1926-2-ocr

Collection: Kolathur Mani – Kudi Arasu Collection

கும ௮௬ 1926-2 பெரியாரின்‌ எழுத்தும்‌ கச்சம்‌ தொகதி 3 பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ 29 இதழியலாளர்‌ குடியிருப்பு திருவள்ளுவர்‌ நகர்‌ - திருவான்மியூர்‌ சென்னை - 600 041 நூல்‌ விளக்கம்‌ நூலின்‌ பெயர்‌ பொருள்‌. மொழி பதிப்பாளர்‌. பதிப்பு உரிமை தாள்‌ வகை: நூல்‌ அளவு எழுத்து அளவு பக்கங்கள்‌. அட்டை வடிவமைப்பு கணினியாக்கம்‌. விலை வெளியீடு குடி அரசு 1926-2 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ தமிழ்‌ கொளத்தூர்‌ தாசெ.மணி இரண்டாம்‌ பதிப்பு, 2008 பதிப்பாளருக்கு நேச்சுரல்‌ ஷேட்‌ 1/8 டெம்மி 1 புள்ளி 488 ட்ராட்ஸ்கி மருது, செம்பட்டி இராசா அசுரன்‌ ஊடகம்‌, திண்டுக்கல்‌ உர. 200 / - பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ 29 இதழியலாளர்‌ குடியிருப்பு திருவள்ளுவர்‌ நகர்‌ - திருவான்மியூர்‌ சென்னை - 600 041 முதற்‌ பதிப்பிண்‌ பதிப்புரை இந்தியத்‌ துணைக்கண்டத்தின்‌ அரசியல்‌ சமூகத்‌ தளங்களில்‌ இன்ற ளவும்‌ தொடர்ந்து செல்வாக்கு செலுத்திவரும்‌ இந்தியப்‌ பொதுவுடைமைக்‌ கட்சியும்‌ சுயமரியாதை இயக்கமும்‌ 1925 ஆம்‌ ஆண்டில்‌ தான்‌ தொடங்கப்‌ பெற்றன. இவற்றுக்கு நேர்‌ எதிரான கொள்கைகளுடன்‌ இராஷ்ட்ரீயசுயம்‌ சேவக்‌ சங்கமும்‌ அதே ஆண்டில்‌ தான்‌ தொடங்கப்பெற்றது. சுயமரியாதை இயக்கம்‌ விளைவித்த தாக்கத்தையும்‌, அதன்‌ செயல்‌ பாடுகளையும்‌, எதிர்வினைகளையும்‌, அன்று நிகழ்ந்து வந்த இந்திய விடுதலை இயக்கத்தின பேரால்‌ சமுதாய மாற்றங்களுக்கு எதிராக மேற்‌ கொள்ளப்பட்ட தந்திரங்களையும்‌, அக்காலத்தைய அரசியல்‌ போக்கு களையும்‌ அறியும்‌ காலக்‌ கண்ணாடியாக திகழ்வது “குடி அரசு' இதழேயாகும்‌. மக்கள்‌ நல்வாழ்வுக்கு அரசியல்‌ விடுதலையே போதும்‌ என்பார்‌. நடுவில்‌ சமுதாய விடுதலையே, சுயமரியாதைத்‌ தன்னுணர்வே அனைத்து விடுதலைக்கும்‌ அடிப்படை என்றது “குடி அரசு”. சமுதாயப்‌ போக்கில்‌ புத்தொளியைப்‌ பாய்ச்சிய, சிந்தனைப்‌ புரட்சியை ஏற்படுத்திய அந்த *குடி அரசு” இதழ்களிலுள்ள பெரியாரின்‌ எழுத்துக்‌ களையும்‌, பேச்சுக்களையும்‌ தொகுத்து வெளியிடும்‌ தொடர்‌ முயற்சியின்‌ மூன்றாம்‌ தொகுப்பே இவ்வெளியீடாகும்‌. பெரியார்‌ கொள்கைகளில்‌ மாறா பற்றும்‌, தீரா வேட்கையும்‌ கொண்டு, பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ மக்களிடம்‌ சேர வேண்டும்‌ என்ற அக்கறை யோடும்‌, கவலையோடும்‌, பொறுப்போடும்‌ 1980 களில்‌ தங்களது மூன்று கோடை விடுமுறை நாள்களை முழுமையாய்‌ செலவிட்ட அந்த பெரியாரிய தொண்டர்களின்‌ மதிப்பு மிக்கப்‌ பணிகளை நன்றியுடன்‌ நினைவு கூர்ந்து நெகிழ்ந்து போகிறோம்‌. மனதில்‌ சுரக்கும்‌ நன்றியுணர்வினை சொற்களால்‌ பதிவு செய்வதை. விட இவ்வெளியீடே அவர்களுக்கு உண்மையில்‌ மன நிறைவைத்‌ தரும்‌ என்று உணர்கிறோம்‌. 1980 களில்‌ எடுத்தெழுதப்பட்ட படிகளை எமக்குக்‌ கொடுத்துதவிய பெரியார்‌ மையத்‌ தோழர்களுக்கும்‌, அவ்வேளையில்‌ கிடைக்காத 08.8.1926, 5-12-1926 “குடி அரசு” இதழ்களையும்‌, 1171926, 18.7.1926, 15.8.1926, 22.8:1926, 29.8.1926, 5.9.1926, 3.10:1926, 10.10.1926, 17.10.1926, 3110.1926, 7.111926, 14.111926, 28111926, 2612-1926 இதழ்களில்‌ விடுபட்டிருந்த பகுதி களையும்‌, 471926 குடி அரசு இதழின்‌ அட்டையையும்‌ தாங்கள்‌ பாது காத்து வைத்துள்ள நுண்படச்‌ சுருளில்‌ இருந்து ஒளி அச்சு எடுத்துக்கொடுத்து தவிய ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தாருக்கும்‌, 24.10.1926 இதழில்‌ விடுபட்டிருந்த பகுதியை கொடுத்துதவிய சென்னை மறைமலை அடிகள்‌ நூலகத்தாருக்கும்‌, அதற்கு தவிய சென்னை தோழர்கள்‌ தபசி. குமரன்‌, அன்பு தனசேகரன்‌ ஆகியோ ருக்கும்‌ நன்றிகள்‌. முன்னர்‌ வெளிவந்த இரு தொகுதிகளைப்போன்றே இம்மூன்றாம்‌ தொகுப்பையும்‌ வகைப்படுத்தி, பொருளடக்கம்‌, சொற்பொருள்‌ எழுதி. இரவு பகல்‌ பாராது பல நாள்களை முழுதாய்‌ இப்பணிக்கு ஒதுக்கி மெய்ப்பு பார்த்து முழுமையாக்கி உதவிய தோழர்‌ ப. தமிழ்க்குரிசில்‌ அவர்களுக்கும்‌, அவருக்‌ குதவிய தோழர்‌ மே.கா. கிட்டு அவர்களுக்கும்‌, ஒளி அச்சு செய்த திண்டுக்கல்‌ அசுரன்‌ கணினி மையத்‌ தோழர்‌ தி.தாமரைக்கண்ணன்‌ அவர்‌ களுக்கும்‌, அட்‌ டையை அழகுற வடிவமைத்துக்‌ கொடுத்த தோழர்‌ யாக்கன்‌ அவர்களுக்கும்‌, அட்டையை அச்சிட்டுக்கொடுத்த சென்னை முல்லை அச்சகத்தாருக்கும்‌, நூலை அச்சிட்ட சென்னை கிரியேட்டிவ்‌ கிராஃபிக்ஸ்‌ அச்சகத்தாருக்கும்‌ எங்கள்‌ நெஞ்சம்‌ நிறைந்த நன்றிகளை உவகையுடன்‌ கூறி நிறைவு கொள்‌ கிறோம்‌. இதையொத்த தொகுப்புகளைத்‌ தொடர்ந்து வெளியிடத்‌ திட்ட மிட்டுள்ள எங்களுக்குப்‌ பெரியாரின்‌ எழுத்துக்கள்‌, சொற்பொழிவு ஒலிப்‌ பேழைகள்‌ உள்ளவர்கள்‌ அனுப்பியும்‌, குறைகளைச்‌ சுட்டிக்காட்டியும்‌, நூல்‌ களை வாங்கியும்‌ ஊக்குவிக்குமாறு அன்புடன்‌ வேண்டுகிறோம்‌. சென்னை - 600 028. தந்தை பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌. 24122005 குடி அரசு - 1926 (2) 4 கால்‌ பதித்தது சுயமரியாதை இயக்கம்‌ 1926 ஆம்‌ ஆண்டுக்கான இந்த இரண்டாவது தொகுதியை ( சூலை முதல்‌ டிசம்பர்‌ வரை! இரண்டாவது பதிப்பாக ஏராளமான புதிய கட்டுரைகளை இணைத்து “பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌” வெளியிடுகிறது. முதற்‌ பதிப்பு 2005 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 24 ஆம்‌ நாள்‌ வெளியிடப்பட்டது. அனைத்துத்‌ தரப்பினரும்‌ பங்கேற்ற பார்ப்பனரல்லாதார்‌ மாநாட்டைக்‌ கூட்டி கோவில்‌ நுழைவு மற்றும்‌ அர்ச்சகர்‌ உரிமைக்கு பெரியார்‌ குரல்‌ கொடுத்தது இந்த ஆண்டில்‌ தான்‌.பண்டித மாளவியா போன்ற பார்ப்பன சக்தி கள்‌ இந்து மகாசபையைத்‌ தொடங்கி முஸ்லீம்கள்‌ மீதான பகைமையைக்‌ கூர்தீட்டியதைக்‌ கண்டித்த பெரியார்‌ காந்தியாரின்‌ சீர்திருத்தத்‌ திட்டங்களைக்‌ குலைக்கும்‌ இவர்களின்‌ நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார்‌. பார்ப்பன ரல்லாத தலைவர்களான திரு.வி.க. வரதராஜுலு நாயுடு போன்றோர்‌ காங்கிரசு காரியக்‌ கமிட்டியிலிருந்து விலகியதும்‌ இக்காலத்தில்தான்‌. திருமணங்‌ களுக்குப்‌ பார்ப்பனப்‌ புரோகிதர்களைப்‌ புறக்கணிக்கச்‌ சொன்ன பெரியார்‌. கதருடை அணிந்து நடந்த திருமணங்களைப்‌ பாராட்டி எழுதுகிறார்‌. பெரியாரின்‌ பார்வை பெண்ணடிமைக்கு எதிராகவும்‌ திரும்புகிறது. “விதவா விவாக விளக்கம்‌” என்ற நூலை விமர்சனம்‌ செய்யும்‌ பெரியார்‌ அதில்‌ தனது தங்கை மகளுக்கு மறுமணம்‌ செய்து வைத்ததையும்‌ சுட்டிக்‌ காட்டுகிறார்‌. சங்கரன்கோவிலிலுள்ள ஒரு கோவிலுக்குள்ளே காஞ்சி சங்க ராச்சாரி மலம்‌ கழித்ததால்‌ ஊர்‌ பொதுமக்களே எதிர்த்து மற்றக்‌ கோவில்களுக்‌ குள்‌ சங்கராச்சாரியை விடாமல்‌ விரட்டியடித்ததைக்‌ “குடி அரசு” கூறுகிறது. காங்கிரசிலிருந்து விலகினாலும்‌ காந்தியின்‌ தீண்டாமை ஒழிப்பு, கதர்‌ பரப்பும்‌ திட்டத்தில்‌ பெரியார்‌ நம்பிக்கை கொண்டிருந்தார்‌ என்பதையும்‌ புரிந்து கொள்ள முடிகிறது. சுயமரியாதை இயக்கம்‌ வலிமையாகக்‌ கால்‌ ஊன்றிய காலகட்டத்தில்‌ பெரியாரின்‌ கருத்துக்களைப்‌ பதிவு செய்கிறது இத்‌ தொகுப்பு. - பதிப்பாளர்‌ 5 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. NP oo ஜ o பொருளடக்கம்‌ முஸ்லீம்கள்‌ “சுதேசமித்திர” னும்‌ “ஸைபுல்‌ இஸ்லாமும்‌ சட்டசபையை விட்டு வெளிவந்த 'வீரர்‌"களின்‌ செய்கை. தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி “சுதேசமித்திர”னின்‌ பித்தலாட்டம்‌ திரு. சக்கரையும்‌ திரு. ஆரியாவும்‌- சித்திரபுத்திரன்‌ “தமிழன்‌” இந்து முஸ்லீம்‌ அபிப்பிராய பேதங்களும்‌ கலகங்களும்‌ ஏற்படக்‌. காரணம்‌ என்ன ? டாக்டர்‌ கிச்சுலுவின்‌ உபதேசம்‌. இனியும்‌ ஆதாரம்‌ வேண்டுமா? . எதிர்பார்த்த வண்ணமே! . பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌. . இந்து முஸ்லீம்‌ சந்தேகத்தை ஒழிக்க வழியாம்‌ . கிறிஸ்தவ மதப்‌ பிரசாரமா? .. எவரை பாதிக்கும்‌? . ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம்‌ . “தொட்டது துலங்காது” . மலையாளக்‌ குடிவார மசோதா . தமிழ்‌ சுயராஜ்ய! . சுதேசமித்திரனின்‌ ஞானோதயம்‌ . பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர்‌ வேண்டுகோள்‌. . ஜனாப்யாகூப்‌ ஹாசன்‌. பிராமணியம்‌! 23. சர்க்காருக்கு “ஜேய்‌" குடி அரசு - 1926 (2) ட ஏமாந்துவிடாதீர்கள்‌! ஏமாந்துவிடாதீ்கள்‌!! சைவ சமயிகளுக்கு ஓர்‌ எச்சரிக்கை . நமது தனிப்பெரும்‌ விண்ணப்பம்‌ . நாயுடு, முதலியார்‌, நாயக்கர்‌ சென்னையில்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌ . தமிழ்‌ சர்வகலாசாலைக்‌ கமிட்டி . முனிசிபாலிட்டியில்‌ சுயராஜ்யம்‌ . சென்னையில்‌ கர்மபலன்‌ கோயில்‌ . சென்னையில்‌ திரு.எஸ்‌. ஆர்‌. தாசும்‌ பார்ப்பனர்களின்‌ தந்திரமும்‌ . கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டு தேர்தல்‌ . பார்ப்பனர்‌ சூழ்ச்சிக்குத்‌ தோல்விகள்‌ . தேவஸ்தான மசோதா பார்ப்பனரின்‌ சூழ்ச்சி, “மித்திரனின்‌ அகம்பாவம்‌ . பம்பாயில்‌ பார்ப்பனர்‌ கொடுமை . பண்டித மாளவியாவின்‌ புது தைரியம்‌ இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக்‌ கருதியா? வகுப்பைக்‌ கருதியா? . பார்ப்பனர்களுக்கு சரியான இடி . இரு பார்ப்பன சீனிவாசர்களின்‌ பொய்மான்‌ அறிக்கை. . நீதி நிர்வாகத்தில்‌ வகுப்பு உணர்ச்சி மதுரை முனிசிபல்‌ சேர்மென்‌ தேர்தல்‌ . பிராமணியத்தை ஒழித்தவர்கள்‌. . “தேசபக்தன்‌” . நாகையில்‌ பார்ப்பனரில்லாத திருமணமும்‌ பிரார்த்தனையும்‌ . வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஸ்ரீமான்‌ 5. சத்தியமூர்த்தி அய்யர்‌ . பார்ப்பணரின்‌ பிறப்புரிமை . பிராமணியக்‌ கொடுமை . டாக்டர்‌ நாயுடுகாரின்‌ வீர கர்ச்சனை 82 102 130 131 133 134 135 136 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 . உஷார்‌ ! உஷார்‌ 11 உஷார்‌ 111 பார்ப்பனர்களின்‌ புதிய தந்திரம்‌ . தேவஸ்தானச்‌ சட்டம்‌ பார்ப்பனர்‌ குட்டு வெளியாய்‌ விட்டது . முளையிலேயே குறும்புத்தனம்‌ . பிராமணியத்தை ஒழித்தவர்கள்‌ . கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டு தேர்தல்களும்‌ வேளாளர்களும்‌ . சென்னையில்‌ குழுமிய சீர்‌ பெருங்கூட்டம்‌ . சென்னையில்‌ குழுமிய சீர்‌ பெருங்கூட்டம்‌ . தேவஸ்தானச்சட்டம்‌ . வரப்போகும்‌ தேர்தல்‌ தமிழர்களுக்கு ஓர்‌ தனிப்பெரும்‌ விண்ணப்பம்‌ . திரு. சீனிவாசய்யங்காரின்‌ தைரியம்‌ ... “விதவா விவாக விளக்கம்‌” . பார்ப்பனரின்‌ வெடிகுண்டு . பார்ப்பன அகராதி . தென்னாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து . யாரையார்‌ மோசஞ்‌ செய்தார்கள்‌? . ஸ்ரீமான்‌ ஓ.கந்தசாமி செட்டியாரிடத்தில்‌ பார்ப்பனர்களுக்குள்ள அபிமானம்‌ . நமது துணை ஆசிரியர்‌ விலகுகிறார்‌ லாலாஜியும்‌ சுயராஜ்யக்‌ கட்சியும்‌ . முளையிலேயே வெருப்பு . தீண்டாமையும்‌ பார்ப்பனரும்‌ . பூனா பார்ப்பணின்‌ கர்மபலன்‌ கண்டனக்‌ கூட்டம்‌ . ஒரு சம்பாஷணை . இந்துமத பரிபாலன மசோதா . மலையாளக்‌ குடிவார மசோதா . ஓர்‌ வேண்டுகோள்‌ ட. பார்ப்பனரல்லாத பிரமுகர்களின்‌ சுற்றுப்பிரயாணம்‌. . தேர்தல்‌ படிப்பினை குடி அரசு - 1926 (2) . முறியடிக்கப்பட்டவர்களுக்கு “மித்திரனி'ன்‌ நற்சாகஷிப்‌ பத்திரம்‌ 138 140 144 148 150 152 154 160 167 168 171 173 181 189 76. வைப்பாட்டிக்கதை 77. தலைவர்‌ பதவி பெறும்‌ வழி 78. ஜேஷ்டபுத்திரனும்‌ தேசபக்தனும்‌ 79. சென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்‌ 80. வடஆற்காடு ஜில்லாவுக்கு சட்டசபை அபேக்ஷகர்கள்‌ 81. ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்காரின்‌ ஆசை 82. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரின்‌ சமத்துவ ஞானம்‌. 83. சேவையும்‌ பாராட்டுதலும்‌ 84. பார்ப்பனர்‌ தேர்தல்‌ முழக்கம்‌ 85. பிராமணியத்தை ஒழிப்பதென்றால்‌ என்ன? (86. ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ 87. தற்கால நிலைமையும்‌ நமது கடமையும்‌ 88. கோயமுத்தூர்‌ ஜில்லா சட்டசபைத்‌ தேர்தல்‌ நிலைமை 89. தமிழ்நாட்டுத்‌ தலைவர்கள்‌. 90. இந்துமத பரிபாலன மசோதாவும்‌ பார்ப்பனர்கள்‌ சூழ்ச்சியும்‌ பனகால்‌ ராஜாவுக்கே ஜே ! 91. சென்னை வாசிகளே என்ன செய்யப்‌ போகிறீர்கள்‌? 92. பனக்கால்‌ ராஜாவின்‌ உளறலா? பார்ப்பனர்களின்‌ போக்கிரித்தனமா? (மித்திரனின்‌ விஷமம்‌) 93. “காங்கிரஸ்‌ விளம்பர சபை” 94. ராயப்பேட்டைத்‌ தேர்தல்‌ பார்ப்பனர்களின்‌ சட்ட ஞானம்‌ 95. கோயமுத்தூர்‌ ஜில்லா சட்டசபைத்‌ தேர்தல்‌ 96. தீண்டாமை விலக்குச்‌ சட்டம்‌ 97. “தேசிய அறிக்கை” 98. நவ சக்தி 272 274 278 279 280 281 282 286 99. இந்தியாவின்‌ “ஏக தலைவரான ஸ்ரீமான்‌ எஸ்‌. சீனிவாசய்யங்காரின்‌. முடிவான லக்ஷியம்‌ 100. சென்னைத்‌ தொழிலாளர்களும்‌ தேர்தல்‌ கூட்டங்களும்‌ 101. உண்மையான தீபாவளி 102. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுவுக்குப்‌ பூச்சாண்டி காட்டல்‌ 288 289 290 294 9 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. 103. 104. 105. 106. 107. 108. 109. 110. 111. 112. 113. 114. 115. 116. 117. 118. 119. 120. 121. 122. 123. 124. 125. 126. 127. 128. 129. 5000 ரூபாய்‌ இனாம்‌ வெற்றி நமதே சட்டசபைத்‌ தேர்தலில்‌. பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்கு வெற்றி உறுதி யாருக்கு ஓட்டு கொடுப்பது தமிழ்நாட்டிலிருந்து 'மற்றொரு இந்தியத்‌ தலைவர்‌” செந்தமிழ்ச்‌ செல்வி (மாத வெளியீடு) தென்ணாட்டு ஜமீன்தாரர்களுக்கு ஒரு வேண்டுகோள்‌ குடி அரசு' வாசகர்களுக்கு ஓர்‌ உண்மையான முன்னறிவிப்பு சோதனைகாலம்‌ ஸ்ரீமான்‌ சீநிவாச சாஸ்திரியார்‌. கொல்லத்‌ தெருவில்‌ ஊசி விற்பனை கோயமுத்தூர்‌ ஜில்லா தேர்தல்‌. மார்க்கெட்‌ நிலவரம்‌ தீபாவளி கதர்‌ ! கதர்‌ !! கதர்‌ 11 ஈரோடு முனிசிபாலிட்டி தமிழ்ப்பொழில்‌ அன்பர்கட்கு வேண்டுகோள்‌ யோக்கியமான பார்ப்பனர்‌ ஒருவராவது உண்டா? ஜஸ்டிஸ்‌ ககஷி கனவான்களே! வேளாள கனவான்களின்‌ பொறுப்பு மகாஜன நேசன்‌ வகுப்புத்‌ துவேஷிகள்‌ யார்‌? பார்ப்பன பிரசாரத்தின்‌ தன்மை கையெழுத்து போடக்‌ கூடாது பொய்ச்‌ சமாதானம்‌ சர்‌.சி.பி. அய்யரின்‌ விஜயம்‌ கஷிகள்‌ பார்ப்பணின்‌ கனவு பலிக்காது. கல்பாத்தி கலியாணசந்தடியில்‌ தாலி கட்டுவதை மறந்துவிடாதீர்கள்‌ காலித்தனத்தை அடக்க சர்க்கார்‌ உத்திரவு குடி அரசு - 1926 (2) 296 298 301 307 312 என்‌. தண்டபாணி கம்பெனி வரப்போகும்‌ சென்னை சட்டசபைத்‌ தேர்தலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கடமையும்‌ சட்டசபைத்‌ தேர்தல்‌ சுயராஜ்யக்கட்சி பார்ப்பனர்‌ கட்சி என்பதற்கு உதாரணம்‌ ஸ்ரீமதி சரோஜினி தேவியின்‌ வாக்கு பார்ப்பனர்களால்‌ வந்த வினை சுயராஜ்யக்‌ கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு “சென்றவிடமெல்லாம்‌ சிறுமை” பனகால்‌ அரசர்‌ வெற்றி ககஷிப்புரட்டு தக்க சமயம்‌ ஜஸ்டிஸ்‌ கசஷிக்கு ஓர்‌ எச்சரிக்கை நாகைத்‌ தொழிலாளர்‌ சங்கம்‌ இதுகூட வகுப்பு துவேஷமா? வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ “வெற்றிக்‌ கொண்டாட்ட” விளம்பரம்‌ பார்ப்பனிபத்தை ஒழித்த கல்யாணங்கள்‌ பிள்ளைவரத்திற்குப்‌ போய்ப்‌ புருஷனைப்‌ பறிகொடுப்பதா? டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு இனி என்ன செய்ய வேண்டும்‌? *பொய்‌ பொய்‌ முற்றும்‌ பொய்‌” சங்கரநாராயணர்‌ கோவிலுக்குள்‌ கக்கூசும்‌ மிதியடியும்‌ கோவை ஜில்லா சட்டசபைத்‌ தேர்தல்‌ முடிவு “மதவிஷயத்தில்‌ சர்க்காரைப்‌ பிரவேசிக்கச்‌ செய்யாத பார்ப்பனர்கள்‌” சந்தா நேயர்களுக்கு வகுப்புவாதம்‌ ஒழிந்ததா? அல்லது முன்னிலும்‌ அதிக பலம்‌ பெற்றதா? பார்ப்பனரல்லாதார்‌ மகாநாடு. பார்ப்பனர்களின்‌ தலைக்கொழுப்பு 370 371 379 382 383 384 385 386 391 394 398 407 409 410 415 419 420 424 429 431 433 435 437 438 439 441 444 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 157. 158. 159. 160. 161. 162. 163. 164. 165. 166. 167. 168. குடி அரசு - 1926 (2) தென்காசியில்‌ பார்ப்பனர்கள்‌ ஒத்துழையாமையும்‌ பகிஷ்காரமும்‌ கதவடைப்பும்‌ சுயமரியாதைச்‌ சங்க ஸ்தாபனம்‌ பார்ப்பனிய சம்பாஷணை மதுரையில்‌ பார்ப்பனரல்லாதார்‌ மகாநாடு. புது ஆண்டு பரிசு மகாத்மா காந்தி காங்கிரஸிற்கு போகும்‌ ரகசியமும்‌ காங்கிரசின்‌ பிரதிநிதித்துவ தன்மையும்‌ “தமிழ்நாடு கான்பரன்ஸின்‌” யோக்கியதை சுயராஜ்யக்கட்சிப்‌ பார்ப்பனரின்‌ பதிவிரதா தன்மை பார்ப்பனரல்லாதார்‌ மகாநாட்டுத்‌ தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ மைசூரில்‌ வகுப்புவாதம்‌ அருஞ்சொல்‌ பொருள்‌ 450 451 458 463 466 467 470 475 417 480 483 485 மாத: [ St — [muuu இப்பு. ] லெ தவான்‌ யங்க னிப்பீடதீ வீலை அணா ஒன்று யஸ்‌ | சபெ, அருவ T அனிமி 20 (4-7--20) @ யார்‌ செய்வப்பட்ட வண்வ செய்ற பயனை வில்‌ எஸ்‌. ரா மின்ச ராமசாபி, மாலே: கதர கத இ கதர்‌ போர்டாரால்‌ கத்ர்‌ டு கதர்‌! 5. fgubiond சேட்டு & குருகே மலி. 12 2838 விறு இருப்பும்‌. சாங்வல்‌, ள்‌ சோ சர்ம, [கல்‌ றப்‌... ப்ச்‌, B கங்திகதாயம்‌ தரப்ப e அத்தகை வ்ள்‌ சுத்த கதர்‌. g விட்‌ லது 3 5 3 கற்பக விதாயகர்‌ கதர்‌ நிலயம்‌. த்துக்கு 8.1 R s கந்து துல்‌, குசால்‌, மம்‌ விண்கல்‌ வ s ua-flw தின்‌ | மஹாசந்தனாநித்தைலம்‌, A7 லவை அல்கல்‌ ந ப முப i oo o o இருப்பூர்‌' உ சுத்த கதர்‌ ஜவுவிகள்‌. 8 நகை ந தம ள்‌ இன்னும்‌ ஜட ஸ்‌ Ren_igiv. அத்தர்‌ த னு | அறிக்கை, எல்‌. தஸ்‌ கற்க ஸ்டோர்‌ e Burinui பொன்னுக்காள்ளனேயம்‌ போ [டப்ப எச iy ஜ்‌ து சென்றா SHEEEEFERRFEEBRRRREH IS இல்கல பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 குடி அரசு - 1926 (2) ல ீம்கள்‌ “ச௬தேசமித்திர னும்‌ “ஸைபுல்‌ கஸ்லா மும்‌ தென்னாட்டுப்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியை பொறுமையோடு ஜாக்கிரதையாய்‌ கவனித்து வந்த “ஸைபுல்‌ இஸ்லாம்‌” பத்திரிகையானது ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ அவர்களைப்‌ போலும்‌ டாக்டர்‌. வரதராஜுலு நாயுடு அவர்களைப்‌ போலும்‌ திடீரென்று ஒரு வெடிகுண்டைப்‌ போட்டு விட்டது. அதாவது, “மாகாணச்‌ சட்டசபைகள்‌ இந்தியா சட்டசபைகள்‌ முதலிய வற்றிற்கு முஸ்லீம்‌ பிரதிநிதிகள்‌ தங்களது சமூகத்தின்‌ சார்பாக நிற்பது நலமா, அல்லது சுயராஜ்யக்‌ கட்சியாரின்‌ சார்பாக நிற்பது நலமா?” என்றும்‌ , திருச்சி மெளலானா ஸையத்‌ முர்த்தூஸா சாஹிபு அவர்கள்‌, முதலில்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு எதிராக நின்று இந்தியா சட்டசபை ஸ்தானம்‌ பெற்ற பிறகு சுயராஜ்‌ யக்‌ கட்சியில்‌ சேர்ந்ததைப்‌ பற்றியும்‌, எல்லைப்புற முகமதியர்களுக்கு சீர்திருத்தம்‌ வேண்டுமென்று மெளலானா தீர்மானம்‌ கொண்டு வந்த காலத்தில்‌ அதை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ எதிர்த்ததின்‌ காரணமாய்‌ சுயராஜ்யக்‌ கட்சியை விட்டு விலக்கிக்‌ கொள்ளும்படி மெளலானாவைக்‌ கேட்டுக்‌ கொண்டிருக்க இப்போது மறுபடியும்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ மெளலானா சேர்ந்திருப்பதின்‌ காரணமென்ன வென்றும்‌ இம்மாதிரி சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாய்‌ நிற்கும்‌ முஸ்லீம்‌ பிரதிநிதிகளை முஸ்லீம்‌ சமூகம்‌ ஆதரிக்கலாமா என்றும்‌ பலர்‌ தன்னை ஸைபுல்‌ இஸ்லாம்‌) கேட்பதால்‌ அது கீழ்கண்டபடி எழுதுகிறது - “காங்கிரஸிலிருந்து சுயராஜ்யக்‌ கட்சியென்று ஒன்று பிரிந்த காலமுதல்‌ அக்கட்சியினால்‌ தேசத்திற்காவது முஸ்லீம்‌ சமூகத்‌ திற்காவது காங்கிரஸால்‌ உண்டாகும்‌ நன்மைகளைப்‌ பார்க்கிலும்‌ அதிக நன்மை உண்டாகுமென்ற நம்பிக்கை நமக்குச்‌ சிறிதளவும்‌ இருந்தது கிடையாது” என்றும்‌, தாம்‌ அதை ஒருபோதும்‌ ஆதரிக்க வில்லையென்றும்‌, “சுயராஜ்யக்‌ கட்சியின்‌ மீது நம்பிக்கை இல்லாமல்‌ இருக்கும்‌ சில தலைவர்கள்‌ சுயராஜ்யக்‌ கட்சியை ஜனங்கள்‌ ஆதரிக்க வேண்டுமெனக்‌ கூறி அதற்காகப்‌ பிரசாரம்‌ செய்து வருவது நமக்குப்‌ பிடிக்கவில்லை” என்றும்‌, ஒருவர்‌ “தமது மனச்சாக்ஷி ஒப்புக்கொள்ள முடியாத ஒரு கட்சியை ஆதரிக்கும்படி பொது ஜனங்க ளுக்குப்‌ 15 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. போதிப்பது கொஞ்சமும்‌ அர்த்தமற்றதன்மை” யென்றும்‌, அப்படி ஆதரித்து வந்த சில தலைவர்களும்‌ விலகி விட்டார்கள்‌ என்றும்‌, சிலர்‌ விலகும்‌ தருவாயில்‌ இருக்கிறார்கள்‌ என்றும்‌ எழுதி விட்டு கடைசியாக தனது முடிவான அபிப்பிராயத்தை எழுதுவதில்‌, “சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சமூகப்‌ பிரசினை விஷயங்களில்‌ பக்ஷ பாதம்‌ காட்டி நடந்து கொள்வதால்‌ முஸ்லீம்‌ பிரதிநிதிகள்‌ சட்ட சபைகளுக்கு சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாய்‌ நிற்காமல்‌ சமூகத்‌ தின்‌ சார்பாய்‌ நிற்பதே நலம்‌ என்றும்‌, முஸ்லீம்‌ சமூகத்‌ தார்‌ “தங்கள்‌ சமூகத்தின்‌ சார்பாய்‌ நிற்கும்‌ பிரதிநிதிகளையே ஆதரித்து அவர்‌ களுக்கே ஓட்டுக்‌ கொடுக்க வேண்டு” மென்றும்‌, முஸ்லீம்‌ சமூகத்தார்‌ “இன்றியமையாத அவசியம்‌ என்று கருதும்‌ சில விஷயங்களை சுயராஜ்யக்‌ கட்சி மறுக்கிறதுஎன்றும்‌, “இந்நிலைமையில்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேர்ந்து அவர்கள்‌ கொள்கைகளை ஒப்புக்கொண்டு சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாக சட்டசபைக்குச்‌ செல்லும்‌ முஸ்லீம்‌ பிர நிதிகளால்‌ முஸ்லீம்‌ சமூகத்திற்கு நன்மை உண்டாகாது என்பதே தனது முடிவு” என்றும்‌ எழுதிவிட்டு பின்னும்‌ “அக்கட்சியின்‌ சார்‌ பாய்‌ நிற்கும்‌ முஸ்லீம்‌ பிரதிநிதிகளை முஸ்லீம்‌ வாக்காளர்கள்‌ ஆதரிக்கக்‌ கூடாது” என்றும்‌, “அதுவே தனது முடிவான அபிப்‌ பிராய”மென்றும்‌ தீர்ப்பு சொல்லிவிட்டது. இதைப்‌ பார்த்த பார்ப்பன மித்திரனாகிய “சுதேசமித்திரனுக்கு” ஆத்திரம்‌ பொங்கி விட்டது. என்ன செய்வான்‌? பாவம்‌! ஒரு துடி துடித்து விட்டு, கடைசியாக தன்னிடமிருக்கும்‌ சர்வ வல்லமைப்‌ பொருந்திய ஒரே ஆயுதமாகிய அதாவது, பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியையும்‌ அயோக்கியத்‌ தனத்தையும்‌ யாராவது வெளியிட்டால்‌ அவர்களைக்‌ கொல்லவேண்டும்‌ என்கிற அவசியம்‌ நமது பார்ப்பனருக்கு ஏற்படும்‌ போது கொஞ்சமும்‌ தயவு தாக்ஷணியம்‌ , ஈவிரக்கம்‌ இல்லாமல்‌ தங்கள்‌ முழு பலத்தோடும்‌ கூடி ஓங்கி அடிப்பதற்கு எதை உபயோகிப்பதென்றால்‌ “*ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேர்ந்து விட்டார்‌”, “ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு வக்காலத்து வாங்கிக்‌ கொண்டார்‌” என்று சொல்லுவது வழக்க மாதலால்‌, அதே ஆயுதத்தை “ஸைபுல்‌ இஸ்லாம்‌” து தொடுத்து விட்டான்‌. இந்த ஆயுதத்தைப்‌ பல தடவைகளில்‌ உபயோகித்திருப்பது வாசகர்‌ களுக்குத்‌ தெரியும்‌. உதாரணமாக ஒன்றிரண்டைக்‌ கீழே குறிப்பிடுகிறோம்‌:- திருச்சியில்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ.இராம சாமி நாயக்கரை தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டிக்கு தலைவராய்த்‌ தெரிந்தெ டுத்த காலத்தில்‌ நமது பார்ப்பனத்‌ தலைவரான ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌, நாயக்கர்‌ பேரில்‌ “நம்பிக்கையில்லை” தீர்மானம்‌ கொண்டு வரப்‌ பாடுபட்டு அதற்காக ஒரு ஆசாமியைத்‌ தேடிப்‌ பிடித்தார்‌. அது யாரென்றால்‌ ஸ்ரீமான்‌ வா.வேசு.ஐயரேயாகும்‌. ஏனெனில்‌ சேரமாதேவி குருகுலத்திற்குப்‌ பணம்‌ குடி அரசு - 1926 (2) 16 கொடுக்கக்கூடாது என்று வாதாடி, ஐயரின்‌ விரோதத்தை சம்பாதித்திருந்ததால்‌ அவரைக்‌ கொண்டு நம்பிக்கையில்லாத தீர்மானம்‌ கொண்டுவரச்‌ செய்தார்‌. இந்த இரகசியத்தை அறிந்த ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாண சுந்தர முதலியார்‌ எழுந்து, “இந்த தீர்மானம்‌ வகுப்பு துவேஷத்தின்‌ மேல்‌ கொண்டு வரப்‌ பட்டிருக்கிறது. இப்போதுதான்‌ முதன்‌ முதலாக ஒரு பார்ப்பனரல்லாதார்‌. காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவராகியிருக்கிறார்‌. அதைச்‌ சகிக்காத சில பார்ப்ப னர்‌ செய்யும்‌ சூழ்ச்சி இதுவென்பதை நான்‌ அறிவேன்‌. இதன்‌ பலன்‌ தமிழ்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்களுக்கு ஆபத்தாய்‌ முடியும்‌?” என்று சொன்னார்‌. அதன்‌ பேரில்‌ ஐயங்கார்‌ “கனங்‌”களும்‌ சில பார்ப்பனர்களுமான 12 பேர்‌ தவிர 90 பேர்களால்‌ ஸ்ரீமான்‌ வா.வே.சு. ஐயரால்‌ கொண்டு வரப்பட்ட ஐயங்கார்‌. தீர்மானம்‌ தோற்கடிக்கப்‌ பட்டது. அது சமயம்‌ ஸ்ரீமான்‌ முதலியாரைக்‌ கொல்ல “சுதேசமித்திரன்‌” “வகுப்புத்‌ துவேஷத்தில்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ புகுந்து விட்டார்‌””, “வகுப்புத்‌ துவேஷம்‌ கிளப்புகிறது” என்றும்‌ எழுதி முதலியாரைப்‌ பார்ப்பனர்கள்‌ ஆதரிக்காமல்‌ இருப்பதற்கும்‌, அவர்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேர்ந்து விட்டார்‌. என்று பலர்‌ நினைக்கட்டுமென்றும்‌ கெட்ட எண்ணங்‌ கொண்டு அவர்‌ பேரில்‌ அந்த ஆயுதத்தை எறிந்தான்‌. மற்றொரு சமயம்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌ குருகுலப்‌ போர்‌ ஆரம்பித்த காலத்தில்‌ அவரைக்‌ கொல்லுவதற்கும்‌ “சுதேசமித்திரனும்‌”, “ஹிந்து” வுமாகிய பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ சூழ்ச்சியை ஆரம்பித்து டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு ஜஸ்டிஸ்‌ ஆபீசிற்குப்‌ போனார்‌” என்று பெரிய எழுத்துக்களில்‌ எழுதி அவர்‌ பேரில்‌ அந்த ஆயுதத்தை எறிந்தான்‌. மறுபடியும்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கரை ஒழிக்கவும்‌ இதே ஆயுதத்தை உபயோகிக்கிறான்‌. ஸ்ரீமான்கள்‌ சக்கரைச்‌ செட்டியார்‌, ஆரியா இவர்கள்‌ பேரிலும்‌ சமீபத்தில்‌ இதே ஆயுதம்‌ பிரயோகிக்கப்பட்டது. இவை போன்றே இப்போது நமது “ஸைபுல்‌ இஸ்லாம்‌” பத்திரிகை: மீதும்‌ இந்த சர்வவல்லமை பொருந்திய ஆயுதத்தை எறிவதற்கு ஆரம்பித்‌ திருக்கிறான்‌.அதாவது, இப்போது அவன்‌ உபயோகிக்கும்‌ புது ஆயுதத்தின்‌ வேகம்‌ “ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேர வேண்டுமென்று “ஸைபுல்‌ இஸ்லாம்‌” நினைக்கி றதா?” என்று கேட்பதேயாகும்‌. இனி அடுத்த தடவை “ஸைபுல்‌ இஸ்லாம்‌” ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு வக்காலத்து வாங்கிக்‌ கொண்டது என்றும்‌, அதற்கடுத்த தடவையில்‌ “ஸைபுல்‌ இஸ்லாம்‌” ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேர்ந்து விட்டது என்றும்‌ “சுதேசமித்திரன்‌” சொல்லுவான்‌ என்பதில்‌ சிறிதும்‌ சந்தேக மில்லை. இவ்வளவும்‌ எழுதி பார்ப்பன மித்திரன்‌ மகமதிய சமூகத்திற்கே ஒரு எச்சரிக்கை செய்கிறான்‌. அதாவது, “முஸ்லீம்களுடைய சமூகம்‌ மதம்‌ ஆகியவைகளின்‌ நன்மையைப்‌ பொருத்த காரியங்கள்‌ பிற சமூகங்களின்‌ 17 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 உரிமையைப்‌ பாதிக்காத வரையில்‌ அவைகளைப்‌ பற்றி எவரும்‌ ஆக்ஷே பிக்க மாட்டார்‌” என்று சொல்லுகிறான்‌. பாதிப்பதாய்‌ தனக்குத்‌ தோன்றினால்‌ ஆக்ஷ்பிப்பேன்‌ என்ற வீரப்பிரதாபம்‌ அதில்‌ தொக்கியிருக்கும்படி இறுதி நிபந்தனை ஏற்படுத்துகிறான்‌. பிற சமூகத்தின்‌ உரிமை என்பதற்கு நயவஞ்சகக்‌. கூட்டத்தின்‌ மித்திரனாகிய “சுதேசமித்திரன்‌” அகராதியில்‌ என்ன அர்த்தமிருக்கிறது? பார்ப்பனர்‌ வாழும்‌ தெருவில்‌ பார்ப்பன ரல்லாதார்‌ நடப்ப தும்‌, பார்ப்பனர்‌ பக்கத்தில்‌ பார்ப்பனரல்லாதார்‌ வருவதும்‌, பார்ப்பனரோடு. பார்ப்பனரல்லாதார்‌ பேசுவதும்‌, பார்ப்பன சமூகத்தின்‌ உரிமையில்‌ குறுக்‌ கிடுவதாகவே அர்த்தம்‌ எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும்‌ பார்ப்பன மத ஆதாரங்களில்‌ - பார்ப்பன வேதங்களில்‌ மகமதியர்கள்‌- “மிலேச்சர்கள்‌” என்று எழுதி வைத்து அதை பூஜித்துக்‌ கொண்டு வரப்படுகிறது. முஸ்லீம்‌ பாஷைக்கும்‌ “மிலேச்சர்‌ பாஷை” என்றே அவர்கள்‌ அகராதியில்‌ எழுதப்‌ பட்டிருக்கிறது. முஸ்லீம்களால்‌ ஆகாரத்திற்காக தங்கள்‌ வேதக்‌ கட்டளைப்படி உபயோகிப்பதாய்‌ சொல்லும்‌ சாதனம்‌ பார்ப்பன மதக்‌ கோட்பாடின்படி மற்ற சமூகங்களின்‌ உரிமைகளில்‌ குறுக்கிடுவதாகவே இருக்கிறது. அது போலவே மற்ற சமூகமும்‌ தங்கள்‌ மத உரிமைகளை நிறைவேற்ற மேள தாளங்களுடன்‌' தெருவில்‌ நடப்பது மகமதிய சமூகத்தின்‌ உரிமைகளில்‌ பிரவேசிப்பதாகவே கருதப்படு கிறது. ஆதலால்‌ சமூக உரிமை என்கிற ஒரு காரணத்தை வைத்துக்‌ கொண்டே “மித்திரன்‌” முஸ்லீம்‌ சமூகத்தையே அழித்தாலும்‌ அழிக்கலாம்‌. சமூக உரிமை என்று இம்மாதிரி ஒருவருக்கொருவர்‌ ஒரே பிடிவாத மாய்‌ ஒரு சமூகத்தாரின்‌ உரிமைகளில்‌ மற்றவர்கள்‌ பிரவேசித்தால்‌ கலகம்‌ செய்வது என்று வீரப்பிரதாபம்‌ பேசுவதால்‌ தேசத்திற்கு எப்படி நன்மை உண்டாகும்‌ என்று “சுதேசமித்திரன்‌” நினைக்கிறான்‌ என்பது நமக்குப்‌ புலனாக வில்லை. ஒருவருக்கொருவர்‌ தங்களது குருட்டு நம்பிக்கையின்‌ உரிமை களில்‌ கொஞ்சம்‌ விட்டுக்‌ கொடுத்துதான்‌ ஆகவேண்டும்‌. உரிமை என்பது தற்கால வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌ சுயநலத்திற்கும்‌ ஒரு சமூகத்தை அடக்கி ஒரு சமூகம்‌ ஆதிக்கம்‌ செலுத்தவுமே உபயோகப்படுகிறதேயல்லாமல்‌ ஜீவன்களுக்குப்‌ பொதுவாய்‌ உள்ள உரிமைகளையோ மனுஷ கோடிகளுக்‌ குப்‌ பொதுவாக உள்ள உரிமைகளையோ காக்க உபயோகப்படுவதில்லை. இந்த நிலைமையில்‌ இம்மாதிரி தந்திரமான வார்த்தைகளால்‌ பாமரர்களை எத்தனை காலத்திற்கு ஏமாற்ற முடியும்‌ என்று “மித்திரன்‌” நினைத்துக்‌ கொண்‌ டிருக்கிறான்‌ என்பதும்‌ நமக்கு விளங்கவில்லை. “மித்திரன்‌” கூட்டத்தார்‌. இவ்விதம்‌ சொல்லிக்‌ கொண்டு திரியும்‌ இரகசியம்‌ என்ன வென்று நாம்‌ யோசித்துப்‌ பார்ப்போமானால்‌ ஒரே விஷயம்தான்‌ நமக்கு விளங்குகிறது. அதாவது “உரிமை”, “உரிமை” என்று ஹிந்துக்களையும்‌ மகமதியர்களையும்‌ முட்ட விட்டு நிரந்தரப்‌ பகையை ஏற்படுத்தி விட்டால்‌ தேசத்தில்‌ சிறு வகுப்‌ பார்களாயுள்ள பார்ப்பனருக்கும்‌ அரசாங்கத்தாருக்கும்‌ தங்கள்‌ ஆதிக்கத்‌ தையும்‌ ஆட்சிகளையும்‌ நடத்துவது வெகு சுலபமாகிவிடும்‌. ஹிந்துக்களும்‌ மகமதியர்களும்‌ ஒற்றுமையாகிவிட்டால்‌ பார்ப்பனர்களுக்கும்‌ அரசாங்கத்‌ குடி அரசு - 1926 (2) 18 திற்கும்‌ ஆபத்துதான்‌. இந்தக்‌ கருத்தைக்‌ கொண்டேதான்‌ மகாத்மாவின்‌ ஒத்துழையாமையை ஒடுக்க ஒத்துழையாமைக்கு வெளியில்‌ பண்டித மாளவி யாவும்‌, ஒத்துழையாமைக்குள்ளிருந்து கொண்டே பிராமண சம்மந்தியாகிய தேசபந்து தாஸைக்‌ கொண்டு தென்னாட்டுப்‌ பார்ப்பனரும்‌ சூழ்ச்சி செய்து ஒத்துழையாமையை அழித்து பழய மாதிரி செய்து விட்டார்கள்‌. இதன்‌ பலனாய்‌ நமது பார்ப்பனர்களுக்கு அரசாங்கத்தாரால்‌ தக்க சன்மானங்கள்‌ இப்போது அளிக்கப்பட்டு வருவதிலிருந்தே எவரும்‌ சுலபத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. உரிமை என்பது ஜனக்‌ கட்டாலோ, பணத்தாலோ, தந்திரத்தா லோ, ஏமாற்றத்தாலோ பலமுள்ளவனுக்கு ஒரு விதமாகவும்‌ பலமில்லாதவ னுக்கு வேறு விதமாகவும்தான்‌ இருந்து வருகிறது. தங்கள்‌ மத தர்மத்தின்படி தங்கள்‌ கோயிலுக்குப்‌ போய்‌ தெய்வங்க ளைக்‌ கண்டு தரிசிக்க வேண்டுமென்பது ஒரு சமூகத்தாரின்‌ உரிமை. அவர்‌ களை உள்ளே விடாமல்‌ தடுக்க வேண்டியது மற்றொரு சமூகத்தாரின்‌ உரிமை. தங்கள்‌ மத வேதத்தைப்‌ படிக்க வேண்டுமென்பது ஒரு மதத்தைச்‌ சேர்ந்த ஒரு சமூகத்தாரின்‌ உரிமை. அப்படி தங்கள்‌ வேதத்தைப்‌ படிக்கக்‌ கூடாது என்பது அதேமதத்தைச்‌ சேர்ந்த மற்றொரு சமூகத்தார்‌ உரிமை. அதுபோலவே தங்கள்‌ கோயிலுக்கு முன்னால்‌ மேளம்‌ அடிக்கக்‌ கூடாது என்பது மகமதிய மதத்தின்‌ உரிமை என்று சொல்லப்படுகிறது. இப்படியாக அநேக சமூகங்களுக்கு அநேக உரிமைகள்‌ உண்டு.. இவைகளை நிறைவேற்ற எல்லா சமூகத்தினருக்கும்‌ உரிமை இருக்க வேண்டும்‌ என்றுதான்‌ ஒவ்வொரு சமூகத்தார்களும்‌ நினைப்பார்கள்‌. நினைப்‌ பது தப்பித மென்று எவனாவது சொன்னால்‌ அவனை யென்னென்று சொல்‌ லுவது? அவரவர்கள்‌ உரிமை காப்பாற்றப்‌ படவேண்டுமானால்‌ காப்பாற்றப்‌ படக்கூடிய ஸ்தாபனத்தில்‌ - அதிகாரத்தில்‌ - பதவியில்‌ - அவனவனுக்குப்‌ பிரதிநிதித்துவ உரிமை இருந்தால்தான்‌ முடியுமே அல்லாமல்‌ வேறு எப்படி காப்பாற்றப்படும்‌? அரசியல்‌ என்பதே மனித உரிமை. மனிதன்‌ என்பதும்‌ தேசத்தையும்‌ மதத்தையும்‌ வகுப்பையும்‌ குறிகொண்டிருப்பதேயல்லாமல்‌ வேறல்ல. அப்படிப்பட்டமனிதனுக்கு உரிமை என்பது, அவனது தேசம்‌ மதம்‌ வகுப்புகளின்‌ உரிமையைக்‌ காப்பதுதானேயல்லாமல்‌ வேறு எதைச்‌ சொல்லக்கூடும்‌? என்னுடைய வகுப்பார்‌ ஒரு மதத்தில்‌ இருப்பதால்‌ தெருவில்‌ நடக்கும்‌ உரிமை பெற முடியா விட்டால்‌ அந்த மதத்தைப்‌ பற்றி எதற்காக நான்‌ கவலை கொள்ள வேண்டும்‌? என்னுடைய மதத்தினர்‌ ஒரு தேசத்தில்‌ இருப்பதால்‌ மத உரிமையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள முடியாமற்போயின்‌ அந்த தேசத்தைப்‌ பற்றி நான்‌ எதற்காகக்‌ கவலை கொள்ளவேண்டும்‌? என்னுடைய தேசத்தார்‌ ஒரு அரசாங்கத்தின்‌ கீழ்‌ இருப்பதால்‌ அந்த தேசத்‌ தின்‌ உரிமையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள முடியாவிட்டால்‌ நான்‌ எதற்காக அந்த அரசாங்கத்தைப்‌ பற்றிக்‌ கவலைப்பட வேண்டும்‌? ஆதலால்‌ உரிமை யின்‌ தத்துவம்‌ என்ன என்பதை யோசிப்பவர்களுக்கு விளங்காமல்‌ போகாது. 19 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தற்காலம்‌ முன்னேற்றமடைந்து யிருப்பவனே முன்னேறிவருவது தான்‌ அவன்‌ உரிமையென்றும்‌, பின்னடைந்திருப்பவன்‌ - தாழ்த்தப்பட்ட வன்‌ பின்னடைந்து கொண்டிருப்பதுதான்‌ அவன்‌ உரிமையென்றும்‌ சொல்லப்‌ பட்டால்‌ பின்னால்‌ இருப்பவர்கள்‌ கதி என்னவாகுமென்று பிற்‌ போக்க டைந்திருக்கிறவர்கள்‌ சிந்திக்காமலிருக்க முடியாது. அதை உத்தே சித்தே “ஸைபுல்‌ இஸ்லாம்‌' வகுப்புவாரி பிரதிநிதித்துவம்தான்‌ மகமதிய சமூகத்தின்‌ உரிமை என்கிறது. அதை சுயராஜ்யக்‌ கட்சி மறுக்குமானால்‌ அதில்‌ எப்படி மகமதியர்கள்‌ வந்து சேரக்கூடுமென்று “மித்திரன்‌” எதிர்‌ பார்க்கிறான்‌ என்பது நமக்கு விளங்கவில்லை. ஜனாப்களான ஹமீத்கான்‌ சாஹிப்பையும்‌ ஷாபி மகமது சாஹிப்பையும்‌ பஷீர்‌ அஹமது சையத்‌ சாஹிப்‌ அவர்களையுமே முஸ்லீம்களின்‌ “சத்து” என்று “மித்திரன்‌” நினைத்துவிட்டான்‌ போலும்‌. மெளலானாக்கள்‌ முகமதலி, ஷவுக்கத்தலி,டாக்டர்‌ கிச்சிலு போன்றவர்களும்‌. சர்‌. அப்துல்‌ ரஹீம்‌ மெளல்வி, அஹமது சையத்‌ சாஹிப்‌ போன்றவர்களும்‌ இன்னும்‌ லக்ஷுமணபுரி காங்கிரஸி லிருந்த மகமதிய தலைவர்களையும்‌ மற்றும்‌ அநேக பெரிய இந்திய மகமதிய தலைவர்களையும்‌ மேலே கண்ட முஸ்லீம்‌ “சத்துக்களான ஜனாப்கள்‌ ஹமீத்கான்‌, ஷாபி மகமது, பஷீர்‌ அஹமது சையத்‌ ஆகிய மூவர்களைக்‌ கொண்டே கொன்று விடலாமென்று “மித்திரன்‌” நினைக்கிறான்‌ போலும்‌. இந்தப்‌ பிரகாரமான பார்ப்பன “மித்திரன்‌” சூழ்ச்சி வாதத்திற்கு 'ஸை. புல்‌ இஸ்லாம்‌” தனது ஜுன்‌ 26-தேதி தலையங்கத்தில்‌ 4 கலம்‌ கொண்ட பதிலை தகுந்தபடி எழுதியிருக்கிறது. அவற்றில்‌ மாணிக்கம்‌ போல்‌ உள்ள ஒரு விஷயத்தை மாத்திரம்‌ இங்கு எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்‌. முஸ்லீம்களுக்கு தனி வாக்காளர்‌ தொகுதி வேண்டியதில்லை யென்ப தற்கு “சுதேசமித்திரன்‌” சொல்லும்‌ காரணங்கள்‌ என்ன வென்றால்‌ ஜனாப்‌ களான ஹமீத்கான்‌ சாஹிப்‌, ஷாபி மகமது சாஹிப்‌ ஆகிய இரு கனவான்கள்‌. ஹிந்து ஓட்டர்கள்‌ அதிகமாயுள்ள பேட்டைகளில்‌ சென்னைக்‌ கார்ப்ப ரேஷனுக்கு பிரதிநிதிகளாய்‌ நின்று ஜெயிக்க வில்லையா? ஆதலால்‌ முஸ்லீம்‌ களுக்கு தனி வாக்காளர்‌ தொகுதி தேவையில்லை என்பதேயாகும்‌. ஆனால்‌ *ஸைபுல்‌ இஸ்லாம்‌” பத்திரிகை “ஜனாப்களான ஹமீத்கான்‌, ஷாபி முகமது சாஹிப்‌ ஆகிய இருவரும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ இஷ்டப்படி நடந்து அவருடைய முழு தயவையும்‌ பெற்று இருப்பதன்‌ காரணமாக -...ஐயங்கார்‌ ஹிந்து வாக்காளர்களுக்குத்‌ தக்க சமாதானம்‌ சொல்லி, ஜனாப்கள்‌ ஹமீத்கான்‌, ஷாபி முகமது சாஹிப்‌ ஆகியோரின்‌ நடத்தைக்கு ஐயங்காரை ஜாமீன்‌ கொடுத்த காரணத்தினாலேயே ஹிந்து வாக்காளர்கள்‌ அவ்விரு முஸ்லீம்களுக்கு ஓட்டுக்‌ கொடுத்திருக்‌ கிறார்கள்‌ என்பது சென்னை மாகாணம்‌ முழுதுமே அறிந்த விஷயம்‌. அல்லாமலும்‌ ஐயங்கார்‌ தயவைப்‌ பெற்று தங்களுக்காக ஐயங்காரை ஜாமீன்‌ வைத்து ஓட்டுப்‌ பெறுவதன்‌ பொருட்டு ஜனாப்கள்‌ ஹமீத்கான்‌, குடி அரசு - 1926 (2) 20 ஷாபி மகமது சாஹிப்‌ ஆகிய இருவர்களும்‌ நடந்து கொள்ளுகிற மாதிரி சுயமதிப்புள்ள வேறு எந்த முஸ்லீம்களாலும்‌ சாத்தியப்படாதாகையால்‌ ஐயங்காருக்கு நல்ல பிள்ளைகளாய்‌ நடந்து ஓட்டுப்‌ பெற்ற முஸ்லீம்‌ களின்‌ உதார ணத்தை “மித்திரன்‌” மற்ற முஸ்லீம்களுக்கும்‌ எடுத்துக்‌ காட்டினால்‌ அதை முஸ்லீம்‌ உலகம்‌ கொஞ்சமும்‌ ஒப்புக்‌ கொள்ள முடியாது...” என்று எழுதுகிறது. ஆனால்‌ ஜனாப்கள்‌ ஹமீத்கான்‌, ஷாபி முகமது ஆகிய இருவர்களும்‌ தங்களது சொந்த நலத்திற்காக தங்களது சுயமரியாதையை இழந்து விட்டு ஐயங்காருக்கு நல்ல பிள்ளையாய்‌ நடந்து கொள்ளும்‌ விஷயம்‌ உலக மறிந்த இரகசியம்‌ என்றாலும்‌, அதை நாம்‌ எடுத்துச்‌ சொல்லுவதற்கு பல காரணங்களாலும்‌ முஸ்லீம்‌ சமூகத்தின்‌ கெளரதையை உத்தேசித்து மறைத்தே வைத்து வந்தோம்‌. எனினும்‌ தமிழ்நாட்டு முஸ்லீம்‌ பிரதிநிதியாகிய “ஸைபுல்‌ இஸ்லாம்‌” தங்கள்‌ சமூகத்தின்‌ நன்மையைக்‌ கோரி இவ்வளவு தைரியமாய்‌ இந்த விஷயங்‌ களை ஒப்புக்கொண்டு வெளியாக்கியதற்காக அதை நாம்‌ மிகுதியும்‌ போற்றுகிறோம்‌. “ஜனாப்களான ஹமீத்கான்‌, ஷாபி முகமது சாஹிப்‌ ஆகிய வர்கள்‌ ஐயங்கார்‌ இஷ்டப்படி நடந்து அவருடைய முழு தயவையும்‌ பெற்‌ றார்கள்‌” என்று *ஸைபுல்‌ இஸ்லாம்‌” எழுதுவதில்‌ எவ்வளவு சங்கதி தொக்கி யிருக்கிறது என்பதைக்‌ கொஞ்சம்‌ கவனித்தாலும்‌ தெரியாமல்‌ போகாது. தவிரவும்‌ இவர்கள்‌ நடத்தைக்காக ஐயங்கார்‌ வாக்காளர்களுக்கு ஜாமீன்‌ கொடுத்தார்‌. என்பதில்‌ எவ்வளவு அர்த்தமிருக்கிறது என்பதையும்‌ கவனித்த வர்களுக்கு விளங்காமல்‌ போகாது. முஸ்லீம்களுக்கு உண்மையான தனி வாக்காளர்‌ தொகுதி இருந்திருக்‌ குமானால்‌ சுயமதிப்புள்ள முஸ்லீம்கள்‌ நடந்துகொள்ள முடியாத தோரணை யில்‌ நடந்து கொண்டிருக்க முடியுமா? அல்லாமலும்‌ ஒரு முஸ்லீம்‌ சென்னைக்‌ கார்ப்பொரேஷனில்‌ ஸ்தானம்‌ பெற ஐயங்காருடைய ஜாமீன்‌ அவசியமாகுமா? ஐயங்கார்‌ ஜாமீன்‌ பெறுவதற்காக முஸ்லீம்கள்‌ ஐயங்கார்‌. இஷ்டப்படி நடக்க வேண்டிய அவசியம்‌ ஏற்படுமா? என்பவைகளை முஸ்லீம்‌ சமூகம்‌ யோசிக்காமலிருக்குமென்று நாம்‌ நம்பவில்லை. இப்போது உண்மையாகவே சென்னையில்‌ ஜனசங்கியை 530,000. இதில்‌ மகமதியரின்‌ சங்கியை 53,000. சென்னை நகர பரிபாலன சபையாகிய கார்ப்பொரேஷன்‌ சபைக்கு கவுன்சிலர்களின்‌ தொகை 50. இதில்‌ வீதாச்சார. எண்ணிக்கைப்படி மகமதியர்களுக்கு 5 ஸ்தானங்கள்‌ கிடைக்க வேண்டும்‌. அதேபிரகாரம்‌ கிறிஸ்துவர்களுக்கு4 ஸ்தானம்‌ கிடைக்க வேண்டும்‌. மற்றபடி தீண்டப்படாத வகுப்பார்‌ ஐரோப்பிய வகுப்பார்‌ முதலியவர்க ளுக்கும்‌ கொடுத்‌ துவிட்டால்‌ இவர்கள்‌ நீங்கிய பார்ப்பனரல்லாதவர்களுக்கு 20 ஸ்தானங்கள்‌ கிடைக்கலாம்‌. ஆதலால்‌ இவர்கள்‌ யாரும்‌ தங்கள்‌ தங்கள்‌ வகுப்புக்குப்‌ பிரதி நிதித்துவம்‌ பெற ஐயங்காருக்கு நல்ல பிள்ளையாக வேண்டிய அவசிய மில்லை; தத்தம்‌ சமூகத்திற்குத்‌ துரோகம்‌ செய்ய 21 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. வேண்டியதில்லை; சர்க்கார்‌ தயவையும்‌ நாட வேண்டியதில்லை. மகமதியர்‌. களுக்கு உண்மையான தனி வாக்காளர்கள்‌ தொகுதி இருந்திருக்குமானால்‌ ஜனாப்கள்‌ ஹமீத்கானும்‌ ஷாபி முகமது சாஹிபும்‌ தங்கள்‌ சுமரியாதையை இழந்து ஐயங்காருக்கு நல்ல பிள்ளைகளாக வேண்டிய அவசியமும்‌ நேர்ந்திருக்காது. உண்மையான முஸ்லீம்‌ பிரதிநிதிகளே வரவும்‌ இட வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ இல்லாமல்‌ 10 ஸ்தானங்கள்‌ கிடைப்பது வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தால்‌ 8 ஸ்தானங்கள்‌ கிடைத்தால்‌ போதும்‌. இதனால்‌ “ஸைபுல்‌ இஸ்லாம்‌” சொல்லுகிறபடி சுயமரியாதை இழக்க வேண்டியதில்லை: ஐயங்காருக்கு நல்ல பிள்ளைகளாக வேண்டியதில்லை; சமூகத்துரோகம்‌ செய்ய வேண்டிய அவசியமில்லை; சர்க்கார்‌ தபவைப்‌ பெற வேண்டியதில்லை: தேசத்‌ துரோகம்‌ செய்ய வேண்டியதுமில்லை. ஐயங்கார்‌. இஷ்ட படி நடக்க முடியாவிட்டால்‌ ஸ்ரீமான்‌ சக்கரைச்‌ செட்டி யாரை: கேட்பதைப்‌ போல்‌ நம்மை ஒருவன்‌ இராஜினாமாச்‌ செய்யும்படி கேட்க வேண்டிய அவசியமும்‌ இராது. இந்த மாதிரி சிறு பிள்ளைகளைப்‌ போல்‌ அபிப்பிராய பேதம்‌ வந்தவுடன்‌ “நான்‌ செய்து வைத்த கவுன்சிலர்‌ வேலை யைகக்கு”என்று கேட்க வேண்டிய அவசியமும்‌ இராது. நமக்காக ஐயங்கார்‌. ஜாமீன்‌ நின்று எலெக்‌ஷன்களுக்கு ஆயிரம்‌ இரண்டாயிரம்‌ பணச்‌ செலவும்‌ செய்ய மாட்டார்கள்‌. அந்தப்‌ பணத்திற்கு நம்முடைய மானம்‌, சுயமரியாதை, மனச்சாக்ஷி, மதம்‌, தேசம்‌ இவைகளை விற்க வேண்டியும்‌ வராது. ஆதலால்‌ *ஸைபுல்‌ இஸ்லாம்‌” சொல்லும்‌ வேத வாக்கை உண்மையான முஸ்லீம்கள்‌ ஒவ்வொருவரும்‌ கவனித்து சுயராஜ்யக்‌ ககஷியின்‌ சார்பாக நிற்காமல்‌ தங்கள்‌ சமூகத்தின்‌ சார்பாகவே நின்று வெற்றி பெற்று இஸ்லாத்தின்‌ நன்மை யையும்‌ கூடுமானால்‌ தேச நன்மையையும்‌ நாடுவார்களாக. குடி அரசு - கட்டுரை - 04.07.1926 குடி அரசு - 1926 (2) 22 சட்டசபையை விட்டு வவனிவந்த “வீறர்‌கனிண்‌ சய்கை சட்டசபையில்‌ ஒரு பலனும்‌ இல்லை என்றும்‌, சட்டசபையிலிருந்து கொண்டு சர்க்காரை எவ்வளவு கெஞ்சிக்‌ கூத்தாடியும்‌ சர்க்கார்‌ மனம்‌ கொஞ்ச மாவது இளகவில்லை என்றும்‌, ஆதலால்‌ இனி சட்ட சபையிலிருப்பது அவ மானம்‌ என்றும்‌, இந்த சர்க்காரின்‌ யோக்கியதையை எடுத்து வெளியில்‌ சொல்லப்‌ போகிறோம்‌ என்றும்‌ வீரப்பிரதாபம்‌ பேசிவிட்டு வெளியில்‌ வந்த “வீரர்கள்‌, என்ன செய்கிறார்களென்று பார்த்தால்‌, மறுபடியும்‌ சட்டசபைக்குப்‌ போக ஓட்டர்களிடம்‌ போய்‌ எங்களை சட்டசபைக்கு அனுப்பினால்‌ நாங்கள்‌ உங்களுக்கு சாதித்து விடுகிறோம்‌ என்று ஓட்டுப்‌ பிச்சை எடுத்துக்‌ கொண்டு திரிகிறார்கள்‌. இம்மட்டோடு நிற்கிறார்களா வென்று பார்த்தால்‌, வீரப்பிரதாபம்‌ பேசி, விட்டு விட்டு வந்த சட்டசபைக்கு அடுத்த கூட்டத்திற்கே போகிறார்கள்‌. ஒரு கூட்டத்தின்‌ பிரயாணப்‌ படியை வாங்காமல்‌ இருப்பதற்கு நமது *வீரர்‌()” களுக்கு மனம்‌ வரவில்லை. இதை அறிந்து “அகில இந்திய ஒப்பற்ற தலைவர்‌(?)” திரு.சீனிவாசய்யங்கார்‌ போகும்படி உத்திரவு கொடுத்துவிட்டார்‌; அகில இந்திய காங்கிரஸ்‌ காரியதரிசி திரு. எ.