Kudi Arasu — 1928, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1928-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 6
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1928-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 320
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
பெண்வி௫கலைச் சிந்தனைகள் முகிழ்த்தன
பெண் விடுதலைக்கான பெரியாரின் புரட்சிகர சிந்தனைகள் முகிழத் தொடங்கிய காலகட்டம் கற்பு குறித்த தனது ஆழமான கருத்துக்களை இரண்டு கட்டுரைகளில் பெரியார் முன்வைக்கிறார். கர்ப்பத்தடையை ஆதரித்து பெரியார் பேசத்தொடங்கியதும் இப்போதுதான். செங்கல்பட்டு மாவட்டக்கழக ஆரம்ப ஆசிரியர் மாநாட்டில் அவர் முன்வைத்த கல்விச் சிந்தனைகளும், மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து சுயராஜ்யா ஏட்டில் எழுதிய ராஜகோபாலாச்சாரிக்கு தந்த பதிலடிகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
பெரியார் பேசிய கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் “சாமியைக் கல் என்று கூறுகிறீர்களா” என்று வினா தொடுக்க, வாருங்கள் காட்டுகிறேன் என்று பெரியார் புறப்பட்டார். “ கல் தானென்றாலும் அதற்குள் மந்திர உச்சாடனம். செய்யப்பட்டுள்ளது” என்று பார்ப்பனர் கூற, அந்த மந்திரத்தை உயிருள்ள தாழ்த்தப்பட்டவர்களிடம் ஏற்றி அவர்களை உயர்த்துங்களேன் என்று பெரியார் எதிர்கேள்வி போட்டு வாயடைக்கச் செய்தார். பஞ்சமருக்கு டிக்கட் தரப்படமாட்டாது என்று நாடகத்துக்கான துண்டறிக்கையில் விளம்பரப் படுத்தியதை எதிர்த்து பெரியார் கண்டனக்குரல் எழுப்பினார். பார்ப்பனர். களின் யாகம் பற்றி நெஞ்சுபதறும் படத்துடன் செய்திகளை வெளியிட்டது. கும்பகோணத்தில் யாகம் செய்த பார்ப்பனர்கள் ஆடுகளின் தோலை உயிரு டன் உறித்து துடிக்கும் போதே உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து நெருப்பில் போட்டார்கள். பார்ப்பனர்களின் வன்மத்தை தோலுரித்த குடி அரசு, பெயருக்கு முன்னால், பயன்படுத்தப்பட்ட ஸ்ரீ வடமொழிக் குறியீட்டை ஒழித்து * திரு” வை பயன்படுத்தத் தொடங்கியது. நாகையில் தென்னிந்திய ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட பெரியார் சிறைபடுத்தப்பட்டார். சுயமரியாதைக் கருத்துகளை தீவிரமாகப் பரப்பிட பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்றை அமைத்திடும் எண்ண ஓட்டத்தையும் பெரியார் முன்மொழிகிறார். உரத்த சிந்தனைகளின் உள்ளடக்கமாக இத் தொகுதி மிளிருவதை வாசகர்கள் உணரலாம்.
- பதிப்பாளர்
பொருளடக்கம்
காங்கிரஸ் என்னும் ஏமாற்றுந் திருவிழாவின் முடிவு
© P NP O s p உ
மற்ற மகாநாடுகள்
கற்பு
மூடநம்பிக்கை
காங்கிரசும் ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டும்
புதுவருஷ விண்ணப்பம்
காங்கிரசுக்கு ஸ்ரீமான் காந்தியின் யோக்கியதா பத்திரம்
இனியும் சந்தேகமா?
விளங்கவில்லை.
பதவிப் போட்டி
புது வருஷத்தின் பார்ப்பன ஆதிக்கநிலை: நீல்சிலையைப் பற்றி காங்கிரஸ் வேடிக்கை
இதுவா ராஜிக்கு சமயம்
காங்கிரஸ் தீர்மானங்களும் ஸ்ரீகாந்தியும்
சீர்திருத்தப் புரட்டு தொழிலாளர் இயக்கம்
கமீஷன் பகிஷ்கார நாடகம்
ஆதிதிராவிட மகாநாடு நெருக்கடியான சமயம்
எதிர்பார்த்தபடியே
காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
அரசியல் நாணயம்
கமிஷன் பகிஷ்காரம்
குடி அரசு - 1928 ()
கற்பு 93
இது கமிஷனுக்கு தெரிய வேண்டாமா? 100
சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம் 101
மந்திரிகளின் நிலை: 102
தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா 106
சங்கீதமும் பார்ப்பனீபமும். 110
சூழ்ச்சியும் ஏமாற்றமும் 111
அருப்புக்கோட்டையில் பார்ப்பனத் தொல்லை: 112
இஸ்லாமிய ஊழியன் 113
இரங்கூன் தனவணிக வாலிபர் இரண்டாவது மகாநாடு 114
நம்நாட்டுக்கு வேண்டியது என்ன? 116
இந்திய சட்டசபை முடிவு 123
சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம். 128
பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும் 134
தேவஸ்தான நிர்வாகத்திலும் பார்ப்பனீயம் 136
பொய்ப் பெருமை 137
இன்னும் அடி 138
சைமனுக்கு பார்ப்பனர்களின் விருந்து 139
சைமனுக்காக சட்டசபை பகிஷ்காரம். 140
அதிசய விருந்து 141
பார்ப்பன அயோக்கியத்தனம் 142
“ சர்க்கார் சாதித்ததென்ன” 149
வேடிக்கை சம்பாஷணை 150
பார்ப்பன தேசியம் 152
தலைவர் உத்தமபாளையம் முதலியார் மறைந்தார். 155
ரிவோல்ட் 157
உஷார்! உஷார்! மண்டையிலடியுங்கள்! 158
யார் வார்த்தைகள் கடினம்? 159
பெரிய அக்கிரமம் 161
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது
162
ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த யோக்கியதை
163
ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் “ஞானோதயம்”
169
“ஆனால் இந்துமதத்தை ஒழித்துவிடுவதே மேல்”
171
சர். பாத்ரோ ஆச்சாரியார்
173
“ தமிழ்நாடு” பத்திரிகையின் புரட்டு பாலிய விவாகம்
174
175
உத்தியோகம் பெறுவது தேசத்துரோகமல்ல அதுவே சுயராஜ்யம்
176
ஏற்றுக்கொண்டோம்
181
தர்மத்தின் நிலை
186
துருக்கியில் மாறுதல்
187
பள்ளிக் கூடத்தில் புராண பாடம்
188
அலசந்தாபுரத்தில் சொற்பொழிவு
தென் இந்திய பெளத்தர் மூன்றாவது மகாநாடு
பார்ப்பனீய போக்கிரித்தனம்
இந்துமத பிரசாரம்
அரசியல் புரட்டுக்குச் சாவுமணி
இந்துமதமும் யாகங்களும்
சுயமரியாதைச் சங்கங்களுக்கு ஆதரவு
ரிவோல்ட்
அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரின் வரவேற்பு
கூடா ஒழுக்கம்
ஜஸ்டிஸ் கக்ஷியும் ஸ்ரீவரதராஜுலுவும்
நமது பத்திரிகையின் நான்காவதாண்டு
மாயவரமும் ஸ்ரீவரதராஜுலுவின் “வீரமும்”
*தேசீயமும்' சுயமரியாதைப் பிரசாரமும்
திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியாரும் திரு.ஸ்ரீனிவாசய்யங்காரும்
யாகம்
குடி அரசு - 1928 ()
நமதுகருத்து
81.
249
ஸ்ரீவரதராஜுலுவின் மற்றொரு சபதம்
82.
252
ஸ்தல ஸ்தாபன சட்டத் திருத்தம்
253
ஏன் இவ்வளவு ஆத்திரம்?
261
சுயமரியாதைச் சங்கங்கள்
268
எது தொலைய வேண்டும்
272
செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு
276
செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு
280
சுயமரியாதைத் திருமணங்கள் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்.
285
289
மறுபடியும் பகிஷ்காரப் புரட்டு அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை:
293
296
“லோகோபகாரி'யின் மயக்கம்
298
“ நவசக்தி” முதலியாரின் நாணயம்
300
பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை:
305
திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்
308
சைமன் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு
314
திருச்சியில் 144
315
அருஞ்சொல் பொருள்.
316
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
குடி அரசு - 1928 (
மதிடிஎன் 041 o எ IS0
யாத ௯3 ம்க் ம் அலத க 11
g இயான் ல் அன Qg ஊல்ழரிக் சப இமை எப வத L ள் e il க்களும் தமிழி [ கைக ப திச. என்ன (A
க 11
அகலில் ஊட் Sy வேனி வில் கண்டல், பெண்ட் பேரம் மரம்.
க வர்கா Bosk பவ வியில் படாது ol Pl 3L இன்னன பெய்க வசி,
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
குடி அரசு - 1928 () 10
காங்கிரஸ் எண்ணும் ஏமாற்றுந்
திருவிழாவின் முழுவ
சென்ற வாரம் சென்னையில் ஏமாற்றுந் திருவிழா என்பதாகப் பெயரிட்டு, தலையங்க மெழுதியிருந்தோம். இவ்வாரம் அத்திருவிழா முடிந்து விட்டதால் அதைப்பற்றி சிலவார்த்தைகள் கூறுவோம்.
நாம் சென்ற வாரம் கூறியபடியே காங்கிரஸ் என்பது பாமர மக்களை படித்த கூட்டத்தார் ஏமாற்றுவதற்கென்று ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதிலும் அப்படித்த கூட்டத்தார் என்பதில் முக்கியமானவர்கள் நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களே என்றும் அவர்கள் இஷ்டப்படி யெல்லாம் ஏறக்குறைய காங்கிரஸ் ஆரம்பமான காலம் முதற் கொண்டு ஆட்டப்பட்டு வந்திருக்கின்றது என்றும், காங்கிரஸ் என்பதாக ஒன்று நமது
நாட்டில் ஏற்பட்ட பிறகே, மக்களின் ஒற்றுமை குலையவும், ஒழுக்கங் கெடவும், ஏழை மக்களுக்குப் பலவழிகளிலும் கஷ்டம் ஏற்படவுமான காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற தென்றும் எழுதி வந்திருக் கின்றோம்.
நிற்க, இவ்வருஷம் சென்னையில் நடந்த காங்கிரசானது, காங்கிர சையும், பார்ப்பனர்களையும் பற்றி நாம் இவ்வளவு காலம் எழுதி வந்ததை
யும், பேசி வந்தததையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் மெய்ப்பித்து விட்டது என்றே சொல்லுவோம்.
இக்காங்கிரசில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள் முக்கியமானது என்று சொல்லத்தக்கது என்பவைகள் நான்கே என்று சொல்லலாம்.அதாவது ஒன்று, ராயல் கமிஷன் பகிஷ்காரம். இரண்டு நமது நாடு வெள்ளைக்காரர்கள் சம்மந்தமில்லாமல் பூரண சுதந்திரம் அடைய வேண்டும் என்பது, மூன்றா வது பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்பது. நான்காவது இந்து முஸ்லீம் ஒற்றுமை ஆகியவைகளாம். இவற்றில் முதல் இரண்டு தீர்மானங்களின் புரட்டுக்களைப் பற்றியும், திராவிடன் பத்திரிகையில் வரிசையாக காணப்பட்ட இரண்டு தலையங்கங்களையும் காங்கிரஸ் தீர்மானங்கள் என்னும் தலைப்பில் இதில் பிரசுரித்திருக்கின்றோம். ஆதலால்
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நேயர்கள் தயவு செய்து அவற்றைக் கவனமாய் படித்துப் பார்க்கும் படி வேண்டுகின்றோம். மற்ற இரண்டு தீர்மானங்களைப் பற்றிய புரட்டுகளை அடுத்த வாரம் வெளியிடுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள அநேகப் பத்திரிகைகளில் “திராவிடன்”, “குடி அரசு” என்கின்ற இரண்டு பத்திரிகைகள் நீங்கலாக, அநேகமாய் மற்ற பத்திரிகைகள் எல்லாம் ஒரே மாதிரியாகக் காங்கிரசைப் புகழ்ந்தும், தீர்மா னங்களைப் பாராட்டியும் எழுதி வந்திருக்கின்னனவே அல்லாமல், ஒன்றா வது உண்மையை வெளியிடவில்லை என்பதைத் தைரியமாய்ச் சொல்லு வோம். ஏனிப்படிச் சொல்லுகிறோமென்றால் அநேக பத்திரிகைகள் உண்மையை அறிந்திருந்தும், வேண்டுமென்றே மறைத்து வைத்து தங்கள் தங்கள் சுய நலத்தையே பிரதானமாகக் கொண்டு பார்ப்பனர்களைப் பின் பற்றுகின்றன. என்கிற முடிவினாலேயே எழுதுகின்றோம்.
தவிர, எவ்வளவு தான் தமிழ்நாட்டுப் பத்திராதிபர்கள் உண்மை களை மறைத்து மறைத்துப் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் எழுதி வந்தி
ருந்தாலும், இவ்வருஷம் நடந்த காங்கிரசின் மூலமாகத் தமிழ் நாட்டின் எல்லா பக்கங்களிலிருந்தும் சென்னைக்கு வந்திருந்த பிரதிநிதிகளில் அனேகர் உண்மையை உணர்ந்து கொண்டார்கள் என்றே சொல்லுவோம்.
எல்லா பத்திரிகைகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு விட் டோம் என்கின்ற தைரியத்தாலோ, அல்லது நமக்கு விரோதமாய் எந்தப் பத்திரிக்கைகாரனும் எழுதிவிட்டுப் பிழைத்திருக்க முடியாது என்கின்ற ஆணவத் தினாலோ தலைகால் தெரியாமல் ஆடினதினால் உண்மை வெளி யாக நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.
காங்கிரசில் நிறைவேற்றப்பட்டதாய் சொல்லப்பட்ட மேற்படி தீர்மா னங்களில் ஒன்றாவது யோக்கியமாய் நிறைவேற்றப்படவில்லை என்றும், எல்லாம் தீர்மானமாக்கப்பட்டதாகக் குறித்துக் கொள்ளப்பட்ட தென்றும், ஆகேஷபணைகளையும், ஆக்ஷ்பிப்பவர்களையும் சூழ்ச்சியினாலும்,
தந்திரத்தினாலும், ஒழுக்கமற்ற நடவடிக்கையினாலும் நிராகரித்தும், மறைத்து விட்டார்கள் என்றும் தெரிந்து விட்டது.
இவ்வருஷத்திய காங்கிரஸ் டெலிகேட்டுகள் எல்லாம் கணக்குப் பார்த்தால் 100-க்கு 76 பேர்கள் சென்னை மாகாணத்துக்காரர்களேயாவார்கள்.
பஞ்சாப்புக்கும், பர்மாவுக்கும் மற்ற மாகாணங்களுக்குமாக சென்னைப் பார்ப்பனர்களே நியமனம் செய்யப்பட்டார்கள். எந்தெந்த மாகாணங்க.
ளிலிருந்து பிரதிநிதிகள் வரவில்லையோ அவற்றிற்கெல்லாம் அநேகமாய் சென்னைக்காரர்களே பர்த்தி செய்யப்பட்டார்கள். அவ்வளவு தூரம் பர்த்தி செய்ய எப்படி சவுகரியம் கிடைத்ததென்றால் பிரதிநிதிக் கட்டணம் ஒரே ரூபா
குடி அரசு - 1928 () 12
யாகப் போய்விட்டதாலும் ஒருவர் ஒரு ரூபாய் கொடுத்து பிரதி நிதியாகப் பதிவு செய்து கொண்டு டிக்கட் பெற்றுவிட்டால் அதை 10 அல்லது
15 ரூபாய்க்கு விற்க செளகரியமிருந்ததாலும் ஏறக்குறைய எல்லா ஸ்தாப னங்களையும் பூர்த்தி செய்ய செளகரியமேற்பட்டது. இதனால் காங்கிரஸ் பிரதிநிதிகள் என்பவர்கள் ஒரு ரூபாய்க்கு வாங்கின டிக்கட்டை 10 ரூபாய்க்கு விற்கலாம் என்கின்ற யோகசாலிகளாகவே இருக்கவும் இந்த டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனவர்கள் பேசாமல் வேடிக்கை பார்த்து
விட்டும் வந்ததல்லாமல் தீர்மானங்களைப்பற்றி யாதொரு காரியமும் செய்ய யோக்கியதை அற்றவர்களாகவுமே போய்விட்டார்கள்.
தவிர, காங்கிரசில் தீர்மானிக்க என்று அநேகர் அநேக தீர்மானங்கள் அனுப்பியிருந்தார்கள். அத்தீர்மானங்களை வெளியில் கொண்டுவராமல் இருப்பதற்காக எவ்வளவு தூரம் அக்கிரமங்கள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து தங்களுக்கு வேண்டாத தீர்மானங்களையெல்லாம் அடியோடு மறைத்து விட்டார்கள்.
ஸ்ரீமான் RK. ஷண்முகம் செட்டியார் அவர்கள் ஒரு தீர்மானம் அனுப்பியிருந்தார். அது காங்கிரசின் லக்ஷியத்தில் மக்கள் சமத்துவமும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிற தத்துவம் கொண்டது. அதை எத்தனையோ பேர் எத்தனையோ கஷ்டப்பட்டுப் பார்த்தும் வெளிக்குக் கொண்டுவரவே முடியவே இல்லை. தீர்மானம் அனுப்பிய ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் இந்திய சட்டசபை மெம்பர். காங்கிரஸ் ககஷிக்கு கொறடா என்று சொல்லும் முக்கிய பதவி பெற்றவர். அவர் வடநாட்டுத் தலைவர்களையெல்லாம் நன்றாய் அறிந்தவர். இவ்வளவும் அல்லாமல்
பார்ப்பனர் அல்லாதார்களுக்கு விரோதமாக பார்ப்பனர்களுடன் கூடிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து, பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் ஓட்டு வாங்கிக் கொடுத்தவர் தமிழ் நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்கு காரியதரிசியாய்
இருந்தவர்.
இவ்வளவு யோக்கியதை உள்ளவர் எவ்வளவோ முக்கியமான தீர் மானம் அனுப்பி அது வெளியில் வரவில்லையானால் வேறு யாரால் என்ன காரியம் நடத்த முடியும்? ஸ்ரீ ஷண்முகம் செட்டியார் இத்தீர்மானத்தை வெளிக்குக் கொண்டுவர டாக்டர் அன்சாரியிடமும் ஸ்ரீமான் கோஸ்வாமி யிடமும் மற்றும் பல தலைவர்களிடமும் சிபார்சு பிடித்தும் பார்த்தார். மற்றும் பலர் சிபார்சு செய்தும் பார்த்தார்கள். ஒரு பலனும் ஏற்படாமல் நரி தின்ற கோழி கூவ முடியுமா என்பது போல் மறைந்து விட்டது.
மற்ற தீர்மானங்கள் ஒழுங்கு முறைகளைக் கூட கவனியாமல் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. எனவே இந்த காங்கிரசு யாருடைய காங்கிரசு என்பதில் இனியும் அறிவாளிகளுக்கு சந்தேகமிருக்க நியாயமிருக்காது.
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தவிர நிர்மாண திட்டங்களைப் பற்றியாவது மற்றும் வேறு அவசிய மான காரியங்களைப் பற்றியாவது ஒரு வார்த்தைகூடப் பந்தலில் நிகழவே நேரமில்லை!
உபசரணைத் தலைவர் உபன்யாசத்திலும் வகுப்பு வேற்றுமை, பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சனை என்பவைகளைப் பற்றி பேசினவர்கள் அதை ஒழிக்கும் விஷயத்தில் கடுகளவு முயற்சியும் எடுத்துக் கொள்ளவேயில்லை. காங்கிரஸ் என்பதை வருணாசிரம மகாநாடு என்பது போலவே நினைத்து எல்லா இடங்களிலும் உள்ள காங்கிரஸ் ஸ்தாபனங் களையும் அக்கிரமமான வழிகளில் தங்கள் அடிமையாக்கி எல்லா ஊர்க
ளிலும் உள்ள பார்ப்பனர்களையே பிரதிநிதிகளாக்கி அவர்களையே கொட்ட கைக்குள் நிரப்பி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டார்கள் என்பதை மறைக்க முடியாது.
பார்ப்பனரல்லாதார்களில் காங்கிரசுக்குப் போன முக்கியஸ்தர்கள் யார் என்றோ, அல்லது அங்கு யாருக்கு செல்வாக்கு இருந்தது என்றோ பார்ப்போமானால் ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டி
யார், வரதராஜுலு நாயுடு, குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை முதலிய வெகு சிலரே என்றே சொல்லவேண்டும். அதுவும் காங்கிரசுக்கு வேண்டிய கூட்டம் வந்துவிட்டது என்கின்ற எண்ணம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டவுடன் ஸ்ரீமான்கள் வரதராஜுலுவையும், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை போன்றவர்களையும் கொஞ்சம் கூட லக்ஷியம் செய்யவே இல்லை. அவர்கள் பந்தலுக்கு வெளியில் கூட்டம் போட்டு இந்த பார்ப்பனத் தலைவர்களை மானங்கெடப் பேசிக் கொண்டே இருந்தார்கள். வட நாட்டிலிருந்து வந்தவர்களுக்குத் தமிழ் தெரியாது என்கின்ற தைரியத்
தால் இதைப்பற்றி பார்ப்பனர்கள் ஒரு சிறிதுகூட கவலை செலுத்தவே இல்லை.
ஆகவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமாக எவ்வளவு தூரம் வேலை செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் வேலை செய்யவே போகின் றார்கள். அதற்கு அனுகூலமாக இக்காங்கிரசின் பலனாய் பதினாயிரக் கணக்கான ரூபாய் மீதியாகும் என்பதாகச் சொல்லிக்கொள்ளப் படுகின்றது.
இந்தப் பணங்களை வழக்கம்போல் பல காலிகளுக்குக் கொடுத்து எவ்வளவு தூரம் நம்மீது அவர்களை உசுப்படுத்திவிட முடியுமோ அவ்வளவு தூரம் உசுப்படுத்திவிட்டு பெருத்த ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்பது மாத்திரம் உறுதி. அதற்குச் சாக்காக சொல்லிக் கொள்ள ராயல் கமிஷன் பஹிஷ்காரப் பிரசாரம் என்பதாக ஒன்றைத் தீர்மானித்துக் கொண்டாய் விட்டது.
குடி அரசு - 1928 () 14
இதையெல்லாம் விட பார்ப்பனர்களுக்கு மற்றொரு சவுகரியமும் என்னவென்றால் பார்ப்பனர்களின் கால் பெருவிரலடியில் கிடக்கின்றது என்று சொல்லத்தக்கதான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அதன் நிர்வாகக் கமிட்டியுமே ஆகும்.
நிர்வாகக் கமிட்டியைப்பற்றி நாம் சொல்லவே வேண்டியதில்லை. உதைத்த காலுக்கு முத்தம் கொடுக்கும் பெருந்தன்மை வாய்ந்த ஸ்ரீமான்கள் கந்தசாமி செட்டியார், ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு போன்ற மணிகள் பார்ப்பனர்கள் இஷ்டம் போல் நடக்க வேண்டுமென்கின்ற அவசியத்தோடு பார்ப்பனரல்லாதார் கட்சியை வைவதன் மூலமாகவே பெருமை பெற வேண்டும், வாழ வேண்டும் என்கின்ற தத்துவத்தை அடிப்படையாய் கொண்டவர்கள். அது மாத்திரமல்லாமல் தாங்கள் ஒதுங்குவதற்கு இதைத் தவிர வேறு இடமில்லை என்றும் முடிவு செய்துகொண்டும் இருக்கின்றவர். கள்.ஆகவே காங்கிரசும் காங்கிரசில் மிஞ்சிய பணமும் காங்கிரசில் சேர்ந்த கனவான்களும் பார்ப்பனரல்லாதார்களின் ககஷிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் சுயமரியாதைக்கும் எமன்களாகத் தோன்றியிருக்கின்றது என்று சொல்லி இதை முடிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று சொல்லு
வோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.011928
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மற்ற மகாநா௫கன்
ஆசாரத் திருத்த மகாநாடு
இதற்கு ஸ்ரீமான் கே. நடராஜன் அக்கிராசனாதிபதி - இவர் வாயால் வெகு வேகமாகப் பேசிவிட்டு காரியத்தில் ஒன்றும் செய்யக் கூடாது என்பதையே கருத்தில் வைத்துத் தலைமை உபன்யாசம் செய்தார். இம்மகா நாட்டுக்கு காரியதரிசி ஸ்ரீ கந்தசாமி செட்டியார். இவர் ஜஸ்டிஸ் கட்சியையும் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆசாரத் திருத்த மாநாட்டுக்குப் பிரதிநிதிகளாக வரக்கூடாது என்றும், மீறி வந்தால் அவர். களுக்குப் பிரதிநிதிச் சீட்டு கொடுக்கமுடியாது என்றும் காரிய தரிசி ஹோதா
வில் எழுதிவிட்டார். அக்கடிதம் சமீபத்தில் பிரசுரமாகும்.
மகாநாட்டுக்குச் சென்ற ஸ்ரீமான் ஆரியா அவர்களை பார்ப்பனர்கள். அவமானப்படுத்தினார்கள் - இதை கண்டிக்க அக்கிராசனாதிபதிக்கு சக்தியோ செளகரியமோ சம்மதமோ இல்லாமல் போனதோடு தந்திரமாக சமா தானம் சொல்ல முன்வந்தார்.
சமஸ்தானப் பிரஜைகள் மகாநாடு
இதற்கு ஸ்ரீ. சீனிவாசய்யங்கார் தலைவர். ஸ்ரீமான். சத்தியமூர்த்தி உபசரணைத் தலைவர். இவர்கள் தீர்மானம் எழுதி ஓட்டு எண்ணாமலே நிறைவேறி விட்டதாக தீர்மானம் செய்தவர்கள் - ஒரு மாதத்திற்குமுன் ஒரு மகாநாடு கூடி இருக்க இப்போது மேற்படி இரண்டு பேர் சேர்ந்து மகாநா டாக்கித் தீர்மானம் செய்ததாக பேர் செய்துவிட்டார்கள் - இதனால், சுதேச சமஸ்தானங்களிலும் பணம் கொள்ளை அடிக்கலாம், தங்கள் இனத்தாருக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுக்கலாம் என்பதுதான் மகாநாட்டின் முக்கிய நோக்கம் என்று சொல்ல வேண்டும்.
பத்திராதிபர்கள் மகாநாடு
இது ஸ்ரீமான் வரதராஜுலு பத்திரிகை விற்க வாடகைக்கு வாங்கிய ஒருகை அகல இடத்தில் திடீரென்று கூட்டப்பட்டது. இதில் என்ன நடந்தது,
குடி அரசு - 1928 () 16
எத்தனை பேருக்கு அங்கு இடமிருந்தது, யார் யார் வந்தார்கள் என்பவை களைப் பற்றி பேசாமல் இருப்பதே எல்லோருக்கும் நன்மையாகும், இல்லா விட்டால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சீனிவாச அய்யங்கார் மகாநாடுகளுக்கு யோக்கியதை வந்துவிடும்.
இதுபோல இன்னும் எத்தனையோ மகாநாடுகள் ஒவ்வொன்றும் கேட்கக் கேட்க அற்புதமாகத்தான் இருக்கும். இவர்களையெல்லாம் குற்றம் சொல்ல நாம் இவைகளை எழுத முன்வரவில்லை; நமது நிலையை விளக் கவே எழுதினோம்.
ஜஸ்டிஸ் கக்ஷி
வடநாட்டில் இருந்து வந்த முக்கிய தலைவர்கள் என்போர்கள் எல்லோரும் க௯ஷித் தலைவர் பனகால் ராஜா அவர்களைப் பார்த்து பேசினார்.
கள். பேசினதின் முக்கிய தத்துவம் என்னமாய் இருக்கலாம் என்றால், பஹிஷ்கார வியாபாரத்தில் நீங்களும் ஒரு கூட்டாகச் சேர்ந்து கொள்ளுங்கள். வருகிற லாபத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கின்றோம் என்றுதான் சொல்லி இருப்பார்கள். இதைவிட வேறு பேசத்தகுந்த காரியம் எதுவுமிருப் பதாக நாம் நினைக்கவில்லை. இதை நம்பி பனகால் ராஜாவும் காங்கிரசுக்கு போய் இருந்தார்; கொட்டகையில் இருந்த ஜனங்கள் இவரைப் பார்த்து செய்த ஆராவாரம் அந்த கொட்டகையில் ஸ்ரீ காந்தி முதல் யாருக்கும் செய் யவில்லை என்று அநேகர் சொன்னார்கள். இதைப் பார்த்த ராஜா சாயபுக்கு காங்கிரசில் சேர்ந்தால் தேவலாம் என்று தோன்றுவதில் அதிசயமில்லை.
காங்கிரஸ் வரவேற்புத் தலைவர்
வரவேற்புத் தலைவரை, வடநாட்டு தலைவர்களில் யாருக்குமே யாரும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லையாம். இதில் ஒன்றும் அதிசய மிருப்பதாக நினைக்க இடமில்லை.
காங்கிரஸ் சாப்பாடு
வேளை ஒன்றுக்கு எட்டணா, பத்து அணா என்பதாக வாங்கிக் கொண்டு நாலணா பெறக் கூடிய சாப்பாடு கூடப் போடவில்லை என்று எல் லோரும் புகார் சொன்னார்கள்.
பத்திராதிபர்களுக்கு செளகரியம்
“இந்து,” “சுதேசமித்திரன்” இரண்டு போக மற்றவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையென்றும் அவர்களுக்கு போதிய செளகரியம் செய்யவில்லை என்றுமே புகார்.
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தீர்மானங்களைப் பற்றி பேசியவர்கள்
பிரிட்டிஷ் சாமான்களை பஹீஷ்கரிக்க வேண்டும் என்கின்ற தீர்மானத் தைப்பற்றி பேசியவர்களில் முக்கியமானவர் ஒரு பத்திரிகைக்கு பிரிட்டிஷ் சாமான்களுக்கு விளம்பரம் சம்பாதித்துக் கொடுக்கும் கனவானாம்
- ஆகவே தீர்மானங்களுக்கு எவ்வளவு தூரம் எதிரிகள் மதிப்பு கொடுப்பார்கள் என்பது இதிலிருந்தே விளங்கும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.01.1928
குடி அரசு - 1928 () 18
கற்பு
- சித்திரபுத்திரன்
கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை
எழுதுகின்றேன்.
கற்பு என்கின்ற வார்த்தையை பகுபதமாக்கி பார்ப்போமானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது படி - படிப்பு என்பது போல் கல் -
கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்படுகிறது. அன்றியும் “கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்கின்ற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை. அதாவது நாணயம், சத்தியம் என்கின்ற கருத்து கொண்டதாக இருக்கின்றது.
அதை பகாப்பதமாக வைத்துப் பார்த்தால் “மகளிர் நிறை” என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்கின்ற பெண்களையே குறிக்கும் பதம் எப்படி சம்மந்தப்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்கு பொருள் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற வார்த்தைகள் காணப்படுகின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கா விட்டாலும் அழிவில்லாதது, உறுதி உடையது என்கின்ற பொருள் கிடைக்கின்றது.
அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்கு கிரமமான கருத்துப் பார்க்கும்போது இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும் கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறபடி அதாவது சேஸ்டிடி
(Chastity) என்கின்ற வார்த்தைப்படி பார்த்தால் வர்ஜினிட்டி (Verginity) என்ற பொருள் என்பதும் அதை அந்த உணர்ச்சிப்படியும் பார்த்தால் இது ஆணுக்கென்றோ பெண்ணுக்கு என்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே, எவ்வித ஆண் பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டதல்ல என்பதும் அதுவும் ஆணோ
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்பு அல்ல என்கின்ற கருத்து கொள்ளக் கூடியதாகின்றது. ஆனால் ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கின்ற பதத்திற்கு “பதிவிரதை” என்கின்ற பொருள் கொள்ளப்படுகின்றது. இந்த இடத்தில்தான்
கற்பு என்கின்ற வார்த்தைக்கு அடிமைக் கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனதபிப்பிராயம். அதாவது பதியை கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொண்டவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன் பதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள்கள் இருப்பதால் அடிமைத் தன்மையை இவ்வார்த்தைகள் பலப்படுத்துகின்றன. ஆனால் தலைவி என்ற பதத்திற்கும் நாயகி என்ற பதத்திற்கும் மனைவி என்ற பொருள் குறிக்கப்பட்டிருந்தாலும் அது காதல் கொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும் பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய வாழ்க்கையில் கட்டுப்பட்ட பெண்களுக்கு தலைவி என்கின்ற வார்த்தை அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை. நாயகன் நாயகி என்கின்ற சமத்துவ முள்ள பதங்களும், கதைகளிலும் புராணங்களிலும் காதல்களை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றது. ஆகவே காமத்தையும் காதலையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர். நாயகி, தலைவர் தலைவி என்கின்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு,
கற்பு என்கின்ற நிலைக்கு வரும்போது அதை பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ள வேண்டுமென்கின்ற கருத்து கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் நமது திருவள்ளுவரின் நிலைமையும் எனக்கு சற்று மயக்கத்தைத் தருகின்றது.
அதாவது, குறளில் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும் பெண் வழிச் சேரல் என்பதைப்பற்றி சொல்ல வந்த 91-வது அத்தியாயத்திலும் மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையையும் தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக்கிடக்கின்றது. தெய்வத்தைத் தொழாமல்
தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும், தன்னைக் கொண்டவன் என்றும் இம் மாதிரியான பல தாழ்த்தத் தகுந்த கருத்து கொண்ட வாசகங்கள் காணப் படுகின்றன. இது விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர், மேல் கண்ட இரண்டு அத்தியாயங்களையும் 20 குறள்களையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப்
பார்த்து பிறகு இந்த இரண்டு அதிகாரங்கள் அதாவது வாழ்க்கைத் துணை நல அதிகாரமும், பெண்வழிச் சேரல் அதிகாரமும் குற்றமற்றது என்பதாக
யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும் கடைசியாக, திருவள்ளுவர்.
ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள்களை எழுதியிருப்
குடி அரசு - 1928 () 20
பாரானால் இம்மாதிரி கருத்துக்களை காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். அது போலவே பெண்களைப் பற்றிய தர்ம சாஸ்திரங்கள் என்பதும் பெண்களைப் பற்றிய நீதி நூல்கள் என்பதும், பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது கற்பு என் கின்ற வார்த்தைக்குப் பெண்கள் வியாக்கியானம் எழுத ஏற்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு பதிவிரதம் என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.
கற்பு என்பதற்கு பதிவிரதம் என்று எழுதிவிட்டதின் பலனாலும் பெண்களை விட ஆண்கள் உடல் வலி கொண்டவர்களானதினாலும் பெண்கள் அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லையென்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர. வேறில்லை.
தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷை களில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்கும் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
இந்த விஷயத்தில் உலகத்தில் இன்ன நாடோ, இன்ன மதமோ, இன்ன சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணமாக ஐரேப்பிய தேசத்திலும் பெண்களுக்கு பலவித சுதந் திரங்கள் இருப்பதுபோல் காணப்பட்டாலும் புருஷன் பெண்சாதி என்பதற் காக ஏற்பட்ட பதங்களிலேயே உயர்வு தாழ்வு கருத்துகள் நுழைக்கப்பட்டி ருப்பதுடன் சட்டங்களும் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியதாகவே
ஏற்பட்டிருக்கிறது.
துருக்கி நாட்டிலும் மகமதிய சமூகத்திலும் படுதா என்றும், கோஷா என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக் கொண்டு வெளியில் போக வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கையும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிக் கொண்டு வாழக் கூடாது என்ற கொள்கையும், நம்நாட்டில் ஒருதடவை புருஷன் பெண் சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால் அந்தப் பெண்ணுக்கு சாகும் வரைக்கும் வேறு எவ்வித சுதந்திரமும் இல்லை என்றும், புருஷன் பல பெண்களை கட்டிக் கொண்டு அப்பெண்ணின் முன்பாகவே ஒவ்வொரு பெண்ணுடனும் கூடி வாழலாம் என்றும், புருடன் தான் கொண்ட பெண் ணைத் தன்னுடன் இருத்தி வாழவிடாமலும் கூட புருடனை சாப்பாட்டிற்கு
மாத்திரம் கேட்கலாமே யொழிய இன்பத்திற்கோ, காதலுக்கோ கட்டுப்படுத்த உரிமை இல்லை என்றும் கட்டுப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இன்னிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதிற்கில்லாமல் சமூகமும் ஒப்புக் கொண்டு இந்நிலைக்கு உதவி ஸ்திரீ
புரிந்து வருவதினாலும் இது உறம் பெற்று வருகின்றதென்றே சொல்ல வேண்டும். அநேக வருட பழக்க வழக்கங்களால் தாழ்ந்த ஜாதியார் எனப் படுவோர் எப்படி தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதை ஒப்புக்கொண்டு தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலகவும் முந்துகின்றார்களோ அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண்மக்களின் சொத்துக் களென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக்கொண்டு சுதந் திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள். உண்மையான பெண்கள் விடு தலை வேண்டுமானால் ஒருபிறப்புக் கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து இரு பிறப்புக்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காக காதலற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.
கற்புக்காக புருடனின் மிருகச் செயலை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மைக் காதலை மறைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும்.
எனவே இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிறவியில் உண்மைக் கற்பை, இயற்கை கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந் தங்களாலும் ஒருபிறப்புக் கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமை
யற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாததுடன் அடிமைக் கற்பைத்தான் காணலாம். அன்றியும் இம்மாதிரியான கொடு மையை விட வெறுக்கத்தக்க காரியம் உலகத்தில் மனித சமூகத்தில் வேறு
ஒன்று இருப்பதாக நான் சொல்ல முடியாது.
குடி அரசு - கட்டுரை - 08.01.1928
குடி அரசு - 1928 () 22
ந்யிக்
வென்னிக்கிழமை விளக்குவைத்த நோம்
- சித்திரபுத்திரன்
நகை வியாபாரி:- அய்யா! தாங்கள் என்னிடம் காலையில் காசுமாலை வாங்கி வந்தீர்களே அது தங்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக் கொண்டிருக்கிறார் அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கின்றேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்து விடுங்கள்.
வைதீகர்:- செட்டியாரே அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசுகள் இருந்தது. எட்டு எண்ணிக்கை கொண்டது எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயி வருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.
நகை வியாபாரி:- அப்படியானால், தயவு செய்து கொடுத்து விடுங்கள்.வேறு ஒருவர் காத்துக் கொண்டிருக்கின்றார்.
வைதீகர்:- ஆஹா, கொடுத்துவிடுவதில் எனக்கு ஆக்ஷபனை யில்லை. காலமே நேரத்தில் வாருங்கள், கொடுத்துவிடுகின்றேன்.
நகை வியாபாரி:- அவர் இன்று ராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர். ஆனதால் தயவு செய்து இப்பொழுது கொடுத்துவிடுங்கள்.
வைதீகர்:- செட்டியாரே, தாங்கள் என்ன நாஸ்திகராய் இருக்கின்
நீர்கள். வெள்ளிக்கிழமை, அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா? அது
லக்ஷிமி அல்லவா?
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நகை வியாபாரி:- என்ன அய்யா! வியாபாரத்திற்காக பெண்டு களுக்கு காட்டிவிட்டு கொண்டுவருகிறேன் என்று எடுத்துக் கொண்டு வந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால் வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம் என்கின்றீர்களே, இது என்ன ஒழுங்கு! ஊரார் நகைக்கு நாள் என்ன, நேரம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லையே.
வைதீகர்:- (தனக்குள்ளாகவே “இந்த இழவு நகையை நாம் ஏன் இந்த மனிதனிடம் வாங்கி வந்தோம்” என்று நினைத்துக் கொண்டு! என் புத்தியை விளக்கு மாற்றால் புடைக்க வேண்டும், உம்ம கடைக்கு வந்ததே பிசகு. தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும் போதே மணி பத்தரை இருக்கும், நல்ல ராகு காலத்தில் எடுத்து வந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த்
தான் தீரும், எனக்கு புத்தி வந்தது. இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்.தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.
நகை வியாபாரி:- இது என்ன அய்யா தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால் நாள் கோள் எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள். ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்க ளுக்கு எவன் புத்தி சொல்லிக் கொடுத்தான். அவனைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையை கொடுங்கள் நேரமாகுது.
வைதீகர்:- நீங்கள் “குடி அரசு' பத்திரிகை கட்சியை சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரங்களையும் கேலி செய்கின்றீர்களே, அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை, கெட்டது இல்லை. மேல் இல்லை, கீழ் இல்லை, கோவில் இல்லை, குளம் இல்லை, சாஸ்திரம் இல்லை, புராணம் இல்லை.பரையனும் பார்ப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாஸ்திகம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல பேசுகின்றீர் களே.
நகைக்காரர்:- நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்து கொள்ளும், அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்து
விடும் பவுன்விலை இறங்கப் போகிறது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறு ஒரு ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர் இருட்டு ஆகப் போகிறது, சீக்கிரம் எடுத்துக் கொண்டு வாரும்.
வைதீகர்- வீட்டிற்குள் போய் சம்சாரத்துடன் யோசிக்கின்றார்! என்ன, செட்டியார் நகை கேழ்க்கின்றார்.
குடி அரசு - 1928 () 24
அம்மா: இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லக்ஷிமியை வீட்டைவிட்டு வெளியில் கொடுக்கலாமா?
புருஷன்:- எல்லாம் நான் சொல்லிப் பார்த்தாய்விட்டது. செட்டியார் ஒரேபிடியாய் இப்போதே கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றார்.
அம்மா:- (பலமாய் சத்தம் போட்டுக் கொண்டு வெளியில் வருகிற போது பேசிக் கொண்டு வருவதாவது! செட்டியாருக்கு புத்தியில்லை. அவர். என்ன செட்டியா? மட்டியா? வீடுவாசல் வைத்து பிழைத்த மனிதனா? நாடோடி தடம் போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கிறான், நான் போய் கேட்கிறேன். என்ன செட்டி யாரே உமக்கு புத்தியில்லை, இப்பொழுது தான் ஏதோ கொஞ்சம் ஓகோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்துவிட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்விடு வீரா அல்லது வேறு ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் என்கிறீரே, அவன் கொள்ளையில் போய் விடுவானா? உமக்குத்தான் புத்தி இல்லா விட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்க வேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப் போய் கேட்கச் சொல்லலாமா என்கின்ற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச் சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன?
இந்த சமயத்தில் மகன் வந்து விட்டான்.
மகன்:- என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?
தாயார்: இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசு மாலையைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கு நிற்கிறார்.
மகன்:- அதெல்லாம் இருக்கட்டும். ஜாஸ்தி பேசாதே? நமக்கு காசு மாலையேது? நம் வீட்டில் காசு மாலை இல்லையே. அப்பாதான் வாங்க வேண்டும் என்று நேத்து மத்தியானம் பேசிக் கொண்டிருந்தார். அதற் குள்ளாகவா வந்துவிட்டது?
தாயார்: உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ! காலையில் கடைக்குப் போனார், இந்த செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது, அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கிவந்தார். நேற்று நினைக்கும்போதே ராகு காலம், இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போது ராகு காலமே - வழியில் வரும் போது பூனை குறுக்க போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டா
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மென்று தலையை சுத்தியெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படிச் செய்யா
மல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப் பார்த்தேன்.காசு அறுபத்தி எட்டாயிருந்தது. உடனே தலையைச்சுற்றி எறிந்து விட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார். அவசரப்படறார்; யாரோ வேறே கிராக்கி காத்துக் கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.
மகன்: ஐயய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாய் இருக்குது.
குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது; வெள்ளியாவது, சனியாவது, ராகாவது, கேதாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டு வந்து பெட்டியில் வைத்து பூட்டிக் கொண்டு வெள்ளியுஞ் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது. பேசாமல் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிடு; இல்லாவிட்டால் பெட்டியை உடைத்து விடுவேன் தெரியுமா?
அதற்குள் அப்பா வந்துவிட்டார்.
அப்பா:- என்னடா பயலே பலே அதிகப் பிரசங்கியாய்ப் போய் விட்டே. நான் அப்போதே உன்னை - “குடி அரசு' பத்திரிகையைப் படிக்க வேண்டாம், கெட்டுப்போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டு குட்டிச்சுவராய் போய் விட்டாயல்லவா? கர்மம்! கர்மம்! இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து ஊரிலுள்ள சிறு பிள்ளை களையெல்லாம் நாஸ்திகனாக்கி விட்டது.
மகன்:- “வெகு நன்றாயிருக்கிறது' என்று சொல்லிக் கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியை பிடுங்கிக் கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான்.
பிறகு புருஷனும் பெண்ஜாதியும் ராகுகாலத்தில் அந்த செட்டி இடம் நகை வாங்கிவந்ததே பிசகான காரியம். இதுவும் வரும், இன்னமும் எவ்வள வோ கெடுதியும் வரும்.என்னை அடிக்க வேண்டு........லே.
குடி அரசு - உரையாடல் - 08.01.1928
குடி அரசு - 1928 () 26
காங்கிரசும் ராயல் கமிஷன் ஷ் ப் புரட்டும்
ராயல் கமிஷனை பஹிஷ்கரிக்கும் விஷயமாய் அரசியல்வாதிகள் இடும் கூச்சல்கள் எல்லாம் புரட்டு என்றும் அது பெரிதும் வகுப்பு உரி மைக்கு விரோதமாய் போடும் கூச்சல்கள் என்றும் ஆதிமுதல் கொண்டே எழுதி வந்திருக்கின்றோம்.
உதாரணமாக, வகுப்பு உரிமை வேண்டுமென்று கேட்கப்படும் எந்தக் கூட்டத்தாராலாவது பஹிஷ்காரம் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்த்தால் தெரியவரும். அத்துடன் கமிஷனை பஹிஞஷ்கரிக்கும் ஒவ்வொரு கூட்டமும் வகுப்புரிமை கூடாதென்பதையும் வற்புறுத்திக் கொண்டே வருகின்றது. எனவே கமீஷனை அடியோடு பஹிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லும் தத்துவம் கமீஷனில் எல்லா வகுப்புகளுக்கும் சம உரிமை கிடைக்கும்படியான நிலைமை ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தாலேயே ஒழிய கமீஷனால் இந்திய அரசியல் சுதந்திரத்
திற்கு ஏதாவது கெடுதி வந்து விடுமோ என்கின்ற காரணத்தாலல்லவென்றே சொல்லுவோம்.
மிதவாதிகள்கூட பஹிஷ்காரத்திற்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம்.மிதவாதிகள் பஹிஷ்கரிக்கும் காரணம் தியாக புத்தியுடனோ அல்லது அரசாங்கத்துடன் விரோதித்துக் கொள்ளத்தக்க வீரத்துடனோ அல்லவென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
முக்கியமாக மிதவாதிகள் என்பவர்கள் பெரிதும் யார் என்று பார்த்தால் இந்த உண்மை விளங்கும். அதாவது,
ஸ்ரீமான்கள் சிவசாமி அய்யர், சிந்தாமணி பந்துலு, சாப்ரூ அய்யர், மாளவியா அய்யர், சீனிவாச சாஸ்திரி, ரங்காச்சாரி, நரசிம்ம சர்மா முதலிய அய்யர், சாஸ்திரி, சர்மா, பந்துலு, ஆச்சாரி ஆகிய பார்ப்பனர்களே அல்லாமல் வேறல்ல. இந்த கூட்டங்களில் ஒவ்வொருவரும் சர்க்காருடன் ஒத்துழைத்தவரும் சர்க்காரில் மாதம் ஒன்றுக்கு 5000, 7000 சம்பளம் வாங்கின
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
வரும் சர்க்காருக்கு விரோதமாக ஜனங்கள் கிளம்பிய காலத்திலெல்லாம் சர்க்காருக்கு ஆதரவளித்து கூலி பெற்றவருமேயல்லாமல் தேசத்திற்காக ஒரு காதொடிந்த ஊசியாவது நஷ்டப்பட்டவரல்லர். அப்படியிருக்க இந்த பார்ப்பனர்கள் இப்போது கமிஷனைப் பஹிக்ஷிஷ்கரிக்க ஒப்புக்கொண்ட காரணம் இதுவரை தாங்கள் ஏகபோகமாய் அனுபவித்துவந்த உத்தி யோகங்கள் இனி ஏற்படப்போகும் சீர்திருத்தத்தின் பலனாய் எல்லோருக்
கும் கிடைக்கும் படியாய் போய்விடுமோ என்கின்ற பயத்தால் அல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
இனி ஏற்படப் போகும் சீர்திருத்தத்தின் பலனாயும் பாமர மக்களுக்கு ஒரு பலனும் உண்டாகாது என்பது உறுதியேயானாலும் இதனால் ஏற்படும் உத்தியோகங்களாவது எல்லா சமூகத்தாருக்கும் சற்றேறக் குறைய சமமாகக் கிடைக்கும்படியாக இருக்கும் என்பதற்கு சில அடையாளங்கள் காணப் படுகின்றன. என்னவெனில் கமிஷனில் இந்தியர்களில் யாரையும் நியமிக்கா ததே ஒரு அடையாளம் என்று கொள்ள வேண்டும். நியமிப்பதானால் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் நியமித்திருக்க முடியாது.அப்படி மீறி நியமித்திருந்தாலும் இப்பார்ப்பனர்கள் இதே மாதிரி கூச்சல்தான் போடுவார்கள். இரண்டாவதான அடையாளம் என்னவென்றால், செக்ரிடெரி ஆப் ஸ்டேட் என்னும் இந்தியா மந்திரியாகிய லார்ட் பர்க்கன் ஹேட் பேசியிருக்கும் பேச்சில், இந்தியாவிலுள்ள வகுப்புப் பிரிவுகளையும் வகுப்புக் கொடுமைகளையும் உணர்ந்திருப்பதாகக் காட்டிக்கொண்டார். இது பார்ப்பனர்களுக்கு வயிற்றில் இடி விழுந்ததுபோல் தோன்றியிருக்கும். ஏனெனில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகிய இந்தியா மந்திரி இந்தியாவில் பல வகுப்பும் வகுப்புக் கொடுமையும் இருக்கின்றதாக ஒப்புக் கொண்ட பிறகு அதற்கு பரிகாரம் செய்யாமல் இருப்பாரானால் அவரைப் பற்றிப் பொது ஜனங்கள் குற்றமாய் நினைப்பார்கள். அதாவது சாக்குச் சொல்லி சுதந்திரம் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வதற்கு மாத்திரம் இம்மாதிரி வகுப்புப் பிரிவினைகளை காட்டிக் கொண்டாரேயொழிய அதற்குப் பரிகாரம் செய்ய முன்்வரவில்லை.ஆதலால், இது கெட்ட எண்ணத்தின் பேரில் சொல்லப்பட்ட வார்த்தை என்று சுலபத்தில் சொல்லி விடுவார்கள் என்பது அவருக்கு தெரிந்த காரியமாதலால் அதற்கு தகுந்த பரிகாரம் கொஞ்சமாவது செய்யத் தீர்மானித்துக் கொண்டுதான் இப்படி சொல்லியிருப்பார் என்பது பார்ப்பவர். களுக்குத் தெரியும். அன்றியும் சதா காலமும் இந்து முஸ்லீம் கலவரங்களும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகரார்களும் நடைபெற்று வருவதும் அவர்.
கள் அறிந்ததே. தவிரவும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அதிகமான பதவிகள் கொடுக்க அரசாங்கத்தார் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் எவ்வளவோ சூழ்ச்சிகளுக்கு இடையில் எவ்வளவோ கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு சீர்திருத்தத்தை நடத்திக்காட்டி இருக்கின்றார்கள். அப்படி ஏதாவது அதிக மான சுதந்திரம் என்பது கொடுக்கப்பட்டால்
குடி அரசு - 1928 () 28
அதனால் ஏற்படும் உத்தியோக முதலிய பலன் முழுதும் பார்ப்பனர்களே அனுபவிக்க முடியாமல் போகுமோ என்கின்ற பயம் பார்ப்பனர்களுக்கு ஏற்படுவது இயற்கைதான்.
உதாரணமாக, காங்கிரசின் காரியதரிசியாய் ஹோம்ரூல் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராய், பெரிய தேசாபிமானியாய் இருந்த சர்.சி.பி. ராமசாமி அய்யர் இனி அதிகமான சீர்திருத்தங்கள் வேண்டியதில்லை என்று அரசாங்கத்தாருக்குச் சொன்னதும், பனகால் ராஜா இனியும் அதிகமான சீர்திருத்தம் வேண்டுமென்று சொன்னதுமே இந்த பயத்திற்கு போதுமான சாக்ஷியாகும்.
தவிர, பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் இரட்டை ஆட்சி ஒழிந்து மாகாண சுயாக்ஷி ஏற்பட்டால்தான் உத்தியோகங்களை ஏற்றுக் கொள்ள அதாவது சர்க்காருடன் ஒத்துழைக்க முடியும் என்று சொன்னதும் காங்கிரஸ்: மகாசபை என்பது அரசாங்கத்தாரின் மனப்பான்மை மாற்றமடைந்ததாக ஜாடை காட்டினால் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம் என்று சொன்னதும் இவ்வருஷக் காங்கிரசில் அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சமயம் போல் நடந்து கொள்ள சவுகரியமிருக்கும்படி இடம் ஏற்படுத்தி வைத்துக் கொண்டதும் மற்றொரு சாக்ஷியாகும்.
தவிர, ராயல் கமிஷன் பகிஷ்காரத்திற்கும் எவ்வளவு தூரம் தயாரா யிருக்கிறார்கள் என்பதற்கும் அதில் எவ்வளவு தூரம் நாணயம் இருக் கின்றது என்பதற்கும் தலைவர்கள் என்பவர்களின் நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கவனித்தால் விளங்காமல் போகாது.
ராயல் கமிஷன் என்பது இந்தியர்களுக்கு என்ன வேண்டும் என் பதையும் எவ்வளவு தூரம் அதை அனுபவிக்க யோக்கியதை உடையவர் களாயிருக்கின்றார்கள் என்பதையும் கொடுத்தவைகளை எப்படி உப யோகித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அறிவதற்காக பார்லி மெண்டாரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு விசாரணை கமிட்டி என்பது தான் தார்ப் பரியம். இதை பகிஷ்கரிப்பது என்பது என்னவென்று பார்ப்போ
மானால் இந்த விசாரணைக்கு எந்த விதமான உண்மைகளும் போய்ச் சேர வொட்டாமல் செய்வது என்பதுதான் கருத்தாயிருக்க வேண்டும்.
இன்னிலையில் பகிஷ்காரத் தீர்மானத்தினுடையவும் பகிஷ்காரக் காரருடையவும் யோக்கியதையைப் பார்ப்போம்.
பகிஷ்காரகாரர்கள் இதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் “யாரும் போய் சாக்ஷி சொல்லக்கூடாது, சட்ட சபையில் ஏற்படுத்தும் கமிட்டியில் யாரும் மெம்பராயிருக்கக் கூடாது, கமிட்டி மெம்பர்களுக்கு மரியாதை செய்யக்
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கூடாது” என்று மாத்திரம் தீர்மானங்கள் செய்துவிட்டார்களே ஒழிய அவர்கள் கோரிவரும் காரியம் தடைப்படுவதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல் இருப்பதுடன் உதவியும் செய்ய ஆள் மேல் ஆள் முந்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதாவது பகிஷ்காரத்தில் தீவிர முயற்சி உடைய பெசண் டம்மையார் இந்தியாவுக்கு வேண்டியது இன்னது என்பதாக ஒரு திட்டம் போட்டு பார்லிமெண்டில் முன்னமேயே ஒப்புவித்து விட்டதோடு அல்லா
மல் இப்போதும் ஊர் ஊராய் மாகாணம் மாகாணமாய் போய் கூட்டம் கூட்டி அதை பொது ஜனங்கள் ஒப்புக் கொண்டதாகப் பெயர் செய்து கொண்டு அதை சீமைக்கு தந்தி அடிக்கச் செய்து கொண்டு வருகின்றார். மாஜி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரி தான் ஒரு திட்டம் போட்டு பார்லிமெண்டிலுள்ள தனது சிநேகிதருக்கும் மற்றும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி தெரியப்படுத்தி விட்டார்.
மற்றொருவர் அதாவது சமீபத்தில் மாஜீயான காங்கிரஸ் தலைவ ராகிய ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் ஒரு திட்டம் போட்டு புஸ்தக ரூபமாக்கி ஆயிரக்கணக்கான பிரதிகளை எல்லாருக்கும் வினியோகித்துக் கொண்டு வருகின்றார். காங்கிரஸ் தீர்மானத்திலும் “வகுப்பு உரிமை கூடாது; தனித் தொகுதி கூடாது” என்பது போன்ற விஷயங்களை தீர்மான ரூபமாகச் செய்து வெள்ளைக்காரர்களும் கமிட்டி மெம்பர்களும் அறியும்படியும் செய்தாய்விட்டது. அதில் இந்தியத் தேசியத் தலைவர் என்ற பண்டிதர் நேரு அவர்களும் சமீபத்தில் பிரான்சில் பேசியபோது இந்தியாவின் கோரிக்கை களை கமிட்டி முன்னால் சமர்ப்பித்து விடுவதைத்தவிர மற்றவைகளை பகிஷ்கரித்து விடவேண்டும் என்று சொல்லிவிட்டார். காங்கிரஸ் மகாசபை தலைவரான டாக்டர் அன்சாரி அவர்களும் “எல்லா வகுப்பார்களும் எல்லாவித அரசியல் கட்சிக்காரரும் ஒன்று சேர்ந்து ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும்” என்று சொல்லி இருக்கின்றார்.
மிதவாதிகள் என்பவர்களும் ஒரு திட்டம் போட்டும் சிலர் பெசண்ட் அம்மையின் திட்டத்தை ஆதரித்தும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை காட்டியாகி விட்டது.
இவ்வளவும் அல்லாமல் பகிஷ்காரத்தின் அறிகுறியாய் சட்ட சபையை விட்டு விலகவோ கமிஷன் வந்து போகும் வரையிலாவது சட்டசபைக்கு போகாமலிருக்கவோ கூட முடியாது என்று தீர்மானித்தாய் விட்டது. ஆகவே பகிஷ்காரம் என்பதை எந்த முறையில் மீதி வைத்திருக் கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே கூலிப் பிழைப்புக் காரரான ஜட்கா வண்டிக்காரரும் ஒற்றைமாட்டு வண்டிக்காரரும் ரிக்ஷா வண்டிக்காரரும் வேலைநிறுத்தம் செய்வதிலும் வெற்றிலை பாக்கு சிகரெட்
பீடி கடைக்காரர் கடைகளை மூடுவதிலும் கமிஷனில் வரப்பட்ட கமிட்டி மெம்பர்களுக்கு நடத்தப்படும் தேயிலைப் பானத்திற்கு போகாமலும்
குடி அரசு - 1928 () 30
காலிகளுக்கு கூலி கொடுத்து தெருவில் போகின்றவர்கள் மீது கல்லெறி வதிலும் மாத்திரம் பகிஷ்காரம் இருப்பதானால் யோக்கியர்கள் இதை ஒப்புக் கொள்ள முடியுமா என்றுதான் கேட்கின்றோம்.
மற்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டியதை கமிஷ னுக்கோ வெள்ளைக்காரருக்கோ தெரியப்படுத்த வேண்டுமானால் அவர்
களும் இந்தமாதிரி திட்டம் போட்டு கமிஷன் முன்னால் சமர்ப்பிப்பதை விட நேரில் போய் சொல்லி விடுவதால் ஏற்படும் நஷ்டம் என்ன என்று தான் கேட்கின்றோம். அவராடி இவராடி எப்படி பாமர மக்களை ஏமாற்றி ஒரு வகுப்பாரே ஆதிக்கம் பெறுவதெப்படி? உயர்ந்த பதவிகளையும் உத்தியோ கங்களையும் அடைவதெப்படி? பெரும் பெரும் சம்பளம் பெறுவதெப்படி? என்பதல்லாமல் இந்தப் புரட்டுகளால் தேசத்துக்கோ, பாமரமக்களுக்கோ ஏற்படும் பயன் என்ன என்று கேட்கின்றோம்.
பகிஷ்கார பிரசாரம் செய்யும் “தமிழ்நாடு” கமிஷன் மெம்பர்களின் படத்தை விளம்பரம் செய்திருப்பது என்னே !
குடி அரசு - கட்டுரை - 08.01.1928
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
புது வருஷ விண்ணப்பம்
புது வருஷ விஷயமாய் நாம் எழுதுவதில் அரசியல் விஷயத்திற்கு பிரதானம் கொடுத்து எழுத வரவில்லை: ஏனெனில் அரசியல் விஷயத்தை மிகுதியும் அலட்சியமாய்க் கருதுவதே “குடி அரசின்” கொள்கை என்று பொதுஜனங்கள் எண்ணும்படி இருக்கவேண்டும் என்பதே நமது கவலை. ஆனாலும் அரசியலின் பேரால் மக்கள் ஏமாற்றப்படும் நிலைமை ஏற்படும்போது அலட்சியமாய் இருப்பதற்கில்லாமல் அதன் புரட்டுகளை: வெளியாக்கவேண்டிய நிலையில் அரசியலைப் பற்றியும் எழுத நேரிடு கின்றது. மற்றப்படி தேசீயம் அரசியல் என்கின்றவைகள் எவ்வளவுக் கெவ்வளவுமக்களால் மறக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத்
தில் விடுதலை உண்டு என்பது நமதபிப்பிராயம். நிற்க, இந்த தலையங்கத்தில்
நாம் எழுத புகுந்ததெல்லாம் புது வருஷத்தின் நிலை நமது முயற்சிக்கு எவ்வளவு பயனளிக்கக் கூடியதாயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளவேதான். எனவே நாம் யோசித்து பார்க்கும் அளவில் புது வருஷத்
தில் நமக்கு பல இடையூறுகள் தோன்றலாம் என்பதாகவே அறிகின்றோம். அவ்விடையூறுகளை லட்சியம் செய்யாதவரை பலனுண்டாகும் என்றும் லட்சியம் செய்து அதற்காக ஏதாவது இணங்க இடம் தந்தால் காரியம் கெடக்கூடும் என்றும் அறிகின்றோம்.
இந்த சமயம் நமது முயற்சிக்கு எவ்வித உதவியும் ஆதரவும் அனுதாபமாவது இருப்பதாகக் காண முடியவில்லை. ஆனாலும் எதிர்ப்புக் காரர்களுக்கும் போதிய பலமோ ஆதரவோ இருப்பதாகவும் தெரிய வில்லை. ஆரம்பத்தில் நாம் வெள்ளைக்காரருடன் வாதாடி மக்களின் இடுக்கண்களை விடுவிக்கக் கிளம்பினோம். அதில் இறங்கியதன் பலனாய் வெள்ளைக்காரரைவிட பார்ப்பனர்களிடமே மிகுதியும் வாதாட வேண்டி யிருக்கின்றது என்று கருதினோம். அதில் இறங்கியதன் பயனாய் பார்ப்பனர். களைவிட நம்மவர்களிடமே வாதாடவேண்டியதாய் பல விஷயங்கள். காணப்படுகின்றன. இதை ஒரு உதாரணமாக விளக்க வேண்டுமானால், நமது விடுதலையை வெள்ளைக்காரர்கள் பறித்துக் கொண்டுபோய் வைத்திருக் கிறார்கள் என்று உணர்ந்து, அவர்களிடம் இருந்து அதைப் பிடுங்கி வர முயற்சித்ததில் நமது விடுதலையை அவர்கள் தங்கள் வீட்டில் வைத்துப்
பூட்டிக் கொண்டு அதற்கு காவலாக நமது பார்ப்பனர்களையே காவல் காக்க
குடி அரசு - 1928 () 32
வைத்திருக்கின்றார்கள் என்பதும் நமது பார்ப்பனர்களும் மிக்க எஜமான விஸ்வாசத்துடன் வெள்ளைக்காரர்களுக்கு காவல் காத்து வருகிறார்கள் என்பதும் நன்றாய் உணர்ந்து விட்டோம்.
எனவே நமது விடுதலை என்பதை நாம் கைப்பற்ற வேண்டுமானால் காவல்காரர்களை விரட்டி அடிக்காமல் முடியவே முடியாது என்பது கண்டு தான் எதிரியின் காவல்காரர்களான பார்ப்பனர்களை அக்காவலிலிருந்து விரட்டத் துணிந்தோம்.
இந்த முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டதின் பலனால் டெ காவல்காரர் களை உண்டாக்கவும் போஷிக்கவும் நம்மவர்களே ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள். நம்மவர்களே அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து வளர்த்து வலுவுண்டாக்கிநமது விடுதலையைக் கைப்பற்றி இருக்கும் வெள்ளைக்காரர்
களின் காவலுக்கு அனுப்பி வருகிறார்கள். ஆகவே நமது போஷணையை நிறுத்திக் கொண்டால் பார்ப்பனர்கள் வெள்ளைக்காரனுக்குக் காவலனாய் இருக்க முடியாது என்பதும், பார்ப்பனர்களின் காவல் ஒழிந்தால் வெள்ளைக்
காரர்கள் நமது விடுதலைக்கு விரோதமாய் இருக்க முடியாது என்பதும் நமது முடிவு. எனவே அப்பார்ப்பனர்களுக்கு எவ்வெவ் வழியில் நியாயமற்ற போஷணை கிடைக்கின்றதோ அவ்வவ் வழிகளையெல்லாம் அடைத்துத்
தீரவேண்டும் என்கின்ற முயற்சியில் இறங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இம் முயற்சி தான் சிலருக்கு நாம் நம்மவர்களுடன் போரிடு வதாகக் காணப்படுகின்றது.
மத விஷயத்திலும் சாஸ்திர புராண விஷயத்திலும்கூட “குடி அரசு” கை வைத்துவிட்டது என்று மதபக்தர்கள் என்போர்கள் சத்தம் போட நேரிட்ட
தும், தேசீய விஷயத்தில் கூட கையை வைத்து விட்டது என்று தேசபக்தர்கள் என்போர்கள் சத்தம் போட ஏற்பட்டதும் இதனால்தானேயல்லாமல் வேறல்ல.
இந்து மதம் என்பதும் அதன் பெயரால் உள்ள சாமிகள், கோவில்கள், பூஜைகள், திருவிழாக்கள் முதலியவைகளும் அதற்காக ஏற்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் என்பவைகளும் பார்ப்பான் பிழைக்
கவும், பார்ப்பான் உயர்ந்தவன் என்கின்ற ஆதிக்கம் பெறவுமே ஏற்பட்டதே யல்லாமல் உலகத்திற்கோ அல்லது பார்ப்பனர்களைத் தவிர வேறு எந்த ஜனசமூகத்திற்கோ ஒரு சிறு துரும்பளவு பிரயோஜனமும் உண்டாக்குவதற் கல்லவென்று உறுதியாய் நம்புகிறோம். நித்திய வாழ்க்கையாலும் இதை பிரதி தினமும் அனுபவத்தில் உணர்ந்தும் வருகிறோம்.
இதை நாம் வெளியிடும்போதும் மாற்றும்படி மக்களை வேண்டிக் கொள்ளுகின்றபோதும் மதக்காரர், சாஸ்திரக்காரர், புராணக்காரர் என்பவர்.
கள் நம்மீது பாய்கின்றார்கள். அப்படிப் பாய்கின்றபோது மதத்தைப் பற்றியும்,
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சாஸ்திரத்தைப் பற்றியும், புராணத்தைப் பற்றியும் இவைகளின் மூலம் தானாகவே ஏற்படும் பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றியும் நாம் சொல்லும் விஷயங்களுக்கு ஒரு சிறிதும் சமாதானம் சொல்லாமலும், பதிலளிக்கக் கருதாமலும், வேண்டுமென்றே அவைகளை மறைத்துவிட்டுக் கடவுள் போச்சே என்று துக்கப்படுகிறவர்கள் போலவும், கடவுளைக் காப்பாற்றப் பிறந்திருக்கிறவர்கள் போலவும் வேஷம் போட்டுக் கொண்டு வெளியாகி “குடிஅரசு' நாஸ்திகம் போதிக்கின்றது என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு மனமறிந்த பித்தலாட்டம் என்கின்ற பூமியின் மீது நின்று கொண்டு நம்முடன் போர் தொடுக்க வருகின்றார்கள். இக்கூட்டமும் இப்போரும் இப்புது வருஷத்தில் பலப்படும் என்பதே நமதபிப்பிராயம். இக்கூட்டத்தாருக்கு உண்மையில் கடவுளிடத்தில் நம்பிக்கை இருக்குமானால் “குடி அரசு” கடவுளை ஒழித்துவிடமுடியும் என்கின்ற பயமும் தங்களால் தான் கடவுளைக் காப்பாற்ற முடியும் என்கின்ற எண்ணமும் ஒருக்காலமும் ஏற்பட நியாயமே இருக்காது என்றாவது அல்லது இவர்கள் போருக்கு கிளப்பியிருக்கும் கருத்து கடவுள் மறைந்து போவார் என்று இல்லாமல், இவர்களது மதமும்,
சாஸ்திரமும் புராணமும் என்பவைகள் மறைந்து போகுமோ என்பதான பயமாய்த்தான் இருக்க வேண்டும் என்றாவது பொதுமக்கள் நினைப்ப தில்லை. ஆகவே சாஸ்திரத்தையும் புராணத்தையும் காப்பாற்ற ஆசைப் பட்டுக் கடவுள் பேரில் சாக்கிட்டுக் கொண்டு வெளிக்கிளம்பும் கோழை போரை லட்சியம் செய்யாமல் இருந்தாலொழிய நமக்கு வெற்றி மார்க்கம் ஏற்படுவது அரிது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் மதம் சாஸ்திரம் புராணம் என்பவைகளைப்பற்றி இப்போது எங்கு பார்த்தாலும் ஜனங் களுக்குள் அதிருப்தியும், அவநம்பிக்கையும், எதிர்ப்பிரசாரங்களும் ஏற்பட்டிருப்பதை இக்கூட்டத்தார்கள் உணர்ந்து பார்க்கட்டும்.
மேல்நாடுகளில் மனித சுதந்திரத்திற்காக எவ்வளவு பெரிய மாறுதல்
கள் ஏற்பட்டு வருகின்றது என்பதும், வெளி மாகாணங்களில் எவ்வளவு தூரம் இவைகளை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டு உண்மை விடுதலை அடை
யும் முயற்சிக்குக் கூட்டம் கூட்டமாய் மக்கள் கிளம்பி இருக்கின்றார்கள் என்றும் உணர்ந்து பார்க்கட்டும்.
அரசியல் தலைவர் என்பவரும் வடநாட்டு ஆரியருமான மோதிலால் நேரு என்பவர் சமீபத்தில் பிரான்சு தேசத்தில் இந்திய வாலிபர்களிடம் பேசும்போது “வகுப்பு வித்தியாசங்கள் அடியோடு அழியத்தக்க உணர்ச்சிகளை வளர்க்க வேண்டும் என்றும் அதற்காக மதத்தையும் மறக்கத் தயாராயிருக்க வேண்டும்” என்றும் பேசியிருக்கின்றார்.
சுருக்கமாய்ச் சொன்னால் நமது முயற்சியின் கருத்தும் இதுவேயாகும். எனவே வகுப்புப்பிரிவு உணர்ச்சி மறைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் தான் இன்ன
குடி அரசு - 1928 () 34
வகுப்பு. இன்ன மதம், இன்ன கொள்கையை உடையவன் என்று ஒருவருக்கொருவர் பிரிந்து நிற்கத் தகுந்த நிலைமைக்கு ஆதாரங்கள். என்னென்ன உண்டோ அவைகள் எல்லாம் அழிந்து மறைபடவேண்டும். நாம் எல்லோரும் ஒரு நாட்டினர் என்றும் நாம் எல்லோரும் சமம் என்றும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பாயிருக்க கடமைப்பட்டவர்கள் என்றும் கருதக்கூடிய உணர்ச்சிகள் பெருகவேண்டும். இதுதான் நமது முயற்சியின் தத்துவம் என்று மறுபடியும் கூறுகிறோம். தற்காலம் நமது நாட்டில் விளங்கும் மதம், புராணம், சாஸ்திரம் என்பவைகள் எல்லாம் பெரும்பாலும் இம்
முயற்சிக்கு, இத்தத்துவத்திற்கு இடையூறாகியிருக்கின்றது என்று கருது வதால்தான் அவைகளை மக்கள் மறந்துவிடவேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றோம். அது சரியா தப்பா என்பதைப்பற்றி சமாதானம் சொல்லா மலும் இடையூறாயிருக்கும் பாகத்தை எடுத்துக்காட்டும் போது அதற்கு சமாதானம் சொல்லாமலும் “நாஸ்திகம் நாஸ்திகம்” என்கின்ற பூச்சாண்டி யையே விட்டு மிரட்டுவதால் என்ன பயன் விளைந்து விடக்கூடும்?
நாஸ்திகம்
நாஸ்திகம் என்றால் என்ன என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்:-
முதலாவது நாஸ்திகம் என்கின்ற சொல் எந்த பாஷையில் உள்ளது? அதற்குச் சரியான தமிழ்ச் சொல் என்ன? நாஸ்திகம் என்கின்ற சொல் எந்த பாஷையிலுள்ளதோ அந்த பாஷையில் நாஸ்திகம் என்பதற்கு என்ன பொருள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பவைகளை வெல்லாம் யோசித்துப் பார்த்தால் அறிவாளிகள் இந்த நாஸ்திகம் என்கின்ற பூச்சாண்டிக்குப் பயப்படமாட்டார்கள்.
நாஸ்திகம் என்பது ஆரிய பாஷைச் சொல். தமிழில் அக்குறிப்பை உணர்த்ததக்க சொல் ஒன்று இருப்பதாக நாம் அறிந்ததில்லை.நாஸ்தி என்றால் “இன்மை” என்றும் “ஆஸ்தி” என்றால் உடைமை என்றுந்தான் பொருள் உண்டு.நாஸ்திகன்- இல்லாதவன், ஆஸ்திகன்- உடையவன். எனவே இந்தப் பதங்கள் எப்படி கடவுளை சம்மந்தப்படுத்திக் கொண்டன என்பதை யாராவது சொல்லக்கூடுமா? என்று கேட்பதுடன் தமிழ் மொழியில் இந்தக் கருத்தையு டைய சொல்லோ வளமையோ இருப்பதாக சொல்லக் கூடுமா? என்றும் கேட்கின்றோம். ஆரிய பாஷையிலும் ஆஸ்திகன் நாஸ்திகன் என்கின்ற பதங்கள் கடவுளைக் குறிக்காமல் வேதத்தைக் குறித்துதான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அதாவது ஆரிய பாஷையில் நாஸ்திகன் என்கின்ற பதத் திற்கு வேதத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்றுதான் பொருள் கொடுக்கப்பட் டிருக்கின்றதே ஒழிய இவ்வார்த்தைக்கு கடவுளை எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தப்பட்டிருப்பதாக காணமுடியவில்லை.
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நிற்க, கடவுளை நம்புகிறவன் நம்பாதவன் என்கின்ற கேள்வி பிறக்குமானால், அந்தக் கேள்வியானது கடவுள்தன்மை இன்னது என்று அறியாதவர்களிடமிருந்துதான் புறப்பட வேண்டும். ஆதலால் அதைப் பற்றி நமக்கு ஒரு சிறிதும் கவலையில்லை என்று சொல்வதோடு சைவம் என்றும், வைணவம் என்றும், ஸ்மார்த்தம் என்றும் மற்றும் பலப்பல வித மாகவும் பல பேராகவும் மதங்களைப் பிரித்துக் கொண்டு உயர்வு தாழ்வு களைக் கற்பித்துத் தன்தன் மதமே பெரிது அதனதன் ஆதாரங்களே சத்தியமானது என்று பிடிவாதம் கொண்டு என்றென்றைக்கும் ஒத்துப்போக மார்க்கமில்லாமல் வாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அனாவ சியமான பொழுது போக்குகளும் நேரக்கேடுகளும் ஒழிய வேண்டும்.
ஆதலால் நமது உண்மையான லக்ஷியம் இன்னது என்று உணர்ந்து கொண்டவர்களும் அதை மனப்பூர்வமாய் ஒப்புக்கொண்டவர்களும் ஒருபோதும் இம்மாதிரி விகல்பத்திற்கு ஏதுவான மதத் தொல்லைகளில் கவனத்தைச் செலுத்தமாட்டார்கள் என்றே நினைக்கின்றோம்.
முடிவாக நாம் புது வருஷத்தின் பேரால் பொது மக்களைக் கேட்டுக் கொள்வதென்னவென்றால் வெள்ளைக்காரரின் தற்காலத்திய ராஜீய பாரம் நமக்கு - நமது நாட்டுக்கு - நமது நாட்டு ஏழை மக்களுக்குப் பெரிய ஆபத்
தாய் இருக்கின்றது. இவ்விபத்தான ராஜ்ஜிய பாரத்தை நமது நாட்டுப் பார்ப்பனர்கள் நடத்திக் கொடுத்து பங்கு வாங்கிப் பிழைத்து வருகிறார்கள். அப்பார்ப்பனர்க்கு நமது மக்கள் மதத்தின்பேரால் சாஸ்திரத்தின் பேரால் புராணத்தின் பேரால் புராணச் சாமிகளின் பேரால் அடிமைப்பட்டு ஆக்கம் தேடிக்கொடுத்து வருகின்றார்கள். எனவே இவைகளை சரிப்படுத்த அஸ்தி வாரத்திலிருந்து வெட்டி எறிய வேலை செய்ய வேண்டியது நமது கடமை. அஸ்திவாரத்தில் கொஞ்சம் தாக்ஷணியம் பார்த்து ஒரு சிறு வேரை விட்டு விட்டாலும் மறுபடியும் அது படர்ந்துவிடும். ஆதலால் தயவு செய்து ஒவ்வொருவரும் ஒரே மூச்சாய் கொஞ்சமும் தாகஷண்ணியமோ குருட்டு நம்பிக்கையோ பிடிவாதமோ இல்லாமல் உரத்து நின்று உதவி செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம். இது வெற்றி பெற்றால் தான் நமது நாட்டுக்கு மாத்திரமல்லாமல் மனித சமூகம் முழுவதுமே சாந்தி உண்டாகும் என்று விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.01.1928
குடி அரசு - 1928 () 36
காங்கிறச௬க்கு நீமாண் காந்தியின் €யோக்கியதா பத்திரம்
விளையாட்டுப் பின்னைகன் மண் கொழிக்கும் சங்கம்
சென்ற காங்கிரசைப்பற்றி ஸ்ரீமான் காந்தி தமது “யங் இந்தியா” பத்திரிகையில் ஜனவரி 5 தேதி எழுதியதாவது,
“நான் விஷயாலோசனைக் கமிட்டியின் கூட்டங்களொன்றுக்கும் செல்ல முடியவில்லையெனினும், மிகவும் பொறுப்பற்ற வகையில் பேச்சும், வேலையும் நடந்தது என்றும் ஒழுங்கீனமாய் அங்கத்தினர்கள் நடந்து கொண்டார்களென்றும் தெரிந்து கொண்டேன். இன்னது விளையும் என்று சிந்திக்காமலே முன்பின் யோசனை இல்லாமல் மிகவும் உபயோகமற்ற தீர்மானங்களை திடீரென விஷயாலோசனைக் கமிட்டியில் பிரேரேபித்து அவைகளை அக்கமிட்டியாரும் யோசனையின்றி ஏற்றுக் கொண்டு விட்டார்கள். சென்ற வருஷம் நிராகரிக்கப்பட்ட பூரண சுயேச்சைத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. அது யோசனையில்லாமலே நிறைவேற்றப்
பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று செய்த தீர் மானமும் அதேமாதிரி சிறிதும் கவலையற்ற தன்மையில் நிறைவேற்றப்
பட்டது. காரியத்தில் நடத்த முடியாது என்று அறிந்தும் இத்தகைய தீர்மானங் களை வருஷா வருஷம் காங்கிரஸ் நிறைவேற்றுவதால்தான் அது தன் கெளரவத்தை இழந்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட தீர்மானங்கள் செய்வதால் நமது பலஹீனத்தை வெளிப்படுத்துவதுடன் ஊராரெல்லாம் நம்மை நகைத்து, நமது எதிரி நம்மைக் கண்டு ஏளனஞ் செய்யுமாறு நாம் செய்து கொள்ளுகின்றோம். காங்கிரசுக்கு பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ் கரிக்கப் பூரண உரிமையுண்டு. ஆனால், இந்திய ஜனங்களின் பிரதி நிதித்துவம் வாய்ந்த பிரதம சபையாகிய அது வீண் மிரட்டல்களினால் அவ மானத்திற்கு ஆளாகக் கூடாது. இங்ஙனம் தீர ஆலோசியாமல் தீர்மானங் களை வெறும் காகித அளவில் செய்து பொதுமக்களின் தேவையையும் அபிலாஷைகளையும் கருதாமல் காங்கிரஸ் போய்க் கொண்டிருந்தால்
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
முன்னிருந்த செல்வாக்கும் பலமும் அதற்கு மீண்டும் வராது. திரும்பவும் காங்கிரஸ் அந்த உன்னத ஸ்திதிக்கு வரவேண்டுமாகில், அதன் அங்கத் தினர்கள் தேசத்தின் ஊழியர்களாய்த் தங்களைப் பாவித்துக் கொண்டு ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது வெறும் பள்ளிக்கூடப் பையன்களைப் போல்தான் அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள். அவ்வளவு தாழ்ந்த நிலைக்கு காங்கிர
சும் வந்துவிட்டது.
காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டியார் தங்கள் ஆதரவில் அகில இந்திய தேசீய கண்காட்சி என்ற பெயருடன் பிரிட்டிஷ் சாமான்களையும் அன்னிய நாட்டுச் சரக்குகளையும் விளம்பரப்படுத்த இடங்கொடுத்தது பெருந்தவ
றாகும். அதில் சுதேசி சாமான்கள் வெகு குறைவாகவேயிருந்தன. இந்தக் கூத்து பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று திட்டஞ் செய்து சுதேசியத்தை வளர்க்கும் காங்கிரசின் ஆதரவிலேயே நடக்கிறது. காங்கிரசின் அடிப்படையான நோக்கத்திற்கே அது விரோதமாகும். யோச னையின்மையும், சிரத்தைக் குறைவும், பொறுப்பற்ற தன்மையும் தான் இதற்
குக் காரணங்கள் என்று சொல்லுவேன். இது மிகவும் வெட்கக் கேடானது
என்று கூறாமலிருக்க முடியவில்லை.
குறிப்பு- அதற்கு ஏற்றாற்போல் ஸ்ரீ எஸ். சீனிவாசய்யங்கார் அவர். களும் காங்கிரஸ் தீர்மானமெல்லாம் வியாபாரத் தீர்மானமே ஒழிய உண்மை யான தீர்மானம் அல்ல என்று சொல்லிவிட்டார். இப்பொழுதாவது காங்கிர சைப் பற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களைப் பற்றியும் “குடி அரசு” எழுதிக் கொண்டுவரும் விஷயங்கள் உண்மை என்பது விளங்கவில்லையா? என்று பொதுமக்களை கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.01.1928
குடி அரசு - 1928 () 38
கனியும் சந்தேகமா?
மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்துவதை பற்றி ஆசாரச்சீர்திருத்தப் போர்வையை போர்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமான் பம்பாய் கே.நடராஜர். என்கின்ற பார்ப்பனரே வெகுதூரம் துக்கப்பட்டார் என்றால் மற்ற பிராமணர்:
கள் வருணாசிரம மகாநாடு கூட்டுவதில் நாம் ஒன்றும் அதிசயப்படவில்லை. ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் வருணாசிரமப் பிரசாரமும் மகாநாடும் நடத்த தைரியமுடையவர்களாயிருக்கிறார்கள் என்பது தெரிந்த பின்னும், பார்ப்பனர்களும் நாமும் சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டா என்றுதான் கேட்கிறோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 08.01.1928.
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
னெங்கவில்
ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். விஷயம் ஒருவாரு முடிவு பெறவேண்டும் என்று பார்ப்பனத் தலைவர்க ளுக்கு எழுதியிருக்கின்றார். இதற்கு பார்ப்பனர்கள் ஒரே பதில் சொல்லி விட்டார்கள். அதாவது "தேசம் பெரியதே ஒழிய பார்ப்பனர் பார்ப்பனரல்லா
தார் என்கிற விஷயம் பெரிதல்ல, ஆதலால் இந்த சமயத்தில் இதை எல்லாம் பேசுவது தப்பு” என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீ ஜோசப் அவர்களுக்கு இதை எழுதுவதற்கு முன்பே பார்ப்பனர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்பது தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந் திருந்தாலும் பார்ப்பனரல்லாதார். விஷயத்தில் தனக்கும் அக்கரை இருப்பதாய் காட்டிக் கொள்ளலாம் என்றா என்பது நமக்கு விளங்கவில்லை.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 08.01.1928
குடி அரசு - 1928 () 40
பதவிப் யோட்மு சுயமரியாதை அணிக்காது
சமீபத்தில் சட்ட மெம்பர் வேலை காலியாகப் போகின்றது.
ஏனென்றால் சர்.சிஃபி. ராமசாமி அய்யர் அவர்களின் 5 வருஷ காலா வதி இனி 2,3 மாதத்தில் முடிவடையப் போகின்றபடியால் அந்த ஸ்தானம் காலியாக வேண்டியது கிரமமாகும். ஆனால் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பர் வேலைபார்த்த காலத்தில் தனது உத்தியோகம் இனியும் கொஞ்சகாலம் நீடிக்க வேண்டும் என்கின்ற உத்தேசம் கொண்டே வெள்ளைக்காரருக்கு அனேக உதவி செய்திருக்கின்றார். கையினால் செய்வதானால் பதினாயிரக்கணக்கான மனிதர்க்குக் கூலி கொடுக்கதக்க வேலைகளை ஒரு சிறிது தயவு தாக்ஷண்ணியம் பாராமலும் இந்தியாவில்
மாதம் 1-க்கு லக்ஷக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் வேறு நாடு களுக்குக் கூலிகளாகப் போகிறார்கள் என்பதைக் கருதாமலும் இந்திய நாட்டுப் பணம் இந்தியர்களால் வரியாகக் கொடுத்த பணம் ஒரு சிறிதும் இந்தியாவில் தங்காமல் வெளிநாட்டிற்குப் போகின்றதே என்கின்ற கவலையில்லாமலும் கையினால் செய்வதற்குப் பதிலாக பத்து லக்ஷம் இருபது லக்ஷம் என்பதாகப் பணம் கொடுத்து வெள்ளைக்காரர்கள் நாட்டு யந்திரங்களுக்காகப் பணம் கொடுத்ததும், நம்ம நாட்டில் உற்பத்தியாகும் சுண்ணாம்பு போட்டு வேலை செய்வதனால் கோடிக்கணக்கான ரூபாய் நமது நாட்டில் தங்குமே என்றாவது அதனால் லக்ஷக்கணக்கான குடும்
பங்கள் பிழைக்குமே என்றாவது ஒரு சிறிதும் கவலையில்லாமலும் கல்மனப் பார்ப்பார் என்பது போல் கல் நெஞ்சத்துடன் பணங்களை வாரி வெளிநாட்டு சிமெண்டு சுண்ணாம்புக்குக் கொடுத்தும், இந்திய வரி கொடுப் போர்களின் பணத்தை சிக்கனமாகச் செலவு செய்யவேண்டுமே என்கின்ற பொறுப்பு ஒருசிறிதும் இல்லாமல் மேட்டூர் தேக்க வேலைக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 1000, 2000, 3000 சம்பளமுள்ள வேலைகளை தேவைக்கும் அளவுக்கும் மிஞ்சி சிருஷ்டித்துடன் அவைகளை இந்தியர்களுக்கு கொடுக்கலாம் என்கின்ற கவலையுமில்லாமல் வெள்ளைக்காரர்களுக்கே கொடுத்தும் அவர்கள் தயவு சம்பாதித்தும் சட்டசபைகளில் இதைப்பற்றி கேட்ட கேள்விகளுக்கு ஏறுமாறாய் பதில் சொல்லியும் கைப்பிடியாய்ப்
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பிடித்துக் கொண்ட சமயங்களில் ஊமைபோல் பேசாமலிருந்தும் ஜனங்கள் இவரது நாணயப் பொறுப்பில் சந்தேகமும் தீர்மானமும் கொண்டதைப் பற்றிக்
கூடலக்ஷியமில்லாமலும் இருந்து அரசாங்கத்திற்கு உதவி செய்து இன்னமும் கொஞ்சகாலம் அப்பதவியில் இருக்க பிரயத்தனப்பட்டு வருகிறார் - ஆதலால் அது காலியாவது சற்று கஷ்டமானாலும் ஆகலாம். அல்லது அவருக்கு இதை விட பெரிய உத்தியோகம் கொடுப்பதாலோ அல்லது இவ்வளவு கேவலமாக அவரது ஆட்சியானது பழிக்கப்பட்டு விட்டது என்கின்ற காரணத்தாலோ காலி ஆனாலும் ஆகலாம். அனேகமாய் காலியாகுமென்றே எண்ணுகின்றோம்.
அப்படி காலியாவதனால் அதற்கு இப்போதிருந்தே போட்டி வந்து
நிற்கின்றது.
முதலாவது பார்ப்பனர் பார்ப்பனரால்லாதார் போட்டி. அதாவது பார்ப்பனர்களில் ஸ்ரீமான்கள் டி. ரங்காச்சாரியார், ஜட்ஜி வி.வி. சீனிவாச யங்கார், சர். தேசிகாச்சாரியார், டிஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் ஆகிய நால்வர்கள். பார்ப்பனரல்லாதார்களில் 8. KV. ரெட்டி நாயுடு, சர். &.உபாத்றோ, டாக்டர் P சுப்பராயன், ஸ்ரீமான்கள் 1.௩. ராமலிங்கம் செட்டியார், வெங்கிட்டபதி ராஜு ஆகியவர்கள் - இதில் பார்ப்பனர்களிலும் அய்யர், அய்யங்கார் என்கின்ற கக்ஷிகள் இருக்கின்றன. அதாவது அந்த வேலை ஏற்பட்டது முதல் ஒரு அய்யர் ஒரு அய்யங்கார் என்று மாறி மாறி வந்திருப் பதால் இப்போது அய்யருக்கடுத்தது அய்யங்காருக்குத்தான் கொடுக்க வேண்டுமென்றும் ஏற்கெனவே மூன்று அய்யர்கள் அதாவது ஸ்ரீமான்கள்
V. கிருஷ்ணசாமி அய்யர், 25. சிவசாமி அய்யர், ராமசாமி அய்யர் ஆகிய மூன்று அய்யர்கள் ஆகிவிட்டதாலும் அய்யங்கார்களில் ?.ராஜ கோபாலாச் சாரியார், K. சீனிவாசய்யங்கார் ஆகிய இரண்டே அய்யங்கார்கள் மாத்திரம் ஆகி இருப்பதாலும இது சமயம் ஒரு அய்யங்காருக்கே கொடுக்கப்பட வேண்டுமென்கின்ற உரிமை பாராட்டப்படுகின்றது.
அதுபோலவே பார்ப்பனரல்லாதார்களாலும் அந்த உத்தியோகம் ஏற்பட்டு இதுவரை அதாவது சுமார் 18 வருஷ காலமாக அது பார்ப்பனர்: களுக்கே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதனால் நீதி இலாக்கா முழுவதும் பார்ப்பன மயமாகிவிட்டது. இந்தத் தடவை எப்படியாவது அதை ஒரு பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்க வேண்டும் என்கின்றதாக உரிமை பாராட்டப்படுகின்றது.
இதில் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் பார்ப்பனரல்லாதாரின் உண்மை பிரதிநிதி என்றும் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்திற்கு விரோதமாய் சர்க்காருக்கு அனுகூலம் செய்திருப்பதாகவும் உரிமை கொண்டாடுகின்றார்.
குடி அரசு - 1928 () 42
சர்.பாத்றோ அவர்கள் பார்ப்பனரல்லாதவர் பிரதிநிதி என்பதோடு மிதவாதி என்கின்ற முறையில் சுவற்றின் மேல் பூனையாய் இருந்தேன் என உரிமை கொண்டாடுகின்றார்.
டாக்டர் சுப்பராயன் - நான் ஜஸ்டிஸ் கட்சியில் இல்லை என்பதுடன் முதல் மந்திரியாயிருந்து சர்க்காருக்கு உதவி செய்து வருகின்றேன், சுயராஜ்ய
கட்சியைக் கொன்று விட்டேன், காங்கிரசின் அயோக்கியத் தனத்தை வெளியாக்கி விட்டேன், மந்திரி பதவியின் உபத்திரவம் பொறுக்க முடியவில்லை ஆதலால் அது எனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று உரிமை பாராட்டுகிறார்.
ஸ்ரீமான் டி.எ. ராமலிங்கம் செட்டியார் - ஆதிமுதல் கொண்டு சர்க்காருக்கு நல்ல பிள்ளையாயிருப்பதுடன் ஜஸ்டிஸ் கட்சி அதிக பலம் பெற்றுச் சர்க்காருக்கு உபத்திரவம் விளைவிக்காமல் இருக்கத்தக்கப்படி அதில் கட்சியை உண்டாக்கி அதை தோற்றுப்போகும்படிச் செய்தேன், அதோடு பார்ப்பனர்களுக்கு தாசனாகவும் இருந்து வந்திருக்கின்றேன்,
சர்.சி.பி. அய்யர் சொன்னபடி எல்லாம் ஆடினேன். அதனால் பார்ப்பன ரல்லாத சமூகத்தில் உள்ள செல்வாக்கையும் இழந்தேன். கோயமுத்தூர் மகாநாட்டில் சர்க்காரையும் கவர்னர் பிரபுவையும், சர்.சி.பி. அய்யரையும் கண்டித்தும் வைதும் செய்யப்பட்ட தீர்மானங்களுக்கு விரோதமாய் வேறு ஒரு மகாநாடு கூட்டி அவைகளை மறுத்து தீர்மானம் செய்யச் செய்தேன். அதோடு இனியும் பார்ப்பனரல்லாத கட்சி அழிய என்ன என்ன வேலை செய்யவேண்டுமோ அதெல்லாம் செய்து வருகிறேன். ஆதலால் எனக்குத் தான் அவ்வுத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும் - என்று உரிமை பாராட்டுகிறார்.
ஸ்ரீ நரசிம்மராஜுலு அவர்களோ - சுயராஜ்யக் கட்சி செத்துப் போய்விட்டது. காங்கிரசும் வேரற்றுவிட்டது, வேறு உத்தியோகம் கிடைத் தால் இதை விட்டுவிடுவதில் தடையில்லை. அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியில் பிளவுண்டாக்கினதற்கு ஒரு காரணஸ்தன், ஆகையால் எனக்கே கொடுக்க உரிமை உண்டு என்கின்றார்.
இவற்றை அனுசரித்து பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும் ஸ்ரீமான் கள் சர். ரெட்டி நாயுடுகாரும் டி.எ. செட்டியாரும் இன்னும் பலரும் சேர்ந்து ஒரு கட்சி ஏற்படுத்த வேலை செய்து வருகின்றார்கள். அதாவது (நான் பிராமின் கான்ஸ்ட்டியூஷனலிஷ்டு! பார்ப்பனரல்லாத ஒழுங்கு முறைக் காரர்கள் என்கின்ற பெயருடன் ஒரு கட்சி முயற்சித்து வருகின்றார்கள்.
இதற்காக ஒரு ஆங்கில பத்திரிகையும் ஏற்படுத்த கருதியிருப்ப தோடு ஆட்களை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றது. பிரசாரம்
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
செய்ய சில பிரசாரகர்களையும் உத்தேசித்தாய் விட்டது. இதற்கு பணம் பெரும் பகுதியும் சூணாம்பேட்டை ஜமீன்தார் தலையில் கை வைப்ப தாகவும் தீர்மானித்தாய் விட்டது. ஸ்ரீ டி.எ.ரா. செட்டியார் கையிலிருந்தும் கொஞ்சம் செலவாகித்தான் தீரும்.
இந்த நிலையில் உத்தியோகப் போட்டி காரணமாய் பார்ப்பன ரல்லாதாருக்கு விரோதமாக இப்படி ஒரு பிரசாரமும் நடக்கப் போகின்றது. ஆனால் இது அநேகமாய் 2 மாதத்திற்குள் வேகம் குறைந்துவிடும். ஏனெனில் 23 மாதத்தில் இந்த உத்தியோகம் யாருக்கு ஆகும் என்பது முடிந்துவிடும். இது நிற்க,
ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள தலைவர்களின் பொறுப்பும் நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டுதான் வருகின்றது. “ஜஸ்டிஸ்” பத்திரிகை ஆசிரியரான
ஸ்ரீமான் ராமசாமி முதலியாருக்கு காங்கிரஸ் ஆசை அதாவது தேசீய ஆசை பிடித்துவிட்டது. அந்த மேடையில் எப்படியாவது இடம் கிடைத்து
விட்டால் பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளியாக்கி இந்தியாவில் உள்ள பேச்சுக்காரர்கள் எல்லோரையும்விட நன்றாய் தனக்கும் தனது
கட்சியாருக்கும் பேசி விளம்பரம் சம்பாதிக்கலாமே என்கின்ற ஆசையே முக்கியமானதாக இருக்கின்றது. இது பார்ப்பனர்களுக்குத் தெரிந்துதான் பார்ப்பனரல்லதாரைக் கொண்டே இவருக்கு இடம் கிடைக்காமல் செய்து விட்டார்கள். ஆனாலும் எப்பொழுது ஒரு தடவை காங்கிரசு ஆசை வந்து விட்டதோ இனி அவரும் அவரைப்போல் காங்கிரஸ் ஆசை பிடித்த ஜஸ்டிஸ்
கட்சி பிரமுகர்களும் சரியானபடி பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு உதவ மாட்டார்கள் என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே ஜஸ்டிஸ் கட்சிக்குள் ( பார்ப்னரல்லாதாருக்குள்) இப்படி ஒரு கூட்டம் சீக்கிரத்தில் வலுப்படக்கூடும் என்றே நினைக்கின்றோம். பனக்கால் ராஜாவுக்கு இன்னது செய்வதென்பது விளங்காமல் விழிக்கிறார் என்று தான் தெரிய வேண்டியிருக்கிறது. எப்படி யாவது இதை விட்டுவிட்டு ஓடிப் போனால் தேவலாம் என்று அவருக்குத் தோன்றுவதாகக் காணப்படுகிறது. தலைவர் என்கிற முறையில் எல்லோருக்
கும் நல்ல பிள்ளையாக நடக்க முயல்கிறார். இக் கொள்கை பெரும்பாலும் தோல்வியைத்தான் கொடுக்கின்றது வழக்கம் என அஞ்சுகின்றோம். ஆகவே இதைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை. இப்பொழுது பார்ப் போமானாலும் சரி யார் மாறினாலும் சரி நமக்கு அதைப்பற்றி கவலை யில்லை.
எப்போதும் ஆங்கிலம் படித்தவன் உத்தியோகம் பெறுவதிலும் பணக்காரன் பதவியும் பெருமையும் பெறுவதிலும் கண்ணாயிருப்பார்களே தவிர பாமர மக்களையும், ஏழை மக்களையும் கவனிக்க மாட்டார்கள் என்பது சத்தியம்.
குடி அரசு - 1928 (1) 44
ஆகவே, அவர்கள் நம்முடன் இருந்தாலும் ஒன்றுதான் நம்மை விட்டு போனாலும் ஒன்றுதான். கூர்மையாய் பார்த்தால் இவர்கள் நம்மை விட்டு
ஒழிந்து போவதே நல்லது. ஏனெனில் இவர்கள் நமக்குள்ளாக இருந்தே இவர்கள் தங்களது சுய நலத்திற்காக ஏமாற்றி நம்மை உபயோகித்து கொள்வ தைவிட அவர்களும் வெளிப்படையான எதிரிகளாகிவிடுவதே. மேலானது. பார்ப்பனனின் உயர்ந்த ஜாதித் தன்மையும் ஆங்கிலம் படித்த உத்யோ கஸ்தனின் அதிகாரத் தன்மையும், பணக்காரனின் செல்வச்செருக்குத் தன்மை
யும் ஒரே தத்துவம் கொண்டதுதான். உண்மை விடுதலைக்கு இம்மூன்றும் சமமான எதிரியேயாகும். ஆதலால் இவற்றையெல்லாம் சேர்த்து எதிர்த்து
நிற்கும் நிலை எவ்வளவு சீக்கிரத்தில் நமக்கு ஏற்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு நமக்கு பல விதத்திலும் விடுதலைப் போர் சீக்கிரமாக முடியு மென்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் இவ்வருடத்திய உழைப்பில்
யாரும் மனம் தளர்ந்துவிடவேண்டியதில்லை. ஒற்றுமையாய் முனைந்து
நின்று வேலை செய்தால் நமது முடிவான லட்சியம் கைகூடும் என்று தைரிய
மாய்ச் சொல்லுவோம். நமது லட்சியம் நியாயமானதும், சத்தியமானது
மாயிருந்தால் எதிர்ப்புகள் ஏற்படுவதெல்லாம் நன்மைக்கனுகூலமாகவே இருக்கும் என்கின்ற விஷயத்தில் யாவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். உத்தியோக சண்டையை விடுதலைப் போராக நினைத்து ஏமாந்ததில் வெகுகாலம் வீணாய்விட்டது. ஆதலால் பொதுஜனங்கள் தேச நன்மைக்கும் மக்கள் சுய மரியாதைக்கும் சமத்துவத்திற்கும் உத்தியோக சண்டையையே பிரதானமாய் கருதாமல் சுயமரியாதைச் சண்டை என்பதாகவே தனிச்சண்டை நடத்தத் தயாராயிருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 15.011928
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
புது வருஷத்திண் யார்ப்பண ஆதிக்க நிலை
சென்னையில் காங்கிரஸ் கூட்டப்பட்டதின் பயனாக பார்ப்பனர்களின் யோக்கியதையும் அவர்களின் ஆயுதமாகிய தேசீயத்தின் யோக்கியதையும் யாவருக்கும் விளங்கியிருந்தாலும், பார்ப்பனர்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமல் தைரியமாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும், ஏனெனில் பல விதத்திலும் அவர்களுக்கு பார்ப்பனரல்லாதார் உதவி இருப்ப தாகத்தான் சொல்ல வேண்டும்.
உதாரணமாக இப்போது பார்ப்பனர்களுக்குத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க பிரசாரத்திற்கு முக்கிய உதவியாயிருக்கும் பார்ப்பனரல்லாதார்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி
செட்டியார், வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், குழந்தை, அண்ணாமலை பிள்ளை, குப்புசாமி முதலியார், கோவிந்தராஜு முதலியார், ஐயவேலு ஆகி யோர்களே ஆவார்கள். மற்றபடி ஸ்ரீமான்கள் சாமி வெங்கடாசலம் செட்டி
யார். சாமி நாயுடு, ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் முதலியோர்களிடத்தில் நம்பிக்கையில்லாத தன்மையைத் தெரிவித்து விட்டார்கள்.
ஸ்ரீமான் முத்துரங்க முதலியாரின் யோக்கியதையைப் பற்றி நாம் சொல்லவேண்டியதில்லை. பெரிய வருணாசிரம தர்மி. பார்ப்பனர்களைப் பூலோக தேவதைகளாகக் கொண்டவர். அவர் எழுதிக் கொடுத்ததைப் படிப்ப
தும் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லுவதும் தவிர வேறு எது படித்தாலும் சொன்னாலும் குரு அபசாரமென்றும் வேத நிந்தனை என்றும் நினைப்பவர். அவருக்கு மேலான பார்ப்பன பக்தன் இனி எந்த பிரம்மாவினாலும் சிருஷ்டிக்கப்பட முடியாது.
ஸ்ரீமான் ஓ.கந்தசாமி செட்டியாரோ தனது அறிவையும் உயிரையும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பாதத்தில் சமர்ப்பித்து விட்டவர். தனக்கு கந்த சாமி செட்டியார் என்கிற பெயர் கூட இருப்பது கூட கஷ்டம் என்று நினைத்
துக் கொண்டிருக்கின்றவர். ஏனெனில் பெயர் மாத்திரத்தினால் கூட அய்யங்
கார் வேறு, செட்டியார் வேறு என்று ஏற்படுகின்றதே என்று விசனப்பட்டு ராமருக்கு அனுமான் என்பது போல் சீனிவாசருக்கு கந்தசாமி என்கின்ற நிலை வேண்டுமென்று நடந்து கொண்டு வருபவர்.
