கும ௮௬
19271
பெரியாரின் எழுத்தும் கச்சம்
கொகுதி 4
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் - திருவான்மியூர்
சென்னை - 600 041
நூல் விளக்கம்
நூலின் பெயர்
பொருள்.
மொழி
பதிப்பாளர்.
பதிப்பு
உரிமை
தாள் வகை:
நூல் அளவு
எழுத்து அளவு
பக்கங்கள்.
அட்டை வடிவமைப்பு
கணினியாக்கம்.
விலை
வெளியீடு
குடி அரசு 1927-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தமிழ்
கொளத்தூர் தா.செ.மணி
2008
பதிப்பாளருக்கு
நேச்சுரல் ஷேட்
1/8 டெம்மி
11 புள்ளி
384
ட்ராட்ஸ்கி மருது,
செம்பட்டி இராசா
அசுரன் ஊடகம், திண்டுக்கல்
உர. 200 / -
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர்
நகர் - திருவான்மியூர்
சென்னை - 600 041
சுயமரியாதை இயக்கத்தின் கோவில்
நுழைவுக் கிளர்ச்சிகள்
தீண்டாமைக்கு எதிராக கோவில் நுழைவுப் போராட்டத்தை முதன்
முதலாக முன்னெடுத்தது சுயமரியாதை இயக்கமே என்ற வரலாற்றை
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வெளிக்கொணருகின்றன.
சுயமரியாதை இயக்க முன்னோடிகள் ஜே.என். இராமநாதன் மதுரை மீனாட்சி
கோவிலுக்குள்ளும் ஜே.எஸ்.கண்ணப்பர் திருவண்ணாமலை கோவிலுக்
குள்ளும் நுழைந்து தேங்காய் உடைத்து தமிழில் பதிகங்களைப் பாடி வழி
பாடுகளை நடத்தினர். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள்
அழைத்து வரப்போவதாகச் செய்திகளைப் பரப்பி அவர் பொதுக்கூட்டம்
பேசச் சென்ற வேலூர், நாகை போன்ற ஊர்களில் கோவில்களைப் பூட்டி
வைத்தனர். அதே நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தூவார் கிராமத்தில்
“பிராமண சம்மேளனம்” கூடி பார்ப்பன இறுமாப்புடன் பல தீர்மானங்களை
நிறைவேற்றியது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் இந்த ஆண்டில்
பெரியார் ஆற்றிய உரைதான் இப்போதும் கல்வியாளர்களால் போற்றப்படு
கிறது. கல்யாண வீட்டில் சாவு மந்திரங்களை ஓதிய பார்ப்பனப் புரோகிதர்.
களைப் பெரியார் அம்பலப்படுத்துகிறார். இந்து மதத்துக்கும் அது வலியுறுத்
தும் சூத்திர இழிவுக்கும் எதிரான அனல் பறக்கும் கட்டுரைகளும் இத்தொகுப்
பில் அடங்கும்.
“ மானமுள்ள ஆயிரம் பேரையும் ஒருவன் எதிர்த்துப் போராட
முடியும். மானமில்லாத ஒருவனை வெல்ல ஆயிரம் பேராலும்
முடியாது!”
“பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.”
“என்னையே நம்பி இப்பணி ஏற்றேன்”
(கம்பராமாயணத்தில் இராவணன் கூற்று)
போன்ற சொற்சித்திரங்களை வரலாற்று வரிகளாக்கிய பெரியாரின்
கட்டுரைகள்
இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
- பதிப்பாளர்
©
P NP
O
s
p
உ
பொருளடக்கம்
பார்ப்பனரல்லாதார் மகாநாடு
சுவாமி சிரத்தானந்தர்
இனிச் செய்ய வேண்டிய வேலை
பொங்கல்வசூல்
தஞ்சை ஜில்லா போர்டை பார்ப்பன அக்கிரஹாரமாக்கச் சூழ்ச்சி!
நல்ல இடி
பார்ப்பனர் விஷமப் பிரசாரம்
23
மகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும் 25
பிறப்புரிமையும்
அதன் தடைகளும்
.
பார்ப்பனரின் அரசியற் புரட்டு
. பார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்
. பார்ப்பனர்களின் ஒற்றுமை
. யாருக்கு புத்திவந்தது?
.
மதுரைத் தீர்மானங்கள்.
.
எங்கும் பார்ப்பன ஆதிக்கமே
.
அதுவானாலும் கிடைக்கட்டும்
.
ஜென்மக்குணம் போகுமா?
.
தஞ்சை ஜில்லா பிரசாரம்
. பத்திரிகைகள்.
.
பார்ப்பனப் பத்திரிகைகளின் தொல்லை
. கீழேவிழுந்தும்
மீசையில் மண்ணொட்டவில்லையாம்
. சென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன
சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா!
குடி அரசு - 19970)
27
37
40
41
42
43
48
50
52
54
57
60
64
65
23. தஞ்சைஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன
பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்
24. பரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பன மந்திரி
25. இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?
26. பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்.
27. தஞ்சைஜில்லா பிரசாரம்
28. நன்றி கெட்ட தன்மை
29. காங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி
30. திருவண்ணாமலை தாலூகா
தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு
31. வருணாச்சிரம தர்மம்
32. கோவில்களின்
பேரால் பார்ப்பனீயத்தொல்லை
33. பொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம்
34. திருவண்ணாமலை தாலூகா தென்னிந்திய
நலவுரிமைச்
சங்கத் திறப்புவிழா
35. ஜஸ்டிஸ் திருநாள்
36. புதுக்கோட்டை முஸ்லீம் மகாநாடு
37. இன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள்
38. செங்கல்பட்டில்
கதர்ச் சாலை திறப்பு விழா
39. மந்திரிசபை
40. சுயமரியாதைப் பிரசாரம்
41. வேண்டுகோள்
42. நமதுகோர்ட்டுகள்
43. பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்தது
!
44. மதுரை அமெரிக்கன் காலேஜ் மாணவர்களுக்குள்
சுயமரியாதை உதயம்
(48. மகாத்மா வரவேற்பு:
46. இதற்கு என்ன பெயர்
47. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் யுத்தம்
தொடங்கப்பட்டு விட்டது
144
48. முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் 150
5
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
61.
62.
8328
67.
. பார்ப்பனியப் பித்தலாட்டம் “ சிரார்த்த சந்தேகம்”
153
. சென்னைசட்டசபை வரவு செலவு திட்டம்
154
. “சுதேசமித்திரனின்” உபத்திரவம்
161
. பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி
வெளியாகிவிட்டது
163
. குடிநிறுத்தும் யோக்கியர்கள்.
165
. தொழிலாளர்கள் தற்கால காங்கிரஸ் தலைவர்களை நம்பக்கூடாது:
அதில் சேரவும் கூடாது
167
.
மேட்டூர் திட்டம்
168
. அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு
என்பதற்கு உதாரணம் இது போதாதா?
172
ட “Bmet
178
.
பார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்
178
. பத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார்
செய்த அக்கிரமம்
180
. “வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லிதிரியும் போலி.
தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்
181
தஞ்சை ஜில்லா போர்டு
183
பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம்
184
காங்கிரஸ்
195
. தேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்
199:
சுயராஜ்யக் கட்சியாரின் சமாதானம்
201
வேண்டுகோள்
206
வகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள்
ஒப்புவதில்லை.
208
.
மேட்டூர் திட்டப் புரட்டு
210
. வெட்கப்படுகிறார்கள்
214
. ஒரு விசேஷம்
215
. மணத்மாவின் தேக அசெளக்கியம்
216
. வாலாஜாபாத் சொற்பொழிவு
217
. காங்கிரஸ் பைத்தியம்:
219
குடி அரசு - 1927 1)
6
81.
82.
&
7
. பார்ப்பனக் கொடுமைக்காக உயிர்விட்ட சுத்தவீரன்.
. பழய கருப்பனே கருப்பன்
. எது பொய்ப் பிரசாரம்?
- ஒரு சிறு குறிப்பு
. வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
. தொழிலாளர்.
. ஜில்லாபோர்டு பிரசிடெண்டு தேர்தல்கள் வகுப்பு துவேஷம்
ஒழித்ததற்கு இது ஒரு சாக்ஷி
யாரிடம் வகுப்புத் துவேஷம் இருக்கிறது?
ஒரு வெளிப்படையான ரகசியம்
போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு
. நமது பத்திரிகை
. பார்ப்பன நிருபர்களின் சக்தி
. பொதுப்
பணம் போகும் வழி
.
பார்ப்பனரல்லாதார் மகாநாடு.
.
மாயவரம் மகாநாட்டின்
எதிரிகளின் சூகஷியும்
திரு.வி.கலியாணசுந்திர முதலியாரின் விஜயமும்
. மாயவரம் மகாநாடு
- காங்கிரசின்
பேரால் பார்ப்பனர்களின்
தேசத்துரோகமும் சுயநலமும்
. ஸ்ரீவரதராஜுலுவின் வண்டவாளம் 1
. கும்பாபிஷேகத்தின் ரகசியம்
. “உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்”
. காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்
. ஒரு சமாதானம்
... எஸ்.சி. போசின் விடுதலை நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு 317
. பைத்தியக்காரனுக்கும் உஷார்காரனுக்கும் சம்பாஷணை
99. “வரதராஜுலு அறிக்கை” க்கு ராமசாமியின் அபிப்பிராயம்
100. ஐயங்காருக்கு அமெரிக்க மாதின் நற்சாகஷி பத்திரம்
223
228
231
239
240
241
243
245
247
250
261
268
276
277
279
282
284
290
296
301
304
308
315
319
324
329
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
101.
குட்டு வெளியாய் விட்டது
330
102.
பாரதத் தாயின் துயரம்
331
103.
மித்திரன் நிரூபரின் அயோக்கியத்தனம்
333
104.
ஈரோடு முனிசிபாலிட்டி
334
108, "சத்தியாக்கிரகம்"
ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! 335
106.
“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம்
11
336
107.
நாகையில் வெறுக்கத்தக்க
சேதி
344
1௦8.
ஸ்ரீனிவாசய்யங்கார் பணத்தின் மகிமை
346
109.
கோவையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு.
347
110.
பார்ப்பன அயோக்கியத்தனம்
351
பட
அரசியல் பார்ப்பனர்களின் யோக்கியதை
354
112.
சேலம்ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்
356
எத]
[வாரப்பதிப்பு]
113.
ஸ்ரீமான்ஜோசப்பின் குட்டிக்கரணம்
358
கட
வ திவ் s
114.
மலையைக் கெல்லி எலியைப்பிடித்தூர்கள்
360
௭௯2]
அ e வதி மில இடி) எல்சா
வே
115.
மந்திரிகளின் நியமனம்
362
தல்ல ககக ககக கலக்கக் கக்ககக்கக கக்கு கந்ககககக்கக்கககக்ககக்
116.
திராவிடர் கழகம் கோவிற்பட்டி 18- வது ஆண்டு நிறைவுவிழா 364
s |
“ங்க
அத்தா
| அத்த 2, $4" i
117.
கோவைமகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்
369
118.
அய்யங்காரின் பார்ப்பனப்பிரசாரம்.
377
i
119.
அருஞ்சொல் பொருள்
379
ந
ந
ள் ன
கற்பக விச்வம் ண் த்
-
னு
மூன்று மாதத்தில்
1
மோட்டார் ஓட்ட கற்றுக்
கொள்ளலாம்
ஸ்தாயிக்கப்பட்ட
து.
கதர!
கதர!
கதர் | o= AN
தமிழ் தாடு கதர் போபிடாமான் | ப்ப ிசிகஷ் s
கெள
o 95 இதுத்தங்கள்
செய்யவும் கத்துக்
[வனடுக்கப்படுல்..
தேற்வெடைய
நான்று!
தல் அரம் ததி அடைந்த அன்பு
| ன்கெண்டு
கசென்சம் ஸு கப்பெனி
[கிலிகட்மே Gurhmini
அத்த வெறுத்து சேரல் எழ தெரியு
-
மதறுண் தென்னிர்தியா
.
க்ஸ்,
மாட்டார்
॥கக்கக்கக்க்ககக்கக்கக்கககக்கக்கக்கக்கககக்கககங்கக
குடி அரசு - 1927 ()
8
9
வ... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
குடி அரசு - 1927 1)
யார்ப்பணால்லாதார் மகாநா௫
சென்ற மாதம் 25,
26 ௨ சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரை:
மாநகரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூடிக் கலைந்து விட்டது. மகாநாடா
னது சென்னை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தினரால் பார்ப்பனரல்லாதார்.
மகாநாடென்று முறையாகச் சென்ற பத்து வருஷ காலமாய் நடந்து வந்ததை
அனுசரித்தே கூட்டப்பட்டது என்பதாகக் கருதி, “பார்ப்பனரல்லாதார் 10வது
மகாநாடு” என்னும் பேரால் கூட்டப்பட்டது என்று சொல்வதானாலும்
இவ்வருஷம் பார்ப்பனரல்லாதார் முதல் மகாநாடென்றே சொல்ல வேண்டும்.
இந்த மகாநாட்டிற்கு வந்தால் தங்கள் வாழ்வில் மண் விழுந்து விடுமோ,
பெருமை குறைந்துவிடுமோ, பார்ப்பனர்கள் அழித்து விடுவார்களோ என்று
பயந்தவர்களும், தவிர்க்க முடியாதபடி பார்ப்பனர்களின் தாக்ஷண்ணியத்
திற்கு கட்டுப்பட்டவர்களும், எப்போதும் பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில்
சேருவதில்லை என்பதாக பார்ப்பனருக்கு வாக்குறுதி கொடுத்து அப்புறம்
இப்புறம் ஒப்பந்தம் பேசிக்கொண்டவர்களும், தவிர்க்க முடியாத அசந்தர்ப்
பத்தில் பட்டவர்களும் தவிர, மற்றெல்லா முக்கியஸ்தர்களும் பிரதிநிதிகளும்
விஜயம் செய்திருந்தார்கள். இம்மகாநாடு கூட்ட வேண்டு மென்று “குடி
அரசி”ன் மூலம் வெகுநாளாக எழுதிக்கொண்டு வந்தது வாசகர்களுக்கு
நினைவிருக்கும். இதை அனுசரித்தே சென்னை ஜஸ்டிஸ் கட்சி தலைவர்
களையும் மற்றும் ஜில்லாக்களிலுள்ள பலதிறப்பட்ட அபிப்பிராயம் கொண்ட
பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் இவ்வாறு மாத காலமாய் கண்டு பேசி
நமது திட்டங்களை விளக்கிக் காட்டி, அவர்களது சம்மதமும் பெற்றுவர
ஸ்ரீநாயக்கர் ஆங்காங்கு சென்று கொண்டிருந்ததும் வாசகர்களுக்குத் தெரிந்
திருக்கலாம்.ஆகவே இதன் பலனாக சட்ட சபைத் தேர்தல்கள்முடிந்தவுடன்
இம்மகாநாடு கூட்டுவதாய் உத்தேசித்திருந்தபடி மகாநாடு மதுரையில்
கூட்டினதும், எல்லாப் பிரமுகர்கள் விஜயம் செய்திருந்ததும், அவர்கள்
ஏற்கனவே ஒப்புக் கொண்டது போல்
நமது திட்டமாகிய நிர்மாணத்
திட்டத்தை மகாநாட்டில் நிறைவேற்றிக் கொடுத்ததும் நமக்கு மிகுதியும்
சந்தோஷமே. இந் நிர்மாணத் திட்டம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டதைப்
பற்றி நமது எதிரிகளான பார்ப்பனரும் நமது கோடாலிக் காம்புகளான
பார்ப்பனரல்லாதாரில் சிலரும் என்ன சொல்லிக் கொண்டபோதிலும் நமக்கு
கவலையில்லை.
காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு இவ்விரு
11
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
கூட்டத்தாரும் நடந்து கொள்ளும் இழி தன்மையைப் போலவும் வஞ்சக
நினைவோடு தீர்மானிக்கும் போலித் தீர்மானங்களைப் போலும் அல்லாமல்
மதுரை மகாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேறின.
மிகப் பெரும் பகுதி
மக்களால் உண்மையான ஊக்கத்தோடும் எவ்விதத்திலாவது நிறைவேற்றி
வைக்க வேண்டும் என்னும் ஆவலோடுமே அவைகள் ஏகமனதாய்
நிறைவேற்றி வைக்கப் பட்டிருக்கின்றன.
தீர்மானங்களையும் மக்களின் உண்மையான நிலையையும் கவனிக்கா
மல், சில வாய்ப்பந்தல் பதர்கள் அக்கிராசனர் இப்படிச் சொன்னார்: வரவேற்பு
அக்கிராசனர் அப்படிச் சொன்னார்: பெயர் நன்றாக இல்லை; சுரைக்காய்க்கு
உப்பு இல்லை என்று சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டும் எழுதிக்
கொண்டும் வருவது நமக்கு ஒன்றும் அதிசயமாக இல்லை. உலக அனுபவ
சரித்திரத்தில் இப்படி ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் வந்திருக்கிறது.
ராவணனுக்கு தன் தம்பியே துரோகியாயிருந்தான். கிறிஸ்துவுக்கு தனது
சிஷ்யனே துரோகியாயிருந்தான். மகாத்மாவையும் தனது சிஷ்ய கோடியி
லொருவரே மூலையில் உட்கார வைத்துவிட்டார். ஆகவே பஞ்சமும்,
நோயும், பார்ப்பனச் சூழ்ச்சியும் உற்றதும், சுயமரியாதை அற்றதுமான நமது
நாட்டில் இத்திருக்கூட்டம் தோன்றுவது அதிசயமல்ல. இக்கூட்டம் யோக்கிய
மான கூட்டமாயிருக்குமானால் மகாநாட்டிற்கு வந்து தங்கள் அபிப்பிராயங்
களைச் சொல்லவோ, மகாநாட்டுக்கு தெரிவிக்கவோ செய்திருக்கும். அது
யாருக்கும் ஆட்சேபமுமிருக்கவில்லை. சிலருக்கு பார்ப்பனரல்லாதார்
என்கிற பெயர் பிடிக்கவில்லையாம். இதனால் தங்களுக்கு பெருத்த அவமான
மாயிருக்கிறதாம். இவர்கள் இதுவரை எந்த உலகத்திலிருந்தார்களோ தெரிய
வில்லை. இவர்களையும் இவர்கள் பெற்றோர்களையும் சந்ததிகளையும்
சேர்த்து வெள்ளைக்காரன் , “மகமதியரல்லாதார்” என்று மேளம் போட்டு
அழைக்கிறானே இதனால் இவர்களுக்குமானம் போகவில்லையா? என்று
கேட்கிறோம். இந்தப் பெயரோடு இவர்கள் சகோதரர்கள் சட்டசபைக்குப்
போக உடந்தையாய் இருந்தார்களே இதனால் இவர்கள் மானம் போகவில்
லையா? என்று கேட்கிறோம். கொஞ்சமாவது நெஞ்சில் ஈவு, இரக்கம்,
குலாபிமானம், தேசாபிமானம், வெட்கம் இல்லாமல் தன் வாழ்வையும்
தன்பெயர் தம்பட்டமடிப்பதையுமே கருத்திலிருத்திக்கொண்டு மகாநாடு
எதற்காக நடத்தப்பட்டது இதனால் யார் பலன் அடைவார்கள், இம்மாதிரி
ஒரு கூச்சல் ஏற்பட்ட பிறகு நமது மக்களின் நிலை என்னவாயிருக்கிறது
என்பதை கொஞ்சமும் உணராமல் "உபதேசியார்'” வேடம் போடுவதானால்
அது மனதிற்கு எவ்வளவு வேதனையைக் கொடுக்கும் என்பது அனுபவித்
தவருக்குத்தான் தெரியும்.
நிற்க, மகாநாட்டுக்கு வந்தவர்களுக்கும் மகாநாட்டு அனுதாபி
களுக்கும் ஒரு வார்த்தை.
தீர்மானங்களை நிறைவேற்ற அனுகூல
மாயிருந்ததும், தீர்மானங்களை நிறைவேற்றியதும் மாத்திரம் போதாது.
குடி அரசு - 19970)
12
பார்ப்பன காங்கிரஸ்காரர்களுக்கானால் இது போதும். ஏனெனில் காங்கிரசு
என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களும்,
படித்தவர்களும் இவ்விரு கூட்டத்தவர்களின் கூலிகளும் சிஷ்யர்களு
முடையதுமாயிருப்பதால், ஏதோ ஒரு தீர்மானம் பாமர மக்கள் ஏமாறும்படி
போட்டு, சட்டசபைக்குப் போய் உத்தியோகம் பெறவேண்டியதே அதன்
தத்துவம். ஆனால் மதுரை மகாநாட்டிற்கு வந்திருந்த 5000 பிரதிநிதிகளில்
உத்தியோகத் திற்கு லாயக்கானவர்களோ சுமார் ஒரு நூறு பேர்கள் கூட
இருக்க மாட்டார்கள். மற்ற 4900 பேரும் தங்கள் நாட்டினுடையவும், சமூகத்
தினுடையவும் சுயமரியாதையைக் காப்பாற்ற வந்தவர்கள். ஆதலால் இவர்கள்
இனி சும்மா இருக்காமல் இத் திட்டங்களை நிறைவேற்ற முயலவேண்டும்.
சென்னைத் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின்
யோக்கியதை இம்மகாநாட்டில் நன்றாய் விளங்கிவிட்டது.
ஆதலால்
அவர்களை நம்புவதில் முழுப் பலனையும் அடைந்து விடமுடியாது.
ஆங்காங்கு ஜில்லா, தாலூக்கா, கிராம வாரியாக கிளைச் சபைகளை ஏற்பாடு.
செய்வதும் பிரசாரம் செய்வதும், நிர்மாண திட்டங்களை நிறைவேற்றுவதும்
பொதுமக்களுடைய வேலையாய் விட்டது. சீக்கிரத்தில் வேலை செய்வோ
ரின் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டி ஜனவரி மாதத்திற்குள்ளாகவே
இத்திட்டங்களை நிறைவேற்றத் தகுந்த வழிகளைக் காணவேண்டும்.
இக்கூட்டத்தின் அங்கத்தினர்கள் கூடியவரையில்
எந்தத் தேர்த
லுக்கும் நிற்கக்கூடாதவர்களாகவும் தங்களது முழு நேரத்தையும் இதற்கே
செலவிடுபவர்களாகவும் இருக்க வேண்டும். 12 பேருக்கு குறையாமல், மாதம்
30 ரூபாய்க்கு அதிகப்படாத சம்பளமும், 10 ரூபாய்க்கு அதிகப்படாத படியும்
கொடுத்து ஜில்லா சுற்றுப்பிரயாண அமைப்புக்காரரையும்
மாதம் 50
ரூபாய்க்கு அதிகமில்லாத சம்பளமும் 25 ரூபாய்க்கு அதிகமில்லாத படியும்
கொடுத்து 3 மண்டலாதிபதிகளை தணிக்கையாளராகவும் நியமித்து வேலை
துவங்க வேண்டும். ஆக இந்த செலவுகளுக்கும் சில்லரைச் செலவுகளுக்
குமாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் குறைந்தது மூன்று மாதத்திற்காவது தமிழ்
நாட்டிற்கு 3000 ரூபாய் வேண்டும். இந்தப் பணத்தை யாராவது சிலரோ
ஒருவரோ தருவதாக, இந்த இரண்டு வாரத்திற்குள் ஸ்ரீமான் மதுரை PT. ராஜன்
அவர்களுக்கு தங்களது பெயர்களையும் தொகைகளையும் அனுப்பி விட
வேண்டும். அப்படிக்கு இயலாதவரை ஸ்ரீமான் PT. ராஜன் 1000ரூபாயும்
சவுந்திரபாண்டிய நாடார் 1000ரூபாயும்,ஈவெராமசாமி நாயக்கர் 500 ரூபாயும்,
ஸி.எஸ். ரத்தின சபாபதி முதலியார் 500 ரூபாயுமாகப் போட்டுக் கொண்டு
ஜனவரி 15 ௨ யில் கூட்டம் கோவையிலோ, மதுரையிலோ போட்டு
காரியங்கள் துவக்க வேண்டும். அப்படிக்கு இல்லாதவரை நமது மகாநாடு
என்பது நமது எதிரிகள் சொல்வது போல்தான் என்று பிறர் நினைக்க இட
முண்டாகிவிடும். மகாத்மா காந்தியவர்கள் ஏப்ரல் மத்தியில் நமது நாட்டிற்கு
விஜயம் செய்யப்போகிறார். அக்காலத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம்
13
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மக்களின் சுயமரியாதைக்கும் பொருளாதார நிலைமைக்கும் வேலை
செய்ததா? அல்லது காங்கிரஸ் வேலை செய்ததா? என்பதை அறியச் செய்து,
கதரைப் பரப்ப நாம் எவ்வளவு தூரம் பிரசாரம் செய்திருக்கிறோம் என்பதைக்
காட்டி நமது இயக்கத்திற்கு மகாத்மாவின் ஆசியைப் பெற வேண்டும்.
மகாத்மாவின் அபிப்பிராயங்கள் வர வர தாக்ஷண்ணியத்திற்கு கட்டுப்
படக்கூடியதாயிருந்தாலும் அதுவும் பெரியோர் குணத்திலொன்றாதலால்,
மகாத்மாவின் ஆசி நமக்கு இருப்பதென்பது நமது சுயமரியாதை
இயக்கத்திற்கு எவ்வளவோ மேன்மையை உண்டாக்கும்.
ஆதலால்,
மகாநாட்டுக்கு வந்து போனவர்களும் மகாநாட்டு அனுதாபிகளும் இதைக்
கவனித்து உடனே தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதுடன் முதல்
காரியமாக வரப்போகும் பொங்கல் பண்டிகைக்கு எல்லோரும் கதரையே
வாங்கி உடுத்த வேண்டும் என்றும் தங்கள் சிப்பந்திகளிடையிலும்
வேலைக்காரர்களிடையிலும் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள ஸ்தாபனங்களின்
இடையிலும் கதரைப் பரப்ப வேண்டும். அதிலில்லாமல் வாயில் பேசுவ
தானது பார்ப்பன அரசியல் புரட்டுக்கு இளைத்ததாகாதென்று கண்டிப்பாய்
தெரிவித்துக் கொள்ளு கிறோம்.
குறிப்பு :இம்மாதம் 1ஆம் தேதி முதல் கதரின் விலையும் கஜம் ஒன்றுக்கு 9
பைசா வீதம் குறைவு பட்டிருக்கிறது.
குடி அரசு - தலையங்கம் - 02.01.1927.
குடி அரசு
- 19270)
14
சுவாமி சிரத்தாணந்தர்
சுவாமி சிரத்தானந்தர் என்னும் பெரியாரை உலகம் முழுதும் தெரியும்.
இவர் தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் ஒதுக்கப்பட்டவர்களின் உயர்.
முன்னேற்றத்திற்காகவும் தனது தொழில், செல்வம், குடும்பம் முதலிய
வற்றைத் தியாகம் செய்து தனது ஜீவிதத்தின் பெரும்பான்மையான பாகத்
தையும் சந்நியாசியாகவிருந்தே தான் எடுத்துக்கொண்ட காரியத்திற்காக
அஞ்சாநெஞ்சத்தோடும், இளையா ஊக்கத்தோடும் தொண்டாற்றினார். இவர்
ஒரு முஸ்லீமால் படுகொலையுண்டிறந்தது ஒவ்வொரு மனிதனுடைய
மனதையும் பெரும் துன்பத்திற்குள்ளாகுமென்பதற்கு சிறிதேனும் ஐய
மில்லை. சுவாமிகளது மரணத்தால் இந்தியா தனது உண்மை புத்திரர்களில்
ஒருவரை இழந்ததென்று சொல்வது மிகையாகாது. ஆயினும்
இதை ஆராயு
மிடத்து இதுவும் ஒரு நன்மைக்கென்றே கொள்ள நேரும். ஏனெனில் பிறப்
பெய்திய ஒவ்வொரு மனிதனும் இறக்க வேண்டியதவசியமே. அங்ஙனம்
சுவாமிகள் சாதாரணமாக ஏதோ ஒரு நோயின் பேரால் இறந்திருப்பாரே
யாயின் இன்றிருக்கும் உணர்ச்சிக்கும் அவரது தொண்டில் மக்களுக்கிருக்கும்
ஊக்கத்திற்கு இத்தனை ஏதுவில்லாமலிருக்கும். இப்படுகொலையினால்
அனாவசியமாய் ஒரு கூட்டத்திற்கு பழியேற்பட நேரிட்டதேயன்றி சுவாமி
களுக்கேனும் அவர் கொண்ட தொண்டிற்கேனும் யாதொரு குறையும் வந்த
தாக எண்ண இடமில்லை.அவர் தான் கொண்ட காரியத்திற்காக இரத்தம் சிந்தி,
உயிர் துறந்து, தானும் தானெடுத்த காரியமும் உலகினின்று மறையா வண்ணம்
செய்திருக்கிறார்.
ஏசுநாதர் சிலுவையிலறையப் படாதிருந்தால் இன்று
அவருக்கித்தனை பக்தர்கள் இருக்க மாட்டார்கள்.
அது போலவே
சுவாமிகளும் அழியாப் புகழ் பெற்று விட்டார். ஆதலால் அவரது உண்மை
பக்தர்களுக்கிடையில் இக்கொலைக்காகப் பரபரப்பும் கிளர்ச்சியும் ஒரு
சிறிதும் வேண்டியதில்லை.அவர்களுக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கு
சுவாமிகள் காரியத்தில் அபிமானம் கொள்ள அவகாசம்
கிடைத்திருக்கிறது.
இத்தருணத்தை வீண் போக்காது அப்பெரியார் விட்டுப்போன காரியத்தை
சிரமேற்கொண்டு வினையாற்ற வேண்டியதே கடனாகும். தான் கொண்ட
கொள்கைக்காக கடைசி வரை கொஞ்சமும் தளராமல் உழைத்து வந்து அதற்
காகவே தனது உயிரையும் துறந்த சுவாமிகளது ஆத்மா சாந்தி அடைவதாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.01.1927.
15
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
Z Y
[வாசப்பதப்பு] TR
W
தன
¢ g
உர:
பணத்
ஜ்
7
பெற்ற சுத்த
o அகக் கதர்
போதன் வீ
கற்பக விதாயகர் கதர் நிலயம்:
-
6.1 Byl
)
o
[
மூன்று மாதத்தில்
15
கோட்டார் ஓட்ட கற்றுக்!
s
கொள்ளலாம்
1016
ஸ்தாபிக்கப்பட்டு:
கேட்
அறுகு வ
ப்பர் கண்டு அறவ கணத்து $
ம்க் க்கக் தல் வெது
ட டட
துறவை எவவ அவி தத்தர் வியாபாரிகளுக்கு 9
ir.
|வுக்ப்பில்,
- தேத்பெடல.. ஆன்று
கை
ன்
அன்றில்
Py
23 அகக்கண்)
R கொடுக்கப்ப.
அத்பக்பந்தகு
சே
றி சொதி
குடி அரசு
- 1927 0)
16
இனிச் வசய்ய வேண்மமய 6வைை
மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக் கடிதங்கள் வந்த வண்ண
மாயிருக்கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சி
யுடன் இருக்கிறார்கள் என்பதும் சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கி
றார்கள் என்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயை
யில் விழுந்து தங்கள் சமூகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை
என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கிவிட்டது. ஆனால் இந்த
விளக்கம் மாத்திரம் போதுமா? இதனாலேயே நாம் சுயமரியாதை அடைந்து
விட்டோமா? என்பதை யோசிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தல்களில்
பார்ப்பனர்களின் சூழ்ச்சியினாலும், விஷமப் பிரசாரத்தினாலும் சுவாதீன
புத்தியுள்ள பல பார்ப்பனரல்லாதார் தோல்வியுற்று விட்ட காரணத்தாலும்,
சுயராஜ்ஜியக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் புரட்டுகளைக் கண்டு
சகியாததாலும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உள்ள காங்கிரஸ் சபையினிடம்
உள்ள அதிருப்தியினாலும் திடீரென்று மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு
பிரதிநிதிகள் வரவும் உற்சாகம் காட்டவும் முடிந்ததே அல்லாமல் முழுதும்
ஏற்கனவே ஏற்பட்டுள்ள உற்சாகமென்றாவது நிரந்தரமாயிருக்கக்கூடிய
உற்சாக மென்றாவது சொல்லிவிடமுடியாது என்றே நினைக்கிறோம். நமது
மக்கள் பார்ப்பன சூழ்ச்சியில் விழுகாதிருக்க வேண்டுமானாலும், நமது மக்க
ளின் முன்னேற்றத்திற்கு
அதுகூலமான மகாநாட்டுத் திட்டங்கள் நிறைவேற்
றப்பட வேண்டுமானாலும் தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து
வேலை செய்ய வேண்டியது மிகவும்
அவசியமானதாகும். பிரசாரங்களைச்
செய்ய வேண்டியதைப் பற்றியும், அமைப்பு விஷயங்களைப் பற்றியும்
சென்ற வாரத்தில் எழுதி இருக்கிறோம். அதைப்பற்றி இவ்வாரத்திலும் எழுத
வேண்டியதில்லை. தவிர மகாநாட்டிற்கு ஒவ்வொரு ஜில்லா தாலூகா
விலிருந்தும் தக்க பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகள் வந்து போயிருக்கிறார்
களானதால் அவர்கள் தங்கள் தங்கள் ஜில்லாவிலும் தாலூகாவிலும் ஜில்லா
தாலூகா மகாநாடுகள் கூட்ட வேண்டும். அதை ஆதாரமாக வைத்தே ஜில்லா
முழுவதும் அமைப்புகளை ஏற்படுத்தச் சவுகரியமாயிருக்கும். அந் தந்த
இடங்களில் இப்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத வாலிப
சங்கத்தார் இந்த மகாநாட்டு வேலையை எடுத்துக் கொண்டு ஆங்காங்குள்ள
பெரியோர்களைப்
பிடித்து மகாநாட்டை கூட்டுவிக்க ஏற்பாடு
செய்ய வேண்டும். திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, தென்னாற்
7
ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
காடு, வடஆற்காடு, சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களில் இப்போது
அவசரமாய் ஜில்லா மகாநாடுகள் கூட்ட ஏற்பாடு செய்யவேண்டும். இப்
போதே அந்தந்த ஜில்லாக்களில் இருக்கும் தென்னிந்திய நல உரிமைச்சங்க
கிளை ஸ்தாபனத் தலைவர்கள் இதை உடனே கவனிக்க வேண்டுமாய்
வற்புறுத்துகிறோம்.
தேர்தல்களில் நிற்பதும் தேர்தல்களுக்குச் செலவு
செய்வதும் தேர்தல்களின்போது ஊர் ஊராய்ச் சென்று ஓட்டர்களை
ஏமாற்றுவதுமே தென்னிந்தியநலஉரிமைச் சங்கத்தார் வேலையானால் இந்தச்
சங்கத்தைவிட காங்கிரஸே மேலானது என்று சொல்லுவோம். உண்மை
யிலேயே பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கும், முன்னேற்றத்
திற்கும் உழைப்பதானால் குறைந்தது இந்த மாதத்திலேயே இரண்டு மூன்று
ஜில்லா மஹாநாடுகளாவது கூட்ட வேண்டுமென்று விரும்புகிறோம். சேலம்,
கோயமுத்தூர், திருச்சி ஆகிய மூன்று ஜில்லாக்காரர்களுக்கும்
இந்த மாதத்தில்
கூட்ட ஆக்ஷேபனை இருக்காது என்றே நினைக்கிறோம். மற்றபடி அந்தந்த
தாலூகாக்காரர்களுக்கும் கூட்ட வசதி இல்லாமற் போகவில்லை. ஆதலால்
இந்த மூன்று மாதத்திற்குள்
இந்த வேலைமுடிந்து, கதர், பார்ப்பன ஆதிக்கப்
புரோகிதத்தை ஒழித்தல், தீண்டாமைவிலக்கு, மதுவிலக்கு இவைகளில் தக்க
முன்னேற்றம் ஏற்படும்படி செய்யவேண்டும். இதில் பார்ப்பனரல்லாத எவ்வித
ராஜீய அபிப்பிராய பேதமுடையவர்களாயிருந்தாலும் இந்த மேற்கண்ட
கொள்கை களை ஒப்புக் கொள்ளக்கூடிய யாரையும் அக்கிராசனராக
அழைப்பதில் ஒன்றும் குற்றமில்லை என்றே நினைக்கிறோம். வீண் செலவும்
ஆடம்பரமும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதையும் ஞாபக
மூட்டுகிறோம். மகாநாட்டுப் பிரதிநிதிகள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டும்
என்கிற ஒரு நிபந்தனையே மதுரை மகாநாட்டில் நிறைவேறிய கதர்
திட்டத்திற்கு மிகுதியும்
துணைப்போவதாகும். அன்றியும் கிராமங்களில்
தொழிலுமற்றுச் சுயமரியாதையுமற்று இரண்டு நாளைக்கு ஒருவேளைக்
கஞ்சிக்கும் வகையற்றுப் பட்டினி கிடந்து தவிக்கும் பார்ப்பனரல்லாத ஏழை
மக்களின் பசியைத் தீர்த்து, பட்டினிக்காக அவர்கள் இழக்க நேரிடும்
கற்பையும், மனச்சாட்சியையும் காப்பாற்ற இது ஒரு ஒப்பற்ற சாதனமாகவும்
இருக்கும். ஆதலால் கதரைப் பிரதிநிதிகளுக்குக் கட்டாயமாக்க வேண்டும்
என்று கேட்டுக் கொள்ளுகிறோம். தவிர வரப்போகும் பொங்கல் பண்டி
கைக்கு எல்லாரும் கதரே உபயோகிக்க வேண்டுமாய்க் கேட்டுக்
கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.01.1927
குடி அரசு - 19970)
18
பொங்கல் தினங்களில் உண்டி மூலம் வீடு வீடாய்ச் சென்று பணம்
வசூல் செய்யுங்கள்.
பார்ப்பனரல்லாத பெரியோர்களே 1
வாலிபர்கள் உங்களைத் தேடி உண்டிகைக் கொண்டு வந்தால்
இல்லை யென்று சொல்லாமல் உங்களுக்குத் தோன்றியதை உண்டியில்
போடுங்கள். வசூலான தொகையை அந்தந்த ஜில்லா ஸ்தாபனங்களுக்கு
தெரியப்படுத்தி அவர்கள் கட்டளைப்படி உபயோகப்படும்.
குடி அரசு - அறிவிப்பு - 09.01.1927
19
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
தஞ்சை வில்லா யோர்டை யார்ப்பண
அக்கிரஹாரமாக்கச் சூழ்ச்சி |
தஞ்சை ஜில்லா போர்டைப் பற்றி பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம்
விஷமப் பிரசாரங்கள் செய்து வருகிறார்கள் என்பது பார்ப்பனப் பத்திரிகை
களைப் பார்ப்பவர்களுக்கு விளங்காமற் போகாது.
ஆனால், அதன் காரணம் என்ன என்பதை வெகு பேர்கள் அறியா
மல், விஷமப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து போவார்கள் என்றே நினைக்
கிறோம். தஞ்சை ஜில்லா போர்டுக்கு இப்பொழுது பிரசிடெண்டாய் இருக்கும்
ஸ்ரீமான் பன்னீர் செல்வத்திற்கு முன் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் அதாவது
ஸ்ரீமான் வி.கே.ராமாநுஜாச்சாரியார் என்பவர் பிரசிடெண்டாய் இருந்த காலத்
தில் தஞ்சை ஜில்லா தாலூகா போர்டுகள் முழுதும் பார்ப்பன ஆதிக்கமாகவும்,
பார்ப்பனர்கள் அக்கிரஹாரமாகவும், பார்ப்பனர்கள் சாப்பிடும்
அன்ன
சத்திர.
மாகவும் இருந்து வந்தது யாவரும் அறிந்ததே. ஆனால், அந்தக் காலத்தில்
பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைப் புகழ்ந்தது வானம் கூட ஓட்டையாய்ப்
போயிருக்கும். ஸ்ரீமான் பன்னீர் செல்வம் வந்த பிறகு பார்ப்பன தனி ஆதிக்
கத்தை ஒழித்து எல்லோருக்கும் பங்கு இருக்கும்படி செய்து பார்ப்பனரல்லா
தாருக்கும் செளகரியமுண்டாகும்படி செய்திருக்கிறார்.
உதாரணமாக
ஒரத்தநாடு சத்திரத்திலுள்ள ஒரு தர்மப் பள்ளிக்கூடமானது (அதாவது சாப்
பாடு போட்டு சம்பளமில்லாமல் சொல்லிக்கொடுக்கும் உயர்தரப் பள்ளிக்
கூடம்) வெறும் பார்ப்பனப் பிள்ளைகளும் பார்ப்பன உபாத்தியாருமே
அடைந்து இருக்கும்படி இருந்தது. இப்பொழுது எல்லா வகுப்புப் பிள்ளை:
களும் சாப்பிடும் படியாகவும், உபாத்தியாயர்களாகும்படியாகவும் செய்யப்
பட்டிருக்கிறது.
திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத காலேஜ் என்பது சாப்பாடும்
போட்டு சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. இது முழுதும்
அய்யங்கார் அக்கிரஹாரமாகவும் அய்யங்கார் பிள்ளைகள் சாப்பிடும் தர்ம
சத்திரமாகவும் இருந்து வந்தது. இப்போது கொஞ்சம் பாகம் பார்ப்பனரல்லாத
பிள்ளைகள் சாப்பிடவும், அய்யங்கார் அல்லாத பார்ப்பன உபாத்தியாயர்கள்.
பிழைக்கவுமாய் இருக்கிறது. மற்றும் பல பெண் பள்ளிக்கூடங்களும், பல
குடி அரசு - 19970)
20
சத்திரங்களும், பல உத்தியோகங்களும், பார்ப்பனரல்லாதாரும் பிழைக்கும்
படி செய்யப்பட்டிருப்பதால் பார்ப்பனர்கள் ஒரே கூச்சல் போடுகிறார்கள்.
இதற்கேற்றார் போல், ராவணனைக் கொன்று விபீஷணனுக்கு பட்டம் தருவ
தாய் ராமன் வாக்களித்து ஆட்களைச் சேர்த்துக் கொண்டது போல் இங்கும்
சில விபீஷணர்களுக்கு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் பட்டம் கட்டுவதாய்
பார்ப்பனர்கள் வாக்குறுதி கொடுத்து அவர்களையும் சேர்த்துக்கொண்டு
அவர்களது உதவியால் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தை ஒழித்து அய்யங்கார்.
ஆதிக்கத்தில் இருந்ததுபோல் தஞ்சை ஜில்லா போர்டையும் தாலூகா போர்டு
களையும் பார்ப்பன அக்கிரஹாரமும் அன்ன சத்திரமும் ஆக்கப் பார்க்கி
றார்கள். மந்திரியும் இவர்களால் ஏமாற்றப்பட்டுப்போவார் போலவே காண்கி
றது. இதற்கேற்ற விபீஷணர்கள் பலரும் பட்டத்திற்கு எதிர்பார்த்து தலையை
நீட்டிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. பாமர ஜனங்கள் பைத்தியக்கார
ராயிருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கத்திற்கு யோகம்தான் .
குடி அரசு - கட்டுரை - 09.01.1927.
21
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
நல்லை இழு
சேலம் பார்ப்பனருக்கும் அவர்களது வால் பிடித்துத் திரிபவர்களுக்
கும் நமது முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் நல்ல இடி கொடுத்ததாக
தெரிந்து நாம் மிகவும் சந்தோஷப்படுகிறோம். ஆனாலும் காண்டா
மிருகத்தோல் படைத்த அப்பார்ப்பனருக்கும் அவர்களது அடிமைகளுக்கும்
அது கொஞ்சமாவது சொரணை உண்டாகுமா என்பதுதான் நமது கேள்வி?
அதாவது கனம் சுப்பராயனவர்களை சேலம் பார்ப்பனர்கள் தங்கள்
டிக்கட் பாக்கட்டில் போடுவதற்காக “லிட்டரரி சொசைட்டி” என்கிற ஒரு
பார்ப்பனக் கூட்ட நிலையத்தில் ஒரு கூட்டம் கூட்டி அவரை வானமளாவப்
புகழ்ந்தும் இதற்கு முன் மந்திரியாய் இருந்தவர்களை ஆசைதீர வைதும்
பேசினார்களாம். இதற்குப்பதிலளிக்குமுகத்தான் கனம் சுப்பராயன் இம்மாதிரி
ஒருவரை, உத்தியோகம்விட்டுப் போனபின் வைவது இழிவு என்றும்,
நாளைக்கு என்னையும் இப்படித்தான் வைவீர்கள் என்றும், இப்படிச் செய்வது
உங்களுக்கு யோக்கியதை அல்ல வென்றும் சொன்னாராம். வைததில்
பெருமை கொண்டவர்களும் வைததைக் கேட்டு ஆனந்தம் கொண்டவர்.
களும் வெட்கித் தலைகுனிந்தார்களாம். இதோடு இந்தப் புத்தியை விட்டு
விடுவார்களா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1927.
குடி அரசு - 19970)
22
யார்ப்பணர் விஷமப் பிரசாரம்
மதுரை முனிசிபல் சேர்மனுக்குமீ“1க்கு ரூ.900 சம்பளம் கவுன்சிலர்
களால் நிர்ணயிக்கப்பட்டவுடன் அச்சேர்மென் ஒரு பார்ப்பனரல்லாதாரா
யிருப்பதோடு பார்ப்பனர்களின் தாளத்திற்குத்தகுந்தபடி ஆட மறுப்ப
வராயிருப்பதால் நமது பார்ப்பனர்கள் ஒப்பாரி வைத்தழுது கூச்சல் போட்டு
விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மதுரை முனிசிபாலிட்டி
யானது சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளும் லக்ஷத்து நாற்ப
தினாயிரம் ஜனத்தொகையும், சுமார் 3. 4 லக்ஷ ரூபாய் வரும்படிக்கு மேற்
பட்டதுமான பெரிய முனிசிபாலிட்டி அதன் சேர்மென் ஸ்ரீமான் ஆர்.எஸ்.
நாயுடு பாரிஸ்டர் பரீக்ஷ தேரினவரும் பாரம்பரியமாய் பெரிய குடும்பத்
தைச் சேர்ந்தவருமான ஒரு கண்ணியமான கனவான். மதுரை மகா ஜனங்
களால் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு அவரது வேலையையும் மதுரைப்
பட்டணத்தின் நிலைமையையும் உத்தேசித்து பெரும்பான்மையான
கவுன்சிலர்களால் B 16@ ரூ. 900 கொடுக்க வேண்டும் என்று அபிப்பி
ராயப்பட்டு அந்தப்படி தீர்மானித்து இருக்கிறார்கள். இதனால் பொறாமை:
கொண்ட பார்ப்பனர்களிற் சிலர் தங்கள் ஜாதிப் புத்திக்கு ஏற்ப “பணம்
போச்சே” “பணம் போச்சே” என்று மாரடித்துக் கொள்ளுவதின் அர்த்த
மென்ன? இந்தப் பார்ப்பனர்கள் தங்களும் தங்களது சிஷ்யர்களுடனும்
வெளியேறினதாகச் சொல்லும் வெட்கங் கெட்ட வெளியேற்றத்தின் அர்த்த
மென்ன? இந்தப் பார்ப்பனர்களுக்கும் அவரது கூட்டத்தாருக்கும்
உண்மையிலேயே பணம் நஷ்டமாகிறதே என்கிற கவலை இருக்குமானால்
மாடு மேய்க்கக் கூடத்தெரியாத விளையாட்டுப் பிள்ளைகள் எல்லாம் 8.58
என்கிறதாக பேர் வைத்துக்கொண்டு ஒரு பலகையை போட்டுக்கொண்டு
ஜட்ஜ்,முனிசீப் மேஜிஸ்திரேட் இவர்களை சரிப்படுத்திக் கொண்டு 57500,
1000, 5000, 10000 என்பதாக ஏழைகளின் தலையிலும் முட்டாள்களின்
தலையிலும் கை வைத்து கொள்ளை அடித்து நாட்டைப் பாழாக்கி “அந்நிய
அக்கிரம ஆட்சிக்கு” ஒற்றர்களாயிருக்கிறார்களே அதைப்பற்றி இவர்கள்
கவனிக்கக் கூடாதா? சராசரி மாதத்தில் நாலுநாள் வேலைகூட இல்லாத
வெறும் வேலையான சட்டசபைத்தலைவர் உத்தியோகத்திற்கு மீ£ 1 க்கு ரூ.
2000, 3000, சம்பளம் வாங்குகிறார்களே அதுவும் இந்த வருஷம் பார்ப்பனர்.
கட்சியான சுயராஜ்ஜியக் கட்சியாரே தங்களுடைய பக்த கோடிகளில்
ஒருவரை நியமித்தார்களே அதில் ஏன் மீ ரூ.1900 குறைத்துக் கொள்ளக்
23
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கூடாது? இந்த 2000 ரூபாய்க்கு வேலை என்ன இருக்கிறது? 128 மெம்பர்களில்
இந்த மெம்பரும் ஒருவர் தானே: அவர்களுக்குள்ள மெனக்கேடு தானே
இவருக்கும்: இதைப்பற்றி எவருக்காவது “பணம் போச்சே, பணம் போச்சோ”
என்கிற விசாரமிருக்கிறதா? மற்றபடி முனிசிபாலிட்டிகளில் தான் இவர்க
ளுக்கு அதிக கவலை என்று வைத்துக் கொண்டால் ஈரோடு முனிசிபாலிட்டி
யில் உள்ள சேர்மன் முனிசிபல் சொத்தைக் கொள்ளை அடிப்பதும்
ரிகார்டுகளைத் திருத்தி பணம் திருடுவதும், கவுன்ஸிலில் பாசாகாத பொய்த்
தீர்மானங்களை மினிட் புஸ்தகத்தை வீட்டிற்குக் கொண்டுபோய் புகுத்தி
முனிசிபல் சொத்தை அனுபவிப்பதும் தனது சகாக்களான கவுன்சிலர்.
களுக்கும்முனிசிபல் சொத்தை வாரி இறைப்பதுமான
அநேக அக்கிரமங்கள்
செய்யப்படுகின்றன.
இதை
எந்தப் பார்ப்பனராவது அவர்களது கட்சியாவது
கவனிக்கின்றதா? எந்தப் பார்ப்பனப் பத்திரிக்கையாவது பார்ப்பன நிரூபங்
களாவது கண்டித்ததா? அல்லது மந்தரிகளாவது கவனிக்கின்றார்களா? ஏன்
கவனிப்பதில்லை என்று பார்த்தால் இத்திருடர்கள் பார்ப்பனரின் தாளத்திற்குத்
தகுந்த படி ஆடிவிடுகிறார்கள். பார்ப்பன தேர்தலுக்கு வேலை செய்து வரு
கிறார்கள். அதோடு சில வெள்ளைக்காரருக்கும் பங்கு கொடுத்து விடுகிறார்.
கள். வெள்ளைக்காரர்கள் தயவும் பார்ப்பனர்கள் தயவும் இருந்து விட்டால்
உலகத்தில் என்ன அக்கிரமம் செய்தாலும் கேள்வி இல்லாமற் போய்
விடுகிறது. மந்திரிகளுக்கோ பார்ப்பன சிபார்சுகள் வந்துவிடுகிறது. அவர்.
களும் தங்களது வாழ்வு நீர்மேற்குமிழியாயிருப்பதால் பயப்படுகிறார்கள்.
இப்படி இன்னமும் எத்தனையோ இலாகாக்களில் உபயோகமில்லாமல்
அவசியமுமில்லாமல் எத்தனையோ ஆட்கள் இருந்துகொண்டு
மீ” 1000, 5000
கொள்ளை அடிப்பதற்குச் சமானமாகவும் மற்றும் பல பெயரினாலும்
கண்ணியமற்ற வழிகளில் தின்கிறதைப்பற்றி இந்தப் பார்ப்பனருக்கு ஒரு
சிறிதும் கவலை இல்லாமல் வீண் வேஷம் போடுவதை ஜனங்கள் நம்பி
ஏமாந்து போகிறார்கள். அப்படி இந்தப் பார்ப்பனருக்கு உண்மையில்
அக்கரை இருக்குமானால் மந்திரிகள் சம்பளத்தை 1571000 ரூபாய் ஆக்கினால்
ஆக்க தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முயற்சித்தால் இவர்கள் யோக்கி
யர்கள் தான். மதுரை சேர்மெனை விட இந்த
மந்திரிகளும் சட்டசபைத்
தலைவரும் எந்த விதத்திலும் அதிக யோக்கியதாம்சமுடையவர்கள் அல்ல
என்பதனை சிறு பிள்ளைகள் முதல் யாரும் ஒப்புக் கொள்ளக் கூடியது தான்.
இதையெல்லாம் விட்டுவிட்டு யாராவது தங்களுக்கு அடிமைப்படவில்லை
யானால் அதற்காக கூப்பாடு போட்டு ஜனங்களை ஏமாற்றுவதென்பதை
பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரம் என்பதல்லாமல் வேறு என்னவென்று
சொல்வது?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.011927
குடி அரசு
- 19270)
24
மகாநாட்டு உபந்நியாசங்களும்,
யார்ப்பணரல்லார் பத்திரிகைகளும்
இம்மாதம் நடந்த மகாநாடுகளில் உபசரணை அக்கிராசனர். மகா
நாட்டுத் தலைவர் ஆகியவர்களின் பிரசங்கங்களைப்பற்றி பார்ப்பனப்
பத்திரிகைகள் தங்கள் ஆதிக்கத்திற்கு அநுகூலமாய் பேசியவற்றையும்
பேசினவர்களையும் புகழ்ந்தும் அதற்கு விரோதமாய் பேசியவர்களை
இகழ்ந்தும் எழுதியிருக்கின்றன என்றாலும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகை:
களில் பெரும்பாலும் தங்களுக்கென கொள்கையும் சுயமரியாதை
உணர்ச்சியும் இல்லாமல் அவற்றையே பின்பற்றித் திரிகின்றன. இதற்காக
பொதுமக்கள் பணமும் நேரமும் எவ்வளவு வீணாய்போகிறதென்பதைக்
கவனிப்பவர்களுக்கு துக்கம் ஏற்படாமலிருக்க முடியாது.
சிலபத்திரிகைகள் “பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்
ஒத்துழைப்பைப்பற்றி பேசிவிட்டார். ஆதலால் பார்ப்பனரல்லாதாருக்கு
அவமானம் ஏற்பட்டுவிட்டது” என்பதாக அளவுக்கு
மீறி
துக்கப்
படுவதாகவும் வெட்கப்படுவதாகவும் வேஷம் போட்டிருக்கின்றன. ஆனால்
பார்ப்பனர்களில் சிலர் அதாவது மாதம் 5000, 10000 சம்பளம் வாங்கியவர்:
களும் தங்கள் வீட்டு பூனைக்குட்டிக்கு முதல் சர்க்காரில் மாதம் 500,1000,
2000, 3000 உத்தியோகம் பெற்று கொள்ளை அடிக்கிறவர்களும் ஒன்று
சேர்ந்து மிதவாத மகாநாடு என்பதாகக் கூட்டி “சர்க்காரோடு ஒத்துழைக்க
வேண்டும். தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் சர்க்கார் பெயர் வைக்க
வேண்டும்” என்றும் பேசிக் கொண்டதைப் பற்றி இந்த ரோஷமுள்ள,
தேசாபிமானமுள்ள, சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாதார் பத்திரிக்கைகள்
ஒன்றும் எழுதவேயில்லை என்ற இவர்களின் தேசாபிமானத்தையும்
சுயமரியாதையையும் என்னவென்று சொல்வது என்பது நமக்குத்
தெரியவில்லை.
இதுவரை பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் மிதவாதப் பார்ப்பனர்
களைப் பின்பற்றி ராஜ விசுவாசத் தீர்மானம் என்பதாக வருஷாவருஷம்
பல்லவி பாடிவந்த ஒரு தீர்மானத்தை இவ்வருஷம் தீர்மானிக்கப்படவில்லை
என்பதை ஒரு பார்ப்பனரல்லாத “தேசீயவாதியும்” அவர்களது பத்திரிகையும்
25
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
பாராட்டவே இல்லை. நம் கூட்டத்திலேயே இப்படி ஆட்கள்
மலிந்திருக்கும்
போது இந்த சமூகம் சுயமரியாதை பெறுவது சுலபமான காரியமாவென்று
கேட்கிறோம்? தவிர, அஸ்ஸாம் காங்கிரசின் உபசரணை அக்கிராசனரின்
பிரசங்கமானது எவ்வளவு கேவலமான தென்றும் பார்ப்பனரல்லாதாருக்கு
எவ்வளவு இழிவையும் அவமானத்தையும் கொடுக்கத்தக்கதென்பதையும்
ஒரு பார்ப்பனரல்லாத “தேசீய பத்திரிகை”யாவது கவனித்ததாகச் சொல்ல
முடியவில்லை. உபசரணை அக்கிராசனர் ஸ்ரீ பூக்கன் ஒரு பார்ப்பனர்.
அதாவது ஆரியரென்று சொல்லிக்கொள்ளுபவர். அவர் தனது பிரசங்கத்தில்
ஆரியரல்லாதார் பார்ப்பனரல்லாதார்! ஆகிய நம்மைப்பற்றி கூறியிருக்கும்
இழி மொழிகளும், நம்மை அசுரரென்று குறிப்பிட்டிருப்பதும், நமது
அரசர்களை
அசுர அரசர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும், நமது கலாஞானம்.
வித்தை பண்டை வழக்க ஒழுக்கம் நமது நாகரீகம் முதலியவைகளை
இழிவுபடுத்தி இருப்பதும், அவற்றைத் தாங்கள் ஒழித்ததையே தங்களது
பெருமையாகக் குறிப்பிட்டிருப்பதும், சங்கராச்சாரியார், மத்துவாச்சாரியார்.
முதலிய அரிய மதஸ்தாபகர்கள் நமது கலை,பண்டைய ஒழுக்கம்,நடையுடை
பாவனை, நாகரீகம் முதலியவைகளை அழித்து வெற்றிபெற்றதையும்,
பார்ப்பன ஆதிக்கம் வேரூன்றினதையுமே பெருமையாகப் பேசியிருக்கிறார்.
“தமிழ்நாடு அரசியல்” மகாநாட்டின் அக்கிராசனர் ஸ்ரீமான் கே.வி.ரங்கசாமி
அய்யங்காரும் தனது அக்கிராசனப் பிரசங்கத்தில் இதேமாதிரியாகவே
பார்ப்பனரை உயர்த்தியும் பார்ப்பனரல்லாதாரை இழிவுபடுத்தியுமே பேசியி
ருக்கிறார். இதுகள் ஒன்றும் நமது “தேசீய பத்திரிகை களுக்குத் தெரிவ
தில்லை. பார்ப்பனரல்லாதார் எதுபேசினாலும், எழுதினாலும் குற்றமாகவே
தோன்றுவதும், பார்ப்பனர் நம்மை எவ்வளவு இழிவாகவும் தாழ்வாகவும்
பேசினாலும் அது தேசீயமாகத்தோன்றுவதும் தான் பார்ப்பனரல்லாத்
தேசீயவாதிகளுக்கும் அவர்களது பத்திரிகைகளுக்கும் ஜன்மக் குணமாய்
போய்விட்டது. வெட்கம்! வெட்கம்!! இதைவிட
வெட்கம்!!! என்ன?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1927.
குடி அரசு - 19970)
26
யிறப்புரிமையும் அதண் தடைகளும்
மனிதப்பிறவி
பிறப்புரிமை என்பது யாருடைய பிறப்புரிமை என்பதை முதலில்
அறிந்து கொள்ள வேண்டும். நான் எடுத்துக்கொண்டது மனிதனுடைய
பிறப்புரிமை என்பது தான். தடைகள் என்பன மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட
தடைகளைத்தான் “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது”
என்று
பெரியோர்கள் சொன்னதாகச் சொல்வார்கள். நான் அதை ஒப்புக்கொள்ள
முடியாததற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். “கொடுமை கொடுமை:
மனிதராகப் பிறப்பது மிகக் கொடுமை” என்பது எனது தாழ்மையான அபிப்
ராயம். உலகில் உள்ள ஜீவகோடிகளில் எல்லாவற்றினும் மனிதப்பிறப்பே
மிகத் தாழ்ந்த பிறப்பு என்பதும் மனிதராகப் பிறப்பது மிகவும் கொடியது
என்பதும் மனிதனைப்போல் அடிமை, உலகில் வேறு ஜீவன்கள் இல்லை
என்பதும் என் அபிப்பிராயம். மனிதனைத் தவிர மற்ற ஜீவகோடிகள் எவ்வ
ளவோ சந்தோஷத்துடனும் அடிமை உணர்வில்லாமலும் சுதந்திரமாய் வாழ்
வதை நாம் பார்க்கிறோம். அவைகளில் சிலவற்றிற்கு கஷ்டமும் அந்நியரால்
கஷ்டப்படுத்தத் தக்க நிலைமையும் ஏற்பட்டு இருந்தாலும் மனிதனைப் போல்
உணர்ந்து துக்கிக்கிற சக்தியாகிய கொடுமை அவற்றிற்கு இல்லை.
பகுத்தறிவு
ஏனெனில், பகுத்தறிவு என்கிற ஒரு உபத்திரவம் கொடுக்கத் தக்க
குணம் அவைகளுக்கில்லாததால்தான். உதாரணமாக குதிரைகளை ஜட்கா
வண்டியில் பூட்டி ஒரு முரட்டு நூல் கயிற்றை மடித்துக்கொண்டு ஓட ஓட
அதனின் மிகு மெல்லியதும்
அதிக உபத்திரவம் கொடுக்கத்தக்க இடமுமாகிய
மர்ம ஸ்தானத்தில் அடித்தாலும், நல்ல வாலிபமுள்ள காளை மாடுகளைக்
கட்டித்தள்ளி அதன் விதர்களை மரக்கட்டையின் மேல் வைத்து மரக்கொட்
டாப் பிடியினால் தண்ணீர் போல் கரையும்படி தட்டினாலும் அவைகளுக்கு
கஷ்ட மாத்திரம் தோன்றுமே அல்லாமல் அதற்கு தன் பிறப்புரிமை இழந்து
இப்படி கஷ்டமனுபவிக்கிறோமே என்கிற உணர்ச்சி இருக்காது. தவிரவும்
அதற்கு மானம், அவமானம் என்கிற உணர்ச்சியும் இல்லை. இதோடு
நாளைக்கு வேண்டுமே என்கிற கவலையும் இல்லை. எவ்வளவு கிடைத்
27
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
தாலும் போதாது என்கிற ஆசை என்னும் அடிமைத் தன்மையும் இல்லை.
ஆகவே, மனிதன் மற்ற ஜீவராசிகளைவிட மானம், அவமானம் என்கிற
உணர்ச்சியும், நாளைக்கு என்ன செய்வது என்கிற தன்னம்பிக்கையற்ற
தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியடைய முடியாத ஆசை
என்னும் அடிமைத் தன்மையும், உடைத்தாயிருப்பதால் மனித ஜன்மமானது
பிறவியிலேயே மிகுதியும், இழிவானதும் கொடுமையானதும் அடிமைத்
தன்மை கொண்டதானதுமாய் இருக்கிறது என்பது நான் கொண்ட கருத்து.
பிறப்புரிமை
இப்படிப்பட்ட மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான
உணர்ச்சியாக மான, அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதை
யைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில்
மனிதன், மானிடன் என்கிற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு.
ஏற்பட்ட மொழிகள். ஆதலின், மனிதன் என்பவன் மானமுடையோன்.
எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது
மானம்தான். அத் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்பு
ரிமையாக கொண்டிருக்கிறான். இது ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் உரிமை
யுடையது.
தடைகள்
அதற்கு நம் முன் நிற்கும் தடைகள் என்ன என்பது இரண்டாவது
விஷயம். தடைகள் இரண்டு விதம். ஒன்று இயற்கையாய் ஏற்பட்ட தடை.
மற்றொன்று மற்றவர்களால் ஏற்பட்ட செயற்கைத் தடை.
இயற்கைத்தடை
நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்றதன்மையும்,
எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும்
மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள். இத்
தடைகள் நீங்குவதென்பது முற்றும் துறந்த துறவிகளுக்கே முடியக் கூடியது.
குடி அரசு - 19970)
28
செயற்கைத்தடை
ஆதலால், நான் செயற்கைத் தடைகளைப்பற்றியே பேசப் போகிறேன்.
இந்தச் செயற்கைத் தடையென்பது ஒவ்வொரு தேசத்திற்கு ஒவ்வொரு
மாதிரியாகக் காணப்படுகிறது. நமது நாட்டில் நமது பிறப்புரிமையாகிய
சுயமரியாதைக்கு முக்கியமாய் இரண்டு விதமான செயற்கைத் தடைகளைச்
சொல்லலாம். ஒன்று அரசியல் சம்பந்தமாக பார்ப்பனர் என்னும் வகுப்பார்.
நம்மை ஏமாற்றி நமது சுயமரியாதையைக் கெடுத்திருப்பது. மற்றொன்று
அதே வகுப்பார் பரமார்த்திகத்திற்கு என்று மதம் என்கிற பெயரால் நம்மை
ஏமாற்றி நிரந்திர அடிமையாக்கி நமது சுயமரியாதையை அடியோடு களைந்து
வருவது.
ஆகிய இந்த இரண்டு விஷயத்திலும் நமது மக்கள் ஏறக்குறைய
எல்லோருமே -
சிலர் ஏதாவது ஒன்றில் - சிலர் இரண்டிலும் மயங்கி அவ்
வகுப்பாருக்கு அடிமையாகி மொத்தத்தில் சுயமரியாதையற்று இருக்கிறோம்.
அன்றியும் அவ்வகுப்பாரைப் பின்பற்றி நம்மவருட் சிலரும் வயிறு வளர்ப்ப
தன் மூலமும் நமது சுயமரியாதைக்கு தடைகளாக இருக்கிறார்கள். ஆயினும்,
இந்த சமயத்தில் அரசியல் என்பதின் மூலமாயுள்ள தடையை விட்டு
பரமார்த்தம் என்னும் பேரால் உண்டாக்கிய தடைகளைப் பற்றியே இங்கு பேச
எண்ணி இருக்கிறேன்.
“இந்து மதம்”
நமது ஆத்மார்த்தத்திற்கென்றும் பரமார்த்தத்திற்கென்றும் இந்து மதம்
என்பதாக ஒரு கற்பனையை இப்பார்ப்பனர்கள் நமது தலையில் சுமத்தி இருக்
கிறார்கள். இந்துமதம் என்கிற இவ்வார்த்தைக்குப் பொருளே காண முடிய
வில்லை. இந்து என்கிற வார்த்தையே
தமிழ் வார்த்தையல்ல என்பதை
நீங்கள் முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது பார்ப்பன பாஷை
(ஒலி. பார்ப்பன பாஷையிலாவது இந்து என்பதற்குப் பொருளுண்டா என்று
பார்த்தால் மதத்திற்கு பொருத்தமானதாக ஒரு பொருளும் இல்லை. வேறு
ஏதாவது பாஷையில் இருக்கிறதா என்று பார்த்தால் பார்சி பாஷையிலோ
அரபி பாஷையிலோ இந்து என்பதற்கு திருடன் என்கிற பொருள்தான்
இருக்கிறது. சிலர் சிந்து நதிக்கரையில் இருந்ததால் சிந்து என்பது இந்து
என்பதாக மருவி அது ஒரு கூட்டத்தினருக்குபெயராகிப் பிறகு மதமாகி
விட்டதாகவும் சொல்கிறார்கள். அது எப்படியோ இருக்கட்டும் இந்து மதம்
என்றால் என்னவென்பதையாவது கவனிப்போம். கிறிஸ்துமதம் என்றால்
கிறிஸ்து மகான் கட்டளையை அடிப்படையாகக்கொண்டது. மகமதிய மதம்
என்றால் மகமது நபியின் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது.
பெளத்தமதம் என்றால் புத்த பகவானின் கட்டளையை அடிப்படையாகக்
கொண்டத. இது போல் மதம் என்று சொல்லக்கூடியவை ஒவ்வொன்றுக்கும்
மத கர்த்தா இன்னார் அவரது கொள்கை கட்டளை இன்னது; இன்ன காலத்தில்
29
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
ஏற்பட்டது: என்கற உண்மைகள் உண்டு. அப்படி இந்து மதத்திற்கு யார்
கர்த்தா? என்ன கொள்கை? எந்தக் காலம்? என்று சொல்வதற்கு என்ன
ஆதாரமிருக்கிறது.
வேதம்
“அநாதி காலம் தொட்டு இருப்பது வேதம்” “அது கடவுள்சொன்னது”'
என்று சொல்லி ஏய்த்து விடுவதாயிருந்தால் அது பொருத்தமாயிருக்க
வேண்டாமா? அநாதியும் கடவுள் சொன்னதாயுமிருந்தால் கடவுளால் உண்
டாக்கப்பட்ட எல்லா தேசத்திற்கும் கண்டத்திற்கும் இதுவே வேதமும் மதமு
மாய் அல்லவா இருக்க வேண்டும். பல்வேறு மதங்கள் இருப்பானேன்?
கடவுளால் சொல்லப்பட்ட வேதம் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடியதா
யல்லவா இருக்க வேண்டும்? உலகத்தில் உள்ள கடவுளின் மக்களிலும்
முக்காலே அரைக் கால்வாசிப் பேர்களுக்கு இவ்வேத சம்பந்தமே இல்லாமல்
வேறு வேறு வேதம் இருப்பானேன்? இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக்
கொள்பவருக்குள்ளாகவே சிலர் இவ்வேதத்தைப் படித்தால் கண்ணைக் குத்த
வேண்டியதும், சிலர் காதினால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற
வேண்டியதும் எதற்காக? கிறிஸ்தவருக்கும், மகமதியருக்கும் முறையே
ஞாயிற்றுக் கிழமையும், வெள்ளிக் கிழமையும் மத சம்பந்தமான விசேஷ
நாட்களாயிருக்கும் போது இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒருவ
ருக்கு திங்கட் கிழமை, ஒருவருக்கு சனிக் கிழமை, ஒருவருக்கு வெள்ளிக்
கிழமை இப்படியாக ஒரு வாரத்திலுள்ள 7 நாட்களுக்கும் வெவ்வேறு மனிதர்:
களாகவும் இன்னும் சிலருக்கு நாள்கள் போதாமலும் போவானேன்?
மதக் குறி
மத சின்னங்கள் விஷயத்தில் ஒருவர் நாமம், ஒருவர் விபூதி, ஒருவர்
கருப்பு பொட்டு, ஒருவர் சந்தனக் கீரல், ஒருவர் முத்திரை, ஒருவர் நெடுக்கு,
ஒருவர் குறுக்கு இப்படியாக பல மாறுதல்கள் ஏற்படுவானேன்? இந்த மாறுதல்
களோடு இதற்குக் காரணங்கள் ஆளுக்கு ஒரு விதமாய்ச் சொல்லுவானேன்?
இந்த வித்தியாசங்களை சுவாமிகளுக்கும் புகுத்துவானேன்? நாமம் என்பது
என்ன என்று கேட்டால் சிலர் சுவாமியின் பாதம் என்கிறார்கள். வெள்ளை
நாமம் இரண்டும் பாதமானால் நடுவில் உள்ள சிவப்பு நாமத்திற்கு பெயர்:
என்ன? அப்படியே சுவாமியின் பாதம் என்பதாகவே ஒப்புக்கொள்ளு
வோமேயானால் சுவாமியின் பாதத்தையே சுவாமியின் நெற்றியில் கொண்டு.
போய் வைப்பானேன் ? இந்த நாமத்திற்கும் பாதம்வைத்த நாமம், பாதமில்லாத.
நாமம் என்பதாக வடகலை தென்கலை என்று ஒருவருக்கொருவர் உதை
போட்டுக் கொள்வானேன்? இவைகளில் ஒரு நாமம் 3 நாமம் பதினோரு
நாமம் என்கிற கணக்குச் சண்டை எதற்கு? இந்துக்களிலேயே ஒரு சாரார் இந்த
நாமத்தைப்பற்றி கேவலமாகப் பேசுவானேன்? இதுபோலவே விபூதி, பொட்டு,
குடி அரசு - 19970)
30
முத்திரை இதுகளுக்குப் பல பல மாதிரி வியாக்கியானங்கள் இருப்பானேன்?'
இதை மற்ற தேசத்தாரும் ஒப்புக்கொள்ளாததேன்?'
சுவாமி
லிங்கத்தைப் பற்றியும் ஆவுடையாரைப் பற்றியும் பலவிதமாகப்
பேசுவானேன்'
தமிழ் பாஷையில் இல்லாமல் அன்னிய பாஷையாகிய ஆரிய பாஷையில்
இருப்பானேன்? சுவாமியை
பூஜிப்பதற்கு நமக்கும் சுவாமிக்கும் மத்தியில்
ஒரு அன்னியன் இருப்பானேன்? அன்னிய பாஷையில் மந்திரங்களும்
தோத்திரங்களும் இருப்பானேன்? ஆளுக்கு ஒரு விதமாக பூசை செய்வா
னேன்? இதற்காக நாம் பணம் கொடுப்பானேன்? ஒவ்வொரு சுவாமிக்கும்
ஒவ்வொரு வித வாகனங்கள் ஏற்படுத்துவானேன்? சுவாமிக்கு பெண்டு
பிள்ளைகள், வைப்பாட்டிகள், தாசிகள், விபச்சாரத் தன்மைகள் ஆகியவை
களை கற்பிப்பானேன்? சிலர் சுவாமியைப் பார்த்தால் சுவாமி சக்தி ஓடிப்
போவானேன்? சிலர் கோவிலுக்குள் வந்தால் கோவிலும் சுவாமியும் தீட்
டாய்ப் போவானேன்? சிலர் சுவாமியைத் தொட்டால் சுவாமி இறந்து போவா
னேன்? ஒரே பெயரும் ரூபமும் உள்ள சுவாமிகளுக்கு ஊருக்கு ஒரு வித
மாய் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, ஜகந்நாதம், பண்டரிபுரம் முதலிய
ஊர்களில் உள்ள சுவாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. கோவிலுக்குப்
போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சுவாமியைத் தொட்டு தலையில்
தண்ணீர் விட்டு புஷ்பம் போட்டு கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள
சுவாமிகள் நமது நாட்டில் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறது. சீரங்கம்,
சிதம்பரம், பேரூர், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர் முதலிய
முக்கிய க்ஷேத்திரங்களில் உள்ள சுவாமிகள் நாடார்கள் கோவிலுக்குள் போய்
கும்பிட்டால் அக்கோவில்களும் சாமிகளும் சாவதில்லை.மதுரை, திருநெல்
வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களில் உள்ள கோவில்களும் சுவாமிகளும்
மாத்திரம் நாடார்கள் போய் கும்பிட்டால் உடனே செத்துப் போய் விடுகின்
றன. இப்படி சுவாமிகளின் சக்தியும் உயிரும் கோவில்களின் யோக்கிய
தையும் ஊருக்கு ஒரு விதமாய் இருப்பானேன்? பிறகு பார்ப்பனருக்கு
மாத்திரம் அந்த சுவாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்?
செலவு
நமது வேதம், சுவாமி பூஜை வணக்கம் முதலியன சம்பந்தமான
விஷயங்கள் இப்படி இருக்கிறதென்றால், இந்த லக்ஷணத்தில் இம்மாதிரி
சுவாமியினாலும், கோவிலினாலும் நமது சுயமரியாதை எவ்வளவு தூரம்
பாதிக்கப்படுகிறது என்பதோடு நமது பணம் எவ்வளவு செலவு ஆகிறது
என்பதையும் கவனித்துப் பாருங்கள். சென்னை மாகாணத்தில் மாத்திரம்
இந்து மத சம்பிரதாயப்படிக்கு ஏற்பட்ட கோவில்களுக்கும் மடங்களுக்கும்
31
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வருஷம் ஒன்றுக்கு “2 ” கோடி ரூபாய் வரும்படி வருகிறது. 2 கோடி ரூபாய்
வரும்படி வந்தால் மக்களுக்கு எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகும். சாதார
ணமாக திருப்பதிக்கு மாத்திரம் சர்க்கார் கணக்குப்படி வருஷம் ஒன்றுக்கு 20
லக்ஷம் வரும்படி வருகிறதாக ஏற்படுகிறது. கணக்குக்கு வராமல் மகந்து
களுக்கும், கோவில் அதிகாரிகளுக்கும், பூஜாரிகளுக்கும் போகும் பணங்
களுக்கு அளவேயில்லை. யாத்திரைக்காரர்கள் காணிக்கையாகக் கொண்டு
வரும் தொகைகளை அறிந்த மகந்து, கோவில் அதிகாரிகள் முதலியவர்கள்
யாத்திரைக்காரர்களைக் கூப்பிட்டு “கோவில் கடாரத்தில் காணிக்கையைப்
போட்டால் சர்க்காரார் எடுத்து ஜர்மன் யுத்தத்திற்கு வாங்கிய கடனுக்கு வட்டி
கட்டி விடுவார்கள்; மகந்துவிடம் கொடுத்தால்தான் சுவாமிக்குப் போய்ச்
சேரும்; நீர் இவ்வளவு ரூபாய், இவ்வளவு நகை கொண்டு வருவதாக சுவாமி
எனது சொப்பனத்தில் சொல்லிற்று” என்று ஏமாற்றி வழிப்பறி செய்வதில்
கொள்ளை போகும் பணம் இந்த 20 லக்ஷத்தில் சேர்ந்ததல்ல. இன்னமும்
யாத்திரைக்காரன் ரயில் சார்ஜ் சில்லரைச் செலவு மெனக்கேடு தேங்காய் பழம்
முதலிய செலவுகள் எத்தனை லட்சமாகும் என்று கணக்குப் பாருங்கள்.
திருவிழா
இன்னும் உற்சவாதிகள், சுவாமிக்கும் அம்மனுக்கும் கலியாணம்,
சுவாமி தாசி வீட்டுக்குப் போதல், ஒரு காலைத் தூக்கி ஆடுதல், நரியை
குதிரையாக்குதல் முதலிய திருவிழாக்களும் 10 மனுவு இடையுள்ள
சுவாமியை 200 டன் இடையுள்ள தேரில் வைத்து 10,000 பேர் இழுப்பதும்.
அதற்கு 50,000 பேர் வேடிக்கை பார்க்க பல இடங்களிலிருந்து வருவதும்
ஆகிய காரியங்களுக்கு ஆகும் செலவுகளும் சுவாமிகளுக்கு அபிஷேகம்,
பூஜை, சதிர், பாட்டுக் கச்சேரி, நகை, பட்டுப் பாவாடை, புனுகு. ஜவ்வாது,
பச்சைக் கற்பூரம் குங்குமப்பூ முதலியவைகளின் செலவுகளும் எல்லாம்
சேர்த்து இந்துமத சாமிகளின் பூஜைக்கும் உற்சவங்களுக்கும் மாத்திரம் தென்
இந்தியாவில் வருஷத்திற்கு 25 கோடி ரூபாய்க்குக் குறைவில்லாமல் செலவா
கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த 25 கோடி ரூபாயும் நாம்
சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கும்
தினம் தினம் நமக்கு ஞாபகப்படுத்துவதற்கும் செய்யும் செலவே அல்லாமல்
இதனால் வேறு என்ன பலனை அடைகிறோம்? இப்பேர்ப்பட்ட “இந்துமதம்”
தான் சென்னை சட்டசபையில் இந்த பணங்களுக்கு கணக்கு கேட்க ஏற்படுத்
திய இந்து மதபரிபாலன மசோதாவினால் அடியோடு பாதிக்கப்பட்டுப்போய்
விட்டதாம். இம் மாதிரி நமது சுயமரியாதையை ஒழிக்கும் “இந்துக்கள்” தான்
“மதம் போச்சுது”, “மதம் போச்சுது” என்று மாயக் கண்ணீர் விடுகிறார்கள்.
சாமி பூஜை, உற்சவம் முதலியதுகளில் நமது யோக்கியதையையும்,
சுயமரியாதைக்கேடும் இப்படி இருப்பதோடு இந்துமதச் சடங்கு என்னும்
பேரால் நமது தலையில் எவ்வளவு பளுவைச் சுமத்தி நமது பணம் எவ்வளவு
குடி அரசு - 19970)
32
கொள்ளை கொண்டு நமது பிறப்புரிமையான சுயமரியாதையை எவ்வளவு
தூரம் நசுக்கி இருக்கிறார்களென்பதை கவனிப்போம்.
இந்துமதச் சடங்கு
இந்துமதம் என்பதாக ஒன்றை நாம் ஒப்புக்கொள்வதால் நமது நிலை
பிறவியிலேயே இழிவானதாகவும், இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக்
கொள்வோரிலேயே ஒருவகுப்பாருக்கு நாம் அடிமைகளாகவும் வைப்பாட்டி
மக்களாகவும் கடவுளாலேயே உண்டாக்கப்பட்டவர்கள் ஆகிறோம். நம்மை
இழிவாய்க் கருதுபவர்கள் காலிலேயே விழுந்து கும்பிடவேண்டியவர்களாகி
றோம். இன்னும் நமது வாழ்நாள் முழுவதும் அதாவது
தாய் வயிற்றில் கருத்த
ரித்த நிமிட முதற்கொண்டு நமது மதச்சடங்கு செலவைப் பாருங்கள். சர்க்கார்.
நம்மிடம் வரி வசூல் செய்கிறார்கள்; இதை அதிகமென்கிறோம். தவிர
நம்மிடம் வசூலிக்கும் வரியை நமக்காக செலவு செய்வதில்லை என்றும், இது
நமது சுயமரியாதைக்கு ஈனம் என்று சொல்லி சர்க்காருடன் சண்டை
செய்கிறோம். பாமர ஜனங்களை சர்க்காருக்கு விரோதமாய் கிளப்பிவிட்டு
பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகங்களைப் பார்ப்பனர்கள் பெற்று நமது
சுயமரியாதைக்கும் அவ்வுத்தியோகங்கள் மூலமாய் இழிவை ஏற்படுத்திக்
கொள்கிறோம்.
பார்ப்பன வரி
ஆனால், மதத்தின் பேரால் பார்ப்பனர் நம்மிடம் வசூலிக்கும் வரி:
யைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லை. சர்க்கார் வரிக்காவது
ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். அதாவது பூமி வரி, வருமான வரி,
ஸ்டாம்பு வரி என்பதாக குறிப்பு இருக்கிறது. இதுகளுக்கு பூமி உள்ளவர்கள்,
இவ்வளவுரூபாய் வரும்படி உள்ளவர்கள், பிராது உள்ளவர்கள் முதலிய
வர்கள்தான் இந்த வரிகள் கொடுக்கக் கட்டுப்பட்டவர்கள் வரிகொடுக்க
கட்டுப்படாதவர்கள் 100-க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். இந்த வரியையும்
நமக்காக ஏதோ செலவு செய்வதாய் கணக்கும் காட்டுகிறார்கள். ஆனால்,
மதச் சடங்குகளின் பேரால் பார்ப்பனர் வசூல் செய்யும் வரிக்கு அளவே
இல்லை. மனிதனாகப் பிறந்தவன் எல்லாம் அதாவது தன்னை எவனாவது
இந்து என்று சொல்லிக்கொண்டால் அவனை உடனே பார்ப்பன வரி சனியன்
பிடித்துக் கொண்டது என்பது போல் காலவரையறை ஒன்றுமே இல்லாமல்
கர்ப்பந் தரித்தது முதல் சாகும் வரை - செத்தும் விடாமல் அதாவது கர்ப்பதான
வரி, சீமந்த வரி, பிள்ளைப் பேறுகால வரி, தீட்டுக்கழித்தல் வரி, தொட்டி
லிடல்வரி, பேர் வைத்தல் வரி, ஆயுசு ஓம வரி, சோறூட்டல் வரி, கிரக தோச
வரி, வித்தியாப்பியாச வரி, கல்யாண வரி, சாந்தி முகூர்த்த வரி, தாசி வைத்தால்
அதற்கு ஒரு சாந்தி முகூர்த்த வரி, சாவு வரி, சாக 10 நாழிகை வரி, செத்த
பின்னும் வரி, செத்தவர் மக்களைப் பிடித்து வருஷா வருஷம் வரி ஆகிய
32
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
பல துறைகளில் (இவற்றைப்
பற்றி மதுரை மகாநாட்டில்
ஸ்ரீமான்
KV. ரெட்டி நாயுடுகாரு . அன்னிய வகுப்புப் புரோகிதரை விலக்க கொண்டு.
வந்த தீர்மானத்தில் பேசியவைகளை அனுசரித்ததாகவே பேசினார்.
ஆதலால் அதைப்பார்த்து கொள்ளலாம் (2.1. 27 “குடிஅரசு” 7ம் பக்கம்
பார்க்க
) காலாவதி இல்லாமலும் ஒரு நபரைக்கூட விடாமல் 100 -க்கு 100
பேரிடம் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே இல்லாமல் கொடுப்போர்.
முட்டாள்தனத்துக்கும், களிமண் மூளைக்கும் தகுந்தபடி வரி கறந்து
விடுகிறார்கள்.
வரியுங் கொடுத்து காலிலும் விழுவது
இந்த வரி வசூலுக்கு ஏதாவது பலன் உண்டா என்று பார்த்தால் இதை
விட முட்டாள்தனமான காரியம் உலகில் வேறொன்றுமில்லை என்று
சொல்லத்தக்கமாதிரி அதாவது “சுவாமிகளே! நான் கொஞ்சமாகச் செய்திருந்
தாலும் என்னுடைய பக்தி சிரத்தையை மதித்து அதை பெரிதாக எண்ணி காசி
கங்கையில் செய்தது போலவும் பிரயாகை வடவால விருக்ஷத்தின் கீழ்
செய்தது போலவும் ஆகும்படி செய்து எனது பெற்றோர்களுக்கு மோக்ஷமும்
திருப்தியும் உண்டாகும்படி அருளுவதுடன் என்னையும் சிரஞ்சீவியாக்கி
எனது பாவங்களை மன்னித்து மோக்ஷம் லபிக்கும்படி கிருபை செய்ய
வேண்டியது” என்று சொல்லி பார்ப்பனர் காலில் நமது தலை முட்டும்படி
விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுவதுமாய் நடந்து வருகிறோம். இவ்வித
சடங்குக்குச் செலவாகும் பணம் எத்தனை கோடி, தங்கச் சொம்பு, வெள்ளிச்
சொம்பு, வீடு, பூமி, கன்னிகை முதலிய தானங்கள் சமாராதனைகள், சாந்திகள்
முதலிய காரியங்களில் ஆகும் செலவுகள் இதுகள் எத்தனை கோடி ஆகும்
என்பதை கவனித்துப் பாருங்கள். இதற்கு ஏதாவது பிரயோஜனமுண்டா
என்பதை யோசியுங்கள். இந்தச் செலவுகள் ஒருபுறம் நம்மை பிச்சு பிடுங்கித்
தின்னவும் இதன் மூலம் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதை எவ்வளவு
பாதிக்கப்பட்டு அடிமையாகி வாழுகிறோம் என்பதையும் யோசியுங்கள்.
இப்படி எத்துணையோ விதமான தடைகள் செயற்கையிலேயே அதாவது
நமது அறிவீனத்தினாலேயே நம்மைச் சூழ்ந்து கொண்டு வாட்டுகின்றன.
இவைகளைக் களைந்தெறிய வழிதேடுங்கள். பிறகு சுயராஜ்ஜியம் தானாக
வந்துவிடும். பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து அவன் காலில் விழுந்தால்
நமது பெற்றோர்கள் மோக்ஷத்திற்கு போவார்கள், நமது பாவம் தீரும் என்று
நினைத்துக்கொண்டிருக்கும் ஜன சமூகத்திற்கு சுயராஜ்ஜியம் வேண்டு
மென்பது யாராவது நம்பக்கூடிய காரியமா? வீணாக அதாவது
சில பார்ப்பனர்
கள் பிழைக்க இந்துக்களாக இருப்பது போலவே சில புரட்டுக்காரர்களும்
பித்தலாட்டக்காரர்களும், அயோக்கியர்களும் பிழைக்க சுயராஜ்ஜியம்,
சுயராஜ்ஜியம் என்று கத்தி ஏமாறாதீர்கள்.
குடி அரசு
- 19270)
34
உண்மை சுயராஜ்யம் காணுமிடம்
சுயமரியாதை கண்டவிடம்தான் சுயராஜ்ஜியமே தவிர சுயராஜ்ஜியம்
என்று ஒரு தனி வஸ்துவில்லை என்பதை உணர வேண்டும். ஆதலால்
பிறப்புரிமை இன்னது என்பதும் அது இன்ன விஷயங்களால் தடைப்
பட்டிருக்கிறது என்பதும் அத்தடைகளிலிருந்து விலக இன்னின்னது செய்ய
வேண்டும் என்பதும் சுயராஜ்ஜியம் என்பது இதுபோலவே மக்களை ஏமாற்
றும் ஒரு புரட்டான மார்க்கமென்பதும் சுயமரியாதை கண்டவிடத்தில்
உண்மையான சுயராஜ்ஜியம் என்பது துலங்கும் என்பதும் விளங்கி இருக்கு
மென்று நினைக்கிறேன்.
குறிப்பு
: 29.12.26 இல் சென்னிமலையில் பாப்பாரப்பட்டி யூனியன்:
சேர்மேன் ஸ்ரீமான் சின்னமுத்து முதலியார் அவர்கள் தலைமையின் கீழ் கூடியகோய
முத்தூர் ஜில்லா 14-வது செங்குந்தர் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 09.01.1927
35
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
Grmibusen Pabbores.
pidang விலுக்
o சன்
தனை]
க
.
- இடல்களிதும்.
e ey
களும் பர்ரபெற்றது.
கப்பி
மஹா சந்தனாதி தைலம்.
B வையை
அரல்ந், எண்களுக்கும் நலிய்வத் சார்வு அன
ன
0
டம் கணக்கை மறக
b
தங்க மட
க்க
த்வற்ற
P. P. & SON
க்கம்
வண
ட
SEVRLPUTTU. g
L Riseris அண்கோட
ட
1 ஒருத வைத தீமை தெய் போல
R R
குடி அரசு - 1927 0)
36
யார்ப்பணரிண் அரசியற்
புரட்டு
இரட்டை ஆட்சியும் வகுப்பு வாதமும் நமது பார்ப்பனர்களின்
சூழ்ச்சியால் ஒழிந்ததா?
அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப்
பெருகிற்றா?
என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் பகுத்தறிவு கொண்டு கவனித்துப்
பார்க்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். ஒத்துழையாமை என்பது மும்மர:
மாய் இருந்த காலத்தில் நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகளின்
மூலம் அதை ஒழிப்பதற்கு பிரயத்தனப்பட்டது வாசகர்கள் அறிந்ததுதான்.
அதாவது கல்கத்தா தனிக் காங்கிரசின் போது தெருவில் போகும் பிச்சைக்
காரரையெல்லாம் பிடித்து அவர்களுக்கு நாமம் போட்டுசென்னை மாகாணப்
பிரதிநிதி என்று ஏமாற்றி ஆள்களைச் சேர்த்தும் அங்கும் தோற்றுப்
போனதும், சென்னையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், காரியதரிசி
களாகவும், இருந்த பார்ப்பனர்களான ஸ்ரீமான்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார் ,
ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் ராஜீநாமாக் கொடுத்து
வெளியேறி ஒத்துழையாமையையும், மகாத்மாவையும், வாய் கொண்ட
மட்டும் வைதும், பழி சுமத்தியும் பார்த்தும் முடியாமல் போனதும், அட்வொ
கேட் ஜெனரலாயிருந்து மந்திரி உத்தியோகம் பெற ஆசைப்பட்டு அதை
ராஜீனாமாக் கொடுத்து வெளிவந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் சர்க்கார் தயவு
பெற ஒத்துழையாமை சட்ட விரோதமானதென்றும் அதை உடனே அடக்க
வேண்டுமென்று சர்க்காருக்கு யோசனைச் சொல்லிக் கொடுத்தும் தனது
சகாக்களான வக்கீல் சைன்யங்களை ஒத்துழையாமையில் சேரக்கூடாதென்று
சொன்னதோடு ஒத்துழையாமைக்கு விரோதமாயிருக்க வேண்டுமென்று
ஏவிவிட்டும் முடிவில் ஒன்றும் பயன் பெறாமல் ஒத்துழையாமை செல்
வாக்குப் பெற்று வலுக்கவே கடைசியாக தங்களுக்கு புத்தி வந்தது போல்
பாசாங்கு செய்து ஒத்துழையாமை திட்டம் ஒன்றையும் ஒப்புக்கொள்ளாமலும்
தாங்களும் அந்தப்படி நடவாமலும் தங்களையும் ஒத்துழையாதார் என்கிற
பெயரைச் சொல்லிக் கொண்டு காங்கிரசுக்குள் புகுந்து காங்கிரசிலும், கான்ப
ரன்சுகளிலும் ஒவ்வொரு தீர்மானத்தையும் எதிர்த்துக்கொண்டும் வந்து
கடைசியாக உண்மையான ஒத்துழையாதார் என்று வேஷம் போட்டுக்
கொண்டு காந்தி சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த சில பார்ப்பனர்.
களின் உதவியால் சட்ட சபையில் போய் ஒத்துழையாமை செய்வது,
7
ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
முட்டுக்கட்டைபோடுவது, இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்கிற பெயரைச்
சொல்லிக்கொண்டு காங்கிரசையும் தங்கள் வசமாக்கி பாமர மக்களையும்
ஏமாற்ற சில பார்ப்பனரல்லாதாரையும் கூலிக்குப் பிடித்துக் கத்தச் சொல்லி
அவரவர்கள் பத்திரிகைகளிலும் எழுதும்படி செய்து ஒத்துழையாமை
தத்துவத்தையே அழித்து கடைசியாக வெற்றியும் பெற்று விட்டார்கள்.
ஆனால் இப்போது நடந்த தென்ன என்பது தான் முக்கியமான விஷயம்.
சட்டசபையில் ஒத்துழையாமை நடந்ததா? என்று பார்த்தால் அந்த பிரஸ்
தாபமே அடியோடு மறைந்து போனதோடு காங்கிரசிலும் ஒத்துழையாமை
எடுபட்டுப்போய்விட்டது. முட்டுக் கட்டைநடந்ததா? என்று பார்த்தால் அந்த
பிரஸ்தாபமும் இப்போது அடியோடு மறந்துபோய் சர்க்காருக்கும்
தங்களுக்கும் வேண்டிய தீர்மானங்களுக்கு அனுகூலமாக இருந்தும் தங்க
ளுக்கு வேண்டியபடி தீர்மானங்கள் கொண்டுவந்தும் தங்களுக்கு மறுபடியும்
சட்டசபை ஸ்தானம் கிடைக்கும்படி பல கேள்விகள் கேட்டும் பொது மக்களி
டை சட்ட சபைக்கு ஒரு யோக்கியதை சம்பாதித்துக் கொடுத்தாய் விட்டது.
கல்கத்தாவிலும்,மத்திய மாகாணத்திலும் வகுப்பு வாதம் காரணமாய் அதாவது
வங்காளத்திலிருந்து முஸ்லீம் என்கிற காரணத்தாலும் மத்திய மாகாணத்தில்
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தாலும் மந்திரி பதவிப்
போட்டியின் காரணமாக கொஞ்ச காலம் மந்திரி உத்தியோகங்கள் காலியாய்
யிருந்ததையே பிரமாதமாய் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும்.
அவற்றை குருவாகக்கொண்ட பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் “இரட்டை
ஆட்சி மடிந்தது”, “சுயராஜ்ய கட்சி ஜெயித்தது”, “எங்கள் காரியம் முற்றுப்
பெற்றது” என்று பாமர மக்களை ஏமாற்றி தயவு பெற்றும், கூலி பெற்றும்
பார்ப்பனர்களுக்கும் அவர்களது பக்தர்களுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுத்து
வீரர்களானார்கள். இதன் பலனாய் மற்ற இடங்களில் “இரட்டை ஆட்சி
ஒழிந்தது” என்று சொல்லிக் கொண்டிருந்ததோடு சென்னை மாகாணத்தில்
வகுப்பு வாதமும் வகுப்புக் கட்சியும் குழி தோண்டி புதைக்கப்பட்டது என்றும்
தம்பட்டமடித்துக் கொண்டார்கள். இப்போது இரட்டை ஆட்சி எங்கே
ஒழிந்தது? என்று பார்த்தால் ஒவ்வொரு மாகாணத்திலும் இரட்டைஆட்சியை
நடத்திக்கொடுக்க சுயராஜ்யக் கட்சியில் இருந்த ஆள்களே பலவேறு வேஷங்
கள் போட்டுக்கொண்டு போட்டி போடுவதும் எல்லா மாகாணங்களிலும்
இரட்டை ஆட்சியை நடத்திக் கொடுக்க ஆள்கள் ஏற்பட்டு இரட்டை ஆட்சி
தலை சிறந்து விளங்குவதும் மறைக்க முடியாத விஷயமாய்ப் போய்விட்டது.
சென்னை மாகாணத்திலோ, சுயராஜ்யக் கட்சியார் என்கிற பார்ப்பனர்கள்
திருட்டுத் தனமாய் இரட்டை ஆட்சிக்கு ஆதரவளிப்பதாய் கூறி இப்போது
தங்கள் ஆதரவில் மந்திரிகளையும் நியமித்துக்கொண்டு, தங்கள் சுயநலக்
காரியங்களை சாதித்துக்கொண்டு வருவதும் மறைக்கக் கூடிய விஷயமல்ல.
இரட்டை ஆட்சி ஒழிந்ததென்பது இப்படி இருந்தாலும் வகுப்பு வாதம் ஒழிந்து
குழியில் போட்டு புதைத்தாய் விட்டதா? என்று பார்த்தால் அதுவும் தலை
மாகாணமாகிய பஞ்சாப்பு முதல் ஒவ்வொரு மாகாணமும் வகுப்புப் படியே
குடி அரசு - 19970)
38
மந்திரிகள் நியமித்துக்கொண்டு வருவதும் யாரும் அறியாத விஷயமல்ல...
பஞ்சாப்பில் ஒரு இந்து, ஒரு சீக்கியர், ஒரு முசல்மான் என்கிற வகுப்பு
மந்திரிகளே! கல்கத்தா மத்திய மாகாண முதலிய எல்லா மாகாணங்களிலும்
இதுபோலவே வகுப்பு பிரித்து மந்திரிகள் நியமிக்கப்பட்டு விட்டார்கள்.
சென்னை மாகாணத்தில் வகுப்பு வாதம் ஒழிந்த யோக்கியதையும் மந்திரி
நியமனமும் சட்டசபைத் தலைவர் நியமனமும் டிப்டி தலைவர் நியமனமும்
எதை ஆதாரமாய் வைத்து நியமிக்கப்பட்டது? வகுப்புவாதம் குழி தோண்டிப்
புதைக்கப்பட்டால் ஏன் ஒரு பார்ப்பன மந்திரியாவது, தலைவராவது, உப
தலைவராவது ஏற்பட்டிருக்கக்கூடாது? பார்ப்பனர்களில் யோக்கியதை
உடையவர்கள் இல்லையா? உப தலைவர் பதவிக்கு “ஒரு மகமதிய கன
வானையேநியமிக்க வேண்டும் என்று” வகுப்பு பெயர் சொல்லி சுயராஜ்ஜியக்
கட்சி தன் தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அதிகாரம் கொடுப்பா
னேன்? சட்டசபையில் சுயராஜ்ஜி யக் கட்சித் தலைவர் (லீடர் பதவிக்கு ஏன்
ஒரு பார்ப்பனரைத் தெரிந்தெடுக்கக் கூடாது. லீடர் பதவிக்கு யோக்கியதை
உள்ள பார்ப்பனர் இல்லையா?
ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியாருக்கு
இருக்கிற யோக்கியதை ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சி.வி. வெங்கிடரமண:
ஐயங்கார் ஆகிய பார்ப்பனர்களுக்கு இல்லையா? வகுப்புவாதம் குழி
தோண்டிப்புதைக்கப்பட்டது வாஸ்தவமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி தனக்கு
லீடர் பதவி கிடைக்காததற்காக கட்சியை விட்டுப் போவதாக மிரட்டிக்
கொண்டிருப்பானேன். “தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஸ்ரீமான்
சத்தியமூர்த்திக்குத் தலைவர் பட்டம் வாங்கிக் கொடுக்க ஒவ்வொருவரையும்
ராஜீனாமா கொடுக்கும்படி கெஞ்சுவானேன்?
மதுரை மகாநாட்டிற்கு
இவ்வளவு பிரதிநிதிகள் வருவானேன்? கோக்கலே ஹால் சென்னை மாகாண
மகாநாட்டுக்கு 150 பிரதிநிதிகளே மாத்திரம் வருவானேன்?
அதுவும்
சென்னை பிரதிநிதிகள் 125 பேர்களாயிருப்பானேன்? காங்கிரசுக்கு வருஷா
வருஷம் சென்னை மாகாணத்திலிருந்து 1000 பிரதிநிதிகள் போய்க் கொண்
டிருக்க இவ் வருஷ காங்கிரசுக்கு 100 பேர்கள் கூட போகாமல் இருக்கக்
காரணம் ஏன்? அதுவும் “தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணம்
கொடுத்துச் சிலரைக் கூட்டிக்கொண்டு போவானேன்? இன்னும் அனேக
ரகசியங்கள் உண்டு. இவைகளையெல்லாம் பார்த்தால் இரட்டை ஆட்சியும்
வகுப்பு வாதமும் ஒழிந்ததா? நிமிர்ந்ததா? வாசகர்களே! நன்றாய் யோசிக்க
மறுபடியும் கோருகிறோம். ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைய
இதுவே தக்க சமயம். வீணாய்ப் பார்ப்பனர்களின் அரசியல் புரட்டில் மயங்கி
தக்க சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.01.1927
39
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
யார்ப்பணறல்லாதார் யிரசாாமும்
o
o
o
o
மகாநா௫களும் சங்கங்களும்
இம்மாதம் 15-ந்தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது மதுரையிலாவது
பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டி பிரசாரம்
ஆரம்பிக்க வேண்டுமென்று எழுதியிருந்தோம். சில கனவான்கள் அதை
ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்.
கள். ஆனால், ஸ்ரீமான் PT. ராஜன் அவர்கள் சென்னையிலே தென் இந்திய
நல உரிமைச் சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும்
அதற்குப் பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித்திருப்ப
தாலும் குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவதை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
தவிரவும் பல இடங்களிலிருந்து ஜில்லா, தாலூகா, கான்பரன்சுகள் கூடப்
போவதாகவும், பல இடங்களில் பார்ப்பனரல்லாதார் சங்கமும், பார்ப்பனரல்லா
தார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும்
தெரிவிக்கப் பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி
நமக்கு மிகவும் சந்தோஷமே. ஆனால், ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம்
வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று
எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதை தெரிவித்துக் கொள்ளா
மலிருக்க முடியவில்லை. சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில்
உள்ளவர்களில் முக்கியமானவர் களைக் கொண்டே செய்து கொள்வது நலம்
என்றும்
அநுகூலம் என்றும் தெரி வித்துக்கொள்ளுகிறோம். மகாநாடுகளுக்கு
தலைமை வகிக்கவும் நாம் முன் எழுதியபடி அரசியலில் எவ்வித கொள்கை
உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத்திட்டத்தையும் சிறப்பாக சுயமரி
யாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள்
யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும்
தெரிவித்துக்கொள்ளுகிறோம். நாயக்கருக்கு சாவகாசம் கிடைத்தாலும் மகா
நாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும்
தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம். அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்.
களான கனவான்களும் எந்த மகாநாட்டுக்காவது அழைக்கப்பட்டால் அரசி
யல் காரணத்தை பிரமாதப்படுத்திக் கொண்டு வர மறுக்காமல் செளகரியப்
பட்டவர்கள் அவசியம் வேண்டு கோளை ஒட்டிக்கொண்டு விஜயம் செய்ய
வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927
குடி அரசு - 19970)
40
யார்ப்பணர்கணிண் ஒற்றுமை
கொஞ்ச நாளைக்கு முன் இந்தியாவிலிருந்து இந்தியர்களின் ஊழிய
ராகவும், ஒரு இந்தியராகவும், இந்துவாகவும் உள்ள ஸ்ரீமான் சர்.டி. விஜய
ராகவாச்சாரியார் இந்திய பிரதிநிதியாக கனடாவுக்கு அனுப்பியதும் அங்கு
போய் தென்னை மரம் இருக்கும் வரை குடித்துத்தான் தீருவோம். பிரிட்டி
ஷாரின் ஆதிக்கத்தையே இந்தியர்கள் விரும்புவதோடு, இதைக் கடவுள்
அனுப்பியதாக இந்தியர்கள் பாவிக்கிறார்கள் என்றும், ஆங்கில நாகரீகத்
தையே இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றும், அதற்கு உதாரணமாக எனது
குமாரத்தியே தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறாள் என்றும்
சொன்னதாக பத்திரிகைகளில் வந்தது ஞாபகமிருக்கும்.
அதையே
ஸ்ரீமான்
RK. ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு திருப்பூர் முனிசிபல் சங்கத்தார்.
வரவேற்புப் பத்திரம் வாசித்துக்கொடுத்த காலையில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி
நாயக்கர் எடுத்துச்சொல்லி நமது ஸ்ரீமான் செட்டியார் அப்படிப் பேசாமல்
சுதந்திரத்தோடும் ஆண்மையோடும் பேசினதாக குறிப்பிட்டிருந்தார்.
இதை மறுப்பதற்கு, இதில் யாதொரு சம்பந்தமும் இல்லாதவரும்
இன்னமும் ஒத்துழையாதாரென்று வேஷம் போட்டுக்கொண்டிருப்பவ
ருமான ஸ்ரீமான் C. இராஜகோபாலாச்சாரியார் மகாத்மாவின் “யங் இந்தியா”
பத்திரிகையைப் பிடித்து அதில் மறுப்பெழுதி உலகமெல்லாம் பரவச் செய்தி
ருக்கிறார் என்றால் பார்ப்பன ஒற்றுமை எவ்வளவு தூரம் பதிந்திருக்கிறது?
மழை யில்லாமல் போனதற்கும், ரயில்வண்டி சார்ஜ் உயர்ந்ததற்கும், வெயில்
அதிகமாய்க் காய்வதற்கும் பனகால் ராஜாதான் காரணம், ஜஸ்டிஸ் கட்சிதான்.
காரணம் என்று தான் பிறரைச் சொல்லும்படி செய்வதிலும், பிறரை நம்பும்படி
பிரசாரம் செய்வதிலும் உடந்தையாயிருப்பவர், தன் இனத்தாரைக் காப்பாற்
றுவதில் எவ்வளவு கவலை எடுத்துக்கொள்ளுகிறவர் என்பது கவனிப்பவர்.
களுக்கு விளங்காமல் போகாது. பார்ப்பனரல்லாதாரில் சிலரின் யோக்கிய
தையையோ சொல்ல வேண்டியதில்லை. எதை வேண்டுமானாலும் விற்று
வயிறு வளர்க்கத் தயாராயிருக்கிறார்கள். என்றுதான் பார்ப்பனர் சூழ்ச்சி அறிய
வும் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமையாயிருக்கவும் யோக்கியதை வருமோ
தெரியவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.01.1927
41
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
யாருக்கு புத்திவந்தது?
சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றை குருவாகக் கொண்ட சில
பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கு இப்பொழுது
தான் புத்திவந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று எழுதுகின்றதுகள்.
இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால்
சுயராஜ்ஜியக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுது தான் கொஞ்சம் புத்தி வந்தது
என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் கதரைக் கட்டாயமாக உடுத்த
வேண்டும் என்று முன்னெல்லாம் மகாத்மா கதறின காலத்தில் முடியாது.
பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும் போது கட்டிக்
கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள் மதுரை மகாநாட்டில் கதரைப்
பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக் கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார்.
எல்லாரும் கதர் கட்டி விடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன்
பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து
சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே
காங்கிரசிலும் கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப்
பனர்கள் ஒரு தீர் மானம் செய்து விட்டார்கள். இதிலிருந்து யாருக்கு புதிதாய்
தந்திரபுத்தி வந்தது? காங்கிரஸ் பார்ப்பனருக்கா? பார்ப்பனரல்லாதாருக்கா?
என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப்பார்க்கவும்.
குடி அரசு - கட்டுரை - 16.01.1927
குடி அரசு
- 19270)
42
மதுரைத் தீர்மாணங்கள்
மதுரைத் தீர்மானத்தைப்பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்
களும் என்னதான் பரிகாசமாகவும், அலட்சியமாகவும் பேசினாலும் பார்ப்பன
ரல்லாதாரின் சுயமரியாதை, விடுதலை, செல்வநிலை ஆகிய எல்லாவற்றினது.
மார்க்கங்களும் அம்மதுரைத் தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன
என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதை முதலியவை மாத்திரமல்லாமல்
நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சுயமரியாதையும், விடுதலையும்,
செல்வமும் அத்தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன. அவை
மாத்திரமல்லாமல் நமது அரசியல் முறையில் கட்டுண்டு அனுபவித்து வரும்
கொடுமைகளுக்கும் நிவர்த்தி மார்க்கம் அவற்றிலேயே அடங்கியிருக்கின்
றன.அன்றியும் நாம் நம் நாட்டு மக்கள் என்றே சொல்லிக் கொள்ளும் பார்ப்ப
னர்களால் மிதிக்கப்பட்டு அனுபவித்து வரும் இழிதகைமைகளிலிருந்து
மீளும் நெறியும் அவற்றிலேயே அடங்கிக் கிடக்கின்றது. இன்னமும் இவை
போன்ற மக்களின் நாட்டின் கோடிக்கணக்கான கொடுமைகள் என்னும்
வறுமை முதலிய வியாதிகளுக்கும் “சஞ்சீவி” என்று சொல்லத்தக்கதேதான்
நமது மதுரை மகாநாட்டின் தீர்மானங்கள்.
காந்தியடிகள் இந்தியாவின் எல்லாக் குறைகளும் நீங்குவதற்காக
கண்டுபிடித்த “பர்டோலி தீர்மான மாக்கும் நமது மதுரை மகாநாட்டின் தீர்மா
னங்கள்! ஆதலால் அதை நிறைவேற்றுவதில் கவலை கொள்ளுதல்தான்
மக்கள் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், செல்வத்திற்கும் தொண்டு செய்வ
தாகும்.
தீண்டாமை
தீண்டாமையை ஒழித்துவிட்டால் சுயமரியாதையின் எதிரிகளான
நமது பார்ப்பனருக்கு நமது நாட்டில் இடமுண்டா? அவர்கள் “பூசுரராக”'
நமது நாட்டில் வாழ முடியுமா? தீண்டாமை, உயர்வு தாழ்வு என்கிற தத்துவம்
ஒன்றி னாலல்லது நமது பார்ப்பனர்களுக்கு இந்நாட்டில் வேறு எதனாலாவது
யோக்கியதை இருக்கிறதா? உலகத்திலுள்ள இழிவுகளெல்லாம் ஓருருவ
மெடுத்தாற் போற் றோன்றும் ஒரு வகுப்பார் ஆதிக்கத்திலிருக்கக் காரணம்,
43
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
இந்த உயர்வு - தாழ்வு என்கிற போலித் தத்துவமல்லாமல் வேறென்ன?
“அரசியலிலோ”, “ஆன்மார்த்தத்திலோ” பார்ப்பனர்களின் வாழ்க்கையில்
எவ்வித இழிகுணம் அவர்களிடமில்லையென்று சொல்லமுடியும்? எவ்வித
மான உயர்குணம் அச் சமூகத்தாரிடத்தில் இருப்பதாகச் சொல்ல முடியும்?
உண்மையில் சுருதிப்படி அவர்களுடைய உரிமையான தொழிலையே
பிச்சையெடுப்பது என்பதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். அதற்கு மேன்மை
கற்பித்துக்கொண்டு மானாபிமானமின்றி பணம் சம்பாதிக்க வழி செய்து
கொண்டார்கள். உண்மையில், இந்த அடிமைத்தன்மையானதும், பிறரை:
ஏய்ப்பதால் மாத்திரம் வாழத்தக்கதுமான தொழிற்றுறைகளில் அநுபோகம்
பெற்று வெகு சமர்த்தர்களாகி விட்டார்கள். அவர்களுடைய நாகரீகங்களோ
சொல்லத் தேவையில்லை. சிறு குழந்தைகளைக் கல்யாணஞ் செய்து கொள்
வார்கள். பதின்மூன்று வயதிலேயே பிள்ளை பெறும்படி செய்துவிடுவார்கள்.
அது தாலியறுத்துவிட்டால் தலை மொட்டையடித்து குரூரப்படுத்தி விடுவார்.
கள். தயவு, தாட்சண்ணியம், அன்பு என்கிற குணங்கள் பூதக் கண்ணாடி
வைத்துத் தேடினாலும் கிடைக்காது. மற்றொருவனுக்குத் தாகத்துக்குத்
தண்ணீர் கொடுத்தால் தங்கள் வீட்டிலுள்ள தண்ணீரெல்லாம் தோஷமாகி
விடும் என்கிற கொள்கையுடைய கருணையாளர்கள். இன்னும் எத்தனையோ
குற்றமுள்ளவர்களாயிருப்பதோடு இக்குற்றங்களை மற்றவர்களுக்குள்ளும்
புகுத்துவதே தங்கள் “உலக சேவை” யென்று நினைப்பவர்கள். இப்படிப்
பட்டவர்கள் இன்று ஆதிக்கம் பெற்றிருப்பதன் காரணம் தீண்டாமை-
உயர்வு
- தாழ்வு என்கிற தந்திரங் களால்தானே அல்லாமல் வேறு என்ன? ஆதலால்,
இத்தந்திர சாதனங்கள் ஒழிக்கப்பட்டால் அன்றே மக்களுக்கு “சுயமரியாதை”
உதயமாகிவிடும். இதன் பயனாய் “பிராமணர்”, “சூத்திரர்”, “பஞ்சமர்” என்ப
வர்கள் ஒழிவதோடு மக்களெல்லாரும் சகோதரர்களாகவும் காணப்படு
வார்கள்.
அதுபோலவே *கதரும்” நமது நாட்டு மக்களைப் பிடித்த
வறுமையை
அடியோடு ஓட்டி உண்மையான விடுதலையையும், மனச்சாட்சியையும்
அளிக்கும். “கதர்த்திட்டம்” என்பது வெறும் கதரையே முதன்மையாய்
கொண்டதல்ல. நாட்டின் விடுதலைக்கு பெரும் விரோதியான வறுமையை
வேரோடு அழிப்பதற்காதாரமானவை எவையென்றால் கைத்தொழிலும்
அதன் மூலம் கிடைக்கும் பொருள் வருவாயுமேயாகும்.
இதுகாலை,
அவ்விஷயத்தில் நமது நாட்டின் நிலைமையென்ன? நாளுக்கு நாள் நம்
நாட்டுக் கைத்தொழில்கள் அருகிக்கொண்டே வருகின்றன. நம் நாட்டு
மக்களில் பார்ப்பனர் நீங்கிய மற்றையோர் 100க்கு 99 பேர் கைத்தொழில்
மூலமே வாழ்ந்து வந்தவர்கள். பழங்கால வாழ்வில் நாட்டின் செல்வமானது
விவசாயம், கைத்தொழிலாகிய ரூபமாயிருந்ததேயன்றி பணம், காசு, வீடு
குடி அரசு
- 19270)
44
முதலிய சொத்துக்கள் ரூபமா யிருந்ததில்லை. இப்பொழுது அச்செல்வமான
கைத்தொழில் அடியோடு ஒழிந்துவிட்டது. விவசாயமும் கூட வாழ்விற்காக
வென்றல்லாமல் பணத்திற்காகவென்றாகிவிட்டது. இதன் மூலம் நம்நாட்டின்
இயற்கைக்கு விரோதமான நிலையேற்பட்டதால் நமது நாட்டையே வறுமை:
முற்றுகை போட்டுக்கொண்டு விட்டது. முதலாவது கைத்தொழில்கள் எவ்
வழிகளில் அருகிவிட்டன வென்பதைக் கவனித்துப் பாருங்கள்!
நம்நாட்டு மக்களின் கைத்தொழில் பஞ்சு அறைத்தல் (பஞ்சில்
கொட்டை பிரித்தல்) நூல் நூற்றல், நெய்தல், சாயம் போடுதல், பூ வேலை
செய்தல், துணி தைத்தல், உலோகங்களின் மூலம் விளக்கு, பாத்திரம்
வகையறா செய்தல், ஆகாரப் பொருள் சுத்தம் செய்தல்,
அதாவது நெல் குத்து
தல்,மாவறைத்தல், கொல் தச்சு வேலை, மாட்டுவண்டி, குதிரை வண்டி செய்
தல், லாடம் அடித்தல், இவற்றை ஓட்டுதல், இந்த மாடு, குதிரைகளுக்கு புல்
பிடுங்கிக் கொண்டு வந்து போடுதல், குதிரை தேய்த்தல், மக்களுக்கு வைத்
தியம் மருந்து செய்தல், மருந்து விற்றல் முதலிய அநேக காரியங்களில் மக்
கள் ஈடுபட்டு யாவரும் தொழில் செய்து பிழைத்து வர முடிந்தது. உதார
ணமாக ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுவோம். ஒரு வேளை 1-க்கு 500 பேர்.
சாப்பிடக்கூடிய ஒரு மூட்டை அரிசிக்கு கையால் குத்துவதானால் 2 மூட்டை
நெல் குத்துவதன் மூலம் 4 பெண்கள் குத்தவும் நான்கு முக்கால் - மூன்று
பட்டணம் படி அரிசி போகவும் செய்வதால் குறைந்தது அதில் 10 பேருக்குச்
சாப்பாடு கிடைக்கும். இரண்டாவதாக உடையை எடுத்துக்கொள்ளுவோம்.
500 பேருக்கு 500 ஜதை வேஷ்டி என்பதாக குறைத்து வைத்துக்
கொண்டாலும் ஜதை ஒன்றுக்கு 6 மாதத்துக்கு 180 நாள்களுக்கு வருவதாய்
வைத்துக்கொள்ளுவோம். இது கதராயிருந்தால் 1ஜதை வேஷ்டி 2 ராத்தல்
பஞ்சு வீதம் 500 ஜனங்களுக்கு 1000 ராத்தல் பஞ்சு ஆகும். இப்பஞ்சை
பருத்தியிலிருந்து பஞ்சு வேறாக கொட்டை வேறாகப் பிரிக்க அதாவது 2
பாரம் பஞ்சுக்கு அறை கூலி 20 ரூபாய் கிடைக்கும். இது கை மணையால்
அறைக்கப்பட்டால் இந்த 20 ரூபாயுக்கு 200 பேர் ஒரு வேளை அரிசி சாதமாக
நன்றாய் சாப்பிடலாம். இந்த பஞ்சை 1.000 ராத்தல் நூலாக நூற்பதில் ராத்தல்
ஒன்றுக்கு ஐந்து அணா வீதம் 312 - 8-0 ரூபாய் கூலி கிடைக்கும். இந்த
ரூபாயைக் கொண்டும் ஒரு நாளைக்கு 3125 பேர் நல்ல அரிசி சாதம்
சாப்பிடலாம். இந்த 1000 ராத்தல் நூலைக் கொண்டு 500 பேருக்குச் சராசரி
2000 கஜம் துணி வேஷ்டி நெய்வதில் கஜத்துக்கு 0- 2-6 வீதம் 2,000, 0-2-6
அணாவாகிய 312 - 8-0 ரூபாய் நெசவு கூலி கிடைக்கும். இதன் மூலமும்
குறைந்தது 3125 பேர் நல்ல அரிசி சாதம் சாப்பிடக்கூடும். இவர்களில்
பெண்களாயிருந்து சேலை கட்டல் சாயம் போடல்
சட்டைக்கும்
ரவுக்கைக்கும் முதலியவைகளில் அதிகமாகும் துணிகள் இதுகளுக்காக4ல் 1
பாகம் அதிகப்படுத்தலாம். இந்த வகையில் 1500 பேருக்கு குறையாமல் தினம்
சாப்பாடு கிடைக்கும். ஆகவே 500 பேர்களின் துணிக்கு ஏற்படும் கூலியில்
45
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மாத்திரம் 8000 பேருக்குச் சாப்பாடு கிடைக்கும். இதை 6 மாதமாகிய 180 ல்
வகுத்தால் சராசரி தினம் 45 ஆகும். அதாவது ஆகாரத்திற்காக நெல்
குத்துவதில் 100 -க்கு 2 பேர் வீதமும் துணிக்கட்டுவதில் தினம் 100-க்கு 9
பேர் வீதமும் சாப்பிடக்கூடிய கூலி கிடைக்கும்.
ஆக இவ்விரண்டு காரியங்
களை மாத்திரம் யந்திரத்திணாலல்லாமல் மக்களைக் கொண்டே கைத்தொழில்
மூலமாக செய்விப்பதில் 100-க்கு 11 பேர் நல்ல சாப்பாடாக சாப்பிடத் தகுந்த
மாதிரியும் 100-க்கு 20 பேர் கஞ்சியாகக் குடிக்கக் கூடிய மாதிரியும் வேலை
கிடைக்கிறது என்றால் மற்றபடி நாம் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வேலை
மற்றும் நம் நாட்டு வேலைகளைப் பற்றி சரிவரக் கணக்குப் போட்டு
பார்ப்பதானால் ஏறக்குறைய 100 -க்கு 100 பேர் சாப்பிடக் கூடிய அளவு கூலி
கிடைக்க வேண்டிய தொழில்கள் இருந்து வந்தன. இப்போது கொஞ்சம்
கொஞ்சமாய் அழிந்து வருகின்றன. கண்ணாடி சாமான், பாத்திர பண்டங்கள்
முதலியவைகளினால் எவ்வளவு தொழில்கள் கெட்டு மக்கள் ஜீவனம் செய்ய
முடியாமல் போய்விட்டது.
ஆகவே, யந்திரங்களாலும், வெளிநாட்டிலிருந்து சாமான்கள் தருவிப்
பதனாலுமே நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமையால் அவஸ்தைப்
பட்டு மனச்சாட்சி, மானம், கற்பு, ஒழுக்கம் முதலியவைகள் இழக்க நேரிட்டி
ருக்கின்றதேயல்லாமல் சட்ட சபையில் தோற்றதும் கவர்னர், நிர்வாக சபை
மெம்பர், மந்திரி, ஐகோர்ட் ஜட்ஜு முதலிய வேலைகள் கிடைக்காமல் போவ
தினாலும் அல்லவென்பது உண்மையான தேசாபிமானமுள்ளவர்களுக்கு
விளங்காமற்போகாது..
ஆகவே, கூடியவரையிலாவது ஏழைகளைக் காப்பாற்றி தரித்தி
ரத்தை ஓட்டுவதுதான் கதரின் ரகஸியமேயொழிய முரட்டுத்துணி உடுத்துவது
என்ற வேஷக் கொள்கையல்ல.
மதுவிலக்கு
அதுபோலவே, மதுபான விஷயமும் நமது நாட்டின் அடிமைத்தனத்
திற்கும், அந்நிய ஆட்சியின் வளர்ச்சிக்கும் ஆதாரமாயிருக்கிறது. மது
பானத்தினால் தான் நமது ஏழை மக்கள் அதாவது கொஞ்ச நஞ்சம் மீதியுள்ள
தொழிலாளிகள் வேலை செய்து, கூலி பெற்றாலும் பட்டினி கிடக்கவும் மது
வெறியினாலேற்படும் நஷ்டத்தால் பெருங்குடித்தனங்கள் அழியவும் அதனா
லுண்டாகும் விவகாரங்களாலேயே பார்ப்பனர்கள் உத்தியோகம், லஞ்சம்
முதலிய வழிகளில் நமது பொருளைக் கொள்ளை கொள்ளவும், இன்னும்
எத்தனையோ வகைகளில் கஷ்ட நஷ்டப் படவும் ஏற்படுகிறது.
ஆகவே,மதுரைத் தீர்மான நிறைவேற்றத்தால் நமது நாட்டில் 100-க்கு
90 பேர்களுக்கு மேலாயிருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கே முக்கிய குறை
குடி அரசு - 19970)
46
களான சுயமரியாதையற்றிருத்தல், மனச்சாட்சியின்றியிருத்தல், பட்டினி
கிடத்தல் முதலிய எல்லாக் குறைகளும் நீங்கி அவர்களுக்கே எல்லா வழிகளி
லும் மிகுதியும் அனுகூலமாக இருப்பதால் இத்திட்டங்களை நிறைவேற்ற
வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கிறது. இத்திட்டங்களை காங்கிர.
சிலிருந்து மெல்ல மெல்ல வெளியாக்க வேண்டிய அவசியமும் இத்திட்.
டத்தை நடத்தக் காங்கிரஸைக் கட்டிக்கொண்டிருந்த மகாத்மாவை காங்கிரசை
விட்டு வெளியாக்கச் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியமும் நமது பார்ப்ப
னருக்கு ஏற்பட்டதும் இந்தக் காரணங்களால்தான். சுருக்கமாகச் சொல்வதா
னால் இத்திட்டங்களால் பார்ப்பனரல்லாதாருக்கே அனுகூலமும் பார்ப்பனர்.
களுக்குப் பெருத்த ஆபத்தும்தான். ஆதலால், பார்ப்பனரல்லாதார் விஷயத்
தில் உண்மையான கவலையுள்ளவர்களும் சுயமரியாதையில் லட்சியமுள்ள
வர்களும் ஏழை மக்களிடத்திலும், தொழிலாளிகளிடத்திலும் கருணையுள்ள
வர்களும் செய்ய வேண்டிய முக்கியமான வேலை மதுரை மகாநாட்டுத்
தீர்மானங்களை நடத்திக்கொடுப்பதேயாகும் என்று மறுபடியும் சொல்லு
வோம்.
மற்றபடி, அர்த்தமில்லாத வார்த்தைகளான “சுயராஜ்யம், “உரிமை”,
“தேசீயம்', “சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடுதல்” “சிங்கத்தின் குகையில்
போய் அதன் வாயைப் பிளத்தல்", “பூரண சுயராஜ்யம்” முதலிய அரசியல்
பரிபாஷைப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு திரியும் வேலைகளை பார்ப்ப
னரைப் போலவேநம்மிலும் உள்ள சில வயிற்றுச்சோற்று தேசபக்தர்களுக்கு
விட்டு விடலாம். பார்ப்பனரல்லாதாருக்குப் பார்ப்பனர் கோரும் “பார்ப்பன
ஆதிக்க சுயராஜ்யம்” ஒரு சிறிதும் தேவையில்லை.அதில் எந்தப் பார்ப்பன
ரல்லாதார் கலந்து கொள்வதும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு துரோகமே
யாகும். பார்ப்பனரல்லாதாருக்கு வேண்டியதெல்லாம் மகாத்மா கோரும்படி
யான நிர்மாணத்திட்டத்தை நிறைவேற்றுதல் என்னும் சுயராஜ்யம்தான். அது
தான் மதுரைத் தீர்மானம்! அதுதான் மதுரைத் தீர்மானம்! அது தான் மதுரைத்
தீர்மானம்!!!
குடி அரசு - தலையங்கம் - 23.01.1927.
47
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
எங்கும் பார்ப்பன ஆதிக்கமே
கோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்
காக்களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா
போர்டிலும் நமது ஜில்லாவிற்குட்பட்ட எல்லாத் தாலூகா போர்டிலும் பிராமண:
ரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர். நம் நாட்டிலோ
எல்லா உத்தியோகங்களையும், பார்ப்பனர்களே வெகுகாலமாகக் கொள்ளை
யடித்து வந்திருக்கின்றனர் என்ற கிளர்ச்சி பலமாக இருந்து வருகிறது.
பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டையாலேயேதான் நம் நாட்டில் பார்ப்
பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கட்சி உண்டானதென்பதில் சந்தேகமில்லை.
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற கிளர்ச்சி தோன்றியபின் பார்ப்பனருக்கு
இனி அதிகம் உத்தியோகம் கொடுக்கக்கூடாது. பார்ப்பனரல்லாதூர்களுக்கே.
கொடுத்து வரவேண்டும் என்ற அபிப்பிராயத்திற்கு சர்க்காரிலுங்
கூட ஆதரவு
காட்டிவந்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்க நமது ஜில்லா லோகல்
போர்டு ஸ்தானங்களில் பார்ப்பனரல்லாதவர்களே தலைவர்களாயிருந்தும்,
இவ்விடம் நியமிக்க வேண்டிவந்த நான்கு டாக்டர் ஸ்தானங்களையும்
பார்ப்பனர்களுக்கே கொடுத்ததானது பெரிய அறியாயமாகும். பார்ப்பனரல்
லாத டாக்டர்கள் டாக்டர் வேலைக்கு லாயக்கில்லை யென்று போர்டார்.
நினைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. நமது ஜில்லாவில்
அநேக பார்ப்பனரல்லாதடாக்டர்கள் பாஸ் செய்து விட்டு வேலையில்லாமல்
காத்திருக்கும் போது, ஒரு ஸ்தானங்கூட பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுக்
காமல் நான்கையும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததற்கு பார்ப்பனரல்லாதார்.
மிகவும் வருந்தவேண்டியிருக்கிறது. போர்டு தலைவர்கள் இம்மாதிரி
அநியாயம் செய்ய என்ன அவசியமேற்பட்டதோ தெரியவில்லை. என்ன
வோ சில சிபார்சுகள் என்ற சிறிய காரணம் தவிர வேறு காரணம் சொல்ல
முடியாதென்றே நினைக்கிறோம். உத்தியோக வேட்டையில் கை தேர்ந்த
பார்ப்பனர்களுக்கு ஆளுக்குத் தகுந்த சிபார்சு பிடிக்க தெரியாமற்போகாது.
கேவலம் சிபார்சுகளுக்காக தாலூகாபோர்டுதலைவர்கள் தங்கள் தங்கள்
அபிப்பிராயங்களை பார்ப்பனர்களுக்கு ஆதரவாகக் கொடுத்திருப்
பார்களென்பதை எண்ணும்போது வருத்தப்படவேண்டியிருக்கிறது. ஆனால்
தற்சமயம் தலைமை வகித்துவரும் போர்டு தலைவர்கள் பார்ப்பனரல்
லாதாரின் க்ஷேமத்தில் அக்கரையில்லாதவர்களல்லர்! ஆனால் பார்ப்பன
டாக்டர்கள் ஷி ஸ்தானத்தை அடைய செய்த சூழ்ச்சிகளுக்கு நாட்டின்
குடி அரசு
- 19270)
48
அபிப்பிராயத்தையும் பார்ப்பனரல்லாதார் க்ஷமத்தில் போர்டு தலைவர்.
களுக்குள்ள அக்கரையையும் பலி கொடுத்துவிட்டதானது பார்ப்பனரல்லா
தாரின் துர்பாக்கிய மென்றே சொல்லவேண்டும். எப்படியோ அந்தந்த தாலூகா
போர்டு தலைவர்களைச் சரிப்படுத்தித் தங்கள் தங்களுக்கு ஆதரவு காட்டும்
படி செய்து நான்கு டாக்டர் ஸ்தானங்களையும் பார்ப்பனர்கள் அடித்துக்
கொண்டு போனதை நினைக்கும் போது நம்மவர்களுக்கு கண்ணிருந்தும்
பார்க்க முடியவில்லை,காதிருந்தும் கேட்கமுடியவில்லை, வாயிருந்தும் பேச
முடியவில்லை,மனமிருந்தும் அறியமுடியவில்லை என்று சொல்வதைத்தவிர:
நாமொன்றும் சொல்லக் கூடவில்லை. இனிமேலாவது போர்டு தலைவர்கள்.
இது விஷயத்தைக் கவனித்துச் செய்வார்களென்று எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 23.01.1927
49
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
அதுவாணானும் கிடைக்கட்டும்
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் பார்ப்பனருக்கு ஒரு “வஜ்ஜிரக்
கோடாரி”. அதாவது தைரியமாய் யாரையும் வைவார். அப்படி வையவும்
அவருக்கு சில செளகரியமுண்டு. என்ன வென்றால் ... “சத்தியமூர்த்தி
வைவதையெல்லாம் பொருட்படுத்துவதானால் உலகில் மனிதனுக்கு வேறு
வேலை செய்ய நேரமே கிடைக்காது” என்று வசவு கேட்போர் ஒவ்வொரு
வரும்நினைக்கும்படியாகவும், “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட்
படுத்தலாமா” என்று ஊரார் வையப்பட்டவரை கேட்கும்படியானதுமான ஒரு
செளகரியம் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு உண்டு. இதனால் இன்னும் வைய
முடியுமானால் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வாய்வலித்தால் மாத்திரம்
வசவுத்தடை ஏற்படுமேயொழிய மற்றவர்களால் தடை ஏற்படுத்த முடியவே
முடியாது. இந்த வசவைப் பார்த்து ஆனந்தப்படும் பாக்கியம் நமது பார்ப்
பனர்களுக்கு யிருப்பதால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியவர்கள் ஒரு வஜ்ஜிரக்
கோடாரி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயோ பாவம்! “அவ்வஜ்
ஜிரக் கோடாரிக்கு” அவரால் வேலை வாங்கிக் கொண்ட சுயராஜ்ஜியக்
கட்சியார் சட்டசபைத் தலைவர் ஸ்தானம் கொடுக்க மறுத்து விட்டார்கள்.
தொலைந்து போகட்டும் அதுதான் பார்ப்பனர் என்கிற காரணத்திற்காக
கொடுக்கவில்லை என்று சிலரும் சத்தியமூர்த்தி சட்டசபைத் தலைவரானால்
சட்டசபை மெம்பரை ராஜிநாமா கொடுத்து விடுவதாக மிரட்டியதால் கொடுக்
கப்படவில்லையென்று சிலரும் (சில சர்க்கார் உத்தியோக மெம்பர்கள் கூட
மிரட்டினார்களாம்। சிலர் தங்களுக்குக் கொடுக்காவிட்டால் கட்சியைவிட்டு
வெளியேறி விடுவதாகப் பயமுறுத்தியதால் கொடுக்கப்படவில்லை என்று
சிலரும் முன்னாலேயே மந்திரி வேலை கொடுப்பதாய் வாக்களித்ததால்
மந்திரி வேலை ஒப்புக்கொள்ளாததால் அதற்கு பதிலாக 5500ரூ. இல்லா
விட்டாலும் 2000 ரூபாயாவது வேண்டாமா என்று தலைவர் வேலையாவது
கொடுக்க வேண்டுமே என்று ஏக தலைவர் நாணயத்தைக் காப்பாற்ற
பார்த்தாலும் கிடைக்காமல் போய்விட்ட தென்றும் சிலர் சொல்லிக் கொள்
வதால் ஏதாவதொன்றினாலோ எல்லாவற்றினாலோ கிடைக்காமல் போயிருக்
கலாம். அதுதான் போகட்டும் என்றாலும் கட்சித் தலைவர் பதவியாவது
கிடைக்க வேண்டாமோ என்று பார்த்தால் அதற்கும் “பார்ப்பனர் கூடாது”
என்று சிலர் சொன்னதாலும் “சத்தியமூர்த்தி கட்சித் தலைவரா அப்படியானால்
குடி அரசு - 19970)
50
எனக்கு கட்சியும் வேண்டாம் சுயராஜ்யம் கூட வேண்டாம்” என்று சிலர்.
சொன்னதாலும் “எனக்கும் வேண்டாம், சத்தியமூர்த்திக்கும் வேண்டாம்,
வேறு யாருக்குக் கொடுத்தாலும் சரி” என்று சிலர் சொன்னதாலும் ஆந்திரா,
தமிழ்நாடு என்கிற நாட்டு வாதத்தாலும் ஏக தலைவரான ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்
யங்காருக்கே ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு தலைவர் பட்டங்கட்டுவதில் பயம்.
ஏற்பட்டதாலும் அதாவது வேறு கட்சியார் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஏமாற்றி
விட்டால் பிறகு தம்முடைய “ஏக தலைவர்” ஸ்திதிக்கு ஆபத்து வந்து
விடுமோ என்று பயந்ததாலும் இன்னும் பல அய்யங்கார் பார்ப்பனர்களின்
போட்டியிலும் கிடைக்காமல் போய்விட்டது. ஆகவே இந்த கோபத்தின்
பலனாய் கட்சி உபதலைவர் பதவியைக் கூட காலால் உதைத்துத் தள்ளி
விட்டார். கடைசியாக ஊர் ஜனங்கள் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை வெறும்.
சத்தியமூர்த்தி என்று எண்ணவும் கூப்பிடவும் ஏற்பட்டதால் இப்போது
கோபம் - தெளிந்தவுடன் ஏதாவது இருக்கட்டும் என்கிற ஞானோதயமாகி
ஏக தலைவரை உபதலைவர் பட்டமானாலும் இருக்கட்டும் என்று கேட்டுக்
கொண்டதால் ஏக தலைவரும் “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில்
ஆண்டி” என்பது போல் பாவம் ஒரு நாயுடுவைப் பிடித்து ஏமாற்றி அவரிடம்
ராஜினாமா வாங்கிவிட்டார். இந்தப் பட்டத்தை சீக்கிரத்தில் ஸ்ரீமான் சத்திய
மூர்த்திக்கு சூட்டி விடுவார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும் அதுவா
னாலும் கிடைக்கட்டும் என்கிற ஆசையின் பேரில் தலையை நீட்டிக்கொண்டி
ருக்கிறார். வகுப்புவாதம் ஒழிந்த தன்மையும் உத்தியோக ஆசை வெறுத்த
தன்மையும் அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டை உடைய தன்மையும் எவ்வளவு
தூரம் சுயராஜ்யக் கட்சியில் துலங்குகிறது என்பதை இதிலிருந்தே எல்லோ
ரும் அறிந்து கொள்ளலாம். “ஆத்மஸ்துதி, பரநிந்தை, திரவிய அபேகைஷ
ஆகிய மூன்று துர்க் குணங்களையும் வெறுத்து நான்கு வேதம், ஆறு
சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைக்கியானம் தெரிந்த ஞானபண்டிதனான
எனக்கும் இரண்டணா ஒன்றும் தெரியாத இந்த தற்குறிக்கும் இரண்ட
ணாவா?” என்று ஒரு சாஸ்திரி கேட்டது போல் இருக்கிறது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23011927
51
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
ணெண்மக்குணம் போகுமா?
சுயராஜ்யக் கட்சி பார்ப்பனக் கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்
திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய்
உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்
தோ,ஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக்கொள்ளப்படுகிறதென்றும்.
பலதடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். அது போலவே
இப்போது சட்டசபைத் தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக்
கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்கபலம் இருக்கிறது என்பதாகக்
கருதி இப்போது சட்டசபைக்கு பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள்.
அதாவது - முதலாவதாக தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு
வரப்பட்டிருக்கிறது. தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமல்ல.
இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லி தேர்தலில்
பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுவிட்டு இப்போது தேவஸ்தான
விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து
விட்டார்கள். இத்தீர்மானம் கொண்டு வந்தது கோவை ஜில்லா பிரதிநிதி
ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமண ஐயங்காரே ஆவார். கோவை ஜில்லாவில்
ஸ்ரீமான் டி.ஏ. ராமலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு விரோதமாய் ஓடி ஓடி
ஓட்டு வாங்கிக் கொடுக்கிற சிகாமணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப்
போகிறார்களோ தெரியவில்லை. ஸ்ரீமான் அய்யங்காரை இது யோக்கியமா?
என்று இவர்கள் கேட்பார்களானால் அவர் உடனே சரியான பதில் சொல்லா
திருப்பார் என்றே நினைக்கிறேன். அதாவது என் பணத்தினால் ஓட்டு
சம்பாதித்தேனே ஒழிய யாருடைய தயவினாலும் எந்த வாக்குத் தத்தத்தி
னாலும் ஓட்டுப் பெறவில்லை; என்னிடம் பணம் வாங்காமல் எனக்கு யார்.
வேலை செய்தார்கள்? ஓட்டுச் செய்தார்கள்? என்று கேட்பார்களாதலால்
அய்யங்காருக்கு வேலை செய்தவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக்
கொள்ள வேண்டியது தான். மற்றொரு தீர்மானம் மற்றொரு பார்ப்பனரால்
கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது பார்ப்பனரல்லாத கட்சி மந்திரி
காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு
ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்ததை இப்போது எடுத்து விடவேண்டு
மென்று தீர்மானம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டி இருப்பதால்
நாலு இரண்டு பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளை காலேஜில் சேர்த்துக்
குடி அரசு - 19970)
52
கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நாலோ இரண்டோ பிள்ளைகள்
படிப்பது கூட நமது பார்ப்பனர்களாகிய சுயராஜ்யக் கட்சியாருக்கு கண்ணில்
குத்துகிற படியால் அடியோடு காலேஜுகளை பார்ப்பன சத்திரங்களாக்க
ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் பார்ப்பனருடைய தப்பிதம் அல்ல.
பின்னையாருடையதென்றால் அவர்கள் பின் திரிந்த, திரியும், திரியப்போகும்
பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்று தேச பக்தர்களின் தப்பிதமேயாகும்
என்பதே நமது அபிப்பிராயம். இன்னமும் என்ன என்ன நடக்குமோ
பார்ப்போம்.
குடி அரசு - கட்டுரை - 23.01.1927
53
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
தஞ்சை வில்லா யிரசாரம்
அக்கிராசணாதிபதியே! சகோதரி சகோதரர்களே!
நான் இதற்கு முன் இந்தப் பக்கங்களுக்கு எத்தனையோ தடவை
வந்திருக்கிறேன்.
ஒரு காலத்திலும் இதுபோன்ற மக்கள் உணர்ச்சியும்
எழுச்சியும் கூட்டமும் வரவேற்பு உபசாரம் முதலியதுகளும் நான் கண்டதே
இல்லை. நம்முடைய எதிரிகள் “வகுப்பு இயக்கங்கள் மாண்டு விட்டன”,
“வகுப்புப் போராட்டங்கள் குழிதோண்டி புதைக்கப் பட்டன”, “பார்ப்பன
ரல்லாதார் கட்சி ஒழிந்து விட்டது”, “இனி நம் இஷ்டம்போல் கொள்ளை
அடிக்கலாம்” என்று சொல்லுகிற காலத்தில் எப்போதும் இருந்ததை விட எண்
மடங்கு அதிகமாய் நமது கட்சியினுடையவும், இயக்கத்தினுடையவும்
உணர்ச்சி வலுத்து வருகிறதுடன் நமது கொள்கையை ஒப்புக்கொள்ளுவதாக
புதிது புதிதான இடங்களில் இருந்து ஆதரவுகள் கிடைத்து வருகின்றன.
இன்றைய தினம் எனக்குச் செய்யப்பட்ட வரவேற்புகளும், ஊர்வலங்
களும், வரவேற்பு உபசாரப் பத்திரங்களும் அதன் மூலம் காட்டிய உணர்ச்சி
களும், ஊக்கங்களும் கண்டிப்பாக எனக்காக அல்ல என்பதையும் அது
களுக்கு நான் கொஞ்சமும் தகுதியுள்ளவன் அல்ல என்பதையும் எல்லோரை
யும் விட நான் நன்றாய் அறிவேன். அதோடு நான் அதுகளுக்கு ஒரு சிறிதும்
அருகனல்ல என்பதையும் உறுதியாயும், திரிகரண சுத்தியாயும் சொல்லுவேன்.
ஆனால், பின்னை எதற்கு நான் ஏற்றுக்கொண்டேன் என்று கேட்பீர்களா
னால், நமது சுயமரியாதைக்காக நான் கைக்கொண்டுள்ள கொள்கைகளுக்கும்,
அதுகளை உங்களிடையே நிறைவேற்றி வைக்க ஏற்றுக்கொண்டிருக்கும்
பொறுப்புக்கும் தொண்டிற்குமென்றே சொல்லுவேன். இதுகளிலிருந்தே
எனது கொள்கையையும், தொண்டையும் நீங்கள் அடியோடு ஒப்புக்கொள்ளு
கிறீர்கள் என்றும் அதற்கு ஆதரவளிக்கத் தயாராயிருக்கிறீர்கள் என்றும் நான்
நினைப்பதோடு எனது கொள்கைகளில் எனக்கு முன்னிலும் அதிகமான
திடமும், எனது தொண்டைச் செய்ய முன்னிலும் அதிகமான ஊக்கத்தையும்
அடைகிறேன். இந்த நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டும்.
என்னும் விஷயத்தில் நான் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சியானது
என்னால் ஏற்பட்டதல்லவென்பதும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதும்
உங்களுக்கு நன்றாய்த் தெரியும். எந்தக் காலத்தில் நம்முடைய நாட்டில்
குடி அரசு
- 19270)
54
அன்னியர்கள் பிரவேசித்து நம்மை ஏமாற்றித் தாழ்ந்தவர்களாக்கி நம்மீது
ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டார்களோ அந்தக் காலமாகிய ஆயிரக்கணக்
கான வருடங்களாக நடந்து வருகிறது. ஆனாலும், நம்முடைய ஒற்றுமையும்
கட்டுப்பாடும் இல்லாத தன்மையாலும் நம்மைப் பிரித்து வைத்து நமக்குள்
கட்சிகளையும் துவேஷங்களையும் உண்டு பண்ணி வாழ்க்கை நடத்த நமது
எதிரிகள் கைக்கொண்ட தந்திரங்களாலும், அவ்வப்போது அந்தந்த பிரயத்
தனங்கள் அருகியே வந்துவிட்டன. இராமாயண பாரத கால முதற் கொண்டும்.
அதற்கு முன் வேதகாலம் என்று சொல்லப்படும் கால முதற் கொண்டும் இந்தத்
தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே எத்தனையோ போர்கள் நடந்து
வந்திருக்கின்றன. வேதம் என்பதின் முக்கிய பாகமும் அதன் தத்துவமும்
என்ன என்பதை நீங்கள் அறிய முற்படுவீர்களானால் நம்முடைய சுயமரியா
தையையும், சுதந்திரத்தையும், வாழ்வையும், பெருமையையும் ஒழித்து
எதிரிகள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் சூழ்ச்சிகளையே அடிப்படை
யாகக் கொண்டது என்பதை ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு பதத்திலும்
ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு ஒலியிலும் காண்பீர்கள். இதை ஒழிக்க
கங்கணம் கட்டிய மகாத்மாக்கள் எத்தனையோ பேர்களில் நமது மகாத்மா
காந்தியும் ஒருவர். இதற்கு முன் ஏற்பட்ட மகான்கள் என்ன கதியை அடைந்
தார்களோ அதே கதியை நமது மகாத்மாவும் அடையும்படியாகவே நமது
சுயமரியாதை எதிரிகள் செய்துவிட்டார்கள் என்பதை நீங்கள் கண்கூடாகப்
பார்க்கிறீர்கள் அல்லவா? ஆதலால் நமது காரியத்தில் நாம் வெற்றிபெறுவது
என்பது சுலபமான காரியமல்லவாயினும் அதற்குத் தகுந்த மன உறுதியுடனும்,
தளரா முயற்சியுடனும் வேலை செய்ய வேண்டியது நமது கடமையாயிருக்
கிறது. பல காலமாய் அடங்கிக் கிடந்த முயற்சியானது சமீப காலத்தில்
அதாவது டாக்டர் நாயர், சர். தியாகராயர் காலத்தில் வெளிக்கிளப்பப்பட்டா
லும் முளையளவிலேயே வெம்பிக் காயும்படி நமது எதிரிகள் செய்துவிட்
டாலும், மகாத்மா காந்தி காலத்தில் காட்டுத் தீ போல் பரவி சுலபத்தில் அழிந்து
விட முடியாதபடி மக்கள் மனதில் பதியும்படி செய்துவிட்டது. நான் இத்
தொண்டில் ஈடுபடக் காரணமே மகாத்மா காந்தியால்தான்.
மக்கள்
சுயமரியாதை அடையாமல் விடுதலையோ
சுயராஜ்ஜியமோ அடைய
முடியாது என்பதை அரசியல் முறையில் மகாத்மா காந்தி தான் முதல் முத
லாகச் சொன்னதோடு சுயமரியாதை அடைந்து விட்டு, சுயராஜ்ஜியத்தை
நினையென்றும் சொன்னார். அதாவது நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்று
வதுதான் சுயராஜ்யம் என்றும், தீண்டாமை ஒழிந்து மக்கள் சமத்துவமடை
வதுதான் விடுதலை என்றும் சொன்னதே இந்தக் கருத்தைக் கொண்டுதான்.
அதனால்தான் சுயமரியாதையின் எதிரிகளான பார்ப்பனர்களும் மகாத்மா
வையும் காங்கிரசை விட்டு வெளியில் போகும்படி செய்ய வேண்டியதாயிற்று.
அதனால்தான் மற்றும் பல பார்ப்பனரல்லாத அரசியல் தலைவர்கள் என்
போரும் இக்கருத்தை தைரியமாய் வெளியில் எடுத்துச்சொல்ல பயப்
படுகிறார்கள். அதனால்தான் பார்ப்பனர்களும் இக் கொள்கைகளைத் தேசத்
55
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
துரோகக் கொள்கைகள் என்றும், நாஸ்திகக் கொள்கைகள் என்றும், வகுப்புத்
துவேஷக் கொள்கைகள் என்றும் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். ஆகவே,
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மனப்பூர்வமாய் சரியென்று நினைப்பதை என்ன
வரினும் அஞ்சாமல் காரியத்தில் நடத்தி வைக்க முயற்சிக்க வேண்டும். இந்தத்
தடவையாவது நமது எதிரிகளின் சூழ்ச்சிகளுக்குப் பயந்து அரை குறையாய்
விட்டு விட்டு ஓடிப்போகாமல் கடைசிவரை போராடி அதற்காகவே உயிரைக்
கொடுத்து நமது சுயமரியாதையை அடைய வேண்டும்.
சுயமரியாதை
அடைந்து விட்டால் சுயராஜ்யம் என்பது கண்மூடி கண் திறப்பதற்குள்
தோன்றிவிடும். சுயமரியாதை அடைந்த நிலையே சுயராஜ்யம். சூரியன்
உதயமான பிறகு ஒரு ஆள் வைத்து இருட்டைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள
வேண்டுமா? அது போலவே சுயமரியாதையான சூரியன் உதயமாகி விட்டால்
அடிமைத்தனம், அன்னிய ஆதிக்கம் ஆகிய இருட்டுகள் யாரும் கழுத்தைப்
பிடித்துத் தள்ளாமலே தானே இருந்தவிடம் தெரியாமல் ஓடி விடும்.
