமல்லாமல் அறியாதவர்கள் என்பவர்
களையும்,
அதே மந்திரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்படி செய்துவிட்டது.
இது ஒன்றே அவர் அரசாங்கத்திற்கு அடிமையாய் இருந்தாரா அரசாங்
கத்தை ஆட்டி வைத்தாரா என்பதை விளக்கி வைக்கும்.
அவர் சென்னை அரசாங்கத்தை மாத்திரமல்லாமல் அவசியமான
போது இந்திய அரசாங்கத்தையும் பார்லிமெண்டையும்கூட மிரட்டி நடுங்க
வைத்து வந்திருக்கிறார். மற்றும் அவர் அதிகார ஆட்சியான ஆறு வருஷ
மந்திரி காலத்தில் தனது மந்திரி வேலையை ராஜிநாமா கொடுத்தது குறைந்தது
மூன்று நான்கு தரம் இருக்கும் என்றே சொல்லலாம். 1921-ல் தொழிலாள
ரக்காக ஒரு தடவையும், 1924-ல் வெளியில் சொல்லக்கூடாத விஷயத்
திற்காக ஒரு தடவையும், 1926 - ல் தேவஸ்தான ஆக்ட்டுக்காகவும் சர். சி.பி.
குடி அரசு - 1928 @)
292
அவர்கள் அக்கிரமத்திற்காகவும் ஒரு தடவையும் மற்றும் சில சமயத் திலும்
அவர் இராஜினாமா கொடுக்கத் துணிந்ததும் ராஜினாமா கடிதம் எழுதி
கவர்னர் பிரபுவுக்கு அனுப்பி விட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டதும்,
கவர்மெண்ட் மெம்பர்கள் ஜாமீனாக இருந்து ராஜினாமாவை வாபீசு பெற்றுக்
கொள்ளச் செய்ததும் அவரது உத்தியோக அலக்ஷியத்தை காட்டப்
போதுமானது.
மற்றும் அரசியல் சுதந்திரம் என்பதின் பேரால் தேசத்திற்காக பனகால்
வீரர் போட்ட திட்டங்கள் இப்போது உள்ள எந்தப் பெரிய மகாத்மாக்களோ,
சிங்கங்களோ, லோகமான்யர்களோ, தேச பந்துக்களோ, நேருக்களோ, தேசீய
வீரர்களோ, அம்மைகளோ, மகான்களோ ஆகியவர்கள் கேட்டவைகளுக்கு
ஒரு பிடியாவது அதிகமானதாயிருக்குமேயொழிய ஒரு நெல்லிடை
அளவாவது குறைந்ததாயிருக்காது என்று கல்லின் மேலும் எழுதுவோம்.
வெள்ளைக்காரர்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதில் நமது ராஜா
அவர்கள் காங்கிரசுக்காரர்களைவிட சிறிதும் பின் வாங்கியவரல்ல என்றே
சொல்லுவோம். அநேக இடங்களில் இதுவரை வெள்ளைக்காரர்கள் பார்த்து
வந்த உத்தியோகங்களை கையைத் திருகிப் பிடிங்கி கொள்வதுபோல் வாதாடி
பிடுங்கிக் கொண்டார். அப்பேர்ப்பட்ட நிலையில் பார்ப்பனர் பார்ப்பனரல்
லாதார் என்கின்ற வித்தியாசத்தை ஞாபகத்திற்கு கொண்டு வந்தவரே அல்ல.
ஆனால் நமது பார்ப்பனக் காங்கிரசுக்காரர்கள் நேரே தங்கள் கைக்கு ஏதாவது
உத்தியோகங்கள் வராது என்று நினைத்தால் உடனே அவற்றை வெள்ளைக்
காரர்கள்தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றார்கள்.
இதற்கு ஆதாரம், எவ்விதமான சீர்திருத்தம் வேண்டுமென்று
பார்லிமெண்டாரால் சென்னை அரசாங்க மெம்பர்கள் என்கின்ற முறையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நமது பனகால் அரசர் கொடுத்த விடையும்
வெகு நாளைய காங்கிரஸ்காரர் சர்.சி.பி. ராமசாமி அய்யரவர்கள் கொடுத்த
விடையும் போதுமானது.அவ்விடைகளை பார்த்தவர்களுக்கு எந்த இயக்கம்
எந்தக் கூட்டம் தேசத்துரோகி என்பதும் யார் தேசபக்தர்கள் என்பதும் ஒரு
மூடனுக்கும் விளங்கச் செய்யும்.
அவரது தலைமை வாழ்நாளில் அவர் எந்தக் காரியம் செய்தாலும்
சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரே வித நன்மையைக் கருதி திட்டம்
போடுவாரே ஒழிய ஒன்றுக்கொன்று விரோதமாகவோ தனது சுயநலத்திற்
காகவோ ஒரு சிறு காரியத்தையும் செய்ததாக அவர் இறந்த பிறகு கூட இழி
முறையில் அவரைத்தூற்ற முற்பட்டவருங்கூட ஒரு சந்தர்ப்பத்திலாவது
சொல்ல வரவில்லை என்பதாலேயே விளங்கும். பார்ப்பனர்களும் அவர்
களது பத்திரிகைகளும் பார்ப்பனக்கூலிகளும் அவர்களது பத்திரிகைகளும்.
நமது ராஜாவின் மீது சுமத்திய பழிகளும் செய்த சூழ்ச்சிகளும் விஷமப்
பிரசாரங்களும் கொஞ்சநஞ்சமல்லவானாலும் ஒன்றையாவது லக்ஷியம்
293
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
செய்து பதில் சொல்லவோ அல்லது அந்த நபர்களை லக்ஷியம் செய்து
திருப்பிச் சொல்லவோ சற்றாவது தனது காலத்தைச் செலவழித்தார் என்று
அவரது எதிரிகள் கூட இதுவரை சொல்ல வரவில்லை.
இந்த தலைமை ஸ்தானத்தால் மற்றவர்களைப்போல் பணம்
சம்பாதிக்காமல் இருந்ததோடு மாத்திரம் அல்லாமல் குறைந்தது மாதம் 1க்கு
2000 ரூ. வரை இயக்கத்திற்காக செலவு செய்து கொண்டு முழு நேரத்தையும்
அதற்கே ஒப்புவித்து விட்டவர். கடைசியாக உயிரையும் கொடுத்துவிட்டார்.
இதனால் உண்மைத் தியாகி ஒப்பற்ற தலைவர் மறைந்தார்.
இந்த நிலையில் இப்பேர்ப்பட்ட தலைவரை இழந்து பரிதவிக்கும்
தமிழ் மக்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்பது நமக்கே
விளங்காமல் துடிக்கின்றோம்.
மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் தடைசெய்ய முடியாத தத்துவம்.
தலைவர்கள் போவதும் வருவதும் முரண்பாடில்லாத வழக்கம். இதற்குமுன்,
எத்தனையோ தலைவர்கள் மறைந்து போனார்கள். எத்தனையோ தலைவர்.
