Kudi Arasu — 1927, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1927-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 5
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1927-3
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 424
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
பெரியாரின் காந்திய எதிர்ப்பு
காங்கிரசிலிருந்து விலகினாலும் காந்தியத்தை ஏற்றுக்கொண்ட பெரியார் இக்காலகட்டத்தில்தான் காந்தியின் எதிர்ப்பாளர் ஆகிறார். மீண்டும். காந்தியைச் சந்தித்து வாதிட்ட பெரியார் அவரின் வருணாசிரம ஆதரவுக் கருத்துக்களை எதிர்த்து “குடி அரசில்” தொடர் தலையங்கங்களைத்
தீட்டுகிறார். மகாத்மா என்ற சொல்லைத் தவிர்த்து திரு.காந்தி என்று பெரியார்.
எழுதத் தொடங்கியதும் இந்தக் காலத்தில்தான். இந்தியாவில் வாழும் பல்வேறு
சமூகத்தினரின் நிலையை நேரில் அறிய வந்த சைமன் குழுவை காங்கிரஸ்:
எதிர்த்த போது பெரியார் துணிந்து வரவேற்றார். இந்தியர்களின் பிரதிநிதித்து
வம் இல்லை என்று காங்கிரஸ் கூறியதற்கு, “இல்லாமல் இருப்பதே மேல் இருந்திருந்தால் பார்ப்பனர்களாகவே இருந்திருப்பார்கள்” என்று பதிலடி
தந்தார் பெரியார். இதே கருத்தை அம்பேத்கரும் கூறினார்.
“இந்து” என்ற சொல்லுக்கு பார்சிய மொழியில் “திருடன்” என்று
பொருள் கூறியிருப்பதை எடுத்துக்காட்டிய பெரியார் இந்து மதத்தை ஒழித்தே தீரவேண்டும் என்று உறுதி ஏற்றதும் இந்தக் காலத்தில்தான். ஜாலியன் வாலாபாக்கில் சுட்டுத்தள்ளிய ஜெனரல் டயரைவிட கொடுமையானவர்கள்.
சாதி வெறியர்கள் என்று பெரியார் எழுதினார். “பாவி டயராவது தன் வீட்டுப் பெண்கள்மீது கல்லு போட்டார்கள் எனக் குற்றங்கூறி தரையில் ஊர்ந்தவாறே தெருவில் போக அனுமதித்தான். ஆனால் நமது நாட்டு டயர்கள் எதுவும்
குற்றம் சொல்லாமல் தெருவில் போகாதே என்கிறார்களே” என்று பெரியார். கேட்ட கட்டுரையும் இத்தொகுதியில்தான் இடம் பிடித்திருக்கிறது.
சைவத்தைத் தூக்கிப்பிடித்த மறைமலையடிகள் தனது மகளுக்குப் பார்ப்பனச் சடங்குகளுடன் திருமணம் நடத்தியதைச் சாடுகிறார் பெரியார். பார்ப்பனரல்லாத மக்களை அரசுப் பதிவேடுகளில் “சூத்திரன்” என்றே
குறித்து வந்த அதிர்ச்சித் தகவலும் பெரியார் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. மனுதர்மத்தையும் புராணங்களையும் பறிமுதல் செய்யக்கோரி பார்ப்பனரல் லாத வாலிபர் மாநாடு போர்க்குரல் எழுப்பியது. விதவைப் பெண்களுக்கும்
குடும்பச் சொத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தும் கட்டுரைகளும். இத்தொகுதியில் உண்டு. மனுதர்ம சாஸ்திரம் பல மாநாடுகளில் தீக்கு இரையாக்கப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.
சுயமரியாதை இயக்கம் வீறுபெற்று எழுந்த காலத்தில் “குடி அரசு” ஊட்டிய உணர்வுகளை இத்தொகுப்பில் உணர முடியும்.
- பதிப்பாளர்
குடி அரசு - 1927 (3)
பொருளடக்கம்
13
நமக்கு மாறுதல் ஏன்? கோவை மகாநாடு
©® NP ;oA ஐ உ
14
17
கோவைமகாநாட்டின் முடிவு கோயமுத்தூர் டவுன்ஹாலில் மாபெருங்கூட்டம்
21
சத்தியாக்கிரகம் கோவை மகாநாடு
25
26
ஈரோட்டில் புதிய/ஹைஸ்கூல்
30
33
நமது வேலை
மந்திரிகளின் நிலை:
38
காங்கிரஸ் தலைவர் பதவி வினியோகம்
41
செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு
43
வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்
49
சிறா வயல்:
52
59
சமூகத்தொண்டும் அரசியல் தொண்டும்
காங்கிரஸ் பைத்தியமும் பார்ப்பனர்களின் அக்கிரமங்களும்
62
கோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும்
64
தொழிலாளர்களும் மக்கள் கடமையும்
66
ஒர் மறுப்பு “ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது”
68
நமது நாட்டுக் கோட்டை நகரத்து சுற்றுப்பிரயாணம்
70
72
திருப்பூரில் மகாநாடு சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி
75
79
ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு
மகாத்மாவும் வருணாசிரமும்1
81
மந்திரிகளைக் காப்பாற்ற மற்றொரு கட்சி வேண்டுமாம்
85
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பொழுது புலர்ந்தது ( சென்னை தேர்தல் )
89 நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே சென்னைக்கு செல்கிறோம்
25.
*மகாத்மாவும் வருணாச்சிரமமும்' என்ற தலைப்பில். சென்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான மகாத்மாவின் பிரசங்கக்குறிப்பு
26.
27.
அரசியல் புரட்டு
28.
திராவிடன்
29.
ஈரோட்டில் முதல் மந்திரி திருவிழா
30.
ஓர் மறுப்பு பாவிடயர்
31.
32.
அறிவை அடக்க புதிய சட்டம்
பயப்படுகிறோம்
33,
34.
திருப்பூர் மகாநாடு
பார்ப்பனர் அக்கிரமம்
35.
36.
தற்கால நிலை - அரசியலும் சமூகஇயலும்
மகாத்மா காந்தியும் வருணாசிரமமும் 11
37.
“திராவிடன்” வேண்டுமா? வேண்டாமா?
38.
இது சத்தியாக்கிரகமாகுமா?
39.
“ஏல விவசாயி!
40.
41,
டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்
42.
சமூக முன்னேற்றம்
43.
சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
கோயமுத்தூர் தொழிலாளர் வேலை நிறுத்தம்
44.
மகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்
45.
சுவாமிகளும் தேவடியாள்களும்
46.
47.
மதப்புரட்டு
48.
சுயமரியாதைக்கு லாபம் இல்லை.
சென்னையில் காலராவைத் தடுக்க கார்போரேஷன். கமிஷனர் அவர்கள் திட்டம்
49.
மகாத்மாவும் காங்கிரசும்
50.
இந்திய சட்டசபையில் மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு
51.
மறுபடியும் பெசண்டம்மையார்.
52.
குடி அரசு - 1927 (3)
167
168
மதத்தைப் பற்றிய விபரீதம்
174
நீல் சத்தியாக்கிரகமும் “ தலைவர்களும்”
178
மகாத்மாவுக்கு முதலியாரின் நற்சாக்ஷி பத்திரம்
179
காந்தியைக் காட்டி காசுபரித்தல்.
180
குருக்களின் புரட்டு சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம்
181
188
“நீலாம்பிகை திருமணம்”
193
பார்ப்பனரும் அரசியலும்
197
மதுரையில் ராஜியும் ஒற்றுமை மகாநாடும்
201
அடுத்த வாரம் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
205
206
நாடார் மஹாஜன சங்க 11 - வது மகாநாடு
207
எதுவீணான அவதூறு?
208
தூர் ஆக்கிரகம்
214
தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம்.
219
திருவார்ப்பு சத்தியாக்கிரகம்
220
சமாதானம்
221
வகுப்புவாதம் ஒழிந்ததா?
222
சமய சீர்திருத்தம்
224
ஸ்ரீஜோசப் கற்ற பாடம்
238
சூத்திரன்.
242
புரசைவாக்கம் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் வருணாசிரம மகாநாடு
246
260
தேவதாசி விண்ணப்பம்.
263
சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு
265
சூத்திரன்
267
ஸ்ரீமான் காந்தி
269
ஆதித்திராவிட மகாநாடு
270
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
எங்கும் சுயமரியாதை சத்தியாக்கிரகம்
271
ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை 1
275
ஒரு விண்ணப்பம்
281
புதியகட்சிகள் பெசன்ட் அம்மையாராட்சி
282
இந்திய தேசியம் காங்கிரசுக்கு பணம் சேர்க்கும் முறை
286
ஈரோடு முனிசிபாலிட்டி
287
சுப்பராய பிரம்மா
289
ராயல் கமீஷன் ஒரு கூட்டுக்கொள்ளை 11
291
ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒரு வார்த்தை
297
பார்ப்பன சூழ்ச்சி
299
சந்தேகம் உறுதியாய் விட்டது சென்னை கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும்
300
301
சேலம் மகாநாடு
304
ஞானூரியன் பட்டுக்கோட்டையில் சுயமரியாதைப் பிரசாரம்
307
309
ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது எதற்காக?
314
கார்ப்பரேஷனும் வகுப்பு வாதமும்
318
ஸ்ரீமதி பெசன்டம்மையார்
322
தமிழ்நாடு
324
யார் பொய்யர்:
326 கோவை சேர்மென் 0.5. இரத்தினைபாபதி முதலியாரின் துணிபு 327
கும்பகோணம் தாலூகா பார்ப்பனரல்லாதார் மகாநாடு
330
ராயல் கமிஷனும் சுயமரியாதையும்
332
ராயல் கமிஷன்: சுயமரியாதைப் பிரசாரத்தின் வெற்றிக்குறி
334
339
பச்சையப்பன் கலாசாலையும் பார்ப்பனர்களும்
343
ஸ்ரீ காந்தியின் தந்திரம் மாஜி ஜட்ஜி சர்.டி.சதாசிவய்யர்
345
346
சேலம் தென்ஆற்காடு ஜில்லாக்கள்.
111.
சுயமரியாதை பிரசாரத்தின் வெற்றி
112.
குடி அரசு - 1927 (3)
ஒரு சந்தேகம்- ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?
113.
349
ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு
114.
350
மனுதர்ம சாஸ்திரம் சர்.பிராஜகோபாலாச்சாரியார்
115.
354
116.
356
மானமற்ற ஜாதி இந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள்
117.
357
118.
358
திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம்
119.
359
ஸ்ரீ வரதராஜுலு ஐயங்கார்
120.
362
ஐந்துக்கு இரண்டு பழுதில்லை ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தின் யோக்கியதை
121.
366
122.
373
பஹிஷ்காரமும் ஜஸ்டிஸ் கக்ஷியும் பார்ப்பண் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்
123.
377
124.
379
பார்ப்பனரல்லாதார் ககஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை
125.
380
ஸ்ரீனிவாசய்யங்காரும் மிரட்டலும்
126.
383
பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில். சுயமரியாதை மகாநாடு
127.
384
எதிர்பார்த்த எதிர்ப்புகள் 1
128.
390
முடியுமா?
129.
397
தூத்துக்குடி திரு.சோமசுந்தரம் பிள்ளை “ நவசக்தி” யில் எழுதிய “ இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்.
130.
399
சென்னையில் ஏமாற்றுந் திருவிழா.
131.
411
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
132.
415
மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை
1383.
418
B RK. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா?
134.
420
அருஞ்சொல் பொருள்
135.
421
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
1927 (2) 10 11 வட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5 குடி அரசு -
[வாரப்ப ப்பு]
அரிசியா அலே. இராம் சாலக்க! மா | சளோடு பிரபவ ஆனின் e L . ம் 10
அறிவா எழக் எப இகம் குமார் ஒக வந பக்க
L) வவ S
த ன்பு, ok பிர் vk இவிக மதத வாபி b, on_ 510 Pt வண. oo, ஆர். இறுகும் காரில் & கம்பெனி நின்னால் [ S, சிங்கப்பூர்
குடி அரசு - 1927 (3) 12
நமக்க மாறுதல் என்?
இந்தியாவிலுள்ள மற்றெல்லாக் கட்சிகளைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி தான் தேசீயக் கொள்கைகளை அதிகமாகக் கொண்டுள்ளதென்பதே எனது நீண்டகால அபிப்பிராயம்.
இத்தகைய பரந்த நோக்கமில்லாததும் குறுகிய நோக்கமுடையதுமான வேறெந்த ஒரு கட்சியுடனாவது ஜஸ்டிஸ் கட்சி சேருவதானது, ஆறானது கடலில் பாய வேண்டியது போய் கடலானது ஆற்றில் பாய்வதை ஒத்திருக்
கிறது.
காங்கிரஸால் மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை யென்று கண்ட பிறகுதான் காலஞ் சென்ற நம் தலைவர்கள் ஜஸ்டிஸ் இயக்கத் தைக் கண்டார்கள். சமய சமுதாய அரசியல் விஷயங்களில், காங்கிரசானது கடந்த ஐம்பது வருஷங்களாய்ச் செய்து முடிக்காத காரியங்களை யெல்லாம் நமது ஜஸ்டிஸ் இயக்கமானது நடந்த பத்தாண்டுகளில் எவ்வளவோ முன்னேற்றத்தைச் செய்து காட்டி யிருக்கிறது. அப்படியிருக்க இப்பொழுது காங்கிரசில் சேருவதாய் நம்மியக்கக் கர்த்தாக்களில் ஆணையை காங்கிரசில் எப்பொழுது சேர்ந்தோமோ அப்பொழுதே நம் கட்சியும் மறையத் தலைப்பட்டு விடுமென்று நான் பயப்படுகிறேன்.
இந்நாட்டில் உண்மையான சுயராஜ்யம் நிலவுமென்றும், ஆகிய இத்தகைய உத்தமக் கொள்கைகளையுடைய ஜஸ்டிஸ் இயக்கத்தில் வந்து சேர்ந்து கொள்ளப்படுமென்றும் நான் அபிப்பிராயப்படுகிறேன்.
எத்தகைய சீர்திருத்தம் வேண்டுமென்பதை ராயல் கமிஷனுக்கு முன்னால் வற்புறுத்துவதற்காக வேண்டி ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். இதை முன்னிட்டு பல்வேறு கட்சிகளிலுமுள்ள தலைவர்கள். தங்கள் சுயநலத்தை ஒழித்து பொதுக் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 03.07.1927
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கோவை மகாநாடு
(ஈ.வெ.கி)
நமது மாகாண பார்ப்பனரல்லாதாரின் விசேஷ மகாநாடு இன்று கோவையில் கூடுகிறது. நீண்ட காலமாக நம்முள் சிதரிக் கிடந்த அபிப்பிராய பேதமுடைய ராஜீய பார்ப்பனரல்லாதார்களான கனவான்கள் யாவரும் விஜயம் செய்திருக்கிறார்கள். இதில் ஒரு நன்முடிவுக்கு நாம் வராவிட்டால் நமது நிலை என்ன ஆகுமென்பதை முன்பே எழுதி இருக்கிறோம்.
“ சுயமரியாதை” வேண்டுமென்றும் அதற்கு நமக்கென ஒரு தனி இயக்கம் வேண்டுவது அவசியமென்றும், காலம்சென்ற நமது தலைவர்களான திரு.
நாயர் பெருமானாலும், தியாகராயர் பெருமானாலும் முதன் முதல் எந்த இடத்தில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே இடத்தில்தான் அவ்வியக் கத்தின் நெருக்கடியான காலத்தில் ஒரு முடிவு காணவும் இன்று கூடி இருக்கிறோம். மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடும், ஜில்லா இளைஞர்கள். மகாநாடும் ஒரே இடத்தில் கூடி இருக்கிறது. இவ்விரு மகாநாடுகளின் வரவேற்புக் கழகத் தலைவர் பிரசங்கமும், மகாநாட்டுத் தலைவர் பிரசங்கமும், நமது பார்வைக்கு வந்து விட்டது.
திருவாளர் ரெத்தின சபாபதிக் கவுண்டர் மகாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரவர்கள் பார்ப்பனர் கொடுமையையும், பார்ப்பன சூழ்ச்சிகளையும், தாராளமாக எடுத்துக் காட்டி கண்டித்திருப்பதோடு காங்கிரஸில் சேர வேண்டு மென்ற அபிப்பிராயத்தையே முக்கியமாகக் காட்டி இருக்கிறார். அதற்கு பல காரணங்களைச் சொல்லி இருக்கிறார் எனினும் காங்கிரஸைப் பற்றி இதுவரையில் நாம் சொல்லி வந்த விஷயங்களில் ஒன்றுக்காவது சரியான பதிலில்லை. மகாநாட்டுத் தலைவர் திவான்பஹதூர் எஸ். குமாரசாமி ரெட்டி.
யார் எம்.எல்.ஸி அவர்கள் தமது தலைமை உபன்யாசத்தில், நமது கட்சியின் இன்றைய நிலையைப் பற்றியும், காங்கிரஸை பார்ப்பனர்கள் தங்கள் நன் மைக்கு எப்படி உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதைப்பற்றியும், காங்கிரஸின் மூலியமாகப் பார்ப்பனர்கள் தங்கள் வகுப்பு நலன் ஒன்றை மட்டும் கோரி எவ்விதம் நடந்து கொள்ளுகிறார்களென்பதை பற்றியும் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் தன்னுடைய வகுப்பு நலனுக் காக இதுவரையில் செய்து வந்த சூழ்ச்சிகளைப் பற்றியும், மந்திரிகளைத் தங்களின் நலத்துக்கென்றே சிருஷ்டித்து அவர்களை எப்படி ஆட்டி வருகிறார் என்பதைப் பற்றியும் விஸ்தாரமாகச் சொல்லியிருப்பதோடு, கிராம
குடி அரசு - 1927 (3) 14
அபிவிருத்தி, நிர்மாணத்திட்டம், எதிர்காலத்தில் நமக்குள்ள பெரும் பொறுப்பு,
கல்வி, சுகாதாரம், கைத்தொழிலபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் முதலிய விஷயங்களைப் பற்றியும் உத்தியோகம் முதலிய விஷயங்களில் அரசாங் கத்தின் மனப்பான்மையை விளக்கிக் காட்டிக் கண்டித்தும் இருப்பதோடு, காங்கிரஸ் பிரவேசத்தைப் பற்றி பிரவேசத்துக்கு அனுகூலமாகச் சொல்லப் படுவதில் சிலதையும், பிரதிகூலமாகச் சொல்லப்படும் விஷயங்களில் சில தையும் எடுத்துக் காட்டி இருப்பதோடு அதன் முடிவைப் பொதுஜனங்கட்கே
விட்டு விட்டதாகவும் எழுதி இருக்கிறார்.
இளைஞர் மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திருவாளர் சி.வி.வி. சுப்பைய்ய செட்டியார் அவர்கள் தமது உரையில் இதுவரையில் இளைஞர்கள் சமுதாய விஷயம் ஒன்றிலேயே இருந்து வந்ததாகவும், இன்று நமது தலைவர்களின் செய்கை இளைஞர்களை அரசியலிலும் தலையிடத் தூண்டிவிடுமோவென்று ஐயுறுவதாகவும் கூறிவிட்டு காங்கிரஸ் பிரவேசம் கூடாதென்றும் அது மாய்கை என்றும், இன்றுள்ள சிறு ஐக்கிய பாவம் கூட பிரவேசத்தால் நமது தலைவர்களுக்கு இராதென்றும், அரசியலும், சமூக இயலும் உடலும், உயிரும் போன்றதென்றும், இவ்விரண்டையும் அனுஷ்
டிக்கும் காலங்களிலெல்லாம் நமது இயக்கத்திற்குச் செல்வாக்கிருந்ததாகவும், அரசியல் ஒன்றையே கவனித்ததால்தான் தேர்தலில் நமது கட்சி தோற்ற
தென்றும், நியாயக் கட்சியான நமது திட்டத்தை நமது மாகாணமின்றி மற்ற மாகாணவாசிகளும் பின்பற்றி வருகிறார்கள் என்றும், அவர்களின் சம்மத மின்றி காங்கிரஸ் பிரவேசத்தைப் பற்றிச் சிந்திப்பதே பொறுத்தமற்றதென்றும் ராயல் கமிஷனிடம் சாக்ஷி கொடுத்து அதன் பயனைக் கொண்டு சமூக நன்மைகளைச் செய்ய அகில இந்திய இயக்கமாக வேண்டுமானால் அதற்கு காங்கிரஸை விட நமது கக்ஷியின் பெயரையே அகில இந்திய இயக்கமாக்க. வேண்டுமென்றும் சென்ற லார்ட் செம்ஸ் போர்டு சீர்திருத்தக் கமிஷன் முன் நாம் சாக்ஷியம் கொடுத்த காலத்தில் காங்கிரசுடன் சேர்ந்திருக்கவில்லை என்றும் பொதுவாக காங்கிரஸ் பிரவேசத்தைக் கண்டித்து, பார்ப்பன புரோகித பகிஷ்காரமான சுயமரியாதை இயக்கத்திற்குச் சகலரும் ஆதரவளிக்க வேண்டுமென்றும் கூறி இருக்கிறார். இளைஞர் மகாநாட்டின் தலைவரான
திருச்சி, திரு. TAG. இரத்தினம் BA,LLB, அவர்களின் அக்கிறாசன உரை நமக்கு இன்னம் கிட்டவில்லை.
பின் அதைப் பற்றி விவரிப்போம்.நமது ஆசிரியர் ஈவெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் திரேக அசெளக்கிய மடைந்து கோவையிலேயே இருப் பதால் மகாநாட்டைப் பற்றிய அபிப்பிராயத்தை நாம் வெளியிடுவதற்கில்லை யெனினும் மகாநாட்டுப் பிரதிநிதிகளில் தங்களை அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற தனிப்பட்ட கனவான்களும், அவர்களின் சிஷ்யர்கள் சிலரும் தவிர, மற்றவர்களெல்லோரும் காங்கிரஸ் சம்பந்தமானது தேசத்திற்கும் சிறப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் கெடுதி என்றே நினைக்
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கிறார்கள். ஆயினும் நம்முள் பிரிவினையில்லாதிருப்பதற்கு ஏதாவது ஏற் பாடு செய்யலாம் என்ற ஆவலுமிருக்கிறதாக உணர்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை சில அரசியல் தலைவர்கள் தங்களுடைய நன்மைக்கு உபயோகப் படுத்திக் கொள்ள இது சூழ்ச்சியா? என்ற பயமுள்ளவர்களும், ஜஸ்டிஸ், காங்கிரஸ் இரு கட்சிகளையும் இதன் இஷ்டம் போல் விட்டு விட்டுச் சமுதாய முற்போக்கிற்கென்று சுயமரியாதை இயக்கத்தை தனியாக ஏர்ப்படுத்தலாமா? என்ற எண்ணமுள்ளவர்களும் இருக்கிறார்களென அறிகிறோம். எப்படி யானாலும் சரி மகாநாட்டில் பொது உணர்ச்சியும், முன்னேற்றத்திற்கு கம்பி ரமான தோற்றத்துடன் கூடிய ஆசையும் தான் தாண்டவமாடிக் கொண்டி ருக்கிறது. நாயக்கரை பொறுத்தவரையில் எந்த விஷயத்தையும் வலியுறுத்தப் போவதில்லையென்றும் காங்கிரஸின் பொறுப்பையோ: ஜஸ்டிஸ் கட்சியின் பொறுப்பையோ தான் மேல் எடுத்துப் போட்டுக் கொள்ள போவதில்லை என்றும் எவருடைய முயர்ச்சிக்கும் தாம் முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை என்றும் முன்னமேயே தெரிவித்து விட்டதாக அறிகிறோம். டாக்டர்கள் கண்டிப்பாய் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கட்டாயப் படுத்தியிருப்பதால் மகாநாட்டின் நடவடிக்கைகளில் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை.
சிறப்புற்ற நமது ஜில்லாவின் தலைநகரான கோவையம்பதி மகா நாட்டுக்கு விஜயம் செய்துள்ள மாகாண பார்ப்பனரல்லாதாரர்களை மீண்டும் நல்வரவேற்கிறோம். தங்களின் மகத்தான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து மகாநாட்டை பொதுநல நோக்கத்துடன் பொறுப்பெடுத்து வெற்றி பெறுமாறு இனிது நிறைவேற்றுவார்களென்று நம்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 03.07.4927
குடி அரசு - 1927 (3) 16
கோவை மகாநாட்முண் முமுஷ
சிறிது காலமாய் நமது மக்கள் இடையில் பிரஸ்த்தாபப்படுத்திக் கொண்டிருந்த கோவை மகாநாடு முடிவு பெற்றுவிட்டது.
இதனால் நமது நாட்டுக்காவது சமூகத்திற்காவது ஏற்பட்ட பலன் என்ன என்று யோசிப்போமானால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.
தீர்மானத்தின் வாசகங்கள் சர்வ ஜாக்கிரதையாக அமைக்கப் பட்டிருந் தாலும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எவ்வளவு சாமார்த்தியமுள்ளதாயிருந்தாலும் தீர்மானத்தின் பலன் நமது முன்னேற்றத்தை தடுத்து விட்டதென்றே சொல்லுவேன். தீர்மானத்திற்குப்
பிறகு இந்த ஒரு வாரத்திற்குள் மக்கள் நிலைமையும் மனப்பான்மையையும்
பார்க்கும் போது பொது ஜனங்களுக்குள்ளாக ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள் என்கிற உணர்ச்சி பரவுவதற்கு ஆதாரங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த உணர்ச்சிக்கு நமது பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரம் ஒரு
புறமிருந்தாலும், இப்போது நம்முடன் வந்து புதிதாக சேர்ந்தவர்கள் தங்களது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள இம்மாதிரி திரித்து கூற வேண்டிய தவசியமாயிருந்தாலும், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ளவர்களின் மனப்பான்மை
யும் நடத்தையுமே முக்கிய காரணமாயிருக்கிறது என்பதையும் நான் ஒளிக்க. முடியவில்லை.
இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு நான் தடையாய் இல்லாமல் இருந்த தற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சிலருக்கு காங்கிரசின் மூலம் பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளியாக்க தங்கள் பிரசாரங்களைச் செய்யலாம் என்கிற ஆசை உண்டாய்விட்டது என்பது எனக்கு நன்றாய்த் தெரிந்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சிக்காக ஆதியில் நான் எவ்வித உதவியும் செய்தவனுமல்ல. அது மாத்திரமல்லாமல் அதற்கு ஒரு சிறு கெடுதியாவது செய்யாமல் இருந்தவனுமல்ல. இப்படிப்பட்ட ஒருவன் அக்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் விருப்பத்திற்கு ஏன் முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டும் என்பதும் அவர்கள் என்னைவிட பொறுப்பும் எல்லா விஷயங் களும் நன்கு அறிந்தவர்கள் என்பதும் இக்கட்சியை எதிர்த்து வந்த சில
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கனவான்கள் கூட ஜஸ்டிஸ் கட்சியின் நேர்மையை உணர்ந்தோ அல்லது அதனுடைய தற்கால நிலையைக் கருதியோ அதனுடன் சேர்ந்து அதற்கு உதவி செய்வதாய் சொல்லுவதையும் நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்பதும், இப்படி எதிர்ப்பதின் மூலமாய் ஏற்படும் பலனை நானே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்துவிட்டால் முழுப் பொறுப்பும் எனது தலையில் விழுவதானால் அதைச் சுமக்க எனக்கு அது சமயம் தைரியம் இல்லை என்பதும் முக்கியமாக எனது பலவீனத்தின் தன்மையான தாக்ஷண்ணியமுமே அத்தீர்மானம் நிறை வேற்ற உதவியாயிருந்ததே அல்லாமல் பல தலைவர்களும் சில பத்திரிகை:
களும் கூறுவது போல் பெருந்தன்மையை உத்தேசித்தோ ஒற்றுமையை உத்தேசித்தோ நான் விட்டுக்கொடுக்கவில்லையாதலால் அவர்களது பாராட்டுதலுக்கும் புகழுரைகளுக்கும் நான் ஒரு சிறிதும் அருகனல்ல.
காங்கிரசைப் பற்றிய எனது அபிப்பிராயம் ஏற்கனவே நான்
தெரிவித்து வந்திருக்கிறேன். அதாவது அது திருத்த முடியாததும் பாமர மக்க ளை பலி கொடுத்து வாழவேண்டிய படித்த வகுப்பினர்கள் சுயநலத்திற்காக ஏற்படுத்திய இயக்கம் என்பதுதான். ஆனால் கோவை மகாநாட்டுத் தீர்மானத்திற்கு மூல புருஷர்களாயுள்ளவர்கள் காங்கிரசை அப்படிப்பட்ட சுயநலக்காரர்கள் கைவசமிருந்து கைப்பற்றி திருத்தி பாமர மக்களுக்கு உபயோகப்படும்படி செய்யலாம் என்கிறார்கள். இந்தக்காரியம் மகாத்மா காந்தி செய்து பார்த்து தனது தோல்வியை கண்ணியமாய் ஒப்புக்கொண்டு. அதாவது “படித்த வகுப்பாரை என் வழிக்குக் கொண்டுவரக்கூடிய சக்தி கடவுள் எனக்கு கொடுக்கவில்லை. எனது தோல்வியை நான் கண்ணியமாய்
ஒப்புக் கொள்ளுகிறேன்” என்று சொல்லியிருப்பதுடன் தனக்கு தோன்றிய முறையில் தேசத்தொண்டு செய்ய தன்னிஷ்டப்படி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டார். அந்த இயக்கமும் படித்த வகுப்பார் ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து விட்டதால் “புளிப்புக்கு நீளம் உருண்டைக்கு அதனப்பன்”' என்பதுபோல் அவரது அகில இந்திய சர்க்கா சங்கமும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாத வகுப்பை நசுக்க பார்ப்பன சூழ்ச்சிக்கும் ஆளாகி விட்டது. இனி அதன் கொடுமையில் இருந்து தப்புவதற்காகவும் பாடுபட வேண்டிய பளுவும் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
எனினும் இப்போது நம்முடன் வந்து சேர்ந்து ஜஸ்டிஸ் கட்சியாரையும் காங்கிரசுக்கு அழைக்கிறவர்கள் ஒரு சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, “காங்கிரசானது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு விரோதமாயி ருப்பது உண்மைதான். அதற்கு காரணம் உண்மையான பார்ப்பனரல்லாதார்.
காங்கிரசில் இல்லாத காரணத்தாலேயல்லாமல் வேறல்ல. அந்தப்படி காங்கிரசில் மற்றும் சிலர் சேர்ந்து உழைத்துப்பார்த்து முடியாவிட்டால் அதை விட்டுவிட்டு வந்து நீங்கள் சொல்வது போல செய்கிறோம்” என்கிறார்கள். அவர்கள் சொல்லுவது ஒப்புக் கொள்ளக்கூடியதல்ல என்பதும் இதற்காக செலவிடுங்காலம் வீண் என்பதும் எனக்கு நன்றாய்த் தெரியும். ஆனால்
குடி அரசு - 1927 (3) 18
ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு போக அனுமதி கேள்க்கும் சில கனவான்கள் இந்த காரணம் சொல்லுவதில்லை. மற்றபடி அவர்கள் சொல்லுவதென்னவென்றால் “பார்ப்பனரல்லாதார்களை நசுக்குவதற்காகவும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும் பார்ப்பனர்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அநேக ஆயுதங்களில் இந்தக் காங்கிரசும் ஒரு ஆயுதமாயிருக்கிறது. அதை எப்படியாவது அவர்கள் கையிலிருந்து பிடுங்கி விட வேண்டும். அதாவது, அதன் மூலம் பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதி ஏற்படாமல் பார்த்துக்கொள்வதற்காகவே அங்கு போக இஷ்டப் பட்டவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்கிறார்கள். இவை யெல்லாம் ஸ்ரீமான் சி.ஆர். தாசைக் கொண்டு பார்ப்பனர்கள் சட்டசபைக்குப் போக காங்கிரசை அனுமதி கேட்டதற்கு சமானமாயிருந்தாலும் இந்த வாதங்கள் பாமர மக்களில் பலரை ஏமாற்றி அவர்களுக்கு இவைகளில் ஒரு மோகம் உண்டாகச் செய்துவிட்டதால் நமது முன்னேற்றத்திற்கு நமது தனி இயக்கத்தை விடவேறு கதி இல்லை என்று எண்ணி இருந்த மக்களின் கருத்து இப்போது இரண்டு காரியங்களில் பிரவேசிக்க நேர்ந்துவிட்டதானது நமக்கு
பலக் குறைவேயாகும்..
ஆனாலும் ஒன்றும் விசேஷமாய் முழுகிப்போய்விடவில்லை. ஆயிரக்கணக்கான வருஷங்களாய் ஏமாற்றப்பட்டு அழுத்தப்பட்டு கிடக்கிற மக்களுக்கு இந்த ஒரு சிறு தடையானது பிரமாதமான கெடுதி ஒன்றும் செய்துவிடாது. ஆனாலும் இவைகளுக்கு எல்லாம் காரணமாய் தேசத்தின்
நிலை மிகுதியும் நாணயக் குறைவுள்ளதாகவும் பிறரை ஏமாற்றுவதன் மூலமே மற்றொருவர் வாழக்கூடியதாகவும் பொது வாழ்க்கை ஏற்பட்டுவிட்டது. பொய்யும் ஏமாற்றலுமே மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்களாயிருக்கும்போது யார்தான் என்ன செய்ய முடியும். உண்மை பேசுகிறவன் வாழ முடிவதில்லை. வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாரா யிருந்து உண்மை பேசத் துணிகிறவர்கள் வெகு வெகு சொற்பமாயிருக் கிறார்கள். இவ்வியற்கைக்கு மகாத்மா காந்தி கூட சிற்சில சமயங்களில் தப்ப முடியாமல் திக்குமுக்காடி வருகிறார் என்றால் மற்றவர்களைச் சொல்லுவதில் பயனில்லை. எனவே பொறுமையையும் நம்பிக்கையையும் கைவிடாமல் 3,4 மாதங்களுக்கு விட்டுப் பார்ப்பதற்கு வேண்டிய தைரியத்தை ஆண்டவன் நமக்கு அருளட்டும். தலைவர்கள் என்போர்கள் தங்கள் சுயநலத்திற்காக நம்மை ஏமாற்றி இத்தீர்மானங்கள் செய்து கொண்டார்கள் என்று நினைக்கும். படிநடந்து கொண்டார்களானால் பின்னால் என்ன செய்வது என்பது எமக்குத்
தெரியும். பின்னால் இன்னும் பலமாய் வேலை செய்ய இப்பொறுமை எமக்கு உதவும் என்றே நம்பி இருக்கிறேன். ஆதலால் காங்கிரசில் ஈடுபட்ட ஈடுபடுகிற மக்கள் நீங்கலாக ஆங்காங்குள்ள மற்றவர்கள் அவ்வவ் விடங் களில் உள்ள சுயமரியாதைச் சங்கங்களையும் பார்ப்பனரல்லாத வாலிப சங்கங் களையும் பலப்படுத்தி வைப்பதுடன் அவை இல்லாத இடங்களில் உடனே
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இவைகளை ஸ்தாபிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். இதற்காக இரண்டு மூன்று உழைப்பாளிகளையும் நியமித்து வெளியில் அனுப்பிக் கொடுக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். எனது கூட்டு உழைப்பாளிகள் நம்பிக்கை இழந்துவிடாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு சோதனை காலம் என்பதில் சந்தேகமில்லை. இச்சோத னைக்கு நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமே அல்லாமல் அதைரியம் கொள்ளக் கூடாது. உண்மைக்கு யோக்கியதை உண்டு என்பதை நம்ப வேண்டும். இன்னமும் எனது உடல் நலிவு முழுவதும் குணப்படவில்லை. ஆதலால்
விரிவாய் எழுத இயலாததற்கு வருந்தி இதை முடிக்கிறேன்.
ஈ.வெ.ரா.
குடி அரசு - தலையங்கம் - 10.07.1927.
குடி அரசு - 1927 (3) 20
கோயமுத்தூர் டஷண் ஹாலில்
மாலைருங்கூட்டம்
சகோதரர்களே!
என்னைப்பற்றி ஸ்ரீமான் ராமசாமி முதலியார் அதிகமாக கூறிவிட்டார். என்னை தங்களது இயக்கத்தின் தலைவர் என்றும் நான் சொல்லுகிறபடியே நடக்கப் போவதாகவும் சொன்னார். இவ்விஷயம் எனக்கு மிகவும் வெட்கத் தையும் பயத்தையும் கொடுக்கிறது. ஒரு காலத்திலாவது நான் தலைவனாய் இருந்ததே கிடையாது. தலைமைத்தனமும் எனக்குத் தெரியாது. அதற் குண்டான குணங்களும் என்னிடத்தில் இல்லை. நான் ஒரு தொண்டனாகவே இருந்து வர பிரியப்படுகிறேன். எனக்கு தொண்டு செய்வதில் அதிக ஆசை இருக்கிறது. ஆதலால் என்னை ஒழுங்கான வழியில் நடத்தி என்னிடம் சரியானபடி வேலை வாங்கிக்கொள்ளுங்கள். நேற்றைய மகாநாட்டில் தென் விந்திய நல உரிமைச் சங்கத்தார்களில் இஷ்டப்பட்டவர்கள் காங்கிரசில் சேரலாமென்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இவ்வித தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டிய அவசியமே நமக்கு ஏற்பட்டிருக் கவில்லை. தெ. இ. ந. உ சங்கத்தாரில் தனிப்பட்ட நபர்கள் காங்கிரசில் சேர்வதை இச்சங்கத்தின் எந்த விதியும் தடுப்பதில்லை. காங்கிரசில் சேர்ந்தவர்களும் ஏற்கனவே இதிலிருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனபோதிலும் நம்முடன் சேர்ந்து உழைப்பதற்காக காங்கிரசிலிருந்து வருகிற சிலரைத் திருப்தி செய்யவும் இங்கிருந்து காங்கிரசுக்கு போகிற சிலருக்கு பயத்தை தெளிய வைக்கவும் இத்தீர்மானம் செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரசின் யோக்கிதையே கெட்டுப்போயிருக்கும்-இந்தக் காலத்தில் காங்கிரஸ்காரன் என்று சொல்லிக் கொள்வதற்கே ஜனங்கள் வெட்கப்படும்-இந்தக்காலத்தில் நம்மவர்கள் காங்கிரசில் சேர்கிறேன் என்பது பரிகசிக்கத் தகுந்ததென்பதும் அதில் போய் ஒன்றும் செய்ய முடியாதென்
பதும் எனது அபிப்பிராயமாதலால்தான், நான் அந்தத் தீர்மானத்திற்கு அனுகூலமாய் இல்லை என்று கூறினேன். பிராமணர்களுக்கு பயந்து கொண்டாவது காங்கிரஸ் பிராமண ஆதிக்கம் என்பதற்காகவாவது நான் அவ்விதம் சொல்லவில்லை. காங்கிரசின் அடிப்படை தத்துவமே பாமர மக்களுக்கு பயன்படாததும், விரோதமானதும் என்பது எனது முடிவு.
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மகாத்மா காந்தி காங்கிரசில் நான் இருந்ததற்கு காரணமெல்லாம் காங்கிரசின் பழய தத்துவங்களை எடுத்து எறிந்துவிட்டு அதனால் யேற்பட்ட கெடுதிகளையும் உடனே அழிக்க திட்டங்கள் போட்டுக் கொண்டு பாமர மக்களுக்கும் சிறப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் நன்மை தரக்கூடிய திட்டங்களை மகாத்மா அதில் புகுத்தியதாலும் அவற்றால் நமக்கு நன்மை உண்டென்று நம்பியதாலும் நான் அதில் ஈடுபட்டு உழைத்து வந்தேன். கடைசியாக பார்ப்பன சூழ்ச்சியே வெற்றி பெற்று காங்கிரசின் பொய் வேஷம் வெளியாய் விட்டது.
இப்பொழுது மறுபடியும் மகாத்மாவினால் செய்ய முடியாத காரியத்தை: நாங்கள் செய்து விடுகிறோம் எங்களுக்கு நீங்கள் கொஞ்சம் உதவியாக
மட்டில் இருங்கள் என்று ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார் முதலியவர்கள் உங்களை அழைக்கிறார்.
கள். அதற்கு தடையாக இருப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை. உங்கள் புத்தியைக் கொண்டே நீங்கள் யோசித்துப் பாருங்கள். நான் கொஞ்ச காலத்
திற்கு யாரையும் தடுக்காமல் விட்டு விடப்போகிறேன். காங்கிரசின் யோக்கிய தையை தெரிந்துகொண்டு பிறகு வெளியே வரட்டும், காங்கிரசினால் உத்தி யோகம் பெற்று விடலாம் என்பதினாலேயே தேசத்துக்கு ஒரு நன்மையும் விளைந்துவிடாது.
யார் மந்திரி வேலை பார்ப்பதாய் இருந்தாலும் நமது லெக்ஷியம் நிறைவேறிவிடாது. பனகால் ராஜாவும் ஆறு வருடம் மந்திரி வேலை பார்த்
தார். அதன் பயனாய் அரிசி விலை ஒரு தம்படியாவது குறைந்து போக வில்லை. அதுபோலவே டாக்டர் சுப்பராயனும் மந்திரி வேலை பார்க்கிறார். அரிசிவிலையொன்றும் யேறிப் போகவுமில்லை. பனகால் ராஜா செய்த வேலையைத்தான் சுப்பராயனும் செய்துவருகிறார். ஆனால் பனகால் ராஜா பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கொடுத்தார். டாக்டர் சுப்பராயனோ பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுத்து வருகிறார். இதற்கு காரணம் பனகால் ராஜாவை பார்ப்பனரல்லாதவர்கள் மந்திரியாக்கினார்கள் அவருடைய மந்திரி ஸ்தானம் நிலைக்க பார்ப்பனரல்லாதார்கள் உதவி செய்து வந்தார்கள். அதனால் பார்ப்பனரல்லாதவர்கட்கு அவர் உத்தியோகம். கொடுத்து வந்தார். டாக்டர் சுப்பராயனோ பார்ப்பனர்கள் தயவால் மந்திரி யானார். அவருடைய மந்திரி ஸ்தானம் நிலைக்க பார்ப்பனர்கள் இரவும் பகலும் பாடுபட்டு வருகிறார்கள். அதனால் பார்ப்பனர்களுக்கே உத்தி யோகம் கொடுக்க வேண்டியது டாக்டர். சுப்பராயனின் கடமையாய் போய் விட்டது. இம்மாதிரி கொள்கையுள்ள மந்திரி ஸ்தானத்திற்கு யார் வந்தாலும் இப்படித்தான் செய்ய முடியும். மகாத்மா காந்தி வந்தாலும் இப்படித்தான்
முடியும். எனவே மந்திரி பதவியே நமது லக்ஷியமல்ல. நமது மக்களுக்கு சுயமரியாதைதான் பிரதானம்.அதற்காக பாடுபடுவதற்கு யார் ஒப்புக்கொண்ட போதிலும் அவர்களுடைய மற்ற அபிப்பிராய பேதங்களை பாராட்டாமல்
குடி அரசு - 1927 (3) 22
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். சுயமரியாதைதான் சுயராஜ்யத்திற்கு வழியே அல்லாமல் மந்திரி முதலிய பதவிகள் அல்ல. நமக்குள்ளிருக்கும் சுயமரியாதை அற்ற தன்மையை சற்று யோசித்துப் பாருங்கள். நம்மில் சுயராஜ்யமென்று பேசிக் கொண்டிருக்கிற பெரிய பெரிய மிராசுதாரர்கள் எல்லாம் பிரபுக்கள் எல்லாம் பார்ப்பனர்களின் காலில் விழுந்து கும்பிட்டு அவர்கள் கால்விரலுக்கு முத்தம் கொடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியும் நானும் பார்ப்பன விஷயங்களைப் பற்றி மிகைப்படுத்தி சொல்லுகிறோமென்று எங்கள் மீது பழிசுமத்துகிறவர்கள் கூட பார்ப்பனர். காலில் விழுந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பார்ப்பனர் தவிர வேறு
வீட்டில் சாப்பிடுவதில்லை என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நேற்றய தினம் இந்த ஊருக்கு வந்த சங்கராச்சாரி என்ற பார்ப்பனருக்கு எத்தனையோ பிரபுகள் அவர் காலில் விழுந்து 1000, 2000 என்று பணத்தை அவர் காலில் கொட்டி அவர் காலைக் கழுவிய தண்ணீரை பாத தீர்த்தம் என்பதாகவணக்கத்துடன் வாங்கி தலையில் தெளித்துக் கொண்டதுமல்லாமல் வாயிலும் ஊற்றிக் கொண்டார்கள். இந்த முட்டாள் தனமானது 500 வருடங்களுக்கு முன்னால் கிருஸ்தவ சமூகத்தில் இருந்த அதாவது “பாவ மன்னிப்பு டிக்கட்டு விற்கிறதான” அவரவர்கள் பாபத்திற்கு தகுந்தபடி விலைபோட்டு பணம் வாங்கிக்கொண்டு விற்று வந்த மூட நம்பிக்கையை விட முட்டாள்தனமாக இருக்கிறது. இந்த முட்டாள்தனமும், மூட நம்பிக்கை
யும் போன பிறகுதான் கிருஸ்தவ நாட்டிற்கும் ஆட்சிபுரியும் சக்தி வந்தது. அதன் பிறகுதான் அது பெரும்பான்மையான தேசத்தை ஆளத்தலைப் பட்டது.
அதுபோலவே நமது மூட நம்பிக்கையும் முட்டாள்தனமும் நம்மை விட்டு விலகி சுயமரியாதையை அடைந்த பிறகுதான் நாம் ஆட்சி புரிவதற்கு உரியவர்களாவோம். நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்டபின்தான் “சுயமரியாதையை” நினைப்பதற்கு யோக்கியதை உண்டு. ஒரு மனிதனைப் பார்த்து பிராமணன் என்று சொல்வதினாலேயே நாம் தாழ்ந்த ஜாதி என்பதும் சூத்திரன் என்பதும் பிராமணனது வைப்பாட்டி மக்கள் என்பதையும் நாமே ஒப்புக் கொண்டவர். களாகிறோம். இதைப் பற்றிக் கவலையில்லாத ஜனங்களுக்கு சுயராஜ்யம் எதற்காக, காங்கிரஸ் எதற்காக, சங்கங்கள் எதற்காக, பொது நலச்சேவை என்கிற வேஷங்கள் எதற்காக, பொய்யான உத்தியோக சண்டையின் பயனாய் இப்பேர்ப்பட்ட இழிவான தத்துவங்கள் எல்லாம் நிலைபெற இடமேற்பட்டு
விடுகிறது. மற்ற மதஸ்தர்களைப் பார்த்தாவது நமக்கு புத்திவர வேண்டாமா?
உலகத்தில் உள்ள எந்த மதத்திலாவது பிறவியின் காரணமாக ஒருவன் காலில் ஒருவன் விழுகிறானா? ஒருவனுக்கொருவன் வைப்பாட்டி மகன் என்று ஒப்புக்கொள்ளுகிறானா? இம்மாதிரி கொடுமைகள் எல்லாம் தீர்வதற்குக்
காங்கிரசில் இடமிருக்கிறதா? அல்லது நமது சங்கத்தில் இடமிருக்கிறதா
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
என்பதைப்பற்றி யோசித்துப்பாருங்கள். உண்மையான இடத்தை விட்டு விட்டு நமது குறைகள் நீங்குவதற்கு காங்கிரஸ் போன்ற கற்சுவற்றில் முட்டிக் கொள்வதில் யாதொரு பயனுமில்லை.
குறிப்பு- கோயமுத்தூர் டவுன்ஹாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரு. முனுசாமி நாயுடு தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 10.07.1927
குடி அரசு - 1927 (3) 24
சத்தியாக்கிரகம்
சத்தியாகிரகம் என்பது பற்றி 3, 4 வாரங்களுக்கு முன் ஒரு சிறு குறிப்பு எழுதி இருந்தோம். அதைப் பார்த்து பலர் வருத்தப்பட்டார்கள். மற்ற பத்திரி கைகாரர்கள் யாரும் அதை கொஞ்சமும் கவனிக்காமல் சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகம் என்பதாக பெரும் தலைப்பு இட்டு எழுதிவந்தார்கள். நாகபுரி ஆயுத சத்தியாக்கிரகம் ஸ்ரீ அவாரி ஜயிலுக்கு போனதும் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் நமது நாட்டு சத்தியாக்கிரகப் பேச்சும் நிறுத்தப்பட்டுப் போய் விட்டது. இம்மாதிரி பொறுப்பில்லாமல் நடக்கும் காரியங்களால் நமது நாட்டுக்கு வரும் கெடுதிகளை பலர் உணர்வதில்லை. தொண்டர்கள் என்போர்களின் நிலைதான் இப்படி என்றாலும் பத்திராதி
பர்களின் யோக்கியதை இதைவிட மோசமானதாயிருப்பதோடு இப்பேர்பட்ட பொறுப்பற்ற சங்கதியை அனுமதிப்பதற்கு அனுகூலமாகவே இருந்து வருகிறது. இனியாவது தங்கள் கடனை உணர்வார்களாக.
குடி அரசு - குறிப்புரை - 10.07.1927
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கோவை மகாநா௫
தலைவருக்கு - கோவை மகாநாடு ஜில்லா மகாநாடாக கூட்டுவதா
யிருந்த காலத்தில் முதல் முதல்ஸ்ரீமான் குமாரசாமிரெட்டியாரவர்கள் பெயரை வரவேற்புக் கமிட்டிக்கு சொன்னவுடன் வெகு குதூகலமாக ஏற்றுக்கொண் டார்கள் என்றும், ஸ்ரீமான்கள் ரெட்டியாரவர்களுக்கு எழுதினவுடன் தேசத் திற்கு ஒரு மனிதன் செய்ய வேண்டிய கடனைச்செய்யும்படி கூப்பிடும் போது தான் எவ்விதத்திலும் ஆக்ஷேபனை சொல்லுவதில்லை என்று சொல்லி ஒப்புக்கொண்டார்கள். மறுபடி இது மாகாண மகாநாடாய் மாறினவுடன் ஸ்ரீமான் ரெட்டியாரவர்கள்தான் ஜில்லா மகாநாடென்று ஒப்புக் கொண்டதா
கவும் இப்போது மாகாண மகாநாடாய்விட்டதால் வேறு யாரையாவது தெரிந்தெடுத்துக்கொள்ளும்படி எழுதிவிட்டாறென்றும் மறுபடி சென்னை தென்னிந்திய நலஉரிமைச்சங்கமும் வரவேற்புக் கமிட்டியும் ஸ்ரீமான் ரெட்டி யாரவர்களையே வேண்டிக்கொண்டதாகவும், அவர் யாதொரு தடையும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாறென்றும் சட்டசபையில் ஸ்ரீமான் ரெட்டியார். அவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை வெட்டவெளியாக்கிவிட்ட வீரர். என்றும் மற்றவர்களைப் போல் அவர் படாடோபம் செய்து கொள்ளாமல் அடக்கத்திலிருப்பவர் என்றும் இம்மகாநாடு நடத்தும் விஷயத்தில் யாதொரு பிரயாசையும் எடுத்துக் கொள்ளாமல் தனது புன்னகையைக் கொண்டே எல்லாக் காரியங்களையும் சாதித்து விட்டார் என்றும், அவர் இளமை யிலிருந்தே பொது நன்மையில் ஈடுபட்டு வந்தவர் என்றும், உதாரணமாக பங்காள பிரிவினை கிளர்ச்சி காலத்தில் தூத்துக்குடி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனிக்கு எவ்வளவோ பாடுபட்டு லக்ஷக்கணக்கான திரவியம் சேர்த்துக் கொடுத்து அழைத்து வந்தவர்கள் என்றும் மகாநாட்டில் யாருக்கும் எவ்வித குறையுமின்றி எவ்வித அபிப்பிராயபேதமும்இன்றி தானும் யாருக்கும் அதிர்ப்தியாக நடந்து கொண்டதாயில்லாமல் நடத்தியது மிகவும் குறிப்பிடத் தக்கது என்றும், எவ்வளவோ தடபுடல் வாதப்பிரதிவாதம் நடக்கும் என்று எண்ணியிருந்த மகாநாடானது ஒரு மணி சப்தம் கூட இல்லாமல் நிறைவேற்
நிக் கொடுத்தார் என்றும் சொல்லி முடித்து வரவேற்பு கமிட்டியார் எடுத்துக் கொண்டசிரமம் மிகவும் பாராட்டத்தக்கதென்றும்,காரியத்தரிசிகள் ஒவ்வொரு வரும் பெரிய பெரிய பிரபுக்களும் மிராசுதார்களும் தக்க பொறுப் புள்ளவர்களுமானவர்கள் என்றும், அவர்களில் ஸ்ரீமான் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் தன்னுடைய உடல் நலிவோடு ஊர் ஊராய்
குடி அரசு - 1927 (3) 26
அலைந்ததல்லாமல் தனது வீட்டையும் காலி செய்து விட்டு விட்டு அவர். எடுத்துக் கொண்ட சிரமம் மிகவும் அதிகமானதென்றும் ராஜீத் தீர்மானத் திற்காகவேண்டி ஒவ்வொரு தலைவர்கள் வீட்டுக்கும் ஒவ்வொரு உழைப்பா ளிகள் ஜாகைக்கும் தூது நடந்தது கணக்கு வழக்கு இல்லை என்றும், தீர்மான வாசகங்கள் எல்லாம் அவர் கைப்படவே சுமார் 20, 30 தடவை எழுதி திருத்தினார் என்றும் அவர் பெரிய ராஜதந்திரி என்றும், அடுத்த காரியதரிசி ஸ்ரீமான் பி.எஸ்.ஜி. நாயுடு அண்டு சன்ஸ் வெங்கிடசாமி நாயிடு அவர்கள் ஒரு பெரிய மில் சொந்தக்காரர் என்றும் பெரிய பெரிய தர்மங்கள் எல்லாம் செய்தவர் என்றும் அவர் மகாநாடு விஷயத்தில் சகோதரர்களுடன் எவ்வ ளவோ கஷ்டப்பட்டார் என்றும் எவ்வளவோ ஆசாரங்களாய் இருந்தவர்கள் இப்பொழுது பெரிய சீர்திருத்தக்காரரானதோடு இப்பேர்ப்பட்ட பொதுக் காரியங்களுக்கு உழைக் கும் விஷயத்தில் யாரையும் விட முன்னுக்கு தானா கவே வந்து தாராளமாய் உழைக்கிறார் என்றும், மற்றொரு காரியதரிசியான ஸ்ரீமான் பி.எஸ். சாத்தப்ப செட்டியார் அவர்கள் அனேக மில்லுக்கு சொந்தக்
காரர் என்றும் அவரது தகப்பனார் ஸ்ரீமான் எஸ்.ராவ் பகதூர் பி.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மிகுந்த தெய்வபக்தியும் பிராமண விசுவாசமும் எல்லோருக்கும் நல்லவர் களாய் இருக்க வேண்டும் என்கின்ற தாட்சியண்ய சுபாவமும் உடையவர். இம்மகாநாடு நடைபெறுவதால் பார்ப்பனர்களுக்கு
வருத்தம் வருமோ என்பதாக நினைத்து தனது குமாரரை இதில் அதிகமாக
பிரவேசிக்கக் கூடாது என்று கருதி மகாநாடு விஷயத்தில் அதிக முயற்சி எடுத்துக் கொள்ளாதிருக்கச் செய்தும் ஸ்ரீமான் சாத்தப்ப செட்டியாரவர்கள் தனது அருமைத் தகப்பனாருக்கு தக்க சமாதானமும் சொல்லி மகாநாட்டுப் பண வசூலுக்கு தானே முக்கிய காரணஸ்தராயிருந்ததல்லாமல் முக்கிய தலைவர்களான ஸ்ரீமான்கள் பணக்கால் ராஜா, சர்.பாத்ரோ, முனிசாமி நாயுடு, ராமசாமி முதலியார் முதலிய கனவான்களுக்கும் தனவைசிய நாட்டிலிருந்து வந்த எல்லா பிரதிநிதிகளுக்கும் தனது வீட்டிலேயே ஜாகை வைத்துக் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய சப்ளை முதலியவை செய்ததோடு மகாநாடு ராஜி தீர்மானத்திலும் தான் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டு அதாவது ஒருக்கால் தீர்மானத்தை யாராவது எதிர்ப்பதாயிருந்தாலும் அதற்
கும் தயாராய் காங்கிரஸ் பிரவேச அனுமதித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மெஜாரிட்டி சேர்த்துக் கொண்டும் ஒரு வார காலமாய் மகாநாட்டு வேலை
யைத் தவிர வேறு ஒரு வேலையையும் கவனிக்காமல் வேலை செய்ததானது மகாநாட்டுக்கு எவ்வளவோ உதவியா யிருந்தது. அவரது தகப்பனார் ஸ்ரீமான் பி.சோமகந்தரம் செட்டியார் அவர்கள் மகாநாட்டுக்கு வர சவுகரியப்படா விட்டாலும் ஒவ்வொரு விஷயமும் ஒழுக்கமாய் நடைபெற வேண்டுமென்று எடுத்துக் கொண்ட கவலையும் முயற்சியும் மிகவும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான் வி.அருணாசலம் செட்டியார் அவர்கள் பிரபல வியாபாரியும் முனிசிபல் வைஸ் சேர்மேனுமாவார். அவர் தானும் தனது சகோதரர்களும் பணவசூலுக்கு ஊர் ஊராய் திரிந்ததல்லாமல் தங்களது வீடு,
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கடை மற்ற கட்டடம் முதலியவை களையும் ஒழித்துக் கொடுத்து கடிதப் போக்குவரத்து, மகாநாட்டுக் காரியா லயப் பொறுப்பு, அச்சு விஷயம் மற்றும் சகல காரியங்களையும் அவர் குடும்பமே மேற்போட்டுக் கொண்டு செய்தது. மற்றொரு காரியதரிசியான ஸ்ரீமான் செட்டிபாளையம் நஞ்சப்ப கவுண்டர் ஒரு பெரிய மிராசுதாரரும் கோயமுத்தூர் ஜில்லா போர்ட் வைஸ் பிரசிடெண்டு. மாவார். இவர் எடுத்துக் கொண்ட பொறுப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. பாத்திரம் வகைகள் சேகரிப்பதும் சமையல் ஒழுங்குகளை கவனிப்பதுமான வேலைகளை மிகுதியும் கவனித்து வந்தார். மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான் நஞ்சப்ப கவுண் டர் அவர்கள் முனிசிபல் கவுன்சிலரும் பாங்கரும் ஆவர். இவரும் மகாநாட்டு பிரதிநிதிகளை ஜாகை ஜாகையாய் கவனிப்பதும் புகார்கள். இல்லாமல் வேலை நடக்கத்தக்க மாதிரியுமாய் ஆங்காங்கு மேற்பார்வைக்கு பார்த்ததும் மிகவும் குறிப்பிடத்தக்கது. கோவைத் தலைவர் ஸ்ரீமான் வேரிவாட செட்டியார் அவர்களும் ஒவ்வொரு காரியத்தையும் மேற்பார்வை பார்த்து வந்தார்கள். ஸ்ரீமான்கள் பரமேஸ்வரம் செட்டியார் பீமைய செட்டியார், பழனிசாமி நாயுடு சி.வி. சுப்ப செட்டியார், செங்கோட்டய்யா, கிருஷ்ணசாமி பிள்ளை முதலிய அனேக வரவேற்புக் கமிட்டி கணவான்கள்: எடுத்துக் கொண்ட முயற்சி, மகாநாட்டு வெற்றிக்கு ஜீவாதாரமானது என்றே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி முடித்துவிட்டு மகாநாடு தொண்டர். தலைவர் ஸ்ரீமான் பொன்னைய கவுடர் அவர்களைப்பற்றியும் சொல்லும் போது அவர் ஒரு பெரிய செல்வந்த ரென்றும் மிகப்பொறுமையுள்ள வரென்றும் தனது புன்னகையாலேயே எல்லாக்காரியத்தையும் சாதிக்கக் கூடியவர் என்றும் அவரே கேப்டனாயில் லாதவரை வாலண்டியர்கள் இவ்வளவு சந்தோஷமாகவும் குதூகலத்துடனும் வேலை செய்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லிவிட்டு மகாநாட்டுக்கு 3 நாளாய் கொட்டகை உதவிய ஸ்ரீமான் வின்செண்டு துரை அவர்களுக்கு நன்றிசெலுத்தும்போது ஸ்ரீமான் நாயக்கர் சொன்னதாவது,
இந்த மகாநாட்டுக்கு உதவி செய்தவர்களில் பேருதவி செய்தவர்கள். இந்தக்கொட்டகை உதவின ஸ்ரீமான் வின்செண்டு துரையே ஆகும் என்றும் இந்த கொட்டகையை மாநாட்டுக்காக கேள்ப்பதற்கு நானும் ஸ்ரீமான் ரத்தின. சபாபதி முதலியாரும் போய் கேட்டதும் யாதொரு பதிலும் சொல்லாமல் உடனே ஒப்புக்கொண்டார் என்றும், ஆனால் நாம் கேள்ப்பதற்கு முன்னா லேயே ஒரு நாடகக் கம்பெனியாருக்கு தருவதாய் பேசி இருந்தும் அக்கம் பினியாரும் இந்த தேதிகளில் நாடகம் நடத்துவதாய் சுவர் விளம்பரங்கள் ஒட்டி இருந்தும் அவர்களுக்கு சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தைரியத்தின் மேல் கொடுத்ததாகவும், கொட்டகை கொடுத்ததோடல்லாமல் நம்மிஷ்டப்படியெல்லாம் இதன் இணைப்புகளை மாற்றிக்கொள்ள சம்மதித்த தோடு கொட்டகை அலங்காரம் முழுவதும் அவர்களே செய்து கொடுத்து வின்செண்ட்துரை சகோதரர்கள் இருவரும் தொண்டர்கள் போலவே
குடி அரசு - 1927 (3) 28
வேண்டிய உதவி செய்தார்கள் என்றும், இந்த கொட்டகை கிடைக்காவிட்டால் 500 ரூ. செலவழித்தாலும் இவ்வளவு சவுகரியம் கிடைக்காதென்றும் அது மாத்திரமல்லாமல் மகாநாடு உபசரணைத் தலைவர் வாலிப சங்க உபசரணை தலைவர் முதலியவர்கள் பிரசங்கங்களும் சுவர் விளம்பரம் துண்டு விளம்
பரம் மகாநாட்டு நடவடிக்கைகள் முதலிய பலவித அச்சு வேலைகளையும் இரவும் பகலாய் கஷ்டப்பட்டு உடனுக்குடன் செய்து கொடுத்தார்கள் என்றும் அவர்களது அன்பான வார்த்தைகளும் அவசரத்திற்கேற்றப்படி நடந்து கொண்ட உதவியும் மிகவும் மதிக்கத்தக்கது என்றும் பேசினார்.
குறிப்பு: கோவையில் 2, 3-07-1927 இரு நாள்களில் நடைபெற்ற மாகாண பார்ப்பனல்லாதார் மகாநாடு-சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 17.07.1927
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஈோட்மல் புதிய ஹைஸ்கூல்
- சித்திரபுத்திரன்
ஈரோட்டில் மகாஜன ஹைஸ்கூல் என்பதாக ஒரு பள்ளிக்கூடம் பல பெயர்களுடன் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகவே இருந்து வருகிறது. இது இருக்கும் போதே லண்டன் மிஷின் என்கிற ஒரு கிருஸ்தவ மத ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் மேல்கொண்டு ஒரு ஹைஸ்கூலை சுமார் 20 வருஷங்களுக்கு முன்பாக ஆரம்பித்தர்கள். அந்த மிஷின்காரர் தங்களது
செல்வாக்கால் கல்வி இலாக அதிகாரிகளையும் நீதிநிர்வாக இலாகா அதிகாரி களையும் கொண்டு தங்களாலான உபத்திரவமெல்லாம் செய்து பார்த்தும் மேற்
படி மகாஜன ஹைஸ்கூலை அசைக்க முடியவே இல்லை. சில பையன் களுக்கு சம்பளத்தைக் குறைத்தார்கள். பையன்கள் பெற்றோர்களுக்கு அரசாங்கத்தில் சிபார்சு செய்து உத்தியோகம் வாங்கிக்கொடுப்பதும் கெளரவ உத்தியோகம் செய்வித்துக் கொடுப்பதும், ஆண்பிள்ளைகள் வகுப்புக்கு பெண்களை உபாத்தியாயர்களாக வைப்பதும், உள்ளூர்கட்சி பிரதிகட்சிகளில் கலந்து கொண்டு கட்சிக்கு விரோதமாய் மற்றொரு கட்சிக்கு அனுகூலமாக உண்மையற்ற விஷயங்களை கோர்டில் சாட்சி சொல்லுவதும் இன்னும் எவ்வளவோ கூடா ஒழுக்கமான காரியங்களை எல்லாம் செய்து பார்த்தார்கள்.
எவ்வளவு செய்தும் மகாஜன ஸ்கூலை ஒழிக்க முடியாமல் போன தோடு கடைசியாய் நஷ்டம் தாங்கமுடியாமல் லண்டன் மிஷன்காரர்களே தங்களது ஹைஸ்கூலை எடுத்துவிட நேர்ந்தது. இதன் பலனாக அவர்கள் கட்டடம் பள்ளிக்கூட சாமான் இவைகள் உபயோகமில்லாமல் போனதோடு.
சில ஆசாமிகளுக்கும் வேலையில்லாமல் போக நேர்ந்து விட்டது. இதற்காக வேண்டிஅந்த லண்டன் மிஷன் நிர்வாகிகள் ஒரு தோது கண்டு பிடித்தார்கள். அது என்னவென்றால் ஈரோடு முனிசிபாலிட்டி தலையில் இதைப் போட்டு விட்டால் தங்கள் கட்டடத்திற்கும் வாடகை வரும், தங்கள் சாமானுக்கும் நல்ல விலை கிடைக்கும். தங்கள் மதத்தில் சேர்ந்து கொண்ட ஆசாமிகளுக்கும் வேலை கொடுக்கலாம் என்பதாக எண்ணி மெல்ல முனிசிபல் சேர்மெனைப்
பிடித்தார்கள். ஈரோடு முனிசிபல் சேர்மென் சங்கதியைப் பற்றி “குடி அரசு” இதற்கு முன் எத்தனையோ தடவை எழுதி எழுதி பேனாவெல்லாம் துர்நாற்
றம் வீகும்படியாயிருக்கிறது என்பது உலகமே அறியும். அப்பேர்ப்பட்ட ஒரு
குடி அரசு - 1927 (3) 30
பெரிய செல்வாக்குள்ள மிஷனரி கிடைத்து விட்டால் பிறகு அவர்க்கென்ன குறைவு. அச்சேர்மெனின் சகல அக்கிரமங் களும் தான் அடிக்கடி கலெக்டர், ஸ்தல ஸ்தாபன இலாகா நிர்வாகிகள் காரியஸ் தர்கள் முதலியவர்களுக்கு சிபார்சு செய்து வந்ததோடல்லாமல் கவுன்சிலில் நடந்த நாணயக் குறைவான காரியங்களுக்கும் உதவியாயிருந்து நியாய ஸ்தலங்களில் கூட உண்மைக்கு மாறாக சாட்சி முதலியவைகளும் சொல்ல அவருடைய விஷயங்களை நிவர்த்தித்து இவ்வளவுக்கும் பிரதிப் பிரயோ ஜனமாகப் பள்ளிக்கூடத்தை முனிசிபாலிட்டியார் நடத்தும்படி செய்து கொண்டு கட்டடத்தையும் சாமான் களையும் முனிசிபாலிட்டியார் தலையி லேயே கட்டி தனது ஆசாமிகளுக்கும் உத்தியோகம் வாங்கிக் கொடுத்து விட்டார். இதன் மூலம் சேர்மெனுக்கு நஷ்டம் உண்டா? ஒரு தம்படியும் கிடையாது. பின்னும் அதிலும் கொஞ்சம் உத்தியோகம் நியமனமேற் பட்டிருக்கிறது. அதனால் லாபம் கிடைக்குமே யல்லாமல் நஷ்டமில்லை. நஷ்டம் ஏற்படுவதெல்லாம் ஊரார் வரிபணமே தவிர வேறில்லை. ஆதலால் இந்த விஷயம் முனிசிபல் கவுன்சிலில் பாசானதற்கு காரணம் பொது ஜனங்களுக்கு சொல்லவேண்டியதில்லை.. மொத்தம் 20 கவுன்சிலர்களில் 12 கவுன்சிலர்கள் இந்த சேர்மென் அக் கிரமத்தையும் மிஷினரி கவுன்சிலர் அக்கிரமத்தையும் அவர் சிபார்சால்
கலெக்டர் முதலிய அதிகாரிகளின் அக்கிரமத்தையும் சகிக்க மாட்டாமல்
தங்கள் சுயமரியாதையை உத்தேசித்து கவுன்சிலர் பதவியை ராஜீனாமா செய்துவிட்டு வந்துவிட்டார்கள். அதற்காக நடந்த மறு தேர்தல்களில் சேர்மென் இஷ்டப்படி அவரால் அழைக்கப்பட்டவர்களே வந்து சேர்ந்
தார்கள்.
மெஜாரிட்டியாராகிய 12 கவுன்சிலர்கள் இருக்கும்போதே நாணயக் குறைவுகள் அக்கிரமங்கள் முதலியன நடக்கும்போது, சேர்மனின் கைகள், கால்கள், வால்கள் போன்ற கவுன்சிலர்கள் இருக்கும்போது இந்த தீர்மானம் நிறைவேறுவது அதிசயமாகுமா? ஒருக் காலும் அதிசயமாகாது.
பிறகு, இத்தீர்மானம் எஜுகேசன் கவுன்சிலில் தோற்றுப்போயும் அதற்கு மேல் மிஷினரி துரை சிபார்சு பிடித்துவிட்டார்கள். மகாஜன ஹை. ஸ்கூல் நிர்வாகிகள் படிப்பு மந்திரியாகிய டாக்டர். சுப்பராயன் அவர்களை தனி முறையில் பேட்டி கண்டார்கள். அவர் ஆகட்டும் சாதித்துவிடுகிறேன், வேறு பள்ளிக்கூடத்திற்கு அனுமதி கொடுப்பதில்லையென்று சொன்னதாக திருப்தியுடன் திரும்பி வந்துவிட்டார்கள். கடைசியாக துரை சிபார்சுப்படி 4- வது 5-வது 6-வது பாரங்கள் ஒரே அடியாய் துவக்கும்படி மந்திரி உத்தரவு செய்து விட்டார். அவர் என்ன செய்வார்; பாவம்! சேர்மென் அதற்குத்தகுந்த ஆளை சிபார்சாகப் பிடித்துகொண்டு போனால் மந்திரி பேசாமல் உத்தரவு போட்டுத் தானே ஆக வேண்டும். அதுபோல் உத்தரவு வந்ததும் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை சேர்ப்பதில் சேர்மென் பிள்ளைகள் வேட்டையாட ஆரம்பித்தார். சம்பளம் குறைப்பதாய் சொன்னார். பூரா சம்பளம் தள்ளி
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
விடுவதாகச் சொன்னார். சாப்பாடு போடுவதாக சொன்னார். நாய் அடிப்ப தற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு என்று கூலி கொடுப்பதுபோல் ஒரு பிள்ளை யைக் கொண்டுவந்து சேர்த்தால் இவ்வளவு கூலி என்று சொன்னார்: பிள்ளை கொண்டு வருபவருக்கு வாத்தியார் வேலை கொடுப்பதாகச் சொன்னார். தானும் இரவில் மோட்டார் போட்டுக் கொண்டு கிராமம் கிராமமாகச் சுற்றினார். கடைசியாக வகுப்பு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று பெஞ்சுகள் நிறையும்படி பிள்ளைகள் சேர்க்கப்பட்டார்கள். இந்த வேட்டையைப் பார்த்து
சகிக்க மாட்டாமல் மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகத் தலைவர் கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் செய்து சர்க்காரின் கல்வி இலாக்கா சட்டங்களை எடுத்துக்காட்டிய பின்பு 4-வது, 5-வது பாரங்களை எடுத்துவிடும்படி சேர்மெனுக்கு உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு சேர்மெனும் ஒரு மிஷினும் லாப மடைவ தற்கு ஊரார் பணம் எவ்வளவு நஷ்டமாவது? ஒழுங்காக நடைபெறும் பள்ளிக்கூடம் எவ்வளவு கஷ்டப்படுவது என்பது யோசித்துப் பார்ப்ப வர்களுக்கு விளங்காமல் போகாது...
மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகம் சரியாயில்லை. ஆதலால், இன்னும் ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்று சேர்மெனும், மிஷின் துரையும் பல இடங் களில் சொன்னதாகப் பிரஸ்தாபம். அப்படி சொல்லியிருந்தால் அது சுத்தப் புரட்டு என்றே சொல்ல வேண்டும்.
மகாஜன ஹைஸ்கூல் நிர்வாகம் சரியல்ல என்பது உண்மையானால் மேலே சொன்ன முறைப்படி எவ்வளவோ செளகரியங்களுடன் லண்டன் மிஷன்காரர்கள் 20 ஹு காலம் பள்ளிக்கூடம் நடத்தினார்களே அப் பொழுது ஏன் பிள்ளைகள் அதில் போதுமானபடி போய் சேர்ந்திருக்கக் கூடாது? அதை ஏன் மிஷன்காரர்கள் எடுக்க நேரிட்டது? இவர்கள் இதற்கு என்ன
பதில் சொல்லுவார்கள்? இனிமேலாவது ஊர் மகாஜனங்களுக்கு நல்லுணர்ச்சி ஏற்பட்டு இப்பேர்ப்பட்ட அக்கிரமங்களும், நஷ்டங்களும் நடக்காமல்
பார்த்துக் கொள்வார்களா?
குடி அரசு - கட்டுரை - 17.07.1927.
குடி அரசு - 1927 (3) 32
நமது 6வைை
“குடி அரசு” பத்திரிகை தோன்றி 27 மாதங்கள் ஆகின்ற தெனினும் அதன் மூலம் தேசத்திற்கும் சமூகத்திற்கும் நமக்கு சரி என்று தோன்றிய வழியில் நம்மால் கூடிய தொண்டை ஆற்றி வந்திருக்கிறோம் எனினும் செய்யவேண்டிய வேலை எவ்வளவோ பாக்கி இருக்கிறது. முன் ஒரு சமயம்
நாம் எழுதியதுபோல் “குடி அரசு” பத்திரிகை வேலை மாத்திரம் அல்லாமல் அதன் கொள்கையைப் பரப்ப மக்கள் மனதில் பதியச் செய்ய ஊர் ஊராய்
திரிந்து பிரசாரமும் செய்ய வேண்டிய பொறுப்பு இனியும் எவ்வளவோ மடங்கு அதிகமாயிருந்து வருகிறது. கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் மூலம் பார்ப்பனரல்லாதாருக்குள் இனி அபிப்பிராய பேதம் இருக்காது என்றும், பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்போர்களும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நமது கொள்கைகளை பிரசாரம் செய்யும் என்றும், நமக்கும் போதிய ஓய்வு கிடைக்கும் என்றும், பல நண்பர்கள் கருதினார்கள். இப்போது அவைகள் ஒரு வினாடி கனவு போலவே முடிந்து விட்டது. பார்ப்பன ரல்லாதார் கக்ஷியிலேயே யார் யாரை நமது சமூக முன்னேற்றத்திற்கும் உண்மையான தேச முன்னேற்றத்திற்கும் உதவி செய்வார்கள் என்று எண்ணி இருந்தோமோ அவர்கள் எல்லோரும் இப்போது காங்கிரஸ் பேரில் நாட்டம் கொண்டவர்களாக ஆகி விட்டார்கள். அரசியல் புரட்டும், தேர்தல் பைத்திய
மும் மக்களை அவ்வழி இழுக்கிறது. கோவைத் தீர்மானமானது யாரோ இரண்டொருவர் “காங்கிரசில் சேர இஷ்டப்படுகிறவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்று இருந்தாலும் ஏறக்குறைய பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் யாவருமே அதில் போய்ச் சேர தீர்மானித்துக் கொண்டதாகவே தெரியவருகிறது.
இது நிற்க, காங்கிரசிலிருந்து புதிதாக சிலர் பார்ப்பனரல்லாத கக்ஷியில் வந்து சேர்ந்து இக்கக்ஷிக்கு உதவிபுரிவார்கள் என்று எண்ணி இருந்தவர்கள் மகாநாட்டின் போது மாத்திரம் பொது மக்கள் மனம் திருப்தியடையும்படி பேசினார்களேயொழிய அவரவர்கள் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் “வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது” என்பது போல் பழைய படியே பார்ப்பனரல்லாத ககஷியை வைவதன் மூலம் பலனடைவதும் நமது எதிரியைப் புகழ்வதும் “நான் இன்னமும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் சேர: வில்லை” என்று சொல்லிக் கொள்ளுவதுமாயிருக்கிறார்கள். பார்ப்பனரல்லா
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தார் பத்திரிகைகளும் இக்கக்ஷியை வைதால் தான் நாட்டில் தமக்கு செல்வாக் குண்டு என்று எண்ணும்படி ஆகி விட்டதாகவே அறியக்கிடக்கின்றது. இவற்றை பார்க்கும்போது நாம் இது வரை என்னதான் மகாநாடுகள் கூட்டி இருந்தாலும் எவ்வளவுதான் பிரசாரங்கள் செய்திருந்தாலும் பொதுவாகவே பார்ப்பனரல்லாதாரில் பல பிரபுக்களுக்கும் பொது வாழ்க்கையில் இறங்கி இருப்பவர்களுக்கும் பத்திரிகைகாரர்களுக்கும் பார்ப்பனர்களிடம் உள்ள பயம் இனியும் நீங்க வில்லை என்றேதான் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக “தமிழ் நாடு” பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் கோவை மகாநாட்டிற்கு வந்து தனது அபிப்பிராயத்தைச் சொல்லிப் பார்ப்பன ரல்லாதாருக்கு உழைக்கும் கக்ஷி இது தான் என்பதை ஒப்புக்கொண்டு தானும் இதில் சேர்ந்து விட்டதாக எல்லாரையும் நம்பும்படியாகச் செய்து இவ்வளவும் ஆனபின் மறுபடியும் “தமிழ்நாடு” பத்திரிகையில் இன்னமும் பார்ப்பன ரல்லாதார் ககஷியை ஜஸ்டிஸ் என்னும் பேரால் வைவதற்கு இடம் வைத்துக் கொண்டும் அதற்கு ஏதேதோ வியாக்கியானம் செய்து கொண்டும் “ஜஸ்டிஸ் கக்ஷியாரோடு தேசியவாதிகள் ஒருநாளும் ஒத்துழைக்க முடியாது” என்றும் ஒரே அடியாய் எழுதிவிட்டார். இவற்றைக் கவனிக்கும்போது இது வரையிலும் பார்ப்பனரல்லாதார். கக்ஷியைப் பற்றி எப்படி தூற்றி வந்தாரோ அதே மாதிரிதான் இப்போதும்
தூற்ற ஆரம்பித்திருக்கிறாரே அல்லாமல் கோவை மகாநாட்டால் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களின் நிலைமையில் ஒன்றும் மாற்றமில்லை என்றே நினைக்கும்படி இருக்கிறது. ஜஸ்டிஸ் அரசியல் கொள்கையில் இவருக்குள்ள வித்தியாசம் என்ன என்பதை எழுதி இருந்தால் அது நன்றா யிருந்திருக்கும். ஜஸ்டிஸ் ககஷியாரானாலும் சரி, தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரானாலும் சரி அவர்கள் உத்தியோகம் ஏற்றுக்கொண்டிருந்த
காலத்திலும் ஸ்ரீவரதராஜுலு நாயுடுவுக்கு அக் கக்ஷியினது அரசியல் திட்டம் பிடிக்கவில்லை. கவர்னருடன் சிநேகமா யிருந்த காலத்திலும் அரசியல் திட்டம் பிடிக்கவில்லை.
இப்போது உத்தியோகம் பெற்றுக்கொள்ளுவதில்லை என்று தீர்மானித் திருப்பதும் பிடிக்கவில்லை. கவர்னரிடம் நம்பிக்கையில்லை என்று தீர்மானித் திருப்பதும் பிடிக்கவில்லை. இனி இக்கககி எப்படி நடந்து கொண்டால்
ஸ்ரீமான் வரதராஜுலுக்கு பிடிக்குமோ நமக்கு தெரியவில்லை.
தவிரவும் மேட்டூர் புரட்டுகளைப் பற்றி மகாநாட்டில் பேசும்போதும், தீர்மானிக்கும் போதும் அதன் ஆபாசங்களைப்பற்றி “ஜஸ்டிஸ், *திராவிடன்',
*குடி அரசு' ஆகியவைகள் கலம் கலமாய் எழுதிவரும்போதும், பார்த்துக் கொண்டு சும்மாயிருந்த ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு திடீரென்று ஸ்ரீமான் சர்.சி.பி.அய்யருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டார் என்றால் இதற்கு நாம் என்னதான் செய்து அவருக்கு உண்மை அறியும்படி செய்ய முடியும் என்பது நமக்குப் புரியவில்லை.
குடி அரசு - 1927 (3) 34
ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்களும் இதே மனப்போக் கையே காட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
“வகுப்பு வாதமிட்டுக்கொண்டிருந்த ஜஸ்டிஸ் கக்ஷியார் காங்கிரசில் நுழைய முன் வந்துள்ளனர்” என்றும், “ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள் நேரிய நெஞ்சுடன் காங்கிரசில் சேர வேண்டும்” என்றும், “சமுதாய சீர்திருத்தத்தில் பற்றுடைய ஜஸ்டிஸ் ககஷியார் நாட்டிலெழும் அரசியல் கக்ஷிக்கு இடையூறு செய்யாமல் தன்னந்தனியராய் தமது தொண்டை நிகழ்த்துவாராக” என்றும் எழுதி இருப்பதிலிருந்தே அன்னாருடைய மனப்பான்மை வெளியாகிறது. ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாருடைய விளக்க உரையை ஸ்ரீமான் முதலியார் நன்றாய் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது அவரே ஒப்புக் கொள்ளக் கூடிய விசயம். ஸ்ரீ செட்டியாரவர்களது சொற்பொழிவில் காங்கிர:
சுக்கும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கும் கொள்கையில் வித்தியாசம் இல்லை என்றும், ஜஸ்டிஸ் கக்ஷி கேள்க்கும் சுயராஜ்யம் தான் காங்கிரஸ் கேள்கிறது என்றும்,
காங்கிரஸ் மற்ற வகுப்பாருக்கு (அதாவது மகமதியர், கிருஸ்தவர்களுக்கு! கொடுத்திருக்கும் வகுப்புவாரி உரிமையைத்தான் ஜஸ்டிஸ் கட்சி கேள்கிறது என்றும், இதற்குப் பார்ப்பனர்களே முட்டுக்கட்டையாயிருக்கிறார்கள் என்றும் நன்றாய் எடுத்துரைத்தார். இவைகளை நன்றாய் அறிந்தும் தெரிந்தும் மனப்பூர்வமாக தானும் ஒப்புக்கொண்டும், தனது வாக்காலேயே இன்னமும் என்ன என்னமோ பேசியும் ஆனபின் ஊர்போய்ச் சேர்ந்தவுடன் ஜஸ்டிஸ் கட்சி “வகுப்புவாதக் கட்சி” அரசியல் கிளர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது, என்கிற பழைய பல்லவியைப் பாடிக்கொண்டு இருப்பாரானால் இதற்கு நாம் என்ன சமாதானம் சொல்லக்கூடும். தேசிய அரசியல் கிளர்ச்சிக்கோ அல்லது காங்கிரஸ் அரசியல் கிளர்ச்சிக்கோ ஸ்ரீமான் முதலியார் போற்றும் மகாத்மா வின் அரசியல் கிளர்ச்சிக்கோ ஜஸ்டிஸ் ககஷி எந்த விதத்தில் மற்ற கட்சி களைவிட இடையூறு செய்யக்கூடியதாயிருக்கிறது. இடையூறு செய்த கட்சிகளுக்கெல்லாம் தான் ஆக்கமளித்ததை அடியோடு மறந்துவிட்டு இப்படி பேசவும் எழுதவும் ஆரம்பித்து விட்டால் நாம் என்ன செய்யலாம்- நம்முடைய கால வித்தியாசம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோலவே
ஸ்ரீமான் ஜோசப்பு போன்ற சில காங்கிரஸ்காரர்கள் என்பவர்களும் இதே பாடத்தைப் படிக்கிறார்கள். முன் எழுதியது போலவே பல பார்ப்பனர்: அல்லாத பத்திரிகைகளும் அப்படியே நடக்கிறார்கள். ஆகவே, இக்கட்சிக்கு உள்ள கஷ்டம் “காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார்”களுக்குள்ளாகவே எவ்வளவு ஏற்படுகிறது என்பதும், இக்கட்சிக்காரர் பலர் காங்கிரஸ் அரசியல் வேஷம் போட்டுக்கொண்டதின் பயனாய் ஏற்படக்கூடிய கஷ்டம் எவ்வளவு என்பதும்
நாம் எடுத்துக்கூற வேண்டியதில்லை.ஆகவே கோவைமகாநாட்டால் நமக்கு நன்மை ஏற்பட்டதா? தீமை ஏற்பட்டதா? என்பதை ஒருவாறு இதன் மூலம் ஊகித்துக் கொள்ளலாம். இது எப்படியோ இருக்கட்டும் இனிச் செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை.
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பாமர மக்களுக்கு பகுத்தறிவு வரும் வரை தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமே ஆகும். எனவே,
நாம் இனி பாமர மக்களை கண் விழிக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள். செய்ய வேண்டியதுதான் உண்மையான தொண்டு. இதற்காகப் பிரயாசைப்பட போதிய பத்திரிகை இல்லை, ஆள்கள் இல்லை, பணமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நமது நாட்டில் உள்ள பத்திரிகைகள், ஆள்
கள், பணம் ஆகியவை எல்லாம் போலி தேசீயத்திற்கும், போலி சுயராஜ்யத்
திற்கும் உபயோகப்படுத்தும் முறையில் வாழ்வும், கீர்த்தியும் அடையக் கூடிய
தாய் இருக்கிறதே ஒழிய உண்மைக்கு உதவக்கூடியதாக ஒன்றும் தென்படுவ தில்லை. புதிதாக நமக்கு ஆள்களும் பத்திரிகை உதவிகளும் சேர்க்கத்தக்க
காலம் இன்னும் வரவில்லையானாலும் இருப்பவைகளையாவது நழுவ விடாமல் வைத்திருக்க வேண்டிய தாயிருக்கிறது. சுமார் நான்கு மாதத்திற்கு முன் “குடி அரசில்” “வேண்டுகோள்” என்னும் தலைப்பின் கீழ் திராவிடன் பத்திரிகையை ஒப்புக் கொள்ளலாமா என்பதைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதி இருந்ததும், அதற்கு 500 கனவான்கள் வரை பதில் எழுதியிருந்ததும் அவர்களுள் 20 கனவான்கள் தவிர மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும்படி எழுதி யிருந்ததும் அதன் பேரில் சில நிபந்தனைகளின்படியானால் ஒப்புக்கொள்ளக்
கூடும் என்று தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாருக்கு நாம் எழுதியிப்பதாக எழுதியிருந்ததும், வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்நிபந்தனை களுக்கு இப்போதுதான் பதில் வந்திருக்கிறது. நமது நிபந்தனைகளில் முக்கியமானது என்னவென்றால் “குடி அரசு” கொள்கைப்படிதான் “திராவி டனை' யும் நடத்த முடியும் என்றும், தென்னிந்திய நலவுரிமைச் சங்கக்தையோ ஜஸ்டிஸ் கட்சியையோ அதன் கொள்கைகளையோ அதில் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட நபர்களையோ கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கண்டிக்கத் தகுந்த உரிமை நமக்கு இருக்க வேண்டும் என்றும் எழுதி இருந் தோம். நாம் ஏன் அப்படி எழுத நேர்ந்தது என்றால் “தேசீயம்', 'சுயராஜ்யம்” என்கிற அரசியல்புரட்டுப் பதங்கள் அக்கட்சிக் கொள்கையிலும் கலந்திருப்
பதால் அதன் மூலம் அக்கட்சியார்களும் காங்கிரஸ்காரர்களைப் போல் பாமர: மக்களை ஏமாற்றும் வழியில் செல்ல நேரிட்டால் அம்மோசத்திலிருந்து பாமர: மக்களை தப்புவிக்க யார் யாரை அல்லது எந்த எந்த கட்சியை கண்டிக்க வேண்டுமானாலும் கண்டிப்பதற்கு பாத்தியமிருக்கவும் மற்றும் சர்க்கார். அதின் உத்தியோகஸ்தர்கள் முதலியவர்களை கண்டிக்கும் விஷயத்தில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காகவுமே அந்நிபந்தனை எழுதி
இருந்தோம்.அதற்கு பதில் எழுத ஏறக்குறைய? மாதத்திற்கு மேலாகி விட்டது.
இப்போது பதில் வந்திருக்கிறது. அதாவது நம்மிஷ்டம் போல் நடத்த ஒப்புக்கொண்டதாகவும், காலவரையரை கட்டியும் ஒரு தீர்மானம் நிறை வேற்றி அனுப்பி இருக்கிறார்கள். ஆகஸ்டு முதல் தேதி முதலே ஒப்புக் கொள்ளும் படியாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அநேக நண்பர்கள்
குடி அரசு - 1927 (3) 36
ஒப்புக்கொள்ளும் படியும் எழுதியிருக்கிறார்கள். இரண்டொரு கனவான்கள் மாதம் ஒன்றுக்கு 100, 200 ரூபாய்வீதம் நஷ்டத்திற்கு உதவுவதாகவும் வாக்களிக்கிறார்கள் சில நண்பர்கள் ஊதியம் எதிர்பாராமல் தொண்டு செய்வதாகவும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆகவே, இந்நிலையில் சிறிது காலத்திற்காவது நாமும் அதை ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதாகவே கருதுகிறோம்.
ஆனால், முக்கிய நண்பர்களில் பலர் உடல் நிலையை கவனிக்கும்
படிக்கும், ஓய்வெடுத்துக்கொள்ளும்படிக்கும் எழுதி வருகிறார்கள். ஓய்வெ டுத்துக்கொள்ள வேண்டிய சமயம் நமக்குத்தெரியும். அதாவது நமது தொண்டு நாட்டிற்கு உதவாது என்றாவது நமது தொண்டை நாட்டார் ஏற்பதில்லை என்றாவது நமக்கு தெரிந்தால் யாரிடமும் சொல்லாமல் நாமே ஓய்வெடுத்துக் கொள்ளுவோம்.
அதுவரை எடுத்துக்கொள்ளும் ஓய்வு உண்மையான ஓய்வாகாது. அப்படி கடுமையாக ஓய்வு எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற முறையில் நமது உடலில் கோளாறு ஒன்றும் இது சமயம் இல்லை என்றே நினைக்கிறோம்.
தனவைசிய நாட்டுச் சுற்றுப்பிரயாணம் முடிந்தவுடன் ஒரு வாரத்தில் “திராவிடன்” சம்மந்தமான ஏற்பாடுகளைப் பற்றி முடிவு செய்ய சென் னைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இது விஷயத்தில் நண்பர்கள் தங்கள். தங்கள் கடமையைச் செய்ய தவற மாட்டார்கள் என்றே முடிவு செய்து கொண்டு இம்முயற்சியில் ஈடுபடலாமெனக் கருதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.07.4927
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மந்திரிகளின் நிலை
கோவை மகாநாட்டில் இரட்டை ஆட்சி அழியும் வரை மந்திரி முதலிய உத்தியோகம் ஓப்புக்கொள்ளுகிறதில்லை என்கிற தீர்மானம் செய்யப்பட்ட வுடன் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் நிலை கொஞ்சம் கஷ்டமாகி
விட்டது. எதனாலென்றால் மதுரை மகாநாட்டிலேயே “இந்த சட்டசபை உள்ள வரை மந்திரி பதவி ஒப்புக்கொள்ளுவதில்லை” என்று தீர்மானித்திருந்தும் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளை ஆதரித்து வந்தார்கள். அதற்கு உண்மை யான காரணம் “இந்த மந்திரி சபையை ஆதரிப்பதின் மூலம் பார்ப்பனரல்லா தார்களுக்கு பார்ப்பனரல்லாதார் கட்சி மந்திரிகளால் சென்ற 6 வருட காலமாய் ஏற்பட்ட நன்மைகளையும், முற்போக்குகளையும் ஒழித்து பழையபடியே அரசாங்க பதவிகளையும், மற்றுமுள்ள ஸ்தாபனங்களையும், பார்ப்பன அக் கிரகாரத்திற்கே சுவாதீனமாக்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் மேல் அதை ஆதரித்து வந்ததோடல்லாமல்” “ஜஸ்டிஸ் கட்சியார் இந்த கவுன்சிலில்
மந்திரி உத்தியோகம் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், அடுத்த கவுன்சிலிலாவது உத்தியோகம் பெற்றுக் கொள்வார்களாதலால் நாங்கள் தற்கால மந்திரிகளை ஆதரிக்கிறோம்” என்று (ஓணாய் ஆட்டுக்குட்டி கதைபோல்) சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படிச் சொல்லுவதன் மூலம் இன்னும் ஒரு கவுன்சில் தேர்தல் நடக்குமானால் அதில் தாங்கள் வெற்றிபெற முடியாதென்று உறுதி கொண்டதையும் தங்களது மோசங்களையும் அயோக்கியத்தனங்களை யும்பாமர மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதையும், பார்ப்பனரல்லாதார். கட்சியின் உண்மைத் தத்துவத்தையும் பாமர மக்கள் அறியும்படி ஏற்பட்டு விட்டதென்பதையும் தாங்களே ஒப்புக்கொண்டதுபோல் ஆகிற தென்பதைக் கூட கவனியாமலும், காங்கிரஸ் திட்டத்திற்கு விரோதமாய் நடந்தாலும் காங்கிரசின் மூலமே தங்களது நடவடிக்கையை காங்கிரசே சரி என்று ஒப்புக் கொள்ளச் செய்துவிடலாமென்று எண்ணி அப்படியே செய்துவிட்டதின் மூலம் காங்கிரஸ் பார்ப்பன சூழ்ச்சி ஸ்தாபனமென்று ஜனங்கள் நினைப்பது சரியென்று ஏற்பட்டாலும் தங்களுக்கு அதைப் பற்றிப் பயமில்லை என்று நினைத்திருப்பதை காட்டிக் கொள்வதாகிறது என்பதையும், கவனிக்காமலும் தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு வந்தார்கள். இப்போது அந்த சமாதானத்தைச் சொல்லி பாமர மக்களை ஏமாற்றுதற்கில்லாமலும், இனி ஒரு தேர்தல் நடக்கக்கூட இடமில்லாமல், அதாவது இரட்டையாட்சி மாறுகிறவரை
குடி அரசு - 1927 (3) 38
உத்தியோகம் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இனி இந்த காங்கிரஸ்காரர்கள் என்கிற பார்ப்பனர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றறிய பார்ப்பனரல்லாத கட்சியை சேர்ந்த. ஒரு சட்டசபை அங்கத்தினர் மந்திரிகளின் மீது நம்பிக்கையில்லாத தீர்மான
மும் கொண்டு வந்தவுடன் பார்ப்பனர்களுக்கு நிலைமை கஷ்டமாகிவிட்டது இதன்பேரில் பழயபடி பாமர மக்களை ஏமாற்றுவதற்கென்றே தாங்களும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதுபோல் பாசாங்கு செய்ய உத்தேசித்து அவர்களும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக வெளியிட்டிருக்கிறார்கள் என்றாலும்,
இது மந்திரிகளைக் கலந்து யோசனை செய்தபிறகுதான், அதாவது மந்திரிகளுக்கு தைரியம் சொல்லிவிட்டு இத்தீர்மானம் கொண்டு வந்திருக் கிறார்கள். ஏனென்றால் மந்திரிகளிடம் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்க ளித்து மாதம் 1-க்கு 400,500 வாங்கிக்கொண்டு அவர்களை காப்பாற்றி வரும் காங்கிரஸ் பார்ப்பனர்களை யாவரும் தெரிந்திருக்கக்கூடும். இப்பொழுது திடீரென்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவர்களை ஒழிப்ப தனால் மாதம் 400,500 கிடைக்குமா? தவிர ஸ்தல ஸ்தாபனங்களிலும் இந்த மந்திரிகளை மிரட்டி பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் உத்தியோகம்செய்து வைப்பதாக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்.
கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியுமா? இனி யாருக்காவது செய்து வைப்பதாக வியாபாரம் பேசமுடியுமா? இந்த
மந்திரிகளின் அதிகாரம் ஒழிந்து பார்ப்பனரல்லாத கட்சி மந்திரிகளுக்கு போகாமல் வெள்ளைக்காரருக்கு இந்த அதிகாரம் போவதாயிருந்தாலும் கூட இப்போதைய மந்திரிகளால் தங்களுக்கு நடக்கும் சவுகரியத்தில் பத்தில் ஒரு பங்காவது செய்துகொள்ள முடியும்? என்பவைகளை யோசித்துப் பார்த்ததில்
முடியாது என்பதாக அறிந்து வேஷத்திற்காக கொண்டு வந்திருக்கிறார்களே. அல்லாமல் வேறல்ல...
இதன் முடிவை இப்போதே சொல்லிவிடலாம். அதாவது இந்த தீர்மானம் சட்டசபைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ்காரர்கள். என்போர்கள் சிலர் “நான் நோகாமல் அடிக்கிறேன், நீ ஓயாமல் அழு” என்பது போல் வெகு உக்கிரமாக மந்திரிகளை வைவதுபோல் ஜனங்கள் நினைக்கும் படி சர்க்காரைத் தாக்கி பேசவும் பேசுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக ஓட்டு எடுக்கும்போது இத்தீர்மானம் தோற்றுப் போகும்படி செய்துவிட்டு மந்திரிகளிடமும் இரட்டை கூலி வாங்கி கொள்ளக்கூடும். இதுதான் அனேகமாய் முடியப்போகிறது. எப்படி எனில், இப்போது உள்ள சட்டசபை மெம்பர்கள் மொத்தம் 128 இருக்கலாம். இதில் சுயராஜ்யகக்ஷியார்.
42, ஜஸ்டிஸ் கக்ஷியார் 22, சுயேச்சை எதிர்ப்பு கட்சியார் 4 பேர் ஆக ஒட்டு மொத்தம் எதிர்ப்புக்காரர்கள் சுமார் 68 பேர்கள் இருக்கலாம். போனால் மீதி
சுமார் 60 பேர் மந்திரியை ஆதரிக்கிறவர்களாக இருக்கக்கூடும். எதிர்ப்புக்கு
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அதிகமாயுள்ள எண்ணிக்கை 8 தான் ஏற்படுகிறது. இந்த 8 பேர்களுக்கும் அத்தீர்மானத்தன்று “காயலாவாகவும்” “வேறு ஊருக்குப் போகவும்” அவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு “பாட்டி சாகவும்”, “பாட்டனுக்கு திதி வரவும்” “வேறு அவசரமான காரியம் ஏற்படவும்” “ரயில் தப்பி போகவும்” வேண்டிய முயற்சிகள் இப்போது இருந்தே நடைபெற்று வருகிறது. இந்தவேலையில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, எ.ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், முதலியவர்கள் வெகு தீவிரமாய் இருக்கிறார்கள். ஸ்ரீமான். சி.ராஜகோபாலாச் சாரியாரின் உதவிகூட வேண்டப்படுகிறது. ஸ்ரீமான் சர். சி.பி. அய்யர். அவர்களின் செல்வாக்கு சந்து பொந்துகள் எல்லாம் உலாவுகிறது. முனிசீபு வேலை முதலானவைகள் கூட மாற்றுப் பண்டங்களாக விலை கூறப்படுகிறது. இவைகள் ஒரு புறமிருக்க மந்திரிமார்களின் பிரயத்தனங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அவை ஆகாயத்திற்கும், பூமிக்கும் தாண்டவ மாடுகிறது. மந்திரிகள் ஊர் ஊராய் பிரசாரம் செய்யப் போவதாய் சொல்லியி. ருப்பதே இதுதான் என்பது யாவருக்கும் முன்னமேயே விளங்கிவிட்டது.
ஸ்ரீமான் சுப்பராய மந்திரி இலாகா, ஸ்தல ஸ்தாபன நியமனங்கள் முதலியவை சட்டசபை அங்கத்தினர்கள் மீட்டிங்குக்கு வராமல் இருப்பதற்கு மாற்றுப் பண்டங்களாக ஏலம் கூறப்படுகிறது. அங்கத்தினர்களின் சுற்றத்தாருக்கு உத்தியோக சிபார்சுகள் பறக்கிறது. மற்ற மந்திரிகளின் முயற்சிகளும் பண்ட மாற்றுகளும் அதுபோலவே வர்ஜ்ஜா வர்ஜ்ஜம் பாத்திரம், அபாத்திரம் என்கிற பேச்சில்லாமல் தாண்டவமாடுகிறது. இவ்வளவுக்கும் மேலாக பார்ப்பனர்: களுக்கு வேண்டிய கொள்ளைக்கார அதிகாரிகளின் மிரட்டல்களும், சிபார்சு களும் ஒரு புறம் ஊடுருவி பாய்ந்துகொண்டு இருக்கின்றன.
இவைகள் தவிர யாராவது ஒரு மந்திரி ராஜினாமா கொடுத்து வேறு ஒரு கோயம்புத்தூர் கனவானுக்கு மந்திரி வேலை செய்து வைப்பதாகவும், அக்கனவான் சட்டசபை மெம்பராவதற்காக இப்போதிருக்கும் ஒரு சட்டசபை மெம்பரை ராஜினாமா கொடுக்கும்படியும் ஏற்பாடுகள் நடப்பதாகவும், அந்த கனவான் முழு பிரயத்தனத்துடன் மந்திரிகளின்மேல் வரும் நம்பிக்கை: யில்லாத் தீர்மானத்தை தோற்கடிக்க வேலை செய்வதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. இத்தனை தத்துக்களையும் தப்பி நம்பிக்கை இல்லை தீர்மானம் நிறைவேறும் என்பதும் இம்மந்திரிகள் போய்விடுவார்கள் என்ப
தும் சுலபமாய் முடிவுகட்டக்கூடிய காரியமல்ல என்பதே நமது அபிப்பிராயம். அப்படித்தான் அவர்கள் போய் விடுவதாலேயே பார்ப்பனர்கள் ஆதிக்கம்
குறையும் என்று சொல்லிவிடவும் முடியாது. அதற்கு தகுந்தவர்களை பிடித்து அவர்களுக்கு வேண்டியதை செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே பாடுபட்டு வெற்றியடைய பார்ப்பார்கள்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.07.1927.
குடி அரசு - 1927 (3) 40
காங்கிரஸ் தனைவர் பதவி விணியோகம்
இவ்வருடக் கோடியில் சென்னையில் கூடும் காங்கிரஸ் என்னும் கூட் டத்திற்கு தலைவராக நமது பார்ப்பனர்கள் டாக்டர் அன்சாரி அவர்களை தெரிந்தெடுத்திருக்கிறார்கள் என அறிகிறோம்.
சென்ற வருடக் காங்கிரசுக்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான். சீனி வாசய்யங்கார் அப்பதவி பெறுவதற்கு செலவு செய்தது போல் பணம் கொடுக்காவிட்டாலும் டாக்டர். அன்சாரி அவர்களிடம் அதற்கும் மேற்பட்ட தான பெரிய மதிப்புள்ள விலை பெற்றுக்கொண்ட பிறகுதான் நமது பார்ப்பன “தேசபக்தர்கள்” என்போர்கள் டாக்டரை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.
அந்த விலை எது என்றால் அதுதான் “மகமதியர்களுக்கு தனித் தொகுதி வேண்டியதில்லை” என்று சொன்னதாகும். டாக்டர். அன்சாரி அவர்:
கள் மகமதிய சமூகத்திற்காக ஒப்புக்கொண்டதாக சொல்வதை மற்ற மகமதி யர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி நமது பார்ப் பனர்களுக்கு அவசியமில்லை. எப்படியாவது அவர் காரியத்தை சாதித்துக் கொள்ள ஒரு சந்து கிடைத்தால் போதும். இப்போது ஸ்ரீமான்கள் ஒரு கந்தசாமி செட்டியாரையும், ஒரு முத்துரங்க முதலியாரையும், ஒரு குப்புசாமி முதலியா ரையும் பிடித்துக் கொண்டு அவர்களையே பார்ப்பனரல்லாதார். பிரதிநிதிகள் என்பதாக ஊர் ஊராய் கூட்டிக் கொண்டு போய் காட்டி எப்படி தங்கள் காரியத்தை சாதிக்கிறார்களோ அதுபோல் டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதியர்களுக்கு தனித் தொகுதி வேண்டாம் என்றால் அதுவே மகமதிய சமூக பிரதிநிதித்துவம் என்பதாகச் சொல்லி வரப்போகும் கமிஷனில்
சரிபடுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் பேரிலேயே இந்தப் பதவி கொடுத்திருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாய் பேசின தினாலும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை வைததினாலுமே ஸ்ரீமான் முத்து ரங்க முதலியாருக்கு சட்டசபை வேலை சம்பாதித்துக்கொடுத்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உபதலைவராக்கினதும் வரப்போகும் காங்கிரசுக்கு தற்கால வரவேற்புக்கமிட்டி தலைவராக்கினதும் யாவரும் அறிவார்கள்.
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
டாக்டர் அன்சாரி அவர்களை காங்கிரஸ் தலைமையில் இருந்து கொண்டு மகமதிய சமூகத்திற்கு தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொல்லும்படி செய்தாலும்கூட நமது மகமதிய சகோதரர்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என்பதே நமது உறுதி. இப்பொழுதிருந்தே அதற்கு வேண்டிய வேலைகள் செய்துகொண்டு வருவதையும் நாம் அறிவோம். ஆனாலும் இப்பதவிகள் பார்ப்பனர்கள் தங்களுக்கு எப்படி அனுகூலப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதற்கே இதைக் குறிப்பிட்டோம்.
குடி அரசு - கட்டுரை - 24.07.1927
குடி அரசு - 1927 (3) 42
செங்கல்பட்டு வில்லா பார்ப்பண்ய மகாநா௫
நம்நாட்டு பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை இந்நாட்டில் நிலை
நிறுத்த ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஆயுதங்களான மதத்தின் பேரால் வேதம், சாஸ்திரம், புராணம், சடங்கு, கோயில், தீர்த்தம், யாத்திரை, மடாதிபதி, குருக்கள், புரோகிதன் என்பவை போன்ற புரட்டுகளைப்போலவே, அரசியல் பெயரால் காங்கிரஸ், சுயராஜ்யம், ஒற்றுமை.தேசீயம், உரிமை அதிகாரத்தில் பங்கு, ஆங்கிலப்பள்ளிக் கூடம், வக்கீல்வேலை, நியாயஸ்தலங்கள் முதலிய புரட்டுகளையும் உற்பத்தி செய்துகொண்டு அதன் மூலமாகவும் நம்மையே ஏமாற்றி அடிமைப்படுத்தி ஆதிக்கம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள் என்ப தைப்பற்றி இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். நமது மக்களை ஏமாற்றுவதற்காக இந்த ஆயுதங்களை உபயோகப்படுத்தும்போது நமது பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரான நமது சமூகத்தாரையே அடிமை களாக்கி அவர்களைக் கொண்டே அவர்கள் மூலியமாகவே நம்மீது பிரயோ
கித்து வருகிறார்கள் என்பதைப் பற்றியும் பல தடவைகளில் எழுதி வந்திருக் கிறோம்.
அந்த விஷயங்களை வாசகர்கள் அனுபவத்தில் உணர்வதற்கு அடிக்கடி நிகழும் பல சம்பவங்களை எடுத்துக்காட்டியும் வந்திருக்கின்றோம். அப்பேர்ப்பட்ட அனுபவ நிகழ்ச்சிக்கு உதாரணத்தை மற்றுமொரு முறை
எடுத்துக் காட்ட “செங்கல்பட்டு ஜில்லா அரசியல் மகாநாடு” என்கிற பித்த லாட்டத்தைப் பற்றி சில விபரங்களை குறிப்பிடலாமென்று இத்தலையங் கத்தை பார்ப்பனீய மகாநாடு என்கிற பெயர் கொண்ட தலையங்கத்தில் எழுதுகிறோம். இதைப்பற்றி ஏன் எழுதுகிறோமென்றால் இம்மாதிரியான அயோக்கியத்தனத்தினாலும். புரட்டுகளினாலும், பித்தலாட்டங்களினாலும், நமது மக்களை இந்தப் பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏமாற்றி நம்மை முட்டாள்களாக்கி, நமக்கு மத விஷயங்களில் குருவாகவும், ஆச்சாரியர்களாகவும், மடாதிபதிகளாகவும், லோககுருக்களாகவும், சடங்கு விஷயத்தில், நமக்கு தகப்பன்களாகவும், ஜாதி விஷயத்தில் நாம் பார்ப்பனர். களுக்கு வைப்பாட்டி மக்களாகவும், தெய்வங்கள் விஷயத்தில் நமக்கும் தெய்வத்திற்கும் மத்தியிலுள்ள துவி பாஷிகளாகவும், மோட்ச சம்பிரதாய விஷயத்தில் அவர்கள் காலில் விழுவதாலும், அவர்கள் கால் கழுவின தண்ணீரை நாம் சாப்பிடுவதால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுவதாகவும்
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் அரசியல் விஷயத்தில் நமக்குத் தலைவர். களாகவும், கல்வி விஷயத்தில் நமக்கு உபாத்தியாயர் களாகவும், உத்தியோக விஷயத்தில் நமக்கு எஜமானர்களாகவும் இருக்க தக்கபடியாக அநேக அயோக்கியத்தனங்களைச் செய்து யோக்கியதையை சம்பாதித்துக்கொண்டு. இருக்கிறார்கள் என்பதில் எவருக்கும் அபிப்பிராய பேதமேயில்லை.
இவ்வித அக்கிரமங்களை ஒழிக்க நம் தலைவர்கள் பல நாளாக முயற்சித்து, அதற்கேற்ப இயக்கங்களை ஏற்படுத்தி அதற்காக உழைத்து வருவதும், அதை ஒழிக்க பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரிலேயே சில இனத் துரோகிகளைப் பிடித்து பலவித கூலி கொடுத்து நமது இயக்கங்களை ஒழிக்கவும், நமது இழிவும், குறைவும் தீர வேலை செய்பவர்களை வையச்
செய்வதும், நமது முன்னேற்றத்திற்கென்று நமது மக்கள் தனி மனிதர்களை நம்பி அவர்கள் மூலம் அவர்களுக்கேற்ற பிரசாரங்கள் செய்ய ஏற்படுத்தி யிருக்கும் ஸ்தாபனங்களிலும் ஏமாற்றி வஞ்சகமாய் உள் நுழைந்து கொண்டு அவற்றை பாழ்படுத்தி அந்த ஸ்தாபனங்களை தங்களுக்கனுகூலமாய் திருப்பிக்கொண்டு அதன் மூலம் நமக்கே கேடாகும்படி செய்ய செய்வதுமே அவர்கள் தொழிலாய் இருப்பதையும் பார்த்து வருகிறோம். இத்தொழில்களில் ஒன்றாகவே செங்கல்பட்டு அரசியல் மகாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. ரெ மகாநாடு நடத்தியதின் கருத்து என்ன? அதன் வரவேற்பு அக்கிராசனர்,
மகாநாட்டுத் தலைவரென்பவர், இவர்கள் யார்? அவர்களுக்கு செலவுக்கு கொடுத்து வருபவர் யார்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்கள் பேசிய
பேச்சின் தத்துவம் என்ன? அவைகளை பிரேரேபணை செய்த, ஆமோதித்த ஆட்கள் யார்? என்கிற விபரங்களை ஒரு நடு நிலைமையிலுள்ள மனிதன்
சற்று கவனமாய் யோசித்துப் பார்ப்பானானாலும் கூட விளங்காமல் போகாது. அதன் உபசரணைத் தலைவர் என்பவர் யார்? அவர் எப்பொழுது பொது வாழ்வில் வந்தவர்? அவரது கொள்கை என்ன? அரசியலில் மகாத்மா
காந்தியடிகள் தலையிட்டு உலக மக்களையே கலக்கி தேசபக்தர்களை கூவிய ழைத்த காலத்தில் இவரெங்கிருந்தார்? ஆகிய சங்கதிகள் ஒன்றும் யாரும் அறிய முடியாதபடி இருக்கிறது. இவரது வரவேற்பு அக்கிராசனப் பிரசங்கம் பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்டு உழைத்து வரும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்த பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத் ததைச் சொல்லும் கிளிப் பிள்ளையின் சத்தமாய் இருக்கிறது. அச்சத்தத்தின் தத்துவங்கள் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்தைப் பற்றி மக்க ளுக்குத் திரித்துக்கூறி, பார்ப்பனரல்லாதார்களை வைது, பார்ப்பனர்களை சரணாகதி அடைய பார்ப்பனரல்லாதார் தத்துவத்தையும், பாமர மக்களையும் பலிகொடுக்கப் பிரயத்தனப்படுவதாயும், பார்ப்பனர்களுக்கு வக்காலத்து
வாங்கிக் கொண்டு பேசுவதாயுமிருக்கிறது. இதற்கு உதாரணமாக இரண்டொன் றைக் குறிப்பிடுவோம்.
“சமயத்திற்கு ஒரு அபிப்பிராயத்தைத் தெரிவித்து தலைவ
குடி அரசு - 1927 (3) 44.
ராகப் பார்க்கும் ஸ்ரீ வரதராஜுலு நாயுடுவும், ஜாதீய உணர்ச்சியும் பொறாமை யும்கொண்டு சுயமதிப்பை விட்டு பனகால் ராஜாவைத் தலைவர் என்று மானமில்லாமல் சொன்ன ஒத்துழையா ஸ்ரீ திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும், பார்ப்பனரல்லாதாரையும் வாய்கூசாமல் திட்டிவரும் ஸ்ரீ ராம சாமி நாயக்கரும், ஆர்.கே. ஷண்முகம் செட்டி யாரும் பார்ப்பனரல்லாதார் சங்கத்தில் இருக்கும் பொழுது பார்ப்பனர். களை மாத்திரம் நாம் எப்படி தூஷிக்கலாம்?'” என்று பேசியிருக்கிறார்.
“உடல், பொருள், ஆவி இம் மூன்றையும் நமக்காகவே அர்ப்பணம் செய்து, தேசத்துரோகிகளின் வசவுகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உழைத்துவரும் நம் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான். சீனிவாச ஐயங்காரு டையவும், மற்ற பார்ப்பன தேசப்பக்தர்களுடை யவும் தேச சேவை நமக்கு வேண்டாமென்று எந்த தேச பக்தர். சொல்லக்கூடும்?”
என்று பேசியிருக்கிறார். இதிலிருந்தே இவருடைய யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார், ராமசாமி. நாயக்கர், ஷண்முகம் செட்டியார், பனகால் ராஜா இந்த ஐவர்களைவிட ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் எந்த விதத்தில் மேலானவர் என்று இந்த வர: வேற்பு தலைவர் ஸ்ரீ ரெட்டியார் கருதுகிறார் என்பதற்கு காரணம் சொல்லி இருந்தால் அது யோக்கியமாய் இருந்திருக்கும். ஸ்ரீ சீனிவாச ஐயங்கார் தேசத் தைப் பாழாக்கும் வக்கீல் பிழைப்புக்காரர், சர்க்காருக்கு நல்ல பிள்ளை யாயிருந்து பட்டம் பதவி பெற்றவர், பெரிய உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு, காந்தியடிகளின் ஒத்துழையாத்திட்டம் சட்ட விரோதமானது என்று சொன்
னார். மகாத்மா காந்தியை “மகாத்மா” என்று கூறுவது தகாது என்று சொன்
னார். காந்திக்கு மூளை இல்லை என்று சொன்னார். தீண்டாமை, மதுவிலக்கு,
கதர் முதலியவைகள் காங்கிரஸில் இருக்கக்கூடாது என்று சொன்னவர்?
“ராமசாமி நாயக்கர், கலியாணசுந்தர முதலியார் ஆகியவர்களை: காங்கிரசை விட்டு வெளியாக்க வேண்டும்” என்று சொன்னவர். “ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் இன்னமும் யேன் சர்க்கார் பிடித்து ஜெயிலில் அடைக்காமல் வெளியில் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று கேட்டவர்.
“அட்வகேட் ஜெனரலாவது இவர்களை ஜெயிலில் அடைக்க யோசனை சொல்லக்கூடாதா?” என்று சொன்னவர்.
இப்படி பேசியிருப்பதோடல்லாமல் ஒத்துழையாமையை ஒழிப்பதற்கு
சேர்த் த்தவர். அன்னக்காவ க்கு பணம்கொடுத்து பார்ப்பன தது ஒழித்தவ டிகளுக்கு த்து
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ரல்லாதாரை வையும்படி சொல்லி வருகிறவர். இன்னமும் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம், பதினையாயிரம் என்று வக்கீல் உத்தியோகத்தில் சம்பாதித்துக் கொண்டு இருப்பவர். நிமிஷத்திற்கு நிமிஷம் தவறாது நூறு பொய் பேசுகி றவர் என்ற பெயரை வாங்கியவர். இப்படி இருக்க, ஸ்ரீமான் ஐயங்கார் அவர்:
கள் எந்த விதத்தில் மற்றவர்களைவிட யோக்கியதாம்சம் பொருந்தியவர். என்பதையும், எந்தவிதத்தில் தேசத்திற்கு உடல், பொருள், ஆவி இம் மூன்றையும் தத்தம் செய்தவர் என்பதையும், ஏதாவது நஷ்டப்பட்டாரா? கஷ்டப்பட்டாரா? சிறைக்கு சென்றாரா? வக்கீல் வேலையை விட்டாரா? என்பவைகளையும் எழுதி இருந்தால் நன்றாயிருக்கும்.
மற்றபடி மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான் ஒத்தகாசு கந்தசாமி செட்டி யாரைப் பற்றி நாம் ஒன்றும் புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. அவர். பார்ப்பனரல்லாதார் ககஷியில் இருந்தவர். அக்கக்ஷியார் இவருக்கு செலவுக்கு பணம்கொடுக்காததால், பார்ப்பனர்களுடன் சேர்ந்துகொண்டதாக அதாவது “கூலி”க்கு மாரடிக்கிறவர் என்று பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவரால் சொல்லப்பட்டு கோர்ட்டிலும் விவகாரம் நடந்தது. பெரும்பாலும் விஷயம். நம்பும்படி ஏற்பட்டு இவருடைய யோக்கியதை “ஒரு காசுக்கும் சின்ன நாணயம் தான் பெறும்” என்ற தீர்ப்பும் பெற்றவர். இந்த யோக்கியர் ஒரு மகாநாட்டுக்கு தலைவர் என்கிற பெயரை பார்ப்பனர்கள் தயவால் பெற்று,
“ஜஸ்டிஸ் கட்சியானது ஒற்றுமையை பாழாக்கிவருகிறது” என்றும் “பார்ப்பனரல்லாதார் பெயர்” பொருளற்றதென்றும், “ஒருவரை மாத்திரம் துவேஷித்து பேசுவது சரியல்ல” வென்றும் இன்னும் பலவாறாக பார்ப்பனர் களுக்கு வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்கிற பெயர் சொல்லிக் கொண்டு பார்ப்பனரல்லாதாரை வைது கொண்டு பெருமை சம்பாதித்துக் கொண்டும் கூலி வாங்கிக்கொண்டும் வாழ்கிறவர்களில் இவரும் ஒருவர் என்பதை இவர். கதை அறிந்தவர்கள் எல்லோரும் நன்றாய்த் தெரிந்தேயிருப்பார்கள்.
“ஜஸ்டிஸ் கட்சி” என்பதாக ஒரு தனிக் கட்சி எங்கேயாவது இருக்கி றதா? அதற்கு கொள்கையுண்டா? அதற்கு சந்தா உண்டா? என்பதை அதை வையும் இந்த யோக்கியர்கள் ௬ஜு செய்தால் நன்றாயிருக்கும். “ஜஸ்டிஸ்” என்பது ஒரு பத்திரிகையினுடைய பெயரேயல்லாமல் ஒரு கட்சியின் பெய ரல்ல. தென் இந்திய நலவுரிமைச்சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கிறது. அதன் கொள்கையை ஒப்புக்கொள்ளுகிறவர்கள் ஒரு கட்சியாக இருக்கிறார் களேயல்லாமல் வேறில்லை. இந்த ஸ்ரீமான் ஒத்தகாசு செட்டியார் இருக்கும் போது ஏற்பட்டிருந்த கொள்கைகள் இன்னமும் அக்கட்சியில் மாறாமல் இருக். கின்றன. அவ்வப்போது அக்கொள்கைகளுக்கு ஏற்ற திட்டங்கள் ஏற்படுத்தி நடத்தி வரப்படுகிறது. நிற்க! “பார்ப்பனரல்லாதார்” பெயர் பொருளற்றது
குடி அரசு - 1927 (3) 46
என்று சொல்லு கிறது. இவரே அக்கட்சியிலிருந்து வைத்துவிட்டு வந்த பெயர். இந்த பெயர் இவருக்கு பிடிக்கவில்லை என்று சொல்வதானது ஸ்ரீமான் சீனிவாச ஐயங்காரின் பணத்தின் மகிமையேயல்லாமல் வேறல்ல. இவரைப் போலவே இன்னும் சில பார்ப்பன அடிமைகளும் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்கிற ஏனையோர்களும் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு கூட்டத்தார் நமக்குவிரோதி, நமது சுயமரியாதையை கெடுத்தவர்.
கள் என்று நாம் உறுதியாக கண்டுவிட்டோமானால் நமது சுயமரியாதை இயக்கத்திற்கு அவர்கள் சகவாசமே கூடாது என்று தீர்மானித்து விட்டோ மானால், அம்மாதிரி இயக்கத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று அவரவர். ஆராய்ந்து சொன்னால் யோக்கியமானதாக இருக்கும். அந்த இயக்கத்தில் அங்கத்தினர்களாக சேர்ந்து கொள்ள உரிமையுள்ளவர்கள் அநேக பெயரையு டைவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நாம் அந்த பெயரை: உபயோகப் படுத்துவதானால் அது நமது சுயமரியாதைக்கு பங்கமானதாக இருக்கிறது. உதாரணமாக “சூத்திரன்” என்று வைத்து கொள்வதா? அல்லது பஞ்சமன் என்று வைத்துக்கொள்ளுவதா? என்று சுயமரியாதையோடு யோசித்துப் பார்த்தால் அதன் யோக்கியதை விளங்காமல் போகாது. தெரிந்து பேசுகிறவர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும். இதை மற்றொரு சமயம் விவரிப்போம்.
தவிர, பார்ப்பனர்களை நாம் பகிஷ்கரிப்பதாய் சொல்லுகிறார். நாம் அவர்களை பகிஷ்கரிக்கின்றோமா? அவர்கள் நம்மை பகிஷ்கரித்து இருக் கின்றார்களா? என்ற விபரம் கடுகளவு புத்தியுள்ளவனுக்கும் தெரியாமல் போகாது. பார்ப்பனர் பகிஷ்காரத்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் கெடுதிகளை
நீக்கிக் கொள்ள நாம் முயற்சிக்கிறோமே யல்லாமல் நாம் அவர்களை பகிஷ்கரிக்கவில்லை. அவனுக்கு உள்ளதை அவன் எடுத்துக்கொள்வதிலும்
நாமாகக் கொடுப்பதிலும் நமக்கு எப்போதும் ஆஷேபனையில்லை. ஆத லால் நாம் அவர்களை பகிஷ்கரிக்கிறோம் என்று சொல்வதும் ஒழிக்கப் பார்க்கிறோம் என்று சொல்வதும், துவேஷம் கொள்ளுகிறோம் என்று சொல் வதும் புரட்டுப் பார்ப்பனர்களுக்கு தாங்கள் மாத்திரம் நல்ல பிள்ளைகளாகி பொறுக்கித் தின்பதற்கும், ஏமாற்றுவதற்கும் போடும் வேஷமேயல்லாமல் வேறல்ல. ஆனால் நமது இயக்கத்திற்கு ஏன் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கேட்கிறார்கள். அப்படி கேட்பது அறிவில்லாமை யும், அனுபவமில்லாமையும் ஆகும். ஏனெனில் பார்ப்பனன் நம்மை செய்த,
செய்து கொண்டிருக்கும் கொடுமையிலிருந்தும், இழிவிலிருந்தும் மீளவே நாம் இவ்வியக்கத்தை ஆரம்பித்துக் கொண்டு இருக்கிறோம். அவ்வித இயக்கத்தில் அவனைக்கொண்டு வந்து உள்ளே நுழைத்துக் கொண்டால் அந்த இயக்கம் வாழுமா? அவர்களுடைய சூழ்ச்சியும், தந்திரமும், நமக்குள் கலகம் செய்வித்து நம்மை பிரித்து வைக்கும் விஷமத்தனமும் நமக்குத்
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தெரியாதா? அவர்களை சேர்த்த எந்த இயக்கம் உலகத்தில் யோக்கியமாய் நடந்தது அல்லது நடைபெறுகிறது?.
மகாத்மா காந்தியின் அற்புதமான இயக்கம் அழிந்து, அவரது புனிதமான தத்துவங்கள் பயன்படாமல் அவரையும் ஒரு சங்கராச்சாரியார். போல ஆக்கிவிட்டது, பார்ப்பனர்களை அவரது இயக்கத்தில் சேர்த்ததினா லல்லவா? தனவைசிய நாட்டில் பார்ப்பனீயத்தை ஒழித்து, மக்களுக்கு சமத்
துவமும், சுதந்திரமும் அளித்து, மூட வழக்கத்தை ஒழித்து, சுயமரியாதையை உண்டாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பதினாயிரக்கணக்கான ரூபாய் களை செலவு செய்து பல அறிஞர்கள் கூடி ஆரம்பித்த ஒரு பத்திரிகை இன் றைய தினம் சுயமரியாதைப் பிரசாரம் செய்வது நாட்டிற்கு கெடுதி என்றதாக எழுதிக்கொண்டு சுயமரியாதைப் பிரசாரத்திற்கு எதிர் பிரசாரம் செய்வதற்கு காரணமென்ன? ஒரு பார்ப்பனனை அந்த பத்திரிகை ஆபிஸில் நுழைய விட்டதினாலல்லவா? இப்பேர்பட்ட சொந்த உறுதியுள்ள மக்களும், தத்துவங் களும், பார்ப்பனர்களை உள்ளே சேர்த்ததின் பலனாக பாழ்பட நேரிடுகிறது என்றால் மற்ற சாதாரண கூட்டங்களில் புகவிட்டால் என்ன கதியாகு மென்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. விதண்டா வாத முறையில் வக்கீல் தத்துவம் பேசுவதின் மூலம் வாயாடிகள் பாமர மக்களை: எந்த கொள்கைக்கு வேண்டுமானாலும் இழுத்து விடலாம். வாதத்தில் பாமர: மக்களை வென்று விடலாம். இவைகளாலேயே சரிக்கண்ட நியாயமேற் பட்டுவிடுமா? பாமர மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி வரும்வரை இம்மாதிரி ஒரு கூட்டத்தார் யேமாற்றி வயிறு வளர்த்துக்கொண்டு பெருமையும்,
கீர்த்தியும் சம்பாதிக்கலாமே ஒழிய உலகத்திற்கு இவர்களால் ஒருபயனும் யேற்படாததோடு நாளுக்குநாள் பாழ்பட்டுக் கொண்டே வரும். எனவே செங்கல்பட்டு ஜில்லா மகாநாடு என்னும் பார்ப்பனீய மகாநாட்டில் நடைபெற்ற நடவடிக்கைகளும் அதில் சம்பந்தப்பட்டவர்களும் பார்ப்பனர்களால் ஏமாந்த வர்களும், பார்ப்பனர்களின் தயவு பெற்று வாழ்பவர்களுமானவர்களின் நடவ டிக்கையேயல்லாமல் இது ஒரு பொதுத்தொண்டு அல்லவென்று சொல்வ தோடு இம்மாதிரி சூழ்ச்சிகளைக் கண்டு மக்கள் யேமாறும் காலம் மலையே நிப்போய்விட்டது என்றும் சொல்வோம். மற்றபடி அதன் தீர்மானங்களைப் பற்றி பின்பு ஆராய்வோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.07.1927
குடி அரசு - 1927 (3) 48
வகுப்புவாரி யிரதிநிதித்துவமும் பார்ப்பண,
தனைனர்களும்
காஞ்சீபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெராமசாமி நாயக்கர், எஸ்.ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின. காரணம் இன்னதென்பதும் அது முதல் வேறு தனிப்பிரசாரம் செய்து வருவதின் நோக்கம் இன்னதென்பதும் நமது நேயர்கள் அனேகருக்குத் தெரியும்.
அதாவது மகாநாட்டிற்கு நாயக்கரும் ராமனாதனும் அனுப்பிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைவர். மகாநாட்டில் பிரேரேபிக்கக் கூட அனுமதிக்காமல் சட்டத்தின் பெயரைச் சொல்லி தள்ளிவிட்டதினாலேயே மேற்கூறியவர்கள் வெளியேறினார்கள். என்பது ஷெமகாநாட்டிற்குப்பிறகும், ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு ஆகியவர்கள் அவ்வகுப்புவாரி உரிமைக்கு விரோதமாய் பிரசாரம் செய்ததும் சில இடங்களில் ஆதரித்ததும் ஆகிய காரியங்களும் நேயர்களுக்குத் தெரியும். கடைசியாக கோவை மகாநாட்டில் வகுப்புவாரி உரிமையை அடிப்படையாகக் கொண்ட காங்கிரசுக்கு நம்மை அழைத்ததும் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தை ஏற்றுக்கொண்டதும் வாசகர்களுக்குத்
தெரிந்ததே.
இப்போது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஒரு புது ஆதரவு. அதாவது நமது நாட்டிற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் எந்த வகுப்பார் தங்களுக்கு ஆபத்து என்பதாகக் கருதி இவ்வளவு திருவிளை யாடல்களைச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ, அந்த.
வகுப்பில் முக்கியமானவரும், ஒரு ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவரா னவரும், சுயராஜ்யக்கட்சி உபதலைவரும், ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி அய்யங்கார். சம்மந்தியுமான ஸ்ரீமான் கோவை சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் அந்த கொள்கையை ஒப்புக்கொண்டு “வகுப்பு வாதத்தை ஒழிப்பதற்கு யோசனை” என்கிற தலைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ திட்டம் கூட ஏற்பாடு செய்துவிட்டார். அதாவது ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார். 16-7-27 தேதி “சுதேசமித்திரன்” பத்திரிகையில் ஒரு நிருபருக்கு பேட்டி
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கொடுத்தார் என்கிற முறையில் இந்த ஜில்லா வாசிகளுடைய அபிப்பிராயங் களையும், அபிலாஷைகளையும் நான் அறிவேன். அவர்கள் அபிப்பிராயங் களை நான் தெரிந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அதை ஒருவாறு சுறுக்கிகூறுகிறார்.
“சட்டசபை போன்ற பொது ஸ்தாபனங்கள் விஷயத்திலும் உத்தியோக விஷயத்திலும்தான் சங்கடம் இருந்து வருகிறது” என்று சொல்லிவிட்டு அதற்கு மார்க்கம் சொல்லுகிறார். அதாவது சட்டசபை முதலிய சம்பளம் இல்லாத கெளரவ ஸ்தானங்களில் 100க்கு 16 /,ஸ்தானங்கள் பார்ப்பனர் களுக்கும் மீதி 83 யில் கிறிஸ்தவர்களுக்கு16 1, யும் மகமதியர்களுக்கு16 17,
யும் தாழ்ந்த வகுப்பு பிரதிநிதிகளுக்கு 16 /, யும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு
33ம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உத்தியோக விஷயத்தில் புதிதாக செய்யப்படும் உத்தியோக நியமனங்களில் 100க்கு 40 பார்ப்பனரல்லாத இந்து மக்களுக்கு என்றும் 100க்கு
20 பார்ப்பனர்களுக்கு என்றும். 100க்கு 20 முகம்மதியர்களுக்கும், 100க்கு 10 கிருஸ்தவர்களுக்கும், 100க்கு 10 ஆதிதிராவிடர்களுக்கு என்றும் எழுதி இருக்கிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று சொன்னவர்.
களுக்கு இதன் பரிமாற்றத்தில் திட்டத்தில் ஏதாவது வித்தியாசமிருந்தாலும் முக்கிய கொள்கையில் யாதொரு மாறுபாட்டையும் காணோம் எனவே பார்ப்பனர்களும் ஒருவாறு வகுப்பு வாரி திட்டம் ஏற்படுத்த ஒப்புக்கொண்டு வருகிறார்கள் என்பது இப்போது வெளிப்படை இன்னமும் எத்தனையோ பார்ப்பனர்களும் பார்ப்பன வாலிபர்களும் நம்முடன் நேரிலேயே சொல்லி இருக்கிறார்கள். அதாவது “பார்ப்பனர் பிறவிகாரணமாய் ஜாதியில் மற்ற எவரையும்விட உயர்ந்தவனல்ல என்பதையும், இந்திய மக்களின் ஒற்றுமைக்
கும் கதி மோக்ஷத்திற்கும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமே சிறந்த சாதனம் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறோம். எங்களையும் தங்கள் சுயமரியாதை
சங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள். நமக்கு இன்னமும் அவர்களிடம் நம்பிக்கை வராததால் நாம் நமது காலிலேயே நின்று நமது தேவையை அடைய வேண்டும் என்கிற ஆசையாலும், இதற்கு முன் பல தடவைகளில் கிளம்பிய இது போன்ற பிரயத்தனங்களை இதே பார்ப்பனக் கூட்டத்தார் கூட இருந்தே கெடுத்திருக்கிறதை பார்த்து இருப்பதினாலேயும், நமக்கு அவர்களிடம் நம்பிக்கை உண்டாவது கஷ்டமாயிருக்கிறதே ஒழிய வேறில்லை. எப்படியும் இதிலிருந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கை யுடைய பார்ப்பன எதிரிகள் குறைந்து வருகிறார்கள் என்கிற விஷயத்தில் நமக்கு சந்தோஷம். ஆனால் பார்ப்பனர்கள் யோக்கியர்கள் என்பதை காட்டிக் கொள்ள இப்படிச் சொல்லிவிட்டு பார்ப்பனரல்லாதாரில் மறுபடியும் சிலரை: சிருஷ்டித்து கலகம் செய்யச் செய்வார்கள் என்கிற பயமும் நமக்கு உண்டு. ஆனாலும் அதையும் ஒரு கைபார்க்க எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வலிமை அளிப்பாராக. கடைசியாய் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி
குடி அரசு - 1927 (3) 50
பச்சைப்பார்ப்பனப் பத்திரிகையாகிய “இந்துப்” பத்திரிகை சொல்லியிருப்ப தையும் குறிப் பிட்டுவிட்டு இதை முடித்துவிடுகிறோம்.
“இந்து” பத்திரிகை எழுதியதாவது:-
“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஜனங்களிடை சுயமதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்துக்குக் காரண மாயிருக்கின்ற தென்பதையும், ராஜீயவாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பி னருக்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டுபண்ணி யிருக்கிற தென்பதையும் யாவரும் மறுக்கமுடியாது” என்று எழுதியிருக்கிறது. இதைப்பார்த்த பின்பாவது பார்ப்பனரல்லாதாருக்குள் வகுப்புவாரி பிரதிநிதித் துவத்திற்கு கண்ணியமான எதிரிகள் இருக்கமாட்டார்களென்று நினைக் கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 31.07.1927
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சகோதரர்களே!
உங்கள் வரவேற்பு பத்திரத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாதானாலும், என்னைப்பற்றிய புகழுரைகள் போக மீதி உள்ள வாசகங்கள் எனது கொள் கையை தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு அதன்படி நடப்பதோடு அதை மற்று அனுபவத்திலும் கொண்டு வர தங்களுடைய சம்மதத்தை தெரிவிக்கின்றன. ஆதலால் அதைப்பொருத்தவரை வந்தனத்துடன் ஏற்றுக் கொள்ளுகிறேன்.
நான் ஏதோ பிரமாதமான காரியங்கள் செய்துவிட்டதாகவும், பெரும் தியாகம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், அவ்விதமாகச் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. ஜெயில் வாசத்தைப் பற்றி சொல்லியிருப்
பது மிகவும் வேடிக்கையானது. ஜெயிலுக்குப் போவதனால் பெரிய கஷ்ட நஷ்டம் ஒன்று மில்லை. சந்தோஷமாகவும், சாந்தியுடனும் ஓய்வெடுத்துக் கொள்ள மனிதனுக்கு ஜெயிலை விட வேறு இடம் இல்லை. ஜெயிலில் இருக் கிற காலம் வரை வெளியில் தொண்டு செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகிறதே என்கிற ஒரு கவலை தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. ஆனால் வெளியில் வந்தால் முன்னிலும் அதிகமாக வேலை செய்யக்கூடிய
ஆற்றலும் எழுச்சியும் உண்டாய்விடுகிறது. ஆதலால் அது ஒரு குறிப்பிடத் தக்க விஷயமே அல்ல. உலகத்தில் உள்ள மக்களும் மற்றும் ஜீவன்களும் அதனதன் உயிர் உள்ளவரை யாதாவது ஒரு தொழில் செய்து கொண்டுதான். இருக்க வேண்டியது ஜீவ சுபாபம். தொழிலில்லாமல் இருக்கவே முடியாது. சும்மா இருப்பது என்பதும் ஒரு தொழிலேயாகும், அன்றியும் அது மற்ற எல்லாத் தொழிலையும் விட மிகவும் கஷ்டமானது. கிரமமாய்ச் சொல்வ தானால் செத்தால் தான் சும்மா இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டு இருப்பது போல் அதாவது ஒருவன் வியாபாரம், ஒருவன் உத்தியோகம், ஒருவன் சாமியார், ஒருவன் பத்திரிகை ஆசிரியன், ஒருவன் தேசத் தலைவன், ஒருவன் பூசாரி, ஒருவன் தாசி வியாபாரம், ஒருவன் கள்ளு வியாபாரி என்பதாக பலர் பல தொழில் செய்வதுபோல் நானும் ஏதேதோ தொழில் செய்து இப்போது இந்த தொழில் செய்கிறேன். இவைகள் செயற்கை வாசனை, தற்செயல் முதலிய பல
குடி அரசு - 1927 (3) 52
காரணங்களால் இது ஏற்பட்டனவே தவிர இதற்குப் பிரமாதமான யோக்கி யதை ஒன்றும் கொடுக்க வேண்டியது இல்லை என்பதே எனது அபிப்பிராயம். மனித வாழ்வில் ஒவ்வொருவனுக்கும் இம்மாதிரி ஏதாவது ஒரு தொழில் இருந்துதான் தீரும். எந்த தொழிலை யார் செய்தாலும் அவனவன் ஜீவ சுபாவத்தைக் காட்டுவதிலொன்றாகுமே ஒழிய அதற்கு யோக்கியதை கொடுக்க வேண்டியதில்லை. இவைகள் உலக வாழ்க்கையில் மாறிமாறி
வரவும் கூடும். இந்நிலையில் ஒரு மாற்றம் மக்களுக்கு அனுகூலம் இருப்பது போலவும், ஒரு சமயம் அவருக்கு மாத்திரம் சுயநலம் இருப்பதுபோலவும், மற்றொரு சமயம் ஒன்றுக்கும் உதவாமல் மக்களையும் கெடுத்து தானும் கெடுவதாகவும் காணப்படும். இவ்வித ஜீவ சுபாவமான தோற்றங்களைக் காணுவதினாலேயே ஆச்சரியப்படத்தக்கதும், புகழத்தக்கதும் ஒன்று மில்லை. தவிர எனது தொண்டாகிய சுயமரியாதை இயக்கத்திற்கு பொது மக்களின் எதிர்ப்பு இருக்குமோ என எண்ணிப் பயந்துகொண்டு வந்த உங்கள் ஊரில்
நீங்கள் ஆதரித்திருப்பதானது எனக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அடக்க முடியாத மன உறுதியையும் கொடுக்கிறது. சுய மரியாதை தத்துவமும், இயக்கமும் நமக்கு புதிதல்ல, அது இன்று நேற்று ஏற் பட்டதல்ல. அது மனிதன் எந்தக் காலத்தில் ஏற்பட்டானோ, எந்தக்காலத்தில்
மனிதத் தன்மையும், பகுத்தறிவு உணர்வும் அவனுக்கு ஏற்பட்டதோ, அன்று முதலே சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டுத்தான் வருகிறது. ஆனால் அதன் எதிரிகள் அதாவது ஒரு மனிதனுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படுவதால் மற்றொரு மனிதனுடைய சுய வாழ்க்கைக்கும், உயர்வுக்கும் தடை ஏற்படுமானால், அந்த தடைக்கு ஆளாகிறவன் மற்றவனின் சுய மரியாதைக்கு விரோதமாயிருந்து அதனை ஒழிக்க வேண்டியது அவனது கடமையாகிற காலத்தில் கொஞ்சம் கொஞ்சம் மறைபடுகிறதுண்டு. ஆனால் அது ஒரே அடியாய் ஒரு நாளும் மறைந்து போகக்கூடியதல்ல..
ஆதிதிராவிடர்
தவிர, ஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்பு
பத்திரம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு இரண்டொரு வார்த்தை சொல்லு கிறேன். நீங்கள் ஆதி திராவிடர்கள் என்று ஒரு பெயர் பெற்று இருப்பது உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனு கூலமான தென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களை கொஞ்ச காலத்திற்கு முன்புபறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த.
காலத்தில் அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும் தத்துவமும் இருந்ததோ அதே பொருளும் தத்துவமும் தான் “ஆதிதிராவிடர்” என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல் எந்த விதத்திலாவது அது மறைவுபட்டதாக காணவில்லை.
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
“பெருமாள்” என்பதாக பெயரையுடைய ஒரு “பறையன்” ஒரு பார்ப்பனனிடம் அடிமையாய் இருந்த காலத்தில் அந்த பார்ப்பனன் அந்த பறையனை பெருமாள் என்று கூப்பிடுவது தனது பார்ப்பனீய கெளரவத்திற்கு, குறைவாய் இருப்பதாக எண்ணி போய் வேறு பெயர் மாற்றிக் கொண்டு வரும்படி, கொஞ்சம் பொருள் கொடுத்து கேட்டுக்கொண்டதாகவும் அந்த பறையன் பெருமாள் என்ற பெயரை மாற்றி, பெரிய பெருமாள் என்று வைத்துக்கொண்டு வந்ததாகவும், அதன் பேரில் இந்த பார்ப்பனன் பழைய பெயரைவிட புதுப்பெயர் ரொம்பவும் மோசமாக போய்விட்டதாக கருதின தாகவும் ஒரு கதை சொல்வதுண்டு. அதுபோலவே பறையர் என்கிற பெயர்:
மாறி ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததினால் “பறையருக்குண்டான” இழிவு தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல் ஆதிதிராவிடன் என்றால் பறையன் இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதை
யையும் இழிவுபடுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதை விட பழய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம்.
சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால்
எந்த குற்றத்தை நீக்குவதற்காகவோ, அல்லது எவ்வித இழிவை விலக்குவதற் காகவோ எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காகவோ
நாம் கருதி இருக்கிறோமோ அந்தக் கருத்தை கொண்டதான பெயரை ஒரு
பிரசாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும். உதார ணமாக நமது நாட்டில் பார்ப்பனர் தவிர ஏனைய மக்கள் பார்ப்பனர்களால் இழிவு படுத்தப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருப்பதை உணர்ந்து அவ்விழிவிலும் கொடுமையிலுமிருந்து மீள்வதற்காக ஏற்படுத்திக் கொண்
டிருக்கும் சங்கத்திற்கும் வைத்துக்கொண்டிருக்கும் பெயர்களை பார்த்தால் உங்களுக்கு விளங்காமல் போகாது. பார்ப்பனர்களுடைய கொடுமையி லிருந்தே மீளுவதற்காக ஏற்படுத்திக்கொண்ட கூட்டமாதலால் “பார்ப்பனரல் லாதார்” என்கிற பெயரோடும் அக் கொடுமையால் தாழ்த்தப்பட்டதிலிருந்து
விலகி பார்ப்பனரல்லாதார் உரிமையை அடைவதற்காக ஏற்படுத்திய சங்கமா தலால் அதே கருத்து தொனிக்க தெ.இ.ந.உ. சங்கமென்பதாகவும் பெயர் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணரலாம். மற்றபடி வேறு எந்த பெயர்: வைத்தாலும் இழிவு மறையவோ, இழிவுபடுத்தினவர்களுடைய சூழ்ச்சிகளி
லிருந்து தப்பவோ, முன்னேற்றமடையவோ, பெயர் மூலியமாய் அடையக் கூடிநன்மையை அடையவோ முடியாது. எத்தனையோ சமூகத்தார் தங்களை மற்றவர்கள் இழிவு படுத்துவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாமென்று கருதி எவ்வளவோ பெயர்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ அது ஒரு சிறிதும் மறை படாமலும் அந்தப் பெயர் ஏற்படுத்துவதற்கு முன் எப்படி இருந்தார்களோ அது போலவே தான் இருந்து வருகின்றார்களே தவிர புது மாதிரியான
மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. உதாரணமாக ஆசாரிமார்கள்.
குடி அரசு - 1927 (3) 54
தேவாங்க சமூகத்தார்கள் முதலிய வர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்க பிராமணர்கள் என்பதாக பெயர் வைத்துக்கொண்டதாலும் நாயக்கர்.
மார்கள், படையாச்சி மார்கள், நாடார்மார்கள், தங்களுக்கு பல்ஜிய க்ஷத்திரியர்.
கள், வன்னிய க்ஷத்திரியர்கள், அக்கினி குல க்ஷத்திரியர்கள் என்பதாக பெயர் வைத்துக் கொண்டாலும் நாட்டு கோட்டை நகரத்து செட்டியார், கோமுட்டி செட்டியார், வாணிகச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிப வைசியர், பூவைசியர் என்பதாக பெயர் வைத்துக் கொண்டாலும் புராணங்கள் மூலியமாக இதற்கு ஆதாரம் கண்டு பிடித்தாலும் மற்ற எத்தனையோ வகுப்பார் மற்ற எத்தனையோ பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும் இந்த பெயர்கள் அல்லாத “சூத்திரர்கள்” என்கிற பெயருக்கு உண்டான பொருளும், தத்துவமும் அனுபவ உண்மையும் கிரகிக்கப்படுகிறதே யல்லாமல் ஒரு சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு எந்த கொள்கையை உத்தேசித்து இந்த பெயரை வைத்துக்கொள்ளுகிறோமோ, அந்த கொள்கை
களின் மூலியமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும் மற்றொரு கூட்டத்தாரை விட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக்கொண்டதோடு அதை நிலை நிறுத்தவும் பாடுபட்டவர்களாகிறோம்.
ஆகவே, இம்மாதிரி பெயர்களை வைத்துக்கொள்வது “சப்தம்”
மாத்திரத்தில் உயர்வாக தோன்றினாலும் தத்துவத்தின் மூலியமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக்கொள்பவர்களாகிய
நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ “அவர்கள் பெயரை வைத்து “அவர்கள் அல்லாதார்” என்பதாக வைத்துக் கொண்டால் அந்தப் பெயரும் கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு அதி
லிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும் சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்த கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை “ஓடுக்கப்பட்டார்' என்றழைக் கலாம் என்பதாக சொல்லுகிறார். எனக்கு அது கூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை வேண்டுமானால் ஒடுக்கினவர்கள். அல்லாதார் “கொடுமைக்காரர்களல்லாதார்,” “அயோக்கியர்கள் அல்லாதார்” என்று பெயர் வைத்துக்கொண்டால் அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன் இப்பெயர் மறைந்து விடுவதற்கும் அநுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் க்ஷத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று அம்மாதிரி பெயர் வைத்துக்கொள்வதால் நமக்கு நாமே சொல்லிக்கொண்டு கர்ப்பகோடி காலம், இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய நாம் கோரும் பலன் ஒருசிறிதும் அதனால் உண்டாகாது. சிலர், இந்த கொள்கையோடு பேர் வைப்
பதின் மூலம் பெருத்த ஆக்ஷேபனை இருப்பதாக காட்டிக் கொள்ளுகிறார்கள்.
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அது ஒரு சிறிதும் உண்மையான தென்றாவது மனப் பூர்த்தியாய் சொல்லு கிறார்கள் என்றாவது ஒரு சிறிதும் எண்ணுவதற்கு இடம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதாவது “பார்ப்பனரல்லாதார்” என்று சொல்வதால் பார்ப்பனர் என்று ஒரு ஜாதி இருப்பதாக ஒப்புக்கொள்வதாகவும் அந்தப் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்கிற தத்துவத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஏற்படுத்தின இயக்கம் அதை நிலை நிறுத்துவதற்கு வேலை செய்வதாக ஆகும் என்றும் சொல்லுகிறார்கள். இந்த வார்த்தைகளில் ஏதாவது கடுகளவு சத்து இருக்கிறதா? பார்ப்பனர்கள் என்ற ஒரு கூட்டத்தாரை நாம் தினம் கண்ணில் பார்த்துக் கொண்டு வருகிறோம். அவ்வொரு கூட்டத்தார் இந்த நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அதை யாரும் திரை போட்டு மறைத்து விட முடியாது. ஆனதினால் அப்படி ஒருவர் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வதாகுமென்பது அர்த்தமேயில்லை. அடுத்தாற்போல் இப்படிச் சொல்வதன் மூலம் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்வ தாகின்றது என்பது நமக்கு அதிசயமாக இருக்கிறது. பார்ப்பனர் என்று சொன்னால் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று ஒப்புக்கொள்வது ஆகிறது என்று எந்த அகராதியில் எழுதியிருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. அல்லது பார்ப்பனன் என்று சொல்லும்போது அவன் உயர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டு சொல்லுகிறோமா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. “ஆதிதிராவிடர்” என்று சொல்லும்போது அவர்கள் மிகத் தாழ்ந்தவர்கள் என்ற உணர்ச்சி தோன்றி விடுகிறது பார்ப்பனர்கள் என்று சொல்லும்போது நமக்கு பலவித கொடுமைகள் செய்தவர்கள் என்றுதான் தோன்றுகிறதே. யல்லாமல் பலரும் அம்மாதிரியே நினைக்கும்படியாக கொடுமைகளை ஞாபகபடுத்தக் கூடியதாக இருக்கிறதேயல்லாமல் வேறு ஏதாவது உயர்வு அதில் இருக்கிறதா? ஏற்படுகிறதா? ஆகவே பார்ப்பனன் உயர்ந்தவன் என்பதை நிலைநிறுத்துவதாக அந்த பதம் இருக்கிறது என்று சொல்லுவது
தர்மம் ஆகுமா? அதில் ஏதாவது, யோக்கிய பொறுப்பிருக்கிறதா? தவிர இந்த
பெயர் இருப்பதினாலேயே எந்த விதத்தில் வித்தியாசம் நிலைத்து விடும் என்பதும் நமக்கு விளங்கவில்லை. நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான வகுப்பு வித்தியாசங்களை ஒழிப்பதற்காகவே அவ்வித்தியாசங்களுக்கு மூலாதாரமானவர்களை அந்த வித்தியாசத்தை விட்டு விட்டு நம்மோடு வந்து சேரும்படி அழைக்கும் தத்துவத்தோடு கூட அந்த பெயர் வைக்கப்பட்டி ருக்கிறதே அல்லாமல் அதை நிலைநிறுத்தும் தத்துவம் அதனிடத்திலில்லை. அதற்கு உதாரணமாகவே பல பார்ப்பனர்கள் இந்த இயக்கத்தில் வந்து சேரப் பிரியப்படுவதும், நாம் இது சமயம் பலகாரணங்களால் அவர்களிடம் நம்பிக்கையில்லாமலும், சேர்ந்து கொள்வதற்கு இல்லாமலும் இருப்பதால் வேண்டாம் என்று சொல்வதாகவும் இருக்கிறதே யல்லாமல் வேறல்ல. நிற்க,
குடி அரசு - 1927 (3) 56
ஆதிதிராவிடர்களுக்கு தனி ஸ்தாபனம்
ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக கிணறு, கோவில், பள்ளிக் கூடம் முதலியவைகள் ஏற்படுத்துவது புண்ணியம் என்று சிலர் கருதுகி றார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாததோடு வெறுக்க வேண்டிய வனாகவும் இருக்கிறேன். சென்ற வருடம் இதே ஊருக்கு வந்திருந்த சமயம்
காந்தி கிணறு என்ற ஒரு கிணற்றை ஆதி திராவிடர்களுக்கு மாத்திரம் என்று வெட்டி அதைத் திறந்து வைக்கும்படி கேட்டு கொண்டபோது நான் இதே அபிப்பிராயத்தை தான் தெரிவித்தேன் காரணம் என்னவென்றால் அவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காகவாவது அவர்களுக்கு தனி செளகரியம் ஏற் படுத்தி கொடுக்கக்கூடாது என்பதற்காகவாவது அல்லவே அல்ல. இம்மாதிரி ஒரு வகுப்பாருக்கு தனி செளகரியம் ஏற்படுத்தி கொடுத்து நம்மோடு கலந்து வாழும்படி செய்யாததின் பயனாய் நிரந்தரமாய் இவர்கள் இழிந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி அவர்களை மிளவிடாமல் செய்தவர்களாகின்றோம். அதுபோலவே பார்ப்பனர்களுக்கும் சிறுதனி உரிமைகள் செய்துகொடுத்து நம்மோடு கலர விட்டு விடாமல் செய்து வருவதின் பயனாகவே அவர்கள். உயர்ந்தவர்கள் என்பதையும் நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் நிலை நிறுத்தினவர்களாகின்றோம். இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு கோடிக்கணக்கான தொகைகளைச் செலவு செய்து தர்மம்.புண்ணியம், மோட்சம் என்பதின் பெயரால் பார்ப்பனர்களுக்கு தனிப்பள்ளிக்கூடங்களும்
சத்திரங்களிலும் கோவில்களிலும் ஏனையஇடங்களிலும் தனி உரிமைகளும் “பறையர்களுக்கு” தனிகிணறும், தனி பள்ளிக்கூடம் முதலியவைகளும்
செய்து கொண்டு வருவதானாலும் ஒருக்காலும் நமது மக்கள் சுயமரியாதை அடைந்து நாடு விடுதலை அடையும் என்று எண்ணுவதற்கு கொஞ்சம் கூட இடமேயில்லை. தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கும். சமத்துவம் அடையச்செய்வதற்கும் பாடுபடும் பெரியோர்கள் அந்த சமூகத் திற்கென்று தனியாக கிணறும், கோவிலும் பள்ளிக்கூடமும், வெட்டவும், கட்டவும் ஏற்படுத்தவும் நினைப்பதானது அச்சமூகத்தாரை நிரந்தரமாய் இழிவுபடுத்தி வைப்பதற்கு ஆதாரங்களையும், அவசியங்களையும், கற் சிலைகளையும், சிலாசாசனங்களையும் உண்டாக்கி வைத்தவர்களே ஆவார்
கள்( இப்படிச் சொல்லிக்கொண்டு வரும்போது திரு. ஏ.வி. தியாகராஜ் அவர்.