ஆதலால், உண்மையான சுயராஜ்யம் அடைவதற்கு சுயமரியாதைதான் ஒரே
ஒப்பற்ற மார்க்கம் என்றும், அதுவே மனிதரின் பிறப்புரிமை என்றும் உறுதி
கொண்டே அதற்காக உழைக்கும்படி உங்களைப் பிரார்த்திக்கிறேன்.
(தொடர்ச்சிகுடி அரசு 06.021927)
குறிப்பு : 24, 25, 26.011927 தேதிகளில் மாயவரம், திருபுவனம், தஞ்சாவூர்
மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் ஆற்றிய
சுயமரியாதைச் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 30.01.1927
குடி அரசு - 19970)
56
ரி
.
நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்
கென்று வெகு காலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே
மதம், வேதம், கடவுள், மோக்ஷம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்
களையும் ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் தாங்களே
உயர்ந்தோர்
களாயிருந்து கொண்டு நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல்,
அரசியல், சுயராஜ்யம், தேசீயம், தேசீயப் பத்திரிகை, தேச சேவை என்கிற
பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிகைகளையும் உண்டாக்கிக்
கொண்டு அதன் மூலமும் நாங்களே தேசபக்தி உள்ளவர்கள் என்றும்,
தங்களுடைய பத்திரிகைகளே தேசீயப் பத்திரிகைகள் என்றும் நமது
பணத்திலேயே விளம்பரப்படுத்திகொண்டு நம்மை தாழ்த்தி மிதித்து மேலேறி
பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக்கொண்டு
விட்டார்கள். இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தா
யிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம்
நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக்கொண்டிருக்கிறது. பாமர மக்கள்.
மாத்திரமல்லாமல் தங்களைப் போதிய அறிவுள்ள மக்கள் என்று சொல்லிக்
கொள்ளும் பலரும் அப்பத்திரிகைகளின் மூலம் ஏமாறுவதும் அப்பத்திரிகை:
களின் மூலம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாவதும் வளர்ந்துகொண்டே
வருகிறது. தமிழ் நாட்டு மக்கள் இப்பார்ப்பனக் கொடுமை முற்றுகையிலி
ருந்தும் அன்னிய ஆட்சிக்கொடுமை முறைகளிலிருந்தும் தப்ப வேண்டு
மானால் இப்பார்ப்பனப் பத்திரிகைகளைப் பார்த்து ஏமாறுவதையும் அது
களுக்கு அடிமைகளாவதையும் ஒழித்தாலல்லது கண்டிப்பாய் முடியவே
முடியாத நிலைமையில் இருக்கிறோம். அவைகள் செய்யும் அக்கிரமங்களை
நினைக்கும்போது நமது மக்கள் மனிதர்கள்தானா - மனிதப் பிறவிதானா -
இப்பிறப்புக்கு மானம், வெட்கம் என்கிற தன்மைகள் இருக்கின்றனவா என்று
சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப்
பத்திரிகைகள் நடந்து வருவதையும் பார்ப்பன ஆதிக்கப் பிரசாரமே அதன்
கொள்கைகளாக இருப்பதையும் நாம் சந்தேகமற மனப்பூர்ணமாய்த் தெரிந்
திருந்தும் இப்பிரசாரங்களுக்கு பணம் கொடுத்து நாம் நாசமாய்ப் போவதற்
காக அப்பத்திரிகைகளையே வாங்கிப் படிப்பதென்றால் யாராவது நம்மை
அறிவு, புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று
57
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
சொல்லக்கூடுமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல்
போகாது. பிறரைக் குற்றம் சொல்லும் போது மாத்திரம் “கள்ளு. சாராயம்
குடிப்பது கெடுதி என்று தெரிந்திருந்தும் மறுபடியும் அதைக் குடிக்கிறார்களே
என்ன புத்தி கெட்ட ஜனங்கள், மானங்கெட்ட ஜனங்கள்” என்கிறோம்.
ஆனால் அந்தப் புத்தியும் மானமும் நமக்கு இருக்கிறதா என்பதைப்
பார்ப்பவர்கள் நம்மில் 1000க்கு ஒருவரைக் கூடக் காணோம். பார்ப்பனப்
பத்திரிகைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு மாத்திர மில்லாமல் நம்முடைய
இழிவுக்கும், தாழ்மைக்கும், அழிவுக்கும் நடத்தப்படுகிறது என்பதை அறிந்தி
ருந்தும் அதைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களுக்கு புத்தியும்.
மானமும் இருக்கிறதா என்பதை கவனிப்பதில்லை. உதாரணத்திற்காக ஒரு
பத்திரிகையை எடுத்துக்கொள்வோம்; சாதாரணமாக சுதேசமித்திரன்”
என்னும் பத்திரிகை பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாருடைய பணத்தையே
மூலதனமாகக் கொண்டது. அதன் பத்திராதிபர்கள், உப பத்திராதிபர்கள்.
மானேஜர்கள் முதலியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அவர்கள்
சம்பளமோ மாதம் 1500, 1000,
800,
600 இப்படி அனுபவிக்கிறார்கள்.
இப்பத்திராதிபர் பார்ப்பனரல்லாதாரை ஒழித்து பார்ப்பன ஆதிக்கம் தேடுகிற
பிரசாரம் தவிர வேறு வேலை ஏதாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?
நம்மை நாமே கெடுத்துக்கொள்ள நமது பணமே உதவ வேண்டுமா? அதற்கு
விளம்பரம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே! அதை
வாங்கிப் படித்துக் கெடுகிறவர்கள் பார்ப்பனரல்லாதார்களே! இதில் ஏதாவது
ரகசியம் இருக்கிறதா அல்லது இப்பார்ப்பனர்கள் எதையாவது ரகசியமாய்ச்
செய்கிறார்களா? நேருக்கு நேராக நம்மைப் பார்த்து “நீங்கள் முட்டாள்கள்
உங்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை, புத்தி, அறிவு இதுகள் கிடை
யாது. ஆதலால் நாங்கள் உங்களை ஏமாற்றுகிறோம். உங்களால் என்ன
செய்ய முடியும்! உங்களில் யாரோ சிலர் கத்தினால் கத்தட்டும் எங்களுக்கு
கவலை இல்லை. இதற்காக
நாங்கள் கொஞ்சமும் பயப்பட்டு எங்கள் கொள்
கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. உங்களிலேயே சில அயோக்கியர்
களையும் முட்டாள்களையும் நாங்கள் சுவாதீனம் செய்து கொண்டு உங்கள்
கத்தல்களை ஒழிக்க எங்களுக்குத் தெரியும். ஒரு கை பார்க்கலாம் வாருங்கள்”
என்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்; இதற்கொன்றும் மார்க்கமில்லையா
என்றுதான் கேட்கிறோம். “குடி அரசு” தோன்றிய பிறகு “மித்திரன்” சுமார்.
2000 சந்தாதாரர்களுக்கு மேலாகவே இழக்க நேரிட்டும் இன்னமும்
பார்ப்பனரல்லாதாரிலேயே பல பங்குக்காரர்களை ரகசியமாக சேர்த்து பணம்
சம்பாதிக்கப்பட்டு வருகிறது. நம்மவர்கள் முன்னேற்றத்திற்கென்றே நடத்தப்
பட்டு வருகிற பத்திரிகைகளை கையில் தொடுவதற்கும் நமது மக்கள் அஞ்சு
கிறார்கள் என்றால் நமது யோக்கியதையை என்னவென்று சொல்லுவது.
சாதாரணமாக “திராவிடன்”
பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு
இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணருகிறார்களா?'
அது யாருடைய நன்மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது
குடி அரசு - 19970)
58
அறிகிறார்களா? யாரையாவது போய் “ஐயா திராவிடன் பத்திரிகை தங்க
ளுக்கு வருகிறதா? இல்லையானால் ஒன்று வரவழையுங்கள். அதைப் படித்து
பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அதனால் நம்மவர்களுக்கு ஏற்படும் கஷ்டத்
தையும் உணர்ந்து அதிலிருந்து தப்புவதற்கு வேண்டியது செய்யுங் கள்” என்
றால் “திராவிடனா அதிலென்ன இருக்கிறது? அதைப் பார்த்தாலே என்னமோ
போல இருக்கிறதே, அந்தப் பெயரே நமக்குப் பிடிக்கவில்லையே” என்று
சொல்லிவிடுகிறார்கள். இதை தங்களுக்கு தோன்றுகிறபடி வாஸ்தவ
மாகத்தான் சொல்லுகிறார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். கட்டின
பெண் ஜாதியை விட்டு தாசி வீட்டுக்குப்போய் சொத்தைப் பாழாக்கி வியாதி
கொள்ளுகிறவர்களைப் பார்த்து, “ஏனப்பா கட்டின பெண் ஜாதியை வீட்டில்
வைத்து விட்டு தாசி வீட்டிற்குப் போய் சொத்தையும் பாழாக்கி வியாதியும்
கொள்ளுகிறாய்” என்றால் மேல்கண்ட மாதிரிதான் பதில் சொல்லுகிறான்.
அதாவது, “வீட்டில் என்ன இருக்கிறது? அவளைப் பார்த்தாலே எனக்குப்
பிடிப்பதில்லை.
அவள் நடந்து கொள்ளுகிற மாதிரியே மனத்திற்கு அசிங்க.
மாகப்படுகிறது. கட்டிலுண்டா? மெத்தையுண்டா? வாசனை யுண்டா? கடிப்ப
துண்டா? கிள்ளுவதுண்டா? சட்டி பானை கழுவுகிறவள் தானே” என்று ஆரம்
பித்து விடுகிறானேயல்லாமல் இதெல்லாம் எதற்காகச் செய்யப்படுகிறது.
பின்னால் நம்முடைய கதி என்னாகும் என்கிற கவலையே இல்லாமல்
அறிவீனமாய் நடந்து கொள்ளுகிறான். அப்படிபோல் நம்மை மயக்கி, ஏய்த்து,
நம்மைப் பாழாக்கி கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாறத்
தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும். ஒருநாள் பூரா படிப்பதற்கும் விஷய
மிருக்கலாம். ஆனால் அது பெரும்பாலும் என்ன விஷயம்? நம்மைக்
கழுத்தறுக்கும் விஷயமும் பொழுது போக்கு விஷயமுமாகத் தானே
இருக்கும். ஆதலால் மானமுள்ள மக்கள் தமது சொந்தப் பெண்டை அன்னி
யன் குற்றம் சொல்லும்படியாகவும், கஞ்சிக்குத் திண்டாடும் படியாகவும்
விடாமல் காப்பதை எப்படி தமது கடமையாய் நினைப்பார்களோ அதுபோல்
“திராவிடன்” பத்திரிகையை ஆதரிப்பதோடு கட்டின பெண்டை தெருவில்
அலையவிட்டு தாசி வீடு காத்து திரிவதுபோல் “திராவிடனை' விட்டுப்
பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை
மறந்து நமது மானத்தைக்
காப்பாற்ற உதவிசெய்ய வேண்டும் என்பதாக தாழ்மையோடு கேட்டுக்
கொள்ளுகிறோம். இந்த மார்க்கம் தான் பாமர மக்களைக் காப்பாற்றவும், நமது
மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படவும் சரியான மார்க்கமாகும்.
குடி அரசு - தலையங்கம் - 30.01.1927
59
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
யார்ப்பணப் பத்திரிகைகணிண் வதால்லை
ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக
3-ல் 2 பங்கு மெம்பர்களுக்கு அதிகப் பேர்களாலேயே தெரிந்தெடுக்கப்
பட்டும், அவரைப்
பற்றியும் அத்தேர்தல் முறையைப் பற்றியும் பார்ப்பனப்
பத்திரிகைகள் செய்யும் கொலை பாதகத்திற்குச் சமானமான கொடுமையும்
பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களும் கேட்போர் மனதை பதைக்கும்படி
யாகவே இருக்கும்.
ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில்
அவருடைய ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானம் காலியாகும். ஆதலால்
அவர் மறுபடியும் பிரசிடெண்டு தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாகும்.
படியாக லோகல் போர்டு இலாக்கா மந்திரியாகிய டாக்டர் சுப்பராயன் அவர்.
களை ஜில்லா போர்டு மெம்பராக நியமனம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
போர்டு வைஸ்பிரசிடெண்டும் போர்டின் மூலம் கவர்ன்மெண்டுக்கு சிபார்சு
செய்தார். மந்திரி, பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டோ அல்லது
பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நினைத்தோ நியமனம் செய்ய
முடியாது என்று சொல்லிவிட்டாராம். அதன் மேல் ஜில்லா போர்டு மெம்பர்:
களில் 27 பேர்கள் சேர்ந்து ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தை ஜில்லா போர்டு
மெம்பராய் நியமிக்காத வரையில் அவர் அடுத்த தேர்தலுக்கு நிற்க முடியா
தென்றும் அவர் மறுபடியும் தலைவராக வர நாங்கள் விரும்புகிறோமென்றும்,
காரணமின்றி சட்ட நிர்பந்தத்தால் மாத்திரம் அவருக்கு ஏற்படும் தடையை
விலக்குவதற்கு வேறு வழி இல்லையென்றும், மற்றும் அவருடைய
நிர்வாகத்தைப் புகழ்ந்தும் ஒரு மகஜர் அனுப்பினார்களாம். அதன்பேரில்
மந்திரி ஒன்றும் செய்ய முடியாமல் போனதால் ஸ்ரீமான் பன்னீர்செல்வம்
மறுபடியும் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு நிற்பதில் சட்டபடிக்கான தடை.
ஒன்றும் இல்லையென்றும், ஆனால் தேர்தல் மாத்திரம் அவர் காலாவதி
தீருவதற்கு முன்னாலேயே செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு
0.0(கவர்ன்மெண்டு உத்திரவு அனுப்பிவிட்டார். அதன்படி காலாவதி தீர 10
நாளைக்கு முன்னால் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஒரு தேர்தல்
போட்டு அந்தப்படியே தேர்தல் நடந்தது. ஆனால் நமது பார்ப்பனர்கள்
தேர்தலை நிறுத்த மந்திரியைப் பிடித்து வேலை செய்யத் தங்களால் கூடுமான
தெல்லாம் செய்து பார்த்தார்கள். மந்திரியால் முடியாமல் போய்விட்டது.
குடி அரசு - 19970)
60
கடைசியாக தேர்தலுக்கு முதல்நாள் முனிசீப் கோர்ட்டில் தடை உத்திரவு
கேட்டார்கள். அந்த முனிசீப்பு முதல் நாள் கேசை விசாரித்து விட்டு தேர்தல்
தினத்தன்று 11 மணிக்கு தீர்ப்புக் கூறுவதாய் சொல்லிவிட்டார். தேர்தலுக்காக
எல்லா மெம்பர்களும் வந்தும் விட்டார்கள். கடைசியாக 1 மணிக்கு முனிச்ப்பு
தடை உத்திரவு கொடுக்க முடியாது என்றும், தேர்தல் நடத்தலாம் என்றும்
தீர்ப்புச் சொல்லிவிட்டார். இந்தப் பார்ப்பனர்கள் இதோடு விடாமல், 12
மணிக்கு ஜில்லா ஜட்ஜியிடம் அத்தீர்ப்பின் மேல் அப்பீல் செய்தார்கள்.
அதாவது தேர்தல் சரியாய் 2 மணிக்கு நடக்க வேண்டும்; ஆனால், இவர்கள்
தேர்தலுக்காக பிரசாரம் கூட செய்ய வொட்டாமலும் தாங்கள் மாத்திரம் ஒரு
ஓட்டருக்கு ஒரு பார்ப்பனர் வீதம் வேலை செய்து கொண்டும் உபத்திரவம்
செய்தார்கள். ஜில்லா ஜட்ஜி 1மணி வரை இரண்டு பக்கத்தில் ஆர்க்குமெண்
டையும் கேட்டுவிட்டு கடைசியாக பார்ப்பனர்களின் அப்பீலை செலவுடன்
தள்ளிவிட்டார். உடனே 2 மணிக்கு தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது. இதில்
இன்னொரு வேடிக்கை அதாவது கும்பகோணம் தாலூகா போர்டு மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஜில்லா போர்டு மெம்பர்களை ஓட்டுச்
செய்யாமல் தடுப்பதற்காக அவர்கள் பெயரை கெஜட்டில் வர ஒட்டாமல்
சூழ்ச்சி செய்தார்கள். இது விபரம் தெரிந்து அவர்கள் பெயரை உடனே கெஜட்
செய்யும் படியாய் தந்தி கொடுத்ததும் பெயர் கெஜட் செய்ய உத்திரவாய்
விட்டதாக தந்தி வந்தது. உடனே கும்பகோணம் மெம்பர்களை தேர்தல் தினத்
தன்று தருவித்தாய் விட்டது. ஆனால் தேர்தல் நடத்த ஆரம்பிக்கும் சமயத்
தில் பட்டணத்திலிருந்து அவ்விரு மெம்பர்கள் பெயரும் சேர்க்கப்பட
வில்லை என்று ஒரு தந்தி வந்தது. அந்த இரண்டு மெம்பர்களையும்
நிறுத்திவிட்டு தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தின்
பெயரை பிரேரேபித்தவுடன் ஒரு மகமதிய கனவானை விட்டு சட்டப்படி
பன்னீர்செல்வம் நிற்பது ஒழுங்கல்ல என்று ஆக்ஷேபணை சொல்லச்
செய்தார்கள். தேர்தலுக்கு அக்கிராசனம் வகித்த உப அக்கிராசனாபதி
அவ்வாகேஷபணையைத் தள்ளிவிட்டார். உடனே வேறு ஒரு கனவான்
பெயரை பிரேரேபிக்க ஆரம்பித்தார்கள். போட்டிப் பெயராக ஸ்ரீமான்கள்
நாடிமுத்து பிள்ளையவர்கள் பெயரும் மருதவனம் பிள்ளை அவர்கள்.
பெயருமே அடிபட்டு வந்தமை நேயர்களுக்குத் தெரியும். ஆனால் தேர்தல்
சமயம் வரையார் நிற்பது என்பது உறுதிப்படாமல் ஒருவருக் கொருவர் நான்
மாட்டேன், நான்மாட்டேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். ஆன
தினால், இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்விருவரிடத்திலும் யார் பேரில் அதிக
நம்பிக்கையோ அதாவது வேண்டாமென்று சொல்ல மாட்டார்களோ
அவர்களைப் பார்த்துக் கண்டுபிடித்து ஸ்ரீமான் மருதவனம் பிள்ளை பெயரை:
ஒரு அய்யங்கார் பார்ப்பனர் பிரேரேபித்தார். ஒரு அய்யர் பார்ப்பனர்
ஆமோதித்தார். ஓட்டு போட்டவுடன் முடிவு தெரிவதற்கு முன்னாலேயே
இக் கூட்டம் அநேகமாய் ஓடிப்போய் விட்டது. எண்ணிப்பார்க்க ஸ்ரீமான்
பன்னீர்செல்வத்திற்கு 27 ஓட்டுகளும் ஸ்ரீமான் மருதவனம் பிள்ளைக்கு 10
61
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஓட்டுகளும் கிடைத்தன. பட்டணத்திலிருந்து பொய்த் தந்தி கொடுக்கப்
பட்டிருக்காவிட்டால் ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு 29 ஓட்டுகள் கிடைத்
திருக்கும். அக்கிராசனார் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் 27 ஓட்டுகளால் தெரிந்
தெடுக்கப்பட்டதாய் முடிவு சொன்னதும் ஜனங்களின் ஆரவாரத்திற்கள
வில்லை. மற்ற விஷயம் மறுமுறை எழுதலாம். இப்போது எடுத்துக்கொண்ட
விஷயத்திற்கு மறுபடியும் போகலாம். அதாவது தெரிந்தெடுக்கப்பட்ட
பிறகும் இத்தேர்தல் சம்பந்தமாய் பனகால் ராஜாவின் மீது பழி சொல்லிப்
பார்ப்பனப் பத்திரிகைகள் கண்டபடி எழுதி ஜனங்களுக்கும் தேர்தல் விஷய
மாயும், பனகால் விஷயமாயும், ஸ்ரீமான் பன்னீர்செல்வம் விஷயமாயும்
தப்பெண் ணம் கற்பிக்க பாடுபடும் காரணம் என்ன? உத்திரவு போட்டது
டாக்டர் சுப்பராய மந்திரி: இதில் பனகால் மந்திரிக்கு சம்பந்தம் என்ன?
அவரை எதற்குதிட்ட வேண்டும்? இதில் உள்ள சூழ்ச்சியை கொஞ்சம் கவன
மாய் படிக்க வேண்டும். அதாவது பனகால் மந்திரி காலத்தில் ஒரு பார்ப்பன
ஜில்லா போர்டு பிரசிடெண்டு தன் காலாவதி சீக்கிரத்தில் முடியப் போகிறப்படி
யால் தான் மறுபடியும் தேர்தலுக்கு நிற்க யோக்கியதை உண்டாக்கிக்
கொள்ளும்படியாக தன்னை மறு நியமனம் செய்யும்படி பனகாலை கேட்டுக்
கொண்டார். பனகால் உடனே நியமனம் செய்யாமல் கொஞ்சம் தாமதம்
செய்யவே பனகால் மீது இப்பார்ப்பன ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கு
சந்தேகம் ஏற்பட்டு சட்டத்தை திருப்பித் திருப்பிப் பார்த்து சென்னை சட்டம்
வல்ல பார்ப்பனர்களையும் கண்டு யோசித்து தான் மறுநியமனம் பெறாமலே
தனது காலாவதி முடிவதற்குள் தேர்தல் ஏற்படுத்தி அதில் நிற்கச் சட்டம் இடம்
கொடுக்கிறது என்பதாகக் கண்டுபிடித்து உடனே தேர்தல் நடத்தி அதில் தான்
தெரிந்தெடுத்ததாய் சர்க்காருக்கு அறிவித்து விட்டார். சர்க்கார் பனகால்! இது
சட்டப்படி செல்லாது என்பதாக அபிப்பிராயப்பட்டார். மற்றொரு பொறுப்
புள்ள உத்தியோகஸ்தர் இது செல்லும் என்று அபிப்பிராயப்பட்டார். கடைசி
யாக அட்வகேட் ஜெனரல் அபிப்பிராயத்திற்கு அனுப்பப்பட்டது: அது
செல்லும் என்று அட்வகேட் ஜெனரல் அபிப்பிராயம் சொல்லிவிட்டார். பிரசி
டெண்டு ஸ்தானம் உறுதியாய் விட்டது. அந்தப் பார்ப்பனப் பிரசிடெண்ட்
இப்போது இந்திரபோகம் அனுபவிக்கிறார். இதைப் பற்றி ஒரு பார்ப்பனப்
பத்திரிகையும் மூச்சுக்கூட விடவில்லை. ஏன்? அந்த போர்டு பார்ப்பன
அக்கிரஹாரமாகவும் அன்னசத்திரமாகவும் இருந்து வருகிறது.
ஒரு
பார்ப்பனர் ஆசைப்பட்டார், ஒரு பார்ப்பனர் யோசனை சொன்னார், ஒரு
பார்ப்பனர் தேர்தல் நடத்தினார், ஒரு பார்ப்பனர் செல்லும் என்றார், ஒரு
பார்ப்பனரல்லாதார் தான்பனகால் அப்போதே இது சட்டவிரோதமென்றார்.
இப்போது இந்த விஷயம் இதேமாதிரி ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு
ஏற்பட்டுவிடவே அதே கூட்டத்துப்பார்ப்பனர்களுக்கு இது சமயம் இது சட்ட
விரோதமாய்க் காணப்படுகிறது. அதாவது சட்டத்திற்குத் தாங்கள்தான் மனு
என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் என்று பார்த்தால் சட்டம்
செய்வது பார்ப்பனர், சட்டத்திற்கு வியாக்கியானம் செய்வது பார்ப்பனர்,
குடி அரசு - 19970)
62
சட்டவாதி பார்ப்பனர், சட்ட அதிபதி பார்ப்பனர். ஆகவே வக்கீல் குமாஸ்தா
முதல் ஐகோர்ட் ஜட்ஜி, சட்டமெம்பர் வரையிலும் பார்ப்பன மயம். அப்படி
இருக்கும்போது வேறு ஒருவர் எப்படி தங்களை சட்டத்தில் மீறக்கூடும்
என்கிற ஆணவம்தான்.
நிற்க, இதே மாதிரி திருநெல்வேலி ஜில்லா போர்டு பிரசிடெண்ட்
சென்ற வாரம் தெரிந்தெடுக்கப்பட்டார். அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட
ஒரு பார்ப்பனராவது அவர்களுடைய பத்திரிகைகளாவது எழுதவும் இல்லை,
பேசவும் இல்லை. தேர்தலிலும் ஆக்ஷபணை இல்லை, சூட்டும் இல்லை,
அப்பீலும் இல்லை. ஏனென்றால் ஸ்ரீமான் குமாரசாமி ரெட்டியார் அவர்
களைப் பற்றி நமது பார்ப்பனர்களுக்கு அவ்வளவு விரோதமில்லை. காரணம்
என்னவென்றால் அங்கு பார்ப்பனர்கள் சாப்பிட தர்ம சத்திரங்கள் இல்லை.
சம்பளமில்லாத பள்ளிக்கூடங்கள் இல்லை. இதுதான் காரணம். அல்லாமலும்
தஞ்சை ஜில்லா போர்டின் உத்தியோகஸ்தர்களில் 100-க்கு 90 பேர் பார்ப்பன
ரல்லாதாராக ஆகும் வரையில் பார்ப்பனருக்கு உத்தியோகம் கொடுக்கக்
கூடாது என்பதாக ஒரு தீர்மானமும், பட்டுக்கோட்டை ஸ்ரீமான் வேணுகோ
பால் நாயுடுகாரால் கொண்டு வரப்பட்டது நிறைவேற்றி வைக்கப்பட்டிருக்
கிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்பார்ப்பனர்கள் எவ்வளவு
கொடுமை செய்தாலும் எப்பேர்பட்ட தீர்மானமிருந்தாலும் ஸ்ரீமான் பன்னீர்.
செல்வம் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுப்பதில் மாத்திரம் குறை
வில்லை.
இதற்கு ஒரு சிறு உதாரணம் -அதாவது தஞ்சை ஜில்லாவில்
ஒத்துழையாமைப் பெயரையும், காங்கிரஸ் பெயரையும் வைத்துக்கொண்டு
பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் ஜஸ்டிஸ் கட்சியை வைவதிலும்
விஷமப் பிரசாரம் செய்வதிலும் பேர் போனவர் ஸ்ரீமான் சூரிய நாராயண:
அய்யர் அவர்கள். அவர் இத்தேர்தல்களிலும் இதற்கு முன் தேர்தல்களிலும்
பார்ப்பனரல்லாதாருக்கு விரோதம் செய்தது இவ்வளவு அவ்வளவு அல்ல.
அப்படிப்பட்ட ஸ்ரீமான் சூரிய நாராயண அய்யர் அவர்களுக்கே அவரு
டைய மூன்று பிள்ளைகளுக்கும் ஜில்லா போர்டில் உத்தியோகம் கொடுத்தி
ருக்கிறார் என்றால் மற்றபடி எத்தனை பார்ப்பனர்களுக்கு உத்தியோகம்
கொடுத்திருப்பார் என்பதை வாசகர்களே உணரட்டும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.01.1927.
63
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கீகேவிமுந்தும் மீசையில்
மண்லணாட்டவில்லையாம்
நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன
மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறை
வேறி இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகிய
வர்கள் சம்மதமும் அரசர் பெருமான் சம்மதமும் பெற்று சட்டமாகிவிட்டது..
இனிமகந்துகள், மடாதிபதிகள் பணம் நமது பார்ப்பனர்களுக்கும் அவர்களது
தேர்தலுக்கும் கிடைப்பது முடியாத காரியம். இதற்காக நமது பார்ப்பனர்கள்.
ஒரு தோது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது “கீழே விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டவில்லை” என்பதுபோல் மறுபடியும் இதைப் பற்றி
திருத்தவோ புகுத்தவோ செய்யலாம் என்பதாக மந்திரியைக் கொண்டு ஒரு
வார்த்தை வாங்கி விட்டார்களாம். இது இன்னமும் ஏமாற்றி மடாதிபதிகளிடம்.
பணம் வாங்கவே அல்லாமல் வேறல்ல.
நமது ஊரில் ஒரு பார்ப்பனக் கிழ வக்கீலிருந்தார்.
அவர் மேஜிஸ்ட்
ரேட் வீட்டிற்குப் போய் தனியாய் தன்னைப் பற்றி கொஞ்சம் கவனித்துக்
கொள்ளும்படி கெஞ்சுவார். மேஜிஸ்ட்ரேட் என்னய்யா செய்யச் சொல்லு
கிறீர் என்று கேட்டால் “எஜமானர் செய்கிறபடி செய்து கொள்ளுங்கள்.
ஆனால் என் கட்சிக்காரனிடம் தாங்கள் தீர்ப்பு சொல்லுகிறபோது இந்த கேசு
இன்னமும் அதிகமாக தண்டிக்க வேண்டும்.
உங்கள் வக்கீலுக்காக
இவ்வளவோடு விட்டேன்” என்று சொல்லி விடுங்கள். அதுவே போதும்
நான் பிழைத்துக்கொள்வேன் என்று சொல்லுவார். அதுபோல் மந்திரி இடம்
போய் கெஞ்சி இப் பார்ப்பனர்கள் பிழைக்க வழி தேடிக்கொண்டார்கள்.
மற்றபடி சட்டத்திற்கு ஒன்றும் ஆபத்து இல்லை. ஆனால் உண்மையான மத
பரிபாலனத்திற்கு இந்த சட்டம் போதாது என்பதும் இன்னமும் பலமான
சட்டம் செய்ய வேண்டும் என்பதும் நமது கோரிக்கை. இந்த மந்திரி சபை
கலைந்தோ அல்லது இந்த சட்டசபை கலைக்கப் பட்டோ மறுபடி கூடும்
சபைகளில் அதுவும் கண்டிப்பாய் நடைபெறுமென்றே நினைக்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.011927
குடி அரசு
- 19270)
64
செண்ணிமலை கங்குந்தர் காமாட்சியம்மன்
ஆயை யரிபாணை சபையிண் 12 வது அண்டு
நிறைவு விழா!
சபையோர்களே!
நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப்
பட்டிருக்கும் புகழ்ச்சிக்கு நான் பாத்திரனல்லன். நான் உங்களோடு சேர்ந்த
ஓர் குடித்தனக்காரனாகவும், சகோதரனாகவும் பழகி வந்தவனாகையால்
உங்கள் மத்தியில் நான் இவ்வளவு மதிக்கப்படுவதையும் புகழப்படுவதையும்
கண்டு வெட்கம் அடைய வேண்டியவனாகவே யிருக்கிறேன். காரியதரிசி
யார் வாசித்த அறிக்கை ரிப்போர்டிலிருந்தே இச்சங்கம் தனது கடமையைச்
சரிவர செய்து வந்திருக்கிறதென்று தெரிய வருகிறது. நம் நாட்டில் எத்தனை
யோசங்கங்கள் தோன்றினாலும் உங்கள் சங்கங்கள் போல் 12,14 வருடங்க
ளாக உயிருடனிருக்கும் சங்கங்கள் வெகு சிலவேயாகும். ஆரம்பத்தில்
ஊக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சீக்கிரம் உயிர் போய் இருந்த இடமே தெரி
யாமல் போவது வழக்கமாயிருக்கின்றது. அது போலவே நம் நாட்டில்
அநேகம் தோன்றி நின்று போயிருக்கின்றன. இச்சங்கத்தின் வளர்ச்சிக்குக்
காரணம், இச்சமூகத்தினருக்கு தங்கள் சமூக முன்னேற்றத்திலிருக்கும்
அக்கரையே காரணமாகும். நான் அநேக சங்கங்களுக்கு அழைக்கப்பட்டுப்
போயிருக்கிறேன். எங்கெங்கு வியாபாரிகளால் சங்கங்கள் நடத்தப்படுகின்ற
னவோ அந்த சங்கங்கள் தான் நீடித்து நடந்து வருகின்றன. குடித்தனக்காரர்.
கள் சங்கத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதிலும் வக்கீல்கள் சங்கம் விபரீத
மானது. அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு சுயநலத்தை நாடி
ஒரு சங்கத்தைத் தோற்றுவிப்பார்கள். உடனே காரியம் தீர்ந்ததும் அச்சங்கம்
இருந்த இடம் தெரியாமற் போய்விடும். கொஞ்ச நாளைக்கு முன் இவ்வூரில்
நடந்த செங்குந்த மகாஜன சங்கமும், இந்த சங்கமும்தான் 1214 வருஷங்களாக.
சரிவர நடந்து வந்திருக்கின்றன.
நம் நாட்டில் இப்பொழுது ஒவ்வொரு
மரபினர்களும் ஒவ்வொரு சங்கம் ஸ்தாபித்து தங்கள் தங்கள் சமூகத்தைச்
சீர்திருத்தம் செய்து வருகின்றனர். கொங்கு வேளாள சங்கம், வன்னிகுல
சங்கம், நாடார் குல சங்கம், அருந்ததியர் சங்கம், திராவிடர் சங்கம், குலாலர்.
65
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
சங்கம் இவ்வாறு பல சமூக சங்கங்கள் தோன்றி வேலை செய்து வருகின்றன.
நாடார் மகாஜன சங்கம் தோன்றி 30 லக்ஷம் ரூபாய் மூலதனத்துடன் அச்சங்கம்
நடந்து வருகிறது. வருஷம் 65 ஆயிரம் ரூபாய் அச்சங்கம் ஒரு ஹைஸ்
கூலுக்கும், கோவிலுக்கும் பிரசாரத்திற்குமாக செலவு செய்து வருகிறது.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் தங்களுக்கும் ஒரு சங்கம் ஏற்பாடு செய்து
அதன் மூலமாகத்தான் தங்கள் சமூகத்தைப் பல வழியிலும் சீர்திருத்தம்
செய்து கொண்டு வருகின்றனர். அவர்களுக்குள் சங்கம் தோன்றிய பின்தான்
அநேக பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டார்கள். செங்குந்த மகாஜன
சங்கத்தினர் அரிய வேலை செய்து முடித்திருக்கின்றனர். கொஞ்ச நாளைக்கு
முன் கொங்கு வேளாள சங்கம் தோன்றினாலும் அது செய்ய வேண்டிய
வேலை அநேகமிருக்கின்றன.
இச்சங்கத்தாரும் பணம் வசூலிப்பதும்
சேகரிப்பதும் மட்டும் தங்கள் வேலையாக நினைக்கக்கூடாது. மடங்களைக்
கட்டிவிடுவதால் மட்டும் பலனில்லை. சபையார் தங்கள் சமூகத்தில் பல ஊர்.
களிலும் கிளைச் சங்கங்கள் ஸ்தாபிக்க வேண்டும். இச் சமூகத்திலுள்ள வாலி
பர்கள், சமூக சீர்திருத்தத்திற்கு முன்வந்து பாடுபட வேண்டும். சங்கங்களா
லேதான் உலகத்தில் அநேக காரியங்கள், அக் காலத்தில் செய்து முடித்திருக்
கின்றனர். இவ்வூரில் எந்த சங்கம் தோன்றினாலும் நன்றாகவே நடந்து வரும்.
இங்குள்ள செல்வந்தர்கள் நன்கு பொது நலமுணர்ந்து தர்மம் செய்து வருகி
றார்கள். அவர்கள் பொது விஷயத்திற்கு தாராள சிந்தையுடன் பொருளுதவி
செய்து வருகின்றனர். இந்த ஜில்லாவிற்கே இவ்வூர்வாசிகள் பொது விஷயத்
தில் செலவிடுவதில் பெயர் வாங்கியிருக்கிறார்கள்.
ஒற்றுமை
எந்தச் சங்கம் மேன்மைக்கு வரவேண்டுமானாலும் ஒற்றுமை வேண்:
டும். ஒற்றுமை இல்லாத சங்கம் முன்னுக்கு வரப் போவதில்லை. சங்கத்திலுள்
ளவர்களிடம் இன்னொரு முக்கியமான குணம் வேண்டும். அதாவது
சமத்துவம் வேண்டும். ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர்க
ளில்லையென்று சொல்ல வருவதுபோல் தங்களுக்கு கீழானவர்களுமில்லை.
என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒற்றுமையை நிலை
நிறுத்த முடியும். ஒரு சமூகத்திலோ ஒரு சங்கத்திலோ தாழ்மை மேன்மை
என்ற வித்தியாசங்கள் வரக்கூடாது. அதிலும் பணக்காரர்கள் இந்த விஷயத்
தில் தாழ்மையாக நடந்து காட்ட வேண்டும். பணக்காரர்கள் ஆடம்பரமின்றி
நடந்து காட்டினால் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். சங்கங்களில்
ஸ்தானங்களை விரும்புகிறவர்களுக்கு விட்டு விட வேண்டும். உண்மை
யாகப் பொது நல ஊழியம் செய்கிறவனுக்கு பதவியோ ஸ்தானங்களோ
வேண்டியதில்லை. ஒரு சமூகம் முன்னேற்றமடைவதென்றால் ஏதோ அச்
சமூகத்தில் ஒரு சிலர் பணக்காரர்களாயிருந்தால் மட்டும் அச்சமூகம் முன்
னேற்றம்
அடைந்து விட்டதாகச் சொல்ல முடியாது.
அச்சமூகத்தில்
குடி அரசு - 19970)
66
ஏழைகளில்லாமல் செய்து விடவேண்டும். ஏழைப் பிள்ளைகளுக்கு கல்வி,
கைத்தொழில் சொல்லிக்கொடுக்க வழி தேட வேண்டும். ஒரு சமூகத்தில் சிலர்
கவுன்சிலராகவும், போர்டு மெம்பர்களாகவும் இருந்தால் அச்சமூகம்
முன்னுக்கு வந்துவிடாது. ஒரு சமூகமென்றிருந்தால் அச்சமூகத்தில் ஏழை
களில்லாமலும் மனச்சாட்சியை விற்று ஜீவிக்கிறவர்கள் இல்லாமலும்
செய்வதுதான் சரியான சமூக சீர்திருத்த வேலையாகும். சமூக சீர்திருத்த
மென்பது ஒரு சமூகத்திற்கு கல்வி, கைத்தொழில் முதலிய வழிகளை
உண்டாக்கிக் கொடுத்து ஏழைகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.
பின்னும் சூது, குடி, வேசி முதலிய கெடுதிகளை சமூகத்தினரிடமிருந்து
அகற்ற பிரசார மூலமாக வேலை செய்ய வேண்டும். ஒரு சமூகத்திற்கு
சுயமரியாதை வேண்டுமானால் தொழிற் கல்விதான் மிக்க அவசியமானது.
இத்தகைய காரியங்களை நீங்கள் செய்ய சங்கமும் ஒற்றுமையும் உங்களுக்கு
பெரிய உதவியாயிருக்குமென்பதில் சந்தேகமில்லை.
உங்கள் சமூகத்திற்கு உற்ற தொழில் நெசவுத் தொழிலானதால் அது
இன்னும் கொஞ்ச நாளையில் நமது நாட்டில் அடியோடு அழிந்துபோகாமல்
இருப்பதற்கு கதர் முக்கியமானது. உங்கள் சமூக நன்மையையும் கிராமத்து
ஏழைப் பெண் மக்களின் நன்மையையும் உத்தேசித்தே மகாத்மா கதர்
திட்டத்தில் வேலை செய்கிறார். ஆதலால் நீங்கள் அவருக்கு நன்றியறித
லுள்ளவர்களாயிருப்பதற்கு கதர் உடுத்துவதுடன் அத்திட்டம் நிறைவேற
உதவி செய்யவேண்டும்.
குறிப்பு: 16. 1. 27.இல் சென்னிமலையில் நடைபெற்ற செங்குந்தர் காமாட்சி
யம்மன்ஆலய பரிபாலன சபை 18ஆம் ஆண்டு நிறைவு விழா நிறைவுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 30.011927
67
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
தஞ்சை வில்லா BUTTG கேர்தனும்
யார்ப்பண பத்திரிகைகளும் நமது
கோரிக்கையும்
தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம்
தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு நமது பார்ப்பனர்களும் அவர்களது
பத்திரிகைகளும் பொறாமை என்னும் போதையில் பட்டு கண்டபடி உளறு
கிறார்கள். இத்தேர்தலில் நடந்த தப்பிதம் என்ன என்பதையும் இதனால்
யாராவது பிரசிடெண்டு ஸ்தானத்திற்கு நிற்பது ஞாய விரோதமாய்த் தடைப்
பட்டு விட்டதா என்பதையும் ஒருவராவது எழுதவேயில்லை. தலைவர் பதவி
காலியாவதற்கு முன்னாலேயே தேர்தல் நடத்தி விட்டார் என்று ஒரே மூச்சாக
சத்தம் போடுகிறார்கள். இது ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தானாகவே நடத்திய
தேர்தலா கவர்ன்மெண்டாரே இந்தப்படி தேர்தல் போடும்படி உத்திரவு
அனுப்பினார்களா என்பதை தெரிவிக்காமல் வீணாய்க் கத்துவதின் ரகசியம்
என்ன? எப்படியாவது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்தின் பேரில் பாமர ஜனங்
களுக்கு ஒரு கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும் என்கிற
அயோக்கியத்தனமே அல்லாமல் இதில் வேறு ஏதாவது யோக்கியப் பொறுப்பு
இருக்கிறதா? இம்மாதிரியே ஒரு பார்ப்பனப் பிரசிடெண்டும் கொஞ்ச
காலத்திற்கு முன் செய்து கொண்டதைப் பற்றி இப்பார்ப்பனப் பத்திரிகைகள்
ஏன் கேட்டிருக்கக்கூடாது? இதற்கு நியாயமிருக்கிறது என்று சொன்ன
பார்ப்பன அட்வொகேட் ஜெனரலை ஏன் கண்டிக்கக்கூடாது? காலாவதிக்கு
முன்னால் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்புக் கொடுத்த பார்ப்பன முனிசீபு,
பார்ப்பன ஜட்ஜு ஆகியவர்களை ஏன் கண்டிக்கக்கூடாது? அன்றியும்
இதனால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட்டது. யார் வீட்டுப் பெரியவாள்.
தேடிய சொத்தை யார் எடுத்துக்கொண்டார்கள்? ஜில்லா போர்டு என்பது
எல்லாருக்கும் பொதுவே ஒழிய பார்ப்பனர்களுக்கு பழைய காலத்திய
முட்டாள் அரசர்கள் விட்டது போன்ற மானியமும் அல்ல, அக்கிரஹாரமு
மல்ல. அப்படிக்கிருக்க ஸ்ரீமான் பன்னீர்செல்வம் மாத்திரம் வரக்கூடாது
என்பதற்கு காரணம் என்ன? இதற்கு முன் பிரசிடெண்டாயிருந்த வி.கே. ராமா
நுஜாச்சாரியார் யோக்கியதையை விட எந்த விதத்தில் பன்னீர்செல்வத்தின்.
யோக்கியதை கெட்டுப்போய்விட்டது?
ஸ்ரீமான் ராமாநுஜாச்சாரியார்.
குடி அரசு - 19970)
68
காலத்தில் சத்திரம், சாவடி, பள்ளிக்கூடம், உத்தியோகம் எல்லாம் பார்ப்பன
மயமாயும், முக்கியமாய் அய்யங்கார்கள் சாப்பிடும் அன்ன சத்திரமாயும்
இருந்து வந்தது யாருக்கும் தெரியாதா? இப்போது ஸ்ரீமான் பன்னீர்செல்வம்.
அந்த ஸ்தானத்துக்கு வந்ததும் ஸ்ரீமான் ராமாநுஜாச்சாரியாரைப் போல்
இருந்திருப்பாரேயானால் பிராமணர்களை எல்லாம் வெளியில் துரத்திவிட்டு
வெறும் கிறிஸ்துவமயமாகவே ஜில்லா போர்டை செய்திருக்க வேண்டும்.
அப்படிக்கில்லாமல், ஸ்ரீமான் பன்னீர்செல்வம் யோக்கியரானதால் அம்மாதிரி
செய்யாமல் எல்லோரும் பொறுக்கித்தின்னும் படியாகவும், கணக்குப் பார்த்
தால் பார்ப்பனர்களே தங்கள் அளவைவிட எண் மடங்கு அதிகமாய் பொறுக்
கித் தின்னும் படியாகவும் வைத்துக்கொண்டிருக்கிறார். இதற்கு பிரதி உபகா
ரம் தான் இப்பார்ப்பனர்கள் போடும் சத்தம் போலும். பாம்புக்கு பால் வார்த்
தால் கடிக்காமல் இருக்கும் என்று நம்புவதுபோல் இருக்கிறது பார்ப்பனருக்கு
உதவி செய்தால் அவர்கள் அதை அறிவார்கள் என்று எண்ணுவது! இனி,
இது முதலாவது ஸ்ரீமான் பன்னீர்செல்வத்திற்கு நியாய உணர்ச்சி ஏற்பட்டு
பார்ப்பனர்களுக்கு மாத்திரம் நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டும் என்கிற
எண்ணத்தை மறந்து எல்லா சமூகத்தாருக்கும் அவரவர்கள் அளவுக்குத்
தகுந்தபடி நியாயம் வழங்கி வருவார் என்று நினைக்கிறோம். எதில் செய்தா
லும் செய்யாவிட்டாலும் முக்கியமாய் பள்ளிக்கூட உபாத்தியாயர் இலாகாவில்
மாத்திரம் கண்டிப்பாய் 100- க்கு 90 - க்கு குறையாத பார்ப்பனரல்லாத உபாத்தி
யாயரையே நியமிக்க வேண்டும். யோக்கியதாம்சம் பெற்ற உபாத்தியாயர்கள்.
இல்லையானால் பார்ப்பனரல்லாதாரிலேயே உபாத்தியாயர் படிப்புக்காக
பணம் கொடுத்து ஒரு வருஷம் உபாத்தியாயர் தொழிலுக்கு படிக்கச் செய்து
அவர்களையே நியமிக்க வேண்டும். முக்கியமாய் பார்ப்பனரல்லாதார்.
பிள்ளைகள் படிப்பதில்லை என்று சொல்லப்படுவதற்கும் போதுமான படித்த
பிள்ளைகள் கிடைக்காமல் போவதற்கும் அநேகமாய் பார்ப்பன உபாத்தி
யாயர்களே காரணம் என்பதை அநேக
வழிகளில் கண்டு பிடித்தாய்விட்டது.
ஜில்லா தாலூகா போர்டுகளும் முனிசிபாலிட்டிகளும் படிப்புக்கு படிப்புக்கு
என்பதாகச் செலவு செய்யும் பணங்கள் எல்லாம் ஒரு கூட்டத்தார் படிப்புக்கே
பிரயோஜனப்படுகிறதே அல்லாமல் பொது மக்களுக்கு உதவுவதே கிடை:
யாது. ஆகையால் இவைகள் எல்லோருக்கும் உதவ வேண்டுமானால்
பார்ப்பனரல்லாதாரைப் பிடித்து நூற்றுக் கணக்காக உபாத்தியாயர் வேலைக்கு
அனுப்ப வேண்டும். அந்த ஸ்தாபனங்களில் நூற்றுக்கு இத்தனை உபாத்தியா
யர்கள்தான் பார்ப்பனர்களாயிருக்கலாமென்றோ அல்லது நூற்றுக்கு
இத்தனை உபாத்தியாயர்கள் பார்ப்பனரல்லாதார்களாயிருக்க வேண்டு மென்
றோ தீர்மானம் செய்து கொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
இதனால் கொஞ்ச காலத்திற்கு படிப்பு பாதிக்கப்படும் என்பதாக பார்ப்பனர்.
கள் கூச்சல் போட்டாலும் பிறகு நமக்கு அபரிதமான லாபத்தைக் கொடுக்கும்.
கூடுமான வரையில் தலைமை உபாத்தியாயர்கள் வேலையில் பார்ப்பன
ரல்லாதாரையே நியமிக்க வேண்டும். யோக்கியமான பார்ப்பன உபாத்தியாயர்
69
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
என்று சொல்லப்படுபவரை விட அயோக்கியமான பார்ப்பனரல்லாத
உபாத்தியாயர் என்று சொல்லப்படுபவரே பார்ப்பனரல்லாத பிள்ளைகளின்
படிப்பு விஷயத்தில் லாபகரமுள்ளவராயிருப்பார். ஏனெனில் யோக்கியமான
பார்ப்பனன் என்பவனின் இயற்கை குணமே பார்ப்பனரல்லாதாரை இழி
வாயும் தாழ்மையாயும் கருதுவதுதான். பார்ப்பனனுக்கு பிறவியிலேயும்
பழக்கத்திலேயும், வழக்கத்திலேயும் பார்ப்பனரல்லாதாரிடத்தில் அருவருப்பு
ரத்தத்தில் ஊறி கலந்திருக்கிறது.
இதை எவ்வழியிலும் அவர்கள் மறைக்க
முடியாது. அநேகமாய் மறைப்பதுமில்லை. பள்ளியில் படிப்புச் சொல்லிக்
கொடுக்கும் உபாத்தியாயரே தான் உயர்ந்த ஜாதியான் என்றும் படிப்பிக்கப்
படும் பிள்ளை தாழ்ந்த ஜாதியான் என்றும் உணர்ச்சி உள்ளவராயிருந்தால்
அவனிடம் படிக்கும் குழந்தைப் பிள்ளைகளுக்கு எப்படி சுயமரியாதை,
ஆண்மை, சமத்துவம் இவைகள் உண்டாகும் என்பதை நன்றாய் யோசித்துப்
பார்த்தால் விளங்காமல் போகாது. பார்ப்பனப் பிள்ளைகளுக்கு பார்ப்பன
உபாத்தியாயர்களே வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லுவார்களே
யானால் அவர்களுக்கென்று இவ்வளவு பணம் என்பதாக ஒதுக்கி வைத்து
அதை அவர்களிடமே ஒப்புவித்து அவர்கள் இஷ்டம்போல் தனியாக
பார்ப்பனப் பிள்ளைகளுக்கு என்பதாக பள்ளிக்கூடம் வைத்து நடத்திக்
கொள்ளுவதானாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. சுயமரியாதை
இல்லாமல் செய்யும் மந்திரி உத்தியோகத்தை விட சுயமரியாதையுடன்
செய்யும் தோட்டி உத்தியோகமே பெரிதானது. ஆதலால் நமது பிள்ளைகள்
மந்திரி உத்தியோகப் படிப்பு படிப்பதை விட சுயமரியாதையைக் காப்பாற்றிக்
கொள்ளும்படியான படிப்பு படிப்பதுதான் தேசத்திற்கும், சமூகத்திற்கும்
முற்போக்கைக் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 06.02.1927
குடி அரசு - 19970)
70
யரோடாவுக்கு தமிழ்நாட்டுப் பார்ப்பண மந்திரி
நமது நாட்டுப் பண்டை அரசாங்கங்கள் ஒழுக்கவீனமாக நடந்ததற்கும்
வேற்றரசர்களால் ஜயிக்கப்பட்டதற்கும் அன்னிய நாட்டரசுகள் ஆதிக்கம்
பெற்றதற்கும் பார்ப்பன மந்திரித்துவம்தான் முக்கிய காரணமென்பது கர்ண
பரம்பரையாகவும் சரித்திர வாயிலாகவும் அனுபோக பூர்த்தியாகவும் நாம்
அறிந்த விஷயம்.
திருவாங்கூர் ராஜ்யம் சென்ற 100 ஹு காலத்திற்கு 22 மந்திரிகளில் 93
காலம் 20 மந்திரிகள் பார்ப்பன மந்திரிகளாகவே இருந்து தூர் மந்திரித்துவ
ஆதிக்கம் செலுத்தி வந்ததின் பலனாய் இப்போது அந்த ராஜ்யத்தில் 100 -
க்கு 50 பங்கு ஜனங்கள் அன்னிய மதஸ்தர்களாவதற்கு இடம் கொடுத்து
வந்திருக்கிறது. 40 லட்சம் ஜனத்தொகையில் 20 லட்சம் ஜனங்கள் அன்னிய
மதஸ்தர்கள். எந்த பார்ப்பன மந்திரியாவது இதைப்பற்றி கவனித்தவரே
அல்லர். அன்றியும் நமது மக்களைப் பறிகொடுத்து பாதிரிமார்களுக்கு நல்ல
பிள்ளைகளாக நடந்து வெள்ளைக்கார கவர்னர்களது சிபார்சு பிடித்து பெரிய
பட்டங்களும் உத்தியோகங்களும் சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கிறார்.
களே அல்லாமல் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் அதிகாரம் செலுத்த
வேயில்லை. கொச்சியிலும் இதுபோலவேதான்.அது போலவே100 -க்கணக்
கான வருஷங்களாய் பார்ப்பனர்களே மந்திரியாய் இருந்து வந்த - வரும்
புதுக்கோட்டை அரசாங்கத்தை இன்னது தான் செய்திருக்கிறார்கள் என்று
சொல்லவே முடியாது. அது இப்போது இருக்கும் யோக்கியதையைப் பார்த்
தாலே தெரியவரும். ஐதராபாத்,
மைசூர் அரசாங்கங்களும் பார்ப்பன மந்திரித்
துவத்தின் பலனாய் நாளுக்கு நாள் அதன் விஸ்தீரணங்கள் குறைந்து
வந்திருப்பதும் வெள்ளைக்காரருக்கு உளவு சொல்லிக்கொடுத்து அந்நாடு
களை ஒழிக்கப் பாடுபட்டு வந்ததும் இன்னமும் வெளி அரசாங்கங்களும்
அதாவது இப்போது பட்டத்திலிருந்து விலகிய இந்தூர் அரசர், பட்டத்திலி
ருந்து விலகுவதற்கு காரணமாயிருந்த சம்பவம் நடந்த காலத்திலும் பார்ப்பன
மந்திரித்துவமும் ஆதிக்கமும் இருக்கும்போதுதான் அவ்வரசனுக்கு இந்த கதி
ஏற்பட்டது. இனியும் இந்த தேசத்தில் இப்போது பிரத்தியக்ஷத்தில் கெட்டுப்
போன அரசுகளும், ஜமீன்களும், பாளையப்பட்டுகளும் ஆகியவை களில்
எதை எடுத்துக்கொண்டாலும் பார்ப்பன ஆதிக்கம் இல்லாததாக ஒன்று கூட
கிடைப்பது கஷ்டமாகத்தானிருக்கும். இவற்றை உணர்ந்தே பெரிய
71
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
வர்கள் “ஆறு கெட நாணலிடு ஊரு கெட நூலை பூணூலை) விடு” என்று
சொல்லியிருப்பதும் அவ்வைப் பிராட்டியாரும் “ஒரு அரசன் மந்திரி
வேலைக்குத் தகுந்தவர்கள் யார் என்று கேட்டபோது நூலாலே பூணூலாலே)
நாடு கெடும் என்று சொன்னதோடு, வேளாளர்கள் மந்திரியுமாவார்கள் வழித்
துணையுமாவார்கள்” என்று ஒரு பாட்டில் சொல்லியிருக்கிறார்கள். இன்ன
மும் இதற்கு எத்தனையோ உதாரணங்களும் ஆதாரங்களுமிருக்கின்றன.
இப்படி இருக்க இப்போது பரோடா சமஸ்தானத்திற்கும் ஒரு பார்ப்பனரையே
திவானாக நியமித்திருப்பதாக தெரியவருகிறது.
இந்தப் பார்ப்பனர்.
திவானாகப் போய் அந்நாட்டின் லக்ஷியத்தை கவனியாமல் வெள்ளைக்
காரருக்கு அனுகூலம் செய்வதன் மூலம் அவர்களது திருப்தி பெற்று திவான்
பகதூர், KCL, சர். முதலிய பட்டங்கள் பெற்று நிர்வாக சபை மெம்பராகி
அவர்கள் வீட்டு நாய்க்குட்டிகள் முதல்கொண்டு டிப்டி கலெக்டர், முன்சீப்,
ஜட்ஜி, கலெக்டர், சூபரெண்டு முதலிய உத்தியோகங்கள் பெற்று நம் தலையில்
கைவைக்கப் போகிறார்கள். ஆணால் பார்ப்பனரல்லாதாரை அனுப்புவதென்
றாலோ வெள்ளைக்காரருக்கு பயம். பார்ப்பனரிடம் இருக்கும் நம்பிக்கை
அவர்களுக்கு மற்றவர்களிடம் இருப்பதில்லை. இவர்களும் ராஜ்யம் எப்படி
யோ போகட்டு மெனக் கருதி வெள்ளைக்காரருக்கு நல்ல பிள்ளையாய்
நடப்பதுமில்லை; அதனால்தான் வெள்ளைக்காரர்கள் பார்ப்பனர்களையே
பார்த்து சிபார்சு செய்து அனுப்புகிறார்கள்.
குடி அரசு - கட்டுரை - 06.02.1927
குடி அரசு - 19970)
72
இண்ணனுமா நமக்கு ௯ூத்திரப் பட்டம்?
நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லை
யென்றும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும் இப்போது
வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும்
தாழ்ந்த நிலைமையில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும் அதாவது
பார்ப்பனர்களால் சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப்
படுகிறதும் 100-க்கு 97 பேருக்கும் மேலான எண்ணிக்கைக் கொண்ட நாம்
இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும் சூத்திரன் என்கிற
பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசி மக்கள் என்னும்
கருத்தையே கொண்டது என்றும், பஞ்சமன் என்கிற பதம் ஜீவ வர்க்கத்தில்
பூச்சி, புழு,பன்றி, நாய், கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமை கூட
இல்லாததும் கண்களில் தென்படக் கூடாததும் தெருவில் நடக்கக்கூடாதது
மான கொடுமை தத்துவத்தை கொண்டது என்றும் மிலேச்சர்கள் என்பது
துலுக்கர், கிறிஸ்தவர், ஐரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை:
குறிப்பது என்றும், அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி
எறிந்துவிட வேண்டிய கருத்தைக் கொண்டதென்று உண்டாக்கி அந்தப்
படியே பார்ப்பனர்களால் ஆதாரங்களும் ஏற்படுத்தி வைத்துக்கொள்ளப்
பட்டு அது தான் இந்து மதத்திற்கு ஆதாரமென்று காட்டப்படுகிறதென்றும்.
அநேக தடவைகளில் ஆதாரபூர்வமாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.
அதற்காக எவ்வளவோ கிளர்ச்சிகளும் செய்து வந்திருக்கிறோம். இவ்வள
வும் நடந்து வரும் இந்தக் காலத்தில் இன்னமும் முனிசிபாலிட்டி, ஜில்லா
போர்டு, தாலூகா போர்டு முதலிய ஸ்தாபனங்கள் சூத்திரன், பஞ்சமன், பிராம
ணன் என்னும் பதங்களை உபயோகப்படுத்தி வருகிறதென்றால் இதன்
தலைவர்களுக்குமானம், வெட்கம், சுயமரியாதை உணர்ச்சி, சுத்த ரத்த ஓட்டம்
ஆகியவைகள் இருக்கிறதா என்று கேட்கிறோம். சமீபத்தில் மதுரை யில்
நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் பொது ஜனங்களுக்கு ஏற்படுத்
தப்பட்ட உணர்ச்சியே இதுதான். இப்படியிருக்க அம்மதுரைப் பட்டணத்
திலே மங்கம்மாள் சத்திரங்களில் சூத்திரன் என்னும் வாசகங்கள் கொண்ட
போர்டுகள் எழுதி தொங்க விடப்பட்டிருக்கின்றன; இது எவ்வளவு அநியா
யம்? ஆதலால் மதுரை ஜில்லா போர்டாரோ முனிசிபாலிட்டியாரோ உடனே
இதை கவனித்து இவ்வித இழி மொழிகள் கொண்ட போர்டுகளையும்
73
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வாசகங்களையும் அப்புறப்படுத்தி இவ்வித வித்தியாசங்களையும் ஒழித்து
விடுவார்கள் என்றே நம்புகிறோம். இதுபோலவே இன்னும் மற்ற ஊர்களிலும்
இம்மாதிரி வாசகங்களோ சொற்களோ காணப் பட்டால் அதை உடனே அடி
யோடு நிவர்த்திக்கவேண்டியது உண்மையான மக்களின் முதல் கடமை
என்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 06.02.1927
குடி அரசு
- 19270)
74
யார்ப்பணரல்லாதார் வில்லா மகாநா௫கன்
மதுரை மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி
வைப்பதற்காக ஜில்லா தாலூகா மகாநாடுகள் நடத்தப்பட வேண்டுமென்பதாக
அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க.
கோயமுத்தூர், சேலம், வட ஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள்
வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர், வட
ஆற்காடு ஜில்லாக் காரர்கள் ஜில்லா மகாநாடு நடத்த கமிட்டி முதலியதுகள்
நியமித்து துரிதமாய் முயற்சி எடுத்து வருகிறார்கள். இம்மகாநாடுகள்
அநேக.
மாய் இம்மாத முடிவிலோ மார்ச்சு மாத ஆரம்பத்திலோ நடக்கக் கூடும். மற்ற
ஜில்லாக்காரர்களும் அதாவது செங்கற்பட்டு, தென் ஆற்காடு, திருச்சி,
ராமனாதபுரம், திருநெல்வேலி முதலிய ஜில்லாக்காரர்கள் எதுவும் செய்த தாக
நமக்குத் தகவலே இல்லாமலிருக்கிறது. ஆதலால் அவர்களும் சீக்கிரம்
முயற்சி எடுத்து சீக்கிரத்தில் மகாநாடுகள் நடத்தி, திட்டங்களை நிறைவேற்ற
வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரவேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகி
றோம். பார்ப்பனர்கள் பணம் சேர்க்கவோ தங்கள் ஆதிக்கத் திட்டங்களை
நிறைவேற்றவோ எப்படியாவது தந்திரங்கள் செய்து அவர்கள் காரியத்தை
சாதித்துக் கொள்ளுகிறார்கள். உதாரணமாக பார்ப்பனர்களின் சர்வ ஜீவநா
டியும் செத்துப் போய் இருக்கும் இச்சமயத்தில் மகாத்மாவைத் தருவிக்கப்
போகிறார்கள்.
அவர் பெயரால் ஆங்காங்கு நம்மவர்களிலேயே சில சோண
கிரிகளைப் பிடித்துக் கூட்டம் கூட்டி நம்மையே நம்பச் செய்து அடுத்த
தேர்தல் வரை தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் படியான ஏற்பாடுகளை
செய்துகொள்ளப் போகிறார்கள். நாம் அதைப்பார்த்து பொறாமைப்படு
வதிலோ அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று
சொல்லிக்கொண்டிருப்பதிலோ ஒரு பயனும் விளையப் போவதில்லை.
உருப்படியான காரியத்தைச் செய்தாலல்லது நமது திட்டங்களை நிறைவேற்றி
வைக்க முடியவே முடியாது. நமக்கு இருக்கும் பொறுப்புக்கும் பார்ப்ப
னர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்
கின்றன. பார்ப்பனர்களின் காங்கிரஸும் தேச சேவையும் அவர்கள் ஆதிக்
கம் நிலை நிற்கவும் அவர்கள் பிள்ளை குட்டிகளுக்கு
உத்தியோகம்
சம்பாதிப்பதும் தவிர வேறில்லை. நாம் மகாத்மாவின் நிர்மாணத் திட்டம்
முழுவதையும் நிறைவேற்றி வைக்க வேண்டிய பொறுப்புடையவர்
75
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
களாயிருக்கிறோம். பார்ப்பனர்கள் கூட்டம் கூடிபாமர ஜனங்கள் ஏமாறும்படி
வாயில் பேசிவிட்டு சட்டசபை, ஜில்லா, தாலூகா, முனிசிபாலிட்டி போர்ட்டு
களில் ஸ்தானம் பெற்று கூச்சல் போட்டுவிட்டால் அவர்கள் கடமையும்
காங்கிரஸ் வேலையும் தீர்ந்துவிட்டது. நமது கடமையோ முதலாவது இப்
பார்ப்பனர்கள் செய்யும் புரட்டுகளை வெளியிட வேண்டியதும் ஒவ்வொரு
மனிதனுள்ளத்திலும் நமது நிலையை உணரும்படி செய்விப்பதும் நமது
உண்மையான சுயமரியாதைக்கும் முன்னேற்றத்திற்கும் ஆன வழிகளை
எடுத்துச் சொல்லி நடக்கச் செய்தலும் ஆகிய அநேக கஷ்டங்கள் இருக்
கின்றன. இவ்வளவுடன் இதுகளுக்கு எதிரிடையாக வேலை செய்யும்படியாக
நமது பார்ப்பனர்கள் நம்மவர்களிலேயே சிலரைப் பிடித்து கூலி கொடுத்து
ஏவி விட்டு செய்யும் உபத்திரவங்களுக்கும் தலை கொடுக்க வேண்டியிருக்
கிறது. ஆகையால் நமது பொறுப்பும் கடமையும் என்ன என்பதை யோசிப்ப
வர்களுக்கு பயமாகவே இருக்கும். ஆனால் இவற்றை இது சமயம் கவனியா:
மல் அசார்சமாகவோ, சுயநலத்திற் கவலையாகவோ இருந்துவிடுவோமேயா
னால் பின்னால் சுலபத்தில் மீளமுடியாது என்பதை ஒவ்வொரு பார்ப்பன
ரல்லாதாரும் நன்றாய் கவனத்தில் வைக்க வேண்டும்.
தவிரவும் மதுரை மகாநாட்டிற்குப் பிறகு நாம் ஆசைபட்டது போலவே
அநேகமாய் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள்.
பார்ப்பனரல்லாதார் சங்கங்களும் பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கங்களும்.
சுயமரியாதை சங்கங்களுமாக ஏற்படுத்துவதுகளில் இருந்தும் ஏற்படுத்த முன்
வருவதிலிருந்தும் இவற்றின் பொருட்டு ஆங்காங்கு செல்லுமிடங்களில்
காணப்படும் உற்சாகத்திலிருந்தும் ஒத்துழையாமையின் போது திரிகரண
சுத்தியாய் காங்கிரசில் உழைத்து வந்த பார்ப்பனரல்லாத உண்மைத் தியாகிகள்
பலர் ஆங்காங்கு இவற்றில் மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கலந்து உழைத்து
வருவதினாலும் நமது பிற்கால வாழ்வில் கொஞ்சம் நம்பிக்கை கொள்ள
இடமேற்படுகிறது. ஆனாலும், புராண வைராக்கியம் போல் இந்த சமயத்தில்
மாத்திரம் ஏற்படும் எழுச்சியில் தலைகால் தெரியாமல் திரிந்துவிட்டு பின்னால்
சோதனை ஏற்படுங் காலத்தில் அடியோடு படுத்துப் போய்விடுமோ என்று
பயப்படவும் வேண்டி இருக்கிறது. ஆதலால் தொடர்ச்சியாய் இருந்து வேலை
செய்ய பிரசாரங்களும் பத்திரிகைகளும் வேண்டியதற்கு ஆகவும் தக்க
ஏற்பாடு களும் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இவைகளுக்கெல்லாம்
பூர்வாங்க வேலையாக முதலில் ஜில்லா மகாநாடுகளைக் கூட்டுவதிலும்
அதன் மூலமாக தொகைகள் வசூலிப்பதிலும் ஆங்காங்குள்ளவர்கள் கவனம்
செலுத்த வேண்டுமாய் மறுபடியும் மறுபடியும் வற்புறுத்துகிறோம்..
குடி அரசு - தலையங்கம் - 06.02.1927
குடி அரசு - 19970)
76
தஞ்சை வில்லா யிரசாரம்
அச்சுயமரியாதை அடையவே இப்போது நாம் ஆங்காங்கு பார்ப்பன
ரல்லாதார் சங்கம் என்பதாகவும், பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்கம் என்ப
தாகவும் ஏற்பாடு செய்து வருகிறோம். வகுப்புப் பெயரால் ஏன் சங்கத்தை
நிறுவ வேண்டும்? என சிலர் கேட்கலாம். நமது நாட்டில் வகுப்புகள் இருந்து
வருவதை யாவரும் மறைக்க முடியாது. ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள்
தங்கள் வகுப்புக்கு என சங்கங்கள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவகுப்பாருக்கும் பொதுக் குறைகள் பலவும் மற்ற வகுப்பார்களால்
சில குறைகளும் இருந்து கொண்டுதான் வருகிறது. அவற்றை நிவர்த்தித்துக்
கொள்ள அந்தந்த வகுப்பார் தனித்தனியாய் முயற்சித்துத் தான் ஆக
வேண்டும். நமது குறையை மற்றொரு வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று
எண்ணுவதற்கு போதிய நிலைமை இன்னமும் ஏற்படவில்லை.
நமது
குறையை மற்ற வகுப்பார் நிவர்த்திப்பார்கள் என்று எண்ணுவதற்கு முன்
அந்த மற்ற வகுப்பாரால் நாம் கொடுமை செய்யப்படாமலும் குறைகளுண்டு
பண்ணப்படாமலும் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
நமக்கு இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் குறைகளில் பெரும்பகுதி மற்ற
வகுப்பார்களாலேயே இருந்து வருகிறதேயல்லாமல் இயற்கையானதல்ல..
ஆதலால் அக் குறைகளை நிவர்த்தித்துக் கொள்ள ஏற்படுத்தும் இயக்கங்கள்
வகுப்புப் பெயர்களுடன்தான் ஏற்படுத்தப்படும். இதில் “ஏன் பார்ப்பனர்.
களை மாத்திரம் விலக்க வேண்டும்” என்பதாக சிலர் கேட்கக்கூடும். நாம்
அவர்களை ஒருபோதும் விலக்கவேயில்லை; அவர்களால் நாம் விலக்கப்
பட்டிருக்கிறோம். அவர்கள் தங்களை மாத்திரம் உயர்ந்தவர்கள் என்று
சொல்லிக்கொண்டு தனியாகப் பிரிந்து மற்றவர்களை யெல்லாம் தாழ்ந்தவர்.
களென்று சொல்லி அநேக முறைகளில் சமத்துவம் அளிக்க மறுத்து நம்மை
விலக்கி வைத்துக்கொண்டு வருகிறார்கள். நித்தியப்படி வாழ்வில் இதைப்
பார்த்து வருகிறோம். ஆதலால் அக்குறைகளை நிவர்த்தித்துக் கொள்ள
வேண்டுமானால் அவர்களை நீக்கித்தான் நாம் சங்கம் ஸ்தாபிக்க முடியும்.
நமக்கு சமத்துவமளிக்க அவர்கள் சம்மதிப்பார்களேயானால் நமக்கென்று
தனியாக பார்ப்பனர் நீங்கிய ஒரு சங்கம் தேவையில்லை. உடனே இவற்றை
மூடியும் விடலாம். அவ்வித சமத்துவம் ஏற்படும் வரை இப்படி ஒன்று
இருந்துதான் தீரும். அது பார்ப்பனருக்கும் நமக்கும் மாத்திரம் அல்ல:
77
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
இன்னும் நம்மால் யாருக்காவது சமத்துவமளிக்க இடையூறு ஏற்படுமானால்
அவர்களும் நம்மை நீக்கித்தான் சங்கம் ஸ்தாபித்துக் கொள்வார்கள். இவ்வித.
குறைகள் உள்ளவரை ஒருவரையொருவர் நீக்கி சங்கம் ஸ்தாபித்து நடந்து
கொண்டுதான் இருக்கும். இதனாலேயே ஒரு வகுப்பாரிடம்ஒருவகுப்பாருக்கு
துவேஷம் என்று சொல்லிவிடமுடியாது.
பஞ்சாப் அட்டூழியங்களைப்
பற்றி மகாத்மா எடுத்துச்சொல்லி அதற்குப் பரிகாரம் தேடுவதற்காக
அரசாங்கத்தாருடன் ஒத்துழையாமை செய்தது அரசாங்கத் துரோகமாகுமா?
அல்லது வெள்ளைக்காரரிடம் துவேஷமாகுமா? ஒரு பார்ப்பனர் ஒத்துழை
யாமையை அரசாங்கத் துரோகம் என்று சொல்லியும் கூட அரசாங்கத்தார்.
அதை ஒப்புக்கொள்ளாமல் பரிகாரம் தேடிக்கொள்ள நமக்கு உரிமை உண்டு.
என்று சொல்லிவிட்டார்கள். அப்படிக்கிருக்க நமது சமத்துவத்திற்காக அது
வும் நமது சுயமரியாதையைப் பாதிக்கும் விஷயத்தை ஒழிப்பதற்காகச்
செய்யும் பிரயத்தனங்கள் ஒருக்காலும் மற்றொரு வகுப்பாரிடம் துவேஷம்
என்று சொல்லவே முடியாது. உதாரணமாக நமது வீட்டில் கொசுக்களின்
உபத்திரவம் அதிகம் என்பதாக வைத்துக் கொள்ளுவோம். கொசுக்கடிக்கு
பயந்துகொண்டு நாம் கொசுவலை போட்டுப் படுத்துக்கொண்டால் அது கொசு
வுக்குத் துரோகம் செய்ததாகுமா? கொசுக்கள் எல்லாம் கூடிக்கொண்டு கொசு
வாதம், கொசுத் துவேஷம் என்று சத்தம் போட ஆரம்பித்தால் கொசுவுக்குப்
பயந்துகொண்டு கொசுவலையை எடுத்தெறிந்துவிட்டு கொசுக்கள் நமது
ரத்தத்தை உறிஞ்சி நமக்கு வியாதியை உண்டாக்கும்படி நாம் தடிக் கட்டை
யாய்ப் படுத்துக்கொள்ளுவதா? ஒருவர் தன் சொத்தைப் பாதுகாத்துக் கொள்ள
நினைத்தால் அச்சொத்தைக் கொள்ளையடிக்க காத்திருப்பவனுக்கு
கஷ்டமாகத்தான் தோன்றும். நமது வீட்டில் திருடலாம் என்று நினைத்திருப்
பவனுக்கு நாம் கதவை தாழிட்டுக்கொண்டு பத்திரமாய்ப் படுத்திருப்பது
துரோகமாய்க் கூட தோன்றலாம்.
ஒரு சமயம் இதனால் அத்திருடன்
குடும்பம் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அதற்காக நாம் பயந்துகொண்டோ,
பரிதாபப் பட்டுக்கொண்டோ, கதவைத் திறந்து போட்டுக் கொண்டு படுத்துக்
கொள்ள வேண்டுமா? கொஞ்ச காலத்திற்கு நாம் பந்தோபஸ்தாயிருந்
தோமானால் திருடன் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்து வீட்டுக்குப்
போய் பட்டினி கிடப்பானானால் பிறகு தானாகவே இந்தத் தொழில் இனி
நமக்கு பிரயோஜனப் படாது என்பதாகக் கருதி வேறு ஏதாவது ஒரு யோக்ய
மான தொழிலில் ஈடுபட்டு யோக்யமாகப் பிழைக்கக் கற்றுக் கொள்வான்.
ஆதலால் நாம் ஜாக்கிரதையாய் இருப்பதன் மூலம் நமது சொத்து பாது
காக்கப்படுவதன் மூலம், திருடனும் யோக்கியனாவதற்கு மார்க்கம் ஏற்படு
கிறது. ஆகையால் இம்மாதிரி சங்கங்கள் ஏற்படுத்துவதையோ, நமது சுய
மரியாதையையும் சமத்துவத்தையும் வேறு ஒருவனுக்கு பறிகொடுக்காமல்
காப்பாற்ற முயலுவதினாலேயே எந்த விதத்திலும் யாருக்கும் துரோகம்
செய்தவர்களாக மாட்டோம். யாரிடமும் துவேஷமுள்ளவர்களுமாக மாட்
டோம். மற்றொருவர் அப்படிச் சொல்லுவார்களே என்று நாம் பயப்பட
குடி அரசு - 19970)
78
வேண்டியதில்லை. ஆதலால் ஒவ்வொரு ஊணிலும், ஒவ்வொரு கிராமத்திலும்,
இவ்வித சங்கங்கள் ஏற்பட்டு மும்முரமாக வேலை செய்ய வேண்டும். வாலி
பர்களே பெரும்பாலும் இக் காரியங்களில் ஈடுபட்டு உழைக்க வேண்டும்.
சுயமரியாதையையும் சமத்துவத்தையும்விட நமக்கு வேறு பெரிய காரியம்
வேண்டுவதில்லை.
சுயமரியாதையும் சமத்துவமும் அற்ற ஜனசமூகம்
அரசியலைப்பற்றி பேசுவதென்றால் அது வெறும் மடமையும், புரட்டும்,
வயிற்றுப் பிழைப்பு மல்லாமல் வேறல்ல. நமது வாலிபர்கள் அரசியல்
என்னும் பெயரால் ஏமாந்து போகிறார்கள். அரசியல் என்கிற தொத்து வியா
திக்கு பலியாகாமல் நமது வாலிபர்களைக் காப்பாற்ற வேண்டும். அரசியல்
என்பது யோக்கியப் பொறுப்புள்ளதானால் மகாத்மா அரசியலை வெறுப்பாரா
என்பதை யோசித்துப் பாருங்கள். மகாத்மாவுக்கு மிஞ்சின தேச பக்தி நமது
அரசியல் புரட்டுக்காரர்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அரசி
யல் ஸ்தாபனம் என்னும் காங்கிரசை மகாத்மா கைப்பற்றிப் பார்த்துத்தான்
அதில் உண்மையான அரசியல் வாதம் இல்லையென்பதும், புரட்டானதும்,
ஒருவரை ஒருவர் ஏமாற்றி தன்னலம் பெறுவதும், தன் வயிற்றுப் பிழைப்பான
துமான காரியமாயிருக்கிற தென்பதையும் உண்மையான அரசியல் விடுத
லைக்கு ஒரு கூட்டத்தார் எதிரிகளாயிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து
தான் தன் ஆதிக்கத்தை விலக்கிக் கொண்டார். அப்படி இருக்கயாரோ நாலு
கத்துக்குட்டிகள் சப்தம் போடுவதற்காக நாம் ஏமாந்து போகக்கூடாது. நமது
சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும், தற்கால காங்கிரசும் அரசியல் முறை
களும் எமன் என்பதை மறந்துவிடாதீர்கள். அதோடு மாத்திரமல்ல, தேசத்
திற்கே பெரிய ஆபத்தான மார்க்கம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
உண்மை யான அரசியல் விடுதலைக்கும், நமது சுயமரியாதைக்கும்,
சமத்துவத்திற்கும், கண்டிப்பாய் இப்போதைய காங்கிரசில் வழியில்லை.
மகாத்மாவின் நிர்மாணத் திட்டத்தை காங்கிரஸ் மூலம் நிறைவேற்றிக்கொள்ள
பார்ப்பனர்களும், அரசியலில் வயிறு வளர்ப்பவர்களும் ஒருக்காலும்
சம்மதிக்கவே மாட்டார் கள். கவனித்துப் பார்ப்பீர்களானால் மகாத்மாவின்
நிர்மாணத் திட்டம் பார்ப்பனர்களுக்கு பெருத்த எதிரியாக இருக்கும்.
அதாவது தீண்டாமை ஒழிந்துவிட்டால் பார்ப்பனர்களுக்கு நமது நாட்டில்
இடம் இருக்குமா என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்க
ளுக்கு இப்போது நமது நாட்டில் இருக்கும் யோக்கியதை எதனால்? அவர்கள்
ஒழுக்கத்தாலா? நல்லறிவினாலா? கஷ்டப்படும் தன்மையினாலா? இவை
ஒன்றிலும் அல்ல. நம்மைத் தாழ்ந்தவர்களென்றும், தீண்டாதவர்களென்றும்
சொல்லிக்கொண்டி ருப்பதும், தாங்கள் உயர்ந்த ஜாதியாரென்றும், மற்றவர்க
ளுக்கு மோட்சம் கொடுக்க யோக்கியதை உள்ளவர்கள் என்றும் சொல்லிக்
கொண்டிருக்கும் புரட்டுகளினாலும், தந்திரங்களினாலு மல்லாமல்
வேறென்ன? இந்த தத்துவம் ஒழிந்து விட்டால் பார்ப்பனர் நமது நாட்டில்
இப்போது இருப்பதுபோல் வாழ முடியுமா? ஆதலால் பார்ப்பனர்கள்
தீண்டாமை ஒழியவும் சமத்துவத்திற்கும் கண்டிப்பாய் சம்மதிக்க மாட்டார்கள்.
79
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று சொன்னவுடன் “பறையன்
வீட்டிலும் சாப்பிடுவேன். நாயக்கர் வீட்டிலும் சாப்பிடூ௭வேன்” என்று
சொல்லிக்கொண்டிருந்த ஸ்ரீமான் ராஜ கோபாலாச்சாரியேதான் தனது சிஷ்ய
கோடிகளுடன் ராஜினாமா கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள் என்றால்
மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? “காங்கிரஸ் தலைவர்” ஸ்ரீமான்
எஸ். சீனிவாசய்யங்காரே “தீண்டாமை அரசியலில் கலக்கக்கூடாது'” என்று
சொல்லும் போது மற்ற பார்ப்பனர்கள் அரசியல் சபையில் தீண்டாமை ஒழிக்க
உடந்தையாயி ரூப்பார்களா? தவிர மதுவிலக்கைப் பற்றியோ வென்றால்
அதற்கும் நமது பார்ப்பனர்கள் சம்மதிக்க முடியாது. நமது நாட்டில் மதுபானம்
ஒழிந்து விட்டால் பெரும்பாலும் படித்த பார்ப்பனர்கள் தங்கள் வீட்டின்
முன்புறம் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் வக்கீல் போர்டு பலகைகளைத்
திருப்பி காப்பி ஓட்டல்கடை போர்டுகளாக மாற்றிக் கொண்டும், பிச்சையும்
தூது போகும் வழிகளில் தான் வயிறு வளர்க்க வேண்டிவரும். சர்க்கார் உத்தி
யோகத்திலுள்ள பார்ப்பனர்களுக்கும் அநேகமாய் இந்த கதியேதான் வரும்.
ஆதலால் குடியை ஒழிப்பதற்கு பார்ப்பனர்கள் மனதோடு கூடி சம்மதிக்க
முடியாது. அப்படி மது விலக்குக்கு உண்மையாய்ப் பாடுபடுபவர்களா யிருந்
தால் கள் உற்பத்தியில் பணம் சம்பாதிக்கும் ஸ்ரீமான் சி.வி. வெங்கட ரமணய்
யங்காருக்கும் சாராயம் விற்று விளம்பரம் செய்யும் ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி
அய்யங்காருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்
சாரியார் பிரசாரம் செய்வாரா? கள்ளை நிறுத்தப் பாடுபடுவதாய் பறை
அடித்துக் கொண்டும் மகாத்மாவிடம் நற்சாட்சி பத்திரம் வாங்கி வைத்துக்
கொண்டுமிருக்கும் ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்கு
பிரசாரமே இப்படியிருக்குமானால் மற்ற பார்ப்பனர்களின் மதுவிலக்கு
பிரசாரம் உண்மையாயிருக்குமா?
கதர் விஷயமும் பார்ப்பனர் கவலை
கொள்ள இடமே இல்லை. நாட்டில் தரித்திரத்தால் கஷ்டப்பட்டு பட்டினி
கிடந்து சாவது பார்ப்பனரல்லாதாரே தவிர பார்ப்பனர்கள் ஒருவராவது
பட்டினி கிடக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. அவர்கள் ஒவ்வொரு
வரும் தங்கள் யோக்கியதைக்கு மேல் வாழுவதோடு மற்றவன் பட்டினி
கிடந்து கொண்டானாலும் தனக்கு கொடுத்து விடவேண்டும் என்பதாக பல
வழிகளிலும் மார்க்கத்தைத் தேடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
பெண்கள் எந்த வகையிலும் குறைவில்லாமல் இருக்கும் படியான நிலைமை
ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முனிசீபு கோர்ட்டில் பியூனாக
வோ சம்மன் சர்வு செய்பவனாகவோ இருந்தாலும் கூட அவன் மகள்
ஆர்மோனியம் வாசிக்கும் படியான செல்வாக்கு பெற்றிருக்கிறாள். இப்ப
டிக்கு எல்லாம் இல்லா விட்டாலும் பிச்சை எடுப்பதையும் குலத்தொழிலாகக்
கொண்டிருப்பதாலும் அவனுக்கு கொடுப்பதே நமக்கு புண்ணியம் என்று
கற்பித்து வைத்திருப்பதாலும் எவ்வழியிலும் அவர்களுக்கு பட்டினிக்கு
மார்க்கமில்லை. ஆதலால் பட்டினி கிடப்பவர்கள் பார்ப்பனரல்லாதாரே
தவிர
வேறில்லை. பார்ப்பனரல்லாதார் பட்டினி கிடக்காமல் சுகமாய் வாழக் கூடிய
குடி அரசு - 19970)
80
நிலைமை ஏற்பட்டால் பார்ப்பனருக்கு அது கஷ்டமாகக்கூடத்தான் இருக்கும்.
ஏனெனில் பார்ப்பனர்களுக்கு வேலை செய்யச் சூத்திரச்சி அகப்ப
டமாட்டாள் என்கிற கவலை ஏற்படலாம். ஆகவே நிர்மாணத் திட்டம்
காங்கிரஸ் மூலமாய் நிறைவேற கண்டிப்பாய் பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ள
முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவற்றை நான் 5 வருஷம் சந்தேகமற
அனுபவத்தில் கண்ட பிறகே பார்ப்பனரல்லாதார்களைக் கொண்டே தான்
நிர்மாணத் திட்டம் நிறைவேற்ற முடியும் என்கிற முடிவின்மேல் பார்ப்பன.
ரல்லாதார் சங்கத்தைப் பிடித்திருக்கிறேன்.
இந்நிர்மாணத் திட்டத்தில்
பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை, சமத்துவம், விடுதலை, உண்மையான
சுயராஜ்யம் ஆகிய எல்லாம் அடங்கிக் கிடக்கிறது. இதை நிறைவேற்றச்
செய்வதற்குத்தான் ஆங்காங்கு பார்ப்பனரல்லாதார் சங்கமும், பார்ப்பனரல்
லாதார் வாலிபர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைச் சங்கமும்
ஆகியவைகள் ஏற்படுத்தப்படுவதே அல்லாமல் சில பார்ப்பனர்களும்
வயிற்றுச் சோத்து தேச பக்தர்களும் அரசியல் பெயரைச் சொல்லாமல்,
வாழ
யோக்கியதை இல்லாதவர்களும் சொல்லிக்கொண்டு திரிவது போன்ற
உத்தியோக ஆசை பிடித்தோ குலாம் தனத்தில் ஆசை கொண்டோ சுயநல
வாழ்க்கை நடத்தவோ அல்ல என்பதைக் கண்டிப்பாய் சொல்லுகிறேன்.
தவிரவும் உத்தியோக ஆசை யாருக்காவது இருக்குமானாலும் அரசியலின்
மூலம் பிழைக்க வேண்டுமானாலும் அவர்கள் தாராளமாய் காங்கிரசுக்கு
போங்கள். காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாகி அவர்கள்
வாலைப் பிடித்துத்திரியுங்கள்!
ஏதோ அவர்கள் தின்று மீதியான எச்சிலையை
உங்களுக்கும் கொடுப்பார்கள், சில சமயத்தில் அவர்களுக்கு எட்டாததை
உங்களுக்கு காட்டுவார்கள். ஆதலால் அந்த எண்ணத்தோடு இச்சங்கத்தில்
யாரும் சேராதீர்களென்று கேட்டுக்கொள்ளுகிறேன். தவிரவும் இச்சங்கத்தில்
உள்ள வாலிபர்கள் எல்லாவற்றிற்கும் துணிந்தவர்களாகத் தானிருக்க
வேண்டும். சத்தியாக்கிரகமோ, சட்ட மறுப்போ, அடக்கு முறையோ ஏற்பட்
டால் மார்பைக் கொடுக்கக் கூடியவர்களாகவே இருக்க வேண்டும். இக்
காரியங்களுக்கு பெரியோர்கள் என்பவர்களை எதிர்பார்ப்பது வீணான
காரியம் என்பது எனக்குத் தெரியும். ஆதலால்தான் வாலிபர்களாகிய உங்க
ளைக் கேட்டுக் கொள்ளுகிறேன். பட்டாளம், பீரங்கி, துப்பாக்கி, ஆகாசக்
கப்பல், வெடிகுண்டு இவைகளைக் கொண்ட சர்க்காரையே லட்சியம் செய்யா
மல் நமது மனச்சாக்ஷியையே மதித்து நடந்த நாம் நமது சுயமரியாதைக்காக
நமது மனச்சாகதியை மதித்து நடப்பது முடியாத காரியமல்ல. ஆகையால்
நமது வாலிபர் சங்கம் எப்போதும் தயாராயிருக்க வேண்டும். அழகுக்கும்,
பெருமைக்கும், சுயநலத்திற்கும் ஏற்பட்ட சங்கமல்லவென்பதையும், உயிரைக்
கொடுத்தாகிலும் சுயமரியாதையை அடையத்தக்க சங்கமென்ப தையும்
நன்றாய் உங்கள் மனதிலிருத்துங்கள். அப்படிப்பட்டவர்களே வாருங்கள்!
நீங்கள் கொஞ்சமாக இருந்தாலும் நமக்கு கவலையில்லை.
பெரிய
சீர்திருத்தங்களோ கிளர்ச்சிகளோ ஏற்படுகிற காலத்தில் தைரியவான்களும்
81
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
பொறுமையும் தியாககுணமும் உள்ளவர்களுமே நமக்கு வேண்டும். குடும்ப
கவலை உள்ளவர்கள் இதில் அதிகமாய் கலந்து கொள்ளா தீர்கள். உங்கள்
உண்மையான முன்னேற்றத்தையும் சுதந்திரத்தையும், ஆண்மையையும்,
திடத்தையும் குடும்பக் கவலைகளே கெடுத்து விடுகின்றன. சுதந்தர மனிதன்
குடும்ப வாழ்க்கையில் பிரவேசித்தவுடன் குடும்பத்தைக் காப்பாற்றவே
பிறந்ததாகவும் அதற்காகவே வாழவேண்டியவனாகவும் ஏற்பட்டு சுய
மரியாதை, ஆண்மை, மனச்சாக்வி எல்லாவற்றை யும் இழந்துவிடுகிறான்.
அநேகமாகவே குடும்பி என்று சொல்வதற்கே ஆண்மை, சுயமரியாதை,
மானம், மனச்சாக்ஷி அற்றவன் என்பதுதான் தத்து வார்த்தம். ஆதலால் குடும்ப
வாழ்க்கையில் ஈடுபடாத வாலிபர்கள் நமது சுயமரியாதைக்கு மிகுதியும்
வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் முதலில் ஒழுக்கத்தையே பயில
வேண்டும்; பிறகு தன்னலத்தை மறுக்க வேண்டும்; சேவைக்காக இருப்ப
தாய்க் கருதவேண்டும். இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் பார்ப்பனரல்லாதார்.
முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கங் (லைட் அவுஸ்/களாவார்கள்.
இப்படிப் பட்ட உண்மையான வாலிபர்களைக் கொண்ட சமூகம் ஒரு வினாடி
யாவது சுயமரியாதையும் சமத்துவமும் சுதந்திரமுமடையாமல் இருக்க
முடியாது.
ஆதலால் வாலிபர்களே! உங்களையே பெரிதும் நம்பி இருப்பதால்
நீங்கள் முன்வர வேண்டும். பெரியோர்களாயிருப்பவர்களும் பல காரணங்
களால் தாங்கள் முன்வர யோக்கியதையற்றவர்களாயிருந்தாலும் வாலிபர்.
களையாவது தடுக்காமல் இருக்க வேண்டுகிறேன் என்றும் பேசியதோடு
மற்றும் கதர் அணிய வேண்டியதின் அவசியத்தைப் பற்றியும் மதச்சடங்கு.
கோவில் முதலிய காரியங்களில் பார்ப்பனரைக் கொண்டுதான் நடத்த
வேண்டும் என்கிற மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும்.
(தஞ்சைஜில்லா பிரசாரம் 30127 குடி அரசு இதழ் தொடர்ச்சி?
குடி அரசு - சொற்பொழிவு - 06.02.1927
குடி அரசு - 19970)
82
நண்றி கட்ட தண்மை
சென்னையில் வர்த்தகர்கள் சங்கம் வியாபாரச் சங்கம் என்பதாக
இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவைகள் முழுவதும் ஐரோப்
பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு இந்திய வியாபாரிகளுக்கு
அவற்றில் போதிய செல்வாக்கும் சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு
காலஞ் சென்ற பெரியார் சர்ஃபி. தியாகராய செட்டியார் அவர்கள் பெரு முயற்சி
செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது
நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல செளகரியங்களும் செய்து கொடுத்து
அதன் மூலம் ஐரோப்பிய சங்கங்களுக்கு இருப்பது போலவே சென்னை
முனிசிபாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும், இந்திய சட்டசபைக்கும்
அங்கத்தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும்
வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு
எவ்வளவோ கஷ்டமும் பட்டார். இப்போதும் மற்ற எல்லா ஸ்தாபனங்களை
யும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங்
களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே இதையும் கைப்பற்றிக்
கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கி
யதையும் சம்பாதித்துக் கொடுத்த சர்.பி.தியாகராயரின் வார்சான ஸ்ரீமான் பிடி.
குமாரசாமி செட்டியார் அவர்களையே அச்சங்கத்தில் சேர்த்துக் கொள்ள
மறுத்து விட்டார்கள். இக்கூட்டத்தாரின் கன்னெஞ்சத்தையும் நன்றி கெட்ட
தன்மையையும் காட்ட இதைவிட வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமா?
ஆகவே நமது பொது நன்மைக்காக என்று எந்த ஸ்தாபனங்களை ஏற்படுத்தி
னாலும் மெள்ள மெள்ள அதில் வேலைக்காரராக வந்து சேர்ந்து குமாஸ்தா
வாகி, மேனேஜராகி, எஜமான்களாகி நம்மை கூலிக்காரர்களாக செய்து விடு
கிறார்கள். இக்காரணங்களால் தான் நாம் செய்யும் தியாகமோ, உழைக்கும்
உழைப்போ, ஏற்படுத்தும் ஸ்தாபனங்களோ நமக்கே பலன் தர வேண்டுமா
னால் கண்டிப்பாய் அவற்றில் பார்ப்பனர்களைச் சேர்க்கக்கூடாது என்று
வாதாடி வருகிறோமே அல்லாமல் மற்றபடி அவ்வகுப்பார் மீது துவேஷம்
கொண்டல்ல. இந்த விஷயத்தை அறியாமல் இருப்பவர்களும், பார்ப்பனர்.
களிடம் கூலி வாங்கிப் பிழைப்பவர்களும் பார்ப்பனர் விரோதம் கொண்டால்
வாழ முடியாதவர்களும், தங்களை பெரிய தேச பக்தர்கள் போல காட்டிக்
கொண்டு உபதேசம் செய்ய வந்துவிடுகிறார்கள். ஆனபோதிலும் பொது
83
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஜனங்கள் இதை ஏதோ அறியாமையாலும்
வயிற்றுக் கொடுமையாலும்
இப்படி உளறுகிறார்கள் என்பதாக மதித்து கூடிய வரையில் பார்ப்பன
சம்பந்தமில்லாமலே முற்போக்கான வழி தேட வேண்டும் என்றும், அதற்
கேற்ப ஸ்தாபனங்களையும் ஏற்படுத்த வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 06.02.1927.
குடி அரசு
- 19270)
84
காங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி
தீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட
நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம் பெற்றிருந்தது.
அதற்காக
எவ்வளவோ பணங்களும் ஒதிக்கி வைத்து அத் திட்டத்தை நிறைவேற்ற
ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது: ஆனால் அவைகள் என்ன கதி அடைந்தன
என்பதை கவனிப்போம். தீண்டாமை விலக்கு நிதிக்காக தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியார் ரூ. 20000 ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அந்தப் பணத்தை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த வேலைக்கு உபயோகப்படுத்த ஸ்ரீமான்
சி.இராஜகோபாலாச்சாரியார் ஒரு சிறிதும் இடம் கொடுக்காமல் தனது வசம்
அந்த ரூபாயை ஒப்புவித்து விடும்படிக்கும் தான் அந்த வேலை செய்து
கொள்வதாகவும் சொல்லிப் பணத்தை எடுத்து தன் பெயருக்கு பாங்கியில்
போட்டுக் கொண்டார். கமிட்டியில் இருந்து தான் விலகும் வரையிலும்
அந்தப் பணத்தை தான் சும்மா வைத்துக் கொண்டிருந்து விட்டு கடைசியாக
அதை சீனிவாசய்யங்காருக்கு தேர்தல் செலவுக்கு ஏற்பட கமிட்டி வசம்
அதை ஒப்புவித்தார். அவரும் தனக்கு பூரா அதிகாரம் வரும் வரை தீண்டா
மையைப் பற்றி பேசாமலே இருந்து தான் முழு அதிகாரத்திற்கு வந்தவுடன்
கொஞ்சம் நஞ்சம் செலவு செய்தது போக மீதி பெரும் பாகம் பணத்தை
தேர்தல் வேலைக்கு எடுத்து தாராளமாய் செலவு செய்து கொண்டும், தன்
பேச்சைக் கேட்கிற ஆதித்திராவிடர்களுக்கு மாதம் ரூ. 20, 30 கொடுத்து
அவர்களைக் கொண்டே தீண்டாமை விலக்குக்கு விரோதமாய் பிரசாரம்
செய்யவும் உபயோகப்படுத்திக்கொண்டு வருகிறார். கடைசியாக தீண்டாமை
விலக்கு காங்கிரசில் இருப்பது சரியில்லை கதரைப் போலவே அது வேறு
ஸ்தாபனமாக இருக்க வேண்டும் என்றும் அக்கிராசனப் பிரசங்கத்தில்
சொல்லிவிட்டார். இப்போது தீண்டாமை விலக்கு நிதி அய்யங்கார்களும்,
ஆச்சாரிகளும், அய்யன்மார்களும் தலைவர்களாவதற்கும், சட்டசபை
மெம்பர், முனிசிபல் கவுன்சிலர்கள் ஆகி தீண்டாமை நிலை நிறுத்தவும் நமது
மனம் பதறப்பதற தாராளமாய் உபயோகப்படுத்தப்பட்டாய் விட்டது.
குடி அரசு - கட்டுரை - 06.02.1927.
85
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
திருவண்ணாமலை தானூகா
தெண் இந்திய ஈல உரிமைச் சங்க மகாநா௫
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்
பும் நீங்கள் வாசித்துக் கொடுத்த பத்திரங்களும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி
யைக் கொடுத்தன. எனினும் அத்தகைய குதூகலமான வரவேற்புக்கும்
இத்தகைய பத்திரங்களுக்கும் நான் பொருத்தமுடையேன் அல்லேன் என்பது
எனக்குத் தெரியும். நீங்கள் மனதாரப் பொறுத்துக் கொண்டிருப்பதுடன், என்
தொண்டை நீங்களெல்லோரும் ஒப்புக் கொண்டு உங்களுடைய மனமார்ந்த
ஆதரவளிப்பதற்கு என் மனப்பூர்த்தியான வந்தனத்தையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்ளுகின்றேன். (கரகோஷம்). இக்கூட்டம் திருவண்ணா
மலை தாலூகா தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் திறப்பு விழாவின்
பொருட்டு கூட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட போதிலும், இங்கு ஏற்கனவே
சங்கம் நிறுவப் பட்டு வேலைகளும் செய்து வந்திருப்பதாகத் தெரிகின்றது.
அன்றியும் இன்று இக்கூட்டம் என்னை வரவிடுத்து என் கடனாற்றச் செய்வ
தன் பொருட்டானதன்றி சில தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்காகவும்
கூட்டப்பட்டதென்பது நிகழ்ச்சிக் குறிப்பினாலறியப்படலாம். ஆதலால் இது
ஒரு மகாநாட்டுக்குச் சமானமானதென்றே கருதுகின்றேன். கடைசியாக
உங்களுடைய வரவேற்புப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்
குத் தனித் தனியாகப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றே
கருதுகின்றேன். மேலும் எனக்குச் சில தினங்களாக தேக அசெளக்கியமா
யிருப்பதால் அவ்வாறு பேசுவதற்கும் ஆற்றலில்லை. ஆயினும், முக்கியமாக
ஒன்றை மட்டும் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன். அதாவது நீங்கள் நம்.
சுயமரியாதையை நிலை நிறுத்தவும் நம் தேசத்தின் குறைகளையுணர்ந்து
அவற்றை ஒழித்து நமது இலட்சியத்தை நிறைவேற்றப் பெரும் உறுதியுடன்
உழைக்க முற்பட்டிருப்பதற்கு நான் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
அதோடு கதர் விஷயத்தில் நீங்கள் மனப்பூர்த்தியான ஆதரவு அளிக்க முன்
வந்திருப்பது எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. நமது நிர்மாணத்
திட்டத்தின் வேலைகளின் சம்பந்தமாக என்னாலான உதவியை அப்போ
தைக்கப்போது செய்து உங்களை ஊக்கமூட்ட எப்போதும் தயாராக விருக்
குடி அரசு - 19970)
86
கிறேன் கரகோஷம்). மற்றபடி முடிவுரை ரூபமாகவோ அல்லது உபந்நியாச
ரூபமாகவோ, எல்லா விஷயங்களையும் நடவடிக்கைகளின் முடிவில் கூறலா
மென்று கருதி நிகழ்ச்சிக் குறிப்பிற் கண்ட விஷயங்களை கவனிக்க உத்தே
சிக்கின்றேன். நிகழ்ச்சிக் குறிப்பில் இனி நடக்க வேண்டிய விஷயங்களில்
முதலாவதாக பொங்கல் வசூல் உண்டி திறக்கப்படுமென்றும், பின் 'தீர்மானங்
களென்றும், அடுத்த படியாக இத்தகைய சங்கங்களினால் ஏற்படும் நற்பயன்
கள் என்பது பொருளாக தேசபக்தர் ஸ்ரீ ஆரியா அவர்களும், திராவிடன்
ஆசிரியர் திருவாளர் கண்ணப்பரவர்களும், திரு. புரிசை முருகேசனும்,
தண்டபாணி பிள்ளையும் சொற்பெருக்கிடுவார்களென்றும் காணக்கிடக்கின்
றன. கடைசியாக அக்குறிப்பில் அக்கிராசனரின் முடிவையும் சேர்க்கப்பட்ட
ருக்கின்றது. கனவான்கள் கடைசி வரையில் பொறுமையோடு கேட்டுக்
கொண்டிருந்து இம்மகாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்
ளுகிறேன். (பெருத்த கரகோஷம்!.
குறிப்பு
: திருவண்ணாமலையில் 6.227 இல் நடைபெற்ற தென்னிந்திய நல.
உரிமைச் சங்க மகாநாட்டில் தலைமை வகித்து முன்னுரையாக ஆற்றிய
சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 13.02.1927
* மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. பொங்கல் உண்டி வசூலில் இருந்து ரூபாய் நூறு தியாகராயர் ஞாபக
நிதிக்களித்து மிகுதியை இச்சங்க உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளும்படி
அனுமதி கொடுக்க வேணுமாய்த் தீர்மானிக்கப்படுகிறது.
2 இச்சங்கம் மதுரைப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் நிறைவேறிய
எல்லாத் தீர்மானங்களையும் மனமுவந்து ஒப்புக் கொள்வதுடன் அவற்றை
அனுபவத்தில் நடைபெறச் செய்வதற்குக் கீழ்க்கண்ட கனவான்கள் அடங்கிய
நிர்வாக சபையை நியமிக்கிறது:-
போஷகர்கள்:-
ராவ்பகதூர் வீரப்ப செட்டியார், திருஞான சம்பந்த முதலியார்.
உப பிரஸிடெண்டுகள் :-
முத்துக் குமாரசாமி முதலியார், ராஜரத்தின முதலியார்.
87
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
காரியதரிசி:-
சாமி செட்டியார்.
கூட்டுக்காரியதரிசி:- முத்துச்சாமி நாயனார்.
நிர்மாண கர்த்தாக்கள்:
எம்.பி.ரங்கசாமி ரெட்டியார்,
ஆதி மூல உடையார்.
பொக்கிஷதார் :-
ஆறுமுக முதலியார் மற்றும் பலர் நிர்வாக சபை
மெம்பர்கள்.
3. தேவஸ்தான மசோதாவை சட்டமாக அங்கீகரித்ததற்காக மேன்மை:
தங்கிய ராஜப் பிரதிநிதி அவர்களையும் சென்னை கவர்னர் அவர்களையும்
இக்கூட்டம் சந்தோஷத்துடன் பாராட்டுகின்றது.
இந்தத் தீர்மானத்தை
மேற்படியார்களுக்கு தந்தி மூலம் அனுப்பிவைக்கும்படி அக்கிராசனரைக்
கேட்டுக்கொள்கின்றது.
4. நமது மாகாணத்தில் நமது சங்கத்தினர் பெயரால் கதர் போர்டு
ஒன்றை ஏற்படுத்தியும் மற்றும் கூடுமான இடங்களிலும் இக்கதர் உற்பத்தி
சாலையும் வியாபார சங்கத்தையும் ஏற்படுத்தி அத்தாகஷிப் பத்திரம் கொடுக்
கவும், இதற்காக நிதி திரட்டவும் மகாத்மா காந்தி அவர்களின் வருகையை
நாமும் கதரின் அபிவிருத்திக்காக வரவேற்கவும் தீர்மானிக்கிறது. இக்கதர்.
போர்டு தலைவராக இருக்கும்படி திருஈவெ.ராமசாமி நாயக்கர் அவர்களைக்
கேட்டுக் கொள்ளுகிறது.
5. பிராமணரல்லாதாரின் நன்மையைக் கோரி உழைத்து வரும்
பத்திரிகைகளுள் முக்கியமான குடி அரசு, திராவிடன், ஜஸ்டிஸ் ஆகிய
பத்திரிகைகளை அவசியம் ஒவ்வொருவரும் ஆதரித்து வரவேண்டு
மென்றும், அப்படி மேற்படி பத்திரிகைகளை ஆதரிக்க செளகரியமில்லாத
வர்கள் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையை அழிக்கவென்றே கங்கணம்
கட்டிக் கொண்டு இருக்கும் பார்ப்பன பத்திரிகைகளை நிராகரிக்கவாவது
செய்ய வேணுமாயும் கேட்டுக் கொள்ளுகிறது.
6. தென் பெண்ணையாற்றில் அணைகட்டும் விஷயமாய் செங்கம்
மகாநாட்டில் தீர்மானித்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் அதனை
கட்டி கால்வாய் பிடித்து ஜலாதாரம் செய்து கொடுக்க வேணுமாயும் எல்லா
காடுகளிலும் (விவசாயிகளுக்கு) இலவசமாய் தழை அறுத்துக்கொள்ள
அனுமதி கொடுக்க வேணுமாயும், துண்டு கேதுகளுக்கு வஜா செய்து
கொடுக்க வேண்டுமாயும் செங்கம் டிவிஷனைச் சேர்ந்த குடிகள் சுமார்.
முப்பது மைலுக்கு மேலாக வந்து திருவண்ணாமலை கஜானாவில் பணம்
செலுத்த வேண்டி இருப்பதால் இந்தக் குறையை நீக்க செங்கம் டிப்டி தாசில்
தார் ஆபிசிலேயே பணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யும்படி கவர்ன்மெண்
டாரைக் கேட்டுக் கொள்ளுகிறது.
குடி அரசு - 19970)
88
7. இவ்வூரில் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஒன்றைத் திறந்து
வைக்கும்படி ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களை கேட்டுக் கொள்ளப்
படுகிறது.
மதுரை கோயில் சுவாமிக்கு சுயமரியாதையுடன் ஆராதனை செய்த
ஸ்ரீமான் ஜே.என்.ராமநாதன் அவர்களையும், சேலம் ஜில்லா ஆத்தூர் தாலுகா
ஏத்தாபூரில் பிராமணர்களின் அக்கிரமங்களைப் பகிஷ்கார மூலமாய் நிவர்த்தி
செய்துகொண்ட அவ்வூர்வாசிகளையும் இம்மகாநாடு பாராட்டுகின்றது.
89
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வருணாச்சிரம தர்மம்
நமது பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக
வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்”என்பதாக ஒரு
பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக்
கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள்
என்றும், தங்களுக்கடுத்தவர்கள் சிலர் கடவுளின் தோளிற் பிறந்தவர்கள்
க்ஷத்திரியர்களென்றும் மற்றும் சிலர் கடவுளின் தொடையிற் பிறந்தவர்.
வைசியர்களென்றும், ஆனால் கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும்
இல்லை என்றும் தங்களைத் தவிர மீதியுள்ளவர்களெல்லாம் கடவுளின்
பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள்” என்றும், அச்சூத்திரர்கள் தங்களது
வைப்பாட்டிமக்கள், தங்களது அடிமைகள், தங்களுக்குத் தொண்டு செய்வ
தற்கென்றே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவதோடு
இந்த சூத்திரர்களுக்கு எந்தவித சுதந்திரமுமில்லை என்றும், அவர்கள்
சொத்து, சுகம் வைத்துக்கொள்ளுவதற்குக் கூட பாத்தியதையில்லாதவர்க
ளென்றும், அப்படி மீறி வைத்திருந்தால் அவர்களிடமிருந்து பிராமணர்கள்
பலாத்காரத்தினால் பிடுங்கிக்
கொள்ளலாமென்றும் இன்னும் நினைப்பதற்கே
சகிக்க முடியாததான அநேக இழிவுகளை யெல்லாம் கற்பித்து இவைகளுக்
காதாரம் வேதத்திலேயே இருக்கிறதென்றும், வேதம் கடவுளால் சொல்லப்
பட்டதென்றும், அவ் வேதத்தை தாங்கள்தான் படிக்கவேண்டுமென்றும்,
மற்றவர்கள் படிக்கக்கூடாது கேட்கக்கூடாதென்றும், அப்படிப் படித்தால்
படித்தவர்கள் நாக்கையறுப்பதோடு கேட்டவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி
ஊற்றி அவர்கள் மனதைப் பிளந்து கொன்றுவிட வேண்டுமென்பது
வேதத்தின் கட்டளையென்றும் சொல்லுவதோடு அதற்கு வேண்டிய ஆதாரங்
களையும் செய்து வைத்து நம்மைத் தாழ்த்தி, இழிவுபடுத்தி வருவதைப் பல
தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம். ஆனால், சில பார்ப்பனர்.
கள் இப்படியெல்லாம் இல்லையென்றும் இது வேண்டுமென்றே பார்ப்பனர்.
கள் பேரில் துவேஷத்தைக் கற்பிக்க எடுத்துச் சொல்லப்பட்டு வருகிற
தென்றும் உயர்வு தாழ்வு வித்தியாசங்கள் இல்லையென்றும் சொல்லுவதும்,
குடி அரசு - 19970)
90
குப்தா என்று பெயர் வைத்துக்கொள்ளுவதும் பூணூல் போட்டுக் கொள்ள
முக்கியமாய் வேளாளர்கள், தாங்கள் பூவைசியரென்றும் தாங்கள் சூத்திரரில்
அப்படிப் பட்டவர்கள் அல்லரென்றும் சொல்லிக் கொள்ளுவதையும் பார்த்து
வருகிறோம். இதுகள் நமது பார்ப்பனர்கள் அவரவர்களுக்குத் தக்கபடி
சொல்லி ஏமாற்றுவதை நம்பி மோசம் போவதே அல்லாமல் வேறல்ல.
இதோடு நம்மைப் பற்றி குற்றம் சொல்லுவதையும் கண்டு வருகிறோம். நமது
கூற்றுக்கு ஆதாரமாக சமீபத்தில் சென்னையில் இரண்டு முக்கியப் பார்ப்பன
பிரசங்கங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று சென்ற மாதம் 22 ந்தேதி
சனிக்கிழமை சங்கராச்சாரியார் மடத்தில் பிராமண சபையின் ஆதரவில்
வேதம் என்பது பற்றிப் பிரசங்கிக்க ஒரு கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது.
இதற்கு ஸ்ரீமான் டி. ஆர். ராமச்சந்திரய்யரே அக்கிராசனம் வகித்திருக்கிறார்.
அதில் வருணாச்சிரம தருமம் வேதத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறதென்றும்
அதோடு சநாதன தர்மமும் அதில் சொல்லி இருக்கின்றதெனவும் இவைகளை
நன்கறிந்து காப்பாற்ற வேண்டும் எனவும் பேசி இருக்கிறார். இது ஜனவரி
27-ந் தேதி மித்திரனில் பார்க்கலாம். மறுபடியும் பிப்ரவரி 7-ந்தேதி திங்கட்
கிழமை கும்பகோணம் சங்கராச்சாரியார் மடத்து ஆஸ்தானம் ஸ்ரீமான்
வெங்கிட்டராம சாஸ்திரியார் சநாதன தர்மப் பிரசாரமாக வருணாசிரம தர்மம்
என்று ஒரு பிரசங்கம் செய்திருக்கிறார்.
அதில் இக் கலியுகத்தில் இரண்டே
வருணங்கள்தான் இருக்கின்றன என்றும் அது பிராமணர், சூத்திரர் என்கிற
இரண்டுதான் என்றும் ஷத்திரியர்களும், வைசியர்களும் கலியுகத்தில்
இல்லையென்றும் வருணம் என்பது ஜாதி என்றும் தற்காலத்திற்கு பராசரஸ்.
மிருதிதான் ஆதாரமென்றும் பேசி இருக்கிறார். இது பிப்ரவரி மாதம் 8ந்
தேதிமித்திரனிலிருக்கிறது. ஆகவே பார்ப்பனர்கள் நம்மை இழிவு படுத்துவ
தற்காக வைத்திருக்கும் சங்கங்கள் மோட்ச சாதனங்களாகப் போய் விடுகின்
றன. நம்மைத் தாழ்த்திப் பேசும் பேச்சுக்கள் சநாதன தர்மமாகி விடுகின்றன.
நாம் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்படுத்தப்படும் சங்கங்கள் தேசத்
துரோக சங்கங்களாகவும், அதில் பேசும் பேச்சுக்கள் பிராமணத் துவேஷமா
கவும் போய்விடுகின்றன.
குடி அரசு
- கட்டுரை - 13.02.1927.
91
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கோவில்கணிண் பேரால் யார்ப்பண்யத்
தொல்லை
நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் பெயராலும்,
மதத்தின் பெயராலும், மதச் சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்து வரும்
கேடுகளுக்கும் தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கி சீரழிந்து சுயமரியாதை,
மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற
நாம் பிரயத்தனப்படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை
உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா
இருந்தோமேயானால் நமது கதி என்னவாகும்?
“அன்ன நடைக்கு
ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று” என்பதுபோல் கோவில்களில்
நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது
என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவே கூடாது என்று
சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக்கொள்ளவும்
ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. “காலானிக்கு
வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு” என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு
அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது. அதுபோல் கோவிலுக்குள் வர
வேண்டாம் என்பதாகவே சொல்லிவிட்டால் கும்பிட்டு விட்டாவது போய்
விடுகிறேன் என்று சொல்ல வருவான்; இல்லாவிட்டால் சம உரிமை கேட்பான்
என்று நினைத்து போகிற பட்சமெல்லாம் கதவைச் சாத்துகிறார்கள்.
கோவிலுக்குள் போக உரிமை கிடைத்தவருக்கு சுவாமி கும்பிட உரிமை
உண்டா இல்லையா? சுவாமி கும்பிட உரிமை உள்ளவனுக்கு சுவாமிக்கு தேங்
காய் பழம் உடைத்து வைக்க உரிமை உண்டா இல்லையா? இந்த உரிமை
களைக் கூட இப்பார்ப்பனர்கள் அபகரிப்பார்களேயானால் இவர்களை விட
வெள்ளைக்காரர்கள் எந்த விதத்தில் கெட்டவர்கள்?
நமது நாட்டுப்
பார்ப்பனர்களைவிட
தென் ஆப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் ஆயிரமடங்கு
யோக்கியர்கள் என்று சொல்லுவோம். இந்த பார்ப்பன ஆட்சியிலும், அடக்கு
முறையிலும் இருப்பதை விட அந்த வெள்ளையர்கள் ஆட்சியே மேலென்
பதாகக் கூடச் சொல்லி விடலாம். வர வர இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு
அக்கிரமங்கள் செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதை நினைக்கும்போது
நமது ரத்தம் கொதிக்கின்றது! குலை நடுங்குகின்றது! “பிச்சைக்கு வந்தவன்
குடி அரசு - 19970)
92
பெண்டுக்கு மாப்பிள்ளை” என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக் காத்து
வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு
சாத்தவும் உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டு விட்டார்கள் என்றால் நமது
மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?
சுவாமியைத் தொட்டுக் கும்பிடுவதும் சுவாமி பக்கத்தில் போய் கும்பிடுவதும்,
பார்ப்பனரும் தாமும் சரிசமமாய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்
கட்டும்; வெளியிலிருந்து தேங்காய் பழம் உடைத்து வைத்துக் கும்பிடுவதில்
இந்தப் பார்ப்பனர்களுக்கிருக்கும் ஆட்சேபனை என்ன? இது பார்ப்பனர்.
களின் எந்த வேதம் சாஸ்திரம் ஆகமங்களுக்கு விரோதம் என்று சொல்லக்
கூடும்? கை வலுத்தவன் காரியமாயிருக் கிறதேயல்லாமல் இதில் ஏதாவது
நியாயம் இருக்கிறதா? நாம் தேங்காய் உடைப்பதால் கோவிலின் வரும்படி
குறைவதாயிருந்தால் அவர்கள் கேட்பதைத் தரத் தயாராயிருக்கிறோம்.
பார்ப்பனர்களின் வரும்படி குறைந்து போகும் என்று சொல்வதானாலும்
அவர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுக்கத் தயாராயிருக்கிறோம்.
மற்றபடி இவர்கள் ஆட்சேபிக்கக் காரணம் என்ன? மதுரைக் கோவிலில்
ஸ்ரீமான் இராமநாதனை உள்ளே வைத்தடைத்தலும் அவரைத் தேங்காய்
உடைக்காமல் தடுத்ததும் எதைக் காட்டுகின்றன? திருவண்ணாமலைக்
கோவிலில் ஸ்ரீமான் கண்ணப்பரையும் மற்றவர்களையும் உள்ளே விடாமல்
கதவை மூடிய விஷயம் கோர்ட்டிலிருப்பதால் அது முடியட்டும். மற்றபடி
மதுரை விஷயத்தைப் பற்றி நமக்கு ஏற்பட்ட அவமானம் பொறுக்கக்
கூடியதல்ல. இதுபோலவே கொஞ்சநாளைக்கு முன் தென்காசி கோவிலிலும்.
தேவாரம் படித்த பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு அவமானம்
என்பதாக கருதி அங்குள்ள பார்ப்பனர்கள் கோவிலை விட்டு போய்விட்
டதுமல்லாமல் சுவாமி எழுந்தருளும் போது கதவை மூடிக்கொண்டார்களாம்.
தேவாரம் படிக்கக் கேட்பதும் அதற்குப் பிறகு பிரசாதம் வாங்குவதும் இந்தப்
பார்ப்பனர்களுக்கு அவமானமாய்த் தோன்றினால் நம்மைத் தேங்காய் பழம்
உடைத்து வைத்து சுவாமி கும்பிடவேண்டாம் என்றால் அது எவ்வளவு
பெரிய இழிவு என்பதை அவர்களே சொல்லட்டும். ஒவ்வொரு அர்ச்சகனுக்
கும் சுவாமி பூஜை செய்ய சம்பளம் உண்டு. அது கோவில் கட்டினவர்களே
இத்தனை வேளை பூஜையென்றும் அதற்கு இன்ன சம்பளம் என்றும்
ஏற்படுத்தி யிருக்கிறார்கள். மற்றவர்கள் செய்யும் பூஜைக்கும் இவர்களுக்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை. அநேக இடங்களில் பக்தர்களே பூஜை
செய்கிறது இன்னும் வழக்கமாகத்தான் இருக்கிறது. பிள்ளையார், மாரியம்மன்,
காளியம்மன் மற்றும் ரதோற்சவ காலங்களில் ரதத்தில் சுவாமி இருக்கும்
போதும், கோவிலிலும் பக்தர்கள் தாங்களே தேங்காய் பழம் உடைத்து பூஜை
செய்வதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. இதுவரையில் இவ்வித
வழக்கத்தை யாவரும் ஆக்ஷ்பித்ததே கிடையாது.
இதை இப்படியேவிட்டு
விட்டால் பம்பாயில் புரோகிதர் சட்டம் வந்ததுபோல் அதாவது பார்ப்பானுக்கு
பணம் கொடுத்துத்தான் திதி செய்ய வேண்டும் என்று சொன்னது இங்கும்
93
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஆகிவிடுமென்றே சொல்லலாம். அங்காவது பார்ப்பா னுக்குப் பணம்
கொடுத்துவிட்டுத் தாங்களாகவே திதி செய்துகொள்வதில் ஆக்ஷேபமில்லை.
என்பதாக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இங்கு பார்ப்பானுக்கு பணம்
கொடுத்தாலும் நாம் செய்துகொள்ள பாத்தியமில்லை என்கிற சட்டம்
இருக்கிறது போல் இருக்கிறது. எந்தக் காரணத்தைக்கொண்டு மதுரைத்
தலைவர் ஸ்ரீமான் 147. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் மறு உத்திரவுவரை
தேங்காய் உடைக்கக் கூடாது என்று பொது ஜனங்களுக்கு 144 உத்திரவு
போட்டாரோ தெரியவில்லை. ஒரு சமயம் இதனால் கலகம் உண்டாகுமென்று
நினைத்து மறு உத்திரவு வரை யாரும் கோவிலுக்குப் போகாதீர்கள் என்று
உத்திரவு போட்டிருந்தால் அது சுயமரியாதையைக் காப்பாற்றப் போட்ட
உத்திரவாகும். அதில்லாமல் பார்ப்பனருக்குப் பயந்து கொண்டு போட்ட
உத்திரவானது நமது சுயமரியாதையை பாதிக்கத்தக்கதென்றே சொல்லுவோம்.
இதனால் என்ன கலகம் எப்படி நடந்துவிடக்கூடும்.
நாம் தேங்காய்
உடைத்தால் மீனாக்ஷியம்மனும், சொக்கலிங்க சுவாமியும் கோவிலைவிட்டு
ஓடி விடுவார்களா?
அல்லது உலகம் முழுகிப் போகுமா? அல்லது
பாவமூட்டை ஏற்பட்டு விடுமா? என்பது நமக்கு ஒன்றும் விளங்க வில்லை.
எல்லா மக்களுக்கும் சமத்துவ உரிமை வேண்டுமென்றும் யாவரும்
கோவிலுக்குள் போய் சுவாமி தரிசிக்கும் உரிமை வேண்டுமென்றும் கேட்டுக்
கொண்டிருக்குமிக்காலத்தில் ஏற்கனவே உரிமையுள்ள காரியங்களையும்
விட்டுக்கொடுப்பதானால் நாம் சம உரிமை அடைய யோக்கியமுடையவர்.
களாவோமா? தேங்காய் உடைப்பதால் என்ன தான் ஏற்பட்டுவிடும்? பார்ப்ப
னர்கள் சர்க்காரிடம் போய்த்தான் 144 உத்திரவு வாங்கி வரட்டுமே அதையும்
பார்த்து விட்டிருக்க வேண்டுமே அல்லாமல் அதைத் தடுத்தது நமக்குத்
திருப்தியளிக்கவில்லை.
கலகம் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நாம் சொல்ல
வரவில்லை: நாம் சரி என்று நமது மனப்பூர்வமாய் யோசித்து தீர்மானித்துச்
செய்யுங் காரியங்களுக்கு ஒரு சிறு தடை ஏற்பட்டால் உடனே பின் வாங்கிக்
கொள்ளுகிறதென்று ஆரம்பித்துவிட்டால் எப்படி முன்னேற முடியும்?
நமக்குப் பின்னால் யாராவது பிரயத்தனப்படுபவர்களுக்கும் இது பெருத்த
குந்தகமாய் வந்து முடியும் என்று தான் பயப்படுகிறோம். ஒரு காரியத்திற்கு
போகக்கூடாது. கிரமம் என்றுநினைத்து தலையிட்டுவிட்டால் அதைச் சுலபத்
தில் விட்டு விட்டு ஓடவும் கூடாது. ஆதலால் ஸ்ரீமான் முதலியார் அவர்கள்
யோசித்து சீக்கிரத்தில் ஏதாவது ஒரு வசதி செய்யக் கோருகிறோம். இன்னும்
மற்ற ஊர்களிலும் இவ்விதமான தடைகள் இல்லாமல் அவரவர்கள் தங்கள்
தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறோம்.
குடி அரசு
- தலையங்கம் - 13.02.1927.
குடி அரசு
- 19270)
94
பொது வாசக சாகைகைனில் பார்ப்பண
க்கம்
எல்லா மக்களின் பொது நலத்திற்கென்று ஏறக்குறைய ஒவ்வொரு
முக்கிய பட்டணங்களிலும் வாசக சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
அவைகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணத்தைக் கொண்டே
நடப்பதாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமே அதில் தலைசிறந்து விளங்கும்.
சிற்சில வாசக சாலைகளில் பார்ப்பனரல்லாதவர்களே காரியதரிசிகளாகக்கூட
இருக்கலாம். ஆனாலும், அவ்வூர் முனிசீப்போ, டிப்டி கலெக்டரோ, மேஜிஸ்
திரேட்டோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டரோ,ரிவினியூ இன்ஸ்பெக்டரோ பார்ப்ப
னர்களாயிருந்து விட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத வக்கீல்களோ, பெரிய
மனிதர்களோ அப்பார்ப்பன உத்தியோக மெம்பர்களுக்கு அடிமையாயிருப்
பதுடன் அப்பார்ப்பன மெம்பர்கள் செய்யும் பார்ப்பனீயப் பிரசாரத்திற்கு
செகரட்ரி என்கிற பெயரால் கையாட்களாகவும் இருந்து வருகிறார்கள். நமது
நாட்டில் உள்ள ஒவ்வொரு வாசக சாலையிலும் “சுதேசமித்திரன்”, “இந்து”
முதலிய பார்ப்பனீயப் பிரசார பார்ப்பனப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்
கும். “இந்து”, “சுதேசமித்திரன்” இல்லாத ரீடிங்குரூம் ஒரு ரீடிங்கு ரூமாகுமா
என்று சொல்லிவிடுவார்கள். தங்கள் ரீடிங்கு ரூமுக்கு மெயில் பத்திரிகை
வருகிறது என்று பெருமையும் பேசிக் கொள்வார்கள். ஆனால், “திராவிடன்”,
“ஜஸ்டிஸ்”, “குடி அரசு” பத்திரிகைகளை தருவிக்கலாமா என்று சொல்லு
வதற்குக்கூட நமது பார்ப்பனரல்லாத செகரட்டரிகளுக்கே தைரியம்
இருக்காது. ஏனென்றால் பார்ப்பன அதிகாரிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டு
விடும் என்கிற பயம்தான். அப்படி யாராவது ஒருவர் மீறி தன்னை தைரியம்
செய்து கொண்டு தருவிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த ரீடிங் ரூமே நமது
பார்ப்பனர்களுக்கு வகுப்பு துவேஷரீடிங் ரூமாய்விடும். பிறகு அந்த காரிய
தரிசியை ஒழிக்க வழி தேடி விடுவார்கள். இதனாலேயே வாசக சாலைகளில்
பெரும்பாலும் இப்பத்திரிகைகள் வரவழைக்கப் படுவதில்லை. அல்லாமலும்
வரவழைத்து வந்த ஒன்று இரண்டு வாசக சாலைகளிலும் இப்பொழுது வர:
வர நிறுத்தப்பட்டு வருவதாய் தகவல்கள் எட்டுகின்றன. உதாரணமாக சேலம்
“லிட்டரரி சொசைட்டி” என்கிற வாசக சாலையில் “தமிழ்நாடு” பத்திரிகை
ஆரம்பம் முதல் வரவழைக்கப்பட்டு வந்தது. இப்பொழுது நிறுத்தப்பட்டாய்
விட்டதாம்.
இவ்வாசக சாலையில் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள்
95
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
அநேகர் உண்டு: ஒரு பார்ப்பனரல்லாதாருக்காவது இதில் அவமானம்
தோன்றவே இல்லை. தங்களை எவ்வளவோ கேவலமாக பார்ப்பனர்கள்.
மதித்தாலும் சரி அவர்களுடன் அவர்கள் வால்பிடித்துத் திரிந்து ஏதாவது
உத்தியோகம் பதவி முதலிய எச்சில் பொறுக்க அவர்கள் தயவை எதிர்பார்க்
கலாமா என்கிற எண்ணமே அல்லாமல் தங்கள் சுயமரியாதையைப் பற்றி
அநேகருக்கு கவலையே இல்லை. உண்மையாய் இப்பார்ப்பனரல்லாத
மெம்பர்கள் சுயமரியாதை உடையவர்களாயிருந்திருந்தால் உடனே
ராஜினாமாக் கொடுத்திருப்பார்கள். தவிர அந்த வாசக சாலையில் பார்ப்பன
ருக்கு தண்ணீர் சாப்பிட வேறு பாத்திரமும் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு
பாத்திரமும் வைக்கப்பட்டிருக்கிறதாம். சேலத்தில் படித்தவர்கள் பெரும்
பாலும் ஸ்ரீமான் சி.இராஜகோபாலாச்சாரியாரின் சிஷ்யர்கள் என்றும் அவரு
டைய நண்பர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறவர்கள்.இவர்கள் யோக்கி
யதையே இப்படி இருந்தால் மற்றவர்களின் யோக்கியதையைப் பற்றி
சொல்லவும் வேண்டுமா? அதனால் இனி பொது வாசக சாலைகளில் உள்ள
சுயமரியாதை உடைய பார்ப்பனரல்லாதார் அவசியம் இவற்றை கவனிக்க.
வேண்டும்.
அதாவது “இந்து” “மித்திரன்” “மெயில்” பத்திரிகைகளை:
வரவழைக்கும் வாசக சாலைகள் கண்டிப்பாய் “ஐஸ்டிஸ்”, “திராவிடன்”,
“சைபுல் இஸ்லாம்” முதலிய பத்திரிகை வரவழைக்க வேண்டும். பணம் இல்லா
விட்டால் பார்ப்பனப் பத்திரிகை ஒன்று பார்ப்பனரல்லாதார் பத்திரிகை ஒன்று
மாக வரவழைக்க வேண்டும். 100 -க்கு 3 பார்ப்பனர்கள் இருந்து கொண்டு
100-க்கு 97 பேர் கொண்டவர்களால் நடத்தப்படும் பத்திரிகையைவரவழைக்க
ஆக்ஷேபிப்பதை பொறுத்துக் கொள்ளுவதென்றால் இந்த பார்ப்பனரல்லா
தாருக்கு மானம், வெட்கம், சுயமரியாதை இருக்கிறதா என்றுதான் கேட்கி
றோம்? தவிரவும் பார்ப்பனருக்கு வேறு தண்ணீர் பாத்திரம் பார்ப்பனரல்லா
தாருக்கு வேறு தண்ணீர் பாத்திரமானால் அதை ஒத்துக் கொள்ளுவதும்
அவமானம் என்றே சொல்லுவோம்.அப்படியானால் எல்லா வகுப்பாருக்கும்
வைக்க வேண்டும்; மகமதியர், கிறிஸ்தவர், சைவர், அசைவர், ஆதி திராவிடர்
மற்றும் சமபந்தியில்லாத சகல வகுப்புக்கும் வைக்க வேண்டும். அப்படிக்
கில்லாமல் தன் ஜாதிக்கு 100-க்கு 3 பேருக்கு ஒன்று மற்ற 100-க்கு 97
பேருக்கும் ஒன்று என்பது நமது சமூகத்தை எவ்வளவு கேவலமும் அவ
மானமும் படுத்தியதாகும். இது விஷயங்களில் படித்தவர்கள் என்பவர்கள்
இவ்விழிவுக்கு கட்டுப்படுவதால் இந்த அவமானம் இது எல்லோர்.
தலையிலும் விடிகிறது. ஆதலால் இனியாவது வாசக சாலைகளில் உள்ள
பார்ப்பனரல்லாத மெம்பர்கள் சுயமரியாதையுடனும் சுத்த ரத்தோட்ட
முள்ளவர் களாகவும் நடந்து கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.02.1927.
குடி அரசு - 19970)
96
திருவண்ணாமலை கானாகா
தெண்ணிந்திய நவைரிமைச் சங்கத்
திறப்புவிழா
காங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கன்
சுயமரியாதை வாழ்வே ௬தந்தர வாழ்வு
சகோதரர்களே! சகோதரிகளே!
நீங்கள் இன்று மாலை சில மணி நேரங்களாக இங்கு நடத்தப்பட்ட
சொற்பொழிவுகளை அமைதியுடன் கேட்டிருந்தீர்கள். எனக்கு இரண்டொரு
தினங்களாக தேக அசெளக்கியமாயிருக்கின்றது. ஆதலால் உங்களை நெடு
நேரம் காக்க வைக்காமல் நான் சொல்ல வேண்டியவைகளைச் சுருக்கமாக
விளக்கி விட உத்தேசித்திருக்கிறேன்.
இன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களை நீங்களே நன்கறிவீர்கள். பின்னும் இத்தகைய சங்கங்களால்
ஏற்படும் நற்பலன்களைக் குறித்து அறிவாளிகள் பலரும் நன்கெடுத்துப் பேசி
னார்கள். ஆதலால் இன்னும் நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்று
மில்லை. எனினும் நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு கூட்ட
நடவடிக்கைகளை முடித்துவிடுகிறேன். இதுகாறும் பேசியவர்கள் நம்மை
பிராமணர்கள் மத சம்மந்தமான விஷயங்களிலும் அரசியலிலும் சமுதாயத்
துறையிலும் ஏமாற்றி வருவதை அனுபவமாக எடுத்து நன்கு விளக்கினார்கள்.
அவர்கள் எடுத்துக் காட்டிய விஷயங்கள் குறித்து பலருக்கு பலவிதமான
அபிப்பிராயங்கள் தோன்றலாம்.சிலர் அவற்றை பிராமண துவேஷம் காரண
மானதென்றும் சொல்லுவார்கள்.மேலும் நம்மீது திருப்தியற்றவர்கள் இன்று
மகாநாடு கூடி நாலு மணி நேரம் பார்ப்பன தூஷணையில்தான் காலங்கழிக்
கப்பட்ட தென்றும் சொல்லுவார்கள். உண்மையைச் சொன்னால் துவேஷமும்,
தூஷணையுமாகத்தான் தோன்றும், நாம் நம்முடன் பிறந்த சகோதரர்களை:
வையக்கூடிய மூடர்களல்லோம்.உடன் பிறந்தானாயினும் அவனுடைய தீச்
செயல்களையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டி கண்டித்துத் திருத்துவது
சகோதர உரிமையின் முதற் கடஉமையன்றோ. கொஞ்ச காலத்திற்கு முன்
நாங்கள் சர்க்காரைக் குறை கூறித் திட்டியது கொஞ்சமல்ல. அது சர்க்கார்.
97
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மீதிருந்த துவேஷத்தினாலா? பிசகைக் கண்டித்து ஆக்ஷேபிக்க வேண்டியது
ஒவ்வொரு நகரவாசியின் கடமையாகும். சர்க்காரின் மீது விசேஷமாகப் பேசி
னவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அடக்கப்பட்டதேயன்றி தென்
னாட்டில் ராஜதுவேஷ குற்றங்கள் சாட்டப்பட்டவர்கள் வெகு சொற்பந்தான்.
பெரும்பாலும் சிறை சென்றவர்களெல்லாம் கள்ளுக்கடை மறியல் முதலான
வற்றை முன்னிட்டுத்தானிருக்கும். நம் மனதில் குற்றமென்று தோன்றுவதை
ஆகஷபித்துக் கண்டிப்பது குற்றம் செய்தவர்களுக்கு துஷணையாகவும்
துவேஷமாகவும் கொள்ளுதல் அறிவுடைமையன்று. பஞ்சாபில் சர்க்கார்.
செய்த உபத்திரவம் அவர்களை எவ்வளவு கண்டித்தாலும் அவர்கள் வாயை
மூடிக் கொண்டிருக்கச் செய்தது. இத்தனை நாளில்லாமல் பிராமணர்கள்
பேரில் இப்போது துவேஷத்திற்கும் தூஷணைக்கும் காரணமாக விருப்ப
தென்ன? நமக்குத் திடீரென்று துவேஷ உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதா? இது
யாராவது நம்பத் தக்கதாயிருக்கின்றதா? பிராமணர்கள் இருக்க வேண்டிய
நிலையைவமீறி வந்து நமது சுதந்திரத்திலும் தலையிட்டு நம்மை மேன்மேலும்
அமிழ்த்த முயலுவதனால்தான் நாம் அவர்களுடைய நிலையை யுணர்த்தி
நம் சுயமரியாதைக்கு வழி தேடிக்கொள்ள வேண்டுமென்கிறோம். பிராமண
ரல்லாத மக்களின் சுயமரியாதையைக் காத்துக்கொள்வதன் சம்பந்தமான
உணர்ச்சி எனக்கு பாலிய முதற் கொண்டேயுண்டு. பத்துப் பதினைந்து வரு
டங்களுக்கு முன்பிருந்தே நான் பிராமணரல்லாத கட்சியின் கொள்கையைப்
பின்பற்றி வந்திருக்கின்றேன். (கரகோஷம்) நம் பிராமணர்களை அவர்க
ளுடைய தீக்குணங்களுக்காகக் கண்டித்து வருவதைப் பட்சபாதமற்ற அன்னி
யரும் பெரியோரும் இவர்கள் சொல்வது போலத்தான், பிராமணர்களுமிருக்
கிறார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். அவர்கள் மரியாதையா
யிருக்கக்கூடிய துறையைக் கடந்து தாங்கள் உயர்ந்தவர்களென்றும் நாம்
தாழ்ந்தவர்களென்றும் சொல்லிக் கொள்வதுடனில்லாது, நமக்கு எஜமானர்.
களாயும் குருக்களாயும் ஆதிக்கமும் செலுத்த முற்பட்டதனால்தான்
இதுகாறும் விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த நம்மக்கள் இனி
இவர்களுடைய கொடுமையையும் ஆதிக்கத்தையும் அடக்கி ஒழிக்க உறுதி
செய்து கொண்டனர். இது இவர்களாகச் செய்து கொண்ட வினையின்
பயனேயன்றி வேறல்ல. (கேளுங்கள்! அவர்களை நாம் ஒன்றுக்கும் குறை
கூற முன்வரவில்லை. அவர்கள் இருக்க வேண்டிய நிலை கடந்துவிட்ட
தனால் தான் இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டது. இது எங்குபோய் முடியுமென்
பதைக் குறித்து எனக்கே பயமாகத்தானிருக்கிறது. இத்தகைய கிளர்ச்சி ஏற்பட
வேண்டுமா என்று கேட்கலாம். ஆம்! இத்தகைய கிளர்ச்சி அவசியமேயாகும்.
இக்கிளர்ச்சி ஒவ்வொர் யுகத்திலுமேற் பட்டுத்தானிருக்கிறது. கூடுமானால்
இரண்டொருவரை அடக்கிவிடலாம். தேச மக்களுள் பிராமணரல்லாத சமூகத்
திடை எங்கும் பரவி நிற்கும் இக்கிளர்ச்சியை அடக்க முடியுமென்பது ஒரு
போதும் சாத்தியமெனத் தோன்றவில்லை. அதற்கு என்ன காரணமென்று
குடி அரசு - 19970)
98
அவர்களும் யோசித்து சமரசமான முடிவுக்கு வந்தாலன்றி வேறுவகையில்
இக்கிளர்ச்சியை அடக்குவது சாத்தியமன்று. ஆயிரக்கணக்கான வருடங்க
ளாக மதத்தின்பெயராலும் பிறவழிகளிலும் மக்களை ஏமாற்றி வந்திருப்பதன்
சம்பந்தமாக அப்போதைக்கப்போது இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டு அத்தீமை
களை ஒழிக்க முயற்சி செய்யப் பட்டிருக்கின்றது. ராமாயண பாரத யுத்தங்கூட
பிராமணரல்லாதார் பிராமணர் சண்டை என்றே சொல்லப் போதிய ஆதார
மிருக்கின்றது. ராமன் முதலானோரை பிராமணராகவும் அரக்கர்களை
பிராமணரல்லாதாராகவும் கொண்டு ராமாயண யுத்தமும் இத்தகைய கிளர்ச்சி
யின் பயனானதென்று கருதுகின்றனர். ராமாயண பாரதக் கொடுமைகளின்
சம்பந்தமாக நமது அவமானங்களைக்கேட்க நாம் பணங்கொடுத்து
காலட்சேபங்களை நடாத்தச் சொல்லுகின்றோம். சிறிது காலத்திற்குள்ளேயே
இத்தகைய யோக்கியதைகளெல்லாம் வெளிப்பட்டு விடுமென்பதில்
சந்தேகமில்லை. அரசியலிலும் மற்றைத் துறைகளிலும் அவர்களுடைய
சூழ்ச்சிகளில் நாம் கீழ் நோக்கிப் போகின்றோம். இப்போது அத்தகைய
சூழ்ச்சிகளும் ஏமாற்றங்களும் வெளிப்பட்டு வருகின்றன. அவர்கள் வெளி
யில் பேசும் சமத்துவமும், சகோதரத்துவமும், ஜாதியில்லை குலமில்லை என்ற
சமரசக் கொள்கையும், வீட்டுக்குப் போனால் கட்டி தெருவாயிற் படியில்
வைக்கப்பட்டு விடுகிறதென்பது திண்ணம். அவர்களுக்கு பலவகைப்பட்ட
உணர்ச்சிகளும் வேடமும் உண்டு. அவர்கள் உண்மையில் சொல்வது ஒன்று,
செய்வது வேறு என்பது கடவுளுக்கும் தெரியும். பழக்க வழக்கங்களில்
இன்னும் மூடநம்பிக்கைகொண்டிருப்பது சரியல்ல.
அதனைக்
குறித்து எது
சரி எது தப்பு என்று நன்காராயவேண்டுவது ஒவ்வொருவருடைய கடமை
யுமாகும் . அபிப்பிராயங்களில் பேதமிருந்தால் இங்கேயே தைரியத்துடன்
வாதாடி முடிவு செய்து கொள்ளவேண்டும். நீங்கள் இங்கு கேட்ட விஷயங்
களை எல்லாம் இங்கிருக்கும் வரையில் சரி எனத் தலையை அசைத்து விட்டு
வீட்டுக்குச் சென்ற பின் மறந்து விடக்கூடாது. நாம் முக்கியமாகக் கஷ்டப்படு
வது சுயராஜ்யத்திற்காக வல்ல.
ஆனால் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள
வேயாம். சுயராஜ்யமென்பதன் உண்மை பொருளை இன்னும் எவரும் நன்
கறியவில்லை. சுயராஜ்யம் பார்சலில் வந்து சேருமா அன்றி நாமாக
வுண்டாக்கிக்கொள்வதாவென்று யாரும் இன்னும் வாஸ்தவத்தையறிந்து
கொள்ளவில்லை. சுயராஜ்யமின்ன தென்று மகாத்மா கூட இன்னும் சொல்
லாமல் அதற்கு யோக்கியமாகப் பிரயத்தனப்படுங்களென்று தான் சொல்லு
கின்றார். அத்தகைய சுயராஜ்யமென்னவென்றால் இன்று நீங்கள் இங்கு
நிறைவேற்றிய தீர்மானங்களைக் கொண்டு அநுசரித்தடையும் பலனேயாகும்.
(கரகோஷம் சுயராஜ்யமென்ற வார்த்தையைக் கொண்டு சாதித்துக் கொள்ளக்
கூடிய விஷயங்கள் நிர்மாணத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
தெரியாத விஷயத்தைக் குறித்துக் கூச்சலிடுவதினால் பயனில்லை. இதனால்
ஏமாற்றமும் கஷ்டமும் தான். ஆனால் சூழ்ச்சிக்காரர்கள் சட்டசபைக்குள்
நுழைந்து கொள்வதற்கும் வயிற்றுக்கில்லாதவர்கள் நாலு இரண்டு வாங்கி
99
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
கோடாரிக் காம்புகளாக வயிறு வளர்த்து சமூகத் துரோகம் செய்வதற்குத்தான்
வழியேற்படக்கூடும். உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையில்லை.
நாங்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்துழைத்தது அங்கு அப்போது
சுயமரியாதையைக் காத்துக் கொள்ளக்கூடிய தத்துவங்கள் பல அடங்கியதான
கொள்கையிருந்ததனால்தான். அக்காலத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு
உயர்ந்த உத்தியோகப் பதவிகள் சம்பாதிப்பதற்காகத் தானிருந்தது அப்போது
காங்கிரஸ்காரர்களைத் திண்ணையிலும் உட்காரவைப்பார் யாருமில்லாதிருந்
தனர். காங்கிரசை மகாத்மா கைப்பற்றி அதில் பல நிர்மாணத் திட்டங்களைச்
சேர்த்து வேலை செய்ய முற்பட்ட பின்தான் அக்காங்கிரசுக்கு மதிப்பும் செல்
வாக்கு மேற்பட்டது. அதன் கொள்கைகள் சமத்துவ பலனளிக்கும் தத்துவ
முடைய தாயிருந்தமையினால் தான் நாங்களெல்லோரும் அக்காங்கிரசில்
சேர்ந்துழைக்கச் சென்றோம். திடீரென்று அதன் போக்கில் வேறுபட்டு
மகாத்மா காந்தியின் கொள்கைகள் ஒவ்வொன்றும் கை நழுவ விடப்பட்ட
தனால் தான் நாங்களும் அதனை விட்டுப்பிரிந்து சுயமரியாதையை காத்து
சமத்துவமான தத்துவத்திற்காகப் பாடுபடும் இச்சங்கத்தில் சேர்ந்துழைக்க
முன்வந்துள்ளோம். (கரகோஷம் தற்போதுள்ள காங்கிரசினால் நாட்டுக்கு
ஆபத்தேற்படுமென்பது உறுதி. நாம் நிறைவேற்றும் கொள்கையை மீண்டும்
காங்கிரஸ் மேற்கொண்டு வேலை செய்ய முற்படுமாயின் பின்னும் நாங்கள
னைவரும் அக் காங்கிரசிலேயே சேர்ந்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.
காங்கிரசை தேசிய சபையென்றும் அதனை முன்னிட்டு அதில் எவ்வளவு
குற்றமிருந்தாலும் அதனைக் குறை கூறுவது கூடாதென்பதும் முற்றுந் தவறு.
புரட்டும், பித்தலாட்டத்தையும்
வெளிப்படுத்தி அது காங்கிரசாயினும்
மற்றெந்த சபையாயினும் அதனைக் கண்டிக்க வேண்டியதே உண்மை
தேசாபிமானிகள் கடமை. காங்கிரஸ் சபையோ அன்றி மற்றெந்த சங்கமோ
மக்களின் நன்மையை உத்தேசித்தே ஏற்படுத்தப்பட்டதேயன்றி வேறல்ல.
ஒரு தீர்த்தத்தின் நீர்கெட்டு கிருமிகள் மிகுந்து அதில் குளித்தால் நோயுண்
டாகுமென்று தெரிந்துகொண்டும், ஸ்தல புராணத்துக்குப் பயந்து அக்குளத்து
நீரில் குளிப்பது கூடாது. (நகைப்பு) அதனை உடனே மண்ணைப்போட்டு
மூடி விட்டு வேறு தீர்த்தமொன்றை வெட்டிக் கொள்ள வேண்டும் கரகோ
ஷம்). அதுபோலவே யோக்கிய மாயிருந்தால் காங்கிரசை மதிக்க வேண்டியது
தான்.
இல்லாவிட்டால் அதனை ஒழிக்க வேண்டியதுதான் முறைமை.
(கேளுங்கள்). ஒத்துழையாமை கைக் கொள்ளப்பட்டு நிர்மாணத் திட்டங்கள்
பல ஊக்கத்துடன் அநுசரிக்கப்பட்டன. ஆனால் பின்னர் அத்தகைய
நிர்மாணத் திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டன.
காங்கிரசினால்தான் நமது தேசத்தில் இவ்வளவு கஷ்டங்களும்
துவேஷமும் கூச்சலும் குழப்பமும் மேற்பட்டதென்பது தான் உண்மையான
அபிப்பிராயம். மேலும் நம் தேசம் இக்கதியடைந்ததற்கும் பிராமண, பிராம
ணரல்லாதார் சச்சரவுக்கும் இத்தகைய காங்கிரஸ்தான் காரணமானது. முப்பத்
குடி அரசு
- 19270)
100
தாறு வருடங்களாக காங்கிரஸ் செய்ததை ஒழிக்கத்தான் மகாத்மா காந்தி
பகிஷ்கார திட்டத்தைப் புகுத்தினார். சர்க்கார் பேரில் குற்றம் சொல்லும்
விஷயங்களில் எல்லாம் இக்காங்கிரசுக்கும் பங்குண்டு. நடு நிலைமையில்
நேர்மையாக ஆலோசிக்குமிடத்து காங்கிரசினால் ஏற்பட்டுள்ள பல
கஷ்டங்களும் ஒருவருக்கும் நன்கு புலனாகாமல் போகாது. காங்கிரசுக்கு
முன் கட்சிப்பிரதி கட்சி சச்சரவுகளும் துவேஷமும் இவ்வளவாக விருக்க
வில்லை. காங்கிரசின் உழைப்பின் பலனாகத்தான்
அதிக உத்தியோகங்களும்.
அதற்கேற்ற வரியுமேற்பட்டது. நாற்பது வருடங்களுக்கு முன் போலீஸில்
சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும், தாலூகாவில் தாசில்தாருக்கும் மேலில்லை.
அப்போது அவர்களுக்கு சம்பளம் முறையே ரூபாய் 200ம் 150 ந்தான்.