தோன்றினார்கள். நமது தலைவரும் மாட்சிமை தங்கிய ஜார்ஜ் மன்னர் பிறந்த
அன்றே அதே நேரத்தில் பிறந்து சாகும்வரை நமக்காகவே உழைத்து 62
வயதான பிறகே உயிர்நீத்தார். இந்திய மக்களின் சராசரி வயது 24 என்றால்
சராசரிக்கு மேல் 39 வருஷம் வாழ்ந்திருந்து நமக்கு செய்திருக்கும் நன்மை
களை உணர்ந்து திருப்தி அடையாமல் இன்னும் கவலைப்பட்டுக் கொண்டு
மனமுடைந்து போவதானது நமது மயக்கத்தையும் பேராசையையுமே
காட்டும். எந்தத் தலைவர் அல்லது எந்தப் பெரியார் சாகாமல் “சிரஞ்
சீவியாய்” வாழ்வதை நாம் பார்க்கிறோம். இப்படி இருக்க உலகில் மக்களில்
ஒருவர் இறந்ததற்காக ஒருவர் ஏன் துக்கப்படுகின்றார்கள் என்று கேட்போ
மானால், அது இறந்தவரின் அருமை பெருமையைப்பற்றி பேசவும் அதனால்
மற்றவர்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை உணர்ந்து அதன்படி
நடக்கவும் அவர்களது உயர்ந்த குணத்தைப் பின்பற்றவும் சித்தாந்தப்படுத்திக்
கொள்ள இந்த சமயத்தை உபயோகித்துக் கொள்வதற்காகத்தான் என்பதே
எமது அபிப்பிராயம். அன்றியும் நாயர் பெருமான் அவர்களும் இதேமாதிரி
நெருக்கடியான சமயத்தில் தேசம் விட்டுத் தேசம் போய் உயிர் துறந்தார்.
தியாகராய வள்ளலும் இதேபோல் இறந்தார். பனக்கால் வீரரும் அவர்களைப்
பின்பற்றி நடந்தார். ஆனால் நாயர் பெருமான் காலமானவுடன் மக்கள்:
கண்ணிலும் மனதிலும் தியாகராய வள்ளல் தோன்றினார். அதுபோலவே
தியாகராய வள்ளல் மறைந்தவுடன் நமது பனகால் வீரர் தோன்றினார்.
பனகால் வீரர் மறைந்த பிறகு யாரும் தோன்றக் காணோம். அவர் மறைந்த
பிறகு சற்றேக்குறைய இரவும் பகலுமாக 192 மணி நேரம் லக்ஷக்கணக்கான
குடி அரசு - 1928 @)
294
வர்கள் காலம் சென்ற தலைவரைப்போல் ஒரு தலைவரைத் தேடித்தேடி
களைத்தாய்விட்டது. இன்னமும் ஒருவரும் புலப்படவில்லை. இது ஒன்றே
நமது பனக்கால் வீரர், ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் என்பதைக்
காட்டுகின்றது.
ஆனாலும் இதற்காக மனமுடைந்து போகாமல் இந்த நிவர்த்தி
இல்லாததும் பெரிய துக்ககரமானதுமான சந்தர்ப்பத்தையும் “இதுவும் ஒரு
நன்மைக்காக” என்பது போல் கருதி அதை அந்தப்படி உபயோகித்துக்
கொள்வதுதான் அறிவுடைமையாகும்.அன்றியும் அதுதான் அறிவும் வீரமும்
தியாகமும் உறுதியும் கொண்ட தலைவரால் நடத்தப்பட்ட மக்கள்
என்பவர்களுக்கு ஏற்ற குணமுமாகும்..
“இனிமேல் நமக்கு எதற்காக தலைவர்கள் வேண்டும்? இனியும் நாம்
எத்தனை நாளைக்கு தலைவர்களாலேயே நடத்தப்பட்டுக் கொண்டிருக்க
வேண்டும்? இவ்வளவு அருமை பெருமை சாமர்த்தியம் வீரம் வாய்ந்த
தலைவர்களாய் இத்தனை காலம் நடத்தப்பட்டும் இனியும் நாம் நமது
காலிலேயே நிற்க முடியாத பலவீனர்களாக நாம் இருப்போமானால் அல்லது
இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டிருப்போமானால் என்றுதான் நாம்.
மனிதர்களாவது?” என்பது போன்ற ஞானங்கள் உதயமாவதற்கு இதுவே தக்க
சமயம் என்று கூசாமல் சொல்லுவோம். ஏனெனில் இந்த சமயத்தில் நாம்
நிலைகொள்ள வில்லையானால் இனி நமக்கு வெகுகாலத்திற்கு விமோசனம்
இல்லை என்றுதான் முடிவுகட்டிக் கொள்ளவேண்டும்.
தலைவர் அவசியமா?
தந்தையை இழந்த மக்கள் தங்களது வாழ்க்கையை இனி தந்தை
இல்லாமல் எந்த விதமாய் நடத்துவது என்கின்ற யோசனை கொண்டு
மார்க்கம் கண்டு நடக்க முயற்சிப்பார்களே ஒழிய வேறு தந்தை யார் என்று
நினைத்துக் கொண்டு தேடித்திரிய மாட்டார்கள்.அதுபோலவே நாமும் இனித்
தலைவரைத் தேடிக் கொண்டு திரிவதைப் போன்ற பைத்தியக்காரத்தனம்.
வேறில்லை என்று நினைக்க வேண்டும். உண்மையில் நமக்கு இப்போது
என்ன குறை? தலைவர் இல்லாத குறையா? நமக்குப் போதிய கவலையும்
உணர்ச்சியும் பொறுப்பும் இல்லாத குறையா? என்பதை ஒவ்வொருவரும்
யோசித்துப் பார்க்க வேண்டும். உண்மையைப் பேச வேண்டுமானால் நமது
மக்களுக்கு இனியும் போதிய உணர்ச்சி ஏற்பட வில்லை. பொறுப்பு ஏற்றுக்
கொள்ளவில்லை. சுயநலம் அளவுக்கு மேல் தாண்டவமாடவிட்டு விடுகின்
றோம். இத்தியாதி குணங்கள் உள்ள சமூகம் ஆயிரம் ஆயிர நாயர்களையும்
தியாகராயர்களையும் பனகால் வீரர் களையும் “சிரஞ்சீவி” களாக வைத்துக்
கொண்டிருந்தாலும் முற்போக்கடைய முடியவே முடியாது என்று சொல்லு
வதற்காக மன்னிக்க வேண்டுகிறோம்.
நமது ஈன நிலைக்கு நமது மக்களில்
295
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
பாமர மக்களைவிட படித்தவர்கள் என்பவர்களும் பணக்காரர்கள் என்பவர்.
களுமே மிகுதியும் காரணஸ்தர்களாய் இருந்து வந்திருக்கின்றார்கள் என்று
சொல்லுவதற்கு படித்தவர்கள் என்பவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும்.