ரெங்கசாமி ஐயங்கார்‌ மேல்‌ ஒப்பம்‌ போட்டு விட்டார்‌; ஆகையால்‌ சென்னை, கல்கத்தா, பஞ்சாப்‌, அஸ்‌ ஸாம்‌ முதலிய மாகாண சட்ட சபைகளுக்குப்‌ போய்த்தீர வேண்டும்‌. அங்கு போய்‌ செய்ய வேண்டிய பல முக்கியமான வேலைகள்‌ இருக்கின்றன. நாங்கள்‌ போகா விட்டால்‌ அநேக காரியம்‌ கெட்டுப்‌ போகும்‌. போகாமல்‌ நின்றுவிட்டால்‌ ஓட்டர்களை ஏமாற்றி மோசம்‌ செய்தது போலாகிவிடும்‌. ஆதலால்‌ போகிறோம்‌ என்ற நொண்டிச்‌ சமாதானத்துடன்‌ சட்ட சபைக்கும்‌ செல்லுகின்றார்கள்‌. இதில்‌ ஏதாவது கடுகளவாவது நாணயமேனும்‌ யோக்கியப்‌ பொறுப்‌ பேனும்‌ இருக்கிறதா? சட்டசபையில்‌ இவர்கள்‌ போய்‌ செய்ய வேண்டியவை பல வேலைகளிருக்குமானால்‌, ஏன்‌ அதில்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது என்று வெளியில்‌ வரவேண்டும்‌? சர்க்காரைக்‌ கெஞ்சியும்‌ கூத்தாடியும்‌ கேட்டும்‌ ஒன்றும்‌ செய்ய முடியாத காரியத்தை சர்க்காருடன்‌ கோபித்துக்கொண்டு வீரப்பிரதாபம்‌ பேசி வந்துவிட்டுத்‌ திரும்பவும்‌ போனால்‌ சர்க்கார்‌ இவர்‌ களை 22 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 எப்படிமதிப்பார்கள்‌? இவர்கள்‌ கோருவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்‌? சட்டசபையை விட்டு வெளியில்‌ வந்த பிறகு கல்கத்தா சட்ட சபைக்கு, அவசரச்‌ சட்டத்தைத்‌ தடுக்க வேண்டும்‌ என்கிற முகாந்தரத்தின்‌ பேரில்‌, போய்ப்‌ பார்த்தார்களே! அவசரச்‌ சட்டத்தை தடுக்க முடிந்ததா என்று கவனித்‌ தார்களா? கவனித்திருந்தால்‌ மறுபடியும்‌ சட்டசபைகளுக்குள்‌ எந்தக்‌ காரியம்‌ செய்ய முடியும்‌ என்பதை உணர்வார்களல்லவா? சட்டசபை யில்‌ மெஜாரிட்டி பலம்‌ பெற்ற வங்காள மாகாண சட்டசபையிலேயே ஒன்றும்‌ செய்ய முடியவில்லையென்றால்‌ மெஜாரிட்டி இல்லாததும்‌ மதிக்கத்தகுந்த மைனாரிட்டி கூட இல்லாததுமான சென்னை சட்டசபையில்‌ என்ன காரியம்‌ செய்ய முடியும்‌? இதை யெல்லாம்‌ பொது ஜனங்கள்‌ அறிய மாட்டார்களா? அறிந்‌ தால்‌ தங்களை எப்படி மதிப்பார்கள்‌ என்றுகூட நினைக்க முடியாத அவ்வளவு மானங்‌ கெட்டத்‌ தன்மையும்‌ முட்டாள்‌ தனமும்‌ உள்ள “வீரர்‌'களால்‌ தேசத்திற்கு என்ன நன்மை விளையும்‌? ஜஸ்டிஸ்‌ கட்சி மெம்பர்களுக்கும்‌ சுயராஜ்யக்‌ கட்சி மெம்பர்களுக்‌ கும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியை விட்டுப்‌ புதிதாய்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ “ஞானஸ்‌ நானம்‌” பெற்ற மெம்பர்களுக்கும்‌ என்ன வித்தியாசமென்று பார்ப்போமா னால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி மெம்பர்களுக்கு சுயமரியாதை இருக்கிறது ; அதாவது இன்றைக்கு ஓட்டர்களை ஏமாற்றுவதற்காக பொய்‌ வீரம்‌ பேசி வெளியே போய்‌ விட்டால்‌ நாளைக்கு எந்த முகத்தைக்‌ கொண்டு சட்டசபைக்குள்‌ நுழைந்து அங்குள்ளவர்கள்‌ முகத்தில்‌ எப்படி விழிப்பது என்றும்‌; அங்கு ஒரு காரியமும்‌ செய்ய முடியவில்லை என்று சொல்லிவிட்டு வெளியில்‌ வந்துவிட்ட பிறகு எந்த முகத்தைக்‌ கொண்டு மறுபடியும்‌ ஓட்டர்களிடம்‌ போய்‌ ஓட்டுக்‌ கேட்கிறது என்றும்‌ நினைத்து தங்கள்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்வதற்காக, ஆதியில்‌ ஓட்டர்களிடம்‌ என்ன சொல்லி சட்ட சபைக்குப்‌ போனார்களோ அந்த வார்த்தையிலேயே இன்னும்‌ நிற்கிறார்கள்‌. சுயராஜ்யக்‌ கட்சியாரோ சுயமரியாதை, மானம்‌, வெட்கம்‌ ஆகிய எல்லாவற்றையும்‌ உதிர்த்து விட்ட “*மாசில்லா பரிசுத்த*” வான்களாதலால்‌ என்ன வேண்டுமானாலும்‌ செய்யவும்‌ எதை வேண்டுமானாலும்‌ பேசவும்‌ தயாராயிருக்கிறார்கள்‌. இன்னும்‌ இருக்கப்‌ போகிறார்கள்‌. இவைதான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கும்‌ காங்கிரஸோடு இரண்டறக்‌ கலந்த சுயராஜ்யக்‌ கட்சிக்கும்‌ உள்ளன வித்தியாசம்‌ . இந்தியாவின்‌ விடுதலைக்கு - சுயமரியாதைக்கு - சுயராஜ்யத்திற்கு - கையெழுத்துகூடப்‌ போடத்‌ தெரியாத மக்களை 100- க்கு 90 பேராக உடைய பாரதத்‌ தாயின்‌ கற்பைக்‌ காப்பதற்கு திரு.சீனிவாசய்யங்கார்‌ “தலைவ ராகவும்‌ திரு. எ. ரெங்கசாமி ஐயங்கார்‌ “காரியதரிசி”யாகவும்‌ அடையப்‌ பெற்ற இந்தியாவே! உனது பாக்கியமே பாக்கியம்‌! ஜப்பானுக்கு வந்த பூகம்பம்‌ உன்னை ஏன்‌ மறந்து விட்டதோ தெரியவில்லை I குடி அரசு - கட்டுரை - 04.07.1926 குடி அரசு - 1926 (2) 24. தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்மு சென்னையில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ வீட்டில்‌ கூடிய தமிழ்நாடு காங்கிரஸ்‌ நிர்வாகக்‌ கூட்டத்தின்‌ நடவடிக்கைகள்‌ இவ்வாரப்‌ பத்திரிகைகளில்‌ வெளியானதை நண்பர்கள்‌ வாசித்திருக்கலாம்‌. ஆனால்‌ அதில்‌ நடந்த விஷயங்களை ஒவ்வொரு பத்திரிகை ஒவ்வொரு விதமாய்‌ தத்தம்‌ செளகரி யப்படி பிரகரித்திருக்கின்றன. ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியாரின்‌ தீர்மானமானது ஒரே அடியாய்‌ தூக்கி அடிக்கப்பட்டு உயிர்‌ வாங்கப்பட்டுப்‌ போயிற்று, அதாவது “*காங்கி ரசால்‌ சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட அபேக்ஷகர்கள்‌ பட்டதாரியாகவாவது அரசாங்க நியமனம்‌ பெற்றவர்களாகவாவது இருப்பரேல்‌, பட்டத்தையும்‌ நியமனத்தையும்‌ விட்டுவிடும்படியும்‌ கதருடையில்‌ பற்றுக்‌ கொள்ளும்‌ படியும்‌ தீர்மானிக்கிறது”” என்பதே ஸ்ரீமான்‌ முதலியார்‌ தீர்மானத்தின்‌ தத்துவம்‌. அப்படியிருக்க திருத்தப்‌ பிரேரேபணையாக ஸ்ரீமான்‌ சத்திய மூர்த்தியால்‌ இம்மாதிரி தீர்மானமே கொண்டுவர ஒழுங்கில்லையென்றும்‌, ஆனால்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ தங்களுக்கு ஓட்டுப்‌ பிரசாரம்‌ செய்யவும்‌ முதலியார்‌ பெயரை விற்று தாங்கள்‌ ஓட்டுப்‌ பெறவும்‌ அவருடைய தயவு வேண்டியிருப்பதால்‌ அவரை ஏமாற்று முகத்தான்‌ ஏதாவது சமாதானம்‌ சொல்ல வேண்டுமே யென்றும்‌, இல்லாவிட்டால்‌ முதலியார்‌ தனக்கு ஏதாவது அவமானம்‌ வந்துவிடுமே யென்று கருதி விலகிவிடுவாரோ என்னமோ என்றும்‌ பயந்து, ஸ்ரீமான்‌ முதலியார்‌ கண்களைத்‌ துடைப்பது போல்‌ ஒரு பொக்கித்‌ தீர்மானம்‌ திருத்தப்‌ பிரேரேபணையாகத்‌ தீர்மானிக்கப்‌ பட்டிருக்‌ கிறது. அதாவது “காங்கிரசின்‌ கொள்கைப்படி பட்டம்‌ விட வேண்டிய அவசியமில்லாவிட்டாலும்‌ யாராவது பட்டதாரிகள்‌ அபேக்ஷகர்களாயி ருந்தால்‌ காங்கிரசின்‌ கெளரதையைக்‌ காக்க தங்கள்‌ பட்டங்களை விடுவார்கள்‌ எனவும்‌ கதர்‌ கட்டுவார்கள்‌ எனவும்‌ எதிர்பார்க்கப்படுகிறது'” என்பதேயாம்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ எந்த கருத்துடன்‌ தனது தீர்மானத்தைப்‌ பிரேரே பித்தாரோ அதற்கு நேர்‌ விரோதமாகத்‌ தீர்மானிக்கப்பட்டுப்‌ போயிற்று. முதலாவது, முதலியாரின்‌ கருத்து பட்டம்‌, நியமனப்‌ பதவி இரண்டையும்‌ துறக்க வேண்டுமென்பது. நியமனப்‌ பதவியைப்‌ பற்றி பேசினால்‌ ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரை பாதிக்குமானதால்‌ அதை அடியோடு விட்டு விடப்பட்டது. இதைப்பற்றி ஸ்ரீமான்‌ முதலியாருக்கு இப்போது ஒரு ஆக்ஷேபனையும்‌ இல்லாமல்‌ போனதின்‌ இரகசியம்நமக்கு விளங்கவில்லை 25 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. இரண்டாவது, பட்டங்களை விட வேண்டியது என்ற தீர்மானம்‌ கொண்டுவரும்‌ போது நமது முதலியாரவர்கள்‌, **பட்டம்‌ பதவியுடைய வர்கள்‌ அவைகளை விட்டுவிடுவார்கள்‌ என்று எதிர்பார்த்தேன்‌. அவர்கள்‌ விடாததால்‌ இத்தீர்மானம்‌ கொண்டு வந்தேன்‌”” என்று சொன்னதோடு ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருக்கு எழுதிய பகிரங்கக்‌ கடிதத்தில்‌, “இப்பொழுது நாம்‌ வழ வழவென்று இருப்போமாயின்‌ பின்னால்‌ வருந்த நேரும்‌. இப்பொழுதே எச்சரிக்கையாயிருத்தல்‌ வேண்டும்‌. கட்டுப்‌ பாடுகளை தளர விட விட நமது கட்சியின்‌ ஆக்கங்குன்றுவது திண்ணம்‌. காங்கிரசில்‌ ஒத்துழைப்பு நுழையாத வாறு காத்தல்‌ வேண்டுமென்னுங்‌ குறி யோடு தங்களுடன்‌ சேர்ந்து உழைக்கின்றேனேயன்றி வேறு எக்‌ குறியோடும்‌ உழைக்கிறே வில்லை” என்று வீர உரை நிகழ்த்திய நமது ஸ்ரீமான்‌ முதலியார்‌ வழ வழத்ததும்‌, எச்சரிக்கை யற்றதும்‌, கட்டுப்பாடுகளைத்‌ தளர விட்டதும்‌ தமது கட்சியின்‌ ஆக்கங்குன்றக்‌ கூடியதும்‌ காங்கிரசில்‌ ஒத்துழைப்பு நுழையும்‌ படியான தீர்மா னத்தை ஒப்புக்கொண்டதும்‌, பட்டத்தை இழித்துக்‌ கூறியவர்‌, பட்டதாரி களையும்‌ நியமனதாரிகளையும்‌ உடைய அமைப்பிற்குத்தான்‌ ஒரு பிரதான அதாவது, தேர்தல்‌ வேலைக்கு ஏற்பாடு செய்யவும்‌ அவற்றை மேற்பார்வை பார்க்கவும்‌ நியமிக்கப்பட்ட கமிட்டி அங்கத்தினராகவும்‌ இருக்க ஒருப்பட்ட தின்‌ இரகசியம்‌ நமக்கு விளங்கவில்லை. இனி அவர்‌ எக்குறியோடு அய்யங்காருடன்‌ சேர்ந்துழைக்கிறார்‌ என்பதும்‌ நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ தான்‌ ஏற்றுக்கொண்ட திருத்தத்தில்‌ தனது மேற்கண்ட கருத்து முழுவதும்‌ பொலிந்து விளங்கக்‌ காண்கின்றாரோ என்பதும்‌ நமக்கு விளங்கவில்லை. எனினும்‌ சீக்கிரத்‌ திலாதல்‌ தெரிந்துவிடுமென்றே நினைக்கின்றோம்‌. இரண்டாவதாக, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகாரின்‌ இராஜினாமா வைப்‌ புனராலோசனைக்குத்‌ திருப்பி அனுப்பப்பட்டதென்றும்‌ அறிகி றோம்‌. ஸ்ரீமான்‌ முதலியாரின்‌ பிரேரேபணையின்‌ பேரில்‌ பிறந்த விநோத மான திருத்‌ தத்தை அவர்‌ ஒப்புக்கொண்டது போலவே டாக்டர்‌ நாயுடுகா ரின்‌ இராஜினாமாவும்‌ வாபீஸ்‌ வாங்கிக்‌ கொள்ளப்படுமென்றே நினைக்‌ கிறோம்‌. ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியின்‌ தீர்மானத்தையே ஸ்ரீமான்‌ முதலியார்‌ ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டிருக்கும்போது, ஸ்ரீமான்‌ சத்திய மூர்த்தி கொஞ்ச நாளாய்‌ டாக்டர்‌ நாயுடுகாரின்‌ பக்கத்திலேயே இருப்பதால்‌ இராஜினாமாவை வாபஸ்‌ பெறும்படி நேருவது முடியாத காரியம்‌ என்ப தாகத்‌ தோன்றவில்லை. இதைப்‌ பற்றியும்‌ பல திறப்பட்ட வர்த்தமானங்கள்‌ அடி பட்டுக்‌ கொண்டிருக்கின்றன. முடிவைப்‌ பொறுமையோடு எதிர்பார்ப்‌ போம்‌. மூன்றாவதாக, ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கரை தூக்கில்‌ போட குடி அரசு - 1926 (2) 26 ஒரு தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது, “ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ காங்கிரசுக்கு விரோதமான பிரசாரம்‌ செய்து வருவதால்‌ அவரை காங்கிரஸ்‌ காரியக்‌ கமிட்டியிலிருந்து விலக்க வேண்டும்‌” என்று தீர்மானங்‌ கொண்டு வரப்பட்டது. இது ஸ்ரீமான்கள்‌ ஒரு பாவலரால்‌ பிரேரேபிக்கப்பட்டு, ஒரு சாயுபினால்‌ ஆமோதிக்கப்பட்டு, ஒரு முதலியாரால்‌ ஆதரிக்கப்பட்டு, ஒரு பிள்ளையால்‌ தூங்கப்பட்டது. ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ மீது கண்டனத்‌ தீர்மானம்‌ கொண்டு வந்திருப்‌ பதைப்‌ பற்றி நமக்குக்‌ கவலையில்லை. இந்த விஷயத்திலாவது நமது அய்யங்கார்கள்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுத்தார்களே; அதுவே நமக்கு மிகவும்‌ சந்தோஷம்‌. ஆனால்‌ இத்தீர்மானத்தை ஆமோதித்தல்‌ ஆதரித்தல்‌ விஷயத்தில்‌, ஒரு பார்ப்பனருக்கும்‌ இதில்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைக்காமல்‌ போனது பற்றியே வருத்தப்படுகிறோம்‌.இதுவும்‌ அவர்களா கவே வேண்டா மென்று சொல்லியிருப்பார்களே ஒழிய ஆசைப்பட்டிருந்‌ தால்‌ கிடைக்காமல்‌ போயிருக்காது. ஆனாலும்‌ தீர்மானத்தின்‌ நிலை என்ன வாயிற்று என்று பார்த்தால்‌, அது அடியோடு ஒழியும்‌ நிலையில்‌ இருந்ததால்‌ மிகத்‌ தந்திரமாய்‌ ஒரு செட்டியாரை திருத்தம்‌ கொண்டுவரச்‌ செய்து, ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அக்கமிட்டியே விசாரித்து அறிக்கையனுப்பத்‌ தீர்மானித்திருப்பதாய்த்‌ தெரிகிறது. அக்‌ கமிட்டியிலாதல்‌ பார்ப்பனருக்குப்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைத்‌ திருக்கிறதென்பதை அறிந்து சந்தோஷிக்கிறோம்‌. ஆனால்‌ பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திரனி”ல்‌ அக்கமிட்டிக்கே நாயக்கரை தூக்கில்‌ போடும்‌ உரிமையும்‌ அளித்திருப்பதாய்க்‌ காணப்படு கிறது. இதன்‌ முடிவை ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ - முதலாவது சார்லஸ்‌ , வாரன்‌ ஹேஸ்‌ டிங்ஸ்‌, லார்டு கிளைவ்‌ இவர்களில்‌ எவருக்காவது ஏற்பட்டது போல்‌ நடக்குமோ அல்லது ருஷியா சக்கிரவர்த்தியான ஜார்‌ சக்கிர வர்த்திக்கு நேர்ந்ததைப்‌ போல்‌ நடக்குமோ என்பதைத்‌ துணிவுடன்‌ எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருக்‌ கிறாரேயல்லாமல்‌ இந்தூர்‌ அரசர்‌ போல்‌ கமிட்டிக்குப்‌ பயந்து கொள்ளவில்லை என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. ஏனெனில்‌, இவ்வய்யங்கார்களுக்கு நல்ல பிள்ளையாகி அவர்கள்‌ பின்னால்‌ திரிந்து உயிர்‌ வாழ்வதைக்‌ காட்டிலும்‌ அவர்களால்‌ **சிலுவையில்‌ அறையப்படுவதையே”” மேல்‌ எனக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 04.07.1926. 27 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 B flfsfifl”fl'fl' o e சென்ற இதழ்‌ “குடி அரசி£ல்‌ திரு.டி.எ. இராமலிங்கம்‌ செட்டியார்‌. அவர்கள்‌ சுயராஜ்யக்‌ கட்சியிலிருந்து விலகுகிறார்‌ என்பதாக வரைந்திருந்த விஷயத்தை வாசகர்கள்‌ கண்ணுற்றிருக்கலாம்‌. அதைப்‌ பார்த்தவுடன்‌ பார்ப்ப னர்‌ கக்ஷியாய சுயராஜ்யக்‌ கட்சிக்குப்‌ பேராபத்து வந்து விட்டதெனக்‌ கருதி “குடி அரசின்‌ கட்டுக்கதை - ஸ்ரீமான்‌ இராமலிங்க செட்டியாரின்‌ மறுப்பு” என்ற தலைப்பில்‌ “சுதேசமித்திரன்‌” ஒரு மறுப்பு எழுதியிருக்கிறது. அதில்‌ திரு.டி.எ.இராமலிங்கம்‌ செட்டியாரவர்கள்‌ “மித்திரன்‌” நிரூபரி. டம்‌ கூறுவதாக எழுதியிருக்கும்‌ விஷயங்களைக்‌ கவனித்துப்‌ பார்த்தால்‌ “குடி அரசு” விஷயம்‌ கட்டுக்கதையா, “சுதேசமித்திரன்‌” விஷயம்‌ அயோக்கியத்‌ தனமா என்பது புலனாகும்‌. திரு. செட்டியார்‌ மறுபடி கூறுவதாவது:- “என்னுடைய அபிப்பிராயம்‌ எதுவும்‌ மாறவில்லை. நான்‌ சுயராஜ்யக்‌ கட்சி அங்கத்தினராக இருந்ததே இல்லை. “பார்ப்பன ரல்லாத கட்சி” என்பது ஜஸ்டிஸ்‌ கட்சியைக்‌ குறிப்பிடுவதானால்‌ அதன்‌ சார்பாக நான்‌ தேர்தலுக்கு நிற்கப்‌ போவதாக எவரிடமும்‌ சொல்லவே யில்லை.உத்தியோகங்களை ஏற்றுக்‌ கொள்ளுவதன்‌ சம்பந்தமாக நான்‌ எவ்வித அபிப்பிராயம்‌ கொண்டி ருக்கிறேன்‌ என்பது எல்லோருக்கும்‌ தெரிந்ததே. உத்தியோகம்‌ ஏற்றுக்கொள்‌ ளும்‌ விஷயத்தில்‌ வைதீக காங்கிரஸ்காரர்களுக்கும்‌ (தங்கள்‌! தேசீயக்‌ கட்சி யினருக்கும்‌ அபிப்‌ பிராய பேதமிருந்த போதிலும்‌ நாட்டில்‌ ஒற்றுமை ஏற்பட வேண்டு மென்னும்‌ நோக்கத்துடன்‌ காங்கிரஸ்‌ அபேக்ஷகர்களாக நிற்க சம்மதித்‌ தோம்‌. பகிஷ்காரத்‌ தீர்மானங்களை வாபீசு வாங்கிக்‌ கொண்டு நாடு சட்ட மறுப்புக்குத்‌ தயாராயில்லாததால்‌ அதை ஆரம்பிப்பதில்லை என்று காங்கிரஸ்‌ தீர்மானம்‌ செய்ததால்‌ இதற்கு நாங்கள்‌ கட்டுப்பட முடிந்தது. இதன்‌ பிறகு நாட்டின்‌ கட்சிகளின்‌ நிலைமையும்‌ தனிப்பட்ட நபர்களின்‌ அபிப்பிராயமும்‌ அடிக்கடி மாறி வருவதால்‌ தேசீயவாதி கள்‌ (தாங்கள்‌) அடிக்கடி தங்‌ கள்‌ நிலைமையைப்‌ பரிசீலனை செய்ய உரிமை பெற்றிருக்கிறார்கள்‌. தேசீயவாதிகளில்‌ சிலர்‌ பரஸ்பர ஒத்து ழைப்பு மனோபாவம்‌ கொண்டவர்கள்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. தேசியவாதிகள்‌ (தாங்கள்‌ ஜுலை மாதம்‌ சட்டசபைக்‌ கூட்டக்காலத்தில்‌ கூடி யோசனை செய்யும்‌ வரையில்‌ தற்கால ராஜீய நிலைமை சம்பந்தமாக எப்படி நடந்து கொள்வார்களென்று தற்பொழுது குடி அரசு - 1926 (2) 28 கூறமுடியாது” என்று இவ்வாறு திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌ சொன்னதாக எழுதி யிருக்கிறது. “மித்திரன்‌” நிரூபர்‌ எழுதியதில்‌ எவ்வளவு புரட்டு பித்தலாட்டம்‌ இருக்கும்‌ என்பதை மறந்து, “மித்திரன்‌” கூற்றை அப்படியே எடுத்துக்‌ கொண்டு பார்ப்போம்‌. திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌ சுயராஜ்யக்‌ கட்சியை விட்டு விலகி விட்டதாக திரு. செட்டியார்‌ சொன்னார்‌ என்று “குடி அரசு' நிரூபரிடம்‌ திரு. வெரிவாட செட்டியார்‌ கூறியதாக “குடி அரசு” எழுதுகிறது. ஆனால்‌ திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌ தான்‌ ஒரு நாளும்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேரவே யில்லை என்று சொன்னதாக மித்திரன்‌ நிரூபர்‌ எழுதியிருப்பதாக “மித்திரன்‌” பிரசுரித்திருக்கிறது. இவ்விரண்டிற்கும்‌ உள்ள வித்தியாசம்‌ என்ன? பின்னும்‌. திரு செட்டியார்‌ சொன்னதிலிருந்து இதுவரை சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனர்கள்‌. தங்கள்‌ கட்சியில்‌ திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌, திரு. வெள்ளியங்கிரி கவுண்டர்‌ முதலியவர்கள்‌ சேர்ந்திருப்பதாய்‌ சொல்லிக்கொண்டது முழுப்‌ பொய்யென்று இப்போது விளங்குகிறது. கோபியில்‌ திரு. நாயக்கர்‌ பேசும்‌ போது சுயராஜ்யக்‌ கட்சியில்‌ வகுப்பு நன்மையைக்‌ கவனிக்காத யோக்கிய மான பார்ப்பனரல்லாதார்‌ யாராவது இருக்கிறார்களா என்று கேட்ட போது, உடனே ஒரு ஐயங்காரும்‌ ஒரு ஐயரும்‌ எழுந்து திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌. இருக்கிறாரே அவர்‌ யோக்கியமானவரல்லவா என்று கேட்டார்‌ கள்‌. அதற்கு திரு.நாயக்கரவர்கள்‌ ““உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொள்ளும்‌ நிபந்தனையின்‌ பேரிலேயேயிருக்கிறார்களேயல்லாமல்‌ சுயராஜ்யக்‌ கட்சி நிபந்தனையின்படி இல்லை” யென்றும்‌ இதை செட்டியாரே தன்னிடம்‌ கூறியிருப்பதாகவும்‌ கூறினார்‌. அதுவும்‌ இப்போது ருஜுவாகி விட்டது. தவிர திரு இராமலிங்கம்‌ செட்டியார்‌ பார்ப்பனரல்லாதார்‌ சார்பாய்‌ சட்ட சபைக்கு நிற்கப்‌ போவதாய்ச்‌ சொன்னதாக அறிகிறோம்‌ என்று “குடி அரசில்‌ எழுதியிருக்கிறது. அதற்குப்‌ பதிலாக பார்ப்பனரல்லாதார்‌ கட்சி என்று ஜஸ்டிஸ்‌ கட்சியைச்‌ சொல்லுவதானால்‌ மாத்திரம்‌ பார்ப்பனரல்லாதார்‌ சார்பாய்‌ தேர்தலுக்கு நிற்பதாய்‌ சொல்லவில்லையென்றே சொல்லுகிறார்‌. இதனால்‌ “ஜஸ்டிஸ்கட்சி”யல்லாத பார்ப்பனரல்லாத கட்சியின்‌ சார்பாக நிற்பதாய்ச்‌ சொன்னதாக நன்றாய்‌ வெளியாகிறது. ஒரு சமயம்‌ தஞ்சையில்‌ கூடிய தேசீயப்‌ பார்ப்பனரல்லாதார்‌ சார்பாக நிற்பதாய்‌ வைத்துக்‌ கொண்டா லும்‌ “குடி அரசு'க்கு இது “மறுப்பு” என்பதாய்‌ எழுதக்‌ காரணமேயில்லை. திரு.டி.எ. இராமலிங்கம்‌ செட்டியார்‌ பார்ப்பனரல்லார்‌ கட்சியின்‌ சார்‌. பாக நிற்பதாகவே திரு. வெரிவாட செட்டியார்‌ “குடி அரசு” பிரதிநிதியிடம்‌ சொல்லியிருக்கிறாரே தவிர ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ சார்பாக நிற்பதாகச்‌ சொன்னார்‌ என்று எழுதவேயில்லை. தவிர திரு. சீனிவாசய்யங்கார்‌ உடன்படிக்கைப்படி நடந்து கொள்வார்‌: 29 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 என்கிற நம்பிக்கை தனக்கு (டி.எ.இரா.செட்டியாருக்கு இல்லை என்று சொன்ன தாக நமது பிரதிநிதி எழுதியிருக்கிறார்‌. திரு. இராமலிங்கம்‌ செட்டியாரும்‌ அதை ஒப்புக்‌ கொள்ளுகிறார்‌. அதாவது நாட்டில்‌ கட்சிகளின்‌ நிலைமையும்‌ தனிப்பட்ட நபர்களின்‌ அபிப்பிராயமும்‌ மாறி வருகின்றன. ஆதலால்‌ தேசீய வாதிகளும்‌ ( அதாவது தாங்களும்‌) தங்கள்‌ நிலைமையை ஜாக்கிரதைப்‌ படுத்திக்‌ கொள்ள உரிமை உண்டு என்று சொன்னதாக நிரூபர்‌ எழுதுகிறார்‌. என்று “மித்திரன்‌” எழுதுகிறது. திருவெரிவாடச்‌ செட்டியாரிடம்‌ திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌ “ஐயங்‌ கார்‌ ஒப்பந்தப்படி நடந்து கொள்ளுவார்‌ என்று நம்ப முடியாமலிருப்‌ பதால்‌” என்று சொன்னதாக *குடி அரசு” பிரதிநிதி எழுதுகிறார்‌. ஆனால்‌ திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌ “மித்திரன்‌” நிரூபரிடம்‌ “தனிப்பட்ட நபர்‌ களின்‌ அபிப்பிராயம்‌ அடிக்கடி மாறி வருகின்றன” என்றே சொல்லி விட்டார்‌. இதனால்‌ ஐயங்கார்‌ பேச்சுப்படி நடப்பார்‌ என்று நம்பமுடிய வில்லை என்பதற்கும்‌ ஐயங்கார்‌ மாறிவிட்டார்‌ என்பதற்கும்‌ உள்ள வித்தியாசம்‌ என்ன என்று பார்த்தால்‌ திரு. இராமலிங்கம்‌ செட்டியார்‌ திரு. வெரிவாடச்‌ செட்டியாரிடம்‌ சொன்னதைப்‌ பார்க்கிலும்‌ “மித்திரன்‌” நிரூபரி டம்‌ இன்னும்‌ கொஞ்சம்‌ பலமாகவே சொல்லிவிட்டார்‌. “தனிப்பட்ட நபர்‌” என்பது ஐயங்காரைக்‌ குறிக்குமா என்பது கேள்வி. ஐயங்காரைத்‌ தவிர வேறு தனிப்பட்ட நபரைப்‌ பற்றி செட்டியார்‌ கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை. செட்டியாருக்கும்‌ பொறுப்‌ பான தனிப்பட்ட நபர்‌ ஐயங்கார்தான்‌. ஆதலால்‌ “குடி அரசுக்கு மறுப்பு என்றும்‌ “குடி அரசு” கட்டுக்‌ கதை” யென்றும்‌ பார்ப்பனப்‌ பத்திரிகையான “மித்திரன்‌” எழுதி பொது ஜனங்களை ஏமாற்றுவது எவ்வளவு அயோக்கியத்‌ தன மென்பதை வாசகர்‌: களே உணரும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்‌. ஆகவே திருஇராமலிங்கம்‌ செட்டியார்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ இல்லை யென்பதை “சுதேசமித்திர”னாலேயே உறுதி செய்யப்பட்டதற்கு வாசகர்கள்‌ மகிழ்வார்களென்றும்‌ திரு.இராமலிங்கம்‌ செட்டியராவர்களிடம்‌ பார்ப்பன ரல்லாதாருக்கிருந்த அதிருப்தி மாறியிருக்கு மென்றும்‌ நினைக்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 04.07.1926. குடி அரசு - 1926 (2) 30 திரு. சக்கரையும்‌ திரு. ஆரியாவஷம்‌ - சித்திரபுத்திரன்‌ திரு சக்கரைச்‌ செட்டியார்‌ அவர்கள்‌ ஹிந்துவாயிருந்து கிறிஸ்துவராக மதம்‌ மாறியவர்‌; அவர்‌ சென்னை திருவாளர்கள்‌ ஒ.தணிகாசலம்‌ செட்டியார்‌, ஒகந்தசாமி செட்டியார்‌ ஆகியவர்களுக்கு நெருங்கின உறவினராயிருந்தவர்‌. பி.ஏ.பி.எல்‌.பட்டம்‌ பெற்ற வக்கீல்‌.1906-ல்‌ அதாவது ஏறக்குறைய 20 வருஷங்‌ களுக்கு முன்னிருந்தே அரசியல்‌ துறையில்‌ இறங்கினவர்‌. வங்காளப்‌ பிரிவினையின்‌ காரணமாக இந்தியா வெங்கும்‌ ஏற்பட்ட “சுதேசி”க்‌ கிளர்ச்சி யின்‌ போதே திரு. சக்கரைச்‌ செட்டியாரும்‌ திரு. சுரேந்திரநாத்‌ ஆரியாவும்‌ சென்னை மாகாணத்தில்‌ - தமிழ்நாட்டில்‌ - மேடை மீதேறி தைரியமாய்ப்‌ பிரசங்கம்‌ செய்த பார்ப்பனரல்லாத வீரர்கள்‌. தேசத்தின்‌ உழைப்பிற்காகவும்‌, உழைத்ததின்‌ பலனாகவும்‌, தங்கள்‌ தங்கள்‌ வரும்படிகளை விட்டவர்கள்‌. உண்மைத்‌ தேசாபிமானம்‌ என்பது இவ்விரு கனவான்களுக்கும்‌ இல்லா திருந்து பார்ப்பனர்கள்‌ போலும்‌ மற்றும்‌ இரண்டொரு பார்ப்பனரல்லாதாரைப்‌ போலும்‌ வயிற்றுப்‌ பிழைப்பு தேசாபிமானிகளா யிருந்திருந்தால்‌ திரு. சக்கரைச்‌ செட்டியார்‌ வயிற்றுப்‌ பிழைப்பு தேசாபிமானத்தால்‌ ஜட்ஜி ஸ்தானம்‌ பெற்ற பார்ப்பனர்களுக்கு முன்னாலேயே, ஹைக்கோர்ட்‌ ஜட்ஜியாக இருப்‌ பார்‌. அதுபோலவே திரு.ஆரியாவும்‌ மாதம்‌ ஒன்றுக்கு 51000, 1500 சம்பாதிக்‌ கும்‌ உத்தியோகத்தில்‌ இருப்பார்‌. திரு.ஆரியா அவர்கள்‌ தனது உத்தியோ கத்தை விடுங்‌ காலத்தில்‌ மாதம்‌ 700 ரூபாய்‌ சம்பளமும்‌ 300 ரூபாய்‌ படியும்‌ வாங்கிக்‌ கொண்டிருந்தவர்‌. இருவரும்‌ தேச நன்மையின்‌ பொருட்டு இங்கி லாந்து முதலிய ஐரோப்பிய நாட்டிற்குச்‌ சென்று அரசியல்‌ இயக்கங்களின்‌ போக்கை அறிந்து வந்தவர்கள்‌. இன்னும்‌ திரு. ஆரியா அவர்கள்‌ மாதம்‌ ஒன்றுக்கு 150 ரூபாய்‌ வாடகை பங்களாவில்‌ குடி இருக்கிறார்‌. அவரது பங்களாவிலுள்ள பூச்செடி களுக்குத்‌ தண்ணீர்‌ வார்க்க 34 ஆள்களை வைத்திருக்கிறார்‌. ஐரோப்பியர்‌ முறையில்‌ தனது வாழ்க்கையை நடாத்துகிறார்‌. அவரது மனைவியார்‌ ஐரோப்பாவில்‌ வாசித்துக்‌ கொண்டிருக்கிறார்‌. ஜெயில்‌ என்றால்‌ பொது ஜனங்கள்‌ பயந்து நடுங்கின காலத்தில்‌ சுமார்‌ 20 வருஷம்‌ கடின காவல்‌ தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு பல காரணங்‌ 31 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. களால்‌ அத்‌ தண்டனைகள்‌ குறைந்து, ஐந்து வருஷ காலத்திற்குக்‌ குறையாமல்‌ கடினக்‌ காவல்‌ தண்டனை அடைந்தவர்‌; ஜெயிலில்‌ மாவு அரைத்தவர்‌: தோட்ட வேலை செய்தவர்‌. திரு.சக்கரைச்‌ செட்டியார்‌ தண்டனை அடைய வில்லையானாலும்‌ ஏறக்குறைய திரு. ஆரியாவைப்‌ போலவே சுக போகத்‌ திலிருந்தவர்‌. இவ்வாறு பீடும்‌ பெருமையோடிருந்த இவ்விருவர்கள்‌ நிலைமையும்‌ ஐயங்கார்‌ ராஜியத்தில்‌ எப்படி மதிக்கப்படுகிறது என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. அப்பொழுதுதான்‌, பார்ப்பனரல்லாத ராஜீயவாதிகள்‌ பார்ப்ப னரைக்‌ கண்டால்‌ ஏன்‌ பயப்படுகிறார்கள்‌? ஏன்‌ குட்டிக்கரணம்‌ போடுகி றார்கள்‌? என்பது வெளியாகும்‌. பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரிடையாய்‌ தீவிர தேசீயவாதிகளானடாக்டர்‌ நாயர்‌, சர்‌.தியாகராயச்‌ செட்டியார்‌ ஆகியவர்‌. களால்‌ காணப்பெற்ற ஜஸ்டிஸ்‌ கட்சியென்னும்‌ பார்ப்பனரல்லாதாரியக்கத்தை ஒழிக்கப்‌ பார்ப்பனர்களால்‌ உண்டாக்கப்பட்ட சூழ்ச்சிக்கு அனுகூலமாக, பார்ப்பனரல்லாதாரிலேயே சிலர்‌ வேண்டுமென்று பார்ப்பனர்களால்‌ போடப்‌ பட்டவலையில்‌ திருவாளர்கள்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌, டாக்டர்‌. வரதராஜுலு நாயுடு முதலியவர்கள்‌ சிக்கினது போலவே நமது சக்கரைச்‌ செட்டியாரும்‌ அதில்‌ அகப்பட்டுக்‌ கொண்டதோடல்லாமல்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியைத்‌ தூற்றும்‌ வேலையைத்‌ திரு.முதலியாரும்‌, டாக்டர்‌ நாயுடுகாரும்‌ தமிழ்நாட்டோடு - தமிழ்‌ மக்களிடத்தோடு - நின்றார்கள்‌. ஆனால்‌ திரு. சக்கரைச்‌ செட்டியாரோ இந்தப்‌ பார்ப்பனர்களுக்காக இந்தியாவை விட்டு ஐரோப்பியா தேசம்‌ போய்‌ லண்டன்‌ பட்டணத்திலுள்ள ஆங்கிலேய மக்கள்‌. வரை சென்று பாடுபட்டவர்‌. இப்படிப்பட்டகனவான்களான திருசக்கரைச்‌ செட்டியார்‌ திரு.ஆரியா ஆகிய இருவர்களையும்‌ “நன்றியறிதலுள்ள” பார்ப்பனர்கள்‌ என்ன செய்தார்‌. கள்‌ என்பது நமதருமைத்‌ தமிழ்‌ மக்கள்‌ கொஞ்சம்‌ அறிய வேண்டாமா? திரு. ஆரியா அவர்களைக்‌ காங்கிரசிலிருந்து தீர்மான மூலமாய்‌ வெறுட்டுவதோடல்லாமல்‌, காலிகளை விட்டு உதைக்கும்படியும்‌ செய்தார்‌. கள்‌. திரு.சக்கரைச்‌ செட்டியாரைப்‌ பற்றியோவென்றால்‌ சென்னைக்‌ கார்ப்ப ரேஷனில்‌ பார்ப்பனர்கள்‌ ஸ்தானம்‌ பெறும்‌ வரை திரு. செட்டியாரை: சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவராய்‌ வைத்து, ஏழை ஓட்டர்களை ஏமாற்றிப்பார்ப்ப னர்‌ கார்ப்பரேஷனுக்கு வரும்படிசெய்து, அவர்கள்‌ உள்ளே வந்தவுடன்‌ திரு. சக்கரையை சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவர்‌ பட்டத்திலிருந்து தள்ளி அந்த ஸ்தானத்தை பாஷ்யம்‌ ஐயங்கார்‌ என்கிற ஒரு பார்ப்பனருக்குப்‌ பட்டம்‌ கட்டி, திரு.சக்கரைக்கு வாக்களித்திருந்த கார்ப்பரேஷன்‌ தலைவர்‌ பதவியையும்‌ அவருக்குக்‌ கொடுக்காமல்‌ மோசம்‌ செய்ததோடல்லாமல்‌, அடியோடு ராஜீய வாழ்விலிருந்தே அவரை டிஸ்மிஸ்‌ நீக்கி) செய்து விட்டார்கள்‌. இதன்‌ காரணம்‌ என்ன? அடிக்கடி புது ஆட்களைச்‌ சேர்த்தால்‌ தான்‌ இவர்கள்‌ காலைக்‌ கழுவிக்‌ கொண்டே இருக்க சம்மதிப்பார்கள்‌. பழய ஆட்கள்‌. குடி அரசு - 1926 (2) 32 கொஞ்ச நாள்‌ போய்விட்டால்‌ இவர்கள்‌ யோக்கியதையை அறிந்து கொள்ளுகிறார்கள்‌. ஆதலால்‌ பழய ஆட்களைக்‌ கொஞ்சமும்‌ வைத்திருக்க மாட்டார்கள்‌. உதாரணமாக, இப்போது புதிதாய்‌ வலை போட்டுப்‌ பிடித்‌ திருக்கும்‌ ஆட்களின்‌ பெயர்களைப்‌ பார்த்தாலே தெரியவரும்‌. இனி தமிழ்நாட்டுக்கு உண்மையான யோக்கியன்‌, தேசபக்தன்‌, சமூக பக்தன்‌ யாரென்று நாம்‌ அறிய வேண்டுமானால்‌ இந்தப்‌ பார்ப்பனர்களால்‌ கண்டனத்‌ தீர்மானம்‌ பெற்றவர்களும்‌, உதைபட்டவர்களும்‌, பார்ப்பனக்‌ காங்கிரசிலிருந்து டிஸ்மிஸ்‌ (தள்ளுபடி) செய்யப்பட்ட பார்ப்பனரல்லா தார்களுமேயாவார்கள்‌. மேற்படி குணங்களுக்கு எதிரிடையானவர்கள்‌ யார்‌: என்று கண்டுபிடிக்க வேண்டுமானால்‌ நமது பார்ப்பனர்களால்‌ பூஜிக்கப்பட்ட வர்களேயாவார்கள்‌. எது போலென்றால்‌, ராஜீய காரணங்களுக்காக நமது சர்க்காரால்‌ தண்டிக்கப்பட்டவன்‌ தேசபக்தர்கள்‌ என்று சொல்லுவதும்‌ சர்க்கா ரால்‌ பெரிய பட்டங்களும்‌ பதவிகளும்‌ அடைந்தவர்களை தேசத்‌ துரோகிக ளென்று சொல்லுவது போலவேயாகும்‌. அல்லாமலும்‌ காட்டில்‌ கிடக்கும்‌ கல்லை சாமியாக்குவதற்கு நமது பார்ப்பனர்களுக்கு சக்தியிருப்பது போலவே தெருவில்‌ ஓட்டுப்‌ பொறுக்கும்‌ அன்னக்காவடிகளை தேசபக்தர்களாக்குவதற்கும்‌ நமது பார்ப்பனர்களுக்கு சக்தியிருக்கிறது. ஆதலால்தான்‌ பழய “தலைவர்கள்‌” கழிபடுவதற்கு முன்னா லேயே அந்தப்‌ பட்டத்திற்கு ஆள்கள்‌ விண்ணப்பம்‌ போட்ட வண்ணமாயி ருக்கிறார்கள்‌. இதையெல்லாம்‌ பார்க்கும்போது நமது ஐயங்கார்‌ கோஷ்டிக்கு இப்போது ஆனந்தத்தைத்‌ தரத்தக்கதாயிருந்தாலும்‌ இதன்‌ பலன்‌ கடைசியில்‌ கல்கத்தா ஹிந்து முஸ்லீம்‌ ஒற்றுமையைப்‌ போல்‌ விளைந்துவிடுமோவென நம்மைக்‌ கவலைப்படச்‌ செய்கிறது. இயற்கை தேவியின்‌ திருவிளையாடல்‌ களை நாம்‌ எப்படி அறிய முடியும்‌? குடி அரசு - கட்டுரை - 04.07.1926 33 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. முன்னர்‌ காலஞ்சென்ற திரு. அயோத்திதாஸ்‌ பண்டிதரவர்களால்‌ “*தமிழன்‌”” என்னும்‌ பெயர்‌ கொண்ட பத்திரிகை நடாத்தப்‌ பெற்று அவர்‌ காலத்திற்குப்‌ பின்னர்‌ அப்‌ பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம்‌ மற்றொருவரால்‌ நடாத்தப்‌ பெற்றது. அதன்‌ பிறகும்‌ ஆதரிப்பா ரற்று நின்று போயிற்று. மீண்டும்‌ இப்பொழுது சாம்பியன்‌ ரீப்ஸ்‌, கோலார்‌. தங்கவயல்‌ சித்தார்த்த புத்தகசாலை வைத்திருக்கும்‌ திரு. பி. எம்‌. இராஜ ரத்தினம்‌ அவர்களால்‌ ஜுலை மாத முதல்‌ வெளியிடப்படுமென தெரிவிக்‌ கப்படுகிறோம்‌. திரு. இராஜரத்தினம்‌ அவர்களின்‌ நிர்வாகத்‌ திறமையால்‌ நன்கு நடைபெறுமென நம்புகிறோம்‌. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 04.07.1926 34 குடி அரசு - 1926 (2) அஅயணு அனி-மி 2-௨. மடு ்‌ குட அரசு. 1 அன்னு HERERRIE T 2 5, ர்க்ஷ்‌ வரப்‌ e et e iy SN யக et நத E: = B - சத்தம வேத dinsan gy Gutins ன்ட்‌ ன்‌ குத்த, டக்‌ § g இதன்‌ [ அயன்‌ மஹா நூலிகை சந்தனாஇ தைல. 5 கோயமுத்தார்‌ ஷண்மத கொண்க | முத்தா உடனான மெண்க்காள்களு்ும்‌ உணின்‌ ueaminh, Wik, ஜட்ஜுகள்‌ குதலியோர்‌ பலரும்‌ உபயோமிற்று வருகஸ்தன்‌. பரிமள மணமும்‌ சிறந்த குண முடையது. LS, வேட 0 [ன ன்‌, பிட்ட ஆண்ட வட்ட ல தது Cpnicarde s, ர்‌ பாலானது அமத கை லான கோறு்கில்‌ 35 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 இந்து முஸ்லீம்‌ அயிப்பிராய பேதங்களும்‌ ககைங்களும்‌ ஏற்படக்‌ காரணம்‌ எண்ண? தேசத்தின்‌ விடுதலைக்காகவென்றும்‌ சுதந்திரத்திற்காகவென்றும்‌ படித்த வகுப்பார்களால்‌ பார்ப்பனர்களால்‌) கிளர்ச்சி ஏற்படும்‌ போதெல்லாம்‌. இந்து முஸ்லீம்‌ கலவரங்களும்‌ அபிப்பிராய பேதங்களும்‌ ஏற்படாமலிருப்ப தில்லை. ஆனால்‌ மகாத்மா காந்தியின்‌ தலைமையின்‌ கீழ்‌ ஏற்பட்டிருந்த ஒத்துழையாமையின்போது மாத்திரம்‌ கலவரமும்‌ அபிப்பிராய பேதமும்‌ இல்லாமல்‌ இருந்ததோடல்லாமல்‌ நாம்‌ அறிய இதுவரை நமதுநாட்டில்‌ ஏற்பட்‌. டிராத இந்து முஸ்லீம்‌ பரஸ்பர நம்பிக்கையும்‌ அபிப்பிராய பேத மின்மையும்‌ ஒற்றுமையும்‌ சகோதரத்‌ தன்மையும்‌ தலைசிறந்து விளங்கிற்று. ஆனால்‌ இதற்கு சில பொறுப்பற்றவர்கள்‌, அது சமயம்‌ மகமதியர்‌ களுக்குக்‌ கிலாபத்‌ சங்கடம்‌ இருந்ததால்‌ அவர்கள்‌ இந்துக்களோடு ஒத்திருந்‌ தார்கள்‌ என்ற உள்‌ எண்ணம்‌ கற்பிக்கிறார்கள்‌. அதற்கு ஒரு சிறிதும்‌ ஆதார மில்லை என்றே சொல்லுவோம்‌. ஒத்துழையாமை மகாத்மாவினால்‌ அமுலில்‌ ஆரம்பிக்கும்‌ காலத்திலேயே கிலாபத்து விஷயம்‌ பெரும்பாலும்‌ முடிவ டைந்து விட்டது. அதோடு துருக்கி நாட்டில்‌ கமால்‌ பாஷாவின்‌ ஆதிக்கம்‌ ஏற்பட்ட தும்‌ கிலாபத்து விஷயம்‌ வெளிநாட்டு மகமதியர்களால்‌ கைவிடப்பட்டும்‌ போய்‌ விட்டது. ஆகவே, மகமதியர்கள்‌ அந்த எண்ணம்‌ கொண்டே இந்துக்‌ களோடு கலந்திருந்தார்கள்‌ என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க ஒத்து ழையாமையின்‌ போது மாத்திரம்‌ ஏன்‌ தேசத்தில்‌ இந்து முஸ்லீம்‌ ஒற்றுமை ஏற்பட்டது. மற்ற காலங்களில்‌ ஏன்‌ கலவரமேற்படுகிறது என்று ஒவ்வொரு இந்து முஸ்லீமும்‌ யோசித்துப்‌ பார்த்தால்‌ விளங்காமல்‌ போகாது. படித்த வர்கள்‌ என்று சொல்லப்படும்‌ வகுப்பினரான பார்ப்பனரும்‌ மற்றையோரும்‌ தேசியக்‌ கிளர்ச்சி என்கிற பெயராலும்‌ காங்கிரஸ்‌ என்னும்‌ பெயராலும்‌ செய்து வந்த காரியங்களெல்லாம்‌ தன்‌ வகுப்பாரின்‌ சுய நன்மையைக்‌ கோரியும்‌ அதில்‌ கலந்த மற்றவர்களும்‌ தங்கள்‌ தங்கள்‌ தனித்த நலத்திற்காகவும்‌ உழைப்‌ பதாயிருந்ததால்‌, மற்ற வகுப்பார்கள்‌ தாங்கள்‌ அக்கிளர்ச்சியில்‌ சம்மந்தப்பட வில்லை என்று காட்டிக்‌ கொள்வதற்காகவும்‌, அக்‌ கிளர்ச்சியின்‌ பயனாய்‌ அவ்‌ குடி அரசு - 1926 (2) 36 வகுப்பாருக்கு ஏதாவது பதவியோ நிர்வாக அதிகாரமோ ஏற்படுமானால்‌ அவை தங்கள்‌ சமூகத்திற்கு (முஸ்லீம்‌ சமூகத்திற்கு) சரியான பங்கு அளிக்‌ கப்படாமல்‌ போவதோடு, ஒரு சமூகம்‌ மாத்திரம்‌ முன்னேறி விட்டால்‌ மற்ற சமூகம்‌ அதனால்‌ அழுத்தப்பட நேரிடும்‌ என்றும்‌ பயந்தே முட்டுக்கட்டை யாய்‌ நிற்க நேர்ந்தது. அதே காரணம்தான்‌, வங்காள பிரிவினையின்போது முஸ்லீம்கள்‌ இந்துக்களிடம்‌ நம்பிக்கை கொள்ளாதிருந்ததும்‌, பிறகு, லக்னோ காங்கிரசில்‌ முஸ்லீம்கள்‌ இந்துக்களை நம்பும்‌ படியாக ஒப்பந்தமும்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவமும்‌ ஏற்றுக்‌ கொண்டதால்‌ இந்துக்களிடம்‌ அவநம்‌ பிக்கையில்லாமலிருந்ததும்‌ எல்லோருமறிந்த விஷயம்‌. பின்னும்‌ ரெளலட்‌ சட்டத்தின்போது ஏற்பட்ட கிளர்ச்சியில்‌ முஸ்லீம்‌ கள்‌ கலந்துகொண்டு மகாத்மாவோடு ஒத்துழைத்ததற்கு காரணம்‌, மகாத்மா முஸ்லீம்களின்‌ நம்பிக்கைக்குப்‌ பாத்திரமானதோடு இரு சமூகத்திற்கும்‌ சமத்துவமாய்‌ விடுதலையளிக்கத்தக்க திட்டங்களோடும்‌ உழைத்ததாலும்‌ மகாத்மா திட்டங்களில்‌ எது நிறைவேறினாலும்‌ அது பெரும்பாலும்‌ முஸ்லீம்‌ களுக்கும்‌ சம பாகம்‌ கிடைக்கக்‌ கூடியதாகவும்‌, ஒருவரை ஒருவர்‌ மோசம்‌ செய்ய முடியாததுமான திட்டங்களாய்‌ இருந்ததாலும்‌ அவற்றில்‌ யாரும்‌ சந்தேகப்படுவதற்கே வழியில்லாமல்‌ போனதோடு இத்திட்டங்கள்‌ நிறை வேறக்கூடிய நிலைமையிலும்‌ இருந்தது. அந்தப்படி மகாத்மா திட்டங்கள்‌ முழுவதும்‌ நிறைவேறி விட்டால்‌, சில வகுப்பார்‌ முக்கியமாய்‌ பார்ப்பனர்கள்‌ இப்போது அனுபவிக்கும்‌ அதிக சுதந்திரமும்‌, ஏகபோக ஆதிக்கமும்‌ அனுபவிக்க முடியாதாகையால்‌ இத்திட்‌ டங்களுக்கு விரோதமாக பார்ப்பனர்கள்‌ கிளம்ப வேண்டியதாயிற்று. இதன்‌ பலனாக தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌, வடநாட்டுப்‌ பார்ப்பனர்களாகிய பண்டித மாளவியாவையும்‌ மகாராஷ்டிரப்‌ பார்ப்பனரையும்‌ தூண்டி விட்டு அவர்களுக்கு உடந்தையாயிருந்து, மகாத்மாவையும்‌ அவரது திட்டத்தை யும்‌ எதிர்க்க வேண்டியதாயிற்று. மகமதிய சமூகம்‌ எண்ணிக்கையில்‌ மிகுந்தி ருக்கிறமாகாணமாகிய பஞ்சாப்பும்‌, வங்காளமும்‌ இத்துடன்‌ சேர வேண்டிய தாயிற்று. லாலா லஜபதிராயும்‌ தேசபந்து தாசும்‌ மகாத்மாவையும்‌ அவரது திட்டத்தையும்‌ எதிர்க்கவும்‌ அழிக்கவும்‌ நேர்ந்தது. இந்த இரகசியத்தை அறிந்த பின்புதான்‌ மகாத்மாவின்‌ முதல்‌ சிஷ்யராகவும்‌ சட்டாம்பிள்ளை: யாகவுமிருந்த ஸ்ரீமான்‌ சக்கிரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும்‌ கடைசியாக அவர்களுக்கு உள்ளாளாயிருந்ததின்‌ இரகசியமும்‌ இந்த உணர்ச்சி ஏற்பட்ட தனால்தான்‌. இந்த இரகசியம்‌ வெளியாகாமலிருப்பதற்கு “பார்ப்பனர்கள்‌ கூடி இப்படிச்‌ செய்கிறார்கள்‌” என்பதை பொது ஜனங்கள்‌ அறியாமலிருப்ப தற்கு தேசபந்து தாசைத்‌ தலைவராக்கவேண்டிய அவசியம்‌ நமது பார்ப்பனர்‌ களுக்கு ஏற்பட்டது. நமது மாகாணத்தில்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்தைக்‌ கொல்ல - ஜஸ்டிஸ்‌ கட்சியைக்‌ கொல்ல - பார்ப்பனரல்லாதாரிலேயே முதலியார்‌ என்றும்‌, பிள்ளை என்றும்‌, செட்டியார்‌ என்றும்‌, நாயுடு என்றும்‌, 37 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. நாயக்கர்‌ என்றும்‌, பாவலர்‌ என்றும்‌, சாயபு என்றும்‌ அப்போதைக்கப்போது எப்படித்‌ தலைவர்களை சிருஷ்டித்துக்‌ கொள்ளுகிறார்களோ அதுபோல்‌ இந்தியாவுக்கே தேச பந்துவைத்‌ தலைவராக்கி அவருக்கு வேண்டிய விளம்பரம்‌ கொடுத்து அவர்‌ கையாலேயே ஒத்துழையாமைக்குக்‌ கொள்ளி வைக்கச்‌ செய்து அவர்‌ வாயாலேயே ஒத்துழைப்பை வெளியாக்கச்‌ செய்து ஒத்துழையாமையும்‌ தேசபந்துவும்‌ மறைந்த பிறகு வார்த்தைக்கு வார்த்தை ஒத்துழையாமையையும்‌ தேசபந்து பெயரையும்‌ சொல்லிக்கொண்டு தங்கள்‌ ஜாதி ஆக்கம்‌ பெற வேட்டை ஆடுகிறார்கள்‌. மகாத்மாவையும்‌ அவர்‌ திட்டத்தையும்‌ ஒழிக்கவே பண்டித மாள வியா இந்து முஸ்லீம்‌ கலகத்தை ஆரம்பிக்கக்‌ கருதி இந்து மகாசபை என்று கிளப்பினார்‌. ஒத்துழையாமைக்கு சில முஸ்லீம்கள்‌ அனுகூலமாயிருந்ததால்‌ அவர்களில்‌ சிலரைக்‌ கலைத்துத்‌ தங்களுடன்‌ சேர்த்துக்‌ கொள்ளுவதற்‌ காகவே சென்னையில்‌ சில ஜனாப்களை ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ சேர்த்‌ துக்‌ கொண்டது போல்‌ வங்காளத்தில்‌ சில ஜனாப்களையும்‌ மெளல்வி களையும்‌ சுவாதீனப்படுத்த வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவங்‌ கொண்ட வங்‌ காள இந்து முஸ்லீம்‌ ஒப்பந்தமொன்றை தேசபந்து தாஸ்‌ ஏற்படுத்தினார்‌. இவ்வொப்பந்தத்தை தேச பந்துகாக்கினாடா காங்கிரசில்‌ பிரேரேபித்தபோது இதை ஆமோதித்தவர்‌ யாரென்று வாசகர்கள்‌ அறிய ஆசைப்படுவார்கள்‌. ஆமோதித்தவர்‌ யாரென்றால்‌ தமிழ்நாட்டுக்‌ காந்தியாகிய ஸ்ரீமான்‌ சி. இராஜ கோபாலாச்சாரியாராகும்‌. எந்த இராஜகோபாலாச்சாரியார்‌ என்று கேட்‌ பார்களேயானால்‌ “வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இந்தியாவுக்குக்‌ கூடாது; அது ஒற்றுமையையும்‌ விடுதலையையும்‌ அழிக்கும்‌; வகுப்புவாரி பிரதி நிதித்துவம்‌ என்பது பார்ப்பனர்களை நசுக்குவதற்காக ஏற்பட்டது” என்பது போன்ற பத்து கற்பனைகள்‌ எழுதி வருகிறாரே அந்த ஸ்ரீமான்‌ இராஜ கோபா லாச்சாரியார்தான்‌. இன்னும்‌ கொஞ்சம்‌ விவரமாய்த்‌ தெரிய வேண்டுமானால்‌ நமது நாட்டில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்ட போது அதற்கெதி ரிடையாய்‌ சில பார்ப்பனரல்லாதாரைக்‌ கொண்டே சென்னை மாகாணச்‌ சங்கம்‌ என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதில்‌ தாங்களும்‌ கலந்து கொண்டு பார்ப்பனரல்லா தாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ கொடுப்பதில்‌ எங்களுக்கு ஆக்ஷ பனையில்லை. ஆனால்‌ அரசியலில்‌ காங்கிரசை ஏற்றுக்‌ கொண்டால்‌ போதும்‌. என்று சொல்லியும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை அப்போது ஒப்புக்‌ கொண்டு காங்கிரஸ்‌ திட்டத்திலும்‌ தேசீய சங்க (நேஷனலிஸ்ட்‌ கான்பரன்ஸில்‌! த்திலும்‌ பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானம்‌ என்றும்‌ இத்தனை ஸ்தானங்களுக்குக்‌ குறையாமல்‌ என்றும்‌ வேலைத்‌ திட்டம்‌ வெளியாக்கிவிட்டு இப்போது பார்ப்பனரல்லாதாருக்குள்‌ கட்சி ஏற்‌ படுத்தி அவர்களுக்கும்‌ ஒற்றுமைக்‌ குறைவு உண்டாகும்படி செய்து விட்டு “வகுப்புவாரி பிரதிநிதித்‌ துவம்‌ தேசத்தைக்‌ கெடுக்கும்‌ பிசாசு” என்கிறாரே அந்த ஸ்ரீமான்‌ இராஜ கோபாலாச்சாரியாரால்‌ ஆமோதிக்கப்பட்டு, வேறு பல ஆட்களை விட்டு அதை தோற்கடிக்கச்‌ செய்து இப்போது ஒத்துழையாமை குடி அரசு - 1926 (2) 38 அடியோடு நசுக்கப்‌ பட்டுப்‌ போனபின்‌, கல்கத்தா ஒப்பந்தம்‌ கூடாது என்று ஒரு கக்ஷியும்‌, அதைப்பற்றி பேசவே கூடாது என்று ஒரு கக்ஷியுமாய்‌ இருவரும்‌ சேர்ந்து அதைக்‌ கொல்ல நினைப்பதின்‌ ரகசியமும்‌ இதுதான்‌. ஆகவே ஒத்துழையாமை ஒழிந்து விட்டதாலும்‌ மகாத்மா தலைமை ஸ்தானத்தில்‌ இருந்து விலகி விட்டதாலும்‌ அந்த ஸ்தானங்களுக்கு சுயநலமும்‌ பார்ப்பன ஆதிக்கமும்‌ வந்து மகமதிய சமூகத்திற்கு இதற்கு முன்‌ ஏற்பட்டிருந்த நன்மைகளையும்‌ அழிக்க சில முஸ்லீம்களை விலைக்கு வாங்கி அவர்களை உபயோகித்துக்‌ கொள்வதாலும்‌, அவநம்பிக்கையும்‌ ஜாக்கிரதையும்‌ மகமதிய சமூகத்திற்கு அவசியமாகி விட்டது. இதன்‌ பலனாய்‌ எங்குப்‌ பார்த்தாலும்‌ இந்து முஸ்லீம்‌ கலகங்கள்‌ ஏற்பட வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டுப்‌ போய்‌ விட்டது. ஒரு பக்கம்‌ பண்டித மாளவியா“உரிமை” “உரிமை” என்று சொல்லிக்‌ கொண்டு இந்துக்களுக்கு முஸ்லீம்கள்‌ பேரில்‌ ஆத்திரம்‌ உண்டாகும்படி பிரசாரம்‌ செய்வதும்‌ இதை எதிர்க்கவேண்டி மற்றொரு பக்கம்‌ மகமதிய தலைவர்கள்‌ என்போர்‌ “மதம்‌ மதம்‌” என்று சொல்லிக்கொண்டு இந்துக்கள்‌ மீது துவேஷம்‌ உண்டாகும்படி பிரசாரம்‌ செய்வதுமாய்‌ ஏற்பட்டுப்‌ போய்விட்டது. இருவர்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ உரிமையிலும்‌ மதத்திலும்‌ உண்மையான தத்துவம்‌ இருப்பதாக நாம்‌ நினைக்கவில்லை. பசுக்‌ கொலை யைப்‌ பற்றி இந்துக்கள்‌ முஸ்லீம்களை: உபத்திரவிப்பது அனாவசியமென்றே கருதுகிறோம்‌. முஸ்லீம்கள்‌ பசுக்‌ கொலை செய்வதால்‌ இந்துக்களுக்கு எந்த விதக்‌ கஷ்டமோ நஷ்டமோ இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்துக்களுக்கு எப்படி ஒரு ஆட்டையோ, கோழியையோ, பன்றியையோ விலை போட்டு வாங்கி வளர்த்து கொன்று தின்பதற்கு பாத்தியமுண்டோ, அதுபோல்‌ முஸ்லீம்‌ களுக்கும்‌ சுவையோ, ஆட்டையோ, கோழியையோ விலை போட்டு வாங்கி கொன்று தின்னப்‌ பாத்தியமுண்டு. இப்படி இருக்க, முஸ்லீம்களுக்கு மாத்திரம்‌ ஒரு ஜெந்து விஷயத்தில்‌ நிர்பந்தம்‌ ஏற்படுத்துவதின்‌ பொருள்‌ என்ன? மாடு சாப்பிடுவதும்‌ மாட்டைக்‌ கொல்லுவதும்‌ நமது தேசத்தில்‌ முஸ்லீம்கள்‌ மாத்திரம்‌ செய்யவில்லை. நமது நாட்டில்‌ பஞ்சமர்‌ என்று சொல்லுவோரில்‌ கோடிக்கணக்கான பேர்கள்‌ அப்படியே செய்கிறார்கள்‌. நாம்‌ இப்போது எந்த அரசாங்கத்தின்‌ கீழ்‌ இருக்கிறோமோ அந்த அரசாங்‌ கமே மாடு தின்கிற வகுப்பைச்‌ சேர்ந்தவர்கள்‌. அதைப்பற்றி நாம்‌ ஒரு சிறிதும்‌ கவலைப்‌ படுவதில்லையே. முஸ்லீம்களும்‌ பஞ்சமர்‌ என்று சொல்லு வோர்களும்‌ பெரும்பாலும்‌ ஏழைகளாயிருப்பதால்‌ முறையே வயதாகி சாகப்போகும்‌ மாடுகளையும்‌, செத்த மாடுகளையும்‌ உபயோகிக்கிறார்கள்‌. நம்மை ஆளும்‌ ஜாதியாரோ நல்ல வாலிபமுள்ளதாய்‌ - காளைத்தரமாய்‌ - உழைக்கக்‌ கூடியதாய்‌ - அழகுள்ளதாய்ப்‌ பார்த்து வாங்கி கொன்று சாப்பிடு கிறார்கள்‌. நமது நாட்டிலிருந்து வருஷம்‌ ஒன்றுக்கு 10 லக்ஷக்கணக்கான மாடுகளையும்‌ பசுக்களையும்‌ விலை போட்டு வாங்கி கப்பலேற்றி மேல்‌ நாட்டுக்குக்‌ கொண்டு போகிறார்கள்‌. இவைகள்‌ எதற்காகக்‌ கொண்டுபோகப்‌ படுகிறது? 39 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஐரோப்பா தேசத்தில்‌ பசு மடம்‌ கட்டப்பட்டிருக்கிறதா? அல்லது உழவு வேலைக்காவது பாரமிழுக்கும்‌ வேலைக்காவது கொண்டு போகிறார்‌ களா?' கொன்று தின்பதற்குத்தான்‌ என்று நமது பார்ப்பனர்களுக்குத்‌ தெரி யாதா? இதனால்‌ இந்த ராஜாங்கத்தை ஒழித்து விட்டோமா? அல்லது வேறு மாடு தின்னாத தேசத்திற்குக்‌ குடிபோய்‌ விட்டோமா? பஞ்சமர்கள்‌ என்று சொல்லுவோரையாவது மாடு தின்னும்‌ காரணத்திற்காக, இந்துவல்ல என்கி றோமா? நமது அரசாங்கத்தாரும்‌ நமது மதத்தாரும்‌ செய்யும்‌ காரியத்தை முஸ்லீம்கள்‌ செய்தால்‌ மாத்திரம்‌ அவர்களோடு கலகத்‌ திற்குப்‌ போவது என்பதின்‌ இரகசியம்‌ என்ன? அல்லாமலும்‌ ஒவ்வொரு பட்டணங்களிலும்‌ முனிசிபாலிட்டியிலும்‌ மாடு அறுப்பதற்கென்றே தனித்‌ தொட்டியும்‌, மாட்டு மாம்சம்‌ விற்பதற்கென்றே தனி கசாப்புக்‌ கடையும்‌ ஏற்பாடு செய்துகொடுத்து அதினால்‌ நாம்‌ பணம்‌ சம்பாதிக்கவில்லையா? இவ்வளவு காரியங்கள்‌. நடக்கும்போதும்‌ இவற்றிற்கு நாம்‌ உடந்தையாய்‌ இருக்கும்‌ போதும்‌ பசுக்‌ கொலை என்பதற்குப்‌ பொருள்‌ என்ன? அது போலவே மசூதி முன்‌ மேளம்‌ என்பதும்‌ பொருளற்றதாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார்‌ தங்கள்‌ பள்ளியில்‌ சுவாமியைத்‌ தொழுவதானால்‌ மற்றொரு வகுப்பார்‌ தெருவில்‌ மேளமடித்துக்‌ கொண்டு போகக்கூடாது என்பது கொஞ்சமாவது வாதத்திற்குப்‌ பொருத்தமானதல்ல. இது நமது பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ வீதியில்‌ மற்ற வகுப்பார்களை நடக்கக்‌ கூடாது என்று சொல்லுவது போலவே இருக்கிறது. ஒருவர்‌ தொழுகைக்கும்‌ மற்ற வகுப்பார்‌. மேளத்திற்கும்‌ என்ன சம்பந்தம்‌? மேளமடிப்பதால்‌ கடவுளை வணங்கு வதற்கு முடியாமல்‌ போய்‌ விடுமென்று சொல்லுவதானால்‌ அந்த வணக்கத்‌ திற்கு மதிப்பு ஏது? அநேக பள்ளிவாசல்கள்‌ சந்தைக்குப்‌ பக்கத்திலும்‌ அதிகமான ஜனப்‌ புழக்கம்‌, கூச்சல்‌, வண்டிப்‌ போக்குவரத்து முதலியவைகள்‌. உள்ள தெருவிலும்‌, சதா டிராம்‌ வண்டி.