கள் ஒன்று மில்லாமல் இருப்பதற்கு இது மேலல்லவா? என்று கேட்டார்கள்!
ஒன்றுமில் லாமல் இருப்பதை விட இது எந்தவிதத்திலும் மேலாகாதென்றும்,
கிணறும், பள்ளிக் கூடமும், கோயிலும் இல்லாமல்போனால் குடிக்கவும்,
படிக்கவும், கும்பிடவும் இல்லாமல் போகலாமே தவிர தாழ்ந்தவன் என்பதை நிரந்தரமாய் நிலை நிறுத்தாது என்பதை கவனியுங்கள். நமது நாட்டில் அதைபோல அநேக பெரியார்கள் எவ்வளவோ காலமாக இதைவிட மிகப் பெரும் பெரும் தருமங்களை அக்கூட்டத்தாருக்கு செய்து வந்திருந்தும் இதுவரையில் ஒரு சிறிதாவது அவர்கள் நிலைமை முன்னேறியிருப்பதாக
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சொல்வதற்கில்லை. உதாரணமாக தஞ்சாவூர் ராஜாவின் தர்மசாசனத்தை நான் பார்க்க நேர்ந்த பொழுது இந்த பறையர்களுக்கு என்பதாக பள்ளிக்கூடம்,
சத்திரம் மற்றும் பல தர்மங்கள் முதலியவைகளுக்கு பெரும்பாகமான பணத்தை ஒதுக்கி வைத்ததோடு, செய்து வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் அந்த ஜில்லாவில்தான் இந்த பறையர்கள் எல்லாரைவிட அதிகமாக அடிமைகளாக விற்கவும், வாங்கவும் படுகிறார்கள். எனவே அந்த வகுப்பாருக்கு யாராவது நன்மை செய்ய வேண்டுமானால் மலையளவு செய்யக்கூடிய தன்மையானது கடுகளவு செய்யக் கூடியதாக ஏற்பட்டாலும் அவர்களும் நாமும் கலந்து பழகுவதற்கு தகுந்தபடி ஏற்படுத்துவதுதான் அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வருவதற்கு தக்க விதமாக ஏற்படுத்தியதாகுமே தவிர அவர்களுக்கு வேறு நமக்கு வேறு என்பதாகவும் அவர்களும் நாமும் சேர்ந்து புழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லாததாகவும் செய்வதானது, செய்தவர்க்கு தர்மம் செய்தார் என்று சொல்லிக்கொள்ள உதவலாமே அல்லாமல் ஒருக்காலும் அந்த கொடுமை செய்யப்பட்ட சமூகத்திற்கு நன்மை செய்வதாக ஆகாது. அதோடு தீமை செய்ததாகவும் ஆகலாம். நமது பெரியோர்கள் பார்ப்பனர்களுக்கு வேறு நமக்கு வேறு என்று பல காரியங்கள் செய்து வந்ததின் பயனாகவே அவைகள் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் அவர்களை விட நாம் இழிந்தவர்கள் என்பதற்கு சிலாசாசன ஆதாரமாக இருந்துவருகிறது.
குறிப்பு : 20.7.27-ல் சிறாவயல் காந்தி ஆசிரமத்தாரும், ஆதிதிராவிடர் சமூகத்தார்களும் அளித்த வரவேற்பில் ஆற்றியசொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 31.07.1927
குடி அரசு - 1927 (3) 58
கூழகத்வதாண்டும் அறசியல் வதாண்டும்
சமூகத் தொண்டிற்கும் “அரசியல்” தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமூகத் தொண்டிற்கு பெருத்த கேடு சூழ்வதேயாகும்.
அரசியல் தொண்டு என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும், அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப் பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும் அது கண்டிப்பாய் இது சமயம் நமது நாட்டிற்குத் தேவையில்லாதது என்றே சொல்லுவோம்.
நம்மைப் பொருத்தவரை அரசியலின் பேரால் கூடுமானவரை உழைத் தாகி விட்டது. கண்டது ஒன்றும் இல்லை. அயோக்கியர்களை உற்பத்தி செய்து அவர்கள் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கச் செய்ததே அல்லாமல் வேறில்லை.அதைவிட்டுத் தொலைத்து சமூகத் தொண்டையே பிரமாதமாய்க் கருதி அதற்கென உழைத்தாலும் அடிக்கடி சறுக்கி, அரசியல் சேற்றில் விழ வேண்டியதாக நேரிட்டு விடுகிறது. இது சகவாச தோஷமே அல்லாமல்
வேறல்ல...
இனி அடியோடு அரசியலை உதறித்தள்ளி வைத்துவிட்டு, மக்க ளுக்கும் அதிலிருக்கும் மூட நம்பிக்கையை ஒழிப்பதை ஒரு திட்டமாக
சமூகத் தொண்டில் சேர்த்து, எல்லா மக்களையும் சமூகத் தொண்டையே பிரதானமாய்க் கருதும்படி செய்வதை முக்கிய தொண்டாக வைத்துக் கொள்வதே நலமெனத் தோன்றுகிறது.
அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக் காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும் தேசத்தையும் சமூகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே முடியாது. இது
நமது அனுபோகத்திற்கு சந்தேகமறத் தோன்றிவிட்டது.
சமூகத் தொண்டில் ஈடுபட விருப்பமுள்ளவர்களிடம், அரசியலில் அதைக் கண்டிப்பதைத் தவிர,மற்றபடிதான் நேரில் கலப்பதில்லை என்பதாக உறுதி பெற்றே அவர்களை சேர்த்துக் கொள்ளும் நிபந்தனைகளை ஏற்படுத்
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தினால்தான் சமூகத்தொண்டு இயக்கம் நடைபெறவும், வெற்றி பெறவும் முடியுமென்றே இப்போதே நினைக்க வேண்டியிருக்கிறது.
பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய நலவுரிமைச் சங்க இயக்கம் கூட இரண்டு பாகமாய் பிரிக்கப்பட்டால் நன்மை என்றே கருது கிறோம். தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதாக உள்ளதில், அரசியல் கலந்த சமூக இயல், தனி சமூக இயல் ஆகிய இரண்டு பேருக்கும் இடமுள்ள தாக்கி தனி சமூக இயல்காரரும் அதனுள் ஒரு உள்பிரிவாக ஒன்றை ஏற் படுத்திவிடுவது நலமென்றே தோன்றுகிறது. ஏனெனில் அரசியல் கலந்தால் எப்பேர்ப்பட்டவர்களும் நாணயக் குறைவுள்ளவர்களாகப் போய் விடு கிறார்கள்.
மகாத்மா இயக்கம் கூட எவ்வளவு புனிதமானதாகக் கருதப்பட்டும், அரசியலில் பஹிஷ்காரத்தை மாற்றி சட்டசபையில் உள்நுழைவை அது என்று ஏற்றதோ அன்றே விதி விலக்கு இல்லாமல் எல்லோரிடமும் நாணயக் குறைவு தோன்ற வழி ஏற்பட்டுவிட்டது. ஆதலால் அதைப்பற்றி இனி சந்தேகப்பட வேண்டியதில்லை. தனி சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு இஷ்டமான ஒரு அரசியல்காரரை ஆதரிக்கலாம். ஆதரிக்க சிபார்சு செய்யலாம் என்பதாக ஒரு கொள்கை மாத்திரம் வைத்துக் கொள்வதா
னால் ( அதுவும் அவசியமானால் அதாவது நமது சமூகத்தொண்டுக்கு அரசியலால் தடை ஏற்படாமலிருக்கும் அளவுக்கு அனுகூலம் கிடைக்கும் போல் இருந்தால் மாத்திரம்) வைத்துக்கொள்ளலாம். நமது அபிப்பிராயத்தில் அந்த அளவு கூட மனிதனை அயோக்கியனாக்கி விடும் என்றே பயப்பட
வேண்டியிருக்கிறது.
இந்த அடுத்து வரும் ஆகஸ்ட் மாதத்திய சட்டசபைக் கூட்டம் முடிந்தவுடன், வட ஆற்காடு ஜில்லாவில் கூடப்போகும் பார்ப்பனரல்லாதார். ஜில்லா மகாநாட்டில் இதைப்பற்றி தொண்டர்கள் ஒன்றுகூடி யோசிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அதாவது, எந்த விதத்திலாவது சர்க்கார். சம்மந்தமான உத்தியோகம், கவுரவ உத்தியோகம், பட்டம், பதவி முதலியவை
கள் எதுவும் இல்லாதவர்களும், இனி பெற்றுக்கொள்ளுவதில்லை என்கிற உறுதி உள்ளவர்கள் மட்டுமடங்கியதாகவே ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே தான். அந்தப்படி இல்லாமல் என்னதான் வேலை செய்
தாலும் பயன் பெற முடியாது. தாடி நெருப்பு பற்றி எரிகிறபோது அதில் சுருட்டு பற்றவைக்க நெருப்பு கேள்பதுபோல், நமது மக்களின் நிலை தாழ்ந்து கிடப்பதையும், சிறுமைப் படுவதையும், அயோக்கியர்களால் கொடுமைப் படுத்துவதையும் பற்றி கொஞ்சமும் கவலை எடுத்துக்கொள்ளாமல் இருப்ப தோடு, மற்றவர்கள் யாராவது கவலை எடுத்துக்கொண்டாலும் அதையும் கெடுத்து அதன் பலனையும் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிற மக்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியும்
குடி அரசு - 1927 (3) 60
என்பது நமக்குத் தோன்றவில்லை.
ஆகையால் உண்மைத் தொண்டர்கள் இது விஷயத்தில் போதிய கவலை எடுத்து, யோசித்து இது சமயம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது மிகவும் அவசியம் என்பதை இப்போதே தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம். இதில் சேர வருகிறவர்கள் கூடுமான வரை கஷ்டம் அனுபவிக்க நேர்ந்தால் அனுபவிக்கவும், தியாகம் செய்யவும், தன்னலத்தை அடியோடு மறுக்கவும் தயாராயிருக்க வேண்டும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு யோசிக்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 31.07.1927
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
காங்கிரஸ் பைத்தியமும் பார்ப்பணர்களின் மாங் ம்
கோவைமகாநாட்டில் பார்ப்பனரல்லாதாரில் சிலர், காங்கிரசில் சேர்ந்து அதைக் கைப்பற்றி காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு. செய்து வரும் கொடுமைகளையாவது செய்யாமல் தடுக்கலாம் என்பதாக பேசின காலத்திலும் எழுதின காலத்திலும் நாம் அதை ஒப்புக்கொள்ளாமல் ஆக்ஷேபித்து வந்தது யாவருக்கும் தெரிந்திருக்கலாம். நாம் ஆக்ஷேபித்த தாவது, காங்கிரசின் மூலம் பார்ப்பனர்கள் செய்யும் கொடுமையை நிறுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணங்கொண்டல்ல, மற்றென்ன வென்றால், காங்கிரசை நாம் கைப்பற்ற முடியாது என்றும், காங்கிரசுக்கு நம்மில் யாராவது போனால், பார்ப்பனர்களுக்கே அதிக பலம் ஏற்படும் என்றும், எப்படியாவது அதற்குள்ள செல்வாக்கை ஒழிக்க அதிலுள்ள அயோக்கியத்தனத்தையும், அக்கிரமத்தையும் வெளியில் இருந்து கொண்டு வெளியாக்குவது தான் மேல் என்றும் சொன்னோம். பாமர மக்கள் எல்லாரும் இதை ஒப்புக் கொண்டார். களாயினும், படித்த கூட்டத்தாரில் பலரும் அரசியல் வாழ்வுக்காரரும் இதை
ஒப்புக் கொள்ளவே இல்லை. அதற்காகவே நாம் வேண்டுமென்றே நடு நிலைமை வகித்ததோடு, நாம் சொன்னது சரியா தப்பா என்று அறிய ஒரு சந்தர்ப்பமும் கொடுக்க வேண்டுமென்று கருதியே அத்தீர்மானம் நிறைவேற
வும் சம்மதித்தோம். இப்போது அதுபோலவே நடந்து வருகிறது. என்ன வெனில், பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் சேர விடாமல் தடுக்கப் பார்ப்பனர்.
கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அதாவது, திருச்சி தாலூக்கா காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி ஸ்ரீமான் துரைசாமி உடையார் “காங்கிரசில் அங்கத்தினர்களைச் சேர்க்கும் இரசீது இல்லை உடனே அனுப்புங்கள். அல்லது இரசீது தானாவது அச்சடித்துக் கொள்ள அனுமதியுங்கள்” என்று சென்னை காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியிருந்தாராம். அதற்கு “நாங்களும் உமக்கு இரசீது புஸ்தகம் அனுப்ப மாட்டோம், நீயும் அச்சடித்துக் கொள்ளக் கூடாது. ஒரு கமிட்டி நியமித்திருக்கிறோம். அவர்களிடம் தேவைக்குத் தக்கபடி வாங்கிக்கொள்” என்று ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பதில் எழுதியிருக்
கிறாராம். இதன் கருத்து என்ன? இது வரையில் இருந்து வந்த வழக்கம் பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் சேர உத்தேசித்தவுடன் மாறுபடுவானேன்? தவிர கமிட்டி மெம்பர்களின் யோக்கியதையைப் பற்றி சொல்லவே வேண்டிய
குடி அரசு - 1927 (3) 62
தில்லை. ஒருவர் ஸ்ரீமான் கேவி. ரங்கசாமி அய்யங்கார் எம்.எல்.ஏ. ஒருவர். ஸ்ரீமான்.என். சுப்பரமணிய ஐயர் எம்.எல்.சி, மற்றொருவர் சனாப் சைது முர்த்துசா சாயபு எம்.எல்.ஏ மற்றொருவர் ஸ்ரீமான் வீரப்பன், மற்றொருவர். ஸ்ரீமான் நரசு பிள்ளை ஆகிய இவர்களில், ஸ்ரீமான் வீரப்பன் ஊரில்
இல்லாதவர். ஸ்ரீமான் நரசு பிள்ளை இதைப்பற்றியே கவலையே இல்லாதவர். ஜனாப் சைதுமுர்த்தூசா சாயபு பார்ப்பனர்களையே நம்பி அவர்கள் இஷ்டப் படி விட்டு வருபவர். மீதியுள்ளவர்கள் ஒரு ஐயங்கார், ஒரு ஐயர் கனவன் களேயாவார்கள். இவர்களுடைய தயவு பெற்றுத்தான், அதாவது இவர்க ளிடம் தேவையைச் சொல்லி என்பதின் இரகசியம் என்ன வென்றால் யார்.
யார் சேருகிறார்கள் அவர்கள் பெயர் என்ன? எத்தனைப் பேர்? என்பதாகக் கேட்டு அவர்கள் இஷ்டப்பட்டால் எண்ணிக்கை அளவு இரசீது கொடுப்பது இல்லாவிடில் இல்லை என்கிற கருத்துதான். நாம் எத்தனை அங்கத்தி னர்களை சேர்த்தோமோ அத்தனை அங்கத்தினர்களை அவர்களும் சேர்த்த தாக பெயர் பண்ணி தாங்களே மெஜாரிட்டியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே நிர்வாகம் செய்யத் துணிந்து விட்டார்கள். இந்த நிலையில் எப்படி நாம் கைப்பற்ற முடியுமென்பது வாசகர்களுக்கு விளங்கா மல் போகாது. இது ஒருபுறமிருக்க, காங்கிரசு என்பது பார்ப்பனர்கள் வாழ்வுக்கு அவர்கள் இஷ்டப்படி நடத்தத் தேசத்தின் பேராலும் தேச மக்களின் முட்டாள்களின் பேராலும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு சுயநல ஸ்தாப னம் என்பது இப்பொழுதாவது விளங்குகிறதா? இல்லையா? என்று கேட்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கோவைத் தீர்மானமும் மந்திரிகளின்
பிரசாரமும்
கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் பலன் என்னவானாலும் அத னால் நாட்டில் ஒரு பெரிய தடபுடல் ஏற்பட்டுவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது பஞ்சாப் படுகொலையின் போது இராஜப் பிரதிநிதி அவர் களை திருப்பி அழைக்க வேண்டும், திரு ஒட்வியரைத் திருப்பி அழைத்து விட வேண்டும். திரு.டயரை தண்டிக்க வேண்டும் என்பதாக நாட்டாரெல் லோரும் ஒன்று கூடி காங்கிரசில், கான்பரசில் சந்து பொந்துகளில் எல்லாம் தீர்மானித்த காலங்களில், திரு ராஜப் பிரதிநிதிக்காவது, திரு ஒட்வியருக் காவது, திரு, டயருக்காவது ஒரு சிறு கலக்கமும் கவலையும் இல்லாமல் இத்தீர்மானங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோயமுத்தூர் மகாநாட்டில் “உத்தியோகம் கிடைக்காமல் ஏமாந்து போன யாரோ சிலர்” கூடி செய்தார்கள் என்று சொல்லும்படியான ஒரு திரு. கவர்னர். மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கவர்னரை தலையெடுக்க வொட்டாமல் இன்னம் படுக்க வைத்து விட்டது. யார் என்ன செய்தாலும் பயப்பட மாட்டோம் என்றுசொல்லிக்கொண்டு இருந்த மந்திரிகளை ஊர் ஊராய் சுற்றி தங்கள் சொந்த செலவில் பிரசாரம் செய்யவும், மந்திரி உத்தியோகத்திற்கு எப்போது சாவு வரப்போகிறதோ என்று பயந்து அதிகாரங்களை இப்பொ முதே இன்ஷரஈர் செய்துவிட்டு ஒயில்சாசனம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். ஒன்றுக்கும் அஞ்சோம் என்ற பார்ப்பனர்களே, காங்கிரஸ் வாசற்படியில் வேட்டை நாய்கள் போல் காவல் காத்துக் கொண்டு வேறு யாரையும் உள்ளே விடக்கூடாது, விட்டால் நமக்கு ஆபத்து என்பதாக இரவும் பகலும் கண் விழித்துக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கொரு கால் அங்கொரு
கால் வைத்துக் கொண்டு ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று எண்ணியிருந்த அரசியல் மேதாவிகளுக்கு உள்ளதும்போய்விடும் போலிருக்கிறதே என்கிற நடுக்கம் ஏற்பட்டு விட்டது. பார்ப்பனர்கள் காங்கிரசில் பல பொய்த் தீர்மானங் களைப் போட்டு ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றிப் பிழைக்கிறார்களே அது போல் நாமும் பொய்த் தீர்மானங்களைப் போட்டு ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்று இருந்த சில பார்ப்பனரல்லாதார்களுக்கும் இத்தீர்மானம் ஒரு பரீகைஷகாலமாய் ஏற்பட்டு விட்டது. மற்றபடி சர்.சி.பி போன்ற உத்தியோகப் பார்ப்பனர்களுக்கும் ஒரு
குடி அரசு - 1927 (3) 64
பெரிய கலக்கத்தை உண்டாக்கி விட்டது. இந்த நிலையில், அய்யோபாவம்! ஆகாச மந்திரிகள் பயந்து தங்கள் உத்தியோகங்களை நிலை நிறுத்த ஊர் ஊராய் போய் பிரசாரம் செய்வது ஒரு அதிசயமாகுமா? ஆகாதென்றே சொல்லுவோம். அவர்கள் தங்கள் நடவடிக்கை நியாயமானது என்று நிரூபிக்க பல இடங்களில் பிரசங்கம் செய்யப் போகிறார்கள். இந்தச் சமயங்களில் நமது
மக்கள் யாதொரு கலகமும் தடையும் இன்றி அமைதியாக அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்க வேண்டும். அவர் யோக்கியதையை நிரூபிக்க நாம் சந்தர்ப்பம் கொடுத்தோம் என்கிற கவுரவம் நமக்கு இருக்கும்
படி பார்த்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல் அவர்களை பேச விடாமல் தடுத்தோம் என்கிற பெயர் ஏற்படும்படி நடந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இதுவிஷயம் நாம் பலதடவை எழுதி வந்திருக் கிறோம். ஏனெனில் இது சமயம் நமது நாட்டு வாலிபர்களின் நடவடிக்கைகள் பெரும்பான்மைக்கும் நம்மையே பொறுப்பாளியாக்குகிறார்கள். ஆனதால்
நாம் இதை எழுத நேர்ந்தது. தவிர, எப்படியும் இந்த மந்திரிமார்கள் நிலைத்து விடுவார்கள் போலவே தோன்றுகிறது. எப்படி என்றால், சென்ற வாரம் மந்திரிகளின் நிலையென்பதாக நாம் எழுதியிருந்த வியாசத்தின் பின் பாகம் அவ்வளவும் ஏறக்குறைய உண்மையாகவே நடந்து வருகிறது. பார்ப்பன ரல்லாதார் கக்ஷி உட்பட ஒவ்வொரு கக்ஷியிலிருந்தும் பலரை மந்திரிகளும், சர்க்காரும் காங்கிரஸ் சுயராஜ்யக் கக்ஷி முதலியதுகளைச் சேர்ந்த பார்ப்பனர். களும் சரி செய்து கொண்டார்கள் என்பதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியும், சட்டசபை காங்கிரஸ் கட உபதலைவரும், சுயராஜ்யக் கக்ஷி காரியதரிசியும், இன்னமும் என்னென்னவோ பெருமை உடையவருமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களும் 4 நாளைக்கு முன் மேன்மை தங்கிய கவர்னர் வீட்டுக்கே நேராகப் போய் கவர்னருக்கு, “நீங்கள் பயப்படவேண்டாம், மந்திரிகள் கலையாமலிருப்பதற்கு வேண்டிய வேலை செய்தாய் விட்டது.” என்பதாக தைரியம் சொல்லிவிட்டு வந்தாய் விட்ட தாகவே தெரியவருகிறது. ஆதலால் அதைப் பற்றி யாருக்கும் இனி சந்தேகம். வேண்டியதில்லை என்பதே எமது அபிப்பிராயம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இணிமயும் எத்தணை நானைக்கு ஏமாறுவது? தொழிலாளர்களும் மக்கள் கடமையும்
நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும், அரசியலில்: உழைக்கிறவர்கள் என்பவர்களை தொழிலாளர் சங்கத்தில் தலைவர் களாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு தனியாக தொழிற்கட்சி என்பதாக ஒரு கட்சி அரசியல் தத்துவத்தோடு இருக்க வேண்டும் என்றும் எவ்வளவோ தடவை வெகு அழுத்தமாக
வற்புறுத்தி வந்திருக்கிறோம். இவ் வலியுறுத்தலுக்கு நாகைத் தொழிலாளர் சங்கத்தாரே கொஞ்சம் காது கொடுத்து வந்தனர். மற்றபடி மற்றத் தொழிலாளர்
களும் தொழிலாளர்களுக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல அரசியல் வாழ்வுக்காரர்களும் நம்மீது பாய்ந்து வந்தனர். ஆனால் இப்போது தொழிலாளர்கள் விஷயத்தில் மிகுதியும் அறிவுள்ளவர் என்று சொல்லும் ஸ்ரீமான் ஜோஷி முதல் கொண்டு அதையே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அதாவது சென்னையில் கூடின தொழிலாளர் மகாநாட்டுத் தலைவரான ஸ்ரீ ஜோஷி “ஒரு அரசியல் கக்ஷியிலும் தொழிலாளர் சேரக்கூடாது” என்றார். தொழிலாள சகோதரர்களுக்கும் ஏறக்குறைய இந்த உணர்ச்சித் தோன்றி வருகிறதையும் பார்க்கிறோம். தவிர. அரசியல் வாழ்வுக் காரரை நம்பக்கூடாது என்று நாம் அதே வேலையாகச் சொல்லி வருவதற்கு தக்க சான்று இவ் வருஷத்திய சென்னை கார்ப்பரேஷன் தேர்தலில் தொழிலாளர்கள் விஷயத் திலும், அரசியல் புரட்டர்கள் காட்டி விட்டார்கள். தொழிலாளர்கள் காங்கிரசில் சேர வேண்டும். தொழிலாளர்களுக்காக காங்கிரசு தான் உழைத்து வருகிறது என்று சொல்லி இதுவரை தொழிலாளர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பதவி பெற்று வந்த ஆசாமிகள் இன்றையதினம் தொழிலாளர்களுக்கு ஒரு தொழிலா ளரே பிரதிநிதியாக இருக்கிறோம் என்பதாக எண்ணி கார்ப்பரேசன் கவுன்.
சிலர் ஸ்தானத்திற்கு ஒரு தொழிலாளி நின்றவுடன் அவரை ஒழிக்க காங்கிரஸ்
காரர்கள் என்போர்கள் என்ன என்னவோ புரட்டுகள் எல்லாம் செய்து தொழிலாளர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய பார்க்கி றார்கள். ஏன்? தொழிலாளர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு இனிப்
குடி அரசு - 1927 (3) 66
பிழைக்க முடியாமல் போய்விடுமே முதலாளிகளை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியாமல் போய்விடுமே என்கிற பயம்தான். எவ்வளவுதான் அரசியல் வாழ்வுக் காரர்களின் அயோக்கியத்தனங்களை தொழிலாளர்கள் பார்த்து
அறிந்து வந்தாலும் அப்பொழுதும் சில தொழிலாளர்களுக்கு புத்தி ஏமாந்து போவதையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். இதுவரை எப்படி நடந்து வந்திருந்தாலும், இந்தத் தடவையாவது கண்டிப்பாய் அரசியல் அயோக்கியர்
கள் வலையில் மாய்கையில் சிக்கி ஏமாந்துபோகாமல், தொழிலாளிகளிடம் அனுதாபமுள்ள மக்கள் ஒவ்வொருவரும் தொழிலாளர்களால் நிறுத்தப்பட்ட தொழிலாள அபேக்ஷசகருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறோம். இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
குடி அரசு - கட்டுரை - 31.07.1927
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஓர் மறுப்பு
“ நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் லசய்தது
“தமிழ்நாடு” பத்திரிகையில் “ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள்” என்றும் “சுதேசமித்திரனில் “ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் டாக்டர். சுப்பராயனைக் கண்டு பேசினார்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே “மந்திரிக்கு உபசாரம்” “மந்திரிகளின் பிரசாரம்” என்ற தலைப்பு களின் கீழ் இதை எழுதி இருக்கின்றன. எனவே இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப் படக்கூடும். என்ன வெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்த ஒருவன் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்ப தாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும், மந்திரி தனது வேலையை காப்பாற்றிக் கொள்ளும் முறை
யில் அவர் செய்யும் பிரசாரத்தில் நமக்கு பங்கு இருந்தது என்று பலர். நினைக்க இடமுண்டாகும் என்கிற எண்ணத்தின் பேரிலும், அந்த இரண்டு பத்திரிகைகளின் கூற்றையும் மறுக்கக்கடமைப்பட்டவனாக இருக்கிறேன். எனது நண்பர் ஸ்ரீமான் பி.டி ராஜன் அவர்கள் தான் 26 -ந்தேதி மெயிலில் நீலகிரியிலிருந்து வருவதாக தந்தி கொடுத்திருந்ததால் அவரை வரவேற்க நான் ரயிலுக்குப் போயிருந்தேன். அப்போது ஸ்ரீமான் ராஜன் அவர்களும்,
டாக்டர். சுப்பராயன் அவர்களும் ஒரே வண்டியில் இருந்ததால் ஒருவருக் கொருவர் வந்தனம் செய்து கொண்டோம். “நீலகிரி மலையில் மழை உண்டா” என்று கேட்டேன். மந்திரி “ஆம்” என்றார். இதே மாதிரி மந்திரி கேட்ட ஒரு கேள்விக்கு நான் “ஆம்” என்றேன். இதற்குள் ஸ்ரீமான் ராஜனவர். களின் சாமான்கள் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு விட்டதால் இருவரும் டாக்டர். சுப்பராயனிடம் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டோம்.
மந்திரி இலாகா நியமனத்திற்காகவும், அவ்விலாக்காவிலுள்ள ஆவலாதி
குடி அரசு - 1927 (3) 68
களுக்காவும், பலர் அங்கு வண்டிக்குள்ளாகவே கூடி விட்டார்கள். இதுதான் நடந்த விஷயம். இவற்றை திரித்து நிரூபர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி இருப்பது சரியல்லவென்றே கண்டிக்கிறேன்.
மந்திரிகளை நான் பார்ப்பது எனது நிலைக்கு உயர்வு தாழ்வு என்றா வது கருதி நான் இம்மறுப்பை எழுதவில்லை. அவசியம் நேர்ந்தால், அல்லது நண்பர்கள் என்கிற முறையில், ஒருவரை ஒருவர் காணவும், அளவளாவவும் கடமைப்பட்டவர்களேயாவோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் விஷமத் தனமான தலையங்கமிட்டு ஜனங்கள் தப்பர்த்தம் கொள்ளும்படி எழுதியிருப் பதால் மறுக்க நேரிட்டதற்கு வருந்துகிறேன்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
நமது நாட்டுக்கோட்டை நகாத்து சுற்றுப்பிரயாணம்
இம்மாதம் 15 தேதி இரவு ஈரோட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத் துக்கு சுற்றுப் பிரயாணம் புறப்பட்ட நாம் 25 தேதி பகல் ஈரோடு வந்து
சேர்ந்தோம். 16 தேதி காரைக்குடி, 17 தேதி சிவகங்கை,18 தேதி தேவகோட்டை,
18 தேதி இரவு பள்ளத்தூர், 19 தேதி காலை புதுவயல், 19 தேதி மாலை கண்ட
னூர், 20 தேதி காலை சிறாவயல், திருப்பத்தூர் 20 தேதி மாலை, 21 தேதி காலை
வடக்கூர், 21 தேதி மாலை நெற்குப்பம், 22 தேதி அமராவதிப் புதூர், 23 தேதி தஞ்சை, 24 தேதி திருச்சிக்கும் சென்றுவிட்டு 25 தேதி ஈரோடு சேர்ந்தோம்.
சுற்றுப் பிரயாணம் சரீரத்திற்கும், மனதிற்கும் மிகவும் திருப்தியளித்து வந்த தென்றே சொல்ல வேண்டும். போகுமிடங்களிலெல்லாம் அன்று மலர்ந்த சுயமரியாதை புஷ்பங்களான தனவணிக வாலிபர்களின் உற்சாகமும் ஆவலும், எழுச்சியும் இதற்கு முன் எங்கும் கண்டதில்லை என்றே சொல்லு வோம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் தன வணிகநாடு மாத்திரமல்ல, தமிழ்நாடு மாத்திரமல்ல, சென்னை மாகாண மாத்திரமல்ல, இந்திய தேசமாத்தி ரமல்ல உலகத்திற்கே சுயமரியாதையைத் தவிர அல்லது சுயமரியாதைக்கு தவிர வேறுமதம் இல்லை வேறு கடவுள் இல்லை என்கிற தத்துவத்தை பரப்பி சுயமரியாதை தெய்வத்தை நிலை நாட்டப் போதிய ஆற்றலும், அறிவும், செல்வமும் படைத்தவர்களாக்கும் நமது தனவணிக நாட்டு வாலிபக் காளை
கள் என்றே சொல்லவேண்டும். அந்நாட்டு சுற்று பிரயாணத்திற்கு ஆதியில்
நாம் அழைக்கப்பட்ட பொழுது நமக்கு மிகுதியும் கலக்கம் ஏற்பட்டது. என்னவெனில் நமது சுயமரியாதைக்கு எதிரிகளாயுள்ள கூட்டத்தாரை: பொன்னே போல் போற்றிவரும் ஒரு......நாட்டிற்கு நாம் சுயமரியாதை
பிரசாரம் செய்யப் போகிறோமே பலமான எதிர்ப்புகளுக்குத் தலை கொடுக்கத் தயாராயிருக்க வேண்டுமல்லவா என்கிற கவலையுடனேயே ஒப்புக் கொண்டேன். ஆனால்அங்கு சென்று அவ்விளங்காளையர்களை கண்ட வுடன் சுயமரியாதைத் தத்துவம் இன்னது என்பதை நமக்கு விளக்கித் தரும் ஆற்றலுடைய காளைகளாகக் கண்டனன் என்றால் அது போழ்து நமது மகிழ்ச்சி எவ்வாறாயிருந்திருக்கும் என்பதை வாசகர்களேதான் உணர்ந்து கொள்ள வேண்டும். தனவணிக நாட்டில் சுயமரியாதைக்குச் சிறப்புதராத
நகரம் இல்லை. கிராமம் இல்லை, தெரு இல்லை, வீடு இல்லை என்பதோடு
குடி அரசு - 1927 (3) 70
அங்குள்ள மரம் செடிகளெல்லாம் சுயமரியாதைக் காற்றை வீசிக் கொண்டி ந்தன. என்றாலும் பார்ப்பன சூழ்ச்சி வாடை காட்டாத இடமில்லை என்பதை
யும் சொல்லித் தானாக வேண்டும். அது விபரங்களை மற்ற பத்திரிகைகள் வாயிலாகப் பார்த்திருக்கலாம். ஆனால் அவ்வளவு சூழ்ச்சிகளும் அந்நாட்டு மக்களுக்கு சுயமரியாதையின் அவசியத்தை நன்றாய் விளக்க உதவியதோடு சுயமரியாதைக்கு உண்மையான பாரம்பரியமான எதிரிகள் யார் என்பதை யும், சுயமரியாதை பரவாவிட்டால் உள்ளுக்குள்ளாகவே இருந்து எதிர் பிரசாரம் செய்கிறவர்கள் யார் என்பதையும் விளக்க ஒரு தக்க சந்தர்ப்பத்தை
யுமளித்தது. இந்த சுயமரியாதை பிரசாரத்திற்கு உதவியளித்து நம்முடன் கலந்துழைத்த கனவான்கள் பலராயினும் அவர்களில் முக்கியமானவர்கள் திருவாளர்கள் பள்ளத்தூர் திவான் பஹதூர் அ. முருகப்ப செட்டியார்,
எம்.எல்.சி. குமரன் பத்திராதிபர், ஸ்ரீமான் சொ. முருகப்ப செட்டியார், கர.
முத்து சிவலிங்க செட்டியார், அமராவதி புதூர் ஸ்ரீமான் பி.ச. சுப்பிரமணிய செட்டியார், ஸ்ரீமான் சிறாவயல் காசிநாதன் செட்டியார், காரைக்குடி ஸ்ரீமான் அரு. சோம சுந்தரம் செட்டியார், ஸ்ரீமான் தெ.லெ.அருணாசலம் செட்டியார், தேவகோட்டை ஸ்ரீமான் டி.வி. அருணாசலம் செட்டியார், ஸ்ரீமான் கிருத்தி வாசகர், சிவகங்கை ஸ்ரீமான் ராமச்சந்திர படையாச்சி, திருப்பத்தூர் ஜனாப் சுல்தான் பாக்தாத், சிறாவயல் காந்தி ஆச்சிரமத்தார் முதலியோர்கள்
ஆவார்கள். அந் நாட்டுக்கும் மற்றும் அந்நாட்டில் நமது பிரசாரத்திற்கு உதவி செய்த கனவான்களுக்கும் மக்களின் சுயமரியாதையின் சார்பாக நமது நன்றியறிதலைக் காட்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.07.1927
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பொய்க்கால் மந்திரிகனை நிலைக்க வைக்க
திருப்பூரில் மகாநா௫
பொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைப்பதற்காக ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்பிரயத்தனத்தின் முதல் பாகம் ஸ்ரீமான் சுப்பராயன் அவர்கள் வேளாளர் என்பதாகவும், அந்த வேளாளரைக் காப்பாற்ற வேண்டி யது வேளாள கனவான்களின் கடமை என்பதாகவும் கிளப்பி விட்டு சில வேளாள கனவான்கள் பெயரால் திருப்பூரில் ஒரு மகாநாடு என்பதாக விளம்பரப்படுத்தி வருகிறார்.
இந்த மந்திரிகளை ஆதரிக்க வேண்டிய அவசியம் நமது செட்டியா ருக்கு என்ன வந்தது என்பதை பொது ஜனங்கள் நன்றாய் யோசித்து பார்க்க வேண்டும். ஸ்ரீமான் செட்டியாரின் கொள்கை என்ன என்பதை பொது ஜனங்கள் முதலில் சிந்தித்தால் மற்றது விளங்கும். “உன் பிறப்போ பத்து என் பிறப்போ எண்ணத் துலையாது”” என்பதாக மகா விஷ்ணுவைப் பார்த்து ஒரு புலவன் பாடினான் என்கிற கதைபோல் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் அரசியலில் தலையிட்ட பிறகு அவரது அரசியல் பிறப்பு எண்ணத் துலையாது என்றே சொல்லவேண்டும்.
சமீபகாலமாக அவரது அரசியல் தொண்டு என்பது சர்.சி.பி. ராமசாமி
அய்யர் அவர்களுக்கு பரமானந்த சிஷ்யனாயிருப்பதிலும் ஸ்ரீமான்களாக
பட்டக்காரர் வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகிய கனவான்களை சுவாதீ
னப் படுத்திக் கொள்ளுவதில் பாடுபடுவதிலுமே முடிந்துவிட்டது.
ஏனென்றால் சர்க்காரை சிபார்சு பிடித்து உத்தியோகம் பெற சர்.சி.பி. அவர்களும், பொது ஜனங்களிடம் சிபார்சு பிடித்து ஓட்டு பெற மேற்கண்ட வேளாள பிரமுகர்களும் இருந்தால் போதும் என்பதே அவரது துணிபாய்
விட்டது. இம்மாதிரி சுருக்க வழியில் சம்பாதிக்கும் பலன் ஒருக்காலும் மண: முள்ளதாயிருக்காது என்பது நமது உறுதி.
ஸ்ரீமான் செட்டியாரிடத்தில் நமக்கு எப்போதும் சிறிது அனுதாபம்
குடி அரசு - 1927 (3) 72
உண்டு. அதாவது சுயமரியாதையை விட்டு பாமர மக்களையும் குடியான வர்களையும் அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுத்து அரசாங்கம் அடிக்கும் கொள்ளையில் தாங்களும் ஒரு பாகம் பெறுவது என்பதையே குறியாகக் கொண்டு சுயநலத்திற்கு பாடுபடுவதான கொள்கையுடைய தற்கால அரசிய
லின் பேரால் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்து வாழும் கூட்டத்தில்
ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்க செட்டியாரும் ஒரு முக்கியஸ்தராயிருந்தாலும், அக்கூட்டத்தில் சேர்ந்த மற்றவர்களைப்போல் ஸ்ரீமான் செட்டியாருக்கும் ஏன் ஒரு பங்கு வரக்கூடாது என்பதும், அவருக்கு வந்திருக்க வேண்டிய முறை கூட அவசரத்தினாலும் அகம்பாவத்தினாலும் தவறி விட்டதே என்பதும்
தான்.
ஆனால் மேல்கண்ட அரசியல் சூதில் வெற்றி பெற்று பலனடைந்த வர்கள் பெரும்பாலும் கூடுமானவரை ஒரே கொள்கையில் இருந்து வந்தவர்.
கள் தானே அல்லாமல் ஸ்ரீமான் செட்டியாரைப் போல் அடிக்கடி மாறி வந்ததா லல்ல. ஸ்ரீமான் செட்டியார் இம்மாறுதல்களை தன்னோடு மாத்திரம் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீமான் வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்களையும் கூட இழுத்து அடிக்கடி வழுக்கலில் சறுக்கி விழும்படி செய்து விடுகிறார்கள். ஸ்ரீமான் செட்டியார் நம்நாட்டு வேளாள சமூகத்தின் நாடியை சரிவர உணர்ந் திருப்பாரானால் இத்தந்திரத்திவிறங்கி இருக்க மாட்டார். காலசக்கிர சுழலி னால் நாட்டில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் பகுத்தறிவும் சுதந்திர உணர்ச்சியும் ஏற்பட்டிருப்பது போலவே நமது வேளாள சமூகத்திற்கும் சுதந்திர உணர்ச்சி ஏற்பட்டிருப்பதை ஸ்ரீமான் செட்டியார் அறியவில்லை போலும். பகுத்தறிவில்லாமல் பெரும் விளம்பரத்தையும் சிபார்சையும் கண்டு
மக்கள் ஏமாந்து ஓட்டுக் கொடுத்து வந்த காலம் மலையேறி விட்டது. இப்போது ஒன்று பணம் கொடுக்க வேண்டும் அல்லது யோக்கியமாகவாவது நடந்து கொள்ள வேண்டும். அல்லது தங்கள் சமூக நன்மைக்காவது உதவ வேண்டும் என்கிற அளவுக்கு நாடு வேகமாய் மாறிவருகிறது. சிபார்சு செலாவணியாகும் காலம் மலையேறிவிட்டது. இதை அறியாதவர்கள் கண்டிப்பாய் ஏமாற்றப்படுவார்கள்.
நமது செட்டியார் இந்த பொய்க்கால் மாதிரி மந்திரிகளை ஆதரிப் பதற்காக போடப்பட்ட கூட்டத்தை திருப்பூரில் போடுவானேன்? கோய முத்தூரில் உள்ள அறிவாளிகளைவிட திருப்பூரில் மேம்பட்டவர்கள் இருக் கிறார்கள் என்பதாலா? அல்லது கோயம்புத்தூரை விட திருப்பூர் பெரிய பட்ட ணம் என்பதாலா? அல்லது அந்த ஊரார் கேட்டுக் கொண்டார்கள் என்பதா கவா? என்பது ஒன்றும் விளங்கவில்லை. திருப்பூர் பஞ்சு வியாபாரிகளுக்கு
மிகவும் அவசியமாயிருக்கிற ஒரு காரியத்தின் பெயரை அதாவது பருத்தி
சட்டத்தில் சில மாறுதல்கள் செய்வதாக ஆசைக்காட்டி அதன் மூலம் கூட்டத்தைச் சேர்க்க ஏற்பாடு செய்து கொண்டு, பொது ஜனங்கள் மந்திரிகளை ஆதரிக்கிறார்கள் என்று ஒரு பொய்க் கதையை உண்டாக்கச் செய்த
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சூழ்ச்சியே அல்லாமல் மற்றபடி வேறு என்ன நாணயம் இதில் இருக்கிறது. ஸ்ரீமான் ராமலிங்க செட்டியார் இந்த மந்திரிகளை ஆதரிக்க இதுவரையில் வெளிப்படையாய்ச் சொல்லியிருக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது “பார்ப்பனரல்லாதாருடைய முன்னேற்றத்திற்கு உழைத்து வருவ
தாகச் சொல்லும் ஒரு கக்ஷியார் பார்ப்பனரல்லாத மந்திரிகளை அதிகாரத் திலிருந்து நீக்குவது சரியல்ல” என்கிறார்.
இந்த வார்த்தை சொல்ல நமது ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியாருக்கு உரிமை உண்டா என்றுதான் கேழ்கிறோம். இதே பார்ப்பனரல்லாதார் முன் னேற்றத்திற்கு உழைப்பதாய் சொல்லிக் கொண்டு இதே பார்ப்பனரல்லாதார். ககஷியில் இருந்த இதே ஸ்ரீமான் ராமலிங்கம்செட்டியார் மூன்று னு த்துக்கு
முன்பு பார்ப்பனரல்லாத மந்திரிகளை அதிகாரத்திலிருந்து நீக்க முயற்சி செய்து கக சேர்த்து பார்ப்பனரல்லாத மந்திரிகளின் மேல் நம்பிக்கை யில்லாத தீர்மானம் கொண்டு வந்து ஓட்டுக் கொடுத்தவரா அல்லவா? அப்படி யிருக்க இவர் இந்த மாதிரி கேழ்பதில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்ப தை யோசித்தால், இது பொய்க்காரணம் என்பது விளங்காமல் போகாது. ஸ்ரீமான் செட்டியார் இப்போது காங்கிரஸ்காரரா? அல்லது பார்ப்பனரல்லாதார். ககஷிக்காரரா? அல்லது மந்திரி ககஷியார் என்கிற இண்டிபெண்டெண்ட் ககஷி யாரா? ஒரு ககஷியிலும் சேராமல் தன் இஷ்டப்படி நடப்பவரா? இவரது அரசியல் கொள்கை என்ன? சமூக இயல் கொள்கை என்ன? அக் கொள்கை: களுக்கு தக்கபடி இதுவரை நடவடிக்கையில் என்ன செய்து வந்திருக்கிறார்? இவைகள் ஒன்றும் இல்லாமல் ஊரில் இருக்கிறவர்கள் எல்லாம் பயித்தியக் காரர்கள், தான் மாத்திரம் ஒரு தனிப்பட்ட அவதாரம் என்று வெறும் பேச்சைப் பேசிக்கொண்டு எல்லாகொள்கைகளையும் பரிகாசம் பண்ணிக் கொண்டிருப் பதால் என்னபயன் அடையமுடியும். மற்றும் ஸ்ரீமான் செட்டியாரின் சொந்த அபிப்பிராயங்கள் பலவற்றை இதுசமயம் வெளியில் சொல்ல இஷ்டமில்லை யானாலும் திருப்பூர் கூட்டத்தின் முடிவுக்குப் பின் வெளியாக்கலாம் என்றே இருக்கிறோம். பொதுவாய் திருப்பூர் கனவான்களுக்கும் மற்றும் பலருக்கும் நாம் எச்சரிக்கை செய்வது என்னவென்றால், நமது சமூக முன்னேற்றத்திற்கு, இடையூறான காரியங்களுக்கு இடம்கொடுத்து விடாதீர்கள். இவர்களது சொந்த காரியம் நடந்த பின்பு மறுபடியும் உங்களை எந்த ஊர் என்று கேழ்பார்.
கள். வீணாக நாடு சுயமரியாதை அடையும் சமயத்தை இரண்டொரு சுயநலக்
காரர் வார்த்தையில் ஏமாந்து பாழாக்காதீர்கள். சில சுயநலக்காரர்களுக்காக ஒரு சமூகத்தையோ நாட்டையோ பலிகொடுத்து விடாதீர்கள் என்பதுதான். மற்றவை பின்னால்.
குடி அரசு - கட்டுரை - 07.08.1927
குடி அரசு - 1927 (3) 74
சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க
யார்ப்பணர்களிண் கூழ்ச்சி
ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக் கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப் போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம். பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருப்பதற்கு எத்தனையோ கதைகளும் சரித்திரக் குறிப்புகளுமிருக் கின்றன. அது போலவே தற்காலம் நமது நாட்டில் தோன்றியிருக்கும் சுய மரியாதை உணர்ச்சியையும் அழிப்பதற்கு பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள். அச்சூழ்ச்சிகளில் சர். சிவசாமி அய்யர் என்கிற ஒரு வக்கீல் பார்ப்பனர் கண்டு பிடித்து இருக்கிற சூழ்ச்சி மிகப்பெரிய சூழ்ச்சி
யாகும். இந்த மாதிரி சூழ்ச்சிகளேதான் இப்பார்ப்பனர்களின் பெரியோர்களான வேதகாலம், மனுதர்ம சாஸ்திர காலம் முதலிய காலத்துப் பார்ப்பனர்களும் செய்து வந்திருக்கிறதாக அந்த வேதங்களும், சாஸ்திரங்களுமே ௬ஜுப்பிக் கின்றன. இது போலவே தற்கால மனுக்களில் ஒரு பழம் பெருச்சாளி மனுவாகிய மேல்கண்ட சர்.பி. சிவசாமி அய்யர் என்பவர் ஒரு மனுதர்ம சாஸ்திரத்தை உண்டாக்க சர்க்காரை வேண்டிக்கொள்ளுகிறார். அதாவது இந்தியன் பீனல் கோடில் மத சம்மந்தமான குற்றம் செய்பவர்களை தண்டிப்ப தற்கு என்று ஏற்படுத்தப்பட்ட 295, 297,298 - வது பிரிவுகளில் மத ஸ்தாபகரை: தூஷிப்பவர்களை தண்டிக்க இடமில்லை. ஆதலால் 203 -வது பிரிவுக்குப் பிறகு புதிதாக ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும் என்றும், அதாவது,
“எந்த வகுப்பாரின் மனதையாவது புண்படுத்தும் வண்ணம் ஒரு மத ஸ்தாபகரையோ தெய்வத்தையோ குருமார்களையோ அவதார புருஷர். களையோ தூஷித்தாலும் அல்லது பத்திரிகையில் எழுதினாலும் அப்படிப் பட்டவருக்கு 2 வருஷ தண்டனை விதிக்க வேண்டும்.
என்பதாக ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று யோசனை சொல்லுகிறார். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்பட்டு விட்டால் மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை யாரும் அசைக்க முடியாது என்பது
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அவர்களது சூழ்ச்சியின் கருத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தக் கருத்தை “சுதேசமித்திரன்” பத்திரிகையும் ஜாடையாக அநேக தடவை எழுதி வந்திருக்கிறது. ஆனாலும் இப்போதுதான் ஒரு சட்ட ஞான. முள்ள பொறுப்பான மனிதரால் சட்டம் செய்ய வேண்டிய வாசகங்களுடன் வெளியாயிருக்கிறது. சர். சிவசாமி அய்யர் சட்டம் கற்று, சுமார் 35 வருஷம் ஆகியும், சட்டத்திற்கு வியாக்யானம் செய்து ஜீவிப்பதிலேயே காலங்கடத்தி வந்தும், இதுவரை இக்குறையைப் பற்றி ஞாபகம் வராமல், இப்போது சுயமரியாதைக் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு இவை ஞாபகத்திற்கு வந்திருப்பதின் பொருள் என்ன என்பது இவை வாசிப்பவர்களுக்கு விளங்காமல்போகாது.
இதே சர். சிவசாமி அய்யரின் கருத்தைத்தான் சென்ற வருடம் ஸ்ரீமான்.
எஸ். சீனிவாசய்யங்கார் தெரிவித்தார். அதாவது:- “வகுப்புத் துவேஷத்தைக்
கிளப்பும் ஈவெ. ராமசாமி நாயக்கரை இன்னம் ஜெயிலில் போடாமல் வெளி
யில் விட்டுக்கொண்டிருப்பதற்கு சர்க்காருக்கு கண்ணில்லையா? அட்வொ
கெட் ஜனரல் இதை கவனியாமல் என்ன செய்கிறார்” என்று கேட்டார். இதே கருத்தைத் தான் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மற்றொரு வழியில் வெளியிட்டார். அதாவது:- “பம்பாய் மாகாணத்து கல்வி மந்திரி ஸ்ரீமான் யாதவர் சென்னை மாகாணத்திற்கு வந்து வகுப்பு துவேஷத்தை உண்டாக்கி விட்டு போவதை சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு யாதவரை தண்டிக்க தைரியமில்லாவிட்டால் தான் ராஜீனாமா கொடுத்து விட்டு வேறு ஒருவரைக் கொண்டாவது ஏன் செய்திருக்கக்கூடாது” என்று கேட்டார். “சுயராஜ்ஜியா”, “சுதேசமித்திரன்”, “பிராமணன்” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் “கேள்வி முறை இல்லையா? இப்படி அக் கிரமங்களை சகித்துக் கொண்டிருக்கலாமா? பிராமணத் தலைவர்கள் இதைப்
பற்றி கவனிப்பதில்லையா” என்று மாரடித்துக்கொண்டன. இவைகள் எல்லாம் கவனிக்கப்படா விட்டாலும் சர். சிவசாமி அய்யரின் அழுகை கட்டாயம் கவனிக்கப்பட்டு அந்தப்படி ஒரு சட்டம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.
நாம் அவைகளுக்குப் பயந்து கொண்டு அயோக்கியர்களின் செய்கை களையும், சூழ்ச்சிகளையும், அக்கிரமங்களையும், மனிதப் பிறப்புரிமைக்கும், மனிதத்தத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் இடையூறு விளைவிக்கும் காரியங்களையும் வெளிப்படுத்தாமலிருக்கப் போவதில்லை. பிறப்புரிமை யான சுயமரியாதையானது சூழ்ச்சிக்காரர்களால், வஞ்சகர்களால் செய்யப்
படும் சட்டங்களுக்கு அடங்கிவிடும் என்று எதிர்ப்பார்ப்பது மடமையே யாகும்.
சாதாரணமாக, இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை யுடையது அல்ல என்பதையும், அது ஒரு பழமையான மதம் அல்ல
குடி அரசு - 1927 (3) 76
என்பதையும், பல பெரியோர்களும் அறிஞர்களும், ஆராய்ச்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இனி சட்டம் என்ன செய்து விட முடியும்.
எவ்வளவோ பிரத்தியக்ஷ ஆதாரங்களுடனும் அநேக நன்மையான கொள்கையுடனும் விளங்கும் கிருஸ்தவ மதத்தைப் பற்றியே பேசும்போது, கிருஸ்துநாதர் என்பதாக ஒருவர் பிறக்கவே இல்லையென்று ஒருவர். புஸ்தகமே எழுதியிருப்பது குற்றமில்லாமல் இருக்கும்போது, அஸ்திவாரத்
திலிருந்தே அண்டப்புளுகையுடையதான இந்து மதத்தைப் பற்றி பேசுவதும், கள்ளு, சாராயம், மாம்சம், பெண் கூத்தி முதலியவைகளை வைத்துப் படைக்க வேண்டிய தெய்வங்களையும், தன்னைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிற மத ஸ்தாபகரையும், ஊரைக் கொள்ளைடித்து ஒரு கூட்டத்தாருக்கே வயிறு புடைக்கத் தின்னும்படி பொங்கிப் போட்டுவிட்டு தான் பஞ்சு மெத்தையில் உறங்கிக்கொண்டும், தங்கப் பல்லக்கில் உலவிக் கொண்டும், தன்னை சன்னியாசி என்றும் துறவி என்றும் சொல்லிக் கொண்டும் திரியும் போலி குருமார்கள் என்போர்களையும் வெளிப்படுத்தினால் அது எப்படி குற்றமாகு மென்பது நமக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆசாமிகளை வெளிப்ப டுத்துவதன் மூலம் இவர்களால் வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு மனம் புண்ணாவதோடு வயிறு கூட பட்டினியால் வருந்த நேரிடலாம். அதற்கு யார். என்ன செய்யக்கூடும். சோம்பேறித் தனத்தையும் ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதையும் விட்டு விட்டுயோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்து தின்னும் படிமக்களை பழக்குவதுதான் இதற்கு பரிகாரமாகுமே தவிர சட்டத்தின் மூலம் இதை வெளிப்படுத்துகிறவரை 2 @ தண்டிக்க வேண்டும் என்பது ஒருக்காலும் பரிகாரமாகாது. வேதம் கூட கடவுளால் சொல்லப்பட்டதென்று தான் சொல்லப்படுகிறது. வேதத்தைக் கண்டிப்பது தெய்வதூஷணை என்றுதான் சொல்லப்படுகிறது. இதற்காக அதன் அக்கிரமங்களை ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் வெளியிடாமலிருக்க முடியுமா? உதாரணமாக அதர்வண வேதத்தில் “ஒரு கிராமத்தில் ஒரு பிராமணன் ஒரு இரவு பெண் இல்லாமல் தனியாய் படுத்திருப்பானானால் அந்த கிராமத்திற்கே கேடு” என்பதாக எழுதப்பட்டிருக்கிறதாம். இதற்காக பயந்து கொண்டு எந்த திண்ணையில் எந்தப் பிராமணன் பக்கத்தில் பெண் இல்லாமல் தனியாய்ப் படுத்திருக்கிறான் என்று தேடிப் பார்த்து அவனிடம் ஒரு பெண்ணைக் கொண்டுபோய் படுக்க வைப்பதா? அல்லது சட்டத்திற்குப்பயப்படாமல் இது சுயநலக்கார வஞ்சகர்களால் எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதா என்பதை யோசித்தால் இச்சட்டத்தின் கதி என்ன ஆகும் என்பது விளங்காமல் போகாது.
எந்த மதஸ்தனானாலும் யாரானாலும் ஏதாவது ஒன்று தனக்கு மாத்திரம் தெய்வம் தனக்கு மாத்திரம் குரு என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வானானால் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவன் முட்டாள்தனத்துக்கு பரிதாபப்படுவதோடு அவ்விஷயம் தீர்ந்துவிடும்.
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அப்படிக்கில்லாமல் தங்கள் நன்மைக்கு மாத்திரம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதை மற்றவர்கள் பிடரியின் பேரில் யேற்றுவதானால் அதை கண்டிக்காமலும் ஒழிக்காமலும் இருக்க முடியவே முடியாது என்பதை ஸ்ரீமான் சர்.சிவசாமி அய்யருக்கும் இதை வாசிப்பவருக்கும் சத்தியமூர்த்தி அய்யருக்கும் மித்திரன் கூட்டத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 07.08.1927
குடி அரசு - 1927 (3) 78
ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புதுவாழ்வு
கொஞ்சநாளைக்கு முன்பு சுதேசமித்திரன்” ஸ்ரீமான் ஈவெராமசாமி நாயக்கரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எழுதுகையில்,
“ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் நடந்து கொண்டுவரும் நடவடிக் கையையும் பேசிவரும் பேச்சையும் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் ஸ்ரீமான் நாயக்கர் சென்னை கவர்னர் வீட்டுக்கு கட்டித் தூக்கிக் கொண்டு போகப்படு
வார் என்று தோன்றுகிறது” என்று எழுதி இருந்தது, அதாவது ஸ்ரீமான் நாயக்கர் சர்க்காருக்கு அவ்வளவு தூரம் நல்ல பிள்ளையாய் போய்விட்ட தாகவும், சர்க்காருடன் சேர்ந்து விட்டதாகவும், இனி சர்க்காரையே ஆதரிப்
பார் என்றும் ஜனங்கள் நினைக்கும்படியாக எழுதியிருந்தது. அது எழுதிய
திலிருந்து நாயக்கரும் தனக்கு ஏதாவது சர்க்கார் “சன்மானம்” வரும் என்றே
எதிர்பார்த்தார். கடசியாக அவர் பேரில் போடப்பட்டிருந்த இரகசியப் போலீசு கூட எடுபடாமல் இன்னமும் தொடருவதுடன் கலக்ட்டரும் போலீசாரும் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள். இது எப்படியோ இருக்கட்டும் ஆனால் சதா சர்வ காலம் சர்க்காரை தாக்குவதாக வேஷம் போட்டு பார்ப்பனரல் லாதாரை தாக்குவதாலேயே பார்ப்பனர்களால் தேசீயவீரர் என்று பெயர் பெற்று வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களை இப்போது சர்க்காரார் கவர்னர் வீட்டுக்கு ஒரே தூக்காக தூக்கிக் கொண்டே போய்விட்டார்கள். அது மாத்திரமல்ல, கவர்னர் பிரபு வீட்டு வாசல் படியை
காக்கும் படியும் செய்துவிட்டார்கள். கவர்னர் பிரபு வீடு மாத்திரமல்ல கவர்னர் ஜனரல் பிரபு வாயில் காக்கும் படியும் செய்தாய்விட்டது. காரணம் என்ன? ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த கவர்னர் பிரபுவின் ஆக்ஷி' யோக்கியமானதாக இல்லை. பார்ப்பனர்களின் கைக்குழந்தையாய் இருக்
கிறார், இவர் ஆக்ஷியில் நடைபெறாத அக்கிரமமே இல்லை என்றும், நாணை:
யக் குறைவு என்பது இந்த கவர்னர் ஆக்ஷியில் தாண்டவம் ஆடுவதுபோல் வேறு எந்த ஆக்ஷியிலும் இல்லை என்றும் சொல்லி இவரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக கோவை மகாநாட்டில் ஒரு பிரேரேபணை பிரேரேபித்ததும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி போன்றாரின் உதவியாலல்லாமல் கவர்னர் நிர்வாகம் நடைபெறமுடியாமல் போய்விட்ட
தால் கவர்னர் பிரபு வீட்டிற்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை மந்திரிமார்களும்
சர்.சி.பி.யும் கட்டித்தூக்கிக்கொண்டு போக வேண்டியதாய் ஏற்பட்டுப்
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
போய்விட்டது. பிறகு கவர்னர் பிரபு தன் வீட்டிலிருந்து ஸ்ரீமான் சத்திய மூர்த்தியை கவர்னர் ஜனரல் வீட்டுக்கு தூக்கிக்கொண்டு போய் போட வேண்டியதாய் ஏற்பட்டுவிட்டது, அல்லாமலும்
தற்காலம் நமது கவர்னரின் நல்ல நடவடிக்கைக்கு ஸ்ரீமான் சத்திய
மூர்த்தி தான் நற்சாக்ஷி பத்திரமளிக்க வேண்டியதாய் விட்டது, அதற்காகவே வைசிராய் பிரபுவின் தரிசனமும் சத்தியமூர்த்திக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டியதாய்விட்டது, ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புது வாழ்வேவாழ்வு! இதைக்கண்டு யாரும் பொறாமைப்படாமலும் இருக்க முடியாது, ஆனால்ஒரு விஷயம்: சர்க்கார் வாசனையே கூடாது என்று வேஷம் போட்ட மைலாப்பூர் கோஷ்டிக்கு, சர்க்கார் சம்மந்தமான விருந்துகளுக்கு கூப்பிட்டாலும் போகக்கூடாது என்று கடும் பத்தியம் வைத்த சுயராஜ்ஜியக் கவிக்கு யேதோ ஒரு வெள்ளைக்கார சீமாட்டி விருந்துக்கு ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் போய்விட்டுவந்ததால் “ ஷண்முகம் செட்டியார் பத்தியம் தவறிவிட்டார்” என்று கத்தின சுயராஜ்ஜியக் ௧௯9 தலைவர்களுக்குஆகிய இத்தனைக்கும் ஜீவாதாரமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியும் காங்கிரஸ் முட்டுக்கட்டை பிரிவு க்ஷி உப தலைவ ரான சத்தியமூர்த்தி - கவர்னர் பிரபுவையும் வைசிராய் பிரபுவையும் பார்க்கப் போனதின் இரகசியம் தான் நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனர்கள் தங்கள். காரியம் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பதை மாத்திரம் வாசகர்களுக்கு தெரிவிக்க இதை உபயோகித்து கொண்டோமே அல்லாமல் இதனால் தேசத்திற்கு நன்மையோ தீமையோ இருக்கிறதை காட்டுவதற்கு ஆக அல்ல. அன்றியும் கவர்னர் பிரபு
வீட்டு வாசல்படி மிதித்தஉடன் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு பூர்வஞானம் வந்து விட்டதற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டிவிட்டு இதை முடிக்கிறோம்.
ஆதாவது, நீலகிரிமலையில் கவர்னர் பிரபுவை பார்த்துவிட்டு
திரும்பினவுடன், மலையாளக் குடிவார மசோதா விஷயமாய் ஏற்படுத்திய
சர்க்கார் கமிட்டியை பகிஷ்கரிக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கையில், தானும் கூட இருந்து நிறைவேற்றிய மலையாளக் குடிவார மசோதாவை சர்.சி.பி. அய்யர் கவர்னரைக்கொண்டு நிராகரிக்கச்
செய்து விட்டாரே என்கிற சொரணை இல்லாமல், “சர் சி.பி. மலையாள ஜன்மிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிற விஷயத்தில் கவலை எடுத்துக் கொண்டு அக்கமிட்டியை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்லுவதும், “தக்க மெஜாரிட்டி இருந்தால் மந்திரி வேலைகளை ஒப்புக் கொண்டு இரட்டை ஆக்ஷியை நடத்திப்பார்க்கலாம்” என்று சொல்லுவதும் முதலான எவ்வளவு புதிய ஞானம் உண்டாயிருக்கிறது என்பதை வாசகர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.08.1927
குடி அரசு - 1927 (3) 80
மகாத்மாவம் வருணாசிரமும்
1
மகாத்மா காந்தி “தீண்டாமை ஒழிய வேண்டும், மதத்திலும், சமுதாயத்
திலும் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும்” என்கிற கொள்கை உடையவர் என்று ஜனங்கள் நம்பி வந்தாலும், அவரது எண்ணத்திலும் பேச்சிலும் அதற்கு நேர் விரோதமான கொள்கையை உடையவராகவே காணப்படுகிறார். இம்மாதிரி எண்ணத்தோடும் பேச்சுகளோடும் மகாத்மா காந்தியின் பிரசாரம் நடைபெற நடைபெற தீண்டாமையும் மூடக் கொள்கைகளும் நாட்டில் வலிமையோடு. நிலைபெற இடம் ஏற்படுமே அல்லாமல் ஒருக்காலும் இவை ஒழிக்கப்படவே முடியாது. எந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெளிப்படையாய் பேசுகிறாரோ அதே தீண்டாமையை நிலை நிறுத்த அதே பேச்சை வியாக்கி யானம் செய்வதில் பாடுபடுகிறார்.
இதைப்பற்றி முன் ஒரு தடவை கூட எழுதி இருக்கிறோம். உண்மை யான தீண்டாமையை நமது நாட்டை விட்டு வெளிப்படுத்த வேண்டுமானால் மகாத்மா காந்தியையும் எதிர்த்து போராடித்தான் தீர வேண்டியிருக்கிறது.
தீண்டாமை இன்னது என்பது மகாத்மாவுக்கு இன்னமும் சரியாய் புலப்பட இல்லை என்பதே நமது அபிப்பிராயம். அவர் மதத்தின் பெயரைச் சொல்லிக் கொள்வதனால் பொது ஜனங்களிடம் உண்டாக்க கூடிய செல்வாக் கையும் உபயோகப் படுத்திக்கொள்ள நினைப்பதால் உண்மைத் தீண்டாமை
தத்துவம், அவருக்கு புலப்பட மார்க்கமில்லாமல் போய்விடுகிறது. ஆதலால் மகாத்மாவினது தீண்டாமை விலக்கு கொள்கையைப் பின்பற்றுவோமானால்
மறு படி தீண்டாமை சேற்றிலே சறுக்கி விழுக வேண்டிவரும் என்றே நாம் பயப்படுகிறோம். வெகு காலம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும், மூடி மூடி வைத்தும் கூட உண்மையான தீண்டாமை விலக்கையும், சுயமரியாதையையும் உத்தேசித்து வெளிப்படையாய் இப்போது அவரை தாக்கித் தீர வேண்டியதாய்
ஏற்பட்டு விட்டதற்கு வருந்துகிறோம்.
ஏனென்றால் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வரப்போகி
றார். தீண்டாமையைப் பற்றி பேசும்போது அவரது வழக்கப்படியே தான்
பேசித் தீருவார். அதன் மூலம் நமது எதிரிகளுக்கு அதிகமான பலம் ஏற்பட்டு
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
நமது முயற்சியை ஒழிக்க அதை அவர்கள் உபயோகித்துக் கொள்ளுவார்கள். ஆதலால் அதை இப்போதே நாம் வெளிப்படுத்திவிடுவது மேலானதென்றே
கருதுகிறோம். அதாவது மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொல்லுவது போலவே நமது சமூக வாழ்வில் வருணாசிரம தர்மம் உண்டு என்றும் அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லிவருகிறார். சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப் பற்றி பேசும் போதும் இந்து சமூகத்தில் வருணாச்சிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வர்ணத்தாருக்கு ஒவ்வொரு தர்மம் விதிக்கப்
பட்டிருக்கிறதென்றும், அந்தந்த வர்ணத்தார் அந்தந்த தர்மத்தை செய்யும் போது அவரவர்கள் அம்மட்டி லுயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும் போது உயர்ந்தவனாகிறதுபோலவே மற்ற வர்ணத் தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான். என்பதாகவும் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள். பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்கு காரணங்களாக சொல்லிவரு கிறார்கள்.
வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமை கொள்கை அமுலில் இருந்து வருகிறதே ஒழிய வருணாசிரமம் இல்லா
விட்டால் தீண்டாமை கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாச்சிரம
தர்மம் என்கிற ஒரு உடல் இல்லா விட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. யோசித்துப்பார்த்தால் இந்த கொள்கைத் தத்துவம் எவருக்கும் விளங்காமல் போகாது. அந்தந்த வருணத்தானுக்கு ஏற்பட்ட தர்மப்படி அவனவன் நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லுவதைத்தான்.
தூவார் மகாநாட்டு “பிராமண சம்மேளன” மும் ஏகமனதாய் தீர்மானம் செய்
திருக்கிறது.
மகாத்மா சொல்லும் வருணாச்சிரம தர்மம் அதுவல்ல என்பதற்கு வேறுஆதாரம் என்ன? மகாத்மாவும் வருணாச்சிரமம் நான்கு என்று சொல்லு
கிறார். அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிறார்.
தூவார் பிராமணச் சம்மேளனத்தாரும் மகாத்மா சொல்லும் ஆதாரத்தைக் கொண்டே க்ஷத்திரியனும், வைசியனும் உலகத்தில் இப்போது காணப் படவில்லை. ஆதலால் பிராமணன், சூத்திரன் ஆகிய இரண்டு வருணத்தார். மாத்திரம்தான் இருக்கிறார்கள் என்கிறார்கள். மறைந்துவிட்ட இரண்டு வருணத்தாரைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இருக்கிற இரண்டு வருணத் தாரைப்பற்றிய வரையிலாவது இவர்களுக்கு “மகாத்மா” கற்பிக்கும் தர்மங்கள் என்ன? என்பதுதான் நமது கேள்வி. வருணாசிரமத்தையும், அதன் தர்மத்தை
யும் ஒப்புக்கொள்ளுகிற ஒருவர் - அதுவும் வருணாசிரமமும், அதனைன் தர்ம மும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்று ஒப்புக்கொள்ளுகிற ஒருவர்:
- தீண்டாமை இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். மகாத்மா கூறும் வருணாசிரமத்திற்கு பார்ப்பனர் கூறும் தர்மத்தைவிட வேறு ஏதாவது தர்மம்
குடி அரசு - 1927 (3) 82
கற்பிக்க ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்தால் நாளது வரை மகாத்மா அது வேறு என்று சொன்னதாகவே தெரியவில்லை. மைசூர் உபந்நியாசத்தில் ஜன சேவையே பிராமணர்களுடைய தர்மம் என்று சொல்லியிருக்கிறார். அது போலவே பிராமண சேவையே சூத்திரனுடைய தர்மம் என்றுதான் அவர் சொல்லி ஆக வேண்டும். பொது ஜன சேவைதான் பிராமண தர்மம் என்று சொன்ன சாஸ்திரங்களில்தான் “பிராமண சேவையே சூத்திர தர்மம்” என்று சொல்லப் பட்டிருக்கிறது.
பிராமணருக்குப் பொது ஜன சேவை செய்வதினால் மாத்திரம் உயர்வு உண்டாகுமானால் சூத்திரனுக்கு பிராமணசேவை செய்வதினால் மாத்திரம் தான் உயர்வு உண்டாகுமேயன்றி அதை விட்டு வேறு வேலை செய்வா னானால் சூத்திரன் கண்டிப்பாய் தாழ்ந்தவனாகிறான் என்றுதான் மகாத்மாவின்
தத்துவத்திற்குப் பொருள் ஏற்படுகிறது. இந்தப்படியானால் எந்த விதத்தில் பிராமணனுக்கு சம அந்தஸ்தாக சூத்திரன் இருக்க முடியும் என்று மகாத்மா
கருதுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.
அன்றியும் “அந்தந்த வருணத்தார் அந்தந்த தருமத்தைச் செய்து வருகையில் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு சொல்லிக் கொள்ள இடமேது” என்றும் பேசியிருக்கிறார். அப்படியானால், அந்தந்த வருணத்
தாருக்குத் தனித்தனி தர்மம் ஏற்பட வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வருணத்தான் மற்ற வருணத்தானுடைய தர்மத்தைச் செய்வதானால் கெடுதி என்ன என்பதைப் பற்றியாவது ஒரு வார்த்தையாவது இதுவரை மகாத்மா சொன்னதேயில்லை. “பொது ஜன சேவை என்பது பிராம ணர்களுக்கு மாத்திரம் சொந்தமானது, அதற்காகவே அவர்கள் பிறந்திருக் கிறார்கள்” என்றும் மகாத்மா சொல்லுவாரானால் மகாத்மா அவர்கள் நான்கு வருணத்தில், தான் எந்த வருணத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடியும்? மகாத்மா சொல்லுகிற கொள்கைப்படி பார்த்தால் அவர் பிறவியில் ஒன்று
சூத்திரராயிருக்க வேண்டும் அல்லது வைசியராயிருக்க வேண்டும். எனவே சூத்திரனுக்கும் வைசியனுக்கும் ஏற்பட்ட தர்மத்தைச் செய்வதை விட்டுவிட்டு பிராமணனுக்கு ஏற்பட்ட தர்மமாகிய பொது ஜன சேவையை செய்வதற்கு மகாத்மாவுக்கு உரிமையேது? தன்னாலேயே நடத்திக் காண்பிக்க முடியாத வருணாசிரம தர்மத்தை மற்றவர்களை ஏற்று நடத்தும்படி சொல்வதில் ஏதாவது பொருளுண்டா? இவைகளைப் பற்றி இவ்வளவு தூரம் எழுதினது தீண்டாமை விஷயத்தில் மகாத்மாவுக்கு உள்ள குழப்பத்தை காண்பிக்கவும், அவரும் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டவரே அல்லாமல் பகுத்தறிவுக்கு
மதிப்புக் கொடுப்பவராகப் புலப்படவில்லை என்பதையும் காட்டுவதற்குமே. எழுதுகிறோமே அல்லாமல் அவர் மீது குறை கூறுவதற்காக அல்ல. அன்றி
யும் மகாத்மா நாட்டிற்கும், மக்களுக்கும் செய்திருக்கும் அநேக நன்மை களைப் பற்றி நமக்கும் மகாத்மாவின் அந்தரங்க சிஷியர்கள் என்று சொல்லிக். கொள்பவர்கட்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை. எனினும் இத்
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தீண்டாமை விஷயத்திலும், வருணாசிரம விஷயத்திலும் மகாத்மாவுக்கு தெளிவு ஏற்பட்டிருக்குமானால் நமது சமூகத்திற்கு எவ்வளவோ நன்மை உண்டாகும் என்கிற ஆசையே இதைப் பற்றி மேலும் மேலும் எழுதி வரவும்
தூண்டுகிறது.
குடி அரசு - தலையங்கம் - 07.08.1927
குடி அரசு - 1927 (3) 84
மந்திரிகனைக் காய்பாற்ற மற்வறாரு கட்சி
வேண்டுமாம்
யாதாவது ஒரு காரியத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போனவர்களும், தனக்கென தனிமரியாதை இல்லாமல் போய் விட்டதே என்று விசனப்பட்டுக் கொண்டு இருப்பவர்களும், தனக்கென ஒரு தனிக்கட்சி சேர்க்க முயலுவது பெரும்பாலும் இயற்கை. யோக்கியமான முறையில் சமாதானம் சொல்லி எதிரிகளை வெல்ல முடியாத கூட்டத்தார்களும் தங்களது ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்து விட்டதாகக் கருதுகிறவர்களும், ஏதாவது சில சோணகிரி. களையும் பேராசைக்காரரையும் பிடித்து தனிக்கட்சி உண்டாக்கி, அவர்களைக் கொண்டு தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளுவதற்காக மற்ற யோக்கியமான கட்சியுடன் போராடுவதும், போராடச் செய்வதும் இயல்பு. இக்காரியங்களை அடிக்கடி நாம் அனுபோகத்தில் பார்த்து வருகிறோம். பார்ப்பனரல்லாதார். கட்சி என்பதாக ஒரு கட்சி தோன்றியது முதல் அக்கட்சிக்கு இடையூறாக நமது நாட்டில் இதுவரை எத்தனை கட்சிகள் தோன்றி மறைந்தன? அதற்கு எதிரிடையாக எத்தனை எத்தனை எதிரிகள் தோன்றி மறைந்தார்கள்? இனியும் எத்தனை தோன்றித் தோன்றி மறையப்போகிறார்கள்? என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இதனுண்மை விளங்காமல் போகாது. இவ்வ ளவு எதிரிடைகள் தோன்றி மறைந்து வந்ததிலும் ஒரு விசேஷம் என்ன வென்றால் பார்ப்பனரல்லாதாரின் கட்சியின் முக்கிய கொள்கைகளை தப்பு என்று சொல்லி வேறு கட்சி ஏற்படுத்தினவர்கள் இதுவரை கிடையவே கிடையாது. இப்போது இன்னமும் ஒரு புதுக்கட்சி ஏற்படுத்த உள்ளுக்குள் ளாகப்பாடுபடும் ஸ்ரீமான் டி.எ.ராமலிங்கம் செட்டியார் கம்பெனியார் உள்பட, இதற்கு முன்னால் பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்படுத்திய காலத்தில் சென்னை மாகாணச் சங்க கட்சி என்கிற ஒரு கட்சி ஏற்படுத்திய பார்ப்பனர்களுக்கு உதவியாயிருந்த ஸ்ரீமான் கேசவ பிள்ளை, ஸ்ரீமான் பி.வரதராஜுலு நாயுடு கம்பெனியார் உள்பட, மற்றும் சென்ற தேர்தலுக்கு முந்தி தேர்தலின் போது ஏற்பட்ட மந்திரி பதவி சண்டைகளின் பலனாய் ஸ்ரீமான் டி.எ. ராமலிங்கம் செட்டியாரால் அப்போது ஏற்படுத்தப்பட்ட கட்சியாருள்பட, ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாதார் கட்சி கொள்கையை ஒப்புக் கொண்டுதான் கட்சி ஏற்ப
டுத்தி இருக்கிறார்களேதவிர வேறில்லை. ஆனால் அதற்கு உள்காரணங்கள்
தான் அடிக்கடி மாற்றி மாற்றி சொல்லப்பட்டு வருகிறதே ஒழிய வேறில்லை.
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அதாவது கோவை மகாநாட்டுக்கு முன் பார்ப்பனரல்லாதார் கட்சியின் மீது சொல்லிக்கொண்டு வந்த குற்றமெல்லாம் “அரசாங்கத்தோடு அக்கட்சியார். ஒத்துழைக்கிறார்கள். இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்கிறார்கள்” என்கிற இரண்டு பெரிய குற்றங்களே சுமத்தப்பட்டன. கோவை மகா நாட்டுக்கு பிறகு, அரசாங்கத்தை எதிர்க்கவும் இரட்டை ஆட்சியை உதறித் தள்ளவும் திட்டம்போட்ட பின்பு “.அனாவசியமாய் அரசாங்கத்தை எதிர்க் கிறார்கள். திடீரென்று இரட்டை ஆட்சியை உடைக்கப் பார்க்கிறார்கள்” என்கிற குற்றம் சாட்டப்படுகிறது. இது யாரால் என்று பார்ப்போமானால் உத்தி யோகத்திற்கும், பார்ப்பனர்களுக்கும் அடிமைப்பட்ட ஆசாமிகளாலேயே அல்லாமல் இவைகளுக்கு அடிமையாகாத பொது மக்களாலல்ல, “தேசீய வீரர்களாலல்ல”, சர்க்காரையும் பார்ப்பனரல்லாதார் கட்சியையும் வைவதன்
மூலமும், பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாயிருப்பதன் மூலமும் வாழ்ந்து வந்த சிலருக்கு பார்ப்பனரல்லாதார் கட்சி மீது மேல்கண்ட குற்றம் சுமத்து வதற்கு யோக்கியதை இல்லாமல் போனதால் அப்படிப்பட்டவர்கள் இப்போது வேறு விஷயத்தில் அக்கரை உள்ளவர்கள்போல வேஷம்போட ஆரம்பித் திருக்கிறார்கள். அதாவது, பார்ப்பனரல்லாதார் கட்சி கொள்கையை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர்களையும் பார்ப்பனரல்லாதார் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதில்லையாம். இப்படிச் சொல்வதன் மூலம் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆகி பார்ப்பனர்களை ஏமாற்றிவிடலாம் என்பது இவர்களின்
கூற்று. ஆனால், இவர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்படுவார்களே ஒழிய வேறு ஒன்றும் ஆய்விடப்போகிறதில்லை. ஸ்ரீமான்கள் ராமலிங்கம் செட்டி
யாரும், மார்த்தாண்டம் பிள்ளையும் பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருந்து
6.7 வருஷங்கள் பார்த்து தங்கள் சுயநலம் ஈடேறாமல் வெளியேறினவர்களே ஒழிய கொள்கை மாற்றத்தால் அல்ல என்பது இப்போதும் அவர்கள் வெளியிட்டிருக்கும் கொள்கையைப் பார்த்தால் தெரியவரும். ஸ்ரீமான் மார்த்தாண்டம் சொல்வது என்னவென்றால்,
“பிராமணரல்லாதார் இயக்கம்........பல வேறு வகுப்பினரின் உரிமை கள் கவனிக்கப்படல் வேண்டும் என்ற உணர்ச்சியையும், தேவையையும் பொது ஜனங்களுக்கு இடையே நன்றாய் வலியுறுத்தி விட்டன” என்று அவர்கள் சொல்லி இருப்பதிலிருந்தே இம்மாதிரி ஒரு இயக்கம் வேண்டுவது தான் என்கிற கொள்கையை அவர் ஒப்புக்கொள்கிறார் என்பதும் மற்றும்,
“ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் குறிப்பிட்ட முறையில் ஏதேனும் ஒரு ராஜிக்கு வந்து இந்தப் போராட்டத்தை நாம் முடிப்போமானால் அதுவே நமது வகுப்புத் தொல்லைக்கு ஏற்ற நல்ல முடிவாகும்” என்று சொல்வதனால்வகுப்பு தத்துவத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைத் தத்துவத்தையும் ஒப்புக்கொள்கிறார் என்பதும் நன்றாய் விளங்க வில்லையா? பார்ப்பனரல்லாதார் கட்சி செய்து வருகிற வேலையையும் பாராட்டிவிட்டு அதன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையையும்
குடி அரசு - 1927 (3) 86
ஒப்புக்கொள்ளுகிற ஒருவருக்கு வேறு கட்சி எதற்கு என்பதை வாசகர்கள் தான் யோசித்தறிய வேண்டும்.
தவிர மற்றும் சிலருக்கு, பார்ப்பனர்களையும் பார்ப்பனரல்லாதார். கட்சியில் சேர்த்துக் கொள்ளாததால் வேறு கட்சி வேண்டுமாம். இவர்களுக்கு வேறு கட்சி எதற்காக வேண்டும். இவர்கள் கோருகிறபடியே காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சி, மிதவாதக் கட்சி, ஓம்ரூல் கட்சி, சுயேச்சை கட்சி என்பதாக பல கட்சிகள் பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஸ்தாபனங்களாக இருக்கும் போது வேறு ஒரு கட்சி எதற்காக வேண்டும் என்பதை யோசித்தால் பார்ப்பனரல்லாதூர் கட்சியைக் கொண்டு பார்ப்பனர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற கெட்ட எண்ணமல்லாமல் வேறில்லை என்பது எந்த யோக்கியனுக்கும் படாமல் போகாது.
தவிர, பார்ப்பனரல்லாதார் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பார்ப்பனர்களை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்கிற கொள்கை யோடு இது ஏற்பட்டு பத்து வருஷம் ஆன பின்பு இப்போது இவர்களுக்கு இந்த ஞானம் தோன்றுவானேன்.
பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு தேசத்தில் செல்வாக்கு வந்துவிட்டது. அதை அழிக்க பார்ப்பனர்களும், அவர்களது அடிமைகளும் செய்த முயற்சிகளின் யோக்கியதைகளை எல்லாம் மக்கள் அறிந்து விட்டார்கள் என்கிற எண்ணம் பார்ப்பனர்களுக்குப் பட்டவுடன், பல பார்ப்பனரல்லாத கட்சியில் உள்ள ஆசாமிகளை ஏமாற்றி உள்ளே வந்து நுழைந்து அதைக் கெடுக்க முயல்வதில் பலனாக இந்த எண்ணம் சில மேதாவிகளுக்கு உண்டாக்கப்பட்டு வருகிறதே அல்லாமல் வேறென்ன? தவிர பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு என்று ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இயக்கங்களில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுகிறார்களா? “பிராமண தர்ம பரிபாலன சபை” என்கிற பார்ப்பன சபைகளில் எத்தனை பார்ப்பனரல் லாதாரை பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற இவர்கள் சொல்ல முடியுமா?
டாக்டர். சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி பதவி முதல் பிரைஸ் விழுந்த உடனே ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் நாக்கில்தண்ணீர் ஊற
ஆரம்பித்து விட்டது. அன்று முதல் இன்றுவரை இனியும் தனக்கு மந்திரி பிரைஸ் விழுக என்ன தந்திரம் செய்யலாம் என்பதே அவருடைய கருத்தாகி விட்டது. அதற்கு ஏற்றாப்போல் சர்.சி.பி. என்கிற ஒரு பார்ப்பனர் ஸ்ரீமான். ராமலிங்கம் செட்டியாருக்கு சினேகிதர் போல வேஷம் போட்டதும் குரங் குக்கு கள்ளு வார்த்தது போல் ஸ்ரீமான் செட்டியார் தன்னைப் பற்றி மகா பிரமாதமாய் எண்ணிக்கொள்ள நேர்ந்து விட்டது.
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
போதாக்குறைக்கு இந்த 57019, சினேகத்தை நிஜம் என்று எண்ணிய பல ஆங்கில நாகரீக குடியானவர்களுக்கும் செட்டியாரிடம் ஒரு மோகமுண்: டாய் விட்டது. இவைகளின் பலனாய் ஸ்ரீமான் செட்டியார் ஒரு தனிக்ககஷி ஏற்படுத்த அநேகருக்கு தனிக்கடிதம் எழுதிவிட்டார். ஸ்ரீமான் கேசவ பிள்ளைக்கு எழுதினாராம். சர். சங்கரநாயருக்கு எழுதினாராம். இன்னும் பலருக்கும் எழுதினாராம். ஆனால் அநேகர் அதை ஒப்புக்கொள்ளவில்லை என்பதாகவே தெரிகிறது. சிலர் சுவற்றின் மேல் பூனை போல் இருக்கிறார்கள். முடிவு என்ன ஆகும் என்பது இப்போதே நமக்குத் தெரியும். அதாவது பார்ப்பனர்களில் ஸ்ரீமான் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார் ஒரு காரியத்தில் பிரவேசித்தால் என்ன பலன் அடைவாரோ அதே மாதிரிதான் பார்ப்பனர் அல்லாதூரில் நமது ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியார் அவர்களின் கைராசியும் என்பது நமது தீர்மானம். ஆன போதிலும் ஒரு சிலருடைய சுயநலத்திற்கு ஆக வேண்டி யாரை வேண்டுமானாலும் எந்தக் கொள்கையை வேண்டு மானாலும் பலிகொடுக்கவும் எவ்வளவு பொறுப்புள்ள இயக்கத்தையும் அதன் பலனையும் ஒழிக்கவும் மக்கள் எவ்வளவு சுலபத்தில் துணிந்துவிடுகிறார்கள் என்பதை பொது ஜனங்கள் அறிவதற்கு இதை எழுதினோமே ஒழிய வேறில்லை...
குடி அரசு - கட்டுரை - 07.08.1927
குடி அரசு - 1927 (3) 88
பொழுது புலர்ந்தது
யல நாள் திருடண் ஒரு நான் அகப்படூவாண்
(வண்ணை €தர்தல்)
தேர்தல்களைப் பற்றி அடிக்கடி நாம் எழுதி வந்திருக்கிறோம். அதா வது தேசத்தின் பெயரையும் காங்கிரசின் பேரையும் சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் பதவி பெறுவதற்காகவும், அவர்களுக்கு கிடைக்காது என்று தோன்றும் சமயங்களில் உண்மை சூத்திரர்களான, அவர்கள் அடிமைகளுக் காவது கிடைக்கும்படி பார்க்கவுமே இதுவரை வேஷம் போட்டுக்கொண்டு வந்தார்கள் இப்போதும் போடுகிறார்கள், இனியும் போடப்போகிறார்கள்.
இதைப்பற்றி சுமார், 5. 6 வருஷ காலமாகவே நாங்கள் வாதாடி வரு
கிறோம். நாம் காங்கிரசிலிருந்த காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் காங்கிரசின் பேரால் யாரும் தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்றும் சொல்லி ஒவ்வொரு தீர்மானத்தையும் எதிர்த்து அனேகமாக வெற்றி பெற்றுக்கொண் டேவந்தோம். கடைசியாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடும், கல்யாணசுந்தர: முதலியாரும் பார்ப்பனர்களுக்கு உடந்தையாகி காஞ்சீபுரம் மகாநாட்டில் இதை நிறைவேற்ற அனுமதித்து விட்டார்கள். அந்த சமயத்தில் கூட நமக்கு அதை எதிர்த்துப் பேச சவுகரியம் கொடுக்காமல் நாம் தண்ணீர் சாப்பிடுவதற்
குள் இந்த தீர்மானத்தை பிரேரேபித்து ஆமோதித்து முடித்து விட்டார்கள். என்றும் நாம் தண்ணீர் சாப்பிட்டு திரும்பி பார்த்ததும் நம்மை எல்லோரும் பார்த்து ஏமாந்து போய் விட்டாயே என்று சிரித்தார்கள் என்றும் அப்போதே
“குடி அரசில்” எழுதி இருக்கிறோம். அது முதல் காங்கிரசின் பேரால் தேர்த லுக்கு நிற்பது என்பதும், அதுவும் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் களைத்தான் நிறுத்துவது என்பதும், வழக்கமாய் வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு முன்னால் கூட காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் தேர்தல் நடத்து வதை நாம் ஆங்காங்கு போய் கண்டித்தும் வந்திருக்கிறோம். நமக்கு விரோத. மாக பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் கூட நம்மை கண்டித்து காங்கிரசுக் காரருக்கே ஓட்டு கொடுக்கவேண்டும் என்று எழுதி வந்தன. இந்த கொடுமை களே நம்மை வகுப்புவாரி தத்துவத்தை இன்னும் அதிகமாக வலியுறுத்தவும்
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
செய்தன. அதற்கும் விரோதமாக அனேக பார்ப்பனரல்லாதார் பத்திரிகை
களும் கூட எழுதியும் வந்தன. இவ்வளவும் இந்த 2, 3 ஹு திய *குடி அரசினால் வெளியாகி பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும், தலைவர்களும் உண்மையுணர்ந்து இப்போதுதான் காங்கிரசுக்கு விரோதமாகக்கூட தேர்தல் பிரசாரம் செய்யவும் காங்கிரசுக்கு விரோதமாய் வெற்றி பெற்ற வர்களை ஆதரிக்கவும் முன் வரக்கூடிய நிலைமை வந்திருப்பதோடு காங்கிரசுக்கும் காங்கிரசுக்காரர் என்போர்கள் செலவு செய்யும் பணத்திற்கும் விரோதமாய் பொது ஜனங்கள் ஓட்டு செய்யவும் முன் வந்து விட்டார்கள். இது ஒரு பெரிய கண் விழிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு கூட தொழிலாளர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது, தொழிலாளர்களுக்கென்று தனிக்கட்சி இருக்க வேண்டும், தொழிலாளர்கள்.
தங்கள் தொழிலாளர் கட்சியின் பேராலேயே தேர்தலில் நிற்கத் தகுந்த யோக்கி யதை அடையவேண்டும், அரசியல்காரர்களை நம்பக்கூடாது. அவர்கள் அயோக்கியர்கள். முதலாளிகளுக்கு திருட்டுத்தனமாய் உதவி செய்து தங்கள்: சுயநலம் பெறுவதற்காக தொழிலாளர்களை ஏமாற்றுகிறவர்கள் என்றும் இந்த
4, 5 வருஷமாய் நாம் சொல்லிக் கொண்டும் எழுதிக்கொண்டும் வருவது யாவருக்கும் தெரிந்திருக்கலாம். உதாரணமாக ஒரு காலத்தில் நாம் காங்கிரஸ்
கமிட்டி காரியதரிசியாயிருக்கும் போது கோயமுத்தூரில் ஒரு தொழிலாளர்
கூட்டத்தில் இம்மாதிரி பேசினதற்காக நம்முடைய வழிப் பயணச் செலவை அதாவது காங்கிரஸ் சம்மந்தமாய் நாம் சுற்றுப் பிரயாணம் செய்த பிரயாணச் செலவை ஒப்புக்கொள்ள முடியாது என்பதாக ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங் காரும் வரதராஜுலு நாயுடுவும் ஒரு கமிட்டி மீட்டிங்கில் சொன்னார்கள் அப்போதும் நாம் இதையே தான் சொன்னோம்.
இன்றைய தினம்தான் அது தொழிலாளருக்கும் மற்றும் தொழிலாள நண்பர்களுக்கும் நிஜமான நாளாயிற்று இப்போது எங்கு பார்த்தாலும் வரிசையாக காங்கிரசு அபேக்ஷகர்கள் என்போர்கள் தோல்வி அடைந்து வரு வதும், காங்கிரஸ் அபேக்ஷகர்கள் அல்லாதவர்கள் மற்ற எந்த கட்சியாரா
னாலும் ஒரு கட்சியிலும் சேராதவர்களானாலும் வெற்றி பெறுவதும் பத்திரிகைகளில் பார்த்து வருகிறோம். இந்நிலைமை நமது நாட்டில் ஏற்பட்டி ருப்பதற்கு உண்மையாளர்கள் சந்தோஷப்படாமல் இருக்கவே முடியாது. நாட்டில் கொஞ்சமாவது கண் விழிப்பு ஏற்பட்டிருக்கிறதென்பதை யாவரும். ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த விழிப்பை பாழாக்காமல் மக்களை மேலும் மேலும் கண் விழிக்கச் செய்தால் நாட்டையும், மக்களையும் வஞ்சகர்கள், அயோக்கியர்கள், சுயநலக் காரர்கள் கையிலிருந்து தப்புவித்த பலனை அடையலாம் என்பது நமது ஆசை.
உண்மையிலேயே சென்னைத் தொழிலாளர் சார்பாக வெற்றி பெற்ற
ஸ்ரீமான் செல்வபதி செட்டியார் தேர்தலின் மூலம் நமக்கு புதிய ஊக்கம்
குடி அரசு - 1927 (3) 90
உண்டாகிறது. நாம் செல்வபதி செட்டியார் வெற்றி பெறமாட்டார் என்றும் வீணாக தொழிலாளர்களுக்கு முதல் முதல் தோல்வி உண்டாகக்கூடாது என்றும் கருதி ஸ்ரீ செல்வபதி செட்டியாருக்கும் ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியாருக்கும் பின் வாங்கிக்கொள்ளும்படி கடிதம் எழுதினோம். ஏனென்
றால் நாம் சென்னைக்கு சென்ற வாரம் போயிருந்த பொழுது தொழிலாளர். தேர்தலைப்பற்றித் தான் சில கனவான்களையும் அதில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருந்தவர்களையும் விசாரித்தோம். அவ்விசாரணையில் தொழிலா
ளர் பிரதிநிதி வெற்றி பெற முடியாதென்றும் எதிராளிகளால் ஓட்டர்களுக்கு தாராளமாய் பணம் வினியோகிக்கப்படுகிறதென்றும் இது வரையில் ஆயிரக் கணக்காய் சிலவாகிவிட்ட தென்றும், இனியும் செய்யக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிந்தோம். அதிலிருந்து நமக்கு நம்பிக்கை இல்லாததால் இம் மாதிரி யோசனை சொன்னோம். அப்படி இருந்தும் இன்றையதினம் தொழிலாளருக்கு வெற்றி என்று பார்த்ததும் நாம் எவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என்பது யோசிப்பவர்களுக்கு விளங்கும்.
ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளத் தக்க புதிய விஷயம் ஒன்றும் இல்லை. ஸ்ரீமான் “டூடல்” முதலியார் இதற்காக எவ்வளவோ தூரம் பார்ப்பனரல்லாதாரை பொம்மை போட்டு வைதும் வீணாய் போய் விட்டதே என்று பரிதாபப்படாமல் இருக்க முடியாது. மற்றபடி ஜனாப் அமீத்கான் தோல்வியிலும் அதிசயத்தக்க விஷயம் ஒன்றுமில்லை. மற்ற தேர்தல்களும் சூதாடுவது போலவே இரண்டில் ஒன்று என்பதாக முடிந்திருக்கின்றன. எனினும் “காங்கிரஸ்”, “தேசீயம்””, என்பவைகளின் புரட்டு வெளியாய் வருகிறது என்பதைத் தவிர வேறு விசேஷமில்லை..
ஸ்ரீமான் செல்வபதி செட்டியார் முதலியவர்கள் வெற்றியினால் கார்ப் பொரேஷனுக்கு பிரமாதமான தன்மை வந்துவிடும் என்பதாகவும் நாம் மகிழ்ச்சியடையவில்லை. நாட்டிற்கு உண்மையான நன்மையாய் தொழிலாளர் நன்மைக்காக அவர்களது ஆதிக்கம் வளர அஸ்திவாரக்கல் பிரம்பூர் தேர்தலில் போடப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தவரை மகிழ்ச்சி அடை கிறோம். அய்யோ பாவம் அய்யங்கார்களே! அவர்களது கோஷ்டியார்களே!'
தினமும் அமாவாசை இருட்டு ஏற்படாது. தினமும் திருட்டு கிடையாது. “பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுப் போவான்” என்பது உங்கள் விஷயத்தில் மாத்திரம் ஏன் பலிக்காமல் போகும் என்று எண்ணி ஏமாறுகிறார்.
கள் என்று உங்களுக்கும் சாமாதானம் சொல்லி விட்டு, சென்னை தவிர வெளியிடங்களில் உள்ள உங்களைப் பின்பற்றுகிறவர்களையும் இனியாவது யோக்கியமாய் நடந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி இதை முடிக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 14.08.1927
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
“மகாத்மாஷம் வருணாச்சிரமமும்” எண்று
தலைப்பில் சசண்ற வாரம் எழுதினதிற்கு ஆதாரமான மகாத்மாவின் யிரசங்கக்குறிப்பு
மகாத்மா காந்தி வருணாசிரமத்தைப் பற்றி மைசூரில் பேசியதாக சென்ற வாரம் குடியரசில் குறிப்பிட்ட விஷயத்தின் விபரமாவது.
தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் இந்து சமூகத் திலிருந்து விலகுவதற்கு முன்னால் சுயராஜ்யம் சித்திக்குமென்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்து மதத்தில் நான் அறிந்த மட்டில் வருணாசிரம தர்மம் ஒரு வருணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு வருணத்தாரைவிட உயர்ந்தவர்கள் என்று நினைக்க இடமில்லை.
ஒவ்வொரு வருணாத்தாருக்கும் ஒவ்வொரு தருமம் விதிக்கப்
பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வருணத் தார் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். பிராமணனுக்கு சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறை வேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமண னுடைய முக்கிய தர்மம். எளியவர்களை பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய
தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும் போது மற்ற எல்லோரிலும் மேம். பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வர்ணத்தினர்களும் தத்தம் தர்மங் களை கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். (இந்த இடத்தில் வைசியர், சூத்திரர் என்கிற வார்த்தை மகாத்மாவே சொல்ல வில்லையோ, அல்லது “சுதேசமித்திரன்” பிரசுரிக்கவில்லையோ தெரிய வில்லை.)
இப்படியிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது. வருணா
சிரம தர்மமானது சமுதாய நலத்தை ரசிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி
ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரசிப்பதற்கு ஏற்பட்டதல்ல.” இந்த வாக்கியங்கள் சுதேசமித்திரன் பத்திரிகையில் காணப்படுகின்றன.
குடி அரசு - குறிப்புரை - 14.08.1927.
குடி அரசு - 1927 (3) 92
அரசியல் புரட்டு
இதுகாலை இந்திய நாட்டை சுயமரியாதை அடைய முடியாமலும் விடுதலை பெறமுடியாமலும் உண்மையாய் தடுத்துக்கொண்டிருப்பவை எவை என்பதாக ஒரு அறிஞன் யோசித்துப் பார்ப்பானேயாகில் இந்துமத இயக்கமும் இந்திய அரசியல் இயக்கமுந்தான் என்பதாகவே முடிவு
செய்வான்.
நம் மக்களின் சுயமரியாதைக்கு இடையூறாயிருப்பது இந்து மதம் என்பதை அநேக தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். இது போலவே இந்திய அரசியல் இயக்கத்தால் நமது விடுதலை தடைப்பட்டு அடிமைத்தன்மை பலப்பட்டு வருவதையும் பலதடவை பேசியும் எழுதியும் வந்திருப்பதுடன், இவ்விரண்டும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கும் சுயநலத் திற்கும் பார்ப்பனர்களால் நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதென்பதையும் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். எனினும், இதுசமயம் அரசியல் புரட்டைப் பற்றியே இத்தலையங்கம் எழுதுகிறோம். உதாரணமாக அரசியல் இயக்கம் தோற்றுவித்த காலத்திலேயே இதை தோற்றுவித்தவர்கள் கருத்தென் னவென்பதை யோசித்தால் விளங்கும். அதாவது அரசாங்க உத்தியோகத்தில்
இந்தியர்கள் சமஉரிமை பெறவும், அரசாங்க அதிகாரத்தில் பங்கு பெறவும், அரசாங்கத்தையே நடத்திக்கொடுப்பதற்கு கட்டுப்பட்டு அரசாங்க சேவை செய்யவுமே தான் கருத்துக்கொண்டு நமது மக்கள் பேரால் சில படித்தவர்கள் என்னும் பார்ப்பனர்கள் அரசியல் இயக்கங்களை ஆரம்பித்தார்களே ஒழிய வேறில்லை.
இவ்வியக்கம் தோன்றிய நாள் தொட்டு அதன் உத்தேசப்படியே உத்தியோகங்களும் அதிகாரங்களும் ஏராளமாக பெருகவும், அவைகள் அவ்வளவும் பார்ப்பனர்கள் அடையவும் ஏற்பாடு ஆகி வருகிறதை யார் மறுக்கக்கூடும், பார்ப்பனரல்லாதார் யாராவது இவ்வுத்தியோகங்களிலோ, அதிகாரங்களிலோ பங்கு பெற ஆசைப்பட்டு விட்டால், அந்த கஷணமே பார்ப்பன அரசியல் மாற்றமடைந்து விடுகிறது. பார்ப்பனரல்லாதாருக்குள் க௯ஷி உண்டாக்கி விடப்படுகிறது. பார்ப்பனரல்லாதார் மீது தேசத்துரோகமும், வகுப்பு துவேஷமும் கற்பிக்கப்பட்டு விடுகிறது. பார்ப்பனரல்லாதாரும் தங்கள் தங்கள் சமூகத்துக்கு துரோகம் செய்து, சமூகத்தை காட்டிக்கொடுத்து,
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சமூகத் தலைவர்களையும் கொள்கைகளையும் கொலை செய்தாலொழிய உத்தியோகம் சம்பாதிக்க முடியாத நிலையில் பார்ப்பனர்கள் ஆக்கி விட்டார்.
கள். யாராவது பார்ப்பனர்களை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாதார். சமூக நலத்தைக் கோரி உழைப்பதின் மூலம் ஏதாவது உத்தியோகம் பெற்று விட்டால் அந்த உத்தியோகத்தை அழிப்பதற்கு எவ்வளவு பிரயத்தனங்கள் வேண்டுமானாலும் செய்து அதை அழித்துவிடுகிறார்கள்.
சாதாரணமாய் யோசித்துப் பார்ப்போமானால் பார்ப்பனர்கள் என்ன அக்கிரமங்கள் செய்தாலும் அவர்கள் எப்படியாவது உத்தியோகம் பெற்று தங்கள் வகுப்பு நலத்தை பெருக்க அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்.
கள். பார்ப்பனரல்லாதார் எவ்வளவு நியாயமாய் நடந்தாலும் அவர்களுக்கு உத்தியோகம் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் அதை தங்கள் வகுப்பு நலத்
துக்கு நடத்த விடுகிறதில்லை..
இதற்கு உதாரணம் “மகாத்மா காந்தியால் தேசம் பாழாகி விடுகிறது அராஜகம் வலுத்து விடுகிறது. அவரை ஜெயிலில் பிடித்துப்போட வேண்டும்” என்பதாக மகாகனம் சீனிவாச சாஸ்திரியும், சர்.சங்கர நாயரும் ஆகிய இருவருமே சொன்னார்கள்.
ஆனால் கனம் சீனிவாச சாஸ்திரிக்கு மீ£4000 ரூபா சம்பளமுள்ள உத்தியோகம் கிடைத்தது. அடுத்த சீர்திருத்தத்தில் கவர்னர் வேலையும் கிடைக்கப் போகிறது. சர். சங்கர நாயருக்கோ கேசு ஏற்பட்டு 2 லட்ச ரூபா கையிலிருந்த பணம் செலவாயிற்று; யாதொரு உத்தியோகத்திற்கும் லாயக்
கில்லாமலும் போய்விட்டார்.
தவிர, பிரிட்டிஷாருக்கும், ஜர்மானியருக்கும் யுத்தம் நடந்து கொண்டி ருக்கும் போது அமெரிக்கா கவர்மெண்டாருக்கு, இங்கிலீஸ் கவர்ன்மெண்
டுக்கு விரோதமாய் கடிதம் எழுதின கூட்டத்தைச் சேர்ந்தவர் சர்.சி.பி. ராம சாமி அய்யர். ஆனால் அவருக்கு மாதம் 2000 ரூபா சம்பளமுள்ள அட்வொ
கெட் ஜனரல் வேலையும் பிறகு மாதம் 5500 ரூபா சம்பளமுள்ள நிர்வாக சபைசட்ட மெம்பர் வேலையும், இரண்டு தடவை ஜினீவாவுக்கு இந்தியப் பிரதிநிதியாய் போகும் பதவியும், திரும்பி வந்து சட்ட மெம்பர் வேலை காலாவதியானதும், இந்திய கவுன்சில் சட்ட மெம்பர் வேலைகூட கிடைக்கக் கூடிய யோகமும் இருந்து வருகிறது. பஞ்சாப் படுகொலையை ஆதரித்த,
கனம் நரசிம்மேஸ்வர சர்மாவுக்கு மாதம் 6500 ரூபா சம்பளமுள்ள இந்திய கவுன்சில் வேலையும் கொடுக்கப்பட்டது.
ஒத்துழையாமையை வைத ஸ்ரீமான் டி. ரங்காச்சாரியாரின் பிள்ளை குட்டிகளுக்கெல்லாம் 1000,500 சம்பளமுள்ள உத்தியோகங்களும் கொடுக்கப் பட்டது. அவருக்கு இந்தியப் பிரதிநிதியாய் வெளி நாடுகளுக்குப் போகத்
குடி அரசு - 1927 (3) 94
தகுந்த பாக்கியமும் கிடைத்தது. அடுத்த சட்ட மெம்பர் வேலைக்கு அஸ்திவாரக் கல்லும் நாட்ட முயற்சி நடந்து வருகிறது.
“ஒத்துழையாமை சட்ட விரோதம், காந்திக்கு மூளை இல்லை, தேசத்
திற்கு சிறைக்கு போய்விட்டு வந்தவர்களை வகுப்புத் துவேஷத்திற்காக சிறைக்கு அனுப்ப வேண்டும்” என்று சொன்ன ஸ்ரீமான் சீனிவாசயங்கார்
காங்கிரஸ் தலைவர், இந்திய அரசியல் தலைவர் முதலிய பெருமைகளோடு விளங்குகிறார்.
ரிஷி மூலம், நதிமூலம் கேழ்கக்கூடாது என்பதுபோல் நமது ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு இவைகள் யாருக்கும் தெரிய முடியாதவர், யாரும் கேட்கவும் கூடாது என்கிற பெருமை படைத்த ஸ்ரீமான் சத்தியமூர்த்தியவர்கள் எவ்வளவு தூரம் தேசத்துக்காக ஊதியம் இல்லாமல் பாடுபட்டவர் எவ்வளவு தூரம் சொந்தமான அபிப்பிராயமுடையவர் எவ்வளவு தூரம் நாணையமானவர் என்பது அறியாதார் ஒருவருமிருக்க மாட்டார்கள். அப்பேர்பட்டவர் இன்று சென்னை மாகாண அரசியல் தலைவ
ராய் விளங்குவதோடு சர்க்காரை எதிர்க்கும் கட்சி தலைவராயும் இருப்பதோடு கவர்னர் பிரபுவையும், கவர்னர் ஜனரல் பிரபுவையும் நேரில் பார்த்துப் பேசக் கூடியவராயும், அடுத்த காங்கிரசுக்கு அரசியல் திட்டம் ஏற்படுத்துபவராகவும் இருக்கிறார். இவர்களெல்லாம் அரசியலின் பேரால் பெரிய மனிதர். களானவர்கள் அல்லவா?
இது தவிர, “உத்தியோகம் கூடாது” என்று வேஷம் போடுகிற நம்நாட்டு அரசியல் பார்ப்பனர்களின் குடும்பத்தார்களாகிய ஒரு அய்யங்கார். இன்ஸ்பெக்டர் ஜனரல் ஆப் பஞ்சாயத்து என்பதாக ஸ்ரீமான் என்.கோபால் சாமி அய்யங்கார் மீ” 2000 ரூ. வாங்கிக் கொண்டிருக்கிறார் மற்றொரு அய்யங்கார் ஸ்ரீமான் வி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பரோடா திவானாக 1573000
ரூ வாங்கிக் கொண்டிருக்கிறார், மற்றொரு அய்யங்கார் ஸ்ரீமான் டி. விஜயராகவாச்சாரியார் மீ” 3000 ரூ. சம்பளம் வாங்கிக்கொண்டு டில்லியில் இருக்கிறார். மற்றொரு பார்ப்பனர் ஸ்ரீ.டி. ராகவய்யர் என்பவர் 1572000 ரூ. வாங்கிக் கொண்டுரிவினியூ போர்டு மெம்பர் கூட்டப்பார்க்கிறார். மற்றொரு பார்ப்பனர் ஸ்ரீமான் பி. சீதாராமய்யர் என்பவர் ம££2000 ரூ. வாங்கிக் கொண்டு கவர்மென்ட் காரியதிரிசியாய் இருக்கிறார். இன்னம் எத்தனையோ பார்ப்பனர்,
கலெக்டர், ஐகோர்ட் ஜட்ஜி முதலிய பெரிய உத்தியோகங்களில் மீ“1000,2000, 3000 வீதம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒருவராவது இந்த உத்தியோகங்கள் பெறுதற்குப் பார்ப்பன சமூகத்தைக் காட்டிக் கொடுத்தாவது பார்ப்பன சமூகங்களின் அக்கிரமமான கொள்கை களைக் கண்டித்தாவது தங்கள் சகோதரர்களான பார்ப்பனர்களை வைதாவது ஒரு சிறு உத்தியோகமும் பெறவேயில்லை. ஆனால், நம்மவர்கள் ஒரு சிறு.
முனிசிபல் கவுன்சிலர் வேலை பெறவேண்டுமானால் என்ன செய்தால்
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கிடைக்கிறது என்பது நேயர்களுக்குத் தெரியும். பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதாரை வைதால் தான் கிடைக்கிறது. உதாரணமாக இப்போதைய மந்திரிகள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்தால் முடிகிறது என்பதைப் பார்த்தால் தெரியும். அன்றியும் ஸ்ரீமான்கள் டி.ஏ. ராமலிங்கம் செட்டியாரும் வெள்ளியங்கிரிக் கவுண்டரும் முறையே எவ்வளவு எவ்வளவு படித்தவர்கள் எவ்வளவு பெரிய குடும்பத்தார்கள் கவர்ன்மெண்டுக்கு எவ்வளவு தூரம் நல்ல பிள்ளைகளாய் இருந்தவர்கள் இப்படியெல்லாம் இருந்தும் ஒரு L52000 ரூபாய் உத்தியோகத்திற்கும் ஒரு சட்டசபை முதலிய
சிறு பதவிகளுக்கும் எவ்வளவு பெரிய கொலை பாதகம் செய்ய வேண்டி யதாய் இருக்கிறது. தங்கள் சமூகத்தார் கூடி ஒரு ஒழுங்குபடியான சபையின்
மூலம் விதிப்படியான பிரதிநிதிகள் கூடி செய்த தீர்மானத்தை அழிப்பதற்கு எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கிறார்கள். இன்னும் ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு பதவியோ உத்தியோகமோ வேண்டியிருந்தால் இன்னமும் என்ன என்ன செய்யும்படி ஏற்பட்டு விடுகிறது என்பவை களைப் பார்ப்பவர். களுக்கு விளங்காமல் போகாது. இதுகளுக்கெல்லாம் காரணம் அரசியல் புரட்டுத்தானா அல்லவா? இந்த உத்தியோகங்கள் அரசியல் புரட்டுகளினால் உண்டானதுகளா அல்லவா? இதுகள் பார்ப்பனரல்லாதார் கழுத்தைத் திருகுகிறதா இல்லையா? இவற்றை எதற்காக சொல்லுகிறோம் என்றால் நமது நாட்டு அரசியல்இயக்கம் வெறும் புரட்டும் அயோக்கியத் தனமும் கொண்டது என்பதையும் அது பார்ப்பனர்கள் பிழைக்கவும் பார்ப்பனரல்லாதாரை: அழிக்கவுமான நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டு அந்தப் படியே நடந்து வருகிறது என்பதையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் யோக்கியமான
பார்ப்பனரல்லாதார் அரசியல் மூலம் தேசத்திற்கோ, சமூகத்திற்கோ நன்மை செய்யமுடியாது என்பதையும் வெளியாக்கச் செய்யவும் எப்படியாவது இம் மாதிரியான அரசியல் இயக்கங்களை ஒழித்தாலல்லது நாட்டிற்கு விடுதலை யோ நமது சமூகத்திற்கு சுயமரியாதையோ கிடைக்க மார்க்கமில்லை என்பதை ஜனங்கள் அறியவும் இதை எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.08.1927
குடி அரசு - 1927 (3) 96
திராவிடன்
“திராவிடன்” பத்திரிகை விஷயமாய் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி வந்தபடி அதாவது திராவிடன் பத்திரிகையின் ஆசிரியத் தொழிலையும் நிர்வாகத்தையும் ஏற்றுக் கொள்வது என்பதாக முடிவு ஏற்பட்டு விட்டதால் அநேகமாக இம்மாத முடிவுக்குள்ளாகவே ஏற்றுக்கொள்ளக்கூடும்.
தன வணிக நாட்டு சுற்றுப் பிரயாணத்திற்குப் பிறகு உடல்நிலை சற்று கெட்டுப்போய் இருக்கிறது. ஆதலால் ஒரு வாரம் குற்றாலம் போய் அங்கி ருந்து கொண்டே சென்னை போக வேண்டிய விஷயங்களைப் பற்றி ஏற்பாடு செய்யலாமென்பதாக நினைத்திருக்கிறோம். அநேகமாக 17 தேதி அல்லது
18 தேதி இவ்விடமிருந்து குற்றாலத்திற்கு புறப்படுவதாயிருக்கலாம். அங்கி
ருந்து இம்மாத முடிவுக்குள்ளாகவே சென்னை செல்ல உத்தேசம்.
ஆங்காங்குள்ள நண்பர்கள் அதற்குள்ளாக ஒரு 500 சந்தாதாரர். களையாவது சேர்த்து அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். திராவிடனை ஒப்புக் கொள்ளும்படி நமக்கு கட்டளை இட்ட சுமார் 500க்கு மேற்பட்ட நண்பர்களில் அநேகர் அதாவது ஒருவர் நாம் ஒப்புக்கொண்ட அன்றே 100 சந்தா சேர்த்துக் கொடுப்பதாகவும் மற்றவர் 50 சந்தா சேர்த்துக் கொடுப்பதாகவும் பலர் 20, 30 வீதம் சேர்த்துக் கொடுப்பதாகவும், மற்றும் பலர். வேறு என்ன என்னமோ உதவி செய்வதாகவும் வாக்களித்திருக்கிறார்கள். தஞ்சை, மதுரை, ஜில்லா நண்பர்கள் மாத்திரம் 1000 சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுப்பதாய் வாக்களித்திருக்கிறார்கள். எல்லா கனவான்களுக்கும் இது சமயம் வாக்குகளை நிறைவேற்றி நமக்கும் குற்றாலத்திற்கு எழுதும் படியாய்
வேண்டிக் கொள்ளுகிறோம்.
இதை நண்பர்கள் அஸ்வார்சமாய் கவனிக்கக்கூடாது என்பதையும்
தெரிவித்துக் கொள்ளுகிறோம். தற்காலம் உலகத்தை புரட்டி வருவதே பத்திரி. கைகள் தான் என்பதையும் அந்தவிஷயத்தில் நாம் அஸ்வார்சமாய் இருந்து வந்ததால்தான் நமது சமூகத்துக்கு இவ்வளவு சுலபமாய் ஒரு கைக்குள் அடங்கக்கூடிய கூட்டத்தார் இவ்வளவு கொடுமைகள் செய்ய இடமேற்பட்டு வந்தது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
“குடிஅரசு” என்கிற குட்டிப் பத்திரிகையால் பாமர மக்கள் எவ்வளவு
தூரம் விழிப்படைய முடிந்தது என்பதையும் எவ்வளவு தூரம் சுயமரியாதை: உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அதுபோல் “திராவிடன்” என்கிற தினப் பத்திரிகையால் நமது முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் எவ்வளவு தூரம் எதிரிகளாயுள்ளவர்களின் கொடுமையை எடுத்துக்காட்டக்
கூடும் என்பதையும் கவனித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் 6 வருஷம் அதிகாரத்திலிருந்தும், நியாயம். ஒழுங்கு. மனச்சாக்ஷி என்கிற பூச்சாண்டிகளுக்கு பயந்துகொண்டு கேவலம் தங்கள்
கக்ஷி பத்திரிகையின் நன்மைக்கு கூட ஒரு காரியமும் செய்யாமல் காலத்தை கடத்தி வந்தார்கள்.
நமது விரோதிகளால் சிருஷ்டிக்கப்பட்டமந்திரிகளைக் கொண்டு இந்த 6.7 மாதத்தில் நமது விரோதிகள், அவர்கள் ஆதிக்கத்திற்கு எவ்வளவு காரி யத்தை சாதித்துக் கொண்டார்கள் என்பதை யோசிப்பார்களானால் தங்களது இளிச்சவாய்த்தனம் விளங்காமல் போகாது. காலை ஒரு உத்திரவு, மாலை
ஒரு உத்திரவு, இரண்டையும் அடித்துவிட்டு மறுநாள் ஒரு உத்தரவு வீதம் மந்திரிகளின் கையைப் பிடித்துப் போடச் செய்கிறார்களா இல்லையா? இதில் ஏதாவது இரகசியம் உண்டா?
வெளிப்படையாய் இன்ன காரியம் எனக்கு செய்தால் உனக்கு இன்ன காரியம் செய்வேன் என்று கடை வைத்து விற்பது போல் ஸ்தல ஸ்தாபன பதவிகளையும் உத்தியோகங்களையும் விற்கிறார்களா இல்லையா? இம்மாதிரி என்ன என்ன வழிகளில் நமது எதிரிகள் நமக்கு தீங்கு செய்து வருகிறார்கள். இக்கொடுமையில் இருந்து தப்ப நமக்கு இப்பத்திரிகைகள் இல்லாமல் வேறு என்ன ஆயுதம் இருக்கிறது.
ஆகவே நண்பர்களே தயவு செய்து இந்த இரண்டு வாரத்தை வீணாக்காதீர்கள். கண்டிப்பாய் சந்தாதாரர்களைச் சேர்த்துங்கள். செப்டம்பர்.
முதல் தேதிக்கு “திராவிடன்” 3000 காப்பிகள் தமிழ் மக்களிடை உலாவ வேண்டும். இதற்குள் விளம்பரங்கள் சேர்ப்பவர்களும் விளம்பரம் சேர்த்துக் கொடுங்கள். குறைந்தது 2500 காப்பிக்கு உத்திரவாதமேற்று விளம்பரம் சம்பாதியுங்கள். வீணாய் காலத்தைக் கடத்தாதீர்கள். *திராவிடனை' நாம் ஏற்றுக்கொள்வதானால் “குடி அரசு” குறைந்து விடும் என்று சிலர் ஐயுறு கின்றார்கள். அதைப் பற்றி யாரும் கவலைப் பட வேண்டியதில்லை. அது எப்படியும் உங்கள் தயவால் தமிழ் மக்களிடம் 3000 பிரதிகள் பிரதி வாரமும் உலாவிக் கொண்டுதான் இருக்கும். எனவே, தமிழ் நாட்டில் உள்ளவர்களும் வெளிநாட்டில் உள்ளவர்களும் சற்று கவனம் வைக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.08.1927.
குடி அரசு - 1927 (3) 98
ஈரோட்மல் முகல் மந்திரி திருவிழா
ஈரோடு முனிசிபாலிட்டியாரால் ஒரு ஹைஸ்கூல் திடீரென்று ஏற்படுத் தினதின் கருத்தையும், அதன் பேரில் மஹாஜன ஸ்கூல்காரர்கள் முதன்
மந்திரிக்கு எழுதியதின் பேரில் ஷி ஹைஸ்கூலில் 4 வது 5 வது பாரங்களை: எடுத்துவிட வேண்டுமென்று மந்திரி உத்திரவு போட்டார் என்பதையும், 23 வாரங்களுக்கு முன்பு “குடி அரசில்” எழுதியிருந்தோம். முதன் மந்திரியின் இந்த உத்திரவின் பேரில் ஈரோடு சேர்மென் சில பலமான சிபார்சுகளைப்
பிடித்துக் கொண்டு போய் அதாவது நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு எதிரிடையாய் க்ஷி சேர்ப்பதாய்ச் சொல்லி, அந்த உத்திரவை மாற்றி மறுபடியும் ஒரே அடியாய் 4வது, 5வது, 6 வது பாரங்கள் வைத்துக்கொள்ள உத்திரவு போடும்படி கேட்க, நமது மந்திரியார் அதே மாதிரி உத்திரவு போட்டார். தவிரவும் இந்தப் பள்ளிக்கூடத்தை திறந்து வைக்க இதே மந்திரி யை ஆரம்பத்தில் முனிசிபல் சேர்மன் சீமான் சீனிவாச முதலியார் கேட்டுக் கொண்ட பொழுது, வருவதாய் வாக்களித்து விட்டு மறுபடி, யார் யாரோ முதல்
மந்திரியிடம் சேர்மெனின் யோக்கியதைகளைச் சொன்ன பிறகு, அப்படி யானால் நான் அங்கு வருவதில்லையென்று சொல்லி வராமல் நின்று கொண்டார். சேர்மென் எத்தனையோ தந்தி அடித்தும் எத்தனையோ சிபார்சு பிடித்தும்ஒரே அடியாய் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பிறகு நம்பிக்கை யில்லாத தீர்மானம் வருவதை அறிந்ததும் யார் என்ன சொன்னாலும் கேழ்க்க வேண்டியவராய் விட்டதோடு ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியார் சொல்படி நடக்க வேண்டியவரானதினாலும் மறுபடியும் அதே பள்ளிக்கூடத்திறப்பு விழாவுக்கு பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாசத்திற்கு மேலான பிறகு வந்து சேர்ந்தார்.
முனிசிபல் பள்ளிக் கூடத்திற்கு “பிரப்” பள்ளிக்கூடம் என்று பெயர். வைக்கப்பட்டது. முனிசிபல் ரீடிங் ரூமுக்கு “காக்ஸ்” ரீடிங் ரூமென்று பெயர். வைக்கப்பட்டது. இந்தப் பெயர்களுடன் பள்ளிக் கூடத்தையும் ரீடிங்
ரூமையும் திறந்து வைத்தார்.
இந்தப் பெயர்கள் முனிசிபல் பணங்களை சேர்மென் அடித்த கொள் ளைக்கு உதவியாக விருந்த கனவான்களுக்கு லஞ்சமாகக் கொடுப்பதாய் எண்ணிக்கொண்டு இட்ட பெயராக விளங்கிற்று. இந்தபெயர் வைக்கும்
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சடங்குக்கு குறைந்தது 500 ரூபாயாவது முனிசிபாலிட்டி கணக்கில் செலவு எழுதக் கூடும். பகுதியாவது பாடுபட்டவருக்கும் ஆகும். இந்த மந்திரி முதலில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்ததும், முதலில் பள்ளிக் கூடம் ஒரே அடியாய் 456 வது பாரங்கள் வைக்க உத்திரவு கொடுத்துவிட்டு மறுபடி அதை கேன்சல் செய்ததும், மறுபடி அதை 5 வது 6 வது பாரங்கள் வைக்க உத்திரவு கொடுத்ததும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வேலை செய்வதற்கு லஞ்சமாகக் காணப்பட்டது.
இவ்வளவோடு போகவில்லை “குதிரை கீழே தள்ளினதோடு குழியும் பறித்தது” என்பது போல் முதல் மந்திரியார் மகாஜன இஸ்கூலையும் வந்து பார்ப்பதாக தானாகவே சொல்லி அனுப்பி வந்து பார்த்து பள்ளிக் கூடத்தில் பிள்ளைகள் இவ்வளவு கூட்டமாயிருந்தால் வாத்தியார்களுக்கு கஷ்டமல் லவா,ஆதலால் வேறுபள்ளிக்கூடம் ஏற்பட்டதால், எட்மாஸ்டருக்கு நன்மை தானே என்று சொன்னாராம். அய்யோ பாவம் மகாஜன ஹைஸ்கூல் பேரிலும், எட்மாஸ்டர் பேரிலும் மந்திரிக்கு எவ்வளவு பரிதாபம். அதிகமாக பிள்ளை களை பெறுவது கூட தாயிக்கும் தகப்பனுக்கும் கஷ்டம்தான். சிலவற்றை வேறு ஒருவன் ஒப்புக்கொள்வது தாய் தகப்பனுக்கு நன்மைதானே என்று கூட மந்திரிக்கு தோன்றலாம். நமது மந்திரிகளின் தர்பார் அந்தக் காலத்தில் கதை களாக எழுதி வைத்த நவாபுகள் தர்பாரிலும் இப்படி நடந்ததாக எழுத அவர்களுக்கு தோன்றவில்லை.
இந்த மாதிரி நடந்தால் திருப்பூரில் மாத்திரம்தானா மந்திரிகளை ஆதரிக்கக் கூட்டம் போடுவார்கள். இன்னம் சந்து பொந்து மூலை முடுக்கு எல்லா இடங்களிலும் நமது சேர்மன் சீனிவாச முதலியார் ஸ்ரீமான்கள் ராம லிங்க செட்டியார் கம்பெனியார் மாத்திரமல்லாமல் இன்னும் எத்தனையோ கம்பெனியாரும் போடுவார்கள். நடக்கிற வரையில் நடக்கட்டும். இந்த மந்திரிகளோடேயே உலகம் முடியப் போவதில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம்- 14.08.1927.
குடி அரசு - 1927 (3) 100
ஓர் மறுப்பு
திருப்பூரில் பார்ப்பனரல்லாதார் நபரால் கூட்டப்போகும் ஒரு போலி மகாநாட்டிற்கு எதிரிடையாய் ஒரு மகாநாடு கூட்டப் போவதாகவும் அதற்கு ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாயக்கர் முதலியோர்கள் வரப்போவதாகவும், பார்ப்பன பத்திரிகைகளில் வெளியாய் இருக்கிறது. இது கொஞ்சமும் ஆதாரமற்றது. இதற்கு மறுப்பு அசோசியேட் பிரஸ் பிரதிநிதியிடம் நேரில் தெரிவித்தும் பத்திரிகைகளில் வெளியாகவில்லை. நம்மை பொருத்தவரை அப்பேர்பட்ட மகாநாடு கூட்டுவதைப் பற்றி கொஞ்சம் கூடக் கருதவில்லை என்றும் கூட்ட லாமா என்று பலர் யோசனை கேட்பதற்குங்கூட அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - மறுப்புரை - 14.08.1927
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
யாவி டயர்
பஞ்சாப்பில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜனரல் டயர் துரை செத்துப்போனதற்கு அநேக பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாராக கண்டபடி வைது எழுதி வருகின்றன.
செத்துப்போன ஜனரல் டயர் துரையை விட கொடுமையானவர்கள்
நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொண்டு சுகமாய் வாழுகிறார்கள். இந்த டயர்களைப் பற்றி எந்தப் பத்திரிகையாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன. நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதை குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு “கங்காதரா மாண்டாயோ கங்காதரா மாண்டாயோ” என்று கத்த வேண்டியது
தான்.
பாவி டயராவது அவரது வகுப்பு பெண்மீது கல்லுப் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ மூக்கினால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனை போட்டாவது அவர்களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டிலிருக்கும் படுபாவி டயர்கள் நாம் ஒரு குற்றமும் செய்யாமல் ஒருவன் மீதும் கல்லுப்போடாமல் இருப்பதுடன் அவர்: கூட்டத்திற்கும் நாம் நன்றாக சோறு போட்டும் பணம் கொடுத்தும் வரும்போதே, அடியோடு தெருவிலேயே போகக்கூடாது, கிட்டத்திலேயே வரக்கூடாது என்கிறார்களே இதைப் பற்றி யாருக்காவது உறைக்கிறதா. இதனால் நமக்கு அவமானமாயிருக்கிறதே என்று படுகிறதா? எந்தப் பத்திரிக்கையாவது இம்மாதிரி நடவடிக்கைகள் படுபாவி டயர்தான் என்று எழுதுகிறதா என்று பார்த்தால் இல்லவேயில்லை. “பாவிடயர்” தன்னுடைய பிறந்த நாட்டுக்காக நன்மை செய்கிறோம் என்கிற எண்ணத்தின் பேரில் நம்மை கொடுமை செய்தான். நம்முடைய நாட்டுப் பாவி டயர்கள் தங்கள் நாட்டையும் காட்டிக்கொடுத்து தங்கள் நாட்டாரையும் வயிற்றுப் பிழைப்புக்கு மாத்திரம் கொடுமை செய்கிறார்கள்.
குடி அரசு - 1927 (3) 102
அதோடு நம் நாட்டுப் படுபாவி டயர் கூட்டத்தார் பாவி டையர் செய்த காரியத்தையும் தாங்கிப் பேசி பெரிய பெரிய உத்தியோகமும் பெறுகிறார்கள். அதைப்பற்றியும் பேசுவாரைக் காணோம். எழுதுவாரைக் காணோம். தவிர
வும் ஒருவர் செத்துப்போனதற்கு பிறகு “பாவி செத்தான் என்பது அவ்வளவு மனிதத்தன்மையாகாது. அதிலும் உயிருடன் இருந்து கொண்டு அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான கொடுமை களை செய்கிறவர்களை மூடிவைத்துக் கொண்டிருக்கிறவர்கள் இப்படிச் சொல்லுவது மிக மிக அக்கிரமமானது என்றே சொல்லுவோம்.
குடி அரசு - கட்டுரை - 21.08.1927
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அறிவை அடக்க புதிய சட்டம்
மத ஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப்பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டுமென்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலா யிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக்கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை. நிலைக்க வைத்துக்கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.
இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக
நாம் வலியுறுத்துவோம். மதம் என்று சொல்வது ஒரு மனிதனுடைய கொள்கை: அல்லது அபிப்பிராயமாகுமே யல்லாமல், அது உலகத்திலுள்ள மனித கோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தக் கூடியதல்ல. அப்படி எல்லோரையும் கட்டாயப் படுத்தப் பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லையென்பதே நமது அபிப்பி. ராயம்.உலக மனிதர்களில் 100 - க்கு 99 ¥, பேர்களால் ஒப்புக்கொள்ளுவ தாகச் சொல்லப்படும் கடவுளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்ப தற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
கடவுள் செய்ததாகச் சொல்லுவதையும், சொன்னதாகச் சொல்லுவதை
யும்பற்றியதர்க்கங்களும் மறுப்புகளும் அறிவு உலகத்தில் தினமும் தாண்டவ மாடிக்கொண்டிருக்க உலகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றை எதிர். பார்த்து அடையாமல் போனவர்களில் பலர் கடவுளையுங்கூட தூஷிப்பதை.
யும் உலகம் பார்த்துக்கொண்டும் அனுமதித்துக் கொண்டுந்தான் வருகிறது. கடவுளைப்பற்றியே இவ்வளவு அனுமதிக்கப்பட்டவர் கடவுள் பக்தர்கள். என்று சொல்லுபவர்களைப்பற்றி. கடவுளை அடைய வழிகாட்டிகள் என்று சொல்லுபவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?
எனவே இவ்விஷயங்கள் ஒருவனுடைய அபிப்பிராயமாகுமே யல்லாமல் அதுவே சத்தியமாய் விடாது. உலகத்தில் எதாவது சீர்திருத்தம் என்பது ஏற்பட வேண்டுமானால் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் கண்டிப்பதும் மறுப்பதும், ஒருவர் கொள்கையை ஒருவர் கண்டிப்பதும்
குடி அரசு - 1927 (3) 104.
மறுப்பதும் அனுமதிக்கப் பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்குச் சட்டம் போட்டு தடுத்துவிட்டால் அது மனிதனின் அறிவு வளர்ச்சியை தடுத்ததா குமே யொழிய மற்றபடி அது எந்த விதமான நன்மையையும் செய்ததாக ஆகாது. அன்றியும் இம்மாதிரியாக ஒரு சட்டமியற்றுவது அநாகரிகமும் காட்டுமிராண்டித் தனமுமே யாகும். இப்பேர்பட்ட விஷயங்களில்தான் மக்களுக்கு விசாரணை செய்ய தாராளமாக இடம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு இடையூறாய் உள்ளவைகளை யெல்லாம் களைந்தெறியவேண்டும். ஒவ்வொரு காலத்திலுள்ள மக்கள் அறிவுநிலைக் கேற்றவாறு ஒவ்வொரு கொள்கைகள் பரப்பப்படுவதும், அது நிலைபெறுவதும், அதற்கு கோடிக் கணக்கான மக்கள் பின்பற்ற ஏற்படுவதும் சகஜமானதேயல்லாமல் அதில்
ஒன்றும் அதிசயமில்லை. அதுபோலவே தற்காலம் உள்ள மக்கள் அறிவு
நிலைக்குத் தக்கபடி மாறிக்கொண்டே வருவதும் இயற்கையே ஒழிய அதிலும் ஒன்றும் அதிசயமில்லை. எனவே மக்கள் வெறும் அரசியல் சமூக இயலில்
மாத்திரம் முற்போக்கடைய வேண்டியது பாக்கியாயில்லை. அறிவிலும் ஆத்மார்த்த விஷயத்திலும் மனிதனுக்குள் இன்னமும் என்ன என்ன சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதிலும் முற்போக்கடையவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ பாக்கியிருக்கிறது. அவைகளை கவனிக்கும் போது இந்த அரசியலும் சமூக இயலும் வெகு சிறியதேயாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட முயற்சிகளுக்கு சமூக இயல் முதலியவைகள் அடிகோலிகள். என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்ளலாம். ஆதலால் இம்மாதிரி அறிவு வளர்ச்சிக்கு ஏதுவாகிய பிறப்புரிமையான சுதந்திர உணர்ச்சிகள் சட்டத்தின் மூலமாய் அழிக்கப்பட்டால் உலகம் காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆளாக
நேரிடும் என்பதை அறிவாளிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 21.08.1927.
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பமாப்ப௫கிகறோம்
மகாத்மா காந்தியிண் தமிழ்நாட்டு வியைம்
இது ஒரு சங்கராச்சாரி விஜயமாகிவிடும் என்பதாகவே பயப் படுகிறோம்.
மகாத்மா காந்தியவர்கள் உலகம் போற்றும் பெரியார் என்பதிலும், பரிசுத்தமான எண்ணமுடையவர் என்பதிலும், மக்களுக்கு நன்மை செய்வ
தில் உண்மையான ஆசை உள்ளவர் என்பதிலும், அதே கருத்துக்கொண்டு உழைக்கிறார் என்பதிலும் யாருக்கும் எவ்வித அபிப்பிராய பேதமுமிருக்க நியாயமில்லை.ஆனபோதிலும் அதோடுகூடவே மகாத்மா காந்தியவர்கள்
நம் நாட்டுப் பார்ப்பனர்கள் கையில் சிக்கி இருப்பவர் என்பதையும், நம் நாட்டு விஷயங்களைப்பார்ப்பனர்கள் மூலம் அறிந்து பார்ப்பனக் கண்ணாடியினால் தான் பார்த்தறியக் கூடிய நிலைமையில் இருக்கிறார் என்பதையும், நாம் மறைப்பதில் பிரயோஜனமில்லை. சாதாரணமாக இந்துமுஸ்லீம் அபிப்பிராய பேதங்கள் விஷயமாக மகாத்மா காந்தியவர்கள் எவ்வளவு பேசினார், எவ் வளவு எழுதினார், எவ்வளவு பட்டினி கிடந்தார், எவ்வளவு வருத்தப்பட்டார். என்பதைப் பற்றி வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்டவேண்டியதே இல்லை.
அப்பேர்ப்பட்ட மகாத்மா பிராமணர் பிராமணரல்லாதார் அபிப்பிராய பேதம் என்பதைப்பற்றி நாளிதுவரை என்ன பேசினார், என்ன எழுதினார், என்ன பட்டினி இருந்தார். என்ன வருத்தப்பட்டார் என்று கேள்ப்பதுடன், குருகுல கிளர்ச்சியான கவனிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தபோதுங்கூட ஜாக்கிர. தையாய் இரண்டுபேருக்கும் நல்ல பிள்ளை ஆவதுபோல் தப்பித்துக் கொண்டாரே யொழிய இப்படித்தான் நடக்கவேண்டும் என்று கண்டிப்பாய் சென்னாரா, எழுதினாரா, என்பதை யோசியுங்கள். குரு குல அக்கிரமத்தைப் பற்றி காங்கிரஸ் மகா சபையில் வெளிப்படையாய் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர். எடுத்துச்சொன்ன காலத்தில் மகாத்மா கேட்டுக்கொண்டுதான் இருந்தார். தமிழ் நாட்டில் அதைப்பற்றித் தீர்மானங்களும், அதற்காக ஸ்ரீமான்கள் ராஜ கோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன் போன்ற பார்ப்பனத் தலைவர்கள் ராஜீனா மாக்களும், ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரி போன்ற வர்ணாசிரமிகளின் வாய்க் கொழுப்புகளும் மகாத்மா காந்திக்கு தெரியாமல் இருக்குமென்று யாரும் நம்பிவிடமுடியாது. இப்பேர்ப்பட்ட விஷயங்களுக்கு எதாவது ஒரு சிறு
குடி அரசு - 1927 (3) 106
சமாதானம் எழுதினாரா என்பதை யோசித்துப்பாருங்கள். இவைகள் நாட்டு நலனுக்கு அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லிவிட முடியுமா?
ஒத்துழையாதாரரான ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் திருப்பதி கோர்ட்டில் போய் வக்கீலாக வழக்காடி கேஸ் ஜயித்ததற்கு வாழ்த்துக் கூறினார். ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார், தமது தோப்பில் கள்ளிறக்க
மரம் கொடுத்த ஸ்ரீமான் வெங்கிட்டரமண அய்யங்காருக்கு கிராமம் கிராம மாய் சுற்றி ஓட்டு வாங்கிக் கொடுத்ததை மிக நல்ல காரியமென்று ஆதரித்தார். “கயராஜ்யக்ககஷியார்கள் சட்டசபையில் கள்ளை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டது மிகவும் நல்லது, ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக்கொடுங்கள்” என்கிற மாதிரியாகவும் எழுதினார். இதன்மூலம் சட்டசபையினால் கள்ளை நிருத்தமுடியும் என்று மகாத்மா நம்புகிறார் என்று ஜனங்கள் நினைக்கும் படியும் நடந்து கொண்டார். ஒரு கடவுள், தனது பக்தனுக்காக- என்னென்ன
காரியத்தில்- கடவுள் தன்மைக்கு விறோதமாகக்கூட நடந்ததாக நமது புராணங்களில் சொல்லப்படுகிறதோ அவைகளுக்கு மேலாகவெல்லாம் நமது நாட்டுப்பார்ப்பன பக்தர்களுக்காக மகாத்மா அவர்கள் நடந்து வந்தார். அவ்வளவு தூரம் பிரயத்தினம் எடுத்துக்கொண்ட மகாத்மாவுக்கு ஏன் நமது நாட்டுப்பார்ப்பனர் பார்ப்பனரல்லார் அபிப்பிராய பேதத்தைப்பற்றி ஒரு வார்த்தையாவது பேச எழுதமுடியாமல் போய்விட்டது என்று யோசிக் கும்போது நமக்கு மகாத்மாவைப்பற்றி குழப்பம் ஏற்படுகிறதா இல்லையா? தென்னாட்டிலிருக்கும் இவ்வபிப்பிராயபேதம் மகாத்மாவுக்கு தெரியாது என்று சொல்வதானால் மகாத்மாவைச் சுற்றியிருக்கும் பார்ப்பன பக்தர்கள் அவ்வளவு தூரம் மகாத்மாவை காது கண்ணில்லாமல் செய்து விடுகிறார்கள். என்றாவது ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறதா இல்லையா ? இங்கு நடக்கிற இவ்வளவு அபிப்பிராய பேதங்களையும் கொடுமைகளையும் பற்றி ஒரு
சிறிதும் கவலைப்படுவதற்கு விடாமல் அவரைக்கொண்டு கதரின் பேரால் பார்ப்பன பிரசாரத்திற்கு பணம் சம்பாதிக்க நமது பார்ப்பனர்கள் நமது நாட்
டிற்கு மகாத்மாவை கூடக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் கதர் பண்டு என்பதாக அதற்குப் பெயர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். எப்படி “மதச் சங்கராச்சாரியர்களை' மோக்ஷ பண்டுக்காக நமது வைதீகப்பார்ப்பனர்கள் கூட்டிக்கொண்டு வருகிறார்களோ அதுபோலவே மகாத்மாவை நமது அரசியல் பார்ப்பனர்கள் அரசியல் சங்கராச்சாரியாக நமது நாட்டுக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். இங்கு வரும் வேலையைப்பற்றி மகாத்மாவைக் கொண்டே “ நான் பணத்திற்காக வருகிறேனே அல்லாமல் வேறு காரியத்திற்காக அல்ல” என்பதாக வெளிப்படையாகவும் சொல்லச் செய்து விட்டார்கள். சங்கராச்சாரியாருக்கு மோட்சத்தின் பேரால் கொடுக்கும் பணம் எப்படி பார்ப்பனர்களுக்கே போய்ச்சேரவும் நம்மை இழிவுபடுத்தவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதோ அதுபோலவே மகாத்மாவாகிய அரசியல் சங்கராச்சாரியர்களுக்கும் கதர் பேரால் கொடுக்கப்படும் பணம்
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கண்டிப்பாய் பார்ப்பனர்களுக்கும் நமது இழிவுக்குமே போய்ச்சேர உப யோகிக்கப்படப் போகிறது என்பதே நமது அபிப்பிராயம். என்னவெனில்,
கதர் இலாக்காவில் நமக்கு சிறிது அனுபோகம் உண்டு. கதர் ஸ்தாபனத்தில் நமக்கும் சிறிது தகவலுண்டு. இப்பொழுது வசூல் செய்யப்படும் பணம்
பூராவும் அந்த ஸ்தாபனத்தை நடத்துவதற்குத்தானே அல்லாமல் கதர். வியாபாரத்திற்கு அல்ல.அந்த ஸ்தாபனம் பெரும்பாலும் இப்போது பார்ப்பன அக்கிரகாரமாகவே இருந்து வருகிறது. அதன் நிர்வாகத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாதாரும் தலைமைப் பதவியில் இருக்கிறார்கள் என்று பார்ப்பனர்கள் சமாதானம் சொல்லக்கூடுமானாலும், இது ஏறக்குறைய, ஸ்ரீமான்கள் சுப்பராயன்,ஆரோக்கியசாமி முதலியார் ஆகியவர்கள் பார்க்கும் மந்திரிபதவி பார்ப்பனரல்லாதார் பதவி என்று சொல்லுவதுபோல் தானே ஒழிய வேறு அதிக வித்தியாசமில்லை. சாதாரணமாக திருப்பூர் வஸ்திராலய நிர்வாகத்தை எடுத்துக்கொன்டால் அதில் கதர் வேலையைவிட வர்ணாஸ்ரம பிரசாரமே தாண்டவமாடுவதை பார்க்கலாம். வாஸ்தவத்தில் மகாத்மாவின் நோக்கத்தை அனுசரித்த அல்லது மக்கள் நோக்கத்தை அனுசரித்த பொது ஸ்தாபனமாக கதர் ஸ்தாபனம் இருக்குமானால் கண்டிப்பாய் அவைகளில் வருணாஸ்ரமிகளுக்கு இடமிருக்கவே நியாயமிருக்காது. கதரும், தீண்டாமை விலக்கும், மது விலக்கும் ஒன்றுக்கொன்று சகோதரக்கொள்கையுடையதே ஒழிய வேறுபட்டதல்ல. கதரில் நம்பிக்கையில்லாதவனுக்கு கதர் ஸ்தாபனத்
தில் வேலை கொடுக்கக்கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, குடிகாரனுக்கு கதர் ஸ்டோரில் வேலை கொடுக்கக்கூடாது என்பது எவ்வளவு நியாயமானதோ, அதுபோலவே வர்ணாசிரமம் பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்று நினைத்துக்கொண்டிருப்பவனுக்கு கதர் இலாக்காவில் வேலை கொடுக்கக் கூடாது என்பதே நமது அபிப்பிராயம். குடிகாரனையும் கதரில் நம்பிக்கை இல்லாதவனையும் கதர் இலாக்காவில் வேலைக்கு வைப்பதால் கூட அவ்வளவு மோசம் வந்து விடாது ஆனால் ஒரு வர்ணாசிரமக்காரனை ஒரு இலாக்காவுக்கு நிர்வாகத் தலைவனாய் நேமிப்பதில் யெல்லாவற்றையும் விட அதிகமான கெடுதி இருக்கிறதென்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் பிறவியில் தன்னை உயர்ந்தவ னென்று நினைத்துக்கொண்டு இருக்கிறவன், பிறவியில் வித்யாசமில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவனிடம் எப்படி அன்னியோன்னியமாயும் நல்ல எண்ணத்துடனும் சமத்துவமாய் இருக்க முடியும் என்பது நமது கேள்வி.
கொர௫ுமை
திருப்பூர் கதர் வஸ்திராலயம் ஒரு கண்டிப்பான வருணாசிரம பார்ப் பனர் தலைமையில் இருப்பதால் இதுவரையில் அதற்கு எதிர் அபிப்பிராய முள்ளவர்கள் எல்லாம் அதாவது சுமார் 8 பேருக்கு மேலாக வேலையிலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3 பேர்கள் தாழ்ந்த வகுப்பார் என்பவர்.
குடி அரசு - 1927 (3) 108
கள். மற்றவர்கள் சமபந்தி போஜனத்தில் சம்மந்தமுடையவர்களும் உயர்வு தாழ்வை ஒப்புக்கொள்ளாதவர்களுமே யாவார்கள். இந்த கொடுமையை மற்ற பார்ப்பனரல்லாத நிர்வாகிகள் அனுமதித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
குற்றம் கண்டு நீக்குவதைப்பற்றி யாருக்கும் ஆக்ஷேபனை இருக்காது. ஆனால் அக்குற்றம் அங்குள்ள யாரும் செய்யாதபடி திட்டப்படுத்திய
குற்றமாக இருக்கவேண்டும். ஒரு கூட்டத்தார் செய்தால் - அதுவும் இரட்டிப் பாய்ச் செய்தால் - குற்றமாகக் கருதக்கூடாததை மற்றொரு கூட்டத்தார் செய்
தால் ஒரே அடியாய் வேலையில் இருந்து நீக்கி விடுவது என்பது அக்கிரமமா இல்லையா என்றுதான் கேட்கிறோம். குறிப்பாக “தீண்டாதவர்கள்'” விஷயத்
தில் இவ்வளவு கொடுமை செய்யப்படுவது யோக்கியமானதா? கேள்விமுறை இல்லையா? இதற்காக நமது பணம் உபயோகப் படலாமா? என்பது தான் நமது முக்கிய கேள்வி. தவிரவும் தமிழ் நாட்டு கதர் ஸ்தாபன தற்கால நிர்வாகம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் அதுவும் அளவுக்குத் தக்கபடி வேண்டும் என்கிறவர் கைவசத்திலிருப்பதாக பெயர் செய்து கொண்டு இம்
மாதிரி கொடுமைகள் நடப்பதானால் யெப்படி நாம் அனுமதிக்க முடியும்? ஒட்டு மொத்தத்தில் உத்தியோகங்கள் ஏறக்குறைய 100 - க்கு 80 பங்கு பார்ப் பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது. பார்ப்பன பிரசாரமே முக்கியமாய் கருதப்படுகிறது. இந்தப் பணம் பார்ப்பனர்கள் சாப்பிடுகிறார்களே என்பதில் நமக்கு பெரிய கவலை இல்லையானாலும் இந்தப் பணம் பார்ப்பன பிரசாரத்
திற்கு, வருணாச்சிரமத்திற்கு ஆதரவு கொடுப் பதற்கு, பார்ப்பனரல்லாதாருக்கு நேர் விரோதமாய் எதிர்ப்பிரசாரம் செய்வதற்கு உபயோகப்படுகிறது என்பதை தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. “மக்கள் மக்களை தாழ்த்துவதைப்
பற்றி, இழிவுபடுத்துவதைப் பற்றி நமக்கு கவலை இல்லை, கதர்தான் பிரதா
னம்” என்று மகாத்மா சொல்லுவாரானால், மக்களுக்கு மக்கள் தாழ்த்தப் படுவதை ஒழிப்பது கதரைவிட முக்கியமானது என்பது நமது கவலை என்பதை நாம் வலியுறுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
மகாத்மாவுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கண்டிப்பாய் நமக்கு
ஒரு நிபந்தனை இருக்கவேண்டும்.“ இந்தப் பணம் பார்ப்பன ஆதிக்கத்துக்கு போகாது, இது பர்ப்பனரல்லாதாரது பங்கை பாதிக்கப்படவும் உபயோகப் படுத்தப்படாது, இனி வருனாச்சிரம காரரிடம் இதன் அதிகாரம் கொடுக்கப் படாது” என்கிற உறுதி இருக்கவேண்டும். அந்த உறுதி இல்லாமல் கொடுக்கப்
படும் பணம் சங்கராச்சாரியாருக்கு கொடுக்கும் பணம் போல் மூடநம்பிக்கைக்
காரரால் கொடுக்கப்படும் பணமாக போகுமேயல்லாமல் ஒருக்காலும் அது ஒரு நாணயமான பணமாகாது என்றே சொல்லுவோம் - அன்றியும், மத சங்கராச்சாரிக்கு எப்படி ஒரு பார்ப்பனர் “ சர்வாதிகாரி” யாய் இருந்து “லோக குருவை” ஆட்டுகிறாரோ அதுபோலவேதான் மகாத்மாவுக்கும் ஸ்ரீமான் 0.ராஜகோபாலாச்சாரியார் சர்வாதிகாரியாய் இருந்துகொண்டு மகாத்மாவை ஆட்டுகிறார். சர்வாதிகாரி சொன்னபடிதான் மகாத்மா ஆடி ஆகவேண்டும்.
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தமிழ்நாட்டில் ராமசாமி நாயக்கன் யோக்கியனா அயோக்கியனா என்று மகாத்மாவுக்கு தெரியவேண்டுமானால் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார்தான் நற்சாக்ஷிப்பத்திர மளிக்கவேண்டும். “ குருகுல ஆச்சாரியார்” ஸ்ரீமான் மகாதேவய்யர் யோக்கியரா அயோக்கியரா என்று தெரியவேண்டுமானால் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார்தான் நற்சாக்ஷிப் பத்திரம் கொடுத்தாக வேண்டும். ஸ்ரீமான் மகாதேவய்யர் மகாத்மாவிடம் பக்கத்திலேயே இருந்து கொண்டு சதா பேசிக் கொண்டிருக்கிறாராம். பார்ப்பதற்கு நல்லவராகவே மகாத்மாவுக்குக் காணப்படுகிறாராம். எனவே மகாத்மாவுக்கு யோக்கியன் அயோக்கியனைக் கண்டுபிடிக்க எவ்வளவு சவுகரியமிருக்கிறது என்பது இதனாலேயே நமக்கு விளங்கவில்லையா? இவ்வளவும் மகாத்மாவைக்
குற்றம் சொல்லுவதற்கு எழுதினதல்ல.ஆனால் மகாத்மாவும் எவ்வளவு தூரம் தொண்டருக்குள் அடக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது என்பதைக் காட்டவும், நம்மைப்பற்றியோ நமது நாட்டைப்பற்றியோ நமது சுயமரியாதை யைப் பற்றியோ மகாத்மாவுக்கு உண்மை தெரிய ஏதாவது சந்தர்ப்பமிருக் கிறதா என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கவும் இதை எழுதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.08.1927.
குடி அரசு - 1927 (3) 110
திருப்டிர் மகாநா௫
திருப்பூரில் மகாநாடு கூடிக்கலைந்தாகி விட்டது. தீர்மானங்கள் கவர்னருக்கு அனுப்பியாய் விட்டது. மற்ற விஷயங்கள் எப்படிப் போணாலும். இதனால் கவர்னர் தயவு இரண்டொரு ஆசாமிகளுக்கு கிடைத்தாய் விட்டது. அதன் மூலம் சிலருக்கு உத்தியோகமும் சிலருக்குப் பட்டமும் வந்துவிடப் போகிறது. இதைப் பொறுத்தவரையில் உறுதி தான்.
மற்றபடி உபசரணைத் தலைவர் மகாநாட்டுத் தலைவர் பிரசங்கங்கள்
ஸ்ரீமான் முத்துரங்க முதலியார், ஓ.கந்தசாமிசெட்டியார் முதலிய கனவான் களின் பிரசங்கங்களைப்போல் என்றே சொல்லவேண்டும். பெரும்பாலும் சர்க்காரையும் மந்திரிகளையும் புகழ்ந்து பார்ப்பனரல்லாதார் கட்சியைஆசை
தீர எழுதிக்கொடுத்தபடி வைததுதான் முக்கிய அம்சமாகும்.
மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான் சர்.முத்தைய்ய செட்டியாரைப் பற்றி
நாம் விசேஷமாக சொல்ல வேண்டியதில்லை. அவரது கொள்கையைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்வதானால் பச்சயப்ப முதலியார் தர்ம ஸ்தாபன தர்மகர்த்தாக்களில் இவர் ஒருவராயிருப்பதில் அப் பள்ளிக்கூடத்திற்கு ஒடுக்கப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கட்சி கட்டிக் கொண்டிருப்பவர். ஆனால் ஒடுக்கப் பட்டவர்கள் உபாத்தியாயர்களாக இருப்பதில் ஆகேஷபணை இல்லை என்பவர். ஆகவே இவரது கொள்கையும் பகுத்தறிவும் பொது ஜனங்களே. தீர்மானித்துக் கொள்ளலாம். இம்மகாநாட்டு சூத்திரதாரராய் இருந்த மற்றொரு செட்டியாரான ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியார் அவர்களோ சொல்ல வேண்டி யதில்லை.
அவர் அரசியல் பிறப்பைப் பற்றி சிறுகதை எழுதலாம்.1915ல் பம்பாய் லிபரல் லீக்கில் ஒரு மெம்பராய்ச் சேர்ந்து சென்னை மகாணத்திற்கு லிபரல்
லீக் நிர்மாணியாயிருந்தவர். பிறகு அடுத்த வருஷம் ஜஸ்டிஸ் கட்சியில் முக்கியஸ்தரில் ஒருவராய் இருந்தவர். அடுத்தாப் போல் தமக்கு மந்திரி பதவி கிடைக்காததால் யுனைட்டெட் நேஷனலிஸ்ட்டு கட்சி உண்டாக்கி தலைவ ரானவர்.அதோடு மந்திரிகள் பேரில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தவர். அடுத்தாப் போல் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தவர்.
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அதற்கடுத்தாப் போல் சுயராஜ்யக்கட்சி மெம்பர்களுடன் “சட்ட சபை
யில் ஒரு பிரயோஜனமும் இல்லை நம்பிக்கையுமில்லை வெளியில் போய்
சர்க்காருக்கு புத்தி கற்பிக்கிறேன்” என்று சொல்லி வெளியில் வந்தவர்.
வெளியில் வந்து மறுபடியும் சுயராஜ்யக் கட்சி சார்பாய் சட்டசபைக்கு போக தெரிந்தெடுத்து சென்னை பார்ப்பனர்கள் நிபந்தனைப்படி 500 ரூடாயும் காணிக்கை கொடுத்தவர். மறுபடியும் 15 நாளில் “சுயராஜ்யக்கட்சி தலைவர். உத்தியோகம் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று சொன்னதை நம்பி நான் காங்கிரஸில் சேர்ந்தேன், சுயராஜ்யக்கட்சியில் சேர்ந்தேன்; சட்டசபை விட்டு. வெளியிலும் வந்தேன்; 500 ரூபாய் காணிக்கையும் கொடுத்தேன். இப்போது பார்த்தால் அதில் உத்தியோகம் கிடைக்காது போல் தோன்றுகிறது. ஆதலால்
நான் சுயராஜ்யக் கட்சி முதலியவைகளில் ராஜினாமா கொடுக்கிறேன்” என்று ராஜினாமா கொடுத்தவர். மறுபடி தானாக சட்டசபைக்கு நின்று எவ் வளவோ பிரயத்தனப்பட்டும் ஸ்ரீமான் வெள்ளியங்கிரிக் கவுண்டர் பட்டக்காரர் அனேக: பார்ப்பனர்கள் இராமசாமி நாயக்கர் முதலியோர் பாடுபட்டும் தோற்றுப் போனார்.
“கதரில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை.கதரை ஒரு நாளும் ஆதரிக்க முடியாது” என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார். தீண்டாமை விலக்கைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை.பார்ப்பனரைத்தான் வீட்டில் சமையல் காரராய் வைத்திருப்பவர். மதுவிலக்கிலோ ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங் காருக்கு இளைத்தவரல்ல. மந்திரிக் கட்சி 3 மந்திரிகளையும் நடத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தன் தலையில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டி
ருப்பவர்.
இவ்வளவும் அல்லாமல் திருப்பூர் மகாநாட்டில் மதுவிலக்கு முதலிய தீர்மானங்களையும் எழுதிக்கொடுத்து நிறைவேற்றி இருக்கிறவர். இம் மாதிரியாக இருப்பதில் அரசாங்கத்தாராவது பொது ஜனங்களாவது எப்படி மதிக்கக் கூடும். இவர்கள் போன்றார்கள் தீர்மானத்திற்கு தேசத்தில் எவ்வித. யோக்கியதை இருக்கும். இவைகளை யோசியாமல் பார்ப்பனரல்லாதார் மகா நாடு என்பதாக மாகாணத்திற்கே பொதுவாய் கூட்டப்பட்டது என்பதையும் அது ஒரு சட்டம், விதி, கட்டு திட்டத்திற்கு அடங்கி நடந்து வருகிறது என்ப தையும், அதற்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும் அதனால் பார்ப்பனரல் லாதார் சமூகத்திற்கு எவ்வளவு மரியாதை உண்டாயிருக்கிறது என்பதையும் ஒரு சிறிதும் கவனியாது எதிர் மகாநாடு என்பதாக கூட்டுவதென்றால் அம்மாதிரியான குணத்திற்கு என்ன பெயரிடுகிறது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒரு எருமைக்கிடா வெட்டுவ தானால் எவ்வளவோ பேர் வேடிக்கை பார்க்க வந்துவிடுகிறார்கள். அது போல் கூட்டம் இருந்ததாலேயே பிரதிநிதித்துவ மகாநாடு ஆகிவிடுமா?
குடி அரசு - 1927 (3) 112
அப்படியாவது எத்தனை பிரதிநிதிகள் வந்தார்கள்? என்ன கொள்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார்களா? பிரதிநிதிகளுக்கு என்ன குறிப்பு இருந்தது என்பவைகளை மற்றவர்களை கவனிக்க மாட்டார்களா என்கின்ற எண்ணமின்றி இந்த இருபதாவது நூற்றாண்டில் கொம்பு தம்பட்டம் தட்டி கூட்டம் சேர்த்து அதற்கு மகாநாடு என்று பெயர் வைத்து தீர்மானங்கள் தீர்மானிப்பது என்ற வேஷம் போட்டு அவன் பல ஜாதி, இவன் இடை வெட்டு, அவன் முட்டாள். இவன் மடையன் என்று மேடையில் பேசி நிறை வேற்றிய தீர்மானத்தை பொது ஜனங்கள் தீர்மானம் என்றால் நம்புவதற்கு ஆள் எங்கே என்று தான் கேள்க்கிறோம்? இந்த வார்த்தைகளைக் கொண்ட சபையை மக்கள் எப்படிப்பட்ட சபையென்று நினைப்பார்கள் என்கிற ஞானமே இல்லாமல் காரியங்கள் நடைபெற்று விட்டதனாலும் இதனால்
ஸ்ரீமான் செட்டியாருக்கு உத்தியோகம் மற்றவர்களுக்கு “பெப்பெப்பே” அல்லாமல் மற்றபடி யார் என்ன பயன் அடையக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இதனால் ஒன்றும்
முழுகிப் போகவில்லை யானாலும் நமது எதிரிகளான சர்க்காரும் பார்ப்பனர்: களும் நம்மைப் பார்த்து சிரிக்கவும் அதாவது பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் எதற்கு வேண்டுமானாலும் ஆள்கள் கிடைக்கும், என்ன வேண்டுமானாலும் அவர்களைக் கொண்டு செய்துகொள்ளலாம், அதற்கு சுயமரியாதை இல்லை யென்று பேசிக் கொள்ளவும் இம்மாதிரி கூட்டம் கோயமுத்தூரில் இருக்கிறது
என்று மற்ற ஜில்லாக்காரர் கேவலமாய் நினைக்கவுமல்லாமல் வேறொன்றும் முழுகிப்போய்விடவில்லை. மற்றபடி இத்தீர்மானத்தினால் மந்திரிகளுக்கு பதவி ஆயுசு வளரப் போவதும் இல்லை, குறையப்போவதும் இல்லை. ஜில்லாவுக்கும் ஜில்லாவின் பெரிய சமூகங்களுக்கும் கெட்ட பெயர் தான்
மிச்சம்
திருப்பூர் மகாநாட்டைப் பற்றி முழு விபரங்களும் போட போதிய சாவகாசம் இல்லை. ஆனாலும் சவுகரியப்பட்டால் மறு தடவையும் இதைப்
பற்றி எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.08.1927.
113 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
யார்ப்பணர் அக்கிரமம்
பார்ப்பனர்கள் உத்தியோகத்திலும் சட்ட சபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், பெரிய ஜமின்களிலும், குடித்தனங்களிலும், இந்திய அரசாங்கங்களிலும் போய் அமர்ந்து கொண்டு இருப்பதின் முக்கிய நோக்கங்
கள் இன்னவை என்பது நமது மக்களுக்கு சரிவர விளங்குவதேயில்லை.. ஏதோஅவர்கள் படித்தார்கள். அதனால் உத்தியோகம் பார்க்கிறார்கள். யார் உத்தியோகம் பார்த்தால் தான் என்ன, யார் சட்டசபைக்கு போனால் தான் என்ன, யார் கவுன்சிலர் ஆனால் தான் என்ன என்பதாக தர்ம நியாயம் பேசி விட்டு பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்து விடுகிறார்கள். இந்த ஏமாளித்தனத்தைப் பார்த்தே பார்ப்பனர்.
களும் நம்மவர்களை சுலபமாய் ஏமாற்றி பதவி பெற்று நம்மையே அழிக்கப் பாடுபடுகின்றார்கள். எந்தப் பதவியில் பார்ப்பனர் இருந்தாலும் அதன் மூலம் நமது கழுத்தை அறுக்க அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள். என்பதை நமது ஜனங்கள் உணர்வதே இல்லை. அல்லாமலும் நம்மில் அநேகர் கொஞ்சமாவது சகோதர அபிமானமின்றி மானம் வெட்கம் எல்லா வற்றையும் துறந்து பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகிபார்ப்பனர்கள் நமக்குச் செய்யும் கொடுமைக்கும் கையாயுதமாக இருந்து நமக்கு கெடுதி செய்தும் வாழ்கிறார்கள்.
நமது நிலை, நமது நாட்டு பார்ப்பனரல்லாத மக்கள் நிலை மிகு மிகு இழிவான தன்மையில் இருக்கிறதற்கு இதுவே போதுமான உதாரணமாகும்.
நிற்க சென்னை கார்ப்பரேஷனில் சில காலமாக பார்ப்பனரல்லாதார் கவுன்சில ராகவும் அக்கிராசனராகவும் கமீஷனராகவும் இருந்து பார்ப்பனரல்லாத மக்களுக்கு நன்மை புரிந்து வருவதைக் கண்ட பார்ப்பனர்கள் இவற்றை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தேசத்தின் பேரால் காங்கிரசின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால் ஆள்களிலும் சில அயோக்கியர்களையும் பைத்தியக்காரர்களையும் சேர்த்துக் கொண்டு, நமது மக்களுக்கும் நமது இயக்கத்துக்கும் விரோதமாக பிரசாரங்கள் செய்து மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்று கார்ப்பரேஷனுக்கு வந்து அவர்கள் செய்த அக்கிரமங்களும் அயோக் கியத்தனங்களும் கொஞ்சமல்ல வென்பது கவனித்து வந்தவர்களுக்கு விளங்காமல் போகாது. ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியார் தலைவரா யிருந்தபோது அவர் ஒரு பார்ப்பனரல்லாதாராகவும், பார்ப்பனரல்லாதார்.
குடி அரசு - 1927 (3) 114
விஷயத்தில் கவலை செலுத்துபவராகவும் இருந்ததற்காக அவருக்கு பார்ப் பனர்கள் எவ்வளவு கொடுமைகள் செய்தார்கள் என்பதும், அதற்கடுத் தாற்போல் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் பாப்பன சிஷ்யராகவும் பார்ப்பனர்கள் “போடு கரணம்” என்றால் “இதோ போடுகிறேன் எண்ணிக் கொள்” என்று எவ்வளவோ பொய்யும் புரட்டும் பேசி வந்தும் கொஞ்சமும் சுயமரியாதை இல்லாமல் நடந்து வந்ததால் அவரை ஆதரித்ததும், அதற்கு பிறகு ஸ்ரீமான் ஜி. நாராயணசாமி செட்டியார் பிரசிடெண்டாய் வந்தவுடன் அவர் பார்ப்பனர்கள் சொற்படி கேள்க்காததால் அவர் மீது பலரை ஏவிவிட்டு. கார்ப்பரேஷன் யோக்கியதையையே கெடுத்து கள்ளுக்கடை, சாராயக் கடை
கள் போல் சதா சர்வ கால கூச்சலும் குழப்பமுமாகவே இருக்கும்படி நடந்து வந்ததும் யாவருக்கும் தெரிந்ததுதான். தவிர சென்னை கார்ப்பரேஷனில் கமிஷனராயிருக்கும் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் பார்ப்பன ரல்லாதாராய் இருக்கிறார் என்கிற காரணத்திற்காக அவரை இந்த பார்ப்பனர்.
கள் எவ்வளவு கொடுமை செய்கிறார்கள் என்பது கவனித்து வருபவர்களுக்கு விளங்கியிருக்கும். ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் ஒரு ஜில்லா கலக்டர் உத்தியோகஸ்தர், அவர் இன்ஸ்பெக்டர் ஆப் ரிஜிஸ்டரார் என்கிற
பத்திரப் பதிவு இலாக்காவுக்கு இந்த மாகாணத்திற்கே தலைவராக இருந்தவர். அவருடைய யோக்கியப் பொறுப்பைப் பற்றியாவது நாணய குறைவைப் பற்றியாவது இதுவரை அவருடைய பார்ப்பன எதிரிகள் ஒரு வார்த்தையாவது சொன்னது கிடையாது. அவர் கார்ப்பரேஷனுக்கு கமீஷனரானபிறகு வருஷத்தில் லக்ஷக்கணக்கான ரூபாய் சென்னை முனிசிபாலிட்டிக்கு லாபம். வருகிறது. ஆபீஸ் சிப்பந்திகளின் அக்கிரமங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு யோக்கியமாய் நடைபெற்று வருகிறது. லஞ்சம் வாங்கின உத்தியோகஸ் தர்களை மிக தயவாகவும் நிதானமாகவுமே தண்டித்து வருவார். அப்படி யிருந்தும் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா மிகவும் கடுமையாய் தண்டிக்கிறார். என்றும் பார்ப்பனரைக் கொடுமைப்படுத்துகிறார் என்றும் அவர் பேரில் பார்ப்பனர்கள் குற்றம் சுமத்தினதின் பேரில் சில குற்றங்களை கோர்ட்டுக்கு இழுத்துவிட்டதில் மேஜிஸ்ரேட் கோர்ட்டில் மாதக்கணக்காய் கடுங்காவல் தண்டனை தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். இவ்வளவு கிரமமாய் வேலை
பார்த்து வருபவரை அவமானப்படுத்துவதும் அற்பத்தனமாய் பேசுவதும் வேண்டுமென்றே குறைவுபடுத்துவதுமாய் குறும்பு செய்து வருகிறார்கள். இந்த விஷயம் வரவர முத்திப் போய்விட்டதால் பார்ப்பனர்களின் வால் பிடித்து திரிந்து கொண்டிருந்த சில பார்ப்பனரல்லாதார்களுக்கும் கூட இந்த கொடுமை சகிக்காமல் இப்போது புத்தி வந்து அவர்களே ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் விஷயத்தில் தாராளமாய் தங்களது அபிப்பிராயங்களை வெளியிட்டு விட்டார்கள். சுத்தமான பார்ப்பனரல்லாத ரத்தம் கடுகளவு எந்த பார்ப்பனரல்லாதார் சரீரத்தில் ஓடுவதாயிருந்தாலும் அவர்களுக்கு எப்போ தாவது பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி வந்தே தீரும் என்பதற்கு இது ஒரு பெரிய உதாரணம் ஆகும். பார்ப்பனர்களின் ககஷியைச் சேர்ந்த ஸ்ரீமான்கள்
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சிங்காரவேலு செட்டியாரும் கெததே ரங்கய்ய நாயுடுவும் ஜி.வெங்கிட்ட நாராயண விஷயமாய் பார்ப்பனர்களின் கூற்றைப்பற்றி பேசியிருக்கும் விஷயமாவது நான் காங்கிரஸ் கக்ஷியைச் சேர்ந்தவன் ஆனபோதும் என் கடிதங்களுக்கு கமிஷனர் ஸ்ரீமான் வெங்கிட்ட நாராயணா அவர்கள் 6 மணி நேரத்திற்குள்ளாகவே பதில் எழுதிவிட்டு அப்போதைக்கப்போது நான் எழுதும் குறைகளையும் நிவர்த்தி செய்து எனது வேண்டுகோளை நிறை வேற்றியிருக்கிறார். அவர் யாரிடத்திலும் பக்ஷபாதமாக நடந்தது கிடையாது.
ஸ்ரீமான் கெத்தா ரங்கயநாயுடு பேசியதாவது “நான் இச்சபைக்கு மெம்பராக வந்ததிலிருந்து எவ்விஷயத்தை குறித்தறிவித்தாலும் கமிஷனர். உடனே அதைக் கவனித்து நிறைவேற்றி வருகிறார். அவ்வாறிருக்க அவர். பக்ஷபாதமாக நடந்து வருவதாய்ச் சொல்வது முற்றும் தவறு” என்பதாக பேசியிருக்கிறார்கள்.
மற்ற ஸ்தல ஸ்தாபனங்களிலுள்ள நிர்வாகத் தலைவர்கள் இந்த இரட்டை ஆகஷியில் அதிலும் தற்கால சுப்பராய மந்திரி ஆகஷியில் நடக்கும் அக்கிரமங்களுக்கு கணக்கு வழக்கு இல்லை. அவைகளைப் பற்றி ஒரு பார்ப் பனராவது கவனிப்பது இல்லை. பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து விட்டால் அந்த நிர்வாகஸ்தர் என்ன அக்கிரமம் செய்தாலும் கேள்வி கிடையாது. பார்ப்பனருக்கு அடிமையாகாவிட்டால் அவர் எப்படிப்பட்ட வராயிருந்தாலும் அவர்களை ஒழிக்க எவ்வித இழிதொழிலையும் செய்கிறார்
கள் என்பதற்கு இதை ஒரு உதாரணமாகவே எழுதினோம்.
குடி அரசு - கட்டுரை - 21.08.1927.
குடி அரசு - 1927 (3) 116
தற்கால நிலை
அரசியனும் சமூகஇயனும்
கனவான்களே!
அரசியலும், சமூக இயலும் என்பது பற்றி எனது அபிப்பிராயங்களை பத்திரிகை மூலம் தெரிந்திருப்பீர்கள். அதாவது, அரசியல்வேறு சமூக இயல் வேறு என்பதாக இரண்டுமே தனித்தனி இயல்கள் கிடையாது. இவ்விரண்டும் வேறு வேறாகத் தனிப்படுத்தக்கூடிய விஷயமல்ல. அரசியல் என்றாலும்
சமூக இயல் என்றாலும் இரண்டும் ஒரு நாட்டின் ஒரு சமூகத்தின் முன்னேற் நத்திற்குத்தானே யல்லாமல் வேறு காரியத்திற்கல்ல. எனவே ஒரு நாட்டின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று வைத்துக்கொண்டு அரசியல் என்றால்
அதில் சமூக முன்னேற்றம் இல்லாமலிருக்க முடியாது. அது போலவே சமூக
இயல் என்றாலும் அரசியல் முன்னேற்றம் அதில் இல்லாமலிருக்க முடியாது. இரண்டும் தனித்தனி பிரிக்கப்படாத தன்மை யுடையது. நமது நாட்டில் இப்போது இவ்விரண்டும் வேறு வேறாக காணப்படுவதின் காரணம் உண்மை யான அரசியல் தொண்டும் உண்மையான சமூக இயல் தொண்டும் இல்லாமல்
வெறும் வேஷத்தில் பாமர மக்களை ஏய்த்து, சிலர் தங்கள் சுயநலத்தை வளர்க்கவும் பாடுபடுவதினால், அதாவது நம் நாட்டு பெரும்பாலும் படித்தவர்.
கள் என்போர்களான பார்ப்பனர்கள் ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகம் சம்பாதிக்கப் பாடுபடுவது அரசியலாகவும், ஆங்கிலம் படிக்காமல் ஆரியம் படித்து விட்டு வயிறு வளர்க்க புரோகிதத் தொழிலை பரப்புவது சமூக இயலாகவும் மதிக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்விரண்டு காரியங்களும்
நாட்டு முன்னேற்றத்திற்கான அரசியலும் ஆகாது, சமூக இயலும் ஆய்விடாது..
உதாரணமாக, மகாத்மா காந்தி அரசியலில் அதாவது காங்கிரசில் ஈடுபட்டிருந்த காலத்தில் அரசியல் என்பதின் பேரால் அவர் ஏற்படுத்தின திட்டமாகியநிர்மாணத்திட்டத்தையும் பஹிஷ்கார திட்டத்தையும் கவனித்துப் பார்த்தால் என்ன என்ன விஷயம் சேர்ந்தால் அரசியல் ஆகும் என்பது புலப்படும்.
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அதாவது நிர்மாணத் திட்டத்தில் எல்லா மக்கள் வயிற்றுக்கும், பிழைப்பும், பணமும் சம்பாதிக்க “பொருளியல்” ஆன கதரும் எல்லோரும் சமத்துவமடைய தீண்டாமை விலக்கு என்னும் “சமத்துவஇயலும்” மனிதர்களின் ஒழுக்கம் சீர்படுவதற்காக, மது விலக்கு என்னும் “ஒழுக்க இயலும்” எல்லா மதஸ்தர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் சகிப்புத் தன்மையாகவும் இருக்க வேண்டும் என்பதாக “இந்து முஸ்லீம் ஒற்றுமை” என்னும் பரஸ்பர “அன்பு இயலும்” ஆகிய இவைகள் சேர்ந்ததை
நிர்மாணத் திட்டமாகவும், ஆட்சி சம்பந்தப்பட்டவரை, அதை ஒழுங்குபடுத்தி அதை மேற்கண்ட நிர்மாணத் திட்டத்திற்கு அனுகூலமாய் ஆட்சி புரியும்படி செய்வதற்காக மட்டும் அனுகூலமாய் இருக்கும்படி செய்ய, அதுவரையில் அதனோடு கூடுமான வழிகளிலெல்லாம் ஒற்றுழைக்காமலிருக்க வேண்டும் என்பதாகக்கொண்டு அரசாங்கத்துள் நமக்குள்ள ஒவ்வொரு சம்பந்தத்தி லிருந்தும் விலகுவதற்காக பஹிஷ்கார திட்டம் என்பதாகவும் ஏற்பாடு செய்திருந்ததே ஒழிய வேறில்லை.
மற்றபடி நமது நாட்டு பழய கால சரித்திரத்தில் இம்மாதிரி அரசியல் என்பதாக ஒன்று இருந்ததாகவே காணமுடியாது. மக்களுக்கும் அரசர் களுக்கும் அபிப்பிராயபேதமோ, அரசாங்க சுதந்திரத்திற்கு என்பதாக மக்கள் அரசாங்கத்துடன் போராடியதாகவோ, அதற்காக ஒரு இயக்கம் இருந்ததா கவோ எந்த இடத்திலும் காணமுடியாது. சரித்திரத்தில் பார்க்கும், அரச தர்பாரில் அரசன் மக்களுக்காக வாழ்ந்து வந்ததும், மக்கள் அரசருக்கு முடி சூட்டினதுமாக காணப்படுமே ஒழிய வேறில்லை. அது ஒரு தனி ஜாதியாக வோ அல்லது ஒரு தனி வகுப்பாகவோ இருந்ததாகக் கூட காணமுடியாது. ஏதாவது ஒரு இடத்தில் குடிகள் அரசனிடம் முறையிட்டதாக பார்ப்போ மானால், அது காட்டு மிருகங்கள் வந்து வேளாண்மைகளை அழித்ததற்
காகவும், வேறு ஏதோ திருடர்களோ, ராக்ஷதர்களோ வந்து குடிகளை இம்சித்த தாகவும் காணப்படுமே ஒழிய வேறு ஆக்ஷி முறையைப் பற்றி குற்றம் காணவே முடியாது. இப்பொழுது நமது கண்களுக்கு நமது நாடு ஆக்ஷி முறை குற்றம் சொல்லப்படுவதாய்க் காண்பதெல்லாம் மேல்காட்டிய நிர்மாணத் திட்டத்தில் நமக்குள்ள குற்றங்களே ஒழிய ஆகஷிக் குற்றமே அல்ல. ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ தங்களுக்குள் ஒற்றுமையில்
லாமல் பரஸ்பர அன்பும் இல்லாமல் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்தி
மனிதத் தன்மைக்கு விரோதமாய் வாழும்போது, எப்படியானாலும் அன்னி யன் யாராவது ஒருவன் உள்ளே பிரவேசித்து ஆதிக்கம் பெற்றுக் கொள்ளத்
தான் முடியுமே ஒழிய வீணாய்க் கிடக்க முடியவே முடியாது. இந்த நிலையில் வந்த கொடுமையான ஆட்சிமுறையானது இந்நிலைகள் சரிப்படுத்தப் பட்டாலொழிய ஒழிக்கப்படவே முடியாது என்பதை கண்டிப்பாய் கவனத்தில் வைக்க வேண்டும். ஏதாவது ஒரு கொடுமையை ஒழிக்க வேண்டுமானால் அக்கொடுமைக்கு உள்ளஆஸ்பதமான காரியம் எதுவோ அதை ஒழித்
குடி அரசு - 1927 (3) 118
தால்தான் அக்கொடுமை வளராமலிருக்க முடியுமேயல்லாமல் மேலுக்கு மேலாகப் பார்ப்பதால் அது அடியோடு ஒழிக்கப்படவே மாட்டாது. உதாரண மாக நமக்கு தலைவலி ஏற்பட்டிருக்குமானால், அத் தலைவலி வருவதற்கு நமது சரீரத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறு என்ன? அதற்கு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த மாதிரி பத்தியமாயிருக்க வேண்டும்? என்ன மாதிரி மருந்து சாப்பிட வேண்டும்? என்பதாக கவனித்து கண்டு பிடித்து அந்தப்படி நடந்து வர வேண்டுமேயல்லாமல் அப்போதைக் கப்போது ஒரு பத்துப் போடவோ அல்லது ஒரு தைலத்தைப் பூசவோ செய்தால் எப்படி வியாதி போகும் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அரசியல் என்கிற பேரால் இதுசமயம் நமது நாட்டில் ஒரு கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வரும் ஒருவித கிளர்ச்சி சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர நாட்டுக்கோ நாட்டிலுள்ள மக்க ளுக்கோ பொதுவாக அதில் ஒருவித நன்மையும் இல்லாததோடு நாட்டுக்கும்
மக்களுக்கும் பெரிய தீவினையை உண்டாக்கி வருவதாகவே இருக்கிறது.
முதலாவது நமக்குள் ஒருவித ஒற்றுமை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காகவே பாடுபட வேண்டும். உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் அதற்கு இடையூறாய் உள்ளவைகளையெல்லாம்.
ஒழிக்க வேண்டும். நமது நாட்டில் ஒற்றுமைக் குறைவு என்பதை ஒரு தேசத் தாருக்கு ஒரு தேசத்தார் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. ஒரு மதஸ்தருக்கு மற்றொரு மதஸ்தர் என்கிற முறையில் மாத்திரம் இல்லை. நம்மைப் பொருத்தவரை அதாவது இங்கு கூடியுள்ள பெரும்பான்மை மக்க ளைப் பொருத்தவரை ஒரு மதஸ்தர் (இந்துக்கள்! என்பவர்களுக்குள்ளாகவே அநேக விதமான கொடுமையும் ஒற்றுமைக்குறைவும் இருந்து வருகிறது.
இந்து மத தத்துவமே நமது நாட்டை இந்த தாழ்ந்த கதிக்கு கொண்டு வந்தது என்பதே நமது கெட்டியான அபிப்பிராயம். மக்கள் அறிவையும் ஆற்ற லையும் அன்பையும் மனித தர்மத்தையும் நமது மதம் என்று சொல்லுவதே
அழித்துக் கொண்டு வருகிறது.
முதலாவதாக நமது நாட்டில் மக்களை பிறவியிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, ஒன்றுக்கொன்று சேர விடாமல் தடுத்து, எவ்வளவு அயோக்கியனா
யிருந்தாலும் ஒரு வகுப்பு தாய் வயிற்றில் பிறந்ததற்காக மாத்திரம் உயர்ந்தவன் என்றும், மற்றெல்லோரும் அவனைத் தொழ வேண்டியவர்கள். என்றும் ஆக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே மற்றொருவன் எவ்வளவு யோக்கியனாயிருந்தாலும் வேறு ஒரு வகுப்பு தாய் தகப்பனுக்குப் பிறந்த தினாலேயே அவன் தாழ்ந்தவனென்றும், தொடக்கூடாதவன், பார்க்கக் கூடாத
வன், கிட்டவரக் கூடாதவன், அவனவன் பக்தி செலுத்தும் தெய்வத்தைக் கூட
பார்க்கக் கூடாதவன் என்றும், பொது தெருவில் நடக்கக் கூடாதவன் என்றும்.
தடுக்கிறது. இந்தக் கொடுமையும் முட்டாள்தனமும் கொண்ட ஆணவம் நமது நாட்டில் தான் இருக்கிறதே தவிர வேறு நாட்டில் கண்டிப்பாய் இம்மாதிரி
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பிறவி தோஷம் கற்பிக்கிறதே கிடையாது. இது மனிதனோடு மாத்திரமல் லாமல் கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகளுக்கும் இத்தோஷம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நாட்டு பழந்தமிழ் சரித்திரங்களில் இம்மாதிரி கொடுமையும் மூடத்தனமும் கொண்ட விஷயங்கள் மருந்துக்கு கூட காணப்படுவதில்லை. நமது நாட்டுக்கு அயல் நாடுகளில் இருந்து வந்து குடியேறின ஒரு கூட்டத்தாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இந்த மதம் நம்மை இந்த இழி நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. பிறப்பினால் உயர்வு தாழ்வு வகுக்கும் தன்மையான வருணம், ஆச்சிரமம், தர்மம், ஜாதி, பிராமணன், க்ஷத்திரியன், சூத்திரன், பஞ்சமன், சண்டாளன் முதலியன வார்த்தைகள் தமிழ் மொழிகளே அல்ல. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பாகுபாடு இருந்ததும் இல்லை, தமிழ்நாட்டிற்கு இப்பேர்ப்பட்ட பாகுபாடுகள்.
எந்த விதத்திலும் வேண்டியதும் இல்லை. அது எந்த விதத்திலும் நடக்கக் கூடிய காரியமும் அல்ல. இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் அபிப்பிராயம். கூட மறுக்க வேண்டியதாகவே இருக்கிறது. பிராமணன் என்பதாக ஒரு ஜாதியோ, ஒரு வகுப்போ, ஒரு மனிதனோ தனியே இருக்க வேண்டும் என்ப
தின் அவசியம் என்ன. ஜன சேவை செய்வது பிராமணர்களுடைய தர்மம் என்றும் அதற்காகவே அவர்கள் பிறவியிலேயே பிராமணர்களாகப் பிறந் திருக்கிறார்கள் என்றும் மகாத்மா சொல்லுகிறார். ஜன சேவை என்பது ஒரு ஜாதிக்கோ ஒரு மனிதனுக்கோ சொந்தமானதல்ல. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒருவனுக்கொருவன் உதவி உபகாரம், சேவை முதலியவைகள் செய்ய வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் பரோபகாரத்திற்கு ஒதுக்கி வைத்த நேரங்களி லெல்லாம் ஜனசேவை செய்தவனாகிறான். ஒரு மனிதன் ஒரு பொதுக்கிணறு வெட்டினால்,வெட்டி வைத்தால், ஒரு பாதை துப்புரவு செய்தால், செய்வித்
தால், சுகாதார விஷயத்தில் வீதி கூட்டினால், கூட்டுவித்தால், இன்னும் இதுபோன்ற காரியங்கள் செய்தால், ஜனசேவை செய்தவனாகிறான். இது ஒரே வர்ணத்திற்கு அல்லது ஜாதிக்கு வகுப்புக்கு என்பதாக ஏன் பிரித்து வைக்க வேண்டும். எப்படி பிரித்து வைக்க முடியும் மற்றவர்களுக்கு ஏன் அந்த பாத்தியம் அவரவர் சவுகரியப்படி செய்ய விடக் கூடாது. தவிர, நாட்டை யாள்வது க்ஷத்திரியனுக்கு உரிய தர்மம் என்று சொல்லுவோமானால் ஒரு நாட்டை ஒரு மனிதன்தான் ஆளமுடியும். ஒரு வருணமோ ஒரு ஜாதியோ ஒரு வகுப்போ ஆளமுடியாது. அப்படிப் பார்த்தால் ஒரு நாட்டிற்கு ஒரே
ஒரு க்ஷத்திரியன் தான் இருக்க முடியும். நாட்டை ஆளுகிறவனுடைய ஜாதி யெல்லாம் க்ஷத்திரிய ஜாதி ஆகிவிட்டால் உலகத்தில் ஆக்ஷி புரியாத ஜாதியே கிடையாது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஜாதியோ வகுப்போ உலகம் பூராவையோ அல்லது ஓர் பாகத்தையோ ஏதாவது ஒரு காலத்தில் ஆண்டு
தான் இருக்கின்றது. ஆகவே, எல்லோரையுமே க்ஷத்திரியர் வர்ணத்தில் தான் சேர்க்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் மகாத்மா மைசூரில் சொன்னதுபோல் “எளியவர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய தர்மம்”
குடி அரசு - 1927 (3) 120
என்பதாகப் பார்த்தாலும் எளியவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு தனி வருணமோ ஜாதியோ எதற்காக வேண்டும். எப்படி இருக்க முடியும். பிறவி க்ஷத்திரிய வர்ணத்தில் எளியவர்கள் இருக்க மாட்டார்கள், அன்றியும் மற்றவர்கள் எளியவர்களைக் காக்கக்கூடாதா. மனிதனானவன் அவனவன் வாழ்வில் எளியவர்களைக் காப்பதற்கு ஏதாவது ஒரு நேரமோ செய்கையோ ஒதுக்கி வைத்துக்கொண்டு செய்தால் அது எளியவர்களைக் காத்ததாகாதா. இப்படியே பிறவி வைசிய வருணத்திற்கு என்ன தர்மம் கட்டுப்பட்டது என்றால், வைசியர்கள் வியாபாரம் செய்தல், வைசியர்கள் தர்மம் என்ற ஒரு
பக்கமும், மாடு மேய்த்தல் வைசியர் தர்மம் என்ற மற்றொரு பக்கத்திலும், உழவு செய்தல் வைசிய தர்மம் என்று மற்றொரு பக்கத்திலுமாக ஆரிய நூல்களில் உளறிக் கொட்டி இருக்கிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக் கொள்ளுகிறாரோ அதைப் பற்றி நமக்கு கவலையில்லாவிட்டாலும் இந்த தொழிலுக்கு ஒரு தனி பிறப்பு வருணம் எதற்காக ஒதுக்கி வைக்க வேண்டும். இவைகளை எப்படி ஒதுக்கி வைக்க முடியும் மற்றவர் ஏன் செய்யக்கூடாது. அதுபோலவே சூத்திரர் என்பவர்களுக்கும் என்ன என்னமோ தர்மம் சொல்லுவதானாலும் குறிப்பாய் அடிமைத்தனத்தையும், பிராமண வர்ணத் தானுக்கு வைப்பாட்டி மகன் என்கிற தத்துவத்தையும் தான் சொல்லுகிறது. இதில் எதை மகாத்மா ஒப்புக் கொள்வதானாலும், இந்தக் காரியத்திற்கும் ஒரு தனி வருணம் எதற்கு என்றும், இந்த காரியங்கள் மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது என்றும் மற்றவர் செய்யாமல் இருக்க முடியுமா என்றும் தான் கேட்கிறோம். இப்படிப்பட்ட ஆபாசங்களை நம்ம தலையில் சுமத்தி யோக்கியன், அயோக்கியன் அடையாளம் தெரிவதற்கில்லாமல் மக்களைப்
பிரித்துப் பாழ்படுத்தி இருக்கிற மதக்கொடுமையாலே தான் நமது நாட்டிற்கு சுபாவமாகவே விடுதலை கெட்டிருக்கிறதே அல்லாமல் வேறு அல்ல என்று பொருள்படும் படிக்கும் மற்றும் இதுபோலவே கடவுள், பக்தி, கோயில், சடங்கு முதலிய விஷயங்களில் நம்முடைய மூட கொள்கைகளையும், பார்ப்பனர்கள் கொடுமையையும் விரிவாக எடுத்துச் சொல்லி இவைகள் ஒழிவதுதான் சுயராஜ்யம் அளிக்க வல்லது என்றும் இதுவே அரசியல் என்பது என்றும், இதைத்தவிர வேறு விஷயங்களை அரசியல் என்றும், சுயராஜ்யம் என்றும் உரிமை என்றும், தேசீயமென்றும், பேசுவதல்லாம் வீண்புரட்டு என்றும்
குறிப்புக் காட்டினார்.
குறிப்பு: ஸ்ரீமான் ராமசாமி நாடார் அவர்கள் தலைமையில் விருதுபட்டி பாண்டியன் மைதானத்தில் தற்கால நிலை என்னும் தலைப்பில் அரசியலும் சமூக இயலும் என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவு:
குடி அரசு - சொற்பொழிவு - 28.08.1927
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மகாத்மா காந்தியும் வருணாசிரமும்
I
“மகாத்மா காந்தியும் வருணாசிரமமும்” என்னும் விஷயமாய் இரண்டு வாரங்களுக்கு முன் “குடி அரசி”ல் மகாத்மாவின் வருணாசிரம அபிப்பி ராயத்தை கண்டித்தெழுதியது நேயர்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் பிறகு
பலர் பல பல விதமாக நமக்கு கடிதம் மூலமாய், மகாத்மாவை தாக்குவது தர்ம மல்லவென்றும், அபிப்பிராய பேதத்தை மகாத்மாவிடம் நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றும், நேரில் சொன்னால் நமது அபிப்பிராயத்தை மகாத்மா ஒப்புக்கொள்வார்கள் என்றும், எப்படி இருந்தாலும் மகாத்மாவைப் பற்றி ஒரு வார்த்தையாவது வித்தியாசமாய் எழுதினால் நமது செல்வாக்கே அடியோடு போய்விடும் என்றும்,நமது பத்திரிகை ஆகிய “குடிஅரசு” கூட ஜனங்களால் மதிக்கப்படாது போய் விடுமென்றும், மகாத்மா பார்ப்பனரல்லாதார் ஆதலால் அவர் பேரில் குற்றம் சொல்லக்கூடாது என்றும் இப்படியாக பல பேர் பல
விதத்தில் கடித மூலமாயும் நேரிலும் நமக்கு தெரிவிக்கிறார்கள்.
மற்றும் சிலர், பல பத்திரிகைகளிலும் ஜாடை ஜாடையாய் நமது அபிப்பிராயத்தை கண்டித்தும், மகாத்மாவை ஆதரித்தும் எழுதி வருகிறார்.
கள்: மற்றும் சிலர், எல்லாவற்றையும் குற்றம் சொல்லிவிட்டு நீர் என்னதான் செய்யப் போகிறீர், எதைத்தான் ஆதரிக்கிறீர்கள், உமது கொள்கைதான் என்ன
என்று எழுதுகிறார்கள். ஆகவே, இவைகளுக்கு தனித்தனி பதிலும், சமாதா னமும் சொல்லிக் கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான காரியமானதால் இவற்றிற்கு பொதுவாக இந்த வாரம் சில விஷயங்களை எழுதுகிறோம்.
ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை பொது ஜனங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ள ஆசைபடுகிறோம். அதென்னவெனில், நாமும் நமது பத்திரிகையும் வயிற்றுப் பிழைப்புக்கோ, பொது ஜனங்களின் செல்வாக்குப் பெறுவதற்கோ, பொது நன்மையின் பேரால் தொண்டு செய்ய வரவில்லை என்பதே. உண்மையை உண்மை என்றும், சரி என்று பட்டதை வெளிப்படுத் துவதற்கும், பொய்யென்றும் தப்பென்றும் பட்டதை கண்டிப்பதற்குமே நடைபெற்று வருகிறது என்பதாகவும், பத்திரிகையின் கொள்கையே அதுதான். என்பதாகவும் ஆதி முதற்கொண்டே பல தடவைகளில் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
குடி அரசு - 1927 (3) 122
இரண்டாவதாக, மகாத்மா காந்தியவர்களிடத்தில் மற்றவர்களுக்கு
இருக்கும் அபிமானத்திலும், பக்தியிலும் நமது பக்தி எள்ளளவும் குறைந்த தல்ல என்பதையும் தெரிவிப்பதோடு, மகாத்மாவை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தின அனேகருள் நாமும் ஒருவரென்றும் மகாத்மாவை
பின்பற்றி வந்த விஷயத்திலும் இப்போது சிபார்சுக்கு வருகிற எல்லோரையும் விட நாம் பின்பட்டவரல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
நிற்க, மகாத்மாவை குருட்டுத் தனமாய் ஆதரிக்கும் மூலமாய் வரும் செல்வாக்கு நமக்கு அவசியமில்லை என்றும், மகாத்மாவைப் பற்றி நாம் கண்டிக்கும் விஷயம் சரியா தப்பா என்று விசாரணை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வர யோக்கியதை இல்லாமல் குருட்டு பக்தியாய் அபிப்பிராயம் கொள்ளுபவரது கண்டனத்தைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்றும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
நிற்க, இதுவரையில் கடிதமூலமாயும் பத்திரிகை மூலமாயும் நேரிலும். நமது கண்டனத்தை மறுத்தவர்களில் ஒருவராவது பிறவியில் வருணாசிரம
தர்மமும் ஜாதி வித்தியாசமும் இல்லை என்ற மகாத்மா சொன்னதாகவாவது, பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதிப் பிரிவுகளும் உண்டு என்று அவர் சொல்லவில்லை என்றாவது ஒருவரும் சொல்லவே இல்லை. இனியும் யாராவது மகாத்மாவுக்கு பிறவியில் வருணாசிரம தர்மமும் ஜாதியும் இல்லை என்று சொல்வார்களேயானால், அல்லது இல்லை என்று மகாத்மா இன்ன இடத்தில் சொல்லியிருக்கிறார் என்று காட்டுவார்களேயானால் உடனே நான் எழுதியவைகளையும் மறுத்து எழுதிவிட்டு மகாத்மா விஷயமாய் நான் கொண்ட அபிப்பிராயத்தையும் மாற்றிக் கொண்டு எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
அப்படிக்கில்லாமல் “அவர் அப்படி எண்ணி இருக்கமாட்டார் இப்படி எண்ணி இருக்க மாட்டார், மகாத்மா சொல்வதற்கு அதுவல்ல அர்த் தம், இதுவல்ல பொருள்” என்பதான வெறும் உத்தேசமும் வியாக்கியானமும் நமது அபிப்பிராயத்தை ஒரு சிறிதும் மாற்றிக் கொள்ளும்படி செய்யவே முடியாது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நிற்க, நமது கருத்தையும், மகாத்மா கருத்துக்கும் நமது கருத்துக்கும் மாறுபட்ட கருத்துக்களைப் பற்றியும் சென்றமாதம் மகாத்மா அவர்களிடம்.
நேரில் கலந்து பேசி நம்மைப் பொருத்த வரையிலும் ஒரு முடிவு கட்டிக் கொண்டே வந்து விட்டோம் “மகாத்மாவிடம் நான் கலந்து பேசினேன்” என்று சொல்லிக் கொள்வதும் எழுதிக் கொள்வதும் இக்காலத்தில் பெரிதும். தற்பெருமைக்கே உபயோகித்துக் கொள்ளக் கூடியதாய் விட்டபடியால் அந்த. தற்பெருமை நமக்கு வேண்டாம் என்பதாகக் கருதியே நாம் அது சமயம் அதை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தவிரவும் அது சமயம் நமக்கும் மகாத்மாவுக்கும் நடந்த சம்பாஷ ணைகளின் விபரத்தை மகாத்மாவின் சம்மதம் பெற்றே வெளிப்படுத்த வேண்டியதான ஒரு நிபந்தனைக்கும் நாம் சம்மதம் கொடுத்து வந்ததால் அதையும் வெளியிட முடியாத நிலையில் இருக்கிறோம்.
முக்கியமாய் மூன்று விஷயத்தைப் பற்றியே தான் மகாத்மாவினிடம் நாமும் நமது நண்பரான ஸ்ரீமான் எஸ். ராமநாதனும் சம்பாஷித்தோம். அதா வது என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்
லாம் இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கிய காரியங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லை என்றும் நாம் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.
அதாவது, ஒன்று, காங்கிரசு என்பதை ஒழிக்க வேண்டியது. இரண் டாவது, இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது, மூன்றாவது, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பவைகளாகும்.
முதல் இரண்டை ஒழித்தாலே பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து விடுமானா
லும், இவ்விரண்டின் மூலமாய் ஒழிந்தது போக பாக்கி கொஞ்ச நஞ்சம் இருந் தாலும் அதையும் ஒழிப்பது என்கிற கொள்கையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே காட்டினோம்.
இது விஷயமாய் நடந்த தர்க்கங்கள் முன் சொன்ன காரணத்தால் வெளியிடக்கூடியதல்ல. ஆதலால் இனி இதைப் பற்றி மகாத்மாவிடம் மறுபடி
யும் கலந்துபேசித்தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை என்ப
தையும் மகாத்மாவினிடம் நேரிலேயே இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக் கூடியதாயில்லை என்றும் சொல்லி மகாத்மாவினிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம். மகாத்மாவும் தான் சொன்ன சமாதானத்தால் நாம் திருப்தி அடையவில்லை என்பதை தெரிந்துகொண்டதாகவும், இன்னம் இரண்டொரு தடவை அதைப்பற்றி பேசவேண்டும் என்றும் சொன்னார். எனது நண்பர் ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கூட மகாத்மா சொன்னது போலவே மறுபடியும் இரண்டொரு தடவை மகாத்மாவிடம் பேசலாம் என்று கூட சொன்னார். இதற்கு உடனே நாம் மகாத்மா நம்முடைய அபிப்பிரா யத்தை மாற்றும்படி திருப்தி செய்வார்கள் என்று நம்புகிறீர்களா அல்லது மகாத்மா அபிப்பிராயத்தை நாம் மாற்றக்கூடும் என்பதாக கருதுகிறீர்களா என்று கேட்டதில், மகாத்மா சொல்வதைக் கொண்டு நம்முடைய அபிப்பிரா யங்களை மாற்றிக் கொள்ள கூடியதாய் ஏற்படாது என்றும் ஒருக்கால் நமது அபிப்பிராயத்துக்கு மகாத்மா இணங்கக்கூடியதானால் நமது பிரசாரத்திற்கு
குடி அரசு - 1927 (3) 124
இன்னம் உதவியாக இருக்காதா என்றும் சொன்னார். உடனே நாம் அந்தப்படி எதிர்பார்ப்பது தப்பு என்றும் மகாத்மாவை திருத்தும் படியாக நாம் சொல்லி
சரி செய்ய முடியாது என்றும், நம்ம அபிப்பிராயத்தை நாம் வெளிப்படுத்த வேண்டியது தான் நமது கடமை என்றும் சொல்லிவிட்டோம். இன்ன இன்ன விஷயங்களைப் பற்றி மகாத்மா அவர்களுடன் சம்பாஷித்ததாக திரு.சி. ராஜ கோபாலாச்சாரியார் அவர்களிடம் தெரிவித்து விட்டே உத்திரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்.
எனவே இது சம்மந்தமாக இனி மகாத்மாவின் அபிப்பிராயம் எப்படி என்பதைப் பற்றி நாம் மறுபடியும் அவரைக் கண்டு கேட்கவேண்டியதில்லை என்பதைப் பற்றியும், அதைப்பற்றி நாம் கொண்டுள்ள அபிப்பிராயத்தில்
நமக்கு கொஞ்சமும் சந்தேகமில்லையென்பதையும் தெரிவித்துக் கொள்ளு
கிறோம். வருணாசிரம விஷயமாய் மகாத்மாவுடன் சம்பாஷித்ததை ஆதார
மாய் வைத்துக் கொள்ளாமலேயே மகாத்மாவே மைசூரில் பேசினதைக் கொண்டும், அதற்கும் அவர் எழுதினதைக் கொண்டும் தான் அந்த மறுப்பு எழுதப்பட்டது. தவிர மகாத்மாவின் வருணாசிரம தர்ம நியமனமும் ஜாதி வித்தியாச நியமனமும் பிறப்பை ஒட்டியது என்பதாக இதற்கு முன் எத்த னையோ தடவைகளில் மகாத்மாவின் பேச்சினாலும் எழுத்துக்களினாலும்
நாம் தெரிந்தே இருக்கிறோம்.
மகாத்மா பார்ப்பன மதமான ஆரியரின் மதத்தைத்தான் இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு தன்னையும் அதே இந்து இந்து என்று அடிக்கடி சொல்லிவருகிறார். தன்னுடைய பிரசங்கங்களுக்கும் அடிக்கடி ஆரியக் கதை களான புராணங்களைத்தான் அதாவது ராமாயணம், பாரதம், பாகவதம் முதலியவைகளையே தனக்கு ஒரு படிப்பினைகளாகவும் மேற்கோள் களாவும் காட்டிக் கொண்டும் வருகிறார். இந்த மாதிரி புராண வழுக்கலானது எப்படியாவது மகாத்மாவை சேற்றில் கொண்டு போய் அழுத்தியே தீரும் என்பதே நமது துணிபு.
தமிழ்நாட்டின் நாகரீகமும், தமிழ்நாட்டின் பழய பழக்க வழக்கங்களும் மகாத்மாவுக்கு தெரிவதற்கு சந்தர்ப்பமேயில்லை. மகாத்மா தென்னாப் பிரிக்காவில் இருந்த காலத்தில் வள்ளியம்மை, நாகப்பன் என்பது போன்ற
சில தமிழ் மக்கள் மூலம் தமிழரின் வீரத்தை அறிந்திருக்கலாமே தவிர தமிழ் நாட்டைப்பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும் பார்ப்பனர்களின் மூலமாகத்
தவிர வேறொன்றும் அவர் அறிந்திருக்க முடியாது என்பதாக உறுதி கூறலாம்.
ஆரியக் கொள்கையான பார்ப்பன மதத்திற்கும் தமிழர் நாகரீக பழக்க வழக்கத்திற்கும் ஏறக்குறைய2000,3000 வருஷங்களாகவே யுத்தங்கள் நடந்து வரும் விஷயங்களை மகாத்மாவுக்கு எடுத்துச் சொல்ல கூடியவர்கள் யார்? மகாத்மா மடத்தில் இருக்கிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டிற்கு ஆரியக் கொள்:
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கைகள் கூடாது என்பதாக நாம் பிரசாரம் செய்வதானால் அதைப் பொருத்த வரை மகாத்மா கொள்கை கூடாது என்றுதான் நாம் சொல்லி ஆக வேண்டும். தொழிலின் மூலமாகக்கூட மக்களைப் பிரிக்கக் கூடாது. பிரிக்க முடியாது, பிரிப்பதும் உலகியற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் சரியல்லவென்று வாதாடுகிற நாம் “பிறவியில் ஜாதி உண்டு, தொழில் உண்டு இது பெரியோர் களால் ஏற்படுத்தப்பட்டது. கடவுளால் ஏற்படுத்தப்பட்டது, ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டது” என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். ரிஷிகள், கிருஷ்ணன் முதலானவர்கள் காலமல்ல இது என்பதும், நாம் அந்தக்காலத்தில் இல்லை என்பதும், இந்தக் காலத்தில் அவர்கள் இல்லை என்பதும் அது சரியா
தப்பா, நிஜமா பொய்யா என்பதற்கு சரியான ஆதாரமும், அவசியமும் சாத்தியமும் இல்லை என்பதும் ஒவ்வொரு பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் தானாக விளங்கும்போது “பாட்டி கதைக்கு” எப்படி மரியாதை கிடைக்கும் என்பது நமக்கே விளங்கவில்லை.
மகாத்மாவும் வருணாசிரமமும் என்னும் வியாசத்தை மகாத்மா
வுக்கும் அனுப்பித்தான் இருக்கிறோம். மற்றொன்றை அவரது அந்தரங்க சிஷ்ய கோடிகளுக்கும் அனுப்பி மகாத்மா தகவலுக்கு கொண்டுபோகும்படி
கேட்டுக் கொண்டும் இருக்கிறோமேயல்லாமல் மகாத்மாவுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனால் அவரது பரமானந்த சிஷ்யர்கள் இம்
மாதிரி விஷயங்களை லக்ஷியம் செய்யாதீர்கள். லக்ஷியம் செய்தால் மறுப் புக்கு அதிக யோக்கியதை உண்டாகிவிடும், மறுப்பவனுக்கும் அந்தப் பத்திரிகைக்கும் யோக்கியதை அதிகமாகிவிடும். ஆதலால் குப்பையில் போட்டு விடுங்கள் என்றுதான் சொல்லிக்கொடுப்பார்கள். அதை மீறுவதற்கு மகாத்மாவுக்கு இது சமயம் சக்தியில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே, இந்த விஷயம் முக்கியமானதாலும் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது சுயமரியாதைக்கும், வருணாசிரமம் என்கிற தத்துவமே அதிலும்
பிறவியில் வருணாசிரமமும் ஜாதியும் உண்டு என்கிற தத்துவமே எமனாய் இருக்கிறது என்பதான கண்ணியமான முடிவுக்கு வந்திருப்பதாலும் அதை யொழிக்கப் பாடுபடுவதே நாட்டில் விடுதலையும் சுயமரியாதையும் கோரும் மனிதனின் கடமையென்று நாம் களங்கமற உணருவதாலும் கண்டிக்க வேண்டியதாயிருக்கிறதே என்பதாக வருத்தத்துடன் இதை எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 28.08.1927
குடி அரசு - 1927 (3) 126
வேண்டுமா? வேண்டாமா?
சகோதரர்களே!
பார்ப்பன ஆட்சியாலும், பார்ப்பன சூழ்ச்சியாலும், பார்ப்பன மதத்
தாலும், பார்ப்பன பத்திரிகை பிரசாரத்தாலும் நீங்கள் இழந்து கிடக்கும் சுய மரியாதையும், சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் திரும்பவும் அடைய வேண்டுமா? வேண்டாமா? வேண்டுமானால் அதற்கென்றே உங்கள் தொண்டர்களால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாகி நடத்தப்பட்டு வரும் “திராவிடனை' வாங்கிப் படியுங்கள். “திராவிடன்” தான் போலி தேசீயத்தையும் சுயராஜ்யப் புரட்டையும் தைரியமாய் வெளியாக்கி சுயமரியாதைக்கென்றே உழைப்பவன். எனவே, “திராவிடன'ன்றிக் கண்டிப்பாய் உங்களுக்கு கதி மோட்சமில்லை; இதை நம்புங்கள்.
குடி அரசு - அறிவிப்பு - 28.08.1927.
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இது சத்தியாக்கிரகமாகமா?
சென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல் துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொரு
வருக்கும் மூன்று மூன்று மாதம் கடுங்காவலும், முன்னூறு ரூபாய் அபராத
மும், அது செலுத்தப்படாவிட்டால், மேல்கொண்டு 3 மீ தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள். ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மன உறுதியையும் அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதா னாலும் இச்செய்கைக்கு சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந்
தாது என்பதே நமது அபிப்பிராயம்.
அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும், அனுபவிக்கத் தயாரா யிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களை தலைவர்கள் என்ப வர்கள் சரியான வழியில்நடத்தி பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத் திக்கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கல்லாத காரியங்களைச் செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம்.
ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப்பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காக சத்தியாக்
கிரகம் செய்யலாம். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு சிலை யை விகாரமாக்குவது மகாத்மாவின் தத்துவப்படி பார்த்தால் எல்லை கடந்த பலாத்காரமாகும் என்றே நமக்குப் புலப்படுகிறது. நல்ல விஷயங்களுக்கு ஏற்பட்ட பொருளை இம்மாதிரி விஷயங்களுக்கு செலவு செய்வதை நாம் பாராட்ட முடியாததற்கு வருந்துகிறோம். நீல்துரை அக்கிரமக்காரர் என்ப தாகவே வைத்துக் கொள்வோம். அவர் செய்த அக்கிரமத்தை விட அதிக மான அக்கிரமங்களும் கொடுமைகளும் செய்துவருகிறவர்களையெல்லாம்.
நாம் என்ன செய்துவிட்டோம்? அப்பேர்ப்பட்டவர்களை எல்லாம் பலாத்கார மில்லாமல் மனமாற்றமடையும்படி நாம் அவர்களை வேண்டிக்கொள்ளு கிறோமேயல்லாமல் அவர்களுடைய கையையும், காலையும் ஒடிக்கப் போகி றோமா? அல்லது ஒடிக்க எண்ணுகிறோமா? அந்தப்படியே இதிலும் நாம் நடந்துகொள்ள வேண்டியதிருக்க இம்மாதிரி நடக்க துணிந்ததானது வருத்தப் படத்தக்கதேயாகும். இம்மாதிரியே ஒவ்வொரு காரியத்திற்கும் செய்ய
குடி அரசு - 1927 (3) 128
ஆரம்பிப் போமானால் கடைசியாக அது எங்குபோய் நிற்கும் என்கிற ஒரு
முடிவு கட்டவும் முடியாது. அன்றியும் நாம் நினைக்கிற காரியமும் கை. கூடாததுடன் அது முறை அல்லவென்றே சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.08.1927
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
“எல விவசாயி”
*ஏலவிவசாயி” என்னும் பெயர் பெற்ற ஒரு தமிழ் மாதாந்த சஞ்சிகை: எமது பார்வைக்கு வந்தது. இது எழுபது எண்பதாயிரம் ஏக்கர் ஏல விவசாய
பூமிகளில் சுமார் 40 லட்சம், 50 லட்சம் ரூபாய் பெறுமான மகசூல்களை' உண்டாக்கும்? ஆயிரத்துக்கதிகமான ஏல விவசாயிகளை அங்கத்தினராகக் கொண்ட திருவாங்கூர் ஏல விவசாய சங்கத்தினின்றும் வெளியிடப்பட்டு வருவது பல துறைகளிலும் ஆராய்ச்சியுள்ள திருஆர். நாராயணசாமி அவர். களை ஆசிரியராகக் கொண்டது.
விவசாயமே எல்லாத் தொழில்களிலும் சிறந்ததாயிருந்தும் நம் நாடு விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தும் விவசாய வளர்ச்சிக்குரிய புதுவிதமான கருவிகளைக் குறித்தும் புது முறைகளைப் பற்றியும் ஐக்ய இயக்கம், கூட்டுறவு இயக்கம், விவசாய சங்கம் ஆகியவைகளைப் பற்றியும் விவசாயப் பொருள்களைச் சேகரம் செய்து செலவழிக்கும் முறைகளைக்
குறித்தும் நமது நாட்டில் தாய்ப் பாஷையில் உலவும் பத்திரிகைகள் மிகச் சிலவே. ஆகவே இவ்விஷயங்களைக் குறித்தும் மிளகு, இஞ்சி, லவங்கம், எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, சணல் ஆகியவைகளைக் குறித்தும் விசேஷமாக. ஏல விவசாயத்தைக் குறித்தும் முதலாளி ,தொழிலாளிகளைக் குறித்தும் தமிழ் மொழி, தமிழ்நாடு திருவாங்கூர் சரித்திரம் அரசியல் ஆகியவைகளைப் பற்றியும் இந்த ஏல விவசாயி என்னும் பத்திரிகை எழுதி வரும். ஆதலால் இப்பத்திரிகையை விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள், முதலாளிகள், தமிழ்நாட்டார், தாய்நாட்டார் ஆகிய அனைவரும் ஆதரிக்கக் கடமைப்பட் டுள்ளார்கள். இதன் வருஷ சந்தா ரூ.2 . வேண்டுவோர் “மானேஜர், ஏல விவசாயி, உத்தமபாளையம், மதுரை ஜில்லா” என்ற விலாசத்திற்கு எழுதி
பெற்றுக் கொள்ளலாம்.
(ப-ர்.
குடி அரசு - மதிப்புரை - 28.08.1927.
குடி அரசு - 1927 (3) 130
டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு
கிருஷ்ணனும்
- சித்திரபுத்திரன்
டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகை.
யில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமி யோ ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமி யாகத் தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும்
தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் “தீண்டாதவர்கள்” கோவிலுக்குள் போனால் ஓடிப் போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாத வர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப் போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும். ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்யமுடியும். ஆதலால் நாம் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு இனிமேல் டெல்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டு மேயல்லாமல் இந்த மாதிரி சக்தியல்லாத, கிட்டப் போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
குடி அரசு - கட்டுரை - 28.08.1927.
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சமூக முண்ணேற்றம்
அரசியலின் பேரால் தொண்டு செய்து வந்த ஒருவன் அரசியலை வெறுத்து அதன் பேரில் குற்றம் சொல்லிக் கொண்டு சமூக முன்னேற்றமே பிரதானமானது என்பதாக இன்று உங்கள் முன் பேச வேண்டிய காரணம் என்ன என்பதைப் பற்றியும், மத சம்பந்தமாக தற்காலம் உள்ள விஷயங் களையும் ஏன் குற்றம் சொல்லுகிறேன் என்கிற விஷயத்தைப் பற்றியும், சமூக முன்னேற்றத்திற்கு உழைப்பதை அரசியலிலும் மத இயலிலும் உழைப்பது என்று ஏன் சொல்லுகிறேன் என்பதைப் பற்றியும் நீங்கள் பொறுமையோடு கவனிக்க வேண்டும். அரசியல் என்பதும் மத இயல் என்பதும் ஒரு சமூகத்
தின் முன்னேற்றத்துக்கு ஏற்பட்டதே தவிர அரசியலுக்கும் மதத்துக்குமாக சமூகம் ஏற்பட்டதல்ல. ஆகவே அரசியல் என்பதும், மதம் என்பதும் சமூக
முன்னேற்றத்திற்கு அனுகூலமாயிருப்பதாயிருந்தால் மாத்திரம் அவற்றில் ஈடுபட்டு ஒரு மனிதன் உழைக்க வேண்டுமேயல்லாமல் மனிதனுக்கு ஒரு வேலை வேண்டுமே என்கிற காரணத்திற்காக வீணானதும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் கேடு சூழ்வதுமான காரியங்களைக் கட்டிக் கொண்டு அழுது மக்களைப் பாழாக்க கூடாது. முக்கியமாக மனித சமூகத்தின் நன்மையை உத்தேசித்துதான் நாட்டின் நிலைமையைக் கவனிக்க வேண்டியதேயல்லாமல் வேறு காரியத்திற்காக அல்ல.அன்றியும் தேசீயம் (நேஷனலிசம்! என்பது கூட ஒரு நாட்டு மக்கள் சமுதாயத்தைப் பொறுத்ததுதான். ஆகவே சமூகத்தின் நன்மையை பார்க்கிற போது நமது மக்கள் இப்போது பேசிக்கொள்ளும் அரசியலையும் மத இயலையும் அடியோடு அழித்து புதுப்பிக்க வேண்டியதே
தவிர அதை வைத்துக் கொண்டு எந்த விதத்திலும் திருத்தவோ, பழுது பார்க்கவோ முடியாது (இர்ரிபேரபிள்) என்பதே எனதபிப்பிராயம். முக்கிய மாய் நம் தமிழ் நாட்டையோ தமிழ் மக்களையோ உத்தேசித்தால் இந்த இரண்டு காரியமும் செய்தாலொழிய கண்டிப்பாய் தமிழ் மக்களுக்கு விடுதலை என்பதே கிடையாது என்றே சொல்லுவேன். எனவே இதற்காக
யாரும் மனம் விட்டுவிடக் கூடாது. இந்த காரியமும் நமது மக்களுக்கு அவசி யம் என்று மனதார தோன்றும்படி ஏற்பட்டுவிட்டால் தானாகவே இது அமுலுக்கு கொண்டுவரக் கூடியதாகிவிடும். ஆனால் அப்படி ஏற்படுகிற காலத்தில் அதற்கு அநேக எதிரிகள் ஏற்படக்கூடும். இதுபோலவே அக் காலமாகவே இவ்வித முயற்சிகளுக்கு எதிரிகள் ஏற்பட்டு அவ்வப்போது அதைக் கெடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். அதற்கு எத்தனையோ
குடி அரசு - 1927 (3) 132
சரித்திரமும், கதையும், புராணமும் இருந்தாலும் நாம் நேருக்கு நேராய் பார்க்கக் கூடியதாய் ஏற்பட்டது, நமது மகாத்மாவினால் தொடங்கப்பட்ட காரியமாகிய அரசியல் என்னும் பேரால் நடத்திய ஒத்துழையாமை என்னும்.
முயற்சியையும், அதற்குள் அழிக்கத்தக்கது, ஆக்கத்தக்கது ஆகிய பகிஷ்கார நிர்மாணத் திட்டங்களை அவ்வெதிரிகள் அழிப்பதற்காக மக்களின் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் முயற்சியையும் வேறு வழியில் ஈர்த்து அவைகளை அடியோடு பாழ்படுத்தினதையும் நாம் நேரிலேயே பார்த்திருக்கிறோம். ஆதலால் இனியாவது நாம் இது விஷயமாய் செய்யும் முயற்சிகளை இம்மாதிரி எதிரிகளால் அழிக்க முடியாதபடி இவ்வளவு காலத்திய அனுபவத்தையும் கொண்டு தக்க பந்தோபஸ்துடன் உழைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். அதற்கு அரசியல் என்றாவது மத இயல் என்றாவது பெயர் கொடுக்காமல் மனிதஇயல் அதாவது மனிதத் தன்மை என்பதான சுயமரியாதை இயல் என்பதாகவே பெயர் கொடுத்து அதற்காக பாடுபட வேண்டும்.அப்படிக் கில்லாமல் வேறு எவ்வளவு பாடுபட் டாலும் வீணாய் ஏமாந்து கீழே போய்க் கொண்டே இருப்போமே தவிர ஒரு விதத்திலும் முன்னுக்குவர மாட்டோம் என்பதை உணருங்கள் .
முதலில் அரசியல் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லிவிட்டு பிறகு மத இயலைப்பற்றி பேசுகிறேன்.
அரசியல் என்பது பித்தலாட்டமானது. அது மக்களுக்கு பொதுவாக எல்லோருக்குமாக ஏற்பட்டதல்ல. இப்போது இருக்கும் அரசியல் நிலையைப் பார்த்து ஏதோ நான் சொல்லுவதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. நமது
நாட்டில் அரசியல் என்பதாக ஒரு இயக்கம் ஆரம்பித்த காலத்திலேயே இதே கருத்துடனும், இதே கொள்கையுடனும்தான் ஆரம்பிக்கப்பட்டதே தவிர வேறில்லை. நமது நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் இயக்கமானது நமது நாட்டு பழக்க வழக்கங்களையும் நன்மையையும் ஆதாரமாய்க் கொண்டு ஆரம்பித்ததல்ல. இது மேல் நாட்டு முறையைப் பார்த்து ஆரம்பிக்கப் பட்டதேயாகும். பெரும்பாலும் உலகத்திலுள்ள அரசியல் என்பவைகளே
யார் ஆட்சி புரிவது, யார் அதிகாரம் செய்வது, ஆட்சி புரிவதாலும், அதிகாரம் செலுத்துவதாலும் ஏற்படும் பயனை யார் அனுபவிப்பது, யார் ஆதிக்கம் பெறு வது என்பதைத்தான் கவலையாகக் கொண்டதேயொழிய, யார் பொது மக்களுக்கு பாமரமக்களுக்கு உபகாரம் செய்வது என்கிற கவலையே ஒரு
சிறிதும் கொண்டதல்ல என்பதை தயவு செய்து கருத்தில் இருத்துங்கள் . இம்
மாதிரி ஆக்கமும், பலனும் அடைய வேண்டியவர்கள் அதற்கு ஒரு ஆயுத மாக பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, பொது ஜனங்களுக்கு உபகாரம் செய்வதாகச் சொல்லுவது உண்டு. இதை பாமர மக்கள் நம்பி அடிக்கடி ஏமாறுவதுண்டு. இதுதான் மேல் நாட்டு அரசியல் என்பது. நமது நாட்டு ஆங்கிலம் படித்தவர்கள் இதைப் பார்த்து தான் நமது நாட்டிலும் அதேமாதிரி அரசியல் இயக்கங்கள் ஆரம்பித்தார்கள் .
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இதில் ஆரம்பித்தவர்கள் அநேகமாக வெற்றியும் பெற்றார்கள்.அவர் கள் வெற்றி பெற்றதின் பலனாய் நாட்டு மக்களுக்கு பெரிய இடையூறும் ஆபத்தும் கொடுமையும் வளர்ந்து கொண்டே வந்தன. இனியும் வரப் போகின்றன.
இக்கூட்டத்திலுள்ளவர்களையே நான் துணிந்து கேட்கிறேன். தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்கள் . இந்த 42 வருஷத்திய அரசியல் இயக்கத்தால் அரசியல் கிளர்ச்சியில் நமது நாட்டிற்கு நமது பாமர மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளிகளுக்கு, வர்த்தகர்களுக்கு, கூலிக்காரர்களுக்கு ஏழைமக்களுக்கு ஏதாவது ஒரு காதொடிந்த ஊசியளவு பிரயோஜனம் ஏற்பட்டதாகச்சொல்லுங்கள் பார்க்கிறேன்.
இரண்டு பெரிய சீர்திருத்தங்கள் வந்தன. பெரிய பெரிய அதிகா ரங்களும், சம்பளங்களும் நமக்கு கிடைத்தது என்று சொல்லுவீர்கள். இதைத் தவிர வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களா? ஒன்றுமில்லை. இந்த உத்தி யோகமும் சம்பளமும் யாருக்குக் கிடைத்தது. இதனால் யாருக்கு என்ன
லாபம். இது இல்லாத காலத்தைவிட இது ஏற்பட்ட காலத்தில் உண்டான நன்மை என்ன? வெறும் ஏமாற்றலும், சிலரின் சுயநல சித்தியும் அல்லாமல் வேறு ஏதாவது ஏற்பட்டதாகச் சொல்ல முடியுமா? ஜனங்களுக்குள் கக்ஷி யுண்டாக்கப்பட்ட தல்லாமல் வேறு ஏதாவது அவர்களுக்கு லாப முண்டா? சர்க்காரை உத்தியோகங்கள் கேட்பதும், அது கிடைத்தவுடன் யார் அதை அடைவது என்பதற்காக சண்டைப் போட்டுக் கொள்வதும் அதற்காகக் ககஷி' ஏற்படுத்துவதும், மக்களை பிரிப்பதும் இதன் சுபாவமாய்ப் போய்விட்டது. அரசியல் கக்ஷிகள் என்பதின் உத்தேசம் தான் என்ன? ஒருவரிடமிருக்கும் உத்தியோகத்தை ஒருவன் பிடிங்கிக் கொள்ளச் செய்யும் தந்திரமேயல்லாமல் வேறு அதில் ஏதாவது நாணயமான எண்ணமுண்டா? பார்ப்பனரல்லாதார். கக்ஷியான ஜஸ்டிஸ் கக்ஷியின் பேரில் பார்ப்பனர்கள் குற்றம் சொல்லி வந்ததின் கருத்து என்ன? அவர்களிடமுள்ள அதிகாரத்தை பிடிங்கிக் கொள்வதற்கேயல்லாமல் வேறு என்ன? இன்றையதினம் பார்ப்பனர்களுக்கு இஷ்டமாயிருக்கும் தற்கால மந்திரிகள் பேரில் மற்றவர்கள் குற்றம் சொல்லும் கருத்து என்ன? இதை இப்படியே விட்டுவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் பெருகிவிடும் என்கிற எண்ணமேயல்லாமல் வேறு என்ன? ஆகவே இப்போதைய மந்திரியாவது முன் இருந்த மந்திரிகளாவது உத்தியோகத்தில் செய்த குற்றமென்ன? அவரவர்கள் ஆதிக்கத்திற்குத் தக்கப்படி உத்தியோகம் நடத்தும்போது மற்ற கக்ஷியாருக்கு விரோதமாயிருப்பதும் அவர்கள் அதை.
ஒழிக்க கிளர்ச்சி செய்வதும் தவிர வேறு என்ன அவங்கிருக்கிறது...... இதைத் தவிர வேறு வேலைதான் ஏதாவது அரசியல்காரருக்கு இருந்ததாகவோ, இருக்கிறதாகவோ சொல்லமுடியுமா? இந்த லக்ஷணத்தில் இந்த மாதிரி இரண்டு சீர்திருத்தங்களையும் நடத்திக் காட்டி விட்டதாகவும் இனி மூன்றாவது சீர்திருத்தம் வேண்டுமென்றும் கேட்கப்படுகின்றது. சர்க்காரும்
குடி அரசு - 1927 (3) 134
விசாரணை செய்து பார்த்து கொடுக்கப் போவதாக வேஷம் போட்டு கடைசி யாக மூன்றாவது சீர்திருத்தம் என்பதாக ஒன்றை வழங்கப் போகிறார்கள் . அது என்ன என்று கேட்பீர்களானால் இதை விட இன்னம் கொஞ்சம் பெரிய உத்தியோகங்கள்..அதாவது இப்போது நிர்வாக சபை மெம்பர், மந்திரி ஆகிய வை இதுவரை கொடுக்கப் பட்டது. இனி மாகாண கவர்னர் வேலைக் கொடுக் கப்படும். அப்படி கொடுப்பதால் வெள்ளைக் காரருக்கு இப்போது இருந்து வரும் அதிகாரமும் உத்தியோகமும் ஒரு சிறிதும் குறைந்து விடும் என்பதாக நினைத்து விடாதீர்கள். அதை உத்தேசித்து இப்போது முதலே அஸ்திவாரம். போட்டு வரப்படுகிறது.என்னவென்றால்:-
சென்னை மாகாணத்தை பாஷைவாரி மாகாணமாக பிரிக்க வேண்டு
மென்று நமது அரசியல்காரர்கள் இப்போதே காங்கிரஸ் மூலம் தீர்மானம் செய்துவிட்டார்கள். அதாவது சென்னை மாகாணம் பாஷைகளை உத்தே
சித்து 4 மாகாணமாகப் பிரிக்க வேண்டுமாம்.
தமிழ் மாகாணம், ஆந்திர மாகாணம், கேரள மாகாணம் என்பதாக நான்காய்ப் பிரித்தால் நாலு மாகாணத்திற்கு நாலு கவர்னர்கள் வேண்டிவரும். லார்ட் கோஷனுக்கோ தமிழ்நாடு என்பது இப்போது இருப்பது போலவே இருந்துவிடும். மற்ற மூன்றில் ஆந்திராவை ஸ்ரீமான் சீனிவாச சாஸ்திரி போன்றவருக்கு அதாவது “மகாத்மாவை ஜெயிலில் பிடித்து போடு” என்று யோசனை சொன்னவருக்கும், மற்ற இரண்டில் ஒன்று நமது டாக்டர் சுப்பராயன் போன்று சர்க்காருக்கு நல்ல பிள்ளையாய் இருப்பவருக்கும் கொடுத்து விட்டு ஒன்றை இன்னும் யாராவது ஒரு வெள்ளைக்காரருக்கும் கொடுத்து விடுவார்கள் . பெயருக்கு இந்தியர்களுக்கு இரண்டு கவர்னர் வேலை கொடுத்ததாகவும் சீர்திருத்த சரித்திரத்தில் எழுத இடம் கிடைத்தது. அரசியல்காரருக்கும் அரசாங்கத்தாரோடு சண்டைபோட்டு கிளர்ச்சி செய்து கவர்னர் உத்தியோகம் வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்று சொல்லி பாமர: மக்களை இன்னமும் ஏமாற்றவும் இடம் ஏற்படலாம். இவை ஆதாரமாகக் கொண்டு இன்னமும் சில உத்தியோகமும் ஏற்படலாம். ஆனால் இவைகளினால் நமது நாட்டுக்கு என்ன லாபம்? பாமர மக்களுக்கு என்ன லாபம்? வரி செலுத்துவோர்களுக்கு என்ன லாபம்? ஏழைகளுக்கு என்ன லாபம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த அதிக சம்பளமுள்ள உத்தியோகங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கு ஏற்படும் செலவுக்கு யார் தலையில் கை வைக்க வேண்டிவரும் என்பதை சற்று கவனித்துப் பாருங்கள். இந்தியர்களுக்கு உத்தியோகமும் பெருத்த சம்பளமும் கொடுப்பதன் மூலமாய் வெள்ளைக்காரர்கள் அனுபவிக்கும் உத்தியோகமும் சம்பளமும் குறைவுபடுவதாயிருந்தால் ஒரு விதத்திலாவது நமக்கு அது லாபம் என்று சொல்லலாம். அப்படியில்லாமல் எவ்வளவு சீர்திருத்தம் வந்தாலும் வெள்: ளைக்காரர் அனுபவிக்கும் உத்தியோகம், சம்பளம் முதலியவைகள் குறை யாமல், மேலும் அவர்களுக்கு அதிகமும் ஆகிக்கொண்டு அதை
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அனுமதிப்பதற்கு லஞ்சம் கொடுப்பது போல நமக்கும் சில உத்தியோகங் களைக் கொடுத்து அந்த செலவுக்கு நமது குடியானவர்கள் , வியாபாரிகள் , பாமர மக்கள் முதலியவர்கள் தலையில் வரிப்பளுவை அதிகப்படுத்தி வருவதில் என்ன நன்மை இருக்கிறது? இவ்வளவு துன்பத்தோடு போவதல் லாமல் இந்த உத்தியோகத்தை நம்மில் யார் அனுபவிப்பது என்பதில் “எச்சில் இலைக்கு நாய்கள் சண்டைப் போட்டுக் கொள்வது போல்”, நமக்கும் ஒருவருக்குக் கொருவர் கக்ஷி, ஜாதிபிளவு, மதப்பிளவு, கிராமப்பிளவு, குடும்பப் பிளவு, சகோதரப்பிளவு முதலிய ஒற்றுமை குறைவுகள் எவ்வள வென்பதையும் கவனித்துப் பாருங்கள். இதோடு தேர்தல் சுதந்திரம் என்பதாக நமக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தைப் போல் மோசமான காரியம் வேறு ஒன்று இருப்பதாகவே சொல்ல முடியவில்லை. ஓட்டர்கள் அதிகமானார்களே' யொழிய ஓட்டுகளை எப்படி உபயோகிப்பது என்கிற அறிவு 100 - க்கு 5 ஓட்டர்களுக்குக் கூட கற்பிக்கப்படவே இல்லை. ஆராய்ச்சி இல்லாமலே ஓட் செய்யக் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் . அதோடு மனிதன் நாணயக் குறைவு கற்பதற்கு முதல் பள்ளிக்கூடம் ஓட்டராவதாய் இருக்கிறது. 4 அணா 2 அணாவுக்கு கள்ளு சாப்பிடும் ஓட்டுகள் விலை கூறப்படுகிறதை தினம்
பார்த்து வருகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பணம் செலவு செய்வதை பொருத்தும், பொய்ப்பித்தலாட்டம் பேசுவதற்கு சக்தி இருப்பதைப் பொருத்தும் முடிவாகிறதே தவிர மனிதனின் யோக்கியதையையோ, பரோபகார குணத்தைப் பொருத்தோ ஏற்படுகிறதா என்பதை யோசித்துப் பாருங்கள் .1000,10000,50000 என்பதாக செலவுசெய்து ஓட்டுகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டசபை முதலிய ஸ்தானங்கள் பெறுகிறவன் யோக்கியனாக யிருப்பானா? இருக்க முடியுமா? ஆகவே இம்மாதிரி ஆபாசங்களும் அயோக்கியத்தனங்களும் தேசத்துக்கு துரோகம் செய்து பாமர மக்களையும் வஞ்சித்து பாழ்படுத்தும் பலனை அரசியல் பலன் என்று எந்த மூடனாவது ஒத்துக் கொள்ள முடியுமா? என்பதை தயவு செய்து யோசியுங்கள் . நான் தேசத் துரோகியல்ல. நானும் தேசத்துக்காக என்று கொஞ்சமாவது உழைத்
தவன்.அதற்குள் புகுந்து அதன் வண்டவாளங்களைத் தெரிந்து வந்து உங்க ளிடம் சொல்லுகிறேனேயல்லாமல் சர்க்காருக்கு உள்ளாள் என்று நினைக்கா
தீர்கள் . நான் போகிறவிடமெல்லாம் போலீஸ்காரன் என்னைத் தொடர்ந்து கொண்டுதான் வருகிறான். வீணாய் அரசியல், அரசியல் என்று கருதி நாட்டையும், ஏழை மக்களையும் குழியில் வீழ்த்தாதீர்கள் என்று சொல்லி விட்டு மதப் புரட்டைப் பற்றிச் சில வார்த்தை சொல்லுகிறேன். ( தொடர்ச்சி
11.09.27 இதழில் )
குறிப்பு:குற்றாவத்தில் சொற்பொழிவு:
குடி அரசு - சொற்பொழிவு - 04.09.1927.
குடி அரசு - 1927 (3) 136
சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொது ஜனங்கள் அதாவது ஈழவர். முதலானவர்களை சில பொதுத் தெருக்களில் நடக்க விடாமல் கொடுமைப் படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதன் பிறகும் அதே ராஜ்ஜியத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க. உரிமை கொடுக்காமல் ஜனங்களை உபத்திரவப் படுத்துவதும், சிற்சில இடங்களை அந்த சர்க்கார் அனுமதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக் கலாம்.ஆனால் நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்க விடாமல் கொடுமைப் படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற னு ஆரம்பிக் கப்பட்டது. ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை: ஆக வேண்டு மென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்தின தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் யெல்லோருக்கும் வழி திறந்து விடப்
படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தை திடீரென்று நிறுத்தும்படி செய்து விட்டார்கள் . இம்மாதிரி ரெ சத்தியாக்கிரகம் நிறுத்தி சுமார் ஒன்றரை வருஷமாகியும் நாளதுவரை யாதொரு முடிவும் ஏற்படாமல் இருந்து வருவதோடு, இப்போது சர்க்கார். வேறு ரோட்டு போட்டுக் கொடுப்பதாகவும் அதற்கு ரூபா பத்தாயிரம் வரை: அரசாங்கத்தாரால் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இம் மாதிரி செய்வதற்கு அந்த ஊர்க்காரர்களும் மற்றும் அந்த சத்தியாக்கிரகத்தில் சம்மந்தப்பட்டவர்களும் அனுமதிப்பார்களேயானால் அதைவிட மானக் கேடான காரியம் வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் சத்தி யாக்கிரகத் தலைவர்கள் ஊர் ஜனங்களுடனும் சுற்றுப்பக்கத்து பிரமுகர் களுடனும் தொண்டர்களுடனும் கலந்து சர்க்காருக்கு ஒரு மாத வாய்தா
கண்டு ஒரு இருதிக் கடிதத்தை அனுப்பி விட்டு அதற்குள் தேவையான பிரசாரம் செய்து தக்க ஆதரவு தேடிக் கொண்டு உடனே சத்தியாக்கிரகத்தை தொடங்க வேண்டுமென்று விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் உற்சாகம் உள்ள பல தொண்டர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு வீண் காரியத்தில் பிரவேசித்து அனாவசியமாய் சிறை சென்று
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வருகிறார்கள். இப்படி ஒரு காரியம் ஆரம்பித்தால் பலர் இவ்விடமிருந்து கூட வந்தாலும் வருவார்கள். இதை தக்கப்படி யோசிக்க வேணுமாய்க் கோருகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 04.09.1927
குடி அரசு - 1927 (3) 138
G . .
தொழிலாளர் 6வலை நிறுத்தம்
கோயமுத்தூரில் நூலாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏற்பட்டதைப் பற்றி நாம் மிகவும் மன வருத்தமடைகிறோம். தொழிலாளர்கள்
பால் நமக்குண்டான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.நிற்க, இம்மாதிரியான ஒரு சம்பவம் ஏற்பட்டதானது பார்ப்பனரல்லாத ஏழை மக்களி னது துரதிஷ்டவசமென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தொழிலாள சகோதரர்கள் தங்களை ஒழுங்காய் நடத்தித் தரத்தக்க ஒரு தலைவரை தங்க
ளுக்குள் அடைய யோக்கியதையற்ற காரணத்தினாலேயே இம்மாதிரியான துரதிர்ஷ்ட்ட வசமான சம்பவம் ஏற்பட நேரிட்டதென்பதே நமதபிப்பிராயம். அல்லாமலும் கோவை தொழிலாளர்களின் தலைவரான ஸ்ரீமான் என்.எஸ். ராமசாமி அய்யங்காரவர்கள் தொழிலாளர்களுக்குத் தலைவராயிருந்து நடத்த எந்த விதத்தில் ரிமையுடையவர் அல்லது யோக்கியதை உடையவர் என்பது நமக்கு விளங்கவில்லை. தொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாள ருக்குத் தலைவராயிருக்கக் கூடாதென்று அநேகத் தடவைகளில் நாம் எழுதியும் தொழிலாளர் கூட்டங்களில் பேசியும் வந்திருப்பது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அல்லாமலும் இம்மாதிரி வேலை நிறுத்தம் செய்வதைப் பற்றியும் நாம் பலமாகக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தி ருப்பது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் எந்த
விதத்தில் என்ன மாதிரியான தொழிலாளராவார். அல்லாமலும் அவருக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த விதத்தில் சம்மந்தம் உண்டு. அவர் தேசத்தை பாழ் பண்ணியும், பாமர மக்களை வஞ்சித்தும், நாணயக் குறை வினாலேயே காலத்தை கழிக்க வேண்டியதான வக்கீல் உத்தியோகம் செய்பவர். அன்றியும் மக்களை சமமான கண்ணில் பார்க்காமல் 100 - க்கு 99 பேர்களான தொழிலாளிகளையே அதாவது தங்கள் சரீரத்தால் உழைத்துச் சாப்பிடும் கண்ணியமானத் தொழில் மக்களைத் தாழ்ந்த பிறவி என்றும், மக்களை ஏமாற்றி ஊரார் உழைப்பால் பிழைக்கும் தன்னைப் போன்றார்களை உயர்ந்த
பிறவி யென்றும் எண்ணி அந்தப்படிக்கே நடந்து வருகிற சாதியை சேர்ந்தவர். அதுமாத்திரமல்லாமல் இப்போது அவர் செல்ல ஏற்பட்ட ஜெயிலிலேயும் அங்குள்ள ஆயிரக்கணக்கான சகோதரர்களைவிட தனக்கு அதிகமான வேறு செளகரியமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் வேறு ஒருவன்
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அதாவது உயர்ந்த ஜாதியானென்று சொல்லிக் கொள்ளுகிற தன் ஜாதிக்காரன். ஒருவனே சமையல் செய்து போட வேண்டுமென்றதுமான தனி உரிமை கொண்டாடுபவர். மற்றும் அவரது தைரியம், சுயமரியாதை, நாணயம் இவைகளைப் பற்றி நாம் எழுதித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லாமலே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாய்த் தெரியக்கூடும். அன்றியும், தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்து கஷ்டப்படுவதில் அவருக்குள்ள கவலை என்ன என்பதை அவர் தன்னை ஜாமீனில் விடும்படிக் கேட்டுக் கொண்ட விண்ணப்பத்தைப் பார்த்தால் சுலபமாய் அறியலாம். அதாவது தன்னை சிறையில் வைத்திருப்பதால்தான் பீஸ் வாங்கிக் கொண்ட கேஸ்களுக்கு கெடுதி வந்து விடுமென்றும் அதற்காக வேண்டி வெளியில் விட வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தவிர அவரைக் கைது செய்ததைப் பாராட்டுவதற்காக பாராட்டுக் கூட்டமும் இவர் போன்ற பார்ப்பனர்களாலே முக்கியஸ்தர்களாக இருந்து நடத்தப்பட்டிருக்கிறது. இவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த விதம் சம்மந்தமிருக்க முடியும். பார்ப்பனரல்லாதார்களுக்கு ஏதாவது ஒரு இடத்தில் கொஞ்சம் செல்வாக்கிருக்குமானால் அந்த செல்வாக்கை யொழித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த தொழிலாளர் கிளர்ச்சியென்றும், வரி செலுத்து வோர் கிளர்ச்சியென்றும், ரயில்வே பிரயாணிகள் கிளர்ச்சி என்றும், குழாய் தண்ணீர் குடிக்கிறவர்கள் கிளர்ச்சியென்றும், தெருவில் நடக்கிறவர்கள் கிளர்ச்சி யென்றும் மற்றும் ஏதாவதொரு கிளர்ச்சியின் பெயரையோ, சங்கத்
தின் பெயரையோ, சொல்லிக் கொண்டு அதில் தங்களைத் தலைவர்களாகவும், காரியதரிசிகளாகவும் தங்களைத்தாங்களே தெரிந்தெடுத்துக்கொண்டு அதன்
மூலம் பார்ப்பனரல்லாத பாமர மக்களையும், வாயில்லாப் பூச்சிகளையும் வசப்
படுத்திக் கொண்டு ஆங்காங்கு பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகப் பாடுபடுப வர்கள் யாராவதிருந்தால் அவர்களை வையவும் அவர்களுக்கிருக்கும் செல்வாக்கை ஒழிக்கவும் இவர்களை ஏவிவிட்டு அந்த ஸ்தானத்தில் தாங்கள் அமர்வதையே முக்கியக் கருத்தாகக் கொண்டு இம்மாதிரி காரியங்கள் நடத்தி வரப்படுகிறது. இதற்கு உதாரணமாக பார்ப்பனரல்லாதார்களில் 100-க்கு 99 பேர்களால் போற்றப்பட்டும் மரியாதை செய்யப்பட்டும் வந்த, வருகிற பெரியாரான சர். தியாகராயப் பெருமானவர்களின் வீட்டுக்கு இது போன்ற தொழிலாளர் கூட்டங்களை ஒருகாலத்தில் ஏவிவிட்டு, அவரை அடிக்கச் செய்ததும், அவர் வீட்டு ஜன்னல், கதவு, கண்ணாடிகளை உடைக்கச் செய்த
தும், அவரது அருமை மனைவியார் இந்த தொழிலாளர்களிடம் தனக்கு மாங்கல்யப் பிச்சை கொடுக்க வேண்டுமென்று தனது முந்தானையைப் போட்டுக் கும்பிட்டுக் கெஞ்சினதும் யாரும் அதற்குள் மறந்திருக்க முடியாது. சென்றமாதத்தில் அதே தொழிலாளர் கூட்ட நண்பரில் ஒருவர் முனிசிபல் ஸ்தானத்துக்கு நின்றபோது அவருக்கு எதிரிடையாய் அவர்களை ஏவிவிட்ட கூட்டத்தாரே வேலை செய்து அவரைத் தோற்கடிக்கப் பார்த்ததும் ஜன்னலும் கதவும் உடைக்கக் கொடுத்து, மாங்கல்யப் பிச்சை கேட்ட கூட்டத்தாரே
குடி அரசு - 1927 (3) 140
அத்தொழிலாளர்களுக்கு உதவி செய்ததும் யாவரும் அறிந்திருக்கக்கூடும்.
நிற்க,
ஸ்ரீமான் சி. வி. வெங்கட்டரமணய்யங்கார் என்கிற மற்றொரு பார்ப்பனர் கோவைத் தொழிலாளர் விஷயத்தில் மிக்க அநுதாபமுள்ளவர். போல சந்தடி சாக்கில் தலையை நீட்டிக் கொள்ளுகிறார். இவருக்குத் தொழிலாளர் விஷயத்தில் எப்படி அனுதாபமிருக்க முடியும். எந்தெந்த மில் தொழிலாளர்கள் இப்பொழுது வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்களோ அந்தந்த மில்களிலெல்லாம் ஸ்ரீமான் வெங்கட்டரமணய்யங்காருக்கு பங்கு இருப்பதோடு தானும் சிலவற்றிற்கு நிர்வாகஸ்தராகவும் இருக்கிறார். ஆகவே இவர் தொழிலாளரை விட உயர்ந்த ஜாதியாரென்று சொல்லிக் கொள்வதோடு. முதலாளி கூட்டத்திலும் சேர்ந்து கொண்டு 100 -க்கு வருஷம் 1-க்கு 30, 40, 50 வீதம் லாபமும் பெற்றுக் கொண்டு நிர்வாகத்தையும் நடத்திக் கொண்டு இருக்கிற இவர் உண்மையில் எப்படித்தொழிலாளர்களிடம் அனுதாபம் காட்ட
முடியும். இவருக்குத் தொழிலாளர்களிடம் உண்மையாகவே அனுதாபமி ருக்குமானால், தான் நடந்து கொள்ள வேண்டிய மாதிரி என்ன? தன்னோடு
சேர்ந்த முதலாளிகளிடம் போய், ஒன்று இத்தொழிலாளர்களுக்கு இன்னின்ன செளகரியம் செய்து கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் என்னுடைய டைரக்டர் ஸ்தானத்தை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று சொல்ல வேண்டும். அல்லது இம்மாதிரி ஏழைகளைக் கஷ்டப்படுத்தி சம்பாதித்த லாபம் எனக்கு வேண்டாம். என்னுடைய பணத்தைக் கொடுத்து விடுங்கள்
என்று சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் முதலாளி கூட்டத்தில் சேர்ந்து கொண்டு தன்னுடைய பணத்துக்கு வருஷம் 1- க்கு 30, 40,50 வீதம் லாபம் சம்பாதித்து மூட்டைக் கட்டிக் கொண்டு தொழிலாளர்களிடம் வந்து “நான் உங்களுக்காக பாடுபடுகிறேன். முதலாளிகள் செய்வது அக்கிரமம். சர்க்கார். செய்வது அக்கிரம்” என்று பேசி பாமர மக்களின் ஓட்டைப் பெற பார்ப்ப
தினால் தொழிலாளர்களுக்கு என்ன லாபம் வந்து விடும். இவர்களுடைய முயற்சிகள் எந்த விதத்தில் யோக்கியமான பலனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நேயர்கள் யோசிக்க வேண்டும்.தவிர ஸ்ரீமான் ராமசாமி அய்யங்காருக்காக கோர்ட்டில் பேசும் வக்கீலோ ஸ்ரீமான் சி.விஜயராகவாச் சாரியார் என்னும் பெரியார். அவர் பீஸுக்காக இந்த கேசில் பேச வந்தால் அவரைப் பற்றி இங்கு ஒன்றும் சொல்ல வரமாட்டோம். அப்படிக்கில்லாமல், மாட்டிக் கொண்டவர் அய்யங்கார் பிராமணராதலால் அவரை தப்பிவித்து விட வேண்டுமென்கிற ஆசையல்லாமல் வேறில்லை. ஆகவே இந்தக் கூட்டத்தார் இது விஷயமாய்ச் செய்யும் ஆர்பாட்டத்தின் கருத்து என்ன என்பதை நாம் யோசித்தால் விளங்காமல் போகாது. வரப் போகும் தேர்தல் களில் தாங்கள் ஏழை மக்களின் நண்பர்கள் என்று காட்டி, பாமர மக்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்கும், தங்களுக்கு கிடைக்காது என்று தெரிகிற சந்தர்ப்பங்களில் தங்களது அடிமைகளைக் கொண்டு வந்து அந்த ஸ்தானங்
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
களில் வைக்கவுமேயல்லாமல் வேறு எந்த விதமாகவும் தொழிலாளர்களிடம் காருண்யம் இருக்க நியாயமில்லை என்பது விளங்காமல் போகாது. எனவே இந்த கூட்டாத்தார் இம்மாதிரியான சம்பவங்களின் மூலம் தங்களை: விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும், அந்த விளம்பரத்தின் செல்வாக்கைப் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாய் உபயோகித்துப் பார்ப்பன ஆதிக் கத்தை நிலை நிறுத்தவுமே வாயில்லா பூச்சிகளான பதினாயிரக்கணக்கான தொழிலாளர்களை பட்டினிக் கிடக்கும்படி கொடுமை செய்து விட்டார்களென் பதே இக்கிளர்ச்சியைப் பற்றின நமது முடிவான அபிப்பிராயம். அடுத்த தேர்தலுக்கு ஆசைப்பட்ட பார்ப்பனரல்லாத இரண்டொருவரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளை உத்தேசித்து இச் சந்தர்ப்பத்தில் தங்களு டைய பேர்களையும் கொடுத்திருக்கிறார்கள். இவைகளினால் தொழிலாளர். இயக்கம் என்பது எவ்வளவு புரட்டும் மோசடியுமானதென்பதும், இத் *தலைவர்”களின் யோக்கியதையும் எண்ணமும் எப்படிப்பட்ட தென்பதும் முதலாளிமார்களுக்கோ சர்க்காருக்கோ தெரியாமல் போக இடமுண்டா?'
இந்தக் காரணங்களால் தான் அநேகமாக முதலாளிமார்களும் கடின சித்தத் தோடிருக்கவும், சர்க்காரும் யோக்கிய பொறுப்பற்ற வழியில் இக்கிளர்ச்சி களை அடக்க முயற்சிப்பதும் நமக்கு அதிசயமல்ல வென்றே தோன்றுகிறது.
நிற்க, பிறவியினாலேயே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனீயத்தையும், அதன் ஆதிக்கத்தையும் வேரோடு அழிக்க வேண்டு மென்பது எவ்வளவு முக்கியமானதோ அது போலவே பணமுடையவன்' உயர்ந்தவன் என்கிற தத்துவத்தையும் பணக்கார ஆதிக்கத்தையும் அடியோடு அழிக்க வேண்டியது என்பதும் அவ்வளவு முக்கியமானதென்பதே நமதபிப்பிராயம். ஆனால் பிறவியின் காரணமாக ஒரு பிச்சைக்காரனும் அயோக்கியனும் கூட தன்னை பெரியவனென்று சொல்லிக் கொள்ளும் உரிமையை நம்மால் அழிக்க முடியாமல் இருக்கும் போது பெரும் பணம் வைத்துக் கொண்டு அப்பணத்தால் பல வழிகளிலும் செல்வாக்குப் பெற்றுக் கொண்டு அப்பணத்தை மக்களுக்குக் கொடுத்து வசப்படுத்திக் கொள்ளும்
சக்தி இருப்பவனை எப்படி அழிக்க முடியும். அல்லாமலும், அதைவிட இதற்கென்ன அவசரம் என்றும் பார்க்க வேண்டியிருக்கிறதே யல்லாமல் வேறல்ல. தவிரவும் பிறவியில் உயர்வு என்கிற கொடுமை ஒழிந்தவுடன் பணத்தால் உயர்வு என்கிற கொடுமையை ஒழிக்கும்வேலைதான் பொதுநல சேவையாக ஏற்பட வேண்டும் என்பதுதான் நமது அபிப்பிராயம். அதுதான் இயற்கையுமாகும். ஆகவே இந்த இரண்டு காரியமும் முடிந்த பிறகுதான் சர்க்காரின் கொடுமையும் ஆதிக்கமும் தானாகவே ஒழிந்துவிடும். முன் சொன்ன இரண்டையும் வைத்துக் கொண்டு சர்க்கார் ஆதிக்கத்தை ஒழிப்பது என்பது உயர்ந்த ஜாதியான் என்பவன் இன்னும் கொஞ்சம் உயர்வதற்கும், பணக்காரன் என்பவன் இன்னும் கொஞ்சம் பணக்காரனாவதற்கும் உபயோகப்படுவதோடு உயர்ந்த ஜாதியான் என்பவன் ஜாதித் திமிரோடு
குடி அரசு - 1927 (3) 142
பணத்திமிரும் அடையவும், பணக்காரனென்பவன் பணத் திமிரோடு ஜாதித் திமிரடையவும் ஏற்பட்டு விடும். உதாரணமாக உயர்ந்த ஜாதியார் என்பவர். பணக்காரர்களாகி வருவதும் பணக்காரராயிருப்பவர் உயர்ந்த ஜாதிக் காரர்களாகி வருவதும் அநுபவத்தில் பார்க்கலாம்.
முடிவாக, முதலாளிகளுக்கும் நாம் சொல்லுவதென்னவென்றால் தொழிலாளர் கிளர்ச்சி என்கிற இம்மாதிரி கிளர்ச்சிகளெல்லாம் பார்ப்பனர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக ஆரம்பித்தார்களென்பது பெரும்பாலும் மறுக்க முடியாத உண்மையென்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு வாயில்லா பூச்சிகளான தொழிலாளர்களின் நன்மையைப் புறக்கணிப்பது கொடுமையும் மனித தன்மையற்ற செய்கை
யுமாகும். தொழிலாளர்கள் தங்களுடைய வயிற்று பசிக்காக எவ்வளவு கொடுமைக்கும் உட்படுவதாயிருந்தாலும் அந்தக் காரணத்தை வைத்துக் கொண்டே அவர்களை கொடுமைப்படுத்துவது மிகவும் இழிவானதென்பதே
மறுபடியும் சொல்லுகிறோம். தொழிலாளர் என்கிற ஒரு கூட்டமும், அவர்களு டைய உழைப்பும் இல்லாவிட்டால் முதலாளிகள் எப்படி பணம் சம்பாதிக்
கக்கூடும்? இந்த சமயம் தொழிலாளிகளை முதலாளிகளாயிருப்பவர்கள்' தோற்கடித்து விட்டாலும், அதன் பலனை எந்த விதத்திலும் முதலாளிகள் அடைந்துதான் தீரவேண்டும். வெறும் கோவில் கட்டுவதிலும், குளங்கள். வெட்டுவதிலும், பார்ப்பனர் காலில் பணம் கொட்டுவதிலும், மோட்சமடைந்து விடலாமென்பது வடிகட்டின முட்டாள் தனமேயாகும். மோட்சமென்பதாக ஒன்று இருக்கிறதென்று யாராவது நம்புவார்களேயானால் அவர்கள் ஏழை களை கொடுமைப் படுத்தாமலும் கூலிக்காரர்கள் வாயில் மண்ணைப் போடாமலும் இருப்பது தான் அம்மோட்சத்திற்கு வழி என்பதை உணர வேண்டும். அன்றியும் நமது நாட்டில் வெகு சீக்கிரத்தில் உண்மையான தொழி
லாளர் கிளர்ச்சி ஏற்படப் போகிறதென்பதை முதலாளிமார்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கிளர்ச்சியை பார்ப்பனர்களாவது
சர்க்காரைக் கொண்டு முதலாளிமார்களாவது ஒருக்காலும் ஏமாற்ற முடியாது என்பதையும் முதலாளிமார்களுக்கு அவர்களிடத்தில் நமக்குள்ள பற்றுதலினால் எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 04.09.1927.
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மகாத்மா காந்தியும் பார்ப்பணப் பிரசாரமும்
மகாத்மா காந்தியும் வர்ணாசிரமமும் என்பதாக இரண்டொரு தலையங் கங்கள் எழுதி வந்ததை நேயர்கள் படித்திருப்பார்கள். இப்பொழுது மகாத்மா
காந்தியும் பார்ப்பனீய பிரசாரமும் என்பது பற்றி எழுத நேர்ந்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறோமாகினும் எழுதாமலிருப்பதற்கு முடியவில்லை. இதற்கு
முன் எழுதிய தலையங்கத்தில் நாம் கண்டிக்க நேர்ந்த விஷயமானதுமகாத்மா அவர்கள் வர்ணாசிரம தர்மம் என்கிற ஜாதிப் பிளவுகள் உண்டு என்றும், அதுவும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்றும் அவனவன் பிறவி ஜாதிக் கேற்ற தர்மத்தையே (தொழிலையே! செய்து தீர வேண்டுமென்றும் அந்தப்படி செய்யாமல் தவறுவானேயானால் அவன் தாழ்ந்த ஜாதியான் ஆகிவிடுவான் என்றும் மகாத்மா சொல்லியும் எழுதியும் வந்த விஷயத் தைத்தான் நாம் தமிழ் நாட்டின் நிலைமையையும், நாகரீகத்தையும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், அவர்களது உரிமையையும் சுயமரியாதை யையும் உத்தேசித்து கண்டிக்க நேர்ந்தது. இப்பொழுது “குதிரை கீழே தள்ளினதல்லாமல் புதைக்குழியும் தோண்டிற்று”” என்கிற பழமொழிபோல் பழய புராணப் பிரசாரம் என்கிற பார்ப்பனப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டதைப் பார்க்க நமது மனம் பதறுகிறது. பார்ப்பனரல்லாதாரியக்கத்தின் வேலையின் பயனாகவும் “குடி அரசி”னுடையும் மற்றும் சில தமிழ் பத்திரிகை யினுடையவும் வேலையின் பயனாகவும் பிடிவாதக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சம் மூட நம்பிக்கைகளையும் புராண புரட்டுகளையும் உதறித் தள்ளி பகுத்தறிவை உபயோகிக்கலாமா என்கிற அளவுக்கு வந்திருக்கிறார்கள். நமது நாட்டுப் பார்ப்பனர்களிலும் ஒரு சாரார் இவற்றிற்கு சம்மதம் கொடுப் பதைத் தவிர வேறு மார்க்கமில்லாமல் தாங்களும் குருட்டு நம்பிக்கை களிலிருந்தும் புராணப் புரட்டுகளிலிருந்தும் விலக வேண்டியது நாட்டின் முன்னேற்றத்தை உத்தேசித்து அவசியமானதென்று சிற்சிலர் பேசியும் வருகிறார்கள் . சமீபத்தில் திருவாரூரில் கூடிய வைஷ்ணவ சித்தாந்த சபை என்கிற ஒரு பார்ப்பன ஆதிக்க சபையின் 10 - வது வருஷக் கூட்டத்தில் அக்கிராசனம் வகித்த ஒரு பார்ப்பனர் தமது முகவுரையில் “நமது பழய அனாவசியமான குருட்டு பழக்க வழக்கங்களையும் மூடநம்பிக்கை களையும் விட்டுவிட வேண்டும். அப்படிச் செய்தால் தான் நம்முடைய மதம் நிலை பெற்று நிற்கும். அதன் மூலமாக இந்துக்களாகிய நாம் கடைத்தேறலாம்” என்பதாக பேசியிருக்கிறார்.
குடி அரசு - 1927 (3) 144
சமீபத்தில் பம்பாயிலுள்ள யாங்சாம்பூ என்ற ஒரு பிரபல சீனப் பெரியார் இந்தியர்கள் விடுதலை பெறாமலிருப்பதற்கு காரணம் அவர்களு டைய மூடநம்பிக்கையும் அவர்களது மத சம்மந்தமான புராணக் கதை களுமே காரணமென்றும், இந்திய சமூகத்துக்கு இன்றியமையாத சாதனங் களென்று கருதப்படும் புராணங்களையும் கதைகளையும் பிறவற்றையும், தூர
ஒதுக்கித் தள்ளி சுயமரியாதை அடையுங்கள். அப்பொழுதுதான் விடுதலை அடைய முடியும் என்றும் சொல்லியிருக்கிறார். நாமும் இப்புராண புரட்டுக ளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்து சுயமரியாதை அடைந்துதான் விடுதலை பெறவேண்டுமென்பதாக இவ்விரண்டு வருஷங்களாக சலிப் பின்றி உழைத்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். இம்மாதிரியான ஒரு நல்ல சந்தர்ப்பத்தில், அதாவது ஜனங்கள் விழிப்படையக்கூடிய சமயத்
தில் நமது நாட்டுப் பார்ப்பனர்கள் இவைகளுக்கு விரோதமாய் மறுபடியும் பாட்டிக் கதைகளான புராண பிரசங்கங்கள் செய்து மக்களை அறியாமை என்னும் மூட நம்பிக்கைகளில் அழுத்த மகாத்மாவைக் கதரின் பேரால் தமிழ் நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து பார்ப்பன பிரசாரம் செய்விக்கிறார்கள் . உதாரணமாக சமீபத்தில் வேலூரில் வாலிபர்களுக்கு உபதேசம் செய்த ஒரு பிரசங்கத்தில் வாலிபர்களைப் பார்த்து “நீங்கள் ரிஷிகளும் ஆச்சாரியர்
களும், பெரியோர்களும் சொன்ன அவர்களுடைய உபதேசத்தை திடீரென்று தள்ளிவிடாமல் அவைகளுக்கு பணிந்து நடக்கும் தன்மையை உங்களிடம் உண்டாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று பேசியிருக்கிறார். பரிசுத்தத் தன்மையுள்ள வாலிபர்களிடத்தில் போய் இம்மாதிரியாக அவர்க
ளுக்கு உபதேசம் செய்தால் அவர்களுடைய பிற்கால வாழ்வு மூடநம்பிக் கையில் அழுத்தப்பட்டுப் போகுமா அல்லவா என்பதை வாசகர்களே உணர வேண்டும். அன்றியும் வேலூரில் ஒரு பெண்கள் கூட்டத்தில் பிரசங்கம் செய்யும்போது ராமாயணக் கதையை அவர்களுக்கு உபதேசித்திருக்கிறார். இவைகளை எல்லாம் மகாத்மா அவர்களிடம் உள்ள பக்தியினால் உண்மை என்று நம்பும் அவர்கள் தங்கள் குழந்தை குட்டிகளுக்கும் இதே பாட்டிக் கதையை போதிக்கவும் அதனால் நமது சமூகம் இழிவடையவும் ஏற்படுகிறதா இல்லையா? இம்மாதிரி கதைகளை ஒரு நல்ல உதாரணத்துக்காக எடுத்து கையாளுவதாகச் சொல்லிக் கொள்வதாயிருந்தாலும் அதிலுள்ள தீங்கு எந்த நன்மைக்காக எடுத்துச் சொல்லப்படுகிறதோ அந்த நன்மையைவிட ஆயிர மடங்கதிகமானதாயிருப்பதால் இதை பற்றி நாம் கண்டனம் எழுதுகிறோமே தவிர வேறல்ல...
இதை படிக்கிறவர்களுக்குக்கூட ஒருக்கால் நம் மீது வெறுப்பேற் பட்டாலும் படலாம்.அதாவது இதென்ன! ராமாயணத்தைப் பற்றிக் கூட குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. வரவர ரொம்ப மோசமாய் போய்விட்டதென்று எண்ணினாலும் எண்ணலாம். தமிழ் மக்கள் சுயமரியாதை அடைய வேண்டுமானால் இவற்றையெல்லாம் குப்பையில் தள்ளினால் ஒழிய ஒரு
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வழியிலும் விமோசனம் கிடையாது. ஏதோ ஒரு காரியம் காதுக்கினிமையாய் இருக்கிற தென்பதற்காகவோ, பக்திக்காகவோ, பயத்துக்காகவோ ராமாய ணத்தை உண்மையில் நடந்த விஷயமென்றும் அதிலுள்ள கொள்கையின்படி நடக்க வேண்டியதென்றும் ஒப்புக்கொள்வோமானால் அதன் மூலம் மற்ற விஷயங்கள் நம்மை என்ன நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு விடுகிற தென்பதை சற்று யோசித்துப் பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வரும்படியாய்
கேட்டுக் கொள்ளுகிறேன். அதே ராமாயணத்தில் மற்றொரு இடத்தில் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது ஒரு நாள் வயோதிகப் பிராமணன் இறந்து போன தன்னுடைய வாலிப குமாரனை தூக்கிக் கொண்டு வந்து ராமன் முன்பாக போட்டு ராமனைப் பார்த்து உன்னுடைய நீதியான அரசாங்கத்தில் என்னுடைய இளவயது மகன் எப்படி சாகக்கூடும் என்று கேட்டதாகவும் உடனே அரசனாகிய ராமன் தன்னுடைய நாட்டில் இந்த பிராமணக் குழந்தை சாகும்படியான அவ்வளவு பெரிய அக்கிரமம் என்ன நடந்து விட்டது என்று
சுற்றிப் பார்த்ததாகவும் அப்பொழுது தென்பாகத்தில் ஏதோ ஒரு நாட்டில் ஒரு சூத்திரன் கடவுளை நோக்கி தோத்திரம் பண்ணிக் கொண்டிருந்ததாகவும் தன்னுடைய நீதியான ராஜ்யத்தில் சூத்திரன் கடவுளை வணங்கினதினால் பிராமணக் குழந்தை செத்துப் போய்விட்டது. இந்த சூத்திரனைக் கொன்று
விட்டால் பிராமணக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பதாக முடிவு செய்து ராமன் ஒரே வெட்டாக அந்த சூத்திரனை வெட்டி விட்டதாகவும் அதே வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டத்தில் எழுதி இருக்கிறது. இவைகளை எல்லாம் நாம் ஒப்புக் கொள்ள வேண்டுமா? என்றுதான் ராமாயண பக்தர்களை கேட்கிறோம்.இந்தக் கதை இந்த நாட்டிலிருக்கும் வரை:
யிலும் தமிழ் மக்களுக்கு சுயமரியாதை ஏற்பட முடியுமா? ராமராஜ்யம், ராம ராஜ்யம் என்று பார்ப்பனர்கள் எழுதிவைத்திருப்பதும் மகாத்மாவும் அதை படித்துவிட்டு வந்து நமக்கு உபதேசம் செய்வதும் நாமும் இந்த ராஜாங்கம் போய் ராமராஜ்யம் வந்துவிட்டால் மிகவும் நல்லது என்று நினைப்பதும், எவ்வளவு பைத்தியக்காரத்தனமான காரியமென்பதையும் ராமராஜ்யம் வந்தால் நமது கதி என்னாகும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். சூத்திரன் கடவுளை ஸ்தோத்திரம் செய்யக் கூடாதென்று ஒரு கதை எழுதப்பட்டிருக்குமானால் அதை உண்டாக்கினவர்கள் எவ்வளவு கொடூர புத்தியுடனும் கெட்ட எண்ணத்துடனும் எழுதி இருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
தவிரவும் தமிழ் நாட்டு மாணவர்களை பகவத்கீதை படிக்க வேண்டு மென்கிறார். பகவத்கீதை பார்ப்பன பாஷை அதன் தமிழ் வியாக்கியானத்தில் 1000 அபிப்பிராய பேதம் அன்றியும் அது பார்ப்பன மதத்தை போதிப்ப தல்லாமல் தற்காலத்தில் நடக்க முடியாததும், நம்ப முடியாததும், விவகாரத் துக்கு இடமுள்ளதுமான விஷயங்களே 100 -க்கு 90 அதில் புதைந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழ் பாஷையில் உண்டாக்கின தமிழர்.
குடி அரசு - 1927 (3) 146
மதத்தையே பிரதானமாகக் கொண்ட குறளை ஏன் தமிழ் மக்களைப் படிக்கச் சொல்லக்கூடாது.
குறளைவிட கீதையில் என்ன அதிகமான நீதியும் சுயமரியாதையும் அடங்கிக்கிடக்கின்றதென்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே மகாத்மா
பார்ப்பனப் பிரசாரம் செய்கிறார் என்பதற்கு இதையும் ஒரு உதாரணமாகக் காட்டுகிறோம்.
நிற்க, மகாத்மா காந்தியவர்கள் தமிழ்நாட்டில் கதர் பிரசாரம் பண்ணு வதை பற்றியாவது தமிழ் மக்களுடைய பணம் லட்சக் கணக்காக வசூலித்துப் பார்ப்பனர்களிடம் கொடுத்து விட்டுப் போவதைப் பற்றியாவது முறையே நமக்கு கடுகளவு ஆக்ஷேபணையும் கவலையும் இல்லை. ஆனால் கதர் பேரைச் சொல்லிக் கொண்டு மூடநம்பிக்கைகளையும் பார்ப்பன மதப் புராணங்களையும் பிரசாரம் பண்ணுவதைப் பற்றிதான் நாம் கவலைப் படுகிறோம்.
அதாவது இதுகாரும் நாம் செய்து வந்த வேலைகளை அடியோடு கவிழ்ப்பதற்காக வேண்டுமென்றே பார்ப்பனர்கள் இந்த பிரசாரம் செய்விக் கிறார்கள் என்பதாக முன்னமேயே நாம் குறிப்புக் காட்டி இருக்கிறோம். அது இப்பொழுது பிரத்யக்ஷமாகவே நடந்தாய் விட்டது. தமிழ் மக்களுக்கு இது ஒரு நெருக்கடியான சமயமென்பதே நமதப்பிராயம். இவற்றிற்கு பரிகாரமாக மறுபடியும் ஒரு மட்டம் தமிழ் நாட்டில் எதிர் பிரசாரம் நடைபெற வேண்டிய
தாய் தானிருக்கும். எதற்கென்றுதான் நமது மக்கள் வேலை செய்ய முடியும். மகாத்மா அவர்களால் இம்மாதிரியான காரியங்கள் நடைபெறுமென்று நாம்
கனவிலும் நினைத்திருந்ததே இல்லை.இது ஒரு எதிர்பாராத ஆபத்தாய் வந்து சேர்ந்து விட்டது.
தவிர இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும் பிரமாதமாகப் பேசியி. ருக்கிறார். ஆனால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தைப் பற்றி ஒருவார்த்தைக்கூடப் பேசுவதற்கு மகாத்மாவுக்கு மனம் வரவில்லை. பிராமணர் - பிராமணரல்லாதார் விஷயத்தை மகாத்மா அவர்கள் அவ்வளவு அலகஷியமாக கருதும் படியாகச் செய்யப்பட்டிருக்கிறது என்று மாத்திரந் தான்
நாம் சொல்லலாமே யொழிய நாம் வேறென்ன சொல்லக்கூடும்.
குடி அரசு - கட்டுரை - 04.09.1927.
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சுவாமிகளும் கேவமுமயான்களும்
- சித்திரபுத்திரன்
நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் “நமது நாட்டு கடவுள் களே வழிகாட்டிகளாகயிருக்கிறார்கள் . அதாவது சூது வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபசாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் சில கடவுள்
களிடத்தில் இவையாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித் தனியாகவும் சில்லரையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வரு
கிறோம். இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படி
யும், மாதப் படியும், வருஷப்படியும் காலக்ஷேப மூலமாகவும், நடிப்பு மூலமாக வும்,பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக் காட்டிக் கொண்டும் வருகிறோம். இவைகளுக்காகவே நமது பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவைகள் தவறாமல் நடந்து வரச் செய்திருக்கிறார்கள் . தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும்பாலும் இக்காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி உண்டாகக் கூடும்? இம்மாதிரியான தர்மங்களை பரிபாலனம்
செய்யும் மக்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்? கடவுள்களும் கடவுள் களைப் பற்றிய கதைகளும் புராணங்களும் மற்றும் அது சம்மந்தமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் உண்டாக்கு வதற்கு உண்டாக்கப்பட்டனவேயன்றி இம்மாதிரி பலன்களுக்கு உண்டாக்கப் பட்டதாக யாரும் ஒப்புக் கொள்ள முடியாது.
மேற்கண்ட அனேக விதமான ஒழுக்கக் குறைவுகள் கடவுள் பெய
ரால் நடப்பவைகளும் இது சமயம் சுவாமியின் பெயரால் பெண்களுக்கு விபசாரித்தனத்திற்கு அனுமதிச் சீட்டு (பொட்டுக் கட்டுதல்) என்னும் லைசென்ஸ் கொடுக்கப்படுவதைப் பற்றி மாத்திரம் இவ்வியாசத்தில் எடுத்துக் கொள்ளுவோம். கோயில்களுக்கு தாசிகள் என்னும் விலைமாதர்கள் எதற்காக வேண்டும்? மேளமடித்தல், மணியடித்தல் முதலிய காரியங்கள்
குடி அரசு - 1927 (3) 148
எதற்காக பூஜைக்கு உபயோகப்படுகிறது என்று யாராவது கேட்டால் சுவா மிக்கு தீபாராதனை ஆகும் போது வேறு சப்தங்கள் காதில் விழாமல் இருக்கும் பொருட்டு மணிச் சப்தங்களும், மேள வாத்தியங்களும் செய்யப் படுகிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. இது சரியோ தப்போ அதைப்பற்றி
நாம் இப்போது விவரிக்க வரவில்லை. வேறு சப்தங்கள் காதில் படாமல் இருப்பதற்கு மணியும், மேளமும் வைத்திருப்பதானால் விலைமாதர்களான விபசார ஸ்தீரிகளை கோவிலில் நிறுத்தி இருப்பதன் காரணம் என்ன? என்று இந்த முறையில் யோசிப்போமானால் சுவாமி தீபாராதனையின் போது பக்தர்களுக்கு வேறு சாமான் கண்களில் படாமல் இருப்பதற்கு இந்த சாமான் களை (விபசாரிகளை! நிறுத்தி வைத்திருப்பதாகத்தான் கொள்ள வேண்டும். இதை யாராவது அறிவாளிகளின் வேலையென்று சொல்லக் கூடுமா?
நமது நாட்டில் விபசாரத்திற்காக பொட்டுக்கட்டிக் கொள்ளும் தாசிகள் எல்லோரும் ஒவ்வொரு சுவாமியின் பெயரால்தான் தங்களைப் பொது மக்கள் என்று முடிவுகட்டி விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்களேயல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லாததால் இந்த வியாபாரத்திற்கு போகிறேன் என்று யாரும் சொல்வதே இல்லை. இந்தமாதிரி அனுமதிச்சீட்டு கொடுக்கும் கடவுள் வேறு எந்த மதத்திலாவது இருக்கிறதாவென்பதை யோசித்துப் பார்த்தால் நமது அறியாமையும் நமது கடவுள்களுக்கு நாம்
செய்யும் இழிவும் புலப்படாமல் போகாது.
தவிர, வேறு விவகார முறையில் பேசுவதானாலும், அதாவது கடவுளுக்கு பணி செய்ய இவர்கள் கோயிலில் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதானாலும் இருந்திருந்து கடவுளுக்கு பணி செய்ய இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைத்தானா நியமிக்க வேண்டும்? வேறு யோக்கியமான தொழிலில் உள்ள பெண் மக்கள் உங்கள் சமூகத்தில் இல்லையா என்று யாராவது கேட்டால் அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லக்கூடும்? இம்மாதிரி ஒவ்வொரு முக்கிய கோயிலிலும் பூஜை காலத்தில் 10, 20, 30 சில கோயில்களில் 100,150 வீதம் விபசாரப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் முன்னிலையில் நடனமாடினால் அந்த பக்தர்களின் கதி என்ன ஆவது? கிராமாந்தரங்களில் எந்த கோயிலில் பார்த்தாலும் உள்ளதுக்கும் நன்றாய் கொஞ்சம் அழகாய் இருக்கிற தாசிகள் , முதலாவது தர்மகர்தாவுக்கு அல்லது அவர்கள் மக்களுக்கு. அதற்கடுத்தது தான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்பதாகவே வழக்கமாயிருக்கிறது.
கிராமாந்தரங்களில் உள்ள கோயில்களின் கதி இப்படி யென்றால் சில பெரிய பட்டணங்களிலும், முக்கிய ஸ்தலங்களிலும் உள்ள கோயில்களின் சங்கதி கேட்க வேண்டியதில்லை. விசேஷ ஸ்தலங்களில் உள்ள கோயில் களின் தாசிக்கு பெரும்பான்மையும் அந்தந்த கோயில் அர்ச்சகர்கள்
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
முதலியவர்களே தரகர்களாகி விடுகிறார்கள். அவர்கள் சுவாமிக்கும் நமக்கும் இடையில் எப்படி தரகர்களாயிருக்கின்றார்களோ அது போலவே இந்த “அம்மன்” களுக்கும் நமக்கும் தரகர்களாயிருந்து கொண்டு யாத்திரைக்கார வாலிபர்களைப் பாழாக்கி விடுகிறார்கள். சுவாமி பக்திக்காக கோயில்களுக்குப் போகும் பக்தர்கள் நாளா வட்டமாய் பழகி தாசி பக்தர். களாகிவிடுவதை நாம் எத்தனையோ பார்த்திருக்கிறோம். இந்த அநாகரீகமும்
கெடுதி யுமான காரியங்கள் மதத்தின் பெயராலும் சுவாமியின் பெயராலும் நடை பெறுவதானது நமது சமூகத்திற்கே இழிவு என்று சொல்லாமலிருக்க முடிய வில்லை. “சாஸ்திரங்களிலிருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்வது” என்று சிலர் சொல்லலாம். “வெகு காலமாய் வழக்கத்தில் வந்து விட்டது, அதற்கு நாம் என்ன செய்வது” என்று சிலர் சொல்லலாம். இதெல்லாம். முட்டாள்தனமான சமாதானமாகுமே தவிர அறிவுள்ள சமாதானமாகாது. நம்முடைய சாஸ்திரத்தில் இல்லாத அயோக்கியத்தனம் உலகத்தில் ஒன்று கூட இல்லை என்பதாக நம்மால் மெய்பிக்கலாம்.அதையெல்லாம் இன்றைய தினம் நாம் செய்வதென்றால் நம்மைப் போல் மூடர்கள் உலகத்திலிருக்கவே முடி யாது. அந்த சாஸ்திரங்கள் என்பவைகளை எழுதினவர்கள் யார்? அவர்.
களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? எதற்காக இப்படியெல்லாம் எழுதி
னார்கள்? இம்மாதிரி வேறு தேசத்தில் வேறு மதத்தில் வேறு சாஸ்திரத்தில் எங்கேயாவது இருக்கிறதா? என்பவைகளை யோசித்துப் பார்த்து பிறகு இவற்றை கவனிக்க வேண்டுமேயல்லாமல், எவனோ தனக்கு தொழில் வேண்டும், வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டும் என்பதாக ஏதாவது ஒன்றை எழுதிவைத்து நமக்குக் காட்டினால் அதுவே நமக்கு கடவுள் வாக்காகி விடுமா அல்லது ஆதாரமாகி விடுமா? மனிதனுக்கு பகுத்தறிவு எதற்காக இருக்கிறது? இப்பொழுது வரவர அனேக கோயில்களில் இந்த தாசி வழக்கத்தை எடுத்தாகி விட்டது. உதார ணமாக மைசூர் கவர்ன்மெண்டார் தங்கள் ஆட்சிக்குள்பட்ட கோயில்களுக்கு எங்கும் தாசி உத்தியோகம் இருக்கக்கூடாது என்பதாக ஒரு உத்திரவு போட்டு தங்கள் சாமிகளை: விபசாரத்தனத்திலிருந்து மீட்டு விட்டார்கள். அதன் மூலம் அந்த சமஸ்தா னத்து கோயில் தாசிகள் எல்லாம் நீக்கப்பட்டாய் விட்டது. மைசூர் சமஸ் தானத்து சுவாமிகளுக்கு வெட்கம் வந்து தங்களுக்கு இனிமேல் தாசிகள் வேண்டியதில்லை என்று அந்த கவர்ன் மெண்டுக்கு சொல்லி விட்டது போல் நமது நாட்டு சுவாமிகளுக்கும் என்றைக்காவது வெட்கம் வந்தோ அல்லது
கிழப் பருவம் வந்தோ இனிமேல் தங்களுக்கு தாசிகள் வேண்டியதில்லை என்று தேவஸ்தான போர்டாரிடமாவது, கமிட்டியாரிடமாவது, தர்ம கர்த்தாக் களிடமாவது சொல்லிவிட கூடாதா? என்பதாக நமது நாட்டு சாமிகளைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 04.09.1927
குடி அரசு - 1927 (3) 150
மதப்புரட்டு
அரசியலின் பெயரால் அரசியல்காரர்கள் தேசீயக்காரர்கள் என்போர்.
கள் தங்கள் சுயநலத்திற்கு மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றி பாழ்படுத்தி வருகிறார்கள் என்று சொல்லி வந்தேனோ அதைவிடக் கொஞ்சமாவது குறைந்ததல்ல இந்த புரோகிதர்கள் அல்லது பார்ப்பனர்கள் என்கிற ஒரு
கூட்டத்தார் மதத்தின் பேரால் நம்மை ஏமாற்றி நமது ஒற்றுமையைக் குலைத்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நமது பொருளையும் கொள்ளை கொண்டு நமது
நாட்டையும் சமூகத்தையும் பாழாக்கி நம்மை சுயமரியாதையற்ற மனிதர்களாக நடைப்பிணமாய் வாழும்படி செய்து வருவது. இதன் ரகசியத்தை நாம் கொஞ்சமும் உணராமல் இம்மாதிரியான வஞ்சகச் செயலுக்கும் நாமே உதவியாயும் இருந்து நீடூழி காலம் நம்மையும் நமது பின் சந்ததியையும்
நிரந்தர அடிமையாக வேண்டியதான ஆதாரங்களையும் சிருஷ்டித்து வருகிறோம். இதை விளக்குகிறபோது உங்கள் மனம் ஒரு சமயம் பதைத் தாலும் பதைக்கும். தயவு செய்து கொஞ்சம் பொறுமையோடு கவனித்து கேட்ட பிறகு உங்கள் பகுத்தறிவையும் நடுநிலைமையில் இருந்து உபயோகப் படுத்தி பார்ப்பீர்களானால் அதன் உண்மை அதாவது “நான் சொல்லுவது சரியா தப்பா என்பது உங்களுக்கு விளங்காமல் போகாது. அல்லாமலும் நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது கடவுள் வாக்கு, நம்பா விட்டால் நரகம் வரும், நாஸ்தீகர்கள் ஆகிவிடுவீர்கள்” என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்கு முறைக்குள் ஆளாக்க வில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம் இதுகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளிவிடுங்கள் . ஒத்து வந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரர்க
ளுக்கும் இதைச் சொல்லி அவர்களையும் ஈடேற்றுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்லுவதனால் எனக்கு இதில் ஒரு சுயநல பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள். நான் எந்த மதக் காரனுக்காவது ஏஜண்டு அல்ல, அல்லது நானும் எந்த மதத்துக்காரனுக்காவது அடிமையும் அல்ல. அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவத்திற்குள் மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால் எனக்குப் பட்டதை உங்கள் முன் சொல்வதில் எனக்கு ஒரு கடமையும், ஆசையும், மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லு கிறேன். மற்றபடி அதைப் பற்றிய உங்கள் கடமைகளை உங்கள் சுதந்திரத் திற்கே அதாவது உங்கள் பகுத்தறிவுக்கே விட்டு விடுகிறேன்.
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனித னுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்காகவா, பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாகஷிக்கு கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனச்சாக்ஷியை கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா அல்லது மதத்துக்காக மனிதனா? என்பவைகளை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
இந்த முறையில் நமது மதம் என்பதின் யோக்கியதையை கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள் . முதலாது நமது மதமாகிய இந்து மதம் என்பது என்ன என்பது இங்குள்ள எத்தனை பேருக்கு தெரியும்? இந்து மதஸ்தர்கள் என் போர்களில் எத்தனை பேர்கள் அதன் தத்துவத்தை அறிந்திருப்பார்கள் ? இந்து மதம் என்பதாக ஒரு மதம் உண்டு என்று எத்தனை பேர் ஒப்புக் கொள்:
ளுகிறார்கள் 2
முதலாவது, இந்து என்பது எந்த பாஷை வார்த்தை? உலகத்திலுள்ள எந்த பாஷையிலாவது இந்து என்கிற ஒரு வார்த்தை இருக்கிறதாக யாராவது சொல்லக்கூடுமா? நமது நாட்டிற்கு இந்த வார்த்தை எப்பொழுது வந்தது? என்று பார்ப்பதானால் நம்முடைய தமிழ் இலக்கண இலக்கியங்களிலாகட்டும் அல்லது சங்ககால பழய தமிழ் ஆதாரங்களிலாகட்டும் அல்லது ஆரிய பாஷை, ஆரிய நாகரீக பழக்க வழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், ஆகமம், சுருதி, ஸ்மிருதி, புராணம், சரித்திரம்,கதை முதலிய எவைகளிலாவது
இந்து அல்லது இந்துமதம் என்கிற வார்த்தை இருக்கிறதா? அல்லது ஆழ்வா ராதிகள், நாயன்மார்கள் என்ற பெரியோர்களது பாடல்களிலாவது, சரித்திரங் களிலாவது இந்த வார்த்தை காணப்படுகிறதா? அல்லது சித்தர்கள் , முனிவர்.
கள் ,ரிஷிகள் என்று சொல்லப்பட்டவர்களாவது இம்மாதிரி வார்த்தை உச்சரித் ததாகவோ வழங்கினதாகவோ எங்காவது காணக்கிடக்கின்றதா?
மதம் என்பதற்கு நாம் உத்தேசிக்கும் பொருள் தான் என்ன? என்று பார்த்தால் ஆராய்ச்சிக்காரர்கள் மதம் என்பது கொள்கை என்று சொல்லு கிறார்கள். அப்படியே வைத்துக் கொள்வதானாலும் இந்து மதம் என்பதற்கு என்ன பொருள் 2
இந்து கொள்கை என்று வைத்துக் கொள்ளலாம் என்றால், இந்து என்பதற்கு பொருள் என்ன? இந்து மதம் என்பதைத் தவிர மற்ற மதங்கள் என்பவைகள் இம்மாதிரி இல்லாமல் மதம் என்பதற்கு முன்னால் ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயரை வைத்து பின்னால் மதம் என்பதைக் கூட்டி
கிருஸ்து மதம், மகமதிய மதம், புத்தமதம், இராமானுஜ மதம், சங்கராச்சாரிய
மதம் என்பது போல சொல்லப்படுகிறது. இம்முறையில் இந்து மதம் என்பது
குடி அரசு - 1927 (3) 152
எந்த ஆசாமியை உடையது? யாருடைய கொள்கை என்று பெயர் கொண்டது? ஒன்றுமே இல்லாமல் வெறும் உச்சரிப்பைத் தவிர யாதொரு பொருளுமற்றதான சப்தம் கொண்ட வார்த்தையை நமது மதத்திற்கு பெயராக வைத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இரண்டாவது, மற்ற மதங்களைப் போல இந்து மதத்திற்கு யார் கர்த்தா? அதற்கு என்ன வயசு? அதற்கு என்ன கொள்கை? இதற்கு என்ன ஆதாரம் என்பவைகளையாவது யோசித்துப் பாருங்கள் “இந்து மதம் என்பது வேத
மதம். வேதம் என்பது கடவுளால் சொல்லப்பட்டது” என்று சிலர் சொல்லுவது உண்டு.அந்த ஆபாசத்தையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். கடவுளால் சொல்லப்பட்ட வேதமானால் உலகத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் ஒரே வேதமாயிருக்கக் கூடுமே தவிர ஒருவர் ஒப்புக்கொள்ளவும் மற்றொருவர். மறுக்கவும், மற்றொருவருக்கு தென்படக்கூடாததாயும் ஒரு எல்லைக்குள் ளாகவே அடங்கக் கூடியதாகவும் இருக்க முடியுமா? கடவுளால் சொல்லப் பட்டதானால் அது ஒரு பாஷையில்தானா சொல்லப்பட்டிருக்க வேண்டும்? நமக்கு சொல்லப்பட்ட வேதமானால் நம்முடைய பாஷையில் சொல்லப் பட்டிருக்காதா? வேத பாஷைக்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா? அன்றியும் நமக்காக கடவுளால் சொல்லப்பட்டதாயிருந்தால் நாம் அதை. கேட்கவும், பார்க்கவும், படிக்கவும், அறியவும் கூடாததாயிருக்க முடியுமா? அது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு வேதம் என்பதாகக் கணக்குக்காரருக்கு கட்டுப்பட்டதாக இருக்குமா? தவிர “பிடித்தவனுக் கெல்லாம் பெண்டாட்டி” என்பது போல் அதற்கு ஆளுக்கு ஒருவிதமாக அவரவர் இஷ்டப்படி வியாக்கியானம் செய்யவும் ஒவ்வொரு வியாக்கியா னத்திற்கு ஒரு க்ஷி சேர்க்கவும் தக்கதாக இருக்கக்கூடுமா? ஆகிய இது போன்ற அநேக விஷயங்களை யோசித்தால் வேதம் என்று ஒன்று உண்டா? உண்டாயிருந்தாலும் அது உண்மையானதா? உண்மையானாலும் நம்மை அது கட்டுப்படுத்தத்தக்கதா என்பவைகளை சற்று யோசியுங்கள். தவிர இம் மாதிரி யான மத வேத கடவுளைப் பற்றியும் இது போலவே யோசியுங்கள் .
உலகத்திற்கு எத்தனை கடவுள்? அதிலுள்ள எத்தனையோ மதங் களில் ஒரு மதமாகிய இந்து மதம் என்பதற்கு எத்தனை வேதங்கள்! அவை களுக்கு எத்தனை கடவுள்கள்! இந்த கடவுள்களை ஆராதிக்கிற வணங்குகிற மக்களுக்கு எத்தனை கக்ஷிகள்! ஒவ்வொரு கடவுள்களின் குறிகளுக்கு எத்தனை அடையாளங்கள்! அவைகளுக்காக எத்தனை சண்டைகள்! இந்த கடவுள்களுக்கு எத்தனை கோயில்கள்! எத்தனை ஆதாரங்கள்! எத்தனை கலியாணங்கள்! எத்தனை பெண்டு பிள்ளைகள்! எத்தனை அக்கிரமமான நடவடிக்கைகள்! என்பது போன்றதையும் கவனியுங்கள். இந்த கடவுள்களின் பக்தர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள்! எத்தனை ஜாதிகள்! எத்தனை உயர்வு தாழ்வுகள்! இவைகளிலெல்லாம் ஒரே ஒரு வகுப்பார் மாத்திரம்,
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அதுவும் விரல் விட்டு எண்ணிவிடத்தகுந்த வெகு சிலர் மாத்திரம் எல்லா வற்றிற்கும் பெரியவர்கள், உயர்ந்தவர்கள், உரிமையுள்ளவர்கள் என்கிற நியாயம் ஏன்?
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர், அவர் எங்கும் உள்ளவர் என்கிற தத்துவம் நம்முடைய மதத்து கடவுளுக்கும் உண்டானால், நாம் கடவுள் கிட்டப் போகக் கூடாது, மற்றவர்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது, மற்றொருவர் மாத்திரம்தான் கடவுளைத் தொடலாம், கழுவலாம், வேஷ்டி துணி கட்டலாம் என்கிற கொடுமைகள் அதற்கு ஏற்படுத்த முடியுமா?
நாம் இந்த மதத்தை ஒப்புக் கொண்டு, அதில் கண்ட சாமிகளையும் ஏற்றுக் கொண்டு அதற்காக கோயிலும் கட்டி சொத்தும் விட்டு, நாம் வணங் கவும் தினம் போய் வருவதினால் நமக்கு ஏற்படுகிற பலன் என்ன என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள் .
ஒரு லக்ஷம், ஐந்து லக்ஷம், பத்து லக்ஷம் ரூபாய்கள் என்பதாக செலவு செய்து கோயில் கட்டி அந்த கோயில் 100 வருஷம், 1000 வருஷம், 10000 வருஷம், 100000 வருஷம் என்கிற காலம் நிலைத்திருக்கச் செய்வதில் என்ன நிலைத்திருக்கச் செய்கிறோம் என்பதை சற்று பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். “இந்த கோயிலிலுள்ள சுவாமியிடம் போகக்கூடாத ஒரு நீச்சன்
நான், அந்த சாமிக்கு நேரே பூஜை செய்யக் கூடாத ஒரு இழிந்த வன் நான், என்னை விட ஒரு பெரிய ஜாதி இருக்கிறது, அவர்களைவிட தாழ்ந்த ஜாதியாகிய நான் நிற்பதற்கு இந்த இடம்” என்று பல பல விதமாக நம்மை நாமே இழிவுபடுத்திப் பிரித்து அதை ஒப்புக் கொண்டு “அந்த கல்லும், கோயிலும், கோயிலுக்குள் இருக்கும் சுவாமியும் உள்ளவரை என்னுடைய
இழிவும் நீச்சத்தனமும் தாழ்வும் நிலைத்திருக்கத்தக்கது. இதற்கு என் பின் சந்ததிகளும் கட்டுப்பட்டிருக்க வேண்டும். இத்தனை லட்சம் செலவு செய்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தது மாத்திரமன்றி என்னைவிட இன் னொரு ஜாதியான் உயர்ந்தவன் என்பதை நிலை நிறுத்தவும், அவன் பசியினால் சாகாமல் இருக்கவும் அவனுக்கு உபயோகப்படும் படியாக அந்த சாமியின் பெயரால் இத்தனை லட்சம் ரூபாய் சொத்துக்களை எழுதி வைக் கிறேன். இதை அவன் கூட்டத்தார் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு பிள்ளை பிள்ளை தலைமுறையாய் கற்பகோடி காலத்திற்கு கல்லும், காவேரியும்,
புல்லும், பூண்டும் உள் எவரைக்கும் மேல் ஜாதியாயிருந்து வர வேண்டியது” என்று செய்வ தாகிறதேயல்லாமல் வேறு என்ன என்பதையும் கவனித்துப் பாருங்கள். இது தவிர இந்த மாதிரி கோயில்களுக்கு மற்றவர்களையும் எவ்வளவு செலவுகள் செய்யச் சொல்லுகிறோம். அதனால் மக்களுக்கு ஏற்படுகிற செலவுகள் எவ்வளவு என்பதை பாருங்கள். “சர்க்கார் நம்மிடம் வரி வாங்குகிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். அது செய்யவில்லை. இது
குடி அரசு - 1927 (3) 154
செய்யவில்லை. வீண்செலவு செய்கிறார்கள் . மக்களுக்கு படிப்பு இல்லை, ஒழுக்கம் இல்லை என்று சத்தம் போடுகிறோமே அப்படிப்பட்ட நாம் இந்த சாமிகளால் அடிக்கப்படும் கொள்ளைகளை கொஞ்சமாவது கவனிக்கி றோமா? அல்லது அவைகளை நிறுத்தவாவது பாடுபடுகிறோமா? என்பதை யோசிக்க வேண்டாமா?
திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள ஒரு 45 கோயில் களை மாத்திரம் கணக்குப் போட்டுப் பாருங்கள் . திருநெல்வேலி கோயிலுக்கு வருஷம் ஒன்றுக்கு 70 ஆயிரம் ரூபாய் வரும்படி சங்கரன் கோயிலுக்கு ஹு 50,000ம்
ரூ. வரும்படி. குற்றாலம் கோயிலுக்கு வருஷம் 40,000 ரூ. திருச்செந்தூர். கோயிலுக்கு 1Y, லட்சம் ரூ. வரும்படி ஆக நான்கு கோயிலுக்கு மாத்திரம்
சுமார் மூன்று லட்சம் ரூபாயிக்குக் குறையாமல் வரும்படி வருகிறதாக இந்த தேவஸ்தான நிர்வாகிகளால் கேள்விப்பட்டேன். இது தவிர இந்த கோயிலுக்கு வருகிற பக்தர்கள் போக்குவரவு, தேங்காய்ப் பழம், நெய், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகம், மேளம் தாளம், தாசி சதிர், பாட்டுக் கச்சேரி, உத்சவம் முதலியவைகளில் செலவு செய்யும் பணம் எவ்வளவு? இவைகளெல்லாம் எதற்காக உபயோகப்படுகிறது? என்பதையும் யோசியுங்கள் .நீங்கள் கீழ்ஜாதி, பூஜை பண்ணுகிறவனும் சிலரும் மாத்திரம் உயர்ந்த ஜாதி, ஆதலால் நீங்கள் கொடுக்க வேண் டியது.மற்றவன் சாப்பிடவேண்டியது என்பதல்லாமல் வேறு எதற்கு உபயோகப்படுகிறது என்பதை நன்றாய் கவனியுங்கள். இந்தமாதிரி செய்யும்படி உங்களை எந்த சாமி கேட்கிறது. அல்லது கட்டளை இடுகிறது.
சில வயிற்றுச் சோற்றுச் சாமி உங்களை ஏமாற்றுவதும், நீங்கள் ஏமாறு வதும் நிஜமாலும் உள்ள சாமிகள் “நமக்கு இப்படியும் முட்டாள் பக்தர்கள். உண்டா?” என்று பல்லைக் காட்டிக் கொண்டு சிரிப்பதும் அல்லாமல் வேறு என்ன பலன் கிடைக்கிறது.
(4.91927 குடி அரசு-சமூக முன்னேற்றம் சொற்பொழிவு தொடர்ச்சி
குடி அரசு - சொற்பொழிவு - 11.09.1927
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சுயமரியாதைக்கு லாயம் இல்லை
ஊார்ஸ் சோசப்யபிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்
காங்கிரஸ் என்பது ஒரு பெரிய தேசத் துரோகமான சபை என்றும், அது பார்ப்பனர்களும் படித்தவர்களுமான சிலர் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பிழைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட சபை என்றும், நாட்டில் எத்தனைக் கெத்தனை காங்கிரசுக்கு செல்வாக்கிருக்கிறதோ அத்தனைக்கத்தனை தேசத்
துக்கும் குறிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கும், ஏழை மக்களுக்கும் துரோகமும். கஷ்டமும் ஆபத்துமே அதிகரிக்குமென்றும், எவ்வளவோ ஆதாரங்களுடன்.
முழு மூடர்களுக்கும் புரியும்படியாக புள்ளி விபரங்களுடனும் உண்மை சம்பவங்களுடனும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறோம். இது இன்று நேற் றல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதார மூலமாய் அறிய வேண்டுமென்கிற ஆவலுள்ளவர்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபக மூட்டு
கிறோம். சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பாக சென்னை மைலாப்பூர் மந்தைத் தெருவில் நாம் ஒரு பிரசங்கம் செய்ததற்காக சர்க்கார் ராஜ துவேஷத் திற்காகவும், வகுப்புத் துவேஷத்திற்காகவும் நம்மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பிரசங்கத்திலேயே
இந்த விஷயமாய் யோசிப்பது ஆதாரத்தில் இருக்கிறது.ஆதாரத்தில் இன்றும் இருக்கிறது. ஆனாலும் நமது நாட்டில் வெகு பேருக்கு இது சமயம் காங்கிரசே நிவர்த்திக்கும் உத்தியோகத்திற்கும், பிழைப்புக்கும் ஆஸ்பதமான ஸ்தாப
னமாய் விட்டதால் இந்தக் கூட்டத்தாருக்கு புத்திவரும்படி செய்துநாட்டையும் மக்களையும் காப்பாற்றுவது பெருத்த கஷ்டமான காரியமாயிருந்து வருகிறது.
நம் நாட்டு பத்திரிகைகளும், பெரும்பாலும் வேறு தொழிலில் பிழைப்பதை மிக கஷ்டமாய் கருதுபவர்களாலேயே நடத்த ஏற்பட்டுப் போய் விட்டதால் தேசத்தையாவது பாமர மக்களையாவது சத்தியத்தையாவது தங்களது மனதில்
தோன்றும் உண்மையையாவது ஒரு சிறிதும் கவனிக்காமலும் இம்மாதிரியான தங்கள் தொழிலுக்கு வெட்கப்படாமலும் ஒருவரைப் பார்த்து ஒருவர். அவருக்கில்லாத வெட்கம் நமக்கு ஏன் என்பதாக ஆடுகள் போல ஒரே அடியாய் எல்லாம் தலை குனிந்து கொண்டு ஒன்றன் பின் ஒன்றாய் “காங்கிரஸ்” “சுயராஜ்யம்”, “தேசீயம்”, “உரிமை”, “விடுதலை” என்கிற பெயர் களை வைத்துக் கொண்டு நாட்டைப் பாழ்படுத்தி வாழ்ந்து வருகின்றன.
குடி அரசு - 1927 (3) 156
ராஜாங்கம் என்பதும் இந்த மாதிரி “தேசீய”வாதிகளினுடையவும், அரசியல்காரர்களினுடையவும், பத்திரிகை காரர்களினுடையவும், நாணயத்
திற்கும், யோக்கியதைக்கும் ஒரு சிறிதும் குறைந்ததல்ல. ஆனதால் ஏறக்கு றைய இருகூட்டத்தாரும் அந்தரங்கத்தில் ஒன்று சேர்ந்தே இக்கொடுமை களைச் செய்து வருகிறார்கள் என்று சொல்லத் தக்க மாதிரியே நடந்து வருகிறார்கள் . இந்தக் கொடுமையிலிருந்து மக்களை தப்புவிக்கலாமென்று யாராவது வேலை செய்து, அது ஏதாவது சிறிது பலன் தரக்கூடிய நிலைமைக்கு வந்து விட்டால் அதையும் ஒழிப்பதற்கு அதன் விரோதிகளான முன் சொல்லப்பட்டவர்கள் ஏதாவது ஒரு தந்திரம் செய்து மக்களை ஏமாற்றி விடு
கிறார்கள் . இந்த மாதிரி தந்திரத்தின் ஒரு பகுதிதான் இப்போது மகாத்மாவை கூட்டி வந்து, “எல்லோரும் காங்கிரசில் சேருங்கள் . காங்கிரசில் சேருங்கள்” என்று சொல்லச் செய்ததான பார்ப்பன பிரசாரமும் என்பதே நமது அபிப் ராயம். இந்த காங்கிரசில் உள்ள “தலைவர்கள்” “தேசாபிமானிகள்” என்பவர் களைப்பற்றி எழுதுவ தென்பது கொஞ்ச இடத்தில் அடங்கக்கூடிய காரியமல்ல. அன்றியும் இந்த வியாசம் அதற்காக எழுதத் தொடங்கினதுமல்ல.. ஆதலால் ஒரே ஒரு முக்கிய தலைவரின் பெயரையும், கொடி வழியையும் சொல்லி விட்டால் மற்றத் தலைவர்களைப் பற்றி அவரவர்களே ஞாபகப்
படுத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
அதாவது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி என்பவர் இதுசமயம், சட்டசபை, காங்கிரஸ், சுயராஜ்யக்கக்டி முதலியவைகளில் முக்கியஸ்தராயிருப்பதுடன்
“நாட்டின் அபிப்ராயத்திற்கு””ம் பிரதிநிதியானவர். கவர்னர், வைசிராய், மகாத்மா காந்தி முதலிய பிரபுக்களிடம் நமக்காகப் பேசுபவர். நாளைக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதற்கும் திட்டம் போடுபவர்.
நிற்க, இந்த மாதிரியான பெரிய பொறுப்பு வாய்ந்த இந்த நமது *தலைவருக்கு”சாப்பாட்டிற்கு கொடுத்துக் கொண்டுவருபவர் யார்? அவர். யோக்கியதை என்ன? இவர்களை தலைவர்களாக்குகிற பத்திரிகைகள். எவை? அவைகளின் யோக்கிய பொறுப்பு எவ்வளவு? இவைகளை எல்லாம் நாட்டு மக்களிடம் அறிமுகப்படுத்தி பின்பற்றுவோர்களையும் சம்பாதித்துக் கொடுக்கும் ஆசாமிகள் யார்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்க ளுக்கு மாதச் சம்பளம், மொத்தக் கூலி எவ்வளவு? கொடுப்பவர் யார்? அவர். யோக்கியதை என்ன? இவைகள் எல்லாம் மகாத்மாவுக்கு தெரியுமா? ஏதாவது
சில தெரிந்திருந்தாலும் அவற்றை வெளியிலெடுத்துச் சொல்லவோ, நடவடிக் கைகளில் காட்டவோ, மகாத்மாவுக்கு தைரியம் உண்டா? இந்த மாதிரியான கூட்டத்தாரைத் தவிர வேறு யாருக்காவது மகாத்மாவை அறிமுகப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட முடிந்ததா? என்பதான விஷயங்களை ஒரு மனிதன் நடுநிலைமையில் இருந்து யோசித்துப் பார்ப்பானானால் நாட்டுக்கு ஏற்பட்ட கஷ்டகாலத்தை உணர முடியாமல் போக நியாயமில்லை.
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தவிர, இந்த மாதிரியான காங்கிரசையும் அரசியலையும் ஏற்றுக் கொள்: ளாதவர்களையோர்ப்பனரல்லாத ககஷியாரை! நமது நாட்டில் இந்த காங்கிரஸ் கூட்டத்தார் (பெரும்பாலும் பிராமணர்கள்! தேசத் துரோகிகள் என்றும், ஏழைமக்களின் விரோதிகள் என்றும், சுயராஜ்ய விரோதிகள் என்றும், பேசினதும், எழுதினதும் பிரசாரம் செய்ததும், இனியும் செய்து கொண்டிருப்
பதும் யாரும் அறியாததல்ல. இம் மாதிரியான கூட்டத்திலும் நமது நாட்டு பெரும்பான்மை மக்களான பார்ப்பனரல்லாதார் சிலரும் சேர்ந்து கொண்டு கூத்தாடியதும் யாவரும் அறிந்ததே. அக்கூட்டத்தில் ஒருவரான ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்களின் விஷயமாகவே இந்த வியாசம் எழுத முன்வந்தோம்.
அதாவது ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்கள், நமது நாட்டு பார்ப்பன ரல்லாதார் இயக்கத்திற்கு விரோதமாய் பார்ப்பனர்களால் சென்னை மாகாண சங்கம் என்பதாக பத்து வருஷங்களுக்கு முன் ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் தனது பெயரை பார்ப்பனர்களுக்கு கொடுத்தவர். அன்றியும் இவர். மாத்திரமல்லாமல் இவரோடு கூடவே ஸ்ரீமான்கள் வரதராஜுலுநாயுடு, கலியாணசுந்திர முதலியார், சர்க்கரை செட்டியார், ஆரியா, தண்டபாணி பிள்ளை முதலிய மற்றும் சில கனவான்களும் இக்கூட்டத்தில் சேர்ந்தவர்கள். இவர்களில் ஸ்ரீமான் ஜோசப்பு தவிர ஏறக்குறைய மற்றெல்லோரும் பார்ப் பனர்களின் சூழ்ச்சியையும் தங்களது அறியாமையையும் உணர்ந்து ஒவ்வொ ருவராக பார்ப்பனர்களைவிட்டு வெளிவந்து பார்ப்பனர்களின் யோக்கியதை யையும் வெளியாக்கி விட்டார்கள் . சிலர் மறுபடியும் மறுபடியும் அங்கொரு
கால் இங்கொரு காலுமாகவும் இருக்க வேண்டி இருந்தாலும் உண்மையை அறிந்து கொண்டதாகவும் தங்கள் குற்றத்தை உணர்ந்து கொண்டதாகவும் தாராளமாய் வெளிப்படுத்தி விட்டார்கள் . எனினும் சிலர் இம்மாதிரி அங் கொருகாலும், இங் கொரு காலுமாய் இல்லாமல் வாழ முடியாத நிலைமையில் தங்களது வாழ்க்கையை சிக்க வைத்துக் கொண்டார்களானதால் அதிகமான கெடுதி அவர்களால் ஏற்படாதிருக்கும் வரையில் இடம் கொடுத்துக் கொண்டு வர வேண்டியதுதான் என்பதே நமது அபிப்பிராயம்.
ஆனால் ஸ்ரீமான் ஜோசப்புக்கு மாத்திரம் பார்ப்பனர்களின் யோக்கி யதை தெரிந்திருந்தாலும் தன்னால் பார்ப்பனர்களை ஏமாற்ற முடியாது என்ப தையும், தன்னை விட பார்ப்பனர்கள் கெட்டிக் காரர்கள் என்பதையும் அறிந்து கொள்ள இதுவரை சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விட்டது.