அவ்வாறிருந்தும் அவர்களுக்குச் சட்ட மெம்பருக்குள்ள அதிகாரத்தைவிட
நூறு மடங்கு அதிகாரமிருந்தது. இக்காலத்திலோ கலெக்டரின் குசினிக்கார
னுக்கு மனங்கோணும்படி தாசில்தார் ஏதாவது செய்தாலும் அவர் தலையில்
கை வைக்கப் பட்டு விடும் நிலைமைக்கு வந்துவிட்டது. (நகைப்பு) அந்தக்
காலத்தில் அவர்களெல்லாம் சுயமதிப்புடனும் கெளரவத்துடனும் நடந்து
கொண்டார்கள். அக்காலத்தில் உத்தியோகத்திற்கிருந்த கெளரவத்திற்கேற்ற
கண்யவானுக்குத்தான் அவ்வுத்தியோகமும் கொடுக்கப்படும். மேலதிகாரி
களுக்கும் அவர்களிடம் போதிய மதிப்பும் கெளரவமுமிருந்து வந்தது. காங்கி
ரஸ் ஏற்பட்டதன் பின் உத்தியோகத்திற்கு யோக்கியதையே வேறாகிவிட்டது
(கேளுங்கள். அவ்வுத்தியோகங்கள் ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான்
கொடுக்கப்பட்டு வந்ததால் பெரிய மனிதர்களும் யோக்கியப் பொறுப்பு
டையவர்களும் பின் தள்ளப்பட்டு விட்டனர். இதனால் பிச்சை எடுத்தவனும்
லாந்தர் விளக்கில் படித்தவனும் பஞ்சாங்கக் கட்டுக்காரன் மகனும் ஆதிக்கம்
செலுத்த வந்து விட்டனர். இதன் பலனாய் உத்தியோகங்களின் மதிப்பும்
கெளரவமும் இழிநிலையை யடைந்துவிட்டது. மேலும் இழிந்த நிலையிருந்
தவர்களும் கண்டபடி இவ்வுத்தியோகங்களுக்கு வந்துவிட்டனர். அரசாங்கத்
திற்கு உத்தியோகஸ்தர்கள்தான் முக்கியம். இதன் சம்பந்தமாக கண்யமும்
மதிப்பும்
போய் அவ்வுத்தியோகத்தின் நிலையே அடியோடு திரும்பி.
விட்டது. காங்கிரசுக்குப்பின் தான் ஓட்டுச் சுதந்திரமும் விரிவாக்கப்பட்டது.
மேலும் பிரதிநிதித்துவத் திலும்
தொகை அதிகமாக்கப்பட்டது. அக்காலத்தில்
சட்டசபையில் மூன்று பிரதிநிதிகளிருந்தனர். அவர்களும் கூடுமான வரை:
யில் நல்ல வேலை செய்து வந்திருக்கின்றனர். காங்கிரஸ் ஏற்பட்டு ஓட்டுரி
மையைக் கண்டபடி உபயோகிக்கப்பட்டது. யாருக்காவது ஓட்டுக்கேட்டு
வாங்கிக்கொடுக்கப் படுகிறதேயொழிய வாங்கிக் கொடுக்கப்படுபவரின்
யோக்கியதை என்னவென்ற கவலையே கிடையாது. நமது ஓட்டுரிமைகளை'
உண்மைப் பிரதிநிதித்துவத்திற்கு உபயோகப்படுத்தும் முறைகளில் நாம்
கவனம் செலுத்துவதேயில்லை. தேர்தல் வியாபாரத்தின் போக்கையும்
ஓட்டுக்கொடுக்கும் ஊழல்களும் எவ்வளவு கேவலமாகிவிட்டதென்பதை
நான் விளக்க வேண்டுவதேயில்லை. இப்போதே இவ்வாறிருக்கையில்
101
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
அதைவிட பெரிய சுதந்திரம் வந்து என்ன பயன். அப்போது மூன்று ஜில்லா
வுக்கு ஒரு மெம்பராக விருந்தது, இப்போது ஒரு ஜில்லாவுக்கு மூன்று மெம்ப
ராகிவிட்டது. அப்போது மூன்று ஜில்லாவுக்கு எழுநூறு ஓட்டர்களென்றால்
இப்போது ஒரு ஜில்லாவுக்கு ஏழாயிரம் ஓட்டர்களுமாக்கப்பட்டுவிட்டது.
மேலும் ஓட்டர்களை ஒரு அணாவுக்கும் ஒரு சொப்பு காப்பிக்கும் ஓட்டுச்
செய்யும் தன்மைக்கும் கொண்டுவரப்பட்டது. எல்லோருக்கும் ஓட்டுரிமை
இருக்கவேண்டுமென்பது மேலான காரியந்தான். ஆனால் ஓட்டுரிமையின்
மேன்மையையும்
அதன் தத்துவத்தையுமுணறாமல் ஒரு சொப்பு கள்ளுக்கும்
ஓட்டுக்கொடுத்து விடுபவர்களுக்கும் இவ்வுரிமையளிக்கப்படுவதனால்
பயன் யாது? (தொடரும்)
- (திராவிடன்.
குறிப்பு
பதிருவண்ணாமலையில் 6227 @6 நடைபெற்ற தென்னிந்திய
நல உரிமைச் சங்க மாநாட்டில் தலைமையுரையின் முடிவுரையாக ஆற்றிய
சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 13.02.1927
குடி அரசு
- 19270)
102
ஸ்முஸ் திருநாள்
பிப்ரவரி மீ” 26 தேதி சனிக்கிழமையை ஜஸ்டிஸ் 10 வது வருஷ
நாளாகக் கொண்டாடும்படி தலைவர் பணகால் ராஜா அவர்கள் பார்ப்பன
ரல்லாத மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக ஒவ்
வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அந் நாளைக் கொண்டாட
வேண்டியவிதம் என்னவென்றால் ஜஸ்டிஸ், திராவிடன், குடி அரசு பத்திரி
கைகளுக்கு சந்தாதாரர்களை சேர்ப்பது தான். வாலிபர்கள் ஒவ்வொருவரும்
கண்டிப்பாய் அன்றைய தினம் ஏதாவது ஒரு புது சந்தாதாரரையாவது சேர்த்து
விட்டுத்தான் சாப்பிடுவதாக விரதமெடுத்துக் கொள்ள வேண்டும். ஜஸ்டிஸ்
பத்திரிகையில் ராய்ட்டர் அசோசியேட் பிரஸ், பிரீ பிரஸ் ஆகிய தந்தி நிரூபங்
கள் மாதம் 1-க்கு 1000 ரூபாய்க்கு மேற்பட்ட சிலவில் வாங்கி சென்ற மாதம்
முதல் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. திராவிடனுக்கும் அசோசியேட்
பிரஸ்:
நிரூபங்கள் வாங்கி பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, பிப்ரவரி மீ”
26- தேதியை இவற்றிற்கு சந்தா சேர்க்கும் தினமாக கொண்டாட வேணுமாய்
பார்ப்பனரல்லாத வாலிபர்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - தலையங்கம் - 20.02.1927
103
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
புதுக்கோட்டை முஸ்லீம் மகாநா௫
சமஸ்தான முஸ்லீம் பிரஜைகளின் முதலாவது மகாநாட்டில் சைபுல்
இஸ்லாம் பத்திரிகை ஆசிரியரான மெளலானா மெளலி அஹமது சயிது
சாஹிப் அவர்கள் 15.2.27ல் அக்கிராசனம் வகித்து நிகழ்த்திய அக்கிராசனப்
பிரசங்கம் மிகவும் நீண்டதாகையால் நமது பத்திரிகையில் முழுதும் பிரசுரிக்க
முடியாததற்கு மிக வருந்துகிறோம். நாமறிந்த வரையில் மெளலானா அவர்
கள் நமது நாட்டுப் பெரும்பான்மையான அரசியல்வாதிகளைப் போல்
கீர்த்திக்கும், பெருமைக்கும், சுயநலத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் ஆசை
பட்டுக் கொண்டு தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டும், உள்ளொன்றும்
புறமொன்றும் ஆகப் பேசியும், எழுதியும் காலங் கழிப்பவரல்ல. சரியோ,
தப்போ தனது மனதிற்குட்பட்டதை ஒளிக்காமல் சொல்லும் சுபாவம் கொண்ட
வர். அவர் தனது அக்கிராசன பிரசங்கத்தில் கூறியிருக்கும் ஒற்றுமை, கதர்.
முதலிய சில முக்கிய விஷயங்களை மாத்திரம் பின்னால் குறிப்பிடுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.02.1927.
குடி அரசு
- 19270)
104
இண்ணமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை
ஆதரிக்கிறீர்கன்
நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களது விஷங்களை பெரும்பாலும்
பார்ப்பனப் பத்திரிகைகள் மூலமாகவே கக்கி பார்ப்பனரல்லாத மக்கள்
அதுகளைப் படிப்பதாலேயே அவ்விஷம் ரத்தத்தில் ஊரிப் போகின்றது.
இதை பல தடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். இப்பொழு
தும் நமது பார்ப்பனர்களின் பிழைப்புக்கான சகல ஆயுதங்களும் அதாவது
தேசத்தின் பேரால் காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்னும் ஆயுதமும் மதத்தின்
பேரால் மோக்ஷம் என்னும் ஆயுதமும் ஏறக்குறைய அடியோடு மழுங்கிப்
போய் வருகிறதென்றே சொல்லலாம். காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்பதன்
மூலம் அல்லாது வயிறு வளர்க்க மார்க்கமில்லாத சில வயிற்றுச் சோற்று
கூலிகள் தவிர மற்றவர்கள் இதை மதித்திருந்த காலம் மலையேரிப் போய்
விட்டது.அது போலவே - மதத்தின் பேரால் அல்லது வாழ முடியாத - வெளி
யில் தலைகாட்ட முடியாத- சில பாஷாண்டிகள் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்.
மூலம் அடையும் மோட்சத்தை மதிக்கும் காலமும் மலையேறிப் போய்
விட்டது. ஆகவே இது சமயம் நமது பார்ப்பனர்களுக்கு மிஞ்சி இருப்பது
அவர்கள் பத்திரிகை விஷமப்பிரசாரந்தான். அதன் மூலம் அவர்கள் பிரசாரம்.
செய்யும் யோக்கியதையை இரண்டொரு உதாரணத்தால் எடுத்துக்
காட்டுவோம்.
சென்ற வாரம் திருவண்ணாமலையில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி
நாயக்கர் முதலானவர்கள் பேசியதை பொதுஜனங்கள் ஆதரிக்கவில்லை
என்றும் ஏதோ ஒரு சில ஆசாமிகள் மாத்திரம் தான் கேட்டதாகவும் வாத்திய
மில்லாமலும் போலீஸ்காரர்கள் பந்தோபஸ்துடனும் வீடு சென்றதாகவும்
அதே சமயத்தில் இதற்கு எதிரிடையாய் கூட்டப்பட்ட கூட்டத்தில் பெருந்
திரளான ஜனங்கள் வந்திருந்ததாகவும் அதில் நாயக்கர் முதலானவர்கள் பதில்
சொல்ல முடியாத அநேக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் நாயக்கர்வாயை
மூடிக் கொண்டு போய் விட்டதாகவும் இன்னும் சில பொய்யுரைகள்
முன்னுக்குப் பின் சம்மந்தமில்லாமல் உளரிக் கொட்டிவிட்டு கடைசியாக
எழுதியிருப்பது என்னவென்றால் “ஞாயிற்றுக்கிழமை நடத்திய திராவிட
கூட்டத்தில் சுயநலக்காரரான நாயக்கர் முதலானவர்கள் கக்கிய விஷப்புகை
105
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
திருவண்ணாமலை நகர முழுதும் பரவி எங்கும் பிராமணத்துவேஷம்,
பிராமணத்தூற்றல் தேசீய பத்திரிகை வெறுப்பு, காங்கிரஸ் மீது குறை கூறல்,
சுயராஜ்ஜிய ககஷியை வைதல் காங்கிரஸ் திட்டங்களை பரிகாசம் செய்தல்,
ஆலயம் செல்லல் வீண் சிலவெனல், கடவுளுக்கும் திராவிடருக்கும்
இடையில் பார்ப்பனத் தரகர் வேண்டாம் எனல், அந்த மூட வழக்கத்தை
ஒழிக்க வேண்டுமெனல், கண்ட கண்ட விடங்களில் பார்ப்பனரைப் பரிகசித்
தல், காங்கிரசை விட்டு திராவிடக் கூட்டத்தில் சேரவேண்டுமெனல் ஆகிய
இதுபோன்ற விஷயங்களே நகர முழுதும் சீறி நிற்கின்றன” என்று தனது
நிரூபர் பேரால் 11. 2. 27 தேதி தமிழ் சுயராஜ்ஜியா பத்திரிகையில் குறிப்பிட்
டிருப்பதாக ஒரு நண்பர் நமக்கு அனுப்பியிருக்கிறார். இது முன்னுக்குப் பின்
எவ்வளவு முரணானதும் அயோக்கியத்தனமானதுமான பிரசாரம் என்பதை
நேயர்கள் கவனிக்க வேண்டும்.
நாம் பேசிய கூட்டத்தில் யாரும்
இல்லையென்றும் ஏதோ காங்கிரஸ் விரோதிகள் சிலபேர் இருந்தார்கள்
என்றும் அதுவும் போலீஸ் பந்தோபஸ்துடன் நடந்தது என்றும் வாத்தியங்கள்.
கூட இல்லாமல் வீட்டிற்கு போனதாகவும் எழுதிவிட்டு தாங்கள் போட்ட
கூட்டத்தில் ஏராளமான ஜனங்கள் வந்திருந்ததாகவும் எழுதி இருக்கிறது.
அப்படியானால் அவ்வளவு “ரகசியத்தில் கக்கிய விஷப்புகை” ஊர்:
முழுவதும் எப்படி பரவி மேல்கண்ட பலன்கள் ஏற்பட்டிருக்கும்? என்பதை.
வாசகர்கள் தான் உணரவேண்டும். இதுதவிர சுதேசமித்திரனோ “ நாயக்கர்.
தனது வாய் வலிக்குமட்டும் இரண்டரை மணிநேரம் 3 மணி நேரம் 5 மணி
நேரம் பார்ப்பனர்களையும் புரோகிதர்களையும் வைதுப் பேசினார்” என்று
எழுதுகிறதே அல்லாமல் என்ன பேசினார் என்பதை இச்சந்தர்ப்பங்களில்
குறிப்பிடுகிறதேயில்லை. இன்னும் இதுபோல் மீட்டிங் போட்டதாகவும்
கூட்டம் கூடினதாகவும் என்ன என்னமோ பேசினதாகவும் எழுதிவிடுகிறது.
இதைப்பற்றி எத்தனையோ தடவை எழுதியிருக்கிறோம். பேசியும் இருக்
கிறோம். கொஞ்சமாவது மானம் வெட்கம், சுத்த ரத்த ஓட்டம் முதலியதுகள்.
இருக்குமானால் இனியும் 10 தலைமுறைக்கு இந்தக் கூட்டம் இவ்வித
இழிவான காரியங்களில் தலையிடவே தலையிடாது. அப்படிக்கு இல்லாமல்
“தாயாரை பெண்டாட்டி ஆக்கிக் கொண்டாலும் நாள் வந்து தானே சாக
வேண்டும்” என்கிற தூர்த்த வாக்கியத்தை தனக்கு ஆதரவாய் வைத்துக்
கொண்டு நாம் என்னதான் எழுதினாலும் நம்மை யார் என்ன செய்யக்கூடும்.
என்கிற தைரியத்தில் எல்லாவற்றையும் மறந்து இதே வேலையில்
ஈடுபட்டிருக்கிறதுகள்.
இவைகளுக்கு இனி நாம் மறுப்பு எழுதுவதாலோ அல்லது கண்டிப்
பதாலோ ஒருக்காலும் புத்தி வரும்படி செய்யமுடியவே முடியாது. மான
முள்ள ஆயிரம் பேரையும் ஒருவன் எதிர்த்து போர் புரிய முடியும். மான
மில்லாத ஒருவனை வெல்ல ஆயிரம் பேராலும் ஆகாது என்கிற முதுமொழிப்
படி மானம், ஈனம், தைரியமற்ற கூட்டத்தை நாம் எப்படி சமாளிக்க முடியும்
குடி அரசு
- 19270)
106
என்று பார்ப்போமேயானால் அம்மாதிரிப் பத்திரிகைகளை பார்க்காமலி
ருப்பதனால்தானே ஒழியும். மற்றபடி இதற்கு வேறு மார்க்கம் இல்லை
என்றுதான் நாம் சொல்லுவோம். இதையே பல தடவைகள் சொல்லி
யுமிருக்கின்றோம். அநேக ஜனங்கள் அப்பத்திரிகைகளுக்கு புத்தி வரும்படி
செய்வதற்காக அதைப் பஹிஷ்கரித்திருப்பதாய் நமக்கு எழுதியும் வருகிறார்
கள்.
ஆனபோதிலும் அது தகுந்த பலனை அளிக்கவில்லை என்றே
தோன்றுகிறது. ஆதலால் இனியாவது இவ்வித பத்திரிகைகளை ஆதரிப்பதன்
மூலம் நமது சமூகத்திற்கு கேடு வருவித்துக் கொள்ள கூடாது என்பதை
தெரிவித்துக் கொள்வதோடு இவ்விதப் புரட்டுகளையும் விஷமப் பிரசாரத்
தையும்
ஒழித்து மக்களுக்கு உண்மையை விளக்கி சுயமரியாதையை
உண்டாக்கவென்றே பாடுபட்டு வரும் “திராவிடனையே” ஒவ்வொரு
தமிழ்மக்களும் அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று வேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.02.1927
107
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
சொங்கயைட்மூல
கதர்ச் சாலை திறப்பு விழா
காங்கிரசின் பெயராலும், சுயராஜ்யமென்னும் பதத்தின் பெயராலும்
மக்களை ஏய்த்து பல அக்கிரமங்கள் செய்யப்படுகிறது. சுயராஜ்யமின்ன
தென்று மகாத்மா காந்தியும் இன்னும் சொல்லாமல் அதனை அடைவதற்குத்
தகுதியாகுங்கள் என்றுதான் சொல்லுகின்றார். மதுரையில் நிறைவேற்றப்பட்ட
நிர்மாணத் திட்டங்களை நம் பிராமணரல்லாத மக்கள் கைக்கொண்டு மனப்
பூர்வமாகப் பாடுபடுவார்களாயின், சுயராஜ்யம் தானாகவே தேடிக்கொண்டு
வந்துவிடும். நாம் சுயராஜ்யமடையக் கருதுவதற்கு முன் சுயமரியாதையை
நிலை நிறுத்த வேண்டுவது முதற்கடமை. சுயமரியாதையில்லாத சுயராஜ்யம்
வந்தும் பயனில்லை. இச்சுயமரியாதையை அடைவதற்கு பாமர மக்களுக்
குள் போதிய பிரசாரம் செய்ய வேண்டும். இதற்கு “ஜஸ்டிஸ்”, “திராவிடன்”
பத்திரிகைகளின் உழைப்பு அத்தியாவசியம். அப்பத்திரிகைகளின் வளர்ச்சி
பிராமணரல்லாத சமூகத்தின் கதிமோட்சத்திற்கான வளர்ச்சி என்பதை மறக்
கக் கூடாது. பிராமணரல்லாத சங்கமென்னும் பெயர் துவேஷம் காரணமெனச்
சொல்லப்பட்ட போதிலும் சரி, அதற்குக் காரணமானவர்கள் அவர்கள்தான்.
அதில் துவேஷமெங்கிருக்கின்றதென விளங்கவில்லை. நமது சுயமரியா
தைக்காக நாம்பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா? கொசுக்
கள் கடிக்காமல் கொசுவலை போட்டுக்கொள்வது கொசுவின் மீது துவேஷ
மாகுமா? திருடன் வருவதற்குத் தடையாக நம் வீட்டுக் கதவை அடைத்து
வைத்தால் திருடன் மனம் வருந்தி பட்டினி கிடக்கவும் நேருமே என்று யாரா
வது கதவைத் திறந்து வைப்பார்களா? நாம் கதவை மூடி வைத்தால் நாம்
ஜாக்கிரதையாயிருப்பதையறிந்து அத்திருடனும் திருத்திக்கொள்ள
முயல்வான். அதுபோன்றே நாம் இனி நமது சுயமரியாதையைக் காத்துக்
கொள்வதற்கான முயற்சிகள் செய்து பிராமணீய ஆதிக்கத்தை ஒழிக்க முயல
வேண்டும். பிராமண பிராமணரல்லாதார் வித்தியாசமும் இம்மாதிரி போராட்ட
மும் பண்டைக் கால முதற்கொண்டே நடந்து வந்திருக்கின்றது. இராமாய
ணம், பாரதம் யுத்தங்களிலும் இப்பேர் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேதங்க
ளில் பிராமணர்கள் பிராமணரல்லாத மக்களைத் தங்களுக்கு அடிமையாக்கி
வைக்கும்படியும் அவர்களை ஒழித்துவிடும்படிக்கும் இந்திரன் முதலான
தெய்வங்களைப் பிரார்த்திப்பது தவிர வேறில்லை. இதனால்தான் வேதத்தை
பிராமணரல்லாதார் படிக்கக் கூடாதென்று சூதும் வாதும் செய்தனர். புத்தர்.
குடி அரசு
- 19270)
108
காலத்திலும் பிராமணர்களின் அநீதியை ஒழித்துச் சமத்துவத்தை நிலை
நாட்டுவதற்கான முயற்சி செய்யப்பட்டு, புத்தமதம் பிரசாரம் செய்யப்பட்டது.
பிராமணர்கள், பண்டைக்கால முதற்கொண்டே பல சூழ்ச்சிகள் செய்து
வருகின்றனர். ராமர் ஆட்சியில் பிராமணரல்லாத வாலிபன் ஒருவர் வேதம்
படித்து தபசுசெய்து வந்ததால் பிராமணச் சிறுவன் ஒருவர் இறந்துவிட்டதாகச்
சொல்லி அப்பிராமணரல்லாத சிறுவனைக் கொன்ற பின்பு பிராமணச் சிறுவன்
பிழைத்துக் கொண்டதாக இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
இத்தகைய மானக் கேடான விஷயங்களைக் கேட்கத்தான் நம் மக்கள் பெரும்.
பொருள் செலவு செய்கின்றனர். நாம் நமது சுயமரியாதையை காத்துக்
கொண்டு நம் மக்களின் அபிவிருத்திக்காக பாடுபடுவோமானால் அது
அவர்களுக்கு துவேஷமாகத் தான் இருக்கும். சுயமரியாதையைக் காத்துக்
கொள்ளும் விஷயங்களில் பழைய மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கும்
பெரியவர்கள் சற்று தயங்கியபோதிலும் கூட நமது வாலிபர்கள் தான் ஒரே
உறுதியுடன் நிற்க வேண்டும். பெரியவர்களும் அவர்களுக்கு தேவை யான
உதவி புரியவேண்டும். சர்க்கார் வரியைவிட பிராமணர்களின் வரி அளவில்
லாமலும் கேள்வி முறை இல்லாமலும் பல தலைமுறையாய்ப் போய்க்
கொண்டிருக்கின்றது. கோவில்களின் இழிவான நிலைமைகளைச் சீர்திருத்தி
அவற்றின் வருமானங்களைக் குறித்தும் செலவுகளைக் குறித்தும் கணக்கு
வைக்கச் செய்வதன் பொருட்டு நமது தலைவர் பனகால் அரசர் தேவஸ்தானச்
சட்டம் இயற்றியபோது பிராமணர்கள் மதத்திற்கே மோசம் வந்து விட்டதாயும்,
மத விஷயங்களிலும் சர்க்காரின் ஆதிக்கத்தைப் புகுத்து வதாயும் கூச்ச
லிட்டனர். கடவுளுக்கு இடும் நாமம் வடகலையென்றும் தென்கலையென்றும்
மதம் பிடித்து சச்சரவிட்டுக்கொண்டு அதனைத் தீர்ப்புச் செய்வதற்கு
சர்க்காரின் உதவியை நாடி வெள்ளைக்காரர்களின் தீர்மானப்படி செய்வது
மாத்திரம் சர்க்கார் தலையிட்டதாக வில்லையா? மற்றும் ஜீயர் கொடி பிடிப்பது
முதலானவற்றிலும் சர்க்கார் தலையிட்டு தீர்ப்புச்சொல்ல கேட்க வில்லையா?
கணக்கு வைத்தால் தாங்கள் மோசம் செய்வதற்கு இடமில்லையே என்ற
ஏக்கத்தால் கூச்சலிடுவதை உலகத்தார் நன்குணர்ந்து கொண்டனர். மேலும்
இச்சட்டத்தால் இந்து மதத்திற்கு மோசம் வந்துவிட்டதெனக் கூச்சலிடும் இந்த
ஜில்லா பிரதிநிதியான ஆச்சாரியாரும் எந்தத் தொகுதியின் பெயரால் நின்றார்.
மகமதியரல்லாத தொகுதியின் பெயராலல்லவா? சர்க்காரால் இந்து மதத்திற்கு
என்று பிரதிநிதித்துவமளிக்கப்பட்டிருக்கின்றதா?
மகமதிய கிறிஸ்துவ
மதங்களுக்குப் பிரதிநிதித்துவமிருப்பது போல இந்து மதத்திற்கில்லாததைக்
குறித்து இப்புலிகள் இதுவரையில் வாயையாவது திறந்திருக்கின்றனரா
எனக்கூறி, முடிவில் மதுரை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை
அனுசரித்து சுயமரியாதையை நிலைநாட்டி நிர்மாணத் திட்டத்தின் கீழ்
செவ்வனே வேலை நடத்தவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு: செங்கல்பட்டில் 12.02.1927 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்க
திறப்பு விழாவில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 20.02.1927.
109
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மந்திரி சபை
தற்கால மந்திரி கட்சி அரசியல் ரீதியில் ஒன்றும் பயனுள்ளதாய் இல்லா
விட்டாலும் செய்யவும் முடியாது என்பதாகவே வைத்துக் கொண்டாலும்,
சமூக சம்மந்தமாகவாவது ஏதாவது பிரயோஜனமுண்டா என்பதாக பார்த்தால்
அதிலும் பார்ப்பனரல்லாதாருக்கு நமக்கு ஒரு பிரயோஜனமில்லாததோடு
எதிர்க்கட்சியார் சொல்லுகிறபடி அதாவது ஸ்ரீமான் சுப்பராயன், சி. இராஜ
கோபாலாச்சாரியாரும், எஸ். சீனிவாசய்யங்காரும் சொல்லுகிறபடியும்,
ஸ்ரீமான் ஏ.ரங்கநாத முதலியார், சர்.சி.பி. இராமசாமி அய்யரும், பெசண்டம்
மையும் சொல்லுகிறபடியும், ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியார், சர்க்காரும்
மற்றும் மேற்கண்ட ஆசாமிகளும் சொல்லுகிறபடியும் ஆடுகிறவர்களேயல்
லாமல் வேறென்ன? எத்தனைக்கெத்தனை இந்த மந்திரிகளை நிலைக்க
வைத்திருக்கிறோமோ அத்தனைக்கத்தனை பார்ப்பன ஆதிக்கத்தைப்
பலப்படுத்திக்கொள்ளவும் நமது பார்ப்பனரல்லாதார் இதுவரை செய்து
கொண்டிருந்ததையும் கெடுத்துக்கொள்ளவுமே உதவுமேயல்லாமல் மற்றபடி
யாதொரு நன்மையும் உண்டாகாது. இம் மாதிரியாகப் பார்ப்பனர்கள் சொற்படி
ஆடும் மந்திரிகளை வைத்துக் கொண்டிருப்பது பார்ப்பனரல்லாத சமூகத்
திற்கே பெரிய அவமானமாகும். அதுமாத்திரமல்லாமல் 47 அங்கத்தினரைக்
கொண்டதாக உள்ள ஒரு கட்சியானது தேசத்தின் பெயரைச் சொல்லிக்
கொண்டு சட்டசபையிலிருந்துகொண்டு 15 பேரைக் கொண்ட கட்சியானது
மந்திரிசபை அமைத்து வாழ்ந்துவர விட்டுக் கொண்டிருப்பது புரட்டா
அல்லவா? அரசியல் கொள்கைப்படி பார்த்தால் சுயராஜ்யக் கட்சிக்கு கொஞ்ச
மாவது மானம், வெட்கம், யோக்கியப் பொறுப்பு இருந்திருக்குமானால் இம்
மந்திரிசபை அரை நாழிகை கூட நிலைத்திருக்க முடியவே முடியாது. அவர்:
கள் தங்கள் சுயநலத்திற்காக திருட்டுத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும்
உதவி செய்து வருவதாக வைத்துக்கொண்டாலும் என்ன கொள்கையின்
பேரில் ஜஸ்டிஸ் கட்சி வாய் மூடிக்கொண்டிருக்கிறது என்பது நமக்கு விளங்க
வில்லை.
மதுரை மகாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் விளம்பரம்
செய்தபடி ஏன் இன்னமும் மந்திரி கட்சியை உடைக்கப் பிரயத்தனப்பட
வில்லை? ஒரு சமயம் காங்கிரசில் சுயராஜ்யக் கட்சி பிரமுகர்களில் ஒருவ
ரான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் இந்த மந்திரி கட்சியை உடைப்பதாய்ச்
சொல்லியபடி உடைத்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் என்பதாக
சொல்லவருவார்களேயானாலும் அது கொஞ்சமும் ஒப்புக் கொள்ளக்கூடிய
குடி அரசு
- 19270)
10
சமாதானமல்ல. ஏனெனில் சுயராஜ்ஜியக் கட்சியார் நாணயமுள்ளவர்கள்'
அல்ல என்பதும், சொல்லுகிறபடி நடக்கும் வழக்கமில்லாதவர்கள் என்பதும்
உலகமறிந்த விஷயம். அப்படியிருக்க அவர்களை எதிர்ப்பார்ப்பதாகச்
சொல்லுவது சரியான சமாதானம் ஆகாது. தவிரவும், சுயராஜ்ஜியக் கட்சியார்
தான் இரட்டை ஆட்சியை ஒழிப்பதாய் சொல்லுகிறவர்கள், முட்டுக் கட்டை
போடுகிறவர்கள், உடைப்பதாய் சொல்லி ஓட்டுப் பெற்றவர்கள். ஆதலால்
அவர்கள்தான் உடைக்கக் கட்டுப்பட்டவர்கள். நாங்கள் இரட்டை ஆட்சியை
நடத்தி வைத்து மேற்கொண்டு சில திருத்தம் கேட்கிறவர்கள் என்று சொல்லித்
தப்பித்துக் கொள்ளப் பார்த்தால் அதுவும் ஒப்புக் கொள்ளக்கூடிய சமாதா
னமல்ல. எப்படி யென்றால், ஜஸ்டிஸ் கட்சியார் அரசாங்கத்தையே
எதிர்ப்ப
தாகச் சொன்னவர்கள் மந்திரியை ஆதரிப்பது என்பது யோக்கியமான
காரியமாகாது. அல்லாமலும் சுயராஜ்ஜியக் கட்சியார் ஜனங்களை ஏமாற்றி
ஓட்டுப்பெற இப்படிச் சொன்னார்களே தவிர உண்மையாய் சொன்னவர்கள்
அல்ல என்பது ஜஸ்டிஸ் கட்சியாருக்கே தெரியும். ஆதலால் அந்தச்
சமாதானமும் சரியாகாது. தவிர, ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யர் பம்பாயில்
பேசிய போது ஜஸ்டிஸ் கட்சியார் வந்துவிடுவார்களே எனப் பயந்து இந்த
மந்திரி சபைக்கு தேசத்தில் ஆதரவில்லாவிட்டாலும் நாங்கள் ஆதரிக்
கிறோம் என்று சொன்ன பிறகு ஜஸ்டிஸ் கட்சியார் இம் மந்திரிசிபையை
வைத்துக் கொண்டிருப்பது பெரிய அரசியல் வெட்கக் கேடென்றே சொல்லு
வோம்.இம்மந்திரி சபையை உடைத்தெரியச் செய்யும் முயற்சியில் ஜஸ்டிஸ்
கட்சியார் வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும் தமது கடமையைச்
செய்துவிட்டதோடு சுயராஜ்ஜியக் கட்சியின் யோக்கியதையையும் வெளிக்கு
காட்ட ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கினவர்கள் ஆவார்கள்.
ஆனால், ஜஸ்டிஸ் கட்சியார் இம்முயற்சியில் பிரவேசிக்கும் போது
ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது
சுயேச்சைக் கட்சி என்ற இந்த மந்திரிசபை உடைபட்டு விட்டால் பிறகு எந்தக்
காரணத்தைக் கொண்டும் தாங்கள் இந்தத் தேர்தலில் ஏற்பட்ட சபையில்
மந்திரி பதவியை ஒப்புக் கொள்வதில்லை என்ற பிரதிக்கினை செய்து
கொள்ள வேண்டும். சுயராஜ்ஜியக் கட்சித் தலையிலேயே இதைக் கட்டி
அடித்து அவர்கள் யோக்கியதையும் பார்த்துவிடவேண்டும். அவர்கள்.
போதுமான மெஜாரிட்டியாய் இருப்பதாகச் சொல்லிக்கொண்டும் மந்திரி
பதவியை ஏற்க தைரியமில்லாமல் பயங்கொள்ளிகளாயிருப்பார்களானால்
சர்க்காரே எடுத்துக் கொண்டு நடத்தட்டும் அல்லது சட்டசபையைக்
கலைக்கட்டும் என்கிற எண்ணத்தோடு இருக்க வேண்டுமே அல்லாமல்
சர்க்கார் தயவாலோ அல்லது மற்ற கட்சியார் தயவாலோ நடத்தக்கூடிய மந்திரி
பதவியை ஒப்புக்கொள்ளக் கொஞ்சமாவது ஆசை வைப்பது சுயமரியாதை
உள்ள எந்தக் கட்சிக்கும் யோக்கியமாகாது என்பதை வற்புறுத்துகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.02.1927.
111
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
சுயமரியாதைப்
பிரசாரம்
கனவான்களே!
இந்த இடங்களில் இதற்கு முன் அநேக தடவைகளில் வந்து பேசியி
ருக்கின்றேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப்பற்றி பேசினே
னோ அதே விஷயங்களைப்பற்றித்தான் இப்போதும் பேச வந்திருக்
கின்றேன். ஆனால் அந்தக் காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க வந்த
ஜனங்களை விடவும் உற்சாகத்தைவிடவும் இப்போது எத்தனையோ மடங்கு
அதிகமான ஜனங்களும் உற்சாகங்களும் காணப்படுவது எனக்கே ஆச்சரிய
மாய் இருக்கிறது. ஒரு சமயம் எனது கொள்கைகள் ஏதாவது மாற்றமடைந்து
விட்டதா என்பதாக நானே யோசித்துப் பார்ப்பதுண்டு. எவ்வளவு யோசித்
தாலும் எனது பழைய கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் மாற்றிக்கொண்ட
தாக எனது மனச்சாக்ஷி சொல்லுவதே இல்லை.
மகாத்மா காங்கிரஸ் காலத்திலும், அதற்கு முன் நான் தனியே அபிப்
பிராயம் கொண்டிருந்த சமயத்திலும் எந்தக் கொள்கையில் நம்பிக்கை
கொண்டிருந்தேனோ அவற்றில் ஒரு சிறிதும் மாற்ற மேற்பட்டதாக எனக்குத்
தோன்றுவதே இல்லை. அதாவது மகாத்மாவின் ஒத்துழையாமை காங்கிர
சுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார் அரசியல் உரிமைகளுக்கும் சமூக
உரிமைகளுக்குமாக காங்கிரஸ் சார்பாக ஏற்பட்டிருந்த சென்னை மாகாணச்
சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்காக மாத்திரம் ஏற்பட்டிருந்த
சங்கத்தில் நானும் ஒரு முக்கியஸ்தனாக இருந்த காலத்தில் எனது கொள்கை
யும் அச்சங்கக் கொள்கையுமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திலும்
மகாத்மா காங்கிரசில் நான் இருந்தபோது காங்கிரஸ் கொள்கையாகவும் எனது
கொள்கையாகவும் இருந்த நிர்மாணத் திட்டம் அதாவது கதர், தீண்டாமை
விலக்கு, மதுவிலக்கு ஆகிய கொள்கைகளிலும் ஒரு சிறிதும் மாறுபடா
ததோடு அவைகள் அப்பொழுதைவிட இன்னமும் பலமாக என் மனதில்
பதிந்து கிடக்கின்றன. வகுப்புவாரி உரிமை இல்லாமல் நமது நாட்டிலுள்ள
வகுப்புகள் ஒற்றுமைப்படாது என்பதும், நிர்மாணத் திட்டங்கள் நிறைவேற்றப்
படுவதல்லாமல் வேறொன்றும் சுயராஜ்யமடைய மார்க்கமல்ல என்பதும்
எனது சரீரத்திலும், ரத்தத்திலும், மயிர்க்கால்களிலும் இரண்டறக் கலந்து ஊறி
விட்டதோடு இவ்விரண்டையும் பெறுவதன் முன்னம் மக்கள் சுயமரியாதை
குடி அரசு
- 19270)
112
அடைய வேண்டும் என்பதும் சித்திரவதை செய்தாலும் மாற முடியாதபடி
பதிந்து ஊறிக் கிடக்கின்றது. ஆனால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்
பற்றி என்னுடன் கூட அக்காலத்தில் ஒத்துழைத்த தலைவர்கள் என்போர்
அரசியல் தந்திரம் என்னும் பேரால் சுயநலத்தைக் கொண்டோ பிற நலத்தைக்
கொண்டோ குட்டிக் கரணங்கள் போட்டுக் கொண்டிருந்தாலும், எந்தக்
காரணத்தை முன்னிட்டும் எனக்கு அதில் ஒரு சிறிதும் மாற்றமேற்
படவில்லை. அதுபோலவே நிர்மாணத் திட்டங்களைப் பற்றியும் மகாத்மா
காந்தி காங்கிரஸ் காலத்தில் என்னுடன் ஒத்துழைத்த தலைவர்களும் காங்கிரசு
சபை என்பதும் சுயநலத்தை உத்தேசித்தோ சுயநலப்பட்டவர்கள் காங்கிரசை
சுவாதீனப்படுத்திக்கொண்டு மகாத்மாவை வெளியேறச் செய்ததினாலோ
முறையேமாறுபட்ட அபிப்பிராயங் கொண்டு விட்டாலும் காங்கிரசின் ஆதிக்
கத்திலிருந்து இத்திட்டங்கள் மாறுபாடு அடைந்து விட்டாலும் கூட அதின்
தத்துவங்களும்,
அவசியங்களும், எனது மனதிலும், வாக்கிலும், செய்கை:
யிலும் ஒரு சிறிதும் மாறுபட மாட்டேன் என்கின்றன. ஆனால் சென்னை
மாகாண சங்கத்தின் மூலம் செய்துவந்த வகுப்புவாரி உரிமை பெறும் தொண்:
டும் காங்கிரஸின் மூலம் செய்து வந்த நிர்மாணத் திட்டப் பிரசாரத்தொண்டும்
இப்போது எந்த சமூகத்தாருக்கு அது முக்கியமாயும் உண்மையாயும் அது
யாருக்கு ஏற்பட வேண்டுமோ அந்த சமூகத்தார் சங்க மூலமாக நிறைவேற்ற
வந்திருக்கின்றேன். இதுதான் வித்தியாசம் என்று சொன்னால் சொல்லலாம்.
ஆனால் இச்சங்கத்தின் மூலம்தான் இவற்றை உண்மையாய் நிறைவேற்றி
வைக்க முடியுமேயல்லாமல் இக்கொள்கைகளுக்கு பிறவி எதிரிகளாகிய
பார்ப்பனர்கள் அவர்கள் சம்மந்தப்பட்டதும் அவர்கள் ஆதிக்கத்திலி
ருப்பதும் அவர்கள் சுயநலத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டதான சென்னை
மாகாணச் சங்கத்தின் மூலமாகவோ காங்கிரசின் மூலமாகவோ நிறைவேற்றப்
பாடுபட்டதைப்போல முட்டாள்தனமான காரியம் வேறில்லை என்பதை நான்
இப்போது நன்றாய் உணர்ந்தேன். நான் மாத்திரமல்லாமல் மகாத்மா காந்தியும்
உணர்ந்து தனியே இவற்றை நடத்தி வைக்கப் பாடுபட்டு வருகிறதையும்
நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? உதாரணமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்
துவத்திற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? 100-க்கு மூன்று பேராயுள்ள
சமூகத்தார் 100-க்கு 97 பங்கு உத்தியோகத்தையும் அரசியல் சுதந்திரங்க
ளையும் அனுபவித்துக்கொண்டு 100-க்கு 97 பேர்களாய் உள்ள நமக்கு100க்கு
மூன்று பங்கு வீதம் அதுவும் பிச்சைக் கொடுப்பது போல் கொடுத்து மீதியை
ஏகபோகமாய் அனுபவித்துக்கொண்டு நம்மை அடக்கி ஆண்டு
கொண்டிருப்பவர்கள் 100-க்கு
3 போக, பாக்கி100-க்கு 97 இழக்கும் படியான
வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொள்ளுவார்களா? என்பதை யோசித்துப்
பாருங்கள். அதுபோலவே நிர்மாணத் திட்டம் என்பதையும் பார்ப்பனர்களின்
ஆதிக்கத்திலிருக்கும் இயக்கங்களே ஒப்புக்கொள்ள முடியுமா என்பதையும்
யோசியுங்கள்.
113
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
கதரினால் பார்ப்பனர்களுக்கு ஏதாவது லாபமுண்டா? அவர்கள்
பெண்டு பிள்ளைகள் கூலியில்லாமலும் வயிற்றுக்கு ஆகாரமில்லாமலும்
எங்காவது பாடுபடுகிறார்களா? அல்லது கதர் நிறைவேற்றப்படுவதால் அவர்.
களுக்கு ஒரு காசாவது ஆதாயமுண்டா? வேஷத்திற்கும் இத்திட்டம் நிறை
வேற்றுவது என்கிற பேரால் நம்மை ஏமாற்றி நம்மிடம் பொருள் பறிக்கவும்
ஓட்டுப் பெறவும் அந்தப் பேரைச் சொல்லிக்கொண்டு சில பார்ப்பனர்கள்
நம்மை ஏமாற்றி வயிறு வளர்க்கவும் ஓட்டுப் பெறவுமே அல்லாமல் வேறு:
எதற்கு அவர்கள் பாடுபட அவசியமிருக்கிறது. அதுபோலவே தீண்டாமை
விஷயத்திலும் பார்ப்பனர்களுக்கு ஏதாவது அக்கரை உண்டா? அவர்கள்
நம் எல்லோரையும் தீண்டாதவர்கள், தாழ்ந்தவர்கள், இழிந்தவர்கள் தங்களது
வைப்பாட்டி மக்கள் என்று சொல்லிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வாழுகிற
வர்கள். நம்முடன் சமமானவர்கள் என்று சொல்லிக்கொள்ள சம்மதிப்பார்
களா? தீண்டாமை ஒழிந்தால் இந்த நாட்டில் பார்ப்பனர்கள், பிராமணர்கள்
என்று சொல்லிக்கொள்ள இடமுண்டா? ஆதலால், அவர்களோ அவர்கள்
ஆதிக்கத்தில் உள்ள சங்கங்களோ இதை நிறைவேற்றி வைக்க சம்மதிக்கும்
என்று நினைப்பதைப் போன்ற பெரிய இளிச்சவாய்தனமான காரியம்
வேறில்லை. ஏதோ சில பார்ப்பனர் தீண்டாமை ஒழிப்பதில் வெகு அக்கரை:
உள்ளவர்கள் போல் காட்டிக்கொண்டாலும், “பறையர்”, “சக்கிலியர்”,
“நாயக்கர்”, “நாடார்” என்று சொல்லப்படுகிறவர்கள் வீட்டில் சாப்பிட்டாலும்
தீண்டாமை ஒழியவும் மக்கள் பிறவியில் வித்தியாசமில்லை என்று
சொல்லவும் செய்யப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ராஜினாமா கொடுத்து
விட்டு ஓடி விட்டார்கள் என்பது பொய்யல்ல. அதுபோலவே மதுவிலக்கு
செய்ய வேண்டிய அவசியமும் நமது பார்ப்பனருக்கு எப்படி ஏற்படும்?
பார்ப்பனர்களா மதுவருந்திக் கெடுகிறார்கள்? அவர்களிலும் சிலர் மது
வருந்துவதாக வைத்துக்கொண்டாலும் அது அவர்கள் குடும்பம் கெடும்
மாதிரியோ ஒழுக்கம் கெடும் மாதிரியோ இல்லை. அவர்கள் மதுவருந்தி
னாலும் லாபமடைகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அதனால் சமூகச்
சீர்திருத்தக்காரர்கள் என்கிற பேரும் பெற்று பெரிய துரைகள் சிநேகமும்
பெற்று பணமும், பதவியும், உத்தியோகமும் சம்பாதிக்க வழி செய்து கொள்ளு
கிறார்களே அல்லாமல் நம்மைப்போல் 'குடிகாரர்கள்” ஆவதில்லை. உண்மை
யாய் பார்ப்பனரல்லாதாராகிய நம் சமூகத்தில் அடியோடு குடி எடுபட்டுப்
போகுமானால் பார்ப்பனர்கள் உத்தியோகத்தின் மூலமாகவும் வக்கீல்
உத்தியோகத்தின் மூலமாகவும் இப்போதைப்போல் பிழைக்க முடியுமா? குடி
நின்று விட்டால் பார்ப்பன உத்தியோகத்தில் பகுதி எடுபட்டுப்போகாதா?'
பார்ப்பன வக்கீல் போர்டுகள் எல்லாம் காபி ஓட்டல் போர்டுகளாகவும்,
பஞ்சாங்க போர்டுகளாகவும், பிச்சை எடுக்கும் தொழில் போர்டுகளாகவும்
ஆகிவிடவேண்டாமா? ஆதலால் அவர்கள் மதுவிலக்குக்கு அனுகூலமாய்
இருப்பார்கள் என்பது ஓநாய் ஆட்டுக்கு வைத்தியம் செய்வது போல்தான்
இருக்கும். ஏதோ சில பார்ப்பனர் மதுவிலக்குக்குப் பாடுபடுவதாய்ச்
குடி அரசு
- 19270)
14
சொல்லுவது நம்மை ஏமாற்றவே அல்லாமல் வேறென்ன? உதாரணமாக ஒரு
ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஒரு கள்ளு உற்பத்தி செய்து பணம் சம்பாதிக்
கும் பார்ப்பனருக்கு மதுவிலக்குப் பேரால் ஓட்டு வாங்கிக் கொடுக்க
வில்லையா? தவிர சுயராஜ்யக் கட்சியார் மது விலக்கு செய்ய ஒப்புக்கொண்
டார்கள்; அவர்களுக்கு ஓட்டுக் கொடுங்களென்று குறள் எழுதவில்லையா?
இப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்த “ஒத்துழை
யாமை” பார்ப்பனருக்குத் தெரியவில்லையா? ஆகவே, பார்ப்பனர்களோ
பார்ப்பன ஆதிக்கமுள்ள சங்கமோ மதுவிலக்குச் செய்யும் என்று எண்ணுவ
தைப் போன்ற ஏமாந்த தன்மை வேறில்லை...
ஆதலால்தான் அவர்கள் சம்பந்தமும் ஆதிக்கமும் உள்ள சங்கங்
களை விட்டுவிட்டு உண்மையாய் அவசியமுள்ள சங்கத்திற்கு வந்து பிரசங்
கம் செய்ய வந்திருக்கின்றேன். அதைவிட பலமடங்கு ஜனங்கள் இங்கு
வந்திருப்பதின் மூலமும் நீங்கள் காட்டும் உணர்ச்சியின் மூலமும் உங்கள்.
கடமைகளை அறிந்திருக்கிறீர்கள் என்பதை உணருகிறேன். அதுவும் சென்ற
மதுரை மகாநாட்டில் இத் தீர்மானங்களை ஏகமனதாய் ஒப்புக்கொண்டதி
லிருந்தும் அதற்குப் பிறகு நாட்டில் எங்கு பார்த்தாலும் கதர் விருத்தியும்
சுயமரியாதையில் கவலை கொண்டு அதற்கு பூர்வாங்கமான வேலையும்
நடந்து வருவதைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் மனத் திருப்தியும்
ஆனந்தமும் அளவிடக் கூடவில்லை. இவ்விஷயங்களை நடத்துவிப்ப
தற்காகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தாலும் அது அரசியலில் செலவழித்த
காலத்தை இதில் செலவழித்ததாக சொல்ல முடியவில்லை. ஜஸ்டிஸ் கட்சி
யார் இத்திட்டங்களை நிறைவேற்றவும் நிறைவேற்றுகையில் இத்திட்டங்
களின் எதிரிகளால் ஏற்படும் கொடுமைகளிலிருந்து தப்பவும் சிறு சிறு
அரசியல் சுதந்திரங்களைப் பெறலாம் என்று நினைத்து அதில் கருத்தைச்
செலுத்த ஆரம்பித்ததும் ஏற்கனவே அரசியல் சுதந்திரத்தை ஏகபோகமாய்க்
கைப்பற்றிக் கொண்டிருந்த கூட்டத்தார் தங்களுக்கு ஆபத்து வந்து விட்ட
தாகக் கருதி ஒன்று சேர்ந்துகொண்டு பல வழிகளின் மூலமாகவும் இக்
கட்சியாருக்கு செய்துகொண்டு வந்த தொந்திரவுகளும், உபத்திரவங்களும்,
சூழ்ச்சிகளும், கொடுமைகளும் தாங்க முடியாததானதோடு இக்கூட்டத்தா
௬டன் சமாளிக்கும் வேலைக்கே தங்கள் காலம் முழுவதும் செலவழிக்க
ஏற்பட்டு விட்டதாலும் அதிகமாக உத்தேசித்த காரியங்களை நிறைவேற்ற
முடியாமல் போயிற்று. ஆனாலும், நமது மக்கள் எவ் வழியிலும் மற்றொரு
சமூகத்தாருக்கு தாழ்ந்தவர் அல்ல என்பதையும் பங்கா இழுத்தல், செடிக்கு
தண்ணீர் ஊற்றல், தபால் ஆபீசுக்குப் போதல், வீதி கூட்டுதல், குழந்தை
குட்டிகளை தூக்கிக் கொண்டு திரிந்து மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி
வாங்குதல், ஜட்கா வண்டி ஓட்டுதல் முதலிய வேலைகள் அல்லாமல் வேறு
வேலைக்கு லாயக்கில்லை என்று மற்ற நாட்டாரும் அரசாங்கத்தாரும் நினைக்
கும் படிநமது பார்ப்பனர்கள் செய்து வைத்திருந்த மீளாத இழிவிலிருந்து
116
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
தப்பிக் கரையேறி அவர்களின் உண்மையான யோக்கியதைகளாகிய
அரசாங்க நிர்வாகம் நடத்துதல் முதல் எல்லா உயர்ந்த பதவிகளையும்
வகிக்கத் தகுந்தவர்கள் என்பதை நிலை நிறுத்தி உயர்தர நீதிமன்றம், மந்திரி
பதவி முதலிய எல்லா ஸ்தானங்களிலும் நம்மவர்களையும் அமரச் செய்து
மற்றெல்லோரையும் விட எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்ல
என்பதையும் உலகத்திற்கு மெய்பித்து நம்மிலும்
பலரை அந்த ஸ்தானங்களி
லும் இருத்தி ஒரு வகையான சுயமரியாதையை உண்டாக்கி இருப்பதோடு
நமது எதிரிகள் பிச்சைக்கு லாயக்குடையவர்கள் என்பதையும் உலகமறியச்
செய்துவிட்டார்கள் என்றாலும் பாமர மக்களிடம் செய்ய வேண்டிய வேலை
எவ்வளவோ அவ்வளவும் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆதலால்,
அதைநிறைவேற்றவே இப்போது இக்கட்சியாருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்
திருக்கின்றது. அதுவும் இரண்டு விதத்தில் என்றே சொல்லலாம். அதாவது
(1) இக்கட்சியார் பதவியில் இருந்த காலத்தில் இவர்கள் பேரில் பலவித
பழிகளை சுமத்தியும், பார்ப்பனரல்லாதாரிலும் சில ஆகாசங்களைப் பிடித்து
கூலியும் விலையுங் கொடுத்து இழி மொழிகளால் பழி சுமத்தியும் பாமர ஜனங்
களை ஏமாற்றிய அயோக்கியத் தனமானது வெளியாகவும், அரசியலிலும்
நமது எதிரிகள் கூட்டத்தாரே பதவியும், ஆதிக்கமும் பெறத் தகுந்த
நிலைமையை அடைந்திருப்பதன் மூலம் தாங்கள் இக்கட்சியாரைவிட என்ன
சாதிக்க யோக்கியதை உள்ளவர்கள் என்பதை ஜனங்கள் அறிய சந்தர்ப்பம்
ஏற்பட்டிருப்பதும் @) தேர்தல் மூலம் ஜஸ்டிஸ் கட்சியார் பாமர மக்களிடம்
இறங்கி வேலை செய்ய தாராளமான செளகரியமும் மற்றொரு விதத்திலும்
பெற்றிருக்கிறார்கள்.
ஆகவே, இந்தச் சமயத்தைக் கைவிடாமல் பார்ப்பன
ரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து இதை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதற்காக பிரசாரம் செய்வதற்குப் பத்திரிகைகளும் அவைகளை ஆதரிக்க
உங்களுடைய ஆதரவுகளும் வேண்டும். நமது பாமர மக்களின் மனம்
பெரும்பாலும் விஷத்தன்மை யானதற்குக் காரணம் நமது எதிரிகளின்
பத்திரிகைகளும் அவர்கள் தயவில் நடக்கும் நம்மவர்கள் பத்திரிகைகளும்
அவர்களிடம் கூலி பெற்று நம்மவர்கள் செய்த பிரசாரங்களுமே தவிற
வேறில்லை. ஆதலால் அதை நாம் வெல்ல வேண்டுமானால் உறுதியும்,
தைரியமும், உண்மையுள்ள பத்திரிகைகளும், பிரசாரகர்களும் நமக்கு
வேண்டும்.அவைகள் இல்லாமல் நாம் எவ்வளவு யோக்கியமாய் நடந்தாலும்
உண்மையான கொள்கைகளை வைத்துக் கொண்டிருந்தாலும் பிரயோஜனப்
படாது.
மகாத்மாவை ஜனங்கள் அறியவும், அவரது கொள்கையை
மக்களிடம் பரப்பவும், ஒரு கோடிரூபாய் இருந்தாலும் 20,000 “யங் இந்தியா'”
பிரதிகளும் 30,000 “நவஜீவன்” பிரதிகளும் உலவியதாலும் தானே ஒழிய
வேறில்லை. இப்பொழுது மறுபடியும் ஒரு கோடி ரூபாய் கிடைக்குமானால்
மறுபடியும் மகாத்மா காங்கிரசைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி தனது
கொள்கைகளைப் பரப்பக் கூடும். ஆதலால் பணமும், பத்திரிகையும்
இல்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாது.
நம்மில் எத்தனை பேர்
குடி அரசு
- 19270)
16
லட்சாதிபதிகள், பத்து லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்!
ஆனாலும் அவர்கள் இந்த முக்கியமான விஷயங்களைக் கவனிப்பதில்லை.
இவ்வளவு கோடி செல்வவான்களாயிருந்தாலும் அரசியலில் ஒரு சிறு
ரெவனியூ இன்ஸ்பெக்டரைக் கண்டால் நடுங்க வேண்டியவர்களாகத்தானே
இருக்கிறார்கள். சமூக இயலில் ஒரு தூது பார்ப்பானைக் கண்டால் சுவாமி
என்று கூப்பிடவும், கையெடுக்கவும் யோக்கியதை உள்ளவர்களாகத்தானே
இருக்கிறார்கள். இந்நாட்டுச் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்களென்று
ஆணவமாய் நினைத்துக்கொண்டிருக்கும் பைத்தியக்கார பிரபுக்களுக்கு இது
படுகிறதா? தாங்கள் தேடி வைக்கும் பொருள்கள் தங்கள் பின் சந்ததியர்.
களுக்கு உதவுமென்றாவது வைத்துக் காப்பாற்றுவார்களென்றாவது நினைக்க
என்ன உறுதி இருக்கிறது. அப்படியே இன்னமும் 10 லட்சமும் பல பங்களாக்
களும், ஜமீன்களும், உத்தியோகங்களும் சேர்த்து வைத்தாலும் அவர்கள் ஒரு
சிறு பிச்சைக்கார பார்ப்பனப் பையனால் தன்னை விடத் தாழ்ந்தவன் என்று
நினைக்க கூடியவர்கள் தானே.
இங்கே இருக்கும் ஸ்ரீமான் பனகால் ராஜா அவர்கள் எத்தனை தலை
முறைகளாக ராஜ வம்சத்தைச் சேர்ந்தவரானாலும், எவ்வளவு சமஸ்கிருத
பாண்டியத்தியமுடையவரானாலும் இன்னும் எவ்வளவு பெரிய பூணூல்
போட்டிருந்தாலும், எவ்வளவு பெரிய பரம்பரை ராஜா பட்டம் பெற்றிருந்
தாலும், இன்னும் 94 வருடங்களுக்கு மந்திரி பதவி வகித்தாலும் அவரும்
“சூத்திரன்”; பார்ப்பனர்களின் வைப்பாட்டி மகன்; அடிமை; வேதம் படிக்கக்
கூடாதவர்; சுவாமி அருகில் போய் சுவாமியைத் தொடக்கூடாதவர்; ஒரு
இழிவான பார்ப்பனன் பக்கத்தில் கூட உட்கார்ந்து சாப்பிடக்கூடாதவர் என்று
சொல்லப்படுவதை நன்றாய் உணருங்கள். இவ்வூரிலுள்ள பிரபுவான ஸ்ரீமான்
தளவாய் முதலியார் அவர்கள் இன்னும் வருஷத்தில் 23 லட்சம் ரூபாய் அதிக
மான வரும்படி வந்தாலும் இன்னும் 10 அரண்மனை, மாட மாளிகை, கூட
கோபுரமிருந்தாலும் இன்னும் அநேக கோவில்கள் கட்டி கட்டளைகள் நடத்தி
னாலும், அவர்களும் அவர்கள் பிள்ளை குட்டிகளும் சூத்திரர்களென்று தான்
கருதப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இது ஒழிக்க வேண்டுமா?
அல்லது இன்னும் மந்திரி உத்தியோகமும் வேண்டுமா? என்று தான் உங்க
ளைக் கேட்கிறேன். ஆகையால் சகோதரர்களே! நமது பார்ப்பனர்கள் பதினா
யிரக்கணக்கான வருஷங்களாக நம் தலையில் வைக்கப்பட்ட இழிவானது
வெகு சுலபத்தில் வெகு சீக்கிரத்தில் மாறக்கூடிய காலம் வந்திருக்கின்றது.
இதை இழந்துவிடாதீர்கள். இதுசமயம் தவறினால் பின்னால் விமோசனம்
இல்லையென்றே சொல்வேன். நமது உணர்ச்சியை இதுசமயம் உலகம் ஒப்புக்
கொண்டு விட்டது. பார்ப்பனர்களும் இதுவரை தங்கள் சூழ்ச்சியின் பெயரால்
ஆணவம் அடைந்திருந்தவர்கள் இப்போது வெட்கப்படுகிறார்கள். நல்ல
சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள். பணங்கொடுக்கக் கூடியவர்கள் பணங்
கொடுங்கள்! பத்திரிகை வாங்கிப் படிக்கக் கூடியவர்கள் வாங்கிப் படியுங்கள்;
117
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
ஒன்றும் உதவ முடியாதவர்கள் பார்ப்பனர்களின் காலில் விழாதீர்கள்; அவன்
காலைக் கழுவி தண்ணீர் சாப்பிடாதீர்கள்; அவனுக்குப் பணங் கொடுத்து
விழுந்து கும்பிட்டால் உங்கள் பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் உங்கள்
பிள்ளை குட்டிகளுக்கும் மோட்சம் உண்டு என்று நினைக்கும் முட்டாள்
தனத்தை ஒழியுங்கள். பார்ப்பனர் மூலம்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்,
அவன்தான் தரிசனை காட்ட வேண்டும், அவனைத்தான் தரகனாக்க
வேண்டும் என்கிற அறியாமையையாவது விலக்குங்கள். சுயமரியாதை
இல்லாத சுயராஜ்யம் காதொடிந்த ஊசிக்கும் சமானமாகாது - மனிதரின்
பிறப்புரிமை சுயமரியாதை
! சுயமரியாதை !! சுயமரியாதை I என்பதை
உணருங்கள்.
குறிப்பு:
2221927 இல் திருநெல்வேவி, பாளையங்கோட்டை முதவிய
இடங்களில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 27.02.1927
குடி அரசு
- 19270)
118
சென்னையில் தென்னிந்திய மகாஜன சங்கம் லிமிடெட் கம்பெனி
யாரால் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு என்பதாக “ஐஸ்டிஸ்”,
“திராவிடன்” என்கிற இரு தினசரி பத்திரிகைகள் முறையே இங்கிலீசிலும்
தமிழிலுமாக நடந்து வருகின்றன. அவைகள் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல்
அதிகாரத்தில் இருந்த காலமாகிய சென்ற ஆறு வருஷ காலமாக மந்திரிகளின்
ஆயிரக்கணக்கான ரூபாய் நன்கொடைகளினாலும் அக்கட்சிப் பிரமுகர்
களின் நன்கொடையாலும் நடைபெற்று வந்தன. இப்போது அக்கட்சி அதி
காரமும், ஆரவாரமும் அக்கட்சியார் பாமர மக்கள் இடையில் தங்களது
கொள்கைகளைச் சரியாகப் பரப்பாததாலும் பாமர மக்களிடம் அளவுக்கு
மீறின நம்பிக்கையால் சரியான பிரசாரம் செய்யாமல் அலட்சியமாக இருந்து
விட்டதாலும் அவர்களின் எதிர்கட்சியராகிய பார்ப்பனர்கள் தங்களுக்கு
அனுகூலமாய் இக்குறைகளை உபயோகித்துக்கொண்டு காங்கிரஸ், சுயராஜ்
யம் என்னும் பல பாமர மக்கள் ஆசையால் ஏமாறத்தக்க பெயர்களால்
விஷமப் பிரசாரம் செய்ததின் பலனாலும், அதிகாரப் பதவி இழக்க நேரிட்ட
தால் இப்பத்திரிகைகள் கஷ்டத்திலிருக்கின்றன. ஆனபோதிலும், இக்
கட்சியார் இப்போது பார்ப்பரைல்லாதார் சமூகத்தின் முற்போக்குக்கு அவசிய
மானதும் உண்மையானதுமான காரியங்களைச் செய்ய நல்ல சமயமும்
சாவகாசமும் பெற்றிருக்கிறார்கள். அதோடு கூடவே மகாத்மாவின் நிர்மா
ணத் திட்டத்தின் அவசியத்தையும், மேன்மையையும் அதனால்தான்
பார்ப்பனரல்லாத மக்கள் முன்னேறக் கூடும் என்கிற ரகசியத்தையும் மனப்
பூர்வமாய் முன்னிலும் அதிகமாய் உணர்ந்தும் இருக்கிறார்கள். இந்நிலையில்
இப்போது செய்ய வேண்டிய வேலை பிரசாரமும் நிர்மாணத் திட்டம் நிறை
வேற்றுதலுமே ஆகும்.
இக்காரியங்களுக்கு பத்திரிகைகள் அவசியம்
என்பது நாம் சொல்லாமலே விளங்கும். ஆகவே பார்ப்பனரல்லாதார்
கைவசம் இது சமயம் மிகக் கஷ்டத்திலிருக்கும் தினசரி பத்திரிகைகள் முன்
சொன்ன “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” என்கிற இரண்டே பத்திரிகைகள்தான்.
இவைகள் முன் மந்திரிமார்களும் மற்ற செல்வவான்களும் சேர்ந்து மாதம்
1-க்கு 3000 முதல் 5000 ரூபாய் வரை கொடுத்து வந்தும் நஷ்டத்திலும்
119
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
கடனிலும் நடைபெற்றுவந்ததென்றால் இப்போது யாருடைய பண உதவியும்
இல்லாத காலத்தில் எப்படி நடைபெறும் என்பதை வாசகர்களேதான் உணர
வேண்டும். இவ்விரண்டு பத்திரிகைகளில் ஒரு பத்திரிகையை மாத்திரம்
அதுவும் “ஜஸ்டிஸ்” என்கிற இங்கிலீஷ் பத்திரிகையை மாத்திரம் ஸ்ரீமான் ஏ.
ராமசாமி முதலியார் அவர்கள் இப்போது ஏற்றுக்கொண்டு அதனால் ஏற்படும்
நஷ்டத்திற்கெல்லாம் தானே பொது ஜனங்கள் மூலமாகவோ அல்லது வேறு
விதமாகவோ சரிசெய்து கொள்வது என்கிற உத்தேசத்தின் பேரிலும் தானும்
எவ்வித ஊதியமில்லாமல் பத்திராபதிபராயிருப்பது என்கிற உறுதியின்
பேரிலும் ஒப்புக்கொண்டு ஏற்று நடத்திவருவதாய்த் தெரிகிறது.
இந்த
நிலைமையில் தமிழ் பத்திரிகையான “திராவிடனை” கவனிப்பாரின்றி
வாராந்திரமாக்க வேண்டியதோ அல்லது நிறுத்திவிட வேண்டியதோவான
நிலைமையில் இருக்கிறது.
அதன் தற்கால பத்திராதிபர்களும் மற்றும்
காரியஸ்தர்களும் அதற்காக எவ்வளவோ கஷ்ட நஷ்டப்பட்டு உழைத்து
வந்திருந்தாலும் இப்போது அதன் நிலைமை நெருக்கடியாகவே இருந்து
வருகிறது.
தமிழ்நாடு என்பதாக 10 ஜில்லாக்கள் கொண்ட ஒரு நாடு
தமிழ்மக்கள் அதாவது பார்ப்பனரல்லாதார் என்பதாக 2 கோடி மக்களைக்
கொண்ட ஒரு சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும்
விடுதலைக்கும் என்பதாக ஏற்பட்ட ஒரு தமிழ் தினசரி பத்திரிகையை நடத்த
முடியாமல் விட்டு விடுவதென்றால் நமது சமூகத்தின் தாழ்ந்த நிலைமையைக்
காட்ட இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை யென்றே சொல்லு
வோம். ஒருக்கால் தமிழ் மக்கள் அப்பத்திரிகையின் கட்சிக் கொள்கையைப்
பற்றி ஏதாவது வார்த்தைகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்பதாக
நினைத்தாலும் அக்கட்சியின் கொள்கையைப் பற்றி யாரும் இது சமயம்
குற்றம் சொல்லுவதற்கில்லாத நிலையில் ஏற்பட்டிருப்பதை நன்றாய்
அறிவார்கள். சுயராஜ்யம் அடையும் விஷயத்திலும் மகாத்மாவின் நிர்மாணத்.
திட்ட விஷயத்திலும் இது சமயம் நமது நாட்டு அரசியல் திட்டம் என்று
சொல்லுபவைகளில் எதிலும் பின் வாங்கியதல்ல. அன்றியும் நம் மக்கள் சுய
மரியாதைக்கு மற்ற எல்லா திட்டங்களையும் விட அதிகமான பிரதானியத்தை
இக்கட்சி கொடுத்திருக்கிறது. அன்றியும் அரசியல் முதலிய உரிமைகளில் ஒரு
வகுப்பாரை மற்றொரு வகுப்பார் ஏமாற்றிச் சூழ்ச்சி செய்து ஆதிக்கம் பெற்று
நசுக்கி விடுவார்களோ என்று எவ்வகுப்பாரும் பயப்படுவதற்கும் அவநம்பிக்
கைப்படுவதற்கும் இடமில்லாமல் எவ்வித உரிமையும் அதிகாரமும் பதவியும்
எல்லா வகுப்பாரும் அவரவர்கள் கூட்டத்திற்கு தகுந்தபடி பிரதிநிதித்துவம்
பெறலாம் பெற வேண்டும் என்கிற வகுப்புவாரி உரிமையையும் பிரதிநிதித்
துவத்தையும் வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும்போது கொள்கைகளைப்
பற்றி யாரும் எந்த வகுப்பாரும் நல்ல எண்ணத்தோடு கொஞ்சமாவதும் குறை
கூற இடமில்லை என்பதும் யாவரும் அறிந்ததே. உயர்ந்த கொள்கைகளை
கொண்ட இம்மாதிரி யான ஒரு பெரிய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும்
சுயமரியாதைக்குமாக நடைபெற ஒரு பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது
குடி அரசு
- 19270)
120
நம் கடமை என்பது நாம் சொல்லாமலே விளங்கும். நம்மில் எத்தனையோ
லக்ஷாதிபதிகள் வருஷம்1 க்கு லக்ஷக்கணக்கான வரவு உள்ளவர்கள், தேசாபி
மானமும் சமூகப் பற்றும் சுமரியாதையில் கவலையுமுள்ளவர்கள் இருந்தும்
கவனிக்காமல் இருப்பதென்றால் இச்செல்வங்கள் மற்றெதற்காகத்தான்
இருப்பதாய்க் கருதுகிறார்களோ தெரியவில்லை.
நிற்க, சென்ற மாதக் கடைசியில் நாமும் ஸ்ரீமான்கள் பனகால் அரசரும்,
ராமசாமி முதலியாரவர்களும் திருநெல்வேலி சுற்றுப் பிரயாணத்தில் ஒன்றாய்
பிரயாணம் செய்த காலத்தில் “திராவிடன்” பத்திரிகையை நடத்துவது
தங்களுக்கு கஷ்டமாய் இருப்பதாகவும் நம்மையே ஏற்று நடத்த வேண்டும்
என்பதாகவும், அப்பத்திரிகைக்கு அச்சு ஆலயமும், அச்சு யந்திரமும்
அசோசியேட் பிரஸ் வர்த்தமானமும் தாங்கள் கொடுப்பதாகவும் நாம் அதன்
நிர்வாகத்தையும் பத்திராதிபர் ஸ்தானமும் ஏற்று நடத்த வேண்டும் என்றும்
மேற்காட்டியவைகள் தவிர மேற்கொண்டு அப்பத்திரிகை நடத்துவதால்
ஏற்படும் நஷ்டங்களை பொது ஜனங்களின் நன்கொடையின் மூலமாக
நம்மையே சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். எவ்வள
வுக் கெவ்வளவு சுருக்கமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் 8 பக்கத்திற்
குக் குறையாமல் 12 பக்கங்களுக்கு அதிகப்படாமல் இப்போதிருக்குமளவில்
குறைந்தது தினம் 2000 பிரதிகளாவது வெளியேறும் படியாவும், சுமார் மாதம்
1-க்கு 1-4-0 ரூபாய் சந்தாவுக்கு மேல் போகாமலும் கூடுமானவரை பிரசார:
விஷயத்தோடு வர்த்தமான விஷயமும் தாராளமாய் பிரசுரிக்கப்பட்டு
வெளியாவதாயிருந்தால் முதல் வருடத்திற்கு மாதம் 1-க்கு 750 ரூ. போல்
நஷ்டம் வரக்கூடுமென்றும் அடுத்த அடுத்த வருஷங்களில் கொஞ்சங்
கொஞ்சமாய் தனக்குத்தானே சரிகட்டிக் கொள்ளக்கூடிய நிலைமை வரலாம்.
என்றும் எதிர்பார்க்கிறோம். ஆகவே, இப்பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வ
தென்றால் பல வழிகளிலும் பயமாகவே இருக்கிறது. முதலாவது “குடி அரசு”
பத்திரிகைப் பொறுப்புடன் இப்பத்திரிகைப் பொறுப்பையும் ஏற்பது என்பது
சாத்தியமாகக் கூடியதா என்பதும் ஈரோட்டை விட்டு சென்னையில் அதிக
நாள் தாமதிப்பது சாத்தியமாகுமா என்பதும் இப்போதைப்போல் வாரத்தில்
34 நாள் பிரசாரங்களுக்கு வெளியிடங்களுக்குப் போக செளகரியம் ஏற்படு
மா என்பதும் ஆகியவைகள் ஒரு புறமும் இவ்வளவு பெரிய நஷ்டத்தைப்
பொதுஜனங்களின் நன்கொடைகளால் ஈடு செய்யக்கூடுமா என்பது ஒரு
புறமும் யோசிக்க வேண்டிய விஷயமாயிருப்பதோடு இத்தொண்டை யாம்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக பொதுமக்கள் விரும்புகிறார்களா
என்பதும் எல்லாவற்றையும்விட முக்கியமாய் யோசிக்க வேண்டிய
விஷயமாகவும் இருக்கிறது.சமீபத்தில்
மதுரை ஜில்லா கனவான் ஒருவர் “குடி
அரசுக்காக வருஷம் 2000 ரூ. வீதம் 3 வருஷத்திற்குக் குறையாமல் கொடுத்து
வருவதாக தானாகவே முன் வந்தார். அதுசமயம் நாம் இப்போது “குடி
அரசுக்கு இவ்வித உதவி தேவையில்லை என்றும், “திராவிடனு”க்கு
121
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
உதவுங்கள் என்றும் சொல்லிக்கொண்டதில் உடனே அவர் “திராவிடன்”
பத்திரிகையையும் நீங்கள் எடுத்துக்கொண்டு நடத்துவதானால் அதன்படியே
கொடுத்து வருகிறேன் என்பதாக வாக்களித்தார். தஞ்சை ஜில்லாவிலும்
இரண்டு செல்வம் பொருந்திய கனவான்கள் “திராவிடனை எடுத்து நடத்துங்
கள் என்றும் அதில் ஏற்படும் நஷ்டத்திற்கு ஏதாவது நாங்கள் உதவுகிறோம்
என்றும் தாங்களாகவே வாக்களித்தார்கள். இந்த நிலைமையில் என்ன
செய்வதென்பது எமக்குத்
தோன்றவில்லை.
ஆகையால் “குடிஅரசு”
அபி
மானிகளும் மற்றுமுள்ள கனவான்களும் கூடுமான வரையில் தங்கள்
அபிப்பிராயத்தை தெரிவித்தால் அந்தப்படி செய்ய அனுகூலமாயிருக்கும்.
அரை அணா
கார்டு செலவை லட்சியம் செய்யாமல் தங்களுக்குத் தோன்றி
யதைத் தெரிவிக்கக் கோருகிறேன். அதாவது “திராவிடனை””
யும் ஏற்றுக்
கொண்டு “குடி அரசு” கொள்கைப்படி தினசரியாக நடத்தலாமா? அல்லது
“குடி அரசை” நடத்துவதே போதுமானதா என்ற விஷயத்தைத் தெரிவிக்கக்
கோருகிறேன். அடுத்த வாரத்தில் நமது முடிவை தெரிவிக்கக் கடமைப்பட்டி
ருக்கிறோம். ஆதலால் தயவு செய்து உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.03.1927
குடி அரசு
- 19270)
122
நமது கோர்ட்டுகள்
கோர்ட்டு எண்பது சூதா௫மிடம்
நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டு பார்ப்பனர்களின் அடிமை
களாகி அவர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு திரிவதற்கு முக்கியக்
காரணம் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும்
குதாடுமிடங்களும் அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட
நிர்வாகிகளுமே ஆவார்கள்.
சீட்டு மேஜை
அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்கு கொடுத்
திருந்தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்று சேர்த்து அவ்வாட்டத்திற்கு
அநுகுணமான சாமான்களையும்
ஆட வசதியையும் செய்து கொடுத்து சீட்டு
மேஜைக் காசுஎன்னும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு.சூது ஆடவருகிற
வர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்து வருவதுண்டு.
சாதாரணமாக காலை முதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு
என்பதாக கையில் பணம் வைத்துக் கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசி
யாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன்காரராய்
எழுந்து போவதும் இருவர் சம்பாதிப்பவர்களாகவும் இருவர் அசலோடு
போவதாகவும் காணப்படும். சம்பாதித்தவர் என்பவர்களுக்கு அவரவர்கள்
அசலும் மேல்கொண்டு கால் ரூபாயோ அரை ரூபாயோ லாபமிருப்பதாகத்
தெரியும். அதுவும் தோற்றவர்கள்மேல் கடன் விட்டிருக்கும் தொகையாயி
ருக்கும்.ஆனால் தோற்ற பணமும் கடன்காரராக்கிய பணமும் எங்கு போய்
விட்டதென்று பார்ப்போமேயானால் வீட்டு வாடகைக்காரனுக்கும் சீட்டாட
வசதி செய்து கொடுத்த சீட்டு மேஜைக் காரனுக்கும் அந்த இடம் தெரிந்து
அங்கு வந்து மிரட்டிய போலீசுக்காரனுக்கும்தான் போயிருக்குமே ஒழிய
ஆடினவர்களுக்கு லாபமிருக்காது. இப்படியே தினப்படி வந்து சூதாடுவதும்
தினப்படி பலர் தோல்வியடைவதுமாயிருக்குமே ஒழிய ஜயித்தவர்களுக்கு
தோற்றவர்கள் பணம் அவ்வளவும் வந்திருக்காது. அதுபோலவே கோர்ட்டு
நீதி என்பது இடம் கொடுத்தவர்களுக்கு சமானமாகிய அரசாங்கத்திற்கும்
ஆட வசதி செய்து கொடுத்து சீட்டு மேஜை வாங்கியவர்களுக்குச் சமான
123
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மாகிய வக்கீலுக்கும் மிரட்டி காசு வாங்கும் போலீசுகாரனுக்கு சமானமாகிய
கோர்ட்டு சிப்பந்திகளுக்கும் தூணுகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறதே
தவிர உண்மையான விவகாரக்காரனுக்கு ஒன்றும் மீதியாவதில்லை.
தோற்றாலும் கெடுதி ஜயித்தாலும் கெடுதி
விவகாரத்திற்கு வரும் வாதி தோற்றால் அனேகமாய் பாப்பராய்
விடுகிறான். ஜஐயித்தால் செலவு செய்த தொகையை அடைந்தவனாகிறான்.
அது போலவே பிரதிவாதியும் ஜயித்தாலும் தோற்றாலும் அனியாயமாய்
கெட்டுப் போகிறான். இதன் காரணம் என்னவென்று பார்ப்போமேயானால்
பிரிட்டிஷ் கோர்ட்டுகள் என்று சொல்வது பலருக்கு உத்தியோகம் கிடைக்க
வும்வக்கீல்கள் பிழைக்கவும் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டனவே அன்றி
குடிமக்கள் நீதி அடைய அல்லவே அல்ல என்பதுதான்.
நியாயம் கிடைக்கும் தன்மை
வக்கீல்களின் புரட்டுகளாலும் தந்திரங்களாலும் விவகாரக்காரனுக்கு
கையில் பணமிருக்கிறவரை “நியாயம்” கிடைக்கும் மாதிரி வசதி செய்யப்
பட்டிருக்கிறது. சிற்சில சமயங்களில் சில விவகாரக்காரனுக்கு கைப்பணம்
தீர்ந்துபோன பிறகு கூட கடன் கிடைப்பதாயிருந்தால் மறுபடியும் கூட
“நியாயம்” கிடைக்க வழியிருக்கிறது. பெரிய விவகாரங்களில் நியாயம்
என்பது சட்டத்தைப் பொருத்ததாகவே இல்லை. மாதிரி கேசுகளில் இதற்கு
முன் உள்ள ஜட்ஜுகள் என்ன அபிப்பிராயம் கொடுத்திருக்கிறார். இன்ன ஊர்.
ஜட்ஜு எப்படி தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்று பழைய ஜட்ஜுகளின்
அபிப்பிராயமே சட்டமாயிருக்கிறது. சில கேசுகளில் அந்தந்த ஜட்ஜு
கொள்ளும் அபிப்பிராயமே சட்டமாகும். நீதி ஸ்தலங்கள் என்பது வரிசைக்
கிரமமாய் முன்சீப் கோர்ட், ஜில்லா ஜட்ஜு அல்லது சப் ஜட்ஜு அபீல்,
ஹைக்கோர்ட் அபீல், புல் பெஞ்சு அபீல், லட்டர்ஸ் பேட்டெண்ட் அபீல்,
ரிவிஷன் பிரிவு கவுன்சில் என படிப்படியாய் பல ஸ்தானங்கள் விவகாரக்
காரன் அறிவீனத்திற்கும் ஆணவத்திற்கும்
பணத்திமிருக்கும் தக்கபடி
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் தூண்டுகோலென
வக்கீல் கூட்டங்களும் இவர்களை நத்திப் பிழைக்கும் இவர்களது புரோக்கர்.
களும் மலிந்து வருகின்றன. இவ்வித நியாய ஸ்தல முறையும் நியாயவாதி
முறையும் நியாயங் கிடைக்குமுறையும் நீங்காமல் மக்கள் சுயராஜ்யமடைந்து
விடலாம் என்பது சமுத்திர நீரை எல்லாம் குடித்து விடலாம் என்பது
போலவே ஆகும். கோர்ட்டு ஏற்படுத்தினதின் கருத்து பொதுவாய் நோக்கு
மிடத்து இம்முறைகள் நாட்டின் விடுதலைக்கு விரோதமாகவும் பார்ப்பன
ஆதிக்கத் திற்கு அநுகூலமாகவும் சர்க்காரும், பார்ப்பனரும் கூடிச் செய்த
சூழ்ச்சியே அல்லாமல் வேறல்ல.
குடி அரசு
- 19270)
124.
தற்கால “தேசாபிமானி” என்பவருக்கும் “பொது நல சேவை செய்ப
வர்” என்பாருக்கும் இம்மாதிரி கோர்ட்டுகளையும், நியாயம் கிடைக்கும்
முறைகளையும் இன்னும் அதிகமாக உற்பத்தி பண்ணுவதே யோக்கியதாம்.
சமாயிருக்கிறது. சமீபத்தில் சட்டசபைக்கு நின்ற கனவான்களில் ஒருவர்.
தன்னுடைய யோக்கியதாம்சத்தை வெளிப்படுத்திய ஒரு அறிக்கையில் நான்.
இன்ன ஊருக்கு கோர்ட்டுகள் வைக்கும்படி செய்தேன் இன்ன ஊரில் எடு.
பட்டு விட இருந்த கோர்ட்டைநிலை நிறுத்தினேன். ஆதலால் எனக்கு ஓட்டுச்
செய்யுங்கள் என்று வெளியிட்டிருந்தார். இதுபோலவே ஒரு ஓட்டர் ஒரு சட்ட
சபை அபேக்ஷகருடைய யோக்கியதையைப் பரிசீலிக்கையில் அவ் வபேக்ஷ
கரைப் பார்த்து
“நீர் இந்த ஊரில் ஏற்பட இருந்த சப்கோர்ட்டை
வேண்டாமென்று சொன்னீராம், ஆதலால் உமக்கு தேசபக்தி இல்லை நீர்
பொது நல சேவைக்காரராகமாட்டீர், உமக்கு ஓட்டு செய்ய முடியாது” என்று
சொன்னாராம். அதற்கு அந்த அபேகஷகர் நீர் தப்பாய் நினைத்துக் கொண்டீர்;
நான் இந்த ஊருக்கு ஒரு ஜில்லா கோர்ட்டே வரவேண்டுமென்கிற ஆசை
யினால் சப்கோர்ட் வேண்டா மென்று சொன்னேன். இந்த ஊர் நிலைமைக்கு
இங்கொரு ஜில்லா கோர்ட்டு வேண்டாமா? அனேக ஜில்லாக்களில் இரண்டு.
ஜில்லா கோர்ட்டு இருப்பது போல் இந்த ஜில்லாவுக்கும் இரண்டு ஜில்லா
கோர்ட்டு வேண்டும், அதற்கு இந்த ஊர்தான் தகுதி என்று சொன்னாராம்.
இதிலிருந்து இம்மாதிரி ஓட்டர்களுக்கும் அபேக்ஷகர்களுக்கும் எவ்வளவு
தேசபக்தியும் பொது நல சேவையும் இருக்கிறது என்று யோசித்து பார்த்தால்
தெரியும்.
சட்டமெம்பரின் தேசபக்தி
அரசாங்கத்தாரின் மற்றபடி சட்ட சம்மந்தமான இலாகா சட்டமெம்
பரின் வேலைதான் என்ன?
இவ்வருஷம் சட்ட கலா சாலையில் (லா
காலேஜில்) படித்துத் தேறிய பிள்ளைகள் தொகை எவ்வளவு? இறந்துபோன.
வக்கீல்கள் தொகை எவ்வளவு? அதுகளுக்கு பதில் செய்து சரிகட்டின
பிள்ளைகள் போக மீதி தொகை எவ்வளவு? இவர்கள் பிழைப்புக்கு புதிதாய்
உற்பத்தி பண்ணின உத்தியோக மெவ்வளவு? போக பாக்கியுள்ள பிள்ளை.
களின் வயிற்றுப் பிழைப்புக்கு எந்தெந்த ஊரில் நிரந்தர முன்சீப் கோர்ட்டு
களை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊில் நிரந்தர சப்கோர்ட்டுகளை ஏற்படுத்த.
லாம், எந்தெந்த ஊரில் நிரந்தர ஜில்லா கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம்,
எந்தெந்த ஊரில் தற்கால சாந்தியாக முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம்,
எந்தெந்த ஊரில் தற்கால சப் ஜட்ஜி கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த
ஜில்லாவுக்கு உதவி சப் ஜட்ஜிகளையே குறிப்பிட்ட காரியங்களுக்கு என்கிற
ஐட்ஜிகளையோ நியமிக்கலாம் என்கிற கவலையே தவிர வேறென்ன
இருக்கிறது?
125
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
சட்ட மெம்பரும் வக்கீல் பேட்டியும்
சட்டமெம்பரை வக்கீல்கள் கூட்டம் கூடி பேட்டி காணுவதிலும் என்ன
வேண்டுகோள் இருக்கிறது. “அய்யா எங்களுக்கு பிழைப்பு குறைந்து
போய்விட்டது. ஒரு கோர்ட்டிலேயே எல்லா வக்கீல்களும் வந்து முட்டிக்
கொள்ளுகிறார்கள். இதனால் வக்கீல் பிழைப்புக்கும் மரியாதை குறைகிறது.
ஆதலால் இக்கூட்டத்தைக் கொஞ்சம் குறையுங்கள் அல்லது இன்னம் ஒரு
கோர்ட்டாவது ஏற்படுத்துங்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாகி விடு.
கிறார். ஆதலால் வக்கீல் பரீகைஷையை இன்னம் கொஞ்சம் அதிக செலவும்
கஷ்டமும் ஆக்குங்கள். நம்மைபோல் பிச்சை எடுத்து அவர்கள் படிக்க
முடியாது. வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்
கள் அதிகமாய் வரக்கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் 2-வது கிரேடு
வக்கீல் பரீகைஷகளையும் 1-வது கிரேடு வக்கீல் பரீகைஷகளையும் எடுத்தும்
கூட பி.ஏ. பி.எல்., வகுப்பிலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து வரு
கிறார்களே இதை எப்படியாவது ஒழித்து இன்னம் கொஞ்சம் செலவும்,
அதிகமான கஷ்டமும் வைத்து அவர்களை இந்த இலாகாவில் தலையிடாமல்
செய்ய முடியாதா” என்பதாகிற இதுகள்தான் வேண்டுகோளாயிருக்கிறதே
தவிர வேறென்ன என்பது யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.
கோர்ட்டுகள் அதிகமாவதினாலே வழக்குகள் அதிகமாகிறது
எத்தனைக்கெத்தனை கோர்ட்டுகள் அதிகமாய் வைக்கிறார்களோ
அத்தனைக்கத்தனை வழக்குகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது.
இதனால் வழக்குகளும் விவகாரங்களும் உற்பத்தியாவதற்கு கோர்ட்டுகளே.
காரணமல்லாமல் வேறென்ன? உதாரணம் வேண்டுமென்றால் கள்ளுக்கடை
களையும் தாசி வீடுகளையும் மோட்டார் வசதிகளையும் பார்த்தால் நன்றாய்
விளங்கும். நாம் ஏன் கள்ளுக்கடைகளை குறைக்கும்படி சர்க்காரை வேண்டு
கிறோம்? கடை குறைந்தால் குடிகாரரின் எண்ணிக்கையும் குடிக்கும் அளவும்
குறையும் என்றுதானே தவிர வேறென்ன? நாலு தாசிகள் இருக்கும் ஊரில்
நடக்கும் விபசாரித்தனத்துக்கும் 40 தாசிகளிருக்கும் ஊரில் விபசாரித்தனத்
துக்கும் கணக்குப் பார்த்தால் அதிக தாசிகள் உள்ள ஊர்களில் விபசாரித்தனம்.
செய்கிற ஆள்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்குமா அல்லவா?
அது போலவே ஒரு ஊருக்கு ஒரு தரம் போய்வரும் போக்குவரத்து
வசதிகளுக்குப் பதிலாக நான்கு தரம் போய் வரும்படி போக்குவரத்து வசதி
ஏற்படுத்தினால் அதற்கேற்ற பிரயாணிகள் அதிகமாக ஏற்படுவார்களா
இல்லையா? அது போலவே கோர்ட்டுகள் அதிகமாகவும், ஊர் ஊராகவும்
ஏற்பாடு செய்தால் விவகாரம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.
குடி அரசு
- 19270)
126
பழைய நிலைமையும் புதிய நிலைமையும்
ஆதியில் கோயமுத்தூர் ஜில்லாவுக்கு இரண்டு முன்சீப் கோர்ட்டு
களும் ஒரு ஜட்ஜி கோர்ட்டும்தான் இருந்தன. இப்போது கொள்ளேகாலம்
உள்பட 8 முன்சீப் கோர்ட்டுகளும் 3 சப் ஜட்ஜி கோர்ட்டுகளும் இருக்கின்றன.
இரண்டு ஜில்லா கோர்ட்டும் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இனியும்
ஒரு சப் ஜட்ஜி வேண்டுமென்று பலரும் இனியும் ஒரு ஜில்லா கோர்ட்டு
வேண்டு மென்று பலரும் விரும்புகிறார்கள் (யாவர்? வக்கீல் கூட்டத்தார்?
கோர்
டுக்கு அவசியமுண்டா?
இதிலிருந்து நாம் அறிய வேண்டியதென்ன?
இவ்வளவு நீதி
ஸ்தலங்கள் ஏற்படும்படியான அளவுக்கு இந்த ஜில்லாவில் சென்ற 40,50
வருஷத்தில் ஜனத்தொகை பெருகிவிட்டதா? அல்லது இவ்வளவு கோர்ட்டு
கள் ஏற்படும்படி ஜனங்கள் அவ்வளவு அயோக்கியர்களாகி விட்டார்களா?
என்று பார்த்தால் ஜனத்தொகை ஏறக்குறைய முன் இருந்த அளவுக்கு 4-ல்
ஒரு பாகம்தான் அதிகமாகி இருக்கிறது. இந்த அளவுக்கு சுமார் !, @)
முன்சீப் கோர்ட்டு அதிகமாயிருந்தால் போதும். அதிகமானால் ஒரு முன்சீப்
கோர்ட்டு அதிகமாகலாம் என்றே வைத்துக் கொண்டாலும் 5 அல்லது 6
முன்சீப் கோர்ட்டுகளும் ஜில்லா ஜட்ஜி அதிகாரமுள்ள ஒரு மேல்கண்ட
ஜட்ஜியும் 2 சப் ஜட்ஜியும் அதிகமாகக் காரணமென்ன? இதைப் பார்க்கும்
போது இவ்வளவு கோர்ட்டுகளுக்கும் வக்கீல்களுக்கும் வேலை உண்டாக்
கத்தக்க மாதிரிக்கு ஜனங்களை அயோக்கியர்களாகவும், சர்க்காரும் பார்ப்ப
னர்களும் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் வேறு என்ன
வென்று சொல்லுவது. அல்லாமலும் முன் காலங்களில் முன்சீப்புகள் 5 மணி
வரை வேலை செய்வார்கள்; சம்பளமும் அவர்களுக்கு 200, 300 தான்.
இப்போது 11 - 30 மணிக்கு கச்சேரிக்கு வந்தால்
2 அல்லது 3 மணிக்கு
வீட்டுக்குப் போய் விடுகிறார்கள்; சம்பளம் 500, 600 வாங்குகிறார்கள்.
இனியும் ஒரு கோர்ட்டு வேண்டுமாம்
இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜி கோர்ட்டு வேண்டு
மென்றால் இவ்வயோக்கியத்தனத்திற்கு எதைச் சமமாகச் சொல்லுவது
:
இதையும் நமது ஜில்லாவில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊருக்கு
வரும்படி எதிர்பார்க்கிறார்களாம்.
கோர்ட்டு வந்தால் வந்த ஊருக்கு ஏற்படும் கெடுதி
எந்த ஊரில் வைத்தாலும் வேலை ஏற்படும் என்கிற விஷயத்தில்
நமக்கு சந்தேகமில்லை. அப்பீல் செய்ய இஷ்டமில்லாதவனுக்கெல்லாம்
127
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
அப்பீல் செய்து பார்க்கலாம் என்கிற ஆசை வந்து விடும். விவகாரத்தில்
ஆசை இல்லாமலும் அசலூருக்குப் போய் விவகாரம் செய்வதில் செளகரிய
மில்லாமல் தங்களுக்குள்ளாகவே பைசல் செய்து கொள்ளலாம் என்கிறவர்.
களுக்கெல்லாம் உள்ளூரில் கோர்ட்டு வந்துவிட்டால் பிராது செய்துவிடலாம்
என்கிற எண்ணம் ஏற்பட்டுவிடும். அலக்ஷியமாகவும் அனாவசியமாகவும்
மறதியில் இருந்த வழக்குகளுக்கெல்லாம் வக்கீல்கள் முதன்மை ஸ்தானம்
கற்பித்துக்கொடுத்து வழக்கிலிழுத்துவிட்டுவிடுவார்கள்.
இன்னமும்
எவ்வளவோ கஷ்டங்கள் அவ்வூரிலுள்ள ஏழைக்குடிமக்களுக்கு ஏற்பட்டு
விடும். முதலாவது வீட்டு வாடகை உயர்ந்துவிடும். காய்,கறி, மோர், தயிர்,
பால், நெய், விறகு விலைகள் உயர்ந்துவிடும். கூலி ஆட்களின் கூலி அதிக
மாய் விடும். ஜனங்களுக்குள் கட்டுப்பாடும் பெரியவர், சிறியவர் என்கிற
மரியாதையும் மாறிவிடும். இவ்வளவு அக்கிரமங்களோடு நாணயமும்
குறைந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுவதாயிருந்தாலும் ஒருவகுப்
பாரின் வயிற்று பிழைப்புக்கு கோர்ட்டுகளை அதிகப்படுத்துவதே தேச
சேவையாயும், இதற்கனுகூலமாயிருக்கும் அதிகாரிகளே பூரண கும்பம்
எடுக்கத்தக்க யோக்கியதை உள்ளவர்களாகவும் போய் விட்டது. இந்தக்
கூட்டத்தார் தான் நமக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுக்கத்தக்க யோக்கியர்.
களாம்...
விவகாரக்காரருக்கு ஏதாவது வசதி உண்டா?
இவ்வளவு அக்கிரமங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் கோர்ட்டு
களில் விவகாரக்காரர்களுக்கு ஏதாவது கடுகளவு செளகரியமோ, யோக்கிய
தையோ அல்லது அவர்களையும் ஒரு மனிதர்களாய் கருதத் தக்க நிலைமை
யோ இருக்கிறதா என்று பார்த்தால் அது கொஞ்சமாவது நினைக்கத்தக்க
காரியமே அல்ல. நியாயாதிபதியாயிருக்கிறவர்
பொது ஜனங்களின்
பணத்திலிருந்து மாதம் 500, 1000, 2000, 3000 சம்பளம் வாங்கிக்கொண்டு
மோட்டாரில் வந்து இறங்குவதும்; தனி அறையில் இளைப்பாறுவதும், பங்கா
வீசுவதும், பக்கத்தில் சேவகர்கள் கை கட்டிக்கொண்டு நிற்பதும், தனி கக்கூசு,
தனி சிற்றுண்டி அறை ஆகிய போக போக்கியமும்
விவகாரக்காரரை
ஏமாற்றி 50, 100, 1000, 2000 என்பதாக பீசு வாங்கும் வக்கீல்கள் குதிரை:
வண்டிகளிலும், மோட்டார் கார்களிலும் வந்து இறங்குவதும், பங்காவின் கீழ்
உட்காருவதும், தங்களுக்கென இளைப்பாறும் அறைகளுமான போக
போக்கியங்களும் அடைவதுமாயிருக்கிறார்களே ஒழிய விவகாரக்காரரைப்
பற்றியோ, விவகாரத்தின் பொருட்டு, சாட்சிக்கு வருகிறவர்களைப் பற்றியோ,
கொஞ்சமாவது கவலையே இல்லை. கோர்ட்டுகளில் விவகாரக்காரருடைய
பரிதாபம் அவர்கள் உட்கார செளகரியமில்லை, தங்க இடமில்லை, ஒதுங்க
மார்க்கமில்லை! வாய்ப்பேச மார்க்கமில்லை.
கோர்ட்டு எல்லைக்குள்.
இருக்கும் வரை ஜெயிலில் கைதி இருப்பது போல் பயந்து ஒடுங்கி நிற்கவும்,
குடி அரசு
- 19270)
128
ஏதாவது ஒருவருக்கொருவர் வாயைத் திறந்தால் அங்குள்ள சேவகர்கள்,
“அஸ்” என்று இடையன் ஆடு மாடுகளை ஓட்டுவது போலவும்,
“பேசாதே” என்று மரியாதை இல்லாமல் கட்டளையிடுவதுமான ஹீனத்
தன்மைக்கு ஆளாக வேண்டியதேயல்லாமல் அங்கு வாதியாகவோ பிரதி
“உஸ்
வாதியாகவோ சாட்சியாகவோ வருகிறவர்கள் மனிதர்கள் என்று எண்ணிய
மாதிரியாய் ஏதாவது காணப்படுகிறதா? அல்லாமலும் கோர்ட்டுகள் மெத்தை
மீது சிலதும் சந்துக்களில் சிலதும் இருப்பதால் கூப்பிட்டாலும் காது கேட்கத்
தக்க அவ்வளவு தூரத்திலாவது நிற்கக்கூட இடமில்லாமல் இருப்பதோடு
வக்கீலிடம் பேசவோ, ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லவோ இடமில்லை.
வாய்தாக்கள்
இத்தனையும் போதாமல் ஒரு விவகாரத்தை 3 வருஸ 4 வருஸ நீட்டி
25 - வாய்தா, 30 - வாய்தா போடும் உபத்திரவங்கள் அல்லாமல் காலை 11
மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை
5 மணி வரையில் நின்று
கொண்டே காத்திருக்க வேண்டும். சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது
என்று தெரிந்தாலும் 5 மணி வரை வாய்தா எப்பொழுது என்று தெரிவதற்குக்
காத்திருக்கவேண்டும். எப்பொழுது நடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா?
என்கிற விவரங்கள் கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை.
இதனால் இவர்களுக்கு கட்டும் சாட்சிய படி போக வர செலவு, மெனக்கேடு
எவ்வளவென்பதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. ஜட்ஜி பெண்சாதிக்
காலில் எறும்பு கடித்துவிட்டால் அன்றைய கேசுகள் முழுவதும் வாய்தா
போட்டாய்விடும். வக்கீல் வீட்டில் அமாவாசை சமையலாக நேரமாய் விட்.
டால் குமாஸ்தா வாய்தா வாங்கிவிடுவான். வக்கீலுக்கு வேறு கோர்ட்டுக்குப்
போக வேலையிருந்தால் கேசை மாலையில் எடுத்துக்கொள்ளும்படி
ஜட்ஜைக் கேட்டு வாய்தா வாங்கி விடுவான். இப்படி எவ்வளவு கஷ்டங்கள்
ஏற்படுகின்றன. நிற்க, சாட்சிக்கு உடம்பு செளகரியமில்லாவிட்டால் டாக்டர்.
களுக்கு 20, 30 கொடுத்து சர்ட்டிபிகேட் வாங்கவேண்டும். வேறு அவசர
வேலையிருந்தால் 20, 30 கொடுத்து வயிற்றுக் கடுப்பு என்று பொய் சர்ட்டி
பிகேட் வாங்க வேண்டும். இப்படியாக எவ்வளவு கொடுமைகள் விவகாரக்
காரருக்கு இருந்து வருகிறதென்பதும் வாய்தாக்கள் ஏற்படுவது கட்சிக்
காரர்களாலா அல்லது வக்கீல்களாலா, ஜட்ஜிகளாலா என்பதைப் பார்த்தால்
100-க்கு 90 விவகாரங்களுக்கு ஜட்ஜிகளும் வக்கீல்களுமேயல்லாமல் வாதி
பிரதிவாதி காரணமேயில்லை என்பதும் விளங்கும்.
மேல் அதிகாரிகளோ?
இவற்றைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு எழுதினால் “அசல் அநியா
யம் அபீலில் அதுவே காயம்” என்பதுபோல் “இதெல்லாம் சகஜம் தான்”
என்று சொல்லுவார்கள். காரணம் என்னவென்றால் முனிசீப்பு ஸ்தானம் முதல்
129
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
ஹைக்கோர்ட்டு ஜட்ஜி, சட்ட மெம்பர் ஆகிய ஸ்தானம் வரையில் இந்த
வக்கீல் கூட்டத்திலிருந்தும் இதனாலே வயிறு வளர்க்கக் கூடிய கூட்டத்தி
லிருந்துமே தான் ஆள்பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. வக்கீல் கூட்டத்
திலிருந்து நியாயாதிபதிகளை நியமிப்பது என்கிற அக்கிரமம் ஒரு நாட்டில்
இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும் விவகாரமும் வலுக்கவும், குடியான
வர்கள் நாசமாய்ப் போகவும், நாடு குட்டிச்சுவராகவும்தான் ஏற்படுமேயல்லா
மல் ஒரு நாளும் நாம் உருப்படியாகி சுயராஜ்யம் பெறப் போவதில்லை
என்பது உறுதி.
குடி அரசு - கட்டுரை - 06.03.1927.
குடி அரசு
- 19270)
120
யார்ப்பணப் புரோகிதம் ஒழிந்தது!
“பார்ப்பன குருமாருக்கு” கொடுத்து வந்த வரியும் ஒழிந்தது.
மதுரை பிராமணரல்லாத மகாநாட்டில் தோன்றிய தீர்மானங்களை நம்
சகோதரர்கள் செய்கையில் நடத்தி வருவதை நம் “திராவிடன்” “குடியரசு”
பத்திரிகைகள் வாயிலான் அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.
நிற்க நம்
மகாநாட்டிற்கு உப காரியதரிசியாய் விளங்கி நமக்கு அல்லும் பகலும்
உழைத்தவரும், உழைக் கின்றவருமானதிருவாளர்.டி. கொண்டல் நாயுடு
அவர்கள் அன்னையார் விண்ணவர்க்கு விருந்தாயது பற்றி 19. 2. 27
குண்ணத்தூரில் தமதில்லத்தில் சடங்குக் கிரியைகள் நடைபெற்றன.
இக்கிரியைகளுக்கு மதுரையினின்று திருவாளர்கள் ஐகோர்ட்டு வக்கீல் பி.
ரங்கசாமி நாயுடு அவர்கள் பி.ஃஏ.பி.எல்., எஸ். கூடலிங்கம் பிள்ளை
அவர்கள், பெஞ்ச் கோர்ட்டு மாஜிஸ்திரேட் சின்ன சாமி ராஜா அவர்கள்,
பென்ஷன் பட்டாளம் சுபேதார் சுப்பா நாயுடு அவர்கள், ஜவுளி வியாபாரம்
சின்னசாமி நாயுடு அவர்கள், ஆத்தூர் சின்னசாமி நாயுடு அவர்கள்,
நிலச்சுவான்தார்கள்
அ.ச. சீனிவாசலு நாயுடு அவர்கள்,
அ.ச. அக்கையசாமி
நாயுடு அவர்கள் மற்றும் கிராமங்களினின்று அநேக நில வளமுடை
யோர்களும் சுமார் 750 பேர்கள் வரை காணப்பட்டனர். திரு. கொண்டல்
நாயுடு அவர்கள் பிறப்பிடம் திருமங்கலம் தாலூகா குண்ணத்தூர்
பரம்பரையான பெருங்குடும்பத்தில் பிறந்தவர்; நிலச்சுவான்தார்.
இவருக்கு இந்நாட்டில் மிக்க செல்வாக்குண்டு. இச்சீரியருடன் பிறந்தார்
இவருடன் நால்வர். அவர்கள் வைணவ மதத்தில் சாலவும் பற்றுடைய
வர்கள். அவர்களும் இவருடைய விருப்பத்திற்கிணங்கி பிராமணனைப்
புறக்கணித்தும் தம் அன்னையாரின் கிரியைகளை செவ்வனே நடத்திய
துடன் வந்திருந்த ஏனையோரும் இதனையே பின் பற்றுவதாக வாக்குறுதி
கொடுத்தார்கள். அத்துடன் ஸ்ரீரங்கம் அண்ணங்கார்சுவாமி குருக்களுக்கு
வரி கொடுப்பதை நிறுத்துதல் செய்யவேண்டுமென தீர்மானித்தபின்
வந்திருந்தோரனைவரும் உணவுண்டு தாம்பூலம் பெற்றுச் சென்றார்கள்.
என்று ஒரு நிருபர் வரைகிறார்.
குறிப்பு: மதுரை மஹாநாட்டின் தீர்மானத்தையொட்டி குண்ணத்தூர்.
ஸ்ரீமான் கொண்டல் நாயுடுகாரவர்கள் தமது அன்னையாரின் இறுதிக் கிரியை
களை பார்ப்பனிய சம்பந்தமின்றி சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்கது.
இதோடு மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி யென்னவென்றால் தங்கள் மரபுக்கு
பரம்பரை ஆச்சாரியர் என்று பேர் வைத்துக் கொண்டு வரும் வம்சவழி வந்த
131
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
ஸ்ரீரங்கம் ஸ்ரீ அண்ணங்கார் ஸ்வாமிகளுக்கு குரு காணிக்கை கொடுத்தல்
கூடாது என்று அன்று தீர்மானஞ் செய்து கொண்டமையேயாம். ஸ்ரீமான்
அண்ணங்கார் சுவாமிகள் பிராமணர் ஆதலால் கொடுத்தல் கூடாது
என்பதற்காக நாம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆச்சாரியர்கள் என்று பேர்.
வைத்துக் கொண்டு அணுவளவேனும் நலன் இல்லாவிட்டாலும் பார்ப்பன
ரல்லாதார் சுயமரியாதையையே வேரோடு அறுப்பதாகிய காரியங்களுக்கு
அடிபணிந்து பொருள் கொடுக்கும் ஈனத்தனம் ஓட்டமெடுக்குங் காலம்
ஆரம்பமாகிவிட்டதற்காகவே மகிழ்ச்சியடைகின்றோம். இந்தப் பார்ப்பனர்.
ஆண்டுதோறும் பிள்ளைக்குக் கலியாணம், பெண்ணுக்குச் சாந்தி முகூர்த்தம்.
வீடு இடிந்து விட்டது என்பதாக ஏதாவதொரு சாக்குச் சொல்லிக்கொண்டு
கிராமங்களுக்கு வந்து பணங்கொடுக்காவிட்டால் சாபங் கொடுத்துவிடுவேன்
என்று பாமர மக்களை மிரட்டிகொள்ளையடித்துக்கொண்டு போவதைத் தவிர.
இவர்கள் சாதிப்பதொன்றுமில்லை. பாங்கில் காரியம் பார்க்கும் ஒரு ஐய்யங்
காரும் காபி கிளப் வைத்து எச்சில் பாத்திரம் கழுவும் ஒரு ஐய்யங்காரும்
கோயமுத்தூர் ஜில்லாவில் கம்மவார் வசிக்கும் கிராமங்களில் துவாதச
நாமத்தோடும் பாத குறட்டோடும் ஆசாரிய வேடம் பூண்டு வந்தமையாமறி
வோம். ஆதலால் இத்தகையோர்களுக்கு நாம் ஏன் பொருள் கொடுத்து
காலில் விழுந்து சுயமரியாதை கெட்ட அடிமைகளாக வேண்டும்? ஸ்ரீமான்
கொண்டல் நாயுடுகாரவர்கள் செய்த இச்சுயமரியாதை தீர்மானத்தை மற்ற
பார்ப்பனரல்லாதாரும் கடைபிடித்தொழுகுவாராக.
(ப-ர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 06.03.1927
குடி அரசு
- 19270)
132
மதுரை அவமறிக்கண் காலேன்
மாணவர்களுக்கன் சுயமரியாதை உதயம்
சென்ற வாரம் சென்னை பச்சையப்பா ஆஸ்ட்டலில் பார்ப்பன
ரல்லாத வாலிபர்கள் தங்களுக்கு பார்ப்பனரல்லாத சமையல்காரரையே
வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வருவதும் அதன் காரணங்களையும்
எழுதி மற்ற காலேஜ் பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் இதை பின்பற்ற
வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம். அதற்கிணங்க இவ்வாரம் மதுரை:
அமெரிக்கன் காலேஜிலுள்ள பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் தங்களுக்குள்.
பார்ப்பன சமையல்காரரைத் தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாத சமையல்காரரை:
வைத்து சமைத்து சாப்பிடுவதுடன் வகுப்பு வித்தியாசமில்லாமல் தங்களுடன்
கூட உட்கார்ந்து சாப்பிட சம்மதிக்கும் மாணவர்களையெல்லாம் சேர்த்து
ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடத் தீர்மானித்து அந்தப்படி நடத்தி வருகிறார்கள்
என்பதைக் கேட்க மிகவும் சந்தோஷமடைகிறோம்.
மதுரை காலேஜில் இப்படி நேர்ந்ததற்கு ஒரு தகுந்த காரணமும்
சொல்லப்பட்டது. அதாவது அக்காலேஜ் மாணவர்களில் இரண்டொரு பார்ப்
பன மாணவர்களுக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் மிகவும் நேச
மாய் இருந்ததோடு மாமிச உணவு முதல் கொண்டு வித்தியாசமில்லாமல்
ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு வருவது வழக்கமாய் இருந்து வந்தது.
சமீபத்தில் ஒரு நாள் அக்காலேஜ் மாணவர்கள் சிலர் கூடி ஒரு சமபந்தி
போஜனம் ஒன்று நடத்தினார்கள். இதற்கு முன்னே சொன்ன அதாவது
மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பன வாலிபர்களையும் அழைக்கப்
பட்டதாம். அவர்கள் பார்ப்பனரல்லாதாருடன் கலந்து உட்கார்ந்து சாப்பிட
மறுத்துவிட்டார்களாம்.
இதன் பேரில் மற்ற பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்
கும் சுயமரியாதை உதயமாகி இனி பார்ப்பன சமையல்காரர் சமைக்க
சாப்பிடுவதில்லை என்றும் தங்களுக்குள் எல்லோரும் ஒன்றாய் இருந்து
சாப்பிடுவதென்றும் தீர்மானித்துக்கொண்டார்களாம். ஆகவே எப்படியாவது
மக்களுக்கு சுயமரியாதை உதயமாவதைப் பார்த்து ந்தோஷமடைகிறோம்..
இனி மற்ற ஹாஸ்ட்டல் மாணவர்கள் எப்போது பின்பற்றுவார்களோ?
குடி அரசு - செய்தி விளக்க குறிப்பு - 06.03.1927
133
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கதரின் பேரால் நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு
இடையூறு அதாவது அரசியலின் பேரினாலும் கடவுள், மோக்ஷம், மதம்,
என்னும் பேரினாலும் எவ்வளவு கொடுமையும், சூழ்ச்சிகளும் செய்து வந்தார்.
களோ வருகிறார்களோ அதுபோலவே ஸ்ரீமான் சி.இராஜகோபாலாச்சாரியார்
முதலிய பார்ப்பனர்களும் அவருடைய பார்ப்பன சிஷ்யர்களும் பார்ப்பன
ரல்லாத சில கூலிகளும் சூழ்ச்சி செய்து வருவதாக நாம் நினைப்பதற்கு
இடமேற்பட்டு வருவதற்கு தகுந்தாற்போல் பல இடங்களில் இருந்து சமாச்சா
ரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இச்சூழ்ச்சிகளுக்கு பெரும்பாலும்
மகாத்மா வரவை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
என்றும் தெரியவருகிறது. “மகாத்மாவின் தென்னாட்டு விஜயம்” என்னும்
பேரால் கதர் பண்டை செலவுசெய்து ஆங்காங்கு போய் பார்ப்பனீய விஷங்
களைப் பரப்ப உபயோகித்துக் கொள்ளுவதாகவும் தெரிகிறது. ஆன போதி
லும் நமக்கு அதைப்பற்றிப் பயம் ஒரு சிறிதுமில்லை என்றே சொல்லுவோம்.
மகாத்மாவை நாம் எல்லோரும் சேர்ந்து வரவேற்க வேண்டியதுதான். நாம்
எல்லோரும் அவரது வருகையின் கருத்துக்கு ஆதரவளிக்க வேண்டியது
தான்.தாராளமாய்ப் பணமும் கொடுக்க வேண்டியதுதான். அதைப்பற்றி நாம்
ஒரு சிறிதும் பின் வாங்கக்கூடாது என்பதே நமது கெட்டியான அபிப்பிராயம்.
அப்படி நம்முடைய பணமும் நம்முடைய ஆதரிப்பும் நமது கெடுதிக்கும்
இழிவுக்கும் சுயமரியாதை அழிவுக்கும் உபயோகப்படுமானால் நாம் என்ன
செய்யவேண்டியது என்பது நமக்குத் தெரியும். கதர் என்பதாக குருட்டு நம்பிக்
கையில் விழுந்து உழன்று கொண்டு நமது சுயமரியாதை பறிபோவதைப்
பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதாக உறுதி கூறுகிறோம்.
பார்ப்பனர்களின் அரசியல் புரட்டுகளையும் மதப் புரட்டுகளையும்
கண்ட கண்ட விடங்களில் எல்லாம் நாம் அவற்றை தாராளமாய் கண்டிக்க
வில்லையா? நமது எதிரிகளும், அறிவிலிகளும் நம்மை தேசத் துரோகி
என்கிறார்கள் என்றோ மதத்துரோகி என்கிறார்கள் என்றோ நாஸ்திகர்கள் என்
கிறார்கள் என்றோ பயந்து நமது மனச்சாக்ஷியை எங்காவது மாற்றிக் கொண்
டோமா? அது போலவே கதர் இயக்கத்திலும் பார்ப்பனப் புரட்டுகளைக்
கண்டோமானால் நம்மை கதர் துரோகி என்று பிறர் சொல்வார்களே எனப்
பயந்துகொண்டு ஒருக்காலும் வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டோம்.
குடி அரசு
- 19270)
134
“தேசத் துரோகி, ராஜத் துரோகி, தெய்வத் துரோகி, மதத் துரோகி, பிராமணத்
துவேஷி, காங்கிரஸ் துரோகி, சுயராஜ்யக் கட்சித் துரோகி” முதலிய எத்த
னையோ “துரோகியும் துவேஷியும்” ஆகி ஜெயிலுக்கும் நரகத்திற்கும்
போனாலும் சரி நமது சுயமரியாதையே நமது பிறப்புரிமை என்று நமக்குப்
பட்டதைச் சொல்லி வரும் போது கதர்த் துரோகிப் பூச்சாண்டிக்கு ஒருக்
காலமும் பயந்து விடமாட்டோம். இப்பொழுது தமிழ்நாடு கதர் ஸ்தாபனத்தில்
100 - க்கு 75 பேருக்கு மேலாகவே பார்ப்பனர்கள் மாதம் 30, 40, 50, 75,100,
150 என்பதாக சம்பளம் பெற்றுக் கொள்ளை கொண்டு பார்ப்பன அக்கிர
ஹாரம் சத்திரம் போல் வாழ்ந்து வருவது நமக்குத் தெரியும். ஆனாலும்
அதைப் பற்றி நமக்கு அவ்வளவு அதிகமான ஆத்திரமில்லை. ஆனால்
அவர்கள் அதை நமக்கு கெடுதி செய்ய ஆதாரமாய் உபயோகித்துக்
கொள்வதைத்தான் சகிக்க முடியவில்லை. “சுதேசமித்திரன்” எப்படி நமது
பங்கு, நமது சந்தாப் பணம், நமது விளம்பரப் பணம் ஆகியதைக் கொண்டு
நமது சமூகத்திற்குக் கேடு சூழும் காரியத்தையே “தேச சேவை”, “தேசீயப்
பத்திரிகை” என்னும் பேரால் பரப்பி வருகிறதோ அதுபோலவே நமது “ஏழை
மக்களுக்கு சாப்பாடு” “குடியானவர்களுக்கு தொழில்” என்று சொல்லிக்
கொண்டு செய்யும்கொடுமைகளை பார்த்துக் கொண்டும் நம்மை எவனாவது
கதர் துரோகி என்று சொல்லி விடுவானே எனப்பயந்து வாயை மூடிக்
கொண்டிருந்தால் அதைவிட பயங்காளித்தனமான காரியம் வேறில்லை
என்பதே நமதபிப்பிராயம். ஆனால் மகாத்மா காந்தி அவர்கள் இவ்வியக்கத்
தலைவராய் இருப்பதால் அப்படிச் சொல்லுவது மகாத்மாவை குற்றம்
சொல்லுவதாகுமோ அவருக்கு துரோகம் செய்ததாகுமோ என்பதாக சில மூட
நம்பிக்கைக்காரர் பயப்படவும் கூடும். இப்படிச் சொல்லி சில பார்ப்பனர்கள்.
பாமர மக்களை ஏமாற்றவும் கூடும். ஆனாலும் அதற்கும் நாம் பயப்படக்
கூடாது என்பதுதான் நமது அபிப்பிராயம். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின்
அக்கிரமங்களை எடுத்துச்சொல்வது ராஜத் துரோகமாகாது. “பஞ்சாபில்
டையர் ராக்ஷதத் தன்மையாய் நடந்து கொண்டார். அவரைத் தண்டிக்க
வேண்டும். அவரைத் தூக்கிலிட வேண்டும்” என்று நாம் சொன்னதும் “லார்ட்
செம்ஸ்போர்டை விசாரணை செய்து தண்டிக்கவேண்டும்” என்று நாம்
சொன்னதும் ஜார்ஜ் மன்னரை வைததாகுமா? ஜார்ஜ் மன்னரைத் துவேஷித்
ததாகுமா? அல்லது இது ஜார்ஜ் மன்னருக்கு துவேஷமாகுமா என்பதை
யோசித்துப் பாருங்கள். ஆகையால்
நாம் ஒன்றுக்கும் பயப்பட வேண்டிய
தில்லை. மகாத்மா நம்மவர்,
அவர் கொள்கையாலல்லது நாட்டுக்கு சுயராஜ்ய
மோ சுயமரியாதையோ சமத்துவமோ விடுதலையோ கிடைப்பது என்பது
முடியாத காரியம். மகாத்மா ஒரு வருஷத்தில் செய்த வேலை இந்த நாட்டில்
இதுவரை தங்கள் தங்கள் ஆயுள் முழுவதும் செலவழித்தும் செய்தவர்களைக்
காணோம். ஆதலால் அப்பேர்ப்பட்ட பெரியாரை வணங்குவதற்கும்
வரவேற்பதற்கும் பின்பற்றுவதற்கும் இப்பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு பயந்து
நாம் பின் வாங்கக் கூடாது.
135
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
தவிர மகாத்மா நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அறியாதார் என்று
நினைப்பதும் அறியாமையாகும். அவரிடத்தில் உள்ள தயவினாலும் தாக்ஷண்.
யத்தினாலும் கருணையினாலும் சிற்சில சமயங்களில் இப் பார்ப்பனர்களின்
சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து விடப்படுகிறதே அல்லாமல் அவரை அவைகள்
ஏய்த்து விட்டதாகவோ அல்லது அவர் அறியாமல் செய்து விடுகிறார்.
என்றோ ஒருக்காலும் சொல்ல முடியாது. அவருக்குச் சில பார்ப்பனர்களிடத்
தில் இருக்கும் தாட்சண்ணியம் என்கிற பலஹீனத்தை சிலர் அதிகமாய்
உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். அதனால் நமக்கு சில சமயங்களில்
கெடுதி நேரிடுவதுண்டு.ஆணாலும் அதுவும் அளவுக்கு மீறுகிற போது நாம்
அதையும் எதிர்க்கத் தயாராயிருந்து வருகிறோமேயல்லாமல் அதற்காக நாம்.
அடியோடு விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. இருக்கவும் மாட்
டோம். தவிற மகாத்மாவிற்கு இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதை நன்
றாய்த் தெரியும் என்பதற்கு நாம் ஒரு உதாரணம் சொல்லுவோம். பெல்காம்.
காங்கிரசின்போது மகாத்மாவிடம் நாம் பேசிக்கொண்டிருந்த சமயம் (அதா
வது கதர் போர்டு சம்பந்தமாகவே அதிலுள்ள உத்தியோகங்கள் மிகுதியும்
பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது என்கிற காரணத்தால் கதர்.
போர்டு பிரசிடெண்டு என்கிற முறையில் நமக்கும் கதர் போர்டு காரியதரிசி
என்கிற முறையில் ஸ்ரீமான் கே. சந்தானம் அவர்களுக்கும் அபிப்பிராய
பேதமேற்பட்டு விட்டது. இதில் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் ஸ்ரீமான்
சந்தானத்திற்கு பக்கபலமாயிருந்தார். இது விஷயமாய் எங்களுக்குள் ஒரு
முடிவும் ஏற்பட இடமில்லாமல் போகவே கடைசியாக காரியதரிசி ஸ்ரீமான்
கே.சந்தானம் அவர்கள் ராஜீனாமாக் கொடுத்துவிட்டார். ராஜீனாமா கொடுத்து
விட்டதோடு சும்மா இராமல் இந்த ராஜீனாமாவை மகாத்மா தகவலுக்கு
கொண்டுபோய் ஸ்ரீமான் சந்தானத்தின் ராஜீனாமாவைப் பின் வாங்கிக்
கொள்ளும்படி செய்ய மகாத்மாவையும் தூண்டப் பட்டது? மகாத்மா நம்மை
கூப்பிட்டு ஸ்ரீமான் சந்தானம் ஏன் ராஜீனாமாக் கொடுத்தார்? என்று கேட்டார்.
நான் கதர் போர்டு சம்பந்தமான உத்தியோகங்களை பெரிதும்
பார்ப்பனர்களுக்கே
அவர் கொடுப்பதால் அதன் தலைவர் என்கிற முறையில்
பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுக்கவேண்டும் என்பதாகச் சொன்னதினால்
அவருக்குத்திருப்தியில்லாமல் அவர் ராஜீனாமாக் கொடுத்து விட்டார் என்று
சொன்னேன்.
மகாத்மா:
இது ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாருக்குத் தெரியாதா ?
என்றார்.
நான் :
இது விஷயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று
சொன்னேன்.
மகாத்மா:
அப்படியானால் உமக்கு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரி
யாரிடம் கூட நம்பிக்கை இல்லையா? என்றார்.
நான் :
பார்ப்பனர்களுக்கு அவர்களிடம் இருக்கும் நம்பிக்கை.
குடி அரசு
- 19270)
136
அவ்வளவு எனக்கு அவரிடம் இல்லை என்று
சொன்னேன்.
மகாத்மா:
அப்படியானால் பார்ப்பனர்களிடத்திலேயே உனக்கு
நம்பிக்கையில்லையா என்றார்.
நான்:
இந்த விஷயத்தில் நம்பிக்கையே உண்டாவதில்லையே
என்றேன்.
மகாத்மா:
அப்படியானால் உலகத்திலேயே நல்ல பார்ப்பனர்
இல்லை என்பது உமது அபிப்பிராயமா என்றார்.
நான்:
என் கண்ணுக்குத் தென்படுவதில்லையே நான் என்ன
செய்யட்டும் என்றேன்.
மகாத்மா:
அப்படிச் சொல்லாதீர்கள் நான் ஒரு நல்ல பார்ப்பனரைக்
கண்டிருக்கிறேன். அவர்தான் கோக்கலே. அவர் தன்னை
பிராமணன் என்று சொல்லிக்கொண்டதே கிடையாது,
யாராவது அவரை பிராமணன் என்று கூப்பிட்டாலும்,
மரியாதை செய்தாலும் ஒப்புக்கொள்ளாததோடு உடனே
ஆட்சேபித்துத் தனக்கு அந்த யோக்கியதை இல்லை
என்பதை எடுத்துக் காட்டுவார்.
நான்:
மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராம
ணன் மாத்திரம் தென்பட்டு இருக்கும்போது என் போன்ற
வர்கள் கண்ணுக்கு எப்படி தென்படக்கூடும் என்றேன்.
மகாத்மா:
(வேடிக்கையாய் சிரித்து விட்டு) மறுபடியும் ஸ்ரீமான்
சந்தானம் ராஜீனாமாவை வாபீசு பெற்றுக்கொண்டு காரிய
தரிசி வேலை பார்க்கக்கூடாதா என்று என்னைக்கேட்டார்.
நான்:
நன்றாய்ப் பார்க்கலாம் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை
இல்லை.
ஆனால் பார்ப்பனரல்லாதாருக்கு சரிபகுதி
அதாவது 100-க்கு 50 உத்தியோகமாவது கொடுக்கப்
படவேண்டும் என்றேன்.
ஸ்ரீமான் பாங்கர் : ஆச்சரியப்பட்டு 100-க்கு 50 வீதம் போதுமா? அது
கூடவா இப்போது கொடுக்கப்படவில்லை என்கிறீர்.
என்று கேட்டார்.
நான்:
ஆம், என்றேன்.
சங்கர்லால்
பாங்கர்:
ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் 100-க்கு 50 போதுமென்
கிறாரே இது என்ன அதிசயம் என்றார்.
137
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மகாத்மா:
நான் ஒருபோதும் சம்மதியேன். 100-க்கு 90 கொடுக்க
வேண்டும்.
நான்
:
100-க்கு 50 கொடுப்பதாய் தீர்மானம் போட ஒப்புக்
கொள்ளமுடியாது என்கிறவர்கள் 100-க்கு 90 கொடுப்ப
தெப்படி? என்றேன்.
மகாத்மா:
தீர்மானம் போடவேண்டும் என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால் 100-க்கு90 கொடுக்கவேண்டியது
கிரமம் என்று சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு
ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து பார்ப்பனரல்லாதாருக்கு
உத்தியோகம் கொடுப்பதில் உமக்கென்ன ஆட்சேபணை
என்று கேட்டார்.
சந்தானம்:
எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஒருவரும்
வருவதில்லையே நான் என்ன செய்யட்டும் என்று
சொன்னார்.
மகாத்மா:
என்னைப் பார்த்து என்ன நாயக்கர் ஜீ? யாரும் வருவ
தில்லை என்கிறாரே என்ன சொல்லுகிறீர்?
நான்:
அது சரியல்ல. ஏன் வருவதில்லை என்பதற்கே காரணம்
வேண்டும். முதலாவது வேலை கொடுக்க வேண்டும்.
வேலை
கொடுத்து அவனை மரியாதையாக நடத்த
வேண்டும். இந்த இரண்டு காரியம்இருந்தால் எவ்வளவோ
பேர் வேண்டுமானாலும் கிடைப்பார்கள்.
மகாத்மா:
அப்படியானால் இனிமேல் உத்தியோகஸ்தர்களை நியமிக்
கும் அதிகாரம் நீங்கள் வைத்துக் கொள்ளுகிறீர்களா?
நான்:
ஸ்ரீமான் சந்தானம் அவர்கள் தன்னால் முடியாதென்றால்
நானே பார்த்துக் கொள்ளுகிறேன்.
மகாத்மா:
ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து இனி உத்தியோகஸ்
தர்கள் நியமனம் நாயக்கரிடம் விட்டு விடுங்கள் என்றார்.
சந்தானம்:
எனக்கு ஆட்சேபணையில்லை.
சி. இராஜகோபா
லாச்சாரியார் : குறுக்கே தலையிட்டு அது முடியாத காரியம். ஏனென்
றால் யார் வேலை வாங்குகிறார்களோ அவர்கள்தான்
வேலைக்காரரை நியமிக்க வேண்டும். அப்படிக்கில்லாமல்
ஒருவர் நியமிப்பது,ஒருவர் வேலை வாங்குவதுமாயு
மிருந்தால் வேலை நடக்காது என்றார்.
குடி அரசு
- 19270)
138
மகாத்மா
உடனே சிரித்துக்கொண்டு நாயக்கர் சொல்லுவதில்
ஏதோ உண்மை இருக்கும்போல் தோன்றுகிறது. இப்போது
நான் காங்கிரஸ் பிரசிடெண்டு, ஸ்ரீமான் ஜவாரிலால் நேரு
காரியதரிசி,நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவாரிலால்
வேலை வாங்க முடியாவிட்டால் நானாவது
குற்ற
வாளியாக வேண்டும். அல்லது ஜவாரிலாளாவது குற்ற
வாளியாக வேண்டும். நியமிக்கப்பட்ட ஆளிடம் குற்றமி
ருக்கநியாயமில்லை. சர்க்காரில் கூட நியமிப்பவர் ஒருவர்,
வேலை வாங்குபவர் ஒருவர். அப்படிக்கிருக்க அதில்
எங்கேயாவது வேலை வாங்குபவர் நியமிக்காததால்
வேலைக்காரர்கள் சரியாய் நடக்கவில்லை என்று ஏற்பட்டி
ருக்கிறதா? என்று கேட்டார்.
சி. ராஜகோபா
லாச்சாரியார்: வகுப்பு பிரிவினை பார்த்தால் போதுமா
? வேலை
நடக்க வேண்டாமா? தகுதியும் கூட பார்க்க வேண்டாமா?
என்றார்.
மகாத்மா:
நாயக்கர் அதையும் பார்த்துக் கொள்வார் என்றே நினைக்
கின்றேன். அப்படி பார்ப்பனரல்லாதாரை நியமித்ததன்
மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம்
கெட்டுப்
போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்க
வேண்டியதுதான்.அதாவது கதர் விஷயம் எப்படி முக்கிய
மானதோ அதுபோல வகுப்பு அதிருப்திகளும் நீங்க
வேண்டியதும் மிக முக்கியமானது. ஆதலால் கதர் போர்டு.
சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில்
இருக்கட்டும் என்று சொன்னார்.
பிறகு எல்லோரும் சரி என்று ஒப்புக்கொண்டதாக அவருக்கு ஜாடை
காட்டிவிட்டு வந்துவிட்டோம். பிறகு எப்படி எப்படியோ பாடுபட்டு கதர்.
ஆதிக்கம் முழுவதும் தங்கள் கைக்கே வரும்படியாக பார்ப்பனர்கள்
செய்துகொண்டார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நாமும்
கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல் கதருக்காக எவ்வளவு உழைக்க
வேண்டுமோ அவ்வளவு உழைத்தோம்; உழைத்துக் கொண்டுமிருக்கிறோம்;
இனியும் உழைக்கப் போகிறோம். எனவே மகாத்மா காந்தி இவர்களை
சரியானபடி அறிந்து கொள்ளவில்லை என நாம் நினைப்பது தப்பு என்றே
சொல்லுவோம். ஆதலால் மகாத்மாவை வரவேற்கும் விஷயத்திலும் பணம்
கொடுக்கும் விஷயத்திலும் நம்முடைய பங்கை நாமும் சரியாக
செலுத்தவேண்டும். சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் தனியாய் வசூல்
செய்தோ தனியாய் வரவேற்றோ தங்கள் கடமையை செய்யலாம் என்பதாக
சிலர் அபிப்பிராயப்படுவதாகவும் தெரிய வருகிறது. அது விஷயத்திலும்
139
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
நமக்கு ஆக்ஷபணை இல்லை. சென்னை, மதுரை, குடியேத்தம், வேலூர்
முதலிய இடங்களில் நம்மை நேரிலும் கேட்டார்கள். நாம் அப்படியானாலும்
சரி, எப்படியாவது நம் கடமையைச் செய்ய வேண்டும் என்றேதான் சொன்
னோம். கடைசியாக சொல்லுவது என்ன வென்றால், மகாத்மா வரவு நாள்
சமீபத்தில் இருப்பதால் ஆங்காங்கு உள்ளவர்கள் தனியாகவோ, கலந்தோ
தங்களுக்கு தோன்றுகிறபடி ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டுமாய்க்
கோருகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 06.03.1927
குடி அரசு
- 19270)
140
இதற்கு எண்ண வபயர்
கோயமுத்தூர் நகர பரிபாலன சபையில் பார்ப்பன கவுன்சிலர்களின்
துவேஷங்களும் உபத்திரவங்களும் கோயமுத்தூர் முனிசிபல் சேர்மனிடம்
பொறாமைக் கொண்ட சில ஆசாமிகளின் விஷமங்களும் கோயமுத்தூர்
விஷயங்களைப் பத்திரிகையில் கவனித்து வருகிறவர்களுக்கு நன்றாய்
தெரிந்திருக்கும். இப்போது அது நாளுக்கு நாள் முற்றி வருவதுடன் அப்
பார்ப்பனர்களுக்கு நாளுக்கு நாள் புத்திகூட மழுங்கிக்கொண்டு வருகிற
தென்றே சொல்லவேண்டியிருக்கிறது. சென்ற வாரத்தில் கோயமுத்தூர் முனி
சிபாலிட்டியில் ஒரு பார்ப்பனர் பார்ப்பனரல்லாத சேர்மெனைப் பற்றி ஒரு
தீர்மானம் கொண்டு வந்த விஷயம், மற்றொரு இடத்தில் பிரசரித்திருக்
கிறோம். அதாவது சேர்மனுக்கு முனிசிபாலிட்டியில் அதிகமான வேலை
இருப்பதால், அவர் தனக்குள்ள கெளரவ உத்தியோகங்களில் ஏதாவது
ஒன்றை ராஜினாமா கொடுத்துவிடவேண்டும் என்ற பொருள் கொண்ட
தீர்மானம் கொண்டு வந்தாராம். இத்தீர்மானத்தை ஈரோடு சேர்மன் ஸ்ரீமான்
ஸ்ரீனிவாச முதலியார் அவர்களாயிருந்தால் காலடியில் போட்டு நசுக்கி
இருப்பார். ஸ்ரீமான் ரத்தினசபாபதி முதலியாரோ அவ்விதம் செய்யாமல்
வேண்டுமென்றே கண்ணியமாய் அதை ஏற்றுக்கொண்டு விவகாரத்திற்கு
விட்டதோடு தானும் அக்கிராசன ஸ்தானத்திலிருந்து மாறி தாராளமாய்
அங்கத்தினர்கள் பேசவும் தன்பேரில் குற்றம் இருந்தால் எடுத்துக் காட்டவும்
இடம் கொடுத்தார். இதை கொண்டு வந்தவர்கள் மூன்று வித யோக்கியதை
யுடையவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்.
அதாவது படித்தவர்
என்பதோடு இரண்டாவது சட்டம் தெரிந்தவரென்றும் சொல்லிக்கொள்ள
உரிமையுடையவர்கள். மூன்றாவது பிராமணர் என்றும் உயர்ந்த ஜாதியார்.
என்றும் சொல்லிக் கொள்ளும் ஆணவமும் படைத்தவர்கள். இத்தீர்மான
மானது படித்த அறிவை ஆதாரமாகக் கொண்டதா? அல்லது சட்டத்தை
ஆதாரமாகக் கொண்டதா? அல்லது பிராமணத் தன்மையை ஆதாரமாகக்
கொண்டதா? என்று பார்த்தால் பார்ப்பனர் பிறவிக் குணம் என்று சொல்ல
வேண்டியதல்லாமல் வேறென்ன சொல்லுவதென்று நமக்கு விளங்கவில்லை.
இத்தீர்மானத்தை அங்கிருந்த பார்ப்பனரல்லாத கவுன்சிலர் 25 பேர்களில்
ஒருவராவது ஆதரிக்கவில்லை. கடைசியாக ஸ்ரீமான் சி.எஸ். சாம்பமூர்த்தி
அய்யர் என்கிற ஒரு பார்ப்பனர் ஆதரித்தாராம். ஸ்ரீமான் சி.எஸ். சாம்பமூர்த்தி
141
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
அய்யர் என்பவர் கோயமுத்தூர் பார்ப்பனர்களுக்கும் கொஞ்சம் புத்திசாலி
என்றும் மற்ற பார்ப்பனர்களைப்போல அவ்வளவு முட்டாள்தனமாய் சிக்கிக்
கொள்வதோ காரியங்களைச் செய்வதோயில்லாமல் தந்திரமாய் நடந்து
கொள்ளக்கூடிய சாமர்த்தியசாலி என்றும் பெயர் வாங்கினவர். அப்படிப்பட்ட
வருக்கும் பார்ப்பனரல்லாதாரிடத்தில் ஏற்பட்ட துவேஷத்தின் போதையும்
பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்கிற
ஆத்திரமும் அவருடைய அறிவையும் கூட மளுங்கச் செய்து அத்
தீர்மானத்தை ஆதரிக்கும்படி செய்துவிட்ட தென்றால் மற்ற பார்ப்பனர்களால்
எவ்வளவு உபத்திரவம் நடந்து கொண்டிருக்கும் என்பதை வாசகர்களே
கவனிக்க வேண்டும். அல்லாமலும் இந்த தீர்மானத்தில் வெறும் குறும்பு
இல்லாமல் வேறு ஏதாவது கண்ணியமான கருத்து அடங்கி இருக்கிறதா?
இதற்கு பார்ப்பனர்களின் துவேஷமும் உபத்திரவமுமென்று சொல்வதல்
லாமல் வேறு என்ன பெயரிடுவது? ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியாருக்கு
சட்டசபை மெம்பர் வேலையோ, ஜில்லா போர்டு தலைவர் வேலையோ
வைத்து இருப்பதானால் முனிசிபல் சேர்மனுக்கு லாயக்கில்லை என்று
சொல்வதனால் மற்றவர்களின் யோக்கியதையை அவரவர்களே யோசித்துப்
பார்க்கட்டும். ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியாருக்காவது அவர் சாப்பாட்
டுக்கு தாராளமாக அவருடைய பெரியவர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்
போயிருக்கிறார்கள். இம்மாதிரியான பொது காரியம் தவிர அவருக்கு வேறு
ஒரு வேலையும்
இது சமயம் இல்லை. அதாவது விவசாயமோ, வியாபாரமோ,
வக்கீல் பிழைப்போ ஆகிய இதுகளில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற
ஒரு தொந்தரவும் கிடையாது. இவருக்கே இவ்வேலைகள் லாயக்கில்லை
என்று சொல்வதானால் அன்றாடம் பலர் குடியைக் கெடுத்தாலொழிய
ஜீவனமில்லை, சொக்காயில்லை, தலைப்பாகையில்லை, வீட்டு வாடகைக்கு
மார்க்க மில்லை மற்றும் 12 மணி நேரமும் தங்கள் வயிற்றுப் பாட்டிற்கே.
நாணயமற்ற வழியில் உழைக்க வேண்டியவர்களும் தங்களது அறிவு, கல்வி,
நேரம் முழுவதையும் அன்னியருக்கு விற்று ஜீவிக்கிறவர்களுக்கு லாயக்
குண்டா? என்பதையும் அவர்கள் வசம் பொது காரியத்தை ஒப்புவிப்பது
இதை விட நல்லதா? என்பதையும் வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.
ஆனால் இவற்றையெல்லாம் கவுன்சில் விவாதத்தின் போதே மற்ற கவுன்
சிலர்கள் நன்றாய் எடுத்துக்காட்டி புத்திவரும்படி செய்திருக்கிறதாக
பத்திரிகையில் பார்த்தோம். ஆனாலும், பார்ப்பனரல்லாதாருக்கு எங்கே
யாவது கொஞ்சம் ஆதிக்கமிருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவு அக்
கிரமமாகவும், யோக்கியப் பொறுப்பற்ற தனமாகவும் ஒவ்வொரு பார்ப்பனரும்
நடந்துகொண்டு அதை ஒழிக்கப் பார்ப்பதும், இதை யாராவது கண்டித்தால்
இது பார்ப்பன துவேஷமென்று சொல்லுவதுமானால் இதன் அர்த்தமென்ன?'
ஸ்ரீமான் சாம்பமூர்த்தி அய்யரைப்போல் பொறுப்பும், யோக்கியதையும்,
புத்தியும் உள்ளதாகக் கருதப்படும் பார்ப்பனர்கள் இவ்வித குறைவான
காரியங்களில் தலையிடாமலும், தலையிடுபவர்களுக்கும் புத்தி சொல்லி இரு
குடி அரசு
- 19270)
142
சமூகத்திற்கு ஒற்றுமை ஏற்படுவதற்கு வேண்டிய காரியங்கள் செய்ய
வேண்டியதிருக்க அதை மறந்து தானும் இதில் சரிபங்கு எடுத்துக் கொள்வ
தானால், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஒற்றுமைக்கும் பரஸ்பர அன்புக்கும்
இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறோம்? தஞ்சை ஜில்லா போர்டு
பிரசிடெண்டும் ஒரு யோக்கியமான பார்ப்பனரல்லாதாராயிருப்பதால்
அவரையும் அங்கு இரண்டு பார்ப்பனர்கள் இதுபோலவே கொடுமை செய்து
வருகிறார்கள். பார்ப்பனப் பத்திரிகை ஆணவமானது இவற்றிற்கு உதவி
யாயிருக்கிறது. சேர்மனின் அக்கிரமங்களைக் கண்டிக்க ஒவ்வொரு கவுன்சி
லருக்கும் ஒவ்வொரு ஓட்டருக்கும் வரி கொடுப்போருக்கும் உரிமையுண்டு.
அதை நாம் ஒரு சிறிதும் ஆக்ஷேபிக்கவில்லை. பார்ப்பனரல்லாதார் என்கிற
காரணத்திற்காக விட்டு விடும் படியும் நாம் சொல்லவில்லை. நன்றாக
யோக்கியமான வழியில் கண்டிக்கட்டும். ஆனால் சேர்மனுக்கு இத்தனை
கவுரவம் கூடாதென்று சொல்லுவதும்,
இவர் கூடாது என்று சொல்லுவதும்
எவ்வளவு அல்பத்தனமும் கெட்ட எண்ணமும் என்பதுதான் நமது கேள்வி.
ஈரோட்டில் இரவு பகலாக பணம் திருட்டுப் போகிறது. சாமான்கள்
திருட்டுப் போகிறது. வரிகள் கொள்ளைப் போகிறது. வரிப்பணங்கள் நாசமா
கிறது. அக்கிரம வரிகள் தலைவிரித்தாடுகிறது. இவ்வளவும் செய்யும் நாணய
மற்ற சேர்மனும் இங்குள்ள பார்ப்பன கவுன்சிலரும் ஒரே படுக்கையில்
படுத்துக்கொண்டு கொஞ்சுகிறார்கள். கவுன்சிலிலும் கேள்வி இல்லை, மந்திரி
சபையிலும் கேள்வி இல்லை, சட்டசபையிலும் கேள்வி இல்லை. கோய
முத்தூர் சேர்மன் மீது ஒரு கவுன்சிலராவது இவ்வளவு பொறாமையுடனும்
கெட்ட எண்ணத்துடனும் தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலராவது இம்
மாதிரியாக ஒரு குற்றத்தையும் சொல்லாமல் மேலும் மேலும் சேர்மனைப்
புகழ்ந்துகொண்டே இம்மாதிரி விஷமம் செய்வதானால் இச்சமூகத்தில் நல்ல
எண்ணத்திலும் மானம் வெட்கத்திலும் இனியுமா சந்தேகம் என்றுதான்
கேட்கிறோம். இது சமயம் பார்ப்பனர்களுக்கு தங்களைச் சேர்ந்தவர்கள்
அதிகாரத்திலிருப்பதாலும் தங்களைப் பிறர் வந்து நத்தும்படியான தொழிலிலி
ருப்பதாலும் செல்வாக்குள்ள பத்திரிகைகள் தங்களுடையதாக இருப்பதாலும்
இதுவும் செய்யலாம் இன்னும் அநேகம் செய்யலாம். இதைப்பற்றி யாராவது
பேசினால் அவர்களை ஒழித்து விடலாமென்கிற ஆணவம் கொண்டாலும்
கூடமக்கள் உண்மை அறிந்து தங்கள் சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் செய்
யும் உணர்ச்சி வந்தால் அப்போது இவர்கள் கதி என்ன ஆகும் என்பதை
யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். ஸ்ரீமான் சாம்பமூர்த்தி
அய்யர் அவர்கள் போன்றார்கள் இம் மாதிரி விஷயங்களில் தலையிட்டிருக்
காவிட்டால் இதைப்பற்றி இவ்வளவு தூரம் எழுத முன்வந்திருக்கமாட்டோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.03.1927.
143
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
யார்ப்பணர் - பார்ப்பணால்லாதார்
யுத்தம் வதாடங்கப்பட்டு விட்டது
கொஞ்ச காலமாக நம் நாட்டுப் பார்ப்பனரல்லாதார் மக்கள் தங்களது
சுயமரியாதை உணர்ச்சி பெற்று பார்ப்பனீய அடிமைத் தன்மையில் இருந்து
விடுபடவேண்டும் என்கிற உணர்ச்சி பெறுகிற காரணத்தால் இப்பார்ப்பனர்.
கள் இவ்வுணர்ச்சியை அடக்கி ஒழிக்க பல வழிகளிலும் முயற்சித்து வருவது
பொது விஷயங்களில் கண்ணோட்டம் செலுத்திவரும் யாவரும் அறிந்ததே.
அதாவது 10 வருஷங்களுக்கு முன்னால்
டாக்டர் நாயர் பெருமானும்
தியாகராய பெருமானும் அரசியல் துறையிலும் காங்கிரஸ் இயக்கத்திலும்
எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் அக்கால அரசியல் காங்கிரஸ்.
கான்பரன்சுகளில் தலைமை வகித்தல், அமிதவாதமான சொற்பொழிவு
நிகழ்த்துதல், கமிட்டியில் சாட்சி சொல்லுதல், தேசீய அபிப்பிராயம் சொல்லு
தல், இரகசிய போலீசாரின் கண்காணிப்புக்கு ஆளாகுதல் முதலிய காரியங்
களில் தற்காலம் மிக பெரிய தேசபக்தர், தேசத் தொண்டர், தேசீய வீரர்,
தேசீயத் தலைவர் என்று சொல்லப்படுவார்கள். எவர்க்கும் இளைத்தவர்கள்.
அல்லாதாராயிருந்து வந்ததும் யாவரும் அறிந்ததே.
இப்பொழுதாவது பார்ப்பனரல்லாதார் “தேசபக்தர்” ஆவதென்றால்
வெகுசுலபமான காரியம். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு விரோதம் என்று
படும்படியாய் பார்ப்பனரல்லாதார் கட்சியென்று ஒன்றிருப்பதால் அக்கட்சி
யை வைவதற்கென்றோ அதற்கு விரோதமாய் பிரசராம் செய்வதற்கென்றோ
ஒரு பூனைக் குட்டியோ நாய்க்குட்டியோ வந்தாலும் நமது பார்ப்பனர்கள்
அதற்கும் ஜே! போட்டுமாலை இட்டு வண்டியில் வைத்து இழுத்து பத்திரிகை.
களின் மூலம் தலைவர் தலைவர் என்கிற பட்டமும் சூட்டி வயிற்றுப் பிழைப்
புக்கும் கூட ஆதரவு தேடிக்கொடுப்பதும். தினக்கூலி மாதக்கூலி கொடுப்
பதுமான சவுகரியம் இருப்பதால் யார் வேண்டுமானாலும் தேசபக்தரும்
தலைவரும் ஆகிவிடலாம். இப்படிப்போல் இல்லாமல் பார்ப்பனரல்லா
தார்களை முற்போக வொட்டாமல் தடுத்து சூழ்ச்சி செய்து அடக்கி ஆளும்
வஞ்சக காலத்தில் தேசத் தலைவராகவும் தேசபக்தர்களாகவும் ஒரு பார்ப்ப
னரல்லாதார் விளங்கி இருந்தனரென்றால் அவர்கள் எவ்வளவு தீவிர தேச
பக்தியும் தைரியமும் உடையவர்களாயிருந்திருக்க வேண்டும்.அப்படிப்பட்ட
குடி அரசு - 19970)
144
வர்களே இப்பார்ப்பனர்களின் உபத்திரவத்தையும் சூழ்ச்சியையும் கொடுமை
யையும் வஞ்சகத்தையும் பொறுக்கமாட்டாமல்
தேசத்தைவிட சுய
மரியாதையே பெரிதென்றெண்ணி. பார்ப்பனர் ஆதிக்கம் பார்ப்பனர் கூட்டு
றவு முதலிய பார்ப்பன சம்பந்தமுள்ள அரசியலை உதறித் தள்ளிவிட்டுவந்து
தனியாக பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கும் முன்னேற்றத்திற்கும்
சமத்துவத்திற்கும் ஆக ஒரு இயக்கத்தை ஆரம்பித்ததும் அதை ஒழிக்க
பார்ப்பனர்கள் செய்த பிரயத்தனங்களும் அதற்காக பார்ப்பனரல்லாதாரை கை
ஆயுதமாக உபயோகித்துக் கொண்டதும் அனுபவபூர்வமாயும் பிரத்தியக்ஷ
பூர்வமாயும் யாரும் அறிந்ததே. அது போலவே இப்போதும் இப்பார்ப்பனர்.
சூழ்ச்சியில் சிக்கி முன் அனுபவப்பட்டவர்களைக் கண்டும் புத்திவராமல்
தாங்கள் அவர்களைவிட அனுபவசாலிகள், புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள்
என்பதாகவோ, அலட்சிய புத்தியாலோ பார்ப்பன மாய்கையில் ஏமாந்தோ
சிலர் சிக்கி விழுந்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும் கெடுத்து மக்க
ளையும் சுயநலக்கார நயவஞ்சகர்கள் வசம் காட்டிக் கொடுத்து புதிதாக
பார்ப்பன அனுபவம் பெற்று அவர்களின் யோக்கியத்தை தெரிந்து டாக்டர்.
நாயர் பெருமான், தியாகராயர் போன்று விலகி முன்னிலும் அதிகமாய் அவ்
வியக்கத்தை பரவச் செய்து வருகிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.