குடி அரசு - 1928 () 46
இவர் ஆதியில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் இருக்கும்போதே பேசின பேச்சும் எழுதி வந்த எழுத்துக்களும் இனியும் இருந்து கொண்டுதான். இருக்கின்றது.
பண விஷயமான தகலாறுகள் ஏற்பட்டதும், அய்யங்கார் தாராளமாய் செட்டியாருக்கு உதவிபுரிய முன்வந்ததும், செட்டியாரின் பழைய நிலைமை எல்லாவற்றையும் மாற்றி புது ஜன்மம் எடுத்தவர் போல் நடந்து கொள்ள வேண்டியவராகிவிட்டார்.
செட்டியாரின் யோக்கியதைக்கு ஒரே ஒரு உதாரணம் போதும். அதா வது ஆசார சீர்திருத்த மகாநாட்டுக்கு காரியதரிசி என்கின்ற முறையில் பார்ப்ப னரல்லாதார் வாலிபர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கத்திலிருந்து ஆசார சீர்திருத்த மகாநாட்டுக்கு பிரதிநிதிகளை ஒப்புக்கொள்ளமுடியாது என்று எழுதி யிருக்கிறார். இந்த எழுத்து செட்டியாரின் நிலைமை எவ்வளவு தூரம் மாறியிருக்கின்றது என்பதை காட்டும்.
“மானம், குலம், கல்வி, வன்மை அறிவுடைமை முதலியவை பத்தும் பசிவந்திடப் பறந்து போம்” என்கின்ற ஆப்த வாக்கியத்திற்கு செட்டியார் நடத்தையைவிட வேறு உதாரணம் கிடைப்பதரிது.
இனி ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு விஷயமோ சொல்லவேண்டிய தில்லை. அவர் பத்திரிகையையும் பிரசங்கத்தையும் நடவடிக்கையையும் பார்த்து வருகின்றவர்களுக்கு புதிதாக ஒன்றும் சொல்லி தெரியப்படுத்த வேண்டிய தில்லை. அவருக்கு இரண்டே இரண்டு மந்திரம் தான். அதாவது “சமூக இயலில் பார்ப்பனர்கள் அயோக்கியர்கள்.” “அரசியலில் பார்ப்பனர்.
கள் குருவும் தலைவர்களுமானவர்கள்'” என்பதைக் கொண்டு சமயம் போல் திரும்ப வசம் வைத்துக் கொண்டிருப்பவர்.
ஸ்ரீமான் சீனிவாச அய்யங்காரருக்கு முழு விரோதியாக ஏற்பட்டு விட்டால் குடிமுழுகிப் போகுமே என்று பயந்து கொண்டு உள் உளவில் அவ ருக்கு நல்ல பிள்ளையாக இருந்து வருவதாக வாக்கு கொடுத்திருப்பவர். அவ்வாக்கை நிறைவேற்றவே ஸ்ரீமான் சண்முகம் செட்டியாரை நீக்கவும், ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு கிடைக்க இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையை அய்யங்காருக்கு சூட்டவும் ஏற்பட்டது.
ஸ்ரீஜார்ஜ் ஜோசப் அவர்கள் விஷயம் இவ்வளவு மோசமாக இல்லா விட்டாலும் பார்ப்பனர்களிடத்தில் உள்ள பயம் ஒரு சிறிதும் நீங்கவில்லை. என்பதும் வாழ்க்கைக்காக பார்ப்பனர்கள் தயவு சற்றும் வேண்டியில்லா
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
விட்டாலும் உத்தியோகம் பதவி முதலியவைகளை அவர்கள் தயவால் சம்பாதிக்கலாம் என்கின்ற ஆசை நீங்காதவர்.
மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, கோவிந்தராஜு முதலியார், அண்ணா மலை பிள்ளை, குப்புசாமி முதலியார், ஜயவேலு ஆகிய கனவான்களைப் பற்றி யாராவது ஒருவர் கூட தெரியாமலிருக்க மாட்டார்கள் என்கின்ற முடிவினால் விட்டுவிட்டோம்.
எனவே இத் தமிழ்நாடு முழுவதையும் நமது பார்ப்பனர்கள் இந்த பக்தர்களைக் கொண்டே ஆண்டு விடலாம், ஆதிக்கம் பெற்று விடலாம் என்கின்ற தைரியத்துடன் சுயேட்சைத் தீர்மானத்தையும், ராயல் கமிஷன் பஹிஷ்காரத் தீர்மானத்தையும் மகமதியர்களின் வகுப்புவாரித் தீர்மானத்தை ஒழிக்கும் தீர்மானத்தையும் பிரசாரம் செய்வதற்கும் அதன் மூலம் தாலூகா,
ஜில்லா, முனிசிபாலிட்டி, சட்டசபை, இந்திய சட்டசபை முதலியவைகளின் தேர்தல்களில் பார்ப்பனர்களையும் பார்ப்பன தாசர்களையும் வெற்றிபெறச் செய்து அமர்த்தவும், துணிந்து பிரசாரத்தில் இறங்கி விட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் பத்திரிகைகளும், அதாவது “இந்து” “சுயராஜ்யா” “டெய்லி எக்ஸ்பிரஸ்” போன்ற ஆங்கில பத்திரிகைகளும், “சுதேசமித்ரன்” “தமிழ்நாடு” “சுயராஜ்யா” “தேசபந்து” “தென்னாடு” “ஊழியன்” “ஜனமித்திரன்' போன்ற
தமிழ் தினசரி வாரப்பதிப்பு ஆகிய பல பத்திரிகைகளும் இருக்கின்றன... இதற்கு அனுகூலமாக பல இடங்களில் பார்ப்பனரல்லாதவர்களுக்குள்ளா கவே தலைவர் தகலாறுகளும், எலக்சன் தகலாறுகளும், உத்தியோகத் தகலாறு
களும், பத்திரிகை தகலாறுகளும் கொண்ட பல கட்சிகள் இருக்கின்றது. அதற்கு ஏற்றாப்போலவே இவ்வளவு தகலாறுகளிலும் ஸ்தல ஸதாபனங்க ளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் தாண்டவமாடுகின்றது. ஆகவே புது வருஷத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு பலக்குறைவு இருப்பதாக யாரும் சொல்லிவிடமுடியாது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் கட்சியார்கள் ஜாக்கிரதையாகவும் சுயநலமில்லாமலும், யோக்கியமாகவும் நடந்து கொண்டா லொழியநிவர்த்தியில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்...
குடி அரசு - கட்டுரை - 15.01.1928
குடி அரசு - 1928 () 48
நீல்சிலையைப் பற்றி காங்கிரஸ் வழக்கை
யார்க்க வந்த கரு
சகோதார்களுக்கள் நடந்த சம்பாஷணை.
தம்பி : நீல் சத்தியாக்கிரகம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்களே, அது என்ன ஆச்சுது?
அண்ணன் : அது உனக்குத்தெரியாதா. “தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி ஏறினது” போல் நீல் சிலையை உடைக்கப் போய் கிருஷ்ணசாமி அய்யர் சிலையின் மூக்கு போய் விட்டது.
தம்பி : அப்படிச் சொன்னால் எனக்கு விளங்கவில்லை, நடந்த சங்கதியைத் தெளிவாய்ச் சொல்லு,
அண்ணன்: நீல் துரை சிலையை சத்தியாக்கிரகக்காரர்கள் சம்மட்டி யால் அடிக்கப் போனார்கள், அதைப் பலாத்காரம் என்று “குடி அரசு” எழுதுச்சு. ஆனால் ஸ்ரீமான் காந்தி அதைப் பலாத்காரம் அல்ல சம்மட்டியால் உடைக்கலாம் என்று சொன்னார். அப்பவும் “குடி அரசு” அது பலாத்காரம்
தான் என்று சொல்லிற்று. அப்புறம் ஸ்ரீமான் காந்திக்கு புத்தி வந்து சம்மட்டி யால் அடிக்காதே களிமண் உருண்டையால் அடி என்று சொல்லிவிட்டு போய் விட்டார். இப்பொழுது சாமிக்கு புஷ்பத்தால் அர்ச்சனை செய்வது போல் தொண்டர்கள் நீல் சிலையை களிமண் உருண்டையால் அர்ச்சனை செய்கிறார்கள். சத்தியாக்கிரகம் நடத்த வந்த தலைவர்களுக்கெல்லாம் வரவு செலவு கணக்கு வைக்கத்தெரியாததால் வசூலான பணங்களை எலி தின்ன ஆரம்பித்து விட்டது. இதனால் ஒருவருக்கொருவர் சண்டையுண்டாச்சு.
புதுப்புதுத் தலைவர்கள் வந்தவண்ணமாயிருக்கிறார்கள். தொண்டர்களை: விட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாய்விட்டதுடன் வரவர நீல் சத்தியாக்கிரகம் அய்யர், அய்யங்கார், அம்மங்கார், பந்தலு ஆகியவர் களுக்கே சொந்தமாகிவிட்டது. “தேசீயத் தலைவர்கள்” எல்லாம் சர்க்காருக்கு பயந்து கொண்டு ஓடிவிட்டாலும், தேசீயத் தொண்டர்களுக்கு பயந்து
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கொண்டு. அதாவது நாளைக்கு இத்தொண்டர்கள் ஜெயிலுக்குப் போய் தேசபக்தர்களாய் வந்து தங்கள் மேல் பாய்ந்தார்களானால் ஆபத்து வருமே என்று நினைத்து இரகசியமாய்ப் பணம் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்.
கள். என்னசெய்தும் எண்ணைச் செலவேயொழிய பிள்ளை பிழைக்கும் வழியைக் காணோம்.
இது இப்படியிருக்க பாவம்! சிவனே என்று சமுத்திரத்தைப் பாத்து நின்று கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணசாமி அய்யருடைய சிலையின் மூக்கை. எவனோ திருட்டுத்தனமாய் அறுத்துவிட்டுப் போய்விட்டான். அந்தச் சங்கதி அப்படியே மறைபட்டுப் போய்விட்டது. அதைப்பற்றி யாரும் கவலையெடுத்
துக் கொள்ளவில்லை. பார்ப்பனர்களின் கையாளான ஸ்ரீ முத்துரங்க முதலி யாரும் மற்றும் சிலரும் பார்ப்பனரல்லாத வாலிபர்கள்தான் இப்படிச் செய்தி ருக்கவேண்டும் என்று நினைக்கும்படி சாடி சொல்லியும் கூட மூக்கறுத்த சிலைக்கு மூக்கு ஒட்ட வைக்காமல் அப்படியே கிடக்கின்றது.
தம்பி: அப்படியானால் இந்த சத்தியாக்கிரகம் எப்படித்தான் முடியும்?
அண்ணன்: அடுத்த முனிசிபல் எலக்ஷன் வரைக்கும் வீதிவீதியாய்
மீட்டிங் போட்டு பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க இதை ஒரு சாக்காக நடத்திப் பார்ப்பார்கள். அது முடிந்து அதன் பலன் என்ன ஆச்சுது என்று
தெரிந்து பிறகுதான் சொல்லக்கூடும். இப்பொழுது முடிவு கட்ட முடியாது.
தம்பி : சட்டசபை எலக்ஷனுக்குக்கூட இது உபயோகப்படுமா?
அண்ணன்: அது முனிசிபல் எலக்ஷனைப் பொறுத்திருக்கின்றது. ஏனெறால் இதில் ஜெயம் கிடைத்தால் நீட்டி வைப்பார்கள். இதில் தோல்வி கிடைத்தால் நிறுத்தி விடுவார்கள்.
தம்பி: இந்தப் புரட்டுக்காக எத்தனை பேர் ஜெயிலுக்குப் போவது? கேள்வி கேப்பாடு இல்லையா?
அண்ணன் : கேள்வி என்ன, கேப்பாடு என்ன? அவர்கள் ஜெயிலில் இருந்தால் நஷ்டம் என்ன, வெளியில் இருந்தால் லாபமென்ன? எல்லாவற்றை
யும் கடந்து உள்ளும் புறமும் ஒன்று என்று நினைக்கும் கடந்த ஞானிகள் தானே இப்போது ஜெயிலுக்குப் போயிருப்பவர்கள்..
தம்பி: ஐயோ பாவம்! அவர்கள் தாய் தகப்பன்மார்கள் வருத்தப்பட
மாட்டார்களா?
குடி அரசு - 1928 () 50
அண்ணன்: சிலரின் தாய் தகப்பன்மாருக்கு தங்களைப் பிடித்த தொல்லை ஏதோ ஒரு வழியில் ஒழிந்ததே என்ற சந்தோஷமுண்டு. சிலருக்கு அவரவர்களே தாய் தகப்பன்மார்கள். சில விஷயத்தில் வருத்தப்பட்டாலும் படலாம். ஆனாலும் இவற்றை அவ்வளவு பிரதானமாய்க் கருதுவதில்லை. ஏனென்றால் தங்கள் குழந்தைகள் உள்ளே போகும்போது தேசத்தொண்டர். களாகப் போய் ஜெயிலிலிருந்து வரும்போது தேச பக்தர், தேசத் தலைவர், தேசீயத் தலைவர் முதலிய பட்டங்களோடு வரக்கூடும் என்கின்ற தைரியத்தி னால் பொறுத்துக் கொள்வார்கள்.
தம்பி இந்த மாதிரி கணக்கு வழக்கு இல்லாமல் அதிகமான தேசபக்தர்:
கள் ஏற்பட்டுவிட்டால் இவ்வளவு பேர்களுக்கும் வேலை வேண்டாமா?
அண்ணன்: அதைப்பற்றி உனக்கென்ன கவலை? தாலூக்கா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலிய எத்தனையோ எலக்ஷன் கள் வரப்போகிறது. எத்தனையோ பேர் அகில இந்திய தலைவர்களாகப் போகிறார்கள். இன்னும் எத்தனைபேர் வாழ்வுக்கு இம்மாதிரி குட்டித்தலைவர் களும் மூட்டை முடிச்சுகளைத் தூக்குவதற்குத் தேசபக்தர்களும் தேவை யிருக்கிறது. இன்னும் எத்தனையோ ஊர்களில்
கக்ஷிப் பிரதி கக்ஷிகள் இருக்கின்றது. இதில் ஒவ்வொரு ககஷிக்கும் தேச பக்தர்கள் வேண்டும். இவைகளையெல்லாம் பார்த்தால் இன்னும் குட்டித் தலைவர்களும் தேச பக்தர்களும் வேண்டுமே ஒழிய இப்போதிருப்பது அதிகமென்று சொல்ல முடியாது. ஆனதினால் தேசபக்தர்களை உண்டாக்க இந்த சிலை ஒரு காரண மாயிருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில்
முடிந்துவிடும் என்று சொல்ல முடியாது.
தம்பி : அப்படியா? நேரமாச்சுது மற்ற சங்கதிகளை சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம். நேரமாச்சுது இதோ தெரிகிறதே காங்கிரஸ் பொருள் காகி கொட்டகை அதற்குள் நுழைந்து அதைப் பார்க்கலாம் வா.
சரி இருவரும் பொருள்காக்டி சாலைக்குள் நுழைந்து விட்டார்கள், அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டுவரும்படி வேறு ஆளை அனுப்பி விட்டு நான் வந்து விட்டேன்.
குடி அரசு - உரையாடல் - 15.01.1928
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இதுவா ராஸிக்கு சமயம்
10-01-28 தேதி சென்னை கோகலே ஹாலில் ராயன் கமிஷன் பகிஷ்கார விஷயமாய் பெசண்டம்மை, ஸ்ரீமான்கள் பி.சிவராவ், எல்.கோவிந் தராகவய்யர், எம்.ராமச்சந்திர ராவ். சி. விஜயராகவாச்சாரியார், கே.ஆர்.வெங் கிடராமய்யர் ஆகிய பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத கட்சித் தலைவர்களில்
ஸ்ரீமான் கள் பணகால் ராஜா, சர் பாத்ரோ, கிருஷ்ண நாயர் ஆகியவர்களைக் கூப்பிட்டு ராஜி பேச ஏற்பாடு செய்ததாகத் தெரிகின்றது.
இக்கூட்டத்தில் பெரிதும் அரசியல் திட்டத்தைக் குறித்தும், கமிஷன் பகிஷ்காரத்தைக் குறித்தும் பேசினார்களாம். நமது சுயமரியாதையையும் சமத்துவத்தையும், இப்பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் வரை: அவர்களுடன் கலந்து ராஜீயத்திட்டம் போடுவதோ அல்லது அவர் களுடன் கலந்து அரசியல் கிளர்ச்சி நடத்துவதோ பகிஷ்காரத்தில் இறங்கு வதோ போன்ற அறியாமை வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
சுயராஜ்யமும், அரசியல் கிளர்ச்சியும், பகிஷ்கார கூச்சலும் படித்த வர்கள் உத்தியோகம் பெறுவதற்காகவா? அல்லது ஏழைக் குடிகளைக் காப்பாற் றுவதற்காகவா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கட்டும். அவ்வுத்தியோகம் எல்லா வகுப்பாருக்கும் சரிசமான
மாய் கிடைப்பதற்கு ஒப்புக் கொள்ளாதவர்களிடம் ராஜிப் பேச்சு பேசுவதில் என்ன பலன் கிடைக்கும்? அவ்வுத்தியோகத்தின் மூலமோ அதனால்
ஏற்படும் பிரதிநிதித்துவத்தின் மூலமோ சகல ஜனங்களுக்கும் சமத்துவமும், சமூக விஷயத்தில் சம உரிமையும் கிடைக்கும்படி செய்வதற்கு உபயோகிக்க. சம்மதிக்காதவர்களிடத்தில் ராஜிப் பேச்சுபேசுவதில் என்ன பலன்? ஆகவே ஒரு பெரிய சமூகமாகிய பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் இவ்விஷயங்களைக் கவனிக்காமல் தங்களுக்கு மாத்திரமோ தங்கள் கோஷ்டிக்கு மாத்திரமோ ஏதோ சில சிறு சிறு பலன்கள் கிடைக்கக்கூடும் என்கின்ற எண்ணத்தின் பேரிலோ அல்லது கிடைக்க செய்வதாய் சில பார்ப்பனர்கள் வாக்களிக்கின்றார்கள் என்கின்ற நம்பிக்கை.
யின் பேரிலோ ராஜிப் பேச்சு பேச உட்காருவதால் மற்ற பொது ஜனங்கள். எல்லோரும் கண்மூடித்தனமாய் ஒப்புக் கொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்
பது ஏமாற்றமாய் முடியும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - 1928 () 52
தவிரவும் பார்ப்பனர்கள் போட்ட பகிஷ்கார கூச்சல்களுக்கும் அவர். களது போலித் தீர்மானங்களுக்கும் நாட்டில் மதிப்பு இல்லாமல் போனதை கண்ட வாலறுந்த நரிகள் மற்ற எல்லா நரிகளின் வாலும் அறுந்து போகும்படி செய்து விட்டால் தமக்கு மாத்திரம் தனி அவமானம் இருக்காது என்பது போன்ற எண்ணத்துடன் ஜஸ்டிஸ் கட்சியாரின் ஆதரவைப் பெற வந்திருக் கிறார்கள் என்பதை உணர்ந்து அப்பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் சிக்கி தாங்களும் வாலறுந்த கூட்டத்தில் சேராமல் இருக்கவேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 15.011928
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
காங்கிரஸ் தீர்மாணங்களும் ஸ்ரீ காந்தியும்
காங்கிரசின் யோக்கியதையைப் பற்றி ஸ்ரீ காந்தி அவர்கள் தமது அபிப்பிராயம் வெளியிட்ட பிறகுதான் தமிழ்நாட்டு மக்களில் பலருக்கு “குடி அரசு” இதுவரையில் உண்மையைத் தான் சொல்லி வந்திருக்கின்றது என்று புலப்பட்டு இருக்கின்றது. உண்மையை ஒழிக்காமல் பேசவேண்டுமானால் நமது நாட்டில் காங்கிரஸ் என்கின்ற ஒரு கொடிய யமன் போன்ற இந்த ஸ்தாபனம் இருக்கும் வரையில் ஏழை மக்கள் விடுதலை என்பதைக் கன
விலும் நினைக்க வேண்டியதில்லை என்றே கல்லிலும் எழுதி விடுவோம்.
வெள்ளைக்காரனின் கொடுமையான ஆகூவிமுறை ஏதாவது ஒரு காலத்திலாவது நமது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமானால் முதலாவது காங்கிரஸ் ஒழிந்து தீரவேண்டும். பிறகு தான் இந்து மதமும் பார்ப்பன ஆதிக்கமும் ஒழியவேண்டுமென்று சொல்லுவோம்.
ஏனெனில் இந்து மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் மாத்திரம்தான் மக்களை ஏமாற்றி பாழ்படுத்த முடியும் காங்கிரசோ அப்படியில்லை. காங்கிர.
சின் பேரால் எல்லா வகுப்பு அயோக்கியர்களும் அன்னக்காவடி களும் அநாமதேயங்களும் காலிகளும் மக்களை ஏமாற்ற வசதியிருக்கின்றது. இந்து
மதம் ஒரு மனிதன் செத்தபிறகு மோக்ஷம் (விடுதலை) கொடுப்பது என்கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டையாகும். காங்கி ரசோ உயிருடன் இருக்கும்போதே விடுதலை (மோக்ஷம்) கொடுப்பது என் கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டையாகும். பாமர மக்களும் ஏழை மக்களும் இதை வெகு சுலபத்தில் நம்பி ஏமாந்து போக தக்கபடி தந்திரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அதற்குத் தக்கபடி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி பிரசாரங்கள் செய்ய வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே ஜனங்கள் ஏமாந்து போவதில் அதிசயம் இல்லை. சென்னை காங்கிரசைப் பற்றியும், தமிழ்நாட்டு காங்கிரஸ் ஸ்தாபனங்களைப் பற்றியும் அதை நம்பிக் கொண்டு
வாழும் தலைவர்களைப் பற்றியும் “குடி அரசு” ஒரு வருஷத்திற்கு மேலாக எவ்வளவோ தூரம் பிட்டுப் பிட்டு விளக்கி எழுதி வந்தும் எத்தனை பேர். அதை லக்ஷியம் செய்தார்கள் என்று பார்த்தால் மிகக் கொஞ்சம் பேர்
குடி அரசு - 1928 () 54
என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சமீப காங்கிரசுக்கு தேர்திருவிழா என்கின்ற வேடிக்கைப் பார்ப்பவர்கள் போல திரள்திரனாக ஜனங்கள் ஓடி வந்தார்கள். காங்கிரஸ் முடிந்தபிறகு சத்தியகீர்த்தியென்று பெயர்வாங்க ஆசைப்பட்ட மகாத்மா காந்தி என்பவரும் “காங்கிரசுக்குப் போகும்போது வழியிலேயே நான் செத்துப் போவேன் என்று டாக்டர்கள் சொல்லுவதா னாலும், காங்கிரசுக்கு போய்த்தான் தீருவேன்” என்று சொன்னார். அதற்கு
15 நாளைக்கு முன்பு தான் “எனது மனச்சாக்ஷியை காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்காரருக்கு ஒப்படைத்து விட்டேன்” என்று சொன்
னார். இந்த இரண்டு வேத வாக்குகளும் எத்தனை பயித்தியக்காரர்களை மோசம் பண்ணியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் யோக்கியர்களின் மனம் பதறாமல் இருக்காது.
இவ்வளவு பணச் செலவையும் இவ்வளவு ஏமாற்றத்தையும் கொடுத்து விட்டு தானும் இருந்து காங்கிரசை நடத்தியதாக மக்கள் நினைக்கத்தகுந்த மாதிரி நடந்து கொண்ட பிறகு பொது ஜனங்கள் தாங்களாகவே காங்கிரசின் யோக்கியதையையும், தலைவர்களின் யோக்கியதையையும், தீர்மானங்களின் யோக்கியதையையும் தெரிந்து கொண்டார்கள் என்று ஏற்பட்டபிறகு, அதுவும் ஸ்ரீ சீனிவாசய்யங்காரே இது ஒரு விளையாட்டுத் தீர்மானம் என்று
ஒப்புக் கொண்டபிறகு “காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம்”, “பொறுப் பற்றவர்கள் கூட்டம்”, “யோசனையற்றவர்கள் கூட்டம்”, “முட்டாள் தனமான தீர்மானம்”, “உலகத்தார் பார்த்து சிரிக்கத் தகுந்தது”, “நேர்மையற்றது”. “நாணயமில்லாதது”. “மக்களை ஏமாற்றச் செய்தது”. “அவமானத்திற்கு இடம் தரக்கூடியது” என்று எழுதி விடுவதால் ஏற்பட்ட பயன் என்ன என்று கேட்கின்றோம்.
இனியாவது ஸ்ரீமான் காந்தி யோக்கியமாய் உண்மையை ஒப்புக் கொண்டு தைரியமாய் பொதுஜனங்களுக்கு விளங்கும்படியாக ஏதாவது சொல்ல வருகின்றாரா என்று பார்த்தால் அங்கும் சாமர்த்தியமாகவும் தந்திர மாகவும் நடந்து கொள்ளுகிறாரே ஒழிய அவர் வாக்குகளில் சத்தியம் தாண்ட வமாடுகின்றதா என்று கேட்கின்றோம். ஏன் இவர் தைரியமாய் “இந்த காங்கிர சினாலும் இதன் கொள்கைகளினாலும் இதற்கு ஏற்படக்கூடும் தலைவர்கள், அபிமானிகள் ஆகியவர்களாலும் நாட்டுக்குநலன் விளையாது. கேடுதான் விளையும்” என்று சொல்லிவிடக்கூடாதுயென்று கேட்கின்றோம்.
தவிரவும் பூரண சுயேச்சைத் தீர்மானத்தையும் பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரத் தீர்மானத்தையும், இந்து முஸ்லீம் ஒற்றுமைத் தீர்மானத்தையும் பற்றி தமது அபிப்பிராயத்தை தெரிவித்த ஸ்ரீமான் காந்தி சைமன் கமீஷன் பகிஷ்காரத் தீர்மானத்தைப்பற்றி ஏன் தனது அபிப்பிராயத்தை தெளிவாய் தெரிவித்துவிடக்கூடாது என்றும் கேட்கின்றோம்.
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இவ்வருஷ காங்கிரஸ் திட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைத் தீர்மானத்தின் மீதும் அதுபோலவே பூரண சுயேச்சைத் தீர்மானத்தின் மீதும் பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரத் தீர்மானத்தின் மீதும் இப்போது செய்ய வேண்டிய வேலை ஒன்றும் இல்லை. எனவே இப்போது காங்கிரஸ் தீர்மானப் படி காரியத்தில் செய்யப் போகும் வேலையெல்லாம் கமிஷன் பகிஷ்காரத் தீர்மானத்தின்படி தான், ஆகவே இந்த சமயம் ஸ்ரீமான் காந்தி மக்களுக்கு ஏதாவது அபிப்பிராயம் சொல்லவேண்டுமானால் இதைப்பற்றிதான் சொல்லி யாகவேண்டும். இதுதான் பிரயோஜனப்படக்கூடியதாகும். இப்படிக்கிருக்க இத்தீர்மானத்தைப் பற்றி ஒன்றுமே பேசாமல் இருந்தால் இதன் பொருள். என்ன என்று பொதுஜனங்கள் நினைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
நம்மைப் பொருத்தவரை இதற்கு காரணம் என்னமாயிருக்கும் என்று யோசிப்போமானால் பொதுஜனங்களுக்கு தான் நல்ல பிள்ளையாவதற்கு காங்கிரசையும் தீர்மானங்களையும் தலைவர்களையும் வைவதற்கும், வைவ தற்கு வேண்டி பார்ப்பனர்கள் வாயை மூடிக்கொண்டு தன்னை திருப்பி வையாமலிருப்பதற்கு லஞ்சம் கொடுத்ததற்கு ஒப்பாகும் என்றுதான் காணக் கூடியதாயிருக்கின்றது. இது எப்படியோ இருக்கட்டும், இனி கமிஷன் பகிஷ்காரத்தைப் பற்றி கவனிப்போம்.
பகிஷ்காரம்
பகிஷ்காரம் என்பது கமிஷன் மெம்பர்களுக்கு நமது அபிப்பிரா யத்தை அல்லது நமது தேவையை அல்லது நமது நிலையை தெரியப் படுத்தக் கூடாது என்பதா? அல்லது கமிஷன் முன்னால் போய் நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடாது என்பதா? என்பது நமது கேள்வி.
முதலாவது விஷயமானால் கமிஷன் தீர்மானத்தில் ஏதாவது சிறிது. பொருள் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். இரண்டாவதானால் இத்
தீர்மானம் சுத்தசுத்தமாக ஏமாற்று தீர்மானம் என்று தான் சொல்லிவிட வேண்டும். முதலாவது சொல்வார்களானால் ஸ்ரீ மோதிலால் நேருவும், ஸ்ரீமான்கள் சீனிவாச அய்யங்கார் கூட்டமும் விஜயராகவாச்சாரியாரும் முறையே அரசியல் திட்டம் தயாரித்து கமிஷன் முன் சமர்ப்பித்து விட வேண்டும் என்பதிலும் திடடம் தயாரித்து ஏற்கனவே அனுப்பியிருப்பதிலும் பகிஷ்கார வாசனை ஏதாவது இருக்கின்றதா?
தவிர இந்தியாவின் சுயமரியாதைக்காக கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பெசண்ட்டம்மைக்கும் உண்மையில் சுய மரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாம் இது சமயம் பார்லிமெண்டில் தாக்கல் செய்து இருக்கும் “காமன்வெல்த்” என்கின்ற இந்திய சுயாட்சி
குடி அரசு - 1928 () 56
மசோதாவை வாபீசு வாங்கிக்கொண்டு விடவேண்டாமா?
இந்த கமிஷனை நியமித்த பார்லிமெண்ட்டினிடம் இந்தியாவின் பெய
ரால் தனது சுயாகஷித்திட்டத்தை சமர்ப்பித்து பல்லைக்கெஞ்சிக் கொண்டிருப்
பது சுயமரியாதை ஆகிவிடுமா? தவிர பார்லிமெண்டில் எந்த தொழிலாளர் கட்சியார் இந்த பில்லுக்கு சாதகமாய் இருப்பதாக சொல்லப்படுகின்றதோ அந்த தொழிலாளர் கக்ஷியாளர்களால் தானே இக்கமிஷன் ஆதரிக்கப் படுகின்றது?
தவிர காங்கிரசாவது வேறு எந்த இந்திய அரசியல் இயக்கங்களாவது
இந்த கமிஷன் இந்தியாவிற்கு வந்துவிட்டு போய் தனது முடிவைத் தெரிவிக்கின்ற வரையிலும் எவ்வித அரசியல் திட்டமும் போடக்கூடாது என்பதாகவாவது. காத்திருக்கின்றனவா? அப்படிக்கில்லாமல் காங்கிரஸ் ஒருத் திட்டம், மிதவாதி ஒரு திட்டம், எல்லாக் கட்சியாரும் சேர்ந்து ஒரு திட்டம், ஒவ் வொரு தலைவரும் தனித்தனியாக ஒரு திட்டம் தயாரிக்க தீர்மானங்களும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது இந்தியாவின் சுயமரியாதை இந்த போலி பகிஷ்காரத் தீர்மானத்தால் மாத்திரம் எப்படி காப்பாற்றப் பட்டுவிட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
தவிர இதே பாலிமென்டினால் ஏற்பட்ட பழய சீர்திருத்தத்தை அமுல் நடத்துவதில் இவர்களும் பங்காளியாய் இருந்துகொண்டு அதில் மீ 4000, 5000,7000, பணம் பெற்றுக் கொண்டு சட்டசபை மெம்பர், இந்திய சட்டசபை
மெம்பர், ராஜாங்க சபை மெம்பர், சட்டசபை தலைவர், மந்திரி என்கின்ற உத்தியோகங்களில் இருந்து கொண்டு இந்தியாவின் சுயமரியாதை யைக் காப்பாற்ற பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்வதில் நாணயம் இருக்கும் என்று யார் நம்பக்கூடும்.
இந்நிலையில் பகிஷ்காரத்தின் பேயரால் பிரசாரம் தொடங்கியாகி விட்டது. அப்பிரசாரங்கள் ஸ்ரீமான்கள் ஓ.கந்தசாமி செட்டியார், குழந்தை, மையிலை ரத்தினசபாபதி முதலியார், பஷீர் அகமது, சீனிவாச அய்யங்காரர். பி.வரதராஜுலு, கோவிந்தராஜு முதலியார், குப்புசாமி முதலியார், முத்துரங்க முதலியார், அண்ணாமலை பிள்ளை முதலியவர்களே ஆவார்கள். இவர்கள். செய்யும் பகிஷ்கார பிரசாரத்தின் புரட்டைவெளியாக்கவும் ஒரு தக்க கமிட்டி ஏற்படுத்த வேண்டியது பொது மக்கள் கடமையாயிருக்கின்றது. அநேகர். அதில் சேர பிரியப்பட்டு தெரியப்படுத்தியும் இருக்கின்றார்கள்.
எனவே பொதுஜனங்கள் ஆங்காங்கு வரும் இரு கூட்டத்தினர். சொல்வதையும் பொறுமையாக கேட்க வேண்டும். கூட்டங்களில் கலவரம் முதலியவைகள் செய்வதால் ஒரு நன்மையும் விளைந்துவிடாது. பிரசாரக்
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
காரர்களை தாராளமாக பேசவிட்டால் தான் மறுப்புகள் பிரயோஜனப்படும். பாமர ஜனங்கள் கண்விழிக்கவும் நன்மை தீமை இன்னது என்று உணர்ந்து கொள்ளவும் இதை ஒரு தக்க சந்தர்ப்பமாய் உபயோகித்துக் கொள்ள வேண்டியது புத்திசாலித்தனமாகும்.
நமது கட்மை
தவிர மற்ற எல்லா கட்சியார் என்பவர்களும் தங்கள் தங்கள் தேவை களையும் அபிப்பிராயங்களையும் கமிஷனுக்கும் பார்லிமெண்டுக்கும் போய்ச் சேரும்படி செய்து விட்டதாலும் இனியும் செய்யப்போவதாலும் கமிஷன் மூலம் அவர்கள் அடைய வேண்டிய பலன் அடைய அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வேலை முழுதும் முடிந்து விட்டது. அது போலவே பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் நம்முடைய நிலையை எடுத்துச் சொல்ல வும் நமக்கு வேண்டியது இன்னது என்பதை தெரிவிக்கவும் அதை கமிஷன் முன்னால் தெரிவித்துக்கொள்வதோ அல்லது மற்ற கூட்டத்தாரைப் போல் திட்டம் தீர்மானித்து அனுப்பிவிடுவதோ இரண்டில் ஒன்று செய்ய வேண்டியது அவசியம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நம்மு டைய திட்டங்களெல்லாம் எல்லாமக்களுக்கும் எந்த மதம் எந்த வகுப்பானா
லும் சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்பதும் பாமர மக்களை பார்ப்பனர்களும் படித்த கூட்டங்களும் ஏமாற்றி வாழத்தக்க தாயிருக்கும் அரசியல் முறைகளை அடியோடு திருத்த வேண்டியதென்பதும் பொதுமக்களுக்குள் ஒற்றுமையைக் கெடுத்து கட்சி களையும் பிரிவுகளையும் வளர்த்துக் கொண்டு நாட்டைப் பாழ்படுத்துவதற் கனுகூலமாய் இருக்கத்தக்கதாகச் செய்யும் அரசியல் பிரதிநிதி தத்துவமுறை அடியோடு ஒழிந்து மக்கள் ஒற்றுமைக்கும் நன்மைக்கும் ஆதாரமான பிரதி
நிதி தத்துவமுறை ஏற்படுத்து வதற்கும் சாதுக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உண்மையான சுதந்திரமும் மேன்மையும் உண்டாக்கத்தக்க கொள்கை ஏற்படுத்துவதற்கும் அனுகூலமான காரியங்கள் முதலியதுகளையே அடிப் படையாகக் கொண்டு ஒரு திட்டத்ததை ஏற்பாடு செய்யவேண்டியது என்பது தான். ஆகையால் பார்ப்பனரல்லா தார்கள் கூடுமானவரை ஒன்று சேர்ந்து சீக்கிரத்தில் இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசரமாயிருக் கின்றது. படித்த பார்ப்பனரல்லாதாரும் பணக்காரப் பார்ப்பனரல்லாதாரும் இதற்கு பெரும்பாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது நமக்கு தெரிந்தது தான். ஆனாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் கட்சி என்பவைகளில் இவர்கள் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையாவது பொது ஜனங்கள் அறியும்
படி செய்து விடவேண்டியது நமது கடமையாகும். ஆதலால் அதற்காகவும் ஏதாவது ஒரு மகாநாடு கூட்ட ஏற்பட்டால் எல்லோரும் தயாராயிருக்க வேண்டிக்கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.011928
குடி அரசு - 1928 () 58
சீர்திருத்தப் புரட்டு
நமது நாட்டுப் பார்ப்பனர்களின் பொதுநலச்சேவை, சீர்திருத்தம் என்ப வைகள் அதாவது காங்கிரஸ் என்றும், சமூக சீர்திருத்தம் என்றும், ஆசாரச் சீர்திருத்தம் என்றும் இப்பார்ப்பனர்கள் பேசுவதெல்லாம் சுத்தப் புரட்டு என்றும் இவைகளை வேறொருவர் செய்வதற்கில்லாமல் ஏமாற்றி தாங்களே செய்பவர்கள் போல காட்டி மக்களை ஏமாற்றி வெறுந் தீர்மானங்களை: ஏட்டில் எழுதிவிட்டு காரியத்தில் நடவடிக்கையில் வரும் போது குறுக்கே படுத்துக் கொண்டு விதண்டாவாதம் பேசுவதே வழக்கம் என்றும் எழுதி வந்திருக்கின்றோம்.
உதாரணமாக, ஆசார திருத்தத்தின் பேரால் பம்பாயில் போய் வயிறு பிழைக்கும் ஸ்ரீ K. நடராஜன் என்கின்ற ஒரு பார்ப்பனர் இந்தியா முழுமைக்
கும் தான் ஒரு ஆசாரத்திருத்தக்காரர் என்ற விளம்பரம் பெற்றவர்... அவரது ஆசாரத் திருத்தமானது ஸ்ரீமான்கள் 11./6.ஆச்சாரி. 1.உராமச்சந்திர ராவ்.
5சத்தியமூர்த்தி முதலிய வருணாசிரம பிரசாரக்காரர்களைவிட மோச மான
திருத்தம் என்றே சொல்லுவோம். உண்மையாய் பேசவேண்டுமானால் அவர். ஆசாரத்திருத்தம் என்கின்ற பெயரால் வருணாசிரமத்தை பரப்ப வந்த சூழ்ச்சிக்கார பார்ப்பனர் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் சுயமரியாதை. இயக்கம் என்று ஒன்று தோன்றியிருப்பதும் மனுதர்ம சாஸ்திரத்தைக் குற்றம் சொல்லி கொளுத்தியதும் இவருக்கு வெகு கஷ்டமாக போய்விட்டதாம். “மனுதர்மத்தைக் கொளுத்தியதாலேயே இந்தியாவின் பழைய தர்மம் என்ப தைஅழித்துவிட முடியாது” என்று பந்தயங்கூறி மக்களை ஏய்ப்பதினா லும் சுயமரியாதை மகாநாடு என்பது கற்பனை மகாநாடு என்பதாக ஒன்று ஏற்படுத்துவதுபோல் அவ்வளவு கேவலமானது என்கிறார். கற்பில் லக்ஷியம். இல்லாத ஜாதிக்கும் சுயமரியாதையில் லக்ஷியம் இல்லாத ஜாதிக்கும் இப்படித் தோன்றுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. சன்மார்க்க சங்கம் என்றோ சன் மார்க்க மகாநாடு என்றோ ஒன்று கூட்டுவதானால் அவர்கள் சன்மார்க்க மற்றவர்கள் என்பதைக் காட்டத் தான் கூட்டுவார்கள் என்பது ஸ்ரீ நடராஜனின் கருத்துப்போலும். தவிர வைக்கம் சத்தியாக்கிரகத்தின்போது கூட இந்த பிரபு “ஆட்க்ஷேபிக்கப்பட்ட வீதியில் நடக்காமல் இருப்பதே ஆக்ஷ்பித்தவர் களுக்கு தக்க தண்டனையாகும்” என்று உபதேசம் செய்தவர்.
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தவிர, சமீபத்தில் கூடிய சென்னை ஆசாரத்திருத்த மகாநாட்டில் இவர். பேசிய பேச்சு பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவே சர்க்கரை பூசிய விஷம் போல் தந்திரமாய்ப் பேசினார். இதைப் போலவே மற்றும் பலர் பல சமயங்
களில் பேசியிருக்கின்றார்கள்.
1912ம் வருஷம் மே மாதத்தில் திருச்சியில் கூடிய மாகாண அரசியல்
மகாநாட்டில் மதசம்மந்தமான தர்ம சொத்தைக் குறித்து சட்டம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீமான்கள் எல்.ஏ. கோவிந்தராகவைய்யரும், சேஷகிரி ஐயரும் கொண்டுவந்த மசோதாவுக்கு கவர்மெண்டார் அனுமதி கொடுக்கா தது தப்பு என்றும் கண்டன தீர்மானங்கள் ஸ்ரீமான்கள் சீனிவாச அய்யங் காரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
ஆனால் அத்தீர்மானத்தை அமுலுக்கு கொண்டு வரும்போது இந்த
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், சேஷகிரி அய்யர் உள்பட பார்ப்பனர்கள் ஒரே கூட்டாக “சர்க்கார் மதத்தில் பிரவேசித்து விட்டார்கள். மதம் போச்சுது நாஸ்திகமாச்சுது” என்று சத்தம் போட்டார்கள்.
தவிர, அதே சமயத்தில் திருச்சியில் கூடிய ஆசாரதிருத்த மகாநாட்
டில் தலைமை வகித்த ஸ்ரீமான் KB ராமநாத அய்யர் என்கின்ற ஒரு பார்ப் பனர் “ஜன சமூகம் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால் கோவில்
களில் தேவதாசிகள் இருக்கும் ஏற்பாட்டை முற்றிலும் நீக்கிவிட வேண்டும்” என்று பேசி இருப்பதுடன் தேவதாசிகள் கோவிலில் உற்சவங்களிலும் பூஜை களிலும் வேலை செய்ய விடுவதினால் இடி உற்சவங்கள் பூஜைகள் இவைகளின் மகிமைகள் குறைந்து போகிறதால் அவர்கள் கோவிலில் வேலை செய்ய விடாதபடி சட்டத்தாலோ அல்லது வேறுவிதத்தாலோ தடுக்கப்படவேண்டுமென்கின்ற தீர்மானமும் ஏகமனதாய் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. 0913 @ மே. மீ£திய “பிழைக்கும் வழி” 236, 238 பக்கம்
பார்க்கி
ஆகவே இத்தீர்மானத்தை அமுலில் கொண்டுவர ஸ்ரீமதி முத்து லெக்ஷ்மி அம்மாளவர்கள் ஒரு மசோதா கொண்டுவர சர்க்காரை வேண்டிக் கொண்டதற்காக எத்தனை சாஸ்திரிகள், சர்மாக்கள், ஆச்சாரியார்கள், சத்திய மூர்த்திகள் இதற்கு விரோதமாய் “மதம் போச்சு நாஸ்திகமாச்சு'” என்றுசப்தம் போட்டு எதிர்பிரசாரம் செய்கிறார்களென்று பார்த்தால் இப்பார்ப்பனர்களும் காங்கிரசும் சீர்த்திருத்தம் செய்வதின் உண்மை விளங்கும். ஆகவே பார்ப்பனர்கள் எந்த காலத்திலும் மக்கள் சமத்துவத்திற்கோ ஒழுக்கத்திற்கோ சீர்திருத்தத்திற்கோ அனுகூலமாயிருப்பார்களென்று நினைப்பது வேப்பங்காய் இனிக்கும் என்று நினைக்கும் மடமைக்கு சமானம் என்றே சொல்லுவோம்.
குடி அரசு - 1928 () 60
மூன்று மாதத்தில் ஆகக்கூடிய வேலை மூன்று வருஷத்தில் ஆவதா யிருந்தாலும் பார்ப்பனப் பூண்டை ஒதுக்கி வைத்து வேலைபார்ப்பதே உண்மையான காரியசித்திக்கு மார்க்கமாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.01.1928.
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தொழிலானர் இயக்கம்
வெற்றி வறாத காரணம் எண்ண?
சென்னையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொழிலாளர் இயக்கம் உருப்பெறாது என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் பார்ப்பனர்களும் அரசியல் பிழைப்புக்காரர்களும் அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்திற்கு உபயோகித்துக் கொள்ளுகின்றார்கள். தொழிலாளர்கள் இயக்கம் சென்னை
யில் தோன்றிய காலம் தொட்டே நாம் இந்த அபிப்பிராயம் சொல்லி வரு கின்றோம். ஸ்ரீமதி பெசண்டம்மைக்கும், ஸ்ரீ சீனிவாசய்யங்காருக்கும், சிவராவுக்கும், சத்தியமூர்த்திக்கும், வரதராஜுலுக்கும் மற்றும் இவர்கள் போன்றோருக்கும் தொழிலாளர் சம்மந்தமோ தலைமை ஸ்தானமோ இருக்க வேண்டிய அவசியமென்ன என்று கேட்கின்றோம் இவர்கள் தொழிலாளர் களா? அல்லது தொழில்திரம் அறிந்தவர்களா? அல்லது தொழிலாளி போன்ற ஏழ்மை வாழ்க்கை வாழ்கின்றவர்களா? தேச மக்களை ஏமாற்றி தங்கள் தங்கள் யோக்கியதைக்குமேல் சம்பாதித்துக் கொண்டும் தங்கள் தேவைக்கும் அனுபோகத்திற்கும் மேலான வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் பாமர மக்களை: பலிகொடுத்து வாழும் இழிதுறையான அரசியல் வாழ்வில் இருந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படி ஏழைகளும் வாயில்லாப் பூச்சிகளுமான தொழிலாளர்களின் கஷ்டத்தை அறியக் கூடியவர்களாவார்கள்? எனவே இவர்களைத் தலைமையாகக் கொண்டு நடைபெற்றுவரும் தொழிலாளர். இயக்கங்களில் கலந்துள்ள தொழிலாள சகோதரர்கள் ஒன்று அறியாதவர். களாயிருக்க வேண்டும் அல்லது யோக் கியப் பொறுப்பற்றவர்களாயிருக்க வேண்டும் என்பதே நமதபிப்பிராயம்.எம்.எஸ்.எம். தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய் யங்காரை அத்தொழிலாள சங்கத்தார். ஏற்றுக்கொண்டதாக பத்திரிகைகளில் பார்த்தோம். அவரைப் பொதுத் தலைவராகக் கொண்ட தொழிலாளர் சங்கம் யோக்கியமானதாக இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். ஸ்ரீ சீனிவாசய்யங்காருக்கும் எம். எஸ். எம். தொழிலாளர் சங்கத்திற்கும் என்ன சம்மந்தம் அல்லது என்ன கவலை என்பதை பொதுமக்கள் யோசித்துப் பார்த்தால் தொழிலாளர்களின் சக்தியும் யோக்கியதையும் யாருக்கும் விளங்காமல் போகாது.
வேலையில்லாத் தொழிலாளர் மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு
குடி அரசு - 1928 () 62
கூட்டி அம்மகாநாட்டுக்கு ஸ்ரீமான் வரதராஜூலு தலைமை வகித்தாராம். வேலையில்லாதவர்களுக்கும் ஸ்ரீ வரதராஜுலுக்கும் என்ன சம்மந்தம். வேலையில்லாத மக்கள் பெரும்பான்மையும் பார்ப்பனரல்லாதாராகவே இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீவரதராஜுலுவின் ஆதிக்கத்தில் உள்ள தமிழ்
நாடு பத்திரிகை ஆபீசிலோ ஒருவன் இடறி விழுந்தால் பார்ப்பனர் மீதுதான் விழவேண்டும் என்கின்ற மாதிரியில் அவ்வளவு அதிகமாகப் பார்ப்பனர் களாகவே நியமித்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீமதி பெசண்டம் மைக்கும் தொழிலாளர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? நாட்டில் நூற்றுக்கு தொண்ணூறு பெயர்கள் தொழிலாளர்களாயிருக்கின்றார்கள். ஸ்ரீமதி பெசண்டம்மையார் தயாரித்து இருக்கும் சுயராஜ்யத் திட்டத்தில் பொறுப் புள்ள ஸ்தானங்களுக்கெல்லாம் மிகுந்த பணக்காரருக்கும் பெரிய படிப்பாளி களுக்கும் ஓட்டு இருக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார்களே ஒழிய தொழிலாளிக்கு ஓட்டோ பிரதிநிதித்துவமோ இருக்கும்படி எழுதவே இல்லை. தவிர ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவா சய்யங்கார் ஆகியவர்கள் தயாரித்த சுயராஜ்ஜியத் திட்டத்திலும் படிப்பாளி களுக்கு ஓட்டுரிமை அதிகமாயிருக்கின்றதே தவிர வரி செலுத்துவோருக்கு ஓட்டுரிமை சரியானபடி இல்லவே இல்லை. அதிலும் தொழிலாளிகளுக்கு
பிரதிநிதித்துவமும் இல்லை. இவற்றை அவரவர்கள் வெளியாக்கி இருக்கும் மசோதா புஸ்தகத்தைப் பார்த்தால் தெரியவரும். இவைகளையெல்லாம் அனேக தொழிலாள பிரமுகர்கள் அறிந்திருந்தும் வேண்டுமென்றே சில தனிப்பட்ட தொழிலாள நபரின் சுயநலத்திற்காக இம்மாதிரி ஆசாமிகளிடம் தங்கள் தங்கள் இயக்கங்களையும் ஸ்தாபனங்களையும் அடிமைப்படுத்தி
விட்டால் இம்மாதிரி தொழிலாளர் பொதுஜனங்களின் அனுதாபத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று கேட்கின்றோம்.
எனவே தொழிலாள சகோதரர்கள் இனியாவது இம்மாதிரி பொறுப் பற்ற தலைவர்கள் கையில் சிக்கிக் கொண்டு பொதுஜனங்கள் அனுதாபத்தை இழக்காமலும் முதலாளிகள் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்த இப்பொறுப்பற்ற தலைவர்களின் நடவடிக்கைகளை ஒரு சாக்காகச் சொல்லு வதற்கில்லாமலும் இருக்கத்தக்க வண்ணம் நடக்க முயற்சித்து தொழிலா ளர்கள் இயக்கம் வெற்றிபெறச் செய்வார்களா?
குடி அரசு - கட்டுரை - 15.01.1928.
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கமீஷண் பகிஷ்காற நாடகம்
அகில இந்திய வேலை நிறுத்தம்
ராயல் கமிஷன் பஹிஷ்கார நாடகமானது இதுவரையில் தீர்மான ரூபங்களாகவும் தட்டிப்பேச ஆள் இல்லாத இடங்களில் மேடைப் பேச்சாகவும் இருந்து வந்ததானது இப்போது அதாவது பிப்பரவரி B மூன்றாம் தேதியில் காரியத்தில் காட்டப்படப் போவதாக தெரிய வருகின்றது. அதாவது இம்மாதம் 15 தேதியில் காசியில் சர்வககஷி பகிஷ்கார மகாநாடு என்பதாக ஒன்றுகூடி அகில இந்திய ஹர்ட்டால் (வேலை நிறுத்தம்) செய்வது என்பதாக தீர்மானங்கள் செய்திருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. அதை அனுசரித்து நாடெங்கும் வேலைநிறுத்தங்கள். செய்வதற்கு வேண்டிய பிரசாரங்களும் ஆங்காங்கு நடத்த முயற்சிகளும் செய்யப்படுவதாய் காணப்படுகின்றது.
பகிஷ்கார விஷயமாய் ஒவ்வொரு ககஷிக்காரர்களும் ஒவ்வொரு தலைவர்கள் என்பவர்களும் சொல்லிவந்த விஷயங்களை மறுத்து அதில் உள்ள புரட்டுகளை வெளியாக்கியும் எத்தனையோ கட்டுரைகள் எழுதியும் சொற்பெருக்குகள் பொழிந்தும் வந்திருந்தும் இதுவரை அவற்றில் ஒன்றுக்காவது சமாதானமோ பதிலோ இல்லாமல் தங்கள் வழக்கபடி புரட்டுகளையே பாமர மக்கள் ஏமாறும்படி எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வருகிறார்களே ஒழிய மக்கள் உண்மையை அறிய இவர்கள் ஒரு
சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனாலும் பகிஷ்காரத்திற்கு அறிகுறியாக செய்யப்போகும் வேலை நிறுத்தத்தில் என்ன செய்யப்போகிறார்களென்று கவனிப்போம்.
பகிஷ்கார இயக்கங்களில் சேர்ந்த மந்திரி யாராவது அன்று சர்க்கார் வேலைபார்க்காமல் இருக்கப் போகிறார்களா? சட்டசபைமெம்பர்கள் சட்டசபை நடந்தால் போகாமல் இருக்கப் போகிறார்களா? வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போகாமல் இருக்கப் போகிறார்களா? இதைப்பற்றி ஒரு தீர்மானத்தையும் காணோம். பின்னையோவென்றால் ஜட்கா வண்டிக்காரர்கள் வண்டிக் கட்டக் கூடாது என்பதும், வெற்றிலை பாக்கு பல சரக்குக் கடைக்காரர்கள்
குடி அரசு - 1928 () 64
கடைதிறக்கக் கூடாது என்பதும் பலகார கடைக்காரர்கள் கடை வைக்கக் கூடாது என்பது போன்றவைகள்தான் பகிஷ்காரத்தை காட்ட வேலை நிறுத்தமாகப் போகின்றது. ஜட்கா வண்டிகள் நடைபெறாவிட்டால் ஜட்கா வண்டிக்காரனுக்கு நஷ்டமே யல்லாமல் தலைவர்களுக்கு என்ன நஷ்டம் ஏற்படக் கூடும்? தலைவர்கள் அவரவர்கள் வீட்டில் உள்ள மோட்டார். வண்டிகளில் உல்லாசமாய் ஊர் கோலம் வருவது தப்பாது. தவிர வெற்றிலை
பாக்குக் கடை மூடப்பட்டால் தலைவர்களுக்கு என்ன நஷ்டம் வரக்கூடும்? நாளைக்கு கடை திறக்க மாட்டார்கள் என்று சொல்லி முதல் நாளே வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைத்துக் கொள்ளுவார்களே ஒழிய அன்று
முழுவதும் வெற்றிலை பாக்கு பொடி முதலியவைகளைப் போடாமலாவது இருப்பார்களா? அதுபோலவே ஒரு சமயம் கோர்ட்டுக்குப் போகா விட்டாலும், ஒன்றா வாய்தா வாங்கிக் கொள்வார்கள் அல்லது வேறு ஒரு வனை ஆஜராகச் சொல்வார்கள். ஒன்றுக்கும் முடியாவிட்டால் கக்ஷிக் காரர்கள் கேசு கெட்டுப்போகும். மற்றபடி இவர்களுக்கு அதனால் நஷ்ட மென்ன ஏற்படக் கூடும் என்பதைக் கவனித்தால் வேலை நிறுத்தத்தில் இவர்களது தியாகம் விளங்காமல் போகாது.
இது தவிர கமிஷன் மெம்பர்களை மற்றவர்கள் பார்க்கவிடாமல் அதாவது இளவரசர் வரவை பகிஷ்கரித்தது போல் சில காலிகளைவிட்டு மறியல் செய்யக்கூடும். இதனால் இப்பெரிய மனிதர்கள் அதாவது சர். தியாகராயர் வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்தது போலும் அவரை: அடிக்க வந்தது போலும் உபத்திரவப்படலாம். மற்றபடி இவர்களுக்கு
ஏற்படும் கஷ்டமென்ன? ஆதலால் இந்த வேலை நிறுத்தமென்பது ஏழைகளை நஷ்டப்படுத்தும் மற்றொரு கெடுதியே அல்லாமல் வேறல்ல.
அல்லாமலும் இவ்வேலை நிறுத்தம் வெற்றி பெற்று கமீஷனும் இத்தலைவர்களுக்கு வணங்கி இந்தியர்கள் யாரையாவது கமீஷனில்
சேர்த்துக் கொள்ளவோ அல்லது இந்திய சுயராஜ்ஜிய நிர்ணயம் செய்ய இவர். களுக்கு பூரண அதிகாரமும் கொடுக்கவோ வசப்பட்டால் அதன் மூலம் இந்த வேலை நிறுத்தம் செய்த ஏழை மக்களுக்கு என்ன நன்மையுண்டாகும்படி இத்தலைவர்கள் திட்டம் போடக் கூடும் என்பதை யோசித்தால் இதன் புரட்டு வெளியாகாமல் போகாது.
இந்த நாட்டின் பாமர மக்களின் உண்மையான பாமரத் தன்மையை விளக்கவும் இப்பாமர மக்களின் பேரால் வயிறு பிழைக்கக் கருதியிருக்கும் அரசியல் வாழ்வுக்காரர்களின் வன்நெஞ்சத்தை விளக்கவும் இந்த பகிஷ்
காரப் புரட்டு ஒன்றே போதுமானது என்பது நமது முடிவு.
இதுவரையில் பகிஷ்காரத்திற்குக் காரணம் எல்லாம் மூன்று விஷயங் கள்தான் முக்கிய தலைவர்கள் என்பவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
என்பதை முன்னும் எழுதியிருக்கிறோம்..
1. இந்தியர்களை கமிஷனில் சேர்க்கவில்லை என்பது.
2. இந்தியாவின் சுதந்திரத்தை நிர்ணயிக்க இந்தியர்களுக்கு அதிகாரமேயொழிய பார்லிமெண்டுக்கு இல்லை என்பது.
3. ஆகையினால் இக் கமிஷன் நியமித்தது இந்தியாவின் சுய மரியாதைக்குப் பங்கம் என்பது.
இம்மூன்றையும் கூர்ந்து பார்த்தால் ஒன்றுக்கொன்று முரண்படக் கூடியது என்பது விளங்கும்.
தவிர இந்தியர்களில் யாரை நியமிப்பது என்பதும் பார்லிமெண்டாரால் இதுவரை இந்தியாவுக்கு நிர்ணயித்து வந்த சுதந்திரங்களை நாம் பகிஷ்கரித் தோமா? அல்லது இந்த சமயத்திலாவது பகிஷ்கரிக்க தயாராயிருக்கின் றோமா? என்பதும் முதல் இரண்டு விஷயங்களுக்குத் தக்க சமாதானமாகும்.
மூன்றாவதான சுயமரியாதை விஷயம் நித்திய அரசு முறை வாழ்க்கையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நமக்கு சுயமரியாதை வழங்கப் பட்டு வருகின்றதா? என்பதையும் பஞ்சாப் அட்டூழியத்தைவிட கமிஷனால் நமக்கு அதிகமான சுயமரியாதை பங்கம் வந்துவிட்டதாவென்பதையும் வங்காளத் தலைவர்களை காரணமில்லாமல் சிறையில் அடைத்து வைக்கிறார். களே அதைவிட இந்த கமிஷன் நியமனத்தால் அதிகமான சுயமரியாதைப் பங்கம் வந்துவிட்டதா? என்பதையும் யோசித்துப் பார்த்தால் மூன்றாவதான நமது சுயமரியாதையின் தத்துவம் விளங்காமல் போகாது. அன்றியும் சமூக வாழ்க்கையில் 100-க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள் நம்மை நித்திய வாழ்க்கையில் இகபர சாதனம் என்பவைகளில் நம்மை நடத்திவரும் - நாமும் ஏற்று நடந்து வரும் தத்துவங்களைவிட இந்த கமிஷன் நியமனம் சுய மரியாதைப் பங்கமானதா? என்பதை யோசித்தால் இந்த கூச்சல் யோக்கிய மானதா? என்பது விளங்கி விடும். ஆதலால் சமூக முன்னேற்றத்திற்கும் உண்மையான சுயமரியாதை தத்துவத்திற்கும் அனுகூலமான இந்த சந்தர்ப்பத்தை வேறு வழியில் திருப்பி விடுவதற்காகவும் கமிஷன் மூலமாய் நமது எதிரிகள் ஒன்று சேர்ந்து கட்டுப்பாடாய் செய்யும் இச் சூழ்ச்சிக்கு நமது மக்கள் இணங்கி ஏமாறக் கூடாது என்றே சொல்லுகின்றோம்.
பகிஷ்கார தினத்தன்று தொண்டர்கள் கடமை
வேலைநிறுத்தம் காரியத்தில் நடைபெற ஏதாவது ஏற்பாடுகள். செய்வார்களானால் உத்தியோகப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவரும் இந்த
குடி அரசு - 1928 () 66
வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாக ஆங்காங்குள்ள பாமர மக்களை மிரட்டி வேலை நிறுத்தத்திற்கு உதவி செய்யக் கூடும் என்பதும் நமக்குத்
தெரியும்.
ஆனாலும் ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இவ் வதிகாரிகளுக்குப் பயப்படாமல் ஒன்று சேர்ந்து முதல் நாளே ஒவ்வொரு கடைக்காரரிடமும், வண்டிக் காரரிடமும் போய் உண்மையைச் சொல்லி ஏமாறாமலிருக்கச் செய்ய வேண்டும். “குடி அரசு” “நவசக்தி” “திராவிடன்”
“குமரன்” முதலிய பத்திரிகையிலும் இது விஷயமாய் வந்த வியாசங்களைப் பெயர்த்து துண்டு விளம்பரங்கள் அச்சிட்டு வழங்க வேண்டும். ஆங்காங் குள்ள முக்கிய தொண்டர்கள் தங்களது விலாசத்தை உடனே தெரிவித்தால் துண்டு விளம்பரங்கள் அனுப்பிக் கொடுக்கப்படும்.
தவிர “திராவிடன்” *குடிஅரசு* “குமரன்” “நவசக்தி” போன்ற பத்திரி. கைகளுக்கு சந்தா சேர்க்க வேண்டும், பார்ப்பனப் பத்திரிகை களையும் பார்ப்பனர்களுக்கு உள் உளவாயோ அல்லது அவர்களுக்கு பயந்து கொண்டோ பகிஷ்காரக் கூச்சலில் கலந்து கூட்டத்தில் கூப்பாடு போடும் பகிஷ்காரப் புரட்டுப் பத்திரிகைகளையும் பகிஷ்கரிக்கும்படி அறி வறுத்த வேண்டும்.
குடி அரசு - தலையங்கம் - 22.011928
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ஆதிதிராவிட மகாநா௫
சென்னையில் சமீபத்தில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டைப்பற்றி பார்ப்பன பத்திரிகைகளும் அவற்றைப் பின்பற்றி வாழும் பார்ப்பன ரல்லாத சில பத்திரிகைகளும் அம்மகாநாட்டையும் மகாநாட்டு தீர்மானங் களையும் நசுக்க எண்ணங்கொண்டு அதைப் பற்றி வெகுகேவலமாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இதைப்போன்ற ஒரு கொடுமையான
காரியம் வேறு ஒன்று இருப்பதாகச் சொல்லமுடியாது.
ஆதிதிராவிட சகோதரர்கள் இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் நாலில் ஒன்று அல்லது ஐந்தில் ஒன்று என்பதாக 6, 7 கோடி மக்கள் இருந்தாலும் அதைப்பற்றி ஒரு சிறிதும் லட்சியம் இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாகக் கூட வெளியார்கள் அறிவதற்கும் இல்லாமல் சூழ்ச்சி செய்து மறைத்து வைத்து விட்டு அவர்களது சுதந்திரத்திற்காக இப்பார்ப் பனர்களும் அவர்களது அடிமைகளான பார்ப்பனரைல்லாதாரும் அவர்களது பத்திரிகைகளும் எவ்வித உதவியும் செய்யாமலிருப்பதோடு ஆதி திராவிடர்களாக ஏதாவது முயற்சித்தாலும் அதையும் கொலை செய்யப் பார்க்கின்றார்கள். என்ன கொடுமை! என்ன கொடுமை!! அதாவது சமீபத்தில் சென்னையில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் பற்றி ஒரு சிறிதும் அனுதாபம் கொள்ளாமல் அது “சர்க் கார் தாசர்கள் மகாநாடு” என்றும் “சுயநலக்காரர்கள் மகாநாடு” என்றும் *முப்பது பேர்களே” அம்மகாநாட்டில் கூடி இருந்தார்கள் என்றும் எழுதி அதன் மதிப்பைக் கெடுத்துப் பொதுமக்களுக்கு அதனிடம் துவேஷமும் வெறுப்பும் வரும்படி பிரசாரங்கள் செய்து வருகின்றன.
எனவே காங்கிரசுக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் என் போருக்கும் ஆதிதிராவிடர்களிடம் இருக்கும் அபிமானத்திற்கும் முன் னேற்றக் கவலைக்கும் இதுதான் அடையாளம் போலும்.
காங்கிரஸ் ஏற்பட்டு 42 வருடங்களாகி, சீர்திருத்தம் ஏற்பட்டு 20 வருடங்களாகியும், ஏழு கோடி ஆதிதிராவிடர்களில் ஏதாவது ஒரு ஆதி திராவிடர் ஸ்டேட் கவுன்சில் முதல் கிராம பஞ்சாயத்து வரையில் ஏதாவ
குடி அரசு - 1928 () 68
தொன்றில் பொதுப் பிரதிநிதியாய் சர்க்கார் தயவில்லாமல் உட்கார இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
இனிமேல் வரப்போகும் சீர்திருத்தங்கள் என்பதிலாவது ஸ்ரீமதி பெசண்ட் முதல் மற்றும் அநேக தலைவர்கள் என்போர்கள் ஏற்படுத்திய சுயராஜ்ய திட்டத்திலாவது ஏதாவது ஏற்பாடு செய்தார்களா? என்று கேட்கின்
றோம். நமது கொடுமையால் வண்ணான் இல்லாமல் நாவிதன் இல்லாமல் அழுக்கு உடைகளுடனும் வளர்ந்து கவிந்த மயிருடனும் பிசாசுகள்: என்பவைகளைப்போல் திரியும் ஏழை பாவங்களுக்கு ஏதாவது ஒரு வழி காட்டினார்களா? என்று கேட்கின்றோம்.
சில இடங்களில் தெருவில் நடக்கக்கூட உரிமையில்லாமலும் சில இடங்களில் மனிதன் கண்களில் தென்படக் கூட உரிமை இல்லாமலும் நரி போலவும், முயல் போலவும் வெளியில் பதுங்கித் திரிகின்றார்கள். இவற்றை நீக்க ஏதாவது ஏற்பாடு செய்தார்களா? என்று கேட்கின்றோம். கோவில்களில் உள்ள தெய்வங்கள் என்பவைகளைப் பார்க்கவோ வணங்கவோ ஏதாவது வழி செய்தார்களா? என்று கேட்கின்றோம். குடிக்கவோ பல் விளக்கவோ தண்ணீர் இல்லாமல் திண்டாடுகின்றார்களே இதற்கு ஏதாவது வழி செய்திருக் கின்றார்களா என்று கேட்கின்றோம். அன்னிய நாட்டிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சைக்காரர்களாய் நமது நாட்டுக்கு வந்தவர்களான ஆரியர்களின் சந்ததியார்கள், பஞ்சாங்கம் சொல்லி பிச்சையெடுத்து புஸ்தகம் வாங்கி முனிசிபல் விளக்கு வெளிச்சத்தில் படித்துவிட்டு, இந்தியாவை காட்டிக் கொடுத்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்து மாதம் 1-க்கு 5000, 10000 ரூபாய் வீதம் சம்பளமுள்ள உத்தியோகமும் சம்பாதனையும் ஏற்படும் படியாக காங்கிரசின் மூலம் சீர்திருத்தம் சம்பாதித்துக் கொண்ட இவர்கள், இந்த ஏழை ஆதிதிராவிடர்கள் தெருவில் நடந்து மூட்டை தூக்கிப் பிழைக்க வாவது வழிசெய்தார்களா என்று கேட்கின்றோம்.
இந்நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் சர்க்கார் தாசர்களாய் இருக்காமல் வேறு அய்யங்கார் தாசர்களாய் இருக்க முடியுமா? மற்றும் அய்யர்கள் தாசர்களாய் இருக்க முடியுமா? அவர்களது அடிமைகள் தாசர்களாய் இருக்க முடியுமா? அல்லது யார் தாசர்களாய் இருக்க வேண்டு மென்றுதான் இந்த அரசியல் வாழ்வுக்காரர்கள் விரும்புகின்றார்கள்? அல்லது எந்த இயக்கத்தின் தாசர்களாய் இருக்கும்படி விரும்புகின்றார்கள்? அந்த இயக்கம் இவர்களுக்கு இதுவரை செய்த நன்மை இன்னது என்றாவது சொல்லட்டும் என்று கேட்கின்றோம்.
நிற்க ஆதிதிராவிடர் மகாநாடானது இந்த மாகாண ஆதிதிராவிட சமூகத்திற்கு சரியான பிரதிநிதித்துவம் கொண்டதல்லவென்றும், முப்பது
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பெயர்களே இந்த மகாநாட்டுக்கு வந்திருக்கின்றார்கள் என்றும், அரசியல் பிழைப்புக்காரர்கள் எழுதி அம்மகாநாட்டை கேவலப்படுத்தி இருக்கின்
றார்கள். இதைவிட அயோக்கியத்தனமான காரியம் வேறொன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்த மகாநாடு ஆதிதிராவிடர் மகாநாடு அல்ல என்று. சொல்வதற்கு இவர்களுக்கு என்ன சுதந்திரமுண்டு என்று கேட்கின்றோம். “மித்திரன்” கூட்டத்தாரும் “தமிழ்நாடு” பத்திரிகை கூட்டத்தாரும் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஆதிதிராவிடர்கள்: மகாநாட்டை நடத்தியவர்களைவிட அதிகமான எண்ணிக்கைப் பிரதி
நிதிகள் இவர்களுக்கு எழுதினார்களா? அல்லது ஆதி திராவிட சகோதரர் களுக்குள் ஏதாவது இம்மகாநாடு விஷயத்தில் தகராறு ஏற்பட்டதா? அப்படிக்கில்லாமல் அந்த சமூகத்திற்கு சம்மந்தப்படாத ஒருவர் அதுசரியான
பிரதிநிதித்துவம் அல்ல என்று சொல்லுவது குறும்புத்தனமா? அல்லவா? என்று கேட்கின்றோம். சுமார் 500 பிரதிநிதிகளுக்கு மேல் இவ்வாதித்திராவிட மகாநாட்டுக்கு வந்திருந்ததாக ஸ்ரீமான் சின்னையா தமது மறுப்பில் எழுதியிருக்கிறார். அதை இதுவரை யாரும் மறுக்கவில்லை. இவர்கள் சொல்லுகிறபடியே 30 பெயர்கள்தான் என்பது உண்மையாயிருந்தாலும் இவர்கள் கூட்டங்களைவிட ஆதிதிராவிடக் கூட்டம் எந்த விதத்தில் குறைவுபட்டுவிட்டது? எல்லா இந்திய மிதவாதிகள் மகாநாட்டுக்கு 33 கோடி மக்களுக்கு பிரதிநிதிகளாய் வந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட் கின்றோம். எல்லா இந்தியர் அல்லது சென்னை மாகாண பத்திராதிபர்கள் மகாநாட்டிற்கு வந்த பெயர் வழிகள் எத்தனை பெயர்கள் என்று கேட்கின்
றோம். 8 கோடி முஸ்லீம்களுக்கு பிரதிநிதிகளாக காங்கிரசுக்கு வந்த முஸ்லீம்கள் எத்தனை பேர்கள் என்று கேட்கின்றோம். 7 கோடி தீண்டாதார். எனப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக காங்கிரசுக்கு வந்த எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்கின்றோம். அகில இந்திய வருணாசிரம மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் எவ்வளவு என்று கேட்கின்றோம்? வேலை நிறுத்தம் செய்யக்கூடிய அகில இந்திய எல்லா கட்சி மகாநாடு கூட்டத்திற்கு வந்தவர்கள் எத்தனை பெயர் என்று கேட்கின்றோம்? “தமிழ்நாடு பத்திரிகை ஆபீசின் அறையில் அடிக்கடி கூடும் மாகாண தேசீய மகாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எத்தனைபேர் என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதாருக்குள் ஒழுங்கு முறைக்கட்சி என்று ஸ்ரீமான்கள் டி.எ. ராமலிங்கம் செட்டியார் கே.வி. ரெட்டியார் முதலியோர் கூட்டின மகாநாடு களுக்கு அவ்வப்போது வந்த பிரதிநிதிகள் எத்தனை பேர் என்று கேட் கின்றோம். இவைகளின் பிரதிநிதித்துவங்களைப் பற்றி ஒரு சிறிதும் எண்ணிக்கைகளைக் குறிப்பிடாமல் ஆதிதிராவிடர்கள் மகாநாட்டைப்பற்றி மாத்திரம் இந்தத் தலைவர்களுக்கும் தேசப்பக்தர்களுக்கும் எண்ணிக்கை யைக் குறைத்து கேவலப்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன வந்து விட்டது என்பதை யோசித்துப் பார்ப்பதோடு இதிலிருந்தே ஆதிதிராவிடர்கள்.
குடி அரசு - 1928 () 70
விஷயத்தில் இத்தேசபக்தர், தேசிய பக்தர், தலைவர் முதலானவர்களின் கவலை என்ன என்பதையும் ஆதி திராவிடர்களுக்கு இவர்கள் பிரதிநிதிகள். ஆவார்களா? என்பதையும் பொதுமக்கள் உணர்ந்து பார்க்கும்படிவேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 22.01.1928
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
வெருக்கமுமாாண சமயம்
பார்ப்பனரல்லாதார்களைப் பொருத்தவரையில் அரசியல் நிலைமை
யிலும் சமூகயியல் நிலைமையிலும் தற்சமயத்தை பொறுப்புடன் நன்றாய் கவனித்து பார்ப்போமானால் இதை ஒரு நெருக்கடியான சமயம் என்றே சொல்ல வேண்டும். என்னவெனில் காந்தியடிகளின் தலைமையில் ஒத்துழையாமையின் போது பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செய்த தியாகத்தின் பலனாய் மாய்ந்து மறையக் கிடந்த பார்ப்பனீயமானது பல பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டதுடன் ஒத்துழையாமையும் ஒழிக்கப்பட்டு அதன் பலன் முழுவதும் பார்ப்பன
ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உபயோகப்படுத்தப்பட்டு வந்ததை அறிந்தே ஏறக்குறைய இரண்டு மூன்று வருடங்களாக சில தொண்டர்கள் எவ்வித எதிர்ப்புக்கும் பழிப்புக்கும் அஞ்சாது முனைந்து நின்று பார்ப்பன கூழ்ச்சியையும் அவர்களைப் பற்றி பிழைப்புக்கும் சில பார்ப்பனரல்லாத புல்லுருவிகளின் சுயநல சூழ்ச்சியையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பாமர மக்களுக்கு விளக்கிக் காட்டியதின் பலனாய் பார்ப்பனரல்லாதார். சமூகம் அரசியல் தலைவர்கள் என்போர்களின் புரட்டையும் தேசாபிமானம் என்னும் வயிற்றுப் பிழைப்பு ஏமாற்றலின் தன்மையையும் ஒருவாறு அறிந்து கொள்ள இடமேற்பட்டதுடன் சமூக வாழ்விலும் தங்களது தாழ்ந்த நிலை இன்னது என்று உணர்ந்து சுயமரியாதையில் கவலை கொண்டு முற்போக்கடையும் முயற்சியில் மக்களின் கவனம் திருப்பப்பட்டிருப்பதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.
இந்நிலையில் அரசியல் வாழ்வுக்காரர்களுக்கு யோக்கியதை யற்றதுடன் அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தலைகாட்டவும் வெட்கப்பட்டவர்களாகி மூலையில் ஒடுங்கிக் கிடந்ததுடன் தங்கள் வாழ்க் கையைமாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்ததும் யாவரும் அறிந்த விஷயமாகும். பொய்யும் புரட்டிற்கும் பித்தலாட்டதிற்கும் நமது நாட்டில் இனியும் கொஞ்ச காலத்திற்கு ஆயுள் இருக்கின்றது என்பதை காட்டுவதற்கு அறிகுறி ஏற்பட்டதுபோல் சைமன் கமிஷன் வருகின்றது என்கின்ற ஒரு சாக்கை வைத்துக் கொண்டு மூலையில் கிடந்தவர்கள் மறுபடியும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
குடி அரசு - 1928 () 72
உதாரணமாக சைமன் என்கின்ற பேச்சு கிளம்புவதற்கு முன் சமீப காலமாக ஸ்ரீமான்கள் வரதராஜுலுவுக்காவது அவரது நண்பர் சத்திய மூர்த்திக்காவது தமிழ்நாட்டில் வெளியில் தலைகாட்ட யோக்கியதை இருந் ததா என்பதை யோசித்துப் பார்த்தால் அரசியல் புரட்டும் அரசியல் வாழ்வும் எவ்வளவு ஆழத்தில் புதைபடக்கூடிய நிலையில் இருந்தது என்பது
விளங்கும். ஸ்ரீவரதராஜுலு எந்தக் கூட்டத்திலும் தலைகாட்டாமல் தப்பித்துக் கொள்வதும் மிஞ்சி ஏதாவது ஒரு கூட்டத்தில் தலைகாட்டித் தீரவேண்டிய அவசியம் வந்தால் முன் ஜாக்கிரதையுடன் 100, 200 ரூ. செலவுகள் செய்து துணைக்கு ஆள்களை வைத்துக் கொண்டு தலைகாட்டுவதும் ஸ்ரீமான்
சத்தியமூர்த்தி தலை தூக்கினால் “உட்கார் உட்கார்!” “மானமில்லையா வெட்க மில்லையா” என்று மானங்கெடப் பேசி அமிழ்த்தி வைப்பதும் யாவரும்
தினமும் தெரிந்து வந்த விஷயமாகும். பொதுஜனங்களும் இவர்களுடைய உபத்திரவம் ஒருவாறு ஒழிந்தது என்று நினைத்துக் கொண்டும் இருந்தார்கள்.
ஸ்ரீமான் எ. ரங்கசாமி ஐயங்காரோ சுதேசமித்திரனையே விட்டு ஓட வேண்டிய நிலைமை வந்துவிட்டதுடன் அப்பத்திரிகையும் படிப்பதற்கு முன்பாகவே சக்கரை கட்டவேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது. ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைமைக்கு அல்லது “நான் இனிமேல் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி காயத்திரி மந்திரம் ஜெபிக்க மூக்கைப் பிடித்துக் கொள்ளப் போகின்றேன்” என்று
சொல்லும் நிலைமைக்கு வந்து விட்டார்.
எனவே அரசியல் வாழ்வுப் புரட்டில் அம்மியும் குழவியும் போல் இருந்தவர்கள் இப்படி ஆகாயத்தில் பறக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்ட பிறகு மற்றவர்களான பழங் கூடையும் முறமும் குப்பையும் செத்தையும் என்ன கதிக்காளாயிருக்கும் என்பவைகளை நாம் எழுதவேண்டியதில்லை. அதில் சேர்ந்த அநேகர்கள் கூட்டம் கூட்டி ஸ்ரீமான்கள் அய்யங்காரையும் வரத ராஜுலுவையும் ரங்கசாமி அய்யங்காரையும் வைததும் இவர்கள் அவர். களுக்கு மறுபடியும் பணம் கொடுத்து தப்பித்துக் கொண்டதும் யாவரும்.
அறிந்ததாகும். தமிழ்நாடு பத்திரிகையும் அடியோடு மறையும் நிலைக்கு வரப்போவதைத் தெரிந்து அதுவும் காங்கிரசை மறைமுகமாய் அதாவது பார்ப்பனரல்லாதாரை ஏமாற்ற சுயராஜ்யக்கக்ஷி என்கின்ற பேரால் பித்த லாட்டக் கருத்துடன் அதன் அரசியல் கொள்கைகளை வைதுகொண்டும், மற்றொருபுறம் பார்ப்பனர்களை ஏமாற்ற காங்கிரசைப் புகழ்ந்து கொண்டும், தனது தைரியத்தைக் காட்ட ஒரு நாளைக்கு ஒருவரை வைது கொண்டும். மறுநாளைக்கு மன்னிப்பு கேட்டு கொண்டும் இம்மாதிரி நித்தியகண்ட மாயிருந்து வந்ததும் யாவருக்கும் தெரியும்.
மற்றொரு பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு சமூக ஆதிக்க வாழ்விலும் ஆபத்து வந்துவிட்டதென்று பயந்து ஸ்ரீமான் காந்தியை அழைத்து வந்து வருணாசிரம பிரசாரம் செய்வித்தும் அதுவும் பலிக்காமல் போனதும்.
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
யாவருக்கும் தெரியும். இந்நிலையில் அதாவது சுற்றிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்ற கானல் நெருப்புக்கு மத்தியில் சிக்கின மனிதர்கள் போல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று பெருமழை வந்ததுபோல் சைமன் கமிஷன் வரவும் அதைப் பிடித்துக் கொண்டு பாமர: மக்களை ஏய்க்க வெளியில் வந்துவிட்டார்கள். சைமன் கமிஷனால் நன்மை வரப்போகின்றதா தீமை வரப் போகின்றதா? அல்லது அதனுடன் ஒத்து ழைக்க வேண்டுமா? அல்லது பகிஷ்கரிக்க வேண்டுமா? என்பது இந்த வியாசத்தின் முக்கிய கருத்தல்ல. மற்றென்ன வென்றால் தங்களின் யோக்கி யதை பாமர மக்களுக்கு வெளியாக்கப்பட்டு பாமர மக்கள் தங்களிடமிருந்து பிரித்து ஒதுக்கப்பட்டு வெளியில் தலை காட்டுவதற்கு தங்களுக்கு மார்க்க மில்லாமல் செய்யப்பட்ட ஒரு கூட்டத்தார்கள் இன்றையத் தினம் சைமன் கமிஷன் என்னும் ஒரு போலி ஆயுதத்தைக் கொண்டு மறுபடியும் வெளியில்
வந்து பாமர மக்களுடன் கலரவும் மறுபடியும் அவர்களை ஏமாற்றி பாழாக்கி வாழவும் தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கப் போகின்றதே என்பதைப் பற்றிய கவலைதான் முக்கிய கருத்தாகும்.
இதில் உள்ள புரட்டுகளைப்பற்றி சுமார் 10, 12 வியாசங்கள் குடி
அரசிலும் 5, 6 வியாசங்கள் திராவிடனிலும், 2, 3, வியாசம் குமரன், நவசக்தி, நாடார்குல மித்திரன் முதலிய பத்திரிகைகளிலும் வெளி வந்ததுடன் சுமார்:
10,15 உபந்நியாசங்களும் நடைபெற்றிருக்கின்றன.
“வெற்றிமேல் வெற்றி” “முழக்கத்திற்கு மேல் முழக்கம்” என்று கொட்டைத் தலையங்கமிட்டு எழுதி வந்த சுதேசமித்திரனும் அவரது சிஷ்யனாகிய தமிழ்நாடும் அதன் வால்களாகிய மற்றும் சிலவும் ஏதாவது ஒரு விஷயத்திற்காவது சமாதானம் சொல்லி வெற்றியைக் காட்டிற்றா? அல்லது முழக்கத்தைக் காட்டிற்றா? என்று பார்த்தால் உலகத்தில் எவ்வளவு தைரிய மாய் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள் என்பதும் அதை நம்புவதற்கு எவ்வளவு மூடர்கள் இருக்கின்றார்கள் என்பதும் இவைகளை வேண்டு மென்றே மறைத்து வைக்க எவ்வளவு துரோகிகள் இருக்கின்றார்கள்
என்பதும் வெளியாகிவிடும். இப்படி எல்லாம் இருந்தாலும் இந்த நிலைமை
யும் கூட நமது பார்ப்பனர்களுக்கு திருப்தியை கொடுக்காமல் பயத்தை கொடுத்திருக்கின்றது என்பது நமக்குத் தெரிகின்றது. அதாவது எவ்வளவு தூரம் பார்ப்பனரல்லாதார்களிலும் சிலர் தங்கள் கூட இருப்பதாக காட்டிக் கொள்ளக்கூட சவுகரியம் இருந்தாலும் அதாவது ஸ்ரீமான்கள் முத்துரங்க
முதலியார், குழந்தை, ஷாபிமகமது சாயபு, பஷீர் ஆமது சாயபு, அமீத்கான் சாயபு, அண்ணாமலைப் பிள்ளை, வரதராஜுலு நாயுடு, குப்புசாமி முதலியார், ஓ.கந்தசாமி செட்டியார் போன்றவர்கள் தங்கள் கூட இருப்பதாகக் காட்டிக் கொள்ள சரிப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் ஒருவரிடமும் பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு நம்பிக்கையும் மரியாதையும் இல்லை என்பதை அவர்கள் நன்றாய் உணர்ந்து விட்டார்களானதால் வேறு சிலரைத்
குடி அரசு - 1928 () 74
தங்களுடன் சேர்க்கவோ அல்லது பார்ப்பனரல்லாதாருக்குள் மற்றும் சில கக்ஷிகளை உண்டாக்கவோ இதுசமயம் முயற்சி எடுத்துக் கொண்டிருக் கின்றார்கள். இதைத்தான் மிக்க நெருக்கடியான சமயம் என்று சொல்லு கின்றோம்.
அதாவது சென்ற 10, 12, வருடங்களுக்கு முன் பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்பட்டு இப்போதைப் போலவே பார்ப்பனர்களின் சூழ்ச்சியை டாக்டர். நாயர், சர்தியாகராயர், சர்.சங்கரன் நாயர் போன்றோர்கள் வெளியாக்கி பாமர ஜனங்களுக்கு பார்ப்பனர்களிடம் மதிப்பில்லாமல் செய்து விட்ட காலத்தில் எப்படி பார்ப்பனர்கள் அதாவது ஸ்ரீமான்கள் சர்.சி.பி. இராமசாமி அய்யர், எ. ரங்கசாமி ஐயங்கார், டாக்டர் ராஜன், சி.ராஜகோபாலாச்சாரி, சி. விஜய ராகவாச்சாரி முதலியோர்கள் ஸ்ரீமதி பெசண்டம்மையையும் சேர்த்துக் கொள்ள முயற்சித்து இதே ஸ்ரீமான் வரதராஜுலு போன்றோர்களை
வசமாக்கிக் கொண்டு அவர்கள் மூலமாய் மக்களை ஏமாற்றி பார்ப்பனரல்லா தாருக்குள் பிளவை உண்டு பண்ணியதோடு அப்போதும் இந்த சைமன் கமிஷன் போல் அதாவது இதுபோலவே இல்லாவிட்டாலும் இந்திய நிலைமையை விசாரிக்க பிரிட்டிஷார் முயற்சித்த காலத்தில் பார்ப்பனர்:
களுக்கு அனுகூலமாய் பார்ப்பனரல்லாதார்களிலே சிலரைப்பிடித்து இங்கு சொல்லுவித்ததல்லாமல் சில பார்ப்பனரல்லாதாருக்கு பணம் கொடுத்து சீமைக்கும் அனுப்பி தங்களுக்கு அனுகூலமாய் வேலைசெய்து கொண்டதுபோல் இப்போது ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் கோகலே ஹாலில் சில நாளைக்கு முன்பாக ஸ்ரீமதி பெசண்டும் மற்றும் சில அய்யர் களும் கூடி பனகால் ராஜா போன்றோரைக் கூப்பிட்டு ராஜி பேச முயற்சித்
ததும் அதில் நம்பிக்கையில்லாது போகவே ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், எம்.ஆர். ஆச்சாரியார் போன்ற அய்யங்கார், கொல்லங்கோடு ராஜா, சர்.கே.வி. ரெட்டி நாயுடு,டாக்டர் நடேசன், சிவஞானம் பிள்ளை முதலியவர்களை அதாவது பார்ப்பனரல்லாதார் கட்சியுடன் முரண் பாடு கொண்டிருப்பவர்களாகப் பார்த்து கூப்பிட்டு பேசி அவர்களுக்கு குல்லாயிட்டு ஒரு கட்சியையும் ஏற்படுத்திவிட்டார்கள். அக்கட்சியில் உள்ளவர்களின் நிலைமையைப்பற்றி “திராவிடன்” 26-1-28 - தி வியாழக் கிழமை தலையங்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் விஷயத்தை மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பன. சாவகாசமே கூடாது என்றவர்களும் பார்ப்பனர்கள் சமீபத்தில் வீற்றிருப்பது சுயமரியாதைக்குக் கேடு என்பவர் களும் பார்ப்பனர்களின் அட்டூழியங் களை அதிகார மதிகாரமாய் பேசினவர் களும் அவர்கள் வலையில் சிக்கி ஏமாந்தவர்களும் ஆவார்கள். அப்பார்ப் பனர்களை அதுவும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் சத்தியமூர்த்தி போன்றார்களை வானமளாவத் துதிக்கவும் புகழவும் ஏற்பட்டதானது எப்பேர்ப்பட்டவர்களுக்கும் சந்தேகத்தை கொடுப்பதாகவே இருக்கின்றது. பாமர மக்களுக்குள் இவர்களைப் போற்றிப்
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
புகழ்ந்து இவர்கள் விஷயத்தில் நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள் பலர். இருக்கின்றார்களானாலும் நேரே சரியான எதிரியிடம் அதுவும் மானம் ஈனம்: இல்லாத எதிரியிடம் சரண் புகுந்ததானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே. பெருத்த மானக்கேட்டை விளைவிப்பதாகவும் பெருத்த ஆபத்தை உண்டாக்
கக் கூடியதாகவும் இருக்கின்றது. இதில் சிலர் ஏமாந்து போய்விழுந்து விடக் கூடும் என்றே நாம் பயப்படுகின்றோம்.
சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களும் டாக்டர். நடேசன் அவர்களும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை புகழ்ந்து பேசி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். பிணக்கை தீர்த்து வைக்கும்படி அவருக்கு விண்ணப்பம் போட்டுக் கொண் டது வாஸ்தவமானால் அந்த இழிவு பல தலைமுறைக்கு மாறா தென்பதே நமது அபிப்பிராயம்.
ஏற்கனவே சுயநலத்தின் மூலமாகவும் அதிகாரப் பேராசையின் மூலமாகவும் சரியான காரணமில்லாமல் பிளவுபட்டுக் கிடக்கும் பார்ப்பன ரல்லாதார்களுக்குள் பார்ப்பன சூழ்ச்சி இப்படி ஒரு கூட்டத்தை தன் வயப்
படுத்திக் கொண்டது. 10 வருடங்களுக்கு முன் ஸ்ரீமான் வரதராஜுலு போன் றோரை தன் வயப்படுத்திக் கொண்டு செய்த உபத்திரவத்தைவிட இது அதிகமான உபத்திரவத்தைக் கொடுக்கும் என்றே பயப்படுகின்றோம். ஏனெனில் அந்தக் காலத்தில் வயப்படுத்திக் கொண்ட ஆசாமிகள் பெரும் பாலும் வெறும் ஆசாமிகளாக இருந்ததோடு பார்ப்பனர்களாலேயே அவர். களை மனிதர்களாக்கி பிறகு அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு உபத்திரவத்தை விளைவித்தார்கள். இப்போது அப்படிக்கில்லாமல் ஏற் கனவே பலவிதத்திலும் யோக்கியதையும் அந்தஸ்தும் சற்று செல்வாக்கும் பெற்றவர்களாயிருப்பதால் இவர்களால் முன்னையைவிட அதிகமான தொல்லை விளையும் என்றே மறுபடியும் சொல்லுகின்றோம்.
இந்நாட்டு மக்களாகிய பார்ப்பனரல்லாதார் சமூகமானது ஆயிரக் கணக்கான வருஷமாக பார்ப்பனர்களாலும் அவர்களது கொள்கைகளாலும்
மிருகத்திலும் கேவலமாய் மதிக்கப்பட்டு மனிதத் தன்மை இழந்து அன்னிய நாட்டார்களால் மிகக் கேவலமாக மதிக்கப்படுவதை எந்த மனிதனும் மறக்க முடியாது என்று துணிந்து கூறுகின்றோம். இப்படிப்பட்ட சமூகம் தலையெடுக் கும்போதெல்லாம் “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” என்பது போல் எமன்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் நம்மைக் கொல்வதற்கு வியாதிகளாக நம்மவர்களிலேயே சிலரிப்படி ஆளாவது நமது
சமூகத்தின் இழிநிலையைக் காட்டும் அறிகுறியென்று கூட சொல்லுவோம்.
இந்நிலையை நாம் யாரிடம் முறையிட்டுக் கொள்வது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. எனவே பார்ப்பனர்களைப் போலாவது அதாவது காங்கிரசைப் போலாவது பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒன்றுகூடி
குடி அரசு - 1928 () 76
நமக்குள்ள குறைகளை இன்னது என்று வெளியார்களுக்கோ தெரிவிக்கக் கூட யோக்யதை இல்லாத நிலையில் இருக்கின்றோம். ஆதலால் இன்னிலை மையை உணர்ந்து பார்ப்பனரல்லாத பாமர மக்களாவது ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து நமது குறைகளையும் தேவைகளையும் குறித்து ஒரு திட்டத்தை ஏற்படுத்தலாமா? என்றும் அல்லது நமது நிலைமையைப்
பற்றி மிஸ்.மேயோ அம்மையார் தயாரித்து உலகத்தாருக்கே சமர்ப்பித்
திருக்கும் “இந்தியத் தாய்” என்கின்ற புஸ்தகத்தையே நமக்கு பிரதிநிதித் துவம் என்று சொல்லி அதற்கு பரிகாரம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளலாமா? என்றும் கேட்கின்றோம்.
இனி நாம் சும்மா இருப்பது மிகவும் வெட்கக் கேடானதும் பொறுப் பற்றதுமான காரியமாகும். அன்றியும் விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விட்டுத் திருடன் வரும்போது தூங்கிவிட்ட அவ்வளவு முட்டாள்தனமானது
மாகும்.
குடி அரசு - தலையங்கம் - 29.01.1928
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
எதிர்பார்த் Py
கமிஷண் பகிஷ்காரம் ௯லிக்கு மாரமப்பணர்கணிண்
காலித்தனத்தில் முழந்தது
“காங்கிரஸ்”, “தேசீயம்”” என்பவைகளின் புரட்டுகள் வெளியாகி தலைவர்கள், தேசபக்தர்கள் என்கின்றவர்களின் சுயநலத்தையும் அயோக் கியத்தனங்களையும் பாமர மக்கள் அறிய நேர்ந்து விட்ட பிறகு வேறு வேஷத்தின் மூலம் வெளியாகலாம் என்று காத்திருந்த பல தலைவர்கள் சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற ஒரு புதிய வேஷம் போட்டுக் கொண்டு வெளியில் தலைநீட்ட முயற்சித்து வந்ததைப்பற்றி பலமுறை எழுதிவிட்டு, கடைசியாக கமிஷன் பகிஷ்காரம் காலித்தனத்தில் முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். அது போலவே சென்னை மீட்டிங் குகளும் வேலை நிறுத்தங்களும் காலித்தனத்திலேயே முடிந்து விட்டது. நேற்று சென்னையில் நடந்த சம்பவங்களைப்பற்றி சென்னைப் பத்திரிகை
யில் உள்ள விஷயங்களை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். அதைப்
பார்த்தால் ஆரம்பமுதல் முடிவுவரை காலித்தனத்திலே முடிந்திருப்பது யாவருக்கும் நன்றாய் விளங்கும். சில்லரைக்கடை வியாபாரிகளை தடி கொண்டு விரட்டிஅடித்து மூடச் செய்தும், கடை அடைக்க ஒப்பாதவர்களின் கடைக்குள் நுழைந்து சாமான்களுக்கு சேதம் விளைவித்தும், சாமான்களை கொள்ளை அடித்தும், தொந்திரை செய்தும், வண்டியில் போய்க் கொண்டி ருந்த வழிப்பிரயாணிகளை கல்லெறிந்தும், காரி உமிழ்ந்தும், துர்ப்பாஷை களால் வைதும், வருத்தியும், மோட்டாரில் போன கனவான்களை அடித்து துரத்தியும், வண்டியை கொளுத்தியும், நியாயஸ் தலங்கள் மீது கற்களை: எறிந்தும், பொது ஜனங்களுக்குத் தொல்லைகள் விளைவித்திருப்பதுடன் பலருக்கு உயிர்ச்சேதமும் உண்டாக்கத்தக்க அளவு முயற்சி எடுத்து போலீஸ் அதிகாரிகள் காலிகளின் தொல்லையை அடக்க வேண்டியும், வந்திருப்ப
தாகவும் தெரியவருகிறது.
காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாய்களை காலிகளுக்கு கண்மூடி வாரி இறைத்து வெறியுண்டாக்கி பாமர மக்களின் மேல் ஏவி விடுவதன்
மூலம் ஏற்பட்ட பலன்களே இச்சென்னைக் காலித்தனமாக முடிந்தது
குடி அரசு - 1928 () 78
என்பதை யாரும் உணராமலிருக்க முடியாது.
முகமதிய சமூகமும், ஆதி இந்து சமூகம் என்று சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமும் இக்கமிஷன் பகிஷ்காரத்தில் ஒரு சிறிதும் கலந்து கொள்ளாமல் பகிஷ்காரத்திற்கு சம்மதமற்ற தங்கள் கருத்தையும் முதலில் இருந்தே காட்டி வந்திருக்கின்றார்கள். மற்றும் பொது மக்களில் பலரும் பகிஷ்காரத்தையும் வேலை நிறுத்தத்தையும் கண்டித்து வந்திருக்கின்றார்
கள். எனவே பார்ப்பனக் கூட்டமும், படித்துவிட்டு உத்தியோகத்திற்கு அலையும் ஒரு சிறு அல்லாதார் கூட்டமும், பிழைக்க வேறு வழியில்லாமல் அரசியலையே பிழைப்புக்கு மார்க்கமாய் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிறு வயிற்றுச் சோற்று தேசபக்த கூட்டமும், கூடிக் கொண்டு சர்க்காரையும் பாமர மக்களையும் ஏமாற்றுவதற்காக செய்த காரியம்தான் இந்தப் புரட்டு என்பதையும் அவ்வப்போது தெரிவித்தும் வந்திருக்கின்றோம்.
இத்தனை ரூபாய் செலவும் இவ்வாறு சுயநலமிகளுடையவும், காலிகளினுடையவும் கூட்டுறவும் சூழ்ச்சியும் தந்திரமும் காலித்தனமும் ஒரு மனிதனையாவது ஒரு கடைக்காரனையாவது இவர்களது காரியத்தை சரி என்று ஒப்புக் கொள்ளச் செய்து தானாகவே வேலை நிறுத்தம் செய்யவோ கடை அடைக்கச் செய்யவோ முடியாமல் போய்விட்டது என்கின்ற விஷயம் இந்த வேலைநிறுத்தத் தோல்வியாலும் அளவுக்கு மீறிய காலித்தனம் செய்ய வேண்டி நேர்ந்தாலும் நன்றாய் விளங்கிவிட்டது! நன்றாய் விளங்கிவிட்டது!
இதைப் போல் இதற்கு விரோதமாக எண்ணமுள்ளவர்களும் ஒரு சிறிதாவது முயற்சி எடுத்திருப்பார்களானால் இச்சுயநலமிகளும் காலிகளும். இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போயிருக்க முடியும். ஆனால் எவரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் “நமக்கென்ன” “நமக்கென்ன” என்று கவலையீனமாகவே இருந்து விட்டார்கள். இம்மாதிரி குணம்தான் நம் இந்திய நாட்டை அடிமையாக்கி ஆங்கில அரசாங்க முறை யை அசுரத்தனமாக்கி தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து வாழும் துரோகிக் கூட்டங்களாகிய பார்ப்பனக் கூட்டத்தையும் வயிறு வளர்ப்பு தேசீயக் கூட்டத்தையும் வாழச் செய்து வருவதுடன் பாமர மக்களையும் தொழிலாளர்களையும் ஏழைகளாக்கி கஞ்சிக்கு வழியில்லாமல் நாட்டை விட்டு கூலிக்கு ஓடச் செய்து வருகின்றது. எனினும் பாமர மக்களுக்கு இது சமயம் சற்று உணர்ச்சி ததும்பியிருப்பது மாத்திரம் நன்றாய்த் தெரிகின்றது. எப்படியெனில் பகிஷ்காரத்துக்கும் கடை அடைப்புக்கும் எதிரிடையாகவும் பகிஷ்காரப் புரட்டை வெளியாக்கவும் “குடி அரசு” என்கின்ற ஒரே ஒரு பத்திரிகைதான் முனைந்து வேலை செய்தது. சுமார் ஒரு லக்ஷம் துண்டுப் பிரசுரமும் 5000 சுவர் விளம்பரமும்தான் வெளியாக்கப்பட்டது. இவைகளில் பகுதி சரிவர வினியோகிக்கப்பட்டிருக்காது என்று கூடத்தெரிய வருகிறது.
15 அல்லது 20 இடங்களில் தான் உபந்நியாசம் செய்திருக்கக்கூடும். இவை
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
களுக்கு ஏற்பட்ட செலவு 500 ரூபாய் கூட இருக்காது. சமீபகாலத்தில் ஆதி இந்து சகோதரர்களில் சிலரும் முகம்மதிய சகோதரர்களில் சிலரும் வெளிவந்து சற்று முயற்சித்தார்கள். ஆனால் அதையும் தேசீயக் காலிகள் உபத்திரவித்தார்கள். எனவே காங்கிரசு பத்திரிகைகள் முழுதும், காங்கிரஸ் ஸ்தாபனங்கள் முழுவதும், அதில் சேர்ந்த ஆட்கள் முழுவதும், மற்றும்
வக்கீல் அதிகாரமும், சட்டமெம்பர் அதிகாரமும், பார்ப்பன மாணவர் கூட்ட
மும், திருட்டுத்தனமாய் பல பார்ப்பன அதிகாரிகளும் சேர்ந்து வேலை செய்தும் 5000, 6000 ரூபாய் செலவும் ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் பணம் அனுப்பச் செய்தும் பகிஷ்கார வேலை நிறுத்த யோக்கியதை இவ்வளவு தோல்வியிலும் காலித்தனத்திலும் முடிந்ததைப் பார்க்கும் போது பொது ஜனங்களும் பாமர ஜனங்களும் எவ்வளவோ விழிப்புடனும் சுய அறிவு டனும் இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இந்த முடிவினால் நமக்கு பெருத்த நன்மையோ தீமையோ ஒன்றும் ஏற்பட்டு விட்டதாகக் கருதி எதையும் இங்கு சொல்ல வரவில்லை. தேசீயத்
தின் பெயரால் வாழும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சியை மக்கள் அறியத்
தகுந்த நிலை ஏற்பட்டு வருகின்றது என்பதற்கு அறிகுறிகள் காண்கின்றன. என்கின்ற சந்தோஷத்தையே தெரிவிக்க விரும்புகிறோம். தவிர நமது உண்மையான சுயமரியாதைக்கு நாம் செய்ய வேண்டிய பகிஷ்காரங்களும் வேலை நிறுத்தங்களும், சத்தியாக்கிரகங்களும் நமது நாட்டில் அநேகம் இருக்கின்றன. அதை நடத்த சர்க்காரும் ஒப்பார்கள். ஏனென்றால் நமக்கு உண்மை சுயமரியாதை வந்து விட்டால் நாம் (இந்திய மக்கள்) எல்லோரும். ஒன்று சேர்ந்துவிடுவோம். அப்போது இங்கு ஆங்கிலேயர்களின் ஆட்சி
முறைக்கு சாவுமணி அடித்துவிடும் - ஆதலால் அவர்கள் நமக்கு எவ்விதத்தி லும் உதவமாட்டார்கள். பின்னையோ பார்ப்பனர்களும் நமக்கு உதவாத தோடு எதிரிகளாகவும் இருப்பார்கள். ஏனென்றால் நமது சுயமரியாதை என்பது பார்ப்பனீயம் சாவதில்தான் இருக்கின்றது. அப்பார்ப்பனீயம் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒன்றா பிச்சை எடுக்க வேண்டும், அல்லது நம்மைப் போல் உடல் வேலை செய்து ஜீவிக்க வேண்டுமேயல்லாமல் இம்மாதிரி மக்களை பிரித்து வைத்து ஏமாற்றிப் பிழைக்க முடியாது.
நிற்க, நமது சுயமரியாதைக்கு மற்றொரு வகை எதிரிகள் யார் என்றால் இப்போது தேசீயத்தின் பெயரால் வாழ்கின்ற வயிற்றுப் பிழைப்பு தேச
பக்தர்கள் என்பவர்கள். அவர்களும் நமது உண்மை சுயமரியாதைக்கு உதவி செய்ய முடியாதவர்கள்.