நமது மேல்கண்ட தலைவர்களால் இதுவரையில் பாமர மக்களை
விட முக்கியமாய் படித்தவர்கள் என்பவர்களும் சிறிது பணக்காரர்கள்
என்பவர்களுமே பயன்பெற்று வந்திருக்கின்றார்கள். அதற்கு உதாரணமாக
அனேக படித்தவர்கள் பெற்றிருக்கும் உத்தியோகங்களையும் பணக்
காரர்கள் பெற்றிருக்கும் பதவிகளையும் கவனித்துப் பார்த்தால் விளங்காமல்
போகாது. ஆனால் இப்படித்தவர்களினுடையவும், பணக்காரர்களினு
டையவும் உணர்ச்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமானால்,
வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டியவர்களாகவேயிருக்கின்றோம்.
நமது யோக்கியதை
உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகின்றோம்.
ஆனால் கோபிப்
பதில் பயன் இல்லை. ஒரு சாதாரணமான 2 '/, அடி உயரமுள்ள பையன்
அதுவும் அரை டிக்கட்டுக்கு அருகதை யில்லாதவன் என்று சொல்லக்
கூடியவன் முதற்கொண்டு பெரிய ஆசாமி என்கின்றவர்கள் வரையில்
இரண்டு கோணை எழுத்து அறிவோ அல்லது ஏதாவது ஒரு சர்வ
கலாசாலைப் பட்டமோ பெற்று விட்டால் உடனே தன்னை ஒரு பெரிய
முக்கியமான பார்ப்பனரல்லாதார் என்று நினைத்துக் கொள்வதும் “பார்ப்
பனரல்லாதாரியக்கம் என்ன செய்துவிட்டது யாருக்கு சாதித்துவிட்டது.
எனக்கு இன்னமும் யாதொரு உத்தியோகமும் கொடுக்கவில்லை, அவனுக்
குக் கொடுத்தார்கள், இவனுக்குக் கொடுத்தார்கள், எல்லாம் அவரவர்கள்
சுயநலத்திற்காக போடும் வேஷமே ஒழிய இது பார்ப்பனரல்லாதார் இயக்க
மல்ல” என சவடால் அடிப்பதும். “பனக்காலைத் தெரியாதா, நாயரைத்
தெரியாதா, செட்டியாரைத் தெரியாதா, எல்லாம் கூட்டுக் கொள்ளை” என்று
சொல்லுவதும் “பார்க்கப்போனால் பார்ப்பனர்களே நல்லவர்கள்” என்று
சொல்லுவதும் “என்ன இருந்தாலும் காங்கிரசைக் குற்றம் சொல்லலாமா?
ஆதலால்தான் இவர்களோடு இருக்கமுடியவில்லை” என்பதும், எல்லாம் சரி,
எனக்கு அந்தப் பெயர்தான் பிடிக்கவில்லை என்பதுமானது, ஆயிரத் தெட்டு
அசந்தர்ப்பமும், அசம்பாவிதமான வார்த்தைகளை உளறிக் கொண்டு
திரிவதும், இவ்வளவையும் சகித்துக் கொண்டும் தலைவர்கள் ஏதாவது
உத்தியோகமோ, பதவியோ கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டவுடன்
நேர் விரோதிகளாகவும் அலட்சியப் புத்தியுடையவர்களாகவும் இருந்து
கொண்டு, “பனக்கால் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும்”
என்று அவருக்கே புத்தி சொல்லுவதும், பார்ப்பனர்களுக்கு உள் ஆளாயி
ருப்பதும், இயக்கத்தைக் குறை கூறுவதுமான வேலையிலேயே காலங்
கழிப்பதுமாய் இருக்கின்றார்கள். பணக்காரர்களும் தங்களுக்கு பதவி
குடி அரசு - 1928 @)
296
கேட்பதும், கிடைத்துவிட்டால் இயக்கத்தை மறந்து விடுவதும், கிடைக்கா
விட்டால் இயக்கத்தையும் தலைவர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டு
எப்படியாவது இந்த இயக்கத்தை ஒழித்தாலொழியநாட்டுக்கு மோட்சமில்லை
என்று பிதற்றித் திரிவதுமான வேலையில் ஈடுபடுவதைத் தவிர வேறு ஒரு
நன்மையுமே செய்யாமல் இருந்து வருகின்றார்கள். இதற்கு வெளிப்படை
யான சாட்சி பார்ப்பனரல்லாதார் பெயர் சொல்லிக் கொண்டு பெரிய பெரிய
உத்தியோகம் பெற்றவர்கள், ஜில்லா ஜட்ஜி, கலெக்டர் முதல் சாதாரண பெரிய
உத்தியோகம் வரை பெற்றவர்கள் இயக்க பத்திரிகை வாங்கமாட்டார்கள்.
வாங்கச் சொன்னால் அதில் குற்றம் சொல்லுவார்கள். மீறி வாங்கினாலும்
பணம் கொடுக்க மாட்டார்கள். கேட்கப் போனால் “அந்தப் பணம் என்ன
ஆச்சுது, இந்தப் பணம் என்ன ஆச்சுது” என்று கேட்பதின் மூலம் பழி சுமத்த
வருவார்கள்.
அதோடு
எதிரிகளின் பத்திரிகைகளை முன்பணம் கொடுத்து
வாங்கிப் படிப்பார்கள். அன்றியும் இவர்கள் தங்களை பார்ப்பனரல்லாத
இயக்கத் தலைவர்கள் என்றும், அவ்வியக்கத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சித்
தலைவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவார்கள்.
சாதாரணமாக, அவ்வியக்கம் அதிகாரத்திலும் செல்வாக்கிலும்
இருந்ததான 1927ம் வருஷம் வரையில் “ஜஸ்டிஸ்” பத்திரிகை 1200ம்.
“திராவிடன்” பத்திரிகை 700 ம் தான் அச்சாகிக் கொண்டு வந்தன. இதற்கும்
மந்திரிகள் மாதம் 2000 ரூபாய் போல் கொடுத்து வந்தார்கள். மற்றபடி சில
ஜமீன்தார்களும் பெரிய பணக்காரர்களும் உதவி வந்தார்கள். ஆனால்
இயக்கத்தால் உத்தியோகம் பெற்றவர்களில் பணங்கொடுப்பதையோ,
பத்திரிகை படிப்பதையோ தங்கள் கடமை என்றுநினைத்தவர்கள் யார் என்று
சொல்ல முடியாமலே இருந்தது. இன்றைய தினமும் 3000க்கு மேல்பட்ட
“ஜஸ்டீசு”ம், 6000க்கு மேல்பட்ட “திராவிட”னும் வெளியாகின்றதானாலும்
“ஜஸ்டீசு”க்கு மாதம் 1-க்கு 1500 ரூபாய் நஷ்டமும் “திராவிட”னுக்கு மாதம்
1க்கு
500 ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டு வருவதன் மூலம் “ஜஸ்டிஸ்”
“திராவிடன்” பத்திரிகைகள் 25000 ரூபாய் கடனிலும் அது இன்னமும்
பெருகும்படியான நிலையிலும் இருக்கின்றது. தியாகராய மமோரியல்
கட்டிடத்திற்கும் 40000 ரூபாய் கடனும் வட்டி ஏறிக் கொண்டும் வருகின்றது.
எனவே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் நன்மை அடைந்தவர்.