ரயில்‌ வண்டி, மோட்டார்கள்‌ முதலி யன கத்திக்கொண்டு போகும்‌ வழிகளிலும்‌ சமுத்திர அலை சதா சர்வகாலம்‌ இரைச்சல்‌ போட்டுக்‌ கொண்டிருக்கும்‌ ஸ்தலங்களிலும்‌, பள்ளி வாசல்களும்‌. தொழுகைகளும்‌ நடந்து கொண்டேதான்‌ இருக்கின்றன. பள்ளி வாசல்க ளுக்குப்‌ பக்கத்தில்‌ உள்ள இந்து, கிறிஸ்தவர்கள்‌ முதலிய வீடுகளிலும்‌ கோவில்களிலும்‌ கல்யாணம்‌, சாவு, உற்சவம்‌ முதலியவைகள்‌ மேளத்‌ தோடும்‌ வாத்தியத்தோடும்‌ நடைபெற்றுக்‌ கொண்டுதான்‌ இருந்து வரு கின்றன. இவைகளெல்லாம்‌ ஆக்ஷ்பிக்கப்படுவதில்லை; ஆகஷ்பிக்க முடிவதுமில்லை. இப்படியிருக்க தெருவில்‌ மாத்திரம்‌ வாத்தியத்தோடு போகக்கூடாது என்பது இஸ்லாம்‌ பள்ளிக்கு இந்துக்கள்‌ மரியாதை செய்ய வேண்டும்‌ என்று எதிர்பார்ப்பதாகத்தான்‌ ஏற்படுமே அல்லாமல்‌ தொழு கைக்கு விரோதம்‌ என்று சொல்லுவதில்‌ பொருளே இல்லை. இம்மாதிரி பொருளற்ற இரு விஷயங்களைத்‌ தங்கள்‌ தங்கள்‌ சுயநலத்திற்காக உபயோ கப்படுத்தி பாமர ஜனங்களைக்‌ கிளப்பி விட்டு கலகங்களை உண்டாக்கி லாபமடைகிறார்கள்‌. குடி அரசு - 1926 (2) 40 இது நிற்க, சிலர்‌ தென்‌ இந்தியாவில்‌ இவ்வித கலகம்‌ இல்லை என்று சொல்லிக்கொண்டும்‌ அதற்குக்‌ காரணம்‌ இங்கு ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ ஒற்றுமை யோடும்‌ இருப்பதாக சொல்லியும்‌ பாசாங்கு செய்து கொண்டும்‌ அவ்வகுப்புக்கு எவ்வளவு கெடுதி செய்யலாமோ அவ்வளவும்‌ செய்து வருகிறார்கள்‌. தென்‌ இந்தியாவில்‌ கலகம்‌ இல்லாதிருப்பதற்கு இந்து முஸ்லீம்‌ பரஸ்பர நம்பிக்கையும்‌ ஒற்றுமையும்‌ ஒருக்காலும்‌ காரணமே அல்ல. முஸ்லீம்களின்‌ எண்ணிக்கைக்‌ குறைவும்‌ இந்துக்கள்‌ எண்ணிக்கை அதிக மும்தான்‌ முக்கியக்‌ காரணம்‌. அப்படிக்கில்லாமல்‌ சம எண்ணிக்கையோ அல்லது இப்போதிருப்பதை விட இன்னும்‌ ஒரு பங்கு அதிகமாகவோ இருந்திருந்தால்‌ தென்னாட்டு இந்து முஸ்லீம்‌ ஒற்றுமை தெரிந்திருக்கும்‌. நமது பார்ப்பனர்‌ தங்கள்‌ பணத்திமிரால்‌ இரண்டொரு மகமதியரை விலைக்கு வாங்கி அவர்களைக்‌ கொண்டு இந்துக்களின்‌ ஓட்டுப்‌ பெற இந்து விக்கிர கங்களை வணங்கச்‌ செய்வதும்‌ நெற்றியில்‌ விபூதி குங்குமம்‌ அணியச்‌ செய்‌ வதும்‌ முஸ்லீம்‌ சமூக நன்மைக்கும்‌ மத உரிமைக்கும்‌ விரோதமாய்‌ அவர்‌ களை பேசச்‌ செய்வதும்‌ எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை வேண்டாம்‌ என்று சொல்லச்‌ செய்வதுமாய்‌ நடந்து கொண்டிருந்தால்‌ யார்தான்‌ சகிப்பார்கள்‌. இது எல்லாம்‌ அடியோடு தப்பு என்று நாம்‌ சொல்லவில்லை. ஆனாலும்‌ சரியோ தப்போ அவரவர்களுக்கு அவரவர்‌ மதக்‌ கொள்கையும்‌ அவரவர்‌ நம்பிக்கையுமேதான்‌ பிரதானமே தவிர வேறொருவரின்‌ உபதேசம்‌ பிரதானமல்ல. ஆதலால்‌ நமது நாட்டில்‌ முஸ்லீம்‌ எண்ணிக்கைக்‌ குறைவாயிருப்பதாலேயே அவர்களை எப்படி வேண்டுமானாலும்‌ உபயோகித்துக்‌ கொள்ளலாம்‌ என்று எண்ணினாலும்‌ அதன்‌ கர்மபலனை அடைய வேண்டி வந்தே தீரும்‌. உண்மையிலேயே நமது பார்ப்பனர்கள்‌ தாங்கள்‌ முன்னால்‌ ஒப்புக்கொண்ட வகுப்புவாரிப்‌ பிரதிநி தித்துவத்தை இப்போது தங்களுக்குப்‌ பலம்‌ அதிகம்‌ ஏற்பட்டு விட்டதென்கிற அஹம்பாவத்தால்‌ எதிர்ப்பார்களேயானால்‌ முன்னால்‌ ஒப்புக்‌ கொண்ட பார்ப்பனரல்லாதாரிலேயே சிலரை விலைக்கு வாங்கி அவர்களைக்‌ கொண்டே விஷமப்‌ பிரசாரம்‌ செய்யச்‌ செய்வார்களேயானால்‌ முடிவில்‌ இந்து முஸ்லீம்‌ கலகமாத்திரமல்ல, பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ கலவரம்‌ கோஹட்‌, கல்கத்தா முதலிய இடங்களைப்‌ போலும்‌ அதற்கு மீறியும்‌ கலவரம்‌ நடந்துவிடுமோ யென்று கவலைப்படுகிறோம்‌. ஆனால்‌ இவ்வளவு அக்கிரமங்கள்‌ செய்யப்பட்டும்‌ இன்னும்‌ நடைபெறாமல்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌ என்ன என்று சிலர்‌ கருதுவார்கள்‌. இதன்‌ இரகசியங்களும்‌ சூழ்ச்சிக ளும்‌ இன்னும்‌ பொது ஜனங்களுக்கு முழுதும்‌ தெரியத்தக்க காலம்‌ ஏற்பட வில்லை. அல்லாமலும்‌ பார்ப்பனரைப்போல்‌ சில ஆட்களை விலைக்கு வாங்கி வசப்படுத்திவிட பார்ப்பனரல்லாத இதரர்களும்‌ முஸ்லீம்களும்‌ இன்‌ னும்‌ மனம்‌ துணியவில்லை; பாவ புண்ணியத்தை மதிக்கிறார்கள்‌. அப்பேர்ப்‌ பட்ட சமயம்‌ வரும்‌ காலத்தில்‌ இப்போது நமது பார்ப்பனர்களுடன்‌ திரிபவர்‌: களும்‌ அவர்களால்‌ தலைவர்களானவர்களும்‌ அவர்களைக்‌ கை விட்டு 41 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 விட்டு அவரவர்கள்‌ வகுப்போடு சேர்ந்துக்கொள்ளுவார்களே தவிர இவர்க ளுக்கு உதவியாய்‌ வரவு மாட்டார்கள்‌; வந்தாலும்‌ ஒன்றும்‌ செய்யமுடியாது என்கிற சத்தியத்தை இப்போதே உணர்வது நலம்‌ என்றே நினைக்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 11.07.1926 குடி அரசு - 1926 (2) 42 டாக்டர்‌ கிச்சுனுவிண்‌ உபதேசம்‌ முஸ்லீம்கள்‌ அரசியலில்‌ தலையிடக்‌ கூடாது நிர்மாண திட்டத்தால்தான்‌ ஒற்றுமை ஏற்படும்‌ டாக்டர்‌ கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம்‌ கலவரத்தைப்‌ பற்றி சமா தானம்‌ செய்யப்‌ பிரசாரம்‌ செய்வதில்‌ மூன்று முக்கிய விஷயங்களைப்‌ பற்றி சொல்லியிருக்கிறார்‌. 1. “இந்து முஸ்லீம்‌ இருவரும்‌ நிர்மாணத்‌ திட்டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது". 2. “முஸ்லீம்கள்‌ கட்டுப்பாடாய்‌ இருக்க வேண்டும்‌”. 3. “முஸ்லீம்கள்‌ அரசியலில்‌ தலையிடக்‌ கூடாது”. என்று பேசியிருக்கிறார்‌. (இது 57.26 ௨ “மித்திரன்‌” 4- வது பக்கம்‌ 5 - வது கலத்தில்‌ காணப்படுகிறது! இப்படியிருக்க, டாக்டர்‌ கிச்சுலு அப்படிச்‌ சொன்னார்‌, இப்படிச்‌ சொன்னார்‌, மகமதியர்களை காங்கிரசில்‌ சேரச்‌ சொன்‌ னார்‌ என்று எழுதுவதின்‌ பொருள்‌ என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும்‌ செய்யலாம்‌ என்பது ராஜதந்திரமாய்ப்‌ போய்‌ விட்டது. ஒன்றா நிர்மாணத்திட்டம்‌ அல்லது வகுப்புக்‌ கட்டுப்பாடு; இரண்டி லொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல்‌ ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம்‌ செலுத்த செய்யப்படும்‌ சூழ்ச்சியாகிய பார்ப்பனக்‌ காங்கிரசோ, சுயராஜ்யக்‌ கக்ஷியோ தேசத்‌ துரோகத்திற்கும்‌ மற்ற வகுப்புத்‌ துரோகத்திற்கும்தான்‌ உதவும்‌ என்பதும்‌ கண்ணை மூடிக்கொண்டு மக்கள்‌ அதில்‌ சேரக்கூடாது என்பதும்‌ டாக்டர்‌ கிச்சுலுவின்‌ உபதேசத்தால்‌ விளங்கி விட்டது. ஆதலால்‌ இனியாவது மகமதியர்கள்‌ போலிகளை நம்பி மோசம்‌ போகாமல்‌ கண்‌ விழித்துக்‌ கொள்வார்கள்‌ என்று நம்புகிறோம்‌. குடி அரசு - சிறு குறிப்பு - 11.07.1926 42 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 Sailupd ஆதாரம்‌ வேண்டுமா? சட்டசபைத்‌ தேர்தலுக்குப்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்கென சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாக காங்கிரசின்‌ பெயரால்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌. கம்பெனியார்‌ நிறுத்தும்‌ அபேக்ஷகர்களைப்‌ பற்றி அப்போதைக்கப்போது எழுதி வந்திருக்கிறோம்‌. அவற்றுள்‌ ஒரு சந்தர்ப்பத்தில்‌ “ஜில்லாவிற்கு இரண்‌ டொரு பார்ப்பனரல்லாதாரை நிறுத்தி பொது ஜனங்களுக்குப்‌ பெரும்பாலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ பெயரைத்‌ தெரியும்படியாகச்‌ செய்து கடைசியில்‌ ஒவ்வொரு ஜில்லாவிற்கும்‌ ஒவ்வொரு பார்ப்பனர்‌ பெயரைப்‌ போட்டுவிட்‌ டார்கள்‌” என்று எழுதியிருந்தோம்‌. அது இப்போது நிஜமாகவே போய்‌ விட்டது. திருநெல்வேலி ஜில்லாவிற்கு ஒரு பார்ப்பனர்‌ பெயரை நுழைத்‌ தார்கள்‌. அது ஸ்ரீமான்‌ சாது கணபதி பந்துலுவின்‌ பெயரேயாகும்‌. மதுரை ஜில்லாவிற்கு இப்போது இரண்டு பார்ப்பனர்களை நிறுத்தத்‌ தீர்மானித்து விட்டார்கள்‌. அதாவது, ஸ்ரீமான்‌ முத்துராமலிங்கய்யரை ஒரு ஸ்தானத்திற்கு. மற்றொரு ஸ்தானத்திற்கு இப்பொழுதுதான்‌ மெள்ள வேறொரு பார்ப்பனர்‌. தலையை நீட்டப்படுகிறது. அதாவது, ஸ்ரீ கே.ஆர்‌. வெங்கட்டராமய்யரேயா கும்‌. திருச்சி ஜில்லாவிற்கும்‌ ஒரு பார்ப்பனர்‌ பெயர்‌ நுழைந்து விட்டது. இன்னும்‌ மற்றொரு ஆசாமியின்‌ பெயரும்‌ நுழையும்‌ போலிருக்கிறது. சேலம்‌ ஜில்லாவிற்கு இன்னும்‌ ஒரு ஸ்தானம்‌ பாக்கி இருக்கிறது. கடைசி காலத்தில்‌ ஸ்ரீமான்‌ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்‌ பெயர்‌ நுழையப்‌ போகிறது. கடிதப்‌ போக்குவரவுகள்‌ நடந்து கொண்டுதானிருக்கின்றன. தஞ்சை ஜில்லா விற்குக்‌ காலியாக வைத்திருந்த ஸ்தானத்திற்கு நாம்‌ முன்‌ எழுதியபடியே, ஸ்ரீமான்‌ ராவ்பகதூர்‌ கே.எஸ்‌.வெங்கட்டராமய்யர்‌ பெயர்‌ போட்டாகி விட்டது. ஆனால்‌ அங்கு இன்னும்‌ இரண்டு பார்ப்பனர்‌ சண்டை யிட்டுக்‌ கொண்டிருக்‌ கிறார்கள்‌. அதாவது, ஸ்ரீமான்கள்‌ என்‌.கிருஷ்ணசாமி ஐயங்கார்‌, பந்துலு வெங்கட்டராமய்யர்‌ ஆகிய இருவருமேயாகும்‌. ஸ்ரீமான்‌ பந்துலு வெங்கட்டராமய்யர்‌ காங்கிரசுக்கு எவ்வளவோ உழைத்தவராயிருந்தும்‌ அவரை வேண்டுமென்றே தள்ளிவிட்டு, ஒரு பட்டதாரியாகவே பார்த்து நியமித்திருக்கிறார்களாம்‌. ஏனெனில்‌ பந்துலு ஐயர்‌. மறுபடியும்‌ ஒத்துழையாமையைக்‌ கொண்டுவந்து விடுவாரோ என்கிற பயந்தானாம்‌. ஸ்ரீ கே.எஸ்‌.வெங்கட்டராமய்யர்‌ பட்டம்‌ விடப்போகிறார்‌ என்று சமாதானமும்‌ சொல்லுகிறார்கள்‌. பட்டத்தை விட்டுவிடச்‌ சொன்ன காலத்தில்‌ குடி அரசு - 1926 (2) 44 விடவில்லை. அதற்கு மொத்தத்திலேயே யோக்கியதைக்‌ குறைந்த பிறகும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேர்ந்து கொள்வேன்‌ என்று மிரட்டிய பிறகும்‌ பட்டம்‌ விடுகிறார்களாம்‌. சீக்கிரத்தில்‌ ஸ்ரீமான்‌ முத்தையா முதலியார்‌. பெயரும்‌ அடிக்கப்பட்டு அதற்குப்‌ பதிலாக ஸ்ரீமான்‌ கிருஷ்ணசாமி ஐயங்கார்‌. பெயர்‌ எழுதப்படும்‌ என்று ஒரு குருவி சொல்லுகிறது. எப்படியாவது ஸ்ரீமான்‌ மருதவானம்‌ பிள்ளை அவர்களின்‌ பிரசாரச்‌ செலவில்‌ இரண்டு மூன்று பார்ப்பனர்‌ சட்டசபைக்குப்‌ போகப்‌ போகிறார்கள்‌. ஸ்ரீமான்‌ மருதவானம்‌ பிள்ளை அவர்களின்‌ பெரியோர்கள்‌ எப்படி சம்பாதித்தார்களோ தெரிய வில்லை, இவ்வித தர்ம கைங்கரியத்திற்குச்‌ செலவாகிறது. இன்னமும்‌ மற்ற ஜில்லாக்களிலும்‌ இதுபோலவே ஒவ்வொரு பார்ப்பனர்‌ பெயரை நுழைத்துக்‌ கொண்டே இருக்கிறார்கள்‌. காஞ்சீபுரம்‌ மகாநாடு நடந்த சமயத்தில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்‌ காருக்குத்‌ தலைவர்‌ பட்டம்‌ சூட்டுவதில்‌ ஸ்ரீமான்கள்‌ நாயுடுகாரும்‌ முதலியார்‌. வாளும்‌ போட்டி போட்டபோது சிலர்‌ பார்ப்பனரே கூடாது என்றும்‌, அதிலும்‌ நமது ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ கூடவே கூடாது என்றும்‌ ஆக்ஷேபித்த காலத்தில்‌ “என்னை நம்புங்கள்‌, நான்‌ எல்லாவற்றையும்‌ சரிப்படுத்தி பார்ப்பனர்‌, பார்ப்பனரல்லாதார்‌ ஜனத்‌ தொகைக்குத்‌ தக்கபடியே ஆள்களை நிறுத்துவதாக உறுதி கொடுக்கிறேன்‌” என்றும்‌ சொல்லி உறுதி கொடுத்து, பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றி, ஐயங்காருக்குப்‌ பட்டங்கட்டிய “வசிஷ்ட முனிவர்கள்‌” இன்று, ஐயங்கார்‌ “போடு குட்டிக்‌ கரணம்‌” என்றால்‌ “சுவாமி எண்ணிக்‌ கொள்ளுங்கள்‌ இதோ போடுகிறேன்‌” என்கிறார்கள்‌. நாள்‌ செல்லச்‌ செல்ல பார்ப்பனர்களின்‌ பெயர்கள்தான்‌ சட்டசபைகளுக்கு அடிபடுகிறதே தவிர “வசிஷ்டர்களின்‌” வாக்கு நிறைவேறுவதாகக்‌ காணவில்லை. ஆதலால்‌ சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்பட்டது யென்பதற்கு இனியும்‌ ஏதாவது ஆதாரம்‌ வேண்டுமா? குடி அரசு - கட்டுரை - 11.07.1926 45 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. எதிர்பார்த்த வண்ணமே! நாம்‌ எதிர்பார்த்த வண்ணமே திருவாளர்‌ திரு. வி.கலியாணகுந்தர: முதலியாரவர்களும்‌ காங்கிரஸ்‌ காரியக்‌ கமிட்டியிலிருந்த தன்‌ தொடர்பை விலக்கிக்‌ கொண்டார்‌. “இது முடிந்த மொழியன்றி மீண்டு முன்னு மொழி யன்று” என்னும்‌ சொற்களால்‌ இனி மீண்டும்‌ புனராலோசனை செய்வதில்லை எனவும்‌ கூறிவிட்டார்‌. இவரது இராஜினாமாவைப்‌ பிரிதொரு பக்கம்‌ பிரசுரித்துள்ளோம்‌. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகாரவர்களும்‌ திரு. முதலியாரவர்கட்கு முன்னரே விலகி விட்டார்‌. அவரும்‌ இனி புனராலோசனை செய்ய முடியாது என்பதாக தமிழ்‌ நாடு காங்கிரஸ்‌ நிர்வாகக்‌ கூட்டமும்‌ பொதுக்‌ கூட்டமும்‌ நிகழ்ந்த 29-ந்‌ தேதியில்‌ தலைவருக்குக்‌ கிடைக்கும்படியும்‌ அதைக்‌ கூட்டத்தில்‌ படித்துக்‌ காட்டுமாறு கடிதம்‌ அனுப்பியிருந்தும்‌, நமது பார்ப்பனத்‌ “தலைவர்‌” அதைப்‌ படித்துக்‌ காட்டாமலும்‌ விஷயத்தையே வெளியிடா மலும்‌ மூடிவைத்துவிட்டு புனராலோசனை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக திருட்டுத்‌ தீர்மானம்‌ செய்து ஏமாற்றினார்‌. திரு. முதலியார்‌, திரு. நாயுடுகார்‌ ஆகிய இருவரும்‌ காங்கிரஸ்‌ காரியக்‌ கமிட்டியினின்று விலகியே விட்டார்கள்‌. இதன்‌ தத்துவம்‌ என்ன? இது போழ்து இவர்களுக்கு தேசபக்தி இல்லாது போயிற்றா? சுயநலம்‌ முளைத்து விட்டதா? அல்லது சர்க்கார்‌ தயவை நாடியா? அன்றி ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேரவா? இவை ஒன்றிற்கும்‌ அல்லவே அல்ல. மற்று எதன்‌ பொருட்டு விலகிக்‌ கொண்டார்கள்‌? காங்கிரஸ்‌ மகாசபையில்‌ பார்ப்பனர்கள்‌ செய்யும்‌ சூழ்ச்சியை அறிந்து, தாங்கள்‌ தற்கால காங்கிரசில்‌ அங்கம்‌ வகித்தி ப்பதால்‌ நாட்டிற்கு எவ்வித நன்மையும்‌ செய்ய இயலாதென்பதை உணர்ந்து, தங்களை. யே கருவியாகப்‌ பிரயோகித்து நமது சமூகத்திற்கு - (பார்ப்பனரல்லாதார்‌. சமூகத்திற்கு) பார்ப்பனர்கள்‌ ஆபத்து விளைவிக்கிறார்‌ கள்‌ என்பதைக்‌ கண்ணாரக்‌ கண்டுகொண்டதாலுமேயல்லாது வேறல்ல. ஆனது பற்றியே தைரியமாய்‌ விலகி விட்டார்கள்‌. நமது பார்ப்பனர்‌ இனி இவர்கள்‌ மீது வசை புராணம்‌ பாடி இவர்களுக்குப்‌ புன்மொழி மகுடஞ்‌ சூட்ட பார்ப்பனரல்‌ லாதாரிலேயே சில பாவலர்‌, நாவலர்‌ முதலியோரைத்‌ தலைவராக்குவார்கள்‌. நிற்க, குடி அரசு - 1926 (2) 46 காங்கிரஸ்‌ காரியக்‌ கமிட்டியில்‌ இனியும்‌ நான்கு பார்ப்பனரல்லாத கன வான்கள்‌ அங்கம்‌ வகித்து வருகிறார்கள்‌. அவர்கள்‌ திருவாளர்களான ஈவெ.இராமசாமி நாயக்கர்‌, ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌, மருதவனம்‌ பிள்ளை, ஹமீத்கான்‌ ஆகியோரேயாகும்‌. இந்நால்வருள்‌ திரு. நாயக்கரைப்‌ பற்றி கவலையுற வேண்டியதே யில்லை. கூடிய விரைவில்‌ பார்ப்பனர்களே அவரை விலக்கிவிடப்‌ போகி றார்கள்‌. திரு. நாயக்கர்‌ காங்கிரசில்‌ அங்கம்‌ வகித்திருப்பது பார்ப்பனர்க ளுக்கு பேரிடராய்‌ இருப்பதாகக்‌ கருதுகிறார்களேயன்றி அவர்‌ இருக்க வேண்டுமென்கிற ஆசை பார்ப்பனர்களுக்கு ஒரு சிறிதும்‌ இல்லை. திரு. ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியாரைப்‌ பற்றி சிறிது கவனிக்க வேண்டியதிருக்‌ கிறது. “இப்பொல்லாப்‌ பார்ப்பனர்கள்‌, பார்ப்பனரல்லாதார்‌ சமூகத்தையும்‌ அவர்களது இயக்கத்தையும்‌, ஆதிக்கத்தையும்‌ அழிப்பதற்காகவே திரு. ஷண்முகம்‌ செட்டியாரை உபயோகித்து வருகிறார்கள்‌. திரு.செட்டியாரும்‌ தனக்கு இந்தியா சட்டசபையில்‌ ஸ்தானம்‌ பெறவேண்டி தமது சமூகத்தைப்‌ பார்ப்பன ருக்கு விற்று பார்ப்பனர்‌ பின்‌ திரிகிறார்‌” என்று உலகினர்‌ சொல்‌ வதற்கு முன்பே விலகிக்‌ கொள்ளுவார்‌ என்று நம்புகிறோம்‌. ஆனால்‌ திரு. முதலியாரும்‌ டாக்டர்‌ நாயுடுகாரும்‌ விலகிக்‌ கொண்டதால்‌ இனி நமது பார்ப்பன வர்க்கத்திற்கு திரு. ஷண்முகம்‌ செட்டியார்‌ “லோக குருவாக” விளங்கப்‌ போகிறார்‌. அவருக்கு இனி சின்னாட்கள்‌ வரை 'ஸ்ரீஜத்‌” “ஸ்ரீலஸ்ரீ” *பிரம்மஸ்ரீ* முதலிய பட்டங்கள்‌ வழங்கப்‌ பெறும்‌: அநேக பார்ப்பனக்‌ குழந்தைகட்கு செட்டியாரது திருப்பெயர்‌ சூட்டப்பெறும்‌; பார்ப்பனர்‌ போகும்‌ கூட்டங்களிலும்‌ நிறுவும்‌ கூட்டங்களிலும்‌ செட்டியாரவர்கள்‌ பெயர்‌ பெரிய பெரிய எழுத்துக்களில்‌ பொறிக்கப்பெறும்‌; பிரசங்க மேடைகளி லெல்லாம்‌. செட்டியாரது பெயரின்‌ நாதம்‌ தொளிக்கப்‌ பெறும்‌. பார்ப்பனப்‌ பத்திரிகை களெல்லாம்‌ செட்டியார்‌ மயமாகவே இருக்கும்‌. இனி ஆறுமாத காலத்திற்கு - அவ்வளவேது? - நான்கு மாத காலத்திற்கு, தெளிவாகக்‌ கூறுமிடத்து சட்டசபைத்‌ தேர்தல்‌ முடிவுறும்‌ வரை நமது செட்டியாருக்கு எங்கும்‌ வரவேற்பும்‌ வண்டியிழுப்பும்‌ பூமாலைகளும்‌ மாப்பிள்ளைக்‌ கோல மும்‌ பற பறக்கும்‌. நமது செட்டியார்‌ கட்புலனுக்கு, நம்மை நோக்குங்கால்‌ கண்ணகி போன்றும்‌, பார்ப்பனரை நோக்குங்கால்‌ மாதவி போன்றும்‌ புலனாகும்‌. சுலபத்தில்‌ மாதவியை” விட்டு விலக மனங்‌ கொள்ளார்‌. இனி அவரது யோகமே யோகம்‌ | போனது போகட்டும்‌. திரு. முதலியாரும்‌, டாக்டர்‌. நாயுடுகாரும்‌ விலகினதினாலாவது நமது செட்டியாருக்கு இத்த கைய ராஜானு ராஜபோகம்‌ வருகிறதே; நாம்‌ ஆசை தீரப்‌ பார்த்து ஆனந்தம்‌ அனுபவிக்கலாம்‌! எவ்வா றிருப்பினும்‌ இறுதியில்‌ முதலியார்‌ நாயுடு போன்றே செட்டியாரும்‌ பார்ப்பனரை விட்டு விலகியே தீருவார்‌. ஏனெனில்‌ திருவாளர்கள்‌ முதலியார்‌, நாயுடு, நாயக்கர்‌, சக்கரை, ஆரியா, தண்டபாணி, இராமநாதன்‌ ஆகியோர்‌ கட்கு பார்ப்பனர்கள்‌ அளந்த வள்ளம்‌ அட்டத்தில்‌ வைத்திருக்கிறார்‌ களேயன்றி உடைத்தொழித்து விட்டாரில்லை. ஆகவே 47 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அவரது மருள்‌ மயக்கம்‌ தெளியும்‌ வரை காத்திருக்க வேண்டியதே. திரு. மருதவனம்‌ பிள்ளை அவர்களும்‌ மிகவும்‌ நல்லவர்‌. ஆனால்‌ அவர்‌ சுலபத்தில்‌ விலகுவார்‌ என்று எதிர்பார்ப்பதே முட்டாள்தனமாகும்‌. ஏனெனில்‌, அவர்‌ தானும்‌ ஞானஸ்நானம்‌ பெற்று பார்ப்பனராக மாற்ற மடைந்து விட்டதாக உள்ளூற நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்‌.1923-ம்‌ ஆண்டு நடந்த தேர்தலின்‌ போழ்து திரு. மருதவனம்‌ பிள்ளையவர்களின்‌ பொருட்‌ செலவாலும்‌ பிரசாரத்தாலும்‌ திரு எ. ரெங்கசாமி ஐயங்கார்‌, பந்துலு ஐயர்‌: ஆகிய இரு பார்ப்பனர்கள்‌ சட்டசபையில்‌ அங்கம்‌ பெற்றிருப்பினும்‌ திரு.பிள்ளைக்கு சுமார்‌ 50,000 ரூபாய்‌ வரை செலவழிந்திருப்பினும்‌, தான்‌ சட்டசபை அங்கம்‌ பெற்றது பார்ப்பனர்தம்‌ கருணையாலும்‌ தயவின்‌ பெருக்காலும்‌ என்றே திரு. பிள்ளை நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்‌. இனி, அடுத்த தேர்தலில்‌ தான்‌ சட்டசபை அங்கம்‌ அடைதலும்‌ அக்‌ கூட்டத்தார்‌ தயவிருந்தால்தான்‌ ஆகும்‌ என்பதாகவே திரு.பிள்ளை நினைக்கிறார்‌. இம்மட்டோ, பார்ப்பனர்‌ விரோதம்‌ நேர்ந்துவிடின்‌ பெரும்‌ சாப மாய்‌ முடியுமென்றும்‌ வாழவே ஏலாதென்றும்‌ முடிவான கருத்துடையவர்‌: நமது பிள்ளையவர்கள்‌. மேலும்‌ திரு. எஸ்‌.சீனிவாசய்யங்காரின்‌ தயவால்‌ வடபாதி மங்கலம்‌ எஸ்டேட்டுக்கு திருபிள்ளை ரிசிவராகயிருக்கிறார்‌ என்று சொல்லிக்‌ கொள்ளப்படுபவர்‌. திரு. எ. ரெங்கசாமி ஐயங்கார்‌ தயவால்‌ “சுதேசமித்திரன்‌” பத்திரிகையில்‌ நாள்தோறும்‌ திகழ்பவர்‌, இன்னும்‌ வேறு பல வழிகளிலும்‌ பார்ப்பனர்களுடன்‌ இரண்டறக்‌ கலந்து கொண்டிருக்கிறார்‌. ஆகவே “பிள்ளைவாள்‌ பார்ப்பனரை விட்டு விலகுவார்‌'” என்று எளிதில்‌ எதிர்பார்க்க வல்லதாகா. திருவாளர்கள்‌ முதலியார்‌, நாயுடுகார்‌, நாயக்கர்‌, சக்கரை, ஆரியா முதலிய இவர்கள்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சிகளையும்‌ கபட வேஷ நாடகத்தையும்‌ அறிய இத்துணை காலமும்‌ இத்துணை மரியாதை களும்‌ வேண்டியிருந்ததெனில்‌ அந்தோ! பாவம்‌! சின்னாட்களுக்கு முன்பாக உலக வாழ்க்கையிலிறங்கிய நமது திரு. பிள்ளையவர்களுக்கு எத்துணை காலம்‌ கடக்கவேண்டும்‌? எனவே நாம்‌ இதை எளிதில்‌ எதிர்பார்த்தல்‌ எங்கனம்‌ சாலும்‌. ஜனாப்‌ ஹமீத்கான்‌ சாகிப்‌ விஷயமே! அது பிறந்தகத்திலிருந்‌ தாலும்‌ ஒன்றுதான்‌ புக்ககத்திலிருந்தாலும்‌ ஒன்றுதான்‌. எங்கிருந்தாலும்‌ அப்பாத்திரம்‌ தண்ணீர்‌ மொள்ளுவதற்குப்‌ பயன்படாது. அல்லது அப்பாத்‌ திரம்‌ விலகி வந்துவிட்டாலும்‌ அதைப்‌ போன்ற பாத்திரம்‌ நமது பார்ப்பனர்‌. களுக்கு ஆயிரக்கணக்காக அகப்படும்‌. ஆகவே அதைப்‌ பற்றி எவரும்‌ கவலை கொள்ளார்‌. எனவே இனி பார்ப்பனரல்லாதார்‌ மேற்கொள்ள வேண்‌ டிய கடமை யாது? தாங்கள்‌ ராஜினாமா செய்துவிட்டதாலேயே இனி திரு. முதலியாரும்‌ டாக்டர்‌ நாயுடுகாரும்‌ வாளாவிருக்கப்‌ போவதில்லை என்றும்‌ எழுதியிருக்கிறார்கள்‌.. தங்களுடைய மனதிற்குச்‌ சரியென்று தோன்றும்‌ வண்‌ ணம்‌ வெளியில்‌ பிரசாரம்‌ செய்வதற்கு அவர்கள்‌ காங்கிரஸ்‌ காரியக்‌ கமிட்டி குடி அரசு - 1926 (2) 48 யில்‌ அங்கம்‌ வகித்திருப்பது ஒவ்வாத காரியமென்கிற உணர்வினாலேயே விலகிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள்‌. இதனின்று அவர்கள்‌ தீவிர பிரசாரத்தில்‌ இறங்கப்‌ போகிறார்கள்‌ என்று தெளிவாகிறது. அத்திவிர பிரசாரம்‌. யாதென நோக்குழி 9.7.26 -ல்‌ வெளிப்‌ போந்த தமது “நவசக்தி” பாலின்‌ சிலம்பொலித்‌ தலைப்பில்‌ “இந்தியாவின்‌ தலை எழுத்து” என்னும்‌ பொருள்‌: பற்றிய கட்டுரையில்‌ திரு. முதலியார்‌ தமது உள்ளக்கிடக்கையை உணர்த்து கிறார்‌. அஃதாவது, “இயற்கைக்கு மாறுபட்ட பல கொடுமைகளை மக்கள்‌ வாழ்வில்‌ புகுத்தினமையால்‌ மக்கள்‌ அன்பு கட்டுக்‌ குலையலாயிற்று- பிறப்பால்‌ உயர்வு தாழ்வு கற்பித்ததும்‌ - மக்கள்‌ உடல்‌ தாங்கியுள்ள சிலரைத்‌ தீண்டாதாரென ஒதுக்கியதும்‌- பெண்‌ மக்களைக்‌ கல்வி பெறாத வழியில்‌ அடங்கி வைத்திருப்‌ பதும்‌ - கோயில்களிலும்‌ மக்கட்கு உரிமை படிப்படியாக அளந்து வழங்கி யிருப்பதும்‌ - இவைகள்‌ குற்றமுடையன என்று சொன்ன அறவோர்களைக்‌ கொன்றதும்‌-ஆகிய கருமங்கள்‌ திரண்டு உருண்டு நாட்டை வருத்துகின்றன- இதுவே இந்தியாவின்‌ தலை எழுத்து - இத்தலை எழுத்தைத்‌ துடைக்க வேண்டுமானால்‌ நாட்டார்‌ என்‌ செயல்‌ வேண்டும்‌? முதலாவது நாட்டார்‌ தம்‌ பாலுள்ள குறைகளைக்‌ களைய வேண்டும்‌, நாட்டில்‌ பலதிறக்‌ குறைகளை வைத்துக்‌ கொண்டு வெறும்‌ அரசியல்‌ கிளர்ச்சி செய்வதனால்‌ நாட்டிற்கு இடுக்கண்‌ பல நேருகின்றன- இப்போதைய அரசியல்‌ கிளர்ச்சியில்‌ மனிதனை விலங்காக்கும்‌ பேச்சும்‌ செயலும்‌ மலிந்து காணக்‌ கிடக்கின்றன - தற்காலக்‌ கல்வியுடையார்‌ என்று சொல்லப்படுவோர்‌ சாதி வேற்றுமை களையும்‌ கிளப்பி விடுவதில்‌ கண்ணுங்கருத்துமாயிருக்கிறார்‌. இந்‌ நிலையில்‌ அரசியல்‌. கிளர்ச்சி வழி நண்ணியும்‌, அரசியல்‌ கட்சி வழி நின்றும்‌ உழைப்பதால்‌ நாட்டுக்கு உண்மை நலன்‌ விளையுமென்று சொல்வதற்‌ கிடமில்லை. நம்‌ நாட்டில்‌ பிராமணர்‌ பிராமணரல்லாதார்‌ பகைமை நிலை நண்ணியிருக்கிறது என்பதை மறுப்பதும்‌ மறைப்பதும்‌ அறியாமை: யாகும்‌. ஆகவே, இப்பொழுது நம்‌ நாட்டுக்குரிய பணி யாது? வெறும்‌ அரசியல்‌ கிளர்ச்சி பணியன்று. நாட்டில்‌ நீண்டகாலமாக நிலவி வரும்‌. குறைபாடுகளைப்‌ போக்கவும்‌ தற்போதுள்ள சில புதிய குறைபாடுக ளைத்‌ தொலைக்கவும்‌ வல்ல ஒரு பணியில்‌ அறிஞர்கள்‌ தலைப்படல்‌ வேண்டும்‌. உரிமையில்லா நாட்டில்‌ அரசியல்‌ கட்சிகள்‌ வளர்வதும்‌, அவைகளின்‌ வழி உழல்வதும்‌, நாட்டைக்‌ குழியில்‌ வீழ்த்துவதாக முடியும்‌. என்று உரைக்கிறார்‌. இவ்வுரைகளை நாம்‌ பொன்னே போல்‌ போற்று கிறோம்‌. நமது “குடி அரசு” வின்‌ கொள்கைகளையும்‌ அது ஆரம்ப காலந்‌ தொட்டு இற்றைவரைத்‌ தாங்கி வந்த யாவையும்‌ பொறுக்கித்‌ தரித்துப்‌ புடைத்துப்‌ பார்த்தால்‌ திரு. முதலியார்‌ மேற்கூறியுள்ள கருத்துக்கள்‌ புலனா குமேயன்றி பிறிதொன்றும்‌ புலனாகா.. 49 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 உண்மையில்‌ நமது முதலியார்‌ இக்கொள்கைகளோடு செய்யும்‌ எவ்‌ விதப்‌ பணிக்கும்‌ நாம்‌ தொண்டனாயிருக்க உறுதி கூறுகிறோம்‌. டாக்டர்‌. நாயுடுகாருக்கு இக்கொள்கைகளின்‌ முறையில்‌ இரண்டோரிடத்தில்‌ மாறுபா டாய்த்‌ தோன்றினும்‌ இவற்றுள்ளிருக்கும்‌ சத்து நிரம்பிய தத்துவத்தில்‌ எத்த கைய மாற்றமும்‌ இருக்காதென்றே சொல்லுவோம்‌. தமிழ்நாட்டு மக்களில்‌ பார்ப்பனரல்லாதாரில்‌ 1000-க்கு 999 மக்கள்‌ இக்‌ கொள்கை உடையவர்களாக வேயிருக்கின்றனர்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியாரது கொள்கையும்‌ இதுவென்றே சொல்கி றார்கள்‌. இவ்வாறாக, நம்முடைய அபிப்பிராய பேத மென்பது மாய்கை கெழு மிய மனக்கசப்பே அல்லாமல்‌ வேறல்ல. ஆகலான்‌ விரைவில்‌ பார்ப்பன ரல்லாதார்‌ அனைவரும்‌ ஒன்றுபட்டு ஓர்‌ மகாநாடு கூட்டி தங்களுக்குள்ளிருக்‌ கும்‌ மனக்கசப்பையும்‌ மாய்கையையும்‌ அகற்றி ஒன்றுகூடி மேற்கண்ட கொள்கையுடையதான ஆக்கல்‌ திட்டத்தை கோலி அஃதினை நிறைவேற்ற உழைப்பது அறிவுடைய மக்களின்‌ செயலாகும்‌. ஆகவே இற்றைவரை நாம்‌ முறையீடிட்டு வந்த வண்ணம்‌ விரைவில்‌ தமிழ்மக்கள்‌ ஒருங்கு சேர்ந்து ஓர்‌. முடிவு காண விழைகின்றோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 11.07.1926 குடி அரசு - 1926 (2) 50 யார்ப்மணய்‌ பத்திரிகைகள்‌ நமது நாட்டுப்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகளும்‌ பார்ப்பனப்‌ பத்திராதி பர்களும்‌ ஸ்ரீமான்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகாரையும்‌ திரு.வி.கலியாண சுந்தர முதலியார்‌ அவர்களையும்‌ குல குருவாய்‌ மதித்து “ராஜரிஷீ” “பிர்ம ரிஷீ” என்று புகழ்ந்து வண்டியில்‌ வைத்து இழுத்தது வாசகர்களுக்குத்‌ தெரியும்‌. இப்பேர்ப்பட்ட இருவர்களையும்‌ இன்று என்னமாய்‌ நடத்துகிறார்‌. கள்‌ என்று பார்த்தால்‌ இவ்விரு கனவான்கள்‌ எழுதியனுப்பிய ராஜினாமாக்‌ களை சரியாய்‌ தங்கள்‌ பத்திரிகையில்‌ போடவே இல்லை.எங்கோ ஒரு மூலை யில்‌ ஒன்றரை அங்குலத்தில்‌ பொது ஜனங்கள்‌ ராஜினாமாவின்‌ முழுக்‌ காரியங்களையும்‌ அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள்‌ ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்டவில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுதவில்லை. ஒரு வயிற்றுச்‌ சோத்து பார்ப்பனன்‌ ஒரு உத்தியோகத்திலும்‌ இல்லாமல்‌ வெறும்‌ ராஜினாமா அனுப்பியிருந்தால்‌ அதை மகாத்மா காந்தியிடம்‌ கொண்டுபோய்‌ இந்தத்‌ தலைவர்‌ போய்விட்டால்‌ தமிழ்நாடே முழுகிவிடும்‌ என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச்‌ சொல்லி ராஜினாமா கொடுத்த தாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்‌. இதுபோலவே நமது பார்ப்பனர்‌ தங்களது பத்திரிகையின்‌ பலத்தால்‌ பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும்‌ முற்போக்கையும்‌ பாழ்படுத்தி வரு கிறார்கள்‌. இதிலிருந்தாவது நம்‌ நாட்டு முன்னேற்றத்தையும்‌ பார்ப்பன ரல்லாதார்‌ சுயமரியாதையையும்‌ உத்தேசித்தாவது பார்ப்பனப்‌ பத்திரிகை களைஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன்‌ வரலா காதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள்‌ இன்னமும்‌ உணரவில்லையா? அல்லது அலக்ஷியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்‌! பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை பரப்புங்கள்‌! அஃதின்றி நாம்‌ சுயமரியாதையோடு மனித னாக வாழ முடியாது! ஒவ்வொரு நாளும்‌ படுக்கையை விட்டெ மும்போது பத்திரிகையைப்‌ பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசியுங்கள்‌! படுத்‌ துறங்கும்போது இன்று என்ன செய்தோ மென்று நினையுங்கள்‌! உங்களுக்கு ரோஷம்‌, மானம்‌, வெட்கம்‌ இல்லையா என்று உங்கள்‌ மனச்சாக்ஷியைக்‌ கேளுங்கள்‌! அன்றுதான்‌ நாமும்‌ மனிதனாகலாம்‌! இல்லாதவரை ஸ்ரீமான்‌ ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார்‌ பிராமணரல்லாதாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும்‌ பலித்துவிடும்‌! குடி அரசு - சிறு குறிப்பு - 11.07.1926 51 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. இந்து முஸ்லீம்‌ சந்ததகத்தை ஒழிக்க வழியாம்‌ “பயித்தியம்‌ தைனிந்து போய்விட்டது உலக்கை ௭௫ கோவணங்‌ கட்ட" 5. 7. 26 - தேதி “மித்திரன்‌” தன்‌ தலையங்கத்தில்‌ இந்து முஸ்லீம்‌ ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டுபிடித்ததாக சாமர்த்தியம்‌ காட்டி விஷச்‌ சிரிப்பு சிரிக்கிறான்‌. அதாவது, சட்டசபைகளிலோ மற்றும்‌ பொது ஸ்தாபனங்‌ களிலோ சமூக சம்பந்தமான பிரச்சினைகள்‌ வரும்போது அந்தந்த சமூகத்‌ தைச்‌ சேர்ந்த அங்கத்தினர்களில்‌ முக்கால்‌ வாசிப்பேர்‌ ஆக்ஷேபித்தால்‌ அந்த பிரச்சினைகள்‌ கொண்டு வரக்கூடாதாம்‌. இந்த மாதிரி ஒரு தீர்மானம்‌ செய்து விட்டதால்‌ முஸ்லீம்களுக்கு பத்திரம்‌ ஏற்பட்டு போய்விட்டதாம்‌. இனி முஸ்லீம்கள்‌ சுயராஜ்யக்‌ கட்சியாரோடு இரண்டறக்‌ கலந்துபோக வேண்டியது தானாம்‌. இது “பைத்தியம்‌ தெளிந்து போய்விட்டது, உலக்கை கொண்டு வா கோவணம்‌ கட்டிக்‌ கொள்ள” என்று ஒருவன்‌ தனது பைத்தியம்‌ தெளிந்து போனதற்கு அடையாளமாகப்‌ பேசினது போல்‌ இருக்கிறது. மகமதிய மெம்பர்களில்‌ முக்கால்‌ வாசிப்பேர்‌ ஆக்ஷபித்தால்‌ இந்து முஸ்லீம்‌ சம்பந்த மான பிரச்சினை சபைகளில்‌ வரக்கூடாது என்பது சரிதான்‌. உதாரணமாக, ஒரு முனிசிபாலிட்டியில்‌ ஒரு பள்ளிவாசலை இடித்து ரோடு போடவேண்டும்‌ என்பதாக ஒரு தீர்மானம்‌ வருவதாக வைத்துக்‌ கொள்வோம்‌. அந்த முனிசி பாலிட்டியில்‌ 30 மெம்பர்களில்‌ மகமதியர்கள்‌ 8 பேர்‌ இருப்பதாகவே வைத்துக்‌ கொள்வோம்‌ . இந்த 8 பேரில்‌ 6 பேர்‌ ஆக்ஷேபித்தால்‌ அந்த தீர்மானம்நிறுத்தப்பட்டுப்‌ போகவேண்டும்‌. இந்த விதி நல்ல விதி தான்‌. இது எப்படி இருந்தால்‌ உண்மையான பலனைக்‌ கொடுக்கும்‌? இந்த எட்டு மெம்பர்களும்‌ மதப்பற்று உள்ளவர்களாகவும்‌ முஸ்லீம்‌ சமூகத்திற்கு பொறுப்புள்ளவர்களாகவும்‌ இருந்தால்‌ தானே இந்த எட்டு பேரில்‌ ஆறு பேராவது ஆக்ஷபிப்பார்கள்‌ என்று நம்பலாம்‌. அப்படிக்கின்றி “ஸைபுல்‌ இஸ்லாம்‌” எழுதுவது போல்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ பணத்தால்‌, சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளைகளாய்‌, சீனிவாசய்யங்கார்‌ ஜாமீன்‌ பேரில்‌ சுயமரியாதையற்றவர்களாய்‌ அந்த சபைக்குப்‌ போகக்கூடியவர்களா குடி அரசு - 1926 (2) 52 யிருந்தால்‌ முக்கால்வாசிப்‌ பேரல்ல முழுவாசிப்‌ பேரல்ல, கால்வாசிப்‌ பேரா வது ஆக்ஷேபிக்கக்‌ கூடியவர்கள்‌ கிடைப்பார்களா? அதே மாதிரி இந்துக்களுக்குள்ளாகவும்‌ பார்ப்பனர்‌ பார்ப்பன ரல்லாதார்‌ என்கிற விஷயத்திலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ தயவில்லாமல்‌ அய்யங்கார்‌ அவர்கள்‌ பணச்‌ செலவில்‌ ஸ்தானம்‌ பெறுகிறவர்கள்‌ நிறைந்த சட்டசபையில்‌ பார்ப்பனரல்லாதாருக்கு எப்படி பந்தோபஸ்து ஏற்படும்‌? உதாரணமாக, பார்ப்பனரல்லாதார்‌ பணத்திலும்‌ பிரசாரத்திலும்‌ சட்டசபைக்குப்‌ போன ஸ்ரீமான்‌ டி.ஆதிநாராயண செட்டியார்‌ எந்த விதத்திலாவது பார்ப்பன ரல்லாதாருக்குப்‌ பொறுப்பாளியாய்‌ இருக்கிறாரா? குருகுல விவாதத்தில்‌ பார்ப்பனர்‌ சொல்லுவதெல்லாம்‌ சரியென்றார்‌. பார்ப்பனர்களுக்காக ஊர்‌ ஊராய்‌ பிரசாரமும்‌ செய்தார்‌. அதற்காகவே இப்‌ போதும்‌ நமது பார்ப்பனர்கள்‌ அவரை ஆதரிக்கிறார்கள்‌. அவரும்‌ பார்ப்ப னர்‌ பணத்தையும்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகளின்‌ பிரசாரத்தையுமே நம்பி மறு படியும்‌ சட்டசபைக்கு அபேக்ஷகராய்‌ நிற்கிறார்‌. நமது ஜனங்கள்‌ மறுபடியும்‌ ஏமாந்து செட்டியாரை ஆதரித்துவிடுவார்கள்‌ போலவே தோன்றுகிறது. ஆதலால்‌, தெரிந்தெடுக்கும்‌ பொறுப்பு அந்தந்த சமூகத்தார்களுக்‌ கென்று வரையறுத்து வைக்கப்படாத வரையில்‌ வேறு எவ்வித விதி செய்தா லும்யோக்கியர்களும்‌ சமூகப்பற்று மதப்பற்று உள்ளவர்களும்‌ பதவி அடைய முடியவே முடியாது. பார்ப்பனர்களின்‌ “கூலிகள்‌” வந்து சேரத்தான்‌ இடங்கொடுக்கும்‌ என்பது திண்ணம்‌. மித்திரன்‌” இந்த சூழ்ச்சித்‌ தந்திரங்‌ களால்‌ முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது என்பதும்‌ திண்ணம்‌. குடி அரசு - கட்டுரை - 11.07.1926 53 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கிறிஸ்தவ மதப்‌ பிரசாரமா? “திறிஸ்தவமதப்‌ பிரசாரமா?'”” என்ற மகுடமிட்டு, சென்னைப்‌ பார்ப்பன மித்திரன்‌ சென்ற 5-7-26-ல்‌ குறிப்பொன்றெழுதி, சென்னைக்‌ கடற்கரையில்‌ ஸ்ரீமான்‌ ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப்‌ பற்றியும்‌, இந்து தெய்வங்களைப்‌ பற்றியும்‌ குறிப்பாக விக்ரஹ ஆராதனையைப்‌ பற்றியும்‌ தூஷித்துப்‌ பேசியதாகவும்‌, அவர்‌ பேச்சைக்‌ கேட்டு ஜஸ்டிஸ்‌ கட்சியினர்‌ ஆனந்தங்‌ கொண்டதாகவும்‌, இத்தகைய கிறிஸ்தவ மதப்‌ பிரசாரம்‌ செய்ய ஸ்ரீமான்‌ ஆரியா தங்களோடு காங்கிரசிலிருந்த காலத்தில்‌ தைரியங்‌ கொள்ளவில்லையென்றும்‌, இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான்‌ எச்சரிக்கை. செய்திருக்கிறான்‌. இக்‌ குறிப்பில்‌ அயோக்கியத்தனமும்‌ சூழ்ச்சியும்‌ ததும்பி வடிகிறது. யோக்கியமானவன்‌ ஆரியாவின்‌ பேச்சுக்களை முற்றிலும்‌ பிரசு ரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான்‌. அவ்வாறின்றி “தூஷித்தார்‌, மதப்‌ பிரசாரம்‌ செய்தார்‌, ஆனந்தங்‌ கொண்டனர்‌, சட்டிக்‌ கூழுக்கு மதத்தைப்‌ புறக்கணித்தது யார்‌?” என்று எழுதி பொதுவாகக்‌ கிறிஸ்தவ மதத்தின்‌ பேரிலும்‌, சிறப்பாக ஆரியாவின்‌ பேரிலும்‌ பொது மக்களி டையே துவே ஷத்தை விளைவிக்கப்‌ பார்ப்பது எவ்வளவு அயோக்யத்‌ தனமும்‌ சூழ்ச்சி யுமானதென்று கவனியுங்கள்‌. மேலும்‌, இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும்‌, வெறும்‌ விக்ரஹங்களிலும்‌ அடங்கிக்‌ கிடக்கவில்லை.போலி வேடங்களை ஒருவர்‌. கண்டிப்பதாலேயே இந்து மதங்‌ கவிழ்ந்து கிறிஸ்துவ மத மோங்கிவிடாது.. இன்று ஆரியாவைக்‌ கண்டிக்கும்‌ இதே பார்ப்பனன்‌, இன்று இந்துப்‌ பறையனா யிருக்கும்‌ கோவிந்தனை பக்கத்தில்‌ வராதே என்று விரட்டுகிறான்‌. அதே கோவிந்தன்‌ நாளைய தினம்‌ மோசஸ்‌ ஆகிவிட்டால்‌ கைலாகு கொடுப்பான்‌. ஆகவே கிறிஸ்தவ மதத்தை இப்‌ பார்ப்பனர்கள்‌ ஆதரிக்கிறார்களா? அல்லது ஸ்ரீமான்‌ ஆரியா ஆதரிக்கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப்‌ பரிபாலிப்ப தாகச்‌ சொல்லும்‌ இப்பார்ப்பனனுடைய வாய்‌ வேதாந்தத்தையும்‌ அநுஷ்டா னத்தையும்‌ பார்த்தீர்களா? இவ்விதப்‌ பார்ப்பன அநுஷ்டானங்களைஆரியா கண்டித்திருந்தால்‌ அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்‌. குடி அரசு - கட்டுரை - 11.07.1926 குடி அரசு - 1926 (2) 54 எவரை யாதிக்கம்‌? செண்ணையில்‌ போலீஸ்‌ கமிஷணரிண்‌ தடை உத்திரவு ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ சார்பாகவும்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாகவும்‌, சென்னையிலே சின்னாட்களாக தேர்தல்‌ பிரசாரக்‌ கூட்டங்கள்‌ வெகுமும்மு ரமாக நடைபெறுகின்றன. அவற்றுள்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாக நடப்ப வற்றிற்குப்‌ பொது ஜனங்கள்‌ கூட்டம்‌ அருகி ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ சார்பாக நடப்பவற்றிற்குப்‌ பெருகி வருகின்றன. எனவே, இப்பொழுது நடக்கும்‌ தேர்தல்‌ பிரசாரக்‌ கூட்டங்களும்‌ தலை சிறந்து மிளிர்வது ஜஸ்டிஸ்‌ கட்சியினருடையதே. ஆதலால்‌ கூட்டங்‌ கூடக்‌ கூடாதென உத்திரவு ஏதேனும்‌ கிடைக்குமேல்‌ அது ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ கூட்டத்தை பாதிப்பதாகவேயிருக்கும்‌. ஏனெனில்‌ முற்கூறியது போன்று சுயராஜ்யக்‌ கட்சியின்‌ கூட்டத்தைக்‌ கண்டு மதிப்பாருமில்லை மகிழ்வாரு மில்லை. இவ்வாறிருக்க, சென்னை நகர போலீஸ்‌ கமிஷனர்‌, “சென்னை நகர எல்லைக்குட்பட்ட எந்தத்‌ தெருவிலும்‌, வீதியிலும்‌, தெரு மூலையிலும்‌, ரஸ்தா மூலையிலும்‌, பொதுமக்கள்‌ நடமாடும்‌ எந்த ராஜ பாட்டையிலும்‌, பொதுஜன நடமாட்டத்திற்குத்‌ தடையாயிருக்கக்‌ கூடிய வேறெந்த பொது இடத்திலும்‌ தேர்தல்‌ கூட்டங்களோ ஊர்வலங்களோ நடத்த இனி அனுமதிக்க முடியாது.” என்றதொரு தடை உத்திரவை பிறப்புவித்திருக்கின்றார்‌. ஆனால்‌, இத்தடை உத்திரவிற்கு "ஜஸ்டிஸ்‌", *திராவிடன்‌' ஆகிய இருபத்திரிகைகளும்‌ ஆதரவு கூறுகின்றன. இவைகள்‌ ஆதரவு கூறுவது, எக்காரணம்‌ பற்றியே யாயினும்‌ “யானை தன்‌ தலையிலேயே மண்ணை வாரிப்‌ போட்டுக்‌ கொள்‌: வது” போன்றிருக்கிறது என்பதே நமது கருத்து. ஏனெனில்‌ நாம்‌ முன்பே கூறியிருப்பது போல்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு சார்பாகக்‌ கூட்டம்‌ சேருவது மில்லை; கூடும்‌ சிறு கூட்டமும்‌ அமைதியோடு கலைவதுமில்லை. ஆனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ பிரசங்கங்களிலோ ஆயிரக்கணக்கான ஜனங்கள்‌ வந்து கூடு வதும்‌ பொறுப்பு வாய்ந்த பிரமுகர்களும்‌, பெரிய மனிதர்களும்‌ பேசி வருவதுமாக யிருக்கின்றனர்‌. இம்மட்டோ! காங்கிரஸிலிருந்து தேசத்திற்காக எவ்வளவோ அருந்‌ தியாகமும்‌ பெருந்‌ தொண்டும்‌ ஆற்றிவந்த 55 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. திருவாளர்கள்‌ ஆரியா, சக்கரைச்‌ செட்டியார்‌, இராமசாமி நாயக்கர்‌, கலியாண சுந்தர முதலியார்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌, தண்டபாணி பிள்ளை, இராமநாதன்‌, சின்னையா பிள்ளை, மெளலானா சாகிப்‌ போன்ற நவமணி களும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ சார்பாக பேசப்போகுங்‌ காலம்‌ சமீபித்துவிடவே போலீஸ்‌ இலாக்கா நிர்வாகம்‌ மைலாப்பூர்‌ கோஷ்டியாரின்‌ இனத்தவர்‌. கையிலிருப்பதால்‌ இவர்களெல்லாம்‌ ஐயங்கார்‌ கட்சிக்கு ஆதரவு கூற வேண்டும்‌. அப்படியல்லாமல்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ சார்பாகப்‌ பேசினால்‌ 144 - வது பிரிவுப்‌ படி தடை உத்திரவு போடுவேன்‌ என்று சொல்லுவதற்குப்‌ பதிலாகயிருப்பது போன்ற இத்தகைய உத்திரவை போலீஸ்‌ கமிஷனர்‌. பிறப்பித்து விட்டார்‌. இச்சட்டம்‌ பார்ப்பனர்களுக்கு உதவி செய்வதாய்‌ இருந்தாலும்‌“கோழி திருடியும்‌ கூடக்‌ குலாவுவது போல்‌” “சுதேசமித்திரன்‌” இவ்வுத்திரவைக்‌ கண்டிக்கிறான்‌. இத்தடை உத்திரவைக்‌ கொண்டு “மித்திரன்‌” அடங்கா மகிழ்வு கொள்ள வேண்டியதிருக்க மாயக்கண்ணீர்‌ விடுவது பொதுமக்களை ஏமாற்றுதற்கே யன்றி வேறல்ல. இனி, ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ வாளாக்‌ கிடத்தலாகாது. கட்டிடங்களுக்‌ குள்ளும்‌ சுற்றாலைச்‌ சுவர்களுக்குள்ளும்‌ கூட்டம்‌ நிகழ்த்துவதோடு மட்டும்‌. நில்லாது ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ செய்த நன்மைகளையும்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ பொய்மைகளையும்‌ எழுதி பதினாயிரக்கணக்கான துண்டுப்பிரதிகளும்‌ துண்டுப்‌ புத்தகங்களையும்‌ அச்சிறுத்தி ஒவ்வொரு வீடு தோறும்‌ வழங்க வேண்டுமென்பதாக ஜஸ்டிஸ்‌ கட்சியாருக்கு நினைவூட்டுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 18.07.4926 குடி அரசு - 1926 (2) 56 ம்ரீமாண்‌ வாங்கிட்டரமணய்மாங்காருக்கு ஒரு புது யோகம்‌ - சித்திரபுத்திரன்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா தலைவர்கள்‌ மகாநாடு ஒன்று கோயமுத்தூரில்‌ கூட்டப்பட்டது வாசகர்களுக்குத்‌ தெரியும்‌. அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக்‌ கடிதம்‌ அனுப்பப்படவில்லை. அழைப்புக்‌ கடிதம்‌ அனுப்பப்படாததற்கு ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ பொறுப்பாளி யா, அல்லது அய்யங்காரின்‌ கூட்டு அபேக்ஷகர்களில்‌ எவராவது பொறுப்‌ பாளியா, அல்லது கூட்டப்பட்டவர்கள்‌ பொறுப்பாளியா என்பது அவ்வளவு சுலபமாய்‌ வெளியில்‌ சொல்லக்கூடிய விஷயமல்ல. இதனால்‌ நமது அய்யங்காருக்கு ஒரு புது யோகம்‌ பிறந்து விட்டது. அதாவது தன்னை அக்கூட்டத்திற்கு அழைக்காத காரணத்தைக்‌ கொண்டு ஒவ்வொரு பார்ப்பனர்கள்‌ வீட்டுக்கும்‌ போய்‌, பார்ப்பனரல்லாதூர்‌ எல்லாம்‌ தன்னைத்‌ தள்ளிவிட்டதாகவும்‌, இந்தக்‌ காரணத்திற்காகவே பார்ப்பனர்கள்‌ எல்லாம்‌ கட்டுப்பாடாக பார்ப்பனர்களுக்கே தனி ஓட்டு சிங்கிள்‌ ஓட்டு போட வேண்டுமென்றும்‌, ஒரு பார்ப்பனனாவது பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச்‌ செய்யக்கூடாது என்றும்‌ சொல்லி ஒவ்வொரு பார்ப்பன ஓட்டரிடத்திலும்‌ பிரமாணமும்‌ வாக்குத்‌ தத்தமும்‌ வாங்கி கட்டுப்பாடு செய்து வருகிறா ரென்றும்‌, பார்ப்பனர்களும்‌ கூட்டம்‌ கூட்டமாகப்‌ போய்‌ அய்யங்காருக்குப்‌ பிரமாணம்‌ செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களென்றும்‌ இதன்‌ காரணத்‌ தாலேயே தான்‌ கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சில பார்ப்பனர்களும்‌ அக்‌ கூட்டத்திற்கு வரவில்லை என்றும்‌ சொல்லப்படுகிறது. அவ்வாறு அழைப்புக்‌ கடிதம்‌ அனுப்பப்பட்டும்‌ கூட்டத்திற்கு வராது நின்றவர்கள்‌ ஸ்ரீமான்கள்‌ சி.எஸ்‌.சாம்பமூர்த்தி அய்யர்‌, கே.இராகவேந்திரராவ்‌, இராமசாமி அய்யங்கார்‌. ஆகிய மூவருமேயாவார்கள்‌. இவர்கள்‌ வக்கீல்‌ உலகத்தில்‌ செல்வாக்குள்‌ எவர்கள்‌: பொது ஜனங்களாலும்‌ மதிக்கப்பட்டவர்கள்‌; பொது ஜனங்களில்‌ பலரும்‌ இவர்கள்‌ செல்வாக்குக்குக்‌ கட்டுப்பட்டவர்கள்‌. இப்பேர்ப்பட்ட வர்களே கட்டுப்பாடாயிருந்து அய்யங்கார்‌ யோகத்திற்குக்‌ காரணமானவர்‌. களாயிருப்பார்களானால்‌, மற்றப்‌ பார்ப்பனர்களின்‌ கட்டுப்பாடும்‌ நமது அய்யங்காரின்‌ யோகத்திற்கு எவ்வளவு காரணமாயிருக்காது?' ஆனால்‌ நமது அய்யங்காரின்‌ இவ்வித கட்டுப்பாட்டையும்‌ யோகத்‌ தையும்‌ நாம்‌ மனமார உள்ளூற வரவேற்கிறோம்‌. ஏனெனில்‌ இவர்களைப்‌ 87 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 பார்த்தாவது மற்ற வகுப்பாருக்கு புத்தி வராதா, அல்லது மற்ற வகுப்பாருக்கு புத்தி கற்பிக்கவாவது இந்த பார்ப்பனக்‌ கட்டுப்பாடு ஒரு துணைக்‌ கருவியா யிருக்காதா என்கிற ஆசையினால்தான்‌. ஆதலால்‌ இப்போது நமது ஜில்லா வுக்கு நிற்கும்‌ அபேக்ஷகர்களில்‌ நமது அய்யங்கார்‌ பார்ப்பனரொழிந்த மீதி அபேகஷகர்கள்‌ மூவரும்‌ பார்ப்பனரல்லாதாராயிருப்பதுடன்‌ மூவரும்‌ வேளா ளர்களாகவே இருக்கிறார்கள்‌. அதாவது ஸ்ரீமான்‌ வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ கொங்குவேளாளர்‌, ஸ்ரீமான்‌ இரத்தினசபாபதி முதலியார்‌ தொழுவ வேளாளர்‌ ஸ்ரீமான்‌ டிஎ.