நல்ல வேளையாய் இப்போது அவருக்கு கிடைத்துவிட்டது. அவர் அசோஸியேட்டட் பிரஸ் இடம் சொன்னதாவது:-
“காங்கிரஸ்காரர் என்று சொல்லிக்கொண்டு காங்கிரசிடம்
விசுவாசம் காட்டாதவர்களும் எனக்கு நேர் விரோதமாய் வேலை
குடி அரசு - 1927 (3) 158
செய்தவர்களும் பார்ப்பனர்கள் தான்.
மதுரைப் பார்ப்பனர்கள் தாங்கள் வகுப்புவாதி களல்ல என்று சொல்லுவது சரியல்ல.
காங்கிரஸ் கமிட்டியார் ஒரு பார்ப்பனரைத் தள்ளிவிட்டு என்னை தெரிந்தெடுத்ததால் காங்கிரஸ் பார்ப்பனர் எனக்கு ஓட்டு செய்யவில்லை”
இந்த மூன்று வாக்கியங்களிலிருந்தே அவரது அபிப்பிராயம் என்ன என்பது வெளிப்படை. அதாவது பார்ப்பனர்கள் காங்கிரசிடம் பக்தி இருப்ப தாய் காட்டிக் கொள்வதெல்லாம் மோசடி என்றும், பார்ப்பனர்கள் தங்கள் சுயநல வகுப்புவாதிகள் என்றும் பார்ப்பனர்களுக்கு ஓட்டு கிடைப்ப தற்காகத்தான் காங்கிரசை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறதே தவிர வேறு காரியத்திற்கல்ல என்றும் தாராளமாய் அபிப்பிராயப்பட்டு இருக்கிறார் என்பதுதான்.
ஆனால் இதோடாவது பார்ப்பனர்களை விட்டு விலகுவார் என்று பார்த்தால் ஒருக்காலும் விலகமாட்டாரென்றே சொல்லுவோம்.ஏனென்றால் இதற்கு சமாதானமாக வேறு ஏதாவது தனக்கு செய்து வைப்பார்களா இல் லையா? என்று கொஞ்சம் தாமதித்துப் பார்ப்பார் போல் தோன்றுகிறது. எப்படி என்றால் தான் இனி என்ன செய்யப் போகிறார் என்கிற முடிவு சொல்ல இன்னும் கொஞ்சம் சமயம் வேண்டுமாம்.
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை” என்பதாக ஒரு பழமொழியுண்டு. அதுபோல் ஸ்ரீமான் ஜோசப்பு அவர்க ளுக்கு யோக்கியமான முறையில் இரண்டு வழிதான் உண்டு. ஒன்று வகுப்பு வாதிகளையே விட்டு விலகவேண்டும். அந்தப்படி வகுப்புவாதிகளை விட்டு விலக முடியாவிட்டால் உலகத்திலுள்ள எல்லா வகுப்புக்காரர்கள் கண்: களிலும் மிளகாய் தூளை தூவி விட்டு தங்கள் வகுப்பாரே வாழ வேண்டும் என்கிற - தான் கண்டுபிடித்த - பார்ப்பன வகுப்பு வாதிகளை விட்டு விட்டு
எல்லா வகுப்புக் காரர்களும் வாழ வேண்டும். ஒரே வகுப்பாரே ஏகபோகமாய் வாழக்கூடாது என்கிற கூட்டத்தாருடன் சேர வேண்டும். அப்படிக்கு மில்லா
மல் இப்படிக்குமில்லாமல், இனியும் பார்க்கலாம், இனியும் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர் தின்ற மீதி எச்சைக்கு காத்துக் கொண்டி
ருப்பது மனிதத் தன்மை ஆகாது என்பதே நமது அபிப்பிராயம்.
ஆனால் ஸ்ரீமான் ஜோசப்பு அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார். என்றே நினைக்கிறோம். ஏனென்றால் ஸ்ரீமான் ஜோசப்பு போன்ற மனப்பான்மையுடையவர்களுக்கு நமது நாட்டில் பார்ப்பனர்களைத் தவிர
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வேறு புகலிடம் கிடையாது. பார்ப்பனரல்லாதார் கூட்டத்திற்கு வந்தால் இவருக்கு திடீரென்று ஒரு நன்மையும் ஏற்பட்டுவிட முடியாது. இவருக்கு முன்னால் எத்தனையோ பேர்கள் வெகு நாளாய் காத்துக் கொண்டி ருக்கிறார்கள் .அவர்களுக்கெல்லாம் வந்த பிறகுதான் இவருடைய பங்குக்கு சமயம் வரும். ஆதலால் ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியாரைப் போல் மன்னிப்பு கேட்டுக் கொண்டோ அல்லது மற்றவர்களைப் போல் தாங்கள் 'பேசியவைகளை மறுத்துவிட்டோ அல்லது வேறு வியாக்கியானம் செய்தோ மறுபடியும் பார்ப்பனர்கள் காலில் நுழைந்துதான் தீரவேண்டும்.
எனவே ஸ்ரீமான் ஜோசப்பவர்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால் மனிதத் தன்மைக்கோ சுயமரியாதைக்கோ ஒரு வித லாபமும் ஏற்பட்டு விடாது என்பதே நமது அபிப்ராயம்.
குடி அரசு - கட்டுரை - 11.09.1927
குடி அரசு - 1927 (3) 160
செண்ணையில் காறைாவைத் த௫க்க
கார்போரேஷண் கமிஷனர் அவர்கள் திட்டம்
சென்னையில் பரவி வரும் காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகளைத் தடுப்பதற்காக சென்னை நகர சபைக் கமிஷனர் ஸ்ரீமான்
௪. வெங்கிட்டநாராயணா அவர்கள் செய்த ஏற்பாடுகளைப் பற்றிய குறிப்பு
ஒன்று வரப்பெற்றோம். அதில் வைத்திய இலாகா தலைமை அதிகாரிகள் அபிப்பிராயப்படியே தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காகவும் வைசூரி, காலரா பரவிய பாகங்களை சுத்தம் செய்வதற்காகவும், ஷெ வியாதிகளால் பீடிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதற்காகவும், வியாதி வராமல் தடுக்கவும் நகர சபைக் கமிஷனர் எடுத்துக் கொண்ட முயற்சியும், அநுசரிக்கும் முறைகளும் மிகவும் பாராட்டத்தக்கவைகளாகவே இருக்கின்றன. நகர சபை அங்கத் தினர்கள் நகரத்தின் க்ஷமத்தில் உண்மையில் அக்கரையுள்ளவர்களா யிருந்தால் நகர க்ஷமத்தைக் கருதி கமிஷனர் செய்திருக்கும் ஏற்பாடுகளை ஆதரித்து அவ்வேற்பாடுகள் அமுலில் கிரமமாய் நடைபெறுவதற்கும் உதவியாயிருக்க வேண்டியவர்கள் என்பதே நமது அபிப்பிராயம்.
ஆனால் நகர சபையில் உள்ள ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களில் சிலர்.
நகரத்தின் க்ஷேமங்களில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் கார்ப்பரேஷன் ஸ்தாபனம் பார்ப்பன அக்கிராரமாகவும், பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும் அன்ன சத்திரமாகவும் இருக்க வேண்டுமென்கிற ஒரே கவலையைக் கொண்டு இதற்கு விரோதமாயிருக்கும் கமிஷனர் ஸ்ரீமான் நாயுடு அவர்களை சதா சர்வகாலமும் அற்பத்தனமான முறைகளில் தாக்கிக் கொண்டும். சில்லரை: விஷமங்கள் செய்து கொண்டும், எப்படியாவது அவரை அந்த ஸ்தானத் திலிருந்து மாற்றி ஒரு பார்ப்பனரை அந்த ஸ்தானத்தில் வைத்து தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும் என்கிற கவலையிலேயே கார்ப ரேஷன் நேரத்தையும் நிர்வாகத்தையும் பாழாக்கி வருகிறார்கள். இவ்வளவும் ஏற்படுவதற்கு காரணம் ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்ட கவுன்சிலர்களைத் தெரிந்தெடுக்கும்படியான ஓட்டர்களுக்கு ஓட்டைப் பற்றி போதுமான ஞானமும் கவலையும் ஏற்படாததுதானே ஒழிய வேறில்லை என்றே சொல்வோம். ஆதலால் இனிமேலாவது ஓட்டர்களாகிறவர்கள் தங்களுடைய ஓட்டுகளை உபயோகிப்பதில் பார்ப்பனர்களின் வஞ்சத்திற்கும்,
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஏமாற்றலுக்கும் காது கொடுக்காமல் யோக்கியமான முறையில் தங்கள் ஓட்டுகளை உபயோகித்து, யோக்கியர்களைத் தெரிந்தெடுத்து முனிசிபல் நிர்வாகம் நாணயமாகவும், யோக்கியமாகவும் நடைபெறுவதற்கு உதவி செய்யும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 11.09.1927
குடி அரசு - 1927 (3) 162
மகாத்மாவஷம் காங்கிரசும்
காங்கிரஸ் ஏற்பட்டது முதல் நாளது வரை பொது மக்களுக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படவில்லை என்பதையும் பல கெடுதிகள் ஏற்பட்டி.
ருக்கிறது என்பதையும் மகாத்மா மனதார அறிந்திருந்தும், அக்கெடுதிகளை' ஒழிக்க தன்னால் கூடியவரை பாடுபட்டுப் பார்த்தும் முடியவில்லை என்று ஒப்புக்கொண்டும், காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டத்தார். பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொண்ட
பிறகும், மகாத்மா எல்லோரையும் காங்கிரசில் சேருங்கள் என்பதும் பம்பாய்
பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு மகாநாட்டார் மகாத்மாவை அழைத்தால் அதற்கு பதிலாக “நல்ல எண்ணத்தோடு எல்லோரும் காங்கிரசில் சேருங்கள்” என்று தந்தி அடிப்பதும் நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்களே காங்கிரஸ் முத்திரை (லேபிள்) இல்லாமல் மகாத்மாவாக இருக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் காங்கிரஸ் முத்திரையைப் போட்டுக் கொண்டு வாழ்வதில் நமக்கு அதிசயம் எப்படி தோன்றும்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 11.09.1927
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இந்திய சட்டசபையில்
மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு
அறிவின் வளர்ச்சிக்கு ஆயத்து
“மதாச்சாரியார்களை தூஷிப்பதை தடுக்க வேண்டியதற்காக” என்னும் பெயரால் இந்திய சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்தாய் விட்டது. இனி, “சட்டமாய் விட்டது”என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி.
இந்த சட்டத்தைப் போல் ஒரு முட்டாள் தனமானதும் மனித சமூகத்
தின் அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தானதுமான சட்டம் உலகத்தில் எந்த சட்ட புஸ்தகத்திலுமே இருக்காது என்பது நமது அபிப்பிராயம். இதைப்பற்றி முன்னமே ஒரு தடவை எழுதியுமிருக்கிறோம்.
மகமது நபிகளை எவனோ ஒருவன் கண்டித்து விட்டான் என்கிற காரணத்திற்காக உலகத்தையே குருடர்களும் செவிடர்களுமாக்க ஒரு சட்டம் கொண்டு வருவது எவ்வளவு கொடுமையானது என்பதை யாரும் யோசிக்
காமல் இம்மாதிரியான அவிவேகமான காரியத்தில் இறங்குவது நமக்கு
மிகவும் வருத்தமாய் இருக்கிறது. ஒரு யோக்கியனை ஒரு அயோக்கியன் கண்டித்து விட்டதற்காக உலகத்திலுள்ள அயோக்கியர்களை எல்லாம் எந்த யோக்கியனும் கண்டிக்கக் கூடாது என்று சட்டமியற்றுவது பிசாசுகள் அரசாங்
கத்தில் கூட நடைபெற முடியாத காரியம் என்பதே நமது அபிப்பிராயம்.மதத் தலைவர்கள் என்பவர்கள் யார் என்று யார் முடிவு செய்வது? ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தியும் நாளைக்கு மதத் தலைவர்கள் ஆகிவிடலாம். ஒவ்வொரு மதத்தை (கொள்கையை! உபதேசிப்பவனும் தனக்கு சில சிஷ்யர்களை பணம் கொடுத்து சேர்த்துக் கொண்டு புராணம் எழுதி வைத்துக் கொள்ளுபவனும் அந்த மதத் தலைவன்தான். எத்தனை மதங்கள் இருக்கிறதென்று யாரால் நிர்ணயிக்க முடியும்? இனி மதங்கள் ஏற்பட முடியாது என்பதற்கு என்ன உறுதி? யார் யார் மதத் தலைவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? கடவுள் என்பவரே ஒவ்வொருவனுக்கு
குடி அரசு - 1927 (3) 164
ஒவ்வொரு விதமாய் அதாவது ரூபமாயும், குணமாயும், அரூபமாயும், நிர் குணமாயும் இருக்கிறார் என்கிறார்கள் .
ஒவ்வொருவன் கொள்கைக்கு ஒவ்வொருவன் கொள்கை விரோத
மாய் இருப்பதாக காணும்போது அவனது கருத்தையும் அறிவீனத்தையும் எடுத்துச் சொல்லாமல் இருக்க வேண்டுமென்பது தானே சட்டத்தின் கருத்து.
இது முறையா? இது தகுமா? இது தர்மம்தானா? “குசுவு விட்டதற்காக குண்டி யை அறுத்து விடுவதா” என்பதாக ஒரு பழமொழி உண்டு. அது போல சர்க்காரும் இந்திய சட்டசபை மெம்பர்களும் நடக்கிறார்கள் .
இச்சட்டத்தால் பெரிதும் பார்ப்பனர்களுக்கும், சர்க்காருக்கும், பார்ப்பன வக்கீல்களுக்கும் லாபமேயல்லாமல் முஸ்லீம்களுக்கு யாதொரு லாபமும் இல்லாததோடு பின்னால் கண்டிப்பாய் தொந்திரவுகளும் ஏற்படும் என்பதே நமது அபிப்பிராயம்.
குடி அரசு - கட்டுரை - 11.09.1927
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மறுயமுமும் வபசண்டம்மையார்
ஒரு விதத்தில் மறைந்து போன ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் அரசியல் செல்வாக்கை மறுபடியும் உயிர்ப்பிக்க கொஞ்சநாளாகவே அந்தரங்
கத்தில் பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றதை நாம் அறிவோம். அதற்காக பல பத்திரிகைகளையும் வசப்படுத்த செய்துவரும் முயற்சியையும் நாம்
அறிந்துவருகிறோம்.
பெசண்டம்மையாரின் ஆதிக்கம் அல்லது தலைமை என்பது பெரிதும் விபூதி பூசும் அய்யர்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான்.மகாத்மா காந்தி
யின் ஆதிக்கமென்பது பெரிதும் நாமம் போடும் அய்யங்கார்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். “நாட்டுக்கு எந்த துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போகாது” என்பது போல் பார்ப்பன சூழ்ச்சி யால் எந்த தலைவர் போய் எந்த தலைவர் வந்தாலும் பார்ப்பனர்களுக்கு யோகமே தவிர நமது கதி இவர்கள் காலை நக்கிக் கொண்டு திரிய வேண்டிய தாய்தான் இருக்குமேயல்லாமல் ஒருக்காலும் சுயமரியாதையுடன் வாழ முடியாது. இதற்கு சாட்சி மகாத்மா ஆதிக்கத்தால் ஏற்பட்ட பலனே போது மானது. இனி நமக்கு மகாத்மாக்களும் வேண்டாம், உலக ரக்ஷகிகளும் வேண்
டாம். நம்ம காலிலேயே நாம் நிற்கும்படியான யோக்கியதை நமக்கு வரும் வரை அனாவசியமாய் இவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமலிருப்பதே மேலானது.
குடி அரசு - செய்தி விளக்கம் - 11.09.1927
குடி அரசு - 1927 (3) 166
நெற்றிக் கண்ணைக் காட்முணானும்
குற்றம் குற்றமே
சுவாமி வேதாசலம் அவர்கள் அருமைக் குமாரத்திக்கும் நமதுநண்பர் திருவரங்கம்பிள்ளை அவர்களுக்கும் நடந்தேறிய திருமணச் சடங்கானது தமிழ்மக்களையே குழப்பத்தில் கொண்டு வந்து விட்டு விட்டது.
சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் தமிழ் நாட்டிலேயே தமிழ் மக்களின் பழய நாகரிக விஷயமாய் தக்க ஆராய்ச்சி உள்ளவர்கள் .ஏனையவர்களை இவர்களுக்கு சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல் இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட இரு ஞான பாஸ்கரர்கள் கூடிச் செய்த திருமணம் பார்ப்பனீயத் திருமணமாய் நடந்தேறிற்றென்றால் மற்ற வர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனீயத்திற்கு உயர்வு கொடுக்க மாட்டார்கள்! உயர்வு கொடுக்க விரும்பார்களா என்பதை யோசிக்கும்படி அவர்களுக்கே விட்டு விடுகிறேன்.இதற்கு ஏதாவது தகுந்த சமாதானம் இவர்கள் சொல்லாத
வரையில் திருத்த முடியாத குற்றமாவதோடு மக்களுக்கு குழப்பமும் நமது முயற்சிக்கு இடையூறும் ஏற்படும் என்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - குறிப்புரை - 11.09.1927.
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சென்னைக்கு லசல்கிறோம்
சுமார் ஐந்து ஆறு மாதங்களாய் நாம் தெரிவித்து கொண்டு வந்த படிக்கு “திராவிடன்” பத்திரிகை விஷயமாய் சென்னைக்குச் செல்லுகிறோம்.
பார்ப்பனரல்லாதார் நன்மையையும் சுயமரியாதையையும் முன்னிட்டு “திராவிடன்” பத்திரிகையையும் ஏற்று நடத்த வேண்டும் என்று நம்மை பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் சில முக்கிய தலைவர்களுக்கும் தோன்றிற்று. இதன் பயனாக நாம் மகா ஜனங்களையும் அபிப்பிராயம் கேட்டதில் அவர்: களும் பெரும்பான்மையோர்கள் அந்தப்படியே கட்டளை இட்டார்கள் . அன்றியும் பல பிரபுக்களும் வேண்டிய சகாயம் செய்வதாக வாக்களித்து
ஏற்றுக் கொள்ளும்படியாகவே வற்புறுத்தினார்கள். எனவே சென்னைக்கு செல்லுகின்றோம்.
இதைப்பற்றி இந்த சமயத்தில் இரண்டொரு வார்த்தைகள் தெரியப் படுத்த வேண்டியது அவசியமெனக் கருதி வெளியிடுகிறோம். முதலாவது ஏற்கனவே தமிழ் நாட்டில் 2, 3 தமிழ் தினசரிகள் இருக்கும் போது “திராவிடன்” என்கிற தினசரி பத்திரிகை ஒன்று நமக்கு வேண்டுமா? தமிழ் மக்கள் இவ்வளவு பத்திரிகைகளையும் ஆதரிப்பார்களா? என்பது முக்கிய மானது.
தமிழ் நாட்டில் எத்தனையோ தினசரி பத்திரிகைகள் இருந்தாலும் மற்ற சமூகத்தாருக்கு இருப்பது போல பார்ப்பனரல்லாதாராகிய 3 '/, கோடி
மக்களின் நலத்தையே பிரதானமாய் கருதி உழைக்கும் தினசரி பத்திரிகை: நமக்கு *திராவிடனை” விட வேறு இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது. அதாவது பார்ப்பனர்களால் நடத்தப்படும் இரண்டு தினசரிகள். கண்டிப்பாய் பார்ப்பன நன்மைக்காகவே, பார்ப்பனர்கள் நன்மைக்கான கொள்கைகளுடனேயே நடைபெற்று வருகிறதுமல்லாமல் அதுவே தமிழ் நாட்டுமக்களின் அபிப்பிராயமென்று ஜனங்கள் ஏமாறும்படி நடத்தப்படு கின்றன என்பதும் யாவரும் அறிந்ததே. பார்ப்பரைல்லாதாரால் நடத்தப்படும் ஒரு தினசரியும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் கருத்தும் கவலையும் இருப்பதாக கண்டாலும் பார்ப்பனக் கொடுமைகளைத் தாராளமாய் கண்டிப்ப
குடி அரசு - 1927 (3) 168
தானாலும் அதன் அரசியல் கொள்கை பார்ப்பனரல்லாதாரை ஒரு நாளும் தலையெடுக்க ஒட்டாததாகவும் பார்ப்பனர்களிடமிருந்து தப்ப முடியாததாக
வுமே இருக்கிறது.
இந்த விஷயத்தில் பார்ப்பன பத்திரிகைகளுக்கும் மற்றும் அநேக பார்ப்பனரல்லாத வாரப் பத்திரிகைகளுக்கும் ஒரு சிறிதும் வித்தியாசமில்லை. தவிர தமிழ் மக்கள் இவ்வளவு பத்திரிகைகள் இருக்கும் போது இதையும் ஆதரிப்பார்களா என்றால் ஆதரித்துதான் ஆக வேண்டும். ஒரு சமயம்
ஆதரிக்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு இதை ஆதரிக்கும் புத்தி வரும்வரை: எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் நடத்திதான் தீரவேண்டிய நிலையிலிருக்கிறோம். இல்லாதவரை தமிழ் மக்கள் மீளுவதற்கு வேறு
மார்க்கம் இல்லை என்றே சொல்லுவோம்.
ஆனால் இது கஷ்டமான வேலை என்பது நமக்கு நன்றாய் தெரிகிறது.
ஒரு வேலையும் செய்யாமல் “வருக, வருக, மகாத்மா வருக,மகாத்மா
வுக்கு ஜே!” என்று சொல்லிவிட்டு மகாத்மாவின் பார்ப்பன பிரசாரத்தையும் போட்டு விட்டு சும்மா இருந்தாலே ஓட்டு கிடைத்து விடும், பத்திரிகையும் தாராளமாய் செலவாகும், மேடைகளிலும் பேச இடமும் கிடைக்கும். அதோடு மகாத்மா பேட்டியுடன் “யங் இந்தியா”விலும் “நவஜீவனி”லும் கூட இடமும் கிடைத்து விடும். இது மிகவும் சுலபமான வேலைதான். இவைகளில் நமது மக்களுக்கு என்ன பலன் உண்டாகும் என்பதுதான் நமது கேள்வி. ஆகை யினாலேதான் இது சமயம் சற்று நஷ்டமாயிருந்தாலும் பலனுள்ள வேலையை செய்யவேண்டியிருக்கிறது.
கொள்கைகள்
“திராவிடன்” கொள்கைகள் “குடி அரசுக் கொள்கைப்படியே தானிருக்கும். “குடி அரசி£ன் கொள்கைகள் யாவரும் அறிந்திருப்பார் களென்றே நினைக்கிறோம். அதாவது: பார்ப்பனரல்லாதாரை அழுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பனர்களுக்கு நமது நாட்டில் ஆயுதங்களாக இருக்கும் அரசியல் புரட்டையும் மதப் புரட்டையும் அடியோடு அழிப்பதுடன் பார்ப்பனீயத்தை ஒழித்து மக்களுக்கு சுய மரியாதை உண்டாகும்படி செய்வது என்பது தான். இதற்குத் “திராவிடன்” சொந்தக்காரர்கள் சம்மதிக்காதபோது நாம் விலகி விடுவோம் என்பது உறுதி. இது சமயம் இந்தக் கொள்கையை ஒப்புக்கொள்ளவோ ஆதரிக்கவோ நமது நாட்டில் ஒரு குட்டித் தலைவராவது இல்லை. ஒரு குட்டிப் பத்திரிகையாவது இல்லை. ஆனாலும் நாம் அதற்காக பயப்படவில்லை. ஏனெனில் இக்
காரியங்கள் நடைபெறாமல் போனால் நமது பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் இந்தியாவுக்கே சுயமரியாதையும் விடுதலையும் ஒருக்
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
காலும் ஏற்படப் போவதில்லை என்பதே நமது முடிவு. பார்ப்பனரல்லாதார். இயக்கமாகிய தென் இந்திய நல உரிமைச் சங்கத்தாரும் அவர்களது பத்திரிகைகளாகிய ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகளுங் கூட இக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் நம்மிடம் சிறிது அபிப்பிராயபேதம் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும். நம்மிடம் “திராவிடன்” ஒப்புவிக்கப் பட்டால் இக்கொள்கைகளுடன் தான் அது நடத்தப்பெறும் என்பதாக அவர்.
களுக்கும் இப்போதே சொல்லி விடுகிறோம். அரை நூற்றாண்டாக அநேக இந்திய மேதாவிகளால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அரசியலை, குற்றம் சொல்வதும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் ரிஷிகளாலும், முனிவர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்டதாய்ச் சொல்லப்படும்- மகாத்மா காந்தியாலும் கூட சொல்லப் படும் - மத இயலைக் குற்றம் சொல்வதும் இரத்தத்திலும், நரம்புகளிலும், எலும்புகளிலும், சதையிலும் ஊறிக் கலந்து இருக்கும் இவ்விஷயங்களைக் குற்றம் சொல்லி மக்களை திருப்புவது என்பது ஒருக்காலும் சுலபமான காரியமென்று சொல்ல
முடியாது. அன்றியும் தற்போது எல்லாத் துறைகளின் ஆதிக்கத்திலும் அதி காரத்திலும் இருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிப்பது என்பது இவற்றையெல்லாம் விட அதிகமான கஷ்டமென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். இதற்கு ஆதாரமாக மகாத்மா காந்தியினாலேயே “பார்ப்பனீயமில்லாதவர்” என்று மதிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் ஒருசமயம் சொன்ன வார்த்தைகளைக் குறிப்பிடுகிறோம்.
“பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க இந்த நாட்டில் ஆயிரக் கணக்கான வருஷங்களாக அநேக பெரியவர்களாலும்,சித்தர்களாலும், சமணர்களாலும், புத்தர்களாலும் எவ்வளவோ பாடுபட்டாய் விட்டது. மற்றும் மகமதிய அரசாங் கத்தாராலும் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தாய் விட்டது. இதனால் இவ்வளவு பேரும் தோற்றார்களேயொழிய ஒருவரும் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் ஒருவனுடைய முயற்சி எம்மாத்திரம்?” என்று சொல்லி பரிகாசம். செய்தார்.
இந்த வார்த்தைகள் வாஸ்தவமாக இருந்தாலும் இருக்கலாம். அது போலவே நமது முயற்சியும் வெற்றிபெறாமல் தோல்வியும் உறலாம். ஆனாலும் ஒன்று மாத்திரம் சொல்லுவோம். என்னவெனில் இம்முயற்சிகள் வெற்றி பெறாமல் நமது நாட்டுக்கும் சமூகத்துக்கும் விடுதலை இல்லை என்பதை மாத்திரம் மறுபடியும் உறுதியாய்ச் சொல்லுகிறோம். எனவே
நமக்குச் சரி என்று பட்ட வழியில் உழைக்க வேண்டியது நமது உமையே யல்லாமல் வெற்றி, தோல்வி என்பவைகளைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டியது நமது கடமையல்ல.
தற்சமயம் திராவிடனுக்கு பத்திராதிபராயிருக்கும் ஸ்ரீ கண்ணப்பர்
குடி அரசு - 1927 (3) 170
இதே கொள்கைகளை உடையவர் என்பதே நமது அபிப்ராயம். அவர் பல வருஷங்களாக எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையில் நமது சமூக முன்னேற் றத்தையே பிரதானமாகக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்திருக்
கிறார். இனியும் அவரேதான் பத்திரிகை விஷயத்தில் நமது முக்கிய துணை: வராயிருந்து நம்மை நடத்துவிக்கப் போகிறார். ஆதலால் அவரது தொடர்பு பத்திரிகையின் பிரதான ஸ்தானத்தில் இருந்து கொண்டுதானிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நாம் “திராவிடனு”க்குப் போவதால் “குடிஅரசு” என்ன ஆகுமோ என்பதைப்பற்றி அநேகருக்கு
பெருங் கவலை ஏற்பட்டிருக்கிறது. *திராவிடனை” விட “குடி அரசையே”
நாம் பிரதானமாகக் கருதுகிறோம் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
கோயமுத்தூர் மகாநாட்டுத் தீர்மானத்தின் பலனாய் நமது இயக்கத்
திற்கு சற்று ஆட்டம் கொடுத்து விட்டதுடன் இது விஷயத்தில் மக்களுக்கு
சிறிது ஊக்கமும் குறைந்து இருக்கிறது என்பதும் நமக்கு நன்றாய் தெரிகிறது. நல்ல சமயத்தை கோயமுத்தூர் தீர்மானங்கள் பாழ்படுத்தி விட்டது என்பதை. நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். அப்பொழுதே நமது இயக்கத்தில் உண்மையான அன்புள்ளவர்களெல்லாம் இந்த விஷயத்தை தீர்க்கத்தரிசிகள் போலவே எடுத்துச் சொன்னார்கள் . சொல்லியும் சிலருடைய சுய நலமும், அவர்களிடத்தில் நமக்கு ஏற்பட்ட பரிதாபமும், நமது பலக் குறைவும் அதுசமயம் நம்மை சும்மா இருக்கச் செய்து விட்டது.
மூன்று மாதத்தில் எவ்வளவோ காரியத்தை சாதித்து விடுவதாக வீரப்பிரதாபம் பேசியவர்கள் இன்று இருக்குமிடம்தெரியாமல் இருந்து வருகி றார்கள் . இவர்கள் எந்த ஊர்களுக்குப் போனார்கள்? எத்தனை மெம்பர். களைக் காங்கிரசுக்கு சேர்த்தார்கள்? காங்கிரசில் எந்தவிதமான ஆதிக்கத்தை பெற்றார்கள்? அல்லது யாருடைய ஆதிக்கத்தை குறைத்தார்கள்? என்ப தாகப் பார்த்தால் ஒன்றுமே காணோம். தானாக காங்கிரசில் ஒருவன் சேர வேண்டு மென்று வந்தாலும் அவனைச் சேர்க்க மாட்டேன் என்று சொல்லுகிறவர். களின் அயோக்கியத்தனத்தைக்கூட ஏன் என்று கேட்பதற்கு யோக்கியதை இல்லாத நிலையில் இந்த வீரர்கள் இருக்கிறார்கள் .
கோவைத் தீர்மானத்திற்கு அனுகூலமாயிருந்தவர்களில் முக்கியஸ் தரான பனக்கால் ராஜாவின் மேல்விலாசமே இப்பொழுது தெரிய முடிய வில்லை. ஸ்ரீமான் ராமசாமி முதலியார் அவர்கள் பம்பாயில் போய் அங்குள்: எவர்களையும் கெடுத்துவிட்டு வந்து சேர்ந்தாரேயல்லாமல் வேறொன்றும் செய்ததாய் காணவில்லை. ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் அவர்கள்
டெல்லிக்குப் போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஸ்ரீமான் கலியாண: சுந்திர முதலியாரவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே இப்போது ஞாபகமில்லை. ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் சங்கதியோ நாம்
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் ஒருவரும் இல்லை.
அன்றியும் இதன் பலனாக “பார்ப்பனரல்லாதாருக்கு இப்பொழுது தான் புத்தி வந்தது. காங்கிரசின் பெருமையை ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள் இப்பொழுது தான் உணர்ந்தார்கள்” என்று நமது எதிரிகளான பார்ப்பனர்கள். சொல்லிக் கொள்ளவும் நமது பாமர மக்கள் மறுபடியும் ஏமாந்து போய் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகவும் நேர்ந்தது.
அல்லாமலும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அவர்களுக்கு காங்கிரசின் பேரால் செலவு செய்ய இன்னமும் கொஞ்சம் நம்முடைய பணம் போய்ச்
சேரவும் தாராளமாய் இடமேற்பட்டதேயல்லாமல் மற்றபடி வேறு என்ன காரியம் நடந்தது? என்ன பலன் ஏற்பட்டது? என்பதை யோசித்தால் விளங்கா
மல் போகாது. இவற்றை எதற்காக இதுசமயம் எழுதுகிறோமென்றால் மறு
படியும் நமது மக்களை “மதுரை மகாநாட்டிற்கு””திருப்பிக் கொண்டு போக வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தவும் அதற்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என்பதை யோசிக்கச் செய்ய வுமே அல்லாமல் வேறில்லை.
எனவே நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இவ் விஷயங்களை நன்றாய் கவனிப்பதோடு மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது “திராவிடனும்” “குடி அரசும்” பார்ப்பனர்கள் கையில் இருக்கும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிடிங்கி பார்ப்பனரல்லாத ஜமின்தார்களும், மிராஸ்தார்களும், வியாபாரிகளும், லேவாதேவிக்காரருமான பணக்காரர்களுக்கும் ஆங்கிலம் படித்த வக்கீல்க ளுக்கும் கொடுப்பதற்காக நடத்தப்படுகிறது என்று நினைப்பார்களானால் அவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள் .ஏனெனில் அரசியல் விஷயத்
தில் பார்ப்பன ஆதிக்கத்தை விட, பணக்கார ஆதிக்கத்தைவிட, வக்கீல் ஆதிக்கத்தை விட வெள்ளைக்கார ஆதிக்கமே ஓடுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் யோக்கியர்களுக்கும் அதிகமான கெடுதி இல்லாதது என்பதே நமது அபிப்பிராயம். வெள்ளைக்கார ஆதிக்கம் ஒழிவதாயிருந்தால் நேரே அது ஏழை மக்களான தொழிலாளர்கள் கைக்கு வருவதுதான் நன்மையேயல்லாமல் ஏழை மக்களுக்கு பார்ப்பனர்களும், பணக்காரர்களும், வக்கீல்களும் தர்மகர்த்தாக்களாகவும், தரகர்களாகவும் இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம். இந்த கொள்கையின் பேரில்தான். பணக்காரர்கள் இப்பத்திரிகைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் இப்போதே வெளிப்படையாய் சொல்லி விடுகிறோம்.
அது போலவே மத இயலில் நமக்கு உதவி செய்பவர்களும் இந்து மதம் என்பதான பார்ப்பன மதத்துடன் போர் புரிந்து வெற்றி ஏற்படுமானால் “சைவ சமயத்திற்கு அனுகூலமாகும்” என்றோ “வைணவ சமயத்திற்கு
குடி அரசு - 1927 (3) 172
அனுகூலமாகு” மென்றோ “கிறிஸ்தவ மதத்துக்கு அனுகூலம் ஆகும்” என்றோ “மகமதிய மதத்திற்கு அனுகூலமாகு” மென்றோ “மாத்துவ மதத்திற்கு அனுகூலமாகு” மென்றோ ஒவ்வொருவரும் தன் தன் சுய மத நலத்திற்கு என்று நினைத்துக் கொண்டார்களானால் அவர்களும் ஏமாற்ற மடைவார்கள் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறோம். பார்ப்பன
மதம் ஒழிந்தால் உண்மையான சமரசமும், சன்மார்க்கமும் உடையதான மதம் ஏற்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் சுயமரியாதை அளிக்கத்தக்கதாய் இருக்க வேண்டும். அது எதுவானாலும் நாம் கவலைப்படமாட்டோம் என்பதையும் தெரிவித்து விடுகிறோம்.
கடைசியாக சில கனவான்களை நாம் கேட்டுக் கொள்ளுவது என்ன வென்றால் இம்முயற்சியில் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் நம்மை ஏமாற் றாமலாவது இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 11.09.1927.
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மதத்தைப் பற்றிய விபரீதம்
மத சம்மந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கி கண்டித்து வருவதில் வைதீகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாப் போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களும் நம்மைப் பற்றி இம் மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால் அவசரப் பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப் பட்டவர்களும் “பழக்கம்” “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாக கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை.
தன வைசிய நாடு என்கிற நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நாட்டில் நாம் பிரசாரத்திற்கு சென்றிருந்த காலையிலும்கூட நெற்குப்பை என்ற ஒரு ஊரிலுள்ள வைதீகச் செட்டியார்மார்களை இப்படித்தான் ஒரு பார்ப்பனன் சொல்லி ஏமாற்றிவிட்டான். அதாவது ராமசாமி நாயக்கர் என்கிற ஒருவன் வந்து நாட்டையே பாழாக்குகிறான், கலி அவனால்தான் வெளியாகிறது, நாஸ்திகம் பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டால் சிறுபிள்ளைகள் எல்லாம்.
கெட்டுப் போவார்கள் . பிறகு கோயில் போய்விடும், மடம் போய்விடும், விபூதி போய் விடும் என்பதான பல விஷயங்களைச் சொல்லி ஏய்த்து விட்டான். இந்த வார்த்தைகளை நம்பி அங்குள்ள சில கனவான்கள் கூட்டம் கூட்ட இடம் கொடுக்காமலும் கூட்டம் சேர்ப்பதற்காக செய்து வைத்து இருந்த சில ஆடம்பரங்களையெல்லாம் விரட்டி அடித்தும் கூட்டத்திற்கு யாரையும் வர வொட்டாமலும் செய்து விட்டார். பிறகு நாமும் நம்முடன் கூட வந்திருந்த சில நண்பர்களும் கடைத்தெருவில் யாரையும் எதிர்பாராமல் ஒரு காப்பிக் கடையில் போட்டிருந்த பெஞ்சு பலகையை எடுத்து வந்து வீதியில் போட்டு அதன் பேரில் நின்று பேச ஆரம்பித்தோம். முதலில் தெருவில் போகிறவர் வருகிறவர்கள் சற்று நின்று என்ன என்பதாக கேட்க ஆரம்பித்தார்கள். பிறகு அப்படியே உட்கார்ந்தார்கள் . இரண்டொரு விஷயங்களைக் கேட்டு அவர். கள், கை தட்டிசிரிக்கவும் அடிக்கடி இம்மாதிரி செய்யவும்,மறைவில் இருந்து
பார்த்துக் கொண்டிருந்த கனவான்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள் . பிறகு பெண்களும் தாராளமாய் வந்தார்கள் . கூட்டம் யாரையும் அறியாமல் தானா கவே பெரிய கூட்டமாய் விட்டது. பிறகு எங்களுக்குத் தெரியாமலே ஒருவர்:
குடி அரசு - 1927 (3) 174
விளக்குத் தருவித்து விட்டார். இரவு 9 7, மணி வரையில் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து நாங்கள் திரும்பி ஊருக்குப் புறப்படுகையில் ஒரு செட்டியார் பெரியவர் நல்ல வைதீகத் தோற்றத்துடன் இருந்தவர் எங்கள் மோட்டார் வண்டிக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டு அய்யா பெரியவரே சில பார்ப்பனர்கள் எங்களிடம் தங்களைப் பற்றி தப்பும் தவறும் சொல்லி ஏமாற்றி விட்டார்கள் . நாங்கள் தங்களைத் தப்பாய் நினைத்து விட்டோம். அதற்காக வருந்துகிறோம். இன்று இரவு இங்கேயே இருந்து நாளைக்கும் ஒரு உபன்யாசம் செய்து விட்டுப் போக வேண்டும். நானே எல்லா ஏற்பாடும் செய்கிறேன். இன்னும் பல பேர்கள் வந்து கேட்க வேண்டும் என்று எவ்வள வோ தூரம் வேண்டிக் கொண்டார். எங்களுக்கு மறுநாள் வேறிடம் ஏற்பாடா யிருந்ததால் அவர் விருப்பத்திற்கு இணங்க முடியாமல் போய்விட்டோம். புதுவயலிலும் இம்மாதிரியாகவே செய்தார்கள் . பிறகு அவர்களும் இப்படியே கூட்ட முடிவில் வந்தனோபசாரம் செய்யும் போது எடுத்துச் சொன்னார். கடையூரிலும் இது போலவே நடந்தது. கடைசியாக வாலிபர் களிடம் மாத்திரமல்லாமல் பெரியோர்களிடமும் மிகவும் திருப்தியுடன் வந்து சேர்ந்தோம். எனவே விஷயங்களை பகுத்தறிய சோம்பல் பட்டுக் கொண்டு தகுந்த அளவு மூளையை செலவு செய்வதில் சிக்கனம் காட்டியும் அவசரப்பட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்களே அல்லாமல் உண்மையை அறியமாட்டேன் என்கிறார்கள் . இதற்காக நாம் இவர்கள் விஷயத்தில் பரிதாபப் படுவதல்லாமல் வேறு ஒன்றும் செய்ய முடியாததற்கு வருந்துகிறோம். இம்மாதிரி கூட்டத்திற்குள் இது சமயமும் வைதீகக் கூட்டத்தில் மிகுதியும் எங்கு பார்த்தாலும் “கலிவந்து விட்டான்.” “மதம் போச்சுது.” “கடவுள் போச்சுது” “புராணங்கள் போச்சுது” “நாஸ்திக மாச்சுது” என்கிற வார்த்தைகளே அடிபடுகிறதாக சேதிகள் வந்து கொண்டிருக்கிறது. இது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் கட்சியில் பாரம்பரியமாக இருந்து வருவதாக பெருமை பாராட்டிக் கொள்பவர்களும் இப்படியே தான் பேசுவதாக தெரிகிறது. அதாவது “பார்ப்பனர்கள் அக்கிரமத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லட்டும். சர்க்கார் விஷயத்திலும் காங்கிரஸ் விஷயத்திலும் உள்ள புரட்டுகளையும் சொல்லட்டும். நமக்கு அதைப்பற்றி நல்லது தான்.ஆனால் மதத்தில் கைவைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்கிறதாகவே பேசுகிறார்களாம். மற்றொரு கூட்டத்தினிடையிலோ வென்றால் பார்ப்பனர் மதம் புராணம் இந்த மாதிரி புரட்டுகளைக் கண்டிக்க வேண்டியது தான். ஆனால் காங்கிரசைக் கண்டித்துதேசீயத்தைக்கெடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் நாம் என்ன செய்யக்கூடும். அவரவர்கள் சபலமும் மூட
பக்தியும் சுயநலமும் நம்மீது குற்றம் கூறச் செய்கிறதேயல்லாமல் வேறல்ல.
எப்படிச் சில பேர்வழிகள் தங்கள் சுய நலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் தேசத்தின் பேரால் “காங்கிரசையும்” “தேசீயத்தையும்” உண்டாக்கி உபயோகித்துக் கொண்டார்களோ அது போலவே தான் சிலர் சுயநலத்திற்கும்
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வயிற்றுப் பிழைப்புக்கும் கடவுள் பேரால் மதத்தையும் புராணங்களையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள் . மனிதனுக்கு கடவுளும் மதமும் புராணமும் எதற்காக இருக்க வேண்டியது என்பதே நமது மக்களுக்கு ஏறக் குறைய முழுதுமே தெரியாது என்றே சொல்ல வேண்டியதாயிருக்கிறது..
மனிதன் ஜீவன்களிடத்தில் கூடுமானவரை அன்பாகவும் மனித
சமூகம் வாழ்க்கையில் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளுவதற்காகவே கடவுளை மனிதன் உணர வேண்டியவனாக இருக்கிறான். அது போலவே அவ்வன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற முறைகளைக் கற்பிக்கவே மதம் என்பதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறான்.அப்படிக்கு இருக்க கடவுளுக்காகவும் மதத்திற்காகவும் மனிதன் இருக்கிறான் என்பதாக மக்களுக்கு உணர்த்தப்பட்டு மக்கள் எல்லோரும் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற முயன்று விடுகிறார்கள் . இதனால் கடவுளைக் காப்பாற்றுவதற்கு
நாம் ஏன் கவலைப்பட வேண்டும். கடவுள் நம்மால் காப்பாற்றக் கூடிய வராயிருந்தால் அவருக்கு கடவுள் தன்மையேது என்பதாக யாராவது உணருகிறார்களா? நாம் கடவுளைக் காப்பாற்றுவது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது! எவனோ தான் பிழைப்பதற்காக கடவுளைக் காப்பாற்றுங்கள், கடவுளைக் காப்பாற்றுவது என்பது எனக்கு கொடுத்து என்னையும் என் பிள்ளை குட்டிகளையும் காப்பாற்றுவதுதான் என்று சொல்லு வானானால் அதை நாம் நம்பிக் கொள்ளுவதா என்றுதான் கேட்கின்றோம். நம்மைக் கடவுள் காப்பாற்றுவதா நாம் கடவுளைக் காப்பாற்றுவதா என்பதே. நமக்குப் புரியவில்லை. வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு பயப்பட வேண்டுமே அல்லாமல் கடவுளைக் காப்பாற்றுவது, அதற்கு சோறு போடுவது, கல்யாணம் செய்வது, பிள்ளைக்குட்டிகளை பெறச் செய்வது என்பது போன்றவைகளெல்லாம் செய்வது எதற்கு? என்றுதான் கேட்கிறோம். இம்மாதிரி செய்பவர்கள் கடவுளுக்கு பயப்படுகிறார்களா என்பதையும் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். திருடுகிறவன், கொள்ளையடிக் கிறவன், கொலை செய்கிறவன், மற்றும் வாழ்க்கையில் எத்தனையோ அக்கிரமங்கள் கூடா ஒழுக்கங்கள் செய்கிறவர் ஆகிய எல்லோரும் கடவுளைக் காப்பாற்றுவதாக, அபிஷேகம் செய்வதாக, திருடி, பதில் அக்கிரமம் செய்து தப்பு வழிகளில் சம்பாதித்த திரவியத்தில் பங்கு தருவதாக, கோயில் கட்டுவதாக, மேளம் சதிர் கச்சேரி வைப்பதாக, தாசிகள் 10 பேரை நியமிப்பதாக சொல்லி அப்படியே செய்கிறான் என்றே வைத்துக் கொள்ளு வோம். இதனால் செய்தவனுக்காவது உலகத்துக்காவது என்ன பிரயோஜனம் என்று தான் கேட்கிறோம்.
கடவுள் என்பதையே மக்களுக்கு சரியானபடி உணர்த்தாமல் சில சுயநலக்காரர்கள் போலி பக்தியை உண்டாக்கி எல்லோரையும் நாஸ்திகர். களாக்கி விட்டார்கள். கடவுள் தன்மையின் உண்மையையும் கடவுளிடத்தில் பயத்தையும் மக்களுக்கு உண்டாக்கி இருந்தால் நமது நாட்டில் இவ்வளவு
குடி அரசு - 1927 (3) 176
அக்கிரமம் நடைபெறுமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இம் மாதிரியான பொய் பக்தி, புரட்டு பக்தி, வேஷ பக்தி, மூட பக்தி ஆகிய நாஸ்திகத் தன்மைகள் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலொழிய நாட்டில் அன்பும் சமத்துவமும் ஒழுக்கமும் ஏற்படப் போவதில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
இது போலவே மதம் என்கிற விஷயங்களும் நமக்கு பெரிய ஆபத்தாகவே இருக்கிறது.மதம் என்பதை ஒழுக்கத்திற்கான கொள்கைகள் என்பதாக எண்ணாமல் சில சடங்குகள் என்பதாகவே கற்பிக்கப்பட்டிருக்
கிறது. மதத்தில் தீவிரப் பற்றுள்ள எவனாவது பொய் சொல்லாமலிருக்கிறானா, அக்கிரமம் செய்யாமலிருக்கிறானா என்பதைக் கவனித்தால் பெரிய பெரிய வைதீக வேஷக்காரர்களின் யோக்கியதை எல்லாம் விளங்கிவிடும். நமக்கு
நேரில் அனேக சாஸ்திரியார்களின் யோக்கியதையும், பாகவதர்களின் யோக்
கியதையும், சன்னியாசிகளின் யோக்கியதையும், தினமும் மூன்றுவேளை:
குளித்து ஆறு வேளை கோயிலுக்கு போய் வாரத்தில் 7 நாள் விரதமிருக்கும் பெரியோர்கள் , ஆசாரக்காரர்கள் , பக்திவான்கள் என்கிறவர்கள் யோக்கிய தையும் நன்றாகத் தெரியும். கடவுள் பக்தியும் மதமும் ஏன் இவர்களை இப்படி நடத்துகிறது என்று ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பொதுவாக இவைகள் ஒரு புறமிருந்தாலும் நமக்கு கற்பிக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் யாராய் இருக்கிறார்கள் . பிறப்பு, இறப்பு முதலியவை களில் ஈடுபடுத்தி மனித வாழ்க்கையில் உள்ள எல்லா காரியங்களும் ஒன்றுகூட விலக்கில்லாமல் அதற்கு கற்பித்து நம்ம தலையில் போடப்பட்டி ர௬ுக்கிறதேயல்லாமல் உண்மைத் தத்துவத்துடன் கூடிய கடவுள் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். வயோதிகர்கள் இதற்கு இடங் கொடுக்க மாட்டார்களானாலும் வாலிபர்கள் இதை உணர்ந்து பரிசுத்த வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்.
அதுபோலவே நமது மதம் என்பது என்னமாயிருக்கிறது. இதைப்பற்றி பலதடவை எழுதி இருக்கிறோம். மறுசமயம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 18.09.1927.
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
நீல் சத்தியாக்கிரகமும் “கலைவர்களும்"”
நீல் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு ஆதாரமாயிருந்த சென்னைத் *தலைவர்”களில் ஒருவரான திரு. குழந்தை திரு. சாமிநாத முதலியாரைப் பிடித்தவுடன் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் சத்தியாக்கிரகத்திற்கு தலைவனல்லவென்றும் சத்தியாக்கிரகி அல்லவென்றும்,
ஸ்ரீமான் சாமிநாத முதலியாரே அதன் தலைவரென்றும் எழுதி இருக்கிறார்.
சத்தியாக்கிரகக் கூட்டங்களுக்கெல்லாம் தலைமை வகித்து, சத்தியாக் கிரகங்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்து பேசி விட்டு,தன்னுடையப் பெய ரையும் பரப்பிக் கொண்டு, இப்போது தலைவர் என்பவரை சர்க்கார் பிடித்த
வுடன் “நான் தலைவனல்ல,” “சத்தியாக்கிரகியல்ல” என்று எழுதி வேறு ஆசாமியை காட்டிக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது எவ்வளவு பயங்காளித் தனம் என்பதை நேயர்களே கவனிக்க வேண்டும். சென்னைத் தலைவர்களின் யோக்கியதை வெளியாவதற்கு திரு குழந்தை உதவி செய்தது நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் முதலிலேயே சத்தியாக்கிரக கூட்டமொன்றில் திரு. தண்டபாணி பிள்ளை அவர்கள் பேசும்போது இந்த மாதிரி கனவான்களின் யோக்கியதைகளை எடுத்துச் சொல்லி “தக்க சமயத்தில் இவர்கள் ஏமாற்றி விட்டுப் போய் விடுவார்கள். ஆதலால் இவர். களை நம்பி இறங்காதீர்கள்'” என்று சொன்னார்.
அங்கிருந்த பார்ப்பனர்கள் கலகம் செய்து அவரை பேச விடாது தடுக்க முயற்சித்தார்கள் . எப்படி இப்போது இவர்கள் யோக்கியதை வெளி யாய் விட்டது! ஸ்ரீமான் சாமிநாத முதலியாரை சர்க்கார் பிடித்ததும் ஸ்ரீமான் குழந்தையின் சினேகிதரான மற்றொரு தலைவர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரை இப்போது பூதக் கண்ணாடி போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேச்சு மூச்சு ஒன்றையும் காணோம். என்ன சத்தியாக்கிரகம்? என்ன தலைவர்? எவ்வளவு அபிமானம்? எதற்காக நடைபெறுகிறது? யார் நடத்துகிறார்கள்? என்கிற விஷயங்களை வாசகர்களே உணர்ந்து கொள்ளக் கோருவதுடன் இனியாவது நமது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு புத்தி வருமா என்று ஆசைப்படுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.09.1927.
குடி அரசு - 1927 (3) 178
ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மகாத்மா காந்திக்கு ஒரு நற்சாககி பத்திரம் வழங்கினார். அதாவது மகாத்மா தன்னைப் பற்றி ஞாபகம் வைத்திருக்கிறாராம். 5 6ணுக்கு முன் தான் மகாத்மாவின் பிரசங் கத்தை மொழிபெயர்த்து மகாத்மாவுக்கு இன்னம் ஞாபகத்திலிருக்கிறதாம். அதனாலேயே மகாத்மாவுக்கு நல்ல ஞாபகக் குறிப்பு இருக்கிறதாம்.
ஆனால் அதே மகாத்மா ஒருசமயம் சென்னைக்கு வந்த காலத்தில் ஸ்ரீமான் சர். தியாகராயர் வீட்டில் இறங்கி கொஞ்சநாள் தங்கியும் இருந்து விட்டு போனபிறகு ஒரு விஷயத்தில் சர். தியாகராயரைப் பற்றி மகாத்மாவை கேட்ட போது தமக்கு அவரைப் பற்றி தெரியாது என்று சொல்லி விட்டாராம், கொஞ்சநேரம் பிரசங்கம் மொழிபெயர்த்ததைப்பற்றி ஞாபகத்தில் வைத்
திருந்த மகாத்மாவுக்கு தாம் இறங்கி கொஞ்சநாள் இருந்தவர் ஞாபகத்திற்கு வராமல் போனது என்ன காரணமோ என்பதை ஸ்ரீமான் முதலியார்தான் சொல்லவேண்டும், மகாத்மாவுக்கு ஞாபக சக்தி அதிகம் என்று தீர்மானிப் பதானால் பார்ப்பனரின் அடக்குமுறை சக்தி அதைவிட அதிகமென்றுதான் தீர்மானிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீமான் முதலியாரிடம் மாத்திரம் அதிக ஞாபகம் என்று சொல்ல வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 18.09.1927.
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
காந்தியைக் காட்மு காசு பரித்தல்
நமது நாட்டுப் பார்ப்பனர்கள் மகாத்மாவைக் காட்டி காசு பரிக்கிறார்
கள் என்று பொதுவாய் எழுதி வந்தோம். இப்போது அது வாஸ்தவமாகவே நடைபெற்றுவிட்டது. அதாவது திருச்சியில் ஒரு கொட்டகையில் மகாத்மா வைக் கொண்டுபோய் வைத்து பார்க்க வருகிறவர்களிடம் டிக்கட்டு போட்டு பணம் வசூல் செய்கிறதாக சங்கதி எட்டுகிறது.
மேடைரூ.25-க்கு மேல் ரிசர்வெட் ரூ.15 முதல் 25 வரை, முதல் வகுப்பு
ரூ.10 முதல் 15 வரை, இரண்டாவது வகுப்பு ரூ. 5 முதல் 10வரை, மூன்றாம் வகுப்பு ரூ.2 முதல் 5 வரை என்பதாகவும்,
டிக்கட்டுகள் சாஸ்திரி & கம்பெனியிலும் வைத்தியா & கம்பெனியிலும் கிடைக்கும் என்பதாகவும் திருச்சி டாக்டர் ராஜனால் துண்டு நோட்டீசு வினி யோகிக்கப்பட்டது நமது பார்வைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மகாத்மாவின் பிரசங்கமும் அவர் தரிசனமும் அவர் தாமதிப்பதும் சங்கராச்சாரி போடும் வரிக்கு மேல் போய் விட்டது. அது செலவாவதும் சங்கராச்சாரி செலவு செய்
வது போலவே பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாகப் போய்விட்டது. நாம் மூடர்களாயிருக்கும் வரை நமக்கு சுயமரியாதை வரும் வரை இது நடந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு யார் என்ன செய்வது?
குடி அரசு - கட்டுரை - 18.09 1927
குடி அரசு - 1927 (3) 180
குருக்கணிண் புறாட்டு
சகோதரர்களே!
இதுவரை அரசியல் புரட்டையும்,மதப் புரட்டையும் பற்றிச் சொல்லி வந்தேன். இனி ஆச்சாரியார், குரு,மகந்து, சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள் என்பவர்களின் பேரால் நடக்கும் புரட்டுகளையும் சற்று கவனித்துப் பாருங்கள் .
எந்த தனிப்பட்ட நபர் மீதிலும் எனக்கு எவ்விதமான மன வருத்தமும், துவேஷமும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் பணம் நின்றுவிட்டால் எனக்கு ஒன்றும் லாபம் கிடையாது. நான் சொல்லுவதெல்லாம் நம்முடைய பணம் எவ்வளவு அக்கிரம வழியிலும், அவிவிவேக வழியிலும் செலவா
கிறது என்பதையும் இதன் மூலம் நமது சுயமரியாதைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதோடு நாம் எந்தெந்த வழிகளில் ஏமாற்றப்படுகிறோம் என்ப தையும் உங்கள் அறிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணமே அல்லாமல் வேறல்ல...
ஆசாரியார், மகந்து, மடாதிபதி, சிஷ்யன், குரு என்று சொல்லும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவை ஆரியர்கள் நாட்டு வார்த் தைகள் . அவர்கள் இங்கு வந்தபிறகு அவ்வார்த்தைகளை நம்முள் புகுத்தி அவர்களே அவர்களை அவ்வார்த்தைக்கு அருகர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்களாக்கிக் கொண்டு, நம்மை அவர்களது சிஷ்யர்கள் என்பதாகச் சொல்லி, அந்த மாதிரியான குரு சிஷ்ய பாவத்திற்கு என்னென்னமோ நிபந்தனைகள் ஏற்படுத்தி, அவைகளுக்கு நம்மை கட்டுப் படுத்தி, அவர்களை நாம் கடவுளை விட சிறந்தவர்களாக மதிக்கும்படியாகச்
செய்து ஏமாற்றியிருக்கிறார்கள்.
முக்கியமான கோயிலாகிய திருப்பதியில் மகந்து என்பதாக ஒருவர் எதற்காக இருக்கிறார்? அவருக்கு ஏற்பட்ட வேலை என்ன? அவரால் அக் கோயிலுக்கோ அங்கு செல்பவருக்கோ உண்டாகும் லாபம் என்ன? அவர். கோயிலுக்கு தர்மகர்த்தாவென்று சொல்லுவதானால் மற்ற தர்மகர்த் தாக்களுக்கு இல்லாத தனி மரியாதை அவருக்கு ஏன் செய்ய வேண்டும்?
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அவர் ஒரு அரசனின் போகபோக்கியம் அனுபவிக்க எந்த விதத்தில் உரிமை உள்ளவர்? மற்ற பெரும்பான்மையான கோவில்களுக்கில்லாத முறை
திருப்பதி கோயிலுக்கு மாத்திரம் ஏன் ஏற்பட வேண்டும்? அல்லாமலும், அவர் எந்த பரம்பரையில் வந்தவர்? அவர் ஜாதி, குலம், தாய், தகப்பன் முதலியவர்களின் தொழில், யோக்கியதை முதலியவைகள் என்ன? இந்த மகந்து வேலையில் இதுவரை இருந்து வந்தவர்களின் யோக்கியதை என்ன? எத்தனை மகந்துகள் கிரிமினல் குற்றத்திற்கு தண்டனை அடைந்தவர்கள்? எத்தனை மகந்துகள் லட்சக்கணக்காக சுவாமியின் சொத்தை குடி, இழிவான
காரியம், மதுபானம், மாம்சம் உண்ணல், விபசாரம் முதலியவைகளில் செலவு செய்து குற்றங்கள் சாட்டப்பட்டனர் என்பவைகளை யோசித்துப் பார்த்தால் இவர்களது வழக்கமான யோக்கியதை இன்னதென்பதும், எந்த விதத்தில் இவர்கள் மதிக்கத் தகுந்தவர்கள் என்பதும் விளங்காமல் போகாது. மற்றும் இம்மகந்துகள் என்போர் சுவாமிக்கு வேண்டுதலை என்பதாக மக்கள். கொண்டுவரும் பொருள்களில் எவ்வளவு பாகம் கணக்குக்கு போகவிடாமல் திருடிக் கொள்ளுகிறார்கள் என்பதும் போய் வந்தவர்களை விசாரித்தால் யாவருக்கும் சுலபமாய் விளங்கும். ஒவ்வொரு யாத்திரைக் காரனிடமிருந்தும் வழிபறிக் கொள்ளை போல் வழி மறித்து பிடுங்கிக் கொள்ளப்படுகிறது எவ்வளவு?
அடுத்தப்படியாக லோககுரு என்னும் சங்கராச்சாரியார் என்பவர் களின் புரட்டு எவ்வளவு என்று யோசியுங்கள் . லோககுரு என்று அவருக்கு எப்படி பெயர் தகும்? அவர் யார்? யாருக்கு குரு? என்று பார்ப்போமானால் அவர் இந்தியாவுக்கு குரு அல்ல. இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்.
களில் பார்ப்பனர்கள் எல்லோருக்குங் கூட குருஅல்ல. பார்ப்பனர்களில் உள்ள பல பிரிவுகளில் ஸ்மார்த்தர்கள் என்கிற ஒரு சிறு கூட்டத்தாருக்கு இவர். குரு என்ற பாத்தியமுடையவர் அச்சிறு கூட்டத்தாருக்கும் இவரைப்போல் இன்னமும் நான்கு ஐந்து சங்கராச்சாரியார்கள் என்போர்கள் உண்டு.ஆகவே
ஒரு சிறு கூட்டத்தின் - அதாவது நமது நாட்டிலுள்ள சில ஆயிரக்கணக்கான மக்களில் 5 அல்லது 6 ல் ஒரு பாகத்தாருக்கு - குரு என்று ஏற்பட்ட ஒருவர். அக் கூட்டத்தினரின் செல்வாக்காலும், தந்திரத்தினாலும், ஏமாற்றுதலாலும், நம்மவர்களின் அறிவீனத்தினாலும், ஏமாந்த தனத்தினாலும் லோககுரு என்ப தாக அழைக்கப்பட்டு இந்துக்கள் என்கிற எல்லா மக்களுக்கும் குருவாகி கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து வெறும் பார்ப்பனர். களுக்கே பொங்கிப் போட்டு பார்ப்பனப் பிரசாரம் செய்து வருகிறார்.
ஒரு சங்கராச்சாரி என்பவர் ஒரு ஊருக்கு வருவாரானால் அந்த ஊரிலுள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர், பார்ப்பன மிராசுதார், பார்ப்பன வக்கீல் முதலிய செல்வாக்குள்ள ஆசாமிகளின் மூலம் அந்நாட்டிலுள்ள செல்வ வந்தர்களை எல்லாம் ஏமாற்றி 100, 200, 1000, 2000, 5000, 10000 என்பதாக
குடி அரசு - 1927 (3) 182
வசூலிப்பதும், தீர்த்தபதி, க்ஷத்திரபதி, தர்ம பூஷணம் முதலிய பட்டங்கள் கொடுப்பதாகச் சொல்லி அறிவில்லாத செல்வவந்தர்களை ஏமாற்றி 10002000 வாங்குவதும், பாத பூஜைக்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், தங்கப் பல்லக்கில் ஊர்கோலம் செய்ய இத்தனை ரூபாய் என்றும், வீட்டிற்கு வர இத்தனை ரூபாய் என்றும், வீட்டில் பூஜை செய்ய இத்தனை ரூபாய் என்றும், நமக்கு சொந்தமான குளத்தில் குளிக்க இத்தனை ரூபாய் என்றும், பிருதுகளுடன் வர இத்தனை ரூபாய் என்றும்,
வெறும் தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், பாத தீர்த்தத்திற்கு இத்தனை ரூபாய் என்றும், வியாபார முறையில் பேசி கொள்ளை அடிக்கிறார்கள் . எந்த ஊருக்கு வந்தாலும் அந்த ஊர்களில் பிரபலமாயுள்ள கோயில்களிலேயே வந்து தங்குவதும், அக்கோயிலுக்குள்ளாகவே சங்கராச்சாரியாருக்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அதாவது கக்கூசு, ஸ்நானம், சமையல் முதலியவைகள் வைத்துக் கொள்வதோடு காலிலுள்ள மிதியடியுடனேயே சுவாமியின் மூலஸ்தானம் வரையில் போய் சாமி கும்பிடுவதுமான காரியங்களையும் செய்கிறார்கள். இம்மாதிரி உலகத்திற்கே குரு என்று சொல்லிக் கொண்டும் பாடல் பெற்ற கோயில்களில் கக்கூசு கட்டிக் கொண்டும், மிதியடியுடனும் சாமி கும்பிடவும் உரிமையுள்ளவரான இந்த சங்கராச் சாரியார்களின் கொள்கை என்ன என்று பார்ப்பீர்களானால், அவர்கள் ஒரு விதத்தில் கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாஸ்திக மதத்தைச் சேர்ந்த
வர்கள். அதாவது தன்னைத் தவிர கடவுள் என்கிற வேறொரு பொருளோ தன்மையோ கிடையாது. தாங்களே தான் கடவுள் என்கிற கொள்கை யையுடையவர்கள் .அதனால்தான் கோயிலில் கக்கூசுகட்டிக் கொள்வதிலும், மிதியடியுடன் மூலஸ்தானத்திற்கு போவதிலும் ஆட்சேபணையில்லா தவர்களாயிருக்கிறார்கள் . இந்த கொள்கையுடையதற்கு ஸ்மார்த்தம் என்று
பெயர். இது சைவ மதத்திற்காவது வைணவ மதத்திற்காவது கொஞ்சமும் சம்பந்தமில்லாதது. கிறிஸ்தவ மதத்திற்கும் மகமதிய மதத்திற்கும் ஒன்றுக் கொன்று எவ்வளவு வித்தியாசம் உண்டோ அதைவிட அதிகமாக சைவ மதத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஸ்மார்த்தாளுக்கும் சைவ கோயில்கள் கிடையாது. தன்னையே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இவர் வேறு கோயில்களை கும்பிடுவது ஏமாற்றுவதற்கேயல்லாமல் வேறல்ல. இன்னும் இவர் சன்னியாசி வேஷம் போட்டுக் கொண்டு தன்னை சன்னியாசி என்று சொல்லிக் கொண்டும் அரசபோகம் அனுபவிப்பார். தனக்கெனவே யானை, குதிரை, ஒட்டகம், சிப்பாய் முதலிய படைகளும் போகிற இடங்களுக் கெல்லாம் கொண்டு போகிறார்கள் . தன்னுடைய சிஷ்யர்கள் என்போர்களா
கிய நம்மவர்களிடமே இவைகளுக்கு செலவுக்கு வேண்டிய பண்டங்க ளையும் சம்பாதித்து வருகிறார்கள். இவ்வளவும் செய்தும் அவரிடமுள்ள மத சம்பந்தமான நாணயமோ மிகவும் மோசமானது. தான் மனதில் மாத்திரம் ஸ்மார்த்தராயிருந்து கொண்டு வெளியில் சைவ வேடம் போட்டுக் கொண்டு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நடவடிக்கைகளை உடையவராயிருக் கிறார்கள்.
182 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மகந்துகள் சங்கதியும் உலக குருக்கள் சங்கதியும் இப்படியானால் மற்ற குட்டி சாமியார்கள் , ஜீயர்கள் முதலிய வைணவ மடாதிபதிகள் சங்கதி எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்
கள். இது தவிர இந்த ஆச்சாரியர்களுக்கு கட்டுப்பட்ட மக்களுக்குள்ளாகவே அநேகருக்கு இந்த குருமார்கள் தவிர குலகுரு என்பதாகவும் தங்கள் ஜாதி குரு என்பதாகவும் அநேகருண்டு. அவர்களும் இது போலவே சஞ்சாரம் என்கிற பெயரை வைத்துக் கொண்டு வருஷத்திற்கு ஒரு முறை பிரயாணம் செய்து குரு காணிக்கை யென்பதாக வரி வசூலிப்பதும், வரி அல்லாமல் மடத்திற்கு கடன் அதிகமாய் விட்டது, மழை இல்லை, சாமியார் விலைக்கு வாங்க, பட்டத்தை நிலைநிறுத்த, செய்த வியாஜ்ஜியத்தில் கடன் ஏற்பட்டு விட்டது, இரண்டு பெண்டாட்டி கட்டியும் பிள்ளையில்லை, மூன்றாவது கல்யாணத்துக்கு தங்கப் பல்லக்கு செய்யப் பணம் வேண்டும், வெள்ளிப் பாத்திரம், பிறாது இவைகளுக்கு பணம் வேண்டும் என்பவைகளான பெயரினால் வசூலிக்கும் பணம் கணக்கு வழக்கில்லை. இம்மாதிரி சாமியார். வரிகள் தினம் ஒன்றுக்கு 4 அணா சம்பாதிக்கும் ஏழைக் கூலியைக்கூட விடுவதில்லை. சாமியார் இல்லாவிட்டால் தங்களுக்கு அவமானம் என்று நினைக்கும்படியாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாமியார்களின் சொந்த யோக்கியதை ஒழுக்கங்கள் என்ன என்பதைப்பற்றி சிஷ்யர்கள் யாராவது கவனிக்கிறார்களா? ஒரு சாமியாருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் அந்த இரண்டு பிள்ளைகளும் உள்ள சிஷ்யர்களை மாடு கன்றுகளைப் பிரித்துக் கொள்வது போல் ஆளுக்குப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுகிறார்கள். மேல், கடை சங்கராச்சாரியார்களும் இம் மாதிரியே ஒருவருக்கொருவர் எல்லை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் எல்லை
யில் ஒருவர் வந்ததற்காக கோர்ட்டுகளில் விவகாரமும் நடந்து வருகிறது.
இது போலவே சிறு கிராமங்களும் குடும்பங்களும் சாமியார்களுக்கு பிரிவினையாக்கப்படுகிறது. இந்த சாமியார்களில் அநேகம் பேர் தங்களு டைய சஞ்சாரத்தில் தாசிகளைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள் . சில சாமி யார்கள் சஞ்சாரத்திற்கு தாங்கள் போக சவுகரியப்படாமல் தங்களுடைய தாசிகளை அனுப்பி விடுகிறார்கள் .
அந்த அம்மா சாமியார்களும் சால்வையைப் போர்த்துக் கொண்டு சிஷ்ய கோடிகளைத் தங்கள் காலில் விழச் செய்து பிரசாதம் கொடுத்து காணிக்கை வாங்கி வருகிறார்கள் . சில சாமியார்கள் வாரண்டு சேவகர்களு டன் காணிக்கை வசூல் செய்யவும், வாரண்டு கடன் தீர்க்கவும் சஞ்சாரம் செய்கிறார்கள் .எனது மைத்துனரின் சாமியார் தாசி வைத்திருப்பதால் அடிக் கடி வாரண்டில் பிடிபடுவதுண்டு. எங்கள் குலகுரு என்பவர் வருவதற்கு சாவகாசமில்லை என்கிற காரணத்தால் கண் தெரியாத தன்னுடைய 80 வயது தாயாரான விதவைக் கிழவியை அனுப்பிக் காணிக்கை வசூல் செய்யச்
குடி அரசு - 1927 (3) 184
செய்வதும், எங்கள் குடும்பமும் அந்த குருட்டுக் கிழவிக் காலில் விழுந்து காணிக்கை கொடுப்பதும் இன்னமும் நடந்து வருகிறது. என் தகப்பனாருக்கும். தாயாருக்கும் இந்த குருடி காலில் விழுவதற்கு வெட்கப்பட்டு வேறொரு சாமியாரை ஏற்படுத்திக் கொண்டார்கள் . வேறு சாமியாரும் நல்லாஞ் சக்கிர வர்த்திகள் என்கிற ஒரே பரம்பரை என்று சொல்லிக் கொள்வதானாலும் அதற்கு வேறு இதற்கு வேறு என்பதாக இரண்டு வரி கொடுக்கப்பட்டு வருகிறது. புது சாமியார் வைத்துக் கொண்டதாக கேள்விப்பட்ட பழய சாமியார் குடும்பத்தோடு வீட்டிற்கு வந்து “ஹரி இரண்டானாலும் குரு இரண்டாகலாமா” என்பதாக கோபித்து சாபமிடுவதாகப் பயமுறுத்தி அதிகப் பணமும் வாங்கிக் கொண்டார்கள் . அந்த சாபத்தால்தான் எனக்கு குழந்தை இல்லை என்றும் நான் குருத் துரோகியாகவும் மதத் துரோகியாகவும் போய் விட்டதாகவும் குருட்டு நம்பிக்கைக் கொண்ட கிழங்கள் பேசிக் கொள்ளு கின்றன. “திராவிடன்” பத்திராதிபரான ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்கள். குடும்பத்துக்கு குரு என்கிற ஒரு ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யங்கார் பார்ப்பனர். ரிவினியூ போர்டாபீசில் மாதம் 75 ரூபாய் சம்பளத்திலிருக்கிறார். வருஷத்
துக்கு ஒரு மாதம் சர்க்காரால் கொடுக்கப்படும் பிரிவிலேஜ் லீவு என்கிற சம்பளத்துடன் உள்ள லீவை உபயோகித்துக் கொண்டு கிராமங்களுக்கு பஞ்சகச்சம் கட்டி ஒரு கிழிந்த சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து காணிக்கை வரி வசூலித்துக் கொண்டு மறுபடியும் உத்தியோகத்திற்கு போய் விடுகிறார்.
இவ்வளவு அழிம்பும் அக்கிரமமும் புரட்டும் பித்தலாட்டமும் ஏமாற்றமும் அயோக்கியத்தனமும் செய்து கொள்ளையடித்துக் கொண்டு போகிற இந்த ஆச்சாரியார், மடாதிபதி, லோககுரு, குலகுரு, சாமியார் இவர். களால் மக்களுக்கு ஏதாவது லாபம் உண்டா என்பதை கவனித்துப் பாருங்கள். இவர்களைப் பற்றி நமது தமிழ் ஆதாரங்களில் ஏதாவது எழுதப்பட்டி ருக்கிறதா என்று பார்த்தால் எங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆரிய நூல்களில் இருந்தாலும், அது எவ்வளவு ஆபாசமாய் காணப்படுகிறது என்று பார்ப்பீர்களானால் அதன் உண்மை விளங்கும். குருபத்தினி சிஷ்யன் மேல் ஆசைப்பட்டு அவனைக்கெடுத்ததும் அதற்காக சிஷ்யன் சபிக்கப்பட்டதும் காணப்படுவதும், குருக்கள் ஒருவருக்கொருவர் பொறாமையால் சண்டைப் போட்டுக் கொள்ளுவதும், குருபத்தினி சம்பந்தம் செய்தால் அது இன்ன பாவம் என்றும் அதற்கு இன்ன பிராயச்சித்தமென்றும், சிஷ்யனாக ஆசைப் பட்டிருந்தால் இன்ன பிராயச்சித்தமென்றும், அந்தம்மாளாக ஆசைப்பட்டி ருந்தால் இன்ன பிராயச்சித்தம் என்றும் புராணங்களும் ஸ்மிருதிகளும்
எழுதப்பட்டிருக்கிறதும் அனுபவத்திலும் இம்மாதிரி அக்கிரமங்கள் நடந்து பலர் பாவத்திற்கு ஆளாவது பிராயச்சித்தத்தின் மூலம் பார்ப்பனர்களுக்கு பணம் கொடுப்பதுமல்லாமல் வேறு என்ன லாபம் உண்டாகிறது? ஆத்மார்த் தத்திற்காவது வாழ்க்கைக்காவது ஏதாவது பலன் உண்டா? ஏதாவது உபதேசம்.
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
உண்டா? லோக குரு சங்கராச்சாரியார் முதலிய பணக்கார குருக்கள் மார்கள், நாம் சூத்திரனானதால் நம்மைப் பார்த்தது குற்றம், நம்முடன் பேசியது தோஷம், நமது பாஷையாகிய தமிழை உச்சரித்தது மகா பாவம் என்பதாகக் கருதுவதும் அதற்காக நம்ம பணத்தைக் கொண்டே பிராயச்சித்தம் செய்வதும், அதன் மூலம் பார்ப்பனர்களுக்குத் தானம் கொடுப்பதும் தவிர. வேறு பலன் உண்டா? குலகுரு என்கிறவனும் நமது வீட்டிற்கு வந்தால் நமது பாயின் மேல் உட்காரக் கூட அசுசிப்பட்டுக் கொண்டு தாவிக் குதித்து கீழே உட்காருகிறான். ஆனால் அதே குரு அசுசியான வீதியில் நடந்து வரும் போது காலில் என்னென்னவோ மிதித்துக் கொண்டு நடந்து வருகிறான். அவன் நடந்து வந்த அசுசியான தெருவை விட நம்ம வீட்டுப் பாய் அசுசி என்பதாக கருதுகிறான். இப்படிப் பட்டவன் காலில்தான் நாம் விட்டம் போல் விழுந்து கும்பிட்டு பணம் கொடுக்கிறோம். இந்த சமயத்தில் குரு நமக்கு உபதேசம் செய்வதென்ன, நம்முடன் பேசுவதென்ன என்பதை கவனித் தீர்களா?
குரு : சவுக்கியமா? சிஷ்யன். : தேவரீர் அனுக்கிரகத்தால் நாயேன் சவுக்கியம்.
குரு £ உனக்கு எத்தனை குழந்தைகள் ?: சிஷ்யன்: * நான்கு குழந்தைகள் .
குரு * பெண் எத்தனை ஆண் எத்தனை? சிஷ்யன். : ஒரு பெண் மூன்று ஆண்.
குரு ஆண்களுக்கு கல்யாணம் ஆய்விட்டதா?' சிஷ்யன் :இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகிவிட்டது.
குரு “அப்படியா, இரண்டு ஆண்களுக்கு கல்யாணமாகி விட்டதா? அப்படியானால் அது இரண்டு குடும்பம், நீ ஒரு குடும்பம் ஆக மூன்று குடும்பமாகி விட்டது. ஆகவே மூன்று தலைக்கட்டுக்கு தலைக் கட்டு ஒன்றுக்கு ஒன்றே கால் ரூபாய் வீதம் மூன்றோன் மூன்று, மூக்கால்
முக்கால் ஆக மூன்றே முக்கால் ரூபாய் அல்லவா காணிக்கை கொடுக்க வேண்டும். நீ ஒன்றேகால் ரூபாய் தானே வைத்திருக்கின்றாய் இது தர்மமா? சிஷ்யன் சுவாமி தேவரிர் என்னை மன்னிக்க வேண்டும். குடும்பம்
இன்னும் பிரிக்கப்படவில்லையாதலாலும் அதுகளால் இன்னமும் ஒரு சம்பாதனையும் இல்லை யாதலாலும் ஒரே குடும்பமாய் பாவித்து விட்டேன்.
குரு :நீ குடும்பம் பிரித்தால் என்ன, பிரிக்காவிட்டால் என்ன. அவர்கள்
குடி அரசு - 1927 (3) 186
சம்பாதித்தால் என்ன. சம்பாதிக்காவிட்டால் என்ன. பெரிய சுவாமிகள் காலத்திலேயே உன் பெரியோர்களால் தலைக்கட்டுக்கு ஒன்றேகால்
ரூபாய் கொடுப்பதாக பட்டயமிருக்கிறது. அல்லாமலும் சாஸ்திரத்திலும் தலைக்கட்டுக்குத் தனித் தனியாய் வாங்கும்படி ரிஷிகள் சொல்லி இருக்கிறார்கள் . அந்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
சிஷ்யன்: சுவாமி! நாயேன் தெரியாத்தனத்தினால் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும். மூன்றே முக்கால் ரூபா காணிக்கையும் இந்த அபசாரத்திற்காக அபராதம் ஒன்றே கால் ரூபாயும் சேர்த்து ஐந்து ரூபாயாக வைத்திருக்கிறேன். பெரிய மனது செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
குரு : நிரம்ப திருப்தி. மடம் ரொம்பவும் பழுதாயிருக்கிறது. சிஷ்யர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு வந்து பார்த்து அது எப்படி செய்ய வேண்டுமோ அந்தப்படி செய்யுங்கள் தன்னைத்தானே சுவாமிகள் ரம்பவும் அதனால் அசவுக்கியப்படுகிறார்கள் . சிஷ்யன் :ஆ ஆகா. இதோ10 நாளில் நாங்கள் எல்லோரும் மடத் திற்கு வந்து ரிபேர் செய்துவிட்டு வருகிறோம்.
இவ்வளவுதான் குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் சம்பாஷணை. இதைத் தவிர வேறு ஏதாவது நடந்ததை நான் பார்த்ததே இல்லை.
இப்படி இருந்தால் இது ஒரு பகற் கொள்ளையா அல்லவா என்று தான் கேட்கிறோம். இம்மாதிரி குருவையுடைய நாடாவது மக்களாவது சுய மரியாதை, அறிவு, விடுதலை முதலியவைகள் அடைய முடியுமா? எனவே ஒரு கூட்டத்தார் அதாவது பார்ப்பனர்கள் பிழைக்கவே அரசியல், கடவுள் ,
மதம், ஆச்சாரியார்கள் ஆகியவைகள் இருக்கின்றனவே அன்றி இவை களால் ஏதாவது பலன் உண்டாகிறதா?
இம்மாதிரியான ஏமாற்றத்திலிருந்து விலகி அன்பு என்கிற உண்மை யான கடவுளை அடைய சமத்துவம் என்கிற கொள்கைகளான மதத்தையும் சுயமரியாதை என்கிற குருவையும் அடைந்தால்தான் விடுதலையோ இன்பமோ மோட்சமோ அடைய முடியுமேயல்லாமல் வேறு ஒன்றினாலும் முடியாது என்பதை உணருங்கள் .
( குற்றாலத்தில் சொற்பொழிவு தொடர்ச்சி 4.9.27 குடிஅரசு, 11.9.27
குடிஅரசு.)
குடி அரசு - சொற்பொழிவு - 25.09.1927.
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம்
வாலிபர்களுக்கு விண்ணப்பம்
பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சி யைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையும் மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த பிறகு பல வாலிபர்கள் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுத்து சத்தியாக்கிரகத்தை சடுதியில் ஆரம்பிக்கும் படியாகச் சொல்லி தங்கள் உற்சாகத்தைக் காட்டி வருகிறார்கள் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பயனுள்ள வேலை செய்யவேண்டு மானால் அது சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறில்லை. என்பதை நாம் மனப்பூர்த்தியாக ஒப்புக் கொள்கிறோம்.நமது நாட்டில் ஆசாரச் சீர்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும் ஆரம்பித்து எவ்வளவு காலமாய் நடைபெற்று வருகிறது? இவ்விரண்டிற்காக நமது மக்கள் சிலவழித்த காலம், பொருள் எவ்வளவு? இவ்வளவு ஆகியும் இதன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தலைவர் என்போரும் மக்களை ஏமாற்றி தன் தன் சுயநலத்திற்கு வழி தேடிக் கொண்டார்களேயல்லது நாடு அடைந்த பலன் என்ன? நாட்டில் மதிக்கத்தகுந்த ஒவ்வொரு பெரியாரும் ஆசாரத்திருத்தம் ஏற்பட வேண்டும், தீண்டாமை ஒழிய வேண்டும், யாவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும், வைதீகப் பிடிவாதங்கள் ஒழிய வேண்டும், அதில்லாவிட்டால் விடுதலையில்லை, சுயராஜ்யமில்லை என்பதாகப் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள் .இதை நாடு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் குறிப்பு காட்டி இருக்கிறார்கள் . அநேக மகாநாடுகளில் இதைப்பற்றிய தீர்மானங்களை ஏகமனதாய் நிறைவேற்றியும் இருக்கிறார்கள் . இவற்றைச் செய்த பெரியார்கள் மக்களால் மதிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால் அனுபவத்தில் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது? இன்று வரை ஒரு காரியமும் இல்லையே. இக்குற்றங்கள் நீங்க முன்னோர்கள் பாடுபட்டது இன்றா நேற்றா?' ஆயிரக்கணக்கான வருஷங்களாய் பாடுபட்டு வந்திருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருந்து வருகிறது. அவ்வாதாரங்கள் எல்லாம் மதிக்கப்படு கிறது, பூஜிக்கப்படுகிறது. ஆனால் பலன் என்ன? என்று மறுபடியும் கேட்கிறோம்.
குடி அரசு - 1927 (3) 188
ராமாயணத்தில் குகனுடன் ராமர் சரிசமமாய் உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள்.
பாரதத்தில் விதுரன் வீட்டில் கிருஷ்ணன் சாப்பிட்டார் என்கிறார்கள். பாகவதத்தில் திருப்பாணர் ஆழ்வாரானார் என்கிறார்கள் .
திருவிளையாடல் புராணத்தில் நந்தனார் அறுபத்து மூவரில் ஒருவராகி நாயன௱ராயிருக்கிறார் என்கிறார்கள் .இவ்விருவரும் கோயில்களில் பூஜிக்கப் படுகிறார்கள் என்கிறார்கள் .பெரிய புராணத்தில் ஜாதியில்லை என்று சொல்லி இருக்கிறது என்கிறார்கள் .
உமாபதி சிவம், பெத்தான் சாம்பானுக்கு முத்தி கொடுத்ததாய் சொல்லு
கிறார்கள் .கபிலர் பார்ப்பனனுக்கும் பரையனுக்கும் வித்தியாசமில்லை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள். அவ்வை “ஜாதியிரண்டொழிய வேறில்லை” என்று சொன்னாள் என்கிறார்கள் .
திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொன்ன தாக சொல்லுகிறார்கள் .
இராமலிங்க சுவாமிகள் “ஜாதி குலம் பேசும் சகடர்கள்” என்று பாடிய
தாகச் சொல்லுகிறார்கள் .
திருநாவுக்கரசு நாயனார் “சாத்திரம் பல பேசும் சளாக்கார்காள் கோத்தி ரமுங்குலமுங் கொண்டென் செய்வீர்கள்” என்று கேட்டதாகச் சொல்லு கிறார்கள் இவைகளுக்கெல்லாம் ஆதாரமுங் காட்டுகிறார்கள் .
மதாச்சாரியார்கள் என்போர்களான ராமானுஜர், ஜாதி வித்தியாச மில்லை என்று சொல்லி பரையர்களையெல்லாம் பிடித்து, நாமம் போட்டு, பூணூல் போட்டு, பஞ்சகச்சம் கட்டச் செய்து, அய்யங்காராக்கினதாகச் சொல் லுகிறார்கள் . சங்கராச்சாரியார் தீண்டாமை இல்லை என்று சொன்னதோடு பறையனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக சொல்லு
கிறார்கள் . இந்து மதத்திலேயே தீண்டாமை இல்லை என்கிறார்கள் .
மகமதியம், கிறிஸ்தவம், பெளத்தம், சமணம், பாரசீகம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம சமாஜம் முதலிய மதங்களிலெல்லாம் தீண்டாமை இல்லை என்கிறார்கள். அறிவாளிகளான தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், ராமதீர்த்தர், ராமகிருஷ்ண பரம அம்சர்,ஜோதி றாம்பூலே, ரபீந்ரநாத் டாகூர், காந்தி முதலிய மகாத்மாக்கள் தீண்டாமை இல்லை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள் .
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இவைகள் தவிர, வேதத்தில் தீண்டாமை இல்லை, கீதையில் தீண்டாமை இல்லை, சைவத்தில் தீண்டாமை இல்லை, வைணவத்தில் தீண்டாமை இல்லை என்றும் சொல்லுகிறார்கள் . இவ்வளவு மதங்களும் இவ்வளவு மதாச்சாரியார்களும் இவ்வளவு பெரியார்களும் இவ்வளவு ஆதாரங் களும் தீண்டாமை இல்லை என்று சொல்லியும் எழுதியுமிருந்தும் நமது நாட்டில் மாத்திரம் பிரத்தியக்ஷத்தில் தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா? என்று பாருங்கள் . தீண்டாமை மாத்திரம் என்று சொல்ல முடியுமா? தீண்டாமை, பேசாமை, நடக்காமை, நிழல் மேலே படாமை கண்ணில் தென் படாமை முதலியவைகள் இருக்கிறதா இல்லையா? அதுவும் கோவில், குளம், பள்ளிக் கூடம், தெருவு முதலிய இடங்களிலும், பூச்சி, புழு,
நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் முதலியவைகள் இருப்பதற்கு நடப்பதற்கு மலஜலம் கழிப்பதற்கு ஆட்சேபணையில்லாததுமான இடங்களில் எல்லாங்கூட தீண்டாமைப் பேய் இருக்கிறதா இல்லையா? சோத்துக்கடை, காப்பிக்கடை, ரயில் வண்டி முதலிய இடங்களில் இருக்கிறதா இல்லையா? இதற்காக எத்தனையோ காலமாய் எத்தனையோ பேர் பாடு
பட்டும் முடியாமலிருக்கிறதா இல்லையா?
ஏன் இப்படி இருக்கிறது? என்பவைகளை யோசித்துப் பாருங்கள். வாலிபர்களே! உங்களைத்தான் கேட்கிறோம். தயவு செய்து யோசித்துப் பாருங்கள். இவற்றைப் போக்கடிக்க யோக்கியமான முறையில் சரியான விலை கொடுக்க முன் வந்து நீங்கள் யாரும் இதுவரை முயற்சிக்கவேயில்லை
என்பதும், அதனால்தான் அது (தீண்டாமை) இன்னமும் நமது நாட்டில் நமது உருவமாகவே விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். எனவே இதைப் போக்கடிக்க வேண்டாமா? வேண்டுமென்பீர்களா னால் உங்கள் கையில் புஸ்தகம் கூடாது. நீங்கள் இது முடியும் பரியந்தம் படிக்கக்கூடாது. பள்ளிக்குப் போகக்கூடாது. கோவிலுக்குப் போகக்கூடாது. ஏன் என்று கேட்பீர்களானால் நீங்கள் எவ்வளவு படித்து எவ்வளவு உத்தியோகம் பார்த்து எவ்வளவு பெரிய மனிதனாகி எவ்வளவு பக்திமாணாகி கடவுளோடு கடவுளாய் உரைந்து கொண்டிருந்தாலும் தீண்டாமை யென்பது ஒருக்காலும் உங்களை விட்டுப் போய் விடாது. ஜஸ்டிஸ் கிருஷ்ணன், ஐகோர்ட் ஜட்ஜ் வேலைபார்த்தும் தீண்டாதவராய்த்தான் செத்தார். அவர். பிள்ளை குட்டிகள் இன்னமும் தீண்டாதவராய்த்தான் இருக்கிறார்கள் . மந்திரி முதலிய பெரிய உத்தியோகம் பார்த்தவர்கள் எல்லாம் இப்பொழுது தீண்டா தார்களாகிய சூத்திரர்களாய்த்தானிருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மடாதிபதி
கள் தம்பிரான்கள் எல்லாம் என்னதான் ஸ்ரீலஸ்ரீ பட்டமிருந்தாலும் சூத்திரர். களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் . மைசூர், புதுக் கோட்டை மகாராஜாக்களெல்லாம் சூத்திரர்களாய்தான் இருக்கிறார்கள் . மகாத்மா காந்தியை உலகமெல்லாம் போற்றினாலும் அவரும் தீண்டாதார் என்பதை மறந்து விடாதீர்கள் . இந்த நிலையில் நீங்கள் படித்து என்ன
குடி அரசு - 1927 (3) 190
செய்யப் போகிறீர்கள்? யாரை காப்பாற்றப் போகிறீர்கள்? நீங்கள் பாசான தாகவே வைத்துக் கொள்ளுங்கள்; பெரிய உத்தியோகம் பார்த்துப் பணம் சம்பாதித்து அரசபோகம் அனுபவித்தாகவே வைத்து கொள்ளுங்கள் : சாகும் போது யாராய்ச் சாவீர்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். குற்றமற்ற மனிதனாய்ப் பிறந்து இருந்தும் சூத்திரர்களாய், தீண்டாதவர்களாய், பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்களாய், மிருகத்திலும் தாழ்ந்தவர்களாய், மனிதத்தன்மை அற்றவர்களாய், சுயமரியாதை இல்லாமல்தான் சாவீர்களா?' அல்லது வேறுவிதமாய் சாவீர்களா? என்பதை நினைப்புக்கு கொண்டு வாருங்கள். நீங்கள் எவ்வளவு பணந் தேடி வைத்திருந்தாலும் உங்கள் பிள் ளைகளும் குட்டிகளும் அப்படித்தான் சாகுமா? வேறு விதமாய்ச் சாகுமா?' என்பதையும் யோசித்துப் பாருங்கள். எனவே உங்கள் போக போக்கியமும் வாழ்வும் பணமும் பதவியும் பட்டமும் என்ன செய்வதற்கு? ஒரு நாய்க்கு இருக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லை யென்று ஒப்புக் கொள்ளுகிற நீங்கள் ஒரு பன்றிக்கிருக்கிறயோக்கியதை உங்களுக்கில்லையென்று ஒப்புக் கொள்ளுகிற நீங்கள் இதைப் பெறாமல் எதற்காக இருக்கிறீர்கள் என்பதற் காகத்தான் படிப்பை விட இதை முக்கியமாய் கவனியுங்கள் என்கிறோமே யொழிய வேறில்லை. முதலில் தீண்டாமையை விட இழிவான சூத்திரத் தன்மையை ஒழிக்க முயலுங்கள். அதற்குத் தக்கவிலை கொடுங்கள் .ஆயிரக் கணக்கான வருஷங்களாக இருந்துவரும் அக்கிரமத்தை மேடைப் பேச்சி னாலும் பத்திரிகைப் பிரசுரத்தினாலும் புராண உபதேசத்திலும் தீர்த்து விடலாம் என்று எண்ணுவது அறியாமையேயாகும். அதனால்தான் மேற் கண்ட இத்தனை பெரியோர்களின் உபதேசமும் கட்டளையும் பாடல்களும் படிப்பினைகளும் ஆதாரமும் ஒரு கூட்டத்தாரின் வயிறு வளர்ப்புக்கு உதவுகிறதேயல்லாமல் தீண்டாமையை அசைக்கக்கூட முடியவில்லை. தீண்டாமையிலிருந்து விலகுவதேதான் சுயராஜ்யம்.அதுவேதான் விடுதலை, அதுவேதான் உரிமை, அதுவே தான் சுயமரியாதை என்பதை உணருங்கள் . விடுதலை சும்மா கிடைக்காது. உயிரை விட வேண்டும், இரத்தம் சிந்த வேண்டும், வெட்டுப்பட வேண்டும், குத்துப்பட வேண்டும், சுட்டுக் கொல்லப் பட வேண்டும், ஜெயிலில் சாக வேண்டும். இம் மாதிரி காரியமில்லாமல் உண்மையில் விடுதலை பெற்ற நாடு எது? ஜாதி எது? சுயமரியாதை பெற்ற சமூகம் எது? என்பதை யோசியுங்கள் இதற்குத் தயாராயிருக்கிறீர்களா? இருக்க முடியுமா? என்று உங்கள் வீரமுள்ள பரிசுத்தமான மனத்தைக் கேளுங்கள் . அது சம்மதங்கொடுத்தால் உடனே உங்கள் புஸ்தகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சத்தியாக்கிரகத்தை நடத்த வாருங்கள் நாங்கள் வரத் தயாராயிருக்கிறோம் என்று எழுதுங்கள் . இப்படிச் செய்வீர்களானால் இங்கு மாத்திரமல்லாமல் எங்குமே தீண்டாமை என்கிற வார்த்தையே இல்லாமல் செய்து விடுவீர்கள் . சூத்திரத் தன்மை ஒழித்தவர்களாவீர்கள். வாலிபர்களாகிய உங்களால் தான் இந்தப் பெரிய காரியம் செய்ய முடியும். வாலிபர்களாகிய நீங்கள் தான் கோடிக்கணக்கான மக்களுக்கு மனிதத்
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தன்மையையும் சுயமரியாதையையும் விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்க யோக்கியதை உடையவர்கள் .எனவே தியாகத்திற்கு, அஹிம்சை
யும் குரோதமும் துவேஷமுமற்ற தியாகத்திற்கு தயாராகுங்கள் .
குடி அரசு - தலையங்கம் - 25.09.1927
குடி அரசு - 1927 (3) 192
*நீலாம்பிகை திருமணம்”
சுவாமி வேதாசலம் அவர்களின் அருமைப்புதல்வி திரு.செல்வி நீலாம்பிகையம்மைக்கும் நமது நண்பரான திருவாளர் திருவரங்கம் பிள்ளை. அவர்களுக்கும் நடந்த திருமணச் சடங்கு சம்பந்தமாக சில விபரங்கள் பொது
மக்கள் கவனத்தை இழுக்கும்படி நேர்ந்தது பற்றி வருந்துகிறோம். ஆயினும். இச்சடங்கானது இது சமயம் தமிழ்நாட்டில் வெகு மும்மரமாய் நடந்துவரும் தமிழ் மக்களின் மனிதத்தன்மை உணர்ச்சியின் எழுச்சிக்கு இடையூறாய் நிற்குமோவென்னும் ஐயத்தால் அவற்றை வெளியிட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது பற்றி வெளியிடலாயிற்று. அதற்கு சமாதானமாக பண்டிதர் ஆனந்தம் அவர்கள் எழுதிய கட்டுரையானது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல் செய்து விட்டாலும் “கண்டு களித்தோன்” என்னும் நண்பர் எழுதிய மற்றொரு கட்டுரையும் அதை ஒருவாறு திருவாளர். காசுப்பிரமணியபிள்ளை அவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட தாக்கலும் மக்களுக்கு திருப்தி அளிக்கும் எனக் கருதி அவ்விஷயத்தை அத்துடன் நிறுத்திவிடலாம் என்பதாக முடிவு செய்து “இவ்விஷயம் இத்துடன் முடிவு பெற்றது” என்பதாக குறிப்பும் எழுதி முடித்துவிட்டோம்.
ஆனால் மறுபடியும் சுவாமி வேதாசலம் அவர்களின் சிஷ்யர் என்று சொல்லப்படுபவரான திருவாளர் பாலசுந்தரம் அவர்களால் ஒரு நீண்ட
வியாசம் வெளிவந்தபிறகு இவ்விஷயம் மறுபடியும் தலையெடுக்க வேண்டி யதாகி விட்டது. இதைப்பற்றி பலருக்குப் பலவிதமாய் தோன்றினாலும் நம்மைப் பொருத்தவரை கோயிலில் சுவாமிகளுக்கு பூசை செய்யும் குருக்கள். என்பவர்களை தமிழ் மக்கள் சடங்குகளில் சேர்த்துக் கொள்வதானது தமிழ் மக்கள் சுயமரியாதைக்கு குறைவு என்பதே நமது அபிப்பிராயம். ஆதாரங் களையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு குருக்கள்மார்களை ஆதி சைவர்
கள் என்றோ, தமிழர் என்றோ, வேளாளர் என்றோ ௬ஜு செய்து விடலாமா னாலும், அக்குருக்கள் ஒப்புக்கொள்ளாதவரையில், அதாவது அக்குருக்கள் நமக்கு சமமானவரென்றும், நம்மை விட உயர்ந்தவரல்லவென்றும், நம்முடன் இருத்தல் உடனுண்ணல் முதலிய காரியங்களை ஒப்புக் கொள்ளாமல் இருக்
கும் போது அவர் யாராயிருந்தாலும் நமக்கு என்ன பிரயோஜனம். சாதாரணமாக 100 - க்கு 75 வைணவ பார்ப்பனர்கள் ஆதியில் இன்னார் என்பது நமக்குத் தெரியும். ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் பார்ப்பனர்கள்
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஆனவர்கள் என்பது ஆராய்ச்சி வல்லோரின் ஆராய்ச்சியின் முடிவு என்றே வைத்து கொள்வோம். அதனால் நமக்கு என்ன லாபம்.நம்மிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை, அதிலும் பிறவியிலேயே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை உயர்ந்த தன்மையைக் காட்டுவதற்கு ஆதாரமாக பழக்கத்தில் வந்து கொண்டிருக்கிற சடங்குகளை நடத்திக் கொடுப்போனாக சேர்த்துக் கொள்ளுவதால் நாமே அவ்வுயர்வுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆகிறோமா யில்லையா என்பதுதான் நமது கவலை.ஆனால் விஸ்வகர்மாள், தேவாங்கர்கள் முதலானவர்கள் தங்களை பிராமணர்களென்றும், மற்றும் கோமட்டி செட்டியார்கள் வாணிப செட்டியார்.
கள் முதலானவர்கள் தங்களை வைசியர்கள் என்றும் சொல்லிக் கொள்ளு கிறார்களே, பூணூலும் போட்டுக் கொள்ளுகி றார்களே. அவர்களையெல்லாம்
நாம் பிராமண வைசிய கூட்டத்தில் சேர்த்து விடாமல் ஏன் பார்ப்பன ரல்லாதாருடன் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதாக கேட்கலாம். இவர்களை நாம் பார்ப்பனரல்லாதாருடன் சேர்த்துக் கொண்டிருப்பதை இவர்கள் ஆக்ஷேபிக்காமல் ஒப்புக் கொள்ளுகிறார்கள் . ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நமது சடங்குகளுக்கு நாம் இவர்களை நடத்தி வைக்கக் கூப்பிடுவதுமில்லை.ஆகவே இந்த சமாதானம் இவ்விஷயத்திற்கு பொருத்தமில்லை என்பதோடு இதைப்பற்றி நாம் அதிகமாக விவாதிப்பதும் சரியல்ல. அல்லாமலும் இவர்களெல்லாம் அரசாங்கக் குறிப்பிலும் பார்ப்பனரல்லாதார் வகுப்பிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் . அதை அவர்கள் ஒப்புக்கொண்டுமிருக்கிறார்கள் .குருக்களோ பார்ப்பன வகுப்பில் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் தங்களையும் பார்ப்பனர்களாகவே மதித்துக் கொண்டும் இருக்கிறார்கள் . அத்தோடு பார்ப்பனர்களும் குருக்கள்களை தங்களைவிட சற்று தாழ்ந்தவர்கள் என்பதாக மாத்திரம் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களுக்குள்ள உரிமைகளில் குருக்கள் பிரவேசிப்பதை தடுப்பது மில்லை. அன்றியும் பண்டிதராயுள்ள சிலர்கள் தவிர மற்றையோர் இக் குருக்கள்களைப் பார்ப்பனர்கள் என்றே எண்ணிக் கொண்டும் தங்களைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டுமிருக்கிறார்கள். இப்போது நமது
மனிதத் தன்மை பிரசாரத்தில் முக்கியமானதெல்லாம் எவன் தன்னை உயர்ந் தவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனை நமது சமூகச் சடங்கு களை நடத்துவிப்பதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடாதென்பதுதானே ஒழிய பார்ப்பனர் மாத்திரம் கூடாது என்பதல்ல. இத்தீர்மானம் திருவாளர் திரு.வி. கலியாணசுந்திர முதலியார் தலைமை வகித்த மாயவரம் சன்மார்க்க சங்க
மகாநாட்டிலும் மற்றும் பார்ப்பனரல்லாதார் மகா நாடுகளிலும் ஏகமனதாய் தமிழ் மக்களால் செய்யப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்களுக்கும் நமக்கும் இருக்கும் தகாராரின் முக்கியமே நம்மைவிட தான் உயர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டு இருப்பது தானே தவிர வேறில்லை; தவிரவும் நமது பிரசாரத்தின் கருத்து எல்லாம் எல்லா சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்பது தானே ஒழிய இந்த மதம் வேண்டும், இந்த மதம்
குடி அரசு - 1927 (3) 194
வேண்டாம் என்கிற மதப்பிரசாரமல்ல. அதோடு இந்த நமது கொள்கையை
ஒப்புக்கொள்ளும் எந்த மதத்தையும், எந்த சமயத்தையும், எந்த சங்கத்தையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ளத்தயாராயிருப்பதுடன் அவைகளை மதிக்கவும் தயாராயிருக்கிறோம்.
இம்முறையில் பார்க்கும் போது திருச்செல்வி நீலாம்பிகை அம்மை
யாரின் மணச்சடங்கு சமத்துவத்திற்கு ஒத்ததல்லவென்பதுதான் நமது தாழ்மை யான அபிப்பிராயம். சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர்களான கா.சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் நம்முடைய சுயமரியாதை, சமத்துவம், மனிதத் தன்மை ஆகிய கொள்கைகளுக்கு உடன்பட்டவர்கள் என்றும், மத சமய ஆராய்ச்சி விஷயமாய் யாராவது நமக்கு இடையூறு செய்ய வந்தால் நாம் அவைகளையும் லட்சியம் செய்யப் போவதில்லையானாலும், அப்பேர்ப்பட்ட இடையூறுகளுக்கும் அம் முறையிலும் கூட நமக்கு இப்பெரியார்கள் பின் பலமாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர்களை மலை போல் நம்பி வருகிறோம். சைவத்தின் பெயராலும், வைணவத்தின் பெயராலும் அனேக பண்டிதர்கள் என்பவர்கள் நமக்கு இடையூறு செய்யக் காத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். சில பார்ப்பனர்கள் இவற்றிற்கு உள் உளவாயிருந்து சில பண்டிதர்கள் என்னும் சமயவாதிகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும். இதற்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லுவார்கள் என்கிற தைரியத்தோடே இருக்கிறோம். பண்டிதத் தன்மை வேறு, அறிவு வேறு, சமயம் வேறு என்பது நமது அபிப்பிராயம். இவை நமது நாட்டில் பிரிக்கப் படவேயில்லை. சரியானபடி உணரப்படவும் இல்லை. எந்தப் பண்டிதரைப் பார்த்தாலும் எந்த அறிவாளியைப் பார்த்தாலும் அவரவர்கள் சமயத்தை ஒட்டி பண்டிதர்களாக இருக்கிறார்களே ஒழிய அதை தனக்குள் கட்டிவைத்து விட்டு பண்டிதத் தன்மையையும், அறிவையும் பிரித்துக் கொள்வதில்லை. சமயம் என்பது அவரவர் சொந்த விஷயம். பாண்டித்தியம், அறிவு என்பது பொது விஷயம். இது யெல்லாரும் ஒப்புக்கொள்ளத் தக்கதுடன் எல் லோருக்கும் பயன்படத் தக்கது. எனவே நமது நாட்டு பண்டிதர்கள் எவ் வளவோ சிறந்தவர்களாயிருந்தாலும் பொது மக்கள் எல்லோராலும் மதிக்கப் படாமல் ஒரு கூட்டத்தாரால் மாத்திரம் மதிக்கப்படுபவர்களாக ஆகி விடுவதற்குக் காரணம் இதுதானே ஒழிய வேறில்லை. அன்றியும் பண்டிதத் தன்மை வேறு அறிவு வேறு என்று கூட நாம் வெகுநாளாய் சொல்லி வருகிறோம். மகாத்மா காந்தியும் தன்னுடைய அறிவையும் பாண்டித்தியத்
தையும் இதுசமயம் ஒரு சமயத்திற்கு அடிமையாக்கிவிட்டதினால் தான் அந்த சமயக்காரரால் மாத்திரம் இப்போது மதிக்க வேண்டியவர்களாகி விட்டார். எனவே சுயமரியாதைக்கும் மனிதத் தன்மைக்கும் ஒரு காரியம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமானால் சடங்கு செய்பவர்களுக்கும் செய்வித்துக் கொள்பவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும், உயர்வு தாழ்வும் இல்லை
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
என்பதாய் இருவரும் ஒப்புக் கொண்டதாக இருந்தாலொழிய அது சுய மரியாதைச் சடங்கு அறிவுச் சடங்கு என்பதாக ஒப்புக் கொள்ளத்தக் கினதில்லை என்பதையும், இனியும் இம்மாதிரி நடைபெறும் சடங்குகள் எல்லாம் பார்ப்பனீயச் சடங்குகள் என்பதாகத்தான் முடிவு பெறும் என்ப
தையும், சமத்துவத் திலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் திருச் செல்வி நீலாம்பிகை திருமணச் சடங்கை பின்பற்றக் கூடாதென்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.10.1927.
குடி அரசு - 1927 (3) 196
யார்ப்பணரும் அரசியனும்
அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை: மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோ கத்திற்கும் வர வேண்டும் என்பதைத்தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர்
கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக்கூடும் என்று எண்ணுகிற விஷயங்களில் அதற்கு விலையாக தேசத்தையோ மானத்தையோ நாணயத்தையோ கூட விடப் பின்வாங்க மாட்டார்கள். என்றும், இந்தப்படி செய்தே நமது நாட்டை ஆயிரக்கணக்கான வருஷங் களாய் அன்னிய ஆக்ஷிக்கு அதாவது மனிதத்தன்மை அற்ற ஆகஷிக்கு அடிமைப்படுத்தி நமது நாட்டிற்கு அடியோடு சுயமரியாதை இல்லாமற் செய்து விட்டார்களென்றும், இக்குணங்களான பார்ப்பனீயம் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லது நமக்கு என்றென்றைக்கும் விடுதலையோ சுயமரியாதையோ ஏற்படாதென்றும் அனேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப்
பதுடன் அதே வேலையிலேயே நமது வாழ்நாளைக் கடத்தியும் வருகிறோம்.
ஆனால் நம்மில் ஒருசாராருக்கே, அதாவது பார்ப்பனர்களை பின்பற்றினாலொழிய வாழ முடியாது என்கிற கூட்டத்தாருக்கு இந்த உண்மை கள் எல்லாம் தெரிந்திருந்தாலும் அவைகளை வெளியிடுவது அவர்கள் வாழ்க்கைக்கு அசவுகரியமாய்த் தோன்றுவதோடு அதற்கு எதிர்ப்பிரசாரமும் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அந்தப் படி செய்து நாம் செய்து வருவதையும் அழித்துக் கொண்டும் வரலாம். ஆனாலும் நமது நாட்டிற்கு இப்படி உண்மைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு முன்னேற்ற மார்க்கம் இல்லை என்பதே நமது முடிவு என்பதோடு இந்தப்படி நாம் சொல்லுவதற்கும் சில உதாரணங்கள் காட்டுவோம்.
நமது நாட்டுக்கு புதிய சீர்திருத்தம் என்பதாக ஒன்று அரசாங்கத்தாரால் வழங்கப்பட்டவுடன் அதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற விஷயத்தில் காங்கிரசுக்காரர்கள் என்பவர்களுக்கே அபிப்பிராய பேதம் ஏற் பட்ட தானது சாதாரண மனிதர்களுக்குள் ஏற்பட்டதாகவும் சொல்ல முடியாது. லோகமான்யர் என்கிற திலகருக்கும், மகாத்மா என்கிற காந்திக்கும், லோக நாயகி என்கிற பெசண்டம்மாளுக்கும், மகாக்கனம் என்கிற சீனிவாச
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சாஸ்திரிக்கும் மற்றும் இது போன்ற தலைமையும், பெருமையும், பிரக்யாதியும், செல்வாக்கும் உள்ளவர்கள் என்று சொல்லுபவருக்குமே அபிப்பிராய பேதம்
ஏற்பட்டது. இவற்றுள் ஒரு கூட்டத்தார் சீர்திருத்தத்தை நிராகரித்து விட வேண்டுமென்றார்கள் . ஒரு கூட்டத்தார் நடத்திக் காட்டி அதிலுள்ள குற்றத்தை எடுத்துச் சொல்லி திருத்தப்பாடு செய்து மேல் கொண்டு சீர்திருத்தம் கேழ்க்கலாம் என்றார்கள் . இதில் ஒப்புக் கொண்டு நடத்திக் காட்ட
லாம் என்று அப்போது சொன்ன கூட்டத்தில் சேர்ந்தவர்கள் தான் சென்னை வாசிகளில் மைலாப்பூர் அய்யங்கார் கோஷ்டியான ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, கஸ்தூரி ரங்கய்யங்கார். முதலியவர்களும், அய்யர் கோஷ்டியை சேர்ந்தவர்களும் மிதவாதக் கட்சியாருமான ஸ்ரீமான் சிவசாமி அய்யர், சி.பி.ராமசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரி, பி.என்.சர்மா முதியவர்களும், பார்ப்பனரல்லாதார் கோஷ்டியாரான ஸ்ரீமான் தியாகராய செட்டியார், டி.எம்.நாயர், பனகால் ராஜா முதலியவர். களுமே ஆவார்கள் .
இவர்களில் அய்யங்கார் கோஷ்டியாரை, அய்யர் கோஷ்டியார்கள் கட்டி சேர்க்காமல் விரட்டிவிட்டதால் அவர்களுக்கு தனி இடம் இல்லாமல் போனதும் “சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்லிக் கொண்டு ஒத்துழை யாமையில் வந்து சேர்ந்தார்கள் . மற்ற இரு கூட்டத்தாரும் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுக்க முயற்சித்ததில், பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஜனங் களிடை செல்வாக்குப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்கள் . தோல்வியுற்ற அய்யர் கட்சி சர்க்காரிடம் செல்வாக்குப் பெற்று உத்தியோக வெற்றி பெற்றார்.
கள். அதன் பலன்தான் இப்போது ஸ்ரீமான்கள் சீனிவாச சாஸ்திரி மாதம் 4000ரூ. சம்பாதிக்கும் தென்னாப்பிரிக்கா கமிஷனரானதும், சி.பி.ராமசாமி அய்யர் மாதம் 5500ரூ. சம்பாதிக்கும் சட்ட மெம்பர் ஆனதும், பி.என். சர்மா மாதம் 6500 சம்பாதிக்கும் இம்பீரியல் கவுன்சில் மெம்பர் ஆனதும், டிரங்காச்சாரி மாதம் 3000 சம்பாதிக்கும் பையாஸ்கோப் கமிஷனரானதும், இவர்கள் பிள்ளைக்குட்டி அண்ணன் தம்பி, மாமன், மைத்துனன் முதலான வர்கள் உத்தியோகங்களில் இருப்பதுமாய் ஏற்பட்டது. அதுபோலவேதான் ஸ்ரீமான் பனகால் ராஜா, பாத்ரோ, சிவஞ்ஞானம் பிள்ளை முதலியவர்களும் மாதம் 4000 சம்பாதிக்கும் மந்திரிகளானதும் என்றும் சொல்லலாம். இப்படி
இருந்தாலும் ஒத்துழையாமைப் பார்ப்பன பத்திரிகைகளும் காங்கிரஸ்: தலைவர்களும் இவர்களைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாத சில கூலி பத்திரிகைகளும், போலித் தலைவர்களும் வயிற்றுச் சோற்று தேச பக்தர். களும், பார்ப்பனரல்லாதார் கட்சியை வைது அவர்களை அந்த ஸ்தானத் திலிருந்து விரட்டி, பார்ப்பனர்களையாவது அவர்களது அடிமைகளையாவது அந்த ஸ்தானத்தில் வைக்க அநுகூலமாயிருக்கும்படி பாடுபட்டார்களே ஒழிய உண்மையான ஒத்துழையாமையையாவது உண்மையான காங்கிரஸ் கட்டளையையாவது பிரசாரம் செய்தவர்களே அல்ல. அன்றியும்
குடி அரசு - 1927 (3) 198
சட்டசபையும், சட்ட மெம்பரும், சர்க்காரும் நடத்திவரும் நடவடிக்கையை அறிய முடியாத அவ்வளவு அறிவிலிகள் அரசியலிலாவது, பொது நலவாழ்விலாவது இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.அப்படி இருந்தா
லும் இப்பொழுது இவர்களை ஆதரிப்பதுதான் அக்கூட்டத்தாருக்கு தேசீய வேலையாக நடந்து வருகிறதே அல்லாமல் வேறில்லை. எனவே இவற்றை பார்ப்பனரல்லாத பாமர மக்கள் உணரமுடியாமல் போனதினால் பாமர மக்களுக்கு இந்தப் பார்ப்பனர்களின் அரசியல் புரட்டை வெளிக்காட்டுவதற் காக பார்ப்பனரல்லாதார் கட்சியார் தங்களுக்கு உத்தியோகம் வேண்டிய தில்லை என்றும், கவர்ன்மெண்ட்டாரை நாங்களும் திட்ட தயாராயிருக்கி றோமென்றும் சொல்லி இரட்டை ஆட்சி ஒழியுமட்டும் மந்திரி உத்தியோக மேற்பதில்லை என்றும், கவர்னரிடம் நம்பிக்கையில்லை என்றும் தீர்மானம் செய்து, சர்க்காரையும் பலமாகத் தாக்கி பேசியும் எழுதியும் வருகிறார்கள் . இதன் பலன் என்ன ஆச்சுது என்று பார்த்தால் இங்குதான் பார்ப்பனப் புரட்டை அறியும் இடம் இருக்கிறது. உடனே பார்ப்பன அரசியல் தலைவர். களில் மிக்க பிரக்தியாதி பெற்ற ஸ்ரீ சத்தியமூர்த்தி கவர்னரையும், கவர்னர். ஜனரலையும் பேட்டி கண்டு பார்ப்பறைல்லாதார் உங்களைத் தாங்காவிட்டால் அக்கரையில்லை.நாங்கள் உங்கள் சர்க்காரை தாங்குகிறோம் என்று வாக்க ளித்தார். மற்றொரு காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் காரியதரிசியுமான ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி அய்யங்கார் காங்கிரஸ் முதலிய அரசியல் சங்க உத்தி யோகங்களை ராஜீநாமா செய்து விட்டு சர்க்காரை தாங்கி உத்தியோகம் பெறுவதில் வெகு பரபரப்பா யிருக்கிறார். சீக்கிரத்தில் ஒரு உயர்ந்த பதவிக்கு வந்து விடவும் கூடும். தேசீயப் பத்திரிகைகள் சர்க்காரையும் மந்திரிகளையும்
தாங்கி எழுதி வருகின்றன. காங்கிரஸ் சங்க தலைவரான ஸ்ரீமான் சீனிவாசய் யங்காரோ அடக்குமுறை சட்டத்திற்கு ஆதரவாய் பேசி காங்கிரஸ் கட்சியை ஓட்டுக் கொடுக்கச் செய்து நிறைவேற்றி வைத்தார். இவ்வளவும் போதாக் குறைக்கு காங்கிரசுக்கும், கவர்னருக்கும் சினேகம் செய்து வைத்து சர்க்கா ருக்கு காங்கிரசிடம் “அன்பு” உண்டாக்கி கவர்னரிடமே காங்கிரசுக்கு செலவுக்காக 500 ரூபாய் சன்மானமும் வாங்கி வந்து விட்டார். இவ்வளவும் செய்ததல்லாமல் ராமநாதபுரம் மகா நாட்டில் தலைமை வகிக்கிற ஸ்ரீமான்
சத்தியமூர்த்தி மெஜாரிட்டி இருந்தால் மந்திரி வேலையை ஒப்புக் கொண்டு நடத்திக் காண்பிக்கலாம் என்றும் பேசி விட்டார். இதை சுதேசமித்திரனும்” ஜனங்களுக்கு நன்றாய் ஆசை ஏற்படும் படி தலையங்கம் எழுதி ஜாடையாய் ஆதரித்து விட்டது. இவைகள் எல்லாம் தாராளமாய் தேசத்தின் பேரால் விடுதலையின் பேரால் சுயராஜ்யத்தின் பேரால் வெளிப்படையாய் நடை பெறுகிறதே யொழிய ரகசியமாய் அல்ல. இவைகள் இப்படி இருக்க இந்த கொள்கைகளுடனிருந்த அய்யர் கூட்டமான மிதவாத கோஷ்டியைப் பற்றி இந்த தேசீயவாதிகள் ஒரு வார்த்தையாவது கண்டித்து பேசினவர்கள் அல்ல வென்பதும் சட்டசபையில் மிதவாதத்தால் பதவி பெற்ற அய்யர்களைப் பற்றி
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஒரு வார்த்தையாவது கண்டித்துப் பேசினவர்களும் அல்லவென்பதும் கவனித்து வந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் பார்ப்பனரல்லாத கட்சியைப் பற்றியோவென்றால், பேசின வார்த்தைகளும் எழுதின எழுத்துக்களும் அளவில. “குலாம் கட்சி”, “நக்கிப் பொறுக்கி”, “அடிமை மக்கள்”, “சர்க்கார் பூசாரி”, “சர்க்கார் தத்துப்பிள்ளை”, “பனகால் ஆட்சி ஒழிக”, *பனகாலை வெட்டிப் புதைக்க, “ராட்சசக் கட்சி”, “தியாகராயர் ஒரு சென்னை டையர்” என்பதாகவும் இன்னமும் எத்தனையோ விதம் அதாவது பார்ப்பரைல்லாதார். தலைவர்கள் பேரில் தொழிலாளர்களை ஏவிவிட்டு அடிக்கவும் உதைக்கவும் செய்வது முதலான காரியங்களும் செய்தார்கள் .
இப்படியெல்லாம் செய்ததினுடையவும், எழுதினதினுடையவும்
கருத்துக்கள் இன்னதென்று இப்பொழுதாவது நமது மக்களுக்கு விளங்கி யிருக்கிறதா என்று கேட்கத்தான் இதை எழுதுகிறோம்.
எனவே பார்ப்பனர்களின் அரசியல் என்பதெல்லாம் பார்ப்பனரல் லாதாரை அடக்கி மிதித்து பார்ப்பனர் ஆக்ஷி பெற வேண்டுமென்பது தவிர வேறில்லை என்பதும், பார்ப்பனரல்லாதாரில் சிலர் அவர்களைப் பின்பற்று வது என்பதையும் அப்பார்ப்பனர் சாப்பிட்டுக் கழித்த எச்சிலுக் காசைப்பட்டு திரிவது தவிர வேறில்லை என்பதையும் மக்கள் உணர்வார்களாக. இந்த ரகசியத்தை அறியாமல் பாமர மக்கள் காங்கிரசு, தேசீயம் என்று கண்ணை மூடிக் கொண்டு பார்ப்பன அரசியலைப் பின்பற்றுவதும், பணங்காசுகளை அள்ளிக் கொடுப்பதும் நமது சுயமரியாதை உதயத்தை மறைப்பதே அல்லாமல் வேறல்ல என்று சொல்லி இதை முடிக்கின்றோம்..
குடி அரசு - கட்டுரை - 02.10.1927.
குடி அரசு - 1927 (3) 200
மதுரையில் ராளியும் ஒற்றுமை மகாநா௫ம்
மகாத்மா காந்தி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத்தைப்
பற்றி ராஜிபேசி ஏதாவது ஒரு முடிவு செய்ய பார்ப்பனரல்லாதார் தலைவர்: என்கிற முறையில் உங்களை கூப்பிட்டால் வருவீர்களா என்பதாக சில பத்திராதிபர்களும் சமாச்சார வியாபார பிரதிநிதிகளும் வந்து நம்மைக் கேட்கிறார்கள்.
தவிர, மதுரையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டி மகாத்மாவைத் தலைமையாக வைத்து பேசு வதானால் வரத் தயாராயிருக்கின்றீர்களா என்று பார்ப்பனரல்லாத பிரமுகர்.
களில் சிலரும் கேட்கிறார்கள். இவற்றிற்கு பதில் சொல்லவேண்டியது அவசி யமாகின்றது. முதலில் மகாத்மா கூப்பிட்டால் என்பதற்கு பதில் சொல்லிவிட்டு
மகாநாட்டுக்கு பதில் சொல்லுவோம்.
மகாத்மா கூப்பிடுகிறாரா இல்லையா என்பது தெரியாமல் கூப்பிட்டால் வரத் தயாராயிருக்கிறேன் என்று சொல்ல நாம் தயாராயில்லை.
அல்லாமலும் எதற்காக கூப்பிடுகிறார் என்பதும், பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ஒற்றுமைக் குறைவாயிருக்கும் விஷயங்களில் மகாத்மா அவர்களின் சொந்த கொள்கை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலும், மகாத்மா அழைப்புக்கு வரும் பார்ப்பனர்கள் மகாத்மா சொல்லும் முடிவை ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளாமலும் அந்தப் பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ளுவதை பார்ப்பன சமூகம் ஒப்புக் கொள்ளுகிறதா என்பதை அறியாமலும் திடீரென்று மகாத்மா கூப்பிட்டால் வருகிறேன், மகாத்மா சொல்வதை ஒப்புக் கொள்ளு கிறேன் என்று சொல்லுவது ஒருக்காலும் பொறுப்பை உணர்ந்தவர்கள் சொல்லும் வார்த்தை ஆகாது என்பதே நமது அபிப்பிராயம். அல்லாமலும் குருகுல விஷயத்தில் பார்ப்பனர் பார்ப்பனல்லாதாருக்கு ஏற்பட்ட தகராறைப் பற்றி மகாத்மாவால் ஒருவித பைசலும் செய்ய முடியாததோடு “இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இது தான் சரி”என்பதாக தமது அபிப்பி
ராயத்தைக் கூட தைரியமாய் சொல்ல முடியாமல் வழ வழ என்று பேசிவிட்டுப் போய்விட்டார். தவிர இங்கு பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஏற்பட்டுள்ள பிரிவினைக்கு ஆதாரமானது என்ன என்று பார்ப்போமானால்
முக்கியமாய் மூன்று விஷயங்கள் என்று கருதுகிறோம், அவைகள் மத இயல், சமூக இயல், அரசியல் என்பவைகளாகும்.
மத இயலில் பார்ப்பனர்களுக்கும் மகாத்மாவுக்கும் எந்த நிலை யிலும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
சமூக இயலில் மகாத்மா அபிப்பிராயத்தைப் பார்ப்பனர்கள், சாஸ்திரிகள், பண்டிதர்கள் முதலியவர்கள் மகாத்மாவின் நேரிலேயே ஒப்புக் கொள்ள முடியாது என்றும், மகாத்மாவை “உனக்கு ஒன்றும் தெரியாது நீ சொல்லுகிறபடி செய்விக்க உன்னாலும் முடியாது உங்கள் பாட்டனாலும் முடியாது” என்றும் சொல்லி விட்டார்கள். அதோடு மகாத்மாவின் பகுத்தறி விற்கும் சத்தியத்திற்கும் வேத சாஸ்த்திரங்கள் இடம் கொடுக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். அன்றியும் தகப்பன் குணம் மகனுக்கு பிறவி
யில் வருகிறது என்று முடிவு கட்டிக்கொண்டிருக்கிற மகாத்மாவானவர் சமூக நிலையில் எல்லோரும் சமம் என்று சொல்வதென்றால் அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. தவிர, குருகுலத்தில் தைரியமாய் முடிவு சொல்ல மகாத்மாவுக்கு முடியாமல் போனதின் காரணமே இதுதான்.
மற்றபடி மூன்றாவதான அரசியலைப்பற்றியோ வென்றால் “ நான் ஒத்துழையாமைக்காரன் ஆனதால் எனக்கு உத்தியோகம், பதவி, அரசாங்க நிர்வாகத்தில் பங்கு ஆகியவைகள் எல்லாம் மிகக் கேவலம். ஆகையால் அதைப்பற்றி நான் ஒன்றும் பேச முடியாது” என்கிறார். ஆகவே “முள்ளு முனையில் மூன்று குளம்வெட்டினேன் அவற்றில் இரண்டில் தண்ணீரில்லை ஒன்று வற்றிப்போய்விட்டது” என்று சொல்வதுபோல் மூன்றும் மூன்றாய்ப் போய்விட்டது. இனி அந்த விஷயத்தில் மகாத்மாவின் அபிப்பிராயம் நமக்கு தெரிய வேண்டியிருக்கிறது. எந்த விதத்தில் அவரது பைசல் நமக்கு செல்லுபடி உள்ளதாகும் என்பதை யோசித்தால் நாம் போகலாமா போக வேண்டாமா என்பது விளங்காமல் போகாது. மகாத்மா பெரியவர் என்கிற முறையில் மகாத்மாவை மதிப்பதைப் பற்றி நமக்கு பிரமாதமான ஆட்சே பனை ஒன்றும் இல்லை. அவருக்கு வேண்டிய சவுகரியம் உபசாரம் செய்வ
திலும் ஆகூஷ்பனை இல்லை.ஆனால் இப்போழுதோ மகாத்மாவுக்கு எங்கு பார்த்தாலும் சங்கராச்சாரிக்கும் கவர்னருக்கும் இருக்கிற கவுரவம் போல் எங்கள் வீட்டுக்கு வாருங்கள், எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்பதாக 1000, 500 கொடுத்து கூப்பிட்டு மரியாதை செய்ய ஆள்கள் மலிந்து இருக்கும் போது, நாம் மேலே விழுந்து அவருக்குச் செய்து கொடுக்க வேண்டிய சவுகரியங் களாவது உபசாரங்களாவது பாக்கி இருக்கிறதா என்பது நமக்குப் புலப்பட வில்லை.நிற்க,
குடி அரசு - 1927 (3) 202
நாமும் மகாத்மாவுடன் பேசியதாக இருக்கட்டும் என்பதாக கருதி எதா வது காரணத்தின் பேரில் மகாத்மாவைக் காணப்போவதானது மகாத்மாவுக்கு
மிகுதியும் தொந்திரவு கொடுப்பதாகும். ஏனென்றால் இது சமயம் யாரோ இரண்டு பேரிடம் தன்னை ஒப்படைத்து, அவர்களது திருப்திக்காக எவ் வளவோ காயாலாவுக்குயிடையில் நமது நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்யும் போதும் அழைத்து வந்தவர்களும் சர்வ ஜாக்கிரதையாய் தங்கள் விஷயம் தவிர வேறு விஷயம் அவருக்கு தெரியப்படுத்தப்படாது என்ற பிரயத்தனத்
தில் இருக்கும் போதும், வேறு யாறையும் தனியாய் பேச விடாமல் எப்போதும் காவல் காத்து வரும்போதும், நாம் ஏன் அனாவசியமாய் உள்ளே புகுந்து மகாத்மா பதில் சொல்ல கஷ்டப்படும் படியான பிரசினைகளை கேட்பதும், அவர் நமக்கு அனுகூலமாய்ச் சொல்லுவதா அல்லது அவர்களுக்கு அனு கூலமாய் சொல்லுவதா என்று தாக்ஷண்ணியத்திற்கு அடிமைப்பட்டு விழிப்பதும், கஷ்டப்படுவதுமான காரியங்களை நாம் ஏன் அவருக்கு உண்டாக்க வேண்டும்? இவற்றையெல்லாம் பார்க்கும்போது மகாத்மாவை பேசாமல் அவர் இஷ்டப்படி விட்டு அவரைக் கூட்டிவந்தவர்களாவது திருப்தி அடையும்படி விடுவதுதான் சகல விதத்திலும் நன்மை என்று தோன்றுகிறது. ஒற்றுமை மகாநாடு விஷயமும் இதுபோலத்தான், அதாவது மகாத்மா ஒரு இடத்தில் பேசும்போது, “பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார். விஷயமாய் ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கர் ஒருவிதமாய்ச் சொன்னார், வரதராஜுலு நாயுடு வேறுவிதமாய் கொன்னார். இன்னொருவர் இந்த இரண்டுக்கும் விரோதமாய் சொன்னார், நான் எதை நம்பட்டும்” என்று பேசியிருக்கிறார். மகாத்மாவுக்கு அவரது பாரிஸ்டர் படிப்பு இதைச்சொல்ல உதவி செய்திருந்தாலும் கூட, நம்மவர்களிலும் மதம், சமுதாயம், அரசியல் ஆகிய விஷயங்களில் எல்லோரும் ஒரே அபிப்பிராயமாய் இருக்கிறார்கள் என்று சொல்லி விடவும் முடியுமா?
கோயமுத்தூர் மகாநாட்டுக்குபிறகு திருப்பூரில் ஒரு மகாநாடு கூட்டி பார்ப்பனரல்லாதார் பேரால் அபிப்பிராயம் வெளியானது போலும், கோய முத்தூர் மகாநாட்டில் இருந்து பேசி விட்டு வந்த கனவான்கள் வெளியில் வந்து பார்ப்பனரல்லாதார் தலைவர் என்கிற முறையில் அவற்றை அடியோடு
திருத்தியும், மறுத்தும் மறந்தும் நேர் விரோதமாய் நடந்துகொண்டது போலும், ஜஸ்டிஸ் கட்சியாருக்குள்ளாகவே “அது நமக்கு பிடிக்கவில்லை” “நான் அதற்கு கட்டுபடவில்லை” என்று சொன்னது போலும், “ஆரம்பத்திலிருந்தே. எனக்கு பேர் பிடிக்கவில்லை, பார்ப்பானை நீக்குவது பிடிக்கவில்லை. இது சமயம் நமது நாட்டுக்கு சுயமரியாதை அவசியம் இல்லை” என்பதாக பலவித
மாய் பேசுவதுபோலும் உள்ள எத்தனை வித அபிப்பிராய பேதப்பட்டவர்கள் நம்மிலும் இருக்கிறார்கள். இவ்வளவு பேரையும் நம்மால் ஒன்று சேர்க்கத்தக்க அளவுக்கு நாம் நாட்டில் செல்வாக்கு பெற்றுவிட்டோமா? இம்மாதிரி ஆள்களுக்கு நாட்டில் மதிப்பில்லாமல் செய்து விட்டோமா? அப்படி
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஒன்றுமில்லாமல் ஒரு மகாநாடு கூட்டி ராஜி பேசுவதென்பது இது சமயம் அவ்வளவு பொருத்தமான காரியம் என்று சொல்லிவிட முடியாது,
அல்லாமலும் இந்த பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் ராஜி செய்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் நிறைவேறக் காலம் வரும்போது இருசமூகத்திற்கும் இது சமயம் தலைவர்களாயிருப்பவர்கள் சர்க்காரே ஒழிய வேறில்லை. அவர்கள் சொல்
லும் தீர்ப்புத்தான் அமுலுக்குவரக்கூடும் அன்றியும் அத்தீர்ப்பை ஒப்புக் கொள்ளாவிட்டால், நிபந்தனையும் போடுவதற்கு அவர்களால் முடியும். அந்த
தீர்ப்பு இல்லாமல் ராஜியாகக்கூடிய யோக்கியதை இது சமயம் நமது நாட்டிற்கு இல்லையென்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் வீணாக இம்மாதிரி காரியங்களில் காலத்தை கடத்தி, நமது லட்சியத்திற்கும் அடிக்கடி தடங்கல் ஏற்படுத்திக்கொள்ளுவதை அடியோடு மறந்துவிட்டு முன் சொன்னது போல ஜனங்களுக்கு தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லி தாங்கள் அனுபவித்து வரும் இழிவிலிருந்து மீளுவதற்கு ஆசையையும் ஆற்ற லையும் உண்டாக்க வேண்டியதே நமது முக்கிய கடமை.
குடி அரசு - கட்டுரை - 0210-1927.
குடி அரசு - 1927 (3) 204
அடுத்த வாரம்
27-9-27 தேதி ஊழியன் என்னும் ஒரு பத்திரிகையின் முதல்
கலத்தில் “ வீணான அவதூறு” என்ற தலைப்பில் ஸ்ரீமான் காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்களுக்கும், ஸ்ரீமான். எஸ். ராமனாதன் அவர்களுக்கும் நடந்ததாக ஒரு சம்பாஷணை காணப்படுகின்றது. இதற்கு சமாதானம் எழுத வேண்டிய பொறுப்பு “திராவிடனுக்கும்” “குடி அரசுக்கும்” ஏற்பட்டதோடு ராமசாமி நாயக்கருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டதற்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.
எனினும் இந்த சம்பாஷணைகளில் கண்ட வர்த்தமானங்கள் முழுதும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் சொல்லப்பட்டது தானா என்பதை நாம் மற்றுமொரு முறை கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் எழுத வேண்டிய நிலைமையில் அச்சம்பாஷணையில் சில பாகம் இருக்கின்றது.
ஆகவே அது முழுவதும் உண்மைதான் என்றாவது, உண்மையல்ல வென்றாவது தெரிந்துகொண்டு அடுத்தவார ஆரம்பத்தில் எழுதுகிறோம். இதற்கு இரண்டில் ஒன்று பதில் இல்லாத பட்சம் சம்பாஷணை நடந்தது வாஸ்த வம் என்றும் அதில் கண்டது முழுவதும் உண்மை என்றும் வைத்துக் கொள்வோம். ஏனெனில் ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் வாக்குமூலத்திற்கு சமாதானம் சொல்லுவதில் நமக்கு சில பொறுப்பு இருக்கிறபடியால் தாமதிக்க வேண்டி இருக்கிறது. இது போலவே இரண்டொரு பெரியாரும் நமக்கு யோசனை சொல்லியிருக்கிறார்கள்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 02:10.1927.
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பெண்ணிண் வருமை அல்லது
வாழ்க்கைத் துணை
இதன் ஆசிரியர் திருவாளர் வி.கல்யாணகுந்தர முதலியாரைப் பற்றி தமிழுலகிற்கு அறிமுகஞ் செய்ய வேண்டிய அவசியமின்று. அன்னார். இதுகாலை எழுதி வெளிப்படுத்தியுள்ள பெண்ணின் பெருமை என்னும் புத்தகத்தைக் கண்டு மகிழ்ந்தேன். தேனினுமினிய செந்தமிழ் நடையில் வாழ்க்கையில் பெண்ணுக்குள்ள இடத்தையும், உரிமையையும், ஆண் பெண் மாறுபாடுகளையும் பெண்பாலாரின் பெருமைகளையும், அவைகட்கேற்ப பெண் தெய்வங்களை ஆண்கள் நடத்த வேண்டிய முறையும், மற்றும் இல்லறம் துறவறம் இரண்டின் விளக்கமும், பெண் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய பல நுட்பங்களையும், எல்லாவற்
நிற்கு மேல் பெண்ணின் பால் உள்ள இறையொளியையும் மிகத் தெளிவாக எடுத்து விளக்கி மற்றப் பதிப்புகளைப் போலன்றி நல்ல தாளில் நல்ல கட்டடத் துடன் கண்ணைக் கவரும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களின் விடுதலை வேண்டு மென்று பாடுபடும் இக்காலத்து இத்தகைய புத்தகங்கள் பல கட்டாயம் வெளிவர வேண்டும்.
விலை ரூ 2.
கிடைக்குமிடம்:
முருகவேள் புத்தக சாலை ராயப்பேட்டை சென்னை.
குடி அரசு - நூல் மதிப்புரை - 02.10.1927
குடி அரசு - 1927 (3) 206
நாடார் மஹாண சங்க 11 - வது மகாநா௫
இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள். எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத
(வகுப்பு வாதமல்லாது மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள் . மற்றொரு வகுப்பார் தலையெடுக்
காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர்: பல மகாநாடுகளை நடத்துகிறார்கள் . ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படி இல்லை. பிறருக்கு கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம்மகாநாடு நடைபெறு
கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும். அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண். டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை. துவேஷம் வேண்டாம், எல்லோ
ரும் சமம் என்று சொல்லுங்கள் என்று சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக்கிறோம். நம் நாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டு வரும் “ஒற்றுமை” என்ற வார்த்தைகளும், பிரச்சனைகளும் வெளி வேஷமே.தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலைமை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பின்னரே உண்மை ஒற்றுமை ஏற்படும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கான வேலைகளைச் செய்ய சுதந்திரம் ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் சுயமரியாதை, சமத்துவம், சுயமதிப்பு ஏற்பட வேண்டும். அதன்மூலந்தான் தேச முன்னேற்றமடையும். உண்மையான தேசீயமென்பது சுயமரியாதை ஒன்றே. சுயமரியாதையைப் பொறுத்தேதான் சுயராஜ்யமிருக் கிறது. சகலரும் ஒன்று.மேலோர் கீழோர் என்ற உணர்ச்சி இருக்கவே கூடாது.
குறிப்பு: 01101927 gyt நாள்கும்பகோணத்தில் நடைபெற்றநாடார் மகாஜன சங்கத்தின் 77.ஆவது மாநாட்டில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 09.10.1927
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
எது விணான அவதூறு ?
ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் காரைக்குடியில் சொன்னதாகக் காணப்படும்
கதர் இயக்க சம்மந்தமான விஷயங்களுக்கு பதில் அடுத்த வாரம் எழுது வதாய் குறிப்பிட்டிருந்தோம். காரணம் என்னவென்றால் அவ்வார்த்தைகள் உண்மையாய் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் வெளியிடப்பட்டதுதானா என்றறிவதற்காக வேண்டியே அப்படி எழுதியிருந்தோம். ஆயினும் இதுவரை அவற்றை மறுக்கத்தக்க விஷயம் ஒன்றும் நமக்கு எட்டவில்லை. ஆதலால் அவற்றிற்கு நம்முடைய சமாதானத்தை எழுதிவிட வேண்டியவர் களாகிறோம். ஏனெனில் மக்களை ஏமாற்றி சிலர் பிழைப்பதற்காக செய்யப்
படும் சூழ்ச்சிகளை நாம் கண்டிக்கப் புறப்படும் போதெல்லாம், இதுவரை நமது கண்டனத்தை கண்டிக்க வந்தவர்கள் ஒருவராவது நாம் என்ன சொன்னோம், அதற்கு அவர்கள் சொல்லுகிற பதில் என்ன? என்பதைக்காட்டாமல், வகுப்புத் துவேஷம், வகுப்பு உணர்ச்சி,பொறாமை, குரோதம் என்கிற வார்த்தைகளைச் சொல்லி தப்பிக்கவோ, மழுப்பவோ, ஏமாற்றவோ, பார்க்கிறார்களேயல்லாமல் யோக்கியப் பொறுப்புடன் நடந்து கொள்பவர்களை காண்பது அரியதாய் விட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் ஸ்ரீமான்கள் ராமநாதன், காசி விஸ்வ நாதஞ் செட்டியார் சம்பாஷணையானது, நாம் பொறாமை, வகுப்புத் துவேஷம், குரோதம் காரணமாக செய்து வருகிறோமா அல்லது உண்மையை மக்களுக்கு அறிவித்து பாமர மக்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவிக்கச் செய்து வருகிறோமா என்பதை வெளிக்காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பமாய் கிடைத்திருக்கிறபடியால், நாம் இவ்விருவருக்கும் நன்றி செலுத்த கடமைப் பட்டதோடு இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடவும் நமக்கு மனம் வரவில்லை. தவிர, அவற்றுள் இரண்டு அம்சம் அடங்கிக் கிடக்கின்றது. ஒன்று, பொது விஷயம்.அதாவது கதர் இயக்க சம்பந்தமானது.
மற்றொன்று தனிப்பட்ட விஷயம். அதாவது ராமசாமி நாயக்கரையும் “குடிஅரசை” யும் “திராவிடனை” யும் தாக்குவது. இவற்றுள் முதல் விஷயத் தைப்பற்றியே இப்போது இதில் சமாதானம் சொல்லுகிறோம்.தனிப்பட்டதைப்
பற்றி பின்னால் சொல்லுவோம். “ஊழியனில்” கண்ட சம்பாஷணையில் முக்கியமானவைகளில் சிலவற்றை இங்கு குறித்து சமாதானம் சொல்லுவோம்.
குடி அரசு - 1927 (3) 208
“ததர் இலாகாவில் உள்ள சிப்பந்திகளில் பிராமணர்கள் எத்தனைபேர், பிராமணரல்லாதார் எத்தனைபேர்” என்ற ஸ்ரீ காசி விஸ்வநாதஞ் செட்டியார். கேள்விக்கு சுமார் சரிபகுதி பிராமணர்களும், சரிபகுதி மற்றவர்களும் இருக்கலாம் என்பதாக பதில் கூறியிருக்கிறார். ஜனத்தொகையில் அதிகமா யிருக்கும் பிராமணரல்லாதார்களை அவர்கள் தொகைக்குத் தக்கப்படி நியமிக்காததின் காரணம் என்ன?
இதற்கு ஸ்ரீமான் ராமநாதனின் பதில், சர்க்கா சங்கத்தின் சிப்பந்திகள் , நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வரையில் பிராமணர்களைக் காட்டிலும் தகுதி பெற்று கதர் வேலை செய்யும் தொண்டர்களைத் தான் வழக்கமாகவும் முறை யாகவும் வைத்து கொண்டிருக்கிறேன்.
பிராமணரல்லாத தொண்டர்கள் அகப்படாவிட்டால்தான் பிராமணர்: களை ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். இதில் முதல் கேள்விக்கு பதில் சொன்ன விஷயத்தைப் பற்றி இது உண்மைக்கு மாறுபட்டது என்று வருத்தத் துடன் கூறுகிறோம். அதற்கு புள்ளி விபரமும் தருகிறோம். கீழ்க்கண்ட புள்.
ளி. விபரத்தை நேயர்கள் பொறுமையுடன் கவனிக்க வேண்டும்.
கதர் இலாகாவை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை நிர்வாகம், உற்பத்தி, விற்பனை ஆகியவைகள் . இம்மூன்று பிரிவுகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதார் கணக்கைக் குறிப்பிடுகிறோம். இக்குறிப்புகள் தான் நம்மை முதல் முதல் கதர் நிர்வாகத்தைப் பற்றி எழுதச் செய்தது. இவற்றில் ஏதாவது சிறு பிழைகள் இருந்தாலும் இருக்கலாம். அதுவும் ஏற்பட நியாயமில்லை...
(நிர்வாகத்தில் அதாவது ஈரோட்டில் உள்ள அகில பாரத சர்க்கா சங்க நிர்வாக காரிய ஸ்தலத்தில் 16 பெயர்கள் இருக்கிறார்கள் . அவர்களுள் 13 பேர் பார்ப்பனர், மூன்றே மூன்று பார்ப்பனரல்லாதார்தான் இருக்கிறார்கள் .
அவர்களது பெயர்களும் சம்பளமும்
பார்ப்பனர்கள்
ஸ்ரீமான்கள் உத்தியோகம் சம்பளம்
1 சுப்பரமணியய்யர் கணக்கர் 45 2.PS சீனிவாசய்யர் தபால் 3
3. ஸ்ரீ கண்டய்யர் கணக்கர் 30
4. அனந்தய்யர். தபால் 20
5. By கணக்கர். 25
6. கோவிந்தராவ் கணக்கர் 20
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
7.பராமசந்திரன் தபால் 25
8.VR. ராமசாமி அய்யர்: ஸ்டோர் மானேஜர் 30 9.50.சுப்பரமணியய்யர் குடி நூல் உதவி ஆசிரியர் 25 or 30
10.15 வரதாச்சாரி இன்ஸ்பெக்டர். 30 1 பார்த்தசாரதி அய்யங்கார் இன்ஸ்பெக்டர் 35 12.1.ரங்கசாமி அய்யங்கார் இன்ஸ்பெக்டர். 30
13. பாஷ்க்கர அய்யர். டி 30
பார்ப்பனரல்லாதார் ஸ்ரீமான்கள்
1. WP. இக்னேஷியஸ் மானேஜர் 15
2. வீராசாமி இன்ஸ்பெக்டர்: 35
3. ஈஸ்வரன் இன்ஸ்பெக்டர். 35
கதர் இயக்கத்தில் இந்த இலாகாவானது சர்க்காரில் சிக்ரெட்ரியேட்
என்று சொல்லுவதற்கு சமானமான அவ்வளவு அதிகார பலமும் சூழ்ச்சித் தன்மை காட்ட சவுகரியமுமானது. எனவே இந்த ஸ்தாபனத்தில் 16-க்கு 13 பார்ப்பனர்களும் மூன்றே மூன்று பார்ப்பனரல்லாதாரும் இருந்தால் இது
ஸ்ரீமான் ராமநாதன் சொல்லுகிறபடி சுமார் “சரிபகுதியா* என்பதை யோசிப் பதுடன் இந்த பார்ப்பனக் கணக்கர், கரஸ்பான்டெண்ட் என்னும் தபால் இலாகாகாரர், இன்ஸ்பெக்டர்கள் ஆகியவர்களிடம் பார்ப்பனரல்லாத சிப்பந்திகள் எவ்வளவு பாடுபடுவார்கள் என்பதையும், அவர்கள் எவ்வளவு தூரம் தங்களது சுயமரியாதையை விற்றுப் பிழைக்கச் சம்மதமிருப்பதால் மாத்திரம் இந்த இலாகாவிற்கு வர சம்மதிப்பார்கள் என்பதையும், நேயர்கள் யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
இரண்டாவதான உற்பத்திலாகாவில், உற்பத்திலாகா நிர்வாக காரியா லயம், உற்பத்திலாகா கீழ்ப்பட்ட காரியாலயங்கள் என இருவகைப் படுத்
தலாம்...
© இவற்றுள் உற்பத்திலாகா நிர்வாக காரியாலயம் என்பது திருப்பூரில் உள்ளது. இந்த காரியாலயத்தில் ஒட்டு மொத்தம் 10 உத்யோகஸ்தர்கள். அவர்களில் 8 பேர் பார்ப்பனர் 2 பேர் பார்ப்பனரல்லாதார். அதாவது:-
பார்ப்பனர்
ஸ்ரீமான்கள் ரூ
1.திருநாராயணய்யங்கர் மானேஜர் 7 2.ஆர்.விசர்மா சாய மானேஜர் 50
குடி அரசு - 1927 (3) 210
3. என்.ராமய்யங்கார் கணக்கர் 40
4 சாமிநாதய்யர் நூல் இலாகா 30
5. பத்மநாப ராவ் தபால் இலாகா 30
6. என்.எஸ்.சுப்பிரமணி ஸ்டாக் இலாகா 30
யய்யர்:
7. என்.எஸ்.கலியாண ஸ்டாக் இலாகா 25
சுந்திரம் அய்யர்
8. ராமய்யர் டி தெரியாது
பார்ப்பனரல்லாதார்
ஸ்ரீமான்கள்
1.நாராயணசாமி பொக்கிஷதார். 45
2. பஞ்சரத்தினம் சாய இலாகா 30
இந்த மானேஜர் கடின வருணாசிரமக்காரரும், கொடிய ஆசாரக் காரரு
மாவார். இவருக்குத் தீண்டாமை மாத்திரமல்ல பார்க்காமையும் உண்டு. இவரைப்பற்றி முன்னமே எழுதி இருந்தோம். அவரும் ஒப்புக் கொண்டு ராஜி ணாமா கொடுத்தார்.ஆனால் கதர் இலாக்கா தலைவர் ஸ்ரீமான் எஸ்.ராம ணாதன் அவர்கள் “இந்த காரணத்திற்காக ராஜினாமா கொடுத்தால் கதர் இலாகாவின்
மீது குற்றம் சொன்னவர்கள் வெற்றியடைந்தவர்களாகி விடுவார்கள், ஆதலால் போகக்கூடாது” என்று கேட்டுக் கொண்டு, வருணாசிரமத்திற்கும், தீண்டாமைக்கும், பார்க்காமைக்கும், ஆசாரத்திற்கும், கதர் இலாகாவுக்கும் சம்மந்தமில்லை என்பதாக தீர்ப்புக்கூறி மறுபடியும் அவரை இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மகாத்மா பணம் வசூல் செய்வதற்காக செய்யும் பிரசங்கத்தில் தீண்டாமைக்கும் கதருக்கும் சம்மந்தமுண்டு என்று சொல்லி பணம் வசூலிக்கிறார். இது வேறு விஷயமானதால் இதை இவ்வள வுடன் விட்டு விடுவோம். இம்மாதிரியான ஒரு பார்ப்பன அக்கிராரத்தின் கீழ் எப்பேர்ப்பட்ட பார்ப்பனரல்லாதாராயிருந்தால் வேலை பார்க்க முடியும் என்பதை நேயர்களே யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியது. இனி உற்பத்தி இலாகா கீழ்த்தர காரியாலயங்களைப் பற்றி கவனிப்போம்.
2 B) இந்த இலாகாவில் இருபது சிப்பந்திகள் இருக்கிறார்கள் .
இவர்களில் 10 பேர்கள் தான் பார்ப்பனர்கள். 10 பேர் பார்ப்பனரல்லாதார். ஏன்
இதில் சரி சமமாக இருக்கிறது என்பதற்கு ஒருசமாதானம் வேண்டியிருக்கும். அதையும் வெளியிடுகிறோம். அதாவது இந்த வேலை மிகக் கடினமானது. எப்படியெனில் இந்த காரியாலயங்கள் ஏறக்குறைய பெரும் பகுதி கிராமம். ரயிலுக்கு 30, 40, 50 மைல் தூரமுள்ளது.வண்டி சவுகரியங்கள் கஷ்டமானது.
தன் கையாலேயே பொங்கி சாப்பிட வேண்டியது. வேலை கடினமானது. அதாவது பஞ்சு கொடுக்கவும், நூல் வாங்கவும், நூல் கொடுக்கவும், துணி
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வாங்கவும், கணக்கு எழுதவும் ஆனவேலையோடு பார்ப்பனர்கள் சில இடங்களில் இருக்கவும் முடியாதது. எல்லாவற்றையும் விட கொஞ்சம் பணப் பொறுப்பும் வேண்டும். எனவே இதில் சரிபகுதி இருக்க நேர்ந்ததே அல்லா
மல் வகுப்புபார்த்து உத்தியோகம் கொடுத்ததாலல்ல வென்றே சொல்லுவோம். ஆதலால் இதில் பெயர் சம்பளம் குறிக்கவில்லை.
(3) விற்பனை இலாகா தமிழ்நாட்டில் 15 இடங்களில் கதர் கடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஒட்டு மொத்தச் சிப்பந்திகளில் 11 பார்ப்பனரல்லாதாரும் 10 பார்ப்பனர்களும் இருக்கிறார்கள் . இதிலும், பார்ப்பனரல்லாதார் அதிகமாயிருப்பதற்குக் காரணம் இதுவும் உற்பத்திலாகா போலவே சற்று கஷ்டமான வேலை. ஏனெனில் சரக்கு விற்பனை செய்ய வேண்டும், கடையில் காத்திருக்க வேண்டும், டிபாசிட்டு கட்ட வேண்டும், பணம் பொறுப்பு வேண்டும். ஆகிய விஷயங்களால் பார்ப்பனரல்லாதார் சரி சமமாய் நியமிக்க நேர்ந்ததே தவிர பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தால் அல்ல. அன்றியும் டிப்போ மானேஜர்களில் பார்ப்பனரல்லாதாரிடமேதான் அதிகமாக டிபாசிட்டு வாங்கப்பட்டிருக்கின்றது.
தவிர, ஸ்ரீமான் ராமநாதன் அவர்களே,“பிராமணர்களைக் காட்டிலும்
தகுதி பெற்று கதர் வேலை செய்ய முன்வரும் பிராமணரல்லாத தொண்டர் களைத்தான் ஏற்றுக் கொள்ளுவதை முறையாகவும் வழக்கமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அச்சம்பாஷணையில் சொல்லியிருக்கிறார். இதன் கருத்து என்ன? பிராமணர்களைவிட கெட்டிக்காரனாய் இருக்கிற பிராமணரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவேன் என்பதிலேயே பிராமணர்: களைச் சேர்த்துக் கொள்ளுவது சாதாரணம் என்றும், அவனை விட கெட்டிக்
காரன் கிடைத்தால் தான் பிராமணரல்லாதாரை சேர்க்க முடியுமென்றும் ஏன் சொல்ல வேண்டும். பிராமணரல்லாதாருக்கு மாத்திரம் அவ்வளவு கடுமை: யான நிபந்தனை எதற்கு. அல்லாமலும், இதுவரை கதர் போர்டில் பார்ப்பன ரல்லாதாரை அதிகமாக சேர்க்காததற்கு காரணமும் பிராமணர்களை விட அதிகமான யோக்கியதை உள்ளவன் கிடைக்காததுதான் என்று தானே ஏற்படுகிறது. இந்த அபிப்பிராயம் கொண்டிருப்பவரிடம் யோக்கியமான
பார்ப்பனரல்லாதான் எப்படி வேலை செய்ய முடியும்? பார்ப்பனரல்லாதாரைப் பற்றி சென்னையில் ஸ்ரீமான் ஓ.கந்தசாமி செட்டியார் பேசிய பேச்சுக்கும், ஸ்ரீமான் ராமநாதன் பேச்சுக்கும் வித்தியாசம் என்ன? இந்தக் கொள்கைப்படி பார்த்தால் ஸ்ரீமான் ராமநாதன் மாத்திரம் எப்படி கதர் இயக்கத்தில் இருக்கத் தகுதி உடையவர் என்று கேட்கிறோம். ஏனெனில் இவர் எல்லாப் பார்ப்பனர். களைக் காட்டிலும் அதிக தகுதி உடையவராக இருந்திருக்க வேண்டும். அந்தத் தகுதி என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. சர்க்கார் சொல்லும். தகுதிக்கும் பார்ப்பனர் சொல்லும் தகுதிக்கும் ஸ்ரீமான் ராமநாதன் சொல்லும் தகுதிக்கும் வித்தியாசம் என்ன என்றுகேட்கிறோம்.