ஏனெனில், நமக்கு உண்மை சுயமரியாதை வந்துவிட்டால் போலி தேசீயத்திற்கு இந்த நாட்டில் வேலை இருக்காது. அது சமயம், இப்பொழுது இந்த தேசியத்தின் பெயரால் பிழைத்துக் கொண்டிருக்கும் கூலி பக்தர்களுக்கு தேசீய பிழைப்பு கிடைக்காது. அவர்கள் ஒன்றா பாடுபட்டுப் பிழைக்க
குடி அரசு - 1928 () 80
வேண்டும் அல்லது கொள்ளைக்காரர்கள், திருடர்கள் முதலியவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். ஆகையால் நமது நாட்டு சுயமரியாதைக்கு மேற்கண்ட அரசாங்கமும், பார்ப்பனர்களும், தேசீய வாழ்வுக்காரர்களும் எதிரிகள் என்பதை நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உண்மை சுயமரியாதைக்காக எங்கு நாம் பகிஷ்காரமும் வேலை
நிறுத்தமும் சத்தியாக்கிரகமும் ஆரம்பித்து விடப்போகிறோமோ என்ற பயத்தாலேயே இந்தப் பார்ப்பனர்களும் தேசீய வாழ்வுக்காரர்களும் கூடி யோசித்த சூழ்ச்சியே இந்த கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தம் என்பவை களுக்கு மற்றொரு காரணம் என்பதை உணர வேண்டுகின்றோம்.
ஆதலால் சூழ்ச்சிகளாலும் இந்த உபத்திரவங்களினாலெல்லாம் நாம் ஏமாறாமலும் நமது முயற்சியை தளரவிடாமலும் தைரியமாய் இருந்து நமது சுயமரியாதைக் கிளர்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டுபோக வேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.
அன்றியும் இச்சுயமரியாதைக்கு அனுகூலமாய் இருந்தால் எந்தக் கமிஷனையும் வரவேற்போம். எந்த சாத்தானையும் வரவேற்போம். விரோதமாயிருந்தால் கடவுளையும் பகிஷ்கரிப்போம், தேசீயத்தையும் குழி தோண்டிப் புதைப்போம், உயிரையும் துறக்க முந்துவோம் என்கின்ற துணிவு ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டுமென்கின்ற கவலைதான் பகிஷ்காரப் புரட்டையும் வேலை நிறுத்த காலித்தனத்தையும் வெளியாக்க முயற்சி எடுத்துக் கொள்ளச் செய்ததே ஒழிய வேறில்லை.
குடி அரசு - தலையங்கம் - 05.02.1928
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
காலித்தனமும் வட்மு சம்மாதிக்கின்றது
சென்னை கடற்கரையில் பார்ப்பனரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ் காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில் காங்கிரசு வீரப் புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப் போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டன வென்றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பன ரல்லாதார்களை கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங்கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம் காங்கிரசுகாரர்கள் தாங்கள்தான் மிக புத்திசாலிகள் என்பதாக கருதி காலித் தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப்பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.
பஹிஷ்கார இயக்கப் பிரசாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார். ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை,
ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர்களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கிவிட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்த கதியையே அடைந்து வருகின்றன.
பிரசாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய்களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய்
முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.
ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்தவுடன் கலகம் ஏற்பட்ட தென்றும், அடிதடிகள் நடந்ததென்றும் பொதுஜனங்கள் அவரைப் பேச விடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப் படுகின்றன. பொது ஜனங்களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீ வரதராஜுலு
குடி அரசு - 1928 () 82
அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரசாரம் செய்கின்றார் என்று எழுது கின்றார், பேசுகின்றார். வாசகர்களை சுத்த முட்டாள்கள் என்றும் எதையும் நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.
அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரசாரம் செய்வதாக வைத்துக் கொண்: டாலும், பார்ப்பனப் பிரசாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலானதென்பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்கு பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?
ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலைமையும் இரங்கசாமி அய்யங்கார். காரியதரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்க
மும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை:
கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்கு தான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.
ஆனாலும் ஜனங்களின் முட்டாள் தனத்தில் அவர்களுக்கு இன்ன
மும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்கு புத்தி கற்பிப்பார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.02.1928
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
யதவுஎன் 2041 EUDI ARASU. எமக ke வில் வன்க என
த ர அ ரசு
[வல
ன் ட சா எலிய ரர எ | வழ இவ்வித வந்தன o சிக்க யஸ் முன்னம் | சக SUEIRANER, த வன் அண்ணல் [
SR காவலன்
'என்ணுய் பநிதிரிகையை
தவணைத் என்வன வ அணை பை வண்ணை பட P வ் கடனை எ ள் அக ம் e
குடி அரசு - 1928 () 84
அரசியல் நாணயம்
சைமன் கமிஷன் பகிஷ்கார வேலை நிறுத்தத்தைப்பற்றி சென்ற வாரம் எழுதியிருந்தோம். இந்த ஒரு வாரமாய் அதைப்பற்றி தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் வயிறு வளர்ப்புப் பத்திரிகைகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சற்றும் மானம் ஈனம் என்பது இல்லாமல் சரமாரியாய் பொய்யையும் புளுகுகளையும் மனங் கொண்டவரையில் எழுதி பத்திரிகைகளை நிரப்பி வருகின்றன.
பொய் எழுதுபவைகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்கிற காரணத்தாலும் பாமர ஜனங்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் பத்திரி கைகள் அதிகமாக இல்லாததினாலும் தங்கள் அக்கிரமங்களை சுலபத்தில் யாரும் கண்டு பிடித்துக் கொள்ள முடியாது என்கின்ற எண்ணம் மேலும் மேலும் இவ்விழி தொழிலில் இறங்கி வாழத் தைரியம் கொடுத்து வருகின்றது.
ஆனபோதிலும் சென்னை அரசியல் பத்திரிகைகள் என்பவை களிலேயே சில தம்மையும் அறியாமல் எழுதிவிட்ட சில குறிப்புகளை:
மாத்திரம் முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். அதாவது,
“சுதேசமித்திரனின்” 4ம் தேதி தலையங்கத்தில் குறிப்பிடுவதாவது, “__. இதுவரையில் நமக்கெட்டியிருக்கும் செய்திகளில் சென்னை ஒன்றில் தான் துர் அதிர்ஷ்டவசத்தினால் அர்த்தாலின் மகிமையைக் குறைக்கக்கூடிய
சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது... திறந்திருந்த கடைகளில் மறியல் செய்யவும் (அதாவது மூடும்படி ப-ர்) ஓடிக் கொண்டிருந்த போக்குவரத்து சாதனங்களைத் தடைப்படுத்தவும் எத்தனித்த பிறகே தொல்லை விளைய ஆரம்பித்தது யார்? காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் L. ...
“ அர்த்தாலின் கவுரவத்திற்கு குறைவு ஏற்பட்டு விட்டது. போலிஸ் கமிஷன
ரும் அவரது சகாக்களும் சீப் பிரசிடென்சி மேஜிஸ்ட்ரேட்டும் அடக்கத்து டனும் பொறுமையுடனும் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நிலைமை தவறி இருந்தால் அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்கும்” (அதாவது இதனால் சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்கு கின்றது. (LD மற்றொரு பார்ப்பன பத்திரிகையாகிய “இந்து” பத்திரிகையும் தலைவர்கள் தோற்றுவிட்டார்கள் என்றும் சரியானபடி ஏற்பாடு செய்ய வில்லை யென்றும் தங்கள் யோக்கியத்துக்கு மீறின காரியத்தைச் செய்தார்கள்
85 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
என்றும் இனி வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றும் பொருள்பட தைரியமாய் எழுதிவிட்டது. (அதாவது சர்க்கார் யோக்கியமாகவே நடந்து கொண்டார்கள் என்று விளங்குகின்றது. ப-ர்) மற்றபடி பொதுவான - பத்திரிகைகளாகிய நவசக்தி 8 தேதி பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக் கிறதாவது.. . “வெள்ளிக்கிழமை காலையில் (அதாவது அர்ட்டால் தினத்தன்று. ப-ற் வழக்கம் போல் டிராம் வண்டிகள் ஓடின. மற்ற வண்டிகள்.
அங்கும் இங்கும் ஓடின தொழில் சாலைகளில் வழக்கம் போல வேலை துவங்கப்பட்டது. பல பெரிய வாணிபக் கூடங்கள் (அதாவது வியாபாரக் கடைகள். ப-றி திறக்கப்பட்டன............ நீதி மன்றங்களில் வழக்கு வாதம் வழக்கம் போல் நடத்தப்பட்டன பச்சையப்பன் கல்லூரி தவிர மற்ற கல்லூரிகள் எல்லாம் திறக்கப்பட்டன... அன்று பத்து மணிவரை: சென்னையின் காட்சி இதுவாகும்” என்று எழுதியிருக்கின்றது.
மற்றபடி “சைபுல் இஸ்லாம்” “தாருல் இஸ்லாம்” என்கின்ற மகமதிய சமூக பத்திரிகைகள் அர்த்தால் பெரிதும் காலித்தனத்தின் உதவியைக் கொண்டே நடத்த முயற்சிக்கப்பட்டதென்றும் அப்படி இருந்தும் பெரிய தோல்வி அடைந்ததென்றும் காட்டியிருக்கின்றது. இவைகள் தவிர பல முக்கியஸ்தர்களும் காங்கிரசின் நடவடிக்கையை கண்டித்து எழுதி வருகிறார்கள். தவிர கல்கத்தாவில் நடந்த காலித்தனத்திற்கும் அளவில்லை என்பதும் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே விளங்குகின்றது. வெளியூர் களில் நடந்ததாகச் சொல்வது அவ்வளவும் 100-க்கு 99 முழுப் பொய்யாகவே
இருக்கின்றது.
உதாரணமாக கோயமுத்தூர் டவுனில் வேலை நிறுத்தம் நடந்ததாக சில அரசியல் பிழைப்பு பத்திரிகைகளில் காணப்படுகின்றன. ஆனால் அங்கு ஒரு சின்ன பார்ப்பனக் கடைகூட மூடப்படவில்லை என்றும் ஸ்ரீமான் ரத்ன சபாபதி முதலியாரை வைவதற்காக அன்று மாலையில் மாத்திரம் சில பார்ப்பனக் காலிகள் ஒரு இடத்தில் கூடி வெகு சீக்கிரத்தில் கலைந்து விட்டார்கள் என்றும் சரியான தகவல் கிடைத்திருக்கின்றது. மற்றும் பல இடங்களில் இது போலவே கூட்டங்கூடி கத்தினதல்லாமல் யாரும் லக்ஷியம் செய்யவில்லை என்றும் பல இடங்களில் காங்கிரஸ் என்ற பெயரைக்கூட வாயில் உச்சரிப்பதற்கு மனமில்லாமல் இருந்ததென்றும் சிலவிடங்களில் சில காங்கிரஸ் காலிகளுக்குத் தக்கபடி புத்தி கற்பிக்கப்பட்டதென்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பம்பாயைப் பொறுத்தவரையில் விசேஷ கலவரம் இல்லை. ஆனாலும் பகிஷ்காரத்தைவிட வரவேற்பு ஆடம்பரமே பலமாய் இருந்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே தெரிய வருகின்றது. ஆகவே இவைகளினால் எந்த விதத்தில் வேலை நிறுத்தம் வெற்றி என்று சொல்ல இடமிருக்கின்றதோ தெரியவில்லை. புதியதாக மதம் மாறியவர் களுக்கு மதவேஷம் அதிகம் என்பதுபோல் “தமிழ்நாடு” பத்திரிகையும் அதன் ஆசிரியர் ஸ்ரீவரதராஜுலுவும் மாத்திரம் இவ்வளவையும் லக்ஷியம்
குடி அரசு - 1928 () 86
செய்யாமல் ஒரே அடியாய் புளுகுவதுடன் உண்மையை மறந்தாப் போல் வெளியிட்ட மித்திரன் மீதும் காய்ந்து விழுகின்றது. ஸ்ரீ வரதராஜுலுவின் பத்திரிகைப்படிக்கும் அவரது பேச்சுப்படிக்கும் பார்த்தாலே காலிகள் என்பவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் வேலை செய்தவர்களா பிரதிகூலமாய் வேலை செய்தவர்களா என்பது நன்றாய் விளங்கும். மோட்டார் பஸ்கள் மீதிலும் டிராம் வண்டிகள் மீதும் தெருவில் மோட்டார். வண்டியில் போனவர்கள் மீதும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்கள் மீதும் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைக்காரர்கள் மீதும் கல் எறியப்பட்டதாகவும்
காரி உமிழ்ந்ததாகவும் வாயில் வந்தபடி இழிமொழிகளால் பேசியதாகவும் ஸ்ரீவரதராஜுலு பத்திரிகை உள்பட எல்லா பத்திரிகையிலும் காணப் படுகின்றது. குறிப்பாய் வேண்டுமானால் ஆரிசன் கம்பெனி கொள்ளை. யிடப்பட்டதும் சர்க்கார் வக்கீலின் மோட்டார் வண்டி கொளுத்தப்பட்டதுமே போதுமானதாகும். மற்றும் ஐகோர்ட்டில் கலகம் செய்ததும் கோர்ட்டுக்கு போன வக்கீல்களை துன்புறுத்தியதும் இன்னும் மேலான சாட்சியமாகும். இந்த நிலையில் காலிகள் காங்கிரஸ்காரர்களா அல்லது பகிஷ்காரத்திற்கு எதிரிடையானவர்களா என்பதை யோசித்தால் முழுமூடனுக்கும் விளங்காமல் போகாது. தவிர ஸ்ரீவரதராஜுலு மோட்டார் மூலம் வேலை நிறுத்தத்தை நடத்த சென்னை முழுதும் சுற்றினதாகவும் அடிக்கடி தன் வண்டியை பலர். வந்து மறித்ததாகவும் தான் வரதராஜுலு என்று தெரிவித்தவுடன் தன்னை காலிகள் விட்டு விட்டு போய் விட்டதாகவும் தானே பல இடங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். இதனால் ஸ்ரீ வரதராஜுலுக்கு ஒரு மோட்டார் இருப்பதாக பொது ஜனங்களுக்கு தெரியப்படுத்த இடமேற்பட்டாலும் இவரை வழிமறித்த காலிகள் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையானவர் களாயிருந்திருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை சும்மா விட்டிருப்பார்களா என்பது யாருக்கும் விளங்காமல் போகாது. ஆகவே வரதராஜுலு என்று தெரிந்த உடன் சும்மா விட்டு விட்டார்கள் என்பதாலேயே அக்காலிகள் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
எந்த இடத்திலாவது மூடியிருந்த கடைக்காரனையாவது நிறுத்தி விட்ட எந்த வண்டிக்காரனையாவது திறக்கும்படியோ ஓட்டும்படியோ யாராவது தொந்திரவு செய்ததாக ஏற்பட்டால் அது மாத்திரம் வேலை நிறுத்தத்திற்கு விரோதமான கூட்டத்தாரின் செய்கை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் தங்களை “தலைவர்கள்” “தலைவர்கள்” என்று தாங்களே. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு பட்டம் சூட்டிக் கொண்டு காசுபணத்தை செலவு செய்து காலித்தனத்தை வளர்த்துவிட்டு அவமானமும் தோல்வியும் ஏற்பட்ட பிறகு மேலும் மேலும் அவமானம் அடையத்தக்க
மாதிரி முட்டாள்தனமாக ஊர் அறிந்த உண்மையை மறைத்து மறைத்து கீழே
விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது தலைமைத் தனத்துக்கு அழகா? அல்லது மனுஷத்தனத்திற்கு அழகா என்று கேட்கின்றோம். யோக்கியமானவர்களாயிருந்தால் ஆண்மையுள்ளவர்களாயிருந்தால் கடுகள.
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
வாவது சுயமரியாதையில் கவலை உடையவர்களாயிருந்தால் உண்மையை ஒப்புக் கொண்டு தவறிப் போனதற்கு உண்மையான காரணத் தைக் காட்டி விட்டு மேலால் நடக்க வேண்டியதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படிக்
கில்லாமல் நடந்த தப்பிதங்களை மறைத்து விட்டு மேலால் நடக்க வேண்டிய காரியங்களையும் பயந்து கொண்டு நழுவ விட்டுவிட்டு “அது அவன் தப்பு இது இவன் தப்பு” என்று ஜவாப் தாரித்தனத்தை எதிரிகளின் மீது போடுவது பேடித்தனமும் கடைந் தெடுத்த மானங்கெட்டதனமும் ஆகுமா அல்லவா? என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்களோ வேலை நிறுத்தம் ஆரம்பித்த வீரப்புவிகளோ ஆண்பிள்ளைகளாய் இருந்தால் “போலீசார் வேலை நிறுத்தத்தை ஒழுங்காய்
நடத்திக் கொடுக்கவில்லை” என்று சொல்வதற்கு கொஞ்சமாவது வெட்கப் பட்டிருக்கமாட்டார்களா என்று கேட்கின்றோம். “போலீசார் யோக்கியமாய் பொறுமையாய் புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டார்கள்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் போலீசார் தக்க பந்தோபஸ்து எடுத்துக் கொள்ள வில்லை என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. தவிர “17-தேதி வேலை நிறுத்தத்திற்காக ஊர்வலத்தையும் மீட்டிங்குகளையும் விளம்பரங்களையும் நாங்களாகவே
நிறுத்தி விட்டோம் என்று ஸ்ரீவரதராஜுலு சொல்லுகிறார், எழுதுகிறார். ஏன் நிறுத்திவிட்டார் என்று கேட்கின்றோம். ஒன்றா சர்க்கார் 144 போடப்போகும் விஷயம் தெரிந்து பயந்து கொண்டு பயங்காளித்தனமாய் நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது இவைகளால் தான் கலவரங்கள் ஏற்பட்டது என்று முடிவு செய்து நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது வெளியில் தலைகாட்டுவதற்கும். மீட்டிங்கு போடுவதற்கும் தங்களுக்கு யோக்கியதையும் செல்வாக்கும்
அற்றுப் போய் விட்டது என்பதை நன்றாய் அறிந்து நிறுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரணம் என்னவாயிருக்கக்கூடும்? என்று கேட்கின்றோம்.
ஒரு சமயம் ஜனங்களுக்கு போதுமான உணர்ச்சி வந்துவிட்டது. யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே கடை மூடிவிடுவார்கள்' என்கின்ற நம்பிக்கை இருக்குமானால் “கடை அடைத்தவர்கள் மீதும். அடைக்கும்படி கட்டாயப்படுத்துகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்” என்று சென்னையில் தண்டூரா அடித்ததை பார்த்துக் கொண்டும் 144 உத்திரவு போட்டதை வாங்கிக் கொண்டும் ஜனங்களுக்கு தைரியம் சொல்லாமலும் உத்திரவுக்கு பயப்படாமலும் வெளியில் வந்து வேலை செய்யாமல் “நாங்கள் 144-க்கு விரோதமாய் யாதொரு வேலையும் செய்வதில்லை என்று முன்னமேயே தீர்மானித்து விட்டோம்” என்று சொல்லுவதில் எவ்வளவு நாணயப் பொறுப்பும் ஆண்மையும் இருக்கின்றது என்பதைப் பாருங்கள். இது எது போல் இருக்கின்றதென்றால் ஒரு திருடன் தென்னை மரத்தில் தேங்காய் திருட ஏறியபோது, மரக்காரன் பார்த்துக்
குடி அரசு - 1928 () 88
கொண்டதை உணர்ந்து திருடன் கீழே இறங்கி வரும்போது, மரக்காரன் திருடனைப் பார்த்து எதற்காக மரத்தின் மீது ஏறினாய் என்று கேட்டதற்கு திருடன் கன்றுகுட்டிக்குப் புல்லுப் பிடுங்க ஏறியதாய்ச் சொல்ல மரக்காரன் தென்னை மரத்தில் புல் ஏதென்று கேட்க, திருடன் அதனால்தான் பார்த்து விட்டு சும்மா இறங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முயற்சித்தது போல் இருக்கின்றது.
எப்படி இருந்தாலும் சைமன் கமிஷன் பகிஷ்காரமும் வேலை
நிறுத்தமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பது மாத்திரம் இந்த வேலை நிறுத்தத்தினால் வெளியாய் விட்டதற்கு நாம். மிகுதியும் சந்தோஷமடைகின்றோம். அதாவது () ஸ்ரீமான். சத்தியமூர்த்தியே இந்த விஷயமறிந்து அன்று பார்ப்பனர்கள் யாரும் வெளியில் போகக் கூடாது என்று உத்திரவு போட்டு விட்டு தான் மாத்திரம் செக்ரிடரியேட் ஆபிசீல் போய் ஒளிந்து கொண்டதும் (2) போலீஸ் உதவி கமிஷனராகிய ஒரு பார்ப்பனருடன் ஸ்ரீ சத்தியமூர்த்தி கலந்து பேசியதில் அவர் தன்னை வெளி
யில் வரவேண்டியதில்லை என்று சொன்னதாக ஸ்ரீ சத்தியமூர்த்தி தன்னுடைய
சமாதானத்தில் குறித்திருப்பதும் 4) இதற்கு விரோதமாய் ஸ்ரீ வரதராஜுலு தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்தால் வெளியில் தாராளமாய் உலவினதும் (4) தன்னை வழிமறித்தவர்களிடம் தான் வரதராஜுலு என்று சொல்லி தப்பித்துக் கொண்டதாக எழுதியிருப்பதும், 6) காங்கிரஸ் காலிகளே. கோர்ட்டுக்குப் போய் பார்ப்பன வக்கீல்களைப் பார்த்து “பார்ப்பனரல்லாதார். களாகிய எங்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய் யும்படி சொல்லி விட்டு பார்ப்பனர்கள் நீங்கள் மாத்திரம் கோர்ட்டுக்கு போக லாமா” என்று கேட்டதாக. பார்ப்பனப் பத்திரிகைகளில் காண்பதும் (6) சிற்சில இடங்களில் அதாவது திருவல்லிக்கேணி இரும்ப வாராவதி முதலிய இடங்களில் மீசை இல்லாதவர். களையும் பூணூல் போட்டவர்களையும் மறித்து உபத்திரவம் செய்ததாக பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே காண்பதாலும் (7) பார்ப்பன அட்வகேட் ஜனராலாகிய ஸ்ரீ டி.ஆர்.வெங்கிட்டராமய்யர் போன்றார்கள் ஸ்ரீ சத்திய மூர்த்தியின் அட்டகாசத்தில்தான் இம்மாதிரி கலகங்கள் நடந்தது என்று வருத்தப்பட்டுக்கொண்டதும் அவரும் தாக்கப்பட்டதாய் சொல்லப்படுவதும்,
மற்றும் பல காரியங்களும் வெளிப்பட்டு விட்டது. நிற்க (8) சர்.சி. பி.ராமசாமி
ஐயரின் குமாரர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் அதிக முயற்சி எடுத்துக் கொண்டதும் (8) கதர் வேலையைத் தவிர வேறு வேலை பார்ப்பதில்லை என்று சொல்லி வடக்கத்திய பிரபுக்களிடம் லக்ஷக்கணக்காய் பணம் வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஆசிரமம் என்னும் பேரால் ஆதிக்கம் செலுத்தி வரும் சி.ராஜகோபாலாச்சாரியாரும் பத்திரிகைகளில் வேலை நிறுத்தம் செய்யும்படி கோடுகட்டிய குறள் எழுதிவந்ததும் 10 அவரே கதர் கடைகளை: யெல்லாம் 3-ம் தேதி மூடும்படி கடிதம் எழுதச் செய்ததும் ஆகிய இவ்வளவு காரியங்கள் வெளிப்படையாய் நடந்ததோடு (11) பார்ப்பன அதிகாரிகள். அதாவது சட்டமெம்பர் ஐகோர்ட்டு ஜட்ஜி முதலானவர் களின் செல்வாக்
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
குகள் வேலை நிறுத்தத்திற்கு உபயோகப்பட்டது என்று சொல்லத்தக்க பல ரகசிய காரியங்களும் போதுமானதாகும்.
தவிர இவ்வேலை நிறுத்தத்திற்கு விரோதமாய் வேலை செய்தவர்கள் இன்னார் என்று ஒரு வார்த்தையாவது இது வரை எந்த பத்திரிகையும் சொல்லவே இல்லை. கலகங்கள் நடந்ததாகவும் சொல்லத்தக்க ஆதரவுகளும் இல்லை. மாலை 5 மணி வரை வேலை நிறுத்தத்திற்கு அனுகூலமாய் கலவரங்கள் நடந்திருப்பது மாத்திரம் விளங்குகின்றதேயல்லாமல் விரோத மாய் இன்ன காரியம் நடந்தது என்று ஒரு பத்திரிகையும் எழுதவில்லை. ஆனால் மாலையில் கூட்டத்திலும் பார்ப்பனத் தெருக்களிலும் பார்ப்பனரைக் கண்ட விடங்களிலும் கலகமானதாக எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்படு கின்றது. இது வாஸ்தவமாக இருக்க அநேக காரணங்கள் உண்டு. என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார்களை மாத்திரம் வேலை நிறுத்தம் செய்யச் செய்து நஷ்டமடையும்படியும் கஷ்டமடையும்படியும் செய்து விட்டு பார்ப்பனர்கள் ஒரு நஷ்டமும் அடையாமல் ஒரு குஞ்சுகூட வெளியில் வராமல் தங்கள் அலுவல்களைச் செய்து கொண்டிருப்பதை பார்த்த வேலை
நிறுத்தத்திற்கு அனுகூலமாய் இருந்த பார்ப்பனரல்லாத மக்கள் சாதாரணமாய் பார்ப்பனர்கள் மீது ஆத்திரப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை, அவர். களுக்கு புத்தி கற்பிக்க வேண்டுமென்று நினைப்பதிலும் ஆச்சரியமில்லை.
தேசத்தில் தேசீய விஷயத்தில் அஹிம்சையை முக்கியமாக வைத்து ஸ்ரீமான் காந்தி 5, 6 வருஷம் எவ்வளவோ வேலை செய்து வந்தும் ஸ்ரீமான்கள்
சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார், அண்ணாமலை முதலியார், வரத ராஜுலு, ஷாபி மகம்மது, அமீத்கான் இவர்களால் ஹிம்சையே தாண்டவ
மாடும் படியான நிலைமை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக ஸ்ரீமான். சத்தியமூர்த்தி அய்யர் போன்றார் “கிளப்பி விடத்தான் முடியும். சர்க் காரர்தான் அதை அடக்க வேண்டும்” என்று பொருள்படச் சொல்லுவது ஒன்றே போதுமானதாகும். நாம் கடைசியாக பார்ப்பனர்களுக்குச் சொல்லுவ தென்னவென்றால் சென்னைக் காலித்தனம் மற்ற இடங்களில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அந்தபடிலக்ஷியம் செய்யாமல் தங்கள் தந்திரங்களினாலும் பணத்திமிரினாலும் பார்ப்பனரல்லாதாரை சரிப்படுத்திக் கொண்டு பார்ப்பனரல்லாதார் மீது ஏவிவிடுவதன் மூலம் தங்கள் காரியங் களைச் செய்து கொள்ளலாம் என்று இன்னும் நினைப்பார்களானால் மாலை
5 மணி வரையில்தான் பார்ப்பன ரல்லாதார் மீது பாய்ந்து சிலருக்கு கெடுதி விளைவிக்கக்கூடுமே யொழிய உண்மை விளங்கியவுடன் இருட்டில் அவர்கள் மீதே திரும்பிப்பாயும் என்கிற எண்ணத்தை இனியாவது கருத்தில் கொண்டு ஜாக்கிரதையாய் இருக்கும்படி எச்சரிக்கை செய்வதோடு, முடத் தெங்குகளை நம்பி மோசம் போய் விடாதீர்கள் என்று சினேக முறையில்
தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.02.1928
குடி அரசு - 1928 () 90
ஹென் யகிஸ்காரம்
இதுவரை நடந்த சம்பவங்களால் கமிஷன் பகிஷ்காரமென்பது அர்த்தமற்றதாய் விளங்குகின்றது என்பதும், சென்னை பம்பாய் முதலிய மாகாண பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் முழுதும் கமிஷனிடம் ஒத்து மைக்க தயாராயிருக்கின்றன என்பதும் விளங்கிவிட்டது. அதாவது ஜஸ்டிஸ்
கட்சித் தலைவர்களில் ஸ்ரீமான் கிருஷ்ணநாயர் அவர்கள் ஸ்டேட்மெண்டும் பம்பாய் பார்ப்பனரல்லாதார் தீர்மானமும் பார்த்தவர்களுக்கு இனிது
விளங்கும். மற்றபடி மகமதியத் தலைவர்களின் பெரும்பான்மை அபிப்பி
ராயமும் பத்திரிகைகளின் அபிப்பிராயமும் முழு ஒத்துழைப்பில் இருக்
கின்றது. ஆதி இந்துக்களின் அபிப்பிராயமும் அதைவிட மீறி நிற்கின்றது. மற்றபடி பார்ப்பனர்களின் இயக்கம் என்று கருதப்பட்ட காங்கிரசின் பேரால் மாத்திரம் சிலர் பகிஷ்காரப் பேச்சு பேசினாலும் காரியத்தில் கமிஷனுக்கு அனுகூலமாய் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தவிர, பார்ப்பனர்களின். முக்கியமான பகிஷ்கார எண்ணமெல்லாம் இந்தியாவிலிருக்கும் ஜாதித்
திமிரும் பார்ப்பன ஆதிக்கமும் வெள்ளைக்காரருக்குத் தெரியக் கூடாது என்பது ஒன்று மாத்திரமேயல்லாமல் வேறு கவலை ஒன்றும் பார்ப்பனர்க ளுக்கு இல்லை என்பது உறுதியாய் விட்டது. இனி யாரும் அதைக் கேட்ப தில்லை என்பது மாத்திரம் உறுதி.
தவிர இங்கிலாந்திலும் உள்ள வெள்ளைக்காரர்களுக்கு மிகுதியும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தத்தான் இந்த பகிஷ்காரப் புரட்டு ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதும் விளங்கி விட்டது. இதை அறிந்தே நமது பார்ப்பனர்கள் வெளிநாட்டுப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவின் சுயநிர்ணயத்தை நிர்ணயிப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு பாத்தியமில்லை என்றும் அப்படி பாத்தியமிருப்பதாய்ச் சொல்லுவது நமது சுயமரியாதைக்கு குறைவு என்றும் சொல்லிக் கொண்டு திரியும் பார்ப்பனர்கள் இப்போது வெள்ளைக்காரர்
நாட்டில் நமது பிரசாரம் செய்ய வேண்டுமென்பதின் இரகசியம் என்ன என்பதை கவனித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டுகிறோம்.
எது எப்படியானாலும், மகமதியர்கள் இப்போதுள்ள தங்கள்
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தனித்தொகுதி பிரதிநிதித்துவத்தை இழந்துவிடாமல் தாஜூக்கா போர்டு ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி பஞ்சாயத்து முதலியவைகளிலும் தனித் தொகுதி பிரதிநிதித்துவம் பெற இந்த சமயத்தை உபயோகித்துக் கொள்ளும் படி உஷாராயிருக்க வேண்டும் என்று சொல்லுவதோடு ஆதிதிராவிடர்கள் என்பவர்களுக்கும் இந்த சமயம் தவறினால் மற்றபடி அவர்களுக்கு இனி வெகு நாளைக்கு விமோசனமில்லையென்றும் உறுதியாய்ச் சொல்லு கின்றோம். இந்த கமிஷனால் ஏதாவது வேண்டுமா என்று கேட்கப்படு மானால் முதலாவது தீண்டாதார் எனப்படுவோர்க்கு மனிதத் தன்மை உண்டாக்கினால் அதுவே நமக்கு போதுமானது என்று சொல்லுவோம். ஆதலால் அவர்கள் இந்த சமயத்தில் கொஞ்சமும் ஏமாந்து விடாமல் உஷாராயிருக்க வேண்டும். பார்ப்பனரல்லாதாரும் தலைவர்களை நம்பிக் கொண்டு ஏமாந்து விடாமல் தாராளமாய் தங்கள் குறைகளை கமிஷனுக்கு எட்டும்படி நடந்து கொள்ள வேண்டும். இதனால் அதிகமான லாபம் கிடைத்துவிடாது என்று நாம் நம்பினாலும் பின்னால் நாம் செய்யப்போகும் கிளர்ச்சிக்கு நமது குறைகளை நாம் சர்க்காருக்கு தெரிவித்து விட்டுத்தான் கடைசி ஆயுதத்தை எடுக்க நேர்ந்தது என்பதையாவது உலகம் அறிய இது
ஒரு சந்தர்ப்பமாகும். தவிரவும் நமது நிலை சில வெள்ளைக்காரருக்குத் தெரியாது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளவும் வேண்டும், உதாரணமாக கல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் தலைவரான கோஸ்வாமி என்பவரிடம் சென்ற மாதம் நமது நிலையைச் சொன்ன காலத்தில் “அப்படியா” “வாஸ்தவமா” என்று இரண்டு மூன்று முறை கேட்டார். பக்கத்து மாகாணத் துக்காரருக்கு தெரியாத விஷயம் சீமையில் இருப்பவனுக்கு தெரியும் என்று சொல்லுவது சரியாகாது.
டாக்டர். நாயர் சீமையில் இருக்கும் பொழுது பார்ப்பனரல்லா தாருக்கு பெரிய உத்தியோகங்கள் இல்லையென்று ஒரு வெள்ளைக்கார: பார்லிமெண்ட் மெம்பரிடம் நாயர் சொன்னபோது, மிஸ்டர் BN. சர்மா “இந்தியா நிர்வாக சபையில் இருக்கிறாரே அது போதாதா” என்று கேட்டா
ராம். எனவே ஸ்ரீமான் 9.11. சர்மா பார்ப்பனரா அல்லவா என்பது அவர்:
களுக்குத் தெரியவில்லை என்றாவது அல்லது நமது நாட்டு பார்ப்பனர்கள் அவரைப் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லி வைத்து ஏமாற்றி இருக்க வேண்டுமென்றாவதுதான் நாம் நினைத்தாக வேண்டும். ஆதலால் பார்ப்பனர். களின் அக்கிரமங்களை தாராளமாய் இந்த சமயம் சொல்லி விடுவதோடு மனுதர்ம சாஸ்திரத்தையும் சமர்ப்பித்து விட வேண்டும்.
இதனால் நமது சுயமரியாதைக்கு யாதொரு கெடுதியும் வந்துவிடாது என்பது மாத்திரம் ஞாபகத்தில் வைக்கத்தக்கது..
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.02.1928
குடி அரசு - 1928 () 92
கற்பு
- சித்திரபுத்திரன்
ஸ்ரீமான் P.R. பரமசிவ முதலியார் எழுதியதற்கு பதில்
இந்த வியாசத்தின் காரணமான ஆதி வியாசம் 8-1-28 தேதி “குடி அரசில்” வரையப்பட்டிருக்கிறது. அதற்கு ஸ்ரீ பரமசிவ முதலியாரின் மறுப்பு 22-1-28 ௨“ குடி அரசில்" பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்கள் மேல்கண்ட இரண்டு வியாசங்களையும் வைத்துக் கொண்டு வாசிப்பது நலமென தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நாம் “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால் இக்கருத்துக்களை கூறியிருக்க மாட்டார்” என்று குறிப்பிட்டிருந்ததற்கு ஸ்ரீ முதலியார் அதை ஒருவாறு ஒப்புக் கொண்டு “தன்னலங்கொண்ட ஒரு கூட்டத்தார் ஏற்றுக் கொள்ளவில்லையானால் நீதியானது அநீதியாகி விடுமோ” என்று பதிலிருத்தியிருக்கிறார்.
இங்கு ஸ்ரீ முதலியார் பெண்களை தந்நலங்கொண்ட கூட்டத்தார்
என்று குறிப்பிட்டது பெண்களுக்கு நீதி வழங்கியதாகுமா? என்பதை யோசிப்பதோடு பெண்கள் தர்மம் எழுதுவதில் ஆண்கள் இம்முறை கொண்டு பிரவேசிப்பது தன்னலங்கொண்டதாகாதா? என்பதையும் சிந்திக்க வேண்டுகின்றோம்.
(இந்த இடத்தில் “கருத்து இன்னது என்பதை முடிவு கட்டா விட்டாலும்) “தமிழ்நாட்டில் வாழ்ந்த வாழுகின்ற பெண்ணரசிகளும் அக் கருத்துக்களை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்” என்று எழுதியிருக் கின்றார். எந்தப் பெண்ணரசியாகிலும் தன்னை ஆண்பிறவிக்கடிமையென் றாவது தாம் அப்பிறவிக்கு கீழ்பட்டவர்கள் என்றாவது ஆண் தன்மையைவிட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது - எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராயிருந்தாலும் அவர். களை பெண்ணரசியென்று சொல்ல நாம் ஒருக்காலும் ஒப்போம்.
*பல தலைமுறைப்பழக்கத்தால் பெண்கள் அக்கருத்துகளை ஏற்றுக் கொள்கின்றனர்” என்று சித்திரபுத்திரன் எழுதியிருப்பதும் அதை தாழ்த்தப் பட்டவர்கள் தங்கள் தாழ்ந்த நிலையை ஏற்றுக் கொள்வது போலாகும்
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
என்பதற்கு ஒப்பிட்டு சித்திரபுத்திரன் எழுதி இருப்பதும் “தாய்மார்களைப் பழித்து கூறியதாகும்” என்று ஸ்ரீ முதலியார் கூறுகின்றார்.
அதற்கு காரணம் காட்டுவதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் கிடைக்க வொட்டாமல் செய்து விட்டதால் அன்னார் அறியாமை உடையவராகி விட்டாரென்றும், பெண்களுக்கு அது பொருந்தாதென்றும் ஸ்ரீ முதலியார் சொல்லுகின்றார்.
இதை ஸ்ரீ முதலியார் ஆராய்ச்சியுடன் கூறியிருப்பதாக நமக்கு விளங்கவில்லை. ஏனெனில், எந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற கூட்டம் ஏற்பட்டதோ எந்தக் காலத்தில் எந்தக் கூட்டத்தாரால் “தாழ்த்தப்பட்டோருக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டதோ” அந்தக் காலத்திலேயே அந்தக் கூட்டத்தாராலேயே பெண்மக்களுக்கும் அறிவு வளர்ச்சிக்குற்ற சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டு தாழ்த்தி அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இதை ஏன் ஸ்ரீ
முதலியார் உணர முடியவில்லை என்பது நமக்கு அறிய முடியவில்லை.
தவிர, பெண்களின் அறிவுத் திறத்திற்கு உதாரணமாக ஸ்ரீ முதலியார் ஒரு ஒளவை பிராட்டியை எடுத்துக்காட்டுகின்றார். அதே மூச்சில் திரு வள்ளுவரையும் எடுத்துக் கொண்டிருப்பாரானால் தாழ்த்தப்பட்டவர்.
களுக்குள்ளும் ஏதோ ஒருவருக்கு அறிவு வளர்ச்சி இருந்து வந்தது என்பதை ஒத்துக் கொண்டிருப்பாரானால் நாம் ஒன்று இரண்டு பெண்ணரசி களைப்பற்றி பேச வரவில்லை என்றும் தற்காலத்து நிகழும் நூற்றுக்கு தொண்ணூற்தொன்பதே முக்காலே மூணுவீச அரைவீசம் பெண்களைப் பற்றி பேசுகின்றோம் என்பதையும் உணர வேண்டுகின்றோம்.
அன்றியும் இதனால் சித்திரபுத்திரன் தாய்மார்களைப் பழித்துக் கூறியவனானால் ஸ்ரீ முதலியார் “தாழ்ந்த ஜாதி” என்பவர்களைப் பழித்துக் கூறியதாக ஏற்படவில்லையா? என்கின்றோம்.
உண்மையை பேசும்போது அதனால் யாருக்கு பழிப்பு ஏற்படு மானாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாது அப்பழிப்புக்கு காரணமா யுள்ளதை ஒழிக்க முயலவேண்டியதே வீரன் கடமையாகும்.
தவிர ஒளவைப் பிராட்டியாரும் திருவள்ளுவரையே அரண் செய்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒளவையாரின் “தையல் சொற்கேளேல்” என்கின்ற முதுமொழியை எடுத்துக் காட்டி, அதற்கு அரணாக வள்ளுவரின் “பெண்வழிச் சேரேல்” என்கின்ற வாக்கை சுட்டிக் காட்டுகின்றார். மற்றும் “பேதமை என்பது மாதர்க்கணிகலம்” என்ற பிராட்டி யாரின் முதுமொழியையும் கூடவே குறிப்பிட்டிருக்கிறார்.
குடி அரசு - 1928 () 94
இதனால் ஸ்ரீ முதலியார் தனது கடைசி ஆயுதத்தை எறிந்திருக்கிறார். ஆயினும் நமக்கு கவலையில்லை. பெண்களும் மனித ஜீவன் என்பதை
ஒப்புக் கொள்ளும் எவரும் இம்மூன்றையும் ஒருக்காலும் நடுநிலைமை உள்ளார் வாக்கென்றோ உண்மை ஆராய்ந்த அறிவுடையோர் வாக் கென்றோ ஒப்புக் கொள்ள முடியாதென்பதே நமது துணிபு. அங்ஙன மில்லையாயின் அவ்வக்கால நிலைக்கேற்றதென்றாவது சொல்லியாக வேண்டும். இங்கு சற்று வாசகர்களுக்கு சங்கடமுண்டாகும் என்பது நமக்குத்
தெரியும். ஆகிலும் குற்றமில்லை. முதலாவது ஒளவையும் வள்ளுவரும் சகோதரர்கள் என்பது ஒரு கதை. அக்கதையே ஆதி என்கின்ற புலைச்
சிக்கும் பகவன் என்கின்ற பார்ப்பனனுக்கும் பிறந்த பிள்ளைகள் ஏழில் இவர்கள் இருவர் என்று சொல்லுகின்றது. இவற்றுள் மற்றொரு விசேட மென்னவென்றால் மேல்கண்ட ஆதிக்கும் பகவனுக்கும் புணர்ச்சி முடிந்ததும் பிள்ளையை பெற்று போட்டுவிட்டு போய்விட்டதாகவும் கதை
கூறப்பட்டிருக்கின்றது. இது சம்மந்தமாக மற்றும் பல பல கதைகளும் உண்டு. அன்றியும் மற்றும் பல பல ஒளவைகள் இருந்தார்கள் என்றும் சிலர். கூறுவார்கள்.எனினும் இது விஷயத்தில் புராணக் கூற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு தனி அறிவைக் கொண்டு மேற்கண்ட நீதிவாக்கியங்களும் குறள்களும் யாரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை கவனியாமல் டி வாக்கியங்களை மாத்திரம் கவனித்து அதுபோன்ற மற்ற வாக்கியங்களுக்கு பொருள் காணுவது போலவே இவைகளுக்கும் காணுவோமானால் மேல்கண்ட முதுமொழிகளின் கருத்தான “பெண்கள் சொல்லைக் கேட்கக் கூடாது” என்பதும் “அறியாமை என்பது பெண்களது ஆபரணம். அதாவது அவர்களின் தன்மைக்கு ஏற்றது என்பதும் “பெண்கள் இஷ்டபடி நடக்கக் கூடாது” என்பதுமே பொருளாக விளங்குகின்ற கருத்துக்கள்தான் காணக்
கிடைக்கும். இனி இதற்கு விசேட உரைகளும் தத்துவார்த்தங்களும் பல பல சொல்ல பல வித்துவான்கள் முந்தக்கூடும். ஆனாலும் தத்துவார்த்
தமும் விசேட உரையும் சொல்ல முடியாத சப்தங்களும் எழுத்துக்களும் வாக்கியங்களும் செய்யுள்களும் உலகத்தில் கிடைப்பது அரிது என்பது நமக்கு தெரியும். ஆதலால் இதற்கு மாத்திரம் தத்துவார்த்தமும் விசேட உரையும் கொண்டு பொருள்கூற வரவேண்டிய காரணம் அறிவாளிகளால் ஒப்புக்கொள்ளக் கூடியதாகாது. ஒளவை முதுமொழியும் வள்ளுவர் குறளும்
யார் சொன்னார்கள் என்பது இங்கு காண வேண்டிய விஷயமல்ல. மற்றபடி இவ்விரண்டும் நீதி நூல்களில் சிறந்ததாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக் கின்றது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். ஆதலால் தான் இதைப்பற்றி பேச முன் வருகின்றோம். இதில் குறுக்கே நிற்கும் சங்கடம் என்னவென்றால் இவ்வளவு உயர்ந்த தத்துவங்களை கொண்ட நீதிகளை உணர்ந்தவர்கள் இவ்வளவு பெரிய பிழைகளை இழைத்திருப்பார்களா என்னும் விஷயமாகும். ஆனால் எல்லா விஷயங்களுக்கும் இவ்வாயுதத்தை உபயோகிக்க முற்படுவதால் அவ்வாயுதம் சில சமயங்களில் உபயோகிப்
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பவர்களையே மோசம் செய்துவிடக் கூடும். அல்லாமலும் காலதேச வர்த்தமானத்தைக் கொண்டு தான் யாரும் எதையும் சொல்லியிருக்க முடியுமேயல்லாமல் பார்ப்பனர்கள் சொல்லுவது போல் எதையும் கடவுள் சொன்னார் என்பதும் அது எப்போதைக்குமே பொருந்தியது என்பதும் இக்காலத்திற்கு பொருத்தமற்றதாகும். இவ்விரு பெரியார்களும் உண்மை யாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்நீதிநூற்கள் சொல்லப்பட்ட காலம் ஆரிய ஆதிக்கம் பரவியிருந்த காலமென்பதையாவது ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். தவிர, ஒளவை பிராட்டியார் பெய ராலோ வள்ளுவர் பெயராலேயோ சொல்லப்பட்ட நீதிகளை ஆக்கிய கர்த்தர்
கள் நம்மைப் போன்ற மனிதத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை முதலா வதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்? இந்த இடத்தில் தெய்வத்தன்மைகள் என்று சொல்லப்படுவதை அதாவது மனிதத் தன்மைக்கு மேற்பட்டது என்பது எதையும் மூட்டை கட்டி வேறாக வைத்துவிட்டு பார்த்தால் தான் உண்மை விளங்கும். அப்படிக்கில்லாவிட்டால் யாரும் எதையும் சொல்ல இடமேற் பட்டு விடும். அப்படிப் பார்ப்போமானால்தான் இவர்கள் இப்படிச் சொன்ன தற்கும் நியாயம் கிடைக்கும். அதாவது அந்தக் காலத்திய நிலைமைக்கு யாராயிருந்தாலும் நீதி இப்படித்தான் சொல்லி இருக்க முடியும் என்கின்ற முடிவு காணலாம்.எப்படி என்றால் கம்பர் அறிவுத்திறமுடைய கவி என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்காது. ஆனாலும் அப்படிப்பட்ட கம்பர் ராமாயணம் பாடினார் என்றால் ஆரியர் செல்வாக்குக் காலத்தில் ஆரிய ஆதிக்கத்தில் மக்களுக்கு உணர்ச்சி உள்ள காலத்தில் பாடியதானதால் அது வால்மீகி உரைத்த கருத்துகளை மாற்றி அதிலுள்ள அருவருப்புகளை நீக்கி ஆரியர்களுக்கே முழு உயர்வையும் ஆதிக்கத்தையும் வைத்து மக்கள் கொண்டாடும்படி பாடியிருக்கின்றார். அதுபோலவே இப்போதும் கூட எவ் வளவு அறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சி முதிர்ச்சியும் பலருக்கு இருந்தாலும் ஆரிய ஆதிக்கத்தை மறுப்பதற்கு பயப்படுகின்றார்கள். ஆரிய உயர்வையே பேசுகின்றார்கள். காரணம் ஆரியருக்குப் பயந்தல்ல வென்றும் சொல்லிக் கொள்ளலாம். மற்றென்னையோ வெனில் ஆரியப் பழக்க வழக்கமும் ஆரியர்கதைகளையே படிப்பதும் ஆரிய ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தின கடவுள் தன்மைகளையே வணங்கி வருவதும் ஆரியக் கதையை ஆதரித்து பாடுவதும் எழுதுவதும் ஆகிய குணங்களே ஆகும். எனவே இம் முறையில்
குழந்தைப் பருவ முதல் வளர்ந்து சரீரத்தின் ரத்தத்தின் மூலமாகவும் மயிர்க்கால் மூலமாகவும் ஆரியத்தன்மையை ஏற்றுக் கொண்டு மூளையை நிரப்பிவைத்திருப்பவர்கள் வேறு என்ன செய்யக்கூடும். ஆதலால் அவர்கள் பரிசுத்த தன்மையும் மேன்மையும் உற்றவர்களானால் அக்காலத்திற்கேற்க கூறினார் என்பதோடு முடித்து விடுவது நன்று. அப்படிக்கில்லாமல் எக் காலத்திற்கும் ஏற்க வேண்டிய தென்போமாயின் அவைகள் குற்றம் குற்றமே. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றமே தான்.
குடி அரசு - 1928 () 96
பின்பு ஸ்ரீமான் முதலியார் சமத்துவம் என்பது பற்றி என்ன என்னமோ அவசியமில்லாத அநேகவற்றை சொல்லுகின்றார். அதைப்பற்றி இங்கு இது சமயம் ஒரு விவகாரமும் வைத்துக் கொள்ள அவ்வளவு அவசிய மில்லை. ஆனால் கடைசியாக அவர் குறிப்பிடும் சமத்துவ கொள்கையை யாவது எடுத்துப்பார்ப்போமானால் அதிலும் முற்றும் முறையாய் சொல்லாமல் நழுவிவிட்டார். அதாவது “பெண்மக்கள் தமது உரிமையையும், தேவை யையும் ஆண்மக்கள் தடையில்லாமலும், ஆண்மக்கள் தமதுரிமைகளையும் தேவைகளையும் பெண்ணின் தடையின்றியும் அவர்களுக்குத் துன்ப மில்லாமலும் பெறுதலும் ஒருவர்க் கொருவர் உதவி செய்து வாழ்வதும் ஆண்: பெண் சமத்துவமாகும்”” என்று சொல்லுகிறார்.
ஆனால் அதே மூச்சில் “ஆண் உரிமை யாது, பெண் உரிமை யாது அன்னாரின் தனித்தனி தேவைகள் என்பவை யாவை என்பதைப் பற்றி ஆராய்வது வேறொன்று விரித்தலாகும்”” என்று சொல்லிவிட்டார்.
இவ்வியாசத்தின் விவகாரத்தின் ஜீவநாடியே ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண்
டும் என்பதேயாகும். அப்படி இருக்க ஸ்ரீ முதலியார் அதை ஆராய்வது வேறொன்று விரித்தல் என்னும் குற்றமாகிவிடும் என்பது உள்ளதை விரிக்கப் பயந்து மறைத்தல் என்கின்ற குற்றத்திற்கு ஆளாகுமே தவிர வேறில்லை என்று சொல்ல வருந்துகிறோம்.
தவிர “ஆணின் தன்மை, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் கொண்டு விளங்குகின்றது” என்றும் “பெண்ணின் தன்மை, அன்பு, மென்மை,
சாந்தம் பேணுந்திறம் கொண்டு விளங்குகின்றது” என்றும் சொல்கின்றார். ஸ்ரீ பரமசிவ முதலியாரின் இம்முடிவுதான் திருவள்ளுவருக்கு வக்காலத்துப்
பெற்று மறுப்பெழுத முன்வரச் செய்து விட்டதென்பது இப்போது நமக்கு நன்றாய் விளங்குகின்றது.
வன்மை: கோபம்: ஆளுந்திறம்: ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம்; அமைதி பேணுந்திறம் பெண்ணுக்குச் சொந்த மென்றும் சொல்வ தானது வீரம்; வன்மை; கோபம்; ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம் அமைதி: பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
அன்றியும் மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலருக்கும் ஸ்ரீ முதலியார் குறிப்பிட்ட இருபாலார் குணங்களும் சமமாய் இருக்க வேண்டும் என்பதும் நமது கருத்தாகும். இருபாலுக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும்
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இருக்கின்றது. ஆனால் அது செயற்கையில் ஆண்களின் சுயநலத்தால் சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது.
கர்ப்பமாகி பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகின்ற குணம் பெண்: களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களைவிட எவ்விதத்திலும் அதாவது வீரம், கோபம், ஆளுந்திறம், வன்மை முதலியவைகளில் மாறுபட்டு விட வேண்டியதில்லை என்றே சொல்வோம். கர்ப்பந் தரித்து பிள்ளை பெறாத காரணத்தாலேயே ஆண்மக்களுக்கு அன்பும் சாந்தமும் பேணுந் திறமும் பெண்களைவிட மாறுபட்டதாகிவிடாதென்றும் சொல்லுவோம்.
உண்மையான காதலுக்கு மதிப்புக் கொடுப்போமானால் உண்மை யான காதல் இருக்குமேயானால் பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிரமற்ற காரியங்கள் இரு பாலருக்கும் ஒன்று போலவே இருக்கும் என்பது
உறுதி.
தவிர தற்கொண்டான் என்பதற்கு அன்பைக் கொண்டவன் என்கின்ற பொருளை வருவித்துக்கொள்ளுவது இங்கு வள்ளுவருக்கு காப்புச் செய்யக் கருதியதாகுமேயல்லாமல் குறளுக்கு நீதி செய்ததாகாது..
அன்றியும் பெண்ணிடமிருந்து ஆண் அறிய வேண்டிய குணம் இல்லை என்பதும் அப்படி இருந்தால் “தற்கொண்டாள்” என்பதாக சொல்லலாம் என்பதும் பொறுத்தமற்ற தென்றே சொல்லலாம்.
அது போலவே “தொழுதெழுவதையும்” ஆணுக்கு குறிப்பிட்ட நியதி இல்லை என்பதும் பொருத்தமற்றதே யாகும். பெண்ணை கொள்ள ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொள்ள பெண்ணுக்கு உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால் பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் சம உரிமை என்பது.
இஃதில்லாதது எதுவானாலும் வன்மையும் கோபமுமே அல்லாமல் வைததல்ல என்றே சொல்லி விடுவோம்.
தவிர ஸ்ரீ முதலியார் அவர்கள் குறளில் ஆண்களுக்கும் வள்ளுவர்
கற்பு கூறியிருப்பதாக சொல்லுகின்றார். இருக்கலாம், ஆனாலும் பெண்க ளுக்கு கூறியது போல் இல்லை என்றுதான் சொல்லுகிறோம் - அதாவது
ஆண்களின் கற்புக்கு ஸ்ரீ முதலியார் அவர்கள் இரண்டு குறள்களை எடுத்துக் காட்டாக கூறியிருக்கிறார். அதாவது,
“திறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை”
குடி அரசு - 1928 () 98
“நிறை நெஞ்சமில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்”
ஆண்கள் கற்பை வலியுறுத்த கூறியதாகக் கூறுகிறார் போல் காண் கின்றது. இவைகள் அதற்காக கூறியதல்ல என்பது நமது அபிப்பிராயம்.
அதாவது, முதற் குறளுக்கு காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை. பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்க வேண்டும் என்பது தான் கருத்து என்று கருதுகிறோம்.
இரண்டாவது குறள் விலைமாதரை புணர்கின்றவர்க்கு கூறிய பழிப்பு ரையே அல்லாமல் காதல் கொண்ட மற்றப் பெண்களைக் கூடித் திரியும் ஆண்களைக் குறித்து கூறியதல்ல என்பது நமதபிப்பிராயம். நிறை என்கின்ற வார்த்தை மாத்திரம் காணப்படுகின்றதே தவிர நிர்பந்தமில்லை.
ஆகவே இருபாலர்க்கும் சம நிபந்தனை குறளில் இல்லை என்பதற்கு.
மற்றும் பல குறள்களையும் நாம் கூறக்கூடும்.
தவிர கடைசியாக ஸ்ரீ முதலியார் நமக்கு உறுத்தும் அறிவுக்கு நாம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவர் விரும்புவது போலவே ஆன்றோர் நூல்களில் ஐயம் தோன்றும் இடங்களில் ஐயவினா வாகவே எழுதி வருகிறோம். சில விஷயங்களில் தவறி இருந்தாலும் இனி அப்படியே எழுத விழைகின்றோம். ஆனால் இக்கற்பு விஷயத்தில் நாம் குறிப்பிட்ட குறளின் கருத்தில் நமக்கு ஐயமில்லை என்று கருதுவதோடு
மற்றும் சில அறிஞர்களின் கருத்தையும் பெற்றோம் என்பதையும் தெரிவித்
துக் கொள்ளுகின்றோம்.
மற்றும் குறள் விஷயத்திலும் குறளாசிரியர் விஷயத்திலும் நாம் கொண்டுள்ள பக்தி ஸ்ரீ முதலியார் கொண்டுள்ள பக்திக்கு மீறியதல்ல வானாலும் குறைந்ததல்ல வென்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். அதற்கு அநேக சான்றுகள் உண்டு. மற்றபடி ஸ்ரீ முதலியார் குறிப்பிட்ட கடைசி குறள்கள் இரண்டையும் பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. ஏனெனில் சரி என்று பட்டதைச் சொல்லும் தன்மை எவனிடமிருந்தாலும் அவன் இக்குறள்கள் மாத்திரமல்ல இதுபோன்ற வசைகள் பலவற்றிற்கும் மற்றும் அநேக காரியங்களுக்கும் தயாராயிருக்க வேண்டியவன் தான் என்கின்ற முடிவால் கவலைப்படவில்லை.
குடி அரசு - கட்டுரை - 12.02.1928
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இது கமிஷனுக்கு வதரிய கவண்டாமா?
மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காக போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் “பஞ்சமர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப் படமாட்டாது பிராம்மண ஸ்திரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி வைக்கப்
பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத்திருக்கிறாராம். துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது. கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடி கூத்தாடுகிற இடத்தில் கூட ஆதிதிராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே பெண்ணே என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும்கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தை காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமிஷனுக்கு தெரியவேண்டாமா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 12.02.1928
குடி அரசு - 1928 () 100
பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோதமென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச்சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினி யோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையை கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டாமா?
குடி அரசு - செய்திக் குறிப்பு - 12.02.1928
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மந்திரிகணிண் நிலை
சென்னை அரசாங்க மந்திரிகளின் நிலை ஆட்டம் கொடுத்திருக்கும் விஷயம் யாவரும் அறிந்ததே. மந்திரிகளின் நியமனத்தின் போது காங்கிரஸ்: பார்ப்பனர்களும் ஒத்துழையா பார்ப்பனர்களும் ஐகோர்ட் ஜட்ஜ் பார்ப்பனர். களும் நிர்வாகசபைப் பார்ப்பனர்களும் உள் உளவாய் இருந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒப்பந்தம் பேசிக் கொண்டு பார்ப்பனரல்லாதாரிலேயே மூவரைப் பிடித்து சுயேச்சைக் க௯ஷி மந்திரிகள் என்று பெயர் தந்து மந்திரி சபையை சிருஷ்டித்தார்கள். உதாரணமாக இம்மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் ஒத்துழையாமைக்கார ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியார், ஸி. விஜயராகவாச்சாரியார் முதலியோரும், காங்கிரஸ் முட்டுக்கட்டைகளாகிய ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, கீனிவாசய்யங்கார் முதலியோரும் சட்ட மெம்பர். ஐகோர்ட் ஜட்ஜுகள் முதலியோரும் வெளிப்படையாகவே எடுத்துக் கொண்ட முயற்சி யாவருக்கும் தெரிந்ததே. இவர்கள் தயவால் ஸ்தானம் பெற்ற மந்திரிகளும் மேற்கண்ட பார்ப்பனர்கள் சொன்னபடியெல்லாம் ஆடினதும் பார்ப்பனரல்லாதார் கட்டைக் குலைத்து அவர்களது இயக்கத் தையே பாழாக்க எவ்வளவு தூரம் கொடுமைகள் செய்யலாமோ அவ்வளவு தூரம் செய்ததும் மறக்கக் கூடியதல்ல. கடைசியாக பார்ப்பனரல்லாதார். கோவையில் மகாநாடு கூடி இம் மந்திரிகளை ஒழிக்கக் கருதி “இரட்டை ஆக்ஷி ஒழியும் வரை உத்தியோகம் ஏற்பதில்லை” என்கின்ற தீர்மானம் செய்த பிறகு மந்திரிகள் பயந்து போய் பார்ப்பனரல்லாதாருக்கும் சிற்சில உத்தியோகங்களும் நியமனங்களும் செய்ய வேண்டி நிர்பந்தம் வந்து விட்டது. இந்த சிற்சில உத்தியோகங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு மந்திரிகள் கொடுக்க ஏற்பட்டதால் பார்ப்பனர்கள் பொறுக்க மாட்டாமல் மந்திரிகளை நெருக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் சட்ட கலாசாலை தலைமை உபாத்தியாயர் (அதாவது லா காலேஜ் பிரின்சிபால் வேலையை ஸ்ரீமான் ரத்தினசாமி என்கின்ற ஒரு கிருஸ்தவ கனவானுக்கு கொடுத்ததினால் எல்லா பார்ப்பனரும் ஒன்றுகூடி மந்திரியை ஒழிக்க கங்கணங்கட்டிக் கொண்டார்கள். ஸ்ரீமான் ரத்தினசாமி ஒரு பாரிஸ்டர் இங்கிலீஷில் உயர்ந்த கல்வியாளர். மேல்நாட்டு கல்வி அனுபவமும் உள்ளவர். சட்டசபை பிரசி டெண்டாக மீ£2000 ரூ. சம்பளம் வாங்கி வந்தவர். பச்சையப்பன் பள்ளிக் கூடத் தலைமை உபாத்தியாயராக கிட்டத்தட்ட 1000 ரூ. சம்பளம் வாங்கிக்
குடி அரசு - 1928 () 102
கொண்டிருந்தவர். இந்தியா சட்டசபை மெம்பர். இவ்வளவு யோக்கியதையும் உள்ள ஒருவருக்கு 571000 ரூ. சம்பளமுள்ள ஒரு வேலை கொடுத்ததற்காக மந்திரி சபையே ஆட்டங் கொடுக்கத்தக்க நிலைமையை பார்ப்பனர்கள் உண்டாக்கி விட்டார்கள். காரணம் என்ன வென்றால் சட்ட கலாசாலையில் படிப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். அவர்களுக்கு பார்ப்பனர் உபாத்தி யாராய் இருந்தால் எவ்வளவு அனுகூலம் உண்டாகுமோ அவ்வளவு அனு
கூலம் உண்டாகாதே என்கின்ற பயமும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் படித்து முன்னுக்கு வந்து விடுமோ என்கின்ற வயிற்றெரிச்சலும் அவர்களைப் பிடித்துக் கொண்டது. இதனால் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முதல்
மந்திரியிடம் இந்த வேலைக்கு ஒரு பார்ப்பனரையே நியமிக்கச் சொல்லிப் பார்த்தும் வேறு எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் யார் பேச்சையும் கேளாமல்
டாக்டர். சுப்பராயன் பார்ப்பனரல்லாதாரையே நியமித்துவிட்டார். மற்றும் சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரே என்கின்ற பயமும் பார்ப்பனர்களுக்கு நன்றாய் விழுந்து விட்டது.
எனவே, மந்திரி சபையை கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அத
னால் இப்பொழுது மந்திரி கட்சியில் பிளவு உண்டாகிவிட்டது. மந்திரி கட்சி
யில் உள்ள பார்ப்பனர்கள் அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். மற்றும் பல பார்ப்பனரல்லாதார்களும் பல மீறமுடியாத செல்வாக்குகளால் பார்ப்பனர் களைப் பின்பற்ற வேண்டி வந்துவிட்டது. மற்றொரு மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாத முதலியார் பார்ப்பனர்கள் சொல்லுகிறபடி ஆடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். அதிலிருந்து அவர் ஒரு சிறிதும் மாறவும் இல்லை. பார்ப்பனர்களுக்கு ஸ்ரீமான். முதலியாரின் குருவாகிய ஸ்ரீ பெசண்டம்மை
யாரின் ஜாமீனும் இருக்கின்றது. மற்றபடி மற்றொரு மந்திரி ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியார் அவர்களைப் பற்றியோ யாருக்கும் கவலை யில்லை. அதாவது “அடிப்போன சட்டி ஆத்தாள் வீட்டிலிருந்தாலும் ஒன்று தான் மகள் வீட்டிலிருந்தாலும் ஒன்றுதான்” என்பது போல் அவர் பார்ப்பனர்.
கள் போட்ட கோட்டை மீற முடியாதவர். எனவே சைமன் விஷயத்தில் சட்ட சபையில் டாக்டர் சுப்பராயனுக்கு எதிரிடையாக அவர் கூட்டு மந்திரிகளும் கட்சி மெம்பர்களில் சிலரும் ஓட்டு கொடுத்ததால் மந்திரி கட்சி ஒழுங்கற்ற தாகி விட்டதுடன் டாக்டர் சுப்பராயனுக்கு மந்திரி கட்சியில் ஆதரவு இல்லை என்றும் ஏற்பட்டுவிட்டது. இதனால் ஒன்றா கவர்னராகவே மந்திரிகளைக் கலைக்க வேண்டும். அல்லது மந்திரிகளாவது ராஜீனாமா கொடுக்க வேண்:
டும். இந்த இரண்டும் நடக்காவிட்டால் பலக் குறைவான மந்திரியாவது ராஜீனாமா கொடுத்து விட வேண்டும். அல்லது மறுபடியும் எல்லோரும் ராஜியாகி விடவேண்டும். இந்நான்கில் ஒன்று நடந்தாக வேண்டுமேயல்லாமல்
சும்மா இருக்க முடியாது. இந்த நிலைமை தான் டாக்டர். சுப்பராயன் அவர்கள் ராஜீனாமா கொடுத்துவிட்டார்கள் என்கின்ற சங்கதி வெளியாகக் காரணமா
யிருந்தது. முதல் மந்திரி ராஜீனாமா கொடுத்ததாக சொல்லப்படும் விஷயத்
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
திற்கு அஸ்திவாரமில்லை என்றுதான் அசோசியேட் பிரஸ் சொல்லக் கூடுமேயல்லாமல் ராஜீனாமா கொடுக்கவில்லை என்று சொல்ல யாருக்கும்
தைரியம் வரவில்லை. இன்று நாளைக்கில்லாவிட்டாலும் மந்திரிகளுக்குள்'
புது ஒப்பந்தம் ஏற்பட்டு காங்கிரஸ் பார்ப்பனர்களும் உத்தியோகப் பார்ப்பனர். களும் ஆதரிப்பதாக வாக்கு கொடுக்காத பட்சம் ராஜினாமா சங்கதி வெளியாகித்தான் தீரும் என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் டாக்டர். சுப்பராயன்
மந்திரி நிலைக்க வேண்டுமானால் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு பதிலாக ஜஸ்டிஸ் கட்சியார் உதவி செய்வதாக வாக்களிக்க வேண்டும். அவர்களும் ஒன்று அல்லது இரண்டு மந்திரி ஸ்தானங்களை ஒப்புக்கொள்ளத் தயாரா யிருக்க வேண்டும்.ஆனால் ஜஸ்டிஸ் ககஷிக்காரர்களுக்கு இது சமயம் மந்திரி ஸ்தானம் ஒப்புக்கொள்ள சற்று பயமாயிருக்கிறதென்றே தெரிகின்றது. ஏனெனில் கோயமுத்தூர் தீர்மானம் ஒன்று குறுக்கே நிற்பதாலும் மறு எலக்ஷ னுக்கு போனால் ஜனங்கள் பரிகாசம் செய்வார்களே என்கின்ற எண்ணத் தாலும்தான் காங்கிரசுக்குள் இருந்தே வேறு கக்ஷி ஆரம்பித்த ஸ்ரீ முத்தய்ய முதலியார் அவர்கள் ககஷியார் தாராளமாய் மந்திரி பதவி ஒப்புக் கொள்ள லாமானாலும் பார்ப்பனர்கள் போக மீதி இருக்கும் மந்திரிக் கக்ஷியும் ஸ்ரீமுத் தைய்யா முதலியார் கட்சியும் ஒன்று சேர்ந்தாலும் போதுமான மெஜாரிட்டி கிடையா ததால் அவர் அந்த ஒரு கட்சியின் உதவியைக் கொண்டு அமைக்க முடியாது மற்றபடி இண்டிபெண்டண்ட் ஆபோசீஷன் என்கின்ற ஸ்ரீமான்
சி.எஸ். ரத்னசபாபதி முதலியார் அவர்களுடைய கட்சிக்கு ஒரு மந்திரி கொடுத்து அக்கட்சியையும் சேர்த்துக் கொள்வதானாலோ அப்பொழுதும் தைரியமாய் இருக்கத்தக்க மெஜாரிட்டி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.டாக்டர். சுப்பராயனை வெளியேற்றி விட்டு ஸ்ரீமான்கள் ரங்கநாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் இருந்து கொண்டு மற்றொரு மந்திரியை தெரிந்தெடுக்க வேண்டுமானால் ஒரு பார்ப்பன மந்திரியைத் தான் தெரிந்தெடுத்தாக வேண்டும். இதற்கு காங்கிரஸ்காரர்களின் உதவி வேண்டியது அவசியம். ஆனால் காங்கிரசினுள் சில பார்ப்பனரல்லாதார்கள். மந்திரி பதவி தங்களுக்கு வருவதாயிருந்தால் வரட்டும் இல்லாவிட்டால் வேறொரு பார்ப்பனனுக்கு உதவி செய்து பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று உறுதியாய் மறுக்கிறார்கள். இந்த நிலையில் பார்ப்பனர்களின் நாக்கில் ஊறும் தண்ணீருக்கு கணக்கு வழக்கு இல்லை. கடைசியாக இது எப்படி முடியும் என்று சொல்லுவதும் கஷ்டமாகத்தான்
இருக்கிறது.
எப்படியானாலும் நிலைக்கத்தக்க மந்திரி சபையை அமைக்க கவர்னர் பிரபு படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. இதற்காக வேண்டியே சட்டமெம்பர். வேலையை கையில் கெட்டியாய் வைத்துக் கொண்டு, மந்திரி சபையை உறுதியாக்குகிறவர்களுக்கு கொடுப்பதாய் ஆசைக்காட்டி வருகின்றார். சட்ட
மெம்பர் வேலை பார்ப்பனரல்லாதாருக்கு கொடுப்பதானால் மந்திரிகளிலும்.
குடி அரசு - 1928 () 104.
ஒரு பார்ப்பனர் இருக்க வேண்டும் என்று வேலையை விட்டுப் போகும் உத்தியோகஸ்தர் சர்க்காரை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் வெகுபேர்.
களுக்கு தூக்கமே இல்லை. வெகு பேர்களுக்கு சாப்பாடு இறக்கமே இல்லை. வெகுபேர் இளைத்துப் போய்விட்டார்கள். கடைசியாக என்ன ஆகுமோ தெரியவில்லை.இவற்றுள் ஜஸ்டிஸ் ககஷிக்காரர் கோயமுத்தூர் தீர்மானத்தை
மதித்து அதை மீறக் கூடாது என்று சொல்லி மந்திரி வேலையை உதைத்துத் தள்ளி வந்திருப்பதானது ஒரு விஷேஷம் என்று சொல்லலாம். மறுபடியும்
மந்திரி வேலை ஒப்புக் கொள்ளுவதானால் வேறொரு மகாநாடுகூட்டி அதற்குத் தகுந்த காரணங்களைக் காட்டி பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதம் பெறாமல் மந்திரி வேலை ஒப்புக் கொள்ளு வார்களேயானால் காங்கிரஸ்காரர்களுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லாமல் போவதோடு இரண்டு ககஷியாருக்கும் நாணயம் கிடையாது என்றும் சமயம் போல மக்களை ஏமாற்றுகின்றவர்கள். என்றும் பொது ஜனங்கள் சொல்லிவிடுவார்கள் என்று எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.02.1928
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தமிமுர்கனே உங்களுக்கு புத்தி ல்லையா
தமிழ்நாடும் தமிழ் மக்களும் மனிதத் தன்மையாகிய “சுயமரி யாதையை இழந்து மிருகங்களிலும், பூச்சி புழுக்களிலும் கேவலமாய் வாழும் நிலைமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் பார்ப்பன மதமாகிய இந்து மதமும் அம்மத ஆதாரங்களாகிய வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் முதலிய ஆபாச புரட்டுகளே முக்கிய காரணம்” என்று வெகுநாளாகச் சொல்லி வருகிறோம். அநேக விதங்களில் அறிவைக் கொண்டும் அனுபவங் களைக் கொண்டும் யாவருக்கும் நன்றாய் விளங்கும்படி விவரமாய் எழுதியும் வந்திருக்கின்றோம். இவற்றை மறுத்து இதுவரை யாரும் எவ்வித சமாதானமும் சொல்லாமல் “மதம் போச்சு” “நாஸ்திகமாச்சு” “தெய்வம் போச்சு” என்று பொய் அழுகை அழுகிறார்களேயல்லாமல் சற்றாவது கவனித்துப் பார்த்து இதற்கு என்ன செய்ய வேண்டும் இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஒருசிறிதாவது கவலை கொள்ளாமல் இருப்பதுடன் செய்ய முயற்சிப்பவர்களையும் காலை வாரி விட சூழ்ச்சிகள். நடந்த வண்ணமாகவும், எதிர் பிரசாரங்கள் நடந்த வண்ணமாகவும் இருந்து வருகிறது.
அன்றியும் முன்னையை விட பார்ப்பனப் பிரசாரமும் பலமாய் நடந்து வருகின்றது. என்னே! தமிழர்களின் மானங்கெட்ட தன்மை.
தமிழ் மக்களில் பலர் படித்தவர்கள் என்றும், பண்டிதர்களென்றும், வித்துவான்கள் என்றும், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும், சீர்திருத்தக்காரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு வெளியில் புறப்பட்டு புஸ்தகம் எழுதுவது
மூலமும், புராண பிரசங்க மூலமும், ஆராய்ச்சி மூலமும், சீர்திருத்தப் பிரசாரம்
மூலமும், பத்திரிகையின் மூலமும் தமிழ் பாஷையைப் பரப்புவதென்பதன்
மூலமும் மற்றும் பலவழிகளில் பார்ப்பன மதப்பிரசாரங்களையே மேலும் மேலும் செய்கின்றார்களே யொழிய வேறு ஒரு காரியமும் செய்ய அறிவும் ஆற்றலும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த உபத்திரவம் போதாமல் இப்பொழுது சினிமாக்களும் நாடகக் காரர்களும் பாராட்டுக் காரர்களும் உபந்நியாசகாரர்களும் இப்பார்ப்பனப் பிரசாரத்தையே கைப்பற்றி தினமும் கோடிக்கணக்கான மக்களுக்கு புராணப் பிரசாரம் செய்து வருகின்றன.
குடி அரசு - 1928 () 106
அன்றியும் சமீப காலமாக நமது நாட்டில் உள்ள எல்லா பத்திரிகை
களும் அறிந்தோ அறியாமலோ இதே வேலையையே செய்து வருகின்றன. எந்தவாரப் பத்திரிகையின் முகப்பைப் பார்த்தாலும் ஆரியப் புராணப் புளுகுகளைப்பற்றி வியாக்கியானம் பண்ணுவதும், அதற்கு விசேஷ அர்த்தமும், தத்துவார்த்தமும் சொல்லுவதும் எழுதி வைத்தவர்களைப் புகழ்வதுமாகவே இருக்கின்றன. எந்த தினசரிப் பத்திரிகையைப் பார்த்தாலும் பார்ப்பன மதக் கொள்கைகளை பிரசாரம் செய்யத்தக்க வண்ணம் ஆரியக் கதைகளையே விளக்கி வருகின்றது.
ஆனால் ஒவ்வொரு பத்திரிகையும் தன்னை சீர்திருத்தப் பத்திரிகை யென்று சொல்லிகொண்டேதான் இந்தக் காரியம் செய்கின்றது என்பதைக் கவனிக்கும்போது தான் நமது மனம் பதறுகின்றது.
அன்றியும் இந்தக் கொடுமைக்கு இன்னதுதான் பரிகாரம் என்பது நமக்கு விளங்கவில்லை. தேவஸ்தான மசோதா வந்த காலத்தில் கூட எல்லா பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும், பார்ப்பனர்களையும் பார்ப்பன பத்திரிகை களையும் பின்பற்றி அம்மசோதாவை நிறைவேறச் செய்துவிட்டன. “திராவிடன்” ஒன்று மாத்திரம் தைரியமாய் உண்மையாய் பிரசாரம் செய்து வந்தது. ஆனாலும் ஒரு பயனும் உண்டாகவில்லை.தவிர தற்சமயம் முக்கிய பிரச்னையாய் இருக்கும் சுவாமிக்காக தமிழ் பெண்களை பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு அனுகூலமாக்கினதை ஒழிக்கச் செய்யும் பிரயத்தனத்தையும், பக்குவமறியாக் குழந்தைகளை பெண்ஜாதி புருஷர்களாக ஆக்கி குரங்கு குட்டிகள் போல பிள்ளைகள் பெற்று மிருகப் பிராயத்திற்கு போய்க் கொண்டிருக்கும் நிலையைத் தவிர்க்கச் செய்யும் பிரயத்தனங்களையும் அடக்க பார்ப்பனர்கள் செய்யும் இடையூறுகள் ஒன்றல்ல பல. கொஞ்ச கால மாக சுதேசமித்திரன்” முதலிய தினசரி பத்திரிகைகளில் இதே விஷயங்கள். வெளியாகின்றன. சங்கராச்சாரியர்களும், பண்டிதர்களும், சாஸ்திரிகளும், வைதீகர்களும் தினம் ஒவ்வொரு இடத்தில் மீட்டிங்குகள் நடந்ததாகப் பேர். செய்து இவ்விரு காரியங்களையும் மறுத்து கண்டித்து தீர்மானங்கள் செய்த தாக எழுதி வருவதும், பொதுமக்கள் ஏமாறும்படி கடவுள் சொன்னதாகவும் தேவர்கள் சொன்னதாகவும் ரிஷிகள் சொன்னதாகவும் அசரீரி சொன்ன தாகவும் அநேக விஷயங்களை எடுத்து எழுதுவதுமாய் இருக்கின்றார்களே! இதை யாராவது கவனிக்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.
இது தவிர பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாடப் புஸ்தகங்கள் என்று அநேக பார்ப்பனர்களும் சுயமரியாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பன ரல்லாதார்களும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தப்புராணம் பெரிய புராணம், அருணாசலப்புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய குப்பை கூலங்களின் பேரால் சிறு சிறு கதைப்புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்கு பார்ப்பன விஷத்தை ஊட்டுவதும் சகிக்கக் கூடியதாயில்லை.
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் ஆரியர் மேலோர் என்பதும், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் தென்னாட்டில் ஒரு முரட்டு ஜாதியர் காட்டுமிராண்டிகளாய் இருந்தார்கள் அவர்களைத்தான் வானரங்கள் என்று சொல்லப்படுவது என்றெழுதுவதும், ஆரியர் தென்னாட்டிற்கு வந்த பிறகே தமிழ் மக்கள் மனிதத் தன்மையை அடைந்தார்கள் என்று எழுதியதுமான புஸ்தகங்களைப் படிக்கச் செய்வதே இப்போது தேசீயப் படிப்பாக மாறி வருவதும் நினைக்க நினைக்க வயிறெல்
லாம் பற்றி எரிகின்றது. இன்னும் பல வழிகளில் தமிழர்களை இழிவுப்படுத்தி யிருக்கின்றார்கள். அவைகளையெல்லாம் இதில் எழுத மனம் வெட்கப் படுகிறது. இதற்கு என்ன வழி என்று யார் சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்களு டைய முகக்கோணலை பொறுத்துக்கொள்ள தமிழ் மக்களில் ஆட்கள் இல்லையென்றால் அந்த சமூகம் வாழுவதால் பயன் என்ன? என்று கேட்கின் றோம். பார்ப்பனரல்லாதார்களில் வயிற்றுக்கில்லாத கூலிகளின் செய்கை களைப்பற்றி நாம் பிரமாதமாய் இதில் எழுத வரவில்லை.
வயிற்றுக்கு தாராளமாய் கிடைக்கத்தக்க தொழிலையும் தளி சம்பாத்தி யத்தையும் சொத்துகளையும் நிலையையும் வைத்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் பார்ப்பனப் பிரசாரங்கள் செய்யும் முட்டாள்தனத்திற்கு நாம் என்ன சமாதானம் செய்து கொள்ளக்கூடும். பார்ப்பனரல்லாத அரசர்களில் பெரும்பகுதியார் பார்ப்பனர்களுக்குப் பிள்ளையாய் பிறக்கக் கருதுகிறார். களேயொழிய பார்ப்பன மதக் கொடுமையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இழிவைப்பற்றி கருதுகிறார்களா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதும் இல்லை.
பார்ப்பனரல்லாத ஜமீன்தார்கள், பிரபுக்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகள் என்போர்களோ ஏழைகளை வதைத்துப் பட்டினி போட்டு ஏமாற்றி கொள்ளையடித்து பல லக்ஷக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்துக் குட்டிச்சுவர்களாக விளங்கும் கோவில்களைக் கட்டுவதும் அங்கு பார்ப்பனத் திருவிழா செய்வதும் பார்ப்பன மதப்பிரசார பள்ளிக்கூடங்கள் வேத பாட சாலைகள் கட்டுவதும், பார்ப்பனர்கள் சாப்பிட சத்திரங்கள் கட்டுவதுமான கொடுமைகளைச் செய்வதற்காகவே தங்கள் பணங்களை உபயோகிக்கின் றார்கள். பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களோ தங்கள் செல்வாக்கு முழுவதையும் பார்ப்பன நன்மைக்கே உபயோகிக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களுடைய உத்தியோகத்திற்கும் வாழ்வுக்கும் ஆபத்தாய் முடிந்து விடுகின்றது. பார்ப்பனரல்லாத சன்னியாசிகளின் சங்கதி சொல்லவே வேண்டியதில்லை எனலாம். சுருங்கக் கூறினால் இயற்கைக்கு விரோதமான இன்பத்தை அனுபவிப்பதே அவர்களது தபசாகிவிட்டது. இனி மீதி
இருக்கும், பாமர மக்களோ மேல்கண்ட பெரிய ஆசாமிகள் என்பவர்கள் நடப்பதைப் பார்த்து அவர்களைப் பின்பற்றி மேலும் மேலும் தங்களை:
குடி அரசு - 1928 () 108
உயர்ந்த ஜாதியான் என்றும் பக்திமான் என்றும் “சனாதன இந்து” என்றும் சொல்லிக் கொள்வதற்கே ஆசைப்பட்டு விபூதியையும் நாமத்தையும் பூசிக் கொள்ளுவதும் யாத்திரையும் சடங்கும் செய்வதுமான வாழ்க்கையிலேயே தமது சம்பாதனையை கூடப் போடுவதுமாய் இருக்கின்றார்களே யொழிய ஐயோ பாவம்! மனிதத் தன்மை இன்னது என்பதைப்பற்றி ஒரு சிறு கவலையும் இல்லாதவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களின் சுயமரியாதை எங்கே இருக்கின்றது? எப்பொழுதுவரும் என்பதைப்பற்றி சற்று யோசித்துப் பாருங்கள். நேயர்களே!
உங்கள் மனம் பதற வில்லையா? உங்கள் அறிவு வெட்கப்பட வில்லையா? நீங்களும் மக்கள் என்று எண்ணிக் கொள்ள உங்கள் எண்ணம் இடம் கொடுக்கின்றதா? உலகத்தில் மானமற்ற மக்கள், ஈனம் உற்ற மக்கள். சுயமரியாதை இன்னதென்று உணராத மக்கள் என்பவர்கள் எங்கிருக் கின்றார்கள்? அவர்கள் யார்? என்பதை சற்று நிதானமாய் தேடிப்பார்த்தால் உங்களைத் தவிர வேறு யாரையாவது கண்டு பிடிப்பீர்களா? போதும் போதும் இனியாவது உங்கள் முயற்சியை சற்று சுயமரியாதைப் பக்கம் திரும்புங்கள். தேசீய நரகத்தில் அழுந்தாதீர்கள். கடைந்தெடுத்த அயோக்கியர்களுக்கும் துரோகிகளுக்கும் ஈனவயிறு பிழைப்புக்காரருக்கும் அறிவிலிகளுக்கும் அதை விட்டுவிடுங்கள். தமிழ்த்தாயின் மானத்தைக் காப்பாற்ற முன்வாருங்கள்.
சமீப காலத்தில் நடைபெற வேண்டிய சுயமரியாதை சத்தியாக் கிரகத்திற்கு வரிந்து கட்டி முன் நில்லுங்கள், உங்கள் விண்ணப்பங்களில் உங்கள் ரத்தத்தைக் கொண்டு கையெழுத்துச் செய்து அனுப்புங்கள். உங்கள் சொத்துக்கள் என்பதில் ஒரு பகுதியை இப்போதே ஒதுக்கி வைத்து விடுங்கள் புரட்டுப்பிரசாரங்களை வெறுத்துத் தள்ளி பாமர மக்களுக்கு உண்மை இன்னது போலி இன்னது சத்தியம் இன்னது பொய் இன்னது என்று உணரும். படி செய்யுங்கள். சுயமரியாதைக்கு உழைக்கும் உண்மைப் பத்திரிகைகளை எல்லாத் தமிழ் மக்களும் படிக்கும்படி செய்யுங்கள். இனி உறங்காதீர்கள்!
பார்ப்பனர்களின் மதத்தின் மூலமாவது புராணங்கள் மூலமாகவாவது அதில்
உழலும் பண்டிதர்கள் மூலமாகவாவது அரசியல் பார்ப்பனரல்லாதார்கள்' மூலமாகவாவது தமிழ் மக்கள் தலை எடுக்கக் கூடும் என்றோ அல்லது சுய மரியாதை அடையகூடும் என்றோ நினைப்பதை அடியோடு மறந்து விடுங்
கள், மறந்து விடுங்கள்.
குடி அரசு - கட்டுரை - 19.02.1928
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கீதமும் யார்ப்பணியமும்
சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சீபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறைவாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பரைல்லாத பிரபுக்கள் சற்றும் லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்௧ள் எவ்வளவு பாண்டித்ய முடையவர்களாயிருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள். நமது நாட்டுப்பிரபுக்களின் முட்டாள்தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும் பார்ப்பன ரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவு படுத்தினாலும் லக்ஷியம் செய்யாமல் சுவாமிகளே ! என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும் அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்௧ளை ஆதரிக்க வேண்டுமென்றும் பலதடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே கோவை
யிலும் முதல் முதலாக ஒரு சங்கீதசபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களும் இதை கவனித்து நடக்குமா?
குடி அரசு - கட்டுரை - 19.02.1928
குடி அரசு - 1928 () 110
சூழ்ச்சியும் ஏமாற்றமும்
திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான்
ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணாமலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீ முதலியாருக்கு பல வரவேற்பு களும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீ முதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என் கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்யவேண்டுமெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மெஜிஸ்ட்: றேட்டிடமிருந்து மாற்றவேண்டுமென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கிவிட்டார்கள். நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும் கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் கிரமப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்து விட்டன. பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றமடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்கு போதுமான காரணம் இல்லையென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர்: பார்ப்பனராயிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார் களானதால் உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய்விட்டது.
மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண்ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலியாரும் போவார் என்றே தெரிகின்றது.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 19.02.1928
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அருப்புக் கோட்டையில்
யார்ப்பனத் வதால்
அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளை வித்து வருவதாக தெரிகின்றது. 7, 8 பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டதாகவும் அரஸ்ட் செய்து ஜெயி
லில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதுவும் திருவண்ணாமலைக் கேசு போலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும் போல் தெரிகின்றது. அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லை யாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்பனரல்லாத வக்கீல் போக வேண்டியிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்த கேசின் செலவுக் காக திருவண்ணாமலை கேசு செலவுக்கு பொதுஜனங்கள் உதவியது போலவே உதவ வேண்டும் என்று அப்பீல் செய்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 19.02.1928.
குடி அரசு - 1928 () 112
இஸ்லாமிய ஊழியன்
ஒத்துழையாமைக் காலத்தில் இருமுறை சிறைசென்று பலவருஷம் சிறைவாசம் செய்த தேசபக்தர் திண்டுக்கல் ஜனாப் வி.கே. தங்கமீரான் சாயபு அவர்கள் “இஸ்லாமிய ஊழியன்” என்ற தமிழ் வாரப் பத்திரிகை யொன்று ஆரம்பிக்கப் போவதாய் நாம் தெரிவிக்கப்பட்டிருக்கிறபடியால் டெ பத்திரி கையை நாம் ஆவலோடு எதிர்பார்ப்பதுடன் பொதுஜனங்கள் ஆதரவளிப்
பார்கள் என்றும் நம்புகிறேன்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 19.02.1928
113 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ர௱ங்கூண் தணவணரிக வாலியர் கரண்டாவது மகாநா௫
இம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திருவாளர் இராமன் செட்டி
யார் அவர்களின் வரவேற்புப் பிரசங்கமும் தலைவர் திருவாளர் அ. வெ. தியாகராஜா அவர்கள் தலைமை முகவுரையும் வரப்பெற்றோம். அவைகளில் தனவணிகர்களுக்கான பல அரிய வுரைகள் மலிந்து கிடக்கின்றன. அவை களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
“ இளம் கைம்பெண்களின் நிலை அந்தோ! அவர் களை மணப்பதற்கு முற்படுபவர்கள் நமது குலத்து வீரராவார்கள். இப் பாழும்
குலத்தில் ஏன் பிறந்தோம் என்று நினைந்து நினைந்து அவர்கள் உள்ளங் குழையாமற் செய்வது உங்கள் கடன்”.
மற்றொரு பெரும் பிரச்சினை மனைவியை வெளிநாட்டிற்கு உடனழைத்துச் செல்லல். மனைவியுடன் கூட வாழல் வேண்டுமென வாலிபர்களாகிய நீங்கள் கொண்டுள்ள பேரவா பளிங்குக்கற் போலத் தெளி வாய் விளங்குகிறது. அவ்வுணர்ச்சி இயற்கை உணர்ச்சி; தெய்வீக உணர்ச்சி; அதைக் குலைப்பது கொடுமை கொடுமை...”
க கேவலம் பொருளே நமது குறிக்கோளன்று. பொருள் பெருக் குவது மனைவி, மக்கள், சுற்றத்தார் நாட்டார் இன்புறுவதற்குத் தானே. பொருள் பெருக்குவதிலேயே நம்மவர்கள் தங்கள் காலமெல்லாம் போக்கின் மனைவி மக்களுடன் இல்லறம் நடத்தி இன்புறுவது எக்காலம்?”
தீண்டாமை இந்து மதத்தைத் தாழ்மைப்படுத்துவது. அதைச் சீக்கிரம் நாட்டைவிட்டுத் துரத்தல் வேண்டும். இந்து மதத்தில் பிறந்த ஒவ் வொருவருக்கும் கோவில்களிலும் பொதுவிடங்களிலும் சம உரிமை
யிருத்தல் வேண்டும். பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது.”
“_...தேடிச் சோறு நிதந் தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, மனம் வாடித்துன்பமிக வுழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து,
குடி அரசு - 1928 () 114
நரைகூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும், பல வீண் மனிதர்களைப் போல் நீங்கள் வாழவிரும்புகின்றீர்களா? நீங்கள் உலகத்தில் வந்து போதைற்கு உங்கள் நாட்டுச் சரித்திரத்தில் சில முத்திரைகள் வைக்க விரும்புகிறீர்களா?”
இன்னும் கல்வி தொழில் முதலியவைகளை ஆதரித்தும், சுபாசுப காலங்களில் செய்யும் ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தும் பல அரிய மொழிகள் மிளிர்கின்றன.
இவைகளைத் தனவணிகரேயன்றி நமது நாட்டார் அனைவருமே ஏற்று அதன்படி யொழுக வேண்டுமென்று நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 19.02.1928
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நம் நாட்டுக்கு Catamnpuigy எண்ண?
அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா?
இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டி யதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது.10 வருஷங்களுக்கு ஒரு முறையோ 20 வருஷங்களுக்கு ஒரு முறையோதான்' ஏற்படுகின்றது. அதை தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பனர்கள் கொடுமை செய்து வருவது ஒரு பக்கமிருந்தாலும் பார்ப்பன ரல்லாதார்களில் அரசியல் பிழைப்புக்காரரும் கோடாரிக் காம்புகளும் முடத் தெங்குகளும் மற்றொரு பக்கமும் இருந்து கொண்டு நாடு முழுவதும்
பாழாகும் வண்ணமும் சமூகம் முழுவதும் இழிவுபடும் வண்ணமும் துரோ கச்செயல்கள் செய்து வருகின்றார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இதுசமயம் முக்கியமாய் விழித்திருக்க வேண்டியதாய் இருக்கின்றது.
நம்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி விசாரிப்பதற்கென்றோ எவ்வகை சீர்திருத்தம் வழங்க வேண்டுமென் பதை அறியவோ, இதுசமயம் ஒரு கமிஷன் அரசாங்கத்தாரால் நியமிக்கப் பட்டு இருக்கிறது. இதை தக்க வழியில் உபயோகித்துக் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமை. எனவே இப்போது வந்திருக்கும் இந்த கமிஷனிடம் நமது நிலைமைகளையும் தேவைகளையும் சொல்லிக் கொள்வது எவ்வழியிலும் இழிவானதாகாது. ஆதலால் இப்போது நமது நிலை என்ன? நமக்கு இப்போது வேண்டியது என்ன? சுயமரியாதையும்
ஒற்றுமையும் தரவல்ல சமூக சீர்திருத்தமா அல்லது நாட்டை இழிவுபடுத்தி பிரித்து வைக்கும் அரசியல் திருத்தமா என்பதுதான் முக்கியமான கேள்வி. அரசியல் சீர்திருத்தம் என்பது நமக்கு இரண்டு மூன்று தடவை வழங்கப் பட்டாய்விட்டது. அதனால் எதிர்பாராத பதவிகள் எல்லாம் நமக்கு கிடைத் திருக்கின்றது. மாதம் 5500 ரூ, 6500 ரூ.7500ரூ. கிடைக்கும்படியான உத்தி யோகங்கள் கிடைத்துவிட்டன.அதுவும் தெருவில் பிச்சை எடுத்தும், பஞ்சாங்
கம் சொல்லி பணம் பறித்தும், முனிசிப்பாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தும் வந்தவர்களுக்கு உயர்தர நீதிபதி பதவியும் நிர்வாக பதவியும்
குடி அரசு - 1928 () 116
கிடைக்கத்தக்க சீர்திருத்தம் வழங்கப்பட்டு இருக்கின்றது. பிரபு பட்டமும் கவர்னர் பதவியும் கிடைத்திருக்கின்றது. இனி நமக்கு கிடைக்க வேண்டிய பதவி இன்னது பாக்கி இருக்கின்றது என்று சொல்ல மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அரசர் பதவியும் அரசு பிரதிநிதி பதவியும் சேனாதிபதி பதவியும்தான் இனி பாக்கி இருக்கின்றது என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் இது வரை நமக்கு கிடைத்த மேல்கண்ட பதவிகளை நாம் உபயோகமற்றதென்று சொல்லித் தள்ளிவிடவும் இல்லை. ஒருவர் மேல் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அதை அடைய முயற் சிக்கின்றோமே யொழிய அடைந்து வருகின்றோமே ஒழிய, வேண்டா மென்று ஒருவரும் சொல்லவே இல்லை. அவைகளை எந்த அரசியல் இயக்கமும் தள்ளவும் இல்லை. இந்த நிலையில் நாடு என்ன முன்னேற்ற மடைந்திருக்கிறது என்று. கேட்கின்றோம். ஒருசமயம், பதவியும் சம்பளமும் மாத்திரம் கிடைத்ததேயல்
லாமல் அதற்கேற்ற அதிகாரம் கிடைக்கவில்லை என்று யாராவது சொல்லக் கூடுமா? நீதிபதி அதிகாரங்களில் நம்நாட்டு மக்களின் சகல சொத்துகளைப்
பற்றியும் அவர்களது உயிரைப்பற்றியும் நீதி வழங்கத்தக்க அதிகாரம் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம். அது மாத்திரமல்ல. இந்த நீதியை மக்களுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு பாடுபடுகின்றவர்களுக்கும் மீ”ஒன்றுக்கு
நபர் ஒன்றுக்கு 50000 ரூபாய் 100000 ரூபாய் வரையிலும் கூட வரும்படி
சம்பாதிக்கதக்க நீதி வழங்கும் முறைகளையும் நீதி அடையும் முறைகளையும் கொடுக்கப் பெற்றிருக்கின்றோம். அந்நீதிகள் இன்ன விதம் இருக்க வேண்டுமென்று சட்டம் ஏற்படுத்தும் பொறுப்பும் நமக்கே கொடுக்கப்பட்டி ருப்பதைக் காட்ட சட்ட நிருமாண சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளும் உபயோகமற்றவை வென்று யாராலும் வெறுத்துத் தள்ளிவிடப்
படவும் இல்லை. இந்தியாவில் உள்ள எல்லா விதமான அரசியல் தலைவர் களும் இந்தச் சட்ட நிருபண சபைகளில் இன்றும் உட்கார்ந்து கொண்டு சட்டமியற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அதுவும் தங்களது சொந்த ஓதாவில் அல்லாமல் சீர்திருத்தத்தின் மூலம் ஏற்பட்ட நியதிப்படி பொது ஜனங்களின் வாக்குப் பெற்று பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்கின்ற முறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்க சபை தவிர மற்ற 7,
8 மாகாண சட்ட சபைகளிலும் இந்திய சட்டசபைகளிலும் ஜனப் பிரதிகளே' அதிக எண்ணிக்கை இருக்கத்தக்க விதமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சர்க்காரை தோற்கடிக்கத்தக்க அதிகப்படிக்கான எண்ணிக்கை. யாகவே இருப்பதுடன் பல தடவை சர்க்கார் தோற்கடிக்கப்பட்டும் இருக்கிறது.
நீதி இலாக்கா, சட்டசபை இலாக்கா மாத்திரமில்லாமல் நிர்வாக இலாக் காவிலும் நமக்கு அதிக எண்ணிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்வோம்.நிர்வாக சபையில் ஏழு மெம்பர்களும் ஒரு தலைவரும் இருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் ஐந்து பேர் இந்தியர்களாகவே இருக்கத்தக்க மாதிரி இருக்கின்றது.
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இந்த ஐவர்களிலும் மூன்று பேர் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களின் நம்பிக்கையை பெற்றே இருக்கத்தக்க வண்ணம் அமைக்கப்பட்டிருக்
கிறார்கள். மற்ற இருவர்களும் இந்தியப் பிரமுகர்களாகவே நியமிக்கப்படத்
தக்கதாயிருக்கின்றது. அந்தப்படியே நியமிக்கப்பட்டும் வருகிறது. அந்தப்படி நியமனம் பெறுகின்றவர்களும் அற்பத்தனமாய் நடந்து கொள்வதற் கில்லாமலும் கண்ணியமாய் நடக்கத்தக்க மாதிரியாகவும் மீ” 5550 ரூபாய் சம்பளமும் மீ£சுமார் 1500 ரூபாய் படித்தரமும் பெறும்படியான சவுகரியங் களும் அமைக்கப்பட்டு இராஜபோகமும் கொடுக்கப்பட்டு அந்தப்படியே அடைந்தும் வருகின்றார்கள்.
இந்திய ஜனப் பிரதிநிதித்துவம் கொண்ட இவ்வளவும் அரசியல் ஸ்தாபனங்கள் என்பது மூலமாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்டதாக இருக்கின்றதேயல்லாமல் வேறல்ல. எனவே இவைகளினால் நாட்டிற்கோ நாட்டிலுள்ள பற்பல ஜனசமூகங் களுக்கோ ஏற்பட்ட நன்மைகள் என்ன? ஏழைகளுக்கு ஏற்பட்ட நன்மை
கள் என்ன? விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? கூலிக்காரருக்கு ஏற்பட்ட நன்மை என்ன? வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? தொழிலாளிக்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேட்கின்றோம்.
ஏழைகளுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்கு பிச்சைக்காரர் களின் தொல்லையும் ஒழுக்கக் குறைவுகள் அதிகப்படுவதும் போதிய சாக்ஷியாகாதா? என்று கேட்கின்றோம்.
விவசாயகாரர்களுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்குப் பூமிகள் எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கே அதுவும் விவசாயம் செய்யத் தெரியாதவனுக்கே போய்ச் சேர்ந்து வருகின்றதும் விவசாயிகள் அவர். களுக்கு உழைத்துப் பட்டினி கிடப்பதும் போதிய சாக்ஷியாகாதா? என்று கேட்கின்றோம்.
கூலிக்காரர்களுக்கு ஏற்பட்ட நன்மையின் யோக்கியதைக்கு தூத்துக்
குடி, மண்டபம், நாகப்பட்டணம், சென்னை, காகிநாடா முதலிய துறைமுகங் களில் தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வாரம் ஒன்றுக்கு பதினா யிரக்கணக்கான மக்கள் கூலிக்காரர்களாக கப்பல் ஏறுகின்ற காக்ஷி போதாதா? என்று கேட்கின்றோம்.
தொழிலாளிகளுடைய நன்மையின் யோக்கியதைக்கு திடீர் திடீர் என்று ஆயிரக்கணக்காக பதினாயிரக்கணக்கான தொழிலாளர்களை முத லாளிமார்கள் வேலையிலிருந்து தள்ளுவதும் அவர்களது வேலைகளை இயந்திரங்களைக் கொண்டு சரி செய்து கொள்வதும் அத் தொழிலாளிகள். தெருத்தெருவாய் திண்டாடுவதும் t5100 ரூ. வரும்படி பெற்ற தொழிலாளி
குடி அரசு - 1928 () 118
கூலி போதாது என்று கேட்டதற்கு நீக்கப்பட்ட நிமித்தம் ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவதும், பால் கறந்து விற்பதுமான வேலையில்கூட ஜீவனம் செய்ய முடியாமல் திண்டாடுவதுமான நிலைமை போதாதா? என்று கேட்கின்றோம்.
மற்றபடி நாடு முன்னேற்ற மடைந்தது என்பதற்கு சாக்ஷியாக மக்களின் அரசாங்க நிர்வாகச் செலவுக்காக வரி வசூலிப்பது வருஷத்திற்கு வருஷம் விஷம் ஏறுவது போல வருஷம் ஒன்றுக்கு 40 கோடியிலிருந்து 165 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதும், நாட்டிலிருந்து வியாபாரத்தின் மூலம் வருஷத்திற்கு வருஷம் மேல்கண்டபடியே கோடிக்கணக்கான ரூபாய்கள் உயர்ந்து கொண்டே வெளிநாடுகளுக்கு போய்க் கொண்டு இருப்பதும் எங்குப் பார்த்தாலும் படித்த மக்கள் முதற் கொண்டு வேலை யில்லாமல் திண்டாடுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.
வியாபாரிகள் நிலைக்கு சாக்ஷியாக நாணய மாற்றுதல் மூலமாகவும் வருமான வரி மூலமாகவும் பத்து லட்சக் கணக்கான ரூபாய்களுக்கு வரு ஷா வருஷம் நூற்றுக் கணக்கான பெரிய பெரிய வியாபாரிகளும் இயந்திர சாலை
களும் தீபாவளி ஆகிவருவது போதாதா என்று கேட்கின்றோம்.
நாடு ஒழுக்கத்தில் முன்னேறியிருக்கின்றது என்கின்ற யோக்கி யதைக்கு சாக்ஷியாக கோ களும் நியாயாதிபதிகளும் நியாயவாதிகளும். காவலாளிகளும் நிர்வாக ஸ்தாபனங்களும் ஜெயில்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது போதாதா? என்று கேட்கின்றோம்.
சமூக ஒற்றுமையின் யோக்கியதைக்கு சாக்ஷியாக நாளுக்கு நாள் இந்து முஸ்லீம் கலவரங்களும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விவாதங்
களும், கீழ் ஜாதி மேல் ஜாதி தொல்லைகளும் புதிய புதிய வகுப்பு உரிமை களும் வளர்ந்து கொண்டு போவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.
நாடு அரசியல் அறிவு பெற்றிருக்கும் யோக்கியதையை அறிய சாக்ஷி யாக எலக்ஷன் கஷ்டங்களும் விவகாரங்களும் வேற்றுமை விரோதங்களும். போதாதா? என்று கேட்கின்றோம்.