களின் யோக்கியதைக்கும், ஒப்பற்ற அருமையான 3 தலைவர்களால்
அவ்வளவு தியாகபுத்தியுடனும் சமர்த்துடனும் நடத்தப்பட்ட மக்களின்
நன்றியறிதலற்ற தன்மைக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று
கேட்கின்றோம். மற்றும் இவ்வியக்கமானது தன்னிடமிருந்து வெறும்
உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் எதிர்பார்க்கும் மக்களைக்
கொண்டிருக்கின்ற வரையிலும் - இயக்கத்தின் லட்சியமே வெறும் உத்தி
யோகங்களை சர்க்காரிடமிருந்தும் பார்ப்பனர்களிடமிருந்தும் பிடுங்கிக்
கொள்வதுதான் என்று கருதும் மக்களைக் கொண்டிருக்கும் வரையிலும் -
297
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
இனியும் எத்தனை தலைவர் தோன்றினாலும் உண்மை லட்சியம் கைகூடும்
என்று நம்மால் சொல்ல முடியாது. பதவிப் போட்டியாலும் அதிகாரப்
போட்டியாலும் உத்தியோகப் போட்டியாலும் மக்களுக்குள் கட்சிப்பிரதி
கட்சியும் விரோதமும் வெறுப்பும் ஏற்படும் நிலைமையை மாறும்படி செய்ய
வேண்டும். உத்தியோகம், பதவி, அதிகாரம் முதலியவைகள் எல்லாம் சமூக
முன்னேற்றத்திற்காக பயன்படத்தக்க வழியில் கைப்பற்றவும் உபயோகப்
படுத்தவுமான மாதிரியில் நிர்வகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெரிய
சம்பளம் உள்ள மந்திரி போன்ற பொறுப்புள்ள அதிகாரப் பதவிகள் இயக்கத்
தின் பிரதிநிதித்துவமாக அனுபவிக்க வேண்டும்.
அதன் வருமானம் முழுவ
தும் இயக்கத்திற்குச் சேர வேண்டும். வேலை பார்ப்பவரின் செலவுக்காக
இயக்கத்திலிருந்து ஏதாவது கொடுபட வேண்டும். கவுரவ உத்தியோகங்
களும், பொது நன்மையை கருதுபவர்களுக்கே - ஒரு குறிப்பிட்ட நிபந்
தனைப்படி நடப்பவர்களுக்கே - கொடுக்கப்பட வேண்டும்.
அன்றியும் சாதாரணமாக இது சமயம் பார்ப்பனரல்லாதார் இயக்
கத்தில் உண்மையிலேயே கொள்கைகளுக்காக அபிப்பிராய பேதம் இருப்ப
தாக யாரும் சொல்ல முடியாது. சுயநலத்தை முன்னிட்டு ஏற்பட்ட விரோதத்
தினால் விலகி நிற்கவும் எதிர்த்து நிற்கவும் வேண்டி வேண்டுமென்றே சில
மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கற்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே
ஒழிய வேறில்லை.
இந்த நிலைமை அடியோடு ஒழிய வேண்டும். இன்னும் இன்னோ
ரன்ன பல விஷயங்களைக் கவனித்து மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள
சம்மதிப்பார்களானால் தலைவர் மறைந்த நஷ்டம் நம்மை ஒன்றும் செய்து
விடாது.மற்றும் அவர்களின் உயிர்த் தத்தத்தால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டது
என்றுகூட சொல்லத்தக்க ஒரு பெருமையும் மறைந்த தலைவர்களுக்கு
ஏற்படும். இந்த சமயத்தில் முடிவாகவும் சுருக்கமாகவும் நாம் இவற்றைச்
சொல்லி இந்த நமது துயரத்தையும் ஆசையையும் படித்த மக்களைவிட
சாதாரண பொது மக்களிடமே தெரிவித்துக் கொண்டும் அவர்களையே
நம்பிக் கொண்டும் இருக்கின்றோம். ஆதலால் இந்த சகித்தற்கரிய துக்கத்தால்
யாரும் தங்கள் பிற்கால கதியைப்பற்றி உடைந்து போகாமல் நம்பிக்கையோடு
ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாடாக முனைந்து வேலை செய்ய வேண்டும்
என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
மக்கள் எல்லோரும் நாயராக!
எல்லோரும் தியாகராயராக!!
எல்லோரும் பனக்கால் வீரராக!!!
குடி அரசு - தலையங்கம் - 23121928
குடி அரசு - 1928 @)
298
நமது பத்திரிக்கை
“குடி அரசு” பத்திரிகையானது அபிமானிகள் பெருக்கத்தால்
வாராவாரம் கிட்டத்தட்ட 10000 பதினாயிரம் பிரதிகள் வரை பதிப்பிக்க
வேண்டியிருப்பதாலும், சமீப காலத்திற்குள் பதினாயிரம் பிரதிகளுக்கு மேல்
அச்சுப்போட வேண்டியிருக்குமாதலாலும். தற்போது நம்மிடம் இருக்கும்
அச்சு இயந்திரம் அவ்வளவு பிரதிகள் அச்சியற்றபோதுமானதாய் இல்லாத
தாலும், இதற்காக வாங்கப்பட்ட மற்றொரு பெரிய அச்சியந்திரம் “திராவிடன்”
பத்திரிகையின் வாசகர்களின் பெருக்கத்தால் “திராவிடனுக்கு வேண்டியிருந்
ததாலும் கொஞ்சநாளைக்கு “குடி அரசை” 16 பக்கத்துடனே வெளிப்படுத்த
வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு
அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக
உபயோகப்படுத்திவரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்
களுக்கு அதிகப்படாமல் செய்து விட்டு சற்றேக்குறைய 2 அல்லது 13 பக்கங்
களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம்.
இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்
கலாம்; ஆனாலும் அவர்களையும் திருப்தி செய்ய சீக்கிரத்தில் ஏற்பாடு
செய்யப்படும்.
குறிப்பு: நிரூப நேயர்களுக்கு இனி கண்டிப்பாய் இடம் ஒதுக்க முடியா
ததற்கு வருந்துகிறோம். அவசியம் என்று தோன்றியவைகளுக்கு மாத்திரம்
சற்று இடம் கொடுக்கலாம். ஆனாலும் நிரூப நேயர்கள் வெறும் வர்த்த
மானத்தை அனுப்பாமல் இருக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - முக்கியக்குறிப்பு - 23.12 1928.
299
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து
விடாதீர்கள்
கல்கத்தாவில் இது சமயம் கூடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் என்னும்
கூட்டம் இந்த வருஷத்திய மற்றொரு ஏமாற்றுத் திருவிழா என்றுதான் சொல்ல
வேண்டும். ஒவ்வொரு வருஷமும் நமது இந்தியப் பாமரமக்கள்'
ஆயிரக்கணக்காகக் கூட்டம் கூடுவதும் நாலைந்து கூட்டுக் கொள்ளை சுயநல
ஆசாமிகள் சேர்ந்து இப்பாமர மக்கள் ஏமாறும்படி ஜாலவித்தைபோல்
இரண்டொரு சதியாலோசனைத் தீர்மானங்கள் செய்வதும் “அதற்குள்.