குடி அரசு - 1927 (3) 212
இதிலிருந்து, கதர் இலாகாவைப் பற்றி அது பார்ப்பன அக்கிரகாரம் என்று நாம் எழுதினவைகளுக்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா என்பதையும், அதன் அதிகார ஸ்தானம் முழுவதும் பார்ப்பனர்கள் கையில் இருக்கிறதா இல்லையா என்பதையும் கவனித்துப் பாருங்கள். காரிய ஸ்தலத்தில் 100 - க்கு 80 பார்ப்பனர்கள், உற்பத்தி ஸ்தலத்தில் 100 - க்கு 80 பார்ப்பனர்கள் இன்ஸ்பக்ஷன் ஸ்தலத்தில் 100 - க்கு 66 பேர் பார்ப்பனர்கள். மற்றது கஷ்டப்படுவது, மூட்டை தூக்குவது, பொறுப்பு ஏற்றுக் கொள்வது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, ஆபீசு கூட்டுவது முதலிய ஆட்கள் பார்ப்பனரல்லாதார் என்றால் இது நியாயமான சமாதானமா?
மற்றபடி, சம்பாஷணையின் மற்ற பாகங்களுக்கு அடுத்த வாரம் எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.10.1927.
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தூர் ஆக்கிரகம்
சென்னையில் சிலர் சத்தியாக்கிரகம் என்னும் பேரால் நீல் துரை உருவச் சிலையை உடைத்தெறிய வேண்டுமென்று சொல்லிக் கொள்வதை
ஒரு பெரும் தேசாபிமானமெனக் கருதி சில வாலிபர்கள் மூலம் போலிக் கிளர்ச்சி ஆரம்பித்து அதற்காக பல வாலிபர்களையும் சிறைக்கு அனுப்பி யாய் விட்டது. சில பெண்மணிகளையும் சிறைக்கு அனுப்பியாய் விட்டது. மகாத்மா காந்தியும் இச் சத்தியாக்கிரகத்தை ஆதரித்து ஆசிர்வதித்ததாகவும் வெளிப்படுத்தியாகி விட்டது. வரப் போகும் காங்கிரசிலும் இதை ஒரு பெரிய அகில இந்திய விஷயமாக்கவும் வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது. தவிரவும் இதற்குச் சிலர் ரகசியமாய்ப் பணம் கொடுத்தது, மகாத்மா கொடுத்ததாகப் பெயர் செய்ய முயற்சிப்பதாகவும் கேள்விப் படுகிறோம்.
இவ்வளவும் உண்மையாகவே நடந்ததாயிருந்தாலும் இதை ஒழுங் கான காரியமென்று ஒருக்காலும் நம்மால் சொல்ல முடியாது. ஒரு சமயம் மகாத்மாவே ஒரு சத்தியாக்கிரகி ஆக வந்து தன் கையால் சம்மட்டி கொண்டு
நீல் சிலையை உடைக்க முன் வந்தாலும்கூட இவற்றைத் துராக்கிரக மென்றுதான் சொல்லுவோமே தவிர மகாத்மா செய்கிறார் என்பதற்காக ஒரு
காலமும் நாம் இதை சத்தியாக்கிரகமென்று சொல்ல மாட்டோம். தற்சமயம் மகாத்மாவின் கொள்கைகள் எப்படி குழப்பமாய் விட்டதோ, அவற்றுள் எப்படி மகாத்மா தன்மையில்லாமல் ராஜதந்திர தன்மை நிறைந்துவிட்டதோ, அதுபோலவே தான் நீல் சத்தியாக்கிரமென்னும் விஷயத்திலும் மகாத்மா வினுடைய கொள்கை என்பது ஆளுக்குத் தகுந்தபடி வழவழவென்று சொல்ல வேண்டியதாகிவிட்டது. இதே காரியத்தை பார்ப்பனர்களல்லாமல் நம் போன்றவர்கள் யாராவது ஆரம்பித்திருந்தால் கண்டிப்பாய் அதை துராக் கிரகமென்றே மகாத்மாவும் சொல்லியிருப்பார்.
நாகப்பூரில் தெருவில் வாளேந்திக் கொண்டு போனதையே துராக்கிரக மென்று வியாக்கியானம் செய்த மகாத்மாவுக்கு, சம்மட்டியெடுத்து ஒரு சிலையை உடைப்பது துராக்கிரகமல்லவென்று தோன்றிவிடுமானால் அதற்கு அப்பீல் எங்கே என்றுதான் நமக்குத் தெரியவில்லை. நீல் துரை அக்கிரமம் செய்தவரா? அயோக்கியரா? என்பதைப் பற்றி நமக்குள் சண்டை வேண்டிய
குடி அரசு - 1927 (3) 214.
தில்லை. அதற்காக அவரது உருவச் சிலையை உடைப்பதில் என்ன அர்த்த மிருக்கின்றது? அயோக்கியர் என்று தோன்றும்படியான மனிதனையெல்லாம் கொன்று விடுவதில் ஆக்ஷபனை இல்லையா என்று கேட்பதுடன் அப்படிக் கொல்லுவது சத்தியாக்கிரகமாகுமா என்றும் கேட்கின்றோம். உதாரணமாக வட இந்தியாவில் மகமதிய சகோதரர்கள் ஸ்வாமி சிரத்தா னந்தர் முதல் பலரை:
சுட்டும் குத்தியும் கொல்ல முயற்சித்து இருவர் செத்தாய் விட்டது. இருவர். குற்றுயிராய்க் கிடக்கின்றனர், மற்றும் பலர் காயப்பட்டுக் கிடக்கின்றனர். ஸ்வாமி சிரத்தானந்தரையும் மற்றவர்களையும் நாம் தலைவர்களாயும்,மகான் களாயும் கருதுகின்றோம். ஆனாலும் இவர்களைக் கொலை செய்ய முன்வந்த கொலை பாதகர்களும் அவர்களுக்குப் பின்னாலிருந்து கொண்டு இக் காரியத்திற்கு ஆதரவு கொடுத்து வருபவர்களும், இம்மகான்களை நாம் நீல் துரையைக் கருதுவதை விட மோசமாகவே கருதுகிறார்கள். ஆனதினால் அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து அவைகளையெல்லாம்
சத்தியாக்கிரகம் என்று சொல்லி விடுவதா என்று கேட்கின்றோம். இம்மாதிரி காரியங்களையெல்லாம் சத்தியாக்கிரகம், தேசாபிமானம், மதாபிமானம் என்று
கற்பித்துக் கொண்டே போவோமேயானால் இதன் முடிவு எங்கு போய் நிற்கு மென்றும் கேட்கின்றோம். இம்முறையில் பார்த்தால் ஸ்வாமி சிரத்தானந் தருக்கு நாம் ஒரு சிலை செய்து வைத்தால் மகமதியர்கள் அதை உடைக்க முன்வந்தால் அது சத்தியாக்கிரகமா அல்லவா என்றும் கேட்கிறோம். நமக்கு “சுயராஜ்யம் கொடுக்க மாட்டேன்” என்று சொல்லுகிறவர்களும், நம்மைக் கொடுமைப் படுத்தி அடக்கி நமது ரத்தத்தை உறுஞ்சிக் கொண்டிருக்கிற வர்களும், தென்னாப்பிரிக்காவில் நம்மவர்களைத் தெருவில் நடக்க விட மாட்டேன் என்று சொல்லுகிறவர்களுமான வெள்ளைக்காரர்கள் சிலை ஒவ்வொன்றையும் உடைக்க வேண்டியது சத்தியாக்கிரகமாகத்தானே முடிய வேண்டியதாகிவிடும். அன்றியும் ஒரு பெரிய சமூகமாகிய நம் தமிழ் மக்களை: ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்கள், சூத்திரர்களென்றும், தங்கள் வைப் பாட்டி மக்களென்றும், தீண்டக்கூடாதவர்கள், பேசக் கூடாதவர்கள், தெருவில் நடக்கக்கூடாதவர்கள் என்றும், சூத்திரன் பொருள் வைத்திருக்க அருகனல்ல வென்றும், அப்படி மீறி வைத்துக் கொண்டிருந்தால் உதைத்தும் பிடுங்கிக் கொள்ளலாமென்றும், அறிவுக்காக அவன் படித்தால் அவன் நாக்கையறுத்து விட வேண்டுமென்றும் இன்னும் எவ்வளவோ இழிவாகவும், எழுதிவைத்துக் கொண்டும், சிலவற்றை சட்டத்தின் மூலமாயும் அமுலிலும் வைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் ஒழிப்பதற்காகச் செய்யும் முயற்சியில் அக் கொடுமைக்கு ஆதாரமானவர்கள் ஒவ்வொருவரையும் சம்மட்டி கொண்ட டிப்பதையும் அவ்வாதாரங்கள் இருக்குமிடங்களை எல்லாம் நெருப்பு வைப்பதையும் சத்தியாக்கிரகமென்று தானே சொல்லியாக வேண்டும். இவ் வழக்கத்தை நிஜமென்று நம்பியோ, அல்லது இந்த முறையால் பிழைக்கலாமென்று கருதியோ இருந்து கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் மேற்கண்ட மாதிரி தங்கள் வாழ்வுக்கே கெடுதி ஏற்படும்படி அழிக்கப்
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பாடுபடுகின்றவர்களை கடப்பாறை கொண்டு அடிப்பதையும் சத்தியாக் கிரகமென்றுதானே சொல்லியாக வேண்டும். க்ஷத்திரிய வம்சத்தையே கூட்டோடு அழித்து விட்டதாக சொல்லப்படும் பரசுராமன் சிலை எங்கிருந் தாலும் க்ஷத்திரியர் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதைச் சம்மட்டி கொண்டு உடைத்துத்தானேயாக வேண்டும். நீல் துரையை விட அதிகமான கொடுமைகள் மகமதியருக்குச் செய்ததாகச் சொல்லப்படும் கதைப்படிசிவாஜி மகாராஜாவின் சிலையை மகமதியர்கள் சம்மட்டியும் கடப்பாறையும் கொண்டு உடைத்துத்தானேயாக வேண்டும்.ஒரு சூத்திரன் தபசு செய்ததற்காக அவனை ஒரே பாணத்தில் கொன்று விட்ட ஸ்ரீராமன் சிலையை சூத்திரர்கள். எனப்படுபவர்கள் எங்கு கண்டாலும் உடைத்துத்தானே யாகவேண்டும். மதுரையில் 8000 சமணர்களை உயிருடன் கழுவேற்றிய திருஞானசம்மந்த மூர்த்தியென்னும் பிராமண பக்தரை நாளைக்கும் சைவ மக்கள் கொண்டாடி உற்சவம் செய்கின்றார்களே, இதைப் பார்த்த சமணர்கள் சம்மந்தமூர்த்தி நாயனார் சிலை எங்கிருந்தாலும் அதை உடைத்துத் தானேயாக வேண்டும். இக்குற்றங்களுக்கும் நீல் துரை குற்றங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் நாம் கற்பித்து விட முடியும். இப்படியே பார்ப்போமானால் சத்தியாக்கிரகம் செய்து உடைக்க வேண்டியதற்கு உட்படாமல் எது மீதியாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்தப்படி பார்த்தால் சமீபத்தில் சென்னையில் ஸ்ரீ. வி.கிருஷ்ணசாமி அய்யர் அவர்களின் சிலையின் மூக்கை உடைத்து விட்டதையும், கழுத்தை வெட்ட முயற்சித்ததையும், குற்றம் என்று சொல்ல முடியாமல்தானே போய் விடும். இன்னமும் வைப்பதற்காக செய்து தயாராயிருக்கும் சர்.பி.தியாகராய செட்டியார், சர்மணி அய்யர், சர். பாஷ்யம் அய்யங்கார் மற்றும் எத்தனையோ சிலைகளை உடைப்பதற்கோ பின்னப்படுவதற்கோ இஷ்டப்படும் ஒவ்வொரு வர்களுக்கும் காரணம் கிடைத்துக் கொண்டுதானே இருக்கும். ஸ்ரீமான் வி.கிருஷ்ணசாமி அய்யரின் சிலையை பின்னப்படுத்தியவர்கள் யார். என்பதைப் பற்றி முதல் முதலாக சென்னையில் ஒரு பிரஸ்தாபம் ஏற்பட்ட தாகவும், அதாவது யாராவது ஒரு வெள்ளைக்காரர் இம்மாதிரி செய்யப் படுவதற்கு காரணமாய் இருக்கலாம் என்று சொல்லப் பட்டதாய் தெரிகிறது. இது வாஸ்தவமாய் இருந்தால் அதில் யார் என்ன குற்றம் சொல்லக்கூடும். சட்டப்படி குற்றம் ஏற்படலாமே தவிர நீல் சிலை நீதிப்படி குற்றம் சொல்ல இடமெங்கே இருக்கிறது?
ஸ்ரீமான் முத்துரங்க முதலியார் கொடுத்த அபிப்பிராயத்தைப் பார்த்தால் “பார்ப்பனர்களை பெரிதும் துவேஷிக்கின்ற பார்ப்பனரல்லாத தலைவர்களும் உற்சாக மிகுதியாயுள்ள தங்கள் சிஷ்யர்களை அளவுக்கு மீறிய காரியம் செய்ய வொட்டாமல் அடக்குவார்கள் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இதைப் போல யோக்கியப் பொறுப்பற்ற வார்த்தைக் கடுகளவு அறிவிருக்கின்ற வேறு எந்த மனிதனும்
குடி அரசு - 1927 (3) 216
சொல்லி இருக்க முடியாது. ஏனெனில் பார்ப்பனரல்லாத வாலிபர்களே செய்து விட்டார்கள் என்பதாக குறிப்புக்காட்டி பேசி இருக்கிறார். ஆனாலும் நாம் அதைப் பற்றி கவலைப்பட வில்லை. ஏனெனில் அவருடைய சகாவும் தலைவருமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் அதற்கு நேர்மாறாய் பேசி இருக்கிறார். அதாவது ஸ்ரீமான் கிருஷ்ணசாமி அய்யர் சிலையை பின்னப்படுத்தினதினாலேயே நீல் துரை சிலையை உடைக்கும் சத்தியாக் கிரகத்தை நிறுத்தப்போகிறதில்லை என்று குறிப்பு காட்டி பேசியிருக்கிறார்.
இதிலிருந்து ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர், நீல் துரை சிலையின் சொந்தகாரர்களையே குறி வைத்துப் பேசி இருக்கிறார் என்பதும் யாவரும் உணரக்கூடியதாயிருக்கிறது. மற்றொரு அய்யங்கார் ஸ்ரீ.வி.கிருஷ்ணசாமி அய்யர் காலத்தில் அய்யங்காரை தலையெடுக்கவொட்டாமல் செய்த காரியம் கொஞ்சமல்லவென்று சொன்னார்.
இம் மாதிரி செய்தவன் வெள்ளைக்காரனாயிருந்தாலும் சரி, பார்ப்பன ரல்லாதாரராயிருந்தாலும் சரி, அய்யங்காராயிருந்தாலும் சரி, வேறு யாராயிருந் தாலும் சரி, நீல் சத்தியாக்கிரக முறைப்படி பார்த்தால் அவன் பயங்காளித் தனமாகவும் திருட்டுத் தனமாகவும், யாருக்கும் தெரியாமல் செய்ததுதான் இப்போது பெருங்குற்றமாக கருதப்பட்டு விட்டதே அல்லாமல், ஒருவன் தனக்கோ, தங்களது சமூகத்திற்கோ கெடுதி இழைத்தவன் என்றோ, தங்களது சுயமரியாதைக்கு விரோதி என்றோ, தங்கள் வகையாரின் சிலையை காப்பதற் கென்றோ கருதிக் கொண்டு வெளிப்படையாய் செய்திருப்பானானால் சட்டப்படி குற்றமாகி ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ அதற்கு மேற்பட். டோ தண்டனை அடைந்திருந்தாலும் அச்செய்கையை சத்தியாக்கிரக மென்றும் தேசாபிமானம் என்றும் செய்தவனை வீரனென்றும் சொல்லப்பட்டு விடுமா அல்லவா? என்று கேட்கின்றோம். அதற்காக ஒரு சத்தியாக்கிரகம் ஆரம்பித்து ஒரு 500ரூ. சிலவு செய்தால் 50 பேரை ஜெயிலுக்கும் அனுப்ப முடியுமா முடியாதா? என்று கேட்கிறோம். தவிர, இம்மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து அது சட்டப்படி சரியானாலும் தப்பானாலும் நியாயப்
படி தப்பானாலும் சரியானாலும் அந்த விசாரமேயில்லாமல் பொதுவாய் காதில் கேட்ட மாத்திரத்தில் சந்தோஷப் படவும் துக்கப்படவும் ஆதரிக்கவும் கண்டிக்
கவும் ஆள்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனாலேயே ஒரு காரியம் சரியா தப்பா என்று மதித்து விடக்கூடாதென்பதே நமதபிப்பிராயம். இம்மாதிரி துராக்கிரக காரியங்களில் மக்களுக்கு அதிலும் பாமர மக்களுக்கு உணர்ச்சி போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பொறுப்புள்ள தலைவர். களுடையவும் பொது மக்களுடையவும் கடமை என்றே சொல்லுவோம். ஒரு மனிதனின் சிலையை அதிலும் ஒரு கூட்டாத்தாரோ பொது ஜனங்களோ அன்பாலும் பக்தி விஸ்வாசத்தினாலும் வைக்கப்பட்ட சிலையை இம்மாதிரி செய்வது என்பது எவ்வளவு மெதுவாக பொன் சம்மட்டியைக் கொண்டு
பின்னம் செய்வதானாலும் அது பலாத்காரமும், துராக்கிரகமும் என்பதே நமது
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தீர்மானம். அதிலும் ஸ்ரீ கிருஷ்ணசாமி அய்யர் சிலையை பின்னமாக்கினது வெள்ளைக்காரராயிருந்தாலும் பார்ப்பனல்லாதாராயிருந்தாலும் பார்ப்பனரா யிருந்தாலும் வேறு யாராயிருந்தாலும் அது மிகவும் இழிவானதும், முட்டாள் தனமானதும், கோழைத்தனமானதும், மனிதத் தன்மையற்றதுமான காரியம் என்றே சொல்லுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.10.1927
குடி அரசு - 1927 (3) 218
தமிழ் நாட்மல் சத்தியாக்கிரகம்
தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்கவும் இதுவரை: அநேக ஆதரவுகள் கிடைத்து வந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் “சூத்திராள்” என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்ட தாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. பல தனிப்பட்ட வாலிபர்களும் பெரியோர்களும் தங்களை சத்தியாக்கிரகி களாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக்கொண்டும் தெரிவித்துமிருக் கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்ப தாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள்
கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொ முது கேள்வி யாயிருக்கின்றது. சமீபத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில் யோசிப்பதாகவும் ஒரு கனவானால் கேள்விப்பட்டு மிகுதியும் சந்தோஷப்படுகின்றோம். ஆதலால் அப்படி ஏதாவது ஆலோசித்து முடிவு செய்ய ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படுமானால் மற்ற வெளியூர்களில் உள்ள பிரமுகர்களும் தொண்டர் களும் அவசியம் வந்து இதற்கு வேண்டிய ஆலோசனை சொல்லி உதவி செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். ஒரு படகோட்டி தன்னை தாழ்ந்த ஜாதி யென்று நினைக்கின்ற ஒருவனுக்கு தனது படகை ஓட்டமாட்டே னென்று சொல்லி பட்டினியிருக்கத் தயாராய் இருக்கும் போது மற்றபடி பெரியோர்கள், பிரபுக்கள், சுயமரியாதை நமது பிறப்புரிமை என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்கு பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லாம லிருக்கும் போதே இதற்குத் தக்க முயற்சி செய்யத் தகுந்த உணர்ச்சி இல்லையா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.10.1927
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
திருவார்ப்பு சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் திருவார்ப்பு என்கிற இடத்தில் தாழ்ந்த ஜாதியார் என்பவர்கள் தெருவில் நடக்க சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம், அம்மகிழ்ச்சியை தெரிவித்துக்
கொள்ளுமுன் அச்சத்தியாக்கிரகத்தை மகாத்மா நிறுத்துமாறு உத்திரவிட்டிருப் பதாய் தெரிகிறது.நீல் சத்தியாக்கிரகத்தை விட திருவார்ப்பு சத்தியாக்கிரகம் அவ்வளவு மோசமானதா என்பது நமக்கு விளங்கவில்லை. மகாராணியும், போலீஸ் கமிஷனரும் நன்மை செய்வார்கள் என்று தாம் அறிந்ததாக மகாத்மா தெரிவித்திருக்கிறார். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தில் சர்க்கார் நாணயம் இன்னது என்று தெரிந்து போய் விட்டது. வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போதும் மகாத்மா ராணியிடமும், திவானிடமும், போலீஸ் கமிஷனரிடமும் பேசி விட்டுத்தான் போனார். கடைசியாக அது வைக்கத்திற்கு மாத்திரம் முடிவதே பெரிய கஷ்டமாய் போய்விட்டது.மற்ற இடங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. இதனால் லாபம் என்ன. ஜனங்களுடைய முயற்சியையும் உணர்ச்சியையும் கட்டுப்பாடாய் எழுந்த ஆசையையும் இம்மாதிரி தடங் கல்கள் அழித்து விடுகின்றன. மறுபடியும் ஆரம்பிப்பதென்றால் இலேசான காரியமல்ல. ஆகவே ஏதாவது ஒரு இடத்தில் யோக்கியமான உரிமைக்கு சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருக்க வேண்டுமே ஒழிய ஆரம்பித்த காரியங்களை நிறுத்துவது நன்மை பயக்காது என்பதே நமதபிப்பிராயம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.10.1927.
குடி அரசு - 1927 (3) 220
சமாதானம்
சென்ற வாரம் “எது வீணான அவதூறு” என்னும் தலையங்க முடிவில், “மற்ற விஷயங்களைப்பற்றி அடுத்த வாரம் எழுதுகிறோம்” என்று எழுதி யிருந்தோம்.
ஸ்ரீமான்ராமநாதன் அவர்கள் கடிதம் கிடைத்து. அவர்களை நேரிலும் பார்த்து பேச நேர்ந்தது. அவைகளில் சம்பாஷணைகளின் தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப்பார்த்தவுடன் மற்றவர்களுக்கு எப்படி படக்கூடுமோ அந்த உணர்ச்சியோடு கூடி அந்த சம்பாஷணை நடைபெறவில்லை என்று சொன்னார் உதாரணமாக “ஊழியன்” பத்திரிகையில் கண்ட சம்பாஷணையில்
* பிராமணர்களைக் காட்டிலும் தகுதிபெற்று கதர்வேலை செய்ய முன்வரும். பிராமணரல்லாத தொண்டர்களைத்தான் ஏற்றுக் கொள்ளுவதை முறையாக வைத்திருக்கிறேன்” என்று காணும் வாசகம் அம்மாதிரி கருத்தோடு நான் சொல்லவில்லையென்றும் பிராமணர்களைவிட பிராமணரல்லாத தொண்டர் களைத்தான் ஏற்றுக்கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதாகவும், இனியும் அம்மாதிரி வழக்கத்தையே கையாளப்போவதாகவும் சொன்னார் என இம் மாதிரி இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட்டார்.
அன்றியும் முக்கியமான விஷயங்களில் நமது கொள்கைக்கு அவரது உள்ளத்தில் எவ்வித மாறுபாடும் இருப்பதாய்க் காணப்படவில்லையாத லாலும் அதை அவ்வளவோடு நிறுத்திவிட்டோம்.
குடி அரசு - குறிப்புரை - 16.10.1927
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வகுப்பு வாதம் ஒழிந்ததா?
சென்னையில் பார்ப்பனர் கையாளாக இருந்து வந்த ஸ்ரீமான் பக்தவத் சலு நாயுடுவைப்பற்றி பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர் கார்பரேஷனில் இருக்கும் வரையும் பார்ப்பனர்கள் இஷ்டப்படி கமிஷனரை வைவதையே தொழிலாகக் கொண்டவர். அவருடைய புத்திசாலித்தனம் அறிய வேண்டு மானால் ஒரு விஷயத்தில் பார்க்கலாம். அதாவது கமிஷனர் முனிசிபல் பள்ளிக்கூடங்களுக்கு புஸ்தகங்கள் வாங்குவதில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெள்ளைக்காரர் கம்பெனியிலும் பார்ப்பனர் கம்பெனியிலும் வாங்கி வருவதைத் தெரிந்தும், ஒரு நாயுடு கம்பெனியில் நூறு ரூபாய் சில்லரைக்கு புஸ்தகம் வாங்க நேரிட்டதற்காக ஸ்ரீ பக்தவத்சலு நாயுடு அவர்கள்; புஸ்தகக் கடைக்காரரும் கம்மீஷனரும் நாயுடுவாய் இருப்பதால் தானே இந்த பள்ளிக்கூடப் புஸ்தகங்கள் நாயுடு கம்பெனியாரிடம் வாங்கப் பட்டது என்பதாய் ஒரு கேள்வி கேட்டார்.இந்த கேழ்வி கேட்ட ஸ்ரீ பக்தவத் சலமும் ஒரு நாயுடுதான் என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண் டால் இந்தக் கேள்வியில் எவ்வளவு புத்திசாலித்தனமிருக்கும் என்பதை அறியலாம். அவ்வளவு தூரம் பார்ப்பன மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ஸ்ரீ நாயுடு அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் தொழிலாளர் பிரதிநிதியால் அதிகமான ஓட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டார்.
இப்போது தாலூகா போர்டிலும் ஸ்ரீ நாயுடு பார்ப்பனர்கள் ஆயுதம் என்பதற்காகவே அதிகமான ஓட்டுகளால் தோற்கடிக்கப்பட்டார். அதாவது
ஸ்ரீ பக்தவத்சலத்திற்கு 26 ஓட்டுகளும் அவருக்கு எதிரியாய் நின்றவருக்கு 443 ஓட்டுகளும் கிடைத்தன.417 அதிகமான ஓட்டுகளால் தோற்கடிக்கப்பட்டி ருந்தால் வகுப்புவாதம் வளருகின்றதா செத்துவிட்டதா என்பதை யோசித்தால் தெரியாமல் போகாது. ஒவ்வொருவூரிலும் இதே மாதிரி நடந்து கொண்டுதான் வருகின்றது. இதை மாற்றத்தான் சென்னையில் காங்கிரசு நடத்துவதும், மகாத் மாவைக் கொண்டு பிரசாரம் செய்விப்பதும் பார்ப்பனர்களுக்கு இதுசமயம் மெத்த அவசியமாய் போய்விட்டது. இதனால் நமதுமக்கள் ஏமாறவுங்கூடும். அன்றி இந்த வெற்றி அடைந்ததினாலேயே பார்ப்பனரல்லாத இயக்கத்தாரும். மெய்மறந்து அக்கிரமங்கள் செய்து, நன்மை செய்யவேண்டிய சந்தர்பங்களை சரியானபடி உபயோகப்படுத்திக் கொள்ளாமல், சுய நலத்தையே பிரதான மாகக் கருதி வந்து, அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் இப்பொழுது அடையும்
குடி அரசு - 1927 (3) 222
பலனை அடையவும் கூடும். எப்படி முடியுமோ என்பது நமக்கு கவலை யாகத்தான் இருக்கிறது. ஏனெனில் சென்னை முனிசிபல் பிரசிடென்டு தேர்த லிலேயே இந்த யோக்கியதை விளங்கிவிடும் போலவே காணப்படுகின்றது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.10.1927
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சமய சீர்திருத்தம்
சகோதரர்களே!
“சமய சீர்த்திருத்தம்” என்பது பற்றி பேசுவது என்பது என்னைப் போன்ற ஒருவருக்கு இலேசான காரியமல்ல. அதற்குத் தக்க ஆராய்ச்சி வேண்டும். சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசவும் எனக்குப் போதுமான திறமையில்லை. நான் சமய ஆராய்ச்சி செய்யவில்லை. கடந்த ஆறேழாண்: டுகளாக அரசியலில் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நடைபெற்று வந்த காங்கிரசில் நான் உழைத்து வந்தது அன்பர் பலர் அறிவர். அரசியலின் மூலம் நாட்டின் சீர்திருத்தத்திற்கு அரும்பாடு பட்டும் யாதொரு பலனும் அடைய இயலாமல் போனதாலும், அதற்கு காரணம் சமய சம்மந்தமான கொள்கைகளே தடை என்று உணர்ந்ததாலும் அக்குறைகளை நீக்க உழைப்ப துதான் அவசியமெனத் தோன்றிய பின்னர் அவ்வழியில் உழைத்துப் பார்க்க லாமென முற்பட்டேன். சமயத்தின் பேரால் உண்டாகும் கஷ்ட நஷ்டங் களையும் விடுதலைக்கு விரோதமானவைகளையும் மக்கள் சுயமரியாதை யற்ற வாழ்க்கையில் துன்புறுவதையும் ஒழிக்கவே முதலில் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் விடுதலை அடைய முடியும். நம் நாடு விடுதலையடைய முடியாததற்கும் சுயமரியாதையற்ற தன்மையில் வாழ்வ
தற்கும் நமது சமயக் கொள்கைகள்தான் இடையூறாக இருக்கின்றன. நான் இப்பொழுது பேசினால் கேட்போர்களில் சிலருக்கு மன வருத்தமாய்த்தான். தோன்றும். ஏனெனில் நம் மக்களுக்கு சமயப் பற்று என்கிற மூட நம்பிக்கை யை சுயநலக்காரர்கள் அதிகமாய் ஊட்டிவிட்டார்கள். அது நமது இரத்தத்
திலும் நன்றாய்க் கலந்து விட்டது. சுலபமாய், கேட்போருக்கு சமாதானம்
சொல்லி சரிப்படுத்த முடியாத அளவு பதிந்திருக்கின்றது. நாட்டின் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் நான் பேசும் விஷயங்களை உறுதியாய் நம்புகிறேன்.
நம் நாட்டிற்கு என்றுமே விடுதலை இல்லாத வழியில் காரியங்கள் சமயத்தின் பேரால் நடைபெற்று வருவதைத் தெரிவித்தால் சிலர் மனம் வருந்தும். அதற்குப் பயந்து வெளிப்படுத்தாமல் போனால் நான் சுயநலம் கருதுபவனா வேன்: அல்லது பயங்காளித்தனம் கொண்டவனாவேன். பகுத்தறிவைக் கொண்டு பொது நிலையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் நான் சொல்லுவதில்
குற்றம் சொல்ல அவசியமிராது. சமய விடயம் பேசும் பொழுது அதன் பயனாய் அரசியலிலும் ஏற்பட்டகுற்றங் குறைகளை கூறவேண்டி இருக்கிறது.
குடி அரசு - 1927 (3) 224
அரசியலில் நான் தீவிர வேலை செய்தேன் என்பது இங்குள்ள பலர் அறிவர். பின்பு அவ்வனுபவத்தைக் கொண்டு அஃதல்ல விடுதலை அடைய பாடுபடும் வழியெனக் கருதியே அதை விட்டு வெளியேறினேனேயன்றி, மற்றபடி யாராலாவது வெளியேற்றப்பட்டோ, அல்லது சிறு அபிப்பிராய பேதம் ஏற்பட்டோ வெளிவந்தவனல்ல. நான் சாதாரண நிலையிலிருந்து வெளிவரவில்லை. அரசியலில் ஒரு பொறுப்புள்ள பதவியிலும் உத்தியோகத் திலுமிருந்தே நான் வெளி வந்தேன். நமது நாட்டுக்கு இவ்வரசியல் இயக்க மூலம் ஒன்றும் ஆகாது எனக் கருதியே வெளிவந்தேன். காஞ்சிபுரம் மகாநாட்டில் தான் இவ்வுணர்ச்சிகள் பலப்பட்டு வெளிவந்தேன். அரசியலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாட்டுக் காரியதரிசியாகவும் பல ஆண்டுகள் இருந்தேன். அப்பொழுதுதான் நான் ஆற்றும் தொண்டு வீண்: தொண்டெனவும், நமது எதிரிகளுக்கு அனுகூலமாய் இருந்து கொண்டு நாட்டையும் சமூகத்தையும் பாழாக்குகின்றோம் எனவும் கருதி நான் விலகினேன்.
மத சம்பந்தமாகவும் எனது நிலையை நீங்கள் அறிய வேண்டுமானால் 1904 ஆம் வருடம் முதல் 1927 ஆம் வருடம் சூன் மாதம் வரையில் சுமார் 23 வருட காலமாக எனது தாலூகாவாகிய ஈரோடு சர்க்கில் தேவஸ்தான கமிட்
டிக்கு காரியதரிசியாகவும் தலைவனாகவுமிருந்தேன். இந்துமத பரிபாலன போர்டாரும் எனது நிர்வாகத்தைப் பற்றி பெருமை பாராட்டியே பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்கள். தற்பொழுது உண்டாகிய புதிய போர்டார் புதிய கமிட்டியை நியமிக்கவே, அவர்கள் நான்கு தாலூகாவிற்கு ஒரு கமிட்டியாக ஏற்படுத்தி அதில் என்னையும் தேவஸ்தானக் கமிட்டி அங்கத்தினராக நியமித்திருக்கிறார்கள். தற்கால மந்திரி சபைக்கும் எனக்குமுள்ள சம்மந்தம் நீங்கள் அறிந்த விடயமே. அவர்கள் செய்யும் குற்றங்களைப் பளிங்கு போல் எடுத்துக்காட்டி வருகின்றவர்களில் நான் ஒருவன்.அப்படி இருந்தும் அவர்.
கள் என்னை நியமித்தார்கள். என்னைப் பற்றிய பிராதுகள் பல அவர்களுக்
குப் பார்ப்பனர்கள் அனுப்பி என்னை நியமிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். அவைகளில் முதல் பிராது நான் குற்றவாளி என்றும், சிறை சென்றவனென்றும், இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டவனென்றும் எழுதிஅனுப்பினார்கள். அந்த பிராது எனக்கே என் பார்வைக்கு வந்தது.நான் அவர்கள் எழுதியதெல்லாம் உண்மை தான். ஆனால் மூன்று தடவை சிறை சென்றேன் என்பதற்கு பதிலாக இரண்டு தடவை என்று எழுதியதுதான் பிழை
என்று திருத்தி அனுப்பி விட்டேன்.மறுபடியும் பல பார்ப்பனரல்லாதாரிடமும், பல பார்ப்பனர்களிடத்திலும் கையொப்பம் வாங்கி “இவன் மதத்தை நிந்திக் கிறான்.எப்பொழுதும் பார்ப்பனரையே வைகிறான். வேண்டுமானால் சி.ஐ.டி. ரிப்போர்ட்டர்களின் ரிப்போர்ட்டுகளைப் பாருங்கள்” என்று ஒரு விண்ணப்
பம் சர்க்காருக்கு அனுப்பினார்கள். அதைப் பற்றியும் சர்க்கார் என்னைக் கேட்டார்கள். நான் அதற்கு பதில் எழுதியதில் நான் ஒரு வகுப்பாரை மாத்திரம்
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வையவில்லை. எல்லோரையும் வைகிறேன். என் தொண்டுக்கு எந்தெந்த வகுப்பார் கொள்கை எதிரிடையாக இருக்கிறதோ அவர்களைக் கண்டியாமல் இருக்க என்னால் முடியாதென்றும், எல்லாருக்கும் சம உரிமை வழங்கப் படுவற்காக உழைக்கிறேனேயல்லாமல் வேறு அல்ல வென்றும் அறிவித் தேன். மறுபடியும் என்னை நியமித்தார்கள். சென்னைக்கு வருவதாலும்
மற்றும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதனாலும் எனது தலைமைப் பதவியைப் பொறுப்பு வாய்ந்த ஒருவருக்குக் கொடுத்து
நான் இன்று வரையில் உபதலைவராகயிருந்து வருகிறேன். என்னை சிலர், நான் செய்யும் உபந்நியாசங்களைக் கேட்டு “நாஸ்திகன்” “மதத்தை நிந்திக்கிறவன்” என்றும் “சுயராஜ்ய விரோதி” என்றும் “சர்க்கார் நேசன்” என்றும் குறைகூறி வருவார்கள். சர்க்காருக்கு வேண்டியவன் என்பதற்கு அறிகுறி ஒன்றும் எனக்குப் புலப்படவில்லை. சர்க்கார் அன்று என்னை எப்படி பாவித்து நடத்தி வந்தார்களோ அதுபோலவே இன்றும் என்னை நடத்தி வருகிறார்கள். இன்னும் எனக்குப் பின்னால் போலீஸ்காரர்கள். தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான் உங்கள் முன்னிலையில் சொல்ல வந்தது சமய சீர்திருத்தம். நான் சொல்லுவதையெல்லாம் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டுமென்றும், அதன்படி நடக்காவிட்டால் பாவம் வரும் என்றும் சொல்லி பார்ப்பனர். களைப்போல் நான் உங்களை ஏமாற்ற வரவில்லை. நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டு பிறகு உங்கள் பிரியம்போல் நடவுங்கள் என்று சொல்லிய பின்பே நான் இன்று பேச எடுத்து கொண்ட சமய சீர்திருத்தம் என்னும் விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறேன்.
சமய சீர்திருத்தம்
சமயம் என்பதும், மதம் என்பதும் ஒன்றுதான். சமய சீர்திருத்தம் என்றால் மதத்தை சீர்திருத்த வேண்டுமென்பதுதான் பொருள். சமயம் அல்லது மதம் என்றால் பொருள் என்ன? மதம் வேண்டுமென்கிற உணர்ச்சி எப்போது உண்டாயிற்று? மதம் எதற்காக வேண்டும்? என்பவைகளை உணர வேண்டும். மதம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் எந்த முறையில் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றால் மக்கள் கூடி கூட்டமாக வசிக்க ஏற்பட்ட வுடன் அவர்களுடைய நித்திய வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருக்கவும் மற்றவர்களுக்கு மனிதன் துன்புறுத்தாமல் உபயோகப்படுகின்ற முறையில்
தான் ஏற்படுத்தப்பட்டது. அந்த முறையில் ஏற்படுத்தின காலத்தில் அக்கால மக்களுக்குள்ள அறிவு, ஆற்றல், நிலைமை, சீதோஸ்ண ஸ்திதி முதலியவை களுக்கு ஏற்றவாறு ஒரு சிறு கொள்கைகளை அமைத்து உண்டாக்கி இருக்க வேண்டும்: நாளைடைவில் அது வளர்ந்து கொண்டும் தனி மனிதன் பெருமைக்கும், அவன் ஆசைக்கும் பிறகு அரசியலுக்கும் ஆக சிறிது சிறிதாய் மாறி இப்போதுள்ளவைகள் போல் சமயம் ஏற்பட்டிருத்தல்
குடி அரசு - 1927 (3) 226
வேண்டும். நமது நாட்டில் ஆதியில் சமயம் ஏற்பட்ட காலத்தில் சமயத்திற்கும் அரசியலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அக்காலத்தில் அரசியலில் நம் மக்களுக்குள்ள உணர்ச்சி இல்லை. உணர்ச்சி உண்டாக வேண்டிய அவசிய முமில்லை. ஏன்? பதினாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள சரித்திரங்களை ஆராயுங்கள். அக்காலத்தில் வேளாண்மை மிகுதியுமிருந்தது. ஒவ்வொருவனுக்கும் வேண்டிய பொருள்கள் அனைத்தும் இருந்து வந்த தோடு மிகுதியும் பட்டது.
நெல் வைத்திருப்பவன் பருத்தி வைத்திருப்பவனுக்கு நெல்லைக் கொடுத்து பருத்தியோ அல்லது துணியோ பெறுவான். இதுபோல் எல்லா செளகரியமும் உண்டு. இதுதான் பண்டமாற்றுதல் என்று பெயர். நம்மவர்கள்
ஓய்வு நேரங்களில் சிந்தித்ததிலேயே சில சட்டங்களும் மற்ற சமய கட்டுப் பாடுகளும் ஏற்பட்டது. ஆனால் இதுதான் பின்னால் நம் நாட்டிற்கு வந்த பார்ப்பனர்கள் கவலையற்று இருந்த நம் மக்களை ஏமாற்றி தங்கள் நன்மைக்
குத் தகுந்தபடி திருப்பி தங்களுக்கு இவைகள் எல்லாவற்றையும் அடிமை யாக்கிக் கொண்டு இவைகளுக்குத் தாங்களே கர்த்தாவாகவும் எஜமானர். களாகவும் ஆகிவிட்டார்கள். கொள்கையொன்றும் ஏற்படவில்லை. அவரவர் இஷ்டம் போல் அனுபவித்தார்கள். மகமதிய மதமும், கிருஸ்துவ மதமும் வெறும் கடவுளை வணங்குதல் என்பதோடல்லாமல் வர வர அரசியல் கருத்தைக் கொண்டும், தங்கள் தங்கள் மதத்தை பொறுத்த வேலை செய்தும், செய்து கொண்டும் வருகிறார்கள். ஆனால் நாம் கட்டுப்பட்டுக் கிடக்கும் சமயத்தையோ அந்த காலத்திலிருந்த நிலையிலே இருக்க வேண்டுமே யல்லாமல் ஒரு சிறிதும் மாற்றக்கூடாது என்கிறார்கள். இதை நம்புகிறவர்களும் பிடிவாதக்காரராய் இருக்கிறார்கள். இங்குதான் அபிப்பிராய பேதம் ஏற்படு கிறது.நமக்கு அவசியமானபடி நாம் மாற்றிக் கொள்ளல் வேண்டும். அப்படி மாற்றுவதில் அடியோடு மாறவும் ஏற்படலாம். நம் மதம் கட்டுப்பாடு உடைய
தல்ல. ஒரு குறிப்புக்கு ஒத்ததல்ல. இக்காரணமே நம்மை அடிமையாக்கிற்று. ஆனால் இதனை நம் மக்கள் அறியார். இப்படி இருந்தால் நாம் எப்பொழுது முன்னேற்ற மடைய முடியும்? நாம் எப்படி அடிமை வாழ்வினின்று நீங்கி சுயமரியாதையுடன் வாழமுடியும். ஆகையால் ஒரு நாடோ, ஒரு தேசமோ சுயமரியாதையுடன் வாழ தடுக்கின்றவர்களை அழிக்க உடனே முற்படல் வேண்டும். பிடிவாதக் குணத்தை விட்டொழித்து மக்கள் நிலைமைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு காரியங்களை முடித்து தடைகளை அகற்றி சுயமரியாதை அடைந்து விடுதலை பெற வேண்டும்.
இந்து மதம்
சிலர் தங்களை இந்து என்கிறார்கள். ஆனால் அவர்களை இந்து என்றால் என்ன என்றால் 100 -க்கு 90 பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அப்படி இருந்தும் நம் மக்கள் மூட நம்பிக்கையால் மதத்தின் பேரால்
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கொண்டுள்ள அன்பு செப்பத்தரமல்ல. மற்ற மதக்காரர்கள் அவைகளை அறிவது போல் நம் மதம் நாம் அறியக் கூடாதவர்களாயிருக்கிறோம். மகம்மதியர்களில் 100 -க்கு 90 பேர் தங்கள் மதத்தைப் பற்றி தெரிந்தவர் களாயிருக்கிறார்கள். நம் மக்களை யாராவது உங்கள் மதம் என்ன? யார். ஏற்படுத்தியது? அதன் காலம் என்ன? இது போன்ற வினா வெழுப்பினால்
பதில் சொல்லுவாரில்லை. மகமதியரையோ அல்லது கிறிஸ்தவர்களையோ அல்லது புத்தர்களையோ வேறு யாரையோ கேட்டால் உடனே பதில் சொல்லத் தயாராயிருக்கிறார்கள். இந்து மதத்தில் இவர்கள் கற்பிக்கப்படும் வயது இலேசானதல்ல. அதாவது கடையில் உள்ள காகிதங்களையெல்லாம் வாங்கி அதில் ஒன்று போட்டு அதன் பின் எத்தனை முட்டை வடிவம் போட்டாலும் அதற்கு மேல் போகுமேயன்றி குறையாது. தலைவர் யார்
என்றால் சொல்லும் நிலைமையிலில்லை. கடவுளால் ஏற்பட்டது என்பர் சிலர். ஆதாரம் என்ன வென்றால் வேதம் என்பார்கள். அது என்ன சொல்லுகிறது என்றால் நீ பார்க்கக் கூடாது, நீ கேட்கக் கூடாது, படிக்கக் கூடாது என்பார்கள். அதை கடவுள் எழுதியிருப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? என்று பாருங்கள். ஒரு பொழுதும் முடியாது. ஏனெனில் கடவுள் சொன்ன வேதமானால் உலகத்தார் எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும். யாரும் பார்க்க வேண்டும். அப்படி இருக்க நாம் எப்படி அந்த வேதத்தை நம்புவது அதன்படி நடப்பது? மற்ற மதக்காரர்கள் தங்கள் வேத நூல்களை பல மொழிகளில் மொழி பெயர்த்து அச்சிட்டு தங்கள் மதஸ்தர்கள் அல்லாத ஒவ்வொருவர் கையிலும்கூட கிடைக்கும் வண்ணம் தங்கள் வேதத்தையும் மதத்தையும் பரப்பி வருகிறார்கள். முகமதியர்களும் கிறிஸ்தவர்களும் இத்தகைய முயற்சி எடுத்து தங்கள் மதங்களையும் வேதங்களையும் மற்ற
மக்களிடம் பரப்பினதால்தான் ஏழரைக்கோடி முகமதிய சகோதரர்களும் ஒரு கோடி கிறிஸ்தவர்களும் நமது நாட்டில் உண்டாக நேரிட்டது. இந்த ஏழரைக் கோடி முகமதியரும் அரபி அல்லது துருக்கி முதலிய தேசத்திலிருந்து வந்தவர்களென்று யாராவது சொல்ல முடியுமா? முடியாது. அப்படி வந்தவர்
களும் ஒரு கோடிக்கு மேலிருக்க முடியவே முடியாது. மற்ற மக்கள் நம் “இந்து” மதத்திலிருந்து பிரிந்து சேர்ந்தவர்களேயாவார்கள். கிறிஸ்துவ
சமயத்திலும் வெளியிலிருந்து வந்தவர்கள் 2 அல்லது 3 இலட்சம் பேரே இருப்பார்கள். மற்ற 97 இலட்சம் பேரும் நம் மக்கள்தான். திருவனந்த
புரத்திலே 40 இலட்ச மக்களுள் பதினாறரை லக்ஷம் கிறிஸ்தவர்களும் மூன்றரைலக்ஷம் முகமதியர்களும் உண்டாகி இருப்பார்களானால் எத்துணை மக்கள் நம் சமயம் விட்டு பிற சமயம் புகுந்தார்கள் என்பது இதில் காணக்கிடக்கின்றது. வாரம் ஒன்றுக்கு இந்துக்கள் என்போர்களில் 4000 பேர். அன்னிய மதம் புகுகின்றார்கள். காரணம்? அவர்கள் மத பிரசாரம் செய்கிறார்கள். மத பிரசாரம் செய்து ஏற்றுக் கொண்ட மக்களுக்கு முதலில் மதத்தைப் பற்றியும் கல்வியிலும் பயிற்சியடையச் செய்கிறார்கள். பின்பு அவன் வாழ்க்கையை செவ்வனே கழிக்க ஒரு தொழில் ஏற்படுத்தி பின்பு
குடி அரசு - 1927 (3) 228
தங்கள் மதமே உலகத்தை ஆளவேண்டு மென்ற உணர்ச்சியை உண்டாக்கு கின்றார்கள். இவ்வளவு காரியத்திற்கும் அவர்கள் வெகு குறைந்த பணத்தைத் தான் மதத்தின் பெயரால் செலவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் நாம் மதத்தின் பேரால் செலவிடுவதில் 100-ல் ஒரு பங்கு கூட செலவு செய்ததில்லை. நம்மைப் போல் மற்றெந்த மதக்காரர்களும் செலவிட மாட்டார்கள். கிறிஸ்தவர்கள் நம் நாட்டிற்கு வந்து சொற்ப நாள்களுக்குள் நம்மக்களைச் சேர்த்து கல்வி கற்பித்து அவர்களை நமக்கு எஜமானர்களாக்கி யிருக்கிறார்கள். உயரிய நிலைக்கும் கொண்டு வருகிறார்கள்.100-க்கு 90 பேர். படிக்கும்படி செய்து வருகிறார்கள். ஆனால் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தென்றும் கோடிகோடி வருஷங்களானதென்றும் சொல்லும் நமது மதத் தையோ பெரும்பான்மையான மக்கள் படிக்கக்கூடாது. அப்படி மீறி படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், படித்து விட்டால் நெஞ்சை அறுக்கவும் மற்றும் பலவிதமான தண்டனைகள் உண்டு. இதன் பலணாய் வெள்ளைக்கார அரசாங்கம் நமது நாட்டிற்கு வந்து இப்போது கூட 100 -க்கு 5 பேர்தான் படிக்க முடிகின்றது. அதிலும் 100 -க்கு 90 பேர். பார்ப்பனர்கள். ஆனால் இப்போது சிலர் “நாங்கள் படிப்பதை தடுப்பதில்லை. வேதத்தைதான் படிக்கக் கூடாதென்கிறோமேயன்றி வேறில்லை” என்கிறார்
கள். வேதகாலக் கல்வி இக்காலத்தைப் போன்று இங்கிலாந்து, ஐரோப்பா, அரேபியா முதலிய சரித்திரங்களல்ல. மற்றும் சேக்ஸ்பியர், மெக்காலே முதலியவர்களால் எழுதின நூல்களுமல்ல. ஆனால் அக்காலத்திய கல்வியென்பது நீதிகளை உணர்வது. நீதிகளோ வேதமாய் விட்டது.வேதமோ
நாம் படிக்கக் கூடாதது. இம்முறையில் நாம் 1000 - க்கு ஒருவராவது படிக்க முடியுமா? வெள்ளைக்கார ராஜாங்கம் வராதிருந்தால் நம்மில் ஆயிரத்துக் கொருவராவது படிக்க நமது மதம் இடம் தந்திருக்குமா? வேதம்தான் படிக்கக் கூடாதென்றாலும் வட மொழியாவது கற்றல் கூடாதா வென்றால் அதுவும் கூடாது என்பார்கள். ஏன் என்றால் அது வாயில் நுழையாது என்பார்கள். இல்லை நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னால் வேதத்திலுள்ள நீதிகள். அதில் இடை இடையே வருமாதலால் அதைப்படிக்கக் கூடா தென்பார்கள். இம் மாதிரியாகவே மதத்தின் பெயரால் நாம் படும்பாடும் அடையும் இழிவும் செப்பத்தரமன்று. ஆனால் செலவாகும் ரூபாயோ கணக்கிலடங்காது. இவ் வளவு ரூபாய் மற்றெந்த சமயக்காரர்களும் சமயத்தின் பெயரால் செலவிடு வதே இல்லை. மற்ற மதத்துக்கு யாரோ ஒருவர் இருவர் 1000 பவுன் 4 ஆயிரம் பவுன் கொடுப்பார்கள். அது சமயத்தை பரப்புவதற்கு பயன்படும். சமயம் பரப்புவது என்பது மக்கள் கல்வி அறிவு, மக்கள் நோய் தீரல், அற்புதம் கண்டு
பிடித்தல் முதலியவை. ஆனால் நம் சமயத்திலோ ஒவ்வொருவரும் மத வரி கொடுத்து தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமிருக்கிறது. நம் மாகாணம் மட்டும் சர்க்கார் கணக்குப்படி ஒருவருஷத்திற்கு 2 கோடி ரூபாய் மதத்தின் பெயரால் கோவிலுக்கும் மடத்திற்கும் மாத்திரம் வரும்படி வருகிறது. இஃதன்றி தனிமடம் கோவில்களின் வரும்படிகளைக் கணக்கு பார்த்தால்
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இப்படி எத்தனையோ பங்கு அதிகமாக முடியும். திருப்பதி கோவிலை மாத்திரம் எடுத்துக் கொண்டால் வருட வருமானம் 20 லட்சமாகும்.திருநெல் வேலி ஜில்லாவிலுள்ள மூன்று அல்லது நான்கு கோவில்களில் மாத்திரம் வருடத்திற்கு 2.3 லட்சம் வரும்படி ஆகும்.
இன்னும் சிதம்பரம், இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் முதலிய பெருமை பெற்றதென்னும் கோவில்களில் கணக்கைப் பார்த்தால் அதிகமாகவே முடியும். இவைகள் தவிர கணக்குக்கு வராத ரூபாய்கள் எவ்வளவு? உதாரண மாக இங்கிருந்து ஒருவர் திருப்பதிக்கு 2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்த புறப்படுகிறார் என்றால் அது தவிர அவனுக்கு நேரிடும் செலவு எவ்வளவு? அவன் தன் சுற்றத்தாரை அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. மஞ்சள் ஆடை தரிக்க வேண்டியிருக்கிறது. மேள வாத்தியங்களுடன் ஊர்வலம் வர வேண்டி யிருக்கிறது. வீதிகளில் கோவிந்தா சப்தம் போட்டு பிச்சை வாங்க வேண்டி இருக்கிறது. இவ்வளவு செய்து 2 ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவது எதற்கு என்றால் அது அவரே செய்து கொண்ட பிரார்த்தனையாம். என்ன பிரார்த்தனை என்றால் அவர் முன்பு காயலா வாயிருந்த பொழுதோ வேறு கஷ்டமாயிருந்த பொழுதோ கடவுளை வேண்டிக்கொண்டாராம். கடவுளும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி அவரை நோய்வாயினின்றும் நீக்கினாராம்! அவர் நினைத்ததை அனுகூலம் செய்தாராம்! அதற்காகப் பிரார்த்தனை ரூபாயில் ஒரு காசுகூட குறையாமல் கொண்டுபோய் கொட்ட வேண்டுமாம். எனவே இதற்கு மற்ற செலவுகளிருக் கின்றன. இவைகளுக்கெல்லாம் எவ்வளவு ரூபாய் செலவாகுமென்று சற்று யோசியுங்கள். இதைப்போன்ற எத்தனை மக்கள் இமய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ளவர்கள் செல்வார்கள். உற்சவத்திற்காகவும் காணிக்கை வேண்டுதலை இல்லாமல் பல மக்கள் செல்லுகிறார்கள். அந்த
முறையில் செலவிடும் செலவு எவ்வளவு? எனவே இவ்வித நம்பிக்கையைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை. இப்படி செலவு செய்யும் பணத்தின் பலன் என்ன? இது என்ன ஆகின்றது? என்பதற்கே இந்த கணக்குச் சொல்லு கின்றேன். இதனால் யார் பலன் அனுபவிக்கிறார்கள் என்பதை பாருங்கள்.
பச்சரிசி, பாசிப்பயறு, நெய்பாதாமி, சக்கரை இவைகள் வாங்க உதவுகின்றது. இதை யார் சாப்பிடுகின்றார்கள்? கைதட்டல்) இது தவிர மதத்தின் பெயரால் சடங்குகளுக்கென்று எவ்வளவு வரி கொடுக்கின்றோம்? குழந்தை உற்பத்தி முதல் கடைசி வரையில் கொடுத்துதான் தீரவேண்டியமாதிரியாய் அமைக்கப் பட்டிருக்கின்றது. ஆனால் இவைகளினால் நாம் அடையும் பலன் என்ன என்று பார்ப்போமானால் நம்மை மிருகத்திலும் கேவலமாய் ஒரு வகுப்பார் மதிக்கும்படி, நாமே நம்மை இழிவுப்படுத்திக் கொள்ளுகிறோம் என்பதல்லாமல் வேறு ஒன்றுமில்லை. ஒருவன் தனது பிரார்த்தனைக்காகவோ, தனது பாவம் தொலையவோ என்று ஒரு கோவிலைக் கட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் அவன் அடைந்த பலன் என்ன? அவனே
குடி அரசு - 1927 (3) 230
உள்ளே புக யோக்கியதை யின்றி தனக்கென ஒரு இடம் வெளியிலே ஏற்படுத்
திக் கொள்ள வேண்டி இருக்கிறது. நாம் மனிதனாகப் பிறந்தும் மனிதனாக மடிவதற்கில்லையே! நம் சமயக் கொடுமைகளைப் பற்றி பல பெரியோர்கள்.
நமக்கு முன்னும் கண்டித்திருக்கிறார்கள்; சீர்திருத்த முறையிலும் இருந்திருக் கிறார்கள்.அதனால் ஒருபலனும் உண்டாக வில்லை. ஆனால் அவர்களெல்
லாம் இப்பொழுது ஒரு சிலையாக இருந்து பூஜை பெற்று வருகிறார்கள். கடைசியாக நம்மவர்கள் “பெரியோர்கள் போன வழியே நாமும் பின்பற்று வோம். நமக்கென்ன” என்பார் பலர். அவர் பெரியோர்கள் போன வழியில் மற்றவைகளில் நடக்கிறார்களா வென்றால் இல்லவே இல்லை. இந்து மத பரிபாலனத்திற்கு என்று ஏற்பட்ட சட்டத்தில் கூட வெறும் கணக்குப் பார்க்கத்
தான் சுதந்திரம் உண்டேயன்றி வரவை யோக்கியமான முறையில் செலவழிக்க அதிகாரமிருப்பதாக ஒருவரிகூட இல்லை. (கைதட்டல்) முன்சொன்னப்படி ஒருவர்2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக திருப்பதிக்குச் செலுத்தப்போகிறார். என்று தெரிந்த உடனே மகந்து என்கிற ஒருவர் தனது ஆளை ரயிலுக்கு அனுப்பி அவனை அழைத்து வரச் செய்து “நீங்கள் சென்னையிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கொண்டு வந்திருக்
கிறீர்கள் அல்லவா” என்றவுடன் இவனுக்கு இஃது எப்படி இவருக்கு தெரிந் தது? எல்லாம் உள்ளது உள்ளபடி உரைக்கின்றாரே என்று நம்பி அவரிடம் அதிகபக்தி செலுத்தி விடுகிறான். இதைப் பார்த்து மகந்து “நீங்கள் கொண்டு வந்த ரூபாயை இங்கே என்னிடத்தில் கொடுங்கள். அங்கு கொண்டுபோய் கெடாரத்தில் கொட்டினால் சர்க்கார் எடுத்து ஜர்மனி யுத்தத்தில் பட்ட கடனுக்கு வட்டியாக உபயோகித்துக் கொள்வார்கள். என்னிடத்தில் கொடுத்
தால் நான் நேரிலே கடவுளுக்குச் சேரும்படி செய்வேன்” என்பார். சம்மதித்
துக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவார். சந்தேகப்பட்டால் இதோ பார் இந்த படத்தை என்று ஒரு படத்தை சுட்டிக் காண்பித்து ஒரு காலத்தில் வெங்கடாசல பதிசாமி மகந்துவிடம் சதுரங்கமாடி தோற்றதாகவும் அதற்கு நிபந்தனையாக கடவுள் முதலில் மகந்துவை தரிசித்த பிறகுதான் தன்னை தரிசிக்க வேண்டு மென்று உத்தரவு பிறப்பித்தாரென்றும் அங்குள்ள மகந்து ஆள்கள் சொல்லு வார்கள். இதை நம்பிதான் ஆக வேண்டும் நம்பாவிட்டால் “கங்கை ஆற்றங் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாபத்திற் காளவாய், தாயைக் கொன்ற பாவத்திற்காளாவாய்” என்று சொல்லுவான் பிறகு பேசாமல் கலகலவென்று ரூபாயை கொட்டி விடுவான். இந்த பணங்களெல்லாம் மேல் கண்ட 2 லட்சத்
தில் சேராது. இதை அடக்க தேவஸ்தான மசோதாவில் சட்டம் இல்லை. இது தவிர அபிஷேகம் 1000 ரூபாய் அல்லது 5000 ரூபாயில் செய்து வைக்கிறார்கள். அல்லது வெள்ளியால் கலசம், பொன் வெள்ளி ரதம், வாகனம் செய்கிறார்கள். பட்டு பீதாம்பரம் சாற்றுகிறார்கள். 50 அல்லது 60 குடம் பால் ஊற்றுகிறார்கள். இதனால் என்ன பலன் என்று அறிய தேவஸ்தான பரிபாலன சட்டத்திலோ மதபரிபாலன சட்டத்திலோ இடமில்லை.5000 வருடங்களுக்கு முன்பு கோவில்கள் கட்டப்பட்டன என்கிறார்கள். சில கோயில்கள் அதற்கு
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
முன்பிருந்ததாகவும் சொல்லுகிறார்கள். இம்மாதிரியாக நம் தமிழ் அரசர். களாலும் மற்றும் பெரியோர்களாலும் கட்டப்பட்டு செலவழிக்கப்பட்ட செல்வம் எவ்வளவு? அவர்கள் செய்த மற்ற தர்மங்கள் எவ்வளவு? அவர்க ளுடைய குடும்பங்கள் இப்போது எங்கே? யாராவது ஒருவரைக் காண முடி யுமா? உதாரணமாக தஞ்சாவூர் அரசரை எடுத்துக் கொள்ளுவோம். அவர். கட்டிவைத்த பள்ளிக்கூடங்களும் அக்ரகாரங்களும் மற்றும் பல தர்மங்களும் இன்னும் இருக்கின்றன. அப்படிச் செய்த அந்த அரசாங்கம் இன்று எங்கே! வெள்ளைக்காரன் கையில் போய் சேர்ந்து விட்டது. மீதியுள்ள சொத்துக்களுக்
கும் சண்டை உண்டாயிற்று. ஒரு காலத்தில் அம் மன்னவனை க்ஷத்திரியன் என்று வானமளாவப் புகழ்ந்து அவரிடம் பிச்சை வாங்கி வயிறு வளர்த்த அன்னக்காவடிகளெல்லாம் நேற்று கலியுகத்தில் பிராமணன், சூத்திரன் என. இரண்டு ஜாதிதான் உண்டு என்று கோர்ட்டில் சாட்சியம் கொடுத்திருக்கிறார். கள்.நம் மக்கள் இன்னமும் இவைகளெல்லாம் செய்தால்தான் புண்ணியமும் மோகஷமும் கடவுள் தயவும் உண்டு என நினைக்கிறார்கள்.
இதைப்பற்றி யாராவது, சொன்னால் “பார்ப்பனர்களை வைகிறார்கள். நாஸ்திகம் பேசுகிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் விடுகிறார்கள். இனி சடங்கு களைப்பற்றி சற்று கவனிப்போம். சடங்குக்காக நாம் செலவிடும் பணம் எவ்வளவு? சடங்குக்காக மனிதனென்று நம் மக்கள் கருதுகிறார்கள். பிறப்ப
தற்கு முன்பே நம்மை சடங்குச் சனி பிடித்துக் கொள்ளுகிறது. கரு தரிப்பதற்கு, முன்பே சடங்கு செய்ய ஆரம்பிக்கிறோம். அதற்கு புரோகிதன் வேண்டும் என்கின்றோம். அவன் வந்து விறகை கொளுத்தி புகைத்துக் கரியாக்க வேண்டும். அவன் நல்ல பிள்ளை பிறக்கும் என்றால்தான் நமக்கு நல்ல பிள்ளை பிறக்குமென்று நினைக்கின்றோம். கர்பத்திலேயே உபதேசம் செய்தால்தான் ஞானம் வரும் என்று நினைக்கின்றோம். அக்குழந்தை கீழே விழுந்ததும் சடங்கு செய்ய வேண்டி இருக்கிறது. சாதகம் பார்ப்பதற்கும், தொட்டிலில் போடுவதற்கும், பாலூட்டுவதற்கும், கோவணம் கட்டுவதற்கும், சவரம் செய்வதற்கும், காது குத்துவதற்கும், பள்ளிக்கூடம் வைப்பதற்கும் சடங்குகள் செய்து தீர வேண்டி யிருக்கிறது. குழந்தைக்கு காய்ச்சல் வந்த தென்றால் சடங்குதான்.இவைகள் எல்லாவற்றிற்கும் பார்ப்பானையே கூப்பிட வேண்டியது தான். அவனுக்கு பணம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. காயலாவந்தாலும் “சனியை சுக்கிரன் பார்க்கிறான் சாந்தி கழிக்க வேண்டும்” என்கிறான். பணம் கொடுப்பது தான் சாந்தி. கலியாண சடங்கோ பொருத்தம். பார்க்க வேண்டியிருக்கிறது. மரத்திற்கு மரம், பாலுக்குப் பால், கயிறுக்குக் கயிறு, பட்சிக்கு பட்சி, எழுத்துக்கு எழுத்து என சிலேட்டுப் பொருத்தம்
பார்க்கிறான் கைதட்டல்). இதற்கும் பணம் வேறு. ஒருவன் அந்தப் பெண்ணை. அடைய ஆசைபட்டால் அந்த புரோகிதனுக்கு சாடை செய்து 1000, 500 ரூபாய் தருகிறேன் என்றால் பொருத்தம் இருந்தாலும் இல்லை என்றே சொல்லி விடுவான். அவன் இஷ்டம்போல் அநேகமாக நாளும் நேரமும்
குடி அரசு - 1927 (3) 232
வைத்துக்கொடுக்கின்றான். கல்யாண மந்திரமென்று, கருமாந்திர மந்திரமோ ஏதோ சொல்லி காசு வாங்கி போகிறான். சில 10 நாளைக்குள்ளும் அந்தப் பெண் தாலி அறுத்துப் போகிறது. மாமியார் படுத்தும் துன்பமோ சொல்லி முடியாது. புருஷன் படுத்தும் உபத்திரவமோ தரித்திரமோ கணக்கு இல்லை. இதனை அந்த புரோகிதனை அடுத்து இவ்வளவு பொருத்தம் பார்த்தும் ஏனையா இப்படி ஆச்சுது என்றால் “அதன் கர்மம் அப்படி இருக்கிறது. இதற்கு யார் என்ன செய்ய முடியும்” என்று சொல்லி விடுகிறான். அதற்கு ஏன் இவ்வளவு பொருத்தமும் சடங்கும் செய்து பணம் பெற்றாய் என்றால் அது உன்னுடைய முட்டாள்தனம் என்கின்றான். பிறகு பிள்ளை பெறா விட்டால் “எப்படியாவது பிள்ளை பெற்று தீர வேண்டும். காசிக்குப்போ இராமேஸ்வரத்திற்குப் போ, தருமம் செய், சாந்தி கழி, ஓமம் பண்ணு, இல்லை
யேல் புத் என்னும் நரகத்திற்குப் போய் சேருவாய்” என்கிறான். பிள்ளை இல்லா வீட்டில் சாப்பிட்டால் பெரிய பாவம் என்கிறான்.
உன் பெண்ஜாதியை உன் அண்ணன் தம்பிக்காவது விட்டு பிள்ளை பெற்றுத்தான் ஆக வேண்டுமென்கிறான். இதன் இரகசியம் என்ன? ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது பின் சந்ததி இருந்தால்தான் இப் பார்ப்பனர்கள் சடங்கு செய்து வாங்கி தின்பதற்கு வழி உண்டு. இல்லையேல் கொடுப்பாரில்லாமல் அந்தச் சந்ததி போய்விடுமே என்பதுதான். கடைசியாக
சாகும் போதாவது நம்மை விட்டு விடுகின்றானா. சுங்கச் சாவடிகளில் எப்படி சுங்கம் வாங்கின பிறகு வண்டி போக அனுமதியளிக்கின்றானோ, அதைப் போல் இறந்து போகிறவன் இங்குள்ள பார்ப்பானுக்கு சுங்கம் கொடுத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. என்னவென்றால், இறந்தவன் மோட்சமடைய வேண்டுமானால் இங்குள்ள பார்ப்பானுக்கு ஒரு பசு வாங்கிக் கொடுக்க வேண்டுமாம். ஏனெனில் இந்த இறந்த ஜீவன் நெருப்பு ஆற்றை மயிர் பாலத்தின் மீது கடந்து மோக்ஷத்திற்குச் செல்ல வேண்டியிருக்கின்றதாம். இறந்த ஜீவன் பாரமான ஜீவன், நடக்கும் பொழுது மயிர்பாலம் அறுந்து விழுந்துவிட்டால் நெருப்பு ஆற்றில் விழுந்து பிசாசாக உலாவ வேண்டி வருமாம். ஆகையால் புரோகிதனுக்கு ஒரு மாடு கொடுக்க வேண்டுமென்று சொல்லுகிறான். ஜீவன் போகும் போதே அறுந்து போகும். அந்த மயிரானது பெரிய மாடு நடந்தால் தாங்குமா? அதோடு நம் தந்தையும் அம்மாட்டு வால்பற்றி தொங்கினால் அந்த மயிர் இரண்டு பேரையும் தாங்குமா என்பதாக கொஞ்சமாவது சிந்திக்கிறோமில்லை. யாராவது சிந்தித்தாலே அதைப் பாவம் என்று சொல்லி விடுகிறான். மதத்தைப் பற்றியும் சடங்கைப்பற்றியும் நமக்கு கொஞ்சமும் புத்தி இல்லை. எவ்வளவு தூரம் நாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை நாம் கொஞ்சமாவது உணர்ந்தோமில்லை. செத்தபிறகும் அவன் சொல்லும் வண்ணம் காலை மடக்கவும், முழங்காலிடவும், மண்டிபோடவும், பணங்கொடுக்கவும், பூணூலை மாற்றி போடவும், அவன் சொல்லுகிற படியெல்லாம் குரங்குபோல் ஆடவும் வேண்டியிருக்கின்றதேயன்றி,
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இழவுக்கு வந்தவர்களிடத்தில் பேசவுங்கூட ஓய்வில்லை. இறந்து 3 - ம் நாள், 4-ம் நாள், 5-ம் நாள், 6-ம் நாள், 16-ம் நாள் கிரியைகள் என்று பணம்
பறிப்பதும் மாதம் மாதம் கொடுப்பதோடல்லாமல் காத்துக் கொண்டேயிருந்து, வரும் மாதம் தேதி ஆனவுடன் ஒரு வாரம் முன்பே “உங்கள் அய்யாவுக்கு வருகிற வாரம் திதி. சாமான் சேகரம் செய்துவை” என்கிறான். நாம் அதற்காக எல்லா சமையல் சாமான்களும் சாப்பாடு அதிகமாய் விட்டால் அஜீரணத்
திற்குச் சுக்கும் மிளகும் கூட வைத்து, மிதியடி, குடை, பாத்திரம் முதலியவை களுடன் கொடுப்பதோடு அல்லாமல், அவன் அழுக்குப்படிந்த காலில் நாம்
மாத்திரமன்றி நம் அருமை பத்தினியையும் விழும்படி தூண்டி, பிறகு அந்தச் சாமான்களை ஆள்வசம் மூட்டைக் கட்டிக் கொடுத்து வீட்டில் சேர்க்கும்படி சொல்லி அனுப்புகிறோம். இந்தச் சாமான்களை விற்று சீட்டாடுவதுமாகிய இழி தொழிலுக்குப் பயன்படுகிறது. சில, வேசி வீட்டிற்குப் போய்ச் சேருகின்றது. செம்பு, பஞ்ச பாத்திரம், குடை, செருப்பு, வேஷ்டி இவைகள் தனக்கு வேண்டி யது போக மீதியை ஒன்றுக்குப் பகுதியாய் விற்கிறான். விற்ற பணத்தில் சூதாடு. கிறார்கள்.7 ரூபாய்க்கு வாங்கின குடத்தை இரண்டரை ரூபாய்க்கு விற்பான். ஒரு பார்ப்பான் நிலம் வாங்கினால் ஒரு தானியம்தான் அவன் பயிரிட முடியும். ஆனால் நம் வீட்டுத் திதிக்கு வந்தால் எல்லாத் தானியமும் அவனுக்கு விளைந்தால் போன்று எடுத்துக் கொடுக்கிறோம். எனவே நம் வீட்டில் ஒருவர். செத்தால் பார்ப்பானுக்கு சகல சாமானும் விளைகிற ஒரு பூமி வாங்கினது போல் ஆகிவிடுகின்றது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் செய்தால் மறுபடியும் அவன் திதியே செய்ய வேண்டியதில்லையென்பான். அப்படி செய்து விட்
டால் பிறகு உனக்குத்தான் சக்தி இருக்கிறதே, சக்தி இல்லாமல் போனால்தான். அந்த சட்டம் பொருந்தும் என்பான். தனக்கே பிண்டம் போட்டுக் கொள்ளவும் செய்வான். செத்தவுடன் மக்களையும் பிண்டம் போடும்படி உயிரை வாங்கி விடுவான். சடங்கு இப்படி.
இனி மத ஆச்சாரியார்களையும், மத குருக்க ளையும் சற்று கவனிபோம். இவர்களால் மக்களுக்குப் பயன் ஒரு சிறிதும் இல்லை. இந்து
மதத்தின் பேரால் சங்கராச்சாரியார், சைவ மடாதிபதி, வைணவ மடாதிபதி முதலிய பலர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் யானைகளிலும், ஒட்டகங்களிலும் தன் இனத்தாருடன் வருவதும் ஓரிடத்தில் தங்குவதும், அவ்வூரிலுள்ள தங்களினத்தாரைக் கொண்டே சாமியாருக்குப் பாத பூசை பிச்சையென்று விளம்பரம் செய்வதும், ஒரு ரூபாய் ஒரு பவுன் கொடுத்து அவன் காலைக் கழுவின நீரை வாங்கி அருந்துவதும், அந்த ஊரில் கறக்கிற வரையில் அங்கே இருந்த பிறகு வேறு வேறு ஊர்களில் தங்குவதும், நம்மிடம் வாங்கின பணத்தைக் கொண்டே சாமியார் சூத்திரனைப் பார்த்ததற்கு ஒரு
பிராயசித்தமும் ஒரு முழுக்கும், நிழல் மேல் பட்டதற்கு ஒரு பிராயசித்தமும் ஒரு முழுக்கும், நீச்ச மொழியாகிய தமிழில் பேசினதற்காக ஒரு பிராய
சித்தமும் ஒரு முழுக்கும் போட வேண்டியவனாகி விடுகிறான். இம்மாதிரி
குடி அரசு - 1927 (3) 234
ஆள்களில் சிலர் உலக குரு என்கிறார்கள். சிலர் குலகுரு என்கிறார்கள்.
குலகுரு என்பவர் ஓரிடத்திலிருந்து தனது ஆட்களில் ஒரு ஆளை அனுப்பி தான் வந்திருப்பதாக தெரிவிப்பார். சிஷ்யர்கள் மக்களோடும் மனைவி யோடும் ஓடோடியும் சென்று அவர் காலில் விழும்படிஅவனது மக்களுக்கும் மனைவிக்கும் கட்டளையிட்டு தானும் காலில் விழுவான்.
குலகுரு: உனக்கு எத்தனை குழந்தை என்பான். சிஷ்யன் : மூன்று குழந்தைகள். இரண்டிற்கு விவாகம் ஆயிற்று.
குலகுரு: உன் இரு குமாரன் இருதலைக்கட்டு,நீ ஒரு தலைக்கட்டு ஆகமூன்று தலைக்கட்டு. மூன்றோன் மூன்று, மூகால் முக்
கால், ஆக மூன்றே முக்காலுக்கு ஒன்றேகால் வைத்திருக் கின்றாய் என்ன?
சிஷ்யன் : சாமி அடியேனை மன்னிக்க வேண்டும். என் அறியா மைக்கு அபராதம்1/, காணிக்கையும் சேர்த்து வைத்திருக் கிறேன். ஏனென்றால் என் மக்கள் இருவரும் உத்தியோகம் செய்யவில்லையே.
குரு : உங்கள் தந்தை தானே தலைகட்டுக்கு 117, கட்டளை என்று எழுதி தந்திருக்கின்றார். இதோ பட்டயம் பார், என்று சொல்லி பணம் வாங்கிக் கொண்டு சாமிகள் வீடு சிறிது பழுது பார்க்க வேண்டி இருப்பதால் நீங்கள் வந்து அவை களை சீக்கிரம் முடித்துக் கொடுங்கள். சாமிகள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி வேறு ஊருக்கு கொள்ளையடிக்கப் போய் விடுவான். இவன் போன பிறகு யாராவது வந்து சிஷ்யனை உன்னுடைய மதம் என்ன அப்பா, நீ பெரியநாமம் போட்டுக் கொண்டி ருக்கிறாயே என்றால் ஒன்றுமே பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பான்.
புரணக்கொடுமை
இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் ஒருமுறை கலியாணம் செய்திருந்தால், நாம் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் வாரத்திற் கொருமுறை நடத்துகிறோம். வீட்டில் வைத்தால், எவ்வளவு பாவம் செய்
திருந்தாலும் எல்லாம் பறந்து போய்விடுவதோடு நமக்கு மோட்சமும் கொடுக்கும் என்று கருதியே, சீதா கலியாணம் செய்ய சாஸ்திரி காலில்
விழுந்து இரண்டு ஜதை வேட்டியும் தருகிறோம். இராமாயணம், இராம பட்டா பிஷேகம், உற்சவம் செய்வதில் கேட்க கேட்க இன்பமாகத்தானிருக்கிறது. ஆனால் கடைசியில் படித்தால் நம்மை அடிமைகள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இராமர் அரசாளும் காலத்தில் ஒரு பிராமணக் குழந்தை செத்துப் போனதாகவும் அக்குழந்தையின் தந்தை
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இராமனை அணுகி “இராமா நீ ஆட்சி புரியும் இன்னாளில் என் குழந்தை எப்படி சாகலாம்” என்று கேட்டதாகவும், இதற்கு காரணம் கண்டுபிடிக்க இராமர் மாறு வேடம் பூண்டு நகர் சோதனை செய்ததாகவும், அப்போது ஓரிடத்தில் ஒரு சூத்திரன் சாமியைக் கும்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், அதைக் கண்ட இராமன், சூத்திரன் சாமியை வணங்கினதால்தான் அப் பார்ப்பனபிள்ளை மாண்டதாக கருதி அவனை பாணத்தால் எய்து வீழ்த்தி யதும் அப்பார்ப்பன பிள்ளை மீண்டும் உயிர் பெற்றதாகவும் எழுதப்பட்டி ருக்கின்றது. எனவே இராமாயணப்படி நாம் கடவுளைக் கூட வணங்க உரிமையில்லாதவர்களா யிருக்கிறோம். சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர்கூட உங்களுக்கு இராம ராஜ்யம் சம்பாதித்து தருகிறோம் என்று பேசியிருக்
கிறார்கள். அப்படி இராம ராஜ்யம் வந்தால் நமது நிலைமை என்ன? சுவாமி கூட கும்பிடாமல் பார்ப்பானுக்கு அடிமையாயிருப்பதுதான் நமது கடமை யென்பது விளங்கவில்லையா? தவிர பெரியோர்கள் போன வழியே நாமும் பின்பற்றுவோம் என்கிறவர்கள் மற்ற காரணங்களுக்கு மாத்திரம் ஏன் பெரி யோர்கள் போன வழியே நடப்பதில்லை என்றால் பதிலில்லை.
ஒரு காலத்தில் ஆற்றங்கரை ஓரத்திலிருந்து மீன்பாம்பு முதலியவை களைப்பிடித்து அதைச் சரியாக கட்டும் சுடாமலும் தின்ற வெள்ளைக்காரர்கள் தற்பொழுது எந்தநிலையிலிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணனாக்கவும் செய்கிறார்கள். எங்கேயோ இருந்த ஒரு பொத்தானை அழுத்தினால் எல்லா விளக்குகள் எரிகிறதும், மறுபடியும் அந்த பொத்தானை தட்டினால் விளக்குகள் நின்று விடுகின்றதும், மணிக்கு 500 மைல் ஆகாயக் கப்பல் பறக்கின்றதும் போன்ற பல தெய்வச் செயல்களையும் செய்து கொண்டு வருகிறார்கள். ஆங்கிலேயரும் பெரியோர் போன வழியே நாமும் போவோம் என்று போயிருந்தால் அவர்கள் இப்பொ முதுள்ள உன்னத நிலைமையிலிருக்க முடியுமா? பாவம் செய்பவன் புரோகித: னுக்கு பணம் கொடுத்தால் அந்த பாவம் அவனைவிட்டு நீங்கிவிடும் என்று நினைப்போமானால் மக்களுக்கு மேலும் மேலும் பாவம் செய்ய வழியேற்
படும். பாவத்தை விலைக்கு விற்கும் மூடவழக்கத்தை மூட்டைக் கட்டி வைத் ததால் அவர்கள் சீரும் சிறப்புற்று விளங்குகின்றார்கள். நாமும் அப்படியே விளங்க வேண்டுமானால் போலிச் சமயமும், மூட வழக்கமும், குருட்டு நம்பிக்கையும் ஒழிய வேண்டும்.
இப்போது நீங்கள் இதையெல்லாம் கேட்டீர்கள். நாளைக்கு ஏதோ சடங்கு செய்ய வேண்டியதாயிருந்தால் புரோகிதனை அழைத்துத் தான் செய்ய முற்படுவீர்கள். காரணம் கேட்டால் பெண்கள் மீது பழிசுமத்துவீர்கள். அதோடு உம்பெண்களையும் அவன் காலில் விழும்படி தூண்டுவீர்கள். இப்புரோகிதக் கொடுமைகளைப் பற்றி நம் பெண்கள் உணர்வார்களாயின் “அய்யோ நீதான் மதியின்றி காலில் விழுந்ததுமல்லாமல் என்னை விழச் சொன்னாயே” என்று நம்மை இழிவுபடுத்துவார்கள். இவற்றையெல்லாம்
குடி அரசு - 1927 (3) 236
பெரியோர்களுக்கு என்ன சொல்லியும் பயனில்லை. அவர்களுக்கு சில நொண்டிச் சமாதானங்கள் இருந்து கொண்டேயிருக்கும். இனிமேல் அவர் களை நம்புவதில் பயனில்லை. நான் வாலிபர்களைக் கேட்டுக் கொள்வ தெல்லாம் இதுதான். நீங்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை அடிமையிலிருந்து
விலக்கப் போகின்றீர்கள். உங்க காலத்தில்தான் சுயமரியாதை உதயமாக வேண்டும். நான் உண்மையாய் நினைக்கிறேன். நீங்கள் நினைத்தால் புரோகிதக் கொடுமை தலைகாட்டா தொழியும், நீங்கள் ஆண் பிள்ளைகளா னால் அடிமைத்தனத்தையும் மூட நம்பிக்கையையும் ஒழியுங்கள். புரோகிதக் கொடுமைகளுக்கு வழி கொடாதீர்கள். அதுதான் உங்களை அடிமையாக்கி இருக்கிறது. ஆகையால் இப்பொழுது நடக்கப் போகும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிற்கு பெருவாரியாய் வந்து உங்கள் சுயமரியாதைக்கு போராட உடனே இடுப்பைக்கட்டி முன் வாருங்கள்.
குறிப்பு: சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் கூடிய கூட்டத்தில் சமய: சீர்திருத்தம் என்ற தலைப்பில் 2110.1927 அன்று ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 23.10.1927
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஸ்ரீ கோசய் கற்ற பாடம்
ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் மதுரையில் ஒர் பிரபல பாரிஸ்டர். நல்ல
குடும்பத்தில் பிறந்து நல்லொழுக்கத்தில் சிறந்து அதிக வருமானமும் வக்கீல் தொழிலும் உடையவராய் மதுரைக்கு ஓர் மாமணியாய் விளங்கி வந்தவர். சேலம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் மேல் மதுரையில் கேசு ஏற்பட்ட போது, பொது வாழ்வில் உணர்ச்சி மேலிட்டு தீவிரமாய் ஜார்ஜ்ஜோசப் இறங்கி இடைவிடாத ஊழியம் புரிந்து வந்திருக்கிறார். மதுரை மில்களிலுள்ள தொழி லாளர்களின் கஷ்ட நஷ்ட காலங்களிலும், வேலை நிறுத்த காலங்களிலும் அவர்களுடன் கலந்து அதில் ஈடுபட்டு தம்மாலான சகல உதவிகளையும் தியாகத்துடன் செய்து வந்திருக்கிறார். மதுரை ஜில்லா கள்ள ஜன சமூகத்தா ருக்கு ஏற்பட்ட கொடுமையான சட்டதிட்டங்களுக்கு அனாவசியமாய் அவர்.
கள் இரையாகாதிருக்கும்படி சாக்கிரதையாய் கவனித்து வந்தார். அவர்க ளுடைய சத்தியாக்கிரகத்தின் போதும், அவர்களுடைய சில கிராமங்களைப் போலீசார் கொளுத்தி பலரை சுட்டுக் கொன்று பலரைக் கைது செய்து பெண்டு பிள்ளைகளையும் இம்சித்து வந்த அந்தக் காலத்தில் ஸ்ரீமான் ஜோசப் தம் காலத்தை யெல்லாம் கள்ளர்களுக்காகவே செலவிட்டு உதவி புரிந்து வந்ததை இன்றும் அந்த கள்ள மகாஜனங்கள் மறந்துவிடவில்லை. ஜார்ஜ் ஜோசப் (ரோஜாப்பூ துறை! என்று சொன்னால் கள்ளர் நாட்டில் கடவுளுக்குரிய மரியா தையும் பயபத்தியும் காட்டப்படும். ஒத்துழையாமைக் காலத்தில் தமது தொழிலை விட்டு காந்தி வழி நின்று சிறந்த தொண்டாற்றினார். வங்கத்தில் தாசைப்போல் தமிழகத்தில் ஜோசப் தியாகத்தில் முன்னின்றார். மனைவி மக்களுடன் வைக்கம் சென்று சத்தியாக்கிரகம் செய்து தீண்டாமைக்காகச் சிறை சென்றார். இவர் இல்லாத காலத்து மிக்க கஷ்ட நஷ்டத்தில் இவரில்லக் கிழத்தியார் அந்த சத்தியாக்கிரகத்தில் முன்னின்று வேலை செய்து வந்தார்.
பின்னர் அலகாபாத் சென்று “இண்டிபெண்டண்டு” என்ற தேசீய ஆங்கில தினசரிக்கு ஆசிரியராய் அமர்ந்து அரிய ஊழியம் புரிந்து வந்தார். அதன் பயனாய் ராஜ துவேஷத்திற்காக இரண்டு வருஷம் வட இந்தியாவில் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். மகாத்மா காந்தியடிகள் சிறை யிலுள்ள போது சில காலம் ஸ்ரீமான் ஜோசப் வெளியிலிருக்க நேர்ந்தது. அப்போது காந்தியடிகளுக்கு பதிலாக அவர் ஸ்தானத்தில் அமர்ந்து காந்தியடிகள் பத்திரிகையாகிய “யங் இந்தியா” வை ஆசிரியராக இருந்து
குடி அரசு - 1927 (3) 238
நடத்தி வந்தார். காந்தி விடுதலை பெற்றதும் வட இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வந்து மதுரையம்பதியை அடைந்தார். அடிகளின் பர்டோலி தீர்மானமும், ஒத்துழையாமையைக் கொன்ற சுயராஜ்யக் கட்சியாரின் சட்டசபை நுழை வையும், பகிஷ்கார நிறுத்தத்தையும் காந்தி ஆதரிக்க முற்பட்டதின் பலனாய் அனேக உண்மைத் தொண்டர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்தைப் போலவே
ஸ்ரீமான் ஜோசப்புக்கு மிகுந்த மன வருத்தமும், வெறுப்பும் உண்டாகி விட்டது. தியாகமும் செய்து, காரியமும் கெட்டு, நாட்டில் ஆதரவும் இல்லாத போது வறுமைவாய்ப்பட்டு சுயமரியாதையை இழப்பதற்குச் சம்மதியாமல் மறு
படியும் மதுரையில் தம்முடைய வக்கீல் தொழிலை ஸ்ரீமான் ஜோசப்
ஆரம்பித்தார். சிறிது காலத்திற்குள் மீ” ஆயிரத்திற்கு குறையாத வரும் படியையும் செல்வாக்கையும் பெற்று விட்டார். இவரிடம் தமிழ்நாட்டார். தங்களுக்குரிய மதிப்பையும் அன்பையும் காட்டுவதற்கறிகுறியாகவே இவர்
தமிழ் மாகாண மகாநாடு சேலத்தில் கூடிய போது ஏகமனதாய் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். இவ்வளவு செல்வாக்கும், பெரும் புகழும், கீர்த்தியும் வாய்ந்த திரு ஜோசப் திடீரென்று பிராமணர்களின் மாயவலைக்குள் சிக்கி சுயராஜ்யக் கட்சியை ஆதரிக்க முன் வந்தார். ஜஸ்டிஸ் கட்சியை மிகவும் பலமாய் தாக்கி பனகால் மந்திரி சபையையும் உடைப்பதற்காக அரும்பாடு பட்டார். சுயராஜ்யக் கட்சியாரைவிட இன்னும் ஒருபடி அதிகமாய் போய்
ஸ்ரீமான் நாயுடு சொன்னது போலவே சட்டசபையில் மந்திரி உத்தியோகம் முதலானவைகளையும் கூட ஒப்புக் கொள்ள வேண்டுமென்றார். உண்மை யான ஒத்துழையாமைக்கும் மாறுபட்ட அபிப்பிராயங்கொண்டு பிராமணர் களுக்கும் சுயராஜ்யக் கக்ஷியாருக்கும் ஆபத்தில் உற்றத் துணையாக விளங்கினார்.டாக்டர் சுப்பராயன் மந்திரி சபையை ஆதரித்து சுயராஜ்யக் கக்ஷியாரின் மறைவான வேண்டுகோளை நிறைவேற்றி வைக்க மதுரையில் அக்கிராசனம் வகித்து பேசியும் பல ஆதரவுக் கடிதங்கள் எழுதியும் வந்தார். மதுரையில் நடந்த பிராமணரல்லாதார் மகாநாட்டின் நடவடிக்கைகளில் கூட கலந்து கொள்ளாமல் பிராமணர்களுக்கு பயந்து கொண்டு சும்மா இருந்து விட்டார்.கோவை மகாநாட்டில் பிராமணர், பிராமணரல்லாதாருக்கு ஒற்றுமை ஏற்படப் போவதை அறிந்து பிராமணர்களின் கட்டளை பெற்று அந்த மகாநாட்டை தாக்கி எழுதியபோது தானும் அதில் கலந்து கொள்ளாமல் தனித்து நின்று விட்டார். இம்மாதிரி மதுரையில் ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் தனது உழைப்பு. தியாகம், தீவிரக் கொள்கை இவற்றை யெல்லாம் விட்டு பிராமணர்களுக்கு அடிமையாயிருந்து வந்ததால் பிராமண பத்திரிகைகளான ஹிந்துவும், மித்திரனும், சுயராஜ்யாவும் ஸ்ரீமான் ஜோசப் தும்மினாலும், இருமினாலும், மூச்சு விட்டாலும், பேசினாலும், எழுதினாலும், தந்தியில் அவைகளை வரவழைத்து பெரிய எழுத்தில் பிரபலமான இடத்தில் பிரசுரித்து அவசியமாயின் அதன் பேரில் தலையங்கங்களையும் எழுதி வந்தன. அசோசியேட் பிரசும், பிரீ பிரசும், ஜோசப் வீட்டு வாயிற்படியை காத்துக் கொண்டிருந்தன.
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இப்படி எல்லாம் இருந்த ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு இப்போது பிராமணர்களும் சுயராஜ்யக் கட்சியாரும், பிராமணர்கள் ஆதிக்கம் நிறைந்த காங்கிரஸ் கட்சியாரும் பிராமணப் பத்திரிகைகளாகிய ஹிந்து, மித்திரன், சுயராஜ்யாவும் என்ன சன்மானம் செய்தன என்பதை யோசித்துப் பாருங்கள். கேவலம் ஒருசிறு முனிசிபாலிட்டியில் உள்ள ஒரு முனிசிபல் கவுன்சிலர்: ஸ்தானத்தைக்கூட அவர் அடைய முடியாமல் செய்து கைவிட்டு விட்டனர்.
ஸ்ரீ ஜோசப்பின் உதவியைக் கொஞ்சமும் நினையாமல் அவர் செய்த பனை அளவு நன்றிக்கு பதிலாக பிராமணர்கள் தினையளவு நன்றி கூடக் காட்டத் தயாராயில்லாமல் ஒரே அடியாய் தங்கள் இனத்தாரையே ஆதரித்து
விட்டார்கள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”
என்ற பொய்யா மொழி வாக்கை பொய்யாக்க வந்த பிராமணர்களுக்கு
நான் மனமாற நன்றி செலுத்துகின்றேன்.மதுரையில் இவ்வாறு பிராமணர்கள். செய்திராவிடில் சேலத்தில் ஸ்ரீ. பி. சுப்பராவ் மூன்று ஓட்டுகள் மட்டும் பெற்று நம்மை கெளரவித்திருப்பாரா? ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமான் கே.வி. ரங்கசாமி அய்யங்கார் எம்.எல்.ஏ யும், அவர் தம்பி ஸ்ரீமான் கே.வி. ஸ்ரீனிவாசய்யங்கா
ரும், சென்னையில் காமத்தும், மற்றும் ஆங்காங்கு பார்ப்பன அபேக்ஷ
கர்களும் வரிசையாய் தோல்வி அடைந்து இருக்க முடியுமா? மதுரையில் ஸ்ரீஜோசப் முனிசிபல் கவுன்சிலின் ஒரு ஸ்தானத்திற்கு அபேக்ஷகராய் காங்கிரஸ் சுயராஜ்யப் பிராமண கட்சியாராலேயே நிறுத்தப்பட்டார். உள்ளே பகையும் உதட்டில் உறவும் வைத்துள்ள பிராமண காங்கிரஸ் ஓட்டர்கள் மறைவாய் ஸ்ரீ ராமனாதய்யரை எதேச்சைவாதியாய் நிற்கும்படி செய்து ஓட்டுக் கொடுத்து வெற்றியை உண்டாக்கி ஸ்ரீ ஜோசப்பை தோல்வியுறும்படி செய்து அவமானப்படுத்திவிட்டார்கள். “குதிரை கொன்றதுமல்லாமல் குழியையும் தோண்டுவது” போல ஸ்ரீ ராமனாதய்யர் தாம் தான் ஓட்டர்களால் விரும்பப்பட்ட உண்மையான காங்கிரஸ்வாதி என்றும் ஸ்ரீ ஜோசப் மகா ஜனங்களால் வெறுக்கப்பட்ட படியால் தோல்வியுற்றார் என்றும் சொல்ல முன்வந்து விட்டார். அந்த டிவிஷனில் உள்ள பிராமண ஓட்டர்களும், ஸ்ரீ
ஜார்ஜ் ஜோசப் 30 தங்களை பயமுறுத்தி ஓட்டை அடைய முயற்சித்ததால்
31 ௨ ஸ்ரீராமனா தய்யருக்கே தங்கள் ஓட்டுகளை எல்லாம் கொடுத்த தாகவும்கையெழுத்திட்டு மித்திரனில் பிரசரித்திருக்கிறார்கள். ஸ்ரீ ஜோசப் தோல்வியிலிருந்து அவரு டைய பெரிய பிரசங்கங்களும் அறிக்கைகளும் பிராமண பத்திரிகைகளில் இடம்பெற முடியவில்லை. அவரை ஏமாற்றி ஜெயித்து விட்டதாகக் கூறி ஆகாயத்தில் பறக்கும் குப்பை கூளம் பதர்களின் பல கடிதங்கள், தந்தி மூலம் இடம் பெற்று பிராமணப் பத்திரிகைகளில் பிரசுரிக் கப்பட்டு வருகின்றன. காங்கிரசினிடமிருந்து ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், திரு.வி. கலியாணசுந்தர முதலியார்
குடி அரசு - 1927 (3) 240
போன்றவர்களை நீக்கி விட்டு காங்கிரசை பரிசுத்தப்படுத்த எண்ணிப் பேசிய ஸ்ரீ.சீனிவாசய்யங்காரைப் பின்பற்றி மதுரைப் பிராமணர்களும் ஸ்ரீ.ஜோசப்பை காங்கிரசினின்றும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்காமல் விலக்கி மதுரையையும், மதுரைக் காங்கிரஸ் கமிட்டியையும் பரிசுத்தப்படுத்தி புண்ணியாவாஹம் செய்து விட்டார்கள். இதை மறைப்பதற்காக ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார். மகாத்மா காந்தியை ஜோசப் வீட்டில் இறக்கி அவரைக் கொண்டு ஸ்ரீ ஜோசப்
புக்கு ஆறுதல் சொல்ல செய்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது இவ்வளவு காலம் தாழ்ந்தும் இவ்வளவு அனுபோகம் பிறந்தும் ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பிற்கு இன்னும் சரியான புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இன்னும் பிராமண மயக்கமும், சூழ்ச்சியும் தம்மை விழுங்கிவிட்டதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். பார்ப்பனரை விட்டுப் பிரிந்தால் வாழ முடியாது என்று நினைக்கிறார். எப்படியெனில் இத் தோல்வியை ஆதாரமாகக் கொண்டு தாம் பிராமணர்களிடத்தில் போய் பிரசாரம் செய்து அவர்களை நல்வழியில்
திருத்தப் போகிறாராம். எத்தனையோ காலமாய் எத்தனையோ பெரியார்க ளால் திருத்தமுடியாத பிராமணர்களை ஸ்ரீ ஜோசப் திருத்துவது நரியைப் பரியாக்குவது போல்தான் முடியும். எப்படியாவது போகட்டும் கெட்டவர். களுக்குப் பட்டது பிரீதி: எனினும் அவருக்கு ஒன்று சொல்லுவோம். அதாவது இப்பொழுதாவது பிராமணரல்லாதவர்களுடன் ஒன்று கூடி பிராமணர்களின் வகுப்பு வாதத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து சாக்கிரதையாய் இருக்கும்படி நாட்டிற்கு பிரசாரம் செய்தால் ஸ்ரீ.ஜோசப், தமக்கும் தம்முடைய வகுப்பிற்கும் நன்மை செய்தவராகக் கருதப்படுவார். இதை செய்யாமல் மறுபடியும் விரோதி களுக்கே உடந்தையாயிருந்து உதைத்தக் காலுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தால், அவர் மற்றொரு தோல்வி பெற்று நமக்கிடையில் வந்து சேரும் வரை பிராமணரல்லாத சமூகம் ஸ்ரீ ஜோசப்புக்காகக் காத்திருக்க முடியாதென்பதை அவருக்கு பணிவுடன் அறிவிக்கிறோம். பிராமணரல்லாத: சகோதரர்களே! நீங்கள் மதுரையில் நடந்ததை ஸ்ரீ ஜோசப்புக்கென்று நினைத்து பாராமுகமாயிருக்க வேண்டாம். அது பிராமணரல்லாதார். ஒவ்வொருவருக்கும் பிராமணர்களால் வழக்கம் போல் ஏற்படுத்தப்பட்டு வருகிற அநீதி, அக்கிரமம், சூழ்ச்சி என்று உணர்ந்து ஒற்றுமைப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள எல்லா பிராமணரல்லாதாரும் ஸ்ரீ ஜோசப் கற்ற பாடத்தால் எச்சரிக்கையாயிருந்து பிராமணர்களிடமிருந்து தப்பி, சுயமரியாதையையும், சுயராஜ்ய ஸ்தாபனங்களையும் அடைந்து ஜெயக்கொடி நாட்டும்படியாய் வேண்டிக் கொள்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.10.1927.
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சூத்திரன்
“தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, மெள்ள மெள்ள வேட்டை
நாய் ஆகிவிட்டது” என்பதாக தமிழ் நாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. அதுபோல் தற்காலத்திய நமது அரசாங்க நிருவாகம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை விஷயத்தில் வேண்டுமென்றே கொடுமை செய்து கொண்டு
வரத் துணிந்து விட்டதென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அதிலும் இது சமயம் தமிழ் மக்கள் பெரும்பாலும் அரசியல் முதலியவைகளைக் கூட
லக்ஷியம் செய்யாமல் தங்கள் சுயமரியாதையைப் பெருக்குவதே முக்கிய நோக்கமாகக் கொண்டு உயிரைக் கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கம் இவ்வளவு யோக்கியப் பொறுப்பற்ற தன்மையாய் நடக்க கூடியதாய் இருந்தால், சாதாரண காலங்களில் எப்படி நடக்க மாட்டாது என்பதைப் பொதுமக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தடவை கூட்டப்பட்ட சென்னை சட்டசபைக் கூட்டத்தில், ஸ்ரீமான் சல்டானா என்கிற ஒரு சட்டசபை அங்கத்தினர் ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் சென்ற ஆறு மாதங்களில் எத்தனை ஸ்தானங்கள் சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட தென்றும், நியமனம் செய்யப்பட்டவர்கள் எந்த எந்த வகுப்பைச் சேர்ந்த வர்கள் என்றும் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் சொல்லும் முகத்தான் வகுப்புகளைப் பிரித்துக் காட்டியதில் சென்னை அரசாங்கம் ஒரு
புது முறையைக் கையாண்டிருக்கிறது. அதாவது :
ஜாதி அல்லது வகுப்பு என்ற தலையங்கத்தில், ஐரோப்பியர், ஆங்கி லோ இந்தியர், இந்திய கிறிஸ்தவர், மகமதியர், ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர் என்று பிரித்துவிட்டுப் பார்ப்பனரல்லாதார் என்பதாக ஒரு உபதலையங்கம் கொடுத்து, விஸ்வ கர்மா, விஸ்வபிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்தி
ரன், ஒடுக்கப்பட்ட வகுப்பார், பிற்பட்ட வகுப்பார் என்பதாக பிரித்துக் காட்டி அதற்கு நேராக எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றுள் யார். யாரை எந்த எந்த வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.ஆனால் சூத்திரன் என்பதாக ஒரு வகுப்பு பிரித்துக் காண்பித்திருப்பதானது, சென்னை கவர்ன்மெண்டு, பார்ப்பன ஆதிக்கத்தில்
மனுதர்ம சாஸ்திர முறைப்படி நடக்கின்றதென்றே கருத வேண்டி இருக்கிறது. இதை நாம் கண்டிக்காமலும் திருத்தாமலும் இருக்க முடியாது. சூத்திரன் என்றால் என்ன என்பதை அரசாங்கம் இன்னும் அறியவில்லை என்று
குடி அரசு - 1927 (3) 242
சொல்லுமானால், அதற்கு நமது நாட்டில் ஒரு மாத்திரை நேரமும் இங்கு வேலையில்லை என்றே சொல்லுவோம். அன்றியும் அந்தக் கணக்குகளைப்
பிரித்துக் காண்பித்த இலாக்காவாகிய ஸ்தல ஸ்தாபன நிருவாகம் ஒரு தமிழ்
மகன் கையிலிருக்கும் போதே, இந்நாட்டு தமிழ் மக்களைச் “சூத்திரன் ” எனப்
பெயர் கொடுத்து அதில் சேர்ந்திருப்பதானது கொஞ்சங்கூட பொறுத்துக் கொள்ளக்கூடிய செய்கை அல்ல வென்று சொல்லுவதோடு, அவ்விலாக்காத் தலைவருக்கும், சுயமரியாதையில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் மான மரியாதையை விற்றானாலும் சம்பளம் பெற்றால் போதும் என்கிற கொள்கை உடையார் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.
பார்ப்பனரல்லாதார் கட்சி ஆதிக்கத்தின் கீழ் இவ்வுத்தியோகங்கள் நடைபெற்று வந்த காலங்களில் இச்சூத்திரன் என்னும் பதம் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து கிடந்தது. பார்ப்பனரல்லாதார் யோக்கியதையைக் கெடுக்கக் காத்திருக்கும் பார்ப்பனர்களின் கைக் குழந்தைகளாகிய சில அடிமைப் பார்ப்பனரல்லாதார் கைக்கு இவ் வுத்தியோகங்கள் போனவுடன்
“சூத்திரன் என்கிற பெயர் சட்டசபை மேஜையின் பேரில் தைரியமாய் தாண்ட வமாட நேரிட்டதுடன் அப்பார்ப்பன அடிமைகளான பார்ப்பனரல்லாத உத்தி யோகஸ்தர்களாலேயே அத்தாண்டவம் ஏற்பட்டதென்றே சொல்ல வேண்டி யிருக்கின்றது. இதைப் பார்த்துக் கொண்டு சட்டசபையில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மற்ற சட்டசபை அங்கத்தினர் களுக்கும் அவர்களது சுயமரியாதை எங்கேபோய் ஒளிந்து கொண்டிருந்தது என்பது நமக்கு விளங்கவில்லை. எனவே தமிழ் மக்கள் மானமும் சுயமரியா தையும் எவ்வளவு அற்ப காரியத்திற்கு விற்கப்படுகின்றது என்பதும், அப்படி விற்ற பார்ப்பனரல்லாதார்களிலும் எப்படிப்பட்டவர்கள் எந்த நிலையிலிருப் பவர்கள் யாராயிருக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்தே அறிந்து கொள்ள
லாம். இம்மாதிரி இழிவான பொருள் கொண்ட வார்த்தையால் ஒரு மகமதி யரையோ ஒரு ஐரோப்பியரையோ அழைத்திருந்தால் இதுவரை அந்த சட்டசபையின் கதி என்னவாயிருக்கும் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. மகமதியரும் அய்ரோப்பியரும் மாத்திரம் ஏன் உலகத்தை ஆளுகிறார்கள் என்பதற்கும், தமிழ் மக்கள் ஏன் இவர்களுக்கெல்லாம் எங்கும் அடிமைகளாயிருக்கின்றார்கள் என்பதற்கும் காரணம் கண்டு பிடிக்க இதைவிட வேறு எங்காவது போக வேண்டுமா என்று கேட்கின்றோம். அதிலும் சூத்திரன் என்கிற பதம் மிக இழிவானதாக இருக்கின்றது என்றும் இது எங்கும் காணப்படாமல் இருக்க சத்தியாக்கிரகம் முதலியவைகள் கூட செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் காலத்தில், இச்சத்தியாக்கிரகத்திற்கே ஒரு வெடிகுண்டு புறப்பட்டது போல் “சூத்திரன்” என்று சர்க்காராலேயே அழைக்கப் படுவதாக ஒரு அறிக்கை சட்டசபை யிலிருந்தே வெளிவருவதானால் இச் சூழ்ச்சியின் தன்மையைப் பற்றி என்ன வென்று சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
“சூத்திரன்” என்றால் என்ன பொருள் என்பதைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் பாமர மக்களுக்காவது இப் பெரியார்களின் யோக்கியதை விளங்கட்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சில குறிப்பிடு கின்றோம். வேதத்திலும் மனுதர்ம சாஸ்திரத்திலும் உள்ளது போலவே குறிக்கின்றோம்.
“அதாவது “சூத்திரன்” என்றால் பக்தியினால் பார்ப்பனனுக்கு வேலை செய்கிறவன், யுத்தத்தில் தோற்று அடிமையானவன், பார்ப்பனனின் வைப்பாட்டிமகன், விலைக்கு வாங்கப்பட்டவன், பாரம்பரியமாய் பார்ப்பன
னுக்குத் தொண்டு செய்து வருபவன்” மனு (8 - 415)
“இப்படிப்பட்டவனான சூத்திரனுக்கு யோக்கியதை என்ன வென்றால்,
சூத்திரன் பிராமணனுக்கு தொண்டு செய்தாலல்லது மோக்ஷமில்லை. சூத்திரன் பொருள் சம்பாதிக்கக் கூடாது. மீறி சம்பாதித்து வைத்திருந்தால் பிராமணன் அதை உதைத்துப் பிடுங்கிக் கொள்ளலாம்.” மனு (10 -129) (8- 417)
“பிராமணனுடன் சரிசமமாய் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் குண்டியை அறுத்து ஊரைவிட்டு துரத்திவிட வேண்டியது” மனு (8- 281)
“சூத்திரன் காக்கப்படாத (அதாவது தன்னிச்சையாய் திரிகிற, தானா கவேசம்மதித்த) பிராமண, க்ஷத்திரிய, வைசிய ஜாதி ஸ்திரியைப் புணர்ந்தால்
பீஜம் ஆண்குறி முதலியவைகளை அடியோடு அறுத்துவிட வேண்டும். காக்கப்பட்ட ஸ்திரியைப் புணர்ந்தால் தேக முழுவதும் சித்திரவதை செய்து வெட்டி விடுவதுடன் அவனுடைய எல்லாப் பொருள்களையும் பிடுங்கி கொள்ள வேண்டும்” மனு (8-374)
“ஆனால் காக்கப்பட்ட சூத்திர கற்புடைய ஸ்திரியைப் பிராமணர்
(வலுவில்) புணர்ந்தால் ஆயிரம் பணம் மாத்திரம் அபராதம் போடவேண்டும்”
மனு (8- 333)
என்பவை போன்றவைகள் “இந்து” மத வேதத்திலும், மனு தர்ம
சாஸ்திரத்திலும் பராசர் முதலிய ரிஷிகள் ஸ்மிருதியிலும், புராணங்களிலும் காணப்படும் “அநீதிகள்” கணக்கு வழக்கு இல்லை. இப்படிப்பட்ட பொரு ளையேமதசம்பரதாயத்தில் “சூத்திரன்” என்கிற பெயரைக் கொண்டு நம்மை அழைப்பதென்றால், அதை எப்படி சகிக்க முடியும்? அடுத்த சட்டசபை யிலாவது இப்பெயர்கள் அரசாங்க சம்பந்தமான எந்த காரியங்களிலும் உபயோகப்படுத்தக் கூடாதென்றும் இப்பெயர்களையும், இதற்கு ஆதாரமான வேத சாஸ்திர புராண முதலிய கதைகளையும் பள்ளிக் கூடங்களில் பிள்ளை களுக்குப் பாடப் புத்தகமாக வைக்கக்கூடாது என்றும் ஒருமசோதா கொண்டு
குடி அரசு - 1927 (3) 244
போய் நிறைவேற்றிச் சட்ட மாக்கி அமுலில் வரும்படி செய்ய வேண்டும். அந்தப்படி செய்ய நமது சட்டசபை அங்கத்தினர்களுக்கு யோக்கியதை இல்லையானால், அவர்கள் அங்கிருப்பதில் பயனென்ன என்று கேட்கிறோம்?
சட்டசபை ஸ்தானம் நமது சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காகவா, அல்லது நமது சுயமரியாதையை விற்று தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளுக்கு அங்கத்தினராகவும் தலைவர்களாகவும் இருந்து வயிறு வளர்ப்பதற்காகவா என்று கேட்கின்றோம். சட்டசபையில் நமக்குக் கடுகளவாவது மரியாதை இருக்குமானால், அதுவும் நமது சுயமரியாதைக்குக் கொஞ்சமாவது உதவாதா என்கிற எண்ணத்தின் பேரில்தான் இருக்கலாமே ஒழிய மற்றபடி பதவிக்கும் சுகத்துக்கும் அல்ல என்றே சொல்லுவோம். எனவேமகாத்மா காந்தியையும் நாம் வெறுத்துத் தள்ளிய காரணமும் இதுவே அல்லாமல் வேறல்ல. அவர் வருணாசிரமத்திற்கு எவ்வளவு பெரிய தந்திர: வியாக்கியானம் செய்தாலும் வருணம் என்பதையும், அது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் எனப்பெயர் கொண்டது என்பதையும், அவர்களுக்குத் தனித்தனி தர்மம் உண்டு என்பதையும் அவரவர். களுக்குண்டான தர்மப்படி அவரவர்கள் நடக்க வேண்டுமென்பதையும், மாற்றி வேறு வியாக்யானம் செய்ய முடியவில்லை என்பதையும் நன்கு உணர்ந்தாய் விட்டது. இனி மகாத்மா இந்தக் கொள்கையுடன் கதரின் மூலமாகவோ வேறு எதன் மூலமாகவோ நம் நாட்டுக்குத் தெருவெல்லாம் பொன் காய்க்கின்ற மரம் உண்டாகும்படி செய்தாலும் கூட அது வெறும்
வயிற்றுச் சோற்று பிரசாரமாகுமே தவிர ஒரு கடுகளவும் சுயமரியாதைப் பிரசா ரமாகாதென்பதே நமது முடிவு. இந்தக் கொடுமையைப் பற்றிச் சர்க்காருக்கும், மந்திரிக்கும் சட்டசபை அங்கத்தினர்களுக்கும் தெரியப் படுத்துவதுடன், நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு பட்டணங்களிலும் ஒவ்வொரு கிராமங் களிலும் இருக்கும் சுத்த இரத்த ஓட்டமுள்ள அதாவது ஒவ்வொரு உண்மை யான சூத்திரரல்லாதவர்களுக்கும் ஒரு கூட்டம் போட்டு சூத்திரத் தன்மை என்பது என்ன என்பதை நன்றாய் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி ஒரு கண்டனத் தீர்மானம் செய்து சர்க்காருக்கும் சட்டசபை மெம்பர்களுக்
கும் உடனே அனுப்புவதுடன் இக்கொடுமையை ஒழிக்கச் செய்யும் சுயமரி யாதை சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டர்களையும் பதிவு செய்து அனுப்பிக் கொடுக்க வேணுமாய்க் கோருகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.10.1927.
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
புரசைவாக்கம் பார்ப்பணால்லாத
வாலிபர் சங்கம்
அன்புள்ள வாலிபர்களே!
அவைத்தலைவர் என்னைப்பற்றி பெருமைபடுத்தி பேசிய தெல்லாம் அவர்கள் என்மீது கொண்ட அன்பேயன்றி வேறல்ல. அவர்கள் சொல்லிய வற்றிற்கு நான் சிறிதும் பொருத்தமுடையவனன்று. ஆனால் எனது கொள்கை களையும் தொண்டுகளையும் ஆதரித்து பேசியிருக்கின்றதிலிருந்து என் கொள்கைக்கு சிறிதாவது நாட்டில் மதிப்பிருக்கிறதென்றும் மக்கள் ஆதரிக் கிறார்களென்றும் ஏற்படுவதோடு, இதனால் என் தொண்டுக்குப் பின் பல மிருக்கிற தென்றும் நான் உணர்கிறேன்.
வாலிபர்கள்
எனது எண்ணமெல்லாம் எப்பொழுதும் வாலிபர்கள்களாகிய உங்கள் மீதுதான் போய்க் கொண்டிருக்கிறது. ஏனெனில் மோட்ச லோகத்தில் ஒரு காலும் பூலோகத்தில் ஒரு காலும் வைத்துக் கொண்டு வீண் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கிற பெரியோர்களைப் பற்றி எனக்கு அதிக கவலை இல்லை. ஆகையால் வாலிபர்களாகிய உங்கள் முன் பேச எனக்கு அளவில்லாஆசை யுண்டாகின்றது. சமீபத்தில் இரண்டு வாலிப மகாநாடுகள் கூடப் போகின்றன. அவைகளில் ஒன்று அகில இந்திய வாலிபர் மகாநாடென்றும், மற்றொன்று பார்ப்பனரல்லாதார் வாலிபர் மாகாண மகாநாடு என்றும் சொல்லப்படும். அகில இந்திய வாலிபர் மகாநாட்டுக்குத்தான் நமது திரு.ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் சென்றிருக்கிறார்கள். சமீபத்திலே அதாவது இம்மாதம்.
22, 23-ம் தேதிகளில் பார்ப்பனரல்லாதார் வாலிபர் மகாநாடு இங்கு கூடும். அதற்காக தமிழ்நாட்டிலிருந்தும், ஆந்திர நாட்டிலிருந்தும், பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிற்குத் தொண்டு செய்வதற்கும் தலைமைப் பதவி பெறுவதற்கும், வாலிபர்கள் தான் சிறந்தவர்.
கள் என்பது எனதபிப்பிராயம். அதிலும் தலைவர் பதவிக்குப் பெரியோர்கள். என்பவர்கள் பயனில்லை. அவர்களை உலக வாழ்க்கையும் சுயநலமும் சுற்றிக்கொள்ளுகின்றது. பொதுவாழ்க்கைக்கும் தலைமைப் பதவிக்கும்
குடி அரசு - 1927 (3) 246
சுயநலமென்பது கண்டிப்பாய் இல்லாதவர்களாகவே இருக்கவேண்டும். அநேக பெரியோர்கள் தாங்கள் முதலில் எந்த எண்ணம் கொண்டு பொது நல சேவையை ஆரம்பித்தார்களோ அதையே மறந்து விடுகிறார்கள். உலக வாழ்க்கையில் சம்மந்தம் ஏற்பட்ட பிறகு சுயநலமில்லாமல் பொது நலவேலை செய்வது என்பது அவர்களுக்கு இலேசான காரியமல்ல. எனவே பரிசுத்த மான வாலிபர்களால்தான் என் தொண்டு முற்றும் பயன்படுமென்று எண்ணி யிருக்கின்றேன். ஏனென்றால் அவர்கள் உலக வாழ்க்கையில் ஈடுபடும் முன் மனது பரிசுத்தமாயிருக்கும். பரிசுத்தமான மனதையுடைய இவ்வாலிப காலத்தில் ஒரு காரியத்தை ஆரம்பித்து நடத்தினால் நாம் மேற்கொண்ட காரியம் பலன்பெறும். வாலிபர்கள் காரியங்களை சீரும் சிறப்பும் உண்டாகு மாறு நடத்திக் காட்டுவார்களானால் பெரியோர் நம் தொண்டைப்பற்றி கொண்டாடி அவர்களும் ஒத்துழைக்க நம்மிடம் வருவார்கள். என்னைப் பொருத்த வரையில் நான் எண்ணும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் வாலிபர்கள் கிடைத்தால்தான் பலன் பெறலாமே அல்லாது பெரியவர்கள் கிடைத்தால் பயன் எதிர்பார்க்க முடியாதென்றே எண்ணி வருகின்றேன். வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை மிகுதியும் பொது வாழ்விற்கு உபயோகப்படுமாறு சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பார்ப்பனரல்லாதார் வாலிபர் மகாநாடு
சிலர் பார்ப்பனரல்லாதார் என்று ஒரு பிரிவு காட்டத்தக்க பெயர் ஏன் என்கிறார்கள். சிலர் இம்மாதிரி பிரித்துக்கொண்டே போனால் உலக நிலை என்னவாகும் என்கிறார்கள். மற்றும் சிலர் பார்ப்பனரல்லாதார் என்கிற பிரிவு உணர்ச்சி வாலிபருக்கு உண்டாகக் கூடாது என்கிறார்கள். இவர்கள் சொல்வ தெல்லாம் நமது நாட்டின் உண்மையான நிலைமையைக் கவனியாதவர்' களுக்கு வேண்டுமானால் ஒரு சமயம் நியாயமாய்த் தோன்றலாம். நமது நாட்டின் நிலைமையைக் கவனிக்கின்ற காலத்தில் இந்தப் பிரிவு ஏற்படுத்தியது யார்? இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது? என்பதைக் கவனிக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பே ஏற்படுத்தப் பட்டதென்பது விளங்காமல் போகாது. நமது நாட்டை ஆயிரக்கணக்கான பிரிவுகளாக நாம் பிரிக்கவில்லை. 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பி ருந்தே ஒரு வகுப்பார் நம்மைப் பிரித்து வைத்து தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு நம்மை கொடுமையாய் நடத்தி வருகின்றார்கள். ஒரு கூட்டத்தாரை மாத்திரம் அதாவது நம்மை பார்ப்பனர்கள் என்பவர்களை
நீக்கி மற்றவர்களை பார்ப்பனரல்லாதார்கள் என்று பிரித்தது இன்றல்ல நேற்றல்ல. ஆதலால் அதற்கு நாம் பொறுப்பாளிகளல்ல. தவிர சிலர் பார்ப்பன ரல்லாதார் என்கிற பெயர் கூடாது என்கிறார்கள். அதாவது பார்ப்பனரல்லாதார். என்கிற பெயரைத் தவிர்த்து வேறு பெயரிடக்கூடாதா வென்கிறார்கள். கிரமமாக எல்லா மக்களும் ஒப்புக் கொள்ளும்படியாக நமக்கு வேறு ஒரு
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பெயர் என்ன கொடுக்க முடியும்? கிரமமாக யோசித்தால் ஆதாரப்படி பார்த்தால் சூத்திரன் என்கிற பெயரைத்தான் கொடுத்தாக வேண்டும். அதை
நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏனெனில் மதக் கொள்கைப்படி இந்தப் பார்ப்பனர்கள் நம் நாட்டு மக்களுக்கு பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்,
சூத்திரர், பஞ்சமர், மிலேச்சர் என்ற பிரிவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பிராமணர்கள் என்கிற பெயரை பொருத்தவரையில் ஒருவிதமான தகரா ரில்லை. ஏனென்றால் பார்ப்பனர்கள் தங்களை பிராமணரென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.
க்ஷத்திரியர்கள்
க்ஷத்திரியர்கள் என்பதில் அநேக தகரார் ஏற்படுகிறது. யார் யாரை க்ஷத்திரியனென்று கூப்பிடுவது? க்ஷத்திரியன் என்கிற பெயர் யாருக்கு உரிமை உண்டென்று சொல்லமுடியும். க்ஷத்திரியனென்றால் நாட்டை ஆளுபவன், போர்வீரன், காப்பாளன், கத்திவாளுடன் அமர்களத்தில் போர். புரிபவன் என்பதாக பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த முறைப்படி எல்லோரும் க்ஷத்திரியர்கள்தான். ஏதாவது ஒரு காலத்திலாவது நாட்டை ஆளாதார் யாரிருக்கிறார்கள்? பட்டாளத்தில் போர் வீரனல்லாதார் யார். இருக்கிறார்கள்? ஒருகாலத்தில் வேளாளர், நாயுடு, வன்னியர், ராஜுக்கள், நாடார்கள், செட்டியார்கள், குயவர்கள், மறவர்கள், தொட்டியர்கள், பார்ப்பனர்.
கள், ஒட்டர்கள், முகம்மதியர்கள் முதலியவர்கள் அரசாண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் நம் நாட்டை ஆங்கிலேயர்கள்தான் ஆள்கின்றார்கள். அந்த முறைப்படி யாரை க்ஷத்திரியர் என்று கூப்பிடுவது?
ஒரு காலத்தில் அரசாண்டவர்களை க்ஷத்திரியர் என்பதா? அல்லது இப்போது அரசாளுகின்றவர்களை க்ஷத்திரியரென்பதா? ஆளுகிறவனை மாத்திரம் க்ஷத்திரியன் என்பதா, அல்லது அவன் குடும்பத்தை மாத்திரம் க்ஷத்திரியரென்பதா? அல்லது ஆளுகின்ற ஜாதியையே க்ஷத்திரியரென்பதா? இப்படிப் பார்ப்போமானால் ஒன்றா உலகத்தில் உள்ள மக்கள் பூராவையும் க்ஷத்திரியர்கள் என்று சொல்ல வேண்டும். அல்லது ஜார்ஜ் சக்கிரவர்த்தியை மாத்திரம் க்ஷத்திரியன் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் நாம் காணும் ஒவ்வொரு ஜாதியார் என்போர்களும் ஒரு காலத்தில் அரசாண்டுதானிருக். கிறார்கள். ஒவ்வொரு வகுப்பாரும் யுத்தத்தில் சேவை செய்துதானிருக் கிறார்கள்.
வைசியர்
அடுத்தாப்போல் வைசியர் என்றாலோ, வியாபாரம் செய்வோர் வைசியர். ஆகையால் வியாபாரம் செய்வோர் அனைவரும் வைசியர். இக் காலத்தில் எல்லா வகுப்பாரும் வியாபாரம் செய்வதால் யாரை வைசியரென்று
குடி அரசு - 1927 (3) 248
சொல்லுவது? இன்னும் விவசாயம் செய்பவர் வைசியர், மாடு மேய்ப்பவர் வைசியர் என்று சொல்லப்படுகிறது. இத்தொழில் எல்லாருமே செய்திருக் கின்றார்கள் செய்கிறார்கள். எனவே யாரை வைசியரென்பது?
பார்ப்பனர் ஒப்புவார்களா?
தவிரவும், க்ஷத்திரியர், வைசியர் என்கிற பிரிவினையைப் பார்ப்பனர்.
கள் ஒப்புக் கொண்டால் அவர்கள் ஏகபோகமாக அனுபவித்து வருகின்ற உரிமைகளை மூன்று பிரிவாகப் பிரித்து அதில் அவர்கள் ஒன்று எடுத்துக் கொண்டு பாக்கியை க்ஷத்திரியருக்கு ஒன்றும் - வைசியருக்கு ஒன்றுமாக பிரிக்க நேரிட்டு விடும். ஆதலால் இதற்குப் பயந்து கொண்டே வெகு தந்திர மாய் கலியுகத்தில் உலகத்தில் பிராமணர்கள் சூத்திரர்கள் என்கிற இருபிரிவு தவிர வேறில்லை என்று சொல்லி விட்டார்கள்.
எனவேமதக் கொள்கைப்படி யார் சூத்திரன் என்று பார்த்தால், பிராம ணன் வைப்பாட்டி மகன், பரம்பரையாக மேல் சாதியாருக்குத் தொண்டு செய்வதைவிட வேறு தொழில் இல்லாதவன் முதலிய யோக்கியதை உடைய
வன், இந்தப் பெயரை ஏற்றுக்கொள்ள நம் மனம் பொறுக்குமா? தவிர மற்றொரு வகுப்பார்களென்ற பஞ்சமர்களை தீண்டப்படாதவர்கள், சண்டாளர் களென்று பிரித்திருப்பதோடு. வேறு மதத்தினர் என்கின்றவர்களான கிறிஸ்தவர்களையும், முகம்மதியர்களையுமாகச் சேர்த்து மிலேச்சர்களென்று பிரித்திருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நான் ஏன் சொல்ல நேரிட்ட தென்றால் பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் தவிர வேறு பெயர் வைக்க முடியாமலிருப்பதற்கு நேரிட்ட காரணத்தை விளக்குவதற்காகத்தான் என்றும் இவ்வித இழிவான பெயர்களையும், கொடுமைகளையும் ஒழிக்கத்தான் அப்பெயர் கொடுக்கப்பட்டது என்றும் காட்டத்தான். தவிர சிலர் ஏன் இவ் வியக்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள். பார்ப்பனர்களை எப்போதும் நம்முடன் சேர்க்கக் கூடாதென்ற கொள்கை இதிலில்லை. அவர்கள் இவ்வித வித்தியாசங்களையும் சூழ்ச்சிகளையும் ஒழித்து சமத்துவத்தை ஒப்புக் கொண்டு நல்ல எண்ணத்துடன் செய்கையில் நடந்துவரும் வரையில் அவர்களை விலக்கி வைக்க வேண்டியது அவசிய மாயிருக்கின்றது. அன்றியும் பார்ப்பனருக்கு என்று மாத்திரம்தான் எங்குப் பார்த்தாலும் ஒரு தனியிட மேற்படுத்திக் கொண்டு அதில் அவர்கள் ஆதிக் கத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அவ்வித வித்தியாசம் வேண்டும் என்கிற ஆசை இல்லை. அதோடு பார்ப்பனர்கள். உயர்ந்தவர்கள் மற்றவர்கள் இழிந்தவர்கள் என்பதை நமது மக்களின் ரத்தத்தி லேயேபாய்ச்சிவிட்டார்கள். எனவே ஒரு சிறு கூட்டத்தாரின் கொடுமையால் பெரிய சமூகம் சுயமரியாதையிழந்து பல கஷ்ட, நஷ்டங்களுக்காளா கியிருப்பதற்குப் பார்ப்பனரல்லாதாராகிய நாம் காரணஸ்தர்கள் அல்ல. தவிர:
சிலர் நம்மைப் பார்த்து பார்ப்பனரிடம் துவேஷம் வேண்டாம், பார்ப்பனரும்
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பார்ப்பனரல்லாதாரும் கூடிஒன்று சேர்ந்துஇக்கொடுமையை நிவர்த்திக்க வழி பாருங்கள் என்று நல்ல பிள்ளைகள் போல பேசுகிறார்கள்.
நாம் அவர்களைத் தொடுவதற்கும், ஒன்றாய் இருப்பதற்கும். உண்பதற்கும், ஒன்று சேர்ந்து கடவுளை வணங்குவதற்கும், தெருவில் நடப்ப
தற்கும் கூட உரிமை கொடாத அவர்களா அல்லது நடப்பதற்கு வழி விடுங்கள் என்று கெஞ்சிக்கேட்கின்ற நாமா துவேஷத்தை உண்டாக்குகிறவர்கள் என்பது சற்று யோசிப்பவர்களுக்குத் தோன்றாமல் போகாது. அன்றியும் ஒற்றுமை யாயிருந்து துவேஷத்தை ஒழித்துக் கொள்ளக்கூடாதா என்று சிலர் சொல்லு கின்றார்கள்? துவேஷம் ஒழிய வேண்டுமானால் துவேஷத்திற்கு காரணமா யிருப்பவர்களிடம் ஒற்றுமையாயிருக்க முடியவே முடியாது. இன்றைய தினம்
நான் மாத்திரமல்ல இக்குற்றங்களை எடுத்துக் கண்டிப்பது, ஏறக்குறைய 5000, 6000 வருடங்களுக்கு முன்புள்ள தேச சரித்திரத்தைப் பார்த்தால் நமது முன்னோர் காலத்திலிருந்தே மனிதத் தன்மைக்கு விரோதமானதும், இயற்கைக்கும் சத்தியத்திற்கும் விரோதமானதுமான கொடுமைகளை ஒழித்து சமத்துவத்தையும் அன்பையும் உலகின்கண் நிலைநிறுத்த நம்மவர்கள் பாடுபட்டிருப்பது விளங்காமலிராது. 5000 வருடமாக பாடுபட்டும், அதுவும் அன்புடனும் ஒற்றுமையுடனும் பாடுபட்டும் இன்னும் அப்பேய் தாண்டவ மாடுமானால் இனியும் எப்படி அன்பாயும், ஒற்றுமையாயுமிருந்து இப் பொல்லாப் பிரிவினைகளை நீக்க முடியும் என்பதை யோசியுங்கள். இவை களை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் நம் வாலிபர்களிலும் சிலர் “எதற்கு இந்த வித்தியாசம்? பாபம் பார்ப்பனர்கள் நம்மிடம் வருகிறார்கள். பிச்சை யெடுக்கிறார்கள், பிறகு போய் விடுகிறார்கள். அவர்கள் மீது நமக்கேன் வெறுப்பு” என்று தர்மசாஸ்திரம் பேசி நம் இயக்கத்திற்கே முட்டுக் கட்டை யாய் நின்று விடுகிறார்கள். அவர்களுக்கு நான் மேலே சொல்லி இருக்கும் சமாதானத்தையே சொல்லிக் கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். நம் சொந்த விடங்களில் எங்கேயாவது இது பார்ப்பனருக்கு இது பார்ப்பனரல் லாதார் என்கிற சூத்திரருக்கு என்று நாம் எழுதி வைத்திருக்கிறோமா? எந்த பொது ஸ்தலத்திலும் எந்த உயர்ந்தவிடத்திலும் எந்த புண்ணிய பூமியிலும் இது பார்ப்பனருக்கு இது சூத்திரருக்கு என்று எழுதி வைத்துக் கொண்டிருப்ப தோடல்லாமல் அதை அமுலில் வைத்துக் கொண்டிருப்பது பார்ப்பனர்களா அல்லது நாமா? அன்றியும் இப்போதும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காப்பி ஓட்டல்களிலும் வெட்டி வைத்த குளக்கரையிலும் இது பார்ப்பனர்களுக்கு இது சூத்திரருக்கு என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படி எழுதியது தப்பு, இவ்வித வித்தியாசம் இருக்கக் கூடாதென்றால் அது ஒற்றுமைப் பிளவாகுமா? அல்லது ஒற்றுமைக்கான முயற்சி ஆகுமா? ஒற்றுமையை எப்படி உண்டாக்குவது? “நீங்களெல்லாம் ஒற்றுமையாயி ரங்கள், இருக்கிற வித்தியாசங்கள் அப்படியே இருக்கட்டும். அது கடவுளால் உண்டாக்கப்பட்டது” என்றால் எப்படி ஒற்றுமை நிலவும்? இதனால் கடவுளே
குடி அரசு - 1927 (3) 250
பிரித்து வைத்திருக்கின்றார் என்றல்லவா ஏற்படும். உண்மையாய் ஒருவருக் கொருவர் ஒற்றுமையாயிருக்க வேண்டுமானால் ஒவ்வொருவர் எண்ணமும் ஒரே மாதிரியாகவும் ஒவ்வொருவரும் மற்றவரால் சமத்துவமாக மதிக்கப் பட்டும், ஒவ்வொருவருக்கும், அன்னியோன்யமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டாலன்றி உண்மையான ஒற்றுமையாய் எப்படி வாழ முடியும்? ஒரு
புலியினிடத்தில் ஒரு ஆட்டுக் குட்டியை விட்டு நீங்களிருவரும் ஒற்றுமை யாயிருங்கள் என்றால் அவைகள் எப்படி ஒற்றுமையாயிருக்க முடியும்? புலி ஆட்டைக் கொன்று தின்னாமலிருக்க முடியுமா? எலிகளிலிருக்குமிடத்து பூனையைக் கொண்டுவந்து விட்டு எலிகளைக் கூப்பிட்டு நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாயிருங்களென்றால் அவைகள் எப்படி ஒற்றுமையாய் சேர்ந்து வாழ முடியும்? கொஞ்ச காலத்திற்குள் எலிகளே காணப்படா தொழியுமா அல்லவா? இரண்டுக்கும் நம்பிக்கையுண்டாக்கி ஒன்றைக் கொன்று ஒன்று வயிறு வளர்க்க வேண்டியிருக்கிற நிலையை மாற்றாமல், அவைகளை எப்படி ஒற்றுமையாயிருக்கச் செய்ய முடியும்? ஆனால் சிலர் வெகு சுலபமாக நீங்க ளெல்லாம் ஒற்றுமையாயிருங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் பொறுப்பை, உணராதவர்களே என்றே சொல்லுவேன். பூச்சி, புழுக்கள், பன்றி, நாய்களைவிட கேவலமாய் நடத்தப் படுவது நாமா? அவர்களா? இப்படி செல்லுகிறவர்கள் நிமிர்ந்து போட்ட தென்ன? குனிந்து எடுத்ததென்ன? வெறும் வாய்வேதாந்தம் பேசுகிறவர்கள் தானே? சுயமரியாதை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு இதன் கஷ்டம் தோன்றாது! சிரிப்பு) நித்திய வாழ்வில் நாம் படும் துயர் யாரே அறிவர்? தவிர வேறு சிலர் “வேளாளருக்குள்ளும் மற்றும், பல வகுப்பார்க்குள்ளும் இம்மாதிரி ஒருவரை ஒருவர் தொடக்கூடாதென்றும், உண்ணக்கூடாதென்றும், கலியாணம் செய்யக்கூடாதென்றும் சொல்லுகிறார்கள். அதை முதலில் ஒழியுங்கள். கீழிருந்து ஒழித்துக் கொண்டு வந்த பிறகு மேலுள்ளவைகளை ஒழிக்க முயலுங்கள்” என்று சொல்லக்கூடும். கீழே காணப்படும் பிரிவினை
கள் உண்மையானதல்ல, இது பார்ப்பானைப் பார்த்து அவன் போல் நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அறியாமையால் நடித்து வருகிற வினை யின்றி சூழ்ச்சிக்காக வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டதல்ல. (கை தட்டல்) பார்ப்பனருக்கு முன் நம் நாட்டில் இந்தக் கொடுமைகளும் கூடா ஒழுக்கங்களுமிருந்ததாக சொல்ல முடியாது. நான் சிறந்த ஆராய்சிக்காரனு மில்லை. குறைந்த ஆராய்ச்சிக்காரனுமல்ல, அடியோடு ஆராய்ச்சி இல்லா தவன். ஆனாலும் பல ஆராய்ச்சிக்காரர்களை அடுத்து கேட்டதின் பயன் அறிந்தவனேயன்றி வேறல்ல. முதலாவது இந்த சாதி என்னும் சொல்லே
தமிழ்ச் சொல்லல்ல. சாதிக்கு ஆதாரம் இந்து மதம் என்று சொல்லுவது அந்த இந்துமதம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லல்ல. அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும் மனுதர்மமும் நமக்கு சம்மந்தப்பட்டவையுமல்ல. அவைகள் நம் பாஷையில் உள்ளவையுமல்ல. நம் மக்களால் எழுதியவையுமல்ல. இந்து
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
என்ற சொல் எந்த மொழியிலுமில்லை, எப்படியோ அது நம் தலைக்கு வினை: யாக வந்து சேர்ந்திருக்கின்றது. ஆராய்ச்சிக்காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள். சிலர் ஒரு இடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிப்பது என்கிறார்கள். சிலர் பர்சிய பாஷையில் திருடர்களைக் குறிப்பது
என்கிறார்கள். மருவி வந்ததென்பார்கள் சிலர். மற்றபடி வருணாசிரம தர்ம மென்னும் சொல்கூட தமிழ்ச்சொல் அல்ல. நம்நாட்டில் அந்நியமம் இருந் திருந்தால் நம் மொழியில் அதற்கு வார்த்தை இருந்திருக்கும். சோளம் நம் நாட்டில் விளைகிறது. அதை சோளம் என்று சொல்லுகிறோம். ஆங்கி லேயரும் அதை சோளமென்றே சொல்லுவார்கள். ஏன்? அவர்கள் நாட்டில் அது இருந்ததில்லை.அது போலவே காப்பியை நம் தமிழ் மக்கள் ஆங்கிலே
யர் வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால் நம் தமிழ் மொழியில் அதற்கு ஒரு பெயரிடுவதற்கு இல்லாமல் போயிற்று. ஆதலால் நாமும் அதை அன்னிய நாட்டுப் பெயரால் காப்பி என்றே அழைக் கின்றோம். வர்ணாசிரமதர்ம சாதி பாகுபாடு நம் தமிழ்நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பேயிருந்திருந்தால் நம் மொழியில் அவைகளுக்குத் தனிப் பெயரிருந்து தானிருக்கும். அன்றியும் இப்பெயர்களையும் இவ்வித்தியாசங் களையும் நாம் ஆதியில் இருந்தே கண்டித்து வந்திருக்கின்றோம் என்பதற்கு அறிகுறிதான் ஆரியர்களை நாம் மிலேச்சர்கள் என்று சொல்லுவது. எனவே இவைகள் ஒழிய வேண்டுமானால் இவ்வாரியத்தன்மை ஒழிய வேண்டும்; ஆரியமதம் ஒழிய வேண்டும்: ஆரியக் கொள்கை ஒழிய வேண்டும்.
அப்படிக்கின்றி அவைகளை ஒழிக்காமல் அவைகளுக்கு மகாத்மா வைப் போல் சவுகரியத்திற்கும் சமயத்திற்கும் தகுந்த படி வியாக்கியானங்கள் செய்து கொண்டிருப்பதினால் ஒரு அணுவளவு பயனும் உண்டாகாது. அடிக்கடிசருக்கி விட்டு ஆரிய மாய்கையில் விழவேண்டியதாய்தான் விடும். அதனால்தான் இவ்வளவு ஆயிர வருஷம் பாடுபட்டும் இன்னமும் அதே அடிமைநிலையில் நமதுநாடு இருந்து வருகின்றது. தவிர சிலர் சொல்லுவது போல் கீழே இருந்து இவ்வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போக வேண்டு மென்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரியமல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காமலிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்து முளைத்த கிளை களை, மாத்திரம் வெட்டினால் மறுபடியும் அது நன்றாய் துளிர்த்து தழைத்து கொண்டுதானிருக்கும். எனவே உற்பத்தி ஸ்தானமான பார்ப்பனர்களிட மிருந்து அதை ஒழிக்க வேண்டும். அவர்களால்தான் இவ்வித்தியாசங்கள் பரவுகின்றன. உதாரணமாக, எங்கள் வீட்டிற்குமுன் ஒரு குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பன சகோதரி வரும் போது ஒரு சுண்டக் காய் பிரமாணம் புளியும் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரும் கொண்டு வந்து குழாயை புளியால் விளக்கி கழுவி பின்பு தண்ணீர் பிடித்துக்கொண்டு போக ஆரம்பிக்கிறாள். இதைப் பார்த்த நம் சகோதரிகள் நெல்லிக்காய் அளவு
குடி அரசு - 1927 (3) 252
புளியும் ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து புளியால் விளக்கி கழுவித் தண்ணீர் எடுத்துக் கொண்டு போக பழகுகிறார்கள். இதைக் கண்ணுற்ற நம் முகம்மதிய சகோதரிகளும் கொளுமிச்சங்காய் அளவு புளியும் முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கி கழுவி தண்ணீர்ப் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகுகிறார்கள். அந்த முகம்மதிய சகோதரியை அடுத்து “உங்கள் மதத்திற்கு வித்தியாசம் இல்லையே, நீங்கள் கூட ஏன் இப்படி கழுவி தண்ணீர் பிடிக்கிறீர்கள்” என்றால் “எனக்கு என்ன தெரியும் இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ என்று கருதி நான் செய்து வருகிறேன்” என்கிறாள். இவ்வளவுக்கும் காரணமாயிருந்தவர்கள் யார் என்று பாருங்கள். பார்ப்பனர்
கள் இப்படிச் செய்யாதிருந்தால் இவ்வித வழக்கங்கள் பரவ வழியில்லை.
அவர்கள் போட்ட முடிச்சு அவர்களால்தான் அவிழ்க்க வேண்டும். என்று விவேகானந்த சுவாமி சொல்லியிருக்கின்றார். நம் மக்களில் சிலர். “அல்லாதார்” என்ற பெயர் ஏன் என்பார்கள். அதற்கும் சமாதானம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆன்டி காலரா மருந்தென்றால் அம்மருந்து எப்படி காலரா வந்த உடன் நினைவுக்கு வருமோ, “ஆன்டி பிளேக்” மருந்தென்றால் பிளேக்கு வந்தவுடன் நினைவுக்கு வருமோ, மூட்டை பூச்சிக்கு “எமன்” என்றால் எப்படி மூட்டப் பூச்சி கடித்தவுடன் அம்மருந்து நினைவிருக்குமோ அதுபோல் சமத்துவமில்லாமல் கொடுமையில் பட்டு இழிவை அனுபவித்து
வரும் மக்களுக்கு அது ஒழிய வேண்டுமானால் அதற்கு ஆதாரமானவர்கள். பெயரும் அவர்களைக் கண்ட அளவில் நினைவிருக்க வேண்டும். கொடுமை செய்த விதமும் ஞாபகத்திற்கு உடனே வரவேண்டுமெனக் கருதியே பார்ப்பனரல்லாதார் இயக்கம் எனப் பெயர் கொடுக்கப்பட்டதேயன்றி வேறல்ல. இவ்வித இழிவும் கொடுமையும் ஒழிந்து எல்லா மக்களும் சமத்துவம் அடைந்து நாம் ஒற்றுமையானால் இவ் “அல்லாதார்” என்ற பெயர்: தானாக இல்லாமலே போகும். அரசியலிலும் கூடஅல்லாதாரென்கிற பெயரை:
நீக்கி நாம் வாழ முடியவில்லை. அது அவமானமில்லை என்றுதான் கருதி இருக்கிறோம். அரசியல் சிர்திருத்த மென்பதில் தேர்தல்களுக்குக் கிறிஸ்த
வர்கள், கிறிஸ்தவர்கள் தொகுதியில் நிற்கிறார்கள். ஆனால் நாம் மாத்திரம் முகமதியர் அல்லாதாரென்ற தொகுதிக்கு மாத்திரம், முகமதியர் அல்லாதார். என்ற தொகுதிக்கு நின்றுதான் இப்பொழுதும் சட்டசபை அங்கத்தினராகவும்
நாம் முகமதியர் அல்லாதார் தொகுதியில் ஓட்டர்களாகவும் இருந்து வரு கிறோம். அரசாங்கத்தாருக்கும் இதைத் தவிர வேறு பெயர் கிடைக்கவில்லை.
நமக்கும் சொல்லத் தெரியவில்லை...
இந்து மத பரிபாலன சட்டம் கொண்டு வந்த காலத்தில் இந்த பார்ப்பனர்.
கள் இந்து மதம் போயிற்றென்று சொன்னார்களே ஒழிய தங்களுக்கும் மகமதியரல்லாதார் என்கிற பெயர் வேண்டாம் என்று சொல்லவே இல்லை. ஏன் என்றால் வேறு பெயர் சொல்வதற்கு இல்லை. இருந்திருந்தால் வாதாடிப்
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பார்த்திருப்பார்கள். இவைகளெல்லாம் எதற்காக சொல்லுகிறேனென்றால் நமது எதிரிகள் நம் இயக்கத்தைக் கெடுக்க சில்லரை விஷயத்தைச் சொல்லி மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றுகிறார்களென்பதை தெளிவுப்படுத்தவே
யன்றி வேறல்ல. எந்தப் புராணத்திலும் எந்தச் சரித்திரத்திலும் இந்து மதம் என்பதைப் பற்றி எங்கும் ஒரு வரி கூட சொல்லவில்லை. ஆங்கில அரசாங்க முள்ள இந்த நாளில்தான் இந்து என்ற பெயர் ரயில்வே பிளாட்பாரத்திலுள்ள ஓட்டல்களில் இந்து பிரயாணிகளென்றும், வெளிக்குப் போக உள்ள இடங்களில் இந்து புருஷர்கள், இந்து பெண்கள் என்றும் எழுதியதைக் காணலாமேயன்றி வேறு எங்கும் காணமுடியாது. ஆகையால் இச்சங்கத்
திற்குப் பார்ப்பனரல்லாத வாலிப சங்கமென்று பெயர் வைத்துக் கொண்டதில்
சிறிதும் பிழை இல்லை.அநேகர் குற்றம் கூறினாலும், சமாதானம் சொல்லுவ தற்கு வேண்டிய சாதனங்களிருப்பதால் நாம் ஒரு சிறிதும் அதற்காக பயப்படாது நம் காரியத்தைச் செவ்வனே செய்து வரல் வேண்டும்.
பார்ப்பனரல்லாத வாலிபர்கள் செய்ய வேண்டுவன
நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி சிறிது சொல்லு கிறேன். நாம் சத்தியத்தின் பெயரால் படும் இடையூறுகளை வேருடன் களைந் தெறியும் வரை பார்ப்பனரல்லாத வாலிபர்கள் கண்டிப்பாய் அரசியலில் ஒருபோதும் தலையிடுதல் கூடாது.அரசியலில் தலையிட ஒரு பக்குவமுண்டு.. அந்த பக்குவம் உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் வந்த பின்பு அரசியலில் தலையிட்டால் பயன்படும்.நமக்கும் அரசியலுக்கும் தற்பொழுது பொருத்த
மும் கவனமும் வைக்கக் கூடாது. நாம் அனைவரும் பொதுவாழ்வில் சம சுதந்திரமும் பிறவியில் நமது வாழ்வும் துக்கமும் அனைவருடைய வாழ்வும்
துக்கமுமாகும் என்றும் பிறவியில் உயர்ந்தவருமில்லை இழிந்தவருமில்லை என்றும் உணர்ச்சி உண்டாகும் வரையில் அரசியலில் தலையிடுதல் கூடாது. அப்படி தலையிட்டால் அது தற்கொலையாகவே முடியும்.
அன்னியர்
மக்களுக்கு அன்னியர் ஆளுவது என்பது கஷ்டமாகத் தானிருக்கும். அந்த ஆட்சியை வாங்கி நாம் ஆளவேண்டுமென்ற எண்ணங்கள் சாதாரண மாக உண்டாவது இயல்புதான். அன்னியர் என்பவர் யார்? நாம் என்று சொல்லிக் கொள்பவர் யார்? என்று ஆராயப் புகின் அன்னியர் வெள்ளைக் காரரென்றும், நாமென்பது பிராமணர், சூத்திரர், பஞ்சமர், கிறிஸ்தவர்,
முகமதியர் மற்றும் பல சாதியாரும் என்று எண்ணியிருக்கின்றோம். பிராமண: னை நம்மவர்கள் என்பதில் சேர்க்கும் போது வெள்ளைக்காரர்களை மாத்திரம் எப்படி அன்னியர் என்று சொல்லக்கூடும்? பார்ப்பனனை விட வெள்ளைக்காரன் நமக்கென்ன கொடுமை செய்கிறான்? வெள்ளைக்காரன் நமக்கு செய்துவரும் கொடுமைகள் என்பதெல்லாம் பார்ப்பனன் யோசனை
குடி அரசு - 1927 (3) 254
கேட்டுப் பார்ப்பனன் சொல்லுகிறபடி பார்ப்பனன் உதவியால் அவன் சம்மதத்தின் பேரில் செய்கிறானா, தானாகவே செய்கிறானா? தவிர வெள்ளைக்காரன் நீங்கிய மற்றவர்கள் எல்லாம் ஒன்று என்றும், ஒன்றாய்ச் சேர்ந்து சுயராஜ்யம் கேட்கின்றார்கள் என்றும் எப்படி சொல்ல முடியும்? லார்டு
ஈர்வின் துரை இங்கு வந்து “நாங்கள் ஊருக்குப் போகிறோம். இந்த கஜானா சாவி இந்த முத்திரை இந்த பட்டம் ஆகிய மூன்றை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வதாகவே வைத்துக் கொள்ளுவோம். அதை யார் வாங்கிக் கொள்வது? முதலில் அய்யர் வருவார் “நான் தான் படித்திருக்கின்றேன் எனக்கு அரசாளும் திறமை வெள்ளைக்காரர்களை அடுத்து கற்றுக்கொண்டி ருக்கிறேன்” என்று நம்மிடத்தில் சொல்லி வெள்ளையரிடம் சென்று “நீங்கள் இவ்வளவு நாள் இங்கிருப்பதற்கு நாங்களல்லவா உதவி யாயிருந்தோம். உங்களை எங்கள் நாட்டாருக்கு காண்பித்துக் கொடுக்காமல், எங்கள் நாட் டாரை உங்களுக்கு காண்பித்துக் கொடுத்தோமே, நீங்கள் நன்றியுடையவர். என்கிறீர்களே, அப்படியானால் எங்களிடம் கொடு” என்பார்கள். நாம் சம்மதிக்காததாயிருக்கின்றோமா? “வெள்ளைக்கார அரசாங்கமிருக்கும் போதே, எங்களை சூத்திரர்கள் என்று கொடுமைப்படுத்தும் நீங்கள். வெள்ளைக்காரர்கள் போய் விட்டால் என்ன செய்ய மாட்டீர்கள்” என்று கேட்டு தடுப்போமா இல்லையா? இதைக்கேட்ட லார்ட் ஈர்வின் “நீங்கள் தான் பெருவாரியாயிருக்கிறீர்களே, நீங்களாவது வைத்துக் கொள்ளுங்கள்” என்று நம்மிடம் கொடுத்தால் பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? “வெள்ளைக்காரர் இருக்கும் போதே பார்ப்பன துவேஷம் நிறைந்திருக்கின்றது. நீங்கள் போய் விட்டால், நம் கதி என்ன” என்று சொல்லுவார்களா இல்லையா? இப்பொழுதே எத்தனையோ உத்தியோகங்கள் தங்களுக்கு இல்லை என்றால் வெள்ளைக் காரர்களுக்குப் போகப் பார்க்கின்றார்களேயன்றி நமக்குக் கிடைக்க சம்மதிக் கின்றார்களா? அதன் ரகசியம்தானே இரட்டை ஆட்சி ஒழிய வேண்டு மென்பது. அன்றியும் நாம் இருவரும் சம்மதித்து ராஜியாவதா யிருந்தாலும், மகமதியர்கள் சும்மாயிருப்பார்களா? “நாங்கள் இப்போது 7Y, கோடி இருக் கின்றோம். இன்னும் நான்கைந்து வருடத்திற்கும் நாங்களே பெரும்வாரியாக. 2 கோடிக்கு வந்து விடுவோம். அப்பொழுது உங்களையே துரத்திவிட எங்க.
ளுக்குத் தெரியும். அதுவரை நீங்கள் போகாதீர்” என்பார்களா இல்லையா? அவர்களும் சம்மதித்தார்களென்றே வைத்துக் கொள்ளுவோம். கிறிஸ்தவர்.
கள் சும்மாயிருப்பார்களா நாங்கள் சில பேர் உங்களை நம்பி இப்பொழுதுதான் கிறிஸ்தவர்களானோம். அப்படியிருக்க நீங்கள் போவதனால் எங்களுக் காகவும் ஒரு கப்பல் அதிகமாக ஏற்பாடு செய்யுங்கள், நாங்களும் உங்கள். கூடவே வந்துவிடுகின்றோம் என்பார்கள். அவர்களும் ஒப்புக் கொண்ட தாகவே வைத்துக் கொள்வோம். எம்.சி. இராஜா சும்மாயிருப்பாரா? “ஐயா எங்களுக்காகத்தானே கடவுள் உங்களை இங்கு அனுப்பினார். உங்களால் தானே நாங்கள் மனிதர்களாக இருக்கிறோம். அப்படி இருந்தும் நீங்கள். இருக்கும் பொழுதே எங்களை வீதியில் நடக்கக் கூடாதென்கிற இவர்கள்
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
நீங்கள் போய்விட்டால் என்ன செய்வார்கள். வண்டியில் கட்டி ஓட்டமாட்டார். களா என்பதை யோசித்துப் பாருங்கள்” என்று சொல்லி காலைப் பிடித்தாவது
குறுக்காட்டிக் கொள்வார்களா இல்லையா? இந்த நிலையில் நாம் என்பது யார். என்பதை யோசித்துப் பாருங்கள். ஒன்றும் இல்லை. ஒரு மந்திரி என்கின்ற, ஒரு பொறுப்புமில்லாத, உத்தியோகம் நமக்குக் கொடுத்திருக்கும் போதே நமது யோக்கியதை இப்படி இருக்கின்றது? வெளியில் சொல்ல வெட்கக்கேடு.
அன்றியும் அதற்கு பார்ப்பன சூழ்ச்சியும் அதற்கு மற்ற சூழ்ச்சியும் எப்படி இருந்து கொண்டு நாடு சிரித்து நம்மை மானக் கேடாக்குகின்றது. இனி அரசாக்ஷியே வந்தால் என்ன கதியாகும் என்பதை நீங்களே யோசியுங்கள்.