இராமலிங்க செட்டியாரும்‌ சோழ தேசத்து வேளாளர்‌. அதுபோலவே நமது ஜில்லா ஓட்டர்களில்‌ 100-க்கு 75 பேருக்கு மேலாகவே வேளாளர்களாவார்கள்‌. மீதி 25 பேரிலும்‌ 20 பேர்‌ பார்ப்பன ரல்லாதார்‌. ஆவார்கள்‌. ஆதலால்‌ நமது பார்ப்பனரல்லாதாரில்‌ வேளாளர்‌ களும்‌ மற்றவர்களும்‌ நமது பார்ப்பனர்களைப்‌ போலவே பார்ப்பனரல்லா தாரான வேளாளர்களுக்குத்‌ தான்‌ ஓட்டு செய்வதே அல்லாமல்‌ பார்ப்பனர்‌ களுக்கு ஓட்டு செய்வதில்லை என்று கட்டுப்பாடுடன்‌ உறுதி செய்து தீர்மானித்துக்‌ கொண்டால்‌ பார்ப்பனரல்லாத சமூகங்கள்‌ தானாகவே முற்‌ போக்கடையும்‌. பார்ப்பனரல்லாத குடியானவர்கள்‌ நெற்றி வியர்வை நிலத்தில்‌ சொட்‌ டும்‌ படியாக இரவு பகலாய்ப்‌ பாடுபட்டு சம்பாதிக்கும்‌ பணத்தை பார்ப்பனர்‌. களிடம்‌ கொட்டிக்‌ கொடுத்து விட்டு “சாமி” “சாமி” என்று அவர்கள்‌ வீட்டு பந்தக்காலைக்‌ கட்டிக்‌ கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. நமது நாட்டில்‌ வேளாளர்கள்‌ பஞ்சம்‌ பஞ்சம்‌ என்று அடித்துக்‌ கொள்ளுவதெல்லாம்‌ முழுதும்‌ மழை பெய்யாததாலோ வெள்ளாமை விளை யாததாலோ என்று சொல்ல முடியாது. வேளாள சமூகத்திற்கு ஏற்பட்ட பஞ்ச மெல்லாம்‌ வக்கீல்கள்‌ அடிக்கும்‌ கொள்ளையினால்‌ ஏற்பட்டதே அல்லாமல்‌ வேறல்ல.இப்பேர்ப்பட்ட வக்கீல்கள்‌ ஏற்படுத்தவும்‌ வழக்குகளை உற்பத்தி செய்யவும்‌ நமது பார்ப்பனருக்கு அனுகூலமாயிருப்பது இந்த சட்ட சபை களேயாகும்‌. ஆகையால்‌ இவற்றை ஒழித்து வேளாள சமூகம்‌ முன்னுக்கு வர வேண்டுமானால்‌, கூடுமானவரை பார்ப்பனர்களை சட்டசபைக்கு அனுப்‌ பாமல்‌ உண்மையாய்‌ வேளாளர்‌ நன்மைக்கு உழைக்கும்‌ வேளாளரே போகும்‌ படி பார்த்துக்கொண்டால்‌ போதுமானது. சட்டசபை மூலம்‌ சுயராஜ்யம்‌ வரும்‌ என்று எண்ணுவதெல்லாம்‌ “கேள்வரகில்‌ (ராகியில்‌) நெய்‌ ஒழுகுகிறது” என்று சொல்லுவது போன்றே யாகும்‌. ஆதலால்‌ பார்ப்பன சமூகத்தார்‌ எப்படி தங்களுடைய ஓட்டுகளை: ஒரு பார்ப்பனருக்குக்‌ கொடுப்பதேயல்லாமல்‌ பார்ப்பனரல்லாதாருக்குக்‌ கொடுப்பதில்லை என்று ஸ்ரீ சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்குக்‌ கட்டுப்‌ பாடாக பிரமாணம்‌ செய்து கொடுக்கிறார்களோ, அதுபோலவே நமது ஜில்லா பார்ப்பனரல்லாதாரும்‌, முக்கியமாய்‌ வேளாள சமூகத்தாரும்‌ கண்டிப்பாய்‌ தங்கள்‌ சமூகத்தாராகிய பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களுக்கே ஓட்டுப்‌ குடி அரசு - 1926 (2) 58 போடுவது என்று உறுதி செய்து கொள்வார்களானால்‌ அதுவே தேசத்திற்கும்‌ தங்கள்‌ சமூகத்திற்கும்‌ உழைத்ததாகும்‌. அப்படிக்கில்லாமல்‌ தங்கள்‌ சமூகத்‌ தாரை அலகஷியம்‌ செய்துவிட்டு பார்ப்பனர்‌ தயவுக்கும்‌ அவர்கள்‌ பசப்பு வார்த்தைக்கும்‌ தந்திரத்துக்கும்‌ ஏமாற்றலுக்கும்‌ கட்டுப்பட்டும்‌, பார்ப்பனர்‌. களிடம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டோ அவர்கள்‌ தயவுக்கு கட்டுப்பட்டோ ஓட்டு சம்பாதிக்கும்‌ தரகர்களுக்குக்‌ கட்டுப்பட்டும்‌ ஏமாந்து பார்ப்பனர்‌ களுக்கு ஓட்டுச்‌ செய்வார்களேயானால்‌ அதைப்போல தேசத்‌ துரோகமும்‌ சமூகத்‌ துரோகமும்‌ வேறில்லை என்றே சொல்லுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 18.07.1926 59 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. « தொட o து கிருஷ்ணனுக்கம்‌ அர்னுனனுக்கும்‌ சம்பாஷணை அர்ஜுனன்‌ : ஏ, கிருஷ்ணா! சுயராஜ்யக்‌ ௧௯௨ காங்கிரசில்‌ சேராமல்‌ தனித்திருந்த போது அதற்குக்‌ கொஞ்சம்‌ மரியாதை இருந்தாப்‌ போல்‌ தெரிந்ததே. இப்பொ ழுது காங்கிரசில்‌ சேர்ந்து சுயராஜ்யக்‌ ககஷியே காங்கிர சாக மாறி மகாத்மா காந்தியும்‌ ஆசீர்வாதம்‌ பண்ணியும்‌ அவர்‌ சிஷ்யர்களும்‌ எவ்வளவோ அதற்கு வெளிப்படையாயும்‌ இரகசியமாயும்‌ உதவி செய்தும்‌ இப்படி துள்ளத்‌ துள்ள செத்துப்‌ போய்‌ விட்டதே அதன்‌ காரணம்‌ என்ன? கிருஷ்ணன்‌ : @ . அர்ஜுனா! இது உனக்குத்‌ தெரியவில்லையா? கலியுக பத்மா சூரன்‌ கை வைத்தால்‌ எதுதான்‌ வாழும்‌? அர்ஜுனன்‌: அது யார்‌? எனக்குத்‌ தெரியவில்லையே. கிருஷ்ணன்‌ : உண்மையாய்‌ தெரியாதா? அர்ஜுனன்‌ : ஆம்‌, தெரியாது. கிருஷ்ணன்‌: அதுதான்‌ நமது ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ . அர்ஜுனன்‌: ஓஹோ! அவர்‌ தலைவரானதினால்தான்‌ போய்விட்டதோ? சரி, சரி, அதனால்தான்‌ நமது தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி கூட செத்துப்‌ போய்விட்டது. இப்பொழுது எனக்குப்‌ புரிந்தது. கொஞ்ச காலத்திற்கு முன்கூட ஒரு நண்பர்‌ எனக்குச்‌ சொல்லியிருக்கிறார்‌. அதாவது, “நம்‌ தலைவர்‌(?) ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ தொட்டது துலங்காது, எதில்‌ போய்‌ அவர்‌ கையை வைத்தாலும்‌ பத்மாசூரன்‌ கை வைத்தது போலவே தான்‌ முடியும்‌. கடைசி காலத்திற்குத்தான்‌ எந்த இயக்கமும்‌ அவரிடம்‌ போய்ச்‌ சேரும்‌” என்று சொன்னார்‌. அது சரியாய்ப்‌ போய்விட்டது. கிருஷ்ணன்‌ : இப்போது உனக்குப்‌ புரிந்ததா. குடி அரசு - 1926 (2) 60 அர்ஜுனன்‌: புரிந்தது. ஆனால்‌ இன்னும்‌ ஒரு சந்தேகம்‌. கிருஷ்ணன்‌: என்ன சொல்லு? அர்ஜுனன்‌: இது இரண்டும்‌ ஒழிந்து போனது நல்ல காரியந்தான்‌. சிலர்‌ காங்கிரஸ்‌, காங்கிரஸ்‌ என்று இன்னமும்‌ சொல்லிக்‌ கொண்டிருக்‌ கிறார்களே அதென்ன? கிருஷ்ணன்‌: காங்கிரசுக்கு காலம்‌ கிட்டிக்‌ கொண்டது. இப்பொழுது தொண்டையில்‌ உயிர்‌ இருக்கிறது. இந்த வருஷம்‌ நமது அய்யங்கார்‌ அதற்கும்‌ தலைவராக வரப்‌ பாடுபட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌. நம்மை பிடித்த நல்ல வேளையாய்‌ அதிலும்‌ அவர்‌ கை வைக்கும்படி ஏற்பட்டுவிட்டால்‌ அதுவும்‌ தீர்ந்து போகும்‌. அர்ஜுனன்‌: இம்மூன்றும்‌ ஒழிந்தால்‌ நமது நாட்டைப்‌ பிடித்த சனியன்‌ ஒழிந்து போகுமல்லவா? கிருஷ்ணன்‌: இம்மூன்றும்‌ ஒழிந்தால்‌ போதாது. மயில்‌ ராவணன்‌ தலை மாதிரி வெட்ட வெட்ட முளைத்துக்‌ கொண்டுதான்‌ வரும்‌. அர்ஜுனன்‌: பின்னை இன்னமும்‌ என்னவாக வேண்டும்‌? கிருஷ்ணன்‌:நாட்டுக்கு நல்லகாலம்‌ வர வேண்டுமானால்‌, நமது நாட்டு பிராமணீயம்‌ ஒழிய வேண்டும்‌. அர்ஜுனன்‌: அது லேசில்‌ ஒழியாது போல்‌ இருக்கிறதே. கிருஷ்ணன்‌:அர்ஜுனா! நீ அப்படி நினைக்க வேண்டாம்‌. இனி நமது கலியுக பத்மாசூரரான சீனிவாசய்யங்கார்‌ பிராமணியத்திற்கும்‌ ஒரே தலைவராகப்‌ போகிறார்‌. அப்போது அதுவும்‌ ஒழியும்‌. அய்யங்கார்‌ பிரள யம்‌ இந்தக்‌ கொடுமைகளையெல்லாம்‌ ஒழித்த பிறகு மகாத்மா காந்தி மறு படியும்‌ வருவார்‌. அப்போது உலகத்துக்கு க்ஷமம்‌ பிறக்கும்‌. அர்ஜுனன்‌: அப்படியா! ரொம்பவும்‌ சந்தோஷம்‌. குடி அரசு - உரையாடல்‌ - 18.07.1926 61 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 மலையானக்‌ குழுவா மசோதா மலையாளக்‌ குடிவார மசோதா என்கிற ஒரு மசோதாவின்‌ பேரில்‌ சென்னை சட்டசபையில்‌ இவ்வாரம்‌ வாதம்‌ நிகழ்ந்து வருகிறது. இம்மசோதா வின்‌ தத்துவம்‌ பிராமணர்‌ பிராமணரல்லாதார்‌ என்கிற வகுப்பின்‌ நன்மை தீமைகளை அஸ்திவாரமாகக்‌ கொண்டது. எப்படியெனில்‌, மலையாள தேசத்தில்‌ உள்ள பூமிகள்‌ பெரும்பாலும்‌ அத்தேசத்திய பிராமணர்களுக்குச்‌ சொந்தமானது. அத்தேசத்துப்‌ பிராமணர்களில்‌ பெரும்பாலோர்‌ நம்பூதிரிகள்‌ என்னும்‌ மலையாளப்‌ பிராமணர்கள்‌. இவர்களுடைய சொத்துக்கள்‌ பாதிக்கப்‌ படுவதேயில்லை. இந்தப்‌ பிராமணர்கள்‌ தங்களுக்கு அதிகக்‌ குழந்தைகள்‌ பிறந்து விட்டால்‌ குடும்பத்திற்கு அதிகச்‌ செலவாகி விடுமென்றும்‌, பங்கு போட்டுக்‌ கொண்டே போனால்‌ சொத்துக்களின்‌ அளவு குறைந்து போகு மென்றும்‌ எண்ணியே தங்கள்‌ குடும்பங்களில்‌ தலைவனாக உள்ளவன்‌ மூத்த வன்‌! மாத்திரந்தான்‌ கல்யாணம்‌ செய்து கொள்வது என்றும்‌ மற்றவர்களெல்‌ லாம்‌ “சூத்திர ஸ்திரீ” களை அதாவது நாயர்‌ ஸ்திரீகளை சம்பந்தம்‌ செய்து (தமிழ்‌ நாட்டு தாசி வேசிகளைப்‌ போல்‌) ஒவ்வொரு பிராமணரல்லாத ஸ்திரீ யை வைப்பாட்டியாக வைத்துக்‌ கொள்வதென்றும்‌, அவர்களுக்குத்‌ தாங்கள்‌ வருஷம்‌ ஒன்றுக்கு நாலு முழத்‌ துண்டுகள்‌ இரண்டு ஜோடியும்‌, தலை முழுக எண்ணையும்‌ கொடுத்து விடுவதென்றும்‌, இதன்‌ மூலமாய்‌ பெறும்‌ குழந்தை களைக்‌ காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்குக்‌ கொஞ்சமும்‌ இல்லாமல்‌ ஏற்பாடு செய்து அதை வெகு நாளாகப்‌ பழக்கத்தில்‌ வைத்திருக்கிறார்கள்‌. இப்பழக்கங்கள்‌ யாதொரு விதமான தங்கு தடையில்லாமல்‌ நடை பெறவே, மலையாள தேசத்துப்‌ பிராமணரல்லாத ஸ்திரீகளுக்கும்‌ பிராமண: சம்பந்தமே புண்ணியமானதென்றும்‌ மோட்சத்திற்கு ஏதுவானதென்றும்‌ சாஸ்திர ஆதாரங்களையும்‌ ஏற்படுத்தி அவர்களை நம்பச்‌ செய்திருக்கிறார்‌. கள்‌. இவ்வித சாஸ்திரங்களில்‌ நம்பிக்கையில்லாமல்‌ யாராவது தகராறுக்கு வந்து விட்டால்‌ என்ன செய்கிறதென்று நினைத்து, சாஸ்திர ஆதாரத்திற்கு மேல்‌ பொருளாதாரத்திலும்‌ ஜாக்கிரதையா யிருந்து, அந்த நாட்டிலுள்ள பூமிகள்‌ பூராவும்‌ தங்களுடையதாக்கிக்கொண்டு, எந்த பிராமணரல்லாதாரும்‌ குடி இருப்பதற்குக்‌ கூட இந்த பிராமணர்களின்‌ தயவில்‌ - பிராமணர்களின்‌ பூமியில்‌ - இருக்கும்‌ படியாயும்‌, இந்த பிராமணர்களின்‌ அதிர்ப்திக்கு ஆளா னால்‌ மோட்ச வீடு இல்லாமல்‌ போவதோடு, குடியிருக்க வீடும்‌ இல்லாமல்‌ குடி அரசு - 1926 (2) 62 போகும்படி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்‌. இது எப்படி இவர்களுக்குச்‌ சாத்தியமாகிறது என்று பார்த்தால்‌, நமது நாட்டுப்‌ பிராமணர்களுக்கு எப்படித்‌ தாங்கள்‌ உயர்ந்த ஜாதியார்‌ என்பதற்கும்‌ தங்களை “சுவாமி” என்று மற்ற வகுப்பார்‌ கூப்பிட்டுக்‌ கும்பிடுவதற்கும்‌ வேத சாஸ்திர ஆதாரத்தோடு உத்தியோக அதிகார ஆதாரமும்‌ தேடி வைத்திருக்‌ கிறார்களோ, அது போலவே இவர்களுக்குப்‌ பூஸ்திதி அதிகம்‌; செலவு குறைவு: இவர்களைத்‌ தவிர மற்றவர்கள்‌ “கூலி ஆட்கள்‌”, “வைப்பாட்டி மக்கள்‌”. இந்த நிலைமையில்‌ ஒவ்வொரு பிராமணக்‌ குடும்பத்திற்குப்‌ பணம்‌ வருஷத்திற்கு ஆயிரக்கணக்காய்‌ மீதப்படுவதால்‌ அக்கம்‌ பக்கம்‌ உள்ள அன்னியன்‌ பூமிகளை எல்லாம்‌ இவர்களே வாங்கிக்கொள்ள செளகரியப்‌ படுகிறதும்‌, மற்றவர்களுக்கு அதிகச்‌ செலவும்‌ வரும்படிக்‌ குறைவும்‌ ஏற்படுவ தால்‌ எப்படி யாவது இவர்களுக்கே தங்கள்‌ பூமியை விற்றுவிட்டுப்‌ போக வேண்டியதுமான நிலைமை ஏற்பட்டு விடுகிறது. சாதாரணமாக, ஒரு பிராமணன்‌ ஏறக்குறைய 40-50 பெண்களுக்குக்‌ கூட சம்பந்தம்‌ வைத்துள்ள புருஷனாக ஏற்படுகிறதும்‌ உண்டு. ஏனெனில்‌ மலையாள தேசப்‌ பெண்கள்‌ தங்களை வைப்பாட்டியாக வைத்திருப்பவன்‌ பிராமணன்‌ என்று சொல்லிக்கொண்டால்‌ தான்‌ அவர்களுக்குப்‌ பெருமை. அதிலும்‌ கொஞ்சம்‌ பெருமையுள்ள குடும்பஸ்தார்களாயிருந்துவிட்டால்‌ கட்டாயம்‌ பிராமணன்‌ பெயரைத்தான்‌ சொல்லிக்‌ கொள்ளவேண்டும்‌. இல்லா விட்டால்‌ அந்தக்‌ குடும்பத்திற்கு கெளரவக்‌ குறைவு என்று எண்ணுவார்கள்‌. சிற்சில கெளரவம்‌ பொருந்திய நாயர்‌ குடும்பங்களில்‌ உள்ள பெண்களுக்குப்‌ பிராமணர்கள்‌ பெயரைத்‌ தங்கள்‌ புருஷனாகச்‌ சொல்லிக்‌ கொள்ளுவதற்கு ருது சாந்தியில்லாமல்‌ 5 வருஷம்‌ 10 வருஷம்‌ காத்திருப்பதும்‌, கடைசியாய்‌ சில சமயங்களில்‌ அந்தப்‌ பிராமணர்களில்‌ யாராவது ஒருவனுக்குப்‌ பணம்‌ கொடுத்துத்‌ தன்‌ சம்பந்தக்காரன்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுவதற்கு உரிமை கேட்பதும்‌ சாதாரணமாய்‌ நடப்பதுண்டு. பெரிய நாயர்‌ குடும்பங்களில்‌ வீடு கட்டுவதானால்‌ தங்கள்‌ வீட்டைச்‌ சேர்ந்தாப்‌ போல்‌ இந்தப்‌ பிராமணர்களுக்‌ கென்று அவர்கள்‌ வரப்போக தங்கியிருப்பதற்கும்‌ பொங்கி சாப்பிடுவதற்கும்‌ “மடம்‌” என்பதாக ஒரு தனிக்‌ கட்டிடமும்‌ கட்டிக்‌ கொள்வதுண்டு. இவ்வளவுமல்லாமல்‌ அங்குள்ள நாயர்களில்‌ யாருடைய சம்சார மாவது கொஞ்சம்‌ அழகுள்ள பெண்ணாயிருக்கிறாளென்று ஒரு பிராமணன்‌ கேள்விப்பட்டால்‌ அந்த பிராமணன்‌ மேற்படி பெண்ணுடைய புருஷனைக்‌ கூட்டி வரச்செய்து, “அடே, மாதவா உன்னுடைய பாரியாள்‌ அதிக அழகுள்‌ ளவளென்று கேள்விப்பட்டேன்‌. அது வாஸ்தவமா” என்று கேட்பான்‌, அதற்கு மாதவன்‌ “அடியேன்‌, எல்லாம்‌ தங்களுடைய பாக்கியம்‌” என்பான்‌. இதைக்கேட்ட பிராமணன்‌ “அப்படியானால்‌ அவளை நம்முடைய மடத்‌ திற்கு வந்து ஒரு வாரம்‌ இருந்து போகும்படி சொல்லு” என்று சொல்லுவான்‌. ஏதாவது அழகுள்ள ஸ்திரீ தெருவில்‌ நடந்து போவதைக்‌ கண்டால்‌ உடனே 63 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. அவளைக்‌ கூப்பிட்டு, “ஏ பெண்ணே! உன்னுடைய வீட்டுப்‌ பெயரென்ன?” என்று கேட்பான்‌. அந்தப்‌ பெண்‌ தன்னுடைய வீட்டுப்‌ பெயரைச்‌ சொன்னவு டன்‌, ““இன்றைய ராத்திரிக்கு நான்‌ வருகிறேன்‌ என்று உன்னுடைய தாயாரிடம்‌. போய்ச்சொல்லு'” என்று சொல்லுவான்‌. இம்மாதிரியாக இந்தப்‌ பிராமணர்கள்‌. தங்களுடைய திருப்திக்காகவே அந்நாட்டிலுள்ள ஸ்திரீகளையெல்லாம்‌. கடவுளைக்‌ கொண்டு தாங்களே சிருஷ்டிக்கச்‌ செய்ததாக எண்ணிக்கொண்டு காரியம்‌ நடத்தி வருகிறார்கள்‌. இது மாத்திரமல்லாமல்‌, அந்த நாட்டுப்‌ புருஷர்களை நடத்துகிற மாதிரியோ இதைவிட மோசமாயிருக்கும்‌. அதாவது யாரைக்‌ கூப்பிடுவ தானாலும்‌, “டோய்‌”, என்கிற சப்தத்தை முன்னால்‌ வைத்துத்தான்‌ கூப்பிடு வார்கள்‌. பெயரோடுகூடிய “சாமி” “அப்பன்‌” என்கிற பதங்கள்‌ இருந்தால்‌ அதைத்‌ தள்ளி “டோய்‌ ராமா”, “டோய்‌ கிருஷ்ணா” என்று தான்‌ கூப்பிடு வார்‌ களேயல்லாமல்‌ “ராமசாமி” என்று கூப்பிடவே மாட்டார்கள்‌. அவர்கள்‌. வீட்டுக்குப்‌ போனால்‌ மேலே வேஷ்டி போட்டுக்கொண்டிருக்கக்‌ கூடாது. அரைக்கை, கால்கை சட்டைகள்‌ போட்டிருந்தாலும்‌ கழட்டி இடுப்பில்‌ கட்டிக்‌ கொண்டு தான்‌ போக வேண்டும்‌. பேசும்‌ போது ஒரு கையைக்‌ கட்டிக்‌ கொண்டும்‌ மற்றொரு கையால்‌ வாயை மூடிக்கொண்டுந்தான்‌ பேச வேண்டும்‌. வார்த்தைக்கு வார்த்தை முன்னிலையாய்‌ பேசும்‌ போது தாங்கள்‌ என்பதற்கு “திருமேனி” என்றும்‌, “திருமனசு' என்றும்‌, “தம்பிரான்‌” என்றும்‌, தன்மை யில்‌ பேச வேண்டுமானால்‌ “அடியேன்‌”, “அடியேன்‌” என்றுந்தான்‌ பேச வேண்டும்‌. இன்னும்‌ மலையாள நாட்டில்‌ அந்நாட்டு பிராமணர்கள்‌ அங்‌ குள்ள பிராமணரல்லாத மக்களுக்கும்‌ அவர்களது பெண்களுக்கும்‌ செய்யும்‌ கொடுமைகளையும்‌ நடத்தும்‌ பான்மைகளையும்‌ எழுதுவதென்றால்‌ இது சமயம்‌ எடுத்துக்‌ கொண்ட வியாசத்திற்கு இடம்‌ கிடையாது போய்விடும்‌. என்று இது சமயம்‌ இவ்வளவோடு நிறுத்திவிட்டோம்‌. இப்பேர்ப்பட்ட கொடுமைகளையும்‌ இந்தப்‌ பிராமணாதிக்கத்தையும்‌ ஏழைகளின்‌ கஷ்டத்தையும்‌ ஒழித்து அங்குள்ள பிராமணரல்லாதாரின்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றி அங்குள்ள பிராமணரல்லாதார்கள்‌ வெகு காலமாகப்‌ பிரயத்தனப்பட்டு வருவது யாவருமறிந்த விஷயம்‌. இதன்‌ பலனா கவே கொச்சி, திருவாங்கூர்‌ முதலிய இடங்களிலும்‌ பிரிட்டிஷ்‌ மலையாளத்‌ திலும்‌ “நாயர்‌ ஆக்ட்‌” என்று சொல்லப்படும்‌ சட்டம்‌ ஒன்றும்‌ நிறைவேற்‌ றப்பட்டிருக்கிறது . ஆனாலும்‌, அந்தச்‌ சட்டமானது பொருளாதார விஷயத்‌ தில்‌ பிராமணர்களுக்கு இருக்கும்‌ நிரந்தர ஆதிக்கத்தால்‌ சரியான பலன்‌ தருவதற்கில்லாமல்‌ செய்து விடுகிறபடியால்‌ அது விஷயத்திலும்‌ சிறிது சீர்‌. திருத்தங்கள்‌ செய்யவேண்டிய அவசியமிருந்தபடியால்‌ “மலையாளக்‌ குடிவார மசோதா” என்ற ஒரு மசோதாவை சட்டசபை மூலம்‌ கொண்டு வர: ஏற்படுத்தி, அதை ஒரு தனிக்‌ கமிட்டிக்கு விட்டு அக்கமிட்டியிலேயே வேண்டிய ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு அது அமுலில்‌ வருவதற்கு சட்டசபை குடி அரசு - 1926 (2) 64 யின்‌ மூலம்‌ நிறைவேற வேண்டியதற்காக இப்போது சட்டசபையில்‌ ஒரு கூட்டம்‌ கூட்டப்பட்டு அது நடைபெற்று வருகிறது. இந்த மசோதா கமிட்டியில்‌ ஏற்பாடு செய்திருக்கிறபடி நிறைவேற்றப்‌ பட்டுவிட்டால்‌ பிராமணர்‌ ஆதிக்கத்திற்குக்‌ கொஞ்சம்‌ ஆபத்து வந்துவிடு மென்னும்‌ காரணத்தினால்‌, பிராமணக்‌ கக்ஷியான சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்டசபையில்‌ ஒரு காரியமும்‌ செய்ய முடியாது என்று வெளியில்‌ வந்த பிறகும்‌ இந்த மசோதாவிற்கு மட்டிலும்‌ போய்‌ சட்டசபையின்‌ மூலம்‌ சில காரியங்கள்‌ செய்துகொள்ளலாம்‌ என்று போனார்கள்‌. இந்த 5, 6- நாட்களாக சட்டசபையில்‌ அந்த மசோதாவைப்‌ பற்றி நடக்கும்‌ வியவகாரங்களைக்‌ கவனித்தவர்களுக்கு இந்த மசோதாவின்‌ உயிர்நாடியை வாங்குவதற்குப்‌ பிராமணர்கள்‌ ஒற்றுமையாய்‌ எவ்வளவு பிரயத்தனங்கள்‌ செய்கிறார்கள்‌ என்பதும்‌, பிராமணரல்லாதார்கள்‌ எவ்வளவு தூரம்‌ கஷ்டப்படுகிறார்கள்‌ என்பதும்‌ விளங்காமல்‌ போகாது. மலையாளத்துப்‌ பிராமணர்களும்‌ பெரிய பூஸ்திதியுள்ள சில ஜமீன்தாரர்களும்‌ ஸ்ரீமான்‌ சர்‌.சி.பி. இராமசாமி அய்யர்‌ அவர்களைத்‌ தங்கள்‌ நாட்டுக்கு வரவழைத்து பெரிய வரவேற்பும்‌ ஆடம்பரமும்‌ செய்ததையும்‌ நேயர்கள்‌ பத்திரிகை களில்‌ பார்த்திருப்பார்கள்‌. இப்போதோ இதே ஸ்ரீமான்‌ சர்‌.சி.பி.இராமசாமி அய்யர்‌ இந்த மசோதாவின்‌ உயிர்நாடியை வாங்க கங்கணம்‌ கட்டிக்கொண்‌: டிருக்கிறார்‌. இதற்கனுகூலமாக மற்ற பிராமண மெம்பர்களும்‌ தங்களால்‌ ஆனவரையிலும்‌ கூடச்‌ சேர்ந்து தாங்கி வருகிறார்கள்‌. இம்மசோதாவின்‌ உயிர்நாடியான சில பாகங்களை சர்‌.ி.பி. அய்யர்‌ எதிர்க்கும்‌ போது சர்‌.கே.வி.ரெட்டி நாயுடு பதில்‌ சொல்லுகையில்‌, *“மலை யாள தேசத்துப்‌ பெண்கள்‌ பக்குவமானால்‌ முதல்‌ முதல்‌ பிராமணன்தான்‌ அவளைப்‌ புணர வேண்டும்‌ என்று இருக்கிற அக்கிரமங்கள்‌ எல்லாம்‌. துலைந்துபோய்‌ விடுகிறதே என்று பயப்படுகிறீர்களா”” என்றும்‌, “*சர்‌.சி.பி அய்யரே நீங்கள்‌ கவர்ன்மெண்டு சார்பாய்‌ பேசுகிறீர்களா அல்லது மனுதர்மத்‌ தின்‌ சார்பாய்‌ பேசுகிறீர்களா” என்றும்‌ கேட்டார்‌. இது சர்‌. சி.பி. இராமசாமி அய்யருக்கு கோபத்தை மூட்டாவிட்டாலும்‌, ஸ்ரீமான்‌ எஸ்‌.சத்தியமூர்த்தி அய்யருக்கு மனுதர்ம சாஸ்திரத்தைப்‌ பற்றி பேசலாமா என்று கோபம்‌ வந்து,சர்‌.சி.பி. அய்யருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, சர்‌.சி.பி. அய்யர்‌ கவர்மெண்டார்‌ சார்பாய்‌ பேசுகிறபடியால்‌ அவரை “நீங்கள்‌” என்று முன்னி லைப்படுத்தி பேசியது தப்பு என்று சிபார்சுக்கு வந்து விட்டார்‌. உடனே ஸ்ரீமான்‌ சர்‌கேவி. ரெட்டி நாயுடு “பார்ப்பனரைப்‌ பாதிக்கும்படியான ஒரு சிறு வார்த்தை ஏற்பட்டாலும்கூட உடனே எல்லா பார்ப்பனர்களும்‌ கட்சி பேதமில்லாமல்‌ ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்‌. சர்‌.சி.பி.அய்யருக்குப்‌ பேசத்‌ தெரியாதா? அல்லது ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி அய்யர்‌ சர்க்கார்‌ மனுஷரா? அல்லது இதனால்‌ ஏதாவது பொது ஜனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதா? இதிலிருந்தே பார்ப்பனர்களின்‌ மனப்பான்மையைத்‌ தெரிந்து 65 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கொள்ளுங்கள்‌” என்று சொன்னவுடன்‌ சத்தியமூர்த்தி அய்யர்‌ வெட்கிப்‌ போய்‌ விட்டார்‌. மற்றொரு சமயத்தில்‌ திவான்‌ பஹதூர்‌ எம்‌. கிருஷ்ண நாயரின்‌ தீர்மானத்தை சர்‌.சிஃபி. அய்யர்‌ எதிர்க்கும்‌ போது சபையைப்‌ பார்த்து “நீங்கள்‌. இங்கு இத்தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதினாலேயே அது அமுலுக்கு கொண்டு வரமுடியாது”, என்றும்‌ “கவர்னரைக்‌ கொண்டு இந்த தீர்மானத்தை தள்ளிவிடச்‌ செய்யப்படும்‌” என்றும்‌ சொல்லி மிரட்டினார்‌. ஸ்ரீமான்‌ எம்‌. கிருஷ்ண நாயர்‌ அதற்குப்‌ பதில்‌ சொல்லும்போது இந்த பில்‌ விஷயத்தில்‌ சர்க்காரார்‌ ஜனங்களை அனுசரித்துப்‌ போகாமல்‌ பொறுப்பற்றதனமாய்‌ நடந்து கொள்வதையும்‌ சர்‌.சி.பி.இராமசாமி அய்யர்‌ ஜனங்களின்‌ மனப்பான்‌ மையைக்‌ கவனிக்காமல்‌ கொஞ்சமும்‌ பயமின்றி நெஞ்சும்‌ குடலும்‌ அஞ்சா மல்‌ எழுந்து நின்று “நீங்கள்‌ நிறைவேற்றினாலும்‌ நான்‌ கவர்னரைக்‌ கொண்டு. நிராகரித்துவிடுவேன்‌ என்று சொல்லும்படியான தைரியம்‌ வந்து விட்ட தல்லவா” என்று சபையைப்‌ பார்த்து ஓர்‌ அதட்டு அதட்டியவுடன்‌ சர்‌. அய்யருக்கு நடுக்கம்‌ வந்து “நான்‌ அப்படிச்‌ சொல்லவில்லை, இப்படிச்‌ சொல்லவில்லை” என்று மழுப்ப ஆரம்பித்து விட்டார்‌. பிரிதொரு சமயத்தில்‌ இந்த மசோதாவை இந்தத்‌ தடவை எப்படியாவது தள்ளிவைத்து வாய்தா போட்டுவிட்டால்‌ பிறகு இந்தக்‌ கவுன்‌ சிலே கலைந்து போய்விடும்‌. அதன்‌ பிறகு புது கவுன்சிலுக்குப்‌ புது மெம்பர்‌ கள்தானே வருவார்கள்‌ என்று நினைத்து, ஒரு வெள்ளைக்காரரைவிட்டு மெதுவாய்‌ காலம்‌ குறிப்பிடாமல்‌ தள்ளி வைக்கும்படி ஒரு தீர்மானம்‌ கொண்டு வந்தார்‌. கள்‌. அதன்‌ வார்த்தைகள்‌ சட்டத்திற்குப்‌ பொருத்தமில்லை என்கிற காரணத்தால்‌ அத்‌ தீர்மானம்‌ தள்ளுபடியாகப்போகும்‌ சமயத்தில்‌, அட்வெகேட்‌ ஜெனரல்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டராம சாஸ்திரியார்‌ அந்த வெள்‌ எளைக்காரருக்கு வார்த்தை திருத்திக்‌ கொடுத்தார்‌. இந்த தீர்மானத்தை ஸ்ரீமான்‌ எம்‌.கிருஷ்ண நாயர்‌ எதிர்க்கும்‌ போது “துரைக்கு இந்த மசோதாவின்‌ தத்துவமும்‌ வாய்தாவின்‌ அவசியமும்‌ ஒன்றுமே தெரியாதென்றும்‌, இதெல்‌ லாம்‌ உங்களுக்கு வேறு ஆட்கள்‌ இருந்து கொண்டு செய்கிற காரியங்‌ களல்லவா” என்றும்‌ கண்டித்ததும்‌ அட்வெகேட்‌ ஜெனரல்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டராம சாஸ்திரியார்‌ எழுந்து “நான்‌ திருத்தினேனே ஒழிய எனக்கும்‌. அதற்கும்‌ சம்மந்தமில்லை” என்று சொல்லிக்‌ கொண்டார்‌. கடைசியாக தீர்மானங்கள்‌ ஓட்டுக்கு வந்த காலத்தில்‌ சர்‌.சி.பி. இராமசாமி அய்யர்‌ உள்பட ஏறக்குறைய எல்லா பார்ப்பனர்களும்‌ ஒன்று சேர்ந்தே ஒரு பக்கத்திற்கு ஓட்டுக்‌ கொடுப்பதும்‌, எல்லா பார்ப்பனரல்லாதாரும்‌ ஒன்று சேர்ந்துமற்‌ றொரு பக்கத்திற்கு ஓட்டுக்‌ கொடுப்பதுமாகவே இருந்து வந்தது. இதிலிருந்து பார்ப்பனர்‌ ஆதிக்கத்திற்கு ஏதாவது கொஞ்சம்‌ ஆட்டம்‌ வருவதாயிருந்தாலும்‌ எல்லோரும்‌ ஒன்று சேர்ந்துக்‌ கொள்வதன்‌ மூலம்‌, பார்ப்பனர்கள்‌ எவ்வளவு தூரம்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ அடிமைத்தனத்தை. குடி அரசு - 1926 (2) 66 விலக்குவதில்‌ எதிரிகளாயிருக்கிறார்கள்‌ என்பதும்‌ விளங்குதற்காகவே இவைகளை இங்கு எடுத்து சொல்லப்பட்டது. இந்த மசோதா விவாத விஷயத்தில்‌ பார்ப்பனரல்லாத அங்கத்‌ தினர்களான கனவான்கள்‌ திவான்பஹதூர்‌ எம்‌. கிருஷ்ண நாயர்‌, சர்‌.கே.வி. ரெட்டி, ஸ்ரீமான்‌ நரசிம்மராஜு முதலியவர்கள்‌ நடந்து கொண்ட உறுதியும்‌ பார்ப்பனர்களுக்கும்‌ அவர்களுடைய அதிகாரங்களுக்கும்‌ கொஞ்சமும்‌ பயப்படாமல்‌ அவர்களின்‌ திருட்டுத்‌ தனத்தை தைரியமாய்‌ வெளியிட்டுக்‌ கண்டித்த வீர மொழிகளும்‌ தங்க நீர்‌ துவைத்த எழுத்துக்களால்‌ அச்சடித்து கண்ணாடிக்குள்‌ சட்டம்‌ போட்டு வைக்கத்தக்க சொற்களாகவே ஜொலிக்‌ கின்றன. இனியும்‌ பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றுவதற்கு இதுபோலவே அநேக மசோதாக்கள்‌ கொண்டு வரவேண்டியிருக்கிறது. அவற்றிற்கெல்லாம்‌ அனுகூலம்‌ செய்யப்படவேண்டுமானால்‌ பார்ப்பனரல்‌ லாதார்களையே சட்டசபைக்கு அனுப்பினால்தான்‌ முடியும்‌. அரசியல்‌ சம்‌ மந்தமாக சட்டசபையில்‌ ஒரு காரியமும்‌ செய்துகொள்ள முடியவே முடியாது. பார்ப்பனர்களின்‌ கொடுமையில்‌ இருந்து விடுதலை பெறுவதற்குத்தான்‌ சட்டசபையைக்‌ கொஞ்சம்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளலாம்‌. அதுவும்‌ பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள்‌ தெரிந்தெடுக்கப்பட்டால்தான்‌ முடியுமே அல்லாமல்‌, பார்ப்பனப்‌ பத்திரிகைகளின்‌ மோசப்‌ பிரசாரத்தில்‌ மயங்கியோ அவர்களின்‌ ஆசை வார்த்தையில்‌ ஏமாந்தோ இன்று அவர்களுக்கு ஓட்டுக்‌ கொடுத்துவிட்டால்‌, நாளைக்கு அப்பா என்றாலும்‌ வராது சாமி என்றாலும்‌. வராது. காரியம்‌ ஆனவுடன்‌ நம்‌ தலையிலேயே காலை வைக்க வந்து விடுவார்கள்‌. உதாரணமாக, ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு பனகால்‌ ராஜா ஜில்லா போர்டு மெம்பர்‌ பதவி கொடுத்த மூன்றாம்‌ நாளே. ராஜாவுக்கு விரோதமாய்‌ அவரின்‌ விரோதிகளுடன்‌ சேர்ந்து கொண்டு நம்பிக்கையில்லாத்‌ தீர்மானத்திற்கு ஓட்டுக்‌ கொடுத்ததை எல்லோரும்‌ பார்க்கவில்லையா? ஆதலால்‌ நம்மிடம்‌ காரியம்‌ ஆகும்‌ வரையில்‌ நமது நன்மைக்குப்‌ பாடுபடப்‌ போவதாகவே சொல்லுவார்கள்‌. காரியம்‌ ஆனவுடன்‌ நம்மை எந்த ஊர்‌ என்று கேட்பதோடு தங்கள்‌ ஜாதி நலனுக்கும்‌ தங்கள்‌ ஆதிக்கத்திற்குந்தான்‌ நாம்‌ செய்து வைத்த வேலையை உபயோகப்‌ படுத்திக்‌ கொள்வார்கள்‌. ஆதலால்‌ வரப்‌ போகும்‌ தேர்தல்களில்‌ ஏமாந்து போகாமல்‌ ஒவ்வொரு ஓட்டரும்‌ தங்கள்‌ தங்கள்‌ கடமையைச்‌ செய்ய வேண்டுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 18.07.1926 67 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 தமிழ்‌ 'சுயாரான்மா” பார்ப்பனர்களின்‌ நயவஞ்சக ஆதிக்கம்‌ பொங்கித்‌ ததும்பி பூரணமாய்த்‌ தாண்டவம்‌ ஆடப்பெறும்‌ தமிழ்‌ *சுயராஜ்யா” பார்ப்பனரல்லா தார்‌ கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ்‌ பணத்தைக்‌ கொண்டு நடைபெறுகிற தென்பதைப்‌ பலரும்‌ அறிவர்‌. அன்னமிட்டவர்‌ வீட்டில்‌ கன்னமிடும்‌ படு பாவிகளைப்போல பார்ப்பனரல்லாதாரின்‌ பணத்தாலேயே பிறந்து, பார்ப்ப னரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ்‌ “சுயராஜ்யா” பார்ப்ப னரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல்‌ லாதாரின்‌ க்$னத்தைக்‌ கோரி பார்ப்பனரல்லாதாருடன்‌ போர்‌ புரிந்து வரு வதை உலகமறியும்‌. சின்னாட்களுக்கு முன்‌ பார்ப்பனரல்லாத கட்சியின்‌ கூட்டம்‌ சென்னை செளந்தரிய மகாலில்‌ நடைபெற்றது. “சுயராஜ்ய” பத்திரிகை அக்கூட்டத்தில்‌ கூடியிருந்தோர்‌ அனைவரையும்‌ “உத்தியோகம்‌ நக்கிப்‌ பொறுக்கிகள்‌” என்று மானங்கெட்டத்தனமாய்‌ பெயரிடுகிறது. ஊரூராய்த்‌ திண்டாடித்‌ தெருவில்‌ நின்று பார்ப்பனரல்லாதார்‌ வீடுதோறும்‌ அலைந்து திரியும்‌ “உத்தியோகம்‌ நக்கிப்‌ பொறுக்கிகள்‌” “சுயராஜ்யா* பத்திரிகை ஆசிரியரின்‌ இனத்தைச்‌ சேர்ந்த பார்ப்பனக்‌ கூட்டமேயன்றி, செளந்தரிய மகாலில்‌ அன்று குழுமி யிருந்த பார்ப்பனரல்லாதவர்களன்று. இதைப்பற்றி “திராவிடன்‌” கூறியுள்ள முத்து போன்ற எழுத்துக்களைக்‌ கவனிப்போம்‌. “தமிழ்‌ “சுயராஜ்யா” அற்பத்தனமாயும்‌ அயோக்கியத்தன மாயும்‌ எழுதத்‌ துவங்கிவிட்டது மிகவும்‌ வருந்ததக்கதாகும்‌. “உத்தியோக நக்கிப்‌ பொறுக்கிகள்‌” செளந்தரிய மகாலில்‌ பெருந்திர: ளாய்க்‌ கூடியிருந்தவர்கள னைவருமாம்‌. வீடுதோறும்‌ பிறப்புக்கும்‌. கலியாணத்துக்கும்‌, இழவுக்கும்‌ அழையாவிட்டாலும்‌ நாய்போல்‌ வந்து பல்லைக்‌ காட்டு அரையணா, ஒரு அணா பெற்றுப்‌ பொறுக்கித்‌ தின்பவர்கள்‌ பார்ப்பனர்களே நிருவாகசபை உத்தியோகங்கள்‌ முதல்‌, கேவலம்‌ செருப்புத்‌ தைத்தல்‌, கும்பகோணம்‌ வேலையில்‌ ஈடுபடல்‌ ஆகிய இழிதொழில்கள்‌ செய்து கால்களை நக்கிப்‌ பொறுக்கித்‌ தின்று வயிறு பிழைப்பவர்கள்‌ பார்ப்பன மாக்களே யன்றி பார்ப்பனரல்லாத மக்களல்ல.” இதைப்பார்த்த பின்னும்‌ இவ்வாறு அந்த பார்ப்பனப்‌ பத்திரிகையால்‌ குடி அரசு - 1926 (2) 68 பார்ப்பனரல்லாதாரை ஏழேழு ஜென்மத்திற்கும்‌ மறையாத மாசுடையோராய்‌ இழித்துரையாடப்‌ பெற்ற “நக்கிப்‌ பொறுக்கிகள்‌” என்ற வார்த்தையைக்‌ கேட்ட பிறகும்‌ - தன்‌ நரம்பிலே பார்ப்பனரல்லாதாரின்‌ சுத்த ரத்தம்‌ ஓடப்‌ பெறும்‌ எவராவது- பார்ப்பனரல்லாதாராய்‌ பிறந்த எந்த ஆண்மை யுடையோராவது இனி “சுயராஜ்யா*ப்‌ பத்திரிகையை கையில்‌ தொடுவாரா? கண்ணில்‌ பார்ப்பாரா? மானம்‌, வெட்கம்‌, ரோஷம்‌, சுயமதிப்பு உடைய எந்த பார்ப்பனரல்லாதாரும்‌ இனி அப்பத்திரிகையைப்‌ பார்க்கவும்‌ தொடவு மாட்டார்களென்றே நம்புகிறோம்‌ குடி அரசு - கட்டுரை - 18.07.1926 69 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 “சுதேசமித்திரணிண்‌ காணோதயம்‌ ஜுலை 15716 ௨ “மித்திர”ன்‌ “இந்து மத தர்ம ஸ்தாபனங்கள்‌ சரியாக நடக்கும்படி செய்யத்தக்க சட்டம்‌ ஒன்று இயற்றப்பட வேண்டு மென்பதை எல்லோரும்‌ ஒப்புக்கொள்வார்கள்‌” என்று எழுதியிருக்‌ கிறான்‌. மதவிஷயத்‌ தில்‌ அரசாங்கத்தார்‌ பிரவேசிக்கக்‌ கூடாது என்று எழுதி இதுவரை பாமரர்களை ஏமாற்றி வந்த பார்ப்பன மித்திரனுக்கு இப்போதா வது சர்க்காரால்‌ சட்டம்‌ ஒன்று செய்யப்பட வேண்டும்‌ என்று சொல்லும்‌ படியான புத்தி வந்ததற்கு நாம்‌ மகிழ்கிறோம்‌. ஆனால்‌ இந்தப்புத்தி தானாகத்‌ தோன்ற வில்லை. ஸ்ரீமான்கள்‌ வரதராஜுலு நாயுடுகாரும்‌, ஈவெஇராமசாமி நாயக்‌ கரும்‌ தேவஸ்தானச்‌ சட்டத்தை ஆதரித்தும்‌ அதை எதிற்கும்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்கஷியைப்‌ பொது ஜனங்கள்‌ அறியும்படி செய்ததின்‌ பலனாகவும்‌ இதை ஒப்புக்கொள்ளாவிட்டால்‌ தங்களுக்கு ஓட்டுக்கிடைக்கா மல்‌ போகுமோ என்கிற பயமும்‌ பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திர” னை “இந்துமத ஸ்தாபனம்‌ சரியாக நடக்க ஒரு சட்டம்‌ அவசியம்‌” என்று சொல்லும்படி செய்து விட்டது. ஆனால்‌ “மித்திரன்‌” அதின்‌ கீழாகவே “இந்த சட்டமானது தர்மங்கள்‌ சரியாக நடைபெறும்படி செய்வதற்கு மாத்திரம்‌ உத்தேசிக்கப்‌ பட்டதாக இருக்க வேண்டும்‌” என்கிறான்‌. அப்படியானால்‌ இப்போதிருக்‌ கும்‌ சட்டம்‌ கோயில்களில்‌ இருக்கும்‌ “கல்லுசாமி”களை யெல்லாம்‌ பிடுங்கி எறிந்துவிட்டு, அந்த ஸ்தானத்தில்‌ ஸ்ரீமான்கள்‌ பனக்கால்‌ ராஜாவும்‌ வரத ராஜுலு நாயுடுகாரும்‌, இராமசாமி நாயக்கரும்‌ உட்கார்ந்து கொண்டு இந்தப்‌ பார்ப்பனர்களைக்‌ கொண்டு அபிஷேகமும்‌ பூஜையும்‌ செய்யும்படி கேட்பார்கள்‌ என்று “மித்தி ரன்‌” உண்மையிலேயே பயப்படு கிறானா அல்லது இந்த முகாந்திரத்தைச்‌ சொல்லி அதை ஒழிக்க சூழ்க்ஷி செய்கிறானா என்பதை வாசகர்கள்‌ உணர்வார்களாக. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 18.07.1926 குடி அரசு - 1926 (2) 70 யார்ப்பணால்லாதார்களுக்கு ஓர்‌ கவண்டுகோன்‌ தற்காலம்‌ நமது நாட்டில்‌ சட்டசபைத்‌ தேர்தல்‌ நெருங்கி வருகிறது. தேர்தல்களில்‌ வெற்றி பெறுவோர்களில்‌ பலருக்கு மந்திரி, தலைவர்‌ முதலிய கொழுத்த சம்பளமுள்ள உத்தியோகங்களும்‌, தங்களுக்கு வேண்டிய பலருக்கு 1000, 500 ரூபாய்‌ சம்பளமுள்ள உத்தியோகங்கள்‌ கொடுக்கக்‌ கூடிய அதிகாரங்களும்‌ கிடைக்க வசதியிருப்பதால்‌, இத்தேர்தலுக்குப்‌ பெரிய மதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, இவ்வுத்தியோகங்கள்‌ அடைய எதிர்பார்த்துக்‌ கொண்டிருப்பவர்களுக்கு சட்டசபையில்‌ ஆள்‌ பலமும்‌ கட்சிப்‌ பெயர்களும்‌ வேண்டியிருக்கிறபடியால்‌ தேசத்தின்‌ பெயராலும்‌ சமூகத்தின்‌ பெயராலும்‌ பலர்‌ பல கட்சிகளை ஏற்படுத்திக்‌ கொண்டு, ஒவ்வொன்றிற்கும்‌ ஜனங்கள்‌ ஏமாறத்தக்க வண்ணம்‌ ஒவ்வொரு பெயரை வைத்துத்‌ தங்களைப்‌ போன்ற சுயநலவாதிகளாகப்‌ பலரைச்‌ சேர்த்துக்‌ கொண்டு கூட்டுக்‌ கொள்ளை அடிப்‌ பது போல்‌ பலவித மோச வார்த்தைகளையும்‌, பொய்‌ வாக்குத்‌ தத்தங்க ளையும்‌ ஓட்டர்களிடம்‌ சொல்லி அவர்களை ஏமாற்றி ஓட்டுப்‌ பெற பலவித முயற்சி செய்து வருகிறார்கள்‌. நாட்டில்‌ எங்கு பார்த்தாலும்‌ சில வகுப்பினர்‌. இதே வேலையாகத்‌ திரிந்து வருகின்றனர்‌. இதனால்‌ தேசத்திற்கும்‌ ஏழை மக்களுக்கும்‌ திருத்த முடியாத கெடுதிகள்‌ ஏற்பட்டு வருகின்றன. ஏழைமக்களிடத்தில்‌ கவலையுள்ளவர்கள்‌ இந்த சமயத்தில்‌ அலக்ஷிய மாயிருக்கக்‌ கூடாது என்கிற எண்ணத்தின்‌ பேரில்‌ அனேகர்‌ இதற்கேதே னும்‌ வழிசெய்து ஏழைமக்களை உண்மை உணரும்படி செய்யவேண்டும்‌ என்கிற ஆசையின்‌ பேரில்‌ எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள்‌. இம்‌ முயற்சியானது பலர்‌ சேர்ந்து குறிப்பிட்ட கட்டுப்பாடோ, திட்டமோ ஏற்படுத்‌ திக்கொள்ளாமல்‌ தனித்தனியாய்ச்‌ செய்து வருவதால்‌ எதிர்பார்க்கும்பலனை அடையக்‌ கூடுமோவென சந்தேகிக்கக்‌ கூடியதாயிருக்கிறது. இவ்வார ஆரம்பத்தில்‌ ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌, திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌, ஆர்‌. கே.ஷண்முகஞ்‌ செட்டியார்‌, என்‌. தண்ட பாணி பிள்ளை முதலியவர்களோடு சென்னையில்‌ கூடி இரண்டு நாள்‌ யோசித்தும்‌ பல காரணங்களால்‌ தேர்தலுக்கு முன்‌ ஒருவித முடிவுக்கு வர முடியாமல்‌ போய்விட்டது. 71 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஆனபோதிலும்‌ ராஜீய விஷயத்திலும்‌ சமூக விஷயத்திலும்‌ வகுப்பு விஷயத்திலும்‌ தேர்தல்கள்‌ விஷயத்திலும்‌ “குடி அரசு” தனது அபிப்பி ராயத்தை கொஞ்சமும்‌ ஒளிக்காமல்‌ வெளியிட்டுக்‌ கொண்டு வந்திருக்கிறது. அதே தத்துவங்களை வைத்து சில திட்டங்களைக்‌ கோரி அவற்றை நிறைவேற்றப்‌ பலர்‌ சேர்ந்து கட்டுப்பாடாக வேலை செய்வதற்காக அடுத்த வாரத்தில்‌ ஒரு அறிக்கை வெளியிட வேண்டுமென்கிற ஆவல்‌ கொண்டி ருக்கிறோம்‌. இவ்வறிக்கையில்‌ பல கனவான்களின்‌ கையொப்பங்களையும்‌ சேர்த்து வெளியிட வேண்டுமென்கிற விருப்பம்‌ கொண்டிருக்கிறபடியால்‌ இத்தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்‌ கனவான்களை தங்கள்‌ பெயரையும்‌, அவ்வறிக்கையில்‌ சேர்த்துக்‌ கொள்வதற்கு முழு விலாசத்துடன்‌ தங்கள்‌. சம்மதத்தையும்‌ உடனே எழுதியனுப்பும்படி வேண்டிக்‌ கொள்ளுகிறோம்‌. தேர்தல்‌ காலம்‌ நெருங்கி விட்டதாலும்‌ நாளுக்கு நாள்‌ நெருக்கடி ஏற்பட்டு வருவதாலும்‌ அன்பர்கள்‌ அலக்ஷியமாய்‌ இருக்காமல்‌ தயவு செய்து அவசர மாகக்‌ கவனிப்பார்களாக. ஈ.வெ.இராமசாமி குடி அரசு - தலையங்கம்‌ - 25.07.1926 குடி அரசு - 1926 (2) 72 ஐஜணாய்‌ யாகூப்‌ ஹாசன்‌ ( எதிரிகளுக்கு ஒரு நல்ல கவட்டை ) ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழிக்க வேண்டும்‌ என்று கஷ்டப்படுகிற அதன்‌ எதிரிகளுக்கும்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியைத்‌ திட்டி கூலி வாங்கிப்‌ பிழைப்பவர்‌. களுக்கும்‌ இந்த மாதம்‌ நடந்த சென்னை சட்டசபைக்‌ கூட்டத்தினால்‌ ஒரு நல்ல வேட்டை கிடைத்ததென்றே சொல்லலாம்‌. மலையாளக்‌ குடிவார மசோதாவைப்‌ பற்றி பார்ப்பனர்கள்‌ பேரில்‌ ஏற்பட்டிருந்த கெட்ட பெயரை: மாற்றிக்‌ கொள்ளவும்‌, சர்‌.கே.வி. ரெட்டி மலையாளக்‌ குடிவார மசோதாவை நிறைவேற்றும்‌ விஷயத்தில்‌ ஆண்மையுடன்‌ எடுத்துக்கொண்ட முயற்சியி னால்‌ ஏற்பட்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை மாற்றவும்‌, நமது பார்ப்பனர்கள்‌. ஜனாப்‌ யாகூப்‌ ஹாசன்‌ சேட்டு பெயரால்‌ தந்திரம்‌ செய்து வெற்றிபெற்று விட்டார்கள்‌. அதாவது ஜனாப்‌ சேட்‌ அவர்கள்‌ சட்டசபைக்கு அபேக்ஷகரா யிருக்கத்‌ தனது சிறை வாசத்தால்‌ ஏற்பட்டிருக்கும்‌ தடையை நீக்கும்படி சென்னை அரசாங்கத்தாருக்கு மிதவாதிகளைப்‌ பிடித்து ஒரு விண்ணப்பம்‌. செய்து கொண்டார்‌. அது பலிக்காமல்‌ போகவே இந்தியா அரசாங்கத்தாருக்கு ஒரு விண்ணப்பம்‌ செய்து மிதவாதிகளைப்‌ பிடித்து சிபார்சு செய்யச்‌ செய்து பார்த்தார்‌. அதுவும்‌ பலனற்றுப்‌ போயிற்று. இது தெரிந்த சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌. ஜனாப்‌ சேட்‌ அவர்கள்‌ தங்கள்‌ ககஷியில்‌ சேராததாலேயே இப்படி ஏற்பட்ட தென்றும்‌, தங்கள்‌ மூலமாய்ப்‌ பிரயத்தனப்பட்டால்‌ இதற்கு விமோசனம்‌ ஏற்படும்‌ என்றும்‌ ஜாடை காட்டினார்கள்‌. ஜனாப்‌ சேட்‌ அவர்களும்‌ இதை நம்பி சுயராஜ்யக்‌ கக்ஷியாரின்‌ தயவை நாடி அவர்கள்‌ பின்னால்‌ திரிந்தார்‌. இதன்‌ பலனாக சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ நமது சேட்‌ அவர்களுக்குத்‌ தனது தடையை நீக்கிக்கொள்ள இனிமேல்‌ பிரயத்தனப்படவேண்டிய அவசியமே. இல்லாமல்‌ செய்துவிட்டார்கள்‌.இம்மட்டோ? தேச மகாஜனங்களுக்கே சேட்‌ அவர்களின்‌ தடை நீங்க இஷ்டமில்லை என்கிற தீர்ப்பையும்‌ வாங்கிக்‌ கொடுத்து விட்டார்கள்‌. ஸ்ரீமான்‌ ஒத்தக்காசு செட்டியாரை அந்த விதத்தில்‌ கெடுத்தார்கள்‌. ஜனாப்‌ சேட்‌ அவர்களை இந்த விதத்தில்‌ கெடுத்தார்கள்‌. இந்த விஷயம்‌ சட்டசபைக்குப்‌ போனால்‌ ஜெயிக்காது என்பது நன்றாய்த்‌ தெரிந்திருந்தும்‌ தங்களின்‌ “கட்டுப்பாட்டையும்‌” மீறிக்கூட ஜனாப்‌ சேட்‌ விஷயத்தில்‌ நல்லது செய்யப்‌ போகிறவர்கள்‌ போல்‌ நடித்துப்‌ பார்ப்பனர்களுக்கும்‌ சேட்டுக்கும்‌ 72 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 உள்ள பழைய விரோதத்தின்‌ பழியைத்‌ தீர்த்துக்‌ கொண்டார்கள்‌. இது போலவேதான்‌ ஸ்ரீமான்‌ ஒத்தக்காசுசெட்டியார்‌ ஜஸ்டிஸ்‌ ககஷியில்‌ இருக்கும்‌. போது இந்தப்‌ பார்ப்பனர்களைத்‌ திட்டிய பழியைத்‌ தீர்த்துக்‌ கொள்ளவே அவரைப்‌ பிடித்து பனகால்‌ ராஜா மீது பிராது கொடுக்கச்‌ செய்து செட்டியார வர்களுக்கு என்றென்றைக்கும்‌ மானக்கேடு வருவதற்கில்லாமல்‌ செய்து, அவருக்கிருந்த பட்டத்தையும்‌ ஒழித்து தங்கள்‌ பழியைத்‌ தீர்த்துக்‌ கொண்‌: டார்கள்‌. இதை நமது சேட்டு அவர்கள்‌ நன்றாய்ப்‌ பார்த்திருந்தும்‌ அவர்கள்‌. கையில்‌ சிக்கி இந்தக்‌ கதிக்கு ஆளாகிவிட்டார்‌. இது உலக வழக்கம்தான்‌. தாசி வீட்டுக்குப்‌ போகும்‌ வாலிபர்களைத்‌ தடைசெய்து அவர்களுக்குப்‌ புத்தி சொன்னால்‌ அவர்கள்‌ கேட்பதில்லை. யாவர்‌ வார்த்தையையும்‌ தட்டி அங்குப்போய்‌ சுகம்‌ அனுபவிப்பது போல்‌ நினைத்துக்கொண்டு தனது பொருள்களையெல்லாம்‌ தோற்று, ரத்தம்‌ கெட்டு, வியாதி பெற்று வீட்டுக்குத்‌ திரும்புகிற காலத்தில்தான்‌ படுகிறது. அதுவும்‌ சிலருக்குத்தான்‌ படுகிறது. சிலர்‌. கடைசிவரை அதிலேயே உழன்று வருகிறார்கள்‌. அதுபோலவே பார்ப்பனக்கக்ஷி என்றாலும்‌ அதன்‌ மறை பெயரான சுயராஜ்யக்‌ க்ஷி என்‌ றாலும்‌ ராஜீயத்‌ துறையையே தங்கள்‌ வாழ்வாய்க்‌ கொண்டவர்களுக்கு அத னிடத்தில்‌ பிரிய முடியாத மோகமாய்த்தான்‌ இருக்கும்‌. ஏனெனில்‌ அக்கக்ஷி யார்‌ தாசிகளை விட அதிகப்‌ பகட்டும்‌ போலி அன்பும்‌ காட்டு கிறார்கள்‌. இவை ஒரு புறமிருக்க, சட்டசபையில்‌ நடந்த கதைகளைக்‌ கவனிப்‌ போம்‌.ஜனப்‌ சேட்‌ அவர்களின்‌ தடையை நீக்கவேண்டிய வேலை முற்றிலும்‌ சர்க்காரையே சேர்ந்தது. அதனால்‌ சர்க்காருக்கு ஏதேனும்‌ பழி ஏற்படுமானால்‌ அது முற்றிலும்‌ சட்ட மெம்பரையே சேர்ந்தது. சட்ட மெம்பர்தான்‌ சர்க்காரின்‌ இஷ்டத்தை நிறைவேற்றி வைக்க வேண்டியவர்‌. அப்படியிருக்க, சட்ட மெம்பர்‌ தைரியமாய்‌ எழுந்து ஜனாப்‌ யாகூப்‌ ஹாசன்‌ சேட்டின்‌ தடையை நீக்குவதற்குப்‌ போதுமான காரணமில்லை என்று சொல்லித்‌ தனது கடனைத்‌ தீர்த்துக்‌ கொண்டார்‌. ஆனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ தங்கள்‌ இஷ்டத்‌ தைத்‌ தாங்களும்‌ அதே மாதிரியாகவே ஒரு வார்த்தையில்‌ சொல்லி முடித்து விட்டு ஓட்டுக்‌ கொடுக்கும்‌ போது தங்கள்‌ இஷ்டம்‌ போல்‌ நடந்து கொள்ள லாம்‌ என்று இராமல்‌ அணவசியமாய்‌ வியவகாரத்தில்‌ தலையிட்டுக்‌ கொண்டு தாறுமாறாய்‌ உளறி இருக்கிறார்கள்‌. அதில்‌ சர்‌.கே.வி.ரெட்டி அவர்‌ கள்‌ தன்‌ பேரில்‌ பொதுஜனங்கள்‌ தப்பபிப்பிராயப்படும்‌ வண்ணம்‌ பேசியிருப்‌ பதைப்‌ பார்த்தால்‌ நாம்‌ வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.ஜணாப்‌ யாகூப்‌ ஹாசன்‌ சேட்டைப்‌ பற்றி நிகழும்‌ வியவகாரத்தில்‌ ஜனாப்‌ சேட்‌ அவர்களைப்‌ பொறுத்த மட்டிலும்‌ பேச வேண்டுமேயல்லாமல்‌ தேசத்தின்‌ பெயரால்‌ ஜெயிலுக்குப்‌ போனவர்களெல்லாம்‌ “பாப்பர்‌"களென்று சொல்லி யிருக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இம்மாதிரி இவர்‌ சொன்னதால்‌ ஜெயிலுக்குப்‌ போன தேசப்‌ பக்தர்களுக்குப்‌ பெருத்த அவமானம்‌ வந்த விட்ட தென்பதாக நாம்‌ நினைக்கவுமில்லை. ஆனால்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ எதிரிகள்‌ சர்‌.கே.வி. ரெட்டியின்‌ பேரில்‌ பொது ஜனங்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி பிரசாரம்‌ குடி அரசு - 1926 (2) 74. செய்ய இதை ஒரு வகையாக உண்டாக்கிக்‌ கொண்டார்‌ களென்றுதான்‌ நாம்‌ சொல்லுகிறோம்‌. இதன்‌ பலனாய்‌ சர்‌.கே.வி. ரெட்டிக்கு ஒன்றும்‌ நஷ்டம்‌ ஏற்பட்டு விடாது என்று நினைத்தாலும்‌, அவர்‌ சார்ந்திருக்‌ கும்‌ கட்சிக்குப்‌ பாமர ஜனங்களிடம்‌ மரியாதை யில்லாமல்‌ போய்விடு மென்பது சர்‌. ரெட்டி. நினைக்காமல்‌ போனது அக்கட்சியின்‌ துர்ரதிர்ஷ்ட மென்றே சொல்ல வேண்டும்‌. இதே மாதிரியாகவே பல சமயங்களில்‌ பல பார்ப்பனர்களும்‌ பாமர ஜனங்களிடத்தில்‌ கவலையில்லாமல்‌ சர்க்கார்‌ தயவுக்காகப்‌ பரிந்து பேசி சர்க்‌ காரிடம்‌ பரிசுகள்‌ பெற்றிருக்கிறார்கள்‌. உதாரணமாக, ஸ்ரீமான்‌ பி.என்‌. சர்மா என்னும்‌ ஒரு பார்ப்பனர்‌ பஞ்சாப்‌ அட்டூழியத்தின்‌ போது லார்டு செம்ஸ்‌ போர்டை ஆதரித்ததினால்‌ மாதம்‌ 6000, 7000 ரூபாய்‌ சம்பளம்‌ வாங்கக்‌ கூடிய உத்தியோகமும்‌ சர்‌. பட்டமும்‌ அனுபவிக்கிறார்‌. ஸ்ரீமான்‌ வி.எஸ்‌. சீனிவாச சாஸ்திரி என்கிற ஒரு பார்ப்பனப்‌ பள்ளிக்கூட உபாத்தியாயர்‌ மகாத்மா காந்தியை ராஜத்‌ துரோகி என்றும்‌ மற்றும்‌ பலவாறாகவும்‌ திட்டியதின்‌ பல னாய்‌ “மஹா மஹா கனம்‌ பொருந்திய” என்கிற பட்டமும்‌, ராஜபோகமும்‌ அனுபவிக்கிறார்‌. ஸ்ரீமதி பெசண்டம்மையார்‌ என்கிற ஆங்கில மாது, பஞ்சாப்‌ அட்டூழியத்தில்‌ ஜெனரல்‌ டையர்‌ சுட்ட குண்டுகளை ஆதரித்ததன்‌ பலனாய்‌ அம்மையாரின்‌ சிஷ்ய கோஷ்டிகளான ஸ்ரீமான்‌ சி.பி. இராமசாமி ஐயர்‌ போன்ற பலர்‌ 5000, 6000 ரூபாய்‌ சம்பளமும்‌ நிர்வாக சபை மெம்பர்‌ போன்ற பல உத்தியோகங்களும்‌ சர்‌. பட்டமும்‌ ராஜபோகமும்‌ அனுபவித்து வருகிறார்கள்‌. ஒத்துழையாமையை ஒழிப்பதற்கு நமது பார்ப்பனர்களுக்‌ காக ஆனாயிருந்த தேசபந்துவென்று சொல்லப்படும்‌ பார்ப்பன மாப்பிள்ளையான நமது சி.ஆர்‌.தாஸ்‌ அவர்கள்‌ நாக்பூர்‌ தேசியக்‌ கொடி சத்தியாக்‌ கிரகத்தில்‌ ஜெயிலுக்குப்‌ போன ஆயிரக்கணக்கான தேசபக்தர்களைக்‌ கஞ்சிக்கு வகையில்லாத ஆட்கள்தான்‌ ஜெயிலுக்குப்‌ போயிருக்கிறார்கள்‌ என்று சொன்னதன்‌ பலனாய்‌ விபீஷணாழ்வாரைப்போல்‌ பார்ப்பனர்‌ பூஜிக்கும்‌ சிலையாய்‌ “சுதேசமித்திரன்‌” ஆபீசிலும்‌ பார்ப்பனர்‌ மடங்களிலும்‌ விளங்குகிறார்‌. அதுபோலவே நமது சர்‌.ரெட்டியும்‌ ஜெயிலுக்குப்‌ போனவர்களை *பாப்பர்‌” என்று சொல்லிவிட்டு போகபோக்கியங்கள்‌ அடைவதில்‌ நமக்‌ கொன்றும்‌ முழுகிப்போகாது. ஆனால்‌ முன்னவர்கள்‌ சார்ந்ததாய்ச்‌ சொல்லிக்‌ கொண்டகட்சியானது பொறுப்பற்றதாயும்‌ தேசத்துக்கோ ஒரு சமூகத்துக்கோ எவ்வித நன்மைக்கோ அருகதையற்றதாகவும்‌ பின்பற்று வோரில்லாததா கவும்‌, தங்கள்‌ தங்கள்‌ நன்மைக்கும்‌ தங்களைப்‌ புகழ்வோர்களின்‌ நன்மைக்‌ குமே ஏற்பட்டதாயிருந்து வந்தது. ஆனால்‌ சர்‌.கே.வி.ரெட்டி தன்னைப்‌ பொறுத்த வரையில்‌ என்று சொல்லிக்‌ கொள்வாரேயானால்‌ அதைப்பற்றி நாம்‌ அவ்வளவு கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால்‌ நமது நாட்டில்‌ ஜனத்‌ தொகையில்‌ 100 -க்கு 97 பேர்களாயுள்ள பெரிய சமூகமான பார்ப்பனரல்லா 78 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 தார்‌ வகுப்புக்கு பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு இம்மாதிரி பேசியிருப்‌ பதானது பார்ப்பனரல்லாதார்‌ என்கிற முறையில்‌ நாம்‌ கண்டிக்காமலும்‌ சர்‌.கே.வி. ரெட்டியின்‌ தவறுதலுக்காக நாம்‌ பரிதாபப்படாமலிருக்க முடிய வில்லை. இவர்‌ அம்மாதிரி பேசியதின்‌ பலனாக அத்தீர்மானத்திற்கு என்ன அதிகமான ஆதரவு கிடைத்தது? அப்படிப்‌ பேசாதிருந்திருந்தால்‌ அத்‌ தீர்மானத்திற்கு எவ்வித ஆதரவு குறைந்து போயிருக்கும்‌? எப்பொழுது சட்ட மெம்பரான சர்‌.சி.பி. இராமசாமி ஐயர்‌ அத்தீர்மானத்தை எதிர்த்தாரோ அப்‌ பொழுதே சர்‌.கே. வி. ரெட்டி பேசினாலும்‌ பேசாவிட்டாலும்‌ அத்தீர்மா னம்‌ தோற்றுப்‌ போய்த்‌ தானே ஆகவேண்டும்‌? ஒரு சமயம்‌ ஜெயித்து விட்டா லும்‌ சர்‌.சி.