இதுவும் இருக்கின்றது, இப்படியும்
சொல்லலாம் அப்படியும் சொல்லலாம்,
எனினும் பொருந்தும், அதற்கு இதுவே முதற்படி, முதற்படிக்கும் இதுவே
முதற்படி” என்பது போன்ற தந்திரவார்த்தைகளால் அத்தீர்மானங்களை
அரண் செய்வதும், வாலிபர்களை இளம் பெண்களைக் காட்டி ஏமாற்றுவது
போல் பாமர மக்களை திரு காந்தியவர்களைக் காட்டி ஏமாற்றி வருவதுமே
காங்கிரஸ் நாடகமாக நடத்திக் காட்டப்பட்டு வருகின்றது. இதைப் போன்ற
ஒரு மோசமான ஏமாற்றுத் திருவிழா நமது நாட்டில் வேறு எதன் பேராலும்
நடத்தப்படுவதாகச் சொல்ல முடியாது.பார்ப்பனர்களோ, அல்லது ஆங்கிலம்
படித்து உத்தியோகத்திற்கு காத்திருக்கும் படித்தவர்கள் என்பவர்களோ,
அல்லது பெருமையையும் பதவியும் அடையக் காத்திருக்கும் பணக்
காரர்களோ இவ்வித நாணயப் பொறுப்பற்ற காரியங்கள் செய்வதில் நமக்கு
சிறிதும் அதிசயமில்லை. பார்ப்பனர்கள், படித்தவர்கள், பணக்காரர்கள்
ஆகிய
மூவரும் சிறப்பாக நமது நாட்டைப் பொருத்தவரையில் ஏழை மக்களுக்கும்
குடியானவர்களுக்கும் எப்போதும் எதிரிகளே ஆவார்கள். அதனாலேயே
தான் முதலில் பார்ப்பன ஆதிக்கத்தை அடியோடு அழித்தெறிய
வேண்டுமென்கின்றோம். அது ஒழிந்தால் அடுத்ததைச் செய்யவே நமது
சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்கின்றது.
மற்றபடி திரு. காந்தி, துறவி என்றும் மகாத்மா என்றும் உத்தமர்:
என்றும் சத்திய சீலர் என்றும், ஏழைகள் நண்பர் என்றும் ஏன் அவதாரம்
என்றும்கூட சொல்லும்படியான ஒருவர், ஒருகாலத்தில் தமக்கு ஏற்பட்ட
செல்வாக்கையும் நம்பிக்கையையும் இவ்வேமாற்றுத் திருவிழாவுக்கு
உபயோகப்படுத்துவதைப் பற்றி நாம் கண்டிக்காமலோ பாமர ஜனங்களுக்கு
எடுத்துக்காட்டாமலோ இருக்க முடியவில்லை. நேற்றும் முன்தினமும்
குடி அரசு - 1928 @)
300
கல்கத்தா காங்கிரசின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விஷயாலோசனைக்
கூட்டத்தில் இரண்டு வித தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஒரு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது:-
“ராஜீய சமூகப் பிரசினைகளை தீர்த்து வைப்பதற்கு சர்வ கக்ஷி'
மகாநாட்டுத் தீர்மானம் உதவியாயிருப்பதால் அதைப் பாராட்டுகின்றது.”
“சென்னை காங்கிரசில் பூரண சுயேச்சைதான் நமது லக்ஷியம் என்று
தீர்மானித்திருப்பதை பின்பற்ற சம்மதித்தது.”
“கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும்
அதிகாரத்தோடும் பிரிட்டிஷார் ஒப்புக் கொள்ளுவதைப் பொருத்தும் இந்த
காங்கிரஸ் நேரு ரிபோர்ட்டில் கண்ட அரசியல் திட்டத்தை ஒப்புக்
கொள்ளுகின்றது.”
“இதை பிரிட்டிஷார் 2 வருஷ வாய்தாவுக்குள் ஒப்புக் கொண்டு
அந்தப்படி சீர்திருத்தம் கொடாவிட்டால் பலாத்காரமற்ற தன்மையில்
வரிகொடாமை, உதவி மறுத்தல் முதலிய ஒத்துழையாமை செய்வது”
என்பதாகும்.
இது, திரு காந்தியால் பிரேரேபிக்கப்பட்டு திரு. சீனிவாசய்யங்காரால்
ஆமோதிக்கப்பட்டு 3ல் 2 பங்கு பேர்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சுயேச்சைக் கொள்கையின் மூலப் புருஷர்களான திரு. ஜவாரிலால்
நேருவும், சுபாஷ் சந்திரபோசுவும் அவர்களது நண்பர்களும் கூட்டத்திற்கு
வரவில்லை.
நிற்க டெ தீர்மானத்தை பிரேரேபித்த திரு. காந்தியவர்களின்
யோக்கியதையை முதலில் கவனிப்போம்.
அத்தீர்மானத்தில் மூன்று விஷயத்தை முக்கிய விஷயமாய் எடுத்துக்
கொள்ளுவோம். அதாவது,
முதலாவது, பூரண சுயேச்சைத் தீர்மானத்தை பின்பற்றுவதாய்
சம்மதித்தது,
இரண்டாவது, நேரு கமிட்டி அறிக்கையை
ஒப்புக் கொள்ளுவது,
மூன்றாவது, இரண்டு வருஷத்தில் நேரு அறிக்கைப்படி சர்க்கார்
சுயராஜியம் கொடாவிட்டால் ஒத்துழையாமை செய்வது.
301
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
திரு. காந்தி சென்ற வருஷத்திய சென்னை காங்கிரசிற்கு வந்திருந்தும்
சில சிஷ்யர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு பூரண சுயேச்சைத் தீர்மானத்தை
எதிர்க்காமல் தாராளமாய் நிறைவேற்ற விட்டு விட்டு, காங்கிரஸ் முடிந்து
நாலைந்து நாள் பொறுத்து அத்தீர்மானத்தை “விளையாட்டுப் பிள்ளைத்
தனம்” என்று தனது “யங் இந்தியாவில் எழுதி பரிகாசமும் செய்துவிட்டு
இப்போது கொஞ்சமும் பொறுப்பும் கவலையும் இல்லாமல் பூரண சுயேச்சைத்
தீர்மானத்தை தான் பின்பற்ற சம்மதித்திருப்பதாய் சொல்லுவது
நாணயமாகுமா என்று கேட்கின்றோம்.
இரண்டாவது,
ஜாதி வகுப்புச் சச்சரவுகளும் ஜாதி உயர்வு தாழ்வுக் கொடுமைகளும்.
தீர்ப்பதற்கு யோக்கியமான முறைகள் ஒன்றும் இல்லாத நிலையில் புதிய
சீர்திருத்தத்தை கேட்பது பொறுப்புள்ள அரசியல்வாதிக்கோ பொதுநல
வாதிக்கோ யோக்கியமான காரியமாகுமா என்று கேட்கின்றோம்.