நான் வேண்டுமென்றாவது, வெள்ளைக்காரரென்கிற கொள்ளைக்காரருக்கு அனுகூலமாகவாவது, பார்ப்பனருக்கு இடையூறாகவாவது சொல்லவில்லை. நாட்டின் உயிர்நாடியைப் பார்த்து உணர்ந்து சொல்லுகின்றேன். எனவே நம்மில் ஒரு கூட்டத்தாரே ஏகபோகமாய் வகிக்கும் ஆதிக்கம் ஒழிந்தால், ஒருவரிடம் ஒருவருக்கு அன்பும் நம்பிக்கையும் ஏற்பட்டால், வெளிச்சத்தைக் கண்ட இருள் ஓடுவது போல் அன்னிய ஆக்ஷி நம்மை விட்டு ஓடி விடும். இதனால்தான் நான் அதுவரையில் குறிப்பாக நம் வாலிபர்களுக்கு அரசியல் உணர்ச்சி ஏற்படவே கூடாது என்கிறேன். அதனால் என்ன கெடுதி நேரிட் டாலும் நம் வாலிபர்கள் அரசியலினின்று முற்றும் விலகியிருத்தல் வேண்டும். உத்தியோகத்தால் தான் நமது பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பிளவேற் பட்டது. நம் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உண்மையாக உத்தியோகப்
பற்றின்றி ஆரம்பித்திருக்கலாம் அதை ஏற்படுத்திய தலைவர்களும் அதே எண்ணத்துடனிருந்து இறந்திருக்கலாம். இப்பொழுதும் பலர் உத்தியோக வெறிபிடியாதவர்களுமிருக்கிறார்களென்பதையும் நான் ஒப்புக் கொள்ளு கிறேன். ஆனால் கொஞ்சமிருந்தாலும் பிளவு உண்டாக்குகின்றது. நம் வாலிபர் கருத்தெல்லாம் நாம் எப்படி சுயமரியாதையடைவது? நாம் எப்படி விடுதலையடைவது என்பதையே கொண்டிருத்தல் வேண்டும். அதை விடுத்து உத்தியோகம் எப்படி பெறுவதென்ற எண்ணம் வாலிபர்களுக்குத் தோன்றாமலிருக்குமாறு செய்து கொள்ள வேண்டும். உத்தியோகங்க ளெல்லாம் வெள்ளைக்காரன் கையில்தானிருக்க வேண்டும். ஏனெனில் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டும் ஒருவரை ஒருவர் வைது கொண்டும் உத்தியோக வேலை பார்ப்பதில் நமது காலத்தை செலவு செய்து கொண்டுமிருப்பதால் அவன் மேலிருந்து நோகாமல் பணத்தைக் கொள்ளை கொண்டு போகிறான். உத்தியோக மூலம் அரசாங்க குற்றமும் பழியும் நம்மீது வீழ்ந்து, நாம் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டதுதான் மிச்சம். வெள்ளைக்காரன் அரசியலின் பேரால் நாம் கேட்பதெல்லாம் கொடுத்துக் கொண்டுதான் வருகிறான். நாம் ஒரு காலத்திலும் கனவிலும் நினையாத உத்தியோகங் களெல்லாம் நமக்குக் கொடுத்திருக்கிறான். அவைகளினால் நாமடைந்த பலனென்ன? ஒன்றுமில்லை. சீர்திருத்தங்களின் பயன்தானென்ன? ஒன்று மில்லை. முன்பு மூன்று வெள்ளைக்காரர்கள் பார்த்த வேலையை இப்பொழுது
குடி அரசு - 1927 (3) 256
எட்டுப்பேர் பார்க்கிறார்கள். இதற்குச் சம்பளம் ஏழைகள் தலையில் கை வைக்
கிறார்கள். இரண்டு சீர்த்திருத்தம் கொடுத்தாயிற்று. மூன்றாவது சீர்திருத்தம் தலைகாட்டுகிறது.அந்த சீர்திருத்தத்தில் கவர்னர் உத்தியோகம் கொடுத்தாலும் கொடுக்கலாம். அதைவிட வேறு உத்தியோக மென்னயிருக்கிறது? ஒன்று மில்லை. ஆனால் அதன் மூலம் வெள்ளைக்காரனுக்குப் பூட்சுதுடைக்க நாம் போட்டி போடப் போகின்றோம். நேற்றோ அல்லது முந்தைய நாளோ நண்பர். திரு.ஏ.இராமசாமி முதலியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒன்று சொன்னார்கள். அதாவது பார்லிமெண்ட் முதலிய சபைகள் ஏற்படுவதற்கு
முன்பு நமக்கு எவ்வளவோ சவுகரியமாய் இருந்தது. இப்போது சவுகரிய குறைவாக இருக்கிறது. என்னவென்றால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியார் நம் நாட்டை ஆளும் போது யாராவது 4 பேர் சேர்ந்து நம் குறையைத் தெரிவித்
தால் அப்பொழுதே கடிதமெடுத்து எழுதி ஒரு உத்திரவு பிறப்பிப்பார்கள்.
அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமிருந்ததாகவும் சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் சமஉரிமை சமசந்தர்ப்பம் இருந்ததாகவும் சொல்லுகிறார்கள். இந்த சீர்திருத்தத்தின் பெயரால் நம்மை யார் உதைக்கிறார்களென்று கூட
நம்மால் கண்டு அறிய முடியவில்லை. உண்மையான விடுதலை ஒரு காலத்தில் நம் நாடு அடையுமானால் நம் மக்கள் உத்தியோகத்திலில்லாத காலத்தில் தான் முடியும் என்று நினைக்கிறேன். நான் வரப்போகும் பார்ப்பன ரல்லாத வாலிபர் மகாநாட்டிற்கு வந்தால் வாலிபர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வருவேன். என் கொள்கை உங்க ளுக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் காங்கிரசு ஒழிய வேண்டும். இந்து மதம் தொலைய வேண்டும். பார்ப்பன ஆதிக்கம் அழிய வேண்டும். இம்மூன்றுமழிந்தாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இதை மகாத்மா இடமும் சொன்னேன். என்னை நன்றாய் விசாரித்தார். நான் சொன்னதில் உள்ள தத்துவத்தையும் ஒப்புக்கொண்டார். நீ சொல்வதெல்லாம் சரி, அப்படியாவதினால் உலகம் கெட்டு விடுமென்றார். அப்படியானால் நீங்களே இவற்றைக் கட்டிக் கொண்டு அழுங்கள் என்று சொல்லி விட்டு வெளிவந்தேன்.40 வருடமாக காங்கிரஸ் தோன்றியது முதல் அது நிறைவேற்றிய தீர்மானங்களெல்லாம் அனேகமாய் நிறைவேறியது. அதற்கு மேலும் சில வந்திருக்கின்றன. வெள்ளைக்காரர்களும் காங்கிரசு சொன்னபடி எல்லாம் நடந்து வந்திருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கிடைத்ததல்லாமல் பாமர ஜனங்களுக்கு லாபம் என்ன? கோர்ட்டுகள், கச்சேரிகள், வக்கீல்கள், நீதிபதிகள் அதிகமானார்கள். இதற்கு வரி அதிகமாயிற்று. நாட்டு மக்களுக்கு சர்க்கார் உத்தியோகமின்றி வேறு வழியில் பிழைக்க மார்க்கமில்லாமல் போய் விட்டது. நம் நாட்டை விட்டு வாரம் ஒன்றுக்கு லட்சக் கணக்கான மக்கள் பிழைப்பதற்கு வேறு நாட்டிற்கு ஓடுகின்றார்கள். சீர்திருத்தத்திற்கு முன் 40 கோடி ரூபாயாக இருந்த வரி இப்பொழுது 165 கோடி ரூபாயாக பெருகியிருக்கின்றது. இது தான் சீர்திருத்
ததின் பலன்.யோக்கியமான சீர்திருத்தமானால் நமக்கு நீதியில், வாழ்க்கையில்,
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
உரிமையில், வரியில் பலனிருக்க வேண்டும். வீதி விளக்கில் படித்தவர்களும், அன்னச்சத்திரத்தில் சாப்பிட்டவர்களும், பிச்சையெடுத்து பள்ளிக்கூடச் சம்பளம் கொடுத்தவர்களும், இன்று நாட்டையே காட்டிக் கொடுத்து பதவி பெற்று அதிகாரம் செய்கிறார்கள். அவன் நான்தான் அந்த உத்தியோகங்கள் பெற பொறுப்புள்ளவன் என்கிறான். ஒரு காலத்தில் நிறைந்த செல்வந்தர். களாயும் நாட்டிற்கு பொறுப்புள்ளவர்களாயும், யோக்கியர்களாயும், நீதி துரந்தரர்களாயுமிருந்தவர்கள் இப்போது கையில் அடப்பம் போல் காகிதக் கட்டு ஒன்றெடுத்துக் கொண்டு பார்ப்பனர்கள் வீடுகளில் ஏறி இறங்க வேண்டி யிருக்கின்றது. ஒரு கவர்னரும், இரு நிர்வாக அங்கத்தினரும் மேற்சொன்ன
மூவருக்கும் மூன்று காரியதரிசிகளுமேயிருந்தார்கள். இப்பொழுது அவர் களுடன் ஐவர்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரியதரிசியும் அதிகமாக ஏற்படுத்தப்பட்டது. வெள்ளைக்காரர்கள் முன்பு வாங்கியதில் ஒரு காசும் குறையாது வாங்குகிறார்கள். மற்ற ஐவருக்கும் 5000 ரூபாய் வீதம் எப்படி கொடுக்க முடியும்? இவ்வருஷம் நடக்கப் போகும் காங்கிரசுதான் ஆகட்டும். அதனால் நாட்டுக்கு என்ன பலனுண்டாகக் கூடும்? அதிகமான சீர்திருத்தம்
என்று கவர்னர் பதவி கேட்பார்கள். வெள்ளைக்காரரும் கொடுப் பார்கள். அதற்காக நம் மகாணத்தை மூன்று பிரிவாகப் பிரித்து ஒன்று சீனிவாச சாஸ்திரிக்கும், ஒன்று கோஷன் பிரபுவுக்கும், மற்றொன்று இன்னொரு வெள்ளைக்காரனுக்குமாக பங்கிட்டுக் கொள்ளுவார்கள். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய்தான் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று காங்கிரசு தீர்மானிக்கும். ஏனென்றால் உத்தியோகத்திற்குத் தகுந்த சம்பளம். வேண்டாமா என்பார்கள். அப்போதும் வெள்ளைக்காரன் தான் வாங்கும் சம்பளம் வாங்கித்தான் தீருவான். மேற்கொண்டும் ஒரு கவர்னராவான். சம்பளத்திற்காக அதிகமான இரு கவர்னர் கார்டின் விலை உயர்த்தியோ, குடி வரியை உயர்த்தியோ, சாமான் வரி உயர்த்தியோ, நிலவரி உயர்த்தியோ, வருமானவரியை உயர்த்தியோதான் தீர வேண்டி வரும். இவ்வரிச் சுமை களை சுமப்பவன் கதி என்ன? இதைப்பற்றி மகாத்மாவைக் கேட்டதில் தந்திரக் காரர்கள் நாட்டை ஆட்சி புரிவது சுபாவம்தானென சொன்னார். அப்படியே இருக்கட்டும். அதில் நமக்கும் உங்களுக்கும் ஏன் பங்கு இருக்க வேண்டும் என்றேன். தக்க மகான்கள் அந்த இடத்திற்கு வந்தால் எல்லாம் சரியாகும். அதுவரை அந்த ஸ்தாபனங்களை அழிக்காமல் வைத்திருக்க வேண்டு
மென்றார். உங்களை விட வேறொரு மகான் எப்பொழுது வருவார்? அவர் யார்? ஒரு கோடிரூபாய் கேட்டீர்கள்.15 நாளில் கொண்டு வந்து கொடுத்தார்.
கள். 1000பேர் சிறைக்குச் செல்லுங்களென்றால் முப்பதினாயிரக் கணக்காக சிறைக்குச் சென்றார்கள். சிறைச்சாலைகளிலே இடமில்லாதவாறு செய் தார்களே. இதை விட மகான் யார் என்றேன். ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பால் அப்படிப் பேசுகிறாய் என்றார்.எனக்கு யார் மீதும் கோபமில்லை. காங்கிரசு ஒழிய வேண்டும். அதை ஆரம்பித்தவர்கள் உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு ஆரம்பித்தார்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்,
குடி அரசு - 1927 (3) 258
அப்படியானால் தாதாபாய் நவரோஜி, கோகலே முதலிய இவர்களும் அப்படிப்பட்டவர்களா என்றார். தாதாபாய் நவுரோஜி, கோகலே, மகாத்மா காந்தி என்ற 3 பேர் யோக்கியர்கள் அதிலிருந்தால் பாக்கி 97 பேர். யோக்கியதையைப் பார்க்க வேண்டாமா என்று சொன்னேன். அன்றியும் பார்ப்பனர்கள் நாட்டிற்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறார்களா என்று யோசித்து ஒன்று சொல்லுங்கள் என்றேன். சொல்ல முடியாது. ஆனாலும் தள்ள முடியாதென்றார். கடைசியாக உத்திரவு பெற்றுக் கொண்டு திரும்பி விட்டேன். குருட்டு நம்பிக்கைகள் நன்றாய் நம் இரத்தத்துடன் கலந்து வேரூன்றி விட்டது. இதனால் என்ன ஆனாலும் வாலிபர்கள் முனைந்து நின்று வேலை செய்ய முற்படல் வேண்டும். வாலிபர்களென்றால் 18 வயதிலிருந்து 26 வயதிற்குட்பட்டவர்கள்தான் என்பது என் எண்ணமல்ல. என் எண்ணப்படி
சாகும் தருவாயிலிருக்கும் முதியோனும் அவன் மனதில் மக்களுக்காக பாடுபட வேண்டும். அதற்காக உயிரையும் விடத் தயார் என்று எண்ணினால்
அம் முதியோனும் வாலிபனே.ஆனால் வயதில் வாலிப பர்வத்திலிருந்தும் நமக்கென்ன இதைப்பற்றி என்று சுயமரியாதையைக் கவனிக்காமலிருப்பவன்.
ஒரு காலமும் வாலிபனாகான்.ஆகவே, நீங்கள் தைரியமாக உணர்ச்சியோடு உழைத்துப் பெரியோர்களையும் சுயநலக்காரர்களையும் உங்கள் வசம் திருப்ப முயற்சி செய்தல் வேண்டும். இப்பொழுது நாம் சமத்துவத்திற்காக பாடுபட்டு வெற்றி பெற்றுவிட்டால் பிறகு அரசாங்கக் கொடுமைகளை மெள்ள ஒழித்து விடலாம்.மற்றும் சுயமரியாதை சத்தியாக் கிரகத்தையும் கவனியுங்கள்.
எனக்குத் தெரிந்தவைகளையும் என் மனதிற்கு தோன்றியவைக ளையும் பழிபாபங்களுக்காக சிறிதும் அஞ்சாது உங்கள் முன்னிலையில் பகர்ந்தேன். அதில் எது சரியென்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அதைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு வேண்டி முடித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு:19.10.27- ல் சென்னை புரசைவாக்கம் அன்னதான சமாஜத்தில் நடை பெற்ற பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கக் கூட்டத்தில் திரு. சொக்கவிங்க முதலியார். பி.ஏ. பி.எல். அவர்கள் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 30.10.4927
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வருணாசிரம மகாநா௫
காங்கிரசின்போது காங்கிரசுப் பந்தலில் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு நடக்கப்போவதாய் பல பத்திரிகைகளில் தெரிய வருகின்றது.
வருணாசிரம மகாநாடு என்பது என்ன என்று நாம் மக்களுக்கு விளக்க. வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது குறிப்பிடூவோம். என்னவெனில் உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் 6 வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதாவது:-1. பிராமணன் 2 க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் 5.பஞ்சமன் 6.மிலேச்சன் என்பதாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதில் பிராமணன்
உயர்ந்தவன் குருவாயிருக்கத்தக்கவன், க்ஷத்திரியன் அதைவிடத் தாழ்ந்தவன் அரசனாயிருக்கத்தக்கவன், வைசியன் அதைவிடத் தாழ்ந்தவன் வியாபாரியாய் இருக்கத்தகுந்தவன், சூத்திரன் அதைவிடத் தாழ்ந்தவன் மேல்கண்ட மூவருக்கும் அடிமையாய் இருக்க வேண்டியதோடு சிறப்பாக பிராமணர்களுக்கு அடிமையாகவும் இருப்பதுடன் சூத்திரனது பெண்களும் பொருள்களும் பிராமணர்களுக்கே உரியது என்றும், கொடுக்காவிட்டால் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும், அவர் படிக்கவும் கடவுளை நெருங்கி வணங்கவும் உரிமையற்றவன் என்கின்றதுமான கொள்: கையை கொண்டது. ஆதிதிராவிடர், ஆதிசூத்திரர், அவர்ணஸ்தர் நாம்
சூத்திரர் என்பதான கோடிக் கணக்கான மக்கள் பஞ்சமர், அதாவது காணவும், நெருங்கவும், நிழல் மேலே படவும், பேசவும், வழியில் நடக்கவும், கோயில் என்பதில் நுழையவும், கடவுள் என்பதை தரிசிக்கவும் உரிமை இல்லாததான கொள்கையைக் கொண்டது.
மிலேச்சர்கள் என்பது மகமதியர், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என்போரகளல்லாதவர்களையும், சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷை பேசுகின்றவர்களையும் குறியாய் கொண்டது. இந்து சாஸ்திரங்கள் மதத் தத்துவங்கள் என்பவைகளின்படி பஞ்சமர், மிலேச்சர் என்பதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் பார்ப்பன செல்வாக்காலும் அவர்களினது அவசியத்தா
லும் இவ்விரண்டு வகுப்புகளும் ஏற்பட்டு பழக்கத்திற்கும் எப்படியோ ஆதியில் கொண்டு வந்து விடப்பட்டு விட்டது. ஆனால் இப்போது
குடி அரசு - 1927 (3) 260
இவைகளுக்கு பல தகராருகள் ஏற்படுவதால் ஆறு வருணத்தையும் இரண்டு வருணமாக்கி, அதாவது கலியுகத்தில் பிராமணன், சூத்திரன் என்னும் இரண்டைத்தவிர வேறு வருணம் இல்லை என்பதாக முடிவுகட்டிஅதையே மதத் தத்துவமாகவும் ஆக்கி விட்டார்கள். ஆனாலும் இப்பார்ப்பனர் பேச்சை நம்பி ஆதியில் பூணூல் போட்டுக் கொண்ட பலர் தங்களை பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்று கொண்டிருந்தவர்கள், இப்போது தகரார். செய்ய வருவதால் அதற்கு அவர்கள் ஏமாறும்படி சமயத்திற்கு ஏற்ற தந்திரங்கள் செய்து நமது பார்ப்ப னர்கள் தப்பித்து வருகிறார்கள். இது எப்படி இருந்தாலும் ஸ்ரீமான் காந்தி அவர்களாலேயே இந்த வருணாசிரம அடிப்படைத் தத்துவமும் கொள்கை யும் ஒப்புக் கொண்டாய் விட்டது. அதாவது பார்ப்பனர்களுக்கும், ஸ்ரீ காந்திக்கும் வர்ணம் நான்கு என்பதிலும், அவைகளுக்கு பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நான்கு தொழில்கள். உண்டு என்பதிலும், அதுவும் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே பிறவியில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஏற்படுகிறான் என்பதிலும் யாதொரு அபிப்பிராய வித்தியாச முமில்லை. ஆனால் வருணம் ஆறா அல்லது நான்கா அல்லது இரண்டா என்பதுதான் இப்போது ஸ்ரீ காந்திக்கும் பார்ப்பனருக்கும் சண்டை.பார்ப்பனர் கள் இரண்டு வருணம்தான், அதாவது பிராமணன், சூத்திரன் என்பதாக சொல்லுகிறார்கள். ஸ்ரீ காந்தி நாலு என்கின்றார். இந்த வாதில் நமக்கு எவ்வித லாபமும் இல்லை.ஏனெனில் பார்ப் பனர்கள் கொள்கைப்படியும் ஸ்ரீ காந்தி அவர்கள் கொள்கைப்படியும் நாம்
சூத்திரர்களில்தான் சேர்க்கப்படுகின்றோமே ஒழிய வேறில்லை. சூத்திரனின்
தருமம் பார்ப்பானுக்கு வேலை செய்ய வேண்டியது. இது பிறப்புரிமை என்று இருவரும் சொல்லுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி கொடுமையுள்ளதும் அயோக்கியத் தனமானதுமான ஒரு கொள்கை கொண்ட வருணா சிரமதர்மம் என்பதாக ஒரு மகாநாடு நடப்பதை எப்படிப் பொதுமக்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் என்று பார்ப்பனர்கள் நினைத்திருக்கின்றார் கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
உலகத்தில் இதுசமயம் எழுந்திருக்கும் சுயமரியாதை உணர்ச்சியைப் பார்த்த பிறகும் சர்க்கார் எப்படி இவ்வித போக்கிரித் தனங்களுக்கு இடம் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை. சாதாரணமாக ரங்கிலாரசூல் என்ற மகமதிய மத தலைவராகிய ஸ்ரீமான் மகமது நபி அவர்கள் விபசாரம் செய்தார் என்கிற தத்துவம் கொண்ட துண்டு
விளம்பரம் போட்டதற்காக பல விவகாரங்களும் பல கொலைகளும் கூட நடந்து வருவதுடன், ஏதோஒரு பெரிய சதியாலோசனைக் கூட்டமும் பின்னால் இருந்து கொண்டு இனியும் வெகு பேரை கொலை செய்யக் காத்திருப்பதாகவும் சந்தேகப்படும்படியான காரியங்கள் நடந்து வருகின்ற இக்காலத்தில் ஒரு பெரிய சமூகத்தையே ஒரு சிறு கூட்டத்தாராகிய சோம் பேறிகள், தங்களுக்கு பிறவி அடிமைகள் என்றும், அவர்களது பெண்கள்
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
எல்லாம் தங்களுக்கு வைப்பாட்டிகள் என்றும், அவர்கள் பேசுவது மிலேச்ச பாஷை என்றும், அவர்களது சொத்துக்கள் எல்லாம் தாங்கள் பலாத்காரத் தினால் பிடுங்கிக் கொள்ளலாமென்றும், இனியும் என்ன என்னமோ இழிவுக் கொள்கைகள் கொண்டதான ஒரு விஷயத்தை நிலை நிறுத்த ஒரு மகாநாடு கூட்டினால் மக்கள் எந்த விதத்தில் பொறுமையோடு இருப்பார்கள் என்று நமது சர்க்காரார் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு விளங்க வில்லை. எப்படியாவது கலகத்திற்கும் அடிதடி சண்டைக்கும் இடம் கொடுத்து கொலைகள் நடக்கின்ற தருணம் வந்தால்தான் தங்கள் அக்கிரம ஆட்சி நடைபெற சவுகரியம் ஏற்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.
குடி அரசு - தலையங்கம் - 30.10.1927
குடி அரசு - 1927 (3) 262
தேவதாசி விண்ணப்யம்
நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும் மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபட வேண்டு மென்பதாக பலர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக சென்னை சட்ட சபை அங்கத்தினரும், உபத் தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால் விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக் கட்டி (முத்திரை போட்டு! விடும் வழக்கம் கூடாதென்றும் அப்படி செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும் அதற்குப் பின்புறம் சிலரிருந்துக்கொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வ
மாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஏனெனில் அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவாது அப்பெண்: மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்பு கெடாம லிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்க முடியாது. ஆனால் அப் பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வை கூட நிலத்தில் விழாமல் மேலாமினுக்காய் இருந்து வாழ்ந்து வரும் மாமாக்கள் என்று சொல்லுகின்றவர்களின் வேலை யில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும். ஆதலால் அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூலக்கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும் இக் கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும் கொடுமையானதுமான காரியம் வேறில்லை.
தவிர மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும் நமது மற்றப் பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து இம்மாதிரி ஒரு கூட்டம்
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டுமென்று சொல்லு கின்றார்களாம். இந்தக் கொடுமையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால் அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற ககஷியை நியாயம் என்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை தலைமுறையாக தங்கள் பெண்களை உதவி வர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக் கின்றது? என்று கேட்பதுடன் அந்த தேசாபிமானமும் நாட்டின் கற்பு அபிமா னமும் கொண்டதான இந்தப் பரோபகாரம், எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்ற வகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆக்ஷேபனை. அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும் கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆக்ஷேபனை என்று கேழ்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித் தானே ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்துவிட்டன.
தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள்
கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும் அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது. இப்படி சொல்லுவதானது ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும். இயற்கைத் தத்துவமும், கடவுள் சித்தமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப் பிராயம். ஆனாலும் பெண்களுக்கு காவலும் கட்டுப்பாடும் நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை கற்பு என்று நாம் ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விஷயத்தில் உலகத் திலுள்ள எல்லா மதமும் பழக்கத்தில் அநியாயமாகத்தான் நடந்து கொள்ளு
கின்றது. ஆனால் இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது
என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இருபாலருக்கும் சரிசமானமான சுதந்திரமில்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.10.1927.
குடி அரசு - 1927 (3) 264
வால் S
யார்ப்பணால்லாத வாலிபர் மகாநா௫
சென்ற வாரம் 22, 23 - ம் தேதிகளாகிய சனி ஞாயிற்று கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட நாயர். பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு பெங்களுர் சட்டசபை மெம்
பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது. சுமார் ஆண், பெண் உட்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய்திருந்தார்கள். அவ்வாலிப சங்கத் தலைவரும் மகா நாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபந்யாசமும், வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும், பார்ப்பனரல்லாத வாலிபர்களும் பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றன. அவற்றை ஒவ்வொரு வரும் கவனித்துப் படிக்க வேண்டியது அவசியம். தவிர இம்மகாநாடானது அளவுக்கு மேல் வெகு விமர்சையாகவும் அதி ஊக்கமாக வும், மிக தாராள நோக்கத்துடனும் நடைபெற்றதானது நமது நாடு விழித்துக் கொண்ட தென்பதையே காட்டுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மா னங்கள் உலகத்தையே மூடநம்பிக்கையிலிருந்தும் அடிமைத் தனத்தி லிருந்தும் விடுதலை செய்யத் தகுந்த அவ்வளவு சக்தி அடங்கியவைகளா கவே இருந்தன. உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தையும் அதை ஆதாரமாகக் கொண்ட புராணங்களையும் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ய வேண்டு மென்று செய்த தீர்மானமும், சூத்திரன் என்று கூப்பிட்டால் பினல் கோட் சட்டப்படி கடுங்காவல் தண்டனையும் கசையடியும் கொடுக்க வேண்டும் என்று பேசிய பேச்சும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எல்லோரும் அறிந்து விட்டார்கள் என்பதையே வெளியாக்குகிறது. அன்றியும் குடும்பச் சொத்துக்
களில் ஆண்களுக்கு உள்ளது போலவேபெண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டுமென்று செய்த தீர்மானமும், விதவைகளான பெண்களுக்கும் குடும்பசொத்தில் தங்கள் புருஷர்கள் இருக்கும் போது அனுபவித்து வந்த வாழ்க்கையையே அளிக்க வேண்டுமே அல்லாமல் ஜீவனாம்சம் என்பதாகச் சொல்லிக் கொண்டு வக்கீல் வீடுகளிலும் கோர்ட்களிலும் அலையா திருக்கச்
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
செய்ய வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவைகளாகிய பல தீர்மானங்களும், சுயமரியாதைக்காகச் செய்யப்படும் சத்தியாக்கிரகங்களிலும் அதை ஆதரிப்பதுடன் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்த தீர்மானமும் இவைகளில் காட்டிய உற்சாகமும் தமிழ் நாட்டின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வீரம் எழுந்து விட்டதென்பதையே காட்டுகின் றன. இவ்வாலிப சங்கமானது இத்தீர்மானங்களுடன் திருப்தி அடைந்து விடாமல் இவை அமுலுக்கு வரத்தகுந்த அளவு வேலை செய்ய வேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன் பம்பாய் வாலிப மகாநாட்டிலும் ஏறக்குறைய இது போன்ற தீர்மானங்களே நிறைவேறி இருக்கின்றன. ஒரு நாடு விடுதலை அடைய வேண்டுமானால் அந்நாட்டு வாலிபர்களுக்கு விடுதலை உணர்ச்சி வர வேண்டும் என்கின்ற ஆப்த வாக்கின்படியே நமது நாட்டுக்கு இப்போது விடுதலை அறிகுறிகள் காணப் படுகின்றதும், அத்துடன் பால்யைகளும் முனைந்து முன் இருக்கின்றதானது இம்மகாநாட்டால் அறியலாம். ஸ்ரீமதிகள் கிருஷ்ணாபாய் B.ALT, 0/;நாயகம்,8.4, பாரிஜாதம் BA, இந்திராணி பாலசுப்ரமணியம், ஸ்கவுட்
மாஸ்டர், அலமேலு மங்கைத்தாயாரம்மாள் முதலிய ஸ்திரி ரத்தினங்களின் சொற்பொழிவுகள் முன் காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காணப்படும் வீரத்தாய்மார்களை எல்லாம் உறுதிபடுத்தியது. எனவே வாலிப சங்கத்தையும் இம் மகாநாட்டையும் அதன் நிர்வாகிகளையும் அதற்கு ஆதரவளித்த பெரி யோர்களையும் நாம் மனப்பூர்வமாய் பாராட்டுவதுடன் நமது கொள்கைக்குப் பின்பலமாயிருப்பதற்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்து கொள்ளு
கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.10.1927.
குடி அரசு - 1927 (3) 266
சூத்திரன்
சூத்திரன் என்கிற வார்த்தையானது இழிவான அர்த்தத்தைப் புகட்டி வஞ்சனையாக ஏற்படுத்தப்பட்டதென்றும், அது பார்ப்பனர்களின் சூழ்ச்சி
யால் பார்ப்பன ஆதிக்கத்திற்காக உண்டாக்கப்பட்ட தென்றும், அவ்வார்த்தை நமது நாட்டில் எந்த விதத்திலும் நம்ம தலையில் இருக்கக் கூடாதென்றும்,
கிளர்ச்சி செய்து அதில் ஒரு விதமான வெற்றிக்குறி காணப்படுகிற காலத்தில் சர்க்காராரே சூத்திரன் என்கின்ற பதத்தை உபயோகித்து வருகின்றார்கள் என்றால் இந்த சர்க்காருக்கு கடுகளவாவது மக்களின் யோக்கியமான உணர்ச்சியில் கவலை இருப்பதாக யாராவது எண்ணக்கூடுமா? பார்ப்பனர். களே இப்போது சூத்திரன் என்று சொல்ல பயப்படுகிறார்கள். அவர்கள் எழுதி கட்டித் தொங்க விட்டிருந்த போர்டு பலகைகளையெல்லாம் அவிழ்த்தெறி கின்றார்கள். வாழ்க்கையில் இப்போது சூத்திரன் என்கின்ற சப்தம் பார்ப்பனப் பெண்களிடையும் கோமட்டி செட்டியார்கள் என்கின்ற ஒரு வகுப்புப் பெண்களிடையும் தான் இப்போது உச்சரிக்கப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களில் நாளுக்குநாள் மறைந்து கொண்டே போகின்றது. அப்படி இருக்க சர்க்காரில் அதுவும் ஒரு பார்ப்பனரல்லாதாராகிய ஒருவரின் ஆதிக்கத்தில் உள்ள இலாகாவில் அதுவும் நமக்கே முழு அதிகாரமும் கொடுத்திருப்பதாக பிரித்து விடப்பட்டதான மாற்றப்பட்ட இலாகாவாகிய ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் அதுவும் ஜாதி வித்தியாசமில்லை பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற கொள்கையை உடையவரும் அதை அமுலில் காட்டும் முகத்தால் ஒரு பார்ப்பன பெண் மணியை மணந்தவருமான ஸ்ரீமான் டாக்டர் சுப்பராயக் கவுண்டர் அவர்களின் ஏகபோக ஆக்ஷியில் உள்ள இலாகாவில் பிராமணன், க்ஷத்திரியன், விஸ்வ பிராமணன், சவுராஷ்டிர பிராமணன், வைசியன், சூத்திரன், ஆதிதிராவிடன், ஒடுக்கப்பட்டவன், பிற்பட்டவன் என்று கலம் போட்டு பிரித்து சட்டசபைக்குத் தெரிவிப் பாரானால் அவரது புத்திக் கூர்மையை என்னவென்று சொல்லக்கூடும். நமக்கு இதைப்பற்றி அதிகமாக
எழுத பல ஆதாரங்களும் ஆத்திரங்களும் இருந்தாலும் அடுத்தாப் போல் கூடும் சட்டசபை கூட்டத்தில் இக்குற்றத்தை உணர்ந்து சூத்திரன் என்ற வார்த்தை உபயோகித்ததற்கு வருந்தி அவ்வார்த்தையை தாம் உபயோகித் திருக்கிற அரசாங்க ஆதரவிலிருந்து எடுத்து விட நமது டாக்டர் சுப்பராய
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கவுண்டருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்து அதில் அந்தபடி நடக்காவிட்டால் பிறகு மற்ற விவரங்கள் எழுதலாம் என்கிற எண்ணத்துடன் இதை இத்துடன்
முடிக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.10.1927.
குடி அரசு - 1927 (3) 268
ஸ்ரீமான் காந்தி
ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று ஐரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்
கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார். நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்.
கள். ஆகவே அவர் அவ்வளவு தூரம் ஐரோப்பிய அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகின்றது. இப்படி ஐரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும் வரவேற்றுக்கொண்டாடத்தக்க வராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான ஐரோப்பியரல்லாத - பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு அரிசி பதம் பார்த்தால் போதும் அல்லவா?
குடி அரசு - கட்டுரை - 30.10.1927
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஆதித்திராவிட மகாநா௫
காட்பாடிக்கடுத்த பிரம்மாபுரம் என்கிற ஊரில் ஸ்ரீமான் ராவ்பகதூர்
M.C. ராஜா... அவர்கள் அக்கிராசனத்தின் மீது கூட்டப்பட்ட ஆதிதிராவிட மகாநாட்டில் தலைவர் செய்த உபற்யாசத்தின் முக்கிய நோக்கத்தை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதில் மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தி சாம்பலாக்க வேண்டும் என்பதாகப் பேசியிருப்பதுடன் அதை பறிமுதல் செய்யவேண்டும் என்று தீர்மானமும் செய்திருப்பதானது அச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள சுயமரியாதையை விளக்குகிறது. தவிர வீதியில் நடக்க உரிமை வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கும் தீர்மானமும் அது போன்ற
மற்றும் மனித உரிமை கேட்கும் தீர்மானமும் இந்த நாட்டில் மக்கள் சுய மரியாதையடைவதற்கு தகுந்த யோக்கியதை இல்லையென்று காட்டுவதற்கு உதவியாயிருக்கின்றது. எனவே சுயமரியாதை பெற்ற பிறகுதான் சுயராஜ்யம் என்பதைப்பற்றி யோசிக்க இடமுண்டு என்பதற்கு இந்த ஆதிதிராவிட மகாநாடே போதுமான அத்தாகூஷியாகும் என்பது நமது அபிப்பிராயம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 30.10.1927
குடி அரசு - 1927 (3) 270
னங்கும் சுயமரியாகை சத்தியாக்கிரகம்
தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியநாடு முழுவதிலுமே இது சமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதை பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு வடதேசத்
தில் உள்ள படகு ஓட்டும் கூட்டத்தாரான செம்படவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களை தீண்டுவதில்லை என்கின்ற வகுப்பாருக்கு படகு ஓட்டுவதில்லை என்று கட்டுப்பாடு செய்து கொண்டது யாவருக்கும் ஞாபகமிருக்கலாம். மறுபடியும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சத்தியாக்கிரஹம் ஆரம்பித்ததும்,
அதற்கு ஸ்ரீமான் காந்தி மத்தியஸ்தராயிருந்து அரசாங்கத்தார் சீக்கிரம் அனு கூலம் செய்வார்கள் என்று ஒப்புக்கொண்டு இருப்பதும், புராணம், சாஸ்திரம் முதலிய குப்பைகளை எரிப்பதுடன் மதாச்சாரியார்கள் என்பவர்களையும் பஹிஷ்கரிக்க வேண்டுமென்று பம்பாய் மாணவர்கள் ஒன்றுகூடி தீர்மானித்த
தும், சென்னையிலும் அதுபோலவே பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில், மனிதனின் சுயமரியாதைக்கு விரோதமான மனுதர்ம சாஸ்திரம், புராணம் இவைகளை சர்க்காரார் பறிமுதல் செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்த
தும், தாழ்ந்த ஜாதி, தீண்டாத ஜாதி, சூத்திரன் ஆகிய வார்த்தைகளை உபயோ கித்தால் அவர்களை கிரிமினல் சட்டப்படி தண்டிக்க சட்டம் ஏற்படுத்த வேண்டு மென்று சொன்னதும், ஆதிதிராவிடர்கள் என்கிற கூட்டத்தார்
மகாநாட்டிலும் வர்ணாசிரம தர்மத்தை போதிக்கும் ஆதாரங்களையெல்லாம் பறிமுதல் செய்யவேண்டுமென்று பேசியதும் தீர்மானித்ததும் மற்றும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிலும் கும்பகோணம் நாடார் சமூக மகா நாட்டிலும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்ததும், பம்பாயி லுள்ள பல மக்களும் கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் ஆரம்பித்திருப்
பதும் மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் பம்பாயிலுள்ள சென்னைப் பார்ப்பனர் கள் ஓட்டல்களில் உள்ள வித்தியாசத்தை ஒழிக்க, ஜாதி சம்ஹார சக்கிர சங்கத்தார் சத்தியாக்கிரகம் செய்ய முன்வந்திருப்பதும்,மற்றும் பம்பாயிலுள்ள பனஸ்வதி என்கின்ற ஆலயத்தில் தரிசனம் செய்ய ஆவலுள்ள யாரையும் உள்ளே விடாததற்காக அக்கோவிலையே பகிஷ்கரிக்க வேண்டுமென்று முடிவு செய்ததும், மகத் என்கின்ற இடத்தில் உள்ள பொது குளத்தில் ஒரு கூட்டத்தாரை ஸ்நானம் செய்ய வொட்டாமல் தடுப்பதை ஒழிக்க டிசம்பர்.
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மாதம் 25 ௨ முதல் சத்தியாக்கிரகம் செய்யப் போவதாய் ஏற்பாடு செய்து 500
ரூ. வசூலாயிருப்பதாயும், பல தொண்டர்களும் சேர்ந்திருப்பதாகவும் தினப்படி பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இது மாத்திரமல்லாமல் சமூகங்களி லுள்ள சில கொடுமைகளையும் விலக்குவதற்காக பெண்களைத் தயாரிப்ப தான பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க செங்குந்த சங்கங்களும், சட்ட சபை மசோதாக்களும் பறந்து கொண்டு மிருக்கின்றன. மது விலக்குக்கும் எங்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, நாட்டின் சுயமரியாதைக் கும் ஒழுக்கத்திற்குமான வேலைகள் தீவிரமாய் நடை பெறுவதுடன் இன்ன மும் ஒவ்வொருவருடைய கவனமும் உணர்ச்சியும் இதிலேயே செல்லும் குறிகளும் காணப்படுகின்றன.
இப்படி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் நாளையில் நம்நாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கியதை எப்படி இருக்கின்றதென்று பார்ப்போமானால் இவைகள் ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையாய் இருந்துகொண்டு மதம் போச்சு, கடவுள் போச்சு, கோவில் போச்சு, குளம் போச்சு, நாஸ்திகமாச்சுது என்பதாக ஓலமிட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கப் பார்க்கின் றார்கள். மக்களின் சுயமரியாதைக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்படுத்துகிற இயக் கங்களை வைதுகொண்டு, அதை அழிப்பதற்கும் முயற்சி செய்து கொண்டு, முட்டாள்களையும், அயோக்கியர்களையும், வயிற்றுச் சோற்றுக் கூலி களையும் பொறுக்கி எடுத்துத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, அவர்க ளுக்குக் காசு, பணம், பட்டம், பதவி மற்றும் என்னென்னவோ முதலியவை களை உதவி, இவற்றின் மீது ஏவிவிட்டு நாட்டில் கலகம் விளைவிப்பதும், மக்களுடைய கவனத்தை தப்பு வழியில் இழுத்து விடுவதுமான கொடுமைகள் ஒரு பக்கம் செய்து கொண்டு மற்றொரு பக்கம் காங்கிரஸ் என்றும், சுயராஜ்யம் என்றும் பித்தலாட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாய் சர்க்காருக்கு உள் ஆளாய் இருந்து உத்தியோகங்கள் பெற்று, மாதம் 1000,2000, 5000 சம்பளம் பெறுவதில் கவனம் செலுத்திக்கொண்டு ஈன வாழ்வு வாழ்வ தையே பொதுநல சேவையாய் காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் இழிதொழில் நிற்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை.
இவ்வளவு அக்கிரமங்களையும் செய்துகொண்டு இருப்பதல்லாமல் இதை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால், அவர்களை வகுப்பு துவேஷக்காரர்கள் என்றும், அசுரனென்றும், ராக்கதனென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதுமாயிருக்கின்றார்கள். இந்த விஷயங்களை உணருவதற்கு நமது நாட்டு மக்களுக்கு புத்தி இல்லாமல் இனியும் அப் பார்ப்பனர்களை நத்திக்கொண்டு பிழைக்கவே ஆசைப்படுகின்றார்கள். இந்த மக்களைப் பார்க்கும் போது ஒரு வேசி வீட்டில் உள்ள வாலிபன் ஒருவன் வேசியான தன் தாயா ருக்கோ தமக்கைக்கோ ஆட்களைக் கூட்டிக்கொண்டு போவதையும், தூதுக் கடிதங்கள் கொண்டு போய்க்கொடுத்துப் பதில் வாங்கி வருவதையும் பார்ப் பது நமக்கு ஆச்சரியமாய்த் தோன்றவில்லை.
குடி அரசு - 1927 (3) 272
ஏனெனில் ஒரு பெரும் சமுகத்திற்கே இவ்வளவு பெரிய இழிவு செய்து கொண்டிருக்கும் பார்ப்பனனிடம் கூடிக்கொண்டு அவ்விழிவுகள் தொலைய ஏற்படுத்தப்படும் இயக்கங்களுக்கு விரோதமாய் இருக்க மனம் சம்மதித்த ஒருவனுக்கு மேற்சொன்ன தூதுக்கடிதம் பெற்று போய்வருவது கஷ்டமான காரியமாயிருக்குமென்று நமக்குத் தோன்றவில்லை.
நிற்க, நமது ஒழுக்க முன்னேற்றத்திற்கு பார்ப்பன முட்டுக்கட்டை எவ்வளவு தூரம் துணிவு பெற்று இருக்கின்றது என்பதைக் காட்ட ஒரு சிறு உதாரணத்தைச் சொல்லுகிறோம். அதாவது ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள்: விபசாரத்திற்கு பெண்களை விடும் - கோவில் பேரால் பொட்டுக்கட்டும் - வழக்கத்தை ஒழிக்கக் கொண்டுவந்த மசோதாவுக்கு எதிர் பிரசாரம் செய்யப் புறப்பட்ட சுயராஜ்யக் கட்சியும் அதன் உயிர் நாடியுமான ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் அவர்கள் இதைப்பற்றி பேசும்போது என்ன சொல்லுகிறார். என்றால் “பொட்டுக்கட்டுதல் என்பது மத ஆட்சாரமும் குல தரும முமாயிருக்கின்றது என்று சொல்லப்படுகிறது. கோவிலில் நாட்டியம் முதலிய பணிகள் செய்வதற்கு தேவதாசிகள் ஏற்பட்டிருக்கிறார்கள், எனவே இது மத சம்மந்தமான விஷமாய் இருக்கின்றது. இம்மாதிரி மத சம்பந்தமான விஷயங்களில் பிரவேசித்து இன்று பொட்டுக்கட்டுவதை ஒழிக்கவேண்டுமென்று சொல்ல முன் வருவோமானால், மற்றொருபுறம் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் வரதராஜுலு நாயுடுவும் கோவிலுக்குள்
குருக்கள் ஒழிக்கப்படவேண்டுமென்று சொல்லுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி விஷயங்களில் நாம் தலையிட்டுக்கொள்ளக்கூடாது” என்று பேசினாராம். இதிலிருந்து பார்ப்பனர்கள் நமது நாட்டு ஒழுக்கத்திற்கும் சுயமரியாதைக்கும் எவ்வளவு தூரம் எதிரிகளாயிருக்கின்றார்கள் என்பது விளங்காமல் போகாது. விபசாரம் கூடாது என்றால் அதை ஒழிப்பது மதத்துக்கு விரோதம் என்று சொல்லுவார்களானால், அம்மாதிரி மதத்திற்கு நமது நாட்டில் என்ன வேலை என்று கேட்கின்றோம். அவ்விபசார ஸ்திரீகளை: வேண்டி இருக்கின்ற கோவிலும் சாமிகளும் நமது நாட்டில் எப்படி வைத்துக் கொண்டிருக்கத் தக்கனவாகும் ?
பார்ப்பனப் புரட்டுப்படிநமது மதத்திற்கும் சாமிகளுக்கும் வேண்டாத இழிவான காரியங்கள் எது நமது நாட்டில் இருக்கின்றது ? தினம் ஆயிரக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், எருமைக் கிடாக்களும், கோழிகளும் பன்றிகளும் வெட்டப்படுவது இந்து மதக் கடவுள்களின் பேரினாலல்லவா என்று கேட்கின்றோம்.தினம் ஆயிரக்கணக்கான கல்லுக்குடங்களும் சாராயப் புட்டிகளும் கஞ்சா அபின் உருண்டைகளும் படைப்பது இந்துமதக் கடவுள்
கள் பேராலா அல்லவா என்று கேட்கின்றோம்.
சிவநேயச் செல்வர்கள் ஒரு புறம் ஜீவகா ருண்ணியப் பிரசாரம் செய்து வருவதும் சக்தி காளி) நேயச் செல்வர்கள் ஒரு புறம் கள்ளும், மாம்சமும்
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வைத்துப் படைப்பதும் இந்து மதக் கடவுள்கள் பேராலல்லவா என்று கேட்கின்றோம்.
கோவில்களுக்குள் சாமிக்கு நாட்டியமாட என்பதாக அலங்கரித்துக் கொண்டு வந்து, சாமி கும்பிட வந்த பக்தனுக்கு பாதி கொங்கையைக் காட்டி கண்சிமிட்டி ஜாடை செய்து வீட்டிற்கு கூட்டிப்போய் அவனுக்கு மேக நோயைக் கொடுத்து மடியிலிருக்கும் பணத்தைப் பிடிங்கிக் கொண்டு வெளியில் தள்ளுவது இந்து மத சாமியின் பேராலா அல்லவா என்று கேட்கின்றோம்.
மக்களுடைய வீடு வாசல்களில் நடக்கும் கல்யாணங்களிலேயே நாட்டியம் கூடாது, அது ஒழுக்கயீனம் ஆவதுடன் மக்களை தப்பு வழியில் நடக்கச் செய்கின்றது என்று நாட்டில் பிரசாரம் நடந்து கொண்டிருக்கும் போது, கோவிலில் சாமிக்கு நாட்டியம் வேண்டும். அது மத சம்பிரதாயம் என்று சொல்லுவதானால் அதில் எவ்வளவு போக்கிரித்தனம் நிறைந்திருக்க வேண்டும் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. மதத்திற்கும் சாமிக்கும் பெண்கள் நாட்டியமும், பெண்கள் பணிவிடையும் வேண்டியது அவசியமானால், அந்தச் சாமியைக் கும்பிடும் ஒவ்வொருவரும் தங்கள். வீட்டிலுள்ள பரிசுத்தமான பெண்களை விட்டு ஆடவும், பாடவும், பணி விடைகள் செய்யவும் ஏன் ஏற்பாடு செய்யக்கூடாது என்று கேட்கிறோம்.
கடவுள், பல புருஷர்களைக் கணவனாய்க் கொண்டே பிழைக்க வேண்டிய ஸ்திரீகளைவிட, ஒரு புருஷனையே கணவணாய்க் கொண்டு பிழைக்க வேண்டிய ஸ்திரீயின் ஆட்ட பாட்ட பணிவிடைகளை ஏற்க மாட்டாரா என்று கேட்கின்றோம்.
எந்த வழியில் பார்த்தாலும் நமது நாட்டுக்கு ஒழுக்கமும், சுயமரியாதை
யும் ஏதாவது ஒரு காலத்திலாவது ஏற்பட வேண்டுமானால் பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே அவர்களால் சிருஷ்டித்துக் கொண்ட கூட்டுக் கொள்ளைத் தந்திரமாகிய இந்து மதம் என்னும் மாயத்தை ஒழித்தேதான் தீர வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியாது.
குடி அரசு - கட்டுரை - 06.11.1927
குடி அரசு - 1927 (3) 274
ராயல் கமீஷண் ஒரு கூட்டுக் வவான்னை
1
இந்தியாவுக்கு இன்னமும் ஒருமுறை சீர்திருத்தமளிப்பதற்காக, நாட்டின் நிலையை விசாரிக்க என்பதாக, ஒரு கமீஷனை சர்க்காரார் நியமிக்கப் போகிறார்களாம். இந்தக் கமீஷனில் பலர், தாங்கள் தாங்கள் அங்கத்தினர். களாக வேண்டுமென்கின்ற ஆசையின் பேரில் “அரண்மனை நெல்லுக்கு பெருச்சாளிகள் சண்டை போட்டுக்கொள்வதுபோல்” தலைவர்கள் ஆளுக் காள் முந்துகின்றார்கள். சர்க்காரும், யாரை நியமிப்பது யாரை விட்டு விடுவது என்கிற கவலையில் மிகுதியும் ஆழ்ந்திருக்கின்றார்கள். ஏனெனில் யாராவது செல்வாக்குள்ள மனிதர் பெயர் அதில் விடுபடுமானால் அவர் மற்றவர்களை சேர்த்துக் கொண்டு கமீஷனை பஹிஷ்கரிப்பதாகவோ சீர்திருத்தத்தை பஹிஷ்கரிப்பதாகவோ கலகம் செய்தால் என்ன செய்வது என்கின்ற பயம் ஒரு புறமும், ஜனங்களிடம் செல்வாக்கில்லாதவரை நியமிக்க நேரிட்டு
விட்டால் கமிட்டிக்கு மரியாதை இல்லாமல் போகுமே என்கின்ற பயம் மற்றொரு பக்கமாகவும் இருந்து கொண்டு ஊஞ்சலாடுகிறார்கள். இந்த நிலை
யில் தலைவர்களும், தேசீயச் சங்கங்கள் என்கின்றவர்களும் கமீஷனைப் பற்றி முடிவாகயாதொரு அபிப்பிராயமும் சொல்வதற்கில்லாமல் சுவற்றுமேல் பூனை போலிருக்கிறார்கள்.
ஆகவே, இந்தக் கமீஷன் என்பது தலைவர்கள் என்போர்களுக்கும், சர்க்காருக்கும் ஒரு சூதாட்டம்போல் நடைபெறுவதாயிருக்கின்றதே தவிர. மற்றபடி நாட்டிற்கோ மக்களுக்கோ எவ்வித நன்மையான பலனும் அளிக்கப் போவதில்லை என்பதோடு அநேக கெடுதிகளையும் உண்டாக்கப் போகின்றது என்பது மாத்திரம் உறுதி.
என்னவென்றால் ரெ கமீஷன்படி மற்றொரு புதிய சீர்திருத்தம் என்ப
தாகச் சொல்லிக் கொண்டு நமது அரசாங்க அமைப்பு என்பது சிறிது மாறுதல் அடையக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. அந்த மாறுதல் என்னமா யிருக்குமென்று யோசிப்போமானால் இன்னம் கொஞ்சம் சட்டசபை அங்கத்தி
னர்கள் அதிகமாவார்கள். அதாவது நமது மாகாணத்திற்கு இப்போது இருக்கும் 125 சட்டசபை மெம்பர்கள் குறைந்தது 250 மெம்பர்களாகவாவது
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பெருகுவார்கள். இப்போது இருக்கும் 3 மந்திரிமார்கள் 5 அல்லது 6 மந்திரி யாகவாவது பெருகுவார்கள்.அல்லது இப்போது ஒரு மாகாணமாயிருக்கும் சென்னையும் அதிலுள்ள ஒரு கவர்னரும் குறைந்தது 2 மாகாணமாகவாகிலும். ஆக்கப்பட்டு இரண்டு கவர்னர்களுக்கு குறையாமல் ஏற்படுவார்கள். மற்ற
மாறுதலும் இது போலவே இருக்கும். ஆனால், சம்பளங்கள் மாத்திரம்
சுலபத்தில் குறையாது. அல்லாமலும் வெள்ளைக்காரர்கள் அநுபவிக்கும் உத்தியோக எண்ணிக்கையிலும், சம்பள அளவிலும் ஒரு சிறிதும் குறையாது என்பதோடு சீர்திருத்தத்தின் பலனாய் அவர்களுக்கு இன்னமும் பல உத்தியோகங்கள் ஏற்படும். தவிர, ஒன்று இரண்டு பங்காய் பெருகி சட்டசபை மெம்பர்கள் மந்திரிகளை நியமிக்க ஓட்டர்களாயிருப்பதும், அந்த ஓட்டு கொடுத்த பிறகு அதற்கு விலையாகத் தங்கள் சுயநலம் தேடிக் கொள்வதல்
லாமல் வேறு என்ன தேசத்துக்கோ மக்களுக்கோ இவர்களால் செய்ய
முடிகின்றது. எனவே, இதைத்தான் சீர்திருத்தத்தின் முடிவு என்று இப்போதே ஒருவாறு சொல்லி விடலாம்.
மற்றபடி நமக்கு இன்னும் சில அதிகாரங்கள் கொடுப்ப தென்பது ஒரு முக்கியமாக மக்களுக்குத் தோன்றலாம். நம்முடைய யோக்கியதையை அறிந்த சர்க்கார் நமக்கு எவ்வளவு அதிகாரத்தை வேண்டுமாணலும் நமக்குக் கொடுக்கக் கூடும். அதினால் ஒன்றும் சர்க்காருக்கு கஷ்டம் ஏற்பட்டுவிடாது. நமக்கும் அதனால் யாதொரு லாபமும் இருக்கும் என்று ஒப்புக்கொள்ளவும் முடியாது. ஏனெனில் கொடுத்துள்ள அதிகாரத்தைப் பொறுத்த வரையில் நமது நிலை என்ன? அது சர்க்காருக்கு என்ன நஷ்டத்தை உண்டாக்கிற்று? நமக்கு எப்படி அது உபயோகப்பட்டிருக்கின்றது? என்று பார்த்தால் இனி வரக் கூடிய அதிகாரத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும்.
மந்திரிகளின் அதிகாரங்களை முதலில் எடுத்துக்கொள்வோம். ஸ்தல ஸ்தாபன அதிகாரங்கள், மந்திரிகளுக்கு அதாவது ஜனப்பிரதிநிதிகளுக்கு கொடுத்ததால் ஏற்பட்ட லாபம் என்ன என்று பார்த்தால் மாகாணத்தில் உள்ள முனிசிபாலிட்டிகள், ஜில்லா போர்டுகள், தாலூகா போர்டுகள் எல்லாம் அவ் வவைகளுக்கு வரும், வர முயலும் தலைவர்களை எல்லாம் அயோக்கியர்: களாகவும், நாணயக் குறைவுள்ளவர்களாகவும் செய்ததல்லாமல் ஒரு மனிதனையாவது யோக்கியனாயிருக்கும்படி செய்ய முடிந்ததா என்று கேட்கிறோம். இதை மேல் பார்க்கும் மந்திரிகளின் யோக்கியதை என்ன என்று பார்த்தால் இந்த தலைவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தையும், நாணயக் குறைவுகளையும் அடக்கா விட்டாலும், அவர்கள் அடிக்கும் கொள்ளைகளில் பங்கு வாங்காமல் இருக்கிறார் என்றாவது ஜனங்கள் சந்தேகப்படுவதற் கில்லாமலிருந்தால் அதுவே போதுமானது என்று நினைக்கும் படியாகத்தான்
நடந்து வருகிறது.
நியமன ஊழல்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. எங்கு
குடி அரசு - 1927 (3) 276
பார்த்தாலும் அவன் மந்திரிக்கு பணம்கொடுத்து நியமனம் பெற்றான், இவன் மந்திரிக்கு கடன் கொடுத்து நியமனம் பெற்றான். அவன் மந்திரிக்கு வேண்டி யவனான இன்னொருவனுக்கு பணம் கொடுத்து நியமனம் பெற்றான், அவன் இன்ன பெண் தயவு பிடித்து நியமனம் சம்பாதித்தான் என்று கடைத்தெருவில் ரொட்டி, பிஸ்கோத்து விற்பதுபோல விஷயங்கள் அடிபடுகின்றதே அல்லா
மல் கவுரவம் கொடுத்து யாராவது பேசுகின்றார்களா? அல்லது ரகசியமாயா வது பேசுகின்றார்களா? என்றாவது பார்ப்போமானால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றியும் இச்சீர்திருத்தத்தின் பலனாய் திருடுகிறவர்கள் எல்லோரும் அயோக்கியர்களெல்லோரும், ஜனங்களால் மதிக்கப்படுகின்றார்களேயல்லாமல் அவர்களைப் பழிப்பவர்கள் ஒருவர்கூட இல்லை. எங்காவது அத்தி பூத்தது போல் அந்த இலாக்காவில் ஒரு யோக்கியர்: இருந்துவிட்டால் அவர் இந்த சர்க்காராலும், மந்திரியாலும் மிகுதியும் அவமானப்படுத்தப்படுகின்றாரேயல்லாமல் அவரை மதிப்பவர்களே இல்லை. இனியும் இதைப்பற்றி பொது ஜனங்களால் சொல்லிக்கொள்ளப்படும் அசிங்கியங்களை பாக்கி வைத்துக் கொண்டு மற்றதை கவனிப்போம். அடுத்த படியாக நமக்கு கல்வி சம்பந்தமாக கொடுத்திருக்கும் அதிகாரங்களிலும் யாதொரு பிரயோஜனமில்லை.
உதாரணமாக எந்தக் கல்வி படித்தாலும் படித்துவிட்டு எவன் காலை யாவது கட்டிமானம், மனச்சாட்சி, சத்தியம், தேசம் அவனது பெண்டு பிள்ளை, கற்பு ஆகிய எதையும் விற்கத் தயாராயிருந்தாவது வயிறு வளர்க்க வேண்
டுமே, உத்தியோகம் சம்பாதிக்க வேண்டுமே, பதவி பெற வேண்டுமே, மேலே போக வேண்டுமே என்கின்ற கவலையோடு சதா சர்வகாலம் வாழத்தக்க தாயிருக்கின்றதே தவிர சுயமரியாதையுடன் யோக்கியமான வழியில் பிழைப் பதற்கு ஒரு கடுகளவாவது இக்கல்வி பிரயோஜனப்படும்படி மாறி இருக் கின்றதா, மாற்றப்பட முடிகின்றதா என்று பார்ப்பதானால் அதன் உண்மை யாருக்கும் விளங்காமல் போகாது.
இனி மது சம்மந்தமான அதிகாரம் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்' என்கின்றோம். இதனால் என்ன மாறுதல் நமது நாட்டில் இதுவரை ஏற்பட்டி
ருக்கின்றது என்று இந்த அதிகாரம் நமது கைக்கு வருமுன் குடித்துக் கொண்: டிருந்த ஜனங்களைவிட ஒரு குழந்தை கூட குடிப்பவர்கள் எண்ணிக்கையில் குறையவே இல்லை. பின்னும் அதிகமாயிருப்பதாகக் கூட சொல்லலாம். அது வருமானத்தைப் பார்த்தாலே தெரியவரும். கடைகளின் எண்ணிக்கையும் பெருகி சந்து பொந்து முதலிய இடங்களிலெல்லாம் லைசென்சு இல்லாமலே விற்கப்படுகிறது. கள்ளுக்கு மரங்களும் கட்டப்படுகிறது. அந்த இலாக்கா மந்திரிகளாவது குடிக்காமலிருக்கிறார்களா? குடிப்பது தப்பு என்று எண்ணு கிறார்களா என்பதே சந்தேகப்பட வேண்டியதாயிருக்கின்றது. ஏனென்றால் மதுவைப் பற்றி அந்த மந்திரிகள் பேசுவதைப் பார்த்து அந்த மாதிரி சந்தேகப் பட வேண்டியிருக்கிறது.
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மற்றபடி நமது நாட்டுக்கு மிகுதியும் முக்கியமானதாகியது கைத் தொழில் விஷயம். அந்த இலாகாவும் நமது கைக்கு வந்திருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். இதனால் என்ன லாபம் ஏற்பட்டிருக்கின்றது? என்ன விதமான கைத்தொழில் நமதுநாட்டில் வளர்ந்திருக்கின்றது? முன் இருந்ததை விட இப்போது குறைந்து வந்திருக்கின்றதேயல்லாமல் கடுகளவாவது விர்த்தியாகி இருக்கின்றதா? அந்த இலாகா மந்திரியாவது கைத்தொழில் என்றால் எதை நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதே ஜனங்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. யந்திரங்கள் வளர்ந்து கொண்டேதான் போய்க் கொண்டிருக்கின்றது. வாரம் லட்சம் கூலிகளுக்கு மேல் நம் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை அறிந்த நமது பிரதிநிதிகள் என்பவர்களும் யந்திரங்களையே ஆதரிக்கின்றார்கள்.
அடுத்தபடி மதவிஷயம்.அதுவும் நமது கைக்கு வந்திருக்கின்றது என் கின்றார்கள். இதில் என்ன மாறுதல் நடந்திருக்கின்றது. அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மதக் கோயில்களில் போய் கடவுளைத் தரிசிக்க உரிமை இல்லை. தெருவில் நடப்பதற்கு உரிமை இல்லை. இன்னும் மதத்தின் பெய
ரால் நடக்கும் விபசாரம் முதலிய கொடுமைகளைக் கூட நீக்க யோக்கியதை இல்லை. அதைப் பற்றி பேசக்கூட அந்த இலாகா மந்திரி என்பவருக்குத் தைரியமில்லை...
மற்றபடி, சீர்திருத்தங்களின்படி இந்தியர்களுக்கு நிர்வாக சபையில் உத்தியோகம் கிடைத்த பலன் என்ன என்று பார்ப்போம்.
சட்ட சம்மந்தமான அதிகாரம் இந்திய நிர்வாக சபை மெம்பருக்கு கிடைத்ததின் பலன் சட்ட சம்மந்தமான இடத்திலெல்லாம் மற்றும் அவர்: ஆதிக்கத்தில் உள்ள இடத்திலெல்லாம் பார்ப்பனர்களை கொண்டுபோய் நிரப்புவதும், பார்ப்பனர்களுக்கு வேலை புதிதாக உண்டாக்கிக் கொடுப்பதும், அவ்வேலையின் கருத்தாக முடிந்ததேயல்லாமல் வேறு என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் பார்ப்பனரல்லாத மக்களை இழிவு படுத்தவும் கொடுமைப்படுத்தவும், எவ்வளவு தூரம் சர்க்காருக்கு இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்து இந்த நாட்டின் செல்வத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி ஒற்றறாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் இருக்கத் துணிவது என்பதைத் தவிர வேறு ஏதாவது உணர்ச்சி அந்த உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உண்டாகின்றது என்று யாராவது சொல்லக்கூடுமா? அல்லது சட்ட உத்தியோகம் இந்தியர்களுக்கு கிடைத்ததின் பலனாய் மக்கள். நாணயமான முறையில் நீதி அடைய முடிகின்றதா? ஒரு வாழைக்காய் பாக்கி வரவேண்டுமென்று பிராது போட்டால் இரண்டு கத்திரிக்காய் லஞ்சம் கொடுக்கத் தயாராயிருந்தாலொழிய நியாயம் கிடைக்க மார்க்கமில்லை.
குடி அரசு - 1927 (3) 278
அன்றியும் இந்திய நிர்வாகசபை மெம்பர்களுக்கு இந்தியப் பண விஷயத்தில் எவ்வளவு அக்கரை உண்டு என்று யோசிப்போமானால், தன்னுடைய அதிகாரம் இன்னும் கொஞ்ச நாளைக்கு நீடிக்கவும் தான் செய்கின்ற அயோக்கியத்தனமான காரியங்கள் செல்லு படியாகவும் வேண்டி வெள்ளைக்காரர்களுக்கு மேலும் மேலும் நல்லப் பிள்ளையாக வேண்டு மென்கின்ற கருத்துக் கொண்டே நமது பணம் நம்ம தொழிலாளிகளுக்கும்,
கூலிக்காரர்களுக்கும், நமது நாட்டு சாமான்களுக்கும், உபயோகப்பட முடியாமல் செய்து கோடிக்கணக்கான ரூபாய்களை ஏழைகள் மனம் பதறப் பதற வெளிநாட்டிற்கு அதுவும் வெள்ளைக்காரருக்கே போய்ச் சேரும்படி செய்யத் துணிவு கொண்டு, உள்நாட்டுச் சுண்ணாம்புக்கு பதிலாக வெளிநாட்டு சுண்ணாம்பும் கூலிக்காரர்கள் கையால் வேலை செய்யச் செய்து அவர்கள்
ஜீவனத்திற்கு கூலி உதவுவதைவிட யந்திரங்களை தருவித்து அதன் மூலம் வெள்ளைக்காரருக்கு அளவில்லாத லாபம் கொடுத்து, கூலிகள் வயிற்றில் மண்ணைப் போடுவதும் தவிர வேறு என்ன செய்ய முடிகின்றது. வாரம் ஒன்றுக்கு லட்சக்கணக்கான கூலி ஆட்கள் நம் நாட்டை விட்டு வேலையில்
லாமல் வெளிநாட்டிற்குப் போவது இவர்களுக்குத் தெரியாததென்று சொல்ல முடியுமா? அன்றியும் இதன் மூலம் அவ்வதிகாரிகளுக்கு ஏற்படும் எந்த பழிப்புக்காவது இழிவுக்காவது பயப்பட இடம் கொடுக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இனி மற்றவைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை...
சீர்திருத்தத்தால் ஏற்பட்ட இவ்வளவு கெடுதிகளும் அல்லாமல் மக்களுக்கு பொதுவில் ஏதாவது பலன் உண்டா என்று பார்த்தால், சீர்திருத்தம் பெருக பெருக வரியும், வழக்கும், ஒழுக்கக் குறைவும், ஒற்றுமைக் கேடும், பஞ்சமும், நாட்டின் மீது அதிகமான கடனும் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வருகிறதேயல்லாமல் வேறு ஏதாவது நன்மை செய்ய முடிகிறதா என்றால் ஒன்றுமே இல்லை. சர்க்காருக்கு இதனால் ஏற்படும் அனுகூலம் இன்னது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. எனவே, இந்த சீர்திருத் தங்களின் பலன் இன்ன குறிப்பிட்ட மனிதரின் சொந்த குறிப்பிட்ட குணங் களால் தான் இந்த ஸ்திதிக்கு வந்தது என்று சொல்லுவதற்கில்லாமல், யார்
இச்சீர்திருத்தத்தை ஏற்று நடத்துவதாயிருந்தாலும் ஒவ்வொருவரும் அப்படித் தான் செய்ய முடியும், செய்யத்தூண்டும் என்கிற மாதிரியிலிருக்கின்றது என்பதற்காகவே இவற்றை விளக்கினோமேயல்லாமல் தனிப்பட்ட மனித னின் குற்றம் என்பதை விளக்கவல்லது என்பதையும் ஒவ்வொருவரும் ஞாபகத் தில் வைத்துக்கொண்டு சீர்திருத்தத்தின் யோக்கியத்தைப் பற்றி நினைக்க வேண்டும்.
எனவே, வெள்ளைக்காரருடைய எந்த அதிகாரம் பதவி நமது கைக்கு வந்தாலும் அதனால் சர்க்காருக்கும், வெள்ளைக்கார அரசாங்கத்திற்கும் ஒரு வெள்ளைக்கார உத்தியோகஸ்த்தர் அந்த பதவியில் இருந்தால் ஏற்படும்
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
நன்மையைவிட, அதிகமான நன்மை ஏற்படுவதோடு மக்களிடத்திலும் வெள்ளைக்காரர்கள் நடந்துகொள்ளும் நாணயக் குறைவைவிட அதிக மாகவே நடக்க ஏற்பட வேண்டிய நிலைமைகள்தான் சீர்திருத்தங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முடிவாக சீர்திருத்தம் என்பதே குடிகளையும் பாமர மக்களையும் ஏமாற்ற சர்க்காரும் ஜனத் தலைவர்கள் என்பவர்களும் வேண்டுமென்றே அயோக்கியத்தனமான எண்ணத்துடன் செய்யும் சூழ்ச்சியும் கூட்டுக் கொள்ளையுமே தவிர வேறில்லை என்று கோபுரத்தின் மீது இருந்தும் கூவு வோம். இதைப்பற்றி இனியும் பின்னால் விபரம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.111927
குடி அரசு - 1927 (3) 280
ஒரு விண்ணப்பம்
திருவண்ணாமலை கோவில் பிரவேச தடுப்பு வழக்கு அநேக வாய்தாக்கள் ஏற்பட்டு இதுவரை 500 ரூபாயுக்கு மேலாகவே சிலவாகி
இருக்கின்றது. ஆனால் வாதி தரப்பு மாத்திரம் தான் முடிவாயிருக்கிறது. இனி எதிரி தரப்பில் சுமார் 2,3 சாகஷிகள் போடப்பட்டிருக்கின்றது. தினம் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சாக்ஷிகள் மேல் விசாரணை ஆவதற்கில்லாமல் வளருகின்றது. ஆதலால் இனியும் குறைந்து 10 வாய்தாக்களாவது ஏற்படலாம். வக்கீல்கள் பீஸ் இல்லாமல் நமக்காகப் பேசியும் அவர்களுக்கு வழிச்சிலவும்
சாக்ஷிகளுக்கு வழிச்சிலவுமாகவே மேல்கண்ட ரூபாய்கள் சிலவாகி இருக்கும் போது பாக்கி விசாரணைக்கு 500 ரூபாயாவது பிடிக்கும் என்பதில் சந்தேக மில்லை. ஆதலால் நண்பர்கள் தங்களால் கூடியதை சேர்த்து சீக்கிரம் அனுப்ப வேண்டுமாய் சிபார்சு செய்கின்றோம். ஏனெனில் இப்பேர்ப்பட்ட உண்மைச் சுயமரியாதைக்காக தொடரப்பட்டிருக்கும் வழக்கு நாட்டில் மக்கள் ஆதரவில்லையானால் மற்றபடி பின்னால் நடக்க வேண்டிய காரியங்களுக்கு எப்படி பொதுமக்களை நம்ப இடமுண்டாகும். ஆதலால் வெளிநாட்டு நண்பர்களும் உள்நாட்டு நண்பர்களும் கூடிய சீக்கிரம் இந்த தேவையை
பூர்த்தி செய்து தைரியமும் ஊக்கமும் அளிப்பார்களாக.
குடி அரசு - வேண்டுகோள் - 06.111927
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
புதிய கட்சிகள்
பெசண்ட் அம்மையாறாட்சி
சாதாரணமாய் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி வேலைகள் மும்முரமாய் நடப்பது இயற்கை. உதாரணமாக ஒரு காலத்தில் எங்கும் பஜனைக் கூடங்கள் ஏற்படும். மற்றொரு சமயம் எங்கும் ரீடிங்ளூம் ஏற் படும். மற்றொரு காலத்தில் எங்கும் சங்கீத சபைகள் ஏற்படும். இம்மாதிரியே ஓரோர். சமயத்தில் ஓரோர் காரியம் செல்வாக்குப் பெறுவதுண்டு. அதுபோலவே நமது நாட்டில் புதுப் புது கட்சிகள் ஏற்படுவது இக்காலத்திய சம்பவமாக
இருக்கின்றது.
சமீப காலத்திற்குள் அரசியலின் பெயரால் அநேக கட்சிகள் ஏற் பட்டாய்விட்டது. இனியும் பல கட்சிகள் ஏற்படும் போலவும் இருக்கிறது. அதாவது தென்இந்திய நலஉரிமைச் சங்க மாகாண மகாநாடு கோயமுத்தூரில் நடந்த பின்பு, திருப்பூர் பார்ப்பனரல்லாதார் சுயேச்சை கட்சி என்பதாக ஒரு கட்சி உண்டுபண்ணி ஸ்ரீமான் திருப்பூர் ராலிங்கம் செட்டியார் முயன்று
ஒன்றும் முடியாமல் கடைசியாக ஒரு மகாநாடு கூட்டி கோயமுத்தூர் தீர்மானத்தை ஆட்சேபித்து கவர்னரையும் மந்திரிகளையும் ஆதரித்து ஒரு தீர்மானம் செய்து சர்க்காருக்கு அனுப்பி, தற்கால சாந்தியாய் ஒரு உத்தி யோகமும் பெற்று இருக்கிறார். அவரைப் பார்த்து மனம் பொறாத ஸ்ரீமான் டாக்டர் சி. நடேச முதலியார் அவர்களும் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்.
களும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் என்கின்ற முறையில் கோய முத்தூர் தீர்மானத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் கட்சி என்பதாக ஒரு கட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேற்கண்ட இரு கனவான் களுமே இரட்டைத் தலைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இன்னமும் இன்ன இன்ன உத்தியோகம் கொடுப்பது என்பது சர்க்காரார் இன்னமும் தீர்மானம் செய்யவில்லை. ஏனெனில் சர்.சி.பி.அய்யர் மேல் நாட்டுக்குப் போனவர். இப்போதுதான் வந்திருக்கிறார். தவிர இனி காங்கிரசு என்பதைப் பற்றி யோசிப்போம். அதற்குள் ஏற்கனவே சுயராஜ்ஜியக் கட்சி என்பதாக
ஒரு கட்சி இருந்தாலும் அதை ஆதரித்துக் கொண்டு அதற்குள் இருந்தவர்: களுக்குள்ளாகவே ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் தேசீயகட்சி என்று ஒன்று ஆரம்பித்தார். அது முளைத்த மூன்று நாளிலேயே அதற்குப் பச்சை
குடி அரசு - 1927 (3) 282
வாதம் வந்து கிணற்றில் விழுந்த கல்லுப்போல் தூங்கிக்கொண்டிருக்கிறது. பிறகு ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் சும்மா இருக்கும் கட்சி என்பதாக ஒன்று ஏற்பட்டது. எல்லா கட்சிகளைவிட அதற்குதான் தொந்தரவு அதிகம். ஏனென்றால் சும்மா இருப்பதே சுகம் என்று வாயில் சொல்ல லாமானாலும் சும்மாயிருப்பதைப் போல் கஷ்டமான வேலை உலகத்தில் வேறொன்றுமேயில்லை. ஏனெனில் ஐம்பொறிகளுக்கும் உணர்ச்சியிருக்கும் வரை எந்த ஜீவனும் சும்மாயிருக்க முடியாது. இது தவிர சுயராஜ்யக் கட்சியில் ஒரு குட்டிக் கட்சி ஸ்ரீமான் எஸ். முத்தையா முதலியாரை தலைவராகக் கொண்டு அதாவது பார்ப்பனர்களை நீக்கி காங்கிரஸ் தேசீயக் கட்சி என்பதாக எட்டு பேர் சேர்ந்து ஒரு கட்சி இந்த வாரத்தில் ஒரு ஏற்பாடாயிருக்கின்றது. இது நாளடைவில் வழுக்கும் போல் தெரிகிறது. ஏனெனில் சுயராஜ்ய கட்சியில் இருந்த பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் ஒவ்வொருவராய் பார்ப் பனர்களின் சூழ்ச்சி இன்னது என்பதாக அறிந்து விலக்கு கின்றார்களாதலால் அப்படி விலகுகின்றவர்களுக்கு இது சமயம் தேசீயப் போர்வையுடன் ஒரு கட்சி வேண்டுமானால் இதுதான் தயாராய் இருக்கின்றது.
இது தவிர மந்திரி ௧௯9 என்று ஒன்று கொள்கையில்லாதது என்கின்ற
அர்த்தத்தில் ஒரு ௧௯$ உண்டு. ஒவ்வொரு மந்திரிக்கும் தனித்தனியாய் ஒரு கக்ஷியும் அதற்கு 2, 3 பின்பற்றுபவர்களும் உண்டு. மந்திரி உத்தியோகம் சாகும்போது இந்தக் ககஷியும் அழுவாரற்று தானாகவே செத்துப்போகும். இது தவிர மிதவாதக் 56 என்று ஒன்றுண்டு. இது தனியாக சாஸ்திரி, சர்மா, அய்யர் என்கின்ற இரண்டு மூன்றுவித பட்டப்பெயரையேகொண்டது இந்த கூட்டத்தார் தான் நமது சர்க்காரை நடத்திக் கொடுக்கவேண்டிய பொறுப்புடன் அடுப்புக் கல்லைப் போல் சர்க்காரைத் தாங்குவதற்கென்றே பிறந்தவர்க ளென்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
போதாதக் குறைக்கு அம்மையார் பெசண்டம்மையார் இந்த
வாரத்தில் நமது நாட்டில் “லோககுரு”” கிருஷ்ணமூர்த்தியுடனும் லட்சக்கணக் கான ரூபாயுடனும் அடிவைத்திருக்கின்றார்கள். இந்தம்மாளைப் பிடித்துக் கொண்டுகரையேறலாமென்று வெகுபேர் நாக்கில் தண்ணீர் சொட்டிக் கொண்டு காத்திருக்கின்றார்கள். இந்த அம்மையாரும் காங்கிரசுக்கு யோக்கியதை கெட்டுப் போயிருக்கின்ற இக்காலத்தில் சுலபத்தில் தான் ஆதிக்கம் பெற்று விடலாம் என்று ஆசைப்படுவதில் அதிசயம் ஒன்றும் இல்லை. “ "அம்மையாருக்கும்" ” “லோக குருவுக்கும்" ” இனி புது புது சிஷ்யர்
கள் சேருவார்கள். “மகாத்மாக்களுடன்” அடிக்கடி பேசுவார்கள். சர்.சி.பி.
அய்யருக்கு இனி அபார யோக்கியதைகள் வளரும். ஏனெனில் அம்மையார். சீமையிலிருந்து பெரிய பெரிய வெள்ளைக்காரரிடம் கோஷன் பிரபுவுக்கு
சிபார்சுக் கடிதம் வாங்கி வந்திருக்கலாம். அதில் சர்.சிஃபி.அய்யருக்குத்தான் இரட்டை பங்கு கிடைக்கும். ஆதலால் இனி அம்மையார் ஒரு பெரிய ககஷியாக புறப்படப்படக்கூடும். சுயராஜ்யக் கக்ஷியும் அம்மையார்.
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ககஷியுடன் இரண்டர கலந்தாலும் கலந்து விடும். ஏனெனில் சுயராஜ்ய ககஷி இப்போது வடிகட்டி ஆய்விட்டதால் அம்மையார் கக்ஷிக்கு வேண்டிய ஆட்களே மீதி தங்கி நிற்கின்றது. ஒரு காலத்தில் அய்யர் கூட்டத்தோடு மாத்திரம் இருந்து கொண்டு ஆதிக்கம் பெற்ற அம்மையாருக்கு இப்போது அய்யங்கார் கூட்டமும் சேர்ந்து ஒரு மந்திரி உத்தியோகமும் தனது சிஷ்ய ருக்கு இருந்து, சட்ட மெம்பர் உத்தியோகமும் அவரது “மகன்” என்பவருக்கு இருக்கும் போது அம்மைக்கு என்னதான் நடக்காது. பருத்திச்செடி புடவையாய் காய்த்தது என்பது போல் ஆகிவிடும் அல்லவா? அதற்கு ஆதாரமாகவே நாளது 7 ௨ நடைபெறும் அம்மையார் வரவேற்புக்கு
சுயராஜ்யக் ககஷிக்கு ஜீவ நாடியாகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரே பேசப் போகிறாராம்.
காஞ்சீபுரம், திருநெல்வேலி முதலிய மகாநாடுகளில் அம்மை யாரைப்பற்றி ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் பேசிய பேச்சுக்களும் எழுதிய எழுத்துக்களும் கல்லின் மேல் எழுத்துக்கு நேராய் விளங்குவது யாவருக்கும்
தெரியும். ஆனால் அப்பொழுது ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை விலைக்கு வாங்கி அம்மையார் மீது ஏவிவிட்ட ஆள்களேதான் இப்போதும் அம்மை யாரைப் புகழ அனுப்பி இருக்கின்றார்கள். ஆகவே இவ்வளவு செல்வமும் பாக்கியமும் யோகமும் பொருந்திய அம்மையார் இந்த செல்வாக்குடன் தென்னிந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்யப் போகிறார்களாம்.
இதன் பலன் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தாகவே
முடியும். ஆனாலும் நாம் அதைப்பற்றி சிறிதும் கவலைப் படவில்லை. ஏனெனில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை பெறத்தக்க அளவு இன்னமும் போதிய உணர்ச்சி பெறவில்லை. அல்லாமலும் அதற்குத் தகுந்த தியாகமும் செய்யவில்லை. ஆதலால் அதற்குத் தகுந்த விலை கொடுக்காமல் எந்தப் பண்டமும் கிடைக்காது என்பது உலகமறிந்த விஷயம்.
இதை எழுதி முடித்த பின்பு நாம் நினைத்தது போலவே அம்மை யாரால் விஷம் கக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது பார்ப்பன ஆதிக்கத்
திற்கு மத விஷயத்தில் பிரசாரம் செய்ய ஒரு மகாத்மா கிடைத்தது போல் இப்போது அரசியலிலும் பிரசாரம் செய்ய அம்மையாராகிய “லோகநாயகி” கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். என்னவென்றால் வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்று சொல்லித்தான் பிரசாரம் செய்யப் போகிறார்களாம். அதற்கு காரணம் பார்ப்பனர்கள் சொல்வது போலவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வந்த பின்புதான் இந்தியாவில் கலகம் அதிக மாய் இருக்கின்றதாம். அய்யோ பாவம் இது எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த காரியமாயிருக்க வேண்டும்.
வருணாசிரமமும் பிறப்பில் குணம் வருவதும் இல்லாவிட்டால்
குடி அரசு - 1927 (3) 284
ஸ்ரீமான் காந்தி அவர்களிடத்தில் பார்ப்பனருக்கு யாதொரு வேலையுமில்லை. அவரை மகாத்மா என்று கூப்பிடவுமாட்டார்கள். அப்படி ஒருவர் இருக் கின்றார் என்று கூட உலகத்திற்கு தெரியாமல் செய்துவிடுவார்கள். அது போலவே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டாமென்று சொன்னால் ஒழிய அம்மையாரிடத்தில் பார்ப்பனர்களுக்கு யாதொரு சிநேகமும் இல்லை. அம்மையாருக்கும் நமது நாட்டில் யோக்கியதையும் இருக்காது. பூரண
கும்பங்களும் லோகநாயகி பட்டமும் இருக்காது. உள்ளதையும் மூன்று நாளில் கவிழ்த்து விடுவார்கள். இந்த விஷயமும் அம்மையாருக்கு நன்றாய் தெரிந்தே தான் வரும்போதே இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஐய்யங்கார் கூட்டத்தையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டார். ஆனால் மகாத்மா என்பவர்களின் உபதேசத்திற்கே ஏமாறாத தமிழ் மக்கள் அம்மையார் சங்கதி நன்றாய் அறிந்த பின்பும் ஏமாந்து போவார்கள் என்று சுலபமாய் சொல்லிவிட முடியாது. ஆனாலும் அம்மையார் இடத்தில் இருக்கும் பணமும் உத்யோகமும் அளிக்கக்கூடிய செல்வாக்கும் யாரைத் தான் சுவாதீனம் செய்ய முடியாது என்று யோசிக்கும்போது சற்று பயமாய்த்
தான் இருக்கின்றது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.1.1927
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இந்திய கேசீயம்
காங்கிரசுக்கு பணம் ர்க்கும் முறை
யானைக்கவுக்களிக்கடுத்த கிருஷ்ணா தியேட்டர் என்னும் நாடகக் கொட்டகையில் ஸ்ரீமதி கமலம் என்கின்ற நடனப் பெண்ணைக் கொண்டு வள்ளிபர்ணியம் அதாவது வள்ளி என்கின்ற குறப்பெண்ணை பரமசிவன் என்கிற இந்து மதக் கடவுளுடைய மகனான சுப்பிரமணியக்கடவுள் என்கிற மற்றொரு இந்து மதக் கடவுள் நரசோரம் செய்த (அதாவதுதிருட்டுத்தனமாய் அடித்துக்கொண்டு போன கதையை நாடகமாக நவம்பர் மாதம் 3 -தேதி ஆடிக்காட்டி அதன் டிக்கெட் விற்பனையின் மூலம் காங்கிரசுக்கு பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தேசீயப் பத்திரிகைகள் என்பவை நாடகத்தைப்பற்றி விளம்பரம் செய்வது கூட தப்பு என்று ஒரு காலத்தில் மகாத்மாவாயிருந்த ஸ்ரீமான் காந்தி எழுதியிருந்தார். இப்போது தேசீய சபையின் தலையெழுத்து நாடகமாடி பணம் சம்பாதிக்க வேண்டியதாய்ப் போய் விட்டது. அதிலும் என்ன நாடகம் என்றால் ஒருவன் பெண்ணை ஒருவன் திருடிக்கொண்டு போகின்ற நாடகம். அதுவும் எதன் பேரால்
என்றால் இந்து மதத்தின் பெயராலும், இந்துமதக்கடவுள் பெயராலும் அதுவும் யாரால் என்றால் ஸ்ரீமதி கமலம் என்கின்ற நடனப் பெண்மணியால், அதுவும் டிக்கெட் யாரால் விற்கப்படுகிறது என்றால் சென்னை மகாஜன சபை கட்டிடத்
தில் காங்கிரஸ் தரகர்களால். எனவே நமது மதத்திற்கும் நமது கடவுளுக்கும் நமது ஒழுக்கத்திற்கும் நமது தேசீயத்திற்கும் நமது காங்கிரஸ் தரகர்களின் யோக்கியதைக்கும் நற்சாட்சி பத்திரம் வாங்க மிஸ் மேயோவிடம் போக வேண்டுமா அல்லது மைலாப்பூர் காங்கிரஸ்காரரிடம் போகவேண்டுமா என்பதை பொதுஜனங்களே யோசியுங்கள்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.11.1927
குடி அரசு - 1927 (3) 286
ஈரோடு முணிசியாவிட்மு
ஈரோடு முனிசிபாலிட்டி சேர்மென் தேர்தலானது முன் வைஸ்சேர்
மென் அவர்கள் குறித்தது போலவே நவம்பர் மாதம் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாயிற்று. ஆனால் மாஜி சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் இந்த தேர்தலையும் நிறுத்துவதற்காக சர்க்காருக்கு எழுதியதில், சர்க்காரும் எலக்ஷனை நிறுத்த அனுமதி கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் சேலம் ஜில்லா போர்டு எலக்ஷனை நடத்தக்கூடாது என்று
சர்க்கார் உத்தரவு வந்தும் சேலம் ஜில்லா போர்டார் அதை லக்ஷியம் செய் யாமல் தைரியமாய் நடத்தினத் தேர்தல் நிலைத்து விட்டதைக் கண்ட ஈரோடு
முனிசிபாலிட்டியாரும் சர்க்கார் உத்தரவை லக்ஷியம் செய்யாமல் தைரியமாய் நடத்தி விட்டார்கள். ஏனெனில் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அன்று பகல்
12 மணிக்கு மேல் முனிசிபல் ஆபிசுக்கு வரக்கூட யோக்கியதை இல்லாது போய்விட்டதால், மற்றபடி முதலியார் கக்ஷியைச் சேர்ந்த ஆள்களில் சிலர். தேர்தலை நடத்தக்கூடாது என்று மீட்டிங்கில் ஆக்ஷேபித்தும் அது யாராலும் லக்ஷியம் செய்யப்படாமல் போய் விட்டது. தவிரவும் முதலியாருக்கு அனுகூலமாயிருந்து, அனுகூலம் பெற்று வந்த சில கவுன்சிலர்களும் முதலி யாருக்கு வேலை போனவுடனே அவரை கைவிட்டு விட்டுவிடவேண்டிய தாகவும் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் சேர்மென் தேர்தல் நடத்தலா மென்று கவுன்சில் மெஜாரிட்டியார் அபிப்பிராயப்படுவதை அறிந்த முதலியாரின் அத்தியந்த கூட்டாளிகளான நண்பர்களில் முக்கியமானவர்
களில் சிலர் கவுன்சிலை விட்டு வெளியேறிவிட்டார்கள். உடனே தேர்தல் துவக்கமானதும் முதலியார் கக்ஷியைச் சேர்ந்தவரும், முதலியாரின் முக்கிய பாதுகாப்பாளராயிருந்தவருமான ஸ்ரீமான் பிரப் துரை அவர்கள் தனது கேண்டிடேட்டாக ஸ்ரீ டேவிட் என்பவரை பிரேரேபித்தார். கிறிஸ்தவ கவுன் சிலர்கள் எல்லோரும் ஸ்ரீமான் டேவிட்டுக்கே ஓட்டுக் கொடுத்தார்கள்.
கருங்கல்பாளையம் ஸ்ரீமான் பாலசுப்பராயலு நாயுடுகார் என்கிற ஒரு கனவானை மற்றொரு கவுன்சிலர் பிரேரேபிக்க, கிறிஸ்தவ நியமன கவுன்சிலர்
கள் தவிர ஏறக்குறைய மற்றக் கவுன்சிலர்கள் எல்லாம் அவரை ஆதரித்து
ஓட்டுக் கொடுத்ததால் மெஜாரிட்டி ஓட்டினால் ஸ்ரீமான் நாயுடு அவர்களே தெரிந்தெடுக்கப்பட்டார். ஆகவே இந்த தேர்தலின் மூலம் ஸ்ரீமான் நாயுடு
கார் தெரிந்தெடுக்கப்பட்டார் என்கிற சந்தோஷத்தைவிட 'ஸ்ரீமான் முதலியார்.
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வருவதற்கில்லாமல் போய் விட்டாரே அதுவே போதும்” என்கின்ற சந்தோஷமே அதிக மென்றுதான் சொல்ல வேண்டும். இந்த தேர்தல் பலனில்
ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தான் வருவதற்கில்லாமல் போய்விட்டதே என்பதாக அடைந்த விசனத்தைவிட ஸ்ரீமான் பிரப் என்கின்ற பாதிரி துரைக்குத்தான் அதிக விசனம் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் ஸ்ரீமான் முதலியாரை கொள்ளையடிக்க அனுமதிப்பதால் பாதிரி துரைக்கு தன் காரியம் எவ்வளவோ சாதகமாய்க் கொண்டு வந்தது. இப்போது அவ்வளவு எதிர் பார்க்கமுடியாது. ஆதலால் தன் மனுஷர் போய்விட்டாரே என்கின்ற விசனம். அவருக்கு இருப்பது அதிசயமல்ல. கடைசியாய் ஈரோடு முனிசிபாலிட்டியில் ஸ்ரீமான் முதலியார் ஆக்ஷியில் இதுவரை நடந்து வந்த ஊழல்களுக்கெல்லாம். இந்த பாதிரி துரை அவர்களே 100 -க்கு 75 பங்கு காரணஸ்தர் என்று சொல்லுவது மிகையாகாது. அவர் தனது மிஷின் காரியத்திற்காகவே ஸ்ரீமான் முதலியார் செய்து வந்த நாணயக்குறைவான காரியங்க ளுக்கெல்லாம் உதவியளித்து வந்ததுதான் இப்படிச் சொல்வதற்கு முக்கிய ஆதாரம். அல்லாமலும் ஸ்ரீமான். முதலியாருக்கு அண்ணனாகிய ஸ்ரீமான் டேவிட் அவர்களை பிரேரேபித்தது இரண்டாவது ஆதாரம்.
நிற்க, இனிமேலாவது முன் நடந்தது போன்ற காரியங்கள் நடவாமல் இருக்கும் என்று தைரியமாய் இருப்பதற்கு போதிய ஆதாரம் இருப்பதாகவும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில் முதலியார் சூழ்ச்சி மறைமுகமாக இன்ன
மும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும் என்று சந்தேகப்பட அநேக அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏனெனில் இந்த சேர்மென் தேர்தலையும் பலர் ஆக்ஷே பிக்கஆசைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் ஸ்ரீமான் பிரப் துரை சிபார்சு வெகுதூரம் பாயும். சர்க்காருடைய யோக்கியதையும் அதற்கேற்றது போல் தான் இருக்கிறது. எனவே யார் யார் சிபார்சு யார் யாரை என்னென்ன செய்ய சொல்லுமோ என்கின்ற பயம் ஜனங்களுக்கு இனியும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆதலால் முன்னின்று வேலை செய்தவர்களுக்கு மூக்கு நிலைக் குமா என்கின்ற சங்கதி போகப் போகத்தான் தெரிய வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 06.11.1927
குடி அரசு - 1927 (3) 288
சுப்பாாய யிரம்மா
டாக்டர் சுப்பராயன் ஜாதிகளை சிருஷ்டிக்கும் வேலையில் மிகுதியும் ஈடுபட்டு வருகிறார்போல் தெரியவருகின்றது.
சென்ற வாரம் பார்ப்பனரல்லாதார் என்பதாக பிரித்து விஸ்வப் பிராம
ணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், தீண்டாதார், தாழ்த்தப்பட்டவர் என்பதாக பல ஜாதிகளை சிருஷ்டித்தார் என்பதாக எழுதி அவற்றைக் கண்டித்து ஒரு
இறுதிக் கடிதமும் எழுதினோம்.
இந்த வாரம் கிருஸ்தவ ஆதித் திராவிடர் என்று ஒரு புதிய ஜாதியை சிருஷ்டித்திருக்கின்றார். இந்து என்கிற ஒரு இல்லாத மதக்காரர்களைப் பிடித்த சனியன் கிருஸ்தவ மதக்காரரையும் தொத்திக் கொண்டுவிட்டதாகக் காண் கின்றது. இனி இந்த பாழும் இந்துமதம் என்னும் பொய் மான் இனியும் எந்த
எந்த மக்களைப் பிடித்து ஆட்டுமோ தெரியவில்லை.
கொஞ்சமும் தாக்ஷண்யம் பாராமல் இந்து மதம் என்னும் பேதமையை அடியோடு வெட்டிப் புதைத்தாலொழிய நமது நாட்டில் வைப்பாட்டி மக்க ளையும் தீண்டாதார்களையும் கீழ் ஜாதியார்களையும் உற்பத்தி பண்ணிக் கொண்டே போகும் வேலை நிற்கவே நிற்காது என்றே நினைக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 06.111927
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
குழு அரசு. oo sl வ்
ன்ன தப்த பங்கை ல் Tl அதிகக் போக்கிடும் என்ன என்பும் by ப இதமா சவால் அடைய மகளே ன்
| கந்தம் கெட்கைகளிலிருப்ம் தப்பு. அப்படகிகக... அகன் அன்கருக்கு உ உணர்ச் எபே வனவள எல் [நஞ்சும் S க்பறுள் அடைக்க ருகஇல ஆரசநிய பென் மில்ல இன்ன்றல்கள் ஸ்ரீனன். நீஃசெரித்தள்ளன அ அ எப் வ தப்புக்கொண்டு “பொறா என்ன. புத்தெறுளன்தகை பத்தின தவன் ந கடத்த தல் அக் வ கெளுச்திவிவண்டுக. அல் ஆ எங்களில் அக்க க்கச் அ்கள்னி க்க ளக
க இதில கனத சனத அத்தனை. யாது எண்பககளவன sy ந்தான் அனு. இன்பம் எசான் gl S oy 05 ரிதம் இக் சே
,‘,,4. தன்தெனதென்ணி e
டு எஙகள் எ த்தப்படுவைற்கு அனுட. கலே இரும்தே இங்வக ாசாாம்மாள து G கத்து அசோ காரியல்சளில் பாவன தாம். ண்ட வகையை கரே உபிவல இ ஒப்பி அஷல ணைன எவை 2 சாயல் கமிஷன். ஒரு கூட்டுக்கொள்ளை,
- Ayn»; வனா த சொத்த P
அஇசமான கெ கன்
இற்குமுள்றான் எழக்ரப்பட்டிராகரும் இகுச்சங்காில் ஏதானது. கடையெற:
பார்கவ gk s ம்பிப் பக்கா எனி மத்தால் அறல் பள் iy ‘:A..:.,, உரிய எம்ப.
1.
செச்த னைக் கேல் கண்ட த்ய ன் நன்று இல்சமிப்ட ஒரு சல்சம். வெச்முதைம், இக் 0௪ ௯ வன் தன்மான விசம் எழுதல. பு Towp வாம் எல் க்கள் என்ப
ல பேத்த்ல் ப் க செல்து பத ஆதன் et ல் இக்கடல் உகிறியோசம் வெகைசத்த பார் எதனை ந A வெத போய்ட போட்டுண்டு செ.
இருச்சகேண்டியதால் போக இதன் நுனைய் ல்கள் = இல்லா த்திய சல்யகல்கள் oo =
ன் Turidugs கிசாவுமாளா ட மி்டனா எழுச்சிக் ச்ச நா இர்நயிகள் சியமிக்கபபட்ட செயல் 2 ர] a
செழ்பழத்குல் ஆள் இனன் போல் திப்ப இளை
P ந்த அயன் eyt வோடு எைநத்கள் குகிகாளிசள் என: தரம் கொண்வப்படுக்கடு் ஏப்ப குர் அகைகவின் பலன் அலைகள் 05 வட்ட என் தொட்டு இர எட்டை அடியால் எ: அறிகளினாம் பால்போல் இன்த அதைத் தளத்தில் அற்சக் m ந்தம் அதைத் அல kB ஜம், S g oy என் வானது g a ld
ப்பது சர்பத் மே இரண்ட இப்போன கத் நுண், ௫ம் சதக கமிடயில் இயர் கிசா கிமல்பபு என்துவது மாமை:
டாமோ ச௫காதா காண்டாயோஎன s அழுகி கதைபோன் கொஞ்சமும் கசன். வினையும் g i பவல்கால் செல் PENER S
குடி அரசு - 1927 (2)
290
ராயல் கமீஷண் ஒரு கூட்டுக் வவான்னை
11
சென்ற வாரம் மேல்கண்ட தலைப்புடன் ஒன்று இலக்கமிட்டு ஒரு தலையங்கம் எழுதி இருந்தோம். இவ்வாரம் அதே தலைப்புடன் இரண்: டாவது வியாசம் எழுதுகின்றோம்.
சென்ற வாரம் ராயல் கமீஷன் என்பது சர்க்காரும் அரசியலின் பேரால் வாழும் சில தலைவர்கள் என்னும் படித்தக் கூட்டத்தாரும் சேர்ந்து இந்திய ஏழை மக்களை வஞ்சித்து கொடுமைக்குள்ளாக்கி வாழச் செய்யும் சூழ்ச்சி என்கின்ற கருத்துக்கொண்டே அதைக் கூட்டுக் கொள்ளை என்று சொன் னோம். அந்தப்படி சொல்லியவைகளையெல்லாம் இவ்வாரத்திய சம்ப வங்கள் உறுதிப்படுத்தியதோடு இந்தியத் தலைவர்கள் என்று சொல்லப்படும் கூட்டம் எவ்வளவு தூரம் உண்மையும் யோக்கிய பொறுப்பும் அற்றவர்க ளென்பதும் எவ்வளவு தூரம் நாணயக் குறைவுகளுமுடையவர்கள் என்ப தையும் விளக்கி விட்டது.
காங்கிரஸ் என்பதும் மற்றும் அதுபோன்ற அரசியல் இயக்கங்கள்
என்பதும் அடியோடு ஏழை மக்களை சில அறிவாளிகள் ஏமாற்றவும் கொடுமைப்படுத்தவும் ஏற்பட்டன என்றும் அவைகளின் பலன் அவைகள் ஏற்பட்ட நாள் தொட்டு இந்திய நாட்டையே அடியோடு பல வழிகளிலும்
பாழ்படுத்தி மீளாத அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வருகின்றதென்றும் பன்முறை எழுதியும் பேசியும் வந்திருக்கின்றோம். பொது வாழ்வு என்ப தானது யோக்கியன் என்பவன் எவனும் பொது நன்மைக்கு உழைக்க முடியாத அளவு நாட்டை பாழ்படுத்தி விட்டது என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். ஆனாலும் பாமர மக்கள் சுலபத்தில் இவ்வேமாற்றத்திலிருந்தும், கொடுமை களிலிருந்தும் தப்புவதாகக் காணப்படவில்லை. ஆதலால் அவர்களுக்கு உண்மை உணர்ச்சி ஏற்படும் வரையில் நாடு முழுவதும் கஷ்டமும் நஷ்டமும் அடைந்து வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இவ்விஷயங்களை ஸ்ரீமான் காந்தி அவர்களிடமும் தெரிவித்த போது அவர் அதை அப்படியே ஒப்புக்கொண்டு “பொதுவாக எல்லாமக்களுக்கும்
29] ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
புத்தி வருகின்றவரை புத்திசாதுர்யமுள்ள ஒரு கூட்டத்தார்தான். ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்க முடியும்; ஆதலால் அது ஜனங்களின் அறிவீன மேயொழிய மற்றவர்கள் தப்பிதமல்ல” என்று சொல்லி மழுப்பிவிட்டார்.
மற்றும் அநேக பெரியாரும் இம்மாதிரியேதான் சொல்லிக் கொண்டே ஏமாற்
றும் கூட்டத்திலே சேர்ந்துகொண்டு மக்கள் ஏமாற்றப்படுவதற்கு அனுகூல மாகவே இருக்கிறார்கள்.
ஆங்கிலேய அரசாக்ஷியானது இந்திய நாட்டிற்கு அனேக காரியங்
களில் பார்ப்பன ஆக்ஷியை விட அதிகமான கொடுமைகளை உண்டாக்கி விடவில்லை என்பது ஒருபுறம் ஒப்புக் கொள்ளக்கூடியதானாலும் இந்திய பொருளாதார விஷயத்தில் இந்தியாவை சுரண்டிக் கொண்டு போகும் காரியத்
தில் இதுவரை எந்த ஆக்ஷியும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டதாக
யாரும் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம். ஆனாலும், இவ்வாங்கி லேயருக்கு இவ்விஷயத்தில் பெரிதும் உதவியாயிருந்து வருவது நம்நாட்டு அரசியல் இயக்கங்கள்தான் என்பதையும் அரசியல் தலைவர்கள்தான் என்பதையும் தைரியமாய்ச் சொல்லுவோம். ஏனெனில் அரசியல் இயக்கம் என்பதாக ஒருமாய்கையை ஏற்படுத்தி மக்களை அதிலேயே மயங்கச் செய்து
விட்டு அதன் மூலமாய் ஆங்கிலேயரிடம் உத்தியோகம் பெறுவதற்காகப் பலர் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றிபெற போட்டி போட்டுக்கொண்டு வெள்ளையரின் கொள்ளைக்கு உள் உளவாகவும் உடந்தையாகவும் இருக்க வேண்டியதாகி விட்டதுதான் என்போம். இதன் மூலமாய் வெள்ளையர்களுக்
கும் தங்கள் கொள்ளைகளை தாராளமாய் நடத்த சவுகரியம் ஏற்பட்டதுடன் ஏன் என்று கேழ்பதற்கும் ஆள் இல்லாமல் போய்விட்டது. இன்றைய தினமும் எந்த ஒரு அரசியல் தலைவர் என்பவருக்காவது ஒரு அரசியல் இயக்கம் என்பதிற்காவது இக்கொள்ளையைப் பற்றிய கவலை ஒரு சிறிதாவது இருக்கின்றதா என்று பார்த்தால் இவ்வுண்மை விளங்காமல் போகாது.
கமிஷன்
தற்போது சர்க்காரார் ராயல் கமிஷன் என்பதாக ஒரு கமிட்டி நியமித் திருப்பதைப் பற்றி அரசியல் தலைவர்கள் என்போர்கள் எல்லோரும் ஒரே மூச்சாக கூப்பாடு போடுகின்றார்கள். தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும்.
மற்றும் சமூகப் பத்திரிகைகளும் ஒரு வண்ணானின் கழுதை செத்துப் போன தற்காக ஊரெல்லாம் சேர்ந்து “கங்காதரா மாண்டாயோ, கங்காதரா மாண். டாயோ” என்று அழுத கதைபோல் கொஞ்சமும் யோசனை இல்லாமல் “கமிட்டியை பகிஷ்காரம் செய்ய வேண்டும், பகிஷ்காரம் செய்ய வேண்டும்” என்று ஓலமிடுகின்றன. இதனால் இந்திய தேசீயம் என்ன என்பதும் தேசீயவாதிகள் யோக்கியதையும் தேசீயப் பத்திரிகைகளின் யோக்கியதையும் என்ன என்பதும் விளங்குகின்றது.
குடி அரசு - 1927 (3) 292
இந்தியா சுயராஜ்யமடைய கமீஷனே வேண்டியதில்லை என்றாவது கமீஷன் வைத்து பரிக7ஷ பார்த்து பிச்சை கொடுப் பதுபோல சுயராஜ்யம் வெள்ளையர் கொடுக்க இந்தியர் வாங்குவது என்கின்ற தத்துவம் கூடாது என்பதாகவாவது வாதாடுவதாயிருந்தால் அது ஆண்மையும் சுயமரியாதை. யுமான காரியமாயிருக்கும்..
அப்படிக்கு ஒரு சிறிதும் இல்லாமல் கெஞ்சிக் கெஞ்சி பிச்சை கேழ்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் இந்தியர்களுக்கு பிச்சை போடும் நிலை
யில் இருப்பதாக நினைத்து இருக்கும் வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் அதிகமான சீர்திருத்தத்திற்கு அருகர்களா இல்லையா என்று பார்ப்பதற் காகவும் கொடுத்த சீர்திருத்தங்களை ஒழுங்காய் நடத்தி இருக்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பதற்காகவும், இதற்கு முன்னால் வழங்கப்பட்டிருக்
கும் சீர்திருத்தங்களில் ஏதாவது நடைபெற முடியாத குற்றங்கள் இருக்கின்றதா என்பதற்காகவும் சீர்திருத்தம் வழங்க அதிகாரமுள்ளவர்கள் என்று இந்தியா தேசீயவாதிகளென்போர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட பிரிட்டிஷ் பார்லிமெண்டார் என்கின்றவர்கள் ஒரு கமிட்டி நியமித்தால் அதில் அங்கம் பெற இந்தியர்களுக்கு உரிமை எப்படி உண்டாகும்?
இந்தியர் அருகர்களா இல்லையா என்கின்ற கமிட்டிக்கு இந்தியர் அங்கம் பெறுவது என்பது தனது யோக்கியதையைப் பரீக்ஷிக்க தானே நீதிபதி யாய் இருக்கின்றது என்கின்றது போலவா அல்லவா என்று கேட்கின்றோம். இந்தியர்கள் சீர்திருத்தம் அடைய யோக்கியதையுடையவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள ஆசை இருந்தால் அந்தக் கமிட்டியின் கேள்விகளுக் கெல்லாம் பதில் சொல்லும் நிலையிலிருந்து தங்களது பெருமையையும் சாமர்த்தியத்தையும் காட்டுவதுதான் யோக்கியமும் நியாயமுமானதாகும்.
மிண்டோ மார்லி சீர்திருத்தத்தில் எத்தனை இந்தியர்கள் நியமிக்கப் பட்டார்கள் என்றாவது, மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தத்தில் எத்தனை இந்தியர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்றாவது யாராவது சொல்லக் கூடுமா. அப்படி இருக்க இப்பொழுது மாத்திரம் இந்தியர்களும் இம்மாதிரி கமிட்டி
யில் உட்காரும்படியான யோக்கியதை என்ன வந்து விட்டது. திடீரென்று முன் சீர்திருத்தங்களின் போது இந்தியர்களுக்கும் ஒற்றுமைக் குறைவும் வகுப்புப் பிரிவினையும் இருந்து இப்போது எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா? முன் கேட்கப்படாத ஒரு புது உரிமையை இப்போது கேட்பதற்கு ஒரு புதிய யோக்கியதை இருக்க வேண்டும் அல்லது முன்னையைவிட இப்போது நல்ல
புத்தி வந்திருக்க வேண்டும். இரண்டில் இப்போது எதைச் சொல்ல முடியும்.
இது ஒருபுறம் நிற்க கமிஷனில் இந்தியர்களில் யாரை நியமிப்பது என்றாவது, யாரை நியமித்தால் யார் ஒப்புக்கொள்ளத் தயாராயிருக்கின்றார்கள் என்றாவது யாராவது சொல்ல முடியுமா? ரெளலட் கமிட்டியில் ஸ்ரீமான்
293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
குமாரசாமி சாஸ்திரிகளை இந்தியர் என்கிற முறையில் நியமித்து அவரும் விசாரணை செய்து திருப்தியடைந்து கையெழுத்துப் போட்டதின் பலனாய் அவர் குடும்பம் பூராவும் ஜில்லா ஜட்ஜ் ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக முடிந்த தல்லாமல் கமிட்டியின் ரிப்போர்ட்படி ஏற்பட்ட சட்டம் இந்தியர்கள் ஒப்புக் கொள்ள முடிந்ததா என்று கேட்கின்றோம்.
சர். சிவசாமி அய்யரும், மகாகனம் சீனிவாச சாஸ்திரியும் மற்றும் பண்டிதர்கள் நேரு, மாளவியா போன்ற அநேக இந்தியர்களும் பல பல கமிட்டிகளில் இருந்து விசாரணை செய்து தயாரித்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் இந்தியர்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதாயிருந்ததா என்று கேட்கின் றோம். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையரான இந்தியரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஏதாவது ஒரு இந்தியர் இதுசமயம் நமது நாட்டில் இருக் கின்றார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
ஒத்துழையாமையை ஒழிக்க வென்றே நினைத்து இந்திய தேசீய காங்கிரஸ் என்கின்ற ஸ்தாபனம் சட்ட மறுப்புக் கமிட்டி என்பதாக தேசீயத் தலைவர்கள் என்பவர்களையே ஒரு கமிட்டியாக நியமித்து அநேக ஆயிரம் ரூபாய்களை செலவு செய்தது யாருக்கும் தெரிந்த விஷயம்தானே. அந்தக் கமிட்டி மெம்பர்கள் யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதாகவாவது அல்லது அவர்கள் செய்தரிப்போர்ட்டு யோக்கியமானதென்றாவது இந்திய மக்கள் ஒப்புக் கொண்டார்களா? அக்கமிட்டி விசாரணையில் இந்திய பிரமுகர்கள் எல்லாம் கலந்துகொண்டார்களா? என்றும் கேட்கின்றோம்.
கமிட்டி என்று சொல்லுவதே பித்தலாட்டம் என்றுதானே இந்தத் தலைவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் கத்திக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு இப்போது எப்படி திடீரென்று கமிட்டியில் அதுவும் வெள்ளைக்காரரையே அதிகமாகக் கொண்ட கமிட்டியில் நம்பிக்கை வந்து விட்டது என்று கேட்கின்றோம்.
வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை இந்தக் கமிட்டியில் நியமிப்பதா னால் யோக்கியமாய் நடு நிலைமையில் இருந்து பார்த்தால் குறைந்த பக்ஷம் தேசீய சபை என்னும் காங்கிரசுக்காக ஒருவரையும் மிதவாதிகள் என்பதற்காக ஒருவரையும், ஜஸ்டிஸ் &) என்பதற்காக ஒருவரையும், மகமதியர்களுக்காக ஒருவரையும், ஒடுக்கப்பட்ட வகுப்பார்கள் என்பதற்காக ஒருவரையுமாவது நியமித்து ஆகவேண்டும்.
வெள்ளையர்கள் இதை ஒப்புக் கொள்ளுவார்களா அல்லது இந்தியர். களாவது இதை ஒப்புக்கொள்ளுவார்களா? நாட்டில் ஒவ்வொன்றும் யோக்கி யமாகவோ அயோக்கியமாகவோ கோடிக்கணக்கான ஜனங்களைக் கொண்ட தென்று சொல்லிக்கொண்டு பல்வேறு ராஜீய அபிப்பிராயம் பலவேறு மதம்,
குடி அரசு - 1927 (3) 294
உயர்ந்தது, தாழ்ந்தது, தீண்டத்தகாதது என்பன போன்ற பலவேறு வகுப்புகள் ஆகியவைகளாய் இருப்பதோடு ஒன்றுக்கொன்று கெட்ட எண்ணமும் நம்பிக்கையின்மையும் துவேஷமும் கொண்டிருக்கின்றபோது இந்தியர்களை. கமிட்டியில் நியமிப்பது என்கின்ற வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று கேழ்க்கின்றோம். பொதுவாக இந்த கமிட்டியைப் பற்றி அடியோடு நமக்கு இஷ்டமில்லை என்பதும் கமிட்டி நியமித்ததுவே பித்தலாட்ட மெனவும் இந்தியர்கள் அதில் அங்கத்தினர்களாக வேண்டும் என்றுகேட்பது அதை விடப் பித்தலாட்டமெனவும் இருவரும் அதாவது சர்க்காரும் இந்தியத் தலைவர்கள் என்போர்களும் கூடிக்கொண்டு குடியானவர்களையும் தொழிலா ளர்களையும் மொட்டை அடிப்பதற்கு ஏற்பாடு செய்த சூழ்ச்சியே இது என்பதும் நமது வெகுநாளைய அபிப்பிராயம் என்பது யாவருக்குமே தெரிந்திருக்குமென்றே நம்புகின்றோம்.
பொதுவாக இந்த கமிஷனைப் பற்றி இந்து மதத் தலைவர்கள் என்ப வர்கள் பல அபிப்பிராயம் கொடுத்திருந்தாலும் அவை இரண்டு தத்துவங் களுக்குள்ளாகதான் வரும்.
அதாவது, இந்திய மக்கள் எல்லோருக்கும் பணக்காரன், ஏழை, தொழிலாளி, முதலாளி, ஆங்கிலம் படித்தவர்கள், ஆங்கிலம் படிக்காதவர்கள், உயர்ந்த ஜாதியார் என்பவன், தாழ்ந்த ஜாதியார் என்பவன் என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் அரசியல் முறையில் வேறு கூட்டத்தார். தயவு இல்லாமல் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் உண்டாகும்படி செய்வதா அல்லது கையில் வலுத்தவனுக்கு ஏகபோக உரிமையாக இப்போதையதைப் போலவே இருப்பதா என்பதுதான் முக்கியத் தத்துவங்களாகுமேயல்லாமல்
பிரிட்டிஷாருக்கும் இந்தியர்களுக்கும் அதிகாரம், பதவி, தொழில், விவசாயம், வியாபாரம் முதலியவைகளில் அனுகூலம் முதலியவைகள் செய்யும் விஷயங்களில் தகராறுகள் அதிகமாயிருக்கும் என்று யாரும் சொல்ல முடியாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் அதைப் பற்றி எந்த
இந்தியத் தலைவருக்கும் கவலையே இல்லை. சுருக்கமாய் சொல்ல வேண்டு
மானால் புதிய சீர்திருத்தத்தில் இப்போது இருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் என்பதை எடுத்து விடுவதா அல்லது இன்னம் கொஞ்சம் விரிவுபடுத் துவதா என்பதே முக்கியமானதாகும். அதென்னவெனில் மகமதியர்களுக்கு விரோதமான சில வடநாட்டு இந்துக்கள் என்போர்களும் பார்ப்பனரல்லா தாருக்கு விரோதமான பல தென்னாட்டுப் பார்ப்பனர்களும் செய்து வரும் பிரசாரமும் தேசசேவையும் என்பதெல்லாம் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதி தத்துவத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்கின்ற கருத்துக்கொண்டே அல்லாமல் வேறு அல்ல. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரவர்கள் வடக்குக்கும்,
தெற்குக்கும் ஓடி ஓடிப் பிரசாரம் செய்த இந்து முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற புரட்டெல்லாம் மகமதியர்களின் வகுப்புவாரிப் பிரதிநிதிதத்துவத்தில் மண்ணைப் போடவே அல்லாமல் வேறல்ல.
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தென்னாட்டிலும் காங்கிரசுக்குள் சுவாதீனப் புத்தியுள்ள பார்ப்ப னரல்லாதார்களை அண்டவிடாமல் மேல் விசாரணைக் கமிட்டி என்பதாக ஒன்றை நியமித்துத்தடுத்ததுடன் இரண்டுக்குமாக பதினாயிரக்கணக்கான ரூபாய்களை வாரி லஞ்சமாகவும் கூலியாகவும் கொடுத்து “கோடாலிக் காம்பு களவும்”, “வயிற்றுச் சோற்று கூலிகளாகவும்” உள்ள பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் வைத்துக்கொண்டு காங்கிரஸ் நடத்துவதின் அவசியமே இதற் காகத்தான்.
இவைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க காங்கிரசை விட்டு ஓட வேண்டும் என்றே விரட்டி அடித்த பெசண்டம்மையை இப்போது மறு படியும் காங்கிரசுக்கு கூப்பிடுவதும் அவருக்கு காங்கிரஸ் தலைவர் பட்டம் கட்ட ஸ்ரீமான்கள் மித்திரன் ரங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்தி அய் யரும் மற்றும் அவர்களது வால்களும் மேல் விழுந்து ஆத்திரப்படுவதும் அதற்காகத்தான். ஏனெனில் சென்னைப் பார்ப்பனர்களின் யோக்கியதையால் காங்கிரசின் யோக்கியதை ஜனங்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதுடன் இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு பாமர மக்களிடம் சுத்த சுத்தமாய் யோக்கிய
தையும் போய் விட்டது. ஆதலால் இவர்களுக்கு ஏதாவது ஒருஉதவி வேண்டி யிருப்பதாலும், அம்மையாரும் இந்த பார்ப்பனர்களின் தயவால் மறுபடியும் தலைவியாகி விடலாம் என்கிற ஆசை கொண்டே இப்பார்ப்பனர்களுக்கு
மிகுதியும் கவலையுள்ளதாகிய வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவ விஷயத்தில் அதற்கு விரோதமாய் இருப்பதாக உறுதி கொடுத்துவிட்டதாலும் இனி அம்மைக்குப் பட்டம் கட்டப்படுவது நிச்சயம். பார்ப்பனரல்லாதாரிலும் நிற்க நிலையில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சில மாஜி தலைவர்களும் தங்களுக்கும் மறுபடியும் தலைவர்களாக ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதற்கு அனுகூலமாய் எவ்வளவு தூரம் அம்மையாரை பின்பற்றலாமோ அவ்வளவு
தூரமும் பின்பற்றி இந்த பட்டாபிஷேகத்திற்கு அனுகூலமாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம்மைப் பொறுத்த வரையில் ராயல் கமீஷன் வந்தாலும் வரா விட்டாலும் அதில் சில இந்தியர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கமீஷன் பேரால் அதிக சுதந்திரம் என்பதாக சில உரிமைகள் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால் அவற்றுள்.
மறுபடியும் நமக்குள் கலகத்திற்கு வழியில்லாமல் மேற் சொன்ன மாதிரி எல்லா
வகுப்பும் சமமாய் அனுபவிக்கத்தகுந்த சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்கின்றதா இல்லையா என்பது தான் முக்கிய கவலை. இந்தத் தத்துவம் மாத்திரம் சரியாக நடக்க இடம் ஏற்பட்டு விட்டால் சுயராஜ்யம் என்பதாக யாரையும் பிச்சை கேட்க வேண்டிய அவசியமே நேராதென்றே சொல்லு வோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.11.1927.
குடி அரசு - 1927 (3) 296
ஜஸ்முஸ் கட்சியாருக்கு ஒரு வார்த்தை
ராயல் கமீஷனைப்பற்றி ஜஸ்டிஸ் கக்ஷியார்கள் ஒருவித அபிப் பிராயமும் இதுசமயம் தெரிவிக்கக்கூடாது என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். பார்ப்பன அரசியல் தந்திரத்தை நாம் பின் பற்றுவதும் அவர்களது இயக்கங்களை நாம் பின்பற்றுவதும் பார்ப்பனரல்லாத
சமூகத்தின் ற்கொலையேயாகும்..
நம் நாட்டில் பார்ப்பனர்கள் சம்மந்தப்பட்ட அரசியல் இயக்கங்கள் என்பது எதுவும் கொஞ்சமும் நாணயமுடையதல்ல. அக்கூட்டத்திற்கே இவ்விஷயங்களில் மானம், வெட்கம், நாணயம் முதலியவைகள் கடுகளவும் கிடையாது என்றே சொல்லுவோம். ஏனெனில் இன்று பஹிஷ்காரம் என்பார்.
கள் நாளை ஏற்றுக்கொள்ளுவது என்பார்கள் இன்று ஒத்துழையாமை என்பார்.
கள் நாளை ஒத்துழைப்பு என்பார்கள். இன்று முட்டுக் கட்டை என்பார்கள் நாளை சன்னைக் கட்டைப்போட்டு நடத்திக் கொடுப்பது என்பார்கள், இன்று நம்பிக்கை இல்லை என்பார்கள். நாளை சம்மந்தம் செய்து கொள்ளுவது என்பார்கள். இன்று காங்கிரஸ் கட்டளை என்பார்கள் நாளை காற்றில் பறக்க விடுவார்கள். இன்று வைவார்கள். நாளைக்கு பல்லைக் காட்டுவார்கள். இவ்வளவும் தங்கள் சுயநலத்திற்காகவே செய்வார்கள். எனவே, இம்மாதிரி கூட்டத்தில் சேர்ந்தால்தான் வாழ முடியும் என்கின்ற பார்ப்பனரல்லாதார். யாராவது இருப்பாரானால் அவர்களின் நிலை பெரும்பாலும் இதை விட்டால் நாளைக்கு ஜீவனத்திற்கு மார்க்கமில்லை என்கின்றவர்களாகத்தான் இருக்க. வேண்டும். அப்படிப்பட்டவர்களை மாத்திரம் ஒரு நிபந்தனையின் மேல் பார்ப்பனர்களிடம் செல்ல அனுமதிக்கின்றோம். அதாவது பார்ப்பனர்களைப் போல் எந்த சமயத்திலும் தனது சமூகத்தை காட்டிக்கொடுத்து வாழாமல் பார்ப்பனர்களைப் பற்றி கவிபாடிக் கொண்டோ பார்ப்பனரல்லாதார் சிலரை
மாத்திரம் வைதுகொண்டோ வயிறுவளர்ப்பதில் நமக்கு ஆக்ஷபணை: இல்லை.
தவிர, இதுசமயம் பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு பெரிய ஆபத்து இருக்கின்றதை முன்னமேயே தெரிவித்திருக்கின்றோம். அதாவது, பெசண்ட் அம்மையின் புதிய உபத்திரவம் என்னவெனில், நம் நாட்டு பார்ப்பனர்கள். இப்போது தங்களுக்குள்ள சகல நாடிகளும் விழுந்து விட்டப்பிறகு, அம்மை
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
யை பற்றி இருக்கின்றார்கள். இனி அது ஒரு ஆட்டம் ஆடித்தான் தன் நிலைக்கு வந்து சேரும். யாரும் அதில் ஏமாந்துபோய் விழுந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம். கோயமுத்தூர் தீர்மானத்தால் ஏற்பட்ட ஆபத்திலிருந்தே இன்னமும் சரியானபடி நாம் மீளவில்லை. இதே சமயத்தில் மற்றொரு ஏமாற்றம் என்னும் பெசண்ட் அம்மை ஆபத்திலும் யாருடைய
சூழ்ச்சியின் பலனாகவாவது மாட்டிக் கொள்வோமானால் பிறகு சுலபத்தில்
நமக்கு விடுதலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாகிவிடும். இது சமயம் நமக்கு யாருடைய தயவும் வேண்டியதில்லை. நம்முடைய சுயமரியாதை இன்னது என்பது நமக்கு ஞாபகத்திற்கு வந்தால் அதுவே போதுமானதாகும். “நாட்டிற்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் தொழில் போகாது” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் இந்நாட்டில் பார்ப்பன ரல்லாத மக்கள் பெரும்பான்மையும், தோட்டி நிலையிலேயே இருக்கின்
றார்கள். அத்தோட்டி நிலைமாற ஏதாவது மார்க்க முண்டானால் மாத்திரம், எந்தத் துரையையும் எந்தக் கமீஷனையும் வரவேற்கவும் செய்யலாம், பஹிஞஷ்கரிக்கவும் செய்யலாம். அதில்லாத பக்ஷம் நாமாக தனித்து நின்று ஒரு கை பார்த்து, நமது நிலையை மற்றவர்களுக்குச் சமமாக உயர்த்திக்கொள்ள வேண்டிவரும். ஆதலால் அவசரப்பட்டுக் கொண்டு இப்போது எவ்வித அபிப்பிராயத்தையும் தெரிவித்து விடக்கூடாது என்பதுடன் எந்த அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.11.1927
குடி அரசு - 1927 (3) 298
யார்ப்பண கூழ்ச்சி
நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள் நாட்டில் தங்களுக்கும் இக்காரியத்திற்கும் ஆதரவில்லை என்று தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்களின் பெயரை வைத்துக்கொண்டு, வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்கள். இது காங்கிரசின்போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்
காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங் களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்து விட்டால் நாளைக்கு பார்ப்பன கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கும் ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரிய மென்றுமே சொல்லுவோம். இனியும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும் ஏமாற்றமும் செய்யக்கூடும் என்பதையும் இக்கூட்டத் திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக..
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.11.1927
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சந்தேகம் உறுதியாய் விட்டது
ஸ்ரீமதிகள் துரைகண்ணு அம்மாள், பார்வதியம்மாள் ஆகிய இரு பெண்கள் பெயரால் பொட்டுக்கட்டும் வழக்கத்தை நிறுத்துவதால் தங்கள் சமூகத்திற்கு கேடு வரும் என்று ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் அவர்களது மசோதாவுக்கு எதிர்பிரசாரமும் செய்ய வந்த காரியங்களை நாம் பார்த்தவு டனேயே இக்காரியங்கள் அவர்களால் நடைபெறுவதல்ல என்றும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு கூட்டம் ஆண்கள் இருந்து செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகப்பட்டோம். அப்படி சந்தேகப்பட்டது சரியென்று மெய்ப் பிக்க இப்போது ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. என்னவென்றால் சுயராஜ்ஜி
யக் ககஷி உயிர்நிலையான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சுயராஜ்ஜியக் ககஷித் தலைவர் வீட்டில் பேசியபோது குறிப்பிட்ட வாசகங்களிலிருந்தே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கூட்டத்தாருடைய தூண்டுதலாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்ப இடமேற்படுகிறது. ஆதலால் இம்மாதிரி ஆக்ஷேபங் களை பொது ஜனங்கள் லக்ஷ்யம் செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகின் றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13111927
குடி அரசு - 1927 (3) 300
செண்ணை கார்ப்பரோஷனும் வகுப்பு வாதமும்
சென்னை கார்ப்பரேஷனுக்குத் தலைவர் தெரிந்தெடுக்க வேண்டிய சடங்கு இம்மாதத்தில் நடக்க வேண்டும்.
சென்னை முனிசிபாலிட்டியில் இதுசமயமுள்ள 50 கவுன்சிலர்களில் பார்ப்பன ககஷியில் சுயராஜ்யக் கக்ஷிக்கும் சுயேச்சை கக்ஷிக்குமாக சுமார் 20 கவுன்சிலர்கள் இருக்கின்றார்கள். பார்ப்பனரல்லாதார் ககரிக்கும் சுமார் 20 கவுன்சிலர்கள் இருக்கின்றார்கள். மீதி வெள்ளைக்காரர்களாக இருக்கின் றார்கள். ஆகவே, எந்த கக்ஷியாரும் வெள்ளைக்காரர்கள் தயவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இந்த நிலையில் வெள்ளைக்கார கவுன்சிலர்கள் இரண்டுக் கக்ஷித் தலைவர்களையும் தங்கள் முன் வந்து அவரவர்கள். கொள்கைகளை உபந்நியாசம் செய்யும்படிக்கும் அதில் யார் வெள்ளைக் காரர்களுக்கு அனுகூலமாயிருக்கிறார்களோ அவர்களுக்குத் தங்கள் ஓட்டை கொடுப்பதாகவும் சொன்னார்கள். அவர்கள் பேச்சை நம்பி இரண்டு ககஷிக் காரர்களும் அதாவது பார்ப்பனரல்லாத கக்ஷிக்காக முக்கியமாய் பனகால் ராஜாவும் பார்ப்பன ககஷிக்காக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரும் பேசினார்.
கள். மற்றும் ஸ்ரீமான்கள் பாத்ரோவும், சாமி வெங்கிடாசலம் செட்டியாரும் முறையே பேசி இருந்தாலும் முன்சொன்ன இருவர்கள் பேசினதையே பிரதானமாய் வைத்துப் பார்த்ததில் ஒருவரைவிட ஒருவர் பேசினது ஜாக்கிர. தையாகவும் இரண்டர்த்தம் கொடுக்கக் கூடியதாகவும் வெள்ளைக்காரரையும் ஜனங்களையும் ஏமாற்றக் கூடியதாகவும் இருந்ததே தவிர ஒன்றும் வெள்ளைக்காரரால் மதிக்கப்படவில்லை. காரணம் என்னவெனில் இந்த. இரண்டு ககஷிக்கும் ஓட்டுக்கொடுப்பதற்கு வெள்ளைக்காரருக்கு இஷ்ட மில்லை.என்னவென்றால் கோயமுத்தூர் மகாநாட்டில் கவர்னர் பிரபு பேரில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றியதால் பார்ப்பனரல்லாதார் ககஷி மேல் இருந்த நம்பிக்கை வெள்ளைக்காரருக்கு விட்டு போய் விட்டது.
சுயராஜ்யக் கக்ஷி கவுன்சிலர்கள் மானம், மரியாதை இல்லாமல் இழிமொழிகள். பரிமாறிக்கொண்டு மீன்கடை, கள்ளுக் கடைபோல் கலகம் செய்வதால் அவர்களுக்குஓட்டுக்கொடுக்கவும் இஷ்டமில்லை. இதுவும் தவிர சுயராஜ்ய கக்ஷியார் வெள்ளைக்காரர் ஓட்டுப் பெறுவதாயிருந்தாலும் அது ஒரு பார்ப்பனருக்கு வருவதற்கு இல்லாமல் இந்த தடவையும் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம்செட்டியாருக்கே போக வேண்டியிருக்கு மாதலால் சுயராஜ்யக்
301 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கக்ஷியிலுள்ள பார்ப்பன கவுன்சிலர்களுக்கு தங்கள் கக்ஷியார் பேரால் ஆளை நிறுத்தவும் மனம் இல்லாமல் சூழ்ச்சி செய்து எப்படியாவது அது இந்த தடவை ஒரு பார்ப்பனருக்கு போகும்படி செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய கருத்து. இந்த நிலையில் ஜி.எ. நடேசய்யர் என்கிற ஒரு பார்ப்பனரை சுயராஜ்யக் கக்ஷி பார்ப்பனர்கள் ரகசியமாய் தூண்டி விட்டு அவரைக்கொண்டு வெள்ளைக்காரர் ஓட்டுகளை சரி செய்யச் செய்து தாங்க
ளும் உதவி செய்வதாய் வாக்களித்து (ஏனென்றால் ஸ்ரீமான் நடேசய்யருக்கு ஓட்டு செய்யாவிட்டால் ஜஸ்டிஸ்காரர்கள் வந்து விடுவார்கள். ஆதலால் ஜஸ்டிஸ்காரர்கள் வராமலிருப்பதற்கு வேறு ஒரு கக்ஷிகாரருக்கு ஓட்டு செய்தோம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்கிற சாக்கின் பேரில் அவரை: யேத் தலைவராக்க வெகு பிரயத்தனங்கள் செய்கின்றார்கள். இந்த சூழ்ச்சி அறிந்த ஜஸ்டிஸ் கக்ஷியார் தங்கள் ஓட்டுகளை தாங்கள் வருவதற்கு இல்லாவிட்டால் ஒரு பார்ப்பான் வருவதைவிட பார்ப்பனரல்லாதாராவது வரட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரில் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கு ஓட்டு செய்வதாய் ஒப்புக் கொண்டு அவருக்கு வலுவில் சொல்லியும் அனுப்பி விட்டார்கள். இது தெரிந்த வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர்களும் இஞ்சி தின்றக் குரங்கை போல் விழிக்கிறார்கள். எப்படி யாவது பார்ப்பானை இந்த தடவை தலைவராக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரில் பார்ப்பனர்கள் ஒரு புது யோசனை கண்டுபிடித்தி ருக்கிறார்கள். அதாவது ஜஸ்டிஸ் கக்ஷியார் நல்ல எண்ணத்தின் பேரில் தங்கள் கக்ஷிக்கு ஓட்டுசெய்ய வரவில்லை. வகுப்பு துவேஷத்துடன் பார்ப்பான் வரக்கூடாது என்கின்ற எண்ணத்தின்மேல் சாமி வெங்கிடாசலம். செட்டியாருக்கு ஒரு பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஓட்டு செய்ய வருகின்றார்கள். ஆதலால் அம்மாதிரி ஓட்டுகளை பெறுவதின் மூலம் வகுப்பு துவேஷத்தை வளர்ப்பதற்கு இடம் தரக்கூடாது. எப்படியாவது பாடுபட்டு
வகுப்பு துவேஷம் ஒழிவதற்கு அனுகூலமாய் இந்த தடவை ஒரு பார்ப்பனருக்கேத் தலைவர் பதவி செய்து வைக்க வேண்டுமென்று தர்மநியா
யம் பேசுகிறார்கள். பார்ப்பனர்கள் தயவினாலும், பணத்தினாலும் ஸ்தானம். பெற்ற பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள் சிலரும் இதற்கு ஆமா ஆமா போடுகிறார்கள்.
என்ன சொன்னாலும் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியாரை
சுலபத்தில் ஏமாற்ற முடியாது. ஆதலால் முடிவு எப்படி ஆகுமோ சொல்ல முடியாது. என்ன ஆவதானாலும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு தலைவர் ஸ்தானம் கிடைப்பது கஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வெள்ளைக்காரர்கள் சுயராஜ்யக் கட்சிக்காவது ஓட்டுச் செய்து கவுன்சில் மீட்டிங்கின்போது காதையும் கண்ணையும் மூடிக்கொள்ளவோ எழுந்து ஓடி விடவோ செய்வார்களேயல்லாமல் கவர்னர் பேரில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் செய்து இரட்டை ஆட்சியை ஒழிக்கின்றவரை உத்தியோகம்
குடி அரசு - 1927 (3) 302
ஒப்புக்கொள்ளுவதில்லை என்று சொன்னவர்களுக்கு ஓட்டுச் செய்யவே மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
எது எப்படியானாலும் அதில் நாம் போற்றுவது ஒன்று. அதாவது கக்ஷிபேதம் பாராட்டாமல் எதிர் ககஷியாய் இருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சியின் பேரில் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கு ஓட்டுக் கொடுப்பதாய் வலுவில் சொல்ல தைரியமாய் முன் வந்த பார்ப்பனரல்லாதார் கக்ஷியின் உணர்ச்சியை நாம் மனதாரப் பாராட்டுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 13.11.1927
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
€சேலம் மகாநா௫
சேலம் மகாநாடு சென்ற வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு விறோதமாக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி கொஞ்சமல்ல. இது
விஷயத்தில் ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடுவும் ஜி. ராமசந்திர நாயுடுவும் எடுத்துக் கொண்ட முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
பார்ப்பனர்கள் இவர்கள் முயற்சிக்கு செய்த கொடுமைகளையும் இடையூறுகளையும் பார்த்து மனம் பொறுக்காமலேயே பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் அநேகர் சேலம் மகாநாட்டிற்கு வந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் சேலம் மகாநாட்டால் வெளியா யிற்று. அதென்னவெனில் காங்கிரசை பார்ப்பனர்களிடமிருந்து பார்ப்பன
ரல்லாதார் லேசில் கைப்பற்றிவிடலாம் என்று வெகு சுலபமாக சிலர் வாயில் பேசிக் கொண்டிருந்தது தப்பு என்பதும் அது சுலபத்தில் முடியக்கூடிய காரியம் அல்ல என்பதும் நன்றாய் வெளியாய்விட்டது. பார்ப்பனரல்லாதார். சேலம் ஜில்லா மகாநாட்டு வரவேற்புக் கமிட்டியைக் கைப்பற்ற மாத்திரம் 1000ரூ. சிலவு செய்ய வேண்டியிருந்தது. அப்படிக் கைப்பற்றியும் கூட அநேகமாய் எல்லா பார்ப்பனர்களும் வெளியேறியதுடன் சில கோடரிக் காம்புகளையும் பிடித்து இது சரியான கமிட்டி அல்ல, இது சரியான தேர்தல் அல்ல என்று பலவித குற்றங்களைச் சொல்லித்தள்ளிவிட்டார்கள். தற்கால ஏற்பாடாய் நடக்கும் மகாநாட்டுக் கமிட்டியை கைப்பற்றவே 1000ரூ செலவு செய்தும் கமிட்டி சரியானதல்லவென்று சொல்லப்பட்டுவிடுமானால் இனி வருஷமெல்லாம் நிரந்தரமாயிருக்கும் காங்கிரஸ் கமிட்டியை கைப்பற்றுவ தென்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமாகுமா? அந்தப்படி முடிந்த இரண்டொரு இடங்களில் கூட அவை தப்பான கமிட்டிகள் என்று சொல்லி அவைகளை செல்லாததாக்கிவிட்டு வேறு கமிட்டிகள் ஏற்படுத்திக் கொண்ட
தாகச் சொல்லி தங்களுக்கே ஏகபோகமாக்கிக் கொண்டார்கள். சேலம் ஜில்லா காங்கிரசையும் கூட இப்படியேதான் செய்துவிட்டார்கள்.
எங்காவது தேச ஊழியம் செய்ய வேண்டும் என்கிற ஒருவன் இந்த மாதிரி அயோக்கிய பார்ப்பனர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியுமா என்பதை யோசித்தால் காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார். சங்கதி விளங்காமல் போகாது.
குடி அரசு - 1927 (3) 304
நிற்க. இவ்வளவு கஷ்டப்பட்டு நடத்திய சேலம் மகாநாட்டால் என்ன பலன் உண்டாயிற்று என்று பார்த்தால் பார்ப்பன ஆதிக்க காங்கிரசு ஒரு ரூபாயானால் சேலத்தில் பார்ப்பனரல்லாதார் 1000ரூ செலவு செய்து கைப்பற்றி நடத்திய பார்ப்பனரல்லாதார் காங்கிரசு 16 அணா என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும் வகுப்புவாரி உரிமைக்கும் ஏற்றதான சில தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்பட்டி
ருந்தாலும் மக்களை ஏமாற்றும் தீர்மானங்களும் அரசியலின் பேரால் தாராளமாய் நிறைவேற்றப்பட்டிருக்கிறதென்றே சொல்லவேண்டும்.
அதாவது ராயல் கமிஷனில் சரியான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தால் அதை பகிஷ்கரிக்க வேண்டும் என்கின்ற தீர்மானமும் பெசண்: டம்மையாரின் காமன் வெல்த்து பில் என்னும் மசோதாவை ஒப்புக் கொள் வதான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதையுமே முக்கியமாய்ச் சொல்லலாம். ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதென்பதும் அதற்கு நிபந்தனை சரியான இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் என்பதும் எவ்வளவு மோசமானது. என்பதும் விளங்காமல் போகாது. இதை அங்கு பலர் ஆக்ஷேபித்து அவ்வா க்ஷபனை எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டும் சிலருடைய சொந்த மரியாதையைக் காப்பாற்றவேண்டி இத்தீர்மானம் தாக்ஷண்ணியத்தின் பேரில் நிறைவேற்றப்பட வேண்டியதாகி விட்டது. அதற்கு ஓட்டுக் கொடுத்த பலர். இத்தீர்மானத்தை நிறைவேற்றினால் ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடுவுக்
கும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாருக்கும் ராயல் கமிஷனில் இடம் கிடைக் கக்கூடும் என்கின்ற ஆசையுடனேயே ஓட்டு கொடுத்தார்கள் என்று நினைக் கத்தக்கதாகவே இருந்தது. யார் சரியானவர்கள் என்பதும் யாரை நியமித்தால் பலளளிக்கக்கூடியதாயிருக்குமென்பதும் இவ்விருகனவான்களுக்கே அர்த்த மாகாமல் ராயல் கமிஷனைப்பற்றி அபிப்பிராயம் கொடுத்து பாமர மக்களைப் பைத்தியக்காரர்களாக்கி கெட்ட பெயர் சம்பாதித்துக் கொடுத்து விட்டார்கள்.
இரண்டாவதாக பெசன்டம்மையார் காமன் வெல்த் மசோதா தீர்மான விஷயத்தையும் அது இன்னது என்றும் அதில் இன்னது இருக்கின்றது என்றும் அங்குள்ள மக்களுக்கு தெரிவிக்காமலேயே அதை ஒப்புக் கொள் வதாக தீர்மானித்துக் கொண்டார்கள். பார்ப்பனர்கள் எப்படி வேதத்தை படிக்க இடங்கொடுக்காமலேயே எல்லோரையும் ஒப்புக் கொண்டதாகச் சொல்லும் படி ஏமாற்றி வருகின்றார்களோ அதுபோலவே இவ்விஷயத்திலும் செய்தி ருக்கின்றார்கள். இதுபோல மோசமான காரியம் வேறொன்றைச் சொல்லவே
முடியாது.
பார்ப்பனரல்லாத மக்கள் காங்கிரசில் சேர்ந்தால் எப்படி ஏமாற்றப் படுவார்கள் என்பதையும் எப்படி பாமர மக்களை மற்றவர்கள் தங்கள் சுயநலத்துக்கு உபயோகித்துக் கொள்வார்கள் என்பதையும் சேலம் ஜில்லா மகாநாடு காட்டிவிட்டது.
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ராயல் கமிஷனைப் பற்றியாவது, பெசன்டம்மை காமன் வெல்த் மசோதாவைப்பற்றியாவது, அதனால் நமது நாட்டு மக்களுக்கோ அல்லது அம்மகாநாட்டில் அநேகமாய் முழுதுமாயிருந்த பார்ப்பனரல்லாத மக்க ளுக்காவது ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது உண்டு என்று யாராவது சொல்லக்கூடுமாயென்று கேட்கிறோம். நாளைக்கு யாராவது சொல்வதா னாலும் கேட்டுக் கொள்ளத்தயாராயிருக்கின்றோம். ஆகவே காங்கிரசைப் பார்ப்பனரல்லாதார் கைப்பற்றியதால் பலன் என்ன என்பதும் சேலம் மகாநாட்டால் தெரிந்து போயிற்று என்றே சொல்லலாம். மற்றபடி மகாநாடு ஏற்பாடுகளும் வந்த பிரதிநிதிகளுக்கும் மற்றும் அழைப்புக்காரர்களுக்கும் வேண்டிய சவுகரியங்களும் போஜன வசதிகளும் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது.
குடி அரசு - கட்டுரை - 13.11.1927
குடி அரசு - 1927 (3) 306
காணசூரியனண்
ஸ்ரீலஸ்ரீ சிவாநந்த சரஸ்வதி ஸ்வாமிகளால் எழுதப்பட்டு ஸ்ரீமான் கானாடுகாத்தான் வயிசு ஷண்முகம் செட்டியார் அவர்களால் பொது நன்மையை உத்தேசித்து அச்சிடப்பட்ட “ஞானசூரியன்” என்னும் புத்தகம் நமது பார்வைக்கு வந்தது. அப்புத்தகம் தமிழ்நாட்டு மக்கள் அவசியம்
படித்துப் பார்க்க வேண்டியவைகளில் ஒன்று என்றே சொல்லுவோம்.
இதைப் படித்து பார்த்தால் வேதம் என்று சொல்லுவதில் உள்ள ஆபாசங்கள் வெளியாவதுடன் வேதத்தை ஏன் ஒரு வகுப்பார் தவிர மற்ற வர்கள் படிக்கக் கூடாதென்று ஆதியிலிருந்தே பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். ஸ்ரீலஸ்ரீ சுவாமி அவர்கள் இதில் பெரும்பாகம் வேதத்தில் உள்ள சுலோகங்களையும் மற்றும் வேதத்தை. ஆதாரமாய் கொண்ட சமஸ்கிருத நீதிநூல்கள் என்பவைகளில் உள்ள சுலோகங்களையும் எடுத்து எழுதி அதற்கு அர்த்தம் எழுதியிருப்பதுடன் ஆரியர்களான பார்ப்பனர்களின் அநாகரிகத்தையும் அவர்களது காட்டு மிராண்டித்தனத்தையும் சுயநலத்தையும் நன்றாய் விளக்கி இருக்கின்றார். இதை ஒரு தடவை வாசித்துப் பார்த்தவன் நேருக்கு நேராக விமானம் வந்து தன்னை கூட்டோடு மோட்ச லோகத்திற்கு அழைத்துக்கொண்டு போவதா னாலும், தான் இந்து என்றோ வேதத்தையும் ஸ்மிருதிகளையும் நம்புபவன் என்றோ சொல்லிக் கொள்ள ஒரு கடுகளவும் சம்மதிக்க மாட்டான். எனவே உண்மையான தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இப்புஸ்தகத்தை ஒரு தடவை
படித்துப் பார்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம். விலை ரூ1. கிடைக்குமிடம்:-ஸ்ரீமான் வயிசு ஷண்முகம் செட்டியார், கானாடுகாத்தான்,
(ராமநாதபுரம் ஜில்லா )
குடி அரசு - மதிப்புரை - 13.11.1927
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
[ச் கள் மதக ககள்வி
மாங் | ரொ, பிரபவ G கார்த்னொச o 8 (011 27) ஜாயித்றுக்ழெமை: | க .
மூன்று மாதத்தில் கதர்ப் பத்திரிகைக்; மோட்டார் ஓட்ட கற்றுக் | பூதப் பத்திர்கைக்கு ன்ன | w0t 52 kst 1918ஹி ஸ்தாபிக்ப்பட்டனு
- அளெயாத க்கத் அட்ட இனனம சக்கான் க கறை கத்மைய்ய o PP -
“குடி அல் R . சக்த g o e செ தமம் அகவ கள்
ன ற்ப ன் த்
| இருப்பூர் கதர் பணியன்கள்..
குளிகாலத்துக்குச் தஞ்ச உபபயோகமான்வைகள், டவ் ம்ப னை தம் க் பதக்கக்ககவதமான
கரும் வறன் பகத
குடி அரசு - 1927 (3) 308
யட்டுக்கோட்டையில் ச௬ுயமரியாதைய் பிரசாரம்
நான் இவ்வூருக்கு இதற்கு முன் இரண்டு தடவை வந்திருக்கின்றேன். இது மூன்றாம் தடவை. தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல இடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால் சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலைப் பெற்று வாழும் மக்களிடம் சுயமரி யாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப் பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. ஆனால்
நாம் பல ஆயிரம் வருஷங்களாக விடுதலையின்றி அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பது நன்கு விளங்கும். முன்னர் சுமார் 500 வருஷங்களுக்கு முன் வெள்ளையர்கள் இருந்த நிலைமையையும், இப்போது அவர்கள் இருக்கும் நிலைமையையும் கவனிக்கையில் அவர்கள் எங்ஙனம் மாறுதலடைந்து வந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இவர்கள் அக்காலத்
தில் நம்மைவிட பக்தி, மூடக் கொள்கை முதலிய படுகுழிகளில் ஆழ்ந்து கிடந்தார்கள். நாம் நம் நாட்டில் நாகரிகம் படைத்திருந்த காலத்தில் அவர்கள் காட்டுமிராண்டிகளாக, மீன், நண்டு. புழு.பூச்சி முதலியவைகளைப் புசித்துக் கொண்டு அநாகரீகர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். அத்தகைய ஜாதி யார்கள்தான் நம்மை அநாகரீகமுள்ளவர்கள், மிலேச்சர்கள் என்று பலவகை மொழிகளை நம்மீது சாற்றி இழிவுபடுத்தி, அடிமைகளாக்கி ஆண்டு வருகி
றார்கள். பல நூற்றாண்டுகளாக நாம் அடிமைக் குழியிலேயே இருந்தும், நாம் விழித்தெழுந்து நமது குறைகளை தீர்த்துக்கொள்ள முன்வரவில்லை. சுயராஜ்
யம், விடுதலை என்றுதான் கத்திக் கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நாளுக்கு நாள் பலமாகக் கிளர்ச்சி செய்து கொண்டும் கூக்குரல் செய்து கொண்டு வந்தும் நாளுக்கு நாள் நாம் பின்னோக்கியே செல்கின்றோம். இத்தகைய கூக்குரல்களைக் கேட்டுக்கேட்டு எதிரிகள் விழித்துக்கொண்டு
இதற்கெல்லாம் காரணம் நமது மதந்தான். மத சம்மந்தமான மூடக் கொள்கைகள், அசட்டுத்தன்மை, குருட்டுத்தனம் முதலியவைகளால் நாம் இவ்வளவு கேவல ஸ்திதிக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மதஸ்.
தர்களையும் எடுத்துக்கொண்டால், அந்தந்த மதஸ்தர்களுக்கு தங்களுக்கென
309 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஆள தேசமிருப்பதல்லாமல், சில மதஸ்தர்கள் பிறநாட்டையும் ஆண்டு. வருகிறார்கள். நாம் நம்முடைய நாட்டையாவது ஆள சக்தி இல்லா
விட்டாலும் அடிமைகளாகவாவது இல்லாமல் இருக்கின்றோமா என்று பாருங்கள்! நேற்று தோன்றிய மதங்களெல்லாம், தங்களுடைய மதஸ்தர்களை ஆண்டு வரும் பொழுது நம்முடைய மதஸ்தர்கள்தான் நம்மை ஆண்டு கொள்ள முடியாமல் அடிமைகளாயிருக்கின்றனர். நமது மதம் எத்தனையோ கோடி வருஷங்களுக்கு முன் கடவுளால் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்
படுகிறது. நம்முடைய மதத்திலுள்ள கொள்கைகளும், குருட்டுத் தனங்களும், நாம் அக்கொள்கைகளைப் படிக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனை களும்தான் நம்மை இக்கதிக்கு கொண்டு வந்து விட்டு விட்டன என்று சொல்வேன். நம் “ஹிந்து மதம்” என்று சொல்லும் மதத்தை சற்று ஆராய் வோம். முதலில் “ஹிந்து” என்கிற வார்த்தையே நம்முடைய வார்த்தையல்ல. அவ்வார்த்தை நம்முடைய புராண ஆகமம் முதலியவைகளில் எங்கேனும் சொல்லப்பட் டிருக்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எங்கி ருந்தோ அந்த ஹிந்து என்ற வார்த்தை நம்முடைய மதத்துக்கு பெயராக புகுந்துவிட்டது. நம் நாட்டு மதத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பெயர். நம்முடைய பாஷையில் அன்றோ இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் “ஹிந்து” என்னும் வார்த்தையே நம்முடைய பாஷையில் கிடையாது. “ஹிந்து” என்னும் பதத்துக்கு என்ன பொருள் என்று கேட்டால் ஒருவருக் குமே தெரியாது. இப்படிப்பட்ட மதத்தை கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மதம், பெருகைளையும் அற்புதங்களையும் உடையது என்று நம்மவர்கள் பெருமை பேசிக்கொள்கின்றனர். நேற்றைக்குப் போய் மற்றொரு மதத்தில் சேர்ந்த ஒருவனைக் கேட்டால் தன்னுடைய மதம், கொள்கை, தத்துவம் முதலியவை
கள் இன்னின்ன வென்பதை உடனே கூறிவிடுவான். அவன் தீண்டாதவனா
யிருந்தாலும் அம் மதத்தில் மற்றவர்களுக்குரிய சமத்துவம் சகோதரத்துவம் முதலிய சகல உரிமைகளும் தாராளமாய் வழங்கப்படுகின்றன. அவர்களு டைய வேத புஸ்தகங்கள் பல பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாய் மக்களுக்கு மூலை முடுக்குகளிலும் கொண்டுவந்து கொடுக்கப்
படுகின்றன. ஆனால் நம்முடைய மதத்துக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா வென்று ஒருவரைக் கேட்டால் அவருக்கு ஒரு ஆதாரமே கிடையாது என்று தான் சொல்வார். ஏனென்றால் ஹிந்து மதத்திற்கு ஆதாரம் என்று சொல்லப் படும் ஆகமம், புராணம், வேதம் முதலியவைகளை ஒரு சாரார் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது, கேட்கக்கூடாது, மீறிச்செய்தால் நாக்கை அறுத்து விடவேண்டும், காதில் ஈயத்தை காய்ச்சிவிட வேண்டுமென்று பல நிபந்த னைகளை நம் மதத்தில் ஏற்படுத்தி இருக்கின்றனர். இம்மாதிரியான மதத்தை ஒப்புக் கொள்கிறவன் அனுஷ்டிக்கிறவனை அறிவாளி என்றாவது, யோக் கியன் என்றாவது சொல்லக் கூடுமா? இனி வேதங்களை ஒப்புக் கொள்ளு கிறவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் எத்தனையோ கொள்கைகளையும், பெருமைகளையுமுடைய ஒரு மதம் மக்களுக்கு எவ்வளவு தூரம் கல்வி, அறிவு முதலிய துறைகளில் எவ்வளவு நன்மை
குடி அரசு - 1927 (3) 310
செய்திருக்கிற தென்பதைப் பாருங்கள். இவ்வளவு காலமாக இருந்து வந்த ஒரு மதத்திலுள்ள மக்களில் 100 -க்கு 5 பேருக்குக்கூட கையெழுத்துப் போடத் தெரியாது. இன்னும் மற்ற மதஸ்தர்கள் தங்களுடைய மதத்தைப் பற்றி எவ்வளவு தூரம் பிரசாரம் செய்து வந்திருக்கிறார்கள். நாம் எவ்வளவு தூரம் பிரசாரம் செய்து வந்திருக்கிறோமென்றும் கவனியுங்கள்! மற்ற மதஸ்தர்கள் தங்களுடைய மதத்தின் பேரால் எவ்வளவு செலவு செய்து வருகிறார்க ளென்று பார்த்தால் நாம் செலவு செய்வதில் 20-ல் ஒரு பங்கு கூட அவர்கள் செய்வதில்லை. நம் முடையஹிந்து கோவில்களுக்கு வருஷத்தில் எவ்வளவு வருமானம் வருகிறதென்று பார்த்தால் அக்கோவில்களின் கணக்குகளிலி ருந்தே விளங்கும். லக்ஷம் லக்ஷமாக வந்து குவிகின்றன. நமது சென்னை மாகாணத்தில் மட்டும் கோவில்களின் வருமானம் இரண்டு கோடி ரூபாய் என்று சர்க்கார் கணக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் ஸ்தல யாத்திரைக் காரர்களின் செலவுதான் என்ன! கோவில் கணக்குகளைப் பார்த்தால் அரிசி, உப்பு, புளி, பாதாம்பருப்பு, திராகைஷ முதலியவைகள்தான் இவ்வளவு இவ்வளவு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சமையல் பண்ணி சாப்பிடுகிறவர்கள் யார் என்று பாருங்கள். இவ்விதம் ஒரு வழியில் வீண் செலவு நடந்து கொண்டிருக்கையில் நம் நாட்டில் விவசாயம் கைத் தொழில் முதலியவைகளை விருத்தி செய்வதற்கு பணமில்லையென்று அழுதுகொண்டிருக்கிறோம். இவ்விதம் கோவில்களில் செலவாகும் செலவு களை யாராவது கவனித்தார்களா? இதை கவனிக்கத்தான் இந்து மத பரிபாலன போர்டார் சட்டம் செய்தார்கள். மற்ற மதஸ்தர்கள் இங்ஙனம். கோவில்களில் வீண் செலவு செய்யாமல் மக்களின் கஷ்ட நிவர்த்திக்கும் அறிவை விருத்தி செய்யப் பள்ளிக் கூடங்களும் ஏற்படுத்தி மக்களை மேன். மேலும் அபிவிருத்தியடைய செய்கின்றார்கள்.