ஆனால் நமது பார்ப்பனர்களுக்கு தாங்கள் முன் சொல்லப்பட்டவர் இயக்கங்
களை ஒழிக்க பிரயத்தனப்பட்ட காலத்தில் சவுகரியமேற்பட்டது போல்
இப்போது சவுகரிய மேற்படவில்லை. ஏனெனில் பாமர ஜனங்கள் கண்:
விழித்துக் கொள்ளத்தக்க நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தவிர பார்ப்பன
ரல்லாதார் இயக்கத்தை திட்டவும் அழிக்கவும் முன் ஆள்கள் கிடைத்த மாதிரி
பார்ப்பனரல்லாதாரில் மரியாதையும் யோக்கியதையும் பாமர ஜனங்கள் நம்பத்
தகுந்த நிலைமையும் உடைய ஏமாந்த சோனகிரிகளாக யாரும் கிடைக்க
வில்லை. ஒவ்வொருவராக நழுவியும் விட்டார்கள். நழுவிக் கொண்டேயும்
வருகிறார்கள். ஆதலால் வெறும் வயிற்றுச் சோற்று ஆசாமியும் தினக்கூலி
மணிக்கூலி ஆசாமிகளும் தவிர வேறு யாரும் கிடைப்பது மில்லை. இதனால்
பார்ப்பனர்கள் பாடு இந்தக் காரியத்திற்கு ஆள் கிடையாது. வெகு திண்டாட்ட
மாய்ப் போய்விட்டதால் இப்போது அவர்கள் புதிய தந்திரம் ஒன்று கண்டு
பிடித்திருக்கிறார்கள். அதாவது வெள்ளைக்காரர்கள் தயவை எதிர்பார்ப்பது
சட்ட இலாக்காவிலும் நீதி இலாக்காவிலுமே தங்கள் இனத்தவர்கள் இப்போது
ஆதிக்கம் பெற்றிருப்பதால் அதைக்கொண்டு சட்டத்தின் பேரால்
இவ்வியக்கத்தை ஒழிக்க முயற்சித்து வருகிறார்கள். எப்படியெனில் பம்பாய்
மாகாண பார்ப்பனரல்லாதார் மந்திரி ஸ்ரீமான் யாகவர் இங்கு வந்த காலத்தில்
அவர் மீது சர்க்கார் சட்ட மெம்பர் ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்.
கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு அவரை இம்மாகாணத்தை விட்டு ஏன்
வெளியேற்றியிருக்கக் கூடாது? என்று ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்.
கள் சொன்னதும் அதற்கு பிறகு ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பேரி
லும் ஆரியா அவர்கள் பேரிலும் சட்டமெம்பரும் அட்வகேட் ஜெனரலும்
145
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
கவர்ன்மெண்டும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி ஸ்ரீமான் சீனிவாசய்
யங்கார் அவர்கள் சர்க்காரைக் கெஞ்சினதும் சென்றவாரம் திருவண்ணா
மலையில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் ஸ்ரீமான் நாயக்கர் முதலிய
வர்கள் பேரில் சர்க்கார் 153 - A பிரிவுப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ள
வேண்டும் என்றும் சர்க்கார் எடுத்துக்கொள்ளாவிட்டால் சுயராஜ்யக் கட்சி
யாராவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் ஸ்ரீமான் சி.ராஜ
கோபாலாச்சாரியார் அவர்கள் தஞ்சைக்கு கதர் பிரசாரத்தின் பேரால் இவ்
வாரம் போயிருந்த காலத்தில் “தமிழ்நாடு” பேரில் நடவடிக்கை எடுத்துக்
கொள்ள வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் பேசினதும் சர்க்கார் ஆதிக்கத்
தில் உள்ள பார்ப்பன பெரிய அதிகாரிகள் சிலர் இவர்கள் வேண்டுகோளுக்கு
அனுகூலமாய் ஆதாரங்கள் தேடிக் கொண்டும் ஏற்படுத்திக் கொண்டும் இருப்
பதும்
ஆகியவைகளே இதற்கு போதுமான ஆதாரங்கள். ஒத்துழையாமைக்
காரரும் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களுமான பார்ப்பனர்.
களே இம்மாதிரி ஆசை கொள்ளுவார்களேயானால் மற்ற பார்ப்பனர்கள்
எவ்வித ஆசைகொள்ளமாட்டார்கள் என்பதை வாசகர்களே யோசித்துக்
கொள்ளட்டும். நமக்கு பல மொட்டைக் கடிதங்கள் கேவலமாகவும், வண்டத்
தனமாகவும், மிரட்டுதலாகவும் எழுதிவருவதையும் பார்க்கும்போது அப்
பார்ப்பனர்களின் ஆசையும் ஆத்திரமும் நன்றாய் விளங்குகிறது.
இதோடு கூட நாம் பிரசாரங்களுக்கு வெளியூர்களுக்குப் போகிற
இடங்களில் எல்லாம் பார்ப்பனர்கள், மேல்கண்ட பார்ப்பனர்கள் ஆசைப்
படுவதுபோல் நடவடிக்கை எடுத்துக்கொள்ளத்தக்க மாதிரியும் வேறு பல
அதாவது திருவண்ணாமலை, மதுரை முதலிய இடங்களில் பார்ப்பனர்கள்.
மேல் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில் முடிவு பெறாமலிருக்கும் பிராதுகளை'
எதிர்க்க ஆதாரமாகவும் சில ஆதாரங்களை ஏற்படுத்திக்கொண்டு வரு
கிறார்கள்.
அவை யாதெனில், வேலூருக்குப் போயிருந்தபோது, “நாயக்கர்
கோயிலுக்கும் ஆதித் திராவிடர்களை கூட்டிக்கொண்டு போகப் போகிறார்.
எல்லோரும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்” என்று துண்டுப் பிரசுரம்
வழங்கப்பட்டதும், நாகையில் “நாயக்கர்
ஆதி திராவிடர்களை கோவிலுக்குள்.
கூட்டிப் போகப் போகிறார்” என்று மேஜிஸ்ட்ரேட்டுக்கு அறிவித்து பந்தோ
பஸ்துக்கு ஆள்களைக் கேட்டு கூட்டிப் போனதும், கோவிலை அனாவசி
யமாய் பூட்டி வைத்து ஜனங்களுக்குள் ஒரு தப்பபிப்பிராயத்தை உண்டு
பண்ணுவதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள்.
சர்க்காருக்கு
தப்பபிப்பிராயங்கள் உண்டு பண்ணுவதைப் பற்றி நமக்கு கவலையில்லை.
ஆனாலும் இதிலிருந்து இவர்கள் எண்ணத்தையும் ஆசையையும் பொது
ஜனங்களே உணர வேண்டும். தவிர, திருவண்ணாமலையில் அண்ணாமலை
யார் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்ற ஸ்ரீமான் கண்ணப்பர்.
முதலியவர்களைத் தடுத்து சுவாமி தரிசனம் செய்ய வொட்டாமல் கதவைப்
பூட்டிக்கொண்டதாக ஸ்ரீமான் கண்ணப்பர் டிரஸ்டி பேரிலும் கோவில்
குடி அரசு
- 19270)
146
மேனேஜர் பேரிலும் குருக்கள் பேரிலும் திருவண்ணாமலை மேஜிஸ்ட்ரேட்.
கோர்ட்டில் பிராது கொடுத்திருக்கிறார். சரியோ தப்போ கோர்ட்டார் கிரமமாய்
விசாரித்து நீதி செலுத்த விட்டுவிட வேண்டியது எல்லோருடைய
கடமையுமாகும். அப்படிக்கில்லாமல் இந்தப் பிராதை பார்ப்பனர் - பார்ப்பன
ரல்லாதார் கட்சி சண்டையாக எடுத்துக்கொண்டு பார்ப்பனர்கள் பெரிதும்
இதில் கவலை வைத்து எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட்டு வருகிறது.
முதலாவது அங்கிருந்து ஒரு பார்ப்பனரல்லாதார் மேஜிஸ்ட்ரேட் திடீரென்று
விசாரணைக்கு இரண்டொருநாள் முன்பதாக மாற்றப்பட்டு ஒரு பார்ப்பன
மேஜிஸ்ட்ரேட்டை அங்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது தானாக ஏற்பட்டதாகச்
சொன்னாலும் சொல்லலாம். ஆனாலும்,
இந்த குறிப்பிட்ட
பிராதை
சர்க்காரும் ஒரு முக்கியமானதாகவும் ஜனங்களுக்குள் உணர்ச்சி உண்டாக்கக்.
கூடியதாகவும் உள்ள பிராது என்பதாக மதித்து கோர்ட்டுக்கு பந்தோபஸ்து
முதலியவைகளை அனுப்பியிருக்கும்போது இம்மாதிரி உணர்ச்சியுள்ள.
கேள்வி விசாரணைக்கு தகுந்தமாதிரி பார்ப்பனரல்லாத மேஜிஸ்ட்ரேட்
மாற்றப்பட்டு அதற்கு பதிலாய் ஒரு பார்ப்பன மேஜிஸ்ட்ரேட்டை போடுவ
தென்றால் எப்படி ஜனங்கள் சந்தேகப்படாமலிருக்க முடியும்? தவிரவும்
அந்த கேசுக்கு வக்கீலாய் வந்த ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, “இந்த இடத்தில்
உள்ள மேஜிஸ்ட்ரேட்டுகளும் கோவாப்ரேட்டிவ் அதிகாரிகளும் அக்
கிரமங்கள் செய்கிறார்கள்” என்றும்
பொதுக்கூட்டத்திலும் சொன்னார்
என்றால் டி மேஜிஸ்ட்ரேட் மாறுதலுக்கும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள்.
சொன்னதற்கும் சம்பந்தமிருக்க வேண்டும் என்று நினைக்க ஹேது
இருக்கிறதா? இல்லையா? தவிர இந்த வழக்கிற்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி
வக்கீலாய் வரக் காரணமென்ன? இதிலிருந்தே இந்தக் கேசை பார்ப்பனர் -
பார்ப்பனரல்லாதார் என்கிற கட்சிப் பிரச்சினையாய்ப் பார்ப்பனர்கள் ஏற்றுக்
கொண்டிருக்கிறார்கள் என்பதும், இதிலிருக்கும் இசகு பிசகுகளை கவனித்து
இருவரையும் பிடித்து ஏதாவது ராஜி செய்துவிட்டுப் போகலாம் என்கிற
சமாதான உணர்ச்சியில்லாமல் ஒரு கட்சிக்கு வக்காலத்து போட்டு தனது எதிர்.
கட்சிக்காரரை 153 பிரிவுப்படி நடவடிக்கை நடத்தவேண்டுமென்று உபந்நி
யாசம் செய்துவிட்டு அந்த பிராது வாங்கின மாஜிஸ்ட்ரேட்டையும் பார்ப்பன
ரல்லாதார் என்பதற்காக வைவதும் என்றால் இப்பார்ப்பனர்கள் எவ்வளவு
தூரம் நம் சமூகத்தின் மீது யுத்தத்திற்குத் தயாராயிருக்கிறார்கள் என்பதை
வாசகர்களே யோசித்துப் பார்க்க வேண்டியது தான். கேஸ் சரியா? தப்பா?
என்பதை பற்றியும் நாம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஆனாலும், பிராது
கொடுத்திருக்கும் ஸ்ரீமான் கண்ணப்பர் பணக்காரரல்ல.
இந்த பிராது
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் முறையில் நடத்துவதாயிருந்தால் கண்ணப்பர்.
அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றே சொல்லுவோம். பல வாய்தாக்
கள் ஏற்படலாம். ஒவ்வொரு வாய்தாவுக்கும் 30,40 செலவாகலாம். இது தவிர:
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களைப் போலவே கட்சி உணர்ச்சியுடன் கேசை
நடத்தக்கூடிய வக்கீல் ஒருவர் ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்களுக்கும்
147
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
வேண்டும். அம்மாதிரி யாராவது ஒருவர் தயாராக முன்வர வேண்டும்
இல்லாதவரை வக்கீலுக்கு பீசு என்று தடவை ஒன்றுக்கு 100 ரூபாயாவது
வேண்டிவரும். ஆக சுயமரியாதையை உத்தேசித்து சாதாரண வழக்கமான
உரிமைக்குப் போராட எண்ணிய ஸ்ரீமான் கண்ணப்பருக்கு இம்மாதிரி
நெருக்கடியான சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவர் என்ன செய்யக் கூடும்?
கோர்ட்களில் சத்திய தீர்ப்பு பெற்று விடக்கூடும் என்று சொல்ல நாம் தயாரா
யில்லா விட்டாலும் இந்தப் பிராது கட்சி யுத்தமாக மாறிவிட்டதே என்கிற
காரணத்திற்காக பயந்துகொண்டு திரும்ப வாங்கிக் கொள்வதோ அல்லது
எதிரியை கெஞ்சிக் கொள்வதோவான காரியங்கள் ஏற்படுவதானால் நம்
சமூகத்திற்கே இதைவிட வேறு அவமானமும் சுயமரியாதை அற்ற
தன்மையும் இல்லை என்றே சொல்வதோடு “பிள்ளைவரத்திற்குப் போய்
புருடனைப் பறிகொடுத்த” பழமொழிக்கே ஒப்பாகும். ஆதலால் இதுசமயம்
பார்ப்பனரல்லாத பொதுமக்கள் பார்ப்பனர்களைப் போலவே இவ்வழக்கை
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் கட்சி வழக்கு என்பதாகக் கொண்டு ஒவ்
வொரு பார்ப்பனரல்லாத வக்கீல்களும் தங்களால் கூடிய வக்கீல் உதவி
செய்ய முன்வருவதுடன் மற்ற பார்ப்பனரல்லாத மக்களும் தங்களால் கூடிய
பண உதவியும் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
பார்ப்பனர்களுக்கோ பணத்திற்குக் குறைவில்லை. “ஒரு நல்ல கொழுத்த
ஆடுஅவர்களுக்கு கிடைத்திருக்கிறது”. அதாவது இந்த திருவண்ணாமலை
வழக்கில் ஒரு நாட்டுக் கோட்டை செட்டியார் கனவானும் எதிரியாய்
இருப்பதால் நன்றாய் பணத்தைச் செலவு செய்யக்கூடும். ஜாதி அபிமான
சலுகையையும் பணம் கொடுக்கத்தக்க செல்வவானையும் அடைந்திருக்
கிறார்கள். ஆதலால் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் நமது மக்கள் கேசு
என்னவாயிற்று என்று பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்
பதில் பயனில்லை. அது என்ன ஆனாலும் நமக்கு கவலை இல்லை.
விரோதமாகும் என்பதாகவே நினைத்துக் கொண்டு தைரியமாக நாம் செய்ய
வேண்டிய கடமைகளைச் செய்து நமது சுயமரியாதையைக் காப்பாற்றிக்
கொள்ளவேண்டியதுதான். அனுகூலமானால் அதிர்ஷ்டம் என்று சந்தோஷப்
படலாம். ஆனாலும், பணமில்லாமல் வக்கீல் இல்லாமல், பொது மக்கள்:
ஆதரவில்லாமல், நமது சமூகத்திற்கு சுயமரியாதை இல்லாததால் கேசு
கெட்டுப்போய் விட்டது என்று பலர் நம்மைப் பரிகாசம் சொல்வதிற்கில்லாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொது மக்கள் ஞாபகத்துக்கு
கொண்டு வருகிறோம். இவ்வழக்கு கோர்ட்டில் வழக்காடுந் தன்மையையும்
நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையையும் பிரதானமாய் கருதாமல் நமது
சமூகத்தின் சுயமரியாதையை உத்தேசித்து ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்
ரூ.50 உதவித் தொகையாக கொடுத்திருக்கிறார். இனியும் இதற்கு யாராவது
பணம் அனுப்புகிறவர்கள் சென்னை பவழக்காரத் தெரு, 6 - 99 ஸ்ரீமான்
தண்டபாணி பிள்ளை அவர்கள் பேருக்கு அனுப்ப வேண்டியது. இந்த
தொகையை ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்கள் இந்தக் கேசைப் பொறுத்த
குடி அரசு
- 19270)
148
வரையில் செலவு செய்து கொள்ளலாம். மற்றபடி மீதி இருந்தால் இதுபோன்ற
காரியங்களுக்காவது “திராவிடன்” பத்திரிகையின் உதவிக்காவது உபயோ
கித்துக் கொள்ளலாம். நெருக்கடியான சமயத்தை வேடிக்கையாய் கருதாமல்
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சக்திக்கும் இஷ்டத்திற்கும் தகுந்தபடி
ஏதாவது அனுப்பிக் கொடுக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.03.4927
149
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
முணிசிபல் வபாது ரோட்டுகனில் மக்களுக்கு
உள்ள ௬தந்திரம்
யார்ப்பணால்லாத ஊட்சிகனின் தீர்ப்பு
ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு
ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலை
யாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர்.
அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும்
கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி
வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக,
போலீசார் இவ்விஷயமறிந்து ஸ்தலத்திற்குப் போய் பைசைக்கிளையும்
வேஷ்டியையும் பிடுங்கி கொடுத்துவிட்டு அந்தப் பார்ப்பனர் மீது கிரிமினல்
நடவடிக்கை நடத்தினார்கள். அதில் பார்ப்பனருக்கு 30 ரூபாய் அபராதம்
விழுந்தது. அதன் பேரில் பார்ப்பனர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து
கொண்டார்கள். அப்பீலில், பார்ப்பனரல்லாத இரண்டு ஐகோர்ட் ஜட்ஜிகள்.
பார்ப்பனர் செய்தது அக்கிரம மென்றும் ஜனங்கள் வரிப் பணத்தில் முனிசிபா
லிட்டியாரால் பரிபாலிக்கப்படும் எந்த ரோட்டிலும் யாரும் நடக்கலாம் என்றும்,
பார்ப்பனர் 30 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியதுதான் என்றும் தீர்ப்புச்
சொல்லி விட்டார்களாம். இது மிகவும் சந்தோஷப்படக்கூடிய விஷயம்
என்பதில் சந்தேகமில்லை. இதே ஐகோர்ட் ஜட்ஜ் ஸ்தானத்தில் வர்ணாசிரமப்
பார்ப்பனரோ அல்லது தன்னை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக்
கொண்டிருக்கும் பார்ப்பனரோ அல்லது பார்ப்பனர் சொல்லுப்படி ஆடுகிற
பார்ப்பனரல்லாதாரோ (நமது மந்திரிகளைப் போல்) ஜட்ஜிகளாய்
இருந்திருந்தால் இந்த கேசின் முடிவு இப்படியிருக்குமென்று உறுதி கூற
முடியுமா? ஜட்ஜிமெண்டு என்பது மிக பரிசுத்த ஜட்ஜிமெண்டு என்பதே
அவரவர்கள் மனச்சாக்ஷியைப் பொறுத்ததாகத்தானே இருக்கும். மனச்சாக்ஷி
என்பதே எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்காது. ஐரோப்பியருக்கு மாடு
சாப்பிடுவது மனச்சாக்ஷிக்கு விரோதமாகாது. பார்ப்பனரல்லாதாருக்கு ஆடு
தின்பது மனச்சாட்சிக்கு விரோதமென்பதாகத் தோன்றாது. பார்ப்பனருக்கு
இவர்கள் சாப்பிடுவதை கண்ணில் கூட பார்க்கக்கூடாது என்பது
மனச்சாக்ஷிக்கு விரோதமாகத் தோன்றாது. ஆதலால் இதே ஐகோர்ட் ஜட்ஜி
குடி அரசு
- 19270)
150
ஸ்தானத்தில் ஒரு வருணாசிரம பார்ப்பனர் இருந்தால் அவர் கண்டிப்பாய்
இந்த ரோட்டில் நடந்தது தப்பு என்றும் போட்ட அபராதம் வாப்பீஸ் செய்து
நடந்தவனை தண்டிக்க வேண்டும் என்று சொன்னால் தான் அவர் மனச்
சாகஷிப்படி நடந்தவராவர். அதனால்தான் நாமும் நமது சுயமதிப்பையும்
மனச்சாகஷியையும் உத்தேசித்து ஐகோர்ட் ஜட்ஜ் முதல் எல்லா ஸ்தானங்க
ளிலும் பார்ப்பனரல்லாதாரே இருக்கவேண்டுமென்று கோருகிறோமே
அல்லாமல் வேறில்லை. இதுபோலவேதான் பார்ப்பனர்களுக்கு தங்களது
ஆதிக்கத்தை உத்தேசித்து பார்ப்பன ஜட்ஜிகளே இருக்க வேண்டுமென்று
கோருகிறார்கள். அவர்கள் கோருவதைப்பற்றி நாம் அவர்கள் பேரில் குற்றம்
சொல்ல வரவில்லை. ஆனால் அது நிறைவேறினால் நமது சமூகத்திற்கும்
நமது சுயமரியாதைக்கும் ஆபத்து என்றுதான் சொல்வதோடு நம்மால்
கூடுமானவரை தடுக்க வேண்டியதும் நம்முடைய கடன் என்கிறோம். அவர்.
கள் 4000, 5000 சம்பளம் வாங்குவதாலும் அவர்கள் ஜாதி வக்கீல்களையே
முன்னுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து அவர்களுக்கு அனுகூலம் செய்து
நம்ம ஜாதி வக்கீல்களை சிறுமைப்படுத்தி விரோதம் செய்வதினாலும் மற்றும்
அவர்கள் ஜாதியாருக்கே முனிச்ப்பு, சப் ஜட்ஜி, ஜட்ஜி முதலிய உத்தியோகங்
கள் கொடுத்து நம்முடைய ஜாதியாரின் உரிமையை ஒழிப்பதினாலும் நமக்கு
அவ்வளவு ஆபத்திருப்பதாய் நாம் நினைப்பதில்லை. ஆனால் கல்பாத்தி
பொது ரோட்டு வழிநடை உரிமை போன்ற விஷயங்களில் பார்ப்பன ஜட்ஜி
களிடம் இருந்தும் பார்ப்பன சட்டமெம்பர்களிடமிருந்தும் நமது சுயமரி
யாதைக்கும் அனுகூலமான தீர்ப்பு பெற முடியுமா என்கிற விஷயத்தில்தான்
பயமாயிருக்கிறது. உதாரணமாக கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்கலாம்
என்று சட்டசபையில் தீர்மானம் ஏற்பட்டும் சட்டமெம்பர் ஸ்ரீமான் சர்.சி.பி.
பார்ப்பனர் வேலையிருந்தால்தான் போகலாம் என்று சொல்லி வியாக்கி
யானம் செய்யவில்லையா? அதுபோலவே இந்த வழக்கும் பார்ப்பன
ஜட்ஜாயிருந்தால் ஈழவர் அந்த ரோட்டில் நடந்தது குற்றமானாலும் நடக்க
உரிமையில்லை. ஆனாலும், அதற்கு வேறு
மார்க்கம் செய்து நடக்கவிடாமல்
செய்துவிட வேண்டுமே அல்லாமல் தடுத்தது குற்றம் என்றாவது சொல்லி
அபராதத்தைக் காயம் செய்ய அவரது மனச்சாக்ஷி சொல்லுமே அல்லாமல்
பார்ப்பனரல்லாத ஜட்ஜியைப் போல் சர்க்கார் பொது ரோட்டில் யாரும் தாராள
மாய் போகலாம் என்று துணிந்து இயற்கை தர்மத்தை சொல்லியிருப்பார்.
என்று எண்ண நமக்கு தைரியமில்லை. இது எப்படியோ இருக்கட்டும்.
இனியாவது பாலக்காட்டு பார்ப்பனர்கள் கல்பாத்தி ரோட்டில் யாரும் நடக்க
சுதந்திரம் கொடுப்பார்களா? அல்லது அந்த தீர்ப்பை வாங்கி பாலக்காட்டு
முனிசீப்பு கோர்ட்டில் நிறைவேற்றி சர்க்கார் பந்தோபஸ்துடன் போய்க்
கொண்டு இருக்க வேண்டுமா என்று தான் கேட்கிறோம்.
அது போலவே,
திருநெல்வேலி சந்நியாசி அக்கிரஹாரப் பார்ப்பனர்களுக்கும் கும்பகோணம்
அய்யங்கார் தெரு, வியாசராய மடத்தெரு, பட்டாச்சாரி தெரு பார்ப்பனர்.
களுக்கும் இந்த தீர்ப்பே போதுமா அல்லது அங்கும் பெரிய கிளர்ச்சி செய்து
151
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
பார்ப்பனர்களின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி, சத்தியாக்
கிரகம் செய்து ஜெயிலுக்குப் போய் ஐகோர்ட்டுக்குப் போய் “நீதி” பெற
வேண்டுமா என்றுதான் கேட்கிறோம். அல்லது மகாத்மா இந்த ஊர்களுக்கு
வந்த சமயம் பார்த்து இந்த தெருவுகளில் நுழைந்து இந்த பார்ப்பனர்களின்
நிலைமையை அவர் அறியச் செய்ய வேண்டுமா என்றுதான் கேட்கிறோம்.
ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள். ஏனெனில்
ஐகோர்ட், கவர்ன்மெண்டு, சட்ட மெம்பர், சட்டசபை மற்றும் அதிகாரம்
செல்வாக்கு முதலியவைகளில் அவர்கள் இருப்பதால் இதையெல்லாம் கால்
தூசிக்கு சமானமாய்தான் நினைப்பார்கள். ஆனாலும், பாமர மக்கள்
இவ்வாங்கில அரசாட்சியிலேயே தெருவில் நடக்க தெருவைத் தொடாமல்
பைசைக்கிளின் மேல் போக உரிமை கொடுக்க மறுக்கும் இக் கல்நெஞ்சக்
கூட்டங்கள் தங்களுக்கு சுய ஆட்சி வந்தால் எப்படி நடப்பார்கள்? நம்மை
எவ்வித கொடுமை செய்வார்கள்? நம்மை மனு தர்ம சாஸ்திரமோ பராசரஸ்
மிருதியோ அல்லது இதில் பட்ட ஆச்சாரிய சுவாமிகளோதான் ஆளுவார்
கள். ஆனாலும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்துவிட்டால் பிறகு
என்ன ஆகும் என்பதுதான் நமது கவலை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1927.
குடி அரசு
- 19270)
152
யார்ப்பணிமய் பித்தலாட்டம்
“சிரார்த்த
o G
33.
ஸ்ரீசங்கராச்சாரியர் மடம் ஆஸ்த்தான வித்துவான் ஸ்ரீ வெங்கிட்டராம
சாஸ்திரியை சிரார்த்த விஷயமான பல சந்தேகங்களைப் பற்றி ஒரு நண்பர்
எழுதிக் கேட்டிருந்தாராம். அதற்கு பதில் எழுத சாஸ்திரிக்கும் சாவகாச
மில்லையாம். குடும்ப விஷயமாக கிராமத்திற்குப் போய்விட்டாராம். மித்திர
னிலும் இடம் ஒதுக்க முடியாதாம். பத்திரிகைகள் மூலம் இம்மாதிரி சந்தேகங்
களும் நீங்காதாம். ஜகத்குருசாமிகள் என்பவர் ஆரியதர்மம் என்று ஒரு
பத்திரிகை போடுவாராம். அதை வாங்கிப் படித்தால் சந்தேகமெல்லாம்.
நிவர்த்தி ஆகி விடுமாம். இது ஸ்ரீ சோமதேவ சர்மா என்கிற ஒரு பார்ப்பனர்:
பேரால் 10. 3. 27 தேதி மித்திரனில் பிரசுரித்திருக்கிறது. இது என்ன புரட்டு?
கள்ளு, சாராயம் விற்க பத்திரிகையில் இடமிருக்கிறது. வருணாசிரம தர்மம்,
ஆரியதர்மம், பிராமண தர்மம், சனாதன தர்மம், இந்து தர்மம் என்கிற
பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஏற்பட்ட மத விஷயங்களைப் பரப்ப மித்திரனில்
இடமிருக்கிறது, சாஸ்திரிகளுக்கும் சர்மாக்களுக்கும் சாவகா முமிருக்கிறது.
யாருக்காவது இதில் சந்தேகமேற்பட்டால் அதை விவரிக்க சாஸ்திரிகளுக்கும்
சாவகாசமில்லை, பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இடமில்லை என்றால்
பார்ப்பனப் புரட்டுகளுக்கு இதை விட வேறு என்ன சாக்ஷி வேண்டும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1927.
153
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
செண்ணை சட்டசபை வாவ சுவை திட்டம்
(ஊஸ்மூஸ் கட்சி வகான்கை)
கனவான்களே! சென்னை சட்டசபையிலுள்ள வரவு செலவு திட்டத்
தைப் பற்றி எனக்கு கொஞ்சமாவது கவலையில்லை.
அதில் கவலை
செலுத்துவதில் ஏதாவது பிரயோஜனம் உண்டாகுமா? என்கிற விஷயத்திலும்.
அதிகமான பிரயோஜனமிருக்காது என்கிற முடிவுக்கு வந்தவன். ஏழை
மக்களிடம் வசூலித்த கோடி கோடியான வரிப் பணத்தை அம்மக்களுக்கு
யாதொரு கிரமமான உபயோகமும் செய்யாமலேயே வெள்ளைக்காரரும்
நமது படித்தக் கூட்டத்தாரும் எப்படி பங்கு போட்டுக்கொள்ளுவது என்பது
தான் பட்ஜெட் (வரவு செலவு திட்ட) விவாதம் என்பது எனது முடிவான
அபிப்பிராயம். சட்டசபை மாத்திரமல்ல இந்திய சட்டசபை அரசாங்க சபை
ஆகிய எதுகளின் யோக்கியதையை பற்றியும் இம்மாதிரிதான் நினைக்கிறேன்.
பெரிய பெரிய திட்டம் என்பதெல்லாம் கூட இப்படியே ஜால வேடிக்கை
யாகத்தான் முடிகிறது. உதாரணமாக மேட்டூர் திட்டம் முதலிய யானை
விழுங்கி பிசாசு போன்ற திட்டங்களின் சூதுகளை கவனித்துப் பார்த்தால் மற்ற
துகளைப்பற்றி யாருக்குமே சுலபமாய் விளங்கிவிடும். அத்திட்டங்களால்
என்ன லாபம் என்பதை இப்பொழுதுதான் தஞ்சை ஜனங்கள் கூட உணர்ந்து
வருகிறார்கள். இத் திட்டத்தின் பேரால் கோடி கோடியாய் நமது பணம்
வெளிநாட்டிற்கு யந்திரங்களுக்காகவும், சிமெட்டு முதலிய வெளிநாட்டு
சாமான்களுக்காகவும் லக்ஷ லக்ஷமாக வெளிநாட்டார் உத்தியோகத்தில்
சம்பாதிக்கவும் கொள்ளை போகவும் நம்நாட்டு அதிகாரிகளுக்கும் லக்ஷ
லக்ஷமாய் கொள்ளை போகவுமே உண்டாக்கப்பட்ட திட்டமாய் ஏற்பட்டு
விட்டதே என்று எல்லோரும் சந்தேகப்படும்படியாய்விட்டது. இச் சந்தேகங்
களுக்கு யாரும் இன்னமும் பதில் சொல்பவரே இல்லை. கோபம் மாத்திரம்
வருகிறது. இந்தக் கொள்ளையை பற்றி ஜஸ்டிஸ் கட்சியார் பேரிலும் கூடத்
தான் ஜனங்கள் குற்றம் சொல்லுகிறார்கள். இவர்கள் ஏன் அதிகாரத்தில்
இருந்த காலங்களில் இவற்றை வெளியிட்டிருக்கக்கூடாது? என்பதற்கு தக்க
சமாதானம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். இப்படி கோடி கோடியாய்
செலவாகும் பணத்தின் யோக்கியதையே இப்படி இருந்தால் ஆயிரம்,
பத்தாயிரம் ரூபாய் செலவுகளில் சண்டை பிடிப்பதில் பயன் என்ன? நமது
குடி அரசு
- 19270)
154
நாட்டு பட்ஜட் சண்டையே வெட்கக் கேடான காரியம். எப்படியாவது
அரசாங்கத்தார் அவர்கள் பிடித்த காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இதில்
தலையிட்டு சத்தம் போடுவதின் மூலம் நமது படித்தவர்கள் தங்களுக்கு ஒரு
பங்கு அதில் கிடைக்க வழி தேடுவதே அல்லாமல் ஜனங்களுக்கு நன்மை
செய்வது என்பது பூஜ்ஜீயம்தான். பட்ஜட்டில் உண்மையான சண்டை போடுவ
தென்றால் அரசாங்கச் செலவை குறைப்பதின் மூலம் மக்களின் வரியைக்
குறைக்கக் கூடியதாய் இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் வரி வசூல்
செய்த பிறகு செலவை குறைப்பதற்கு சண்டை போடுவதில் லாபம் என்ன?
உதாரணமாக மந்திரி சம்பளம் குறைப்பது என்பதில் சிலர் சண்டை போட்டு
விட்டால் பெரிய தேசப் பக்தர்களாகி விடுகிறார்கள். மந்திரிகள் சம்பளம்.
குறைவுப்பட்டால் யாருக்கு லாபம்? சம்பளம் குறைந்த விகிதத்திற்கு ஏதாவது
வரி குறைக்கப்படுகிறதா? “சுடுகாட்டிற்கு போன பிணம் சுட்டுத்தான் ஆக
வேண்டும், திரும்பி வரமுடியாது” என்பதுபோல் மந்திரிகள் சம்பளம்
ஆளுக்கு மூவாயிரம், மூவாயிரம் குறைத்து விட்டாலும் அந்த மீதி பணத்
திற்கும் இன்னும் இரண்டு உத்தியோகமோ, திட்டமோ போட்டு பார்ப்பனர்.
களுக்கும், படித்தவர்களுக்கும் அந்த பணம் போய் சேரும்படி செய்து
விடுவார்களே தவிர வரி கொடுத்தவர்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காமல்
போவதோடு அந்த உத்தியோகஸ்தர்களையும் திருப்தி செய்ய ஏழைகள்
அதிகம் பணம் செலவு செய்ய வேண்டித்தான் வரும். மந்திரிகள் நிறைய
சம்பளம் வாங்கினாலாவது சட்டசபையில் தங்களை உபத்திரவிக்கின்றவர்
களுக்கு மாதம் 400, 500 கொடுக்கலாம்; அதனால் அவர்களும் பிழைக்கலாம்.
நான் நேற்றுகூட ஒரு விசேஷம் கேள்விப்பட்டேன். அதாவது,ஜஸ்டிஸ் கட்சி
மந்திரிகள் தங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் தங்கள் கட்சி பிரசாரங்க
ளுக்காக, பத்திரிகைகளுக்காக மாதம் 3000 ரூபாய் கொடுத்து வந்தார்களே
அதுபோல் சில மந்திரிகள் தங்களை சட்டசபையில் உபத்திரவிக்காமல்
இருக்கும்படி செய்வதற்காக சில வாயாடி ஆசாமிகளுக்கு மீ” 400,500
கொடுக்கலாமாஎன்று கூட நினைத்தார்களாம்! இது பொய்யோ நிஜமோ
எனக்கு உண்மை தெரியாவிட்டாலும் வேடிக்கையாக பார்ப்போமேயானால்
இதில் தப்பிதமில்லை என்றே சொல்லலாம். என்னவென்றால் ரூ 5533-5 - 4
வீதம் ஒவ்வொரு மந்திரி மீ” சம்பளம் வாங்கி இவ்வளவையும் தானே
சாப்பிடுவதற்கு என்ன பாத்தியம்? ஏன்? மற்றவர்களுக்கும்
அதில் ஒரு பங்கு
கொடுக்கட்டுமே;
ஒரு கட்சி மந்திரிகள் தங்கள் பேரில் ஒரு கட்சியார்
ஏற்படுத்தும் கெட்டப் பெயரை மாற்றுவதற்காக பத்திரிகை பிரசாரத்திற்கு
ஆளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்தால், மற்றொரு கட்சி மந்திரிகள்
தங்கள்பெயரில் கெட்ட பெயர் ஏற்படுத்த எண்ணி உபத்திரவம் செய்ய
வருபவர்களுக்கோ 500, 500 ரூபாயாக கொடுத்து அதை முளையிலேயே
கிள்ளி விடுவது, பின்னும் லாபகரமான காரியமே அல்லாமல் வேறல்ல.
தற்கால நாகரீக அரசியல்களில் இதெல்லாம் ஒரு அதிசயமும் அல்ல
குற்றமும் அல்ல என்றே தோன்றும். ஆனால் இதுகள் ஒருவழியில் சிரமம்
155
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியார் இந்த தர்ம நியாயத்தை நினைத்துக்கொண்டு
சும்மா இருக்கக்கூடாது. ஜஸ்டிஸ் கட்சி அதிகார பதவியில் இருந்த காலத்தில்
அதன் எதிரிகள் உருப்படியான யாதொரு காரியத்தையும் செய்யவில்லை.
ஆனாலும், செய்பவர்களையும் கெடுத்துக்கொண்டு தேசம் எப்படி போனா
லும் சரி என்று அதிகாரப் பதவிகளை மாத்திரம் கைப்பற்றச் செய்து வந்த
பல சூழ்ச்சிகளில் சட்டசபையில் வெறும் கூப்பாடு போட்டு பாமர ஜனங்கள்
ஏமாறும்படிபத்திரிகைகளில் விஷமப் பிரசாரங்கள் செய்து வந்ததும், அதற்கு
அனுகூலமாக சில அரசியல் பிழைப்புக்காரர்கள் ஒத்தாசை புரிந்து வந்ததும்,
அதனால் பாமர மக்கள் உண்மை அறியமுடியாமல் போய் ஏமாற்றம்.
அடைந்ததும் நாம் எல்லோரும் நேரில் அறிந்த விஷயமே. அவ் விதப் பொய்
பிரசாரத்தின் காரணமாகவே ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த பலர் தத்களைவிட
எவ்விதத்திலும் யோக்கியதை, உயர்வு இல்லாதவர்களாலும், தாழ்ந்த சாதாரண
மக்களாலும் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டதும் நாம் யாவரும் அறிந்த
விஷயமே.
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியாரும் இப்போது பதிலுக்கு பதிலாய் அந்த
கொள்கையை எடுத்துக்கொள்ளக் கூடாதானாலும் பார்ப்பனக் கூட்டத்தார்.
செய்தது புரட்டான காரியங்களென்றும் அது தங்கள் தங்கள் சுயநலத்திற்காக
செய்து வந்த ஆரவாரங்களேயல்லாமல் அதில் உண்மையான தேசபக்தியோ,
நல்ல எண்ணமோ இல்லை என்றும், இவ்வித முயற்சிகள் பார்ப்பனரல்லாதார்
முன்னேற்றத்தைத் தடுக்க எண்ணங்கொண்டு செய்த சூழ்ச்சிகள் என்றும்,
இதை அறியாமல் பாமரமக்கள் ஏமாந்து போய்விட்டார்கள் என்றும், வெளிக்
குக்காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் அதை விட்டுவிடாமல்
எந்தெந்த கிரமமான வழிகளில் அவற்றை வெளிக்கு காட்டக்கூடுமோ,
அந்தந்த வழிகளுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டுவிடக்கூடாது என்றே
சொல்லுகிறேன். இவ்வித காரியங்களாலும் தேசத்திற்கு ஒரு நன்மையும்
ஏற்படாதென்பது உறுதி. ஆனாலும் பொய்யர்களின் யோக்கியதையை
வெளிப்படுத்துவதின் மூலமாய் தேசத்திற்கு நன்மைகள் ஏற்படலாம் என்பதை
மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். உதாரணமாக மந்திரிகளின்
சம்பளத்தை குறைப்பதில் யாதொரு விதமான லாபம் இல்லையானாலும் நாம்.
குறைக்கத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அப்போது பார்ப்பன கட்சியாகிய
சுயராஜ்ஜிய கட்சியாரின் யோக்கியதை என்ன என்பதை பாமர மக்கள் அறியச்
செய்யலாமல்லவா? அன்றியும் ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்கார்
என்கிற ஒரு அய்யங்கார் பார்ப்பனர் ஸ்ரீரங்கத்தில் சொன்னதாக “சுதேச
மித்திரன்” பத்திரிகையில் வெளியாயிருக்கிறபடி பார்த்தாலே பார்ப்பன
சூழ்ச்சிகள் இன்னது என்பது யாவருக்கும் விளங்கும். அதாவது:- தாங்கள்.
மந்திரிகளை எதிர்க்கப் போவதில்லை என்றும், ஏதாவது திட்டங்களை
எதிர்த்து சட்டசபையில் வெற்றி பெற்றாலும் அவ்வெற்றியை நிராகரித்துவிட
கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாகவும் ஆதலால் அநாவசியமாய்
குடி அரசு
- 19270)
156
எதிர்ப்பதில் பயனில்லை என்று கருதி மந்திரிகளுடன் ஒருவிதமான ராஜி
செய்து கொண்டதாகவும் பேசியிருக்கிறதாக பத்திரிகைகளில் காணப்
படுகின்றது. சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றி வெற்றிபெற்றால்
அதை கவர்னர் நிராகரித்துவிடலாம் என்கிற விஷயத்தை ஒரு மனிதன்
உணருவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 30000,40000 செலவு செய்து பொய்யும்
புளுகும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி சட்டசபைக்குப்
போனபின்புதான் தெரிந்துகொள்வதென்பது யாராவது நம்ப முடியுமா? இந்த
உண்மை ஒரு பங்கா இழுப்பவனுக்கும் கூடத் தெரிந்திருக்கும். அப்படி
யிருக்க ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்கார்
அவர்கள் இப்போதுதான்
தெரிந்துகொண்டவர் போல் பேசியிருப்பதிலுள்ள புரட்டு யாவருக்குமே எளி
தில் விளங்கலாம். அல்லாமலும் மந்திரிகளிடம் பார்ப்பனர்கள் ராஜி செய்து
கொண்டார்களாம். என்ன ராஜி என்று பார்ப்போமானால் “பாள்ப்பணரல்லா
தார் முன்னேற்றத்திற்கு மந்திரிகள் இடையூறாய் இருக்க வேண்டும்.
ஜில்லா போர்டு முனிசிபாலிடி முதலிய ஸ்தானங்கள் பார்ப்பனர்கள்
சொல்லுகிறபடி தாங்களும் தங்களுடைய நிபந்தனையில்லாத அடிமை
களுக்குமே விநியோகிக்க வேண்டும். மந்திரிகளின் ஆதிக்கத்திலுள்ள
உத்தியோக போகங்கள் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமை
களுக்குமே விநியோ கிக்க வேண்டும் - இதற்கு நன்றி காட்டுவதற்காக
மந்திரிகளுக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் நடந்து கொள்ளுவ
தோடு மற்றவர்கள் யாராவது இடைஞ்சல் செய்தாலும் தாங்கள்
முன்னின்று அதை நிவர்த்தித்துக் கொடுப்பது” என்பது அல்லாமல் வேறு
ராஜி என்னமாய் இருக்கக்கூடும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
உதாரணமாக மந்திரிமார்கள் போகிற பக்கங்களிலெல்லாம் சுயராஜ்ஜிய கட்சி,
ஒத்துழையாமைக் கட்சி முதலிய கட்சி பார்ப்பனர்கள் வரவேற்பளிப்பதும்,
அவர்கள் வாலை பிடித்துக் கொண்டு பின்னால் திரிவதுமான காரியங்களிலி
ருந்தே பார்க்கலாம். முன் மந்திரிகளுக்கு எந்த முனிசிபாலிட்டியாராவது வர
வேற்புசெய்தால் “இதுயாருடைய பணம்” என்று கேட்பதும், முன் மந்திரிகள்
சுற்றுப்பிரயாணம் செய்தால் “எதற்காக இப்படி பொது மக்கள் பணத்தில்
சுற்றுப்பிரயாணம் செய்கிறார்கள். இதற்கு செலவு என்ன ஆயிற்று” என்று
கேட்பதுமாயிருந்தார்கள். முன் மந்திரிகளாவது தாங்கள் தனியாய் சுற்றுப்
பிரயாணம் செய்தார்கள். இப்போதைய மந்திரிகள் நியமனமான காலந்
தொட்டு பெண்டு பிள்ளைகள், சம்சார சகிதமாய் (எத்தனை நாளைக்கு இந்த
பதவி வாழப்போகிறதோ என்கிற கவலையின் பேரில்) மாமியார் வீட்டு
விருந்து சாப்பிடுவது போல் ஊர் தவறாமல் சுற்றிக்கொண்டு தங்கள் பதவி
நிலைப்பதற்கு ஆங்காங்குள்ள ஆள்களுக்கு நல்ல வார்த்தை சொல்லுவதும்,
ஸ்தல சுய ஆட்சி முதலிய பதவி உத்தியோகங்கள் கொடுப்பதுமான காரியத்
தில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் யாருமே பார்த்திருக்கலாம். இதற்காக இந்த
“தேசீய பார்ப்பனர்களும் ற்
ர
, “முட்டுக்கட்டைபார்ப்பனர்களும் |, “ஒத்துழையா
பார்ப்பனர்களும்” ஏதாவது பேசுகிறார்களா? திருடனை தேள் கடித்தது போல்
157
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
வாயை மூடிக் கொண்டிருப்பதுடன் இவர்களும் இதற்கு உதவி செய்து வருகி
றார்கள். இதை பார்க்கிறபோது ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்கார்,
“மந்திரிகளிடம் ராஜி செய்து கொண்டோம்” என்று சொன்னதற்கு ஆதார
மில்லாமல்
போகவில்லை. நாமும் இவற்றையெல்லாம் அடியோடு கூடாது
என்று சொல்ல வரவில்லை. இப்போதைய அரசியல் முறையில் யார் மந்திரி
வேலை பார்த்தாலும் இப்படித்தான் நடக்கச் செய்யும் என்பது நமக்குத்
தெரியும். ஆனாலும் இந்த போக போக்கியம் பார்ப்பனர்களுக்குத்தான்
சொந்தமா என்றுதான் கேட்கிறோம்? ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள்
இந்த பார்ப்பன புரட்டுகளை பாமர மக்களுக்கு சட்டசபையின் மூலம்
எவ்வளவு தூரம் வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் வெளிப்படுத்த
வேண்டுமென்றுதான் நான் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். அதற்
கேற்ற நல்ல சமயம் கிடைத்திருக்கிறது. இனி இம்மாதிரி சமயம் கிடைப்பது
அரிது. மந்திரிகள் நமக்கு தனி முறையில் சிநேகிதர்கள் என்றோ வேண்டி
யவர்கள் என்றோ அல்லது பார்ப்பனர்களுக்கு பத்து எலும்பு போட்டால்
நமக்கு ஒன்றாவது போடமாட்டார்களா என்றோ நினைத்து பார்ப்பன புரட்டு
களுக்கு நாம் அனுகூலமாய் இருப்பது மிக மிக கேவலமும் மானக்கேடும்.
ஆகும் என்றே சொல்லுகிறேன். இரண்டு, மூன்று வருஷ காலத்திற்குதான்
நாம் உத்தியோகமில்லாமல் இருந்தால் செத்துப் போய்விடுவோமா? ஆயிரக்
கணக்கான வருஷ காலமாய் பார்ப்பனர்களால் அழுத்தப்பட்டு கிடக்கும் நாம்
நல்ல சந்தர்ப்பம் வந்து பாமர ஜனங்களும் கண் விழித்துக்கொள்ள தயாரா
யிருக்கும் இச்சமயத்தை சரியானபடி உபயோகித்துக்கொள்ள வேண்டு
மென்றே கோருகிறேன். ஸ்ரீமான் பனகால் அரசருக்கும், 21:ராஜனுக்கும்
டாக்டர் சுப்பராய மந்திரிகளிடமும் அன்பும் சினேகிதமும் இருக்கலாம்.
அதுபோலவே நமக்கும் முதல் மந்திரி விஷயத்தில் அய்யோ பாவம் ஒரு
கொங்கு வேளாள மந்திரியாவது கொஞ்ச காலத்திற்கு போக போக்கியமனுப
விக்கட்டுமே என்கிற ஆசை இருக்கலாம். ஆனால் அதை காட்ட இது
சமயமல்ல. பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு மானக்கேட்டை உண்டாக்கும்
படியான நிலைமையை விருத்தி செய்வதற்கு அனுகூலமாயிருக்கும்
மந்திரிசபையிடம் இம்மாதிரி சொந்த சிநேகிதமும், அன்பும், ஆசையும்,
வைத்து அனுமதிப்பது மிகவும் முட்டாள்தனமான காரியமென்றே சொல்லு
வேன். மந்திரிகளின் கொடுமைக்கும் அவர்கள் பார்ப்பன கொள்கையையே
உடையவர்கள் என்பதற்கும் ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன். தமிழ்நாட்.
டில் ஒன்று இரண்டு தவிர ஏறக்குறைய எல்லா ஜில்லா போர்டு பிரசிடெண்டு
களும் பார்ப்பனரல்லாதாராயிருக்கிறார்கள். இதனால் பார்ப்பனரல்லாத
சமூகத்திற்கு எவ்வளவு நன்மை ஏற்பட்டிருக்கிறதென்பது அந்தந்த ஜில்லா
போர்டுகளில் பார்ப்பனர்கள் பிரசிடெண்டாயிருந்த காலத்தில் எப்படி
இருந்தது என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். இப்போது பார்ப்பன
ரல்லாத பிள்ளைகள் படிக்கவும், பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் உத்தி
யோகஸ்தர்கள் ஏற்படவும் எவ்வளவோ நன்மை ஏற்பட்டிருக்கிறது. இந்த
குடி அரசு
- 19270)
158
சம்பளமே பிரதானமாயில்லா விட்டாலும் பார்ப்பனரல்லாதாருக்கும் புத்தி
உண்டு, மூளை உண்டு என்று ௬ஜு செய்யவாவது சந்தர்ப்பம் கிடைத்தது.
இப்போது இதை ஒழிக்க பார்ப்பனர்கள் யோசனை சொன்னால் முதல் மந்திரி
அதற்கு இடம் கொடுப்பதானால் இதைவிட மோசமாக பார்ப்பனரில்கூட
ஒருவரை எதிர்பார்க்க முடியாது. என்னவெனில் திருநெல்வேலி, தஞ்சை,
தென்னாற்காடு, சேலம், செங்கற்பட்டு ஆகிய ஜில்லாக்களின் ஜில்லா போர்டு
பிரசிடெண்டுகளுக்கு உத்தியோகம் காலாவதியானால் மறுபடியும் அவர்கள்
தேர்தலில் நிற்பதற்கு யோக்கியதை அளிக்கக்கூட மறுப்பதானால்
இம்மந்திரியின் கொள்கையையும் பார்ப்பனரல்லாதார் அபிமானத்தையும்
பற்றி சொல்ல வேறு என்ன ஆதாரம் வேண்டும்? பொள்ளாச்சி முனிசிபாலிட்
டியில் வெகு காலமாய் கட்சிகள் இருந்து வருவதும் அங்குள்ள உத்தியோகஸ்
தரல்லாத சேர்மனை எடுத்துவிட்டு உத்தியோகஸ்தர்களே சேர்மணாய் இருந்து
வந்ததும் யாவருக்கும் தெரியும். இந்த ஊருக்கு உத்தியோகஸ்தரல்லாத
சேர்மன் முறை வழங்கும்படி பொது ஜனங்கள் வெகு காலமாய் கேட்டு
வந்தவர்களுக்கு தவளைகள் தங்களுக்கு ராஜாவாக இருக்க மரக்கட்டை
வேண்டாமென்று கேட்டதற்கு பாம்பை கொடுத்ததைபோல் திடீரென்று ஒரு
பார்ப்பன சேர்மனை நியமிப்பதென்றால் அதுவும் தனக்கு மீட்டிங்கு நடத்த
கோரம்கூட சேர்த்துக்கொள்ள லாயக்கில்லாத அவ்வளவு “செல்வாக்கு”
உள்ள ஒரு பார்ப்பனரை நியமிப்பதானால் மந்திரியின் கொள்கைக்கு
இதைவிட வேறு பரீட்சை என்ன வேண்டும்? ஜமீன்தார் பிரதிநிதியான மந்திரி.
யோக்கியதையே இப்படி இருந்தால் மற்ற மந்திரிகளைச் சொல்லவேண்டுமா?
மற்றபடி ஒரு கிருஸ்தவ பிரதிநிதியாய் வந்த மந்திரி வகுப்புவாரி திட்டத்தின்
மூலமாய் பதவி அடைந்து விட்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தப்பு
என்கிறார். “இது உண்ட கலத்தில் இரண்டுக்கு இருந்தது” போல் அல்லவா
இருக்கிறது. இது மாத்திரமல்ல கள், சாராயம் குடிப்பது கெடுதியா என்று கூட
இனிமேல் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமாம். இதை பள்ளிக்
கூடத்திலேயே படித்துவிட்டு வராமல் ஏழை வரி செலுத்துவோர் பணத்திலா
மாதம் 5500 வாங்கிக்கொண்டு மந்திரியாகித் தானா படிக்க வேண்டும்? கள்,
குடிநின்றால் சர்க்கார் நடக்காதாம். சர்க்காரை நடத்திக் கொடுக்கத்தான் இவர்.
களை சுயராஜ்ஜியக் கட்சியார் மந்திரிகளாக்கினார்கள் என்பது இப்போதாவது
விளங்கவில்லையா? இன்னமும் இவர்கள் ஊருக்கு ஊர் முன்னுக்கு பின்
புரண்டு பேசுவதைப் பற்றி வண்டி வண்டியாய் எடுத்துச் சொல்லலாம். இந்த
மந்திரிகள் தங்கள் கட்சிக்கு 15 பேர்கள்தான் இருக்கிறார்கள் என்று
சொல்லுவது சுத்த பொய் என்றே சொல்லுவேன். சுயராஜ்யக் கட்சி மெம்பர்.
40 பேரும் சட்ட மெம்பர் தயவால் நியமனம் பெற்றவர்களும் ஒத்துழையா
பார்ப்பனர் தயவால் சட்டசபைக்கு வந்தவர்களும் பின்பலமாயிருக்கிறார்கள்.
இதை வெளியாக்கக்கூட ஜஸ்டிஸ் கட்சிக்கு யோக்கியதை இல்லை என்பதா
னால் இதை விட நமது சமூகத்திற்கு வேறு அவமானம் வேண்டியதில்லை.
ஆதலால், இந்த புரட்டுகளையும் சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்த எங்கெங்கு
159
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றதோ அதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்
என்று சொல்லுகிறேன். இதற்காகத்தான் நீங்கள் சட்ட சபையில் இருந்தால்
இருக்கலாம்.
ஒரு சமயம் சர்க்கார் நிஷ்டூரமோ மந்திரிகளின் சொந்த
சிநேகிதத்திற்கு கெடுதியோ வரும் என்பதாக பயப்படுவதாய் இருந்தால்
கவுன்சில் பதவியை ராஜினாமா கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிடுவது
சுயமரியாதைக்கு அழகல்லாமல் சுயராஜ்யக் கட்சியாரின் சுயநலத் திட்டத்தை
நடத்திக் கொடுக்கும் மந்திரிகளுடன் சரிசமமாய் உட்கார்ந்திருப்பது மிகவும்
கேவலமானதாகும்.
மதுரை மகாநாட்டில் தலைவர் பனகால் அரசர்
சட்டசபையில் மந்திரிகளையும் சர்க்காரையும் எதிர்க்க சந்தர்ப்பம் கிடைக்கிற
காலத்தில் கொஞ்சமும் தயவு தாக்ஷண்யமில்லாமல் எதிர்ப்போம் என்றும்,
உத்தியோகம் ஏற்பதில்லை என்றும் சொன்னார். இதை பார்ப்பனர்கள்
வாக்குத்தத்தம் போலும், பார்ப்பன காங்கிரஸ் வாக்குத்தத்தம் போலும் செய்து
விடாமல் பார்ப்பனரல்லாதார் வாக்குத்தத்தம் போல் செய்ய வேணுமாய்க்
கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு: சென்னை தியாகராய மெமோரியல் கட்டிடத்தில் பி.டி. ராஜன்.
தலைமையில், பனகால் அரசர், பாத்ரோ ஆகியோர் முன்னிலையில் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 20.03.1927.
குடி அரசு
- 19270)
160
“௬தேசமித்திரணின் ” உபத்திர
“சுதேசமித்திரன்” என்னும் பத்திரிகையைப் பற்றி அதாவது அது
பார்ப்பன பத்திரிகை என்றும், அது பார்ப்பனரல்லாதார் முற்போக்குக்கு
இடைஞ்சலாகவும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அனுகூலமாகவும் பார்ப்பன
பிரசாரம் செய்யும் பத்திரிகை என்பதாகவும் பல தடவைகளில் நாமும் மற்றும்
அநேக கனவான்களும் அவ்வப்போது ஆதார பூர்வமாய் வெளிப்படுத்திக்
கொண்டே வந்திருக்கிறோம். அதன் நிருபர்களும் ஆங்காங்கு உண்மைக்கு
மாறாகவும் விஷமத்தனமானதாகவும், பார்ப்பன முன்னேற்றத்திற்கு தகுந்தாப்
போலும் பார்ப்பனரல்லாதார்க்கு இழிவும் கெட்ட பெயரும் வரும்படியாகவும்
அறிக்கை செய்து கொண்டு வருவதைப் பற்றியும் நாம் மாத்திரமல்லாமல்
மற்றும் அநேகர்கள் கண்டித்தெழுதி வந்திருப்பதோடு அதை பகிஷ்கரித்து
வந்திருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கக்கூடும். அது மாத்திரமல்லாமல்
அநேக முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டு தலைவர்கள் “மித்திரன்”
நிருபரை உள்ளே அனுமதிக்க மறுத்ததும், பார்ப்பன அங்கத்தினர்கள் சிபார்சு
செய்திருப்பதும் அதே பத்திரிகையில் பார்த்திருக்கக்கூடும். என்ன செய்தும்.
பத்திரிகையினுடையவும் பத்திரிகை நிருபருடையவும் ஜாதிப் புத்தி கொஞ்ச
மாவது மாற்றமடைந்ததாகக் காணமுடியவில்லை.
கொஞ்ச நாளைக்கு முன் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டு
தேர்தலின் போது நாம் தஞ்சைக்கு போயிருந்த காலத்தில் தேர்தல் முடிந்ததும்
தலைவர் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் அவர்கள் சில அங்கத்தினர்களுக்கு நன்றி
கூறுகையில் தனியாக நிருபர்களை வெளியில் போகும்படி கேட்டுக் கொண்
டும், யாரும் இதைக் குறித்துக் கொள்ளக்கூடாது இது பொது விஷயமல்ல
என்பதாகவும் சொல்லி சில விஷயங்கள் சொன்னார். அதனால் ஒரு பார்ப்பன
நிருபர்
திருட்டுத்தனமாய்
வேஷ்டியைப்
போர்த்துக்கொண்டு
உள்ளுக்குள்ளாக குதித்துக்கொண்டு வந்தார். இதை நாகை தொழிலாளர்
ஸ்ரீமான் திருஞான சம்மந்தம் கண்டுபிடித்து தலைவருக்கு சொல்ல அவர்
சேவகனை விட்டு பரிசோதிக்க விஷயம் திருட்டுத்தனமாய் குறித்துக்
கொள்ளப்பட்டதும் தெரிந்தது. அதுவும் விஷமத்தனமாய் குறிக்கப் பட்டி
ருந்தது. இதைப் பார்த்து அங்கு உள்ளவர்கள் அவரை இகழ்ந்து வெளி
யாக்கிவிட்டார்கள். இது போலவே கொஞ்சமாவது மானம், வெட்கம்,
கண்ணியம் என்பது இல்லாமல் ஒவ்வொரு விஷயங்களிலும் இந்தக் கூட்டம்
161
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
உபத்திரவம் செய்து வருவது மறுக்க முடியாது. சமீபத்தில் கோயமுத்தூர்.
முனிசிபாலிட்டியில் சேர்மனுக்கு பல கெளரவம் இருக்கிறது:
இதில்
எதையாவது விட்டுவிட வேண்டும் என்கிற தத்துவமடங்கிய ஒரு தீர்மா
னத்தை இரண்டு பார்ப்பனர்கள் கொண்டு வந்த சமயத்தில் நடந்த விவாதங்
களை தப்பாய் பிரசுரித்தார்கள். அதாவது கவுன்சிலர்கள் சேர்மனைப் பற்றிப்
புகழ்ந்து பேசுகையில் “என் முன்னிலையில் என்னைப் புகழ்வது எனக்கு
வெட்கமாயிருக்கிறது என்றும் இனி யாரும் தயவு செய்து என் புகழ்ச்சியைப்
பற்றி பேசாதீர்கள் என்றும், குற்றத்தை மாத்திரம் எடுத்துச் சொல்லுங்கள்
திருந்துவதற்கு முயற்சிக்கிறேன்” என்று கண்ணியமாய் சொன்ன வார்த்
தையை கண்ணிய அபிப்பிராயம் கொடுக்கும்படி எழுதாமல் என்னை இம்
மாதிரி அவமானப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினதுபோல் குறிப்பிட்டி
ருந்ததும், இன்னும் இப்படி பல விதங்களில் உண்மையில் அந்தக் கூட்டத்தில்
நடந்த விவாதத்தில் ஸ்ரீமான் முதலியாரை யாரும் இகழ்ந்து பேசியதாகவும்
அப்பத்திரிகையிலும் குறிக்கவில்லை.
இப்படியிருக்க இப்படி பொருள்படும்படி சொன்னார். அப்படிநினைக்
கத்தகுந்த மாதிரி சொன்னார் என்பதாக இவர்களுக்கு மறுபடியும் சமாதா
னமும் எழுத வருகிறார்கள். ஆகவே நமது பாமர மக்கள் இம்மாதிரி விஷமப்
பிரசாரங்களைப் படித்துவிட்டு தங்களுடைய பரிசுத்தமான மனதை விஷ
மாக்கிக் கொண்டு விடுகிறார்கள். இந்த விஷமங்கள் பெரும்பாலும் ஜில்லா,
தாலூகா போர்டு விஷயங்களிலேயே செய்யப்படுகிற காரணம் பார்ப்பன
ரல்லாதார் செல்வாக்கை ஒழித்துப் பார்ப்பனர் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே.
ஆதலால் இனி இம்மாதிரி விஷயங்களை நிறுத்தச் செய்ய வேண்டுமானால்
ஜில்லா, தாலூகா போர்டு, முனிசிபல் தலைவர்கள் ஒன்று கூடி இம்மாதிரி
பார்ப்பன நிருபர்களின் இடைஞ்சல்களிலிருந்து தப்பவும், பார்ப்பன
பத்திரிகைகளின் விஷமப் பிரசாரத்திலிருந்து தப்பவும் வேண்டிய ஏற்பாடு
செய்துகொள்ளவேண்டும். குறிப்பிட்ட நிபந்தனைக்குட்பட்டு யோக்கியமாய்
நடந்துகொள்ளும் ஜவாப்புதாரிதனத்தின் மேல் இவர்களை உள்ளே
அனுமதிக்கவும் கவுன்சில் இவர்கள் நடவடிக்கை ஒன்று, இரண்டு, மூன்று
எச்சரிக்கைகளுக்குப் பிறகும் திருத்தப்படா விட்டால் அடியோடு உள்ளே
விடப்படாமலிருக்கவும் முடிவு செய்து கொள்ள வேண்டும். நிருப பார்ப்பன
ருக்கு இருக்கும் பொது நன்மை நமக்கு இருக்காது என்று எழுத எந்த
மனிதனும் நினைக்கமாட்டான். திருட்டுப் புரட்டு நடக்கும் பொது ஸ்தானங்
களை இந்தப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமாயிருந்தால்
வெளியிடவுமாட்டார்கள். ஆதலால், இதற்கு யாரும் பயப்படாமல் நமது
சமூகத்தின் நன்மையையும், நாட்டின் பொது க்ஷமத்தையும் கருதி இதற்கு
ஏதாவது ஒரு முறையை தைரியமாய் கை கொள்ள வேண்டுமென்று
சொல்லுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.03.1927
குடி அரசு
- 19270)
162
யார்ப்பணர்கனிண் முட்டுக்கட்டை பூனைக்குட்மு
வெணியாகிவிட்டது
சென்னை மந்திரிகள் “சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்களும்”,
“ஓத்துழையாமைப்” பார்ப்பனர்களும் தங்களுக்கு உள் உளவாய் இருக்கிறார்.
கள் என்கிற தைரியத்தினால் ஆளுக்கு ஒரு விதமாய் தலைவிரித்தான்
கோலமாய் உளறிக்கொண்டு வருகிறார்கள். “கன்னா பின்னா காவரையே,
கூவரையே உங்களப்பன் வீட்டுப் பெருச்சாளி” என்னும் உளறலை ஒரு
விறகுத் தலையன் பாடம் செய்துகொண்டு ஒரு சமஸ்தானத்திற்குப் போய்
இதை கவி என்று சொல்லி பரிசு கேட்டதாகவும், அங்கு இந்த விறகுத்
தலையனுக்கு அனுகூலமாயிருந்த ஒரு வித்வான் இதற்கு வியாக்கியானம்
செய்து பரிசு பெற உதவியாய் இருந்ததாகவும் தமிழ் இலக்கியத்தில் ஒரு கதை
உண்டு. அதைப் போல் மந்திரிகள் உளறலுக்கு சுயராஜ்யக் கட்சியார் அதாவது
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் வியாக்கியானம் செய்து அவர்கள் பதவி
நிலைக்க மந்திரிகளை மெச்சி நற்சாக்ஷி பத்திரம் அளிக்கிறார்.
உதாரணமாக ஒரு மந்திரி ஒரு ஊரில் படிப்படியாகத்தான் குடியை
ஒழிக்க முடியும் என்றும் மற்றொரு மந்திரி குடி தப்பா சரியா என்பதை
பற்றியே தான் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும், மற்றொரு
மந்திரி பணத்திற்கு என்ன செய்வ தென்றும் பேசியவைகள் எல்லாருக்கும்
தெரிந்ததே. இதைப்பற்றி வரவு செலவு திட்ட விவாதத்தில் “ஜஸ்டிஸ்”
கட்சியார் எடுத்து சொன்னபோது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் உடனே
வக்காலத்து வாங்கிக்கொண்டு சமாதானம் சொல்ல வந்துவிட்டார்கள்.
அதாவது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் “கவர்ன்மெண்டின் முறையில்
எங்களுக்குள்ள அதிருப்தியைக் காட்டிக் கொள்ளப் போகிறோமல்லாமல்
(மந்திரி பேரில் நாங்கள் குற்றம் சொல்ல இடமில்லை?” “இப்பொழுது
இருக்கும் மந்திரி சபை ஜஸ்டிஸ் கட்சியாருக்குப் பிடிக்காததால் அதை தோற்க
டிக்கப் பார்க்கிறார்கள்.” ஆனால் (நாங்கள் அதற்கு இடங்கொடுக்காமல்
அதை நிலை நிறுத்துவோம்!
“ஜஸ்டிஸ் கட்சியார் இந்த மந்திரி சபையைத் தோற்கடித்து விட்டுத்
தாங்கள் மறுபடியும் அதிகாரமடையப் பார்க்கிறார்கள்.” ஆதலால் நாங்கள்
163
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
இந்த மந்திரிகளை எதிர்க்க முடியாது உதவி செய்துதான் தீருவோம்! “இப்
போதிருக்கும் மந்திரிகள் வெளியிட்டிருக்கும் கொள்கை முற்போக்கானதாக.
விருக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளுகிறோம். இப்போதைய
மந்திரிகள் மதுவிலக்கு விஷயத்தில் கஷ்டமிருப்பதாக சொல்லுவது
எங்களுக்கும் தெரிகிறது. பணத்திற்கு வழி தேடவேண்டும்.திருட்டுத்தனமாக
மது வியாபாரம் தடுக்க வழி தேட வேண்டும்.” (இது இரண்டும் செய்யாமல்
மதுவிலக்கு என்பது முடியாத காரியம்). “இந்த மந்திரிச/பையை கவிழ்த்துவிட
நாங்கள் இப்போது சம்மதிக்க மாட்டோம். அதற்கு தகுந்த காலம் எங்களுக்
குத் தெரியும்” (அதாவது இம்மந்திரிசபை கவிழ்ந்ததும் நாங்கள் அதை
அடையக்கூடிய சமயம் எதுவோ அதுதான்! என்று பேசியிருக்கிறார். இது
“சுதேசமித்திரன்” பத்திரிகையிலேயே இருக்கிறது.
குறிப்பு:
“இவ்வடையாளமிட்டது ஸ்ரீமான் மூர்த்தி அவர்கள் பேசியது” (.)
இவ் வடையாளமிட்டது அதில் தொக்கியிருப்பது. ஆகவே பார்ப்பனர்களின்
முட்டுக்கட்டையும் இரட்டை ஆட்சியை ஒழிக்குந் தன்மையும் வகுப்பு
துவேஷமில்லாமல் தேச நன்மைக்குச் சட்ட சபையில் இவர்கள் வேலை
செய்யும் பொது சேவையும் இதிலிருந்தாவது விளங்கவில்லையா? இது
போலத்தான் இவர்கள் இனி வரப்போகும் முனிசிபாலிட்டி, டிஸ்ட்ரிக்ட்
போர்டு முதலிய தேர்தல்களிலும் மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறப்
பார்ப்பார்கள் என்பதைப் பாமர ஜனங்கள் உணரவேண்டும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.03.1927
குடி அரசு
- 19270)
164
குழ நிறுத்தும் யோக்கியர்கள்
ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் குடி நிறுத்தும் பேரால் தன் இனத்
தாராகிய ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக்
கொடுக்க பிரசாரம் செய்த காலத்தில் ஸ்ரீமான் அய்யங்காரவர்கள் குடியை
அடியோடு உடனே நிறுத்திவிடப் போகிறாரென்றும், அவருக்கு ஓட்டுக்
கொடுங்களென்றும் அவர் மரத்தில் முட்டி தொங்கினதைப் பார்த்த பிறகு கூட
கிராமம் கிராமமாய்த் திரிந்து பிரசாரம் செய்ததும் இதற்காக மகாத்மா
காந்தியின் சிபார்சு கூட வாங்கினதும் வாசகர்கள் இதற்குள் மறந்திருக்க
முடியாது. ஆனால் இப்பொழுது ஸ்ரீமான் வெங்கடரமணய்யங்கார் சட்ட
சபையில் என்ன செய்கிறார் என்று பாருங்கள். குடியை உடனே ஒழித்து
விடுகிறேன் என்றவர் 10 வருஷத்தில் ஒழிய வேண்டும் என்று விரும்புவதாக
வும், அதற்குத் தகுந்தபடி மந்திரிகள் வேலை செய்தால் போதுமென்றும்,
ஆனால் இதற்காக வேண்டி இப்போதிருக்கும் மந்திரியைத் தோற்கடிக்கவோ
கலைக்கவோ விடமாட்டோமென்றும் பேசியிருக்கிறார். ஸ்ரீமான் ரஜகோபா
லாச்சாரியார் ஓட்டு வாங்கிக்கொடுத்த பார்ப்பன கனவானின் யோக்கியதை
யும் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியால் ஏமாற்றப்பட்ட மகாத்மா காந்தியின்
சிபார்சு பெற்ற பார்ப்பன கனவானின் யோக்கியதையும் இப்படி இருக்கு
மானால் மற்றபடி ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார்
முதலியவர்கள் பணத்தாலும் பிரசாரத்தாலும் ஓட்டுப் பெற்ற கனவான்களின்
யோக்கியதையை நாம் சொல்ல வேண்டுமா? இதை அறிந்த பிறகாவது
இவர்களுக்கு சிபார்சு செய்த பார்ப்பனர்கள் ஏதாவது பேசுகிறார்களா?
அல்லது இவர்களை திருத்தவாவது முயலுகிறார்களா? ஒன்றுமில்லாமல்
“சந்தடி சாக்கில் கந்த பொடி கால் பணம்” என்பது போல் ஒன்றும் தெரியாத
சாது வேஷம் போட்டுக்கொண்டு “காந்தி வருகிறார் பணம் கொடு, காந்தி
வருகிறார் பணம் கொடு” என்று அலைவதைத் தவிர வேறு என்ன? ஆகவே
இந்த பார்ப்பனர்களின் தேசப்பக்தி முட்டுக் கட்டை, குடி ஒழித்தல், பாவாயி
கருப்பாயி சம்பாஷணை, கோடு கட்டிய குறள் ஆகியதுகள் எல்லாம்
சுயமரியாதையும், சுதந்திர உணர்ச்சியுமுள்ள பார்ப்பனரல்லாதாரை ஒழித்து
தாங்கள் ஆதிக்கம் பெறுவதும் முடியாவிட்டால் தங்களது அடிமைகளான
சுயமரியாதையும், சுதந்திர புத்தியும் அற்ற அசடுகளைக்கொண்டு பந்து
165
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
வைத்து தங்கள் காரியங்களையும் சாதித்துக்கொள்ள முயற்சிப்பதுமல்லாமல்
வேறு என்ன என்பதை பார்ப்பனர்களில் சில பார்ப்பனர்களாவது யோக்கியர்.
கள் இருப்பார்கள் என்று நினைக்கும் பிரபுக்கள் உணர்வார்களாக.
குடி அரசு - கட்டுரை - 20.03.1927
குடி அரசு
- 19270)
166
தொழிலானர்கள் தற்கா காங்கிரஸ்
தனைவர்களை நம்பக்கூடாது;
அகில் சேரவம்கூடாது.
தொழிலாளர்கள் காங்கிரசில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்
கிறவரை அவர்கள் உலகத்தாராலும், அதிகாரிகளாலும், முதலாளிகளாலும்
மனிதர்களாகப் பாவிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நமது முடிவும்.
இதைப் பல இடங்களில் சொல்லியும், எழுதியும் வந்திருக்கிறோம். சமீபத்தில்
சென்னை சட்டசபைக்கு ஒரு தொழிலாளியை நியமிக்க சர்க்கார் பிரயத்
தினப்பட்டதில் அப்பதவிக்கு மூன்று பேர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. ஒருவர்
ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் சொல்படி
நடப்பாரோ, தொழிலாளிக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டாரோ என்பதாக
சந்தேகித்து சில தொழிலாளர்கள் ஆக்ஷபித்ததினால் அவர் பெயர்
அடிக்கப்பட்டது. மற்றவர் ஸ்ரீ பெசண்டம்மை கோஷ்டியைச் சேர்ந்தவர்.
என்று சிலர் ஆக்ஷபித்ததால் அவர் பெயர் அடிக்கப்பட்டது. மற்றவர்
பார்ப்பன அதிகாரிகளுக்கு திருப்தி இல்லாததால் அவர் பெயர் அடிக்கப்
பட்டது. ஆதலால் இனியாவது தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம்
வேண்டுமானால் தொழிலாளருக்கு ஓட்டுக் கொடுத்து அவர்களால் தெரிந்
தெடுக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமே அல்லாமல் பார்ப்பனர் தயவில்
சட்டசபைக்குப் போகலாம் என்பது முடியாத காரியம். போனாலும் பார்ப்பனர்.
கள் சொல்படி ஆடத்தான் முடியும்.
ஆனால், பார்ப்பன காங்கிரசோ
தொழிலாளிகளுக்கு தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்காது.
ஏனெனில் தங்களுடைய நன்மைக்கு தொழிலாளர்களை உபயோகப்படுத்திக்
கொள்ளுகிறவர்கள்; எனவே இவர்கள் உண்மையில் தொழிலாளர் பிழைக்க
இடம் கொடுப்பார்களா ?
14 127826 “சுதேசமித்திரன் ''14,அம் பக்கத்தில்
தொழிலாளர் பிரதிநிதித்துவம்
என்ற தலையங்கத்தின் கீழ் திருஆர்.சபாபதி முதவியார் எழுதிய மடலுக்கு போத்த
னூர் ஜனாப் சேக் ஷர்வர் அவர்கள் எழுதிய மறுப்பு மடலை ஓட்டிய குறிப்புரை
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 20.03.1927
167
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மேட்டூர் திட்டம்
“மேட்டூர்
அணை
திட்டம்” விஷயமாய் அதிலுள்ள ஊழல்களையும்
தனிப்பட்ட வகுப்பினர் நன்மைக்காக நமது பணம் எவ்வெவ் வழிகளில்
வீணாவதாயிருக்கிறது என்பதுபற்றியும் “ ஜஸ்டிஸ்” பத்திரிகை கொஞ்ச
நாளைக்கு முன் பொதுவாக சில குறிப்பு எழுதி இருந்ததற்காக சட்ட மெம்பர்.
ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டசபையில் வெகு ஆத்திர
மாகவும் ஆணவமாகவும் அலட்சியமாகவும் அப்பத்திரிகையை பேர்
சொல்லாமல் மறைமுகமாய் அவமதித்துப் பேசியதும் “ இதற்கெல்லாம் நான்
பயப்படமாட்டேண்” என்று “ வீர முழக்கம்” செய்ததும் வாசகர்களுக்குத்
தெரிந்திருக்கலாம்.
அதன் பேரில் “ ஜஸ்டிஸ்” பத்திரிகையானது அத் திட்டத்
தின் உள் ரகசியங்களையும் புரட்டுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல்
புட்டு புட்டு விளக்கி மேட்டூர் திட்டத்தின் புரட்டு என்கிற தலையங்கத்தில் 3,
4 வியாசங்கள் எழுதினதும்,
சர். சி.பி அவர்களை குற்றவாளியாக்கி
விசாரணை வைக்க வேண்டுமென்று எழுதி வந்ததும் வாசகர்களுக்கு தெரிந்
திருக்கும். அதின் பேரில் சர்.சிஃபி. அவர்கள் பெட்டியில் பாம்பு அடங்கினது
போல் அடங்கி விட்டதோடு தான் எந்த பத்திரிகையையும் லட்சியம் செய்யப்
போவதில்லை எந்த பத்திரிகைக்கு பயபப்படபோவதில்லை, என்றாரோ அப்
பத்திரிகையையே லட்சியம் செய்து அரசாங்க தோரணையில் ஒரு விளம்பரம்
செய்து மக்களுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்து
விட்டார். அவ்விளம்பரமானது “ஜஸ்டிஸ்” பத்திரிகையிலும் “திராவிடன்”
பத்திரிகையிலும் சட்டமெம்பர் மீது சுமத்தப் பட்டிருந்த ஒரு குற்றத்துக்காக
வாவது பதில் சொல்லுவதாயில்லாமல் பூசி மெழுகி பாமர மக்களை ஏமாற்றி
பணத்தைப் பாழ்பண்ண செய்வதாயிருக்கிறதேயல்லாமல் இவ்வளவு பணம்
கோடிக்கணக்காய் கொள்ளை போகிறதே என்று வேதனைப்பட்டுக் கொண்டி
க்கிற மக்களை ஒரு கடுகளவாவது சமாதானப்படுத்துவதற்கு லாயக்கில்லாத
தாகவே இருக்கிறது.
“ஜஸ்டிஸ்” பத்திரிகையானது மேட்டூர் திட்டத்தின் ஊழல்கள்
விஷயமாய் எழுதியிருப்பதின் சாராம்சமென்னவென்றால்,
இத் திட்டத்தின்
கருத்தானது பொது மக்களின் நன்மையை யுத்தேசித்ததல்ல வென்றும்
பார்ப்பன அதிகாரிகளும் பார்ப்பன பென்ஷன் அதிகாரிகளும் மற்றும்
பார்ப்பன மிராஸ்தார்களும் ஆகவே முன்கூட்டியே பட்டுக்கோட்டை தாலூக்
குடி அரசு
- 19270)
168
காவில் முக்கியமாக அங்குள்ள புன்செய் நிலங்களையெல்லாம் மிகவும்
சலீஸான விலையில் வாங்கி வைத்துக் கொண்டு காவேரி தண்ணீரைக்
கொண்டுபோய் பாய்ச்சிக் கொள்ள ரை பார்ப்பன அதிகாரிகள் செய்து
கொண்ட ஏற்பாடுதான் மேட்டூர் திட்டமே அல்லாமல் மற்றபடி இத்திட்டத்தால்
நம் நாட்டிலுள்ள எல்லா வகுப்பார்களும் சமமாய் ஒருவித பயனும்
அநுபவிக்க முடியாதென்பதும்.
இத்திட்டத்திற்காக கடன் வாங்கிச் செலவு செய்யப்படும் பணத்திற்குத்
தகுந்த வட்டி கூட இதில் கிடைக்க முடியாதென்பதும் இத்திட்டத்திற்காக
செலவு செய்த பணத்திற்கு ஏற்படும் வட்டிக்குக்கூட மற்ற ஜனங்களால்
செலுத்தப்படும் வரியிலிருந்து எடுத்து கொடுக்க வேண்டி வரும் என்பதும்
இத் திட்ட தண்ணீரைப் பெரும்பாலும் அநுபவிக்கிறவர்களான டி
பார்ப்பனர்கள் “நாங்கள் ஏக்கராவிற்கு விதிக்கப்பட்டிருக்கிற 15 ரூ. கந்தாயம்
கொடுக்க மாட்டோம்; ஐந்து ரூபா வீதம் தான் கொடுப்போம் பெற்றுக்கொள்ள
இஷ்டம் இல்லையானால் உங்கள் தண்ணீர் எங்களுக்கு வேண்டுவதில்லை;
புன்செய் வேளாண்மை செய்து கொள்ளுவோம்” என்று
சொல்லி
விடுவார்களானால் சர்க்காரார் பேசாமல் ஒப்புக்கொண்டு அவர்கள் கொடுக்
கிற பணத்தை ஒப்புக் கொள்ளவேண்டுமே தவிர மற்ற நீர்ப்பாசனங்களில்
பலனையனுபவிக்கிறவர்கள் கிடைத்த தண்ணீரை அநுபவித்துக்கொண்டு
விதித்த தீர்வையைக் கொடுத்துத்தான் தீரவேண்டுமென்று சட்டப்படி
கட்டுப்பட்டிருப்பதுபோல் மேட்டூர் திட்டத்தின் தண்ணீர் அனுபவிக்கும்
பார்ப்பனர்களுக்கு ஒரு வித கட்டுப்பாடாவது, சட்டமாவது ஒப்பந்தமாவ
தில்லையென்பதும் இத்திட்டமானது சரியானபடி ஆராய்ச்சியுடன் நிறை
வேற்றப்பட்டதல்லவென்பதும், அந்த இலாகா சம்பந்தமான நிபுணர்
களுடைய அபிப்பிராயம் மாறுபட்டிருக்கிற தென்பதும் இத்திட்டத்திற்காக
செலவிடும் பெரும் பகுதியான பணங்களை யெல்லாம் யந்திரங்களுக்காக
வும் சாமான்களுக்காகவும் வெளிநாடுகளுக்குப் போகவும் பார்ப்பன
அதிகாரிகளும் வெள்ளைக்கார அதிகாரிகளும் மாதம் ரூ.1000, 2000, 3000.
கணக்காகச் சம்பளங்கள் பெறவும் அவர்களுடைய பிள்ளை குட்டிகளும்
சுற்றத்தார்களும் சில்லறை உத்தியோகங்களை அநுபவிக்கவும் கண்ட்ராக்ட்
பலனை அநுபவிக்கவும் உபயோகப்படும்படியாக இருக்கிறதே யல்லாமல்
பொது ஜனங்களெல்லாரும் கிரமமாய் அநுபவிக்கும் மாதிரியா யில்லை
என்பதும் ஆகிய இன்னும் பலவித கருத்துக்கள் கொண்ட குற்றங்களைச்
சுமத்தியிருக்கிறது. இவற்றிற்கு ஒன்றிற்காவது சட்ட மெம்பர் சரியான பதில்
சொல்லாமலும் இத்திட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றுவதற்குமுன் சட்ட
மெம்பர் என்னென்ன பேசினாரோ அவைகளை எல்லாம் லட்சியம் செய்யா
மல் இப்போது அதற்கு நேர் விரோதமாய் மாற்றிச் சொல்லியும் வருகிறார்.
சாதாரணமாக நமது சர்க்காரார் இம்மாதிரியான நீர்ப்பாசனங்களுக்கு திட்டம்
அமுலுக்கு வருவதற்கு முன்பாகவே அது நஷ்டம் அடையாமலும் அதினால்
169
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
பின்னால் எவ்வித கஷ்டம் ஏற்படாமலும் இருப்பதற்கு ஒரு சட்டம் செய்து
கொள்வது வழக்கம். இத்திட்ட விஷயத்தில் நமது சட்ட மெம்பர் சட்டம்
செய்து கொள்ளாமல் காரியத்தை நடத்துகிறார் என்று “ஜஸ்டிஸ்” பத்திரிகை
சாட்டிய குற்றத்திற்கு சட்ட மெம்பர் விளம்பர மூலமாய் பதிலளிக்கையில்
என்ன சொல்லுகிறாரென்றால் அம் மாதிரியான சட்டம் இல்லாததினால்
ஒன்றும் முழுகிப்போய் விடாதென்றும், பூமிக்குடையவர்கள் தங்களுடைய
நன்மையை உத்தேசித்தே சர்க்கார் ஏற்படுத்துகின்ற வரியைக் கொடுத்துத்
தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுவார்களென்றும் சமாதானம் சொல்லுகிறா
ரேயல்லாமல் ஏன் தான் சட்டம் செய்து கொள்ளவில்லையென்பதற்கு சரியான
பதில் சொல்ல வில்லை. இதற்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சட்டமெம்பரே
சட்டசபையில் பேசும்போது என்ன சொல்லியிருக்கிறாரென்றால் இத்திட்டம்
நிறை வேறுவதற்கு முன்னால் ஒரு சட்டம் செய்து கொள்ள வேண்டு
மென்றும், அப்படி ஒரு சட்டம் செய்து கொள்ளாவிட்டால் பூமிக்குடையவர்:
களால் சர்க்காரார் நஷ்டமடைய வேண்டி வந்துவிடுமென்றும், சட்டமில்லா
மல் இத்திட்டத்தை நிறைவேற்ற இந்திய அரசாங்கத்தாரும் சீமை அரசாங்கத்
தாரும் உத்தரவு கொடுக்கமாட்டார்கள் என்றும், ஆகையால் சட்ட மேற்
பட்டால் தான் திட்டத்தை நிறைவேற்ற முடியுமென்றும் சொல்லியிருக்கிறார்.
முன்னுக்குப் பின் முரணானதும் கண்ணியத்திலேயே சந்தேகப்படத்
தக்கதுமான இந்த விஷயமொரு புறமிருக்க மற்றொரு விஷயத்தைப் பற்றி
கவனிப்போம். அதாவது இத்திட்டத்தில்பலனையடைய ஏற்கனவே பூமி
வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்.
களென்றும் அவர்களிற் பெரும்பாலும் பென்ஷன் உத்தியோகஸ்தர்களும்
சட்டந்தெரிந்தவர்களுமென்றும் முன்பே சொல்லியிருக்கிறோம்.
ஆகவே ஷி
பார்ப்பனர்கள் இப்பொழுது சட்டமெம்பர் செய்திருக்கும் குற்றத்தைத்
தெரிந்தும் அதில் சர்க்காருக்குள்ள பலக் குறைவைத் தெரிந்து கொண்டும்
தாங்களெந்த விதத்திலும் சர்க்காருக்கு இவ்வளவு வரிதான் கொடுக்கக்
கடமைப்பட்டவர்கள் அல்ல என்கிற தைரியத்தினால் “ஏக்கரா ஒன்றுக்கு 5
ரூ. வீதம் தான் நாங்கள் வரி கொடுக்க முடியும், அதற்கு மேல் கொடுக்க
முடியாது. உங்களுக்கு இஷ்டமிருந்தால் தண்ணீர் விடுங்கள் இல்லாவிட்டால்
எங்களுக்குத் தண்ணீர் வேண்டியதில்லை” என்று ஷி பார்ப்பனர்களெல்
லோரும் ஒன்று சேர்ந்து கட்டுப்பாடாய் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுவ
தில்லை என்று சொல்லி விட்டார்களானால் அவர்களிடத்தில் வரி வசூலிக்க
சர்க்காருக்குச் சட்டமெங்கே இருக்கிறது? இத் திட்டத்திற்காக சர்க்காரார்.
வாங்கின கடனுக்கு வட்டி கட்டுவதற்காக இத்திட்டத்தில் சம்பந்தப்படாத
வர்களும் சர்க்காரார் கேட்கிற வரியை கொஞ்சமும் ஆக்ஷேபிக்காமல்
கொடுத்துத் தீரவேண்டியவர்களும் மற்ற வேறு திட்டங்களின் நீரைப் பாய்ச்
சிக்கொள்ளுகிறவர்களுமான தஞ்சை ஜில்லா குடியானவர்களிடமிருந்து
தானே வசூலிக்க வேண்டும். அதோடு மேட்டூர் திட்டத்தின் தண்ணீரைப்
பாய்ச்சிக் கொள்ளுகிற பார்ப்பன மிராஸ்தார்களிடமிருந்து அவர்கள்
குடி அரசு
- 19270)
170
கொடுக்கிற வரியை வாங்கிக்கொண்டு அவர்களுக்குத் தண்ணீர் விட்டுத்
தானே ஆக வேண்டும். விடுவதில்லையென்று சர்க்கார் சொல்லி விடுமே
யானால் அந்தத் தண்ணீரை என்னதான் செய்வது? வேறு புது வாய்க்கால்
வெட்டி வேறெந்த ஊருக்காவது தண்ணீர் திருப்புவதானால் அந்தச்
செலவுகளுக்குப் பிடிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு எங்கே போவது?
ஆகவே மேட்டூர் திட்டத்திலுள்ள ஊழல்களும் சட்ட மெம்பரின் குற்றங்
களும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளும் நம்முடைய பிரதிநிதிகள் என்று
சொல்லிக்கொண்டு சட்டசபையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மண்ணாங்
கட்டி பொம்மைகளின் யோக்கியதைகளும் இவர்களுக்கு ஓட்டுக் கொடுத்த
னுப்பிய ஓட்டர்களாகியபாமர ஜனங்களின் பக்குவங்களும் தெரிந்துகொள்ள
இந்த ஒரு விஷயமே போதுமானதென்று நினைக்கிறோம். மேட்டூர்
திட்டத்திலுள்ள மற்ற புரட்டுகளை சாவகாசமுண்டானபோது விவரிக்கலாம்.
குடி அரசு - கட்டுரை - 27.03.1927
171
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
அளசியல் வாழ்வ
எண்பது அயோக்கியர்கனிண் வயிற்று பிழைப்பு
எண்பதற்க உதாரணம் இது போதாதா?
மகாத்மா காங்கிரசில் தலையிட்டு ஒத்துழையாமை கொள்கையை
நாட்டில் பகிஷ்காரத் திட்டத்தையும் நிர்மாணத் திட்டத்தையும் நிறைவேற்ற
உழைத்து வந்த காலத்தில் நாமும் நம்போன்ற அநேகரும் யாதொரு
நிபந்தனையுமில்லாது குருட்டு நம்பிக்கையுடன் மகாத்மாவை பின்பற்றி
உழைத்து வந்தது தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்குத் தெரியாமலிருக்காது.
மகாத்மா ஜெயிலுக்கு போனவுடன் மேற்கண்ட பகிஷ்காரத் திட்டத்திற்கும்.
நிர்மாணத் திட்டத்திற்கும் விரோதமாய் நமது நாட்டு பார்ப்பனர்கள் சூழ்ச்சி
செய்து வந்த காலத்திலும் அதுகளுக்கு இடம் கொடுக்காமல் காங்கிரஸ்
கட்டளை என்றும், காங்கிரஸ் கமிட்டி கட்டளை என்றும் கூட பார்க்காமல்
திட்டங்களை நிலைப்பிப்பதிலும், நிறைவேற்றுவதிலுமே வேலை செய்து
வந்ததும் அநேகருக்கு தெரிந்திருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில் நம்மை
நமது எதிரிகளான அரசியல் பார்ப்பனர்களில் பலர் காங்கிரசுக்கு துரோகி
என்றும், தேசத் துரோகி என்றும், காங்கிரசில் இருக்க யோக்கியதையற்றவன்
என்றும், காங்கிரஸ் இருப்பதா இறப்பதா? என்றும் காங்கிரஸ் கமிட்டியை
விட்டு நம்மை நீக்கிவிட வேண்டுமென்றும், நம்மை காங்கிரசிலிருந்து
நீக்கவும், நமது நடவடிக்கையை கண்டிக்கவும் பல கூட்டங்களும் கூட்டின
தும், காங்கிரஸ் விதிப்படி நாம் காங்கிரஸ் கமிட்டியிலிருக்க சட்டம் இடம்
கொடுக்கவில்லை என்று சொல்லி நமது ஸ்தானத்தில் வேறு ஒருவரை:
நியமித்ததும் அநேகருக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. அதோடு
ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டுவந்த
காலத்தில் அத்தீர்மானம் காங்கிரஸ் கட்டளைப்படி இல்லாததால் ஏற்றுக்
கொள்ள முடியாது என்று சொல்லி அவரையும் ராஜினாமாக் கொடுக்கச் செய்த
தும் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு அவர்கள் இஷ்டப்படி நடக்க காங்கிரஸ்:
இடம் கொடுக்க வில்லை என்கிற காரணத்தால் அவரும் ராஜினாமா கொடுத்து
வெளியேறவும், ஆகவே இவ்வளவு பேர்கள் சம்பந்தமும் காங்கிரஸ்
நிர்வாகத்திலிருந்து விலக நேரிட்ட போதிலும் லக்ஷியமில்லாமல் காங்கிரஸ்:
கட்டளை, காங்கிரஸ் திட்டம், காங்கிரஸ் கட்டுப்பாடு என்று சொல்லிக்
கொண்டு சுவாதீன புத்தி உள்ளவர்கள் எல்லோரையும் வெளியாக்கிவிட்டு
குடி அரசு
- 19270)
172
குலாம்களையும், கூலிகளையும் கூட சேர்த்துக் கொண்டு பாமர ஜனங்களை
ஏமாற்றி பதவி பெற்ற பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் காங்கிரசை மதித்திருக்
கிறார்கள்? எவ்வளவு தூரம் காங்கிரஸ் கட்டளைப்படி நடக்கிறார்கள்?
எவ்வளவு தூரம் காங்கிரஸ் கட்டுப்பாடுகளுக்கு இணங்குகிறார்கள்? என்பது
இவ்வாரம் சட்ட சபையில் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து முழு
மூடர்களும் அறிந்திருக்கலாம் என்றே நினைக்கிறோம். உதாரணமாக கடைசி
காங்கிரஸ், அதாவது கோகத்தி காங்கிரசின் கட்டளை என்ன என்பதை
முதலில் ஆராய்வோம்.
“இந்திய சட்டசபையிலும் மாகாண சட்டசபையிலும் உண்டான
காங்கிரஸ்காரர்கள் எல்லா விஷயங்களிலும் எதிர்ப்பையே முக்கிய கொள்கை
யாய் கொள்ள வேண்டியது”. தேசீய கோரிக்கைக்கு அரசாங்கத்தார் இணங்
கிறவரை அரசாங்கத்தால் கொடுத்து பெறுவதற்குரிய உத்தியோகங்களை
மறுத்துவிடவேண்டும்.
மற்ற கக்ஷியார்களால் மந்திரிசபை அமைக்கப்
படுவதை எதிர்க்க வேண்டும். செலவுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.
வரவு செலவு திட்டங்களை நிராகரிக்க வேண்டும்...” இதுகளைச் சொல்லிக்
கொண்டுதான் பாமர மக்களிடம் ஓட்டு பெற்றார்கள். இதுகள் எல்லாம்
பார்ப்பனீய புரட்டென்றும், மோசமென்றும், பார்ப்பனரல்லாதார் ககஷியை
ஒழித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தச் செய்யும் சூழ்ச்சிகள் என்றும்
அப்பொழுதே நாம் எழுதி இருந்தோம். அதாவது 2.1. 27 “குடி அரசில்”
காங்கிரஸ் தீர்மானத்தைப் பற்றி எழுதி இருப்பதாவது:
“காங்கிரஸ் தீர்மானங்களில் முக்கியமாய் கவனிக்கவேண்டியது 4வது
தீர்மானமாகிய சட்டசபை தீர்மானமேயாகும். இத்தீர்மானம் எவ்வளவு தூரம்
பாமர மக்களை ஏமாற்ற ஏற்பட்ட தீர்மானம் என்பதை அறியவேண்டுமானால்
இத்தீர்மானம் விஷயாலோசனைக் கூட்டத்தில் பிரேரேபிக்க ஆரம்பித்த
வுடன் அங்கு இருந்த மகாத்மா காந்தி உடனே எழுந்து வெளியேறிவிட்ட
திலிருந்தே அறிந்து கொள்ளலாம்... தங்களுக்கு மெஜாரிட்டி வரும்வரை:
சர்க்கார் இணங்கி வரவில்லை என்று சொல்லிக்கொண்டு காலம் தாட்டவே
இத்தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாமலும் இப்போது சுயேச்சை கட்சி மந்திரி சபை அமைத்தது
என்பது பேருக்கு மாத்திரம் ஸ்ரீமான் சுப்பராயனே ஒழிய உண்மையில்,
“சுயராஜ்யக்கட்சி” பார்ப்பனரும் “ஒத்துழைப்பு” பார்ப்பனரும், “ஓத்து
ழையா” பார்ப்பனரும் ஆகிய எல்லோரும் சேர்ந்தே தான் அமைத்திருக்
கிறார்கள். உண்மையில் சுயராஜ்ய கட்சியார் திருட்டுத்தனமாய் ஒத்துழைப்
பதாக வாக்களித்திராவிட்டால் ஸ்ரீமான் சுப்பராயன் மந்திரிசபை அமைக்க
தைரியம் கொண்டிருப்பாரா என்பதை வாசகர்களே யோசிக்க வேண்டும்...
இது “ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் காத்திருப்பதே அல்லாமல்
வேறல்ல” என்று எழுதி இருக்கிறோம். அப்போது நம்ம பேரில் பலர்:
173
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
வருத்தப்பட்டிருந்தாலும் இப்போது எண்ணமாய் நடந்து கொண்டிருக்கிறார்.
கள் என்பதை கவனிக்க வேண்டுகிறோம். மந்திரிகளின் அமைப்பையே
எதிர்க்க வேண்டியவர்கள் அமைப்புக்கு திருட்டுத்தனமாய் உளவாய் இருந்த
தோடு மந்திரிகளின் பெயரில் ஜஸ்டிஸ் கட்சியார் கொண்டு வந்த நம்பிக்கை
இல்லாத தீர்மானங்களுக்கும் ஓட்டுக் கொடுக்காமல் துரோகம் செய்து
விட்டதும், சம்பளத்தை குறைக்க ஜஸ்டிஸ் கட்சியார் கொண்டு வந்த தீர்மானத்
திற்கும் ஓட்டு கொடுக்காமல் துரோகம் செய்ததும் வரவு செலவு திட்டங்களை
நிராகரிக்காமல், நிராகரிப்பதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் கொண்டுவந்த தீர்மானங்
களுக்கு விரோதமாய் காங்கிரஸ் கட்சியார், சுயராஜ்யக் கட்சியார் ஓட்டுக்
கொடுத்து நிறைவேற்றி வந்ததும் சட்டசபையில் இவ்வார வரவு செலவு திட்ட
வாதத்தை கவனித்தவர்கள் நன்றாய் அறிந்திருக்கலாம்.
இதிலிருந்து காங்கிரசுக்கு கண்ணியம் இருக்கிறதா?
காங்கிரஸ்:
காரருக்கு கண்ணியம் இருக்கிறதா? காங்கிரசில் ஆதிக்கம் பெற்ற சுயராஜ்ய
கட்சியினருக்கு கண்ணியம் இருக்கிறதா? காந்தி சிஷ்யர்கள் ஒத்துழையாமை
காரர் என்பவர்களுக்கு கண்ணியம் இருக்கிறதா? என்பதை நடுநிலைமை
யிலிருந்து யோசித்துப் பார்த்தால் தெரியாமல் போகாது. யாரோ நாலு பார்ப்ப
னர்கள் காங்கிரஸ் என்றும், காந்தி என்றும், கதர் என்றும், சுயராஜ்யம் என்றும்,
மிதவாதம் என்றும் ஆளுக்கொரு கட்சி பெயரை சொல்லி ஒவ்வொரு
கட்சியிலிருந்து அதைக் கைபற்றிக் கொண்டு தாங்களே தேச பக்தர்கள்,
தாங்களே மகாத்மா பக்தர்கள், தாங்களே கதர் பக்தர்கள், தாங்களே மது
விலக்கு பக்தர்கள், தாங்களே மிதவாதிகள் என்பதாக வேஷம் போட்டுக்
கொண்டு சுயநலக் காரரையும், சுயமரியாதை இல்லாதவர்களையும், வயிற்று
சோற்று தேசப் பக்தர்களையும் கூலி கொடுத்து சேர்த்துக்கொண்டு பொய்
பிரசாரம் செய்தும் மக்களுக்கு லஞ்சம், லாவணம், கள்ளு, சாராயம் வாங்கி
கொடுத்து ஓட்டுப்பெற்று பதவிகள் அடைந்து
தங்கள் ஆதிக்கத்தை
பலப்படுத்திக் கொள்ளுவதோடு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஒழிக்க
முயலுவதே இத்தனை கட்சிகளுடையவும் கொள்கைகளாக வைத்துக்
கொண்டு நம்மை ஏமாற்றுவது இதிலிருந்தாவது தெரிகிறதா இல்லையா?
என்றுதான் கேட்கிறோம்.
சர்க்காரையும், மந்திரிகளையும் ஜஸ்டிஸ் கட்சியார் எதிர்க்கவும்
சுயராஜ்யக் கட்சியார் ஆதரிக்கவும் யாராவது சுயராஜ்யக் கட்சியாரை:
“ஏனையா நீங்கள் காங்கிரஸ் கட்டளைப்படி சர்க்காரையும், மந்திரிகளையும்
எதிர்க்க வில்லை” என்று கேட்டால் அதற்கு கொஞ்சமாவது மானம், வெட்கம்,
ரோசம், சுயமரியாதை, நாணயம் ஒன்றுமில்லாமல் இந்த மந்திரிகள் போனால்
ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் வந்துவிடுவார்கள்.
அதனால்தான் எதிர்க்காமல்
இருப்பதோடு சர்க்காருக்கும், மந்திரிக்கும் ஆதரவளிக்க வேண்டி இருக்கிறது
என்று சொல்லுகிற ஒரு கூட்டம் இன்றைய தினம் நம் நாட்டு மக்களுக்கு
அரசியல் சுயராஜ்யம் வாங்கிக் கொடுக்கிறவர்கள் என்று சொல்லப்படு
குடி அரசு
- 19270)
174
வார்களானால் இந்த நாட்டுக்கு இதைவிட வேறு என்ன அவமானமும்
இழிவும் வேண்டியிருக்கிறது? என்றுதான் கேட்கிறோம். தற்கால அரசியல
மைப்பில் யார் தலையிட்டாலும் இப்படித்தான் நடக்க முடியும் என்று சொல்லு
வது இதற்கு சமாதானமானாலும் அதை பார்ப்பனர் கள் தான் அனுபவித்துக்
கொண்டு நம்மை அழிக்க வேண்டுமேயல்லாமல் நம்மவர்கள் அனுபவித்துக்
கொண்டு சுயமரியாதையும் சமத்துவமும் அடையக்கூடாது என்று நம்மவர்:
களிலேயே சொல்லுகிற சில அசடுகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகி
றார்கள்?
குடி அரசு - தலையங்கம் - 27.03.1927
175
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
2
“ திராவிடன்
“திராவிடன்” பத்திரிகையை நாம் ஏற்று அதற்கு பத்திராதிபராயிருந்து
“குடி அரசு” கொள்கையின்படி நடத்தலாமா என்கிற விஷயத்தில் பொது
ஜனங்களின் அபிப்பிராயத்தை அறிய “வேண்டுகோள்” என்று தலையங்க
மிட்டு ஒரு விண்ணப்பம் 63.27 தேதி “குடி அரசின்” தலையங்கமாக எழுதி
இருந்தோம். பொறுப்புள்ள நண்பர்களை நேரிலும் கலந்து பேசினோம்.
அதற்கு இதுவரை ஐந்நூற்றுச் சில்லரை கனவான்கள் தனி முறையிலும் 7, 8
சங்கங்களும் 3, 4 பொதுக் கூட்டங்களும் தீர்மான மூலமாகவும், தங்கள்.
தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் 500 பேர்.
வரையிலும் மற்றும் சங்கங்களும் பொதுக்கூட்டங்களும் “திராவிடனை”
ஏற்றுக் “குடிஅரசு” கொள்கைப்படி நடத்தும்படியும் 20 பேர்கள் ஒவ்வொரு
வர் ஒவ்வொரு விதமாக அதாவது நிபந்தனை பேரில்தான் நடத்த வேண்டும்.
என்றும், உடல் நலம் கெட்டு போகும் என்றும், “குடி அரசு” குன்றி விடும்
என்றும், வேறு பெயர் மாற்ற வேண்டும் என்றும், பிரசாரத்திற்கு போதுமான
காலம் இல்லாமல் போய் விடுமென்றும் “தமிழ்நாடு”, “திராவிடன்” ஆகிய
இரண்டு தமிழ் தினசரிக்கு நமது நாடு இடங்கொடுக்குமா என்றும், “ஜஸ்டிஸ்”
கட்சியாரை நம்பி இறங்கினால் அவர்கள் “குடி அரசு” கொள்கைக்கு மனப்
பூர்வமாய் கட்டுப்பட்டு நடப்பார்களா என்றும், ஜஸ்டிஸ் கொள்கை ஏற்றுக்
கொள்ள வேண்டி வந்துவிட்டால் நமது முயற்சிகள் பலனில்லாமல் போகு
மென்றும் “குடிஅரசு, “திராவிடன்” ஆகிய இரண்டு பத்திரிகை நடத்தினால்
பணக் கஷ்டத்திற்காக ஊர் ஊராய் பிச்சை கேட்டுக் கொண்டு திரிய
வேண்டிவரும் அப்படி ஆனால் நமது பிரசாரத்திற்கு மதிப்பு குறைந்து
போகுமென்றும் ஆகிய பல விஷயங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.
இவற்றில் நடத்தும்படி சம்மதம் கொடுத்தவர்கள் எழுதியிருப்பதைப் பற்றி
அதிகம் எழுதவேண்டியதில்லை. ஏனெனில் அது அவ்வளவும் இந்திரனே
சந்திரனே, கடவுளே, ராமனே, கிருஷ்ணனே..... என்று பலவாறாக புகழ்ந்தும்
உதவி புரிவதாகவும் சுமார் 400 சந்தாதாரர்கள் போல் சேர்த்துக்கொடுப்பதாக
வாக்களித்தும் 4,
5 கனவான்கள் பிரதிபிரயோஜனமில்லாமல் பத்திரிகைக்கு
உழைப்பதாகவும் தங்கள் தங்களால் கூடுமானவரை சந்தா சேர்த்து அனுப்பு
வதாகவும் திரவிய சகாயம் செய்வதாகவும், திராவிடனை ஒப்புக் கொண்டால்
ஒழிய வேறு மார்க்கமில்லை என்றும், இம்மாதிரியாக அளவுக்கு மீறி
குடி அரசு
- 19270)
176
புகழ்ந்தும் உற்சாகம் காட்டியும் எழுதி இருக்கிறார்கள். இவற்றில் எடுத்துக்
கொள்ளும்படி எழுதிய 500 நண்பர்களின் அபிப்பிராயத்தைவிடநிபந்தனை
யாகவும் விரோதமாகவும் எழுதின 20 கனவான்கள் அபிப்பிராயத்திற்கு
அதிகம் மதிப்புக் கொடுத்து ஒரு வார காலம் இதே சிந்தனையாய் இருந்து
யோசித்து பார்த்ததில் அவர்கள் எழுதியிருப்பதில் பெரும்பாகம் யோசிக்க
வேண்டிய விஷயமே இருந்தாலும், வேறு பல கஷ்டங்கள் இருந்தாலும் இந்த
சமயத்தில் நமது கொள்கைக்கு ஒரு தினசரி இல்லாதிருப்பது சரியல்ல என்கிற
முடிவுக்கே வரவேண்டியதாகி விட்டது. பணக் கஷ்டத்தைக் கூட நாம்
அவ்வளவு பெரிதாய் நினைக்கவில்லை: எப்படியாவது நடத்தலாம் என்றா
லும் மற்றபடி உள்ள கஷ்டங்கள் உண்மையானதுதான் என்றாலும் வேறு
என்ன செய்வது என்று யோசித்தே சில நிபந்தனையின் மேல் ஒப்புக்கொள்ள
லாம் என்கிற முடிவுக்கே வந்து அந்நிபந்தனைகளையும் ஜஸ்டிஸ் கட்சி
தலைவர்களுக்கு எழுதப் போகிறோம். அந்தப்படி அவர்கள் ஒப்புக்
கொண்டார்களானால் ஏற்று கொஞ்ச காலத்திற்கு நடத்தலாம் என்றே இருக்கி
றோம். மற்றபடி ஊக்கங்காட்டி எழுதிய நண்பர்கள் தயாராக சந்தாதாரர்களைச்
சேர்த்து வைக்கும்படியாக வேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.03.1927
177
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
யார்ப்பண ஏமாற்றனும் மடாதியதிகணிண்
மடமையரம்
நம்நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000,10000, 100000, 1000000
ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது
முன்னோர்கள் நம் மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த
விஷயங்களுக்குமாக உபயோகப்பட வேண்டும் என்பதாகக் கருதி பொது
நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக்காலத்தில் உண்மையாயும், யோக்கிய
மாயும் நடந்து வந்த சன்னியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு
வந்தார்கள். ஆனால், இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொது நல ஸ்தாப
னங்கள் எந்நிலையிலிருக்கிறது? என்பதும், இதை யார் அனுபவிக்கிறார் கள்?
என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக்களாகிய சன்னியாசிகள் என்போரின்
யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்லவேண்டியதில்லை.
இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும்
பொது நலத்திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின்
இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா? என்பதை கவனிக்க இந்துமத.
பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம் மடாதிபதிகள்
தங்கள் சுயநலத்துக்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடும்
என்பதாக கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும், லஞ்சமாகவும், பிச்சை
யாகவும் அழுத பணங்கள் கணக்கு வழக்கில் அடங்காது என்றே சொல்ல
லாம்.
இவ்வளவு பணங்களை தொலைத்தும் தாங்கள் வெற்றி பெற
வில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா? என்று
பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள்
சொல்லுகிற படியெல்லாம் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு வருகிறார்கள்.
சமீபத்தில் ஸ்ரீமான் டி. ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் முப்பது
லக்ஷம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது
வடநாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக் கூடமும், கோவிலும் கட்டப்
போவதாகவும் அதற்கு பணம் வேண்டுமென்றும், இம்மட அதிபதி
களிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார
சன்னதி அவர்களை கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் 10
வருஷத்திற்கு கொடுப்பதாய் ஒப்புக்கொண்டாராம். இவரைப் பார்த்து மற்ற
மட அதிபதிகளும் கொடுப்பார்கள்.
பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள்,
குடி அரசு
- 19270)
178
மிராஸ்தார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்கு
கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ,
மிராஸ்தாரோ, நாட்டுக் கோட்டையாரோ மற்று ஏதாவது செல்வமுள்ளவர்:
களோ நமது நாட்டில் மிகமிக அருமையானதால் இந்த பணம் கொடுத்துதான்
தீர வேண்டி வரும். ஆனால் இப்பணம் எதற்கு உபயோகப்பட போகிறது?
டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டத்தான்
உபயோகப்படும். ஆனால், தமிழ் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று
வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள்.
எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பன பிள்ளைகள்.
பிழைக்கவும், கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாதஊரில் கூட கோவில்
கட்டிவித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் “சூத்திரர்கள்”
உள்ளே போகக்கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலக மெல்லாம்
நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப் போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது
மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக்கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல
பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது
மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.03.1927
179
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
பத்திரப்பதிவு இலாக்காக்கனில் மக்களுக்கு
சுயாரால்னியக் ககூஷியார் சசய்த அக்கிரமம்
சென்ற வாரத்தில் சென்னை சட்டசபை வரவு செலவு விவாதத்தின்
போது பத்திரப்பதிவு இலாக்கா சம்மந்தமாக ஜனங்களுக்கு இப்போது
இருக்கும் கஷ்டத்தை நீக்கும்படி அதாவது அதிகமாயிருக்கும் கட்டண:
விகிதத்தை குறைக்கும் படிக்கும் முக்கியமாக வெளியில் வர செளகரியப்
படாத பெண்களின் செளகரியத்தை ஒட்டியும் காயலா முதலியவைகளால்
அவஸ்த்தைப் பட்டுக்கொண்டு படுத்தப் படுக்கையில் கிடக்கும் ஏழை
குடியானவர்களுக்கும் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமானால் ரிஜிஸ்டர்.
கட்டணம் முன்னையை விட இப்போது சரிபங்கு அதிகமாய் விட்டதால்
அதாவது சப் ரிஜிஸ்ட்ரார் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் 10 ரூ. கட்டண:
மாயிருந்தது. இப்போது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதை குறைத்து
ஜனங்களுக்கு சவுகரியம் செய்யும்படி ஒரு தீர்மானம் ஜஸ்டிஸ் கக்ஷியாரால்
கொண்டு வரப்பட்டது. இதை அறிந்து சுயராஜ்யக் க௯ஷியார் இப் பெருமை
ஜஸ்டிஸ் ககஷிக்கு விடக்கூடாது என்பதாக தாங்களும் இந்த விஷயத்தில் ஒரு
தீர்மானம் கொண்டு வந்ததாய் ஜனங்களுக்கு காட்டுவதற்காக வேஷத்திற்காக
ஒரு தீர்மானம் அனுப்பி யிருந்தார்கள். அக்ராசனர் சுயராஜ்யக் ககஷியை
சேர்ந்தவராயிருப்பதால் இம் மாதிரி தீர்மானங்கள் சுயராஜ்யக் ககஷியார்.
பேரில்தான் வெளிவரக் கூடும் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது.
ஆதலால் ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் பேரால் தீர்மானம்
விவாதிக்கப்பட்டது.
ஜஸ்டிஸ் க௯ஷி அங்கத்தினர்கள் அதிக கட்டணத்திலுள்ள கஷ்டங்
களை எல்லாம் நன்றாய் எடுத்துச்சொல்லி வாதாடினார்கள். ஆனால்
கடைசியாய் ஓட்டு எடுக்கும்போது சுயராஜ்யக் ககஷியார் வெளியே ஓடி விட்
டார்கள். இதன் பலனாய் அத்தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது. ஏழை
களுக்கு நன்மை செய்யும் சுயராஜ்யக் ககஷியாரின் யோக்கியதையை உணர
புத்திசாலிகளுக்கும் யோக்கியர்களுக்கும் இதைவிட வேறு சாக்ஷியம் தேவை
யில்லை என்றே சொல்லுவோம்.
குடி அரசு - கட்டுரை - 27.03.1927
குடி அரசு
- 19270)
180
“வகுப்பு உரிமை” வேண்டாம் எண்று
சொல்லிதிரியும் போலி கேசாபிமாணி,
கேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்
நமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26-வது வருஷத்திய நிர்வாக
அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப்
பட்டிருக்கின்றன.
நமது சர்க்கார் உத்தியோகத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்
பட்டிருக்கின்றது. அதாவது () கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது
குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில்
வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை:
வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில்
உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வ
ளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள்
இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங்
களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா
அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி
குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார்
குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் நம்மில் நம்மவர்களுக்கும்
விகிதாச்சாரம் உத்தியோகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்பவர்கள் வகுப்பு
உரிமைக்காரரா? அல்லது வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் வயிற்று
சோற்று உரிமைக்காரரா? என்பது வெளிப்பட்டுவிடும். கணக்கு விபரம்:-
கெஜட்டட் ஆபீசர்
மாதம் 1க்கு
மாதம்1க்கு
மாதம்(க்கு
உத்தியோகம்
100 ரூபாய்க்கு
35க்கு மேல்
மாதம் 1க்கு
மேல் சம்பளம்
சம்பளம்
250 க்கு மேல்பட்டு
பெறக்கூடிய
பெறக்கூடிய
5500 ரூபாய் வரை:
வர்கள்.
வர்கள்.
சம்பளம் பெறக்கூடியவர்கள்
181
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
பார்ப்பனர்
402
3409
8197
பார்ப்பனரல்லாத
இந்துக்கள்.
215
1901
5238
தாழ்ந்த வகுப்பார்
-
2
54
முகமதியர்கள்
53
323
139
கிறிஸ்தவர்கள்
109
456
643
100-க்கு மூன்று வீதம் உள்ள பார்ப்பனர் மொத்தம்
=12008
100-க்கு 97 வீதம் உள்ள பார்ப்பனரல்லாதார்.
எல்லோரும் சேர்த்து
=10133
இவற்றுள் 100-க்கு 25 வீதம் உள்ள தாழ்த்தப்பட்ட
வகுப்பார்.
= 56
இதோடு முனிசீப்பு ஜட்ஜிகளின் கணக்கு சேர்ந்தால் எப்படி
இருக்கும் என்பதையும் இந்தக் கணக்கை வெளியிட்டவர்கள் அந்தக்
கணக்கையும் வெளியிட ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும் சுயராஜ்யம்.
வந்தாலும் இந்த கணக்குதான் ஏற்படுமா அல்லது வேறு கணக்கு ஏற்பட வேறு
ஏதாவது வழி இருக்கிறதா என்பதையும் யோசித்துப் பார்த்து வகுப்புரிமை
வகுப்பு வாதம் வேண்டாம் என்று சொல்லும் “தேசீயவாதிகள்” வகுப்பு வாதம்
அல்லது வகுப்பு உரிமை தவிர வேறு வழிகளால் முக்கியமாய் தாழ்த்தப்பட்ட
சகோதரர்கள் சமத்துவமடைய முடியுமா? என்பதையும் உத்தியோகம் பார்ப்ப
தும் “சுயராஜ்ஜியத்தில்”” ஒன்று அல்லவா என்பதையும் தெரிவிக்க வேண்டு
கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 27.03.1927
குடி அரசு
- 19270)
182
தஞ்சை வில்லா போர்டு
தஞ்சை ஜில்லா போர்டு, போர்டின் ஆதரவில் நடைபெறும் பள்ளிக்
கூடங்களில் 25 ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு உண்டி உடை கொடுத்து
இலவசமாய்க் கல்வி போதிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேட்டு மிகவும்
மகிழ்ச்சியடைகிறோம். பார்ப்பனரல்லாத பிரசிடெண்டு வந்ததினால்தான்
இவ்வித செளகரியம் செய்ய முடிந்தது. இதற்காக ஷே போர்டாரைப் பெரிதும்
பாராட்டுகிறோம்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 27.03.1927
182
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
யார்ப்பணீயப் புரோகிதப் பகிஷ்காற சங்கம்
ஆரம்பப் பிரசங்கம்
சகோதரிகளே! சகோதரர்களே!
நான் இன்று பேசத் துணிந்த விஷயமாகிய பார்ப்பனீயப் புரோகித
பகிஷ்கார விஷயம் சாமானியமானதல்ல. ஆயிரக்கணக்கான வருஷங்
களாய் அநேக தலைமுறையாய் நம்மவர்கள் குருட்டு நம்பிக்கையில்
ஈடுபட்டு மதத்தின் பேரால் ஆத்மார்த்தம் என்றும், மோக்ஷம் என்றும், தர்மம்
என்றும், புண்ணியம் என்றும், கடமை என்றும் கருதி சுயமரியாதை இழந்து
நடந்து வந்திருக்கும் அர்த்தமற்ற ஒரு காரியத்தைப் பற்றி உங்கள் முன்
பேசுவதென்பது சுலபமான காரியமென்பதாக எனக்குத் தோன்றவில்லை..
ஏனெனில் இம்மூட நம்பிக்கையும் அர்த்தமற்ற நடவடிக்கைகளும் நமது
மக்கள் ரத்தத்திலேயே கலந்து விட்டது. இதுகளைப் பற்றி யோசிப்பதுவே
மிகப்பாவம் என்பதாக கருதப்படுகிறது.
கொஞ்ச காலத்திற்கு முன் இம்மாதிரி விஷயங்களுக்கு ஒரு கூட்டம்
கூட்டுவது என்றால் கூட்டத்திற்கு வந்து என்ன பேசுகிறார்கள் என்று
கேட்பதற்கு கூட மனிதர்களுக்கு பொறுமை இருக்காது. ஒரே அடியாய்
“காலம் கெட்டுவிட்டது, கலியின் வக்கிரம் இம்மாதிரி நாஸ்திகம் வளருகிறது”
என்று எவ்வளவோ வெறுப்பார்கள். ஆனால் இப்போது இதைப்பற்றி என்ன
சொல்லுகிறான் என்று கேட்பதற்காவது இத்தனை பேர்கள் வந்திருப்பதே
அதிலும் மதம், சமயம் முதலிய விஷயங்களிலும், சரித்திர ஆராய்ச்சி முதலிய
விஷயங்களிலும்
நிபுணர்கள் உள்பட அநேக மேதாவிகளும்,
அறிவாளிகளும் இவ்விடம் வந்திருப்பது எனக்கே ஒரு ஆச்சரியத்தையும்
நம்பிக்கையையும் கொடுக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தை முதலிலேயே
சொல்லிவிடுகிறேன். நான் படித்தவன் என்று சொல்லிக்கொள்ளும்
கூட்டத்தில் சேர்ந்தவன் அல்ல. என்னுடைய 10 - வது வயதுக்கு மேல் நான்
ஒரு பள்ளிக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டவனே அல்ல. ஏனெனில் எனது
10-வது வயதிலேயே எனக்கு படிப்பு வராதென்றும் பள்ளியில் ஒழுங்காய்
போய் படிக்கமாட்டேன் என்றும், மிகவும் துஷ்டப்பிள்ளை என்றும் எனது
பெற்றோர்களால் கண்டு பிடிக்கப்பட்டு என்னை என் தகப்பனார் பள்ளிக்கு
குடி அரசு
- 19270)
184
அனுப்புவதை நிறுத்தி தனது வியாபாரத்திற்கு அனுகூலமாயிருக்கும்படி
கடையிலேயே வைத்துக் கொண்டார்.
இப்போது எடுத்துக்கொண்ட
விஷயமாய் எனக்கு உள்ள எண்ணம் ஏறக்குறைய அந்த வயது முதற்கொண்
டே இருந்து வந்தாலும் பள்ளியில் படித்ததினாலேயோ ஆராய்ச்சியினா
லேயோ அல்லாமல் பெரியோர்களிடம் பேசி பேசி அறிந்ததினாலும் உலக
அனுபவத்தினாலும் ஆலோசனைகளுக்கும், பகுத்தறிவுகளுக்கும் மதிப்புக்
கொடுத்ததாலுமே தோன்றி இம்மாதிரி காரியங்களில் வெறுப்பு காட்டுவதும்
இகழ்ந்து பேசுவதும் உண்டு. இம்மாதிரி நான் பேசும் காலத்தில் எனது
வீட்டார்கள்
உள்பட அநேகர் என்னை அக்காலம் முதல்கொண்டே பலமாய்
நாஸ்திகம் என்றும், மததுவேஷம் என்றும் வெறுப்பார்கள். என்ன வெறுத்தா
லும் எனது எண்ணங்கள் இம்மாதிரி விஷயங்களில் ஆலோசிக்க ஆலோ
சிக்க ஒரு சிறிதும் மாறுபடாமல் இருந்து வந்ததோடு இப்போதுதான் அவற்
றை இவ்வளவு தாராளமாய் வெளியில் எடுத்துச் சொல்லவும் பலர் கூடி
கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்
காரம் என்னும் இவ்விஷயம் இதன் பெயரைப் பார்க்கும் போதே பார்ப்பன
புரோகிதத்தை மாத்திரம் விளக்கிவிட்டு அந்த இடத்தில் பார்ப்பனரல்லாத
புரோகிதரை வைத்து அச்சடங்குகளைச் செய்வது என்பதாக பலருக்குத்
தோன்றலாம். இச்சங்கத்தின் கருத்து அதுவல்லவென்றே நினைத்தே நான்
இதில் பேச ஒப்புக்கொண்டிருக்கிறேன். அப்படி இல்லை யானால் இச்சங்
கமே அவசியமில்லை. இவ் விஷயத்தின் கருத்தே மூட நம்பிக்கைகள் ஒழிய
வேண்டும் என்பதும் மனிதன் தனக்குள்ளாகவே தான் மற்றவனை விட பிறவி
யில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும்
சுயமரியாதையும் ஏற்படவேண்டும் என்பதும்தானே அல்லாமல் வேறல்ல.
ஆனால் பார்ப்பனீயப் புரோகித பகிஷ்காரம் என்பதில் அவ்வித அர்த்தம்
காண்கிறதே என்று கேட்பார்களானால் அதற்கு நான் சொல்லும் பதில்.
புரோகிதம்
புரோகிதம் என்று சொல்லுகிற வார்த்தையும் அதில் பிறக்கும்
அச்சடங்கு அதாவது திவசம், திதி, சிரார்த்தம், பிண்டம், புண்ணியாவர்ச்சனம்,
சாந்தி, கருமம், சங்கல்ப்பம், தானம், பிதுர் தேவதை, பிதுர்லோகம் முதலிய
துகள் பார்ப்பனர்களாலேயே ஏற்பட்டதாலும், இதுகளும் இது போன்ற பல
சடங்குகளும் பார்ப்பனீயத்திலிருந்தே தோன்றியதாலும் பார்ப்பனீயம்தான்
இம்மாதிரி மூட நம்பிக்கைகளுக்கு தாயகமாகவும் மக்கள் உயர்வு தாழ்வு
முதலிய கற்பனைகளுக்கும், ஆதாரமாகவும் இருப்பதால் பார்ப்பனீயமே
முதலில் ஒழிய வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டு அப்பெயர் இடப்
பட்டிருக்கிறதென்றே சொல்லுகிறேன். குருட்டு நம்பிக்கைகளும் மூடவழக்
கங்களும் ஒழிய வேண்டுமானால் முதலாவது பார்ப்பனீயத்தை ஒழித்தாக
வேண்டும். பார்ப்பனீயம் ஒழிய வேண்டுமானால் பார்ப்பனன் உயர்ந்தவன்,
185
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
நாம் அவனை விட தாழ்ந்தவன் என்கிற உணர்ச்சி ஒழிய வேண்டும்.
ஆதலால்தான் முதல்படியாக பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவ
தற்கும் ஆதாரமாயிருப்பதற்கும் அனுகூலமான பார்ப்பனனைக் கொண்டு
தான் புரோகிதம் முதலிய சடங்குகள் செய்வது என்கிற வழக்கமும் உணர்ச்சி
யும் ஒழிந்து விட்டால் அடுத்தப்படியில் அப்புரோகிதம் என்கிற மூட வழக்கங்
களின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி அதிலிருக்கும் அர்த்தமற்றத் தன்மை
யையும் எடுத்துக்காட்டி அவற்றை ஒழிப்பதற்கும் அனுகூலமாயிருக்கும்.
இல்லாதவரை பாமர ஜனங்களுக்குள் ஏதோ ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்
துவது போல் நினைத்து பயப்பட இடமுண்டாய்விடும். ஏனெனில் அம்
மாதிரியான விஷயத்தை நான் முன் சொன்னது போல் பல ஆயிரக்கணக்கான
வருஷங்களாகவே நமது மக்களுக்குள் புகுத்தப் பட்டிருக்கிறது. அவ்
விஷயத்தைப் படிப்படியாகத்தான் இறக்க வேண்டும். அவசரப்படுவதும்
விதண்டாவாதம் பேசுவதும் காரியத்திற்கு உபயோகப் படாததாய்ப் போய்
விடும். எனவே உயர்ந்த ஜாதி என்று எண்ணுகிற உணர்ச்சி ஒழிந்தவுடன்
அதனால் ஏற்பட்ட மற்ற அசம்பாவிதங்களை ஒழிப்பது வெகு சுலபமாகி
விடும் என்கிற எண்ணந்தானேயல்லாமல் பார்ப்பனர் வரும்படியைக் கெடுத்து
அதை மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டுமென்பதல்ல. தவிற மேற்
சொன்ன புரோகிதம் என்கிற சடங்குகள் நமக்கு எதன் மூலமாய் புகுத்தப்
பட்டது என்று பார்த்தால் மதம் என்பதை ஆதாரமாய் வைத்து புகுத்தப்
பட்டிருக்கிறது.
இந்து மதம்
அம்மதம் இந்து மதம் என்று சொல்லப்படுவது. அவ்விந்து மதம்
என்பது என்ன என்று பார்க்கப்போனாலோ அது “பிடிக்கப் பிடிக்க நம
சிவாயா” என்பது போல் கொஞ்சங் கூடப் பொருள் இல்லாததும் முழுப்
புரட்டானதும் என்றேதான் சொல்ல வேண்டும். இந்த இந்து மதம் என்கிற
வார்த்தை எதில் இருக்கிறது? எப்போது ஏற்பட்டது? அதன் கொள்கைகள்.
என்ன? என்கிற விஷயங்களை விசாரிக்கப் போனால் ஒன்றுக்குமே சமா
தானம் கிடைக்காது. உலகத்தில் இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எந்த
மதமும் இம்மாதிரி புரட்டுகளையும் மோசத்தையும் கொண்டிருக்க வில்லை.
வேறு எந்த மதஸ்த்தர்களும் தங்கள் மதத்தைப் பற்றி இவ்வளவு காட்டு
மிராண்டித்தனமான மூடர்களாயிருக்கவில்லை.
மற்ற மதங்கள்
முகமதிய மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்ன காலத்தில்
இன்னாரால் ஏற்பட்டது. அதன் கொள்கை இன்னது. அதற்கு மூல ஆதாரம்
“குரான்.” அதை யாரும் படிக்க வேண்டியது என்கிற குறிப்புகள் உண்டு. அது
போலவே கிறிஸ்துவ மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்;
இது இன்ன
குடி அரசு
- 19270)
186
காலத்தில் இன்னாரால் ஏற்படுத்தப்பட்டது. அதன் கொள்கை இன்னது.
அதற்கு மூல ஆதாரம் “பைபிள்”. அதை யாரும் படிக்க வேண்டியது என்கிற
குறிப்புகள் உண்டு. அது போலவே புத்தமதம், சமணமதம், சீக்கியர் மதம்
என்பன முதலிய எத்தனையோ மதங்களுக்கு இது போன்ற காலமும்
கர்த்தாக்களும், கொள்கைகளும், ஆதாரங்களும் அவற்றை எல்லா மக்களும்
அறியவும் சுதந்திரங்களும் உண்டு.
நாம் சொல்லும் இந்து மதத்திற்கு
இவைகளில் ஏதாவது எள்ளளவாவது இருக்கிறதாவென்று பார்த்தால்
ஊற்றுக்கு நிற்கும்படியான ஒரு காரியத்தையும் காணோம். இந்து மதம்
என்கிற பெயரே பூர்வ சரித்திரங்கள், சங்க இலக்கியங்கள், புராணங்கள்,
இதிகாசங்கள், ஆகமங்கள், தர்ம சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள், வேதங்கள்
முதலான எந்த புஸ்தகங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. நான்தான்
முன்னமேயே அதிகமாய் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.
ஆனாலும் படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய அனேகரையும் கேட்டதில்
ஒருவராவது இந்துமதம் என்ற பெயர் இன்ன ஆதாரத்தில் இருக்கிறது
என்பதாக சொல்லவே இல்லை. இங்கும் யாராவது சொன்னாலும் சரி என்றே
சொல்லுகிறேன்.
பொதுவாக இந்துமதம் என்றால் மக்கள் பிறவியில் உயர்வு, தாழ்வு
என்பதை கற்பிப்பது. நெற்றியில் ஏதாவது குறி வைத்துக் கொள்வதும், பல
சாமிகள் இருப்பதாக வணங்குவதும், “என் சாமி பெரியது”, “உன் சாமி
சிறியது” என்று சண்டை போடுவதும், சாமிக்கு பெண்டு பிள்ளைகள் கூத்தியா
முதலியவைகள் கற்பிப்பதும் ஆகியவைகளைத் தவிர வேறொன்றும்
இல்லை. இவைகளைப் பற்றி
ஆராய்வோமென்றால்,
இவைகள், “வேதத்தில்
உள்ளது” என்றும், “வேதம்தான் இந்துமதம்” என்று சிலர் சொல்லி விடு
கிறார்கள். சரி அந்த வேதத்தையாவது பார்க்கலாம் என்றால் “அதை நீ
கண்ணால் பார்த்தால் கண்ணை குத்த வேண்டும்,” “காதால் கேட்டால் காதில்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிவிட வேண்டும்” என்றும் சொல்லி விடுகிறார்கள்.
வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளு
வதற்கு கூட நமக்கு இடமில்லையானால் நாம் அதை
எப்படி ஒப்புக்கொள்ள
முடியும்? எவனாவது நம்மிடம் வந்து “உனக்கு கொஞ்சம் ரூபாய் தருகிறேன்.
பெற்றுக் கொண்டதற்காக இந்த கடிதத்தில் கையெழுத்துப் போடு” என்று
சொன்னால் அக்கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்துதானே
கையொப்பம் இடுவோம். “அதை நீ பார்க்கக் கூடாது; நான் காட்டுகிற
இடத்தில் கையெழுத்துப் போட வேண்டியதுதான் பணம் பெற்றுக் கொள்
பவன் கடமை” என்று யாராவது சொன்னால் பேசாமல் கையொப்பம் போட்டு
விடுவோமா? அதில் என்ன எழுதி இருக்கிறது, எத்தனை ரூபாய்க்கு எழுதி
இருக்கிறது என்பவைகளை தெரிந்து கொள்ளாமல் கையெழுத்துப் போடுவது
முட்டாள்தனம் என்று உணரமாட்டோமா? நம்மை பார்த்து “நீ இந்து மதஸ்த்
தன். இந்து மதம் என்பது வேதத்தை ஒப்புக் கொள்வது. அதில் உள்ள சடங்கு
187
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
களை நீ ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்வது என்பது பார்ப்பன
னுக்கு பணம் கொடுப்பதும் அவர்கள் காலில் விழுவதும்தான். ஆதலால்
எனக்கு பணம் கொடு. என் காலில் விழுந்து கும்பிடு. என் காலை கழுவின
தண்ணீரை குடிப்பது உனக்கு மோக்ஷம் கிடைக்கச் செய்யும்” என்று ஒரு
பார்ப்பனன் சொல்லுவானானால் நாம் சரி அப்படியே செய்யலாம் ஆக்ஷ
பணை இல்லை. ஆனால் அந்த வேதத்தைக் கொஞ்சம் காட்டுங்களே. அதில்
அப்படி எழுதி இருக்கிறதா என்பதை கொஞ்சம் கண்ணினால் பார்ப்போம்
என்றால் “நீ அதைப் பார்க்கக் கூடாது. பார்த்தால் பாவம்” என்று சொல்லும்
போது நாம் எப்படி அம்மதத்தை ஒப்புக் கொள்ள முடியும். முன் சொன்னது
போல் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடக் கூடிய அவ்வளவு
மூடர்களாய் நாம் இருந்தால்தானே படித்துப் பார்க்காமல் இந்து மதத்தை
ஒப்புக் கொள்ளுவதோ அல்லது அதில் இருக்கிறதாக சொல்லுகிறபடி நடப்ப
தோ முடியும்.
இந்த இந்து மதம் என்கிற ஒரு மதம் தவிர வேறு மதக்காரர்கள்.
எல்லோரும் தங்கள் தங்கள் மதங்களையும் கொள்கைகளையும் தங்கள்
மதக்காரர்கள் எல்லோரையும் படிக்கச் செய்வதுடன் வேறு மதக்காரர்களும்
படிக்கும்படியாக அந்தந்த பாஷைகளில் தங்கள் சொந்த சிலவில் அச்சிட்டு
இலவசமாக வழங்குகிறார்கள்.
பெண்களுக்கும், பெண்கள் மூலமாக
வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். சம்பளம் கொடுத்து பாதிரி
மாரையும் உபதேசியாரையும் நியமித்து பிரசாரமும் செய்விக்கிறார்கள்.
இவர்கள் பெரும் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று சாணி
உருண்டை அடியும் கல்லடியும் பட்டுக்கொண்டு எல்லா ஜனங்களுக்கும்
போதிக்கிறார்கள். ஆனால் நம்முடைய மதம் என்கிற இந்து மத சம்பந்தமான
வேதம் என்பதையோ பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கண்ணில் கூட
பார்க்கக் கூடாது, காதால் கூட கேட்கக் கூடாது, நெஞ்சினால் கூடநினைக்கக்
கூடாது என்கிறார்கள். மற்ற மதக்காரர்களுக்கு அதாவது கிறிஸ்தவர், மகமதி
யர்களுக்கு கடவுளை வழிபடவும் தொழவும் நாள்களும் காலமும் முறை
களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஞாயிறு, வெள்ளி ஆகிய கிழமைகள்
முறையே அவர்களுக்கு முக்கிய நாளாகும். நமக்கோ ஒருவர் சனி, ஒருவர்:
ஞாயிறு, ஒருவர் திங்கள், ஒருவர் செவ்வாய் முதலிய ஏழு நாள்களைப்
பற்றியும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதல்லாமல் குறிப்புமில்லை.
சர்க்காரிலும் நமது நாள்களுக்கு மரியாதை கொடுப்பதுமில்லை. அவர்கள்
ஒப்புக்கொள்வது மில்லை. நமது இந்து மதம் என்பதையாவது சர்க்காரார்.
ஒப்புக் கொண்டு இருக்கிறார்களா அல்லது ஒப்புக் கொள்ளும்படி செய்திருக்
கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எப்படி என்றால், அரசியலில்
சீர்திருத்தம் என்பதின் பேரால் பல மதங்களுக்கும் தனி பிரதிநிதித்துவம்
கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சட்டசபை ஸ்தானங்களுக்கு கிறிஸ்தவ
மதத்தின் பேரால் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ தொகுதி என்று சில
குடி அரசு
- 19270)
188
ஸ்தானங்களும் மகமதிய மதத்தின் பேரால் மகமதியர்களுக்கு மகமதிய
தொகுதி என்று பல ஸ்தானங்களும் ஒதுக்கி வைத்து கொடுக்கப்பட்டிருக்
கின்றது. அப்படி இருக்க இந்து மதம் என்கிற ஒரு மதம் இருக்குமானால்
அதற்கும் ஏதாவது சில ஸ்தானங்களை இந்து தொகுதி என்பதாக ஒதுக்கி
இருப்பார்களா இல்லையா? அப்படி ஏதாவது ஒதுக்கப்பட்டிருக்கிறதா?'
என்பதை யோசித்து பாருங்கள். அல்லாமலும் இந்துக்கள் என்கிற நாம்
சட்டசபைக்குநிற்க வேண்டுமானால் எந்த பேரால் நிற்கிறோம் என்பதை சற்று
கவனித்துப் பாருங்கள். மகமதியர் அல்லாதார் தொகுதி என்கிற பெயரால்
தானே நிற்கிறோம். மகமதியர் அல்லாதார் என்றால் என்ன அர்த்தம் என்று
உங்களுக்குத் தெரியுமா? மகமதிய மக்கள் கோட்பாடுப்படி “காபா” என்றும்
அல்லது “மதம் இல்லாதவன்” என்றும்தான் பொருள்படும்.
நாம்
மதமற்றவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?.
இந்த பெயரை வேறு ஒருவரும் நமக்கு சூட்டவில்லை.
நாமேதான்
சூட்டிக்கொண்டு “மகமதியரல்லாதார் தொகுதிக்கு நான் நிற்கிறேன்” என்கி
றோம். நமது சட்டசபை மெம்பர்கள் எல்லாம் மகமதியரல்லாதாரே தவிர
இந்துக்கள் அல்ல.
இந்துமத பரிபாலன சட்டம் ஏற்படுத்தியதை பார்த்து சத்தம் போட்ட
பெரிய பெரிய “இந்துமத வர்ணாசிரம தருமிகளும், இந்துமத தலைவர்களும்,
இந்து மதத்தைக் காப்பாற்ற பிரசாரம் செய்த பத்திராதிபர்களும்'” இன்றைய
தினம் இந்திய சட்டசபையில் மகமதியரல்லாதாராகத்தான்
அங்கம் பெற்றிருக்
கிறார்கள். காரணம் என்ன? மகமதியரல்லாதார் ஆக வேண்டுமென்றா?
அல்லவே அல்ல.
பின் என்னவென்றால் இந்துமதம் என்று ஒரு மதம்
இருக்கிறதையும் அதன் கொள்கைகள் என்ன என்பதையும் ௬ுஜுபிக்க
முடியாததாலேயே அல்லாமல் வேறல்ல. இப்படிப்பட்டவர்கள் இந்துமத
பரிபாலன சட்டத்தைப் பார்த்து “மதம் போச்சுது” “மதம் போச்சுது” என்று
சத்தம் போட்டார்கள் என்றால் நமது பணத்தை தின்று கொளுப்பதால்
அவர்களுக்கு ஏற்படும் மதம் போய்விடுமே என்கிற பயத்தினாலே தானே
யல்லாமல் வேறல்ல. மற்றபடி அந்த சட்டத்தினால் இப்பொழுது இருப்பதாய்
பாசாங்கு பண்ணும் மதத்திற்கு என்ன குறைவு எந்த பிரிவினால் ஏற்பட்டு
விட்டது?
தவிரவும் மதத்தில் “சர்க்கார் புகுந்து விட்டார்கள். சர்க்கார் புக நம்ம
மந்திரிகள் இடம் கொடுத்துவிட்டார்கள்” என்று சத்தம் போட்டார்களே.
சர்க்கார் எதில் புகுந்து விட்டார்கள்? எப்பொழுது புகுந்து விட்டார்கள்?
இதற்கு முன்பு புகவில்லையா? என்பதற்கு இவர்கள் பதில் சொல்ல முடியுமா?
இந்துமத சாமியின் நெற்றியில் வைக்கும் நாமம் (குறி) வடகலையா,
தென்கலையா என்பதை கண்டுபிடிக்க நமது மத ஆதாரங்களான வேத
சாஸ்திர நூல்களில் நமக்கு முடிவதில்லை. வெள்ளைக்கார ஜட்ஜ் சொன்னால்
தான் நாமும் ஒப்புக் கொள்கிறோம். நமது கோவிலில் தேவார பாராயணம்
189
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
செய்யலாமா வேண்டாமா? என்பதற்கு வெள்ளைக்கார கோர்ட்டில் தான்
முடிவு பெற வேண்டி இருக்கிறது. இப்படி இருக்கும் போது நமது மதத்திற்கு
ஏதாவது பொது கொள்கை உண்டா? சுயமரியாதை உண்டா? ஆகவே நமது
மத அஸ்திவாரமே, அதன் தத்துவமே நமக்கு இன்னது என்று சொல்ல முடியா
மலிருக்கும்போது அதிலிருந்து ஏற்பட்ட ஆபாச கட்டுப்பாடுகளைப் பற்றி
யும் அர்த்தமற்ற சடங்குகளைப் பற்றியும் கவலை செலுத்துவது எவ்வளவு
முட்டாள்தனமான காரியம் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். மதச்
சடங்குகளின் யோக்கியதையே இப்படி இருக்கும் போது சடங்குகளை:
பார்ப்பனரைக் கொண்டு செய்வதா? பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு
செய்வதா? என்கிற கேள்விக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா? ஒருவனை
“பந்தியிலேயே உட்கார வேண்டாமென்றால் இலை கிழிந்திருக்கிறது என்று
சொல்லுவதில் பிரயோஜனமென்ன” என்கிற பழமொழி போல் இருக்கிறது
யாரைக்கொண்டு புரோகிதம் செய்விக்கிறது என்கிற விஷயம்.
மதச் சடங்கு
இம்மாதிரி முழுதும் மோசமான மதத்தின் பேரால் நமக்கு ஏற்பட்டி
ருக்கும் சடங்குகளும் அதனால் நமக்கு ஏற்படும் வரி (செலவுகளும் அத
னால் நமது சுயமரியாதை எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதும் சற்று
யோசித்துப் பாருங்கள். நாம் ஒரு இந்து என்று சொல்லிக்கொள்வதனால்
பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வரி கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை
சற்று கவனியுங்கள்.
சர்க்கார் நம்மிடம் வாங்கும் வரியைப்பற்றி நமது
அரசியல் பிழைப்புக்காரரான இதே பார்ப்பனர்கள் அதுவும் அந்த வரி
பணங்களை எல்லாம் இவர்களே அனுபவித்துக் கொண்டு எவ்வளவு சத்தம்
போடுகிறார்கள். சர்க்காராராவது வாங்கும் வரிக்கு ஒரு திட்டம் கணக்கு வரவு
செலவு முதலியவைகளை காட்டுகிறார்கள். வீடு, பூமி, கடை, தொழில், வியா
பாரம், விவகாரம் முதலியவைகள் உள்ளவர்களிடம்தான் வரி வசூலிக்கிறார்.
கள். அதை சரியாகவோ, தப்பாகவோ எல்லோருக்கும் உபயோகப்படுத்து
வதாக சொல்லுகிறார்கள். மதத்தின் பேரால் இப்பார்ப்பனர்கள் நம்மிடமிருந்து
வாங்கும் வரிப்பணத்துக்கு ஏதாவது ஒழுங்குண்டா? முறையுண்டா? வரவு
செலவு கணக்கு சொல்லுவதுண்டா? ஒன்றுமில்லாமல் ஒவ்வொரு மனித
னையும் விடாமல் அதுவும் அவன்
கர்ப்பத்தில் தரிக்கும் முன்பே கர்ப்பதான
முகூர்த்தம் என்பதாகவும், கர்ப்பம் தரித்தால் சீமந்த முகூர்த்தம் என்பதாகவும்
பிறந்துவிட்டால் ஜாதகரணம், நாமகரணம், தொட்டிலில் போடுதல், பாலூட்
டுதல், ஆயிசு ஓமம், முடி வாங்குதல், காது குத்துதல், பள்ளியில் வைத்தல்,
காயலா முதலியதுகளுக்கு சாந்தி பிறகு அவனுக்கு கல்யாணம் என்றால்
பெண் பார்த்தல், ஜாதகம் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நாள் பார்த்தல்,
விவாகம் ஆன பின் டெசடங்கு அவன் பிள்ளைக்குட்டி பெற்றால் அதற்கும்
அவன் காயலாவுக்கு கிரக தோஷம், சாந்தி, கோவில், குளம், யாத்திரை
குடி அரசு
- 19270)
190
ஆகியதுகள், இவ்வளவும் தவிர கடைசி காலத்தில் சாவதாயிருந்தால் சாக
அதாவது உயிர்விட பத்து நிமிஷமிருக்கும்போதே சுங்கக் காரனுக்கு சுங்கம்
கொடுத்துவிட்டுதான் ஒரு ஊருக்குள் நுழைய வேண்டும் என்பது போல
பார்ப்பானுக்கு மாடு வாங்கி கொடுத்தால்தான் (கோ தானம்! இந்த ஜீவன் அந்த
மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு மோட்சத்திற்குப் போக முடியும்.
இல்லாவிட்டால் மேலோகத்திலுள்ள நெருப்பாறு மயிர்ப் பாலம் தாண்ட
முடியாது என்று சொல்லி மாடு கொடுக்க வேண்டி இருக்கிறது.
மாடு
கொடுத்து செத்து விட்டாலாவது விடுகிறானா? அப்போதும் வீட்டில் வந்து
உட்கார்ந்து கொண்டு இழவுக்கு வந்தவர்களைக் கூட விசாரிக்க நேரமில்லா
மல் உபத்திரவித்து வரிசையாக ஹு முழுவதும் பிச்சி புடுங்கிதின்கிறார்கள்.
இவ்வளவுடன் தீர்ந்து விடுகிறதா? இல்லவே இல்லை. ஒரு ஹு ஆனதும்
“ உன் தகப்பனார் இன்ன வருடம். இன்ன மாதம், இன்ன தினம், இன்ன
திதியில் செத்துப்போனார். வை பணம், அரிசி. பருப்பு. உப்பு,புளிவகையறா
சாமான்கள்” என்று கேட்பதோடு சாப்பிட்டு அஜீரணம் ஏற்பட்டால் அதற்கும்
இஞ்சியும். சுக்கும் வை என்றும் கேட்டு வாங்கி இவ்வளவும் கொடுத்தும்
“நீயும் உன் பெண்ஜாதியும் என் காலில் விழுந்து கும்பிட்டு கால் கழுவின
தண்ணீரைக் குடியுங்கள்” என்றும் சொல்லி மூட்டைக் கட்டிக்கொண்டு போய்
விடுகிறான். அம்மூட்டைகள் அநேகமாக தாசிகள் வீட்டிற்கே போய்ச்
சேருகிறது.
மடாதிபதிகள்
மதச் சடங்குகள் யோக்கியதைதான் இப்படி இருக்கிற தென்றால்
மதாச்சாரியார்கள் யோக்கியதையை கொஞ்சம் பாருங்கள். மதத்தை காப்ப
தற்காக என்றோ மதப் பிரசாரம் செய்வதற்காக என்றோ அல்லது சமயத்தை
பரப்ப என்றோ நமது முன்னோர்கள் விட்ட சொத்துக்கள் இன்றைய தினமும்
100,
200,
500, 1000க்கணக்கான வேலி
பூமிகளும்
10000, 20000,
50000க்கணக்கான விராகன் பொன்களும், ராஜ்யம், ஜமீன், மிட்டா என்ற
ஆட்சிகளும் தானமாகவும் மானியமாகவும் விட்டிருக்கிறார்கள். இவற்றை
நிர்வகிக்கும் மடாதிபதிகளின் யோக்கியதை எப்படி இருக்கிறது? அவர்களின்
ஒழுக்க வழக்கங்கள் எப்படி இருக்கிறது? இவ்வளவு சொத்துக்களின்
வரும்படிகள் மதத்திற்கோ சமயத்திற்கோ என்ன பிரயோஜனப்படுகிறது?'
மத ஆச்சாரியர்கள்
இது போலவே ஆச்சாரியர்களும், லோக குருக்களும் என்ன செய்கி
றார்கள் என்று பாருங்கள். யானை, குதிரை, வண்டி, மாடு, தங்கம், வெள்ளி,
தந்தம் ஆகிய பல்லாக்குகள் முதலிய 500 உருப்படிகளுடன் ஊர் ஊராய்
திரிவதும் அங்குள்ள பார்ப்பன அதிகாரிகள் செல்வாக்கால் மக்களை
மிரட்டியும், ஏமாற்றியும் 100, 200, 1000, 2000, 5000 என்பதாகத் தெண்டத் தீர்வை
191
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
போல் வசூலிப்பதும் பொங்கிப் பொங்கி தங்கள் இனத்தாரிலேயே பொறுக்கி,
சோம்பேறிகளுக்கும், தடியர்களுக்கும் படைப்பதும் மீதியை மூட்டைக்
கட்டிக் கொண்டு பகல் கொள்ளைக்காரன் போல் மற்றொரு ஊருக்கு போய்
டேரா அடிப்பதுந் தவிர என்ன மத உபதேசமோ ஆத்மார்த்த உபதேசமோ
செய்கிறார்கள்? டெ ஆச்சாரியர்கள் நம்மிடம் பேசினாலே பாவம். சூத்திர
சம்பாஷணை என்று அதற்காக பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதுதான்
நம்மை அவர்கள் உபதேசம் செய்வதும் மரியாதை செய்வதுமான
விதமாயிருக்கிறது..