சமூக முன்னேற்றமடைந்திருப்பது என்பதின் யோக்கியதையை அறிய கேவலம் மனிதனுக்கு மனிதன் தொட்டால் பாவம், பார்த்தால் பாவம் என்பதை ஒழிப்பதில் உள்ள கஷ்டங்களும் காங்கிரசில் இருந்த தீண்டாமைத்
திட்டமும் மனித சமத்துவத் திட்டமும் எடுத்தெறியப்பட்டிருப்பதும் வீதியில் நடப்பதற்கும் பள்ளியில் படிப்பதற்கும் கிணற்றில் தண்ணீர் மொண்டு குடிப்பதற்கும் நம்மால் ஒப்புக் கொள்ளப்படாமல் சர்க்கார் கோர்ட்டுகளில்
நீதி பெற வேண்டியிருப்பதும் பல சந்தர்ப்பங்களில் அங்கும் இந்திய
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அதிகாரிகளாலேயே இவைகள் மறுக்கப்படுவதும் வருணாசிரம மகாநாடுகள். நடப்பதும் வகுப்பு மகாநாடுகள் பெருகிக் கொண்டு போகவேண்டிய அவசிய மேற்படுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.
நாட்டின் பொது நாகரீக முன்னேற்றத்தின் யோக்கியதையைப்பற்றி அறிவதற்கு சாட்சியாக மிஸ்.மேயோ போன்ற நூற்றுக்கணக்கான பேர்கள். எழுதி இருக்கும் புஸ்தகங்களும் அதை நாடக ரூபமாக அன்னிய நாடுகளில் நடத்திக் காண்பிக்கப்படுவதும், இன்னும் பலர் இப்போதும் அம் மாதிரி விஷயங்களில் பிரவேசித்து புஸ்தகமெழுதி பணம் சம்பாதிப்பதும். இவ்வளவுமல்லாமல் மதத்தின் பேரால், கோயில்களின் பேரால், சுவாமிகளின்
பேரால் விபசாரப் பெண்கள் உற்பத்தியையாவது தடுக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை கொண்ட சட்டம் செய்வதில் மதத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று மதத் தலைவர்களும் உயர்ந்த ஜாதியார் என்பவர்களும், வாதாடுவதும் அறியாக் குழந்தைகளை பொம்மைக் கல்யாணம் செய்து பெண்ஜாதி புருஷர்களாக்கி வீட்டிற்குள் தள்ளக் கூடாது என்பதாக சட்டம் ஏற்படுத்த பெண்மணிகள் முயற்சித்தால் அதையும் மதத் தலைவர்களும், உயர்ந்த
ஜாதியார் என்பவர்களும், அரசியல் தலைவர்களும் மதத்தின் பேராலும் தேசத்தின் பேராலும் தடுப்பதும், மற்றும் ஒருவரை ஒருவர் தொடுவது பாவம் என்றும் ஒருவர் தொட்ட தண்ணீர் சாப்பிட்டால் நரகம் கிடைக்குமென்றும், ஒருவர் தொழும் இடத்தில் மற்றொருவர் தொழுதால் கடவுள் அருள் போய்விடும் என்றும், ஒருவர் குளிக்கும் இடத்தில் மற்றொருவர் குளித்தால் நதியோ குளமோ கெட்டுப் போகும் என்றும் மதத்தின் பேராலும் கடவுள்கள். பேராலும் நிர்பந்தப்படுத்தி வருவதும் போதாதா? என்று கேட்கின்றோம். அன்றியும் இவைகள் முழுவதும் ஒழிய வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அதற்கு “நாஸ்திகம்” என்றும் “தேசத் துரோக மென்றும் பெயர் கொடுத்து அம்முயற்சிகளை ஒழிக்கமுற்படுவதும் போதாதா? என்று கேட்கின்றோம்.
எனவே அரசியல் சீர்திருத்தத்தால் இந்தியர் இந்திய மக்கள். அடைந்திருக்கும் நன்மைக்கு மேல் கண்டவைகளைவிட இனியும் வேறு என்ன உதாரணங்கள் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆதலால் இனியும் அதிகமான அரசியல் சீர்திருத்தம் கிடைத்தால் இந்தியாவுக்கு என்ன பலனைக் கொடுக்கக்கூடும், இந்தியா என்ன கதியை அடையக் கூடும், என்பவைகளை யோசித்துப் பார்த்தால் உண்மையான இந்தியனுக்கு இப் போது என்ன வேண்டும்? அதாவது அரசியல் திருத்தமா? சமூக திருத்தமா?' என்பது புலனாகாமல் போகாது என்று சொல்லுவோம். எந்தக் காரணத்தைக்
கொண்டும் அரசியல் திருத்தத்தால் நமது நாடு முன்னேற முடியவே முடியாது என்பது இதுவரையில் கிடைத்த அனுபவத்தினாலேயே தெரிந்து கொண்டோம். அன்றியும் எந்நாடும் முதலில் சமூக சீர்திருத்தமும் சமூக
குடி அரசு - 1928 () 120
ஒற்றுமையும் பெறாமல் அரசியல் சுதந்திரம் பெற்றதாக யாரும் கூற முடியாது.
தேசீயம் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். தேசீயம் என்பது தேச மக்களின் சுயமரியாதை முன்னேற்றத்தைப் பொறுத்தது. அதை பலர் தப்பாக அர்த்தம் செய்து காட்டி பாமர மக்களை ஏமாற்றி உயிர் வாழ்கிறார்கள். அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எம்மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் விஷயமாகும். இப்போதைய அரசியல்வாதிகள் எல்லாம் தங்கள் தங்கள் தனி ஆதிக்கத் திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்ற முறைகளை வகுக்கின்றார்களே யொழிய தேசத்திற்கும் தேசத்திலுள்ள பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்ற முறைகளை வகுப்பதே இல்லை. அந்தப்படி வகுத்தால் அரசியலில் பிழைப்பவர்களுக்கு பிழைப்பு போய்விடும். ஏனென்றால் நமது நாட்டில் யோக்கியமான பிழைப்புகள் மறைந்து விட்டதினால் அநேகருக்கு அரசியல் வயிற்றுப் பிழைப்பாய் போய்விட்டது. அதிலும் தேசத்தைக் காட்டிக் கொடுத்தும் தேசமக்களின் சுயமரியாதையை விற்றும் பிழைக்க வேண்டிய நிலையில் அரசியல் பிழைப்பு அமைக்கப்பட்டுவிட்டது. ஆதலால் இப் போதைய அரசியல் இயக்கங்களாலும் இப்போதைய அரசியல் பிழைப்புக்
காரர்களாலும் ஏற்படும் அரசியல் சீர்திருத்தத்தால் இந்திய நாடு ஒரு நாளும் முன்னேற்றமடைய முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். போதிய பலனளித்தாலும் பலனளிக்காவிட்டாலும் சமூக சீர்திருத்தமே இப்போது வேண்டற்பாலது. சமூக சீர்திருத்தம் இல்லாத காரணமே இந்திய மக்கள் பல மதங்களாகப் பிரியவும் அவற்றுள் உயர்வு தாழ்வு, உள் சண்டைகள் ஏற்படவும், பல ஜாதிப்பிரிவுகள் உண்டாகவும், அவற்றுள் உயர்வு தாழ்வுச் சண்டைகள் ஏற்படவும், இதன் பலனால் மக்கள் நிரந்தரமாய் ஒற்றுமைப்பட மார்க்கமில்லாமல் வேற்றுமைப்பட்டு பிரிந்து நிற்கவுமான நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதை யாரும் மறைக்க முடியாது. இவற்றை உணர்ந்தே அனேக பெரியோர்கள் சமூக சீர்திருத்தத்திலேயே உழைத்து வந்திருக்கிறார்கள். தற்காலம் நமது சமூக நிலையின் பலன்தான் அரசியல் கொடுமைகளேயல்லாமல் வேறல்ல. அரசியல் சீர்தி ரத்தம் வந்த பிறகு சமூக சீர்திருத்தம் ஏற்பட்டு விடும் என்று சொல்பவர்கள் எல்லாம் முதல் நெம்பர். அயோக்கியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏதாவது ஒன்று இரண்டு யோக்கியர்கள் என்போர்களும் அதில் கலந்திருக்கின்றார்கள் என்று யாரா வது சொல்ல வருவார்களானால் அப்படி கலந்திருப்பவர்கள் அயோக்கியர். களாயில்லாவிட்டாலும் முட்டாள்களாகவாவது கண்டிப்பாய் இருந்து தான் ஆகவேண்டும் என்று உறுதி கூறுவோம்.
சுவாமி விவேகானந்தருடைய வாக்கைப் பாருங்கள். ஸ்ரீ மான் காந்தி யின் முந்திய வாக்குகளைப் பாருங்கள். அப்படிப் பார்ப்பீர்களானால் இந்திய நாட்டின் நன்மையைப்பற்றி இவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாய் விளங்கும்.
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
எனவே இதுசமயம் நமது நாட்டிற்கு வந்துள்ள ராயல் கமிஷனை சமூக சீர்திருத்தத்திற்காகவே நாம் உபயோகித்துக் கொள்ள வேண்டும். பகிஷ்காரமானாலும், வரவேற்பானாலும், சமூக சீர்திருத்தத்திற்கும் சுய மரியாதைக்குமே நடத்த வேண்டும். எம்மை சர். ஜான் சைமன் கூப்பிட்டு உமக்கு அரசப் பிரதிநிதி பட்டம் வேண்டுமா? சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண்டுமா? என்று கேட்டால் சூத்திரன் என்கின்ற பட்டம் நீங்க வேண்டும் என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு கவர்னர். பதவியும் சட்ட மெம்பர் பதவியும் மந்திரி பதவியும் கிடைத்தும் இந்தப்பதவி பெற்றவர்களாலாவது ஜனப்பிரதிநிதிகள் சபைகளிலாவது நம்மை சூத்திரன் என்று அழைக்கும் தன்மை மாறவில்லை என்பதை உத்தேசித்துத்தான். பறையர் என்று இழிவாக பேசப்படும் குலத்தில் உதித்தவர் என்று சொல்லப் படும் ஸ்ரீமான் எம்.சி. ராஜாவுக்கு இந்திய சட்ட சபையில் உட்காரும் யோக் கியதை கிடைத்தும் தெருவில் நடக்கும் உரிமையும் சுவாமியைப் பார்த்து கும்
பிடும் உரிமையும் கிடைக்கவில்லை, குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமையும் கிடைக்கவில்லை.
இனி எந்த அரசியல் பதவியும் பட்டமும் அதிகாரமும் கிடைத்தால் நாம் சூத்திரனாகாமல் மனிதனாயிருக்கக் கூடும். ஸ்ரீ எம்.சி. ராஜா குளத்தில் தண்ணீர் குடிக்கக் கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். “சுயராஜ்யம் கிடைத்தால் எல்லாம் சரியாய் போய்விடும்” என்கின்ற பித்தலாட்டக் காரர்களை நம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. அதென்னவென்றால் இந்தியா சுயராஜ்யமடைந்திருந்த காலத்தில்தான் ராமராஜியத்தில் தான் மனு அதர்ம சாஸ்திரம் உண்டானது. அது ஆட்சியிலும் இருந்தது.நமக்கு சூத்திரப்பட்ட மும் சண்டாளப் பட்டமும் கிடைத்து. தெருவில் நடக்க உரிமை கேட்டவர். களை கழுவில் ஏற்றினது வேதத்தையும் நீதியையும் படித்தால் நாக்கை. அறுக்கவும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், பார்த்தால் கண்ணை குத்துவதுமான சட்டம் அமுலிலிருந்து வந்தது. இப்போது இந்திய அரசர்கள் ஆளும் ராஜ்யங்கள் அதாவது மைசூர் திருவாங்கூர் கொச்சி முதலிய தேசங்களில் தான் மனு அதர்மம் தாண்டவமாடுகின்றது. ஆதலால் நமக்கு வேண்டியது. சமூக முன்னேற்றம், சுயமரியாதை. இதை அடையாமல் ராயல் கமிஷன் மாத்திரமல்ல மற்றும் நரகத்தில் இருப்பது என்பதையும் உப யோகித்து கொள்ள வேண்டியது மக்கள் கடமை. எனவே சுயநலக்காரர்கள். வார்த்தையையும் புரட்டர்கள் வார்த்தையையும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.02.1928.
குடி அரசு - 1928 () 122
இந்திய சட்டசபை முழுவ
இந்திய மக்களுக்கு காங்கிரசு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதைப் பற்றியும், சட்டசபைகள் எவ்வளவு தூரம் பிரதி நிதித்துவம் உடையது என்பதை பற்றியும், இவைகளில் உள்ள தலைவர்கள். என்போர்களும் அங்கத்தவர்கள் என்போர்களும் எவ்வளவு தூரம் பிரதி நிதித்துவம் உடையவர்கள் என்பதைப் பற்றியும் நாம் பொது மக்களுக்கு அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
சாதாரணமாக காங்கிரசு என்பது பார்ப்பனர்களுடையவும் படித்த சிலருடையவும் நன்மைக்காக, அதாவது, உத்தியோகமும், பிழைப்பும் பெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கம் என்பதாக நாம் பல நாளாக சொல்லிக் கொண்டே வந்திருக்கிறோம். அதுபோலவே சட்டசபை முதலியவைகளில் அங்கம் பெறவும் அது சம்மந்தமான தேர்தல்களில் ஏழைகளை, பாமர மக்களை நாணயக் குறைவான காரியங்களால் ஏமாற்றி சுயநலத்திற்காக ஸ்தானம் பெறவும் ஆன ஸ்தாபனங்கள் என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். இவற்றை இதுவரையில் எவரும் மறுத்ததில்லை. ஸ்ரீமான்
காந்தியும் இவைகளை ஒப்புக் கொண்டு பாமர மக்களுக்கு அறிவுவரும்வரை: இப்படித்தான் ஏமாற்றப்பட்டு வரக்கூடும் என்று சொன்னாரேயல்லாமல் பாமர: மக்களுக்கு அறிவு உண்டாக்கும் விஷயத்தில் ஒரு சிறிது முயற்சியும்
எடுத்துக் கொண்டவரல்ல. எனவே மகாத்மா என்றவர்களெல்லாம் பாமர மக்களின் அறிவில்லாத தன்மையை உபயோகித்துக் கொள்ளாமல் இருக்க முடியாமலும் பாமர மக்களுக்கு அறிவு வரும் மார்க்கத்தைச் செய்ய முடியாமலும் தலைவர்களாக இருந்து வரும்போது மற்றவர்களைப்பற்றி நாம் சொல்லுவது வீண் வேலையாகும்.
தேசீயத் தலைவர்கள் என்கின்ற முறையில் இந்தியாவுக்கு சுயராஜ்யத் திட்டம் வகுக்க அநேக கூட்டங்கள் கூட்டியாகிவிட்டது. அதிலும் இந்தியா சுயராஜ்யத்திற்கு எவ்வளவு தூரம் அருகதை உடையது என்பதை அறிவதற் காக பார்லிமெண்டாரால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் இந்தியாவுக்கு வேண்டியதை அதனிடம் தெரிவித்துக் கொள்வது இந்தியாவின் சுயமரியாதைக்கு அழகல்ல என்று சொல்லிக் கொண்டு தாங்களாக பல பல திட்டம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். எனவே,
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இவர்கள் இந்தத் திட்டத்தை என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை சற்று யோசித்தால் இதன்புரட்டு இன்னது என்பது மக்களுக்கு விளங்காமல் போகாது.
இவர்கள் போடும் திட்டம் காங்கிரஸ் மூலமோ, சட்டசபைகள் மூலமோ, அல்லது தனித்தனி நபர்களின் சொந்த ஓதாவின் மூலமோ, அல்லது
சர்வ கட்சி மகாநாடு என்பதன் மூலமோ, பார்லிமெண்டுக்கு அனுப்பியோ அல்லது அறிவித்தோ தான் அதன் பலன்களை எதிர்பார்க்க வேண்டு மேயல்லாமல் திட்டம் போட்ட ஸ்தாபனங்களோ திட்டம் போட்ட ஆசாமி களோ “இனிமேல் இந்தப்படியே ராஜரீகம் நடைபெற்று வரத்தக்கது” என்று வெளிப்படுத்தி விட்டால் அந்தப்படி அனுபவத்தில் நடக்கப் பெற்றுவிடுமா என்று கேட்கின்றோம்.
“சொன்னதைச் சொல்லுமாங் கிளிப்பிள்ளை” என்பது போல் சுய அறிவு இல்லாதவர்களும் அரசியல் பிழைப்புக்காரரும் ஏமாற்றி வாழும் சில மக்களும் சேர்ந்து கொண்டு “கமிஷன் பஹிஷ்காரம்” “கமிஷன் பஹிஷ்காரம்” என்று கத்துவதால் எல்லா காரியமும் சரிப்பட்டுப் போகுமா? என்று கேட்கின்றோம் சர்வ கட்சி மகாநாட்டின் பேரால் சீர்திருத்த திட்டம் என்பதாக ஸ்ரீமான்கள் சாப்புரூ. மாளவியா, சீனிவாசய்யங்கார் முதலியவர்.
கள் சில திட்டங்களை தனித்தனியாய் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்
கிறார்கள். அதிலுள்ள முக்கிய விஷயமும் ஒற்றுமையான விஷயமும் ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் மகமதியர்களுக்கு தனித் தொகுதி அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாது என்பதுதான். இந்த திட்டம் குறிப்பிட்ட தலைவர்கள் என்பவர்கள் மூவரும் பார்ப்பனர்கள். இவர்களுக்கு இப்போது உள்ள கவலையெல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித்து
வம் கொடுக்கக் கூடாது என்பதும் முகமதியர்களுக்கு வழங்கப்பட்டிருப் பதையும் பிடுங்கிக் கொள்ளல் வேண்டும் என்பதுமே தவிர வேறில்லை. இதற்காக இதுவரை சுமார் நூற்றுக்கணக்காக இந்து முஸ்லீம் ஒற்றுமை மகா
நாடும், சர்வ கட்சி மகாநாடும், ஒழுங்குத் திட்டங்களும் போட்டாய்விட்டது. ஒன்றும் பலித்தபாடில்லை. சர்வகட்சி மகாநாட்டிற்குச் சென்றிருந்த ஸ்ரீமான் ராமசாமி முதலியாரால் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போனாலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (தனித்தொகுதி தேர்தல்) அவசியம் இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. யார் சொன்
னாலும் லக்ஷியம் செய்யாமல் எல்லோரையும் லஞ்சம் கொடுத்தாவது ஏமாற்றி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒழிக்க வேண்டியதைத் தவிர பார்ப் பனர்களுக்கு வேறு கதியில்லை. சைமன் கமிஷன் பஹிஷ்காரத்தின் தத்துவமே இதுதான். தவிர ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் தனித்திட்டத்தில் மற்றொரு விசேஷம் இப்போது புதிதாகக் காணப்படுகின்றது. அதாவது மாகாண நிர்வாகங்களைப்பற்றிய முழு அதிகாரமும் இந்திய சட்டசபைக்
குடி அரசு - 1928 () 124
குத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அநேகம் பேர் அநேக நாளாக ஸ்ரீ சீ. ஆர். தாஸ் முதற்கொண்டு மாகாண சுய ஆக்ஷி (புரொவன்ஷியல் அட்டானமி) கொடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க பல அரசியல் மகாநாடுகளும் தீர்மானித் திருக்க இப்போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மாகாண நிர்வாக அதிகாரம் இந்திய சட்டசபைக்கு இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன என்பதைப்பற்றியும் அதுவும் இந்தியாவுக்கு அரசியல் விசாரணைக் கமிஷன் வந்திருக்கும் சமயம் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைப்பற்றியும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
என்னவென்றால் சென்னை மாகாணத்தில் உள்ள மக்களைப்பற்றி பார்ப்பனர்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. சென்னை மாகாண பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி பரவத்தக்க வேலைகள் நடந்து வருகின்றது. வயிற்றுச் சோற்று தேசபக்தர்களாக இருக்கும் இரண்: டொருவரைத்தவிர மற்றவர்களை இனி ஏய்க்க முடியாது என்கின்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனருடன் இருந்து வந்த பார்ப்பனரல்
லாதார் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்து, ஸ்ரீமான்கள் வரதராஜுலு, கந்தசாமி செட்டியார், குழந்தை, குப்புசாமி முதலியார், அண்ணாமலை
முதலியார், ஷாபிமுகமது சாயபு போன்ற சில நிர்ப்பந்தமூடைய ஆசாமிகள். தவிர மற்றவர்கள் எல்லாம் அவர்களைவிட்டு வெளிபட்டு விட்டார்கள். இந்தக் கனவான்கள் தங்களுடன் இருப்பதாலும் தங்களுக்கு ஒரு நன்மையும் உண்டாவதாக தெரிவதில்லை அன்றியும் சென்னை மாகாணமானது ஆந்திர மாகாணம், தமிழ் மாகாணம் என இரண்டு பிரிவாய் பிரிக்கப்பட போவதாக
வும் அவர்களுக்குத் தெரியவருவதால் சுத்த சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. ஆதலால் தமிழ்நாட்டு நிர்வாக அதிகாரம் மாகாண சட்டசபையில் இருக்க கூடாதென்றும் இந்திய சட்டசபைக்கு இருக்கவேண்டுமென்றும் சொல்ல வேண்டிய நிலைக்கு பார்ப்பனர்கள் வந்து விட்டார்கள். இதிலி ருந்தே இந்திய சட்ட சபை பார்ப்பன ஆதிக்கத்திற்குத் தக்கதாயிருக்கின்றது என்பது நன்கு விளங்க வில்லையா? என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.
தவிரவும் இந்திய சட்டசபையில் இது சமயம் தமிழ்நாட்டு பிரதி நிதிகளாய் உள்ளவர்கள் யார் என்பதைப் பார்த்தால் ஸ்ரீமான். ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைத் தவிர எல்லோரும் அய்யங்கார்கள் ஸ்ரீமான்கள் எ.ரங்கசாமி அய்யங்கார், எம்.கே.ஆச்சாரியார், சீனிவாசய்யங்கார், துரைசாமி அய்யங்கார், சேஷய்யங்கார் ஆகிய அய்யங்கார் “சுவாமி”களாகவே இருக் கிறார்கள். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் பார்ப்பனர் கூட இருந்து
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கோவிந்தா போட்டதால் தான் அங்கு போக முடிந்தது. இந்த பிரபுக்கள் உள்ள கூட்டத்தில் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தீர்மானம் செய்வது அதிசயமல்ல. ஸ்ரீமான் எம்.சி.ராஜா அங்கிருக்க நேர்ந்ததும் உள்ள நிலையை எடுத்துச் சொல்ல இடம் கிடைத்ததும் பார்ப்பனதாசராய் இல்லாமல் சர்க்கார்.
தயவு பெற்றதால்தான். அப்படி இருந்தும் அவர் தனது சமூகத்தைப்பற்றி கொஞ்சம் பேச ஆரம்பித்த உடனே “ஸ்ரீமான் எம்.சி.ராஜா எங்கள் பிரதிநிதி அல்ல” என்று சில வரதராஜுலுக்களையும் சாம்பசிவங்களையும் பிடித்து தந்தி தருவித்து விளம்பரம் செய்துவிட்டார்கள். ஆதலால் இப்போது நமது பார்ப்பனர்களுக்கு இந்திய சட்டசபைதான் பிரதிநிதித்துவ முடையதாகி விட்டது. அங்குதான் தமிழ் நாட்டைப்பற்றி அறியாத ஆசாமிகள் கூட்டம்
கூடும். அங்கு என்ன வேண்டுமானாலும் பொய்யும் புளுகும் வண்டி வண்டியாய் அளக்கலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது. இந்திய சட்ட சபையில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது என்பதற்கும். தெரிந்திருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்கள் சொல்வதையே “ஆமாசாமி” போடுகிறவர்கள் என்பதற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டுகின்றோம்.
சென்ற காங்கிரசின்போது, சென்னைக்கு வந்திருந்த பல வெளி மாகாண பிரமுகர்கள் என்பவர்களில் ஸ்ரீமான் கோஸ்வாமி என்பவரும் ஒருவராவார்.அவருக்கு தமிழ்நாட்டுநிலையைப்பற்றி எடுத்துச் சொல்லலாம் என்பதாக ஒரு சிறு விருந்து வைத்து அதில் எல்லா சங்கதியும் எடுத்துச் சொல்லப்பட்டது. அந்தச் சமயம் ஸ்ரீமான் கோஸ்வாமி தமிழ்நாட்டில் தொடக் கூடாத ஜாதி, பார்க்கக் கூடாத ஜாதி, தெருவில் நடக்கக் கூடாத ஜாதி இருப்ப
தாகத் தனக்குத் தெரியாது என்றும் தனது நாடாகிய வங்காளத்தில் ஜாதி வித்தியாசம் இருந்தாலும் இம்மாதிரி தொடக்கூடாத ஜாதி முதலியவை கள் இல்லையென்றும் சொன்னார். அதற்காகவே இங்கு சுயமரியாதை சங்கம் முதலியவைகள் ஏற்படுத்தி இருப்பதாகவும் அது மும்முரமாக வேலை நடக் கின்றது என்றும் இன்னின்னார் அதில் முக்கியமாய் உழைக்கின்றார்கள் என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது; அந்த சமயம் நன்றாய் குறிப்பாய் கேட்டுக் கொண்டுமிருந்தார்.
இப்படி இருக்க சமீபத்தில் கமிஷன் விஷயமாய் இந்திய சட்டசபை
யில் பேச நேர்ந்த இதே ஸ்ரீமான் கோஸ்வாமி சென்னையில் புதுப்புதுச் சங்கங்கள் தோன்றி இருக்கிறது. சுயமரியாதை சங்கம் கூட தோன்றியிருக் கின்றது என்று பரிகாசமாய் பேசி இருக்கிறார் எனவே அங்குள்ள ஆட் களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி எவ்வளவு கவலை இருக்கும் என்பதும் அவர்கள் எப்படி நடந்து கொள்ளக் கூடும் என்பதையும் இதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
குடி அரசு - 1928 () 126
தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்மக்களுக்காகவும் பாடுபடும் பெரியோர். களும் தொண்டர்களும் இவற்றை உத்தேசித்தே இந்திய பொது ஸ்தாப னங்களால் ஒரு நன்மையும் விளையாதெனக் கருதியே தனி ஸ்தாபனங்கள் மூலமாகவே வேலை செய்து வந்திருக்கிறார்கள். இதனாலேயே தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் இம்மாதிரி ஸ்தாபனங்களை அழிக்கப் பலப் பல சமயங்களில் ஸ்ரீமான்கள் வரதராஜுலு, கந்தசாமி செட்டியார், குப்புசாமி முதலியார் போன்றவர்களை கையில் போட்டுக் கொண்டு முயற்சி செய்தும்
வருகிறார்கள். இம்மாதிரி நிலையில் தமிழ் மக்கள் இனியும் உறங்கிக் கொண்டிருப்பது பெருத்த ஆபத்துக்கிடமானதாகும் அடுத்த தேர்தலிலாவது இந்திய சட்டசபை தேர்தலுக்கு பார்ப்பனர்களை விடாமலும் பார்ப்பன அடிமைகளை விடாமலும் விரட்டி அடிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழ் மக்கள் சுயமரியாதை அடைய வேண்டிய விஷயத்தில் பார்ப்பன தாசர்களாயிருந்து தேசத்திற்கும், சமூகத்திற்கும் துரோகம் செய்வதை விட
சர்க்கார் தாசர்களாகவாவது இருந்து ஸ்ரீ மான் எம்.சி. ராஜாவைப் போல் நமது சமூக இழிவை நீக்க முயற்சிப்பது ஆண்மைத்தனமும் யோக்கியப் பொறுப்பு முடையதாகும்.
ஆதலால் இனிவரும் இந்திய சட்டசபை தேர்தல்களில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய் கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 26.02.1928.
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம்
எனக்கு முன் பேசிய மூன்று கனவான்களும் பேசியவற்றிற்குப் பின்
நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது
முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ்யம் தூரமாகி விடுகின்றது என்று சொன்னார்கள். நான் தலைவனல்ல ஒரு தொண்ட னாவேன்.நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக்கின்றது என்று சொன்னேனோ அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணாசிரம தர்மமும் ஒழிந்தாலல்லது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டாமையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காக தனியாய் பிரசாரம் செய்கின்றேன்.
ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடவில்லை என்கின்
றார். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரிடம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணாசிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வதோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் இதைக் கேட்ட பிறகு அவரை “மகாத்மா” என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.
மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவுகளும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமூகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான். ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக்கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களின் சீர்திருத்தத்தைப்பற்றி
குடி அரசு - 1928 () 128
பேச யோக்கியதை உண்டு. ஆதலால் மற்ற மதங்களின் ஊழல்கள் இருப்பதற் காக நாம் நமது மதம் என்பதின் ஊழல் களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட்டால் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலக்ஷியமாய் பேசினதற்காக வருந்து வதாக பேசினார். நான் அதற்கு பரிதாபப்படுகின்றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்கமாட்டேன். யார். என்னை என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கவலையில்லை. அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத்திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல்லுவேன். ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள்ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதம் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய்
ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்கு தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டு மென்பதையும் அதற்கு விரோதமாய் உள்ள மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்தி கொண்டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த கூட்டத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும் என்றும் சொல்லிவிட்டு ஸ்ரீமான் திருநாராயண அய்யங்கார் பேசியதற்கும் மற்றதற்
கும் பொதுவாக நீண்ட பதில் உரைத்ததாவது-- ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து “நீங்கள் சாமியை கல்லென்று சொன்னீர்களே இது சரியா” என்றார்.
உடனே ஸ்ரீமான் நாயக்கர், “ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகின்றேன்” என்று மேஜை மீதிருந்த கைத் தடியைஎடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைத்தட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.
மற்றொரு பார்ப்பனர் - பத்திரிகை நிரூபர் “அந்த கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது.”
நாயக்கர்: அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்கும் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ளதானால் இதோ
- எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உப தேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்கும் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா என்றார்.
அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் “இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நீங்களாவது ஒரு புது
மதம் சொல்லுவது தானே” என்றார்.
நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத் திற்குவிரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்
தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி அது
மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.
அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்பதானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண்டாமா என்றார்.
நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது,
எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக் கின்றது என்று ஏன் கேட்க வேண்டும். இந்து மதம் என்பதாக உலக மெல்லாம் நாறுகின்றதே அந்த துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்.
அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே. உங்களுக்கு லக்ஷ லக்ஷமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்க கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.
நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சுவல்ப வரும் படிதான் வரக்கூடியதாயிருக்கின்றது. அதையும் எனக்கு சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகிறேன். அல்லாமலும் இந்த தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின்றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு
நிறுத்தி விட்டேன். இந்த பிரசார செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய்
வீதம் ஆகிவருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான்
ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்புவண்டியில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.
குடி அரசு - 1928 () 130
அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தைதான் படிக்கின்றது.
நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்
திற்கும், சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கை களும் கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன் என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்னதாவது:- இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் எனக்கு அனுபவிப்பது சகஜம் தான். எவ்வளவுக்கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ்வளவுக்கெவ்வளவு எதிர்பிரசாரங்கள் ஏற்படுகின் றதோ அவ்வளவுக்கவ்வளவு எனது வேலை சுலபமாகும். எனது எண்ண
மும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலை கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சமயம் இருந்த அரசர்கள் முட்டாள் களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாகவும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. “ராமராஜ்ய”மாகவோ “பாண்டிய ராஜ்ய” மாகவோ இருந்தால் நான் இதுவரை “ஒரே” பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது கழுவேற்றப்பட்டிருப்பேன். நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய்விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை: தாராளமாக பேச இடம் கிடைத்துவிட்டது. சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான். வீட்டில் ஒயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத்தொண்டிற்கு பிரவேசித்திருக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாக பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால்தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும் தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம்.
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும் கல், வெறும் கல்.நமது தேசீய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவைகள் வெறும் புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு-யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப்பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள்ளுங்கள். தப்பானால் தள்ளிவிடுங்கள். சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசீயமும் எனக்குத் தெரியும் அதை வெளியிடும் தொண்டு
தான் இது” என்று பேசி உட்கார்ந்தார்.
உடனே அக்கிராசனர் இனி யாராவது பேச வேண்டுமா என்றும் இதற்கு யாராவது பதில் சொல்லுகிறீர்களா என்றும் கேட்டார். 2 நிமிஷம் நிஸ்சப்தமாய் இருந்தது. ஒருவரும் பேசவில்லை என்று சொல்லிவிட்டு ஒரு கனவான் ராயல் கமிஷன் பகிஷ்கார விஷயமாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.அதைச் சிலர் பகிஷ்காரத்திற்காக இக்கூட்டம் கட்டவில்லை என்று ஆட்சேபித்தார்கள். ஸ்ரீமான் நாயக்கர் எழுந்து அதைப்பற்றி கவலையில்லை என்றும் தான் அதையும் எதிர்ப்பதாகவும் சொல்லி அதைப் பற்றி சில விஷயம் பேச அக்கிராசனரை அனுமதி கேட்டார். மணி சுமார் பத்தாய் விட்டதால் சீக்கிரம் சொல்லி முடிக்கும்படி சொன்னார். ஸ்ரீமான் நாயக்கர். வெகுவேகமாக அரசியல் புரட்டையும் பகிஷ்காரப் புரட்டையும் சொன்னார். பிறகு ஸ்ரீமான் காப்பிக்கடைதிருநாராயணய்யங்கார் பேசி ஓட்டுக்குவிட்டார். சிலரே கை தூக்கியதால் தோல்வி உற்றதாக அக்கிராசனர் சொன்னார். மறு படியும் ஓட்டு எடுக்க கைதூக்கச் சொல்லும்படி அக்கிராசனரை அய்யங்கார். வேண்டிக் கொண்டார். அக்கிராசனர் மறுபடியும் தீர்மானத்திற்கு சாதகமா னவர்களை கை தூக்கும்படி சொன்னார். வெகு சிலரே கைதூக்கினார்கள். பாதகமானவர்களை தூக்கும்படி சொல்லாமலும் முடிவு சொல்லாமலும் அக் கிராசனர் முடிவுரை துவக்கி கூட்டத்தை முடித்து விட்டார். பிறகு வந்தனோ
பசாரம் கூறப்பட்ட சுமார் 6 மணி முதல் 10 மணிக்கு மேலாக அதாவது 430 மணி நேரம் மக்கள் சுமார் 1000 பேருக்கு மேல் அசையாமல் பொறுமையுடன்
உட்கார்ந்து கேட்டுகொண்டு இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இம்மாதிரி கூட்டம் பொறுமையாக 4.30 மணி நேரம் உட்கார்ந்து கேட்ட தில்லை என்று சொல்லலாம். இனியும் 2 மணி நேரம் பேசினாலும் இருக்க ஜனங்களுக்கும் பிரியம் தானே யொழிய யாரும் நேரத்தை கவனிக்கவில்லை. தவிர பேசியவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவருக்கொருவர் கண்ணிய
மாயும், யோக்கியமாயும், பேசிக் கொண்டார்களேயொழிய நியாயத் தப்பாய் யாரும் பேசிக் கொள்ளவில்லை. கூட்டம் முடிந்து திரும்பிப் போகும்போது மாத்திரம் வழியில் பார்ப்பனர்களைப் பற்றியும் அவர்கள் சூழ்ச்சியைப் பற்றியும் அவர்கள் கையாளாய் இருக்கும் பார்ப்பனர் அல்லாத ஆட்களைப்
குடி அரசு - 1928 () 132
பற்றியும் பத்திரிகைகளைப் பற்றியும் மிக கேவலமாக பேசிக் கொண்டார்கள். நாயக்கர் வரவால் சிதம்பரம் ஒருவித புத்துயிர் பெற்றதென்றே சொல்ல வேண்டும்.
குறிப்பு: 26.02.7928 அன்று சிதம்பரத்தில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 04.03.1928
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
யார்ப்பண ௯ூழ்ச்சியும்
யணகால் நாணாணம்
டாக்டர் சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்
திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள்.நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட் டுத்தனத்திற்கும், அயோக்கியத் தனத்திற்கும் உறைவிடமாய் விட்டதாக கருதவேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித்துவமோ பொருந்தியது என்று சொல்வதற்கில்லை. இந்த ஒரு வருஷத்திற்குள்ளாக 3, 4, தடவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய்விட்டது. இதைப் போன்ற விளையாட்டு விஷயங்களே மிகுதி
யும் சட்டசபைகளில் நடக்கின்றதேயல்லாமல் பொதுஜனங்களுக்கு அனு கூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை. இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சியாகிய காங்கிரஸ் என்கின்ற
கட்சியில் 23 பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும்
எழுந்து நின்றதாகத் தெரிகின்றது. ஆகவே வெடி மூன்று ககஷிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் 6 பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்டதானது பெரிய முட்டாள் தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்காரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும் அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசீய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலை யில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு
சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப்பிராயம். கொஞ்ச காலமாக பனகால் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்ற தாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத்தின்மேல் குற்றம், அறியாமையின்மேல் அறியாமையாகவே நடவடிக் கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி
குடி அரசு - 1928 () 134
ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் ககஷி தேய்ந்து போகும்படியானதாகிவிடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர்களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பராயனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவநம் பிக்கை என்னவென்று கேட்கின்றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக் குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப்பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம். உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந்தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரி களை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டுவிட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனர் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட்டாலும் அது கெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசியாக நஷ்டத் தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனி யாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக.
குடி அரசு - தலையங்கம் - 04.03.1928.
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தேவஸ்தான நிர்வாகத்தினும்
யார்ப்பணிமாம்
தஞ்சை தேவஸ்தான கமிட்டியார் நாடார்களை தேவஸ்தான கமிட்டி அங்கத்தவர்களாய் நியமிக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அருகதை இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்து அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கின்றார்களாம்! இதை என்ன மாதிரி அயோக்கியத்தனம் என்று சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப் பற்றி எந்த தேசீய
பத்திரிகையும் எழுதாமல்: “சைமனே திரும்பிப்போ, எல்லாம் நாங்களே சாதித்து விடுகின்றோம்” என்கின்றன. சைமனை திரும்பி போக சொல்லும் சில நாடார் வாலிபர்கள் நாளைக்கு யாரிடம் இதைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை. ஒரு கூட்டத்தார் தங்கள் வயிற்று பிழைப்புக்கும் கூலிக்கும் சைமனை பஹிஷ்கரித்தால் மற்றொரு கூட்டத்தார் தங்கள் அறியாமையால் பஹிஷ்கார போலிகளுடைய மாய்கையில் சிக்கிவிடுகின்றார்கள். ஐயோ பாவம்!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.03.1928
குடி அரசு - 1928 () 136
வொய்ப் வருமை
சென்னையில் சைமன் கமிஷன் வந்து இறங்கிய தினத்தில் வேறு யாருடைய பிரயத்தனமும் இல்லாமல் பொது ஜனங்களாகவே வேலை நிறுத்தம் செய்ததாக, சொந்தத்தில் பெருமை சம்பாதிக்க யோக்கியதை இல்லாதவர்கள் தங்களது பொய்ப் பிரசாரத்தால் பெருமை அடைகிறார்கள். இது அமாவாசை அன்றைய தினம் சந்திரனுக்கு வெளிக்கிளம்பாமல் இருக்கும்படி உத்திரவு போட்ட வீரனின் பெருமைக்கே ஒக்கும். ஏனெனில்
யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பிராட்வே, சைனா பஜார் முதலிய
முக்கிய வியாபார ஸ்தலங்களில் ஞாயிற்றுக் கிழமையதினம் பெரும் பான்மையான கடைகளை மூடிவிடுகின்ற வழக்கம் உண்டு என்பது தெருப் பொருக்கிக்குக் கூட தெரிந்த விஷயம். அத்தோடு போலீசையும் தடபுடலை
யும் சென்ற மாதம் 3- தேதி காங்கிரஸ் காலித்தனத்தையும், கண்ட ஆசாமிகள் யாராவது இரண்டொருவர் அன்று வேறு வேலைக்குப் போயிருக்கவும்
கூடும். உதாரணமாக அனேக வக்கீல்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர் களும்கூட மூன்றாந்தேதி பயத்தினால் 26 தேதி தங்கள் பெண்டு பிள்ளை களை வேறு ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கேள்வி. இதுவும் “தேசீய வீரர் களின் பிரசாரம் தான் போலும். இம்மாதிரி பொய்ப் பெருமையால்
அரசியல் புரட்டர்கள் எத்தனை நாளைக்கு வாழமுடியுமோ தெரியவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.03.1928
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இன்னும் அம
சைமன் கமிஷன் அர்த்தாலின் போது பார்ப்பனர்களை அடிக்க ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை என்று தெரிகிறது. அதாவது சென்ற
வாரத்தில் ஒரு உத்தியோகப் பார்ப்பனரை யாரோ சில காலிகள் வழிமறித்து நன்றாய் புடைத்தார்களாம்! ரிக்ஷா வண்டிக்காரன் பயந்து ஓடினதற்கு ஓடாதே! ஓடாதே! உன்னை நாங்கள் அடிக்க வரவில்லை, இந்தப் பார்ப் பனனைத் தான் அடிக்க வந்தோம் என்று காலிகள் சொன்னார்களாம்! ஆனால் சிலர் அந்தப் பார்ப்பனரை அடிப்பதற்கு காரணம் வேறு விதமாக
வும் சொல்லிக் கொள்ளுகிறார்களாம்! அதாவது ஆபீசில் உத்தியோக தோரணையில் அவர் செய்யும் கொடுமையால் இம்மாதிரி ஏற்பட்டதென் கிறார்களாம். எப்படி இருந்தாலும் இது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது. எனவே இதை அடக்காமல் இருப்பது யோக்கியமல்ல.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.03.1928
குடி அரசு - 1928 () 138
சைமனுக்கு பார்ப்பணர்கனிண் விருந்து
ஸ்ரீமான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனர் சைமன் கமிஷனுக்கு ஒரு விருந்து வைத்து பார்ப்பனர்களுக்கும் அழைப்பு அனுப்பி எல்லா பார்ப்பனர்களையும் அறிமுகம் செய்து வைத்ததோடு அவரிடம் பார்ப்பனப் பிரசாரமும் செய்யப்பட்டு விட்டது. இதைப்பற்றி பேசுவோர் யாருமில்லை. தேசீய வீரர்களும் தேசீயப் பத்திரிகைகளும் தங்களை மறைத்துக் கொண்டன. பார்ப்பனரல்லாதார் யாராவது பகிஷ்காரப் புரட்டில் கலவாவிட்டால் அல்லது பகிஷ்கார புரட்டர்களின் யோக்கியதையை வெளியாக்கினால் அதற்கு பெயர் பக்தர்கள் பரவசமாம், அல்லது சர்க்கார். தாசர்களாம். என்னே அரசியல் அயோக்கியத்தனம்!
குடி அரசு - செய்திக் குறிப்பு - 04.03.4928
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சைமனுக்காக சட்டசயை பகிஷ்காறம்
சைமன் சென்னையில் இருக்கும் தினத்தன்றே நமது தேசீய வீரப்புலிகள் சட்டசபைக்குப்போய் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பிரயாணப்படி வாங்கி வந்துவிட்டார்கள். காங்கிரஸ் சட்டசபைக் ககஷிக் காரர்களின் சட்டசபை பகிஷ்காரக் கூச்சலுக்கு இதைவிட வேறு என்ன யோக்கியதைவேண்டும். இவர்களை நம்பி எத்தனையோ சோணகிரிகள் இன்னமும் ஏமாந்து போகிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மாதிரி சுயராஜ்யம் கொடுப்பது என்பது நமக்குப் புரியவில்லை.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 04.03.7928
குடி அரசு - 1928 () 140
அதிசய விருந்து
ஈரோட்டிற்கு சென்ற வாரம் முதல் மந்திரி வந்திருந்த சமயம் ஒரு விசேஷம் நடந்தது. அதாவது கோவை ஜில்லாவில் உள்ள கொங்கு வேளாள கனவான்களுக்குள்ளாகவே சிலர், அதாவது பட்டக்காரர்கள் என்கின்ற கனவான்கள் அந்தச் சமூகத்தார் பந்தியில்கூட உட்கார்ந்து உணவருந்தும்
வழக்கம் இதுவரை நடந்ததில்லை. ஆனால் முதல் மந்திரிக்கு அளித்த விருந்தின்போது பட்டக்காரர்களில் மிக செல்வாக்குப் பெற்றவரும் ஈரோடு தாலூகா போர்டு பிரசிடெண்டுமான பழய கோட்டை பட்டக்காரர் ஸ்ரீராய் பஹதூர் நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் அவர்கள் தாராளமாக இந்து முஸ்லீம் கிருஸ்தவர்கள் ஆகிய கனவான்கள் அடங்கிய கூட்டத்தில் கலந்து சமமாய் இருந்து விருந்துண்டார்கள். இது மிகவும் முற்போக்கான காரியமாகும். இதைப் பின்பற்றியாவது அச்சமூகத்தில் மற்ற சாதாரண கனவான்கள் நடந்து கொள்ளக் கூடாதா? என்று ஆசைப்படுவதுடன்
ஸ்ரீ பட்டக்காரர் அவர்களையும் அவர்களது தாராள நோக்கத்தை பாராட்டி மனதார வாழ்த்துகின்றோம்.
குடிஅரசு - செய்தி விளக்கம் - 04.03.1928
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
யார்ப்பண அயோக்கியத்தனம்
நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சுயமரியாதைக்கும் பார்ப் பனர்களே ஜன்ம விரோதிகள் என்றும், அவர்களாலேயே நமது நாடு அடிக்கடி அன்னிய ஆதிக்கத்திற்கும் கொடுங்கோல் அரசு முறைக்கும் ஆளாகி வந்துக் கொண்டிருக்கின்றது என்றும், பார்ப்பன அயோக்கியத்தனம். வீழ்ந்த அன்றே வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சிமுறை பட்டு மாய்ந்து விடும் என்றும் நாம் விபரம் தெரிந்த காலம் முதல் தொண்டை கிழியக்
கத்தியும் வருகின்றோம், கை நோக எழுதியும் வருகின்றோம். ஆனாலும், வேறு வழியில் வயிறு வளர்க்க முடியாத இழிமக்கள் தங்கள் வாழ்வுக்காக பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி சிலர் கடவுளுக்கு வக்காலத்து பேசுவது போல் இவர்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து பேசி நமது முயற்சியைக் கெடுக்க வந்து விடுகின்றார்கள். பொதுஜனங்களும் முக்கியமாய் பாமர:
மக்களும் இவ்விஷயத்தில் கவலை இல்லாமலும் தங்கள் பகுத்தறிவை
சரியாய் உபயோகிக்காமலும் கவலை அற்ற முறையில் “பார்ப்பானைக்
குற்றம் சொல்லாத முறையில் நமது வேலை நடக்கக் கூடாதா” என்போர் களும் “பார்ப்பனர்கள் 100-க்கு மூன்று பேர்கள் தானே, அவர்கள் நமக்கு ஒரு எதிரிகளா” என்று “தர்மம்” பேசுவோர்களும், மற்றும் பலவிதமாக அர்த்தமில்லாத சமாதானம் சொல்வோர்களுமாக இருந்து வருகிறார்கள். என்றைக்காவது நமது நாடு யோக்கியமான முன்னேற்றமும் சுயமரியாதையும் பெறவேண்டுமானால் பார்ப்பன அயோக்கியத்தனமும், சூழ்ச்சியும், ஆதிக்கமும் ஒழிந்த பிறகுதான் சாத்தியப்படக்கூடிய விஷயமேயல்லாமல் பார்ப்பனீய ஆதிக்கம் அடியோடு அழிபடாமல் ஒரு நாளும் முடியாது என்று கோபுரத்தின் மீதிருந்தும் கூவுவோம். வெளியில் இருக்கிற பாமர மக்களுக்கு
பார்ப்பனத் தொல்லை இன்னது என்பது ஒரு நாளும் புலப்படுவது இல்லை. பார்ப்பனன் தன்னுடைய வாழ்வுக்குத் தக்கபடி தனது நடவடிக்கையை
மாற்றிக் கொள்ளத்தக்க சவுகரியங்கள் மதத்தின் பேராலும், கடவுள், வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணங்கள் முதலியவைகளின் பேராலும் பழக்க வழக்கங்களினாலும் ஆதியிலேயே ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். அன்றியும் நம்மவர்களின் பெரும்பாலோர்களை படிக்க முடியாமல் செய்தும், படித்த சிலரையும் மேல்கண்ட கடவுள், வேதம், சாஸ்திரம், சமயம், பக்தி முதலியவைகளால் பிடிவாத மூடர்களாக்கி வைத்திருப்பதாலும் எவ்வளவு
குடி அரசு - 1928 () 142
எடுத்துச் சொன்னாலும் புத்தியில் படாமல் நமது முயற்சிகள் வீணே போய் விடுகின்றன.
கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் நமது பெண்களை விபசாரி களாக்கும் கொடுமையை ஒழிக்க முயற்சிக்கும் விஷயத்திற்கும் சிறு குழந்தைகளை புருஷன் பெண்ஜாதிகளாக்கும் கொடுமையை ஒழிக்கும் விஷயத்திற்கும் மனிதனுக்கு மனிதன் தீண்டாதவன் தாசி மகன் என்பதை ஒழிக்க வேண்டும் என்பதற்கும் நம் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஸ்மிருதிகள் பேராலும் “மதத் தலைவப் பார்ப்பனர்கள் முதல் காப்பிக் கடைப் பார்ப்பனர்கள் இடையாக தரகுப் பார்ப்பனர் ஈறாக எவ்வளவு எதிர்ப்புகளும் சூழ்ச்சிகளும் தொல்லைகளும் விளைவித்து வருகின்றார்கள் என்பது யாராவது அறியாத விஷயமா என்று கேட்கின்றோம்.
“சுயராஜ்யம் வேண்டும்” “தேசீயம் முக்கியமானது” என்று கூச்சல் போடுகிற யாராவது இக்கொடுமையிலும் இழிவிலும் இருந்து விலகுவதற்கு ஏதாவது கவலை எடுத்துக் கொள்ளுகிறார்களா அல்லது அதற்கு ஆதாரமாய் இருக்கும் இடத்தைக் கண்டு அதை வெட்டி எறிய ஏதாவது முயற்சி எடுத்துக் கொள்ளுகிறார்களா என்று கேட்கின்றோம். தேசீயக் கூச்சல் போடுகின்ற வயிற்றுச் சோற்று ஆசாமிகள் எந்த சமயத்திற்கு எதைச் சொன்னால் பாமர:
மக்கள் ஏமாறுவார்கள், பொது ஜனங்களை ஏமாற்றி வாழலாம் என்கின்ற கவலையில் இருக்கின்றார்களேயொழிய வேறு ஏதாவது மானம், அவமானம், சுரணை, இழிவு என்பதைப்பற்றி கொஞ்சமாவது உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்களா?
உதாரணமாக பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க ஸ்ரீமதி முத்து லக்ஷிமி அம்மாளவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு விரோதமாக ஒரு “பிரபல தேசீயவாதி” என்கின்ற பெயர் பெற்ற ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னது என்ன என்பதை சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர் என்ன சொன்னார் “பெண்களை கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுகிற வழக்கம் தப்பு என்பதாக இன்று நாம் ஒரு முடிவு செய்து விடுவோமானால் ஸ்ரீமான் ஈ. வெ.ராமசாமி நாயக்கரும், வரதராஜுலு நாயுடுவும் நாளைக்கு கோவிலில் சுவாமிக்கு (தரகர்கள்! அர்ச்ச கர்கள் வேண்டியதில்லை என்று சொல்லுவார்கள். அதையும் கேழ்க்க வேண்டியதாய் ஏற்பட்டுவிடும். ஆதலால் கண்டிப்பாய் மதத்தில் பிரவேசிக்க (அதாவது எவ்வித சீர்திருத்தமும் செய்ய இடம் கொடுக்கக் கூடாது” என்று
3 மாதத்திற்கு முன் சொன்ன சங்கதி யாவருக்கும் தெரியும். மற்றொரு சமயம் சுமார் 2 வருஷத்திற்கு முன்பு ஸ்ரீமான் சத்தியமுர்த்தி அய்யரை நட்டுவன் போல் படமெழுதி அவர் கையில் ஒரு ஜால்ராவைக் கொடுத்து ஒரு தாசிக்குப் பின்னால் நிறுத்தி அவர் தட்டும் மாதிரியாகவும் ஒரு தாசி ஆடும் மாதிரியாகவும் படம் போட்டு “இங்கிலாந்தில் தேசீயக் கூத்து” என்று பெயர்.
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கொடுத்து லண்டனுக்கு விபசாரத்திற்கு விடுவதற்காக ஸ்ரீமதி பத்மாசனி அம்மாளை அழைத்துப் போகிறார் என்று முதல் நாள் எழுதி விட்டு மறுநாள்: கேஸ் ஆகிவிடுமோவென்பதாகப் பயந்து விபசாரத்திற்கு என்று எழுதியது கைப்பிசகென்றும் அதை உபசாரத்திற்கு என்பதாக திருத்திக் கொள்ள
வேண்டும் என்றும் “தமிழ் நாடு” பத்திரிகையில் ஸ்ரீ வரதராஜுலு திருத்தம் எழுதியதும் யாவருக்கும் தெரியும். எனவே அப்படிப்பட்ட ........ஸ்ரீமான்
சத்தியமூர்த்தி அய்யரை அதே ஸ்ரீ வரதராஜுலு மந்திரி வேலையை தயவு செய்து ஒப்புக் கொள்ளும்படி எப்படி தந்தி கொடுத்தார்? அதே ஸ்ரீ சத்திய மூர்த்தி அய்யர் அதே ஸ்ரீமான் வரதராஜுலுவுக்கு இன்றைய தினம் எப்படி தலைவரானார்? அவர் தலைமையில் இவர் எப்படி தொண்டாற்றுகின்றார்? “தமிழ்நாடு” ஆபீசில் அடிக்கடி கதவை மூடிக்கொண்டு எப்படி இருவரும் இரகசியக் கூட்டம் கூடுகின்றார்கள்? என்பவைகளையெல்லாம் கவனித்தால் பொது ஜனங்களுக்கு இதில் ஏதாவது ஒரு இரகசியம் இருக்கும் சங்கதி விளங்காமல் போகாது.
அடுத்தாப்போல் “இந்து” பத்திரிகை என்னும் ஒரு பார்ப்பனப் பத்திரிகை எவ்வளவு தூரம் நமது மக்களுக்கு கொடுமை செய்கின்றது! எவ்வளவு தூரம் நமது முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் முட்டுக் கட்டையாயிருக்கின்றது! நமது ஆங்கிலம் படித்த மக்களை தலையெடுக்க வொட்டாமல் செய்ய எவ்வளவு அயோக்கியத்தனங்கள் செய்கின்றது! என்பனவாதியவைகள் யாருக்கும் தெரியாதா! என்று கேட்கின்றோம். உதாரணமாக சமீபகாலத்தில் “இந்து” பத்திரிகையால் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்திருக்கிறது. இதைப்பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர். “இந்து” வை ஒரு கேள்வி கேட்டார். அதாவது “ஓ! இந்துவே நீர் சீர்திருத் தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே!/ இந்தக் காலத்தில் கூட10 வயது அல்லது 2 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்கு கலியாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா” என்று கேட்டார். அதற்கு “இந்து” பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.
“40 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிளையையும் வீட்டிற்குள் விட்டு கதவு சாத்துகின்றோமே. அதுதான் விவாகம்” என்று அயோக்கியத்தனமாய் பதில்
எழுதிற்று.
இதற்கு அந்த சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால் “ஓ இந்துவே 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வது போல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட
குடி அரசு - 1928 () 144
புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அது கூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா” என்று கேட்டார். உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி போல் “இந்து” இதற்கு ஒரு மறுமொழி
யும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது. மற்றும் பல சமயங்களில் அது நம்மவர்களுக்கு விரோதமாக எவ்வளவோ கொலை பாதகத்திற்கு ஒப்பான கொடுமைகளைச் செய்திருக்கின்றது; செய்கின்றது; செய்யக் காத்திருக்
கின்றது. இம்மாதிரியான பத்திரிகையைத்தான் ஸ்ரீமான் வரதராஜுலுவும் அவரது “தமிழ் நாடும் உயர்ந்த யோக்கியமான பத்திரிகை என்று சொல்ல ஸ்ரீமான் காந்தியிடம் தூது சென்றன.
நிற்க, ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் நமது சமூகத்தார் தயவினால் சட்ட மெம்பர் ஆனவர். அப்படி இருந்தும் அவர்கள் பரம்பரை வழக்கம் போல் அதை மறந்துவிட்டு நம்மவருக்கு செய்த இடையூறுகள் கொஞ்ச நஞ்சமா? என்பதை அறியாதார் யாரும் இருக்க மாட்டார்கள்.
மேட்டூர் திட்டத்தில் அவர் செய்த புரட்டும் பித்தலாட்டங்களும் கணக்கு வழக்குகள் அடங்கியதல்ல. இதை பிட்டுப்பிட்டு ஜஸ்டிஸ் “திராவிடன்” பத்திரிகைகள் வெளியாக்கின. கொஞ்ச காலத்திற்கு முன்வரை ஸ்ரீமான் வரதராஜுலுவும் அவரது தமிழ்நாடும் ஸ்ரீமான் சி.பி. அய்யரைப்
பற்றி எழுதிய வசவு எழுத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி இருக்க இப்போது திடீரென்று சர்.சி.பி. அய்யருக்கு சிபார்சு பேசுவதும் அவரை: ஆதரிப்பதும் அவரையும் அவர் ஊழல்களையும் வெளியாக்கினதற்காக ஜஸ்டிஸ் கட்சியை “தமிழ்நாடு” பத்திரிகை வைததும் ஆகிய விஷயங் களைப்பற்றி யோசிப்பவர்களுக்கு அதிலும் ஏதாவது இரகசியம் இருக்க வேண்டுமென்று புலப்படாமல் போகுமா?
எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் பார்ப்பன சூழ்ச்சியை வெளியாக்கி மக்களை பார்ப்பனக் கொடுமையிலிருந்து விடுதலை பெறச் செய்ய ஒரு சாரார் பிரயாசைப்படும்போது ஸ்ரீ வரதராஜுலுவும் அவரது பத்திரிகையும் பார்ப்பன பூஜை செய்து கொண்டு கவிபாடி திரிந்து கொண் டிருக்க வேண்டிய இரகசியம் என்ன? இதற்காக இவருக்குப் பார்ப்பனர்கள் கொடுத்த கூலி என்ன? என்பதை கவனித்துப் பார்ப்போமாக.3 ௨ “தமிழ்
நாடு” உபதலையங்கத்திலும் 8 தேதி “ஜஸ்டிசி”லும் 9 தேதி “திராவிடனி£லும் உள்ள தலையங்கத்தில் காணப்படும் சில குறிப்புகளை சற்று கவனித்துப் பார்த்தால் ஸ்ரீ வரதராஜுலுவுக்கு பார்ப்பனர்கள் கொடுத்த கூலியும் அவர் களின் அயோக்கியத்தனமும் நன்றாய் விளங்கும். அதில் காணப்படுவ தென்னவென்றால்,
“இந்து” பத்திரிகையின் சந்தாதாரர்களின் தொகை 13,500 - 6 இருந்து
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
17,5006:@ உயர்ந்துவிட்டது. ......... தமிழ் பத்திரிகைகளுக்குள் “தமிழ் நாடு” பத்திரிகையின் சந்தாதாரர்களின் தொகை நூற்றுக்கு ஐம்பது வீதம் உயர்ந்து 6000 பத்திரிகை ஆகிவிட்டது. இது கொள்கையை மாற்றிக் கொண்டதனால் இப்படி உயர்ந்து விட்டது....... ஜஸ்டிஸ் முதலிய பத்திரிகைகளின் சந்தாதாரர்களின் தொகை மிகுதியும் குறைந்துவிட்டது...
என்பதாகக் காணப்படுகின்றது. இது அரசாங்கத்தாரின் சென்ற வருஷ நிருவாக அறிக்கையில் பத்திரிகைகளைப் பற்றிய குறிப்புகளில் இருந்து
எடுத்து எழுதப்பட்டது.
இதைப் பார்க்கும்போது பார்ப்பன அயோக்கியத்தனத்திற்கும் ஸ்ரீ வரதராஜுலுவுக்கு பார்ப்பனர்கள் கொடுத்த லஞ்சத்திற்கும் வேறு ஆதாரம் வேண்டுமா என்று கேட்கின்றோம். இந்த இலாகா நிர்வாகம் சர்.சிஃபி.என்கின்ற பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ளது. பத்திரிகை கணக்கெடுக்கும் 0.1.0 உத்தி யோகஸ்தர்கள் மிகுதியும் சர்.சிஃபி. அய்யரின் ஏவலாள்களான பார்ப்பனர்கள். எனவே இந்தக் காரியமானது சர்.ஃபி.பி.அய்யராலாவது அல்லது அவரது 010 சிஷ்யர்களாலாவது செய்த அயோக்கியத்தனமாக இருக்க வேண்டுமே யொழிய வேறு யாராலாவது அல்லது யோக்கியமா கவாவது செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். இந்த ரிப்போட்டு எழுதப் பட்ட காலத்தில் “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் மள மள வென்று உயர்ந்துகொண்டு போன காலம். இது எந்த மடையனுக்கும் தெரிந்த விஷயம். அதல்லாமல் “தமிழ்நாடு” பத்திரிகை படல் படலாய் விழுந்துகொண்டு வந்த. காலம். இப்படி இருக்க இம்மாதிரி அரசாங்க ரிபோர்ட்டில் எழுதப்படுவது என்றால் பார்ப்பன அயோக்கியத்தனம் எவ்வளவு தூரம் பாய்கின்றது என்பதற்கு அளவுண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். “தமிழ்நாட்டை”
ப் பற்றி உயர்த்தி ஒன்றுக்கு மூன்றாய் எழுதியதில் நமக்கு பொறாமை இல்லை. வேலைக்குத் தகுந்தக் கலி அடையட்டும். “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகளைப் பற்றி இவ்வளவு குறைவாய் வேண்டுமென்றே போக்கிரித் தனமாய் எழுத வேண்டிய காரணம் என்ன? என்பதுதான் நமது கேள்வி.
விளம்பரம் கொடுப்பவர்களை இப்பத்திகைகளுக்கு கொடுக்க முடியாமல் செய்துவிடவேண்டுமென்றும் “தமிழ்நாடு பத்திரிகைக்கும் “இந்து” பத்திரிகைக்கும் அதிகமான பேர் விளம்பரம் கொடுத்து அவைகள் பணம் சம்பாதித்து வயிறு வளர்த்து பார்ப்பனப் பிரசாரம் செய்யட்டும் என்றும் எண்ணினதேயல்லாமல் வேறு என்னமாய் இருக்க முடியும்?
அப்படிக்கில்லாமல் இந்த அறிக்கை அறியாமலாவது முட்டாள் தனமாகவாவது எழுதப்பட்டிருக்குமென்று யாராவது சொல்ல முடியுமா? வேண்டுமென்றே கூலிக்காகச் செய்த காரியமா அல்லவா என்பதைப் பொது ஜனங்களே யோசித்துப்பார்க்கட்டும். சற்று கடுமையாக இருப்பதாக யாராவது
குடி அரசு - 1928 () 146
சிலர் சொல்லவரக்கூடும். அக்கடுமையின் பலனை நாம் அனுபவிக்கத் தயாராயிருக்கின்றோம். ஆனால் கடுமை என்று நினைப்பவர்கள் எத்தனை நாளைக்கு இம்மாதிரி அயோக்கியத்தனங்களையும் போக்கிரித்தனங் களையும் சகித்துக் கொண்டு இருப்பது என்பதையும் இவைகளை நிறுத்த என்ன செய்வது, எப்படிப்பட்ட பாஷையில் எழுதுவது என்பதையும் பற்றி நமக்கு ஏதாவது யோசனை சொல்லட்டும். இல்லாத வரை வாயை மூடிக் கொண்டு நமது பத்திரிகையை கிழித்தெறிந்துவிட்டு சும்மா கிடக்கட்டும். இரண்டும் இல்லாமல் நோணாவட்டம் பேசவேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகுபடுத்தி நம்மை சூத்திரன் என்கின்ற பிரிவில் சேர்த்து சட்டசபையில் அறிக்கை வெளியிட்டு இன்னமும் ஆறுமாதம் கூட ஆகவில்லை. அதைப் பற்றி தொண்டையைக் கிழித்துக் கொண்டோம். கையை ஒடித்துக் கொண்டோம். யாரும் ஏன் என்று கேட்கவில்லை. “தேசீயம் பறக்கின்றது”
“சீர்திருத்தம் வாழ்கின்றது” “சுயமரியாதைக்காக பகிஷ்காரமும் அர்த்தாலும் தாண்டவமாடுகின்றது” “சட்ட சபைகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கர்ஜ்ஜிக்கின்றது' “பார்ப்பனரல்லாத் தலைவர்களும் அதற்கு எழுந்து நிற்கின் றார்கள்” இவ்வளவு அமோகத்தில் இதைப்பற்றிய அயோக்கியத்தனங்
களுக்கும் கொடுமைகளுக்கும் சற்றும் இடமே இல்லை. இனி நம்ம “தலைவிதி தான்” என்ன என்பதைப்பற்றி யாராவது யோசிக்க வேண்டாமா?
தமிழ் மக்களின் நிலைதான் என்ன? இது தலை எடுக்கும் காலந்தான் எப்பொழுது? என்பதை சற்று கவனித்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் இந்த வியாசத்தின் கருத்து “பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பேச்சே இப் போது கூடாது” என்று போலி தேசீய ஞானம் பேசும் ஸ்ரீமான்கள் வரதரா ஜுலுவும், குப்புசாமியும், அண்ணாமலையும், “தமிழ்நாடு” பத்திரிகையும் வடநாட்டு இந்து - முஸ்லீம் கலவரங்கள் போல் தென்னாட்டிலும் பார்ப்ப
னர் பார்ப்பனரல்லாதார் கலவரங்கள் ஏற்பட்டு தினம் இரு பக்கத்திலும் நாலு பத்து என்பதாக மடியவும் கை கால் ஒடியவும் ஏற்பட வேண்டும் என்கின் றதா இந்த தேசீய ஞானிகள் கருத்து என்று கேட்கின்றோம்.
அப்படி ஒரு சமயம் ஏற்பட்டாலும் கூட அதனால் ஏதாவது பெருமை வருவதாயிருந்தால் அப்போதும் இந்த வரதராஜுக்களும் “தமிழ்நாடு” போன்ற பத்திரிகைகளும் “நாம் சொல்லியபடியே நடந்தது, நாம் எழுதிய படியே நடந்தது. இதற்காக பொது ஜனங்களை பாராட்டுகிறோம்” என்று சொல்லி விளம்பரப்படுத்தி அதிலும் லாபம் சம்பாதிக்கப் பார்ப்பார் களேயொழிய இதற்காக கடுகளவாவது கவலைப்படுவார்களா என்று யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி நிலை (ஏற்படாமல் இருக்கட்டும்) ஒரு
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சமயம் ஏற்படுமானால் இவர் கதியும் என்ன ஆகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டிக்கொள்ளுகின்றோம்.
இப்பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் சாந்தத்தையும் பொருமையும் அகிம்சையையும் கொலை செய்கின்றார்களேயல்லாமல் கடுகளவாவது அதற்கு மதிப்பு கொடுக்கிறார்களா வென்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப் பார்ப்பன அயோக்கியத்தனத்தின் பலனாகவும் இப்பார்ப் பனர்களின் அடிமைகளின் நடவடிக்கையின் பலனாகவும் அரசாங்கத்தாரும் (வெள்ளைக்காரர்களும்) தங்களது ஆட்சி முறையை எவ்வளவு அக்கிரம
மாக நடத்த முடியுமோ அதற்கு மேலும் நடத்திக் கொண்டு போகத் துணிந்து விட்டார்கள். மேலும், அவர்கள் இக் கொடுமைக்கார பார்ப்பனர்களை ஆதரித்து தங்கள் கொடுமையான ஆட்சி முறையை வலுப்படுத்திக் கொண்:
டும் போகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். பார்ப்பனீயம் உள்ளவரை: அரசாங்கத்தை யோக்கியமானதாகச் செய்ய முடியாது. பார்ப்பனரல்லாதா ருக்கு நியாயம் வழங்கத்தக்கதாக செய்யவும் முடியாது என்பது நமது கடைசி முடிவு. இந்த நிலையில் இப்போது அரசாங் கத்தைப் பற்றிப் பேசுவது காட்டிலிட்ட கூச்சலாகும். பார்ப்பனீயம் என்னும் மரம் வெட்டி வீழ்த்தப் படும்போது அன்றே அதே சமயத்தில் அந்த நிழலில் வாழும் அரசாங்கமும் நசுக்குண்டு போகுமென்பது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
எனவே இவ்விஷயங்களை பார்ப்பனரல்லாத வாலிபர்கள் கண்டிப் பாய் அறிய விரும்புகின்றோம். இது மிகவும் நெருக்கடியான சமயம் என்பதை வலியுறுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 11.03.1928
குடி அரசு - 1928 () 148
க்க | த் ட
தீண்டாதார்களுக்கும் தீண்டாமையைப் பற்றியும் “சர்க்கார் சாதித்த தென்ன, சர்க்கார் சாதித்ததென்ன”” என்று தலைவர்கள் என்போர்கள் முதல் வாலர்கள் என்போர்கள் வரை கத்துகின்றார்கள்.
“சர்க்கார் அயோக்கிய ஆட்சிமுறை கொண்டது. கொள்ளை அடிக்க வந்தது” என்று நாம் தீர்மானம் செய்தாகிவிட்டது. “உலகத்தை ரக்ஷிக்க வந்த பிராமணர்களும் மதமும் தேசிய வீரர்களும்” என்ன செய்தார்கள், செய்கிறார்.
கள், செய்யப்போகிறார்கள் என்று தான் கேட்கின்றோம். அதற்கு பதில் சொல் லாமல் சற்றும் வெட்கமின்றி சர்க்கார் சாதித்ததென்ன என்று கேட்பது அயோக்கியத்தனமா அல்லவா என்று கேட்கின்றோம்.
அதோடு இன்றையத்தினம் ஸ்ரீ. 11.0. ராஜாவும் சிவராஜவும் சாமி சகஜானந்தாவும் சட்டசபைக்குப் போனதும்.தங்கள் குறைகளை அங்கெடுத்
துப் பேசுவதும் சர்க்கார் சாதித்ததா அல்லது ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலுவும், குப்புசாமியும், அண்ணாமலையும் சாதித்ததா என்று கேட்கிறோம்.
அவர்கள் பிள்ளைகள் இன்று ஆயிரக்கணக்காக பள்ளியில் அரிச் சுவடி படிப்பது சர்க்கார் சாதித்ததா அல்லது வேதமும் சங்கராச்சாரியும் இந்து
மதமும் சாதித்ததா என்று கேட்கின்றோம்.
கல்பாத்தி தெருவில் நடக்கவும் பச்சயப்பன் பள்ளியில் படிக்கவும் ஏற்பட்டது சர்க்கார் சாதித்ததா அல்லது ஸ்ரீ சீனிவாச அய்யங்காரும் ரங்கசாமி ஐயங்காரும் சாதித்ததா என்று கேட்கின்றோம்.
இன்னும் இம்மாதிரி எத்தனை வேண்டும்?
குடி அரசு - கட்டுரை - 11.03.1928.
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
€வமக்கை சம்பாஷணை
- சித்திர புத்திரன்
ஒரு குடித்தனக்காரன்: ஐயா ஆ ஆப! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கிறது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கு புண்ணியமாகும்.
சித்ரபுத்ரன் : ஐயய்யோ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?
குடி H ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா?
சித்தி 1 அப்படியானால் உங்கள் வீதியில் “பிராமணாள்” இருக்கின்றார்களா ?
குடி : ஆம், 5 வீட்டுக்காரர்கள் இருக்கின்றார்கள்.
சித்தி 1: அவர்கள் ஏதாவது உங்கள் வீதி பக்கம் வந்தார்களா?
குடி H ஆம் அய்யா, காலையில் ஒரு பிராமணர் ஆத்துக்குபோய் குளித்துவிட்டுமொண மொணா என்று சொல்லிக்கொண்டு. இந்த வீதியில்தான் போனார்.
சித்தி 1: சரி சரி, உங்கள் வீதி வீடுகள் வெந்துபோனதற்குக் காரணம் தெரிந்துபோயிற்று.
குடி H என்ன அய்யா எனக்கு தெரியவில்லையே!
சித்தி இது தெரியாதா உனக்கு; பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்டதில்லையா.
குடி H நான் கேட்டதில்லையே!
சித்தி H அடபயித்தியமே, பிராமணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில் தூக்குகிறார்களே அது ஏன்வலது
குடி அரசு - 1928 () 150
கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எறிந்து போய் விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.
அப்படியா! அது எனக்கு தெரிந்திருந்தால் நான் அவர். களை அந்த வீதியிலேயே நடக்கவிட்டு இருக்க மாட்டேனே. ஏமாந்து போய்விட்டேன்.
குடி
சித்தி
அது மாத்திரமா, பிராமணாள் வாயிலும் நெருப்பு,
வயிற்றிலும் நெருப்பு: இது உனக்குத் தெரியாதா?
தெரியவில்லையே! சற்றுத் தெரியும்படியாய் சொல்லுங் களேன்.
குடித்
பிராமணாள் “எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய்போய் விடுவாய்” என்று சொல்லுகிறார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்பதால்தானே அவர்கள் அப்படிச்சொல்வது. தவிரவும், பிராமணாள் நம்மைப் பற்றி ஏதாவது நினைத்
சித்தி
தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின்றார். களே அதன் அருத்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவதாய் இருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லா
விட்டால் முடியுமா?
இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழ்வது. இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவதானால் இந்த
குடி
நாலு பிராமணர்களாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்ப லாய் விடும் போலிருக்கிறதே.
பின்னை தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராமணர்: களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின்
றார்கள்.
ஓஹோ! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல்லு கின்றார்களா! சரி, இனி புத்தியாய் பிழைத்துக் கொள்ளு கிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங்களய்யா.
குடி
குடி அரசு - உரையாடல் - 18.03.1928
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
151
யார்ப்பண தேசீயாம்
சென்னை அரசாங்கத்திற்கு விலக்கப்பட்ட மந்திரிகளுக்கு பதிலாக
ஸ்ரீமான்கள் முத்தையா முதலியாரும் சேதுரத்தினமய்யரும் நியமனம் பெற்றுவிட்டார்கள். இவர்களால் நமக்கு ஏற்படப்போகும் நன்மை தீமைகளை பற்றி இப்போது ஒன்றும் எழுதாமல் விட்டுவிடுகிறோம்.
மந்திரிகளிடமிருந்தோ, சர்க்காரிடமிருந்தோ அல்லது எந்த விதமான அரசியல் கட்சியார் என்பவர்களிடமிருந்தோ நாம் எவ்வித அரசியல் விஷ யத்தையும் நாம் இப்போது எதிர்பார்ப்பதில்லை. அதற்கு காலம் வரும்போது அதைப் பற்றி பேசிக்கொள்ளலாம். இப்போது நாம் மந்திரிகளிடமும், அரசாங்கத்தினிடமும் எதிர்பார்ப்பதெல்லாம் நம் மக்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் சமத்துவமும் சமசுதந்திரமும், சுயமரியாதையும் ஏற்படு
வதற்கு ஆதரவுதான். இந்தக் காரியத்திற்கு எவ்வளவு தூரம் இந்த மந்திரிகள் ஆதரவளிப்பார்கள் என்பதைப்பற்றி இப்போது “ஜோசியம்” கூறும் நிலை
மையில் நாம் இல்லை.
ஏனெனில் ஒரு மந்திரி பார்ப்பனர்: அதிலும் வைதீக வேஷம் கொண்ட பார்ப்பனர். வைதீக வேஷமில்லாத பார்ப்பனராகிய சர். சி. பி. அய்யரால் நமது சமூகத்திற்கு நேர்ந்த கொடுமைகளை பார்க்கும்போது வைதீக வேஷக்காரப் பார்ப்பனரால் என்ன விளையக்கூடும் என்பதைப் பற்றி யோசித்தால் பயமாய்தான் இருக்கும். மற்றொரு மந்திரி ஸ்ரீமான் முத்தையா முதலியார் ஒரு பார்ப்பனரல்லாதார். ஆனாலும் பார்ப்பனருக்கு அடுத்தபடி என்று சொல்லத்தக்க வேளாள சமூகத்தை சேர்ந்தவர். இவரால் எவ்வளவு
தூரம் அனுகூலம் ஏற்படும் என்பதும் யோசிக்கக் கூடியதுதான். ஆனால் இப்போது நாம் அதைப் பற்றி பேச வரவில்லை.
இந்த இருகனவான்களும் மந்திரி பதவி ஒப்புக்கொண்டதற்காக “தேசீய” வயிற்றுப் பிழைப்பு ஆசாமிகளின் கூக்குரலுக்குத் தான் நாம் சமாதானம் சொல்ல விரும்புகின்றோம்.
கோணஹத்தி காங்கிரசுக்குப் பின்னாலும், மந்திரி வேலை ஒப்புக்
குடி அரசு - 1928 () 152
கொள்ளுவதில்லை என்று சொல்லியும், முட்டுக்கட்டை போடப் போகி றோம் என்று சொல்லியும் இன்னும் என்ன என்னமோ சொல்லியும் ஓட்டு வாங்கி சட்டசபை ஸ்தானம் கிடைத்த பிறகும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரியை மந்திரி உத்தியோகம் ஒப்புக்கொள்ளும்படி தந்தி கொடுத்த ஸ்ரீமான்கள் வரதராஜுலு போன்றோருக்கும் “தமிழ் நாடு” பத்திரிகை போன்றவைகளுக்கும் ஸ்ரீமான்கள் முத்தையா முதலியாரும், சேது ரத்தினமய்யரும் மந்திரி வேலை ஒப்புக்கொண்டதைப் பற்றி பேச வாயுண் டா? எழுத கையுண்டா? என்று கேட்கின்றோம். அப்படி மீறிப்பேசினால் அது பேசும் வாயா அல்லது கழிக்கும் வாயா என்று கேட்கின்றோம். மீறி எழுதினால் அது எழுதும் கையா? உலக்கையா? என்று கேட்கின்றோம்.
நிற்க, புதிய மந்திரிகளுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவளிப்பதாக கவர்னரிடம் ஒப்புக்கொண்டதாக தெரிகின்றது என்றும், “ஜஸ்டிஸ் கட்சியின் குட்டிக்கரணம்.” “பனகால் ராஜாவின் துரோகம்” என்றும் டி ஆசாமிகளும், பத்திரிகைகளும் கூப்பாடு போடுகின்றன. கோஹத்தி காங்கிரசில் “மந்திரி பதவி ஒப்புக் கொள்ளவும் கூடாது, வேறு கட்சிகள் மந்திரி ஸ்தானம் பெறுவதை ஆதரிக்கவும் கூடாது” என்கின்ற தீர்மானம் நிறைவேறி இருக்கும் போதே திருட்டுத்தனமாய் பார்ப்பன அடிமைகளை மந்திரியாக்கி. அவர்களை ஆதரித்து, விஷயம் வெளியான பின்பும் ஸ்ரீமுத்தையா முதலியாரை இதைப்பற்றி கேள்விக் கேட்கக்கூட உரிமையில்லாமல் செய்ததுடன் இம்மாதிரி அயோக்கியத்தனம் செய்ததிற்காக தங்களையே தாங்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பாராட்டிக் கொண்ட யோக்கியர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டது தப்பு “என்பதற்கு வாயேது; எழுத கையேது என்று கேட்கிறோம்.ஜஸ்டிஸ் கட்சியார். இரட்டை ஆட்சி ஒழியும் வரை உத்தியோக மேற்பதில்லை என்று சொன்னது வாஸ்தவம் தான். அந்தக் கட்சி மறுபடியும் அனுமதி கொடுக்கும்வரை: அவர்கள் உத்தியோகமேற்பதில்லை என்பதை காப்பாற்றி வருகின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சியாரை தெரிந்தெடுத்த வோட்டர்கள் உத்தியோகம் ஏற்க வேண்டாம் என்று சொல்லி தெரிந்தெடுக்கவில்லை என்பது முழுமூடனுக்கும் தெரியும். எனவே கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் கட்சிக் கூட்டத்திலேயே யோசித்து செய்யவேண்டியது: செய்து கொள்ளவும் பாத்தியமுடையது. ஆதலால் அவர்கள் நாளைக்கே கூட்டம் கூடி தீர்மா னித்து மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்வதை எந்த நியாயமும் தடுக்க முடியாது. காங்கிரஸ் காரரைப்போலவோமற்றும் பல கக்ஷியாரைப் போலவோ, ஜஸ்டிஸ் ககஷியார். ஓட்டர்களை ஏமாற்றி ஓட்டர்களுக்குத் துரோகம் செய்யவில்லை என்பதை பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலிகளும் உணரட்டும்.
தவிர, கோவைத் தீர்மானத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் நிபந்தனைகளுக் குள்பட்டு தாங்கள் மந்திரி பதவி ஒப்புக்கொள்ளுவதில்லை என்று தீர்மானித்
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
துக் கொண்டார்களேயொழிய வேறு கட்சி மந்திரிகளை ஆதரிப்பதில்லை என்று எங்கும் எப்போதும் தீர்மானிக்கவேயில்லை..
இதையறியாத தற்குறிகளும் துவேஷக்காரர்களும் சுயநலக்காரர் களும், ஜஸ்டிஸ் கட்சியை குற்றம் சொல்வதின் கருத்தென்ன? இதில் பனகால்
ராஜாவின் துரோகமென்ன? என்று கேட்கின்றோம்.
தவிர கோவை மகாநாட்டில் இரட்டை ஆட்சியென்பதைப் பற்றி பேசியபோது நிர்வாக சபையில் ஒரு பார்ப்பனர் இருந்து கொண்டு பார்ப்பன ரல்லாதாருக்கு செய்த அக்கிரமங்களையும் கொடுமைகளையுமே முக்கிய மாகக் குறிப்பிட்டு பேசியது அக்கூட்டத்திலிருந்த பந்தற்கால்களுக்கும் சுவர்களுக்கும் கூட நன்றாய் விளங்கியிருக்கும். அப்படி இருக்க அந்த பார்ப்பனர் ஒழிந்ததோடல்லாமல் அந்த ஸ்தானமும் ஜஸ்டிஸ் கட்சியாருக்கே கொடுப்பதானால் மற்ற மந்திரிகளிடம் ஜஸ்டிஸ் கட்சியார் வேலை வாங்கிக் கொள்வதில் யாருக்கு என்ன ஆட்க்ஷேபம்? எந்த “சத்திய தேவதைக்கு”
இதில் ஆபத்து வந்து விட்டது? என்று கேட்கின்றோம்.
பார்ப்பன அடிமைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு மந்திரி வேலை
ஒப்புக் கொண்டால் அது “தேசீயம்” ஆகிவிடுகிறது. அம்மந்திரிகள் “தேசீய
மந்திரிகள்” ஆகிவிடுகின்றார்கள். அவர்களை வெளியில் இழுத்து விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமான மந்திரிகள் வந்தால் அது “தேசத் துரோகம்” “பனகால் துரோகம்”, ஐஸ்டிஸ் ககஷியார் குட்டிக் கரணம் ஆய்விடுகின்றது. என்னே பார்ப்பன சக்தி! இந்த பித்தலாட்டம் ஒழிந்தாலல்லது இந்த நாட்டுக்குச் சுயமரியாதை இல்லையென்பது நமது உறுதி. ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை - எந்தக் காரணத்தைக் கொண்டா வது அரசாங்கத்தார் சட்ட மெம்பர் பதவியை ஒரு பார்ப்பனருக்கு கொடுப் பார்களேயானால் மறு நாளே இந்த மந்திரிகளை கவிழ்த்து விட வேண்டியது அவர்களது கடமையாகும். நமக்கு சுயமரியாதையும், சமத்துவமும், சம உரிமையுமே நமது தேசீயம் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். மற்றபடி வயிற்றுப் பிழைப்புக்கு தேசீயத்தைப்பற்றி நமக்கு ஒரு சிறிதும் கவலை இல்லை.
குடி அரசு - தலையங்கம் - 18.03.1928
குடி அரசு - 1928 () 154
தனைவர் உத்தம யானையம் முதலியார்
மறைந்தார்
தமிழ்நாட்டுத் தலைவரும் தமிழர்களின் நண்பருமான உத்தம பாளையம் முதலியார் என்கின்ற மதுரை ஸ்ரீமான் எம்.டி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் வியாழக் கிழமை இரவு காலஞ்சென்றார் என நண்பர்: திரு. பி.டி ராஜன் அவர்களின் தந்தியால் தெரிந்து திடுக்கிட்டுப் போனோம். தலைவர் முதலியார் அவர்களுக்கு ஏற்பட்ட நீரழிவு வியாதியானது எவ்வளவு சிகிச்சை செய்தும் குணப்படாமல் அவரது உயிருக்கு “கூற்றுவ”னாகவே முடிந்துவிட்டது. திருவாளர் முதலியார் அவர்கள் தமிழ்
நாட்டின் பழங்குடி மக்களுள் முதன்மையானவர். தென்னாட்டில் நாயக்கர்: அரசாங்கம் ஏற்பட்டிருந்த காலத்தில் அவருக்கு பிரதம மந்திரிகளில் ஒருவராகிய திரு. அரியநாயக முதலியாரின் சந்ததியில் வந்தவர். மதுரை ஜில்லாவிலுள்ள பெரிய மிராசுதார்களில் முக்கியமானவர். பாரம்பரிய மாகவே செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தவர். அரசாங்கத் தாராலும் சுதேச மன்னர்களாலும் புராதன ஜமீன்களாலும் மிகுதியும் போற்றப்பட்டவர். நமது மன்னராகிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியவர். களின் முடிசூட்டு வைபவத்திற்கு அழைக்கப்பட்டு இங்கிலாந்து சென்றவர். இவையாவும் அவரது மேன்மையையும் அந்தஸ்தையும் காட்டக்கூடிய தானாலும் நாம் அவரைப் போற்றி துதிக்கும் தன்மை என்ன வென்றால், தமிழ்நாட்டில் உள்ள மற்ற செல்வவான்களைப் போல் தமது வாழ்வுக்கும் திருப்திக்கும் தமது செல்வத்தை உபயோகிப்பதும் தமது சுயநலத்திற்காக செல்வம் சம்பாதிக்க வாழ்வு நடத்துவதும் போன்ற செல்வவான்களைப் போலல்லாமல் இவர் தமிழ் மக்களின் மேன்மைக்கும் சுயமரியாதைக்குமாக பெரிதும் தமது வாழ்வையும் செல்வத்தையும் உபயோகப்படுத்தி வந்தவர். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆரம்பித்த காலம் முதற் கொண்டு அவ் வியக்கத்திற்கு ஸ்தம்பமாய் இருந்து வந்தவர். அன்றியும் எந்தக் காரணம் கொண்டும் அவ்வியக்க சம்மந்தமாய் மற்றவர்களைப் போல் அடிக்கடி அபிப்பிராய மாறுதல் அடையாமல் ஒரே நிலையில் இருந்து அவ்வியக்
கத்திற்கு தொண்டு செய்து வந்தவர். தென் இந்திய நல உரிமைச் சங்கத்திற்கு உபதலைவர். சென்ற சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் இயக் கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தோல்வி அடைந்த காரணத்தால் இயக்கமே
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மறைந்து விட்டது என்று நினைக்கும்படியாக ஏற்பட்ட நெருக்கடியான காலத்தில் மதுரையில் பெரிய மகாநாடு கூட்டுவித்து இயக்கத்திற்கே புத்துயிர ளித்த பெரியார். நமது மக்களுக்காக இன்னும் எவ்வளவோ அரிய பெரிய காரியங்கள் செய்ய வேண்டும் என்றும் இவ்வியக்கத்தினரிடம் பிணங்கி பிரிந்து நிற்கும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும் பெரிதும் கவலையுடன் பல பெருந் திட்டங்களையும் ஏற்படுத்திக் கொண்டி ருந்தவர். சுருங்கக் கூறின் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு சென்னை தவிர வெளியிடங்களில் யாராவது உண்மையான தலைவர்கள் இருப்பார்களானால் அவர்களுள் நமது முதலியாரே முதன்மையானவர். இப்பேர்ப்பட்ட ஓர்: பெரியார் இந்நிலையில் நம்மைவிட்டுப் பிரிந்ததானது நமது தவறு காலம் என்றே சொல்ல வேண்டும். அவர்களது அருமை குமாரருக்கும் அவரது சகோதரருக்கும் மற்றொரு சகோதரரின் குமாரரான திரு. பி.டி. ராஜன் அவர்.
களுக்கும் மற்றும் அக்குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். எல்லாம் வல்ல சக்தியானது அவர்கட்கு
ஆறுதல் அளிப்பதாக.
குடி அரசு - தலையங்கம் - 25.03.1928
குடி அரசு - 1928 () 156
1011” ரிவோல்ட்
ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியும் கே. நடராஜன் போன்றவர்களும்
மற்றுஞ் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரசாரத்திற்கு விரோத மாக ஆங்கிலத்தில் பத்திரிகைகள் மூலியமாயும், வியாசங்கள் மூலியமாயும்
பிரசாரம் செய்கிறபடியாலும், நமது பிரசாரமும் பத்திரிகையும் தமிழிலேயே இருப்பதாலும் அது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போக மார்க்க மில்லாமலிருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு வாரப் பத்திரிகை *குடி அரசு” கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதாக ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அப்பத்திரிகைக்கு “ரிவோல்ட்” ௦1) என பேர் கொடுப்பதென்றும் தீர்மானித்திருக்கிறோம். அப்பத்திரிகைக்கு கெளரவ ஆசிரியர்களாக இருக்க சில ஆங்கிலங் கற்ற நண்பர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். பல அறிஞர்கள் அரிய விஷயதானம் செய்யவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்பத்திரிகையை தற்கால “குடி அரசு” அளவில் 8 பக்கம் கொண்டதாகவும் வருஷ சந்தா ரூபாய் 3 ஆகவும் வைத்து வெளிப் படுத்தத் தீர்மானித்துள்ளோம். சமீபத்தில் வெளியிட முயற்சித்துக் கொண்டி ருக்கிறோமாதலால் அன்பர்கள் சந்தாதாரர்களாய்ச் சேரவும் மற்றும் கூடிய உதவிகள் செய்யவும் முன்வர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். சந்தா தாரர்களாகச் சேர இஷ்டமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம்.
குடி அரசு - அறிவிப்பு - 25.03.1928
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
உஷார்! உஷார்!
மண்டையிமையமாங்கள்!
சென்னையில் பார்ப்பனீயத்தைப் பரப்புவதற்கு ஒரு புதிய ஸ்தாபனம். சமீபத்தில் பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதுதான் “கிராமப் புனருத்தாரண வேலை ஸ்தாபனம்.” நண்பர்களே இந்தப் பெயரைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஸ்ரீமான்கள் நேரு, சீனிவாசய்யங்கார், சீனிவாச சாஸ்திரியார் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து “இந்திய ஐக்கிய ஒற்றுமை சங்கம்” என்பதாக ஒன்றை ஸ்தாபித்தார்கள். அதில் வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களை சேர்ப்பதில்லை என்றும் நிபந்தனை போட்டார்கள். அது நமது தமிழ் நாட்டிற்குள் வராதபடி மண்டையிலடித்து கொல்லப்பட்டுப் போய்விட்டது.
அதுபோலவே இப்போது மறுபடியும் முயற்சி எடுத்து கிராம புனருத்தாரணம் என்னும் பெயரில் சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு மெம்பர்கள் ஸ்ரீமான்கள். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மோதிலால் நேரு,
ஏ. ரங்கசாமி அய்யர், கேல்கர், பட்டாபி சீதாராமய்யர், பி. சிவராவ், டாக்டர் பெசண்டு, அருண்டேல், ரங்கநாத முதலியார் போன்றவர்களே. இது பிரம ஞான சங்கத்தினர் வாலைப்பிடித்து ஆரம்பித்த புதிய சூழ்ச்சியே யாகும்.
தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு கொடிய எதிரியாக பிரம்மஞான சங்கம் விளங்குகின்றது. அச்சங்கத் தலைவர் ஸ்ரீமதி பெசண் டம்மைக்கு உள்ள பணமும் செல்வாக்கும் அடையாறு பிரம்மஞான சங்கத் தோற்றமும் அநேக பார்ப்பனரல்லாதார்களையும் மூடர்களாகவும் இனத் துரோகிகளாகவும் ஆக்கி அச்சங்கத்திற்குப் பலி கொடுத்திருக்கிறது. இதைப் பார்த்து யாரும் ஏமாந்து விடக் கூடாது என்றும், இப்புதிய சூழ்ச்சியில் யாரும்
சிக்கி அதற்கு ஆளாகக் கூடாது எனவும் எச்சரிக்கை செய்து பணிவாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.03.1928
குடி அரசு - 1928 () 158
யார் வார்த்தைகள் கழணம்?
பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளை கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம் மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் “மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலை களை சம்பாதிப்பார்கள்” என்று சொன்னாராம். இது யோக்கியமான வார்த் தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர். களாவது கண்டித்தார்களா என்று கேட்கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர்களுடைய இம் மாதிரி வார்த்தை களை கண்டித்தாரா என்று கேட்கின்றோம்.
ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளை கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீ வரத ராஜுலுவுக்கும் “தமிழ்நாடு” க்கும் “பெண் ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள்” என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்கவில்லையா?
சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜிகளில் யாருக்காவது மேக வியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசீயவாதிகள். உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ்வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரி பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக் காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல. தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும் அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவைகளில் அதிகப் பிரசங்கித்தனமாய் பேசிவிட்டு. மன்னிப்பு கேட்டுக் கொண்டதானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண்டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.ஆகவே யாருடைய வார்த்தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும் பொய்யானதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரிகைகள் என்ன வேலை செய்து
யார் நடத்தினாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசீய மென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசீயமாகவும் காங்கிரஸ் சட்ட மாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 25.03.1928
குடி அரசு - 1928 () 160
வரிய அக்கிரமம்
பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,
ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்கு பூணூல் போட்டு உபநய னம் செய்யப்பட்டதாம். இதற்காக பார்ப்பனர்களுக்கு செய்யும் சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டனவாம். இந்தத் தீண்டாதார்கள் எனப்படும் ஆயிரம் பேரும் நாளைக்கு நமக்கு எமனாய் வரப்போகிறார்கள் என்பது சத்தியம்.
ஏனெனில் இதுபோல் ஒவ்வொரு காலத்தில் சீர்திருத்தம் என்னும் பெயரால் நம்மவர்களுக்கு போட்ட பூணூலினாலும் செய்த உபநயத் தினாலுமே இந்நாட்டில் இத்தனை பார்ப்பன எமன்கள் தோன்றியிருக்கின் றன என்பது ஆராய்ச்சி உள்ள எவருக்கும் தெரியும். எனவே இந்த பூணூல் போட்ட ஆயிரம் பேரும் நாமம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் சி. ராஜ கோபாலாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார், வி.வி. சீனிவாசய்யங்கார் களாகவும் விபூதி பூசினார்களானால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரிகள், கே. நடராஜன் போன்றவர்களாகவும், கோபி சந்தனம் போட்டார்களானால் ஸ்ரீமான்கள் மதன்மோகன் மாளவியா வாகவும் தோன்றப்போகிறார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமே இல்லை.
இவைகளுக்கு சற்று தாமதமானாலும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியாராகவாவது வெகு சீக்கிரத்தில் வரப்போகிறார்கள் என்பது உறுதி. பூணூலை அறுத்தெரிய வேண்டிய சமயத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு பூணூல் உபநயனம் நடப்பது அக்கிரமம்! அக்கிரமம்! பெரிய அக்கிரமம்!
எனவே தீண்டாதார்கள் என்கிற நமது சகோதரர்களை பார்ப்பன
மதத்திற்கு விட்டு பார்ப்பனர்களுக்கு பறிகொடுக்காமல் அவர்களுக்கு சகல உரிமைகளும் கொடுக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் முக்கிய
கடமையாகும்...
குடி அரசு - கட்டுரை - 25.03.1928.
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இன்னுமா சந்தேகம்?
ரகசியம் வவணியாய் விட்டது
பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசியத்தின் பேராலும் ஸ்ரீ வரத ராஜுலு போன்ற ஆசாமிகளை சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பன ரல்லாதாருக்கு கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் “காங்கிரசுக்கும் தேசீயத்திற்கும்' விரோதமாய் பொய்க்கால் மந்திரிகளை சிருஷ்டித்ததும் அவர்களை ஆதரித்தும் பார்ப்பனரல்லாதார்களுக்கு கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம். இதற்கு சரியான ௬ஜூ கொடுக்க சமீபத்
தில் சென்னை சட்ட சபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்க நாத முதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம்.
அவர் சொன்னதாவது “1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப் பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் கமிட்டி
களுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்”, இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23-3-1928 ௨ “சுதேசமித்திர” னிலேயே இருக்கிறது. இதை காங்கிரஸ் கக்ஷி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள்
சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்டசபையில் மறுக்கவில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை. இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி. நிபந்தனை செய்துகொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதி னாலேயே ஸ்ரீ ரங்கநாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்து தேசீயமென்பதும் காங்கிர சென்ப
தும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 25.03.1928.
குடி அரசு - 1928 () 162
ய்ங்மாண் ஈாககோயாலாச்சாரியின்
சீர்திருத்த யோக்கியதை ர்மசாஸ்திரத்துக் ஸ்
தமிழ்நாட்டில் தற்காலம் தோன்றியிருக்கும் சுயமரியாதைக் கிளர்ச்சி யின்பலனாக இந்துமத மென்பதைப் பற்றியும், அதற்காதாரமாயுள்ள வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் என்பனவற்றைப் பற்றியும், வருணம், தர்மம் என்பனவற்றைப் பற்றியும் மக்களுக்குள் பரபரப்புண்டாகி அவற்றைப்
பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்தலும், அவற்றின் புரட்டுகளை வெளியாக்கி தைரியமாய் கண்டித்தலும், அவற்றால் ஏற்பட்ட கொடுமைகளை ஒழிக்க ஆங்காங்கு தீவிரப் பிரசாரம் செய்தலும், கொடுமைக்கு ஆதரவளிக்கும் ஆதாரங்களைத் தீயிட்டுக் கொளுத்துதலுமான பிரசாரங்கள் மும்முரமாய் நடப்பதைக் கண்டு பார்ப்பனர்கள் தங்கள் வாழ்வுக்கே ஆபத்து வந்தெனக் கருதி இவைகளுக்கு விரோதமாக எதிர் பிரசாரம் செய்வதும், பார்ப்பன ரல்லாதாரிலேயே சிலரை ஏவிவிட்டு இடையூறு செய்விப்பதும், வேறு மார்க்கத்தில் வாழ முடியாதவர்கள் இவ்வெதிர்ப் பிரசாரத்திற்கு ஆதரவ ளித்து வாழ்வதுமான காரியங்கள் நடைபெற்று வருவதும் யாவரும் அறிந்த விஷயமேயாகும். சிறிதுகாலமாய் “சுதேசமித்திரனும்” “தமிழ்நாடும்” “குயராஜ்யா' வும் “ஹிந்துவும் மற்றும் சில பார்ப்பன கூலிப் பத்திரிகைகளும் இவ்வேலையில் ஈடுபட்டுத் தீவிரமாய் எதிர்ப் பிரசாரம் செய்து வருவதும் யாவரும் அறிந்த விஷயமாகும். இவ்வளவும் போதாமல் சீர்திருத்தக்காரர். என்றும், தேசாபிமானிகள் என்றும் பேர்வாங்கிய சில பார்ப்பனர்களும் இதில் ஈடுபட்டு மக்களை ஏய்த்து வருகிறார்கள்.
சீர்திருத்தக்காரர் என்பவர்களில் ஸ்ரீமான் கே. நடராஜன் என்னும் பார்ப்பனர் இந்தியா முழுதுக்கும் சீர்திருத்தக்காரர் என்னும் பேர்வாங்கி யவர். அவருடைய சூழ்ச்சியைப் பற்றி பலதடவை எழுதியிருக்கிறோம். ஸ்ரீ.ஸி.ராஜ கோபாலாச்சாரி என்கின்ற ஒரு ஐயங்கார் பார்ப்பனர் தமிழ்நாடு முழுவதிலும். பெரிய சீர்திருத்தக்காரர் என்ற பெயர் வாங்கினவர், தமிழ் மக்க ளையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். இப்பொழுதும் சமயம் பார்த்து வெளிக் கிளம்புவ தற்காக பதுங்கிக் கொண்டிருப்பவர். பொது உலகத்தில் தன்னை ஒருவரும்
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மறந்து விடாமலிருக்கும்படி விஷமப் பிரசாரத்தின் பேரால் அடிக்கடி தலைக்காட்டிக் கொண்டிருப்பவர். தனக்கு ஜாதி வித்தி யாசமில்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், தன்னிடம் பார்ப்பனத் தன்மை இல்லை யென்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாயிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதாரியக்கத்தை ஒழித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதில் இந்தியாவிலுள்ள பார்ப்பனரெல்லாரையும் விட அதிகமான கவலையும் அதற்கேற்ற சூழ்ச்சியும் தந்திரமும் கொண்டவர். இப்படிப்பட்ட ஸ்ரீ.ஸி. ராஜகோபாலாச்சாரியார் 21.3.28 ல் இங்கிலீஷ் “சுயராஜ்யா” பத்திரிகையில் மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு 7 கலங்கள் எழுதியிருக்கிறார். அதில், மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டுமென்பது தற்கொலைக்கு ஒப்பாகுமென்றும், அது அருமையான நீதிகளைக் கொண்டது என்றும் விசேஷமாய் புகழ்ந்துவிட்டு, பார்ப்பனருக்கு
சம்பந்தப்படாததும், கவலையில்லாததுமான விஷயங்களைப் பற்றி மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து இரண்டொரு வாக்கியங்களை எடுத்துக்காட்டி பொது ஜனங்களை ஏமாற்றப் பார்த்திருக்கிறார். இதன் காரணமென்னவென்போ மானால்,மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்த வேண்டுமென்பதான உணர்ச்சி இந்தியாவெங்கும் பரவி வருவதைப் பார்த்து அதை அழிப்பதற்காகவே எழுதப்பட்டதாகும். மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ள சில வாக்கியங்களை நாம் இதிலெடுத்து காட்டுகிறோம். அந்தந்த வாக்கியங்களின் முடிவில் அவ்வாக்கி யங்கள் எத்தனையாவது அத்தியாயத்தில் உள்ளதென்பதையும், அது எத்தனையாவது சுலோக மென்பதையும், காட்டி அவ்வவ்வாக்கியங்களை கீழே குறிப்பிடுகின்றோம். அதாவது
*பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும் அவன்
நீதி செலுத்தலாம், சூத்திரன் ஒருபோதும் நீதி செலுத்தலாகாது”. அ.8.௬.20.
“சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடைய தாயிருக்கும்'..அ.8. ௬.22.
*சூத்திரனாகவும் மிலேச்சனாகவும் பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி” அ 8 ௬22
“ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை”. அ.8.ச112.
“நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனை சத்திய மாகச் சொல்லச் சொல்ல வேண்டும். பிரமாணம் செய்யவேண்டிய சூத்திர னைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும். அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்குக் கை வேகாமலும் தண்ணீரில்
குடி அரசு - 1928 () 164
அழுத்தியதால் உயிர்போகமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.” அ.8.௪ு113,14,15.
“சூத்திரன் பிராமணரைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். அ.8, சு 270.
“சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவற்றைச் சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.” அ.8.௬271.
“பிராமணனைப் பார்த்து” நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லு கிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றவேண்டும்." ௮2௬272.
“சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். அ.8.௬281.
*பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை.” ௮8143.
“சூத்திரன் பிராமணப்பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்போகும் வரையில் தண்டிக்க வேண்டும்.”
“பிராமணன் கொலைக்குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமல், செய்த குற்றத்துக்கு எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்'அ.8.௬380.
“அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்குபணிவிடை செய்யும்படி கட்டளை இடவேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்.” அ.8.௬410.
*பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம். ஏனென்றால் பிராமணனுக்கு தொண்டு செய்யவே கடவுளால் படைக்கப் பட்டிருக்கிறான்.” அ.8.௬413.
“பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப் பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொரு
ளுக்கும் உடையவனாக மாட்டான்.” அ.8.௬417.
“சூத்திரன் பொருள் சம்பாதித்தால் அது அவனுடைய எஜமான
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
னாகிய பிராம்மணனுக்குச் சேரவேண்டுமேயன்றிச் சம்பாதித்தவனுக்குச் சேராது.'அ.9.௬446.
*பிராமணனால் சூத்திர ஸ்திரிக்குப் பிள்ளை பிறந்தால் அப் பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை.” அ.8.௬455.
“பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து கொல்லவேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தன் இஷ்டப்படி கொள்ளையிடலாம்.” அ.9.௬248.
“பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்” அ8.சு317.
“பிராமணர்கள் இழிதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவர்களாவார்கள்.” அ.9௬38.
*பிராமணனிடமிருந்து ஷத்திரியனுண்டானவ னானதனால் அவன் பிராமணனுக்குத் துன்பஞ்செய்தால் அவனை சூன்யம் செய்து ஒழிக்க வேண்டும்”. அ.9.௬319,320.
“சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணரில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும் க்ஷத்திரியனில்லா விட்டால் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான பசுக் களும் செல்வமும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டுக் கொடுக்கா விட்டால் களவு செய்தாவது பலாத்காரம் செய்தாவது அவற்றைப் பிராம ணன்
எடுத்துக் கொள்ளலாம். ௮11௬12.
“சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்.” அ711௬13.
“யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்
கக் கூடாது.” அ.ி.௬20.
“பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவ
மாகும்.” அ.71.௬66.
*ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்ய
வேண்டும்.” அரி.சு131.
“அதுவும் முடியாவிடில் வருணமந்திரத்தை 3 நாள் ஜெபித்தால்
குடி அரசு - 1928 () 166
போதுமானது.” அ.71.ச132.
“க்ஷத்திரியன் இந்நூலில் சொல்லப்பட்டபடி ராஜ்ய பாரம் செய்வதே தவமாகும். சூத்திரன் பிராமணப் பணிவிடை செய்வதே தவமாகும்.” ௮1௯285
*சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே
யாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனே யாவான். ஏனெனில் கடவுள் அப்படியேநிச்சயம் செய்துவிட்டார்.” அ:10.௬75.
*பிராமணரல்லாதவன் உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.” அ.10.௬96.
“சூத்திரன் இம்மைக்கும் மோக்ஷத்திற்கும் பிராமணனையே தொழவேண்டும்.” அ:10.௬122.
“பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும் உடுத்திக் கிழிந்த ஆடையும் கெட்டுப்போன தானியங்களும் சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்க வேண்டும்” அ:10.ச125.
“சூத்திரன் எவ்வளவு திறமையுடையவணாயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணருக்குத் துன்பமாய் முடியும்.” அ410.சு129.
“மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ அதுவே வேத சம்மதமாகும்.ஏனென்றால் அவர் வேதங்களின் கருத்துகளை நன்றாய் உணர்ந்தவர்.” ௮.2.7.
“வேதத்தைச் சுருதியென்றும் மனுதர்ம சாஸ்திரத்தை ஸ்மிருதி யென்றும் அறியத் தக்கது. இது இரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாவான். அத்தகைய நாஸ்திகனை ஒழித்துவிட வேண்டும்.” ௮2௬10.
இம் மாதிரி ஆயிரக்கணக்கான சுலோகங்கள் மனுதர்ம சாஸ்திரத்தில் காணப்படுவதைப் பற்றி ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரி என்ன சமாதானம் சொல்லுகிறார் என்று கேட்கிறோம். இது போலவே நாமும் நம்மையே ஒரு மனுவென்பதாகப் பெயர் சூட்டிக் கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கனுகூல
மாய் ஒரு “தர்ம நூல்” இதுபோல் எழுதினால் ஸ்ரீமான்கள் ராஜகோபா
லாச்சாரியும் நடராஜனும் மற்றும் இந்துமதப் பிரசாரம் செய்யும் வரதராஜுலு
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
போன்றாரும் சும்மாயிருப்பார்களா வென்று கேட்கிறோம்.
இந்து மதம் என்பதற்கு மனுதர்ம சாஸ்திரமென்பதும் அதற்காதார மென்று சொல்லப்பட்ட வேதமென்பதும் இவைகளை ஆதாரமாய்க் கொண்டு எழுதி வைத்த புராணங்களென்பதும் அப்புராணங்களில் காணப் பட்ட கடவுள்கள் என்பவைகளும் தவிர வேறு ஏதாவது ஆதாரமிருக் கின்றதாக யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் அவ்வாதாரங்கள் இம் மனுவாதாரங்களை மறுக்க முடியுமா? இவற்றை யோசித்தால் நாம் செய்து
வரும் பிரசாரம் யோக்கியமானதா அல்லது ஸ்ரீமான்கள் நடராஜனும் ராஜகோபாலாச்சாரியும் செய்துவரும் சீர்திருத்தப் பிரசாரமும் வரதராஜுலு
வும் அவர்கள் போன்ற சில கூலிகளும் செய்து வரும் இந்துமதப் பிரசாரமும் யோக்கியமானதா என்று முடிவு செய்யும் பொறுப்பை ஜனங்களுக்கே விட்டுவிடுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 25.03.1928.
குடி அரசு - 1928 () 168
ராஜிய உலகத்தில் பார்ப்பனர்களுடையவும் அவர்களது வால்களினு டையவும் நாணயமும் யோக்கியதையும் அடியோடு ஒழிந்து அவர்களின் அயோக்கியத்தனம் வெளியாய் விட்டதால் இந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததை அறிந்து ஸ்ரீமான் காந்தி காலத்தில்
அவர் நிழலில் யோக்கியதை பெற்ற ஸ்ரீ சி. ராஜகோபாலாச்சாரியார் இப் போது வெகு மும்முரமாய் முழு பார்ப்பன வேஷத்தோடு ஆதரிக்க வெளி வந்து விட்டார்.
முதலாவதாக மனுதர்ம சாஸ்திரத்தை ஆதரித்து எழுதினார். பிறகு “ஜஸ்டிஸ்” கட்சியை வைது எழுதினார். இப்போது அரசியலே அயோக் கியத்தனமென்றும் தற்கால மந்திரிகள் ராஜீனாமா கொடுக்க வேண்டும் என்றும் எழுதி இருக்கிறார். ஸ்ரீ ஆச்சாரியார் அரசியல் அயோக்கியத்தனம் என்பதை என்றைய தினம் தெரிந்து கொண்டார்? திருட்டுத்தனமாய் பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டு ஒத்துழையாமைக்கு டில்லியில் உலை வைத்தாரே அன்றா? அல்லது காகிநாடாவில் சட்டசபைக்கு போபவர்களை ஆதரித்தாரே அன்றா? அல்லது ஜமன்லால் பஜாஜ் இடம் ரூ.50000 வாங்கினாரே அன்றா? அல்லது புதுப்பாளையம் ஜமீன்தாரிடம் 10000 ரூ. பொறுமான தோப்பு தானமாய் வாங்கினாரே அன்றா? அல்லது ஸ்ரீ வெங்கட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க நாயக்கர்மார்கள்
கிராமங்களில் சுத்தினாரே அன்றா? அல்லது மது விலக்கின் பெயரால் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யும்படி பத்திரிகைகளில் கோடு கட்டிய குறள்கள் எழுதிவந்தாரே அன்றா? அல்லது சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்கு பலம் குறைந்ததாக தெரிந்தவுடன் சென்னைக்கு ஓடி டாக்டர். சுப்பராயனை முதல் மந்திரி ஆக்கினாரே அன்றா? அல்லது தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரும் வெளியில் தலைகாட்டுவதற்கு யோக்யதை இல்லாமல் போன சமயம் பார்த்து ஸ்ரீமான் காந்தியை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து வருணாசிரம பிரசாரம் செய்வித்து அவரை அடியோடு ஒழித்தாரே அன்றா?
அல்லது ஸ்ரீமான் காந்தி செய்த பிரசார தைரியத்தை வைத்துக்
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கொண்டு மனுதர்ம சாஸ்திரப் பிரசாரம் செய்யத் துணிந்தாரே அன்றா? அல்லது புதுப்பாளையத்தில் பார்ப்பனரல்லாத ஜமீன்தாராகிய ஸ்ரீ ரத்தின. சபாபதி கவுண்டர் தானமாய் கொடுத்ததான பூமியில் இருந்து கொண்டு “பத்மாசூரன் கதைபோல்” அந்த சமூகத்தையே ஒழிக்க ஒரு பத்திரிகை சீக்கிரத்தில் ஆரம்பிக்க முடிவு செய்தாரே அன்றா? அல்லது இவர் பார்ப் பனருக்கு அனுகூலமாக பிடித்து வைத்த மந்திரிக்கு பார்ப்பனரல்லாதார். அபிமானம் சிறிது தோன்ற ஆரம்பித்ததே அன்றா? என்று கேட்கின்றோம். நமது ஆச்சாரியாருக்கு தானும் தன் இனமும் என்ன அயோக்கியதனம் செய்தாலும் அது காந்தீயம், ஒத்துழையாமை, தேசாபிமானம், ஆஸ்ரமத் தன்மை முதலியவைகள் ஆகிவிடுகின்றது.
பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக ஏதாவது ஒரு சிறு நன்மை காணப்பட்டால் அது திடீரென்று தேசீய அயோக்கியத்தனமாகி விடுகின்றது. இதுவே தற்கால பார்ப்பனரல்லாதார் நிலைக்கு உதாரணம்போலும். “நம்மவரே நம்ம குலத்தைக் கெடுக்கக் கைப்பிடியாய் இருக்கும் போது இரும்பு என்ன செய்யும்” என்று ஒரு மரம் சொல்லிற்றாம். அது போல் பார்ப் பனரல்லா தாரிலே உள்ள கோடலிக் காம்புகளை நினைக் கும் போது ஸ்ரீ ராஜகோபாலாச் சாரியாரின் நடவடிக்கை நமக்கு ஆச்சரிய மாகத் தோன்ற வில்லை.
குடி அரசு - தலையங்கம் - 01.04.1928
குடி அரசு - 1928 () 170
“ஆணால் இந்து மதத்தை 9 - 8 தே 1
௬வாமி ராமதீர்த்தாவிண் வாக்கியம்
இந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் “சென்னை பிரதிநிதிகளான” அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும் சட்டசபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்துகிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும் போது இந்தியாவின் செல் வாக்குள்ள சனாதன தர்மிகளின் பிரதிநிதியாகவே தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக்கூடா தென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக்கூடாதென்றும். அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசினபோது அதற்கு பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரண் சரமுன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம் மசோதாவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம் மசோதாவை ஆதரிக்கிறார். கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோதாவை எதிர்ப்பதன் இரகசியம் தனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந் திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீ ஆச்சாரியார் போன்றவர்களே காரணம்
என்றும், “இந்து மதம் முன்னேற்றத்திற்குத் தடையிருக்குமானால் அதை ஒழித்து விடுவதே மேல்” என்று சுவாமி ராமதீர்த்தர் கூறியிருக்கின்றார். என்றும் கூறினாராம்.
இந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது “தமிழ்நாடு” பத்திரிகையோ அல்லது ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் “முன்ஷி” ஈஸ்வர சரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது “ஈஸ்வர சரணர் பிரசாரம்” என்றோ தலையங்கம் கிளம்பியிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீ ஈஸ்வர சரணர் நல்ல காலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார். இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.04.1928
குடி அரசு - 1928 () 172
சர். பாத்றோ ஆச்சாரியார்
சென்னை சட்டசபையில், பாலிய விவாகத்தை தடுக்க ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட ஒரு சிபார்சு தீர்மானம் விவாதத்திற்கு வந்த காலத்தில் சர். பாத்ரோ அவர்கள் அத்தீர்மானத்திற்கு எதிரிடையாய் அதாவது மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார். இது யோக்கியமா என்று கேட்கிறோம். இந்த சம்பவம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கே ஒரு பெரிய மானக்கேடு என்று சொல்லு வோம். மனிதர்கள் அரசியலில் கரணம் போடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அரசியல் என்றாலே அயோக்கியதனம், கேப்பமாறித்தனம், தேசத்துரோகம் என்பவைகள் நமது அகராதி அர்த்தம். காங்கிரஸ் கொள்கை முதல்கொண்டு, அதை ஆரம்பித்த பெரியார்கள் என்பவர்கள் முதல்கொண்டு, அதில் உள்ள தலைவர்கள் என்பவர்கள் முதல்கொண்டு, எல்லாவற்றிலும் பெரும்பான்மையார்கள் அந்த எண்ணத்தைக் கொண்டே ஆரம்பித்து நடத்திவரப்படுகின்றது என்பதே நமது முடிவு. ஆனால் சமூக சீர்திருத்த விஷயத்திலாவது மேல்கண்ட குணங்கள் இல்லாமல் யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கின்றோம். சர்.பாத்ரோ பிரம்ம சமாஜி என்று சொல்லிக் கொள்ளுபவர். உண்மையிலேயே அவருக்கு மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற அபிப்பிராயமிருக்குமானால் தேவஸ்தான சட்டம் செய்ததைப் பற்றியும் யூனிவர்சிடியில் செய்ததைப் பற்றியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மரியாதையாக பார்ப்பனரல்லாதார் கட்சியை விட்டு வெளியில் போய்விடும் படியாக வேண்டிக்கொள்ளுகிறோம். ஸ்ரீ பாத்ரோ ஆச்சாரி யாரைவிட ஸ்ரீ வரதராஜுலு அய்யங்காரே மேல் என்று ஜனங்கள் நினைக் கும்படி நடந்து கொண்டதற்கு நாம் மிகுதியும் பரிதாபப்படுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.04.1928
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
“தமிழ்நாடு” பத்திரி 86 ௫
“தமிழ்நாடு” பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச் சூழ்ச்சிக்கு ஆதர வாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியிருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் “தமிழ்நாடு” தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப் பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல்லுவதும் இல்லை. ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டுவிட்டதால் சர்க்கார் 23.3.28ல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் “ஜஸ்டிஸ் பத்திரிகை இந்த இரண்டு வருஷ மாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத்
திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கை களைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள். இதிலிருந்து
ஸ்ரீ வரதராஜுலுவின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின் கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங் களுக்கே விட்டு விடுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.04.1928
குடி அரசு - 1928 () 174
யாலிய விணாகம்
குழந்தை : என்னடி அம்மா நேற்று அவன் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?
தாயார் : அடி பாவி அது நகையல்ல ; தாலி அதை ராத்திரி அறுத் தாய்விட்டது.
குழந்தை : எனக்குத் தெரியவில்லையே.
தாயார்: ராத்திரி 11 -மணி இருக்கும் நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய். ஆதலால் உனக்குத் தெரியவில்லை.
குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்
தாயார்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்துபோய் விட்டா னல்லவா.அதனால் அறுத்துவிட்டார்கள்.
குழந்தை : அவன் போனால் போகட்டுமே. வேறு யாரையாவது கட்டச் சொல்வதுதானே, அதையேன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய், அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன். ஊ! அள! கள!!!
குடி அரசு - உரையாடல் - 01.04.1928
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ஊத்திமோகம் வபறுவது தேசத்துரோகமல்ல அதுவே S unb
தலைவர் அவர்களே! சகோதரர்களே!
நான் நேற்று ஈரோட்டிலிருந்து புறப்பட்டு மதுரைக்குப் புறப்பட்டு செல்லும்பொழுது ஸ்ரீ திருமலைசாமி செட்டியார் ஸ்டேஷனில் வற்புறுத் தலுக்கிணங்கி இங்கு பேசுவதாக ஒப்புக்கொண்டேன்.
நான் இன்று பேசுவதாகக் குறிப்பிட்டுள்ள விஷயம் “சட்ட அங்கத்
தினரும் மந்திரிகளும்” என்பதாகும். நான் இப்பொழுது மந்திரிகளைப் பற்றி பேசுகிறேன். பின்னர் முன்னைய பொருளை விளக்குவேன். சென்ற தேர்தலில் அதிக அங்கத்தினரைக் கொண்டதாக வெற்றி பெற்றது சுயராஜ்
யக் கட்சி. அவர்கள் பொது மக்களிடத்திலே ஓட்டு பெற்ற காலத்தில் என்ன வாக்குறுதி செய்தார்கள்? நாங்கள் அதிகார வர்க்கத்தை ஒரேயடியாய் எதிர்ப் போம். மந்திரிசபையை எந்த காரணத்தை முன்னிட்டும் ஒப்புக்கொள்ள மாட்டோம், இரட்டையாட்சியைக் கலைப்போம், சுயராஜ்யத்தை விரைவில் வாங்கித் தருவோம் என்று “கர்ச்சித்து” உட்புகுந்தார்கள். எனவே, இவர்கட்கு மந்திரிசபையில் வேலையில்லாது போய்விட்டது. இரண்டாவதாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சியார் முழு ஓட் பலமின்மையால் ஒப்புகொள்ள மறுத்து விட்டனர். இவர்கள் எங்களுக்கு ஓட் வழங்கி பெரும்பான்மையாய் அனுப் பினால் மந்திரி சபையை ஒப்புக்கொண்டு அதனால் பார்ப்பனரல்லாத
ருக்குச் செய்யக்கூடிய எல்லா நலன்களையும் செய்வோம் என்று உறுதியிட்டு வெற்றி பெற்றார்கள். எஞ்சி நின்றது சில்லரை ககஷிகள். அவைகளிடத்தில்
பேரம் பேசிச் சுயேச்சைக் கட்சியென்று உற்பத்தி செய்து மந்திரிச/பையை நியமிக்க இரட்டையாட்சியைக் கலைக்கும் வீரர் நிறைந்த சுயராஜ்யக் கட்சி ஆதரவு தந்தது. இந்த உண்மையை அறியாத பொது மக்கள் சந்தேகங் கொண்டனர். உண்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ஜஸ்டிஸ் கட்சியார். நம்பிக்கையில்லாத தீர்மானங் கொண்டு வந்தனர். காங்கிரஸ் ககஷியார் அதை எதிர்த்து தங்கள் யோக்கியதையை வெட்ட வெளிச்சமாக்கினர். இதனால் எங்கும் அவர்கள் மீது பெரும்புகார் ஏற்பட்டது. எவரும் சுயராஜ்யக் கட்சியை
இழித்துக் கூறுவாராயினர். இந்த இழிவை நிவர்த்தித்துக் கொள்ள சென்னை
குடி அரசு - 1928 () 176
மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில் ஜஸ்டிஸ் கட்சியாரை ஒழிக்கவே காங்கிரஸ் மந்திரி சபையை உடைக்குந் தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் அந்த வேலையை சென்னை சுயராஜ்யக் கட்சியார் செய்து முடித்ததற்கு அவர்களை பாராட்டுவதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டனர். ஏன் சுயேச்சை கட்சியை ஆதரிக்க வேண்டுமென்ற கேள்வி எழும்போது “தாங்கள் அப்படி” செய்யாது போயின் ஜஸ்டிஸ் கட்சியினர் மந்திரி பதவி ஒப்புக்கொள்ளுவர், என்று சொல்லி ஏமாற்றி வந்தனர். ஜஸ்டிஸ் கட்சியினர். கூட்டம் கூட்டி ஒப்பு கொள்ளுவதில்லை என்று உறுதி கூறினர். அதில் நம்பிக்கை இல்லையென்று காங்கிரஸ்காரர் ஏமாற்றிவந்தனர். முடிவில் கோயம்புத்தூரில் ஜஸ்டிஸ் கட்சியின் மாகாண மகாநாடு கூட்டப்பட்டது. அங்கு ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமான கொள்கையையுடைய மந்திரிகளை எதிர்க்க வேண்டுமென்றும் சட்ட மெம்பர் பார்ப்பனராயிருப்பதால் மந்திரிகள்
தங்கள் வேலைகளை சுதந்திரமாய் செய்ய முடியவில்லை யாதலாலும், பல இடையூறுகள் நேருகின்றமையாலும் மாகாண சுயாட்சி வரும் வரையில் (இரட்டையாட்சி ஒழியும் வரை) மந்திரிசபையை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்ற தீர்மானம் ஒன்று நிறைவேறியிருக்கிறது. பார்ப்பன சட்டமெம்பர். சொன்னபடியெல்லாம் கவர்னர் நடந்தமையால் கவர்னர் மீதும் நம்பிக்கை யில்லா தீர்மானம் நிறைவேறியது. ராயல் கமிஷன் சம்பந்தமான தீர்மானம் சட்டசபையில் வந்தமையால் மந்திரிகட்குள் பிளவேற்பட்டது. எனவே, ஒத்துழைப்பதாகச் சொன்ன டாக்டர் சுப்பராயன் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் சுயராஜ்யக் கட்சியார் கொண்டு வந்து தோல்வியுற்றனர். இந்த காரணங்கொண்டு ஏனைய இரண்டு மந்திரிகளையும் கவர்னர் விலகுமாறு உத்திரவிட்டு விட்டார். உடனே இந்த பதவிகளை ஜஸ்டிஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கவர்னர் வற்புறுத்தினார். தங்கள் கோயம்புத்தூர். தீர்மானத்திற்கிணங்க சட்ட மெம்பர் தங்கள் கட்சியைச் சார்ந்தவராய் இருந்தாலொழிய ஒத்துழைக்கவும் முடியாதென்று கூறிவிட்டனர். இவர்கள். சட்டமெம்பர் பதவியினால் இடையூறு விளைவதற்கு முதற் காரணமாயிருந் ததென்று சொல்லப்பட்ட இலாக்காக்களை வழக்கப்படி வேறு மந்திரிகளிடம் கவர்னர் ஒப்படைத்தார். அந்த சட்ட மெம்பர் பதவிக்கு நியமிக்கப்பட்டு இரண்டு நாட்கள் வேலை பார்த்த ஸ்ரீ வெங்கிட்டராம சாஸ்திரி உடனே விலக நேரிட்டது. பிறகு அரசாங்கத்திற்கு புத்தி வந்து இப்பதவியை பார்ப்பன ரல்லாதாருக்கு கொடுக்க வேண்டியதாயிற்று. அதன்பேரில் தாங்கள் மந்திரி பதவி ஒப்புக்கொள்ள முடியாது என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு பெருந் துன்பம் விளைவித்து வந்த இந்த பதவி தம் வசப்பட்டதால் சுயேச்சைக்
கட்சியினர் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு இடையூறு இல்லாத மந்திரி சபை நியமித்தால் தாங்கள் அதை எதிர்ப்பதில்லை என்று ஜஸ்டிஸ் கட்சியார்.
கூறினர். அதுபோல் மந்திரி சபையும் நியமிக்கப்பட்டது. இவைகளினின்று. ஜஸ்டிஸ் கட்சியினர் நியாய நெறியினின்றும் தவறிவிட்டதாக எவராவது கூற முடியுமா? மெய்ப்பிக்க முடியுமா? காங்கிரஸ்காரர் பொறாமை கொண்டு
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நம்மை குட்டிக்கரணம் என்று கத்தினால் அறிவுடைய உலகம் ஒப்புக் கொள்ளுமா?
சட்ட மெம்பர் பதவிக்கு நமது கிருஷ்ணன் நாயர் அவர்கள் நியமிக்கப்பட்டவுடன் பார்ப்பனர்கள் நம்மை தேசத்துரோகம் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். அவர்கள் யோக்கியதையை கவனியுங்கள். சென்ற பதினெட்டு வருடங்களாய் வழக்கமாகவோ, நிர்பந்தமாகவோ சட்ட மெம்பர் பார்ப்பனரே நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த காலத்தில் அவர்கள். நமது சமூகத்திற்கு இழைத்த அநீதிகள் அளவற்றன. ஆறு பார்ப்பனர் அந்த பதவியிலிருந்து நம்மை தலையெடுக்க வொட்டாமல், அரசாங்கத்தார். மக்களைக் கொடுமைப்படுத்திய காலத்தில் ஸ்ரீமான்கள் கிருஷ்ணசாமி அய்யர், சிவசாமி அய்யர், சீனிவாசய்யங்கார், ராமசாமி அய்யர் முதலியவர்: கள் மாப்பிள்ளை போல அந்த பதவியில் உட்கார்ந்திருந்தனர். ஒத்துழை யாமை காலத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் ஜெயில் வாசம் செய்த காலத்திலே மாப்பிள்ளை போல் சர். சி.பி. ராமசாமி அய்யர் அந்த பதவியை ஒப்புக்கொள்ளவில்லையா? 144-வது தடையுத்தரவை அந்த காலத்தில் அநுஷ்டித்து வந்த அக்கிரமத்தை ஒப்புக்கொள்ளவில்லையா? பாலக்காடு தெருவில் நடக்கும் தீர்மானத்துக்கு அக்கிரம வியாக்கியானம் செய்ய வில்லையா? இப்பொழுது சுயமரியாதைக்காக விலகியதாக புழுகும் அதே
ஸ்ரீ வெங்கட்ராம சாஸ்திரி அவர்கள் அந்த காலத்தில் அட்வகேட் ஜெனரல் பதவியினின்றும் ஏன் இராஜீனாமா செய்யவில்லை? தேசாபிமானிகட்கு அப்பொழுது அவமானம் எங்கு சென்றிருந்தது என்று கேட்கின்றேன். சட்ட மெம்பர் பதவிக்கு இன்ன இலாக்காக்களை கொடுக்க வேண்டுமென்று இந்தியா கவர்ன்மெண்டில் சட்டம் கிடையாது. அப்படியிருக்க ஜனாப் உஸ்மான் என்ற மகமதிய கனவானுக்கு புதிதாக சில இலாக்காக்களை மாற்றிய உடன் ஏன் இவ்வளவு பொறாமைப் படவேண்டும். இப்பொழுது இவ்வளவு பெரும் சப்தம் போடும் பார்ப்பனர்கள் அக்காலத்தில் நமக்கு செய்த தீங்கு களை ஒருவாறு எண்ணி பார்க்கட்டும். அவர்களால் நீதி இலாக்காவில் நமக்கு நேர்ந்த துன்பங்கள் சொல்லி முடியாது. சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மகமதிய கனவான் காலியான அந்த ஸ்தானத்திற்கு ஒரு மகமதியரை நிய மிக்க சட்டசபைத் தீர்மானம் செய்து கூட ஒரு ஐயங்கார் நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருக்க வேறொரு மகமதியருக்கு உரிமை இல்லையா? பார்ப்பன சட்ட மெம்பர்கள் மகமதியர்களுக்கோ மற்றவர்களுக்கோ வேலை கொடுக்காதொழிந்தாலும் கவலை இல்லை.லாயக்கு இல்லை என்று நம்மைச் சொன் னால் இதை யார் பொருத்துக் கொள்ள முடியும். இதைவிட வேறு என்ன அயோக்கியத்தனம் அவர்கள் செய்ய வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
நாம் உத்தியோகம் பெறுவதை உத்தியோக வேட்டை என்றும் தேசத் துரோகம் என்றும் சொல்லிக் கொண்டு தாங்களே எல்லா உத்தியோகங்
குடி அரசு - 1928 () 178
களிலும் இருக்க ஆசைப்படுவது “சரீரம் அநித்தியம் உன்சொத்தை எனக்கு கொடுத்துவிடு” என்பதைப் போன்ற அயோக்கியத்தனம் அல்லவா வென்று கேட்கின்றேன். இப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்கில அடிமைக் கலாசாலைகளில் படிக்கின்றனர். படிக்கின்றவர்கள் எல்லாம் உத்தி யோகப் பைத்தியம் பிடித்து அலைவதும் தொழிலில்லாது பல ஆயிரக்கணக் கான மாணவர்கள் வருந்துவதும் நாம் கண்ணால் நாடோறும் பார்க்கின்ற காட்சிகளாகும். இதற்கு முதற்காரணமாயிருந்தது காங்கிரசு. காங்கிரசு சபைதான் உத்தியோகங்களை பெருக்க வேண்டும் என்று மன்றாடியது. அதுதான் சுயராஜ்யம் என்று இப்போதும் கருதி வருகிறது. உத்தியோகம் பார்ப்பது தேசசேவை என்று பார்ப்பனர் கருதி படித்து விட்டு எவ்வளவோ
இழித் தொழில்களைச் செய்து பெரிய பெரிய உத்தியோகங்களை எல்லாம் பெற்று நமக்கு தீங்கிழைத்து வருகிறார்கள். நம்நாட்டில் ஒவ்வொரு மனிதனு டைய ஜாதகமும் உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ பள்ளிக் கூடங்கள் எதற்காக புதுப்பித்து வருகின்றார்கள்? உத்தியோகங்கட்கு ஆட்களை திரட்டுவதற்காகவா அல்லவா? பள்ளிக்கூடங்களில் எல்லோ ருமே பிள்ளைகளும் படிக்கின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் யார்? பார்ப்பனர்கள் என்பதை எவர் மறுக்க முடியும்? அவர்கள் எதற்காக
படிக்கின்றார்கள்? சங்கராச்சாரியாகவா? ஜீயர்களாகவா? மாதம் மூன்று மழை பெய்யச் செய்யவா? ஆற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டு மூக்கைப்
பிடித்துக் கொள்ளவா? இல்லவே இல்லை. அது உத்தியோகம் பெறுவதற் கென்பதை விளையாட்டுப் பிள்ளையும் அறியும். உத்தியோகம் பெறுவதற் கென்று படிக்கும் அவர்களெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியாருக்கா பிறந்தார்கள்? ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டையாடுகிறதென்பதற்கு பொருள்தான் என்ன?
சைமன் கமிஷன்
சைமன் கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற காங்கிரஸ் அது நாட்டைவிட்டு செல்லுவதற்கு முன்னேயே ஒரு சுயராஜ்யத் திட்டம் தயாரித்தனுப்பியிருக்கிறது. அந்த திட்டப்படி உத்தியோகங்கள் ஒன்றுக்கு பத்தாக ஆவதைத்தவிர வேறு பயன் பெற முடியாது.150 அங்கத்தினர்கள் உள்ள சட்டசபைக்கு 400 அங்கத்தினர்கள் வேண்டுமாம்.150 பேர் உள்ள டெல்லி சட்டசபைக்கு 700 அங்கத்தினர்களாக்க வேண்டுமாம். இதுவா சைமன் கமிஷன் பகிஷ்காரம்? மாஜி காங்கிரஸ் தலைவர்களான ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் திட்டம் தயாரித்து புத்தக வடிவில் வெளியிட்டு 8 அணாவுக்கு கடைதோறும் விற்கிறது. ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் ஸ்ரீ அனிபெசண்டு ஸ்ரீ நேரு முதலியவர்கள் திட்டத்தை பார்லிமெண்டுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். தற்கால காங்கிரஸ் தலைவர் டாக்டர் அன்சாரி சர்வ கட்சி மகாநாடு கூட்டி சைமன் கமிஷனிடம் திட்டத்தை அனுப்பப் போகிறார்.
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
வீடு வேகிற சமயத்தில் பிடுங்கினது லாபம் என்பதாக வீட்டிலுள்ள சாமான்களை வேடிக்கை பார்க்க வந்தவர் பங்கிட்டுக் கொள்வது போல் காங்கிரஸ்காரர்கள் நடந்து வருவார்களானால் அவர்களுடன் ஜஸ்டிஸ் கட்சியார் எப்படி ஒத்துழைக்க முடியும்? தங்கள் பரம்பரை வழக்கம்போல் ஏமாந்தவன் துடையில் கயிறு திரிப்பது என்ற தத்துவத்தை பார்ப்பனர்கள் கையாண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சுயராஜ்யம் என்பது எதுவா யிருக்க முடியும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் எந்த காங்கிரஸ்காரராவது பார்ப்பனராவது சமாதானம் சொல்லுகிறார்களா? சொல்லுவதேயில்லை.. இதற்குக் காரணம், நம்மை பொருட்படுத்தவில்லை என்று அவர்கள். சொல்லலாம். நாம் உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதை மட்டும் ஏன் அவர்கள் பொருட்படுத்தி குலைத்துக் கொண்டிருக்க வேண் டும்? சட்ட மெம்பர் வேலையை நாம் ஒப்புக் கொண்டதால் உண்டாகும் தீமையை யாராவது சொன்னார்களா? உலகத்தாரெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று எண்ணி தேசத்துரோகம் என்பதன் மூலமாக அவர்களுடைய பொறாமைச் செறிவைக் காண்பித்து வருகிறார்கள். இவைகளிலிருந்து உத்தியோகம் ஏற்பது தேசத்துரோகமல்ல வென்றும், அதுதான் தேசத் தொண்டு, அதுதான் சுயராஜ்யம் என்றும் பார்ப்பனர்கள் கருதி வேலை செய்து வரும் உண்மையை
நாம் ஒவ்வொருவரும் அறிந்து நன்னிலை யடைவோமாக.
குறிப்பு: 02041928 ஆம் நாள் திருச்சி டவுன்ஹாலின் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 08.04.1928.
குடி அரசு - 1928 () 180
ஏற்றுக் ல போம்
“திராவிடன்” பத்திரிகையின் நிர்வாகத்தை நாம் ஏற்றுக் கொள்ளுவதா என்கின்ற விஷயத்தைப் பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தை கேட்டிருந்தது வாசகர்களுக்குத் தெரியும். அதற்கு பதிலாக சுமார் 500 கனவான்களுக்கு மேலாகவே “திராவிடனை' ஒப்புக் கொள்ளும் படிக்கு எழுதினதுடன் தங்கள் தங்களால் கூடுமான உதவியைச் செய்ய முன் வருவதாக வாக்குத்தத்தமும் செய்தார்கள். அதை அனுசரித்து சென்ற ஆவணி -மீ£26-தேதி “குடி அரசில்” “சென்னைக்குச் செல்கின்றோம்” என்பதாக ஒரு தலையங்கம் எழுதி அதன் கீழ் “திராவிடனை' நடத்துவதில் நமது கொள்கை இன்னது என்பதையும் விளக்கியிருக்கின்றோம். அதாவது,
“திராவிடன்” கொள்கைகள் குடி அரசு” கொள்கைப்படியேதான் இருக்கும். “குடி அரசின்” கொள்கைகள் யாவரும் அறிந்திருப்பார்க சென்றே நினைக்கிறோம். அதாவது:- பார்ப்பனரல்லாதாரை அழுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த பார்ப்பனர்களுக்கு நமது நாட்டில் ஆயுதங்களாக இருக்கும் அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் அடியோடு அழிப்பதுடன் பார்ப்பனீயத்தையும் ஒழித்து மக்களுக்கு சுயமரியாதை உண்டாகும்படி செய்வது என்பதுதான். இதற்கு “திராவிடன்” சொந்தக்காரர்கள் சம்மதிக்காதபோது நாம் விலகிவிடுவோம் என்பது உறுதி. இது சமயம் இந்தக் கொள்கையை ஒப்புக் கொள்ளவோ ஆதரிக்கவோ நமது நாட்டில் ஒரு குட்டித் தலைவராவது ஒருகுட்டிப் பத்திரிகையாவது இல்லை. ஆனாலும் நாம் அதற்காக பயப்படவில்லை.
ஏனெனில் இக்காரியங்கள் நடைபெறாமல் போனால் நமது பார்ப்பன
ரல்லாதார் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் இந்தியாவுக்கே சுயமரியாதையும் விடுதலையும் ஒருக்காலும் ஏற்படப்போவதில்லை என்பதே நமது முடிவு. பார்ப்பனரல்லாதூர் இயக்கமாகிய தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரும் அவர்களது பத்திரிகைகளாகிய “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகளுங்கூட இக்கொள்கைகளைப் பொருத்த வரையில் நம்மிடம் சிறிது அபிப்பிராய பேதம் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும்.நம்மிடம் “திராவிடன்” ஒப்புவிக் கப்பட்டால் இக்கொள்கைகளுடன் தான் அது நடத்தப்பெறும் என்பதாக அவர்களுக்கும் இப்போதே சொல்லி விடுகிறோம். அரை நூற்றாண்டாக அநேக இந்திய மேதாவிகளால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படும்
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அரசியலைக் குற்றம் சொல்வதும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ரிஷி
களாலும், முனிவர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்ட
தாய்ச் சொல்லப்படும் - “மகாத்மா” காந்தியாலும் கூட சொல்லப்படும் - மத இயலைக் குற்றம் சொல்வதும், இரத்தத்திலும், நரம்புகளிலும், எலும்புகளிலும், சதையிலும் ஊறிக்கலந்து இருக்கும் இவ்விஷயங்களைக் குற்றம் சொல்லி மக்களைத் திருப்புவது என்பதும் ஒருக்காலும் சுலபமான காரியம் என்ற சொல்ல முடியாது. அன்றியும் தற்போது எல்லாத்துறைகளின் ஆதிக்கத்திலும், அதிகாரத்திலும் இருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிப்பது என்பது இவற்றை யெல்லாம்விட அதிகமான கஷ்டமென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். இதற்கு ஆதாரமாக “மகாத்மா” காந்தியினாலேயே “பார்ப்பனீயமில்லாதவர்” என்று மதிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் ஒரு சமயம் சொன்ன வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றோம்.
“பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அனேக பெரியவர்களாலும், சித்தர்களாலும், சமணர்: களாலும், புத்தர்களாலும் எவ்வளவோ பாடுபட்டாய் விட்டது. மற்றும் மகமதிய அரசாங்கத்தாராலும் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தாய் விட்டது. இதனால் இவ்வளவு பேரும் தோற்றார்களே யொழிய ஒருவரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் உன் ஒருவனுடைய முயற்சி எம்மாத்திரம்?” என்று சொல்லி பரிகாசம் செய்தார்.
இந்த வார்த்தைகள் வாஸ்தவமாக இருந்தாலும் இருக்கலாம். அது போலவே நமது முயற்சியும் வெற்றி பெறாமல் தோல்வியும் உறலாம். ஆனாலும் ஒன்று மாத்திரம் சொல்லுவோம். என்னவெனில் இம்முயற்சிகள் வெற்றிபெறாமல் நமது நாட்டுக்கும் சமூகத்துக்கும் விடுதலை இல்லை என்பதை மாத்திரம் மறுபடியும் உறுதியாய்ச் சொல்லுகிறோம். எனவே நமக்கு
இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று நமக்கு பட்ட வழியில் உழைக்க வேண்டியது நமது கடமையே அல்லாமல் வெற்றி, தோல்வி என்பவைகளைப்
பற்றி முதலிலேயே முடிவு செய்து கொள்ள வேண்டியது நமது கடமை அல்ல.
எனவே நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இவ் விஷயங்களை நன்றாய் கவனிப்பதோடு மற்றொரு விஷயத்தையும் அறியவேண்டும். அதாவது “திராவிடனும்” *குடிஅரசும்” பார்ப்பனர்கள். கையில் இருக்கும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிடுங்கி பார்ப்பன
ரல்லாத ஜமீன்தாரர்களும் மிராஸ்தாரர்களும் வியாபாரிகளும் லேவாதேவிக் காரருமான பணக்காரர்களுக்கும் ஆங்கிலம் படித்த வக்கீல்களுக்கும் கொடுப்பதற்காக நடத்துகிறது என்று நினைப்பார்களானால் அவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து பேவார்கள். ஏனெனில் அரசியல் விஷயத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை விட பணக்கார ஆதிக்கத்தைவிட வக்கீல் ஆதிக் கத்தைவிட வெள்ளைக்கார ஆதிக்கமே ஓடுக்கப்பட்டவர்களுக்கும் ஏழை
குடி அரசு - 1928 () 182
மக்களுக்கும் குடியானவர்களுக்கும் யோக்கியர்களுக்கும் அதிகமான கெடுதி இல்லாதது என்பதே நமது அபிப்பிராயம். வெள்ளைக்கார ஆதிக்கம் ஒழிவதாயிருந்தால் நேரே அது ஏழை மக்களான தொழிலாளர்கள் கைக்கு வருவதுதான் நன்மையே அல்லாமல் ஏழை மக்களுக்கு பார்ப்பனர்களும், பணக்காரர்களும், வக்கீல்களும் தர்மகர்த்தாக்களாகவும் தரகர்களாகவும் இருக்கக் கூடாது என்றே சொல்லுவோம்.இந்தக் கொள்கையின் பேரில் தான். பணக்காரர்கள் இப்பத்திரிகைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் இப்போதே வெளிப்படையாய் சொல்லிவிடுகிறோம்.
அது போலவே மத இயலில் நமக்கு உதவி செய்பவர்களும் இந்து
மதம் என்பதான பார்ப்பன மதத்துடன் போர் புரிந்து வெற்றி ஏற்படுமானால் சைவ சமயத்திற்கு அனுகூலமாகும் என்றோ, வைணவ சமயத்திற்கு அனுகூலமாகுமென்றோ, கிறிஸ்துவ மதத்திற்கு அனுகூலமாகுமென்றோ, மகம்மதிய மதத்திற்கு அனுகூலமாகுமென்றோ, மாத்துவ மதத்திற்கு அனுகூலமாகுமென்றோ ஒவ்வொருவரும் தன் தன் சுயமத நலத்திற்கு என்று நினைத்து கொண்டார்களானால் அவர்களும் ஏமாற்றமடைவார்கள். என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறோம். பார்ப்பன மதம் ஒழிவத னால் உண்மையான சமரசமும் சன்மார்க்கமும் உடையதான மதம் ஏற்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் சுயமரியாதை உணர்ச்சி ததும்பவேண்டும். என்பதாகவே ஓர் அறிக்கையை வெளியிட்டுவிட்டு சென்னை சென்றோம்.
“திராவிடனுக்கு” உதவி செய்வதாக வாக்களித்திருந்த சில கனவான்கள் இந்த அறிக்கையைப் பார்த்துக்கொண்டு தாங்கள் முற்றிலும் இந்த அறிக்கையை ஒப்புக் கொள்வதாகவும் இந்த நிபந்தனையின் மீதே உதவி செய்து வருவதாகவும் வாக்குறுதி செய்து கடிதம் எழுதினார்கள். அதிலிருந்து இதுவரை ஒருவாறு நம்மால் “திராவிடன்” கவனிக்கப்பட்டு வந்தாலும் ஏப்ரல்
முதல் தேதி முதலே கணக்கு முதலிய நிர்வாகங்களும் தென்னிந்திய மகாஜன சங்கத்தை விட்டு பிரித்து நமது வசம் ஒப்புவிக்கப்பட்டு விட்டது.
இதன் மத்தியில் “தமிழ்நாடு” பத்திரிகையும் ஸ்ரீ வரதராஜுலுவும் “திராவிடனை'ப் பற்றி எவ்வளவோ பொய்யும் புளுகும் -அதாவது ராமசாமி நாயக்கர் திராவிடனுக்கு வந்தார், தமது ஜம்பம் செல்லவில்லை; ஓடிவிட்டார் என்பது போன்ற பல விஷயங்களை எழுதிவிட்டார். அதற்கும் பொது ஜனங்கள் ஏமாறாமல் எவ்வளவு தூரம் இம்மாதியான ஒரு பத்திரிகையை ஆதரிக்கக்கூடுமோ அவ்வளவு தூரம் ஆதரித்து வந்திருக்கிறார்கள்.
“திராவிடன்” பத்திரிகை மற்ற பத்திரிகைகளைப் போல வயிற்றுப் பிழைப்பு பத்திரிகையாகவோ வியாபாரப் பத்திரிகையாகவோ, கூலிக்கு உழைக்கும் பத்திரிகையாகவோ இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை பிரசாரம் செய்யும் பத்திரிகையாக இருப்பதால் பொது மக்களின் மதிப்பை
182 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பெற அது கொஞ்சம் தனது நாணயத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை முன்னிட்டு “தமிழ்நாடு” முதலிய பத்திரிகைகளைப் போல வெளி ஆடம்பரத்திலும் வியாபாரப் புரட்டிலும் பொதுமக்களிடம் பணம்
பறிக்கச் செய்யும் தந்திரங்களையும் கையாளாமல் உள்ளது உள்ளபடி நடந்து
வந்ததால் “திராவிடன்” அதனுடையநிலைக்குத் தகுந்த விளம்பர ஆதரவு முதலியவைகள் பெறவில்லை. ஆனபோதிலும் அதற்காக வேண்டி அது தன் கொள்கையையோ நாணயத்தில் உள்ள கவலையையோ ஒருசிறிதும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதாக உறுதி கூறுவோம்.
நிற்க “திராவிடன்” நமக்கு சாஸ்வதமான சாதனமல்லவென்பதையும் தற்காலம் நமது தொண்டிற்காக உபயோகித்துக் கொள்ளும் ஒரு உதவி சாதனமேயாகும் என்பதையும் “குடி அரசே” நமது தொண்டிற்கு சாஸ்வத மான மூல சாதனம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இது சமயம் பார்ப்பனர்களுக்கு பலவழிகளிலும் அவர்களது யோக்கியதை வெளியாகி அவர்களது செல்வாக்கு முன்னேறுவது தடைப்பட்டு இருந்தாலும் இனியும் அவர்களால் பொது மக்கள் ஏமாறக்கூடிய நிலைமை இருப்பதற்குக் காரணம் அவர்களுடையவும் அவர்களது கூலிகளாகவும் வால் பிடித்து பிழைப்பவர்
களாகவும் உள்ள சில பார்ப்பனரல்லாதாருடைய பத்திரிகைகளினுடையவும் பிரசாரமுமே தவிரவேறல்ல :
இது சமயம் நமது நாட்டிலுள்ள சற்றேறக்குறைய எல்லாப் பத்திரிகை: களும் பார்ப்பனத் தலைமையின் கீழ் தான் நடத்தப்படுகின்றன. பார்ப்பனர். களேதான் கொள்கைகளை உற்பத்தி செய்கிறார்கள். அதுவும் பார்ப்பன ரல்லாத சமூகத்திற்கு கெடுதி பயக்கத்தக்கதாகவே பார்த்து கண்டுபிடிக்கின்
றார்கள். அதை மீற யாருக்கும் தைரியமில்லை. ஏனெனில் அவர்களை விரோதித்துக் கொண்டால் எந்த பத்திரிகையையும் நடத்த முடியாதபடி செய்யத் தகுந்த அளவு செல்வாக்கு பார்ப்பனர்களுக்கு இருக்கின்றது. எனவே, பார்ப்பன ஆதிக்கம் இந்தப் பத்திரிகைகளின் பிரசாரத்தாலேயே நிலைபெற்றுவிடுவதால் நமக்கும் தக்க பத்திரிகை உதவி வேண்டும். பார்ப்பனர்களை எதிர்ப்பதால் பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கு தலை கொடுக் கத்தக்க அளவில் நஷ்டப்படவும், கஷ்டப்படவும் தயாராயிருக்க வேண்டும். போதாக்குறைக்கு ஸ்ரீமதி பெசண்ட்டம்மையாரும், சர்.சி.பி. ராமசாமி அய்யரும் ஒரு தமிழ் பத்திரிகையை தினசரியாகவோ வாரப்பதிப்பாகவோ ஆரம்பிப்பதாக ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதற்காக முன் ஒரு காலத்தில் “ஒரு தேசீயத் தமிழ் பத்திரிகையின்” ஆசிரியராய் இருந்த பார்ப்பனரல்லாத ஒரு கனவானை ஆசிரியராக வர வேண்டுமாய் கூப்பிட்டும் அவர் அதற்கு
ஒத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் இனியும் தக்க பார்ப்பனரல்லாத ஆசிரியரையே தேடித்திரிகிறார்கள். “சுதேசமித்திரன்” “சுயராஜ்யா” போன்றவைகளின் பிரசாரமும் “தமிழ்நாடு” போன்றவைகளின் கூலி
குடி அரசு - 1928 () 184
வயிற்றுப் பிழைப்பு முதலிய சமய சஞ்சீவிப் பிரசாரமும் நமது முன்னேற் த்திற்கு எவ்வளவு தூரம் கெடுதி செய்து வந்திருக்கின்றன என்பதும் ஸ்ரீமதி பெசண்டம்மை ஸ்ரீ ராமசாமி அய்யர் கம்பெனியாரின் புதிய பத்திரிகையும் வெளிவந்தால் இனியும் எவ்வளவு தொல்லை ஏற்படும் என்பதையும் யோசித்துப் பார்ப்பவர்களுக்கு “திராவிடனின்” அவசியமும் அருமையும் தெரியாமல் போகாது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையிலும் முன்னேற்றத்திலும் அபிமானமும் கருணையும் உள்ள கனவான்கள் “திராவிடனை” முன்னிலும் அதிகமாக ஆதரிக்க முன்வர வேண்டுமாக வேண்டிக்கொள்கின்றோம். அடுத்து வரும் தமிழ் வருஷப் பிறப்பு தினத் தன்று கூடுமானவரை திராவிடனுக்கு புதிய சந்தாதாரர்களை சேர்க்கும் தொண்டைச் செய்து அன்றைய தினம் தக்க அளவு புதிய சந்தாதாரர் களையாவது சேர்த்துக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.04.1928
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நாட்டுக் கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக்கூடாததாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப்படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமூகத்தாராகிய பார்ப்பன ரல்லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யாவிட்டாலும் முழுதும் பார்ப் பனர்களுக்கே உபயோகப்படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது. கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர். கள்தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே இப்படிப் பார்ப் பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தபட நியாயமிருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத்தாரை துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதை செலவு செய்வதானால் அப்படியானவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா? ஆதலால் நமது சர்.அண்ணாமலை செட்டியார் செய்தி
ருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல் கண்ட குற்றத்திற்கு ஆளா
காமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப் படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை
செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.04.1928
குடி அரசு - 1928 () 186
உ யில் ம .
துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷயத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமாற வரவேற்பதுடன் இது உலக விடுதலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல்லுவோம்.
துருக்கி ராஜாங்கம் மதத்திற்காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலா பத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப்பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க - மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து - அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 08.04.1928
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பன்னிக் கூடத்தில் பசாண யாடம்
- சித்திரபுத்திரன்
உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.
பையன் : எனக்கு தெரியவில்லையே சார்.
உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. “பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான்” என்கின்ற பழமொழி கூட நீ கேட்டதில்லையா மடையா?
பையன்: நான் கேட்டதில்லை சார்.ஆனால் ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது ஆதிசேஷன் விஷ்ணு
வின் படுக்கையென்றும் அந்த விஷ்ணு ராம அவதாரம் எடுத்தபோது இந்த ஆதிசேஷன் லக்ஷ்மணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது.
உபாத்தியாயர் : ஆமாம் அந்த ஆதிசேஷன் தான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
பையன் : இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம்
சார்...
உபாத்தியாயர் : என்ன சந்தேகம் சீக்கிரம் சொல்.
பையன் : பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற ஆதிசேஷன் விஷ்ணுவுக்கு படுக்கையாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார். தாங்குவார்கள்? தவிர லட்சுமணனாக உலகத்திற்கு வந்து விட்டபோது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்? தயவு செய்து சொல்லுங்க சார்.
குடி அரசு - 1928 () 188
உபாத்தியாயர் : நீ என்ன “குடி அரசு” படிக்கிறயோ! அது தான் அதிகப் பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய். பொறு! உனக்கு இந்த பரிகைஷயில் சைபர் போடுகின்றேன்.
பையன் : இல்லவே இல்ல சார். நான் சத்தியமாய் குடி அரசைப் படிப்பதே இல்லை சார். ராமாயணம்தான் சார் கேட்டேன். தாங்கள் சொல்வ
திலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றிற்று சார்.
உபாத்தியாயர் : ஆதிசேஷன் தெய்வத்தன்மை பொருந்தியவன். அவன் ஒரே காலத்தில் பல வேலை செய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு. அவன் பூமியையும் தாங்குவான். விஷ்ணுவுக்கு படுக்கையாகவுமிருப்பான். விஷ்ணு ராமனாக உலகத்திற்கு போகும் போது லக்ஷ்மணனாக கூடவும் போவான். தெரியுமா?
பையன் : இப்ப தெரிந்தது சார். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார். அது மாத்திரம் சொல்லிப் போடுங்கள். இனி நான் ஒன்றும் கேட்பதில்லை.
உபாத்தியாயர் : என்ன சொல் பார்ப்போம்.
பையன்: பூமியை ஆதிசேஷன் தூங்குகிறான் சரி, அதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன். அப்புறம் தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது சார். எனக்கு நிஜமாலும் தெரியவில்லை சார்.
உபாத்தியாயர் : என்ன சங்கதி சொல்லு; நான் கோபிக்கிறதில்லை.
பையன் மறுபடியும் : பூமியை ஆதிசேஷன் தாங்குகின்றான் சார் தலையை சொரிந்து கொண்டு! ஆதிசேஷனை யார் தாங்கறாங்க சார்? அவர். எதன் மேலிருந்து கொண்டு தாங்கராங்க சார். அதை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப்போதைக்கு இல்லை
சார்.
உபாத்தியாயர் : போக்கிரிப்பயலே நீ குடி அரசு படிக்கிறாய் என்பது இப்போது எனக்கு உறுதியாச்சுது. பொறு, பொறு, பேசிக்கொள்கிறேன்.வாயை மூடிக்கொண்டு போய் உட்கார், அதிகப் பிரசிங்கிப் பயலே!
பையன்: பேசாமல் உட்கார்ந்து கொண்டான் உபாத்தியாயரும் எஸ்.எஸ்.எல்.சி. பரீகைஷக்கு அவனை அனுப்பவில்லை. இதைப் பற்றி கேள்வி கேட்பாரும் இல்லை. பள்ளிக்கூட மேனேஜரையும் வாத்தியார் சரிப்படுத்திக் கொண்டார்.
குடி அரசு - உரையாடல் - 08.04.1928.
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அசைந்தாபுத்தில் வாற்வபாழிவ
சகோதரர்களே!
நான் இன்றைய தினம் போல் என்றைக்கும் சந்தோஷமாயிருந்த தில்லை. இன்றைய தினம் தான் என் வாழ்நாளில் ஓர் சுபதினமாகும். நான் உழைத்த உழைப்பின் பலனாக இன்று நடந்த இந்த ஒரு காரியமே என்னைச் சந்தோஷத்தில் அமிழ்த்திவிட்டது. இந்த மாதிரி ஒருவராவது நான் சொல்வது சரியென்று பட்டு தமது வாழ்க்கையை சுயமரியாதையில் திருப்பி அந்திய காலத்திலாவது பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்து நல்ல விஷயத்தைச் செய்ததை நோக்க நான் செய்து வரும் எல்லா ஊழியத்திற்கும் இந்த ஒரே கைமாறு போதுமென நினைக்கிறேன். இந்த மாதிரி அனுபவத்தில் காட்டக்கூடிய உணர்ச்சி அன்பர்கள் அவரவர்கட்கே உண்டாகி விட்டால் என் போன்றோர். உழைப்பில்லாமலேயே நம் மக்கள் சுயமரியாதையைப் பெற்றுவிடுவார்கள். எனக்குப் பல வேலைகளும் உடல் நலிவும் இருந்தபோதிலும் உங்கள் அழைப்பிற்கு நான் மிகவும் சந்தோஷத்தோடு இங்கு வந்திருக்கிறேன். இவ்வளவு பெரிய விசேஷக் கூட்டங்களுடனும் உணர்ச்சியுடனும் இக்
காரியம் நடைபெறுமென்று நான் நினைக்கவேயில்லை. நான் 50 கிராமங்க ளுக்குச் சென்று செய்ய வேண்டிய 50 நாள் வேலையை எல்லோரும் இங்கு வந்திருக்கிறபடியால் ஒரு நாளில் ஒரே மணியில் செய்து முடிக்க நேர்ந்ததே என்றும் திருப்தியடைகிறேன். துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் நுழையக் கூடாத இம்மலையடர்ந்த காட்டிற்குள்ளும் நான் சொல்லும் சிறு மொழியும் “குடி அரசு” உபதேசமும் நுழைந்து இவ்வளவு மாறுதலையுண்டு பண்ணியிருக் கின்ற தென்றால் இதன் கொள்கைகளின் உண்மைகள் எவ்வளவு மேலானதென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை பல பேர் கேட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறபடியாலும், நானே வந்து அவ் விஷ யங்களைச் சொல்ல வேண்டுமென்று கேட்கின்றபடியாலும், என்னால் சொல்லப்படுகின்ற உண்மை ஜனங்களின் உண்மையான உணர்ச்சியில் தோன்றக் கூடியதுதான் என்றும், அதுதான் சுயமரியாதையுள்ள மக்களுக் குள்ள உயர்ந்த அபிப்பிராயமென்றும், அதையேதான் நான் சொல்கின்றேன் என்றும் உணர்கின்றேன். ஆனால் நான் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்டதன்படி நடக்க வேண்டுமென்று கட்டாயமில்லை.நான் சொல்வதைக் கேட்காவிட்டால் நரக தண்டனை யென்று நான் மேற்கோளும் காட்ட வரவில்லை.
குடி அரசு - 1928 () 190
சங்கராச்சாரி, மடாதிபதிகள், குருக்கள், புரோகிதர்களுடைய ஊழல் களைச் சொல்லுவதனால் நான் டி மடாதிபதியாக வருவதற்கல்ல. நான் நாயனாராகவோ ஆழ்வாராகவோ ஆவதற்கல்ல. ஆனால் என் அனு போகத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உண்மையென்று பட்டதை, நான் உள்ளபடி உணர்வதை உங்களுக்கும் சொல்லுகின்றேன். உங்கள் அறிவிற்கு அது சரியென்று பட்டால் கொள்ளுங்கள். அல்லவென்று பட்டால் தள்ளுங்கள்; சரியென்று பட்டபின் அதைக் கொள்ள தைரியமில்லாமல் ஊரை ஏமாற்ற “நாய்க்கர் நாஸ்திகம் பேசுகிறார்” என்று சொல்லி வீண் பழி பாவத்திற்கு உள்ளாக்காதீர்கள். நமது சமூகத்திற்கு எதிரிகளாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைக்கும் கோடாலிக் காம்புகளின் பேச்சைக் கேட்டு ஏமாறா
தீர்கள். கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுள் பேரால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு, கடவுள் பேரால் விபசாரம் செய்து கொண்டு, கடவுள் பேரால் தீண்டாமையை உற்பத்தி செய்து கொண்டிருப்பதை யெல்லாம் தான் நான் கண்டிக்கிறேன். கடவுளை நம்புகிறவன் யோக்கியமாய் இருக்க வேண்டியது அவசியம். கடவுளை நம்பி யோக்கியமாய் இருக்க முடிய வில்லையானால் கடவுளைப் பற்றி கவலைப்படாமலாவது நீங்கள் யோக்கி யர்களாய் இருக்க வேண்டுமென்பதுதான் என் கோரிக்கை. எல்லாரையும்
சமமாயும் சகோதரராயும் பாவிக்க வேண்டும். எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும். தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும். தாசித் தொழில் ஒழிய வேண்டும். பாலிய விவாகம் ஒழிந்து நமது பெண்கள் எப்பொழுதும் சுகமாயிருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. திருடக்
கூடாது. யோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இது போல் சொல்லி வருகின்றேன். இதைச் சில அயோக்கியர்களும் அவர் தம் பத்திரிகைகளும் பொறாமை, சுயநலம், அற்ப புத்தி காரணமாக நாஸ்திகம் என்று பேசியும் எழுதியும் வருகின்றன. இவையெல்லாம் நாஸ்திகமாயின்
பின் ஆஸ்திகம் தான் என்ன?
கடவுள் பேரால் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுதலும், கடவுள். பேரால் தீண்டாதார்களைக் கோயிலுக்குள் கும்பிட விடாமலும், கடவுள் பேரால் இளங்கன்னிகளைக் கல்யாணம் செய்து அறுதலியாக்குவதும், கடவுள் பேரால் 100க்கு 96% பேர் முட்டாளாகவும் 3% பேர் படிக்கவும், கடவுள் பேரால் ஒரு வகுப்பார் உட்கார்ந்து சாப்பிடவும் மற்றொரு வகுப்பார். உப்பில்லாமல் ஓடியுழைக்கவும், கடவுள் பேரால் பொய் சொல்லவும், திருடவும், பலியிடவும், யாகங்கள் செய்யவும், ஏமாற்றவும் செய்தால் இது தானா ஆஸ்திகம் என்று கேட்கின்றேன். அப்படியானால் இந்த ஆஸ்திகத் தை ஒழிப்பதே உலகுக்கு நன்மை பயக்குமல்லவா. உங்கள் அறிவை விளக்கி, இம்மாதிரி ஆஸ்திகப் பேச்சை விட நான் சொல்லும் பேச்சில் ஆஸ்திகம் அதிகமிருக்கிறதா நாஸ்திகம் இருக்கிறதா என்று பகுத்தறிந்து பின்பற்றுங்கள். அயோக்கியர்கள் உங்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது. இம்மாதிரி.
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
குக்கிராமத்திலேயே ஒரு வயது சென்ற பெரியார் அந்தக் காலத்தில் சுயமரியாதை உணர்ச்சி பெற்று பார்ப்பனீயத்தை ஒழிக்க முற்பட்டதும் அதையும் பக்தியுடன் நிறைவேற்றிய அவர்தம் புதல்வரையும் நோக்க இந்த சுயமரியாதைக் கிளர்ச்சியின் பலம் எதிரிகளுக்கு விளங்காமற்போகாது.. இதற்காக அப்பெரியாரையும் போற்றி அவர் தம் குமாரனையும் ஆசீர்வதிக்
கிறேன்.
மதத்தின் பேரால் பார்ப்பனர்களின் பொய் புரட்டு, வேதம், புராணம், சாஸ்திரம் முதலியவைகளில் நம்மக்கள் பல்லாயிரக்கணக்கான வருஷங் களாக அடிமைப்பட்டு விட்டனர். சுயமரியாதையே இல்லாது போய் விட்டது. சுயமரியாதை இல்லாது போனால் சுயராஜ்யம் எங்கே இருக்கும்?
கிறிஸ்துவ மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. புத்த மதத்திற்கு ராஜ்யமி ருக்கிறது. முகமதிய மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. அந்தந்த ராஜ்யம் அந்தந்த மதத்தார்களால் ஆளப்படுகிறது. ஆனால் பழைய தொன்மையான ஹிந்து
மதத்திற்கு அநாதி காலந்தொட்டு ராஜ்யமுமில்லை, இருக்கிற ராஜ்யத்தையும் ஹிந்துக்கள் ஆளாமல் அன்னியர் ஆளுகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் ஜனத்தொகை பெருகுகின்றது. நம் பழமையான ஹிந்து மதத்திற்கு ஜனத் தொகை குறைகின்றது. இந்தியாவில் உள்ள இந்து மத சம்பிரதாயப்படியுள்ள. தீண்டாமையென்னும் கொடிய வழக்கத்தால் சுமார் 7, 8 கோடி முகமதியர் களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகிவிட்டனர். இன்னும் தீண்டாமை ஒழியாவிட்டால் முகமதியராகவும் கிறிஸ்தவராகவும் ஆவதற்காக 6 கோடி பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்துவாக இருந்து முகமதியராக மாறினவர்களுக்கும் துருக்கி சுல்தானுடனும் ஆப்கன் அமீருடனும் சமத்துவமாக நின்று தொழவும் “குரான்” படிக்கவும் உணவு அருந்தவும் சமத்துவமான சுதந்திரம் உண்டு. இது போல் கிறிஸ்துவ மதத்திலும் புத்த மதத்திலும் உண்டு. ஆனால் பழைய ஹிந்து மதத்தில் கடவுளைப் பார்க்கக் கூடாத ஒரு சாதி கிட்டே போகாத சாதி. இந்து வேதத்தைப் படிக்கக்கூடாத ஒரு சாதி உண்டு. ஆனால் அதை ஒப்புக் கொள்ளுகிறவன் தான் ஹிந்து, இதெல்லாம் வெறும் புரட்டும், மக்களை ஏமாற்ற எழுதி வைத்ததும் தற்கால வாழ்விற்கு வேண்டாததும் ஆகியவைகளா இல்லையா என்று தான் கேட்கின்றேன். ஆதலால் இந்தப் புரட்டையெல்லாம் உதறித் தள்ளி நல்ல சமயத்தில் பற்றிக்கொண்டு நல்ல காரியத்தைச் செய்யுங்கள் என்றால் நாஸ்திகம் என்று குறுக்கே சொல்ல வந்துவிடுகிறார்கள். பிறகு கடவுள், மதம், சடங்குகள் முதலியவற்றால் சுயநலம் கொண்ட ஒரு சாதியார் எப்படி மக்களை ஏமாற்றி பிழைத்து வந்தார்கள் என்பதை சாங்கோ பாங்கமாக
எடுத்து உரைத்து தமது ஆசனத்தமர்ந்தார்.
குறிப்பு: 20.03.1928 இல் அலசந்தாபுரத்கில் சொற்பொழிவு,
குடி அரசு - சொற்பொழிவு - 15.04.1928
குடி அரசு - 1928 () 192
தெண் இந்திய வனத்தர் மூண்றாவது மகாநா௫
தலைவரே! தாய்மார்களே! அன்பர்களே!
இன்று என்னை மதம் என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அக்கட்டளையை சிரமேற்கொண்டு என் அறிவிற்கெட்டிய சில முக்கிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் அப்படியே நம்பி ஒப்புக்கொள்ள வேண்டு மென்றோ நான் ஓர் பெரிய அறிவாளி, ஆராய்ச்சிக்காரன் என்றோ சொல்ல வரவில்லை. நான் சொல்வதை நன்காராய்ந்து உங்களுக்குச் சரியெனத் தோன்றுவதை எடுத்துக்கொண்டு சரியல்ல வெனத் தோன்றுவதை ஒதுக்கி விடும்படிதான் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் பெரிய சீர்திருத் தக்காரனும் உபதேசக்காரனுமல்ல. ஆனால் என் அறிவுக்கெட்டிய வரை: தீயவைகளாகத் தோன்றுவதைக் கண்டித்து நல்லவைகளை எடுத்துக் காட்டி பொது ஜன உபயோகமான துறையில் செலவிட வேண்டுமென்பது தான் என் முக்கிய நோக்கமும் விருப்பமுமாகும். என்னுடைய அறிவுக்கு எது தீய தென்றும், எது ஒழிந்துபட்டு மறைந்தொழிய வேண்டுமென்றும் பட்டிருக் கின்றதோ அதனைப் பல தலைப்புகளின் கீழ் பல விடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகின்றேனேயன்றி வேறல்ல. அதைத்தான் இங்கும் மதம் என்பதன் பெயரால் நான் உங்கள் முன்னிலையில் சொல்ல வந்தி ருக்கிறேன்.
நான் ஏன் மதம் என்பதைப்பற்றி பேசி வருகிறேன் என்றால் நான் ஏதோ சிறிது நேரமாயினும் பொது நன்மைக்கென்று செலவிட்டுக்கொண்டு வந்த வரையில் சில விஷயங்கள் நம் நாட்டுக்கு மட்டுமன்றி மனித. சமூகத்திற்கே முன்னேற்றத் தடைகளாயிருப்பது மதத்தின் பெயரால் செய்ய படுபவைகள் தான் என்று நான் அபிப்பிராயப்படுகிறபடியால் தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதமிருக்க வேண்டுமென்றும் சொல்லப் படுகிறது. அப்படியானால் அம்மதம் அவன் வாழ்நாளில் உபயோகமான நன்மைகளைச் செய்யக் கூடியதாயிருத்தல் வேண்டியது அவசியம். ஆயினும் நம் நாட்டில் ஒரு மனிதனின் மதம் என்பது அவன் வாழ்நாளில் அவனுக்கு எவ்வளவு உபயோகமில்லாததாயினும் அதன் கற்பனைகளுக்கு
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாயிருப்பதைக் கண் கூடாகக் காண்கின் றோம். மகமதிய, கிறிஸ்துவ, இந்து, சைவ, வைஷ்ணவ சமயங்களெது
வாயினும் எல்லாம் ஒரே மாதிரி பல நிர்ப்பந்தங்களையுடைய மதங்களாகத் தானிருக்கின்றன. அந்த நிர்ப்பந்தங்களின்படி அந்தந்த மதஸ்தர்கள் நடக்க வேண்டுமென்ற கட்டுப்பாடுகளுமிருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் எந்த மதத்தினரைக் கேட்டாலும் இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்
றும் அதற்கு மீறி நடக்கக் கூடாது என்றும் ஏதோ சில நிர்ப்பந்தங்களைச் சொல்லுகின்றார்களேயன்றி அதில் உள்ள ஒழுக்கத்தை பின்பற்றியதென்பது ஒரு சிறிதும் இல்லை. மனிதன் தன் அறிவிற்கெட்டிய உண்மைப்படி நடக்க வேண்டும் என்று ஒரு மதமும் சொல்வதில்லை. மேலும் அவர்கள் அக்கட்டுப் பாட்டிற்கு மாறாக எண்ணினால் பாவம், பேசினால் மதத் துவேஷம் என்றும்
சந்தேக நிவர்த்திக்கு ஏதாவது ஒரு சிறிது முயற்சித்தால் அதை நாஸ்திக மென்றும் சொல்லுகின்றார்கள். இதனால் அறிவின் தன்மைக்கும் இயற்கைக்
கும் ஒத்த மாதிரி ஏற்றவாறு நடக்க இடம் கொடுக்கும் படியான மதம் உலகில்
மிக அருமையாகத்தானிருக்கிறது. உண்மையில்,
மதமென்பது என்னவென்பதையும் அதன் அவசியத்தையும் அறிந்திருப்போர் வெகு சிலர்; அது என்னவென்றேயறியாது பழமை என்பதனாலும் முன்னோர்களுடையது என்பதனாலும் பழக்க வழக்கங் களினாலும் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டுமிருப்பவர்கள். பெரும்பாலோர். பெரும்பாலோருக்கு அவர்கள் அனுசரித்துவரும் கொள்: கைகளைப் பற்றியோ அல்லது தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்பந்தங் களைக் குறித்தோ ஒன்றுமே தெரியாது. ஆனால் அத்தகையோர் “பெரி யோர்கள் சொன்னபடி கேட்க வேண்டும். அவர்கள் சென்றவழி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பாவம், தோஷம்” என்று ஏதோ சமாதானம் சொல்லுகின்றார்களேயன்றி அதன் உண்மையை யறியும் விஷயத்தில் ஒரு
சிறிதும் முயற்சியில்லாமல் தானிருக்கின்றனர். என்ன காரியத்திற்காக மதம் இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அந்தக் காரியத்திற்காக மதம் உபயோகப்படுவதாய் காணப்படவில்லை. ஒருவரை உனக்கு மனைவி மக்களுண்டா? எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? என்ன சொத்து சுதந்திரம் இருக்கிறது? என்று விசாரிப்பது போலத்தான் ஒருவனை உன் மதம் என்னவென்று கேட்பதும் ஒரு சொத்தாய் மதிக்கக் கூடியதாயிருக்கின்றது. மதம் என்று சொல்வது எதற்காக? அது எப்போது ஏற்பட்டது? அது ஒரு நிலையாயிருக்க வேண்டுவதா? அல்லது அடிக்கடி மாறக் கூடியதா? அல்லது புதிதாக உண்டாக்கிக் கொள்ளக் கூடியதா! என்பனவற்றை ஆலோசிப் போமாயின் மற்ற தோற்றங்கள் மாறக்கூடியதாயிருப்பது போன்றே மதமும் அறிவிற்கு ஏற்றவாறு மாறக்கூடியதற்கு இடந்தர வேண்டும் என்பது புலனாகும். அன்றியும் ஒருவனுக்கு ஒரு மதமென்பது நித்தியமானதென்றும், அது என்றைக்கும் மாறக்கூடாதென்றும் சொல்வதற்கு இடமில்லை.
குடி அரசு - 1928 () 194
மதமானது அவ்வப்போதைய காலதேச வர்த்தமானத்திற்கேற்றவாறும், மக்களின் வாழ்க்கையை எப்படி நடத்துவதென்பதன் படியும், சரீர பலத்தினாலோ புத்தி பலத்தினாலோ அவரவர்கள் புத்திக்கு ஏற்றவாறு பல கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் நிர்ணயித்து அதைத்தான் மக்கள் பின்பற்றி நடக்க வேண்டுமென்றும் கட்டுப்படுத்தி நிர்ப்பந்தித்து வருவ தையே தான் இப்போது மதம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு பல ஆதாரங்களையும் அற்புதங்களையும் சொல்லி விடுகிறார்கள். அவை
கள் ஒரு சமயம் அந்தக் காலத்திற்கு தகுந்ததாக ஒப்புக் கொள்ளப்பட்டி ருப்பினும் இப்போது அவை ஒன்றும் ஒப்புக்கொள்ளக் கூடியவைகளா? என்பதை ஒரு சிறிதும் கவனிப்பதில்லை. ஒவ்வொரு மதத்திலும் கடவுள்,
கடவுள் அவதாரம், கடவுள் மகன், கடவுள் மூலமான தூதன் என்று பலவாறு. மதத்துடன் கடவுளை இணைத்து சொல்லப்படுகிறது. அக்காலத்து நிலைமையை உத்தேசித்து மக்களுடைய நன்மையை முன்னிட்டு அவ்வா றான பிரமாணங் கற்பனை செய்யப்பட்ட தென்றாலாவது ஏதோ ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கின்றி கடவுள் அவதாரமாகவோ பிள்ளை யாகவோ தோன்றி இதைச் சொன்னார் அதைச் சொன்னார் என்பதும், ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் நாயன்மார்கள் முதலிய பல பெயர்களுடை யவர்கள் தோன்றி பல அற்புதங்கள் செய்து காட்டி இதைச் சொன்னார். அதைச் சொன்னார் என்பதும் தான் இவ்வுலகத்திற்குப் பெரிய கஷ்டத்தையும்
துன்பத்தையும் தரக்காரணமாயிருப்பதுடன் மக்களை முழு மூடர்களாக்கிக் கொண்டும் வருகின்றது. (கரகோஷம்?) உலக வாழ்வில் மற்றொருவனுக்கு இம்சையின்றி பிறருக்கு எப்படி உபயோகப்படுவது என்பதையேதான் முக்கிய கொள்கையாகக் கொண்டுழைப்பவனுக்கு வேறு மதம் வேண்டுவ தில்லை என்பதுடன் தேவகுமாரனும், நபியும், ஆழ்வாரும், ஆச்சாரி யார்களும், நாயன்மார்களும், தெய்வீகமும், அற்புதங்களும் வேண்டிய தில்லை என்பதே என் முடிவு.அம்மாதிரி தருமத்தையேஅனுபவமாக்கத்தக்க. விதமாய் இப்போது போதிக்கத்தக்க மதமெதுவுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படிக்கு இருப்பதாக இப்போது சொல்ல வருவ தெல்லாம் ஏதோ செல்லரித்த ஏட்டை எடுத்துக்கொண்டு வந்து இதோ பார் நீ சொல்வதெல்லாம் இதில் எழுதியிருக்கிறது என்று காட்டப்படுவதன்றி சமூக வாழ்க்கையின் அனுபவத்திலிருக்கின்றதெனச் சொல்லப்படும் மதமோ சமயமோ ஒன்றுமில்லை. இவ்வளவு மதங்கள் சமயங்கள் இருந்தும் அனுப
வத்திற்கும் இயற்கை இன்பத்திற்கும் ஒத்தது எது அவசியமானது எது, என்று கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கின்றதே ஒழிய தாராளமாய் பின்பற்ற ஒரு சமயமும் இடம் கொடுக்கவில்லை. அந்த விதமான ஒரு நிலைமை மனித
சமூகத்திற்கு ஏற்பட்டாலொழிய மனித சமூகம் ஒற்றுமையுடனும் அன்புட
னும் சுதந்திரத்துடனும் வாழ்வது கஷ்டந்தான். நாளுக்கு நாள் புதிய மதங்கள் உற்பத்தியாவதும்; பழைய மதங்களுக்குப் புதிது புதிதான பாஷியமும் பொருளும் சொல்லிப் பிரசாரங்கள் மிகுந்து கொண்டுமிருக்கின்றன
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
வேயன்றி மனித சமூகத்தின் அவசியம், தன்மை, கடமை முதலியவை என்னவென்றும் இத்தகைய பாஷியங்களும் மதமும் அவற்றிற்கு ஏற்றவைகளாயிருக்கின்றனவா? யென்றும் ஆலோசிப்பார் யாருமில்லை. அக்கிராசனர் சொல்லியது போல் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆயிரக் கணக்கான கொள்கைகளையும் தர்மங்களையும் எழுதி வைத்தி ருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. எந்த மனிதனுக்கும் அவசியமெனச் சொல்லும் எக்கொள்கையும் அனுபவத்தில் எளிதாக அனுசரிக்கப்படுவதற்கு ஒத்ததாயிருக்கின்றதோ - அனுசரித்தே தீர வேண்டியதாயிருக்கின்றதோ அதனைத்தான் உத்தமமும் உண்மையுமுள்ள கொள்கையென்று சொல்ல வேண்டும். இல்லாமல், இப்படியிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டு மென்று கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் மாத்திரம் ஏற்படுத்திக் கொண்டு அதை சிவன் சொன்னார், விஷ்ணு சொன்னார், கிறிஸ்து சொன்னார், நபி சொன்னார், புத்தர் சொன்னார், ரிஷி சொன்னார், முனி சொன்னார், மனு சொன்னார் என்பதாக சொல்லிக் கொண்டு காரியத்தில் நடைபெற முடியாமல்
இருக்கும் மதங்கள் எவற்றினாலும் உலகம் ஒரு நாளும் உய்யப்போவ தில்லை.மனிதனுடைய இயற்கை தத்துவத்திற்கும் அனுபவத்திற்கும் விரோத மானதைப் புகட்டும் எந்த மதத்தையும் சுருட்டிக் கட்டி மடக்கி சமுத்திரத்தில் போட வேண்டியதுதான். புண்ணியம், பாவம், மதம், கொள்கை முதலிய இவற்றின் பெயரால் ஜன சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களும், துன்பங்களும் இவ்வளவு என்று சொல்ல முடியாது. உலகத்தில் அநீதிகளும் மக்களுக்கு விரோதமான காரியங்களும் எவ்வளவு இருக்கக் காண்கி றோமோ அவ்வளவும் மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும்தான் ஏற்படுகின்ற தென்பதை உறுதியாய்ச் சொல்லுவேன். திருட்டுக்கும், விபசாரத்
திற்கும், பொய், கொலை, முதலியத் தீத் தொழில்களுக்கும், குடிக்கும், சர்வ சதாகாலமும் மக்களை வஞ்சித்து பிறருடைய உழைப்பினால் சாப்பிட்டுக் கொண்டு சோம்பேறிகளாய் காலங்கழித்துக் கொண்டிருப்பதற்கும் மதங்க ளும் தெய்வங்களும் சம்மதப்பட்டு இடங் கொடுத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லி புராணங்களும் இதிகாசங்களும் எழுதி வைத்திருப்பதுடன் கடவு ளுக்கும் அது இஷ்டந்தான் என்றும் கடவுளும் அவற்றில் ஆசைப்பட்டு நடந்திருப்பதாயும் எழுதிவைக்கப்பட்டு இருக்கின்றன. (கரகோஷமும் நகைப்பும்! குடிப்பதே சில கடவுள்களுக்கு இன்பம். மற்றும் விபசாரம் திருட்டு. முதலிய பல தீச் செயல்கள் செய்வதே சில கடவுளுக்கு விருப்பம். ஏழை களை வதைத்து அவர்கள் உழைப்பினால் சுகமாக வாழ்வதே சில கடவுளுக்
குச் சந்தோஷமென்று மதத்தின் பேரால் பலவாறாக ஆபாசமான கற்பனை
களும் புராண ஆதாரங்களும் வேதங்களு மேற்பட்டிருக்கவில்லையா? மக்களுக்கு உபயோகமற்றதும் இம்மாதிரி இயற்கைக்கு விரோதமானதுமாகிய கடவுளும் மதம் முதலியவைகளும் உலகத்தை விட்டொழியும்போதுதான் மக்களுக்கு சுகமுண்டாகும்.மனிதனுக் கும் இத்தகைய சுகத்தைப் பெறுவதற் கான வழியைத் தேடுவதற்கு வேண்டிய தைரியம் வந்தால் தான் அந்த
குடி அரசு - 1928 () 196
எண்ணமும் உதயமாகும். ஆனால் அந்த எண்ணம் உதயமாகுமுன்பே அந்நெறியிலிருந்து மனிதனை வலைவீசி இழுத்து பாழ்படுத்த பல முட்டுக்கட்டைகளும் நிர்ப்பந்தங்களுமிருக்கின்றன. மனிதன் இம்முயற்சி
யில் இவற்றிலிருந்து விடுபடவேண்டுமானால் எந்தவிதமான கட்டுப்பாட்டுக்
கும் அடங்கியவனாக இருக்கக்கூடாது. எதையும் உடைத்தெறிந்து கலகம் செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.
மனிதன் தன்னுடைய அயலானுக்கு கஷ்டம் கொடுக்காமலும் எந்த
விதத்தில் உதவி செய்யலாம், நாமும் இன்பமாய் வாழலாம் என்ற நோக்க முடையவனாயும் வாழ வேண்டும். மற்றப்படி சிறு கூட்டங்களின் சுயநன் மைக்காகப் பலவித கட்டுப்பாடுகளையும், நிர்ப்பந்தங்களையும் வைத்துக் கொண்டு மக்களையும் ஏமாற்றித்திரியும் மதங்களையும், கொள்கைகளையும் வெட்டி ஆழப் புதைக்கவேண்டும். ஆதாரங்களை சுட்டுப் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்து விட வேண்டும். (கரகோஷம்! நான் மதத்தைப் பற்றிப் பேசும்போது சிலருக்கு வருத்தமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அவர்கள்
பார்க்கும் கண், இந்து மதத்தின் கொள்கைகளின் மூலமானதாயும், பிறரை வஞ்சித்து மோசம் செய்வது, இம்சிப்பது முதலான கொள்கைகளின் மூலமாகவும் பார்ப்பதுமாக விருப்பதனால் தான். யாருக்கு எந்த மதத்தில் பற்று இருப்பினும் அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை.ஆனால் அந்த மதத்தினால் நாடு என்ன நன்மை பெற்றது, மனித வர்க்கத்திற்கு என்ன பலனேற்பட்டது என்னும் கேள்வி முக்கியமானதாய் இருக்க வேண்டும். புல்லாகிப் பூண்டாகி புழுவாகி மனிதனாகிப் பிறகு கடவுள் பக்கத்தில் இருப்பவன் என்றும் பலவாறு பரிணாம நிலைகளை (நகைப்பு ) குறித்துச் சோம்பேறிகள் பெருமையாகப் பாடிக்கொண்டு போவதனால் என்ன பயன்? வேண்டுமானால் மூடர்கள் முன்னிலையில் ஆழ்வார்களாகவும் நாயன்மார் களாகவும் வாழலாம். (கரகோஷம்) மனிதனோ புல் பூண்டு, புழு மிருக முதலிய ஜீவராசிகளுக்கெல்லாம் மேலான அறிவைப் படைத்துள்ளவ னென்று சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றினிடத்தும் மனித வருக்கத்
திற்கு அப்புல் பூண்டு புழு பூச்சிகளை விட அறிவற்ற தன்மையும் துன்ப முமே தொடர்ந்து வரக் காண்கின்றோம். ஒரு சமயம் மனிதனுக்கும் அவற்றிற்
குச் சமமான அறிவு இருந்திருந்தால் துக்கம் துக்கமென்ற, உணர்ச்சியில்லாமற் போயிருக்குமல்லவா? மனிதனுடைய உண்மையான நிலையை ஒருவருக் காவது கற்றுக் கொடுக்கக் கூடிய மதம் இல்லை.உள்ளதைக் கொண்டு திருப்தி யடையுங்கள், அடுத்தவனுக்கு உபகாரியாய் நன்மை செய்யுங்க ளென்று எந்த
மதமும் காரியத்தில் கற்பிக்கவில்லை. அதனை அறியும் வரை மனிதனும்
பூச்சிப் புழுக்களைப் போல் நசுக்குண்டுதான் துன்பத்திலுழன்று கொண்டிருப்
பான்.
இந்து மதமென்றாலும் வேறு மற்றெந்த மதமென்றாலும் நாட்டையும்
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ஜன சமூகத்தையும் பாழ்படுத்த எவ்வளவு, கட்டுப்பாடுகளும் நிர்ப்பந் தங்களும் நிறைந்திருக்கக் கூடுமோ அவ்வளவும் நிறைந்து வழியக் கூடிய வைகளாகத் தானிருக்கின்றன. காரிய அளவில் இந்து மதம் என்பதும் அதன் பெயரால் கொள்ளப்படும் கொள்கைகளும் மற்றெல்லா மதங்களைவிட மனிதனை ஏமாற்றிக் கட்டுப்படுத்தி நிர்பந்தங்களுக்குள்ளாக்கக் கூடியவைக ளாகத்தானிருக்கின்றன. கூடியவரை புத்த மதக்கொள்கைகள் ஒரு விதத்தில் உயரிய கருத்தைக் கொண்டதாக இருப்பதாய் சொல்லப்படுகின்றது. மேலும் மற்றெல்லாம் மதங்களைவிட புத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக விருக்கின்றன என்று சொல்லப் படுகின்றது. இதனை நான் முழு ஆராய்ச்சியினால் சொல்லுவதாகக் கருதி விடக்கூடாது. உலகத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் என்ன இது புத்த மதமாயிருக்கிறதே என்று சொல்லப்படுவது இயற்கை யாயிருப்பதிலிருந்துதான் இம் மதத்தின் கருத்துக்களை அனுமானித்தேன். இன்றைய தினம் இங்கு கூட்டப்பட்டுள்ள மகாநாட்டில் நீங்கள் இப்படி நடக்க வேண்டும். அப்படி நடக்க வேண்டுமென்று கட்டுப்படுத்தும் தீர்மானங்களும் செய்யப்படலாம். அதனாலேயே முடிவான நன்மைகள் விளைந்து விடாது. உலகத்திலுள்ள பெரிய மதங்கள் என்பவை ஏன் மக்களை உயரிய கருத்துக் களை அனுசரித்து வாழ்க்கையிலுய்யுமாறு பக்குவப்படுத்தவில்லை என்னும் கேள்விக்கும் பதில் சொல்லக் கடமைப் பட்டுமிருக்கின்றோம். அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாயுள்ள மதம் என்றால் மக்களுள் பெரும்பாலோரால்
ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் இதற்கு “எதிரிகளின் சூழ்ச்சி களினால்தான்” என்று பதில் சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லா மதத்தினரும் இவ்வாறு தான் சொல்லுகின்றனர். எந்த மதம் மக்களுடைய வாழ்க்கையைக் கைப்பற்றி அவர்களைப் பக்குவப்படுத்தியிருக்கின்றது என்று பார்ப்போமா னால் ஒன்றைக் கூடச் சொல்வதற்கில்லை. மதத்தின் பெயரால் செய்யப்படும் காரியங்கள் ஒன்றாவது மக்களை மனிதத் தன்மைக்குத் திருப்புபவைகளா யிருக்கவில்லை. ஆதலால் இம்மாதிரியான மகாநாடுகள் மனிதனை மனிதத் தன்மைக்குத் திருப்புவது என்ற முயற்சிகளிலிறங்கி நிர்ப்பந்தமின்றி அனுபவத்தில் எளிதில் கைக்கொண்டனுசரிக்கத்தக்க - அனுசரித்துத் தீர வேண்டியதான கொள்கைகளை பகுப்பது உசிதமாகும். எது மனித தர்மத்
திற்கு விரோதமோ எது அறிவுக்கு விரோதமாக முட்டுக்கட்டையாக நிற்கின் றதோ அதை எல்லாம் அழிக்க தைரியமாக முன் வந்து அவ் வேலையில்
ஒரு கட்டுப்பாட்டுக்கும் நிர்பந்தத்திற்கும் இடங்கொடாது அவற்றை அழித்து மனிதத் தன்மையைப் பரவச் செய்வதனால்தான் இது சாத்தியமாகும். உலகமும் மனித சமூகமும் சுகமும் சுதந்திரமுமடையக்கூடும். (பெருத்த கரகோஷம்? இந்து மதமென்பதாக ஒரு மத மில்லை என்பது தான் என் அறிவுக்கு எட்டிய முடிவு. ஆனால் பல மதங்கள் (சைவம், வைணவம் முதலியன) சேர்ந்தது இந்து மதமென்று சிலர் சொல்லுகின்றனர். இந்து மதமென்பதில் சைவம் வைணவமாகிய இத்தியாதி மதங்கள் சேர்ந்த
குடி அரசு - 1928 () 198
தொடர்பெனச் சிலர் சமாதானம் கூறினாலும் அவை எவ்வித உண்மைக்கும் ஒத்ததல்லவென்பது தான் என் அபிப்பிராயம். இந்து மதம் என்பதில் சைவம் வைணவம் என்றும் இரண்டு சமயமும் வெறும் புரட்டையே அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்டது. மகமதிய மதமும், கிறிஸ்துவ மதமும் ஒரு குறிப் பிட்ட காலத்தில் ஏற்பட்டதென்றும் அதனை உண்டாக்கியவரைக் குறித்தும், கொள்கைகளைப் பற்றியும் சில ஆதாரங்களுமிருப்பதாகச் சொல்லப்படு கின்றது.ஆனால் சைவம் வைணவம் முதலிய மதங்கள் சேர்ந்த தொடர்பான இந்து மதமென்பது எக்காலத்தில் எப்படி ஏற்பட்டதென்ற அஸ்திவாரம் குறிப்பிடுவதற்கில்லாமலிருக்கின்றது. இம்மதங்களென்பது ஜனங்கள் அறி யாமை காரணமாக வளர்ந்து கொண்டு இந்நாட்டினரை ஒன்று படுத்துவதற் கிடமில்லாமலிருக்கின்றது. நானும் கூடியவரை அந்தந்த மதத்தில் சம்பந்தப் பட்டவர்கள் சொல்லும் சமாதானங்களையும் அவர்கள் அபிப்பிராயங் களையும் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். மதங்களால் ஒரு பெரிய
சமூகம் சிதறுண்டு பல கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் இலக்காகியிருக். கின்றது. மதங்கள் என்ற பித்த லாட்டங்களும் சமயங்கள் என்ற புரட்டுகளும் மக்களை அந்தகாரத்தில் ஆழ்த்தி வருகின்றன. பெரும்பகுதியான மக்களின் உன்னத நாகரீகமும் செல்வ வளர்ச்சியும் நிறைந்த நாட்டு மக்களை மக்க ளெனச் சொல்ல முடி யாது மாக்களாக்கியிருப்பதும் இம்மதமென்ற புரட்டுக் கள்தான். (கரகோஷம்) பெரும் இடையூறுகளை எளிதில் சொல்லமுடியா தாயினும் சிறுமையாக விருக்கும் தடைகளைச் சீக்கிரத்திலேயே ஒழிக்க முயல வேண்டும். “மகாத்மா” காந்தி என்பவரும் மக்களைச் சமத்துவப் படுத்தி சகோதரத்து வத்தை நிலைநாட்ட ஊரெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்ய வந்தவர் கடைசியில் விலங்கைத் தறித்து குட்டையிலடைத்து விட்டதுபோல் செய்து வைத்தார். (கரகோஷம் அவருடைய சமீபமாறுதல் களால் அவர் உலகத்திற்கு பெரும் தீங்கிழைத்திருப்பது புலனாகும். ராமானுஜர் சமத்துவத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர். மதம் இப்போது வித்தியாசமில்லாதவர்களுக்குள்ளும் வித்தியாசத்தைப் புகுத்தி விட்டது. (நகைப்பு) சங்கராச்சாரியார் மனிதனுக்கு மனிதன் பேத மில்லை என்று சொல்லி பெரும் பேதத்தை உண்டாக்கி மக்கள் வாழ்க்கையை பாழ்படுத்தி வைத்தார். இவ்வாறு மற்றும் பல மதத்தலைவர்களும் ஆச்சாரி யார்களும் குழப்பத்தில் தான் கொண்டு வந்து விட்டிருக்கின்றனர். இந்து மதம் என்பதை இன்னும் பிரித்து பிரித்து நன்காராய்ந்தால் அதன் பெயரால் கஷ்டங்
களும் ஆபாசங்களும் மிகுந்து மக்களை மேன்மேலும் கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் உட்படுத்தியிருப்பது தான் தெளிவாகக் காண்கின்றன. அதனால் இதற்காக புதிதான கொள்கைகளும் மார்க்கமும், சமயமும் அவசிய மில்லை. உள்ள மார்க்கத்தில் எது எது இயற்கைக்கும் அனுபவத்திற்கும் விரோதமாயும் மனிதத் தன்மைக்கு முரணாயுமிருக் கிண்றதோ அவற்றை எல்லாம் உடைத்தெறிய வேண்டும். அதற்காக ஒருவன் பிறக்கப் போகிறான் என்பதும் மூட நம்பிக்கையாகும். ஒவ்வொருவரும் அதை உடைத்தெறிய
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சுதந்திரமுடையவர்கள் என்ற கொள்கை மனித வர்க்கத்தினர் யாவருக்கும் உதிக்க வேண்டும். நிற்க மனித வர்க்கத்தில் பாதியான ஸ்திரி வர்க்கத்தை நம். நாட்டிலும் கேவலமாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றது. இதைப்பற்றி எல்லா மதமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இயற்கைத் தோற்றத்திலேயே பெண் என்றால் தாழ்ந்தவர்கள் என்ற உணர்ச்சிதான் ஆண் மக்களுக்கு தோன்றுகிறது. பல மதங்களில் பெண் மக்களுக்குச் சுதந்திரமும் உரிமை களுமளிக்கப்படுவதாகத் தோன்றினாலும் அவர்கள் இன்னும் பழைய அடிமைத்தனத்திலிருந்து விடுபட எந்த ஆண்மகனும் யாரும் சம்மதிப்பதாக காணவில்லை.ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த நிலையாலும் எவ்வித வித்தி யாசமும் கற்பிக்கப்ப ட்டிருக்கவில்லை என்ற தத்துவத்தை மனிதன் உணரும் போதுதான் மனிதத்தன்மை என்பது வெளிப்படக்கூடும். (கரகோஷம்! இயற்கைக்கும் அனுபவத்திற்கும் விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம். உடைத்தெறியத்தக்க கொள்கைதான் மனிதவர்க்கத்திற்கு அவசியமான தென்று கருதுவதின் மூலம்தான் அவர்கள் ஒரு காலத்தில் அந்நிலைமைக்கு வந்து சேரக்கூடுமென்றும் நம்பிக்கையும் எனக்குப் பூர்ணமாய் ஏற்பட்டிருக் கின்றது. (கரகோஷம்) நான் இது வரை கூறியதில் உங்களுக்குச் சரி எனப் படுவதை ஏற்றுக்கொண்டு தப்பாகத் தோன்றுவதை ஒதுக்கி என் அறியா மைக்கு என்னிடம் பரிதாபப்பட்டு என்னை மன்னிப்பீர்களென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.(கரகோஷம்!
குறிப்பு: 07.04.1928 இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் லட்சுமிநரசு அவர்களின் தலைமையில் நடந்த தென் இந்திய பவுத்தர்களின் மூன்றாவது மாநாட்டில் மதங்கள் குறித்து ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 15.04.1928
குடி அரசு - 1928 () 200
யார்ப்பணீய யோக்கிரித்தணம்
சென்ற ஒரு மாத காலமாக பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் வாலைப் பிடித்து வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதார் பத்திரிகை களும் ஒரே அடியாய் சற்றும் அறிவு, மானம், வெட்கம் இன்றி பார்ப்பன ரல்லாதார் கக்ஷியையும் மந்திரிகளையும் வசைபாடும் வேலையிலேயே ஈடுபட்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல் வெளியிடங்களில் உள்ள பார்ப்பனர்களும் அவர்களிடம் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் பார்ப் பனரல்லாத வயிற்றுப் பிழைப்பு தேச பக்தர்களும் இதையே பின்பற்றிக் கொண்டு ஆங்காங்கு கூட்டம் போட்டது போலவும், மந்திரிகளையும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியையும் கண்டித்து தீர்மானங்கள் செய்தது போலவும், மந்திரிகளை ராஜீனாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வது போலவும் பலவித பித்தலாட்டத் தீர்மானங்களைச் செய்ததாக பத்திரிகைகளில் எழுதி விடுகின்றார்கள். “மந்திரிகளின் துரோகம்” என்றும் “தேசத்துரோகம்” என்றும் மற்ற பல இழிவான வார்த்தைகளை போக்கிரித் தனமாக எழுதி பாமர மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.
எனவே இவர்கள் வையும் இந்த மந்திரிகள் யார் என்றும், எங்கிருந்து வந்தவர்கள் என்றும், எந்த ககஷியைச் சேர்ந்தவர்கள் என்றும் சற்று யோசிப் போம்.
ஸ்ரீமான்கள் சுப்பராயன், ரங்கநாத முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் ஆகிய மூவர்களையும் சுயராஜ்ஜியக் கக்ஷியின் உதவியைக் கொண்டு ஸ்ரீமான்கள் ஸி.ராஜகோபாலாச்சாரியார், ஸி. விஜயராகவாச் சாரி
யார், சர்.சி.பி. ராமசாமி அய்யர் மற்றும் பல பார்ப்பனர்கள், அடையாறு கோஷ்டியார் ஆகியவர்கள் ஒன்று சேர்ந்து சிருஷ்டித்தார்களா இல்லையா? என்று கேட்கின்றோம்.
இந்தப்படி பார்ப்பன கோஷ்டியார் மந்திரிகளை சிருஷ்டித்ததற்காக
மேல் கண்டமந்திரிகளிடம் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் கவலையுள்ள பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகங்களும் ஸ்தல ஸ்தாபன நியமனங் களும் கொடுக்கக் கூடாது என்றும், பார்ப்பனரல்லாதார் ககஷியை ஒழித்து விட வேண்டும் என்றும் வாக்குறுதி வாங்கிக் கொண்டு அந்த நிபந்தனை
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
யின் பேரில் ஆதரிப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டது உண்டா? இல் லையா? என்று கேட்கின்றோம்.
அந்தப்படியே மூன்று மந்திரிகளையும் தங்கள் கையில் உள்ள களிமண் உருண்டைகள் போல் நினைத்து தங்களுக்கு வேண்டிய படியெல்லாம் பொம்மைகள் செய்து கொண்டார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.
மற்றும் இம்மந்திரிகள் மூலம் பார்ப்பனர்கள் தங்களுக்கு வேண்டிய மாதிரியெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்களில் புரட்டும் பித்தலாட்டங்களும் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கும் நன்மைக்கும் தங்களால் கூடிய உபத்திரவமெல்லாம் செய்து வந்தார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.
சட்டசபை தேர்தல் ஆனவுடன் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை மந்திரி வேலை ஒப்புக் கொள்ளும்படிக்கும் கவர்னரை ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு மந்திரி வேலை கொடுக்கும் படிக்கும் கேட்டுக் கொள்வதாக ஸ்ரீமான் வரதராஜுலு காங்கிரஸ்வாதி என்கின்ற முறையில் தந்தி கொடுத்தாரா இல்லையா என்று கேட்கின்றோம்.
மந்திரிகள் நியமனமான பிறகு மந்திரிக்கு காங்கிரசு கட்சித் தலைவர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒரு விருந்தளித்து தான் மந்திரிக்கு வேண்டியவர். என்று காட்டிக்கொண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாரா இல்லையா என்று கேட்கின்றோம்.
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்த விளம்பரத்தை வைத்துக் கொண்டு ஸ்தல ஸ்தாபன நியமனங்களுக்கும், உத்தியோகங்களுக்கும் மற்றும் மந்திரிகளால் ஆக வேண்டிய காரியங்களுக்கும் பீஸ் வாங்கிக்கொண்டு சிபார்சு செய்து பதினாயிரக்கணக்காக பணம் சம்பாதித்தாரா இல்லையா என்று கேட் கின்றோம்.
இம்மாதிரியெல்லாம் செய்யலாமா என்று கனம் ஸ்ரீ முத்தையா முதலியார் காங்கிரஸ் முறையில் கேட்டதற்கு ஆம் அப்படித்தான் செய் வோம். பார்ப்பனரல்லாதார் கட்சியை எப்படியாவது ஒழிப்பதுதான் எங்கள் வேலை என்றும் அதற்காக “இதுவும் செய்வோம் இனியும் என்னமுஞ் செய்வோம்” என்றும் சொன்னார்களா இல்லையா யென்று கேட்கின்றோம்.
இந்த மேல் கண்ட மந்திரிகள் சுற்றுப் பிரயாணம் செய்த காலத்தில் அவர்களுக்கு செல்லுமிடங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் பூரண கும்பங்கள்.
எடுப்பது, ஆடம்பர மரியாதை செய்வது முதலிய பல காரியங்கள் நடந்ததா இல்லையா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1928 () 202
பார்ப்பனரல்லாத மந்திரிகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டிற்குள் இறக்கி வைத்துக்கொண்டு வேறொருவர் பார்க்காதபடி மூடுமந்திரங்கள். செய்தார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.
கவர்னர், ஸ்ரீமான்கள் அரங்கநாதம், ஆரோக்கியசாமி ஆகிய முதலி யார்மார்களை வெளியில் பிடித்து தள்ளி விட்டதற்காக இந்த பார்ப்பனர்.
களும் அவர்கள் கூலியாகிய ஸ்ரீமான் வரதராஜுலுவும் இந்த மந்திரிகளை: கவர்னர் வெளியில் போகச் சொன்னது தப்பு என்றும் மறுபடியும் அவர். களையே மந்திரியாக நியமிக்க வேண்டும் என்றும் தங்கள் பத்திரிகையில் எழுதினார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.
மேற்படி முதலியார் மந்திரிகள் விலக்கப்பட்டதற்கு ஒப்பாரி வைத்து அழுதார்களா இல்லையா? என்று கேட்கின்றோம். இப்பொழுது இருக்கும் மந்திரிகளை பாராட்டுவதற்காக காங்கிரஸ் பார்ப்பனர்கள் அதாவது ஸ்ரீமான்
கள் ஏ. ரங்கசாமி, சி.வி. வெங்கட்டரமணன் முதலிய அய்யங்கார்களும் பல அய்யர் சாஸ்திரி பார்ப்பனர்களும் காஸ்மாபாலிட்டன் கிளப்பு மெத்தைக்கு போய் பாராட்டி வந்தார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.
இப்பொழுதும், மந்திரிகள் தங்களுக்கும் பகுதி நாமிநேஷனும் உத்தியோகமும் கொடுப்பதாயிருந்தால் தாங்கள் இந்தக் கூப்பாடு போடாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறோமென்று சொல்லி தூது அனுப்பிக் கொண்: டிருக்கிறார்களா இல்லையா என்று கேட்கின்றோம். இந்த ஸ்ரீமான் சி. ராஜ கோபாலாச்சாரியார் அதாவது புதிய மந்திரிகள் மந்திரி வேலை ஒப்புக் கொண்: டது அரசியல் நாணயக் குறைவு என்று இப்போது சொல்லுபவர் இனியும்
முதல் மந்திரியிடம் தனது வகுப்பு நன்மைக்காக சமாசாரப் போக்கு வரத்தும் சிபார்சு போக்குவரத்தும் வைத்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்று கேட்கின்றோம். மற்றும் பல பார்ப்பனர்களும் காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி
வீரர் என்பவர்களும், நியமனம், உத்தியோகம் ஆகிய எலும்புகளுக்கு இன்னமும் மந்திரிகளின் வீட்டைச் சுற்றிக் கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டும் திரிகிறார்களா இல்லையா என்று கேட்கின்றோம். ஆகவே இந்த பார்ப்பனர்களுக்கும் ஸ்ரீ வரதராஜுலுக்கும் மற்றும் காங்கிரஸ் கயராஜ்ஜியக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் மானங்கெட்ட வீரர்களுக்கும் இந்த மந்திரி
கள் எந்த விதத்தில் தேசத்துரோகிகளாய் விட்டார்கள் என்று கேட்கின்றோம்.