எனினும், திரு. காந்தியவர்கள், நேரு திட்டத்தில் கண்ட பரிகாரங்
களே ஜாதிவகுப்பு ஒற்றுமைக்கும் கொடுமைகள் ஒழிவதற்கும் போதுமானது
என்று மனப்பூர்வமாய் தன் மனசாக்ஷி அறிய நம்புகின்றாரா என்று
கேட்கின்றோம்.
மூன்றாவதானது, ஒத்துழையாமைப் பூச்சாண்டி.
அதாவது, 2 வருஷத்திற்குள் சர்க்கார் நேரு திட்டத்தை ஒப்புக்
கொள்ளாவிட்டால் ஒத்துழையாமை செய்வேன் என்பது. இதில் எவ்வளவு
ஏமாற்றுதல்கள் நிறைந்திருக்கின்றன என்பதை வாசகர்கள்தான் உணர
வேண்டும். மறுபடியும் ஒத்துழையாமை செய்வேன் என்று சொல்லும் திரு.
காந்தி முன் ஏன் ஒத்துழையாமையை நிறுத்தினார் என்பதற்கு யாராவது பதில்
சொல்ல முடியுமா? இவரை நம்பி ஒரு கோடி ரூபாயும் கொடுத்து முப்பது
ஆயிரம் பேர் 1, 2, 3,
4 தடவைகள் ஜெயிலுக்கும் போய் அவரவர்கள்
பிழைப்பு, வாழ்வு, பதவி முதலியவைகளைக் கூட விட்டுவிட்டு இவர் பின்
திரிந்தார்களே, அந்தச் சமயத்தில் ஏன் நிறுத்தினார்? இப்போது அதைவிட
நல்ல சமயமா? அல்லது இரண்டு வருஷமாகி விட்டால் தயாராகிவிடுமா?
என்ன எண்ணத்தைக் கொண்டு இந்த தீர்மானத்தை பிரேரேபித்தார்? சற்றும்
பொறுப்பும் கவலையும் இல்லாமல் மற்ற பித்தலாட்டக்காரர்கள் சொல்லுகின்ற
படி ஆடியிருக்கின்றார் என்பதைத் தவிர வேறு என்னசொல்ல முடியும்?
அதிலும் “பலாத்காரமற்ற ஒத்துழையாமை” என்று பேசியிருப்பது
வெறும் கேலிக் கூத்தும் முன்னுக்குப் பின் முரணானதுமாகுமென்றே
சொல்லுவோம். ஏனெனில் முன் ஒத்துழையாமையை நிறுத்தினதற்கு காரணம்
குடி அரசு - 1928 @)
302
செளரி செளரா கொலை என்றே குறிப்பிட்டுவிட்டார். இப்போதும் கல்கத்தா
காங்கிரசில் பேசுவதற்கு இரண்டொரு மணி நேரத்திற்கு முன்பு தமது “யங்
இந்தியா” பத்திரிகையில் “நமது தேசத்தில் பலாத்காரம் என்பது காற்றைப்
போல் எங்கும் நிறைந்து கிடக்கின்றது” என்று எழுதியிருக்கின்றார். அந்த
இங்கிகூட இன்னம் காயவில்லை. அதற்குள் தான் மறுபடியும் பலாத்காரமற்ற
ஒத்துழையாமை செய்யப் போவதாய் மிரட்டுவது கேலிக் கூத்தும் நாணய
மற்றதும் ஆகும் என்று சொல்ல வேண்டியதோடு தாம் (காந்தி ஜி) முன்
சென்னைத் தீர்மானத்தைப் பற்றிச் சொன்னது போல் இத்தீர்மானங்களையும்
விளையாட்டுப்பிள்ளைகள் கூடிச் செய்யும் வெறும் பேச்சுக்குச் சமான
மானவை என்றுகூட சொல்லலாமா வேண்டாமா என்று கேட்கின்றோம். திரு.
காந்தி, சைமன் கமீஷன் பகிஷ்காரத்தில் ஏற்படும் பலாத்காரச் செய்கை
களையும் சமீபத்தில், பஞ்சாப்பில் நடந்த படுகொலைகளையும் தெரிந்து
இப்படிச் சொன்னாரா அல்லது இவ்விரண்டும் அவருக்கு எட்டாமலே
சொன்னாரா? என்பதை யோசித்தால், திரு. காந்தியின் பலாத்காரமற்ற
தன்மைக்கு அர்த்தம் விளங்காமல் போகாது.
திருவாளர்கள் சத்தியமூர்த்திகளும் ஸ்ரீனிவாசய்யங்கர்களும்,
குப்புசாமிகளும், வரதராஜுலுக்களும், நேருக்களும், மாளவியாக்களும்,
ரங்கசாமி அய்யங்கார்களும், ராஜகோபாலாச்சாரிகளும் போன்றவர்கள்
பேசுவதைப் பற்றியோ நடந்து கொள்வதைப் பற்றியோ நாம் இவ்வளவு
முக்கிய ஸ்தானம் கொடுத்து சமாதானம் சொல்லவேண்டுவதில்லை. திரு.
காந்தி போன்றவர்கள், அதாவது எதாவது ஒருவிதத்தில் மக்களின்
செல்வாக்குப் பெற்றவர்கள் இம்மாதிரி -அதாவது தாங்கள் பேசுவதால் என்ன
நேரிடும் என்பதைக் கவனியாமல் “பிடித்தவனுக்கெல்லாம் பெண்டாட்டி”
என்பது போல் யார் என்ன சொன்னாலும் கிளிப்பிள்ளையைப் போல் -
சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிவிடுவதென்றால், அது மக்களுக்கு
எவ்வளவு ஆபத்தை உண்டாக்கி விடுகிறது என்பதை கவனித்தால் நமக்கு
ஆத்திரமாக இருக்கின்றது.
சாத்வீகத்திலாவது, தீண்டாமை ஒழிப்பதிலாவது, ஒடுக்கப்பட்ட -
தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மக்களின் கஷ்டத்தை நிவர்த்திப்
பதிலாவது, திரு. காந்திக்கு 4,5 வருஷமாய் ஒரு கடுகளவு கவலையாவது
இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமாவென்று கேட்கின்றோம்.
தென்னாட்டுக்கு வந்து 3 லக்ஷம் ரூபாய் கொள்ளையடித்து அதை பார்ப்பனர்.
களுக்கு பாதகாணிக்கை வைத்து விட்டுப் போய்விட்டார், அது நம்
பார்ப்பனர்களின் தேர்தல் பிரசாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் கதரின் பேரால்
செலவாகின்றது. அன்றியும் அது ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் புகுந்து
பார்ப்பனரல்லாதார்களுக்கு கெடுதியை செய்து கொண்டு வருகின்றது.
இவற்றையெல்லாம் அவரது நேரில் எல்லோரும் சொன்னார்கள். சற்றும்
கவனிக்காமல் வந்ததை வரப்பற்றுவதிலேயே கவலையாய் இருந்துவிட்டார்.