கடவுள்
மத ஆச்சாரியர்கள் யோக்கியதைத்தான் இப்படி என்றால் இம்மதத்
தில் ஏற்பட்ட கடவுள்களின் யோக்கியதைகளோ சொல்லவே வெட்கக்
கேடாய் இருக்கிறது.
ஆளுக்கு ஒரு கடவுளும் “என் கடவுள் பெரிது; உன் கடவுள் சிறிது”
என்கிற சண்டையும், ஊருக்கு ஒருவிதமான கடவுளும், ஒவ்வொருவனுக்கும்
ஒவ்வொருவிதமான கடவுளும், தத்துவமும் அதாவது ஒருவன் கடவுள்
கிட்டப் போனால் சாமி செத்துப் போவதும், ஒருவன் கடவுள் இருக்கும் கோவி
லுக்குள் போனால் சாமி செத்துப்போவதும், ஒருவன் கோவில் மதிலுக்குப்
பக்கத்தில் போனால் சாமி செத்துப்போவதும், ஒருவன் சாமியைப் பார்த்து
விட்டால் சாமி செத்துப்போவதும், இப்படி செத்துப்போன சாமிகளுக்கு
பார்ப்பானுக்கு பணம் கொடுத்தால் உயிர் வந்துவிடுவதும், ஜகநாதத்திலும்,
பண்டரிபுரத்திலும், காசியிலுமிருக்கும் சாமி யார் தொட்டாலும், யார் தொட்டு
கும்பிட்டாலும் சாகாமலிருப்பதும் நம்ம நாட்டிலுள்ள சாமி நாம் கட்டினதா
யிருந்தாலும் நாம் சிலவு கொடுத்து பூஜை செய்விப்பதாயிருந்தாலும் நாம்
கிட்டத்தில் போன உடனே செத்துப் போவதும், ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சி,
சிதம்பரம் முதலிய ஊர் சாமிகள் நாடார் கனவான்கள் கோயிலுக்குள் போய்
நம்மைப்போல் கும்பிட்டால் சாகாமலிருப்பதும், மதுரை, ராமநாதபுரம்,
திருநெல்வேலி முதலிய ஜில்லா சாமிகள் நாடார்கள் கோயிலுக்குள் வந்து
கும்பிட்டால் செத்துப் போவதும், நாடார்கள் வீட்டிற்கு சாமி போய் வந்தால்
சாகாமலிருப்பதுமாக எத்தனையோ வித்தியாசமான சாமிகளும் எவ்வளவோ
பலக் குறைவான சாமிகளும் நமது மதத்தில் கும்பிடப்படுகிறது.
மோக்ஷம்
சாமியின் யோக்கியதைத்தான் இப்படி என்றால் மோகம், புண்ணியம்
என்பதோ இதைவிட ஆபாசமானதென்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
அதாவது மனிதனுடைய யோக்கியமான எண்ணத்தினாலும் வார்த்தையினா
லும் நடவடிக்கையினாலும் இல்லாமல் பார்ப்பானுக்கு கொடுப்பதினாலேயே
குடி அரசு
- 19270)
192
புண்ணியமும் மோக்ஷமும் ஏற்பட்டு விடுகிறது. எவ்வளவு அயோக்கியத்
தனமும் கொலை பாதகமும் கொடுமையும் நம்பிக்கை துரோகமும் செய்து
விட்டாலும் பார்ப்பானுக்கு பணம் கொடுத்தால் எல்லாப் பாவமும் ஓடிப்போய்
மோகம் கிடைத்து விடுகிறதாம். பார்ப்பானுக்கு கொடுப்பதாலேயே நமது
இஷ்டம் சித்தியாவதும் நமது பிள்ளை குட்டிகள் சந்ததி விளங்குவதும்
ஆகக்கூடியதாயிருக்கிறது. நமது நாட்டுப் பழய காலத்து அரசர்கள் இந்த
பார்ப்பனர்களுக்கு அழுதது கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனை மானியம்?
எத்தனை அக்கிரமம்? எத்தனை அன்ன சத்திரம்? எத்தனை கன்னிகாதானம்?
முதலிய 32 தர்மங்கள் செய்திருக்கிறார்கள். இப்போது அந்த அரசாங்க
மெல்லாம் எங்கே? கடைசியான தஞ்சாவூர் அரசாங்கம் பார்ப்பனருக்கு
கொடுத்து அழுததுபோல ஒரு அரசாங்கமும் கொடுத்ததை நாம் பார்த்த
தில்லை. இப்பொழுதும் அதை அநுபவிக்கிற பார்ப்பனர்கள் கணக்கு வழக்
கில்லை. அப்பேர்பட்ட தஞ்சை அரசாங்கம் இன்றைய தினம் பேர் சொல்லக்
கூட சந்ததி இல்லாமலும் ராஜா க்ஷத்திரியன் அல்ல, சூத்திரன் என்று அவரிடம்
வாங்கித் தின்கிறவர்கள் சாக்ஷி சொல்லவுமாய் இருக்கிறார்கள்.
பார்ப்
பனருக்கு கொடுப்பவர்களின் குடும்பம் நாசமாய் போய் விட்டது, விடுகிறது,
விடும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டியதில்லை. ஆகவே
வேதம், சடங்கு, ஆச்சாரியர்கள், சாமி, மோக்ஷம், புண்ணியம் என்கிற
விஷயங்களில் நமது மதம் என்பதின் யோக்கியதை எப்படி இருக்கிறது
என்பதையும் இதை பிரதானமான நினைத்துக் கொண்டு நமது ஜனங்கள்
ஏழைகள் முதல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படி நாசம் செய்து
நம்மை போன்ற மனிதனுக்கு நம்மிலும் ஒழுக்கத்திலும் யோக்கியதையிலும்
இழிந்தவனுக்கு முட்டாள்தனமாய் கொடுத்து சுயமரியாதையில்லாமல் அவன்
காலில் விழுந்து கால் கழுவின தண்ணீரைக் குடிக்கிறோம் என்பதையும்
நீங்களே நன்றாய் யோசித்துப் பாருங்கள்.
நான் பேசுவதைப் பார்த்து
கைத்தட்டினீர்கள், சிரித்தீர்கள், ஆச்சரியப்பட்டீர்கள், இப்பொழுது தான் இந்த
விஷயங்களைக் கேட்டு உங்கள் பைத்தியக் காரத்தனத்திற்கு விசனப்
படுகிறவர்கள் போல் ஜாடை காட்டினீர்கள். இதில் என்ன பிரயோசனம்.
நீங்கள் எழுந்து வீட்டுக்குப் போகும் போது நாடகம் பார்த்தவர்கள் போல்
நன்றாய் பேசினார் நன்றாய் பேசவில்லை என்பதாக எனக்கு நற்சாக்ஷி
பத்திரம் கொடுப்பதில் உங்கள் புத்தியை சிலவிடாமல் நான் பேசியவைகளில்
எது சரி எது தப்பு என்பதாக நன்றாய்த் திருப்பி திருப்பி யோசித்துப் பார்த்து
உங்கள் மனதுக்கு சரியென்று பட்டதை உடனே அமுலுக்கு கொண்டு
வருவதனால்தான்
நீங்கள் இது கேட்டதற்கு யோக்கியமாய் நடந்து கொண்ட
வர்களாவீர்கள். நமக்கு யாரிடமும்
சண்டை இல்லை, துவேஷமில்லை. நமது
சுயமரியாதையைக் காப்பாற்ற நாம் நமது மூடநம்பிக்கைகளுடன் போர்
செய்து ஜெயம் பெற்று சுயமரியாதை அடையவேண்டும் என்றுதான்
சொல்லுகிறோம். இப்பொழுது எல்லாம் சரி என்று ஒப்புக்கொண்டு வீட்டிற்கு
போய் படுத்து தூங்கி எழுந்தவுடன் “அய்யரை கூட்டிக்கொண்டு வா,
தர்ப்பணம் பண்ண வேண்டும்” என்று சொல்லுவதும் பக்கத்தில் யாராவது
193
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
இருந்து “என்னையா நேற்று எவ்வளவோ கேட்டுவிட்டு இன்றைக்கு
மறுபடியும் அந்த முட்டாள்தனத்திலேயே முழுகியிருக்கிறீர்களே'” என்று
கேட்டால் “என்னால் ஒன்றுமில்லை, வீட்டில் பெண்டுகள் உபத்திரவம்.
அதனால் இப்படி செய்ய வேண்டி இருக்கிறது” என்று சொல்லி நமது
சகோதரிகள் மீது பழியைப் போட்டு அவர்களை முட்டாள்களாக்கு
வதுமாயில்லாமல் உறுதியுடன் நின்று உங்கள் பெண்டுகளுக்கும் சமாதானம்
சொல்லி உங்கள் மனத்திற்கு சரியென்று பட்டதை தைரியமாய் செய்யுங்கள்.
மற்ற வழிகளில் உங்கள் பெண்டுகளுக்கு விரோதமாய் எத்தனை காரியங்கள்.
செய்கிறீர்கள் என்பதையும் ஞாபகப் படுத்திப் பாருங்கள். எனக்கு ரயிலுக்குப்
போக நேரமாகி விட்டதால் மற்றொரு சமயம் மீதி விஷயங்களைப் பற்றி பேச
இருக்கிறேன்.
குறிப்புசென்னை செளந்திரிய மஹாலில் ஸ்ரீமான் சிங்காரவேலு செட்டியார்
தலைமையில் பேசியது:
குடி அரசு - சொற்பொழிவு - 03. 04. 1927
குடி அரசு
- 19270)
194
காங்கிரஸ்
காங்கிரஸ் என்னும் பதத்திற்கு கூட்டம் என்பது பொருள்.
நமது
நாட்டில் இது அரசியல் சம்பந்தமான கூட்டமென்பதற்கே குறிக்கப்படுகிறது.
அரசியல் என்பதற்கு பொருள் அரசாட்சி, ராஜரீக முறை என்று இருந்தாலும்
அது அரசாங்கத்துடன் ராஜரீக முறை விஷயமாய் செய்யும் கிளர்ச்சி என்ப
தற்கே சொல்லப்படுகிறது. காங்கிரஸ் என்பதும் அரசியல் கிளர்ச்சி என்பதும்
நமது நாட்டு வார்த்தையும் தத்துவமும் அல்ல. அது மேல் நாடுகளில் பாமர
மக்களின் பேரில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்கிற விஷயமாய் ஏற்படும்.
கிளர்ச்சிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதே அல்லாமல் இங்கே சொல்லிக்
கொள்ளப்படுகிற சுயராஜ்யம், சுதந்திரம் என்கிற போலி வார்த்தைகளுக்கும்
அதன் தத்துவத்திற்கும் ஏற்பட்டதல்ல.
மேல் நாடுகளில் சுய ஆட்சி,
சுயராஜ்யம் என்பதற்கு சரியான பொருளே ஒரு தேசம் அனேகமாய் அரசன்
என்பவனால் ஆளப்படாமல் அந்தந்த நாட்டு மக்களாலேயே நிர்வகிக்
கப்படுவது. நமது நாட்டில் முதல் முதல் அதாவது காங்கிரஸ் ஆரம்பித்த
காலத்தில் சுய ஆட்சி, சுயராஜ்யம் என்பதற்கே இன்ன பொருள் என்று கூட
தெரியாததுமாய் நினைக்காததுமாய் படித்தவர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு
சிலர், பாமர மக்களின் மேல் யார் ஆதிக்கம் செலுத்துவது என்கிற கொள்கை:
யைக் கொண்ட அரசியலையே குறியாக வைத்து மேல் நாட்டு முறைப்படி
காங்கிரஸ் என்பதாக ஒரு கூட்டம் கூட்டி அரசாங்கத்தின் தயவை எதிர்பார்த்து
அரசாங்கத்தார் செலுத்தும் ஆதிக்கத்தில் தங்களுக்கும் ஏதாவது ஒரு பங்கு
கொடுக்க வேண்டும் என்று கெஞ்சி வந்தார்கள். அரசாங்கத்தாரும் இது
தங்களது ஆதிக்கம் இன்னமும் பலப்படுவதற்கு புதிதாக மேல் கொண்டு
தங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது அதாவது யார் பேரில் தங்கள் ஆதிக்
கத்தை செலுத்தி யாருடைய செல்வத்தை கொள்ளை கொண்டு வாழ
வேண்டுமோ அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களே தங்களுக்கும் ஒரு பங்கு
கொடுத்தால் தாங்களும் அவ்வாதிக்கத்திற்கும் அக்கொள்ளைக்கும் உளவாக
இருந்து உதவி செய்வதாய் சொல்லுவது எவ்வளவோ அனுகூலம் என்ப
தாகக் கருதி அவர்களும் இந்த மாதிரி காங்கிரசையும் அரசியல் கிளர்ச்சி
யையும் மதித்தது போல் நடித்து தங்கள் ஆதிக்கத்திலும் தங்களது அனுபவத்
திலும் கொள்ளையிலும் ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் தங்களுக்கு
மேலும் மேலும் பலமும் ஆதரவும் உண்டாக்கிக் கொள்ள பாமர மக்களின்
195
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மேல் புதிய ஆதிக்கங்களையும் புதிய அநுபவங்களையும் ஏற்படுத்தி அதில்
ஒரு பங்கு இவர்களுக்கும் கொடுத்து வந்தார்கள்.
சிறியதாய் இருந்த
இக்கூட்டம் நாளுக்கு நாள் பெருக நமது நாட்டு படித்த மக்களின் கூட்டம்
என்பதும் இம்மாதிரி நமது பாமர மக்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவது
என்கிற பேரால் அரசாங்கத்திற்கு உள் உளவாயிருந்து வாழ்வதே தங்களது
வாழ்க்கைக்கு உரிய சாதனமென்றும் அதைத் தவிர வேறு பிழைக்கும் வழி
இல்லை என்றும் தீர்மானித்துக் கொண்டபடியால் இக்கூட்டம் நாளுக்கு நாள்.
வலுக்கவும் ஒருவருக்கு ஒருவர் காங்கிரஸ், சுயராஜ்யம், உரிமை, தேசியம்,
சர்க்காரோடு சண்டை என்கிற போலி வார்த்தைகளின் பெயர்களால் போட்டி
ஏற்பட்டு அது பலமான போட்டியாகவும் செல்வாக்கு பெற்ற போட்டி
யாகவுமே மாறி அப்போட்டிக்கு தயாராவதே மக்களின் படிப்பு என்றும்
ஏற்பட்டு பிழைப்பு வேண்டிய மக்கள் இப்போட்டியில் ஈடுபடக் கருதி படிப்பு
என்பதன் மூலமாய் தயாராவதே நோக்கமாய் போய் விட்டது. இப்போட்'
டியில் வெற்றி பெற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்கு திருப்தி அளிக்க
வேண்டியதற்கு எவ்வளவு தூரம் நமது மக்களை ஏமாற்ற தேசத்தைக் காட்டிக்
கொடுத்தும் மக்களுக்குத் துரோகம் செய்தும் அரசாங்கத்திற்கு திருப்தி
அளிக்கவேண்டுமோ, அவ்வளவு தூரம் துரோகம் செய்யவும் அதற்காக
ஏமாற்றவும் போட்டி போட வேண்டி வந்து விட்டது. அதன் பயனால் நமது
நாடு நாளுக்கு நாள் அன்னிய ஆதிக்கத் தன்மையும், செல்வம் கொள்ளை
போகும் தன்மையும் பலப்பட்டு வருவதோடு தேசத்திற்கும் மக்களுக்கும்
காங்கிரஸ் இல்லாத காலத்தில் இல்லாததான பல இடைஞ்சல்களும், இன்னல்
களும் ஏற்பட்டு வருகிறது. உதாரணமாக காங்கிரஸ் இல்லாத காலத்தில்
மக்களுக்கு இருந்த வரிகளை விட இப்போது ஒன்றுக்கு நான்கு பங்கு
வரிகளும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் மக்களுக்குள் இருந்த மதுபான
அளவை விட ஒன்றுக்கு பதினாறு பங்கு மதுவருந்துவதும், காங்கிரஸ்
இல்லாத காலத்தில் மக்களுக்குள் இருந்த விவகாரங்களை விட ஒன்றுக்கு 2
பங்கும் விவகாரங்களும் கோர்ட்டுகளும் வளர்வதும் , காங்கிரஸ் இல்லாத
காலத்தில் இல்லாத அடக்கு முறைகள் எல்லாம் ஒன்றுக்கு
10 ஆக
ஏற்படுத்தவும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் இருந்த சுதந்திரங்கள் எல்லாம்
பறிபோய்க் கொண்டிருப்பதும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் மக்களுக்குள்
இருந்த ஒற்றுமையும், நாணயமும், ஒழுக்கங்களும் அடியோடு மறைந்து
அதற்கு விரோதமாக விரோதங்களும், நாணயக் குறைவுகளும், ஒழுக்கக்
கேடுகளும் வளர்ந்து வருவதும், காங்கிரஸ் இல்லாத காலத்தில் இருந்த
யோக்கியதைக்கும், யோக்கியர்களுக்கும், பணக்காரருக்கும், சாதுக்களுக்கும்,
பார்ப்பனரல்லாத மக்களுக்கும் இருந்து வந்த மதிப்பெல்லாம் போய்,
அயோக்கியத்தனத்திற்கும், அயோக்கியர்களுக்கும், சுயநலக்காரருக்கும்,
துரோகிகளுக்கும், வஞ்சகர்களுக்கும், சூக்ஷிக்காரர்களுக்கும் மதிப்பு
ஏற்படவுமாய் நிலைமை மாறிக்கொண்டே வருகிறது.
தேசத்திற்கும்,
மக்களுக்கும் இவ்வளவு துரோகமும், கொடுமையும் செய்ததற்கு ஆதாரமான
குடி அரசு
- 19270)
196
காங்கிரஸ் அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் நமது படித்த கூட்டத்தார்கள்
செய்து வந்ததற்கு நமது அரசாங்கத்தார் அவர்களுக்குக் கொடுத்து வந்த
கூலிதான் இப்போது பெரும்பான்மையாய் நமது பார்ப்பனர்கள்
அனுபவிக்கும் உத்தியோகம், ஆதிக்கம், போகம், போக்கியங்கள் முதலியது
களே அல்லாமல் மற்றபடி வேறுவிதமாய் இவர்களுக்கு கிடைக்க எந்த
விதத்திலும் மார்க்கமில்லை என்பது சரித்திர பூர்வமாயும் அனுபவ பூர்வ
மாயும் யாவரும் அறிந்ததேதான்.
இதில் ஒன்றும் ரகசியமும் இல்லை.
அரசியல் என்பது இக் கொள்கைகளைக் கொண்டதுதானே அல்லாமல்
வேறில்லை என்பதற்கு ஆதாரமாக ஒரு மேல்நாட்டு அறிஞர் சொல்லி
இருப்பது என்னவென்றால் “அரசியல் என்பதும் அரசியல் கிளர்ச்சி என்பதும்
அயோக்கியர்கள் தங்களுக்கு வேறு எந்த அயோக்கியத்தனமான
வழிகளிலும் பிழைக்க மார்க்கமில்லை என்று கண்டு தங்களது பிழைப்புக்கு
கடைசி அயோக்கியத் தனமான பிழைப்பு மார்க்கம் அதாவது இனி இதைத்
தவிர வேறு மார்க்கத்தில் பிழைக்க முடியாது என்பதாகக் கருதி ஏற்படுத்திக்
கொண்டதான பிழைப்புக்குத்தான் அரசியல், அரசியல் கிளர்ச்சி, என்று
சொல்லுவது” என்பதாக சொல்லியிருக்கிறார்.
நாம் முன் சொல்லி
வந்தவைகளுக்கும் மேல் நாட்டு அறிஞர் சொல்லியிருப்பதற்கும் தற்கால
அரசியல் வாழ்வுகளையும் கிளர்ச்சிகளையும் கவனித்து வருகிற அறிவாளி
களுக்கு நாம் ஆதாரங்கள் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
பாமர:
மக்களுக்கு தெரிய வேண்டுமானால், நாம் சுருக்கமாக ஒரே வழியைச்
சொல்லிவிடுகிறோம். அதாவது காங்கிரஸ் ஏற்பட்ட நாள் முதல் நாளது
வரையில் அரசியல் கிளர்ச்சியில் கலந்து இருக்கிற தேசபக்தர்கள், தேசாபி
மானிகள், அரசியல் சுதந்தரக்காரர்கள் என்கிற நபர்களை தனித்தனியாகப்
பிரித்து எடுத்து அவர்களின் பிறப்பு, வளர்ப்பு, முற்கால நிலை, தற்கால நிலை
ஆகியவைகளைப் பற்றி குறிப்பு எடுத்து மிகப் பெரும்பான்மையா
யிருக்கிறவர்களின் யோக்கியதையை கவனித்தால் வெகு சுலபத்தில்
விளங்கிவிடும்.
அதோடு அரசியல் ககஷிகளை எடுத்து அதன் கொள்கைகள்,
முற்கால கொள்கைகள், தற்கால கொள்கைகள்,
அதன் தலைவர்கள், பின்பற்று
வோர்கள், பிரசாரகர்கள், தொண்டர்கள் என்பவைகளையும் கவனித்து
குறித்து வைத்து அதில் பெரும்பாகம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால்
உடனே விளங்கிவிடும். அதிலும் சரியானபடி விளங்கவில்லை என்றால்
பிரத்தியக்ஷப் பிரமாணமாகத் தெரியவேண்டுமானால் சுயராஜ்யக் ககஷி
என்னும் ஒரு கக்ஷியின் தத்துவத்தையும் அதன் கொள்கைகளையும்,
தேசத்திற்கு ஏற்பட்ட நன்மைகளையும், தேச மக்களின் ஒற்றுமையையும்
ஒழுக்கங்களையும் ஒழித்து வயிறு வளர்க்க அடிக்கடி மாறி மாறி எடுத்துவந்த
அவதாரங்களையும், அதன் தலைவர்கள் முதல் வாலர்களையும் அதன்
அபிமானிகளையும் அதற்காதரவளித்தவர்களையும் அவர்களின் யோக்கிய
தையையும் அறிந்து வைத்துப் பார்க்கிறவர்களுக்கு வெகு சுலபத்தில்
விளங்கும். அதிலும் முழுதும் விளங்காதவர்களுக்கு சென்னை சட்டசபை
197
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
யில் தேசத்தின் பேரால் “கெளஹத்தி காங்கிரசின் கட்டளையை நிறைவேற்றி
வைத்த” சுயராஜ்யக் க்ஷி பான்மையையும் அதன் நடவடிக்கைகளையும்
அவர்கள் சொல்லும் பதிலையும் பார்த்தால் எப்படிப்பட்டவர்களுக்கும்
விளங்காமல் போகாது. யாரோ ஒருவர் இருவரின் நிலைமையை இதற்கு
மாறுபட ஏற்பட்டாலும் அதனாலேயே இதன் முடிவு மாறுபட்டுவிடாது..
குடி அரசு - தலையங்கம் - 03. 04. 1927
குடி அரசு
- 19270)
198
கேசத்தின் தற்கால நியையும்
யார்ப்பணால்லாதார் கடமையும்
இன்றைக்கு 40, 50 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையை விட
தற்பொழுது தேசம் மிகக் கேவல நிலையடைந்திருக்கிறது என்றும், காங்கிரஸ்
மகாசபை. ராஜீயத் தலைவர்கள் முட்டுக்கட்டைத் திட்டம், சர்க்காருடன் யுத்தம்
முதலியவை ஏற்பட்டதின் பலன் சர்க்காரின் வரியும் குடிகளின் வறுமையும்
அதிகரித்ததேயொழிய வேறு நாட்டின் நலத்திற்கானவை ஒன்றும் ஏற்பட
வில்லையென்றும், தேசத்தின் பெயரையும் மகாஜனங்களின் பெயரையும்
சொல்லிக் கொண்டு படித்தவர்களில் ஒரு வகுப்பார் தங்கள் சுயநலத்துக்கான
சவுகரியங்களை ஏற்படுத்திக் கொள்ளவே ராஜீயக் கிளர்ச்சி செய்து வந்தார்
கள் என்றும், நாடு
வறுமையினின்றும் விடுபட அவர்கள் ஒன்றும் செய்யவே
யில்லையென்றும், இந்நிலையில் ராஜீய சுதந்திரம் கிடைக்கினும் தேசம்
விடுதலை பெற்று விட்டதாகக் கருதப்படமுடியாதென்றும், சுயராஜ்யம் ஏழை
களுக்கே மிக அவசியமானதென்றும், தனவந்தர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்
திலிருப்பவருக்கும் சுய
ஆட்சியினால் இப்பொழுதுள்ளதை விட அதிகமான
அநுகூலங்கள் ஏற்பட இடமில்லையாதலால் அவர்களுக்கு தேசவிடுதலை
யைப் பற்றிய கவலை ஏற்படாதென்றும், ஏழை மக்களின் நிலைமை மேன்மை
படுத்துவதே சுயராஜ்யத்துக்கான வேலை செய்வதாகும் என்றும், காங்கிரஸ்
இவ்விஷயத்தில் தலையிடாமல் படித்தவர்களின் ஸ்திதியையே உயர்த்தும்
விஷயத்தில் பாடுபட்டு வந்ததாய் அறிந்த தீவிர காங்கிரஸ்வாதிகளும்
சுயநலத்தியாகிகளுமான டாக்டர் நாயர் பெருமானும் தியாகராய பெருமானும்
காங்கிரஸினின்றும் விலகி, நம்மவர்களின் முன்னேற்றத்தைக் கருதி,
பார்ப்பனரல்லாதாரியக்கத்தை ஆரம்பித்தனர் என்றும், மகாத்மா அவர்களும்
தேசம் க்ஷமமடைவதற்கான திட்டங்கள் காங்கிரஸில் இல்லாதது கண்டு கதர்,
மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு என்னும் உயரிய திட்டங்களைப் புகுத்தினார்
என்றும், ஆயினும் காங்கிரஸ் தலைவர்கள் இவற்றில் கவலை கொள்ளாது
சட்ட சபையே தங்கள் வேலைக்கான இடம் என்று இவற்றை அலட்சியம்
செய்துவிட்டார்கள் என்றும் சொல்லியபின் இந்நிலையில் பிராமணரல்லாதார்.
செய்ய வேண்டிய கடமைகளைப் பேசியதாவது:-
199
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
100 - க்கு 97 உள்ள ஜன சமூகமாயிருந்தும் நம்மைக் குறிக்கச்
சொந்தமான பெயரில்லாது, அற்ப எண்ணிக்கையுள்ள ஒரு வகுப்பினரின்
பெயரால் “பார்ப்பனரல்லாதார்” என்று நம்மைப் பெயரிட்டுக் கொள்வது
நம்மில் சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆம், கேவலம்தான்.
நம்மில் பல
பிரிவுகளையும் வித்தியாசங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தை
உத்தேசித்து உண்டாக்கி நமக்கு ஒரு பொதுப் பெயரில்லாது செய்து விட்டனர்.
மேலும் இப்பெயரிட்டதற்கு வேறு காரணமுமுண்டு. கொடிய நோய்களைப்
போக்கும் மருந்துகளுக்கு அந்த நோயின் பெயராலேயே பெயரிடுவது
வழக்கமும் பொருத்தமுமாயிருக்கிறது. அது போன்றே நமக்கு ஏற்பட்ட
கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள ஏற்பட்ட இயக்கத்திற்கு இக்கஷ்டங்க
ளுக்குப் பெரிதும் காரணமாயிருக்கும் வகுப்பினரின் பெயரைக் கொண்டு
பெயரிட்டது மிகவும் பொருத்தமானதுதான்.
நிற்க, நம் கடமைகள் எவை என்பதை மதுரை மகாநாடு முடிவு
செய்திருக்கிறது. அவை காந்தி அடிகளின் நிர்மாணத் திட்டம் ஆகும்.
முதலாவதாக கதர் உற்பத்தியை ஆதரிப்பதோடு நாம் கதர் துணிகளையே
உபயோகிக்க வேண்டும். இது தேசத்தின் வறுமை மிகுதியும் போக்குவது
என்று எடுத்துக் காட்டியதோடு நாயக்கரவர்கள் பல திருஷ்டாந்தங்களின் மூல
மாய் அதன் பொருளாதார லாபத்தை விளக்கினார்கள். இரண்டாவதாக
'தீண்டாமை” என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசுகையில், திரு நாயக்க
ரவர்கள், நாட்டின் தற்கால நிலைமைக்கு இதுவே முக்கிய காரணம் என்றும்,
மக்கள் யாவருக்கும் சம அந்தஸ்தும் சம உரிமைகளும் ஏற்பட வேண்டியது
நியாயமும் அவசியமும் ஆகும் என்றும், தீண்டாமை ஏற்பட பார்ப்பனர்தான்
காரணஸ்தர்கள் என்றும் ஆயினும் தற்சமயம் இது சகல வகுப்பாருக்குள்ளு
முண்டென்றும் நாட்டின் நலங் கருதி யாவரும் ஏகோபித்துத் தீண்டாமையை
ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாரின் முக்கிய கடமையாகுமென்றும்
சொன்னார்கள். மூன்றாவதாக, மதுவிலக்கு என்னும் விஷயமாய் பேசுவதால்,
குடியினால் விளையும் கேடுகள் பலவென்றும் அவை யாவரும் அறிந்ததே
யென்றும் குடியை முற்றிலும் ஒழிப்பதற்கான முறைகளை அநுசரிக்க
வேண்டியது நம்மவர்களின் கடமை என்றும் சொன்னார்கள். கடைசியாக
புரோகிதர்களின் பகிஷ்கார விஷயமாய் நம்மைத் தங்களை விடத் தாழ்ந்
தோர் என்று கருதும் பார்ப்பனப் புரோகிதர்கள் நம் வீடுகளில் நடக்கும் சுபா
சுப காரியங்களுக்கு அழைத்தல் கூடாது என்றும் தங்கள் தங்கள் வகுப்பின
ருக்குள்ளேயே புரோகிதர்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும்
கூறினார்.
குறிப்பு:
27-03-27ஆம் நாள் விருதுப்பட்டியில் ஆற்றிய பொதுக்கூட்டச்
சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 03. 04. 1927
குடி அரசு
- 19270)
200
சுயாால்யக் கட்சியாரிண் சமாதானம்
சுயராஜ்யக் கட்சியார் என்கிற தமிழ் நாட்டுப் பார்ப்பனக் கட்சியாரின்
பூளவாக்கு சென்ற மாதம் சட்டசபை வரவு செலவு திட்டத்தின் போது
வெளியாய் விட்டதால், அதை மறைக்க என்னென்னமோ தந்திரங்களும்
மந்திரங்களும் செய்கிறார்கள். என்ன செய்தும் அதை மறைக்க மறைக்க
நாற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை.
இவர்களின்
நடவடிக்கையைப் பற்றி இவர்களுக்கு உதவி செய்து வந்த தமிழ்நாட்டுக்
காங்கிரஸ் தேசிய பத்திரிகைகள் என்று சொல்லப்படும் “தமிழ்நாடு”
“நவசக்தி” “தேசபந்து” முதலிய பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும்
“சுயராஜ்யா” “ஹிந்து” முதலிய பார்ப்பன பத்திரிகைகளும், “வசுமதி”
“மராட்டா” முதலிய வெளி மாகாண பத்திரிகைகளும் கண்டித்திருக்கும்
சாராம்சத்தை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். இதுகளிலிருந்து
“சுதேசமித்திரன்” என்கிற ஒரு பார்ப்பனப் பத்திரிகை போக, மற்றபடி
பார்ப்பனர் தயவில் நடக்கும் பத்திரிகைகள் கூட வேஷத்திற்கானாலும்
கண்டிக்காமல் விடவேயில்லை. ஆகவே இப்பார்ப்பனர்களின் நடத்தை
மோசமான தென்பதும் வஞ்சகமான தென்பதற்கும் இளி யாரும் சந்தேகப்பட
இடமேயில்லை.ஆனால் இக்கூட்டத்தார் கொஞ்சமும் தங்கள் காரியத்திற்கு
வெட்கப்படாமல், இதற்கு சமாதானம் சொல்லப் புறப்பட்டிருக்கும் யோக்கிய
தையைப் பார்க்கும் போது ஜனங்களை இவர்கள் எவ்வளவு தூரம் முட்டாள்.
கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டு
வதற்காக இதை எழுதுகிறோமேயொழிய வேறில்லை. அதாவது, சென்ற
சனிக்கிழமை மாலை செளந்தர்ய மகாலில் “மந்திரிகளின் சம்பளத்திற்கு
ஆதரவளித்ததற்கு காரணம்” சொல்லுவதற்கு என்று ஒரு கூட்டம் கூட்டி
அதில் பேசிய பேச்சுகளின் யோக்கியதையைப் பொது ஜனங்களின் கவனிப்
புக்கு கொண்டு வருகிறோம். ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார்.
தலைமை வகித்து பேசியதில்,
அவர் மந்திரிகளை ஆதரிப்பதற்கு சொல்லும்
காரணங்களாவன:-
“இருக்கும் மந்திரியை துலைத்துவிட்டால், ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள்.
வந்து விடுவார்கள். ஜஸ்டிஸ் கட்சியாரை தேசத்தார் விரும்பவில்லை.”
ஜஸ்டிஸ் கட்சியார் செய்த குற்றம் என்னவென்றால் “ அவர்கள் வகுப்புவாதம்.
பேசுகிறார்கள்.” சுற்றி சுற்றி இந்த விஷயங்களைத் தான் தங்கள் நடவடிக்கை:
201
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
களுக்கு சமாதானம் சொல்லுகிறார்கள். இதிலிருந்தே இவர்கள் செய்து வந்த
தந்திரமும், சூழ்ச்சியும், போட்டுக் கொண்ட வேஷமும் எப்படியாவது
ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற கருத்துக் கொண்டேயல்லாமல்
வேறு ஏதாவது இருக்கிறதாகத் தெரிகிறதா?
“இரட்டை ஆட்சியை ஒழிப்பதும்,” “சட்டசபையில் ஒத்துழையாமை
செய்வதும்,” “அரசாங்கம் நடைபெறாமல் முட்டுக்கட்டை போடுவதும்”
இப்போது என்னவாயிற்று? இவைகளை ஆதரித்த “தேசீயவாதிகள்”
“உரிமைக்காரர்கள்” நாம் இந்த விஷயத்தை அந்தக் காலத்திலேயே எடுத்துச்
சொன்னபோது, “ நாயக்கர் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் விட்டார்.
காங்கிரசுக்கு விரோதமாய்ப் போய்விட்டார், காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட
சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய்ப் போய்விட்டார்” என்று சொல்லிக்
கொண்டு திரிந்து விட்டு, இப்போது நாம் சொன்னதெல்லாம் நிஜமானவுடன்
நம்முடன் கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டு “சுயராஜ்யக் கட்சி
அயோக்கியக் கட்சி, பார்ப்பனக் கட்சி என்று அப்போதே சொன்னேன், இப்
போதே சொன்னேன் ” என்று நாட்டுக்கு நல்ல பிள்ளைகளாகப் பார்க்கிறார்.
கள்.
சுயராஜ்யக் கட்சியார் அயோக்கியர்களா அல்லது அவர்களுக்கு
ஆதிக்கம் தேடிக்கொடுத்து, பாமர மக்களையும் அவர்களை நம்பும்படி
செய்து, சதி செய்து தேசத்தையும் சமூகத்தையும் பாழாக்கினவர்கள் அயோக்
கியர்களா? என்பதை யோசிக்க விரும்புகிறோம். சுயராஜ்யக் கட்சியாரிடம்
அந்தக் காலத்திலும் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே சொல்லு
வோம். அவர்களை ஜனங்கள் எவ்வளவு வெறுக்க வேண்டுமோ அவ்வளவு
கயா காங்கிரஸ் முதல் வெறுத்துக் கொண்டுதான் வந்தார்கள். ஆனால்
எப்படியோ தந்திரத்தாலும் வேஷத்தாலும் பாமர ஜனங்களிடம் செல்வாக்குப்
பெற்ற பலர் அவர்களை ஆதரித்தாலும் பல கிளி பிள்ளை பத்திரிகைகள்.
சுயபுத்தி இல்லாமல் பிதற்றினதாலும், சுயராஜ்யக் கட்சியார் தங்கள் விஷயங்
களை நாட்டில் பரப்ப முடிந்ததே தவிர வேறில்லை.
ஆனாலும் இப்பொழுதும் கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியார் செய்த
தப்பிதமென்ன? “ அதிகாரங்களைக் கைப்பற்ற முயற்சித்தார்கள்” என்றே
வைத்துக் கொள்ளுவோம். வேறு
எந்தக் கட்சி முயற்சிக்கவில்லை?
“ தங்கள் இனத்தாருக்கு உத்தியோகம் கொடுத்ததாகவே” வைத்துக்
கொள்ளுவோம். எந்த கட்சி அப்படிச் செய்ய வில்லை?
“ஓத்துழையாமையின் போது அதற்கு விரோதமா யிருந்தார்கள்”'
என்றே வைத்துக் கொள்ளுவோம்.
இந்த சுயராஜ்யக் கட்சியார் ஒத்துழையாமைக்கு அநுகூலமாயிருந்
தார்களா? ஜஸ்டிஸ் கட்சியாராவது வெளியில் இருந்து கொண்டு மனதில்
குடி அரசு
- 19270)
202
பட்டதை ஒளிக்காமல் சொன்னார்கள், செய்தார்கள். சுயராஜ்யக் கட்சியார்.
கூட இருந்தே குடியை கெடுத்தார்கள்.
மற்றபடி “ஜஸ்டிஸ் கட்சியார் சர்க்காருக்கு
அநுகூலமாயிருந்தார்கள்”
என்றே வைத்துக் கொள்ளுவோம்.
வேறு
எந்தக் கட்சி சர்க்காரை எதிர்த்தது, எந்தக் கட்சி சர்க்காருக்கு
ஆதரவில்லாமலிருக்கிறது?
சந்தர்ப்பமில்லாத காலத்தில்
சீ அந்தப் பழம் புளிக்கும் என்று
சொன்னதே அல்லாமல் சர்க்கார் சம்பளம் பெறாமலும் அவர்களது பட்டம்
பதவி பெறாமலும் எந்தக் கட்சி இருக்கிறது?
“ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் தேசபக்தர் என்பவர்களை வைத
தாகவே” வைத்துக் கொள்ளுவோம்.
காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி தலைவர், காரியதரிசிகள் முதலியவர்கள்
தேசபக்தர்கள் என்பவர்களை ஜெயிலில் வைக்கும்படியும் அவர்கள் பேரில்
நடவடிக்கை நடத்தும்படியும் சர்க்காரையும் சட்ட மெம்பரையும், அட்வகேட்
ஜனரலையும் கெஞ்ச வில்லையா? ஊர் ஊராகப் போய் தேசியப் பத்திரிகை
என்பவைகளின் பேரில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி ஒத்துழை
யாமைக் கட்சித் தலைவர்கள் முதல் எல்லோரும் சொல்லவில்லையா?
“ஜஸ்டிஸ் கட்சியார் சட்டசபையில் அக்கிரமம் செய்ததாகவே”
வைத்துக் கொள்ளுவோம். காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியார் சட்ட சபையில்
தேவஸ்தான சட்டம் போன்ற அவசியமும் முக்கியமான சட்டங்களை
எதிர்க்கவில்லையா?
“ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள தனிப்பட்ட நபர்களில் சிலர் யோக்கியர்.
கள் அல்லவென்றே” வைத்துக் கொள்ளுவோம்.
சுயராஜ்யக் கட்சியிலும் ஒத்துழையாமைக் கட்சியிலும் உள்ளவர்கள்
எல்லாம் யோக்கியர்கள்தானா? ஒருவர் கூட அயோக்கியர்கள் இல்லையா?
என்று கேட்கிறோம்.
“ஜஸ்டிஸ் கட்சியில் சிலர் வயிற்றுப் பிழைப்புக் காரர்கள் இருக்கிறார்
களென்றே” வைத்துக் கொள்ளுவோம்.
சுயராஜ்யக் கட்சியில் உள்ளவர்கள் எல்லோருமே தேச பக்தர்கள்
தானா? ஒருவராவது வயிற்றுப்பிழைப்புக்காரர் இல்லையா? வென்றுதான்.
கேட்கிறோம்.
203
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
ஆகவே, எந்த வழியிலும் “சுயராஜ்யக் கட்சியாரை” விட “ஜஸ்டிஸ்
கட்சியார்” எந்த வகையில் குற்றமானவர்கள்?
கொள்கையைப் பற்றிப் பேசுவதானாலும் “ஜஸ்டிஸ்” கட்சிக்
கொள்கையானது வேறு எந்தக் கட்சிக் கொள்கைக்கு இளைத்ததாயிருக்கிறது?
யோக்கியமான பொது மனிதன் கிடைப்பானானால் எல்லா கட்சி
கொள்கைகளையும் விட ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளையே உயர்ந்தது
என்று சொல்லுவான். உயர்ந்ததாக இல்லாவிட்டாலும் எந்த கொள்கைக்கு
மட்டம் என்று சொல்லக்கூடும்?
ஆகவே கிளர்ச்சியும், வேஷமும், யோக்கியப் பொறுப்பில்லாதவர்.
களின் புரட்டுகளையும் நம்பி பாமர மக்கள் ஏமாந்து “கங்காதரா மாண்டாயே”
என்று கத்துவதுமல்லாமல், வேறு என்ன காரியத்தைக் கண்டு குற்றம்
சொல்லக்கூடும்?
ஒருசமயம் பார்ப்பனர்களை “ஜஸ்டிஸ்” கட்சியில் சேர்த்துக் கொள்வ
தில்லை. இது ஒரு வகுப்பாரைத் தள்ளி வைக்கும் கட்சியாய் இருக்கிறது.
ஆதலால் அது சரியான கட்சி ஆகாது என்று சிலர் சொல்லக் கூடும்.
முஸ்லீம் லீக் எல்லோரையும் சேர்த்துக் கொள்ளுகிறதா ? அந்த
காரணத்திற்காக அதை யாராவது வெறுக்கப் பிரயத்தனப் படுகிறார்களா?
அதையாராவது குற்றம் சொல்லுகிறார்களா? அந்த மந்திரி சபையை அழிக்க.
யாராவது பிரயத்தனப் படுகிறார்களா? அதை அழிக்கப் பிரயத்தனப்படுகிற
வர்களுடன் எந்த முஸ்லீமாவது சேருகிறார்களா?
எனவே, அந்த வழியிலும் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளாததால்
ஒரு கட்சியையோ, சங்கத்தையோ அழிக்க வேண்டு மென்பது ஞாயமில்லை
என்பதும் யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.
ஆகவே, ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரியாய் வந்து விட்டால் என்ன
முழுகிப் போய்விடும்? அவர்கள் மந்திரித்துவத்தை எந்த ஜனங்கள் வேண்டா
மென்று சொல்லிவிட்டார்கள்.
பின்னை எந்தக் கட்சியின் மந்திரித்துவத்தை ஜனங்கள் விரும்பி
அவர்களையே மந்திரிக்கு லாயக்காகும்படி தெரிந்தெடுத்திருக்கிறார்கள். 30
பேர்கள் உள்ள ஒரு கூட்டத்தின் மந்திரித்துவத்தையே ஜனங்கள் வேண்டாம்
என்று சொல்லி விட்டதாகக் கருதப் படுமானால் ஏழுபேர் கூட இல்லாததான
கூட்டத்தின் மந்திரித்துவத்தையா ஜனங்கள் விரும்பினதாகக் கருதுவது?
குடி அரசு
- 19270)
204.
ஜஸ்டிஸ் கட்சியார் இந்த மந்திரி சபை கலைந்தால், மறுபடியும் இந்த
சபைக்கு மந்திரிகளாய் வருவதில்லை என்று சொன்னால், “இந்த சபை
கலைந்து மறு தேர்தல் ஏற்பட்டு மறு தேர்தலில் வந்து விடுவார்கள்.ஆதலால்
இந்த சபையை கலைக்க விட மாட்டோம்” என்று சொல்வதில் எவ்வளவு
பேடித் தனமும், ஆண்மையற்றதனமும், அயோக்கியத்தனமும் இருக்கிறது
என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
மறு தேர்தல் வந்தால், மறு தேர்தலில் ஜனங்களால் தெரிந்தெடுக்
கப்பட்டால்தானே. அதுவும் மந்திரிகளாக இவர்களே வர வேண்டும் என்று
ஜனங்கள் விரும்பினால்தானே இவர்கள் வரக்கூடும்.
ஆதலால் சுயராஜ்யக் கட்சியார் என்கிற பார்ப்பனர்கள் இப்படிச்
சொல்லுவதிலிருந்தே மக்கள் சுயராஜ்யக் கட்சியாரின் அயோக்கியத்தனத்
தைத் தெரிந்து கொண்டார்கள் என்பதும், ஜஸ்டிஸ் கட்சியாரை இன்னும்
அதிகமாகத் தெரிந்தெடுக்காமல் போன முட்டாள் தனத்திற்காக வருந்துகிறார்.
கள் என்பதும், முன் தேர்தலில் சுயராஜ்யக் கட்சியாருக்குத் தேசீயக் கட்சி
என்றும், அரசியல் கட்சி என்றும் நினைத்து ஆதரவு காட்டியவர்களும், உதவி
செய்தவர்களும், பிரசாரம் செய்தவர்களுமான ஆசாமிகள் இப்போது
வெட்கப்படுகிறார்கள் என்பதும், இவர்கள் உதவி அடுத்த தேர்தலுக்கு கிடைக்
காது என்று சுயராஜ்யக் கட்சியார் முடிவு செய்து கொண்டார்கள் என்பதும்
இதிலிருந்தே விளங்கவில்லையா? என்று கேட்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 10. 04. 1927
205
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
CaanGBsmer
தஞ்சை ஜில்லாவில் சுற்று பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில
இடங்களில் சிலர் படங்களை நெருப்பிற்கிரையாக்கியதாக “திராவிடன்”
பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆக்ஷ்பிப்பதற்காக
மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும்
தராததோடு மனித சமூகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய்
தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு
எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங்களையும்
தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு
யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம்
விரோதம் கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம் மாதிரியான சம்பவங்
கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில்
கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்ல வென்றே நினைக்கிறோம். யார் வந்து
எதை வேண்டுமானாலும் பேச நாம் இடங்கொடுக்க வேண்டும். நமக்கு
ஆண்மையிருந்தால் அக்கூட்டத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட
முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே
பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும் பேசவும்
அனுமதி கிடைக்காவிட்டால் கண்ணியமாயிருந்து மறுநாள் கூட்டம் கூட்டி
இதைப்பற்றி பேசலாம், கண்டிக்கலாம், சமாதானம் சொல்லலாம். இதுகள்:
தான் யோக்கியர்களுக்கு அழகு. அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கலவரம்
செய்வதென்பது கலவரம் செய்பவர்களையும் அவர்களது கொள்கை
களையும் பலகுறைவாக்கி விடுகிறதோடு பேசுபவர்களுக்கு யோக்கிய
தையை உண்டாக்கிவிடுகிறது. நாம் போன இடங்களிலும் இரண்டொரு
இடங்களில் இம்மாதிரி சிலர் முயற்சித்தும் நாம் செளகரியப்பட்ட இடங்களில்
எல்லாவற்றிற்கும் இடங் கொடுத்து சமாதானம் சொன்னதில் கேட்க வந்தவர்.
கள் நமது கொள்கையை ஏற்றுக்கொள்ள நேர்ந்ததோடு நமது கொள்கை
களுக்கு முன்னிலும் அதிகமான பொது ஜன ஆதரவு கிடைத்ததேயல்லாமல்
நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. கேள்விக்கு சமாதானம் சொல்லமுடி
யாதவர்கள் வெளியில் போய் பேசுவது என்பது கேவலமான காரியம்
என்றுதான் சொல்ல வேண்டும். நமது கொள்கைகளும் தீர்மானங்களும் நம்
மனதிற்கு உறுதி உள்ளதானால் யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லலாம்.
குடி அரசு
- 19270)
206
நமக்கே உறுதியில்லாமல் மற்றோரை ஏமாற்றுவதனால் மாத்திரம் பதில்
சொல்லுவது கஷ்டம்தான். ஆகையால் மற்றவர்களைப் பற்றி கவலையில்லா:
மல் நமது கட்சியைப் பொறுத்த வரையிலாவது ஒழுங்காய் நடந்து கொள்ள
வேண்டும். யார் வந்தாலும் தாராளமாய் பேச இடந்தர வேண்டும் என்று
கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 10.04.1927
207
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வகுப்புவாரி உரிமையை விட்௫ூவிட கசசண்ணை
முஸ்வீம்கன் ஒப்புவதில்லை
புதிய
சீர்திருத்தத்தின்படி அரசியலில் மகமதியர்களுக்கு
கொடுத்திருக்கும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்காக சென்னை
பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வருவதும் தங்கள் பணச் செலவில் சில மகமதி
யர்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு அவர்களுக்கு தேர்தல்களில்
தாங்கள் உதவி செய்து மகமதிய சமூகத்திற்கு அனுகூலமில்லாமல் தங்களது
சுயநலத்திற்காக அவர்களை உபயோகித்து வருவதும் யாவரும் அறிந்ததே.
சமீபத்தில் டில்லியில் இது விஷயமாய்க் கூட்டம் கூடியதில் தங்களுக்கு
வகுப்புவாரித் தொகுதி வேண்டாம் என்றும், கலப்புத் தொகுதியில் தங்களுக்கு
என்று சில ஸ்தானங்கள் ஒத்தி வைத்தால் போதுமென்றும், சில மகமதியர்கள்'
ஒப்புக்கொண்டதாக விஷயங்கள் வெளியாயிருக்கின்றன. ஆனால் பல
நிபந்தனைகளின் மேல் அம்மாதிரி ஒப்புக்கொண்டதாக பின்னால்
விஷயங்கள் வெளிவருகின்றன. ஆனால் பல சுவாதீன முஸ்லீம்களும் சமூக
விஷயத்திலும் மார்க்க விஷயத்திலும் அபிமானமும் பொறுப்பும் உள்ள
முஸ்லீம்களும், இந்த விஷயத்தை ஆக்ஷபித்து தங்களுக்கு இப்போதுள்ள
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அதாவது முஸ்லீம்களாலேயே தெரிந்தெடுக்
கும் பாத்தியமே வேண்டுமென்று சொல்லி வருவதோடு மேல்படி ஒதிக்கி
வைக்கும் கொள்கையை ஆட்க்ஷபித்தும் கண்டித்தும் வருகிறார்கள்.
சமூகத்தையும் மார்க்கத்தையும் கவனிக்காமல் அரசியல் மூலம் உத்தியோக
மும் பதவியும் சுயநலமும் பெறலாம், வயிறு வளர்க்கலாம் என்கிற ஆசாமி
களுக்கு இந்த தனித்தொகுதி உரிமை பிடிக்காது தான். ஏனெனில் தங்கள்.
சமூகத்தாரால் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமானால் அவன் யோக்கியமாய்
நடந்து கொள்ள வேண்டும். யோக்கியமாய் நடந்து கொள்ளுபவனுக்கு சுய
நலம் பலிக்காது. தங்கள் சமூகத்தார் தயவில்லாமல் வேறு சமூகத்தார் தயவில்
பதவியும் பிரதிநிதித்துவமும் பெறுவதென்றால் அயோக்கியர்களுக்கு அது
எப்பொழுதும் தயாராயிருக்கும். ஏனெனில் தனது சமூகத்தையும் மார்க்கத்
தையும் வேறு சமூகத்தின் நன்மைக்கு விட்டுக்கொடுப்பதால் வேறு சமூகத்
தாரால் ஆனந்தத்துடன் வரவேற்பார்கள். அதனாலேயேதான் பலருக்கு
இதுவே ஜீவனமாகவும் நடந்து வருகிறது. ஒருவன் தங்கள் சமூகத்திற்கு தனி
குடி அரசு
- 19270)
208
உரிமை வேண்டுமென்றால் அவன் மற்ற சமூகத்தாரால் அழிக்கப்பட
வேண்டியவனாய் விடுவான்.
அதினாலேயே இந்துக்கள் என்பவர்களிலும் சிலர் தங்களுக்கு வகுப்பு
வாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொன்னவர்களாயிருந்தாலும்
இப்போது பார்ப்பனர்களுக்கு பயந்து கொண்டு எங்கு அவர்கள் தங்கள்.
பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடுவார்களோ என்கிற நடுக்கத்தின் பேரில்
இப்போது பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டு “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
கூடாது, அது தேசத்திற்கு கெடுதி” என்று சொல்லுகிறார்கள். ஆனால் நமது
சென்னை மாகாண மகமதிய கனவான்களில் பலர் அப்படி இல்லாமல் அதா
வதுபார்ப்பனருக்கு பயப்படாமல் அவர்கள் சூட்சியில் சிக்காமல் தைரியமாய்
வெளிவந்து முஸ்லீம்களுக்குள் தனித்தொகுதியை எடுத்து விட்டுக் கலப்புத்
தொகுதி ஏற்படுத்தினால் முஸ்லீம்களுக்கு மிகுந்த தீங்கை விளைவிக்கும்
என்றும், இதனால் இந்து முஸ்லீம்களுக்குள் தற்காலம் இருக்கும் ஒற்றுமை
கெட்டுவிடும் என்றும் தாராளமாய் எடுத்துகாட்டியிருக்கிறார்கள், அவர்களில்
முக்கியமானவர்கள் ஜனாப்கள் கே.ஃபி.வி.எஸ். முகமது மீரா ராவுத்தர், டிகே.
தாஜூடீன், டி.கே.சையத் இப்ராகீம் ராவுத்தர், முகமத்ஷபனாத், எஸ்.கே.
அப்துல் ரஜாக், அப்துல் வஹாப், என். காதர் மைய்தின், டி.எம்.மொய்டு,
உப்பிசாஹிப், அப்துல் ஹெய் முதலிய சட்டசபை மெம்பர்களாவார்கள்.
சென்னை அய்யங்கார் பார்ப்பனர்கள் தயவில் சட்டசபைக்கு வந்த
ஜனாப்களின் கையெழுத்துக்கள் இதில் இல்லாதது நமது மகமதிய
சகோதரர்களுக்கு ஒன்றும் ஆச்சரியமாயிருக்காது. ஆதலால் அதைப்பற்றி
ஒன்றும் குறிப்பு எழுதவில்லை. 1929ல் வரப்போகும் கமிஷனுக்குள் நமது
சென்னைப் பார்ப்பனர்கள் செய்யும் முக்கிய வேலைகள் எல்லாம் இந்த
வகுப்பு வாரி உரிமையை ஒழிக்கப் பிரயத்தனப்படுவதல்லாமல் வேறில்லை.
வகுப்புவாரி உரிமை வந்துவிட்டால் பிழைக்க முடியாத சில பார்ப்பனரல்லா
தாருக்கும் இதைத் தவிர இப்போது வேறு
வேலைகள் இல்லை. ஆகையால்
இது சமயம் இந்து முஸ்லீம்கள் மிகுந்த ஜாக்கிறதையுடன் இருக்க வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 10.04.1927.
209
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மேட்டூர் திட்டப் பாட்டு
சட்டசபையில் கோவை ஸ்ரீமான்கள் ராவ் பகதூர் சி.எஸ். இரத்தின.
சபாபதி முதலியார் அவர்கள் கேள்வியும், சர். சிஃபி. ராமசாமி அய்யர்
அவர்கள் பதிலும்,
சி.எஸ். ஆர். முதலியார்:- மேட்டூர் அணைக்கு அஸ்திவாரம் வெட்ட
வாங் கப் போகும் குறிப்பிட்ட மாதிரி இயந்திரம் தாங்கள் வாங்க உத்தேசித்
திருக்கும் கம்பெனியில் மாத்திரம் தான் கிடைக்கக் கூடியதா? அல்லது வேறு
கம்பெனிகளிலும் கிடைக்குமா?
சர்.சி.பி. அய்யர்
:- அது ஒரு குறிப்பிட மாதிரி என்று நான்
நினைக்கவில்லை.
இந்த குழிதோண்டும் இயந்திரம் மிகவும் பேர்போனது,
சுக்கூர் பம்பாய் முதலிய இடங்களில் குழி வெட்ட இதையே உபயோகிக்
கிறார்கள். (மற்ற இடத்தில் இது போன்றது கிடைக்குமா கிடைக்காதா என்று
முதலியார் கேட்டதற்கு பதில் இல்லை
சி.எஸ்.ஆர். முதலியார்
- அது ஒரு குறிப்பிட்ட மாதிரியாய் இல்லா
மல் சாதாரணமானதாயிருந்தால் தாங்கள் ஏன் மற்ற கம்பெனிகளிலிருந்தும்
அதன் விலையை தெரிந்து விலை குறைவாய்க் கிடைக்கும் இடத்தில் வாங்க
ஏற்பாடு செய்யக்கூடாது?
சர்.சி.பி. அய்யர் - இதற்கு பதில் சொல்ல நோட்டீஸ் வேண்டும்.
சி.எஸ்.ஆர். முதலியார் :- குழி வெட்டும் இயந்திரம் இல்லாமல்
இயந்திரத்தில் செய்தால் எத்தனை நாளில் முடியுமோ அதைவிட சீக்கிரத்தில்
கூலி ஆள்களை விட்டு வெட்டி சரிசெய்து கொடுப்பதாக தக்க கண்டிறாக்
டர்கள் முன் வந்தால் இயந்திரம் வாங்கும் எண்ணத்தை விட்டு கூலி
ஆள்களை விட்டுக்கொண்டு வேலை வாங்க முடியுமா?
சர்.சி.பி. அய்யர் :- முடியாது
சி.எஸ்.ஆர். முதலியார் :- தண்ணீரை விவசாயிகள் எடுத்துக்கொள்ள
ஒப்பியிருப்பதாகக் கனம் சட்ட மெம்பர் சொன்னார். வாய்க்கால் வெட்டு
குடி அரசு
- 19270)
210
வதற்கு முன்னர் குடிகளிடமிருந்து விதிக்கப்பட்டிருக்கும் தண்ணீர் வரிக்கு
கட்டுப்படுத்த முச்சலிக்கா வாங்குவதில் ஏதேனும் கஷ்டமுண்டா?
சர்.சி.பி.அய்யர் :- கனம் மெம்பர் அவர்கள் சொன்ன பிரகாரமே
செய்ய யோஜிக்கப்படுவதுடன் அவரது யோசனைக்கு வந்தனமளிக்கிறேன்.
சி.எஸ்.ஆர். முதலியார்
:- கனம் கிருஷ்ணன் நாயர் அவர்களது
கேள்விக்கு விடை அளிக்கும் போது குறிப்பிட்ட ரெவின்யூ போர்டார்
ரிபோர்ட்டைகனம் சட்ட மெம்பர் ஆஜர்படுத்துவாரா?
சர்.சி.பி.அய்யர்:- அது இதரரிபோர்ட்டுகளுடன் முன்னரே சபையில்
ஆஜர் செய்யப்பட்டிருக்குமென்று நினைக்கிறேன்.
சி.எஸ்.ஆர். முதலியார் :- மேட்டூர் அணை வேலைக்குத் தன்னை
நியமிக்கும்படிஸ்டோனி துரை அவர்களே கேட்டுக்கொண்டாரா?
சர்.சி.பி. அய்யர்:- நான் அக்கேள்விக்கு விடை கொடுக்க
மறுக்கிறேன்.
சி.எஸ்.ஆர். முதலியார்:- ஸ்டோனி துரை அவர்கள் எந்த அணை
கட்டுவதிலாவது அனுபவம் பெற்றிருக்கிறாரா?'
சர்.சி.பி. அய்யர்:- இரண்டு மூன்று உத்தியோகஸ்தர்களைத் தவிர
வேறு யாருக்கும் இம்மாகாணத்தில் இம்மாதிரி பெரிய திட்டங்களில் அனுபவ
மில்லை: அரசாங்கத்தாரும் சமீப காலம் வரை இப்படி பெரிய திட்டங்கள்
ஆரம்பித்ததில்லை.
சி.எஸ்_ஆர். முதலியார்;- மேற்குறிப்பிட்ட அம்மூன்று உத்தியோக
ஸ்தர்களை இத்திட்டத்திற்கு நியமிக்கப்படலாகாதா?
சர்.சி.பி.அய்யர்:- இவ்விஷயம் ஆலோசிக்கப்படும்.
சி.எஸ்.ஆர். முதலியார்:- சீதகாரி,
( குளிர்ச்சி தரும் இயந்திரம்)
ஆஸ்பத்திரிக்கு மட்டும் உபயோகிக்கப்படுவதா
அல்லது கிளப்சங்கத்துக்கும்
பிரயோஜனப்படுவதா?
சர்.சி.பி.அய்யர்:- அது சங்கத்தின் பிரயோஜனத்திற்காக ஏற்படுத்தப்
பட்டதன்று.
சி.எஸ்.ஆர். முதலியார்:- ஆஸ்பத்திரியும் சங்கமும் இன்னும் ஆரம்
பிக்கப்படவில்லை என்று கனம் சட்டமெம்பர் அவர்கள் சொல்லியிருக்க
211
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
அவ்வியந்திரம் எப்படி அதற்குள் கெட்டுப்போய்விட்டது.
சர்.சிபி. அய்யர்;- கனம் கோயமுத்தூர் மெம்பர் அவர்கள் மற்றொரு
கனம் கோயமுத்தூர் மெம்பர் அவர்கள் கொடுத்த தகவலிலிருந்தும் கேள்வி
கேட்கிறார். அவ்வியந்திரம் கெட்டுப்போனது எனக்குத் தெரியாது. ஆனால்
மற்றொரு கனம் மெம்பர் அவர்கள் கொடுத்த தகவலிலிருந்து அரசாங்கத்தார்.
இவ்விஷயத்தில் விசாரணை செய்வார்கள். ஒரு மெம்பர் கொடுக்கும்
தகவலை ஆதாரமாகக் கொண்ட கேள்விகளுக்கு பதிலிறுப்பது கஷ்டமானது.
ஸ்ரீமான் ரத்தினசபாபதி முதலியார் அவர்களின் இந்தக் கேள்வி
களையும் இதற்கு கனம் சர்.சி.பி.அய்யர் அவர்கள் கொடுத்திருக்கும் பதில்
களையும் பார்த்தால் மேட்டூர் திட்டம் புரட்டு, ஹம்பக், ரசாபாசம் என்று
“ஜஸ்டிஸ்” பத்திரிக்கை எழுதியது சரியென்று யாவருக்கும் எளிதில் விளங்
கும். ஒரேமாதிரி இயந்திரம் மற்றொரு இடத்தில் சல்லீசாய் கிடைக்கிறதை ஏன்
வாங்கக்கூடாது என்று கேட்டால் அதற்கு நோடடீஸ் வேண்டுமென்று
சொல்லுவதும் வாங்க சம்மதிக்காததும் பார்த்தால் அதில் சந்தேகப்பட இட
மிருக்கிறதா? இல்லையா?
இயந்திரம் செய்யும் வேலையை மனிதர்கள் செய்ய தயாராயிருக்கும்
போதும் இயந்திரத்தினால் எவ்வளவு நாளில் செய்துவிடலாமோ அவ்வளவு
நாளில் முடித்துக் கொடுக்கத்தக்க கண்டிராக்டர்கள் ஒப்புக் கொண்டால்
அவர்கள் மூலம் வேலை நடத்தக்கூடாதா என்றால் கூடாது என்று சொல்லுகிற
பதிலிலிருந்து இயந்திரத்திற்கும் சர் அய்யர் அவர்களுக்கும் ஏதோ சம்மந்தம்
இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் ஏற்படுகிறதா இல்லையா? தவிர
இவ்வளவு பத்து லட்சக் கணக்கான ரூபாயை நமது நாட்டு மக்கள் கூலியாக
அடையக் கூடாது, வெள்ளைக்காரர்கள் தான் அடைய வேண்டும் என்ற
பிடிவாதமிருக்கிறது என்பதும் எப்படியாவது வெள்ளைக்காரருக்கு நல்ல
பிள்ளையாகவேண்டுமென்று பார்க்கிறார்களே யல்லாமல் நாட்டுக்கு
துரோகியாவதைப் பற்றி கொஞ்சமாவது கவலைப்படுவதில்லை என்று
எண்ண இடமிருக்கிறதா இல்லையா?
தவிர, மேட்டூர் திட்டம் நிர்வாகத்திற்கு ஏற்படுத்தியிருக்கிற பெரிய
உத்தியோகஸ்தர்கள் இம்மாதிரி விஷயத்தில் அனுபோகமுள்ளவரா என்று
கேட்டால் இம்மாதிரி அனுபோகமுள்ளவரே இந்த மாகாணத்தில் இரண்டு
மூன்று பேர்கள் தான் உண்டு, ஆதலால் அனுபோகபட்டவர்களை நியமிக்க
முடியாது என்கிற மாதிரியில் பதில் சொல்லுவதும்.
அந்த அனுபோகப்பட்ட
இரண்டு மூன்று பெயரையாவது ஏன் நியமிக்கவில்லை என்றால்
யோசிக்கலாம் என்று சொல்லுவதினால் இந்த உத்தியோகஸ்தருக்கும் சட்ட
மெம்பருக்கும் ஏதாவது கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்று அதாவது “நான்
உங்களுக்கு அனுபோகமில்லாவிட்டாலும் உங்களை 53000, 4000ரூ.
குடி அரசு
- 19270)
212
சம்பளத்தில் நியமித்து விடுகிறேன், நீங்கள் எங்கள் பார்ப்பனர்கள் அனுபோக.
மில்லாவிட்டாலும் அவர்களை 500, 1000, 2000 ரூ.மீ£சம்பளமுள்ள உத்தி
யோகத்திற்கு நியமிக்க வேண்டும். பணம் ஊரார் வீட்டுதுதானே. உங்கள்.
பெரியவர்கள் சம்பாதித்ததுமல்ல எங்கள் பெரியவர்கள் சம்பாதித்ததுமல்ல”
என்கிற ஒப்பந்தமாயிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறதா இல்லையா?
தவிர, இவ்வளவு பணச் செலவு செய்து ஏற்படுத்தும் திட்டத்தின்
தண்ணீரை உபயோகித்துக் கொள்ளுபவர்களிடம், இன்ன விகிதம், வரி ஏன்
வசூல் செய்வதாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால்,
இவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்து விட்டு இனிமேல் யோசிக்கிறேன்
என்று சொல்லுவதானால் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளும் மிராசுதாரர்கள்
பெரும்பாலும் பார்ப்பனர்கள் ஆனதால் சர். அய்யர் வேண்டுமென்றே
அவர்களைக் கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டார் என்று சொல்ல இடமிருக்
கிறதா இல்லையா?ஆகவே நமது நாட்டாரின் பணம் சுமார்15 கோடி அதாவது
1500 லட்சம் ரூபாய்களில் பெரும்பாகம் இயந்திர சாமான் முதலியவை
களுக்காக சீமைக்கும் பெரும்பாகம் வெள்ளைக்கார உத்தியோகத்திற்காக
சீமைக்கும் பெரும்பாகம் பார்ப்பனர்கள் உத்தியோகஸ்தர்களுக்கென்றும்
சம்பளமாக நமது நாட்டு பார்ப்பனருக்கும் இதன் பலன் கொஞ்ச நஞ்சம்
உள்ளதை நிலத்திற்கு உடையவர்கள் என்கிற முறையில் பார்ப்பன பென்ஷன்
தார்கள், பார்ப்பன உத்தியோகஸ்தர்கள், பண மிராசுதாரர்களுக்குமே
போகிறது என்பதில் என்ன ஆட்சேபணை இருக்கிறது. ஏதோ சில பாகம்
கண்டிராக்டர்களுக்குப்
போகலாம்.
ஆனாலும் “தோசைக்காரியிடம் மாவு
விலைக்கு வாங்கினது போல” உத்தியோகஸ்தர்களுக்கு மூன்று பாகமும்
கண்டிராக்டர்களுக்கு ஒரு பாகமும் இருக்கலாமேயொழிய அதுவும் வயிறாரச்
சாப்பிடக்கூட கிடைக்காது. இம்மாதிரியான வேலைகளில் அனுபோக
முள்ளவர்களும் நிபுணர்களும் இல்லையென்கிறதினாலும், கிடைக்கிறவர்
களையும் வேலை வாங்க இஷ்டப்படாததினாலும் இந்த திட்டம் ஒழுங்காய்
நடைபெறுமோ நடுத்தூக்கில் ஏதாவது மோசம் செய்து விடுமோ என்று பயப்
படாமல் இருக்கவும் இடமில்லை. இவைகளெல்லாம் எதைக் காட்டுகிற
தென்றால் “நமது பைத்தியக்காரத்தனத்தை”” வெள்ளைக்காரரும் பார்ப்பனர்.
களும் ஒன்று சேர்ந்து கொண்டால் மேட்டூர் திட்டம் பகற் கொள்ளை
மாத்திரமல்ல நம்மையெல்லாம் மேல் லோகத்திற்கு அனுப்புகிற திட்டம் கூட
சுலபத்தில் நடத்திவிடலாம் என்று கூட சொல்லலாம்.
குடி அரசு - கட்டுரை - 10.04.1927
213
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வெட்கப்படுகிறார்கள்
சென்னை சுயராஜ்யக் கட்சியில் உள்ள பல பார்ப்பனரல்லாதார்.
அக்கட்சி யில் இருப்பதற்காக இப்போது வெட்கப்படுகிறார்கள் என்று
நன்றாய்த் தெரிகிறது.
அவர்கள் யார் என்று பொது ஜனங்கள் அறிய
ஆசைப்படுவது சகஜம் தான். நாம் அதை தெரிய ஒறே ஒரு சூசனை காட்டு
கிறோம்.அதாவது சுயராஜ்யக் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் யார்.
யார் உள்ளதற்குள் யோக்கியர்கள் என்று பெரும்பான்மையோர்களால்
நினைக்கப்பட்டார்களோ, அவர்களில் பெரும்பான்மையோரும், இனி அந்தக்
கட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஸ்தானம் கிடைக்காமல்
போய்விடுமோ என்பவர்களில் சிறுபான்மையோரும் சேர்ந்து இப்போது
தனிக்கட்சி ஏற்படுத்தலாமா அல்லது ஜஸ்டிஸ் கட்சியையே சுவாதீனப்
படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த
சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் புத்திசாலிகளாகவும் உண்மையாய் பார்ப்பன
ரல்லாதாருக்கும் உழைப்பவர்களாயிருந்தால் ராஜீய அபிப்பிராய பேதத்தை
யும், சுயநலத்தையும், சொந்த விரோதத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு
வருகிறவர்களை மனப்பூர்வமாக வரவேற்பார்களாக.
குடி அரசு
- துணைத் தலையங்கம் - 10.04.1927.
குடி அரசு
- 19270)
214
ஒரு விசேஷம்
சென்னை சட்ட சபையில் மந்திரிகளின் மீது நம்பிக்கை இல்லாத
தீர்மானம் வந்து விவாதம் நடந்த காலத்தில் ஜனாப் அப்பாசலி பேசும் போது
“இண்டிபெண்டண்ட் கட்சியார்களும் மந்திரிகளும் யாதொரு முக்கியமான
வேலை செய்யாவிட்டாலும் வேட்டை நாய்கள் போன்ற சுயராஜ்யக் கட்சி
யாரை பெட்டிக்குள் பாம்பு அடங்கினது போல் செய்து அவர்களின் தடை
வேலைகளையும் தேசீய வேஷங்களையும் மூட்டை கட்டி வைக்கச் செய்து
விட்டோமே, இதைவிட வேறு என்ன செய்யவேண்டு” மென்று பேசிக்
கொண்டே வரும்போது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மந்திரி கணம் சுப்பராயனைப்
பார்த்து உங்களுக்கு உள் உளவாயிருந்ததற்கு இப்படித்தானா சபையில்
எங்கள் மானத்தைக் கெடுப்பது என்று ரகசியமாய் கெஞ்சினாராம். கணம்
சுப்பராயன் உடனே ஜணப் அப்பாசலிக்கு ஜாடைகாட்டி, கண்ணைச்சிமிட்டி
உட்காரச்சொன்னாராம். இந்த காட்சியைப்பார்த்து சட்ட சபையிலுள்ள
மந்திரிகளுள்பட எல்லாக் கட்சியாரும் சிரித்தார்களாம். ஐயோ பாவம்.
சுயராஜ்யக் கட்சியின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.04.1927.
215
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மகாத்மாவின் 655 அணனக்கியம்
மகாத்மா காந்தி அசெளக்கியமாக இருப்பதாகவும் அவருடைய
தென்னாட்டுச் சுற்றுப் பிரயாணம் பாதிக்கப்படும் என்பதாகவும் பொதுவாய்
தெரிய வருகிறது. ஆனாலும் அவருடைய சிஷ்ய கோடிகள்,
அதாவது
அவரைக் கொண்டு வந்து ஆட்டி வைத்து யோக்கியதையும் பணமும்
சம்பாதித்துக் கொள்ள நினைத்திருப்பவர்கள் அந்த விபரத்தைப் பற்றி
ஜனங்கள் சரியாய் உணருவதற்கு இடமில்லாமல் குழப்பமடையும்படி
யாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் ஏமாற்றுத் தந்திகள் அடித்தவண்ண
மாயிருக்கின்றார்கள். காயலாவினுடைய உண்மையையும் சரியாய்த் தெரியப்
படுத்தாமல் ஏதேதோ தந்திரமாயும் மூடு மந்திரமாயும் தெரிவித்து வரு
கிறார்கள்.
ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரி தந்தியை விட்டு விட்டு, ஸ்ரீமான்
தேசாய், நியானியிலிருந்து கொடுத்திருக்கும் தந்தியை பார்க்கும் பஷத்தில்
மகாத்மாவுக்கு மூளைக்கொதிப்பும், ரத்தோட்டக் குரைவும், கைக்கால் சரியான
சுவாதீனமற்ற தன்மையும் காட்டுகிறதாகவும், தக்க ஓய்வு எடுத்துக் கொள்ள
வேண்டுமென்று டாக்டர்கள் அபிப்பிராயம் கொடுத்திருப்பதாகவும் குறைந்
தது இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு அதாவது கோடைகால
முழுவதற்கும் ஓய்வு எடுத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணத்தை நிருத்த
வேண்டுமென்று சொன்னதாகவும் தெரிய வருகிறது. கடைசியாய் பார்க்கும்
போது தற்காலம் மகாத்மா சுற்றுப்பிரயாணம் நிருத்தப்பட்டதாகவே முடிந்து
விட்டது. எனினும், இனியும் சுமார் இரண்டு மூன்று மாதம் பொருத்தானாலும்
மகாத்மா நமது நாட்டுக்கு வரும்போது நாம் நமது கடமையைச் செய்து
வரவேற்கத் தயாராயிருக்க வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 10.04.1927
குடி அரசு
- 19270)
216
லாணாயாத் வசாற்வமாழிவ
ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் இதுவரை செய்த வேலைகளையும்
செய்யப்போகும் வேலைகளையும் பற்றி சொன்னது தமக்கு மிகுந்த திருப்தி
அளிக்கின்றதெனவும் இவ்வளவு வேலைகள் அவர் செய்திருந்தாலும்
தற்கால பார்ப்பன அகராதிப்படி அவர் பெரிய தேசத்துரோக ஜாப்தாவில்
சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9 பார்ப்பன
ரல்லாத ஜில்லா போர்டு மெம்பர்களில் இரண்டு ஜில்லா போர்டு மெம்பர்கள்
தான் “ தேசத்துரோகிகள்” என்று சொல்லப்படுகிறார்கள் என்றும், அவர்கள்
செங்கல்பட்டு போர்டு ஸ்ரீமான் ரெட்டியாரும் தஞ்சாவூர் போர்டு ஸ்ரீமான்
பன்னீர் செல்வமுமே யாவார்கள் என்றும், ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தைவிட
ஸ்ரீமான் எம்.கே.ரெட்டியாரே அதிகமான அதாவது பிராயசித்தமே இல்லாத
“ தேசத்துரோகி” என்றும் ஸ்ரீமான் பன்னீர் செல்வம் தன்னுடைய ஆட்சியில்
பல பார்ப்பனருக்கு உத்தியோகம் சோறு, படிப்பு முதலியவைகள்
கொடுக்கிறார் என்றும், இவர் அடியோடு மறுக்கிறார் ஆதலால் தான் பெரிய
“ தேசத்துரோகியாகி” விட்டார் என்றும் அப்பேர்பட்ட தேசத்துரோகியை
பாராட்டும் கூட்டத்திற்கு தேசத்துரோகிகளுக்கு உபாத்தியாயரான ஸ்ரீமான்
௭. ராமசாமி முதலியார் பேசப்போவதும் மிகவும் பொறுத்தமான தென்றும்
இப்படியான “ தேசத்துரோக கூட்டத்திற்கு ” சமீபகாலம் வரை “ தேச
பக்தனாக பார்ப்பனர்களாலும்” “ தியாக மூர்த்தியாகவும்” “தேசாபிமானச்
சிங்கமாகவும்” அழைக்கப்பட்டுவிட்டு திடீரென்று தேசத்துரோகியாகி விட்ட
தான் அக்கிராசனம் வகிப்பதை மிகப் பெருமையாக நினைக்கிறேன் என்றும்,
தான் ஸ்ரீமான் ரெட்டியாரவர்கள் இடம் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த பதவியும்
அவருக்குள்ள ராவ்பகதூர் பட்டமும் போவதாயிருந்தாலும், அன்றி நரகமே
கிடைப்பதாயிருந்தாலும், இப்பொழுது அவர் பார்ப்பனர்களால் தேசத்
துரோகப் பட்டம் வாங்கியிருப்பதை மாற்றி, பார்பனர்களால் தேசப்பக்த
பட்டம் வாங்க முயற்சிக்கக்கூடாது என்றும் உண்மையாய் தேசத்துக்கும்
சமூகத்துக்கும் உழைக்கும் மனிதர்களைக் கண்டுபிடிக்க ஒரே ஒரு மார்க்கத்
தைத்தான் கையாடி வருவதாகவும்
அது என்னவென்றால் நமது நாட்டில் யார்.
யார் பார்ப்பனர்களால் தேசபக்தர் தேசபக்த சிகாமணி என்று அதாவது
விபீஷணனைப் போல பார்ப்பனர்களால் கொண்டாடப்படுகிறார்களோ
அவர்கள் எல்லோரும் ஒருவர்கூட பாக்கியில்லாமல் தெரிந்தோ, தெரியா
மலோ தேசத்திற்கும் தமது சமூகத்திற்கும் கெடுதி செய்த பெரிய துரோகிகள்
217
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
என்றும் யார் யார் பார்ப்பனர்களால் தேசத்துரோகி என்றும் வகுப்புவாதிகள்
என்றும், வகுப்புத்துவேஷகாரர் என்றும், காங்கிரஸ் விரோதி என்றும்
சொல்லப்படுகிறார்களோ அவர்கள் கூடுமானவரை உபயோக முள்ளவர்கள்
என்றும் தான் முடிவு செய்வதற்காகவும் சொன்னதோடு ஸ்ரீமான் ரெட்டியார்.
அவர்களிடம் போர்டு பிரசிடெண்டு முறையில் தான் இனியும் எதிர்பார்ப்பது
என்னவென்றால், ரெட்டியார் ஆக்ஷிக்கு உள்பட்ட பள்ளிக்கூடங்களில்
பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களையே வைக்க ஏற்பாடு செய்ய வேண்டு
மென்றும் அதனால் கொஞ்சம் அதிகப் பணம் சிலவாவதானாலும் கல்வி
கற்பிப்பது தாமதப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பார்ப்பன
ரல்லாத உபாத்தியாயர்களைக் கொண்டே நமது பிள்ளைகளுக்கு கல்வி
போதிக்கப்பட வேண்டுமென்றும் பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களை
தற்பித்து செய்ய ஒரு பள்ளிக்கூடம் ஒவ்வொரு ஜில்லா போர்டும் ஏற்பாடு
செய்ய வேண்டுமென்றும் அதற்காகத் தகுந்தபடி பணம் ஒதுக்க வேண்டும்
என்றும் பேசினார்.
குறிப்பு:
வாலாஜாபாத் மகாஜனங்களால் அளிக்கப்பட்ட உபசாரத்தில்
தலைமை ஏற்று 10.4.27 6 ஆற்றிய சொற்பொழிவின் முன்னுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 17. 04. 1927
குடி அரசு
- 19270)
218.
காங்கிரஸ் பைத்தியம்
மகாத்மா காந்தி அவர்களாலும்,
அவர் பேச்சைக் கேட்டு சிறைக்கு
சென்ற பதினாயிரக்கணக்கான தேசபக்தர்களாலும் ஒரு கோடி ரூபாய் செலவு
செய்து பிரசாரம் செய்ததின் பலனாலும் பாமர மக்களிடையே காங்கிரஸ்
என்கிற பதத்திற்கு நமது நாட்டில் ஒருவித மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்ட
தோடு படித்த வகுப்பார்களுக்கு அதன் மூலம் உத்யோகம், பதவி, பட்டம்,
அதிகாரம் முதலியதுகள் கிடைப்பதற்கு இடமிருப்பதால், அதனிடத்தில்
ஒருவித பைத்தியமும் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒரு கூட்டத்தார்.
காங்கிரசின் பெயரை சொல்லிக் கொண்டு பிழைப்பதையும் மறைக்க
முடியாது. ஆகவே, காங்கிரசின் பேரில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு
நம்பிக்கையில், அதனால் தேசத்திற்கும், தேசத்தின் பெரும்பான்மை
மக்களான குடியானவர்கள், தொழிலாளிகள், ஏழை மக்கள் முதலியவர்களுக்
கும் ஏற்பட்ட கெடுதியையும், சர்க்காருக்கு அதனால் ஏற்படும் ஆதிக்கத்
தையும் பலத்தையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட பயப்படுகிறார்கள்.
யாராவது துணிந்து வெளியில் எடுத்துச் சொல்ல வந்தாலும் அது மிகக்
கஷ்டமாக இருக்கிறது. அதாவது மத சம்மந்தமான புரட்டுகளை வெளியில்
எடுத்துச் சொல்வது எப்படிமதத் துரோகமும் நாஸ்திகமும் ஆய்விடுகிறதோ
அதுபோல் காங்கிரஸ் புரட்டுகளை எடுத்துச் சொல்வது தேசத் துரோகமும்,
தேசாபிமானமற்ற தன்மையுமாக ஆய்விடுகிறது.
அதற்கு பாமர மக்களிடையே இருக்கும் செல்வாக்கை பார்த்தே
காங்கிரஸ்
யோக்கியதை அறிந்தவர்களும் மக்களை ஏமாற்ற காங்கிரசில் சேர.
ஆசைப்படுவதும், காங்கிரஸ் பெயரை சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதும்
சகஜமாக நடந்து வருகிறது. ஏதோ சிலர் உண்மையிலேயே காங்கிரஸ் ஒரு
தேசிய விடுதலை இயக்கம் என்பதாக எண்ணி அதனிடத்தில் பக்தி செலுத்த
ஆரம்பிப்பதும் சகஜமாக இருக்கிறது.உதாரணமாக மதுரை மகாநாட்டில் கூட
ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்துவிட வேண்டும் என்பதாக ஒரு தீர்மா
னம் வந்ததும், பலர் அதை
எதிர்த்தும், சிலர் அதை ஆதரித்ததும் விஷயா
லோசனைக் கமிட்டியில் கலந்திருந்தவர்களுக்குத் தெரியும். எதிர்த்தவர்.
களில் யாரும் தங்களுக்கு சுயராஜ்யம் வேண்டாமென்றாவது அல்லது
அன்னியர்களின் கொடுமையான ஆட்சியிலேயே இருக்க வேண்டுமென்பது
அல்லது அவ்வித கொடுமையான ஆட்சிக்கு உதவி செய்ய வேண்டு
219
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மென்கிற எண்ணமாவது இல்லாமல் காங்கிரசினால் தேசத்திற்கு எவ்வித
பலனுமில்லாமல் இருப்பதோடு பலவித கெடுதி ஏற்படுவதையும் உத்தே
சித்தும், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காகவே அதை வைத்துக்
கொண்டிருக்கிறார்கள் என்றும், காங்கிரஸ் ஏதாவது பலன் அளிக்கக் கூடியதா
யிருந்தால் அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆக்கமளிக்கக்கூடியதுதான்
என்றும் மனப்பூர்த்தியாய் உணர்ந்தே எதிர்த்தார்களே ஒழிய வேறில்லை.
ஆதரித்தவர்களும் சிலர் உண்மையாய் அதனால் சுயராஜ்யம் அடையலாம்
என்றும், சிலர் அதனால் ஏதாவது பாமர மக்களின் ஆதரவும் அரசியலில்
அதிகாரமோ பதவியோ அடையலாம் என்றவர்களுமே தவிர வேறில்லை...
ஆனாலும், அக்கூட்டத்தில் அத்தீர்மானம் தோல்வியே அடைந்து
விட்டால் கட்சி கட்டுப்பாட்டுக்கு அடங்கி யாவரும் அத்தீர்மானத்தை ஏற்றுக்
கொண்டார்கள்.
இப்போதும் ஜஸ்டிஸ் கட்சியிலுள்ள அனேகருக்கு காங்கிரசினி
டத்தில் ஒரு பைத்தியம் இருப்பதாகவே தெரிய வருகிறது. அதாவது
சமீபத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் பேசியிருக்கும் பேச்சிலிருந்து அறி
கிறோம். இது அவரவர்கள் தனி அபிப்பிராயமாய் இருக்கலாமே தவிர கட்சி
அபிப்பிராயமா யிருக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது. இதுபோலவே
சுயராஜ்யக் கட்சியில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் பலருக்கும் ஜஸ்டிஸ்
கட்சியினிடத்தில் பக்தியிருக்கிறது. ஆனாலும் ஏதோ சில குறிப்பிட்ட
தடைகள் இருப்பதாக கனவு காண்கிறார்கள்.
காங்கிரசில் சேர வேண்டுமென்கிற ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்த
சிலருக்கும், ஜஸ்டிஸ் கட்சியில் சேர வேண்டும் என்கிற காங்கிரஸ் சுயராஜ்யக்
கட்சியார் சிலருக்கும், மத்தியில் நாம் தடைக் கல்லாய் இருக்க பிரியப்பட
வில்லை. காங்கிரசில் சேருவதென்பது உபயோகமற்ற காரியம் என்பதாக
மாத்திரம் சொல்லுகிறோமேயொழிய காங்கிரசில் சேருவதானால் ஜஸ்டிஸ்
கட்சிக்கு விரோதமென்றாவது காங்கிரஸ்காரர்களை ஜஸ்டிஸ் கட்சியில்
சேருவது தப்பிதம் என்றாவது நாம் சொல்ல வரவில்லை. இரண்டிற்கும்
இப்போது உள்ள கொள்கைகளின் படி இவர்கள் அதில் சேருவதானாலும்,
அவர்கள் இதில் சேருவதானாலும் ஒருவருக்கும் ஒருவித பலனும் உண்டாகி
விடாது என்பதே நமது அபிப்பிராயம். என்னவெனில் காங்கிரசிலிருக்
கிறவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தால் அவர்களை காங்கிரசுக்கு வார்சு
தாரர்களான பார்ப்பனர்கள் தேர்தல்களுக்கு நிறுத்த மாட்டார்கள். “காங்கிரஸ்.
கமிட்டியும்” அவர்களை நிறுத்தாது. அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து
காங்கிரசில் சேருகிறவர்களையும் தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் தலைவர்:
களான பார்ப்பனர்கள் சம்மதிக்க மாட்டார்கள். காரணம் கேட்கப் போனால்
“வகுப்பு சம்பந்தமான கட்சியில் நீ மெம்பராய் இருக்கிறாய். அது தேச முன்
னேற்றத்திற்கு
விரோதம்.
ஆதலால் கூடாது” என்று சொல்லிவிடுவார்கள்.
குடி அரசு
- 19270)
220
இதைச் சொல்ல பார்ப்பனர்கள் கூட தேவையில்லை.
ஸ்ரீமான்கள்.
வரதராஜுலு நாயுடுகார், கல்யாணசுந்திர முதலியார் முதலிய பார்ப்பனரல்
லாதார்களாலேயே சொல்லப்பட்டுவிடும். ஏனென்றால் பார்ப்பனரல்லாதார்.
முன்னேற்றத்திற்கு என்று ஏற்பட்டிருக்கும் ககஷிகள் எல்லாம், எல்லா
வகுப்புகளுக்கும் சம சுதந்திரமும் வகுப்புவாரி உரிமையும் கேட்கிறது.
இப்போதைய காங்கிரசோ இதை தேசத் துரோகமென முடிவு செய்கிறது.
ஆகவே தேர்தல்களுக்கு நிற்க முடியாது. இப்போது காங்கிரசினிடத்தில் ஒரு
சிலருக்கு (பெரும்பான்மையாய்ப் படித்தக் கூட்டத்தாருக்கு) மோகம்
இருப்பதெல்லாம் தேர்தலுக்கு நிற்கத் தானே அல்லாமல் வேறல்ல. அத்
தேர்தலில் காங்கிரஸ் பேரால் நிற்க அனுமதி கிடைக்க வில்லையானால் பிறகு
காங்கிரசில் சேருவதிலென்ன லாபம் இருக்கிறது? ஒரு சமயம் பார்ப்பன
ரல்லாதார் மொத்தமாய் சேர்ந்து காங்கிரசைக் கைப்பற்றி விடலாம் என்பதாக
வைத்துக் கொண்டாலும் “வகுப்புவாரி உரிமையும், சம சுதந்திரமும் தேசத்
துரோகம்” என்று சொல்லும் பார்ப்பனரல்லாதாரும் அதற்குள் இருந்து
கொண்டுதானே இருப்பார்கள். பார்ப்பனர்கள் வழக்கம்போல் இக் கூட்டத்
தாரையும் அரசியலை வாழ்வுக்குக் கொண்டவர்களையும் உபயோகித்துக்
கொண்டு கலகம் செய்வித்துக் கொண்டுதானே இருப்பார்கள்?
சரி, இந்த கஷ்டங்களை எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம்
என்பதாகவே வைத்துக் கொண்டாலும் காங்கிரசில் சேராத ஜஸ்டிஸ்
கட்சிக்காரர் ஒருவர் தேர்தலுக்கு நின்றால் ஜஸ்டிஸ் கட்சியார் யாரை ஆதரிப்
பது? காங்கிரசைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஆசாமியையா? அல்லது சேராத
ஜஸ்டிஸ் ஆசாமியையா?
இப்பொழுது முஸ்லீம் லீக்கென்று மகமதியச் சகோதரருக்குத்
தனியாய் ஒன்று இருந்தாலும் அவர்களுக்கு தனித்தொகுதி வகுப்புவாரி
உரிமை இருப்பதால், காங்கிரசில் இருப்பதால் அவர்களுக்கு கஷ்டமில்லை.
அவர்களும் கலப்புத் தொகுதியில் நிற்பதாயிருந்தால் முஸ்லிம் லீகுக்கும்
பெரிய ஆபத்தாய்த்தான் இருக்கும். ஆகவே.எவ்வித
தந்திரம் செய்தாலும்
பார்ப்பனர்களை ஏமாற்ற முடியாது. உண்மையான நல்லெண்ணத்தோடு
காங்கிரசில் சேரவேண்டு மென்கிற ஜஸ்டிஸ் கட்சியாருக்கும், ஜஸ்டிசில் சேர.
வேண்டுமென்கிற காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியாருக்கும் நாம் ஒன்று சொல்லு
வோம். அதாவது, எவ்விதமான அரசியல் அபிப்பிராயமுள்ளவர்களும்
அதாவது, அராஜகக்காரனென்று சொல்லப்படுபவன் முதல், அரசாங்க
சிப்பந்திகள் வரை சேரும்படியாக ஜஸ்டிஸ் கட்சியில் அதிலுள்ள அரசியல்
திட்டத்தை எடுத்துவிட வேண்டும். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரே நோக்கம்தான்
இருக்க வேண்டும். சமத்துவம், சுயமரியாதை, சகல வகுப்பார்களும் அவரவர்.
கள் உரிமையையும் பிரதிநிதித்துவத்தையும் அடைய வேண்டியது என்கிற
கொள்கை மாத்திரம் இருக்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் தேர்தல்
களுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தக்கூடாது என்கிற நிபந்தனையும் இருக்க
221
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
வேண்டும். வேண்டுமானால் காங்கிரசுக்குள் உள்ள பார்ப்பனரல்லாதார்.
எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை ஏற்பாடு செய்து கொண்டு பார்ப்பனரல்
லாதாருக்காக பிரதிநிதிகளை நிறுத்திக் கொள்ளட்டும். அப்போது இரண்:
டொருவர் போகமற்ற பார்ப்பரைல்லாதார் எல்லாருக்கும் ஜஸ்டிஸ் கட்சியில்
சேருவதில்
ஆக்ஷ்பணை இருக்காது. நமது கட்சிக்கு விரோதம் செய்யவும்
சக்தி இருக்காது. அப்படிக்கில்லாமல் அதிலொருகால், இதிலொருகால்
வைத்துக்கொண்டு தங்கள் காரியத்தையும் கெடுத்துக்கொண்டு பொது
காரியத்தையும் கெடுத்து “தினம் ஒரு கட்சி மாறுகிறவர்” என்கிற கெட்ட
பெயரை வாங்கி மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போவதில் ஒரு பிரயோ
ஜனமும் இல்லை என்றே சொல்லுவோம். வேறு ஒன்றும் வேண்டியதில்லை.
தேசத்திற்கு உண்மையான விடுதலை வேண்டும். அதற்காக என்ன
வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராயிருக்கிறோம் என்று சொல்லு
கிறவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்கு காங்கிரசும், ஜஸ்டிஸ் கட்சியும்
எல்லாம் ஒன்றுதான். ஒன்றிலும் பிரயோஜனம் உண்டாகாது. ஒரே அடியாய்
ஒத்துழையாமையை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஒத்துழை யாமைக்குத்
தேசமும் தானும் லாயக்கில்லை என்று நினைப்பதனால் மக்கள் சுயமரி
யாதைக்கு உழைக்க வேண்டியதுதான். இரண்டையும் விட்டு விட்டு தேசம்,
தேசீயம் என்று மக்களை ஏமாற்றுவதில் தாங்கள் மாத்திரம் பிழைக் கலாமே
ஒழிய மக்களுக்கு யாதொரு பிரயோஜனமும் உண்டாகாது.
குடி அரசு - கட்டுரை - 17.04.1927
குடி அரசு
- 19270)
222
யார்ப்பணக் ககா௫மைக்காக உயிர்விட்ட
சுத்த வீரன்
பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை பார்த்து வயிறு பிழைப்
பதை விட சாவதே மேல் என்பதாகக் கருதி ஒரு சுத்த வீரன் பாஷாணத்தைச்
சாப்பிட்டு உயிர்விட்டுத் தனது சுயமரியாதையைக் காத்துக் கொண்ட
செய்தியை வேறு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வீரனை நாம் உண்மை
யான சுத்த ரத்தோட்டமுள்ள சுத்தவீரனென்றே சொல்லுவதோடு, மனமாரப்
பாராட்டுகிறோம். இவ்வீரனின் தியாகமானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்காக
இதுவரை பாடுபட்ட எல்லாப் பெரியார்களின் தியாகத்தை விட மிகப்பெரிய
தியாகமென்றும், மற்றவர்கள் செய்த வேலைகளையெல்லாம் விட மிகப்
பெரிய பலனை அளிக்கக்கூடியது என்றும் சொல்லுவோம்.
நாயர் பெருமானின் பிராமணத் தியாகமும், தியாகராய பெருமானின்
தன்னலமற்ற சேவையும் மற்றும் பலரின் சிறைவாசமும் இவ்வீரனின் தியாகத்
திற்கு ஒரு விதத்திலும் சமானமாகாதென்றே சொல்லுவோம்.
இதைப்பற்றி எழுதும் போது நமது உடம்பு சிலிர்த்துக் கொண்டே
இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்கள் இவ்வீரனைக் கொண்டாட வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் போட்டு அவனைப் பாராட்டித் தீர்மானங்
கள் செய்தனுப்ப வேண்டும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றச் சம்பந்தமான
ஒவ்வொரு சங்கத்திலும் இவ்வீரனின் உருவப் படத்தை வைக்க வேண்டும்.
உண்மையான பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படங்கள்
துலங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கெல்லாம் இவ்
வீரனின் சுத்த வீரத்தன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். ஒன்றா பார்ப்ப
னீயக் கொடுமையில் இருந்து விலக வேண்டும், விலக முடியாவிட்டால் உயிர்
துறக்க வேண்டும் என்கிற மந்திரம் பார்ப்பனரல்லாத சமூகத்திற்குள் எங்கு
பார்த்தாலும் முழங்க வேண்டும். உயிரை விட சுயமரியாதையே பெரிது
என்ப தை யாவரும் உணரும்படி செய்ய வேண்டும்.
இதுசமயம் எத்தனை பேர்கள் நமது சுத்த வீரனைப் போல் உயிர் விட
சம்மதமில்லாமலும் வெளியேறிப் பிழைக்க முடியாமலும் பார்ப்பனர்களின்
கீழ் கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை கணக்கிலடக்கக் கூடுமா? நாம்
223
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
ஏறக்குறைய வாரத்தில் 3 அல்லது நான்கு நாள் வெளி ஊர்களில் சுற்றுப்
பிரயாணம் போய்க் கொண்டு இருக்கிறோம். போகிற ஊர்களிலெல்லாம்
பார்ப்பனர்களால், பார்ப்பனீயக் கொடுமைகளால் நமது மக்கள் படும்
கஷ்டங்கள் சகிக்க முடியாதபடி கேள்விப்படுகிறோம். பார்ப்பனர்களும்
வரவர அதிகமான தைரியம் பெற்று விட்டார்கள். ஏனென்றால் எல்லாத்
துறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் பெற்றுவிட்டதாலும் நிர்வாக
சபையில் பொறுப்புள்ள ஸ்தானத்தில் பார்ப்பனரே இருக்கிற படியாலும்
மந்திரிகளும் பார்ப்பனர்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடுகிறவர்களா
யிருப்பதாலும், நம்மவரிலும் சிலரைத் தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்ட
தாலும், பயமின்றியும், ஈவு இரக்கமின்றியும் தங்கள் ஆதிக்கத்தைப் பலப்
படுத்திக் கொள்ள நம்மவர்களை சித்திரவதை செய்து வருகிறார்கள். இதற்கு
உதாரணமாக நாம் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைப் பொது
ஜனங்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறோம்.
அதாவது, சென்னையில் வித்தியா இலாக்கா சம்பந்தப்பட்ட ஸ்தாபன
மொன்றில் சமஸ்கிருத இலாக்காவில் ஒரு பார்ப்பனரல்லாதார் சுமார் 9
வருஷமாக புரொபசராக இருந்து வருகிறார். அவர் சமஸ்கிருதத்தில் மிக்க
பாண்டித்தய முடையவர். அப்படிப்பட்டவர் ஒரு பரிட்சகராய் நியமிக்கப்
பட்டார். தலைமை பரீட்சகரான ஒரு பார்ப்பனர் அவருடைய நியமனத்தை
அடித்துவிட்டு வேறு ஒரு பார்ப்பனரை நியமித்துக் கொண்டார். சிண்டிகேட்
சபையார் என்கிற மேல் அதிகாரிகள் தலைமைப் பரீட்சகரின் உத்திரவை
நிராகரித்துவிட்டு மறுபடியும் அந்த பார்ப்பனரல்லாதாரையே நியமித்தார்கள்.
அதன் பேரில் தலைமை பரிட்சகரான பார்ப்பனருக்குக் கோபம் வந்து டே 9
வருஷ காலம் சமஸ்கிருத புரொபசராயிருந்த ஒரு பார்ப்பனரல்லாதாரை ஒரே
அடியாய் அவர் புரொபசர் வேலைக்கே லாயக்கில்லை என்பதாகச் சொல்லி
வீட்டுக்கு அனுப்பி விட்டார்களாம். அல்லது அனுப்பப் போகிறார்களாம்.
பார்ப்பனீயக் கொடுமைக்கு இதைவிட இன்னும் என்ன ௬ஜு வேண்டும்?
இம்மாதிரி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் தினமும் நடைபெறுகின்றன. தவிர:
சென்னை முனிசிபல் கார்ப்பரேஷனில் ஒரு பார்ப்பனரல்லாதார் கமிஷனரா
யிருப்பதினால் அங்கு உள்ள பார்ப்பன கவுன்சிலர்கள் எவ்வளவு அக்கிரம
மாகவும் அயோக்கியத்தனமாகவும் நடந்து கொள்ளுகிறார்கள் என்பது
பத்திரிகை பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. இதுவரை யாராவது
ஒரு கவுன்சிலர் அவர் பேரில் நாணயக் குறைவு என்று சொல்லவே இல்லை.
கார்ப்பரேஷனுக்கும் வருஷத்தில் 2, 3 லட்ச ரூபாயிக்கு மேலாகவே லாபம்
செய்தும் வைத்திருக்கிறார். கார்ப்பரேஷன் உத்தியோகஸ்தர்கள் லஞ்சம்
வாங்குவதை வெகுசாய் நிறுத்திவிட்டார். கவுன்சிலர்கள் கண்டிராக்டர்களி
டம் லஞ்சம் வாங்குவதையும் நிறுத்தி குறைந்த விலைக்கு நல்ல சாமான்கள்
கிடைக்கும் படியாகவும் டோல் முதலிய குத்தகைகள் முதலியவைகளில்
உள்ள புரட்டுகளை நீக்கி அதிகத்தொகைக்கு அடைபடும்படியாகவும்
செய்திருக்கிறார். இன்னமும் அவர் முனிசிபாலிட்டிக்கு செய்துள்ள சீர்திருத்
குடி அரசு
- 19270)
224
தங்கள் சொல்லி முடியாது. அவ்வளவு நன்மைகள் செய்திருந்தும், அந்த
ஸ்தானம் இரண்டாயிர ரூபாய் சம்பளமுள்ள தாயிருப்பதால் அவரை டெ
முனிசிபாலிட்டியை விட்டு விலக்கி அந்த ஸ்தானத்தில் ஒரு பார்ப்பனரைக்
கொண்டுவந்து வைக்கப் பார்ப்பனர்கள் செய்யும் முயற்சி இவ்வளவு
அவ்வளவு என்று சொல்ல முடியாததாயிருக்கிறது. மந்திரி பார்ப்பனர்களின்
அடிமையாயிருப்பதால் அவர் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்யத்
துணிந்து வெற்றி பெறுகிறார்கள். கமிஷனரும் மூட்டைக் கட்டித் தயாராய்
வைத்துக் கொண்டே இருக்கிறார். மற்றபடி வெளி தாலூக்கா, ஜில்லா போர்டு,
முனிசிபாலிட்டிகளிலும் பார்ப்பனாதிக்கத்திற்கு அளவே இல்லை. மதுரை:
முனிசிபல் சேர்மெனுக்கு மதுரை கவுன்சிலர்களால் பாசான தொகை,
கிரமப்படி சம்மதம் கொடுக்க விடாமல் அதை ஆக்ஷபிக்கும்படி மந்திரியை
பிடித்து உபத்திரவம் செய்து வருகிறார்கள். மந்திரியும் ஸ்திர புத்தி இல்லாமல்
எழுதி எழுதி, அடித்து அடித்து உத்திரவு போட்டு வருகிறார். சேலம் ஜில்லா
போர்டு தேர்தல் நடக்கும் தினத்தன்று அதை நடக்க விடாமல் செய்யக் கருதி
மந்திரியைக் கொண்டு நிபந்தனைகள் காட்டி எலக்ஷனை தடை செய்தார்கள்.
போர்டு பிரசிடெண்டு நிபந்தனையின்படி எலெக்ஷன் நடத்திய பிறகு கூட
அந்தத் தேர்தலை ஒப்புக் கொள்ளச் செய்யாமல் அதை நிராகரிக்கும்படி
மந்திரி வீட்டில் போய் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு அவர் கையைப்
பிடித்து எழுதச் சொல்லுகிறார்கள். மற்றும் பல விஷயங்களில் ஹைகோர்ட்டு
ஜட்ஜிகளை கலெக்டர்கள் முதலான பெரியவர்களிலும் சிலரை ஏமாற்றிப்
பார்ப்பனரல்லாதாருக்கு என்னென்ன கெடுதிகளும் முட்டுக் கட்டையும்
போட வேண்டுமோ அவ்வளவும் செய்து வருகிறார்கள். எப்படியாவது
பார்ப்பனர்களின் மாய்கையில் சிக்க முடியாத யோக்கியதை நம்மில் நூற்றுக்கு
தொண்ணூற்றொன்பது பேருக்கு இல்லை என்றே சொல்லலாம். இந்த பலக்
குறைவையே நமது பார்ப்பனர்கள் மிகுதியும் உபயோகித்துக் கொள்ளு
கிறார்கள். இவைகளையெல்லாம் யோசிக்கும் போது சுயமரியாதை உள்ளவர்.
களுக்கு மேல் கண்ட சுத்தவீரனின்” உணர்ச்சிதான் தோன்றுமே அல்லாமல்
வேறு ஒன்றும் தோன்றுவதற்கு இடமே இல்லை. ஆதலால் அவ்வீரனைப்
பாராட்டி ஆங்காங்கு தீர்மானங்கள் செய்யவும் அவனது உருவப் படத்தை
ஒவ்வொரு சங்கங்களிலும் வீட்டிலும் தொங்கவிடவும் மறுபடியும் வேண்டிக்
கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.04.1927
* உண்மையான சுத்தவீரன் “ பார்ப்பனர் கீழ் வேலை
செய்வதைக் காட்டிலும் சாவதே மேல்”
செங்கல்பட்டு ஜில்லா பொன்னேரியில் காஞ்சீபுரம் ரிடயர்ட் சால்ட்
சப்இன்ஸ்பெக்ட்டருடைய குமாரரான பி. சுப்பரமணிய முதலியார் என்கிற
22- வயதுள்ள ஒரு வாலிபர் ஒரு பார்ப்பனருக்குக் கீழ் இருந்து வேலை
225
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
செய்வதைப் பார்க்கிலும் செத்துப்போவதே மேல் என்பதாகக் கருதி
தன்னுடைய நண்பர் ஒருவருக்கு கீழ்க்கண்ட விதமாக ஒரு கடிதம் எழுதி
வைத்துவிட்டுப் பாஷாண சம்பந்தமான மருந்தைச் சாப்பிட்டு விட்டு, உயிர்.
துறந்தார். அக்கடிதமாவது;-
பொன்னேரி லோகல் பண்டு ஆஸ்பத்திரி,
7-4-21.
அன்புமிக்க மாணிக்கம்!
இந்தமாதம் 8- தேதி எனக்கு குறிப்பிடத்தக்க ஒரு அதிர்ஷ்
டவசமான நாளாகும். அது என்னவென்றால் நான் இந்த உலகத்தையும்,
உன்னையும், எனது பந்துக்களையும் விட்டு சந்தோஷமாகவும், திருப்தி
யாகவும் பிரியும் நாளாகும்.
ஒருபார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை செய்ய இனி என்னால்
முடியாது.பார்ப்பன எஜமானன் கீழ் வேலைசெய்து ஜீவிப்பதைக் காட்டிலும்,
செத்துப்போவது மேலானதெனவும், புத்திசாலித்தனமான தெனவும் நான்
தெரிந்து கொண்டேன்.
என்னுடைய பார்ப்பன எஜமானனுடைய பெயர் உனக்கு தெரிந்தது
தானே. அந்த
சீனிவாசப்பிரபு என்பவர், என்னையும் மற்றும் உள்ள
சிப்பந்திகளையும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உழைக்கிற தேவநேச சாமி
என்கிற ஒரு பார்ப்பனரின் இஷ்டப்படியும், அவர் சொல்லுகிறபடியும்
நடத்துகிறவராயிருக்கிறார். இதுவரை டாக்டர் நாயர், சர். தியாகராய செட்டி
யார், எ. ராமசாமி முதலியார், சி. நடேச முதலியார் முதலியவர்கள் பார்ப்ப
னர் கொடுமைகளை அடியோடு துலைப்பதற்காக செய்து வரும் பிரயத்
தனங்களைத் தப்பிதமென்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது
அத்தலைவர்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியமானது என்பது என்
விஷயத்தில் மிகவும் ரூஜூவாகி விட்டது. பார்ப்பனர்களை வெறுப்ப
தாலாவது “ பார்ப்பனர்களின் கீழ் வேலை செய்யக்கூடாது என்று நினைத்து
என்வேலையை ராஜீனாமா செய்து விடுவதினாலாவது வேறு வழியில் இந்த
நாட்டில் பிழைக்கமுடியாதவனாயிருக்கிறபடியால் ஒரு கோப்பை பாலில் ஒரு
அவுன்சு சியானிக் ஆசிடைக் ( Hydro - Cyanic Add) கலந்து சாப்பிட்டு உயிரை
மாய்த்துக்கொள்வதையே விரும்புகிறேன். ஆதலால் நான் ஒரு உண்மையான
பார்ப்பனரல்லாத உணர்ச்சி உடையவனாகவும் எனது பார்ப்பனரல்லாதார்.
சகோதர சகோதரிகள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து நீங்குவதற்காக
அப்பார்ப்பனக் கொடுமையை அழிக்க வேண்டியும், நான் பிராணனை
விடுகிறேன். நான் செய்யும் இந்தக்காரியம் சரிதானே? இந்த விஷயத்தை
மெயில் பத்திரிகையிலும் ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் பிரசுரிக்கச் செய்வதால்
குடி அரசு
- 19270)
226
நமது சகோதரிகளையும் சகோதரர்களையும் பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி
ஏமாராமலிருப்பதற்காக இருந்து தப்புவிக்க உதவும் என நினைக்கிறேன்.
உன்னிடத்திலும் என் அன்பு நிறைந்த சிநேகதர் ஸ்ரீமான் சி.சி. மல்லி நாத்
ஜெயின் இடத்திலும், எம்.எஸ்.எம். ரயில்வே பாக்காலா ஜில்லா இஞ்சினீர்.
ஆபிசு
டைப் அடிப்பவரிடத்திலும் விடைபெற்றுக் கொள்ளுங்காலம்
நெருங்கிவிட்டது. இதோடு நான் நல் விடைபெற்றுக்கொள்ளுகிறேன்.
இனி
நீபார்க்க முடியாததான என்னுடைய கடைசி கையெழுத்து இதுதான், என்னு
டைய பிரேதத்தை பார்ப்பன தெருவுக்கு முன்னால் ஓடும் ஆரணி நதி
மணலில் பார்க்கலாம்.
என்னுடைய சம்பள பாக்கியை நீ எனக்காக வாங்கி ஓட்டல்காரருக்
கும் மற்றும் நான் கொடுக்கவேண்டிய கடன் காரருக்கும் கொடுத்து விடு.
(ஒம். ) பி. சுப்பிரமணியன்.
227
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
யமுய கருப்பணே கருப்பன்
சென்னையில் இருந்து டாக்டர் வரதராஜுலு நாயுடுவால் வெளியிடப்
போகும் “தமிழ்நாடு” தினசரிப் பத்திரிகை வெளியாக வேண்டும், வெளியாக
வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களில் யானும் ஒருவன். அதனால் நமது
சமூகத்திற்கோ, நாட்டிற்கோ, பெருத்த அனுகூலம் ஒன்றும் ஏற்பட்டு விடாது
என்ற முடிவு ஏற்கெனவே இருந்தாலும், சுதேசமித்திரனால் நாட்டுக்கும் நமது
சமூகத்திற்கும் ஏற்படும் கெடுதியையாவது கொஞ்சம் குறைக்காதா என்று
எதிர்பார்த்தோம். கடைசியாக வெளிவந்தது. வெகு ஆவலாய்ப் படித்துப்
பார்த்தோம். பழய கருப்பனே கருப்பனல்லாமல் வேறு ஒரு சங்கதியையும்
காணோம். மறுபடியும் பார்ப்பனர்கள் காலுக்குள் நுழையும் தந்திரங்களே.
நிறைந்திருப்பதும் சுதேசமித்திரன் காலில் விழுந்து அதை ஆதரித்து
அதனால் தான் வாழப் பார்ப்பதும் அல்லாமல் வேறு ஒன்றையுங் கண்டு
பிடிக்கமுடியவில்லை. அதோடு வழக்கம் போல் ஜஸ்டிஸ் கட்சியைவைவ
தின் மூலம் பார்ப்பனர்களின் தயவைச் சம்பாதிப்பதில் கண்ணுங் கருத்துமாய்
காணப்படுகிறது. உதாரணமாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம்
எடுத்துக் காட்டுகிறோம். ஏனென்றால், கோயமுத்தூரில் நாயுடு கான்பரன்
சிலிருந்து இந்த விஷயம் எழுதியதால் வரி வரியாய் எடுத்துக் கொண்டு
விவகரிக்க எழுத நேரமில்லாமல் சுருக்கமாக எழுதுகிறோம்.
அதாவது, ஸ்ரீமான் நாயுடுகாருக்கு விளம்பரக்காரர்களால் தங்கக்
கிண்ணம் இனாமாக அளிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கூட்டத்தில் ஸ்ரீமான்
நாயுடுகார் பேசியதாக “தமிழ்நாடு” பத்திரிகையில் எழுதி இருக்கும்
விஷயத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
“சென்ற ஒரு வருஷ காலமாக நான் இருந்தவிடம் தெரியாமல் ஒதுங்கி
இருக்கிறேன்.”
“ராஜீய விஷயத்தில் எனக்கும் மற்ற தலைவர்களுக்கும் அபிப்பிராய
பேதமிருந்ததால் நான் விலகி இருக்கிறேன்”.
“ராஜீய விஷயத்தில் அபிப்பிராய பேதமிருந்தால்....... அபிப்பிராய
பேத முள்ளவர்கள் சக்தி இல்லாவிட்டால் விலகி இருப்பதே நலம்”.
குடி அரசு
- 19270)
228
“ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகள் எனக்குப் பிடிக்க வில்லை.
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதில்லை”.
“திராவிடன் கொள்கைக்கும் எனது கொள்கைக்கும்
அதிக வித்தியாச
டு
“சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கும் எனக்கும் ராஜீய விஷயத்தில்
யாதொரு அபிப்பிராய பேதங்களும், கொள்கையில் வித்தியாசங்களும்
கிடையாது. ஆனால், அவர்கள் என்னுடைய செய்திகளை வெளியிடாது
அமுக்கி விடுகிறார்கள்.”
“ ஹிந்து பத்திரிக்கை மாத்திரம் என்னுடைய செய்திகளைச் சரிவர:
பிரசுரித்தது. மற்ற பத்திரிகைகளை விட ஹிந்து பத்திரிகைதான் அக்காலத்தில்
உண்மைப் பத்திரிகையாய் இருந்தது.”
“தமிழ்நாடு ஆரம்பித்தது முதல்.
_... ஜஸ்டிஸ் கட்சியோடு
போர் புரிந்து வந்தது. ”
“சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கு போட்டியாக நான் தமிழ்நாடு
பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை.”
என்பதாக எழுதியிருக்கிறது. டெ பிரசங்கத்தைப் பற்றி வரி வரியாக
எடுத்துக் கொண்டு விவரிக்கலாமானாலும் அவசரத்தில் இரண்டை மாத்திரம்
எடுத்தெழுதி விவரிக்கிறோம். தலையங்கத்தைப் பற்றியும் அதிலுள்ள
நோக்கத்தைப் பற்றியும் பிறகு எழுதலாம். “சுதேசமித்திரன்” ராஜீய விஷய
மும் அதன் கொள்கைகளும் என்ன என்பதைப் பற்றி இதுவரைத் “தமிழ்
நாடு” பத்திரிகை என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தது ? அதுதானா இப்
போது தமிழ்நாடு பத்திரிகையின் கொள்கை? அப்படியானால் “தமிழ்நாடு”
தினசரி எதற்கு? நாட்டிற்கு ஒரு உபத்திரவம் போதாதா? அதே கொள்கை
யைப் பார்ப்பனரல்லாத பத்திரிகையும் பிரசாரம் செய்ய வேண்டுமா?
“சுதேசமித்திரன்” செய்யும் உபத்திரவத்திற்காவது ஜனங்கள் ஏமாறா
திருக்கவும் கெடாமல் இருக்கவும் கொஞ்சம் காரணம் உண்டு. என்ன
வென்றால், அது பார்ப்பனப் பத்திரிகை என்று சொல்லி விடலாம். அதே
கெடுதியை பார்ப்பனரல்லாதார் பத்திரிகை என்று பேர் வைத்துக் கொண்டு
“சுதேசமித்திரன்” கொள்கையை
நடத்தி வந்தால் தேசத்திற்கும் சமூகத்திற்கும்
எவ்வளவு கெடுதி ஏற்படும் என்பதை பொது ஜனங்கள் யோசித்துப்
பார்க்கட்டும். டாக்டர் நாயுடுகாரு தன் சங்கதியைப் பிரசுரிக்காத காரணத்தால்
மாத்திரம் சுதேசமித்திரன் நடவடிக்கை நாயுடுகாருக்குப் பிடிக்கவில்லை
என்றால் என்ன அருத்தம்? இவர் நடவடிக்கையை விளம்பரப்படுத்திக்
கொண்டுவந்துவிட்டால் “மித்திரன்” யோக்கியன் என்றுதானே கருதுகின்றார்.
229
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
என்று ஏற்படுகிறதா? இல்லையா? ஆகவே “தமிழ்நாடு” பத்திரிகை நாயுடு
காரின் விளம்பரத்திற்கு மாத்திரம் வேண்டி ஏற்பட்டு விட்டதே தவிர, புதிதாய்
எந்தக் கொள்கையையும் பரப்ப அல்ல வென்பதும் விளங்கவில்லையா?
இந்த ஒரு காரியத்திற்காக எத்தனை பேர் அந்த பத்திரிகை நடத்தப் பணம்
கொடுப்பது? எத்தனை பேர்
அதை பணம் கொடுத்து வாங்குவது? என்பதை
யோசித்துப் பாருங்கள்.
தவிர, ஜஸ்டிஸ் ககஷியும்,திராவிடன் பத்திரிகையும் இவருக்கு என்ன
கெடுதி செய்தது?
ஜஸ்டிஸ் க௯ஷி கொள்கையை விட சுயராஜ்யக் ககஷி கொள்கையும்,
“நாயுடுகாரின் தேசீயக் கக்ஷி'” கொள்கையும் என்ன விசேஷமானது
அநியாயமாய் நாயுடுகார் ஒருவரின் சவுகரியத்திற்காக ஒரு பெரிய
சமூக முன்னேற்றக் ககதியை பலிகொடுப்பானேன்? அல்லது நாயுடுகார்.
சொன்ன எந்தக் கொள்கையை ஜஸ்டிஸ் ௧௯௨ ஏற்றுக் கொள்ள மறுத்தது?
அனாவசியமாய் ஜஸ்டிஸ் கடியை வைவதால் பார்ப்பனர்கள் மதிப்பார்கள்.
என்கிற காரணத்திற்காக முன்பின் யோசிக்காமலும் பகுத்தறிவை உபயோகிக்
காமலும் வைதுவிடுவது தானா தேசீய வீரர்கள் என்பவர்களின் கொள்கை?
சுதேசமித்திரனைப் பற்றியும், அதன் ராஜீய விஷயங்களைப் பற்றியும்,
அதன் இதர கொள்கைகளைப் பற்றியும், ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றியும்,
அதன் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், டாக்டர்
நாயுடுகாரு இதற்கு முன் பத்திரிகையிலும் பிரசங்கத்திலும் எழுதியும்
சொல்லியும் வந்ததெல்லாம் உலகத்தை விட்டு மறைந்து விட்டதா? பார்ப்பன
ரல்லாதார் ககஷியை வையாமல் அதற்குக் கெடுதி செய்யாமல் நாயுடுகாரு
தனக்காக என்ன செய்து கொண்டாலும் எந்தப் பார்ப்பனப் பத்திரிகையைப்
புகழ்ந்தாலும், எந்தப் பார்ப்பனர் இடம் மன்னிப்பு கேட்டாலும், எவனைக்
கெஞ்சி, எவன் காலுக்குள் நுழைந்தாலும் நமக்கு அதைப்பற்றி கவலையே
இல்லை. இதை பல தடவைகள் சொல்லியும், எழுதியும் இருக்கிறோம்.
ஆகையால் நாம் நமது கடமையைச் செய்யாமலிருக்க முடியவில்லை.
இதை
எழுதுவதற்கு நமக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
நமது சொந்த
கஷ்டத்திற்கு பயந்து கொண்டு சும்மா இருப்பது பயங்காளித்தனமாகுமென்று
கருதியே இதை வருத்தத்துடன் எழுதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.04.1927
குடி அரசு
- 19270)
230
எது வாய்ப் பிரசாரம் 2
19-2-27 தேதி “தமிழ்நாடு கயையங்கத்திற்க பதில்
“தமிழ்நாடு” தனது ஏப்ரல் மீ£19 உபத்திரிக்கையில் “பொய் பிரசாரம்”
என்பதாக பேரிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது.
அதில்
தமிழ்நாட்டைப் பற்றி “சுதேசமித்திரனும்”” “குடி அரசும்” “தமிழ்நாடு”
யோக்கியதைக் குறித்து எழுதிய குறிப்புகளுக்கு பதில் எழுதியதாக ஜனங்கள்.
நினைக்கும்படி என்ன என்னமோ உளறிக் கொட்டி இருக்கிறது. அவற்றுள்
மித்திரனைப் பற்றி எழுதியிருப்பவைகளை நாம் கவனிக்க வேண்டியதில்லை.
ஏனெனில் ஸ்ரீமான்கள் அய்யங்காரும், நாயுடுகாரும் நினைத்தால் சண்டை
போட்டுக் கொள்வார்கள், நினைத்தால் ராஜியாகி விடுவார்கள். ஏனென்றால்,
மித்திரன் ராஜீய அபிப்பிராயத்திற்கும் கொள்கைக்கும் “தமிழ்நாடு” வுக்கும்
யாதொரு வித்தியாசமும் இல்லை என்று “தமிழ்நாடு”வே எழுதியிருக்
கிறபடியால் நாம் அதை கவனிக்க வேண்டியதில்லை. தவிர “தமிழ்நாடு”
“குடிஅரசு "வைப் பற்றி எழுதியதை மாத்திரம் எடுத்து கொள்ளுவோம்.
உண்மையும் யோக்கியதையும் பெருமையும் உள்ள பத்திரிகை
களாயிருந்தால் தன்னைப்பற்றி ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினால்
அதுகளை எடுத்து சரியாய் போட்டு அதற்கு சமாதானம் சொல்ல வேண்டியது
கிரமம். அப்படிக் கில்லாமல் வெறும் வீணான வார்த்தையை உபயோகித்து
மக்களை ஏமாற்ற நினைப்பது மிகுதியும் இழி குணமென்றே சொல்லுவோம்.
“குடிஅரசா”னது “தமிழ்நாடு” முதல் இதழ் வெளியானதும் அதில் உள்ள
வாசகங்களில் சிலதை எடுத்து எழுதி பிறகு அதை குற்றம் சொல்லி
இருக்கிறதே அல்லாமல் திருட்டுத்தனமாகவோ யோக்கிய பொறுப்பில்லா
மலோ ஒரு வரியும் எழுத வில்லை. அதற்குத் “தமிழ்நாடு” இப்பவும் என்ன
சமாதானம் சொல்லுகிறது என்றுதான் கேட்கிறோம். “சுதேசமித்திரன்” ராஜீய
அபிப்பிராயமும் “சுதேசமித்திரன்” கொள்கையும் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு
ராஜீய அபிப்பிராயமும் கொள்கையும் ஒன்றாயிருக்குமானால் “தமிழ்நாடு”
பத்திரிகை தேசாபிமானத்தை முன்னிட்டு நடத்தப்படுவதாக எப்படி கருதக்
கூடும்? அதோடு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திலும் தனக்கு கவலை
இருப்பதாய் காட்டிக் கொள்வதை எப்படி நம்பக்கூடும் என்றுதான் கேட்கி
231
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
றோம். சுதேசமித்திரனுடைய தேசாபிமானத்தைப் பற்றியும், பார்ப்பனரல்லா
தூர் விஷயத்தில் சுதேசமித்திரனுக்குள்ள கொள்கையைப் பற்றியும், ஸ்ரீமான்
வரதராஜுலு நாயுடு இதற்கு முன் சொன்னதும், எழுதினதும் இப்போது
என்னவாயிற்று என்று கேட்டதற்கு மறுமொழி சொல்வதல்லவா யோக்கிய
மான காரியமாகும்? அதை விட்டுவிட்டு ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின்
நோக்கத்தைப்பற்றி ஏதோ தெரிந்துவிட்ட மேதாவிபோல் பேசிவிட்டால்
ஜனங்கள் ஒப்புக்கொள்வார்களாவென்று கேட்கிறோம்? மற்றவர்களுக்குள்ள
தேசாபிமானமும், வகுப்பு அபிமானமும், ஸ்ரீ வரதராஜுலு நாயுடுவுக்கும்,
தமிழ்நாடு பத்திரிகைக்கும் இருப்பதாக வாயிலும் எழுத்திலும் காட்டினால்
போதுமா? செய்கையில் கடுகளவாவது காட்ட வேண்டாமா? பாமர மக்களை
வெரும் தேசீயப் பேச்சால் ஏமாற்ற வந்த பழய யோகத்தை மூட்டை கட்டி
வைத்து விடும்படி வேண்டிக் கொள்ளுகிறோம். பெசண்டை எதிர்த்தும்
“குரு குல கிளர்ச்சியையும்” ஆயிரக்கணக்கான தடவை சொல்லிக் கொள்வ
தால் நாட்டுக்கோ, சமூகத்திற்கோ காதறுந்த ஊசியளவு பயனும் விளையாது.
பெசண்டம்மையை அய்யங்கார் பார்ப்பனர்கள் கவிழ்க்க சூட்சி செய்த காலத்
தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவையும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியையும்
ஆயுதமாக உபயோகித்துக் கொண்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த
விஷயம்தான்.
பார்ப்பனர்கள் இப்போது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு
அநுகூலமான ஆசாமிகளையும், இயக்கங்களையும் வைகிற ஆசாமிகளை
எப்படி தலைவர்களாக்கி தூக்கி விடுகிறார்களோ அது போல அந்தக்
காலத்தில் பெசண்டம்மையாரை வைத ஆசாமிகளையும் தலைவர்களாக்கி
தூக்கிவிட்டுக் கொண்டு கூலி கொடுத்துதான் வந்தார்கள். அதுசமயம் எத்த.
னையோ பேர்கள் ஸ்ரீமான் நாயுடுவைப் போல் தாக்கி பயன் பெற்றிருக்
கிறார்கள். குருகுல கிளர்ச்சியின் பெருமையும் யாரும் அறியாததல்ல. அக்
கிளர்ச்சி எப்படி ஏற்பட்டதென்பது பற்றி இனியும் யாருக்காவது தெரிய
வேண்டுமானால் 12. 7.25 ந் தேதி
“குடி அரசைப்” பார்த்தால் தெரியும்.
கடைசியாக அது என்ன வாயிற்று என்கிற இரகசியமும் அதில் கலந்திருந்த
வர்களைக் கேட்டால் தெரியும். ஆகவே இந்த இரண்டின் பெருமையை
எவ்வளவு நாளைக்கு எத்தனை தடவை எதெதற்குச் சமாதானமாக சொல்லிக்
கொண்டு வாழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்பொழுதும் கேட்கிறோம் : சுயராஜ்யத்திற்கு ஸ்ரீ வரதராஜுலு
நாயுடுவின் கொள்கை என்ன?
திட்டம் என்ன? காரியத்தில் அமுல்:
என்ன?
பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு
நாயுடுவின் கொள்கை என்ன?
திட்டமென்ன? காரியத்தில் அமுல்
என்ன?
அவைகள்
எந்த தேதி முதல் எந்த தேதி வரை அமுலுக்கு
வரத்தக்கனது அல்லது வந்து கொண்டு இருந்தது என்று சொல்லட்டும்
என்றுதான் கேட்கிறோம்.
மத சம்பந்தமான சில பாஷாண்டிகள் பக்தி
குடி அரசு
- 19270)
232
சம்மந்தமான சிலபரிபாஷை சொற்களை சொல்லிக் கொண்டு காலங் கழிப்பது
போல் ராஜீய சம்பந்தமான சில சொற்களை மாத்திரம் உபயோகப் படுத்தி
வருவது மாத்திரம் தேசாபிமானம் சமூகாபிமானம் என்று இனியும் சொல்லி
ஏமாற்றப் பார்த்தால் யார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? அப்படி ஒரு
மனிதன் பொறுத்துக் கொண்டு இருப்பதின் மூலம் தேசமும் சமூகமும்
பாழ்படுவதை கண்ணால் பார்த்துக் கொண்டும் தனது சுயநன்மைக்காகவோ
பிறர் தாட்சிண்ணியத்திற்காகவோ சும்மாவிருப்பதும் மனிதத் தன்மை
அல்லவென்பதே நமது அபிப்பிராயம். அதனாலேயே தான் இவற்றை
எழுதுகிறோமே தவிர வேறு காரணமில்லை என்பதை ஸ்ரீமான்
பி.
வரதராஜுலு நாயுடு நம்ப வேண்டும் என்று வேண்டுகிறோம். நம்பவில்லை
யானால் நமக்கு அதைப்பற்றி கடுகளவு கவலையுமில்லை.
தவிர, “தம்மை தவிர வேறு யாருக்கும் பார்ப்பனரல்லாத இயக்கத்
திலோ முன்னேற்றத்திலோ அக்கறை கிடையாது என்று ஸ்ரீமான் ராமசாமி
நாயக்கர் சொல்லுவதை நாம் லட்சியம் செய்யவில்லை. நாயக்கர் இம்மாதிரி
பிரசாரம் செய்வார் என்று நாம் முன்னமே எதிர்பார்த்தோம். இதற்கு காரணம்
வேறு இருக்கிறது.” என்று எழுதுகிறார். அதிலிருந்து ஏதோ பூனைக்குட்டி
வெளியாகப்போகிறது. அக்காரணத்தை வெகு ஆசையோடு வரவேற்கி
றோம். இம்மாதிரி ஒரு முக்கியமான காரணத்தை மூடி வைத்திருப்பது
போன்ற கெட்ட குணம் வேறு ஒன்றும் இல்லை என்றே சொல்லுவோம்.
ராமசாமி நாயக்கர் எப்பொழுது தன்னை தவிர வேறு யாருக்கும் பார்ப்பனரல்
லாதார் இயக்கத்தில், முன்னேற்றத்தில் அக்கறை இல்லை என்று சொன்னார்.
என்பதை இனியாவது சொன்னாரானால் நன்மையாயிருக்கும். நாயக்கர்
இம்மாதிரி பொய் பிரசாரம் செய்வார் என்று எத்தனை வருஷமாக அல்லது
எத்தனை நிமிஷமாக ஸ்ரீமான் நாயுடுக்கு தெரியும் என்பதையும் உலகுக்குத்
தெரிவிப்பாரா?
தவிர, “நியாய வழியில் இதற்கு எல்லாம் நாம் என்ன பதில் சொன்
னாலும் பொய் பிரசாரங்கள் நிற்கப் போவதில்லை. நமது கொள்கையை
மறுபடியும் தெரிவிக்கும் பொருட்டு இவைகளுக்கு பதில் எழுதலாமென்று
இருக்கிறோம். இம்மாதிரி பொய் பிரசாரத்தின் நோக்கத்தை நண்பர்கள்.
அறிவார்கள். ஆதலால் இனிமேல் இ பத்திரிகை எது எழுதிய போதிலும்
அவைகளை நாம் கவனிக்கப் போவதில்லை” என்று எழுதுகிறார். இதிலி
ருந்து, பதில் எழுதுவதாகவும் எழுதாமல் இருக்கப் போகிறதாகவும் அர்த்தம்
படும்படி சமயம் போல் நடந்துகொள்ள இடமிருக்கும்படி வைத்துக்
கொண்டார். ஆனாலும் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரை பதில் எழுதுவதற்குத்
தகுதி இல்லாத மாதிரி அவ்வளவு சாதாரண மனிதர் என்பதாக ஸ்ரீமான்
வரதராஜுலு நாயுடு மதித்திருப்பாரானால் பார்ப்பனர்களைப் போல, வாயை
மூடிக்கொண்டு தன் காரியத்தில் கண்ணாயிருக்கட்டும். பதில் சொல்லித்
தீரவேண்டிய யோக்கியதை உடைய மனிதன் என்று நினைப்பாரானால்
233
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கண்டிப்பாய் பதில் சொல்லட்டும். இரண்டு மில்லாமல் சுவற்று மேல் பூனை
வியாபாரம் மாத்திரம் இனிக் கூடாது என்று கண்டிப்பாய் சொல்லுவோம்.
ஏனெனில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கும் ராமசாமி நாயக்கருக்கும்
உள்ள “தகராறோ' “பொறாமையோ” “பொய்ப் பிரசாரமோ'” மற்றும் எதுவோ
அவரவர்கள் சொந்த காரியத்தைப் பொறுத்ததா? பொது காரியத்தைப்
பொறுத்ததா? என்பது வெளிப்படையாகி விட்டால் பிறகு அதைப்பற்றி
கவலை இல்லை. தேசத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும் என்று
சொல்லிக் கொண்டு ஏற்படுகிற போது அதை அலட்சியமாய் மூடி வைத்து
விடுவது தேசத்திற்கும், சமூகத்திற்குமே கேடு சூழ்வதல்லாமல் துரோகம்.
செய்ததுமாகும் என்று வற்புறுத்துகிறோம்.“சுதேசமித்திரன் எழுதியதிலிருந்து
அது பிராமணீயத்தை ஆதரிப்பதாகவே தெரிகிறது...
சுதேசமித்திரன்
கொள்கை இதுவாயிருந்தால் மித்திரன் மாத்திரமல்ல அக்கொள்கையை
ஆதரிக்கிற எல்லோரையும் நாம் எதிர்த்தே தீருவோம்” என்று எழுதி
இருக்கிறது. இந்த எழுத்துகளில் ஒரு எழுத்திலாவது ஏதாவது யோக்கியப்
பொறுப்பு இருக்கிறதாவென்று அறிய விரும்புகிறோம். சுதேசமித்திரன்
எழுத்து, கொள்கை ஆகியவைகள் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்கு
இன்றுதான் தெரிய வந்ததா? அதுவும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு “சந்து
வழியில் புகாமல் ராஜபாட்டையில் நடக்கட்டும்” என்று எழுதிய பிறகுதானா?
இது எழுதாமல் வேறு மாதிரியாய் ஸ்ரீமான் நாயுடுவைப் புகழ்ந்து எழுதி
யிருந்தால் இப்போது கண்டுபிடித்த கொள்கை என்னவாயிருக்கும்
என்பதைப் பற்றி நாம் எழுத வேண்டுமா?
தவிர, “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் அற்பத்தனமாக எழுதியுள்ள
வார்த்தைகளைப் பற்றி நாம் ஒன்றும் கவனிக்கப் போவதில்லை” என்று
எழுதியிருக்கிறார். அற்பத்தனத்தை கவனிக்காத - லட்சியம் செய்யாத பெருந்
தன்மைக்காக யாவரும் சந்தோஷமடைய வேண்டியதுதான். ஆனால்
அற்பத்தனத்தின் சத்தை எடுத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டு அதற்கு
சமாதானம் எழுதுகிறார்.
அதாவது, அந்த அற்பத்தனத்தின் சாராம்சம் என்னவென்றால்
“ஜஸ்டிஸ் கட்சி ஒன்றுதான் பிராமணரல்லாதாருக்குப் பிரதிநிதியாய் விளங்
குவது. அதன் கொள்கைகளையே பிராமணரல்லாதார் ஆதரிக்கிறார்கள்.
அதை தாக்குவது பிராமணரல்லாதாருக்கு கெடுதி செய்வதாகும்” என்று நாம்
சொல்லுவதாக எழுதியிருக்கிறார்.
ஆகவே, இந்த சாராம்சத்தைக் கொண்ட வார்த்தைகள் அற்பத்
தனமாய்ப் போய் விட்டதற்காக நாம் கொஞ்சமும் வெட்கப்படவில்லை,
வெட்கப்படப் போவதுமில்லை. மற்றபடி அதன் கீழ் “ஜஸ்டிஸ் கட்சி ஒன்று
தான் பிராமணரல்லாதாருக்கு பிரதிநிதி என்று சொல்லுவதை நாம் ஒரு நாளும்
ஒப்புக்கொண்டது இல்லை, ஒப்புக் கொள்ளப் போவதுமில்லை
..
குடி அரசு
- 19270)
234
அதனுடைய ராஜீயக் கொள்கைகளை எப்பொழுதும் கண்டித்து வந்திருப்பது
போலவே நாம் இப்பொழுதும் கண்டிக்கிறோம்” என்று எழுதி இருக்கிறார்.
ஸ்ரீ வரதராஜுலு நாயுடுவுக்குப் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக
வேறு என்ன கட்சி இருக்கிறது? எந்த கட்சியின் மூலம் இவர் என்ன
செய்திருக்கிறார்? “ஜஸ்டிஸ்” கட்சி ஏற்பட்ட காலம் முதற்
கொண்டே
அதை
ஒழிக்க பார்ப்பனர் செய்த சூழ்ச்சியில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவும்
கலந்து சென்னை மாகாண சங்கம் ஆரம்பித்தாரே அது என்னவாயிற்று?
அந்தக் கொள்கைகள் இப்போது எங்கே போய் விட்டது?
அன்றியும், “ஜஸ்டிஸ்” கட்சியில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்குப்
பிடிக்காத கொள்கை அல்லது திட்டம் என்ன இருக்கிறது?
“பார்ப்பனரல்லாதார் நன்மையை உத்தேசித்து நான் ஜஸ்டிஸ் கட்சியில்
சேருவேன்” என்று ஒரு காலத்தில் சொன்னாரே அப்பொழுது பார்ப்பன
ரல்லாதார் நன்மைக்கு வேறு கட்சிகள் இருப்பதாய் இவர் ஒப்புக் கொண்டிருப்
பாரானால், ஏன் அதன் பெயர்களைச் சொல்லி அதில் சேருவதாகச் சொல்லி
இருக்கக் கூடாது? சொல்லா விட்டாலும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில்
அக்கறை இருந்தால் ஏன் அவைகளில் எதிலாவது சேர்ந்திருக்கக் கூடாது?
இவ்வளவும் இல்லாமல் வேறு ஒருவர் செய்வதையும் தடுக்கும்
படியான சூழ்ச்சியிலும் கலந்து இருந்து விட்டு தன்னாலான கெடுதிகள்.
எல்லாம் செய்து பார்த்தும் ஒன்றுக்கும் சளைக்காமல் “ஜஸ்டிஸ்” கட்சி
செல்வாக்காயிருக்கும் போது மேற்கண்டபடி அதில் சேருவதாகவும் சொல்லி
“ஜஸ்டிஸ்” கட்சியார் யாரும் இவரை நம்பி கூப்பிடாமலும், சேர்க்காமலும்
இருப்பதற்காக அதை வைது கொண்டிருப்பதென்றால் யார் பொறுத்துக்
கொள்ளுவார்கள்? தவிரவும் “ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீயக் கொள்கை பிடிக்கா
ததால் கண்டிக்கிறோம்” என்று எழுதுகிறார். ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீயக்
கொள்கை என்ன என்பதை இவரால் சொல்ல முடியுமா? ராஜீயக் கொள்கை:
தவிர மற்றதையாவது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு ஆதரித்திருக்கிறாரா?
ஆதரிக்கிறாரா? ஆதரிக்கப் போகிறாரா? பார்ப்பனர்கள் வைதால் ஜஸ்டிஸ்
கட்சியில் சேருவேன் என்று மிரட்டுவதும், “ஜஸ்டிஸ்” கட்சியார் வைதால்
சுயராஜ்யக் கட்சிதான் தேசத்தில் யோக்கியமான கட்சி என்று சொல்லுவதும்,
இரண்டு பேரும் சட்டை செய்யாவிட்டால் இரண்டும் உபயோகமில்லை,
தேசீயக் கட்சி ஸ்தாபிக்கப் போகிறேன் என்பதும், மறுபடியும் “கொஞ்ச
நாளையிலேயே கொள்கைகளை வைதேனே யொழிய ஆசாமிகளை வைய
வில்லை” என்பதும், மறுபடியும் கொஞ்ச நாளையிலேயே “ஆசாமிகளை
வைகிறேனே ஒழிய கொள்கைகளைப் பற்றி குற்றம் சொல்லவில்லை”
என்பதும், “ ஏதோ ஒரு சமயம் அப்படி வைது இருந்தாலும் இப்பொழுது
அவற்றை எல்லாம் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்” என்பதும்
ஆகிய மாதிரியில் இருக்கிறதே அல்லாமல் 10 நாளைக்கு சேர்ந்தாப்போல்
235
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஒரு குறிப்பிட்ட
கொள்கையோ, அபிப்பிராயமோ, திட்டமோ, அமுலோ
ஏதாவது தன்னிடம் இருப்பதாய்த் தைரியமாய் சொல்லக் கூடுமா? “தமிழ்
நாடு” தினசரி முதல் இதழுக்கும், பின் வந்த 4, 5 இதழ்களுக்கும் உள்ள
வித்தியாசங்களைப் படித்தாலே இந்த விபரங்கள் யாருக்கும் புலப்பட்டு
விடும்.தவிர,
“ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரே தமது “குடி அரசி”ல் மற்றொரு
பக்கத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் ராஜீயத் திட்டங்களை விட்டு விட வேண்டும்.
என்றும் சமூகத் திட்டங்களை மாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும்.
என்றும், அப்படியானால் மாத்திரம் எல்லாப் பார்ப்பனரல்லாதாரும் ஜஸ்டிஸ்
கட்சியில் வந்து சேர முடியும் என்றும் எழுதியிருக்கிறார். இது ஒன்றே அவர்.
நம்மை பற்றி எழுதினது தவறு என்பதை ரூபிக்கப் போதுமானது” என்று
ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு எழுதி இருக்கிறார்.
“குடிஅரசு” எங்கு இப்படி எழுதியிருக்கிறது என்பதை தயவு செய்து
காட்டும்படி கேட்கிறோம். நாம் எழுதி இருப்பதை தப்பர்த்தம் படும்படியாய்
திரித்துக்கூறுகிறார் என்றே சொல்லுவோம். நாம் எழுதி இருப்பது என்ன
வென்றால் “ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேருவதானால் தேர்தல்களின்
போது சங்கடமேற்படும். ஏனெனில் தேர்தலை உத்தேசித்துத்தான் காங்கிரசில்
சேர வேண்டுமே ஒழிய வேறில்லை. அப்படி சேர்ந்த பிறகு காங்கிரசும்
ஜஸ்டிஸ் கட்சியும் அபேக்ஷகர்களை நிறுத்தினால் காங்கிரசில் சேர்ந்த
பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டு செய்யும் விஷயத்தில் கஷ்டம் ஏற்படும், கட்சி
ஏற்படும்” என்பதையே முக்கியமாய் காட்டி தேர்தலுக்கு ஆசைப்படுகிறவர்:
களுக்கு ஏதாவது ஒரு ஸ்தாபனமிருக்கட்டும், ஜஸ்டிஸ் கட்சியை அரசாங்க.
உத்தியோகஸ்தர்களும் வந்து சேரும்படிசமூக இயக்கமாக்கி விடுங்கள் என்று
சொன்னோமே அல்லாமல் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவுக்காவது வேறு
அரசியல்காரருக்காவது பிடிக்காத அரசியல் திட்டம் ஜஸ்டிஸ் கட்சியில்
இருக்கிறது அதை எடுத்து விடுங்கள் என்று நாம் சொல்லவேயில்லை. “குடி
அரசில்” “இரண்டொருவர் தவிர மற்றவர்கள் வந்து சேருவார்கள்” என்று
எழுதியதில் கூட அந்த இரண்டொருவரில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு
வையும் ஒருவராக கருதிதான் எழுதினோம். ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சியை
வைதா லொழிய தனக்கு வேறு
மார்க்கமில்லாத மாதிரியில் கொள்கைகளை
வைத்துக் கொள்ள வேண்டியவராகி விட்டார் என்பதை உணர்ந்து தான்.
ஆதலால் குடி அரசு எழுதியதை ஸ்ரீமான் நாயுடு உபயோகித்து கொண்ட
மாதிரி சரியா என்பது யாவருக்கும் விளங்காமல் போகாது.
தவிர,“ஜஸ்டிஸ் கட்சி ராஜீயத் திட்டத்தை விட்டு விட்டால் சமூக
வேலை சம்பந்தப்பட்ட வரை எல்லா பார்ப்பனரல்லாதாரும் அதில் சேருவார்.
கள் என்பதில் சந்தேகமில்லை” என்று எழுதுகிறார். மற்றவர்கள் சேருகிறார்.
களா சேர்ந்திருக்கிறார்களா என்கிற விஷயம் பிறகு பேசலாம். ஸ்ரீமான்
குடி அரசு
- 19270)
236
வரதராஜுலு நாயுடு சேருவதற்கு ஆகூஷபணை இல்லையா என்று கேட்
கிறோம்.
அப்படியானால் காஞ்சிபுரம் மகாநாட்டின் போது கூட்டப்பட்ட கூட்
டத்தில் ஏன் இவர் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளையாக,
ஸ்ரீமான் முதலியாருடன் ஏன் போட்டி போட்டார் என்று கேட்கிறோம். காங்
கிரஸ் ராஜீய அபிப்பிராயத்தோடுதானே. அங்கு பார்ப்பனரல்லாதார்.
முன்னேற்றத்திற்கு என்று சில தீர்மானங்கள் வந்தது. அதில் உள்ள ராஜீய
அபிப்பிராயம் இவருக்கு ஆக்ஷபணை இல்லையே. சமூக அபிப்பிராயந்
தானே வித்தியாசமாயிருந்தது என்று சொல்லக்கூடும். அதாவது வகுப்புவாரி
உரிமை. அது போலவே ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள ராஜீய அபிப்பிராயம்
எடுத்துவிட்டால் அதில் மீதி என்ன இருக்கும். வகுப்புவாரி உரிமைதானே
இருக்கும். வகுப்புவாரி உரிமையைப் பற்றியோ வென்றால் ஸ்ரீமான் வரதரா
ஜுலு நாயுடு தினம் ஒரு அபிப்பிராயம் தானே சொல்லி வருகிறார். அப்படி
இருக்கும் போது இவர் சேர்ந்து ஒரே கொள்கையாயிருப்பார் என்பதற்கு
என்ன உறுதி இருக்கிறது?
அதுதான் போகட்டும், மதுரையில் நடந்த
பார்ப்பனரல்லாதார் மகாநாட்டின் போது எல்லா பார்ப்பனரல்லாதாரையும்
அவர்கள்,அதாவது பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் அக்கறை உள்ளவர்கள்
ஒவ்வொருவரும் வந்து தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லும்படி
கேட்டுக் கொண்டார்களே அப்பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு என்ன
அபிப்பிராயம் கொடுத்தார் அல்லது தான் வராததிற்கு என்ன காரணம்
சொன்னார் என்றுதான் கேட்கிறோம். தனக்கு ஏதாவது ஒரு அபிப்பிராயம்.
இருந்திருக்குமானால் சொல்லி இருக்கலாமா இல்லையா? பின்னும் அந்த
மகாநாடு நன்றாய் நடைபெறாதிருக்கவும் சில பார்ப்பனரல்லாதாரையாவது
மகாநாட்டுக்குப் போகாமல் இருக்கும்படி தடுக்கவும் பிரயத்தனப்பட்டு அதே
தேதியில் தானும் ஒரு மகாநாடு கூட்டுவதாய் வெளிப்படுத்தினாரே ஒழிய
அப்படியாவது கூட்டி ஏதாவது ஒரு ஏற்பாடு செய்தாரா என்று கேட்கிறோம்.
தவிர முடிவாக ஒரு வார்த்தை என்று, “பிராமணியத்தை ஒழித்து சமத்துவத்
தையும் அடிமைத் தனத்தையும் ஒழித்து சுயராஜ்யத்தையும் ஸ்தாபிப்பதில்
யார் குறுக்கே நின்றாலும் தான் பயப்படப் போவதில்லை” என்று எழுதுகிறார்.
இந்த இரண்டும் வாயில் சொல்லிக் கொண்டிருப்பதை விட காரியத்தில் செய்ய
இவருடைய கொள்கை என்ன? திட்டம் என்ன? அமுல் என்ன? என்று
மறுபடியும் கேட்கிறோம். வெறும் பரிபாஷையால் எத்தனை நாளைக்கு
ஏமாற்றுவது என்றும் கேட்கிறோம். அந்தப்படி யாருக்கும் பயப்படாத வீரர்.
ஏன் சென்ற ஒன்று இரண்டு வருஷமாக தலை காட்டாமல் இருந்தேன் என்று
சொல்லிக் கொள்ள வேண்டும். கடைசியாய்,
“சத்தியம் வெல்லுமா பொய் பிரசாரம் வெல்லுமா என்பதை ஒரு கை
பார்க்கப் போகிறதாக” எழுதி இருக்கிறார்.
237
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
இதை மாத்திரம் நாம் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு அதன்
முடிவையும் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் சத்தியம் இன்னது பொய் பிரசாரம்
இன்னது என்பதை அறிய முடியாத ஜனங்கள் இனி நமது நாட்டில் அதிகமாக
இல்லை என்கிற தைரியத்தினாலும் ஏற்கனவே ஜனங்கள் ஏறக் குறைய எது
பொய், எது புரட்டு, எது சத்தியம் என்பதை அறிந்துவிட்டார்கள் என்கிற
நம்பிக்கையாலும்தான் நாம் அந்த வார்த்தைகளை மாத்திரம் ஒப்புக்கொண்டு.
வெகுஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 24.04.1927
குடி அரசு
- 19270)
238
ஒரு சிறு குறிப்பு
சென்னையில் உள்ள முக்கிய வைத்தியர்களில் அனுபவம் பெற்ற
இரண்டு கனவான்கள் நமது உடல் நிலையைப் பற்றி கவனித்து சரீரத்தில் ரத்த
ஓட்ட வேகம் (Blood Pressure) அதிகமாயிருப்பதாகவும், சுமார் 150 டிக்கிரி
பிரஷர் இருக்க வேண்டியது 200 டிக்கிரி போல் இருப்பதாகவும், இது
போலவே கூடுதலாகிக் கொண்டு வருமாகில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்த
ஓட்டம் நின்று கால் கை அல்லது மூளை முதலியதுகள் ஸ்தம்பித்துப்
போகுமென்றும் அபிப்பிராயம் சொல்லி, அதற்கு சிகிச்சையாக குறைந்தது
இரண்டு தடவை மூன்று மூன்று நாள்கள் முழுப்பட்டினி இருக்க வேண்டும்
என்றும், இராத்திரி சாப்பாட்டை குறைத்துவிட வேண்டுமென்றும், மாமிச
ஆகாரத்தை அறவே நீக்கி விட வேண்டும் என்றும், கண்டிப்பான சிகிச்சை
சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சுவாமிகளுமிதற்கு முன்பே இதே
அபிப்பிராயத்தை இரண்டு மூன்று தடவைகளில் சொல்லி இருக்கிறார்.
அன்றியும் நமக்கு சரீரத்தில் முன்னை விட எடை அதிகமாயிருந்தாலும்,
அதிகமான பலக்குறைவும் மூச்சு வாங்குதலும் அரை மணி நேரம் சேர்ந்தாப்
போல எழுத முடியாதபடி அடிக்கடி சோம்பலும் கை வலியும் பேசப் பேச
மறதியும் முதலிய குணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வைத்தியரிடம் பட்டினி
இருப்பதாய் ஒப்புக் கொண்டு வந்திருந்தாலும், தற்சமயம் ஏற்பட்டிருக்கும்
இரண்டொரு சம்பவங்களை முன்னிட்டு கொஞ்ச நாளைக்கு பட்டினி
விரதமெடுத்துக் கொள்ள செளகரியமில்லாமலிருப்பதால் வைத்தியருக்குக்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையிலிருக்கிறோம்.
ஆனாலும், ஆகார விஷயத்தில் வைத்தியர் கட்டளைப்படி நடக்க முடிவு
செய்து கொண்டிருப்பதால் மாமிச ஆகாரம் சாப்பிடுவதை நிறுத்தியிருக்
கிறோம். ஆகையால் வெளிகளில் நம்மைக் கூப்பிடும் கனவான்கள் தயவு
செய்து இந்த விஷயங்களை மாத்திரம் கவனித்துக்கொள்ள வேண்டுமாய்ப்
பிரார்த்திக்கிறோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 24.04.1927
239
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வகுப்புணாரி பிரதிநிதித்துவம்
இந்தியாவில் தற்காலமிருக்கும் பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள்
முதலியவைகளை உத்தேசித்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக்
கவும் ஒற்றுமை உண்டாக்கவும் என்பதாகக் கருதி சென்ற சீர்திருத்தத்தின்
போது தகுந்தபடி விசாரணை செய்து சில வகுப்புகளுக்கு பிரதிநிதித்துவ
ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தும் சில வகுப்பார்களுக்கே தனித்தொகுதிகள்.
மூலம் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத்தியும் வைத்திருப்பது யாவரும் அறிந்த.
விஷயமே. இதிலிருந்து சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்த விசாரணைக்
கமிஷன் போது முன்பு பொது தொகுதியில் ஒதுக்கி வைத்த வகுப்பாரும்
இனித் தங்களுக்குத் தனித் தொகுதி மூலம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட
வேண்டும் என்ற கிளர்ச்சியைப் பார்த்து சிறு தொகையினரான நம் நாட்டுப்
பார்ப்பனர்கள் இம்முறை அமுலுக்கு வந்து விட்டால் தாங்கள் இப்பொழுது
அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏகபோக மிராசு போய் விடுமென்றும்,தங்கள்
சமூகத்துக்குத் தகுந்தபடி வீதாச்சாரம் கிடைப்பதாயிருந்தால் இப்பொழுது
கிடைத்துக் கொண்டிருப்பதில் 10ல் ஒரு பாகங்கூட கிடைக்காமல் போய்
விடுமே என்று பயந்து இக்கிளர்ச்சியை யொழிக்க பல வழிகளிலும் சூழ்ச்சி
செய்து வருவது யாவரும் அறிந்த விஷயமே.
இச்சூழ்ச்சிகளில்
தலைமையான சூழ்ச்சியாக சில மகமதிய சகோதரர்களைப் பிடித்து தங்கள்
சமூகத்துக்கு இனி தனித் தொகுதி வேண்டாமென்று சொன்னதாக ஏற்பாடு
செய்து ஒரு பெரிய விளம்பரம் செய்து விட்டார்கள். இப்பொழுது அது
“பிடிக்கப் பிடிக்க நமச்சிவாயம்” போல் வந்து முடிந்து விட்டது. அதாவது
இந்து மகா சபையின் நடவடிக்கைகளிலிருந்தும், மகமதிய சமூகத்தார்களின்
பிரமுகர்களிடமிருந்தும் தனித் தொகுதியே நிலைத்திருக்க வேண்டும் என்கிற
மாதிரியாகவே விஷயங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. இதிலிருந்து
தென்னாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி பலிக்கவில்லை என்றே தெரிகிறது.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 24.04.1927.
குடி அரசு
- 19270)
240
தொழிலானர்
சென்னைப் பார்ப்பனத் “தலைவர்கள்” தாங்கள்தான் தொழிலாளர்கள்
விஷயத்தில் அதிக அக்கரையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு
வேண்டிய சகல சவுகரியங்களும் தங்களால்தான் செய்யக் கூடுமென்றும்,
தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங்களெல்லாம் தங்களால்தான்
வாங்கிக் கொடுக்கக்கூடும் என்றும், சொல்லி இது காலபரியந்தம், தொழி
லாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்களைப் பெற்று பதவி பெற்று
வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல்
தேர்தல்களிலும், சட்டசபை தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்
களிலும் இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலா
ளர்கள் தங்களுடைய ஓட்டுக்களை எல்லாம் பார்ப்பன அபேட்சகர்களுக்கே
கொடுத்து பார்ப்பனரல்லாதாரை தோற்கடிக்க செய்ததும் யாவருக்கும் தெரிந்த
விஷயமே. இப்படி இருக்க, இப்போது ஷி தொழிலாள சகோதரர்களில்
தங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலாம் என்பதாக கருதி.
வரப்போகும் சென்னை முனிசிபல் தேர்தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே
இரண்டொருவரை அபேட்சர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை:
அறிந்த டெ பார்ப்பனர்கள் தொழிலாளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி
கண்டு பிடித்து இருக்கிறார்கள். அது என்னவென்றால் தொழிலாளர்களுக்கு
பிரதி நிதித்துவம் வேண்டும் என்றால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக்
கட்சியில் சேரவேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம்.
இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர்களே யோசிக்க வேண்டும்.
என்னவெனில், காங்கிரஸிலோ சுயராஜ்யக் கட்சியிலோ, தொழிலாளர்கள்
சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளிமார்கள் அவர்களை எப்படி
யாவது கெடுத்துவிடக் கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரஸில் சேர
முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழிலாளி
களை சுலபமாக தள்ளிவிடலாம்
என்பதுதான். தொழிலாளிகளுடைய
ஓட்டுபெறும் போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி
அவர்களுடைய ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என்கிற தந்திரத்தின்
பேரில்தான் பார்ப்பனர்களின் “தொழிலாளர் அனுதாபம்” நிற்கிறது. நமது
தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சிகளை அறியாமல் “எடுப்பார் கை
குழந்தை” களாய் இருக்கிறார்கள். இவைகளை எல்லாவற்றையும் அறிந்தே
241
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
தான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்மந்தமான எந்த கட்சியிலும் சேரக்
கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக் கூடிய சக்தியை
பெறவேண்டும் என்றும், அது கொஞ்ச காலம் தாமதமானாலும் குற்றமில்லை
என்றும், பேசியும் எழுதியும் வந்தோம், நாம் இப்படி பேசி எழுதி வந்ததைப்
பற்றி பல “தொழிலாளர்கள் தலைவர்களுக்கும்” நம் மீது மனஸ்தாபம்
ஏற்பட்டதும் நமக்குத் தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மகாநாட்டு
உபசரணை தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். “மித்திரன்”
அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது.ஆனபோதிலும் இன்னமும் நாம்
அதே கொள்கையுடன்தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ்:
கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட்சகர்கள் நிறுத்தும் விஷயத்தில்
ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டியாருக்கும், சத்தியமூர்த்தி, ரெங்கசாமி
அய்யங்கார், சீனிவாச அய்யங் கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பா
ஷணை, அடிதடி சண்டை முதலிய வைகள் நடந்து இருப்பதையும் தொழி
லாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவ ராவு, கல்யாணசுந்தர முதலியார் முதலிய
வர்கள் பேசிய பேச்சுகளில் இருந்தும் பார்ப்பன தந்திரங்கள் நன்றாய் விளங்கு
கின்றன. இனியாவது நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டு
களின் மாய்கையில் இருந்து விலகுவார்களா? என்பதுதான் நமது கோரிக்கை.
அப்படி அவர்கள் விலகி தனிப்பட்ட ஓதாவில் தொழிலாளி என்கிற
முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால் நாமும் நம்மால் ஆனதை செய்ய
தயாராய் இருக்கிறோம் என்றும், எந்த கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை
பார்த்து விடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர்களுக்குத்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.04.1927
குடி அரசு
- 19270)
242
ஜில்லா 6யோர்டு பிரசிவடண்டு தேர்தல்கள்
வகுப்பு துவேஷம் ஒழித்ததற்கு இது ஒரு சாக்ஷி
தமிழ் நாட்டிலுள்ள பதினொரு ஜில்லாக்களின் ஜில்லா போர்டு
பிரசிடெண்டு ஸ்தானங்களில் இது சமயம் திருச்சி நீங்கலாக (அங்கு மாத்திரம்
பார்ப்பன பிரசிடெண்டு மற்ற 10 ஜில்லாக்களில் பார்ப்பனரல்லாத பிரசிடெண்
டுகளே இருந்து வருகிறார்கள். அதாவது ஸ்ரீமான்கள் செங்கல்பட்டுக்கு
14/6ரெட்டியும், தென்னாற்காட்டுக்கு சீத்தாராம ரெட்டியும், வடஆற்காட்டுக்கு
கிருஷ்ணசாமி நாயுடுவும், சித்தூருக்கு முனிசாமி நாயுடுவும், சேலத்திற்கு
எல்லப்ப செட்டியாரும், கோயமுத்தூருக்கு ரத்தினசபாபதி முதலியாரும்,
தஞ்சைக்கு பன்னீர்செல்வமும், மதுரைக்கு போக்ஸ் துரையும், இராமநாத
புரத்திற்கு இராமநாதபுர ராஜாவும், திருநெல்வேலிக்கு குமாரசாமி ரெட்டி
யாருமாக இருக்கிறார்கள். இது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதால் இம்மாதிரி
பார்ப்பனரல்லாத கனவான்கள் வரமுடிந்தது என்பதும், அதனாலேயே
பார்ப்பனர்கள் நமது ஜஸ்டிஸ் கட்சியையும் அதன் தலைவரான பனக்கால்
ராஜாவையும் வெட்டிப் புதைக்க வேண்டு மென்று சொல்லுவதும்.
இப்பொழுது ஏற்பட்ட அரைப் பார்ப்பனரான சுப்பராய மந்திரிசபையின்
மூலம் இதை மாற்றி இத்தனை ஜில்லா போர்டுகளையும் பார்ப்பன மயமாக
வும், பார்ப்பன அக்கிரகாரமாகவும், பார்ப்பன அன்ன சத்திரமாகவும்.பார்ப்பன
வேத பாட சாலையாகவும் ஆக்கிக் கொள்ள பார்ப்பனர்கள் எல்லோரும்
ஒன்று சேர்ந்து “பகீரத பிரயதனப்” படுகிறார்கள் என்பதும் யாவரும் அறிந்
ததே. இது காரணமாகவேநமது அரைப் பார்ப்பன மந்திரி ஒரு ஜில்லா போர்டு
பிரசிடெண்டுக்காவது அவர்கள் மறுபடியும் தேர்தலுக்கு நிற்பதற்கு
லாயக்கில்லாமல் படிக்கு மெம்பர் ஸ்தானமே நாமினேசன் செய்யாமல் ஒரே
அடியாய் அடித்து விட்டார். ஆன போதிலும் ஏதோ ஒரு சட்டப்படி ஏற்பட்
டிருந்த சட்ட சம்மந்தமான ஆதாரத்தைக் கொண்டு செங்கற்பட்டு, தென்னாற்
காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி முதலிய ஜில்லா போர்டு பிரசிடெண்
டுகள் மறுபடியும் நின்று ஏகமனதாகவும், 4-ல் 3 பங்கு பேர்களாலும், 3-ல் 2
பங்கு பேர்களாலும், அதிக மெஜாரிட்டியாய் தெரிந்தெடுக்கப்பட்டு விட்டார்.
கள். ஆணாலும் பார்ப்பனர் கள் சும்மாவிராமல் நீதி இலாக்காவில் தங்களுக்கு
இருக்கும் செல்வாக்கு ஆணவத்தால் இத்தனை தேர்தல்கள் பேரிலும்
243
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
அந்தந்த ஜில்லா கோர்ட்டு களில் தேர்தல்களை ரத்து செய்ய வேண்டுமென்று
வியாஜ்ஜியம் தொடுத் திருக்கிறார்கள். இவ்வியாஜியங்களில் முக்கியமான
வியாஜ்ஜியமாகிய தஞ்சா வூர் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தேர்தலைக் குறித்த
தானதும் காங்கிரஸ் தலைவர், சுயராஜ்யக் கட்சித் தலைவர், பார்ப்பனத்
தலைவர், மாஜி அட்வ கேட் ஜெனரல், “அவதார புருஷர்”, “ஜஸ்டிஸ்
கட்சியை வெட்டி புதைத்தவர்”, “வகுப்புத் துவேஷத்தை ஒரேயடியாய்
துலைத்தவர்” ஆகிய பெருமைகள் பெற்ற ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார்
அவர்களே வக்கீலாக வாதித்ததுமான வியாஜ்ஜியத்தை வெள்ளிக்கிழமை
மாலையில் செலவுத் தொகையுடன் தள்ளி எலக்ஷனை உறுதிபடுத்தி
இருப்பதாக தந்தி வந்திருக்கிறது. ஆனால் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தின்
வக்கீலோ “மூளை இல்லாத வகுப்பு” என்கிற பார்ப்பனரல்லாதார் வகுப்பைச்
சேர்ந்த ஸ்ரீமான் வெங்கிட்டரமணராவ் நாயுடு என்பதையும் குறிப்பிடுகிறோம்.
இது தவிர, சேலம் ஸ்ரீமான் எல்லப்ப செட்டியார் தேர்தல் விஷயத்தில் தேர்தல்
நடக்காமலிருக்கச் செய்ய சேலத்து பார்ப்பனர்கள், முக்கியமாய் ஸ்ரீமான்
சி.
ராஜகோபாலாச்சாரியார் முதல் கொண்டு, மந்திரியின் கையைப் பிடித்து எழுதி
வைத்தும் மந்திரியின் நிபந்தனைப்படி தேர்தல் நடந்து அதில் ஏறக்குறைய
ஏகமனதாய் செட்டியார் வெற்றி பெற்றும், மறுபடியும் அதை தள்ளுபடி
செய்யும்படி ஜட்ஜு கோர்ட்டில் விண்ணப்பம் கொடுத்ததல்லாமல் மந்திரியை
பிடித்தும் கெஜட்டு பிரசுரம் செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று
கேள்விப்படுகிறோம். இத்தேர்தலை மந்திரி அடியோடு நிராகரித்து விட
வேண்டிய ஏற்பாடுகள் செய்தாய் விட்டது என்றும் ஒரு பார்ப்பன கனவான்.
அதற்கு மந்திரிக்காக தக்க காரணங்கள் காட்டி ஜட்ஜ் மெண்ட் முதலியதுகள்
கூட எழுதிக் கொடுத்திருக்கிறார் என்றும், மந்திரி இலாக்காவிலுள்ள பொறுப்பு
வாய்ந்த அதிகாரிகள் இதை ஆக்்ஷேபிக்கிறார்கள் என்றும் கேள்விப்படு
கிறோம். வகுப்பு துவேஷம் ஒழிந்த தன்மைக்கு இது ஒரு சாக்ஷி.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1927
குடி அரசு - 19970)
244
யாரிடம் வகுப்புத் துவேஷம் இருக்கிறது?
ய்ந்மாண்கள் பார்ப்பண ஈங்காச்சாரியும்
யார்ப்பணால்லாத சண்முகம் ஊசட்முயாரும்
சமீப காலத்திற்குள், அதாவது
சுமார் 6 மாதத்திற்குள், நமது மாகாணத்
திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு கனவான்கள் இந்தியாவின் பிரதிநிதி
என்கிற முறையில் போயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பார்ப்பன
ரல்லாத வகுப்பைச் சேர்ந்த, கோவை ஸ்ரீமான் ஆர். கே. ஷண்முகம் செட்டி
யார் அவர்கள், எம். எல். ஏ. ஆவார். மற்றவர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த
மைலாப்பூர் அய்யங்கார் ஸ்ரீமான் டி.ரங்காச்சாரியார் ஆவார். ஸ்ரீமான் செட்டி
யார் ஜனப் பிரதிநிதியாய் கவர்ன்மெண்ட்டாருடைய பணச் செலவில்லாமல்
பொது அரசியல் விஷயமாய் சென்று வந்தவர். ஸ்ரீமான் ரங்காச்சாரியார்.
கவர்ன்மெண்ட் பிரதிநிதியாய் சர்க்கார் செலவில் ஏதோ ஒரு ஊரின் திறப்பு
விழாவிற்காக “இந்திய பிரதிநிதியும் வந்திருந்தார்” என்று கணக்கு காட்டு
வதற்காக போகிறவர். இந்த லட்சணத்தில் தனக்கு ஒரு உத்தியோக காரிய
தரிசியாம். அதாவது தனது மகனையே காரியதரிசியாக்கிக் கொண்டார்.
செளகரியத்திற்கு ஒரு ஆளாம். அதற்கு மற்றொரு மகனை நியமித்துக்
கொண்டார். ஆகவே அப்பன் மக்கள் மூவரும் போகிறார்கள். திரும்பி
வருவதற்குள்
இந்த பிள்ளைகளுக்கு ஏதாவது மாதம் 300, 400 ரூபாய்களில்
உத்தியோகங்களும் கிடைத்து விடலாம். ஸ்ரீமான் ரெங்காச் சாரியாருக்கும்
கூடிய சீக்கிரத்தில் மாதம் 4000, 5000 கிடைக்கும். ஏதாவது கமிஷனில்
மெம்பர் ஸ்தானமோ அல்லது நிர்வாக சபைகளில் மெம்பர் ஸ்தானங்களோ
கிடைத்துவிடலாம். சர்க்கார் தயவை எதிர்பார்த்து சர்க்கார் பிரதிநிதியாய் சர்க்
கார் செலவில் போன ஸ்ரீமான் ரங்காச்சாரிக்குப் பார்ப்பன பத்திரிகைகளும்
பார்ப்பனர்களும் செய்த ஆரவாரமென்ன? விருந்துஎன்ன? வழியனுப்பு
உபச்சாரமென்ன? என்பதையும், ஜனப் பிரதிநிதியாய் தன்னு டைய எலெக்
ஷனையும் கவனியாமல் சர்க்கார் செலவில்லாமல் தனியே போனவருக்கு
இப்பார்ப்பனர்கள் செய்த விஷயம் என்ன? என்பதையும் யோசித்துப்
பார்த்தால் நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமில்லையா என்பது
விளங்காமல் போகாது.
245
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
தவிர, செட்டியாருக்கு கொஞ்சம் பொதுஜனங்களிடம் செல்வாக்கு
வந்துவிட்டாய் தெரிந்தவுடன் அவரை ஒழிக்க ஆரம்பித்தும், செட்டியா
ரைக் கூட்டிக் கொண்டு திருச்சி, திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களில் ஊர்.
ஊராய் திரிந்து தாங்கள் யோக்கியதை சம்பாதித்துக் கொண்டு, தங்களுக்கு
ஜயம் கிடைத்தப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலக்கி
விட்டதும், இப்பொழுதும் இந்தியா சட்டசபையில் நன்றாய் பேசக்கூடிய
நபர் ஸ்ரீமான் செட்டியார் தான் என்று இந்தியா பத்திரிக்கைகள் பூறாவும்
கூச்சல் போட்டாலும், சென்னை
பார்ப்பனப் பத்திரிக்கைகள் இப்பேச்சுகளைப்
பற்றி ஒரு வரி கூட எழுதாமல், ஆர். கே. ஷண்முகம் செட்டியார் என்பதற்கு
பதிலாக, எஸ். செட்டியார் என்று, அதாவது முன் ஸ்ரீமான் சம்மந்த முதலியார்.
இந்தியா சட்டசபையில் இருந்த காலத்தில் அவர் பெயர் யாருக்கும் தெரியக்
கூடாது என்கிற எண்ணத்தின் பேரில், எஸ். முதலியார் என்று எழுதிவந்தது
போலவே, எஸ். செட்டியார் என்று ஆரம்பித்து விட்டார்கள். இதிலிருந்து
யாரிடம் வகுப்பு துவேஷம் இருக்கிறது என்பதை இனியாவது உணரும்படி
வேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1927
குடி அரசு
- 19270)
246
ஒரு வனணிப்படையான ரகசியம்
அடுத்த 5-5-27 தேதியில் பம்பாயில் கூடப்போகும் அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டிக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒரு தீர்மானம் கொண்டு
போகப் போகிறாராம். அதாவது :-
மாகாண சட்ட சபைகளில் காங்கிரஸ்காரர்கள் எப்படிநடந்து கொள்ள
வேண்டும் என்கிற விஷயத்தில் அந்தந்த மாகாணத்திற்கு தகுந்தபடி நடந்து
கொள்ள மாகாணச் சுதந்திரம் கொடுத்துவிட வேண்டும் என்பதே.
அந்தத் தீர்மானம் நிறைவேறியவுடன், சென்னை மாகாணக் காங்கிரஸ்
கமிட்டியில் சில தீர்மானங்கள் கொண்டுவரப் போகிறாராம். அதாவது :-
மந்திரிப் பதவியை ஒப்புக் கொள்ளலாம் என்றும், இப்போதுள்ள
மந்திரி சபையை கலைத்துவிடவேண்டுமென்றும், மறு மந்திரிசபை
அமைப்பதில் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் முதல் மந்திரியாக
வும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கல்வி, தேவஸ்தானம் மந்திரியாகவும், ஸ்ரீமான்
சுப்பராயன் கலால் மந்திரியாகவும் அமைப்பது என்றும் முடிவாய் இருப்ப
தாகத் தெரிகிறது. மற்ற மந்திரிகளுக்கு வேறு சில உத்தியோகங்கள் கொடுக்.
கும் விஷயத்தில் யோசனை செய்து கொண்டு வரப்படுகிறது. ஆனால்
ஸ்ரீமான் சுப்பராயன் முதல் மந்திரி பதவியை விட இஷ்டப்படவில்லை
என்றும் எந்த இலாக்காவை
யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்
என்று சொல்லுவதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது.
இதிலுள்ள கஷ்டங்களை சரி செய்ய ஒரு யோசனை சொல்லும்படி
ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டிருப்பதாகவும்,
அவர் ஸ்ரீமான்
சுப்பராயனுக்குத்தான் முதல் மந்திரியும், ஸ்தல ஸ்தாபன இலாக்காவும் இருக்க
வேண்டும் என்றும் சொல்லுவதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. யார்.
எப்படி போனாலும் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு கல்வி மெம்பர் ஸ்தானம்
கிடைக்குமா என்று பார்ப்பனர்கள் ஆசைப்படுகிறார்கள் என்றும் தெரிய
வருகிறது.
247
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஸ்ரீமான் சி.வி.வெங்கிடரமண அய்யங்காருக்கு சட்டசபைத் தலைவர்
வேலை தீர்மானமாகிவிட்டதாகவும் தெரியவருகிறது. இந்த அபிப்பிராயங்.
கள் நிறைவேறினாலுங்கூட இப்போது இருப்பதை விட நிலைமைகள் ஒன்றும்
மாறிவிடாது என்பதும், பார்ப்பனரல்லாதாரை பொறுத்த வரையிலும் இன்னம்
கொஞ்சம் கண்விழிப்பும் அநுகூலமும் ஏற்படும் என்றே நம்புகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 24.04.1927
வ இயமம் நாயக்கர்
ot
|
ரர
பிணை சத்தின் 11௨ (1-$- 87) ஞாமிற்தம்நெமை,
வ
L
மின்சார
ரசம்.
v or“, TN, வொ்கலிங்கம்
பிள்ளே & சன்ஸ் Pl
மத்து காப் வியபாரம், கைந்து ித்நியை வித் மதுரா,
இ:ழுமம்மது
காம்
& க்பெணி, வளம்,
பினால, சன்சப்பூர்.
248
249
— QuAwafer எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
குடி அரசு - 1927 0
போளூர் ஆரம்பாசிரியர் மகாநாடு
சகோதரிகளே! சகோதரர்களே!
இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம்,
வரவேற்புப் பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும்
வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்த விதத்தில்
தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்.
என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மகாநாட்டுக்கு
அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியு/டையவனா
வேன். உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய தைரியமில்
லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்க வேண்டியவனாயிருக்
கிறேன். என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷ காலந்தான் நான் பள்ளியில்
படித்திருப்பேன். அவ்விரண்டு வருஷமாகிய எனது 8 வயதுக்கு மேல்பட்டு
T வயதுக்குள்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தை விட உபாத்தியா
யரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும்.
இதையறிந்த என்
பெற்றோர்கள், இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதித் தாங்கள்
செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 - வது வயதிலேயே
ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருஷ கெடுவிலேயும் என் கையெழுத்துப்
போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்வி
முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விஷயத்
தையும் சொல்லக் கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி
அனுபவத்திற் கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்லுகிறேன்.
தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர்.
தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதிப் பெருமைப்பட்டுக்
கொண்டிருந்தாலும் அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி
உணர்ந்து நடப்பதிற்கில்லாத நிலையில் இருந்துகொண்டு அத்தொழிலை
தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாயிருக்கிறது.
ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் பேசுவதும், தீர்மானிப்பதும்
தங்களுக்கு சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும் தங்கள் சம்பளத்தை
அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய
வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேசம் முன்னேற்
குடி அரசு
- 19270)
250
றத்திற்கு அநுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியையடையவோ ஒரு
பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை. முதலாவது நீங்கள்
படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப்
பிழைப்புக்கு ஒரு ஆதாரமாகக் கருதிக் கற்கவும் கற்பிக்கப்படவும் ஏற்பட்டி
ருக்கிறதேயல்லாமல் மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ,
ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாயிருக்கிறதென்பது
நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி,
சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால் தற்காலம் அடிமைத்
தன்மையையும் சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக், கொடுமை:
யான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவி செய்து வயிறு
வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகத் தானே
இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?
சாதாரணமாக ஆரம்பாசிரியர்கள் என்கிற பெயரையே யாருக்கு
உபயோகப் படுத்தலாமென்றால் முதலில் நமது பெண் மக்களுக்குத்தான்
உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்பாசிரி
யர்கள் அவர்களுடைய
தாய்மார்களாகிய நமது பெண்களே ஆவார்கள்.
அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தி
யாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களிலும் இவை
தான் காணப்படுகிறது.எனவே,
இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிரு
வரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள்
தேசத்திற்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய்
வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்
பட வேண்டியிருக்கிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட ஆரம்பாசிரியர்களாகிய
பெண்களோ நமது நாட்டில் பிள்ளைபெறும் இயந்திரங்களாக இருக்கின்
றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்
லவாபிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும். ஆகவே, அந்த
முதலாவது ஆரம்பாசிரியர்களின் யோக்கியதை இப்படியாய் விட்டது.
அடுத்தாற்போலுள்ள இரண்டாவது ஆரம்பாசிரியர்களாகிய உங்கள் யோக்
கியதையோ, உங்கள் வயிற்றுப்பாட்டுக்கே கான்பரன்ஸ் கூட்ட வேண்டிய
தாகப் போய்விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப் போகிற
பிள்ளைகள் எப்படித் தக்க யோக்கியதை அடைய முடியும். கல்வி என்பது
வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல, அது அறிவுக்காகவும் ஏற்பட்டது
என்பதாக நாம் எடுத்துக் கொண்டால் மக்கள் சுயமரியாதையோடும், சுதந்திரத்
தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும்,
அன்பு, பரோபகாரம்
முதலியவைகளோடு கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த
ஞானமும் உண்டாகத் தகுந்ததாக இருக்க வேண்டும். இவைகளையறிந்தே
வள்ளுவரும் “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும், கல்லாதார்
251
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
அறிவில்லாதார்” என்றும், “தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர்.
கற்றறிந்தார்” என்றும், “ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்” என்றும் சொல்லி இருக்கிறார். இதற்கேற்ற
கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
நாய்க்கு நாலுகால், பூனைக்கு
வாலுண்டு, கண்ணில்லாதவன் குருடன், திருடாதே, அடிக்காதே என்று
சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டுவிடக்கூடும். இவைகள்
எல்லாம் குழந்தைகள் தானாகவே படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால்
அவன் திரும்பி அடித்துவிடுவான். ஒருவனை வைதால் அவன் திரும்பி
வைதுவிடுவான்.
திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள்.
என்பதும் நாயும் பூனையும் கண்ணில் பார்க்கும்போதே கால் எவ்வள
வென்பதும் வாலுண்டென்பதும் தெரிந்து கொள்வான். இதற்காக இவ்வளவு
பெரிய ஆர்ப்பாட்டமும், பணச் செலவும், மெனக்கேடும் வேண்டியதில்லை.
என்பதே நமது அபிப்பிராயம். நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை
இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
மானம், ஆண்மை
இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக்
கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க
வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில்
ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா வென்பதை உங்கள்
மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல,
உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து எம்.ஏ. டாக்டர்.
முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், ஒரு காபிக்கடைக்குப் போனால்
தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு
“சாமி ஒரு கப் காப்பி கொண்டு வா” என்று கூப்பிடுகிறான்.
தான்
மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து
அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும், மக்களையுங்
காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான். இந்தப் பட்டம்
எல்லாம் கல்வியாகுமா? இதைப் பெற்றவர்களெல்லாம் படித்தவர்களா
வார்களா? வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர்.
எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ
அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ. என்ற படித்தவர்கள் என்போர்களும்
அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திரப்
பாடம் தெரியாதோ அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில்
தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளம் தெரியாதோ அப்படியே
எம்.ஏ.
படித்தவனுக்கு பிறருக்கு க்ஷவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி
இலக்கண இலக்கியங்களும், வேத வியாக்கியானங்களும் தெரியாதோ
அப்படியே வித்வான்களுக்கும், சாஸ்திரிகளுக்கும், செருப்புத் தைக்கத்
தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட
பி.ஏ. எம்.ஏ. சாஸ்திரி, வித்வான் முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்தி
லும் உயர்ந்தவர்களுமல்லர், அறிவாளிகளுமல்லர், உலகத்திற்கு
அநுகூலமா
குடி அரசு
- 19270)
252
னவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே
தவிர அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்
காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும்
படியாதவர்கள் பரோபகாரியாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்
ளவர்களாகவும் இருக்கலாம். எனவே இதுகளல்ல கல்வியென்பது நமக்கு
விளங்கவில்லையா? நமது நாட்டின் கேட்டிற்கும், நிலைமைக்கும் முதல்
காரணம் தற்காலக் கல்விமுறை யென்பதே எனது அபிப்ராயம். முற்காலத்தில்
பனை ஓலையில் எழுதித் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த
படிப்பை விட தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது?
ஓலைச் சுவடியும், எழுத்தாணியும், ஆற்று மணலும் போய்க் காகிதக் குப்பை
களுக்கும் பெரும் பெரும் புத்தகங்களுக்கும், இங்கிப் பெட்டி, பேனா,
பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிற
தேயல்லாமல் வேறு பலனுண்டா?
படிப்பில்லாத என்கிற முற்காலத்து
மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதம்
உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்
யத்தில், நம்பிக்கையில், படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்? முன்
காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டு
வாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டிவிடுவது
வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கஞ்சி பெண்ஜாதியின் தாலியை
விற்றாவது கடனைக் கொடுத்துவிட்டுத்தான் வீதிப்புரம் நடப்பான் என்று
எனது தகப்பனார் சொல்லியிருக்கிறார்.
கல்வி ஏற்பட்ட காலமாகிய
இப்பொழுது அம்மாதிரி செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் பாலைக்.
கரந்து நமக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடு பாவம் வந்து உன்னை என்ன
செய்துவிடும் பார்க்கலாம் என்று தைரியம் சொல்லி ஏமாற்றி வழிகாட்டி
வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மேஜிஸ்ட்ரேட் கச்சேரி,
எத்தனை முனிசீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை
போலீஸ் கச்சேரி ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்
லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா? படிப்பு என்னும் தற்காலக் கல்வி
முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்கஹீனமாக நடக்கத் தூண்டி
அல்லல்படுத்தி நாட்டையும், சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.
தொழிற்கல்வி
சகோதரர்களே!
அறிவு கல்வியின் யோக்கியதை இப்படியானால், தொழிற் கல்வியின்
யோக்கியதை இதைவிட மோசமாக விருக்கிறது. தொழிற்கல்வி என்னும்
பெயரால் தற்காலம் நமது பணமும், நேரமும், மக்களின் அறிவும் வீணாவ
தல்லாமல் வேறென்ன பலனைக் கண்டோம். தற்காலப் பள்ளிக்கூடங்களில்
தொழிற்கல்வி என்ற பெயருடன் கற்றுக் கொடுக்கும் தொழிற்கல்வி முறையும்,
253
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கொஞ்சமும் சரியானதல்ல. கொஞ்சகாலமாகத் “தேசீயக் கிளர்ச்சி” ஏற்பட்ட
தின் பலனாய் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தொழிற்கல்வி என்பதாகச்
சொல்லி, தச்சு வேலையும், விவசாயமும், ராட்டினம் சுற்றுதலும், நெசவு
நெய்தலும் முதலிய வேலைகளுக்கென்று அனாவசியமாய்ப் பணத்தையும்,
நேரத்தையும் பாழ்படுத்தப்படுகின்றன. வக்கீல் மகனுக்கும், ஜட்ஜ் மகனுக்
கும், மிட்டாதார் மகனுக்கும், வியாபாரி மகனுக்கும், பெரிய நிலச்சுவான்
தார்கள் மகனுக்கும் ஒருங்கே உட்கார வைத்து சில மணி நேரம் தச்சுவேலை
கற்றுக் கொடுப்பதாலும், ராட்டினத்தைச் சுற்றச் சொல்வதாலும் என்ன பயன்
விளையக் கூடும்? எல்லாத் தொழிலும் கற்றிருக்கட்டும் என்பதற்காகவே
சொல்வோமானால் இந்த இரண்டு மூன்று தொழிலாலேயே உலகத்தொழில்
எல்லாம் தெரிந்து விடுமா? ஜீவனோபாயத்துக்கு என்று சொல்வோமானால்
மேற்கண்ட பிள்ளைகளெல்லாம் இந்தத் தொழிலை ஜீவனோபாயத்திற்காக
ஏற்று ஜீவிக்க முடியுமா? ஆகவே, அறிவுக்காவது, ஜீவனத்திற்காவது இந்தத்
தொழில்கள் இப்பிள்ளைகளுக்கு உபயோகப்படுகிறதா? உயர்தரப் பாட
சாலை என்பவைகளில் சயன்ஸ் என்றும், சரித்திரம் என்றும் எதை எதையோ
பணத்தையும், காலத்தையும் செலவழித்துச் சொல்லிக்கொடுத்து உருப்
போடச் செய்து கற்றுத் தேர்ந்த பிறகு 30 ரூபாயுக்கு ஏவின வேலை செய்து
படிப்பினுடைய சக்தியையும், அறிவையும் கொண்டல்லாமல் மேலெஜ
மானனுக்கு மானத்தையும், மனச்சாட்சியையும் விற்று நல்ல பிள்ளையாவதன்'
மூலம் சம்பளத்தை உயர்த்தி, வாங்கிய சம்பளத்தில் வாழ்ந்து தன் காரியத்தைப்
பார்த்துக் கொண்டதோடு சாவதல்லாமல் வேறு ஏதாவது பல் குத்துகிற
துரும்புக்காவது உதவப்படுகிறதா? அல்லது அந்தத் தொழிலுக்காவது இந்தப்
படிப்புகள் உபயோகப்படுகிறதா? அது போலவே இக் கைத்தொழில்களும்
வாழ்விற்கோ பிழைப்பிற்கோ உபயோகப்படாமல் போகிறது. கைத்தொழில்
கற்றுக் கொடுப்பதென்றால் கூடுமானவரையில் பிள்ளைகளின் இயற்கை
அறிவிற்கும், வாழ்க்கைக்கும் , தக்கபடி தரந்தரமாகப் பிரித்து அததுகளுக்குத்
தகுந்த தொழில்களைச் சொல்லிக் கொடுத்து அதை அவர்களுக்கு
உபயோகப்படும்படிச் செய்ய வேண்டும். பெண்களுக்கு ராட்டினம் சொல்லிக்
கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆண் பிள்ளைகளுக்கு
கதரைக் கட்டச் செய்வதும் கதரை ஆதரிக்க வேண்டிய அவசியத்தைச்
சொல்லிக் கொடுப்பதும் ராட்டினத்தை விட முக்கியமானதாகும். அதை
விட்டு விட்டு உபாத்தியாயரும் கதர் கட்டாமல், பிள்ளைகளையும் கதர் கட்டச்
செய்யாமல் இவர்களின் எஜமானர்களாகிய தாலூகா போர்டு, ஜில்லா போர்டு
முதலிய தலைவர்களும் அங்கத்தினர்களும் கதரைக் கட்டாமல் பொது ஜனங்
களின் வரிப்பணத்தை அள்ளி வெறும் ராட்டினத்தை வாங்கி பிள்ளைகளின்
நேரத்தையும், பஞ்சையும் வீணாக்கி நூலைக் குப்பையில் போடுவதில்
லாபமென்ன?
கதர் கட்டுவதன் அவசியத்தை அறியாத ஒரு பையன்
ராட்டினம் சுற்றுவதில் பிரயோஜனமென்ன? கதரைக் கட்டாத உபாத்தி
யாயர்கள் கதரைக் கட்டும்படி உபதேசம் செய்வதில் பிரயோஜனமென்ன?
குடி அரசு
- 19270)
254
1000 பொய் ராட்டினம் சுற்றி நூல்களைக் குப்பையில் போடுவதை விட 100
பிள்ளைகள் கதர் கட்டுவது மேலான தர்மம். ஆகவே இம்முறைகள்
காரியத்துக்கு உதவாததாகவும், உண்மைத் தொழில் தத்துவமற்றதாகவும்
நடைபெறுகின்றது.
குருபக்தி
அறிவும், தொழிலும் இப்படியானால் உபாத்தியாயர்களுக்கும்,
பிள்ளைகளுக்கும் இருக்கிற பொறுப்பும், பற்றுதலும், பக்தியும் இதைவிட
மோசமானதென்றே சொல்ல வேண்டும். சாதாரணமாய் ஒரு உபாத்தியாய
ருக்கும், ஒரு மாணாக்கனுக்கும் உள்ள பற்றுதலையும், பக்தியையும் விட ஒரு
தாசிக்கும் அவளுடைய அன்றன்றைய நாயகனுக்கும் உள்ள பக்தியும்,
பற்றுதலும் மேலானதென்றே சொல்லலாம். எப்படியெனில் ஒரு தாசிக்கு ஒரு
இரவு முழுவதாவது ஒரு நாயகன் இருக்கக்கூடும்.நமது மாணாக்கர்களுக்கோ
மணிக்கு இரண்டு உபாத்தியாயர்கள்
வருகிறார்கள். ஒரு நிலையான
உபாத்தியாயரிடமிருந்து ஒரு பொறுப்பான விஷயங்களை உணரக்கூடிய
சந்தர்ப்பங்களே கிடையாது. உபாத்தியாயர்களும் சம்பளம் உயர்ந்த பள்ளிக்
கூடங்களுக்குப் போவதும், மாணாக்கர்களும் தங்களுக்குச் செளகரியப்பட்ட
பள்ளிக்கூடத்திற்குப் போவதும் சுயேச்சையாகிவிட்டது. பிள்ளை படிக்க
வேண்டியதும் உபாத்தியாயர் அவனைத் தேறச்செய்ய வேண்டியதும்
அவர:
வர்கள் இஷ்டத்தைப் பொருத்ததாகவே போய்விட்டதேயல்லாமல் பொறுப்
பும் கவலையும் ஒருவருக்கும் கட்டுப்பட்டதல்லதாகவே இருந்து வருகிறது.
காலக்ஷேபம்
கல்வி, அறிவு, தொழில் முறை, குருபக்தி ஆகியவற்றின் யோக்கியதை
இப்படியென்றால் உபாத்தியாயர்களின் காலக்ஷபமோ நினைப்பதற்கே
பரிதாபமாயிருக்கிறது. முன்காலத்திய உபாத்தியாயர்களுக்கு காலக்ஷேபத்
தைப் பற்றிய கவலையே இருந்ததில்லை. உபாத்தியாயர்களுக்கு ஒரு சிறு
குடிசை இருந்தால் போதும். பிள்ளைகளுக்கு அக்குடிசைகளுக்கு முன்னால்
ஒரு பந்தலோ, கொட்டகையோ இருந்தால் போதும். பிள்ளைகள் படிப்பதற்கு
ஐந்தாறு மட்டை பனை ஓலையும் அரை வண்டி மணலும் இருந்தால் போதும்.
எழுதுகோலாக ஒரு கூர்மையான ஆணி இருந்தால் போதும். மற்றபடி
உபாத்தியாயர்களுடைய காலக்ஷ்பத்தைப் பற்றி உபாத்தியாயர்களுக்கு
கவலையே இருந்தது கிடையாது. வெள்ளாமை காலத்தில் பையன்களிடம்
சொல்லிவிட்டால் கூடை கூடையாய் தானியங்கள் வந்து குவிந்துவிடும்.
உபாத்தியாயரே போட்டு வைக்க இடமில்லாததால் போதும் என்று சொல்லி
விடுவார். எண்ணெய், விறகு முதலியதுகள் மாதத்துக்கு ஒரு தடவையும்,
காய்கறி பதார்த்தங்கள் தினமும் தானாகவே பிள்ளைகள் மூலம் வீட்டுக்கு
வந்து சேர்ந்து விடும். பண்டிகைகளுக்கு வேஷ்டி துணிகளும், மேற்செல
255
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வுக்கு இனாம் பணங்களும் தானாகவே வந்து சேர்ந்துவிடும். உபாத்தியாயர்.
வீட்டில் நடக்கும் கல்யாணம், கார்த்திகை, நன்மை, தீமை முதலிய சடங்கு
களுக்கு அவ்வப்போது பெற்றோர்களும் பையன்களுடைய சுற்றத்தார்.
களும் தாராளமாகக் கொடுத்து நடத்தி விடுவார்கள்.பையனுடைய படிப்புக்கு
உபாத்தியாயர் ஜவாப்தாரியாகவும், உபாத்தியாயர்களுடைய காலக்ஷேபத்
திற்கு பிள்ளைகளின் பெற்றோர்கள் ஜவாப்தாரிகளாகவும் பரஸ்பரம்
பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு பையன் வீட்டில் ஏதாவது குற்றஞ்
செய்து விட்டாலும் அவன் படித்ததாகச் சொல்லும் பாடங்களில் கேட்ட
கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லாவிட்டாலும் உபாத்தியாயருக்குக்
கொடுப்பதில் குறைத்து விடுவார்கள். உபாத்தியாயர்கள் பெயரைச் சொன்
னால் பையன்கள் நடுங்குவார்கள். சாப்பாட்டுக் கவலையென்பதே உபாத்தி
யாயர்களுக்குத் தெரியவே தெரியாது. உபாத்தியாயர் வீட்டுப் பெண்களோடு.
குடும்பக் கவலை நின்றுவிடும். எவ்விதத்திலும் அவைகள் உபாத்தியாயர்.
காதுக்கு எட்டவே எட்டாது. அக்காலத்தியப் படிப்புச் செலவு இப்போதைய
செலவுகளில் பதினாறில் ஒரு பங்கு கூட இருக்காது. இப்பொழுதோ
பிள்ளைகள் கொடுக்கிற பணம் கணக்கு வழக்கில்லை. புத்தகம், காகிதம்,
பேனா, பென்சில், சித்திர சாமான், விளையாட்டுக் கருவி, ரஸாயன சாமான்,
பெஞ்சு, நாற்காலி, மேசை, கட்டடங்கள் இவைகளுக்காகும் செலவுகளே'
மக்கள் தாங்க முடியாததாகப் போய் விடுகிறது. இதன் மேல் உபாத்தியா
யர்களுக்குக் கொடுப்பதும் தாங்க முடியாததாகவே ஏற்பட்டு விடுகிறது.
சாதாரணமாக ஆரம்பாசிரியர்கள் என்போருக்கு கொடுக்கப்படும் சம்பளம்
சில ஆபீஸ்களில் பியூன்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் கொடுக்கப்
படுவதை விட குறைவாகத்தானே இருக்கிறது. குழந்தை குட்டிகளோடு
வாழ்கிற ஒரு குடும்பத்திற்கு 30 ரூபாயாவது இருந்தால் தான் கவலை
யில்லாமல் தன் காரியத்தைக் கவனிக்கக்கூடும். அது கூட இல்லாமல்
கஷ்டப்படுகிறதைப் பார்க்கும்பொழுது நமக்கு மிகவும் பரிதாப
மாகத்தானிருக்கிறது.
கல்விக்கு ஒதுக்கப்பட்ட பணம்
பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்வது போல் நமது அரசாங்
கத்தார் கள்ளு, சாராயத்தை விற்று அதில் வரும் லாபத்தை எடுத்து கல்விக்காக
செலவு செய்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கல்வி சவுகரியமும், சம்பள
சவுகரியமும் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கள்ளு,
சாராயம் குடித்து, அதனால் அதிக வரும்படியையுண்டாக்கும் பொறுப்பை
நம்ம தலையில் வைத்திருக்கிறார்கள். நமது மக்கள் கற்ற கல்வி பெரிதும்
தேசத்துரோகத்திற்கே உபயோகப்பட்டு வரும் காரணமே வெகு குடும்பங்கள்
கெட்டதன் பலணாய் ஏற்பட்ட கள்ளு சாராயப் பணத்திலிருந்து படித்ததினால்
தான். இம்மாதிரி குடியில் வரும் லாபத்தினால் தான் படிப்புக்குச் செலவு
குடி அரசு
- 19270)
256
செய்ய வேண்டும் என்று ஏற்படுமானால் மக்கள் படிக்காமல் தற்குரியாக
இருந்தாவது உபாத்தியாயர்களெல்லாம் தெருவில் கல்லுடைத்து ஜீவனம்
செய்துக் கொண்டாவது கட்குடியை நிறுத்துவதே மேலானதென்பது என்
அபிப்பிராயம்.
படிப்பின் பலன்
இம்மாதிரிப் படிப்பு வலுத்ததின் பலனாய் படிப்பின் அவசியமில்லா
மல் வேறு வழியில் வாழக்கூடிய பெருத்த குடும்பங்களெல்லாம் பாழாகிப்
போய்க்கொண்டே வருகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு உயர்தரப் பள்ளிக்
கூடங்களென்பது அதிகமாய்க் கொண்டு வருகின்றதோ அவ்வளவுக்
கவ்வளவு அதில் படித்த பெரும்பான்மைப் பிள்ளைகளின் குடும்பங்கள்
கெட்டுக் கொண்டே வருகின்றன. உதாரணமாக பூமிகளின் சொந்தக்
காரர்களின் பெயர்களைக் காட்டும் செட்டில்மெண்ட்ரிஜிஸ்டர் என்னும் பதிவு
புஸ்தகத்தை வாங்கிப் பார்த்தீர்களானால் அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
40, 50 வருஷங்களுக்கு முந்திய செட்டில்மெண்ட்ரிஜிஸ்டரிலுள்ள பூமிக்குச்
சொந்தக்காரரின் பெயர்களை 10 வருஷத்துக்கு முன்னுள்ள புஸ்தகத்தைப்
பார்ப்பீர்களேயானால் 100 - க்கு 75 பாகம் மாறிப்போய்த்தானிருக்கும். அக்
காலத்தில் கவுண்டர், நாயக்கர், பிள்ளை, படையாச்சி, ரெட்டி, நாயுடு என்றிருப்
பது போய் இப்பொழுது அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், செட்டியார்
முதலிய உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், வியாபாரிகளாகியவர்கள்
பேருக்கே மாறியிருக்கும். காரணமென்னவென்றால், உயர்தரப் பள்ளிக்
கூடம் வந்தவுடனே எல்லாப் பிள்ளைகளும் அதில் படிக்கச் சேர்ந்து விடு
கின்றார்கள். குடியானவர்களும் தங்கள் பிள்ளைகளை அதிலேயே சேர்த்து
விடுகிறார்கள். அந்தப் பிள்ளைகளுக்குப் படித்துத்தான் ஜீவனம் செய்ய
வேண்டுமென்கிற அவசியமில்லாததாலும், “இந்தக் கூட்டங்களும் படித்து
விட்டால் உத்தியோகங் கொண்டே வாழவேண்டியவர்களாகிய நம்ம கூட்டத்
தார் வாயில் மண் விழுந்து விடுமே” என்கிற பயங்கொண்ட உபாத்தியாயர்:
களாலும் இப்பிள்ளைகள் சரியாகப் படிக்க முடியாமல்
5, 6 வருஷம்
பெஞ்சுக்கு வாடகைக் கொடுத்ததோடு தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும்,
சிகரெட், பீடி குடித்துக் கொண்டும், வேடிக்கை உடைகளை தரித்துக்
கொண்டும், பொறுப்பும் ஒழுக்கமுமற்ற சம்பாஷணைகள் பழகிக் கொண்டும்,
உல்லாசமாய்த் திரிந்து 2, 3 தடவை பரிட்சையில் தோல்வியுற்று கடைசியாய்
இனி படிப்பு வராது என்கிற முடிவுடன் வீடுபோய்ச் சேருகின்றதுகள். இந்தப்
பட்டணவாசல் பள்ளிப் பழக்கமானது பட்டிக்காட்டு வாசத்துக்குச் செளகரிய
மில்லாமல், வீடு வாசல்களும், விவசாயப் பண்ணைகளும் தங்களுக்குப்
பிடித்தமில்லாததாகி நோக்கமெல்லாம் பட்டணங்களிலேயே கொண்டுபோய்
விடுகிறது. அல்லது சிலருக்கு பட்டிக் காட்டிலேயே பட்டணங்கள் போல்
வீடுவாசல் கட்டி சுகமனுபவிக்க ஆசை ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம்
257
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
தங்கள் விவசாயம் கெடுவதோடும் தங்களுக்கு கிரமமாய் வரும் பொருள்
வருவாயும் கெடுவதோடு அதிக செலவும் ஏற்பட்டு அதன் மூலம் கடன்
காரர்களாகி வீண் விவகாரங்களில் ஈடுபட்டு கடைசியாய் இக்குடும்பச் சொத்
தானது விவகாரத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சத்தின் மூலமாகவும், வக்கீல்
களுக்குப் பீசின் மூலமாகவும், லேவா தேவிக்காரர்களுக்கு வட்டியின் மூல
மாகவும் போய்ச்சேர்ந்து விடுகிறது. இந்தக் காரணங்களால் இவர்கள் பூமிகள்
அவர்கள் பேருக்குப் பட்டா மாறுவதும் அல்லது அவர்கள் விலைக்கு
வாங்குவதுமாய் முடிந்து விடுகிறது. இனியும் ஒரு 50 வருஷத்திற்கு இக்கல்வி
முறை இப்படியே இருக்குமானால் நமது பூமிகளெல்லாம் உத்தியோக வக்கீல்
கூட்டத்தாருக்கும் லேவாதேவி கூட்டத்தாருக்குமே போய்ச் சேர்ந்து விடும்.
இப்பொழுதுள்ள மிராஸ்தார்களின் பிள்ளைகளெல்லாம் அந்தக் கூட்டத்தார்
களிடம் பண்ணையாளாகவும், குடிவாரக்காரர்களாகவும் போய்ச் சேர
வேண்டியதுதான்.
அரசியல் புரட்டு
அரசாங்கத்தாரும், கல்விக்காகக் கோடிக் கணக்கான ரூபாயைச்
செலவு பண்ணுகிறார்கள். அவ்வளவும் உபாத்தியாயர்களுக்குப் போவதா
யிருந்தால் உபாத்தியாயர்களுக்குக் கஷ்டமே இருக்காது. பணத்தையெல்
லாம் கல்வியின் பேரால் மேற்சொன்னபடி சாமான்களுக்கும், கட்டடங்
களுக்கும் மற்றும் பாதிரிமார்களுக்கும் உயர்ந்த சம்பளம் பெறும் உபாத்தியா
யர்களுக்கும் இவற்றை மேற்பார்வை பார்ப்பது என்பதாகப் பல பெரிய பெரிய
சம்பளமுள்ள உத்தியோகஸ்தர்களுக்குமே போய்விடுகிறது. இவ்வளவு
செலவுகளையும் அனாவசியமாய்ச் செய்துவிட்டு ஆரம்பாசிரியர்களையும்
பட்டினி போட்டுவிட்டு இந்த ஆசிரியர்களை ஆடு மாடுகளை விட கேவல
மாக மதிக்கிறார்கள்.
ஜனப் பிரதிநிதிகள் என்கிற சட்டசபை அங்கத்தினர்கள் முதலிய
அரசியல் வாழ்வுக்காரர்களோ உங்களிடம் வரும்போது உங்களிடத்தில்
ரொம்பவும் அனுதாபம் உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டு “உங்களுக்கு
சம்பளம் 40 ரூபாய் வேண்டும், 50 ரூபாய் வேண்டும்” என்ற ஆசை வார்த்தை
சொல்லி உங்களைத் திருப்தி செய்து உங்களால் தங்களுக்குக் கிடைக்கக்
கூடிய ஓட்டுக்களைப் பெற்றுக்கொண்டு போய்விடுகிறார்கள்.
பொது
ஜனங்களிடம் போகும் போது அவர்களைப் பார்த்து “சர்க்காரார் உங்களிடம்.
அதிக வரி வசூல் பண்ணுகிறார்கள். அனாவசியமாய் அதிகமான ஆள்
அம்புகள் வைத்து அரசாங்கச் செலவை பெருக்கிவிட்டார்கள். நாங்கள்
போய் சம்பளத்தையும் செலவையும் குறைத்து உங்களுக்கு வரியைக்
குறைக்கிறோம்”” என்று மேடை மேல் நின்று பேசிவிடுகிறார்கள். உங்களிரு
வரையும் ஏமாற்றி சட்டசபையில் போயிருந்து கொண்டு சட்டசபையில்
உட்கார்ந்து கொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் திருப்தி ஏற்படும்.
குடி அரசு
- 19270)
258
படியாக ஏதோ இரண்டு கேள்வி கேட்டதாகப் பாவனை காட்டிவிட்டு
உங்களையும் பொது ஜனங்களையும் வஞ்சிக்கிற காரியங்களுக்காக சர்க்கா
ருக்கு உள் உளவாயிருந்து தங்களுக்குப் பெருமையும், உத்தியோகங்களும்,
பதவியும் கிடைப்பதற்கும், தங்கள் சொந்தக் காரியங்கள் ஏதாவது சாதித்துக்
கொள்ளுவதற்கும் ஆளாகி விடுகிறார்கள். வரி குறைப்பதும் சம்பளம்
கூட்டுவதும் ஒன்றுக்கொன்று பொருந்தாத விஷயம். வரியையும் குறைத்து
உங்கள் சம்பளத்தையும் உயர்த்த வேண்டுமானால் பெரிய உத்தியோகஸ்
தர்களுடைய சம்பளத்தையும் நான் மேலே சொன்ன வீண் செலவுகளையும்
குறைக்கும்படிச் சொல்லுவதற்கு இவர்களுக்கு தைரியம் வேண்டும். இவர்
களே மாதம் 2000, 3000, 4000, 5000 ரூபாய்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு
மந்திரி, தலைவர் முதலிய பதவிகளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டும்,
இவர்களே இப்பேர்பட்ட பதவிகளை மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்து,
அவர்களை ஆதரித்து அதன் மூலம் தாங்கள் பிழைக்கப் பிரயத்தனப்பட்டுக்
கொண்டும் இவர்களுடைய செலவுக்கே தினம் 10,15, 40, 50 வேண்டுமென்று
சர்க்காரைக் கேட்டுக் கொண்டும் இவர்கள் போக்குவரத்துக்கே முதலாவது
இரண்டாவது வகுப்பு இரட்டைப் படிகள் வாங்கிக் கொண்டும், இவர்கள்.
நடவடிக்கை நடத்தும் கட்டடங்களுக்கே 2 லக்ஷம்,
3 லக்ஷம், 2 கோடி, 4 கோடி
அனுமதித்துக் கொண்டு ராஜபோகமனுபவிப்பவர்கள் வேறு யாருடைய
எந்தச் செலவைக் குறைத்து வரி உயர்த்தாமல் உங்களுக்கு சம்பளத்தை
அதிகப்படுத்தக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே, இவ்வித
அரசியல் புரட்டுகள் நமது நாட்டில் உள்ள வரையிலும் உங்களைப் போன்ற
வர்கள் இவர்களை ஆதரித்து இப்புரட்டர்களை மரியாதை செய்கிறவரை:
யிலும் உங்களுக்கு மாத்திரமல்ல இந்த நாட்டுக்கே விமோசனம் இல்லை
யென்பதுதான் என் அபிப்ராயம். இனியாவது இந்த அரசியல் புரட்டர்களின்
சூழ்ச்சிகளிலிருந்து தப்புவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.
முடிவுரை
எனவே, இவை ஒவ்வொன்றையும், இன்னமும் கிளரக் கிளர மிகவும்
மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம்மகாநாட்டைப் பொறுத்த
வரையிலும் இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்தவரை:
யிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும் குறைகளையுமறிந்து நான்
மிகவும் அனுதாபப்படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம் மரியாதை
முதலியன உயரவேண்டு மென்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதற்
காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கும் ஆசையிருக்
கிறது. ஆனால் அந்நோக்கங்களையும், கிளர்ச்சிகளையும் உங்கள் சுய
நன்மைக்கு மாத்திர மென்றில்லாமல் நமது மக்களின் உண்மையான
ஆரம்பாசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
கல்வி விஷயத்தில் நமது நாட்டுக்கு ஏற்பட வேண்டிய திருத்தத்தில், உங்களு
259
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
டைய உதவியும், தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலியவற்றின்
உதவியும் ரொம்பவும் வேண்டியிருக்கிறது. உண்மையான தேசாபிமானக்
கண்ணோடு பார்ப்பீர்களானால் உங்களுக்கு இவைகளெல்லாம் விளங்காமற்
போகாது. இங்கு விஜயம் செய்திருக்கும் தாலூகா, ஜில்லா, போர்டு அங்கத்
தினர்களையும், தலைவர்களையும் இவ்விஷயங்களையெல்லாம் கவனித்து
உங்களுக்கு அநுகூலமாயிருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். என்னை
நீங்கள் ஒரு பொருட்டாய் மதித்துத் தலைவனாகத் தேர்ந்தெடுத்ததற்கு என்
மனதில் சரியென்று பட்டதை உங்கள் முன் கொஞ்சமும் ஒளிக்காமல்
பேசியிருக்கிறேன். இவற்றுள் கொள்ளத்தக்கதும் தள்ளத்தக்கதும் இருக்க
லாமென்று நினைக்கிறேன். ஆதலால் உங்களுடைய அறிவையும் ஆற்ற
லையும் இவைகளுள் செலுத்தி தள்ளத் தக்கதைத் தள்ளி, கொள்ளத்தக்கதைக்
கொண்டு அமுலில் கொண்டுவர வேண்டுகிறேன்.
1)
- 24.4.27 போளூர்
ஆரம்பாசிரியர் மாநாடு தலைமையுரை.
ப்பு
ளூர்ஆ
நாடு
த
யு
குடி அரசு - சொற்பொழிவு - 01.05.1927
குடி அரசு
- 19270)
260
நமது பத்திரிகை
சகோதர வாசகர்களே!
நமது “குடி
அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா
வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப
இதழில் “குடி அரசு" என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது
பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது
வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி
இருக்கிறோம்.
இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப
முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு
குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம்.
நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும்,
சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை
யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர்.
ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில்
சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த
கொஞ்ச நாட்களுக்குள் “குடி அரசு” என்று ஒரு வாரப் பத்திரிகையும்,
“கொங்கு நாடு” என்று ஒரு மாதாந்திரமும் நடத்தப் போவதாய் 19.1.23
தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.
இவ்விஷயத்தை முதலில் ஸ்ரீமான் திரு.வி.கல்யாணகந்தர முதலியார்.
அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையை கேட்டவுடன்
சந்தோஷப்பட்டு “இப்படி ஒரு பத்திரிகை வேண்டியது தான். அதற்கு நீயே
சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான
சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது. ஒரு
கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும், நடந்த
வரை லாபம், நடத்துங்கள்” என்றார். பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு
அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டு “சீக்கிரத்தில்
வெளியாக்க வேண்டுமென்று விரும்புவதாகவும், வெளியாகத் தாமத
261
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மேற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி
வரும் படியும் சொன்னார்.” பிறகு ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார்.
அவர்களிடம் சொன்னேன். அவர் “இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை
கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டு
விட்டு நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது
சமயம் மிகவும் அவசியமானது ஆனதால் கண்டிப்பாய்ப் போகக் கூடாது”
என்று சொல்லி விட்டார். அதன் பேரில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்து
விட்டு மறுபடியும் ஒத்துழையாமைக்காகவே உழைத்தேன். தற்செயலாய்
வைக்கம் சத்தியாக்கிரகம் ஏற்பட்டது. ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் அவர்களும்.
வைக்கத்திலிருந்து “என்னை பிடிக்கப் போகிறார்கள்.
நான் இதோ
ஜெயிலுக்குப் போகிறேன். வேறு யாரும் இல்லை. நீ வந்து ஒப்புக்கொள்”
என்று எழுதின கடிதமும் தந்தியும் என்னைக் குடும்பத்துடன் வைக்கத்திற்குப்
போகும்படி செய்து விட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும்போதும் இதே.
எண்ணம்தான். அதாவது வெளியில் போனதும் பத்திரிகை நடத்த வேண்டும்.
என்கிற ஆவல் அதிகமாயிற்று. அதுபோலவே வெளியில் வந்ததும்
பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்து விட்டேன். அதற்கேற்றாற்போல் திருப்
பாப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞான சிவாச்
சார்ய சுவாமிகளும் கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்
பட்டு அவர்களை இங்கு அழைத்து அவர்களைக் கொண்டே ஆரம்ப விழா
நடத்திவிடலாம் என நினைத்து, கோயம்புத்தூர் சென்று அழைத்ததும்,
யாதொரு ஆக்ஷேபணையும் சொல்லாமல் அவர்கள் ஒப்புக்கொண்டு
ஈரோட்டிற்கு வந்து, ஆரம்ப விழா நடத்திக் கொடுத்தார்கள். அது சமயம்
பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி ஞானியார் சுவாமிகளை
கேட்டுக்கொண்ட போது, “அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தா
லும்அவைகள் தங்கள் மனச்சாக்ஷிக்கு உண்மை என்று பட்டதை தெரிவிக்க
அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்றப்
பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்க
ளுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது எமது நோக்கம்”
என்று சொல்லி இருக்கிறேன். ஞானியார் சுவாமிகளும் பத்திரிகாலயத்தைத்
திறக்கும்போது, நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை.
போன்ற கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை.
“உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது.” “சமத்துவம்
என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும்.” “குடி அரசின்” கருத்து இதுவே
என நான் அறிந்துகொண்டேன்.
“சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்டும்.” “இவை
குடிஅரசின் முதல் கொள்கையாய் விளங்க வேண்டும்.” இப் பத்திரிகையில்
ஸ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும்
குடி அரசு
- 19270)
262
உண்டு” என்று ஆசிர்வதித்திருக்கிறார். முதல் இதழ் தலையங்கத்திலும் நமது
நோக்கத்தை வெளியிட்ட தலையங்கத்திலும் நாம் குறிப்பிட்டிருப்பதாவது,
“ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும்”. “இதை அறவே
விடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின்.
நோக்கமன்று.”
“மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும்
ஓங்கி வளர வேண்டும்.”
“உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும்
ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி
ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம்
வளர வேண்டும்.” ....... _இன்னோறென்ன பிற நறுங்குணங்கள் நம் மக்கள்
அடையப்பாடுபடுவது நமது நோக்கமாகும்.”
“எவர் எனக்கு இனியர் இவர் எனக்கு இன்னார் என்ற விருப்பு
வெறுப்பின்றி,”
“நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக் கண்மேச் சென்றிடித்தற்
பொருட்டு” என்ற வாக்கைக் கடைபிடித்து நண்பரே யாயினுமாகுக. அவர்தம்
சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்
கப்படும்...” என்று எழுதி இருக்கிறோம். இவையாவும் 2-5-25 தேதி குடி
அரசில் காணலாம்.
அடுத்தபடி
ஆறு மாதம் முடிந்த இதழில் “நமது பத்திரிகை” என்னும்
தலையங்கத்திலும்,
“குடிஅரசு” குறிப்பிட்ட கருத்தைப் பிரசாரம் செய்யும் பத்திரிகையே
அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால் ......பிரதி
வாரமும் “குடி அரசு” தனது ஆத்மாவை வெளிப்படுத்தும் (தத்துவத்தை
விளக்கும்) போது கண்ணீர் கொட்டாமலிருக்க முடிவதே இல்லை. இதன்
பலனால் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்வோராகிய பிராமணர் முதலிய
சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர் என்று சொல்வோராகிய பல ராஜ தந்திரி
களுக்கும் விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் நமது “குடி
அரசு” ஆளாக வேண்டியிருப்பதால் இது சீக்கிரத்தில் பாமர ஜனங்களின்
செல்வாக்கைப் பெற முடியாமலிருப்பது ஆச்சரியமல்ல என்றும்,
“உண்மையில் “குடி அரசுக்கு” எந்த பிராமணனிடத்தும் குரோதமோ
வெறுப்போ கிடையாது.
ஆனால் பிராமணன் உயர்ந்தவன் என்றும்,
263
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மற்றவர்கள் தீண்டாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்பன
போன்ற இழிவான மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று
எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார் தான்
முன்னணியில் இருக்க வேண்டும், மேன்மையுடன் பிழைக்க வேண்டும்,
மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.
என்று எண்ணிக்கொண்டு அதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளிடத்திலும் தான்
குடி அரசுக்குக் குரோதமும் வெறுப்பும் இருப்பதுடன், அதை அடியோடே
களைந் தெறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு உழைத்து வருகிறது”
என்றும்,
“குடிஅரசு” ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும், அது வரை ஆயிரத்துச்
சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள், அதனைப் படிக்க வேண்டிய
அளவு ஜனங்கள் படிக்கவில்லை என்றும், பாமர ஜனங்கள் சரியானபடி குடி
அரசை ஆதரிக்கவில்லையானால் அது தானாகவே மறைந்து போகவேண்டி
யதுதான் அதன் கடமையே அல்லாமல் வியாபார தோரணையாய் நடந்து
வராது” என்றும் எழுதியிருந்தது, (இதை 1-11-25 தேதி இதழிற் பார்க்கலாம்!
பிறகு ஒரு வருஷம் முடிந்து, இரண்டாவது வருஷ ஆரம்ப இதழில்
“நமது பத்திரிகை” என்ற தலையங்கத்திலும், “இதுவரை நமக்குள்ள 2000
சந்தாதாரர் களில் நால்வர் அதிருப்திக்கே ஆளாகிறோம் என்று எழுதிவிட்டு,
“குடிஅரசு” எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ,
கீர்த்திக்கோ, நடைபெற வில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்
கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை:
இல்லையானால்,
அது தானே மறைந்து விடுமே யல்லாமல், மானங்கெட்டு
விலங்குகளைப் போல் வாழாது, “குடி அரசு” தோன்றிய பிறகு அது ராஜீய
உலகத்திலும், சமூக உலகத்திலும், பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. என்று
பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம்,
என்றும் எழுதி இருக்கிறோம்.
ஆகவே, இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம்
ஆரம்ப இதழில் அதே தலையங்கத்துடன் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படு
கிறோம். முதலாவதாக, ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதா
வது “குடி அரசு”க்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒரு
வருஷத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும் இப்போது இரண்டு வருஷத்
தில் நாலாயிரத்து ஐந்நூறு சந்தாதாரர்களும் இருப்பதால் கூடுமான வரையில்
தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
“ ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னாற் குறிப்பிட்ட கொள்கை:
களில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக் கொண்டபடி நடந்து வந்தி
குடி அரசு
- 19270)
264
ருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, “குடி அரசு”
குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும்.
என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்நாலாயிரத்து ஐந்நூறைக் கொண்டு
நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடைய
வில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள்.
காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர்.
களை ஏற்படுத்திக் கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை.
ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும்
250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மன
மார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள் தோறும் “குடி
அரசின்” வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை
கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், என்பதும் எனக்குத்
தெரியும். அவர்கள் “குடி அரசுக்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர்.
களைச் சேர்த்துக் கொடுத்ததற்காகவும் “குடி அரசுக் கொள்கைகளைப்
பரப்பப் பாடுபட்டதற்கும், நான் மனப்பூர்வமாய் நன்றி செலுத்துகிறேன்.
“குடிஅரசு "க்கு இரண்டாவது வருடத்தில் நஷ்டமில்லை. முதல் வருடத்தின்
நஷ்டம் அடைபட வேண்டும். ஆனால் இன்னமும் கொஞ்சம் நல்ல இதழில்
இன்னும் நாலு பக்கம் அதிகப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் இருந்து
வருகிறது. இக் காரியங்களுக்கு இப்போது ஆகும் செலவை விட இன்னமும்
வருஷம் ஒன்றுக்கு 2000 ரூ. அதிகமாகச் செலவு பிடிக்கும்.
இனியும்
கொஞ்சம் சந்தாதாரர்கள் அதிகமானால் இவைகளைச் செய்ய செளகரிய
மாயிருக்கும்.இவ்வருஷம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் அதிகமாய்
இல்லை என்றே நினைக்கிறேன்.
பொதுவாக நமது பிரசங்கத்தினாலும் “குடி அரசி”னாலும் நான் செய்து
வந்த பிரசாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன்,
அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதம் என்பதைக்
கண்டித்தேன், மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதச்சடங்கு
என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; குருக்கள் என்பவர்களைக் கண்டித்
திருக்கிறேன்; கோவில் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சாமி என்பதைக்
கண்டித்திருக்கிறேன்; வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்கிறேன்:
சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; புராணம் என்பதைக் கண்டித்
திருக்கிறேன்;
பார்ப்பனீயம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்;
ஜாதி
என்பதைக் கண்டித்திருக்கிறேன்; அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்
கிறேன்; உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; நீதி ஸ்தலம்
என்பதைக் கண்டித்திருக்கிறேன்; நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்
திருக்கிறேன்; நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்;
ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; பிரதிநிதிகள்
என்பதைக் கண்டித்திருக்கிறேன்; தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன்;
265
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
கல்வி என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக்
கிறேன்; ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, சி.
ராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த
நண்பர்களைக் கண்டித்திருக்கிறேன்; இன்னும் என்னென்னவற்றை யோ யார்.
யாரையோ கண்டித்திருக்கிறேன், கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன்;
எதைக் கண்டித்திருக்கிறேன், எதைக்கண்டிக்கவில்லை என்பது எனக்கு
ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று
பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும்
வையவும் துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை.
கண்டிக்கத்தகாத, வையத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என்
கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது. இவைகளன்றி எனது வார்த்தை
களும், எழுத்துகளும், செய்கைகளும் தேசத் துரோகமென்றும், வகுப்புத்
துவேஷமென்றும், பிராமணத் துவேசமென்றும், மான நஷ்டமென்றும்,
அவ
தூறு என்றும், ராஜதுரோகம் என்றும், ராஜத் துவேஷமென்றும், நாஸ்திக
மென்றும், மத தூஷணை என்றும், சிலர் சொல்லவும் ஆத்திரப் படவும்
ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேசபக்தர்கள்
என்பவர்கள் என்னை வையவும் என்னை தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி
அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன். இந்த இன்பமற்ற காரியங்களை
நான் ஏன் செய்ய வேண்டும்? சிலருக்காவது மன வருத்தத்தையும், அதிருப்தி
யையும் கொடுக்கத்தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே
யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும், நாம்
ஏன் இக்கவலையும் இவ்வளவு தொல்லையும் அடையவேண்டும்?
நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன்.
நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா? ஒரு
தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவியுண்டா?
இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல் இருக்கிறது.
என்பதாக நினைத்து விலகி விடலாமா என்று யோசிப்பதுமுண்டு.
ஆனால்
விலகுவதில் தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுள் காலமும்
தீர்ந்துவிட்டது. இனி நாலோ அய்ந்தோ அல்லது அதிகமாயிருந்தால் பத்து
வயது காலமோ இருக்கலாம். இந்த கொஞ்ச காலத்தை ஏன் நமது மனச்
சாட்சிக்கு விட்டு விடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம்
செய்யப் போகிறோம்? என்பதாக கருதி மறுபடியும் இதிலேயே உழன்று
கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை. உண்மையில் நாம் முன்
சொன்ன அரசியல் மத விஷயம் முதலியதுகளைக் கண்டிக்க நேரிட்டபோது
உண்மையான அரசியல் மத இயல் இவைகளை நாம் கண்டிக் கவே இல்லை.
எதைப் பார்த்தாலும் புரட்டும், பித்தலாட்டமும் பெயரைப் பார்த்து ஏமாறத்
தகுந்ததாயிருக்கிறதே அல்லாமல் தத்துவங்கள் எல்லாம் நமக்கும் நமது
நாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் கொஞ்சங் கூடரிபேர்.
செய்வதற்கில்லாமல் அடியோடு அழித்து மறுபடியும் புதிதாய் உண்டாக்க
குடி அரசு
- 19270)
266
வேண்டியதாகவே இருக்கிறது. நமது காலத்தில் இவை திருத்தப்பாடடையும்
என்கின்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லா விட்டாலும் வேறு யாராவது
மகாத்மாவைப் போன்ற மகான்கள் வந்தால் அவர்களுக்கு பக்குவம் செய்து
வைத்திருக்கக் கூடாதா என்றும், அதுவும் முடியாவிட்டால் பலன் எப்படி
யானாலும் கடமையைச் செய்ய வேண்டியதுதானே என்கிற முடிவும்
கிடைக்கிறது. ஆகவே, இக்கஷ்டமானதும், மனதுக்கு இன்பத்தைக் கொடுக்
கக்கூடுமானதுமான இக்காரியத்தில் இறங்கிவிட்டோம். உலகம் ஒப்புக்
கொண்டாலும் சரி தள்ளிவிட்டாலும் சரி நமக்கு அதைப்பற்றி கவலை
யில்லை. நமது கடமையை எப்படி நாம் பிரதானமாய்க் கருதி இறங்கி இருக்கி
றோமோ அது போலவே பொது ஜனங்களும், அதாவது இக்கடமையைச் சரி
என்று எண்ணியவர்கள் தங்கள் தங்களது கடமையையும் எண்ணி அக்
கடமையைச் செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.05.1927
267
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
காங்கிரஸ் புரட்டு
காங்கிரஸ் என்கிற புரட்டு என்றைக்கு நம்ம நாட்டை விட்டு ஒழியு
மோ,அன்றுதான் நம்ம நாடு ஒரு சமயம் ஏழைகள் கஷ்ட மொழிந்து மக்கள்
சமத்துவமடைந்து ஒற்றுமை ஏற்பட்டு தரித்திரம் நீங்கி விடுதலை அடைவ
தானால் அடையக்கூடும் என்றும், எதுவரை இக்காங்கிரஸ் புரட்டு நமது
நாட்டில் இருக்குமோ அதுவரை நமது நாட்டில் தற்காலமிருந்துவரும் கஷ்டங்
கள் கொஞ்சமும் நீங்க இடமில்லாமல் மேலும் மேலும் ஊர்ந்து கொண்டே
வருவதுடன் படித்த கூட்டமும், பணக்காரக் கூட்டமும் மாத்திரம் சில
நாளைக்கு இனியும் கொஞ்சம் மேன்மையாய் வாழ்ந்துவிட்டு பிறகு எல்லோ
ரமே நீங்கினவர் போலவும் வாலில்லாத குரங்கு போலவும் வாழவேண்டியது
தானே ஒழிய வேறில்லை என்பது நமது அபிப்ராயம் என்பதாகப் பல
தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கிறோம். எவ்வளவு தூரம் நாம் எடுத்துக்
காட்டியும் இன்னமும் மக்களை காங்கிரஸ் பெயரைச் சொல்லி ஏமாற்றும்
கூட்டத்தார் கொஞ்சமும் இதை லக்ஷியம் செய்யாமல் மக்களின் அறியாமை:
யை உபயோகப்படுத்திக் கொண்டு எடுத்ததற்கு எல்லாம் காங்கிரசு காங்கிரசு
என்று பேசி பாமர மக்களைக் குட்டிச் சுவராக்கி வருகிறார்கள். ஏனெனில்
இந்த காங்கிரஸ் மந்திரத்தை பார்ப்பனரும் அவர்கள் கொள்கை கொண்ட
பார்ப்பனரல்லாதாரும் மற்றும் பல பொறுப்பற்ற ஆசாமிகளும் தாங்கள்
தங்கள் சுயநலத்திற்கு ஒரு பெரிய சாதனமாகக் கொண்டுவிட்டார்கள். இதை
மாற்றும்படிச் செய்வதென்றால் பெரிய கஷ்டப்படவேண்டிய நிலைமையில்
இருக்கிறது. தூங்குபவர்களை எழுப்புவதென்றால் சாதாரணமாய் ஒரு சப்தத்
திலோ இரண்டு அல்லது மூன்று சப்தத்திலோ எழுப்பி விடலாம். தூக்கம்
இல்லாமல் தூங்குவது போல வேஷம் போடுகிறவர்களை எப்படி எழுப்ப
முடியும். கைகால் ஒடியும்படி தட்டினால் ஒழிய ஒருக்காலமும் எழுந்திருக்க
மாட்டார்கள் என்பதே நமது அபிப்பிராயம். நாம் காங்கிரஸின் புரட்டுக்களை
கண்டிக்கும் போதும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும்போதும்
விளக்கமாகவும், விபரமாகவும் ஒவ்வொரு விஷயமாய் எடுத்து பிரித்துப்
பிரித்துச் சொல்லி அது ஏற்பட்டது முதல் அது ஏற்படாததற்கு முன் முதல்
உள்ள நிலைமையும் அதனால் நமது நாட்டிற்கும் குறிப்பாய் ஏழை மக்க
ளுக்கும் தொழிலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் மற்றும் தாழ்த்தப்பட்ட
மக்கள் என்பவர்களுக்கும் ஏற்பட்ட கஷ்டங்களையும் நாட்டின் செல்வ
நிலைமை, கைத்தொழில் நிலைமை, வியாபார நிலைமை, விவசாய நிலைமை,
குடி அரசு
- 19270)
268
நாணய நிலைமை, ஒழுக்க நிலைமை, நீதி நிர்வாக நிலைமை முதலியது
களையும் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். நன்றாய்
எழுதியும் வந்திருக்கிறோம். அநேகரிடம் நேரில் பேசி அவர்களை ஒப்புக்
கொள்ளும்படி செய்தும் வந்திருக்கிறோம். இவ்வளவையும் தெரிந்த பலரும்
பல பத்திரிகைக்காரர்களும் இவைகளுக்குக் கொஞ்சமாவது சமாதானம்
சொல்லாமல் ஒன்றும் தெரியாதவர்களைப் போல் மறுபடியும் பேச்சு பேச்சுக்கு
காங்கிரஸ் காங்கிரஸ் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
சிலர்
தாங்களாகப் பார்ப்பனரைத் திட்ட வேண்டிய சமயம் வந்தால் மாத்திரம் அந்த.
சமயம் 2 வார்த்தை ஜாடை மாடையாகக் காங்கிரசைக் கண்டித்து விட்டு
அதுவும் தாங்கள் மறுபடியும் புரண்டு கொள்வதற்கு இடமிருக்கும்படியாக
வைதுவிட்டு தங்களுக்கு அவசியமிருக்கும் போது திரும்பவும் காங்கிரஸ்
காங்கிரஸ் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். இது சமயம் சென்னை
மாகாணத்திலாவது தமிழ் நாட்டிலாவது காங்கிரஸ் பேரைச் சொல்லாமல்
நமது பத்திரிகை “குடி அரசைத்” தவிர ஒன்று கூட இல்லை என்றே சொல்ல
லாம். ஏறக்குறைய எல்லாத் தலைவர்கள் என்போர்களும், தேசாபிமானிகள்'
என்போரும், தேசபக்தர்கள் என்போரும் இதே மந்திரமாகத்தான் இருக்
கிறார்கள். சென்ற தேர்தலில் காங்கிரஸ் புரட்டுக்குக் கொஞ்சம் வெற்றி ஏற்
பட்டு விட்டதாக ஏற்பட்ட பிறகு ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும், ஜஸ்டிஸ்
கட்சிப் பத்திரிகைகளுக்கும் கூட அந்த மயக்கம் கொஞ்சம் ஏற்பட்டிருப்பதாக
நமக்குத் தெரியவருகிறது. ஆகவே, இவற்றை இப்படியே விட்டுக் கொண்டு.
வந்தால் சில படித்தவர்களும், சில பத்திரிகைக்காரரும், சில தேசீயத்
தலைவர்கள், தேசபக்தர்கள், தேசாபிமானிகள் என்போர்களும் ஏதோ ஒரு
விதத்தில் பதவி, பட்டம், உத்தியோகம், வயிர்பிழைப்பு முதலியதுகள் பெற்று.
காலம் கழித்து வரலாமே அல்லாமல் ஒருக் காலமும் நமது நாடு முன் சொன்ன
கேடுகள் நீங்கி முன்னேற்றமடையும் என்கிற எண்ணமே கடுகளவாவது
நமக்கு இல்லை. அதோடும் முன் சொன்னது போலவே பாழாகிவிடுமென்றே
சொல்லு வோம்.
மகாத்மா ஆதிக்கத்திலிருந்த காங்கிரசை நீக்கி இப்போதிய காங்
கிரசை நாம் பேசுகிறோம். காங்கிரஸ் என்றால் என்ன? அது கொள்கைக்காக
மதிக்கப்படுவதா? அதன் பெயருக்காக மதிக்கப்படுவதா? அதனால் ஏற்படும்
பலனுக்காக மதிக்கப்படுவதா? இந்தியா அரசியலில் முன்னேற்றம டைய
சுயராஜ்யம் பெற இந்தியர்களால் ஏற்படுத்திக் கொண்ட ஒரு மகாசபை
அல்லது ஒரு இயக்கம் அல்லது ஒரு ஸ்தாபனம் என்பதானால் சுயராஜ்யம்
என்றால் என்ன? இந்த சுயராஜ்யத்திற்கு காங்கிரஸ் திட்டமென்ன? இந்தியர்.
கள் என்றால் யார்? அவர்களில் யார் யார் காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார்கள்?
பெரும்பான்மையான இந்திய மக்கள் வாழவும் பெரும்பான்மை யான
இந்தியக் குறைகள் நீங்கவும் காங்கிரசில் என்ன திட்டம் இருக்கிறது. இது நிற்க,
காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு இந்திய மக்களுக்கு அது எந்தத் துறை யில்
269
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
அனுகூலம் செய்து இருக்கிறது? அது ஏற்படாததற்கு முன் அத்துறைகள்
எப்படி இருந்தது? அதனால் நமக்கு ஏற்பட்ட லாபம் என்ன? காங்கிரசுக்கு
முன்னால் அரசியலில் நமது சுதந்திரம் என்ன? இப்போது என்ன ? காங்கி
ரசுக்கு முன்னால் நமது அரசியல் செலவு என்ன? காங்கிரசுக்கு முன்னால்
நாம் செலுத்திய வரி என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்னால்
நமக்குள் இருந்த ஒற்றுமை என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்
னால் பார்ப்பனரல்லாதார் நிலைமை என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு
முன் பார்ப்பனர் நிலைமை என்ன? இப்போது என்ன? காங்கிரசுக்கு முன்
னால் அரசாங்கத்தார் நம்மிடம் வைத்து இருந்த மதிப்பு என்ன? இப்போது
என்ன? காங்கிரசுக்கு முன்னால் நீதி வழங்கும் முறை என்ன? இப்போது
என்ன? காங்கிரசுக்கு முன்னால் மக்கள் அறிவு, ஒழுக்கம், நாணையம் இதுகள்
எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது ?
காங்கிரஸ் ஒரு கூட்டத்தினர்க்கே நலனை அளித்து மற்றொரு
கூட்டத்திற்கு இழிவை அளிப்பதானால் அது பொது இயக்கமாகுமா?
இந்தியாவில் உள்ள பல வகுப்பார் அதாவது மகம்மதியர், கிறித்தவர், மகமதிய
ரல்லாதார், தீண்டாதார், சீக்கியர், புத்தர், பார்சி, யூதர் முதலிய பல வகுப்
பாரிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள் காங்கிரஸை ஒப்புக் கொள்ளு
கிறார்களா அல்லது அந்தந்த சமூக வகுப்பு மகாநாடுகள் காங்கிரசை ஒப்புக்
கொள்ளுகிறதா?
ஏழரை கோடி மக்களுள்ள முஸ்லீம்களின் சங்கங்கள் காங்கிரசை
ஒப்புக்கொள்ளுகின்றதா? 6 கோடி உள்ள தீண்டாதார் அல்லது தாழ்த்தப்
பட்டவர்கள் என்பவர்கள் காங்கிரசை ஒப்புக் கொள்ளுகிறார்களா? புத்த
சமூகமும் சீக்கிய சமூகமும் காங்கிரசை ஒப்புக் கொள்ளுகின்றதா? சுமார் 12
கோடிக்கு மேல்பட்ட மகமதியரல்லாதாராகிய இந்துக்கள் என்று சொல்லிக்
கொள்வோர் தங்களுக்கு உள்ள இந்து மகாசபை மூலமாகவோ, பார்ப்பன
சபை மூலமாகவோ, ஆரிய சபை மூலமாகவோ, பார்ப்பனரல்லாதார் சபை
மூலமாகவோ மற்றும் பல வகுப்பு சமூக மூலமாகவோ காங்கிரசு ஒப்புக்
கொள்ளப்பட்டிருக்கிறதா?
இச்சபைகளை அரசாங்கமாவது ஒப்புக்
கொண்டிருக்கிறதா?
அல்லது அரசியலுக்கு காங்கிரஸ் ஒன்றுதான்; அதைவிட வேறு
ஸ்தானம் இல்லை என்பதையாவது காங்கிரஸ் சொல்ல முடியுமா? மிதவாதக்
கட்சி, ஓம் ரூல் கட்சி, சுயேச்சை கட்சி, ஜஸ்டிஸ் கட்சி ஆகியதுகளைவிட
சர்க்காரில் காங்கிரசுக்கு என்ன அதிகமான மரியாதை இருக்கிறது? நாட்டி
லாவது என்ன மரியாதை இருக்கிறது? காங்கிரசுக்கு நிலையான ஒரு குறிப்
பிட்ட கொள்கை என்ன இருக்கிறது? அதற்கெனக் குறிப்பிட்ட நாணயம்
என்ன இருக்கிறது? சுமார் நாற்பது வருஷத்துக்குள்ளாக காங்கிரஸ் எந்தெந்த
கட்சியார் கைக்குப் போய் வந்திருக்கிறது? காங்கிரசைக் கைப்பற்றுபவர் தன்
குடி அரசு
- 19270)
270
இஷ்டம் போல் காங்கிரசை நடத்தக்கூடியதாய் இருக்கிறதே அல்லாமல்,
காங்கிரசில் சேருகிறவர்கள் காங்கிரஸ் சொல்கிறபடி நடக்க வேண்டும்
என்கிறதாக ஏதாவது நிபந்தனை இருக்கிறதா?
அது ஏதாவது ஒரு சட்டப்படி கட்டுப்பட்ட சபையா? அதற்கு ஏதாவது
கொள்கை, விதி முதலியதுகள் ஏற்படுத்தி மக்கள் கட்டுப்படத் தகுந்த மாதிரி
சட்டப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? அல்லது கட்டுப்பட வேண்டிய
அவசியமிருக்கிறதா? அல்லது யோக்கியர்கள் நாணயக்காரர்கள் ஒழுக்கமுள்.
ளவர்கள் ஆகியவர்கள் தவிர மற்றவர்களை அதில் சேர்க்க முடியாதபடி
அதற்கு ஏதாவது பந்தோபஸ்து ஏற்படுத்தி இருக்கிறதா? நாளைக்கு வேறு
ஒரு மனிதன் 10 லக்ஷமோ, 20 லக்ஷமோ,1 கோடியோ ரூபாய் சிலவு செய்தால்
காங்கிரசைத் தன் இஷ்டப்படியெல்லாம் திருப்ப முடியுமா முடியாதா?
சர்க்காருக்கு உள் உளவாயிருந்து அரசாங்கத்திற்கும் ஏதோ ஒரு வகுப்புக்கும்
அநுகூலமாகவும் தேசத்திற்கும் மற்ற வகுப்பாருக்கும் ஆபத்தாகவும் காங்கி
ரசில் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியுமா முடியாதா? அப்படி இதுவரை
நடக்கவில்லை என்பதாக யாராவது உறுதி கூறமுடியுமா?
இம்மாதிரி பொருப்பில்லாததும், எடுப்பார் கைக்குழந்தையாகவும்
கைப் பிடித்தவனுக்கெல்லாம் பெண்டாகவும் உள்ளதும் அயோக்கியர்
களுக்கும் துரோகிகளுக்கும் தங்கள் தங்கள் இஷ்டம் போல் காரியத்தைச்
சாதித்துக் கொள்ளக்கூடியதுமான ஒரு ஸ்தாபனத்தை இதெல்லாம்
தெரிந்தும்
தேசப் பொது ஸ்தாபனமென்று யாராவது சொல்வார்களானால் அவர்கள்
அறிவாளிகளா? யோக்கியர்களா? ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்காரும்
எ.ரங்கசாமி ஐயங்காரும் உண்மையிலேயே நமது நாட்டு பொது அரசியல்
ஸ்தாபனம் என்பதற்கு முறையே தலைவராகவும், காரியதரிசியாகவும் இருக்க
யோக்கியதை உள்ளவர்களா? இவர்களைத் தெரிந்தெடுக்கும் ஜனங்களும்
ஸ்தாபனங்களும் ஜனப் பிரதிநிதியாவார்களா? ஜனப் பிரதிநிதியாக யோக்கி
யதை உடையவர்களா? அல்லாமலும் இவற்றைச் சொல்லுவதினாலேயே
நம்மை காங்கிரஸ் காங்கிரஸ் என்று கத்துகிறவர்களை விட தேசாபிமானத்
தில் குறைந்தவன் என்று யாராவது சொல்லக்கூடுமா? இதைத்தவிர தேசாபி
மானி என்று காட்டிக் கொள்வதற்கு உள்ள பரீகைஷ எதிலாவது மற்றவர்.
களைவிட நாம் குறைந்திருக்கிறோமா? அல்லது நமக்கு தேசாபிமானம்
இருக்க நியாயமில்லை என்று சொல்லுவதற்கு ஏதாவது இரகசியமோ
ஆதாரமோ இருக்கிறதா?
“காங்கிரஸ் பிரசாரம் செய்கிறவர்கள் அதிகமான கஷ்டமும் தியாக
மும் அடையவும், செய்யவும் வேண்டியிருக்கிறது. அதற்கு எதிர்பிரசாரம்.
செய்கிற நமக்கு சுகமும் லாபமும் இருக்கிறது” என்று யாராவது சொல்ல
முடியுமா? காங்கிரசிலிருப்பவர்களுக்கு இன்னமும் பதவியும், பட்டமும்,
உத்தியோகமும், அவர்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகமும் சர்க்கார்
271
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
சிநேகமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காங்கிரசின் புரட்டுகளை
எடுத்துக்காட்டி கண்டிக்கிற நமக்கு இன்னமும் எங்கு போனாலும் ரகசியப்
போலீசு துடர்ந்து கொண்டும் போகிற இடங்களிலெல்லாம் வந்து துப்பு
விசாரிப்பதும் சில இடங்களில் பேசுவதை எழுதிக்கொண்டு போவதுமாகத்
தான் இருந்து வருகின்றது.
அன்றியும் காங்கிரஸ் பெயரை சொல்லிக்
கொண்டு காங்கிரஸ் பிரசாரம் செய்கிற ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார்,
ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி, எம்.கே. ஆச்சாரி, பி.வரதராஜுலு நாயுடு,
திரு. வி. கலியாணசுந்தர முதலியார் ஆகிய தலைவர்களானாலும் சரி அவர்
கள் எவ்வளவு தூரம் சர்க்கார் உத்திரவையோ சட்டத்தையோ மீறக்கூடிய
தைரியமோ அல்லது ஜெயிலுக்குப் போகக்கூடிய துணிவோ அல்லது சர்க்கார்.
நடத்தையைக் கண்டிக்கக் கூடிய பான்மையோ ஆகியவற்றை விட நம்
போன்றவர்கள் ஏதாவது பயந்தோ பின்வாங்கியோ அலக்ஷியமாக இருக்
கிறோம் என்பதாக யாராவது சொல்லக் கூடுமா? காங்கிரஸ் தலைவர்கள்,
பக்தர்கள், பிரசாரகர்கள் இவர்கள் காங்கிரசின் பேர் சொல்வதன் மூலம் அடை
யும் நஷ்டத்தை விட கொஞ்சமாவது அல்லது லாபத்தை விட அதிகமாக
வாவது காங்கிரசை கண்டிப்பதன் மூலம் நாம் அடைகிறோமா? இவைகளை
பொதுஜனங்கள் யோசிக்க வேண்டும். வெறும் குருட்டு பக்தியாலும் மூட
நம்பிக்கையாலும் தேசம் பாழாகப் போகவிடக் கூடாது. நாம் இப்படி எழுதுவ
தைப் பார்த்து சில மூடபக்தியும் குருட்டு நம்பிக்கையுமுள்ள நண்பர்கள்
உண்மையிலேயே நம்மீது கோபம் கொள்ளுவார்கள்.
இக்காங்கிரஸ் புரட்டைப் போலவே மதப் புரட்டையும் வெளியி
லெடுத்துச் சொல்லும்போது “நீ, வேறு எதை வேண்டுமானாலும் வைது கொள்.
மதத்தைப் பற்றி மாத்திரம் ஒன்றும் பேசாதே.
அதன் முறைகளை
வேண்டுமானால் திருத்தப் பாடுபடு. அடியோடு மதத்தையே குற்றம்
சொன்னால் அதுமகாபாதகமாகும்” என்று சொல்ல வருகிறார்கள். ஆனால்
மதம் என்றால் என்ன? என்று கேட்டால் “இதெல்லாம் விதண்டாவாதம்”
என்கிறார்கள். இதுபோலவே காங்கிரசும் இருக்கிறது. இதில் ஒரு விசேஷம்
மத சம்மந்தமானவர்கள் “நீ காங்கிரசைப் பற்றி சொல்வது சரி மதம்
அப்படியல்ல” என்கிறார்கள். காங்கிரஸ் சம்மந்தமானவர்கள் “நீ மதத்தைப்
பற்றி சொல்வது சரி காங்கிரஸ் அப்படியல்ல” என்கிறார்கள். ஆகவே, இவ்
விரண்டும் சிலர் வாழப் பலரைப் பலிகொடுக்கும் ஸாதனங்களே அல்லாமல்
வேறல்ல. ஆன போதிலும் காங்கிரஸ் என்பதைப்பற்றி சில விஷயங்கள்.
கவனிக்கும்படி வேண்டுகிறோம்.
அன்புள்ள வாசகர்களே!
காங்கிரசினால் தேசம் இதுவரை பாழானது போதும். பார்ப்பனர்கள்
பதவியும், உத்தியோகமும் பெற்றது போதும்.
பார்ப்பனரல்லாதார்.
கீழ்நிலைக்கு வந்தது போதும். காங்கிரஸ் பேரைச் சொல்லிக்கொண்டு பலர்.
குடி அரசு
- 19270)
272
வயிறு வளர்ப்பது போதும். இனியாவது கொஞ்சம் ஏழை மக்களையும்
தொழிலாளர்களையும் குடியானவர்களையும் திரும்பிப் பாருங்கள். மகாத்மா
காந்தியை விட இந்த காங்கிரஸ் பக்தர்கள் பெரிய தேசாபிமானிகள் என்று
எண்ணி ஏமாறாதீர்கள்.
மகாத்மா காங்கிரசில் இருந்த காரணமே 36 வருஷ காங்கிரஸ்,
நாட்டுக்கும் பல சமூகங்களுக்கும், ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும்
செய்த கொடுமையை விலக்கத்தானேயல்லாமல் வேறல்ல. அது முடியாது
என்று தெரிந்த உடனேதான், தான் வேறு ஒரு இயக்கத்தை ஆரம்பித்துக்
கொண்டு மெல்ல நழுவி விட்டார். மகாத்மாவைப் பூஜிக்கிறவர்கள் அவரது
கொள்கைக்கு காங்கிரசில் இடம் வைத்திருக்கிறார்களா?
இக்காங்கிரஸ் கொள்கையை மகாத்மா ஒப்புக் கொள்ளுகிறாரா?
போறாக் குறைக்கு தொழிலாளர்களை காங்கிரசில் சேரும்படி சில காங்கிரசின்
தலைவர்கள் அதாவது ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுவும், கலியாணகுந்தர
முதலியாரும் சொல்ல ஆரம்பித்திருப்பதைப் பார்க்கும்போது நமக்கு வயிறு
பற்றி எரிகிறது. தொழிலாளர்கள் கெடவேண்டுமானால் இப்போதிருப்பதை
விட இன்னமும் கேவலமான நிலைமைக்கு வந்து மிருக நிலை அடைய
வேண்டுமானால் தொழிலாளர் காங்கிரசில் சேரட்டும். தொழிலாளர்கள்
உண்மையான தொழிலாளர்களாகி தொழிலாளர்களாலேயே உலகம் முன்
னுக்கு வரத்தக்க யோக்யதை ஏற்பட்டு தொழிலாளர்களே இந்நாட்டில் ஆட்சி
செலுத்தத்தக்க யோக்யதை ஏற்பட வேண்டுமானால் அவர்கள் காங்கிரசை
விட்டு விலகி இருப்பதோடு காங்கிரசு என்று சொல்லுகிறவர்களையும் தங்கள்
கூட்டத்தில் சேர்க்காமல் இருக்கட்டும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம்.
தொழிலாளிகள் முதலாளிகளிடம் சிக்கிக்கொண்டு படுகிற பாடு போராமல்
எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றுவது போல் காங்கிரசுக்காரரிடமும்
சிக்கிக்கொண்டு சீரழிய வைப்பது பெரிய பாவம் என்றே சொல்லுவோம்.
முதலாளிகளின் கொள்கைகளை விட காங்கிரஸ்காரர்களின் கொள்கை ஒரு
விதத்திலும் யோக்கியமானதல்ல. காங்கிரஸ்காரர்கள் தொழிலாளிகளுக்குப்
பொறி வைப்பது “அங்கேண்டி மகளே ஆலாய் பறக்கிறாய் இங்கே வா காற்
றாய்ப் பறக்கலாம்” என்பது போலிருக்கிறது அல்லாமல் வேறில்லை. காங்கிர
சினால் வரப்போகும் சீர்திருத்தம், சுயராஜ்யம் இவைகளை விட வெள்ளைக்
காரர் தானாகவே செய்யும் சீர்திருத்தம் மேலான தென்றே சொல்லலாம்.
அவன் ஒன்றும் செய்யாவிட்டாலும் இவ்வளவு மோசம் ஏற்படாமலா
வதிருக்கும்.
காங்கிரஸ் என்ற பெயர் வைத்து அதிலிருந்த தலைவர்கள் என்பவர்.
கள்: பொதுமக்களின் பணத்தில் ஆளுக்கு 1000, 2000, 3000, 5000, 7000
சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏதோ சிலர் பார்த்து வருவதால் நாட்டிற்கு
273
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வந்த லாபமென்ன இந்த உத்தியோகம் இவர்களுக்கு இல்லாத காலத்தில்
அனுபவித்த நாட்டுக் கெடுதி என்ன.
சட்டசபையில் 128 பிரதிநிதிகள் ஏற்பட்டதால் நாட்டுக்கு ஏற்பட்ட
நன்மை என்ன இவர்கள் இல்லாததால் நாட்டிற்கு என்ன கெடுதி ஏற்படக்
கூடும்.
வாசகர்களே! தொழிலாளர்களை விட குடியானவர்கள் அதாவது
விவசாயக்காரர்கள் காங்கிரசில் சேருவது அவர்களுக்கு மிகவும் ஆபத்தா
னது என்று சொல்லுவோம். எந்த சீர்திருத்தம் வந்தாலும் எந்த உத்தியோகம்.
ஏற்பட்டாலும் அது நாள் முதல் குடியானவர்களின் தலையில்தான் கை.
வைக்கும். ஏனென்றால் இத்தனை புது உத்தியோகத்திற்கும் இத்தனை புது
பிரதிநிதித்துவத்திற்கும் ஏற்படும் செலவு சுற்றிச் சுற்றி எப்படிப் பார்த்தாலும்
குடியானவன் தலையில் தான் கையை வைத்து ஆகவேண்டும் என்பதை
மறந்து விடக்கூடாது. காங்கிரசினால் ஏற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு
சம்பளம் கொடுக்கவே அனேகமாய் தபால், கார்டு, கவர், ரயில் சார்ஜ் முதல்
சகல வரியும் உயர்த்தப்பட்டதே அல்லாமல் வேறில்லை.
வெள்ளைக்
காரருக்கு மாத்திரம் சம்பளம் கொடுக்க வேண்டுமானால் நாம் இப்போது
கொடுத்துவரும் வரியில் பகுதி வரி கொடுத்தால் போதுமானது. சர்க்காருக்கு
எந்தவிதமான வரி
யார் கொடுத்தாலும் அது கடைசியாக குடியான
வனைத்தான் பிடிக்கும் என்பதை குடியானவர்கள் மறந்துவிடக்கூடாது.
ஆதலால்தான் காங்கிரஸ் குடியானவர்களுக்கு எமனாகத் தோன்றி
இருக்கிறது என்று சொல்லுகிறோம்.
தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கோ காங்கிரஸ் என்பது பெரிய ஆபத்
தான சாதனமாகும். அவர்களுக்கு இதுவரையில் காங்கிரசினால் ஒரு பயனும்
ஏற்பட்டதில்லை என்பதும், அவர்களுக்கு இருக்கும் கஷ்டத்தைப் போக்கி
மனிதத் தன்மையை உண்டாக்க காங்கிரசினிடத்தில் ஒரு கொள்கையும்
இல்லையென்பதும், அவர்களுடைய முன்னேற்றமெல்லாம் கூடியவரையில்
சர்க்காராலேயே செய்ததாய் ஏற்பட்டிருக்கிறது என்பதும், தாழ்த்தப்பட்ட
மக்கள் பேரையும் சொல்லிக்கொண்டு சிலர் காங்கிரசின் பெயரால் பெற்ற
பலன்களில் ஒரு சிறிதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவவே இல்லை
என்பதும் யாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம். அதோடு அச் சமூகத்
தார்களும் இதை நன்றாய் அறிந்திருக்கிறார்கள்.
ஆனதால் அவர்
களைப்பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
வியாபாரிகளைப் பற்றி நமக்கு அதிக கவலை இல்லை. ஏனெனில்
அவர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு அடுத்தவர்கள். சர்க்காரால் என்ன வரி
ஏற்படுத்தினாலும் அதற்கு மேல் லாபம் வைத்து விற்பவர்கள். தவிரவும்
இன்னமும் கொஞ்சகாலத்தில் கடலைப்பொரி, சுருட்டு, சிகரெட்டு, வெத்திலை,
குடி அரசு
- 19270)
274
பாக்கு வியாபாரம் போக மற்ற வியாபார மெல்லாம் இனிமேல் நமது நாட்டில்
வெள்ளைக்காரர்களாலேயே நடைபெறப் போகிறது. ஏனெனில் வெள்ளைக்
காரர்கள் சீமை முதலிய இடங்களில் இருந்துகொண்டு இந்தியாவில் வியா
பாரம் செய்வதை விட இங்கு வந்து இருந்துகொண்டு வியாபாரம் செய்வது
அவர்களுக்கு அதிகமான லாபத்தை கொடுக்கக்கூடியதாகும். முதலாவது
சாமான் போக்குவரத்து செலவு குறையும். இரண்டாவது அங்கிருந்து இங்கு
வரவும் இங்கிருந்து அங்கு போகவும் சாமான்களின் மீது ஏற்படும் வரி
குறையும்,
மூன்றாவது கூலி ஆள்களும் குமாஸ்தாக்களும் சீமையில்
கிடைப்பதை விட அரைக் கூலி கால் கூலியில் கிடைக்கும்.
அம் முதலாளி
களுக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுப்பதற்கு நமது நாட்டில் படித்த
வகுப்பார் என்கிற பார்ப்பனக் கூட்டமும் தயாராயிருக்கிறது. அல்லாமலும்
இப்போது ஆங்கிலேயர் மற்ற நாட்டாருடன் வியாபாரத்தில் போட்டி போட
முடியாமலிருப்பதாலும் சுங்க உபத்திரவத்தாலும் இங்கேயே தொழில் செய்ய
வேண்டியது அவர்களுக்கு அவசியமாய் போய்விட்டது. அல்லாமலும்
இப்போதைய வியாபார முறையும் குடியானவர்களைப் பாழாக்குவதாக
இருக்கிறதே அல்லாமல் வேறில்லை. ஆதலால்தான் வியாபாரிகளைப் பற்றி.
நமக்கு அதிக கவலையில்லை என்கிறோம்.
படித்தவர்கள் விஷயமோ காங்கிரசை நம்பித்தான் படிக்கிறார்கள்.
ஆதலால் அவர்கள் காங்கிரசில் சேர்ந்தால்தான் உத்தியோகம் பெருத்த
சம்பளம் முதலியதுகள் கிடைக்கும். மற்றபடி வெறும் ஆசாமிகளைப்
பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. இப்பொழுது வர வர வயிற்றுப்
பாட்டிற்கு அதுவும் சோம்பேறி வயிற்றுப் பாட்டிற்கு காங்கிரசு ஒரு சரியான
துறையாய் ஏற்பட்டு விட்டது. மகாத்மாவின் 2,3 வருஷத்திய வேலையின்
பலனாகவும், ஒரு கோடி ரூபாய் செலவின் பலனாகவும், பல ஆயிரம் பேர்
ஜெயிலுக்குப் போனதின் பலனாகவும் காங்கிரசிற்கு பாமர மக்களிடையே
கொஞ்சம் நல்ல பெயர் வந்துவிட்டதால் அதன் பெயரைச் சொல்லிக் கொண்டு
பிழைப்பதற்கு வெகுபேருக்கு சவுகரியம் ஏற்பட்டு விட்டது. ஆதலால்
வெறும் ஆசாமிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டிய தில்லை.
ஆகவே தொழிலாளி, விவசாயி, தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய மூன்று பேர்:
விஷயத்தில் நாம் அதிகமாக எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 08.05.1927.
275
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
யார்ப்பண நிருபர்களின் சக்தி
இந்திய சட்டசபையில், சட்டசபை நடந்து கொண்டிருந்த காலத்தில்
சென்னையில் உள்ள “இந்து பத்திரிகைக்கும் “மெயில் பத்திரிகைக்கும்
ஒரே நிருபர் இருந்து கொண்டு இரண்டு பத்திரிகைக்கும் இரண்டுவிதமான
சமாச்சாரத்தை அனுப்பி வந்தாராம். “இந்து” வுக்கு எழுதும்போது ஒரே
கையில், ஒரே பேனாவில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றி எழுதும்
போது ஸ்ரீமான் அய்யங்கார் வந்தவுடன் எல்லோரும் கரகோஷம் செய்
தார்கள், அற்புதமாய் பேசினார். வெள்ளைக்காரர்கள் வாயை அடக்கி திக்கு
முக்காட வைத்து விட்டார், புது புது யோசனைகள் வெகு யுக்தி யுக்தியாகப்
பேசினாராம், அவரே தலைவர் பதவிக்குத் தகுந்தவர் என்று பேசிக்
கொண்டார்கள் என்று எழுதுவதும், அதே கை அதே பேனாவில் “மெயி”
லுக்கு எழுதும் போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் “குரங்கு” குல்லாயுடன்
உள்ளே நுழையும் போது எல்லோரும் பரிகாசம் செய்து சிரித்தார்கள் என்றும்
இவர்தானா சீனிவாசய்யங்கார்? கொஞ்சமாவது புத்தியில்லையே! சட்டசபை
விதிகள் கூட தெரியவில்லையே, இவர் தலைமை வகித்ததற்குத் தானா
காங்கிரஸ் என்று பெயர். இவரை எப்படி காங்கிரசுக்கு தலைவராக்கினார்கள்.
சீனிவாசய்யங்கார் இந்திய சட்டசபைக்கு வராமலிருந்தாலே அவருக்குக்
கொஞ்சம் பெருமை மீதியாயிருக்கலாம் என்றும், இவர் பேசும் போதெல்லாம்.
சட்டசபை இவரை பரிகாசம் செய்வதே வேலை யென்றும் - எழுதுவதும்,
அதே கையில் அதே பேனாவில் அசோசியேட்பிரசுக்கு எழுதும்போது
அதற்குத் தகுந்த மாதிரி எழுதுவதும் ஆகியவைகளை ஒருவரே செய்வ
தானால் அது எவ்வளவு ஆச்சரியம்?
குடி அரசு - கட்டுரை - 08.05.1927
குடி அரசு
- 19270)
276
பொதுப் பணம் போகும் வழி
வங்காளத்தில் கிராம சீர்திருத்தம் என்பதாக தேசபந்து தாஸ் பேரைச்
சொல்லி பொது ஜனங்களிடம் நிறைய பணம் வசூலித்து கடைசியாக அந்தப்
பணத்தை சுயராஜ்ஜியக் ககஷி தேர்தலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டதாக
கோர்ட்டில் விவகாரம் நடக்கிறது.
இங்கும் அதுபோலவே குறிப்பிட்ட
காரியங்களுக்கென்று ஒதுக்கி வைத்த ரூபாய்களும் வசூலித்த ரூபாய்களும்
தேர்தல்களுக்கே சிலவாகி வருகிறது. ஆனாலும் இங்கு கோர்ட்டில் வியாஜ்
ஜியம் போட ஆளில்லை. பின்னையோ மேலும் மேலும் பணம் கொடுக்கத்
தான் ஏராளமான சோணகிரிகள் இருக்கிறார்கள்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 08.05.1927
277
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
வடமலை
il
'பரிப்பனாஸ்லாதார் மகாசாடு.
|
0w
கத்தப்கிறகு ௮
மை
எண்வாளம்
ஸ்ர
வதா
M, வவணன்
கா
Lo M. 1O, அளிசள் சங்கை
தப்பாக கடைபென்றெதுட
வா
குடி அரசு
- 1927 ()
278
யார்ப்பணால்லாதார் மகாநா௫
மதுரை பார்ப்பனரல்லாதார் மகாநாட்டிற்குப் பிறகு அம்மகாநாட்டின்
தீர்மானங்களைத் தமிழ்நாட்டில் அமுலில் கொண்டு வருவதற்காக ஒவ்
வொரு ஜில்லாவிலும் ஜில்லா மகாநாடு கூட்டவேண்டுமென்று 3, 4 மாதங்
களாகவே எழுதி வந்திருப்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் சில
ஜில்லாக்கள் இதைப்பற்றி எவ்விதக் கவலையும் எடுத்துக் கொண்டதாக
தெரியவேயில்லை. தஞ்சை, கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு ஆகிய
ஜில்லாக்கள் மாத்திரம் மகாநாடு கூட்டும் விஷயத்தில் முயற்சி எடுத்துக்
கொண்டிருப்பது வெளிப்படையாய் தெரியவருகிறது. மற்றும் இரண்டொரு
ஜில்லாக்கள் நமக்கு மாத்திரம் தனித்த முறையில் தெரியப்படுத்தி இருக்கிறதே
அல்லாமல் காரியத்தில் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொண்டதாய்
தெரியவில்லை. கோயமுத்தூர் ஜில்லாவில் இம்மாத மத்தியில் மகாநாட்டை
நடத்துவதாயிருந்ததானது சிலரின் செளகரியத்தை உத்தேசித்து அடுத்த
மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. ஆனபோதிலும் மகாநாட்டிற்காக
ஆக வேண்டிய விஷயங்களை கோயமுத்தூர் பிரமுகர்களான ஸ்ரீமான்கள்
வெரிவாட செட்டியார், சம்மந்த முதலியார், இரத்தினசபாபதி முதலியார்,
சாத்தப்ப செட்டியார், இரத்தினசபாபதி கவுண்டர், 25௦.வெங்கிடுசாமி நாயுடு,
அருணாசலம் செட்டியார் முதலிய கனவான்கள் வெகு ஊக்கமாகக் கவனித்து
வருகிறார்கள். இதுவரை ஏரக்குறைய 2500 ரூபாய் வரை வசூலும் செய்து
விட்டார்கள். மற்றபடி வட ஆற்காடு ஜில்லாக்காரரும் கூடுமானவரை:
ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பல காரணங்களால் ஒத்தி வைக்க
நேரிட்டாலும் சீக்கிரம் நடைபெறும். சேலம் மகாநாடும் சீக்கிரத்தில் நடை
பெறலாம். ஆனால் அந்த ஜில்லா பிரமுகர்கள் இது சமயம் ஜில்லாபோர்டு
தேர்தல்களில் ஈடுபட்டிருப்பதால் இது முடிந்த பிறகு தான் கவனிக்கக்கூடும்
என்றும் நினைக்க வேண்டி இருக்கிறது.
மற்றபடி தஞ்சை ஜில்லா மகாநாடோ,
நேற்றும் இன்றுமாய் மாய
வரத்தில் மயூரமணி ஸ்ரீமான் ௩ சின்னையாபிள்ளை அவர்கள் முயற்சியிலும்
மற்றும் பல கனவான்கள் முயற்சியாலும் மலையாளம் ஸ்ரீமான் திவான்பகதூர்
M. கிருஷ்ணன் நாயர் BABL, MLC.
அவர்கள் தலைமையின் கீழ் சிறப்பாக
நடைபெறுகிறது. வரவேற்புத் தலைவரான மயூரமணி சின்னையாபிள்ளை:
அவர்களின் வரவேற்புப் பிரசங்கம் இனியும் நமது கைக்கு கிடைக்கவில்லை.
279 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மகாநாட்டின் அக்கிராசனரான திவான் பகதூர் கிருஷ்ணன் நாயரின்
அக்கிராசனப் பிரசங்கத்தை இன்று மற்றோரிடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.
அதை ஒவ்வொருவரும் தயவு செய்து ஊன்றிப் படிக்க வேண்டுமாய் கோரு
கிறோம். திவான் பகதூர் நாயர் அவர்கள் தனது பிரசங்கத்தில் முதலாவது
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தத்துவத்தைப் பற்றியும் கொள்கைகளைப்
பற்றியும்
அது ஜனநாயகத்திற்கு பாடுபடுவதாகும் என்பதைப் பற்றியும் வெகு
விளக்கமாக எடுத்துச் சொல்லியிருப்பதோடு சுயநலக்காரர் இவ்வியக்கத்தின்
மீது கூறப்படும் பழிகளுக்குச் சரியான ஆணித்தரமான பதில்களும் சொல்லி
யிருக்கிறார். அவற்றுள் உத்தியோக வேட்டை என்பதைப்பற்றி சொல்லி
யிருக்கும் விஷயத்தை நடுநிலைமைக்காரர் எவர் படித்துப் பார்த்தாலும்,
எவ்வளவு அறியாதவராயிருந்தாலும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின்
தத்துவம் இன்னது என்பது விளங்கிவிடும்.
பிறகு தேசத்தின் பெரும்பகுதியினரான விவசாயிகளின் விஷயமாய்
சாச்வத நிலத்தீர்வையின் அவஸ்யத்தைப் பற்றியும் அதற்காக அவர்கள்
வெகுநாளாக பாடுபட்டு வந்திருப்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு நமது
மாகாண அரசியல் நிலையைப் பற்றியதாக தற்கால மந்திரி
சபையைப் பற்றியும் அதன் ஊழல்களைப் பற்றியும் அதனால் நமது
சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்படும் கெடுதியைப் பற்றியும் உள்ளது உள்ள
படி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு நமது நாட்டுக் காங்கிரசின்
யோக்கியதையையும் காங்கிரஸ் பக்தர்களான சுயராஜ்யக் ககஷியாரின்
யோக்கியதையையும் அவர்கள் மக்களை ஏமாற்றி துரோகம் செய்த விஷயத்
தையும் எடுத்துச் சொல்லியிருப்பதோடு அப்பேரை வைத்துக்கொண்டு
பார்ப்பனரல்லாதாருக்குச் செய்துவரும் கெடுதிகளையும் சொல்லியிருக்கிறார்.
இதில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனர் கொண்டுவந்த யூனிவர்சிடி
அமெண்ட்மெண்ட் பில் என்கிற சர்வகலாசாலை சட்டத்திருத்த மசோதா
என்பதையும் அதன் சூழ்ச்சியையும் விளக்கி அதை உதாரணமாகக் காட்டி
இருக்கிறார். பிறகு லார்ட் பர்க்கன் ஷெட்டின் பேச்சைப் பற்றியும், இனி
அடுத்த நிலைமை என்ன என்பதைப் பற்றியும், வங்காள அடக்குமுறையைப்
பற்றியும், தென் ஆப்பிரிக்கா இந்தியர்களைப் பற்றியும் இந்த இயக்கப்
பிரசாரத்தைப் பற்றியும் விவாதித்து விவரமாகச்
சொல்லியிருக்கிறார்.
ஆகவே திவான் பகதூர் கிருஷ்ணன் நாயர் சொல்லியிருப்பதுகள் எல்லாம்
அநேகமாய் மிகவும் சரியானது என்றே நாம் ஒப்புக்கொள்ளுகிறோமாயினும்,
இனியும் சொல்லி யிருக்க வேண்டிய இரண்டொரு முக்கிய விஷயங்களைச்
சரியாகச் சொல்ல விட்டுவிட்டார் என்றே சொல்லுவோம். அதாவது மதுரை:
மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நிர்மாணத் திட்டம் என்பதைப் பற்றித்தான்.
ஏனெனில் எவ்வளவு அரசியல் தத்துவத்தைப் பற்றிப் பேசினாலும்
கடைசியில் நாம் செய்யவேண்டிய காரியத்தைப் பற்றியும் பேசினால்தான்
அப்பேச்சு முடிவு பெற்றதாகும். அரசியல் திட்டங்கள் என்பதுகளினாலும்,
குடி அரசு
- 19270)
280
அரசியல் இயக்கங்கள் என்பதுகளினாலுமே நமது நாடு இக்கெடுதிக்கு
ஆளாயிருக்கிறது என்று நாம் உறுதியாகச் சொல்லுவோம். இதிலிருந்து
விடுபடவேண்டுமானால் நிர்மாணத்
திட்டத்தைத் தவிர வேறு
எவ்வழிகளினாலும் முடியவே முடியாது என்பது நமது அபிப்ராயம். மேலே
சொல்லியுள்ள குற்றமுள்ளதும் நாணயக் குறைவுள்ளதுமான
மந்திரி
மார்களின் ஆக்ஷி முறையும், காங்கிரஸ் சுயராஜ்யக்கக்ஷி ஆகியதுகளும்
அடியோடு ஒழிந்து போவதாகவோ அல்லது ஜஸ்டிஸ் ககஷியார் கைக்கே.
வந்துவிடுவதாகவோ வைத்துக் கொண்டாலும் இவர்கள் செய்ததைத்தான்
ஜஸ்டிஸ் கட்சியாரும் செய்யமுடியுமே அல்லாமல் அதுகளினால் வேறொன்
றுமே பிரமாதமாகச் செய்துவிட முடியாது. உதாரணமாக ஜஸ்டிஸ் கட்சியார்
ஆதிக்கத்தில் உள்ள காலத்தில் என்ன செய்தார்களோ அதையே தான்
என்னென்னமோ கட்சியார் என்று பெயர் சொல்லிக்கொள்ளுகிறவர்களும்
செய்கிறார்கள். அதற்கும் இதற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் மாத்திரம்
என்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சியார் இதே காரியத்தை நாணயமாகவும்,
யோக்கியமாகவும், வெளிப்படையாகவும் செய்துவந்தார்கள். மக்களிடத்தில்
உண்மையைச் சொல்லி சொன்னது போல் உண்மையாய் நடந்து கொண்
டார்கள், காங்கிரஸ் முதலிய கட்சிக்காரர்கள் என்பவர்களோ நாணயக் குறை
வாகவும், யோக்கியப் பொருப்பற்ற தனமாகவும், மக்களை ஏமாற்றியதோடு
தனித் தனி சுயநலக்காரராயும் நடந்துகொண்டார்கள். ஆனால் இது அவர்கள்
குற்றமல்ல. அவ்வியக்கங்களின் தத்துவங்களே அது தான். ஆகவே, நடந்து
கொண்ட மாதிரிதான் வித்தியாசமே அல்லாமல் செய்யக்கூடியதில் எல்லாம்.
ஒன்றே தான். ஆதலால் இவற்றைப்பற்றி நமக்கு அதிகமான கவலை இல்லை.
நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நல்ல பலனை அளிக்கக்கூடிய
நிர்மாணத் திட்டத்தினிடம்தான் மக்களின் கவனத்தை இழுக்கும்படிச் செய்ய
வேண்டும். அதுவேதான் நமது மகாநாடுகளுக்கு அமுலில் கொண்டுவர
வேண்டிய முக்கிய திட்டங்களாகும். இக்காரியங்களைப்பற்றி ஸ்ரீமான் நாடார்.
முன்னுரை பிரசாரத்தில் சொல்லாவிட்டாலும்
அவர் தலைமையில் கூடியுள்ள
மகாநாடு செய்து தீருமென்று உறுதியாக நம்பியிருக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.05.1927.
281
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மாயவரம் மகாநாட்மூண் எதிரிகணிண்
சகூஷியும் திரு. வி.கலியாண௬ந்திர
முதலியாரிண் வியைமும்
ஸ்ரீமான் முதலியார் அவர்கள் மாயவரம் மகாநாட்டுக்கு வந்ததும்
மகாநாட்டில் அதுசமயம் கூடியிருந்த சுமார் 3000 பேருக்கு மேல்பட்டுள்ள
மகாஜனங்கள் செய்த ஆரவாரத்திற்கும் அடைந்த சந்தோஷத்திற்கும் அளவு
சொல்ல யாராலும் முடியாது என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் முதலியார்
அவர்களை மாயவரம் மகாநாட்டுக்குப் போகவிடக்கூடாது என்று செய்த
சூட்சிகள் கொஞ்சமும் பலிக்கவே இல்லை. உண்மையான தேசபக்தர்கள்.
மாயவரம் மகாநாட்டுக்குப் போகக்கூடாது என்று ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு
தனது “தமிழ்நாடு” பத்திரிகையில் எழுதி இருந்தது யாவருக்கும் தெரியும்.
அதோடு “தமிழ்நாடு” பத்திரிகை ஏஜண்டு ஒருவர் ஸ்ரீமான் முதலியார்
அவர்களுக்கு ஒரு பயமுருத்தல் கடிதம் எழுதி அதில் மாயவரத்திற்கு
வரக்கூடாது என்றும், வந்தால் கலகம், அடிதடி, மரியாதைக் குறைவு
முதலியதுகள் நடக்குமென்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது சங்கதி ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கருக்குத் தெரிந்ததும்
முதலியார் அவர்களுக்கு எப்படியாவது வர வேண்டும் என்றும், மாயவரத்
தில் கலகமும் அடிதடியும் நடக்குமானாலும் அதற்குத் தான் ஜவாப்புதாரி
என்றும், முதல் அடியைத் தான் பட்டுக்கொள்ளத் தயாராயிருப்பதாகவும்,
முதலியார் விளம்பரப்படுத்திய பிறகு வராவிட்டால் எதிரிகள் குற்றம் சொல்ல
இடமேற்பட்டுவிடும் என்றும் கேட்டுக் கொண்டு வற்புறுத்தி எழுதியதின்
பேரில் முதலியார் அவர்கள் தைரியமாய் வர நேரிட்டது. கலகம் செய்வதாய்ப்
பயமுறுத்தி முதலியாருக்குக் கடிதம் எழுதியவர்கள் ஸ்ரீமான் பி.வரதராஜுலு
நாயுடுக்கு எவ்வளவு வேண்டியவர்களோ அதைவிட கொஞ்சம் அதிக
மாகவே நாயக்கருக்கும் வேண்டியவர்களாயிருந்தபடியாலும் அவர்களுக்கு
உண்மையான பார்ப்பனரல்லாத சுத்த ரத்தம் சரீரம் முழுவதும் ஓடிக்கொண்
டும் கொதித்துக் கொண்டும் இருந்ததாலும் கலகம் என்கிற எண்ணத்தையே
மறந்துவிட்டு ஸ்ரீமான் முதலியார் அவர்கள் அக்கிராசனத்திலேயே தீர்மா
னங்களைப் பிரேரேபித்து அற்புதமாய்ப் பேசினார்கள்.
மற்றும் மகா
குடி அரசு
- 19270)
282
நாட்டுக்குப் போகக் கூடாது என்று ஜாடை மாடையாகத் தடுக்கப்பட்ட சில
பார்ப்பனரல்லாத தேச பக்தர்களும்
அதை
லட்சியம் செய்யாமல் தாராளமாக
மகாநாட்டில் கலந்து உதவி செய்ததும் மிகவும் போற்றத்தக்கது.
மகாநாட்டில் கலவரம் நடக்கும் என்கிற தீர்மானத்தின் பேரில்
கலவரத்தைப் பெரிது செய்து பத்திரிகைகளில் எழுதத் தகுந்த மாதிரி அதற்குத்
தகுந்த சில நிருபர்களை அனுப்பியும் கூட மகாநாட்டில் ஒரு சிறு கலவரம்கூட
நடக்காததால் அனுப்பியவர் ஏமாற்றமடைந்து விட்டார் என்றே சொல்ல
வேண்டும். மற்றும் ஜஸ்டிஸ் கட்சியிடமும் மாயவரம் மகா நாட்டினிடமும்
பாமர ஜனங்களுக்குக் கெட்ட எண்ணம் ஏற்படும் படி இதில் எழுதுவதற்குத்
தகாத எத்தனையோ சூட்சிகள் நடந்தன. ஆனால் அவைகள் ஒன்றும்
பயன்பெறாமல் போய் விட்டது.
ஆனபோதிலும் மகாநாட்டிற்கு வந்தவர்.
களில் பெரும்பாலோர் இவைகளை
நன்றாய் அறிந்து கொண்டார்கள் என்றே
சொல்ல வேண்டும். எப்படி எனில் பிரதிநிதிகள் நாலுபேர் ஐந்து பேர் கூடின
இடத்தில் எல்லாம் இதே பேச்சுகள்தானே தவிற வேறில்லை. எனவே நமக்கும்
நமது சமூகத்திற்கும் இருக்கும் கஷ்டத்தை இதிலிருந்து கொள்ளும் படி
வேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.05.1927.
283
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மாயவரம் மகாநா௫
மாயவரத்தில் பார்ப்பனரல்லாதார் மகாநாடும் சமரச சன்மார்க்க மகா
நாடும் இளைஞர் மகாநாடும் கூடிக் கலைந்து விட்டது. அதற்குச் சரியென்றும்
அவசியமென்றும் தோன்றிய பல தீர்மானங்களும் நிறைவேற்றியிருக்கிறது.
இம்மகாநாடு நடந்த சிறப்பும் வந்திருந்த பிரதிநிதிகளும் தமிழ்நாட்டின் நாலா
பக்கங்களிலிருந்தும் வந்திருந்த பெரியோர்களும் அவர்கள் ஒவ்வொரு
தீர்மானத்தின் மீது பேசிய பேச்சுக்களும் மக்களுக்குப் பிறந்த உற்சாகங்
களும் நேரில் பார்த்தவர்களே அறியக்கூடுமேயல்லாமல் மற்றபடி எவ்
விதத்திலும் அதை அப்படியே தெரியப் படுத்துவதென்பது மிகவும் கஷ்ட
மான காரியமென்றே சொல்லுவோம். இம்மகாநாட்டை நடத்த தஞ்சை ஜில்லா
தேசபக்தர்களும் பிரமுகர்களும் உழைத்த உழைப்பு மிகவும் பாராட்டத்தக்க
தென்றே சொல்லுவோம்.
இந்நிலையில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்
தினிடத்தில் பொறாமையும் துவேஷமும் கொண்டு “தமிழ்நாடு” பத்திரிகை
செய்த எவ்வளவோ சூழ்ச்சிகளையும் தாண்டி எவ்வளவோ தூரம் சிறப்பாய்
நடந்துவிட்டதென்று சொன்னால் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதுதான்.
மதுரையில் நடந்த மகாநாட்டின் போதும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு
அவர்கள் காங்கிரசில் உழைத்து வந்த சில தேச பக்தர்கள் மதுரை மகா
நாட்டுக்குப் போகாமலிருக்கச் செய்வதற்காக மதுரை மகாநாடு நடந்த தேதி
யிலேயே தேசீயமகாநாடு என்பதாக ஒரு மகாநாட்டை சென்னையில் நடத்தப்
போவதாகத் தெரியப்படுத்தியிருந்ததும், இதன் மூலம் யாரையும் அதிகமாகத்
தடுக்க முடியாதென்பதாகத் தெரிந்த பிறகு தனது மகாநாட்டை ஒத்திப்
போட்டுவிட்டதாகத் தெரியப்படுத்திவிட்டதையும் இதற்குமுன் நாம்
தெரியப்படுத்தியிருக்கிறோம். மாயவரம் மகாநாட்டிலேயும் அது போலவே
சில இடையூறுகள் ஏற்பட முயற்சித்திருப்பதையும் வேறு பத்தியில் காணலாம்.
அப்படியிருந்தும் யாதொரு விக்கினமுமின்றி மகாநாடு செவ்வனே
நடைபெற்று விட்டதானாலும் மகாநாடு நடந்த பிறகாவது சும்மா இருந்து விடா
மல் மறுபடியும் மகாநாட்டைப் பற்றி “தமிழ்நாடு” குறைகூறி தனது இயற்கை
யைக் காட்டியிருக்கிறது. மே மீ” 9 -ந் தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில்
“மாயவரம் மகாநாடு” என்ற தலைப்பின் கீழ் எழுதியிருப்பதாவது:-
குடி அரசு
- 19270)
284
1 “மாயவரத்தில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு முக்கிய விஷயங்
களைப்பற்றி யாதொரு தீர்மானமும் செய்யாமல் கலைந்து போய்
விட்டது; தஞ்சை ஜில்லாவிலேயே தற்கால முக்கிய விஷயம் தஞ்சை
ஜில்லா போர்டு ரயில்வே ஆகும். அது சர்க்காருக்குக் கொடுத்து
விடுவதா அல்லது போர்ட்டாரே வைத்துக் கொள்வதா என்பது பற்றி
பெரிய வாதம் நடந்து கொண்டி ருக்கும் போது மாயவரம் மகாநாடு
அதை கண்ணெடுத்துக் கூடப் பார்க்க வில்லை” யென்று ஒரு குற்றம்.
சாட்டியிருக்கிறது.
இதன் யோக்கியதையைக் கவனிப்போம். தஞ்சாவூர் ஜில்லா போர்டு.
ரயில்வே சர்க்காருக்குக் கொடுப்பதில்லை என்பதாக ஏறக்குறைய முன்னமே
தீர்மானமாகிவிட்டது. அதன் பேரில் மகாநாடு செய்ய வேண்டிய வேலை
ஒன்றுமே அதிகமாக பாக்கியும் இல்லை. அப்படியிருக்க இதை ஒரு பெரிய
குற்றமாகக் காட்டி மகாநாட்டைக் கண்டிப்பதன் ரகஸியம் வாசகர்களே
உணர்ந்து கொள்ளலாம்.
2 “ஜஸ்டிஸ் கட்சி தேசீயக் கொள்கைகளை ஆதரிக்கப் போகிறதா?
இல்லையா? என்பது அதன் தீர்மானங்களிலிருந்து தெரியவில்லை”
என்பதாக மற்றொரு குற்றம் சாட்டியிருக்கிறது.
தேசீயக் கொள்கைகள் என்பதைப் பற்றி நாம் பல தடவை எழுதி
யிருக்கிறோம். ஆயினும் பல பத்திரிகைகளும் பல தலைவர்களும் தேசீயம்
என்கிற வார்த்தையை சுயநலத்துக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகப்
படுத்திக் கொண்டு வருகிறார்களென்பதை இந்தக் காலத்தில் பெரும்பான்மை
யான ஜனங்கள் அறிந்துவிட்டதால் நாம் அதைப்பற்றி மறுபடியும் அதிகம்
இதுசமயம் எழுதவில்லை. ஆனாலும், ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு இந்தக்
குற்றத்திலிருந்து தப்புவதற்கு மார்க்கமில்லாமல் நடந்துகொண்டது என்று
சொல்லுவதற்கு இடமில்லை. அதாவது அதன் கீழாகவே “மாகாண சுயாட்சி”
வேண்டுமென்றும், “இந்தியா முழுதிற்கும் பூரண பொறுப்பாட்சி” வேண்டு
மென்றும் அதற்காக இந்தியாவிலுள்ள சர்வ கட்சிகளையும் கூட்டிக் கலந்து
என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க வேண்டும் என்பதாகவும் இரண்டு
தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொள்ளு கிறது.
இப்படிக்கிருக்க எந்த விதத்தில் “தமிழ்நாடு” பத்திரிகைக்கு ஜஸ்டிஸ் கட்சியின்
தீர்மானங்களிலிருந்து அது தேசீயக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளுகிறதா
இல்லையா என்பது தெரியவில்லையோ அது நமக்கு விளங்கவில்லை.
3. “ஸ்ரீமான் கிருஷ்ணன் நாயர் நிலவரி விஷயமாக எவ்வளவோ
பேசினார். அதைப்பற்றி ஒரு தீர்மானத்தையுங் காணோம்” என்று ஒரு
குற்றஞ்சாட்டி இருக்கிறது.
இது மிகவும் மோசமான காரியம்
என்பதோடு “தமிழ்நாடு” பத்திரிகையின் தன்மை எப்படிப்பட்ட
285
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
தென்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். “தமிழ்நாடு” பத்திரி
கையானது மகாநாட்டில் நடந்த தீர்மானங்களைக் கூட கிரமமாகப்
போடாமல் ஜனங்களுக்கு மகாநாட்டின் பேரில் அதிருப்தி ஏற்படும்
படி விஷமப் பிரசாரம் செய்யவும் தைரியம் கொண்டுவிட்டது.
இந்த மகாநாட்டில் ரெவின்யூ செட்டில்மெண்டைப் பற்றி ஒரு
தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ரெவின்யூ செட்டில்மெண்ட்
கொள்கைகள் கொண்ட ஒரு மசோதா சட்டசபையில் கொண்டுவர வேண்டு
மென்றும், மற்றும் பலவிதமாக வாசகங்கள் கண்டு நிலவரியைப் பற்றி ஒரு
தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இப்படியிருக்க அடியோடு
தீர்மானமே
கொண்டுவரவில்லையென்று குற்றங் கூறுகிறது. “சுயராஜ்யக் கட்சியார்.
நடத்தையைப் பற்றி ஜஸ்டிஸ் கட்சியார்
இனி சட்டசபையில் என்ன செய்யப்
போகிறார்கள் என்பதைப் பற்றி ஒன்றும் தீர்மானம் செய்யவில்லை” யென்று
ஒரு குற்றம் சாட்டியிருக்கிறது.
அதற்கு நாலு வரிக்கு மேலேயே “மகாநாடு
மேட்டூர் தேக்கத்தையும் சர்வகலாசாலை சீர்திருத்த மசோதாவையும் மட்டும்
கண்டிக்கத் தவறவில்லை. இதிலிருந்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் தங்களு
டைய சட்டசபைப் போராட்டத்திற்கு மட்டும் வேண்டியவைகளை கவனித்துக்
கொண்டார்கள்” என்று எழுதியிருக்கிறது. இப்படியிருக்க எவ்விதத்தில்
ஜஸ்டிஸ் கட்சியார்
இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதைத் தெரியப்ப
டுத்தவில்லை என்று “தமிழ்நாடு” சொல்வதற்கு நியாயமிருக்கிறது?
5. “ஜஸ்டிஸ் கட்சியாருக்கு மந்திரிப் பதவியில் ஆசை உண்டா?
கிடைத்தால் எம்மாதிரி நடந்துகொள்ளப் போகிறார்கள் என்று ஒரு
தீர்மான மும் செய்யவில்லை” என்று ஒரு குற்றம் சாட்டியிருக்கிறது.
இது எவ்வளவு தூரம் வேண்டுமென்றே அக்கிரமமாகச் சாட்டிய
குற்றமென்பதை ஒரு மூடன் கூட சுலபமாக அறிந்து கொள்ளக் கூடு
மென்றே நினைக்கிறோம். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்போர்கள்
மதுரை மகாநாட்டிலேயே இந்த சட்ட சபையில் தாங்கள் மந்திரிப்
பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ப தாகத் தெரியப்
படுத்தி விட்டார்கள். அப்படிக்கிருக்க மாயவரம் மகாநாட்டில் மந்திரிப்
பதவியில் ஆசையுண்டா என்பதைப் பற்றியும் கிடைத்தால் எம்மாதிரி
நடந்து கொள்ளுவோம் என்பதைப் பற்றியும் தெரிவிக்கவோ தீர்மா
னம் செய்யவோ இடமெங்கேயிருக்கிறது? என்பதை வாசகர்கள்தான்
முடிவு செய்து கொள்ள வேண்டும்.
6. “மாகாண சுயாட்சி கேட்பதும் இந்தியாவுக்கு பொறுப்பாட்சி
வேண்டுமென்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயிருக்கிறது”'
என்பதாக ஒரு குற்றம் சாட்டியிருக்கிறது. நமது மாகாணத்துக்குப்
பூரணப் பொறுப்பாட்சி கேட்பதும், இந்தியா ஒட்டுக்கும் பொறுப்பு
வாய்ந்த அரசாங்கத்தைப் பெற திட்டங்களை வகுப்பதற்கு நாட்டி
குடி அரசு
- 19270)
286
287
லுள்ள எல்லா அரசியல்வாதிகளுடையவும் மகாநாடு ஒன்றைக் கூட்ட
வேண்டியதற்கான முயற்சியை சென்னை தென்னிந்திய நலவுரிமைச்
சங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்யப்பட்ட தீர்மான
மானது எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும் என்பது நமக்கு
விளங்கவில்லை. இதையும் வாசகர்களேதான் யோசித்துக் கொள்ள
வேண்டும். தவிர,
7. “ஜஸ்டிஸ் கட்சியார் கேட்பது மாகாண சுயாட்சியா? அல்லது பூரண
சுயராஜ்யமா? என்று தெரியவில்லை” என்பதாக ஒரு குற்றம் சாட்டி
யிருக்கிறது. மாகாணத்துக்குப் பூறா பொறுப்பாட்சியும் கேட்டுவிட்டு,
இந்தியா முழுவதுக்கும் பொறுப்பாட்சித் திட்டங்களை வகுக்க எல்லா
கட்சியார்களையும் ஒன்று கூட்டி யோசிக்க வேண்டுமென்று சொல்லும்
போது “தமிழ் நாடு” பத்திரிகைக்கு எப்படி சந்தேகமேற்பட்டிருக்
கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. தவிர,
8.“பூரண சுயராஜ்யத்திற்கு வேலை செய்ய சர்வகட்சி மகாநாட்டைக்
கூட்டவேண்டுமென்றால், மாகாண சுயாட்சி பெற ஒரு வேலையும்
செய்ய வேண்டாமென்பது அவர்கள் நினைப்பா?” என்று ஒரு
கேள்வி கேட்பதன் மூலம் ஒரு குற்றத்தைச் சுமத்தி இருக்கிறது. இந்தக்
கேள்வி “தமிழ்நாட் டிற்கு எப்படி உண்டாயிற்றென்பதே தெரிய
வில்லை...
9. இவ்வளவையும் எழுதிவிட்டு “இவையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சி
யாரின் மனக் குழப்பத்தையே காட்டுகின்றன. தேர்தலில் தோற்ற
வேகத்தினால் மதுரையில் கூடிப் பல ஆச்சரியமான தீர்மானங்கள்.
செய்தார்கள். இப்பொழுது கொஞ்சம் காலம் கடந்துவிட்ட போதிலும்
அவர்கள் குழப்ப நிலை இன்னும் தெளிவடையவில்லையென்ப
தையே மாயவர மகாநாட்டுத் தீர்மானங்கள் காட்டுகின்றன” என்று
எழுதி கேவலப்படுத்தியிருக்கிறது.
எந்தத் தீர்மானத்தின் மூலம்
குழப்பமிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறது?
என்பது நமக்கு
விளங்கவில்லை.
10. “ஜஸ்டிஸ் கட்சியார் கதர் கட்டிக் கொள்வதும், தீண்டாமை ஒழிக்க
வேண்டும், சுயராஜ்யம் வேண்டும் என்று கேட்கத் துணிந்ததும் சென்ற
தேர்தலின் பாடம் என்று சொல்லப்படுகிறது” என எழுதியிருக்கிறது.
யாரால் சொல்லப் படுகிறதென்பதை எழுதவில்லை. தீண்டாமை
ஒழியக்கூடாதென் றாவது, சுயராஜ்யம் வேண்டாமென்றாவது ஜஸ்டிஸ்
கட்சியார் எப்போதாவது, எங்காவது சொல்லியிருக்கிறார்களா என்ப
தை யோசித்துப்பார்க்கும்படி வாசகர்களையே கேட்டுக்கொள்கிறோம்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
1. “"ஜஸ்டிஸ் கட்சியாருக்கு இந்த நல்ல புத்தி ஏற்பட்டிருப்பதைக் கண்டு
நாம் சந்தோஷிக்கிறோம்”
என்று எழுதியிருக்கிறது. “தமிழ்நாடு”
பத்திரிகை உண்மையாகச் சந்தோஷப் படுவதாயிருந்தால் “தமிழ்
நாடு” பத்திரிகைக்கு இம் மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய மனம்
வருமா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.
19. “ராஜீய விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்னும் பழய பின் புத்தி
போகவில்லை” என்று எழுதியிருக்கிறது. ராஜீய விஷயத்தில் ஜஸ்டிஸ்
கட்சியின் பின் புத்தி என்ன? “தமிழ்நாடு ”“வினுடையவோ, காங்கிரசி
னுடையவோ, சுயராஜ்யக் கட்சியினுடையவோ, ஸ்ரீமான் வரதராஜுலு
நாயுடு வினுடையவோ ராஜீய விஷயத்திலுள்ள “முன் புத்தி” இன்ன
தென்று தெரியப்படுத்தினால் யோக்கியமாயிருக்கும். இன்னும்
என்னென்னமோ படிப்பதற்கே புரியாமல் உளறிக் கொட்டியிருக்கிறது.
இதை எல்லாம் பார்க்கும்பொழுது “தமிழ்நாடு” பத்திரிகையானது
தன்னுடைய ஜாண் வயிறு வளர்ப்பதற்காக எவ்வளவு இழிவான
காரியத்தைச் செய்யத் துணிந்திருக்கிறதென்பதையும், எவ்வளவு
பெரிய சமூகத்தையும் பலிகொடுக்கத் துணிந்திருக்கிறதென்ப தையும்
அப்பத்திரிகைக்குக் கடுகளவாவது மனச்சாட்சியோ, இருதய
சுத்தமோ, மனிதத் தன்மையோ இருக்கிறதா? என்பதை அறியும்
விஷயத்தை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்.
மாயவரத்தில் கூடிய 2, 3 மகாநாடுகளிலும் சுமார் 20, 30 தீர்மானங்கள்.
செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளில் 5,6 தீர்மானங்களை மாத்திரம் அந்தப்
பத்திரிகையில் போட்டிருக்கிறது. சாதாரண வாரப் பத்திரிகைகள் கூட சிலது
முழுத்தீர்மானங்களையும் போட்டிருக்கிறது. பார்ப்பனரல்லாதார் நன்மைக்
கென்று ஏற்பட்டிருக்கிற இக்கட்சி விஷயத்தில் இப் பத்திரிகைக்கு இவ்வளவு
துவேஷம் ஏன் உண்டாகவேண்டும்? பார்ப்பனர் செய்யும் உபத்திரவம்
போதாதென்று கருதியா, இது வொன்று முளைத்திருக்கிறது? என்று நினைக்க.
வேண்டியதிருக்கிறது. பார்ப்பனப் பத்திரிகைகள் கூட இவ்வளவு மோசமாக.
நடக்கத் துணியவே இல்லை. “தமிழ்நாடு” பத்திரிகையானது பார்ப்பனரல்
லாதார் சமூகத்துக்கு உடன்பிறந்தே சொல்லும் வியாதியாய்த் தோன்றி
விட்டதைக் குறித்து நாம் வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. இது தவிர:
இன்னும் ஒரு உபத்திரவம் முளைத்திருக்கிறதையும் வருத்தத்துடன்
தெரிவிக்கிறோம். அதாவது நாட்டுகோட்டை செட்டிமார்கள் நாட்டில் தோன்றி
யிருக்கும் “ஊழியன்” என்கிற ஒரு பத்திரிகை “தமிழ்நாடு” பத்திரிகைக்குத்
தம்பியாகத் தோன்றியிருக்கிறது.
அது வரவரப் பச்சைப் பார்ப்பனப்
பத்திரிகையாகப் போய்க் கொண்டிருக்கிறது. அது எதற்காக இவ்வளவு
பணத்தை சிலவு செய்து கொண்டு நடைபெற வேண்டுமோ நமக்குத் தெரிய
வில்லை. ஒரு வருஷ காலமாகவே அதன் பேச்சு மிகவும் கேவலமாகவே
குடி அரசு
- 19270)
288
போய்க்கொண்டிருக்கிறது. அப்பத்திரிகையை ஒரு கொடும் பார்ப்பனர்
நடத்துகிறாரோ? அல்லது பார்ப்பனரல்லாதார் நடத்துகிறாரோ? என்பது நாம்
கண்டுபிடிக்க முடியாததாகவே இருக்கிறது. கொஞ்ச காலமாகப் பொருத்துப்
பொருத்து பார்த்தே முடிவில் இதை எழுத வேண்டிய நிலைமைக்கு வந்து
விட்டோம். என்செய்வது நடப்பது நடக்கட்டும் என்றே எழுதத் துணிந்தோம்.
இவ்வாரம் நமக்கு சாவகாசமில்லாததால் அதைப் பற்றி விரிவாக எழுத
முடியாமல் போய்விட்டது. ஆயினும் இது விஷயத்தில் நாம் மிகுதியும்
வருத்தம் அடைகிறோம் என்பதை மாத்திரம் இதுசமயம் எழுதி இதை
முடிக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.05.1927
289
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
காங்கிரசிண் பேரால் யார்ப்பணர்கணிண்
கேசத்துரோகமும் சுயகமைம்
பம்பாயில் இம் மாதம் 15, 16,17, 18 தேதிகளில் கூடிய அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டியின் நாடகம் கவனித்தவர்களுக்கு வேடிக்கையாகத்
தோன்றாமல் இருக்காது.
ஒரு ஸ்ரீயின் விபசாரத் தனத்திற்காக அவளது நடத்தையை
கண்டிக்கக்கூடிய கூட்டத்தில் அந்த ஸ்ரீயின் விபசாரத்தனத்தினால் அனேகம்
மக்கள் திருப்தி அடைகிறார்கள். ஆதலால் அந்த ஸ்ரீயின்பரோபகாரத்தைப்
பாராட்டுகிறோம் என்று ஒரு தீர்மானம் செய்யப்பட்டது போல், அகில
இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் சென்னை சுயராஜ்யக்கட்சியார் காங்கிரஸ்:
தீர்மானத்துக்குத் துரோகம் செய்த விஷயம் முடிவு பெற்றுவிட்டது. ஸ்ரீமான்
ஸ்ரீனிவாசய்யங்கார் ஒரு மாத காலமாக வடநாடு சுற்றுப் பிரயாணம் செய்து
கொண்டிருந்த கருத்தே இதுதான். அனேகமாக காங்கிரஸ் கமிட்டியில்
மாகாண சுதந்திரம் பெற்று இம்மந்திரிகளை தோற்கடித்து தாங்களே
மந்திரியாக வேண்டிய பிரயத்தனம் செய்தார். ஆனால் மற்ற மாகாணங்களில்
உள்ள “காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி தேசபக்தர்களுக்கு'” இம்மாதிரி வேட்டை.
கிடைக்க மார்க்கமில்லாததால் அவர்களின் யோக்கியதை அந்தந்த
மாகாணங்களில் கெட்டுப்போய்விடும் என்கிற பயத்தின் பேரில் அதற்கு
ஒருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. சென்னை அய்யங்கார் கூட்டத்தார்.
தங்கள் செல்வாக்கால் மந்திரி ஸ்தானம் ஒப்புக் கொள்ளலாம் என்பதாகத்
தீர்மானம் செய்வதற்கு மற்றொரு சிறிய தடையும் தோன்றிவிட்டது. அதாவது
சென்னையில் ஒரு பார்ப்பனர்தான் மந்திரியாக வரக்கூடும். அந்த ஒரு
ஸ்தானத்திற்கும் இரண்டு வகுப்பு சண்டையிடுகிறது. ஒன்று அய்யங்கார்.