தாங்கள் என்ன சொன்னாலும் என்ன எழுதினாலும் கேட்பதற்கும் படிப்பதற்கும் நாட்டில் தேவையான முட்டாள்கள் இருக்கின்றார்கள் என்
கின்ற ஆணவமேயல்லாமல் இந்த மந்திரிகளை இவர்கள் குறை சொல்ல வேறு ஏதாவது உண்மையான காரணங்கள் உண்டு என்று யாராலாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். “எள்ளுதான் எண்ணைக்காக காய்கின்றது. இந்த எலிப்புளுக்கை எதற்காக காய்கின்றது” என்று ஒரு
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பழமொழி உண்டு. அதுபோல் பார்ப்பனர்கள்தான் தங்கள் வகுப்புக்கு ஆதிக்கம் போய்விடுமே, நியமனம் போய்விடுமே, உத்தியோகம் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு இந்த சமயம் ஊளையிட வேண்டியது அவர்களுக்கு அவசியமாகும். மற்றபடி தம்மை பார்ப்பனரல்லாதார் என்று. சொல்லிக் கொள்ளும் ஸ்ரீ வரதராஜுலுக்கு இதில் ஆமா சாமி போட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் பொது ஜனங்க கண்டுபிடிக்க வேண்டியரகசியமாயிருக்கின்றது. மந்திரிகள் விஷயத்தில் ஸ்ரீ வரதராஜுலு கொள்கை என்ன? தேசீய விஷயத்தில் ஸ்ரீவரதராஜுலு கொள்கை என்ன? தொழிலாளர் விஷயத்தில் ஸ்ரீ வரதராஜுலு கொள்கை என்ன? மத விஷயத்
தில் ஸ்ரீ வரதராஜுலு கொள்கை என்ன? என்று இந்த உலகத்தில் யாராலாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். இம்மாதிரி தனக்கும் புத்தியில்
லாமல் வேறொருவர் சொல்லுவதையும் கேட்காமல் உயிருடன் இருப்பதற் காகவே பார்ப்பனர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு அவர்கள் சொல்லுவ தற்கெல்லாம் ஆமா சாமி போட்டுக் கொண்டும் காற்றடிக்கும் பக்கம் சாய்ந்து கொண்டும் பார்ப்பனரல்லாத சமூகத்தையே காட்டிக் கொடுத்துக் கொண்டும்
இருப்ப வர்களுக்கு மந்திரிகள் பேரில் ஆத்திரம் வருவதற்கு ஏதாவது அர்த்த மிருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
தவிர கனம் ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் சுயேச்சை கட்சியைச் சேர்ந்
தவர். மந்திரிகளுக்காகவே அக்கக்ஷி காங்கிரஸ் பார்ப்பனரால் உண்டாக் கப்பட்டது. இந்த கனம் ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் சுயராஜ்யக் கட்சியின்
பேரால் அதாவது மந்திரி வேலை ஒப்புக் கொள்வதில்லை, மந்திரிகளை ஆதரிப்பதில்லை என்கின்ற கொள்கையின் பேரால் சட்டசபைக்கு நின்று எதிர்ப்பு இல்லாமல் வெற்றி பெற்றவர். அப்படிப்பட்டவர் தேர்ந்தெடுக் கப்பட்டவுடன் மந்திரி வேலை ஒப்புக்கொள்ளும் கட்சிக்கு போய்விட்டாரே அந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களின் வாயும் கையும் என்ன செய்தன என்று கேட்கின்றோம். ஒரு பார்ப்பனராவது ஒரு பத்திரிகையாவது ஸ்ரீமான் “சேதுரத்னமைய்யர் கட்சி மாறிவிட்டார்” என்று கூட சொல்லவில்லையே, அதுவும் இல்லாமல் காங்கிரஸ் பார்ப்பனர்கள் தானே அவரை அந்தக் கட்சிக்கு அனுப்பினது. அப்பேர்பட்ட ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் இப்போது கனம் சேதுரத்னமய்யரானவுடன் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஏன் இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்று கேட்கின்றோம்.
தவிர ஸ்ரீமான் முத்தையா முதலியார் சட்டசபை மெம்பர் ஆனவுடன் மந்திரிகளை ஆதரிப்பது காங்கிரஸ் கொள்கைக்கு விரோதம் என்று தொண்டையைக் கிழித்துக் கொண்ட காலத்தில் ஒருவராவது அவருக்கு செவிசாய்க்காமலும் அவர் ஒரு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “சுயராஜ்யக் கட்சியார் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள். தேர்தல் வாக்குறுதிகளுக்கு விரோதமாய் திருட்டுத்தனமாய் மந்திரிகளை ஆதரிக்கிறார்கள்” என்று
குடி அரசு - 1928 () 204
சொல்ல எழுந்தபோதெல்லாம் அவரை தலையில் அடித்து உட்கார வைத்ததை ஒரு பார்ப்பனப் பத்திரிகையாவது அவர்கள் வால்களாவது கண்டிக்காமல் இருந்துவிட்டு அவர் திருட்டுத்தனமாய் வேறு ஒருவரை: ஆதரிக்காமல் நேரடியாய் தைரியமாய் ஒப்புக் கொண்டதற்கு மாத்திரம் இவ்வளவு ஆத்திரப்படுவதின் அர்த்தமென்ன என்று கேட்கின்றோம்.
முன்னால் தங்களாலேயே சிருஷ்டிக்கப்பட்டு தங்களாலேயே ஆதரிக்கப்பட்டு தங்களாலேயே பூரண கும்பம் எடுக்கப்பட்டு வந்த டாக்டர். சுப்பராயன் இப்போது இவர்களுக்கு கசந்து போகக் காரணமென்ன என்பன வைகளை நடுநிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால் பார்ப்பனரல்லாத கட்சியை ஒழிக்க இந்த மந்திரிகள் இப்போது ஒப்புக்கொள்ளவில்லை என்கின்ற காரணம் தவிர வேறு ஏதாவது உண்டா? என்று கேட்கின்றோம்.
ஆகவேபார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் எதுவரையில் இம் மந்திரிகளை வைகின்றார்களோ அதுவரையில் இந்த மந்திரிகளை ஆதரிக்க வேண்டியதும் அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களிடமிருந்து பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு ஆன வேலை வாங்கிக் கொள்ள வேண்டி யதும் ஒவ்வொரு அறிவுள்ள பார்ப்பனரல்லாதார் கடமை ஆகும் என்று தைரியமாய்ச்சொல்லுவோம்.மற்றபடி பார்ப்பனர்கள் காட்டும் சுயராஜ் ஜியம், தேசீயம், தேசத்துரோகம் என்கின்ற பூச்சாண்டிகளைக் கண்டு யாரும் பயப் படக்கூடாது என்றும் மற்றபடி அவர்கள் கூலிகளையும் காலிகளையும் வால்களையும் லட்சியம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.04.1928
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இந்துமத பிரசாரம்
இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைகளையும் கற்பனை செய்து அவற்றை பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந்தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்.
கள் உடைய பல கடவுள்கள் இருப்பதாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங்களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும் துதிபாடுவதுமே சைவ வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழியில் சொல்லவோ எழுதவோ இல்லை.
ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் பலமாக கட்டப்பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத்தறிவை உபயோகிக்காமலும் பொது ஜனங்களுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படாமலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டுகளை நிலைநிறுத்த ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான “ *நாஸ்திகமாச்சுது” “மதம் போச்சுது” “கலிகாலத்தின் கொடுமை” என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயுதங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே ஒழிய ஒரு வழியிலாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகாலமாக சில சைவர்கள் என்போர்கள் நம்மைப்பற்றி காணாத இடங் களில் “சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார். உஷார்” என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர்கள் ஏமாறத்தக்கதுமான
குடி அரசு - 1928 () 206
வார்த்தைகளை அடுக்கி துண்டு விளம்பரங்கள் போடுவதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரிகைகளும் தனக்கென யாதொரு கொள்கை யுமற்று சமயம் போல் நடந்து உயிர் வாழ்வதையே முக்கிய பிழைப்பாய்க் கொண்டி
ருக்கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் “நாயக்கர் பிரசாரம்,” என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள்பேரால் எழுதுவதற்கு தைரியமற்று ஏதோ பல அனாமதேயங்களின் பேரால் “நாயக்
கர் மதத்தை அழிக்கப் பார்க்கின்றார், நாஸ்திகத்தை பிரசாரம் செய்கின்றார்” என்கின்ற மாதிரி எழுதுவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.
நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கடவுளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டு களைப் பற்றியும் அதுபோலவே விஷ்ணுவைப் பற்றியும் விஷ்ணுவை கடவுளாகக் கொண்ட வைண சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி “மத தூஷணை” “தெய்வ நிந்தனை” என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும்போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக்கும் போதும் சைவன் வைஷ்ணவத்தையும் விஷ்ணுவையும், வைணவன் சைவத்தையும் சிவனையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழிவாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போமானால் இதுவரை: நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற்றில் பதினாயிரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக,
சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக
புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகியவைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர்களுக்கு இதன் உண்மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல்வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற்கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்ன தாகவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும், ரிஷி சொன்ன தாகவும் உள்ள விஷயங்களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லியும் வருகின்றோமேயல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல்வது
போல் “அதற்கு இதல்ல அருத்தம்” “இது சையன்சுக்கு பொருத்தம்” “இது படியாத முட்டாளின் கருத்து” “இது குண்டர்களின் வேலை” “ஆராய்ச்சி யில்லாதவர்களின் கூற்று” என்பதான அயோக்கியத் தனமும், போக்கிரித் தனமும், பேடித்தனமும், இழிதகைமையும் பொருந் தியதான சமாதானங் களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.
அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களை சமயத்தைக் காக்க வந்த
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தாகச் சொல்லிக் கொள்ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல்லுவதையும் எடுத்து இரண்டொரு உதாரணங்கள் காட்டுவோம்.
தற்சமயம் நமது பிரசாரத்தைப் பற்றி வைணவர்களைவிட சைவர்
களுக்குத்தான் அதிக ஆத்திரமாக இருக்கின்றது. அவர்களுக்குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய்விடுமோ என்கின்ற பயம் அதிகமாய் பிடித்து ஆட்டி மதம்போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடு. கின்றார்கள். வைணவர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத் தக்க ஆதாரங்கள் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப் போது வெளிப்படையாய் ஒன்றையும் காணோம். சமீபத்தில் 'வைணவன்” என்கின்ற ஒரு பத்திரிக்கை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமாயணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக்கு சற்று மனத்தாங்கல் இருப்பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல முன்வர (இஷ்ட மில்லையோ அல்லது தனக்குச் சக்திஇல்லையோ)வில்லை ஆனால் கடைசி யாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்னவென்றால் இராமாயணத்
தைக் காட்டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன
என்றும்,
இராமனைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பலர் இருக்கிறார்கள். அவ்வாபாசங்களைக் குறித்து இவ்வாராய்ச்சிக்காரர் ஒரு வார்த்தையேனும் கூற முன்வரவில்லை. இராமாயண மட்டும் இவர்கள் கண்களில் உருத்திக் கொண்டிருக்கக் காரணம் என்ன” என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒரு மறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்கு சொல்லும் பதில் மற்ற நூல்களுடையவும் கடவுள். களுடையவும் ஆபாசங்கள் அதனதன் முறையில் தானாகவெளிவரும். இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இராமாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்ட தல்ல. வரிசை கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற்பட்டது என்பதும் “இராமாயணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப்
பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும் பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள். கொள்ளையடிப்பதும் அதிகமாயிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது” என்பதுந்தான்.
சைவர்களின் மதப்பிரசாரத்தைப் பற்றியும் சிலவார்த்தை சொல்லு வோம்.
நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள
சில நேயர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய
குடி அரசு - 1928 () 208
ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப்போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து “சிவநேசன்” என்பதாக ஒரு பத்திரிகை. ஆரம்பித்தார்கள். அப்பத்திரிகையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்ட
தாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலாவது மலர் அனுபந்தத்தில் “கோபிசந்தனம்” என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:-
e தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற்றியை குறுக்காகவே படைத்திருப்பதை யாவரும் காணலாம்.
இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல்லியிருப்பதானது:- *ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசல லாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நர்த்துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்
வந்தித்ரி புண்டரகம்”.
அதாவது பிரம்மா சிருஷ்டி துடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அனிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றிகளையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர்.நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத்திலர்,அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டாமணியாமல் தீவினை வயப்பட்டு உழறுகிறார்கள் என்று விளங்குதலால் அறியலாம்” என்கிறார்.
இனி கோபிசந்தனத்தைப் பற்றி வாசுதேவ உபநிஷத்தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது.
கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்தபோது அப் பெண்கள் ஸ்தனங்களிலிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.
எனவே சைவர்கள் பூசும் விபூதி யாக குண்டத்தில் இருந்து வந்த தென்றும், வைணவர்கள் பூசும் கோபிசந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளை புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க
நாம் நேரம் செலவழிக்க வில்லை. ஏனென்றால் அவர் சொல்வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக் காட்டியிருக் கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக்கவும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக்குத் தெரிய வேண்டும். அதாவது:-கிருஷ்ணனும்
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷ ணையும் அல்லவென்று தோன்றும் போதும் ஆண் குறியும், பெண்குறியும்
சேர்ந்தபோது அறுந்துவிழுந்ததின் தத்துவம்தான் லிங்கமும் ஆவுடையாரும். என்றும் அதைத்தான் சைவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும் வைணவர்கள் சொல்லி இந்துமத ஆதாரங்களிலிருந்தே மேற்கோள்கள்
எடுத்துக்காட்டுவது இந்துமத தூஷணையும் சைவசமய தூஷணையும் அல்ல வென்று வைணவர்களுக்குத் தோன்றும் போதும் நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும் போது மாத்திரம் நம்மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமய தூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின்றார்கள் என்பது
தான் நமக்கு விளங்கவில்லை.
தவிர மதப்பித்துக் கொண்ட பேயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரசாரம் செய்யக் கிளம்பும் மதாபிமானி களைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை.
ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர்களென்றும் வித்து வான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையேறிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம்.
நாம் எழுதுவதும் பேசுவதும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்துமத ஆதாரங்கள் என்பவைகளில் உள்ளவைகளா? உள்ளவைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். தக்க சமாதா னம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரசாரமும் பேடிப் பிரசாரமும் செய்யா
தீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப்படாதீர்கள். உங்களைப் போல் பல கற்றறி மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைபார்ப்பனர். களுக்கு அடிமையாக்கி மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறிவற்ற மிருகங்களாக்கிவிட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும் சமய நிபுணத்துவம் என்பதையும் புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பயன் படும்படி செய்யுங்கள். முடியாவிட்டால் சப்தத்திற்கும் எழுத்துக்கும் வார்த் தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை கடத்திக் கொள்ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தா
தீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 15.04.1928
குடி அரசு - 1928 () 210
அரசியல் புரட்டுக்குச் சாவமணி
அரசியலில் பார்ப்பனர்களும் அவர்தம் கூலிகளும் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு இடையூறாய் செய்துவரும் சூழ்ச்சிகளையும் பிரசாரங்களையும்பற்றி சென்ற வாரம் பார்ப்பனீய போக்கிரித்தனம் என்ற தலைப்பின் கீழ் எழுதியிருந்ததோடு சென்னை மந்திரிகள் நடுநிலைமை வகிப்பதன்மூலம் பார்ப்பனரல்லாதாரின் நலத்திலும் சற்று கவலை ஏற்படு வதால் அவர்களைப்பற்றி இப்பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் எவ்வளவு தூரம் விஷமமும் பொய்யும் கலந்த சூழ்ச்சிப் பிரசாரம் செய்கின் றார்கள் என்றும் எடுத்துக் காட்டி அது சரியா தப்பா என்பதற்கும் பல உண்மைகளை வெளியிட்டிருந்தோம். அன்றியும் கடைசியாக எது வரையில் தற்கால மந்திரிகளை இப்பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் வைகின் றார்களோ அது வரையில் அம் மந்திரிகளை அவர்களிடமிருந்து பார்ப்பன. ரல்லாதார் நன்மைக்கு ஆன காரியங்களை பெற ஆதரிக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் கடமை என்றும் எழுதியிருந்தோம்.
அது போலவே இவ்வாரம் மந்திரிகளின் தஞ்சை, திருச்சி, கடலூர் ஜில்லா சுற்றுப் பிரயாணங்களில் மந்திரிகளுக்கு பொது ஜனங்கள் நடத்திய வரவேற்புகளும் நமக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. எது காரணம் பற்றியென்றால், மந்திரிகள் சாதித்துவிட்டார்கள் என்றோ சாதித்து விடுவார்கள் என்றோ அல்ல. மற்றென்னை எனில், இப்பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு தற்கால மந்திரிகளை: எப்படியாவது கவிழ்த்து தங்கள் தாசர்களை மந்திரியாக்கி பொம்மை களைப் போல் ஆட்ட வேண்டுமென்ற பேராசையாலும் அடுத்த தேர்தலில் தாங்களே வெற்றி பெற்று பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்னும் ஆத்திரத்தாலும் மந்திரிகள் செல்லும் இடங்களிலெல்லாம் அதை ஆதாரமாய் வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய ஆங்காங்கு தினக்கூலி களையும் அமர்த்திக் கொண்டு செய்த விஷமப் பிரசாரங்களையும் “மந்திரி களின் துரோகம்” “வாக்கு மீறல்” “தேசத்தைக் காட்டிக் கொடுத்தல்” என்ப தான எத்தனையோ இழி மொழிகளை உண்டாக்கி பெரும் கொட்டை எழுத்துகளில் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதியும் கூப்பாடு போட ஆள்களை சேர்த்தும் செய்த பிரசாரங்களும் பணச் செலவுகளும் ஒரு காதொடிந்த ஊசிக்கும் பிரயோசனப் படாமல் போனதோடு சில இடங்களில்
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கூலிகளுக்கு உதையும் அடியும் கிடைத்ததோடு பிரசாரம் செய்யச் சென்ற “தலைவர்கள்” என்போர்களும் சென்ற இடங்களிலெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும், நின்று பேச இடம் கிடைக்கா மலும், கூட்டங்கள் கலவரத்தில் முடிந்ததும் மற்றும் பல இடங்களில் பெருமித அவமானங்களும் அடைந்து வந்ததும், பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே விளங்கிவிட்டன. சென்னையில் சைமன் கமிஷன் பகிஷ்காரத்தின் போது எப்படி தலைவர்கள் என்போர்கள் புத்திகள் கற்பிக்கப்பட்டார்களோ அதற்கு மேலாகவே மந்திரி விஜயத்தாலும் பல தலைவர்கள் ஆங்காங்கு தக்கபடி
புத்தி கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இனித் தமிழ் நாட்டில் பார்ப்பனர். களின் சூழ்ச்சிக்கும் அவர்கள் தாசர்களின் வயிற்றும் சோற்றுக் கூலி பிரசாரத் திற்கும் யோக்கியதை இல்லை என்பதும் கூடிய வரையில் பொது ஜனங்க ளுக்கு யோக்கியர்கள் யார், அயோக்கியர்கள் யார், என்பதும் பொது நலத் திற்கு உழைப்பவர்கள் யார், சுயநலத்திற்கு உழைப்ப வர்கள் யார் என்பதும், பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்கள் யார், பார்ப்பனர்களுக்கு தாசர்களா
யிருந்து அவர்களுக்காக உழைத்து கூலி பெறுவதின் மூலம் பார்ப்பன ரல்லாதார் சமூகத்திற்கு துரோகம் செய்பவர்கள் யாரென்பதும் நன்றாய் விளங்கி அரசியல் புரட்டுக்கும் தேசீய புரட்டுக்கும் சாவு மணி அடித்து விட்டதற்கு இது ஒரு அறிகுறியாய் இருப்பதற்காகவே இச்சம்பவங்களையும் மந்திரிகளின் வரவேற்பு ஆடம்பரங்களையும் ஆதாரமாய் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
ஸ்ரீமான் கனம் சேதுரத்தினமையர் அவர்களுக்கு அநேக பார்ப்பன
மிராசுதார்களும் சட்டசபை மெம்பர்களும் பார்ப்பனரல்லாத மிராசு
தாரர்களும் பொது ஜனங்களும் ஆடம்பரமான வரவேற்பு விருந்து முதலிய விழாக்கள் நடத்தி இருக்கிறார்கள். ஸ்ரீமான் கனம் முத்தையா முதலியார் அவர்களுக்கும் அது போலவே மிராசுதாரர்களும் பொது ஜனங்களும் வரவேற்பும் விருந்தும் மற்றும் பல பெருமைகளும் நடத்தியிருக் கிறார்கள். முதல் மந்திரி ஸ்ரீமான் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கோ
ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரிகள் என்பவர்களுக்கு நடந்த பெருமைக்கு மேலாகவே சென்ற இடங்களிலெல்லாம் பல பல ஊர்வலங்களும் வரவேற்புகளும் விருந்துகளும் பொதுக் கூட்டங்களும் வெகு தடபுடலாகவே நடந்திருக் கின்றன. எனவே இந்த மந்திரிகள் எந்த விதத்தில் யாரால் மறுக்கப் பட் டார்கள்? யாரால் பஹிஷ்கரிக்கப்பட்டார்கள்? என்பது நமக்கு விளங்க வில்லை.
பார்ப்பனக் கூச்சல்களும் அவர்களது தாசர்கள் கூச்சலும் பத்திரிகை அறைக்குள் நின்று விட்டதே யல்லாமல் சிலது பத்திரிகைகளில் எழுத் தளவில் நின்று விட்டதே அல்லாமல் காரியத்தில் எங்காவது யாராலாவது நடத்தப்பட்டதா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1928 () 212
எனவே இனியாவது பாமர மக்களில் சிலர் இன்னும் மயக்கந் தெளியாமல் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் பார்ப்பன தாசர்களின் வயிற்று சோற்றுக்குமாக கூப்பாடு போடும் தேசீயம் என்றும் காங்கிரஸ் அரசியல் என்றும் சுயராஜ்யம் என்றும் சொல்லப்படும் மாய வார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.
உண்மையான தேசீயம் என்பது தேச மக்களின் சுயமரியாதையை பொருத்ததே அல்லாமல் சிலரின் ஜீவனோபாயத்திற்கு மாத்திரம் ஏற்படும் வழியல்ல.
உண்மையான அரசியல் என்பது எல்லா மக்களும் சமமாய் அனுப
விக்கக் கூடியதாயிருக்குமேவொழிய ஒரு வகுப்பாருடைய ஆதிக்கத் திற்கு
மாத்திரம் கிடைக்கக் கூடியதல்ல.
உண்மையான சுயராஜ்யம் என்பது எல்லா மக்களும் சமமாய் ஏற்றத் தாழ்வில்லாமல் பாவிக்கக் கூடியதும் பொது வாழ்வில் எல்லோருக்கும்
சமத்துவம் அளிக்கக் கூடியதுமாயிருக்குமே யல்லாமல் ஒரு குலத்திற்கு ஒரு
நீதி உடையது அல்ல என்றே சொல்லுவோம்.
ஆகவே கனம் முதல் மந்திரி முதல் ஒவ்வொருவரும் இந்த சுற்றுப் பிரயாணத்தில் ஆங்காங்கு பொது ஜனங்களுக்கு சொல்லி வந்திருப்பது போல் சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் ஏற்பட்ட பிறகுதான் மக்கள் அரசியல் சுதந்திரம் என்பது அடையக்கூடும் என்பதையும் அப்படிக்
கில்லாவிட்டால் ஒரு சமயம் அரசியல் சுதந்திரம் கிடைத்தாலும் நிலைக்காது என்பதையும் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் உணர வேண்டுமென்றே விரும்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.04.1928
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இந்து மகமும் யாகங்களும்
மதத்தின் பெயரால் “கடவுள் வழிபாடு” என்று கருதப்படும் அக்கிரமச்செயல்கள் பலவற்றுள் “யாகம்” செய்வதும் ஒன்று. இது ஒரு கொடிய பாதகச் செயலாகும். ஏனெனில், யாகத்தில் பிராணிகளை இம்சிக்கின் றார்கள். இது பார்ப்பனர்களால் கடவுள் வழிபாடாக நடந்து வருகிறது. அஸ்வமேதம், அஜமேதம், கோமேதம் முதலான யாகங்களில் ஒன்றும் அறியாத அபல பிராணிகளான, குதிரை, ஆடு, மாடு முதலான ஜீவன்களைக் கொலை செய்கின்றார்கள். உலகில் கொலை செய்வதைவிட கடினகர்மம் வேறு ஒன்றுமில்லை யென்பது மகான்களின் அபிப்பிராயம். பூர்வத்தில் மனிதனையும் பலியிடும் வழக்கம் இருந்ததாக சரித்திரங்கள் மூலம் அறிகின் றோம். ஆரியர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் நம் தேசம் அறிவிலும்
ஒழுக்கத்திலும் சமத்வ சகோதரத் தன்மையிலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்து விளங்கியிருந்த தென்பதை தொல்காப்பியம் முதலான பழம் தமிழ் நூல்களால் அறியக்கூடும். ஆரியர்களின் வருகைக்கு பின்னர் அவர்களின் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் புகுந்து விட்டதால் கடவுளின் பெயரால்
பலியிடும் வழக்கத்தை நம்மவர்களும் பழகி விட்டார்கள். இதை சில கோவில்களில் நிகழும் கொலைகளால் நிச்சயிக்கலாம். கடவுளின் பெயரால் நாதனில்லாத அபல பிராணிகளை யாகத்தில் பலியிடுவதின் கருத்து என்ன?' என்பது தெரிய வில்லை. கடவுளின் கருணைக்கு பாத்திரமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இக்காரியங்கள் செய்யப்படுகின்றன. பிராணிகளெல்லாம் அவருடைய சந்ததிகளாயிருக்கின்றன எனச் சொல்பவர்: களே அவருடைய சந்ததிகளையறுத்து அவருக்கே நிவேதனமாகச் செய்வதென்றால் அது அவருக்கு சம்மதமாயிருக்க முடியுமா? விசேஷ
புத்தியில்லாத புலி, கரடி முதலான துஷ்ட ஜந்துக்களும் தங்கள் குட்டிகளை அறுக்கவோ, அறுத்துக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளவோ செய்வதில்லை. பகுத்தறிவில்லாத இத்தகைய துஷ்ட ஐந்துக்களை விட ஞானமில்லாதவனும் துச்சமான மாம்சத்தில் பிரியமுள்ள வனும், புலியைவிட பெரிய புலியாயிருப்பவனும் தானோ ஹிந்துக்களின் தெய்வம்? கடவுளுக்கு ஏதாவது காய்ச்சல் பிடித்து தேகம் மெலிந்து விட்டதா? அல்லது அவர் ஆடு. கோழி முதலான பிராணிகளை திருடித்தின்னும் குள்ள நரியின் கூட்டத்தில் சேர்ந்தவரா? எந்த காரணத்தைக் கொண்டு பிராணிகளை இம்சித்து கடவுளுக்காக மாம்சத்தை வைத்து ஆராதிக்கிறார்களோ? அறியோம்.
குடி அரசு - 1928 () 214.
யாகம் செய்வது கடவுளுக்கல்லவென்றும் தேவர்களுக்காக செய் கிறார்களென்றும் சிலர் கூறுகின்றார்கள். தேவர்கள் அமிர்தத்தை அருந்தி ஜரைநரைகளை நீக்கினவர்களென்று புராணங்களில் காணப்படுகின்றன. ஆகையால் அமிர்தத்தை உண்டவர்கள் அசங்கியமான மாம்சத்தை உண்ண
மாட்டார்கள். மேலும் மாம்ச உணவு இராக்ஷசர்களுக்கு ஏற்பட்டதென்றும் அதை தேவர்கள் உண்ண மாட்டார்களென்றும் சொல்லப்படுகிறது. ஓர். வேளை, பூதேவர் ( பிராமணர்! களுக்கு சாப்பிட வேண்டி ஏற்பட்டால் ஏற்பட்டி ருக்கலாம். அதற்காக அவர்கள் கடவுள் பெயரையும் மதத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டு இவ்வித தந்திரங்களை செய்கின்றார்கள் என்று தான் நிச்சயிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு பிரமாணங்களும் உண்டு அதாவது,
5 “த்விஜைர் போகரதைர் வேதே, தர்சிதம் ஹிம்சனம் பசோஜி ஹ்வாஸ் வாதபரை, காமா,அஹிம்சைவ பரம்மத” என்று தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதன் கருத்து :- “விஷயங்களில் ஆசையுள்ளவர்களும் நாக்கின் ருசியை மட்டும் கருதுவோருமாகிய சில பிராமணர்கள் யாகத்தில் பசு ஹிம்சை செய்யவேண்டுமென்று வேதத்தில் எழுதிவைத்திருக்கிறார்கள். அஹிம்சையை விட உத்தம தர்மம் வேறு ஒன்றுமில்லை” என்பதாம்.
இந்த சுலோகத்தின் கருத்தை பார்க்கும் பொழுது, வேதத்தில் பார்ப் பனர்கள் அநேகம் தகாத செய்கைகளை தங்கள் சுயநலத்தைக் கருதி எழுதி வைத்திருக்கின்றார்கள் என்பது புலனாகும்.
அநேக வருடக்கணக்காக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவ தில் யாகம் செய்வதும் ஒரு தந்திரச் செய்கையாகும். மற்ற செய்கைகளால் அதிக பணம் கிடைக்காது.யாகம் செய்வதால் அதிக பணம். கிடைக்கின்றது. யாகம் செய்ய வேண்டுமென்றால் ரூபாய் 5000, 10000 ஏன்? இவ்வுலகம் முழுவதையும் தானம் வாங்கவும் உரிமையுண்டு. என்னே ஏமாற்றம்! மதத்திற்கும் கடவுளுக்கும் அவமானத்தை உண்டுபண்ணும். இத்தகைய கொடுமையான செய்கைகளை வேதம்வேதமென்று எழுதிவைத்து ஜனங் களின் தனத்தை கொள்ளையடிப்பதுமன்றி அறிவையும் கெடுத்து மூட நம்பிக்கைக்குள் மூழ்கியிருக்கும்படி செய்துள்ளார்களே! அநியாயம்! அநியா யம்! யாகத்தில் செய்யும் ஜீவ இம்சயையை ஒழிப்பதற்காக விஷ்ணு பகவான் புத்தாவதாரமாக வந்திருக்கிறார் என்று இந்துக்களால் ஒத்துக்கொள்ளப் பட்ட பகவான் புத்தர் இதற்காக எவ்வளவோ பாடு பட்டார். “அஹிம்சா பரமோ தர்ம” என்ற சிறந்த உபதேசத்தை உபதேசித்தார். என்ன பயன் ஏற்பட்டது. மகாத்மாவும் ஞானியும் தயாளுவுமான புத்தரின் மதத்தை நாட்டிலிருந்து முடுக்கி விட்டவர்களல்லவா
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நம் ஆசாமிகள். என்னே! ஹிந்து மதத்தின் பெருமை.
உபநிஷத்துகளில் உள்ள சாரங்களையெல்லாம் திரட்டியிருப்பதும் ஹிந்துக்களால் மேலான சாஸ்திரமென்று கொண்டாடப்படுவதுமான பகவத் கீதையிலும் யாகம் முதலான ஆபாச கர்மங்கள் வற்புறுத்தப்பட்டிருக்கின்றன. கீதையை ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்திருக்கிறார். அதில்
“ இஷ்டான் போகான், ஹிதோதேவான் தாஸ்யந்தே யக்ஞ வித”. என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது யாகம் செய்வோர்களுக்கு தேவர்கள். இஷ்டபோகங்களை கொடுக்கின்றார்கள் ( தருவார்கள் என்பதாம். இதை கிருஷ்ணன் சொன்னாரோ அல்லது மற்றுயாராவது சொல்லியருப்பார்களோ என்பதை இங்கு ஆராய சந்தர்பம் இல்லை. ஆனால் தத்துவமென்ன? என்பதை மட்டும் ஆராய்ந்துகொள்வது அவசியம்.
யாகம் செய்வதால் தேவர்கள் ப்ரத்யக்ஷமாய் இஷ்டபோகங்களை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை கிருஷ்ணனுக்கு இருந்தால் யாகத்தை செய்து தேவர்களை வசப்படுத்தி, அர்ச்சுனனுக்கு ராஜ்யாதிபத்தியத்தையும் இஷ்டபோகங்களையும் வாங்கிக்கொடுத்திருக்கலாமல்லவா? அர்ச்சுனன்
யுத்தம் செய்ய இஷ்டமில்லாதவனாகி காண்டீபத்தை போட்டு விட்டு தேரில் உட்கார்ந்தான் என்று சொல்லப்படுகிறது, யுத்தம் செய்வதற்கிஷ்டமில்லாத அர்ச்சுனனை பலாத்காரமாக, பயங்கரமான யுத்தத்தில் இறங்கும்படியாக கிருஷ்ணன் ஏன் வற்புறுத்தவேண்டும்? அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் மைத்துனராகவும் குருவாகவும் இருக்கிறார். யுத்தத்தில் வெற்றி, தோல்வி இன்னார்களுக்கென்று ஆரம்பத்தில் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஓர் வேளை அர்ச்சுனன் இறந்துபோக நேரிட்டால் கிருஷ்ணன் தன் சகோதரியா கிய சுபத்திரையின் வைதவ்ய துக்கத்தை பார்த்துக்கொண்டு துக்கிக்கவும் நேரிடு மல்லவா? இவ்வித அபாயங்கள் ஒன்றுமில்லாத யாகத்தை செய்து காரியத்தை சாதித்துகொள்ள ஏன் கிருஷ்ணன் முயலவில்லை. தேவர்களுக்கு தலைவனான தேவேந்திரன் அர்ச்சுனனுடைய பிதாவாயுமிருக்கிறார். இத னால் மற்றுள்ளவர்களுக்கு தேவர்கள் பிரத்யட்சமாவதைவிட சீக்கிரத்தில் அர்ச்சுனனுக்கு வசப்பட்டுவிடுவார்கள். இவ்வளவு சுலபமான காரியங்க ளெல்லாமிருக்க அவ்வண்ணம் செய்யாமல் யுத்தத்தை செய் என்று சொல்லி எண்ணிறந்த ஜனங்களை கொல்லச்செய்து ராஜ்யத்தை கைவசப்படுத்தி யிருக்கிறார். இதனால் கிருஷ்னனுக்கு யாகத்தில் நம்பிக்கை இல்லை என்று ஏற்பட்டது. இதை கிருஷ்ணன் பாகவதத்தில் யுத்தவருக்கு உபதேசிக்கிறார். அதாவது :- சு. “தேமேமதமவிஞ்ஞாய பரோக்ஷம் விஷயாத்மக வ்ருதா
பசூன் விஹிம் சந்தி, ஹிம்சந்தே ப்ரேத்தைஸ்துதே”.
கருத்து:- “ என்னுடைய உண்மையான தர்மத்தை அறியாமல் விஷயங்களில் ஆஸக்தியுள்ளவர்கள் வீணாக யாகத்தில் பசுக்களை கொல்
கின்றார்கள். பின்னால் பசுக்கள் இவர்களையும் கொல்லுவார்கள்.” என்பதாம்.
குடி அரசு - 1928 () 216
இதனால் கிருஷ்ணனுக்கு யாகத்தில் நம்பிக்கையில்லையென்றும் அது பெரிய பாதகமான செயலென்றுதான் கருதுவதாகவும் ஏற்பட்டது. ஆகவே கீதையிலும் சுயநலப் பூனைகள் சுயநலமான பல வாக்கியங்களை நுழைத்திருக்கின்றார்கள் என்பது வெட்டவெளிச்சமாயிற்று.
முற்காலத்தில் ராவணன் தன்னுடைய சிரசுகளை அறுத்து யாகத்தில் ஹோமித்து விட்டதனால் கடவுள் பிரத்யட்சமாகி வேண்டிய வரங்களை அளித்தார் என்று புராணங்களில் காண்கிறோம். யாகம் செய்வோர் அவ் வண்ணம் தங்கள் சிரசுகளை வெட்டி கடவுளுக்கு அர்ப்பணம் செய்தால் சீக்கிரத்தில் கடவுள் கருணை கிடைக்குமல்லவா? அங்ஙணம் செய்யாமல் ஒன்று மறியா பிராணிகளை கடவுளின் பெயரால் ஏன் கொலை புரிகின்றார்
கள்? இதுதான் சனாதன தர்மமா? கடவுளுக்கும் மகான்களுக்கும் மதத்திற்கும் திருப்திகரமாயில்லாத இத்தகைய பாவச்செயல்களை இக்காலத்திலும் செய்து வருகிறார்கள். என்ன அநீதி! இதனால் கடவுளின் கருணையை தேடுவோர். குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொள்வதை ஒத்திருக்கும் இதையும், இதைப் போன்ற ஆபாச கிரியைகளையும் தான் “ குடி அரசு” வேண்டாமென்று சொல்வது. மதம் போச்சு என்று சொல்லவேண்டாம். மதத்தினிடம் பற்றுள்ள வர்கள் இத்தகைய ஆபாச கொள்கைகளைக் கண்டித்து ஜனங்களின் சுய மரியாதையை காப்பாற்ற நல்வழியில் முயற்சி செய்யவேண்டும். அதற்கு சாத்தியமில்லை என்று கருதுவோர், இத்தகைய ஆபாசங்களுக்கு ஆதரவ ளிக்காமல் இருக்கவேண்டும். அதுவும் முடியாதென்றால் மக்களின் முன்னேற் றத்தைக் கருதி உழைப்பவர்களை எதிர்க்காமலாவது இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 22.04.1928
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சுமமரியாதைச் சங்கங்களுக்கு ஆதரஷ
தமிழ் நாட்டில் புதிதாய் தோன்றி இருக்கும் சுயமரியாதைச் சங்கங் களுக்கும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கங்களுக்கும் ஏறக்குறைய நாடு முழுதுமே ஆதரவு கிடைத்துவரும் விஷயம் யாவரும் அறிந்திருக்கலாம்.
காங்கிரசின் போது வங்காளத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருந்த திரு வாளர் கோஸ்வாமி முதலியோர் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப்பற்றி பார்ப்பனரல்லாத தலைவர்களிடம் பேசும்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தைப் பற்றியும் சுயமரியாதைச் சங்கத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசி விட்டுப் போய் இந்திய சட்டசபையிலும் பிரஸ் தாபித்தது நேயர்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்போது சென்னை மாகாண மந்திரிகளும் முக்கியமாய் முதல்மந்திரியும் தஞ்சையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது இது சமயம் “நாட்டில் சுயமரியாதைச்சங்கங்களை ஸ்ரீ மான் ராம சாமி நாயக்கர் போன்றார்கள் ஸ்தாபித்து வருவது கேட்டு தாம் மிகவும் சந்தோஷப்படுவதாகவும் அவைகள்தாம் இப்போது வேண்டப்படுகின்றன வென்றும் சிறிதும் பயமில்லாமல் பார்ப்பனரல்லாதார் இக்காரியத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு போனால் சீக்கிரத்தில் நன்மை பிறக்குமென்றும் இவ்வேலைகள் தான் சுயராஜ்யமடையச் செய்யுமென்றும் பேசி பார்ப்பன ரல்லாத இளைஞர்களையும் உற்சாகப்படுத்தி பேசினார் (இந்த வாக்கியங்கள். 20-4-28 உ “சுதேசமித்திரன்” 6-வது பக்கம் 5-வது கலத்தில் இருக்கின்றது. ஆனால் “தமிழ்நாடு” பத்திரிகை சுயமரியாதைச் சங்கங்களும் பார்ப்பன ரல்லாத வாலிப சங்கங்களும் வயிற்று பிழைப்புக்காக நடைபெறுவதாக ஜாடை ஜாடையாக எழுதுகிறது.
எனவே ஸ்ரீ வரதராஜுலுவும் அவர் தேசிய பிரசாரமும் வயிற்றுப்
பிழைப்பு பிரசாரமா, அல்லது சுயமரியாதைப் பிரசாரமும் பார்ப்பனரல்லாத: வாலிப சங்கப் பிரசாரமும் ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், கண்ணப்பர், ஆரியா போன்றவர்களின் பிரசாரமும் வயிற்றுபிழைப்பு பிரசாரமா என்பதை பொது ஜனங்களே உணர்ந்து கொள்ள விட்டு விடுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928
குடி அரசு - 1928 () 218
“ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையின் பதிப் பாளராகவும் வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்துகொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.4.28 இல் மறுபடியும் கோர்ட்டுக்கு போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்துகொள்ள
முடியும் என்றும் சொல்லி பதிவு செய்துகொள்ள மறுத்துவிட்டார்.
பிறகு போலீசார் “ரிவோல்ட்” என்னும் பத்திரிகையின் கொள்கை: என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் இரகசிய மாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
ஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற்கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது.
“ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:-
இப்பவும் டெ பிரசில் “ரிவோல்ட்” என்கின்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் “குடி அரசு” என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கை: களையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. Revolt என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும்
சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண்: இயலிலானாலும் சரி மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார்.”
இதன் மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரியவில்லை.
குடி அரசு - அறிக்கை - 22.04.1928.
குடி அரசு - 1928 () 220
அம் . சன்மார்க்க சங்கக்காரில்
வாவேற்பு
சமய நெறி உணர்த்துவது சன்மார்க்கமா? துன்மார்க்கமா?
அக்கிராசனாதிபதியே! சமரச சன்மார்க்க சங்கத்தினர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் அன்பர்களே!
இன்று சமரச சன்மார்க்க சங்க சார்பாக வாசித்துக் கொடுத்த உபசாரப்
பத்திரத்தில் கண்ட புகழுரைகளுக்கு நான் உண்மையிலேயே ஒரு சிறிதும் பொருத்தமில்லாதவனாயிருந்த போதிலும் அதன் போக்கானது எனது தொண்டின் தாத்பர்யத்தையும் போக்கையும் தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக்கொண்டு என்னை புகழ்வதாயிருப்பதால் மிக்க நன்றியறிதலோடும் மகிழ்ச்சியோடும் இவ்வுபசாரப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளுகின்றேன்.
எனது தொண்டைப் பற்றி பலர் ஆதரவளித்தாலும் ஒரு சிலர் அபிப் பிராய பேதப்படுவதையும் ஏதோ முழுகிப் போனது போல் கவலைப் படுவதையும் பார்க்கும் போது எனக்கே சிற்சில சமயங்களில் நாம் ஏதாவது தப்பான வழியில் போகின்றோமோ என்று தோன்றி கலக்கமுறுவதுமுண்டு.. இந்த நிலையில் தங்கள் உபசாரப் பத்திரமானது “இனி உனக்கு அப்பேர்ப் பட்ட கலக்கங்கள் கண்டிப்பாய் வேண்டியதில்லை. உனது கருத்துப்படியே உனது தொண்டை தீவிரமாக செய்து கொண்டுபோ நாங்கள் உனக்கு பின் உதவியாய் இருக்கின்றோம்” என்று எனக்கு ஊக்கத்தை மூட்டி எனது தொண்டை முன்னிலும் அதிக முயற்சியுடன் செய்ய பிடரியைப் பிடித்து தள்ளுவது போல் இருக்கின்றபடியால் நான் அதை மகிழ்ச்சியும் நன்றியறி தலுடனும் ஏற்றுக் கொள்ளுகிறேன்.
நிற்க, அன்பர்களே! இந்த சமயத்தில் சமரச சன்மார்க்க சங்கம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன். அது ஒரு சமயம் உங்கள் மனத்திற்கு கசப்பாயிருந்தாலும் இருக்கலாம். அன்றியும் “என்னடா இவன் நம்மிடத்தில் உபசாரப் பத்திரம் பெற்றுக் கொண்டு நம் மையே உடைச்சல் விடுகிறான்” “ஏன் இவனுக்கு உபசாரப்பத்திரம் கொடுத்தோம்” என்பதாக தோன்றினாலும் தோன்றலாம். ஆன போதிலும்
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சிலர் சமரச சன்மார்க்க சங்கம் என்பதாக பெயர் வைத்துக் கொண்டே சமரசத்திற்கு பதிலாக ஏற்றத் தாழ்வும் சன்மார்க்கத்திற்கு பதிலாக துன்மார்க் கமுமே விளையத்தக்க முறையில் நடந்து வருகின்றார்கள். சுருங்கக் கூறில் சமரச சன்மார்க்கமென்பது அனுபவத்தில் பிறரை ஏமாற்றி தங்கள் காரியத் தை சாதித்துக் கொள்வதற்கும் தங்கள் சமயத்தை உயர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஆயுதமே ஒழிய வேறில்லை என்றே சொல்லலாம். பொதுவாக ஒவ்வொரு மதக்காரரும் உட்சமயக்காரரும் தங்கள் தங்கள் மதம்
சமயம் ஆகியவைகளை சமரச சன்மார்க்கக் கொள்கை கொண்ட தென்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் அவரவர்கள் நடை உடை பாவனை உணர்ச்சி முதலியவைகள் வேறாகவே இருந்து வருகின்றன. ஒவ்வொரு மார்க்கக்காரரும் தமது கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஒருவனை துன் மார்க்கியாகவே கருதுகிறார். மகமதிய மதம் சமரச சன்மார்க்கத் தன்மை பொருந்தியதானாலும் மற்ற சமயக் கடவுள்களும் கொள்கைகளும் அவர்களுக்கு சிறிதும் சகிக்க முடியாததாகவே இருக்கின்றது. கிறிஸ்த்தவ
மதம் சமரச சன்மார்க்கக் கொள்கையுடையதுதான் என்று சொல்லப்பட்டாலும் அதுவேறெந்த மதத்திலும் மோக்ஷமடைய வழி கிடையாது என்றும் மற்ற மதஸ்தர்கள் எல்லாம் அஞ்ஞானிகள் என்றும் சொல்லக் கூடியதாக இருக்கின்
றது. இந்து மதமும் அதன் ஒவ்வொரு உட்பிரிவும் சமரச சன்மார்க்கம் கொண்டதென்றே பறையடிக்கப்படுகின்றது. இதைப் போல ஏற்றத்தாழ்வு
களும் துன்மார்க்கங்களும் கொண்ட மதம் இது சமயம் உலகில் வேறு ஒன்றும். இருப்பதாக சொல்ல முடியாது. வைணவத்திற்கும் சைவத்திற்கும் அதனதன். கடவுள்களுக்கும் உள்ள பேதங்களும் விரோதங்களும் சொல்லி முடியாது. ஒவ்வொரு நாளும் இதில் உள்ள உயிர்கொலைகள் கணக்கிலடங்காது.
குடியும் விவசாரமும் ஏட்டிலடங்காது. நிற்க சகலருக்கும் பொதுவாகவே சன்மார்க்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையை உடையது அல்ல வென்றே சொல்லுவேன். ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்றொருவ ருக்கு துன்மார்க்கமாகவே காணப்படுகின்றது. சிலருக்கு, குழந்தைகளுக்குக் கலியாணம் செய்வது சன்மார்க்கம் சிலருக்கு பக்குவமான ஆண் பெண்கள் இருவருக்கும் அவரவர்கள் சம்மதப்படி கலியாணம் செய்விப்பது
சன்மார்க்கம். சிலருக்கு மனிதனை மனிதன் தொடுவது துன்மார்க்கம். சிலருக்கு மனிதனுக்கு மனிதன் தொடுவதினால் குற்றமில்லை என்று சொல்வது சன்மார்க்கம். சிற்றப்பன் மகளை மணந்து கொள்வது சிலருக்கு
சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். அத்தை மகளை மணந்து கொள்வது
சிலருக்கு சன்மார்க்கம். சிலருக்கு துன்மார்க்கம். மாடு தின்பது சிலருக்கு சன்மார்க்கம் சிலருக்கு துன்மார்க்கம் கடவுளுக்கு கண்ணு, மூக்கு, கை கால், பெயர் பெண்டு பிள்ளை முதலியவைகள் வைத்து வணங்குவது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். காலும் கையும் கெட்டியாயிருந்து நன்றாய் உழைத்து சாப்பிடக்கூடிய வரத் தடியர்களுக்குச் சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம்; சிலருக்கு துன்மார்க்கம் ஏழை எளியவர்கள், சரீர
குடி அரசு - 1928 () 222
ஊனமுள்ளவர்கள், உழைத்துச் சாப்பிட சக்தியற்றவர்கள் ஆகியோருக்கு சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம்.
எனவே இம்மாதிரி ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்ற வருக்கு துன்மார்க்கமாயிருப்பதை நித்திய வாழ்வில் தினம் தினம் எத்த னையோ காண்கின்றோம். ஒரு மார்க்கத்தின் முட்டாள்தனத்தையும், புரட்டு களையும் வெளியிலெடுத்துச் சொன்னால் எப்பேர்ப்பட்ட சமரச சன்மார்க்கம் என்கிறவனும் பதில் சொல்ல முடியாவிட்டாலும் காய்ந்து விழுந்து மக்களை ஏய்க்கப் பார்க்கின்றானேயொழிய தனது மார்க்கம் உண்மையில் யோக்கிய மானதா என்பதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. எனவே உலகத்தில் உள்ள எத்தனையோ புரட்டு மதங்களில் சமரச சன்மார்க்கம் என்பதும் ஒன்றேவொழிய உண்மையில் எல்லோருக்கும் ஏற்ற சமரசத்தையும் சன்மார்க் கத்தையும் கொண்டது எதுவும் இல்லை என்றே சொல்வேன்.உங்கள் சமரச சன்மார்க்க சங்கம் இம்மாதிரியான குற்றங்களில் சிக்காமலும் மூட நம்பிக்கை
குருட்டு பழக்க வழக்கங்களாகிய வைகளுக்கு அடிமையாகாமலும் புராணக் குப்பைகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஆளாகாமலும் மக்களிடத்தில்
காட்டும் அன்பும் கருணையுமே பிரதான மாகக் கொண்டு மனிதத் தன்மை
யுடன் நடைபெறுமென்று நினைப்பதுடன் அம்மாதிரியே நீடூழி காலம் நடை பெற்று வர வேண்டும் என்றும் ஆசைப் படுகின்றேன்.
குறிப்பு: 08.04.1928 ஆம் நாள் அம்பலூர் கரிய கவுண்டர் அவர்கள் பங்களாவில் அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரால் வழங்கப்பட்ட வரவேற்பு
உபசாரப் பத்திரத்திற்கு பதில் அளித்து உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 22.04.1928
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
. .
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரி சென்ற இடங்களிலெல்லாம் கலவரம் ஏற்பட்டதாகவும் சில விடங்களில் கூட்டத்தில் செருப்புகள் வந்து விழுந்த தாகவும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. மந்திரிகளின் விஜயத்திலும் பார்ப்பனர்களின் கூலிகள் சிலருக்கு அடி விழுந்ததாகவும் காணப்படு கின்றன. இம்மாதிரியான காரியங்கள் மிகுதியும் வெறுக்கத்தக்க தென்றும் நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.
இதற்கு முன்னும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் முதலியோருடைய படங்களை கிழித்து மிதித்து எறிந்ததற்கும் சில கூட்டங்களில் செருப்புகள்.
பறந்ததற்கும் நாம் மிகுதியும் வருத்தப்பட்டு கண்டித்து எழுதியிருந்தோம். மறுபடியும் அம்மாதிரியான காரியங்கள் நடைபெற்றதாக தெரிவதற்கு நாம். மிகுதியும் வருத்தமடைகின்றோம். “தமிழ்நாடு” பத்திரிகையில் இச் சம்பவங்கள் சுயமரியாதை சங்கத்தைச் சேர்ந்ததாக பிறர் நினைக்கும்படி காணப்படுகின்றதானாலும் நாம் அதை சிறிதும் நம்புவதில்லை. ஏனெனில் அது காட்டிக் கொடுத்து கூலி பெறுவதிலோ அபாண்டத்தை சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆவதிலோ பார்ப்பனர்களை விட ஒருபடி முன்னிற்பது. ஆதலால் அதை நாம் ஆதாரமாய் எடுத்துக் கொள்ள
வில்லை.
ஒரு சமயம் அப்படி ஏதாவது உண்மையில் நடந்திருக்குமானால் அது. யாரால் நடந்திருந்தாலும் அதற்காக நாம் மிகுதியும் வெட்கப்பட வேண்டிய வர்களாவோம். ஏனெனில், இத்தொழில் பார்ப்பனக் கூலிகளுக்கே உரியது. சுயமரியாதை உடையவர்களானால் இம் மாதிரி காரியங்களை மிகவும் வெறுக்க வேண்டும். பேசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கூட்டத் திற்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் பேசிய தற்கு சமாதானம் மறுநாள் கூட்டம் போட்டு சொல்ல வேண்டும். அப்படிக்
கில்லாமல் கூட்டத்தைக் கலைப்பது யோக்கியமானதாகாது. கூட்டத்தில் செருப்பெடுத்து எறிவது மிகுதியும், அயோக்கியத்தனமான செய்கையாகும். சென்னையில் ஒரு கடற்கரை கூட்டத்தில் பார்ப்பனர்கள் முதல் முதலாக ஒரு செருப்பை எடுத்து எறிந்துவிட்டு பிறகு அவர்கள் வெளியில் கூட்டம் போடுவதற்கே தகுதியற்றவர்களானதும் அவர்கள் போடும் கூட்டங்களில்
குடி அரசு - 1928 () 224.
பல தடவை செருப்புகள் வந்து விழுந்ததும் தேசீய வீரர்கள் ஓடி ஒளிந்ததும் தெருக்களில் ஒவ்வொருவரும் விரட்டப்பட்டதும் நாம் அறிந்த விஷய
மாகும். அப்படியிருக்க மற்றவர்களும் அந்த மாதிரி செய்ய முற்படுவது அறிவீனமான காரியமென்றே சொல்லுவோம். ஸ்ரீ சத்தியமூர்த்தி சாஸ்திரி. தனது சமூக நன்மையை கருதி அவர்கள் தொண்டாற்றி வருகின்றார். கூடுமா னவரை அவரை ஒரு சமூகத் தொண்டர் என்றே சொல்ல வேண்டும். அதன் மூலம் ஏதாவது சுயநலம் கிடைத்தால் அதை அனுபவிக்கிறார். எந்த சமயத் திலும் தனது பார்ப்பன சமூகத்தை காட்டிக் கொடுத்து ஒரு வார்த்தையாவது பேசினவரல்ல.அம் மாதிரி சமூகத் தொண்டர்களை நாம் போற்ற வேண்டும். அவருடைய தனிப்பட்ட சொந்த விஷயங்கள் பல இருக்கலாம். அவற்றை அவர் நமக்கு தலைவராகவோ, உபதேசிப்பவராகவோ வரும்போது நாம் பேசிக் கொள்ளலாம். கூட்டத்தில் அவரை மறித்தது சரியல்லவென்றே சொல்லுவோம். இம் மாதிரிக் காரியம் நமது கூட்டங்களிலும் செய்ய அவர்:
களாலும் முடியக் கூடியதுதானேயல்லாமல் ஒருவருக்கே சொந்தமல்ல என்றே சொல்லுவோம்.
யாவருக்கும் பேச்சு சுதந்திரம் கொடுக்க வேண்டும். திருச்சியில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் காரியம் பார்ப்பனர்களுக்குள்ளாகவே ஸ்ரீமான்கள் சாஸ்திரி, டாக்டர் ராஜன் கூட்டத்தாருக்கும், ஸ்ரீமான் சேதுரத்ன
மய்யர் கூட்டத்தாருக்குமே நடந்ததாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து சேதி வந்தாலும் இது யாருக்குமே கூடாது என்று சொல்லுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928.
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பதிவு எண் 2041 KUDI ARASU. சிப்பி விங் பதம அவரச
ட் ஆது வாரப்பழிப்பு. (னான கவல் g 1 மாத சந்தா கண்வ T8 முது பப் e |
காண்ப; | ஈரோம், விபல ஹு இந்ந மீ 17௨ (20— 6௨-28) ஞூயிற்றுக்ழெமை.. மார் 1
ம்! டேபில் டைம்பிஸ் இனம் U! அதன ஜெர்மன் எறக்ரரிக் * @it இரிடியம் உள்ள 14 ட தங்க சீப்பு போட்ட Sell-Alling
எங்கள் 28 எட் சேமம் சேட் எடம் பமா வன்டலாமல வுடு சே க் ப்
ளிளக்கு. இரை சுமன் பேசத் s கை இதத் பும்கவியிுக்சப. ல் சண்ட சம்த்தின் (ன s கியம் சிளத்சரம். செய்வன், ஸ்காந்த.
o வல் த்தில் க்தக்கு சா] மில்கள் மித்திலன்
வல். அனுப்பப் கட S 4150, வேடும் கத் s b
ச்ட் ey2esi ok பல்ப் நண்ப மை வா். த த் ஒம்கொடுகககாதி்து வண்கை
கணித சோதிடம் i சதப்பக smisdOrin ல்:
இச விவலல் ஒல் ஒன்று. வில vy சாக். எழுதி ek வழ்க
| மோட்டார் ஓட்ட கற்றுக்
சொள்ளலாம் (ஜன் அாமிபகபபட்டது
குடி அரசு - 19280)
226
ஸ்முஸ் ககூறியும் ஈநீவரகராச-னுவும்
ஸ்ரீ வரதராஜுலு ஏப்ரல் 27 தேதி “தமிழ் நாடு” பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :- “ஜஸ்டிஸ் கக்ஷியார் செய்து வரும் தொல்லையால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக்கின்றார்கள்”.... ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீய நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரதராஜுலு 12 வருஷங்களாக பாடுபட்டு. வருகிறார்.”
“நாயக்கர் பிரசாரம் இப்போது போலவே நடைபெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.”
“தேசீய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கக்ஷி ஒரு பெரிய முட்டுக் கட்டையாக இருக்கிறது...”
*கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?
“பிராமணர்களை தேசீயக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது...”
என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை
மிரட்டுகிறார்.
இவைகள் முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப்பார்கள் என்பது ஸ்ரீ வரதராஜுவுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப்பனர்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்து விட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும் பேதமையானது இதையெல்லாம் எழுதச் செய்கின்றது. ஒரு ஒற்றை மனிதனின் வயிற்றுப் பிழைப்பு என்னவெல்லாம் செய்யத் துணிவு கொடுக்கின்றது என்பதை எடுத்துக் காட்டவே இவைகளை நாம் எழுதுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியாரால் தமிழ் மக்களுக்கு என்ன நோவு வந்திருக்கின்றது என்பதை முதலில் காட்டி பிறகு அக்கட்சியில் வந்த நோவுக்கு அக் கட்சியைக் காட்டிக் கொடுப்பாரானால் அது ஆண்மையும்
ஐ QuAwARE எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
யோக்கியமும் பொருந்தின காரியமாயிருக்கும். ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் இல்லாதிருந்திருக்குமானால் தமிழ் மக்களின் யோக்கியதை இது சமயம் என்னமாயிருக்கும் என்பதை யோசித்தால் ஒரு அறிவிலிக்கும் ஜஸ்டிஸ் கட்சியால் தமிழ் மக்களுக்கு நோய் உண்டாயிற்றா அல்லது ஸ்ரீ வரதராஜுலு போன்றார் பார்ப்பன வால்களாயிருந்து கொண்டு. பார்ப்பன ஆதிக்கத்திற்கு உள் உளவாயிருப்பதால் தமிழ் மக்களுக்கு சுயமரியாதை இல்லாததான நோய் உண்டாகிக் கொண்டு வந்திருந்ததா என்பது விளங்காமல் போகாது.
“12 வருஷகாலமாக ஜஸ்டிஸ் கட்சியின் “நய வஞ்சகத்தை உடைத் தெறிய ஸ்ரீ நாயுடு வேலை செய்தது” என்பது வாஸ்தவமே. ஆனால் அது நாட்டின் நலத்திற்காகவா தனது சுயநலத்துக்காகவா என்பதை அறிய பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம். ஆனால் இவர் ஜஸ்டிஸ் கட்சியை வைது அதற்காக பார்ப்பனரிடம் கூலி வாங்கிக் கொண்டதல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியின் மீது ஒட்டிய ஒரு சிறு தூசியையாவது அசைக்க முடிந்ததா என்று கேட்கின்றோம்.
அன்றியும் அக்கட்சி ஒன்று இல்லாதிருந்தால் ஸ்ரீ வரதராஜுலுவை பூதக்கண்ணாடி கொண்டாவது காணமுடியுமா என்று கேட்கின்றோம்.
“நாயக்கர் பிரசாரம் இப்படியே இருந்தால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ்
கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். போன தேர்தலில் ஸ்ரீ வரதராஜுலுவும் அவர்கள் தலைவர்களும் சேர்ந்தே ஒரு கை பார்த்தார்கள். தமிழ் நாட்டில் இந்த ஒன்றரை வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு
தூரம் இருந்த இடம் தெரியாமல் செய்து விட இவர்களால் முடிந்தது என்பதையும் பொது ஜனங்களே யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். ஸ்ரீ வரதராஜுலு போன்றவர்கள் இருந்த இடம் தெரிய காங்கிரசில் சிலர். ராஜீனாமா கொடுத்து விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்கு விண்ணப்பம் போட நேர்ந்ததும் அதை அவர்கள் தள்ளும்படி செய்ததும் பொது ஜனங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று கேட்கின்றோம். தவிர நாயக்கர் பிரசாரத்தைக் கண்டு பயந்து ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுவது எவ்வளவு இழி தன்மை என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
“தேசீய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி முட்டுக்கட்டையாயிருக்கின் றது” என்று சொல்வது. தேசீயம் என்றால் என்ன? அதற்காக யார் எந்த விதமான பிரசாரம் செய்கிறார்கள்? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்.
பதைப் பற்றி “குடி அரசு' சுமார் ஒரு நூறு இருநூறு தடவை ஸ்ரீ வரதராஜுலு போன்ற வயிற்றுப் பிழைப்பு தேசீய வீரர்களை கேட்டிருக்கும். ஆனால் நாளிது வரை ஸ்ரீ வரதராஜுலுவாவது மற்றும் எந்தப் பார்ப்பனராவது
குடி அரசு - 1928 () 228
தேசியத்திற்கு வியாக்யானம் சொன்னவர்கள் அல்ல.அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி தேசீயத்திற்கு முட்டுக்கட்டை என்பது ஏமாற்றுப் பிரசாரமா அல்லவா? என்று கேட்கின்றோம்.
“ஒரு சட்ட மெம்பர் பதவிக்கு தேசத்துரோகம் செய்தது” என்பது. இதைப் பற்றி இதே மாதிரி பார்ப்பனர்களும் ஸ்ரீ வரதராஜுலுவும் இதற்கு முன்னால் போட்ட கூப்பாட்டிற்கு நீண்ட பதில் எழுதியிருக்கிறோம். அதற்கு சமாதானம் சொல்லாமல் மறுபடியும் அதை எழுதுவது பொது ஜனங்கள் பைத்தியக்காரர்கள் என்கின்ற எண்ணமே ஒழிய வேறு என்ன என்று கேட்கின்றோம்.
ஸ்ரீகிருஷ்ணன் நாயர் சட்ட மெம்பர் பதவி ஒப்புக்கொண்டதில் தேசத் துரோகம் என்ன என்றும் திரு. சர் சிவசாமி, சர்.சி.பி. சர். கிருஷ்ணசாமி,
சர். ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீ வெங்கட்டறாமசாஸ்திரி ஆகியவர்கள் ஒப்புக் கொண்டதில் உள்ள தேச பக்தி என்ன என்றும் எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். அப்படிக்கில்லாமல் தேசத்துரோகம் என்று எழுதுவது வயிற்றுப்
பிழைப்புக்காகச் செய்யும் இனத்துரோகமேயல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.
“பிராமணர்களை விலக்க முடியாது” என்பது ஸ்ரீ வரதராஜுலுவைப் பார்ப்பனர்கள் சேர்க்காவிட்டாலும் ஸ்ரீ வரதராஜுலுவின் ஆயுள் வரை: வரதராஜுலு பார்ப்பனர்களை விட முடியாது என்பது பார்ப்பனர்கள் உள்பட எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆதலால் அதில் ஒன்றும் அதிசய மில்லை என்றே சொல்லுவோம்.
எனவே ஸ்ரீ வரதராஜுலுவின் இவ்வாக்கியங்களிலிருந்து அவர். எவ்வளவு தூரம் தனது சமூகத்தாரின் கேட்டுக்குத் தயாராயிருக்கிறார் என்பது முதலியவைகளை விளக்கவே இதை எழுதுகிறோமேயல்லாமல் மற்றபடி இவரது இம்மாதிரி பிரசாரத்தில் ஏதாவது விளைந்துவிடுமோ என்கின்ற பயத்தினால் நாம் இதற்கு சமாதானம் எழுதவரவில்லை என்பதையும் தெரிவிக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 29.04.1928
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நமது பத்திரிகையிண் நாண்காவதாண்டு
*குடி அரசு' பத்திரிகை தோன்றி இன்றைக்கு மூன்றாவது ஆண்டு கழிந்து நான்காவது ஆண்டு தொடங்கிவிட்டது.
அது தோன்றிய நாள் முதல் இது வரை செய்து வந்த தொண்டைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பலனைப் பற்றியும் பொது ஜனங்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.
*குடி அரசின்” கொள்கையை அதன் முதல் மலர் முதலிதழில் தலையங்கத்தில் தெரிவித்தபடி, அதாவது:-
“மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர்த்தல் வேண்டும்.......
உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்னும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி
பற்றி இவர் எமக்கு இனியர் இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு வெறுப்புகள் இன்றி... நண்பரே ஆயினும் ஆகுக. அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்.”
என்று நாம் உலகத்தாருக்கு ஆதியில் வாக்குக்கொடுத்தது போலவே இதுகாறும் ஒரு சிறிதும் மாறுதல் இன்றியும் கள்ளங் கபடின்றியும் தயவு தாக்ஷண்யம் இன்றியும் அது தனக்கு சரி என்று பட்டதை எவருக்கும் அஞ் சாது எப்பழிக்கும் பின் வாங்காது உண்மையுடன் உழைத்து வந்திருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
எனவே இப் பத்திரிகையின் கொள்கை இன்னது என்பதையும் அது ஆரம்பித்த நாள் முதல் இது வரை அதையே கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தவே இக் குறிப்பை வெளியிட்டோம்.
அன்றியும் “குடி அரசின்” இக் கொள்கை கொண்ட உழைப்பானது மற்ற பெரும்பான்மையான பத்திரிகைகளின் உழைப்பைப் போல் பத்திராதி
குடி அரசு - 1928 () 230
பரின் வாழ்வுக்கும் ஜீவனத்திற்கும் மாத்திரம் அனுகூலமாக்கி கொண்டு நாட்டை பாழ்ப்படுத்திக்கொண்டோ அல்லது ஒரு பயனும் இல்லாமல் மக்களை மூடபக்தியிலும் குருட்டு நம்பிக்கையிலும் அழுத்திக்கொண்டோ அல்லது சோம்பேறி வேதாந்தம் கற்பித்துக்கொண்டோ அல்லது அர்த்தமற்ற சுயராஜ்ய பேச்சோ தேசிய போச்சோ பேசிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டோ இருந்துவராமல் மக்களுக்குள் ஒரு வித உணர்ச்சியையும் எழுச்சியையும் கொடுத்து அறிவை விளக்கி வந்திருக்கின்றது என்பதை பல நண்பர்கள் நமக்கு எடுத்துக் காட்டி இருப்பதையே நாம் இங்கு இது சமயம்
சுட்டிக் காட்டுகின்றோம்.
“குடி அரசினால்” தேசிய வாழ்வுக்காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் புராணப்பிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்
பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக்கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம். ஆனாலும் அக் கூட்டத்தையும் அவர்களது கூச்சலையும் ஒரு கடுகளவும் லக்ஷியம் செய்யாமல் நாம் முனைந்து நிற்பதால் அவர்களால் நேரிடும் இடையூறுகள் யாவும் தூள் தூளாய் சின்னா பின்னப்பட்டு காற்றில் பறப்பதும் வாசகர்கள்
நிதமும் உணர்ந்ததேயாதலால் அதை பற்றி நாம் அதிகம் எழுத வரவில்லை.
உதாரணமாக மோட்டார் வண்டிகள் தெருக்களில் வேகமாச் செல்லும் போது தெருப்பொறுக்கும் சுணங்குகள் அவ்வண்டியின் நிலையறியாது அதை வழிமறித்து தடுத்து கடித்தெறிந்து விடலாம் என்கின்ற ஆவலுடன் குரைத்துக் கொண்டு சிறிது தூரம் வண்டியைத் தொடர்ந்து ஓடி காலும் வாயும் வலித்த உடன் எப்படி முணு முணுத்துக்கொண்டு திரும்பிப்போய் விடு கின்றனவோ அது போல் “குடி அரசின் வேகத்தினிடம் அநேகம் பத்திரிகை.
களும் தனி நபர்களும் வெகு ஆத்திரமாக அதை தடுத்து நிறுத்தி விடுவதுபோல் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்துவிட்டு அடங்கிபோனவை
களும் சில மறைமுகமாய் விஷமம் செய்து கொண்டிருப்பதும் சில மானம் வெட்கமில்லாமல் நின்ற நிலையில் இருந்தே குரைத்துக் கொண்டதுமான நிலையை தினமும் உணருகின்றவர்களுக்கு “குடி அரசி”ன் வேகத்தைப் பற்றியோ தத்துவத்தைப் பற்றியோ அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதைப் பற்றியோ அறிவிக்க வேண்டியதில்லை.
நிற்க, தமிழ் நாட்டின் நிலைமைகளும் வயிற்றுப் பிழைப்புத் தேசீய வாழ்வுக்காரர்களின் யோக்கியதைகளும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். வேறுபாடுகளும், வெளிமாகாணக்காரருக்கும், வெளி தேசத்தாருக்கும் தெரியப்படுத்த சுமார் 10, 12 வருஷங்களாக பார்ப்பனரல்லாதார் இயக்கமும் “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகளும் எவ்வளவோ பாடுபட்டும் பார்ப்ப னருடையவும், அவர்களது கூலிகளுடையவும் பலவித சூழ்ச்சிகளால் அதன்
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
குரல் வெளியில் போகாமல் தடுக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்த விஷயமாகும். அவ்வித தடைகளை எல்லாம் தாண்டி, இப்பொழுது வெளி மாகாணங்களுக்கும் மேல்நாடுகளுக்கும் கூட அவைகள் எட்டியிருப்பதற்கு, நம்நாட்டு தேசீயப் புரட்டும் பார்ப்பன சூழ்ச்சியும் பாமரர்கள் யாவரும்.
அறிந்திருப்பதற்கும் “குடி அரசின் தொண்டு ஒரு சிறிதாவது காரணமென்று சொல்வது மிகையாகாது.
“குடி அரசு” முதல் வருஷத்தின் முடிவில் 2000 சந்தாதாரர்களையும், இரண்டாவது வருஷ முடிவில் 4500 சந்தாதாரர் களையும், மூன்றாவது வருஷ முடிவில் 7000 சந்தாதாரர்களையும் கொண்டு உலவி வருவதனாலேயே அது ஒரு விதத்தில் பொது ஜனங்களின் ஆமோதிப்பைப் பெற்று வருகின்றது என்று சொல்லலாம். அதோடு, தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தினசரி, வாரப்
பத்திரிகைகள் எல்லாவற்றிலும் “குடி அரசே” அதிகமான சந்தாதாரர்களை:
யும், வாசகர்களையும் கொண்டிருப்பதாகவும் சொல்லலாமானாலும் இனியும் அது அடையவேண்டிய உயர்ந்த எண்ணிக் கையை அது அடைந்து விட்டதாக நாம் சொல்வதற்கில்லை.
சற்றேறக்குறைய 2 கோடி மக்களையுடைய தமிழ்நாட்டில் “குடி அரசு”
7000 பிரதிகள் மாத்திரம் உலவுவதானது ஒருக்காலும் போதாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் “குடி அரசு” மேற்போட்டுக் கொண்டிருக்கும் தொண்டு இலேசானதல்ல என்பதாலும் அது அழிக்க முனைந்திருக்கும் கேடுகள் இன்று நேற்று ஏற்பட்ட கெடுதி அல்ல வென்பதும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மயங்கும் படியான தெய்வத்தின்
பேராலும் மோக்ஷத்தின் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்டு என்றென்றைக்கும் விடுதலையடைய மார்க்கமில்லாமல் கட்டிப் போடப் பட்டிருக்கின்றதாதலாலும் இந்த கேட்டை பரப்புவதையும் நிலை நிறுத்து வதையும் பார்ப்பனரல்லாதாரிலும் பலர் பக்தியாகவும் ஜீவனோபாயமாகவும் கொண்டிருக்கிறதினாலும் இப்புரட்டுகளும் சூழ்ச்சிகளும் உலகத்தில் நூற்றுக்கணக்கான வருஷங்களில் கூட அழிக்க முடியாதபடி கோவில் களாகவும் தெய்வங்களாகவும் வேதங்களாகவும் புராணங்களாகவும் படங் களாகவும் பஜனை பாட்டுக்களாகவும் இலக்கணங்களாகவும் இலக்கியங் களாகவும் நாடெல்லாம் நிறைந்து அரசன், செல்வந்தன், படித்தவன்,
பிச்சைக்காரன் ஆகிய எல்லோர் வாயிலும் மனத்திலும் குடிகொண்டதாலும் இப்படிப்பட்ட விஷயத்தை அது எவ்வளவு புரட்டானதானாலும் மோசமான
தானாலும் மக்களுக்கு எவ்வளவு இழிவும் கேடும் சூழ்வதானாலும் அதை ஒழித்து உண்மையை வெளியாக்கி மக்களை சீர்படுத்துவதென்றால் அதை
சில வருஷங்களில் வாரம் ஒரு 7000 பிரதி வெளியீட்டில் முடியக்கூடிய காரியம் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனமேயாகும். ஆதலால்தான்
குடி அரசு - 1928 () 232
ஏழாயிரம் பிரதி போதாதென்பதோடு குறைந்தது 50,000 பிரதியாவது வாராவாரம் வெளியாக வேண்டுமென்பதே நமதபிப்பிராயம்.
மற்றப்படி இதற்கு ஏற்படும் எதிரிகளைப் பற்றியோ எதிர்ப் பிரசாரத்தைப் பற்றியோ நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை.ஏனெனில் இது வரை பல எதிரிகள் வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும் தானாகவும் கூலிக்கும் தனது உண்மை அபிப்பிராயத்திற்கும் தனது சுயநலத்
துக்கும் ஆக பலவிதங்களில் எதிர்த்துப் பார்த்து விட்டார்கள். நமது வாசகத் தையும் எழுத்தையும் திரித்தும் பழித்தும் விஷமம் பிரசாரம் செய்தும் பார்த்து விட்டார்கள். இவைகளினாலெல்லாம் “குடி அரசி£ன் அபிப்பிராயம் பரவுவதிலும் பிரதிகள் உயர்வதிலும் எவ்வித தடையும் ஏற்படவில்லை என்கின்ற காரணத்தினாலேயே உறுதி கூறலாம்.
அன்றியும் “குடி அரசையும் அதன் கொள்கைகளையும் எதிர்ப் பதாகவோ வெளியில் எதிர்த்து பிரசாரம் செய்வதாகவோ வெளியில் வந்த யாரும் இதுவரை “குடி அரசில்” கண்ட விஷயங்களில் எதற்காகவாவது
ஒன்றுக்கு யோக்கியமான சமாதானம் சொல்லவும் முன்வரவில்லை என்ப
தினாலும் உணரலாம்.
ஆனாலும் “குடி அரசு” தமிழ் நாட்டில் 50000 பிரதிகள் உலவி அதில் காணும் முக்கிய விஷயங்களை ஜில்லா தோறும் பதினாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் வெளியாக்கி வினியோகித்து வந்தால் மாத்திரம் சரியானபடி பரவக்கூடுமேயல்லாமல் இந்த 7000 பிரதியோ அல்லது 17000 பிரதியோ ஒரு காரியமும் செய்து விடாது என்றே சொல்லுவோம்.
தவிர. “குடி அரசு” இனி ஈரோட்டிலிருந்து வெளிவருவது சற்று கஷ்டமாகவேதான் காணப்படுகிறது. ஏனெனில் யந்திரங்கள் போதுமானதா யில்லாததோடு போதிய சவுகரியமும் இல்லை. இன்னம் ஒரு மிஷின் வாங்க. வேண்டியதாயும் இருக்கின்றது. இதல்லாமல் இனி “குடி அரசு” ஒரு தனிப் பட்ட மனிதனின் ஆதிக்கத்தில் இருப்பதும் சரியல்ல வென்றே நினைக் கிறோம். என்னவெனில் இப்படி ஒருவராலேயே நடத்தப்படுவதாயிருந்தால்
இது இனி வெகு காலத்திற்கு நடந்து வர முடியுமா என்பதுதான். ஆதலால் “குடி அரசை” ஒரு லிமிடெட் கம்பெனியாக்கி இந்த கொள்கை கொண்ட ஒரு நிர்வாக கம்பெனியிடம் ஒப்படைத்து இன்னமும் கொஞ்சம் குறைந்த விலையில் அதாவது ஒரு வருஷம் 2 ரூபாய் சந்தாவில் இனியும் அதிகமான பிரதிகள் வெளியாக்கத்தக்க மாதிரியிலும் இனியும் அதிகம் பேர் படிக்கத்தக்க மாதிரியிலும் செய்ய வேண்டுமென்றே ஆசைப்படுகின்றோம். சாதாரணமாக
20,000 பிரதிகள் வாரா வாரம் வெளியானால் வருட சந்தா 2 ரூபாயாக ஆக்கினாலும் நஷ்டம் வராது என்பது நமது துணிவு. பக்கங்களை வேண்டு மானாலும் குறைத்துக் கொள்ளலாம். லிமிடெட் கம்பெனி ஆக்க வேண்டு
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மென்பது பொறுப்பை உண்டாக்கவே ஒழிய பணம் அதிகம் தேவை என்பதாகவல்ல என்றும் சொல்லுவோம். இனி ஒரு மிஷினைத் தவிர வேறு
ஒன்றும் வேண்டியதில்லை. தவிர நமக்கு எவ்வளவு மனஉறுதி இருந்தாலும் சற்று உடல் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. என்னவெனில் 2, 3, 4 மணி நேர
மானாலும் பேசுவது சுலபமாயிருக்கின்றதேயல்லாமல் எழுதுவது அரைமணி நேரமானாலும் தலைவலிவந்து விடுகின்றது. கையும் வலி எடுத்துக் கொள்ளு கின்றது. அடிக்கடி மயக்கம் வருகின்றது. இது தவிர இங்கிலீஷ் வாரப் பத்திரிகையும் (ரிவோல்ட்) நடத்த வேண்டியிருப்பதாலும் அடிக்கடி பிரசாரத் திற்காக வெளியில் போகவேண்டியிருப்பதாலும் “திராவிடன்” பத்திரிகை யின் பொறுப்பையும் ஒப்புக் கொண்டிருப்பதாலும் இவ்வளவு காரியமும் ஒரு மனிதன் தலையிலேயே போடக்கூடிய காரியம் ஆகுமா என்பதும் யோசிக்க வேண்டிய காரியமாகும். அன்றியும் இக்கொள்கைக்கு ஒரு கட்டுப்பாடான இயக்கம் ஏற்படுத்தி அதற்கு ஜில்லா தாலூக்கா பிரசாரக்காரர்களையும் ஏற்படுத்தி அவ்வியக்கத்தின் சார்பாய் இப்பத்திரிகைகள் நடைபெறுவது நலமளிக்குமாதலால் அம்மாதிரி இயக்கம் ஒன்று வேண்டியிருப்பதோடு. அதற்கு வேறு பல பிரயத்தனங்களும் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றை யெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்படி வாசகர். களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.04.1928
குடி அரசு - 1928 () 234
மாயவாமும் ஸ்ரீ வாதா -னுவிண் “விாமும்”
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் மாயவரத்தில் கூடி பிரமாதமான காரியத்தைச் சாதித்துவிட்டதாகத் தங்களையே புகழ்ந்து கொண்டு அடிதடி
யுடன் கலைந்து ஆளுக்கொரு மூலையாய் ஓடி ஒளிந்து விட்டு சென்னைக்கு வந்து “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று வீரம் பேசுகின்றார்கள்.
மாயவரம் பெரிதும் பார்ப்பன அக்கிராரமாய் இருந்தாலும் அங்கு சில காலமாகவே தேசீய புரட்டுக்கு இடம் இல்லாமலே இருந்ததுடன் சமத்து வத்திற்கும் சுயமரியாதைக்கும் தமிழ் நாட்டில் முன்னணியில் இருந்தது.
குருகுல வேஷத்தின் போதுகூட ஸ்ரீ வரதராஜுலுவைப் பார்ப்பனர்.
கள் துன்புறுத்த கட்டுப்பாடாய் ஏற்பாடு செய்து கொண்டு கூட்டத்தில் வந்து விளக்கு முதலியவைகளைக்கூட உடைத்து மீட்டிங்கு நடக்காமல் தொந்தரவு செய்த காலத்திலும் இதே மாயவரம் தேச பக்தர்களால் தான் தடுக்கப்பட்டு ஸ்ரீநாயுடு காப்பாற்றப்பட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்பேர்ப் பட்ட இடத்தில் “தீட்டின மரத்தில் பதம் பார்ப்பது” என்கின்ற பழமொழிபோல் ஸ்ரீவரதராஜுலு நாயுடு எல்லாரிடத்திலும் நடந்து கொள்ளும் மாதிரியாகவே மாயவரம் தொண்டர்களிடத்திலும் நடந்து கொண்டது அதிசயமல்ல. அதைப்
பற்றி நமக்கு அதிக கவலை இல்லை. மாயவரம் தொண்டர்கள் யோக்கியர் அல்லாதவர்களை யோக்கியர் என்று நம்பிய குற்றத்தினால் அடைந்த பலன் களுக்கு நாம் என்ன சமாதானம் சொல்லக்கூடும். ஸ்ரீ வரதராஜுலுவை பார்ப்பனரல்லாதார் கோஷ்டியில் சேர்த்துக் கொண்டு அவரைப் பார்க்க அங்கு தனியாய் சென்றதின் பலனாகவே திரு. சுப்பிரமணியம் அடிபட
நேர்ந்தது. இதைப் பற்றி ஸ்ரீ வரதராஜுலு ஒண்டியாய் வந்தவர் அடிபட நேர்ந்ததைப் பற்றி மாத்திரம் ஜம்பம் பேசிக் கொள்ளலாம். ஆனாலும் திரு. சுப்பிரமணிய பிள்ளையைப் பொருத்தவரையில் ஸ்ரீ நாயுடுவின் நன்றி கெட்டதன்மையை தமிழ் மக்கள் பெரிதும் அறிய இது ஒரு சம்பவமாகும்.
நிற்க,
ஸ்ரீ வரதராஜுலு சுயமரியாதைப் பிரசாரத்தை அடக்கவும் மாயவரத்தில் ரத்தம் சிந்தியதைப் போல் தமிழ்நாடு எங்கும் இரத்தம் சிந்தச்
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
செய்யவும் 20 ஆயிரம் ரூபாய் சென்னை காங்கிரசில் மீந்த பணத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அதை செலவிட்டு அடக்கிவிடப் போவ
தாகவும் பந்தயம் கூறி நம்மை பயமுறுத்துகிறார். ஸ்ரீ வரதராஜுலுவின்
வீரத்திற்கும் அவரது பந்தயத்திற்கும் எவ்வளவு தூரம் மதிப்பு உண்டென்பது தமிழ் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். வெறுங் குடத்தை தட்டினால் அதிகமாகத்தான் சத்தம் கேழ்க்கும், உள்ளே சாமான் இருந்தால் சத்தமாகாது என்பது போல் ஸ்ரீ வரதராஜுலுவின் வாழ்வின் அஸ்திவாரமே இந்த வாயளப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது அவருடன் பழ காத எதிரிக்குங்கூட தெரிந்த விஷயம். தான் அடங்கிக்கிடக்க நேரும்போது, “கிடந்து போகட்டும் என்று அலட்சியமாய் இருந்து வந்தோம்” என்பதும் வெளியில் வர கொஞ்சம் இடம் கிடைத்ததும் “இனிமேல் பார் நம்ம சங்கதி” என்பதுமான வீரமும் அவர் கூடவே பிறந்த குணங்களாகும். இம்மாதிரி இதற்குமுன் எத்தனை தடவை பேசியிருக்கிறார். இதுவரை ஏதாவது ஒரு செல்லாக்காசு பெறுமான காரியமாவது செய்தாரா? அல்லது அதனால் ஏற்பட்டதா? என்கின்ற விஷயங்களை கவனித்தால் உண்மை வெளியாகாமல் போகாது தவிர ஸ்ரீ வரதராஜுலுவின் எதிர் பிரசாரத்தின் யோக்கியதை அறியாதவர்கள் இந்த மாகாணத்தில் யாரும் இல்லையாதலால் அதைப்பற்றி எழுத வேண்டிய அவசியமும் இல்லை என்றே இத்துடன் விட்டு விடுகின்றோம்.
மற்றபடி எந்த பார்ப்பனர்களாவது இவரை நம்பி பக்கத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்கின்ற சந்தேகமும் நமக்கு கிடையாது. ஆதலால் இவராகப் போய் பார்ப்பனர்களுடன் உறைய வேண்டியது தானேயல்லாமல் இவரைக் கொண்டு அவர்களுக்கு யாதொரு காரியமும் ஆகிவிடப் போவதுமில்லை. ஆதிதிராவிடர்களின் இயக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் விரோதமாய் சிலருக்கு கூலி கொடுத்து திராவிடர் சபை என்பதாக ஒரு போலி சபையை உண்டாக்கி இருப்பது போல ஸ்ரீ வரதராஜுலுவைப் பிடித்து பார்ப்பனரல்லா
தார் இயக்கத்திற்கு விரோதமாக “தேசீயப் பார்ப்பனரல்லாதார் சபை” என்ப தாக ஒன்றை ஏற்படுத்தி நமக்கு விரோதமான காரியங்களைச் செய்ய தூண்டலாம். ஆனால் இனி அவைகள் நடப்பதென்பது முடியாத காரியம் என்றே சொல்லுவோம். ஏனெனில் ஸ்ரீ வரதராஜுலுவும் இந்த மூன்று நான்கு வருடங்களாக தேசீய சபை என்றும் தேசீய பார்ப்பனரல்லாதார் சபை என்றும் ஒவ்வொரு தடவையும் தன் கை காசு100, 200 செலவு செய்து கூட்டம் கூட்டி
யும் கட்சி சேர்த்தும் பார்த்து விட்டார். அக்கூட்டங்களுக்கெல்லாம் இதுவரை: போனவர்கள் எத்தனை பேர் என்பதும் அவர்கள் யார் யார் என்பதும் அதில் பெரும்பாலோர் மற்றவர்கள் யார் கூப்பிட்டாலும் போகாதவர்கள் என்பதும் கவனித்தவர்களுக்கு தெரியாமல் இருக்க முடியாது. மாயவரத்தில் திரு. சுப்பிரமணிய பிள்ளையை அடித்து விட்டு வந்த ஜோரில் 19-தேதி
குடி அரசு - 1928 () 236
சென்னையில் கூட்டப்போவதாக பறை அடித்த தொண்டர் கூட்டம் தேதி போடாமல் ஒத்தி வைக்க நேர்ந்தது 27-தேதி “தமிழ்நாடு” பத்திரிகையை பார்த்தால் தெரியும்.
இந்த நிலையில் தகப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனிடம் சொல்ல வந்த பயித்தியக்காரி போல் ஸ்ரீ வரதராஜுலுவின் தேசீய பெருமை யை தமிழ் மக்களிடம் சொல்லவருவது வேடிக்கையாயிருக்கின்றது.
தவிர, ஒரு காலத்தில் ஸ்ரீ நாயுடு போன்ற மற்றொரு பார்ப்பனரல்லாத தேசீயவாதியை “ஏனையா ஜஸ்டிஸ் கட்சியை வைகின்றீர்” என்று ஒருவர். கேட்டதற்கு அவர் “திரு.ராமசாமி நாயக்கர் என்னை வைகின்றார் ஆதலால் அவர் ஆதரிக்கும் ஜஸ்டிஸ் கட்சியை நான் வைய நேரிடுகின்றது” என்று சொன்னார். இப்போது ஸ்ரீ வரதராஜுலுவையும் ஒருவர் கண்டு “ஏன் ஜஸ்டிஸ். கட்சியுடன் போய் முட்டிக் கொள்கின்றீர்” என்று கேட்டால் இவரும் அதே மாதிரி “திரு. நாயக்கர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கின்றார். திரு. நாயக்கரை: ஜஸ்டிஸ் கட்சி பின்பற்றுகின்றது. அதனால் தான் அதை ஒழிக்க வேண்டி யிருக்கின்றது” என்று சொல்கின்றாராம். எனவே இவ்விரண்டு தேசீய பிராமணரல்லாதார்களால் ஜஸ்டிஸ் கட்சி அழிந்துவிடக் கூடுமாயிருந்தால் அது இன்றைக்கே அழித்து விடுவதுமேல் என்றே ஆசைப்படுகின்றோம். அந்த மிரட்டுதலுக்கும் இங்கு யாரும் பயப்படுகின்றவர்களும் இல்லை என்பதை தைரியமாய்ச் சொல்லுவோம். நிற்க ஸ்ரீ வரதராஜுலு கடைசியாக திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களை தஞ்சமடைந்திருப்பதாக தெரிய வருகின்றது.
நம்மை முன்னிட்டாவது அவர்கள் இருவரும் மறுபடியும் ஒற்றுமைப்பட நேர்ந்தது பற்றியும் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுத்துக் கொள்ள நேர்ந்ததைப்பற்றியும் நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவதுடன் அவர்களது ஒற்றுமையின் பலனையும் கவனித்து வருவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.04.1928
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
*கேசீயமும்” சுயமரியாதைப் பிரசாரமும்
தேசீயத்திற்கு விரோதமாக சுயமரியாதைப் பிரசாரம் நடப்பதாகவும் ஆதலால் “ரத்தம் சிந்தியாவது, தேசபக்தர்கள் புற்றீசல்களைப் போல் உயிர் துறந்தாவது, சுயமரியாதைப் பிரசாரத்தை ஒடுக்கி விடவேண்டும்” என்றும் “அதற்காக பல ஆயிரம் ரூபாய்கள் காங்கிரஸ் நிதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது” என்றும் “தமிழ்நாடு” பத்திரிகை எழுதி இருக் கின்றது. மற்றபடி பார்ப்பனப் பத்திரிகைகளோ ஒன்று சேர்ந்து இவ்விஷயத்
தில் எதிர் பிரசாரம் செய்ய ஸ்ரீ வரதராஜுலுக்கே வக்காலத்து கொடுத்துவிட்டு யாவருக்கும் தெரியாமல் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியைத் தோற்கடிக்க இரகசியமாக ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றியும் மந்திரிகளைப்
பற்றியும் சட்டமெம்பரைப்பற்றியும் குறைகூறி விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்கள் இஷ்டப்படியும் அவர்களது கூலிகளின் ஆசைப்படியும் அடுத்த தேர்தலிலும் ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வியடைந்து
மந்திரி பதவி வகிப்பதற்கு தகுதியில்லாமல் போய் விட்டாலுங்கூட உண்மையிலேயே நாம் ஒரு சிறிதும் கவலைப்படமாட்டோம். ஏனெனில் அக்கக்ஷியானது ஆறு வருஷ காலம் மந்திரிப் பதவி ஏற்று அதிகாரத்தில் இருந்த காலத்தில் எவ்வளவு நன்மை அடைய முடிந்ததோ அதைவிட பலமடங்கு அதிகமாகவே அக்கட்சி வேலையின் பயனாக பார்ப்பனரல்லாத சமூகம் நன்மையையும் விழிப்பையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அடைந்திருக்கின்றது என்றே தைரியமாய்ச் சொல்லுவோம். அது போலவே
இனியும் ஒரு மூன்று வருஷ காலத்திற்காவது அக்கக்ஷி மந்திரி முதலிய அதிகார பதவியில் இல்லாமல் இப்போது இருப்பதுபோல் மந்திரிகளையும் சர்க்காரையும் ஆட்டிக் கொண்டு இருக்கும் நிலைமையில் இருக்குமானால் பார்ப்பனரல்லாதாருக்குள் இன்னும் அதிகமான உணர்ச்சி ஏற்படும் என்பதே நமது துணிபு.
உதாரணமாக, திரு.ஏ.ராமசாமி முதலியார் அவர்களுக்கு சட்டசபை ஸ்தானம் கிடைக்கக்கூடாது என்று கருதி திரு. சீனிவாசய்யங்கார் பந்தயங்
கூறி தனது கூலிகளை விட்டு எவ்வளவோ விஷமப் பிரசாரங்களும் சூழ்ச்சி களும் செய்து தங்கள் கருத்துப்படியே திரு. முதலியாரை தோற்கடித்து தாங்கள் வெற்றி பெற்று விட்டார்கள். ஆயினும் அத்தோல்வியின் பயனாக
குடி அரசு - 1928 () 238
திரு. முதலியார் சட்ட சபையிலிருந்து எவ்வளவு தூரம் பார்ப்பனரல்லாதார்.
சமூகத்தின் நன்மைக்கு உழைக்கக் கூடுமோ அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உழைத்து நன்மை செய்ய முடிந்தது. உதாரணமாக 1200 பிரதி மாத்திரம் வெளியாகிக் கொண்டு தூங்கிக் கிடந்த “ஜஸ்டிஸ்” பத்திரிகையை 4000 பிரதிக்கு மேலாக வெளியாக்கி தமிழ்நாட்டையே ஆட்டிவைக்க முடிந்தது; பார்ப்பனரல்லாத வாலிபர்களையெல்லாம் தட்டி எழுப்ப முடிந்தது. பார்ப்பனக் கொடுமையை வெளி மாகாணத்திற்கெல்லாம் வெளிப்படுத்த முடிந்தது. பார்ப்பனர்களின் அரசியல் புரட்டுகளையும் அரசாங்கம் பார்ப்பனர்களுக்கு அடிமைபட்டுக் கிடந்ததையும் பார்ப்பனர்கள். தேசீயத்தின் பேரால் அரசாங்கத்திற்கு உளவாய் இருக்கிறதையும் வெளி
யாக்க முடிந்தது. பார்ப்பனரல்லா பாமர மக்களும் பார்ப்பனர்களுடையவும் அவர்களது கூலிகளுடையவும் வயிற்றுப் பிழைப்புத் தேசீயத்தின் யோக்கிய தையை உணர முடிந்தது!. மற்றும் எவ்வளவோ நன்மைகளும் ஏற்பட்டி ருக்கின்றன. அது போலவே திரு. பனக்கால் அரசருக்கும் மந்திரி பதவி இல்லாததால் எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
முதலாவதாக, பனக்கால் அரசர், மந்திரி ஆகாத காரணத்தினாலேயே பார்ப்பனர்களின் தேசீயத்தையும், காங்கிரஸ் கொள்கையையும், சுயராஜ்ஜியக் கட்சியின் யோக்கியதையையும், அவர்களது முட்டுக்கட்டையின் தத்துவத் தையும் வெளியாக்க முடிந்ததுடன் ஜஸ்டிஸ் கட்க்ஷியாகிய பார்ப்பனரல்லா
தார் கக்ஷியை ஒழிப்பதுதான் காங்கிரஸ் கொள்கை என்பதை காங்கிரஸ் காரர்களின் வாயாலேயே ஒப்புக்கொள்ளச் செய்ததையும் பொது ஜனங்கள் உணர முடிந்ததுடன் காங்கிரஸ் என்பதே பார்ப்பனர் பிழைப்புக்கு ஏற்பட்ட சாதனங்களில் ஒன்று என்பதையும் மக்கள் உணர முடிந்தது. தவிரவும் பனகால் அரசர் சட்டசபை அங்கத்தினர் பதவிகூட அடைய முடியாமல் போயிருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் இனியும் சற்று முன்னேற்றம் அடைந்திருக்கக் கூடும் என்று கூடச் சொல்லுவோம். இதை இப்போது மாத்திரம் சொல்ல வரவில்லை. சென்ற தேர்தலின் போதே நாம் எடுத்துக் காட்டி இருக்கிறோம். அதாவது “பனக்கால் அரசர் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதில், பார்ப்பனர்கள் பனக்கால் அரசர் சட்டசபை அங்கத்தினராகக் கூடாது என்று எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் பலிக்காமல் தோல்வி அடைந்தார்கள் என்கின்ற ஒரு விஷயத்திற்காக
மாத்திரம் நாம் மகிழ்ச்சியடைகின்றோமே யல்லாமல் மற்றபடி பனக்கால் அரசரின் தோல்வியே நமக்கு நல்ல பலனை அளிக்கும்” என்று பேசியும் எழுதியும் இருக்கிறோம்.
அது போலவே வரப்போகும் தேர்தலிலும் திரு. ராமசாமி முதலியா
ரும், பனக்கால் அரசரும் தோல்வியடைவார்களானால் அது பார்ப்பன ரல்லாதார் இயக்கத்திற்கு எவ்வளவோ வெற்றியளிக்குமே தவிர எவ்
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
விதத்திலும் இடையூறு செய்து விடாது என்று சொல்லுவோம். இது “சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்லும் தத்துவத்தில் சொல்லுவதல்ல என்றும், உண்மையாகவும் அனுபவத்தைக் கொண்டுமே தான் சொல்லுகின்றோம் என்றும் முன்னமேயே நாம் சொன்னது என்றும் வாசகர்கள் உணர்வார்களாக.
நிற்க, தேசீயம் என்பது என்ன என்பது பற்றியும் சிலர் கூப்பாடு போடுவது போல சுயமரியாதைப் பிரசாரத்தால் அந்த தேசீயம் எப்படி தடைப்படுத்தப்படுகின்றது என்பது பற்றியும் சற்று ஆராய்வோம். தேசீயம் என்கின்ற பதத்திற்கு என்ன பொருள் என்பதை முதலில் ஆராய்வோம்.
முதல் முதலில் ஆங்கிலத்தில் இருந்துதான் இந்த வார்த்தையை நமது மக்கள் பேசத் தெரிந்து கொண்டார்கள். அதாவது ஆங்கிலத்தில் நேஷன், நேஷனல், நேஷனலிசம் என்கின்ற பதங்களின் பொருள்களே தான் தேசம், தேசத்திற்குரியது, தேசீயம் என்கின்ற பதங்களாகும். அதாவது ஒரு குறிப் பிட்ட தேச சமூகத்தின் சுயமரியாதையைப் பொருத்த விஷயங்களையே தான் பெரிதும் குறிப்பிடுகின்ற முறையில் அவ்வார்த்தை ஏற்படுத் தப்பட்டதே ஒழிய வேறில்லை. அந்த முறையில் இந்திய தேசீயம் என்பது இந்திய சமூகத்தின் சுயமரியாதையைப் பொருத்ததாகும். இப்பொழுது அரசியல் உலகில் பெரும்பாலும் பிரஸ்தாபிக்கப்படும் தேசீயம் என்கின்ற பதத்தில் தேச சமூகத்தின் சுயமரியாதையைப் பொருத்ததோ நன்மையைப் பொருத்ததோவான கருத்துக்கள் ஏதாவது பொதிந்து கிடக்கின்றனவா என்று பார்த்தால் தேசீயம் என்கின்ற பதம் உண்மையான பொருளில் உபயோகப் படுத்தப்படுகின்றதா என்பது நன்கு விளங்கும்.
தவிர, தமிழ் நாட்டைப் பொருத்தவரை யாராவது தேசீயம் என்பதை எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய சுயமரியாதையைப் பற்றியோ நன்மையைப் பற்றியோ ஏதாவது கவலை எடுத்துக்கொள்ளத்தக்க குறிப்பு அதில் இருக்கின்றதா என்பதும் மிகுதியும் கவனிக்கத்தக்கதாகும். எனவே இவ்விரண்டும் அதாவது இந்திய மக்கள் சமூகத்தைப்பற்றியும் தமிழ் மக்களின் சமூகத்தைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் சீர்திருத் தத்தைப் பற்றியும் ஒரு சிறிது கவலையும் இல்லாது தேசீயம் என்கின்ற
வெறும் வார்த்தையை மாத்திரம் பாமர மக்கள் ஏமாறும் மாதிரி உச்சரித்துக் கொண்டு சிலரின் உத்தியோகத்திற்கும் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகித்துக் கொண்டு உண்மையான தேசீயமாகிய சுயமரியாதையைப்
பற்றிக் கவலை எடுத்துக்கொண்டிருக்கும் இயக்கங்களையும் குறை கூறிக்கொண்டு “சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டியது தேசியத்தின் கடமை” என்று சொல்வதில் எவ்வளவு தேசீயத் துரோகம் இருக்கின்றது என்பதை பொது மக்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
பொதுவாக ஒரு சிறு கூட்டத்தார் பிழைக்கவே அவர்களது சுலநலத்
குடி அரசு - 1928 () 240
திற்காகவே தேசீயம் என்கின்ற வார்த்தையை உண்டாக்கிக் கொண்டிருப் பதாக சொல்வதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பது இங்கு கவனிக்க வேண்டும். தேசீயம் என்கின்ற வார்த்தையோ, தேசீயம் என்கின்ற இயக்கமோ நமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகின்றது. இந்த இயக்கம் ஏற்பட்ட பிறகுதான் இதன் பயனாக நமது அரசியல் உத்தியோகங்கள் ஏராளமாக உண்டாக்கப்பட்டதும், அதை நம் நாட்டுப் பார்ப்பனராகிய ஒரு கூட்டத்தாரே ஏக போகமாய் அனுபவிப்பதுமான நிலைமை ஏற்பட்டது என்பதை யாராவது மறுக்க
முடியுமா என்று கேட்கின்றோம்.
தேசீய இயக்கம் (காங்கிரசு! ஏற்படுவதற்கு முன் நிர்வாக சபை மெம்பர்கள் (மந்திரிகள்! இருவர்களும் ஐகோர்ட்டு ஜட்ஜிகள் ஐவருமாக இருந்தார்கள். தேசீய இயக்கத்தின் (காங்கிரசின் பயனாக இப்பொழுது நிர்வாக சபை மெம்பர்கள் மந்திரிகள்! எழுவரும் ஐகோர்ட் ஜட்ஜுகள் பதி
நால்வரும் இருக்கின்றார்கள். இது போலவே கிராமத்தலையாரி வரையிலும் உத்தியோகங்கள் பெருகிக் கொண்டே வந்திருப்பதுடன் அவ்வுத்தியோகங் களுக்கு சம்பளங்களும் ஏராளமாய் பெருகிக் கொண்டே வந்து தேசீய
இயக்கம் ஏற்படுவதற்கு முன் இந்தியா முழுமைக்கும் 40 அல்லது 50 கோடி ரூபாய்க்குள் இருந்த சர்க்கார் வரியானது தேசீயம் ஏற்பட்டதின் பயனாகவும் அதனால் உண்டான உத்தியோகங்களின் பயனாகவும் அவைகளுக்கு உயர்ந்த சம்பளங்களின் பயனாகவும் இன்றைய தினம் 150 கோடியாக வரி உயர்ந்து ஏழை இந்தியக் குடியானவர்கள் தலையிலும், வியாபாரிகள் தலையிலும் மற்றும் பொது ஜனங்கள் தலையிலும் பளுவு ஏற்பட்டிருக் கின்றது. இதை நாளிது வரை எந்த “தேசீயவாதி"யாவது “தேசீயநிபுண”ராவது மறுத்தார்களா? என்று கேட்கின்றோம்.
இம்மாதிரி வரிப்பளுவு 40 கோடியில் இருந்து 150 கோடி ஆனதின் பயனாக இந்த “தேசீயத் தலைவர் ”களுக்காவது மற்றும் அவர்கள் காலை
நக்கிப் பிழைக்கும் வயிற்றுச் சோற்று “தேசீய வீரர் ”களுக்காவது ஒரு புதுக் கோட்டை அம்மன் காசு பெறுமான நஷ்டமுண்டா என்று கேட்கின்றோம்.
இந்த பார்ப்பனத் தேசீயத்தின் பலனாகவும் அவர்களது கூலி தேசியத்தின் பலனாகவும் ஏற்பட்ட உத்தியோகங்களில் அதன் செலவின் பளு முழுவதையும் பொறுக்கும் பார்ப்பனரல்லாதாரில் யாராவது சிலர் தங்கள் வகுப்பாருக்கும் சில உத்தியோகங்கள் ஏன் கொடுக்கப்படக் கூடாது என்று கேட்டால் அது பெரிய தேசத்துரோகம் என்று சொல்லப்பட்டு வருகின்றது. இது பார்ப்பனர்களால் மாத்திரமல்லாமல் அவர்களது கூலிகளாகிய பார்ப்பனரல்லாதார்களில் சிலராலும் சொல்லப்பட்டு வருகின்றது. இந்த அறிவிலிகள்- இனத்துரோகிகள் - தேசீயம் என்பதின் பொருள் தெரியாமல்
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
உளறுகிறார்கள் என்றருத்தமா, அல்லது தெரிந்தும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி இப்படிச் சொல்லுகின்றார்களா? என்பதை பொது மக்களே யோசித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.