303
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
தீண்டாமையைப்பற்றி கனவிலும் நினைப்பதில்லை. யாதொரு பிரசாரமும்
செய்தவருமல்ல. சமத்துவத்திற்காவது சம சந்தர்ப்பத்திற்காவது
அப்
பக்கங்களில் தலை வைத்துக்கூட படுத்தவர் அல்ல. எப்படியாவது அவரை:
மகாத்மா என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம், தமது மடத்தில் வயிறு
வளர்ப்பதே அவருக்கு திருப்தி போல் காணப்படுகின்றது.
எனவே, காங்கிரஸ் தீர்மானம் என்பது பித்தலாட்ட தீர்மானமா
யிருப்பது வழக்கமானாலும் திரு. காந்தி அவர்களும் இவற்றில் இவ்வளவு
நேரடியாய் பங்கெடுத்துக் கொள்வதென்பது சற்றும் சகிக்கக் கூடியதல்ல
வென்பதற்காகவே இவ்வளவு எழுதினோம்.எந்தக் காரணத்தைக் கொண்டும்
நமது மக்கள் இனி “ஒத்துழையாமை”, “பூரண சுயேச்சை” என்கின்ற
நாடகங்களில் கலந்து கொள்வது இது சமயம் சிறப்பாக பார்ப்பனரல்லாத
மக்களுக்கு தற்கொலையாகவே முடியும். காலம் சென்ற ஒத்துழையாமையின்'
பயனாய் ஏற்பட்ட நிலைமை இன்னமும் நமது நாட்டு மக்களின் மானத்
தையும் நாணயத்தையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனாலும்
ஒத்துழையாமையின் தலைவர்களும் சிஷ்யர்களும் மாத்திரம் இன்னமும்
மடாதிபதிகளாகவும் மடத்தாண்டிகளாகவும் பெருமையும் பிழைப்பும் பெற்று
வாழ்கின்றார்கள்.
எனவே கடைசியாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு, சிறப்பாக தாழ்த்தப்
பட்ட - ஒடுக்கப்பட்ட, விலக்கப்பட்ட தீண்டப்படாத மக்களுக்கு நாம்
சொல்வது யாதெனில் சைமன் கமீஷனிடம் நமது நிலைமையை ஒளிக்காமல்
யோக்கியமான முறையில் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிட வேண்டி
யதுதான். இந்தியா மந்திரியும் சைமன் கமிஷனும் பார்லிமெண்டும் நமது
நிலைமையை உணர்ந்துவிட்டார்கள் என்பதாக நாம் சந்தேகமற அறிந்த
பிறகு அவர்கள் இதற்குத் தக்க பரிகாரம் செய்யவில்லை என்பது நமக்கு
தீர்மானமாகத் தெரிந்து விட்டால், அதன்பிறகு காங்கிரசும் திரு. காந்தியும்
செய்யும் ஒத்துழையாமை இந்த சர்க்காரை ஆட்டுமா? அல்லது நமது
இயக்கம் செய்யும் ஒத்துழையாமை இந்த சர்க்காரை ஆட்டுமா என்பது சற்று
பொறுமையோடு இருந்து பார்க்க வேண்டிய விஷயமாகும்.
முடிவாக சர்க்காருக்கு நாம் செய்யும் எச்சரிக்கை என்னவென்றால்,
இந்த ஜால வேடிக்கைத் தீர்மானத்தை மதித்தோ அல்லது அந்த மாதிரி ஒரு
பொறுப்பும் கவலையும் நாணயமும் அற்ற சுயநலக்கூட்டத்தை எப்படியாவது
கைக்குள் போட்டுக் கொண்டால் இன்னமும் கொடுமையான முறை வைத்து
நாட்டைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கலாமென்றோ சர்க்கார்.
மனப்பால் குடிப்பார்களானால் அதைப் போன்ற ஒரு முடிவு காலம் அவர்.
களுக்கு வேறு இருக்காது என்றே சொல்லுவோம். காங்கிரஸ், உத்தியோகத்
திற்கும் மற்றவர்களை அழுத்தி வைப்பதற்கும் ஆசைப்பட்டு பயங்காளித்
தனமான தந்திரங்கள் செய்கின்றது. அவர்கள் தோற்றால் அவர்கள்
குடி அரசு - 1928 @)
304
பிழைப்புக்கு பிச்சை எடுக்கும் தொழில் இருக்கின்றது.
ஆனால் நமதியக்கமோ அப்படிக்கில்லாமல் சுயமரியாதையையும்
சமத்துவத்தையும் சமசுதந்திரத்தையும் லக்ஷியமாகக் கொண்டு யோக்கிய
மான முறையில் வெளிப்படையாக வேலை செய்யத் தீர்மானம் செய்து
கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நமதியக்கம் தோற்றால் ஒரு கை பார்த்து
உயிர்விடுவதைவிட வேறு வழியில்லை என்பதை சர்க்காருக்கு நண்பர்
முறையில் தெரிவிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.12.1928
305
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
-
.
.
PP
வேண்மமய விஷமாம்
நமது தலைவர் பனக்கால் அரசர் காலமான பிறகு கக்ஷி நிலையைப்
பற்றிய உண்மைகளை பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரும் உணர்ந்
திருக்க வேண்டியது அவசியமாகும்.
தலைவர் பட்டத்திற்கு யார் வருவது என்பது பற்றிய யோசனை
ஒவ்வொருவர் மனதிலும் ஊசலாடுவது அதிசயமல்ல.
சில பிரமுகர்கள் தாங்கள் தலைவராகவேண்டும் என்று ஆசைப்
படுவதிலும் அதிசயமொன்றுமில்லை. அவரவர்களுக்கு வேண்டிய
நண்பர்களை தலைவராக்க முயற்சிப்பதிலும் அதிசயமொன்றுமில்லை.
ஆனால்
நமக்கு இப்போது அவசரமாய் ஆகவேண்டிய
காரியமென்ன வென்றால், “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் நடக்க
வேண்டும், ஆங்காங்கு இயக்க பிரசாரங்களும் ஸ்தாபனங்களும் ஏற்பாடு
செய்ய வேண்டும் என்பனவே.
தற்காலம் “ஜஸ்டிஸ்” “திராவிடன்” கட்டடத்தின் மீதுள்ள 75000 ரூ.
கடன் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு விதத்தில் முடிவு பெற்றாலொழிய
அடுத்து வரும் தேர்தலில் நாம் நிலை கொள்ள முடியாது என்பது நிச்சயம்.
அது மாத்திரமல்லாமல் நமது ஸ்தாபனமும் செல்வாக்கோடு இருக்க
முடியாமல் போய்விடும் என்று கூடச் சொல்லுவோம். திரு. காந்திக்கும்
காங்கிரசுக்கும் இன்றைய தினம் ஏதாவது செல்வாக்கு இருக்குமானால் அது
அவரவர்களிடம் உள்ள பணச் செல்வாக்கே ஒழிய கொள்கை செல்வாக்
கென்றோ நாணய செல்வாக்கென்றோ அடியோடு சொல்லிவிட முடியாது.