இனி நம் மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்துவதும் விடுதலையடையத் தடையாயிருப்பதுமான நமது மதச்சடங்குகளை கவனிப் போம். கருத்தரித்த நாள் முதல் கொண்டு கட்டையில் வைத்ததற்குப் பின்னும் கற்பகோடி வருஷங்கள் வரை சடங்குகள் தோன்றி விடுகின்றன. அர்த்தமற்ற, நிபந்தனையற்ற சடங்குகளின் பேரால் புரோகிதப் பார்ப்பானும், பஞ்சாங்கப் பார்ப்பானும் பொய்யும் சூதுகளையும் சொல்லி பணம் பறித்துச் செல்கின்றார்.
கள். கலியாண காலங்களிலும், கருமாதி காலங்களிலும் புரோகித பார்ப்பானும் அரிசி, பருப்பு, இலை முதலியவைகள் மூட்டை மூட்டைகளாக பறித்துக் கொண்டு செல்கின்றார்கள், ஒருவனுடைய மரணத்திற்கு பின்னும், அவனை மோட்ச லோகத்துக்கு தான் அனுப்பி விடுவதாக அவனுடைய குடும்பத்தார் களிடம் பொய் வார்த்தைகள் கூறி வருஷா வருஷம் பணம் பறித்துக் கொண்டு செல்கின்றனர். இதெல்லாம் நமது மூடக் கொள்கையும் மூடத் தன்மையுமன்றோ! ஆகையால் இப்புரோகித மதத்தை ஒழித்தாலன்றி நாம் ஒரு நாளும் முன்னேற முடியாது. மற்ற நாடுகளில் பிற மதஸ்தர்களும் தங்களுடைய புரோகித மதத்தை ஒழித்த பின்புதான் அந்நாட்டு மக்கள்
311 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
விடுதலை அடைந்திருக்கின்றனர்.
இனிமதாச்சாரியர்கள், குருமார்கள் முதலியவர்களைக் கவனிப்போம், இவர்கள் குதிரைப் பல்லக்கு முதலியவைகளைப் போட்டுக் கொண்டு கொள்ளைக்காரர்களைப் போல ஊர் ஊராய் வந்திறங்கி, அங்குள்ள உத்தி யோகஸ்தர்கள், மிராசுதார்களின் செல்வாக்கை அனுகூலமாகக் கொண்டு மூட்டை மூட்டையாக பணத்தைப் பலரிடமிருந்து பறித்துக்கொண்டு செல் கின்றனர். இவர்கள் சொல்லிவாங்கும் வகைகளுக்காவது அப்பணத்தை செலவு செய்கின்றார்களா பாருங்கள். இல்லையே. அத்தகைய மடாதிபதிகள், குருமார்கள் பணத்தைக் கொண்டு போய் என்ன செய்கிறார்கள்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்கள் நமக்கு என்ன உபதேசம் செய்கின்றார்கள்? என்பதையே நாம் கவனிப்பதில்லை. இவர்களெல்லாம் குலகுருக்களென ஆடம்பரத்துடன் எவ்வித யோக்கியதையும் இலட்சணங்களுமின்றி ஊர். ஊராய் கம்பீரமாய் வருகின்றனர். இவர்களிடம் அயோக்கியத்தனமே
நிறைந்திருக்கிறது.
இனி, நாம் வணங்கும் தெய்வங்களைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.
சில்லரைத் தேவதைகளெனப் பெயர்பெற்ற மாடன், கருப்பன் முதலிய சாமிக
ளுக்கு கள், சாராயம் முதலியவைகளை வைத்து ஆராதனை செய்து வரு கிறோம். இனி பெரிய தெய்வங்களையுடைய கோவில்களுக்குப் போய்ப்
பார்த்தால் அங்கு தாசிகளை நடனமாடச் செய்திருப்பது முதலிய ஆபாசமான பழக்கங்களை உண்டு பண்ணி ஆடம்பரமான வகைகளில் வீணாக விரையம் செய்யப்படுகிறது.
இனி நம் ஹிந்து மதஸ்தர்கள் அணிந்து கொள்ளும் சின்னங்களின் அர்த்தமென்ன என்று கேட்டால் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாது. இதை யெல்லாம் பொது ஜனங்களுக்கு உணர்த்த எவரேனுமிருக்கின்றனரா? இம் மாதிரியான அர்த்தமற்ற சடங்குகள் மூடக் கொள்கைகள் முதலிய ஊழல் களால் எத்தனை ஆயிரம் ஜனங்களை நாம் பிற மதங்களுக்கு பலி கொடுத்தி ருக்கின்றோம் என்று கவனியுங்கள். ஒரு ஹிந்து அரசரால் ஆளப்படும் திரு வாங்கூர் ராஜ்ஜியத்தில் சுமார் 35 வருஷங்களுக்கு முன் இருந்த மூன்று லக்ஷம் கிறிஸ்தவர்கள் இப்போது 15 லக்ஷமாகப் பெருகிவிட்டனர். இப்படி
நாம் நமது மதத்தின் பேரால் பலரை அன்னிய மதங்களுக்கு அனுப்புவதல்லா.
மல் ஆயிரக்கணக்கான நமது சகோதரர்களை உயிருடனேயே “சனீஸ்வரர். களாகிய பிராமண எமன்களுக்கு” ஆளாகும்படி செய்து வருகிறோம்.
இனி மதத்தின் பெயரால் சிறு பெண்களைக் கோவில்களில் பொட்டுக் கட்டி விபசாரத்துக்கு விட்டு வைப்பதை தடுக்கும் பொருட்டு சென்னை சட்டசபையிலும் வெளியிலும் பலத்த கிளர்ச்சி செய்யப்பட்டது. இதைப் பெரும்பாலோரான பிராமணரல்லாதார் ஆதரித்தும் சத்தியமூர்த்தி போன்ற பிராமண அரசியல் தலைவர்கள் தேவதாசிகளைக் கோவில்களில் பொட்டுக்
குடி அரசு - 1927 (3) 312
கட்டி வைப்பது மத சம்மந்தம் என்று அதை எதிர்த்து பிரசங்கங்கள் செய்தனர். இவர்களெல்லாம் போலிகளென்றும், வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு பணம்.
பறித்துத் தின்று திரிபவர்கள் என்றுந்தான் சொல்லுவேன். இதனால்தான் ஸ்ரீ மேயோ போன்ற பிற நாட்டார்கள் நம்மை இழிவுபடுத்தி புஸ்தகம் எழுத இடமேற்படுகிறது. அதனால் நாம் இப்போது அனுஷ்டித்து வரும் மதம், மூடக் கொள்கை ஆகியவைகள் ஒழிந்தால்தான் நாம் க்ஷமமடைவோம். இத்தகைய சடங்குகளும், கிரியைகளும் செய்து பணத்தைச் செலவிட்டும் நம் மதஸ்தர்களுக்குள் ஒருவருக்கொருவர் கட்டுப்பாடு சிறிதேனும் உண்டா? இல்லையே கட்டுப்பாடு இல்லாமற் போய்விட்டதுடன் ஒருவருக்கொருவர். உயர்வு, தாழ்வும் நமது மதம் கற்பிக்கிறது. உண்மையான ஒற்றுமையும், கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை ஏமாற்ற நம் நாட்டில் போலி ஒற்றுமைப் பிரசங்கங்கள் காங்கிரஸ் பெயராலும் மற்றும் ஸ்தாபனங்கள் பெயராலும் எங்கு பார்த்தாலும் ஆகாயம் அளாவும்படி ஒலிக்கின்றன.
இனி போலி பிராமணர்கள் ஊளையிடும் கயராஜ்யத்தைப் பற்றி சிறிது ஆராய்வோம். சுயராஜ்யம் என்றால் என்ன? அதை நாம் அடைய யோக்கி யதை உள்ளவர்களா? நமக்குள் ஒருவருக்கொருவர் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் முதலிய சகல உரிமைகளையும் அன்னியோன்யமாய் அனுப விக்கிறோமா என்று பார்த்தால் நம்மை ஆளும் வெள்ளைக்காரர்கள் இந் நாட்டில் இருந்தால் போதும் என்றுதான் சொல்ல வேண்டிவரும். இத்தகைய நிலையில் நாம் இருக்கும்போது இதற்கு முன் இரண்டு சுயராஜ்யம் வந்து
விட்டு போய்விட்டது. மூன்றாவது சுயராஜ்யமும் 3 மாதக் கர்பமாக இருக் கிறது. இதற்கு முன் வந்த சுயராஜ்யத்தால் 3 மந்திரிகளும் 3 நிர்வாக உத்தி யோகஸ்தர்களும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற
னர். இவர்களுடைய சம்பளச் செலவுகளுக்கெல்லாம் குடியானவர்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்களின் தலைகள்தான் மொட்டையடிக்கப்படுகின்றன.
நமக்குக் கிடைத்த இரண்டு சுயராஜ்யத்திற்குப் பிறகு ஹைகோர்ட் ஜட்ஜ்களும் உத்தியோகஸ்தர்களும்தான் அதிகப்பட்டன. இவ்விதம் சிப்பந்திகள் அதிகப் பட்டும் நிர்வாகமும் ஒழுங்காக நடைபெறுவதாகக்காணோம். ஆகையால் சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று கத்துவதெல்லாம் வெள்ளைக்காரர்களும், பணக்காரர்களும், படித்தவர்களும் லாபம் பெறவேயொழிய நாட்டுக்கு எத்தகைய நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆகையால் நாம் சுயமரியா தையடைந்து ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு உண்மையான சுயராஜ்யம் பெற வேண்டுமானால் நம் மதத்தின் பேரால் ஏற்பட்டுள்ள மூடக் கொள்கை களையும், புரட்டுகளையும் அறவே ஒழிக்க வேண்டியது அவசியமாகும்.
குறிப்பு-71127-ல் பட்டுக்கோட்டையில் சுயமரியாதைப்பிரசார சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 20.111927
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ராயல் கமிஷணை பணிஸஹ்கரிப்பது எதற்காக?
அடங்கிக் கிடந்த அரசியல் உலகத்திற்கு இரண்டு விஷயங்கள் கிடைத்து விட்டன. ஒன்று மறுபடியும் பெசண்டம்மை ஆதிக்கம். இரண்டு ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது.
இந்த வியாசத்தில் இரண்டாவதான ராயல் கமிஷன் பஹிஷ்காரத் தைப் பற்றியே பேசுவோம்.
எதற்காக ராயல் கமிஷனை பஹிஷ்கரிப்பது?
1. ராயல் கமிஷனில் இந்தியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதற் காகவா?
2. அல்லது இது சமயமல்ல என்பதற்காகவா?
3. அல்லது கமிஷன் நியமித்து பரீகைஷ செய்து சீர்திருத்தம் கொடுப்பது இந்தியருக்கவமானம் என்பதற்காகவா?
4. கமிஷனில் நியமிக்கப்பட்ட கனவான்கள் நம்பிக்கைக்கு பாத்திர மானவர்கள் அல்ல என்பதற்காகவா?
என்று பார்ப்போமானால் ஒவ்வொரு தலைவர்கள் என்போர்கள் ஒவ்வொருவிதம் சொல்லுகிறார்கள். தலைவர்கள் அறிக்கை என்பதில்,
வெள்ளைக்காரர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், இந்தியர்களின் யோக்கியதையை ஆராயப் பார்லிமெண்ட் கமிஷன் நியமித்தது இந்தியாவின் சுயமரியாதைக்கு விரோதமென்றும்,
ராயல் கமிஷன் என்பதே இப்போது மாத்திரமல்ல எப்போதுமே வேண்டாம் என்றும், இக்கமிஷனில் இந்தியர்களுக்கு இடமளிக்காததால் இந்தியர் கமிஷனை பஹிஷ்கரிக்க வேண்டும் என்றும் எழுதி, ஸ்ரீமதி பெசண்ட் கூட்டத்தாராகிய ஸ்ரீமான்கள் பி.சிவராவ், எம்.எஸ்.மாதவராவயன்,
ஸ்ரீராம் டிலாங்கு, ஜீனராஜதாசர் ஸ்ரீமதி ஜீனராஜ தாசர் ஆகியவர்களும், பார்ப் பனர்க் கூட்டத்தாராகிய ஸ்ரீமான்கள் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார், எ. ரங்கசாமி அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி, எம்.கே.ஆசாரியார், சி.வி.வெங்கிட்டரமண: அய்யங்கார், வி.எஸ்.ராமசாமி சாஸ்திரி, கே. சீனிவாசய்யங்கார், வி.ராமதாஸ்,
குடி அரசு - 1927 (3) 314
கே.ஆர். வெங்கிட்டராமய்யங்கார், கி.ஆர். பார்த்தசாரதி அய்யங்கார் ஆகியவர்களும்,
பார்ப்பனரல்லாதார்களில் ஸ்ரீமான்கள் ஷாபி மகமது சாயபு, சாமி வெங்கிடாசலம் செட்டியார், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, அப்துல் அமீத்கான், சி.எம். முத்துரங்க முதலியார், சி.எஸ். கோவிந்தராஜுலு
முதலியார், சாவடி சுப்பிரமணிய பிள்ளை ஆகியவர்களுமேயாவார்கள்.
இதில் கண்ட கனவான்களிடத்தில் யாரிடத்திலாவது தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலாவது தமிழ் மக்களுக்கு இவர்களது அரசியல் கொள்கையில் யாருக்காவது நம்பிக்கையுண்டா?
அல்லது கையொப்பம் போட்ட தலைவர்கள் என்பவர்களில் யாருக் காவது அரசியலில் ஒரு குறிப்பிட்ட கொள்கையுண்டா? அல்லது இவர்களில் யாராவது கொஞ்ச நாளைக்காவது மாறுதல் இல்லாமல் ஏதாவது ஒரு கொள்கையைப் பிடித்து நடப்பதுண்டா?
இந்தக் கூட்டத்தில் எத்தனை பேருக்கு அரசியலில் சொந்த புத்தி உண்டு?
எத்தனை பேர் ஜீவனத்திற்காக அரசியலில் இருக்கின்றவர்கள்?
எத்தனை பேர் இனியும் கூலி பொங்கிக் கொண்டு அரசியலில் கலந்திருக்கின்றவர்கள்?'
இந்தக் கூட்டத்தாரை நம்பி பஹிஷ்கார இயக்கத்தில் மக்கள் சேருவ தென்றால் அவர்கள் எவ்வளவு அறிவிலிகளாக இருக்க வேண்டும்? நாளைய
தினம் ஸ்ரீமதி பெசண்டம்மையையாவது, சீனிவாசய்யங்காரையாவது, சாப்ருவையாவது, சிவசாமி அய்யரையாவது கமிஷனில் சேர்த்துக் கொள்ளப் பட்டாய் விட்டது என்கின்ற ஒரு அறிக்கை வெளியானால் இந்த பஹிஷ்கார அறிக்கைக்கு கையெழுத்து போட்டவர்கள் எவ்வளவு மதிப்பு கொடுப்
பார்கள்.
சேலம் மகாநாட்டில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு பிரதி நிதித்துவம் உள்ள இந்தியர்களை கமிட்டிகளில் சேர்க்க வேண்டு மென்று ஒரு தீர்மா னத்தை நிறைவேற்றிக் கொண்டார். ஆகவே, அவருக்கு கமிஷன் நியமிப்பது சம்மதம் என்றும் அதன் ரிப்போர்ட்களை ஒப்புக்கொள்ளத் தயார் என்றும் தானே அருத்தம். நிபந்தனை யெல்லாம் ஒரு சரியான இந்தியப் பிரதிநிதியை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே தவிர வேறு ஏதாவது உண்டா? இப்பொழுது பார்லிமெண்டார் ஒரு சரியான பிரதிநிதியின் பெயரை சொல்லு
315 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
என்று கேட்டால் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு பெயரைச் சொல்லத் தயாராயி ருக்கிறாரா? சரியான பிரதிநிதி யார் என்பது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக் காவது தெரியுமா என்று கேட்கிறோம். ஸ்ரீமான். சீனிவாசய்யங்காரை நியமித்து விட்டால், ஸ்ரீமான்கள் ஷாபி மகமது, எ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, பார்த்தசாரதி அய்யங்கார், முத்துரங்க முதலியார், கோவிந்த ராஜுலு முதலியார், சி.வி.வெங்கிட்டரமண அய்யங்கார், ராமதாஸ் முதலிய அய்யங்கார் சிஷ்யர்கள் எல்லோருக்கும் திருப்தியாகி கமிஷனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்து விடுவார்களா? இல்லையா? ஸ்ரீமதி பெசண்ட் அம்மையை கமிஷனில் நியமித்து விட்டால் ஸ்ரீமான்கள் திலாங், சிவராவ், ஜீனராஜ தாசர், மாதவராவ், ஸ்ரீராம், ஸ்ரீமதி ஜீனராஜதாசர் முதலியவர் அம்மை யார் இஷ்டப்பட்டால் எல்லோருக்கும் திருப்தி ஏற்பட்டு கமிஷனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்து விடுவார்களா? இல்லையா? ஆகவே இப்போது பஹிஷ்காரத்தின் தத்துவம் என்ன என்பதைப் பற்றி வாசகர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
இந்திய அரசியலை ஒரு பித்தலாட்டக் கூட்டம் தங்கள் கையில் வைத்துக்கொண்டு பாமர மக்களை களிமண் உருண்டைகளைப் போல்
ஆட்டுகின்றது.
நாட்டில் மக்கள் இடையில் நடத்தப்பட வேண்டிய காரியங்கள் எவ்வ ளவோ பாக்கி இருக்கும்போது அதை சற்றும் கவனியாமல் இம்மாதிரி ஜால வித்தைகளில் தலைவர்கள் என்போர் காலத்தைக் கழிக்கிறார்கள். ஒத்துழை யாமையை அழிப்பதற்கு இதே பார்ப்பனர்கள் எவ்வளவு பித்தலாட்டங்களும் சூழ்ச்சிகளும் செய்தார்கள் என்பதை யோக்கியர்கள் அதற்குள் மறந்து இவர்களை நம்பி விடுவார்களா?
சட்டசபையில் போய் முட்டுக்கட்டை போடுவது என்றும், அங்கு ஒத்துழையாமை செய்வது என்றும், சட்டசபை படிச்சிலவையும் கூட வாங்கு வதில்லை என்றும், வெள்ளைக்காரர்கள், அதிகாரிகள், வீட்டு விசேஷங்க ளுக்குக் கூடபோவதில்லை என்றும், எந்ததீர்மானத்தையும் எதிர்ப்பதென்றும் எவ்வளவு பேசினார்கள். இந்த புரட்டர்கள் அடங்கின சுயராஜ்யக் கட்சியை இந்த ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடும், கலியாணசுந்தர முதலியாரும் எவ்வளவு ஆதரித்தும் அவர்களுக்கு ஆக்கம் தேடியும் கொடுத்தார்களே. இப்போது அதெல்லாம் என்ன ஆச்சுது “கோழி திருட்டுக் கொடுத்தவன் அழுகிற கூட்டத்தில் கோழி திருடினவனும் சேர்ந்து கொண்டு அழுவது போல்” இப்போது நம்முடன் சேர்ந்து கொண்டு சுயராஜ்யக் கட்சி அயோக் கியக் கட்சி என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்களே ஒழிய கடுகளவாவது தாங்கள். செய்த குற்றத்திற்கு வெட்கப்படுகின்றார்களா? எனவே இக் கூட்டத்தை நம்பி இவர்களைப் பின்பற்றலாமா என்றுதான் கேட்கின்றோம்.
குடி அரசு - 1927 (3) 316
புத்தியுள்ள ஒவ்வொருவருக்குமே ராயல் கமிஷனை என்ன செய்வது என்பது தெரியும். பெரும்பான்மையான மக்களுக்கும் யாரைப் பின்பற்றுவது என்பதும் நன்றாய் தெரிந்து வருகின்றது. ஆகவே பாமர மக்கள் இக் கூட்டத்தை நம்பி ஏமாந்து போகக்கூடாதென்பதை மாத்திரம் இது சமயம் கவலையுடன் எச்சரிக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 20.1.1927
317 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
SIMICTapab வகுப்பு வாதமும்
சென்னையில் 16.1127 தேதி நடந்த கார்ப்பரேஷன் (முனிசிபல் சபை! தலைவர் தேர்தலில் வகுப்பு வாதம் என்ன என்பதும் அது யாரிடத்தில் இருக்கின்றது என்பதும் நன்றாய் விளங்கிவிட்டது. இனிமேல் கடுகளவு அறிவுள்ளவருக்கும் கூட அதைப்பற்றி எவ்வித சந்தேகமும் இருக்க நியாயம் இல்லை என்றே எண்ணுகின்றோம். சென்னை கார்ப்பரேஷன் தலைவர். தேர்தலை நினைத்த உடனே இந்த வருஷம் பார்ப்பனரல்லாதார் &8 யாராகிய ஜஸ்டிஸ் ககஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும், பார்ப்பனக் கக்ஷியாகிய சுயராஜ்ஜியக் ககஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும் கருதியே வெள்ளைக்கார கவுன்சிலருடைய தயவு இருந்தால்தான் எந்தக் ககஷியாரும் வெற்றி பெறமுடியும் என்கின்ற எண்ணத்தின் பேரில் இருக்ககஷியாரும் வெள்ளைக்கார கவுன்சிலரை அணுகி கெஞ்சிப் பார்த்தார்கள். வெள்ளைக் காரர், இவர்கள் இவருடைய யோக்கியதையும் பார்த்து தனித்தனியே இரு ககஷித்தலைவரையும் தங்கள் தங்கள் அரசியல் கொள்கையைப் பற்றி தங்கள் முன் பிரசங்கம் செய்யச் சொன்னார்கள். அதற்கும் உடன்பட்டு பார்ப்பன ரல்லாதார் க௯ஷிக்காக பனகால் ராஜாவும், பார்ப்பன கக்ஷிக்கு ஸ்ரீமான்கள் சாமி வெங்கடாசலமும் சத்தியமூர்த்தியும் போய் ஐரோப்பியர்கள் முன்னிலையில் தங்கள் தங்கள் கொள்கையைப் பற்றி பேசினார்கள். பேசியதில் இவ்விரு ககஷி யாரும் ஒருவருக் கொருவர் பயந்து கொண்டு ஒருவர் பேரில் ஒருவர். குற்றம் சொல்ல இடம் ஏற்பட்டதே ஒழிய ஒருவர் காரியமும் பலிக்கவில்லை. கடைசியாக வெள்ளைக்காரர்கள் சட்ட மெம்பர் சர். ராமசாமி அய்யர் பேச்சையும்,மகாகனம் சீனிவாச சாஸ்திரி பேச்சையும், அட்வகேட் ஜெனரல்
ஸ்ரீ வெங்கிட்டராம சாஸ்திரி பேச்சையுமே கேட்டுக்கொண்டு மிதவாதிகள் என்கின்ற கலப்படமில்லாத பிராமண கக்ஷி காரியதரிசி ஸ்ரீமான் ஜி.எ. நடேசய்யருக்கே ஓட்டுக் கொடுப்பது என்று தீர்மானித்துக் கொண்டார்கள். இந்த விஷயமறிந்த ஜஸ்டிஸ் ககஷியார் சுயராஜ்யக் ககஷியாருக்கு இடம் கொடுத்தாவது வெள்ளைக்காரருக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது சுயராஜ்யக் ககஷித் தலைவரான ஸ்ரீமான் சாமி வெங்கடா சலத்திடம் வலுவில் சென்று வெள்ளைக்காரர்களுக்கு வெற்றி உண்டாவதை விட சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி உண்டாவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அதிலும் சுயராஜ்யக் கட்சித் தலைவர் பார்ப்பன
குடி அரசு - 1927 (3) 318
ரல்லாதவராய் இருப்பதால் அத்தலைவருக்கு தங்கள் கட்சியார் ஓட்டுக்கொடுப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆதலால், சாமி வெங்கிடாசலம் செட்டியார் நிற்பதில் தாங்கள் மனப்பூர்வமாய் ஆதரிக்கத் தயாராயிருப்பதாகவும் அதற்காக சுயராஜ்யக் கட்சியிடமாவது ஸ்ரீ சாமி வெங்கிடாசலம் செட்டியாரிடமாவது எவ்வித பிரதி பிரயோஜனமும் எதிர்பாராமல் எவ்வித நிபந்தனையுமின்றி தாங்கள் வலுவில் வந்திருப்ப தாகவும் தெரிவித்துக் கொண்டார்கள். அப்படி இருந்தும் பார்ப்பனர்கள் இதை ஒப்புக் கொள்ளாமல் கட்சித் தத்துவத்தையும் எதிர்பாராமல் வெள்ளைக் காரர்களின் அகம்பாவத்தையும் லக்ஷியம் செய்யாமல் எப்படியாவது ஒரு பார்ப்பனர் கார்ப்பரேஷனுக்கு தலைவரானால் போதும் என்கின்ற எண்ணத்
தின் பேரில் ஜஸ்டிஸ் கட்சியார் வலிய வந்ததையும் உதைத்து தள்ளிவிட்டு பார்ப்பனர்களுக்கு எவ்வளவோ அடிமையாயிருந்து பழிபாவங்களுக்கு அஞ்சாமல் பார்ப்பனர்களையே நம்பி அவர்கள் வாலைப் பிடித்துக் கொண்டே திரிந்த ஸ்ரீமான் சாமிவெங்கிடாசலம் செட்டியாரையும் தங்கள் கக௯ஷி அபேட்சகராய் நிறுத்தாமல் ஒரே அடியாய் வகுப்புவாதிகளாய் நின்று விட்டார்கள். இதன் பலனாய் பார்ப்பனக் கக்ஷியில் இருந்த சில பார்ப்பனரல் லாதாருக்கு கண் விழிப்பு ஏற்பட்டு சுயராஜ்யக் கட்சியிலுள்ள பார்ப்பனருக்கு எப்படி ௧௯9 கொள்கையைவிட பார்ப்பனருக்கே ஓட்டுக் கொடுப்பது முக்கியம் என்பதாகத் தோன்றுகிறதோ, அதுபோலவே அக்ககஷியிலுள்ள பார்ப்பனரல்லாதார்க்கும் அவரவர் இஷ்டப்படி ஓட்டு செய்யும் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த சுதந்திரம் கொடுக்க மறுத்தால் சில பார்ப்பனரல்லாதார் சுயராஜ்யக் கட்சியை விட்டு ஜஸ்டிஸ் ககஷியில் சேர்ந்து விடுவார்கள் என்கிற பயத்தால் அம்மாதிரி அவரவர்கள் இஷ்டப்படி ஓட்டுக்கொடுக்க அனுமதி கொடுத்து விட்டார்கள். இதன் பலனாய் ஜஸ்டிஸ் கக்ஷியிலிருந்தே தலைவர் பதவிக்கு ஒரு கனவானை நிறுத்த வேண்டிய அவசியம் சுயராஜ்யக் ௧௯௮ பார்ப்பனரல்லாதாருக்கும் ஏற்பட்டுவிட்டது.
இவர்களை நம்பி ஜஸ்டிஸ் ககஷியாரும் தங்கள் கக்ஷியிலிருந்து ஸ்ரீமான் திவான்பகதூர் ஸ்ரீ நாராயணசாமி செட்டியாரை நிறுத்தினார்கள். அவ்வளவும் தெரிந்து பார்ப்பனர்கள் வெள்ளைக்கார தயவுக்கும் சட்ட மெம்பர், அட்வகேட் ஜெனைல், சில ஹைகோர்ட் ஜட்ஜ்கள் முதலியவர்கள் சிபார்சுக்கும் கட்டுப்பட்டு பல பார்ப்பனரல்லாதார் தங்களுக்கு ஓட்டுச் செய் வார்கள் என்கின்ற தைரியத்தின் பேரில் ஸ்ரீமான் 6..நடேசய்யர் அவர்களை நிறுத்தினார்கள். கடைசியில் ஓட்டு எடுக்கும்போது பார்ப்பனரல்லாதார். கவுன்சிலர்கள் 32 பேர்களில் 28 பேர்கள் ஒரே அடியாய் பார்ப்பன ரல்லாதாருக்கே அதாவது திவான்பகதூர் நாராயணசாமி செட்டியாருக்கே ஓட்டுக் கொடுத்தார்கள். இதில் சுயராஜ்யக் ககஷியை சேர்ந்த பார்ப்பன ரல்லாதாரிலும் சுமார் 8 பேர்கள் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஆனால் பார்ப்பன அபேட்சகருக்கு கவுன்சிலிலுள்ள 6 பார்ப்பனர்களும் கவுன்சிலில் உள்ள 8 வெள்ளைக்காரர்களும் ஒரே அடியாய் ஓட்டுச் செய்தார்கள். மேல் கொண்டு 4 பேர் யார் என்று பார்ப்போமானால் அவர். களில் இரண்டு மகமதியர்களும், மற்றும் ஒரு நாட்டுக்கோட்டை செட்டி யாரும், ஒரு கிறிஸ்தவருமாகவும் இருக்கக்கூடும் என்றே அனுமாளிக்கப் படுகிறது. எனவே வகுப்பு வாதம் என்பது பார்ப்பனர்களிடமும் வெள்ளைக் காரர்களிடமும் இருப்பது போன்று பார்ப்பனரல்லாதாரிடமாவது அதற்குட் பட்டமகமதியரிடமாவது, கிறிஸ்தவர்களிடமாவது அவ்வளவு பலமாய் இருக் கின்றதா என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. தவிர சுயராஜ்யக் கட்சியை இதுவரையில் பார்ப்பன கக்ஷி என்று சொல்லி வந்ததில் ஏதாவது ஆக்ஷேபனை உண்டா என்பதும், வெள்ளைக்காரரும் பார்ப்பனர்களும் சேர்ந்து நமது நாட்டை கொள்ளை அடிப்பது தான் அரசாங்கமாகவும் அரசியல் இயக்கமாகவும் இருக்கின்றது என்று சொல்ல வந்ததில் ஏதாவது
தப்பு இருக்கின்றதா என்றும் கேட்கின்றோம்.
ஸ்ரீமான் 6.& நடேசய்யருக்கு ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, EL அய்யர்,
புர்ரா, சத்திய நாராயண அய்யர், K. பாஷ்ஷியம் அய்யரவர்கள், டாக்டர். மல்லையா, டாக்டர் நாராயணராவ் ஆகிய ஆறு பார்ப்பனர்களும் ஒருங்கே ஓட்டு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றோம்...
ஜி.எ. நடேசய்யரின் அரசியல் கொள்கை என்ன என்று பார்த்தால் ஜஸ்டிஸ் கட்சியைவிட எந்த விதத்தில் தீவிரமானவர். சுமார் 10 வருஷத்துக்கு, முன் வரையில் ஸ்ரீமான் ஜி.எ.நடேசய்யரை கவர்மெண்டு ஒற்றர் என்று இந்த பார்ப்பனர்களே சொல்லிக்கொண்டு திரிந்தது என்ன ஆச்சுது? தவிர: வெள்ளைக்காரருக்கு ஸ்ரீ நடேசய்யர் எந்த விதத்தில் இப்போது மேலானவர். என்று சொல்லக்கூடும்? சென்ற வாரத்தில் தானே ஸ்ரீமான் ஜி.எ. நடேசய்யர். ராயல் கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று பேசியதும், பகிஷ்காரக் கட்சியில் சேர்ந்திருக்கின்றார். ஆகவே, இதில் வகுப்புவாதமில்லாமல் வேறு என்ன தத்துவம் இருக்கின்றது? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் வெள்ளைக்
காரர் கூட்டத்தில் பேசும்போது சுயராஜ்யக் கக்ஷியார் யோக்கியர்கள் என்றும். ஜஸ்டிஸ் கக்ஷியார் சுயராஜ்யக் கக்ஷியைவிட அமிதவாதிகள் என்றும் உதாரணமாக கோயமுத்தூர் மகாநாட்டில் எல்லாக் ககஷியைவிட அமிதவாத கொள்கையை உடையதான இரட்டை ஆட்சி ஒழியும் வரை பதவி ஏற்ப தில்லை என்று தீர்மானம் செய்திருக்கின்றார்கள் என்றும் சாடி சொல்லிக் காட்டிக் கொடுத்ததிலிருந்தே ஜஸ்டிஸ் ககஷி ராஜீய அபிப்பிராயம் வெள்: ளைக்காரர்களுக்கு தத்துப் பிள்ளைகள் அல்ல என்பதை காட்டும். இப்படி யெல்லாம் இருப்பதை ஜனங்கள் தெரிந்து கொள்ளச் சக்தி இல்லை என்கின்ற எண்ணத்தின் பேரில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி என்ன என்னமோ நொண்டி சமாதானம் சொல்லுகிறார். சுயராஜ்யக் கட்சி தங்கள் கட்சியிலிருந்து தலைவர்.
ஸ்தானத்திற்கு அபேட்சகர் நிறுத்தாததற்கு காரணம் அடுத்த வருஷம் வரி
குடி அரசு - 1927 (3) 320
அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக கெட்ட பெயர் வந்து விடுமோ என்று பயந்து விட்டார்களாம். இது யோக்கியமான காரியமாகுமா? அப்படி அதிக மாக்க வேண்டிய அவசியமிருந்தால் அதிகப்படுத்துவதில் ஆக்ஷபனை என்ன? ஆகவே இந்த தைரியமும் பகுத்தறிவும் இல்லாத கட்சி வேறு என்ன காரியம் செய்யமுடியும்? எனவே ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் பார்ப்பனரல் லாததால் நிறுத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டால் விவகாரம் ஒரு வழியில் தீர்ந்துவிடும். அப்படி இல்லா விட்டால் பார்ப்பன வண்டவாளம் மேன்மேலும் வெளியாகுமே யல்லாமல் நன்மை ஒன்று உண்டாகாது. இதுவரை இப்பார்ப்பனர்கள் எத்தனை பார்ப்பனரல்லாதாரை இம்மாதிரி செய்தார்கள் என்பதற்கு எவ்வளவு சாக்ஷி வேண்டும்.
பழய சங்கதிகளை விட்டு விட்டாலும் சமீப சம்பவங்களை கவனித்
தால் அதுவே போதும் என்று நினைக்கின்றோம்.
காங்கிரசிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பி.வரத ராஜுலு நாயுடு, திரு.வி. கல்யாணகந்தர முதலியார் ஆகியோர்களை காங்கி ரசைவிட்டு வெளியாக்கி காங்கிரசை சுத்தப்படுத்த வேண்டும் என்று சொன் னதும், ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கமிட்டியில் இருக்க யோக்கியதை இல்லை என்று சொல்லி விட்டதும், ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியாரை விரட்டி விட்டதும், ஸ்ரீமான் ஆரியாவை விரட்டி விட்டதும், ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களையும், ஆரியாவையும் சிறையில் வைக்கவேண்டும் என்று சர்க்காரை வேண்டிக்கொண்டதும் ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பை மதுரை தேர்தலில் நடத்தியதும் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரை நடத்தியதும் ஸ்ரீமான் முத்தையா முதலியாரை நடத்தியதும் இப்போது திரு.சாமி வெங்கிடாசலம் செட்டியாரை நடத்தியதும் யோசித்தால் விளங்காமல் போகாதா என்று கேழ்க்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.1.1927
321 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ub1p8} வபசண்டம்மையார்
ஸ்ரீமதி பெசன்டம்மையார் நாம் முன் நினைத்தது போலவே திக் விஜயம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சியின் வரவேற்புகளும், உபசாரங்களும் தடபுடலாக நடைபெறுவதாக விளம்பரமாகி வருகின்றது. இந்த சமயத்தில் எதற்காக பெசண்டம்மையாரை பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என் பதை கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் உணரக்கூடும். ஆனால் பார்ப்பனரல்லாதார்களில் முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு முதலிய ஸ்தானங்களில் பதவி வகிக்கும் சுயமரியாதை அற்ற பலர் இப்பார்ப்பன
சூழ்ச்சிக்கு அனுகூலமாய் இருப்பது நமக்கு மிகவும் அவமானமாக இருக் கின்றது. அநேக பார்ப்பனரல்லாதார்கள் கொள்கையே இல்லாமல் இரண்டு பக்கமும் வாயை வைத்துக் கொண்டு தம்முடையவாழ்வையே பிரதானமாகக்
கருதி திரியும் இழிதன்மை மாறினாலொழிய பார்ப்பனரல்லாதாருக்கு சுய மரியாதை ஏற்படுவதென்பது கனவேயாகும். ஒவ்வொரு பார்ப்பனரல்லா தாரும் பதவி கிடைக்கும்வரை தான் பார்ப்பனரல்லாதார் என்றும், பார்ப்பன ரல்லாதார் நன்மைக்கு பாடுபடுகின்றவனென்றும், பார்ப்பன அக்கிரமங்களை அடக்கவே இப்பதவிகளுக்கு ஆசைபடுகிறேன் என்றும் சொல்லிக் கொண்டு பல்லைக் காட்டி பதவி பெற்றதும், பெற்ற தாயை துரோகம் செய்வது போல் தன்னையும் பரிசுத்த பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு பார்ப் பனக் கூட்டத்துக்கு வால் பிடிப்பதில் பந்தயம் போட்டு முந்த ஆரம்பித்து விடுகிறார்கள். இதைப்போல் சிறுமை குணம் வேறு கூட்டத்தில் இருப்பதாக
நாம் சொல்ல முடியாது. என்ன காரியத்திற்காக முனிசிபாலிட்டிகளும், போர்டுகளும் பெசண்டம்மையாருக்கு உபசாரபத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டும்? அவ்வம்மையார் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு செய்த நன்மை என்ன? அவ்வம்மையாரின் நாணயம் என்ன? அபிப்பிராயம் என்ன? இனியும் அவ்வம்மையார் செய்யப் போகும் காரியமென்ன? ஒன்றையுமே கருதாமல் இம்மாதிரி காரியங்கள் செய்வதால் இம்மாதிரி பார்ப்பனரல்லாதார் தங்களுக்கு சுய புத்தியும், சுயமரியாதையும், பகுத்தறிவும் இருப்பதாக எப்படி சொல்லிக்கொள்ள முடியும்? ஒரு சிறு பார்ப்பனப் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு லோககுரு வந்துவிட்டார், லோக குரு வந்து விட்டார் என்று பார்ப்பனர்களைவிட மோசமாய் ஏமாற்றுவதும், தினம்
குடி அரசு - 1927 (3) 322
பரமாத்மாக்களுடனும், மகாத்மாக்களுடனும் பேசுவதாக வேஷம் போடுவது மாகிய வழிகளில், பார்ப்பன மதத்தை பிரசாரம் செய்வதும் இவ்வளவும் அல்லாமல் அரசியலிலும் மிகவும் மோசமாக நடந்து ஒத்துழையாமையின் போது எதிர் பிரசாரம் செய்ததும், பஞ்சாப் அக்கிரமங்களைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்திற்கு விரோதமாய் வெள்ளைக்காரருடன் சேர்ந்துகொண்டு “பஞ்சாப்காரர்கள் வெள்ளைக்காரர் மேல் செங்கல்லை
எறிந்ததற்கு வெள்ளைக்காரர்கள் பீரங்கி மூலமாகவும், ஆகாச கப்பல் மூல மாகவும் ஈயக்குண்டையும் வெடி குண்டையும் எறிந்தது மிகவும் சரி” என்றும் சொல்லி, வெள்ளைக்காரர்களை ஆதரித்ததுடன் இன்னமும் தன் கோஷ்டி முழுவதையும் விட்டு வெள்ளைக்காரருக்கு உதவியும் செய்ய சொல்லி இருக்க இப்போது திடீரென்று எவ்விதத்தில் அம்மையாருக்கு தேசா
பிமானமும், இந்தியாபிமானமும் வந்துவிட்டதென்று கேட்கின்றோம்.
இந்தம்மையாரை இப்போது நடத்துகின்றவர்கள் யார் என்பதும் அம்மையார் பிரசாரம் இன்னதுதான் என்பதும் யாருக்குத்தான் தெரியாது
என்று சொல்ல முடியுமா?
ஸ்ரீமான்கள் எ. ரங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்தி அய்யரும் மறைமுகமாயிருந்துகொண்டு நடத்துகின்றார்கள். அம்மையின் பிரசாரமெல்
லாம் பார்ப்பனமதப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றுவதுமேயாகும். அதோடுகூடவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆகேஷபிப்பது மாகும். இந்த நிலைமையில் உள்ளவர்களை பார்ப்பனர்கள் வரவேற்கவும், பூர்ண கும்பமெடுக்கவும் மற்றும் படம் வைத்து பூஜிக்கவும் கடமைப்பட்டிருக் கிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாதார் எதற்காக இதில் சேருகின்றார்கள் என்பதுதான் நமது கேள்வி.
ஆதலால் இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.1.1927
323 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தமிழ்நாடு
தமிழ்நாடு பத்திரிகையானது மறுபடியும் சென்னை பார்ப்பன தெய்வங் களுக்குள் இரண்டறக் கலரத் தீர்மானித்து விட்டதாக நினைக்க வேண்டி இருக்கிறது. அதின் முழு கவனம் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதில் மாத்திரமில்லாமல் பெசன்டம்மையை தலைவியாக்குவதிலும் அரசியல் பார்ப் பனர்களை காப்பாற்றுவதிலும் கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. கமிஷன் பஹிஷ்காரத்தைப் பற்றி அவரவர்கள் அரசியல் அபிப்பிராயம் என்று சமாதானம் செய்து கொண்டு வாதாடலாமாயினும், பெசன்ட் அம்மையாரை தலைவியாக்க ஆசைப்படுவதில் பார்ப்பனர். களுடன் போட்டிப் போடுவதான இரகசியம் நமக்கு விளங்கவில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும் என்று தள்ளிவிடுவதானாலும் பார்ப்பனரல்லா தார்களுக்கு கடுந்துரோகிகளாகிய அரசியல் பார்ப்பனர்களுடன் குலாவுவதும் அவர்களை காப்பாற்றுவதும் பற்றி காரணம் அறியாமலிருக்க முடியவில்லை. சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் விஷயத்தில் அரசியல் பார்ப்பனர்கள்.
நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி தமிழ்நாடு பத்திரிகை தனது அபிப்பிரா யமாக ஒரு வரி கூட எழுத முடியாத நிர்பந்தம் இப்போது திடீரென்று அதற்கு ஏற்பட்ட காரணம் என்ன என்று கேட்கின்றோம்.
பார்ப்பன அரசியல்வாதிகள் தமிழ்நாடு பத்திரிகை ஆபீசுக்கு வந்து எவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றார்களோ அவ்வளவுதூரம் அவர்கள் மற்றும் எல்லா பத்திரிகை ஆபீசுகளுக்கும்தான் போய் கெஞ்சுகின்
றார்கள். பார்ப்பன பத்திரிகைகளாகிய “இந்து”, “சுதேசமித்திரன், *கயராஜ்யா” முதலியவைகளும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளாகிய “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” ஐரோப்பிய பத்திரிகைகளாகிய “மெயில்” முதலியவைகளும்
தைரியமாய் தமது அபிப்பிராயத்தை எழுதி இருக்கும் போது “தமிழ்நாடுக்கு” மாத்திரம் ஏற்பட்ட தட்ட முடியாத தாக்ஷண்யம் என்ன என்று கேட்கின்றோம். பார்ப்பன தயவை எதிர்பார்க்கும் நிலை, ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டி யாரை விட தமிழ்நாடுக்கு அதிகமாய் ஏற்பட்டு விட்டதா?
ஸ்ரீமான் வெங்கிடாசலம் செட்டியாரே எலக்ஷன் விஷயத்தில் தைரிய மாய் பார்ப்பன சூழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கும் போது “தமிழ்நாடு” மாத்திரம் ஏன் பயப்படவேண்டும்.
குடி அரசு - 1927 (3) 324
பார்ப்பன சூழ்ச்சிக்கும் பார்ப்பன வகுப்பு வாதத்திற்கும் சென்னை தேர்தலைவிட சரித்திரத்தில் எழுதத் தகுந்ததான வேறு ஆதாரம் என்ன வேண்டும். திடீர் திடீர் என்று இம்மாதிரி துப்பாக்கியை கீழே போட்டு எதிரி களுக்கு இடம் கொடுத்து விடுவதால் எவ்வளவு காரியம் கெட்டுப்போய் விடுகிறது. முதலாவது பார்ப்பனர்கள்கூட இப்பத்திரிகைக்கு பயப்படமாட் டார்கள், மதிக்கவும் மாட்டார்கள். ஏனெனில் நேரில் போய் சரிபடுத்திக்கொள் எலாம் என்கின்ற ஒரு தைரியம் அவர்களுக்கு உண்டாய் விடும். இரண்டாவ தாக அடிக்கடி இம்மாதிரி அயர்ந்து விடுவதால் மக்களுக்கும் அதனிடத்தில் அதிக மதிப்பு இருக்காது என்கின்ற தைரியமும் அவர்களுக்கு ஏற்பட்டு
விடும்.
இதை “தமிழ்நாடு” பத்திரிகை உணராதது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.11.1927
325 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
யார் வா௱ய்யார்
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் வீட்டில், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளின் தேவதாசிகளின் தீர்மானம் விஷயமாய்ப் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்துவ கன்னியா ஸ்திரிகளைப் பற்றியும் மற்றும்பல விஷயங்களைப் பற்றியும் பேசிய பேச்சுக் களை இல்லை என்று மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். “தமிழ்நாடு”, பத்திரிகை அய்யர் சொன்னதாக குறிப்பிட்ட விஷயங்களை ருஜுபடுத்து வதாக பந்தயம் கூறிற்று. அய்யர் அடங்கிவிட்டார். ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளும்,அய்யர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை பற்றி பேசியதும் மற்றும் “தமிழ்நாடு” பத்திரிகையில் கண்ட விஷயங்களும் உண்மை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் அவர். களும் மேலொப்ப மிட்டிருக்கிறார். இந்நிலையில் “தமிழ்நாடு”நிருபர், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள், ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் ஆகிய இம்மூவர்கள் சொல்வது பொய்யா அல்லது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர். சொல்வது பொய்யா என்பதை உணர பொது ஜனங்கள் ஆவலாயிருப்பார்கள். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் இதற்கு முன் எத்தனையோ தடவைகளில் பொய்யர் பட்டம் வாங்கி வாங்கி தேறியிருக்கின்றார். அல்லாமலும் “தமிழ்
நாடு” பந்தயம் கூறின பிறகும் ஸ்ரீமதி. முத்துலட்சுமி அம்மாள் அய்யரின் யோக்கியதையை வெளிப் படுத்திய பிறகும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி “உலர்ந்த
மாம்சம் திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல்” பேசாமல் இருப்பதால் அய்யர் தான் பேசிவிட்டு இப்போது இல்லை என்று சொல்லு கின்றார். என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க நியாயமில்லை. இம்மாதிரி அடிக்கடி பேசிவிட்டு பேசிவிட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே வருவதைவிட கண்ணியமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தால் அது மிகுதியும் நன்மையாயிருந்திருக்கும். இப்போது பேசிய குற்ற மொன்று, அதை மறுத்து இல்லையென்று பொய் சொல்லும் குற்ற மொன்று ஆக இரண்டு குற்றத்தை சுமந்திருக்கிறார். இவர்தான் இந்திய அரசியல் கட்சியின் தலைவருள் பிரதானமானவராம். கவர்னருக்கும் சட்ட மெம்பருக்கும் மந்திரிக்கும் அந்தரங்க விசுவாசியாம்.
குடி அரசு - கட்டுரை - 20.111927
குடி அரசு - 1927 (3) 326
கோவை 6சர்வமன் 0.5.காத்தினசபாபதி
முதலியாரின் துணிபு
கோயமுத்தூர்டவுன் எக்சைஸ் லைசென்சிங் போர்டுக்கு சென்ற வாரத்
தில் தலைவரை தெரிந்தெடுப்பதற்காக கோவை கலெக்டர் ஆபீசில் மேற்படி போர்டுமெம்பர்களால் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டது. அம்மீட்டிங்குக்கு ஏழு மெம்பர்களே ஆஜரானார்கள்.
அவர்கள், ஸ்ரீமான்கள் கலெக்டர் காக்ஸ் துரை, சேர்மென் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எம்.எல்.சி., வைஸ்சேர்மென் அருணாசலம் செட்டியார். தேவசகாயம், சால்ட் சர்க்கிள் இன்பெக்டர், போலீஸ்டிஸ்ட்ரிக்ட் சூப்ரண்டெண்ட், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகியவர்களே.இந்த எழு
வரில் ஸ்ரீமான் கலெக்டர் காக்ஸ் துரை அவர்களை போலீஸ் சூப்பிரண்டு துரை அந்த போர்டுக்கு தலைவராக பிரேரேபிக்க சால்டு சர்க்கில் இன்ஸ்
பெக்டர் ஆதரித்தார் . உடனே ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எழுந்து உத்தியோகப்பற்றில்லாதவர் தலைவராக இருக்கவேண்டும் என்
கின்ற கொள்கையின் பேரில் ஸ்ரீமான் தேவசகாயம் அவர்களை பிரேரேபிக்க ஸ்ரீமான் அருணாசலம் செட்டியார் ஆதரித்தார்.
ஓட்டுக்கு விட்டதில் ஸ்ரீமான்கள் காக்ஸ் துரையவர்களுக்கு மூன்று ஓட்டுகளும் தேவசகாயம் அவர்களுக்கு மூன்று ஓட்டுகளும் கிடைத்தன. இந்த சமயத்தில் ஸ்ரீமான் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் எழுந்து இம்மாதிரி. போர்டுகளுக்கு உத்தியோகப் பற்றில்லாதவர்கள் தலைவர்களாயிருந்தால் ஜனங்களுக்கு போர்டிடம் நம்பிக்கையுண்டாகும் என்றும், போர்டு ஏற்படுத் தியதின் பலன் கொஞ்சமாவது ஏற்படக்கூடுமென்றும், இல்லாவிட்டால் போர்டு இருந்தும் சர்க்கார் அபிப்பிராயமே போர்டு அபிப்பிராயமாகிவிட நேருமென்றும், போர்டு ஏற்படுத்தியதின் கருத்து நிறைவேறாமல் போய் விடக்கூடும் என்றும் சொன்னார். உடனே கலெக்டர் துரை, ஸ்ரீமான் முதலியார் சொன்னதை அனுசரித்து, தான் அபேக்ஷக ஸ்தானத்தில் இருந்து விலகிக்கொள்வதாய் சொல்லி விலகிக் கொண்டார். எனவே, ஸ்ரீமான் தேவ சகாயம் அவர்கள் ஏகமனதாய் தெரிந்தெடுக்கப்பட்டார்.
327 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால் ஆஜராகியிருந்த ஏழு மெம்பர்களில் ஸ்ரீமான்கள் முதலியாரும் செட்டியாரும் தவிர கலெக்டர் துரையும் ஓட்டு கொடுத்ததால்தான் ஸ்ரீமான் தேவசகாயத்திற்கு மூன்று ஓட்டுகள் கிடைத்தன. ஸ்ரீமான் தேவசகாயம் நடுநிலைமை வகித்திருந்தார், கலெக்டர் துரைக்கு சர்க்கார் உத்தியோகஸ்தர்களாகிய ஜில்லா சூப்பிரண்டு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சால்ட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகிய மூன்று பேரும் கலெக்டருக்கே ஓட்டு செய்தார்கள்.
ஆகவே கலெக்டர் அவர்கள் எதிர் அபேக்ஷகருக்கு ஓட்டுக் கொடுத்ததோடு தான் விலகிக்கொண்டதான இரண்டு வகையிலும் நடந்து கொண்டதானது மிக்க பெருந்தன்மை என்றே சொல்லவேண்டும். அதோடு ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியார் அவர்களும் உத்தியோகஸ்தர்கள் மெஜாரிட்டியாயிருந்தும் கலெக்டரே அபேக்ஷகராய் இருக்கிறார் என்று தெரிந்தும் தைரியமாய் வேறு அபேக்ஷகரை நிறுத்தியதுடன் கலெக்டர: வர்களை பின்வாங்கிக்கொள்ளும்படி சொன்னதும் மிகவும் தீரச்செய்கை என்றே சொல்லவேண்டும்.
எக்சைஸ் லைசென்ஸ் போர்டு கமிட்டிகளுக்கு உத்தியோகப் பற்றில் லாத தலைவர் முதல் முதல் தெரிந்தெடுக்க ஏற்பாடு செய்த பெருமை ஸ்ரீமான் முதலியாருக்கே உரியதாகும். சென்னை சட்ட சபைக்கு ஒருபெண் உப பிரசிடெண்டாக இருக்க காரியம் ஆரம்பித்த பெருமையும் ஸ்ரீமான் முதலி யாருக்கே உரியது, இன்னமும் இது போன்ற பல நன்மையான விஷயங்கள் முதலியார் அவர்களால் செய்யப்பட்டிருக்கின்றது. ஸ்ரீமான் முதலியார்.
ஸ்தானத்தில் ஒரு பார்ப்பனர் இருந்திருந்தால் கலெக்டரையே பிரேரேபித்து தலைவராக்கி, கலெக்டரின் வெற்றியைப் பற்றி ஒரு கவியும் பாடி விட்டு, கலெக்டர் வீட்டுக்கும் போய் கூலியும் வாங்கிக் கொண்டிருப்பார். ஸ்ரீமான் முதலியார் தன்னைப் பற்றி விளம்பரம் செய்து கொள்ளும் குணமில்லாத வரானதினாலும், அவைகளில் அவர் மிகுதியும் அருவருப்பு உடையவரான தினாலும் அவர் செய்யும் அருமையான நற்காரியங்கள் மக்கள் அறியக் கூடுவதில்லை. ஆனால் முதலியாரின் எதிரிகளால் சில சமயங்களில் வெளி யாகிவிடுகின்றன. எவ்வளவோ எதிர்ப்புக்கும் முதலியாருடைய எதிரிகளின் எவ்வளவோ சூழ்ச்சிக்கும் இடையில் கோயமுத்தூர் ஜலசப்ளை வேலை மும்முரமாக நடந்து வருவதின் பெருமை முதலியாரையே சேர்ந்ததாகும். அதுபோலவே கோபி தாலூக்காவில் பவானி ஆற்றுக்கு இரண்டு பெரிய பாலங்கள் கட்டுவதற்கு பிரயத்தனப்பட்ட காரியத்திலும் எவ்வளவோ தடைக ளை நீக்கி வெற்றிபெற்று அப்பாலங்கள் சமீபத்தில் வேலை தொடங்கப்படும் நிலைக்கு வந்திருக்கும் பெருமையும் ஸ்ரீமான் முதலியாருக்கே சேர்ந்ததாகும். இவ்விரண்டு காரியங்களும் நிறைவேறியபின் ஸ்ரீமான் முதலியார் அவர்கள். தனது பொதுநல சேவையை சற்று குறைத்துக் கொண்டு தன் சொந்தக் காரியத்தையும் சற்று கவனிப்பது அறிவுடைமையாகும். ஸ்ரீமான் முதலியார்
குடி அரசு - 1927 (3) 328
ஸ்தானத்தில் வேறு பார்ப்பனர்கள் யாராவது இருந்திருந்தால் அவர்கள் சொந்த காரியங்கள் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கும், அவர்கள் சொந்தக் கார்களையும் வெகுபேரை பணக்காரராக்கியிருப்பார்கள். ஆனால் இவ்வளவு நன்மை செய்யும் முதலியாருக்கு நன்றி செலுத்த ஆளில்லா
விட்டாலும் தரித்துக்கூறும் எதிரிகளுக்கு குறைவில்லை.
குடி அரசு - கட்டுரை - 20.1.1927
329 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கும்பகோணம் தானூகா
யார்ப்பணால்லாதார் மகாநா௫
இவ்வுலகத்தில் வேறு எந்த மதத்திடத்திலும் மனிதர்கள் பிறவியில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வழக்கம் கிடையாது. ஆனால் நம்முடைய தேசத்திலோ ஒருவன் எவ்வளவு கேவலமான நடத்தை யுடையவனாயினும் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்துவிட்டால் அவன் உயர்ந்த ஜாதியென்றும் எவ்வளவு நல்ல நடத்தை யுடையவனாயிருந்தாலும் அவன் “தாழ்ந்த ஜாதி”
யில் பிறந்து விட்டானானால் அவன் கேவலமாகவும் கருதப்பட்டு வருகிறான்.
இதற்கு காரணம் மதந்தான். இம்மாதிரி ஒரு மதத்தை அனுஷ்டித்து வரும் வரையில், நாம் அவற்றை யெல்லாம் கண்டிக்காமல் மெளனமாய் யிருக்கும் வரையில் நாம் நூற்றுக்கணக்கான மக்களை நமது சமூகத்திலிருந்து பிற மதங்களுக்கு பலி கொடுத்துக்கொண்டு தான் வரவேண்டும். இந்துமத பரிபாலன போர்டு தலைவர் ஸ்ரீ சதாசிவய்யர், இந்துக்கள் என்பதற்கு வேதத் தை எவன் நம்புகிறானோ அவன் தான் இந்து என்று கூறியிருக்கிறார். அப்படி யானால் ஆதி திராவிடர்கள் பஞ்சமர்கள் இவர்களெல்லாம் இந்துக்கள், இந்தியா ஒரு காலத்தில் உன்னை நாகரீகம் படைத்திருந்த காலத்தில் மற்ற மேல் நாடுகளெல்லாம் நாகரிகமற்று அந்நாட்டு மக்கள் காட்டுமிராண்டிகளாக புழு பூச்சிகள் முதலிய வஸ்துக்களைத் தின்று கொண்டு வனாந்தரங்களிலும் கடற்கரையோரங்களிலும் திரிந்துகொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் இப்போது நம் நாட்டை ஆண்டுவருகின்றனர். நாம் பிற நாட்டை ஆள முடியாவிட்டாலும் நமது நாட்டையாவது ஆண்டு கொள்ளக்கூடாதா? ஏன்
நாம் ஆண்டுகொள்ள முடியவில்லை. ஏனென்றால் நாம் மதத்தின் பேராலும் மூடக்கொள்கைகளின் பேராலும் நாம் அடிமைப்பட்டிருப்பதுதான். மற்ற நாடுகளெல்லாம் இம்மாதிரி மூடக் கொள்கைகளையும், அர்த்தமற்ற உயர்வு
தாழ்வு கற்பிக்கும் மதத்தையும் அடியுடன் ஒழித்துவிட்டதால்தான் அவர்கள். தங்களுடைய தேசத்தை ஆளுவதுடன் பிற நாட்டாரையும் அடக்கி ஆண்டு வருகிறார்கள். இப்படி இருக்க நமது நாட்டையும் நம் மக்களையும் கெடுத்து வருவது பிராமணர்கள் பேசும் வருணாசிரமமும் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்து மதம் என்பதும் தான். வர்ணாசிரமத்தைப் பற்றி பலர் பலவிதமாய் பேசுகிறார்கள். எவ்வித வியாக்கியானம் செய்த போதிலும் அது உயர்வு தாழ்வு கற்பிக்கிறது. ஆதி
குடி அரசு - 1927 (3) 330
தமிழர்களிடத்தில் வருணாசிரமம் இருந்திருக்குமானால் வருணாசிரமம் என்னும் சமஸ்கிருத பதத்திற்குப் பதிலாக தமிழ் மொழியில் இருந்திருக்க வேண்டும். இன்னும் வருணாசிரம பிராமணர்கள் ஒரு தமிழனுடன் பேசிவிட்டால் அதற்காக ஒரு பிராயச்சித்தமும், அவனுடைய பாஷையை பேசினால் அதற்கொரு பிராயச்சித்தமும், அவன் நிழல் பட்டால் அதற்கொரு பிராயச்சித்தமும் செய்வதை நீங்கள் பார்க்கலாம். உதாரணமாக சங்கராசாரி போன்றவர்கள் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதல்லாமல் இவ்வாறு நம்மை இழிவுபடுத்தியும் வருகின்றார்கள். ஆகையால் நாம் இனி இத்தகைய இழிவுகளை ஒரு நாளும் சகித்திருக்க முடியாது.
இனி சடங்குகள் என்று பெயர் வைத்துக் கொண்டு நம்மிடமிருந்து பணம் பறிப்பதுமல்லாமல் நம்மை ஒரு ஜாதியாருக்கு அடிமையுமாக்குவதை ஒழிக்க வேண்டுமென்பதைத் தவிர புரோகிதர்களின் வாயில் மண்ணைப் போட வேண்டுமென்னும் கெட்ட எண்ணத்துடன் நான் கூறவே இல்லை. ஒரு கூட்டத்தாருக்குக் கொடுப்பதே புண்ணியமென்று நினைப்போமானால் நாம் சுயராஜ்யமடைவதற்கே தகுதியுடையவர்களல்ல. நமது முன்னோர்கள் தர்மம், புண்ணியம் என்று வாரி வாரி இப்பிராமணர்களுக்கு கொடுத்தும் அவர்களும் அவர்களுடைய குடும்பமிருக்கிற நிலைமையையும் பாருங்கள். நமது சுயராஜ்யமும் போய், பரராஜ்யமும் அடிமைத்தனமும்தான் மீதி. இன்னும்
தஞ்சாவூர் ராஜா காசிமுதல் கன்னியாகுமரிவரை தான தர்மங்களும், சத்திரங்களும் கட்டி வைத்திருந்தும் அவருடைய பெயர் சொல்ல இன்று ஒரு சந்ததி கிடையாது. இன்னும் எத்தனை குடும்பங்கள் கெட்டுப்போய்விட்டது என்று கவனியுங்கள். ஏழைகளுக்கும், கூன், குருடு, வேலைசெய்ய இய லாதவர்களுக்கே நாம் தர்மங்கள் செய்ய வேண்டுமேயொழிய, வேலை செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ, திறமையுள்ள பிராமணக் கூட்டத் தாருக்கு மதங்களின் பெயராலும் வீணாக நாம் ஒரு நாளும் கொடுக்கவே
கூடாது. ஒரு குழந்தை ஜனனமானது முதல் அதன் ஆயுள் பரியந்தம் நாம் சடங்குகள் பெயரால் பணம் கொடுப்பதல்லாமல் இறந்த பின்னும் நாம் செலவு செய்கிறோம். இத்தகைய மனப்பான்மையுள்ள நாம் சுயராஜ்யமடையத் தகுதியுடையவர்கள்தானா? மக்களுக்கும் உயர்வு, தாழ்வு, தீண்டாமை முதலியவைகள் நாட்டிலிருந்து வரும்வரை நம் நாடு சுரராஜ்யம் அடையப் போவதில்லை. ஆகையால் நீங்கள் இப்புரோகித மதத்தை ஒழித்து சுய மரியாதை இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
@l 201127 இல் திருப்புவனத்தில் நடைபெற்ற கும்பகோணம் தாலூகா பார்ப்பணல்லாதார் மாநாட்டில் மாநாட்டுத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 27.111927
331 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ராயல் கமிஷனும் சுயமரியாதையும்
ஊண்முஸ் ககூஷியாருக்கு மாண் ஈ.வவ. ராமசாமி
நாயக்கரின் கசய்தி
“ஜஸ்டிஸ்” கட்சித் தலைவர்களுக்கு ராயல் கமிஷன் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய தன்மையைப் பற்றி ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், தனது அபிப்பிராயமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும். செய்தியாவது:-
பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள் ஒப்புக் கொண்டு இருக்கின்ற வரையில் இம்மாதிரியான ராயல் கமிஷன்களில் இந்தியர்களுக்கு பதவி அளிக்காதது நம்மவர்களின் சுயமரியாதையை பாதிக்கக் கூடியதாய் இருக்கின்றது என்று எண்ணுவதில் கொஞ்சமாவது அர்த்தமில்லை.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஒரு அம்சமாகவே இந்த கமிஷன் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியரின் சுயமரியாதையை அடியோடு அழித்ததான பஞ்சாப் அநீதி போன்ற காரியங்களில், ஒன்று சேர்ந்து பரிகாரம் தேடசம்மதிக்காத ஒரு கூட்டத்தார் இப்போது பகிஷ்காரத்தைப் பற்றி வீண் கூப்பாடு போடுவது கேலிக்கிடமானதென்றே சொல்ல வேண்டும்.
உண்மையில் ராயல் கமிஷனை பகிஷ்கரிப்பதென்பது எந்த அரசாங்
கத்தாரால் இந்த ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டதோ அதே அரசாங்கத்தின் அம்சங்களான சட்டசபைகளையும், மந்திரி முதலிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பகிஷ்கரிக்கத்தக்க கொள்கையுடையதாயிருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு விதமான தியாகத்திற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாததான வெறும் வார்த்தை அளவில் பகிஷ்காரம் என்று கூச்சல் போடுவதானது சுயமரியாதையுள்ள தேசத்தார் என்பவர். களுக்கு கொஞ்சமும் அழகாகாது. உண்மையிலேயே முழு விடுதலைக்கும் நம்முடைய நாட்டார் தயாராயிருக்கின்றார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு. விடுமானால் அந்த காலத்தில் பார்ப்பனரல்லாதாரே முன்னிலையில் நின்று விடுதலைப்போர் புரிவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகப்பட வேண்டிய
தில்லை.
குடி அரசு - 1927 (3) 332
ராஜீய விஷயங்களில் சாத்தியமானதும், காரியத்தில் நடக்கக் கூடியது மான துறையில் பாடுபடும் “ஜஸ்டிஸ்” கட்சிக்காரர்கள் வேண்டுமென்றே பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக மற்ற கட்சியார் செய்யும் சூழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது அறிவுடைமை ஆகாது.
கோயமுத்தூரில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாட்டில் மாகாண சுயாட்சி கிடைக்கும் வரையிலும் பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
ஆதலால் முழு சுதந்திரமும் கேட்கக் கூடிய காலம் வரும் வரை “ஜஸ்டிஸ்” கட்சிக்காரர்கள் மாகாண சுயாட்சிக்காகவும், நம்முடைய நாட்டிலுள்ள எல்லா வகுப்பார்களுக்கும் சமமான நீதியும் பங்கும் கிடைக்கும் படியாகவும், ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்று கொண்டாடும் பாத்தியதையை நிராகரிக்கவும், ஒரே நிலையாக இருந்து பாடுபட்டு வர வேண்டியவர்களாவார்கள். “ஜஸ்டிஸ்” கட்சியாரின் வெளிப்படையான இந்த கொள்கையை நம்முடைய தேச மக்களிடமும் மற்றும் அந்நிய நாட்டாரிடமும், அவர்களால் ஏற்படுத்தப்படும் சபைகளின் முன்னிலையிலும் ஸ்தாபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கமிஷன் அங்கத்தினர்களில் இந்திய அங்கத்தினர்கள் ஒருவரும் இல்லாதது ஒரு கெடுதியாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கவர்ன் மெண்டார் ஒரு சமயம் இந்தியர்களில் யாரையாவது நியமிப்பதானால் இப்போதைய நிலைமையில் நியமனம் பெறக்கூடிய இந்தியர்கள் பொதுவாக பிராமணரல்லாதாருக்கு தீங்கிழைக்கக் கூடியவர்களாகத்தான் இருக்க
முடியும்.
தவிர,ஆதியில் ரெளலட் கமிட்டியில், இந்தியர் ஒரு அங்கத்தினராய் இருந்தும்கூட, அக்கமிட்டியின் சிபார்சானது இந்திய மக்களை அரசாங்கத் தோடு ஒத்துழையாமை செய்ய வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது. பொதுவாக யோசிக்குமிடத்து கமிஷனில் அங்கம் பெறக்கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர்களாகவே இருந்துவிடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 27.11927
333 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கமிஷன்
ராயல் கமிஷன் பகிஷ்காரக் கூச்சல் சுயநல அரசியல்வாதிகளிடை எவ்வளவுக் கெவ்வளவு பலமாகக் கிளம்புகின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு நாட்டிலுள்ள மக்களிடை அதன் புரட்டுகளும் வெட்ட வெளிச்சமாய்க் கொண்டு வருகின்றது.
தவிர, பகிஷ்காரத்திற்கு எதிர் பிரசாரமும் பலமாய் ஏற்பட்டு வரு கின்றது.பகிஷ்கார காரணங்களும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. எனவே கூடிய சீக்கிரத்தில் பகிஷ்கார கூச்சலுக்கு சாவுமணி அடித்துவிடும் என்பது திண்ணம்.
ராயல் கமிஷனில் இந்தியர்களை சேர்க்கவில்லை என்ற கருத்துடன் தான் ஆதியில் பகிஷ்காரம் ஆரம்பிக்கப்பட்டது. தேசத்திலிருக்கும் கட்சி பிளவுகளையும், ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைக்கும் சூழ்ச்சிகளையும் வெளியாக்கி, யாரை நியமிப்பது என்ற கேள்வி பிறந்தபின் அதற்கு பதில் சொல்ல முடியாமல், இப்போது கமிஷனை பகிஷ்கரிப்பதற்கு அது காரணம் அல்ல என்று சொல்ல முன்வந்து விட்டார்கள். “காங்கிரஸ்” சுயராஜ்யக் கட்சி முதலியவற்றிற்கு தலைவரான பண்டித மோதிலால் நேரு அவர்கள் கமிஷனில் இந்தியரை சேர்க்காதது மிகவும் நல்லதென்றே சொல்லிவிட்டார்.
ஆகவே, பகிஷ்காரத்தின் வேருக்கு சாவுமணி அடித்தாய் விட்டது. இனி தப்புத் தவறுகளைப் பற்றி நாம் அதிகக் கவலைப்படவேண்டியதில்லை.
சுயமரியாதை
பகிஷ்காரத்திற்கு இப்போது முக்கியமாய்ச் சொல்லிக் கொள்ளப்படும் காரணமெல்லாம் இந்தியாவின் சுயமரியாதையை உத்தேசித்து பகிஷ்காரம் செய்ய வேண்டுமென்பதாகக் கூச்சலிடப்படுகின்றது. கமிஷன் நியமனத் தினால் இந்தியாவின் சுயமரியாதை இந்தக் கூட்டத்தாருக்கு எந்த விதத்தில் பாதிக்கப்பட்டு விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த ராயல் கமிஷன் நியமிக்கப்படும் என்கிற விஷயம் இன்றல்ல, நேற்றல்ல, இன்றைக்கு
குடி அரசு - 1927 (3) 334
8,9 வருஷத்திற்கு முன்பாகவே நமக்கு வழங்கியதாய் சொல்லப்பட்ட
சீர்திருத்த நிபந்தனையிலேயே கண்டிருக்கின்றது. அதாவது இந்த சீர்திருத்தத்தை இந்தியர்கள் நன்றாய் நடத்திக் காட்டி விட்டார்களா என்கின்ற பரிட்சை பார்க்க இனி பத்து ஹு கழித்து ஒரு கமிஷன் வைத்து விசாரணை: செய்யப்படும் என்கின்ற தத்துவம் கொண்ட வியாசங்கள் அதில் காணப்
பட்டிருக்கின்றன.1920- ம் வருஷத்திய சீர்திருத்தம் போதாது, அது அதிரப் தியும், ஏமாற்றமும் அளிக்கிறதாயிருக்கிறது. ஆதலால் இதை பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சொன்ன காலத்தில் அதை எதிர்த்து இந்த
சீர்திருத்தமானது சுயராஜ்யத்திற்கு முதற்படியானது. இதை நடத்திக் காட்டி மேலால் சீர்திருத்தம் கேட்க வேண்டுமேயல்லாமல் பகிஷ்கரிப்பது சரியல்ல என்றும், இத்தீர்மானத்தை நிறைவேற்றியதாலேயே காங்கிரஸ் செத்துப் போய்விட்டது என்றும் சொல்லியதுடன் சீர்திருத்தத்தை நடத்த தனது சிஷ்ய கோடிகளை ஏவிவிட்டு ஆள் ஒன்றுக்கு மாதம் 5000,6000 ரூ. வீதம் சம்பளம் வாங்கிக் கொடுத்தது இதே பெசண்டம்மையார்தான். அப்படிப்பட்ட அம்மைக்கு மறுபடியும் கமிஷன் நியமித்ததால் இப்போது திடீரென்று சுயமரியாதை ஞானம் எப்படி வந்தது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்தியாவின் சுயமரியாதைக்கு ஒரு வெள்ளைக்கார சீமாட்டி அழுவதென்றால் “ஆடு நனைகிறதென்று ஓணாய் ஓலமிட்டழுத கதை யையே ஒக்கும்” என்பதே நமது அபிப்பிராயம். அதிலும் பெசண்டம்மையார். அழுவதென்பது “ஆடு நனைகின்றதென்று சிறுத்தைப் புலி அழுவதையே ஓக்கும்” என்றும் சொல்லுவோம்.
இந்தம்மையார் இந்தியாவின் சுயமரியாதைக்காக கவலைப்படுவதின் யோக்கியதையைப் பொதுமக்கள் அறிய உதாரணம் பஞ்சாப் படுகொலையை ஆதரித்து பிரசாரம் செய்தார்களே அது ஒன்றே போதும் என்றே நினைக் கிறோம். அதாவது “பஞ்சாபியர்கள் செங்கல் போட்டதற்கும் ஜனரல் டயர்:
பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாய் போய்விட்டது. இதுதான் அரச தர்மம்” என்று சொன்னார்கள்.
இவ்வம்மையார் சுயமரியாதை லக்ஷணம் இப்படியானால் அய்யர்மார், அய்யங்கார்மார்கள் சுயமரியாதை உணர்ச்சிக்கு ஏதாவது உதாரணம் வேண்டு. மானால் அதே பஞ்சாப் அக்கிரமத்தின் போதும் அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒத்துழையாமையின் போதும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சற்று யோசித்தால் விளங்காமல் போகாது. ஒத்துழையாமைதீர்மானம் நிறைவேறி
யதும் ஸ்ரீமான்கள் “சுதேசமித்திரன்” ஆசிரியரும் இப்போதைய காங்கிரஸ் காரியதரிசியுமான எம்.ரங்கசாமி அய்யங்காரும் “இந்து” ஆசிரியரும் தமிழ்நாட்டு தலைவராயுமிருந்த கஸ்தூரி ரங்கய்யங்காரும், பரிசுத்தத் தேசீயவான் என்று சொல்லப்படுபவரும் சுயராஜ்யக் கக்ஷி காரியதரிசியும் சட்ட சபையில் காங்கிரஸ் க௯ஷி உபதலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ்
335 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கமிட்டி காரியதரிசியுமான சத்தியமூர்த்தி அய்யரும் ராஜீனாமா கொடுத்துவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். இந்திய தேசீயத் தலைவரும், எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரும் டிக்டேடர் என்று சொல்லுவதான ஏகத்தலைவருமான ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்கள் (ஒத்துழையாமை) பகிஷ்காரங்கள் என்பது சட்ட விரோதம் என்று சொன்னார்.
ஆகவே, பஞ்சாபில் குழந்தை குட்டிகளுடன் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களைக் கொண்ட ஒரு பெருங்கூட்டத்தில் முன்பின் எச்சரிக்கை இல்லாமல் பின்புறமாய் வந்து ஓடவிடாமல் தடுத்து மிஷின் பீரங்கிவைத்து பட்டாஸ் சுடுவது போல் சடபுட, சடபுட என்று குண்டுகளைப் பொழிந்து மக்களைக் கொன்றதும், தண்ணீர் குழாய்களையும் காந்த விளக்கு களையும் நிறுத்தி தெருவில் மக்கள் வயிற்றினால் ஊர்ந்து போகும்படி சொன்னதும்,மக்களை மூக்கை நிலத்தில் தேய்த்ததும், முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தினதும், நொண்டி அடித்து நடக்கும்படி கட்டளை இட்டதும், பெண்கள் கற்பை அழித்ததும், சகோதரிகளை நிர்வாணமாக்கி மர்ம ஸ்தானத்தில் கோலை குத்தினதும் ஆகிய காரியங்களை இந்தியாவின் சுயமரியாதைக்கு பங்கம் என்று நினைக்காமலும் வேறு சிலர் அப்படி நினைத்தும் அதற்கு பரிகாரம் செய்ய ஏற்படுத்திய பகிஷ்காரங்களுக்கு கட்டுப்படாமலும்,எதிரிகளுக்கு உளவாயிருந்து கூலி வாங்கினதுமான இந்த துரோகிகள், வஞ்சகர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், அயோக்கியர்கள். இப்போது தங்களுக்கு திடீரென்று சுயமரியாதை ஞானம் வந்துவிட்டதென்று சொன்னால் கடுகளவு மூளையுள்ளவனாவது அவ்வளவு யோக்கியனாவது இவற்றை நம்ப முடியுமா என்றுதான் கேட்கின்றோம். குறிப்பாக பேசுமிடத்
தில் இந்த பகிஷ்காரத்தை கிளப்பியதில் நம் நாட்டு பார்ப்பனர்கள் தங்களது வயிற்று பிழைப்பிற்காக எந்த எந்த வழியில் தங்கள் சுயமரியாதையை விற்று பிழைக்கின்றார்கள் என்பதும் தங்கள் சுயநலங்களுக்காக எந்த எந்த விதத்தில்
மதத்தின் பேராலும் அரசியலின் பேராலும் எத்தனைக் கோடி மக்களின் சுயமரியாதையை கெடுத்து வாழ்கின்றார்கள் என்பதும் இந்திய நாட்டுக்கு வந்த எந்த அன்னிய ஆட்சியாவது இந்த பகிஷ்கார பார்ப்பனக் கூட்டத்தின் உள்உளவும் காட்டிக் கொடுக்கும் தன்மையும் இல்லாமல் வர முடிந்ததா என்பதும் அறியாதார்கள் யார் என்றே கேட்கின்றோம். ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டதானது எந்த விதத்திலாவது இந்தியாவின் சுயமரியாதைக்கு விரோதமானது என்று இந்த பார்ப்பனக் கூட்டத்தாராவது பெசண்டம்மை கூட்டத்தாராவது மற்றும் வேறு எந்த யோக்கியராவது உண்மையில் நினைப்பார்களானால் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய யோக்கியதை என்ன என்பதையாவது சற்று யோசித்து பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
ராயல் கமீஷன் யாரால் ஏற்படுத்தப்பட்டது? பிரிட்டிஷ் பார்லி மெண்டாரால். பிரிட்டிஷ் பார்லிமெண்டார் என்பவர்கள் யார் என்றால் நம்
குடி அரசு - 1927 (3) 336
நாட்டை ஆளுவதற்கு ஏற்பட்ட பிரிட்டிஷ் ஜனங்களின் பிரதிநிதிகள். ஆகவே அவர்களுடைய நடவடிக்கையை நாம் ஒப்புக் கொள்ள வில்லையானால் அல்லது அவர்களது நடவடிக்கை நமக்கு சுயமரியாதைக்கு விரோத மென்பதானால் நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன? அவர்கள். ஏற்படுத்திய சட்டசபையில் அரை க்ஷணம் உட்கார்ந்திருக்கலாமா? அவர்கள் ஏற்படுத்திய உத்தியோகத்தில் அரை வினாடி இருக்கலாமா? அதற்காக அவர்கள் கொடுக்கும் காசில் ஒரு சின்ன காசு பெறலாமா? அவர்களின் இம்மாதிரியான நமது சுயமரியாதைக்கு விரோதமான ஆட்சியை நடத்த நாம் அடிமையாப் பதிவு செய்து கொள்ளலாமா? அவர்கள் ஏற்படுத்திய கோர்ட்களில் அந்த கூட்டத்தாரால் ஏற்படுத்திய அதிகாரிகளிடத்தில் போய்
நின்று கொண்டு, கடவுளே! பிரபுவே! கன்னியவான்களே! என்று கும்பிடு போட்டுக் கெஞ்சும் வக்கீல் உத்தியோகத்தில் ஒரு இமைநேரமாவது இருக்கலாமா? ஆகவே இது போன்றவைகளை யோசித்துப் பார்த்தால் இப்போது பகிஷ்காரத்தை ஒரு வாயில் பேசிக் கொண்டு மற்றொரு வாயில் மேற்படி காரியங்களை செய்து கொண்டு இருக்கும் கூட்டத்தார் யோக்கியர்.
கள் என்று யாராவது நம்ப முடியுமா? என்றும் அப்படி நம்புகிறவர்களும் அவர்களை பின்பற்றுகின்றவர்களும் அறிவாளிகளாகவும் யோக்கியர்களாக
வும் இருக்கக் கூடுமா? என்றும் கேட்கின்றோம்.
பார்ப்பனர்களின் சுயமரியாதை, யோக்கியம், நாணயம் ஆகிய இவைகளின் தத்துவம், கெளகத்தி காங்கிரஸ் தீர்மானத்திற்கு கொடுத்த மதிப் பையும், பார்ப்பனரல்லாதார் சிலர் காங்கிரசில் சேர எண்ணி வந்தவர்களை நடத்திய மாதிரியையும், சென்னை முனிசிபல் தலைவர் தேர்தலையும் கவனித்த களிமண் உருண்டைக்கும் விளங்காமல் போகாது.
சென்னையில், உண்மையை தைரியமாய் எடுத்துச்சொல்லவோ பகுத்தறிவுடன் நடந்து கொள்ளவோ பார்ப்பனரல்லாத பத்திரிகைக் கூடப் பயப்படுகின்றன. ஆனபோதிலும் இது விஷயத்தில் “சைபுல்இஸ்லாமும், “நவசக்தியும்” தைரியமாய் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருப்பதற்கு நாம் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். “சைபுல் இஸ்லாம்” எழுதி இருப்பதை வேறு இடத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம். நவசக்தி எழுதுவதாவது:-
“பஹிஷ்காரம் பஹிஷ்காரம் என்று கூச்சலிடுவது சூழ்ச்சியின் பாற் பட்டதாகும். முன்னே உருக்கொண்ட பல கமிஷன்களில் இந்தியர் சிலர். அங்கம் பெற்றதின் பயன் என்னவாயிற்று?”
“பஹிஷ்காரம் என்னும் சொல்லைக் கேட்டு சகோதரர்கள் ஏமாற லாகாது என்று எச்சரிக்கை வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கின்றது.
“நவசக்தி” எழுதி இருக்கும் முழு விவரமும் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.
337 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
எனவே, நம் நாட்டிடை இது சமயம் தோன்றியிருக்கும் பஹிஷ்கார இயக்கமானது பார்ப்பனர்களின் மற்றொரு சூழ்ச்சி என்பதையும் இதில் கலப்பது மக்களுக்கும் குறிப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும் தற்கொலை யாயிருக்கும் என்பதையும் தெரிவிப்பதுடன் பார்ப்பனரல்லாதாரிலும் சிலர். பார்ப்பனர் ஓலமிடும் பகிஷ்காரத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமான முத்துரங்கங்கள், கந்தசாமிகள், வரதராஜுலுகள் போன்றார்களை நம்பி குழியில் விழுந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.111927
குடி அரசு - 1927 (3) 338
சுயமரியாதைப் பிரசாரத்தின் வற்றிக்குறி
பார்ப்பனரல்லாதூராகிய தமிழ் மக்கள் தென்னாட்டில் சுயமரியாதைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்ததும், அதற்கு நாட்டில் சிறிது செல்வாக்கு ஆரம்பித்தாலும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனப் பிரசாரம் மிகுதியும் பலமாய் செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னால் எங்காவது மடாதிபதிகளும், லோக குருக்களும், சங்கராச்சாரிகளும், பண்டிதர்.
களும், சாஸ்திரிகளும், பாகவதர்களும், சஞ்சாரம் என்கின்ற பெயராலும் காலக்ஷேபமென்கின்ற பெயராலும் இந்துமதம் என்கின்ற பெயராலும் வருணாசிரமம் என்கின்ற பெயராலும், ஆரிய தர்மம் என்கின்ற பெயராலும் இந்து தர்மம் என்கின்ற பெயராலும், புராணப் பிரசங்கம் என்கின்ற பெயராலும், வேதம், ஸ்மிருதி ஆகமம் என்கின்ற பெயராலும், ரிஷிகள்: பெயராலும், மகாத்மாக்கள் பெயராலும் பலவிதசூழ்ச்சி பிரசாரமும் மற்றும் பல பேர்வழிகளின் பெயரால் பார்ப்பனப் பத்திரிகைகளிலும் அவர்கள் தயவால் வாழும் பத்திரிகைகளிலும் அவர்களது கூலிப்பத்திரிகைகளிலும் பிரசரிப்ப தின் மூலமாகவும் பிரசாரம் செய்து வந்தார்கள்.
சுயமரியாதைப் பிரசாரத்தின் பலமானது இவைகளையெல்லாம் தாண்டிச்செல்லும்படியான நிலைமைக்கு வந்து பாமர மக்களையும் பகுத்தறிவில்லாத மூடநம்பிக்கைக்காரரையும் தட்டி எழுப்பத்தக்க யோக்கிய தைக்கு வந்து விட்டதால், உதாரணமாக மகாத்மா என்கின்ற பெருமையைக் கொடுத்து எவ்வளவோ தூரம் மக்கள் பின்பற்றி வந்த பெருமையையும் அடைந்த பெரியார் என்பவரான ஸ்ரீமான் காந்தியையே இவ்விஷயத்தில் எதிர்த்ததுடன் அவரிடம் வைத்திருந்த நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள் ளும்படியான நிலைமை ஏற்படும்படியான அளவுக்கு ஜனங்கள் விழித்துக் கொண்டதாலும் பல பார்ப்பனரை குலகுரு என்று பல தலை முறையாய் வணங்கி கப்பம் செலுத்தி வந்ததையெல்லாம் நிறுத்தி விடத்தகுந்த அறிவும் துணிவும் ஏற்பட்டு விட்டதாலும் இனி வைதீகப் பெயரால் செய்யும் பிரசாரத்
திற்கும் செல்வாக்கில்லை எனக்கருதி இப்போது உத்தியோகப் பார்ப்பனர்கள் இந்திய நாகரிகம் என்னும் பெயரால் பார்ப்பனப் பிரசாரத்திற்கு ஆரம்பித்து விட்டார்கள். அதாவது சட்ட மெம்பர் சர்.சிஃபி. ராமசாமி அய்யர் என்கின்ற பார்ப்பனரின் தலைமையில் கோர்ட் ஜட்ஜி வி.வி.சீனிவாசய்யங்கார் என்கின்ற மற்றொரு பார்ப்பனர் அட்வோகேட் ஜனரல் ஸ்ரீமான் TR வெங்கிட்ட ராம
339 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சாஸ்திரி என்கின்ற பார்ப்பனரின் உதவியையும் மற்றும் ஸ்ரீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், TR ராமச்சந்திரய்யர், 1.14.கிருஷ்ணசாமி அய்யர், சந்திரசேகரய்யர் முதலிய செல்வாக்குள்ள வக்கீல் பார்ப்பனர்கள் உதவியை
யும் கொண்டு பிரசாரத்திற்கு வெளிக் கிளம்பிவிட்டார்கள்.
தென்னாட்டில் சுயமரியாதைப் பிரசாரம் ஏற்பட்டதின் பலனாய் “பாம்பும் கீரியும்” போல் இருந்த அய்யர் அய்யங்கார்களும், “நாயும் பூனை
யும்” போல் இருந்த சுயராஜ்யக் கட்சியும் மிதவாதக் கட்சியும் கொஞ்சிக் குலாவிக் கொண்டு நம்மீது பாய்கின்றன. எனவே இக்குறிகள் தமிழ்நாட்டில் சுயமரியாதைப் பிரசாரமானது ஒரு அளவுக்கு மதிப்புப் பெற்று வருகின்றது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏதாவது ஒரு இயக்கம் புதிதாக ஆரம்பமானால் அதற்கு அதன் எதிரிகளால் 5 தத்துக்கள் உண்டு.அதாவது:-
1.ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தை அதன் எதிரிகள் அலட்சியமாய் கருதுவது போல் வேஷம் போட்டு யாரையும் அதனால் லட்சியம் செய்யா மலிருக்கச் செய்து அதை ஒழித்துவிட முயற்சிப்பது.
2. அவ்வியக்கத்தைப் பற்றி ஜனங்கள் தப்பாய் நினைக்கும்படி இழிவாய்பேசி அதன் பேரில் பலவித தப்பர்த்தங்களையும்
பழியையும் சுமத்தி ஒழித்துவிட முயற்சிப்பது.
3. அதன் தலைவர்களைப் பற்றி குற்றம் சொல்லி துர் எண்ணம்
கற்பித்து யாரையும் பின்பற்றச் செய்யாமலும், மதிப்புக்கொடாமலும் இருக்கும்படி செய்து ஒழித்துவிட முயற்சிப்பது.
4. பிறகு தங்களுக்குள்ள சகலவித செல்வாக்குகளையும் உபயோ
கித்து பலவித எதிர்பிரசாரம் செய்து ஒழித்துவிட முயற்சிப்பது.
5. கடைசி மார்க்கமாக பலாத்காரத்தாலும், சட்டங்களினாலும் ஒழித்துவிட முயற்சிப்பது.
இவ்வளவையும் தாண்டிவிட்டால் இயக்கம் வேரூன்றி விட்டதென்றே சொல்லலாம்.
எனவே நமது சுயமரியாதை இயக்கம் அதன் எதிரிகளால் செய்யப் படும் மேல் கண்ட எல்லாவிதமான தத்துக்களையும் அனுபவித்துக் கொண்டு வருகின்றதுடன் அவைகளில் இருந்து கொஞ்சங்கொஞ்சமாய் தப்புவித்துக் கொண்டு வருகின்றதென்றே சொல்லவேண்டும்.
குடி அரசு - 1927 (3) 340
மாதம்1க்கு4000ரூ சம்பளம் வாங்கும் ஒருஹைகோர்டு ஜட்ஜும் 5500 சம்பளம் வாங்கும் சட்ட மெம்பரும் 2000ரூ சம்பளமும் 5000ரூ வரும்படியும் சம்பாதிக்கும் அட்வகேட் ஜனரலும், மற்றும் மாதம் 10000, 20000 சம்பாதிக்கும் முக்கியமான வக்கீல்களும் ஒன்று சேர்ந்து எதிர் பிரசார யுத்தத்திற்கு வர: நேர்ந்துவிட்டதென்றால் இப்பேர்ப்பட்டவர்களை நாம் வெளிப்படையாய் எதிரிகளாய் அடைந்ததின் மூலம் சிறிதாவது நாம் வெற்றியடைந்திருக் கின்றோமென்பதில் சந்தேகம் இல்லை. அதோடு எதிரிகள் நிலைமையும் இதுசமயம் சற்று கஷ்டமான நிலையில் இருக்கின்றது என்பதற்கும் இவ்வளவு பெரிய உத்தியோகஸ்தர்கள் பிரசாரத்திற்கு கிளம்பியிருப்பதே போதுமான ஆதாரமாகும். இந்த சமயத்தைக் கைவிட்டு விடாமல் ஜாக்கிரதையாய் இருந்து முன்னேறப் பார்க்க வேண்டியது நமது கடமையாகும்.
ஐகோர்ட் ஜட்ஜாகிய ஸ்ரீமான் வி.வி.சீனிவாசய்யங்கார் சென்னையில் செய்த எதிர் பிரசாரத்தில் பேசிய பேச்செல்லாம் புரோகிதர்களால் செய்யப் பட்டு வரும் ஒவ்வொரு சடங்கையும் செய்து தீரவேண்டும் என்பதே. அவைகள் ஒவ்வொன்றிற்கும் சமாதானம் சொல்லுவதற்கு ஒரே விஷயத் தைத்தான் எடுத்துக் கொண்டார். அதாவது:- “இவ்வளவு சடங்கை ஏற்படுத் தின நம் முன்னோர்கள் பயித்தியக்காரர்களா'” என்று கேட்கின்றார். இரண்டா வதாக சடங்கின் பெருமைகளை வெள்ளைக்காரர்கள் கூட உணர ஆரம்பித்து விட்டார்கள் என்கின்றார். தவிர பாலிய விவாகத்தைப் பற்றி சமாதானம் சொல்லும்போது, அந்தப் பொறுப்பை பெற்றோர்களுக்கு விட்டு விட வேண்டுமே ஒழிய மற்றவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாது என்கின்றார்.
தீண்டாமையைப் பற்றி பேசும்போது, பிறவியிலேயே மக்களுக்கு ஒருவித வசீகரமும் ஆத்ம ஞானமும் வருகின்ற தென்றும் தீண்டாதவர். களுக்கு அவ்வித வசீகரமும் ஞானமும் இல்லை என்றும் சொல்லுகின்றார். அம்மாதிரி வசீகரமும் ஆத்மஞானமும் இருந்த நந்தணார் முதலிய பல பார்ப் பனரல்லாதாரை பார்ப்பனர்கள் வழி படுவதற்கு ஏதாவது ஆகேஷபிக்கின்றார். களா என்கிறார். எனவே ஒரு ஐகோர்ட் ஜட்ஜியின் பகுத்தறிவும் பாரபக்ஷமற்ற நீதிவழங்கும் தன்மையும் இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். இவரால் இது சம்மந்தமான விஷயங்களில் மக்களுக்கு சரியான நியாயம் கிடைக்குமென்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? இவருக்கு துணைவரான சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் அக்கிராசன முடிவுரையாகப் பேசும்போது நாட்டில் தற் காலம் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையானது ஜஸ்டிஸ் சீனிவாசய் யங்காரை இம்மாதிரி பேசச் செய்தது என்று ஆரம்பித்து. வருணாசிரமத்தைப்
பற்றி பேசும் போது இந்து நாகரீகம் புராதனமானதென்றும் இந்தியாவில்
இருக்கும் வருணாசிரம தர்ம அற்புதம் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும் அதுவே இந்திய நாகரீகத் திற்கு ஒரு உயர்வு என்றும் ஏழ்மையும் தெய்வ ஞானமும் பொருந்தியவரை முதலில் வைத்து, போர்த்திறமுள்ளவரை: இரண்டாவதாக வைத்து செல்வந்தர்களை மூன்றாவதாக வைத்து, தொழில்
341 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
செய்பவர்களை நான் காவதாக வைத்து இருப்பதானது உலக நன்மையை முன்னிட்டு நம் முன்னோர்களின் ஆழ்ந்த சிந்தனையின் பலனாகவும் முதிர்ந்த அனுபவத் தின் பலனாகவும் ஏற்படுத்தப்பட்டது என்றும் மெச்சிக் கொள்ளுகின்றார். ஆகவே 5500 ரூபாய் வாங்கும் நமது சட்டமெம்பரின் ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள நமக்கு இதைவிட வேறு என்ன சந்தர்ப்பம் வேண்டும்.
இந்து மதத்தைப்பற்றியும் இந்திய நாகரிகத்தைப் பற்றியும் வருணா சிரமத்தைப் பற்றியும் பேசப் புகுந்த இந்த ஆசாமிகளின் யோக்கியதையை உலகமறியாதா என்றும் கேட்கின்றோம். அக்கிராசனர் சர்.சி.பி.ராமசாமி ஐயர். என்கின்றவர் எங்கும் போவார், எதையும் சாப்பிடுவார், எதையும் குடிப்பார், யாரையும் சுகிப்பார், என்னமும் செய்வார். பிரசங்கியாராகிய ஐகோர்ட் ஜட்ஜ் ஸ்ரீமான் வி.வி. சீனிவாசய்யங்கார் என்பவர் சர்.சி.பி.க்கு அண்ணன் என்று சொல்ல வேண்டியதுடன் எதுவும் செய்து உத்தியோகம், சம்பாதிப்பார் எனவே இம்மாதிரியான சுத்தர்கள் நமக்கு இந்து மதத்தையும் இந்திய நாகரீகத்தையும் வருணாசிரமத்தையும் பெரியோர்களின் புத்திசாலித் தனத்தையும் போதிக்க வருகிறார்கள் என்றால் நமது நிலைமை என்னவென்று சொல்லிக் கொள் ளுவது என்பது நமக்கு விளங்கவில்லை. இவர்கள் இப்போது பார்த்து வரும் பொறுப்புள்ள உத்தியோகத்தில் இனி அரை நாழிகை உட்கார்ந்திருக்க யோக்கியதை உண்டா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்க வேண்டும். குதிரை கீழே தூக்கிப்போட்டதல்லாமல் புதைக் குழியும் பறித்தது என்பது போல் சாஸ்திர ஞானத்தோடு இவ்வளவு நாள் பேசியதல்லாமல் இப்போது சட்ட ஞானத்தோடும் பேச முன் வந்து விட்டார்கள். இனித்தான் நாம் விழிப்
பாய் இருக்க வேண்டும். மதம் என்றும் வருணம் என்றும் ஆச் சிரமமென்றும் தர்மம் என்றும் பெரியோர்கள் ஏற்படுத்தியது என்றும் வேதம் என்றும் புராணமென்றும் இந்திய நாகரீகமென்றும் சொல்லிக்கொண்டுவரும் எந்த ஆசாமிகளையும் கண்டிப்பாய் நம்பக்கூடாது என்றும் வேண்டிக் கொள்ளு கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 27.1.1927
குடி அரசு - 1927 (3) 342
பச்சையப்பன் கலாசாலையில் ஆதிதிராவிடர்கள் என்று சொல்லப் படுபவர்கள் இந்துக்கள்தான் என்று ஐகோர்ட்டார் தீர்ப்பு சொன்னதின் பலனாக சேர்த்துக் கொள்ள அப்பள்ளி தர்மகர்த்தாக்களில் பெரும்பாலோர்.
ஒப்புக் கொண்டார்களாம். இந்துக்கள் என்பவர்களுக்கும் இந்து மதம் என்ப
தற்கும் இதைப்போல் முட்டாள்தனமானதும் அவமானமானதுமான சம்பவம் என்பதாக மற்றொன்றை குறிப்பிட முடியவேமுடியாது. ஒரு மனிதன் இந்துவா அல்லவா என்பதற்கு கூட வெள்ளைக்காரர்கள் ஏற்படுத்திய சட்ட
மும் கோர்ட்டுகளும் தான் தீர்மானிக்க யோக்கியதை யுடையவைகளாக இருக்கின்றதேயொழிய தர்மகர்த்தாக்களுக்கோ இந்து மதம் ஆதாரம் என்பவைகளுக்கோ இந்துமத தலைவர்கள் என்பவர்களுக்கோ கொஞ்சமும் யோக்கியதை இல்லை என்றும் வெள்ளைக்கார கோர்ட்டார் சொன்னால் தான் தர்மகர்த்தாக்கள் ஒப்புக் கொள்ளக்கூடியவர்களே ஒழிய தங்களுக்கு என்ப தாக ஒரு சுயபுத்தியும் சுயமரியாதையும் இல்லையென்பதும் இதனால் நன்
றாய் விளங்கிவிட்டது.
தவிர தர்மகர்த்தாக்கள் சிலரின் யோக்கியதையை பார்க்கின்றபொழுது இந்த விஷயத்தில் அபிப்பிராயம் சொல்ல நேர்ந்த ஐகோர்ட் ஜட்ஜு நல்ல வேளையாக ஒரு வெள்ளைக்காரராய் இருந்ததினாலேயே ஆதிதிராவிடர்
களும் இந்துக்கள்தான் என்று சொல்ல நேர்ந்தது. அல்லாமல் மற்றபடி ஒரு பார்ப்பனனாகவோ அல்லது பார்ப்பன கொள்கையை பின்பற்றும் அவரது அடிமையாகவோ இருந்திருந்தால் இம்மாதிரி சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கத்தக்கதாவும் ஏற்பட்டுவிட்டது. அதாவது பச்சையப்பன் டிரஸ்டி கூட்டத்தில் ஆஜரான 6 டிரஸ்டிகளில் ஒரு பார்ப்பனர் இருந்திருக் கிறதாக தெரிய வருவதுடன் அந்த ஒரு பார்ப்பனரும் ஆதிதிராவிடர் இந்துக் களானாலும் கூட அவர்களை கலாசாலையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அபிப்பிராயங்கூறி இருக்கிறதாகவும் காணப்படுகிறது.
விபசாரத்திற்காக சாமிபோராலும் மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விடுவதை தடுக்க வேண்டுமென்று சொன்னால் அது வேண்டாம் என்று
343 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சொல்ல தேசீயத் தலைவர்கள் என்று சொல்லும் பார்ப்பனர்களிலேயே பலர் இருக்கும் போது வெறும் பார்ப்பனர்களில் ஒருவர் இதைச் சொல்லுவதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 27.114927
குடி அரசு - 1927 (3) 344
ஸ்ரீ காந்தியின் தந்திரம்
ராயல் கமிஷனைப் பற்றி ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயம் சொல்லியி ருப்பது மிகவும் தந்திரமானதாய் இருக்கின்றதே தவிர நேர்மையானதாக காணவில்லை.
அதாவது அசோசியேட் பிரசுக்கு சொன்னதாக காணப்படுவது என்ன வென்றால்.
தனது மனச்சாக்ஷி காங்கிரஸ் தலைவரிடத்தும் காங்கிரசிடமும் இருப்பதாகவும் சொல்லியிருப்பதோடு பஹிஷ்காரத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஆதரிக்கிறேன் அல்லது இல்லை என்று சொல்லாமல் தந்திரமாய் பேசியிருக்கிறார். அதாவது காங்கிரஸ்காரர் சொல்லுவதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்று சொல்லி விட்டார். காங்கிரஸ் காரர்களின் தீர்மானத்தையாவது ஒப்புக்கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு அதை ஒப்புக்கொள்ளமுடியாது ஆயினும் எதிர்க்கமாட்டேன் என்று சொல்லி யிருக்கிறார். எனவே இவ்வார்த்தைகள் ஒரு பெரிய மகாத்மா என்றோ தலைவர் என்றோ பெரியவர் என்றோ சொல்லப்படுபவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளா அல்லது ஒரு தந்திரக்காரர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகளா என்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டு கிறோம். எப்படி அவர் பேசியிருப்பதை பார்ப்பனப் பத்திரிகைகள் மகாத்மா காந்தியும் ராயல் கமிஷனை பஹிஷ்கரிக்கிறார் என்று தலையங்கமிட்டு எழுதி மக்களை ஏமாற்றுகின்றன, இதை ஸ்ரீமான் காந்தியவர்கள் அறிந்தே சும்மா
இருக்கிறார்.
எனவே பாமர மக்களுக்கு எவ்வளவு ஆபத்து இருக்கின்றது என்ப தை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
குடி அரசு - கட்டுரை - 27.1.1927
345 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மாசி ட்ளி சர்.மு. சகாசிவய்யார்
சர். டி. சதாசிவய்யர் இறந்ததைக் கேட்டு மனவருத்தம் அடை கின்றோம். மனிதனுடைய சராசரி யோக்கியதைக்கும் நாணயத்திற்கும் மேற்பட்ட அந்தஸ்தும் ஒழுக்கமும் உள்ளவர். தென்னாட்டுப் பார்ப்பனர். களுக்குள் எந்த ஒரு பெரிய அதிகாரியாவது கூடிய வரையிலும் கண்ணிய மாயும், நாணயமாயும் தனது அதிகாரத்தை செலுத்தியவர் உண்டா என்கின்ற ஒரு கேள்வி பிறக்குமானால் அதற்கு சர். சதாசிவம் என்றே சொல்லுவோம்.
ஜன சமூக சமத்துவத்திற்கு, எந்த ஒரு பார்ப்பனராவது கூடிய வரையில் சம்மதித்தவர் உண்டா? என்கின்ற கேள்வி பிறக்குமானால் அதற்கு
சர். சதாசிவம்தான் என்கின்ற விடையே பகர்வோம்.
எனவே, இப்பேர்ப்பட்ட ஒரு பெரியார் இம்மண்ணுலகில் மறைந்தது பற்றி யாரும் துயருறாமல் இருக்க முடியாது என்பதோடு சர். சதா சிவத்தினிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மிகுதியும் அன்பும் மரியாதை
யும் விசுவாசமும் கொண்டுள்ள ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார். அவர்களுக்கும் நமது ஆறுதலை சமர்ப்பிக்கின்றோம்.
குடி அரசு - இரங்கலுரை - 27.111927
குடி அரசு - 1927 (3) 346
சேலம் ABHHOLDBTG வில்லாக்கன்
சேலம் ஜில்லாவிலும் தென்னாற்காடு ஜில்லாவிலும் மகாநாடு விஷயமாக எவ்வித பிரஸ்தாபமும் காணப்படுவதில்லை. பார்ப்பனரல்லாதார். மகாநாட்டுப் பேச்சை ஆரம்பித்தால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் பதவி போய்விடுமோ என்னமோ என்று பயப்படுவதாகக் காணப்படுகின்றது. தமிழ்நாடுகளில் இப்படி பயந்து கொண்டு மதில் மேல் பூனையாய் இருந்த காரணத்திற்காகவே பல பிரமுகர்களுக்கு இருந்த பதவி கூட போய்விட்டதாக நாம் அனுபவத்தில் அறிந்து வருகின்றோம். ஆதலால் பதவியை சதா சர்வகாலம் கட்டிக்கொண்டு அழாமல் தாங்கள் எந்த முத்தி ரையில் இந்த பதவிகளுக்கு வந்தோம் என்பதைக் கவனித்து சற்று கண் விழித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 27.111927
347 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சுயமரியாதை பிரசாரத்தின் வற்றி
எவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப் படுத்தப் பட்டிருந்ததான பாலக்காடு கல்பாத்தி பொது ரோடுகளில்,மலையாளத்து ஈழவ சகோதரர்களும் தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் ஐகோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும் சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இது போல மலையாளத்திலும் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய ஒரு பார்ப்பனருக்காவது
புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 27.11927
குடி அரசு - 1927 (3) 348
ஒரு சந்தேகம்
அதி திராவிடர் விபசாரி மக்கனைவிட இழிந்தகவர்களா?
ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதி யருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போக லாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும்
இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டா
தார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும்
இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களை
யும் டைனாமெட்டு! வெடி குண்டு போட்டு உடைத் தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவு ளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்த வர்களா? என்று அறிய விரும்புகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 27.1.1927
349 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கமிஷன்
பஹிஷ்காறப் பூட்டு
ராயல் கமிஷனை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்கின்ற கூச்சல் பத்திரிகைகளில் வரவர பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகின்றதே தவிர. காரியத்தில் குறைந்துகொண்டே போகின்றது. பொதுவாக கூறுமிடத்து மகமதிய பொது ஜனங்கள் சற்றேறக்குறைய யாவரும் பகிஷ்காரத்திற்கு விரோதமாகவே இருக்கின்றார்கள்.
உத்தியோகப் பேய் பிடித்தவர்களும் அரசியல் வாழ்வுக்காரர்களு மான ஒரு கை விரலுக்குள் அடங்கின சில பேர்கள் மாத்திரம் தான் பகிஷ்
காரப் புரட்டில் சேர்ந்திருக்கிறார்கள். மற்ற மகமதிய தலைவர்கள் எல்லோரும் பகிஷ்காரத்தை வெறுக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் மேல் கண்ட கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பு தவிர வேறு பெயர்கள் பகிஷ்கரிக்க காணப்படுவதாய் சொல்வதற்கில்லை.
இவ்விரு சமூக பொதுக் கூட்டங்களும் எல்லா பத்திரிகைகளும் பகிஷ்காரத்தை பலமாய் கண்டிக்கின்றன. இது தவிர இந்தியா முழுவதிலு முள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பார்களாகிய ஆதிதிராவிடர்கள் ஆதி இந்துக்கள் முதலிய சமூகம் அடியோடு பகிஷ்காரத்தை வெறுக்கின்றது..
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பார்த்தாலும் எத்தனை பேர்கள் பகிஷ்காரத்தை ஆதரிக்கிறார்கள் என்பதும் எத்தனைபேர் அதில் சேர வில்லை என்பதும் தெரியவரும்.
இப்படியிருக்க அரசியலின் பேரால் பிழைக்கும் தலைவர்கள் என் போரும் பத்திரிகைகளும் உலகமே பகிஷ்காரத்தை ஆதரிக்கின்றது என்று மனதறிந்த பொய்யை பரப்புகின்றார்கள். இவர்களில் பார்ப்பனர்களைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகளைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. பார்ப்பனரல்லாத பத்திரிகைகளிலும் சில இக் கூட்டத்தில் கோவிந்தாப் போட்டு வருவது மிகவும் பரிகசிக்கத் தகுந்த காரியமாகும். உதாரணமாக “தமிழ்நாடு” பத்திரிகை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது.
குடி அரசு - 1927 (3) 350
காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி இயக்கம் என்றும் அவர் கள் அதை வசப்படுத்திக்கொண்டு தங்கள் இஷ்டப்படி மக்களை ஆட்டி வருகின்றார்கள் என்றும் ஒப்புக்கொண்டவர்கள். காங்கிரஸ் அபிப்பிரா யத்தைப் பொதுஜன அபிப்பிராயம் என்று சொல்ல முன்வரமாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர மிதவாதிகள் என்போர்கள் நமது நாட்டில் மூன்றே முக்கால்பேர்வழிகள்தான். அவர்களும் தேசத்தைக் காட்டிக் கொடுத்த விபீஷணாழ்வானுக்குச் சமானமானவர்கள் என்று சொல்லப் பட்டவர்கள்.மிதவாதிகள் அபிப்பிராயத்தை பொது ஜன அபிப்பிராயமென்று சொல்ல முன்வர மாட்டார்கள் என்று நினைக்கின்றோம். மற்றபடி வேறு யார்.
யார் பகிஷ்காரத்தை ஆதரிக்கின்றார்கள் என்று பார்த்தால் “மூன்றில் ஒருவர்.
மாத்திரம் ஆதரிக்கவில்லை பாக்கி இரண்டுபேர் ஒப்புக் கொள்ளவில்லை”
என்று சொல்லும் பழமொழி போல்தான் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா ஒட்டுக்கும் பகிஷ்காரப் பிரசாரம் செய்ய கமிட்டி நியமிக்கப் பட்டிருக்கின்றது என்று சில ஆசாமிகள் பெயர் விளம்பரமாயிருக்கின்றது. அதில் மொத்தம் ஆசாமிகள் 10; இதில் 6 பேர்கள் சென்னைவாசிகள்; அதில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; அதிலும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ஏரங்கசாமி அய்யங்கார், இவர்கள் யோக்கியதை வெளியாக்கவும் அவர்கள் எவ்வளவு நாணயமும் தேசபக்தியும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் எப்படிப்பட்டவர்கள் என்று அறிய காகிதத்தையும் இங்கியையும் சிலவழிக் காமலே ஜனங்களுக்குத் தெரியக்கூடும் என்று நினைக்கின்றோம். மற்றொரு பார்ப்பனரான ஸ்ரீ சிவராவோ ஸ்ரீமதி பெசண்டம்மையாருடைய சிஷ்ய கோஷ்டியில் சேர்ந்தவர். அவருக்கு எவ்வளவு சுவாதீன புத்தி இருந்து வந்திருக்கின்றது என்பதை விளக்க வேண்டியதில்லை. மற்ற மூன்று பேர். என்பவர்கள் ஸ்ரீமதி பெசண்டம்மையார், ஸ்ரீமதி ஜீனராஜதாச, ஸ்ரீமதி கசின்ஸ் ஆகிய பெண்மணிகள். இவர்கள் மூவரும் சரீரம் மூன்றாயிருந்தாலும் பிரம்மஞான சங்க வைபவத்தில் மனம் ஒன்று என்றே சொல்லவேண்டும். ஆக கமிட்டி மெம்பர் 10 பேரில் சென்னைக்காரர்களே மெஜாரிட்டியான ஆறுபேர் ஆவார்கள். அம் மெஜாரிட்டியும் ஐயங்கார் பிரதிநிதியும் ஐயர். பிரதிநிதியுமான பெசண்ட்டம்மையும் ஆகிய இருவர் அபிப்பிராயமே இந்தியா ஒட்டுக்கும் ஏற்படுத்தின கமிட்டிக்கு மெஜாரிட்டி ஆகி விட்டது. மீதி நால்வர்களில் நால்வர்களும் வெளிநாட்டு மகமதியர்கள் அந் நால்வர்களும் மகமதிய சமூக இயக்கங்களுக்கும் மகமதிய சமூக பத்திரிகைகளுக்கும் விரோதமான கொள்கைக்காரர்கள். இதில் சிலர் அவரவர்களுக்கு அவரவர்.
கள் பிரதிநிதிகள் என்று கூட சொல்ல முடியாது.
மகமதிய சமூகம் இவர்களை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றது. என்பதும் இவர்களது அபிப்பிராயத்திற்கு எவ்வளவு தூரம் மகமதிய சமூகம் மதிப்பு கொடுத்து வந்திருக்கின்றது என்பதும் அவரவர்களுக்கே தெரியும்.
எனவே இந்த கமிட்டி முன்னே பகிஷ்கரிக்க வேண்டும் என விடுத்த
351 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சுற்றறிக்கையில் கையெழுத்து போட்ட கனவான்களுக்கு எந்த விதத்திலும் வித்தியாசப்பட்டவர்களே அல்ல. இவர்கள் போடும் சத்தத்தை நம்பி இந்தி யாவே பகிஷ்காரத்திற்கு. ஆதரவளிப்பதாக நினைப்பது எவ்வளவு பயித்திய காரத்தனமாகும் என்பது நாம் சொல்லாமலே விளங்கிவிடும்.
இப்படியிருக்க சென்னையில் நடைபெறும் “லோகோபகாரி” என்னும் ஒரு வாரப்பத்திரிகை இந்த புரட்டுக் கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொண்டதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. இவ்வளவு மோசமான நிலைமைக்கு அப்பத்திரிகை இதுவரை வந்ததாக நமக்கு ஞாபகமில்லை. அது சோதனை என்ற தலைப்பின் கீழ் எழுதுவதாவது:-
“மிதவாதிகளும் அமிதவாதிகளும், இந்துக்களும், முஸ்லீம்களும் பகிஷ்காரத்தில் ஒன்றுபட்டு வருகிறார்கள். ஒரு சில சுயநலவாதிகளும் உத்தி யோக வேட்டைக்காரர்களும் மட்டும் இதில் வேறுபட்டிருக்கின்றார்கள்” என்று எழுதியிருக்கின்றது.
இது யார் யாரை மிதவாதி, அமிதவாதி என்று நினைத்துக் கொண்டிருக் கின்றதென்றும் யார் யாரை சுயநலவாதி உத்தியோக வேட்டைவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றும் நமக்கு விளங்கவில்லை.
லோகோபகாரிக்கு ஸ்ரீ சீனிவாச அய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சிவசாமி அய்யர், சிந்தாமணி அய்யர் முதலானவர்கள் சுயநலமற்றவர் களாகவும் உத்தியோக வேட்டைக்காரர்கள் அல்லாதவர்களாகவும் ஆகி விட்டதோடு பகிஷ்கரிக்கக்கூடாது என்று சொல்லுபவர்கள் ஒரு சிலராகவும் சுயநலவாதிகளாகவும், உத்தியோக வேட்டைக்காரர்களாகவும் ஆகிவிடும் படியான அவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்ட ரகசியம் நமக்கு தெரிய வில்லை.“லோகோபகாரி” யோக்கியப் பொறுப்புள்ள பத்திரிகையாயிருக்கு மானால் பகிஷ்கரிக்கக் கூடாது என்கின்றவர்களை உத்தியோக வேட்டையும் சுயநலமும் உள்ள ஒரு சிலரின் பெயரைக் குறிக்குமென்று எதிர்பார்க்
கின்றோம்.
இந்த நிலைக்கு '“லோகோபகாரி” வர நேர்த்ததற்கு நாம் மிகுதியும் இரங்குகின்றோம். “லோகோபகாரி”யின் தற்கால நிலை “தமிழ்நாடு” பத்திரிகையை எவ்வளவு நல்லதாக்கி விட்டது.
“தமிழ்நாடு” பத்திரிகைக்கும் ஒரு சகோதரன் இருக்கின்றது என்பதை காட்டிவிட்டது. பெசண்டம்மையார் ஆதிக்கம் வலுக்க வலுக்க இன்னமும்
யார் யார் நிலைமை எப்படி ஆகும் என்பது முடிவுகட்ட முடியாததுதான்.
நமது நாடு எவ்வளவு பைத்தியகாரத்தனத்தில் இருக்கின்றது என்பதும்,
குடி அரசு - 1927 (3) 352
யார் வேண்டுமானாலும் பாமர மக்களை ஏமாற்றக்கூடும் என்ற நிலையில் இருக்கின்றது என்பதையும் அறிய இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்று கேட்கின்றோம்.
ஒத்துழையாமையை வஞ்சித்த ஆள்களிடம், அதை ஒழித்த ஆள்
களிடம், நல்ல சமயத்தில் மோசம் செய்த ஆள்களிடம், ஒரு சமூகத்தாரின் ஆதிக்கத்தை அழித்து அடிமைப்படுத்துவது தான் எங்கள் கொள்கை என்று சொல்லுகின்ற ஆள்களிடம், அதையே காங்கிரஸ் கொள்கை என்கின்ற ஆள்களிடம் அபிமானம் ஏற்பட்டு அவர்களை பின்பற்ற வேண்டிய அவசியம் சிலருக்கு வருமானால் அவர்களைப் பின்பற்றி நாடு வர வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் சொல்லி இதை இப்போது
முடிக்கின்றோம்.
இப்போதைய பகிஷ்கார இயக்கம் மகமதியர்களுக்கும் தென்னாட்டு பார்ப்பனரல்லாதார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விரோதமான பலனை தரத்தக்கது என்று அந்த கருத்தைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம். இந்த கமிஷனால் மேல்கண்ட கூட்டத்தாரின் சுயமரியாதைக்கு ஏதாவது அனுகூலம் ஏற்படுமானால் அந்த சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக்கூடாது. அரசியல் சம்பந்தமான உரிமைகள் என்பது நமக்கு வருவதைவிட வராதொழிவதே மேலானதாகும். ஏனெனில் எது வந்தாலும் அது உத்தியோகமாகத்தான் இருக்கும். பார்ப்பனர்களுக்கும் ஆங்கிலம் படித்த கூட்டத்தார் என்கின்ற சிலரின் சுயநலத்திற்குந்தான் உதவும். பாமர மக்களுக்கு யாதொரு பலனும் கண்டிப்பாய் உண்டாகாது என்பது உறுதி.
நரகம் வரினும் சரி, தேசத்துரோக பாவம் சுற்றினாலும் சரி, சுயநலப்பழி
வரினும் சரி ஒன்றுக்கும் அஞ்சாமல் சுயமரியாதை அடைய முயல்வதே
முக்கிய கடமையாகும்.
குடி அரசு - தலையங்கம் - 04.12.1927.
353 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மனுதர்ம சாஸ்திரம்
சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும் ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வடஆற்காடு,
சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதை கண்டித்திருப்பதுடன் அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ்தி ரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.
அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகி றார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்திருக் குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணாசிரமத்தை அழித்து சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவி லேற்றி இருக்கும் என்றும் கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8000. சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமமும் ஜீவகாருண்யமும் அறிவும் அற்றத் தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும் யாரும் சொல்ல முடியாது. நமது அரசாங்கங்கள் பழய கால அரசாங்கங்களைப் பின் பற்றிக் கழு வேற்றா விட்டாலும் சட்ட மூலம் கொடுமைகளை ஒழிக்கவாவது உதவ வேண்டாமா என்று கேட்கின்றோம்.
ஒருக்கால் மத விஷயத்தில் தலையிட முடியாது என்று சொல் வார்களானால் மத விஷயங்களையாவது கவனித்து மதத்தில் எப்படி சொல்லி யிருக்கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப்பட்டிருக்கின்ற தோ, யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டு மென்று குறிப்பிடப் பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்க வேண்டும். அப்படி
யும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும், வெள்ளைக்காரனும் மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ எப்படி எப்படி சீர்திருத்தம் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்துக் கொண்டு மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது
குடி அரசு - 1927 (3) 354
வடிகட்டின அயோக்கியத்தனமாகுமென்றே சொல்லுவோம்.
இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்போது இதுசமயம் மகமதிய அரசாங்
கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று ஆசைப்பட வேண்டியதாயிருக்கின்றது. காரணமென்ன வென்றால், வீரர் கமால்பாஷா அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு கொரானை ஆதரவாக காட்டிய போது “அது அக்காலத்து சங்கதி இக்காலத்திற்கு செல்லாது” என்று அதைப் பிடுங்கி
வீசி எறிந்தாராம். குரான் வாக்கியம் செதுக்கப்பட்ட இடங்களை யெல்லாம் அழித்து சுயமரியாதையையும் கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதி வருகிறாராம். மகமதியரைவிட வெள்ளைக்காரருக்கும், பார்ப்பனர் களுக்கும் மதபக்தியிருக்கின்றது என்று சொன்னால் எந்த பைத்தியக் காரராவது நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்.
எனவே மதம் என்கிற புரட்டுகளையும், மதாச்சாரியார்கள் என்கின்ற அயோக்கியர்களையும், சாஸ்திரம், வேதம், புராணம் என்பவைகளாகிய அதர்ம அக்கிரம ஆதாரங்களையும் குருட்டுத் தனமாய் பின்பற்றாமல் அன்பு, ஜீவகாருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து அவற்றிற்கு விரோதமாய் உள்ளவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்படவேண்டியதுதான் பகுத்தறிவுள்ள மனிதன் கடமை. ஆதலால் அதற்கு ஒவ்வொருவரும் முற்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 04.12.1927
355 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சர்.பி.ராஐகோயாலாச்சாரியார்
சர்.பி.ராஜகோபாலாச்சாரியார் பெங்களூரில் காலமானதாகக் கேட் வருத்தமடைகிறோம்.
அவர் வித்தியாசம் பாராட்டாதவர். மூடக் கொள்கைகளில் நம்பிக்கை
யில்லாதவர். உத்தியோகத்திலும் கூடுமானவரை யோக்கியமாய் நடந்து கொண்டவர். பார்ப்பனரல்லாதூர் அநேகரின் அன்புக்கும் விஸ்வாசத்திற்கும் பாத்திரமாயிருந்தவர். உத்தியோக முறையில் பார்ப்பனரல்லாதாருக்கு சிறிதா வது நன்மை செய்த பார்ப்பனர் இருப்பாரானால் அதில் ஸ்ரீமான் சர். பி.ராஜ கோபாலாச்சாரியாரே முதன்மையானவர். அவரது குடும்பத்திற்குநமது அனு தாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - இரங்கலுரை - 04.12.1927
குடி அரசு - 1927 (3) 356
மாணமற்ற காதி
மதுரையில் 29-11-27 -ல் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்த பிரசங்கத்தில் யாரோ ஒரு காங்கிரஸ் தொண்டர் ஸ்ரீ நாயக்கரை பல கேள்விகள் கேட்டதாகவும் அதனால் குழப்பமுண்டானதாகவும் குறிப்பிட்டி ருக்கிறார். இது உண்மையல்ல. நாயக்கரை யாரும் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. ஒருவர் பண்டிதர், பண்டிதர் என்று சத்தம் போட்டார். அதற்கு அங்கு இருந்தவர் அவரை கலகம் செய்ய வந்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு கண்டித்து மேடையில் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். கூட்டம் கலையும் வரை பேசாமல் உட்கார்ந்திருந்துவிட்டு போய்விட்டார்.
அதுசமயம் நாயக்கரும் சத்தம் போட்டவரையும், அவரைக் கண்டித்த வர்களையும், அவரை கூட்டி வந்து உட்கார வைத்தவர்களையும் தக்கபடி கண்டித்துவிட்டு இம்மாதிரி சிறு விஷயங்களை நாளையதினம் சில அயோக்கிய பத்திரிகைகளும் அயோக்கிய நிருபர்களும் கூட்டத்தில் குழப்பம் என்றும் கேள்விகளென்றும் எழுதி இக்கூட்டத்தின் பெருமையைக் கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள் என்றும் சொன்னார். பார்ப்பனப் பத்திரிகை களும் பத்திரிகை நிருபர்களும் பெரும்பாலும் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் என்ன பேசினார் என்பதை எழுதுவதற்கு தைரியம் இல்லாமல் ஈனத்தனமாய் நடந்து கொண்டதோடு கூட்டத்தைப் பற்றி குறை கூற பிரயத்தனப்படுவதில் கொஞ்சமாவது வெட்கப்பட்டு பின் வாங்குவதில்லை.
இதைப் பற்றி எவ்வளவு கண்டித்தாலும் வைதாலும் அந்த ஈன ஜாதிகளுக்கு ரோஷம் மானம் வெட்கம் என்பது இல்லாமல் இத்தொழிலை விடாமல் செய்து வருகின்றனர். இவ்வளவு காலம் இவ்வளவு பெரிய அக்கிரமங்கள் செய்து கொண்டு இன்னமும் இச்சாதி உயிர் வாழ ஏற்பட்ட காரணமே அடியோடு மானத்தையும் வெட்கத்தையும் விட்டு விட்டதாலும் உலகத்திலுள்ள ஈனத்தையெல்லாம் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்ட தாலுமே அல்லாமல் வேறில்லை. ஒன்றா இந்த ஜாதி ஒழிய வேண்டும். அல்லது இந்த ஜாதிக்கு மானம் ஏற்படும்படி செய்ய வேண்டும். இவற்றுள். இரண்டில் ஒன்று ஏற்படாதவரை இவர்கள் உள்ள நாட்டிற்கு விடுதலை இல்லை என்பது உறுதி.
குடி அரசு - கட்டுரை - 04.12.1927
357 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இந்திய சட்டசயை வமம்பருக்கு ஒரு கவண்டுகோன்
இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையை உத்தே
சித்து சட்ட சம்மந்தமாக பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.
குறிப்பாக இந்து லாவில் பிராமணன் சூத்திரன் என்கிற பாகுபாடு
களும் அதற்கு தக்கபடி பிராமணன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சூத்திரன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்ற. அவை களை சட்டத்தில் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று கேட்கின்றோம்.
ஒரு பார்ப்பன இந்திய சட்டசபை மெம்பர்கூட இம்மாதிரி பிராமணன் சூத்திரன் என்கின்ற வித்தியாசம் சட்டத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லி ஒப்புக்கொண்டாலும் கூட பார்ப்பனரல்லாத மெம்பருக்கு உணர்ச்சி வரவேண் டாமா என்று கேட்கின்றோம். ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு உபயோக மற்றதும் வேஷமானதுமான ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தில்
இருக்கும் சுறுசுறுப்பில் ஏதாவது ஒரு பகுதியாவது இந்த சூத்திர பட்டமும் பாரபக்ஷமும் ஒழிவதில் கவலை இருக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். இனி உள்ள நாள்களையும் இது போல் வீணே கழிக்காமல் காரிய வழியில் கழிக்கும்படியாய் மிகவும் வணக்கமாய் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 04.12.1927
குடி அரசு - 1927 (3) 358
திருவுநல்வேலி வில்லா ௬யாமரியாதை சங்க மகாநாடு வையவம்
ஊர்வமைம் கூட்டத்தில் கதூகமைம்
இவ்வாண்டுவிழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவெண்டுமென்று எண்ணினேனோ அதை மறக்கச் செய்தது. அவர்களுக்கு என்னிடமும் எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன்மையும், அளவுக்கு மீறி என்னை
புகழச் செய்தது. அப் புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல. ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும். இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.
இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இடமில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்துவருவதை கண்டு மிக தைரியங்கொண்டு அந்த ஆசையின் மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டிருக்கிறேன். “குடி அரசை*ப் பற்றி மிக அதிகமாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்றமெல்லாம் எனக்குத் தெரியும் அதில் உள்ள மெல்லின வல்லினம் போன்ற பல இலக்கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக்கணம் கற்கப் போவதில்லை. இவ்வாண்டுவிழாவுக்கு எனக்கு கடிதம் அனுப்பாவிட்டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று
கூறியது எனது பாக்கியமேயாகும். சிறந்த கல்வியாளர்களும் பெரியார்களும். நிறைந்த இந்த ஜில்லாவாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங்களுடன் போட்டியிட்டு தங்கள் சுயமரியாதையை நிலை நிறுத்துவதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டுமென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளுகிறேன்.
359 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சுயமரியாதை இயக்கமென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால் இப்பொழுதோவெனில் இவ் வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக்கூடியதாயும் மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற்போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத்தானிருக்கிறது. நம்நாடு வெளிநாடு தேசீய வாதிகளுங்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீ காந்தியும் சுமரியாதையைப் பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத் திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்ச காலமாய் நமது நாட்டில் நடந்து வரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் கூட சுயமரியாதைக்காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.
இச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள்கைகள் என்னவெனிலோ,
பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லையென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்த வில்லை. யென்பதையும் உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். ஆனால் நம்நாட்டுப் பார்ப்பனர் கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்ற னர். இது அக்கூட்டத் தாரின் யோசனையின்மையாலும் பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற வர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படுகிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர்களுக்கும் பயனுண்டு.
பார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுப் படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோமோ அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படுகின்றோமோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களுக்கு நன்மை யாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல் பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக கடைசியாக இவ் வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால் அரசாங்கத்தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத் திற்கு கஷ்டமாகத்தானிருக்கும். ஏனெனில் நாம் எவ்வளவு தூரம் சுய மரியாதையற்றிருக்கின்றோமோ அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்குங்கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்துவிடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத்துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப்படை யானது. இதைப் பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். “கவரிமான்
குடி அரசு - 1927 (3) 360
ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது” என்பதுபோல் மனிதனும் மானமழிந்து வாழவிரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மையோடிசைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் சுயமரியாதைத்தான் வேண்டற் பாலது. இப்பொழுது மணி ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூட வேண்டியிருப்பதால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக்கிராசனப் பதவியை அளித்த அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.
குறிப்பு : 28.1127 திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாடு- தலைமைஉரை:
குடி அரசு - சொற்பொழிவு - 04.12.1927
361 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஸீ வாதராசுனு ஐயைங்களர்
ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மறுபடியும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் உபநயனம் என்னும் பூணூல் கல்யாணம் செய்து தங்கள். ஜாதியில் சேர்த்துக் கொண்டார்கள். ஆதலால் அவரை இனி வரதராஜலு அய்யங்கார் என்றுதான் அழைக்க வேண்டும். இந்த கோஷ்டியார் சுவீகரிக்கத்தக்க ஒரு சந்தர்ப்பம் வருவதற்கு ஸ்ரீமான் வரதராஜலு பட்ட பாடு. இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. முன்பு ஸ்ரீ காந்தியையும், ஒத்துழையாமையையும்கூடத் தாக்கி, சுயராஜ்ஜியக் ககஷியுடன் கூடிக் குலாவி எவ்வளவோ கூத்தாடியும், அதைப்பற்றி தனது பத்திரிகையில் எவ்வளவோ பிரசாரம் செய்து பார்த்தும் அதற்கு செல்வாக்கு இருக்கின்றவரை கூடவே இருந்தும் பார்ப்பனர்களின் புகழ் விளம்பர சாகரத்தில் ஆழ்ந்திருந்துவிட்டு அக்கக்ஷிக்கு சாவு மணியடிக்கப் போகின்றதென்று தெரிந்தவுடன் தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி அதைவிட்டு ஒரே தாவாகத் தாவி வெளியில் வந்து விட்டதும், பிறகு அது அடியோடு செத்து குழியில் போட்டு. புதைக்கப்படும்போது தானும் ஒருகை மண்ணை அள்ளிப் போட்டு விட்டு நல்ல பிள்ளை போல் இரவும் பகலும் அதை வைவதன் மூலம் அதற்கு கருமாதி செய்வதிலேயே தனது கிரியை ஆற்றி வந்தார். பிறகு இவர்களால்
காங்கிரசுக்கும் ஆபத்து வந்துவிட்டதாக தெரிந்தவுடன் தனக்கு ஏதாவது ஒரு இடம் வேண்டுமே என்கின்ற எண்ணத்தின் பேரில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியாகிய ஜஸ்டிஸ் க்ஷி என்கின்ற மரத்தின் கிளையையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டிருந்தார். இது தெரிந்த பார்ப்பனர்கள் இவரை அடியோடு. காங்கிரசை விட்டு வெளியாக்க தீர்மானித்துவிட்டார்கள்.
ஆனாலும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் இவர் பேரில் உள்ள சந்தேகத்தினால் தனக்குள்ள ஆதரவற்ற தன்மையை அறிந்ததும் சென்ற தேர்தலின் பொழுது எக்ககதி வலுக்கின்றதோ அக்ககஷியில் சேர்ந்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் பேரில், ஜஸ்டிஸ் ககஷிக்கும் ஓட்டு கொடுக்காதீர்கள், காங்கிரஸ் கக்ஷிக்கும் ஓட்டு கொடுக்காதீர்கள் என்று சொல்லி பிரசாரமும் செய்து பார்த்து கடைசியில் காங்கிரஸ் கக்ஷிக்கு ஜெயம். என்று தெரிந்த உடனே ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை தலைவராய் ஏற்று மந்திரி வேலை ஒப்புக்கொள்ளும்படி தந்தி கொடுத்து கேட்டுக் கொண்டும், அக்கூட்டத்தார் இவரை லக்ஷியம் செய்யாமல் போகவே, மறுபடியும்
குடி அரசு - 1927 (3) 362
அவர்களை வைதுக் கொண்டு கோவை மகாநாடு மூலமாய் ஜஸ்டிஸ் ககஷியுடன் உறவாட முயற்சித்து மறுபடியும் அதை விட்டு காங்கிரஸ் சத்தம் போட்டு ஒன்றும் முடியாமல் போகவே கடைசியாக பார்ப்பனர்கள் தங்களை எவ்வளவு அவமானப்படுத்திய போதிலும் அதிலிருந்தால்தான் ரதம் ஓட்ட முடியும் என்று நினைத்து தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் போது திடீரென்று கடவுள் அனுப்பியது என்பதுபோல் ராயல் கமிஷன் சாக்கு ஒன்று வந்தது. அதற்கேற்றாப் போல் அய்யங்காரின் ஒற்றுமை அறிக்கை ஒன்றும் வந்தது. மற்றெல்லோரும் அவ்வறிக்கையை தலையில் அடித்து அதை நசுக்கிக் கொண்டிருக்கும் போது அய்யங்காருக்கு நல்ல பிள்ளையாக. எண்ணி இவர் அதை கட்டி முத்தமிட்டு வரவேற்று உபதலையங்கம்
எழுதினார்.
இவர் எவ்வளவு வரவேற்றும் எவ்வளவு எழுதியும் அது தோன்றிய அன்றே செத்துவிட்டது. அல்லாமலும் காங்கிரஸ் மகாநாடுகள் நடத்தியாவது பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகலாமா என்று பார்த்தார். அந்தப்படியே
மிக்க முயற்சியும் தக்க செலவும் செய்து சேலம் மகாநாட்டை நடத்தினார். அந்த மகாநாட்டையும் பார்ப்பனர்கள் அடியோடு பகிஷ்கரித்து அது வகுப்பு மகாநாடென்று மண்டையில் அடித்தார்கள். பிறகு தென்னாற்காடு மகாநாட்டைப் பிடித்தார். அதையும் பார்ப்பனர்கள் பகிஷ்கரித்து அதன் வரவேற்புக் கமிட்டியையே கலைக்க போலீஸ் பந்தோபஸ்தெல்லாம் கொண்டு வந்தார்கள். கடைசியாக ராஜியாயிற்று. எப்படி ராஜியாற்று என்று சொல்ல வேண்டுமானால் இன்னின்ன மாதிரி எழுதிப் படிக்கின்றேனென்றோ அல்லது எழுதிக்கொடுத்தபடி படிக்கின்றேன் என்றோ ஒப்புக் கொண்டிருந் தாலொழிய பார்ப்பனர்கள் சுலபத்தில் இந்த ராஜிக்கு வந்திருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஸ்ரீ அய்யங்கார், ஸ்ரீ ராமசாமி முதலியாருக்கு கார்ப்பரேஷன் தலைவர் வேலை கொடுப்பதற்காக இந்த நிபந்தனைதான் பனகால் ராஜாவை கேட்டார். ஆதலால் இந்த நிபந்தனை எதிர்பார்க்கக் கூடியதுதான். இப்படியெல்லாம் இருந்தும் பார்ப்பனர்கள்
முழுதும் நம்மால் மகாநாட்டுக்கும் சரியாய் வராமல் குற்றஞ்சொல்லக் காத்திருந்தார்கள். கடைசியாக மற்ற கிளைகளையெல்லாம் அடியோடுவிட்டு
விட்டு பார்ப்பன அடி மரத்தையே பிடித்திருப்பதையும், அதைத் தவிர தமக்கு வேறு கதியே இல்லையென்றும் பரிசுத்தமாய்க் காட்டிக் கொண்ட பிறகுதான் கிடைத்தவரையில் லாபமென்று அபயம் கொடுத்து தென்னாற்காடு உபந்நியாசத்தைப் பற்றி தலையங்கங்கள் எழுதி புகழ ஆரம்பித்தார்கள்.
இவரும் ஆசையோடு அதை ஏற்று திருப்பித் திருப்பி தமது பத்திரிகையிலும் தமது தலையங்கத்திற்குப் பக்கத்தில் பிரசுரித்தார். பிறகு அவர்களோடு இரண்டறக் கலந்தார். பிறகுதான் அவர்கள் உபநயனம் செய்து விட்டார்கள். ஆகவே இவ்வளவுதான் அவர்கள் செய்யக் கூடும்.
363 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இனி மற்றவர்கள்தான் அவருக்கு நாமகரணம் செய்ய வேண்டும். ஆதலால் வரதராஜுலு அய்யங்கார் என்ற நாமத்தை சாற்றுகின்றோம். இவ்வளவு பெருமைகள் ஒத்துழையா இயக்கம் ஆரம்பித்த காலம் தொட்டு
ஸ்ரீ வரதராஜுலுக்கு கிடைத்திருக்காதென்றே சொல்லலாம். இது போலவே பெசண்டம்மையாருக்கும் அப்போதே ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். தேவையாயிருந்தது. ஸ்ரீ வரதராஜுலு இரண்டுக்கும் விண்ணப்பம் போட்டதில் இரண்டிடத்திலும் பிரைஸ் விழுந்துவிட்டதால் இப்போது எதை.
ஒப்புக் கொள்வது என்ற மயக்கம் வந்துவிட்டது. அம்மையார் சட்டத்திற்கு உட்பட்டு சத்தம் போட வேண்டும் என்கின்றார். அய்யங்கார் சட்டத்திற்கு
மீறிச் சத்தம் போட வேண்டுமென்கின்றார். இரண்டு பேரும் எதிர்பார்க்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ எதிர்பிரசாரத்திற்கு இவர் தயாராயிருந்தாலும். எதைப் பின்பற்றுவ தென்பது தெரியாமல் ஸ்ரீ வரதராஜுலு விழிக்கின்றார். இரண்டு பேரையும் விட மனம் வரவில்லை போல் தெரிகின்றது. ஸ்ரீ வரத ராஜுலுவின் சொந்த நிலைமை இன்ன தென்பதை தென்னாற்காடு மகாநாடே அவருக்கு நன்றாய்க் காட்டி விட்டது. அதாவது இவர் தலைமை வகித்த மகாநாட்டுக்கு உள்ளுர் பார்ப்பனர்கள் யாவரும் வரவில்லையென்றும், வெளித்தாலூகாக்களிலிருந்து யாருமே வரவில்லை என்றும் “சுதேசமித்திரன்” தெரிவிக்கிறது. மற்றபடி இந்தத் தலைவரைச் சுற்றி இருந்த பெரும்பான்மை. யான கோஷ்டிகளும் இதை உறுதிப் படுத்துகிறது. எது எப்படியானாலும் நல்ல சமயத்தில் கிடைத்த ஆதாரத்தைப் பிடித்துக்கொண்டு இனி கரையேற வேண்டிய வேலையே அவருக்குச் சரியாய் போய்விட்டது. என்னவெனில் பகிஷ்காரப் பிரசாரந்தான். தவிர பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகை.
களும் கூட இவரைப் போலவும் இவரது பத்திரிகையைப் போலவும் அவ்வளவு அதிகமாய் பகிஷ்காரப் பிரசாரம் செய்வதில்லை. ஏனென்றால்
புதிதாக ஒருவர் ஒரு மதத்தில் சேருவாரானால் அதே மதத்தில் பிறந்து வளர்ந்தவர்களைப் பார்க்கிலும் அதிகமான வேஷம் போடுவது சகஜம்.எதுபோல வென்றால் “புதிய சைவனுக்கு பூச்சும், ருத்திராட்சமும் அதிகமாயிருக்கும்”” என்பது போல், அப்படிச் செய்தால்தான் மற்றவர்களும். நம்புவார்கள். ஆதலால் ஸ்ரீமான் வரதராஜுலுவும் அவரது பத்திரிகையும்
பகிஷ்காரப் பிரசாரம் சரியாகவோ, தப்பாகவோ முழக்குவதில் நமக்கு அதிசயம் ஒன்றும் இல்லை. இதை நம்பிக் கெட்டுப் போக எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாவதற்கு ஸ்ரீ வரதராஜுலுவுடன் போட்டி போட்டு வரும் மற்றொரு பார்ப்பனரல்லாத தலைவர் ஒருவர் இருக்
கின்றார். அவர் ஸ்ரீ வரதராஜுலு பார்ப்பனர் பக்கம் போய் விட்டாரானால் அரை நிமிஷம் கூட தனித்திருக்க சகிக்க மாட்டாதவர். எனவே அவர் இனி பகிஷ்காரம் என்னும் அரசியலின் பெயரால் வெளியில் வருவாரோ, அல்லது
புராணம், மதம் என்னும் அழுக்கு மூட்டைகளுடன் வெளியாவாரோ தெரிய
குடி அரசு - 1927 (3) 364
வில்லை. எப்படியானாலும் இவர் அய்யங்காராக வராவிட்டாலும், அய்யரா கவாவது வெளியாகித்தான் தீருவர். ஆதலால் அதையும் வரவேற்கக் காத்திருக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 11.12.1927
365 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஐந்துக்கு கரண்டு பமுதில்லை
- சித்திரபுத்திரன்
நான் கொஞ்ச காலமாக மறைந்திருந்தேன். இனி அடிக்கடி தோன்று வேன்.அன்பர்கள் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசுகிற போது முழுதும் உண்மையா யிருக்
காது என்று சந்தேகப்படுகிற காலத்தில் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி சொல்வதுண்டு. அது எப்பொழுது ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது என்கிற விபரம் அநேகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியா தென்றே நினைக்கிறேன். தெரியாதென்று நினைப்பதால் அதைப்பற்றி நான் கண்டு பிடித்த முடிவை சொல்லுகிறேன்.
“ஐந்துக்கிரண்டு பழுதில்லை” யென்பதானது ஐந்து விஷயம் சொன்னால் அதில் இரண்டாவது பொருத்தமாயிருக்கும். அப்படி இருந்தாலே போதும் என்கிற கருத்துக்கொண்டே இப்பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது என்று பார்ப்போமானால் ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த காலத்தில் அப்புரட்டுகளை யாராவது கண்டுபிடித்து கேழ்க்க ஆரம்பித்தால் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்” அதாவது முன் சொன்னது போல் ஐந்தில் இரண்டு விஷயங்கள் நிஜமா யிருந்தாலே போதுமென்று அதை நம்ப வேண்டியதுதான் என்று சொல்லி ஏமாற்றுவதற்கு உபயோகப்படுத்தினார்கள். அந்தப் பழமொழியின் ஆதாரத் தைக் கொண்டுதான் ஜனங்கள் இப்பொழுதும் சாஸ்திரம், புராணம், ஜாதகம், ஆரூடம், சகுனம், சாந்தி, ஓமம், யாகம், சாமியாடி வேண்டுதலை அல்லது பிரார்த்தனை, அருள்வாக்கு என்பவை போன்ற மூட கொள்கைகளெல்லாம்.
நாட்டில் பரவலாயின. ஏனெனில் இவைகளில் எவ்வளவு பொய்யாய் போய் விட்டாலும் அதை நம்பிக் கெட்ட மூடர்கள் பார்ப்பனர்களை சமாதானம். கேழ்க்க ஆரம்பித்தால், அதனால் பிழைக்கும் அயோக்கியக் கூட்டத்தார். “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டுமெயொழிய ஒவ்வொன்றையும் பரிசோதிப்பது நாஸ்திகத் தன்மை யாகி விடும்” கடவுளிடத்தில் நம்பிக்கையற்றதன்மையாகிவிடும் என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள்.
குடி அரசு - 1927 (3) 366
ஆனால் அவற்றுள் ஐந்து என்ற எண்ணிக்கையும் இரண்டு என்கிறஎண்ணிக்கையும் எப்படி குறிப்பாய் வந்தது, வேறு எண்களை சொல்லக் கூடாதா என்று சிலர் கேட்கக் கூடும். இம்மாதிரி கேள்விகளுக் கெல்லாம் பதில் சொல்லுவது அனாவஸ்யமாகும். ஏனெனில் ஏதாவது இரண்டு எண்களைச் சொல்லித்தானாக வேண்டும். அப்படி சொல்லும் போது இந்த இரண்டு எண்களை மட்டும் சொல்லக்கூடாது என்பதற்கு யாதொரு நிபந்தனையும் இல்லை. ஆனாலும் இந்த இரண்டு எண்களுக்கு குறிப்பான சமாதானம் இல்லாமல் போகவுமில்லை. அதைச் சொல்லுகிறேன் கவனமாய் கேளுங்கள். ஆனால் அதை நம்பியே தீர வேண்டுமென்று நான் உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. உங்களுக்கு சரியென்று தோன்றினால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லா விட்டால் வேறு சமாதானம் கிடைக்கும் வரை இதை அனாமத்தில் வைத்திருங்கள்.
அதாவது பார்ப்பன பாஷையில் ஒரு தோத்திர ஸ்லோகமுண்டு. என்னவென்றால் “அகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி, ஸ்மிருதா, பஞ்சகன்யாஸ்மரே நித்தயம் மாஹபாதக் நாசனம்.” இதன் கருத்து அகல்யை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து கன்னிகைகளை தினம் நினைத்தால் மஹாபாதகமெல்லாம் நாசமாய்விடும் என்பதே. இதில் ஏற்பட்ட விவகாரத்திற்காகத்தான் “ஐந்துக்கு இரண்டு பழு தில்லை” என்கிற பழமொழி உண்டாக்கப் பட்டது. விவகாரத்தின் தன்மை யாவது:-
கோபமில்லாமல் பகுத்தறிவோடு கேட்கவேண்டும். ஏனென்றால் கோபம் வந்தால் பார்ப்பான் ஏமாற்றி விடுவான். கோபமில்லாவிட்டால்தான் அதிலிருக்கும் ரகசியம் விளங்கும். நான் கிளப்பப் போகும் விவாதம் இந்த ஸ்லோகத்தை எந்தப் பார்ப்பான் எழுதினானோ அந்தப் பார்ப்பான் எழுதி வைத்த சங்கதியைத்தான் சொல்லப் போகிறேன். ஆதலால் நான் என் உத்தேசப்படி சொல்லப் போவதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள். இதில் கண்டிருப்பது வாஸ்தவமா இல்லையா என்று ஒவ்வொரு பார்ப்பானையும் கேளுங்கள். வாஸ்தவமல்ல என்று சொன்னால் என்னைக் கேளுங்கள். முதலாவது அந்த ஸ்லோகத்தில் மேல்கண்ட ஐந்து பெண்களையும் கன்னிகைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கன்னிகை என்றால் கலவி அறியாதவள். அதாவது புருஷர்கள் சாவகாசம் தொடங்காதவள், கல்யாண: மில்லாதவள் என்பது பொருள். ஆகையால் அந்த ஸ்லோகம் முன்னுக்குப்
பின் முரணானது என்று சொல்லுவேன்.
ஒரு சமயம் பார்ப்பனர்கள் இதற்கு இந்த ஸ்லோகத்தில் ஷி பெண்: களை குறிப்பிட்டு நினைக்கும்படி சொன்னதின் கருத்து கன்னித் தன்மையை உத்தேசித்தல்ல. அவர்களுடைய கற்புத்தன்மையைப் பற்றி என்று சமாதான மாக சொல்ல வருவார்களானால் அதையும் பற்றி சற்று யோசிப்போம்.
367 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இந்த ஐந்து பெண்களையும் நான் 1தாரை 2 அகலியை,3.துரோபதை 4.சீதை 5.மண்டோதரி என்கிற வரிசையில் எடுத்துக் கொள்ளுகிறேன்.
முதலாவது தாரை. தாரை என்பவள் தேவகுருவாகிய பிரகஸ்பதி யினுடைய பெண்சாதி. இந்தம்மாளைப் பற்றிய விஷயம் அறிவதற்கு
£தம் கட்டிக்கொண்டு காதம் காதமாய் ஊர்ப் பயணம் போகவேண்டிய
தில்லை. இன்றைக்கும் தெருதெருவாய் தாரையும் சந்திரனும் படுத்து உருளுவதும் நிர்வாணமாய் நின்று கொண்டு சந்திரனுக்கு எண்ணை தேய்ப்பதுமான சத்காலட்சேபத்தை தினம் தினம் பார்த்து வருகிறோம். தாரையம்மன் புருஷனே சங்கதி தெரிந்து இரண்டு பேருக்கும் சாபமிட்டதும், இவர்கள் இரண்டு பேருக்குமாக பிறந்த குழந்தை புதன் என்பவன் இருப்பதுவும் மேல்படி பார்ப்பனர்கள் சாஸ்திரங்களிலேயே இருக்கிறது.
ஆகவே, குருவின் யோக்கியதை, குரு பத்தினியின் யோக்கியதை, சிஷ்யனின் யோக்கியதை, ஆஸ்ரமத்தின் யோக்கியதை, ஆரிய நாகரிகத்தின் யோக்கியதை ஆகிய இவ்வளவுக்கும் தாரையம்மாள் உதாரணமாக விளங்கு கிறாள். இதையெல்லாம்விட கற்பின் லக்ஷணத்திற்கும் இது ஓர் அரிய இலக்கி யமாய் விளங்குகின்றது.
இரண்டாவதான அகலியை அம்மாள் விஷயம்.அகல்யை அம்மாள் என்பவள் கெளதம முனிவர் என்கிற ஒரு இருஷியின் பெண்டாட்டி. தெய்வராஜனான இந்திரன் இந்த அம்மாள் மேல் ஆசைப்பட்டு மாறுவேஷம் பூண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும் பிறகு ஒருவருக் கொருவர் இன்னார்.
என்று தெரிந்து கொண்டு இரண்டு பேரும் சுகித்ததாகவும் ரிஷி இந்த விஷயம். தெரிந்து இருவரையும் தண்டித்ததாகவும் அத்தண்டனையில் இந்திரனுக்கு சரீரமெல்லாம் பெண் குறியாகவும், அகலிகையை கல்லாகவும் ஆய் விட்ட தாகவும் பார்ப்பன சாஸ்திரங்கள் என்பவைகளே சொல்லுகின்றன. அதுவும் தெருவில் போகின்ற சாஸ்திரங்கள் சொல்லவில்லை. ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுவதாகிய இராமாயணம், பாரதம் முதலியவைகளில்தான் இந்த உண்மைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. இதனால் தேவர்களின் அரசனின் யோக்கியதையும், ரிஷிபத்தினிகளின் யோக்கியதையும் விளங்குகின்றது.
மூன்றாவது, துரெளபதையம்மாள் சங்கதி. இந்த அம்மாள் முதலில் ஒரு புருஷனை மாத்திரம் கட்டிக்கொண்டு பிறகு மாமியார் இஷ்டப்படி மற்றும் நால்வருக்கும் பெண்டாட்டியாக இருந்து வந்திருக்கிறாள். ஐந்து பேரிருந்தும் ஆசை தீராமல் இன்னொரு புருஷனையும் மனதில் நினைத்து நினைத்து வருந்தியிருக்கின்றாள் என்பதை தானே ஒப்புக் கொண்டதல்லாமல் உலகத்தில் பெண்கள் பதி விரதைகளாக இருக்க வேண்டுமானால் ஆண் மக்களே இருக்கக் கூடாது என்று தீர்ப்புங் கூறி விட்டாள். இதனால் அக்காலக் கற்புக்கு இலக்ஷணம் புருஷனும் மாமியாரும் யாரிடம் போகும்படி சொன்னா
குடி அரசு - 1927 (3) 368
லும் போய்த்தான் ஆக வேண்டும் என்பதும், அதுவும் கற்பில் சேர்ந்ததுதான் என்பதும் பிறகு தன்னிஷ்டப்படி யாரை ஆசைப்பட்டாலும் அதுவும் கற்புடன் சேர்ந்தது தான் என்பதும் அக்கால வழக்கத்தில் இருந்ததாய் விளங்குகின்றது. ஆகவே, ஐந்து கன்னிகைகளில் மூன்றுபேர் சங்கதி இப்படியிருக்கின்றதே என்று கேட்கப்படும் கேள்விகளுக்குத்தான் பார்ப்பனர்கள் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று சொல்ல அதிலிருந்து
இந்தப் பழமொழி ஏற்பட்டது.
இந்த இரண்டில் ஒன்றும் குற்றமில்லையா என்று பார்த்தால் அதிலும் ஒன்றை கழிக்க வேண்டியதாகத்தான் இருக்கின்றது அடியோடு கழிக்கா
விட்டாலும் சந்தேகத்திலாவது வைத்துத் தீரவேண்டிய தாகத்தானிருக்கின்றது.