வகுப்பு மற்றொன்று ஸ்மார்த்த வகுப்பு. அய்யங்கார் வகுப்புக்கு ஸ்ரீமான் சி.
வி. வெங்கிட்டரமணய்யங்கார் நாக்கில்
6 வருஷ காலமாக நீர் வடிந்து
கொண்டிருக்கிறது. ஏறக்குறைய மூன்று தேர்தலுக்கும் சுமார் லட்சம் ரூபாய்
வரை செலவு செய்தவர். அவருக்குக் கிடைக்க வேண்டியது நியாயம்.
அல்லாமலும் அவருக்குப் பணமும் உண்டு. ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி அய்யங்
காருக்கும் சம்மந்தி. ஸ்மார்த்த பார்ப்பன வகுப்புக்கோ ஸ்ரீமான் சத்திய
மூர்த்திக்கு 7. 8 வருஷமாகவே ஏதாவது ஒரு வேலைக்கு நாக்கில் நீர் ஒழுகிக்
கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் ஸ்மார்த்த “குருவான” ஸ்ரீமதி பெசண்
குடி அரசு
- 19270)
290
டம்மையாரை அய்யங்கார் கூட்டங்கள் எதிர்த்த காலமாகிய காஞ்சீபுரம்
மகாநாடு முதலே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யங்கார் கூட்டத்திற்கு உழைத்து
வந்திருக்கிறார். அதற்காக அவ்வப்போது அய்யங்கார் கூட்டம் ஸ்ரீமான்
சத்தியமூர்த்திக்குப்பணப்பை உதவி வந்தாலும் அதுகள் ஸ்ரீமான் மூர்த்தியின்
குடும்பச் செலவுக்குத்தான் ஆயிற்றே ஒழிய மிச்சப்படுத்த உதவவேயில்லை.
அய்யங்கார் கூட்டம் தங்களது பத்திரிகையில் தூக்கிவிட்டார்கள் என்றாலும்
அதுகள் தங்கள் சுயநலத்துக்கே அல்லாமல்
ஸ்ரீமான் மூர்த்தி பிழைப்புக்கு
இவர்கள் உதவிய பணம் தவிர பத்திரிகை விளம்பரத்தால் ஒரு காகம் லாபம்
இல்லை. சப் ஜட்ஜ் முதலிய வேலைகள் கிடைத்திருக்குமானாலும் ஸ்ரீமான்
சி.பி. அய்யர் பழைய விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு “உன்
யோக்கியதைக்கு சப் ஜட்ஜி வேலைக்கு போவது
மிகவும் குறைவானது.
மந்திரி, பிரசிடெண்ட், கமிட்டி மெம்பர் முதலியதுகள்தான் தக்கது” என்று
சொல்லிவிட்டாராம். ஆகவே அவருக்குக் கண்டிப்பாய் ஒரு மந்திரி வேலை
கொடுத்துத்தான் தீர வேண்டும். அப்படியே கொடுக்க வேண்டும் என்று
ஆரம்ப முதலே ஸ்மார்த்த பிராமணர்கள் சிபார்சு செய்தும் வருகிறார்கள்.
ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு மந்திரி வேலை கொடுப்பதில் அய்யங்கார்கள்
கூட்டத்தாருக்கு மற்றொரு பயமும் இருக்கிறது. என்ன வென்றால் ஸ்ரீமான்
சத்தியமூர்த்தியிடம் அய்யங்கார்களுக்கு உள்ளுக்குள் நம்பிக்கையுமில்லை.
யாரையும் நன்றாய் திட்டுகிறார் என்பதும் யார் திரும்பித் திட்டினாலும்
கொஞ்சமும் சலிக்காமல் அவ்வளவையும் வாங்கி மூட்டை கட்டிக் கொள்
கிறார் என்கிறதினாலும் அவரை உகப்படித்திவிட்டு மற்றவர்களைத் திட்டச்
சொல்கிறவரையில்தான் அய்யங்கார்களுக்கு அவரிடம் நம்பிக்கையே
அல்லாமல் வேறு வழியில் அய்யங்கார்களுக்கு அவரிடம் நம்பிக்கை
யில்லை. அன்றியும் ஒரு சமயம் தங்கள் மீதும் ஏதாவது திரும்பிவிடுமோ
என்கிற பயமும் எப்போதும் அய்யங்கார் கூட்டத்திற்கு உண்டு. அதினால்
தான் அவரை லீடராக்காமல் ஸ்ரீமான் சாமி வெங்கிடசலத்தை லீடராக்
கினதும் காங்கிரசுக்கு காரியதரிசி ஆக்காமல் சுயராஜ்யக் கட்சியோடு நிறுத்தி
விட்டதுமே தவிர வேறில்லை. இக்காரணங்களாலேயே சுயராஜ்யக் கட்சிக்கு
மந்திரி பதவி இப்பொழுது அழுவாரற்ற பிணங்களாக நாறிக் கொண்டிருக்
கிறதே அல்லாமல் வேறில்லை.
நிற்க. சென்னை சுயராஜ்யக் கட்சியார் செய்த காங்கிரஸ் துரோகத்தைப்
பற்றிய கண்டனத் தீர்மானம் வந்த சமயம் தலைமைப் பதவியில் இருந்த
ஸ்ரீமான் நேரு “11 மணிக்கு 10 நிமிஷம் இருக்கிறது. இந்த விஷயம் 10.
நிமிஷத்துக்குள் முடிந்துவிட வேண்டும். இத்தீர்மானத்தின் மேல் யாரும்
அதிகமாய் பேசக்கூடாது” என்று அடக்குமுறை உத்திரவிட்டாராம்,
இதன்
பேரில் கூட்டத்தில் பெரிய குழப்பமும் கூச்சலும் உண்டாயிற்றாம். இந்தியா
விலுள்ள எல்லா பத்திரிகைகளும் ஏறக்குறைய பார்ப்பன சம்பந்த
முடையதாகவே யிருப்பதால் ஒன்றாவது இக்குழப்பத்தின் விவரத்தையும்
291
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
அங்கு நடந்த வாக்குவாதத்தையும் சரியாய் போடவேயில்லை. பார்ப்பனர்.
களுக்கு விரோதமாக ஏதாவது ஒரு காரியம் நடைபெறுவதானால் சட்டம்
என்பதின் மூலமாகவோ குழப்பத்தின் மூலமாகவோ தப்பித்துக் கொள்கிற
வழக்கமானதால் இதிலும் அப்படியே குழப்பம் செய்து மெல்ல தீர்மானத்தை
காரியக் கமிட்டிக்குத் தள்ளிவிட்டார்கள். அக்கிராசனாதிபதி பார்ப்பனர்,
குற்றம் செய்தவர் பார்ப்பனர், தீர்மானம் கொண்டு வந்தவர் அரைப்
பார்ப்பனர், கலகம் செய்தவர் பார்ப்பனர். இந்நிலைமையில் இத்தீர்மானம்.
என்ன ஆகும் என்றுயாரும் யோசிக்க வேண்டியதே இல்லை. கடைசியாகக்
காரியக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அங்கு என்ன முடிந்தது என்றால்
“சென்னை சுயராஜ்யக் கட்சியார் காங்கிரசுக்கோ கெளகத்தி தீர்மானத்திற்கோ
விரோதமாக ஒன்றும் செய்துவிடவில்லை. தவிரவும் அவர்கள் சென்னை
மந்திரி விஷயத்தில் நடந்து கொண்டதைப்பற்றி இந்த சபை பாராட்டுகிறது”
என்கிற மாதிரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது எப்பேர்ப்பட்ட
அயோக்கியத்தனமான பித்தலாட்டம் என்பதை வாசகர்கள்தான் உணர
வேண்டும்.
இதை ஆந்திர தேசத்து பார்ப்பனரும் ஒப்புக் கொண்டார்கள் என்றால்
அவர்களின் அயோக்கியத்திற்கும் இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டி
யிருக்கிறது. “நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு” என்கிற மாதிரி
தமிழ்நாடு பார்ப்பனரும் ஆந்திர நாட்டுப் பார்ப்பனரும் சேர்ந்து பாமர:
ஜனங்களை ஏமாற்றும் பித்தலாட்டமே அல்லாமல் மற்றபடி வேறென்ன?
என்று கேட்கிறோம்.
இந்து முஸ்லீம் ஒற்றுமை
தவிர, இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதாக ஒரு வேஷம்
புதிதாகக் கட்டிவிட்டிருக்கிறார்கள். ஏதோ ஆங்கிலம் படித்த நான்கு
மகமதியர்கள் உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு “நாங்கள் ராஜியாய் விட்
டோம்” என்று சொன்னால் அது 7 கோடி முஸ்லீம்களைக் கட்டுப்படுத்தி
விட்டதாக அர்த்தமா? என்று கேட்கிறோம்.
சென்னையில் ஸ்ரீமான்
சீனிவாசய்யங்காருக்கு கிடைத்துள்ள மகமதிய ஜனாப் பிரதிநிதிகளைப்
போலவே வடநாட்டிலும் உத்தியோகம், பதவி முதலியஆசை கொண்ட சில
ஜனாப்புகள் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு எப்படி மந்திரி,
பிரசிடெண்ட், நிர்வாக சபை மெம்பர் முதலியதுகள் கிடைக்கும் என்கிறதைத்
தவிர வேறு நிலையான சமூகாபிமானம் இல்லை. அவர்களுடைய அறிவும்,
ஆராய்ச்சி ஆற்றலும் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால்
அதற்கு ஒரு உதாரணம் காட்டுகிறோம். அதாவது ஒரு மகமதிய கனவான்
ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் புகழ்ந்த போது ஸ்ரீ அய்யங்கார் “தமிழ்
நாட்டில் பிராமணர்
- பிராமணரல்லாதார் சண்டையை அடியோடு
ஒழித்துவிட்ட வீரர்” என்று சொன்னாராம். இது எப்படி இருக்கிறது என்றால்
குடி அரசு
- 19270)
292
“பஞ்சபாண்டவர்களை எனக்குத் தெரியாதா? கட்டில் குத்துக்கால்கள்.
போன்று மூன்று பேர்கள் என்று சொல்லி இரண்டு விரலைக் காட்டினானாம்.”
அது போல் சீனிவாசய்யங்காரையாவது தமிழ் நாட்டையாவது பிராமணர் -
பிராமணரல்லாதார் சண்டையையாவது அது எது பற்றியது என்பதையாவது
சரிவரத் தெரிந்திருந்தால் இம்மாதிரிப் பேசி இருக்கவே மாட்டார்.
தமிழ்நாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் சண்டை ராஜியாய் விட்டதா?
அல்லது ஒழிந்துவிட்டதா? ஜஸ்டிஸ் கட்சி மறைந்துவிட்டதா? இவற்றை எந்த
யோக்கியராவது சீனிவாசய்யங்கார் செய்துவிட்டார் என்று சொல்லக்கூடுமா?
வேறு வழியில் மனிதனாக முடியாதவர்களையும் வேறு வழியில் ஜீவிக்க
முடியாதவர்களையும் கூலி கொடுத்து சுவாதீனம் பண்ணிக் கொண்டு அவர்.
களை உசுப்படுத்தி பார்ப்பனரல்லாதாரையும் அவர்களது இயக்கத்தையும்
வையும் படி சொல்லி விட்டதினாலும் ஏதோ சில கஞ்சிக்கு வழியில்லாமல்
வயிற்றுக்கொடுமையால் அவதிப்படும் ஆள்கள் ஊரூராய்த் திரிந்து பலரை:
வைதே வயிறு வளர்க்கவேண்டி ஏற்பட்டுவிட்டதினாலேயும் அவர்களைப்
பிடித்துப் பாமர ஜனங்களிடம் பொய்யும் புளுகும் சொல்லி காசு பணம்
செலவு செய்து ஏமாற்றி ஒன்று இரண்டு தடவை ஓட்டு வாங்கிவிட்ட
தினாலேயும் மூன்றரை கோடி மக்களுடைய உணர்ச்சியை அடக்கிவிட்ட
தாகுமா? அல்லது ஜெயித்து விட்டதாகுமா? என்பதை யோசித்துப் பார்த்தால்
விளங்காமல் போகாது.
“இந்து முஸ்லீம் சமாதானம்” என்பது என்னவென்றால் முஸ்லீம்
களுக்கென்று பிரித்துவிட்டிருக்கும் வகுப்புவாரித் தொகுதியை ஒழித்து
கலப்புத் தொகுதியை ஏற்படுத்திக் கொள்ள மகமதியர்கள் சம்மதித்து விட்டார்.
களாம்.
இந்த தந்திரம் செய்த தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் உத்தேச
மென்னவென்றால் நமது மாகாணத்தில் வகுப்புவாரி உரிமை அதாவது
பார்ப்பனர்களுக்கும் நமக்கும் தனித்தொகுதி வேண்டுமென்று நாம் கேட்
பதை ஒழிப்பதற்காக “மகமதியர் கூட வேண்டாம் என்கிறார்கள்” என்று
சொல்லவே இந்த தந்திரம் செய்கிறார்கள்.
இதை ஆங்கிலம் படித்து உத்தியோகத்திற்கு நத்திக் கொண்டிருக்கும்
ஏதோ சிலர் தவிர மற்ற மகம்மதியர் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ளப் போவ
தில்லை என்பது நமக்கு நன்றாய் தெரியும். ஏனெனில் இதற்கு முன் ஒரு
தடவை இவ்வகுப்புவாரி உரிமையை ஒழிக்கும் சூழ்ச்சியாக “தேசீய
ஒப்பந்தம்” தயாரிக்கும்படி டாக்டர் அன்சாரி, லாலாஜி ஆகியவர்களை ஒரு
கமிட்டியாகப் போட்டதில் அவர்கள் முனிசிபாலிடி, தாலூகா போர்டுக்கும்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று ரிப்போர்ட் செய்தார்கள்.
தனித் தொகுதியை எடுத்து கலப்புத் தொகுதி ஏற்படுத்தலாம் என்று டி
இருவர் சொன்ன அபிப்பிராயத்தை மற்ற மகமதியர்கள் அப்போதே நிராக
ரித்து விட்டார்கள். இவ்வகுப்புவாரி உரிமை மகமதியர்களுக்கு கிடைத்த
பிறகுதான் அவர்கள் மனிதர்களாக பார்ப்பனர்களால் மதிக்கப்படுகிறார்கள்.
293
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
அதற்கு முன் மகமதியரைத் தொட்டால் தொட்ட விரலை வெட்டிவிட
வேண்டும் என்றும், மிலேச்சர் என்றும் எழுதி வைத்துக் கொண்டிருந்தவர்கள்
என்பதற்கு இன்னமும் ஆதாரமிருக்கிறது. ஆதலால் சுயமரியாதை உள்ள
எந்த மகமதியரும் இந்தப் பார்ப்பனர்களின் இப்போதைய சில நல்ல
வார்த்தைக்கும் இரண்டொருவருக்குப் பணம் சிலவு செய்து முனிசிபாலிடி,
சட்டசபை முதலியதுகளுக்கு ஸ்தானம் சம்பாதித்துக் கொடுத்திருப்பதையும்
நிரந்தர நன்மையாய் நினைத்துக் கொண்டு ஏமாந்து விடமாட்டார்கள் என்றே
உறுதி கூறுவோம்.
சமீபத்தில் கூட்டப்போகும் திருச்சி மஜிலிஸ் உலமா
கான்பரன்சு இந்த விஷயத்திற்காக கூட்டப் படுகிறதென்றே கேள்விப்படு
கிறோம். தவிரவும், சென்னை ஐகோர்ட் ஜட்ஜி பதவிக்கு ஒரு மகமதிய
கனவானையும் நியமிக்க வேண்டு மென்று தமிழ்நாட்டு பிரபல மகம்மதிய
கனவான்கள் கூடி ஒரு தீர்மானம் செய்ததை வாங்கிக் குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு “பிர்மாவின் முகத்தில் பிறந்த பிராமணோத்தமர்களாகவே”
போட்டிருப்பதையும் மகமதிய கனவான்கள் பார்க்காமலில்லை. ஆதலால்
மகமதியர்களுக்கு அளித்திருக்கும் வகுப்புவாரி உரிமையை அவ்வளவு
சீக்கிரத்தில் பார்ப்பனர்கள் அழித்துவிடும்படி விட்டுவிட நமது முஸ்லீம்
சகோதரர்கள் அவ்வளவு ஏமாளிகள் என்று நாம் நினைக்கவில்லை.
சுயராஜ்ஜியத் திட்டம்
சுயராஜ்ஜியத்திற்குத் திட்டம் போட மறுபடியும் ஒரு கமிட்டி நியமித்
திருக்கிறார்களாம். இது எல்லாவற்றையும் விட பெரிய பித்தலாட்டம் என்றே
சொல்லுவோம். இதற்கு முன் ஒரு தடவை ஸ்ரீமான் நேரு முதலியவர்கள்.
மிதவாதிகளுடனும் சுயேச்சைக் கட்சிக்காரருடனும் ராஜி செய்து கொண்டு
குறைந்த அளவு சுயராஜ்யத் திட்டம் (நேஷனல் டிமாண்டு) என்னும் பேரால்
ஒரு திட்டம் தயாரித்து 1924 ஹு பிப்ரவரி 1518 ௨ இந்தியா சட்டசபையில்
வைத்து நிறைவேற்றியது இப்போது என்ன ஆயிற்று என்று கேட்கிறோம்?
“சர்க்காரார் தங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அல்லது
மாற்றிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாவிட்டால் சட்ட மறுப்பு, முட்டுக்
கட்டை, வெளியேற்றம் முதலிய காரியங்கள் செய்வது” என்ற வீரமொழிகள்
என்னவாயிற்று?
சர்க்கார் இத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளாததாலும்
யாதொரு பதிலும் தெரிவிக்காமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்ட
தாலும் மனமாற்றத்தைக் காட்டாததாலும் வெளியே போகிறோம் என்று
சொல்லி சட்ட சபையை விட்டு ஒரு தரம் வெளியேறி மறுபடியும் கொஞ்ச
மாவது மானயீனமின்றி உள்ளே போய் இதுகாலவரையில் இருந்தும் விட்டு
இப்போது மறுபடியும் ஒரு புதுத்திட்டம் தயாரிக்கத் திட்டம் என்றால் இது
யாரை ஏமாற்றுவதற்கு என்றுதான் கேட்கிறோம்? முன் திட்டமே குறைந்த
அளவுத் திட்டமாய் இருந்தும் அது குப்பைத் தொட்டியில் இருக்கும்போது
இத்திட்டம் இனி அதைவிடக் குறைவாய்த்தானே இருக்க வேண்டி வரும்.
குடி அரசு
- 19270)
294.
ஆகவே சுயராஜ்யக் கட்சி ஏற்பட்டது முதல் ஒத்துழையாமையை ஒழித்ததோ
டல்லாமல் மகாத்மாவையும் மூலையில் உட்கார வைத்ததோடல்லாமல்
சர்க்காரோடு திருட்டுத்தனமாய் ஒத்துழைப்பதோடல்லாமல் இனியும் திட்டம்
திட்டம் என்று சொல்லிக் கொண்டு தேசத்தைப் பாழாக்குகிறார்கள் என்பதைப்
பற்றி யாருக்காவது கவலை இருக்கிறதா? இவர்களுடைய திட்டம் எல்லாம்
இனியும் கொஞ்சம் உத்தியோகமும் அதிகாரமும் அல்லாமல் வேறு என்ன?
இம்மாதிரி மானம், வெட்கம், நாணயம், யோக்கியம் ஒன்றுமில்லாத கடைந்
தெடுத்த அயோக்கியர்களாக சேர்ந்து தேசத்தைக் காட்டிக்கொடுத்து பாழாக்கி
அதிகாரம் பெற்று பணம் சம்பாதித்துத் தான் வாழ ஆதாரமாய் ஒரு கட்சியை
யும், சபையையும் ஏற்படுத்திக்கொண்டு அதை தேசத்தின் பிரதிநிதித்துவ
சபை என்றும் அதில் உள்ளவர்கள் தேசாபிமானிகள் தேசப் பிரதிநிதிகள்.
என்றும் சொல்வதானால் இதுகளை உடைய நாடு சுயமரியாதை உடைய நாடு
என்றாவது சுதந்திரம் பெற யோக்கியதை உடைய நாடு என்றாவது சுயபுத்தி
உள்ள நாடு என்றாவது எந்த முட்டாளாவது சொல்லக் கூடுமா? சொல்லக்
கூடுமா? சொல்லக் கூடுமா? என்று மும்முறை கேட்கிறோம். இம்மாதிரி
சபைக்கு ஆள் பிடிக்க இனியும் நமது நாட்டில் வயிற்றுச் சோற்றுக் கங்காணி
கள் ஏற்பட்டுக் காங்கிரஸ் காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டே வந்தால்
மற்றவர்கள் பேசாமல் பார்த்துக் கொண்டு தேசத்தையும் மக்களையும் பலி
கொடுப்பதா என்று யோசித்துப் பாருங்கள். சென்ற தேர்தலில் காங்கிரஸ்
புரட்டுக்குக் கொஞ்சம் வெற்றிகள் ஏற்பட்டு விட்டதால் “தினமும் நெய்ச்
சோற்றுப் பிச்சை கிடைக்கும்” என்பது போல் உத்தியோகத்திலும், சட்ட
சபையிலும், தாலூகா, ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டியிலும் ஆசை உள்ள
கூட்டங்களுக்கு இப்போது காங்கிரசிடம் கொஞ்சம் இழுப்பு அதிகமாய்
இருந்துகொண்டு வருகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்கும் இதில் கொஞ்சம் மயக்கம்
இருக்கிறது போல் தெரிகிறது. இந்தக் காங்கிரசும் இந்தக் காங்கிரசில் உள்ள
சிகாமணிகளும் இந்த காங்கிரசால் ஏற்பட்ட உத்தியோகங்களும் பதவிகளு
மேதான் நமது நாட்டின் ஒற்றுமையைக் குலைத்ததற்கும் தரித்திரத்தை
உண்டாக்கியதற்கும் ஏழைக் குடியானவர்களுக்கு வரியை அதிக மாக்கியதற்
கும் மக்களுக்கு தேசாபிமானம், பரோபகாரம் முதலிய குணங்கள் போய்
தேசத்துரோகம், சுயநலம் முதலிய கெட்ட குணங்கள் உண்டாகியதற்கும்
அடிப்படையான ஜவாப்பு தாரித் தத்துவங்கள் என்பதை தைரியமாய்
சொல்லுகிறோம். பல தடவை சொல்லியும் இருக்கிறோம். அதுகளுக்கு
இதுவரை எந்த “தேசபக்தராவது.” “தேசத் தொண்டராவது” “தேசியப்
பத்திரிகையாவது,” “சுயராஜ்ஜிய வீரராவது”” பதில் சொல்லவே இல்லை.
கங்காணி வேலையை விட்டுவிடவும் இல்லை.
ஆனாலும் ஜனங்கள்
முட்டாள்களாயிருக்கும் வரை நாட்டில் இதுகளுக்கு யோக்கியதை இருந்து
கொண்டுதானிருக்கும்.புத்திவரும் நாள் என்னாளோ?
குடி அரசு - தலையங்கம் - 22.05.1927
295
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஸீ வாதராசுனுவிண் வண்டவானம்-1
மாயவரம் மகாநாட்டைப் பற்றி ஸ்ரீ வரதராஜுலு நாயுடு செய்த சூழ்ச்சி
களைப் பற்றியும், அதுகள் பலிக்காமல் மகாநாடு செவ்வனே நடந்தேறிய
பிறகும் அம்மகாநாட்டைப் பற்றியும், அதில் நிறைவேறிய தீர்மானங்களைப்
பற்றியும் பொறாமை கொண்டு குரோத புத்தியோடு கண்டித்து எழுதிய பான்
மையைப் பற்றியும் சென்ற வாரம் விபரமாக ஒவ்வொரு விஷயமாய் பிரித்து
பிரித்து எடுத்துக் காட்டி பொது மக்களுக்கு விளங்கும்படி தக்க சமாதானமும்.
எழுதியிருந்தோம். அதற்கு பதில் என்கிற முறையில் “தமிழ்நாடு” பத்திரி
கையில் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு நாம் எழுதியதில் ஒரு வரியாவது எடுத்துப்
போட்டு அதற்கு சரியான சமாதானமாக ஒரு வரியாவது எழுதுவதற்கு
யோக்கியதை இல்லாமல் போனதோடு பயங்கொள்ளித்தனமாய், “நய
வஞ்சகம்.” “கடைசி
வார்த்தை” என்ற தலைப்புகளின் கீழ் “பழைய
விரோதம்,” “வெகுநாளைய கெட்ட எண்ணம்” என்கிற வார்த்தைகளைப்
போய்க் கட்டிப் பிடித்துக் கொண்டு, அதுகளை சரணாகதி அடைந்து
தப்பிக்கப் பார்க்கிறார்.
“நாயக்கரின் நயவஞ்சகம்,” “பழைய விரோதம்,” “வெகு நாளைய
பொறாமை” இதுகளைப் பற்றிப் பின்னால் தக்க ஆதாரங்களுடன்
விவரிக்கின்றோம். இப்போது நாம் 15-5-27 ௨ “குடி அரசில்” எழுதியது
களுக்கு என்ன பதில் சொல்கிறார் என்றே கேட்கிறோம். அதோடு “எது
பொய்ப் பிரசாரம்” என்று 24-4-27 தேதியில் எழுதியதற்கும் என்ன பதில்
சொல்லுகிறார் என்றே கேட்கிறோம்.
ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு இதுகளையெல்லாம் லக்ஷியம் செய்து
இதற்குப் பதில் எழுதிக் கொண்டிருப்பதில் தனது காலத்தை சிலவழிக்க
இஷ்டப்படவில்லை என்று எழுதித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கலாம், அது
நடவாது. முன் ஒரு தரம் அதாவது “பொய்ப் பிரசாரம்” என்ற தலைப்பின்
கீழ் எழுதியதிலும் இப்படித்தான் எழுதினார். ஆனால் மறுபடியும் கடைசி
வார்த்தை என்ற தலைப்பு வந்துவிட்டதா இல்லையா? அல்லாமலும் கொஞ்சம்
தனக்கு இடம் கிடைத்தும் உடனே பதில் எழுதினாரா இல்லையா? அதாவது
“முதலியாருக்கு பயமுறுத்தல் கடிதம் எழுதியவர் ஜஸ்டிஸ் கட்சியார்” என்றும்
அதற்கு ஸ்ரீமான் ஓ. கே. ராமசாமி செட்டியார் கடிதத்தையும் தருவித்துப்
குடி அரசு
- 19270)
296
பிரசுரித்தாரா இல்லையா? ஆகவே இப்போதும் கடைசி வார்த்தை என்று
எழுதிவிட்டாலும் ஆதாரம் இருந்தால் கண்டிப்பாய் பதில் வருமென்றே
நினைக்கிறோம். பதிலெழுத யோக்கியதை இல்லா விட்டால் அதுவே கடைசி
வார்த்தையாய் இருக்கட்டும். ஆனால் பார்ப்பனரல்லாதார் ககஷியை வைது
கொண்டு வாழும் வரை வரதராஜுலுவின் வண்டவாளம் வந்து கொண்டே
இருக்கும்.
நமது கேள்விகள்
1.தேச பக்தர்கள் மாயவரம் மகாநாட்டிற்கு (போகக்கூடாது என்கிற
எண்ணத்துடன்) போக மாட்டார்கள் என்று எழுதினாரா இல்லையா?
உபிறகு தானே “உடம்பு செளகியமில்லாததால் டெ மகாநாட்டுக்கு
வரமுடியவில்லை” என்று எழுதினாரா இல்லையா?
3. மகாநாட்டு விஷயங்களைப் பற்றி ரிப்போர்ட் செய்வதற்கு தமது
ஆபீஸ் மானேஜர் ஒரு பார்ப்பனரல்லாத ரிப்போர்ட்டரை அனுப்ப ஏற்பாடு
செய்திருந்தும்
அவர் போனால் மகாநாட்டுக்கு விரோதமாய் ரிப்போர்ட்
செய்யமாட்டார் என்று ஒரு பார்ப்பன ரிப்போர்ட்டரை அனுப்ப வேண்டு
மென்று உத்திரவு போட்டாரா இல்லையா?
4. மகாநாட்டுத் தீர்மானங்களில் 4, 5 மாத்திரம் தனது பத்திரிகையில்
போட்டு விட்டு மற்றதைப் போடாமலே மறைத்து விட்டதோடல்லாமல், சில
தீர்மானம் மகாநாட்டில் செய்திருந்தும் அவைகளைச் செய்யவில்லை
என்பதாக ஒரு போலிக் குற்றம் சாட்டித் தன் குரோத புத்தியைக் காட்டிக்
கொண்டாரா இல்லையா?
5. மதுரை மகாநாடு கூட்டும் தேதியில் தானும் ஒரு மகாநாடு
கூட்டுவதாக வெளிப்படுத்தி இதற்கு இடைஞ்சல் செய்ய சூழ்ச்சி செய்தாரா
இல்லையா?
6. இவரது சூழ்ச்சியை லக்ஷியம் செய்யாமல் அது செவ்வனே
நடக்கப்போகிற சங்கதி தெரிந்து அதை ஒத்திபோட்டதாக எழுதிவிட்டாரா
இல்லையா?
7. ஸ்ரீமான் முதலியாருக்கு பயமுறுத்தல் கடிதம் எழுதினவர் எந்தக்
கட்சியைச் சேர்ந்தவரானாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.
அக்கடிதம் எழுதினவர் “தமிழ்நாடு” பத்திரிகைக்கு ஒரு ஏஜண்டா
இல்லையா? என்பதுதான் நமது கேள்வி.
297
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
8.அக்கடிதம் எழுதினவர் மகாநாட்டின் போது “தமிழ்நாடு” பத்திரிகை
களை கையில் வைத்து விற்றுக் கொண்டும் சந்தா சேர்த்துக் கொண்டும்,
இருந்தாரா இல்லையா?
9. இதை ஸ்ரீமான் ஒ.கே. ராமசாமி செட்டியார் பார்த்தாரா இல்லையா?
10. அன்றியும் ஸ்ரீ வரதராஜுலு நாயுடு “குடி அரசு” எழுதிய மற்ற
சங்கதிகளுக்கு எல்லாம் பதில் எழுதாமல் விட்டு விட்டு இதற்கு மாத்திரம்
பதில் எழுதப் புறப்பட்டவர் “ஸ்ரீமான் முதலியாருக்கு பயமுறுத்தக் கடிதம்
எழுதியவர் ஜஸ்டிஸ் கட்சியார்” என்று எழுதினாரே அல்லாமல் அவர்:
“தமிழ்நாடு” ஏஜண்டா இல்லையா என்று ஏன் தானே தைரியமாய் எழுதி
யிருக்கக் கூடாது? இதற்கு “முதலியார் சொன்னார்” “செட்டியார் எழுது
கிறார்” என்று ஏன் எழுத வேண்டுமென்று இப்பொழுதும் கேட்கிறோம். “குடி
அரசு”ம் இதைப் பற்றி எழுதுகையில் “தமிழ்நாடு பத்திரிகையின் ஏஜண்டு
ஒருவர் ஸ்ரீமான் முதலியாரவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் கடிதம் எழுதினார்”
என்று தான் எழுதிருக்கிறதே அல்லாமல் இன்ன கட்சி என்று எழுதிற்றா?'
இந்தச் சமாதானம் கொல்லத் தெருவில் ஊசி விற்றது போல் இருக்கிறதே.
அல்லாமல் வேறென்ன?
11.தவிர நாகப்பட்டணம் ஸ்ரீமான் பக்கிரிசாமி பிள்ளை குமாரர் ஸ்ரீமான்
VP காயாரோகணம் பிள்ளை அவர்களும் மற்றும் 63 கனவான்களும் தன்னை
மகாநாட்டுக்கு வரும்படி அழைத்ததாக ஒரு போலிக் கடிதத்தைத் தன்
பத்திரிகையில் போட்டு விளம்பரம் செய்துகொண்டு அதன் மூலம் ஜஸ்டிஸ்
கட்சியையும் வைது பெருமை பாராட்டிக் கொண்டாரா இல்லையா?
அக்கடிதம் முற்றிலும் பொய் என்றும் தான் எழுதவில்லை என்றும் “ஸ்ரீமான்
வரதராஜுலு நாயுடு தனது அரசியல் கொள்கை இன்னது என்று யாரும்
கண்டுபிடிக்காத மாதிரியில் இருப்பதாலும் அவரது கொள்கைகளும்
திட்டங்களும் தினம் இருமுறை மாறி வருவதாலும்,
நான் அவரது வரவை
அவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்க நியாயமில்லை” என்று பகிரங்கமாக
எழுதி இருக்கிறாரே, அதற்கு இதுவரை ஸ்ரீமான் நாயுடு ஏதாவது பதில்
எழுதினாரா? ஸ்ரீமான் காயாரோகணம் பிள்ளைக்கும் ஸ்ரீமான் வரதராஜுலு
நாயுடுவுக்கும் வெகுநாள் விரோதமா பொறாமையா? அல்லது நயவஞ்சகமா?
என்று கேட்கிறோம்.
13. இதுவும் தவிர மன்னார்குடியில் இருந்து சமரச ஞான சபையார்
பேரால் 48 கனவான்கள் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவை மகாநாட்டுக்கு
அழைத்ததாக மற்றும் ஒரு பொய்க் கடிதத்தைத் தனது பத்திரிகையில்
பிரசுரித்துத் தன்னை பெருமைப்படுத்திக் கொண்டதோடு அதற்கு வர:
முடியாது என்பதாக எழுதியதில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களைத் தாக்கு
வதால் வரமுடியாது என்று பார்ப்பனருக்கு வக்காலத்து வாங்கி எழுதினாரா
குடி அரசு
- 19270)
298
இல்லையா? தவிர மன்னார்குடி சமரச ஞானசபை காரியதரிசியார் இம்மாதிரி.
கடிதம் தாங்கள் எழுதவில்லை என்று எழுதி இந்தப் பித்தலாட்டத்தை
வெளியாக்கினார்களே அதற்கு ஏதாவது ஸ்ரீமான் நாயுடு பதில் எழுதினாரா?
சமரச ஞான சங்கக் காரியதரிசியாருக்கும் ஸ்ரீ வரதராஜுலுக்கும் வெகுநாள்
விரோதமா பொறாமையா அல்லது நயவஞ்சகமா? தவிர டி மன்னார்குடி
கடிதத்தில் காணும் 48 பெயர்களையும் தலைப்பு எழுத்துக்கள் இல்லாமல்
மொட்டை மொட்டையாய் பத்திரிகையில் போட்டுக் கொண்டதிலிருந்தே
இக்கடிதம் இக்காரியத்திற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டதும் அனாமதேயக்
கடிதம் என்பதும் உறுதியாகிறதா இல்லையா?
இத்தனைப் புரட்டும் பித்தலாட்டமும் நாணயக் குறைவும் தன்னிடம்
பிறர் கண்டுபிடிக்க இடம் ஏற்படுகிறதே என்பதற்கு கொஞ்சமாவது வருந்
தாமலும் வெட்கப்படாமலும் பொது நன்மையை உத்தேசித்து தனக்கு
சரியென்று தோன்றியதை யாராவது நியாய வழியில் செய்தால் அதனிடம்
பொறாமையும் துவேஷமும் கொள்ளுவதும் அதைக் கெடுக்க சூழ்ச்சி
செய்வதும் அதையாராவது கண்டித்தால் அது பழய விரோதம், பொறாமை,
நயவஞ்சகம் என்று எழுதுவதும் எவ்வளவு இழிகுணம் என்பதை வாசகர்.
கள்தான் உணர வேண்டும்.
ஸ்ரீமான் நாயக்கர் எழுதியவைகளுக்கு தலைப்புப் பேர் கொடுத்த
நயவஞ்சகம் என்கிற வார்த்தையையே தான் ஸ்ரீமான் நாயுடு மே மாதம்
4- ந தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில் சுதேசமித்திரனுக்கும் கொடுத்து
இருக்கிறார். அதாவது “சுதேசமித்திரனின் நயவஞ்சகம்” என்று தலையங்
கமிட்டு ஒரு வியாசம் இதுபோலவே எழுதியிருக்கிறார்.
ஸ்ரீமான் நாயுடுவின் வண்டவாளத்தை வெளிப்படுத்துகிற ஒவ்வொரு
வருக்கும் ஸ்ரீமான் நாயுடு இந்தப் பெயரையே கொடுத்து தான் தப்பித்துக்
கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அது
கண்டிப்பாய் இனி நடவாது என்றும் ஸ்ரீமான் நாயுடுவிடம் “நயவஞ்சகம்”
என்கிற பெயர் வாங்க இனியும் 1000க்கணக்கான பெயர்கள் நமக்குப்
பின்னால் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஸ்ரீமான் நாயுடு மேல்கண்ட
தனது குணங்களை மாற்றிக் கொண்டாலொழிய “நயவஞ்சகம்” தமிழ்நாட்டு
மக்களிடம் நிற்கப் போவதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
மற்றபடி “நாயக்கரின் நயவஞ்சகம்” என்ற தலைப்பின் கீழ் கண்ட
கடிதங்களுக்கும் கடைசி வார்த்தைக்கும் அடுத்த வாரம் விபரமாய் பதில்
எழுதுவோம். ஏனெனில் அக்கடிதங்கள் சம்பந்தமாக சில ஆராய்ச்சிகள்.
வேண்டியிருப்பதாலும் அதுகளுக்கு பதில் எழுதிய பல கடிதங்களைத் தேடி
எடுக்க வேண்டியிருப்பதாலும் நாம் கோவை, கள்ளிக்கோட்டை முதலிய
299
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
இடங்களில் இந்த வாரம் முழுவதும் செலவு செய்ய வேண்டி ஏற்பட்டு
விட்டதாலும் சாவகாசமும் இடமும் இல்லை.
ஆனாலும் அடுத்த வாரம் நாலு.
பக்கம் இதற்காகவே அதிகமாய்ப் போட்டு விபரமாய் எழுதுகிறோம்.
குறிப்பு
:-
பார்ப்பனரல்லாதாருக்குள்ளாகவே நாயக்கரின் நயவஞ்சகமும் வரத
ராஜுலுவின் வண்டவாளமுமான மனவருத்தத்திற்கிடமான சங்கதிகள் எழுத
நேரிடுவது பற்றி சில உண்மையான பெரியோர்களின் மனம் சங்கடப்
படக்கூடும் என்பது நமக்குத் தெரியும்.
ஆனாலும் இதனால் ஒன்றும் முழுகிப்
போய்விடாது. உலகத்திற்கோ சமூகத்திற்கோ இதனால் நன்மையே தான்
ஏற்படும் என்பதே நமது உறுதியாகும். ஏனெனில் நம்முடைய வேலையோ
ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களுடைய வேலையோ அவரவர்கள்
சொந்த நன்மை தீமைகளை பொருத்த வேலையல்ல என்பதும் பெரிய ஒரு
சமூகத்தின் பேராலும் ஒரு தேசத்தின் பேராலும் நடைபெறுகின்றது என்பதும்
முதலில் பொது ஜனங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வளவு பெரிய பொறுப்புள்ள வேலைகளை மேற்கொண்டு
அதற்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளுபவர்களின் யோக்கியதை
களும் நாணயங்களும் பொதுமக்கள் அறியும்படி வெளியாக்க வேண்டியது
அவசியமா இல்லையா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல்
போகாது. மகாத்மா காந்தி அவர்களுக்கு நாட்டில் உள்ள பெருமை முதலியது
கள் எல்லாம் அவருடைய யோக்கியதையைப் பற்றியும் நாணயத்தைப்
பற்றியும் ஜனங்கள் அறிய நேர்ந்தமைதானே தவிர வேறில்லை. இவ்விவ
காரங்கள் எத்தனைக் கெத்தனை யார் யாருடன் ஏற்படுகிறதோ அத்தனைக்
கத்தனை அவரவர்கள் தொண்டுக்கு தக்க பலனை அளிக்கும் என்பது நமது
எண்ணம்.
குடி அரசு - கட்டுரை - 22.05.1927
குடி அரசு
- 19270)
200
கும்பாபிஷேகத்திண் ரகசியம்
குருக்கள் பார்ப்பணர்கள் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
நடேச குருக்கள் : ஏண்டா சுப்பா! இந்த 4, 5 மாதமாய் நம்ம கோயி
லுக்கு அபிஷேகம் வற்றதில்லே பிரார்த்தனை வற்றதில்லை முன்னைப்
போல் அதிக சனங்கள் அர்ச்சனை செய்ய வற்றதில்லையே என்ன சங்கதி?
சுப்புக் குருக்கள் : சங்கதியா! சங்கதி. ஈரோட்டில் ராமசாமி நாயக்கன்
இருக்கான் அல்ல. அவன் “குடி அரசு” என்னும் ஒரு பேப்பர் போட்றான்.
அதில் சும்மா இதையே எழுதுறான். பார்ப்பானுக்குப் பணம் கொடுக்காதே,
பார்ப்பான் காலில் விழாதே, பார்ப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே,
கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துவிடு.
பார்ப்பானைத் தேங்காய் பழம் ஒடைக்கச் சொல்லாதே, அவன் தீபார்த்தனை
காட்ட நீ கும்பிடாதே, அவன் கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படி
யெல்லாம் எழுதியும் போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை:
வெச்சுகிட்டு வற்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள்
தானே வற்றது. தானே கும்பிடரது. பேசாமல் போயிடரது. இப்படி பண்ணு
ராங்கடான்னா.
நடேச குருக்கள்
: அப்படியா! அடடா அவனுக்கு என்ன கேடு
வந்தது. அவப்பா ரொம்ப பிராமண விசுவாசியாச்சுதே. எத்தனை சமாரா
தனை எத்தனை கோயில் எத்தனை சத்திரம் சாவடி தண்ணிப்பந்தல் உச்சவம்.
உபநயனம் கல்யாணம் இதெல்லாம் செய்திருக்க அப்படிப்பட்ட வயிற்றில்
இப்படிப் பிள்ளையா பிறக்கணும். அய்யய்யோ கர்மம் உடுமா. அவன்
இன்னம் கொஞ்ச நாளில் என்ன கெதி ஆகப் போறான் எண்ணு பாரு.
முன்னே மூனு நாலு தரம் ஜெயிலுக்குப் போயும் அவனுக்கு புத்தி வல்ல.
சீக்கிரத்தில் ஜெயிலுக்குப் போகப் போறானா இல்லையா? எண்ணு பாத்து
கிட்டு இரு ராஜ துவேஷம் பிராமண துவேஷம் யாரை சும்மா விட்டது.
இவனை விடுரதுக்கு? ஆனாலும் இதனாலெ இப்ப நமக்கு இந்த 2, 3 மாச
மாய் சுத்தமாய் வரும்படி இல்லையே. அதுக்கென்ன பண்ணரது? இப்ப வர:
வர தெவசத்துக்குக் கூட எந்த சூத்திரனும் நம்மை கூப்பிடறது இல்லை.
301
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
நமக்கு முன்னையெல்லாம் ஒரு இடை இழுத்துவிட்டு அரிசி பருப்பு காசு
எவ்வளவு தாராளமாகக் குடுப்பாங்கோ.
இப்ப அதுகூட இல்லையே.
இதென்ன சங்கதி, இந்த வருஷம் பிராமணன் மேலே சங்கராந்தி வந்துட்டதா
என்ன ஒண்ணும் தெரியவில்லையே?
சுப்புக் குருக்கள் :வரும்படியைப் பத்திக் கவலைப்படாதே, நான் ஒரு
வழி சொல்லுறேன். அப்படிக் கேக்கரையா?
நடேசக் குருக்கள்: சொல்லித் தொலைய்யா. சோத்துக்கில்லாத
பாப்பான். சொன்னபடியெல்லாம் கேப்பான் எண்ணு நீ கேட்டதில்லையா,
சொல்லு, சொல்லு.
சுப்புக் குருக்கள்
: சொல்லுகிறேன், வெளியில் சொல்லாதே.
நடேச குருக்கள்
: இது வேறே கர்மமா, நான் தான் சுத்த சுத்தமா
சோத்துக்கு சாகறேன். இன்ன இதை வெளியில் சொல்றது வேறையா,
கொஞ்சம் சொல்லப்பா சட்டுண்ணு..
சுப்புக் குருக்கள் : சுத்தியுமுத்தியும் பார்த்துக்கோ, ஆராவது வந்து
டப் போறாங்க.
நடேசக் குருக்கள் : ஒருத்தரும் இல்லை, சொல்லித் தொலை.
சுப்புக் குருக்கள்: அது என்னான்னாக்கா? கோயிலில் சாமி இருக்கு
தல்ல. அதை ஆட்டிப் புடிங்கி கீழே தள்ளி படுக்க வெச்சிடு, காத்தாலெ
கோயிலைப் போய் நீ பாத்ததாகவும் “கோயில் கதவு ஒடச்சி எவனோ உள்ளே
போயி சாமியை ஆட்டிக் கீழே தள்ளிப்போட்டு அதிலெ இருந்த தங்கம்
வெள்ளி நவரத்தினமெல்லாம் எவனோ எடுத்துக்கிட்டுப் போயிட்டான்.
கும்பாபிசேகம் பண்ண வேணும், இல்லாவிட்டால் ஊருக்கு ஆகாது. தர்ம
கர்த்தாவுக்கு தோஷம், கமிட்டியாருக்கு பாவம்.” அப்படின்னு சொல்லிப்
போடு. கமிட்டியார் கும்பாபிசேகம் பண்ர வரைக்கும் சாமிக்கு கீழே போட்டு
இருந்த தங்கம், வெள்ளிகாசு, நவரத்தினம் இதை வித்து சாப்பிட்டுகிட்டு இரு.
இது தெரியாதா உனக்கு.
நடேசக் குருக்கள்
: இது நல்ல யோசனை தான். நானும் இதற்கு
முன்னாலேயே சாமியை ஆட்டி தள்ளி அதுக்கு கீழே இருந்ததை
எடுத்துக்கிட்டு சாமியை சும்மாதான் நிக்கவெச்சி இருக்கிறே. அர்ச்சனை
பண்ற பூ பெலமா சாமி மேலெ பட்டாலே சாமி ஆடும். அது மாத்தரமா எங்க
கோயிலில் இருக்கிற எந்த சாமியைத் தொட்டாலும் சட்டுண்ணு படுத்துக்கும்
எல்லாம் ஆட்டி பிடுங்கி அதிலிருந்ததை முன்னையே எடுத்துத் திண்ணு
குடி அரசு
- 19270)
302
போட்டோம்.
ஆனதினாலே சாமியை பாடுபட்டு ஆட்டி கீழே தள்ள.
வேண்டியதில்லை.தொட்டா போதும். தானே கீழே விழுந்து விடும்.
சுப்புக் குருக்கள்
: அப்படியானாக்கா, இன்னைக்கி ராத்திரியே சாமி
யைத் தள்ளிப் போடு, இருட்டு காலம் தானே, யாரு பாப்பாங்கோ, கும்பா
பிசேகம் பண்ணினாக்கா உனக்கும் கிடைக்கும், எனக்கும் கிடைக்கும்.
இன்னம் மத்த பிராமணர்களுக்கும் தச்சனை, வேட்டி, சமாராதனை இதெல்
லாம் கிடைக்கும். ஒரு வாரம் எப்படியும் தாட்டிக்கிலாம். தச்சனை,வேட்டி,
குடம், சொம்பு முதலானதும் மாசக்கணக்காக வரும். அப்புரம் இதே மாதிரி
ஒவ்வொரு ஊரிலேயும் பண்ணச் சொன்னாக்க இந்த வருசத்து சங்கதி
முடிஞ்சு போகும். மேலைக்கு பாத்துக்கலாம். அதுக்குள்ளே அவனும்
ஜெயிலுக்குப் போயிட்டாக்க மத்தவனுங்க இந்தப் புத்திவுட்டுடுவானுங்கோ.
நடேசக் குருக்கள் : சரி சரி, ராத்திரிக்குப் போய் தள்ளிப் போட்டே
வந்துடுறேன், நீ எங்கயும் போயிடாதே. தருமகர்த்தாகிட்ட சொன்ன உடனே
அவன் ஒரு முட்டாளு ஆனதினாலே கும்பாபிசேகம் உடனே பண்ண
வேணும் எண்ணு சொல்ற தர்மகர்த்தா. அவன் உடனே ஏற்பாடு பண்ண
ராப்லெ இருந்தா உடனே உன்னை வந்து கூப்புடுறேன் தெரியுமா?
சுப்புக் குருக்கள்
: ஆமா ஆமா, உங்க தர்மகர்த்தாகூட ஒரு
பயித்தியக்காரன்தான். அவனுக்கு சும்மா மேலும் கீழும் சாம்பலைப் பூசத்தா
தெரியும். அரகரா, சிவசிவ எங்கத்தா தெரியும். மத்தபடி நீ சொன்னதுதான்
வேதவாக்கு. உடனே செய்வான். நானும் சத்திரத்திலேயே படுத்திருக்கிறேன்.
காலமே நேரத்திலேயே வந்து சொல்லு தெரியுமா?
நடேசக் குருக்கள் : சரி, போய்ட்டு வா. நீ நல்லா இருக்கணும். நல்ல
கஷ்டகாலத்திலே சரியான யோசனை சொன்னே. சரி, சரி.
குடி அரசு - உரையாடல் - 29.05.1927
303
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
“உருண்டைக்கு நீனம் புனிப்புக்கு
o
o
“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” என்பதாக ஒரு
பழமொழி உண்டு. அதாவது ஒருராஜாவைப் பார்க்க எல்லோரும் எலுமிச்சம்
பழம் கொண்டுபோனார்களாம். திருவாழ்தான் என்பவன் ஒரு புளியம்பழம்
கொண்டுபோய் கொடுத்துப் பார்த்தானாம். ராஜா திருவாழ்தானைப் பார்த்து
இது என்ன என்று கேட்டாராம். அதற்குத் திருவாழ்தான் “உருண்டைக்கு
நீளம் புளிப்புக்குஅவளப்பன்” என்றானாம். என்னவெனில் எலுமிச்சம்பழம்
உருண்டை, புளியம்பழம் நீளம்.
புளிப்பு விஷயத்தில் இது அதைவிட
அதிகமான புளிப்பு என்று சொன்னானாம்.
அதைப் போலவே ஜஸ்டிஸ் கட்சி மந்திரி காலம் மிகக் கொடுமை
யாகவும், தேசத் துரோகமாகவும் இருந்ததாகப் பார்ப்பனர்களால் கூறப்பட்டு
வந்தது. நமது நற்காலமாகவே ஜஸ்டிஸ் மந்திரி ஆட்சியும் மறைந்தது.
இரட்டை ஆட்சியை வெட்டிப் புதைப்போம், மந்திரிகளை எதிர்த்தே
தீருவோம் என்ற நமது அய்யங்கார்கள் சுப்பராய மந்திரிக்கட்சியை அமைத்
தார்கள். இது உருண்டைக்கு நீளமாகவும் புளிப்புக்கு அதனப்பனாகவும்
ஏற்பட்டு விட்டது.
நாம் இந்த ரகசியத்தை முன்னமேயே வெளியிட்ட
பொழுது நேற்று வரை மந்திரி கட்சிக்கும் எங்களுக்கும் சம்பந்தமேயில்லை,
நாஸ்திகரும் பார்ப்பன துவேஷியானவருமான நாயக்கர் சொல்வதை
நம்பாதீர்களென்று பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் கத்தி
வந்தன. ஸ்ரீமான் எஸ். முத்தைய முதலியார் போன்றார்கள் எக்காரணத்
தினாலோ பார்ப்பனர்களை...
அ. இ. கா. கூட்டத்தில் தாக்க ஆரம்பித்ததும்
உண்மை விஷயம் பார்ப்பனர்கள் வாயிலிருந்தே கக்கப்பட்டு விட்டது.
அதாவது :-
“தற்காலமிருந்துவரும் மந்திரி ஆட்சியில் தேசீய மணம் கமழ்கின்
றதும் காங்கிரஸ் நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்ற இம்மந்திரிகள்தான்
லாயக்குள்ளவர்கள். அதற்காகவே இம்மந்திரிகளை உபயோகப்படுத்திக்
கொள்ளுகிறோம். வகுப்புவாதக்காரர்களான ஜஸ்டிஸ் கட்சியார் தேசத்
துரோகிகள் அவர்கள் மந்திரியாய் வராமல் பார்த்துக் கொள்ளவும் சுப்பராய
குடி அரசு
- 19270)
304
மந்திரி சபையை ஆதரிக்க நேர்ந்தது. மறுதேர்தலை உண்டாக்க ஜஸ்டிஸ்
கட்சி இன்னமும் முயற்சிப்பதால் தான் இனியும் சுப்பராய மந்திரி ஆட்சியை
எப்படியாவது ஆதரிக்கப் போகிறோம்” என்பதாகச் சொல்லி பார்ப்பனர்கள்
தங்களது அயோக்கியத்தனத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.
எப்படியாவது உண்மை வெளிவந்தமை குறித்து நாம் மகிழ்ச்சி அடைய
வேண்டியதே. ஆனால் தேசீய மணம் கமழும் சுப்பராயன் மந்திரி ஆட்சியின்
யோக்கியதை என்ன? என்பதைப் பொது ஜனங்கள் அறிய வேண்டாமா?
பார்ப்பனர்களுக்கு வலது கை கொண்டு கால் அலம்பி விடும் எந்த
பார்ப்பனரல்லாதாரும் இன்றைய அய்யங்கார் ஆட்சியில் சிறிது இன்ப
மனுபவிக்கலாம் என்பது மட்டும் உண்மைதான்.
நம் நாட்டு வேளாள
குலத்தில் ஜனித்தவர்களே பெரும்பாலும் நமது அரசாங்க பெரிய உத்தியோ
கங்களில் வர வேண்டுமென்பது நமது நீண்டகால அவாவாகும். ஆயிரக்
கணக்கான வருடங்களுக்கு முன் ஸ்ரீமதி அவ்வைப் பிராட்டியாரும் அப்ப
டியே சொல்லியிருக்கிறார். ஆனால் இவ்வளவு தூரம் மோசமான ஒரு
வேளாளர் மந்திரியாக வருவதால் நமது நாட்டுக்காவது சமூகத்திற்காவது
யாதொரு நன்மையும் ஏற்படாதென்றே சொல்லுவோம். இப்போது கனம்
சுப்பராயன் மந்திரியாக இருக்கிறார் என்பது உண்மை. ஆனால் எந்த
யோக்கியதையுடன் மந்திரியாக இருக்கிறார்? இயற்கையாக அவருக்குள்ள
குலம், கல்வி, செல்வம், சக்தி ஆகிய இதுகளின் வன்மையால் இருக்கிறாரா
என்று பார்த்தால் ஒருக்காலும் இல்லவே இல்லை. பின் எப்படியென்றாலோ
பார்ப்பனர்களின் தயவில் அவர்களால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையாய்
இருப்பதினாலேயே மந்திரியாய் இருக்கிறார். நாடு சிரிக்கவும், சமூகம்
வெட்கப்படவும் மந்திரி வேலை பார்ப்பது நண்பர் சுப்பராயன்.அதன் பலனை
அடைந்து உத்தியோகம் பதவி பெற்று தின்று கொழுப்பது பார்ப்பனர்கள்.
இதை எண்ணும் போதும் நாம் மிக வருத்தப்படுவதுடன் அவ்வேளாள
சமூகத்திற்கே இம்மாதிரியான ஒருவரை அடைந்த துர்பாக்கியத்திற்கும் நாம்
அனுதாபப்படாமலிருக்க முடியவில்லை.
இதுவா தேசீய மணம்?
மந்திரியாக வந்த கதை இதுவென்றால் நடந்த கதைதான் என்ன? என்று
பார்த்தால், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் முதலிய முனிசிபாலிட்டிகளிலும்,
கோபிசெட்டிபாளையம் தாலூகா போர்டிலும், மகாத்மா காந்தியடிகளுக்கு
வரவேற்புப் பத்திரமளிப்பதென்று தீர்மானித்தார்கள். இதை சுப்பராய
மந்திரியார் தடுத்துவிட்டு ஓர் சுற்று உத்திரவையும் சகல ஸ்தாபனங்கட்கும்
அனுப்பியிருக்கிறார். இவ்வுத்திரவைப் பார்ப்பன மித்திரன் மந்திரி உத்திரவு
என்று சொல்லாமல், திருட்டுத்தனமாய் “சர்க்கார் உத்திரவு” என்கிறான். இதே
உத்திரவு பனக்கால் காலத்தில் ஏற்பட்டதற்கு “பனக்காலின் தேசத் துரோகம்,”
“பனக்காலின் ராஜ்யம் பாழ்” “மகாத்மாவுக்கே உபசாரம் கூடாதாம்” என்று
கூறினான். ஏனென்றால் பனக்கால் மந்திரி பார்ப்பன அடிமையல்ல..
305
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
பெல்காம் மகாநாட்டின் பொழுது மகாத்மாவுக்கு பத்திரமளிக்க 100
ரூபாய் செலவுடன் ஒரு கலெக்டர் 0.0.5. ஆங்கிலேயர்) தலைவராய் உள்ள
முனிசிபாலிட்டியில் தீர்மானித்தார்கள்.
ஆனால் அ.
இ. தலைவர் அய்யங்
காரின் ஆதரவு பெற்ற நமது கனம் மந்திரியின் செய்கையோ ஓர் ஆங்கிலே
யரின் செய்கை அளவு கூட யோக்கியமாய் நடந்து கொள்ள முடியவில்லை.
உண்மையில் பனக்கால் காலத்திலாவது மகாத்மா காந்தி ஆங்கிலேய
ஆட்சிக்கு ஒரு ஆபத்தான மனிதராய் விளங்கினார் என்று சொல்லிக்
கொண்டார்கள்.
ஆகவே
“சர்க்கார் விரோதிக்கு” “சர்க்காரை ஆதரித்த”
கட்சியார் ஆதரவு அளிக்காதது ஒரு விதத்தில் பொருந்தும். இன்றைய
மகாத்மா காந்தியோ மிக சாதுவாய் விட்டார். சர்க்கார் மனிதர்களும்,
மன்னர்களும், திவான்களும் விருந்தாளியாக அழைக்கும் அவ்வளவு தூரம்
சாதுவாகிவிட்டார். இப்படிப்பட்ட சாது காந்திக்கு “தேசீய மணம்” கமழும்
மந்திரி பொதுஜனங்கள் பணத்தில் உபசாரம் அளிக்கக் கூடாது என்பாரானால்
அம்மணம் தேசீய மணமா? தேசத் துரோக மணமா? “தேசீய மணமான ”'
சுயமரியாதையற்ற மணமா? என்று தான் மகாஜனங்களைக் கேட்கிறோம்.
சேலம் தேர்தல்
சேலம் ஜில்லா போர்டு தேர்தல் விஷயமாக மந்திரி நடந்து கொண்ட
தென்ன? அந்நடத்தைக்குப் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் வியாக்
யானம் என்ன?
நியாயமாக நடந்த ஜில்லாபோர்டு தேர்தல் தடை
செய்யப்பட்டது. இதற்குத் திருநெல்வேலியிலும் தஞ்சையிலும் அகப்பட்டது
போல் ஏமாந்தவர்கள் சேலத்தில் கிடைக்காததினால் முழுவதும் மோசமான
தான தாறுமாறான விளையாட்டுப்பிள்ளை உத்திரவுகளை பிறப்பிக்கும்படி
மந்திரி கையைப் பார்ப்பனர்கள் பிடித்து எழுதி தந்தி கொடுத்து வருகிறார்கள்.
இந்த மந்திரி ஆட்சியை மந்திரி ஆட்சி என்பதா? “ரி” யை தள்ளி “மந்தி”
ஆட்சி என்பதா? முதல் முதல் சேலம் ஜில்லாபோர்டு தலைவர் தேர்தல்
நடத்த மந்திரியே தான் உத்திரவிட்டார். அதாவது தற்கால பிரசிடெண்டு
ராஜினாமாவை போர்டு ஒப்புக்கொண்டு, பிறகு தேர்தல் நடத்தலாம் என்று
உத்திரவு செய்தார். அந்தப்படியே நடந்த தேர்தலை பார்ப்பனர்கள் வார்த்தை
யைக் கேட்டுக் கொண்டு ரத்து செய்துவிட்டார். மறுபடியும் மே மீ£23- ந்
தேதி நடத்தும்படி உத்திரவு செய்தார். அந்தப்படியே 23 - ந்தேதி தேர்தல்
நடக்கும் சமயம் பார்த்து அந்தத் தேதியிலும் நடக்கக் கூடாது என்று உத்திரவு
அனுப்பிவிட்டார். பிறகு ஜுன் மாதம் 4- ந் தேதி நடத்த வேண்டுமென்று
தந்தி கொடுத்திருக்கிறாராம். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான உத்திரவைப்
பிறப்பித்துப் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை அவமானப்படுத்தவே நமது
கனம் சுப்பராயன் பார்ப்பனர்களுக்கு ஓர் அடிமையாய் விளங்குகிறார்.
என்பதை நினைக்கும் போது இதை உடனே ஒழிக்காமல் வேறு என்ன
செய்வது? இவ்வளவு அக்கிரமங்களையும் ஸ்ரீமான் சுப்பராயனை செய்யச்
சொல்லி அவரையும் கெடுத்து நமது சமூகத்தையும் ஒழிக்கப் பாடுபட்டுவிட்டு
குடி அரசு
- 19270)
306
நாளைய தினம் வெள்ளைக்காரர்கள் முன்னால் இவ்விஷயங்கள் பிரஸ்தா
பிக்கப்படும் போது இதே பார்ப்பனர்கள் என்ன சொல்வார்கள் என்றால்
“பார்ப்பனரல்லாதார் உயர்ந்த வேலைகள் பார்க்க யோக்கியதை உடையவர்.
கள் அல்ல. வெறும் ஆசைப்படுவதும் பார்ப்பனர்களின் மீது பொறாமைப்
படுவதுமாய் இருக்கிறார்களே ஒழிய வேலை கொடுத்தால் இம்மாதிரி
சுப்பராய மந்திரியைப் போல்தான் நடந்துவிடுகிறார்கள். ஆதலால் கொடுப்ப
தாயிருந்தால் பார்ப்பனர்களாகிய எங்களுக்குக் கொடுங்கள், இல்லாவிட்டால்
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பச்சையாய் சாட்சி சொல்லப்
போகிறார்கள். இதை நினைக்கும் போது வேளாளசமூகத்திற்கு மாத்திரமல்ல
பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே ஒரு சொத்தை ஏற்படும்படியாக ஏற்பட்டு
விட்டதே என்கிற மன வருத்தம் நம்மை மிகுதியும் வாட்டுகிறது.
இவ்வளவு கெட்ட பெயரும் ஊரார் சிரிப்பும் அவமானமும்
அடைந்தும் சமூகத் துரோகமும் செய்தும் தானாவது ஒரு லாபத்தை அடை
கிறாரா என்று பார்ப்போமானால் அய்யோ பாவம் அதுவுமில்லை என்றே
சொல்ல வேண்டும். ஏனென்றால் பார்ப்பன சட்ட சபை மெம்பர்களும் கனம்
சுப்பராயன் மந்திரி ஆவதற்கு உதவிய சில பார்ப்பனர்களும் வரும்
சம்பளத்தில் பகுதிக்கு மேல் பிடுங்கிக் கொள்ளுகிறார்களாம்.
கதருக்
கென்றும், காங்கிரசுக்கென்றும், கட்சிப் பிரசாரத்திற்கு என்றும், வாயாடி
வம்பருக்கென்றும், கோவிலுக்கென்றும், உபநயனமென்றும். இன்னமும்
எத்தனையோ இழவுக்கு என்றும் பிடுங்கித் தின்று விடுகிறார்களே அல்லாமல்
ஒரு காசாவது வீடு வந்து சேருவதற்கும் வழியில்லை. போராக்குறைக்கு
சிபார்சு ஆள்களும் வீதிவீதியாய்த் திரிகிறார்கள். அதாவது உனக்கு என்ன
வேண்டும் கனம் சுப்பராயனால் ஏதாவது வேலை ஆகவேண்டுமா சொல்
உடனே செய்து வைக்கிறேன். சுப்பராயன் என்ன நம்ம தம்பி கைக்குள்
ளாகத்தானே, நம்ம அத்தான் சட்டப் பயில்தானே, நமது சத்தியமூர்த்தி
டிக்கெட் பாக்கெட்டில் தானே இருக்கிறார். இப்பொழுது சொல் நாளை
கெஜட்டில் பார்த்துக்கொள். சாயந்திரம் 3 மணிக்கு தந்தி வருகிறதா இல்லையா
பார். ஆனால் எனக்கு என்ன தருகிறாய் என்கிற வியாபாரம் அக்கிரகாரத்
தெருவுகளில் தூண்கள், பந்தக் கால்கள், எச்சைத் தொட்டிகள் எல்லாம்
பேசுகின்றதுகள். கூடிய சீக்கிரத்தில் கனம் சுப்பராயன் பெயர் இதை விட இனி
மேல் கெடுவதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரிக் கெட்டுப் போய்விடும்
என்பதில் சந்தேகம் தோன்ற இடமில்லைபோல் தெரிகிறது. ஆனாலும்
இதற்கு யார் என்ன செய்யக்கூடும். பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டவர்கள்.
யாராவது முன்னுக்கு வந்திருந்தால் நமது கனம் சுப்பராயன் முன்னுக்கு
வராததைப் பற்றி வருத்தப்படலாம். உலகம் பிறப்பதற்கு முன் உண்டான
சட்டம் சுப்பராயன் விஷயத்தில் மாத்திரம் எப்படி மாறக்கூடும்? ஆதலால்
அனுபவிக்க வேண்டியதுதான்.
குடி அரசு - கட்டுரை - 29.05.1927
307
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
காங்கிரஸ் பைத்தியமும் வபாய்மான்
வேட்டையம்
கோயமுத்தூரில் நடக்கப் போகும் கோயமுத்தூர் ஜில்லா பார்ப்பன
ரல்லாதார் மகாநாட்டை தென் இந்திய பார்ப்பனரல்லாதார் மகாநாடாக நடத்த
வேண்டும் என்பதாக சில ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் விரும்பியதால் கோய
முத்தூர் ஜில்லா மகாநாட்டு வரவேற்பு சபையினரும் அதற்கு இசைந்து
25 தேதி ஒரு மீட்டிங்கு கூட்டித் தென் இந்திய பார்ப்பனரல்லாதார் சங்க
நிர்வாக சபை அம்மாதிரியே தீர்மானித்து வேண்டிக் கொண்டால் அந்தப்
படிக்கே தங்களது மகாநாட்டை மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடாக
நடத்துவதாகத் தீர்மானமும் செய்தாய் விட்டது. இதன் பலனாக ஜுன் 11, 12
தேதிகளில் கூட்டுவதாயிருந்த மகாநாடு மறுபடியும் தேதி மாறினாலும்
மாறலாம்.
ஜில்லா மகாநாட்டைமாகாண மகாநாடாக மாற்ற வேண்டிய அவசியம்
என்ன என்பதைப் பற்றி நண்பர்கள் ஐயுறலாம். அதற்கு நாம் ஒரே பதில்
அளிக்கிறோம். காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையுமே தான்
காரணம். அதாவது,
ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த சில கனவான்களுக்கு காங்கிரஸினி
டத்தில் பைத்தியம் ஏற்பட்டிருப்பதும் காங்கிரசிலுள்ள பல கனவான்களுக்கு
ஜஸ்டிஸ் கட்சியில் சேரவேண்டும் என்கிற எண்ணமும்தான் இச் ஜில்லா
மகாநாட்டை மாகாணமாக நடத்தப் போகிறது.
நிற்க, காங்கிரசிலுள்ள கனவான்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவது நமது
இயக்கத்திற்கு இன்னும் நல்ல காலமென்றே சொல்லுவோம். அவர்களை
மனப்பூர்வமாய் வரவேற்போம். அப்படி அவர்கள் வந்து சேருவதற்கு
இடையூறாக நம்மிடம் என்னென்ன குற்றங்கள் இருக்கின்றதாகச் சொல்லு
கிறார்களோ அவைகளையெல்லாம் விலக்க நம்மாலான வரை முயற்சி செய்
வோம். இன்னமும் நம்மீது யாருக்காவது மனவருத்தமிருந்தாலும் மன்னிப்புக்
கேட்கவும் பின்வாங்கோம். ஏனெனில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற
மடைவதற்கும் அவர்கள் சுயமரியாதை அடைவதற்கும் எந்த விதத்தினாலும்
எல்லாப் பார்ப்பனரல்லாதாரும் ஒன்று கூடினால்தான் எதிர்பார்க்கும் பலன்
குடி அரசு
- 19270)
208
முழுவதும் அடையமுடியும் என்கிற முடிவான கருத்தை நாமுடையவ
ராதலால் இந்த நிலையில் நாம் வலிய அழைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆனால் காங்கிரசில் ஜஸ்டிஸ் கட்சியார் எல்லோரும் போய்ச் சேரவேண்டு
மென்பதையோ பார்ப்பனரல்லாதார் எல்லோரும் போய்ச் சேர வேண்டு
மென்பதையோ நாம் ஆதரிக்க முடியாததற்கு வருந்துகிறோம். ஏனெனில்
காங்கிரசைப் பற்றி இதற்கு முன் பல தடவைகளில் “குடி அரசில்” எழுதியும்,
அனேகக் கூட்டங்களில் பேசியும் வந்திருக்கிறோம். அதற்கு நாளதுவரை:
யாரும் பதில் சொல்லவேயில்லை.
காங்கிரசினால்தான் வெள்ளைக்கார ஆட்சியோ, அதிகார வர்க்க
ஆட்சியோ, அன்னிய ஆட்சியோ எதுவோ அதாவது நமது நாட்டிற்கு
அனுகூலமில்லாத ஆட்சி பலப்பட்டு நடைபெற்று வருகிறதென்பதும்,
காங்கிரசினாலேயேதான் மக்கள் ஒற்றுமை இழந்து டி அரசாட்சியைத்
தாங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், காங்கிரசினா
லேதான் நம் நாட்டுத் தொழில்கள் கெட்டு தொழிலாளிகள் கஷ்டப்படுகிறார்.
கள் என்பதும், வருஷம் ஒன்றுக்கு 10 லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நம்
நாட்டைவிட்டு வெளியில் கூலிகளாக போய்க்கொண்டிருக்கிறார்களென்
பதும், காங்கிரசினாலே தான் உத்தியோகங்கள் பெருத்ததென்பதும், காங்கிரசி
னாலேதான் அவ்வுத்தியோகங்களுக்கு உலகத்தில் எங்குமே இல்லாத
கொள்ளைச் சம்பளம் அதாவது மாதம் 1000, 2000, 5000, 6000, 10000 போல
ஏற்பட்டதும் வக்கீல்கள் பெருத்து மாதம்1000,10000, 20000, 50000 வீதம் ஏழை
மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஏற்பட்டதும், ஏழைக் குடிகள்
தலையிலும், வியாபாரிகள் தலையிலும் தாங்க முடியாத வரிகள் ஏற்பட்டதும்,
பணக்காரர்கள் மேல் மேல் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேல் மேல்
ஏழைகளாகவும், தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் தரித்திரத்தினால்
மானம், கற்பு, சுயமரியாதை, மனச்சாட்சி இவைகளை விற்று வாழும்படி
ஏற்பட்டதும் காங்கிரசினால்தான் என்பது நமது உறுதியான அபிப்பிராயம்.
இதை எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லவும்
மெய்ப்பிக்கவும் தயாராயிருக்கிறோம்.
இப்படிப்பட்ட இன்னல்கள்
விளைவிக்கும் ஒரு ஸ்தாபனத்தை தேசாபி விருத்தியில் கவலையுள்ள
வர்களும் ஏழை மக்களிடத்தில் அன்புள்ளவர்களும் ஒழித்து நன்மை
பயக்கத்தக்க இயக்கத்தில் சேர்ந்து உழைக்க வேண்டுமே அல்லாது அதில்
தாங்களும் போய்ச் சேருகிறோம் என்பதும், நீங்களும் வாருங்கள் என்று
மற்றவர்களைக் கூப்பிடுவதும் கொலை பாதகமென்பதே நமது கருத்து.
என்றாலும், அரசியலை வாழ்வாய் கொண்டவர்களும் ஆங்கிலம் படித்தவர்.
களும் எவ்வளவு தான் பரிசுத்தமான எண்ணமுடையவர்களாயிருந்த
போதிலும் காங்கிரஸ் படுகுழியில் விழாமல் தப்புவிக்க முடியவே முடியாது.
ஏனெனில் அரசியல் வாழ்வுக் காரர்கள் பாமர மக்களை ஏமாற்ற சர்க்காரை:
வைய வேண்டும்.
ஆங்கிலம் படித்தவர்கள் பெரும்
பெரும் பதவி,
309
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
உத்தியோகம் முதலியதுகளைப் பெற வேண்டும். இவ் விரண்டுக்கும் இது
சமயம் நமது நாட்டில் காங்கிரசை விட வேறு இயக்கம் கிடையாது. ஆதலால்
அவர்கள் காங்கிரசை விடமுடியாது என்பதை யாவரும் ஒப்புக்கொண்டு
தானாக வேண்டும்.
இதுசமயம் காங்கிரசுக்கு நமது நாட்டில் இழிவு ஏற்பட்டு விட்டதாலும்,
காங்கிரஸ் நாம் மேற்கூறிய இவ்வளவு இன்னல்களுக்கும் காரணமாயிருப்
பதையும் சமீபத்தில் பம்பாய் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை
களைப் பார்த்த பிறகு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமானதும்,
பார்ப்பன ஆதிக்கத்திற்கு
அநுகூலமான ஸ்தாபனம் என்பதை யாவரும்
ஒப்புக்கொள்ள வேண்டி ஏற்பட்டதாலும், காங்கிரசானது பார்ப்பன
ரல்லாதாரை நசுக்கவே பார்ப்பனர்கள் உபயோகித்துக் கொண்டிருக்கும்
ஆயுதம் என்பது யாவருக்கும் தெரிந்து விட்டதாலும், அதிலிருக்கும்
பார்ப்பனரல்லாதாருக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடிக்கவேண்டிய
அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே அவர்கள் “பார்ப்பனரல்லா
தாரில் முக்கியமாயுள்ளவர்கள் காங்கிரசை விட்டுவிட்டதால் ஒரு சிறிய
கூட்டத்தார் பெரும்பான்மையராகி அதில் ஆதிக்கம் பெற்று பார்ப்பன
ரல்லாதாருக்கு விரோதம் செய்கிறார்கள். ஆதலில் பார்ப்பனரல்லாதார்.
பெரும்பான்மையாகிவிட்டதால் அவர்களது ஆதிக்கம் காங்கிரசில் குறைந்து
விடும். பிறகு நமக்கு சுயராஜ்யம் வந்து விடும்” என்கிறார்கள். இது வாலறுந்த
நரி கதையே தவிர வேறல்ல. ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள சில ஆங்கிலங் கற்ற
பிரமுகர்களோ “நாம் நமது மாகாணத்துக்குள் எவ்வளவுதான் செல் வாக்கு
பெற்றிருந்தாலும் காங்கிரசின் மூலம் நமது நாட்டுப் பார்ப்பனர்கள் வெளி
மாகாணங்களின் மூலமாக தங்களுக்கு அனுகூலம் தேடிக் கொள் கிறார்கள்.
இப்போது பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் உபத்திரவங் களில்
பெரும்பாகம் காங்கிரசினால்தான் ஏற்படுகிறது. ஆதலால் அதை நாம்
கைப்பற்றிக் கொண்டால் அதாவது அவர்களிடமிருந்து நாம் பிடுங்கிக்
கொண்டால் நமக்கும் உபத்திரவம் செய்ய அவர்களுக்கு வேறு ஆயுதம்
இல்லாமல் போய்விடும்” என்பதாகச் சொல்லுவதோடு “இப்பார்ப்பனர்களின்
யோக்கியதையை வெளி மாகாணங்களிலும் போய்ச் சொல்ல செளகரிய
மாயிருக்கும்” என்றும் சொல்லுகிறார்கள்.
இது “கொக்கு தலையில்
வெண்ணை வைத்து அது உருகி கண்ணுக்கு வந்து கண் தெரியாமல் போகும்
போது பிடித்துக் கொள்ளலாம்” என்பது போல் இருக்கிறது.
மற்றொரு கூட்டத்தார் அதாவது காங்கிரசில் ஒரு காலும் ஜஸ்டிஸ்
கட்சியில் ஒரு காலும் வைத்திருக்கிறவர்கள். “இப்போது தானே இந்தக்
காங்கிரஸ் இப்படி தேசத்துக்கும் சமூகத்திற்கும் துரோகம் செய்கிற
ஸ்தாபனமாகிவிட்டது. இதுவரையில் தேசத்திற்கு எத்தனையோ நன்மை
செய்திருக்கிறது. ஆதலால் அதைக் கைப்பற்றி முன் போல செய்யவேண்டும்
குடி அரசு
- 19270)
210
என்கிறார்கள்.” இது முழு மோசமான தென்றே சொல்லலாம். ஆகவே
இம்மூன்று வாதங்களும் கொஞ்சமும் பொருத்தமானதல்ல..
முதலாவது, காங்கிரசை எந்த காரணம் கொண்டும் நம்மால் கைப்பற்ற
முடியவே முடியாது.
மகாத்மா காலத்திலும் காங்கிரஸ் பார்ப்பனர்கள்
வசம்தான் இருந்தது. ஆனால் நம்மை முன்னால் இருத்தி வேலை வாங்கிக்
கொண்டு வந்தார்கள். இப்போதும் காங்கிரஸ் நம்ம கைக்கு வரவேண்டு
மானால் பார்ப்பனர்கள் சொல்படி நடந்தால் உடனே வந்துவிடும். மற்றபடி
அவர்கள் நன்மைக்கல்லாமல் நாம் கைப்பற்றுவதானால் முடியவே முடியாத
காரியம் என்பது நமது அபிப்ராயம். ஏனெனில் காங்கிரசைக் கைப்பற்ற
நமக்கு பார்ப்பனர்களுக்கு ஆள்கள் கிடைப்பதைப் போல நாமும் விசேஷ
பணம் செலவு செய்து ஆள்களைச் சேர்த்துக் கொண்டு காலித்தனத்திற்குத்
தயாராயிருக்க வேண்டும். பார்ப்பனர்கள் செலவு செய்யும் பணமும் அவர்.
கள் பேச்சைக் கேட்டு காலித்தனம் செய்யும் ஆள்களும் அவர்களுடையது
அல்ல. நம்ம பணங்கள்தான்,நம்ம ஆள்கள்தான். அதாவது நமது பண்டாரச்
சன்னதிகள், ஜமீன்தாரர்கள், பெரிய பெரிய மிராசுதாரர்கள் முதலியவர்
களைத் தங்கள் அதிகார பலத்தால் மிரட்டிப் பணம் பெற்று விடுகிறார்கள்.
அதைக்கொண்டு நம்மவர்களுக்கே கொடுத்து நம்மவர்களையே பிடித்து
நம்மை வையச் சொல்லவும், காலித்தனம் செய்து அடிக்கச் சொல்லவும்,
அடிபடவும், வசவு கேட்கவும் செய்து விடுகிறார்கள். அன்றியும் இம்மாதிரி
நம்மில் பலர் காங்கிரசைக் கைப்பற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்
பதைக் கேள்விப்பட்டவுடன் காங்கிரஸ் வரவேற்பு கமிட்டி அக்கிராசனர்
வேலையை 45000 ரூபாய்க்கு ஒரு அய்யங்கார் பார்ப்பனருக்கு விற்று
விட்டதாகவும்
அந்த அய்யங்கார் பார்ப்பனர் அந்த 45 ஆயிரம் ரூபாயையும்
2.3மடாதிபதிகளிடமும் இரண்டொரு மகந்துக்களிடமும் வாங்கிக் கொடுக்கத்
தீர்மானித்து விட்டதாகவும் சென்னையில் பலமான வதந்தி உலாவுகிறது.
இதற்கு நாம் செலவு செய்ய பணம் யாரிடமிருக்கிறது. நமக்கு எந்த மடாதிபதி
கொடுக்க முடியும்.
தவிர நம்மவர்களையே பிடித்து நம்முடன் கலகம்
செய்யத் தூண்டிவிட்டால் நாம் அவர்களுக்கு பணம் கொடுத்து சரி செய்ய
நம்மால் முடியுமா? தவிர ஸ்ரீமான்களான ஒரு ஓ. கே. செட்டி யாரையும்,
ஒரு நாயுடுவையும், ஒரு முதலியாரையும், ஒரு நாயக்கரையும், ஒரு
பிள்ளையையும், ஒரு குழந்தையையும், ஒரு பாவலரையும், ஒரு சாயபு
வையும் நாம் வசப்படுத்திக் கொண்டால் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு
வேறு நாயுடு, முதலியார், செட்டியார், நாயக்கர், பிள்ளை, பாவலர், சாயபு
கிடைக்கமாட்டார்களா? இப்படி எத்தனை பேரை வசப்படுத்த எவ்வளவு
ரூபாய் செலவு செய்து எத்தனை காலித்தனங்களுக்கு நாம் தலை கொடுப்பது?
இவ்வளவும் செய்தாலும் இந்த விஷயங்கள் தெரிந்தே சமீபத்தில் கூடிய
எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஒரு தீர்மானம் போட்டுக்
கொண்டிருக்கிறார்களே அதற்கு என்ன செய்வது? அதாவது “ஒரு ஊரில்
311
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
இரண்டு காங்கிரஸ் கமிட்டி ஏற்பட்டு விட்டால் காங்கிரஸ் காரியக் கமிட்டியார்
எதை ஒப்புக் கொள்ளுகிறார்களோ அதுதான் செல்லுபடி உள்ளது. மற்றது
தள்ளிவிடத் தக்கது” என்று செய்து கொண்டிருக்கிறார்களே. அதற்கு நாம்
என்ன செய்ய முடியும். ஏதோ ஒரு அன்னக்காவடியைப் பிடித்து ஒரு அய்யர்.
பிரசிடெண்டு ஒரு அய்யங்கார் காரியதரிசி
2,
3 சோணகிரிகள் நிர்வாக
மெம்பர்கள் என்று கடிதத்தில் எழுதிக்கொண்டால் அதைத்தான் காரியக்
கமிட்டி ஏற்றுக்கொள்ளுமே தவிர இங்கு நாம் எவ்வளவுதான் ஒழுங்காய்
வேலை செய்து ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு பிரசிடெண்டு, ஆர்.கே.
ஷண்முகம் செட்டியார் காரியதரிசி, பனகால் ராஜா, கலியாணசுந்திர முதலி
யார், ராமசாமி நாயக்கர் நிர்வாக சபை மெம்பர்கள் என்று சொன்னாலும்
அதை ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காரோ சத்தியமூர்த்தியோ பார்த்துக்
காரியக்கமிட்டியால் குப்பைத் தொட்டியில் போடச் செய்ய வேண்டுமானால்
அரை க்ஷண நேரத்தில் முடியும். அப்படித்தான் ஜயித்தாலும் காங்கிரசிலும்
அகில இந்தியக் காங்கிரஸ் காரியக்கமிட்டி இதுகளிலும் நம்மால் என்ன
செய்துவிட முடியும்? பம்பாயில் ஸ்ரீமான் முத்தையா முதலியார் கொஞ்சம்
பேசுவதற்குத் தன்னாலானவரை பாடுபட்டும் கடன் வாங்கிப் பார்த்தும்
முடியாமல் முக்காடு போட்டுக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார்.
அதற்குமேல் யார் என்ன செய்து விட முடியும்? எப்படியும் எல்லா இந்தியத்
தலைவர் பார்ப்பனராகவோ அல்லது ஸ்ரீமான் தாஸ் போன்ற விபீஷணர்
களாகவோதான் இருக்க முடியும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டும் அதைப்
பிடித்துவிட்டாலும் அதனுடன் மாரடிக்கவும் அதை மறுபடியும் பார்ப்பனர்கள்
கைப்பற்றாதிருக்க பாடுபடவும் அதே வேலை நமக்கு சரியாய் இருக்குமே
ஒழிய அரை நிமிடமாவது நமக்கு நாட்டிற்கோ சமூகத்திற்கோ வேலை
செய்யக் கொஞ்சமும் ஓய்வு இருக்காது. அப்படித்தான் ஓய்வு இருந்தாலும்
நமக்கு வேண்டிய திட்டங்களை யெல்லாம் இந்தியக் காங்கிரசில் புகுத்த
முடியாது. ஆகவே இவ்வளவு கஷ்டங்கள் காங்கிரசிலிருப்பதை யோசித்துப்
பார்த்தால் யாருக்கும் விளங்காமல் போகாது.
ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு எல்லோரும் வாருங்கள் காங்கிரசில்
சேருங்கள் என்று பார்ப்பனரல்லாதாரைக் கூவியழைத்ததும் பார்ப்பன
மித்திரனுக்கும் பார்ப்பன சுயராஜ்யாவுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்து
விட்டது என்பதைப் பாருங்கள்.
மித்திரன்
“ஸ்ரீ வரதராஜுலு நாயுடு
பேச்சைக் கேட்டு பார்ப்பனரல்லாதார்களே கெட்டுப் போய்விடாதீர்கள்””
என்று புத்தி சொல்லுகிறான். மற்றொருவன் காங்கிரசுக்கு ஆபத்து வந்து
விட்டது போல் ஆத்திரப் படுகிறான். ஆகவே காங்கிரசு பார்ப்பனர்கள்
வீட்டுச் சொத்தாய் இருந்து அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து
வந்திருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லையா? நாம் ஏன் அங்கு போக.
வேண்டும். நமக்கு ஒரு சொத்து தேடிக் கொள்ள முடியாதா? இப்பொழுது
காங்கிரசின் பூரா யோக்கியதையும் வெளியாகி அது உலகத்தாரால் அவமதிக்
குடி அரசு
- 19270)
312
கப்பட்டு கூடிய சீக்கிரத்தில் சாகப்போகும் ஒரு ஸ்தாபனத்திற்கு நாம் போய்
உயிர்கொடுத்து அதற்கு யோக்கியதை உண்டாக்கிப் பார்ப்பனர்கள் கையில்
ஒப்படைத்து விட்டு வர வேண்டுமா? ஸ்ரீமான் நாயக்கர் சொம்பையும்
மூட்டையையும் தூக்கிக் கொண்டு காலை ஒரு ஊர், பகல் ஒரு ஊர், மாலை
ஒரு ஊர், படுக்கை ஒரு ஊராகத் திரிந்து காங்கிரசுக்கு உழைத்த உழைப்பு
இன்று என்ன ஆச்சுது. ஸ்ரீமான் முதலியார் தொண்டைக் கிழியக் கத்திக்
காங்கிரசுக்கு உழைத்தது இன்று என்ன ஆச்சுது. ஸ்ரீமான் நாயுடு ஜஸ்டிஸ்
கட்சியைக் கொலை செய்து காங்கிரசுக்கு வீரகண்டாமணி சூட்டியது இன்று
என்ன ஆச்சுது?
“தென்னாட்டுத் திலகரை (ஸ்ரீ நாயுடுவை! காங்கிரசை விட்டுத் துரத்த
வேண்டும், மாரீசனை (ஸ்ரீ முதலியாரை! காங்கிரசை விட்டு வெளியாக்க
வேண்டும், நாயக்கரை ஜெயிலில் பிடித்து அடைக்க வேண்டும்” என்று
சொன்னவரைத் தானே காங்கிரசு தனக்கு தலைவராக ஏற்றுக் கொண்டது
வேறு அதனிடத்தில் நாட்டுக்கோ மக்களுக்கோ சமூகத்திற்கோ இருக்கும்
நன்மையோ, நாணயமோ இன்னது என்பது
நமக்கு விளங்கவில்லை.
ஆனபோதிலும் ஜஸ்டிஸ் கட்சியில் வந்து சேருவதற்கு காங்கிரசில் இருக்கும்
பார்ப்பனரல்லாதாருக்குத் தடையாக ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு 25 - தேதி
தந்தியில் கண்ட காரணமாகிய இரண்டு மாத்திரமே அதாவது “ஜஸ்டிஸ்
கட்சிக்காரர்கள் காங்கிரஸ் விவகாரங்களை எதிர்க்கக்கூடாது” என்பதும்
“பார்ப்பனரல்லாதார்கள் தங்கள் சொந்த ஹோதாவில் காங்கிரசில் சேர
அனுமதி அளிக்க வேண்டும்” என்பதுகளே ஆக்ஷேபணைகளா யிருக்கு
மானால் அதைப்பற்றி நமக்குத் தோன்றியதைச் சொல்லுகிறோம். இரண்டா
வது விஷயத்தைப் பற்றி நமக்கு ஆக்ஷபணை இல்லை. சொந்த ஹோதா
வில் காங்கிரசில் சேருகிறவர்கள் சேர்ந்து கொள்ளட்டும்.
முதலாவது
விஷயமாகிய அதாவது “காங்கிரஸ் விவகாரங்களை ஜஸ்டிஸ்காரர்கள்
எதிர்க்கக்கூடாது”' என்று சொல்லுவது நியாயமாகுமா? நேற்று பம்பாயில்
கூடிய கூட்டத்தின் நடவடிக்கைகளை இப்போது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு
முதல் உலகமே எதிர்க்கிறதே. கயா தீர்மானங்களை தேசபந்து தாஸ் எதிர்க்க
வில்லையா?
காங்கிரசு சூழ்ச்சிகளை ஜனங்களுக்கு வெளிப்படுத்த
வேண்டாமா? காங்கிரசு தேவஸ்தான ஆக்டை எதிர்த்தால் ஜஸ்டிஸ் கட்சிக்
காரர்கள் சும்மா இருக்க வேண்டியதா? காங்கிரசு சர்க்காரை ஆதரித்தால்
ஜஸ்டிஸ்காரர்கள் சும்மா இருக்க வேண்டியதா? காங்கிரஸ் இப்போதைய
மந்திரிகளை ஆதரிக்க
அ. இ.கா. கமிட்டி உத்திரவு பெற்று வந்து விட்டதால்
ஜஸ்டிஸ் கட்சியும் ஸ்ரீமான் சுப்பராய மந்திரியை எதிர்க்கக்கூடாதா? ஆதரிக்க
வேண்டியதுதானா? என்பதுகளை யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு
கொடுமையான அடக்குமுறை என்பது விளங்காமல் போகாது. இதுவரை
காங்கிரஸ் எத்தினை குட்டிக்கரணங்கள் போட்டு வந்திருக்கிறது என்பது
யாருக்கும் தெரியாதா? ஆதலால் முதலாவது நிபந்தனை நீக்கி இரண்டாவது
33
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
நிபந்தனையை ஒப்புக்கொள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு
ஆக்ஷேபணை இருக்காது
என்றே எண்ணுகிறோம். மற்றபடி நமக்கு சொந்தத்தில் எதைப்பற்றியும்
அதிகமான கவலை கிடையாது. ஏனெனில் நாம் காங்கிரஸ் அரசியல்
விவகாரங்களைப் பற்றியும் ஜஸ்டிஸ் அரசியல் விவகாரங்களைப் பற்றியும்
நம்பிக்கையே கிடையாது. இரண்டின் அரசியல் விவகாரங்களையும் புரட்டு
என்றும் பாமர ஜனங்களையும் ஏமாற்றி உத்தியோகம் சம்பாதிக்கும் வழி
என்கிறோம். நமது தேசாபிமானம் நிர்மாணத் திட்டம்தான். நமது அரசியல்
விவகாரம் எல்லா மக்களுக்கும் சரிசமமாய் அரசாங்கப் பதவி உத்தியோகத்
தில் உரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான். நமது ஜீவகாருண்ணியமும்
பரோபகாரமும் சுயமரியாதைதான். ஆதலால் மற்றவைகளைப் பற்றி நமக்குக்
கவலை இல்லை. நம்மால் ராஜி கெட்டு போய் விட்டது என்கிற பெயர்.
வேண்டியதில்லை. ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் நிபந்தனைகளைப்
பற்றி யோசிப்பவர்கள் நம்மைப்பற்றி யாரும் நினைக்க வேண்டியதில்லை.
யார் எப்படி தீர்மானம் செய்து கொண்டாலும் மேற்குறித்த நமது கொள்கை
களை நிறைவேற்றும் விஷயத்தில் யார் யார் உதவி செய்யக் கூடும் என்று
தோன்றினாலும் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் அவர்.
களுடன் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம்..
நமது மேற்கண்ட கொள்கைகளுக்கு யார் யார் எதிராயிருந்தாலும்
அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் அவர்களை எதிர்க்கத்
தயாராக இருக்கிறோம் என்பதைப் பொது மக்களுக்குத் தெரிவித்துக்
கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.05.1927
குடி அரசு
- 19270)
314
ஒரு சமாதானம்
சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில்
“நாயக்கரின் நயவஞ்சகம்” என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக
“ஸ்ரீவரதராஜுலுவின் வண்டவாளம்” என்னும் தலைப்பின்
கீழ் சில
விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப்
பட்டிருந்தக் கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே
நாயக்கருக்குக் கொஞ்ச காலத்திற்கு முன் எழுதியதாகக் காட்டப்பட்டிருந்த
கடிதத்திற்கும் சமாதானமாகவும், அடுத்த வாரம் எழுதுவதாகப் பதில்
எழுதியிருந்தோம். அதை உத்தேசித்து அநேகக் கனவான்கள் நமக்குப்
பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது நாம் எழுதப்
போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங்
களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் தங்கள்
இஷ்டப்படிக் கண்டித்து நாயுடுவுக்குப் பதில் என்கிற முறையில் எழுதி பல
கடிதங்களும்; இவ்விதம் இருவர் சண்டைபோட்டுக் கொள்வது ஒழுங்கல்ல
வென்கிற முறையில் சிற்சில கடிதங்களும்; இந்த விஷயத்தைப் பற்றி நாம்
சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப் போகும்
பத்திரிகையில் சுமார் 250 பத்திரிகை வரையில் அதிகமாக அனுப்பிக்
கொடுக்கும்படி பல கடிதங்களும் வந்திருக்கின்றன. இவ்வளவும் நாம்
இவ்வாரத்தில் பிரசுரிக்கப் போகும் பதில்களுடன் சேர்த்து பிரசுரிக்கவே
வந்திருக்கின்றன. நாமும் சென்ற வாரம் எழுதியது போலவே நமக்குக்
கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் மனப்பூர்வமாய் நாம் சரி என்று
எண்ணுவதையும் கொண்டு ஒரு விரிவான வியாசம் எழுதலாமென்றுதான்
இருந்தோம். ஆனால் நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவரும்
உண்மையான நண்பர் என்று எண்ணிக் கொண்டிருப்பவருமான ஒரு
கனவான் இவ்விஷயத்தில் மிகுதியும் சிரமம் எடுத்துக் கொண்டு சில நிபந்த
னைகளின் பேரில் விவாதத்தை இத்துடன் நிறுத்தி விட வேண்டுமென்று
கட்டாயப்படுத்தினார். ஏறக்குறைய அவர் உறுதி கொடுத்த நிபந்தனை
களானது நமது பிற்கால பிரயத்தனங்களுக்குக் கெடுதியில்லாததாகவும்
அனுகூலத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் இருந்ததோடு அந்நிபந்தனைகள்
நிறைவேற்ற அவரே பொறுப்பேற்றுக் கொண்டதினாலும் ஸ்ரீலஸ்ரீ கைவல்ய
சாமிகள் முதல் பல பெரியார்கள் இது விஷயமாக நமக்கு எழுதியிருப்
315
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
பவைகளுக்கிசைந்து ஒருவாறுநிறுத்திக் கொண்டு இருக்கிறோம். இம்மாதிரி
நாம் எழுதியிருப்பதானது அனேகருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்குமென்பது
நமக்குத் தெரியும். ஆனாலும் ஏமாற்றமடைந்தவர்களில் பலருக்கும் நமக்கும்
ஒரு குறிப்பிட்ட லட்சியத்தினிடத்திலேதான் அதிக கவலையும் மதிப்புமே
தவிர சண்டையும் அவசியமில்லா வீரியமும் பெரிதல்ல. இது விஷயமாக
வந்த பல கடிதங்களை இதுசமயம் போடாததற்கு நிரூப நேயர்கள் மன்னிக்க
வேண்டும். இதற்குமேல் விரிவான சமாதானத்தை விரும்புகின்ற வர்களுக்கு
கோயம்புத்தூர் மகாநாட்டுக்குப் பிறகு தெளிவாகக் கூறுவோம்.
குடி அரசு - கட்டுரை - 29.05.1927
குடி அரசு
- 19270)
316
எஸ்.சி. போசிண் வி௫தலை
நமது நாட்ழற்க ஒரு வவட்கக்கேட
சுயசாதி போஸ் (சுபாச் சந்திர போஸ்) விடுதலையானது பற்றி ஏறக்
குறைய எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதிலிருந்து இந்திய மக்களின்
சுரணை மானம்! கெட்டதன்மை நன்றாய் வெளியாகிறது.
சுபாச் சந்திரபோஸ் சர்க்காரால் காரணம் சொல்லாமல் விசாரணை:
செய்யாமல் சுமார் 2 ', வருஷ காலம் ஜெயிலில் அடைத்து வைக்கப்
பட்டிருந்தார். மகாத்மா காந்தியும் இந்த அக்கிரமத்தை அறிந்து ஸ்ரீமான் தாசும்
அடைபட்டு விடுவாரோ என பயந்து ஒத்துழையாமையையும் அதனால்
மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பலிகொடுத்து ஸ்ரீ தாசுக்கு ஏதோ
பெரிய ராஜி செய்து கொண்டதாய் பாவனை காட்டி சர்க்கார் ஸ்ரீமான் தாசைப்
பிடித்தடைக்காமல் செய்தார். இதன் பலனாக தேசம் குட்டிச்சுவர் ஆகி
அயோக்கியர்கள் முன்னுக்கு வந்தார்கள். பதவிக்குப் போட்டி போட்டார்கள்.
பதவி பெற்றார்கள். அதிலேயே மகிழ்ந்திருந்தார்கள். தங்களுக்குப் பதவி
வேண்டிய போதெல்லாம் பதவி வேட்டைக்கு சுபாச் சந்திரபோஸ் பெயரை
சொல்லிக் கொண்டார்கள். இவ்வளவுதானே அல்லாமல் அவரை விடுதலை
செய்ய வெறும் மேடைப் பேச்சும் காகிதத் தீர்மானமும் செய்தார்களே
அல்லாமல் காரியத்தில் ஒரு வேலையும் செய்தவர்கள் அல்ல. சட்டமறுப்பு
செய்திருக்கலாம். சத்தியாக்கிரகம் செய்திருக்கலாம். சட்டசபையை விட்டு
வெளி வந்திருக்கலாம். இன்னமும் ஏதாவது ஒரு நாள் வேலை நிறுத்தம்
(ஏற்பட்டால்) முதலியதுகளாவது செய்திருக்கலாம். ஒன்றுமில்லாமல்
வேகமாய் போய்க் கொண்டிருக்கும் மோட்டார் கார் வண்டியைப் பார்த்து
பட்டிக்காட்டு நாய்கள் கொஞ்ச தூரம் உரத்த சப்தத்துடன் குலைத்துக்
கொண்டு போய் வாயும் காலும் ஓய்ந்தவுடன் தனக்குள் முணுமுணுத்துக்
கொண்டு திரும்பி வருவது போல் இருந்தார்களே தவிர வேறு என்ன
நடந்தது? கடைசியாய் ஸ்ரீமான் போஸ் செத்து விடுவாரோ? என்னமோ?
என்கிறதாகப் பயந்து சர்க்காரார் அந்தப் பழியில் இருந்து தப்பித்துக்கொள்ள
திருச்சி ஜெயிலில் மகாவீரர் வாஜ்பாயி என்பவரைக் கொண்டு வந்து
வெளியில் தள்ளிவிட்டது போல், வெளியில் கொண்டுவந்து விட்டால்
317
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
இதற்காக சந்தோஷம், வாழ்த்து, சர்க்கார் புத்திசாலித்தனத்திற்கு நற்சாட்சிப்
பத்திரம், நன்றியறிதல் போன்ற இழிதன்மைகளே எங்கு பார்த்தாலும்
மலிகின்றன. இந்த மனப்பான்மைதான் இந்தியாவில் உள்ள கஷ்டங்களுக்கு
ஆதாரமே தவிர வேறில்லை. இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் இருக்
கிறதா? வெட்கப்படக்கூடிய விஷயம் இருக்கிறதா? என்பதை யோசித்துப்
பாருங்கள். தவிர பங்களா அரசியல் வாழ்வுக்காரர்கள் அனேகமாய் நமது
தமிழ்நாட்டு அரசியல் வாழ்வு பார்ப்பனர்களை விட மிகவும் சுயநலக்காரர்.
வெட்கங்கெட்டவர் என்பதற்கு ஸ்ரீமான் போசின்
2 வருஷம் சிறைவாசமும்
அவர் சிறையில் இருக்கும் போது சுயராஜ்யக் கட்சி முதலிய அரசியல் கட்சி
பேரால் சட்டசபை மந்திரி, பிரசிடெண்ட், மேயர், கார்ப்பரேஷன் மெம்பர்,
காங்கிரஸ் கமிட்டி தேர்தல் முதலியவைகளில் நடந்த போட்டியும் சூழ்ச்சி
களுமே போருமான சாட்சியாகும். தானாகவே விடுதலை செய்யப்பட்ட
ஸ்ரீமான் போசின் விடுதலையைப் பற்றி இவ்வளவு தூரம் சந்தோஷப்பட
ஒன்றும் காரணமில்லை என்பதைத் தெரிவிக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 29.05.1927
குடி அரசு
- 19270)
318
பைத்தியக்காரனுக்கும் உஷார்காரனுக்கும்
சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
பைத்தியக்காரன்
: ஸ்ரீமான்கள் பிரகாசமும், சாம்பமூர்த்தியும்
இப்போது ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் சத்தியமூர்த்தி முதலியவர்களுடன்
சண்டை போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பார்ப்பனக் குட்டுகளை
வெளியாக்கி வருகிறார்களே, இந்த சமயத்தில் நாம் காங்கிரசைப் பிடித்துக்
கொள்ளலாமே?
உஷார்காரன்: அட போடா! பைத்தியக்காரப் பயலே. பார்ப்பனர்கள்
சங்கதி உனக்குத் தெரியாதா? சுயராஜ்யப் பத்திரிகைக்கு ஏதாவது கொஞ்சம்
பணம் வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் ஆந்திர தேசத்தில் சுயராஜ்யக்
கட்சியையும் சீனிவாசய்யங்கார் கோஷ்டியையும் திட்டினால்தான் மதிப்புக்
கிடைக்கிறதாகவிருக்கும். அதற்காக ஸ்ரீமான்கள் பிரகாசமும் சாம்பமூர்த்தி
யும் போட்ட புது வேஷமேயல்லாமல் இதில் நமக்கொன்றும் லாபமில்லை.
மேற்படி இரண்டு யோக்கியர்களும் சட்டசபைத் தேர்தலின் போது செய்த
உபத்திரவம் உனக்குத் தெரியாதா? இவர்கள் ஜஸ்டிஸ் ககடியை வைதது
உனக்குத் தெரியாதா? இதே ஸ்ரீமான் சாம்பமூர்த்தி முழங்காலுக்கு மேல்
வேட்டியைக் கட்டிக்கொண்டு காந்தியைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு
பார்ப்பனரல்லாதாரை திட்டவில்லையா? பார்ப்பனரல்லாதார் என்கிற
சண்டை வரும் போது திடீரென்று எல்லாப் பார்ப்பனரும் ஸ்ரீமான்கள்
பிரகாசம் சாம்பமூர்த்தி உள்பட நிமிஷ நேரத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
அவர்களை நம்பி விடாதே.
பைத்தியக்காரன் : அப்படியானால் பார்ப்பனரல்லாதார் எல்லோரும்
ஏன் ஒன்று சேருவதில்லை?
உஷாரர்காரன் : அதற்குக் காரணம் அனேகமுண்டு. என்னவென்றால்
பார்ப்பானுக்கு வயிற்றுச் சோற்றுப் பஞ்சமே இல்லை. எப்படியாவது கஷ்டப்
படாமல் பிழைக்கலாம்.
319
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
பைத்தியக்காரன் :.அதென்ன பார்ப்பனனுக்கு மாத்திரம் சோத்துக்குக்
கஷ்டமில்லை என்கிறாய்.
உஷார்காரன் : அப்படிக் கேள். சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து
கொள்ளாமல் சில பேர் மகா மேதாவிகள் போல் நினைத்துக் கொண்டு “பார்ப்
பனர் புத்திசாலி அவர்களுக்குள் சண்டை இல்லை. பார்ப்பனரல்லாதார்.
முட்டாள்கள். அதனால்தான் சண்டை பிடித்துக் கொள்ளுகிறார்கள்” என்று
சொல்லிவிடுவதுண்டு. அது என்ன காரணம் என்றால் அது நமது அடிமை
மனப்பான்மையே தவிர வேறில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் அவர்களை
விட புத்திசாலி என்பது நன்றாய் விளங்கும்.பார்ப்பானுக்கு ஏன் சாப்பாட்டுக்
குப்பஞ்சமில்லை என்றால்:
முதலாவது, பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்பதாலும் மற்றவர்கள் தாழ்ந்த
ஜாதி என்பதாலும் பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவரும் தாங்கள் உண்மை
யாய் எந்தத் தகப்பனுக்குப் பிறந்தார்களோ அதை விட்டுவிட்டு “நான்
வைசியனுக்குப் பிறந்தேன்; நான் க்ஷத்திரியனுக்குப் பிறந்தேன்; நான் பூ
வைசியனுக்குப் பிறந்தேன்; நான் அக்னி குல க்ஷத்திரியனுக்குப் பிறந்தேன்;
நான் யாக க்ஷத்திரியனுக்குப் பிறந்தேன்; நான் விஸ்வப் பிராமணனுக்குப்
பிறந்தேன்; நான் செளராஷ்ட்டிரப் பிராமணனுக்குப் பிறந்தேன்” என்று இந்த
நாட்டில் இல்லாத ஒரு ஜாதித் தகப்பன் பேரைச் சொல்லிக் கொண்டும்
எல்லோரும் சகோதரர் என்பதை மறந்தும் ஒருவனுக்கு ஒருவன் உயர்ந்த
ஜாதி என்றும் ஒருவனை ஒருவன் மற்றவனை விட தாழ்ந்த ஜாதி என்றும்
சொல்லிக் கொண்டு பார்ப்பனனைப் பார்த்து காப்பியடித்து ஒருவன் வீட்டில்
ஒருவன் சாப்பிடுவதில்லை;
ஒருவன் தொட்டதை ஒருவன் சாப்பிடுவ
தில்லை: ஒருவன் பார்க்க ஒருவன் சாப்பிடுவதில்லை என்று முட்டாள்தன
மாக சொல்லிக் கொள்வதாலும் இவர்கள் எல்லோரும் பார்ப்பனனை விட
தாழ்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொண்டு அவனை உயர்வாகக் கருதிக்
கொண்டிருப்பதாலும், பார்ப்பனரல்லாதார் எல்லோரும் பார்ப்பனர்கள்
தொட்டதை பார்ப்பனர் வீட்டில் பார்ப்பனர் முன்னால் சாப்பிடுவது குற்றமற்ற
தென்றும் விசேஷ மென்றும் நினைத்துக்கொண்டு இருப்பதாலும் பார்ப்பனர்.
ஓட்டல், பலகாரக் கடை, காப்பிக் கடை முதலியதுகள் வைத்து கொள்ளைய
டிக்க சவுகரியமாயும் கோவிலில் பூசை செய்ய செளகரியமாயும், சமையல்
வேலையில் சேர்ந்துக் கொள்ள செளகரியமாயும் ஆகிய இந்த வேலைகளை
உலகத்தில் உள்ள 3-ல் ஒரு பங்கு பார்ப்பனருக்கு தாராளமாய் கிடைக்கிறது.
இதனாலேயே ஒரு சமையல் பார்ப்பானுக்கு மாதம் 30 முதல் 50 ரூபாய் வரை
சம்பளம் நடக்கிறது. ஒரு காப்பிக்கடைக்காரன் மாதம் 1-க்கு 100, 150 ரூ.
வாடகை கொடுத்து 50, 60 ரூபாயிக்கு சாராயம் குடித்து, மாம்சம் சாப்பிட்டு
மாதம் 75 முதல் தேவடியாளுக்கும் கொடுத்து தான் குடும்பத்திற்கு L5100 ரூ.
சிலவும் செய்யத்தக்க வரும்படி சம்பாதிக்கிறான். பக்கத்துக் கடைக்காரன்
பார்ப்பனரல்லாதானாயிருந்தால் அதே வியாபாரம் செய்வதில் மீ” 15 ரூபாய்
குடி அரசு
- 19270)
320
வாடகை கொடுக்கமாட்டாமலும் தன் வீட்டு ஜனங்கள் வயிறு நிறைய
சாதாரண சாப்பாடு கூட சாப்பிட முடியாமலும் பட்டினி கிடக்கிறார்கள்.
இரண்டாவது பார்ப்பார் உயர்ந்த ஜாதி, கடவுள் முகத்தில் பிறந்தவன் என்கிற
நமது அறியாமையால் நமது பாவங்களைப் போக்கவும் புண்ணியம் சம்பாதிக்
கவும் நமது பெற்றோர்களுக்கும் பண்ணை குடிகளுக்கும் நன்மையை
உண்டாக்கவும் நாம் அவனுக்குப் பணம் கொடுத்து அவன் காலில் விழுந்து
அவன் காலைக் கழுவி தண்ணீர் குடித்து மோக்ஷத்திற்கு போக எண்ணு
வதாலும் அவர்களுக்கு தினப்படி தாராளமாய் சம்பாதனை ஏற்பட்டு
விடுகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு புரோகிதனும், பண்டாரங்களும்,
பஞ்சாங்கக்காரனும் தாங்கள் வயிறு நிறைய சாப்பிட சம்பாதிப்பதுடன் தங்கள்
பிள்ளை குட்டிகளையும் BA, MA, படிக்க வைத்து ஐகோர்ட் ஜட்ஜி, சட்ட
மெம்பர், அட்வொகேட் ஜனரல் முதல் உத்தியோகம் பெற்று வாழவும்,
லக்ஷக்கணக்காய் சம்பாதிக்கவும், காசி இராமேஸ்வரம் கன்னியாகுமரி
வரையில் பார்க்கிறோம்.
தவிர, காங்கிரசின் பலனாய் சர்க்கார் உத்தியோகங்களில் பார்ப்பனர்.
கள் ஏராளமாய் அமைய ஏற்பட்டுவிட்டதாலும் அவர்களே கோர்ட் குமாஸ்தா,
ஜட்ஜிகள் வரையில் ஏற்பட்டு விட்டதால் அவர்கள் கோர்ட்டுக்கு பார்ப்பன
வக்கீல்களும், பார்ப்பன வக்கீல் குமாஸ்தாக்களும் என்கிற வகையில் ஒரு
மாசம் பார்ப்பனர்களுக்கு பிழைப்பு ஏற்பட்டு விடுகிறது.
இது தவிர பிச்சை எடுப்பது தங்கள் குலத்தின் மேலான தர்மம்
என்பதாக ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நம்மிடவர்களில் கடைந்தெடுத்த
முட்டாள்கள் அவர்களுக்கு பிச்சை கொடுப்பது தங்களுக்கு மோக்ஷக் கதவு
திறக்கக்கூடிய சாவி என்று நினைப்பதாலும் இவ்வளவு வழியிலும் பிழைக்க
முடியாத பார்ப்பான்களுக்கு கோவென்றால் கெட்டுப்போன நம்முடைய
முன்னோர்களும், நம் பழய ராஜாக்களும், கெடப்போகும் நம்மிடப் பெரிய
வர்களும் இப்போதிருக்கும் சில இஸ்பேட் ராஜாக்களும் 100 - க்கு 5 வட்டி
சம்பாதித்த பாவத்தைத் தொலைப்பதற்கு பார்ப்பனனுக்கு சோறு போட்டால்
போதும் என்று நினைக்கிற லேவா தேவி செட்டிப் பிள்ளைகளும், பார்ப்பன
ஆண் - பெண், பெண்டில்லாதவன், புருஷனுடன் வாழாதவள், புருஷனிழந்
தவள், குழந்தை குட்டி சகலத்துடன் தினம் சாப்பிட சத்திரங்களும், காம
விகாரத்தால் தப்புக் குழந்தைகள் உண்டாகிவிட்டால் பிரசவிப்பதற்கு பிரசவ
ஆஸ்பத்திரிகளும், பிரசவித்த அக்குழந்தையை எடுத்து வளர்த்து தங்கள்
ஜனசங்கையை அதிகப்படுத்திக் கொள்ள கிறிஸ்து பாதிரிமாரும் போர்டிங்கு
களும் தாராளமாய் இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு எந்த வழியில்
வயிற்றுப் பிழைப்புக்குக் கஷ்டம் இருக்கிறது என்பதை சொல்லு பார்ப்போம்.
தவிர பார்ப்பான் பிழைப்பு என்றும் கெடவில்லை. அன்றும் கெட
வில்லை. இன்றும் கெடவில்லை. நமது முட்டாள்தனத்தால் பிழைப்பவ
321
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
னானதால் நம்மிடம் எதுவரை முட்டாள்தனம் இருக்கிறதோ அதுவரை
அவன் பிழைப்புக்கு ஆக்ஷபணையில்லை.
நம்மவர் பிழைப்போ
அப்படியில்லை...
பைத்தியக்காரன் : அதென்ன அப்படிச் சொல்லுகிறாய்?
உஷார்காரன் : என்னவென்றால் நம்மவர்கள் முன்காலத்தில் எப்
படிப் பிழைத்தார்கள் தெரியுமா?
எல்லோருக்கும் விவசாயமும் கைத்
தொழிலும் தான். விவசாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வரி
கட்டுவதே கஷ்டமாய் விட்டது. பூமி எல்லாம் பார்ப்பனனிடமும் பார்ப்ப
னர்கள் காலில் விழுந்து அவர்களுக்கு அழுகும் சில பணக்காரனிடமுமே
சேர்ந்து விட்டது.
போராக் குறைக்கு பருவ மழையுமில்லை.
கைத்
தொழிலைப் பற்றி நினைக்கவே வேண்டியதில்லை. இந்தப் பார்ப்பனர்கள்
அரசாங்கத்திற்கு உள் உளவாய் இருந்து வருவதின் மூலம் வெளி அரசாங்
கத்தார் நமது தொழில்களையே பாழ்பண்ணி விட்டார்கள். எனவே கோடிக்
கணக்கான பார்ப்பனரல்லாதாருக்கு தன் தன் குடும்ப ஜீவனத்திற்கு மார்க்க
மில்லாமல் இருப்பதுடன் மேல் கண்ட பார்ப்பனர்களுக்கு அழுகவும்
சம்பாதிக்க வேண்டிய கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அல்லாமலும் காங்கிரசின்
பயனாய் “அரசியல் பார்ப்பனர்களுக்கு செல்வாக்கு ஏற்பட்டு விட்டபடியால்
பார்ப்பனரல்லாதார்களில் அரசியலின் மூலம்” பணம் சம்பாதிக்கவோ பதவி
பெறவோ ஆசைப்பட்டவர்களும் பார்ப்பனர்கள் காலை சுற்றிக் கொண்டு
அவர்கள் வாலைப் பிடித்துத் திரிய வேண்டி ஏற்பட்டு விட்டது.
பைத்தியக்காரன்
: இதுதானா காரணம். வேறொன்றுமில்லையா?
உஷார்காரன்: வேறு என்ன. நீ தான் சொல்லு பார்ப்போம். எத்தனை
பார்ப்பனரல்லாதார், மகமதியர், கிறிஸ்தவர், பஞ்சமர் என்று சொல்லக் கூடிய
வர்கள் உள்பட பார்ப்பனரிடம் பணம் வாங்கிக் கொண்டு பார்ப்பனரல்
லாதாரைத் திட்டுகிறார்கள். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வைகிறார்கள்.
பார்ப்பனர்கள் எவ்வளவு அயோக்கியர்களாயிருந்தாலும் அவர்களை நமது
பார்ப்பனரல்லாதார்கள் “தலைவர்,” “தென்னாட்டு மகான்,” “பெரியார்,”
“தியாகி,” “விவேகி.” “குரு” எனப் பலவிதமாய் புகழுகிறார்கள். ஏன்?
நம்மவர்களில் உண்மையான தியாகி இல்லையா? மகான் இல்லையா?
தலைவர் இல்லையா? பெரியார் இல்லையா? விவேகி இல்லையா? எந்தப்
பார்ப்பனரல்லாதாராவது நம்மவர்களைப் பற்றிச் சொல்லுகிறார்களா? என்று
யோசித்துப் பார். அதோடு நம்மவர்களை வையாமலாவது இருக்கிறார்களா?
ஏன்? பார்ப்பனர்களிடம் கொடுக்கப் பணம் இருக்கிறது. பார்ப்பனரல்லா
தாரிடம் வாங்க தரித்திரமிருக்கிறது. அப்படிக்கில்லாதிருந்தால் ஓட்டமுள்ளவ
னுக்கு ஒரு கடுகளவு மூளையுள்ளவனுமான எந்தப் பார்ப்பனரல்லாதாராவது
குடி அரசு
- 19270)
322
நமது சமூகத்தையும், நமது இயக்கத்தையும் பாழாக்க கங்கணம் கட்டிக்
கொண்டிருக்கும் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரை அவரது பொய், புரட்டு.
புளுகு, வஞ்சகம், மானம் கெட்டத்தன்மை எல்லாம் வெளியான பிறகு கூட
தலைவன் என்று கூப்பிட மனம் வருமா? ஸ்ரீனிவாசய்யங்காரிடம் உதை
வாங்கிக் கொண்டு அவர் காலை முத்தமிட மனம் வருமா? அதோடு அனேக
பார்ப்பனரல்லாதாருடைய உழைப்பையும், பரிசுத்த எண்ணத்தையும், தியாகத்
தையும் மனதாரப் பார்த்துக்கொண்டு அவர்களை வைய மனம் வருமா?
காட்டிக் கொடுக்க வருமா? என்பதை நீயே யோசித்துப் பார். தவிரவும் நமக்கு
இருக்கிற தரித்திரம் பார்ப்பனருக்கில்லை என்பதற்கு இன்னமும் ஒரு சாட்சி
காட்டுகிறேன். அதாவது எந்தப் பார்ப்பனனாவது பார்ப்பனரல்லாதாரிடம்
பணம் வாங்கிக்கொண்டு எந்தப் பார்ப்பனனையாவது வைவதைப்பார்த்திருக்
கிறாயா? வைவதற்குப் பத்திரிகை நடத்துவதைப் பார்த்திருக்கிறாயா? கொடுப்
பதற்குப் பார்ப்பனரல்லாதாரிடம் பணமும் இல்லை. ஒரு சமயம் இருந்தாலும்
தனது சமூகத்தை விற்றாவது வாழ வேண்டும் என்று சொல்லத் தகுந்த
தரித்திரமும் பார்ப்பனர்களிடத்தில் இல்லை. இதுதான் வித்தியாசமே ஒழிய
பார்ப்பனர் மகா புத்திசாலி என்பதாவது பார்ப்பரைல்லாதூர்கள் முட்டாள்கள்
என்பதாவது இதன் பொருள் அல்ல. உதாரணமாக ஒத்தக்காசுசெட்டியாரான
ஸ்ரீமான் ஓ. கந்தசாமி செட்டியாருக்குப் புத்தியில்லை என்கிறாயா? அல்லது
அய்யங்காரின் புரட்டுகளையும், பித்தலாட்டங்களையும், கெட்ட எண்ணத்
தையும், சின்னப் புத்தியையும் அறிய சக்தி இல்லை என்கிறாயா? அல்லது
அய்யங்காரை மகா பெரிய மனிதர் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்
கிறார் என்கிறாயா? செட்டியாரின் புத்திசாலித்தனம் அவருடைய பழைய
வீரம், அவர் கொஞ்ச நாளைக்கு முன்பு பார்ப்பனர்களுடைய அயோக்கியத்
தனத்தை புட்டுப்புட்டு விளக்கியிருக்கும் தன்மை, அவருடைய கல்வி,
பார்ப்பனருடன் சேருவதற்கு முன் இருந்த ராவ்சாஹிப் பட்டம் முதலியதுகள்
எனக்கு நன்றாகத் தெரியும். கஷ்டகாலம் வந்தால் யார்தான் என்ன செய்வார்.
கள். அரிச்சந்திரன் சத்தியத்திற்கு ஆக பெண்டாட்டியை விற்றதாகக் கதை
இல்லையா? அது போல் நம்முடைய சகோதரர்கள் பலர் தரித்திரத்திற்கு ஆக
சமூகத்தை விற்கிறார்கள் என்பதில் அதிசயமென்ன இருக்கிறது. அதற்கு
யார்தான் என்ன செய்வது. கடவுளைத்தான் கேழ்க்க வேண்டும். கடவுளோரி
டமில்லாதவர் ஆனதினால் குட்டிச் சுவற்றில்தான் முட்டிக் கொள்ள
வேண்டும். போ! எனக்கு நேரமாய் விட்டது.
குடி அரசு - உரையாடல் - 05.06.1927
323
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
“வரதராசுனு அறிக்கை” க்க
ராமசாமியிண் அபிப்பிராயம்
“தமிழ்நாடு” பத்திரிகையின் ஜுன் மீ£3-ம் தேதி தலையங்கமாகிய
“வரதராஜுலு அறிக்கை” என்னும் விஷயத்திற்கு நான் ஏதாவது சமாதானம்
சொல்ல வேண்டும் என்பதாக நமது வாசகர்கள் எதிர் பார்க்கக் கூடுமென்
பதாக நினைத்தே அதே தலையங்கமிட்டு இவ்வியாசத்தைத் துடங்குகிறேன்.
ஸ்ரீ வரதராஜுலு அறிக்கையின் முதல் வாக்கிய ஆரம்பத்தில் “காங்கிரஸ்
மகாசபையே தேசத்தில் பிரதானமானது” என்பதாக ஆரம்பிக்கப்பட்
டிருக்கிறது. அது எந்த விஷயத்தில் யாருக்குப் பிரதானமானது? எந்த
தேசத்திற்குப் பிரதானமானது? தேசத்தில் உள்ள 33 கோடி மக்களில் எந்த
வகுப்பாருக்கு எந்தக் கூட்டத்தாருக்கு பிரதானமானது? தென்னாட்டில் படித்த
வகுப்பாரான பார்ப்பனருக்கும், வடநாட்டில் படித்த கூட்டத்தாரான
சிலருக்கும் உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பதற்கும், அவர்களை வாழ
வைக்கவும் பிரதானமானதே அல்லாமல் வேறு யாருக்கு? எதற்கு3 அதனால்
என்ன பிரயோஜனமுண்டென்றும் கேழ்க்கிறேன்? காங்கிரஸ் ஏற்பட்டு 40
வருஷத்திற்கு மேலாகியும் தேசமக்களின் பெரும்பாலோரான விவசாயி,
தொழிலாளி, குடியானவன் ஆகிய கூட்டத்தாருக்கு என்ன நன்மை செய்திருக்
கிறது?
காங்கிரசுக்கு முன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட வரி எவ்வளவு?
காங்கிரசுக்கு முன் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்த கடன் எவ்வளவு? காங்கி
ரசுக்குப் பின் விவசாயிகளுக்கு ஏற்பட்ட வரி எவ்வளவு? கடன் எவ்வளவு?
காங்கிரசுக்கு முன் தொழிலாளிகளின் நிலைமை சம்பாத்தியம் முதலியதுகள்'
சவுகரியம் எப்படியிருந்தது?
காங்கிரசுக்குப் பின் தொழிலாளிகளின்
நிலைமை, தொழில் சம்பாத்தியம் சவுகரியம் எப்படி ஆய்விட்டது? என்று
கேட்கிறேன். இனி வகுப்புகள் வாரியாய் கவனிப்போம். காங்கிரசுக்கு முன்
பார்ப்பனரல்லாதார் நிலைமை, செல்வம், செல்வாக்கு எப்படி யிருந்தது?
காங்கிரசுக்குப் பின் அவர்களது நிலைமை எப்படி இருக்கிறது? காங்கிரசுக்கு
முன் பார்ப்பனர்கள் நிலைமை எப்படி இருந்தது? பின்
அவர்கள் நிலைமை
எப்படி இருக்கிறது? ஜஸ்டிஸ் கட்சியும் முஸ்லீம்லீக்கும் ஏற்படாமல் காங்கி
ரசை நம்பியிருந்தால் “பஞ்சமர்கள்,” “மகமதியர்கள்” முதலிய சகோதரர்கள்.
நிலைமை என்னவா யிருக்கும்? இவைகளை எல்லாம் தனது மனதில் கையை
வைத்து யோசித்துப் பார்க்கும்படி ஸ்ரீமான் வரதராஜுலு அவர்களை
வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன். அன்றியும் “சகல ஜாதியாருக்கும்
குடி அரசு
- 19270)
324
பொதுவான காங்கிரஸ் சென்னையில் உள்ள இரண்டொரு பார்ப்பனர்களிடம்.
அகப்பட்டு விட்டதால் பார்ப்பன காங்கிரசு என்று பெயரெடுத்து விட்டது”
என்று “தமிழ்நாடு” எழுதியிருக்கிறது.
எந்த விதத்தில் அது சகல
ஜாதியாருக்கும் பொதுவானதாகும் என்று கேட்கிறேன்.
கிருஸ்தவரில் எத்தனை பேர் காங்கிரசில் இருக்கிறார்கள்? மகமதி
யரில் எத்தனை பேர் காங்கிரசிலிருக்கிறார்கள்? பஞ்சமரில் எத்தனை பேர்.
காங்கிரசிலிருக்கிறார்கள்? இன்னமும் இந்துக்கள் என்போர்களில் எத்தனை
பேர் காங்கிரசில் இருக்கிறார்கள்? இந்தக் கூட்டங்களில் பெரும்பான்மை
யோர் காங்கிரசிலிருக்கிறார்களா? விலகி இருக்கிறார்களா? எந்தக் காலத்திலா
வது பார்ப்பனரல்லாத மற்றவர்களிடத்தில் காங்கிரசு இருந்து வந்ததா? எந்தக்
காலத்திலாவது அது பார்ப்பனக் காங்கிரசல்லாததாயிருந்ததா?'
தவிர “ஐயங்கார் கோஷ்டியாரிடமிருந்து காங்கிரசை மீட்க வேண்டும்.
என்கிற உணர்ச்சி பரவி விட்டது” என்கிறது. ஐயங்கார் பாதார விந்தங் களில்
மறுபடியும் மறுபடியும் காங்கிரசையும், தலைமைப் பதவியையும்
காணிக்கையாய் வைத்து போட்டி போட்டு தண்டம் சமர்ப்பிவித்தது யார்?
பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? அம்மாதிரி ஆசாமிகள் இப்போது
ஒழிந்துபோய் விட்டார்களா? இனி அம்மாதிரி ஆசாமிகளை சிருஷ்டிக்க
ஐயங்கார் சுவாமிகளால் முடியாதா? என்று கேட்கிறேன். தவிர, “ராஜீய
அபிவிருத்தி இந்தியாவுக்கு ஏற்படும் போது அது ஒரு ஜாதியாருக்கென்று
தனியாக இருக்க முடியாது. ஆதலால் எல்லா ஜாதியாரும் காங்கிரசில்
சேரவேண்டும்” என்று “தமிழ்நாடு” குறிப்பிடுகிறது. ராஜீய அபிவிருத்தி
என்பது என்ன என்று கேட்கிறோம்? 1000, 2000, 5000, 10000 சம்பளமுள்ள.
உத்தியோகங்களும் பதவிகளும் அல்லாமல் வேறு ஏதாவது உண்டா? அந்த.
உரிமையையும் நமது நாட்டில் பார்ப்பனர்களான ஒரே ஜாதியார் ஏகபோகமாய்
அனுபவிக்காமல் வேறு எல்லா ஜாதியாரும் கிரமமாய் அனுபவிக்கிறார்களா?
என்று கேட்கிறேன். தவிர “பார்ப்பனரல்லாதார் நசுக்கப்படாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு இருக்குமானால்
அதற்கு காங்கிரசை விட வேறு பலம் உள்ள ஸ்தாபனம் கிடையாது” என்று
“தமிழ்நாடு” எழுதுகிறது. இதுவரை அதாவது இந்த 10 வருஷ காலமாக
பார்ப்பனரல்லாதாரின் நிலைமையும் உரிமையும் ஜஸ்டிஸ் கக்ஷியினால்
உயர்ந்ததாக்கப்பட்டதா? அல்லது காங்கிரசினாலா? மகமதிய ஹைக்கோர்ட்டு
ஜட்ஜி,நிர்வாக சபை மெம்பர், வைசிராய் பிரபு சபை மெம்பர், மைசூர் திவான்,
கிருஸ்தவ ஹைக்கோர்ட் ஜட்ஜி, மந்திரி, சட்டசபை பிரசிடெண்ட்,
திருவாங்கூர் திவான், பார்ப்பனரல்லாத ஹைக்கோர்ட்டு ஜட்ஜி,மந்திரி, பஞ்சம.
ஹைகோர்ட் ஜட்ஜி, சட்டசபை மெம்பர், இந்தியா கவுன்சில் மெம்பர் இன்னும்.
இது போன்ற எத்தனையோ “அரசியல் உரிமைகள்” காங்கிரசினால்
இவர்களுக்கு கிடைத்ததா? காங்கிரசில் சேராமல் வெளியில் இருந்ததினாலும்
ஜஸ்டிஸ் கக்ஷியாலும் இவர்களுக்கு கிடைத்ததா? என்று கேழ்க்கிறேன். இது
325
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
போன்ற இன்னும் பல விஷயங்கள் எழுதியிருக்கிறதுகளுக்கும் இது
போலவே பதில் சொல்லலாம்.
“தமிழ்நாடு” காங்கிரசில் சேரும்படி
எழுதியவற்றில் பார்ப்பனரல்லாதார் நன்மையைப் பொறுத்தவரை ஒன்றாவது
சரியான காரணம் அல்ல என்பது நமது பொது அபிப்ராயம். இன்னமும்
சொல்லப்போனால், இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தர வேண்டும் என்று
நினைப்பதற்கு தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதாராகிய நாம் ஒரு விதத்திலும்
யோக்கியதை உடையவர்கள் அல்ல. நமது யோக்கியதையையே சரிப்படுத்
திக் கொள்ள நமக்கு யோக்கியதை இல்லை. நாம் தாழ்ந்த ஜாதியார் என்று
நமது நாட்டில் வேதப்படி, சாஸ்திரப்படி. சட்டப்படி, வழக்கப்படி மதிக்கப்படு
கிறோமா இல்லையா? என்பதை ஸ்ரீமான் நாயுடுவை முதலாவதாக யோசித்துப்
பார்க்கும்படி விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன். அதற்கு ஸ்ரீ நாயுடு என்ன
செய்யப் போகிறார் என்று வினயத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன். 40
வருஷத்திய காங்கிரசினால் “சகல ஜாதிக்கும் பொதுவான காங்கிரசினால்”
மற்றும் என்ன என்னவோ “பொறாமை” கொண்ட காங்கிர சினால் நமக்குள்ள
இக்குறைவுகளை நீக்க ஏதாவது முடிந்ததா? அதனால் கிடைத்து வந்த பலன்
அல்லது “ராஜீய உரிமைகளா”லாவது முடிந்ததா? என்று கேட்கிறேன்.
“பார்ப்பனரல்லாதாருக்கு தேசாபிமானம் உண்டு, ராஜீய ஞானம் உண்டு என்று
மற்றவர் அறிய வேண்டுமானால் அவர்கள் காங்கிரசில் சேர வேண்டியது
அவசியமாகும்” என்று கூட அப்பத்திரிகை எழுதி இருக்கிறது. என்னைப்
பொறுத்தவரை தேசாபிமானமும் ராஜீய ஞானமும் எனக்கு உண்டு என்பதை
மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டியது அனாவசியம். என்னுடைய சொந்த
சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் தேசாபிமானத் தையும் ராஜீய ஞானத்தை
யும் கூட விற்கத் தயாராயிருக்கிறேன். என்னுடைய சுய மரியாதையையும்
உரிமையையும் ஒப்புக்கொள்ளாத ஒரு ஸ்தாபனம் அது காங்கிரசாயிருந்
தாலும் சரி,
அது தேசாபிமானமாயிருந்தாலும் சரி, மோக்ஷ லோகமாயிருந்
தாலும் சரி அதில் இருக்க நேரும் ஒவ்வொரு விநாடியையும் நரகத்திலிருப்
பதாகத்தான் எண்ணுவேன். நமது உரிமையை ஏற்றுக் கொள்ளும் படி ஒரு
சங்கத்தைப் போய்க் கெஞ்சுவது நமது சுயமரியாதைக்கு அழகல்ல வென்பதே
எனது அபிப்பிராயம். வெள்ளைக்காரனை சுயராஜ்யம் கேட்பதும் காங்கிரசை
நமது உரிமை ஒப்புக்கொள்ள நாம் கெஞ்சுவதும் நமக்கு சுயமரியாதை
இல்லை என்பதற்கு சரியான உதாரணங்களாகும். காங்கிரசை எவனொருவன்
அது நம்மைப் போன்ற ஒரு பத்து பேர் சேர்ந்த கூட்டம் என்று நினைக்
கிறானோ எவனொருவன் காங்கிரஸ் அபிப்பிராயத்தை நம்மைப் போன்ற ஒரு
பத்து மனிதனின் அபிப்பிராயமென்று நினைக்கிறானோ, அவனே சுதந்திர
புத்தி உள்ளவனாவான். அதைவிட்டுக் கண்மூடித்தனமாய் பின்பற்றுபவன்
உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் யோக்கியதை அற்றவனே ஆவான் என்பது
எனது தாத்பிரியமான முடிவு.
அதே பத்திரிகை “காங்கிரசில் ஜஸ்டிஸ் கொடியை நாட்ட வேண்டு
குடி அரசு
- 19270)
326
மென்று சிலர் சொல்லுகிறார்கள். ... ... .. அதில் தனிப்பட்டவர்கள் வகுப்பு
வாதத்தை புகுத்துவது நியாயமல்ல”என்றும் எழுதியிருக்கிறது. அப்படி
யானால் கீழ் வகுப்பார் தாழ்த்தப்பட்ட வகுப்பார் முதலியவர்களின் கதி
என்னாவது என்று கேழ்க்கிறேன். காங்கிரசில் எல்லோருக்காகவுமே உத்தி
யோகம் வருகிறது என்று வைத்துக் கொண்டால் “எங்கள் வகுப்புக்கு ஒன்று
கொடுங்கள்” என்று கேழ்க்கக் கூடாது என்று காங்கிரசு சொல்லு மானால்
அல்லது நாயுடுகார் சொல்வதானால் மற்றபடி காங்கிரசினால் லாபம்தான்
என்ன? என்று கேட்கிறேன். காங்கிரசில் கேழ்ப்பது உத்தியோகம் அதிகாரம்
பதவி சம்பளம் இவற்றைத் தவிர வேறில்லை என்பது யாவரும் அறிந்த
விஷயம்.
அக் காங்கிரசில் உள்ளவர்களோ அனேக வகுப்பார்களாயிருக்
கிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம். எல்லா வகுப்பார்களுக்கும் அது
கிடைக்க வேண்டுமென்பதோ காங்கிரசுக்குள் வகுப்புவாதத்தைப் புகுத்து
வதாகி விடுகிறது. அப்படியானால் அதன் இரகசியம் என்ன என்பதை வாசகர்:
கள் யோசிக்க வேண்டுகிறேன். தவிர காங்கிரசின் சட்ட மறுப்பையாவது
சத்தியாக்கிரகத்தையாவது கண்டு “ஜஸ்டிஸ்” கட்சியாரோ அல்லது எந்தப்
பார்ப்பனரல்லாதாரோ பயப்பட வேண்டியதில்லை என்று “தமிழ்நாடு”
பத்திரிகை எழுதியிருக்கிறது. இவ் விஷயத்தில் இப்போது “காங்கிரஸ்”
தலைவர்களாகிய ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ரங்கசாமி
அய்யங்கார், சாமி வெங்கிடாசலம், வெங்கிட்ட ரமணய்யங்கார், ஓ. கந்தசாமி
செட்டியார், எம். கே. ஆச்சாரியார், ஆதிநாராயண
செட்டியார் முதலியவர்.
களை விட எவ்விதத்திலும் இளைத்த ஆசாமிகள் “ஜஸ்டிஸ்” கட்சி
பார்ப்பனரல்லாதார் கூட்டத்திலேயே இல்லை என்று உறுதியாய்ச் சொல்லு
வேன்.
ஆகவே, “ஜஸ்டிஸ்” கட்சியின் நன்மையை உத்தேசித்தும்,
பார்ப்பனரல்லாதாரின் நன்மையை உத்தேசித்தும், அக்கட்சி காங்கிரசில்
சேருவது என்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல என்பதோடு
ஜஸ்டிஸ் கட்சிக்கு சாவு மணி என்றுகூட சொல்ல வேண்டியிருக்கிறதே என்று
வருத்தப்படுகிறேன். ஜஸ்டிஸ் கட்சிக்கு இது சமயம் நாட்டில் கொஞ்சம்
மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முக்கிய காரணம் என்னவென்றால் காங்கிரசின்
யோக்கியதை அதன் கசுமாலம் முதலியன வெளியாக்கப்பட்டதினால்தான்.
கூடிய சீக்கிரத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்களே பார்ப்பனரல்லாதாரை
காங்கிரசில் வந்து சேரும்படி கெஞ்சப் போகிறார்கள் என்பது நமக்குத்
தெரியும். அதாவது பார்ப்பனரல்லாதார்கள் கட்டுப்பாடாகவும் ஒற்றுமை
யாகவும் இருந்து ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் பார்ப்பனர்கள் பயந்து
கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கும் சம்மதித்து தங்கள் சொந்தப்
பணமும் செலவு செய்து கூட காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் சங்கம் (சென்னை
மாகாணச் சங்கம்! என்பதாக ஒன்று ஏற்படுத்தி நம்மில் சிலருக்குத் தந்து அவர்.
கள் வேலை முடிந்ததும் அழித்து விட்டது போல் செய்யப் போகிறார்கள்.
327
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
முக்கியக் காரணமென்னவென்றால் இது சமயம்
பார்ப்பனரல்லாதார்.
கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பதுடன் தங்கள் இழிந்த தன்மையை தான்.
ஆகவே இக்கட்டுப்பாடு குலையாமல் யார் வேண்டுமானாலும் எந்தக்
கட்சிக்கு வேண்டுமானாலும் ஸ்ரீமான் நாயுடுகார் சொல்வது போல்
அவரவர்கள் தனித்த ஓதாவில் போய்க் கொள்ளுவதில் நமக்கு ஆக்ஷ
பணை இல்லை. ஆனால் கட்சியே சேருவதானால் தலைவர் யார், உப
தலைவர் யார், மந்திரி யார், பிரசிடெண்டு யார் என்பன போன்ற விஷயங்
களின் சண்டையும் அதைக் காப்பாற்ற பல அயோக்கியத் தனங்களைச்
செய்து கொண்டு அக்கப் போரில் காலம் கழிப்பதிலும் நேரம் சரியாய்ப் போய்
விடுமே யொழிய உண்மையான வேலை செய்ய நேரமும் காலமும் இருக்க
வே இருக்காது. ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவும் ஜஸ்டிஸ் கட்சியில் சேரும்
பார்ப்பனரல்லாதார்களுக்கு தங்கள் சொந்த ஓதாவில் காங்கிரசில் சேர
சுதந்திரமிருக்க வேண்டுமென்றுதான் கேட்கிறார். நாமும் அதினால் அதிக
நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டு விடாது என்றே சொல்லுகிறோம்.
ஜஸ்டிஸ்
கட்சியாலும் கூட நிர்மாணத் திட்டமாகிய கதரில் நம்பிக்கையில்லாத
வர்களும், தீண்டாமை ஒழிவதில் சம்மதம் இல்லாதவர்களும் மதுவிலக்கில்
லட்சியம் இல்லாதவர்களும் இரண்டொருவர் இருக்கிறார்கள் என்பது
நமக்குத் தெரியும். ஆன போதிலும் அக்கட்சி நிர்மாணத் திட்டத்தை ஒப்புக்
கொண்டதால் நாம் நம்மால் கூடிய ஆதரவை அளிக்கிறோமேயல்லாமல்
இரண்டொருவருக்கு நம்பிக்கையில்லை என்கிற காரணத்துக்காக கட்சியை
யே குற்றம் சொல்ல முன்வரவில்லை. அதுபோலவே இஷ்டப்பட்டவர்கள்'
தங்களது மனச்சாட்சியை கட்சிக் கட்டுப்பாட்டின் பேரால் விட்டுக் கொடுக்க
வேண்டியதில்லை என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
கட்சியில் “ராமசாமி நாயக்கரும் அவருடைய சகாக்களும் எதிர்கால
நிலைமையை கவனித்து மறுபடியும் தீர யோசித்து ஒரு முடிவுக்கு வரும்படி
கேட்டுக்கொள்ளுகிறோம்”” என்று “தமிழ்நாடு” எழுதியிருக்கிறது. உண்மை
யில் அரசியலில் இது சமயம் எனக்கு சகா யாரும் இல்லை. அன்றியும்
எனக்கு என்று இது சமயம் யாதொரு கட்சியுமில்லை. எனக்கும் சில தனிப்
பட்ட நபர்களுக்கும் சில விஷயங்களில் மாத்திரம் அபிப்பிராய ஒற்றுமை:
ஏற்பட்டி ருப்பதை ஆதாரமாக வைத்துக்கொண்டு தனித்த முறையில் எனது
தொண்டை செய்து வருகிறேனே தவிர வேறில்லை. அதுபோலவே ஜஸ்டிஸ்:
கட்சியிலும் எனது அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ளுகிற அளவு வரையில்
நான் அக் கட்சிக்கும் தொண்டராயிருந்து எனது கொள்கைக்கு அதை உப
யோகித்துக் கொள்ளுகிறேனே தவிர வேறில்லை. ஆகவே ஸ்ரீ வரதராஜுலு
நாயுடு அவர்கள் இவ்விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனி சுதந்திரம்
கொடுத்திருக்கிறது போலவே நமக்கும் கொடுப்பாரென்று நம்புகிறேன்.
குடி அரசு - தலையங்கம் - 05.06.1927.
குடி அரசு
- 19270)
328
ஐயாங்காருக்கு அவமரறிக்கா மாதின்
நற்சாக்ஷி பத்திரம்
ஸ்ரீ..சீனிவாசஐயங்காருடையவும் அவர்தம் சிஷ்ய கோஷ்டிகளு
டையவும், மோசத்தைப் பற்றியும் அவர்களது தேசத்துரோகம் நாணயமற்ற
தனம் பார்ப்பனரல்லாதாரிடம் துவேஷம் திறமையின்மை ஆகியதுகளைப்
பற்றியும் நாம் பன்முரை எடுத்துக் காட்டி இருக்கிறோம். அதற்கு அனுசரனை
யாக அநேக சாக்ஷிகளும் குவிய ஆரம்பித்த இக்காலத்தில் ஐயங்கார் கூறும்
ஒரேபதில் யாதெனில் “ நான் பலர்களுக்கு கொடுத்து வந்த பணத்தை நிருத்தி
விட்டேன் அதற்குத்தான் இவ்விதம் கூருகிறார்கள். அதை நம்பாதீர்கள்”
என்கிறார். ஆனால் இன்று ஐயங்கார் யோக்கியதையைப் பற்றி, ஓர் அமெ
ரிக்கா மாது சொல்வதற்கென்ன சொல்கிறார். மிஸ். கிரேஸ் ஹட்சின்ஸ் என்ற
அமெரிக்கா மாது எழுதுவதாவது, “மகாத்மா காந்தி அரசியல் விஷயங்
களிலே தலையிடுவதில்லை.
அவர் சமய இயக்கத்தையே நடத்திவருகிறார்.
இந்தியா உயர்ந்த வாழ்வை பெறவேண்டுமானால் அது அங்குள்ள 7000
கிராமங்களின் வாயிலாகவே முடியும்”
- இந்தியன்
நேஷனல் காங்கிரஸுக்குத் தலைமை வகித்தவர் 5.சீனிவாச ஐயங்கார் என்ப
வர், நடுத்தரமான யோக்கியதை உடையவர். அரசியல் கக்ஷிகளை ஒழித்து
ஒற்றுமை படுத்த போதுமான ஆற்றல் இல்லாதவர்”
ஒரு சமயம் இந்த அம்மையாரும் பணம் கேட்டு ஐயங்கார் கொடுக்க
வில்லையோ?
குடி அரசு - செய்தி விமர்சனம் - 05.06.1927
329
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
குட்டு ஊணியாய் விட்டது
பார்ப்பன சுயராஜ்யக் கட்சியின் மோசத்தை வெளியிட உடனே சம்பள
பிரேரணையை எதிர்க்க வேண்டும் என்று நமது “ குடி அரசு” கூறிற்று,
சட்டசபையில் மைனாரடி கட்சியார் எதிர்க்கக்கூடாதென்கிறார்கள். மந்திரி
சம்பள விஷயத்தைப் பற்றி ஆலோசித்த அநேக கூட்டங்கள் சீனிவாசய்யங்
கார் பங்களாவில் கூடியது யாவும் அந்தரங்கம் வெளியிட முடியாது
என்றார்கள். முடிவில் சம்பளப் பிரேரபணையின் பொழுது வெளியே போய்
விட்டார்கள். இவையாவும் சுத்த புரட்டென்றும் மந்திரி கட்சியை கைவிட்டு
விடாதீர்கள் என்று நேருவும், சீனிவாசய்யங்காரும் தந்தி கொடுத்தார்.
களென்பதையும், அண்டப்புளுகர் திரு. சத்தியமூர்த்திக்கு மாதா மாதம்
சம்பளம் மந்திரிகளால் கொடுக்கபடுகிறதென்றும் “குடி அரசு” அக்காலத்
திலேயே கூறியிருக்கிறது. இவைகளை யாரும் மருக்கவில்லை. இச்சம்
பவத்தை யொட்டி எண்ணற்ற, அர்த்தமற்ற அறிக்கைகள் வெளிவந்தது.
நேற்றைய ஐயங்கார், ஐயர் சண்டையில் குட்டு வெளியாயின.
சத்தியமூர்த்தியிடமிருந்து டெல்லியில் கிடைத்த தந்தியை சினிவாசய்
யங்கார் எனக்கு காட்டி அதன்படி நடக்கவேண்டுமென்றும் கூறினார். எங்கள்
மாகாணக் கமிட்டி தடுத்திருப்பதால் சம்பள பிரேரபணையை ஆதரிக்குமாறு
ஆந்திர அங்கத்தினர்களுக்கு தந்தி கொடுக்க நான் மருத்துவிட்டேன். பின்,
நேருவும் சீனிவாசய்யங்காரும் சென்னை சட்டசபை சுயராஜ்யக்கட்சி அங்கத்
தினர்களுக்குத் தந்தி கொடுத்தார்களென்று திரு பிரகாசம் நேற்று ஒப்புக்
கொண்டுவிட்டார். அடுத்தார்ப்போல் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்காரிடம்
சம்பளம் பெற்று வருவதை ஐயங்காரே சொல்லிவிட்டார். இனி மந்திரிகளிடம்
சத்தியமூர்த்தி பெறும் சம்பளவிகிதம் வெளியாக வேண்டியது. பாக்கி அதுவும்
வெகுசீக்கிறத்தில் வெளியாகிவிடும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 05.06.1927
குடி அரசு
- 19270)
330
யாறதத் தாயிண் துயாம்
- சித்திரபுத்திரன்
ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை
அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி
விட்டாய். என் மக்களில்
பெரும்பாலோரை அயோக்கியர்களாக்கி விட்டாய்.
யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப்
போது தலைவர்கள் தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனேக
அயோக்கியர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லா
விட்டால் எனது அருமைப் புத்திரனான காந்தி மகான் எனக்காகச் செய்த
தவமும் தியாகமும் ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா? நீ
இல்லாவிட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால் எனது அருமை
மகன் மகாத்மா மூலையில் உட்காரமுடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில்
கூடிப் பேசிய அயோக்கியர்களும் சுயநலக்காரரும் துரோகிகளும் “ஜனப்
பிரதிநிதிகள்” ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டி
கொடுத்து மாதம் 1- க்கு 1000, 2000, 3000, 4000, 5000, 6000 வீதம் எனது
ஏழைகளின் பணத்தை பணமாகக் கொள்ளை கொள்ளுவார்களா? என்னை
மானபங்கப்படுத்த இத்தனை வக்கீல்கள் வருவார்களா? எனது கற்பை
அழிக்க இத்தனை கோர்ட்டுகள் ஏற்படுமா? இவற்றிற்கு எல்லாம் யார்.
பொறுப்பாளி? காங்கிரஸ் பாவியாகிய அரக்கி நீ அல்லவா எனக்கு எமணாய்
தோன்றி இருக்கிறாய்? என்று நீ ஒழிவாய்? அன்று நான் நரகத்தில் இருந்து
எழுவேன், விடுதலை பெறுவேன், சுயமரியாதை அடைவேன். இது சத்தியம்.
பாரதத் தாய் தனது மக்களுக்குச் சொல்வது
ஏமக்களே! உங்கள் மூடபுத்தி என்று ஒழியும்? உங்கள் மூட புத்தி
யாலல்லவா நாட்டில் பிளேக்கு, காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகள்
இருப்பது போல் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம் முதலிய தொத்து வியாதி
கள் பரவி என்னை பாழாக்குகிறது. காலரா, பிளேக்கு, வைசூரி ஒவ்வொன்றும்.
மனிதனின் சரீரத்தையும் உயிரையும் மாத்திரம் பற்றி கொள்ளை கொள்ளக்
கூடியது.
ஆனால் “காங்கிரஸ்” “சுயராஜ்யம்” “தேசியம்” என்னும்
வியாதிகளோ எனது முப்பத்து முக்கோடி மக்களையும் அவர்கள் வாழும்
331
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
தேசமாகிய என்னையும் அவர்களது அறிவையும், செல்வங்களையும்,
ஒழுக்கங்களையும், என் உயிர் போன்ற சுயமரியாதையையும் கொள்ளை
கொண்டு பாழ் பண்ணிக் கொண்டு வருகிறதே இதை கவனிப்பதில்லையா?