அது போலவே நமது இயக்கமும், கொள்கையின் யோக்கியதையையும்
நாணயத்தின் பெருமையையும் மாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தால் ஒரு
காரியமும் ஆகிவிடாது. ஒற்றுமையும் கட்டுப்பாடும் இருந்தால் நமக்குப்
பணம் கிடைப்பது ஒரு அதிசயமல்ல. சென்ற வருஷம் மாத்திரம் கதரின்
பேரால் 3 லக்ஷம் அழுதோம். காங்கிரசின் பேரால் பல லக்ஷம் தொலைத்
தோம். இன்னமும் சங்கராச்சாரிகளின் கொள்ளையால் ஊருூருக்கு 10, 20
குடி அரசு - 1928 @)
306
ஆயிரங்கள் பாழாகின்றன. மற்றும் சாவு, சடங்கு, உற்சவம், வேண்டுதலை
முதலியவைகளின் பேரால் பல பல லக்ஷம் வீணாகின்றது.
எனவே நமது நாட்டில் பணமும், கொடுக்கும் தாராள தன்மையும்
இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதை எப்படி
உபயோகப்படுத்துவது என்பதற்கான புத்தி மாத்திரம் நம்மவர்களுக்கு
இல்லை என்பதைச் சொல்லி ஆகவேண்டியிருப்பதுடன் அதை யாரும்
கற்பிக்க முயற்சி செய்யவில்லை என்கின்ற குற்றத்தையும் ஒப்புக் கொண்டாக
வேண்டும்.
முதலாவது நமது கக்ஷியில் ஒற்றுமைக்கும் கட்டுப்பாட்டிற்கும்
விரோதமாய் உள்ள அபிப்பிராய பேதங்கள் என்ன என்பதை யாராவது
சொல்ல முடியுமா? தங்கள் தங்கள் உத்தியோகம் பெறுவது, பதவி பெறுவது,
ஆதிக்கம் பெறுவது என்பதினால் ஏற்படும் சொந்த அபிப்பிராய
பேதமில்லாமல் பொது கொள்கைகளில் யாருக்கும் அபிப்பிராய பேதம்
உண்மையில் இல்லையென்றே சொல்லுவோம்.
ஆதலால் இனி அவ்வித அபிப்பிராய பேதத்தை அடியோடு
ஒழித்தாலொழிய கக்ஷி நிலைப்பதோ அல்லது அது பொது ஜனங்களுக்கு
உபயோகமாகும் என்பதோ கவலைப்படத்தக்கதாகிவிடும். நாம் பார்ப்பன
ரல்லாதார் கட்சி என்பதை அரசியலோடு பொருத்தாமல் இருப்பது குழப்பத்
திற்கிடமில்லாததாக இருக்கும் என்று அபிப்பிராயப்படுகின்றோம். ஆனால்
உத்தியோகங்கள் பதவிகள் எல்லாம் நமது மக்களின் சுயமரியாதையையும்
சமத்துவத்தையும் சம சுதந்தரத்தையும் உத்தேசித்து கூடுமானவரைக்
கைப்பற்றத்தக்க திட்டங்களையும் வகுத்துக் கொண்டு அதற்கு சரியான
முக்கிய ஸ்தானம் கொடுத்துவிடவேண்டும். ஏனெனில் அரசியல் என்பது
அர்த்தமற்றதும் பித்தலாட்டமானதும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.
வெள்ளைக்காரர்களை நமது நாட்டை விட்டு ஓட்டுவதாயிருந்தால்
அவர்கள் போய் விட்ட பிறகு எல்லாத் தன்மைகளும் மக்கள் யாவருக்கும்
பொதுவானதாகயிருக்க வேண்டும். அப்படிக்கில்லாவிட்டால் வெள்ளை
காரர்கள் போன பிறகு இன்னது செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதோ
அல்லது வேறு ஒரு கொள்ளைக்காரனோ கொடுமைக்காரனோ சள்ளைக்
காரனோ ஆளுவதாயிருந்தால் வெள்ளைக்காரனை நிறுத்தி வைப்பதே
மேலானதாகும்.
அன்றியும் வெள்ளைக்காரனிடம் உள்ள உத்தியோகங்களைப்
பற்றுவதானாலும், அதுவும் அது போலவே எல்லோரும் சமத்துவமுடனும்
சம சந்தர்ப்பத்துடனும் அனுபவிக்க செய்வதானால் மாத்திரம் தான் அதில்
நாம் சேர்ந்துழைக்கலாம். அதற்கு மக்களையும் தயார் செய்யலாம்.
307
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
அப்படிக்கில்லாமல் வெள்ளைக்காரனிடமிருந்து பிடுங்கி ஒரு வகுப்பார்.
மாத்திரம் அனுபவிப்பதாயிருக்குமானால் அதைவிட அவ்வுத்தியோகம்
வெள்ளைக்காரனிடத்திலேயே இருந்து விடுவதால் ஒன்றும் மூழ்கிப் போய்
விடாது. ஆதலால் இது சமயம் நமது லட்சியம், சுயமரியாதை, சமூக
சமத்துவம், சம சுதந்தரம் என்பவைகளையே முக்கியமாய்க் கொண்டு
அதற்காகவே ஒவ்வொரு திட்டமும் வகுக்க வேண்டும் என்பதேயாகும்.
அருவ்ணால் வபாருன்
ஆதலால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் அரசியல் என்பதைக்
கொண்டு வந்து புகுத்தாமல் இருக்க வேண்டிக் கொள்ளுகின்றோம். ஏன்
அகசுபம்
-
தீமை
இதை எழுதுகின்றோம் என்றால் சிலருக்கு நமது இயக்கத்தில் சேருவதற்கு
அதிதிகள்
-
விருந்தினர்கள்
“மற்றக் கொள்கைகள்” ஒப்புக்கொள்ள முடிவதில்லையாம். அதை விளக்க
அநர்த்தம்
-
பேரழிவு
வும் நமது இயக்க வாலிபர்கள் அரசியல்காரர்கள் என்பவர்களால் ஏமாறாம
ப்பம்
-
சவரக்கருவிகள் வைக்கும் பெட்டி,
லிருக்கவுமே இதை எழுதுகின்றோம்.
வெற்றிலைப்பாக்குப் பெட்டி
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.12.1928
ஆக்ஞை
-
கட்டளை ஆணை
உபதானம்.
-
பிச்சை
எடினமாக
-
கடினமாக
சள்ளைக்காரன்
-
தொல்லை செய்பவன்
சாகவாசம்
-
நட்பு, தோழமை
சேதித்து
-
வெட்டி அறுத்து
நிஷ்காரணமாய்
-
காரணமில்லாமல்
பரத்துவம்
-
கடவுள் தன்மை
பரிவாரம்
-
சுற்றி இருப்போர், உடன் இருப்போர்
பர்த்தி
-
இணை, ஒப்பு.நிரப்பல்
மித்தை
-
பொய்
யாதாஸ்து
-
அறிக்கை, குறிப்பு
விக்கினம்
-
இடையூறு, தீது
வியாகரணம்.
-
இலக்கணம்
குடி அரசு - 1928 (2)
308
309
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
குடி அரசு - 1928 (2)
310
211
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - T
குடி அரசு - 1928 (2)
312