நாலாவதான சீதையம்மாள் சங்கதி பார்த்தால் முன் சொன்ன கதைகளின் படிக்கு அவ்வளவு இல்லாவிட்டாலும் உத்தம ஸ்திரீ என்றோ முழுதும் பரிசுத்ததானவளென்றோ கற்புக்கரசி என்றோ சொல்வதற்கில்லை. குண விசேஷத்தைப் பற்றியோவென்றால் மாய மானைத் துரத்திக்கொண்டு ராமன் போன காலத்தில் வெகுநேரம் வரை திரும்பி வராதது கண்டு புருஷ
னைப் போய்ப் பார்த்து வரும்படி சீதை லக்ஷ்மணனுக்குச் சொல்ல லக்$ம ணன் போக வேண்டிய அவசியமில்லை ராமர் எப்படியும் திரும்பி வருவார். என்று சொன்னதற்கு அண்ணன் செத்தால் என்னைக் கைப்பற்றலாம் என்று பார்க்கின்றாயா என்று சொன்னதிலிருந்தே லட்சுமணனிடம் பழகிய சீதைக்கு போதிய அறிவும் உயர் குணமும் விஷயத்தை அறியும் சக்தியும் இல்லை யென்கின்ற தத்துவமும் நன்றாய் விளங்குகின்றது. தவிர சீதையிடம் வெகு
காலம் நன்றாய்ப்பழகிய அவன் புருஷனாகிய ராமனும் பலதடவை சீதையின்
கற்பில் சந்தேகப் பட்டிருக்கிறான்.அதாவது ராவணனைக் கொன்றபின் முதல்
முதல் சீதையை ஒரு தடவை சந்தேகப்பட்டபோது சீதையிடம் என்ன சொல்லுகிறான் என்றால் “ஏ சீதை! நான் உன்மேல் ஆசைப்பட்டு உன்னை மீட்டுக்கொண்டு போவதற்காக ராவணனிடம் யுத்தம் செய்யவில்லை. பின் என்னவென்று கேட்பாயானால் ஒருவன் பெண்சாதியை மற்றொருவன் அடித்துக் கொண்டுபோய் விட்டால் அவனைச் சும்மா விட்டு விடுவது வீரனுக்கு அழகாகுமா என்கின்ற ரோசத்தின் மேல்தான் சண்டைப் போட்டு அவனைக் கொன்றேன். மற்றபடி ஒரு துஷ்டன் வீட்டில்அதுவும் அவனுடைய அதிகாரத்திற்கும் பெலத்திற்கும் கட்டுப்பட்டு 10 மாதம் வசித்த.
தன் பெண்சாதியை சுயமரியாதையுள்ள எவனாவது மறுபடியும் சேர்த்துக் கொள்வானா? என்று சொன்னதோடல்லாமல் சகல வசத்திலும் அவனுடைய சுவாதீனத்திலிருந்த நீ அவனுக்கு வசப்படாமலிருந்திருக்க முடியுமா? ஆதலால் நீ எங்கே வேண்டுமானாலும் உன்னிஷ்டப்படி போகலாம். உன்னை
நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கோபத்தால் சொல்ல வில்லை. நெடுநேரம் ஆலோசித்து செய்த முடிவு இது” என்று சொன்னான். (இந்த இடத்தில் ராமன் உலக அபவாதத்திற்குக் கட்டுப்பட்டு இப்படி சொல்லவில்லை. தானே
369 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
சந்தேகப்பட்டு ஒருவித முடிவு செய்து கொண்டு சொல்லுகிறான் என்றுதான் அர்த்தம்) அதோடு 10 மாதம் எதிரி வீட்டில் வசித்த நீ என்பதால் இதுவரை:
உயிர் வைத்திருந்தாயே என்கின்ற கருத்தும் தொக்கியிருக்கின்றது.
இதற்கு சீதை சொல்லும் பதில் என்னவென்றால், “ஏ ராமா நீ சொல்லுவது உண்மை! அதற்கு நான் என்ன செய்யப்படும். நானோ ஒரு பெண், ஒண்டியாயும், அனாதையாயும் இருந்தவள். ராவணனோ ராக்ஷசன், அளவற்ற பலசாலி. என்னால் கூடியவரை தடுத்துப் பார்த்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போகவேண்டும் என்கின்ற ஆசை இருந்ததா? விதியை நோக வேண்டியதே தவிர என்னைக் குற்றஞ் சொல்லக்கூடாது. என் தேகம்தான் பிறருக்கு வயப்பட்டதே ஒழிய என் ஹிருதயம் அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் உன்னிடத்திலேயே இருக்கின்றது. சுதந்திரமற்ற நான் என்ன செய்ய முடியும். அனுமானை அனுப்பி நான் இருக்குமிடத் தையும் ஸ்திதியையும் அறிந்து வரச் சொன்னதின் மூலம் நான் லங்கையில் ராவணனுடைய வீட்டில் இருப்பதாக தெரிந்த உடனே என்னை ஏன் தள்ளி விடவில்லை” என்றுதான் சொன்னாள். (இது வால்மீகி ராமாயணம் யுத்தக் காண்டம், 117, 118 வது சர்க்கத்தில் காணப்படுவது) இந்த இடத்தில் ராமன் சீதையைப் பார்த்து “நீ கற்பழிந்து விட்டாய் என்று நான் தீர்மானித்து விட்டேன்” என்று வெளிப்படையாய் சொல்லி காட்டியதற்கு சீதை ஏன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று தைரியமாய் சொல்லியிருக்க கூடாது என்கின்ற கேள்விக்கு பதில் இல்லை. அதோடு என் சரீரம் அவன் வயப்பட்டுவிட்டது.ஆனால் அப்போதும் மனம் உன்னிடம்தான் இருந்தது. விதியை நோக வேண்டுமேயொழிய என்னை நோகக் கூடாது. ராவணன்
வீட்டில் இருந்ததையும் என் ஸ்திதியையும் அனுமான் பார்த்து விட்டு வந்து சொல்லி இருப்பானே. அப்போதே ஏன் என்னை தள்ளிவிட்டதாக சொல்லி அனுப்பவில்லை என்பதாக வெல்லாம் சொல்லுவதினால் விஷயம் சந்தேகத் திற்காவது இடமுண்டாகின்றதா இல்லையா ? என்பதை யோசித்துப் பாருங்
கள். ஒரு சமயம் இராவணன் மீது அதிகமான பழியை சுமத்த வால்மீகி வேண்டுமென்றே இப்படி எழுதி இருக்கக்கூடும் என்று சொல்வதானால் அது வேறு விஷயம். என்னவென்றால் அது ராவணன் சங்கதியைப் பற்றி பேசும் போது கவனிக்கவேண்டிய விஷயம்.
இந்த இடத்தில் கற்பைப் பற்றி பரீக்ஷிப்பதால் வால்மீகி வார்த்தையில் இருந்தும் சாத்தியத்தில் இருந்தும்தான் பேச வேண்டும்.
தவிர, மற்றொரு தடவை வண்ணான் வார்த்தையைக் கேட்டுக் கொண்டு கொஞ்சமும் கூட முன்பின் யோசிக்காமல் திடீரென்று லக்ஷ்மண: னைவிட்டு சீதையை நடுக்காட்டில் கொண்டுபோய் விட்டு வந்ததும் அங்கு சீதைதன் கற்பைப் பற்றி யார் என்ன சொல்லி விடப்போகிறார்களோ எனப் பயந்து “லக்ஷ்மணா இதோ பார் நான் இப்பொழுது கர்ப்பமாயிருக்கின்றேன்”
குடி அரசு - 1927 (3) 370
என்று சொன்னதும் காட்டில் இரட்டைப் பிள்ளை பெற்றதாக ஒரு ராமாயணத்திலும், தர்ப்பை கிள்ளிப் போட்டு வால்மீகி ஒரு பிள்ளையை உண்டாக்கினார் என்று மற்றொரு ராமாயணத்திலும் சொல்லப்பட்டாலும் இந்த பிள்ளைகளை ராமன் ஒப்புக் கொள்ளாமல் வால்மீகி முதலிய எவ்வளவோ பெரிய தவ சிரேஷ்டர்கள் என்போர்கள் பிரமாணம் செய்தும் ஒப்புக் கொள்ளாமல் மறுபடியும் நெருப்பில் இறங்கும்படி சொன்னதும் அதற்கு சீதை கட்டுப்படாமல் உலக அபவாதத்தையோ அல்லது ராமனுடைய சந்தேகத் தையோ நிவர்த்தி செய்ய வேண்டாமா என்கின்ற கவலையில்லாமல் பூமியை பிளக்கச் செய்து பூமியில் இறங்கி மறைந்துவிட்டாள் என்றும் எழுதப் பட்டிருக்கின்றது. இன்னமும் என்னென்னவோ இருந்தாலும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு இதுவே போதும்.
எனவே சீதையின் விஷயமானது சந்தேகப்படுவதற்கில்லாமல் போகவில்லை என்பதோடு சீதையின் லக்ஷ்மித் தன்மையும், ராமனின் விஷ்ணுத்தன்மையும் எப்படிப்பட்டதென்று விளக்கவும் ஆரியர் பழக்க வழக்கங்களும் அக்காலத்திய ஆண் பெண்கள் வாழ்க்கை நிலையும் வெளி யாக்கவும் உதவுகின்றது.
கடைசியாக மீதி இருப்பது ஐந்தாவதான மண்டோதரி அம்மாள். இந்தம்மாள் விஷயத்தில் ஒரு தகராரையும் காணோம். கம்பராமாயணத்தில் புருஷன் பிரிந்தவுடன் செத்து விட்டான் என்கின்ற சங்கதி தெரிந்து அழுது உயிர் விட்டு விட்டதாகக் காணப்படுகின்றது. தவிரவும் செத்துப்போன ராவணனைப் பார்த்து அழும்போது சீதை குலத்திலாவது, ரூபத்திலாவது, குணத்திலாவது, சாமார்த்தியத்திலாவது என்னைவிட சிறந்தவளா என்று மாத்திரம் கேட்டிருக்கின்றாள். இது சீதையின் குணத்தை 10 மாதம் நேரிலிருந்து பார்த்தவள் கேட்டிருப்பதால் இதில் மண்டோதரி பேரில் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால் சீதையின் குணம்தான் வெளியாக்கப்பட்டதாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலால் மண்டோதரியின்பால் மாத்திரம் குற்றம் சொல்ல இட மில்லை. கற்புள்ள பெண் என்றே சொல்லலாம். ஆனால் இது திராவிட நாகரிகத்திற்கும் திராவிடச் சிறப்புக்கும் இலக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பஞ்ச கன்னிகைகளின் யோக்கியதையைப் பார்க்கின்ற போதும், கற்பு இலக்கணங்களைப் பார்க்கின்றபோதும், குரு, அரசன், ரிஷி, கடவுள் என்கின்றதைப் பார்க்கும்போதும் நன்றாய் கவனித்தால் இதன் ஆபாசங்கள் விளங்குவதோடு ஐந்துக்கு இரண்டாவது சுத்தமாய் தேர்கின்றதா என்பது வெளியாகும்.
முதலாவது விஷயம், குரு பத்தினியின் சங்கதியையும் சிஷ்யனின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று. இரண்டாவது விஷயம், தேவர்களுக்.
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கெல்லாம் அரசனாயிருப்பவன் யோக்கியதையையும் ரிஷிபத்தினியின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று. இந்த இரண்டு விஷயமும் புருஷர். களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பதையாவது காட்டிற்று. மூன்றாவது விஷயமோ புருஷனும் ஒப்புக் கொண்டான், மாமியும் ஒப்புக் கொண்டாள். சகோதரர்களும் ஒப்புக்கொண்டார்கள். உலகமும் ஒப்புக் கொண்டது என்பதை காட்டிற்று. நாலாவது விஷயம் அவதாரங்கள் என்பதின் யோக்கிய தையையும் வெளியாக்கிற்று.
மிஞ்சியது இராக்ஷதர்கள் என்றும் இராக்ஷச ஸ்திரிகள் என்றும், ஆரியர்கள் எப்பேர்ப்பட்டவர்களை சொல்லுகின்றார்கள், சொல்லி வந்திருக் கின்றார்கள் என்பதையும் ஒரு திராவிடப் பெண்ணின் கற்பின் நிழலுக்குள் ஆரியர்கள் எப்படி வந்து கலந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும் வெளி
யாக்கிற்று. இந்தப் பழமொழி ஒன்றா உலகத்தை ஏமாற்றிச் செய்திருக்க வேண்டும். அல்லது இது அவர்களின் பழக்கவழக்கமாய் இருக்கவேண்டும். ஆகவே ஐந்துக்கு இரண்டு கூட அவர்கள் சொற்களில் உண்மை இல்லை என்பதும் ஏதாவது உண்மையிருந்தால் அதுவும் நம்முடைய விஷயங்களில் தான் என்பதும் இந்த விஷயத்தினால் வெளிப்படுத்துகின்றேன்.
இப்பொழுது எப்படி அவர்கள் அக்கிரமங்களை மறைத்துக் கொண்டும், பெருமையாய் பிரசாரம் செய்துகொண்டும், நம்முடைய யோக்கிய மான காரியங்களைக் குற்றம் சொல்லிக்கொண்டும், அதற்கு நம்மவர்களையே கூலிக்கமர்த்திக்கொண்டும் வேலை செய்து வருகிறார்களோ இதுபோல்தான். இந்தப் பார்ப்பனர்கள் என்னும் ஆரியர்கள் முன்காலத்திலும் செய்து வந்திருக்கிறார்கள் என்பதோடு நம்முடைய பாமர ஜனங்கள் இவர்களை அப்போதும் இப்போதும் நம்பி ஏமாந்து வருகிறார்கள் என்பதும் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்னும் வியாசத்தால் வெளியாக்கப்பட்டது.
குடி அரசு - கட்டுரை - 11.12.1927
குடி அரசு - 1927 (3) 372
ராயல் கமிஷண் பணஹிஸஷ்கா௱ரத்தின் €மோக்கியதை
ராயல் கமிஷன் பஹிஷ்காரத்திற்கு இந்தியா முழுவதற்கும் இப்போது இரண்டு தலைவர்கள்தான் முக்கியமானவர்கள்.
அவர்களில் காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒருவர். மற்றப்படி சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்ட க௯ஷிக்
காரர்கள் தலைவர் என்று ஸ்ரீமதி பெசண்டம்மையார் இரண்டாமவர் ஆவார்.
மற்றவர்கள் எல்லோரும் இவர்கள் இருவர்களில் கட்டுப்பட்டவர்கள். எனவே, இந்த இருவருக்குள்ளாகவும் பலமான அபிப்பிராய பேதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் புரட்டுக்கார பத்திரிகைகள் இதை ஜனங்கள் அறியாதபடி
சந்திலும் பொந்திலும் போட்டு மறைத்து வைத்து வருகின்றன. ஆனாலும்
சமீபத்தில் வெளியாகித்தான் தீரும்.
என்னவெனில் பஹிஷ்காரப் பேச்சு பேசும் தலைவர்கள் அநேகமாய் புரட்டர்கள் என்றும் தங்களுக்கு மானம் போய் விட்டதாக வேஷம் போடு
கிறார்கள் என்றும் உண்மையிலேயே பார்லிமெண்டார் இந்தியரை கமிஷ
னில் நியமிக்காததானது இவர்களது சுயமரியாதைக்கு பங்கமாயிருப்பதாக கருதுவார்களானால் அதே பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்ட மற்ற பதவி களில் இருக்கலாமா என்றும் அதாவது சட்டசபை, ராஜாங்க சபை மற்றும் அது சம்மந்தமான பதவி உத்தியோகங்களில் இருக்கலாமா என்றும் ஒரு கேள்வி கேட்டிருந்தோம். அதன்பின் சில ஆசாமிகள் சமயம் வந்தால் அதையும்தான் பஹிஷ்கரிப்போம் என்று சத்தம் போட்டார்கள். இதையறிந்த பெசண்டம் மையார் பஹிஷ்காரம், பஹிஷ்காரம் என்று வாயில் சொல்லிக் கொண்டு மாத்திரம்தான் இருக்க வேண்டுமே ஒழிய ஒரு வேலையையும் பஹிஷ்க
ரிக்கக் கூடாது என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்கள். இதில் ஸ்ரீமான் அய்யங்கார் கையெழுத்துமிருக்கிறது.
நாட்டின் நிலைமையைப் பார்த்த ஸ்ரீ அய்யங்கார் இப்போது திடீ ரென்று கரணம் போட்டு பெசண்டம்மையின் அந்தக் கொள்கைக்கு நான் கட்டுப்பட்டவனல்ல. ஒரு சமயம் எல்லா வேலைகளையும் பஹிஷ்கரிக்க
373 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வேண்டி வந்தாலும் வரும் என்று வீரர் போல் மற்றொரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
இதற்குமத்தியில் மற்றொரு “வீரர்” ஸ்ரீ பண்டித மாளவியா வரிகொடா இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றார். மூன்றும் மூன்று விதமாய் இருக்கின்றது. ஆனால் மூவரும் பார்ப்பனர்களே. “பசுவை நம்பினாலும் பார்ப்பானை நம்பாதே” என்று பழமொழி உண்டு. இது கண்டிப்பாய் மாளவியா விஷயத்தில் உபயோகிக்கப்பட வேண்டியதுதான்.
ஏனெனில் பஞ்சாப் அட்டூழியத்திற்காக கொஞ்சம்கூட சுயமரியாதை யைப் பற்றிக் கவனிக்காத மகான், ரெளலட் பில்லுக்காக சட்டசபை ஸ்தா னத்தை ராஜீநாமா கொடுத்து விட்டு மறுபடியும் திருப்பி வாங்கி கொண்ட வீரர்.ஏதோ ஒருஉப்புப் புளியில்லாத சப்பைக் காரியமான பஹிஷ்காரமென்ற போலிக்கு வரிகொடுக்காத இயக்கமும் ஆரம்பிக்கின்றேன் என்றால் அதை யார் நம்புவார்கள். இதில் ஏதாவது புரட்டு இருக்குமா இருக்காதா என்று
பார்த்தால் வெளியாகாமல் போகாது. அதுதான் மகமதியர் தலையிலும் பார்ப்பனரல்லாதார் தலையிலும் கையை வைக்கும் புரட்டு. என்னவென்றால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒழித்து விட்டு பார்ப்பன ஆதிக்கமே நிலைத்திருக்கச் செய்வதாகும்.
இது இப்படி மூன்றும் மூன்று விதமாய் இருக்க மற்றொரு விஷய மென்ன வென்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று பொய்ச் சங்கூதுவது. யார் யார் ஒன்று சேர்ந்தார்கள், எது எதெதெற்கு ஒன்று சேர்ந் தார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். 8 கோடி பேர். கொண்டசமூகமாகிய மகமதியர்கள்100 -க்கு கால் பேர் கூடபகிஷ்காரத்துக்கு சேரவில்லை. மகமதிய சமூகத்தின் ஸ்தாபனமும் சேரவில்லை.
தவிர, லாகூர் பிரபல மகமதியர்கள் பலர் அதாவது சர். சல்பீகர் அலிகான், சர். அப்துல் காசிம், சர். அப்துல்ஹை, ஜனாப் ரஜான் பக்ஷ்,ஜனாப் முகம்மது, சர். இக்பால் முதலியோர்கள் கையெழுத்திட்டு பகிஷ்காரத்தில்
சேரக்கூடாது என்று கண்டித்து தங்கள் சமூகத்திற்கு அறிவுறுத்தி இருப் பதுடன் வகுப்பு கலவரத்தினால் அடையும் சுயமரியாதைக் குறைவைவிட ராயல் கமிஷனால் சுயமரியாதைக்கு அதிகக் குறைவு கிடையாது என்று சொல்லி ஜனாப் ஜின்னாவையும் கண்டித்திருக்கின்றார்கள்.
பங்காளத்தில் மகமதியர்கள் பெரும்பான்மையோர் பகிஷ்காரத்தில் கலரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அலகாபாத்திலும் ராயல் கமிஷனை பகிஷ்கரித்தால் முஸ்லீம்களுக்கு அதிக பாதகம் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள்.
குடி அரசு - 1927 (3) 374
சென்னையிலும் முஸ்லீம்கள் ஏறக்குறையயாவரும் எதிரிடையாகவே இருக்கின்றார்கள். மொத்தத்தில் முஸ்லீம் பத்திரிகைகள் எல்லாம் பகிஷ்காரத்
திற்கு விரோதமாயிருக்கின்றன. முக்கிய பத்திரிகையாகிய “சைபுல் இஸ்லாம்” பகிஷ்காரத்தின் புரட்டை புட்டுப் புட்டுக் காட்டுகின்றது.
கிறிஸ்தவர்களிலும் நூற்றுக்கு அரைக்கால்வாசிப் பேர் கூட சேர்ந்த தாக தெரியவில்லை.அவர்களது சமூக இயக்கம் எதுவும் சேர்ந்ததாக தெரிய வில்லை. சுற்றி சுற்றிப் பார்த்தால் பார்ப்பன பொக்கிஷத்தில் எப்போதும் தயாராயிருக்கும் ஸ்ரீமான்களான குழந்தை, ஜோசப் ஆகிய இருவர்கள்தான். அதிலும் ஸ்ரீமான் குழந்தையின் அழுகுரலைக் கூட கொஞ்ச நாளாய் காண முடியவில்லை. இந்துக்கள் என்பவர்களிலும் இந்து மகாசபை என்பது பகிஷ் காரத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
மற்றும் 8 கோடி சமூகமாகிய தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பவர்களில், இந்த 8 கோடிக்கும் ஒரு ஆசாமியாவது சேர்ந்ததாக தெரியவில்லை. அவர்களது சமூக இயக்கம் எதுவும் சேர்ந்ததாக தெரியவில்லை. அய்யங்கார். சுவாதீனத்தில் இருக்கும் ஸ்ரீமான் ஜெயவேலு அவர்கள் பெயர் ஏதாவது ஒரு
சமயம் அடிபடலாமோ என்னமோ அவ்வளவுதான். மற்றபடி இம் மாகா ணத்தில் மீதியுள்ள இரண்டரைக் கோடி ஜனங்களான பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் எத்தனை பெயர்கள் சேர்ந்திருக்கிறார்கள்? அவர்களது சமூக இயக்கமும் என்ன சொல்லிற்று. ஸ்ரீமான்கள் வரதராஜுலு, குப்புசாமி
முதலியார், அண்ணாமலை பிள்ளை, தேவ நாயக்கர் முதலிய சிலர்கள் சேர்ந்தாலே எல்லோரும் சேர்ந்ததாக ஆகிவிடுமா? என்று கேட்கின்றோம். அவரவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை பிரசாரம் பண்ணுவதை பற்றி
யாருக்கும் ஆக்ஷபணை இல்லை மனதறிந்து வேண்டுமென்றே பொய் பேச வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு, “உலகமே ஒன்று சேர்ந்து விட்டது, உத்தியோக ஆசை பிடித்தவர்களும், சர்க்கார் தாசரும் தவிர மற்ற யோக்கியர்களும், சத்திய கீர்த்திகளும், நாணயக்காரரும், தியாகிகளும், பொறுப்பாளிகளும், சுயநலமற்றவர்களும், பிரபுக்களும், தொழிலாளிகளும்,
மற்றும் எல்லோரும் சேர்ந்து விட்டார்கள்” என்று சொல்வதில் கண்ணிய மிருக்கிறதா? என்றுதான் கேட்கின்றோம். தப்பட்டை அடித்து கூட்டம் கூட்டி அதில் கூப்பாடு போட முடியும். தலைகால், பகுத்தறிவு, அறிவு, பொறுப்பு இல்லாமல் சர்க்காரைவைவதாக வேஷம் போடக்கூடும். திருட்டுத் தனமாய் சர்க்காரை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் கூடும். தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டதாக பத்திரிகையில் எழுதவும் கூடும். காரியம் என்ன நடக்கும் என்றுதான் கேட்கின்றோம். அதிகமான பிரயத்தனமெடுத்துக் கொண்டால் பாமர மக்களை ஏமாற்ற முடியும். அதைத் தவிர ஒரு அணுவளவாவது சத்தியத்திற்கோ, நாட்டிற்கோ, மக்களுக்கோ, நன்மை உண்டாகுமா என்றுதான்
375 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கேட்கின்றோம். இனியும் இந்தக் கூட்டத்திற்குத்தானா நாட்டில் மதிப்பு இருப்பதாக ஏற்பட வேண்டும்?
பெசண்டம்மை, ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்
கார், ஜோசப்பு, வரதராஜுலு, சத்தியமூர்த்தி, அண்ணாமலை முதலியார், குப்பு சாமிமுதலியார் ஆகிய இவர்களுடன் இந்திய பிரதிநிதித்துவம் தீர்ந்து விட்ட
தாம். மற்றவர்கள் சர்க்கார் தாசராம், உத்தியோகப் பேய் பிடித்தவர்களாம். இப்படிப்பட்ட சிலர் எப்போதும் இருந்துதான் தீருவார்களாம். தலைவரை: நம்புவதா? வாலரை நம்புவதா? இந்த நிலையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரே மற்றொரு புறம் பகிஷ்காரத்தில் “ஒற்றுமை இல்லையே, ஒற்றுமை இல்லையே” என்று கதறுகிறார்.
குடி அரசு - தலையங்கம் - 11.12.1927
குடி அரசு - 1927 (3) 376
யபஹிஷ்காறமும் ஸ்மூஸ் ககூறியும்
பஹிஷ்காரக் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சியாரும் சேர்ந்து கொண்டால் தேவலாம் போல அக் கட்சி பிரமுகர்களுக்கு தோன்றுவதாய்த் தெரிகின்றது. ஏனெனில் பாமர ஜனங்களிடம் தங்களுக்குச் செல்வாக்கில்லை என்று நினைப்பதுடன் அரசாங்கத்தாரும் தங்களைக் கண்டால் பயப்படுவதில்லை என்றும் நினைப்பதாய்க் காணப்படுகிறது. அவர்கள் அப்படிநினைத்திருப் பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம். பாமர மக்கள் எப்போதும் பாமர மக்களாகவே இருக்க முடியாது. இப்பொழுது சற்று கண்விழித்துக் கொண்டு வருகின்றார்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற்று ஏதாவது நன்மை செய்ய வேண்டுமானால் பாமர மக்கள் மனம் மகிழும்படியான மாதிரி யிலேயே போய்க் கொண்டிருப்பதினால் ஒருபலனும் ஏற்படாது. அவர்கள் உண்மையை உணர்ந்து நன்மையைக் கடைபிடிக்கும்படி செய்ய வேண்டும். அதற்காக காத்திருந்தாலும் குற்றமில்லை. இரண்டொரு தடவை தோல்வி ஏற்பட்டாலும் குற்றமில்லை. இல்லாவிட்டால் முக்கியமான சமயத்தில் ஆபத்து வந்துவிடும். பிறகு சுலபமாய் திருத்த முடியாமலும் போய் விடும். ஆதலால் தக்க அஸ்திவாரத்துடனும் நிலையான கொள்கைகளுடனும் வேலை செய்ய வேண்டியதுதான் பொறுப்பாகுமே தவிர கூட்டத்தில் கோவிந்தா போடுவது பொறுப்பாகாது என்று நினைக்கிறோம்.
தவிர, சர்க்கார் பயப்பட மாட்டார்கள் என்று எண்ணுவதும் தப்பு என்று நினைக்கின்றோம். சர்க்காரை பயப்படுத்துவதாய் நினைப்பதைப் போல முட்டாள்தனமான காரியம் வேறில்லை. வெறும் உத்தியோகம் மாத்திரம் நமது கவலையானால் சர்க்காரை மிரட்டுவது பயன்படும். அது நமது முக்கிய நோக்கமல்ல. ஒருக்கால் அப்படியே வைத்துக்கொண்டாலும் நாமாக ஒரு காரியம் செய்து அதன் மூலம் சர்க்காரை மிரட்டலாம். அந்த யோக்கியதை வரும் வரை காத்திருக்கலாம்.அப்படிக்கில்லாமல் பார்ப்பனர்களோடு சேர்ந்து நாமும் கூப்பாடு போடுவதின் மூலம் சர்க்காரை மிரட்டினால் ஒரு சமயம் சர்க்காரும் பயப்படுவதானால் அதன் பலன் முன்னின்று சத்தம்போட்ட பார்ப்பனர்களுக்குத்தான் ஏற்படுமே தவிர மற்றவர்களுக்கு ஒன்றும் ஏற்படப் போவதில்லை. பார்ப்பனர்கள் அவ்வளவு பயித்தியக்காரரல்ல. மிஞ்சி ஏதாவது கிடைத்தால் அவர்கள் தின்றது போக மீதி எச்சில்தான் கிடைக்கும். ஒரு சமயம் நமக்கு ஏதாவது பெரிய பலன் கிடைப்பதாயிருந்தால் அப்போது
377 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
வேறு வழியை அனுஷ்டிக்க பார்ப்பனர்களுக்குத் தெரியும். தவிரவும் ஒரு பெரிய சமூகத்தின் நிரந்தரமான முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் இம்மாதிரி அடிக்கடி மாறும் கொள்கைகளை பார்ப்பன அரசியல்காரருக்கும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களுக்கும் பயந்துகொண்டு மாற்றி வந்தார்களா? பார்ப்பனரல்லாதார் என்கின்ற இவ்வளவு பெரிய சமூகத்தின் பேரால் ஏற்பட்ட இயக்கம் தனக்கென ஒரு மனத்துணிவும் நிலையும் இல்லாமல் கச்சலுக்கும் கும்பலுக்கும் பயந்து கொண்டிருக்கின்றது என்று பிறர் சொல்லும்படி நடந்தார்களா? சர்க்காரையாவது உதறித்தள்ளிவிட வேண்டும்.யோக்கியமான. நிலையான கொள்கைகளை கட்டிக்கொண்டு சாகவேண்டும். அப்பொழுது
தான் நமது பின் சந்ததிக்காவது பலனுண்டு. இம்மாதிரி மனக்கிலேசங்கள்' வரும்போது உண்மைத் தலைவர்களான டாக்டர் நாயர் பெருமானையும், சர். தியாகராயரையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் ஏதாவது அடிக்கடி மாறினார்களா? பாமர மக்களுக்காவது பயந்தார்களா என்பது ஞாபகப்படுத்தும் என்று நினைக்கின்றோம். முடிவாக நாம் சொல்லுவது என்னவென்றால் பார்ப்பனரல்லாத சமூக இயக்கத் தலைவர்கள் தங்களை காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களைப் போல் தாங்கள் தங்கள் பெண்டு பிள்ளை குடும்பங்களுக்கு மாத்திரம் தலைவர்கள் என்று எண்ணாமல், பார்ப்பனர்களாலும், அரசாங்கத்தாராலும் எவ்வளவோ கொடுமைகள் செய்யப்பட்டு வாயில்லாப் பூச்சிகளாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் தலைவர்கள் பிரதிநிதிகள் என்பதை நினைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.12.1927
குடி அரசு - 1927 (3) 378
யார்ப்பணர் ஊால்னுகிறபமு பணம்
கொடுக்காவிட்டால் அதற்க வபயர் காங்கிரஸ் துவேஷமாம்
சென்னைக் கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக் கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிக்கைகள் விஷமப் பிரசாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள்காட்சி என்ற பெயர் வைத்துக்கொண்டு காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களை காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு பணம் கொடுக்கா விட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு
நாம் பயப்படுவதா என்கின்றோம்.
பட்டாஸ் வெடி விற்றுத் தருவதாகவும் கல்பூரம் விற்றுத் தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக் கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால் பட்டாசு வாங்காதீர்கள் கல்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள் என்று நாம் சொன்னால் அது மத துவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி மிரட்டி கை கண்டு விட்டாலும் நம்மில் சில கேனங்களும் வயிற்று சோற்று ஆசாமிகளும் அவர்களுடன் சேர்ந்து திரிவதாலும் பார்ப்பனர் சொல்வதெல்லாம் செலாவணியாகி வருகிறது. இன்னும் அப்படி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா? சுயமரியாதைக்காக உயிர் விடப் போகிறீர்களா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 11.12.1927
379 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
யார்ப்பணரல்லாதார் ககூறி சட்டசபை
மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை
புதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு சட்ட சபையின் மூலம் நிகழ்ந்த நன்மைகள் என்ன வென்று பார்ப்போமானால் ஒன்றும் இல்லையென்று சொல்ல வேண்டியதுடன் பல கெடுதிகள் நடந்திருப்பதாகவும் சொல்லாம
லிருக்க முடியாது.
புது சட்டசபை கூடிய உடன் முதன் முதல் நடந்த சங்கதி பார்ப்பன ரல்லாதார் ஆதிக்கத்தில் இருந்த தாஜூக்கா ஜில்லா போர்டுகளை பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப் பட்டது. அதிலும் பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள்.
அடுத்தபடியாக “ஜஸ்டிஸ்” மந்திரிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டி ருந்த சர்வகலாசாலை - யுனிவர்சிட்டி சட்டத்தை திருத்தி அந்த இலாக்கா முழுவதும் பார்ப்பன மயமாக்க ஸ்ரீ சத்தியமூர்த்தியால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் இருக்கிறது.
மூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க பெரிதும் போராடி பாடுபட்டு வருவதாகிய வருணாசிரம தர்மத்திற்கு சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாகப் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகு பாடுகளுக்கு ஆதாரம் கற்பிக்கப்பட்டது. இன்னும் இதுபோன்ற மற்றும் பல காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகள். அவ்வளவும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமானதும் பார்ப்பனரல்லாதார்.
களுக்கு பிரதிகூலமும் கொடுமையும் இழிவுமானது என்பதில் சுயமரியாதை யுள்ள பார்ப்பனரல்லாதார் யாருக்கும் சந்தேகமிருக்காது.
இது நிற்க! பார்ப்பனரல்லாதார்களுக்கு அனுகூலமாய் ஸ்ரீமதி முத்து லக்ஷிமி அம்மாளால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது கோவில்களின் பேரால் சில பெண்களுக்கு பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடும் வழக்கத்தை நிறுத்த ஒரு சட்டம் கொண்டு வரும்படி சர்க்காரை
குடி அரசு - 1927 (3) 380
கேட்டுக் கொள்ளுகின்றது என்கின்ற தீர்மானம். இது நிறைவேறி இருந்தாலும் காரியத்தில் ஒரு பலனையும் கொடுக்கத் தக்கதல்ல என்றே சொல்லுவோம். சர்க்காரைக் கேட்டுக் கொள்ளும் காரியம் என்ன பலனடையும் என்பது யாவருக்கும் தெரிந்ததுதான். அதுவும் பார்ப்பனர் சட்ட மெம்பராய் இருக்கும் காலத்தில் என்ன காரியம் நடைபெறக்கூடும் என்பதும் நன்றாய் தெரிந்த விஷயம்தான். இத்தீர்மானம் கூடாது என்பதற்கு பார்ப்பன சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர வேறு எவ்வித முக்கிய தீர்மானமும் கொண்டு வரப்பட்டதாகவும் தெரியவில்லை. 4, 5 தடவை சட்டசபை கூடியாய்விட்டது. இதற்குள் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படவில்லை. பார்ப்பனர்கள் சுமார் 15 பேர் தான் சட்டசபையில் உண்டு. பார்ப்பனரல்லாதார் புற்றீசல் போல் பலபேர் இருக்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாரின் நன்மைக்காவே சட்டசபைக்கு போவதாக பறை சாற்றி பெரிய கிளர்ச்சி செய்து பார்ப்பனரல்லாதாரின் ஓட்டுகளைப் பெற்றுப் போனவர்கள். இதுவரை என்ன செய்தார்கள்? எத்தனை தீர்மானங்கள் கொண்டு போனார்கள் என்று கேட்கின்றோம். மந்திரி வேலைக்கு பிரயத்தனப்பட்டதும், முடியாமல்போன
பிறகு மந்திரிகளுடன் சண்டைப் போட்டதும் மந்திரிகளை மிரட்டி நியமனங்
கள் பெற்றதும் அல்லாமல் வேறு என்ன காரியம் செய்ய முடிந்தது என்று பாமர மக்கள் நினைக்கும்படியாகத்தானே இருக்கின்றது. அதே காரியங் களைத்தானே பார்ப்பனர்களும் செய்து வருகின்றார்கள். பார்ப்பன சூழ்ச்சி களை எதிர்த்து வருவதை ஒரு வெற்றியாக சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் இதுவேதானா நமது லக்ஷியம் என்று கேட்கின்றோம்.
எத்தனை மகாநாடுகளில் நமது நலத்தைக் குறித்து எவ்வளவு தீர்மா னங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? அத்தீர்மானங்கள் அமுலில் வருவதற்கு
சட்ட சம்மந்தமான ஆதரவுகள் வேண்டியவைகளுக்கு சட்டசபை மெம்பர்
கள் ஆதரவு பெற முயற்சித்தார்களா? ஸ்தல ஸ்தாபனங்களில் நடக்கும் அக் கிரமங்களை ஒழிக்க ஏதாவது முயற்சித்தார்களா? பார்ப்பனரல்லாதார். களுக்கு சரியான பிரதிநிதித்துவமில்லாத இலாக்காக்களில் பிரதிநிதித்துவம். கிடைக்க முயற்சித்தார்களா என்று கேட்கின்றோம். ஒரு சமூகத்திற்கே. பிரதிநிதிகளாகப் போய் தங்கள் காரியங்களை மாத்திரம் பார்த்துக் கொண்
டார்கள் என்று சொல்லும்படி நடந்து கொள்வது யோக்கிய பொறுப்பாகுமா? பார்ப்பன மெம்பர்கள் வெகு சொற்பமாயிருந்தாலும் அவர்களது சமூக
முன்னேற்றத்திற்கும் நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து இழிவு படுத்தவும் எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றார்கள்? அந்த. உணர்ச்சி ஏன் பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கக் கூடாதென்று கேட்கின் றோம். “காங்கிரஸ்”, “தேசீயம்” என்பவைகள் எப்படி பார்ப்பனர்கள் உத்தி யோகம் சம்பாதிக்கும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ பார்ப்பன ஆதிக்கத்
திற்கு உபயோகப் படுத்திக்கொள்ளும் ஸ்தாபனங்களாக இருக்கின்றதோ அது
381 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
போலவே பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களை பார்ப்பன ரல்லாதார்களில் யாரோ சிலர் கைப்பற்ற கூடியதாக மாத்திரம் இருக்கின்றது என்று நமது எதிரிகள் கருதும்படியாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறார். களே அல்லாமல் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் குயமரியாதைக்கும் பாடுபடும் கருத்தும் வரவர மறைந்து வருகிறது. எவ்வளவோ ஊக்கமும்,
எழுச்சியும் உள்ள இந்தக் காலத்தில் கூட ஒரு காரியமும் செய்ய முடிய வில்லையானால் இனி எப்போதுதான் சாதிக்க முடியும். ஆதலால் பார்ப்பன ரல்லாத சட்டசபை மெம்பர்கள் ஒரு கூட்டம் கூட்டி மீதி உள்ள காலத்திற்குள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக என்னென்ன மசோதா கொண்டு போக வேண்டியதென்று ஒரு முடிவுக்கு வந்து அவைகளை நிறை வேற்றுவ தற்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இதுவரை செய்த வேலைகள் கண்டிப்பாய் திருப்தியற்றதென்றும் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்வது மாத்திரம் ஓட்டுப் பெறக்கூடிய யோக்கியதாபத்திரமாகாதென்றும் செய்த வேலையை காட்ட வேண்டிய நிலைமை முதலியவைகள் கண்டிப்பாய் நேரிடும் என்றும் இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 11.12.1927
குடி அரசு - 1927 (3) 382
ஸ்ஙநீணிவாசய்மாங்காரும் Wi eoub
ராயல் கமிஷனில் மகமதிய சமூகம் அதாவது எந்த எந்த மாகாணத்தில் அச்சமூகம் அதிகமாய் இருக்கின்றதோ அங்கெல்லாம் அதாவது பஞ்சாப், அலஹாபாத், கல்கத்தா முதலிய இடங்களிலுள்ள பிரபலஸ்தர்களும் மகமதிய பிரதிநிதிகளும் பஹிஷ்காரக் கூட்டத்தில் மகமதியர் சேரக் கூடாது என்று தீர்மானித்துவிட்டதையறிந்த ஸ்ரீ சீனிவாசய்யங்கார் அம்மகமதியர்களை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். அதாவது பஹிஷ்கார இயக்கத்தில் மகமதி யர்கள் சேராவிட்டால் சர்க்காருடன் தாங்கள் சேர்ந்து கொண்டு மகமதியர். களை துன்புறுத்த நேரிடும் என்று சொல்லுகின்றார். இது ஸ்ரீசீனிவாசய்யங்கார். சொல்லுவதல்ல. அந்த ஜாதி சொல்வதென்றுதான் சொல்லவேண்டும். அக்கூட்டம் இதுவரை அப்படியேதான் செய்து வந்திருக்கின்றது. இந்து அரசாங்கத்தை ஒழித்து மகமதிய அரசாங்கத்தை கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். மகமதிய அரசாங்கத்தை ஒழித்து வெள்ளைக்கார அரசாங் கத்தைக் கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். இப்போது அந்த வெள்ளைக்கார அரசாங்கத்தை மிரட்டி தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொண்டுவருவதும் இந்தகொள்கைதான். ஆகவே சுயமரியாதை உள்ள மகமதியர்கள் இதற்குச் சரியான பதில் கடாவுவார்களே அல்லாமல் பயந்துகொண்டு ஸ்ரீ அய்யங்காருக்கு வால் பிடித்துக்கொண்டு திரிய மாட்டார்கள் என்று நினைக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 1121927
383 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பட்டுக்கோட்டை தானூக்கா 6பரஈஷாணியில் சுயமரியாதை மகாநா௫
நானும் எனது சகாக்களும் எதைச் சரி என்று உணர்ந்தோமோ, அதையே எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டுமென்ற கருத்துடனேயே இயன்ற தொண்டு செய்து வருகிறோம். எங்களுக்கு இத்தொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டதல்லவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம்
இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து வீரத்துடனும் கீர்த்தியுடனும் வாழ்ந்து வந்து இன்று அன்னியர்கள் ஏமாற்றத்தில் அகப்பட்டு சுயமரியாதை அற்று மிருகங்களைப் போல் நடத்தப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்டே அதை நிவர்த்திக்க உழைத்து வருகின்றோம். ஏனெனில் நமது மக்களில் 100-
க்கு 90 பேர் இப்போது கிணற்றுத் தவளையாகவே இருந்து வருகின்றனர். உலகத்தின் இதர தேசங்களையும் அத்தேசத்தாரின் நிலைமையையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் மற்ற காரியங்களையும் நம்மில் அநேகர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இது விஷயங்களையறிந்து நமது நிலைமையையும் கவனித்து எங்கள் புத்திக்குச் சரியென்று பட்டதைச் சொல்லவே முன் வந்திருக்கின்றோம். அதை நீங்கள் செம்மையாய் கவனித்து யோசனை செய்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியென்று பட்டால் அதைச் செய்ய வேண்டுமென்றே உங்களை நான் கேட்டுக்கொள்ளுகிறேன். நீங்கள் இப்போது எங்களை வரவேற்ற முழக்கத்தையும் பாராட்டுதலையும் ஊக்கங் களையும் ஆவேசங்களையும் பார்க்கும் போது எங்கள் ஊழியத்தை தாங்கள் ஆதரித்து வருகின்றீர்களென்று தெரிவதுடன் அதனால் எங்களுக்கும் நாங்கள் மேற்கொண்டுள்ள காரியத்தில் ஊக்கத்தை அளிக்கின்றது. முக்கிய
மாய் நம்மவர்கள் என்று சொல்லி நம்மை ஏமாற்றும் பார்ப்பனீயக் கொடுமை யிலிருந்து விடுபட்டு சுயமரியாதையடையவே நாம் இம்முயற்சியிலீடு படுகின்றோம். பார்ப்பனரல்லாதார் என்று நாம் நம்மை கூறுவதால் நாம் பிராமணர்களை விலக்கி வைத்திருக்கின்றதாக நீங்கள் நினைக்கக் கூடும். நம்மைத்தான் அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கின்றார்களே தவிர, நாம் அவர்களை விலக்கவில்லை. உதாரணமாக சாப்பாட்டுக் கடைகளிலும், காபி ஓட்டல்களிலும், குளங்களிலும், குட்டைகளிலும், ஆலயங்களிலும், பள்ளிக் கூடங்களிலும், வேத சாஸ்திரங்கள் என்பவைகளை படிப்பதிலும் வெகு காலமாகவே நம்மை பார்ப்பனர்கள் விலக்கி வைத்து தங்களுக்கு தனி
குடி அரசு - 1927 (3) 384
இடமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர். மிலேச்சர் என்பதாக அநேக வகுப்புகளையுண்டு பண்ணி மக்களைப் பிரித்து வைத்து எல்லோருக்கும் தாங்கள் மேலென்றும் ஏனையோர் தாழ்வென்றும் திட்டப்படுத்தி அதற்கு ஆதாரமாக கடவுள் சொன்னார் கடவுள் செய்தார் என்று சாஸ்திரங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். வெள்ளைக்கார அரசாங்கத்தில் கூட இந்து
லா என்று சொல்லப்பட்ட சட்டத்திலும்,நீதி இலாகாத் தீர்மானங்களிலும் கூட பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் தனியாக சட்டமிருப்பதைக் காணலாம். இது கிரிமினல் சிவில் இருதரப்பிலும் இப்படி இருக்கிறது. பார்ப்பனத் தலைவராகிய ஸ்ரீ சீனிவாசய்யங்கார் கூட இதை ஒப்புக் கொண்டு இனி இந்த வித்தியாசம் இருக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நடத்தி வருகின்றார்களென்றால் இந்து மதம் என்ற பெயரால்தான். இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதானால் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நாம் அவர்களுக்கு அடிமையாகவிருந்து வருகின்றோம். இதைப் போக்கத்தான்.
நாம் இந்தக் கிளர்ச்சியை ஆரம்பித்தோம், பிராமணருக்கென்றும், மற்றவர். களுக்கென்றுமாக நீதிகளில்லாமல் வித்தியாசங்களில்லாமல் செய்யவே நாம் இப்போராட்டம் செய்கின்றோம். இதுவே தவிர அவர்களிடம் துவேஷம் கிடையாது.நமது நாட்டுக்கும் நமது மக்களுக்கும் விடுதலையும், நல்வாழ்வும் கிடைக்க வேண்டுமானால் ஒருவருக்கொருவர், வித்தியாசங்களை விட்டொழித்து பரஸ்பரம் நல்லெண்ணத்துடன் நடந்து கொண்டு ஒற்றுமை அடைய வேண்டும். இன்றேல் முடியாது. உயர்வு தாழ்வு என்ற தத்துவம் போனாலொழிய அது சாத்தியமில்லை. இத்தத்துவம் நமது மதத்தின் அஸ்திவாரத்திலேயே பதிந்து கிடக்கின்றது. நமது மத வேதங்களும், ஸ்மிரு
திகளும், புராணங்களும்தான் இந்தப் பாழும் தத்துவத்திற்கு ஆதாரம். இம்மாதிரி வித்தியாசம் கற்பித்து மக்களை சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி நாய் பன்றிகளை விட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்
கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும். நான் இவ்வாறு சொல்வது உங்களில் சிலருக்கு வருத்தமாகத் தோன்றலாம். நான் சொல்வதை பார்ப்பனர்கள் சொல்வதுபோல் அப்படியே நம்ப வேண்டுமென்று உங்களை கட்டாயப்படுத்தவில்லை. நான் நம்புவதை எனக்குத் தோன்றியதை நான் கண்டதைச் சொல்லுகிறேன். உங்கள் பகுத்தறிவைக் கொண்டு பார்த்து நான் சொல்லுவது நியாயமாயிருந்தால் அதைக் கைக்கொள்ளுங்கள். குற்றமானால் தள்ளுங்கள். அல்லாமல் இம்மாதிரி குருட்டுத் தனமாக நம்பிக்கை கொண்டு இன்னமும் மிருகப் பிராயத்திலிருந்தால் நாம் முன்னுக்கு வர முடியாது. அநேகமாய் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உண்மைகளை கண்டுபிடித்து அவற்றை செய்கையில் நடத்தியதானால்தான் இதர நாட்டினர் கள் முன்னுக்கு வந்திருக்கின்றார்கள். நாம் வெகு புத்திசாலிகளாவும், ஞானிகளாவும், நாகரீகர்களாகவும் இருந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில்
385 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மேல் நாட்டினர் காட்டுமிராண்டிகளாக இருந்தனர். இன்றைக்கு சுமார் 1000 வருஷங்களுக்கு முன் இவ்வாறிருந்ததாக மேல்நாட்டார்களே சரித்திரம் எழுதி வைத்திருக்கின்றனர். இப்பொழுது காலத்திற்கேற்றவாறு நாகரீக மடைந்து பகுத்தறிவின் மேன்மையினால் அக்குறைகளை நீக்கி தெய்வத் தன்மை என்பதை அடைந்து உலகில் பெரும்பாகத்தை ஆளும் ஸ்தானத் திலிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவோ மேன்மையாக இருந்ததாகக் கதைகள் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் நாமோ அவர்களுக்கு அடிமைப்
பட்டு இழிவான நிலையிலிருந்து வருகின்றோம். குருட்டுக்கொள்கைகளை: அவர்கள் விட்டொழித்ததாலேயே அவர்கள் நல்ல வாழ்வடைந்தார்கள். நாம் இன்னும் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடப்பதால் பார்ப்பான் நம்மை வேசிமகன், அடிமை, சண்டாளன், தீண்டாதவன் என்கின்றான். வெள்ளையன் நம்மை அஞ்ஞானி, கூலி, காட்டுமிராண்டி என்கின்றான். புரோகிதக் கொடுமையால் ஏற்பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெரிந்தாலேயே மேல் நாட்டினர் இன்று இந்நிலையிலிருக்கின்றார்கள். நம்நாட்டுப் புரோகிதக் கூட்டத்தைப் போலவே மேல் நாட்டிலும் 500 வருஷத்திற்கு முன் இருந்த புரோகித வகுப்பார் பாவமன்னிப்பு டிக்கட்டு என்று மக்களுக்கு விற்பனை செய்து பணங்களை கொள்ளையடித்து வந்ததாக சரித்திரம் இருக்கின்றது. அக்கொடுமையை அவர்களில் சில சீர்திருத்தக்காரர்கள் தோன்றியொழித் ததால்தான் அநேக அற்புதங்களைக் கண்டுபிடித்து ஆண்மையுடன் மேன்மையடைய முடிந்தது. பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கும் பயித்தியக் காரர்களாயிருந்தவர்கள் இன்று எவ்வளவோ தெய்வீகச் செயல்களைப்
புரிகின்றார்கள். இது எதனால்? காலப் போக்கையறிந்து அறிவை உபயோ
கித்து மூடவாழ்விலிருந்து விலகியதால்தான் என்று மறுபடியும் சொல்லு
கின்றேன். நாமோ பழைய வழக்கமென்ற கயிற்றால் தலையெடுக்க விடாதபடி கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம். பழைய வழக்கம், பழைய வழக்கம் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா அல்லது இந்நிலையிலிருந்து திருந்தக் கூடாதா. நம் முன்னோர்கள் செய்துவந்த எத்தனையோ நல்ல பழக்கங்களை நாம் கைவிட்டு விடவில்லையா? அதே போல காலத்திற்கேற்ற பழக்க வழக்கங்களையடைந்து சீர்திருத்தி மேம்பாடடையக் கூடாதா என்பதை யோசித்துப் பாருங்கள். முன்னாட்களில் நாம் ஏமாறுவதற்குத் தகுந்தபடியிருந்த வசதிகளில் அதாவது நாம் படிக்கவே கூடாது என்று பார்ப்பனர்கள் ஏற்படுத்திய கொடுமைகளால் குருட்டுப் பழக்கத்திலீடு
பட்டிருந்து வந்திருந்தாலும், இக்கால உலக நிலையையுணர்ந்தாயினும் நாம் நம்மை சீர்திருத்திக் கொள்ள கூடாதாவென்றுதான் நான் கேட்கிறேன். எனவே, நாம் அடிமைப்பட்டிருப்பது முக்கியமாய் மதத்தின் பெயரால்தான். ஆகையால் அதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும். மதம் என்பது மக்களின் வாழ்விற்கும் அன்புக்கும் பரோபகாரத்திற்கும் காலத்தின் நிலைமைக்கும் அறிவுக்கும் சீதோஷ்ண ஸ்திதிக்கும் தக்கதான கொள்கைகள். அக்கொள்கைகளைப் பற்றி வாழ்க்கையில் இன்பம் என்னும் முக்தியடைய
குடி அரசு - 1927 (3) 386
ஏற்பட்டதேயல்லாமல் வேறல்ல. நமது மதம் என்பது அனுஷ்டானத்தில் இவ்வாறிருக்கின்றதா? இன்னும் முக்கியமாக உள்ள கிறிஸ்தவ மதம், முகமதிய மதம், புத்த மதம், இந்து மதம் ஆகிய நான்கில் இந்து மதம் என்பதைத் தவிர வேறெதுவும் கீழான நிலையில் இல்லை. நம்மைத் தவிர மற்ற மதஸ்தரெல்லாம் தங்கள் தேசத்தை ஆளுவதுடன் பிற தேசங்களையும் ஆண்டு வருகின்றார்கள். அப்படிக்கிருக்க நாமோ ஆயிரக்கணக்கான வருஷங்களாக அநேகருக்கு அடிமையாயிருக்கின்றோம் ஏன்? நமது மதமென்பது நம்மை அடிமையாக்க உதவி புரிகிறது காரணம், அது பொய்யாகவும், புரட்டாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. நமது மதத்திற்கு பெயராக உள்ள இந்து என்ற வார்த்தை நமது தேச பாஷைகள் எதிலும் இல்லவே இல்லை. ஆராய்ச்சிக்காரர்கள் இந்து என்ற வார்த்தை பாரசீக பாஷையில் திருடர்கள் என்று பொருள்படுவதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் சிந்து என்ற பதம் இந்து என்பதாக மாறிற்று என்றும், அது நாட்டைக் குறித்து என்றும் மதத்தைக் குறித்ததல்ல வென்றும் கூறுகின்றார்கள். அதுவேதான் நம்நாட்டுக்கு இந்தியா என்ற பெயரைக் கொடுத்தது. இந்து என்பது ஒரு இடத்தைக் குறிப்பதேயல்லாமல் கொள்கை
கள் கொண்ட எந்த மதத்தையும் குறிக்காது. இது சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள்
முடிவாகும். தவிரவும் இலக்கண இலக்கிய சாத்திரங்கள் முதலானவைகளிலும் இந்து என்கின்ற வார்த்தை காணப்படவே இல்லை. பின் இது என்னவென்று
பார்த்தால் ஆதாரமற்றதாகவே காணப்படுகிறது. தவிர எந்த இந்துவும் தன் மதம் என்று காட்டப்படும் இந்து மதத்தின் காலம், தலைவர், கொள்கை ஆகிய
எதுவும் கூற முடியவே முடியாது. சமீப காலத்தில் ஏற்பட்டதான கிறிஸ்துவ
மதம், மகமதிய மதம், புத்தமதம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் மதத்தைப் பற்றிய சகல விபரங்களையும் தாராளமாக சொல்லக்கூடிய நிலைமையிலிருக்கின்றார்கள். நமது மதம் கோடிக்கணக்கான வருஷங் களுக்கு மேம்பட்டதாகக் கூறுகின்றோம். ஆனால் விவரம் ஒன்றும் தெரியாது. நமக்கு எவ்வளவோ பின்பு ஏற்பட்டதாக நம்மால் கூறப்படும் எல்லா மதத்தினரும் கல்வி, ஆராய்ச்சி, பொருளாதார நிலைமை முதலிய பலவற்றிலும் முற்போக்குடன் உன்னத நிலையில் இருக்கிறார்கள். நமது மதத்தில் 100-க்கு 5 க்கு மேல் படித்தவர்களில்லை. பிற மதங்களில் 100 -க்கு 90 பேர் இருக்கின்றார்கள். மதத்திற்காக இதர மதஸ்தார்கள் தங்கள் தங்கள் மதப்பிரசாரம் செய்யும் பொழுது நம் மதத் தலைவர்கள் நம் பணங்களைக் கோடிக்கணக்காய் வாங்கி தின்று கொண்டு எத்தகைய பிரசாரமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதுடன் நமது மதத்தவர்களை கோடிக்கணக்காக இதர மதங்களில் சேர இடங்கொடுத்து வருகின்றார்கள். நம் மத நூல்களை:
நம் மதத்தை சேர்ந்தவர்கள் படிக்கக் கூடாதென்று கட்டுப்படுத்தி வைத் திருக்கின்றார்கள். இதர மதக்காரர்கள் தங்கள் மதச் சங்கதிகளை தாராளமாக அச்சிட்டு வழங்குகின்றார்கள். பிற மதஸ்தார்கள் ஏழைகளுக்கு உபகாரங் களைச் செய்யும் பொழுது, நாம் தீண்டாதார்களென்று கோடிக்கணக்கான
387 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஏழைமக்களை ஒதுக்கி வைத்து கஷ்டப்படுத்துகின்றோம். மத வழிபாட்டிலும் நாம் வீணாக குருக்களுக்கும், புரோகிதர்களுக்கும் கொடுத்து வறுமைப் படுகின்றோம். பிற மதங்களில் அவ்வாறில்லை. மதத்தின் பெயரால் நாம்.
செய்யும் சகல செலவுகளும் ஒரு வகுப்பாருக்கு ஜீவாதாரமாக முடிவதல் லாமல் அதைக் கொண்டு அவர்கள் நம்மை இழிவாக நடத்தி வரவும் இடங்
கொடுத்து வருகின்றது. இதர மதக்காரர்கள் சகல சுதந்திரங்களும் மக்களுக்கு கொடுக்கும் பொழுது நாம் ஒருவர் உயர்வு என்றும், மற்றவர்கள் தாழ்வு என்றும், ஒருவரைப் பார்க்கக் கூடாதென்றும், ஒருவரைத் தீண்டக் கூடாதென்றும் சொல்லுகிறோம். இதுதான் இந்து மதமாக இருக்கிறது. ஒரு வகுப்புக்கு உயர்வையும் மற்றவர்களுக்கு அடிமைத் தனத்தையும் கொடுப்பதுதான் நமது மதமாக வழங்கப்படுகின்றது. முஸ்லீம், கிறிஸ்தவர், பெளத்தர் போன்றவர்களைப் போல நமக்கு ஒற்றுமையிருக்கின்றதா? அத்தகைய ஒற்றுமை நமது மதம் கற்பிக்கின்றதா? ஒரு மதத்திற்குள்ளகவே ஆயிரம் ஜாதி, பதினாயிரம் வகுப்பு. லட்சம் தெய்வம் என்பதாக மேலும் மேலும் பிரிவினையாகவே ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் நூல்களாகிய நமது சாத்திரங்களில் இந்த வித்தியாசங்களுக்கு ஏதேனும் ஆதாரமுண்டா? இடையில் புகுத்தப்பட்ட இந்த பேத வழக்கத்தை நாம் ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? பிராமணர் உயர்வு என்றும் மற்றவர் தாழ்வு என்றும் நாம் ஏன் கொள்ள வேண்டும்? சகல அக்கிரமங்களைச் செய்தாலும் ஒரு பிராமணன் உயர்வு என்றும் எவ்வளவு தூயவழக்கமும் அறிவுமுள்ளவனாக இருந்தாலும் ஏனையோர் தாழ்வு என்றும் கொள்வதுதானா நியாயம்? தீண்டாதவர்கள் என்று ஒதுக்கி வைத்துக் கட்டுப்பாடு செய்துவிட்டு அவர்கள் சுசீலமாக இல்லையென்று சொல்வதில் என்ன அர்த்தம்? அவர்கள் மாடுதின்கிறார்கள். என்று சொல்வதும் விந்தைதான்? மாடுதின்னும் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாய் இருக்கும் பொழுது நமது தேசத்தில் பிறந்த இவர்களை அதற்காக நாம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடத்த வேண்டும். இது நமது
மதம் என்பதின் குற்றமல்லவா? இப்படி யெல்லாம் செய்வதால்தானே நமது மக்கள் எல்லோரும் இதர மதங்களில் சேர்ந்துகொண்டு வருகின்றார்கள். திருவாங்கூர் ராஜ்யத்தில் சுமார் 40 லட்சம் ஜனங்களென்று கணக்கிருக்கும் பொழுது இப்பொழுதுள்ள ஜனக்கணிதக் கணக்குப்படி 16 லட்சம் கிறிஸ்தவர்களும், சுமார் 4 லட்சம் முகமதியர்களுமாக சுமார் 20 லட்சம் ஜனங்
கள் அன்னிய மதத்திவிறங்கி இருக்கின்றனர். பாக்கியுள்ள 20 லட்சத்திலும் சுமார் 12 லட்சம் ஜனங்கள் தீண்டாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நிலைமையானதற்கு நம் மதக் கொடுமைதான் காரணம். ஆகவே, அவை களை அடியுடன் ஒழித்தால்தான் நாம் சுகப்படுவோம். பிராமணர்களைப் போல் மதக் கட்டுப்பாடுகளை வற்புறுத்தும் பெயர் வழிகளிலும், இதர ஜாதி
களும் இல்லாமலில்லை. அவர்களையும் நாம் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் பார்ப்பனர்கள்தான் இவைகளுக்கு காரணமாகையாலும் அவர்கள்
நம் நாட்டுக்கு வந்த பின்புதான் இவ்வாறான மூடப்பழக்கங்களெல்லாம்
குடி அரசு - 1927 (3) 388
அவர்களால் ஏற்பட்டதாகையாலும் அவர்களைத்தான் முதலில் குறை கூற வேண்டியிருக்கின்றது. இவர்கள் நிலைக்க வைத்த மதம் ஆசாரம் முதலிய வைகளை நாம் முதலில் ஒழித்தால்தான் நமக்கு சுயமரியாதையும் அதன் மூலம் சுயராஜ்யமும் கிடைக்கும். இன்னும் சடங்குகளின் பேரால் நாம் பிராமணருக்குக் கொடுப்பதுதான் மோட்சம் என்று நினைத்து ஏராளமான பணத்தைச் செலவிடுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை ஏழை கட்கும் அங்கஹீனர்களுக்கும் கஷ்டப்பட முடியாதவர்களுக்கும் உதவாமல் சோம்பேரிகளாகிய இவர்களுக்கா தர்மம் செய்வது. சற்று யோசித்து இதில் ஏதேனும் புண்ணியம் இருப்பதாகப் படுகின்றதா என்று பாருங்கள். இதெல்
லாம் அறிவீனத்தையும் நமது சுயமரியாதை இன்மையையுமே காட்டுகின்றது தர்மம் செய்ய வேண்டியது அவசியம்தான். ஆனால் தகுதியை கருதி நாம் அதை நடத்த வேண்டும். அவ்வகையில் நாம் நடந்து வந்தால்தான் நமக்கு கதி மோட்சம் உண்டு.ஆகவே, சகோதரர்களே! இந்த மூட நம்பிக்கைகளை: எல்லாம் உதறித்தள்ளி நீங்கள் கயமரியாதைக்குப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு : 22.11.27 பேராவூரணியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு - தலைமை உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1927
389 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
எதிர்பார்த்த எதிர்ப்புகள்
1
நாம் சில காலமாக எதிர்பார்த்திருந்தபடியே நமது தொண்டிற்கு ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும், கல்யாணசுந்தர முதலியாரும் வெளிப்படை
யாய் வந்து எதிர்க்கநின்று விட்டார்கள். இனி இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இவர்களை மூடி மூடி வைத்து எவ்வளவு தூரம் சரிப்படுத்த பார்க்கலாம் என்று நினைத்தோமோ அவ்வளவுக்கவ்வளவு அஸ்திவாரத்துடன் எதிர்க்க சவுகரியம் செய்து கொண்டு ஆரம்பித்துவிட்டார்கள்.
ஸ்ரீவரதராஜுலு வழக்கம்போல் ஒரு கொள்கையும் இல்லாமல் வாயில் வந்த வார்த்தைகளை உளறிக் கொண்டு தேசீயம் என்கின்ற ஆயுதத்தின் மூலமாய் மறுபடியும் வெளியாய்விட்டார். ஸ்ரீ முதலியார், அவருக்கு அண்ணனாய் சமயம் சீர்திருத்தம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு வெளியாய்விட்டார். எனவே இவைகளுக்கு பதில் சொல்லித் தீரவேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. இருவரும் தாங்கள் ஆத்திரப்படும் விஷயம் இன்னது என்பதைக் குறிப்பிடாமலும் நமது பெயரையும் நமது பத்திரிகையின் பெயரையும் நாம் என்ன சொல்கின்றோம் என்பதையும்
குறிப்பிடாமலும் நமக்கும் நாம் எழுதினவைகளுக்கும் தாங்கள் என்ன சமாதானம் சொல்லுகிறார்கள் என்பதைக் குறிப்பிடாமலும் ஜாடை பேசும் குணத்தை மாத்திரம் கையாண்டு வருகிறார்கள். வரதராஜுலுவின் குட்டிக்கரண விஷயமாயும் அவர் அய்யங்காரானதையும் வெளிப்படையாய் சென்ற வாரம் விவரமாய் குறிப்பிட்டோம். அதில் ஒன்றுக்காவது ஒழுங்கான
பதில் இல்லை. மறுக்கவும் இல்லை. அன்றியும் அவர் இப்போது விளம்பர: மடையப் பிடித்திருக்கும் ராயல் கமிஷன் பகிஷ்காரப் புரட்டையும் புட்டுப்புட்டு வெளியாக்கினோம்.
அவைகளிலும் ஒன்றுக்காவது பதில் இல்லை. ஆனால் என்ன பதில் என்றால் வெகு பயங்காளித் தனத்துடன் சந்துகளிலும் பொந்துகளிலும் முட்டாள்கள் என்றும், இழி குணத்தவர்கள் என்றும் எழுதுவதுடன் தனக்கு உள்ள ஆத்திரத்தை மாத்திரம் கொட்டிவிட்டு அய்யங்கார் அடிமையாகப்
குடி அரசு - 1927 (3) 390
பார்க்கிறார். ஸ்ரீ முதலியாரோ தனது கல்வி, பழக்கம், ஒழுக்கம், ஆராய்ச்சி என்பவைகள் இவ்வளவையும் அடியோடு மறந்துவிட்டு “கயமை, *இழிதுறை” என்கின்ற பேச்சைக் கட்டிக்கொண்டு பார்ப்பனர்களை அபயம் கொள்ளுகிறார். இவ்விருவரின் நிலைமைக்கும் இரங்குகின்றோம்! இரங்குகின்றோம்! இருவரும் நம்மை குற்றம் கூறும் தத்துவம் முடிவில் ஒன்றேதான். அதாவது “ஜாதி மத வேற்றுமைகளை கிளப்பிவிட்டு தலைவர் பட்டம் சூட்டி தாண்டவமாடும் முட்டாள்கள்” என்று ஒருவரும், “இயற்கை நோக்கை உணரும் அறிவாற்றல் வாய்க்கப்பெறாத ....சிலரால் நிகழ்த்தப் பெறும் சீர்திருத்தத்தால் உலகில் அமைதி இன்மையும் பிறவும் ஏற்படும்”
என்று மற்றொருவரும் எழுதுவதின் மூலம் எதிரிகளுக்கு நம்மைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இப்படி இவர்கள் நம்மைக் காட்டிக் கொடுப் பதன் மூலம் பார்ப்பனர்களை தஞ்சமடைய கருதுவதுதான் இவர்களது தற்கால தொண்டின் தன்மையாய் முடிந்துவிட்டது. மற்றபடி
இவர்கள் உண்மை யிலேயே பொது நலத்தில் கவலை கொண்டவர்களானால் இன்னார் இன்னது சொல்கின்றார். இன்ன பத்திரிகை இன்னபடி எழுதுகின்றது. அதனால் இன்னது நடந்துவிட்டது என்று சொல்லி இவ்வளவு ஆத்திரப் பட்டார்களானால் அதில் மனிதத்தன்மை உண்டு. பெயரையும் பத்திரிகை யையும் வெளியிடுவதிலும் கூட பயந்துகொண்டு இவர்களை குற்றம் சொல்லும் பத்திரிகையையும் ஆசாமியையும் அறிந்தால் அதன் மூலம் தங்கள் யோக்கிய தையின் உண்மை வெளியாகி விடுமோ என அஞ்சி பொது வாக யாரையோ பேசுவதுபோல் பேசுகின்றார்கள். இதிலிருந்தே இவர்களது நிலைமை விளங்கலாம்.
நிற்க, “தமிழ்நாடு” டிசம்பர் 14 -ந்தேதி பத்திரிகையில் “சர்க்கார் பவை சம்பாதிக்கவோ வயிற்றுப் பாட்டிற்காகவோ ஜாதி மத வேற்றுமைகளை: கிளப்பி விட்டு தாண்டவமாடும் முட்டாள்களுக்கு அமீர் உபதேசம் ஆலகால விஷம் போல் தோன்றலாம்” என்று எழுதி இருக்கின்றார். அதி லேயேபிறிதோர் இடத்தில் “தென்னாட்டில் இரண்டொரு பிராமணரல்லாதார். தேசீயத்தையும் தேசபக்தர்களையும் தாக்கி என்னதான் வசை புராணம் பாடினாலும் காட்டிலிட்ட கூச்சலாகவே முடியும்” என்கின்றார்.
இதில் “ஜாதி மத வேற்றுமைகளை கிளப்பிவிட்டு தாண்டவமாடும் முட்டாள்கள் “யார்” என்றும், எதனால் முட்டாள்கள் ஆனார்கள் என்றும் நாம் கேட்கின்றோம். ஜாதி மத வித்தியாசத்தை ஏற்படுத்தினவர்களா அல்லது அதை அழிக்க வேண்டுமென்று மண்டையை உடைத்துக் கொள்ளுகின்ற வர்களா? அல்லது திருத்தத்திற்கு குறுக்கே நிற்பவர்களா? அன்றியும் அவைகள் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்கின்றோம். ஜாதி, மத, பேதம் கிளப்புவதாகவும் இதனால் வயிறு பிழைப்பதாகவும் இவர். யாருடைய எந்த வாக்கியத்தில் கண்டார். அப்படி கண்டதற்கு என்ன சமாதா னம் சொல்லி இந்த புத்திசாலி அவர்களை கண்டிக்கிறார் என்று கேட்கின்
391 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
றோம். ஆகவே அவைகளை குறிப்பிடாமலும் சமாதானம் சொல்லாமலும் பாமர மக்களை ஏமாற்ற இம்மாதிரி விஷமம் செய்து காரியத்தைக் கெடுத்து
எதிரியின் காலுக்குள் நுழைவது யோக்கியமானதா அயோக்கியமானதா என்று கேட்கின்றோம். மூடத்தனம் என்பது அநேகமாய் மன்னிக்கக்கூடியதாகி
விடும். அயோக்கியத்தனத்தை மன்னிக்க முடியுமா? தேசீயத்தையும், தேச பக்தர்களையும் இரண்டொரு பிராமணரல்லாதார் வைகிறார்கள் என்பதில் எந்த தேசீயத்தை, எந்த தேசபக்தரை, எந்த பிராமணரல்லாதார் எப்படி வைதார் என்பதை இப்போதாவது சொல்லட்டும். அதைச் சொல்ல தைரிய மில்லாதவர்கள் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரியிட்டு அழுவதில் பயன் என்ன? யோக்கியமும் தைரியமும் மனிதத் தன்மையும் இருந்தால் தைரியமாய் வெளியில் வந்து விஷயங்களை சொல்லி வாதாடி மக்களிடை மெய்ப்பிக்கட்டும். அப்போது நாம் சந்தோஷமாக பின்பற்றத் தயாராயிருக்கின்றோம். அஃதில்லாமல் இம்மாதிரி விஷமத்தனம் செய்யும் காரியங்களை ஒருக்காலும் விட்டு வைக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.
பஹிஷ்காரத்தைப் பற்றி “குடி அரசில்” நாம் சுமார் 5, 6 தலையங்கங்
கள் எழுதியும், பலவிடங்கள் 10.12 உபந்நியாசங்களில் செய்துமிருக்கிறோம். அவற்றுள் எதற்காகவாவது எந்த பத்திரிகையாவது எந்த தலைவர்களாவது பதில் சொன்னார்களா? என்று கேட்கின்றோம். நாமும் நமது பத்திரிகையும்
பதில் சொல்லக்கூடிய யோக்கியதை உடையவைகள் அல்ல என்று கருதியதாக சொல்லப்படுமானால் அலக்ஷியம் செய்துவிட்டு பேசாமல் வாயை மூடிக் கொண்டு வேறு வேலை பார்க்க வேண்டுமேயல்லாமல் ஜாடை யாக நம்மைப் பற்றி வயிற்றுச் சோற்றுக்காரர், சுயநலக்காரர், உத்தியோக ஆசை பிடித்தவர்கள், சர்க்கார் மனுஷர்கள் என்பதான அற்பத்தனமான வார்த்தைகளை ஏன் உப யோகப்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம். இம்மாதிரி நடந்து தீர வேண்டிய ஒரு அவசியம் வந்தவர்கள் வயிற்றுச் சோற்றுக்காரர்கள் முதலியவர்களாயிருக்கக் கூடுமா அல்லது உண்மை என்று பட்டதை எழுதுகிறவர்களும், பேசுகிறவர்களும் வயிற்றுச் சோற்றுக் காரர்களாயிருக்க முடியுமா? என்பதை பொது மக்களே யோசித்துப் பார்க்
கட்டும். தற்கால நிலையில் சுயமரியாதைக்கென்றோ தேசத்தின் நன்மைக் கென்றோ ராயல் கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லுகின்ற வர்கள் யோக்கியர்கள் என்றும் அவர்களை பின்பற்ற வேண்டுமென்றும் கடவுள் சொல்வதானாலும் அதை ஒன்று முட்டாள்தனமென்றோ இல்லா விட்டால் அயோக்கியத் தனமென்றோதான் சொல்லத் தயாராயிருக்கின்றோம். கல்லிலும் எழுதத் தயாராயிருக்கின்றோம். காரணங்கள் *குடி அரசில்” ஒன்றரை மாதகாலமாய் காட்டி வந்திருக்கின்றோம். இனியும் கேட்டால் சொல்லத் தயாராயிருக்கின்றோம். சுயமரியாதையும் தேசாபிமானமும் ராயல் கமிஷன்பகிஷ்காரத்தில் இல்லை. இருப்பதாக சொல்ல வருவார்களானால் இதைவிட அதிகமாகவும் கவனிக்க வேண்டியதாயுமிருக்கின்ற இடத்தை
குடி அரசு - 1927 (3) 392
இக்கூட்டத்தார் கவனிக்காமல் மறைத்து வைத்துக் கொண்டு பித்தலாட்டங்கள். செய்து வேண்டுமென்றே மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள். அந்த பித்தலாட்டங்கள்தான் இதைக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. ராயல் கமிஷன் நியமனத்தினால் தங்கள் சுயமரியாதையை இழந்து விட்டதாகக்
கருதிக் கொள்ளும் மக்கள் தேசத்தில் மிகச் சிலரேயாவர். பல ஆண்டுகளாக வேறு பல வழிகளில் சுயமரியாதையை இழந்து தவிக்கும் ஜனங்கள் கோடிக்கணக்காக இருக்கிறார்கள். எனவே இக்கோடிக்கணக்கான மக்களுக்கு சுயமரியாதையைத் தேடிக் கொடுப்பதுதான் உண்மை தேசீயமாகும்.
இனி சீர்திருத்தத்தைப் பற்றி உபதேசம் செய்யும் ஸ்ரீ முதலியாரைப் பற்றி யோசிப்போம். இதுவும் அதே டிசம்பர் 14 ந்தேதி “நவசக்தி”யில் கண்டதையே குறித்து சமாதானம் சொல்லுகின்றோம். இருவரும் ஒருமித்து இக்கருமம் ஏற்றார்களோ என்று சந்தேகப்பட வேண்டியதானாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. சீர்திருத்தத்தைப் பற்றி உபதேசம் செய்ய முன் வந்தவர்கள் தங்களது சீர்திருத்தம் இன்னது என்றும், அதற்காகத்தான் இன்னது செய்து வந்திருக்கின்றேன் என்று குறிப்பிட்டு விட்டு மற்றவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முன்வரட்டும். அதில்லாமல் எவராவது ஏதாவது செய்தால் அதைக் குறிக்கிட வருவது எப்படியோக்கியமாகும். தவிர மேற்படி தேதி “நவசக்தி” தலையங்கத்தின் இறுதியில் “இன்று பொது முறைபற்றி எழுதலானோம். சிறப்பு முறைபற்றி சமயம் நேர்ந்துழி எழுதுவோம்” என்று குறிப்பிட்டிருக்கின்றது. ஆதலால் அதை விரைவில்
எதிர்பார்க்கின்றோம். இப்பொழுது எழுதி இருப்பது வழ வழவென்று “வெண்டைக்காய் குழம்பு” போல் இருக்கின்றதேயல்லாமல் குறிப்பு இல்லை. ஆனாலும் அதற்கும் சமாதானம் சொல்லுவோம். பொதுவாக மக்கள் சீர்திருத்தம் சமய சீர்திருத்தம் என்பவற்றுள் நாம் தற்காலம் ஆசைப்படுவது
மக்கள் சீர்திருத்தமேயொழிய எவ்வித சமய சீர்திருத்தமுமல்ல வென்பதையும் இம்மக்கள் சீர்திருத்தத்திற்கு இடையூறாயிருக்கும் எந்த சமயமோ சமூகமோ திருந்தவோ, அழியவோ நேரிடக்கூடுமானால் அதைப் பற்றியாம் கொஞ்சமும் பின்வாங்கப் போவதில்லை என்பதையும் நம்மை எதிர்ப்போர்கள் உணர வேண்டுகின்றோம். மக்களுக்காக சமயமேயொழிய சமயத்திற்காக மக்களல்ல என்பதே நமது முடிவு. ஆகவே, நம்முடைய இம்
முயற்சிக்கு பாமர மக்களின் அறியாமையால் ஏற்படும் எவ்வித இடையூறை
யும் பொறுமையுடன் ஏற்று சமாளிக்க எப்போதுமே தயாராயிருக்கின்றோம்.. ஆனால் சமயங்களின் பேரால் என்று சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் என்றும், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும், சமயவாதிகள் என்றும், சமய ஆச்சாரியார்கள் என்றும் சொல்லிக் கொண்டு வரும் எதிர்ப்பு களுக்கு ஒரு சிறிதும் பொறுமை காட்ட இணங்கோம் என்பதை அவரவர்கள் உணரட்டும். ஏனெனில் காலம் போதாது. அன்றியும் இந்தக் கூட்டங்களேதான் இப்போது நமது நாட்டு மக்களின் உண்மை விடுதலைக்கு எமனாய் இருப்ப வைகள்,
393 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
இருந்தும் வந்தவைகள் என்பது நமது அபிப்பிராயம். உண்மையான சீர்திருத் தங்கள் தோன்றும்போது இக்கூட்டத்திற்குத்தான் முதல் முதல் ஆபத்து வரும். ஏனெனில் அப்படிச் செய்த நாடுதான் இன்று பரிபூர்ண விடுதலை அடையும் வழியில் போய்க் கொண்டிருக்கின்றது. ரசியாவில் பாதிரிகளைத் தூக்கில் போட்ட பிறகே அந்நாடு இன்று உயர்வு, தாழ்வு, முதலாளி, தொழிலாளி என்ற வித்தியாசம் இல்லாத நிலைக்கு போய்க்கொண்டிருக்கின்றது. சீர்திருத்தக்காரனுக்கு முக்கியமாய் அறிவு வேண்டுமே ஒழிய ஆராய்ச்சி வேண்டியதில்லை. சமயம் என்பதை எந்த அர்த்தத்தில் “நவசக்தி* உபயோகப்படுத்துகின்றது என்பது நமக்கு விளங்காமையால் நாம் இப்போது அதைப்பற்றி எழுத முடியவில்லை. ஆனால் நம்மிடம் கோபமும் வெறுப்பும் இருப்பதாகவும் இதனால் கேடு வரும் என்றும் அது எச்சரிக்கை செய்கின்றது. இதை நாம் ஒரு சிறிதும் லக்ஷியம் செய்யவில்லை. ஏனெனில் உலக மக்களுக்கு கோபமும் வெறுப்பும் மனித இயற்கை என்பதை முதலியார்
அறியட்டும். அஃதில்லாதவன் மனிதனல்ல என்பதையும் மனிதனுக்கு அது அவசியம் வேண்டும் என்பதையும் ஸ்ரீ முதலியார் உணரட்டும். அன்றியும் தான் உள்பட இன்ன மனிதனிடத்தில் கோபமும் வெறுப்பும் இருந்ததில்லை என்றாவது அல்லது முதலியாரின் சமயத்தின் பேரால் காணும் இன்ன தெய்வத்தினிடம் கோபமும் வெறுப்பும் இருந்ததில்லை என்றாவது ஸ்ரீமான் முதலியார் எடுத்துக் காட்டட்டும். அஃதின்றி வீணே நம்மை காட்டிக் கொடுப்பதற்கும் சில பார்ப்பனர்களுக்கு தான் நல்ல பிள்ளை ஆவதற்கும் மாத்திரம் இதைச் சொல்லி குற்றம் சுமத்தப் பார்ப்பது நேர்மையல்ல வென்றே சொல்லுவோம். மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உடையவன் அன்புகாட்ட வேண்டிய இடத்தில் அன்பும், கோபம் காட்ட வேண்டிய இடத்தில் கோபமும், விருப்பு காட்ட வேண்டிய இடத்தில் விருப்பும், வெறுப்பு காட்ட வேண்டிய இடத்தில் வெறுப்பும் காட்டித்தான் தீரவேண்டும். இது இயற்கை. உதாரணமாக. எவ்வளவு பசியோடிருப்பவனானாலும் அவனுக்கு சகலவித பலகார பக்ஷணங்களை இலையில் பரிமாறி உட்கார வைத்து அவ்விலையின் ஒரு மூலையில் கழற்சிக் காயளவு மலம் வைத்தால் வைத்தவனிடம், கோபமும், மலத்தினிடம் வெறுப்பும் உண்டாகாதா என்று கேட்கின்றோம். மனிதனுடைய ஒவ்வொரு அவயவங்களுக்கும் கோபமும் வெறுப்பும் இருப்பது ஸ்ரீ முதலியார் அறியாரா என்று கேட்கின்றோம். மூக்கு நல்ல வாசனையை எப்படி முகர்கின்றது துர்வாசனையை எப்படி வெறுக்கின்றது. இதுபோல் ஒவ்வொரு அவயவத்தையும் கவனித்துப் பார்க்கட்டும் என்று வேண்டு கின்றோம்.
ஸ்ரீமான் முதலியார் நாம் இன்ன இடத்தில் உபயோகித்த கோபமும் வெறுப்பும் கூடாது என்று சொல்ல முன்வராமல் அவ்வார்த்தையைச் சொல்வதால் உலகத்தை ஏமாற்றலாம் என்கின்ற கருத்துக்கொண்டு பழிசுமத்த வந்தது யோக்கியமா என்று மறுபடியும் கேட்கின்றோம். அன்றியும்
குடி அரசு - 1927 (3) 394
ஸ்ரீ முதலியாரும் யோக்கியமான எண்ணத்துடன் கண்டிக்கப் புறப்பட்டால் அவர் கண்டனங்களுக்கு நாம் சொல்லும் குறிப்புகளை தனது பத்திரிகையில் போட முன்வரட்டும். அப்படிக்கில்லாமல் அன்னியருக்கு கையாளாய் இருந்து கொண்டு வெறும் எதிர்ப்பு வேலைகளை மாத்திரம் முறை தவறிய வழியில் ஆற்ற முன்னிற்பது அழகாகுமா? என்று கேட்கின்றோம். நியாயமான எதிர்ப்புகளை மனப்பூர்வமாய் வரவேற்கின்றோம்.
குரானையும் ஒதுக்கி உண்மையைக் கடைபிடிக்கும் கமால் பாஷா வீரனையும், முல்லாக்களையும் ஒதுக்கி சமத்துவத்தை காண விரும்பும் அமீர். வீரனையும், பாதிரிகளை தூக்கிலிட்டு சுதந்திரமளிக்கும் ரஷிய வீரனையும் கண்டபிறகு அழுக்கு மூட்டைகளுக்கு பேச வாயேது என்று கேட்கின்றோம்.
காந்தியடிகள் என்றும், மகாத்மா என்றும் இவர்களால் தற்காப்புக்காகக் கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் காந்தி அவர்களே ஒரு சமயம் என்ன சொன்னார். என்றால் ஒரு சமயம் ஒரு இந்து என்பவன் தன்னுடைய மனைவியை ஒரு மகமதியன் தன் எதிரில் கற்பழித்து விட்டதாக வேதனைப்பட்டு வந்து தன்னிடம் பிராது சொல்லும்போது அவர் அளித்த பதில் என்னவென்றால், “அட பாவி! இங்கு வந்து சொல்லும்வரை உனக்கு உயிர் வைத்திருக்க இஷ்டம் இருந்ததா?” என்றுதான் கேட்டாராம். இதன் கருத்து என்ன? தற் கொலை செய்து கொள்ள சொன்னாரா என்றால் இல்லவே இல்லை. மற் றென்னவென்றால் அங்கேயே உன் மனைவியை கற்பழித்த கொடியவன் மீது ஒரேபாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனைக் கொன்றிருக்க வேண்டும். அப்படிக் கில்லாத பட்சம் அம் முயற்சியில் உன் உயிரை இழந்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். இந்நிலையில் காய்தல், உவத்தல், முனைதல், எறிதல் ஆகியவைகள் கூடாது என்பது போன்றதெல்லாம் எங்கே போயிற்றென்று கேட்கின்றோம்.
முடிவாய் ஒன்று சொல்லுகின்றோம். உண்மைச் சீர்திருத்தமும் சமத்து
வமும் ஏற்பட்டு மக்கள் ஒன்றுபட வேண்டுமானால் மதம்,சமயம், வேதம், புராணம் என்கின்ற அழுக்கு மூட்டைகள் ஒழிய வேண்டும். அவைகளை
தூக்கி திரிந்து கொண்டிருக்கும் வரை ஒருக்காலமும் வெற்றியடைய முடியாது.
எப்படியோ பல மதங்கள், பல சமயங்கள், பல வேதங்கள், பல தெய்வங்கள் கற்பிக்கப்பட்டாய்விட்டது. அவைகள் ஒவ்வொன் நினாலும் மக்களை அடிமைப்படுத்தியாய்விட்டது. குரங்கு பிடியாய் இவற்றைப் பிடித்துக்கொண்டு சமய ஞானம் பேசுகிறவர்களிடம் காலத்தை கழிப்பது வீண் வேலையேயாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டே இருக்கின்றார்கள். மண்ணையும் சாம்பலையும் குழைத்து பூசிக் கொள்வதே சமயமாய்விட்டது.
395 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
பார்ப்பானுக்கும் பாஷாண்டிக்கும் அழுவதே தர்மமாகிவிட்டது.
கூடா ஒழுக்கங்களும், அண்டப் புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளை திருப்பித் திருப்பிப் படிப்பதே காலட்சே பமாய்விட்டது.
அன்புமயமான உண்மைக் கடவுளை அடியோடு மறந்தாய் விட்டது.
ஒழுக்கத்தினிடத்திலும் சத்தியத்தினிடத்திலும் மக்களுக்குள்ள கவலையே அடியோடு நீங்கிவிட்டது.
வலிவுள்ளவன் வலிவில்லாதவனை இம்சிப்பதே தர்மமாய் விட்டது.
பணக்காரன் ஏழைகளை அடிமைப்படுத்துவதே முறையாய் விட்டது.
தந்திரசாலிகள் சாதுக்களை ஏய்ப்பதே வழக்கமாய்விட்டது.
அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப்படுத்துவதே நீதியாகிவிட்டது.
வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு உலகத்தில் இடமே
இல்லாமல் போய்விட்டது.
இவைகளைச் சீர்திருத்த காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? இதனால் கலகம் உண்டாவதானால் அதற்கு பின் வாங்க வேண்டுமா? யாராவது மதம், சமயம், புராணம், சாஸ்திரம், தேவாரம், திரு வாசகம், பிரபந்தம் என்கிற நிழலில் போய் ஒளிந்து கொண்டு எதிர்ப்பாரானால் அதற்காகப் பயந்துகொண்டு ஓட வேண்டுமா என்று கேட்கிறோம். அக்காலம். மலையேறிவிட்டது என்பதை ஸ்ரீ முதலியார் நன்றாய் உணரட்டும். பாட்டி கதை இனி பலிக்காது என்பதை முதலியார் கூட்டங்கள் நன்றாய் அறியட்டும். திருந்தினால் திருந்தட்டும் இல்லாவிட்டால் அழியட்டும் என்கின்ற இரண்டி லொரு கொள்கையிலேதான் இறங்கி இருக்கின்றோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டியதில்லை. ராஜி பேசுவதற்கும் இனி இடமில்லை, கண்ணியமாய் குறிப்பாக வரும் எதிர்ப்புகளை ஆவலோடும், பணிவோடும் வரவேற்று சமாதானம் சொல்ல முயலுகின்றோம்..
குடி அரசு - தலையங்கம் - 18.12.1927
குடி அரசு - 1927 (3) 396
முழமயுமா?
இவ்வருஷம் நடைபெறப்போகும் காங்கிரஸ் மகாநாட்டில் காங்கிரஸ் கொள்கையில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்பதாக சேலம் மகா நாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நேயர்களுக்கு நினைவிருக் கலாம். அதன் கருத்தாவது:-
“இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெருதற்கும்
ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்கள் விரோதமாயிருப்பதால் அவற்றையும் ஒழிப்பது காங்கிரசின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். இது அடுத்த காங்கிரசில் திருத்தப்படவேண்டும்”” என்பதே.
ஆகையால் இத்தீர்மானங்களை பிரேரேபிக்கவேண்டும் என்பதாக ஸ்ரீ ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்களை பலர் கேட்டுக் கொண்டுமிருக் கிறார்கள். அவரும் ஆகட்டும் என்று வாக்களித்திருக்கின்றார். ஆனால் அவர் இவ்வருஷம் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தெரிந்தெடுக் கப்பட்டால் தான் இதை பிரேரேபிக்க முடியும். இந்த உளவு தெரிந்த பார்ப்ப னர்கள் கண்டிப்பாய் இவ்விஷயத்தில் சூழ்ச்சி செய்வதாயிருந்தாலும் பார்ப் பனரல்லாத மாகாணக் கமிட்டி மெம்பர்களாவது அவரை தெரிந்தெடுத்து இந்த விஷயத்தைப் பற்றி பேசவாவது சந்தர்ப்பம் அளிப்பார்களா என்பது
உறுதி சொல்லமுடியாததாகவே இருக்கின்றது.
குடி அரசு - செய்தி விளக்கம் - 18.12.1927
397 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
o) எண் 2041 i e 28 S கடி எ
வாரப்பழிப்பு காக் வளப்பம் டக்க [ச்பாகள் விபவ அகத & ] ஆண்கள் உல எமர், வம் க்கம் பத்
அதன ஜெர்மன் எலல்டிசில் விளக்கு நை மைல் போல் சின்
விழி ஸ்கல் கொண்டு கோலின் **தாருள் இஸ்லாம் வாழா 0 வளப்பத்நிரிகை.
கே கலாதி | இலதப்போனைற s ஊய்பழிறிள்கை இதை கொள்கி, இது செரு சால் நட்ட | அற வததி ஓக்கே வாடப்பத்நிிகை டட | அய்போன். கடத்தப்வில்தது... க நலம்] ஒவஞ்வினை விடுவதை கண்டத்து உன். யலா: S A s இரவும் 00 | வடடல agwedar ரூ.6 தாண்: கொள் w5y . T80 வாழ்க அதி இரும் ட அக்கட கல்ற ஈதுருள் இல்லாம்" ஆபிஸ், ணா சா 0. " . நல்ல P & [ | ஊண்
குடி அரசு - 1927 (2) 398
“நவசக்தி” யில் எழுதிய
6 & - மதமும் o . விரும்
என்ற கட்டூுரைக்குச் சமாதானம்
ஸ்ரீமான் தூத்துக்குடி கா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் “இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்பதாக ஒரு வியாசம் 7-12-27 தேதி
*நவசக்தி”யில் எழுதி இருக்கிறார். அதற்கு சமாதானமாக பல கனவான்கள் ஆராய்ச்சி மூலமாகவும் மற்றும் பொதுவாகவும் வியாசங்கள் எழுதிபிரசுரிக்க நமக்கு அனுப்பி இருக்கின்றார்கள். நாம் அவற்றை அவ்வியாசம் தோன்றிய பத்திரிகைகளுக்கு அனுப்பும்படி எழுதி விட்டோம். நம்மையும் பிரசுரிக்கும் படி வற்புறுத்தினால் ஒருக்கால் பிரசுரிக்கலாம். ஆனாலும் அவைகள். பிரசுரமாகும் முன்பு நமது சமாதானத்தை தெரிவிக்க விரும்புகிறோம். அவ்வியாசத்தின் சாராம்சத்தை முதலில் சுருக்கமாக குறிப்பிடுவோம்.
1 “நாயக்கர் பேச்சிலும் எழுத்திலும் இந்து மதத்தை மனம் போனவாறு
இழிந்து கண்டித்து வருகிறார்...
2 பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று கூறும் முறையில் அவரது கூற்றால் அச்சமூகத்தாருக்கு எவ்வித மதஉணர்ச்சியும் அற்றுப்போகும்...
3. மதவுணர்ச்சியற்று நாஸ்திகம் பரவும்படி செய்வதே இவரது தொண்டாயிருக்கின்றது......
4. இத்தொண்டின் பயனாய் தேசாபிமானிகள், மதாபிமானிகள் ஆகியவர்கள் மனம் புண்படுகின்றது........
5.௪ இவர் ஆராய்ச்சி செய்து பேசுகிறாரா? . 0)அல்லது மக்களை வேறு மதத்திற்காவது விரட்டியடிக்கப் பேசு
899 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
கிறாரா? என்று எண்ண வேண்டியிருக்கிறது......
6. ௨ பக்தி மூடநம்பிக்கை என்கின்ற படுகுழியில் என்கின்றார்.
b. அப்படியானால் பற்பல அற்புதங்களைச் செய்து உலகத்தை வாழ்விக்க வந்த திருஞான சம்மந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், பன்னிரு ஆழ்வார் முதலியோர்கள் எல்லாம் இந்த படுகுழியில் வீழ்ந்தோர்கள் போலும்...
7. சைவம், வைணவம், சமணம், பெளத்தம், துவைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம், வீர சைவம் முதலியன இந்து சமயம் என்ற விரிந்த மதத்தின் பாற்படும் என்பது யாவரும் அறிவர். இது நாயக்கருக்கு தெரிந்தும் தெரியாததுபோல் பேசி மக்களை மயக்கு
கிறார். “இந்துமதம்” என்கின்ற பெயர் எப்படி வந்ததென்பது சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்...
8. மத சம்மந்தமான எந்த நூலையும் பார்க்க யாருக்கும் தடையில்லை. எல்லாம் கடையில் விற்கின்றது. யாரும் நாக்கை அறுக்க மாட்
டார்கள்...
9. கோவிலை நாயக்கர் கூத்துச்சாலைபோல் நினைக்கின்றார்...
10. கல் மனதையும் கரைக்கும்படியான சக்தி சில ஆலயங்களில் இருப்பதை நாயக்கர் அறிவாரா.......
1. இக்கலிகாலத்திலும் பல இடங்களில் எத்தனையோ அற்புதங்கள் நடக்கின்றன.
2. விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான ஜனங்கள் கால்வலி மெய்வலி பார்க்காமல் நடந்துபோய் சுவாமி தரிசனம் செய்து ஆனந்த பரவசமாகின்றதை பார்க்கின்றோம்...
18. அதை நிவர்த்திக்காமல் இந்து மதம், பக்தி, கோயில் முதலிய எல்லாவற்றையும் அழித்துவிட முயல்வது அறிவுடமையாகாது......
14. கெளதமர் இந்து மதத்திலுள்ள சில குறைகளை உணர்ந்து சில சீர்திருத்தங்கள் செய்து போதித்தார். அதுதான் பெளத்தமதம்.
8. அதுபோல் நாயக்கர் தமக்குத் தெரிந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனங்கள் நம்பத்தக்கது இன்னது, அனுசரிக்க வேண்டியது
குடி அரசு - 1927 (3) 400
இன்னது என்று தெளிவாகச் சொல்லி ஒரு மதத்தை ஸ்தாபிக் கட்டும்..........” என்று எழுதுகிறார்.
நமது சமாதானம்
அவற்றுள் (1) “நாயக்கர் இந்து மதத்தை கண்டிக்கிறார்” என்பது.
ஆம், கண்டிக்கிறோம். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்றும் இந்து என்கின்ற வார்த்தையே நமது பாஷை அல்லவென்றும், வட சொல்லிலோ மற்ற எந்த சொல்லிலோ இந்து என்கின்ற சொல் இல்லை யென்றும்! இதை ஒப்பாமலும் போதிய ஆதாரம் காட்டாமலும் இந்து என்கின்ற ஒரு வார்த்தை இருப்பதாக யாராவது வாதாடுவதானாலும்) அது இந்தியாவிலிருக்கும் மனிதரைக் குறிப்பதென்றும், உதாரணமாக, பங்காளத்
தில் இருப்பவன் பங்காளி, குஜராத்தில் இருப்பவன் குஜராத்தி, மலையாளத்
தில் இருப்பவன் மலையாளி என்பதுபோலவும், பிரான்சு தேசத்தவனை பிரன்சு என்றும், துருக்கி தேசத்தவனை டர்க் என்றும், ஜப்பான்காரனை ஜப்பானி என்றும், ஜர்மன் காரனை ஜெர்மன் என்றும் அழைப்பதுபோல் இந்து என்பது இந்நாட்டு மனிதனைக் குறிக்கும் சொல்லாகும் என்றும், இந்தியா தேசத்தவன் இந்து என்றும் இந்தியன் என்று அழைக்கப்படுவதோடு இந்தியா தேசத்திற்கும் ஆரியபாஷையில் இந்துஸ்தானம் என்றே வழங்கப்படுகின்றது என்றும் எனவே இந்து என்கின்ற சொல்லானது இந்தியா நாட்டில் வகிக்கின்ற எல்லா மக்களையே குறிப்பிடுவதேயல்லாமல் அது ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ அல்லது மதக்காரரையோ குறிப்பதல்ல என்றும் அல்லாமலும் தேசத்தின் பேரால் மதமே இருப்பதாக நாம் அறியவில்லை என்றும் (இவற்றையும் ஒப்புக் கொள்ளாமலும் ஆதாரம் காட்டாமலும் இதையும் மறுப்பதானாலும்”) இந்தி என்கின்ற பாஷையை பார்த்தாலும் அது ஆரிய பாஷையாகவே இருப்பதாலும், அது தமிழ்நாட்டு உச்சரிப்புக்கே பொறுத்த மற்றதாகவும் இருப்பதால் அது நமது மக்களுக்கு எவ்வகையிலும் சம்மந்தப் பட்ட சொல்லுமல்ல என்றும், அநேக தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருப்பதை ஸ்ரீமான் பிள்ளை அறியாரா என்று கேட்கின்றோம். இதையும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஆங்கில அகராதிகளில் அதாவது ஆரியர்கள் ஒப்புக்கொண்டு பழக்கத்தில் வைத்திருக்கிற - ஆரியர்களாலேயே எழுதப்பட்ட அகராதிகளிலும் இந்து என்கிற பதத்திற்கு அர்த்தமாக இந்தியன், இந்தியாவில் வசிப்பவன் ஆரியன், ஆரியக் கொள்கை, ஆரியமதம், ஆரியரை பின்பற்றுவோன், பார்ப்பனீயத்தில் நம்பிக்கையுள்ளவன், மகமதி யனல்லாதவன் அதாவது மகமதியர்களுக்கு எதிரானது என்பது போன்ற பொருள்களே குறிக்கப்பட்டிருக்கின்றனவே யல்லாமல் நம்மெல்லோரையும் கட்டுப்படுத்தத்தக்க ஒரு மதம் என்கிற பொருளில் அல்ல.
401 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
தவிர இந்து மதம் என்கின்ற வார்த்தையானது ஆரியர்களின் சமயம் பழக்கம் வழக்கம் என்பது முதலியவைகளைக் குறிப்பிடும் வேதம், சாஸ்திரம்,
புராணம், கதை என்பவைகள் முதலிய எவைகளிலாவது அல்லது தமிழ் மக்களின் பழக்க வழக்கமென்பது முதலியவைகளைக் குறிப்பிடும் பழந்
தமிழ் ஆதாரங்கள் என்பவைகள் எவைகளிலாவது இருந்ததாகவோ இருக் கின்றதாகவோ யாராவது சொல்லக் கூடுமா? என்று கேட்கின்றோம். ஆகவே பொருளற்றதான ஒரு வார்த்தையை ஒரு சமயம் என்பதாக ஏற்றுக் கொண்டு. அதற்கு அநாகரீகமானதும், மனித இயற்கைக்கும் நேர்மைக்கும் பொருத்த மில்லாததுமான விஷயங்கள் நிறைத்து வைத்திருக்கும் புத்தகங்களை: ஆதாரங்கள் என்பதாக வைத்துக் கொண்டு அதைக் கடவுள் சொன்னார். என்பதாக அதனிடம் குருட்டு விஸ்வாசத்தைக் காட்டிக்கொண்டு இருப்ப தோடு அதை நமது தலையிலும் சுமத்த வந்தால் அதற்கு நாம் எப்படி சம்மதிக்க முடியும்?
(2) தவிர இப்படிச் செய்வதால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு எவ்வித உணர்ச்சியும் அற்றுப்போகும் என்பது.
அற்றுப்போனால் குற்றமில்லை. சகல மத உணர்ச்சியும் அற்று மனிதத் தன்மையான சுயமரியாதை உணர்ச்சி மாத்திரம் வந்தால் போதுமானது. எந்தவிதமான மத உணர்ச்சிக்கும் மனிதன் அடிமையல்ல. மதம் என்பது அவனவன் இஷ்டத்தைப் பொறுத்தது. மனிதத் தன்மை உணர்ச்சி வந்து விட்டால் அல்லது அதற்கு விரோதமாயிருப்பவைகளை அழித்துவிட்டால் அவசியமான உணர்ச்சி வந்தேதீரும். இதற்கு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை...
(3) நாஸ்தீகம் பரவிவிடுமே என்று பயப்படுவது.
இந்த இடத்தில் நாஸ்தீகம் என்றால் என்ன என்று கேட்கிறோம். கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்று சொல்வது நாஸ்தீகமானால் அதைப் பற்றி யாவரும் கவலைப்பட வேண்டியதில்லை. கடவுள் என்பதாக ஒன்று இருக்குமானால் அதை இல்லாமல் செய்து விடவோ இல்லை என்று எண்ணும்
படி செய்துவிடவோ எந்த மனிதனாலும் முடியாது. அப்படி ஒரு சமயம் ஏதாவது ஒரு மனிதன் கடவுள் என்பதாக ஒன்று இல்லாமலோ இல்லைஎன்று எண்ணும்படியோ செய்து விடுவானானால் அப்பொழுது உண்மையிலேயே கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்றுதான் அர்த்தமேயொழிய, ஒரு மனிதனது செய்கையினால் கடவுள் இல்லாமல் போய்விட்டது என்பது அசம்பாவிதமானதாகும்.
தவிர கடவுள் உணர்ச்சியை ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் புகட்ட வேண்டும் என்று சொல்வதானால் அப்படிச் சொல்லுபவர் உண்மைக்
குடி அரசு - 1927 (3) 402
கடவுளை அறியாதவர் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
தவிரவும் சூரியன் இல்லை சந்திரன் இல்லை என்று ஒரு மனிதன் சொல்லிக் கொண்டு திரிவானானால் அதன் மூலம் மக்களுக்கு சூரியன் சந்திரன் என்கின்ற உணர்ச்சியற்றுப் போகுமா என்று கேட்கின்றோம். எத்தனையோ கோடி வஸ்துகளில் இரண்டு வஸ்துகளை எப்படி ஒரு மனிதன் இல்லாமல் செய்யமுடியாதோ அது போலவே கடவுள் என்பதாக ஒன்று இருப்பதாய் ஸ்ரீமான் சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் உண்மையில் உணர்வாரானால் கண்டிப்பாய் அதை மற்றொருவன் அழித்து விடுவா னென்றோ, மக்களுக்கு அவ்வுணர்ச்சியில்லாமல் செய்துவிடுவான் என்றோ அவர் பயப்படுவதாகச் சொல்வது கேலிக் கூத்தேயாகும்.
(4) நாயக்கர் இப்பிரசாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண்படுகின்றது என்பது.
இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? இமயமலைப் பனியால் மூடப் பட்டு குளிரால் அவஸ்த்தைப் படுகின்றது என்று அதற்கு யார் கம்பளிப் போர்வையைப் போற்றி குப்பை செத்தைகளை அரித்துப்போட்டு நெருப்பு வைத்து குளிர்காய வைக்க முடியும்? எரிமலை நெருப்பு ஜுவாலையில் கஷ்டப்படுகின்றது என்று அதற்கு யார் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சி செய்ய
முடியும்? அது போல அவரவர்கள் தன்மைக்கு ஏற்ற பலனை அவரவர் அடையவேண்டியதுதானே ஒழிய வேறில்லை.
பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் தேச மத அபிமானியையும் யோக்கியமாய் நடந்துகொள்ளும் எந்த தேச மதஅபிமானியையும் நாம் கனவிலும் நினைப்பதற்கே நம்மால் அவர்கள் மனம் புண்பட நியாயமில்லை. அப்படிக்கில்லாமல் மக்களை ஏமாற்றவென்றே வெளிவரும்போது தாம் நாம்
சும்மாயிருக்க முடியவில்லையே ஒழிய மற்றபடி நமக்கு யார் மனதையும் புண்படுத்த நினைத்து இத்தொண்டை ஆரம்பிக்கவில்லை என்பது உறுதி.
(5) ௨ நாயக்கர் ஆராய்ச்சி செய்து பேசுகின்றாரா என்பது...
நாம்10-வதுவயதிற்குமேல் எந்த பள்ளிக்கூடத்திலும் படிக்க வில்லை. நமக்கு புத்தக ஆராய்ச்சி இல்லை. நம் சக்திக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதின் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களை சந்திக்க நேர்ந்தபோது கேட்டு அறிவது தானே ஒழியவேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்ளுகிறோம்.
(5) ௨ இவர் வேறு மதங்களுக்கு மக்களை அனுப்ப முயற்சிக்
கின்றார் என்பது.
403 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மதம் என்பதாக ஒன்றை நித்திய பொருளென்றோ, தத்துவப் பொரு சென்றோ நாம் கருதுவதில்லை. மதம் என்பது எதுவும் ஒரு மனிதன் அல்லது சில,பல மனிதரின் அபிப்பிராயம் என்பதாகவே கருதுகிறோம்.
தவிர, அது எவ்வளவு வேண்டுமானாலும் தோன்றவும் மறையவும் கூடியதே தவிர நிலைத்ததல்ல. அது ஒரே மனிதனின் அடிக்கடி மாறுப்பட்ட அபிப்பிராயங்களாகவும், பல மனிதர்களின் ஒன்றுபட்ட அபிப்பிராயங் களாகவும் பல காலங்களில் பல மனிதர்களின் பலமாதிரியான அபிப்பிராயங் களாகவும் இருக்கலாம். மதமானது எந்த மனிதனையும் தனக்கு அடிமைப் படுத்தத்தக்கினதல்ல. ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் பல மதத்தை தழுவலாம். பல மதத்தை உண்டுபண்ணலாம். பல மதத்தை சீர்திருத்தலாம். பல மதத்தை அழிக்கலாம். இதனாலெல்லாம் ஒரு மனிதன் பாவியாகிவிட முடியாது. கெட்டவனும் ஆகிவிட முடியாது. ஆகவே எந்த மனிதனை எந்த
மதத்திற்கு போகும்படி யார் சொன்னாலும் அதில் ஒரு குற்றமும் இல்லை. அன்றியும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மதம் இருக்க வேண்டி யதோ கற்பிக்க வேண்டியதோ அவசியம் என்பதாக நாம் நினைக்கவில்லை.
ஏனெனில் அறிவுள்ள மனிதனுக்குத் தனது வாழ்க்கைக்கேற்ப கொள்கைகளை ஏற்படுத்திக் கொள்ளத்தெரியும், தெரிந்துதான் வருகிறது.
அறிவில்லாத மனிதனுக்கு இன்ன மதம்தான் சொந்தம் என்று சொல் லவோ அவன் இன்ன மதத்தில்தான் இருக்க வேண்டுமென்று சொல்லவோ யாருக்காவது அதிகாரமிருப்பதாகச் சொல்லுவதானது “கோழிக் குஞ்சைத்
தூக்கிக் கொண்டு போக கருடனுக்கு பாத்தியமா, கழுகுக்கு பாத்தியமா, இராஜாளிக்குப் பாத்தியமா” என்று முடிவு செய்யும் நியாயத்தைப் போன்றது
தான் என்பதே நமது அபிப்பிராயம்.
மதமோ, சமயமோ அவ்வக் காலங்களில் ஏற்பட்ட மனிதர்களால் அவ்வக் காலங்களின் நிலைமைக்குத் தக்கபடி அவ்வவ்விடத்திய சீதோஷ்ண முதலிய காலநிலைக்கு ஏற்றாற்போல் நிர்ணயமாக்கப்பட்டதே ஒழிய எக்காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா இடத்திற்கும் எல்லா நிலைக்கும் இதுவேதான் ஏற்றது என்பதாக ஏற்பட்டதல்ல என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே காலம், இடம்,மக்களின் அறிவுநிலை இவை களுக்குத் தக்கதுபோல் தானாகவே மாறிக்கொண்டுதான் வரும். இதைப்பற்றி யாரும் சிந்திக்க வேண்டியதில்லை.
(6 ) மூடபக்தி, மூடநம்பிக்கை என்கின்ற படுகுழி என்பது.
இதில் மூடபக்தி, மூட நம்பிக்கை என்று சொல்வதைப் பற்றி யாரும் கஷ்டப்படவேண்டியதில்லை. மூடபக்தி, மூடநம்பிக்கை என்பதின் கருத்து
குடி அரசு - 1927 (3) 404
என்ன? ஒரு மனிதன் தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி கவலை எடுத்துக்கொள்ளாமல், தனக்கு இன்ன இன்ன காரியங்கள் ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஒரு கடவுளை வணங்குவதும், அதன் பெயர், உருவம், குணம், சக்தி இவைகளை கட்டுப்படுத்துவதும் மூட பக்தி என்பதே நமது அபிப்பிராயம். அதோடு நாம் கடவுளுக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்கும் என்கின்ற வியாபார நோக்கத்துடன் செய்யும் காரியங்கள் எதுவும் மூடநம்பிக்கை என்பதே நமது அபிப்பிராயம்.
அதுவும் தவிர சுவாமி காரியம் நடக்க வேண்டும். சுவாமியைப் பற்றி மக்களுக்கு அறிவிக்க வேண்டும், சுவாமிக்கு இன்னது இன்னது செய்ய வேண்டும், சுவாமியை தோத்திரம் பண்ண இன்ன இன்ன மாதிரி இருக்க வேண்டும் என்பவைகள் போன்றதெல்லாம் மூடபக்தி மூடநம்பிக்கையில் பட்டது என்பதே நமதபிப்பிராயம்.
அன்றியும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் காரியத்தின் தன்மையை கவனிக்காமல், சுவாமி காப்பாற்றுவார், சுவாமி கொடுத்துவிடுவார்,
சுவாமிக்கு பொருத்தமாக இருக்க வேண்டும், சுவாமி அறிய சொல்லுகிறேன், சுவாமி தலையில் பாரத்தைப் போட்டு செய்கின்றேன் என்பதுபோல் ஒவ்வொன்றையும் சுவாமி தலையில் போடுவது ஆகிய விஷயங்கள்
எல்லாம் மூடபக்தி, மூட நம்பிக்கை என்பதே நமதபிப்பிராயம்.
௦) அப்படியானால் பல அற்புதங்கள் செய்து உலகத்தை வாழ்
வித்த அப்பர் சுந்தரர் முதலிய நால்வர்களும், ஆழ்வாராதிகளும் மூட
பக்தி படு குழியில் விழுந்தோர்களா என்பது.
அவர்கள் எப்படி இருந்தாலும் நமக்கு என்ன. முதலாவது அவர் களைப் பற்றிய கதை நமக்குத் தெரியாது. தவிர அவர்கள் நடவடிக்கைகள் சாதாரண மனிதத் தன்மைக்கு மீறினதாகச் சொல்லப்படுகிறது. அதை நாம் நம்புவதால் பயன் என்ன? நம்பாததால் நஷ்டம் என்ன? யார் இருந்து அந்த
சமயம் பார்த்தவர்கள்? அந்தகால மக்கள் அறிவு, மூளை, சக்தி ஆகியவை
கள் எப்படி இருந்தது? இவைகள் எல்லாம் விவகாரத்திற்கு இடமில்லாமல் சொல்லக்கூடியதாயிருந்தால் நம்புகின்றவர்கள் நம்பட்டும். மலை சமுத்திர: மாக மாறியிருக்கின்றது. சமுத்திரம் மலையாக மாறியிருக்கின்றது. நாடு காடாயிருக்கின்றது. காடு நாடாயிருக்கின்றது என்கின்றார்கள்? அப்படி இருக்கையில் இவைகள் எங்கு எப்போது நடந்தது என்பதும் எப்படி தெரிந்த
தென்பதும் சுலபத்தில் முடிவு செய்யக்கூடிய காரியமல்ல. உதாரணமாக,
முதலையுண்ட பாலனை வரவழைத்தக் கதை சொல்லும்போது அந்தக்
காலத்து முதலை எப்படிப்பட்டது. குழந்தை எப்படிப்பட்டது என்பதை யார்
நிர்ணயிப்பது. நரி குதிரையான கதை சொல்லும்போது அக்காலத்தியநரிக்கும்
405 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
குதிரைக்கும் உள்ள வித்தியாசம் அக்காலத்திய மக்கள் கண்ணின் நிலைமை:
யும் அறிவின் நிலைமையும் யார் அறிந்தவர்கள்.
சமுத்திரத்தில் கல்லைக் கட்டிப் போடப்பட்டவர் தண்ணீரில் மிதந்தார் என்கின்ற கதையும், ஓலை எழுதி ஆற்றில் போட அது எதிர்த்து வந்தது என்பதுமான கதைகளும் அப்படியேதான்.
இதுபோலவே ஆழ்வாராதிகள் சங்கதியும் வைத்துக் கொள்ளலாம். இதை எல்லோரையும் நம்பும்படி கட்டாயப்படுத்த யாருக்கு அதிகாரமிருக்
கின்றது. இன்னமும் இராமாயணம், பாரதம் முதலிய கதைகளையும் எடுத்துக்கொண்டு விவகாரம் பேசப் புறப்பட்டால் அவைகளுக்கு முடிவு
எது?
அராபியன் நைட் என்கின்ற கதையையும் யக என்கின்ற மோகினிக் கதைகளையும் வேறு ஒருவர் நம்முன் தோன்றி அவர்களும் சில நாயன்மார்கள், ஆழ்வாராதிகள், கடவுள்கள் அவதாரங்கள் என்கின்றவை களின் பெயரால் சொல்ல வந்தால் யாருக்கு அவைகளை மறுக்க அதிகாரம் இருக்கின்றது. எனவே “ஒரு காலத்தில் நடந்தது என்கின்ற விஷயம்” இப்போது யாருக்கு என்ன பலனைக் கொடுக்கும். அது பொய்யா, மெய்யா என்று வாதாடுவதில் செலவாகும் நேரம் கடவுளுக்கோ, மதத்திற்கோ, மக்களுக்கோ என்னப் பலனைக் கொடுக்கும் என்பதுதான் இங்கு கேள்வியே ஒழிய அதன் உண்மையைப் பற்றியே முழு விவகாரமும் அல்ல. எவ்வள வோ கஷ்டப்பட்டு உண்மை கண்டுபிடிக்க முயற்சித்தால் பிறகு திடீரென்று தத்துவார்த்தம் வேறே வந்து குறுக்கே விழுந்து எல்லாவற்றையும் கெடுத்து விடுகின்றது. ஆதலால் நம்முடைய எண்ணத்தால், வார்த்தைகளால், நடவடிக்கைகளால் நாம் அன்னியருக்கு உதவுவது எப்படி, அன்னியர்: கஷ்டத்தை நிவர்த்திப்பது எப்படி என்கின்ற காரியத்தில் காலத்தை செலவழிக்க வேண்டுமென்று எண்ணியே மூடபக்தி, மூடநம்பிக்கை என்ப தோடு ஏட்டில் உள்ள அற்புதங்களைப் பற்றியும் கவலைவேண்டாம் என் கின்றோம்.
(7) சைவம், வைணவம், சமணம், பெளத்தம், துவைதம், அத் வைதம், விசிஸ்டாத்வைதம், வீரசைவம் முதலியன எல்லாம் இந்து மதத்தில் பட்டது என்பது.
அப்படியானால் கிறிஸ்துவம், மகமதியம், ஆரிய சமாஜம், சீக்கியம், பிரம்ம சமாஜம், பார்சீகம் முதலியவைகளான மற்றும் சில மதங்கள் இதில் ஏன் ஸ்ரீமான் பிள்ளையவர்களால் சேர்க்கப்படவில்லையோ நமக்கு தெரியவில்லை.
குடி அரசு - 1927 (3) 406
தவிர, சைவ மதம் ஏன் சமணர்களை கழுவேற்றிற்று என்பது நமக்கு விளங்கவில்லை. பெளத்த மதத்தை ஏன் பார்ப்பனர்கள் விரட்டி அடித் தார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
சங்கராச்சாரி மதமான ஸ்மார்த்த மதத்திற்கும் சைவ மதத்திற்கும் ஏன் சண்டை நிகழ்கின்றதென்பது நமக்குத் தெரியவில்லை. வைணவத்திற்கும் சைவத்திற்கும் பரத்துவத் தகரார் ஏன் நடைபெறுகின்றது என்பது நமக்குப் புலப்படவில்லை. ஆளுக்கு ஒருவிதமான குறிகள் ஏன் என்பதும் தெரிய வில்லை. பெளத்தர் ஏன் கடவுளைப் பற்றி பேசவில்லை என்பதும் தெரிய வில்லை. ஒரு மதக் கடவுள் மற்றொரு மதக் கடவுளை ஏன் பூசித்தார். என்பதும் தெரியவில்லை. இன்னும் இவற்றின் உட்பிரிவும், கடவுள்களும் அவைகளின் நடவடிக்கைகளும் எப்படி ஒரே மதமாகுமென்பது நமக்கு படவில்லை. ஆதலால் இந்து மதத்திற்கு இவைகள் மாத்திரம் உட்பிரிவு என்பதையோ, இவைகளெல்லாம் ஒரே மதம் என்பதையோ ஒப்புக் கொள்ள முடியாது. ஒப்புக்கொள்வதானால் நாம் சொல்வதெல்லாம் மேல்கண்ட மதத்தில் பட்டவர்களே. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் சொன்னதாக அந்தந்த மதக்காரர்களே சொல்ல நாம் கேட்டிருக்கின்றோம். ஆகையால் நாம் சொல்லுவதைப் பற்றி இது என்ன மதமோ என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை...
இந்து மதம் என்கின்ற பெயர் எப்படி வந்தது என்று விவேகா
னந்தர் சொல்லியிருக்கிறார் என்பது.
அவர் எதையோ சொல்லி இருக்கலாம். எந்த அர்த்தத்திலோ சொல்லியிருக்கலாம். இப்பொழுது நமக்குத் தெரியவேண்டாமா? என்பது தான் கேள்வி. ஸ்ரீமான் பிள்ளை அவர்களுக்குத் தெரிந்தால் சொல்லட்டும்
பதில் சொல்ல முயலுகிறோம்.
(8) மத சம்மந்தமான எந்த நூலையும் பார்க்க யாருக்கும் தடை. யில்லை என்பது.
பார்க்கவேண்டும் என்கிற ஆசை ஒன்றும் நமக்கில்லை. நாம் சொல்வ தென்னவென்றால் மதப்படி நடப்பதாக ஒருவன் ஒப்புக் கொண்டால் வேதத் தைப் பார்க்க முடியுமா என்பதுதான் கேள்வி. பார்க்க மதம் இடம் கொடுக்கின்றதா என்பதுதான் கேள்வி. அப்படி இடம் கொடுக்குமானால் எவ்வளவோ பழய மதம் என்று சொல்லப்படுவதான இந்துக்கள் என்போர். கள் என்ன காரணத்தினால் இதுவரை 100 -க்கு 5 பேருக்கு மேல் படிக்க முடியவில்லை என்பதையும், அப்படி படித்திருப்பதும் இந்து அரசாங்க மல்லாத வெள்ளைக்கார அரசாங்கத்தினாலா அல்லது மதத்தின் உதவியி னாலா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகின்றோம்.
407 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
(9) கோயில்களைக் கூத்துச்சாலை என்று நாயக்கர் சொல்லு
கின்றார் என்பது.
ஆம், அப்படித்தான் சொல்லுகிறோம். ஏனெனில் கோயிலுக்குள் மாத்திரம்தான் இருக்கின்றது என்பதாக ஒரு விசேஷமும் இல்லை என்றும், ஏதாவது இருப்பதாகச் சொன்னால் பொய்யும், புரட்டும், கூடா ஒழுக்கங்
களுக்கு செளகரியமும் மாத்திரம் இருக்கின்றதெனவும் சொல்லுகின்றோம். இது நம்முடைய 30 வருஷத்திய கோயில் நிர்வாக அனுபவம்.
(10) கல் மனதையும் கரைக்கும்படியான சக்தி சில ஆலயங் களுக்கு இருக்கின்றது என்பது.
அது எந்த ஆலயத்தில் என்று ஸ்ரீமான் பிள்ளையவர்கள் சொல் வார்களானால் மெத்த உபகாரம். தவிரவும் ஏன் மற்ற ஆலயங்களுக்கும் அச்சக்தி இல்லாது போயிற்றென்பதையும் எடுத்துச் சொன்னாரானால் அதைவிட உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
(1) இக்காலத்தில் பல இடங்களில் எத்தனையோ அற்புதங்கள் நடக்கின்றன என்பது.
நம் நாட்டில் எங்கே என்ன விதமான அற்புதங்கள் நடக்கின்றன என்ப தை காட்டி ர௬ஜுப்பிப்பாரானால் அதற்கு ஏற்படும் செலவு முழுவதையும் கொடுத்து ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கின்றோம். அப்படி இல்லாவிட்டால் குருட்டு நம்பிக்கைக்கும், மூட பக்திக்கும் ஸ்ரீமான் பிள்ளை அவர்களே சாட்சியாவார்கள்.
(12) பல ஸ்தலங்களுக்கு விசேஷ காலங்களில் லட்சக் கணக்கான ஜனங்கள் நடந்துபோய் ஆனந்த பரவசர்களாகிறார்கள் என்பது.
லட்சக்கணக்கான ஜனங்கள் நடந்து போவதாலேயே ஒரு ஸ்தலம் உயர்ந்ததாய் விடாது. சந்திரனுக்குத் தாரை நிர்வாணமாய் எண்ணெய்த் தேய்ப்பதாக விளம்பரம் போட்டால் தாரை வேஷக்காரன் ஆணாயிருந்தா
லும் கொட்டகை நிறைய ஆட்கள் கூடி விடுகிறார்கள். வெகுதூரத்திலிருந்து பணம் கொடுத்து பார்த்து விட்டுப் போகின்றார்கள்.
இன்னக் கள்ளுக்கடையில் நல்ல போதையுள்ள கள்ளு விற்கிறதாக பறையடித்தால் நிற்கக் கூட இடமில்லாமல் ஆள்கள் பல இடங்களில் இருந்து வந்து குடித்து மெய்மறந்து தெருவெல்லாம் புரண்டு கொண்டிருக்கிறார்கள். வண்டிமேல ஏறுவது கூட தெரிவதில்லை. அதுபோலவே பீபிள்ஸ் பார்க் வேடிக்கைக்கு எத்தனையோ பேர் போகின்றார்கள். அதுபோலவே காங்கிரஸ்
குடி அரசு - 1927 (3) 408
என்றும், கண்காட்சி சபை என்றும், காந்தி என்றும், சங்கராச்சாரி என்றும், மாமாங்கமென்றும், மேளா என்றும் எத்தனையோ பேர் போகின்றார்கள். இதனாலெல்லாம் இடத்திற்கு மகத்துவமா? அந்த ஆள்களுக்கு மகத்துவமா? என்னவென்று ஸ்ரீமான் பிள்ளை சொல்வாரோ தெரியவில்லை.
(13) மதம், கோவில், பக்தி முதவியவற்றை அழித்துவிட நாயக்கர் முயலுவது அறிவுடைமையாகாது என்பது.
யோக்கியமாக மனிதன் உலகத்தில் வாழ்வதற்கு இவைகள் வேண்டு மென்றே அவசியமில்லை. இப்போதைய மதம், கோயில், பக்தி முதலியவை
கள் மக்களுக்கு எவ்வித பலனையும் ஒழுக்கத்தையும் கொடுப்பது மில்லை, கெடுதியும் செய்கின்றது. எனவே ஏதாவது ஒரு காலத்திலாவது அவைகள் அழிய நேரிட்டால் யாரும் கவலைப்பட வேண்டியதுமில்லை. தவிர கோவில்
கள் இல்லாத காலத்தில் மக்கள் இவ்வளவு அயோக்கியர்களாக இருந்தார்கள் என்றும் மக்களை மக்கள் இவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள் என்றும் ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வதில்லை.
(14) கெளதமர் இந்து மதத்திலிருந்தே சீர்திருத்தம் செய்திருக்
கிறார். அதுபோல் நாயக்கர் செய்யட்டுமே என்பது.
கெளதமர் கொள்கைகளை ஒப்புக்கொண்டு அதன்படி நடப்பவர்.
களிடம் அதிக தகராரில்லை.
அவர் எந்த மதத்தைச் சொன்னார். எந்த கடவுளைச் சொன்னார். எந்தக் கோவிலைச் சொன்னார், எந்த உற்சவத்தைச் சொன்னார், எந்த ஜாதி யைச் சொன்னார், எந்த பக்தியைச் சொன்னார் என்பதை பிள்ளையவர்கள். சற்று யோசித்துப் பார்ப்பாரானால் இவ்வளவு தூரம் கவலைப்பட்டிருக்க
மாட்டார் என்றே சொல்லுவோம்.
அவர் ஜீவன்களிடத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதைத்தான் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறோம்.
(15) நாயக்கர் புதுக் கொள்கைகளைக் கொண்டு வந்து சீர்திருத்தம் செய்யட்டுமே என்பது.
நாம் எவ்வித புதுக் கொள்கைகளையும் கொண்டு வரவேண்டு மென் கின்ற எண்ணமில்லை. இப்போது இருக்கும் ஆபாசக் கொள்கைகள் ஒழிந் தாலே தானாக டெநல்ல கொள்கைகள் ஏற்பட்டு விடுமென்கின்ற நம்பிக்கை. நமக்கு உண்டு. சுருக்கிச் சொன்னால் மனிதனை மனிதன் இழிவு படுத்துவதும், பலத்தினால் அடக்கி ஆளுவதும் ஒழிய வேண்டும். இதுபோல பல
409 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஒழிவதற்கு இடையூராயிருக்கும் எது ஒழிவதானாலும் நமக்குக் கவலை இல்லை. நமது கவலை சுயமரியாதையும் அன்புந்தான்.
மற்றும் அவர் வியாசத்தில் உள்ளவைகளுக்கும் இவற்றில் சமாதானம். இருக்குமென்று சிந்திக்கின்றோம். எவ்வளவு சுருக்கியும் வியாசம் அதிகமாக நீண்டுவிட்டதால் இதுசமயம் இத்துடன் நிறுத்தி விட்டோம்.
குடி அரசு - கட்டுரை - 2512.1927
குடி அரசு - 1927 (3) 410
செண்ணையில் ஏமாற்றுந் திருவிழா
இவ்வாரத்தில் சென்னையில் மக்களை ஏமாற்றுந் திருவிழாக்கள் பல நடக்கப் போவதாக விளம்பரங்கள் எங்கு பார்த்தாலும் பறக்கின்றன. இதைக். கண்டு அநேக ஆயிரமக்கள் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு போகவும் கூடும். சர்க்கார் காரியாலயங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை நாளானதாலும் வக்கீல்களுக்கும் உபாத்தியாயர்களுக்கும் ஓய்வு காலமான
தாலும் விவசாயக்காரருக்கும் வேலை ஒழிந்த காலமானதாலும் வியாபாரி
களுக்கும் வேலையில்லாத காலமானதாலும் ரயில் சத்தமும் இதை உத்தே சித்து குறைக்கப்பட்டிருக்கிறதாலும் இம்மக்களை அவ்விளம்பரங்கள் சுலபமாக கவர்ந்து விடுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. இம்மக்களல்லாத பிரபுகளுக்கும் சுகவாசிகளுக்கும் இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதே அரிதானதால் அவர்களும் இதில் கலந்து இக்கூட்டத்தில் காணப்படுவதில் ஆச்சரியமுமில்லை. ஆனால் இவ்வேமாற்றுந்திருவிழாக்களில் நிர்வாகிகள் யார்? கொள்கைகள் என்ன? அதனால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன? என்பவைகள் தான் இங்கு கவனிக்கத்தக்கது.
இத்திருவிழாவின் விளம்பரத்திற்கு பங்கு எடுத்துக்கொள்ளாத பத்திரிகைகளே நமது நாட்டில் மிக மிக சொற்பம். ஏனெனில் மனிதன் இது சமயம் நம்நாட்டில் வாழவும் பத்திரிகைகள் நடைபெறவும் இத்திருவிழாக் களின் தத்துவமே ஜீவாதாரமாய்ப் போய்விட்டதால் இவ்விளம்பரத் தொழிலில் இருந்து விலகுவது அநேக பத்திரிகைகளுக்கும், பத்திராதிபர்
களுக்கும் சுலபமான காரியமல்ல. ஆதலால் அதன் பலனாக குறைந்த அளவு
10 அல்லது 15 ஆயிரம் மக்களுக்கு குறையாமலாவது வெளிநாடு களிலிருந்தும் வெளி ஊர்களிலிருந்தும் சென்னைக்குப் போவார்கள் என்பது உறுதி. இவர்களுக்கு ஏற்படும் ரயில் சார்ஜ் போக்குவரத்து சிப்பந்தி சில்லரை: சாமான் வேடிக்கை பார்த்தல் முதலிய செலவுகள் குறைந்தது 15, 20 லக்ஷம் ரூபாய்க்கு குறையாது என்றே சொல்லலாம். இத்திருவிழாக்களின் நிர்வாகி களோ படித்தவர்களும் முதலாளிகளும் என்றுதான் சொல்லவேண்டும். இவர்களது கருத்தோ உத்தியோகம் சம்பாதிப்பதும் பணம் சம்பாதிப்பது மேயல்லாமல் வேறொன்றிருக்கநியாயமில்லை.
411 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
நாட்டில் எப்படி வியாபாரம் விர்த்தியாகி தக்க லாபம் கிடைப் பதற்கென்று வியாபார சங்கங்கள் இருக்கின்றனவோ விவசாயம் பெருகி நல்ல பலன் உண்டாவதற்காக எப்படி விவசாய சங்கங்கள் இருக்கின்றனவோ மற்றும் ஒவ்வொரு தொழிலுக்கும் உத்தேசத்திற்கும் எப்படி ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்னனவோ அதுபோல் ஆங்கிலம் படித்தவர்களுக்கு உத்தியோகங்கள் பெருகவும் அதனால் நல்ல பணம் சம்பாதிக்கவும் கருதி படித்தவர்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சங்கமே காங்கிரசாகும். இதை: அறியாத அறிவாளி நமது நாட்டில் இருப்பான் என்று சொல்லவே முடியாது. ஆனால் மற்ற சங்கங்களுக்கு பொது ஜனங்கள் சம்மந்தமில்லாமல் இருக்கும்போது காங்கிரஸ் என்கின்ற உத்தியோகம் சம்பாதிக்கும் சங்கத்திற்கு, மாத்திரம் ஏன் பொது ஜனங்கள் சம்மந்தம் ஏற்பட்டது என்கின்ற கேள்வி பிறக்கலாம். அப்படியானால் அது சரியான கேள்விதான்.மற்ற சங்கங்களுக்கு பலன் ஏற்படுவது அந்தந்த சங்கங்களின் முயற்சியினாலேயே அல்லாமல் மற்றொருவர் கொடுப்பதாலல்ல. ஆனால் உத்தியோக விஷயமோ அப்படியல்ல. உத்தியோகம் வேண்டுமென்று கேட்பது மாத்திரம் போதாது. சர்க்காரையும் உத்தியோகங்கள் உற்பத்தி பண்ணும்படிக்கும் தங்களுக்கு கொடுக்கும்படிக்கும் செய்ய வேண்டும். அதற்கு ஏற்படும் செலவை பொது மக்கள் பொருக்க வேண்டியிருக்கிறபடியால் பொது ஜனங்கள் தகராறுக்கு வராமலும் இருக்க வேண்டும். ஆதலால் பொது ஜனங்கள் கேட்பதுபோல
கேட்பதற்கும் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்பதுபோல அடைவ தற்கும் வழி ஏற்படுத்த வேண்டியது அவசியமாயிருக்கின்றபடியால் பொது ஜனங்களை இதில் கலரும்படி செய்யத்தக்க சூழ்ச்சிகளை செய்ய வேண்டிய அவசியமும் இக்கூட்டத்தாருக்கு ஏற்பட்டு விட்டது. அதற்கு ஏற்றாற்போல் படித்த கூட்டத்தாரிடையே அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறபடியால் இதற்கு எதிர்ப்பு இல்லாமல் செய்வதும் சுலபமாய் விட்டது. அதோடு படிப்பு இல்லாதவர்கள் என்கின்ற கூட்டத்திலும் சிலருக்கு இதனால் ஜீவனம் கிடைக்க இப்பொழுது வழி ஏற்பட்டு விட்டதால் அவர்களில் சிலரும் இதில் கலர நேர்ந்ததால் பொது ஜனங்களும் நம்பி கலந்துகொள்ள இடமுண்: டாய்விட்டது. இவ்வளவுதானே தவிர இதனால் தேசத்திற்கோ மக்களுக்கோ எவ்வித பலனும் ஏற்பட்டதுமில்லை. ஏற்படப் போவதுமில்லை என்று தைரியமாய்ச் சொல்வோம். ஆகவே இம் மாதிரி உத்தியோகம் சம்பாதிக்கும் சங்கமாகிய காங்கிரசின் பலனால் படித்த கூட்டத்தாருக்கு அரசாங்க உத்தியோகங்களும் அரசாங்க நீதி நிர்வாகங்களால் பிழைக்கும் வழிகளும் அதிகப்படவேண்டியிருந்ததால் படித்தக் கூட்டத்தார் மற்ற மக்களின் பிழைப்பைப் பற்றியோ தொழிலைப் பற்றியோ ஒரு சிறிதும் கவனியாமல் பொது மக்களையும் சேர்த்துக்கொண்டு தங்கள் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்ததால் மற்ற தொழில் பிழைப்புகள் எல்லாம் அடியோடு மறைந்து போகவும் நேரிட்டு இது சமயம் மனிதனின் வாழ்க்கைக்கு உத்தியோகம் என்கின்ற ஒரே மார்க்கம் தவிர வேறு மார்க்கம் இல்லாமல்
குடி அரசு - 1927 (3) 412
போய்விட்டது. வேறு ஏதாவது இருப்பதாய் கருதினால் முதலாளிகள் மேலும்
மேலும் முதலாளி ஆகத் தகுந்த வியாபாரமும் ஒரு மார்க்கமாய் இருப்பதாகச் சொல்லலாம். அதுவும் பணக்காரனுக்கு ஏற்றதாய்ப் போய்விட்டதால் யந்திரமயமாய் விட்டதால் வியாபாரத்தின் பலனாய் சாதாரண மனிதனுக்கு
ஒரு பலனும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
விவசாயமும் அதுபோலவே உணவு பொருள்களாக விவசாயம் செய்யப்படுவது பெரிதும் மாறி மேல்நாட்டுத் தொழில் திறத்திற்கு உதவும் படியான மூலப் பொருள்களாய்ப் போய்விட்டதால் விவசாயக்காரனுக்கு உணவுப்பொருள் கிடைப்பதற்கு மார்க்கமில்லாமல் பணமாய் கிடைக்க
நேரவும் அதை அவன் பாழாக்கத்தகுந்த பல வழிகளும் நிலைமைகளும் தாராளமாய் ஏற்படவும் அதின் மூலம் அப்பணத்தை சீக்கிரத்தில் இழந்து விட்டுத் தவிக்கவும் இவைகளிலும் இடமில்லாதவர்களுக்கு அடியோடு வேறு
மார்க்கங்கள் இல்லாமல் மக்கள் கூட்டங் கூட்டமாய் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு வயிற்று பிழைப்புக்காக கூலிகளாய் போகவுமே ஏற்பட்டு விட்டது. ஆகவே இதுதான் இந்திய காங்கிரசின் பலன். இதை ஒருவராவது சிந்தித்துப் பார்த்து இக்கொடுமைகளை ஒழிக்க முயலுவதையே காணோம். அன்றியும்
இப் படித்தக் கூட்டத்தார் மக்களையும் நாட்டையும் ஏமாற்றி இப்படி பாழ் பண்ணுகிறார்களே என்கின்ற கவலையும் யாருக்குமே கிடையாது. மகாத்மா என்னும் ஸ்ரீ காந்தி அவர்களே இப்புரட்டுக்கு உதவி செய்து வாழவேண்டிய அவசியத்தில் விழுந்துவிட்ட பிறகு இனி யாரை நாம் குற்றம் சொல்லுவது என்பது விளங்கவில்லை.
கொஞ்ச காலத்திற்கு முன் மாயவரத்தில் முன்சீப்பு வேலை பார்த்த ஸ்ரீ வேதநாயகம் பிள்ளை அவர்கள் ஒரு உபமானம் சொல்லி இருக்கிறார். அதாவது, “நாயானது சதை இல்லாத வெறும் எலும்பை கடித்துக்கொண்டிருக் கும்பொழுது அவ்வெலும்பின் முனைகள் அந்நாயின் பல் எகிர்களில் பட்டு அதனால் வரும் ரத்தத்தை எலும்பிலிருந்து வரும் சாரமாக நினைத்துக் கொண்டு விடாமல் எலும்பைக் கடித்துக் கொண்டேயிருந்து கடைசியாய் வலி பொறுக்க மாட்டாத நிலைமை ஏற்பட்டப் பிறகுதான் அதைவிட்டு விலகும்” என்று சொல்லியிருக்கிறார்.
அதுபோலவே காங்கிரஸ் என்கின்ற சதையில்லாத எலும்பைக் கடிப்பதால் செலவாகும் பொதுமக்களின் ரத்தமாகிய செல்வங்களை தங்களுக்கு கிடைத்த காங்கிரசின் பலன் என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் அதனிடத்தில் மக்களுக்கு பற்றுதல் உண்டாகும்படி படித்தக் கூட்டத்தார் செய்வதை மக்கள் என்றைக்கு உணருகின்றார்களோ அன்றுதான்
நாட்டிற்கு க்ஷமமுண்டாகுமே தவிர வேறில்லை என்றே சொல்லுவோம்.
412 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
அதுபோலவே பொருள்காக்ஷி என்பதும் எவ்வளவு மோசமான ஏமாற்றுந் தொழில் என்பதை யாராவது உணருகின்றார்களா என்றுதான் கேட்கின்றோம்.
பல தாசிகளும் இன்ன உற்சவத்திற்கு வருவார்கள் என்று எண்ணிக் கொண்டு உற்சவத்திற்கு போகிறவன் எப்படி ஏதாவதொன்றில் விழுந்து கெட்டுப்போக இடமுண்டாகின்றதோ அதுபோல் காங்கிரசின் பேரால் அந்நிய நாட்டுச் சாமான்களின் பொருள்காகஷி நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. இந்த ஒரு ஆதாரமே போதாதா? காங்கிரசும் கண்காக்ஷியும் படித்தவனும், பணக்காரனும் சேர்ந்து செய்கின்ற ஏமாற்றுந் திருவிழா என்பதற்கு உதாரணம்? என்று கேட்கின்றோம்.
இக்காங்கிரசினால் இன்னும் எவ்வளவு வரி உயரப் போகின்ற தென்றும் இவ்வன்னிய நாட்டுப் பொருள்காக்ஷியினால் இன்னும் எத்தனை தொழிலாளருக்கு தொழில் அற்றுப் போகப் போகின்றதென்றும் யாராவது கவனிக்கிறார்களா? விளக்கில் பூச்சிகள் போய் மடிகின்றதைப் போல் எல்லா மக்களும் அதில் போய்விழுந்து அம்மாய்கையில் சிக்கி விடுகின்றார்களே ஒழிய இதை வெளியிட யாருக்காவது கவலையிருக்கின்றதா? தைரியமி ருக்கின்றதா? போதாக்குறைக்கு ஒவ்வொரு பத்திரிகையும் மக்களை சென் னைக்கு போகும்படியும் காங்கிரசுக்கு போகும்படியும் சொல்லுகின்றதே என்னே வெட்கக் கேடு! வெட்கக் கேடு! வெட்கக் கேடு!
குடி அரசு - தலையங்கம் - 25.12.1927.
குடி அரசு - 1927 (3) 414
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்மு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டமும் அதில் நடந்த விஷயங் களும் “தமிழ்நாடு” பத்திரிகையில் பார்த்தால் விளங்கும்.
எவ்வளவு தந்திரமாகவும், ஒழுங்கீனமாகவும் தேர்தல்களை நடத்தி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது காங்கிரஸ் தலைவர் என்பவ ரான ஸ்ரீ சீனிவாசய்யங்காரின் யோக்கியதையைவிட அதில் கலந்து கொண்டவர்களின் யோக்கியதையே பெரிதும் கவனிக்கத்தக்கது.
கோவையில் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் காங்கிரசில் சேரப் பிரியமுள்ளவர்கள் காங்கிரசில் சேரலாம் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியவுடன் பார்ப்பனர்கள் தங்களது அடிமைகளல்லாத வேறுயாரும் காங்கிரசிற்குள் நுழைந்துவிடாதபடி எவ்வளவு நிர்பந்தங்கள் ஏற்படுத்தினார்
கள் என்பதை பொது வாழ்வில் கலந்துள்ள யாரும் அறியாமல் இருக்க முடியாது. காங்கிரசில் சேர்க்கும் இரசீதுகளை தாங்களே தங்களுக்கு வேண்டிய வர்களுக்கே வினியோகித்து தங்கள் சொற்படி கேட்பவனை மாத்திரம் சேர்க்கும்படி கட்டளையிட்டதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி யிருந்தும் தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எந்த நிர்வாக கமிட்டி யிலாவது சேர்ந்துவிட்டால் அவர்களை ஒழிக்க வேறு கமிட்டிகளை ஏற்படுத்தச் செய்து ஏற்கனவே ஏற்பட்ட கமிட்டிகளை செல்லுபடியற்ற தாக்கினது யாருக்காவது தெரியாது என்று சொல்ல முடியுமா? அநேகமாய் ஒவ்வொரு ஊணிலும் இரண்டு கமிட்டி ஏற்பட்டதும் தங்களுக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு. மற்றதை நீக்கியதும் யாருக்காவது தெரியாது என்று சொல்ல முடியுமா? இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் தமிழ்
நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் செய்தது போன்ற அயோக்கியத் தனங்களும் அக்கிரமங்களும் வேறு எங்காவது நடந்தாகக் காட்ட முடியுமா? அல்லது தமிழ்நாட்டிலாவது இந்த 5, 6 வருஷ காலத்தில் இப்படி நடந்ததாக யாராவது காட்ட முடியுமா? இதை யாராவது கவனித்தார்களா? இதனால் ஏற்பட்ட மானக்கேட்டைப்பற்றி யாராவது சிந்தித்தார்களா? கொஞ்சமும் மானமும் ஈனமும் இல்லாமல் இவ்வயோக்கியர்களுடன் கூடி குலாவ ஒவ்வொருவரும் முயற்சித்தார்களே ஒழிய நேர்மையையாவது சுய மரியாதையையாவது யாராவது கவனித்தார்களா? என்று கேட்கின்றோம்.
415 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
ஸ்ரீவரதராஜுலு சென்ற வருஷத்திற்கு முன் வருஷம் காங்கிரஸ்கமிட்டி நிர்வாக ஸ்தானத்திலிருந்து ராஜீனாமா கொடுத்து விலகினது எதற்காக? இப்போது மறுபடியும் அக்கூட்டத்திற்குள் புகுந்து குலாவி மறுபடியும் நிர்வாக சபை அங்கத்தினரானது எதற்காக என்றே கேட்பதுடன் முன் தான் ராஜீனாமா கொடுத்த காலத்தில் அக்கமிட்டியிலிருந்த அயோக்கியத்தனங்கள் இப்போது மாறிவிட்டனவா அல்லது தான் கமிட்டிக்குத் தக்கவராகி விட்டாரா? என்று கேட்கின்றோம். இந்த ஆறுமாத காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யையும் அதன் நிர்வாகத்தின் யோக்கியதையையும் மக்கள் விடாமல் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்ததை பார்த்துவிட்டு தானும் சில சமயங்களில்
சொல்லிக் கொண்டும் இருந்து விட்டு இப்போது திடீர் என்று அதற்குட் புகுந்த காரணம் என்ன என்பதை சொல்லுவாரா? திரு.வி. கலியாண சுந்தர: முதலியாரவர்கள் இவரோடு கூட இவரை நம்பி ராஜீநாமா கொடுத்து வெளியேறி இருக்க அவரைப் பற்றி கொஞ்சமாவது நினைத்தாரா? ஒன்றும் இல்லாமல் தனக்கு இடம் கிடைத்ததே போதும் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு சகலத்தையும் உதிர்த்து விட்டு கமிட்டி நிர்வாகத்திலும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் இடம் சம்பாதித்துக் கொண்டதின் அர்த்தம் என்ன என்றுதான் கேட்கின்றோம். ஸ்ரீமான் அண்ணாமலை பிள்ளையும், குப்புசாமி முதலியாரும், தெய்வனாயக அய்யரும், தங்கமீரான் சாயபுவும், தீர்த்தகிரி முதலியாரும் இந்த அயோக்கியக் கூட்டத்திற்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை யாராவது வர்ணிக்க முடியுமா? அப்பேர்பட்டவர். களே அக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது தங்கள் சுயமரியாதைக்கு லாயக்கில்லை என்று தைரியமாய் எழுந்து வெளி வந்திருக்கும்போது,ஒரு வேலையும் செய்யாமல் சும்மா வைதுக் கொண்டிருந்த ஸ்ரீமான் வரதராஜுலு அங்கு இருந்தே தீர வேண்டியதின் ரகசியம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. அல்லாமலும் அங்கு ஏற்பட்ட தகராறுகளை சமரசம் செய்ய முயற்சித்ததாகவும் “தமிழ்நாடு” பத்திரிகையிலேயே காணப்படுகின்றது. ஆகவே அரசியல் வாழ்வு என்பதில் எவ்வளவு தூரம் நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இருக்கின்றது என்பது இதனாலேயே மக்களுக்கு விளங்க வில்லையா என்று கேட்கின்றோம். சென்னை பார்ப்பனர்கள் வெளி நாட்டிலிருந்து வரும் ஆசாமிகளிடம் ஸ்ரீமான்களான வரதராஜுலுவையும்,
ஜார்ஜ் ஜோசப்பையும், ஷாபி மகமது சாயபுவையும், ஸ்ரீ ஜயவேலுவையும்
கூட்டிக் கொண்டு போய் இதோ பார் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதிகள் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவராக அதாவது பார்ப்பனரல்லாத இந்து என்பதற்கு ஸ்ரீ வரதராஜுலுவையும், கிருஸ்தவர் என்பதற்கு ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பையும், மகமதியர் என்பதற்கு ஜனாப் ஷாபி மகமது சாயபுவையும், ஒடுக்கப்பட்ட வகுப்பார் என்பதற்கு ஸ்ரீஜயவேலுவையும் காட்ட ஏற்பாடு செய்து கொண்டார்கள். அதற்கு இந்த கனவான்களும் உதவி செய்து விட்டார்.
கள். இவர்களுக்கும் பார்ப்பனர்கள் ஏதாவது பிரதி உபகாரம் செய்வார்கள் என்பதல்லாமல் இந்த பிரதிநிதிகளால் இந்த சமூகங்களுக்காவது நாட்டிற்கா
குடி அரசு - 1927 (3) 416
வது காதொடிந்த ஊசி அளவு பலனுண்டா என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டிக்கொள்ளுகின்றோம். எவ்வளவு காலத்திற்குத் தான் இம் மாதிரி நடவடிக்கைகளை நமது நாட்டில் ஆதிக்கம் பெற்றிருக்க விடுவது என்று பொது ஜனங்கள் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதும் நாம் கொஞ்சமும் அறியக்கூடாத நிலையில் இருந்து வருகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.12.1927
417 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
மகாத்மாவைய் பற்றி “தமிழ்நாடு” விண் கவலை
“தமிழ்நாடு” பத்திரிகையானது 16-12-27 தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது.
அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல் வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர். என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழிகுணம் படைத்தவராக இருக்க வேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டுமென்றும் எழுதியிருக்
கிறது.
மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழி குணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப்
பற்றி கவலையில்லை.
ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு
உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத் தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு இல்லை என்று தீர்மானித்து விட்டோம். அதிலும் சூத்திரன் என்பவன் அடுத்த ஜென்மத்தில்தான் பிராமணனாய்
பிறக்கலாம் என்கின்ற அவருடைய தீர்ப்பு சுத்த சுத்தமாய் நம்மை மாற்றியது. மகாத்மா பட்டம் ஒருவரின் அபிப்பிராயத்தையும் நடவடிக்கையையும் பொறுத்துத்தான் வழங்கப்படுவதே தவிர வெறும் உருவத்திற்காக வழங்கப் படுவதல்ல என்பதை உணர்ந்தவர்களுக்கு இவ்விஷயத்தில் கவலை ஏற்பட நியாயமில்லை. மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்கி நாம் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சுமார் இரண்டு மாதம் ஆகின்றது. இது வரையும் சகித்துக் கொண்டிருந்த “தமிழ்நாட்டிற்கு” இந்த வாரம் திடீரென்று கவலை தோன்றி நமது “இழி குணத்தையும்”, “மதியின்மையையும்” கண்டு பிடித்து எழுதி இருப்பதற்கு இரகசியமான காரணமில்லாமல் போகவில்லை. அதை தக்க சமயம் வெளியிடுவோம்.
குடி அரசு - 1927 (3) 418
ஒவ்வொரு பட்டமும் அவரவர்கள் அபிப்பிராயத்தாலோ, நடவடிக் கைகளாலோ ஏற்படுவதும் அவைகள் மாறும்போது மறைபடுவதும் வழக்கமாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் சிலருக்கு பட்டம் மக்களின் அறியாமையினால் ஏற்படுவதும், விஷயம் தெரிந்தவுடன் மறைந்துபோவதும். வழக்கமாக இருக்கின்றது. இது வரையில் எத்தனை பேர்கள் தலைவர்களாகி மறுபடியும் நினைப்பதற்கே அருகர்களல்லாதார்களாய்ப் போயிருக்கின் றார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் “தமிழ்நாடு” வுக்கு இவ்விஷ யத்தில் இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்க நியாயமே இருந்திருக்காது.
தவிர கடவுளின் அவதாரமாகவும் மகாத்மாவாகவும் தோன்றினதாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் என்பவன் கடைசி காலத்தில் ஒரு காட்டில் ஒரு வேடனால் கொல்லப்பட்டு அழுவாரற்று செத்து நாறிக் கிடந்ததாகவுள்ள விஷயங்களை அறிந்திருந்தால் இம்மாதிரி காரியத்திற்காக ஒருவரை இழிகுணம் என்றும், மதியீனம் என்றும் எழுத நியாயம் கிடைத்திருக்காது என்போம். ஆனாலும் நம்முடைய இந்த சமாதானமெல்லாம் “தமிழ்நாடு” பத்திரிகைக்கல்ல. ஏனெனில் அது பழய குப்பையை தேடிப்பார்த்து குற்றங் கள் கண்டுபிடிக்கின்ற வேலையில் முனைந்து இருக்கின்றது. ஆதலால் அதற்கு இச்சமாதானங்கள் ஒரு உணர்ச்சியையும் கொடுக்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை கண்ணுற்றவர்கள் ஏமாறாதிருக்கவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 25.12.1927
419 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
யீ RK. ஷண்முகம் சசட்முூயார் கவணிப்பாறரா?
காங்கிரஸ் கிரிட் என்னும் முக்கிய கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதையும் ஒரு கொள்கையாகத் திருத்த வேண்டு மென்று காங்கிரசுக்கு சிபார்சு செய்வதாக சேலம் மகாநாட்டில் தீர்மானித்த தீர்மானத்தை காங்கிரசில் பிரேரேபிப்பதாய் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஒப்புக்கொண்ட படி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் பிரேரேபணை கொண்டு வருவாரா? என்று கேட்கின்றோம்.
இப்பிரேரேபணை காங்கிரசில் நிறைவேறாது என்பது நமக்குத்
தெரிந்திருந்தாலும், நிறைவேறினாலும் அதனாலேயே பிரமாதமான பலன் ஏற்பட்டுவிடாது என்பது உறுதியானாலும் மக்களுக்குள் சமத்துவம் ஏற்பட வேண்டியது காங்கிரசின் நோக்கமல்ல என்பதையும், சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று சொல்லி படித்தவர்கள் உத்தியோகம் பெறவேண்டியதுதான் அதன் நோக்கம் என்பதையும் ருஜுவாக்க இதுவும் ஒரு சந்தர்ப்பமாகுமே என்கின்ற ஆசையால்தான் இதை ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கு ஞாபகமூட்டி கவனிக்கும்படி வேண்டுகின்றோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 25.12.1927
குடி அரசு - 1927 (3) 420
அருக்கால் வாருன்
அதைரியம் - பயம்
அத்தியந்த - நம்பகமான
அவிவேகம் - அறிவற்று, பகுத்தறிவு இன்றி அனாமத்து - தனி, தனி நிலை, வேறு நிலை அஸ்வார்சமாய் - ஈடுபாடின்றி ஆவலாதி - குறை கூறுகை ஆஸ்பதமான - இடமான, பற்றுக்கோடான
கலர: - கலந்துகொள்ள, கலந்து வாழ கொம்பு தம்பட்டம் - தாரை தப்பட்டை சிலாசாசனம் - கல்வெட்டு
சுசீலமாக - நற்பண்புடன்
தத்துக்கள். - தடைகள்
துராக்கிரகம் - வீண்பகை, வீணாசை, பேராசை
துர்ராக்கிரகம்
துரந்தரர்கள்' - பொறுப்பாளர்கள், தாளாளர்கள்
நியமம் - சமயக் கடைமை, நன்னெறி
பரியந்தம் - அதுவரை, எல்லை பால்யை - இளம்பெண்:
பிரக்யாதி - நன்கு அறியப்படுதல், கீர்த்தி,
பிரீதி - விருப்பம், விழைவு
மனக்கிலேசம் - மனக்கலக்கம், துயரம்
ஜன்மிகள் - நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள்
421 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 5
குடி அரசு - 1927 (2) 422 423 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - §
குடி அரசு - 1927 (3) 424