பி. அய்யர்‌ கவர்னரைக்‌ கொண்டுகேன்சல்‌) தள்ளுபடி செய்து தானே ஆகவேண்டும்‌? ஆதலால்‌ இனியாவது இப்பேர்ப்பட்ட விஷயங்‌ களில்‌ புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்களென்றே எதிர்பார்க்கிறோம்‌. பொதுவாய்‌ தேசத்திற்காகவும்‌ மதத்திற்காகவும்‌ ஜெயிலுக்குப்‌ போன தேசபக்தர்கள்‌ கூலி கேட்காமலிருந்தால்தான்‌ அவர்கள்‌ செய்த தியாகத்‌ திற்குப்‌ பலனும்‌ மதிப்பும்‌ ஏற்படும்‌. அப்படிக்கில்லாமல்‌ கேவலம்‌ இந்த சட்ட சபைக்குப்‌ போக பிரயத்தனப்பட்ட நமது ஜனாப்‌ யாகூப்‌ ஹாசன்‌ சேட்‌ அவர்‌. கள்‌ கருத்து நமக்கு விளங்கவில்லை. கிலாபத்துக்காகவும்‌, சுயராஜ்ஜியத்‌ திற்காகவும்‌ ஜெயிலுக்குப்‌ போன நமது ஜனாப்‌ சேட்‌ அவர்களுக்கு இப்பொ முது சட்டசபைக்குப்‌ போக வேண்டிய அவசியம்‌ என்ன வந்து விட்டது. சட்டசபைக்குள்‌ சென்றதும்‌ கிலாபத்தையும்‌ சுயராஜ்யத்தையும்‌ எடுத்து நிறுத்தி விடலாமென்று நினைக்கிறாரா? எந்த கவர்ன்மெண்டாரை திட்டி ஜெயிலுக்குப்‌ போனாரோ அந்த கவர்ன்மெண்டுக்கே விண்ணப்பம்‌ போட்டு. தான்‌ சட்டசபைக்குப்‌ போக அனுமதி கேட்பது நியாயமாகுமா? சர்க்கார்‌ சட்ட சபையில்‌ ஏதாவது செய்யக்‌ கூடுமென்கிற நம்பிக்கை இவருக்கிருக்குமானால்‌ முதலாவது இவர்‌ செய்ய வேண்டிய வேலை கவர்ன்மெண்டாரை அடி பணிந்து, முன்‌ தான்‌ நினைத்ததற்கும்‌ நடந்து கொண்டதற்கும்‌ நிபந்தனை யில்லா மன்னிப்பு விண்ணப்பம்‌ போட்டு மன்னிப்பைப்‌ பெற்ற பிறகு சட்ட சபைக்கு விண்ணப்பம்‌ போட்டிருக்க வேண்டும்‌. அப்படிக்கில்லாதவரையில்‌ ஆண்பிள்ளை சிங்கம்‌ போல்‌ சர்க்கார்‌ தயவை எதிர்பாராமல்‌ சர்க்காராகவே தன்னை விரும்பும்‌ வரையில்‌ தன்னாலானதைச்‌ செய்துகொண்டிருக்க வேண்டும்‌. அப்படியுமில்லாமல்‌ இப்படியுமில்லாமல்‌, “கூழுக்கும்‌ ஆசை மீசைக்கும்‌ஆசை” என்பது போல்‌, வழ வழ வென்று நடந்து கொண்ட தானது ஜனாப்‌ யாகூப்‌ ஹாசன்‌ சேட்‌ அவர்களின்‌ நிலைமை ஆடிப்போன தல்லாமல்‌ நமது நாட்டு தேசபக்திக்கும்‌ தியாகத்திற்கும்‌ மாசை ஏற்படுத்தி வைத்து விட்டார்‌ என்று சொல்ல நேர்ந்தது பற்றி நாம்‌ மிகவும்‌ வருந்துகிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 25.07.1926. குடி அரசு - 1926 (2) 76 77 பிராமணியம்‌! இந்திய மக்களின்‌ ஒற்றுமையைக்‌ குலைத்து வேற்றுமையை அதிகரித்தது எது? சுயநலம்‌ கொண்ட பிராமணீயமே... இந்து முஸ்லீம்‌ கலகங்களை விளைவிப்பதெது? சுயநலக்‌ கூட்டத்தாரின்‌ ஆதிக்கம்‌ கொண்ட பிராமணீயமே.. இக்காலத்தில்‌ பார்ப்பன - பார்ப்பனரல்லாதார்‌ கட்சி உண்டாகக்‌ காரண பூதமாய்‌ நிலவுவதெது? பாழான பிராமணீயமே. எனவே என்‌ செய்தல்‌ வேண்டும்‌? பிராமணீயத்தைச்‌ சுட்டெரித்து சுடுகாட்டுக்கனுப்ப வேண்டும்‌. தமிழர்களேஒன்று படுக! ஒருங்கு சேருக! பிராமணீயத்துடன்‌ போர்‌ தொடங்குக! வீரர்கள்‌ நம்மவரே! ஆதலால்‌ வெற்றியும்‌ நம்முடையதே! காகம்‌ உறவு கலந்துண்ணக்‌ காண்கிறீர்‌.. ஆதலால்‌ சேரவாரும்‌ ஜெகத்தீரே! குடி அரசு - பெட்டிச்‌ செய்தி - 25.07.1926. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 ) . 33 “சர்க்காருக்கு லேய்‌ சர்க்கார்‌ ககூறிக்கு ஸண்ணை சட்டசபையில்‌ இன்னும்‌ 5 வமம்பர்கன்‌ அதிகம்‌ (தொழிலானர்‌ நிலை) தாழ்ந்த வகுப்பார்களுக்கென்றும்‌ தொழிலாளர்களுக்கென்றும்‌ சர்கார்‌ தயவில்‌ இந்தியா பூராவுக்கும்‌ 12 ஸ்தானங்கள்‌ அதிகப்படுத்தப்‌ பட்டிருக்‌ கிறது. ஆனால்‌ இந்த 12 - ஸ்தானங்களும்‌ அந்தந்த வகுப்பார்களால்‌ தெரிந்‌ தெடுக்கப்படாமல்‌ சர்க்காரால்‌ நியமிக்கப்படுவதாய்ப்‌ போய்விட்டது. இதற்‌ காக நாம்‌ தற்கால நிலைமையில்‌ தொழிலாளர்கள்‌ பொருட்டும்‌ தாழ்த்தப்‌ பட்ட வகுப்பார்கள்‌ பொருட்டும்‌ விசனப்படாவிட்டாலும்‌ ஓட்டர்கள்‌ பொருட்டு நாம்‌ மிகுதியும்‌ விசனப்படுகிறோம்‌. தொழிலாளிகளுக்கென்றோ. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்றோ தேர்தலுக்கு அந்தந்தப்‌ பிரிவார்‌ கொண்ட ஓட்டர்‌ தொகுதியில்லாத வரையில்‌ தற்காலத்‌ தேர்தலைவிட நியமனம்‌ அத்‌ தனை மோசமானதல்ல வென்பது நமது அபிப்பிராயம்‌. ஏனெனில்‌ தற்கால நிலைமையில்‌ தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கென்று சொல்லிக்கொண்டு ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌ போன்ற ஒரு வருணாச்சிரம தர்மி நிற்கக்‌ கூடும்‌. அதற்கு மற்றொரு வருணாச்சிரம தர்மியாகிய ஒரு மகந்து பணம்‌ செலவு செய்யக்‌ கூடும்‌. ஆச்சாரியார்‌ சட்ட சபையில்‌ வந்து உட்கார்ந்து கொண்டு “ஒரு பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடு வதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌ ஒரு மாதம்‌ பட்டினி இருப்பேன்‌” என்று சொல்‌ லுவார்‌. பார்ப்பனரல்லாத உயர்ந்த ஜாதியார்‌ என்போர்‌ பார்த்துவிட்டதா லேயே ஒரு மாதம்‌ பட்டினி கிடக்கும்‌ நமது ஆச்சாரியார்‌, ஒரு சமயம்‌ “தாழ்ந்த வகுப்பார்‌” என்று சொல்லப்பட்டவர்கள்‌ பார்க்க நேர்ந்துவிட்டால்‌ உடனே அவர்களைத்‌ தூக்கில்‌ போடவேண்டும்‌ என்றுதான்‌ தீர்மானம்‌ கொண்டு வருவார்‌. அதுபோலவே தொழிலாளர்களுக்கென்று தேர்தல்‌ ஏற்பட்டால்‌ முதலாளிகளைவிட மோசமான முதலாளி கூட்டத்தினரான ஸ்ரீமான்‌ எ.ரெங்கசாமி அய்யங்கார்‌ தொழிலாளி அபேட்சகராக நிற்பார்‌. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ பணம்‌ செலவு செய்வார்‌. சட்டசபையில்‌ போய்‌ உட்‌ குடி அரசு - 1926 (2) 78 கார்ந்துகொண்டு பார்ப்பனர்கள்‌ கூலி கொடுக்காவிட்டாலும்‌ “சூத்திரர்‌ களான” தொழிலாளிகள்‌ வேலை செய்துதான்‌ தீர வேண்டும்‌. ஏனெனில்‌ பார்ப்பனர்களுக்கு வேலை செய்வதற்கென்றே(“பார்ப்பனர்களின்‌ வேசி மக்களான”) “சூத்திரர்‌ "களைக்‌ கடவுள்‌ சிருஷ்டித்து இருக்கிறார்‌ என்கிற மனுதர்ம சாஸ்திரத்தைத்‌ தீர்மானமாகக்‌ கொண்டுவருவார்‌. இந்த நிலைமை யில்‌ நல்ல வேளையாக இப்பன்னிரண்டு ஸ்தானங்களும்‌ பொதுத்‌ தொகுதி தேர்தலுக்கு வராமல்‌ போனதைக்‌ குறித்து சர்க்காரின்‌ நடவடிக்கைக்கும்‌ இவ்விரு வகுப்பாரின்‌ பாக்கியத்திற்கும்‌ நாம்‌ சந்தோஷப்படுகிறோம்‌.ஆனால்‌ பொதுத்தொகுதி ஒட்டர்களைப்‌ பற்றி நாம்‌ ஏன்‌ விசனப்படு கிறோமென்றால்‌, இந்த 12-ஸ்தானங்களின்‌ தேர்தலுக்காக செலவு செய்யப்‌ படும்‌ பணத்தில்‌ பங்குபெறக்‌ கூடிய யோகம்‌ இந்நியமனங்களால்‌ சில ஓட்டர்களுக்கு இல்லாமல்‌ போய்விடு கிறதே என்பதுதான்‌. நிற்க.சர்க்கார்‌ இந்நியமனங்களையாவது அந்தந்த வகையாரிலேயே செய்வார்களா என்பது நமக்குப்‌ பெரிதும்‌ சந்தேகமாகவே இருக்கிறது. இவ்வித அனர்த்தங்கள்‌ விளையக்‌ காரணஸ்தர்கள்‌ யாரென்று பார்ப்‌ போமானால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு விரோதிகளாயிருப்பவர்‌. களேயாகும்‌.எத்தனைக்‌ கெத்தனை எல்லா வகுப்பாருக்கும்‌ சரியான பிரதி நிதித்துவம்‌ கிடைப்பதற்கில்லாமல்‌ ஒரு வகுப்பாரே எல்லா வகுப்புக்கும்‌ பிரதிநிதிகளாயிருக்க சூழ்ச்சியும்‌ தந்திரங்களும்‌ செய்கிறார்களோ, அத்த னைக்கத்தனை பிரதிநிதித்துவமற்ற வகுப்பார்‌ சர்க்கார்‌ தயவை நாடித்தான்‌ பிரதிநிதித்துவம்‌ பெற முடியும்‌. இதில்‌ சர்க்கார்‌ தயவை நாடும்‌ வகுப்பார்‌. மீது கொஞ்சமும்‌ குற்றமில்லை என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. நானும்‌ பிரதிநிதித்துவம்‌ பெற சம்மதிக்கமாட்டேன்‌, சர்க்காரிடமும்‌ நீ பிரதிநிதித்‌ துவம்‌ பெறக்‌ கூடாது” என்று யாராவது சொல்வார்களானால்‌ அவர்கள்‌ எப்பேர்ப்‌ பட்ட கொடுமைக்காரர்கள்‌ என்பதை பொது ஜனங்கள்‌ தான்‌ உணர வேண்டும்‌. அல்லாமலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுத்து விட்டால்‌ சர்க்கார்‌ தயவை எதிர்பார்ப்பதற்கும்‌ ஆள்கள்‌ இல்லாமல்‌ போய்‌ விடும்‌. ஆதலால்‌ தான்‌ அதிக பிரதிநிதித்துவம்‌ அடையத்தக்க முறையில்‌ முன்னணி யில்‌ நிற்கும்‌ பார்ப்பனரும்‌ சர்க்காரும்‌ வகுப்புவாரிப்‌ பிரதி நிதித்துவம்‌ என்றால்‌ தங்களுக்கு ஆபத்து வந்து விட்டதாய்ச்‌ சொல்லிக்‌ கொண்டு தேசம்‌ போய்விடும்‌ - தேசம்‌ போய்விடும்‌ என்ற சத்தம்‌ போடுவதே யொழிய வேறில்லை .தேசம்‌ யாருக்குப்‌ போய்விடும்‌? பார்ப்பனருக்கும்‌ சர்க்காருக்‌ கும்‌ தான்‌ போய்விடும்‌? மற்ற வேறு யாருக்கும்‌ போய்விடாது. இப்பன்னிரண்டு ஸ்தானங்களுள்‌ தொழிலாளருக்கு ஏற்பட்ட நான்கு ஸ்தானங்களில்‌ ஒன்று கூட தமிழ்‌ நாட்டிற்கு இல்லாமல்‌ போனதை நினைத்‌ தால்‌ நம்‌ நாட்டு தொழிலாளிகள்‌ ஏமாற்றமடைந்ததாகவே கருதி துக்கப்படு வார்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ ஒரு சிறிதும்‌ துக்கப்படக்‌ காரணமில்லை யென்றே சொல்லுவோம்‌ . சென்னை மாகாணத்திலாகட்டும்‌ தமிழ்‌ நாட்டிலா 79 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 கட்டும்‌ ஒழுங்கான தொழிலாளர்‌ சங்கங்கள்‌ ஒன்று கூட இல்லை என்றே சொல்லுவோம்‌. உதாரணமாக சென்னையில்‌ உள்ள பக்கிங்ஹாம்‌ கர்னாட்‌ டிக்‌ மில்‌ தொழிலாளர்களின்‌ யோக்கியதையோ மிகவும்‌ வேடிக்கையானது. ஒரு தொழிற்சாலை தொழிலாளருக்கு இரண்டு சங்கம்‌ இருக்கிறது. அதில்‌ ஒன்று பார்ப்பனர்‌ கட்சியான சுயராஜ்யக்‌ கட்சியின்‌ ஆதிக்கத்தின்‌ கீழ்‌ உள்ளது. மற்றொன்று முதலாளிகள்‌ கட்சியும்‌ பார்ப்பனரல்லாத ஜஸ்டிஸ்‌: கட்சியும்‌ ஆகிய இவ்விரண்டு கட்சிகளின்‌ ஆதிக்கத்திலுமுள்ளது. எப்படி யெனில்‌ முன்னையதற்கு ஸ்ரீமான்‌ சிவராவ்‌ என்கிற ஒரு பார்ப்பனர்‌. அக்கிராசனர்‌. முதலாளியும்‌ சுயராஜ்யக்‌ கட்சி ஜீவனுமான ஸ்ரீமான்‌ எ.ரெங்க சாமி அய்யங்கார்‌ உப அக்கிராசனர்‌. இவர்கள்‌ இருவரும்‌ சுருதி யுக்தி அநுபவம்‌ ஆகிய இம்மூன்றில்‌எந்த வகையில்‌ தொழிலாளருக்குத்‌ தலைவர்களாகவோ பிரதிநிதிகளாகவோ உரிமை உண்டு என்பது நமக்கு விளங்கவில்லை . இது போலவே மற்றொரு கட்சியாரான ஜஸ்டிஸ்‌ கட்சி யாருக்கு தொழிலாளர்‌ ஏறக்குறைய எல்லோ ௬ம்‌ தங்கள்‌ வகுப்பார்‌ என்‌ பதைத்‌ தவிர, வேறு எந்த வழியில்‌ இப்போதி ருக்கும்‌ முதலாளிகளையோ ஜஸ்டிஸ்‌ கட்சியையோ சேர்ந்த தலைவர்கள்‌ தொழிலாளிகளை நடத்தவோ பிரதிநிதிகளாகவோ உரிமை உடையவர்கள்‌ என்பது நமக்கு விளங்க வில்லை. இவ்விரண்டுந்தான்‌ இப்படி இருக்கிறது என்று வைத்துக்‌ கொண்டா லும்‌, தொழிலாளிகளுக்காவது தனித்த முறையில்‌ தங்களுக்கு ஒரு ஸ்தாப னத்தை வைத்து நடத்திக்‌ கொள்ள யோக்கியதை இருக்கிறதா என்ற பார்த்‌ தால்‌, சில காரணங்களால்‌ அதுவும்‌ இருப்பதாகச்‌ சொல்லிக்‌ கொள்ளு வதற்கு யோக்கியதை இல்லை. என்னவெனில்‌, காலம்‌ சென்ற ஸ்ரீமான்‌ டாக்டர்‌ நாயர்‌. பெருமானின்‌ ஞாபக தினத்தை கொண்டாட சென்ற வாரம்‌ சென்னை கடற்கரையில்‌ ஒரு பெரிய கூட்டம்‌ கூட்டப்பட்டது. அக்கூட்டத்‌ தில்‌ பக்கிங்ஹாம்‌ கர்னாட்டிக்‌ மில்‌ தொழிலாளர்கள்‌ சார்பாய்‌ டாக்டர்‌ நாயர்‌ பெரு மான்‌ ஞாபகத்திற்காக ஒரு வெள்ளிக்கிண்ணம்‌ அளிப்பது என்று தொழிலாளர்கள்‌ சுமார்‌ 5000, 6000 பேர்‌ வரையில்‌ வந்து கூடினர்‌. அக்‌ கூட்டத்திற்கு டாக்டர்‌ நாயர்‌ பெருமானால்‌ ஆரம்பிக்கப்பட்ட பார்ப்பன ரல்லாதார்‌ கக்ஷித்தலைவரும்‌ சென்னை அரசாங்க முதன்‌ மந்திரியுமான கனம்‌ சர்‌. பனகால்‌ ராஜா அக்கிராசனம்‌ வகித்தார்‌. இக்கூட்டத்திற்கு சென்‌ னையில்‌ உள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள்‌ ஏராளமாய்‌ வந்திருந்தார்கள்‌. இக்‌ கூட்டம்‌ சென்னைப்‌ பார்ப்பனரின்‌ கக்ஷிக்கு பெரிய கண்வலிப்‌ போல்‌ இருந்து இருக்கும்‌ என்பது யாவருக்கும்‌ தெரியும்‌. அப்படியிருக்க அப்‌ பார்ப்பனரின்‌ தலைமையின்‌ கீழ்‌ உள்ள பார்ப்பனரல்லாத தொழிலாளி களான ஆயிரக்கணக்கான பேர்‌ கலகம்‌ செய்வதற்கென்றே அக்கூட்டத்‌ திற்கு வந்து அப்பார்ப்பனர்கள்‌ திருப்தி அடையத்தக்க வண்ணம்‌ அடி தடியும்‌ கலகமும்‌ உண்டாக்கியும்‌ கல்லுகள்‌ எறிந்து நிரபராதிகளைக்‌ காயப்‌ படுத்தவும்‌ செய்தார்களாம்‌. இப்படி இருந்தால்‌ இவர்கள்‌ தனித்து தங்கள்‌ சங்கங்களை நடத்திக்‌ கொண்டு போகத்தக்க யோக்கியதை உடையவர்கள்‌ என்று யார்‌. குடி அரசு - 1926 (2) 80 ஒப்புக்கொள்வார்கள்‌? கலகம்‌ செய்து கல்லெறிந்தால்‌ யாருக்கு லாபம்‌ ஏற்பட்டது; யார்‌ யோக்கியதை குறைந்தது என்று யோசித்தால்‌ பார்ப்‌ பனர்கள்‌, தொழிலாளர்களுக்கும்‌ புத்தியில்லை, அவர்களை நடத்த நாங்கள்‌ தான்‌ தர்மகர்த்தாக்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ள இடம்‌ கிடைத்தது. பார்ப்பன ரல்லாத தொழிலாளிகளுக்கு, “காலிகள்‌” “கலகக்‌ காரர்‌ "கள்‌ என்று சொல்லும்‌ படியான கெட்டபெயர்‌ கிடைத்தது. காலஞ்சென்ற கனவானைக்‌ கெளரவிப்ப தற்காகக்‌ கூட்டப்பட்ட கூட்டத்தில்‌ தொழிலாளிகள்‌ வந்து கலகம்‌ செய்யக்‌ காரணம்‌ என்ன? என்பது நமக்கு விளங்கவில்லை. தொழிலாளிகளுக்குப்‌ பணம்‌ இல்லாததற்குக்‌ காரணம்‌ வேண்டுமானால்‌ முதலாளிகளின்‌ கொடுமை என்ற சொல்லிக்‌ கொள்ளலாம்‌. குலாபிமானமும்‌ ஒழுங்கு முறையும்‌ இல்லாததற்கு யார்‌ பேரில்‌ குற்றம்‌ சொல்லுவது? பார்ப்பன விஷமமும்‌ பார்ப்பன சூழ்சியுந்தான்‌ காரணம்‌ என்ற சொல்ல வேண்டும்‌. அத்தொழிலாளர்‌ கூட்டத்தில்‌ கண்ணியமான தொழிலாளர்களாயிருப்பவர்கள்‌ டாக்டர்‌ நாயர்‌ பெருமானை உத்தேசித்தா வது தங்களின்‌ இவ்வித நடவடிக்கைகளுக்குக்‌ கடவுளை மன்னிக்கும்படி கேட்டுக்‌ கொள்ள வேண்டும்‌. எவ்விதத்திலும்‌ பார்ப்பனர்‌ சம்பந்தத்தையும்‌ முதலாளிமார்கள்‌ சம்பந்தத்தையும்‌ விலக்கிக்கொண்டு தங்கள்‌ கால்களி லேயே நிற்க வேண்டும்‌.தங்களுக்கு எல்லா விஷயங்களுக்கும்‌ தனிப்‌ பிரதி நிதித்துவம்‌ கிடைக்கும்படி உழைக்க வேண்டும்‌. அப்படிக்கில்லாத வரையில்‌ தொழிலாளர்களுக்காக எத்தனை ஸ்தானங்கள்‌ சட்டசபையிலோ இந்தியா சட்டசபையிலோ ராஜாங்க சபையிலோ வழங்கப்பட்டாலும்‌ ஒரு பலனும்‌ இல்லை என்றே சொல்லுவதோடு சென்னை சட்டசபைக்கு தாழ்த்தப்பட்ட வர்களுக்காக புதிதாக ஏற்பட்ட 5-ஸ்தானங்களும்‌ சர்க்கார்‌ கட்சிக்கு இன்னும்‌ 5-மெம்பர்களை அதிகமாகக்‌ கொடுத்திருக்கிறதென்றுதான்‌ சொல்லுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 25.07.1926 81 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஏமாந்து விடாதீர்கள்‌! ஏமாந்து விடாதீர்கள்‌! சைவ சமயிகளுக்க ஓர்‌ எச்சரிக்கை சில தினங்களில்‌ சுமார்த்த மத குருவாகிய சங்கராச்சாரியார்‌ வரப்‌ போகிறார்‌. சைவ சமயிகள்‌ அவர்‌ அணிந்திருக்கிற விபூதி உருத்திராக்கத்‌ தைப்‌ பார்த்தும்‌, சுமார்த்தப்‌ பிராமணர்கள்‌ சைவர்கள்‌ பணத்தைத்‌ தங்கள்‌ வகையினர்க்குப்‌ பயன்படுத்தும்‌ பொருட்டு தங்கள்‌ குருவை உலகத்தினர்க்‌ கெல்லாம்‌ குருவென்ற முறையில்‌ “லோக குரு” வென்று கூறும்‌ தந்திர வார்த்தையில்‌ நம்மவர்கள்‌ மயங்கி அவருக்கு வந்தன வழிபாடு, பாத காணிக்கை முதலியன செய்து பாவத்தை ஏற்றுப்‌ பொருளிழந்து வறியவர்களா காமலிருப்பார்களாக. நம்மவர்களுக்கு உண்மை நெறியை உணர்த்த எல்லாம்‌ வல்ல இறைவன்‌ திருவருளை வழுத்துகிறோம்‌.. குடி அரசு - வேண்டுகோள்‌ - 01.08.1926 குடி அரசு - 1926 (2) 82 நமது தணிப்வபரும்‌ விண்ணப்யம்‌ சென்ற “குடிஅரசு” இதழில்‌ திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கரவர்கள்‌ பார்ப்பனரல்லாதாருக்கு விடுத்த வேண்டுகோளை அன்பர்கள்‌ கண்ணுற்‌ ருக்கலாம்‌. தற்காலம்‌ தமிழ்நாட்டு அரசியல்‌ நிலைமையும்‌ சமுக நிலைமை யும்‌ பெரிதும்‌ குழப்பத்தோடிருக்கிற தென்பதை தமிழ்‌ நாட்டவர்களுக்கு நாம்‌ எடுத்து கூற வேண்டியதவசியமில்லை. இத்தகைய குழப்பமான நிலை மையில்‌ அரசியல்‌ துறையையும்‌ சமுக விஷயத்தையும்‌ சத்தியமான, ஒழுங்‌ கான, உண்மையான அமைப்போடும்‌ திட்டத்தோடும்‌ நிலையிறுத்திச்‌ சீர்பெறச்‌ செய்வான்‌ பொருட்டே திரு. நாயக்கரவர்கள்‌ அவ்வேண்டு கோளை விடுத்தார்‌. திரு. நாயக்கரவர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கி இற்றைவரை: சுமார்‌ 500 தமிழர்கள்‌ “ குடி அரசி”ன்‌ கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும்‌ திரு. நாயக்கருள்ளிட்ட பலர்‌ வெளியிடப்‌ போகும்‌ அறிக்கையில்‌ தங்கள்‌ பெயரையும்‌ சேர்த்துக்‌ கொள்ளுமாறும்‌ தங்கள்‌ கையொப்பம்‌ அளித்துள்‌ ளார்கள்‌. இத்தகைய முறையில்‌ அவ்வமைப்பு ஏற்படுத்தி இத்தகைய திட்டங்‌ கோல வேண்டுமென்பதாகவும்‌ ஒத்துழையாமை காங்கிரசில்‌ முன்னின்று ழைத்த பல அறிஞர்கள்‌ நீண்ட கடிதங்கள்‌ எழுதி வருகிறார்கள்‌. தேர்தல்‌ காலம்‌ மிகவிரைவாக நெருங்கி வருகிறது. ஆதலால்‌ நமது கொள்கையை ஏற்கும்‌ பார்ப்பனரல்லாத சகோதரர்கள்‌ சிறிதும்‌ காலந்‌ தாழ்த்தாது உடனே தங்களதும்‌ மற்றைய அன்பர்களதும்‌ கையொப்பங்களைப்‌ பொறித்தனுப்ப வேண்டுகிறோம்‌. இன்று நாளை யெனக்‌ காலங்கடத்த இது சமயமன்று. காலச்‌ சக்கிரம்‌ அதி விரைவாய்‌ சுழன்று வருகிறது. ஆதலால்‌ உடனே தமிழர்கள்‌. தங்கள்‌ கடமையைச்‌ செய்வார்களாக. நன்றென்பதை இன்றே செய்யுங்கள்‌. குடிஅரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 01 .08.1926 83 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. நாயுடு, முதலியார்‌, நாயக்கர்‌. செண்ணையில்‌ டாக்டர்‌ வரதராசுனு நாயுட௫கார்‌ ( தற்கா நிலைமை ) சென்னையில்‌ இம்மாதம்‌ 17-ந்‌ தேதி திருவல்லிக்கேணி கடற்கரையில்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ அக்கிராசனத்தின்‌ கீழ்‌ டாக்டர்‌ நாயுடுகார்‌ ஒரு நீண்ட பிரசங்கம்‌ செய்தார்‌.அவை பல பத்திரிகைகளில்‌ பலவிதமாக வெளிப்‌ பட்டிருந்தாலும்‌ அவரது “தமிழ்‌ நாடு” பத்திரிகையில்‌ சுருக்கமாக வெளி வந்திருக்கிறது. அவற்றில்‌ சில உண்மைகள்‌ விளங்குவதை மாத்திரம்‌ நாம்‌ இதனடியில்‌ குறிப்பிடுகிறோம்‌. அதாவது “பெரிய சந்தேகம்‌” என்ற தலைப்பின்‌ கீழ்‌ “இந்த சர்க்கா ரை இப்பொழுதே நாம்‌ நிருத்திவிட முடியும்‌. ஆனால்‌ அதற்குப்‌ பிறகு (நிருத்திய பிறகு) இத்தேசத்தை எப்படி நிர்வகிப்பதென்பதுதான்‌ இப்பொ முது பெரிய சந்தேகம்‌” என்று பேசியிருக்கிறார்‌. தற்கால நிலைமையில்‌ யோக்கியமான ராஜீயவாதிகளின்‌ கருத்து இதுவேதான்‌. ஏனெனில்‌, நமது தேசத்தில்‌ ஒருவன்‌ உயர்ந்தவன்‌ என்றும்‌ பிராமணன்‌ என்றும்‌, மற்றவன்‌ தாழ்ந்தவன்‌ என்றும்‌, சண்டாளன்‌, பார்க்கக்‌ கூடாதவன்‌, தெருவில்‌ நடக்கக்‌ கூடாதவன்‌ என்றும்‌, ஒரு மதம்‌ உயர்ந்த மதம்‌, மற்றொரு மதம்‌ தாழ்ந்த மதம்‌, ஒரு வகுப்பார்‌ தான்‌ மூளை உள்ளவர்கள்‌, மற்ற வகுப்பார்‌ மூளை இல்லாத வர்கள்‌ என்று சொல்லிக்கொண்டு அவனவன்‌ சுயநலத்துக்காக மானம்‌, கற்பு, மனச்சாகஷி இவைகளை விற்று ஏழை மக்களை நசுக்கிப்‌ பிழைத்துக்‌ கொண்டிருக்கிற காலத்தில்‌ இந்த சர்க்கார்‌ நின்று போனால்‌ தேசம்‌ என்ன கதி அடையும்‌ என்பதை யோசித்துப்‌ பார்த்தால்‌, “இந்த சர்க்காரை நடைபெற வொட்டாமல்‌ செய்கிறோம்‌, வெள்ளைக்காரரையே ஓட்டி விடுகிறோம்‌” என்று சொல்லி ஓட்டுக்‌ கேட்பவர்கள்‌ எவ்வளவு அயோக்கியர்கள்‌ என்பது விளங்கும்‌. இந்த உண்மையை டாக்டர்‌ நாயுடுகார்‌ தைரியமாய்‌ எடுத்துச்‌ சொன்னதற்கு நாம்‌ அவரைப்‌ பாராட்டுகிறோம்‌. அடுத்தபடியாக “முறைகள்‌” என்ற தலைப்பின்‌ கீழ்‌ “காங்கிரஸ்‌ முன்னிருந்த நிலைமையில்‌ இப்பொழுதில்லை. அதில்‌ முன்னிருந்த கட்டுப்பாடுகளும்‌ இப்பொழுதில்லை” என்று சொல்லியிருக்கிறார்‌. குடி அரசு - 1926 (2) 84. இதையும்‌ அவர்‌ தைரியமாய்‌ எடுத்துச்‌ சொன்னதற்கு நாம்‌ பெரிதும்‌ பாராட்டுகிறோம்‌. ஏனெனில்‌ காங்கிரஸ்வாதிகளென்போர்கள்‌ காங்கிரசின்‌ குற்றங்களை எடுத்துச்‌ சொன்னால்‌ பெரிய பாவமென்றும்‌ தேசத்‌ துரோக மென்றும்‌ சொல்லி ஏமாற்றும்‌ பார்ப்பனர்கள்‌ மத்தியிலிருந்து கொண்டு காங்கிரசின்‌ ஊழல்களை எடுத்துச்‌ சொல்வதென்றால்‌ அதற்கு மிகவும்‌ தைரியம்‌ வேண்டும்‌. ஆதலால்‌ நாம்‌ இதையும்‌ போற்றாமலிருக்க முடியாது. மற்றோரிடத்தில்‌ “சட்டசபைக்குச்‌ செல்லுபவர்களால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டு “ராயல்‌ கமிஷன்‌ வருவதற்கு முன்பு நமது அபிப்பிராயங்களை சட்டசபைகளில்‌ சரியாய்த்‌ தெரிவிக்க உதவும்‌” என்று சொல்லி இருக்கிறார்‌. இதுவும்‌ உண்மையான விஷயம்‌ தான்‌. இப்போது சட்டசபைக்குப்‌ போகிற பார்ப்பனர்கள்‌ கருத்தும்‌ அதுதான்‌. ஏனெனில்‌ இப்பொழுது கொடுத்திருக்கும்‌ சீர்திருத்தம்‌” நமது மாகாணத்தில்‌ பார்ப்பனரல்லாதார்‌ கொஞ்சமாவது முன்னேறுவதற்கு உதவி செய்திருக்கிறது. பார்ப்பனரல்லாத மந்திரிகள்‌ நிர்வாகத்திற்கு வரவும்‌, பார்ப்பனரல்லாதாரில்‌ சிலருக்காவது உத்தியோகம்‌ பதவி முதலியவைகள்‌ ஏற்படவும்‌, அதன்‌ மூலம்‌ பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதை காப்பாற்றப்படவும்‌ அது உதவியாயிருக்‌ கிறது. ஆதலால்‌ 1929-ம்‌ வருடம்‌ வரும்‌ ராயல்‌ கமிஷனில்‌ நமது பார்ப்பனர்‌ தேசத்தின்‌ பேரால்‌ சட்டசபைக்கு வந்ததாகச்‌ சொல்லிக்‌ கொண்டு இதுவரை: பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்டிருக்கும்‌ நன்மைகளை அழிக்கவும்‌ கொஞ்ச மாவது கொடுத்திருப்பதாய்ச்‌ சொல்லும்‌ அதிகாரங்களை திருப்பி எடுத்துக்‌ கொள்ளச்‌ செய்து சர்க்கார்‌ மூலம்‌ தங்களுக்கே உத்தியோகமும்‌ பதவியும்‌ பெரிய சம்பளங்களும்‌ கிடைக்கும்படியாகப்‌ பாடுபடவும்‌, வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கூடாது, எல்லாவற்றிற்கும்‌ எல்லா வகுப்புக்கும்‌ எல்லா மதத்‌ திற்கும்‌ பார்ப்பனர்கள்‌ தாங்களே பிரதிநிதியாயிருந்து கொண்டு மற்றவர்களை மிலேச்சர்‌, தீண்டப்படாதவர்‌ என்று சொல்லிக்கொள்ள சவுகரிய மேற்படுத்‌ திக்‌ கொள்ளலாம்‌ என்பதும்தான்‌ அவர்கள்‌ கவலை. அதற்காகத்தான்‌ இப்‌ போது சட்டசபைக்குப்‌ போக இவ்வளவு தந்திரங்கள்‌ செய்வது என்பதுதெளி வாய்‌ விளங்க, டாக்டர்‌ நாயுடுகாரின்‌ மேற்கூறிய வார்த்தைகள்‌ போதுமானது. “பட்டதாரிகள்‌” என்ற தலைப்பின்‌ கீழ்‌, “தேர்தலுக்குக்‌ காங்கிரஸ்‌ அபேக்ஷகர்களைத்‌ தெரிந்து எடுக்கும்போது சிறந்த தேசாபிமானிகள்‌ அபேக்ஷகர்களாய்‌ கிடைக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார்‌. இதுவும்‌ சத்தியமான வாக்கென்றே சொல்லுவோம்‌. காரணம்‌ அவர்‌ என்ன சொல்லி யிருந்த போதிலும்கூட “சிறந்த தேசாபிமானிகள்‌ காங்கிரஸ்‌ அபேக்ஷகர்க ளாய்க்‌ கிடைக்கவில்லை” என்பது மிகவும்‌ சத்தியமானது. ஏனெனில்‌ காங்கிரசில்‌ தேசாபிமானிகள்‌ இல்லை என்பதை ௬ஜுப்படுத்த இதைவிட வேறு எதையும்‌ அவர்‌ சொல்லியிருக்க முடியாது. *ஐமீன்தாரர்கள்‌' என்ற தலைப்பின்‌ கீழ்‌ “பணக்காரருக்கு ஓட்டுக்‌ கொடுக்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்‌. இதுவும்‌ சரியான விஷயம்‌. 85 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பணக்காரர்கள்‌ சட்டசபைக்குப்‌ போனால்‌ தங்கள்‌ நிலைமையாகிய பணக்‌ காரர்கள்‌ நன்மைக்குத்தான்‌ பாடுபடுவார்கள்‌. ஏழைகளைப்‌ பற்றி கவனிக்க மாட்டார்களென்பதுதான்‌ அதன்‌ தத்துவம்‌. *பார்ப்பனரல்லாதார்‌” என்ற தலைப்பின்‌ கீழ்‌ “ஜஸ்டிஸ்‌ கக்ஷி பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்திற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டது” என்று சொல்லியிருக்கிறார்‌. இதை டாக்டர்‌ நாயுடுகார்‌ ஒப்புக்‌ கொண்டதற்கு பார்ப்பனரல்லாதார்‌ அவருக்கு நன்றி செலுத்தக்‌ கடமைப்பட்டுள்ளார்கள்‌. ஏனெனில்‌ நமது பார்ப்பனர்‌ சில காலங்களுக்குக்‌ கூலி கொடுத்து ஜஸ்டிஸ்‌ கட்சி “சர்க்கார்‌ கட்சி, “உத்தியோக வேட்டைக்‌ கட்சி”, “ஒரு சில பதவிக்‌ கேற்பட்ட கட்சி” என்று எழுதியும்‌ பேசியும்‌ வரும்படி செய்து பார்ப்பன ரல்லாதார்‌ கட்சியையே அடியுடன்‌ ஒழிக்கக்‌ கங்கணங்கட்டிக்‌ கொண்டு வேலை செய்யும்‌ சமயத்தில்‌ நமது டாக்டர்‌ நாயுடுகாரவர்கள்‌ **ஜஸ்டிஸ்‌ கட்சி பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்திற்காக ஏற்பட்ட கட்சி*” என்று சொல்லி பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சிகளும்‌, தந்திரங்களும்‌ அடங்கும்படி கர்ஜித்ததற்கு நன்றி பாராட்ட வேண்டியது நமது கடமை. அல்லாமலும்‌, பார்ப்பனரல்லாதாருக்கு சர்க்கார்‌ உத்தியோகங்கள்‌ அதிகமாகக்‌ கிடைப்பதின்‌ மூலமாய்த்தான்‌ முன்னேற முடியுமென்று அறி வித்து விட்டே அவர்கள்‌ வேலை செய்து வருகிறார்கள்‌. ஆதலால்‌ “உத்தி யோகம்‌ பெறுவது தங்கள்‌ கொள்கை என்று பகிரங்கமாகச்‌ சொல்லும்‌ ஒரு கக்ஷியாரை எப்படி பதவி வேட்டைக்காரர்‌ என்று சொல்ல முடி யும்‌?” என்று வினவியிருக்கிறார்‌. இது பார்ப்பனருக்குமாத்திரமல்லாமல்‌ பார்ப்பனரல்லாதாரிலேயே சில பைத்தியக்காரர்‌, பார்ப்பனரல்லாத கக்ஷியின ரைப்‌ “பதவி வேட்டைக்காரர்‌” என்று சொல்லித்‌ திரிவோர்களுக்கும்‌ புத்தி வரும்படி செய்திருக்குமென்றே நினைக்கிறோம்‌. “பூர்வீக பிராமணர்‌” என்ற தலைப்பின்‌ கீழ்‌ “இப்போது பார்ப்பனர்‌ களே எங்கு பார்த்தாலும்‌ உத்தியோகங்களில்‌ நிறைந்திருப்பதால்‌ தங்க ளுக்கும்‌ உத்தியோகம்‌ கிடைக்க வேண்டுமென்று ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ கேட்கிறார்கள்‌. தங்களுக்குரிய பங்கைக்‌ கொடுக்கும்படி ஒருவர்‌ கேட்‌. கும்‌ போது அதைப்‌ பதவி வேட்டை என்று எப்படிச்‌ சொல்ல முடியும்‌?” என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌ .இது ஒரு வகுப்பார்‌ உரிமை கேட்பதால்‌ தேசம்‌ கெட்டுப்போகுமென்று சொல்லித்‌ திரிபவர்களுக்குச்‌ சரியான பதிலாகும்‌. “பார்ப்பனரின்‌ கொடுமை” என்ற தலைப்பின்‌ கீழ்‌ “வெள்ளையர்‌ களிடம்‌ இந்தியர்‌ என்ன கேட்கிறார்களோ அதையேதான்‌ பார்ப்பனர்‌ களிடம்‌ பார்ப்பனரல்லாதார்‌ கேட்கிறார்கள்‌” என்று சொல்லியிருக்கிறார்‌. அல்லாமலும்‌ “குருகுலப்‌ போராட்டத்திவிருந்து நான்‌ பார்ப்பனர்களிடம்‌ வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டேன்‌” என்றும்‌ “பார்ப்பனர்‌ களது கொடுமைகளின்‌ காரணமாகவே தமிழ்நாடு காங்கிரஸ்‌ நிர்வாகக்‌ கமிட்டி அங்கத்தினர்‌ பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்‌” என்றும்‌ குடி அரசு - 1926 (2) 86 சொல்லியிருக்கிறார்‌. இதனாலேயே காங்கிரஸ்‌ பார்ப்பனர்கள்‌ ஸ்தாபனமென்‌ பது யாவருக்கும்‌ நன்றாய்‌ விளங்கும்‌. இல்லாவிட்டால்‌ பார்ப்பனர்கள்‌ கொடு மைக்காக ஒருவரும்‌ காங்கிரஸ்‌ பதவியிலிருந்து விலகவே மாட்டார்கள்‌ என்பதை யாவரும்‌ சுலபத்தில்‌ உணரலாம்‌. “ஜஸ்டிஸ்‌ கக்ஷிக்கு வேண்டுகோள்‌” என்ற தலைப்பின்‌ கீழ்‌ “வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ நல்லதல்ல, ஆனால்‌ தங்களுடைய நன்மைக்கு ஆபத்து வராமல்‌ காத்துக்கொள்ள தற்கால ஏற்பாடாக ஏதாவது ஒன்றைச்‌ செய்து கொள்ளலாம்‌” என்றும்‌ “ஒருவருக்கொருவர்‌ நம்பிக்கை யேற்ப டுகிற வரையில்‌ இம்முறையைக்‌ கைக்‌ கொள்ளலாம்‌” என்றும்‌ “ஜஸ்டிஸ்‌ ககஷியாருக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை விட முடியாதென்ற எண்ண மிருந்தால்‌ அவர்கள்‌ காங்கிரசில்‌ வந்து ஏன்‌ வற்புறுத்தக்‌ கூடாது ? அவ்வாறு செய்யும்படி அவர்களைக்‌ (ஜஸ்டிஸ்‌ கக்ஷியாரை! கேட்டுக்கொள்ளுகிறேன்‌” என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. இவற்றில்‌ மேற்கூறிய இரண்டொரு வார்த்தைகளைத்‌ தவிர மற்றவை களை மாத்திரம்‌ நாம்‌ ஆதரிக்க முடியாதிருப்பது பற்றி வருந்துகிறோம்‌. டாக்டர்‌ நாயுடுகார்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ தப்பென்றாலும்‌ “ஒருவருக்‌ கொருவர்‌ நம்பிக்கை ஏற்படும்‌ வரை தற்கால யேற்பாடாக ஏதாவதொன்றைச்‌ செய்து கொள்ளலாம்‌” என்று சொல்லுகிறார்‌. “அது எது”, *என்ன செய்து கொள்ளலாம்‌” என்று சொல்லியிருந்தால்‌ நன்றாயிருந்திருக்கும்‌. ஒருவருக்‌ கொருவர்‌ நம்பிக்கையில்லாததால்தான்‌ தனிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்கிறார்‌ கள்‌ என்கிறதை ஒப்புக்கொண்ட டாக்டர்‌ நாயுடுகார்‌ தானும்‌ ஒரு வழி சொல்‌ லாமல்‌ பிறத்தியார்‌ கேட்பதையும்‌ தப்பென்று சொன்னால்‌ வேறு கதி என்ன வென்‌ பதுதான்‌ நமது கவலை. ஆனால்‌ சமீபத்தில்‌ டாக்டர்‌ நாயுடுகாரவர்கள்‌. இரண்‌ டோர்‌ இடங்களில்‌ பேசியபோது, சில வகுப்பாருக்கு வாக்காளர்‌ தனித்‌ தொகுதியுங்கூட கொடுக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளார்‌. சில இடங்க ளில்‌ பேசும்‌ போது ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ கேட்கும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ தப்பல்ல என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. நாமும்‌ இரண்டொரு சமயத்‌ தில்‌ டாக்டர்‌ நாயுடுகாரின்‌ அபிப்பிராயத்தைப்‌ பற்றி எழுதும்‌ போது டாக்டர்‌ நாயுடுகார்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அடியோடு கூடாதென்று சொல்ல வில்லை யென்றும்‌, அதில்லாமல்‌ வேறு வழியில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்து வத்தின்‌ கருத்தைப்‌ பூர்த்தி செய்ய முடியுமாவென்று பார்க்கிறார்‌ என்றும்‌, முடியாவிட்‌ டால்‌ அவர்‌ என்ன செய்வாரென்பது நமக்குத்‌ தெரியுமென்றும்‌ எழுதியிருந்‌ தோம்‌. ஆதலால்‌ அவர்‌ தற்கால நிலையில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவக்‌ கொள்கைக்கு விரோதியல்ல வென்பதும்‌, அதனுடைய வழி களில்‌ தான்‌ கொஞ்சம்‌ குழப்பமாயிருக்கிறார்‌ என்பதும்‌ நமது நம்பிக்கை. அப்படியில்லா விட்டால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியாருக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ கேட்க சுதந்திரம்‌ உண்டென்றும்‌ காங்கிரசில்‌ வந்து கேட்கும்‌ படியும்‌ சொல்லியிருக்க மாட்டார்‌. 87 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஆனால்‌ பார்ப்பனல்லாதார்‌ ஏழு பேரும்‌, பார்ப்பனர்‌ இரண்டு பேரு மாயிருக்கும்‌ காங்கிரஸ்‌ நிர்வாக சபையிலிருந்து,டாக்டர்‌ நாயுடு கார்‌ போன்ற வீரர்களே பார்ப்பனர்‌ கொடுமையைச்‌ சகிக்க மாட்டாமல்‌ மனம்‌ நொந்து அதைவிட்டு விலக வேண்டிய அவசியம்‌ நேர்ந்திருக்கும்‌ போது ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ எத்தனை பேர்கள்தான்‌ காங்கிரசுக்குள்‌ வந்தாலும்‌ பார்ப்பனர்‌. கொடுமையிலிருந்து தப்பமுடியுமா? அல்லாமலும்‌ காங்கிரசிலி ருந்து வகுப்பு வாரி உரிமையை வற்புறுத்தும்படிடாக்டர்‌ நாயுடுகார்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறார்‌. இதுவும்‌ நமக்கு ஆச்சரியமாகவேயிருக்கிறது. காங்கிரஸ்‌ கமிட்டிக்கு டாக்டர்‌ நாயுடுகார்‌ தலைவராகயிருந்த சமயத்‌ தில்‌ ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌ தலைமை வகித்ததும்‌ 100- க்கு 90 பேர்‌ பார்ப்பனரல்லாதாராய்க்‌ கூடியிருந்ததுமான தமிழ்‌ மாகாண மகா நாட்டில்‌, மும்முறை காங்கிரஸ்‌ கமிட்டி காரியதரிசியாகவும்‌, இரண்டு முறை கமிட்டித்‌ தலைவராகவும்‌, ஒருமுறை தமிழ்‌ மாகாண மகாநாட்டுக்குத்தலைவ ராகவும்‌, மூன்று முறை ஜெயிலுக்குப்‌ போனவரென்று சொல்லப்பட்டவராக வுமுள்ள ஒரு இராமசாமி நாயக்கர்‌ என்பவரே வகுப்புவாரி தீர்மானம்‌ காங்கிரசின்‌ பேரால்‌ கொண்டுபோய்‌ பிரேரேபிக்கக்கூட அனுமதி கிடைக்கா மல்‌ ஓடிப்போகும்படி நேர்ந்திருக்கும்‌ போது, ஐயோ பாவம்‌! எவ்வளவோ கஷ்டப்பட்டுக்‌ கொண்டும்‌ காங்கிரஸ்‌ உலகத்தில்‌ கெட்ட பெயர்‌ வாங்கிக்‌ கொண்டுமிருக்கும்படியான ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ காங்கிரசில்‌ வந்து சேர்ந்தால்‌ அவர்களைப்‌ பார்ப்பனர்கள்‌ சும்மா விடுவார்களா? இந்நிலைமையில்‌ இது ஆகிற காரியமா? ஒரு சமயம்‌ தமிழ்நாடு. கமிட்டியில்‌ ஒப்புக்கொண்டாலும்‌ அகில இந்திய காங்கிரசில்‌ ஒப்புக்‌ கொள்ளும்படி பார்ப்பனர்‌ சம்மதிப்பார்களா? இவைகளை யோசித்துப்‌ பார்த்தால்‌ உண்மை விளங்காமல்‌ போகாது. ஜஸ்டிஸ்‌ கட்சியாரைத்‌ தற்கால காங்கிரசுக்குக்‌ கூப்பிடுவதானது பார்ப்பனரல்லாதாரியக்கத்தை ஒழிப்ப தாகுமே தவிர அவர்களுக்கு அநுகூலம்‌ செய்வதாகாதென்றே உறுதி கூறு வோம்‌. இது “*அங்கேண்டி மகளே ஆலாய்ப்‌ பறக்கிறாய்‌ இங்கு வா காற்‌ றாய்ப்‌ பறக்கலாம்‌” என்பது போலிருக்கிறது. நம்மால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு உதவி செய்ய முடியா விட்டாலும்‌ நாம்‌ அதற்குக்‌ கெடுதி செய்யாமலிருந்‌ தாலே கோடிக்‌ கன்னிகாதானம்‌ செய்த பலனுண்டு. ஆதலால்‌ இந்த இரண்‌ டொரு விஷயத்தைத்‌ தவிர மற்ற விஷயங்களில்‌ நமது டாக்டர்‌ நாயுடுகார வர்கள்‌ சொன்னதாக நாம்‌ “தமிழ்‌ நாடு” பத்திரிகையிலிருந்து மேலே எடுத்துக்காட்டிய விஷயங்கள்‌ முழுவதையும்‌ மனப்பூர்வமாய்‌ ஆதரிக்‌ கிறோம்‌. இதற்கு முன்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள்‌. எழுதிய “இந்தியாவின்‌ தலையெழுத்து” என்ற விஷயமும்‌ “குடிஅரசு” எழுதிவரும்‌ விஷயமும்‌ டாக்டரவர்கள்‌ சொன்னதாக இதில்‌ எடுத்தாண்‌ டிருக்கும்‌ விஷயமும்‌, பார்ப்பனர்‌ - பார்ப்பனரல்லாதார்‌ என்கிற விஷயத்‌ தைப்‌ பொறுத்த வரையிலும்‌ தற்கால காங்கிரசின்‌ யோக்கியதையைப்‌ குடி அரசு - 1926 (2) 88 பொறுத்த வரையிலும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியைப்‌ பொறுத்தவரையிலும்‌ யாதொரு அடிப்படையான வித்தியாசமும்‌ இருப்பதாய்‌ நாம்‌ நினைக்கவில்லை. ஆனால்‌ நாம்‌ பச்சைத்‌ தமிழில்‌ எழுதுகிறோம்‌; பேசுகிறோம்‌. டாக்டர்‌ அவர்கள்‌ ராஜதந்திரத்‌ தமிழில்‌ எழுதுகிறார்‌. பேசுகிறார்‌. ஸ்ரீமான்‌ முதலியா ரவர்கள்‌ சங்கத்தமிழில்‌ எழுதுகிறார்‌; பேசுகிறார்‌. இதுதான்‌ வித்தியாசமே தவிர வேறில்லை.பல காரணங்களால்‌ பலருக்குப்‌ பச்சைத்‌ தமிழ்‌ வராது. இதற்காக வேண்டி ஒருவரும்‌ கலக்கமுற வேண்டியதில்லை. தேர்தல்கள்‌ சமீ பித்து விட்டன; சூழ்ச்சிகள்‌ மலிந்து விட்டன; தமிழ்‌ மக்கள்‌ பாஷை வித்தி யாசத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனம்‌. திருட்டுப்‌ போன பின்பு கதவைத்‌ தாழ்ப்போடுவதில்‌ பயனில்லை. ஆதலால்‌ பார்ப்பன ரல்லாதார்‌ உடனே ஒன்று கூடித்‌ தேர்தலில்‌ தங்கள்‌ சமூக முன்னேற்றத்‌ திற்கும்‌, சமூகக்‌ கட்டுப்பாட்டிற்கும்‌, பத்திரத்திற்கும்‌, சுயமரியாதைக்கும்‌ பங்கமில்லாதபடி நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பார்ப்பனரல்லா தாரின்‌ முக்கியக்‌ கடமை யாகும்‌ என்று தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 01.08.1926 89 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தமிழ்‌ சர்வகலாசாலைக்‌ கமிட்மு தமிழ்‌ நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான்‌ வேண்டி சின்னாட்களாகப்‌ பல தமிழர்‌ கிளர்ச்சி செய்து வருகின்றார்கள்‌. இக்கிளர்ச்‌ சியை ஒடுக்குவான்‌ வேண்டியும்‌, தமிழ்‌ கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்ப னர்கள்‌ செய்துவரும்‌ சூழ்ச்சி முறைகளையும்‌ அனேகர்‌ அறிந்திருக்கலாம்‌. கடைசியில்‌ இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய்‌ தமிழ்‌ சர்வகலாசாலை ஏற்படுத்த வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும்‌ நியமிக்கப்படலாயிற்று. இக்கமிட்டியும்‌ பெருங்‌ கபடத்துடனேயே நியமிக்கப்பட்டுள்ளதெனக்‌ கூறவேண்டும்‌. ஏனெனில்‌ தமிழ்‌ மொழியின்‌ ஆணி வேர்‌ நுனி வரை நுணுகி ஆராய்ந்து தமிழ்‌ மொழியே உயர்‌ தனிச்‌ செம்மொழியெனக்கொண்டு, தமி மையே உயரினும்‌ பெரிதாய்‌ ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந்‌ தொண்‌ டாற்றி வரும்‌ திருவாளர்கள்‌ சுவாமி வேதாச்சலனார்‌, ந.மு. வேங்கடசாமி நாட்டார்‌, தவே.உமாமகேசுவரம்‌ பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர்‌, கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா. பூரணலிங்கம்‌ பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும்‌ தமிழுக்கும்‌ உள்ள பதத்தை ஒரு சிறிதும்‌ உணராத பலரையும்‌ தமிழில்‌ பற்றுடைய மிகச்‌ சிலரையும்‌ நியமித்திருக்‌ கிறார்கள்‌. இவ்வாறு அடிப்படையிலே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால்‌ தமிழ்த்‌ தாய்க்கு எவ்வித ஆக்கமும்‌ அளிக்கப்‌ பெறாதென்பதே நமது கருத்து. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 01.08.1926 குடி அரசு - 1926 (2) 90 முணிசியாலிட்முயில்‌ ச௬யாரான்மம்‌ - சித்திரபுத்திரன்‌ கொஞ்ச நாளாக எங்கு பார்த்தாலும்‌ முனிசிபல்‌ சேர்மென்கள்‌ வசூல்‌ செய்யத்‌ தவக்கப்பட்ட காரணத்தினால்‌ முனிசிபாலிட்டிக்கு ஏற்பட்ட வரிநஷ்‌ டத்தை அவ்வித சேர்மென்களிடமிருந்து வசூல்‌ செய்யப்பட வேண்டு மென்று கவர்ன்மெண்டார்‌ உத்திரவு போட்டு வருகிறார்கள்‌. ஆனால்‌ சேர்மென்கள்‌ திருடுகிற - திருடிக்‌ கொண்ட பணத்தை வசூல்‌ செய்யவும்‌ அவர்கள்‌ பேரில்‌ நடவடிக்கை நடத்தவும்‌ அதிகாரிகளும்‌ கவர்ன்மெண்‌: டாரும்‌ கவலைப்‌ படுவதேயில்லை போலிருக்கிறது.அதிகாரிகளைக்‌ கண்டு “சேர்மென்கள்‌ இம்‌ மாதிரி கொள்ளையடிப்பதைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்‌ கிறீர்களே இது சரியா? என்று கேட்டால்‌, நாங்கள்‌ என்ன செய்வோம்‌; நீங்கள்‌ தானே சுயராஜ்யம்‌ கேட்டவர்கள்‌; நாங்கள்‌ சுயராஜ்யம்‌ கொடுத்து விட்டோம்‌; அந்த நிர்வாகம்‌ உங்கள்‌ மந்திரிகளிடம்‌ இருக்கிறது: அவர்களைப்‌ போய்க்‌ கேளுங்கள்‌. நீங்கள்‌ கேட்ட சுயராஜ்யத்தை நீங்கள்தானே அநுபவிக்க வேண்டும்‌? எங்களை ஏன்‌ தொந்தரவு செய்கிறீர்கள்‌?” என்கிறார்களாம்‌. கவர்ன்மெண்டார்‌ என்கிற மந்திரிமார்களை இதைப்‌ பற்றி கவனிக்கும்படி சொன்னால்‌ “நீங்கள்‌ தெரிந்தெடுத்த சேர்மென்தானே, அவரால்‌ ஏற்படும்‌ &6 துக்கத்தை நீங்களே அனுபவியுங்கள்‌” என்று சொல்லுகிறார்களாம்‌. “நாங்கள்‌. தெரிந்தெடுக்கவில்லை, ஏமாற்றி விட்டார்கள்‌” என்று சொன்னால்‌ “கோர்ட்டுக்குப்‌ போங்கள்‌” என்று சொல்லுகிறார்களாம்‌.ஊரில்‌ சிநேகிதமாய்‌ உள்ள சிலரிடம்‌ சொல்லியாவது இதைத்‌ திருத்தலாமென்றால்‌ சேர்மெனின்‌ நண்பர்கள்‌ “இதனால்‌ என்ன முழுகிப்‌ போய்விட்டது. அவரும்‌ ஒரு பார்ப்பன ரல்லாதார்‌ (நான்‌ பிராமின்‌) தானே, சாப்பிட்டுப்‌ போகட்டுமே. இதனாலேயா முனிசிபாலிட்டி முழுகிப்‌ போய்விடும்‌?” என்று சொல்லி விடுகிறார்களாம்‌. சாக்ஷிக்காரர்கள்‌ காலில்‌ விழுவதை விட சண்டைக்காரர்‌ காலிலேயே விழுந்து விடலாமென்று சேர்மெனிடம்‌ போய்‌ “*ஐயா! இப்படிச்‌ செய்கிறீர்‌ களே, இது யோக்கியதையா? உம்முடைய அக்கிரமத்தினால்‌, சுயராஜ்யம்‌ என்றாலே ஜனங்கள்‌ பயப்படும்‌ படியாயிருக்கிறதே, கொஞ்சமாவது சர்க்கா ருக்கு மேலதிகாரம்‌ இருக்கும்‌ போதே இப்படிக்‌ கொள்ளையடித்தால்‌ சர்க்கார்‌. சுத்தமாய்‌ விலகிவிட்டால்‌ முனிசிபாலிட்டியார்‌ கதியென்னாவதென்று ஜனங்‌ 91 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கள்‌ நினைக்கும்படி செய்கிறீர்களே” யென்று கெஞ்சினால்‌, சேர்மென்கள்‌ “அதெல்லாம்‌ சரி, அந்த தர்ம நியாயம்‌ எனக்கும்தான்‌ தெரியும்‌. ஆனால்‌ எனக்கு சோத்திற்கு வேறொரு வழிகாட்டுங்கள்‌. நானும்‌ உங்களோடு தர்ம நியாயம்‌ பேசுகிறேன்‌. எனக்கு பெண்டு - பிள்ளை - நல்லது - கெட்டது இவைகளில்லையா? எந்த ஊரில்‌ பிறந்து இந்த ஊருக்கு வந்து சும்மா உழைக்க நாமென்ன முட்டாளா? உங்கள்‌ தகப்பன்மார்‌ காலந்தொட்டு நான்‌ இப்படித்தான்‌ நடக்கிறேன்‌” என்றும்‌ “ஒரு சம்பளச்‌ சேர்மென்‌ வைத்தாலும்‌ மாதம்‌ 500 ரூ. செலவாகுமல்லவா? அதற்கு மேலாகவா என்னால்‌ முனிசிபா லிட்டிக்கு செலவாகிவிடுகிறது?'”” என்று சொல்லி வருத்தப்படுகிறார்களாம்‌. இந்நிலைமையில்‌ கஞ்சிக்குங்கூட வழியில்லாத ஆட்களை சேர்மென்‌ உத்தியோகத்தில்‌ போட்டு அவர்கள்‌ மீது இம்மாதிரி குற்றங்‌ குறை சொல்லு வதை விட, சேர்மென்‌ வேலைக்கு வருகிறவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு 500 ரூபாய்‌ வரையில்‌ படி உண்டென்று ஏற்பாடு செய்துவிட்டால்‌ இம்மாதிரி கஷ்டங்கள்‌ ஏற்படாததோடு முனிசிபாலிட்டிக்கும்‌ அதிக நஷ்ட மேற்படாது. இல்லாவிட்டால்‌ சேர்மென்‌ மாதம்‌ 500 ரூபாய்‌ சம்பாதிக்க வேண்டியிருந்தால்‌ முனிசிபாலிட்டிக்கு எவ்வளவு ரூபாய்‌ நஷ்ட மேற்படு கிறது? பணம்‌ சம்பாதிப்‌ பதற்காக அவசியமில்லாத வேலைகள்‌ எல்லாம்‌ செய்ய வேண்டி நேரிடுகிறது. உதாரணமாக, சேர்மெனுக்கு ஒரு 100 ரூபாய்‌ வரும்படி வர வேண்டு மானால்‌ கன்ட்றாக்டருக்கும்‌ 200 ரூபாய்க்குக்‌ குறைவில்லாமல்‌ லாபம்‌ இருக்க வேண்டும்‌. இவைகள்‌ தவிர ஆபிஸ்‌ சிப்பந்திகள்‌ ஓவர்சீயர்‌ முதலி யவர்களுக்கும்‌ 50 ரூபாய்க்குக்‌ குறையாமலாவது வரும்படி இருக்கவேண்‌ டும்‌. இதற்காகத்தான்‌ குறைந்தது ஒரு 2000 ரூபாய்‌ வேலையையாவது உற்பத்தி செய்ய வேண்டும்‌ .இம்மாதிரி இவர்கள்‌ சாப்பிடுவதை அனுமதிக்‌ கிறதற்குக்‌ கவுன்சிலர்களுக்கு நல்ல பிள்ளையாய்‌ நடந்து கொள்ள வேண்‌ டும்‌. அவர்களுக்கும்‌ பல செளகரியங்கள்‌ செய்து கொடுக்க வேண்டும்‌. அவர்களில்‌ யாராவது இரண்டொரு கவுன்சிலர்கள்‌ சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள்‌ வர நேர்ந்து விட்டால்‌ அவர்களுக்கும்‌ மாதம்‌ 10050 கிடைக்‌ கும்படி செய்ய வேண்டும்‌. இவ்வளவுமில்லாமல்‌ தன்னைத்‌ தாங்கிப்‌ பேச ஊணில்‌ சில ஆட்களைச்‌ சுவாதீனம்‌ செய்து கொள்வதற்காக அவர்களுக்‌ கும்‌ வேறேதாவது உத்தியோகமோ கன்றாக்டோ, வரி குறைவோ முதலிய உதவி கள்‌ செய்ய வேண்டும்‌. இவ்வளவையும்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிற முனிசி பல்‌ சிப்பந்திகள்‌ சும்மா இருக்க முடியுமா? ஒருக்காலும்‌ முடியாது. ஆத லால்‌ அவர்கள்‌ செய்யும்‌ அக்கிரமங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இவ்வளவு மல்லாமல்‌ ஊர்‌ ஜனங்களிடம்‌ பணம்‌ வாங்க ஆரம்‌ பித்து விட்டால்‌ அவர்களுக்கும்‌ முனிசிபல்‌ வரியோ, சொத்தோ உதவ வேண்‌: டும்‌. ஆட்களிடம்‌ பணம்‌ பெற்றாக வேண்டும்‌. இம்மாதிரி சேர்‌ மெனுக்கும்‌ சிப்பந்திக்கும்‌ பணம்‌ கொடுத்தும்‌ சிபார்சு பிடித்தும்‌ உத்தி யோகம்‌ பெறுபவன்‌ குடி அரசு - 1926 (2) 92 யோக்கியதையும்‌ தகுதியுள்ளவனாயுமிருப்பானா? ஒருக்காலும்‌ இருக்க முடியாது. ஆகவே, எவ்வெவ்‌ விதங்களில்‌ நமது சுயராஜ்யம்‌ பெற்ற ஸ்தாபனங்கள்‌ கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை பொது ஜனங்கள்‌ அறிவார்களாக. குடி அரசு - கட்டுரை - 01.08.1926 93 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. செண்ணையில்‌ கர்மபனை்‌ கர்மபலன்‌ என்றால்‌ மனிதர்‌ தங்கள்‌ வாழ்நாளில்‌ செய்யும்‌ காரியங்‌ களுக்கும்‌ பேசும்‌ விஷயங்களுக்கும்‌ நினைக்கும்‌ எண்ணங்களுக்கும்‌ தக்க பலனை அவரவர்‌ இறந்த பிறகு “மேல்‌ லோகத்தில்‌” கடவுள்‌ முன்னிலையில்‌ அனுபவிப்பதென்றும்‌, அந்த அனுபவம்‌ மோக்ஷம்‌ நரகம்‌ என்கிற இடங்களில்‌ என்றும்‌, சில சமயங்களில்‌ அதற்கு மீறி அடுத்த ஜென்மம்‌ எடுத்து அதில்‌ அனுபவிக்க வேண்டும்‌ என்றும்‌, மனிதன்‌ அதற்குத்‌ தப்பித்துக்‌ கொள்ள வேண்டுமானால்‌ பார்ப்பனர்களுக்குப்‌ பணம்‌ கொடுத்து அவர்கள்‌ சொல்லுகிறபடி கேட்டால்‌ தப்பித்துக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌, நமது பார்ப்ப னர்கள்‌ அனேக ஆதாரங்கள்‌ எழுதி வைத்துக்கொண்டு தங்கள்‌ பிழைப்புக்கு அதையும்‌ ஒரு வழியாக உபயோகித்து வருகிறார்கள்‌. ஆனால்‌, நாம்‌ கர்மபலன்‌ என்பதை அவ்விதத்தில்‌ பொருள்‌ கொள்வ தில்லை. கர்மபலன்‌ என்றால்‌ வேலையின்‌ கூலியென்று தான்‌ நினைக்கி றோம்‌. கர்மம்‌ என்றால்‌ வேலை, பலன்‌ என்றால்‌ அதனால்‌ நாமடையும்‌ பிரதிப்‌ பிரயோஜனம்‌; இதை நாம்‌ கூலியென்று சொல்லுகிறோம்‌. அந்தக்‌ கூலியை மேல்‌ லோகத்தில்‌ பெறுவதென்பதும்‌, அங்கு பட்டு மெத்தை, கட்டில்‌, நாற்காலி, பங்கா, அழகிய பெண்கள்‌ முதலிய சுகானந்தமடையத்‌ தக்கதான ஒரு இடம்‌ மோக்ஷம்‌ என்று இருக்கிறதாகவோ அல்லது கல்‌, முள்‌, தேள்‌, பாம்பு, மலம்‌, புழு முதலிய கஷ்டமனுபவிக்கத்தக்க சாதனங்களோடு நரகம்‌ என்று ஒரு ஸ்தானமிருக்கிறதாகவோ புத்தியிருக்கிறவர்களும்‌ பார்ப்பனர்‌. மாய்கையில்‌ சிக்காதவர்களும்‌ கொஞ்சமும்‌ நினைக்க மாட்டார்‌ கள்‌.