நமது நாட்டின், நமது சமூகத்தின், சுயமரியாதைக்கு நிரந்தர விரோதி களாய் இருக்கும் பார்ப்பனர்களுக்கும் அவர்களை நத்தி தன் இனத்தைக்
காட்டிக் கொடுத்து வாழும் சுயநலக்காரருக்கும் எப்படியாவது சுயமரியாதை உணர்ச்சி என்னும் தேசீயத்தில் கவலை இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர்கள் “இத்தனையாம் தேதியில் உங்கள் தகப்பனாருக்கு திதி வருகின்றது தயாராயிருங்கள்” என்று சொல்வதில் நமது பெற்றோர்களைப்
பற்றி எவ்வளவுதூரம் அவர்களுக்கு கவலை இருக்க முடியுமோ, ரயில்வேக். காரன் “இன்ன மாதம் இன்ன தேதியில் சிதம்பரத்தில் ஆருத்திரா தரிசனம். வருகின்றது: எல்லோரும் போய்ப்பார்த்து மோக்ஷமடையுங்கள்” என்று ரயில்வே கைய்டிலும் பணம் கொடுத்து வேறு பத்திரிகையிலும் விளம்பரப் படுத்துவதில் நாம் மோக்ஷமடைவதில் அவனுக்கு எவ்வளவு நம்பிக்கையும் கவலையும் இருக்குமோ அவ்வளவு கவலைதான் இந்தப் பார்ப்பனர்களுக்
கும் அவர்களது கூலிகளுக்கும் நமது தேசீயத்தைப் பற்றி பிரசாரம் செய்வ
திலும் பத்திரிகைகளில் எழுதுவதிலும் இருக்கும் என்று நாம் நினைப்பதில் ஏதாவது கடுகளவாவது பிசகு உண்டா என்று கேட்கின்றோம்.
எனவே சிலரின் சுய நன்மைக்கும் வயிற்றுப்பிழைப்புக்கும் ஏற்படுத்
திக் கொண்ட “தேசீயத்திற்கு” இனியும் எத்தனை காலம் நமது மக்கள் ஏமாறு
வது என்பது இப்போது முக்கியமாய் யோசிக்கத்தக்க விஷயமாகும். நமக்கு கடுகளவாவது சுயமரியாதை உணர்ச்சி வந்து இருக்கின்றது என்று நாம் சொல்லிக் கொள்ள விரும்பினால் நமது தேசத்தை விட்டு - குறைந்தது நமது தமிழ்நாட்டை விட்டாவது - தேசீயப் புரட்டை ஒழிக்க முற்பட்டோமா? என்பதை ஒவ்வொருவரும் தம்தம் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்க வேண்டுமாய் விரும்புகிறோம்.
பொதுவாக நமது நாட்டு மக்களின் உண்மையான தேசீயத்திற்கு அதாவது சுயமரியாதைக்கு எமனாய் இருப்பது. இந்தப் போலி - நாட்டைக் காட்டிக் கொடுத்து வரும் - கூட்டத்தாரின் உத்தியோகக் கற்பனையும் இனத்தை காட்டிக் கொடுத்து வாழும் ஒரு சிலரின் தேசீய வேஷமுமேயாகும் என்று கோபுரத்தின் மீதிருந்தும் கூவுவோம். இந்த போலி சுயநல வயிற்றுப் பிழைப்பு தேசீயத்தை வெட்டி வீழ்த்தினாலல்லது மக்கள் சுயமரியாதை அடைந்து ஏழைகள் வாழ முடியும் என்பது ஒருக்காலும் முடியாத காரியம் என்றே சொல்லுவோம்.
குடி அரசு - 1928 () 242
“மோக்ஷமும்” “பக்தியும்” “மதமும்” எப்படி ஒரு சமூகத்தைப் பிரித்து சின்னாபின்னப்படுத்தி நிரந்தர முட்டாள்களாகவும் காட்டுமிராண்டி களாகவும் மனிதத்தன்மை அற்றவர்களாகவும் செய்து விடுகின்றதோ அது போலவே இந்த “தேசீயமும்” நாட்டையும் மக்களையும் பிரித்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து ஏழைகளையும் குடியானவர்களையும் வதைத்து மீளாத் தரித்திரத்தில் ஆழ்த்தி மனச்சாகஷியை இழந்து சுயமரியாதையற்று
வாழச் செய்கின்றது. எனவே நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கைகளில் இந்த போலி தேசீயத்தை வெளியாக்கி வயிற்றுப் பிழைப்பு தேசீயவாதிகளை ஒழிப்பதும் ஒரு முக்கிய கொள்கையாகக் கொள்ள. வேண்டும் என்பதை உண்மைச் சுயமரியாதை வீரர்களுக்கும் தொண்டர்.
களுக்கும் அறிவுறுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.05.1928
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
திரு.ஆர்.6ே. ஷண்முகம் சசட்முயாரும்
திரு. மநீணிவாசய்யாங்காரும்
திருஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் இம்மாதம் 2-ந் தேதி இந்தியர் பிரதிநிதியாக பொது மக்கள் சார்பாய் தெரிந்தெடுக்கப்பட்டு சர்க் காராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஜினிவா மகாநாட்டுக்குச் செல்கின்றார்.
திரு. ஸ்ரீனிவாசய்யங்கார் வெயில் காலத்தில் சுகம் அனுபவிக்க உடல் நலம் பேணி இங்கிலாந்துக்குச் செல்கின்றார்.
ஆனால் தனது சுகவாசத்திற்குச் செல்லும் திரு, ஸ்ரீனிவாசய்யங் காருக்குத் தேசீயத்தின் பேரால் வழியனுப்பு உபசாரங்கள் பொதுமக்கள் பேரால் சென்னையில் செய்யப்பட்டதே ஒழிய திரு. ஷண்முகம் செட்டியா ருக்கு ஒரு உபசாரமும் நடத்தப்படவில்லை. இதன் காரணம் என்ன என்ப தைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
திரு. செட்டியார் பார்ப்பனரல்லாதார், திரு. அய்யங்கார் பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. இவ்வய்யங்கார் வழியனுப்பு உபசார திருவிழாவுக்கு போட்டி போட்டு செலவு செய்து தலைமை வகித்த
திரு. வரதராஜுலு அவர்கள் திரு. அய்யங்காரைப் பற்றி பாடியிருக்கும் கவியை சற்று கவனிப்போம்.
“திரு. அய்யங்காரை முப்பது கோடி மக்கள் பொது சொத்து என்று கருதுகிறார்கள்.
சுயராஜ்யப் போரில் அய்யங்கார் தளகர்த்தராய் இருக்கிறார். தேக செளக்கியத்தை முன்னிட்டு இங்கிலாந்துக்கு போவதாக அய்யங்கார். சொன்னாலும் சமயம் நேர்ந்தால் தேச விடுதலைப் போரின் லக்ஷியங்களை'
எடுத்துச் சொல்ல பின்வாங்கமாட்டார். இந்த நாட்டில் ஜாதிச் சண்டை, சமூக வேற்றுமை, வகுப்புப் பிணக்கு உண்டுமானால் அதை மத்தியஸ்தம் செய்ய பிரிட்டிஷாருக்கு உரிமை இல்லை யென்பதை திரு. அய்யங்கார் பிரிட்டி ஷாருக்கு தெரிவிக்க வேண்டும்.” (திரு அய்யங்காருக்குத்தான் உண்டு
போலும். ப-ர்)
குடி அரசு - 1928 () 244
என்று பேசியிருக்கின்றார். பின்னர் திரு. வரதராஜுலுவின் சகாக் களாகிய திரு. ஷாபி முகம்மது சாயபும், திரு குழந்தையும், திரு சத்திய
மூர்த்தியும், திரு வரதராஜுலுவை விட ஒருபடி குறைவாகவே அய்யங் காரைப் பற்றிக் கவிபாடி உற்சவத்தை ஒருவாறு முடித் திருக்கின்றார்கள்.
திரு. வரதராஜுலுவைப் பற்றி திரு. அய்யங்காரும் திரு. அய்யங் காரைப்பற்றி திரு. வரதராஜுலுவும் இதற்கு முன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட வார்த்தைகள் “நாய் கூட குறுக்கே போகமுடியாது” என்று சொல்லும் பழமொழிபோல் அவ்வளவு கேவலமாக இருந்தது யாவருக்கும் தெரிந்த விஷயம்.
திரு. வரதராஜுலுவை காங்கிரசிலிருந்து விலக்கினால்தான் காங்கிரசு பரிசுத்தப்படும் என்று அய்யங்கார் சொன்னதும், மைலாப்பூர் அய்யங்காரை: காங்கிரசை விட்டு ஒழித்து காங்கிரசைக் கைப்பற்றினால்தான் அது பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தில்லாமல் இருக்கும் என்றும், பார்ப்பனர்
கள் பார்ப்பனரல்லாதாருக்கு கேட்டை விளைவித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த காங்கிரசை ஆயுதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார். களாதலால் அவர்களை காங்கிரசை விட்டு ஒழிக்க வேண்டும் என்றும் திரு. வரதராஜுலு சொன்னதும் போய், இவர்கள் இப்போது ஒருவருக்கொருவர். புகழ்வது கவி பாடிக் கொள்வதில் உள்ள இரகசியம் என்ன என்பதை பொது ஜனங்களே கண்டு கொள்ளட்டும். சென்ற வருடம் திரு. வரதராஜுலுவை பார்ப்பனர்கள் காங்கிரசிலிருந்து வெளிப்படும் படியாய்ச் செய்ததற்காக பார்ப்பனரல்லாதார்களில் சிலரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பலனாக
வும் “இந்த ஒரு தடவை பாருங்கள், இனிமேல் எனக்கு புத்தி வந்து விடும்” என்று சொல்லிக் கொண்டதின் பலனாகவும் பார்ப்பனரல்லாதாரிலும் சிலர், “இஷ்டப்பட்டவர்கள் - அதுவும் காங்கிரசினால் பார்ப்பனர்கள் பார்ப்பன ரல்லாதாருக்கு கெடுதி செய்ய முடியாமல் பார்த்துக் கொள்ள சக்தி உடைய வர்கள் - காங்கிரசில் சேரலாம்” என்று அனுமதி கொடுத்தவுடன், யாரும் காங்கிரசிற்குள் நுழையாதபடி திரு. அய்யங்கார் பந்தோபஸ்து செய்து கொண்ட காலத்தில், திரு. வரதராஜுலுவின் ஊர் காங்கிரஸ் கமிட்டியையும் பார்ப்பனர்கள் சுவாதீனம் செய்து கொண்டு வரதராஜுலுவை வெளியாக்கிய போது ஸ்ரீவரதராஜுலு வெட்கப்பட்டு பல ரூபாய் செலவு செய்து சேலத்தில் ஜில்லா காங்கிரஸ் மகாநாடு கூட்டி “பார்ப்பனர்கள் என்னை மிக அவமானப் படுத்தி விட்டார்கள். ஆதலால் நாயக்கர்வாளே தாங்கள் வரவேண்டும்! திரு. சிதம்பரம் பிள்ளைவாளே! தாங்கள் வரவேண்டும்! திரு.பனக்கால் ராஜாவே தாங்கள் வந்து என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்! திரு. ராமசாமி முதலியாரே ! தாங்கள் வரவேண்டும். திரு. ஷண்முகம் செட்டியாரே தாங்கள் வரவேண்டும்” என்று ஒவ்வொரு பார்ப்பனரல்லாதவர்களையும் கெஞ்சி அழைத்து மகாநாட்டை நடத்தியதும், அது சமயம் திரு. வரதராஜுலு
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அய்யங்காரையும் பார்ப்பனர் களையும் வைததும், பார்ப்பனரல்லாதார்களை. திருப்தி செய்ய காங்கிரசின் கொள்கையிலேயே ஜாதி வித்தியாசம் இல்லை என்கின்ற ஒரு குறிப்பை சென்னையில் கூடும் காங்கிரசில் சேர்த்து விடுவதாகவும் அது முடியா விட்டால் தான் காங்கிரசை விட்டு மறுபடியும் வெளியில் வந்துவிடுவதாக வீரம் பேசினதும் இதற்குள் யாரும் மறந்திருக்க முடியாது.
அப்படிப்பட்ட நாயுடு இதே திரு. அய்யங்கார் அழையாமலே காங்கிரசிற்குள் வலிய நுழைந்ததும் கூட்டம் திரு. நாயுடு மீது சந்தேகப்பட்டு.
காங்கிரசில் திரு. நாயுடுவை மேடையில் கூட உட்கார வைக்காமல் அவமா னப்படுத்தியதும், இதற்காக திரு. நாயுடு இதே திரு.அய்யங்காரிடம் “காங்கி
ரசின் கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்று சேர்க்க
திரு. ஷண்முகஞ் செட்டியார் கொடுத்திருக்கும் தீர்மானம் வெளியானால் நானே அதை எதிர்த்து தோற்கடிக்க உதவியாய் இருக்கின்றேன்” என்று உறுதி சொல்லி தன்னை சேர்த்துக் கொள்ளும்படி செய்து கொண்டதும் யாவரும். அறிந்த ரகசியமேயாகும். இந்த நிலையில் திரு அய்யங்காரை நாயுடு புகழ்வதும் திரு. அய்யங்கார் நாயுடுவைப் புகழ்வதும் இருவரும் சேர்ந்து இந்தியப் பிரதிநிதியாய் ஜினிவாவுக்குச் செல்லும் திரு. செட்டியாருக்கு வேறு
சிலர் நடத்த இருந்த வழியனுப்பு உபசாரத்தைக் கூட தடுத்ததும் ஒரு அதிசயமல்ல.
எனவே தேசீயம் என்பது என்ன என்பதை வெளிப்படுத்த இதை எழுதுகிறோமே ஒழிய செட்டியாருக்கு உபசாரம் இல்லை என்பதற்கு இதை எழுதவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.05.1928
குடி அரசு - 1928 () 246
பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதார்களில் பெரும்பான்மை யோருக்கும் வித்தியாசமிருப்பதாக பார்ப்பனர்களால் சொல்லப்படும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடு வதில்லை என்பதும், பார்ப்பனரல்லாதார் மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பதுமேயாகும். மாம்சம் சாப்பிடுவதிலும், பதார்த்தத்தில் உள்ள குண தோஷங்களைப் பற்றி - அதாவது காய்கறிகளுக்கும் மாமிசத்திற்கும் உள்ள
உருசி குணம் முதலியவைகளைப் பற்றிக் கூட அல்லாமல் - ஒரு ஜீவனை வதைக்கின்றது கூடாது என்பதான ஜீவ ஹிம்சையையே பிரதானமாகக் கருதி சொல்லப்படுகின்றது.
இதை உத்தேசித்தே ஆங்காங்கு ஜீவகாருண்ய பிரசாரமும், கொலை
மறுத்தல் பிரசாரமும், புலால் உண்ணாமை பிரசாரமும் எவ்வளவோ செய்யப்பட்டு வருகின்றன.
இப்படியிருக்க, இந்த நாளில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி தெய்வத்தின்
பேராலும், மதத்தின் பேராலும், மோக்ஷத்தின் பேராலும் ஜீவன்களை வதைத்து கொன்று தின்பதானது மோகஷத்திற்காக செய்யப்படும் காரியமாய் பாவிக்கப்படுகின்றது. என்னே நமது அறிவீனம்! மாமிசம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? பாவமா புண்ணியமா? அவசியமா இல்லையா? என்: பதைப் பற்றிய விவகாரத்தை நாம் இந்த வியாசத்தில் வைத்துக் கொள்ள வில்லை.
“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க” என்கின்ற கொள்கையை மதமாக உடையவர்களும்,
ராமன் நன்றாக வெந்த நல்ல நல்ல மாமிசமாகப் பார்த்து பொறுக்கி எடுத்து சீதைக்குக் கொடுத்தான் என்கின்ற புராணத்தை கும்பிடுவதை மதமாகக் கொண்டவர்களும், எச்சில் மாமிசத்தை, அதாவது தான் கடித்துத் தின்று ரசி பார்த்து பின்பு சிவனுக்கு படைத்து அதனால் மோக்ஷமடைந்த பக்தர்களைப்
பாடி மோக௲்ஷமடைவதை மதமாகக் கொண்டவர்களும், ஆடும், கோழியும், பன்றியும், எருமைக்கிடாவும் அடுக்கடுக்காக கொன்று பூசை செய்ய வேண்டிய கடவுளை கும்பிடுவதை மதமாகக் கொண்டவர்களும், வீணாகப்
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
போவது மனிதனின் பசிக்குதவுவதால் யாருக்கு என்ன நஷ்டம் என்பவர்.
களும், தண்ணீரைக் காய்ச்சி சாப்பிட்டால் அதிலுள்ள பல ஜீவன்கள் சாகின்ற னவாதலால் காய்ச்சாமல் சாப்பிடவேண்டுமென்றும், விளக்கு வைத்தால்
அதில் பல பூச்சிகள் வந்து விழுந்து சாகுமாதலால் இருட்டில் இருக்க வேண்டுமென்றும், மூச்சு விட்டு சுவாசம் உள்ளே இழுத்தால் பல பூச்சிகள் உள்ளே போய் இறந்து போகுமாதலால் வாயையும் மூக்கையும் துணியில்
மூடிக் கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகின்றவர்களும் இருக்கும்போது மாமிசம் சாப்பிடுவது சரியா தப்பா என்பதை சுலபத்தில் முடித்துவிட முடியாது. ஆனால் வேதத்தின் பேரால் கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் ஆடுகளை வதைத்துக் கொன்றது சரியா என்பதுதான் இவ்வியாசத்தின் கருத்தாகும். கசாப்புக் கடைக்காரனோ அல்லது வேறு கீழ்த்தரக் கடவுள் களோ ஜீவன்களை ஒரேவெட்டாக ஒரு வினாடியில் வெட்டிவிடச் செய்கின் றார்கள். ஹிம்சை என்பதை அச்சீவண்கள் ஒரு சிறிதும் அனுபவிப்பதற் கில்லாமல் திடீரென்று வெட்டி விடுகின்றார்கள். ஆனால் யாகத்தின் பேரால் “உயர்ந்த வகுப்பு” பார்ப்பனர்கள் “உயர்ந்த வகுப்பு கடவுளுக்கு” மோக்ஷத் திற்காக உண்ணுவதற்கு பலி கொடுப்பதற்காக செய்யும் கொலையில் மேல் கண்டபடியாவது வெட்டாமல் உயிருடன் விரையை நசுக்கியும் தோலை உரித்தும் வேண்டிய அவயவங்களை உயிருடனிருக்கும் போதே அறுத் தெடுப்பதும் என்றால் எவ்வளவு கொலை பாதகம்- சித்ரவதை - கடுஞ்சித்தம் என்பதை கவனித்து பார்க்கவேண்டும் என்றே வேண்டிக் கொள்ளு கின்றோம்.
ஒரு ஜீவகாருண்ய சங்கமாவது, கொலை மறுத்தல் கூட்டமாவது, சிவனடியார் திருக்கூட்டத்தாராவது இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது இதுவரை பேசினவர்கள் அல்லர். மதமும் கடவுளும் சுயராஜ்மும் எப்படி புரட்டின் மீதே கட்டப்பட்டிருக்கின்றதோ அது போலவே ஜீவகாருண்யமும் கட்டப்பட்டிருக்கின்றததேயொழிய உண்மையான தத்துவத்தின் பேரில் இல்லை. இதுதான் இப்படி புரட்டு இயக்கம் என்றால், ஜீவஹிம்சை நிவாரண சங்கத்தார் அதாவது 5:20.&சங்கத்தார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.அவர்கள் இந்த யாகத்தின் பேரால் கொலை பாதகம் செய்த பார்ப்பனர்களை 520.4. சட்டப்படி நடவடிக்கை நடத்தி ஏன் தண்டித்திருக்கக் கூடாது என்று கேட்கின்றோம். மதத்தின் பேராலும் சுவாமி
யின் பேராலும் செய்யும் காரியங்கள் குற்றமல்ல என்று சொல்வார்களானால், நமது சுவாமிகள் எல்லாவித பாபத்திற்கும் காரண பூதமாகவும் உடந்தை யாகவும் இருக்கின்றது என்பதில் என்ன சந்தேகம். பார்ப்பனர்கள் எது செய்தாலும் அது மோக்ஷத்திற்கும் சுயராஜ்யத்திற்குமாக ஆய்விடுகின்றது. அதே காரியங்களை நம்மவர்கள் செய்வது தேசத் துரோகமும், தெய்வத் துரோகமும் ஆய்விடுகின்றது.
குடி அரசு - தலையங்கம் - 13.05.1928
குடி அரசு - 1928 () 248
நமது கருத்து
“குடி அரசின்” நான்காவது ஆண்டு முதல் இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் பார்த்த நண்பர்கள் பலர் நமது இயக்கத்தைப் பற்றியும் நம் குடி அரசின்” வளர்ச்சியைப் பற்றியும் வாழ்த்துக் கூறி பல கடிதங்கள் எழுதி இருக்கின்றார்கள். உதாரணமாக காரைக்குடி “குமரன்” பத்திரிகையும், அதன் ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியார் அவர்களும், அமராவதிப்புதூர் திரு. பிச்சப்பா சுப்பிரமணிய செட்டியாரும், கானாடுகாத்தான் திரு. வையி. ௬. ஷண்முகம் செட்டியார் அவர்களும், மதுரை, அருப்புக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, நாகப்பட்டணம், கும்பகோணம், மாயவரம், தஞ்சை, திருச்செங்கோடு, மாரண்டள்ளி, அம்பலூர், சென்னை, கொளும்பு முதலிய இன்னும் பல இடங்களிலிருந்து பல நண்பர்களும் எழுதி இருக்கின்றார்கள். அவற்றுள் சிலர் குடி அரசை” லிமிட்டெட் கம்பெனியாய் ஏற்படுத்துவதை. ஆதரித்தும் பலர் அதைத் தடுத்தும் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தை ஒரு தனி ஸ்தாபனமாக்கி அதற்கு வேண்டிய சங்கம், பிரசாரம் காரியஸ்தலம் முதலிய ஏற்பாடுகள் செய்யும் விஷயத்தில் யாவரும் ஒரே அபிப்பிராயமாகத்தான் எழுதி இருக்கிறார்கள். இதை சுமார். ஒருவருஷ காலமாகவே பலர் எழுதி வருகிறார்கள். இவைகளில் மலேயா
நாட்டுக் கடிதங்களே பல. “குடி அரசை” தனித்த முறையில் நமது சொந்த பத்திரிகையாக நடத்துவதில் பொருள் நஷ்டம் ஒன்றுமில்லையானாலும் நம்மால் இனி நிர்வகிக்கக் கூடியதாயில்லை என்பதை நாம் தெரிவித் தாக வேண்டியதாயிருக்கின்றது.
எனவே சுயமரியாதைக் கொள்கை உடையவர்களாகவே சேர்த்து ஒரு லிமிட்டெட் கம்பெனியாக்கி (எந்த மதத்தைப் பற்றியானாலும் சரி) வேதம்,
சாஸ்திரம், புராணம், ஜாதி, மதம் முதலியவைகளில் (எந்த மதத்தில் பிறந்தவர். களானாலும் சரி) அடியோடு நம்பிக்கையில்லாதவர்களாகவும் மனம், வாக்கு, காயங்கள் மூலம் சற்றும் அவை அனுபவத்திலில்லாதவர்களுமான ஒரு கூட்டத்தாரின் சுதந்திரத்தில் ஆசிரியத் தன்மையை விட்டு “குடி அரசும், *ரிவோல்ட்£டும் நடைபெறும்படியான ஏற்பாடு செய்வது மிகுதியும் அவசிய மான காரியம் என்பதே நமது அபிப்பிராயம். “குமரன்” பத்திரிகை எழுதியி
ருப்பது போலும் மற்றும் பல நண்பர்கள் எழுதியிருப்பதுபோலும் வெகு காலமாகவே இம்மாதிரி இயக்கம் நம் நாட்டில் பல தோன்றித் தோன்றி,
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மறைந்து கொண்டே வந்திருக்கின்றதே ஒழிய ஒன்றாவது நிலைத்திருக்கவே யில்லை. இதை நமது எதிரிகளே நன்றாய் சொல்லிக்காட்டி நம்மையும் வெருட்டி வருகிறார்கள். அதாவது “வள்ளுவர், புத்தர் முதலியோர்களின் இயக்கங்களும் இன்னும் எத்தனையோ பேர்கள் முயற்சியும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. அப்படியிருக்க இதை யார் லட்சியம் செய்யப் போகிறார்கள்” என்று சொல்வது போலவே நடந்து வந்திருக்கின்றது. ஆனால் மேல் நாடுகளில் சற்று இவ்வியக்கம் வெகு வேகமாக பரவி வருகிறதாக இப்போது தெரியவருகிறது. நமது நாட்டில் இவ்வியக்கம் வேரூன்றி விட்டதில் சந்தேகமில்லையானாலும் இனி ஒரு ஐம்பது ஆண்டாவது விடாமல் தொடர்ச்சியாய் வேலை செய்தாக வேண்டும். முன்காலங்களில் இவ்வியக்கம் நிலைக்காததற்கும் பலனளிக்காததற்கும் முக்கிய காரணம் என்னவென்றால், அவ்வக் காலங்களில் இருந்த அரசர்கள் வேத, சாஸ்திர, புராண, ஜாதி, மதப் பார்ப்பனர்களின் கைப்பிள்ளைகளாகவே இருந்து வத்ததால்தான். இப்போது உள்ள அரசாங்கம் பார்ப்பனர்களைக் கொண்டு நடைபெறுவதானாலும் வேதம், சாஸ்திரம், புராணம், மதம், ஜாதி என்கின்ற விஷயங்களில் பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்கள் அல்ல. அன்றியும் இவ்விஷயங்களில் அரசாங்கத்திற்கும் உண்மையான நம்பிக்கை கிடையாது. ஏதோ அவர்களது ஆட்சி நிலைத்திருக்க வேண்டியும், இவ்வேத சாஸ்திர:
புராண ஜாதி மதம் அதற்கு அனுகூலமாயிருப்பதாலும் இவற்றை ஒழிக்க அவர்களாக முன்வருவது இல்லையேயல்லாமல் மற்றபடி இவைகளை ஒழிக்கச் செய்யும் இயக்கத்திற்கு வெளிப்படையான எதிரிகள் யில்லை. இது நமக்கு எவ்வளவோ அனுகூலம் என்றே சொல்ல வேண்டும்.
ஆப்கானிஸ்தான அமிரும், துருக்கி கமால் பாட்சாவும், இட்டலி முசோலினியும் ஒரு அளவுக்காவது சுயமரியாதையையும் அறிவையும்
ஆதாரமாக கொண்டு அவரவர்கள் நாட்டை உன்னத நிலைமைக்கு கொண்டு. வந்து காட்டிவரும் உதாரணத்தைக் காண்பவர்களுக்கு நமது இயக்கத்தைப் பற்றிய பயமோ சந்தேகமோ ஒரு சிறிதும் இருக்கத் தேவையில்லை என்றே சொல்லுவோம்.
மற்றபடி தங்கள் இனத்தாரின் சுயநலங்காரணமாகவோ, சில தனிப் பட்டவர்களின் பிழைப்பு காரணமாகவோ, அறிவில்லாத காரணமாகவோ கூப்பாடு போடுபவர்களை லட்சியம் செய்ய வேண்டிய நிலைமையையும் நமது இயக்கம் ஒருவாறு தாண்டிவிட்டதென்று சொல்லலாம். அன்றியும் அவ்வித கூப்பாடுகளால் நமக்கு பலவித நன்மைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆதலால் தொடர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்வதுதான் இப்போது
நாம் செய்ய வேண்டிய வேலையாகும். ஏதேனும் சில நண்பர்களாவது ஒன்று
சேர்ந்து இவ்வியக்கத்திற்கு ஒரு சங்கமேற்படுத்தி அதை பதிவு செய்து அதன் மூலம் பத்திரிகைகளையும் நடத்த ஏற்பாடு செய்வதே நலம் என்று தெரிவித்
துக் கொள்கிறோம்.
குடி அரசு - 1928 () 250
இதைப்பற்றி சமீபத்தில் தஞ்சை ஜில்லாவில் கூட இருக்கும் மாகாண சுயமரியாதை மகாநாட்டில் ஒரு முடிவு செய்யலாம் என நினைக்கிறேன். அதற்குள் ஏதாவது கடிதப் போக்குவரத்து செய்ய வேண்டும் என்கிற எண்ண முள்ள கனவான்கள் திரு. ஈ.வெ. ராமசாமி என்கின்ற சொந்த விலாசத்திற்கு எழுதிக் கொள்ளலாம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.05.1928
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ub ஷாகரானுனுவின் HADN® சயதம்
ஸ்ரீ வரதராஜுலு நாயுடு 10-ந் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையில் பின் வருமாறு எழுதுகிறார்:-
“சமதர்மம் நிலைபெற உழைப்பதே எனது நோக்கம். இரண்டு வருஷங்களாக எச்சரித்து வந்தேன். நாயக்கர் சீர்படவில்லை. வெற்றி தோல் வியை பற்றி எனக்கு கவலை இல்லை. நாயக்கர் பிரசாரம் தொலைய வேண்டும் அல்லது நான் தொலைய வேண்டும். நான் எதற்கும் துணிந்தவன். என்பது தங்களுக்குத் தெரியும். பிராமணரல்லாதாருக்குள் போராட்டம் வேண்டாமென்றே இதுவரையில் பொறுத்திருந்தேன். இனிமேல் நான்
சும்மாயிருந்தால் அது தேசத்துரோகமாகும். “திராவிடனை”ப் பற்றி கவலை: இல்லை. நாயக்கர் ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தாரென்பதற்காக ஒரு சில நண்பர்கள் அவர் சொல்வதை கேட்கிறார்கள். அந்த தப்பு அபிப்பிராயத்தை போக்குவதே எனது பிரசாரத்தின் நோக்கம். குருக்ஷேத்திர பூமியில் தயங்கி
நின்ற அர்ஜுனனுக்கு துணைபுரிந்த திரு. கிருஷ்ணபகவான் ஒருவரே எனக்குத் துணை. இன்றைய தமிழ்நாட்டு நிலைமை இதுவேயாகும். நாயக்கர்.
பிரசாரத்தில் வந்தவினை இது தான்”.
இது எத்தனையாவது சபதம் என்பதும் இனியும் இது போல் எத்தனை சபதம் பிரசுரம் வெளியாகப் போகிறது என்பதையும் பொது ஜனங்கள் பொறுமையோடு கவனிக்க வேண்டுகிறோம். 30428 தேதி தலையங்கத்தின்
கீழ் பஞ்சம மந்திரி பாதபூஜை செய்வது தனது பாக்கியம் என்றார். இன்று, ஒன்று நாயக்கர் பிரசாரம் தொலையவேண்டும் அல்லது தான் தொலைய வேண்டும் என்கிற பிரயத்தனத்தில் இறங்கி விட்டதாகக் கூறுகிறார். இனி
எதில் இறங்கி விடுவாரோ?
குடி அரசு - செய்தி விளக்கம் - 13.05.4928
குடி அரசு - 1928 () 252
ஸ்தல ஸ்தாயண சட்டத் திருத்தம்
காங்கிரஸ் என்றும், சுயராஜ்யக் கக்ஷி என்றும், தேசீயக் கூட்டம் என்றும் சொல்லப்படுவனவாகிய கூட்டங்கள் மக்களின் அறியாமையாலும் கவலைக் குறைவாலும் நாட்டில் செல்வாக்குப் பெற்றதன் பயனாக நம்நாடு
மிகமிகக் கேவலமான நிலைமைக்கு வந்து விட்டதோடு அதனால் ஏற்பட்ட அரசியல் சுதந்திரங்கள் என்பவைகள் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தை தேடிக் கொடுத்துக் கொண்டு வருவதுடன் நாட்டைப் பிரித்து வைத்து ஏழை மக்களையும் பாமர மக்களையும் வதைத்துக் கொண்டு வருகின்றது. அதாவது
மந்திரி பதவிகளும் நிர்வாக மெம்பர் பதவிகளும் ஐகோர்ட்டு ஜட்ஜ், ஜில்லா
ஜட்ஜ் பதவி முதலியவைகளும் சட்டசபை மெம்பர் ஜில்லா தாலூகா போர்டு தலைமை முதலிய பதவிகளும் இந்திய மக்களுக்குக் கிடைக்க ஆரம்பித்தக் காலம் முதற்கொண்டே அவற்றை எப்படி நாட்டுக்கும் மக்களுக்கும் அனுகூலமாக நடத்துவது என்கின்ற விஷயத்தில் ஒரு சிறிதும் கவலை கொள்ள இடமில்லாமல், அந்த உத்தியோகங்களை யார் வகிப்பது என்பது பற்றியும், எந்த வகுப்பார் அதை ஏக போகமாய் அனுபவித்து வருவது என்பது பற்றியுமே கவலை கொண்டு, அதன்மூலம் அடைந்த உத்தியோகங் களை மறுபடியும் தாங்களோ அன்றி தங்கள் பின் சந்ததியாரோ அல்லது இனத்தார்களோ நிரந்தரமாய் அனுபவிக்க மார்க்கம் செய்து கொள்ளுவ திலேயே அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டு வந்திருப்பதுடன் நீதியும் நாணயமும் பக்ஷபாதமற்ற தன்மையும் இல்லாமல் கொள்ளைக்கும்
திருட்டுக்கும் புரட்டுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் தாய்வீடாக இருந்தும் வருகின்றது.மந்திரி பதவிகளால் அது ஏற்பட்ட காலம் முதல் கொண்டு இது வரை ஏழை குடியானவர்களின் வரிப் பணத்தில் மாதம் பதினாயிரக்கணக் கான ரூபாய் சம்பளமும் செலவும் ஏற்பட்டதல்லாமல் அதனால் நாட்டிற்கு ஏதாவது பலன் உண்டாயிற்று என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
அதுபோலவே நிர்வாகசபை மெம்பர்கள் உத்தியோகம் இந்தியர் களுக்கு கிடைத்ததன் பலனாக ஏதாவது நன்மை உண்டாயிற்றா என்று பார்த்
தால், சர்.சி.பி. அய்யரின் ஆக்ஷியையும் அப்பதவியில் நாட்டில் ஏற்பட்ட கோர்ட்டுகளையும் அவ்வதிகாரங்கள் ஒரு வகுப்பாருக்கு பெரும்பான்மை யாக வழங்கப்பட்டு அதனால் மற்ற வகுப்பார் நசுக்கப்பட்டதையும் விவ
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
காரத்திற்கு அதிக சிலவேற்பட்டதையும் தவிர வேறு என்ன பலன் வரி
செலுத்தும் பொதுமக்கள் அடைந்தார்களென்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றபடி ஹைகோர்ட் நிர்வாகம் சந்தைக் கடை வியாபாரத்தை விடக் கேவலமாய் பொறுப்பற்று விளங்குவதும் நாளுக்கு நாள் ஜட்ஜுகளின் எண்ணிக்கையும் சம்பளமும் உயருவதும் விவகாரமாடும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து அநேக பழம்பெரும் குடும்பங்கள் தாசி, குடி, சூது இவைகளில் பாழாவதைக் காட்டிலும் எண்மடங்கு விவகாரத்தால் பாழாக்கக் கூடிய மாதிரியாகவும் இருந்து வருகின்றதேயல்லாமல் நியாயம் கிடைக்கும் முறை நாணயமாகவோ யோக்கியமாகவோ சுலபமாகவோ இருந்து வருவ தாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் ஜட்ஜுகளுக்கும் வக்கீல்களுக்கும் உள்ள சம்பந்தமும் ஜட்ஜுகளுக்கும் கவர்னர் சீப் ஜட்ஜுகளுக்கும் உள்ள சம்பந்தமும் எழுதுவது வெட்கக் கேடான காரியம் என்பதே நமது அபிப்பிராயம்.
கலெக்டர் பதவியின் யோக்கியதை சொல்லவே வேண்டியதில்லை என்போம். உதாரணமாக ஒரு தண்டுவப் பார்ப்பனக் கலெக்டரின் நடத்தை சகிக்க முடியாததாயிருந்தும் கேள்வி கேட்பாடு இல்லாமல் பெரிய தர்பாராய் இருந்து வருகின்றது. தினமும் ஒரு பெண் வீதம் கீழ் அதிகாரியோ குமாஸ்தாவோ, கட்சிக்காரனோ சப்ளை செய்து தீரவேண்டும். அவர் ஆசைப் பட்ட குமாஸ்தா பெண்ஜாதி அவசியம் சப்ளை செய்தாக வேண்டும். இல்லா விட்டால் குமாஸ்தா வீட்டில் கல்லு போடுவதும் காலித்தனம் செய்வது மாகிவிடும். ஜில்லா சூப்ரண்டுக்கு விண்ணப்பம் போட்டால் அவரும் அடக்கி விடுகின்றார். நிருவாக சபை மெம்பருக்கு விண்ணப்பம் மகஜர் முதலியவை
கள் அனுப்பினால் அவரும் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகின்றார். இவரைப் பற்றிய கதை மற்றும் அநேகம் உண்டு. இதுபோல் இன்னும் சில கலகங்கள் ஐரோப்பியர்களிலும் உண்டு அவர்கள் மாற்றப்படும் ஊர்களுக்கு எல்லாம் (சுற்றுப்பிரயாணம்) சர்க்யூட் போகும் இடங்களுக்கெல்லாம் கீழ் அதிகாரியையோ குமாஸ்தாவையோ சம்சார சகிதம் கூட்டிக் கொண்டு போகின்றவர்களும் உண்டு. அவர் கூட சம்சார சகிதம் போகக் கூடியவர். களுக்கே சீக்கிரம் மேலுத்தியோகங்கள் கிடைப் பதும் அதற்கு சம்மதிக்காத வர்கள் எவ்வளவு யோக்கியர்களானாலும் அப்படியே இருப்பதுமான விஷயங்கள் எவ்வளவோ பார்க்கின்றோம்.
சட்டசபை மெம்பர்கள் யோக்கியதை அறியாதவர்கள் இருக்க முடியாதென்றே சொல்லுவோம். ஒவ்வொருவரும் தேர்தலுக்கு 1000, 10000, 50000 வரை ரூபாய்களை லஞ்சமாகவும் கூலியாகவும் செலவாகவும் செலவு செய்து பாமர ஓட்டர்களுக்குப் பணமும் கள்ளு சாராயமும் கொடுத்து
குடி அரசு - 1928 () 254
உபாத்தியாயர்கள் கிராமாதிகாரிகள் முதலிய தரகர்கள் மூலம் ஓட்டுப் பெற்று மெம்பராகி சிலர் கட்சிகளை உண்டாக்கியும் சிலர் கட்சிகளில் சேர்ந்தும் அங்கத்தின் பதவியை தங்களுக்குப் பதவியும் உத்தியோகமும் கிடைக்கும் வகைகளுக்கு ஒரு சிறிதும் நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இல்லாமல் உபயோகித்து மக்களின் நலத்தில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் எவ்வெவ் வழிகளில் மக்களுக்கு விரோதமாகவும் வெள்ளைக்காரர்களுக்கு அனுகூல
மாகவும் நடக்கக் கூடுமோ அவ்வளவு வகையிலும் நடந்து சுயநலத்தை கவனிப்பதல்லாமல் வேறுண்டோ? என்று கேட்கின்றோம்.
ஸ்தல நிர்வாகம்
ஜில்லா போர்டுகளின் நிலை மிக மிக பரிதபிக்கத் தகுந்தது. ஒரு மெம்பருக்காவது ஜில்லா போர்ட்டு எதற்கு ஆக ஏற்பட்ட தென்பதே தெரியாது. ஜில்லா போர்டு மெம்பர்களில் பெரும்பான்மையோர் இப் பதவிகளை தங்களுக்கு ஒரு பெருமைக்காக விரும்புகிறார்களே ஒழிய தங்கள் கடமையை அறிந்தவர்களாகவாவது அதில் கவலை உள்ளவர் களாகவாவது இருக்கின்றார்களா?'
ஜில்லா போர்டு தலைவர்களும் தாங்கள் எப்படி இந்த உத்தி யோகத்தில் நிரந்தரமாய் இருப்பது என்று அஸ்திவாரம் போடுபவர்களும் சட்டசபை மெம்பர் பதவி பெற இதை உபயோகித்துக் கொள்ளலாம் என்று இருப்பவர்களுமல்லாமல் ஜில்லா போர்டு வேலையை கவனிக்க வேண்டிய வர்கள் மிகவும் அருமையாகவே இருக்கின்றார்கள். அனேக போர்டுகளில் பிரசிடெண்டோ அல்லது மெம்பர்களோ அல்லது அவர்களுக்கு வேண்டிய வர்களோ தான் கன்றாக்டராயிருந்து வருகிறார்கள்.
தாலூக்கா போர்டுகளின் நிலைமையும் கேவலமாகவேதான் இருந்து வருகின்றது. அங்கு நடக்கும் தேர்தல்களும் கன்றாக்ட்களும் உபாத்தியாயர்.
களின் மாற்றங்களும் மெம்பர்களின் சுயநலங்களும் சிறிதாவது யோக்கிய மானதென்று சொல்லமுடியாததாகவே பெரும்பான்மை இருந்து வருகின்றது.
முனிசிபல் சேர்மென்களோ இவர்கள் எல்லாரையும் விட மோசமான வர்களாகவே இருந்து வருகின்றனர். தேர்தல் அதிகாரத்தில் சேர்மென்கள் செய்யும் அயோக்கியத்தனங்கள் கணக்கிலடங்காது என்போம். தமக்கு வேண்டாத பேர்களை ஓட்டர் லிஸ்டில் சேர்ப்பது கிடையாது.
தனக்கு வேண்டிய அன்னக் காவடிகள் எல்லோரையும் கையில் இருந்து பத்துப் பத்தணா கொடுத்து ஓட்டர்களாக்கிக் கொள்வது.
தேர்தல் நியமனச் சீட்டை வாங்கி கிழித்து எரிந்து விடுவது.
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தேர்தல் நியமனத்தை நாமினேஷன் ஸ்லிப்பை! வித்திட்றா செய்து கொண்டதாக போர்ஜரி காகிதம் எழுதி வைத்துக் கொண்டு தள்ளி விடுவது, அனாவசியமான காரணத்தால் தேர்தல் நாமினேஷன் சிலிப் நியமன விண்ணப்பத்தை) செல்லுபடியற்றதென்று சொல்லித் தள்ளிவிடுவது.. கட்டாயப்படுத்தி பயமுறுத்தி ஓட்டு வாங்குவது.
ராத்திரியில் பெட்டியை உடைத்து ஓட்டுகளைத் திருத்துவது.
அனாவசியமாக ஓட்டுகளை செல்லுபடி அற்றவை (இன்வாலிட்) களாக்குவது.
அதிக எண்ணிக்கை பெற்றவனை விட்டு விட்டு குறைந்த எண்ணிக்கை உள்ளவனை (டிக்ளேர்! கவுன்சிலராக்குவது.
அப்படி கோர்ட்டுக்கு போனாலும் முனிசீப்புக்கு லஞ்சம் கொடுத் தலில் ஏறிய கை தான் ஜெயிக்கும்.
ஹைகோர்ட்டுக்கு போய்விட்டாலோ ஒரு குமாஸ்தாவுக்கு 10ரூ. கொடுத்து விட்டால் தப்பாக கவுன்சிலரானவரின் காலாவதி முடிவுவரை கேசு வெளிவருவதில்லை. சேர்மெனின் நிர்வாகமோ, குமாஸ்தாக்கள் உபாத்தி யாயர்கள் முதலியவர்களின் சம்பளத்தில் பங்கு. கண்ட்ராக்டில் முதலிலேயே அட்வான்ஸ் என்று செக் எழுதி தானே பணம் எடுத்துக் கொள்வது. கண்ட்ராக்
டர் கொடுத்த டெண்டருக்குமேல், தான் ரேட்டை உயர்த்தி டெண்டரை திருத்தி பணம் கொள்ளை அடிப்பது.
கவுன்சிலர்களுக்கு பங்கு கொடுப்பது, கலக்டர்களுக்கு சப்ளை செய்வது.
கலெக்டருக்கும் கவர்னருக்கும் வேண்டிய பாதிரிகளுக்கு குலா மாய் இருந்து முனிசிபாலிட்டி பணத்தையும் மிஷின்களுக்கு அள்ளிக் கொடுப்பதும், பல பெண் உபாத்தியாயர்களை சேர்மெனும் கவுன்சிலர்களும் படிப்பு நிர்வாக அதிகாரியும் குமாஸ்தாக்களும் பஞ்ச பாண்டவர்கள் போல் முறை வைத்துக் கொள்வது. தனக்கு 1000ரூ. கிடைப்பதற்கு முனிசிபா
லிட்டியில் 5000ரூ. வேலைகளை இடித்து குமாஸ்தாக்களுக்கும் கவுன்சிலர்: களுக்கும் 100ரூபா கண்ட்ராக்ட் விட்டு விட்டு புதிதாக 7000 ரூபாயுக்கு கட்டிடம் கட்டுவது. கட்டிடங்களையும், இடங்களையும் முனிசிபாலிட்டியின் அவசியத்திற்கு என்று 1000 ரூபாய் பெறுமானதை 8000க்கு விலை பேசி சேர்மென் 5000ரூ. எடுத்துக் கொண்டு இடக்காரனுக்கு 3000 கொடுப்பது.
குடி அரசு - 1928 () 256
இடக்காரன் அந்தப் பணத்தில் மானேஜருக்கும் சர்வேயருக்கும் ஓவர்சியருக்கும் ஆளுக்கு ரூ.100 கொடுப்பது.
பொய் பில் எழுதி பணம் எடுத்துக் கொள்வது. ரிகார்ட்டுகளை திருத்துவது. தனது ஆள்களுக்கு வேலை கொடுக்க புது உத்தியோகங்களை உண்டாக்குவது.
ஆறுமாதம் ஏழுமாதம் மீட்டிங்கு போடாமல் இருப்பது. தனக்கு வேண்டாத கவுன்சிலரை மூன்று மாதம் வரவில்லை என்று தள்ளிவிடுவது..
கடிகாரத்தை திருப்பி வைத்து முன்னால் வந்து தனக்கு வேண்டிய வர்களை வைத்து வேண்டியபடி எழுதிக் கொண்டு போய்விடுவது.
தீர்மான புஸ்தகங்களில் வரி பிளந்தும் திருத்தியும் புது தீர்மானங் களையும் அதிகப் பணத்தையும் சாங்ஷன் செய்ததாக செய்து கொள்வது.
இவைகளை கலெக்டரிடம் சொன்னால் மந்திரிகளை கேட்கச் சொல்லுவது.
மந்திரிகளிடம் சொன்னால் கோர்ட்டுக்குப் போகச் சொல்லுவது. கோர்ட்டுக்குப் போனால் முன் லஞ்சம் கேட்பது.
இன்னமும் இது போல் நடக்கும் அக்கிரமங்கள் எண்ணத் தொலை யாது என்றே சொல்லுவோம்.
இந்நிலையில் சர்க்கார் ஸ்தல ஸ்தாபன சட்டத்தை திருத்தப் போவதாக பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது.
அத் திருத்தங்களில் ஏதாவது பலன் ஏற்படும் என்பதாக நாம் சொல்வதற்கில்லை..சர்க்கார் ஸ்தல ஸ்தாபனங்களில் யோக்கியமான திருத்தம் செய்ய நினைப்பார்களானால் முனிசிபாலிட்டி, தாலூக்கா போர்டு, ஜில்லா போர்டு இம் மூன்றையும் உடனே எடுத்துவிட்டு ரிவினியூ அதிகாரிகள் வசம் ஒப்படைத்து விடவேண்டும். அப்படிச் செய்வதில் வரி கொடுப்போர்களுக்கு அநேக நன்மைகள் உண்டு.ஆனால் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளத்
தக்க பக்குவம் இது சமயம் நமது மக்களுக்கு போதாது. ஆதலால் இது சமயம்
எதையும் கலைக்க வேண்டியதில்லை.
மற்றபடி நிர்வாகத்திற்கு சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து விட வேண்டும்.
ஜில்லா போர்டுக்கு ஒரு சப் கலெக்ட்டரும் தாலூக்கா போர்டுக்கு ஒரு
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தாசில்தாரும் முனிசிபாலிட்டிக்கு ஒரு டிப்டி கலெக்ட்டரும் ஆக 35 வயது முதல் 45 வயதுக்கு மேல் படாத உத்தியோகஸ்தர்களை சம்பளம் கொடுத்து நிர்வாக உத்தியோகஸ்தராக நியமித்து விடவேண்டும்.
இரண்டு வருஷத்திற்கு மேல் ஒருவர் அதில் இருக்கக் கூடாது.
கவுன்சிலர்களும் சேர்மேனும் பிரசிடெண்டும் தீர்மானம் நிறை வேற்றிவிட்டுப் போய்விடவேண்டும். சிப்பந்திகள் நியமிப்பதோ வேலை
கள் கண்ட்ராக்ட் கொடுத்து நடத்துவிப்பதோ ஆபீசு நிர்வாகமோ எக்ஸிக்யூ
டிவ் ஆபீசர் என்கின்ற மேற்படிநிர்வாக உத்தியோகஸ்தருடைய பொறுப்பாய் இருக்க வேண்டும். நாமிநேஷன்கள் இருக்கக் கூடாது. ஆறு வருஷத்திற்கு ஒரு முறை தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
காலி ஏற்பட்டால் கவுன்சிலர்களே நியமித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தேர்தல்கள் அடிக்கடி ஏற்பட்டு ஊருக்குள் அடிக்கடி கலவரங்
கள் ஏற்படக் கூடாது என்பதுதான். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படும் வரையில் மகமதியர், கிறிஸ்துவர், ஆதிதிராவிடர், பார்ப்பனர் ஆகிய தனிப்பட்ட வகுப்புக்கு தனித் தொகுதி ஏற்படுத்திவிட வேண்டும்.
தேர்தல்களில் எந்தக் காரணத்தைக் கொண்டும் சேர்மேனோ தலை வரோ பிரவேசிக்க இடம் கொடுக்கக் கூடாது. ஓட்டர்களை குறைப் பதானாலும் குறைத்துக்கொள்ளலாம். அல்லது வரி கொடுக்க லாயக்குள்ள வர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை கொடுக்கலாம். ஆனால் வரி பாக்கி உள்ளவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்கிற முறை கூடாது.
ஏனென்றால் சமயத்துக்கு பணம் கையில் இல்லாத காரணத்தால் உரிமை இழக்க இடம் கொடுக்கக் கூடாது. இம் மாதிரி ஸ்தல ஸ்தாபனங்கள்
ஜனப் பிரதிநிதித்துவம் பொருந்தியதல்ல என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதன் இலாக்கா நிர்வாகம் ஜனப் பிரதிநிதி என்று சொல்லப்பட்ட மந்திரியின் ஆட்சியின் கீழ் இருப்பதாலும் நிர்வாக உத்தியோகஸ்தர்களை ஸ்தல ஸ்தாபனங்கள் தங்கள் பொறுப்பில் கடன் வாங்கிக் கொள்வதாலும்
ஜனப் பிரதிநிதித்துவம் மாறுவதில்லை.
நிர்வாக உத்தியோகஸ்தர்கள் சம்பளமானது வருஷம் ஒன்றுக்கு ஜில்லா போர்டுக்கு ரூ.2000 தாலூக்கா போர்டுக்கு ரூ.5000 முனிசிபாலிட்டிக்கு ரூ.6000 ஆகக் கூடும். இந்த செலவுகள் இந்த ஸ்தாபனங்களின் யோக்கியதைக்கு அதிகம் என்று சொல்ல முடியாது.
இப்போதைய கவுரவ தலைவர்கள் தாக்ஷணியத்தாலும் போதிய
குடி அரசு - 1928 () 258
சாவகாசம் இல்லாததாலும் மற்றும் பல காரணங்களாலும் அந்தந்த ஸ்தாபனங் களுக்கு ஏற்படும் நஷ்டம் இதைப் போல இரண்டு மடங்கு மூன்று மடங்கு சில இடங்களில் நான்கு மடங்கும் ஆகின்றன.
தலைவர்கள் நாணயக் குறைவில் நஷ்டமாவது கணக்கே இல்லை. தவிர ஜில்லா தாலூக்கா, முனிசிபாலிட்டி தலைவர்கள் சட்டசபைக்கு நிற்கக் கூடாது என்கின்ற நிபந்தனை இருப்பது நலமாகும். ஏனெனில் இதை உத்தேசித்து எவ்வளவோ ஒழுங்குத்தவறுதல் ஏற்படுவதோடு தனக்குத் தானே எஜமானனாகியும் ஆகிவிடுகிறார்கள். கீழே அக்கிரமங்கள் செய்து விட்டு மேலே சட்டசபையில்) தாங்களே இருந்தால் அதனால் நியாயம் கிடைக்காமல் போய்விடும்.
எனவே, தற்கால ஸ்தல ஸ்தாபனங்களில் இவ்வளவாவது சீர்திருத்தம் ஏற்பட்டாலொழிய அவை ஒழுங்காக நடைபெறும் என்றாவது மக்களை யோக்கியமாக இருக்கும்படி செய்யும் என்றாவது சொல்வதற்கில்லை.
தாலூகா போர்டை எடுத்து விடுவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. மற்ற ஸ்தாபனங்களையும் எடுத்து விடுவதிலும் நமக்குக் கவலை இல்லை. கொஞ்ச காலத்திற்கு சட்டசபையை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்ற ஜனப்பிரதிநிதி ஸ்தாபனங்களை எடுத்துவிட்டு சட்டசபையிலுள்ள ஜனப்பிரதிநிதி மந்திரிகளுக்கு அதன் தணிக்கையை விட்டுவிட்டால்
நாட்டிற்கு எவ்வளவோ நன்மையும் ஒற்றுமையும் உண்டாகுமென்பதே நமது
முடிவு.
ஏனெனில் இப்போதைய நிலையில் தேர்தல் முறையானது நமது நாட்டிற்கு எமனாய் இருக்கின்றதுடன், நாட்டு நலத்தின் பொறுப்பை. அரசாங்கத்தார் நமது தலையில் போட்டு நாட்டைச் சுரண்டும் வேலையை மாத்திரம் அவர்கள் வைத்துக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார்கள். நாம் சரியானபடி வேலை செய்தாக வேண்டுமானால் அப்பொறுப்பு அவர்கள் தலையிலேயே இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை.
அதாவது இப்பொழுது அவ்வளவு வரிகளைக் கொடுத்துவிட்டு ஏதாவது காரியங்கள் கேட்டுப் போனால் நாம்தான் ஒருவரை ஒருவர் குடுமியைப் பிடித்துக் கொள்ளும் மாதிரியில் அரசாங்க முறை இருக்கின்றதே தவிர ஆட்சி புரிபவர் நேரில் ஜவாப்தாரியாயிருப்பதற்கில்லாமல் இருக்கின்றார்கள்.
நம்மவர்கள் செய்யும் அக்கிரமங்களை கவனிக்க ஆரம்பித்தால் ஜாதியும், கட்சியும், சுயநலமும் குறுக்கிட்டு காரியங்களை அதிகமாகக் கெடுத்து விடுகின்றதைத் தினமும் பார்த்து வருகின்றோம். எனவே நமக்குத்
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தணிக்கை செய்யும் அதிகாரமும், வெள்ளையருக்கு வேலை செய்யும் கடமையுமுடையதாக நமது சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் மேல்கண்ட நமது அபிப்பிராயத்தின் தத்துவமாகும்.
குடி அரசு - தலையங்கம் - 20.05.1928.
குடி அரசு - 1928 () 260
ஏன் இன்வனவ ஆத்திரம்?
திரு. வரதராஜுலுவுக்கு கொஞ்ச காலமாக ஒருவித பயமும் நடுக்க
மும் ஏற்பட்டு, அதனால் மூளை கலங்கி, எப்போது பார்த்தாலும் சுயமரியாதை இயக்க ஞாபகமும் கவலையும் ஏற்பட்டு, கனவிலும் சுயமரியாதை இயக்கம் என்கின்ற பேச்சைக் கேட்டால் நடுங்குவதாகத் தெரியவருகிறது.
இதனாலேயே அவரது எழுத்தும் பேச்சும் எப்போது பார்த்தாலும் “சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும்” என்றும், “அதைத் தொலைப் பதே தேசீய வேலை” என்றும் “ஒன்றா சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும், இல்லாவிட்டால் நானாவது (அதாவது தானாவது) தொலைய வேண்டும்” என்றும் “இதற்காக பதினாயிரக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி வைத்திருக்கிறேன்” என்றும் “இந்த வேலையில்தான் மிகவும் முனைந் திருப்பதாகவும் இதற்கு தேசீயவாதிகள் உதவி செய்ய வேண்டும்” என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்.
அல்லாமலும் பொது ஜனங்களும் இந்த சுயமரியாதை இயக்கத்தை தெரியாத்தனமாக ஆதரிப்பதாகவும், இதனால் பெரிய ஆபத்து நேரிடப் போகின்றதென்றும் எழுதிவிட்டு கடைசியாக சுயமரியாதை இயக்கப் பிரசாரம் நடைபெறுவதால்தான் பார்ப்பனரல்லாதாரியக்கத்தையே தான் அழிக்க வேண்டியிருப்பதாகவும் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்தவிடம் தெரியாமல் போக நேரிடுமென்றும் பயமுறுத்தி எழுதியும்
பேசியும் வருகிறார். முடிவாக “திராவிடனை'ப் பற்றிக் கூட தனக்கு கவலை யில்லை என்றும் நாயக்கரையும் “குடிஅரசை"யும் ஒழித்தாலல்லது தேசியம் உருப்படியாகாதென்பதாகவும் எழுதிவிட்டு இறுதியாக அர்ஜ்ஜுணனுக்கு துணை இருந்த கிருஷ்ண பகவானே தனக்கு இக்காரியத்தில் துணை என்றும். சொல்லி முறையிட ஆரம்பித்து விட்டார். இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலு சாதித்து விடுவதைப் பற்றியும் அவர் புதிதாக சிபார்சு பிடித்திருக்கும் கிருஷ்ண பகவான் துணைபுரியப் போவதைப் பற்றியும் பின்னால் பேசிக் கொள்ளலாம்.
“கையால் ஆகாதவனுக்கு கடவுள் துணை” என்பது போலவும் “சாகப் போகிறவனுக்கு சாமி துணை என்பது போலவும் தன் சக்தியெல்லாம் முடிந்து
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
விட்டதாகதானே தீர்மானித்துக் கொண்டு சாமியைத் துணைக்கு கூப்பிட ஆரம்பித்து விட்டார்.
நிற்க, ஸ்ரீ வரதராஜுலு இவ்வளவு ஆத்திரமும் கவலையும் சாமியிடம் முறையீடும் அழுகையும் அழுவதற்கு சுயமரியாதை இயக்கம் இவரை என்ன செய்துவிட்டது என்பதை முதலில் யோசிப்போம்.
சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான பிறகு பார்ப்பன ஆதிக்கத்திற்கு. ஆதாரமான அரசியல் புரட்டு, மதப் புரட்டு, தெய்வப் புரட்டு முதலிய புரட்டு கள் வெளியாகி இவைகளின் மூலம் பார்ப்பனர்களுக்குள்ள செல்வாக்குகள் சிறிதளவாவது குறையத் தலைப்பட்டதே ஒழிய ஸ்ரீ வரதராஜுலுக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
ஸ்ரீ வரதராஜுலுக்கு ஏதாவது குறை ஏற்பட்டிருக்குமானால் அவரது பத்திரிகை வீழ்ச்சி பெற்று சற்று வரும்படி குறைந்திருக்கலாம். அதோடு மின்சார மருந்து வியாபாரமும் சற்று குறைவு பட்டிருக்கலாமேயல்லாமல் அவர் கவலைப்படத்தக்க அளவு குறை ஏற்பட்டிருக்க நியாயமில்லை. மேல்கண்ட இரண்டிற்கும் கூட தனது முட்டாள்தனம் காரணமா அல்லது சுயமரியாதை இயக்கம் காரணமா என்பதை ஸ்ரீ வரதராஜுலு நிதானமாக யோசித்துப் பார்த்திருந்திருப்பாரானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அவர் இவ்வளவு பயமும் ஆத்திரமும் பட வேண்டிய காரணம் ஏற்பட்டிருக் காது. ஸ்ரீ வரதராஜுலு நினைப்பது போலும் எழுதுவது போலும் பத்திரிகையிலும் மின்சார ரசத்திலும் அவர் பணம் சம்பாதிப்பதைப் பற்றி
யாருக்கும் வருத்தமோ பொறாமையோ இருக்க நியாயமே இல்லை. ஏனெ
னில் ஸ்ரீவரதராஜுலுவைவிட மோசமான வழியில் எத்தனையோ பார்ப்ப னர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டும்,
விட்டுக் கொண்டும் தான் வருகின்றோம். அப்படியும் பாவம் ஸ்ரீ வரதராஜுலு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்கதான பெரும் பணம் ஒன்றும் சம்பாதித்து விடவுமில்லை என்பது நமக்குத் தெரியும். கடைசியாக அவர் குடியிருக்கும் வீடாவது அவருக்கு மிஞ்சுமா என்பது மிகவும் கவலையோடு கவனிக் கத்தக்க விஷயமாகும். தினசரி பத்திரிகை ஆரம்பித்த காலம் முதல் கொண்டு வாரப் பதிப்பில் வந்து கொண்டிருந்த சுமார் மாதம் 400 ரூபாயும் உள்ளே
இழுத்துக் கொண்டதானது அவரது வரவு சிலவு கணக்கை பார்த்தாலேயே
தெரியும்.
மின்சார விற்பனை லாபந்தான் அவரது ஜீவனத்திற்கு வழியாய் இருப்பது. அதுவும் மலாய் நாட்டில் மாத்திரந்தான் தக்கபடி விற்று வந்தது. அதாவது மாதம் 1-க்கு 500 ரூபாய் அல்லது 600 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்படி விற்பனையாகி வந்தது.
குடி அரசு - 1928 () 262
இது அவர்கள் செலுத்திவரும் இன்கம்டாக்ஸ் கணக்கு மூலமே தெரியலாம். இந்த 500,600 ரூபாயும் சரியானபடி மீத்தாமல் தன்னைப் பெரிய பிரபு என்று பிறர் நினைத்துக் கொள்ளவேண்டும் என்கிற பைத்தியக் காரத்தனமான ஆசையால் அவ்வளவுக்கும் சரியான செலவை வைத்துக் கொண்டார். ஆகவே கொஞ்ச காலமாக வரவும் செலவும் சரியென்று சொல்ல வேண்டுமேயல்லாமல் வேறில்லை. மேல்கொண்டு ஏதாவது சொல்ல வேண்டுமானால் அச்சடிக்கும் ஈயமும் தண்டவாள இரும்புந்தான் மீதி என்று சொல்ல வேண்டும். அதிலும் முற்றும் பலருடைய பங்குத் தொகைகளும் இருக்கின்றன. இந்நிலையில் ஸ்ரீவரதராஜுலுவின் மீது பொறாமைப் படுவதெதற்கு என்பது விளங்கவில்லை.
இவர் பத்திரிகையின் வீழ்ச்சிக்கு காரணம் “குடி அரசும்” நாயக்கர் பிரசாரமுமா? அல்லது ஸ்திர புத்தியும் நிலையும் இல்லாமல் அடிக்கடி பச்சோந்தி போல் மாறி மாறி வந்தது காரணமா? என்பதை யோசித்தால் ஸ்ரீவரதராஜுலுவுக்கே உண்மை விளங்காமல் போகாது. இவர் தினசரிப் பத்திரிக்கை ஆரம்பித்த தினமேதான் சுதேசமித்திரன் அடிச்சுவட்டை பின் பற்றி நடக்கப் போவதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டதால் அது தலை எடுக்க முடியாமல் போனதோடு வாரப் பதிப்பையும் சந்திக்கு கொண்டுவந்து விட்டுவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களை ஏமாற்றி
வந்தாலும் வாரப்பதிப்பு லாபத்தாலும் கொஞ்ச காலம் நஷ்டம் இல்லாமல் நடத்திவர முடிந்தது. பத்திரிகை எண்ணிக்கையின் உண்மையை அறிந்த சில விளம்பரக்காரர்கள் விழித்துக்கொண்டதால் இப்போது நஷ்டமேற்பட்டி ருக்கலாம். அதற்கு யார் என்ன செய்யக்கூடும்? விளம்பரம் கொடுக்கும் வியாபாரிகளையும் ஏமாற்ற சர்க்கார் அறிக்கையில் தனது பத்திரிகை 6000 வெளிப் போவதாக உண்மைக்கு மாறாக குறிக்கும்படி ஏற்பாடு செய்தும் வெற்றிபெற்றார். ஆனாலும் அவ்வெண்ணிக்கை இருந்ததாக குறித்த
காலத்தில் இவர் தினசரிப் பத்திரிகையே ஆரம்பிக்கவில்லை என்பது வெளியானவுடன் அவ்வறிக்கையும் உள் நாட்டில் பிரயோஜனப்படாமல் போய்விட்டது. ஆனால் வெளிநாட்டிலும் மேல்நாட்டிலும் சற்று இப்புரட்டு செலாவணியாகிக் கொண்டு வருகிறது என்று சொல்லலாம். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. அவ்வறிக்கையில் “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகளைப் பற்றி தாழ்வாக எழுதச் செய்யாமல் இருந்திருக்குமானால், அவ்வறிக்கையின் புரட்டைக் கூட வெளியாக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.
இந்நிலையில் ஸ்ரீவரதராஜுலு மற்றவர்கள் பேரில் சங்கடப்பட்டு
ஆத்திரப்படுவதில் என்ன பலன்? “குடி அரசோ” நாயக்கர் பிரசாரமோ வலு
வில் எப்போதாவது ஸ்ரீ வரதராஜுலுவைப் பற்றி ஏதாவது வம்பிழுத்திருக் கிறதா? அல்லது வாழ்வை வெளிப்படுத்த வந்ததா?
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ஸ்ரீ வரதராஜுலுவின் போக்கை ஸ்ரீ நாயக்கர் கண்டித்ததற்காக ஒரு
காலத்தில் (10.8.25ல்ஸ்ரீ வரதராஜுலு ஸ்ரீ நாயக்கருக்கு எழுதிய கடிதத்தின் ஓர்பாகத்தில் எழுதியிருப்பதாவது:-
..“.. என்னை விட தாங்கள் வயதிலும், அனுபவத்திலும், தியாகத்திலும் சிறந்தவர்கள். நான் ஏழை, தங்களைப் போன்றவர் களின் தேச சேவையைப் பார்த்து நானும் தேச ஊழியத்தில் ஈடு பட்டவன் .
என்று எழுதிய கடிதத்திற்கு அப்போதே ஸ்ரீ நாயக்கர் எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் :
“தங்கள் சுய நன்மையின் பொருட்டுத் தாங்கள் நடந்து கொள்ளும் எவ்வித காரியத்திலானாலும் என் போன்ற தனிப்பட்ட நபர்கள் விஷயத்தில் கெடுதி உண்டாகும்படியாக தாங்கள் செய்யும் எவ்வித காரியத்தைப் பற்றி யானாலும், நான் எவ்வித கவலையும் எடுத்துக் கொண்டதுமில்லை; இனியும் நானாவது என்னைப் போன்ற எனது நண்பர்களாவது எடுத்துக் கொள்வதாக உத்தேசமுமில்லை. தங்கள் நிலையையும் பலக்குறைவையும் நன்றாய் அறிந்தே அதற்காக எவ்வளவோ இடம் (Margin) விட்டுக் கொண்டுதான் வந்து உள்ளது. ஆனால் சமூகத்தையே அடியோடு காட்டிக் கொடுத்து காலம் தள்ள இனி ஒருக்காலும் ஒருப்படப் போவதில்லை. இதற்காக தாங்கள் வருத்தப்படுவதிலும் பிரயோஜனமில்லை.
தங்கள் தேச சேவையின் உத்தேசம் எதுவானாலும், தங்கள் சுய
ராஜ்யத்தின் கருத்து எதுவாயிருந்தாலும், எனது தொண்டிற்கும் அதன் கருத்துக்கும் தங்கள் ஒத்துழைப்பும் இருந்தால் நல்லது என்பது எனக்கு தெரியும். ஆனால் முடியாவிட்டால் என்ன செய்வது. ஆன வரையில் ஆகட்டுமென்று செய்ய வேண்டியதுதான். தங்களுக்கு தைரியமிருந்தால் இனியும் ஒத்துழைப்புக்கும் தங்கள் உத்தேசம் நிறைவேறுவதற்கும் இடமிருக்கின்றது. நான் இதை ராஜதந்திரமாக எழுதவில்லை. மனதில் உள்ளதை அப்படியே வைத்திருக்கிறேன் என்று தாங்கள் நம்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.”
என்று ஸ்ரீ நாயக்கர் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற சமயங்களிலும் இது போலவே எழுதிய கடிதங்களும் எழுதச் செய்த கடிதங்களும் இருக்கின்றன.
இந்நிலையில் யார் மீது யாருக்கு பொறாமையோ துவேஷமோ இருக்கக் காரணம் ஏது? நிற்க,
குடி அரசு - 1928 () 264
ஸ்ரீ நாயுடுவின் தேசீயம் என்பதுதான் என்ன என்பதாக இதுவரை யாராவது அறியக்கூடியதாக இருக்கின்றதா? அதற்கு என்ன கொள்கை என்பதாகவாவது தெரிவிக்கக் கூடியவராக அவர் இருக்கிறாரா? அதனால் இதுவரை மக்கள் அடைந்த பலன் இன்னது என்பதாகவாவது எதையாவது அவர் காட்டக்கூடுமா?
தேசீயத்தின் பேரால் பிழைக்கின்ற பார்ப்பனரல்லாதார் யாரைப் பற்றியும் நாம் அதிக கவலை எடுத்துக் கொள்வதே இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் எல்லோருக்குமே அதனால் பிழைப்பு நடக்கும்போது பார்ப்பனரல்லாதார் சிலருக்கும் அதனால் பிழைப்பு நடப்பதில் நமக்கு பிரமாதமான கெடுதி ஒன்றும் இல்லை என்பதுதான். அதனால் எந்த பார்ப்பானும் எந்தவித தேசீயத்திற்காகவும் தனது சமூகத்தின் நன்மையை ஒரு சிறிதும் காட்டிக் கொடுத்து பிழைப்பது இல்லை. எந்த “தேசீயப் பார்ப்பானாவது வருணாசிரம மகாநாட்டைப் பற்றியாவது, சங்கராச்சாரி களைப் பற்றியாவது, பார்ப்பனக் கக்ஷி பிரசாரத்தைப் பற்றியாவது, ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுவதைப் பார்க்கின்றோமா?
“தேசீய” பார்ப்பனரல்லாதார்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியை வைவதும் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு விரோதமாகப் பேசுவதுமல்லாமல் வேறு வேலை காங்கிரசிலோ, சுயராஜ்ஜியக் கக்ஷியிலோ, மிதவாதக் கூட்டத்திலோ, தேசீயத்திலோ இருக்கின்றதாக யாராவது காட்ட முடியுமா என்று கேட் கின்றோம்.
ஸ்ரீ வரதராஜுலுவுக்கும், நாயக்கருக்கும் பொறாமையோ துவே ஷமோ இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அது போலவே ஸ்ரீமான்கள்: குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, இரத்தினசபாபதி முதலியார், கந்தசாமிச் செட்டியார், ஆதிநாராயண செட்டியார் முதலிய “தேசீய” திருக் கூட்டத்தார்களைப் பற்றியும் தான் எழுதிவருகின்றோம். இதனால் அவர்களுடன் நாயக்கருக்கோ “குடி அரசுக்கோ ஏதாவது பொறாமையோ துவேஷமோ உண்டா என்று கேட்கின்றோம்.
மற்றும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார், ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், வெங்கிட்டரமணய்யங்கார் முதலிய “காங்கிரஸ் தலைவர்களை”ப் பற்றி எழுதி வருகின்றோமே, அவர்களுடன் ஏதாவது நமக்குபொறாமையோ துவேஷமோ உண்டா என்று கேட்கின்றோம்.
திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரைப் பற்றியும் காஞ்சீபுரம் முதல் அவர் காங்கிரசில் ராஜீனாமா கொடுக்கும் வரை கண்டித்து எழுதி வந்தோமே, அவருக்கும் நமக்கும் பொறாமையோ துவேஷமோ உண்டா என்று கேட்கின்றோம்.
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மற்ற பார்ப்பனரல்லாதார்களையும், அதாவது பனக்கால் ராஜாவின் முட்டாள்தனமென்றும், ஸ்ரீ பாத்ரோ ககஷியை விட்டு மரியாதையாய் விலகிக் கொள்ள வேண்டும் என்றும், ஸ்ரீ தணிகாசலம் செட்டியாரால் கரிக்கும் மானக்கேடு என்றும் எழுதினோமே அவர்கள் பேரில் பொறாமையும் துவேஷமுமா என்று கேட்கின்றோம்.
டாக்டர். சுப்பராயன் அவர்களை மந்திரியானது முதல் பார்ப்பன ரல்லாதார் நன்மைக்கு திரும்பு மட்டும் வெளுத்துக் கொண்டு வந்தோமே, அவர் மீது நமக்கு பொறாமையும் துவேஷமுமா என்று கேட்கின்றோம்.
திரு. ராமலிங்கம் செட்டியாரையும் திரு. ஷண்முகம் செட்டியாரையும்
கண்டித்து எழுதி வந்தோமே. அப்பொழுது அவர்களுக்கும் நமக்கும் துவேஷமும் பொறாமையுமா என்று கேட்கின்றோம்.
கோயம்புத்தூர் மகாநாட்டில், கவர்னர் துரையை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து அவரை கண்டித்தோமே அப்பொழுது கவர்னரிடம் நாயக்கருக்கு பொறாமையும் துவேஷமுமா என்று கேட்கின்றோம்.
ஸ்ரீ வரதராஜுலு அதே வேலையாய் இருப்பதால் நாம் அதே வேலையாய் கண்டிக்கின்றோம். அவர் அதை விட்டு விட்டவுடன் நாமும் அவரை போற்றி இருக்கின்றோம். மறுபடியும் அவர் மாறினால் மறுபடியும் அவரை வெளியாக்குகிறோம்.
எனவே தாங்கள் செய்யும் அயோக்கியத் தனத்தையும் அதனால் ஒரு பெரிய சமூகத்திற்கே ஏற்படும் தீங்கையும் ஒரு சிறிதும் யோசித்துப்பாராமல், அதை வெளிப்படுத்துபவர்களை மாத்திரம் பொறாமை என்றும், துவேஷம்
என்றும், சர்க்கார் பிரசாரம் என்றும் எழுதிவிட்டால் சரியாய் போய்விடுமா என்று கேட்கின்றோம் அல்லது நாயக்கர் பணம் திருடிக் கொண்டார் என்று சொல்லிவிட்டால் தாங்கள் செய்யும் அயோக்கியதனமெல்லாம் மறைந்துபோகுமா என்றும் கேட்கின்றோம்.
நாயக்கர் பணம் திருடியிருப்பது வாஸ்தவமானால் எந்த யோக்கி யனாவது பொறுப்புடன் முறையுடன் நாயக்கரைக் கேட்டால் அது ஆண் தன்மையாகும். அஃதில்லாமல் “நாயக்கர் பணம் திருடி விட்டார். கணக்கு கொடுக்கவில்லை” என்று இழிபிறப்பு போலவும் கலப்புப் பிறப்புப் போலவும் காணாத இடங்களிலும் பொறுப்பற்ற முறையிலும் நாய் போல் குலைப்பதால் பயன் என்ன? நாயக்கர் பணம் திருடிக் கொண்ட விஷயமாய் விசாரிக்க மாயவரம் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட கமிட்டியாரின் வாயும் கையும் இதுவரை என்ன வேலையில் ஈடுபட்டிருக்கின்றது என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1928 () 266
ஏன் இதைப்பற்றி ஸ்ரீநாயக்கரை ஒரு வார்த்தையாவது இவர்கள். கேட்கக் கூடாது? கேட்பதற்கு தைரியமும் யோக்கியதையும் இல்லாத ஆட்கள் ஏன் அக்கமிட்டியில் அங்கம் பெற சம்மதிக்க வேண்டும்? நாயக்கர். பிரசாரத்தின் எதிர் பிரசாரத்திற்கு இதுவரை நாயக்கர் மீது யார் என்ன குற்றம். கண்டு பிடித்தார்கள்? அல்லது நாயக்கரின் சொந்த நடவடிக்கைகளில் இதுவரை யார் என்ன குற்றம் சொல்ல முடிந்தது? காஞ்சீபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் நாயக்கர் அங்குள்ள சில காங்கிரஸ்வாதி களையும் பார்ப்பனர்களையும் பார்த்து “நீங்கள் அயோக்கியர்கள், வயிற்
றுக்கு சோறு சாப்பிடுபவர்களல்ல” என்று உரத்துச் சொன்ன காலத்தில் ஸ்ரீமான்கள் ஏ. ரங்கசாமி அய்யங்காரும், சி.வி. வெங்கிட்டரமண அய்யங் காரும் “நாயக்கர் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்” என்றும், ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும், கல்யாணசுந்தர முதலியாரும் “நாயக்கர் இவ் வார்த்தைகளை திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் சொல்லி பார்ப்பனர்களுக்காக சிபார்சு பேசவந்தார்கள். நாயக்கர் ஒரே அடியாய் அது ஒன்றும் முடியாது என்றும், தன்னைத் தூக்கு மேடையின் மீது நிறுத்தினாலும் இதைச் சொல்ல தயாராயிருப்பதாகவும் சொன்னார். அதற்கு பிறகுதான் அதே நிமிஷத்தில் நாயக்கரையும் நிர்வாகக் கமிட்டியில் நியமித்தும் ஸ்ரீனிவாசய் யங்காருக்கு தலைவர் தேர்தல் ஆகியும் ஸ்ரீ நாயக்கர் சம்மதிக்காவிட்டால் தான் அப்பதவியை ஏற்றுக்கொள்ள முடியாதென்று நாயக்கரை சம்மதம் கொடுக்கும்படி கேட்டதும், ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும் கல்யாண சுந்தர முதலியாரும் நாயக்கரை ஒப்புக் கொண்டதாக சொல்லும்படி வேண்டினது மான காரியங்கள் நடந்தன. இவற்றின் குறிப்பு அப்போதே ‘@l அரசிலும்” “இந்து” பத்திரிகைகளிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நாயக் கருக்கு காங்கிரசில் மதிப்பிருக்கவில்லையா அல்லது அவர் காங்கிரசையும் “தலைவர்” களையும் வைத பிறகும் அவருக்கு காங்கிரசில் இடமளிக்கப்பட வில்லையா என்பவைகளை யோசித்தால். நாயக்கரின் சுயநலமும், நாயக்கர் பணம் அடித்ததும், நாயக்கரின் சர்க்கார் பிரசாரமும் விளங்காமல் போகாது என்று சொல்லுகின்றோம். தவிர,
ஸ்ரீ வரதராஜுலு சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்தான் என்ன என்பதை எடுத்து எழுதியாவது அதை தொலைக்கக் காரணம் சொல்லு கின்றாரா என்றால் அதுவும் இல்லை. எனவே சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் பிரசாரத்தைப் பற்றியும் எந்த பார்ப்பனரும் பார்ப்பனப் பத்திரிகை
யும் படாத அவ்வளவு ஆத்திரமும் வேதனையும் நமது வரதராஜுலுக்கு மாத்திரம் உண்டாகக் காரணம் என்ன என்பதை பொது ஜனங்களே கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் அடுத்த வியாசத்தில் தேசீயக் கொள்கை என்ன என்பதையும் சுயமரியாதைக் கொள்கை என்ன என்பதை
யும் விரிவாய் எழுதுவோம்.
குடி அரசு - கட்டுரை - 20.05.1928
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சுயமரியாதைச் சங்கங்கள்
நமது சுயமரியாதை இயக்கமானது தமிழ் நாட்டில் எவ்வளவு பரவ வேண்டுமோ அவ்வளவு பரவிவிட்டதாகக் கொள்வதற்கில்லை.
ஆனால் அது ஒரு விதத்தில் மக்கள் கவனத்தை பெரிதும் இழுத்துக் கொண்டும் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டும் வருகின்றது என்பதில் நமக்கு எள்ளளவு ஐயமும் இல்லை. ஆனால் இவ்வளவோடயே நாம் திருப்தி அடைந்து விட முடியாது. மந்திரிகள் ஆதரித்ததினாலும் சட்ட மெம்பர் முதலிய அறிஞர்கள் நற்சாக்ஷிப் பத்திரம் வழங்குவதினாலும் நமக்கு எந்த வித இலாபமும் ஏற்பட்டுவிடாது. அவர்களும் இதை ஏற்றுக் கொள்ளு கின்றார்கள் என்கின்ற அளவில் திருப்தி அடையலாமே ஒழிய வேறொன்றும். இல்லை.
தவிர நமது இயக்கம் நம் நாட்டில் எவ்வளவு பரவி இருக்கின்றது என்று நினைக்கின்றோமா அதைவிட அதிகம் பரவி இருப்பதாகவே நமது எதிரிகள் பயந்து கிலிபிடித்து நடுக்கமுற்று வருகின்றார்கள் என்பது மாத்திரம் நமக்கு நன்றாய் விளங்குகிறது.
தவிர நமது இயக்கத்தை பரப்பும் விஷயமாய் நாம் இன்னமும் அதிகமான வேலை செய்ய வேண்டியிருக்கின்றது. நமது மாகாணத் திலேயே ஆந்திர நாட்டிலும் மலையாள நாட்டிலும் கர்நாடக நாட்டிலும் உள்ள மக்களில் அநேகருக்கு இப்படி ஒரு இயக்கம் தோன்றி இருக்கும் சங்கதியே சரியாகத் தெரியாது என்பதே நமது அபிப்பிராயம். இப்படி இருக்கும்போது வெளிமாகாணங்களைப் பற்றி கேட்க வேண்டுமா?
எனவே கூடிய சீக்கிரத்தில் இவ்வியக்கத்தை இன்னமும் சரியான ஒழுங்குமுறையில் அமைக்க வேண்டியது நமக்கு மிகுதியும் அவசரமா யிருக்கின்றது. ஏனெனில் அடுத்தாப்போல் சமீபத்தில் நமது நாட்டுக்கு வரப்
போகும் அரசியல் விசாரணைக் குழுவினரான “சைமன் கமிஷன்” வருவ தற்கு முன்பாகவே நாம் ஒவ்வொரு ஊரிலும் சங்கங்கள் நிறுவி அங்கத் தினர்களை சேர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் ஒரு ஐம்பதினாயிரம் அங்கத்தி னர்களையாவது சேர்த்து நமது நாட்டிலுள்ள எல்லா சங்கங்களையும் விட
குடி அரசு - 1928 () 268
இதுவே அதிக ஜனப் பிரதிநிதித்துவம் கொண்டது என்பதை உணர்த்திவிட வேண்டும். அன்றியும் இச்சங்கந்தான் பொதுமக்களின் சரியான பிரதிநிதித்துவம் பொருந்தியது என்பதை மெய்ப்பித்துவிட வேண்டும்.
வரப்போகும் கமீஷனிலோ சீர்திருத்தத்திலோ மக்களின் சுய மரியாதைக்கேற்ற திட்டங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அதிகாரமும் பதவியும் சம்பளமும் உள்ள உத்தியோகங்களை எவ் வளவுக் கெவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைக்க முயல வேண்டும். குறைக்க முயலாவிட்டாலும் இனியும் அதிகமாகப் பெருகி ஏழைகளை துன்புறுத்தி பொது மக்கள் ஒற்றுமையைக் குறைத்து கக்ஷி பிரதிகக்ஷிகள் ஏற்படுத்திக் கொடுமையான ஆட்சி முறை நடைபெறச் செய்யும் தன்மையையாவது நிறுத்தவேண்டும். எனவே ஜில்லாக்கள்,தாலூக் காக்கள், கிராமங்கள் தோறும் நம் சங்கங்களை, நிறுவவும் அங்கத்தினர் களைச் சேர்க்கவும் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒவ்வொரு சுயமரியாதை தொண்டரை நியமிக்க வேண்டியது இது சமயம் மிகவும் அவசியமா யிருக்கின்றது. ஆகையினால் இதை உத்தேசித்து இப்போது திருச்சி ஜில்லா வுக்கு திரு. இராவணதாஸையும், தஞ்சை ஜில்லாவுக்கு திரு. காளியப்ப தேவரையும், கோவை ஜில்லாவுக்கு திரு. AR. சிவானந்த முதலியாரையும் நியமிக்க உத்தேசித்து அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். மற்ற ஜில்லாக்களுக்கும் ஒவ்வொரு தொண்டரை சிபார்சு செய்யும்படி ஆங்காங்கு உள்ள பிரமுகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் பதில் வந்த உடன் நியமனம் செய்யப்படுவார்கள். இச் சுயமரியாதை சங்கத்தின் சார்பாக சட்டசபை, ஜில்லா போர்டு, தாலூக்கா போர்டு, முனிசிபாலிடி முதலியவற்றின் தேர்தல்களுக்கு அபேக்ஷகர்களை: நிறுத்தவோ அல்லது நமது சுயமரியாதைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட வர்களுக்கு மாத்திரம் தேர்தல்களில் உதவி செய்யவோ கூடியதான நிலை மையை நாம் அடுத்த சட்டசபை தேர்தல்களுக்குள் அடைந்தாக வேண்டும். அப்படிக்கில்லையானால் இப்போதைய நிலைமையில் சுலபத்தில் மக்கள் சுயமரியாதைத் தன்மையை அடைய முடியாதென்பதாகவே காணப் படுகின்றது.
நமது சுயமரியாதை திட்டத்திற்கு அரசாங்க சட்டங்கள் எவ்வளவோ இடையூறாக இருந்து வருகிறது.
உதாரணமாக அரசியல் தன்மையில் பறையர், சக்கிலிகள் என்று சொல்லப்படுவதான குற்றமற்ற பெயர்களை மாற்றிக் கொண்டு ஆதி திராவிடர்கள் என்கின்ற பெயரை வைத்துக் கொள்ள ஏற்றுக் கொண்ட
சர்க்கார், தாசிமகன், அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட சூத்திரன் என்கின்ற பெயரை மாற்ற சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று சொல்லி விட்டார்கள். சட்டத்தைத் திருத்த மதம் இடம் கொடுக்கவில்லை என்று ஜனப்
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
பிரதிநிதிகள் என்போர்கள் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் சுயமரியாதை: உணர்ச்சியுள்ள கனவான்கள் சட்டசபையில் இருந்தால் சூத்திரன் என்ற பெயரை மாற்ற சட்டமும் மதமும் குறுக்கிடுமா என்று கேட்கின்றோம்.
தவிர, பார்ப்பனப் புரோகிதம் இல்லாமல் செய்யப்படும் கல்யாணங்
கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்பதாக சட்டத்தில் இருக்கின்றது. இந்து லாப்படி பார்ப்பனனும் பார்ப்பனச் சடங்கும் இல்லாமல் ஒரு கல்யாணம் நடந்தால் அது சட்டப்படி நடந்த கல்யாணமாகக் கருத முடியாத நிலையில் சட்டம் செய்யப்பட்டிருக்கின்றது.
சொத்துக்கள் பங்கு வீதத்திலும், ஆண், பெண் தன்மையிலும், தகப்பன் மகள் முறையிலும் சட்டத்தில் பல ஊழல்கள் இருக்கின்றன.
மற்றும் அநேக விஷயங்களில் சுயமரியாதைக்கு விரோதமாக எவ்வளவோ கொடுமைகள் சட்டத்தில் இருக்கின்றன. இவைகளை எல்லாம் சட்டசபைகள் மூலம் மாற்றினாலன்றி நமது லட்சியம் நிறைவேற்றுவதற்கு மார்க்கமில்லை என்றே சொல்லுவோம். சட்டத்தினால் தடைகளைவைத்துக் கொண்டு விபரமில்லாமல் வெள்ளைக்காரர் மீதும் பொது ஜனங்கள் மீதும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பலனும் இல்லை.
ஆகையால் நாம் நமது இலட்சியத்தை அடைய வேண்டுமானால், வைதீகர்கள் வசமும், வைதிகத்தின் அடிமைகள் வசமும் அதிகாரங்களை ஒருநாளும் விட்டுவைத்தல் கூடவே கூடாது என்பதே நமது அபிப்பிராயம். ஜஸ்டிஸ் ௧௯9 என்பதான தென்இந்திய நல உரிமைச் சங்கம் பெரும்பாலும் சுயமரியாதை இலட்சியத்தை ஒப்புக் கொள்ளுகின்றதானாலும் அதிலுள்ள
சிலர் அதிகாரத்தையும் உத்யோகத்தையும் பொருத்த வரையில் மாத்திரம் பார்ப்பனீயத்தை ஒழிக்க சம்மதிக்கிறார்களேயொழிய நித்திய வாழ்க்கையில் பார்ப்பனர் காலில் விழுவதையோ பார்ப்பனர் கால் கழுவின தண்ணீரை:
சாப்பிட்டு தலையில் தெளித்துக் கொள்வதையோ நீக்கிவிட அநேகர் சம்மதிப்பதில்லை.
உதாரணமாக ஒரு பார்ப்பனன் சட்டசபை மெம்பராகவோ தாலூக்கா போர்ட் மெம்பராகவோ வருவதாயிருந்தால் மாத்திரம் பார்ப்பனீயம் கூடாது என்று சொல்லி பார்ப்பன ஆக்ஷியை வைய வருகிறானேயல்லாமல் அதே பார்ப்பனன் இவருக்கு குருவாகவோ மோக்ஷத்திற்கு வழிகாட்டியாகவோ கடவுளை அறிமுகப்படுத்துபவனாகவோ வருவதையும் அப் பார்ப்பனன் காலில் விழுவதையும் ஆக்ஷேபிக்க ஒரு சிறிதும் சம்மதிப்பதே இல்லை. எனவே, சுயமரியாதையின் தத்துவத்தை ஜஸ்டிஸ் கட்சியார் என்கின்ற தென் இந்திய நலவுரிமைக் கட்சியார் உணர்ந்திருக்கின்றார்கள் என்று சொல்லி விட
முடியாது.ஆதலால் நமது லக்ஷியத்திற்கு அக்க௲்ஷியையே முழுவதும் நம்பி
குடி அரசு - 1928 () 270
விட்டுவிடுவதற்கில்லாத நிலையில் இருக்கின்றோம். ஆதலால் நமக் கென்று தனிக் கட்சி ஒன்று சட்டசபையில் அதாவது நமது சுயமரியாதைக்கு இடையூறாக இருக்கும் சட்டத் தடையை ஒழிப்பதற்காவது அவசியம் வேண்டியிருக்கின்றது.
இவ்விஷயத்தில் அலட்சியமாய் இருந்துவிட்டு எவ்வளவுதான்
பிரசாரம் செய்தாலும், எவ்வளவு தான் தியாகமும் கஷ்டமும் நஷ்டமும் அடையத் தயாராயிருந்தாலும் ஒரு பலனையும் அடைந்து விட முடியாது. ஆதலால் இப்போதே ஆங்காங்குள்ள சுயமரியாதை வீரர்கள் ஆங்காங்கு சங்கங்கள் கண்டு அங்கத்தினர்கள் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.05.1928
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
எது வாயை வண்டும்
தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அரசியல் புரட்டர்களுக்கு பேச மேடையில்லாமலும்
மதப் புரட்டர்களுக்கு மரியாதை இல்லாமலும், புராணப் பிரசங்கத்திற்கு இடமில்லாமலும் செய்து விட்டதோடு இவைகள் மூலம் அவரவர்களின் சொந்த வியாபாரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு விட்ட விபரம் இவைகளி னால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் நெருப்பில் விழுந்த புழுத்
துடிப்பது போல் துடிப்பதினாலே விளங்கும். இதுபோலவே பார்ப்பன ஆதிக் கமும் புரோகிதர்கள் ஆதிக்கமும் ஆங்காங்கு ஒருவாறு மறைந்து கொண்டே வருவதும் வெள்ளிடைமலை. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் பதினாயிரம் பேருக்கு மேலாகவே போலி அரசியலையும், புரட்டுப் பார்ப்பனி யத்தையும் விட்டு விலகி விட்டதாக அவர்கள் தங்கள் பெயரை வெளிப் படுத்தி இருப்பதையும், ஆயிரக்கணக்கான சடங்குகள் பார்ப்பனர்களை நீக்கி நடத்தி இருப்பதாக வெளியாகி வருவதையும், அநே கர் தங்கள் குலகுரு என்கின்ற போலிக் குருமார்களை நீக்கியிருப்பதையும் கவனித்துப் பார்ப் பவர்கள், இச்சுயமரியாதை இயக்கம் இத்தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம் வேரூன்றி வருகின்றது என்பதை உணரலாம். இந்நிலையில் ஸ்ரீவரதராஜுலு. நாயுடு சுயமரியாதை இயக்கம் தொலையவேண்டும் என்றும், அதைத் தொலைத்தாலொழிய தேசீயம் வளராதென்றும், ஆதலால் அதைத் தொலைப்
பது என்பதே தனது வேலையாகக் கொண்டிருப்பதாகவும் வீரமுழக்கம் செய்கிறார். எனவே இது எதற்காக என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா அல்லது ஸ்ரீமான்கள் வரதராஜுலு, சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார் போன்றார்களின் தேசீய இயக்கம் தொலைய வேண்டுமா என்பதைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமாய் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.
திரு. வரதராஜுலு முதலியோரின் தேசீயம் என்பது காங்கிரசா, அல்லது சுயராஜ்யக் கட்சியா, அல்லது தேசீயக் கட்சியா, அல்லது ஓம்ரூல்
கட்சியா, அல்லது மிதவாதக் கட்சியா, அல்லது மற்றெதுவோ என்பதை திரு. வரதராஜுலு சொல்லுவாரா? அல்லது அவருடைய தலைவர்களாவது மற்றக் கூலிகளாவது சொல்வார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் இவைகளின்
குடி அரசு - 1928 () 272
எதனுடைய கொள்கைகளாவது இன்னது என்பது வரதராஜுலு அவர்களுக்
குத் தெரியுமா? என்று கேட்கின்றோம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் இன்னது என்று தெரியாமலும், அதனால் இன்ன பலன் உண்டு என்பதை உணராமலும், எப்படி ரயில்வே கம்பெனிக்காரன் தனது வரும்படிக்காக எல்லோரையும்
“ஸ்ரீரங்கம் உற்சவத்திற்குப் போங்கள்” என்று விளம்பரம் செய்கின்றானோ அதுபோலவும், கும்பகோணம் மாமாங்கக் குளத்தின் தண்ணீரின் யோக்கி யதை இன்னதென்று தெரியாமலும், அதில் குளித்தால் இன்ன பலன்
கிடைக்கும் என்று தெரியாமலும், எல்லோரும் மாமாங்கத்திற்குப் போய் மோட்சமடையுங்கள் என்று எப்படி ரயில்வேகாரன் விளம்பரம் செய்கின் றானோ அது போலவும் சுயராஜ்ஜியம் இன்னது, தேசீயம் இன்னது அதன் பலன் இன்னதாகும் என்பதைப் பற்றி ஒரு சிறு அறிவும் இல்லாமல் “எல்லோரும் சுயராஜ்ஜியம் அடைய வேண்டும” “தேசீயத்தில் சேர வேண்டும்” என்று தங்கள் தங்கள் லாபத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்குமாக கூப்பாடு போடுவதல்லாமல் இதில் வேறு ஏதாவது காரியம் உண்டா என்று கேட்கின்றோம்.
இந்த 42 வருஷகாலமாக சுயராஜ்ஜியத்திற்கு பாடுபட்டவர்களின் நிலைமை என்ன? அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்ட கேள்விக்கு யாராவது இதுவரை பதில் இறுத்திருக்கிறார்களா? ஒரு
சிறு விளம்பரக்காரன் ஏதாவது ஒன்று சொன்னதாக வெளியானால் உடனே அவனைப் பிடித்து அவனுக்கு எலும்பு போட்டு அதை மறுக்கும்படி கடிதம்
எழுதி வாங்கியோ கற்பனை செய்தோ மறு நாளே பதிலெழுதும் முறையில் வெளிப்படுத்தப்படும். “தமிழ் நாடு” போன்ற பத்திரிகைகளும் திரு. வரதராஜுலு போன்ற தேசீயப் பிழைப்புக்காரர்களும் 33 கோடி மக்களை: ஏமாற்றிப் பிழைக்கத்தக்க வழிதான் சுயராஜ்ஜியமும் தேசீயக் கூப்பாடும் என்றால் இவர்கள் ஏன் அதற்கு உடனே பதில் சொல்லக் கூடாது என்று கேட்கின்றோம்.
இன்றைய உத்தியோக பெருக்குக்கும், வரி உயர்வுக்கும், கட்சிப்பிரதி
கட்சிக்கும், ஏழைகள் கஷ்டத்திற்கும், அரசாங்கத்தின் அநீதிக்கும் சுயராஜ் ஜிய கூச்சலும் தேசீயப் புரட்டும் காரணமா இல்லையா என்று கேட்கின்றோம்.
இவ்வளவு கொடுமையைச் செய்த காங்கிரசும் தேசீயமும் மக்கள் ஒற்றுமைக்காவது சமத்துவத்திற்காவது ஏதாவது ஒரு சிறு நன்மையாவது செய்து இருக்கின்றதா? அல்லது சமத்துவத்தைப் பற்றிய கொள்கை ஏதாவது
காங்கிரசில் இருக்கின்றதா?
ஒத்துழையாமையின் போது காங்கிரசில் நுழைக்கப்பட்ட 1. சமத்துவம்
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
2. தீண்டாமையொழித்தல் 3. மதுவிலக்கல் 4. கதர் 5. ஒற்றுமை ஆகிய மக்களுக்கு வேண்டிய திட்டங்களில் ஏதாவது ஒன்று இன்றைய காங்கிரசிலோ தேசீயத்திலோ இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
அன்றியும் சென்ற வருஷ காங்கிரசில் கொண்டு வரப்பட்ட சமத்துவத் தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதா என்றும், தீண்டாமை ஒழிக்கக் கொண்டு வந்த தீர்மானத்தை பம்பாய் மாகாண காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதா என்றும், எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க. வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானத்தை சென்னை மாகாண காங்கிரஸ். அனுமதித்ததா? என்றும், கதரைத் தவிர வேறு ஒன்றும் கட்டக் கூடாதென்ற தீர்மானத்தை காங்கிரஸ் வைத்திருக்கிறதா? என்றும், முஸ்லீம்களுக்கு அவர்களுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ்
ஒப்புக் கொள்ளுகிறதாவென்றும் கேட்கிறோம்.
இந்நிலையில் காங்கிரசும் தேசீயமும் மக்களுக்கு என்ன நன்மை செய்து விட்டது, அல்லது செய்யக் கூடும் என்று கேட்கிறோம். இவைகள் ஒன்றும் இல்லாமல் உத்தியோகங்களை உண்டாக்குவதும், அதற்காக அதிக சம்பளங்களை ஏற்படுத்துவதும், அதற்காக வரியை அதிகப்படுத்துவதும், வரியை ஏழைமக்கள் தலையில் விதிப்பதும், அவ்வுத்தியோகத்தை ஒரு வகுப்பாரே அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு கூலிகளை விட்டு
கூப்பாடு போடுவதும் அக்கூலிக்காரர்களுக்குள் ஒருவராக திரு வரதராஜுலு தன்னையும் பதிவு செய்துகொண்டு வாழ்வதும் அல்லாமல் தேசியத்திற்கு வேறு ஏதாவது அர்த்தமோ பலனோ திரு. வரதராஜுலு சொல்லக் கூடுமோ என்று அறை கூவி அழைக்கிறோம்.
நிற்க, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் என்ன என்பது பற்றியும் அதனால் யார் பிழைக்கிறார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்ப்போம்.
மக்களுக்கு பிராணனைவிட மானம் பெரிதென்பது அதன் முதலாவது கொள்கையாகும்.
எல்லோரும் பிறவியில் சமம் என்பது இரண்டாவது கொள்கையாகும்.
பெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டுமென்பது மூன்றாவது கொள்கையாகும்.
ஜாதி மத பேதங்கள் தொலையுமட்டும் நாட்டின் ஒற்றுமையையும் எல்லாருடைய நம்மையையும் உத்தேசித்து ஒவ்வொரு ஜாதி மதத்திற்கும் அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
குடி அரசு - 1928 () 274
என்பது நான்காவது கொள்கையாகும்.
கண்மூடி வழக்கங்களும் மூட நம்பிக்கையும் தொலைய வேண்டு. மென்பது ஐந்தாவது கொள்கையாகும்.
வேதம், சாஸ்திரம், புராணம், பழக்கம் என்றும் காரணங்களால் மனிதனின் பகுத்தறிவை கட்டுப்படுத்தக்கூடிய பார்ப்பனீயம் ஒழிந்து சுயேச்சையும் அறிவும் வளர வேண்டும் என்பது ஆறாவது கொள்கையாகும்.
இது போன்ற இன்னும் அநேக கொள்கைகளை சுயமரியாதை
இயக்கம் இன்றைய தினம் தாங்கிக் கொண்டு மூலை முடுக்குகளிலெல்லாம். வேலை செய்து வருகிறது.
அதில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரும் இதுவரை தன்தன் சொந்தக் காசை செலவு செய்து தொண்டாற்றி வருகின்றார்கள்.
திரு. வரதராஜுலுவும் அவர் கூட்டமும் தேசீய விளம்பரத்தால் பிழைப்பது போல் சுயமரியாதை விளம்பரத்தால் யாராவது பிழைக்கின்றார். களா? யாருக்காவது இதனால் ஒரு அம்மன் காசு லாபமுண்டா?'
எனவே இம் மாதிரி மக்களுக்கு உண்மையான விடுதலையளித்து அறிவைப் பரவச் செய்யத்தக்க சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா? அல்லது கூலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மாத்திரம் அனுகூலமாயிருந்து நாட்டையும் பாழாக்கும் தேசீயம் தொலைய வேண் டுமா? என்பதைப் பற்றி யோசித்து முடிவாக எது தொலைய வேண்டும் என்பதை உணருமாறு பொது மக்களை வேண்டிக்கொள்ளுகிறோம். திரு. வரதராஜுலோ அவரது கூட்டாளிகளோ மாத்திரமல்லாமல் வேறு யார் இதற்கு தக்க பதிலுரைத்தாலும் வந்தனத்தோடு ஏற்று சமாதானம் சொல்ல தயாராயிருக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 27.05.1928
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
செங்கல்பட்டு வில்லா Cumi® ஆரம்ப ஆசிரியர் மகாநா௫
“திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவனாக யிருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. ஏனென்றால் இது “கல்வி” என்பது சம்பந்தமான ஆசிரியர் மகாநாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்சமாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்கு தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான். நான் என்னுடைய ஒன்பதாவது பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத் திலுமே வாசித்தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உள்பட்ட காலத்திலும் என்னை பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்கு தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டு ஓர் திட்டத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத்தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன். அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும் பிள்ளை: களுக்கும் தொல்லை விளைவிப்பதும். அவர்களிடம் அடிபடுவதுமான காலந்தான், நான் ஏதாவது இரண்டொரு எழுத்தை கற்றக் காலமாயிருக்கும். இதை நான் அநேக சந்தர்ப்பங்களில் பல பொதுக் கூட்டங்களில் சொல்லி யிருக்கின்றேன். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டுதான் ஒரு சிலர். அதாவது என்னுடைய கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களோ அதனால் நஷ்டப்பட நேரிடுகிறவர்களோ என்னைக் கண்டிப்பதற்கு இதை உபயோ
கித்துக் கொள்கிறார்கள். என்னவென்றால் “நான் கல்வி அறிவு அற்றவ னென்றும் அதனால் எனது கொள்கைகள் அறிவு அற்றதென்றும்” சொல்லி
யும் எழுதியும் வருவதைப் பார்க்கின்றேன். ஆனாலும் உங்கள் ஜில்லா போர்டு தலைவர் திரு. எம். கே. ரெட்டியார் அவர்களுக்கு என்மீதுள்ள அன்பும் நம்பிக்கையும், நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே மகாநாட் டுக்கு தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியதால் வேறு வழியில்லாமல் நான் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. நீங்கள் எந்தவித மான சிறந்த உபந்நியாசத்தையோ எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஜில்லா
குடி அரசு - 1928 () 276
போர்டு தலைவர் இந்த மகாநாட்டை திறந்து வைக்கும்போது செய்த வரவேற்புப்பிரசங்கமானது மிகவும் அற்புதமாகவும் ஆணித்தரமானதாகவும் பெரிய அநுபோகமும் ஆராய்ச்சியும் பொருந்தியதாகவும் இருந்தது. அது உங்கள் நிலையை விளக்கியதுடன் நீங்கள் செய்ய வேண்டியதையும் நன்றாய் எடுத்துக்காட்டி இருக்கின்றது. அவ்வுபன்னியாசம் உங்களுக்கு மாத்திர மல்லாமல் உங்கள் மாணாக்கர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும்
மற்றும் கிராம வாசிக ளுக்கும் பொதுநல சேவைக்காரர்களுக்கும் மிகுதியும் பயன்படக்கூடியது.