மக்களே! நீங்கள் மாக்கள் அல்ல என்பதற்கு இதுதானா அடையாளம். இவ்
வியாதிகளின் பேரால் “வைத்த பாரமெல்லாம் சுமக்கிறேன். இன்னும் வை,
இன்னும் வை” என்று உங்கள் முதுகைக் குனிந்து கொடுக்கிறீர்களே, இதுதான்
உங்கள் மக்கள் தன்மையா?
எவனாவது ஒரு காங்கிரஸ்காரன் இந்த ஊருக்கு ஒரு கோர்ட்டு
வேணுமென்று விண்ணப்பம் எழுதிக் கொண்டு வந்தால் உடனே நீங்கள்
அப்பன் மக்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு விடுகிறீர்கள். கோர்ட்டு
வைத்த மறுநாளே நீங்களே அப்பன், மக்கள், அண்ணன், தம்பி, எஜமான்,
குமாஸ்தா, குடியானவன், மிராஸ்தார் முதலிய என்கிற முறையில் கோர்ட்
டுக்குப் போக வேண்டியவர்களாகிறிர்கள்.
பிராமணீயம், பிரிட்டானீயம் இந்த இரண்டை விட தேசியமே பெரிய
ஆபத்தானது. பிரிட்டானீயத்தைக் கடுகளவாவது அசைக்க வேண்டுமானால்
முதலில் இந்த தேசீயமும் இரண்டாவதாக பிராமணீயத்தையும் துலைக்க
வேண்டும். பிராமணீயத்தை நிதானமாகக் கூட ஒழிக்கலாம். அவசரமாக
தேசீயத்தை ஒழிக்க வேண்டும். ஏனெனில் தேசீயமே பிரிட்டானியத்திற்கு
அஸ்திவாரமாயிருக்கிறது. தேசீயத்தை இடித்துவிட்டால் பிரிட்டானீயம்
ஆடிப்போகும். தேசீயமில்லாதிருக்குமானால் வெகு நாளைக்கு முன்பே
பிரிட்டானியம் உண்மையான சுதேசீயமாய் விட்டிருக்கும்.
குடி அரசு - கட்டுரை - 05.06.1927
குடி அரசு
- 19270)
332
மித்திரண் நிருபாரிண் அயோக்கியத்தனம்
நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக்
கோர்ப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக.
கோவையில் இருந்து மித்திரன் நிரூபர் ஒருவர் மிகவும் அயோக்
கியத்தனமான ஒரு நிரூபத்தை மித்திரனுக்கு அனுப்பி இருக்கிறார். அதாவது
ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும்
அதை அச்சுக்
கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள் என்றும்.
எழுதியிருக்கிறார். இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம்.
எல்லா பத்திரிகை நிரூபர்களுக்கும் மானம், வெட்கம், சுத்த ரத்தோட்டம்.
முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்பதாகக் காண்கிறோம்.
நமது சுதேசமித்திரன் நிரூபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள்
காணப்படுவதே இல்லை. இதன் காரணமும் நமக்குத் தெரிவதில்லை.
மித்திரனுக்காவது மனிதத் தன்மையும் யோக்கியப் பொறுப்பும் இருந்தால்
அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது
வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம்.
நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க
சூழ்ச்சி செய்தது காரைக்குடியில் உள்ள ஒரு பத்திரிகை காரியாலயத்தில்
இருக்கும் ஒரு பார்ப்பனர் என்று தெரிவிக்கிறோம். ஆனாலும் அதனால்
பத்திரிகை வேலை குந்தகப்படாமல் நடந்தேற உதவிய நண்பருக்கு நமது
வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 12.06.1927.
333
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஈட முணிசியாலிட்மு
ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள்.
மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம்.
அதாவது சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான்
முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியங்கள் செய்வதற்கும் தடையாய்
இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிட வேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள்.
5],மணிக்குக் கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை
என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு வேறு யாரும் வந்து மீட்டிங்கு
நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்று
கொண்டு இருந்ததும் கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங்
களைப் பற்றி ஒரு நிரூபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும்
போட்டிருந்தோம். இப்போது அதற்கேற்றாற்போலவே இவ்வாரம் ஒரு
அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குகளுக்கு
வராததால் அவர் நீக்கப்பட்டு விட்டதாக தானே ஏற்பாடு செய்து கொண்டு
அவருக்கு நோட்டீசு தராமல் மீட்டிங் கூட்டிவிட்டார். அதற்குள் அக்கவுன்
சிலர் விஷயம் தெரிந்து தானாகவே போய் உட்கார்ந்து கொண்டிருக்கையில்
அவரை வெளியே போகும்படி கட்டாயப்படுத்தி வெளியாக்கிவிட்டு தனது.
சவுகரியத்திற் கேற்றபடி இரண்டொரு
தீர்மானத்தையும் செய்து பலனடைந்து
கொண்டார்.
அது எப்படியோ இருக்கட்டும்.
வெளிப்படுத்தப்பட்ட
கவுன்சிலர் உடனே சென்னைக்குச் சென்று ஐக்கோர்ட்டில் விண்ணப்பம்
போட்டு சேர்மென் நடவடிக்கை சரி இல்லை என்பதாக வாதாடி தாம் கவுன்
சிலராக இருக்கலாம் என்பதாக உத்திரவு பெற்று வந்துவிட்டார். இது மற்ற
பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இந்தியர்கள் சுய ஆக்ஷிக்கு அருகதை
உள்ளவர்கள் என்பதும் வெள்ளைக்காரர்கள் நமது நிர்வாகத்தை மேற்பார்.
வை பார்க்கயோக்கியதை உள்ள தர்மக்கர்த்தர்கள் என்பதும் ௬ுஜுவு செய்ய
நமது மந்திரி கனம் சுப்பராயன் அவர்கள், நமது சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச
முதலியார் அவர்கள், நமது ஈரோடு முனிசிபாலிட்டியில் உள்ள கவுன்
சிலர்கள், பாதிரியார் உள்பட அவரது நண்பர்கள் அந்த ஆபீசிலுள்ள
சிப்பந்
திகள், நமது ஜில்லா கலெக்டர் ஸ்ரீமான் காக்சு துரை அவர்கள் ஆகிய இவர்
களே போதுமான அத்தாக்ஷி ஆவார்கள். இந்தியாவின் மானக் கேட்டுக்கும்
இந்தியர்களின் இழி தன்மைக்கும் வெள்ளைக்காரர்கள் யோக்கியதைக்கும்
இதைவிட வேறு என்ன சாகி வேண்டும்?
குடி அரசு - கட்டுரை - 12.06.1927.
குடி அரசு
- 19270)
334
சத்தியாக்கிரகம்”
ஊாக்கிரதை ! ஊாக்கிரதை !! ஊாக்கிரதை 11!
நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு
வேறு மார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி “சத்தியாக்கிரகம்”,
“சத்தியாக்கிரகம்” என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள்.
சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும்
வேலை போல நினைத்துக் கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும்
விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு
ஏற்பட்டு விட்டது.
சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம்
செய்யவேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு
நாட்டினரின் சம்மதி பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு
உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் துவங்கப்
படவேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணைக்குப்
பக்கத்தில் நெருப்பு புழங்கப்படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க.
வேண்டுமோ அதுபோல சத்தியாக்கிரகமெனும் நெருப்பை உபயோகிக்க.
வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்
பிட்ட லக்ஷியத்திற்கு அழிவு ஏற்படும் என்றே சொல்லுவோம். சத்தியாக்
கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்:
களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி, வயிறு வளர்த்துக்
கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதை
யாய் உணர வேண்டும். நாகபுரி சத்தியாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி
இல்லை என்று தெரிந்தவுடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல்
தண்டனை ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின்.
யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்து கொண்ட
மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும்,
இவைகளின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில்
அறிந்ததே. ஆதலால் வாசகர்களே! போலி ஆசாமிகள் வேறு வழியில்
சுயநலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளு
வதற்கும் கூலிக்கு மாரடிப்பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள்
விஷயத்தில் ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!!
குடி அரசு - கட்டுரை - 12.06.1927
335
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வா,
G
Y
”»
ராமசாமியின் சமாதானம் - 1T
மேல்கண்ட தலையங்கமிட்டு சென்ற வாரம் நான் எழுதிய விஷயங்
களுக்கு மறுபடியும் 6-6-27 தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில் பதில்
எழுதுமுகத்தான் சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்பதிலின்
தன்மையைப் பற்றி விவகரிக்கு முன்பாக அப்பத்திரிகை ஏதாவது ஒரு
சமாதானம் எழுத முன்வந்ததற்காக அதைப் பாராட்டுவதுடன் மிகுதியும்
மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இதுவரை ஒரு பத்திரிகையாவது காங்கி
ரசைப் பற்றி இவ்வளவு நாளாக நான் எழுதிக்கொண்டு வந்த விஷயங்
களுக்கு பதில் என்பதாக ஒரு வரி கூட எழுத முன்வராமல் வழக்கம் போல்
தங்கள் தங்கள் “தேசாபிமானப் பிரசாரத்தை” நடத்திக்கொண்டும் பார்ப்பன
ரல்லாதார் இயக்கத்தை வைது கொண்டுமே வந்திருக்கின்றன. ஆனால்
காரைக்குடி “ஊழியன்” பத்திரிகை கூட ஒரு சமயத்தில் நம்மைப்பற்றி
“சுயமரியாதைப் பிரசாரம் செய்வது தேசத்திற்கு ஆபத்து” என்று மாத்திரம்
எழுதிற்றே அல்லாமல் காங்கிரசைப் பற்றி நாம் எழுதியதற்கு பதில் ஒன்றும்
எழுதவில்லை. “தமிழ்நாடு” துணிந்து எழுத முன் வந்து விட்டதால் இனி
ஒரு சமயம் எல்லாப் பத்திரிகைகளும் எழுத முன்வந்தாலும் வரலாம்.
ஆனாலும் இம்மாதிரி யாராவது சமாதானம் சொல்ல வருவதன் மூலமாகத்
தான் அவ்விஷயங்களை இன்னமும் பாமர மக்கள் நன்றாய் அறியும்படி
செய்ய சவுகரியங்கள் ஏற்படும். இல்லாவிட்டால் ஒருதலைபக்ஷமாக நான்
எழுதுவதாய் பிறர் நினைக்க ஏது உண்டாகலாம். அதனால் தான் மகிழ்ச்சி
அடைவதாக குறிப்பிட்டேன்.
பதில் எழுத முன் வந்த “தமிழ்நாடு” பத்திரிகையானது நான் எழுதிய
சமாதானங்களை தனது பத்திரிகையில் எடுத்துப் போட்டு முறையே நான்
எழுதி வருவது போல் எழுதியிருந்தால்
அது இன்னமும் கொஞ்சம்
பாராட்டத் தக்கதாக இருந்திருக்கும் என்பதுடன் எனது சமாதானத்திற்கும்
நியாயம் செய்ததாகும். அப்படிக்கில்லாமல் “குடிஅரசு சமாதானத்தைப்
பார்த்து எந்த தேசீயவாதியும் வருந்தாமலிருக்க முடியாது” என்றும்
“இம்மாதிரி ஒரு தேசத்திற்குரிய பெரிய தேசீய ஸ்தாபனத்தை முறை தவறிப்
பழித்து விட விரும்பினால் இதை யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்”
குடி அரசு
- 19270)
336
என்றும் வீர கர்ஜனை செய்து எழுதியிருக்கிறது. “சாப்பாட்டுக்கு பந்தியிலே
உட்காரக் கூடாது என்று தடைப்படுத்தப்பட்ட ஒருவன் இலை ஓட்டை
யாயிருக்கிறது'”” என்று சொல்லுவதில் என்ன பிரயோஜன
“சமூக சமத்துவத்தையும், சுயமரியாதையையும், சுதந்திரத்தையும்
காங்கிரசின் மூலம் அடையாதபடி தென்னாட்டுப் பார்ப்பனர் செய்கிற
கொடுமையை சகிக்க முடியாமல் நாயக்கர் இம்மாதிரி எழுதுகிறாரே அன்றி
தாமே முன்னின்று பிரசாரம் செய்து சிறைச் சென்று கவுரவப்படுத்திய
காங்கிரஸ் மகாசபையை வேண்டுமென்று தூஷிப்பதாக நாம் நினைக்க
வில்லை” என்று “தமிழ்நாடு” பத்திரிகை எழுதி இருக்கிறது.
இந்த இடத்தில்தான் பொதுஜனங்கள் கொஞ்சம் நன்றாய் கவனம்
செலுத்திப் பார்க்க வேண்டும்.
காங்கிரசை உண்டாக்
கினவர்களே அவர்கள் யாராயிருந்தாலும் வெள்ளைக்காரர்கள் உள்பட
உத்தியோகமும் அதிகாரமும் சம்பாதனையும் பெறவேண்டிய கூட்டத்தார்கள்
என்றும், பெரிதும் அதே நோக்கத்தோடு ஏற்படுத்தி அது ஏற்பட்ட நாள்
தொட்டு நாளதுவரையும் அவர்கள் அதே காரியத்தில் வெற்றி பெற்றும்
வந்திருக்கிறார்களே ஒழிய தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மாத்திரம் இந்த
காரியத்திற்கு முழுப் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும் யாவரும் உணர
வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்த 40 வருஷங்களாக காங்கிரஸ்
பிரதிநிதிகள் யார் என்பதைக் கணக்குப் போட்டு பாருங்கள்.
அதன்
தலைவர்கள் யார் என்பதைக் குறிப்பிட்டுப் பாருங்கள். அதன் நிர்வாகி
337
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
யாராயிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
இவர்களில் யாராவது இந்திய நாட்டின் 100- க்கு 95 வீதம் உள்ள மக்கள்.
கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டவர்களா? என்று யோசித்துப் பாருங்கள். இது
மாத்திரமல்ல இதுவரை காங்கிரசில் செய்து வந்த தீர்மானங்களையும் அத்
தீர்மானங்களின் பலனாய் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும் அதன் அனுபவங்
களையும் ஒவ்வொன்றாய் உங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கொண்டு
யோசித்துப் பாருங்கள். தேசத்தைக் காட்டிக் கொடுத்து வாழவேண்டியதான
ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், தேசத்தைப் பாழாக்கி வாழ வேண்டியவர்.
களான வக்கீல்களும், கூலிக்காரர்களையும், தொழிலாளிகளையும், குடியான
வர்களையும், விவசாயிகளையும் வதைத்து வாழவேண்டியவர்களான
முதலாளிகளும், நிலச்சுவான்தாரர்களுமே பிரதிநிதிகளாயுள்ள ஒரு கூட்டம்
அல்லது அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனம் 100-க்கு 90 பேர்களா
யுள்ள அவர்களல்லாத மேல்கண்ட மக்களுக்கு எவ்விதத்தில் பிரதிநிதி
சபையாகும்? பிரதிநிதி ஸ்தாபனமாகும்? என்று கேழ்க்கிறேன். இப்போது
“இந்துக்கள்” எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்படும் வர்ணா
ஸ்ரம தர்மபரிபாலன சபை, எனக்கும் ஸ்ரீ வரதராஜுலுவுக்கும் ஸ்ரீ கல்யாண:
சுந்திர முதலியாருக்கும் பிரதிநிதி சபையாகுமா? அதைக் கூட்டி நடத்தும்
ஒரு சிலர்கள் அந்த ஸ்தாபனத்தை இந்தியாவில் உள்ள 24 கோடி “இந்துக்
களுக்கு” பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டும் இந்து வேதம், சாஸ்திரம்,
புராணம் என்பதுகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டும் நடத்துவதாக
வேதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். வழக்கமும் சட்டமும் கூட அதை
ஒப்புக் கொள்ளுகிறது. ஸ்ரீமான்கள் ஜயவேலு, முத்துரங்க முதலியார், ஆதி
நாராயண செட்டியார், ஓ. கந்தசாமி செட்டியார் போன்ற சில கனவான்கள்.
அதை இந்துக்களின் பிரதிநிதி சபை என்றும் ஒப்புக்கொள்கிறார்கள் என்றே
வைத்துக் கொள்வோம். அதனாலேயே ஸ்ரீமான்கள் வரதராஜுலு, வீரய்யன்,
எம்.சி.ராஜா, நான் முதலியவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதுதானா? ஒரு
சபையின் பெயர் பிரதானமா? அல்லது கொள்கையும், நடவடிக்கையும்,
நடத்தும் ஆசாமிகளும் பிரதானமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்க
வேண்டும். நமது மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எனக்குத் தெரிந்த
வரையில் 4 கனவான்கள் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்ரீமான்கள் சங்கர்.
நாயர்,மணி அய்யர், விஜயராகவாச்சாரியார், சீனிவாசய்யங்கார். இவர்களின்
யோக்கியதை என்ன? நான்கு பேர்களும் எந்த விதத்தில் தேச மக்களுக்கு
பிரதிநிதியானவர்கள். இவர்களின் தொழில் என்ன? இவர்களின் காலக்ஷேபம்
என்ன? ஏழை மக்களை வஞ்சித்து பாமர மக்களை ஏமாற்றி தாங்கள் மாதம்
1000, 5000, 10000, 20000 என்பதாகக் கொள்ளையடித்து எந்த சர்க்காரைக்
கண்டிப்பது போலும், வைவது போலும், ஒழிப்பது போலும் வேஷம் போட்டு
நம்மை ஏமாற்றுகிறார்களோ அந்த சர்க்காருக்கு அபிமான புத்திரர்களாக
இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்து வாழ்ந்தவர்கள் - வாழ்பவர்கள் தானே
அல்லாமல் வேறுண்டா? இவர்கள் பிள்ளைகுட்டி, மறுமக்கள், அண்ணன்
குடி அரசு
- 19270)
338
தம்பி, மாமன் மைத்துனன் முதலியவர்களையும் சர்க்கார் தெய்வத்துக்கு
ஒப்படைத்து அவர்களைக் கொண்டு நம்மைக் காட்டிக்கொடுத்து அச்சர்க்
காரை வாழவைக்கும் முறையில் வயிறு வளர்க்கச் செய்திருக்கிறார்களே தவிர
வேறு ஏதாவது நன்மையுண்டா? ஸ்ரீமான்கள் மணி அய்யர் தலைவரானார்.
அய்யர் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார். சங்கர நாயர்
தலைவரானார். மலையாளிகளுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார்.
விஜயராகவாச்சாரியார் சீனிவாசய்யங்கார் தலைவர்களானார்கள். அனேக:
அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார்கள். சர்.
சி.பி.ராமசாமி அய்யர் காங்கிரஸ் காரியதரிசி ஆனார். இன்று அவரும் 5500
ரூ.சம்பளம் வாங்கிக் கொண்டு சமையல்காரப் பார்ப்பனர் மக்கள், பஞ்சாங்கப்
பார்ப்பான் மக்கள், தூதுவப் பார்ப்பனர் மக்கள் வரையில் ஐகோர்ட் ஜட்ஜி,
ஜில்லா ஜட்ஜி, சப் ஜட்ஜி, சூப்பிரென்டெண்ட் முதலிய பணம் கொழிக்கும்
உத்தியோகங்கள் கொடுத்தார்.
ஸ்ரீ ரங்கசாமி அய்யங்கார் காங்கிரஸ்
காரியதரிசி ஆனார். அவர் தம்பி 572000 ரூபாய் வாங்குகிறார். அவர்
சுற்றத்தார்கள் அதுபோலவே
வாழ்கிறார்கள்.
ஸ்ரீமான்
ராஜ
கோபாலாச்சாரியார் காரியதரிசியானார். இப்போது அவர் பேரால் அவர் சிபார்.
சால் எந்தெந்த உருப்படிகளோ அரசாங்கத்தில் உத்தியோகம் பெறுவதும், கதர்
இலாகாவில் வயிறு வளர்ப்பதுமாய் நடைபெற்று வருகிறது. இனியும் ஸ்ரீ
நாயுடுவும், ஸ்ரீ கல்யாணசுந்திர முதலியாரும் பார்ப்பனரல்லாதாரைக்
காங்கிரசில் சேர்த்து காங்கிரஸ் தலைமைப் பதவி பெற்று காங்கிரசை
நடத்தினால் இதைவிட வேறு என்ன செய்துவிட முடியும்? எல்லாவற்றையும்
விட ஒன்று கேழ்க்கிறேன். மகாத்மா காந்தி காங்கிரசில் சேர்ந்து நானும்
என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பைத்தியக்காரர்களும் அவருக்கு
சிஷ்யர்களாக இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்தும் சிறை
சென்றும் அதற்குத் தகுந்த என்ன காரியத்தைச் சாதிக்க முடிந்தது? இதற்கு
பதில் யாராவது சொல்லட்டும். பல கெடுதிகள் ஏற்பட்ட தென்று சொல்லக்
கூடியவர்களை தடுக்கக்கூட நமக்கு யோக்யதை இல்லை. மேலும் அப்
பத்திரிகை “நாயக்கரே காங்கிரசில் சேர்ந்து உழைத்து பிரசாரம் செய்து
ஜெயிலுக்கும் போய் வந்துவிட்டு அதே காங்கிரசை தூஷிக்கிறார்” என்று
எழுதுகிறது. இது வாஸ்தவம். காங்கிரசைப் பற்றிய எனது பரீகை்ஷை முடிந்து
விட்டது. மக்கள் தனது நாட்டிற்குஆக என்னென்ன செய்ய வேண்டுமென்று
மகாத்மா சொன்னாரோ அவற்றை என்னால் கூடியவரை செய்து காட்டினேன்.
மகாத்மாவும் செய்து பார்த்து விட்டார்.
காங்கிரஸ் ஒழிந்த மறுதினமே மகாத்மாவை சத்யாக்கிரக
339
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
உலகத்தில் காணலாம், தியாக உலகத்தில் காணலாம், விடுதலை உலகத்தில்
காணலாம். இது உறுதி என்று சொல்லுவேன். மகாத்மா காங்கிரசை விட்டு
விலகும் போது என்ன சொன்னார்? என்பதைக் கவனியுங்கள். எனது
நாட்டின் விடுதலைக்கு ஏற்ற கொள்கைகளைப் படித்த வகுப்பாரை ஒப்புக்
கொள்ளும்படிச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலை கடவுள் எனக்குக் கொடுக்க
வில்லை. ஆதலால் எனது கொள்கைகளை காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து
விலக்கிக் கொள்ளுகிறேன். என்னாலானதை நான் வெளியில் செய்து
பார்க்கிறேன் என்று சொன்னதை ஸ்ரீமான்கள் நாயுடுவும் முதலியாரும்
ஒப்புக்கொள்ளுகிறார்களா? ஆக்ஷபிக்கிறார்களா? என்று கேழ்க்கிறேன்.
மகாத்மாவினால் திருப்தி செய்விக்க முடியாத படித்தவர்களது
ஸ்தாபனமான பணம் சம்பாதிக்கும் காங்கிரசை ஸ்ரீமான்கள் நாயுடுகாரும்,
முதலியாரும் கைப்பற்றி மகாத்மா
கொள்கைகளை அப்படிப் படித்தவர்.
களுக்குள் புகுத்தி காங்கிரசின் மூலம் விடுதலை சம்பாதித்துக் கொடுக்கப்
போகிறார்களா? என்று கேழ்க்கிறேன். ஒருக்கால் ஸ்ரீமான் நாயுடுவும் முதலி
யாரும் ஒப்புக்கொள்வதானாலும் வாசகர்களே! நீங்கள் முடியும் என்று நம்பு
கிறீர்களா? என்று கேழ்க்கிறேன். தவிரவும் அப்பத்திரிகை எழுதுவதாவது
சரித்திர ஆராய்ச்சியும் பிரதேச சுதந்திரக் கிளர்ச்சியின் அனுபோகமும்
எனக்கு இல்லாததால் நான் இப்படி சொல்லுவதாய் மிகவும் தாகஷண்ணி
யமான பாஷையில் எழுதியிருக்கிறது. பாஷையில் தாக்ஷண்ணியம்
காட்டியதைப் பொருத்தவரை நான் நன்றியறிதலுள்ளவனாக இருக்கிறேன்.
கருத்தைப் பொருத்தவரையிலும் மாறுபடுவதற்கு மன்னிக்க வேண்டு.
கிறேன். இதற்கு ஆக ஒரு சிறுகதை சொல்லுகிறேன். ஒரு ஊரில் ஒருவன்
வீட்டில் அவனது தாயார் இறந்துவிட்டாள். அதற்குத் துக்கம் விசாரிக்கப்
போனவர்கள் அச்சிறுவனைப் பார்த்து “உன் தாயார் இறந்து போனதைப்பற்றி
எங்களுக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. அந்தம்மாள் உனக்கு மாத்திரம்
தாயல்ல. எனக்கும் தாயாராயிருந்தாள். இந்த வீதிக்கே மற்றும் இந்த ஊருக்கே.
தாயாராயிருந்தாள். அப்பேர்பட்ட புண்ணியவதி போய் விட்டாளே என்று
மிகவும் வருத்தப்படுகிறோம்”” என்று ஆறுதல் சொன்னார்கள். அடுத்த
வாரத்தில் பக்கத்து வீட்டிலுள்ள ஒருவரின் மனைவி இறந்து விட்டாள். இந்த
வாலிபன் அந்நண்பர் வீட்டிற்கு துக்கத்தை விசாரிப்பதற்குச் சென்றவன்,
துக்கம் விசாரிக்கும் முறை இப்படித் தானாக்கும் என்று நினைத்துக் கொண்டு
வீட்டுக்காரரைப் பார்த்து “அய்யோ உன் மனைவி இறந்து விட்டதைப் பற்றி
நான் மிகவும் துக்கப் படுகிறேன். அப்புண்ணியவதி உனக்கு மாத்திரமா
மனைவி என்று இருக்கிறாயா? எனக்கும் மனைவியாய் இருந்தாள், இந்த
வீதியிலுள்ள எல்லாருக்கும் மனைவியாயிருந்தாள், இந்த ஊராரிலும் யாருக்கு,
வேண்டுமானாலும் மனைவியாயிருந்தாள். அப்பேர்பட்ட தர்மவதி இறந்து
போனதற்கு நான் மாத்திரமல்ல
இந்த ஊரார் எல்லோரும் துக்கப்படு
கிறார்கள்” என்று சொன்னானாம். அது போல இருக்கிறது உலகத்தில் உள்ள
குடி அரசு
- 19270)
240
மற்ற தேசக் கிளர்ச்சியை நமது இந்திய நாட்டுக்கு ஒப்பிட்டு அச்சரித்திரங்க
ளின் படிப்பும், கிளர்ச்சிகளின் படிப்பும் இந் நாட்டில் நடத்த எத்தனிப்பது..
உலகத்திலுள்ள மற்ற தேசமெல்லாம் வேறு, இந்தியா வேறு. அதனாலேதான்
“தமிழ்நாடு” பத்திரிகை சொல்வது போன்ற அயல்நாட்டு சரித்திரங்களையும்
கிளர்ச்சியையும் மற்றவர்கள் யாருக்கும் பின்வாங்காத அளவுக்கு படித்தறிந்த
மகாத்மா காந்தி இந்நாட்டு விடுதலைக்கு அவைகள் எதையும் உபயோகித்துக்
கொள்ளாமல் தன் சொந்த முறையில் ஒரு தத்துவத்தைப் புகுத்தினார்கள்
என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் அயல்நாட்டு விடுதலை சரித்திரமும்
கிளர்ச்சி மாதிரியும் நமது நாட்டுக்கு உதவாது என்பதையும் அறிவித்துக்
கொள்ளுகிறேன்.
மேலும் அப்பத்திரிகை எழுதி இருப்பதாவது “நாயக்கர், வரி
உயர்ந்ததும், பார்ப்பனரல்லாதார் நன்மை கெட்டு பார்ப்பனர் ஆதிக்கம்
வலுத்ததும், தொழிலாளர் நிலைமை கேவலப்பட்டதும், இன்னும் பல குறை
களுக்கும் காங்கிரசே காரணம் என்று சொல்லுகிறார். இது சரியல்ல. மற்ற
தேசங்கள் காங்கிரஸ் என்கிற ஸ்தாபனத்தின் மூலம் தான் வெற்றிபெற்று
இருக்கிறது. காலத்திற்கு ஏற்றபடியும் தேவைக்குத் தக்கபடியும் எல்லா
தேசத்திலும்தான் உயர்ந்திருக்கிறது. ஆதலால் இவற்றிற்கு காங்கிரஸ்
காரணமல்ல” என்று எழுதி இருக்கிறது. இதற்கும் முன் சொன்ன துக்கம்
விசாரிப்புக் கதையையே சமாதானமாகச் சொல்லவேண்டி இருப்பதற்கு
வருந்துவதுடன் மேலும் இரண்டொரு சமாதானம் சொல்லுகிறேன்.
நமது அரசாங்கத்தார் உயர்த்தியிருக்கும் வரி கால தேச வர்த்தமான
அதிகச் செலவை உத்தேசித்தா? அல்லது காங்கிரசுக்கு அழுக வேண்டிய சில
உத்தியோகங்களை உத்தேசித்தா? என்பதையும் நமது நாட்டு அரசாட்சிக்கு
இவ்வளவு உத்தியோகம் வேண்டுமா? என்பதையும் மற்ற தேச உத்தியோகங்
களுக்கு இவ்வளவு சம்பளமிருக்கிறதா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
ஒரு கவர்னரும், இரண்டு நிர்வாக சபை மெம்பர்களும், இரண்டு
காரியதரிசியும் அரசாட்சி புரிந்த சென்னை அரசாங்கத்திற்கு ஒரு கவர்னரும்,
7 நிர்வாக அங்கத்தினர்களும்,7 காரியதரிசிகளும் எதற்காக? இது கால தேச
வர்த்தமானத்தை உத்தேசித்தா? காங்கிரசின் தேசத் துரோகத்தை உத்தே
சித்தா? என்பதை கண்ணியமாய் சொல்லட்டும். 5 ஐகோர்ட்டு ஜட்ஜிகள்
இருந்து நியாயம் விளங்கின சென்னை உயர்தர நீதிமன்றத்திற்கு 15 ஐகோர்ட்.
ஜட்ஜிகள் இருப்பது கால தேச வர்த்தமானத்தை உத்தேசித்தா? காங்கிரசின்
தேசத்துரோகத்தை உத்தேசித்தா?
ஸ்ரீமான்கள் சர். சி. பி. ராமசாமிக்கும் சர். சிவஞானத்திற்கும் டாக்டர்.
சுப்பராயனுக்கும் மற்றும் இவர்கள் போன்றாருக்கும் மாதம் 5500 ரூ.
கொடுப்பதும் காரியதரிசிகளுக்கும் ஜட்ஜுகளுக்கும் 2500,3000 கொடுப்பதும்
341
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்தா? காங்கிரசின் தேசத் துரோகத்தை
உத்தேசித்தா? இதுபோன்ற ஆயிரக்கணக்கான உத்தியோகங்கள் அதிகமான
தும் அதுகளுக்கு சம்பளங்கள் கொடுக்க வேண்டியதும் நாட்டின் உண்மை
யின் அவசியத்தை முன்னிட்டா? காங்கிரசின் தேசத் துரோகத்தை முன்னிட்
டா? இவர்களுக்கும் இவர்களைப் போலவே வெள்ளைக்காரருக்கும் அதிக
சம்பளம் கொடுக்க வேண்டியதற்காகவே 40 கோடி ரூ. வரி செலுத்தி வந்த
நமது நாட்டு குடியானவர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள், கள்ளு சாராயம்
குடிக்க வேண்டியவர்களை அதிகப்படுத்த அவசியங்கள் ஆகிய வரிகள்
கார்ட், கவர், ரயில் சார்ஜ், உப்பு வரி, வருமான வரி, சாமான்கள் மீது வரி
முதலியதுகளை அதிகமாக்க ஏற்பட்டதா? அல்லது தேசத்தின் காலதேச
வர்த்தமானத்தை உத்தேசித்து ஏற்பட்டதா? என்று கேழ்க்கின்றேன்.
தூங்குபவர்களைத் தட்டி எழுப்பலாம் “தமிழ்நாடு” போன்று எல்லா.
விபரமும் தெரிந்து வேண்டுமென்றே கண்ணைக் கெட்டியாய் மூடிப் படுத்துக்
கொண்டிருப்பவர்களை எப்படி எழுப்புவது? மற்றும் அப்பத்திரிகை எழுது
வதாவது “காங்கிரஸ் தோன்றிய பிறகுதான் மக்களுக்கு தேசாபிமானம்
இன்னது என்று தெரிந்தது. சீர்திருத்தங்களைப் படிப்படியாய் அடைய
முடிந்தது. அடைந்ததை ஆள முடிந்தது. தேச சமூக சமய வேத புராண
புரோகித விடுதலைகளில் உணர்ச்சி ஏற்பட்டது” என்று எழுதுகிறது.
இதில் மருந்துக்குக் கட உண்மை இல்லை. காங்கிரஸ் ஏற்பட்ட
பிறகுதான் மக்களுக்குத் தேசத் துரோகம் செய்யும் ஆசை கற்பிக்கப்பட்டது.
தேசத் துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே மக்களுக்கு ஏற்பட்டது.
காங்கிரசுக்கு முன் உத்தியோகஸ்தர்கள் மாத்திரம் அதுவும் மிகுதியாக
பார்ப்பன உத்தியோகஸ்தர் மாத்திரம் செய்ய முடிந்தது. இப்போது மக்கள்
ஒவ்வொரு வரும் வாழ வேண்டுமானாலும் சிறப்பாக
அயோக்கியர்கள் வாழ
வேண்டுமானாலும் உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக
இருந்து வருகிறது. சமய சமூகவாரிகள் விடுதலைக்கு நமது நாடு ஆயிரக்
கணக்கான வருஷங்களாய் போராடுகிறது. அது வெற்றி பெறும் நாளையில்
காங்கிரசின் பலனாய் பார்ப்பன ஆதிக்கம் வளர்ந்து அவ்விடுதலைகளுக்கு
இடையூறாய் நிற்கிறது. இன்றும் இவ்விடுதலைக்கு காங்கிரசின் பேரால்
உழைக்க இடமிருக்கிறதா? என்று கேழ்க்கிறேன். காங்கிரசால் வந்த சீர்திருத்
தத்தைதானே நம்ம நாட்டுக்கு ஆபத்து என்று சொல்லுகிறேன். அது வந்த
தால் கெடுதிதானே ஆயிற்று. சீர்திருத்தத்தை நடத்திக்காட்ட முடிந்தது
என்கிறது. எதை நடத்திக் காட்டியதாக அப்பத்திரிகை சொல்லுகிறது என்பது
நமக்கு விளங்கவில்லை. மந்திரிப் பதவிகளில் டாக்டர் சுப்பராயன், பனகால்
ராஜா முதலியவர்கள் நடத்திக் காட்டியதையா? தேர்தல்களில் சீனிவாசய்
யங்கார் நடத்திக் காட்டியதையா? இந்தியருக்கு உயர் பதவி கொடுத்ததில் சர்.
சி.பி. நடத்திக் காட்டியதையா? ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்ரீமான் ஈரோடு டி.
ஸ்ரீனிவாச முதலியார் நடத்திக் காட்டியதா? கூட்டுத்தொகுதியில் இந்திய சட்ட
குடி அரசு
- 19270)
342
சபைக்கு தென்னாட்டில் அய்யங்கார்களே போக முடிந்ததையா? எதைச்
சொல்லுகிறது? என்று கேட்கிறேன். இது போலவே அதன் மற்ற வரிகளும்
இருக்கின்றன. மற்றவைகளுக்குப் பதில் விரும்பினால் வரிவரியாய்ப் பிரித்து
எழுதத் தயாராய் இருக்கிறேன்.
ஒற்றுமையை உத்தேசித்து கொள்கைகளை விட்டுக் கொடுத்த
பலன்தான் மகாத்மா முக்காடிட்டு சங்கராச்சாரி போல் மூலையில் உட்கார
நேர்ந்ததும் அவரது நடவடிக்கைகள் இப்போது ஒரு மடாதிபதிகள்
சம்பிரதாயம் போல் ஆனதும் மடங்களில் பலர் ஆஷாடப்பூதித்தனம் செய்து
பெருமை அடைவது போல் காந்தி மடத்திலும் பல “சாஸ்திரிகள்” போய்
அமர்ந்து முகஸ்துதி செய்து பெருமை பெற்று வாழ்வதுமான காரியங்கள்.
நடந்தது. காந்தி கொள்கைக்கு இருந்த மதிப்புகள் அடியோடு போய் காந்தி
மடமேற் பட்டுவிட்டதற்கு காரணமே கொள்கையை விட்டுக்கொடுத்து
ஒற்றுமையை நாடின பயித்தியக்காரத்தனம் தான். மகான்கள் செயலில்
பயித்தியக்காரத்தனமும் ஒன்றாதலால் மகாத்மா காந்திக்கு அது தகும். ஒரு
சமயம் அதை மாற்றிக்கொள்ள அவருக்கு நம்பிக்கை பிறந்தாலும் பிறக்கும்.
நமக்கு அது தகாது. நமக்கு அந்நம்பிக்கை இல்லை. கொள்கை விட்டு
ராஜியான ஒரு ஸ்தாபனமும், ஒரு மனிதனும், ஒருநாடும் உருப்படியாகாது
என்பது எனது புத்திக்கு எட்டிய உறுதியான முடிவு.
ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் “காங்கிரஸ்”
பயித்தியம் இருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்ரீ முதலியாருக்கு
அரசியல் விளம்பரம் தேவை இல்லை. ஆங்கிலம் படித்த பயனாக தேசத்
துரோகத்தன்மை தோன்றவும் இடமில்லை. வேறு விதத்தில் அவர் ஒரு
பெரியராஜதந்திரியாக வேண்டியதவசியமும் இல்லை. ஆதலால் அவருக்கு
“காங்கிரஸ்” பைத்தியம் ஏனோ தெரியவில்லை. எப்படியானாலும் “காங்கி
ரஸ்” தேசத்துரோக ஸ்தாபனமென்பதையும், ஏழைகளை வதைக்கும் ஸ்தா
பன மென்பதையும் நாம் கோபுரத்தின் மேலிருந்து கூவுவோம். ஆனால் கடசி
யாக ஒரு வார்த்தை அதாவது யாவறொருவர் “காங்கிரசைப்” பற்றி என்னைப்
போல் நினைக்கிறார்களோ, என்னைப் போன்ற முடிவை உறுதியாகக் கொண்:
டிருக்கிறார்களோ அவர்கள்
மாத்திரம் “காங்கிரசி”ல் சேர வேண்டியதில்லை.
ஸ்ரீமான் நாயுடுவைப் போலவும், முதலியாரைப் போலவும், மற்றும் “ஜஸ்டிஸ்”
கட்சியில் உள்ள சிலர்கள் போலவும் “காங் கிரஸ்” ஒரு தேசீய சபை, அதனால்
தேசத்திற்கு நன்மை செய்யலாம் என்று யாராவது நினைப்பார்களேயானால்,
அவர்கள் அவசியம் தங்கள் மன சாட்சிப்படியே நடக்க வேண்டுமென்று
கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஆனால் மனதில் உண்மை தெரிந்து
சுயநலத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ போய் சேர்ந்து தேசத்தையும், ஏழை
மக்களையும் கெடுக்காதீர்கள் என்று பிரார்த் திக்கிறேன்.
குடி அரசு - தலையங்கம் - 12.06.1927.
343
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
நாகையில்
வைறுக்கத்தக்க சதி
நாகையில் நமது சகோதரர்களில் சிலர் அதாவது ஜனாப் அப்துல்
அமீத்கான், ஜனாப் தங்க மீரான் சாயபு, ஸ்ரீமான் கிருபாநிதி முதலியவர்கள்.
பிரசாரம் செய்ய வந்த காலையில் கூட்டத்தில் சிலர் மிக இழி தன்மையாய்
நடந்து கொண்டதாக பத்திரிகையில் காணப்படுகிறது. (அதாவது கூட்டத்தில்
பாதரகைஷ எறியப்பட்டதாம்?. அது வாஸ்தவமானால் நாகையில் உள்ள
எனதன்பான தொழிலாளர் சகோதரர்களும், நாகையில் உள்ள பார்ப்பன
ரல்லாத பிரமுகர்களுக்கும் கட அவமானகரமான காரியமென்றே
சொல்லுவோம். இவ்விழித் தகைமை
ஆன
காரியத்தினால் பார்ப்பனரல்லாத
சமூகத்திற்கு வந்த நன்மை என்ன? பொது வாழ்வில் யாவருடைய குற்றத்
தையும் ஆண்மையுடன் கண்டிக்க யாவருக்கும் உரிமை உண்டு.
இம்
மாதிரியான காரியங்களினால் மிகவும் சமூகத்திற்கே அவமானத்தை
விளைவிக்கத் தக்கதாகவும் நடந்து கொண்டதற்கும் அக்கூட்டத்தில் நமது
பெயரும் நமது பத்திரிகையின் பெயரும் அடிபட்டுக் கொண்டு இம்மாதிரி
நடந்ததற்கும் நாம் மிகுதியும் வெட்கமடைகிறோம். பார்ப்பன சூழ்ச்சியின்
பயன் என்னவாய் முடிகிறது. பார்ப்பன வஞ்சக புரோசீஜர் கோட் ஆகிய
ராமாயணமென்னும் புத்தகத்தில் என்ன சொல்லி யிருக்கிறது? எதிரியை
ஜெயிக்க முடியாவிட்டால் எதிரியின் கூட்டத்தில் உள்ள ஒரு ஆசாமிக்கு
ஆசை வார்த்தை சொல்லி லஞ்சம் கொடுத்து நமது சுவாதீனப்படுத்திக்
கொள்ள வேண்டும். அவர்களுக்குள்ளாக விவகாரம் இருந்தால் ஒரு
கக்ஷியில் (பீசில்லாமல்) சேர்ந்து கொண்டு ஒருவனுக்கு கெடுதி செய்ய
வேண்டும். அதாவது விபூஷணருக்குப் பட்டம் கட்டுவதாகச் சொல்லி அவன்
தமையனுக்கு விரோதமாய் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டதும், வாலி
சுக்ரீவன் சண்டையில் சுக்ரீவனுடன் சேர்ந்து கொண்டு வாலி மேல் சுக்ரீவ
னைத் தூண்டிவிட்டு தான் உள்ளுக்குள் இருந்து கொண்டு திருட்டுத்தனமாய்
வாலியைக் கெடுத்ததும் போலவும். கூட்டம் அதிகமாய் ஏற்பட்டு தங்களால்
சமாளிக்க முடியாத காலத்தில் மூல பல சைன்னியங்களுக்குள்ளாகவே
ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று கொள்ளும்படியாக செய்வித்தது
போலவுமாய் இப்போது பார்ப்பனர் செய்யும் சூழ்ச்சியை அறியாமல் நாம்
நம்மவர்களை இம்மாதிரி நடத்துவது அறியாமையேயாகும்.
எந்தக்
குடி அரசு - 19970)
344
கூட்டத்திலாவது எந்தப் பார்ப்பனராவது இம்மாதிரி சபையில் மாட்டிக்
கொள்ளுகிறானா என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்கும்படி வேண்டு
கிறோம். பார்ப்பனரல்லாதார் மீது பழி சொல்ல ஒரு சமயம் இக்காரியம் ஒரு
பார்ப்பனராலேயே ஏற்பட்டு இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் அதற்கும்
இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பார்ப்பனரல்லாதார்.
கடமையென்று சொல்லுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 12.06.1927
345
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
ஸீணிவாசய்யாங்கார் பணத்திண் மகிமை
சென்ற வாரம் தூத்துக்குடியில் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் சிஷ்யர்.
களில் ஒருவரான ஒரு குப்புசாமி முதலியார் அவர்கள் தூத்துக்குடியில்
“காங்கிரஸ்” (பார்ப்பன! பிரசாரம் செய்யும் போது ஒரு கூட்டத்தில் ஸ்ரீமான்
ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் தானும் ஒரே கள்ளுக்கடையில் கள்ளுக்குடித்
தோம் என்றும் தனக்கு சீனிவாசய்யங்கார் சிலவுக்குக் கொடுக்கிறார் என்றும்
மற்றும் பலவிதமாய் பெண்டு பிள்ளைகளைக் குறித்தும் வேடிக்கையாகப்
பிரசங்கம் செய்தார் என்றும் அக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர்கள் குலுங்கி
குலுங்கி நகைத்தார்கள் என்றும் ஸ்ரீனிவாசய்யங்கார் கக்ஷியாரை ஆதரிப்
பதாக சொல்லிக்கொள்ளும் சில பார்ப்பனரல்லாதார்கள் கூட இதைப்பற்றி
வருத்தப்பட்டார்கள் என்றும் ஸ்ரீமான் வெ. நாராயணன் என்பவர் தூத்துக்குடி
யில் சில கனவான்கள் முன்னிலையில் நமக்குச் சொன்னார். இது உண்மை
யானால் ஸ்ரீ.ஸ்ரீனிவாசய்யங்காரின் பணத்தின் மகிமையே மகிமை.
குடி அரசு - செய்தி விளக்கம் - 12.06.1927.
குடி அரசு
- 19270)
346
கோவையில் UMTILTEENSTT மகாநா௫
கோவையில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் விசேஷ
மகாநாடு ஜுலை மாதம் 2,
3 தேதிகளில் அதாவது ஆனி மாதம் 18,19 தேதி
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதாய் முடிவாகத் தீர்மானிக்கப்பட்டு
விட்டது. கோவை ஜில்லா மகாநாடாக கூட்டுவதாயிருந்த இந்த மகாநாடு
காங்கிரசில் உள்ள சில பார்ப்பனரல்லாதாரின் உணர்ச்சியை அனுசரித்து
மாகாண விசேஷ மகாநாடாகக் கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அதோடு கூட, காங்கிரஸ் பார்ப்பனர்கள் தேசத்தின் பெயரால், காங்கிரஸ்
என்கிற ஸ்தாபனத்தைக் கைக்கொண்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்க்கு
செய்து வரும் கெடுதியையும், தேசத்தின் விடுதலையைக் காட்டிக்கொடுத்து
தேசத் துரோகம் செய்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள
செய்துவரும் சூக்ஷியையும் அறிந்து ஒன்றா காங்கிரசினது யோக்கியதையை
வெளியிலெடுத்துச் சொல்லி பாமர மக்களை அக்காங்கிரஸ் படுகுழி மோசத்
தில் இருந்து தப்புவிக்க வழிதேட வேண்டும். அல்லது காங்கிரஸைக் கைப்
பற்றி அதிலுள்ள அயோக்கியர்களையும், சுயநலக்காரரையும் வெளியாக்கி
காங்கிரசின் மூலம் தேசத்திற்கு உண்மையான விடுதலையும், சுயமரியாதை
யும் உண்டாகும்படி செய்ய வேண்டும் என்கிற ஆசையானது ஜஸ்டிஸ்
கக்ஷியைச் சேர்ந்த சில தலைவர்களுக்கு உண்டானதினாலும் மாகாண பொது
மகாநாடாக கூட்டி பார்ப்பனரல்லாத கனவான்களில் அரசியல் விஷயத்திலும்
மற்றும் பல விஷயங்களிலும் அபிப்பிராய பேதப்பட்ட எல்லா கனவான்
களையும் அழைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடனும்
அம்மகாநாடு கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் சொல்லலாம்.
எனவே, இம்மாகாண பார்ப்பனரல்லாத பொதுமக்களுக்கு இதுசமயம் பெரிய
பொறுப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை ஞாபகப் படுத்துகிறோம்.
சுயராஜ்யக் கக்ஷியையும் ஜஸ்டிஸ் கட்சியையும் வைது கொண்டு
தேசியக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்ரீமான்
வரதராஜுலு நாயுடுவுக்கும் அதே மாதிரி சுயராஜ்ஜியக் கட்சியை அக்கிரமக்
கட்சி என்று சொல்லிக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியை பார்ப்பனரல்லாதார்.
எல்லாருக்கும் பிரதிநிதியான கட்சி அல்லவென்று சொல்லிக் கொண்டும்
சன்மார்க்க சங்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கும் ஸ்ரீமான்
கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் மற்றும் இதுபோலவே காங்கிரஸ்:
347
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கொள்கையும் தப்பு, சுயராஜ்ஜியக் ககஷியார் நடவடிக்கையும் பிடிக்கவில்லை,
ஜஸ்டிஸ் ககஷித் தலைவர்களிடத்திலும் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்
கொண்டு மந்திரிகளை ஆதரிக்க வேண்டியது தனது கடமை என்றும்
சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்ரீமான் டி ஏ.ராமலிங்க செட்டியாருக்கும் மற்றும்
காங்கிரஸ் நல்லது, அதை நடத்துகிறவர்கள் அயோக்கியர்கள், அவர்களை
வெளியாக்கி காங்கிரஸைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். ஜஸ்டிஸ்
கக்ஷியின் சமூக சம்பந்தமான கொள்கைகள் சரியானதுதான். ஆனால், அதன்
அரசியல் கொள்கை காங்கிரஸ் கொள்கையாக இருக்க வேண்டும் என்று
சொல்கிற ஸ்ரீமான் ஆர். கே. ஷண்முகம் செட்டியாருக்கும் மற்றும் யாதொரு
கொள்கையும் இல்லாமல் மாதம் 30 நாள் நடந்தேற வேண்டியதும் 5500 ரூபாய்
சம்பளம் பெறுவதும் தவிர அது நிரந்தரமாய் கிடைத்துக் கொண்டிருக்க
வேண்டியதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்கிற கொள்கை
யுடைய மந்திரிமார்களுக்கும் இவர்கள் இத்தனைப் பெயருடைய கோஷ்டி
யாருக்கும் பின்பற்றுவோர்க்கும் இம் மகாநாடு தாராளமாய் வழி திறந்திருப்
பதுடன் இவர்கள் இத்தனை பேரும் சொல்லும் யோசனையை வணக்கத்
துடனும் சகிப்புத் தன்மையுடனும் காது கொடுக்கவும் அவற்றிற்கு சரியான.
நியாயம் வழங்கவும் தயாராக காத்துக் கொண்டிருக்கிறது.
மதுரை மகாநாடும் இப்படியேதான் எல்லோரையும் வரவேற்க
காத்திருந்தது. ஆனால், சிலருக்கு அதுசமயம் பலவித சந்தேகங்களும்,
அசெளகரியங்களும் ஏற்பட்டிருக்கலாம். இப்போது மதுரை மகாநாடு நடந்த
பிறகும் காங்கிரஸ் நடைமுறையைக் கண்ட பிறகும் அவரவர்களுக்கு ஏற்பட்.
டிருந்த சந்தேகங்களும் அசவுகரியங்களும் அநேகமாக ஒழிந்திருக்கு
மென்றே எண்ணுகிறோம். எப்படியெனில் மகாத்மாவின் நிர்ணயமான
திட்டத்தை காங்கிரஸ் உதைத்துத் தள்ளியிருந்துங் கூட ஜஸ்டிஸ் கட்சி அதை
ஏற்றுக் கொண்டதும், “இரட்டையாட்சியை ஒழிக்க வேண்டும், மந்திரி
சபையை ஒழிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் செய்த தீர்மானத்தைக்
காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களே உதைத்துத் தள்ளிவிட்டு இரகசியமாய்
இரட்டை ஆட்சியையும் வெளிப்படையாய் மந்திரிகளையும் சர்க்காரையும்
ஆதரித்து வந்தும், ஜஸ்டிஸ் கட்சி தைரியமாய் மந்திரி சபையையும்
சர்க்காரையும் எதிர்த்து வருவதும் இதன் பலனாக மந்திரி பதவிகளை வலிய
தங்களுக்குக் கொடுத்தாலும் எடுத்துக் கொள்ளுவதில்லை என்று உறுதியாய்
இருப்பதும் யாவரும் அறிந்த விஷயமேதான்.
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் கொள்கைகளிலோ சமூகக்
கொள்கைகளிலோ நிர்மாணத் திட்டத்திலோ இனி யாரும் குறை கூறிக்
கொண்டு சாக்குப் போக்குச் சொல்ல முடியாது. “நடத்துகிறவர்கள் ஒழுங்கா
யில்லை, தலைவர்கள் சரியாயில்லை” என்று சொல்லவோ “அடிப்படைத்
தத்துவம் சரியாயில்லை” என்று சொல்லவோ இனி யாருக்கும் இடமும்
இல்லை. ஏனெனில் யாவர்களும் வந்து அவரவர்கள் அபிப்பிராயங்களைச்
குடி அரசு
- 19270)
348
சொல்லி அவற்றை ஒப்புக் கொள்ளாததினாலோ அல்லது “மற்றவர்களை உள்.
சேர்க்கக் கூடாது. ஒரு சிலரிடமே ஆதிக்கம் இருக்க வேண்டும்” என்று
சூக்ஷியைக் கண்ட பிறகோ, யாராவது அதன் பேரில் குற்றம் சொன்னால்
சொல்லலாம்.
அப்படிக்கு ஒன்றும் இல்லாமல் எல்லோரையும் வரவேற்க தயாராய்
இருப்பதுடன் எல்லோருடைய அபிப்பிராயத்திற்கும் மதிப்புக்கொடுக்கத்
தயாராயிருக்கும் போது வருவதற்கு இசையாதவர்களை பார்ப்பன பயம்
காரணமில்லாமல் வேறு சாக்குச்சொல்லவே முடியாது என்றே சொல்லு வோம்.
தவிர, மகாநாட்டின் அக்கிராசனர் ஸ்ரீமான் திவான் பகதூர் எஸ்.
குமாரசாமி ரெட்டியார் அவர்கள். அவரைப்பற்றி நமது மாகாணத்தில் தெரி
யாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் 1907-ம் வருஷத்தில்
ஏற்பட்ட வங்காளப் பிரிவினைக் கிளர்ச்சியின் போதே தேசீய விஷயத்தில்
ஈடுபட்டவர். தூத்துக்குடி சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்கு முக்கியஸ்
தராயிருந்து கிராமம் கிராமமாகச் சுற்றி 10 லட்சக்கணக்காக பொருள் வசூல்
செய்து கப்பல்கள் வாங்கி நடத்தியும் மற்றும் எவ்வளவோ பிரயாசைப்
பட்டவரும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக பத்து ஹு காலத்திற்கு
அதிகமாகவே ஒரே கொள்கையுடன் கட்டுப்பாடாய் இருந்து நாணயமாக
நடந்து வருபவரும் திருநெல்வேலி ஜில்லா கவர்மெண்ட் வக்கீலாய்
இருந்தவரும் ஜில்லா போர்டு பிரசிடெண்ட்டாக இரண்டு முறை இருக்கிற
வரும், சென்னை சட்டசபையில் முக்கிய அங்கத்தினராகவும் இருந்தும்
வருகிறவர். எனவே, அவரது தலைமைப் பதவி “காங்கிரஸ் தலைவர்கள்”
தலைமைப் பதவியைப் போலல்லாமல் கண்ணியத்துடனும் சாமர்த்தியத்து
டனும் நடைபெறும் என்பது நமது உறுதி. இப்பேர்ப்பட்ட தலைவர் இந்த
நெருக்கடியான சமயத்தில் கிடைத்ததே மகாநாட்டின் பாக்கியம் என்று
சொல்ல வேண்டும். அதுபோலவே, வரவேற்புத் தலைவராகிய ஸ்ரீமான் பி.
இரத்தினசபாபதி கவுண்டர் அவர்களைப் பற்றியும் நாம் அதிகம் சொல்ல
வேண்டிய தில்லை. அவர், இந்த ஜில்லாவின் பெரும் பாகமான சமூகமாகிய
கொங்கு வேளாளர் சமூகப் பிரமுகர்களில் ஒருவர். கொங்கு வேளாளர்
சங்கத்திற்கு ஆதி முதல் காரியதரிசியாகவும் கடைசியாக நடந்த மகா
நாட்டிற்கு வரவேற்புத் தலைவராகவும் கோயம்புத்தூர் ஜில்லா பஞ்சு வர்த்த
கர்களில் முக்கியஸ்தராகவும் செல்வந்தராகவும் பொதுநலச் சேவையில்
உண்மையான பற்றுக் கொண்டவராகவும் உள்ள கனவான். இந்த ஜில்லாவில்
அவருக்குத் தமது சமூகத்திலும் மற்றும் வியாபார சமூகத்திலும் பாமர:
மக்களிடத்திலும் விசேஷ செல்வாக்குண்டு. எனவே, அவரது வரவேற்புத்
தலைமையானது யாவருக்கும் திருப்தியைத் தரத்தக்கதாகவே இருக்கும்.
அதன் காரியதரிசிகளோ மிகவும் விசேஷப்பட்டவர்கள்:- ஒன்று,
ராவ்பகதூர் சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், எம். எல். சி.ஜில்லாபோர்டு
பிரதிடெண்ட், முனிசிபல் சேர்மன். இரண்டு, ஸ்ரீமான் பி. எஸ். சாத்தப்ப
349
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
செட்டியார், காளீஸ்வரர் மில் முதலிய பல மில்லுகளின் ஏஜண்ட் . அவரது
முயற்சி எல்லோரையும் விட மிகச் சிறந்தது. மூன்று, ஸ்ரீமான் சி. வி.நஞ்சய
கவுண்டர், கோயம்புத்தூர் ஜில்லா போர்டு வைஸ் பிரசிடெண்ட்டு ஸ்ரீமான்
வி.சி.வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்களின் மருமான். நான்கு, பி.எஸ்.ஜி
சன்ஸ் வெங்கட சாமி நாயுடு. ரங்கவிலாஸ் மில் ஏஜண்ட், கம்ம நாயுடு சமூகப்
பிரமுகர்,
அநேகப் பெரிய தர்மங்கள் செய்தவரும், ஜில்லாவில் மிக்க செல்
வாக்குடையவரும் ஆவார்.
5. ஸ்ரீமான் அருணாசலம் செட்டியார்.
கோயம்புத்தூர் முனிசிபல் வைஸ் சேர்மன், தேவாங்க குல பிரமுகர், பொதுக்
காரியங்களில் மிகவும் ஊக்கமாகவும் உழைத்து வருபவர். ஆறு, ஸ்ரீமான்
நஞ்சுண்ட கவுண்டர். முனிசிபல் கவுன்சிலர், ஒரு பெரிய பாங்க்கின் காரிய
தரிசி, ஒக்கிலிகர் சமூகப் பிரமுகர். இன்னமும் இது போன்ற நிர்வாக சபை
அங்கத்தினர்கள் ஆகிய அநேக பெரியோர்களையும், முக்கியஸ்தர்களையும்
கொண்ட இம்மகாநாட்டை விசேஷ மகாநாட்டில் மிக விசேஷமானது என்று
சொல்வது மிகையாகாது.
ஆதலால் மாகாணத்தில் பல பாகங்களிலும் சிறப்பாக தமிழ்நாட்டில்
உள்ள எல்லா ஜில்லா, தாலூகா, கிராமங்களில் இருந்தும் தவறாமல் பிரதிநிதி
கள் ஆயிரக்கணக்காக வந்து சேரவேண்டியது ஒவ்வொரு உண்மையான
பார்ப்பன ரல்லாதாரின் கடமையாகும். முக்கிய விசேஷம் என்னவென்றால்
ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்திர முதலியார், ஆர். கே.
சண்முகம் செட்டி யார், வி. ஓ.சிதம்பரம்பிள்ளை ஆகிய அநேக கனவான்கள்
இம்மகாநாட்டிற்கு வரக்கூடும். அவர்கள் யாவரும் வருவதற்குத் தகுந்த
அழைப்புகளும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இம்மகாநாட்டின் மூலமும் அநேக கனவான்களின் விஜயம் மூலமும்
பார்ப்பனரல்லாத சமூகத்திற்குள் ஒரு புது கட்டுப்பாடும், ஒற்றுமையும், பொது
வேலைத் திட்டமும் ஏற்படக் கூடும் என்பதற்கு அநேக ஆதாரங்கள் இருக்
கின்றன. யாவரும் தவறாமல் வந்து மகாநாட்டின் உத்தேசத்தை நிறைவேற்றி
வைக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.06.1927
குடி அரசு
- 19270)
350
யார்ப்பண அயோக்கியத்தனம்
*அகில இந்திய பிராமண சம்மேளனம்” என்பதாகப் பேர் கொண்டு
தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலைக் கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர்,
உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடைப் பார்ப்பனர்,
தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம்
கூடி ஒன்று சேர்ந்து “அகில இந்தியப் பிராமண சம்மேளனம்” என்பதாகப்
பேர் வைத்துக் கொண்டு பல தீர்மானங்கள் செய்து இதை இந்தியாவில் உள்ள
இந்துக்கள் என்று சொல்லப்படும் இருபத்தைந்து கோடி மக்களுக்குக்
கட்டுப்பட்டதாக கருதும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். அங்கு நடந்த
தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின்
தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான
கலப்பற்ற பார்ப்பனரல்லாதார்களின் இரத்தம் கொதிக்காமல் இருக்கவே
முடியாது.
அவ்விருவர் பிரசங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப்படும்
விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இத் தேசத்தில்
இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும்,
க்ஷத்திரியரும், வைசியரும் கிடையாது என்றும் பேசியிருக்கிறார்கள். கஷத்திரி.
யரும், வைசியரும் இந்நாட்டில் இல்லை என்பதைப் பொறுத்த வரையில்
நமக்குச் சந்தோஷமே. நாமும் அப்படித்தான் தீர்மானித்திருக்கிறோம்.
மற்றபடி யார் யார் தங்களை க்ஷத்திரியர்கள் என்றும், வைசியர்கள் என்றும்
எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களைப் போல் பூணூல் போட்டுக் கொண்டு
திரிகிறார்களோ அவர்கள் பார்ப்பனர்களிடம் போய் கெஞ்சி தங்கள்.
க்ஷத்திரிய, வைசிய உரிமைகளைக் காப்பாற்றி பார்ப்பனர்களின் க்ஷத்திரியர்
மக்களல்ல என்பதை நிரூபித்துக் கொள்ளட்டும். நமக்கு அதைப்பற்றி
கவலையில்லை. ஆனால் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள்
என்று சொன்னதுதான் நமக்கு மிகுதி ரத்தத் துடிப்பை உண்டாக்குகிறது.
பார்ப்பனர்கள் இந்த நாட்டிற்கு பிழைக்க வந்தவர்கள் என்பதில்
யாருக்கும் ஆக்ஷேபணை இருக்காது என்றே நினைக்கிறோம். அவர்கள் ஒரு
இழிந்த ஜாதியார் என்பதிலும் யாருக்கும் ஆகூஷபணை இருக்க நியாய
மில்லை. நமது அகராதிகளிலேயே ஆரியர் என்றால் மிலேச்சர் என்று
குறிப்பிடப்பட்டிருப்பதும், அதுவும் அவர்களால் ஒப்புக்கொண்ட அகராதி
களில் காணப்படுவதும், அவர்களது நாகரிகமோ அவர்களால் எழுதி
351
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
வைத்திருக்கும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் இதுகளால் அவர்கள்.
தமிழ் மக்களாகிய நமது நாகரிகத்திற்கு எவ்வளவு கீழ்ப்பட்டது என்பதும்,
அருவருக்கத்தக்கது என்பதும் ஆராய்ச்சி உள்ளவர்களுக்கு நன்றாகத்
தெரியும். “அதாவது பார்ப்பன ஸ்திரீகள் விபசாரம் செய்து விட்டால், கர்ப்பம்
தரிக்காமலிருந்தால் வீட்டிற்கு தூரம் ஆனவுடன் அந்த தோஷம் தீர்ந்து
விடுகிறது” என்று பராசர ஸ்மிருதி பிராயச் சித்த காண்டம்
4 - வது அத்தி
யாயம் 2 - வது சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதே சுலோகத்திற்கு
விரிவுரை எழுதுகையில் “பிராமண ஸ்திரீ சூத்திரனைப் புணர்ந்து விட்டால்
மாத்திரம் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்றும், அதுவும் தினமும் ஒரு
கவள அன்னம் வீதம் 15 நாளைக்கு குறைத்துக் கொண்டு வந்து 16 - ம் நாள்.
முதல் தினம் ஒரு கவளம் அன்னம் வீதம் உயர்த்திக் கொண்டு வந்து விட்டால்
போதுமானது” என்று இருக்கிறது. இதுதான் பிராமண ஸ்திரீகளின் விபசாரத்
திற்குப் பிராயச்சித்தம். மற்றபடி கர்ப்பம் தரித்து விட்டால் மாத்திரம் மிகவும்
தோஷமானதென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்மிருதி பிராயச்
சித்த காண்டம் ஏழாவது அத்தியாயம் 23 - வது சுலோகத்தில் “பூமியானது
எப்படியோ அப்படியே ஸ்திரீகளுமாகையால் அவர்கள் தூஷிக்கத் தக்க
வர்கள் அல்லகள்” என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இதன் விரிவுரையில்
பூமியை யார் தொட்டாலும் உபயோகப்படுத்தினாலும் எப்படிச் சுத்திச்
செய்வதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ அப்படியே ஸ்திரீகளும்
சண்டாள சங்கமம் செய்த ஸ்திரீகளும் பிராயச் சித்தம் செய்து அங்கீகரித்துக்
கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறது.
அன்றியும் “எருமை, கழுதை, ஒட்டகம் இவைகளையும் புணரும்
பிராமணன் ஒரு நாள் உபவாசம் இருப்பதால் சுத்தனாகிறான்” என்று அதே
ஸ்மிருதி அதே அத்தியாயம் 14 - வது சுலோகத்தில் சொல்லியிருக்கிறது. இது
போலவே தனது தாயையும், குமாரத்தியையும், சகோதரி முதலியவர்களையும்
புணரும்படியானதிலும் அறிந்தும் அறியாமலும் நிலையாகவும் நடந்து
கொள்ளும் விஷயத்திலும் பிராயச் சித்தங்கள் சொல்லியிருக்கிறது. இப்
பிராயச் சித்தங்களில் பெரும்பாலும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டிய
தும், பட்டினி முதலியதுகள் இருக்க வேண்டியதுமான சாதாரண பிராயச்
சித்தங்களேதான்.
இன்னும் அதுகளில் உள்ள ஆபாசங்கள் அநேகம்.
இவற்றை நாம் எடுத்துச் சொன்னதன் கருத்து என்னவென்றால் எப்படிப்பட்ட
யோக்கியர்கள் நம்மை சூத்திரர்கள்
- அதாவது பார்ப்பனர்களுடைய வைப்
பாட்டி மக்கள், பார்ப்பனர்க்குத் தொண்டு செய்ய கடவுளால் பிறப்பிக்கப்பட்ட
வர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டவும் நமது ராஜரீகங்க
ளுக்கும் அவர்களது நாகரீகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டி யார்.
உயர்ந்தவர்கள், யார் தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டவுமேதான் எடுத்துக்
காட்டியிருக்கிறோம். தற்காலம் நமது நாட்டில் உள்ள மக்களின் உணர்ச்சியும்
அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியையும் நன்றாகப் பார்த்துக்
குடி அரசு
- 19270)
352
கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் “பார்ப்பன மகாநாடு” கூட்டி “நாம் பிராமணர்:
கள்தான், மற்றவர்கள் நமது வைப்பாட்டி மக்கள்தான், சண்டாளர்கள்தான்”
என்பதாக தீர்மானம் செய்திருப்பதாக வெளிப் படுத்துவர்களானால்
அவர்களின் தைரியத்தையும் அயோக்கியத் தனத்தையும் என்னவென்று
சொல்வது? இன்னமும் அம்மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானப்
பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பார்ப்பனீய சபைகளும் பிரசாரங்களும்.
நடைபெற வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் கோரும் சீர்திருத்தங்களை
யெல்லாம் கண்டித்தும் தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுடன் மகாத்மாவின்
சமூகத் திருத்தக் கொள்கைகளையும் கண்டித்துப் பேசப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களும், நீதி நிர்வாக
இலாக்காக்களின் தீர்ப்பு சொல்லக்கூடிய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்
கிறார்கள் என்றால் நமது சுயமரியாதையைப் பொறுத்த அல்லது சுயமரியாதை
விஷயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்களுடைய தீர்ப்புகளில்
எப்படியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? என்று கேழ்க்கிறோம்.
இந்தக் கூட்டத்தார்தானே அரசியலிலும் நமக்கு சுயராஜ்ஜியம் வாங்கிக்
கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் வாங்கிக் கொடுக்கும்
சுயராஜ்ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்
பாட்டிகளாய் இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜி
யம் இவர்களால் வரக்கூடும்? என்பது நமக்கு விளங்கவில்லை. மகாத்மா
கேழ்க்கும் சுயராஜ்ஜியமே இந்தப் பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய்,
பார்ப்பனத் துரோகமாய், இந்து மத துவேஷமாய் போய் விட்டது. இப்படி
யிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும்
வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது பார்ப்பனர் கோரும் சுயராஜ்ஜியச்
சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாழும்
சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது
இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டின் துர் அதிஷ்டமாய்
இருக்கிறது. அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பன சம்மேளனக் கொடுமை
இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை.
ஆதலால், பார்ப்பனரல்லாத மக்களே! இந்தப் பார்ப்பனக் கொடுமை யில்
இருந்தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும்
தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகிறீர்கள்? கிராமங்கள் தோறும்
சுயமரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்தி, பார்ப்பனக் கொடுமையை ஒழிப்பது
தவிர நமக்கு வேறு கதி இல்லை. சுயராஜ்ஜியப் பேச்சு பேசிக் கொண்டு
பார்ப்பனர்கள் காலுக்கு முத்தமிட்டு தேசத்தின் பெயரால் பிழைப்ப வர்கள்
பிழைக்கட்டும்.
சுயமரியாதையில் கவலையுள்ளவர்கள் இந்த வேலை
பார்த்தால் போதும்.
குடி அரசு
- துணைத் தலையங்கம் - 19.06.1927.
353
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
அரசியல் பார்ப்பணர்கணிண் யோக்கியதை
சத்தியம் எண்பது அவர்கள் வாரிமோர் தேமூவைத்த
சொத்து
சென்ற வாரம் தூத்துக்குடியில் நடந்த பார்ப்பனப்பிரசாரத்தில்
ஸ்ரீமான்கள் MK ஆச்சாரியார் பல உபன்யாசங்கள் செய்தாராம். அவர்கள்
(ழெ ஆச்சாரியார்! பேசும்போது வரதராஜுலு நாயுடு ஒரு போக்கிரி என்றும்
தான் ஒருநாளும் பார்ப்பனப்பிள்ளை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத
குழந்தை பார்த்துவிட்டால் பல நாள் பட்டினி கிடப்பேன் என்று சொல்ல
வில்லை என்றும் உறுதி கூறினாராம். பார்ப்பனர்களுக்கு பொய் சொல்வ
தென்றால் அது அவர்களுடைய வேதபாராயணம் செய்வதுபோலும். “ஏக.
தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பொய்யிக்கு அளவே இல்லை
என்பதற்கு ஆதாரமாக சென்ற தேர்தலுக்கு ஆள்கள் சேர்க்கும் முறையில்
ஸ்ரீமான்கள் நரசிம்மராஜு ராமலிங்கம் செட்டியார் இன்னும் மற்றவர்களும்
ஆந்திர தேசத்துப் பத்திரிக்கைகளும் வண்டி வண்டியாய் ௬ஜு செய்தன.
ஆனால் ஸ்ரீமான் அய்யங்காரோ தோள் மேல் தொண்ணூரு அடி
அடித்தாலும் துடைத்துவிட்டால் ஒன்றும் சோதிக்காது என்று சொல்வதுபோல்
அத்தனையும் ஜீரணம் செய்துகொண்டு இனியும் “தலைவராகவே”
விளங்குகிறார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளின் பொய்யை நிரூபிக்க
யாவரும் பிரயத்தனப்பட வேண்டியதே இல்லை என்று ஆய்விட்டது.
ஏனெனில் “ஜஸ்டிஸ் திராவிடன்” பத்திரிகைகள் சாஸ்திரிகளின் கோக்கலே
ஹால் பிரசங்கத்தின் பேரிலேயே முதலில் அண்டப்புளுகர் என்கிற பேரைக்
கொடுத்தது. ஸ்ரீமான் சாஸ்திரிகள் அது போராது என்று சொல்லி அப்பீல்
செய்துகொண்டதின் பேரில் மிகுந்த தாராள நோக்கத்துடன் அப் பத்திரிக்
கைகள் ஆகாயப் புளுகர் என்கிற பெயர் கொடுத்திருக்கிறது. அதை சாஸ்திரி
வாளும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு சுகமாகவே இருந்துவருகிறார்.
நமது ஸ்ரீமான் யம். கே. ஆச்சாரியர் அவர்களோ இப்போது ஸ்ரீ
சத்தியமூர்த்தி பேரில் பொறாமை கொண்டு பொய்யில் போட்டிபோட வந்து
விட்டார். அதாவது தான் திருச்சி தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்
குடி அரசு
- 19270)
354
ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியார், ராஜன், சந்தானம் முதலிய பார்ப்பன
“தேச பக்தர்கள்” “தியாக மூர்த்திகள்” முன்னிலையிலும் மற்றும் பல பார்ப்
பனரல்லாதார் முன்னிலையிலும் “ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை
ஒரு சூத்திரக் குழந்தை பார்த்துவிட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன்”
என்று சொல்லிவிட்டு இப்போது சொல்லவே இல்லை என்கிறார். முக்கியமாக
நமது நாட்டு அரசியல் பார்ப்பனர்களுக்கு பொய்சொல்லுவது என்ற குணம்
தான் சிறந்த யோக்கிதையாக விளங்குகிறது. இம்மாதிரி பொய்பேசும் ஆசாமி
களுக்குத்தான் தேசபக்தர் என்கிற பெயர் பெரிதும் பொருத்தம்போலும்.
ஸ்ரீமான் யம். கே. ஆச்சாரியார் இவ் விஷயத்தில் உண்மை சொல்லும்
வரையிலும் அல்லது அவர் அரசியல்பேரால் பிழைப்பதை விட்டு விட்டு
வேறுவழியில் பிழைப்புத் தேடிக்கொள்ளுகிறவரையிலும் பொய்யர் என்கிற
அடைமொழியை நமக்கு ஞாபகமிருக்கும்போதெல்லாம் சேர்த்தே அவர்
பெயரை வழங்குவோம் என்பதாக தெரிவித்துக்கொள்ளுகிறோம். “தமிழ்
நாடு” பத்திரிக்கையும் இதை பின்பற்றுவது நியாயம் என்பதையும் தெரிவித்
துக் கொள்ளுகிறோம். ஏனெனில் அப்பத்திரிகை தலைவரைப் பற்றித்தான்
தான் சொன்ன வார்த்தையை இல்லை என்று மனமறிந்த பொய் சொல்வதுடன்
குரும்பர் என்றும் சொல்லுகிறது. ஒரு சமயம் ஸ்ரீமான் நாயுடுகார் பல காரணங்
களால் மன்னித்தாலும் மன்னிக்ககூடும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927
355
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
€ேலம் வில்லா போர்டு தலைவர் கேர்தல்
முதன் மந்திரியால் மூன்று முறை நிறுத்தப்பட்டது
சேலம் ஜில்லா போர்டு மெம்பர் திரு.ராஜமாணிக்கம் பண்டாரம் முதல்
பேர் சென்னை கவர்னரின் அந்தரங்க காரியதரிசிக்கு அனுப்பிய தந்திச்
செய்தி ,
ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு போல்க்ஸ் தலைவர் பதவியை
ராஜிநாமா செய்யப்
போவதாக அறிவித்தவுடனே லோக்கல் போர்டு ஆக்டு
17-வது பிரிவின்படி மார்ச் 31
௨ வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு
கூட்டம் கூட்டும்படி தீமானிக்கப்பட்டது. திருபோல்ஸின் ராஜிநாமாவை
ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கூட்டத்தில் தானே மறு தலைவர் தேர்தலையும்
நடத்தவேண்டுமென்று மந்திரி உத்தரவு கொடுத்தார். அந்த உத்தரவுபடி திரு
போல்சின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட கூட்டத்திலேயே ராவ்பகதூர்.
எல்லப்பசெட்டியார் ஏகமனதாக எல்லோராலும் தலைவராகத் தேர்ந்தெடுக்
கப்பட்டார்.
ஆனால் தேர்தல் முடிவை 6-வாரம் வரை கெஜட்டில் பிரசுரம்
செய்யாமல் மந்திரி நிறுத்தி வைத்தார். மே15 தேதி திரு எல்லப்ப செட்டியார்.
தேர்தலை ரத்து செய்து உடனே வேறு
தேர்தல் நடத்தவேண்டுமென மந்திரி.
உத்தரவிட்டார். இரண்டாம் முறையும் அவர் உத்தரவுப்படி நடத்தப்பட்டது.
மே 23 தேர்தல் நடத்துவதாக ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நோட்டீஸ்
கொடுக்கப்பட்டது. மே 22 தேதி மந்திரி மீண்டும் தேர்தல் நோட்டீஸை ரத்து
செய்து நோட்டீஸின் போக்குவரத்துக்கு 2 நாளும் சட்டப்படி கூட்டத்துக்கு
முன் 7 நாளும் ஆக 9 நாள்களுக்கு முன்னாலேயே தேர்தல் நோட்டீஸ்
கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மூன்றாம் முறையும் அவரது
உத்தரவு அனுசரிக்கப்பட்டது.
ஜூன் 4 தேதி தேர்தல் நடத்துவதாக
குறிப்பிட்டு நாளைக்கு முன்னாலேயே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூன்
3 தேதி தேர்தலையும் மந்திரி ரத்துசெய்து, போர்டு மெம்பர்களில் ஐந்துபேர்.
போர்டு கண்றாக்டில் சம்மந்தப்பட்டிருப்பதாக எதிர் ககஷியார் அனுப்பி
யிருக்கும் மனுவை விசாரித்து முடிவு செய்த பிறகு தேர்தல் நடத்தினால்
போதுமென்று ஒரு உத்தரவு அனுப்பினார். வைஸ் பிரஸிடெண்டு அந்த
குடி அரசு
- 19270)
356
உத்திரவை போர்டு மீட்டிங்கில் ஆஜராக்கினார். ஏதோ தப்பெண்ணத்தின்
பேரில் அந்த உத்திரவு அனுப்பப்பட்டிருக்க வேண்டுமென்றும், அதைப்
புனராலோசனை செய்ய ஸர்க்காரிடம் விண்ணப் பம் செய்து கொண்டு
தேர்தலை அன்று நடத்த வேண்டுமென்று போர்டு கூட்டத்தில் தீர்மானிக்கப்
பட்டபடி தேர்தல் நடந்தது. ராவ்பகதூர் எல்லப்ப செட்டியார். எம்.எல்.ஸி.
மீண்டும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விஷயங்களை விளக்கி
ஜுன் 5 தேதி கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
மீண்டும் மந்திரி இவ்
விஷயத்தில் குறுக்கிடக் கூடுமென்று வதந்தி உலாவுகிறது. நான்கு தாலூகா
போர்டு மெம்பர்களும் 6 டிஸ்ட்டிரிக்டு போர்டு மெம்பர்களும் உள்பட
பத்துபேர் கவர்னர்களைப் பேட்டிகாண உத்திரவு வாங்கித் தானாக வேண்டு
மென்று பிரார்த்திக்கிறோம் .
குடி அரசு - கட்டுரை - 19.06.1927.
357
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
யங்மாண் சோசப்பின் குட்மக்காணம்
சென்னை அரசாங்கத்தில் கிருஸ்தவர் என்கிற சலுகையின் பேரில்
ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியாருக்கு மந்திரிப் பதவி கிடைத்ததிலிருந்து
ஸ்ரீமான் நமது ஜோசப்புக்கு நாக்கில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது.
அதோடு மாத்திரமல்லாமல் அந்த மந்திரிப் பதவி பார்ப்பனர்கள் மூலமாகத்
தான் விற்கப்படுகிறதென்கிற தீர்மானமும் ஏற்பட்டு விட்டது. அதோடு கூட
அம்மந்திரிப் பதவிக்கு பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை
“ஜஸ்டிஸ்” கட்சியைத் திட்டி பார்ப்பனரல்லாதாரைக் காட்டிக் கொடுக்க
வேண்டியதுதான் என்கிற முடிவும் அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
சமீபத்தில் மதுரையில் பேசினதும் ஸ்ரீ சத்தியமூர்த்தியைப் புகழ்ந்ததும்
மற்றும் அவர் தெரிவித்த அபிப்பிராயமும், ஸ்ரீமான் ஜோசப்பின் புதிய
பிறப்பைக் காட்டுகிறது.
ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஒரு மனிதர் புகழ்
வாரானால் அம்மனிதருடைய யோக்கியதை இன்னதென்று நாம் சொல்லிக்
காட்ட வேண்டியதில்லை. உதாரணமாக “மலம் நல்ல வாசனையாயிருக்கிறது
என்று ஒருவர் சொல்லுவாரானால் அவர் மூக்கின் யோக்கியதையைப் பற்றி
சொல்லவும் வேண்டுமா?” என்ற பழமொழி ஒன்றுண்டு. அதுபோலவே
ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் யோக்கியப் பொறுப்பும் நாணயமும் நன்றாக
அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு அவர்கள் அவரைப் புகழ்வதும் சுயராஜ்யக்
கட்சியின் யோக்கியதையையும், தென்னாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கிய
தையையும் நன்றாக அறிந்த ஸ்ரீமான் ஜோசப்பு இவைகளுக்கு வக்காலத்து
வாங்கிக் கொண்டு பேசுவதுமானால் பீசு இல்லாமல் பேசுகிறார் என்று
யாராவது நினைக்க முடியுமா?
இதன் பயனாகக் கிறிஸ்தவர் என்கிற
முறையில் ஸ்ரீமான் ஜோசப்புக்கு ஒரு சமயம் மந்திரி உத்தியோகம் அல்லது
அதற்கு சமானமான பதவி கிடைப்பதாயிருந்தாலும் ஸ்ரீமான் ஜோசப்பின்
வாழ்க்கையின் பெருமை அடியோடு ஒழிந்து போகுமென்றே பயப்
படுகின்றோம்.
இந்து மதம் என்கிற புரட்டை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள்,
தாங்கள் பெரிய ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டும் அம்மதத்தினர்.
என்பவர்களுக்குள்ளாகவே தாங்களொழிந்த மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியா
ராக்கி நிரந்தரமாய்ப் பிழைக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “அரசியல்”
குடி அரசு
- 19270)
358
இயக்கம் என்பவைகளிலுள்ள சூழ்ச்சியை வெளிப்படுத்தப் பார்ப்பனரல்லா
தார் பார்ப்பனருடன் சண்டை இடும் போது ஸ்ரீமான் ஜோசப் போன்றவர்கள்
இரு ஆட்டுக்குட்டிவர் சண்டையிலிருந்து ஒழுகும் இரத்தத்தைக் குடிக்கும்
(குள்ள நரியாக) வீரராகத் தோன்றியது மிகவும் பழி சொல்லத்தக்க காரியம்.
தேசாபிமானம் என்பதற்கு ஸ்ரீமான் ஜோசப் என்ன பொருள் கொண்டிருக்
கிறார் என்பது விளங்கவில்லை. தென்னாட்டுப் பார்ப்பனர்களின் அயோக்
கியத் தனத்தைத்தான் ஸ்ரீமான் ஜோசப் அவர்கள் தேசாபிமானம் என்று
கொள்வாரானால் அவரையும் பார்ப்பனக் கூட்டத்தில் சேர்த்துத்தான் கணக்
குப் பார்க்கவேண்டும். ஏனெனில் ஸ்ரீமான் ஜோசப்புக்கும் பார்ப்பனருடன்
சேருவதற்கு உரிமை உண்டு. என்னவென்றால் “இந்துக்” களில் பார்ப்பன
ரல்லாதார் அதிகமானவர்கள். பார்ப்பனர்கள் மிகுந்த குறைந்த எண்ணிக்கை
உள்ளவர்கள். குறைந்த எண்ணிக்கையுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையுள்ள
வர்களை எய்தி ஆதிக்கம் பெற வேண்டுமானால் ஏதாவது ஒரு சூழ்ச்சியின்
மூலம் தான் முடியும் என்பது பார்ப்பனர்களின் முடிவு. அது போலவே
ஸ்ரீமான் ஜோசப் அவர்களும் தங்கள் குறைந்த எண்ணிக்கையை உத்தேசிக்
கும்போது தாங்களாகத் தனித்த ஒரு தந்திரமோ அல்லது பார்ப்பனர்களின்
தந்திரத்தில் கூட்டு வியாபாரமோ செய்ய வேண்டியதுதான் கிரமமானது
என்கிற முடிவுக்கு வரவேண்டியவர்தான். ஆனால் யோக்கிய மான முறை
யில் கிடைக்காத எந்த ஆதிக்கமும் நிலைக்காது என்பதும் நிலைத்தாலும்
வாசனையுள்ளதாயிருக்காது என்பதும் எமது துணிவு.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927
359
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
மலையைக் வல்லி எலியைய் பிழுத்தார்கன்
சேலம் ஜில்லா போர்டு தலைமைப் பதவிக்கு திருவாளர் எல்லப்ப
செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதாக சேலத்திலுள்ள சில பார்ப்பனர்.
களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது
வாலைப் பிடித்துக் கொண்டு திரியும் சில பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று
கூடிசுயமரியாதைக்கு பங்கமுண்டுபண்ணும் கூட்டத்திற்கு அனுதாபம் காட்டி
வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம்
செய்து பார்த்தும் வேண்டும் என்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனை
யோ அக்கிரமமான உத்திரவுகளைப் போடச் செய்தும் கடைசியாக கனம்
மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப
செட்டியாருடைய (தலைவர்! தேர்தல் சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டு
விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம்
சுப்பராயனின் மந்திரி தன்மை, மானங்கெட்டு நாடு சிரிக்க ஏற்பட்டதுதானே
தவிர பார்ப்பனர்களுக்காவது திரு எல்லப்ப செட்டியாருக்காவது ஒரு வித
நஷ்டமும் ஏற்பட்டுவிடவில்லை.
நமது நாட்டு சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு
நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய
பேச்சையாவது கேட்டு யோக்கியமடைந்ததாகவாவது முன்னுக்கு வந்ததாக
வாவது, எந்த ஆதாரத்தைக் கொண்டாவது ௬ஜுப்பிக்க முடியுமா? பார்ப்பன
ரல்லாதாரை ஒழிப்பதற்காக பார்ப்பனர்களுக்குக் கை ஆயுதமாக இருந்த
பார்ப்பனரல்லாதார்களில் யாராவது ஒருவர் பார்ப்பனர்களால் சபிக்கப்
படாமலும், தூஷிக்கப்படாமலும் தப்பித்துக் கொண்டவர்கள் ஒருவராவது
இருக்கிறார்களா? இன்றைய தினம் பார்ப்பனர்களாலும் அவர்கள் பத்திரிகை:
களாலும் வசை கேட்டுக் கொண்டு இருக்கும் தேசீய வீரர்கள், தேசபக்தர்கள்
என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்களின் கை
ஆயுதங்களாக இருந்து கொண்டு “தேசபக்தர்கள்”, “தேசாபிமானிகள்,”
“தலைவர்கள்,” பிரமரிஷி”. “ராஜரிஷி” என்கிற பெருமையை அடைந்து
கொண்டு இருந்தவர்கள்தான். ஆயினும் பார்ப்பனர்கள் தங்கள் வேலை
முடிந்த உடனே திடீரென்று கீழே தூக்கிப் போட்டு மிதித்து விடுகிறார்கள்.
உதாரணமாக இப்பொழுது நமது நாட்டிலுள்ள பார்ப்பனர்களெல்லாம் ஒரே
அடியாய் ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு.
குடி அரசு
- 19270)
260
எஸ். முத்தையா முதலியார் ஆகியவர்களை வைத வண்ணமாக இருக்கிறார்
கள். இவர்களை இதே பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் தூக்கி வைத்து கவி
பாடிக் கொண்டு பின்னால் திரிந்தார்கள் என்பது ஜனங்கட்குத் தெரியும்.
பார்ப்பனர்கள் தனியாக எங்கேயாவது போனால் பொது ஜனங்களால் கல்லடி,
சாணி உருண்டை முதலிய மரியாதைகள் கிடைக்கும் என்று தோன்றுகிற
இடங்களுக்கெல்லாம் ழி கனவான்களைக் கூட்டிக் கொண்டு போவதும்,
அவர்களை வண்டியில் வைத்து இழுப்பதும், ஜே! போடுவதும், அவர்கள்.
படங்களைப் பள்ளி அறையில் வைத்து பூஜித்துவிட்டும் கொஞ்சம் ஏதாவது
இவர்களது அக்கிரமங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விட்டால் உடனே
அவர்கள் மேல் கத்தி தீட்டுவதுமான செய்கைகளை நாம் பார்த்துக்கொண்டே
வருகிறோம். அல்லாமலும் சுயமரியாதையுள்ள எந்தப் பார்ப்பனரல்லாதா
ரையாவது தங்களுடன் சேர்த்துக் கொண்டோ அல்லது வையாமலாவது
இருக்கிறார்களா என்பதைப் பார்த்தால் இது அனுபவத்தில் தெரியவரும்.
இவற்றை எதற்காகச் சொல்லுகிறோமென்றால் இதே ஸ்ரீமான் சுப்பராயன்
அவர்களுக்கும் சேலத்தில் உள்ள அவரது கோஸஷ்டிக்கும் கொஞ்சம்
சுயமரியாதை உதயமான உடனே இவர்கள் பேரிலும் இதே பார்ப்பனர்கள்
கத்தி தீட்டுவார்களென்பதை அறிவுறுத்துவதற்காகவேயன்றி வேறல்ல.
திரு. எல்லப்ப செட்டியாரின் வெற்றியானது பார்ப்பன சூழ்ச்சியின்
தன்மையை வெளிப்படுத்தவும், பார்ப்பன சூழ்ச்சியினின்று தப்புவதானால்
எவ்வளவு பிரயாசை இருக்கிறதென்பதை வெளிக்காட்டவும் ஒரு அறிகுறி
யாகக் கொள்ளலாமேயல்லாமல் மற்றபடி பிரமாதமாய் பாராட்டத் தகுந்த
விஷயம் அதில் ஒன்றுமில்லை என்பதே எமது அபிப்ராயம்.
குடி அரசு - கட்டுரை - 19.06.1927.
361
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
மந்திரிகளின் நியமனம்
ஜஸ்டிஸ் ௧௯௮ மந்திரி பதவியில் இருந்த காலத்தில் யாருக்காவது
ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் செய்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும்
நமது பார்ப்பனர்கள் ஒவ்வொரு பொய்க் கதையைக் கட்டி பார்ப்பனரல்லாதார்.
இயக்கத்தைத் தூஷித்துக் கொண்டு பாமர மக்களுக்கு அவ்வியக்கத்தினிடம்
அருவருப்புண்டாகும்படிஎவ்வளவோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து கொண்டு
வந்தது பொது ஜனங்களுக்குத் தெரிந்ததுதான்.
ஆனால் அம்மாதிரி
நியமனங்கள் பார்ப்பனர்களுக்காவது அக்கோஷ்டியைச் சேர்ந்த பார்ப்பன
ரல்லாதாருக்காவது கிடைத்துவிட்டால் அதைப்பற்றி வெளியிலே பேசாமல்
ரகசியமாக அனுபவித்துக் கொண்டு வந்ததும் யாவரும் அறிந்தது.
உதாரணமாக ஸ்ரீமான் ஸி.வி.வெங்கட்டரமண ஐயங்காருக்கு கோயம் புத்தூர்.
ஜில்லா போர்டுக்கு நியமனம் செய்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் ஒரு
வார்த்தையாவது பேசவே இல்லை. அதே
சமயத்தில் சென்னை முனிசிபாலி
டிக்கு ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரை
அதே
மந்திரிகள் நியமனம் செய்த
காலத்தில் கொல்லை வழிப் பிரவேசமென்று எழுதியிருந்தார்கள். அதற்குச்
சமாதானமாகத் தேர்தலில் தோற்றவர்களை நியமனம் செய்வதுதான்
கொல்லை வழிப் பிரவேசமே யொழிய தேர்தலுக்கு நின்று வெற்றிபெறத்தக்க
யோக்கியதை இல்லாதவர்களை
நியமிப்பது கொல்லை வழிப் பிரவேசமல்ல
வென்று சொல்லி விட்டார்கள். ஆனால் கீழே குறிப்பிடப் போகும் சம்ப
வத்தை நமது பார்ப்பனர்கள் என்னவென்று சொல்லுவார்களோ? தெரிய
வில்லை. கோயமுத்தூர் ஜில்லா கல்விச் சபைக்கு சமீபத்தில் நியமனம்
செய்யப் பெற்றிருக்கும் மாதிரியும் அப்பொழுது சத்தம் போட்ட பார்ப்பனப்
பத்திரிகைகளுக்கு இப்பொழுது கண்ணே இல்லையா?
புத்திதான் இல்
லையா? என்பதும் வாசகர்களால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது
ரெ சபைக்கு சமீபத்தில் சர்க்காரால் நியமனம் செய்யப் பட்ட ஸ்ரீமான்
டிஎம். ராமச்சந்திரன் செட்டியார் என்பவர் ஜில்லா ஸ்தல ஸ்தாபன மூலியமாய்
செனட்டிற்கு நின்று வெகு வித்தியாசமான ஓட்டுகளால் தோல்வியுற்றவர்.
அதாவது இவர் பட்டதாரி என்கிற பெருமையுடையவராக இருந்து
கோயமுத்தூர் டவுன் முனிசிபல் கவுன்ஸிலிலேயே 30 ஓட்டுக்களுக்கு மேல்
இருந்தும் இவருக்குப் போட்டியாக நின்றவர் பட்டதாரி அல்லாதவராக
இருந்தும் வெளியூர்க்காரராக இருந்தும் அவருக்கு சுமார் 60 ஓட்டுக்கள்.
குடி அரசு
- 19270)
362
கிடைத்தது மல்லாமல் திரு செட்டியார் 10 ஓட்டுக்கள்தான் பெற்று
தோல்வியடைந்தார். எஜுகேஷன் கவுன்சிலுக்கும் கோயமுத்தூர் முனிசிபா
விடி மூலியமாக நின்று வேறொரு பட்டதாரி அல்லாதவர் இவருக்குப் போட்டி
யாக நிற்க இவர் வெற்றிபெறமுடியாமல் பின் வாங்கிக் கொள்ள வேண்டிய
தாகப் போய்விட்டது. தவிர திரு செட்டியார் அவர்களுடைய
வகுப்பில்
யாருக்கும் அந்த ஸ்தானமில்லை. ஆதலால் அவ்வகுப்பாருக்காக செட்டியா
ருக்குக் கொடுக்கப்பட்டதென்று சொல்லுவதாக இருந்தாலோ அதுவும்
இல்லை. ஏனெனில் அதே வகுப்பில் ஸ்ரீமான் செட்டியார் குடும்பத்திலேயே
ஸ்ரீமான் செட்டியாரின் தமயனாருடைய குமாரரின் மனைவியாரும் தமது
சின்ன மாமனாரின் குமாரத்தியும் ஆகிய ஸ்ரீமதி லலிதாம்பாள் அவர்கள்.
ஏற்கெனவே அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அப்படி
யிருக்க தோல்வியுற்றவரும், அதே வகுப்பில் மற்ற ஒரு நியமனம் பெற்ற
வகுப்பினரும் ஆகிய கனவானை எதற்காக மந்திரி நியமித்தார். அந்த
சபைக்கு லாயக்குள்ள வேறு கனவான்களாவது அல்லது அச்சபையில்
பிரதிநிதித்துவமடையாத வேறு வகுப்பாராவது இல்லை என்கிற காரணத்
தினாலா? அல்லது மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கட்கு நியமனம்
பெற்ற ஸ்ரீமான் செட்டியார் விருந்து முதலானது செய்து மரியாதை செய்தார்
என்பதற்காகவா? இதைப்பற்றி எந்தப் பார்ப்பன பத்திரிகையாவது இதை
அவர்களது நிருபர்களாவது பிரஸ்தாபித்தார்களா? எந்த சட்டசபை வாயாடி
களாவது வெளிப்படுத்தினார்களா என்று கேழ்க்கின்றோம்?
இது எப்படியோ இருக்கட்டும். இந்த நியமனத்தினால் பெரிய தீமை
யோ நன்மையோ ஏற்பட்டதாக நாம் சிறிதும் கவலைப்படவில்லை. அல்லது
ஸ்ரீமான் செட்டியார் அந்த ஸ்தானத்திற்கு லாயக்கில்லாதவர் என்றும் சொல்வ
தற்கு வரவில்லை. நமது நாட்டுப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சி
மந்திரிகளின் பேரில் சொல்லிக் கொண்டு வந்த குற்றங்களும் அவர்களுக்கு
விரோதமாகச் செய்து கொண்டுவந்த பிரசுரங்களும் யோக்கியமானதா?
அயோக்கியமானதா? என்பதையும் இவைகள் தேசத்திற்காகச் செய்யப்
பட்டனவா? அல்லது பார்ப்பனர் ஆதிக்கத்திற்காகச் செய்யப்பட்டனவா?
என்பதைப் பொது ஜனங்கள் அறிவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 19.06.1927.
363
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
திராவிடர் கமகம் கோவிற்பட்மு
18 - வது ஆண்டு நிறைவ விழா
தலைமை முன்னுரை
அன்பர்களே!
நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர்
வி.ஓ.ிதம்பரம்
பிள்ளை அவர்கள் என்னைப்பற்றி சொல்லியவைகள் யாவும் என்னிடம்
உள்ள அன்பினால் அல்லாது அவ்வளவு உண்மை யென்று தாங்கள்
நம்பிவிடக்கூடாதென்று தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னை
அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படு
கிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக
இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய பெரும் கிளர்ச்சி
யின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக்
கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றாரையும் கண்டே பொதுத்
தொண்டில் இறங்கினேன். அன்றியும் நான் சிவஞான யோகிகள் வாசித்துக்
கொடுத்த உபசாரப் பத்திர வாக்கியங்களுக்கும் நான் ஒரு சிறிதும் பொருத்த
முடையவன் அல்லன். ஆகிலும் அப்பத்திரத்தில் எனது கொள்கைகளை
புகழ்ந் திருக்கும் விஷயங்களைப் பொருத்தவரை அக்கொள்கைக்கு அதை
ஒரு நற்சாகஷிப் பத்திரமாக எடுத்துக் கொண்டு அதற்காக எனது நன்றியை
செலுத்துகின்றேன்.
இத்திராவிட சங்கம் 18-வது ஆண்டுவிழா என்று சொல்லப் படுவதால்
இதற்கு 18 ஆண்டு முடிந்திருக்கிறது. நமது நாட்டில் திராவிடர் முன்னேற்ற
சம்பந்தமாய் ஏதாவது இயக்கங்களின் மூலம் பேசுவதாயிருந்தால் நமது
எதிரிகள் உத்தியோகத்திற்கு ஆசைப்பட்ட யாரோ சில பார்ப்பனரல்லாதாரால்
சமீபத்தில் திராவிடர்கள் பெயரை சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு
சுயநல இயக்கமென்று சொல்லி வருவது உங்களுக்குத் தெரியும். ஆனால்
இக்கழகம் அப்பேர்ப்பட்டவர்களால் ஆக்கப்பட்டதா என்பதும் சுவாமி
சிவஞான யோகிகள் ஏதாவது உத்தியோகம் ஆக்கப்பட்டு கிடைக்காமல்
போனதற்காக
ஆரம்பித்தாரா என்பதையும் அவருக்கு ஏதாவது
குடி அரசு
- 19270)
364
உத்தியோகம் வேண்டியிருக்கிறதா என்பதையும் திருவள்ளுவருக்கு
உத்தியோகம் வேண்டியிருந்ததா, புத்தருக்கு உத்தியோகம் வேண்டியிருந்
ததா,கபிலருக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா, அவ்வைக்கு உத்தியோகம்
வேண்டியிருந்ததா என்பதையும் யோசித்துப் பாருங்கள். அன்றியும் சுவாமி
சிவஞ்ஞான யோகிகள் காலத்தில் மாத்திரம், இம்மாதிரி முயற்சிகள்
தோன்றிற்று என்பதாக நினைக்கிறீர்களா? என்று இந்த நாட்டில் ஆரியர்கள்
கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர், திராவிடர் என்கிற
வேற்றுமையும் ஆரியர் சங்கம், திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும்
சுயமரியாதைக் கிளர்ச்சி களும் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
இதுகளை எவ்வளவோ பாடுபட்டு நமது எதிரிகள் மறைக்க முயன்றாலும்
இயற்கைத் தத்துவம் மறைக்க முடியாமல் செய்து வருகிறது. எதுவரையில்
ஆரியர் வேதம் என்பது நமது நாட்டில் இருக்குமோ எதுவரை ஆரியர்.
ஆதிக்கம், ஆரிய தர்ம பிரசாரச் சபை, வருணாஸ்ரம தர்ம பிரசார சபை நமது
நாட்டில் இருக்குமோ அதுவரை நமது இயக்கம் அதாவது திராவிடர்:
முன்னேற்ற இயக்கம், சுயமரியாதை இயக்கம், சமரச இயக்கம் இருந்து தீர
வேண்டியது தான். சமீப காலத்தில் ஆரியர்கள் தஞ்சை ஜில்லா தூவார்
என்கிற கிராமத்தில் கூட்டப்பட்ட “பிராமண சம்மேளனம்” என்னும்
கூட்டத்தையும் அதன் நடவடிக்கைகளையும் பார்த்தவர்களுக்கு இம்மாதிரி
இருக்கப்பட்ட சங்கங் கள் அவசியமா இல்லையா என்பது யாவருக்கும்
தெரிந்திருக்கும். மேலும் நமது நாட்டில் மத மடங்கிய வேதம், சாஸ்திரம்,
ஸ்மிருதி,
ஆகமம், புராணம் முதலியவைகளின் பேரால் ஆரியப் பிரசாரம்
செய்து வரும் வரையில் நாம் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டு இருந்து தீர
வேண்டியது தான். எனவே இம்முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென்று
பிரார்த்திப்பதுடன் எனது முகவுரையை நிறுத்திவிட்டு மற்றும் நான் ஏதாவது
சொல்லிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏற்பட்டால் அவற்றை எனது
முடிவுரையில் சொல்லிக் கொள்கிறேன்.
நிறைவுரை :
சகோதரர்களே!
தேசத்தின் பேரால் முன் தொண்டு செய்ய வந்த நான் இப்போது
சமயத்தின் பேராலும், சடங்குகள் பேராலும் தொண்டு செய்ய வந்ததைப்
பார்க்க உங்களில் சிலருக்கு ஆச்சரியம் வரலாம். ஆனால் உண்மையில் இது
ஆச்சர்யப்படத்தக்கதல்ல. முன்னமேயுள்ள என் கொள்கைகளும் இப்போ
துள்ள என் கொள்கைகளும் ஒன்றே தான்.
இரண்டும்
நம் மக்களை:
அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க வேண்டிய விடுதலை தான். நம்
மக்களுடைய சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் இடையூறாயிருப்பது
சர்க்
கார் மாத்திரமல்லாமல் நம் சமயமும் சடங்குகளுமாம். தேசத்திற்கு
ஒத்தில்
லாத ராஜியத்தில் கஷ்டப்பட்டு இவ்வளவு காலம் அடிமையாயிருந்த நாடு
365
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
நம் நாட்டைப் போல் வேறெந்த நாடும் இல்லை. காரணம் குருட்டு நம்பிக்கை,
மூடபக்தி, சுயமரியாதையற்ற நிலைமை இவைகளால் நிறைந்து நம் சமயம்
போல் அடிமைப்படுத்தி இருக்கும் சமயமும் வேறு எதுவுமில்லை. முன் ஒரு
காலத்தில் கிறிஸ்து மதமும் இந்த அடிமைத்தனத்தில் அகப்பட்டிருந்தது.
குருக்கள் பாவமன்னிப்பு சீட்டுக்கள் விற்று ஜனசமூகத்தை அடிமைகளாக்கி
வந்தனர். ஆனால் சீக்கிரம் சீர்திருத்தக்காரர்கள் ஏற்பட்டு தங்களுக்குச் செய்த
கொடுமைகட்கும் பயப்படாமல் இம்மூடக்கொள்கைகளை உடைத்தனர்.
ஜனசமூகம் விடுதலை அடைந்தது, நாடு மேம்பட்டது. அது பற்றி இப்
போதுள்ள கிறிஸ்துவ நாடுகளின் பெருமை இந்த சீர்திருத்தக்காரர்களுக்கே.
சேரும்.
இனி நம்முடைய சமயத்தில் எடுத்துக் கொள்வோம். மற்ற சமயங்
களின் ஆதாரமான குரான், பைபிள் முதலிய புஸ்தகங்களை எல்லோரும்
படிக்கலாம். நம்முடைய சமய ஆதாரமான வேதங்களையோ ஒரு வகுப்பார்
தவிர மற்றவர் படிக்கக்கூடாது, கேட்கக் கூடாது. படித்தால் நாக்கை அறுக்க
வேண்டும். கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். ஏன்
அய்யா இப்படிச் செய்யலாமா என்று கேட்டால் அது மதத் துவேஷம், ஜாதித்
துவேஷம் ஆகி விடுகிறது.
கடவுள் வழிபாடோ, தரகர் இல்லாமல் செய்ய முடியாது. நம் சாமிக்குப்
பக்கத்தில் நாம் போனால் சாமி செத்துப்போவார். சில வகுப்பார் 10 முழத்தில்
சில வகுப்பார் 100 முழத்தில் நிற்க வேண்டும். சில வகுப்பார் கண்களுக்கே
தென்படக்கூடாது சில வகுப்பார் மதிலைக் கூட பார்க்கக் கூடாது. இல்லா
விட்டால் அவருக்குத் துன்பம். நம் பாஷை சாமிக்குத் தெரியாது. தரகர்.
இல்லாமல் காரியம் நடக்காது. தரகர் பாஷைதான் அவருக்குத் தெரியும்.
சர்க்கார் செய்கைகளுக்கோ நல்லதாயினும் கெட்டதாயினும் ஒரு சட்டம்
உண்டு. சர்க்கார் வரிகள் எல்லாவற்றிற்கும் ஒரு சட்டம் உண்டு. ஆனால் நம்
மதத்தின் பேரால் ஏற்படுத்தி வசூல் செய்யும் வரிக்குச் சட்டம் இல்லை.
சர்க்கார் வசூலிக்கும் வரிக்குக் கணக்கு உண்டு. மதத்தின் பேரால்
வசூலிக்கும் வரிக்கு கணக்கு இல்லை.
ஒவ்வொரு கோவில்களிலும்
செலுத்தப்படும் வரி லட்சக்கணக்காய் முடிகிறது. பலன் ஒன்றுமில்லை.
மகம்மதியர் கிறிஸ்தவர் கோவிலில் மதப் பிரசாரம் உண்டு. நம் கோவில்
களில் வரி கொடுப்பவருக்கு மதப் பிரசாரமேனும் கிடையாது.
இனி மடாதிபதிகளோ கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்கு முன்
விடப்பட்ட சொத்துக்கள் மதப் பிரசாரத்திற்காக. இப்போது அவற்றின் வரும்
படி போவதோ கூடா ஒழுக்கங்கட்கும் ஒரு வகுப்பைச் சேர்ந்த வாயாடி
வக்கீல்கட்கும். அவர்கள்தான் போகட்டும். சமய ஆச்சாரியார்களோ, லோக
குருக்களோ அவர்கள் ஊர் ஊராய்த் திரிந்து “அந்தப் பதி” “இந்தப் பதி” என்று
குடி அரசு
- 19270)
366
பட்டங்கள் விற்று நூறு, ஆயிரக்கணக்காய் பணம் தட்டி ஒரு வகுப்பாருக்கே
சமராதனை செய்ய வேண்டியது. அவர்கள் தான் போகட்டும். குலகுருக்
களோ அவர்களுடைய ஜோலி தட்சனை வசூல் ஒன்றுதான்.
நம்முடைய சமயம் இவ்வளவு
சீர் கேட்டில் இருக்க இவைகள்
ஒன்றையும் பற்றிக் கேட்கவில்லை. வரவிற்கு கணக்கு மாத்திரம் கொடு என்று
கேட்க ஒரு இந்துமத தேவஸ்தான சட்டத்தை ஏற்படுத்தினால் அது
பொல்லாப்பு. “ஜஸ்டிஸ் கட்சியார் நம் மதத்தையே கெடுத்து விட்டார்கள்”
என்று ஊரெல்லாம் தூற்றுகிறது. ஜன சமூகத்தில் அவர்கள் மேல் வெறுப்பை
உண்டாக்குகிறது. ஒரு ஆற்று வெள்ளத்தில் பட்டு போன நரி ஐயோ உலகமே
போய்விட்டது உலகமே போய்விட்டது என்றதாம். ஒருவன் இது என்ன
ஆச்சர்யம் என்று எண்ணி அதை எடுத்துக் கரையில் விட்டு என்ன உலகமே
போய்விட்டது என்கிறாய்? என நரி “ஆம் நீ என்னை வெள்ளத்திலிருந்து
விடுவிக்காவிட்டால் எனக்கு உலகமே போய்விட்டதல்லவா?” என்று
சொல்லி ஓடிப் போயிற்றாம். அது போல் ஒரு வகுப்பாருக்கு வரும்படி
குறைந்து விடுமானால் ஆம் அவருக்கு மதம் கெட்டுப் போய்விட்டதுதான்.
சமயம் இம்மட்டில் இனி சடங்குகளை எடுத்துக் கொள்வோம்.
அவைகளினுடைய பலன் ஒரு கூட்டத்தார் வயிர் வளர்க்க மற்றவர்கள்.
எல்லாம் உயிர் போகும்படி உழைக்க வேண்டியதுதான்.
நாம் பிறந்தது முதல் ஒவ்வொரு சுபகாரியத்திற்கும், ஒவ்வொரு அசுப
காரியத்திற்கும் ஒரு கூட்டத்தாரைக் கூப்பிட்டு, அவர்களுக்கு வரி கொடுத்து
அவரை வணங்க வேண்டும். அவர்களுக்கு அப்படி செய்யாவிட்டால்
நமக்கு கடவுள் நன்மை கிடையாது. அவர்கள் மாத்திரம் இல்லாமல் ஒன்றும்
நடக்காது. கல்யாண வீட்டில் அவர் சாவு மந்திரத்தைச் சொன்னாலும் அது
நமக்கு அக்கரையல்ல. அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை நாம்
அவர்களுக்குக் கொடுத்தே தீரவேண்டுமாம். நம் காசால் அவர்கள் வயிறு
வளர்த்து படித்து, வேலைக்கு வந்து, நம்மை மிதிக்க வேண்டும். இதுதான்
சடங்காம்.
தானங் கொடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால்
வறியவர்க்குக் கொடுக்க வேண்டும். யோக்கியர்க்குக் கொடுக்க வேண்டும்.
“அப்படிக்கில்லாமல் ஒரு கூட்டத்தாருக்கே கொடுக்க வேண்டும். அவர்கள்
எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தாலும் சரி” என்பது மூடத்தனம். நாம்
அவர்களுக்கு கொடுக்காவிட்டாலும் அவர்கள் பட்டினி இருந்து கெட்டுப்
போய் விடமாட்டார்கள். நமக்குப் பாவம் ஒன்றும் வந்து விடாது. அப்படிச்
செய்தால் அவர்களும் சீக்கிரம் சீர்திருந்தி சோம்பலை விடுத்து தேகத்தை
உழைத்துச் சம்பாதிக்கப் பழகிக் கொள்வார்கள். கிழிந்த பஞ்சாங்கத்தையும்
காய்ந்த தெர்ப்பைப் புல்லையும் ஜெயிக்க முடியாத நமக்கு எப்போது
367
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
விடுதலை! இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து நாம் நம் மக்களை விடுவிக்க
வேண்டும்.
ராஜரிய முயற்சிகளால் சிறுபாலோருக்கும் உத்தியோகம்
கிடைக்குமானால் பெரும்பாலோரான ஜன சமூகத்திற்கு வரிகள் அதிகமாகும்.
இது நாம் கண்டறிந்த விஷயம். காங்கிரஸ் சபை வரு முன் இரண்டு மெம்பர்.
களால் நடந்த ராஜரீய காரியங்களையே இப்போது நான்கு மெம்பர்களும்
மூன்று மந்திரிகளும் நிர்வாகித்து வருகிறார்கள். அதனால் செலவு மாத்திரம்
அதிகம், வரி அதிகம். காங்கிரஸ் முயற்சியால் வரும் நன்மை, உத்தி
யோகங்கள் அந்த நன்மை சிலருக்கே அதனால் பலருக்கும் கிடைப்பது வரி
அதிகம் என்பது தான். ஆதலால் “சமயச் சடங்குகள்” இவைகளிலுள்ள மூட
விசுவாசங்களிலிருந்தும், குருட்டு நம்பிக்கைகளிலிருந்தும், கட்டுப்பாடு
களிலிருந்தும், ஜன சமூகத்தை விடுவித்து நம் மக்களை சுதந்தரத்திற்கும்
சுயமரியாதைக்கும் அருகராக்குவதே உண்மையில் மேன்மையான முயற்சி
யாகும். அதுவே சுய ஆட்சியைக் கொடுப்பதும் ஆகும்.
குறிப்பு: கோவில்பட்டி போர்டு ஹைஸ்கூல் கட்டிடத்தில் 19. 6. 27 அன்று
நடை பெற்ற திராவிடர் கழக 18 - வது ஆண்டுநிறைவு விழா சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 26.06.1927
குடி அரசு
- 19270)
368
கோவை மகாநாடும்
யார்ப்பணால்லாதார் கடமையும்
கோவையில் அடுத்த வாரம் கூடப்போகும் பார்ப்பனரல்லாதார்.
விசேஷ மகாநாட்டைப்பற்றி இதுவரை குடி அரசு 4, 5 தலையங்கம் எழுதி
ஆகிவிட்டது. மாயவரம் மகாநாடு நடந்தது முதல் விசேஷமாய் கோவை
மகாநாட்டைப் பற்றியே எங்கும் பேச்சாய் இருக்கிறது. இம்மகாநாட்டில்
தமிழ்நாட்டுக்கு ஒரு புது உணர்ச்சி ஏற்படக்கூடும் என்பது நமது அபிப்பி
ராயம். ஆன போதிலும் இம் மகாநாடு சம்பந்தமாய் தலைவர்கள் என்போ
ருக்கு பெருத்த பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் யாரும் மறந்து
விடக் கூடாது. ஏனெனில் பொது மக்களின் கவனத்தை இம்மகாநாடு பெரிதும்
இழுத்துக் கொண்டிருப்பதுடன் இம்மகாநாட்டின் முடிவை பார்ப்பன
ரல்லாதார் மாத்திரம் அல்லாமல் பார்ப்பனரும் சர்க்காரும் வெகு ஆவலாய்
கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மகாநாட்டில் ஒரு கட்டுப்பாடானதும்
எல்லோரையும் கட்டுப்படுத்தக் கூடியதுமான ஒரு திட்டத்தை ஏற்படுத்த
முடிய வில்லையானால் பிறகு பார்ப்பனரல்லாதார் அரசியலிலும் சமூக
இயலிலும் முன்னேறும் காலம் சமீபத்தில் இல்லையென்றே தீர்மானித்துவிட
வேண்டியதுதான்.
பார்ப்பனரல்லாத சமூகப் பிரமுகர்கள் என்போர் இவ்விஷயமாய் இனி
புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியதோ திருத்தப்பாடு அடைய வேண்டி
யதோ அல்லது இனி ஒருவர் மனதை திருப்பக் கூடியதோ ஒன்று இருப்பதாக
நாம் நினைப்பதற்கில்லை. ஏனெனில் இவ்வியக்கம் ஏற்பட்டு பத்து வருஷத்
திற்கு மேலாகியும் இதன் குண தோஷங்களை இயக்கத்தில் கலந்திருந்தும்,
இயக்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு எதிர்த்து நின்றும், சிலர்.
உள்ளிருந்து வெளிவந்தும் மறுபடியும் உட்புகுந்தும், வெளியிலிருந்து
எதிர்த்தவர்கள் இப்போது உட்புகுந்து ஆதரித்தும், உள்ளிருந்து ஆதரித்தவர்
இப்போது வெளியேறி எதிர்த்தும் ஆகிய பலவித அனுபவங்களை
அனேகமாய்ப் பெற்றாகிவிட்டது. மேற்கண்ட இவ்வித நடவடிக்கைகளின்
தன்மைகளையும் இவ்வித நடவடிக்கைகளின் காரண காரியங்களையும்
யாவரும் தெரிந்து கொண்டும் ஆகிவிட்டது. அதோடு கூட கொள்கைகள்
எவ்வளவு தூரம் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் அவரவர்
369
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
சவுகரியங்கள் எவ்வளவு தூரம் இவ்வித காரியங்களுக்குக் காரணமாய்
இருந்தது - இருக்கிறது - இருக்கப் போகிறது என்பதும் ஏறக்குறைய எல்லோ
ருக்கும் தெரியக்கூடியதாகிவிட்டது.
ஆகையால் இனி வேண்டியதெல்லாம் அவரவர் இஷ்டமும் சகிப்புத்
தன்மையுமேயல்லாமல் மற்றபடி வேறு பெரிய மாறுதல்கள் எதுவும் தேவை
யிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. எனவே, மகாநாட்டிற்கு வருவோர்.
களின் கடமையெல்லாம் எவ்வெவ் விஷயங்களில் கொள்கை மாறுபாடில்
லையோ அவ்வவ்விஷயங்களில் தாராளமாய் மிகுதி வைத்துக் கொள்ளாமல்
ஒன்றுபட ஒத்துப்போக வேண்டும் என்பதும், கொள்கை மாறுதலும்,
நம்பிக்கையின்மையும், ஏற்பட்ட விஷயங்களில் சகிப்புத் தன்மையுடன்
நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இந்த இரண்டு குணமும் மகா
நாட்டிற்கு வரும் கனவான்களிடம் குடிகொண்டிருக்கும் பட்சத்தில் மகா
நாட்டில் அபிப்பிராயபேதம் என்பதையே காண முடியாது. ஒரு கூட்ட
மென்றாலே பலதிறப்பட்ட அபிப்பிராயமுடையவர்களைக் கொண்டதாகத்தா
னிருக்கும். கண்ணியமான கூட்டமென்பது பலதிறப்பட்ட அபிப்பிராயமுடை
யவர்கள் வந்தாலும்
அவரவர்கள் அபிப்பிராயத்தை மதித்து நமது அபிப்
பிராயம் ஒருவருக்குப் பிடிக்காவிட்டால் அவரை எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோலத்தான் பிறர் அபிப்பிராயம்
நமக்குப் பிடிக்காவிட்டால் நாமும் நடந்துகொள்ள வேண்டும். அன்றியும்
ஒருவர் அபிப்பிராயத்தில் நமக்கு சந்தேகம் தோன்றுமானால் அதாவது “இது
அவரின் கண்ணியமான அபிப்ராயமல்ல.
தங்களது சுயநலத்திற்கான
அபிப்பிராயம்” என்பதாக யாரிடமாவது நமக்கு சந்தேகம் தோன்றுமானால்
அவற்றையும் மரியாதையுடன் பொறுத்துக்கொண்டு சந்தேகத்தின் பிரயோ
சனத்தை அவருக்கே கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டுமேயல்லாமல்
அதை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஏனென்றால் “உங்களுக்குத்
தோன்றியதை சொல்லுங்கள்” என்பதாக நாமாக அழைத்து ஒருவர் வந்திருக்
கும் போது அவர் சொல்லுவதைப் பொறுமையுடன் கேழ்க்க வேண்டியது
தான். மற்றபடி ஒருவர் அவராக வந்து நமக்குச் சொல்லும்போது அதைத்
தட்டி நமது மனதில் தோன்றியதைச் சொல்ல நமக்கு உரிமை வைத்துக்
கொள்வதில் குற்றமில்லை.
நாமாக வருந்தி அழைத்து குற்றம் சொல்லுவதானது பெருந்தன்மை
யான புத்தியாகாது. இதைப்பற்றி ஏன் இவ்வளவு தூரம் எழுதுகிறோமென்றால்
நமக்கு வந்துள்ள கடிதங்களும் நிரூபங்களும் பெரிதும் இம்மாதிரி
பொறுமையற்ற தன்மை உடையதுகளாகவே இருக்கிறது. அன்றியும் இவ்வார
“நவசக்தி” தலையங்க முடிவில்,
“கோவை மகாநாட்டிற்கு போதருமாறு ஜஸ்டிஸ் கட்சியிற்
சேர்ந்த பல பார்ப்பனரல்லாத தலைவர்கள் அழைக்கப் படுவார்கள்
குடி அரசு
- 19270)
270
என்று நாம் அறிகிறோம். ஒருவேளை அவர்களும் மேடை மீது வாதப்
போரில் தலையிட நேரலாம். அது போழ்து அமைதி, பெருந்தகைமை
முதலியன பாதுகாக்கப் பட வேண்டுமென்று நாம் சொல்லவேண்டுவ
தில்லை. அழைக்கப்படுவோர் மரியாதையாக நடத்தப்படுவாரென
எதிர்பார்க்கிறோம்”
என்பதாக எழுதியிருக்கிறது. இவ்விஷயங்களைப் பார்த்தாலும் நமது
எதிரிகள் பலர் இம் மகாநாட்டில் எப்படியாவது கலவரமுண்டாக்கி நமது
கட்டைக் கலைக்கக் காத்திருப்பது அதிசயமல்லவானதினாலுமே இவ்வளவு
தூரம் எழுதுகிறோம்.
நிற்க, இவ்வார “நவசக்தி” தலையங்கத்தில் கோவை மகாநாட்டைப்
பற்றி எழுதியிருப்பதில் நம்மைப்பற்றி சில வார்த்தைகள் பொரித்திருக்கிறது.
அவற்றை மாத்திரம் இங்கு எடுத்து எழுதி நமது கருத்தை வெளியிடுவோம்.
நவசக்தி எழுதியிருப்பது போலவே நாமும் வாதப்போருக்கு ஆக இதை
எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நவ
சக்தியில் காணும் செய்தியாவது-
1 ஸ்ரீமான் நாயக்கரும் அவர் உள்ளிட்டாரும் ஜஸ்ட்டிஸ் ககஷி காங்கிர
சுடன் ஒன்றலாகாது என்று தம் மதம் நிறுவியே தீர்வர். “ ஸ்ரீமான்
நாயக்கரும் அவர் கூட்டத்தாரும் விட்டுக்கொடுத்தாலன்றி ஜஸ்ட்டிஸ்
கக்ஷித் தலைவர் களின் கருத்து நிறைவேறல் அரிது” என்றும்,
2. “ஜஸ்ட்டிஸ் கக்ஷியார் அரசியல் கூறு காங்கிரசோடு ஒன்றிவிடின்
ஸ்ரீமான் நாயக்கர் தனது சமூக சீர்திருத்தத்
தொண்டை இன்னும் பதின்
மடங்கு ஊக்கமாக நிகழ்த்தலாம்” என்றும்,
3. “ஜஸ்ட்டிஸ் ககஷியில் தனிப்பட்ட அரசியல் ஜீவநாடி ஓடினாலன்றி
சமூகச் சீர்திருத்தத் தொண்டை திறம்பட ஆற்ற இயலாது. அதற்கு
இடமும் நேராது என்று நாயக்கர் சொல்லுகிறார். இக்கூற்றில் ஒரு வித
உண்மையுண்டு என்பதை நாம் மறுக்கவில்லை” என்றும்,
4. “ஜஸ்ட்டிஸ் கக்ஷியார் அரசியல் கூறு தேசிய வளர்ச்சிக்குத் தடையா
யிருப்பது ஈண்டு பெரிதும் கவனிக்கப்பாலது” என்றும்,
5. “ஆதலால் நாயக்கர் விட்டுக்கொடுக்கும் பேரறத்தைக் கடை
பிடித்தல் வேண்டுமென்று நாம் கூறுகிறோம்” என்றும் எழுதியிருக்
கிறது.
271
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
நவசக்தி 22-6-27 தேதி தலையங்கத்தில் இவற்றையே முக்கியமாய்க்
கருதி இவற்றிற்கு நமது கருத்தை வெளியிட கடமைப்பட்டுள்ளோம்.
1.
நாம் நமது அபிப்பிராயத்தை வலியுறுத்தப் போவதில்லை.
விஷயத்தை விளக்கிவிட்டு அவரவர்கள் மனச்சாட்சியின்படி நடக்கவிட்டு
விடுவோமே அல்லாமல் ஒரு சிறிதும் கட்டாயப்படுத்தவோ ஓட்டு சேகரிக்
கவோ மாட்டோம் என்பதை உறுதி கூறுகிறோம். விட்டுக் கொடுத் தலைப்
பற்றி மற்றொரு இடத்திலும் வருவதால் கடைசியாக எழுதுவோம்.
2. இரண்டாவது விஷயத்திற்கு நவசக்தியின் மூன்றாவது விஷயமே
பதில் சொல்லிவிட்டபடியால் நாம் அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை.
ஆனாலும் சிறிது சொல்லுவோம். பார்ப்பனப் பிரசாரம் நமது நாட்டில் பலப்
பட்டிருப்பதற்குக் காரணம் இது சமயம் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக
இருக்கும் அரசியல் ஜீவநாடியின் வலுவா அல்லவா? அது போலவே
ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஒரு சிறிதாவது தனி அரசியல் ஜீவநாடி இல்லாதிருக்கு
மானால் இது சமயம் நமது நிலை என்னவாயிருக்கும் என்பதை மனதில்
கையைவைத்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
ஜஸ்டிஸ் கட்சிக்கு தனி அரசியல் கொள்கை இல்லாதிருக்குமானால்
ஜனாப் மகமது உஸ்மான் நிர்வாக சபை மெம்பராயிருக்க முடியுமா? ஜனாப்
மகமது உஸ்மானும் ஸ்ரீமான் மார்ஷபேங்கும் நிர்வாக சபையின் மெம்பரா
இல்லாதிருக்குமானால் ஸ்ரீமான்கள் கல்யாணசுந்திர முதலியாரும்,
வரதராஜுலு நாயுடுகாரும், ராமசாமி நாயக்கரும் ஜெயிலுக்கு வெளியில்
இருந்து கொண்டு தொழிலாளர் பிரசாரமோ தேசீயப் பிரசாரமோ சமூகச்
சீர்திருத்தப் பிரசாரமோ செய்ய முடியுமா என்று பந்தயம் கட்டி கேழ்க்கிறோம்.
இந்த ரகசியம் அனேகருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால்
ஸ்ரீமான்கள் முதலியாருக்கும் நாயுடுவுக்கும் நாயக்கருக்கும் தெரியாமல்
இருக்க நியாயம் இல்லை. எந்தப் பிரசாரத்தையாவது அடக்க பார்ப்பன
அரசியல் திட்டத்திற்கு சக்தி இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா?
இந்த இரகசியங்களை அறிந்தேதான் நவசக்தி “நாயக்கர் சொல்வதில் ஒருவித
உண்மையுண்டு” என்பதாக தானே ஒப்புக் கொண்டிருப்பதால் இதைப்பற்றி
நாம் அதிகம் வளர்த்தவில்லை.
4-வது விஷயம் “ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் கூறு தேசிய வளர்ச்
சிக்கும் இடையூறு” என்பது. இந்த இடத்தில்தான் நாம் நவசக்தியிடமும்
மற்றும் பலரிடத்திலும் பலமான அபிப்பிராய பேதம் கொள்வதாயிருக்கிறது..
நவசக்தியைப் போலவே பாமர மக்களில் அனேகர் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி நாம் பலமுறை எழுதியிருக்கிறோம்.
இதுவரை யாரும் அதுகளுக்கு சமாதானம் எழுதவே இல்லை. ஜஸ்டிஸ் கட்சி
குடி அரசு
- 19270)
372
அரசியல் கூறு என்னவென்பது தெரிந்தால் இந்தப் பிரச்சினை பிறக்கவே
இடமிருக்காது.
“தேசிய” அரசியல் கூறால் தேசம் கஷ்டப்படுவதும் இன்றைய தேசிய
சபை நாடு சிரிப்பதும் அறியாதார் யார்? இதை எல்லோரையும் விட நவசக்தி
அதிகம் அறிந்திருக்கிறது என்பதே நமது அபிப்ராயம். ஏனெனில் நவசக்தி
யின் கண்டனங்களை நாம் கவனித்து வாசித்து வந்திருக்கிறோம். எனினும்.
கீழே சில விஷயங்களைப் பாமர மக்களுக்காக எழுதுகிறோம்.
தேசியக் கொள்கைகளுக்கு நமது நாட்டில் செல்வாக்கு ஏற்பட்டது
சமூக சீர்திருத்தக் கொள்கைகளான மகாத்மாவின் நிர்மாணத் திட்டமும்,
நாணயமான தேசிய திட்டமாகிய ஒத்துழையாமையும் காங்கிரசில் இருக்கிறது
என்றதினாலல்லாமல் வேறு காரணம் உண்டா? ஸ்ரீமான்கள் முதலியாரும்
நாயுடுவும் இன்னும் சிலரும் மதிக்கும் காங்கிரசில் இத்திட்டங்கள் இருக்
கிறதா? இருக்க வைக்க முடியுமா? மகாத்மாவுக்கு மேல் இனி யாராவது
முயற்சிக்க முடியுமா? முடியுமானால் அப்போது அதில் நாம் போய் சேர்ந்து
தொண்டாற்ற முடியாதா?
காங்கிரசு முன்னால் ஒத்துழைப்பாயிருந்தது
என்பதையும் ஒப்புக்கொண்டு பழயபடி இப்போதும் ஒத்துழைப்புக்கு வந்து
விட்டது என்பதையும் ஒப்புக்கொண்ட ஒருவர் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல்
கூறு தேசிய வளர்ச்சிக்கு இடையூறாய் இருக்கிறதென்று சொல்லுவதானால்
நாம் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும். தேசியத் திட்டத்தில் முதலாவதாக
ஒத்துழையாமை நிறுத்தப்பட்டு விட்டது. பிறகு மதுவிலக்கு நிறுத்தப்பட்டது.
பிறகு தீண்டாமைநிறுத்தப்பட்டது. இப்போது கதரும் நீக்கப்பட மகாத்மாவின்
சம்மதம் பெற்றாகிவிட்டது. ஒத்துழைப்புத் திட்டங்களையும் ஒப்புக்கொண்டு
சட்டசபைக்குப் போய் இரட்டையாட்சிக்கும் ஆசி கூறி ஆக்கமளித்து
வருவதையும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டாகிவிட்டது. இனி என்ன செய்வது
பாக்கியிருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. ஜஸ்டிஸ் கட்சியோ
மகாத்மாவின் நிர்மாணத் திட்டத்தை ஒப்புக்கொண்டாய் விட்டது. அரசிய
லில் “முட்டுக்கட்டையைக்” கைக் கொண்டிருக்கிறது. இப்படியிருக்க எந்த
விதத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தில் அரசியல் கூறு காங்கிரசுக்கு
பிற்பட்டதாயிருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை.
ஒரு சமயம்
“நாளைய தினம் மாறிவிடுமோ என்னமோ” என்று பயப்படுவதானாலோ யார்:
மாறாதவர்களா யிருந்தார்கள்? எந்த அரசியல் சமூகஇயல் இயக்கங்களின்
திட்டம் மாறாததாயிருந்தது? எந்தத் தலைவர் மாறாதவராயிருக்கிறார்?
ஸ்ரீமான் பண்டித மாளவியா மேடை மீது ஏறிக்கொண்டு தீண்டாதவர்
களுக்காக கண்ணீர்விட்டு மக்களை ஏமாற்றுகிறார். தனது குடும்பத்தில் தன்
மகனுக்கு பெண் கொடுத்த சம்பந்தி ஒருவர் வேறு வகையில் ஒரு
பார்ப்பானுக்குப் பெண் கொடுத்ததற்காகவும் மற்றொருவனைப் பார்ப்பான்
பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்காகவும்
அவரை ஜாதியை விட்டுத் தள்ளி
விட்டதோடு தனது மருமகளின் தாயார் சாகக்கிடக்கும் போது மருமகள்
373
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
எவ்வளவு கெஞ்சி அழுதும் தனது தாயாரைப் பார்க்க அனுப்பிக் கொடுக்காத
புண்ணிய ஆத்துமா, இன்றைய தினம் தென்னாட்டில் வந்து காசிப்பார்ப்பனப்
பள்ளிக்கூடத்திற்கு பணம் பறிக்க பிராமண- பிராமணரல்லாதார் - ஒற்றுமைப்
பிரசாரம் செய்கிறார்.
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக 21 நாள் பட்டினி இருந்த மகாத்மா
காந்தி “இந்து முஸ்லீம் கலவரம் இப்படி இருக்கும் போது எனக்கு ஓய்வு வேறு
வேண்டுமா” என்று சொன்ன மகாத்மா காந்தி இன்றைய தினம் “அவரவர்கள்
சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்கள் கையா லானதைப்
பாருங்கள்” என்று சொல்லி விட்டு ஓய்விலிருக்கிறார். இப்படியே இனியும்
பல உதாரணங்கள் கூறலாம். எனவே “எந்த இயக்கத்தை நம்புவது? யார்
பேச்சையும் நடவடிக்கையும் நம்புவது? யார் அபிப்பிராயம் மாற்றிக் கொள்ள
முடியாதது? என்று சொல்லுவது” என்பதை யோசித்துப் பார்த்தால் இம்மாதிரி
சந்தேகத்திற்கு இடமிருக்காது. “மணமுண்டானால் வழி உண்டு” என்கிற
சமாதானம்தான் சொல்லி ஆக வேண்டும்.
இனி “நாயக்கர் விட்டுக்
கொடுக்கும் பேரறத்தை கைக்கொள்ள வேண்டும்” என்று சொல்வதற்கு நாம்
பதில் சொல்லி ஆக வேண்டும். இது விஷயத்தில் விட்டுக்கொடுப்பது
என்பதின் கருத்து கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
கொள்கைகளை மாற்றிக்கொள்ளுவது என்பது மதத்தை விட்டு மாறு என்று
கட்டாயப்படுத்துவதற் கொப்பானது. ஒரு மகமதியனை நீ விக்கிரகத்தை
வைத்து வணங்கு என்று சொல்லுவது எப்படி அநியாயமோ அது போல்
ஒருவனை காங்கிரசில் சேரு என்று சொல்லுவது என்பது நமது அபிப்
பிராயம். இன்னம் யோசித்துப் பார்த்தால் அதைவிட கடினமானக் கட்டளை
என்று கூட சொல்லலாம்- விக்கிரகத்தை வணங்குவது பாவம் என்பது ஒரு
மகமதியருடைய நம்பிக்கையே ஒழிய அது பிரத்தியட்சமல்ல. ஆனால்,
காங்கிரசு தேசத்திற்கு கெடுதி யானது என்பது பிரத்தியட்ச பிராமணத்தால்
ஏற்பட்ட
அனுபவ
முடிவு. அதை மாற்றிக் கொள்வது என்பது உண்மை
யுள்ளவனுக்கு சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது நமது அபிப்பிராயம்.
உண்மையில் பலன் தரத்தக்க மகாத்மாவின் அரசியல் திட்டங்களைப்
பாழாக்கினதும்,
அதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோரின் கண்ணியத்தை
கொள்ளை கொண்டதும், இந்த விதமான விட்டுக் கொடுக்கும் தன்மையும்
இதை அநுசரித்த “ஒற்றுமை”ப் பிசாசும்தானே அல்லாமல் வேறல்ல.
மகாத்மா காந்தி தனது கொள்கையில் இருந்து ஒரு சிறிதும் விட்டுக்
கொடுக்காமலிருந்தவரை தேசத்தின் நிலை கொள்கையின், தத்துவத்தின்
தன்மை, தேசிய அனுகூலம், அரசாங்கத்தின் மனம் எப்படியிருந்தது?
விட்டுக் கொடுத்து ஒற்றுமைப் பிசாசுக்கு ஆளாகி ராஜி ஒப்பந்தத்தில்
இறங்கிய பின் தேச நிலை முதலியதுகள் என்ன ஆச்சுது? உண்மையானதும்
உறுதியானதுமான கொள்கைகளை எப்படி ஆனாலும் சரிபடுத்திக்
கொள்ளக்கூடிய மகாத்மா போன்றவர்கள் விட்டுக் கொடுத்தே இக்கெதி
குடி அரசு
- 19270)
374
ஆனால் இனி சாதாரண மனிதன் விட்டுக் கொடுத்தால் அதன் கதி என்ன
ஆகும் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.
யோக்கியமாய் பேசுவோமானால் “விட்டுக்கொடுத்தாலொழிய
காரியம் நடவாது” என்கிற நிலை வரும்போது சுத்தமான கர்மவீரன் அந்தக்
காரியத்தில் இருந்து விலகி விடுவது அறமாகுமே அல்லாமல் விட்டுக்
கொடுத்து கருமத்தை ஆற்றலாம் என்பது தோல்வியை ஒப்புக்கொண்டதே
ஆகும். (தன்தன் சொந்தக் காரியங்களுக்கு, இவ்வளவு கடினமான தத்துவம்
பொருந்தாதெனினும் அதன் இரகசியமும் இதுதான்.
இதில் விட்டுக்
கொடுப்பதால் தன் காரியம் தான் கெட்டுப்
போகலாமே அல்லாமல் வேறல்ல
முடிவாக ஒரு வார்த்தை “என்னையே எண்ணி இப்பெரும்பழி ஏற்றேன்”
என்று இராவணன் சொன்னது போல் காங்கிரசை எதிர்ப்பது என்கிற
கொள்கையை நாம் முடிவு காட்டிய காலத்தில் நமக்கு உதவியாக யாரையும்
நாம் எதிர்பார்த்து இத்தொண்டில் இறங்கவில்லை.
( இதைப் பார்த்தவுடன்
சிலருக்காவது “இராவணனைப் போல் இவனும் அழிந்து
போவான் என்று
சொல்லத் தோன்றும். இராவணன் தனது கொள்கையிலாவது தனது பலக்
குறைவாலாவது அழிந்து போகவே இல்லை. எதிரிகளின் சூக்ஷியாலும்
இராவணனது வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிரி
களுடன் சேர்ந்து கொண்டு காட்டிக் கொடுத்ததினாலும் அவர் அபஜய
மடைய நேரிட்டது எனலாம். எனினும் அவரது புகழும் சாமார்த்தியமும்
நீதியும் இனியும் அடியோடு மறைந்து போகவில்லை.
அக்கதையின்
இரகசியம் வேறு. அதுவும் மக்களுக்குப் பகுத்தறிவு ஏற்படும் காலத்தில்
தானாகவே பிரகாசிக்கும். அதற்கு காலம் வரும்.) ஜஸ்டிஸ் கட்சி கொள்:
கையே முழுதும் நமது கொள்கையல்ல. பரஸ்பர சகாய எதிர்ப்பார்ப்பதே
தவிர வேறில்லை.
ஜஸ்டிஸ் கட்சியும் ஒரு காலத்திலும் காங்கிரசின்
உண்மையான கொள்கைகளை எதிர்க்க வேயில்லை. “அரசியல் விஷயத்தில்
காங்கிரஸ் செய்கிற புரட்டுகளை நாங்களும் செய்து எங்கள் வீதாச்சாரம்
அந்தப்
பலனை அடைவோம்” என்று சொல்லி வருகிறதே தவிர வேறில்லை.
ஆதலால் நாம் காங்கிரசைப் பற்றி கொண்ட கொள்கைக்கு ஜஸ்டிஸ் கட்சியின்
உதவி எப்போதும் நமக்கில்லை. இதனால் மற்றவர்களை நாம் கட்டாயப்
படுத்தவில்லை - கட்டாயப்படுத்தப் போவதுமில்லை. ஜஸ்டிஸ் கட்சித்
தலைவர் யோக்கியதையும் நமக்குத் தெரியும். அவர்களின் இலட்சியமும்
நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் பார்ப்பன அரசியல்வாதிகளின்
கங்காணிகளைவிட ஆயிரம் மடங்கு யோக்கியர்கள் என்பதும் பார்ப்பன
அரசியல்வாதிகளால் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு பலன் உண்டோ
அதுபோலவே பார்ப்பனரல்லாத அரசியல்வாதிகள் எண்ணம் நிறைவேறு
வதிலும் கொஞ்சம் குறைவாகவாவது ஏற்படும் என்கிறது மாத்திரம் நமக்
குண்டு.எனவே, எல்லோரும் மகாநாட்டிற்கு வரவேண்டும் என்றும் ஒருவருக்.
கொருவர் கண்ணியமான அவரவர்கள் அபிப்பிராயங்களை பரிமாறிக்
375
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4.
கொள்ள வேண்டும் என்றும் ஒத்து வருகிறதைப் பொருத்த வரையில்
கண்ணியமாய் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மகாநாட்டில் பரஸ்பர சகிப்புத்
தன்மையும் மரியாதையும் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக்
கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.06.1927.
குடி அரசு
- 19270)
376
அயப்பாங்காரிண் பார்ப்பணப் யிரசாரம்
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார்,
ஓ.கந்தசாமி செட்டியார் ஆகிய இருவரையும் பார்ப்பனரல்லாதார் என்கிற
பெயருக்காக கூட இழுத்துக் கொண்டு தென்னாட்டில் பார்ப்பனப் பிரசாரம்
செய்து வருவதும், அவ்விரு கனவான்களை ஏவிவிட்டு பார்ப்பனரல்
லாதாருக்கு விரோதமாகப் பேசும்படி செய்து வருவதும் பத்திரிகையில்
பார்த்திருக்கலாம்.
ஆனாலும் அவர்கள் போகிற இடங்களில் ஜனங்கள் கேள்விகள்
கேட்க ஆசைப்படுவது இந்தக் காலத்தில் மிகவும் சகஜமானது என்பதும்
யாவருக்கும் தெரியும். பிரசாரத்திற்குப் போகிறவர்கள் கூடுமானவரையிலா
வது நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது நியாயமான
பிரசாரர்களின் கடமை. அப்படிக்கில்லாமல் கேள்வி கேட்கிறவர்களை
அடக்கி விடவும், அவர்களைத் தொந்தரவு செய்ய ஆள்களைத் தயார் செய்து
ஏவி விடுவதும், அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொள்ள
முடியுமேயல்லாமல் பிரசாரம் கோரிய பலனைத் தருவது கஷ்டமான காரியம்
என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
இதுவரையில் பார்ப்பன
பத்திரிகைகளில் வந்த சேதிகளைக் கொண்டே பார்ப்போமானால் ஸ்ரீமான்கள்.
சீனிவாசய்யங்கார் கோஷ்டிகளான ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, எம். கே. ஆச்
சாரியார், குப்புசாமி முதலியார், அமீத்கான் சாயுபு, கந்தசாமி செட்டியார்.
முதலிய எல்லா கனவான்கள் சென்று பிரசங்கம் செய்த கூட்டங்கள் எல்லா
வற்றிலும் ஏறக்குறைய ஏதாவது ஒரு கலவரம் நடந்ததாகவே காணப்
படுகின்றது. அய்யங்காரின் பிரசாரத் தன்மை எப்படியிருந்தாலும் சமூகத்
திற்கோ, தேசத்திற்கோ அது எவ்வளவு கெடுதியைத் தரத்தக்கதாய் இருந்
தாலும் நியாயத்தையும், மரியாதையையும், யோக்கியத்தையும் உத்தேசித்து
நாம் சொல்லுவது என்னவென்றால் கூட்டங்களில் கலவரம் நடந்ததாக
ஏற்படுவதானது அதற்கு காரணமாய் இருக்கிறவர்களின் இழிதகைமை
என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் அய்யங்கார் மாத்திரம் அல்ல, இன்னமும்
வேறுயாரானாலும் அவரவர் இஷ்டத்தின் பிரகாரம் பிரசாரம் செய்ய உரிமை
உடையவர்களே ஆவார்கள். அவ்வித பிரசாரத்தை எதிர்க்கிறவர்கள் ஆண்
பிள்ளைகளானால் தாராளமாய் பேச இடம் கொடுத்து விட்டு அவர்கள்
சொல்ல வேண்டியவைகளை எல்லாம் சொன்ன பிறகு ஏதாவது கேள்வி
377
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
இருக்குமானால் அதுவும் அவர்கள் அந்தச் சமயம் பேசிய பேச்சுக்களில்
கேள்வி பிறக்குமானால் மாத்திரம் கேள்வி கேட்க வேண்டும். அவற்றிற்கும்
அவர்கள் பதில் சொல்ல வில்லையானால் மறுநாள் கூட்டம் கூட்டி தாராளமாக
மறுத்துப்பேச வேண்டும். அப்படிக்கில்லாமல் இடையில் கேள்வி கேட்பதும்
பதில் சொல்ல இஷ்டம் இல்லாவிட்டால் கட்டாயப் படுத்துவதும் மனிதத்
தன்மைக்கு ஏற்ற காரியம் அல்ல என்றே சொல்லுவோம். கண்ணியமான
முறையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கலாம். அதுவும் அக்கூட்டத்திற்கு
இடைஞ்சல் உண்டாக்க கூடியதாக இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம்.
தனியாகவும் ஜனங்களைக் கூட்டி வைத்து விஷயங்களை எடுத்துச் சொல்ல
யோக்கியதை இல்லாதவர்கள்தான் வேறு ஒருவர் கூட்டிய கூட்டத்தில் போய்
கலவரம் செய்வார்களேயொழிய ஆண்மையுள்ளவர்கள் ஒருக்காலும்
கலவரம் செய்ய போகமாட்டார்கள் என்பது நமது அபிப்பிராயம். சமீபத்தில்
நாகப்பட்டணத்தில் நடந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் கண்டித்து
எழுதியிருந்தது நேயர்கள் கவனித்திருக்கலாம்.
அதற்குப் பிறகும்
திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களிலும் குழப்பத்திற்கு
முயற்சித்ததாகவும், குழப்பம் நடந்ததாகவும் பார்க்க மிகுதியும் வருத்தம்
அடைகிறோம். மதுரையின் கூட்டத்தில் ஒரு கல் விழுந்ததாகக் காணப்
படுகிறது. இது ஒரு கோழையின் செய்கையே அல்லாமல் ஆண்மகன்
செய்கை அல்ல. அந்தக் கல்லை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரே, ஸ்ரீமான்
கந்தசாமி செட்டியாரை விட்டு ரூ. 5 க்கு ஏலத்தில் எடுத்துக் கொண்டதாக
பாவனை உண்டாக்கி விட்டாராம். இதுவும் ஒரு தந்திரமான காரியம் என்றே
சொல்லலாம். ஆனாலும் பார்ப்பனக் கட்சிக்குப் பணம் சேர வேண்டும்
என்கிற ஆசை உள்ளவர்களை இம்மாதிரியே கூட்டத்தில் கல் எறியத்
தூண்டும். ஏனெனில் ஒரு கல் விழுந்தால் 5 ரூபாய் வருமானமானால் 100 கல்
விழுந்தால் நூத்தைந்து 500 ரூபாய் இலாபமாச்சு என்று எண்ணிக் கொண்டு
பார்ப்பன பிள்ளைகளே தம் கட்சிக்கு பணம் சேர்க்க கல்லு போட முன்வர:
வேண்டி வரும். ஆதலால் இந்த தந்திரமும் அவ்வளவு புத்திசாலித்தனமல்ல
என்றே சொல்லுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 26.06.1927
குடி அரசு
- 19270)
378
அருஞ்கசால் வாருன்
அசார்சமாக
-
அசட்டையாக, அக்கறையில்லாமல்,
ஈடுபாடின்றி
அபஜயமடைய
-
தோல்வியடைய
ஆத்ம ஸ்துதி
-
தற்புகழ்ச்சி
உபத்ரவித்து
-
தொல்லை கொடுத்து
கர்ண பரம்பரை:
-
செவிவழி (செய்தி)
கால பரியந்தம்
-
காலம் வரை
குசினிக்காரன்
-
சமையல்காரன்
குதிரை தேய்தல்
-
குதிரை உடலைத் தேய்த்து அழுக்கு
அகற்றி பளபளப்பாக்குதல்
சமராதனை
-
பார்ப்பனர்க்கு விருந்திடல், பிராமண:
போஜனம்
சலீஸாக
-
மலிவாக
சாச்வத
-
நிரந்தரமான, நித்தியம், திடம், மோட்சம்
சைன்யம்
-
படை
தற்பித்து
-
பயிற்சி
தாத்பிரியமான
-
விளக்கம், நோக்கம், பாராட்டு
திரவிய சகாயம்
-
பொருள் உதவி
திரவிய அபேகைஷ
-
பண ஆசை, பொருள் ஆசை
திரிகரண சுத்தியாக
-
மனம், மொழி, மெய் (மனோ வாக்கு காயம்!
ஆகிய மூன்று பொறிகளுக்கு உண்மை
யாக, தூய்மையாக
திருஷ்டாந்தம்
-
எடுத்துக்காட்டு
தூஷணை
- பழிப்பு, இகழ்ச்சியுறுத்தல்
நிஷ்டூரம்
-
கொடுமை, வெறுப்பு
பட்சபாதம்
-
ஒரு சார்பு, ஓர வஞ்சனை
பரநிந்தை
-
பிறரை இகழ்தல்
379
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
பிரதிக்கினை
பிரத்தியக்ஷத்தில்
பிரத்தியக்ஷ பிரமாணம்.
பிரஸ்தாபம்
பூசுரர்
பூளவாக்கு
ரசாபாசம்
வஜா
வித்தியா இலாக்கா
விக்கினம்.
வித்தியாப் பியாசவரி
லபிக்கும்படி.
ஜட்கா வண்டி
ஜலாதாரம்
ஸ்திதி
குடி அரசு - 19970)
சூளுரை, உறுதிமொழி
நடைமுறையில், வெளிப்படையாக
நேரடி சான்று, வெளிப்படையான சான்று
அறிவித்தல், விளம்பரப்படுத்தல்
பூமியில் வாழும் தெய்வம் (பார்ப்பனர்?
யோக்கியதை, தரம், நேர்மை
சீர்கேடு, சுவைக்கேடு
தள்ளுபடி (வரிதள்ளுபடி)
கல்வித்துறை
இடையூறு, தீது
பள்ளியில் சேர்க்கும் போது
பார்ப்பனர்க்கு கொடுக்கும் வரி
கிட்டும்படி
குதிரை வண்டி
நீராதாரம்
நிலை, பதவி
280
281
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
குடி அரசு - 1927 ()
282
383
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 4
குடி அரசு
- 1927 0).
384