ஆனால்‌ கர்மபலன்‌ என்பதற்கு நாம்‌ எப்படிப்‌ பொருள்‌ கொள்ளு கிறோமென்றால்‌ நாம்‌ எண்ணிய-பேசிய - செய்த நமது எண்ணம்‌ - பேச்சு - காரியம்‌ ஆகிய இவற்றின்‌ பலன்களை நாமே நேரில்‌ இந்த உலகத்தி லேயே நேருக்கு நேராய்‌ அனுபவிக்கிறோம்‌ என்பதுதான்‌. இந்த முடிவைக்‌ கொண்டே இன்று “சென்னையில்‌ கர்மபலன்‌” என்கிற தலையங்கம்‌ கொண்டு எழுதத்‌ தொடங்கினோம்‌. சென்னையில்‌ நமது பார்ப்பனர்‌ மகாத்மாவின்‌ பெயரைக்‌ கொண்டும்‌, தேசத்திற்காக உண்மையில்‌ தியாகம்‌ செய்தும்‌ ஜெயிலுக்கு போயும்‌ கஷ்டப்‌ பட்டவர்களின்‌ பெயரைக்‌ கொண்டும்‌, காங்கிரஸ்‌ என்கிற பொய்மான்‌ பெயரைக்‌ கொண்டும்‌ சுயராஜ்யம்‌ என்கிற மாய்கையைக்‌ கொண்டும்‌ தமிழ்‌ குடி அரசு - 1926 (2) 94 மக்களை ஏமாற்றி தாங்கள்‌ ஆதிக்கம்‌ பெற பலவித சூழ்ச்சிகள்‌ செய்து வந்தார்கள்‌ - வருகிறார்கள்‌ - வரப்போகிறார்கள்‌ என்பது நாடறிந்த விஷ யம்‌. இதற்காக அவர்கள்‌ இந்த இரண்டு மூன்று வருஷங்களாய்‌ எண்ணிய கெட்ட எண்ணங்களும்‌, பேசிய பொய்‌ வார்த்தைகளும்‌, புன்மொழிகளும்‌, செய்த அக்கிரமங்களும்‌ ஒரு அளவுக்கடங்கியதல்ல. உதாரணமாக தாங்‌ கள்‌ காந்தி கீடர்களென்றும்‌, தங்களுக்குக்‌ கொடுக்கும்‌ ஓட்டு மகாத்மா காந்திக்கு கொடுப்பதென்றும்‌, பார்ப்பனரல்லாத கக்ஷிக்காரரான ஜஸ்டிஸ்‌ ககஷியாருக்குக்‌ கொடுக்கும்‌ ஓட்டுகள்‌ தேசத்‌ துரோகிகளுக்கும்‌ சுயநலக்‌ காரர்களுக்கும்‌ கொடுக்கும்‌ ஓட்டென்றும்‌ சொன்ன தோடல்லாமல்‌, பார்ப்‌ பனரல்லாத கக்ஷியார்‌ கூட்டும்‌ கூட்டங்களில்‌ காலிகளை விட்டு கல்லெறியச்‌ சொல்லு வதும்‌ கூட்டத்தைக்‌ கலைக்கச்‌ செய்வதும்‌, பார்ப்பனரல்லாதார்‌. கட்சித்‌ தலைவர்களை அவர்கள்‌ வீட்டுக்கு முன்னால்‌ நின்று கொண்டு யோக்கியப்‌ பொறுப்பில்லாமல்‌ துர்பாஷையால்‌ திட்டச்‌ சொல்வதும்‌ பார்ப்‌ பனரல்லாத தேச பக்தர்களான ஆரியா முதலியவர்களை ஆட்களை விட்டு அடிக்கச்‌ சொல்வதும்‌, தேர்தல்‌ சமயங்களில்‌ தேர்தல்‌ ஸ்தானங்களில்‌ பெரிய மனிதர்களையும்‌ ஸ்திரீகளையும்‌ துர்பாஷையாகப்‌ பேசியும்‌ காலித்தனமாய்‌ நடத்தும்‌ பல காரியங்களைச்‌ செய்த விஷயம்‌ சென்ற சென்னை முனிசிபல்‌ தேர்தல்‌ சம்பந்தமாய்‌ நியாய ஸ்தலத்திற்கு சென்ற பல வியவகாரங்களி லிருந்தும்‌ அவை உண்மைதானா அல்லவா என்பதை கடைசி வியவகார மாகிய ஸ்ரீமான்‌ ஆரியா அவர்களை அடித்ததாக ஏற்பட்ட வியவகாரம்‌ முடிந்த விதத்திலிருந்தும்‌ அறிந்திருக்கலாம்‌. தேர்தல்கள்தான்‌ இப்படி என்றால்‌ தேர்தல்களுக்கு முன்பாக ஒத்து ழையாமை இருந்த காலத்திலும்‌ சக்ரவர்த்தித்‌ திருமகனார்‌ சென்னைக்கு வந்த காலத்தில்‌ அவரைப்‌ பார்க்கச்‌ சென்ற பார்ப்பனரல்லாத தலைவர்களைத்‌ திட்டியும்‌ அடித்தும்‌ துன்புறுத்திய தோடல்லாமல்‌ அவர்கள்‌ ஏறிச்‌ சென்ற மோட்டார்‌ வண்டி முதலிய வாகனங்களின்‌ மேல்‌ கல்‌ எறிந்து காயப்‌ படுத்தியும்‌ சேதப்படுத்தியும்‌ அவர்களை ஓடி ஒளியும்படி செய்ததையும்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ மாபெருந்தலைவரான சர்‌.ஃபி. தியாகராய பெருமானின்‌ வீட்டுக்குக்‌ கூட சில காலிகளை விட்டு அவர்‌ வீட்டு ஜன்னல்‌ கதவு கண்ணாடி முதலியவைகளை உடைத்தும்‌ அவரைக்‌ கொல்ல ஏற்பாடு செய்தும்‌ அவர்‌ பத்தினியார்‌ வந்து இக்காலிகளின்‌ காலில்‌ விழுந்து தனக்கு மாங்கல்லியப்‌ பிச்சை கொடுக்க வேண்டுமென்று கெஞ்சிக்‌ கேட்டும்‌ அப்‌ பாவிகளுக்கு மனமிளகாமல்‌ துர்பாஷையால்‌ அவ்வம்மையாரைத்‌ திட்டி உள்ளே நுழையப்‌ பிரயத்தனப்பட்டும்‌ அங்குள்ளவர்கள்‌ அப்‌ பெரியாரை ஒளியச்‌ செய்யும்படியான அவ்வளவு அக்கிரமங்கள்‌ செய்யச்‌ செய்ததையும்‌, சென்ற வாரத்திலும்‌ பார்ப்பனரல்லாத தலைவரான காலஞ்‌ சென்ற டாக்டர்‌ நாயர்‌ பெருமான்‌ ஞாபக தினத்தைக்‌ கொண்டாடும்‌ முக்கிய சம்பவமான ஒரு பெரிய கூட்டத்தில்‌ கலகம்‌ செய்யச்‌ செய்தும்‌ பார்ப்பனரல்லாத தேசபக்தர்கள்‌ தலைமீது கல்‌ போட்டு காயப்படுத்தியும்‌ கூட்டத்தைக்‌ கலைக்கச்‌ சூழ்ச்சி 95 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. செய்தும்‌ மற்றும்‌ எவ்வளவோ கொடுமைகள்‌ செய்ததை யும்‌ உலகமறிந்திருக்கும்‌. இப்‌ பார்ப்பனர்கள்‌ செய்வித்த இவ்வித அக்கிரமங்‌ களைத்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியும்‌ மகாத்மா காந்தியும்‌ முறையே தீர்மான மூலமாகவும்‌ “எங்‌ இந்தியா” பத்திரிகை மூலமாகவும்‌ கண்டித்திருப்‌ பதும்‌ உலகமறிந்த விஷயம்‌. இவைகள்‌ மாத்திரமல்லாமல்‌ வெளியூர்‌ களிலும்‌ கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத தலைவர்களையும்‌ பெரிய மனிதர்களையும்‌ திட்டுவதற்கு ஏவி விடுவதும்‌ அவர்கள்‌ பேரில்‌ பொய்யும்‌ புளுகும்‌ சொல்லச்‌ செய்து கலக முண்டாக்‌ குவதுமான பல கொடுமைகளைச்‌ செய்து வருவதும்‌, தங்கள்‌ கைவசம்‌ உள்ள பத்திரிகைகளைக்‌ கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கும்‌ அவர்களு டைய கட்சிக்கும்‌ அக்கட்சித்‌ தலைவர்களுக்கும்‌ நமது பார்ப்பனர்‌ செய்து வரும்‌ கொடுமைகளும்‌ அளவிடக்‌ கூடியதல்ல. இவ்வளவு கஷ்டங்களையும்‌ கொடுமைகளையும்‌ அபாயங்களையும்‌ சகித்துக்கொண்டு பார்ப்பனல்லாதார்‌ சும்மாயிருப்பதாயிருந்தாலும்‌ வேலை செய்தவன்‌ கூலி பெறாமல்‌ போக இயற்கைதேவி சம்மதிப்பாளா? ஒரு சமயம்‌ இயற்கைதேவி சம்மதித்தாலும்‌ உலகம்‌ பொறுக்குமா? ஒருக்காலும்‌ பொறுக்‌ காது.ஆகையால்‌ உண்மையான கூலி அடையாவிட்டாலும்‌ அடையக்கூடிய நிலைமையிலாவது இருக்கிறார்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளப்படுகிறது. அதுவுமில்லாமல்‌ வேலை செய்தவர்களே கூலி அடைகிறோம்‌ என்றாவது சொல்லிக்‌ கொள்ளத்தக்க சம்பவம்‌ ஏற்படுகிறது. உதாரணமாக “சுதேச மித்திரன்‌” என்னும்‌ பார்ப்பன மித்திரன்‌ பத்திராதிபரான ஸ்ரீமான்‌ எ. ரெங்க சாமி அய்யங்கார்‌ ஒரு கூட்டத்தில்‌ பேசும்‌ போது அவர்‌ பேசிய பொய்க்‌ கூற்றை வெளிப்படுத்த சிலர்‌ அவரைக்‌ கேள்வி கேட்டதாகவும்‌, அதற்கு ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ பதில்‌ சொல்லாமல்‌ போலீஸ்‌ இன்ஸ்பெக்டரைக்‌ கூப்‌ பிட்டு “இதோ கேள்வி கேழ்க்கிறானே, அவனை அரஸ்ட்‌ செய்‌” என்று கட்டளை இட்டதாகவும்‌, அந்த இன்ஸ்பெக்டர்‌ “அவர்கள்‌ கலகம்‌ செய்தால்‌ அரஸ்ட்‌ செய்யலாம்‌, நீர்‌ பேசியதிலிருக்கும்‌ புரட்டுகளை வெளியாக்க வேண்டும்‌ என்கிற நல்ல எண்ணங்கொண்டும்‌ பொதுஜன நன்மையை உத்தேசித்தும்‌ கேள்வி கேட்டால்‌ அதற்காக எப்படி அரஸ்ட்‌ செய்வது?'” என்று கேட்டதாகவும்‌, அதன்‌ பேரில்‌ ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ வெட்கித்‌ தலை குனிந்ததாகவும்‌, பிறகு தங்களது வஜ்ஜிராயுதமாகிய பத்திரிகையில்‌ போலீஸாரைப்‌ பற்றி தூஷித்தெழுதி வருவதாகவும்‌ சொல்லப்படுகிறது. பிறகு ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌ ஒரு கூட்டத்தில்‌ பேசும்போது “காங்கிரசில்‌ இப்போது காந்தியிருக்கிறாரா?” வென்று ஒருவர்‌ கேட்க, அவரைக்‌ (கேட்ட வரை) காலியென்று சொல்லிப்‌ பார்ப்பனரல்லாதார்‌ கக்ஷியைத்‌ தூஷித்த தாகவும்‌ அது சமயம்‌ பக்கத்திலிருந்த ஒருவர்‌ காலியென்று சொன்னதையும்‌ தூஷித்த கெட்ட வார்த்தையையும்‌ வாபீசு வாங்கிக்கொள்ளும்படி கேட்ட தாகவும்‌, அதற்கு ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ சம்மதிக்காமல்‌ மேலும்‌ மேலும்‌ அப்படியே பேசினதாகவும்‌, இந்த வார்த்தைகளைப்‌ பின்வாங்கிக்‌ கொள்ளும்‌. குடி அரசு - 1926 (2) 96 படி தன்‌ பக்கத்தில்‌ வந்து சொல்லச்‌ சொன்ன ஆளைப்‌ பிடித்து ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ தள்ளியதாகவும்‌ அந்த ஆள்‌ ஆச்சாரியாரின்‌ தாடி யைப்‌ பிடித்து ஆட்டினதாகவும்‌ சொல்லிக்‌ கொள்ளப்படுகிறது. ஸ்ரீமான்கள்‌ எம்‌.கே. ஆச்‌ சாரியாருக்கும்‌ எ.ரெங்கசாமி அய்யங்காருக்கும்‌ ஏற்பட்ட இச்‌ சம்பவத்தைக்‌ குறித்து நாம்‌ வருந்துகிறோம்‌. கூட்டங்களில்‌ இம்மாதிரி நடந்து கொண்டவர்களையும்‌ நாம்‌ அழுத்தமாகக்‌ கண்டிக்கிறோம்‌. ஆனால்‌ நமது வருத்தமும்‌ நமது கண்டிப்பும்‌ ஒரு மனிதன்‌ தான்‌ செய்த கருமத்திற்காக அனுபவிக்கும்‌ பலனைத்‌ தடுக்க முடியுமாவென்பது நமக்குச்‌ சந்தேகமாகத்தானிருக்கிறது. ஆனாலும்‌ ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌ போன்றவர்கள்‌ பார்ப்பன ரல்லாதார்‌ உள்ள பொதுக்‌ கூட்டங்களில்‌ நின்று பேசுவது கொஞ்சமும்‌ சரி யல்ல வென்பதுதான்‌ நமது அபிப்பிராயம்‌ . அப்படிப்‌ பேசுகிற கூட்டங்களில்‌ கலகம்‌ நடப்பது நியாய விரோதமானாலும்‌ சுபாவத்திற்கு விரோதமென்று சொல்ல வழியில்லை. ஏனெனில்‌ “ஒரு பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடுவதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை ஒருவேளை பார்த்து விட்டால்‌ நான்‌ ஒரு மாதம்‌ பட்டினி கிடப்பேன்‌” என்று சொன்னவரும்‌, “பிறப்பில்‌ பார்ப்பனனும்‌ சூத்திரனும்‌ சமம்‌ என்று சொன்னால்‌ நான்‌ காங்கிர சிலேயே இருக்க மாட்டேன்‌” என்று சொல்லிக்‌ காங்கிரசை விட்டு வெளி யில்‌ போனவரும்‌, கல்பாத்தி ரோட்டில்‌ பார்ப்பனரல்லாதாரை நடக்க விடும்‌ படிக்கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்துப்‌ பேசியவருமான நமது எம்‌.கே. ஆச்சாரியார்‌ எந்த முகத்தைக்‌ கொண்டு பார்ப்பனரல்லாதார்‌ கூடி யுள்ள கூட்டங்களில்‌ பேசத்‌ துணிகிறார்‌ என்பதும்‌ எந்த முறையில்‌ பார்ப்‌ பனரைல்லாதார்‌ ஓட்டுக்களை தனக்குப்‌ போடும்படி கேட்கிறாரென்பதும்‌ நமக்கு விளங்கவில்லை. அதோடுகூட பார்ப்பனரல்லாதாரில்‌ பலர்‌ ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌ பின்‌ சென்று ஆச்சாரியாருக்கு ஓட்டுவாங்கிக்‌ கொடுக்க எப்படிச்‌ சம்மதிக்கிறார்கள்‌ என்பதும்‌ நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரல்‌ லாதார்‌. பார்த்த ஆகாரம்‌ சாப்பிடுவது மாத்திரம்‌ பெரிய தோஷமானால்‌ அவர்கள்‌ ஓட்டுக்களை வாங்கிப்‌ பதவி பெற்றுப்‌ பணம்‌ சம்பாதித்து வயிறு வளர்ப்பது மாத்திரம்‌ நமது பார்ப்பனர்களுக்கு மோக்ஷம்‌ போலும்‌. இம்மாதிரியான அக்கிரமங்களின்‌ பலனையும்‌ சூழ்ச்சிகளின்‌ பல னையும்‌ ஒரு மனிதன்‌ அனுபவிக்க முடியாமல்‌ செய்ய வேண்டுமென்று ஒருவன்‌ எண்ணுவானேயானால்‌ அது சூரியன்‌ உதிக்கக்‌ கூடாது என்று சொல்லுவது போல்தான்‌ முடியும்‌. ஆனாலும்‌ பொதுவாய்‌ பார்ப்பனரல்லா. தாருக்கும்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமூகத்திற்குப்‌ பாடுபடுவதாய்ச்‌ சொல்லும்‌ அன்பர்களுக்கும்‌ நாம்‌ ஒரு விண்ணப்பம்‌ செய்து கொள்ளுகிறோம்‌. அதா வது, எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ எவ்வளவு கோபமூட்டப்பட்டாலும்‌, கூட்டங்களில்‌ ஒருவரை ஒருவர்‌ திட்டுவதோ கலவரம்‌ செய்வதோ அடி தடி ஏற்படும்படிநடந்து கொள்வதோ பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே கஷ்டமும்‌ 97 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. அவமானமும்‌ கெட்ட பெயரைத்‌ தரத்தக்கது என்றே சொல்லுவோம்‌. முதலாவது, இம்மாதிரி செய்யும்‌ காரியமே மிகவும்‌ இழிவானது. அல்லாமலும்‌ “முள்ளு வாழையிலையின்‌ மேல்‌ பட்டாலும்‌ வாழையிலை முள்ளின்‌ மேல்‌ பட்டாலும்‌ இலைக்குத்தான்‌ கெடுதியே தவிர, முள்ளுக்கு ஒரு கெடுதியுமில்லை” என்று ஒரு பழமொழியுண்டு. அது போல்‌ பார்ப்பனக்‌ கட்சிக்காரர்‌ பார்ப்பனரல்லாத கட்சிக்காரரை அடித்தாலும்‌ திட்டினாலும்‌, பார்ப்‌ பனரல்லாதாருக்குத்தான்‌ கஷ்டமும்‌ அவமானமும்‌ ஏற்படுகிறது. எப்படியென்றால்‌ இரண்டு கட்சியிலும்‌ சண்டை பிடித்துக்கொள்ளும்‌ போதும்‌, அடிதடி செய்து கொள்ளும்‌ போதும்‌ பார்ப்பனரல்லாதார்களாகவே இருக்கிறார்கள்‌. உதாரணமாகப்‌ பார்ப்பனக்‌ கட்சிக்காரர்களின்‌ சார்பாய்‌ பார்ப்பனரல்லாதாரைத்‌ திட்டுவதற்கு நமது பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதா ராகப்‌ பார்த்தே ஏவி விடுகிறார்கள்‌. உதாரணமாக, இப்போது பார்ப்பனரல்லா தார்களைத்‌ திட்டுபவர்கள்‌ யாரென்று பார்த்தால்‌ ஸ்ரீமான்கள்‌ பாவலர்‌,மயிலை ஜயவேலர்‌, மயிலை ரெத்தினசபாபதி முதலியார்‌, குப்புசாமி முதலியார்‌, அண்ணாமலைப்‌ பிள்ளை, சுப்பிரமணிய நாயக்கர்‌, ஜனாப்கள்‌ ஷாபி மகமது, அப்துல்‌ ஹமீத்கான்‌ என்கிற கனவான்களாகவே இருக்கிறார்களேயொழிய வேறில்லை. இவர்கள்‌ பார்ப்பனரல்லாதாராயிருந்தும்‌ இவர்கள்‌ திட்டுவதும்‌ அடிப்பதும்‌ பார்ப்பனரல்லாதாரையேதான்‌. இதற்குத்‌ திருப்பி திட்டுவ தாயிருந்தாலும்‌, அடிப்பதாயிருந்தாலும்‌ இவர்களைத்தான்‌ திட்டவும்‌ அடிக்கவும்‌ நேருமேயல்லாமல்‌ பார்ப்பனர்கள்‌ சுலபத்தில்‌ சிக்கிக்‌ கொள்ள. மாட்டார்கள்‌. எப்படியாவது நமது கையைக்‌ கொண்டே நமது கண்ணைக்‌ குத்துவார்கள்‌.ஆதலால்‌ எந்த வகையிலும்‌ நமக்குத்தான்‌ கஷ்டம்‌. நியாய மும்‌ சத்தியமும்‌ நம்முடைய பங்கில்‌ இருப்பதனால்‌ நமக்குத்‌ திட்டும்‌ வேலையும்‌ அடிக்கும்‌ வேலையும்‌ கண்டிப்பாய்க்‌ கூடாதென்றே சொல்லு வோம்‌. தவிரவும்‌ நமது காரியங்கள்‌ ஒவ்வொன்றிலும்‌ பாமர பொது ஜனங்‌ களைக்‌ கொண்டே செய்ய வேண்டியதாகையால்‌ நாம்‌ பொது ஜனங்களின்‌ அன்பையும்‌ ஆதரவையும்‌ பெற வேண்டியது முக்கியமான காரியம்‌. அடிதடி சம்பவம்‌ யாரால்‌ ஏற்பட்டாலும்‌ நமக்குத்தான்‌ கெட்ட பெயரென்‌ பதையும்‌ நமக்குத்தான்‌ நஷ்டமென்பதையும்‌ வற்புறுத்திக்‌ கூறுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 01.08.1926. குடி அரசு - 1926 (2) 98 கோயில்‌ இந்து மதத்தினரெனக்‌ கூறப்படும்‌ மக்கள்‌ பல பிரிவும்‌ பல வகுப்பும்‌ பல குலமுமாக எண்ணுதற்கரிய சாதி சாதியென்று பிளவுண்டு ஓர்‌ வகுப்பின ௬டன்‌ மற்றோர்‌ வகுப்பினர்‌ சேராமலும்‌ ஓர்‌ குலத்தினரிடம்‌ மற்றோர்‌ குலத்‌ தினர்‌ உண்ணல்‌ - தின்னல்‌ கிடையாமலும்‌ இருந்து வருகின்றனர்‌. எவரிட்ட சாபமோ இன்னும்‌ இந்த இருபதாம்‌ நூற்றாண்டிலும்‌ ஒரே மதத்தினர்‌ என்று கூறிக்‌ கொண்டு இவ்வாறு பல பிரிவினராயிருந்து வருகின்றனர்‌. இத்தகைய பிரிவிற்‌ கெல்லாம்‌ மூலகாரணம்‌ “பனவராம்‌ பெரும்‌ படிறற்‌ உஞயற்றிய கள்ளமாயை”. அதாவது சூழ்ச்சியிலேயே ஊறிப்‌ பிறந்த வஞ்சகர்களான பார்ப்பனர்கள்‌ என்னும்‌ இரு பிறப்பாளர்கள்‌ ஏற்படுத்திய திருட்டு வித்தியாசத்‌ தத்துவமே யாகுமென்னும்‌ பெரியார்‌ வாக்கினின்று பார்ப்பனர்களே என்பதை அறிவாளர்‌ எவரும்‌ மறுக்க மாட்டார்கள்‌. தமிழ்நாட்டிலேயுள்ள கோயில்களெல்லாம்‌ பண்டைத்‌ தமிழ்‌ வேந்தர்‌. களால்‌ சமரசம்‌, ஒற்றுமை, நல்லொழுக்கம்‌, பக்தி முதலிய தூய எண்ணம்‌ துலங்க வேண்டுமெனக்‌ கருதியே கோயில்கள்‌ நிருமாணிக்கப்‌ பெற்றதாகும்‌. இதற்காக மானியங்களும்‌ அவைகளைக்‌ கட்டிய தமிழரசர்களால்‌ ஏராளமாக விடப்பட்டிருக்கின்றன. பஞ்ச தந்திரத்தில்‌ பெயர்‌ பெற்று விளங்கும்‌ பார்ப்ப னக்‌ கூட்டம்‌ தந்திரமாய்‌ தமிழரசர்களின்‌ தயவாலும்‌ பல தமிழர்களின்‌ மூட நம்பிக்கையினாலும்‌ சன்னஞ்‌ சன்னமாக கோயில்‌ அர்ச்சகர்களென்றும்‌ ஆலயங்களை சுத்தப்படுத்துவோர்‌ என்றும்‌ புகுந்து நாளடைவில்‌ கோயி லையே தங்கள்‌ வசப்படுத்திக்‌ கொண்டார்கள்‌. இப்பொழுது சைவ வைணவ கோயில்களிலெங்கும்‌ பார்ப்பன ஆதிக்‌ கமேமல்கிவிட்டது. நாட்டின்‌ நல்ல காலமாக, கோயில்‌ பொருளாதார விஷயத்‌ தில்‌ பார்ப்பன ஆதிக்கமில்லாதபடி- பார்ப்பனர்‌ இஷ்டம்‌ போல்‌ செலவு செய்து கணக்கெழுதுவதற்கு முடியாதபடி- இந்து மத பரிபாலனச்‌ சட்டம்‌ என ஒரு சட்டம்‌ வந்து அவர்களின்‌ அகங்காரத்தை ஒருவாறு ஒடுக்கிற்று. இவ்வாறு பார்ப்பனர்களின்‌ “கொள்ளை”த்‌ தொழிலுக்கு இந்துமத பரிபாலனச்‌ சட்டம்‌ ஓரிடராயிருப்பதன்‌ பொருட்டே பார்ப்பன ராஜ்யத்தை நிலை நாட்டு தற்கு முயன்று வரும்‌ சீனிவாசய்யங்கார்‌ கோஷ்டியினர்‌ அச்சட்டம்‌ கூடா தெனத்‌ தங்கள்‌ ஊத்தை வாய்‌ திறந்து உளறியும்‌ அதை அழிக்க வேண்டு மென்ற ஒரே பெருங்கருத்துடன்‌ சட்டசபைக்கு மெஜாரிட்டியாகச்‌ செல்ல முயன்றும்‌ வருகின்றனர்‌. 99 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சமத்துவம்‌ விரவ வேண்டுமெனக்‌ கட்டப்பட்ட ஆலயம்‌ உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு இப்பொழுது உதவி வருகிறது.சுவாமியிருக்கும்படியான கற்பக்‌ கிரகத்திற்குள்‌ ஒரு குறிப்பிட்ட வகுப்பார்‌ தான்‌ போகவேண்டுமென்‌ றும்‌ மற்ற வகுப்பார்‌ போகக்‌ கூடாதென்றும்‌ இன்னின்ன வகுப்பார்‌ கோயி லுக்குள்‌ அடியெடுத்து வைக்கவே கூடாதென்றும்‌ இதைமீறி ஆண்டவன்‌ பக்தியால்‌ கோயிலுக்குள்‌ பிரவேசித்துவிட்டால்‌ அதனால்‌ ஆலயத்தின்‌ தூய்மையே அழிந்து விட்டதென்றும்‌, அதனால்‌ ஏற்பட்ட “தீட்டைப்‌” போக்க. பார்ப்பனர்களே கும்பாபிஷேகம்‌ செய்ய வேண்டுமென்றும்‌ பார்ப்ப னர்கள்‌ பணித்து விட்டனர்‌. இதனைச்‌ சீர்திருத்தம்‌ செய்வதற்கு தமிழ்‌ நாட்டிலே ஓர்‌. பெரும்‌ எழுச்சி ஏற்படல்‌ வேண்டுமென்பது நமது முக்கியக்‌ கருத்துக்களிலொன்று. இந்துமத பரிபாலனச்‌ சட்டம்‌ சமூக சம்பந்தமாய்‌ ஆலயத்தில்‌ நடக்கும்‌ அக்கிரமங்களை ஒன்றும்‌ செய்வதற்கில்லை. தமிழர்‌ களே இதற்கெனத்‌ தனித்ததோர்‌ பெருங்கிளர்ச்சி செய்தல்‌ வேண்டும்‌. இப்‌ பொழுது நமது பார்ப்பனக்‌ கட்சியினர்‌ ஆலய விஷயத்தில்‌ அக்கறை காட்டு வதெல்லாம்‌ தங்களதும்‌ தங்கள்‌ வகுப்பினரதும்‌ வயிற்றுப்‌ பிழைப்பைக்‌ கருதியேயாகும்‌. எனவே கோயில்‌ விஷயமாய்க்‌ கிளர்ச்சிசெய்து பெருஞ்‌ சீர்திருத்தம்‌ செய்ய வேண்டிய பொறுப்பு தமிழர்களின்‌ கடனேயாகும்‌. பினாங்குவாசியான திரு.வை.க.சபாபதி முதலியார்‌ கோயிலைக்‌ காப்‌ பாற்றுங்களென்று “தமிழ்நாடு” வாயிலான்‌ தமிழர்களுக்கு ஓர்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌. அதில்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ கட்டிய கோயில்களில்‌ பார்ப்பனர்‌. செல்வாக்கு மிதமிஞ்சியிருத்தலை அழுத்தமாகக்‌ கண்டிக்கிறார்‌. கோயில்‌ களில்‌ பூசை செய்யும்‌ பார்ப்பன அர்ச்சகர்களிற்‌ பலர்‌ ஒழுக்கங்‌ குன்றி இழித கைமை உடையோராய்‌ இருக்கிறார்களென்பதை நன்கு எடுத்துக்‌ காட்டு கிறார்‌. இதற்குச்‌ சான்றாக, சத்தியமின்றித்‌ தனி ஞானந்‌ தானின்றி ஒத்தவிடயம்‌ விட்டு ஓரும்‌ உணர்‌ வின்றிப்‌ பத்தியு மின்றிப்‌ பரன்‌ உண்மை யின்றி ஊண்‌ பித்தேறும்‌ மூடர்‌ பிராமணர்தான்‌ அன்றே. என்ற திருமூலர்‌ வாக்கை தமிழர்கள்‌ கவனிக்குமாறு அவர்‌ எடுத்துக்‌ காட்டி இடித்துக்‌ கூறுவதோடு படிற்றொழுக்கம்‌ மல்கி அந்தணத்தன்மை அருகி, பஞ்சமா பாதகம்‌ நிரம்பியுள்ள ஒரு கூட்டத்தை பிறப்பளவில்‌ உயர்ந்தோரெனக்‌ கருதி கோயில்‌ பூசை செய்ய விடுவதை விலக்கிவிட்டு. ஒழுக்கத்தால்‌ வேதியராக உள்ள நல்லோர்கள்‌ எந்த சாதியில்‌ இருந்த போதிலும்‌ அவர்களை நமது கோயில்களில்‌ பூசை செய்யுமாறு வேண்டுவன செய்தல்‌ வேண்டுமெனப்‌ பொறித்துள்ளார்‌. 'லோகோபகாரி” பத்திரிகை இதைப்‌ பற்றி எழுதி விட்டு தன்னுடைய முடிவுரையாக “*நமது கோயில்கள்‌ குடி அரசு - 1926 (2) 100 இன்னும்‌ சீரழியாமலிருக்க வேண்டு மானால்‌ நமது சமயம்‌ சிறந்தோங்க வேண்டு மானால்‌, இந்தச்‌ சீர்திருத்தத்தை நம்மவர்கள்‌ இன்னும்‌ தாமதமின்றி உடனே செய்ய வேண்டும்‌” என்று எழுதியுள்ளது. இதனைத்‌ தமிழர்கள்‌ கவனிப்‌ பார்களாக. குடி அரசு - கட்டுரை - 01.08.1926 101 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. காங்கிரஸ்‌ கருப்பதை விட கறப்பகே Gioeo. ஏண்‌? இப்வபாமுதுன்ன காங்கிரஸ்‌ பார்ப்பண காங்கிறசே அக்கிராசனாதிபதி அவர்களே! கனவான்களே! நான்‌ எந்தக்‌ கட்சியின்‌ சார்பாகவும்‌ பேச வரவில்லை. தற்காலம்‌ இந்த தேர்தலில்‌ பெருத்த கலவரமாயிருந்து வருகையில்‌ ஓட்டர்களுடைய கடமை என்ன என்பதை எடுத்துக்‌ கூறவே நான்‌ வந்திருக்கிறேன்‌. அக்கிராசனாதிபதி அவர்கள்‌ என்னைப்‌ பற்றியும்‌ என்னுடைய வேலையைப்‌ பற்றியும்‌ கூறினார்‌. எத்தனையோ தேசபக்தர்கள்‌ நாட்டிற்காக தியாகம்‌ செய்த காலையில்‌ நான்‌ அவர்களுக்குத்‌ தொண்டு புரிந்து என்னால்‌ கூடிய அளவு ஊழியம்‌ செய்திருக்கிறேனே ஒழிய வேறில்லை. ஒத்துழையாமைக்‌ காங்கிரசில்‌ கலந்துள்ள நான்‌ இக்கூட்டத்தில்‌ பேசலாமாவென்ற சந்தேகம்‌ சிலருக்கிருக்‌ கலாம்‌. காங்கிரஸ்‌ எப்படியிருந்தது? இப்போது என்ன ஸ்திதிக்கு வந்தது? என்ற விஷயங்கள்‌ தெரிந்து விட்டால்‌ அந்தக்‌ கவலை உங்களுக்கு இருக்‌ காது. அந்த விஷயங்களை எடுத்துக்‌ கூறவே நான்‌ இங்கு வந்துள்ளேனே யொழிய, தனிப்பட்டவர்களைப்‌ பற்றியாவது கட்சியைப்‌ பற்றியாவது பேச நான்‌ வரவில்லை. நாம்‌ தனிப்பட்டவர்களைப்‌ பற்றி பேசினால்‌ கலகம்தான்‌. நடக்கும்‌. சென்ற வருடத்தில்‌ நான்‌ இங்கு வந்திருந்த போது திரு.வாசு நாயுடு டிவிஷனில்‌ பல பிரசங்கம்‌ செய்தி ருக்கின்றேன்‌. எலக்ஷன்‌ காலத்தில்‌ அங்கு கலகம்‌ நடந்ததும்‌ நாலைந்து வழக்குகள்‌ பிரசிடென்சி மாஜிஸ்ட்ரேட்‌ கோர்ட்‌ டில்‌ இருந்து ஒருவாறாக முடிவடைந்ததும்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌. அந்த சமயத்தில்‌ ஏதோ ஓட்டர்களை ஏமாற்றி ஓட்டுப்‌ பெற்று சென்றிருந்த போதி லும்‌ அதன்‌ பலன்‌ அடுத்தடுத்து வரும்‌ தேர்தல்களில்‌ தெரிந்து விடும்‌. இப்போது நடக்கிற தேர்தலில்‌ அனுஷ்டிக்கப்படுகின்ற காரியங்‌ களைப்‌ பார்க்கையில்‌ விரோதமும்‌ குரோதமுமே அதிகரித்து வருகிறதென்று ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருக்கின்றது. அவ்வாறு விரோத உணர்ச்சி ஏற்படா மல்‌ நாம்‌ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்‌. இப்போது பார்ப்பனர்‌ பார்ப்ப னரல்லாதார்‌ என்கிற கட்சியின்‌ பெயரை வைத்துக்கொண்டு தேர்தல்‌ சண்டை நடந்து வருகின்றது. நம்மில்‌ சிலரை ஒரு சாரார்‌ தூண்டி விட்டு தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறார்கள்‌. ஒரு சாராரின்‌ தூண்டுதலின்படி குடி அரசு - 1926 (2) 102 செய்யும்‌ பார்ப்பனரல்லாதாருக்குக்‌ கலியோ அல்லது வேறு வித உப சாரமோ கிடைக்கிறது. ஆகவே அவர்கள்‌ நம்மையே திட்டும்‌ படியாக ஏற்பட்டு விடுகிறது. எதிரிகள்‌ கலகப்‌ பிரசாரம்‌ செய்யும்படிசில ஆட்களை ஏவிவிட்டு கலகம்‌ செய்யும்படியும்‌ தூண்டி விடுகிறார்கள்‌. சென்ற வருஷத்தில்‌ கலகம்‌ நடந்ததன்‌ பயனாகப்‌ பிராதுகள்‌ கொடுக்கப்பட்டன. சிலர்‌ தண்டிக்கப்பட்டார்கள்‌. ஆனால்‌ அவர்களை அவ்வித காரியங்கள்‌. செய்யும்படி தூண்டி விட்டவர்கள்‌ யார்‌ என்று கண்டுபிடித்து அவர்களை அடக்க நாம்‌ முயற்சி செய்யவில்லை. சென்னை மாகாணம்‌ பூராவும்‌ கட்சி வித்தியாசத்தில்‌ மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறது. அது பார்ப்பனர்‌ பார்ப்பன ரல்லாதார்‌ என்கிற இரண்டையே பொறுத்திருக்கின்றது. பிராமணர்களு டைய ஆதிக்கத்தைப்‌ போக்க பல ஆயிரம்‌ இரண்டாயிரம்‌ வருடங்களுக்கு முன்னதாகவே பல மகான்கள்‌ பாடுபட்டிருக்கின்றனர்‌. கபிலர்‌, புத்தர்‌ முதலியவர்களெல்லாம்‌ பாடுபட்டனர்‌. புத்தரும்‌, சமணர்களும்‌ அதற்‌ காகவே பாடுபட்டார்கள்‌. இராமாயணம்‌, பாரதம்‌, அரிச்சந்திர புராணம்‌, இரண்ய புராணம்‌ முதலியவைகளெல்லாம்‌ பார்ப்பனர்‌ - பார்ப்பனரல்லாதார்‌. போராட்டத்தையே விளக்குகின்றன. ஆகவே சர்‌.தியாகராயரும்‌ டாக்டர்‌. நாயரும்‌ தோற்றுவித்த இந்த இயக்கமானது அநேக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்‌ நாட்டில்‌ இருக்கிற தென்பததை அனைவரும்‌ உணர்ந்து கொள்ளல்‌ வேண்டும்‌. காங்கிரஸ்‌ என்றால்‌ என்ன? நாம்‌ எவ்வளவு படித்தவர்களாக இருந்த போதிலும்‌ நமது திரு. தணிகாசலம்‌ செட்டியாரைப்‌ போன்ற திவான்‌ பகதூரும்‌, அதற்கு மேற்பட்ட பட்டதாரிகளாயிருந்தபோதிலும்‌ ஒரு பார்ப்பனர்‌ தர்ப்பப்‌ புல்லை எடுத்துக்‌ கொண்டு வருவாரேயாகில்‌ “சாமி”, “சாமி” என்று அவர்‌ காலில்‌ விழக்கூடிய வர்களாகவே இருக்கின்றோம்‌.நம்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி சுயராஜ்யத்தைப்‌ பெறுவதற்காக ஏற்பட்டதேயொழிய உத்தியோகத்துக்காக ஏற்பட்டதல்ல. நாம்‌ தேவடியாள்‌ மகன்‌, அடிமை, சண்டையில்‌ பிடிபட்டவன்‌ என்று பொருள்படக்‌ கூடிய “சூத்திரன்‌” என்ற பதத்தால்‌ அழைக்கப்படாமல்‌ இருப்பதற்கும்‌ நாம்‌ மனிதர்கள்‌ என்று காண்பிக்கவுமே இவ்வியக்கம்‌ தோன்றியிருக்கிறது. இப்‌ போது நம்‌ எதிரிகள்‌ காங்கிரசின்‌ பெயரால்‌ கூறுவதெல்லாம்‌ சுயநலத்தைக்‌ கருதியேதான்‌. மகாத்மா காந்தி அவர்கள்‌ ஒத்துழையாமை இயக்கத்தைத்‌ தோற்றுவித்தபோது நானும்‌ ஸ்ரீமான்கள்‌ கலியாணசுந்தர முதலியார்‌, டாக்டர்‌. வரதராஜுலு நாயுடு, எஸ்‌.இராமநாதன்‌, தண்டபாணி பிள்ளை முதலியவர்‌ களும்‌ அதில்‌ ஈடுபட்டோம்‌. நம்முடைய குறைகளை நிவர்த்தி செய்வதே அந்த இயக்கத்தின்‌ தத்துவமாக இருந்தது. கிராமங்களிலுள்ள ஏழை மக்கள்‌. ஒரு வேளை சாப்பாட்டுக்குக்‌ கூட வகையின்றி கஷ்டப்படுவதைக்‌ கண்ட மகாத்மா கைராட்டையில்‌ நூல்‌ நூற்க வேண்டுமென்று போதனை செய்தார்‌. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்ற தத்துவத்தில்‌ மனிதனுக்கு மனிதன்‌ 103 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. உயர்ந்தவன்‌ தாழ்ந்தவன்‌ என்ற வித்தியாசம்‌ அடிப்பட்டுப்‌ போகின்றது. நாங்கள்‌ இன்னும்‌ ஒத்துழையாமையிலேயே இருக்கின்றோம்‌. நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ ஒத்துழையாமை இயக்கம்‌ மனிதனுக்கு மனிதன்‌ சமத்துவத்‌ திற்காகப்‌ போராடுவதை உணர்ந்ததும்‌ அதை நிறுத்தப்‌ பாடுபட்டார்கள்‌. அதற்காக இங்கும்‌ அங்கும்‌ பல ஆட்களைப்‌ பிடித்து சூழ்ச்சியான வேலை கள்‌ செய்து மகாத்மாவை காங்கிரசிலிருந்து பிரிந்து போகும்படி செய்து விட்டனர்‌. காங்கிரசானது மனிதனுக்கு மனிதன்‌ சமம்‌ என்பதையும்‌ தீண்டாமை விலக்கையும்‌ கதர்‌ உற்பத்தி செய்வதையும்‌ முற்றும்‌ விட்டுவிட்டு, இப்போது சட்டசபைக்குச்‌ செல்ல ஆட்களை நிறுத்தி வேலை செய்கின்றது. யார்‌ யார்‌ பார்ப்பனரல்லாதார்களின்‌ நன்மைக்காகப்‌ பாடுபடுகின்றார்களோ அவர்களையெல்லாம்‌ கார்பொரேஷனை விட்டும்‌ சட்டசபையை விட்டும்‌ விரட்டியடித்து விட்டு அந்த ஸ்தானங்களில்‌ பார்ப்பனர்களை நுழைய வைக்கப்‌ பகீரதப்‌ பிரயத்தனம்‌ செய்கின்றனர்‌. அல்லாமலும்‌ காங்கிரஸ்காரர்‌. கார்ப்பொரேஷனுக்குச்‌ சென்றால்‌ வரி குறையுமென்றும்‌ சுயராஜ்யம்‌ வரு மென்று சொல்லுகிறார்கள்‌. யாருக்கு வரும்‌ என்று நினைக்கிறீர்கள்‌. பார்ப்‌ பனர்களுக்கே. பார்ப்பனரல்லாதார்களுக்கோ தீங்கே விளையும்‌. இப்போதைய காங்கிரஸ்‌ இறப்பதே மேல்‌ காங்கிரஸ்‌ முன்னிருந்த நிலைமையையும்‌ இப்போதுள்ள நிலைமை யையும்‌ நீங்கள்‌ அறிந்து கொள்ளவேண்டும்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டு 40 வருஷ மாகிறது. அதனால்‌ என்ன பலன்‌ கிடைத்தது? அது ஏற்படாததற்கு முன்பு என்ன பலன்‌ கிடைத்தது? காங்கிரஸ்‌ இருப்பதா மடிவதா? என்று இன்று துண்டுப்‌ பிரசுரம்‌ வழங்கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன்‌. என்னைக்‌ கேட்டால்‌ தற்போதுள்ள காங்கிரஸ்‌ மடிவதே நன்று என்று சொல்லுவேன்‌. இப்போ துள்ள காங்கிரசைக்‌ குழி தோண்டிப்‌ புதைக்க வேண்டும்‌. காங்கிரஸ்‌ ஏற்படாத தற்கு முன்பு பிராமணரல்லாதார்கள்‌ செல்வாக்கும்‌ யோக்கியதையும்‌ அடைந்‌ திருந்தார்கள்‌. அன்றியும்‌ சகல உத்தியோகங்களையும்‌ நம்மவர்களே வகித்து ஒற்றுமையாக நடத்தி வைத்திருக்கிறார்கள்‌. நீதி நிர்வாகங்கள்‌ ஒழுங்காக நடந்து வந்தன. முன்பு கேசவலு நாயுடு என்று ஒரு சிரஸ்தார்‌ இருந்தார்‌. கலெக்‌ டர்‌ கூப்பிட்டாலும்‌ கையில்‌ தடியும்‌ வாயில்‌ சுருட்டும்‌ பிடித்துக்கொண்டே போய்‌ என்னவென்று கேட்பார்‌. கலெக்டரும்‌ அவருக்கு மரியாதை கொடுத்து வந்திருக்கின்றார்‌. முனிசீப்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவரும்‌ அவ்வித உத்தியோகத்தைத்‌ திறமையாக நடத்தியிருக்கின்றார்‌.திருபெத்தண்ணா என்ற ஒரு தாசில்தார்‌ இருந்தார்‌. அவருக்கு இங்கிலீஷில்‌ கையெழுத்துப்‌ போடத்தான்‌ தெரியும்‌. ஆனால்‌, வேலையில்‌ திறமைசாலி. அவரை வேறு இடங்களுக்கு மாற்றினதற்காக பல தடவை இராஜினாமா கொடுத்தார்‌. அப்‌ போது உத்தியோகங்களுக்கு கெளரவமும்‌, யோக்கியதையும்‌, மரியாதையும்‌ ஏற்பட்டிருந்தது. காங்கிரசுக்குப்‌ பின்‌ தெருப்‌ பிச்சை எடுக்கிற வகுப்பினர்‌. களெல்லாம்‌ உத்தியோகங்களுக்கு வந்துவிட்டதால்‌ மரியாதையைக்‌ குடி அரசு - 1926 (2) 104 கெடுத்துவிட்டார்கள்‌. இவர்களை வேலையிலிருந்து விலக்கிவிட்டாலோ, அதிகாரிக்கு கும்பிடு போட்டோ அல்லது அந்த அதிகாரிக்கு வேண்டிய சகல செளகரியங்களையும்‌ செய்து கொடுத்தோ அந்த வேலையை சம்பாதித்துக்‌ கொள்ளுவார்கள்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டதன்‌ பயனாக பார்ப்பன ரல்லாதார்களுக்குப்‌ பெருத்த கஷ்டமும்‌, நீதி நிர்வாகங்களுக்கு அநீதியும்‌ ஏற்பட்டு விட்டதென்றே சொல்லுகின்றேன்‌. காங்கிரஸ்‌ போர்வையைப்‌ போர்த்திக்‌ கொண்டே நிர்வாக சபை அங்கத்தினர்‌ பதவி முதற்கொண்டு கீழ்த்தர உத்தியோகம்‌ வரையிலும்‌ பார்ப்பனர்களே புகுந்து விட்டார்கள்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டு முப்பது முப்பந்தைந்து வருடங்கள்‌ வரையிலும்‌ இவ்‌ விதமாகவே நடந்து வந்திருக்கின்றது. காங்கிரசின்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு ஒரு வகுப்பார்‌ எல்லா உத்தியோகங்களையும்‌ அனுபவித்து வருவ தைக்‌ கண்ட மகாத்மா காந்தி அவர்கள்‌ எல்லோரையும்‌ சமம்‌ செய்யும்‌ உத்தேசத்தோடு ஒத்துழையாமை ஆரம்பித்து, ஒருவரும்‌ அரசாங்க உத்தி யோகங்களுக்குப்‌ போகக்கூடாதென்று உபதேசம்‌ செய்தார்‌. அப்பொழுது இந்தப்‌ பார்ப்பனர்களெல்லாம்‌ ஏன்‌ அரசாங்க உத்தியோகங்களை விட்டு வெளியே வரவில்லை? இப்போது இந்த டிவிஷனுக்கு அபேட்சகராக நிற்கும்‌ திரு.பி.டி. குமாரசாமி செட்டியாருக்கு எதிராக ஒரு பிள்ளையை நிறுத்தி வைத்திருக்கும்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌, ஈ.வெ.இராம சாமி நாயக்கர்‌ ஜெயிலுக்குப்‌ போனார்‌: டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு ஜெயிலுக்குப்போனார்‌: என்‌.தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியோர்‌ ஜெயிலுக்குப்‌ போனார்கள்‌ ஆகவே சுயராஜ்யக்‌ கட்சி அபேட்சகருக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌ என்று கேட்‌ கின்றார்கள்‌. (நகைப்பு காங்கிரசின்‌ பெயரைக்‌ கேட்டு நீங்கள்‌ ஏமாந்து போகக்கூடாது. ஓட்டர்கள்‌ தங்களுக்குள்ள பகுத்தறிவைக்‌ கொண்டு சீர்‌ தூக்கிப்‌ பார்த்து எது நியாயமோ அதன்படி தங்கள்‌ வாக்குகளைக்‌ கொடுக்க. வேண்டும்‌. கார்ப்பொரேஷனில்‌ யார்‌ கவுன்சிலராகப்‌ போனாலும்‌ வரியைக்‌ குறைக்க முடியாது. நான்‌ முனிசிபல்‌ சேர்மெனாயிருந்து நிருவாகம்‌ உணர்ந்‌ தவனாகையால்‌ இவ்விதமாக உறுதியுடன்‌ கூறுகின்றேன்‌. வீட்டு வரியைக்‌ குறைத்தால்‌ முனிசிபல்‌ நிருவாகம்‌ சரியாக நடைபெறுவதற்காக வேறு விதமான வரிபோடத்தான்‌ வேண்டும்‌. முனிசிபாலிட்டி நடைபெறுவதற்கு இத்தனை லட்சம்‌ ரூபாய்‌ வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டது. முனிசிபா லிட்டியின்‌ நிருவாகம்‌ இன்னின்னவாறு நடைபெற வேண்டுமென்று சட்டங்களும்‌, விதிகளும்‌ தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எந்தக்‌ கட்சியைச்‌ சேர்ந்தவர்‌ தெரிந்தெடுக்கப்பட்டபோதிலும்‌ அங்கு சென்றதும்‌ முனிசிபல்‌ சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடப்பதாக வாக்குறுதி செய்ய வேண்டிய தாகயிருக்கிறது. வாக்குத்‌ தத்தம்‌ செய்து கொடுத்துவிட்டு ஒருவரும்‌ மீறி நடக்க முடியாது. மீறி நடப்பவர்கள்‌ அயோக்கியர்களேயாவார்கள்‌: பத்துப்‌ பதினைந்து வருடங்களாக சென்னைக்‌ குழாய்களில்‌ பூச்சியும்‌ புழுக்களும்‌ வந்து கொண்டிருக்கின்றன. அதை நிவர்த்தி செய்வதாக யிருந்தால்‌ 30 அல்லது 40 இலட்ச ரூபாய்‌ செல்லும்‌. அதற்கு உங்கள்‌ மீதுதான்‌ வரி போட 105 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. வேண்டி வரும்‌. ஆதலால்‌ இப்போது நீங்கள்‌ போன போதிலும்‌ சரி அல்லது ஒரு பூனைக்‌ குட்டியை கவுன்சிலராக அனுப்பியபோதிலும்‌ ஒரே வேலைதான்‌ செய்யமுடியும்‌. கையெழுத்துப்‌ போடுவதற்கு ஒரு இயந்திரம்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌ முனிசிபல்‌ நிருவாகம்‌ செவ்வனே நடைபெற்று விடும்‌. முனிசிபாலிட்டிக்கு தங்கள்‌ நலனைக்‌ கருதியே செல்லுகிறார்கள்‌ முனிசிபாலிட்டிக்குச்‌ செல்லுபவர்கள்‌ தங்களுடைய நன்மையைக்‌ கருதியே போகின்றார்கள்‌. முனிசிபாலிட்டியில்‌ பலவித உத்தியோகங்கள்‌. இருக்கின்றன. பார்ப்பனர்களை அங்கு போகும்படி விட்டுவிட்டால்‌ மேல்‌ உத்தியோகம்‌ முதற்கொண்டு பங்கா இழுக்கும்‌ வேலை வரையிலும்‌ பார்ப்‌ பனர்களையே போட்டு விடுவார்கள்‌. பார்ப்பனரல்லாதார்களை அனுப்பி னால்‌ உங்களுக்கு நன்மை உண்டு. பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளே போட்டி ஏற்படுமேயானால்‌ உங்கள்‌ வகுப்பின்‌ நன்மைக்காக யார்‌ பாடுபடுவார்‌. களென்று தெரிகின்றதோ அவர்களையே ஆதரிக்கவேண்டும்‌. காங்கிரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டியில்‌ வேலை கிடையாது காங்கிரஸ்காரர்கள்‌ சர்க்காரோடுதான்‌ முட்டுக்கட்டை போடுவதாகச்‌ சொன்னார்‌ கள்‌. அப்படியிருக்க இவர்கள்‌ முனிசிபாலிட்டியில்‌ எவ்விதமான முட்டுக்‌ கட்டையும்‌ போடமுடியாது. எல்லா விஷயங்களையும்‌ சரிவர நடத்துவதாக வாக்குறுதி செய்து பிறகே ஸ்தானம்‌ ஏற்றுக்‌ கொள்பவரால்‌ அதற்கு மீற முடியாது. அன்றியும்‌ முனிசிபாலிட்டிற்கு வருபவர்கள்‌ சுயராஜ்‌ யத்துக்காக எந்த மனுவும்‌ அரசாங்கத்தாருக்கு அங்கிருந்து போட முடியாது. சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மூன்றாவது வருடம்‌ நடைபெற்ற தேர்தலில்‌ பார்ப்பனர்களில்‌ 3 பேரையும்‌ சென்ற வருடம்‌ 5 பேரையும்‌ அபேட்சகராகப்‌ போட்டார்கள்‌. இந்த வருடத்தில்‌ 10 ஸ்தானத்துக்கும்‌ பார்ப்பனர்களைப்‌ போட்டுவிடலாமென்று கருதியிருந்தார்கள்‌. இப்போது அவர்களுடைய நிலைமை ஜனங்களுக்குத்‌ தெரிந்து விட்டது. ஓட்டர்களாகிய நீங்களும்‌ விழித்துக்‌ கொண்டீர்கள்‌. ஸ்ரீமான்‌ வி. சக்கரை செட்டியார்‌ சிறிது காலம்‌ அவர்‌. களுடன்‌ சேர்ந்து கொண்டிருந்தார்‌. அவரது உடம்பில்‌ பார்ப்பனரல்லாதார்‌. இரத்தம்‌ ஓடுகின்றபடியால்‌, ஒவ்வொரு சமயத்திலும்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌. நன்மைக்காகப்‌ போராடினார்‌. இதைக்‌ கண்ட பார்ப்பனர்‌ இவரைத்‌ தள்ளி விட்டு வேறு ஒருவரை கார்ப்பொரேஷன்‌ பிரசிடெண்டாக்கி விட்டார்கள்‌. திரு. புர்ரா முனிசிபல்‌ கவுன்சிலராக வருவதற்கு திரு.சக்கரை எவ்வளவோ பிரயாசைப்பட்டார்‌. இப்படியிருக்க ஒரு விஷயத்தில்‌ திரு.சக்கரை பேசிக்‌ கொண்டிருக்‌ கையில்‌ அவரை திரு.புர்ரா தன்னுடைய நண்பரல்லவென்று சொன்னார்‌. வெட்கம்‌! சுயராஜ்யக்‌ கட்சியார்‌ பார்ப்பனரல்லாதார்களுக்கு என்‌ குடி அரசு - 1926 (2) 106 னென்ன கெடுதல்‌ செய்ய வேண்டுமோ அவ்வளவும்‌ செய்திருக்கின்றனர்‌. திவான்‌ பஹதூர்‌ ஜேவெங்கட்ட நாராயணா கார்ப்பொரேஷன்‌ கமிஷனராக வந்தது முதல்‌ அவரை ஒழிக்க சுயராஜ்யக்‌ கட்சியார்‌ பாடுபடுவானேன்‌? அவரிடத்தில்‌ பூநூல்‌ இல்லை. இவர்‌ பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வேலை முதலியவை கொடுத்து ஆதரிக்கிறாராம்‌. அதற்காக அவரைத்‌ தள்ளிவிடப்‌ பாடுபடுகின்றார்கள்‌. நேற்று முன்‌ தினம்‌ நடைபெற்ற கூட்டத்‌ தில்‌ ஒரு விஷயம்‌ வாதிக்கப்பட்டது. ஒரு உத்தியோகஸ்தரை நாலைந்து வருடங்களுக்கு மேல்‌ ஒரு ஊரில்‌ வைக்கக்கூடாதென்று அடிக்கடி மாற்று வது அரசாங்கத்தின்‌ கொள்கையாக இருக்கிறது. அதுபோலவே சென்னைக்‌ கார்ப்பொரேஷன்‌ சுகாதார உத்தியோகஸ்தரை வேறு உத்தியோகத்துக்கு மாற்றிவிட்டார்கள்‌. அந்த உத்தியோகஸ்தரே 10 வருடம்‌ கார்ப்பொரேஷனில்‌ வேலை பார்த்திருக்கின்றார்‌. அப்படியிருக்க அந்த உத்தியோகஸ்தரே வேண்டுமென்று சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சொல்லுவதன்‌ காரணம்‌ யாதெனில்‌ அவர்‌ ஒரு பார்ப்பனராகயிருப்ப தேயாகும்‌. இதற்காக அவர்கள்‌ அரசாங்கத்‌ தாரை ஏன்‌ கண்டிக்க வேண்டும்‌? “ஜஸ்டிஸ்‌”, “திராவிடன்‌” ஆகிய இரு பத்திரிகைகளுக்கும்‌ இந்த வருடத்தில்‌ கார்ப்பொரேஷன்‌ விளம்பரங்கள்‌ கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக பல வருடமாக “இந்து”, 'சுதேசமித்திரன்‌” பத்திரிகைக ளுக்கே விளம்பரம்‌ கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. பார்ப்பனரல்லாதா ரால்‌ நடத்தப்படும்‌ பத்திரிகைகளுக்கு இந்த வருடம்‌ விளம்பரம்‌ கொடுப்‌ பதைக்‌ கண்டதும்‌ அப்பத்திரிகைகளுக்கு விளம்பரம்‌ கொடுப்பானேன்‌ என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்‌ . கார்ப்பொரேஷன்‌ விளம்பரம்‌ கொடுத்து ஆதரித்தால்‌ அப்பத்திரிகைகள்‌ அதிகமாக நாட்டிற்கு உழைக்க முற்பட்டுவிடுமென்றே அவர்கள்‌ விளம்பரம்‌ கொடுக்கக்‌ கூடாதென்கிறார்‌. கள்‌. முனிசிபாலிட்டிக்குக்‌ கட்டப்படும்‌ வரிகளில்‌ 100-க்கு 97 பாகம்‌ பார்ப்‌ பனரல்லாதார்களாகிய நீங்களே கொடுக்கின்றீர்கள்‌. ஆகவே பார்ப்பனரல்லா தார்களாலேயே அதன்‌ நிருவாகம்‌ நடைபெற வேண்டும்‌. இப்போது நடை பெறப்போகும்‌ முனிசிபல்‌ தேர்தலில்‌ காங்கிரஸ்‌ கட்சியார்‌ என்றாவது சுயராஜ்‌ யக்‌ கட்சியார்‌ என்றாவது அவர்கள்‌ சொல்லுவதைக்‌ கேட்டு ஏமாந்து போகக்‌ கூடாது. உண்மையாக உங்களுக்கு உழைப்பவர்களை ஆதரிக்க வேண்டும்‌. இன்னும்‌ இரண்டு மூன்று தடவை நான்‌ பேச எண்ணியிருக்கிறபடியால்‌ அவ்வப்போது மற்றும்‌ சில விஷயங்களை எடுத்துக்‌ கூறுவேன்‌. குறிப்பு: 29.07.1926 ஆம்‌ நாள்‌ சென்னை வண்ணாரப்பேட்டையில்‌ அகில. இந்திய பார்ப்பனரல்லாதார்‌ காங்கிரஸ்‌ சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்‌ சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 08.08.1926 107 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. செண்ணையில்‌ திரு.எஸ்‌.ஆர்‌. தாசும்‌ யார்ப்பணர்கனிண்‌ தந்திரமும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.ஆர்‌.தாஸ்‌ அவர்கள்‌ ஸ்ரீமான்‌ சி.ஆர்‌.தாஸ்‌ அவர்களின்‌ தாயாதி சகோதிரர்‌. வங்காளத்தில்‌ மாதம்‌ நாற்பதினாயிரம்‌ ஐம்பதினாயிரம்‌ சம்பாதித்துக்‌ கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர்‌. இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயிருப்பவர்‌. இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனரல்லாதார்களைப்‌ பற்றி நமது பார்ப்பனர்கள்‌. பத்திரிகைகளின்‌ மூலமாகவும்‌ கோள்‌ சொல்லுவதன்‌ மூலமாகவும்‌ ஏற்படுத்தி வைத்திருக்கும்‌ தப்பபிப்பிராயங்களை அறிந்த நமது பனகால்‌ அரசர்‌. டெல்லிக்குப்‌ போய்‌ அரசப்‌ பிரதிநிதியாரிடம்‌ நமது உண்மையான நிலையை எடுத்துச்‌ சொன்னதன்‌ பலனாய்‌ வைசிராய்‌ ஆச்சரியமடைந்து தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ உண்மை நிலை மையை நேரில்‌ அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில்‌ ஒரு பொறுப்‌ புள்ள அங்கத்தவரான ஸ்ரீமான்‌ எஸ்‌. ஆர்‌. தாஸ்‌ அவர்களை அனுப்பி யதாகத்‌ தெரிந்தோம்‌. ஸ்ரீமான்‌ எஸ்‌.ஆர்‌. தாஸ்‌ அவர்கள்‌ சென்னைக்கு வந்ததும்‌ சென்னை யிலுள்ள பார்ப்பனத்‌ தலைவர்கள்‌ ஒன்றுகூடி ஸ்ரீமான்‌ ரெங்காச்சாரியார்‌. பெயரால்‌ ஸ்ரீமான்கள்‌ திருப்பதி மகந்து, சர்‌. சதாசிவய்யர்‌, மகாகனம்‌ சீனி வாச சாஸ்திரி, ஜட்ஜுகள்‌ குமாரசாமி சாஸ்திரி, சீனிவாசய்யங்கார்‌, எ.ரெங்க சாமி ஐயங்கார்‌ , வி.ராம்தாஸ்‌, எ.வி. இராமலிங்கய்யர்‌, வி.டி. கிருஷ்ண மாச்சாரி, சர்‌.சி.பி.இராமசாமி ஐயர்‌, அட்வகேட்‌ ஜெனரல்‌ வெங்கட்டராம சாஸ்திரியார்‌, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்‌, எஸ்‌.வரதாச்சாரி, கே.பாஷ்யம்‌ ஐயங்கார்‌, ஜி.எ. நடேசன்‌ ஐயர்‌ முதலிய பல பார்ப்பனர்கள்‌ பெரிய விருந்து நடத்தி தாஸ்‌ அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்‌. இவ்விருந்தின்‌ செலவின்‌ பெரும்பாகம்‌. திருப்பதி மகந்துவினுடையதென்று சொல்லப்படுகிறது. இந்த விருந்துக்கு தன்னை சன்னியாசி என்று சொல்லிக்கொள்ளும்‌ திருப்பதி மகந்தும்‌, காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சியைச்‌ சேர்ந்தவர்களும்‌ அரசாங்க சம்பந்தமான நபர்களுக்கு நடக்கும்‌ விருந்து முதலியவைகளை பகிஷ்‌ காரம்‌ செய்து முட்டுக்கட்டை போடுகிறவர்களும்‌, ஒத்துழையா நாற்றம்‌ தங்கள்‌ மீது வீசப்‌ படுகிறதாகக்‌ கூறிக்‌ கொள்ளுகிறவர்களுமான ஸ்ரீமான்‌ ௭. ரெங்கசாமி ஐயங்கார்‌, வி.ராம்தாஸ்‌, கே. பாஷ்யம்‌ ஐயங்கார்‌ முதலிய பார்ப்பனர்களும்‌ வந்திருந்ததிலிருந்தும்‌, அவ்விருந்தில்‌ வாலிபப்‌ பெண்கள்‌ மூலமாக சங்கீதம்‌ குடி அரசு - 1926 (2) 108 நடத்தி ஸ்ரீமான்‌ எஸ்‌.ஆர்‌. தாசை ரம்மிக்கச்‌ செய்ததிலிருந்தும்‌ இவ்விருந்தின்‌ சூழ்ச்சியும்‌ தந்திரமும்‌ விருந்து நடத்தியவர்களின்‌ கருத்தும்‌ நாம்‌ சொல்லாமலே விளங்கும்‌. ஸ்ரீமான்‌ எஸ்‌. ஆர்‌. தாஸ்‌ விருந்துக்கு திருப்பதி மகந்தைத்‌ தருவிக்க வேண்டிய காரணம்‌ என்ன? பெண்களை அழைத்து சங்கீதம்‌ நடத்த வேண்டிய அவசியமென்ன? திருவாடுதுறை மடத்திலிருந்து வந்ததாகச்‌ சில விஷயங்களை ஸ்ரீமான்‌ எஸ்‌.ஆர்‌. தாசுக்கு அறிவிக்க வேண்டிய காரணம்‌ என்ன? சர்க்காரை பகிஷ்கரிக்கும்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ அங்கு வர வேண்‌: டிய வேலை என்ன? ஸ்ரீமான்‌ சாமி வெங்கடாஜலம்‌ செட்டியார்‌ கவர்னருக்குக்‌ கொடுத்த ஒரு விருந்தின்‌ போதே அது சுயராஜ்யக்‌ கட்சியாருடைய விருந்தல்ல, தனிப்பட்ட நபர்‌ செய்த விருந்துமல்ல என்று சொல்லித்‌ தப்பித்துக்கொண்டநமது சுயராஜ்யக்‌ ககஷிப்‌ பார்ப்பனர்கள்‌ ஸ்ரீமான்‌ ரெங்காச்‌ சாரியார்‌ என்கிற ஒரு தனிப்பட்ட நபர்‌ நிர்வாக சபை மெம்பர்‌ என்கிற சர்க்கார்‌. பிரதிநிதி உத்தியோகஸ்தருக்கு, அவர்‌ சர்க்கார்‌ வேலை சம்பந்தமாய்‌ வந்திருக்கும்‌ சமயத்தில்‌ கொடுக்கப்படும்‌ விருந்திற்கு இவர்கள்‌ எப்படிப்‌ போகக்கூடும்‌? இவற்றையெல்லாம்‌ யோசித்துப்‌ பார்த்‌ தால்‌ நமது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய்‌ இந்திய அரசாங்கத்தில்‌ நமது பார்ப்பனர்கள்‌ இதுவரை சொல்லி வந்திருக்கும்‌ கோள்களையும்‌ செய்து வந்திருக்கும்‌ சூழ்ச்சிகளையும்‌ கெடுதிகளையும்‌ உண்மை என்று உறுதிப்படுத்துகிறது. குடி அரசு - கட்டுரை - 08.08.1926 109 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கோயமுத்தூர்‌ வில்லா போர்டு தேர்தல்‌ இம்மாதம்‌ 4-ம்‌ தேதி கோயமுத்தூரில்‌ நடந்த ஜில்லா போர்டு தலைவர்‌. தேர்தலில்‌ ஸ்ரீமான்‌ சி.எஸ்‌. இரத்தினசபாபதி முதலியார்‌ அவர்களும்‌ ஸ்ரீமான்‌ வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ அவர்களின்‌ இளைய சகோதிரரான ஸ்ரீமான்‌ பழனிச்சாமிக்‌ கவுண்டர்‌ அவர்களும்‌ அபே க்ஷகர்களாக நின்றதில்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ மூன்றில்‌ இரண்டு பங்குக்கு மேற்பட்ட அங்கத்தினர்‌ ஓட்டுகளால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டார்‌ என்பதைக்‌ கேட்க வாசகர்கள்‌ மிகுதியும்‌ ந்தோஷமடைவார்களென்றே எண்ணுகிறோம்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ கோயமுத்தூரில்‌ பல தலைமுறையாய்‌ இருந்துவரும்‌ கெளரவமும்‌ பிரபலமுமுள்ள குடும்பத்தைச்‌ சேர்ந்தவர்‌. பத்து லட்சம்‌ இருபது லட்சம்‌ முதல்‌ வைத்து நடத்தும்‌ பல கூட்டுறவு பாங்கிகளுக்கு பிரசிடெண்டாகவும்‌ டைரக்டராகவும்‌ இருந்து வருபவர்‌. ஏறக்குறைய கோய முத்தூர்‌ ஜில்லாவிலேயே 24-வயதிற்கு மேற்பட்டு 36-வயதிற்கு உட்பட்டி. ருக்கிற ஒவ்வொரு வாலிபருக்கும்‌ ஆப்த நண்பனாகவும்‌ உற்ற மந்திரியாக வும்‌ இருந்து வருபவர்‌. அவர்‌ பெரிதும்‌ குடியானவர்களிடத்திலும்‌ ஏழை மக்களி டத்திலும்‌ அன்பு கொண்டவர்‌. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கிற வித்தி யாசமே கொஞ்சமும்‌ அற்றவர்‌. ஏறக்குறைய பத்துப்‌ பதினைந்து வருஷ காலமாகவே கோயமுத்தூர்‌ முனிசிபல்‌ கவுன்சிலராகவும்‌ ஐந்தாறு வருஷ காலமாய்‌ முனிசிபல்‌ சேர்மெனாகவும்‌ தென்னிந்திய ரெயில்வே போர்டு அட்வைசரிக்‌ கமிட்டியிலும்‌, தமிழ்‌ சர்வகலாசாலைக்‌ கமிட்டியிலும்‌ அங்கத்தி னராகவும்‌ இருந்து வருகிறார்‌. அதோடு கூட 4,5 வருஷ காலம்‌ கோயமுத்தூர்‌ தாலூக்கா போர்டு பிரசிடெண்டாகவும்‌ இருந்து வந்ததோடு சென்ற மூன்று வருஷ காலம்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டுக்குப்‌ பிரசிடெண்டாகவும்‌ இருந்து வந்திருக்கிறார்‌. இவ்வளவு செல்வாக்கும்‌ பெருமையும்‌ அந்தஸ்தும்‌ உடையவர்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டுக்கு மறுபடியும்‌ பிரசிடெண்டாய்த்‌ தேர்ந்தெடுக்‌. கப்பட்டிருப்பதில்‌ அதிக ஆச்சரியப்படத்தக்க விஷயம்‌ ஒன்றுமில்லையா னாலும்‌, போட்டியன்னியிலேயே தேர்ந்தெடுக்கப்படாமல்‌ போனது கோய முத்தூர்‌ ஜில்லா போர்டு ஓட்டர்கள்‌ தங்களுடைய புத்திசாலித்தனத்தைக்‌ காட்டிக்கொள்ள வாய்த்த ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார்களென்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. குடி அரசு - 1926 (2) 110 மகாத்மா காந்தியை காங்கிரஸ்‌ பிரசிடெண்டாகத்‌ தேர்ந்தெடுத்த காலத்‌ திலும்‌ அபிப்பிராய பேதமும்‌ எதிர்‌ ஓட்டுக்களும்‌ சிலது இருந்ததென்றால்‌, நமது முதலியார்‌ தேர்தலில்‌ எதிர்‌ ஓட்டு இருப்பது அதிசியமல்லவென்றே சொல்லுவோம்‌ . ஆனால்‌ தேர்தல்‌ காலத்தில்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ விஷயத்‌ தில்‌ கோயமுத்தூர்‌ ஜில்லாவிலுள்ள பெரிய ஜமீன்தாரர்களும்‌, மிராஸ்தாரர்‌ களும்‌, மற்றும்‌ பெரிய பாங்கர்களும்‌, பெரிய இயந்திரசாலைக்காரர்களும்‌, வியாபாரிகளும்‌, பொது ஜன சேவையிலீடுபட்டவர்களும்‌ முதலியாருக்காக எடுத்துக்‌ கொண்ட ஊக்கமும்‌ உணர்ச்சியும்‌ அளவிடத்‌ தகுந்ததல்ல.மற்றும்‌ சகல வகுப்பார்களிடமும்‌ நமது முதலியாருக்கு செல்வாக்கிருக்கிறது என்பதற்கு உதாரணமாக தேர்தல்‌ காலங்களிலும்‌ மற்ற சமயங்களிலும்‌ நடந்த வைபவங்‌ களையும்‌ பிரயத்தனங்களையும்‌ பார்த்தால்‌ நன்றாய்‌ விளங்கும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்களாகிய ஸ்ரீமான்கள்‌ எம்‌. சம்பந்த முதலியார்‌, வெரிவாட செட்டியார்‌ வகையறாக்களும்‌, காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சியாரான அதன்‌ காரியதரிசி ஸ்ரீமான்‌ ஆர்‌.கே.ஷண்முகஞ்‌ செட்டியார்‌ வகையறாக்‌ களும்‌, வர்ணாசிரம பார்ப்பனரான ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்‌ கார்‌ முதலியவர்களும்‌, ஒத்துழையாதாரைச்‌ சேர்ந்த ஸ்ரீமான்‌ டி.எஸ்‌.பாண்டே முதலியவர்களும்‌, கொங்கு வேளாள சமூகத்தில்‌ முக்கியஸ்தர்களான கொங்குவேளாள சங்கக்‌ காரியதரிசி பொள்ளாச்சி ஸ்ரீமான்‌ இரத்தின சபாபதிக்‌ கவுண்டரவர்களும்‌, வடகரை வேளாள சமூகத்தில்‌ முக்கியஸ்தரான கோவை தாலூக்காபோர்டு பிரசிடெண்டு ஸ்ரீமான்‌ ராஜாக்‌ கவுண்டர்‌ என்கிற நஞ்சப்பக்‌ கவுண்டரவர்களும்‌, வேட்டுவக்‌ கவுண்டர்‌ சமூகத்தில்‌ பிரதானஸ்‌ தரான அப்பிச்சிமார்‌ மடாதிபதி ஸ்ரீமான்‌ ஆண்டமுத்துக்‌ கவுண்டரவர்களும்‌, ஜமீன்தாரர்களில்‌ முக்கியஸ்‌ தரான ஊத்துக்குளி ஜமீன்தாரும்‌, பொள்ளாச்சி தாலூக்காபோர்டு பிரசிடெண்டுமான ஸ்ரீமான்‌ துரைராஜா அவர்களும்‌, பட்டக்காரர்களில்‌ முக்கியமானவர்களுள்‌ ஒருவரான சங்கரண்டாம்பாளை யம்‌ பட்டக்காரர்‌ ஸ்ரீ வேணுடையாக்‌ கவுண்டரவர்களும்‌, நாயுடு சமூகத்‌ தலைவர்களான ரெங்க விலாஸ்மில்‌ ஏஜண்டு ஸ்ரீமான்‌ பி.எஸ்‌. குருசாமி நாயுடுகார்‌, பல்லடம்‌ தாஜூக்காபோர்டு பிரசிடெண்டு ஸ்ரீலட்சுமி நாராயண சாமி நாயுடுகார்‌ முதலியவர்களும்‌ பஞ்சமர்‌ என்று சொல்லப்படும்‌ வகுப்புத்‌ தலைவரான ஸ்ரீமான்‌ முனியா மேஸ்திரி முதலியவர்களும்‌, ஒக்கிலியக்‌ கவுண்டர்‌ சமூகத்தாரில்‌ பிரதானப்பட்டவர்களான ஸ்ரீமான்கள்‌ பட்டக்கார வீரப்பக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌, புளியம்பட்டி கிஞ்சப்பக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ முதலியவர்களும்‌, நாட்டுக்‌ கோட்டை நகரத்தார்களில்‌ சிறந்தவரான காளீஸ்வரர்‌ மில்‌ ஸ்ரீமான்‌ சாத்தப்ப செட்டியார்‌ அவர்களும்‌, மகமதிய சமூகத்தின்‌ சிரேஷ்டர்களான ஈரோடு ஜனாப்‌ கா. அ.ஷேக்தாவூத்‌ சாயபு பகதூர்‌, உடுமலைப்பேட்டை ஜனாப்‌ காஜா முகய்யதீன்‌ சாயபு பகதூர்‌ முதலியவர்‌ களும்‌ இன்னமும்‌ இந்த ஜில்லாவில்‌ பெரிய வியாபாரிகளான ஸ்ரீமான்கள்‌ வி.எஸ்‌. செங்கோட்டய்ய முதலியார்‌, மு.ச. முத்துக்கருப்பஞ்‌ செட்டியார்‌ போன்றவர்களும்‌, சன்னியாசிகளில்‌ ஸ்ரீலஸ்ரீ கைவல்லிய m பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சுவாமியார்‌ போன்றவர்களும்‌ ஸ்ரீமான்‌ முதலியாரவர்களைத்‌ தேர்தலுக்கு நிற்கும்படி வற்புறுத்தியும்‌ அவருக்காக ஊக்கத்துடன்‌ பிரயத்தன மெடுத்துக்‌ கொண்டுமிருக்கிறார்கள்‌ என்றால்‌ மற்றபடி முதலியாரின்‌ குணாதிசயங்‌ களைப்‌ பற்றியும்‌ அவரது செல்வாக்கைப்‌ பற்றியும்‌ யாரும்‌ தெரிந்து கொள்ள வேண்டிய திருக்காதென்றே எண்ணுகிறோம்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களை இந்த ஜில்லாவின்‌ சார்பாய்‌ சட்டசபை அங்கத்தினராக்க வேண்டுமென்கிற எண்ணங்கொண்டே இவ்வளவு பெரிய மனிதர்களும்‌ இந்த ஜில்லா போர்டு தலைவர்‌ ஸ்தானத்‌ திற்கு ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ அவ்வளவு லட்சியமில்லாதிருந்துங்கூட ஒரே மூர்ச்சாய்‌ இவரை பிரசிடெண்டாக ஆக்கியிருக்கிறார்கள்‌. இது போலவே சட்டசபைத்‌ தேர்தல்‌ விஷயத்திலேயும்‌ மேற்சொன்ன கனவான்‌ களெல்லோரும்‌ முதலியாருக்காக வேண்டிய வேலை செய்வதாக வாக்குறுதி கொடுத்திருப்பதோடு இதுமுதலே முயற்சி செய்து கொண்டு வருவதாகவும்‌ தெரிய வருகிறது. ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ சட்டசபை மெம்பர்‌ பதவியை அடை வதிலோ அதன்‌ மூலமாய்‌ தன்னால்‌ செய்யக்கூடுமென்று நினைக்கிற விஷயங்களைப்‌ பொது ஜனங்களுக்குச்‌ செய்வதிலேயோ நமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. ஆனால்‌ இப்போது தேச முன்னேற்றத்திற்கு அவசியமான தும்‌ மகாத்மாவின்‌ உபதேசமானதுமான தீண்டாமை விலக்கு, கதர்‌ என்கிற இவ்விரண்டு விஷயத்திற்கனுகூலமாக தமது பெருமையையும்‌, செல்வாக்கையும்‌, பதவிகளையும்‌ கொஞ்சம்‌ உபயோகப்படுத்துவார்களே யானாலும்‌ அதைத்‌ தான்‌ நாம்‌ உண்மையான பொதுநல சேவை, தேச கைங்‌ கரியம்‌ என்று சொல்வோம்‌. தீண்டாமை விலக்கு விஷயத்தில்‌ நமது முதலி யார்‌ சுமார்‌ 20 வருஷத்திற்கு முன்பாகயிருந்தே அனுகூலமாயிருக்கிறார்‌. என்பதும்‌ அவருக்கு அவ்வித வித்தியாசமில்லை என்பதும்‌ நமக்குத்‌ தெரிந்த விஷயமே. ஆனால்‌ கதர்‌ விஷயத்தில்‌ கதரின்‌ தத்துவங்களை உணர்ந்திருந்தும்‌ வீட்டில்‌ கதர்‌ வஸ்திரங்களை உபயோகப்படுத்திக்‌ கொண்டு வந்தும்‌ வெளியில்‌ கதர்‌ அணிவதற்கு வெட்கப்படுகிறாரா? அல்லது பயப்படுகிறாரா? என்பது நமக்குப்‌ புலனாகவில்லை. இதுவரையில்‌ எப்படியிருந்து வந்த போதிலும்‌ இனிமேலாவது கதரைத்‌ தவிர வேறு வஸ்திரங்கள்‌ உடுப்பதில்லை என்றும்‌ தன்னுடைய செல்வாக்குகளை கதருக்கு உபயோகப்படுத்துவதில்‌ எவ்வித ஆட்சேபனையுமில்லை என்றும்‌ உறுதி சொல்வாரேயானால்‌ சட்ட சபைப்‌ பதவியை அடைவதற்கு இப்‌ பொழுது நிற்கும்‌ நான்கு ஐந்து அபேட்சகர்களில்‌ நமது முதலியார்‌. முதன்மையானவர்‌ என்று சொல்லக்கூட நாம்‌ முன்‌ வருவோம்‌. அதில்லாத வரையில்‌ மற்றவர்களைப்போல்‌ இவரும்‌ ஒருவர்‌ என்றுதான்சொல்லுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 08.08.1926. குடி அரசு - 1926 (2) 112. யார்ப்பணர்‌ கூழ்ச்சிக்குத்‌ கோல்விகன்‌ சென்னையிலும்‌ மற்றும்‌ பல வெளியிடங்களிலும்‌ சுயராஜ்யக்‌ கட்சி காங்கிரஸ்‌ என்கிற தேசீய வார்த்தைகளின்‌ பெயரால்‌ நமது பார்ப்பனர்கள்‌ செய்து வந்த சூழ்ச்சிகளுக்கு இவ்வாரத்தில்‌ பெருந்‌ தோல்வி யென்றே சொல்ல வேண்டும்‌. சென்னையில்‌ சென்ற 4-ம்‌ தேதி நடந்த தேர்தல்களின்‌ முடிவானது நமது பார்ப்பனர்களுக்கு முற்றும்‌ விரோதமாகவே போனதோடு, அங்குள்ள பாமர ஜனங்கள்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியை அறிந்து கொண்‌: டோம்‌, அறிந்து கொண்டோம்‌ என்று ஆரவாரம்‌ செய்து விட்டார்கள்‌. சென்னைத்‌ தேர்தல்களில்‌ முக்கியமாய்‌ டாக்டர்‌ நடேச முதலியாரை ஒழிக்க வேண்டுமென்பதுதான்‌ நமது பார்ப்பனர்களுக்குப்‌ பெரிய ஆத்திரமாயி ருந்தது. அதற்காக வேண்டி ஸ்ரீமான்‌ ஓ. கந்தசாமி செட்டியார்‌ அவர்களைப்‌ பிடித்து, அவருடைய ராவ்பகதூர்‌ பட்டத்தையும்‌ விடச்‌ செய்து, டாக்டர்‌ நடேச முதலியாருக்கு விரோதமாய்‌ நிறுத்தி, எவ்வளவோ பொய்ப்‌ பிரசாரங்‌ களையும்‌ இழிவுப்‌ பிரசாரங்களையும்‌ செய்து, ஆயிரக்கணக்கான ரூபாய்கள்‌ செலவு செய்யத்‌ துணிந்தும்‌ கடைசியாய்‌ ஓட்டர்களை ஏமாற்ற முடியாமல்‌ போய்விட்டது. இதுபோலவே ஸ்ரீமான்‌ குமாரசாமி செட்டியார்‌ அவர்களையும்‌ தோற்கடிக்க வேண்டுமென்கிற எண்ணங்‌ கொண்டு அங்கும்‌ ஸ்ரீமான்‌ இராமலிங்கம்‌ பிள்ளை என்கிற ஒருவரை நிறுத்தி எவ்வளவோ சூழ்ச்சிப்‌ பிரசாரங்களெல்லாம்‌ நடத்தியும்‌ பயன்படாமல்‌ அளவுக்கு மிஞ்சிய தோல்வி ஏற்பட்டிருக்கிறது. டாக்டர்‌ நடேச முதலியார்‌, குமாரசாமி செட்டியார்‌ ஆகிய இரு தலை வர்களையும்‌ தோற்கடித்து விட்டால்‌ பார்ப்பனரல்லாதாரையே ஒழித்து விட்டதாகுமென நினைத்துக்கொண்டு செய்த பகீரத பிரயத்தினத்தின்‌ பலன்‌, நமது பார்ப்பனர்களை மறுபடியும்‌ இவ்விதக்‌ கெட்ட எண்ணத்தில்‌ தலையிடுவதற்கே கருதுவதற்கில்லாமல்‌ செய்து விட்டதென்றே சொல்ல லாம்‌. பார்ப்பனரல்லாத கட்சியின்‌ பெயரால்‌ நின்ற ஸ்ரீமான்‌ குமாரசாமி செட்டியாருக்கு 614 ஓட்டுகளும்‌ பார்ப்பனக்கட்சியான சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாய்‌ நின்ற ஸ்ரீ இராமலிங்கம்‌ பிள்ளை அவர்களுக்கு 47 ஓட்டு களுந்தான்‌ கிடைத்திருக்கிறது. டாக்டர்‌ நடேச முதலியார்‌ அவர்களுக்கு 454 ஓட்டுகளும்‌ ராவ்‌ பஹதூர்‌ பட்டத்தை விட்ட ஸ்ரீ கந்தசாமி செட்டியாருக்கு 194 116 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஓட்டுகளுமே கிடைத்திருக்கிறது. சென்ற வருஷங்களில்‌ பார்ப்பனரல்லாதார்‌. கட்சிக்குப்‌ பார்ப்பனர்களால்‌ சென்னைத்‌ தேர்தல்களில்‌ பெரும்‌ தோல்வி ஏற்பட்டிருந்தாலும்‌, பார்ப்பனக்‌ கூலிகளால்‌ வசைமொழி களும்‌, அடிதடிகளும்‌, கல்லடிகளும்‌, காலித்தனங்களும்‌ நடந்திருந்தாலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ போதுமான பிரசாரம்‌ செய்யாததாலும்‌, பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சிகளைத்‌ தைரியமாய்‌ எடுத்துச்‌ சொல்லாததாலும்‌ பாமர ஜனங்கள்‌ ஏமாந்து போக நேரிட்டதென்பதை நாம்‌ ஒப்புக்கொண்டு தான்‌ ஆக வேண்டும்‌. இது போலவே வெளியிலும்‌ அனேக இடங்களில்‌ பார்ப்பன ரல்லாதாருக்குப்‌ பூரண வெற்றி கிடைத்துக்‌ கொண்டு வருவதுடன்‌ பார்ப்பனக்‌ கட்சிக்கு சாவு குறியும்‌ காணப்பட்டு வருகிறது. பார்ப்பனர்‌ கட்சிக்கு எங்கு வெற்றி ஏற்பட்ட போதிலும்‌ அவைக ளெல்லாம்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியை பார்ப்பனரல்லாதார்‌ தைரியமாய்‌ எடுத்துச்‌ சொல்லப்‌ பின்‌ வாங்கி நின்ற காரணங்களினாலும்‌ பார்ப்பனர்‌. களைப்போல்‌ பார்ப்பனரல்லாதார்‌ அனைவரும்‌ ஒன்று கூடி ஒற்றுமையாய்‌ வேலை செய்ய முன்‌ வராததாலுமேயல்லாமல்‌ வேறல்ல. அல்லாமலும்‌ பார்ப்பனர்களுக்குப்‌ பிரசாரம்‌ செய்வதற்கு மகந்துகளும்‌ மடாதிபதிகளும்‌ தாராளமாய்ப்‌ பணம்‌ கொடுப்பதாலும்‌, கூலிக்கு உழைப்பதற்குப்‌ பார்ப்பன ரல்லாத வயிற்றுச்‌ சோத்து பிரசாரகர்கள்‌ எளிதில்‌ கிடைப்பதனாலும்‌ பார்ப்‌ பனர்‌ சூழ்ச்சி செல்வாக்குப்‌ பெற இடமேற்பட்டுவிடுகிறது. அதை எதிர்த்து நிற்க வேண்டுமானால்‌ பார்ப்பனரல்லாதாரிலேயும்‌ பார்ப்பனரல்லாதார்களும்‌ பிரசாரத்திற்குப்‌ பணமும்‌ உண்மையான பிரசாரர்களும்‌ ஏற்பாடு செய்து தானாக வேண்டும்‌. இவ்வொரு வருஷத்தில்‌ பார்ப்பனரல்லாதார்‌ கொஞ்சமாவது துணிந்து பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியை வெளியிட்டதன்‌ பலனாலும்‌ ஸ்ரீமான்கள்‌ ஆரியா, தண்டபாணி பிள்ளை, சக்கரை செட்டியார்‌, வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார்‌ போன்றவர்களுக்கு பார்ப்பனர்களின்‌ சாவகா சத்தை விட்டும்‌ காங்கிரசின்‌ ஊழல்களை அறிந்து அவற்றின்‌ நிர்வாகங்களி லிருந்து விலகவும்‌ தைரியம்‌ ஏற்பட்டதன்‌ பலனாகவே பார்ப்பன சூழ்ச்சி தோல்வி அடைய செளகரியமேற்பட்டது. சென்னையிலாகட்டும்‌ மற்றும்‌ வெளியிடங்களிலாகட்டும்‌, சட்டசபை முதலிய ஸ்தாபனங்களுக்கு அபேட்‌ சகர்களாகக்‌ கூட நிறுத்துவதற்கு ஆளில்லாமல்‌ பார்ப்பனர்கள்‌ திண்டாடவும்‌ இவர்களை நம்பி ஏமாந்து இவர்கள்‌ சார்பாய்‌ அபேட்சகர்களாய்‌ நின்ற இரண்டொருவர்களும்‌ இப்பொழுது ஒவ்வொருவராய்‌ விலகிக்கொண்டு போவதையும்‌ பார்த்தால்‌ இந்த பிரசாரங்கள்‌ சென்ற வருஷத்திலேயே தொடங்கியும்‌ இப்பொழுது விலகிய கனவான்களுக்கு சென்ற வருஷத்தி லேயே விலகும்படியான தைரியம்‌ இருந்தும்‌ இருக்கு மானால்‌ இதுவரையில்‌ பார்ப்பனர்‌ சூழ்ச்சியும்‌ அதன்‌ பலனாய்‌ ஏற்பட்ட காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சிகளும்‌ மாண்டு ஒழிந்து போயிருக்கு மென்பதுடன்‌ மகாத்மாவின்‌ குடி அரசு - 1926 (2) 114. ஒத்துழையாமைக்‌ காங்கிரஸ்‌ மறுபடியும்‌ தொடங்கப்பட்டி ருக்குமென்றே சொல்லலாம்‌. மகாத்மாவின்‌ காங்கிரஸ்‌ தொலைவதற்கு அப்‌ பார்ப்பனர்களே. முக்கிய காரணஸ்தர்களென்று சொல்ல வேண்டுமானாலும்‌ கூட, அக்‌ காரணங்களுக்கு மேற்சொன்ன பார்ப்பனரல்லாத தலைவர்களும்‌ இதுவரை உதவியாயிருந்து வந்ததும்‌ ஒரு காரணமென்பதையே நாம்‌ வருத்தத்துடன்‌ சொல்ல வேண்டியிருக்கிறது. இனியும்‌ பார்ப்பன சூழ்ச்சியோ சுயராஜ்யக்‌ கட்சியோ பார்ப்பன காங்கிரசோ ஒரு கடுகளவு நமது நாட்டில்‌ ஒரு க்ஷணம்‌ இருப்பதாக வைத்துக்‌ கொண்டாலும்‌ அது நமது பார்ப்பனரல்லாதாரின்‌ சுயநலமும்‌ சமூகத்‌ துரோகமும்‌ வயிற்றுப்‌ பிழைப்பு தேசபக்தியுமே காரண: மேயல்லாமல்‌ வேறல்ல வென்பதை உறுதியாய்ச்‌ சொல்லுவோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 08.08.1926. ns பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கேவஸ்தாண மசோதா யார்ப்பணரிண்‌ கூழ்ச்சி, “மித்திரணிண்‌ அகம்பாவம்‌ சென்ற புதன்‌ வியாழக்‌ கிழமைகளில்‌ தேவஸ்தான மசோதாவைப்‌ பற்றி பார்ப்பன மித்திரனாய “சுதேசமித்திரன்‌” பத்திரிகையில்‌ “அக்கிரமத்‌ திற்கும்‌ அளவில்லையா?” என்கிற தலைப்பின்‌ கீழ்‌ சில விஷமத்தனமான வார்த்தைகளை எழுதியிருக்கிறது. அது எதைப்பற்றி என்றால்‌ வரப்போகிற சென்னை சட்டசபைக்‌ கூட்டத்தில்‌ தேவஸ்தான சட்டத்தில்‌ உள்ள சில சட்ட சம்பந்தமான சிறு தவறுதல்களைத்‌ திருத்துவதற்காக ஒரு மசோதா சர்க்காரால்‌ கொண்டு வரப்படப்‌ போகிறது. ஏனெனில்‌ அச்‌ சிறு சட்ட சம்பந்தமான தவறு தல்களை ஆதாரமாக வைத்தே தேவஸ்தான மசோதாவை அடியோடு ஒழிப்பதாகச்‌ சொல்லி நமது பார்ப்பனர்கள்‌ மகந்துகளையும்‌, மடாதிபதி களையும்‌ ஏமாற்றி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பொருளைக்‌ கவர்ந்து வியவகாரங்களை உண்டாக்கி நியாயஸ்தலங்களில்‌ தற்காலத்‌ தடை உத்திரவும்‌ பெற்று இன்னும்‌ பல மடாதிபதிகளை ஏமாற்றிப்‌ பொருள்‌ பறிக்கப்‌ பிரயத்தனப்பட்டு வருகிறார்கள்‌. இப்பொழுது சர்க்காரால்‌ கொண்டு வரப்படப்‌ போகும்‌ மசோதா நிறைவேறிவிடுமானால்‌ இம்மாதிரி நமது பார்ப்பனர்கள்‌ மடாதிபதிகளையும்‌ மகந்துகளையும்‌ ஏமாற்றிப்‌ பொருள்‌ பறிக்கவும்‌ தற்காலத்‌ தடை உத்திரவுகள்‌ பெற்று தர்ம சொத்துக்களைக்‌ கொள்ளையடிக்கவும்‌ முடியாமல்‌ போய்‌ விடுமாகையால்‌ இது பற்றியே “சுதேசமித்திரன்‌” இம்‌ மசோதாவைப்‌ பற்றி அதிகப்‌ பிரசங்கித்தனமாகவும்‌ “அக்கிரமத்திற்கும்‌ அளவில்லையா” என்று தலையங்கமிட்டு என்னென்‌ னமோ பிதற்றுகிறான்‌. 1. “1923-ம்‌ வருஷத்தில்‌ இம்‌ மசோதா சட்டசபை அங்கத்தினர்களில்‌ ஹிந்துக்கள்‌ பலரால்‌ எதிர்க்கப்பட்டும்‌ ஹிந்துக்களல்லாதாரின்‌ உதவியைக்‌ கொண்டு நிறைவேற்றப்பட்டது”” என்று எழுதுகிறான்‌. இம்மசோதா சட்ட சபையில்‌ நிறைவேறும்போது எதிர்த்த ஹிந்துக்களைவிட எதிர்க்காத ஹிந்துக்களே அதிகமாயிருந்து நிறைவேற்றி யிருக்கிறார்கள்‌. “மித்திரன்‌” அகராதியில்‌ ஹிந்துக்களென்று சொன்னால்‌ பார்ப்பனர்களும்‌ பார்ப்பனர்‌ கள்‌: தாளத்திற்கு ஆடும்‌ பார்ப்பனரல்லாதாரையும்தான்‌ குறிக்கும்‌ போலிருக்‌ கிறது. பார்ப்பனர்களுடைய அயோக்கியத்தனத்தை யாராவது வெளியி லெடுத்துச்‌ சொன்னாலாவது அவர்களுக்கு விரோதமாய்‌ யாராவது நடந்து கொண்டாலாவது அவர்கள்‌ இந்துக்கள்‌ அல்லபோலும்‌.” குடி அரசு - 1926 (2) 116 2. அல்லாமலும்‌ “ஆதி மசோதா கோர்ட்டில்‌ வியவகாரத்திலிருக்‌ கும்போது புது மசோதா வெளியிட அவசியமில்லை” என சுதேச மித்திரன்‌” கூறுகின்றான்‌. மசோதாவில்‌ சட்டசம்பந்தமான சில குற்றமிருந்ததன்‌ பல னாய்‌ கோர்ட்டில்‌ மசசோதாவைத்‌ தள்ளி வைக்க வியவகாரம்‌ தொடுத்திருந்‌ ததாக வைத்துக்கொண்டாலும்‌ இந்த சமயத்தில்‌ மசோதாவின்‌ குற்றத்தை நீக்குவதில்‌ “மித்திரனுக்கு” நஷ்ட மென்ன? மசோதாவின்‌ குற்றம்‌ நீங்கி கோர்ட்டிலுள்ள வழக்குகள்‌ மேல்‌ நடவடிக்கைகள்‌ நடத்த வேண்டிய அவசியமில்லாமல்‌ நின்று விட்டுப்போக வேண்டிய அவசியம்‌ ஏற்படுமே யானால்‌ தங்கள்‌ ஜாதியாருக்கு பீஸாப்பிடாமல்‌ போய்விடுமே என்கிற பேராசைக்‌ கெட்ட எண்ணமும்‌ வரப்போகும்‌ தேர்தல்களில்‌ பிரசாரம்‌ செய்வதற்காக மடாதிபதிகளிடம்‌ தேவஸ்தான மசோதாவை ஒழிக்க சட்ட சபைக்கு ஆட்களை சேர்க்கிறோம்‌, ஆட்களை சேர்க்கிறோம்‌ என்று ஏமாற்றிப்‌ பொருள்‌ பறிக்க முடியாமல்‌ போய்விடுமே என்கிற சின்னப்‌ புத்திதானா அல்லவா? 3. தவிறவும்‌ “பொது ஜன அபிப்பிராயம்‌ தெளிவாக வெளிப்படப்‌ போகும்‌ சமயமான சட்டசபைத்‌ தேர்தலுக்கு முன்‌ இம்‌ மசோதாவை சட்ட மாக்க முயலுவதால்‌ பொதுஜன அபிப்பிராயத்தை மந்திரிகள்‌ லட்சியம்‌ செய்யவில்லை” என்றும்‌“இந்த மந்திரிகளை ஒழித்தால்தான்‌ ஜனங்களு டைய அபிப்பிராயத்திற்கு மதிப்பு ஏற்படும்‌” என்றும்‌ கூறுகிறான்‌. இது மகா அக்கிரமமான வாசகமென்றே நாம்‌ சொல்லுவோம்‌. இப்பொழுது சட்டசபை யிலுள்ள கனவான்களின்‌ அபிப்பிராயம்‌ பொதுஜன அபிப்பிராயம்‌ அல்லவென்று “மித்திரன்‌” எப்படிச்‌ சொல்லக்‌ கூடும்‌? பொதுஜனங்க சென்றால்‌ யார்‌? “மித்திரனு”டைய இவ்வார்த்தையானது பொது ஜனங்க ளையே அவமானப்‌ படுத்தத்தக்கதாயிருக்கிறது. பார்ப்பனர்‌ தவிர பார்ப்‌ பன்‌. பெரும்பான்மையாயிருக்கிற சபைகள்‌ தவிர மற்ற சபை பொதுஜன சபை அல்லவென்றும்‌ பொதுஜன அபிப்பிராயமல்ல என்றும்‌ “மித்திரன்‌” கருதுவானேயானால்‌ இப்பார்ப்பனர்களும்‌ “மித்திரனும்‌” பொது ஜனங்கள்‌ அல்லவென்று நாம்‌ நிரூபித்தாலொழிய நமது நாடு முன்னுக்கு வரா தென்று தான்‌ நாம்‌ சொல்லுவோம்‌. இப்‌ பார்ப்பனர்கள்‌ தாங்கள்‌ எந்த முறையில்‌ சட்டசபையில்‌ போயிருந்து கொண்டு பொது ஜனப்பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளுகிறார்களோ, அதே முறையில்‌ சட்டசபைக்குச்‌ சென்ற பார்ப்பனரல்லாதாரும்‌ தாங்களும்‌ பொது ஜனங்களின்‌ பிரதிநிதி என்று சொல்லிக்‌ கொள்வதற்கு உரிமை பெற்றவர்கள்‌ என்ற அறிவு “மித்திரனுக்கு” ஏன்‌ இல்லாமல்‌ போய்‌ விட்டது? இம்மாதிரி ஒரு சமூகத்தையும்‌ சமூகப்‌ பிரதிநிதிகளையும்‌ கேவல மாகவும்‌ அவமானமாகவும்‌ மனம்‌ புண்படும்படி யாகவும்‌ எழுதக்‌ கூடிய ஆணவத்தை என்றைக்கு நாம்‌ அழிக்கிறோமோ அன்றுதான்‌ நாட்டிற்கே க்ஷமமுண்டாகும்‌. அதில்லாமல்‌ இவைகளை இப்படியே அதிகப்பிரசிங்கித்‌ தனமாக நடக்கவிட்டுக்‌ கொண்டிருக்கும்‌ வரையில்‌, கோயில்‌ சொத்தைத்‌ தின்னுகிறவர்களும்‌, மகந்து மடாதிபதி 117 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 களுக்கும்‌ தாசி வேசிகளுக்கும்‌ இடையில்‌ தூது நடக்கிறவர்களும்‌, வழக்கு கள்‌ பெயரால்‌ தர்மச்‌ சொத்தை கொள்ளையடிக்கிறவர்களும்‌, பாமர ஜனங்‌ களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறவர்களும்‌ தேசத்திற்கோ மதத்திற்கோ கொஞ்சமும்‌ பொறுப்பற்ற சுயநலப்‌ பிணங்களுந்தான்‌ நமது நாட்டுப்‌ பொது ஜனங்களாகக்‌ கருதப்படு வார்களென்றே நாம்‌ பயப்படுகிறோம்‌. அடுத்தாப்போல்‌ சட்டசபையில்‌ தேவஸ்தான மசோதா வரும்‌ போது சட்டசபையை விட்டு வெளியில்‌ வந்துவிட்டோமென்று சொன்ன பார்ப்பன சுயராஜ்யக்‌ கட்சி “வீரர்கள்‌” மீண்டும்‌ சட்டசபைக்கு வருவார்களா வரமாட்‌ டார்களா என்பதும்‌ தேவஸ்தான மசோதா விஷயம்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு சம்பந்தப்பட்டதா தனித்தனி நபர்‌ சம்பந்தப்பட்டதா என்பதும்‌, தனித்தனி நபர்‌: சம்பந்தப்பட்டதானால்‌ கட்சித்‌ தலைவரின்‌ உத்திரவில்லாமலே சட்ட சபைக்குப்‌ போகலாமா என்பதும்‌ அறிய வெகுஜனங்கள்‌ இச்சமயம்‌ ஆவலாக எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 08.08.1926 குடி அரசு - 1926 (2) 118. பம்பாயில்‌ பார்ப்பணர்‌ கா௱௫மை “மூர்க்கனும்‌ முதலையும்‌ கொண்டது விடா” என்பது ஓர்‌ பழமொழி. அத்தகைத்தே நமது பார்ப்பனர்களின்‌ தன்மையாகும்‌. பல நூறு ஆயிர ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள்‌ தங்களின்‌ வயிற்றுப்‌ பிழைப்பைக்‌ கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்‌ கொண்டு அட்டை போல்‌ உறிஞ்சி வந்தனர்‌ - வருகின்றனர்‌. எத்தகைய கேவலத்‌ தொழிலையும்‌ செய்யப்‌ பின்‌ வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக்‌ கூட்டம்‌ இந்துக்களின்‌, அதாவது பார்ப்பனல்லாதாரின்‌ மதகுருவென்றும்‌ சுபா சுப காரியங்களை: நடத்தி வைக்கும்‌ புரோகிதர்களென்றும்‌ மக்களை ஏமாற்றி ஆதிக்கள்‌ செலுத்தி வந்தனர்‌ - வருகின்றனர்‌. இவர்களின்‌ பஞ்சதந்திரக்‌ கொடுந்தன்மை களை பார்ப்பனரல்லாதார்‌ அறியவே சுபா சுப காரியங்களில்‌ இவர்களை விலக்க வேண்டுமென்ற பரபரப்பும்‌ துடிதுடிப்பும்‌ அதிவேகமாக நாடெங்கும்‌ பரவி வருகிறது. சென்னை மாகாணத்திலே பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌ தோன்றிய சின்னாளுள்‌ இந்து சமூகத்தாருள்‌ எவ்வளவோ பல சமூக சீர்திருத்தங்களும்‌ மாறுதல்களும்‌ நடந்து வருகின்றன. அவற்றுள்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌ சுபா சுப காரியங்களுக்கு பார்ப்பனர்களைப்‌ புரோகிதர்களாகத்‌ தருவிக்காது தங்கள்‌ சமூகப்‌ பெரியோர்களைக்‌ கொண்டே நடத்திவர முற்பட்டு விட்டமை ஒன்றாகும்‌. சென்னை மாகாணத்தில்‌ இந்துக்கள்‌ ஒவ்வொரு கிரிகைகளுக்கும்‌ பார்ப்பனர்களை வைத்தே அதை நடத்த வேண்டுமென்ற விதி சட்டமூல மாகக்‌ கிடையாது. அவரவர்கள்‌ விருப்பப்படி யாரை வேண்டுமானாலும்‌ வைத்துக்‌ கொண்டு நடத்திக்‌ கொள்ளலாமென்று இருப்பதால்‌ மேற்கூறிய காரியங்கள்‌ எளிதிலே நடாத்தற்கு இலகுவாகிறது. ஆனால்‌ பம்பாய்‌ மாகாணத்திலோ அப்படியில்லை. பம்பாய்‌ பார்ப்பனரல்லாதார்‌ தங்கள்‌ சுபா சுப காரியங்களுக்குப்‌ பார்ப்பனப்‌ புரோகிதர்களை அழைத்தாலும்‌ அழைக்‌ கா விட்டாலும்‌ அவர்களுக்கு தட்சணை என்னும்‌ கட்டாயப்‌ பிச்சை கொடுத்தே தீர வேண்டுமென்று சட்ட வாயிலாக ஏற்பட்டிருக்கிறது. சென்னையிலே தோன்றிய பார்ப்பனரல்லாதாரியக்கம்‌ இந்தியாவெங்கும்‌. பரவி வருகின்றமை யான்‌ ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார்‌ தங்கள்‌ தங்கள்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்ற முனைந்து வருகின்றனர்‌. பம்பாய்‌ மாகாணத்திலே உள்ள அத்த கைய கொடிய சட்டத்தை அறவே ஒழிப்பான்‌ 119 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வேண்டி சின்னாட்களுக்கு முன்‌ கூடிய பம்பாய்‌ சட்டசபைக்‌ கூட்டத்தில்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ தலைவர்களும்‌ ஒருவரான திரு. எஸ்‌. கே.போலே என்பார்‌ ஓர்‌ திருத்த மசோதா கொண்டு வந்தார்‌. ஒவ்வொரு மனிதரும்‌ தத்தம்‌ மனச்சாக்ஷிப்‌ படியும்‌ விருப்பப்படியும்‌ மத அனுஷ்டானங்களை நடத்த உரிமையிருக்க வேண்டு மென்பதே இம்மசோதாவின்‌ முக்கியக்‌ கருத்து. திரு.எஸ்‌.கே. போலே அவர்களின்‌ திருத்த மசோதாவை எதிர்ப்பதற்‌ கென்றே சுயராஜ்யக்‌ கட்சி சட்டசபை அங்கத்தினர்கள்‌ அக்கூட்டத்திற்கு வந்திருந்ததாக “சுதேசமித்திரன்‌” நிருபர்‌ எழுதியிருக்கிறார்‌. சுயராஜ்யக்‌ கட்சியினரென்பது யார்‌? என்றும்‌, அவர்கள்‌ நாட்டிற்கு எத்தகைய ராஜ்யம்‌. வேண்டுமென்கிறார்கள்‌? என்பதும்‌ இவற்றினின்று நன்கு அறிந்து கொள்ளலாம்‌.அதாவது சுயராஜ்யக்‌ கட்சியார்‌ பார்ப்பனக்‌ கட்சியேயென்பதும்‌. அக்கட்சியார்‌ கோருவது பார்ப்பன ராஜ்யமே என்பதும்‌ இவற்றினின்று தெள்ளிதிற்‌ புலனாகும்‌ என்பதே. திரு. போலே அவர்களின்‌ திருத்தமசோதா சுயராஜ்யக்‌ கட்சியினரால்‌ மிகுந்த பலத்தோடு தாக்கப்பட்டதாகத்‌ தெரிகி றோம்‌. அக்கட்சியார்‌ புரோகிதர்கள்‌ சார்பாய்‌ வாதாடும்‌ போழ்து அத்திருத்த மசோதா போல்ஷ்விக்‌ கொள்கை உடையதாயிருக்கிறதென்றும்‌ பிராமண துவேஷத்தை வளர்க்கக்கூடியதென்றும்‌ கூறி அம்மசோதாவைத்‌ தனிக்‌ கமிட்டிக்கு அனுப்புமாறும்‌ வாதம்‌ நிகழ்த்துவதானால்‌ அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்குமாறும்‌ பல திருத்தங்களும்‌ மாற்றங்களும்‌ கொண்டு வரப்பட்டன. எவ்வளவோ சூழ்ச்சி செய்தும்‌ சுயராஜ்யக்‌ கட்சி யினரின்‌ திருத்தத்தின்மேல்‌ வந்த திருத்தங்கள்‌ முற்றும்‌ தோற்கடிக்கப்‌ பட்டன. இவ்வாறு புரோகிதர்‌ கட்சி வீழ்ச்சி பெறுவதைக்‌ கண்டடாக்டர்‌ பரஞ்‌ சப்பே அவ்விரு கட்சிக்கும்‌ ஒரு ராஜி செய்ய முயன்றார்‌. இவரது ராஜியின்‌ தோரணையைக்‌ கவனித்தால்‌ பூனைகள்‌ திருடிக்கொண்டு வந்த அப்பத்தைப்‌ பங்கிடப்‌ புகுந்த குரங்கின்‌ கதையாகவே யிருக்கிறது. ஏனென்றால்‌ சாதி அபிமானம்‌ சந்நியாசிக்கும்‌ போகாது என்பது போல்‌ டாக்டர்‌ பரஞ்சப்பே பார்ப்பனரானதால்‌ அவர்‌ தம்‌ இனத்தவராய பார்ப்பனப்‌ புரோகிதர்களின்‌ சார்பிலேயே பஞ்சாயம்‌ செய்தார்‌. அதாவது பரம்பரையாக இருந்துவந்த பாத்தியதையை இழக்க நேரும்‌ புரோகிதர்களுக்கு ஒருவகை நஷ்டஈடு கொடுத்துவிடுமாறும்‌ சிவிலியன்கள்‌ சீர்திருத்தம்‌ வழங்கப்பட்டவுடன்‌, வீதாச்சாரப்‌ பென்ஷன்‌ பரிகாரம்‌ முதலியவற்றிற்காகப்‌ பிரமாதக்‌ கிளர்ச்சி செய்ததை கவர்ன்மெண்டின்‌ ஞாபகத்துக்குக்‌ கொண்டு வருவதாகவும்‌ அதே. போல்‌ ஆயிரக்கணக்கான வருஷங்கள்‌ அனுபவித்து வந்த பாத்தியதை களைப்‌ புரோகிதர்கள்‌ இழப்பதற்குப்‌ பரிகாரமளிக்க வேண்டாமா என்றும்‌. பேசியிருக்கிறார்‌. மற்றொருவர்‌ புரோகிதரைக்‌ கூப்பிட விரும்பாதவர்கள்‌. அனைவரும்‌ அதற்குப்‌ பதிலாக தடவை ஒன்றுக்கு ரூபாய்‌ ஒன்று வீதம்‌ கொடுக்க வேண்டுமென்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. கல்வி மந்திரி கனம்‌ யாதவ்‌ டாக்டர்‌ பரஞ்சப்பே அவர்கள்‌ பேசியதை எதிர்த்து “மசோதாவின்‌ உத்தேசம்‌. குடி அரசு - 1926 (2) 120 கிராம ஜனங்களுக்குப்‌ பூரா விடுதலையளிப்பதாகையால்‌ நஷ்டயீடு அளிப்பது அந்தத்‌ தீய முறையை இன்னும்‌ நீடிக்கச்‌ செய்வதாகும்‌” என்று அழுத்தமாகப்‌ பேசியிருக்கிறார்‌. பார்ப்பனரல்லாதாரிடம்‌ புரோகிதர்கள்‌ நஷ்டஈடு கேட்டதற்கு எத்த கைய உரிமை உண்டு என நமக்கு விளங்கவில்லை. இவர்கள்‌ பார்ப்பனரல்‌ லாதாரின்‌ பின்‌ வழித்தோன்றிய சந்ததியாரா? பார்ப்பனரல்லாதாரின்‌ வாழ்வை அழியாது நிலை நிறுத்திய வீரர்களா? எனக்‌ கடாவுகின்றோம்‌. பார்ப்பனர்‌. களின்‌ எதிர்ப்பைத்‌ தாக்கிய திரு. சூர்வே, “பார்ப்பனப்‌ புரோகிதர்கள்‌ ஜனங்‌ களுடைய விருப்பப்படி சடங்குகளை நடத்தி வைக்காததால்தான்‌ மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது'” என்று கூறியதிலிருந்து அப்‌ புரோகிதர்களே கிரிகைகளை நடத்தி வைக்கவும்‌ அவற்றிற்கு கெளரவப்‌ பிச்சை பெறவும்‌ எவ்வாறு உரிமை உடையார்‌ என்பதை வாசகர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌. முதற்கண்‌ மேற்கண்ட கிரிகைகள்‌ எதற்காக என்ன பலனைக்‌ கருதி, பார்ப்பனர்களைக்‌ கொண்டும்‌ அக்காரியங்கள்‌ நடத்தி வைக்க வேண்டு மென்பது நமக்குத்‌ தெரியவில்லை.வயிற்றுப்‌ பிழைப்பிற்காக ஒரு கூட்டத்தார்‌. செய்த அக்கிரமத்திற்குப்‌ பார்ப்பனரல்லாத சமூகம்‌ நஷ்டயீடு கொடுக்க வேண்டுமாம்‌. இவ்வரசாங்கம்‌ பார்ப்பனர்களுடையதாயிருக்குமே யாகில்‌ புரோகிதர்களை விலக்கும்‌ பார்ப்பனரல்லாதாரை ஸார்‌ சக்கிரவர்த்தி யின்‌ தலையை வாங்கியதைப்‌ போன்றே அப்பார்ப்பனரல்லாதாரின்‌ தலையை வாங்கும்படி தீர்மானம்‌ செய்வார்களென்பதில்‌ சந்தேகமில்லை. ஜனங்களுடைய விருப்பப்படியும்‌ கிரிகை செய்வதில்லை. இதற்குப்‌ புரோகிதர்களை வேண்டாமென்று நிறுத்தினாலும்‌ அதற்குத்‌ தண்டவரி கொடுக்க வேண்டுமென்றால்‌ இந்த அக்கிரமத்திற்கு எங்கு போய்‌ முறையிடு வது? இவற்றினின்று சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனக்‌ கட்சி என்பதையும்‌ அக்கட்சி பாடுபடுவதனைத்தும்‌ பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே என்பதையும்‌ நமது வாசகர்கள்‌ உணர்ந்து கொள்வார்களென்று நம்புகிறோம்‌. பார்ப்பனரல்லாதார்‌ பார்ப்பனர்களை நம்பியிருந்த காலத்தில்‌ பார்ப்‌ பனர்கள்‌ பம்பாய்‌ அரசாங்கத்தில்‌ புகுந்து தங்கள்‌ ஆதிக்கத்தை நிலைநாட்டி புரோகிதர்களை அழைத்தாலும்‌ அழைக்காவிட்டாலும்‌ அவர்களுக்குப்‌ பணம்‌ கொடுக்க வேண்டுமென்ற இவ்வித சட்டத்தை ஏற்படுத்திக்‌ கொண்டார்கள்‌. இப்பொழுது பார்ப்பனரல்லாதார்‌ விழித்துக்‌ கொண்டு தங்கள்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்கொள்ள முன்‌ வந்தது போற்றத்தக்கதாகும்‌. இவர்களது முயற்சி வெற்றி பெறுமென்று திரு.போலேயின்‌ மசோதாவின்‌ பேரில்‌ நடைபெறும்‌ விவாதத்திலிருந்து அறிகிறோம்‌. அவர்களது முயற்சியை நாம்‌ போற்றுகிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 08.08.1926. 121 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 பண்முத மானவியாவின்‌ புது தைரியம்‌ இப்போது சட்டத்தை மீறுவது தேசத்தைக்‌ கருதியா? வகுப்பைக்‌ கருதியா? ஒத்துழையாமையின்போது சர்க்காரால்‌ போடப்பட்ட எத்துணையோ இலட்சக்கணக்கான அநாகரீகமானதும்‌ அறியாயமானதுமான உத்திரவு களை இந்திய மக்களில்‌ பதினாயிரக்கணக்கான பேர்‌ மீறி ஜெயிலுக்குப்‌ போய்க்‌ கொண்டிருந்த காலத்தில்‌ இவைகளில்‌ ஒன்றாவது நமது பண்டித மாளவியாவுக்கு அநியாயமான உத்திரவென்றோ அநாகரீகமான உத்திர வென்றோ தோன்றாமல்‌ போய்விட்டது ஏன்‌? அது தேச நன்மைக்கும்‌, இந்திய மக்களின்‌ சுயமரியாதைக்கும்‌ பஞ்சாப்புக்கும்‌ கிலாபத்துக்கும்‌ ஏற்பட்ட அநீதிக்கும்‌ பரிகாரம்‌ தேட ஏற்பட்ட வழிகளைத்‌ தடைப்படுத்த ஏற்பட்ட உத்திரவானதால்‌ அதைப்பற்றி நமது பண்டிதருக்கு லட்சிய மில்லை.ஆனால்‌ இப்பொழுது கல்கத்தா கலவர சம்பந்தமாய்‌ உண்மையாய்‌ கொலைகளும்‌, கொள்ளைகளும்‌, அடிதடி கலவரங்களும்‌ இரு பக்கமும்‌ நடந்து கொண்டிருக்கிற காலத்தில்‌ வங்காள அரசாங்கத்தார்‌ போட்ட தடை உத்திரவை மீறுவதற்கு நமது பண்டிதருக்கு வெகு அவசரம்‌ ஏற்பட்டு விட்டது. ஏனென்றால்‌ இந்த உத்திரவானது வெறும்‌ வகுப்பு சம்பந்தத்தையே ஆதாரமாகக்‌ கொண்டிருப்பதால்தான்‌. ஆனதால்‌ நமது பண்டிதர்‌ வகுப்பு வாதியா, தேசீயவாதியா என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம்‌. பண்டிதர்‌ பார்ப்பனராயிருப்பதால்‌ அவர்‌ செய்யும்‌ காரியங்களும்‌ கிளர்ச்சி களும்‌ இந்து சமூகத்‌ திற்கு என்கிற பெயரை வைத்துக்கொண்டு பார்ப்பன சமூகத்திற்கும்‌ வர்ணா சிரமத்திற்கும்‌ ஆதரவளிக்கச்‌ செய்வதாயிருப்பதால்‌ நமது நாட்டுப்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகளும்‌ பார்ப்பனத்‌ தலைவர்களும்‌ பண்டிதரின்‌ நடவடிக்கையை வகுப்புத்‌ தொண்டு என்று சொல்லாமல்‌ தேசீயத்‌ தொண்டு என்று சொல்லி பண்டிதரை பெரிய தேசபக்தராக்க விளம்பரம்‌ செய்வார்கள்‌. வங்காள உத்திரவை யோக்கியமான உத்திரவென்று நாம்‌ சொல்லா விட்டாலும்‌ பண்டிதர்‌ பெற்ற பிள்ளையாய இந்து மகாசபை பிறந்திருக்கா விட்டால்‌ இந்தியாவில்‌ இந்து முஸ்லீம்‌ கலகமும்‌ மகாத்மாவின்‌ ஒத்துழை யாமைக்கு சாவும்‌ ஏற்பட்டிருக்காதென்றே நெருப்பின்‌ மீது நின்று கூறுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 08.08.1926 குடி அரசு - 1926 (2) 122 யார்ப்பணர்களுக்கு சரியாண இழு யார்ப்பண யார்ப்பணரால்லாதாரிண்‌ வகுப்பு வித்தியாசத்தைப்‌ பற்றி யங்மாண்‌ எஸ்‌. ஆர்‌. காசிண்‌ அபிப்பிராயம்‌ “நான்‌ இங்கு வந்ததின்‌ முக்கிய நோக்கமெல்லாம்‌ இங்குள்ள விஷயங்களை நேரில்‌ அறிந்து அரசப்‌ பிரதிநிதிக்கு எடுத்துச்‌ சொல்ல வேண்டுமென்ற அபிப்பிராயத்தின்‌ பேரிலேயேயாகும்‌. இங்கு வந்து நேரில்‌ விஷயங்களைக்‌ கவனிக்கிறபோது பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ ஆகிய இரு சமூகத்தாருக்குள்ளும்‌ இருக்கும்‌ வகுப்பு உணர்ச்சி எனக்கு நன்றாகத்‌ தெரிகிறது. நான்‌ எப்பொழுதும்‌ இம்‌ மாகாணத்திலுள்ள தாழ்ந்த நிலையிலி ருக்கும்‌ வகுப்பாரிடமே அபிமானம்‌ கொண்டிருப்பேன்‌. ஏனென்றால்‌ தாழ்ந்த சமூகத்தினர்‌ முன்னுக்கு வரும்வரையில்‌ தேசம்‌ சுயராஜ்யம்‌ பெறமுடியாது. தாழ்ந்த சமூகத்தினர்‌ முன்னுக்கு வரவேண்டுமென்று சொல்வதையும்‌, பிற்பட்ட வகுப்பினர்‌ - தாழ்ந்த வகுப்பினர்களென்றும்‌ பிறத்தியாரால்‌ அழுத்தப்பட்டுக்‌ கிடக்கிறவர்களென்றும்‌ நினைத்துக்‌ கொண்‌ டிருக்கிற ஜனங்கள்‌ தங்கள்‌ முன்னேற்றத்திற்காக ஏற்படுத்திக்‌ கொண்‌ டிருக்கும்‌ எந்த இயக்கங்களையும்‌ வகுப்பு இயக்கங்களென்று சொல்லவே கூடாது. அவற்றையெல்லாம்‌ தேசீய இயக்க மென்றே சொல்ல வேண்டும்‌. ஏனெனில்‌ தாழ்த்தப்பட்ட- பிற்பட்ட- அழுத்தப்‌ பட்ட சமூகத்தார்‌ முன்ன ணிக்கு வருகிறவரையில்‌ தேசீய இயக்க மென்று சொல்லிக்கொண்டு வேலை செய்வது பிரயோஜனத்தைத்‌ தராது. தாழ்ந்த வகுப்பினர்‌ முன்னேற்றமடைய முயல்வதன்‌ பயனாய்‌ ஏற்கனவே முன்னணியிலிருந்து - உயர்ந்த வகுப்பார்‌. என்று சொல்லுகிறவர்களுக்கு சிறிது பாதகம்‌ ஏற்பட நேரும்‌. அந்த பாதகங்‌ களையும்‌ தேச முன்னேற்றத்தை உத்தேசித்து ஏற்றுக்கொள்ளத்தான்‌ வேண்டும்‌. இவ்வித விஷயங்களையெல்லாம்‌ தேசீய விஷயங்களாகத்தான்‌ கருத வேண்டும்‌. இதை உணர்ந்தால்‌ தேசீய உணர்ச்சியுள்ள எந்தப்‌ பார்ப்பனனும்‌ உங்கள்‌ இயக்கத்தைத்‌ தடுக்க முன்வரமாட்டான்‌. சில பார்ப்பனர்களாவது யோக்கியர்களாக இருக்கக்கூடும்‌. அப்படியிருந்தால்‌ அவர்களுடைய ஒத்தாசை உங்களுக்குக்‌ கிடைக்கும்‌. பார்ப்பனர்களும்‌ அநாவசியமாக பார்ப்பனரல்லாதார்களுடைய முன்னேற்றத்தைக்‌ கண்டு 123 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பயந்து இடைஞ்சல்‌ செய்யமாட்டார்கள்‌. புத்திசாலிகளாயுள்ள பார்ப்பனர்‌ கள்‌. பார்ப்பனரல்லாதாருக்கு உதவியாயிருந்து, பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லா தார்‌. என்கிற வகுப்புப்‌ பிரச்சினையை தேசீயப்‌ பிரச்சினையாக்கி, விரைவில்‌ தேசம்‌. முன்னேறுவதற்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்‌. பார்ப்பன ரல்லாதார்‌. பார்ப்பனரைக்‌ கொஞ்சமாவது நம்ப வேண்டும்‌” என்று பேசி யிருக்கிறார்‌. இம்மாதிரி ஸ்ரீமான்‌ எஸ்‌. ஆர்‌. தாஸ்‌ அவர்கள்‌ பேசி வகுப்புக்‌ கிளர்ச்சிகளை ஆதரித்து “அதைத்‌ தேசீயக்‌ கிளர்ச்சியாகக்‌ கருத வேண்டு மேயல்லாமல்‌ வகுப்புக்‌ கிளர்ச்சி என்று அதை அடக்கப்‌ பிரயத்தனப்படக்‌ கூடாது” என்று சொன்னதோடல்லாமல்‌ இவ்வித கிளர்ச்சிகளுக்குத்‌ தன்னாலான உதவியும்‌, செய்வதாக வாக்களித்தும்‌ போயிருக்கிறார்‌. இப்படியிருக்க “சுதேசமித்திரன்‌” இவற்றைத்‌ தனக்கனுகூலமாகத்‌ திருத்தி எழுதிக்‌ கொண்டு “ஜஸ்டிஸ்‌ கட்சிக்குச்‌ சாட்டை” என்று விஷமத்‌ தலையங்கமிட்டு வகுப்புப்‌ பேச்சும்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ வேண்டா மென்று அவர்‌ சொன்னதாகக்‌ குறிப்பு எழுதி, முழுப்‌ பூசணிக்காயை சோற்றில்‌ மறைப்பதுபோல்‌ யோக்கியப்‌ பொறுப்பற்ற பிரசாரம்‌ செய்திருக்கிறான்‌. ஆகையால்‌ ஒருவரும்‌ இதை நம்பாமல்‌ ஆங்‌ காங்கு உயர்ந்த வகுப்பார்‌. களால்‌ கொடுமைப்‌ படுத்தப்பட்டு வரும்‌ ஒவ்வொரு சமூகத்தாரும்‌ தைரிய மாய்‌ வெளியில்‌ வந்து தங்களுக்கிருக்கும்‌ கொடுமைகளை எடுத்துச்‌ சொல்லி அதைப்‌ போக்கிக்‌ கொள்வதற்குக்‌ கங்கணம்‌ கட்டிக்‌ கொள்ள வேண்டும்‌. தற்காலம்‌ நமது நாட்டின்‌ தேசீய வேலை இதுவே யாகுமே யல்லாமல்‌, வயிற்றுப்‌ பிழைப்புக்காரர்களும்‌ பஞ்ச தந்திரப்‌ பார்ப்பனர்‌ களும்‌ சொல்லிக்‌. கொண்டு திரியும்‌ சுயராஜ்யம்‌, தேசம்‌, விடுதலை, காங்கிரஸ்‌, சர்க்காரை அழிப்பது என்கிற அர்த்தமற்றதும்‌ முட்டாள்‌ தனமானதும்‌ சூழ்ச்சி களும்‌ தந்திரங்களும்‌ சுயநலமும்‌ நிரம்பியதான போலி வார்த்தைகள்‌ அல்லவென்பதைப்‌ பொதுமக்கள்‌ உணர வேண்டுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 08.08.1926 குடி அரசு - 1926 (2) 124. இரு யார்ப்பண சீணிணாசர்கணிண்‌ வபாய்மாண்‌ அறிக்கை தை மண்டையில்‌ அத்துப்‌ புதைக்க கவண்டும்‌. ஸ்ரீமான்கள்‌ மகாகனம்‌ சீனிவாச சாஸ்திரியும்‌, எஸ்‌.சீனிவாசய்‌ யங்காரும்‌ சதியாலோசனை செய்து ஒரு பொய்மான்‌ அறிக்கை வெளியிடச்‌ செய்திருக்கிறார்கள்‌. இப்பொய்மான்‌ அறிக்கையைக்‌ கண்டு பொதுஜனங்கள்‌ ஏமாந்து போகக்கூடாது. அவ்வறிக்கையை ஒரே அடியாய்‌ மண்டையில்‌ அடித்துக்‌ கொன்று குழியில்‌ புதைக்க வேண்டும்‌. அது எதுவென்றால்‌ அதுதான்‌ இந்திய தேசீய ஐக்கியச்‌ சங்கம்‌ என்பது. இதை உண்டாக்க நேரு- ஆசாத்‌ அறிக்கை என்பதாக ஒன்றைக்‌ கட்டி விட்டிருக்கிறார்கள்‌. உஷார்‌! உஷார்‌! உஷார்‌!!! குடி அரசு - கட்டுரை - 08.08.1926 125 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. b3 நிர்வாகத்தில்‌ வகுப்பு உணர்ச்சி மதுரை முணிசியல்‌ சேர்வமண்‌ தேர்தல்‌ மதுரை முனிசிபாலிட்டிக்குச்‌ சேர்மெனாகப்‌ பொது ஜனங்களாலும்‌ இயற்கை தேவியாலும்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான்‌ ஆர்‌.எஸ்‌. நாயுடுவை நமது பார்ப்பன தேவதைகள்‌ ஐந்து, ஆறு மாத காலமாக அந்த ஸ்தானத்தில்‌ உட்காருவதற்கில்லாமல்‌ செய்து விட்டார்கள்‌. அது என்னவென்றால்‌ ஸ்ரீமான்‌ ஆர்‌.எஸ்‌. நாயுடுவும்‌ மற்றொரு கனவானும்‌ சேர்மென்‌ பதவிக்குப்‌ போட்டி யாக நின்றார்கள்‌. ஸ்ரீமான்‌ நாயுடு பார்ப்பனர்களின்‌ எடுப்பார்‌ கை குழந்தை யாயில்லாமல்‌ சுயமரியாதை உள்ளவராயிருந்துவிட்டபடியினால்‌ அங்குள்ள பார்ப்பனர்கள்‌ நாயுடுவுக்கு விரோதமாக ஒருவரை நிறுத்தி சுயராஜ்யக்‌ கட்சி யின்‌ பெயராலும்‌ காங்கிரஸ்‌ பெயராலும்‌ எவ்வளவோ சூழ்ச்சிகள்‌ செய்தும்‌ ஸ்ரீமான்‌ நாயுடுவுக்கு சம ஓட்டு கிடைத்ததால்‌ திருவுளச்‌ சீட்டு போட வேண்டிய அவசியமேற்பட்டு, திருவுளச்‌ சீட்டிலேயும்‌ ஸ்ரீமான்‌ நாயுடு வுக்கே ஆகிவிட்டது. இதைப்‌ பொறுக்காத பார்ப்பனர்கள்‌ ஒரு பார்ப்பனரை: நியாயாதிபதியாய்‌ அடைந்திருக்கிறோமென்ற தைரியத்தின்‌ பேரில்‌ கோர்ட்‌ டுக்குப்‌ போய்‌ அத்‌ தேர்தலை ரத்துசெய்து, வேறு தேர்தல்‌ செய்யும்படி தீர்ப்புப்‌ பெற்று விட்டார்கள்‌. நல்ல வேளையாய்‌ பார்ப்பனரல்லாதார்‌ அப்பீல்‌ நியாயாதி பதியாய்‌ இருக்கும்‌ படியான ஒரு நியாயஸ்தலம்‌ நமது நாயுடுவுக்குக்‌ கிடைத்த படியினால்‌, அங்கு நாயுடு அப்பீல்‌ செய்து கொண்டதன்‌ பலனாய்‌ அந்த பார்ப்பன நியாயாதிபதியின்‌ உத்திரவு மாற்றப்பட்டு பொது ஜனங்கள்‌. இஷ்டப்‌ பிரகாரமும்‌ இயற்கை தேவியின்‌ ஆசீர்வாதத்தாலும்‌ ஸ்ரீமான்‌ நாயுடுவே சேர்மென்‌ வேலை பார்க்கும்‌ படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது. எவ்வளவுதான்‌ சட்டங்களுக்கும்‌ தேசத்தின்‌ மானத்திற்கும்‌ பயந்து கொண்டு விஷயங்களைச்‌ சகித்து சகித்துப்‌ பார்த்தாலும்‌ வகுப்புணர்ச்சிகளின்‌ பலனாய்‌ ஒரு வகுப்பாருக்கு மற்றொரு வகுப்பார்‌ செய்யும்‌ கெடுதியை மறைக்க முடியவில்லை. சுருக்கமாய்ச்‌ சொல்லுவதானால்‌, நமது நாட்டில்‌ வெள்ளைக்காரர்களுக்கும்‌ கருப்பு மனிதர்களுக்கும்‌ ஏற்படும்‌ வகுப்பு வியவகாரங்களில்‌ வெள்ளைக்கார நியாயாதிபதிகளிடமிருந்து பெரும்பாலும்‌ கருப்பு மனிதர்கள்‌ நியாயம்‌ பெற முடியாத நிலைமையில்‌ இருக்கிறார்களோ அது போலவே பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்கிற உணர்ச்சியின்‌ பேரில்‌ ஏற்படும்‌ வியவகாரங்‌ களில்‌ பார்ப்பனர்களிடமிருந்து பார்ப்பனரல்லாதார்‌. குடி அரசு - 1926 (2) 126 நியாயம்‌ பெற முடியாமலிருப்பதோடு கஷ்டமும்‌ நஷ்டமும்‌ அடைய வேண்டியதாயிருக்கிறதை இதுசமயம்‌ நாம்‌ சொல்லித்‌ தீர வேண்டிய தாயிருக்கிறது. நமது கொஞ்சகால ராஜீய அனுபவத்தில்‌ பார்ப்பனரல்லாத வக்கீல்‌ கள்‌: பார்ப்பன நியாயாதிபதிகளிடத்தில்‌ அடையும்‌ இழிவும்‌ கொடுமையும்‌ பாரபக்ஷமும்‌ சுயமரியாதை உள்ளவர்களென்போர்‌ வெளியில்‌ சொல்லிக்‌ கொள்ள முடியாததாயிருப்பதை அனுபவத்தில்‌ பார்த்து வருகிறோம்‌. இவ்வித வித்தியாசங்களுக்கு ஒரு சிறிய போலீஸ்‌ அதிகாரி முதல்‌ உயர்தர நீதிமன்றம்‌ வரையில்‌ ஆளாக வேண்டியதாகவேயிருந்து விடுகிறது. இதற்கு உதாரணங்கள்‌ எவ்வளவு வேண்டுமானாலும்‌ சொல்லிக்கொண்டே போகலாம்‌. ஆனால்‌ இதிலிருந்து நமது மக்கள்‌ எப்படித்‌ தப்புவது என்பது தான்‌ நமக்குப்‌ பெருத்த கவலையாயிருந்து வருகிறது. ஒரு வகுப்பாருக்கு மாத்திரந்தான்‌ இப்போது இந்தக்‌ கஷ்டமிருக்கிறது என்று நாம்‌ இங்கு சொல்ல வரவில்லை. தேர்தல்‌ வியவகாரங்கள்‌ நூற்றுக்கு 90 குறைவில்லாமல்‌ அப்பி லில்‌ மாறியிருப்பதின்‌ சம்பவமென்ன? ஏறக்குறைய தற்காலம்‌ நமது நாட்டில்‌ நடக்கும்‌ தேர்தல்‌ வியவகாரங்களெல்லாம்‌ வகுப்புணர்ச்சியை ஆதாரமாக வைத்தே நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகுப்பு உணர்ச்சி கள்தான்‌ இவ்‌ விதத்‌ தீர்ப்புகளுக்கும்‌ ஆதாரமென்றே நாம்‌ நம்ப வேண்டி யிருக்கிறது. இதிலிருந்து நாம்‌ என்ன முடிவுக்கு வர வேண்டிய திருக்கிற தென்றால்‌ தேர்தல்‌ சம்பந்தமான வியவகாரங்களை நீதிபதிகள்‌ கைக்குக்‌ கொண்டு போகாமல்‌ நிர்வாக அதிகாரிகள்‌ கையிலேயேயிருக்கச்‌ செய்தால்‌ ஒழுங்காயிருக்க முடியுமா என்று கூட நினைக்க வேண்டியதாயிருக்கிறது.. நிர்வாக அதிகாரிகள்‌ செய்யும்‌ கொடுமைகள்‌ நீதிபதிகள்‌ செய்யும்‌ கொடுமை களைவிடக்‌ குறைந்ததல்லவானாலும்‌ உதாரணமாக ஈரோடு முனிசிபல்‌ நிர்வாக ஊழல்களைப்‌ பற்றி மேல்‌ நிர்வாகிகள்‌ நடந்து கொள்ளும்‌ தோரணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்‌ இவ்வளவு காலதாமதமும்‌ பணச்‌ செலவும்‌ மினக்கேடும்‌ வக்கீல்கள்‌ சூழ்ச்சியும்‌ குறையுமென்றே நம்புகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 08.08.1926 127 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 பிராமணீயத்தை ஒழித்தவர்கன்‌ சென்னையில்‌ கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌, ஆர்‌.கே. ஷண்முகஞ்‌ செட்டியார்‌, திரு.வி. கலியாண சுந்தர முதலியார்‌, ந. தண்டபாணி பிள்ளை, ஈ.வெ.