அது போல நான் எதையும் எடுத்துச் சொல்ல முடியாது. தவிர அக்கிராசனம் வகித்தவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அதுபோல் ஆராய்ச்சியோடு ஒன்றும் சொல்ல முடியாது என்றும் ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய விஷயம். எதையாவது என் சொந்த முறையில்தான் சொல்லக் கூடும் என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என்கின்றவர்கள் ஒருவித தொழிலாளிகளே. அதாவது ஜீவனத்திற்காக வேலையோ கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக் காரர்களேயல்லாமல் உண்மையான ஆசிரியத்தன்மையுடையவர்கள் அல்ல என்பதே எனது அபிப்பிராயம். எப்படி ஒரு மனிதன் தன் ஜீவனத்திற்கு மூட்டை தூக்குகிறானோ, மாடு மேய்க்கிறானோ, வண்டி ஓட்டுகிறானோ,
வக்கீல் வேலை செய்கிறானோ, குமாஸ்தாவாக இருக்கிறானோ அப்படியே உபாத்தியாயர் வேலை என்பதும் ஒரு தொழிலாகவே ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு உபாத்தியாயரும் தங்கள் தங்களை உபாத்தியாயர் வேலைக்குத் தகுதி ஆக்கிக் கொண்டதின் கருத்தே அவர்களின் ஜீவனத்திற்கு ஏதாவது தொழில் வேண்டாமா என்கின்ற கருத்து கொண்டுதானேயல்லாமல் ஏதாவது ஆசிரியத்தன்மையில் ஆசை இருந்து ஏற்பட்டதாக எனக்கு தோன்றுவ தில்லை. ஆதலால் இம் மாதிரி மகாநாட்டுக்கு உபாத்திமைத் தொழிலாளர் மகாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமான பெயராகும்.அதுபோலவே உங்களிடம் தங்கள் பிள்ளைகளை படிக்கவிடும் பெற்றோர்களும், பிள்ளை களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது வழி ஏற்பட சற்றுப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்களே யொழிய அவர்களும் படிப்பை வயிற்றுப் பிழைப்பைத் தவிர வேறு காரியத்
திற்கு கருதுவதில்லை. உங்கள் ஜில்லா, தாஜூக்கா போர்டுகளும் முனிசிபா லிட்டிகளும் கூட அந்த கருத்துடன்தான் பள்ளிக்கூட நிர்வாகம் செய்து வருகின்றார்கள். கடைசியாக சர்க்காரும் கூட இவ்வளவு வரிப் பணத்தை படிப்புக்காக செலவு செய்தும் படிப்பு இலாக்கா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
நடைபெற கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய் கின்றார்கள். அதனால்தான் பலவழிகளிலும் தற்கால கல்விக்கு வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது.மனிதனுக்கு கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும் அவ்வறிவால் தான்
இன்புறவும் மக்கள் இன்புறவுமான தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே. இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்மந்தமில்லாத தாகவே இருக்கின்றது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாகவும் தொழி லாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படு வதாக இல்லை. ஒரு நிமிஷத்திற்கு 100 கவி பாடக் கூடிய வித்வானானாலும் அவன் அக்கவி பாடுவதில் அதாவது ஒரு நிமிஷத்திற்கு நூறு அச்செழுத்தை கோர்க்கும் ஒரு கம்பாசிட்டருக்கு சமானமான தொழிலாளிதானே ஒழிய அவனை ஒரு பெரிய அறிவாளி என்று சொல்லிவிட முடியாது. அது போலவே ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லக்கூடிய ஒரு பண்டிதனோ ஒரு பாஷ்யக்காரனோ என்பவன், ஒரே தோலில் நூறுவிதமான செருப்புத் தைக்க கற்றுக் கொண்ட ஒரு சக்கிலிக்கு மேலானவனென்று சொல்லிவிட
முடியாது.
ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லும் பண்டிதனுக்கு எப்படி செருப்பு தைக்க தெரியாதோ அது போல சக்கிலிக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாது. ஆனாலும், இருவர்களும் இரு தொழிலில் இரு வித்தையில் சிறந்தவர்களே ஒழிய அறிவாளிகள் என்று சொல்லிவிட முடியாது.
உதாரணமாக சில பெரிய சட்டம் படித்த வக்கீல்களை விட சிறிய சட்டம் படித்த வக்கீல்கள் கெட்டிக்காரர்களாய் இருக்கின்றார்கள்.
சிலருக்கு படிப்பெல்லாம், நெட்டுருப்போட்டு ஒப்புவிக்க முடிகிற
தல்லாமல் தங்களுக்கு ஒரு காரியத்திற்கும் உயபயோகப்படுவதில்லை.
உதாரணமாக ஒரு பெரிய விஞ்ஞான சாஸ்திரி அதாவது சைன்ஸ் படித்த பண்டிதன் ஒரு புளியமரத்தடியில் பேய் இருப்பதாக யாராவது சொல்லிவிட்டால் அந்தப் புளிய மரத்தடியில் நடக்க நேரும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுக்கத்துடன் நடக்கின்றான். தன் பெண்ஜாதியை பேயோட்ட கோயிலுக்கு அனுப்பிக் கொடுக்கிறான், உடற்கூறும் அதன் சிகிச்சையும் படித்த பெரிய பண்டிதனான டாக்டர் கூட தன் பெண்ஜாதியோ மகளோ வீட்டிற்கு தூரம் என்றால் உடனே வெளியில் உட்கார வைத்து விடுகிறான் அல்லது கோழிக்கூடு போன்ற சிறு அறைக்குள் இருக்கச் செய்து விடுகின்றான் அல்லது நிழல் மேலேபட்டால் தீட்டு என்று சொல்லி விடுகின்றான். இரவில் வெளியில் தள்ளி கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே
படுத்து தூங்குகிறான். தனது குழந்தை நொண்டியாய்ப் பிறந்தால், தான் முன்
குடி அரசு - 1928 () 278
ஜென்மத்தில் செய்த வினை என்று வருத்தப்படுகின்றான்.
பெரிய வான சாஸ்திர பண்டிதன் கிரகணத்தின் போது ஊறுகாய்ச் சட்டியில் அருகம்பில்லைப் போட்டுவிட்டு கிரகணம் ஆரம்பிக்கும்போது ஒரு முழுக்கும் நீங்கும்போது ஒரு முழுக்கும் போடுகிறான். பெரிய ஞான சாஸ்த்திர பண்டிதன் என்பவனும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஊருக்குப் போனால் மோட்சம் என்று குறிப்பிட்ட குளத்து தண்ணீரில் (அது எவ்வளவு அழுக்காயிருந்தாலும்) முழுகினால் தான் செய்த அக்கிரமங்களின் பலன் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் நினைத்துக் கொண்டு முழுகி விட்டு இதுவரையில் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தன்னை தைரியப் படுத்திக் கொண்டு புதுக்கணக்கு போட்டு மறுபடியும் அக்கிரமங்களைச் செய்ய தைரியவானாகி விடுகிறான். பெரிய ஸ்தாவர சாஸ்திரமும் ஜீவ ஜெந்து சாஸ்திரமும் படித்தவன் நாயைக் கொன்றால் பாவம் இல்லை, நரியைக் கொன்றால் பாவம் இல்லை, கெருடனைக் கொன்றால், குரங்கைக் கொன்றால் பாவம் என்கிறான். பால் சாப்பிட்டால் மாம்ச பக்ஷணமல்ல, ஆடு, கோழி சாப்பிட்டால் மாம்ச பக்ஷணம் என்கின்றான்.
இம்மாதிரி எத்தனையோ காரியங்களில் படித்தவர்கள் என்பவர்
களின் நிலைமை அறிவுக்கும், படிப்புக்கும் சம்பந்தமில்லாமலே இருக் கின்றது. எப்படிப் பல புஸ்தகங்கள் நிறைந்த அலமாரிக்கு ஒரு சிறிதும் புஸ்தகங்களின் தன்மை தெரியாதோ அதுபோலவே பல புஸ்தகங்களையும் அலமாரிக்கு பதிலாக அவைகளை உள்ளத்தில் வைத்து இருக்கிறதாகக் காணப்படும் நகரும் அலமாரிகளான பண்டிதர்கள் கடுகளவு பகுத்தறிவும் புஸ்தகத்தின் தன்மையும் அறியாதவர்கள் அனேகர்கள் இருப்பது எனக்குத் தெரியும். எனவே கல்வி என்றும் பெயர் வைத்துக் கொண்டு நாம் செய்யும் இம்மாதிரியான அநேக பிரயத்தனங்கள் மக்களின் ஒரு சிறு பகுத்தறிவிற்கும் உபயோகப்படாமலே இருந்து வருகின்றது. உதாரணமாக நமது நாட்டின் சரித்திரம் என்பதாக சொல்லப்படும் எந்த பழஞ் சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மற்ற நாட்டார் எல்லோரையும் விட நாம் மேல் நிலையில் இருந்ததாகவே காணப்படுகின்றது. ஆனால் இன்று நாம் இருக்கும் நிலையானது மற்ற எல்லா நாட்டாரின் நிலைமையை விட தாழ்மையாகவே இருக்கின்றது. (தொடர்ச்சி 03.06.1928 குடிஅரசு?
குறிப்பு:- 19.05.1928 அன்று பூந்தமல்லி கண்டோண்மெண்ட் கட்டிடத்தில் நடந்த செங்கல்பட்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாட்டுக்குத்தலைமை வகித்து ஆற்றிய உரையின் முதல் பகுதி.
குடி அரசு - சொற்பொழிவு - 27.05.1928
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சொங்கல்யட்டு வில்லா CUMTG ஆரம்ப ஆசிரியர் மகாநா௫
இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாக பதில் சொல்லிவிடுகின்றார்கள். இப்படிப்
பதில் சொல்லுபவர்களே தான் பெரும்பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கின்றார்கள். இம் மாதிரி தொட்டதற்கெல்லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும் கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம் பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயலாகவும் பெரியோரின் ஞான மாகவும் ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக்
கும் மற்ற நாட்டார் எல்லோரும் தங்கள் புத்திக்கும் முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தியாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளை களையும் கொண்டு வர வேண்டும். அம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம்.
எந்த விதத்திலும் முன்னடைந்தே தீரும்.
இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பலவிஷயங்களைப் பற்றி உபந் நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம சீர்திருத்தம், இயற்கைப் பாடம்,
சாரணர் இயக்கம் முதலிய விஷயங்கள் முக்கியமானவை. அவைகளைப்
பற்றி எனது அபிப்பிராயங்களையும் சிறிது சொல்கிறேன். உபந்யாசகர் தமிழ்நாட்டில் மட்டும் 27 இலட்சம் கிராமங்கள் இருப்பதாக சொன்னார்கள்.
கிராம சீர்திருத்தம்
அவைகள் உண்மையாகவும் இருக்கலாம். அக்கிராமத்தின் நன்மைக் கும்கிராம வாசிகள் முன்னேற்றத்திற்கும் இதுவரை அரசாங்கமோ அரசியல் இயக்கமோ, கிராம சீர்திருத்தக்காரர்களோ, அரசியல் ஜனப் பிரதி நிதிகளோ ஏதாவது ஒரு சிறிது நன்மை செய்திருக்கிறார்களா? ஆனால் ஒவ்வொரு வரும் தம்தம் நலனுக்காக வேண்டி கிராமத்தார்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லியே மக்களை ஏமாற்றிப் பிழைப்பை வலுப் படுத்தியோ தாங்கள் ஓட்டுப் பெற்றோ மக்களின் நம்பிக்கை பெற்றோ சுயநலமடைந்து வருகிறார்கள். கிராமத்தின் நிலைமைகள் மாத்திரம் நாளுக்கு
குடி அரசு - 19280) 280
நாள் கீழ் நோக்கிக் கொண்டே போகின்றது. உதாரணமாக எங்கள் ஜில்லாக்
களில் அனேக கிராமங்கள் அக்கிராமச் சொத்தைவிட அதிகமான கடனுக்கு ஆளாகி கிராம மிராசுதார்கள் வெளி நாட்டு லேவாதேவிக்காரர்களுக்கு தங்கள் சொத்துக்கள் முழுவதையும் அடமானம் செய்திருக்கிறார்கள். இதற்கு காரணம் விளைவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. அல்லது விளைபொருள்களுக்கு விலை இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இவற்றுள் அனேக கிராமங்கள் வருஷம் மூன்று போகம் விளையக் கூடிய தண்ணீர் வசதிகளையும் நிலத் தோட்டத்தையும் நிரந்தரமாய் உடையவைகள்.
நெல், வாழை, கரும்பு, பருத்தி, புகையிலை, மஞ்சள் முதலிய விலை உயர்ந்த விளை பொருள்களையே அதிகமாக வெள்ளாமை உடைய பூமிகளாகவே இருந்து வருகின்றன. இப்பூமிகளை உடைய விவசாயிகளும் லேசான மிராசுதார்கள் அல்ல. அதாவது ஒவ்வொரு மிராசுதாரனும் வருஷம் ஒன்றுக்கு 1000 சலகை 2000 சலகை 3000 சலகை என்கின்ற எண்ணிக்கையான தானிய வருவாய் உடையவர்கள். (ஒரு சலகை நெல் 12 ரூபாய் விலை பெறுமானது!
இப்படிப்பட்ட மிராசுதார்களே 10 ஆயிரம், 50 ஆயிரம், ஒரு லட்சம்,
2 லட்சம் ரூபாய்கள் 100-க்கு10 முதல் 15 வரை வட்டியுள்ள கடனாளிகளாக இருக்கின்றார்கள் என்றால் சிறிய மிராசுதார்களைப் பற்றி விளக்க வேண்: டுமா? கிராம சீர்திருத்தம் என்பது வீதி கூட்டுவதும், பள்ளிக்கூடம் கட்டுவதும் பஜனைமடம் உண்டாக்குவதும், உத்சவங்கள் செய்விப்பதும அதிக வெள்ளாமை விளையச் செய்வதுமான காரியங்களைச் செய்து விட் டால் போதும் என்று பலர் நினைக்கிறார்கள். இக்காரியங்களினால் எந்தக் கிராமமும் முற்போக்கடைந்து விடாது. கிராமக் குடித்தனக்காரருக்கு பகுத்தறிவையும், சிக்கனத்தையும், ஏழை மக்கள் நிலைமையையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும். கிராமவாசிகள் கள்ளுக்கடை ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்து சுவாமி கோவில் கட்டுகிறார்கள். பரம்பரையாய் திருடுகின்ற ஜாதியார் என்கின்றவர்களுக்கு திருட அனுமதி கொடுத்து, அவர்களை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க இடம் கொடுக்காமல் இருப்பதாக வாக்களித்து அபயம் கொடுத்து அவர்களிடம் திருட்டில் பங்கு வாங்கி உற்சவம் செய் கிறார்கள். வெறும் புராணப்படிப்பைச் சொல்லிக்கொடுத்து தங்கள் பணங் காசையெல்லாம் பஜனைக்கும், உற்சவத்திற்கும் கல்யாணத்துக்கும் கருமாதிக்
கும் கும்பாபிஷேகம் முதலிய காரியங்களுக்கும் செலவு செய்யச் செய்வதும் யாத்திரைக்கும் உற்சவத்திற்கும் சமாராதனைக்கும் சிலவு செய்து அவற்றில் போட்டிபோட்டு தங்கள் வரும்படியையும் மேற்கொண்டு கடன் வாங்கியும் செலவு செய்ய பழகிவிடுகிறார்கள். மற்றும் பக்தி என்றும் மதம் என்றும் முட்டாள்தனமாக கிரகித்துக் கொண்டு பட்டை நாமங்கள் போட்டுக் கொண்
டும் சாம்பலை பூசிக்கொண்டும் குடும்பத்தை கவனிக்காமல் பாஷாண்டி களாய் திரிவதும் புது நாகரீகம் என்னும் பேரால் தங்கள் வாழ்க்கைச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு மோட்டார் வண்டி யென்றும் அனுபவிக்க உயர்ந்த சாமான்கள் என்றும் உயர்ந்த ஆடைகள் என்றும் பல வழிகளில் தங்கள்
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தேவைகளுக்கு மேலும் தங்கள் அனுபவிக்கவேண்டிய சுகத்திற்கு மேலும் போட்டிபோட்டுக் கொண்டு முட்டாள்தனமாக தங்கள் பணங்களை செலவு செய்து விடுகின்றார்கள். போதாக் குறைக்கு அரசியல் புரட்டால் ஏற்பட்ட தொல்லையாகிய ஜனப்பிரதிநிதித்துவம் என்று சொல்லப்படும் ஸ்தானங் களாகிய யூனியன், பஞ்சாயத்து, தாலூகா ஜில்லா போர்டு, முனிசிபாலிடி சட்டசபை முதலிய ஸ்தானங்களின் தேர்தல்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு 1000, 5000, 10000, 50000 ரூபாய்கள் வரை தேர்தல்கள் செலவும் அவைகளினால் தங்கள் வாழ்க்கை கவனிப்பு கெடுதலும் ஏற்படுகின்றன. மற்றபடி ஒழுக்கங்களிலும் மிராசுதாரர்களாயிருக்கிறவர்கள் தாசி, வேசி, வைப்பு முதலிய விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் வீட்டு பெண்களை கவனியாமலும் அவர்களுக்கு வாழ்க்கையில் இன்பமில்லாமல் கொடுமைப் படுத்துவதும் அதனால் இம்மாதிரி மிராகதாரர்கள் வீட்டுப் பெண்கள் பெரிதும் தங்கள் இயற்கை உணர்ச்சியை கட்டுப்படுத்த சக்தியற்ற வர்களாகி தங்கள். வேலையாட்கள் வெளியாட்கள் முதலானவர்களுடன் இன்பம் அனுபவிக்க துணிவு கொள்ள வேண்டி ஏற்படுவதும், இதனால் குடும்ப கவனம் குறைந்து அவரவர்கள் இஷ்டம் போல் அவரவர்கள் கையில் சிக்கின பணத்தை பாழாக்குவதுமான வழிகளால் அநேக குடும்பங்கள் கெடுவதும், மற்றும் விவகார வியாஜியங்கள் முதலிய காரியங்களில் வக்கீல் களுக்கும் அதிகாரி களுக்குமாக தங்கள் பொருள்களை அள்ளிக் கொடுத்து பாப்பராவதும், அதிகாரிகள் சிநேகத்திற்காகவும் பட்டம், பெருமை, முதலியவைகளுக் காகவும் பொருள்களை கவலையின்றி வாரி இறைத்து கடன்காரர்களாவதும் ஆகிய எத்தனையோ விதங்களில் கிராமங்களும் கிராம மிராசுதாரர்களும்
100-க்கு 80 பேருக்கு மேலாக கடன்காரர்களாகவும் ஒழுக்கமில்லாதவர்: களாகவும் குடும்பங்களில் கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வருவதை நாம் தினமும் பார்த்துவருகின்றோம்.
இக் குறைகள் நீங்கினாலன்றி வேறு எந்த காரணத்தாலாவது நமது
கிராமங்கள் முற்போக்கடைந்து விட முடியுமா என்று கேட்கின்றேன்.
எனவே இக் குறைகள் நீங்க எந்த அரசியலோ, மத இயலோ, கிராம சீர்த்திருத்த இயலோ, இதுவரையில் ஏதாவது செய்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றேன்.
உண்மையாய் ஏதாவது ஒரு கிராமம் திருத்தமடைய வேண்டுமானால் மேற்கண்ட குற்றங்கள் நீங்கத் தகுந்த கொள்கை கொண்டதாக கிராம
சீர்திருத்தத் தன்மை ஏற்பட்டாலொழிய வேறு எந்த விதத்திலும் சீர்திருத்தம் ஏற்படாது. இவைகள் எல்லாம் என்னுடைய 35 வருஷ கிராமவாசிகளுடை
யவும் மிராசுதாரர்களுடைய சினேக அனுபவத்தினாலேயே சொல்லு கின்றேன். இந்த மேற்கண்ட காரணங்களால் வருஷம் பத்தாயிரம், இரு
குடி அரசு - 1928 () 282
பதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் வரும்படி உடைய பெரிய பெரிய குடும்பத் தாரின் கடனுக்கும் சொத்துக்கும் சரி என்றும் சொத்துக்கு மேற்பட்ட கடன் என்றும் சொல்லும்படியான நிலையில் இருந்து வருகின்றது.
இயற்கைப் பாடம்
இனி இயற்கைப் பாடம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன்.
இந்த இயற்கைப் பாடம் என்பதை நமது சிறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைப் பற்றி உபாத்தியாயர்கள் மிகவும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது மக்களின் அறிவு வளர்ச்சிக்கு மிக்க அவசிய மானதாகும். ஆனால் அநேக உபாத்தியார்களுக்கு இயற்கைத் தத்துவம் இன்னதென்றே தெரியாது என்பது எனது அபிப்பிராயமாகும்..
நமது மக்களின் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்குக் காரணம், இயற்கையின் தத்துவம் இன்னதென்று அறிய முடியாமல் போனதே தான். மேல் நாட்டார்கள் குறிப்பாக வெள்ளைக்காரர்கள், நம்மால் தெய்வத் தன்மையென்றும் அற்புதம் என்றும், சொல்லத்தக்கதான அநேக ஆச் சரியப்படத்தக்க காரியங்களை செய்து கொண்டும் இனியும் அநேக ஆச் சரியங்களைக் கண்டு பிடித்துக் கொண்டும் வருவதற்கு அவர்கள் இயற்கை
யின் தத்துவத்தை அறிவதில் பெரிதும் கவலை எடுத்துக் கொண்டதே
காரணமாகும்.
நமது பிள்ளைகளுக்கு நாம் இயற்கையின் தத்துவம் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் மேல் நாட்டார் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கையின் தத்துவத்தை சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் ஒன்றுக் கொன்று நேர் விரோதமானது. நாம் நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே, “எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓர். அணுவும் அசையாது; கடவுள் சம்மதம் இல்லாமல் நம்மால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆகையால் இதில் நம்பிக்கை வைத்து எல்லா பொறுப்பை
யும் கடவுள் மீது போட்டுவிட்டு பக்தியாய் இருக்க வேண்டும்” என்று
சொல்லிக் கொடுக்கின்றோம். மேல்நாட்டாரோ அப்படி இல்லாமல், “மனித னால் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. முயற்சி செய்; பலனடை வாய். உனது சக்தியில் நீ சந்தேகம் கொள்ளாதே; உன்னால் ஆகுமோ ஆகாதோ என்று பயப்படாதே சகல அற்புதங்களும், அதிசயங்களும், உனது
நம்பிக் கைக்குள்ளும், உனது முயற்சிக்குள்ளும் சிக்கிக் கிடக்கின்றது” என்று சொல்லிக் கொடுக்கின்றார்.
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மழை பெய்யாவிட்டால் பார்ப்பானுக்கு பணம் கொடுத்து வருண ஜெபம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லிக் கொடுக்கின்றோம்.
மேல் நாட்டார் மழை பெய்யாததற்கு மேகத்தில் உள்ள கோளாறு என்ன என்று கண்டுபிடித்து, மேகத்தை கலக்கிவிட்டு மழை பெய்யச் செய்யும்படி சொல்லிக் கொடுக்கிறார்கள். இயற்கைத் தத்துவம் அறியத்தக்க
அறிவுப் பெருக்கத்திற்கு நாம் குழந்தைகளை பழக்குவதில்லை..
குழந்தைகள் இயற்கை விசாரணையில் இறங்கினால் நம்மவர்கள் மிரட்டி நாஸ்திகம் என்றும் அதிகப் பிரசங்கம் என்றும் பயப்படுத்தி அடக்கி விடுகின்றோம்.
இவ்விதம் அடக்கும் தன்மையை பெரும்பாலும் நாம் மதத்தின்
பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், நாஸ்
திகம் ஆகும் என்றும் சொல்லி பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடுமையேதான் முக்கிய காரணமாகும்.
மதத்தையும் கடவுளையும் நினைத்ததற்கெல்லாம், எடுத்ததற் கெல்லாம், தொட்டதற்கெல்லாம் சம்மந்தப்படுத்தி “எல்லாம் கடவுள் செயல்; எல்லாம் கடவுள் செயல்” என்பதையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் தன்மையை அடியோடு நிறுத்திவிட வேண்டும்.
09.05.1028 அன்று பூந்தமல்லி கண்டோண்ட்மெண்ட் கட்டிடத்தில் நடந்த குறிப் செங்கல்பட்டு ஜில்லாஆரம்பஆசிரியர் மகாநாட்டுக்குத்தலைமை வகித்து ஆற்றிய உரை- தொடர்ச்சியின் இறுதிப்பகுதி.
குடி அரசு - சொற்பொழிவு - 03.06.1928
குடி அரசு - 1928 () 284
சுயமரியாதைத் திருமணங்கள்
இந்த வாரம் அநேக இடங்களில் இருந்து சுயமரியாதைத் திருமணங்
கள் நடந்ததாக சமாச்சாரங்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆனாலும் அவற்றில் பெரிதும் பார்ப்பனர்களை விலக்கி நடத்தியதாக
மாத்திரம் தெரிய வருகின்றனவேயல்லாமல் மற்றபடி அவை முழுவதும் சுய மரியாதைத் தத்துவப்படி நடைபெற்றிருப்பதாக சொல்லுவதற்கில்லா மலிருப்பதற்கு வருந்துகின்றோம். ராமநாதபுரம் ஜில்லா சுக்கிலநத்தத்தில்
நடந்த மூன்று திருமணங்களையும் மதுரையில் நடந்த ஒரு திருமணத் தையுமே பரிபூரண சுயமரியாதைத் திருமணங்களென்று சொல்லலாம். சுயமரியாதைத் திருமணத்திற்கும் அது அல்லாத திருமணத்திற்கும் நாம் குறிப்பிடும் வேறுபாடுகள் என்ன வெனில்,
சுயமரியாதை அற்ற திருமணமென்பது
1. மற்றவர்களைக் காட்டிலும் ஜாதியாலோ சமயத்தாலோ தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிற ஆச்சாரியன் என்பவனைக் கொண்டு மணச்சடங்கு நடத்துவது.
2. மணமக்களுக்கு, மணமக்கள் அறியாத பாஷையில் சடங்கு வாக்கியங்களைச் சொல்வது.
3.மணமக்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பொருள் விளங்காத சடங்குகளைச் செய்விப்பது.
4. இன்னின்ன காரியத்திற்காக இன்னின்னவைகளைச் செய்கிறோம் என்கின்ற குறிப்பில்லாமல், வழக்கம், பழக்கம், பெரியவாள் காலத்தில் ஏற்பட்டது என்கின்ற குருட்டு நம்பிக்கையின் பேரில் காரியங்களைச் செய் வது ஆகிய இவைகளும் மற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளும் கொண்ட மணங்களை சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்.
தவிர, மணமக்கள் விஷயத்திலும் போதிய வயது முதலிய பொருத்த
மில்லாததும், பெண்ணின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லா
மல் பெற்றோர்கள் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுதான்
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பதும் சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சுக்கில நத்தத் திருமணங்கள் சுயமரியாதைத் திருமணம் என்றே சொல்ல வேண்டும். முதலாவது மணமக்கள் ஒருவரை ஒருவர்: அன்புங் காதலும் கொண்டு தாங்களாகவே சம்மதங் கொண்டவர்கள். இரண்டாவது, திருமணத்தின்போது முன் சொன்னக் குற்றங்களில்லாமல்
பரிசுத்தத் தன்மையாகவே நடைபெற்றன. அதாவது மணமக்களை வெகு சாதாரண உடையில் சுமார் 2000 பந்துக்களும் பொதுமக்களும் நிறைந்த கூட்டத்தின் நடுவில் கொண்டு வந்து இருத்தி மணமக்களின் பெற்றோர். எழுந்து சபையாரை நோக்கி “இன்று இங்கு எழுந்தருளியிருக்கும் பெரியா ரான திருவாளர் ராமசாமி நாயக்கரவர்களை எனது மகனின் திருமணத்தை இனிது நடத்திவைக்கும்படி நான் வேண்டிக்கொள்ளுகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். திரு. நாயக்கர் எழுந்து சபையோரைப் பார்த்து “மண: மகனின் தந்தையார் வேண்டியபடி நாம் நடத்தி வைக்கப் போகும் திருமண மானது இனிது நடைபெறவேண்டும்” என்றும் “மண மக்களும் சுற்றத்தாரும் எல்லாப் பேறும் பெற்று இன்பமாய் நீடூழி வாழ வேண்டும்” என்றும் எல்லாம் வல்ல சக்தியை இறைஞ்சி ஆசீர்வதிக்கும் படியாய் வேண்டிக் கொண்டார். சுற்றத்தாரும் பொதுமக்களும் ஒரு நிமிஷம் அவரவர் வழிபடும் சக்தியை பிரார்த்தித்து ஆசீர்வதித்தார்கள். பிறகு நாயக்கர் மணமக்களைப் பார்த்து சொல்லும் படி கேட்டுக் கொண்டதாவது:-
“எல்லாம் வல்ல சக்தியின் அருளால் நமது இல்லற வாழ்க்கைக்கு அரிய துணையாக தங்களைப் பெறுகிறேன். தங்களைப் பேணுவதில் தங்களருமைத் தாய் தந்தைகளைப் போலவும் இல்லறத்தை நடத்துவதில் தங்களுக்கு உண்மையான அமைச்சராகவும் அருமைத் தோழியாகவும் இருந்து வருவதோடு என் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் தாங்கள்: செல்லும் நல்வழியில் தங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்படியாக யான் எச்செயலையும் செய்யவும் உடன்படுகிறேன். நாம் இருவரும் உடலும் உயிரும் போலவும் கண்ணும் இமையும் போலவும் ஒருவருக்கொருவர். உதவியாயிருக்க அருள் புரியுமாறு எல்லாம் வல்ல சக்தியை வணங்கி இம் மாலையைத் தங்களுக்கு சூட்டுகின்றேன்” என்று சொல்லி மணமகள் மணமகனுக்கு மாலை சூட்டினார். அதுபோலவே மணமகனும் சொல்லி மங்கல நாணை மணமகளுக்கு பூட்டினார். மற்றும் ஒரு முறை சபையோர் ஆசீர்வதித்தார்கள். சிலர் எழுந்து நின்று இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லி ஆசீர்வதித்தார்கள். மணமக்கள் மணத்தை ஒப்புக் கொண்டதற்கறி குறியாக மாலைகளை மாற்றிக் கொண்டார்கள்.
கடைசியாக மணமக்கள் எழுந்து நின்று தங்களுக்கு திருமணம் செய்வித்ததற்காக வணக்கம் செய்வதின் மூலம் நன்றி செலுத்திவிட்டு
குடி அரசு - 1928 () 286
இருவரும் “நமது இல்லற வாழ்க்கையை ஒழுங்காக நடத்தவும், காதலின் பத்தை அனுபவிக்கவும், உலகிலுள்ள மக்கட்கு நம்மாலான உதவி புரியவும், குடும்ப வாழ்க்கையை ஏற்று நடத்திச் செல்வோம்.” என்று சொல்லிக் கொண்டே நடந்து அம்மியை மிதித்துவிட்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
(குறிப்பு:- இந்த இடத்தில் அம்மியை மிதிப்பதற்கும் மணவரையைச்
சுற்றுவதற்கும் பொருள் இன்னதென்று விளங்கவில்லையானாலும் இந்து லாப்படி இவ்விரு சடங்கும் செய்தால்தான் மணம் செல்லுபடியாகும் என்றிருப்பதால் இவற்றைச் செய்ய வேண்டி நேரிட்டது!
மணமக்களின் பெற்றோர்கள் இம்மாதிரி திருமணம் நடத்த வெகு ஆவலோடு இருந்தார்கள் என்பதையும் மற்றபடி மூடப்பழக்க வழக்கங் களில் அவர்களுக்கு நம்பிக்கையில்லையென்பதையும் பொது ஜனங்கள் உணர்வதற்கு ஒருசிறு உதாரணமே போதுமானது. அதாவது மணமகளின் பெற்றோர் பல லட்சத்திற்கு அதிபதிகளாயிருந்தும் மணமக்களுக்கு புது உடை கூட உடுத்துவிக்காமலும், மணப்பெண்ணுக்கு சாதாரணமாய் அணிந்திருக்கும் அணியை விட விசேஷ நகையொன்றும் பூட்டாமலும், மணமகன் சாதாரண வேஷ்டியுடனும் ஒரு சிறுதுண்டை மேல் வேஷ்டியாக அணிந்திருந்ததோடு ஒரு காசளவு பொன்னோ வெள்ளியோ அணியாமலும் வெகு இயற்கையழகோடு வந்து வீற்றிருந்தார்கள். நிற்க திருமணச் சடங்கு தொடங்கும்போது ஒரு பெரிய அம்மையார் மணமக்களின் முன்பாக ஒரு குத்து விளக்கை வைத்து விளக்கு ஏற்ற நெருப்புக் குச்சியை உரைக்கும் போது மணமகளின் தகப்பனரான ஸ்ரீதுரைசாமி ரெட்டியார் எழுந்து “எதற் காக இங்கு விளக்குப் பற்றவைக்க வேண்டும்? பகல் 11 மணி நேரத் துக்கு இங்கு இருட்டாகவா இருக்கிறது? அனாவசியமாக அர்த்தமில்லாததைச் செய்யாதீர்கள்” என்று தடுத்துவிட்டார். தவிர வேறு எவ்வித சடங்கையும் வைத்துக் கொள்ளவில்லை. மற்றபடி ஒரே ஒரு சடங்கில்தான் எல்லோரும் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது பகல் 12-மணிமுதல் இரவு 2-மணி வரையிலும் வந்திருந்த சுமார் 5000 பேருக்கு குறையாமல் சாப்பாடு போட்ட வண்ண மாகவே இருந்தார்கள். பலர் மூட்டை கட்டிக் கொண்டு போன வண்ண மாகவே இருந்தார்கள். ஒரு ஊர்வலமும் நடந்தது.
நிற்க மறுநாள் காலையில் நாயக்கரும் அவர்கள் சகாக்களும் ரெட்டி யார் அவர்களிடம் விடை பெற்றுக் கொள்ளும்போது ரெட்டியார் சொன்ன
தாவது:
“தாங்கள் இங்கு வந்தது எனக்கு பெருமையும் திருப்தியும் அளிக்கத் தக்கதாய் இருக்கிறது. தங்களால் நடத்தி வைக்கப்பட்ட இத் திருமணங் களைப் பற்றி என் சுற்றத்தார்களும் நண்பர்களும் நேற்றுப்பகல் T மணி முதல்
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மாலை 6மணி வரை குற்றம் சொல்லிக் கொண்டும் பரிகாசம் செய்து கொண்டும் இருந்தார்கள். ஆனால் நேற்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை நிகழ்த்திய தங்களுடையவும் தங்கள் சகாக்களுடையவும் பிரசங்கங் களைக் கேட்ட பின்பு ஒவ்வொருவரும் திருப்தியடைந்ததோடு இனி தாங்கள் செய்யப்போகும் ஒவ்வொரு சடங்கையும் இப்படியே செய்வதாக தீர்மானித்துக் கொண்டும் முதல் முதல் இச்சடங்கை நானே செய்து காட்டிய
பாக்கியம் பெற்றதற்காக பாராட்டிவிட்டும் சென்றார்கள்”
எனவே, நம் நாட்டில் நடக்கும் திருமணங்களில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் அர்த்தமற்ற சடங்குகளை விலக்கு
வதும் ஆடம்பரமற்ற முறையில் அதாவது அனாவசியமான வழியில் பெருமைக்காகப் பணத்தைச் செலவாக்காமல் இருப்பதும் கல்யாணங்களை பல நாட்கள் நீடித்து நடத்தாமல் ஒரே நாளில் முடிப்பதும் ஆகிய காரியங் களை முக்கியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் நடக்க வேண்டுமென்ப தற்காகவே அம்மாதிரி நடத்திய ஒரு பெரியாரின் செயலை ஆதாரமாகக் கொண்டு இத்தலையங்கம் எழுதியிருக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 03.06.1928
குடி அரசு - 1928 () 288
திரு.வி. கல்யாணகந்தா முதலியார்
திரு. முதலியார் அவர்கள் சிறிது காலம் உறங்கிக் கிடப்பதும் பிறகு திடீரென்று பூர்வக்கியானம் பெற்றவர் போல் நாட்டுக்கு பெரிய அழிவு வந்துவிட்டதாகவும் அதைத்தான் காப்பாற்றப் போகின்றதாகவும் வேஷம் போட்டுக் கொண்டு சீர்திருத்தக்காரர்களால் ஆபத்து! ஆபத்து! என்று சப்தம் போடுவதும் அதன் பேரில் ஏதாவது இரண்டு கிடைத்தால் வாங்கிக்கொண்டு பொறுக்கமுடியாமல் “நான் அப்படி செய்யவில்லை இப்படி நினைக்க வில்லை. அதற்கு இதல்ல அருத்தம் அதல்ல பொருள்” என்று பல்லைக் காட்டுவதும் ஆகிய காரியத்திலேயே இருந்து வருகிறார்.
உதாரணமாக கொஞ்ச காலத்திற்கு முன் சீர்திருத்தம் என்கின்ற தலையங்கம் இட்டு ஒரு வியாசத்தில், தற்காலம் நடைபெறும் சீர்திருத்தத்தால் நாட்டிற்கு பெரிய ஆபத்து என்றும் சீர்திருத்தக்காரர்கள் மிக்க மோச மானவர்கள் என்றும் ஜனங்கள் நினைக்கும்படி எழுதினார்.
“குடி அரசு' அதற்கு தகுந்த ஆப்புக்கடாவினவுடன் “நான் அப்படி எழுதவில்லை இப்படி எழுதவில்லை”, “அதற்கு இதல்ல அர்த்தம்” என்று சமாதானம் சொல்லி அமர்ந்தார். இப்போது பல இடங்களில் மூடநம்பிக்கை: ஒழிந்த சடங்குகளால் சில நடவடிக்கைகளில் மக்களின் கவனம் இழுக்கப் பட்டதும் மறுபடியும் “சீர்திருத்தம்” என்கின்ற தலைப்பு கொடுத்து “சீர்திருத்தக் காரர் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும்” என்று உபதேசம் செய்ய வந்து விட்டார்.
அதோடு தனது ஆராய்ச்சி ஆணவத்தை முன்னால் தள்ளிக் கொண்டு “ஆராய்ச்சி வேண்டும். அனுபவம் வேண்டும், குணநலம் வேண்டும்” என்று சோம்பேறி ஞானம் பொரிக்கின்றார். இவற்றிற்கு “திராவிடன்” ஒருவாறு பதிலிருத்தவுடன் தனது பழய குணப்படி “நான் பொதுவாகச் சொன்னேனே ஒழிய “திராவிடனை'யோ *குடிஅரசை”யோ சொல்லவில்லை” என்று ஒளியப் பார்ப்பதுடன் மற்றும் தனக்கு ஒரு புதிய இயக்கம் வேண்டும் என்றும், யாராவது ஆரம்பித்தால் அதற்கு தான் உதவி செய்யப் போவதாயும், நாஸ்திக இயக்கங்களை அழிக்க ஏதோ ஒரு புது இயக்கம் தோன்றப் போவதாகவும், அதற்கு முப்பது ஆண்டாக தமிழ்நாட்டின் சீர்திருத்தத்திற்கு உழைத்த
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
ஒருவரின் தலைமை கிடைக்கப்போவது கேட்டு மகிழ்வதாகவும் எழுதி மிரட்டுகிறார்.
திரு.முதலியாரை நன்குணந்தவர்கள் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு
மதிப்புக் கொடுப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.
திரு. முதலியாருக்கு ஒரு இயக்கம் வேண்டுமானால் திருவாரூர், விஜயபுரம் சர்வமத சங்க இயக்கத்தை கைக்கொண்டு அதற்கு உதவி செய்ய
லாம். அல்லது பட்டுக்கோட்டை நகரத்தார் தோற்றுவித்திருக்கும் சிவநேச இயக்கத்தில் சேர்ந்து அதற்கு உதவி செய்யலாம். அல்லது தானே இப் பொழுது பலருக்கு எழுதிக் கேடடுக்கொண்டிருப்பது போன்று ஒரு இயக் கத்தை ஆரம்பிக்கலாம். எதுவானாலும் வரவேற்கத் தயாராயிருக்கின்றோம்.
திரு. முதலியாருக்கு இருக்கும் சீர்திருத்த ஆண்மை நாம் நன்றாக அறிந்தது தானே ஒழிய அறியாதது ஒன்றும் மறைவிலில்லை என்றே சொல்லுவோம். அப்படி ஒன்று இருக்குமானால் “சீர்திருத்தம்”, சீர்திருத்தம்” என்கின்ற தலையங்கத்தின் கீழ் ஜுடைமாடையாய் எழுதவேண்டியும் இருக்காது. எழுதிவிட்டு உன்னை சொல்லவில்லை” என்று எழுதுகிற பயங்காளித்தனமும் இருக்காது. நமது தொண்டு முதலியார் சக்தியையும் செய்கையையும் அவரது குழாத்தின் சக்தியையும் எதிர்ப்பையும் முழுதும் எதிர்நோக்கி துவக்கப்பட்டதே ஒழிய முதலியாரை மறந்து துவக்கப்பட்டது அல்ல என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். திரு. முதலியார் நமது தொண்டிற்கு இதுவரை எவ்வளவு இடையூறு செய்து வந்தார். என்பது நமக்கு தெரிந்ததேயொழிய தெரியாதது அல்ல. எனினும் திரு முதலியாருடன் இனியும் நாம் நேசமாகவே இருக்கின்றோம். ஏனெனில் திரு. முதலியார் அவர்களின் இடையூறு நமது தொண்டை கெடுத்து விடாது என்கின்ற தைரியத்தோடு தானே அல்லாமல் வேறல்ல. அன்றியும் திரு. முதலியார் தயவில்லாவிட்டால், அழிந்து போகும்படியான தொண்டால் உலகிற்கு என்ன பயன் ஏற்படக்கூடும் என்கின்ற எண்ணமும் கூடத்தான்.
நமது தொண்டின் கருத்தை மறுபடியும் பொதுமக்களுக்கு தெரியப் படுத்துகின்றோம். இதில் ஒன்றும் மறைவாக வைத்துக் கொள்ள நமக்கு இஷ்டம் இல்லை. ஏற்கின்றவர்கள் ஏற்கட்டும். அதாவது, முதலாவது புராணக் குப்பை யுலகத்திலிருந்து மக்கள் விடுதலை அடைந்தே தீர வேண்டும். அது எந்தப் புராணமானாலும் நமக்கு அக்கரை இல்லை. உதாரணமாக ராமாயணமோ, பாரதமோ, மச்ச புராணமோ, தவளைப் புராணமோ, பெரிய புராணமோ, சின்னப் புராணமோ, சிவ புராணமோ, விஷ்ணு புராணமோ அதைப்பற்றி நாம் ஒரு சிறிதும் வித்தியாசம் பார்க்கமாட்டோம். அதோடு இந்தப் புராணங்களைப் படித்துவிட்டு பிரசங்கத்தில் வயிறு வளர்ப்பவர் களுக்கும் இவற்றை அச்சடித்து
குடி அரசு - 1928 () 290
விற்பனைக்கு காத்திருப்பவர்கட்கும் கஷ்டமும், நஷ்டமும் ஏற்படும் என்பது
நமக்குத் தெரியும். ஆனாலும் நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஏனெனில் மக்களின் விடுதலை நமக்கு பெரிதே ஒழிய புராணப் பிரசங்கியுடையவும் புஸ்தகக் கடைக்காரனுடைய வும் வயிறு வளர்ப்பு பெரிதல்ல.
இரண்டாவது, மூட நம்பிக்கை ஒழியவே வேண்டும். அது சிவ னைப்பற்றியதானாலும், விஷ்ணுவைப்பற்றியதானாலும், காளியைப் பற்றிய தானாலும், கருப்பைப்பற்றியதானாலும், நமக்குக் கவலையில்லை. இவர்களை நம்பிக் கொண்டிருப்பவர்கள் அநேகர்கள் என்பதும் இவர்களால் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள் அநேகர்கள் என்பதும் நமக்குத் தெரியும். அதைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. மக்கள் அறிவு பெறுவதே நமது கவலை.
மூன்றாவது, அனுபவத்திற்கு ஒத்துவராத சமயங்களும் மக்களுக்கு சுயமரியாதை அளிக்காத சமயங்களும், ஒழிந்தே தீரவேண்டியது மிக்க அவசியமான வேலை. அது எந்த சமயம் ஆனாலும் சரி, வைணவ சமயமோ, சைவ சமயமோ ஸ்மார்த்த சமயமோ மாத்துவ சமயமோ மற்றைய சமயமோ என்பதைப் பற்றிய கவலை நமக்கு ஒரு சிறிதும் இல்லை. இனியும் இது போன்ற பல உண்டு. எனவே நமது தொண்டில் இதைத் தவிர வேறு இரகசியம் ஒன்றும் இல்லை. ஆதலால் இவற்றிற்கு எதிராக உள்ளவர்கள் எம்முறை யிலாவது நம்மோடு போராடட்டும். அதற்கு நாம் தவாராகவே இருக்கின்றோம். ஆனால் சூழ்ச்சி முறை மாத்திரம் வேண்டாம் என்கின்றோம். அதாவது பவுத்த சமயத்தை அழிக்க சிலர் பவுத்த மதத்திலேயே சேர்ந்து துரோகம் செய்தது போல் நம்முடன் கூட இருப்பவர்கள் போல் காட்டிக் கொண்டும், நம்மையே சதா புகழ்ந்து கொண்டும் வேறு விதமாக அயோக்கியத்தனமாக யாரும் நடக்க வேண்டாம் என்று தான் கேட்டுக் கொள்ளுகின்றோம். நாம் எழுதுவதற்கோ, பேசுவதற்கோ யோக்கியமாக சமாதானம் சொல்லத் தயாரா கவே இருக்கின்றோம். பார்ப்பானுடைய வேத சாஸ்திரஸ்மிருதிகளுடன் வாதாடும். வேலையைவிட திரு. முதலியார் போன்ற புராணக்காரர்களுடைய வும் அழுக்கு மூட்டைகளுடையவும், உபத்திரவமே நமக்கு பெரிய தொல்லை யாய் இருந்து வருகின்றது. காரணம் இவர்கள் வெளிப்படையாய் நேரான
வழியில் எதிர்க்காமல் சூழ்ச்சி வழியை பின்பற்றுகிறது தானே ஒழிய வேறில்லை.
நிற்க. ஆராய்ச்சிக்காரர்கள் என்பதற்காகவோ, பண்டிதர்கள் என்பதற் காகவோ இவ்விஷயத்தில் நம்மிடத்தில் தனிமரியாதை ஒன்றுமில்லை என்பதை பொதுமக்கள் உணரவேணுமாய் வேண்டுகின்றேன். ஏனெனில் ஆராய்ச்சியும் பண்டிதத் தன்மையும் வேறு, அறிவு வேறு என்பது நமது
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அபிப்பிராயம். ஆராய்ச்சிக்காரரும் பண்டிதர்களும் அறிவாளிகளாகவே இருப்பார்களென்று எண்ணினால் ஏமாந்து போய்விடுவோம். ஆதலால் அவர்களிடத்தில் பொது ஜனங்கள் அறிவாளிகளுக்கு கொடுக்கத்தகுந்த மதிப்பை கொடுத்து ஏமாந்துவிடக்கூடாதென்பதை தெரிவித்துக் கொள்ளு கிறேன்.
சமீபத்தில் நான் ஒரு தொல்லையிலிருந்து நீங்கி சற்று ஓய்வடைந் தோம் என்று எண்ணியிருந்தோம். திரு. முதலியார் தொல்லை தவிர்க்க முடியாததாகிவிட்டதால் அதன் முடிவையும் பார்த்து விடவேண்டியது அவசியமாகிவிட்டதற்கு வாசகர்கள் மகிழச்சி அடைவார்கள் என்றே நினைக் கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.06.1928
குடி அரசு - 1928 () 292
மறுயமமரம் பகிஷ்காறய் புரட்டு
சைமன் கமீஷன் விஷயமாகப் பார்ப்பனர்கள் ஆரம்பித்த பகிஷ்
காரப் புரட்டுக்கு ஒருவிதத்தில் சாவுமணி அடித்து விட்டதானாலும் மறுபடி யும் சிலர் செத்த பாம்பை ஆட்டுவது போல் சத்தில்லாத விஷயங்களைக்
காட்டிக் கொண்டு பாமரமக்களை ஏமாற்ற புதிது புதிதாக வழி கண்டுபிடித்து தங்கள் தங்கள் அரசியல் புரட்டுத் தேரை ஓட்டப் பார்க்கின்றார்கள். இனி இம்மாதிரியான புரட்டுகளுக்கெல்லாம் பாமர மக்கள் ஏமாற மாட்டார்கள்: என்றே உறுதி கூறுவோம்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பஹிஷ்கார வேஷம் இனி செலா வணியாகாது என்று தெரிந்திருந்தாலும் அடுத்து வரப் போகும் தேர்தல்
களுக்கு தங்களுக்கு அனுகூலமாக ஏதாவது மார்க்கம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமுடையவர்களும் பார்ப்பனரல்லாதார் ககஷி வலுப்படுவதன் மூலம் தங்கள் வாழ்வுக்கு பங்கம் வந்து விடுமோ என்கின்ற சுயநல வாதிகளும் சேர்ந்து பகிஷ்காரம் பகிஷ்காரம் என்று போலிக் கூக்குரல் இடுகின்றார்கள். அதைப் பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை. ஆனாலும் பகிஷ்காரக் கூச்சலில் ஏதாவது ஒரு சிறு நாணயமாவது இருக் கின்றதா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
சைமன் கமீஷனை பகிஷ்கரிப்பது எதற்காக?
இந்தியர்களை கமீஷனில் சேர்க்கவில்லை என்பதற்காகவா?
அல்லது இந்தியாவின் சுதந்த ரத்தை நிர்ணயிக்க வெள்ளைக்கார ருக்கோ பார்லிமெண்டுக்கோ அதிகார மில்லை என்பதற்காகவா?
அல்லது வேறு எதற்கு ஆக? இதற்கு இதுவரை எந்த அரசியல் தலைவராவது எந்த அரசியல் இயக்கமாவது சரியான பதிலிருக்கவே இல்லை.
மற்றபடி மொத்தத்தில் தற்காலம் சுயமரியாதை இயக்கத்தால் சுயமரியாதை என்கின்ற வார்த்தைக்குச் சற்று மதிப்பு இருப்பதை உணர்ந்து
293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அந்த வார்த்தையை உபயோகப்படுத்திக் கொள்ளக் கருதி “கமிஷனுடன் ஒத்துழைப்பது இந்தியரின் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல” என்று மாத்திரம் சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை. எவ்விதத்தில் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்பதையும் யாரும் விளக்கிக் காட்டவுமில்லை.
“இந்தியர்களை கமீஷனில் நியமிக்காததற்காக கமிஷனுடன் ஒத்து ழைக்கக் கூடாது” என்று சேலம் ஜில்லா அரசியல் கான்பரன்சு முதல்முதலாக தீர்மானித்து அந்த பெருமையை அது அடிக்கடி பாராட்டிக் கொண்டாலும் இந்தியர்களில் யாரை நியமிப்பது? எந்த மதத்தினரை நியமிப்பது? அதற்குள். எடங்கின எந்த வகுப்பாரை நியமிப்பது? அல்லது எந்த அரசியல் கட்சித் தலைவரை நியமிப்பது? என்கின்ற கேள்வி பிறந்தவுடன் *திருடனைத் தேள். கொட்டியது” போல் அந்த பிரசினையை அடியோடு நழுவவிட்டு விட்டு சுயமரியாதை மந்திரத்தை மொட்டையாய் பிடித்துக் கொண்டார்கள். பிறகு கிட்ட நெருங்கி கேட்க ஆரம்பித்த பிறகுதான் “பார்லிமெண்டுக்கு இந்தியா
வின் சுதந்திரத்தை நிர்ணயிக்க அதிகாரமில்லை” என்ற புதிய யுக்தி வாதத்தை கண்டுபிடித்தார்கள். ஆனால் இவ்விரண்டையும் பகிஷ்காரப் புரட்டர்கள். எல்லாரும் ஒப்புக்கொள்வதாக காட்டிக் கொள்வதுமில்லை, ஒப்புக் கொள்வ தில்லை என்பதாக தைரியமாய் சொல்லுவதும் இல்லை.
உதாரணமாக ஸ்ரீமதி பெசண்டம்மையார் தனது “காமன் வெல்த் ஆப் இந்தியா” என்கின்ற இந்திய சுயராஜ்ய மசோதா ஒன்றை சேலம் அரசியல் மகாநாட்டிலும் மற்றும் பல காங்கிரஸ் கூட்டங்களிலும் நிறைவேற்றிக் கொண்டு பார்லிமெண்டின் பாதத்தில் வைத்து அதை ஒப்புக் கொள்ளும்படி விழுந்து கும்பிட்டுக் கொண்டிருக்கின்றார். இதைப்பற்றி எந்த தேசீயத் தலைவர்களாவது தேசீய சுயமரியாதைக்காரர்களாவது ஒரு சிறிதும் வாய்
திறந்தவர்கள் அல்ல.
பார்லிமெண்டை லக்ஷியம் செய்யாதவரும், பார்லிமெண்டுக்கு இந்தியாவின் மீது ஆதிக்கமில்லை என்பவரும், அரசியல் கமிஷனை சமூக விஷயத்தில் கூட பகிஷ்கரிக்க வேண்டும் என்பவருமான மாஜி காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாட்டு தனிப்பெருந் தலைவர் என்பவரும், 30 கோடி மக்களுடைய தலை எழுத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கின்றவர்: என்றும் பிரபல தேசீயவாதிகள் என்றும் சொல்லிக் கொள்ளுவோர்களால் சொல்லப்படுபவருமான ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பார்லிமெண்ட் மெம்பர். களால் பிச்சையாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லிக் கொள்ளப் படும். இந்திய சட்டசபை ஸ்தானத்தை முதுகில் தூக்கிக் கொண்டு பார்லி மெண்டுக் காரர் வேஷமான உடையை உடுத்திக் கொண்டு, “சமூக விஷயத்தில் அரசியல் கமிஷனை பகிஷ்கரிக்கும்படி நான் சொல்லவில்லை” என்கின்ற பொய்யை உளறிக் கொண்டு பார்லிமெண்டின் பாதத்தில் வைக்க ஒரு திட்டத்தையும் தயாரித்து தலையில் சுமந்து கொண்டு காயலாக்காரர் என்கின்ற
குடி அரசு - 1928 () 294
பெயர் வைத்துக் கொண்டு இங்கிலாந்தில் பார்லிமெண்ட் மெம்பர் வீட்டு புறவிடைப்புறம் திரிகின்றார் என்றால் பஹிஷ்காரமெங்கே? சுயமரி யாதை எங்கே? பூரண சுயேச்சை எங்கே? என்றுதான் கேட்கின்றோம்.
அன்றியும் இது யாருடைய கண்களில் மிளகாய்த்தூள் அள்ளிப் போடுவதற்காக செய்யும் சூழ்ச்சி என்பதாக தேசீயவாதிகள் என்போர்களை கேட்கின்றோம்.
போதாக் குறைக்கு சர்வ க௯ஷி மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டி அதன் மூலம் பாமர மக்களின் தலையில் கை வைக்கவும் தாழ்த்தப்பட்ட வகுப்பாரையும் குழியில் தள்ளவும் எவ்வளவோ சூழ்ச்சியும் செய்துப் பார்த்தாய் விட்டது.
எனவே இனியாவது இந்தப் புரட்டுகளை தலைகாட்டவிடாமல் அடிக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும்.
குடி அரசு - துணைத்தலையங்கம் - 10.06.1928
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அருப்புக்கோட்டை சுயமரியாதை
கேஸ் வி௫தலை
அருப்புக்கோட்டையில் சுகாதார வார கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப்பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு
“முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிராமணன் தான் பாட வேண்டும்” என்று சொல்ல, உடனே அங்கிருந்த கூட்டம் “சூத்திரன்” என்று சொன்னதற்காக அக்கிராசனரை மன்னிப்பு கேட்கும்படி கேட்கவே, அக்கி ராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுய மரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்யவொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும் சிலகுற்றங்களும் சுமத்தி அரஸ்டு செய்து ஜாமீனில் விடவும் மறுத்து சிறைச் சாலையில் இரவெல்லாம் அடைத்து வைத்து கேஸ் தொடர்ந்தார்கள். கேசுக்கு மதுரையிலிருந்து வக்கீல்கள் பீசில்லாமல் போய் பல வாய்தாக்கள் ஆஜராகி கேஸ் நடத்தினார்கள். கடைசியில் குற்றவாளிகள் இன்னார் என்று சரிவர: அடையாளம் காட்டவே முடியாமல் போய் விட்டது. அப்படி இருந்தும் அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்த மேற்படி வாலிபர்கள் கேஸை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஆசைப்பட்டார்கள். கடைசியாய் கேசு தள்ளுபடி யாகிவிட்டதாக அருப்புக்கோட்டையிலிருந்து தந்தி வந்திருக்கின்றது.
அனாவசியமாய் ஒரு இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்த தற்காக போலீசு அதிகாரிகள் மீது நஷ்டத்திற்கு விவகாரம் தொடர வேண்டும் என்கின்ற எண்ணம் அவ்வூராருக்கு இருப்பதாக தெரிய வருகின்றது. அதற்காக பலர் பொருளுதவி செய்வதாகவும் முன் வருவதாகவும் தெரிய வருகின்றது.
குடி அரசு - 1928 () 296
என்றாலும் விடுதலை அடைந்த விஷயத்திற்காக வாலிபர்கள் பதினொருவரையும் பாராட்டுவதுடன் இந்த கேசுக்கு பொருள் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டத்தையும் கருதாது வந்து உதவி செய்த மதுரை வக்கீல்
களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்து கொள்ளுகின்றோம்..
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.06.1928
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
லாட யின் க்
31-5-28 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில்,
. குழந்தைகளுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நன்று. ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின்
பிரசாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இது முடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்ல வென்று
நமக்குத் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கின்றது. இப்படி எழுதி இருப்ப தானது சீர்திருத்தக்காரருக்கு தலையையும் அதன் விரோதிகளான பார்ப்பனர். களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது.
“குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை” என்று தன்னாலேயே
ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்கு கேடு உண் டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் “லோகோ பகாரி*க்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.
கடைசியாக “இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய விஷயங்களில் பலவித தொல்லை விளையும்” என்று எழுதுகின்றது. மனிதன் தன் சொத்தை அடையும் விஷயத்திலும் உத்தி யோகம் பெறும் விஷயத்திலும் மற்றும் அனேக விஷயத்திலும் வயது நிர்ணயம் குறிக்கப்பட்டிருக்கின்றது. இவைகளில் என்ன தொல்லைகள். விளைந்து மக்களைக் கெடுத்துவிட்டது என்பது விளங்கவில்லை. வேறு மதஸ்தர்கள் என்பவர்களுக்காகிலும் வயது கண்டு பிடிக்கும் விஷயம் சற்று கஷ்டமாக இருக்கலாம்.
இந்துக்கள் என்போர்களுக்கு அதிலும் பார்ப்பனர்கள் என்போர்க்கு வயது கண்டுபிடிப்பதில் தொல்லை விளைய காரணமில்லை என்றே சொல்வோம். ஏனெனில், அவர்கள் ஜோசியம், ஜாதகம் என்னும் ஒரு வித
குடி அரசு - 1928 () 298
மூடநம்பிக்கையுள்ளவர்களானதால் கண்டிப்பாய் கணக்கு வைத்திருக்க முடியும். அதோடு சர்க்கார் பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்து வருவதால் ஜாதகத்தை புரட்டி விடுவார்கள் என்கின்ற பயமும் வேண்டியதில்லை.
எனவே இனியாவது “லோகோபகாரி”ச் சீர்திருத்த விஷயங்களில் இம்மாதிரி வழவழப்பையும் இரண்டு பேருக்கும் நல்லவராகப் பார்க்கும் தன்மையையும் விட்டு தைரியமாய் ஒரு வழியில் நின்று மக்களுக்கு உதவ வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 10.06.1928
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
“நவசக்தி” முகலியாரிண் நாணயம்
நாம் சென்ற வாரம் “குடி அரசில்” திருவாளர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களைப் பற்றி எழுதியதில் “நவசக்தியின் சீர்திருத்தம்” என்கிற கட்டுரையானது திரு. முதலியாரால் பேடித்தனமாகவும், திருட்டுத் தனமாகவும் நம்மைக் குறிப்பிட்டே ஜாடையாக எழுதப்பட்டதென்னும். பொருளைக் காட்டியதோடு அதை நாம் மறுக்கவோ, கண்டிக்கவோ ஆரம்
பித்தால் உடனே, திரு.முதலியார் “அது குடி அரசைப் பற்றி எழுதவில்லை” என்றும் பொதுப்பட எழுதினது என்றும் எழுதி ஒளியப் பார்ப்பார் என்றும் எழுதியிருந்தோம். அது போலவே இவ்வாரம் “நவசக்தி”யில் திரு.முதலியார். அவர்கள் “குடி அரசின் குதர்க்கம்” என்னும் தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டபடியே தமது பழங் குணத்தைக் காட்டியிருக்கிறார். அதாவது,
“குடி அரசு” குதர்க்கத்தில் பேர் பெற்றது என்றும் அது தோன்றியது முதல் யாரையேனும் போருக்கிழுப்பதே அதன் வேலை என்றும் அது இவ் வாரம் தம்மீது திரு. முதலியார் மீது! நாட்டத்தைச் செலுத்தி இருப்பதாகவும் எழுதிவிட்டு,
“நவசக்தியில் தோன்றிய “சீர்திருத்தம்” என்னும் கட்டுரை பொது நெறிபற்றி எழுதப்பட்டதே தவிர “குடி அரசின்” ஆசிரியரையோ அதன் இயக்கத்தையோ உளம் கொண்டு எழுதவில்லை” என்றும் எழுதி யிருக்கிறார்.
இப்படி திரு, முதலியார் எழுதி மறையப் பார்ப்பார் என்று நாமும் நமது நண்பர்களும் முன்னமே நினைத்ததுதான். ஆனாலும், பின்னை அது யாரைப் பற்றி எழுதினது என்று கேட்டு இம்முறை திரு.முதலியாரின் நாணயத்தின் யோக்கியதையை சந்திக்கு இழுத்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் சென்ற வாரம் “குடி அரசில்” “திரு.வி.கலியாண சுந்தரமுதலியார்”” என்கின்ற தலையங்கம் எழுதினோம்.
திரு.முதலியார், உடனே வெகு அவசரமாக அடுத்த வாரமே அது நம்மைப் பற்றி எழுதவில்லை என்று எழுதி தப்பித்துக் கொள்ளப் பார்த்தாரானாலும் வெகு ஆத்திரத்தின் மீது 5, 6 கலம் நீட்டி எழுதிய அதே
குடி அரசு - 1928 () 300
கட்டுரையில் தம்மை அறியாமலே தமது விஷம் முழுவதையும் கக்கி விட்டார். அதாவது,
“குடிஅரசில் வரும் கட்டுரைகளில் பல எமக்கு (திரு.முதலியாருக்கு! பிடிப்பதில்லை” என்றும் “அதற்காக நான் அறப்போர் தொடுக்கப் போகி றேன்” என்றும் எழுதி அவ்வாதப் போரிட நம்மை அறைகூவி அழைத்
திருக்கிறார்.
அதோடு “ஆண்டவன் அருளை முன்னிட்டே இப் போர்முனை
யில் நான் இறங்குகிறேன்” என்று சொல்லி ஆண்டவன் அருளில் போய் ஒளிகிறார். அதோடு நில்லாமல் “முரடர்களால் தாக்கப் பெறும் பேறும் கொல்லப் பெறும் பேறும் எமக்கு கிடைத்தால் அதுவே போதும்” என்றும் சோம்பேறி ஞானமும் பேசி பேடி வசவும் வைகிறார்.
அன்றியும் பெரியோர்களை இழிந்த உரைகளால் தூற்றும் கட்டுரை களைக் கொண்டு வெளிப்பட்டுள்ள ஒரு பத்திரிகையுடன் (குடி அரசுடன்! போர் புரிந்து உயிர் நீப்பதே எனது பிறவிப்பயன்” என்றும் எழுதுகிறார்.
அன்றியும் “குடிஅரசுத் தலைவருக்கு ஆள்வலி, தோள்வலி, பொருள் வலியுமுண்டு; எமக்கோ அத்தொன்றுமில்லை; ஆதலால் ஆண்டவன் அருள்வலிகொண்டு போர் தொடங்குகிறேன்” என்றும் எழுதி இருக்கிறார். இவ்வெழுத்துக்களின் யோக்கியதை எப்படி இருந்தாலும் இவ்வெழுத்துக்
களுக்குள் எவ்வளவு புரட்டும் இழிகுணமும் நிறைந்திருந்தாலும் ஒன்று மாத்திரம் வெளிப்படையாய்த் தெரிகிறதா இல்லையா? என்றுதான் கேட் கின்றோம்.
அதாவது, தாம் இதுவரை எழுதிவந்த “சீர்திருத்தம்” என்னும் கட்டு ரைகள் “குடி அரசையோ அதன் கொள்கைகளையோ குறித்ததல்ல என்றும், பொதுவான சீர்த்திருத்தையே குறிக்கொண்டு எழுதப்பட்டது என்றும் எழுதி வந்ததும் இப்போது இப்படி எழுதுவதும் யோக்கியப் பொறுப்பற்ற பொய்யா அல்லவா? என்பதுதான்.
இம்மாதிரியான யோக்கியரைப்பற்றி தாம் வசை மொழிகள் எழுதி விட்டதாக மிக்க வருந்துகிறார். அதோடு இவரை கண்டித்திருக்கும் வார்த்தை
கள் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்றும் எழுதுகிறார். எனவே பிறர் செய்யும் அயோக்கியத்தனங்களை மறைத்து வைப்பதுதான் திரு.முதலியார் அவர்கள். அகராதியில் சுயமரியாதைக்கு பொருள் போலும்.
தவிர திரு. முதலியார் நம்முடன் தொடங்கியிருக்கும் போர் அறப் போராமறப்போரா என்பதையும் பொது மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டு
301 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
மாய் விரும்புகிறோம். அறப்போர் என்பது எதிரி என்ன குற்றம் செய்தான் என்பதை எடுத்துக்காட்டி, அது குற்றம்தானா? என்பதை ருசுப்படுத்தி. அதன்
மீது போர் தொடுத்து கண்டித்தல் யோக்கியர்கள் செய்யும் அறப்போருக்கு உரிய தர்மமாகும்
நமது திரு. முதலியார் அவர்களின் அறப்போருக்கு இந்த தர்மங்கள் வேண்டியதில்லை போலும். அன்றியும் “நாஸ்திகம்” “பெரியோரை நிந்தித்
தல்” என்று சொல்லிவிட்டு, பேடித்தனமாக வாயில் வந்தபடி மறைவாக வைது விட்டு யாராவது ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால் “உம்மையல்ல” என்று சொல்லிவிடுவதுதான் அறப்போர்க்குற்ற தர்மங்களாகிவிடும் போலும்... இவ்வித அறப்போருக்கு நமது திரு. முதலியாருக்கு கடவுள் அருள் வேறு வேண்டுமாம்.
கடவுள் ஒன்று இருப்பதாக திரு. முதலியார் அவர்கள் உண்மை யிலேயே எண்ணி இருப்பாரானால் அதன் அருளை தமக்கு மாத்திரம் சொந்தமாக்கிக் கொண்டிருக்கமாட்டார். அதுவும் தன்னுடைய ஒழுக்கமும், நாணயமும், ஆண்மையும் அற்ற மறப்போருக்கு ஆண்டவன் அருள் கிடைக்குமென்று ஒரு க்ஷணமும் நினைத்திருக்கவும் மாட்டார். எனவே, உலகத்தில் எப்படிப்பட்டவர்கள் தொட்டதற்கெல்லாம் கடவுளை நினைக் கிறார்கள் என்பதற்கும், கடவுள் அருளை வேண்டுகிறார்கள் என்பதற்கும் இதுவே ஒரு உதாரணமாகும்.
நிற்க திரு. முதலியாரவர்கள் புராணங்களைப்பற்றி எழுதும்போதும் திருட்டுத்தனமாகவே எழுதுகிறார். அதாவது புராணங்களைப்பற்றிய நமது
கருத்து நேயர்களுக்கு முன்னமே தெரியுமாம். ஆதலால் இப்பொழுது எழுத வேண்டியதில்லை என்று மறைந்து கொண்டார். இந்தப் போருக்கோ கட்டுரைக்கோ ஜீவாதாரமான விஷயம் இப்புராண விஷயந்தான் என்பது யாவரும் அறிந்ததாகும். அப்படியிருக்க அதைப்பற்றி மற்றுமொரு சமயம் எழுதப்போகிறாராம். எப்பொழுது எழுதுவது? என்பது நமக்கு விளங்க வில்லை. புராணங்களைப் பற்றி குறைகூறுவதாக நம்மீது குற்றம் சுமத்தும் போது அதன் யோக்கியதைகளை எடுத்துச் சொல்லாமல் மற்று எப்போது சொல்லுவதற்காக அதை வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பது விளங்க வேண்டாமா? இதற்குதான் அறப்போர் என்று பெயரிட்டிருப்பதுடன் ஆண்டவன் அருளை நம்பி போருக்கு எழுந்து விட்டாராம். அதோடு கூடவே தான் ஒருபடி இறங்கி “புராணங்களை கவி அழகு, இயற்கை வருணனை முதலியவற்றைக் கருதிக்கூடவா படித்தல் கூடாது” என்கிறார். அவ்வியற்கை அழகுக்கும் கவி அழகுக்கும் உதாரணமாக கம்பராமாய ணத்தையும், பெரிய புராணத்தையுமே காட்டத் துணிந்து விட்டார். இவ்வள வாவது இறங்கி வந்தது நல்ல காலமே.
குடி அரசு - 1928 () 302
கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும், கவியழகையும், வருணனையும் குறிக்கொண்டு படிப்பவரிடம் நமக்கு வேலையில்லை என்பதை திரு. முதலியார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஆனால் பாமர மக்களைக் கூட்டிவைத்து அதைப் படிப்பதுதான் பக்தி என்றும் கேட்பதுதான் மோட்சமென்றும், அதில் உள்ளவைகளை நம்பாத வன் நாஸ்திகன் என்றும், முரடன் என்றும், கடவுளையும், கடவுள் நெறியை
யும், கடவுள் நெறியை உணர்த்திய பெரியார்களையும் தூஷிப்பவன் என்றும் சொல்லுகின்றார்களே அம்மாதிரியான மூடர்களின் பிரசாரம் ஒழிய வேண்டும் என்பதுதான் நமது கவலை.
மற்றும் திரு. முதலியார் அவர்கள் எழுதுவதாவது “பத்திரிகை உலகில் ஈண்டு “குடி அரசு” உலவுவது போல கலைகளில் குப்பைப் புராணங்கள். உலவுகின்றன” என்றும்
“நாயக்கர் போன்றாருக்கு உலகில் இடமிருக்கும் வரை புராணங்
களுக்கும் இடமிருந்தே தீரும்” என்றும்
“புராணக் கலைகளை நாயக்கர் போன்றாருக்கு உவமையாய்க் கூறலாம்” என்றும் எழுதி இருக்கிறார்.
இம்மூன்று வாக்கியங்களாலும் நாயக்கரை திரு. முதலியார் அவர்கள் எவ்வளவு இழிவாய்க் கருதி இருக்கிறார் என்பது ஒருபுறமிருந்தாலும், அப்படி இழிவாய் கருதுவதிலும் நமக்கு என்ன லாபமிருக்கின்றது என்று பார்த்தால் இதிகாச புராணங்கள் என்பவைகளை அவ்வளவு இழிவாய்க்
கருதி இருப்பதாக திரு. முதலியார் இப்போதாவது ஒப்புக் கொள்கின்றாரே, அதுவே நமக்கு ஒரு பெரிய லாபமாகக் கொள்ளலாம். ஆனால் இந்தப் புத்தி எவ்வளவு நேரம் நிற்குமோ?
உள்ள இதிகாசங்களையும் புராணங்களையும் வெறும் கலையாக
ஒப்புக் கொண்ட பிறகும், மற்றும் அவை “நாயக்கரை”ப்போன்ற அவ் வளவு இழிகுணமுள்ளதாகத் தீர்மானித்த பிறகும், திரு. முதலியார் அவர்கள். கடவுளையும் கடவுள் நெறியையும், கடவுள் நெறிகளை உணர்த்திய பெரியாரையும் வேறு எதிலிருந்து கண்டுபிடித்தார் என்பதையும், எப்படிப் பட்ட கடவுளையும் கடவுள் நெறியையும் நெறி உணர்த்திய பெரியாரையும் நாயக்கர் வைகிறார் என்பதையும் திரு. முதலியார் ஆண்மை இருந்தால் இப்போதாவது சொல்ல முன் வருவாரா? என்றுதான் கேட்கின்றோம்.
எனவே, திரு. முதலியார் அவர்கள், “சீர்திருத்தம்” என்று எழுதிய கட்டுரைகள் நம்மையும் நமது இயக்கத்தையும் பற்றி எழுதியதுதான் என்று
நாம் கொண்டது சரியென்றும், திரு. முதலியார் நம்மைப்பற்றி எழுதியது
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அல்ல என்று சொல்வது நாணயப் பொறுப்பற்ற பேடித்தனம் என்றும், திரு. முதலியார் அவர்களாலேயே 13-6-28 தேதி “நவசக்தி”யில் “குடிஅரசின்
குதர்க்கம்” என்று எழுதப்பட்ட தலையங்கத்திலேயே தாம் முன் எழுதிய
“சீர்திருத்தம்” என்னும் கட்டுரையை நம்மைப்பற்றியே எழுதியதாகவும், அது
வும் கடவுளையும், கடவுள் நெறியையும், அந்நெறி உணர்த்திய பெரியார். களையும் குறைகூறுவதானாலும். நாஸ்திகம் பரப்புவதானாலுமே நம்முடன் இப்போர் தொடுக்க நேரிட்டது என்றும் எழுதி ஒப்புக் கொண்டிருப்பதையும் வாசகர்களுக்கு மெய்பித்து விட்டோம் என நினைக்கிறோம்.
மற்றும், திரு. முதலியார் அவர்களின் கட்டுரையின்கண் காணும் இழிமொழிகளுக்கு அதாவது சிற்றினம் என்றும், நாய் என்றும் புன்மொழி என்றும், நாயக்கர் இறுமாந்தவரென்றும், நாஸ்திகத்தை புகுத்துகிறவர் என்றும், “குடிஅரசு” இழிவுரை உமிழும் பத்திரிகை யென்றும், “குடி அரசு” கடவுள்
நெறிக்கும் கலைகளுக்கும் கேடு சூழ்ந்து வருகின்றது என்றும் மற்றும் அது போன்று காணும் பழிப்புகளுக்கும், இழி மொழிகளுக்கும், மற்றும் அதில் கண்ட பலவற்றிற்கும் பின்னால் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.06.1928
குடி அரசு - 1928 () 304
பார்வதிக்கும் பரமசிவனுக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
பார்வதி :- எனது பிராணநாதனாகிய ஓ சிவபெருமானே! ஆகாயத்
தில் பறக்கின்ற, கருடன் என்கின்ற பட்சியைப் பார்த்து பலர் காலையிலும், மாலையிலும் கன்னங்கன்னமாய் போட்டுக் கொள்ளுகின்றார்களே, அது எதற்காக நாதா?
பரமசிவன் :- கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகாவிஷ்ணுவுக்கு வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக் கண்டால் கன்னத்தில் அடித்துக் கொள்ளு கிறார்கள்.
பார்வதி :- ஓ ஹோ அப்படியா சங்கதி! சரி அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது நம்முடைய வாகனமாகிய காளை மாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள், ஒடை அடிக் கிறார்கள், செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள், அடித்துக்கூட தின்று விடு கிறார்களே அது ஏன்?
பரமசிவன் :- நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை. நன்றாக சாம்பலை பூசிக் கொள்ளத்தான் தெரியும்.நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.
பார்வதி :- அதுதான் போகட்டும், நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால் ஏன் கன்னம் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்? அய்யோ
பாவம்!
பரமசிவன் :- கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால் கணபதிக்கு அபிஷேகம் செய்யும்போது அவனது வாகனமாகிய கல்லுப் பெருச்சாளிக்கும் அபிஷேகம் செய்வார்கள். அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றி கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன்
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம் பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே! இந்த வெட்கக் கேட்டை யாருடன் சொல்லுவது!
பார்வதி :- அதுதான் போகட்டும், தங்களுடைய மற்றொரு வாகன மாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு சோடு என்று விரட்டுகின்றார்களே அது என்ன காரணம்
நாதா?
பரமசிவன் - கண்மணி அதுவும் பக்தர்களின் அறியாத்தனம் தான். ஆனாலும் அது மலம் சாப்பிடுகின்றதல்லவா? அதனால் அதன் மீது சிலர்: அசசிப்படுகின்றார்கள் போல் இருக்கின்றது.
பார்வதி :- என்ன நாதா, வைரவக் கடவுள் வாகனம் மலம் சாப் பிட்டால் மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு,நத்தை, நண்டு முதலிய அசுசியமான வஸ்துக்களையெல்லாம் சாப்பிடுகின்றதே! அதையெல் லாம் அந்த பக்தர்கள் மன்னிக்கும் போது மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக்கூடாது?
அதுதான் போகட்டும் நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங் கன்னமாய் போட்டுக் கொள்ளுவ தில்லை, அன்றியும் அதைக் கண்டால் அடித்துத்தின்று விடுகிறார்களே! அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத்தின்று விடுகிறார். கள்? இது என்ன அறியாயம்?
பரமசிவன் :- அது அந்த பக்தர்களின் பக்திக் குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்.
பார்வதி :- நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும் போதுதான் எனக்கு மிகவும் வெட்கக்கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கெளரவமும் அவர் பக்தர்களுக்கு மாத்திரம் இவ்வளவு பக்தியும் இருப்பதும் நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும், நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக் குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே தவிர விஷ்ணுவின் பெண்ஜாதியான மகாலக்ஷ்மி கூட இதனாலேயே அடிக்கடி என்னைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றாள். தவிர நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல் நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இருப்பதோடல்லாமல் விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங்கன்னமாய் போட்டுக் கொண்டு மரியாதை: செய்கிறார்களே இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1928 () 306
பரமசிவன் - என்ன செய்யலாம் சகி? நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்துவிட்டான். விதி யாரை விட்டது? சொல் பார்ப்போம் என் கண்மணி! நீ இதற்காக அழவேண்டாம். உன்னைப் பார்த்தால் எனக்கும் அழுகை வருகிறது.
பார்வதி:- சரி சரி, இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும். இனி நீங்கள் வேறு அழுக வேண்டும்! போனால் போகட்டும் இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிரம்மாவை பேசிக் கொள்ளலாம். வாருங்கள் நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்.
குடி அரசு - உரையாடல் - 17.06.4928
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
திரு. வி. கல்யாணசுந்தா முதலியார்
திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் தமது 20.6.28 ௨ “நவசக்தி” பத்திரிகையில் “திறந்த மடல்” என்னும் தலையங்கத்தின் கீழ் நமக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், நாம் சென்ற வாரக் “குடி அரசு' பத்திரிகையில் எழுதிய விஷயங்களை தாம் ஒப்புக் கொள்ள வில்லை என்றும் “நவசக்தி”யில் கண்ட மற்ற - நாம் கண்டிக்காமல் விட்ட - விஷயங் களை நாம் ஒப்புக்கொண்டதாக தாம் கொள்ளுவதாகவும் எழுதி யிருக்கிறார். இதைப்போன்ற அறிவுடைமை பயித்தியக்கார ஆஸ்பத்திரியிலும் கண்டு பிடிக்க முடியாது என்றே சொல்லுவோம். மற்றவைகளைப் பற்றி நாம் பின்னர். எழுதுவோம் என்று குறிப்பிட்டது திரு. முதலியாரின் கண்களில் படாமல் போனது ஏனோ அறியோம்.
மற்றும் நமது கட்டுரையை நான்கு பிரிவாக்கி
முதலாவதாக வசைமொழி என்றும், அதை இனி நாம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நமக்கு புத்தி சொல்லி வருகிறார். இது அவரு டைய அதிகப் பிரசங்கித்தனத்தையே காட்டுகின்றது. தற்கால பண்டித
உலகத்தில் இது ஒரு அதிசயமல்ல. இதையே இவர் வசைவு என்றால் திரு.
முதலியார் அவர்களின் யோக்கியதைக்கேற்ற மாதிரி அவர் போக்கை முழுதும் பின்பற்றியே எழுதியிருந்தால் அவர் அதற்கு என்ன பேர் இடுவா ரோ நாம் அறியோம். நம்மை சிற்றினம் என்று சொன்ன திரு. முதலியாரின் இனத்தை விரிக்க நாம் துணிந்திருந்தால் அதை என்ன வென்று சொல்லு வாரோ நாம் அறியோம். அன்றியும் பின்னும் ஒரு காலத்தில் திரு. முதலியார் அவர்களுடன் பழமை பாராட்ட நேரிடும் என்றே அவர் இனத்தை மனப் பூர்வமாக மூடி வைத்தோம். இதை திரு. முதலியார் ஒப்புக் கொள்ளாவிட்டால் நமக்கு கவலை இல்லை. சமயம் வரும் போது, நாம் எவ்வளவு மூடி வைத்தோம் என்பதை அவர் உணரக்கூடும் என்கிற தைரியம் நமக்குண்டு. ஆதலால் இனிமேலாவது திரு. முதலியாரவர்கள் நம் போன்றோருக்கு அறிவுறுத்தும் தன்மையை விட்டு தன்னையே அவர் திருத்திக் கொள்ள. முயல வேண்டுமென்று அவருக்கு அறிவுறுத்த நமக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் அந்நிலை ஏற்பட நாம் ஆசைப்பட உரிமை உண்டு என்று நினைக்கின்றோம்.
குடி அரசு - 1928 () 308
இரண்டாவதாக “நவசக்தி*யின் மொழிகளில் சிலவற்றை நாம் தவறாக கொண்டதாக குறிப்பிட்டு தனது கல்வித்திறன் முழுவதையும் அதற்காக செலவழித்திருக்கின்றார்.
இதைப்பற்றிய விசாரணையை வாசகர்களுக்கே விட்டு விடுகிறோம்.
திரு. முதலியாரவர்களின் எழுத்தையோ மொழிகளையோ பிறழக் கொள்ள வில்லை என்று ஒரு மனிதன் திரு. முதலியார் அவர்களிடம் பேர் வாங்க வேண்டுமானால் அது உலகத்தில் மக்கள் பிறவிக்கு ஆகக்கூடிய காரியமா? என்பது நமக்குப் பெரிய மயக்கமாகவே இருக்கின்றது. ஆழந்தெரியாமல் காலைவிட்டுக் கொள்வதும் பிறகு மற்றவர்கள் மீது பிறழக்கொண்டதாகக்
குறை கூறுவதும் அவரோடு கலந்திருந்த முறையில் நாம் கண்டு பிடித்த ஒன்றாகும்.
மூன்றாவதாக திரு. முதலியார் பொறித்த சீர்திருத்தக் கட்டுரையை பொதுநெறி பற்றி எழுதியதாகவே திரும்பவும் எழுதி தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்கிறார்.
திரு. நாயக்கர் மீது போர்தொடுக்க ஆரம்பித்துவிட்டோம். உதவிக்கு
நீ வா,நீ வா என்று கதவு வைத்த வீடுதோறும் காத்துத் திரிந்தும், விலாசம் தெரிந்த பேர்வழிகளுக்கெல்லாம் சேதி அனுப்பினதும் திரு. முதலியாரவர். களாலேயே சமீபகாலத்தில் மடையன், அயோக்கியன், துர்த்தன், இழிமகன் என்றும் இன்னும் இன்னோரன்ன பலவாறாகச் சொல்லிக் கொண்டிருந்த நபர்களிடமெல்லாம் உயிர்துணை எதிர்பார்த்து இறைஞ்சியதும் “அறப் போர்” தொடுக்க ஆண்டவன் அருளைத் துணை கொண்டதும் இவ்வளவும் பெற்றும் போதாமல் உயிர்விடத் துணிவு கொண்டதும் ஆகிய மற்ற காரியங்
கள் எதற்காக யாரை உத்தேசித்து எது முதற்கொண்டு ஏற்பட்ட கெடுதிக்காக என்பதை கருணை கூர்ந்து திரு. முதலியாரவர்கள் திருக்கரங்கொண்டு இப் போதாவது அருளுவாரா? என்று இறைஞ்சிவிட்டு அவ்விஷயத்தை தற்கால சாந்தியாக நிறுத்தி வைக்கின்றோம்.
நான்காவது புராணக்கலையை ஒட்டியது என்று குறிப்பிட்டுவிட்டு புராணத்தைப்பற்றிய தமது அபிப்பிராயத்தை முருகன் என்னும் புத்தகத்தில் முன்னமேயே குறிப்பிட்டிருப்பதாகவும் எழுதி அதில் உள்ள விஷயத்தை எடுத்து நான்கு கலம் நீட்டி தீட்டியிருக்கிறார்.
அவற்றுள் நாம் இது சமயம் இரண்டு இடங்களை மாத்திரமே எடுத்தாளுவோம். அதாவது, ஒன்று கடவுளைப் பற்றியது; மற்றது புராணங் களைப் பற்றியது. அவற்றுள் “கடவுளைப் பற்றியதில் - சைவ, வைணவ, பெளத்த சமயவாதிகள் அறநெறி பிறழ்ந்து ஒருவரோடொருவர் போரிட்டு ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய ஏட்டுச் சுவடிகள் பல......
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
இச்சமய வெறியர்கள் முருகன் - என்னும் தமிழ்ப் பெயரை விரும்பா தொழியினும் இயற்கை முதற்கு வேறுபெயர் சூட்டியாதல் வழிபட்டிருக் கலாம்? இயற்கையின் உட்பொருளை எப்பெயரால் வழுத்தினால் என்ன? இயற்கை, கடவுள் முருகன் என்னும் பெயர் தாங்கினால் என்ன? அரி, அரன், அல்லா, ஜாஹோவா முதலிய எப்பெயரிட்டு அழைத்தாலென்ன?”
என்று எழுதியிருக்கும் இடத்தை முதலாவதாக எடுத்துக் கொள்ளுகிறோம்.
இங்கு திரு.முதலியாரவர்கள் தம்மை இயற்கையவாதியாகக் கொள்ளு கின்றார் என்று கொள்ளுகிறோம்.
அதாவது ஆங்கிலத்தில் நேச்சுரலிஸ்ட் (Naturalist) என்று சொல்லும்
மதம்.
அதோடு இயற்கையை எந்த பெயரால் அழைத்தாலென்ன என்றும் அதை முருகன் என்று அழைக்க ஒருப்படாதவர்கள் வேறு எப்பெயரால் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லி யிருக்கிறார்.
அன்றியும் முருகனைப்பற்றி ஒவ்வொரு புராணத்தில் ஒவ்வொரு விதமாக சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எனவே பல சமயக்காரர்கள், பல புராணக்காரர்கள், பல பேர் வழிகள் முருகனைப்பற்றி பல விதமாக எழுதியிருக்கிறார்கள் என்பது போலவே திரு..
முதலியார் அவர்களும் தமது மதப்படி அல்லது தான் அறிந்தபடி ஒருவாறு முருகனைப்பற்றி திரு. முதலியார் அவர்களின் முருக புராணத்தில் எழுதி இருக்கிறார் என்றே வைத்துக் கொண்டு, இவைகளில் எந்த சமயக்காரரை, எந்த புராணத்தை, எந்த நபரை ஏற்றுக் கொள்வது என்பதைப்பற்றியும், எது சரி? எது தப்பு என்பதைப் பற்றியும், எவ்வாறு வழிபடுவது, எதற்காக வழிபடுவது என்பதைப் பற்றியும் மற்றொரு சமயம் ஆராய்வோம்.
இரண்டாவதாக புராணங்களைப் பற்றி எழுதியதில் “குப்பை என்று வழங்கப்படும் சுவடுகளில் பேர் பெற்று விளங்குவன புராணங்கள். அவை ஆரிய உலகினின்றும் நம் தமிழ் நாட்டிற்குள் புகுந்தவை. புராணங்கள் தமிழ் நாட்டின் முதல் நூல்கள் அல்ல.
புராணம் என்ற சொல்லே தமிழ்ச் சொல்லன்று” என்று எழுதிவிட்டு.
“பெரிய புராணம்” என்பது மாத்திரம்) தமிழ் நாட்டில் தோன்றிய தென்றும் அது பதினெண் புராணக் கூட்டத்தில் சேர்ந்ததல்ல வென்றும்,
குடி அரசு - 19280) 310
“ஒன்று அல்லது இரண்டு போக மீதி உள்ள புராணங்கள் எல்லாம் வட மொழியினின்று மொழி பெயர்த்தது”” என்றும் எழுதிவிட்டு “சமய வெறியர்: கள் பலர் பிறர் சமயக் கடவுளர் நிந்தனை கொண்டு போலிக் கதைகள். புனைந்து புராணம் பாடத் தொடங்கிணார்கள். காமுகர் சிலரும் புராணம் பாடி இருக் கிறார்கள். இப்புராணங்களிலுள்ள வருணனைகள் இயற்கையை மறைப்பவை யாயின, கதைகளோ விலங்குகளும் வெறுக்கத் தக்கன; இப்போலிப் பாணங்களால் கடவுள் நெறிக்கும் ஒழுக்கங்களுக்கும் கேடு விளைந்தது...” என்றும் எழுதியிருக்கிறார்.
எனவே இவை இரண்டினுள்ளும் இயற்கை தோற்றந்தான் கடவுள் என்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியும் புராணங்கள், குப்பைகள் என்று எழுதியதைப் பற்றியும் அவைகள் ஆரியர் களால் புகுத்தப்பட்டன என்று எழுதியதைப் பற்றியும் அவைகள் பல சமய வெறியர்கள் பலரால் பாடப்பட்டவை என்று எழுதியது பற்றியும் அவை களால் உலகில் மக்கள் ஒழுக்கங்கட்கு கேடு சூழ்ந்தது என்று எழுதியது பற்றியும் நாம் திரு. முதலியார் அவர்களோடு போர் தொடுக்க கவலை கொள்ளவில்லை என்பதை திரு. முதலியாருக்கு வணக்கமாய் தெரிவித்து
விடுகிறோம்.
இனி அவற்றுள் போருக்கு நிலைக்களனாய் எஞ்சி நிற்பது பெரிய புராணமேயாகும். “இது போன்ற ஒன்று அல்லது இரண்டு” என்பது எது என்பதையும் குறிப்பிட்டு அதை எதற்காக குறிப்பிட்டு மீத்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதையும் சொல்லியிருந்தால் நலமாயிருக்கும். ஆகிலும் அவை வெளியாகும் போது பார்த்துக் கொள்வோம்.
முதலாவதாக அப்“பெரிய புராணத்தை” திரு. முதலியார் என்னமாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு சற்று புலனாக வேண்டியிருக்கின்றது. அது திரு. முதலியார் கருதி இருக்கும் இயற்கை கடவுளால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்டது என்கின்றாரா?'
அல்லது அதில் உள்ள விஷயங்கள் திரு. முதலியார் அவர்களின் இயற்கை கடவுளின் திருவிளையாடல்கள் என்கின்றாரா?
அல்லது அதை ஒரு வான சாஸ்திரம் என்கிறாரா? அல்லது விஞ்ஞான
சாஸ்திரம் என்கிறாரா?
அல்லது உடற்கூறு சாஸ்திரம் என்கின்றாரா? உலகக் கூறு சாஸ்திரம் என்கின்றாரா?
அல்லது “வேதாந்த” சாஸ்திரம் என்கின்றாரா? சித்தாந்த சாஸ்திரம் என்கின்றாரா?
311 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அல்லது அதை ஒரு தேச சரித்திரம் என்கின்றாரா? அல்லது அதை தெய்வ சரித்திரம் என்கிறாரா? அல்லது அதை இகத்திற்குச் சாதனம் என்கிறாரா? “பரத்திற்கு” சாதனம் என்கிறாரா?
கற்புக்கு வழி என்கிறாரா? களவுக்கு வழி என்கிறாரா?
அரசியலுக்கு அறிவு என்கிறாரா? மத இயலுக்கு அறிவு என்கிறாரா?
“கடவுள்” தன்மைக்கு நெறி என்கின்றாரா? மனிதத் தன்மைக்கு நெறி என்கின்றாரா?
அறிவுக்கு ஆதாரம் என்கின்றாரா? ஆராய்ச்சிக்கு ஆதாரம் என்கின்றாரா?
அல்லது அது திரு. முதலியாரின் இயற்கை கடவுளை உணர்த்த உதவுகின்றதா? அன்றி செயற்கைக் கடவுளை உணர்த்த உதவுகின்றதா?
அன்றியும்,
முடிவாக அதிலுள்ள தெல்லாம் திரு. முதலியாரவர்கள் சத்தியமாய் நடந்தது என்பதாக ஒப்புக் கொள்ளுகின்றாரா அல்லது ஒரு சமயத்தாரால் மக்கள் நன்மைக்காக என்று பெரியோர்களால் கற்பிக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என்று ஒப்புக் கொள்ளுகின்றாரா?
திரு. முதலியார் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அதை ஏற்றுக் கொள்ளுவதினாலேயே உலகில் உள்ள மற்ற மக்கள் எல்லோரும் அதை
ஏற்றுக் கொண்டே தீரவேண்டும் என்கின்றாரா?
அன்றியும் யாராவது ஒருவன் அதை ஏற்றுக் கொள்ள ஒருப்படா விட்டால் அதற்கு காரணம்கூட சொல்லக்கூடாது என்கின்றாரா?'
இன்னோரன்ன பிறவற்றிற்கு திரு. முதலியாரவர்களின் திரு. மனதி லுதித்த திருச்சமாதானம் என்னவென்பதை திருவாய் மலர்ந்தருளுவாரா?' என்று விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.
நிற்க, திரு. முதலியார் அவர்கள் மேலே குறிப்பிட்ட 20-6-28 ௨ தலையங்க முடிவில் நாயக்கரை முன்னிலைப்படுத்தி, “நண்பரே! தங்கள். பொருட்டு எனது காலம் வீணே கழிகின்றது.தாங்களும் நானும் சில அறிஞர்
கள் முன்னிலையில் சமய சீர்திருத்த பொருள்பற்றி வாதம் நிகழ்த்தி ஒரு
முடிவிற்கு வருவது நலம். கல்வி, கேள்வி ஆராய்ச்சிகளில் வல்ல சிலரிடமே சாலும்.அன்னார் இன்னார் என நாமே தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.தங்கள் பதிலை விரைந்து எதிர்நோக்கும் திரு. கலியாண சுந்தரன். (முதலியார்!
குடி அரசு - 1928 () 312
ஆசிரியர் “நவசக்தி” இராயப்பேட்டை, சென்னை.” என்று எழுதி முடித்
திருக்கிறார்.
திரு. முதலியார் அவர்களுக்கு எது முதல் இந்த பஞ்சாயத்து ஞானம் உதயமாயிற்று என்று கேட்கின்றோம்? “சிற்றின ”த்தினிடத்தில் அவருக்குப் பஞ்சாயத்து எதற்கு? ஆண்டவன் அருள்கொண்டு உயிருக்குத் துணிந்து போருக்குத் தொடங்கினவர்கள் போர்க்கோலத்தையும் தமது படைவீரர். களையும் களத்தே போரிட்டு வெறுங்கையோடு பஞ்சாயத்தில் புகுவதன் கருத்து யாது என்பதும்
இப்பஞ்சாயத்தில் புகுவோரின் யோக்கியதை தானா தென்னாடு
எழுதிற்று, வடநாடு குகம்பிற்று, தமிழ் நாடு கதறிற்று என்று தன்னாலே நேற்று வரை இழிந்துரைக்கப்பட்ட அவைகளிடம் தஞ்சம் புகுவது என்பனவாகிய விஷயங்களும் நமக்குப் புலனாகவில்லை..
அன்றியும் இவைகளிலிருந்து, திரு. முதலியாரவர்களின் பஞ்சாயத்
திற்குக் காரணமாகிய சமய சீர்திருத்தம் இன்னது என்பதும் நமக்குப் புலனாக வில்லை; அவர் எச்சமயத்தவர்? எச்சீர்திருத்தம் விரும்புகின்றவர் என்பவை
களும் நமக்கு விளங்கவில்லை. இவைகள் ஒன்றும் அறியாமலே எங்ங னேயாம் பஞ்சாயத்தில் புகுவது? என்பதும் நமக்கு விளங்கவில்லை. முடி வாக திரு. முதலியாருக்கு நாம் ஒன்று சொல்ல விழைகின்றோம்..
திரு. முதலியார்வாளே! நமது சீர்திருத்தமெல்லாம் போர் எல்லாம் நமது பெரிய புராணத்தையும் அது போன்றவைகளையும் “கடவுள்” களுக்காகவும் “கடவுள்” நெறிகளுக்காகவும், அந்நெறி உணர்த்திய பெரியா ருக்காகவும், ஏற்றுக் கொள்ளுகின்றவர்கள் போன்றாரிடமும் “நாஸ் திகம் என்பதாக ஒன்று இருப்பதாகக் கருதி அதைச் சிலர் பரப்புவதாகவும் கருதி அதை ஒழிக்க “ஆண்டவர்” அருள் கொண்டு உயிருக்கு துணிந்து கிளம்பிய
வீரர்கள் போன்றாரிடமும்தாள் பெரிதும் இருக்கின்றது. அதற்குத் தாங்கள். எப்பஞ்சாயத்தைக் குறிப்பிடுகின்றீர்கள் என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்க. கடமைப்பட்டிருக்கிறேன். தங்களது அருளும் வீரமும் பெற்ற நேரம் வீணாவதில் நான் பரிதாபப்படுகிறேன். ஆனாலும் வேறு வழி இல்லாமல் தங்களது நேர்மை கொண்ட பதிலை எதிர்பார்க்கின்றேன்.
இப்படிக்கு தங்கள் உளத்தை மதியைக் கொள்ளை கொண்ட
“சிற்றினம்.”
குடி அரசு - தலையங்கம் - 24.06.1928
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
சைமண் கமிஷண் பஹிஹ்காரய் LG
சைமன் கமிஷன் பஹிஞஷ்காரம் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றும், மற்றும் பல பார்ப்பன தாசர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் என்றும் பலமுறை தெரிவித்து வந்திருக்கின்றோம். அதற்கிசைந்த வண்ண மாக தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அடிக்கடி குட்டிக் கரணம் போட்டு வருவதையும் பகிஷ்காரத்திற்கு புது புது வியாக்கியா னங்கள் சொல்லி வருவதையும் அவ்வப்போது தெரிவித்து வந்திருக் கின்றோம் திரு. சீனிவாசய்யங்கார் தமது திட்டத்தை தூக்கிக் கொண்டு சீமைக்குச் சென்றிருப்பதைப் பற்றியும் தெரிவித்திருக்கின்றோம். இப்போது பார்ப்பனர்கள் பார்ப்பன சமூகத்தின் பேராலும் வருணாசிரம தர்ம சபையின் பேராலும் கமிஷனுடன் ஒத்துழைக்கும் விதமாக தங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள். கமிஷனிடம் சாட்சி சொல்லவும் தயாரா யிருக்கிறார்கள். எனவே பகிஷ்கார உபதேசத்தை இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் இனி யாருக்கு உபதேசம் செய்கின்றார்கள் என்பதை பொதுஜனங்களே யோசித்துக் கொள்ள வேண்டுகின்றோம். அன்றியும் இப்பார்ப்பனர்களையும் அவர்களது அடிமைகளையும் நம்பி மோசம் போகாமல் ஒவ்வொரு சமூகத்தாரும் தங்கள் தங்கள் குறைகளை அவசியம் கமீஷனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதாகவும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.06.1928
குடி அரசு - 1928 () 314
திருச்சியில் 144
திருச்சிமலைக்கோட்டை கோவிலுக்குள் பிரவேசிக்கக்கூடாது என்று திருவாளர்கள் ஜே.கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ஜே. என்.ராமநாதன். ஆகியவர்களுக்கு அவ்வூர் மாஜிஸ்திரேட் திரு.சீனிவாசராவ் என்கின்ற ஒரு பார்ப்பனரால் 144ம் உத்திரவு பிறப்பிக்கப் பட்டிருக்கின்றது. இவ்வுத்திரவு அக்கிரமமான உத்திரவானதால் அதை மீறி பிரவேசித்து சிறை புக தீர்மானித்து திருவாளர்கள் கண்ணப்பரும் தண்டபாணி பிள்ளையும் முடிவு செய்து விட்டார்கள். இன்று அல்லது நாளை திருச்சிக்கு சென்று உத்திரவை மீறுவார்கள்.
பின் வந்த தந்தி
திரு. கண்ணப்பரும் தண்டபாணியும் இன்று காலை 144ஐ மீறுவதற்கு இவ்விடமிருந்து திருச்சிக்கு பிரயாணமாயிருக்கிறார்கள். தங்களது மீறுதலால் எவ்வித கலகமும் பலாத்காரமும் நடைபெறாது என்று உறுதி கூறி திருச்சி பொது மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பதாகவும் தங்களை அவசியம் மீற வேண்டும் என்பதாக மனபூர்வமாய் ஆமோதித்திருப்ப தாகவும் திருச்சியில் இருந்து இன்று மாலை தந்தி கொடுத்திருக்கிறார்கள்.
திருச்சியில் கோவிலதிகாரிகளின் பலாத்காரம்
திருச்சி மலைக் கோட்டை கோயிலுக்கு சுவாமி தரிசனைக்கு திருவா ளர்கள் ஜே. என். ராமநாதனும் மற்றும் அவர்களின் பல நண்பர்களும் சென்றதற்காக கோவில் அதிகாரிகள் காலிகளை வைத்து வழிமறித்து
அடிக்கும்படி ஏற்பாடு செய்து நன்றாக அடித்து துன்பப்படுத்திவிட்டதாக திரு. ராமநாதன் அவர்களால் திருச்சிநியாயஸ்தலத்தில் கோவிலதிகாரிகளின் மீது பிராது தொடரப்பட்டிருக்கின்றது. இந்த பிராதுக்கு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் பீசு இல்லாமல் ஆஜராகி வழக்கை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் உத்திரவை மீறி நடப்பதற்காகவும் மேல்கண்ட விவகாரத்தை நடத்து வதற்காகவும் ஏற்படும் செலவுக்காக பொது மக்கள் தங்களால் கூடுமான பொருளுதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 24.06.1928.
315 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
அருஞ்கால் வாருன்
அந்தகாரம் இகபர சாதனம்
இருள், இருட்டு இவ்வுலக மறுவுலக துணை காளைகளின் ஆண்மை நீக்கத்துக்காக விதர்களை நசுக்கி உடைத்தல் தோரணையில், முறையில் வைணவரின் ஒருவகை நெற்றிக்குறி சர்க்கரை பொட்டலம் கட்டுதல் முழுமையாக
ஒடை அடித்தல்
ஓதாவில்
கோபிசந்தனம்
சக்கரை கட்டுதல்
சாங்கோ பாங்கமாக
நாய்கள். பொருள், விளக்கம்
சுணங்குகள்'
தூத்பர்யம் தெய்வ எத்தனம்
கடவுள் ஏற்பாடு
தொந்திரை பாஷியம் புதுக்கோட்டை
தொந்திரவு
விளக்கம், உரை
சிறு மதிப்புள்ள நாணயம், 320 புதுக் கோட்டை அம்மன் காசுகள் -1ரூ
அம்மன் காசு
புனருத்தாரணம்
மறுசீரமைத்தல்
முடத்தெங்கு வந்தனோபசாரம்
நன்றிகூறல்
விகல்பம்
மனமாறுபாடு, வேறுபாடு
ஸ்தம்பம்
தூண்
குடி அரசு - 1928 ()
316 317 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
குடி அரசு - 1928 () 318 319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 6
குடி அரசு - 1928 () 320