இராமசாமி நாயக்கர்‌ முதலி யவர்கள்‌ கூடிப்‌ பேசியதாகவும்‌ அதன்‌ முடிவு என்ன என்பதைப்‌ பற்றியும்‌ முந்திய இதழில்‌ எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்‌. அதாவது, அரசியல்‌ விஷயத்தைப்‌ பற்றி அவரவர்கள்‌ அபிப்பிரா யப்படி நடந்து கொள்வதென்றும்‌, சமூக சமத்துவ விஷயங்களில்‌ எல்லோ ரும்‌ ஒரே அபிப்பிராயமாயிருக்கிறோம்‌ என்றும்‌, அது விஷயத்தில்‌ எல்லோரும்‌ ஒத்துழைக்க வேண்டுமென்றும்‌ முடிவு செய்யப்பட்டது என்றும்‌ எழுதியிருந்தோம்‌. அதன்‌ பலனாக அதே சமயத்தில்‌ சமூக சமத்துவ விஷயமாய்‌ எல்லோரும்‌ ஒத்துப்‌ பிரசாரம்‌ ஆரம்பிக்கப்படும்‌ முன்பு பார்ப்பனரல்லாதார்‌ வைதீக சடங்குகள்‌ என்று பெயர்‌ வைத்துக்‌ கொண்டு ஒவ்வொரு குடும்பங்களிலும்‌ பார்ப்பனர்களைக்‌ கொண்டு செய்யப்படும்‌ சடங்குகளை நிறுத்துவதற்கு முதல்‌ முதலாகப்‌ பிரசாரம்‌ செய்யவேண்டுமென்றும்‌, அப்படிச்‌ செய்வதில்‌ தங்கள்‌ தங்கள்‌ பெற்றோர்களையும்‌ மற்றோர்களையும்‌, மோக்ஷத்திற்கனுப்புவதற்கென்றும்‌, அவர்கள்‌ சுகமாய்‌ இருப்பதற்கென்றும்‌ பார்ப்பனர்‌ களைக்‌ கொண்டு திதி, திவசம்‌ என்றோ சிரார்த்தம்‌ என்றோ சொல்லும்படியான பல வைதீகச்‌ சடங்குகள்‌ செய்வதில்‌ ஒன்றும்‌ பலனில்லையென்றும்‌, அம்‌ மாதிரி சடங்கு கள்‌ பார்ப்பனர்களின்‌ பிழைப்புக்கு ஏற்படுத்திக்‌ கொண்டதல்லாமல்‌ வேறல்ல வென்பதை பார்ப்பனரல்லாதாருக்குத்‌ தெரிவிப்பதற்காக ஒரு பிரசாரம்‌ ஆரம்பிப்பதென்றும்‌ அதில்‌ அப்பொழுதிருந்து பேசிய ஐவரும்‌ மற்றும்‌ அதற்கு சம்மதித்தவர்கள்‌ பெயரையும்‌ வெளியிட்டு வருவதென்றும்‌ முடிவு செய்து அதன்படியே சென்றவாரத்‌ “தமிழ்நாடு” பத்திரிகையிலும்‌ “பிராமணீயத்தை ஒழித்தவர்கள்‌'” என்ற தலைப்பின்‌ கீழ்‌ பல கனவான்களின்‌ பெயர்‌ பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும்‌ தெரியப்படுத்தும்‌ கனவான்‌ கள்‌ பெயரும்‌ அவ்வப்போது வெளிப்படுத்திக்‌ கொண்டுவரப்படும்‌. அதா வது, யார்‌ ஒருவர்‌ பார்ப்பனரைக்‌ கொண்டானாலும்‌ மற்றபடியானாலும்‌ தாங்‌ கள்‌ செய்யும்‌ திதியோ, திவசமோ, சிரார்த்தமோ அல்லது வேறு பல சடங்கு களால்‌ இறந்து போன தங்கள்‌ பெற்றோர்களுக்கோ, மற்றோர்களுக்கோ “மேலுலகத்திற்கு”ப்‌ போய்ச்‌ சேரும்‌ என்று நினைத்துக்கொண்டு ஒன்றும்‌ குடி அரசு - 1926 (2) 128 செய்வதில்லை, அவ்விதச்‌ சடங்குகளில்‌ நம்பிக்கையில்லை என்று யாருக்கு ஏற்படுகிறதோ அவர்கள்‌ தங்கள்‌ பெயரைத்‌ தெரியப்படுத்தினால்‌ பத்திரிகை யில்‌ பிரசுரித்து வரப்பெறும்‌.மேற்கூறிய பிரகாரம்‌ பிராமணீயத்தை விரட்டிய வர்களாவன:- ஸ்ரீமான்கள்‌ 1 டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, “அசோக விலாஸ்‌”, சேலம்‌. 2 திரு.வி.கலியாணகந்திரமுதலியார்‌, “நவசக்தி” ஆசிரியர்‌,சென்னை. 3.ஈவெஇராமசாமி நாயக்கர்‌, “குடி அரசு” ஆசிரியர்‌, ஈரோடு. 4 ஆர்‌.கே.ஷண்முகஞ்‌ செட்டியார்‌, “ஹவார்டன்‌”, கோயமுத்தூர்‌. 5 சனக சங்கர கண்ணப்பர்‌, “திராவிடன்‌” ஆசிரியர்‌ , சென்னை. 6.என்‌. தண்டபாணி பிள்ளை, 6-99 பவழக்கார தெருவு, சென்னை. 7. ௪. சொக்கலிங்கம்‌ பிள்ளை, “தமிழ்‌ நாடு” துணை ஆசிரியர்‌, சென்னை. &.வெ. சுப்பையா பத்தர்‌, 84 முதல்‌ வீதி , ரங்கூன்‌. 9 திரு.அ.மு.அ.அண்ணாமலை செட்டியார்‌, ஆத்தங்குடி. 10. எம்‌. என்‌. முத்துக்குமாரசாமி பாவலர்‌ ,பரோபகார சங்கத்தலைவர்‌, மேல்பாதி, நெல்லிக்குப்பம்‌. 1 எஸ்‌. இராமநாதன்‌ , காரியதரிசி, தமிழ்‌ மாகாண அபா.சர்க்கா சங்கம்‌, ஈரோடு. 12 சா. இராமசாமி நாயக்கர்‌, வியாபாரம்‌, ஈரோடு. 13. ஓ.சி. முத்துசாமிக்‌ கவுண்டர்‌, வியாபாரம்‌ , ஈரோடு. 14. மணவை ரெ.திருமலைசாமி, “குடி அரசு' துணை ஆசிரியர்‌, ஈரோடு. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 08.08.1926 129 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 o 9% “தேசபக்தன்‌” பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும்‌ வார மும்முறைப்‌ பதிப்பாகும்‌. இதன்‌ ஆசிரியராயிருக்கும்‌ திரு. கோ. நடேசய்‌ யரைப்‌ பற்றி நாம்‌ நன்கு அறிவோம்‌. தஞ்சையினின்று வெளி வந்த “வர்த்தக மித்திரன்‌” பத்திரிகையும்‌ திரு. நடேசய்யரையே தன்‌ ஆசிரியராகக்‌ கொண்டி ருந்தது. அக்காலை 'வர்த்தகமித்திரனி”ல்‌ ஒழுங்காகவும்‌ தேசநலங்கருதியும்‌ எழுதப்பட்ட கட்டுரைகளே வெளிவந்தன. ஆனால்‌ இப்பொழுது அதே திரு. நடேசய்யரை ஆசிரியராகக்‌ கொண்ட “தேசபக்தன்‌” தாங்கி வரும்‌ கட்டுரைகள்‌ ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின்‌ மாட்டு அன்போடும்‌ அபிமானத்தோடும்‌ எழுதி வருவது பெரிதும்‌ வருந்தத்தக்கதாகும்‌. வெளிப்படையாகக்‌ கூறப்புகின்‌ “தேசபக்தனும்‌” பார்ப்பனப்‌ பிரசாரம்‌ செய்யத்‌ தொடங்கிவிட்டான்‌ என்றே கூற வேண்டும்‌. சென்னையில்‌ நடைபெறும்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ செய்துவரும்‌ பார்ப்பனப்‌ பிரசாரம்‌ போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின்‌ குடியைக்‌ கெடுக்க, மலாய்‌ நாட்டில்‌ “தமிழ்‌ நேசன்‌” என்றும்‌ இலங்கையில்‌ “தேசபக்தன்‌” என்றும்‌ இரு பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌. தோன்றியுள்ளதென்றே கூறவேண்டும்‌. கறுப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது போல பார்ப்‌ பனப்‌ பக்தனாகயிருப்பவன்‌ “தேசபக்தன்‌” என்று பெயர்‌ பூணி தமிழர்களைப்‌ பாழ்படுத்த முயலுவதை நாம்‌ கண்டிக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால்‌ இதை இனித்‌ தமிழ்‌ மக்கள்‌ ஆதரிப்பது கொள்ளிக்கட்டை எடுத்து தலையைச்‌ சொரிந்து கொள்வதாகும்‌. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 08.08.1926 குடி அரசு - 1926 (2) 130 நாகையில்‌ பார்ப்பணரில்ைத திருமணமும்‌ பிரார்த்தனையும்‌ நாகபட்டணம்‌ தென்‌ இந்தியா ரயில்வேயைச்‌ சேர்ந்த தொழிலாளரும்‌, ஸ்ரீமான்‌ பாலையத்‌ தேவர்‌ குமாரருமான ஸ்ரீமான்‌ பா. காளியப்பத்‌ தேவர்‌ அவர்களுக்கும்‌ பட்டுக்கோட்டையைச்‌ சேர்ந்த படப்பக்காட்டிலிருக்கும்‌ ஸ்ரீமான்‌ இராசாமித்‌ தேவரவர்கள்‌ குமாரத்தி ஸ்ரீமதி செல்லம்மாளுக்கும்‌ இவ்வாவணி- மீ”மூன்றாந்தேதி (19-8-26) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாகை கோட்டைமேட்டுத்‌ தெருவில்‌ உள்ள மணமகன்‌ இல்லத்தில்‌ திருமணம்‌: நடைபெறும்‌. அத்திருமணத்தில்‌ மணமகனும்‌ மணமகளும்‌ கதரா டையே அணிவதுடன்‌ பார்ப்பனர்‌ சம்மந்தமே இல்லாமல்‌ அத்திருமணச்‌ சடங்கும்‌ நடைபெறும்‌. நம்‌ தென்னாட்டில்‌ இம்மாதிரி கதருடையுடன்‌ இதுவரை பல திருமணங்கள்‌ நிகழ்ந்திருந்தாலும்‌ பார்ப்பனப்‌ புரோகிதரில்‌ லாமல்‌ திருமணங்கள்‌ நடப்பது அதிசயமாகக்‌ கருதப்படுவதுடன்‌ வெகுசில திருமணங்களே இதுவரை நடைபெற்றிருக்கின்றன.அவற்றுள்‌ சென்ற மாதம்‌ வட ஆற்காடு ஜில்லா ஆம்பூர்‌ சாணாங்‌ குப்பத்திலிருக்கும்‌ திருவாளர்கள்‌ வெங்கிடசாமி முதலியாரும்‌ அவரது உறவினர்‌ இருவரும்‌ சேர்ந்து நடத்தி வைத்த மூன்று திருமணங்களும்‌ நாகையில்‌ நடக்கப்‌ போகும்‌ இத்‌ திருமண: மும்‌ முக்கியமானதென்றே சொல்லலாம்‌. இனியும்‌ தமிழ்நாட்டில்‌ நடக்கும்‌ அநேக திருமணங்களும்‌ இதுபோலவே தங்கள்‌ தங்கள்‌ வகுப்பிலுள்ள முதிர்ந்த பரிசுத்தம்‌ பொருந்திய பெரியோர்களைக்‌ கொண்டே நடத்திக்‌ கொள்வது திராவிட மக்களின்‌ சுயமரியாதையைக்‌ காப்பதாகுமென்று விண்ணப்பித்துக்‌ கொள்ளுகிறோம்‌. சுமார்‌ 30, 40 வருஷங்களுக்கு முன்னால்‌ தென்னாட்டில்‌ விசேஷமாய்ப்‌ பார்ப்பனரின்றியே விவாகம்‌ முதலிய அநேக சடங்குகளும்‌ நடைபெற்று வந்திருக்கிறது. முக்கியமாய்‌ இன்னாட்டுக்‌ கொங்கு வேளாள சமூகமாகிய பெரும்‌ சமூகத்தார்‌ தங்கள்‌ மணச்சடங்குகளைத்‌ தங்கள்‌ சமூகத்திலேயே உள்ளவ ரான அருமைக்காரர்‌ என்னும்‌ பெரியார்களைக்‌ கொண்டே நடப்பித்து வந்திருக்‌ கிறார்‌. கொஞ்சம்‌ செல்வமோ, அல்லது நாகரீகப்பேயோ ஏதாவது ஒரு குடும்பத்திற்குப்‌ புதிதாய்‌ ஒட்டிக்‌ கொண்டால்‌ அவர்கள்‌ பார்ப்பனரைக்‌ கொண்டு சடங்குகள்‌ செய்வது ஒரு பெருமை என்று நினைத்துவர: பார்ப்பனர்களே இருந்து நடத்த வேண்டும்‌ என்று செய்து விட்டார்கள்‌. 131 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. இன்னமும்‌ அவ்வகுப்புக்களிலும்‌ மற்றும்‌ பல வகுப்புக்களிலும்‌ 100-க்கு 90 குடும்பங்கள்‌ பார்ப்பனர்‌ இல்லாமலே நடைபெற்று வருகின்றன. சிரார்த்தம்‌ முதலிய சடங்குகள்‌ வேளாள சமூகமாகட்டும்‌, பலிஜா சமூகமாகட்டும்‌ மற்றும்‌ பல சமூகங்களாகட்டும்‌ இப்பொழுதும்‌ பெரும்பான்மையான குடும்பங்கள்‌ பார்ப்பனரைக்‌ கொண்டு செய்வதே இல்லை. இப்படி இருந்‌ தும்‌ பார்ப்பனர்கள்‌ சூழ்ச்சியினால்‌ பார்ப்பனர்களைக்‌ கொண்டு செய்யும்‌ சடங்குகளும்‌ ஒரு பெருமை இருப்பதாகக்‌ கருதிப்‌ புதிது புதிதாய்‌ அவ்‌ வழக்கங்களை ஸ்தாபித்து வருகிறார்கள்‌. இவை பார்ப்பனர்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கு அனுகூலமே தவிர நமக்காவது நமது பெற்றோர்களுக்காவது நமது மணமக்களுக்காவது யாதொரு பயனும்‌ இல்லை.அவர்கள்‌ சொல்லும்‌ மந்திரங்கள்‌ என்னும்‌ சமஸ்கிருத வார்த்தைகளிலும்‌ யாதொரு விசேஷப்‌ பொருளும்‌ இல்லை. அதைச்‌ செய்து வைக்கும்‌ புரோகிதர்களோ உபாத்தி யாயர்களோ அப்படி ஒன்றும்‌ விசேஷ சக்தியோ யோக்கியதையோ பெரு மையோ படைத்தவர்‌ களுமல்ல. வீண்‌ பிரமையும்‌ போலி நாகரீகம்‌ என்கிற முட்டாள்தனமுமேயல்லாமல்‌ இதில்‌ வேறு ஒரு பலனும்‌ இல்லை. உண்மை யாகவே பார்ப்பனர்‌ இல்லாமலும்‌ பார்ப்பனரைக்‌ கொண்டு சடங்குகள்‌ செய்யாமலும்‌ சிரார்த்தம்‌ தர்ப்பணம்‌ முதலிய பார்ப்பனர்‌ வயிர்‌ வளர்க்கும்‌ போலிச்‌ சடங்குகளில்லாமலும்‌ இருக்கும்‌ ஜனங்களும்‌ சமூகமும்‌ ஜாதியும்‌ சேர்த்து கணக்குப்‌ பார்த்தால்‌ இவைகளையெல்லாம்‌ பார்ப்பனர்களைக்‌ கொண்டு செய்கிறவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாய்த்தானி ருப்பார்கள்‌. இதினாலேயே அவர்கள்‌ க்ஷமமாய்‌ வாழவில்லையென் றாவது அவர்கள்‌ பெற்றோர்‌ மோக்ஷம்‌ அடையவில்லை என்றாவது சொல்லி விட முடியுமா? ஆதலால்‌ பார்ப்பனரல்லாத இந்து மக்கள்‌ இனி மேலாவது தங்கள்‌. சுயமரியா தையையும்‌ தத்துவத்தையும்‌ உத்தேசித்தாவது பார்ப்பனர்‌ இருந்து நடத்தும்‌ காரியங்கள்‌ தான்‌ உண்மையானது என்றும்‌ உயர்ந்தது என்றும்‌ கடவுள்களும்‌ மோகஷத்திற்கும்‌ பிரீதியானது என்றும்‌ பார்ப்பனர்கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்றும்‌ எண்ணி தங்கள்‌ தங்கள்‌ சமூகத்தையே தாழ்த்திக்‌ கொள்வதற்குத்‌ தாங்களே பணங்கொடுத்து ஆளாகாமல்‌ தங்கள்‌ தங்கள்‌ சமூகத்தாரைக்‌ கொண்டே செய்து கொள்ள வேண்டுமாய்‌ பிரார்த்திக்‌ கிறோம்‌. குறிப்பு: இத்திருமணத்திற்கு ஸ்ரீமான்‌ நாயக்கரையும்‌ அவசியம்‌ வரும்படி வேண்டிக்கொண்டிருப்பதால்‌ அநேகமாய்‌ ஸ்ரீமான்‌ நாயக்கரும்‌ போகலாம்‌. குடி அரசு - சிறு குறிப்பு - 15.08.1926 குடி அரசு - 1926 (2) 132 வகுப்புணாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ம்ரீமாண்‌ 5.சத்தியமூர்த்தி அம்யர்‌ சென்ற வாரம்‌ வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில்‌ ஸ்ரீ எஸ்‌.சத்தியமூர்த்தி அய்யர்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பற்றி பேசியதில்‌ கடைசியாக “பிராமணர்‌ - பிராமணரல்லாதாரின்‌ நம்பிக்கைக்‌ குப்‌ பாத்திரமாகும்‌ வண்ணம்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. உத்தியோக விஷயத்தில்‌ பிராமணரல்லாதாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது.அக்‌ குறையில்லாதபடி பிராமணர்கள்‌ நடந்து கொள்ள வேண்டியது அவசியம்‌” என்று பேசியிருக்கிறார்‌. இது மிகவும்‌ சரியான வார்த்தை; நாமும்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்பதற்கு இந்தக்‌ குறைகளைத்தான்‌ சொல்லுகி றோம்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைத்தால்‌ தான்‌ இக்குறைகள்‌ நீங்கும்‌; அல்லது சுவாமி சிரத்தானந்தர்‌ சொன்னபடி செய்தாலாவது கொஞ்சம்‌ நீங்கலாம்‌. இரண்டு மில்லாமல்‌ ஸ்ரீமான்களான குழந்தையையும்‌ ஓ.கந்தசாமி செட்டியாரையும்‌, பாவலரையும்‌, ஜயவேலரையும்‌ பிடித்து வகுப்புவாரிப்‌ பிரதி நிதித்துவம்‌ வேண்டாம்‌ என்று சொல்லச்‌ செய்வதாலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்பவர்களைத்‌ திட்டச்‌ செய்வதினாலும்‌ இக்குறை நீங்கி விடுமா? என்று கேட்கிறோம்‌. குடி அரசு - சிறு குறிப்பு - 15.08.1926. 133 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யார்ப்பணரிண்‌ பிறப்புரிமை வங்காள அரசாங்கத்தார்‌ ஒற்றுமையும்‌ சமாதானமும்‌ என்னும்‌ பெயரால்‌ பண்டித மாளவியா அவர்களுக்கும்‌ டாக்டர்‌ மூஞ்சே அவர்க ளுக்கும்‌ வங்காளத்திற்குள்‌ பிரவேசிக்கக்‌ கூடாதென்பதாக 144 உத்திரவு போட்டார்கள்‌. அவற்றை ரெ இரு கனவான்களும்‌ வீரர்களைப்‌ போல மீறி நடந்தார்கள்‌. அம்மீறுதலானது கேவலம்‌ வகுப்பு பிரச்சினையை உத்தேசித்தே. மீறினார்கள்‌ என்று நாம்‌ நினைக்க ஏற்பட்டபோதிலும்‌ இக்கனவான்்‌௧ளுடைய புதிய வீரத்தை நாம்‌ மனதில்‌ பாராட்டினோம்‌. அம்மீறுதலின்‌ பேரில்‌ சர்க்கார்‌ நடவடிக்கை எடுத்துக்‌ கொண்டிருக்‌ கிறார்கள்‌ என்று தெரிந்தும்‌ இம்மகிழ்ச்சிக்கு அதிக ஆயுள்‌ இருக்காதென்று நாம்‌ சந்தேகப்பட்டதுண்டு.அதுபோலவே இப்பொழுது பண்டிதர்‌ பேரிலும்‌ டாக்டர்‌ மூஞ்சே அவர்கள்‌ பேரிலும்‌ நடவடிக்கை எடுத்துக்‌ கொள்ளக்‌ கூடா தென்று ஸ்ரீமான்கள்‌ சர்‌.சிவசாமி அய்யர்‌, டி ரங்காச்சாரியார்‌ முதலிய பார்ப்ப னர்கள்‌ அரசப்‌ பிரதிநிதியிடம்‌ போய்‌ பல்லைக்‌ கெஞ்சுவதாய்த்‌ தெரிய வரு கிறது. ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஒருபுறம்‌ வீரமும்‌ சர்க்காரை ஏமாற்று வதற்கு மற்றொருபுறம்‌ பல்லைக்‌ கெஞ்சுவதும்‌ நமது பார்ப்பனர்களுக்கு பிறப்புரிமை என்பது இதனால்‌ விளங்கவில்லையா? குடி அரசு - சிறு குறிப்பு - 15.08.1926 குடி அரசு - 1926 (2) 134 பிராமணீபக்‌ AsTGaniD இந்தியாவின்‌ ஒற்றுமையைக்‌ குலைப்பது பிராமணீயம்‌ ! இந்தியாவை வேற்றரசர்‌ கையில்‌ கொடுத்தது பிராமணீயம்‌! இந்து முஸ்லீம்‌ கலகங்களை மூட்டுவது பிராமணீயம்‌! தமிழரை வறுமைக்குள்ளாக்கியது பிராமணீயம்‌! இந்தியா சுயராஜ்யம்‌ அடைவதற்குத்‌ தடைக்‌ கல்லாயிருப்பது பிராமணீயம்‌! உடன்பிறந்த சகோதரர்களான தமிழர்கள்‌ அடித்துக்‌ கொள்ளவும்‌ நீதிமன்ற மேறி வழக்காடவும்‌ காரண பூதமாயிருப்பது பிராமணீயமே! தமிழர்களே! இந்தப்‌ பாழான பிராமணீயத்தை நாட்டை விட்டு ஓட்டுக.. குடி அரசு - சிறு குறிப்பு - 15.08.1926. 135 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. டாக்டர்‌ நாயுடுகாரின்‌ வீர கர்ச்சணை இந்து தேவஸ்தான மசோதாவைப்‌ பற்றி பார்ப்பனர்கள்‌ தங்கள்‌. சுயநலத்திற்காக எதிர்க்கக்‌ கடமைப்பட்டிருந்தாலும்‌ அதைத்‌ தாங்களே எதிர்ப்பதற்குப்‌ போதுமான தைரியமும்‌ யோக்கியதையும்‌ இல்லாததால்‌, குரங்கு கையில்‌ பூமாலை கிடைத்தது போல்‌, தங்கள்‌ கையில்‌ சிக்கி நசுக்‌ குண்டு கொண்டிருக்கும்‌ காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக்‌ கொண்டு காங்கிரசின்‌ பெயரால்‌ இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ எதிர்க்க வேண்டு மென்று ஒரு பொருளற்ற உத்திரவைப்‌ போட்டுக்‌ கொண்டு வரப்போகும்‌ சட்டசபையில்‌ பல பார்ப்பனரும்‌ அவர்களது சிஷ்ய கோடிகளும்‌ எதிர்க்கப்‌ போகிறார்களாம்‌. இதையறிந்த நமது டாக்டர்‌ வரத ராஜுலு நாயுடுகார்‌ அவர்கள்‌ வீர கர்ச்சனை முழங்கியுள்ளார்‌. அதாவது:- “இப்பொழுது சட்டசபையில்‌ வரப்போகும்‌ சீர்திருத்தம்‌ பெற்ற இந்து மத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம்‌ அரசியல்‌ கட்சிப்‌ பிரச்சினை அல்ல. ஸ்ரீமான்‌ ஆர்‌.கே.ஷண்முகம்‌ செட்டியார்‌ உள்பட காங்கிரஸ்காரர்கள்‌ இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள்‌. மசோதாவை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்ட சபைக்குப்‌ போய்‌ எதிர்ப்பது இம்மாகாணத்தில்‌ காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும்‌. ஆதலால்‌ சட்டசபையிலுள்ள சுயராஜ்யக்‌ கட்சி சட்டசபை அங்கத்தவர்கள்‌ கண்டிப்பாய்‌ இது விஷயத்தில்‌ நடுநிலைமை வகிக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுகிறேன்‌. அரசியல்‌ வேற்றுமை இருந்‌ தாலும்‌ சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய்‌ நான்‌ ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்‌”. “அதாவது, வெளியிடப்பட்டிருக்கும்‌ இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனல்லாதாரும்‌ முழு மனதுடன்‌ ஆதரிக்‌ கிறார்கள்‌.மசோதாவுக்கு விரோதமாய்‌ செய்யப்படும்‌ கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால்‌ நடத்தப்படும்‌ பொய்க்‌ கிளர்ச்சியாகும்‌. இது விஷயமாய்‌ அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்க வும்‌ தயாராயிருக்கிறேன்‌” என்று பார்ப்பனருக்கும்‌ அரசாங்கத்திற்கும்‌ தந்தி கொடுத்திருக்கிறார்‌. ஆனால்‌ இதற்கு மேல்‌ ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ என்ன செய்யப்‌ போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும்‌ இதை நாம்‌ முழு குடி அரசு - 1926 (2) 136 மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய்‌ ஆதரிக்கவும்‌ செய்கிறோம்‌. இப்பார்ப்பனர்களின்‌ கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத்‌ தீவிர தேசீயவாதிகளை ஜஸ்டிஸ்‌ கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திர மில்லாமல்‌ சர்க்காரோடும்‌ ஒத்துழைக்கச்‌ செய்கிறது. இனியும்‌ நமது பார்ப்‌ பனர்களின்‌ சூழ்ச்சியும்‌ கொடுமையும்‌ வெளியாக வெளியாக இன்னமும்‌ என்னென்ன செய்யச்‌ சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால்‌ நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான்‌ அறிவாள்‌. குடி அரசு - கட்டுரை - 15.08.1926 137 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. முறியழுக்கப்பட்டவர்களுக்கு ‘Uid B mail’dn நற்சாகூஷிப்‌ பத்திரம்‌ சென்னைத்‌ தேர்தல்களில்‌ பார்ப்பனரல்லாத கட்சியாருக்கு வெற்றி ஏற்பட்டதைப்‌ பற்றி “மித்திரன்‌” தன்னை திருப்தி செய்து கொள்ளுகையில்‌ சென்னை வெற்றி பார்ப்பனரல்லாத கட்சியான ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு வெற்றி யல்லவென்றும்‌, ஜஸ்டிஸ்‌ அபேட்சகர்களான கனவான்கள்‌ அந்தந்த பேட்டை ஓட்டர்களுக்குச்‌ செய்த சேவையினாலேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்த தென்றும்‌ சொல்லுகிறான்‌. இதிலிருந்தே பார்ப்பனக்‌ கட்சியான சுய ராஜ்யக்‌ கட்சியாரின்‌ சார்பாய்‌ நிறுத்தப்பட்ட அபேட்சகர்களை ஓட்டர்‌ கள்‌ மதிக்க வில்லை என்றும்‌ இவர்கள்‌ நன்மை செய்வார்கள்‌ என்று ஓட்டர்கள்‌ நினைக்கவில்லை என்றும்‌ ஏற்படுகிறது. இதைப்‌ பார்க்கும்‌ போது, ஐயோ பாவம்‌! நமது ஸ்ரீமான்‌ ஒத்தக்காசு செட்டியாரை இப்பார்ப்பனர்கள்‌ பழைய குரோதத்தை மனதில்‌ வைத்துக்கொண்டு எந்தெந்த விதத்தில்‌ கெடுத்து விட்டார்கள்‌ - கெடுத்து வருகிறார்கள்‌ என்பதை நினைக்கும்‌ போது செட்டி யார்‌ பேரில்‌ அளவு கடந்த பரிதாபமேற்படுகிறது. ஸ்ரீமான்‌ செட்டியாரின்‌ மான நஷ்ட வழக்கில்‌ செட்டியார்‌ மானம்‌ ஒத்தக்காசுதான்‌ பெறும்‌ என்று தீர்ப்பு வாங்கிக்‌ கொடுத்து விட்டார்கள்‌. ஸ்ரீமான்‌ செட்டியார்‌ தனது பேராசையினிமித்தம்‌ தனது பட்டத்தையும்‌ விட்டுஏமாறினார்‌ என்கிற பெயர்‌ வாங்கிக்‌ கொடுத்து, பட்டத்தையும்‌ பிடுங்கி விட்டார்கள்‌. போதாக்‌ குறைக்கு சென்னைத்‌ தேர்தலில்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌. தோல்வியுற்றதற்குக்‌ காரணம்‌ ஓட்டர்களுக்கு செட்டியாரிடத்தில்‌, தங்க ளுக்கு நன்மை செய்வார்‌ என்கிற நம்பிக்கையில்லாததால்தான்‌ ஓட்டுக்‌ கிடைக்க வில்லை என்று சொல்லிவிட்டார்கள்‌. ஸ்ரீமான்‌ செட்டியார்‌ வெற்றி பெற்றிருந்தால்‌ அது செட்டியாரின்‌ நல்ல குணத்திற்கு அல்லவென்றும்‌. சுயராஜ்யக்‌ கட்சியாரிடத்தில்‌ ஜனங்களுக்குள்ள மதிப்பு என்றும்‌ சொல்லிக்‌ கொள்ளுவார்கள்‌. ஸ்ரீமான்‌ செட்டியார்‌ தோற்றதால்‌ அது சுயராஜ்யக்‌ கட்சிக்கு ஜனங்களிடத்தில்‌ உள்ள வெறுப்பும்‌ அவநம்பிக்கையும்‌ அல்ல வென்றும்‌. செட்டி யாரிடத்தில்‌ ஜனங்களுக்கு நம்பிக்கையில்லாததால்தான்‌ என்றும்‌. சொல்லி விட்டார்கள்‌.நாளைக்கு சென்னை சட்டசபைத்‌ தேர்தலில்‌ செட்டியார்‌. அவர்கள்‌ அநேகமாய்த்‌ தோற்றுப்‌ போகலாம்‌. அப்போது செட்டியாரைப்‌ பற்றி என்ன சொல்லுவதற்குத்‌ தயாராயிருக்கிறார்களோ தெரியவில்லை. குடி அரசு - 1926 (2) 138 எப்படியாவது நமது ஸ்ரீமான்‌ செட்டியாருக்கு நாள்‌ கழிந்தால்‌ போதும்‌; யார்‌ என்ன சொன்னாலும்‌ கவலை இல்லை போல்‌ இருக்கிறது. செட்டியாரின்‌ பரிதாப நிலைக்கு நாம்‌ மிகுதியும்‌ இரங்குகிறோம்‌! குடி அரசு - கட்டுரை - 15.08.1926 139 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. உஷார்‌ 12 apmii!! உஷார்‌!!! இந்தியாவின்‌ நன்மையின்‌ பொருட்டும்‌ மக்களின்‌ சம உரிமையின்‌ பொருட்டும்‌ மகாத்மா காந்தியால்‌ ஏற்படுத்தப்பட்ட நிர்மாணத்‌ திட்டமும்‌ பகிஷ்காரத்‌ திட்டமும்‌ கொண்ட ஒத்துழையாமையை காங்கிரசின்‌ மூலம்‌ நடத்தப்பட்டு வந்த காலத்தில்‌ நாட்டில்‌ சுயநலம்‌ படைத்த பார்ப்பனர்களும்‌ ஆங்கிலம்‌ படித்த அடிமைகளும்‌ தவிர மற்றவர்களுக்குள்‌ ஒற்றுமையும்‌ நம்பிக்கையும்‌ கூடிய வரையில்‌ கட்டுப்பாடும்‌ இருந்து வந்தது என்பதை யாரும்‌ மறுக்கமாட்டார்கள்‌. அதற்கு முன்‌ இருந்து வந்த வகுப்பு உணர்ச்சி களுக்கும்‌, வகுப்புத்‌ தந்திரங்களுக்குங்கூட பலம்‌ குறைந்திருந்தது என்பதை யும்‌ யாரும்‌ மறுக்க மாட்டார்கள்‌. அவ்விதமிருந்த தேசத்தை, அது முன்னேறி நிர்மாணத்‌ திட்டமும்‌ பகிஷ்காரத்‌ திட்டமும்‌ வெற்றி பெற்று மக்கள்‌ சமத்துவமும்‌ சுதந்திரமும்‌ அடைந்து விட்டால்‌ “வாழ முடியாத” வகுப்பார்களாகிய வஞ்சகப்‌ பார்ப்‌ பனர்களும்‌ ஆங்கிலம்‌ படித்த அடிமைகளும்‌ இவற்றை எதிர்த்துப்‌ பலவித சூழ்ச்சிகளால்‌ கூடவே இருந்து குடியைக்‌ கெடுத்து தேசத்தின்‌ மக்களை பழய படி உயர்வு தாழ்வு வித்தியாசத்திலும்‌ அடிமை வாழ்வில்‌ பிழைக்க வேண்‌ டிய அவசியத்திலும்‌ கொண்டுவந்து விட்டு விட்டார்கள்‌. இதன்‌ பலனாய்‌ இப்போது தேசத்தில்‌ எங்கு பார்த்தாலும்‌ பழயபடி வகுப்பு உணர்ச்சிகள்‌. பெருகி, ஒவ்வொரு வகுப்பாரும்‌ தங்கள்‌ தங்கள்‌ சுயமரியாதையையே சுதந்‌ திரம்‌ என்பதாகக்‌ கொண்டு, தங்கள்‌ தங்கள்‌ முன்னேற்றத்திற்குப்‌ பாடுபடு கிறார்கள்‌. இப்படிப்‌ பாடுபடுவதானது சாது ஜனங்களை ஏமாற்றி ஏற்கனவே பல சுதந்திரங்களும்‌ செளகரியங்களிலும்‌ செய்து வைத்துக்‌ கொண்டிருக்கிற பார்ப்பனர்களுக்கு தங்கள்‌ அதிகாரமும்‌ அதிக சுதந்திரமும்‌ போய்விடுமே என்கிற கவலை ஏற்பட்டு, பொதுமக்கள்‌ அடையும்‌ சமத்துவத்திற்கும்‌ முற்‌ போக்கிற்கும்‌ முட்டுக்கட்டையாய்‌ இருக்க வேண்டியது. (நமது பார்ப்பனர்‌. களின்‌ வேதக்‌ கடமையாய்ப்‌ போய்விட்டது. இதற்காக ஆங்காங்குள்ள பார்ப்பனர்கள்‌ ஒன்று கூடி எவ்வளவோ சூழ்ச்சிகளும்‌ பகீரதப்‌ பிரயத்‌ தனங்களும்‌ செய்து பார்க்கிறார்கள்‌. உதாரணமாக வர்ணாசிரம சபை, இந்து மகாசபை, சங்கதன்‌ சுத்தி, சுயராஜ்யக்‌ கக்ஷி, பெங்கால்‌ பேக்ட்‌, இந்தி பாஷை, இரட்டை ஆக்ஷியை ஒழித்தல்‌ ஆகிய இவ்வளவு இயக்கங்களும்‌ பார்ப்பன குடி அரசு - 1926 (2) 140 ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும்‌ ஆங்கிலம்‌ படித்த ஒரு சிலர்‌ வயிறு வளர்க்‌ கவும்‌ பொதுமக்கள்‌ சமத்துவமும்‌ சுயமரியாதையும்‌ பெறுவதையும்‌ பிற்பட்ட வர்கள்‌, தாழ்த்தப்பட்டவர்கள்‌, ஒதுக்கப்பட்டவர்கள்‌ ஆகியவர்கள்‌ விடுதலை பெற்று முன்னேறுவதைத்‌ தடுக்கவும்‌, முட்டுக்கட்டை போடவுமே ஏற்படுத்‌ திக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. ஆனாலும்‌ இப்போது வர வர பாமர ஜனங்கள்‌. இவைகளை உணர்ந்து, இப்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சி வலையில்‌ சிக்காமலும்‌, சிக்கினவர்களும்‌ சூழ்ச்சியறிந்து வெளிவருவதாலும்‌ நமது பார்ப்பனர்களுக்கு இதுவரையில்‌ ஏற்பட்டிருந்த கவலையை விட இப்போது கொஞ்சம்‌ அதிகமான கவலை ஏற்பட்டு இதற்கு வழி தேடுகிறார்கள்‌. தற்காலம்‌ நமது நாட்டில்‌ பார்ப்பனர்கள்‌ ஆதிக்கத்தில்‌ இருக்கும்‌ எவ்வித ஸ்தாபனங்களுக்கும்‌ பாமர ஜனங்களிடையில்‌ மதிப்பில்லாமல்‌ போய்‌ விட்டபடியால்‌, புதிதாய்‌ ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி அதன்‌ மூலம்‌ ஜனங்களை மயக்க நமது பார்ப்பனர்கள்‌ புதியதொரு தந்திரம்‌ கண்டு பிடித்திருக்கிறார்கள்‌. அது என்ன வென்றால்‌, “தேசீய ஒற்றுமைச்‌ சங்கம்‌” என்பதாக ஒன்றைப்‌ புதிதாகத்‌ தாங்களே சிருஷ்டித்து அதில்‌ இரண்டொரு ராஜீய விளம்பரக்காரர்களிடம்‌ கையெழுத்து வாங்கி தாங்களும்‌ கையெழுத்திட்டு இன்னும்‌ பல சுயநலத்திற்காக எதையும்‌ தியாகம்‌ செய்யத்தக்க “தியாக புருஷர்களின்‌?” கையெழுத்தையும்‌ வாங்கப்‌ போகிறார்கள்‌. இந்து மகாசபை போலவே இச்சங்கத்தை ஒவ்வொரு ஊரிலும்‌ ஸ்தா பிப்பார்கள்‌. அதில்‌ வகுப்பு நலன்‌ நாடுபவர்கள்‌ யாவரும்‌ சேர்த்துக்‌ கொள்‌: ளப்‌ படமாட்டார்களாம்‌.இது ஒரு புதிய தந்திரமென்றே சொல்லுவோம்‌. தமிழ்நாடு சார்பாய்‌, ஸ்ரீமான்கள்‌ சீனிவாச சாஸ்திரிகளும்‌ சீனிவாசய்‌ யங்காரும்‌ கையெழுத்திட்டிருக்கிறார்களாம்‌. இந்த இரண்டு பெரியார்களும்‌ வகுப்பு உணர்ச்சியே இல்லாதவர்கள்‌ போலும்‌! சமத்துவமே ஒரு உருவாய்‌ வந்தவர்கள்‌ போலும்‌! இருவர்களும்‌ மகாத்மாவையும்‌ ஒத்துழையாமையை யும்‌ ஒழித்ததற்குக்‌ கொஞ்சங்‌ குறைய முழுப்‌ பொறுப்பாளிகள்‌. பண்டித மாள வியா அவர்களும்‌ இதில்‌ சேர்ந்து விட்டால்‌ மூவரும்‌ முழுப்‌ பொறுப்‌ பாளிகளாய்‌ விடுவார்கள்‌. இந்த சிகாமணிகள்‌ தேச நன்மைக்குப்‌ பாடுபடுகிறவர்களாம்‌. இந்தியா வின்‌ முட்டாள்‌ தனத்தாலும்‌, அடிமைத்‌ தனத்தாலும்‌ அன்னியர்க ளுக்கு ஒற்றர்களாயிருப்பதாலுமே வாழ வேண்டிய இந்த “பிரபுக்கள்‌” - இந்தியா சமத்துவமும்‌ சுதந்திரமும்‌ அடைந்த உடன்‌ இந்த நாட்டை விட்டு ஓடவோ அல்லது இந்தியாவிற்கு வேற்றரசரைக்‌ கூட்டி வரவோ வேண்டிய அவசிய முள்ள இந்த “வீரர்கள்‌” இந்தியாவின்‌ நன்மையை நாடுவதற்கு எப்படி அருகர்‌ களாவார்கள்‌? இவர்கள்‌ எப்படி நம்முடைய பிரதிநிதிகள்‌ என்று சொல்லிக்‌ கொள்ள யோக்கியதை உடையவர்கள்‌ ஆவார்கள்‌? ராஜீய - மத - வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களே இதில்‌ சேரக்கூடாது என்று சொல்லி ஒரு சங்கம்‌ ஸ்தாபித்தால்‌, அதில்‌ யார்‌ போய்ச்‌ சேரக்கூடும்‌? ராஜ்ஜியத்தை 141 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அன்னியனுக்குக்‌ காட்டிக்‌ கொடுக்கத்‌ தயாராயிருக்கிறவனும்‌, மதம்‌ இல்லாத வனும்‌, தான்‌ எந்த வகுப்பு என்று தெரிந்து கொள்ள முடியாதவனும்‌ அல்லா மல்‌ வேறு யாராவது இந்த சங்கத்தில்‌ சேரக்கூடுமா என்பது நமக்கு விளங்க வில்லை. மனிதனாய்ப்‌ பிறந்த ஒருவன்‌ தனது தேசாபிமானம்‌ இல்லாமல்‌ எப்படி இருக்க முடியும்‌? அது போலவே தனது மதாபிமானமும்‌ குலாபி மானமும்‌ இல்லாமல்‌ எப்படி இருக்க முடியும்‌? இம்‌ மூன்றையும்‌ விட்டுவிட்டு இப்பார்ப்பனர்களிடம்‌ வந்து ஒருவன்‌ அனுபவிக்கப்‌ போகிற லாபம்‌ என்ன?' இச்சங்கம்‌ என்பது தற்காலம்‌ ஒவ்வொரு மதஸ்தர்களுக்கும்‌ ஒவ்வொரு வகுப்பாருக்கும்‌ ஏற்பட்டிருக்கும்‌ சுயமரியாதை உணர்ச்சியைக்‌ கொல்ல ஏற்‌ பட்ட சங்கமே அல்லாமல்‌ வேறல்லவென்றே கூறுவோம்‌. ஆதலால்‌ நமது முஸ்லீம்‌ சகோதரர்களே! கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்களே! இம்‌ மாய்கையில்‌ சிக்கிக்‌ கொள்ளாமல்‌ உஷாராயிருக்க வேண்டும்‌ . இந்து மகாசபையை எப்படித்‌ தமிழ்நாட்டிற்குள்‌ நுழைய விடாமல்‌ மண்டையிலடித்து ஒழித்தோமோ, அதுபோலவே இத்‌ தேசீய ஐக்கியச்‌ சங்கம்‌ என்னும்‌ பார்ப்பன அயோக்கியச்‌ சங்கத்தைத்‌ தமிழ்நாட்‌ டிற்குள்‌ நுழைய விடாமல்‌ வாசற்படியிலேயே அடித்துக்கொல்ல வேண்டும்‌. இது சமயம்‌ தமிழ்‌ மக்களின்‌ தலையெழுத்து எவ்வளவு மானக்‌ கேடானதாகவும்‌ இழிவானதாகவும்‌ இருக்கிறது என்பதை சற்று நிதானமாய்க்‌ கவனித்துப்‌ பாருங்கள்‌. கோடிக்கணக்கான தமிழ்‌ மக்களுக்கு தலைவர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுபவர்கள்‌ யார்‌? ஸ்ரீமான்களான எஸ்‌. சத்திய மூர்த்தி அய்யர்‌.எ.ரெங்கசாமி அய்யங்கார்‌, எம்‌.கே.ஆச்சாரியார்‌, எஸ்‌.சீனி வாசய்யங்‌ கார்‌, வி.எஸ்‌.சீனிவாச சாஸ்திரிகள்‌ முதலிய பார்ப்பனர்களே. இவர்களுக்கும்‌ நமக்கும்‌ என்ன சம்பந்தம்‌? இவர்கள்‌ பிறப்பு என்ன? இவர்‌ கள்‌ ஒழுக்கம்‌ என்ன? இவர்கள்‌ வளர்ப்பு என்ன? இவர்கள்‌ ஜீவனம்‌ என்ன? எந்த வகையில்‌ இப்பொழுது மனிதர்களாய்‌ வாழ்கிறார்கள்‌? என்ன எண்‌ ணத்தின்மேல்‌ நமக்கு இவர்கள்‌ தலைவர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளு கிறார்கள்‌? நமக்குத்‌ தலைவர்களாய்‌ இருக்க இவர்களுக்கு என்ன பாத்திய தையும்‌ யோக்கியதையும்‌ இருக்கிறது? பிச்சைக்கு வந்தவன்‌ பெண்டுக்கு மாப்பிள்ளையானது போல்‌ நமது நாட்டைக்‌ காட்டிக்‌ கொடுத்ததல்லாமல்‌, அரசையும்‌ போக போக்கியத்தையும்‌ பாழாக்கியதல்லாமல்‌ நமது சுயமரியா தையை அடியோடு துலைத்ததல்லாமல்‌, நமக்குள்‌ ஒற்றுமைக்கே மார்க்கமில்‌ லாமல்‌ செய்ததோடல்லாமல்‌, நம்மைத்‌ தாழ்ந்தவர்கள்‌, தெருவில்‌ நடக்கக்‌ கூடாதவர்கள்‌ கண்ணில்‌ பார்க்கக்‌ கூடாதவர்கள்‌ , கூடப்‌ பேசக்‌ கூடாதவர்கள்‌, சுவாமியினிடம்‌ போகக்‌ கூடாதவர்கள்‌, கோயிலுக்குள்‌ நுழையக்‌ கூடாதவர்‌. கள்‌, தீண்டப்படாதவர்கள்‌, தாசி மக்கள்‌, வேசி மக்கள்‌, தங்கள்‌ வைப்பாட்டி மக்கள்‌, சண்டாளர்கள்‌ என இப்படிப்‌ பல மாதிரியாக ஆக்கி வைத்துக்‌ கொண்டதோடல்லாமல்‌ இன்னமும்‌ நம்மைக்‌ கெடுத்து “நமது இரத்தத்தை” உறிஞ்சிக்கொண்டிருக்கும்‌ இந்தக்‌ கூட்டம்‌ கொஞ்சமேனும்‌ அச்சமும்‌ நாணமும்‌ இல்லாமல்‌ இனியும்‌ நமக்குத்‌ தலைவர்கள்‌ என்று சொல்லிக்‌ குடி அரசு - 1926 (2) 142. கொள்ளவும்‌ நாம்‌ இவற்றைப்‌ பொறுத்துக்‌ கொள்ளவும்‌ இருப்பதென்றால்‌, நமக்கு அறிவு உணர்ச்சி ஆண்மை ரத்தம்‌ இருக்கிறதா என்றுதான்‌ கேட்கி றோம்‌. ஆதலால்‌ இந்து முஸ்லீம்‌ கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனப்‌ பூண்டு கலந்த எந்தச்‌ சங்க மானாலும்‌ எந்த ஸ்தாபனமானாலும்‌ அதைத்‌ திரும்பிக்கூடப்‌ பார்க்காதீர்கள்‌! மோக்ஷமானாலும்‌ சரி நரகமானாலும்‌ சரி, உங்கள்‌ காலைக்‌ கொண்டு நீங்கள்‌ நில்லுங்கள்‌. உங்களிடம்‌ பார்ப்பனர்கள்‌ உங்களை தங்களோடு சேரும்‌ படிக்கோ அல்லது தங்களை உங்களுடன்‌ சேர்த்துக்‌ கொள்ளும்‌ படிக்கோ வந்து கேட்பார்களேயானால்‌ முதலாவதாக இந்து மகாசபையையும்‌ வர்ணா சிரம சபையையும்‌ ஒழித்துக்‌ கதவடைத்து விட்டு வரச்சொல்லுங்கள்‌! தாங்கள்‌ கடவுளின்‌ முகத்திலிருந்து பிறந்தவர்கள்‌, உயர்ந்தவர்கள்‌ என்றும்‌, நாம்‌ அவர்கள்‌ வைப்பாட்டி மக்கள்‌, தாழ்ந்தவர்கள்‌, அடிமைகள்‌ என்று சொல்லும்‌ சாஸ்திரங்களையும்‌ ஆதாரங்களையும்‌ நெருப்பில்‌ போட்டுப்‌ பொசுக்கி சாம்பலாக்கி விட்டு வரச்‌ சொல்லுங்கள்‌! அதை யாராவது இனிமேல்‌ வைத்திருந்தால்‌ அவர்களைக்‌ கழுவிலேற்‌ றுவது என்றும்‌ தூக்கில்‌ போடுவது என்றும்‌ சட்டம்‌ செய்து கொண்டு வரும்‌ படி சொல்லுங்கள்‌! ஒரு காலத்தில்‌ அவர்கள்‌ நம்மை இப்படிச்‌ செய்துதான்‌, அதாவது நம்முடைய பழைய ஆதாரங்களையும்‌ நமது பெருமைகளையும்‌ கூறும்‌ நூல்களைப்‌ பொசுக்கி அவர்களுக்கு சாதகமாகப்‌ பலவித சட்டங்‌ களைச்‌ செய்து நம்மை இவ்விழிந்த நிலைக்குக்‌ கொண்டு வந்து விட்டு தாங்‌ கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்று சொல்லும்படி செய்து கொண்டார்கள்‌. நாம்‌ அப்படிச்‌ செய்யவில்லை. ஆனால்‌ நாம்‌ கேட்பது என்ன? சமத்துவமாக இருக்கச்‌ சொல்லுகிறோம்‌. “நீயும்‌ சரி நானும்‌ சரி, இருவ ருக்கும்‌ சம உரிமை உண்டு” என்றுதான்‌ சொல்லும்படி கேட்கிறோம்‌. இந்து முஸ்லீம்‌ கிறிஸ்துவ சகோதரர்களே! நல்ல சமயத்தைக்‌ கைவிட்டு விடாதீர்கள்‌! பார்ப்பனரின்‌ பசப்பு வார்த்தையில்‌ ஏமாந்து விடாதீர்கள்‌! உங்கள்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள இத்தருணம்‌ தப்பினால்‌ இனி எத்தருணமும்‌ வாய்க்காது! இதுதான்‌ சமயம்‌! மகாத்மா காந்தியை நினையுங்கள்‌! மறுபடியும்‌ அவரை உங்களது தலைவராயிருந்து இழிதன்மையையும்‌ தாழ்மை நிலைமையையும்‌ அடிமைத்தனத்தையும்‌ போக்கிச்‌ சுயமரியாதையையும்‌ சமத்துவத்தையும்‌ விடுதலையையும்‌ சம்பாதித்துக்‌ கொடுக்கச்‌ சொல்லுங்கள்‌! இவைகளுக்காக உங்கள்‌ உடல்‌, பொருள்‌, ஆவி மூன்றையும்‌ தத்தம்‌ செய்யத்‌ தயாராயிருக்கிறோம்‌ என்று உங்கள்‌ சுத்தமான இரத்தத்தினால்‌ பேனாவைத்‌ துவைத்து உறுதி மொழிக்‌ கையெழுத்திட்ட விண்ணப்பம்‌ அனுப்புங்கள்‌! வருவார்‌! வருவார்‌! வருவார்‌!!! வந்து வினை தீர்ப்பார்‌!!! குடி அரசு - தலையங்கம்‌ - 15.08.1926 142 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 €ேவஸ்தானச்‌ சட்டம்‌ யார்ப்மணர்‌ குட்டு வவணியாய்‌ விட்டது அதிகார துஷ்பிரயோகம்‌ வசய்வது நாமா? யார்ப்பணர்கணா?' டாக்டர்‌ வாதரானுனு நாயு௫காரும்‌ ஆர்‌.கே.ஷண்முகம்‌ கட்ழுயாரும்‌ கங்கள்‌ வாக்கை நிறைவேற்றுவார்களா? சென்னை இந்து பரிபாலன மசோதாவானது தற்காலம்‌ நமது நாட்டில்‌ அரசியல்‌ விஷயமாகவோ பொது நன்மை தீமை என்கிற விஷயமாகவோ கருதப்படாமல்‌ பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்கிற விஷயமாய்க்‌ கருதப்‌ பட்டு வருகிறது என்பது எல்லோரும்‌ அறிந்த விஷயம்‌. அல்லாமலும்‌ அம்‌ மசோதாவைப்‌ பற்றிக்‌ கண்டபடி தூற்றி வரும்‌ பார்ப்பனர்களும்‌ அவர்களது பத்திரிகைகளும்‌ நாளது வரையில்‌ அதிலுள்ள ஒரு சிறு கெடுதியையாவது பொது ஜனங்களுக்கு எடுத்துக்‌ காட்டியவர்கள்‌ அல்ல. சுயராஜ்யம்‌ என்றும்‌ சர்க்காருடன்‌ போராடுவதென்றும்‌ பொய்யும்‌ புளுகும்‌ சொல்லி கேப்பமாரித்‌ தனம்‌ செய்து அரசியல்‌ விஷயத்தில்‌ ஆதிக்கம்‌ பெற்று எப்படி தங்களுக்கும்‌ தங்கள்‌ இனத்தாருக்கும்‌ உத்தியோகமும்‌ ஆதிக்கமும்‌ சம்பாதித்துக்‌ கொள்ளு கிறார்களோ அதுபோலவே இந்த மசோதா விஷயத்திலும்‌ வேண்டு மென்றே மனப்பூர்த்தியாய்‌ “மதம்‌ போச்சு”, “தெய்வம்‌ போச்சு”, “இந்து மதத்தில்‌ அரசாங்கத்தார்‌ புகுந்துவிட்டார்கள்‌”, “அநியாயமாய்ப்‌ புது வரி போடப்‌ போகிறார்கள்‌”, “நமது இந்துமத தர்ம சொத்துக்களை சர்க்காரார்‌ எடுத்துக்‌ கொள்ளப்‌ போகிறார்கள்‌” “மகமதியருக்கும்‌ கிறிஸ்துவர்களுக்கும்‌ கொடுக்‌ கப்‌ போகிறார்கள்‌”, “அவர்களுக்குப்‌ படிப்புச்‌ சொல்லிக்‌ கொடுக்கும்‌ பள்ளிக்‌ கூடத்திற்கும்‌, ரோட்டிற்கும்‌, முனிசிபாலிட்டிக்கும்‌ உபயோகப்‌ படுத்தப்‌ போகிறார்கள்‌” என்றும்‌, இன்னமும்‌ எத்தனையோ விதமாய்‌ அயோக்கியத்‌ தனமானதும்‌ இழிவானதுமான பல பொய்‌ வார்த்தைகளைச்‌ சொல்லி பாமர: ஜனங்களை ஏமாற்றி அம்‌ மசோதாவை ஒழித்துத்‌ தங்கள்‌ பிழைப்புக்கு வழி குடி அரசு - 1926 (2) 144 தேடிக்கொள்ளப்‌ பார்க்கிறார்கள்‌. இது விஷயமாய்‌ நாம்‌ ஒரு பந்தயம்‌ கூறுகிறோம்‌. அதாவது இந்து மத சம்பந்தமான இனாம்களைக்‌ குறித்த 1923 -ம்‌ வருஷத்திய சென்னப்‌ பட்டணத்து ஆக்டு என்று சொல்லப்படும்‌ பிரஸ்தாப சட்டத்தில்‌ 9- அத்தியாயங்களும்‌ அவைகளில்‌ மொத்தம்‌ 81- பிரிவுகளும்‌ (செக்ஷன்‌ களும்‌! 3- ஷெடியூல்களும்‌ இருக்கின்றன. இவைகளில்‌ எந்தப்‌ பிரிவின்‌ படி நமது மதங்களிலோ தர்மங்களிலோ கோயில்களிலோ வரும்படி களிலோ தர்மச்‌ சொத்துக்களிலோ இது வரையில்‌ இல்லாத மாதிரி சர்க்கார்‌ பிரவேசிக்கிறார்கள்‌' என்றாவது, வேறு மதத்தினர்களின்‌ உபயோகத்திற்கு நமது தர்மச்‌ சொத்தை செலவழிக்கிறார்கள்‌ என்றாவது, முனிசிபாலிட்டிக்கோ அல்லது சர்க்காருக்கோ இந்த வரும்படியைக்‌ கொடுக்கலாம்‌ என்றாவது அல்லது எந்தப்‌ பிரிவின்படி புதுவரி ஜனங்களுக்குப்‌ போட இடமிருக்கிறது என்றாவது, மற்றும்‌ இந்து மதத்திற்கோ சமூகத்திற்கோ கோயில்‌, குளம்‌, தெய்வம்‌ முதலியவைகளுக்கோ ஆபத்து வரக்‌ கூடியதாய்‌ இருக்கிறது என்றாவது எவரேனும்‌ காட்டுவார்களேயானால்‌, இந்தப்பார்ப்பனர்களை நாம்‌ நமது தலைவர்கள்‌ என்றும்‌, இந்த மசோதாவை ஒழிப்பதற்கு நாமும்‌ சேர்ந்து பாடுபடத்‌ தயாராயிருக்கிறோம்‌ என்றும்‌ உறுதி கூறுகிறோம்‌. இல்லா தவரை: இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ இனிமேல்‌ நமக்காவது நமது நாட்டுக்காவது தலைவர்கள்‌ என்று சொல்லிக்கொள்ளும்‌ அல்பத்தனத்தை விட்டுவிடு கிறார்களா என்று கேட்கிறோம்‌. தவிரவும்‌ ராஜீய விஷயத்தில்‌ தேவஸ்தான மசோதாவைப்‌ பற்றியும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ விஷயத்தைப்‌ பற்றியும்‌ பேசக்‌ கூடாது என்று இதுவரை சொல்லி வந்து விட்டு சந்தர்ப்பம்‌ வந்த உடன்‌ தேவஸ்தான விஷ யத்தை ராஜீயத்‌ திட்டத்தில்‌ சேர்த்துக்‌ கொண்டு சுயராஜ்யக்‌ கட்சியாருக்கு சட்டசபைக்குப்‌ போய்‌ தேவஸ்தான மசோதாவை எதிர்க்க வேண்டும்‌ என்று ஸ்ரீமான்‌ ரெங்கசாமி அய்யங்கார்‌ சுற்று உத்திரவு அனுப்பக்‌ காரணம்‌ என்ன? சுயராஜ்யக்‌ கட்சி என்றால்‌ பார்ப்பனர்‌ கட்சி, பார்ப்பனர்‌ கட்சி என்று இதுவரை சாற்றி வந்தோம்‌. இதை சில நண்பர்கள்‌ விரும்பவில்லை என்பதாகக்‌ காட்டி வந்தார்கள்‌. இப்போது சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனர்‌ கட்சிக்‌ கூட அல்ல, ஆனால்‌ சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனரின்‌ குலாம்‌ கட்சி என்றே சொல்லுவோம்‌. தேவஸ்தான மசோதா, வரப்போகும்‌ சென்னை சட்டசபைக்‌ கூட்டத்‌ திற்கு வரப்போவதாய்‌ சுமார்‌ ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சுயராஜ்யக்‌ கட்சிக்கு நன்றாய்த்‌ தெரியும்‌. அப்படி இருக்க அதை எதிர்ப்பதற்காக சட்டசபைக்கு சுயராஜ்யக்‌ கட்சியார்‌ போவதா இல்லையா என்பதாக ஸ்பெஷல்‌ கமிட்டியை கேட்க காங்கிரஸ்காரியதரிசியாகிய ஸ்ரீமான்‌ எ. ரெங்க சாமி அய்யங்காருக்குப்‌ போதுமான சாவகாசமிருந்தது: இன்னமும்‌ இருக்‌ கிறது. இப்படியிருக்க தங்கள்‌ கட்சியைச்‌ சேர்ந்த இரண்டொரு அடிமை 145 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. களிடமிருந்து கடிதம்‌ வந்ததாகப்‌ பெயர்‌ வைத்துக்‌ கொண்டு, அதுவும்‌ மடாதிபதிகளிடம்‌ பொறுக்கித்‌ தின்பவர்களிடமிருந்து கடிதம்‌ வந்ததாகப்‌ பெயர்‌ வைத்துக்கொண்டு அதன்‌ பேரில்‌ காங்கிரஸ்‌ காரியதரிசியாயிருக்கும்‌ ஒரு பார்ப்பனரான ஸ்ரீமான்‌ எ. ரெங்கசாமி அய்யங்கார்‌. சுயராஜ்யக்‌ கட்சி “ஆக்டிங்‌ தலைவராயிருக்கும்‌” மற்றொரு பார்ப்பனரான ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனி வாசய்யங்காரிடம்‌ யோசனை செய்ததாகவும்‌, தேவஸ்தான மசோதா 69-வது பிரிவுப்படி ஜனங்களுக்கு அதிக வரி போட இடந்தருவதாகவும்‌, ஆதலால்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ போய்‌ இதைத்‌ தடுக்க வேண்டியதென்றும்‌, இது முக்கியமான விஷயமானதால்‌ இதற்காக நியமித்த ஸ்பெஷல்‌ கமிட்டியை அனுமதி கேட்க வேண்டியதுகூட அவசியமில்லை என்றும்‌ இவர்கள்‌. தீர்மானித்து விட்டு தாங்களே உத்திரவு கொடுத்திருப்பதாயும்‌ சுயராஜ்யக்‌ கட்சி சட்டசபை மெம்பர்களுக்கு ஒரு சுற்று உத்திரவு அனுப்பப்பட்டிருக்‌ கிறது. இதிலிருந்து காங்கிரஸ்‌ பார்ப்பனர்களுடையது என்றும்‌, பார்ப்பன ராஜ்யத்திற்குத்‌ தான்‌ காங்கிரஸ்‌ உபயோகப்பட்டு வருகிறதென்றும்‌, பார்ப்‌ பனர்கள்‌ தங்களுக்குக்‌ கிடைத்த அதிகாரத்தைப்‌ பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய்‌ துஷ்பிரயோகம்‌ செய்கிறார்கள்‌ என்றும்‌, காங்கிரஸ்‌ பொது காங்கிரஸ்‌ என்று சொல்லிப்‌ பாமரர்களை ஏமாற்றவே அதில்‌ சில பார்ப்பன ரல்லாதார்‌ பெயர்களையும்‌ சேர்த்துக்‌ கொள்ளப்பட்டிருக்கிறது என்றும்‌, சில பார்ப்பனரல்லாத கனவான்களும்‌ இந்த அக்கிரமங்களை அறிந்தே தங்களு டைய பெயரையும்‌ இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ உபயோகப்‌ படுத்திக்கொள்ள சம்மதித்திருக்கிறார்கள்‌ என்றும்‌ எழுதியும்‌ சத்தம்‌ போட்டும்‌ வந்தோம்‌. அது இப்போது வெளிப்படையாய்‌ ௬ுஜுவாகி விட்டதென்றே சொல்லு வோம்‌. பார்ப்பனர்களின்‌ இந்தப்‌ புரட்டுகளை எதிர்பார்த்தே சென்னையில்‌ ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு அவர்களையும்‌ ஆர்‌.கே. ஷண்‌. முகம்‌ செட்டியார்‌ அவர்களையும்‌ நாம்‌ சந்தித்த காலத்தில்‌ தேவஸ்தான மசோதாவைப்‌ பற்றி நமது பார்ப்பனர்கள்‌ இதேமாதிரி செய்வார்களே, அப்போது தாங்கள்‌ என்ன செய்வீர்கள்‌ என்று கேட்டோம்‌. அது சமயம்‌ டாக்டர்‌ நாயுடுகார்‌ அவர்கள்‌ சொன்னதாவது:- எந்தெந்த விஷயங்களில்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்டசபைக்குப்‌ போக லாம்‌ என்கிற விஷயத்தை நிர்ணயிக்கவும்‌, சுயராஜ்யக்‌ கட்சிக்கு சட்ட சபைக்குப்‌ போக அனுமதி கொடுக்கவும்‌ ஏற்பட்ட தனிக்கமிட்டி யில்‌ தானும்‌ ஒரு அங்கத்தினரானதால்‌ தான்‌ இதற்கு உத்திரவு கொடுக்க மாட்டேன்‌ என்றும்‌ அப்படி மீறி அவர்கள்‌ போனால்‌, அந்தக்‌ கமிட்டி யிலிருந்து தான்‌ விலகுவதோடு மட்டும்‌ நில்லாமல்‌ அதற்கு மேல்‌ என்ன. செய்வது என்பது தனக்குத்‌ தெரியும்‌ என்றும்‌ சொன்னார்‌... ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ அவர்கள்‌ சொன்னதாவது:- தேவஸ்தான மசோதா விஷயம்‌ சுயராஜ்யக்‌ கட்சித்‌ திட்டத்தில்‌: ஒன்றாக இப்‌ பார்ப்பனர்கள்‌ கருதி ஏதாவது செய்வார்களேயானால்‌ தான்‌ குடி அரசு - 1926 (2) 146 சுயராஜ்யக்‌ கட்சியில்‌ இருந்து விலகி விடுவதாய்ச்‌ சொன்னார்‌. இவ்விரண்டு கனவான்களும்‌ தங்கள்‌ வாக்கை நிறைவேற்ற வேண்டிய காலம்‌ வந்து விட்டது. என்ன செய்யப்‌ போகிறார்கள்‌ என்பதை தமிழ்மக்கள்‌ ஆவலாய்‌ எதிர்ப்பார்த்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌ என்பது தப்பாகாது. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 15.08.1926. 147 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 முனையி€ைய குறும்புத்தனம்‌ “சென்ற ஞாயிற்றுக்‌ கிழமை மாலை 4 மணிக்கு சென்னை பார்ப்பன ரல்லாத மாணவர்‌, தங்கள்‌ சொந்த பணத்தைக்‌ கொண்டு ராவ்பகதூர்‌ வி. ரெங்க நாதன்‌ செட்டியார்‌ கட்டிய வெங்கடேஸ்வரர்‌ ஹாஸ்டலில்‌, சென்ற கார்ப்ப ரேஷன்‌ தேர்தல்களில்‌ வெற்றி பெற்ற நமது டாக்டர்‌ சிநடேச முதலியார்திரு. பி.டி. குமாரசாமி செட்டியார்‌, பி. ரெங்கநாதஞ்‌ செட்டியார்‌ முதலியவர்‌ களுக்கும்‌ பனகால்‌ ராஜா, மதன கோபால்‌ நாயுடு, ஆரியா முதலியவர்களுக்‌ கும்‌, சென்ற தேர்தல்களில்‌ நமது ஜஸ்டிஸ்‌ கட்சி வெற்றி பெற்றதற்காக சிற்றுண்டி வழங்கினர்‌.90 பேர்‌ இருக்கும்‌ ஹாஸ்டலில்‌ 25 பேர்தான்‌ நம்மவர்‌. அந்தோ! பார்ப்பனரல்லாதாரின்‌ தருமம்‌ இப்படியும்‌ வீணாக வேண்டுமா? அப்படியிருந்தும்‌, அன்று பார்ப்பனப்‌ பிள்ளைகள்‌ நமது தலைவர்களை: அவமானப்படுத்த எண்ணங்கொண்டு, வார்டனிடமும்‌, செட்டியாரிடமும்‌ சென்று இந்த கொண்டாட்டத்தை தடை செய்யச்‌ சொன்னார்கள்‌. அவர்கள்‌ மறுத்து விடவே, ஹாஸ்டலை விட்டு எல்லாப்‌ பார்ப்பன மாணவர்களும்‌ தலைவர்கள்‌ வரும்‌ சமயத்தில்‌ வெளியேறினர்‌. ஆனால்‌ மாலை 8 மணிக்குத்‌ திரும்பி வந்து விட்டனர்‌” என்று ஒரு நிருபர்‌ எழுதியுள்ளார்‌. சென்னையில்‌ பார்ப்பனரல்லாத தலைவர்கள்‌ நகரக்‌ கார்ப்பரேஷன்‌ தேர்தலில்‌ பார்ப்பனரின்‌ பலமான சூழ்கஷிக்கிடையில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியானது சென்னையில்‌ உள்ள பார்ப்பனரல்லாத மாணவர்களுக்‌ கெல்லாம்‌ பெரிய உணர்ச்சியையும்‌ மகிழ்ச்சியையும்‌ உண்டாக்கிவிட்டது. அதன்‌ பலனாக சென்னையில்‌ பார்ப்பனரல்லாத ஒரு தர்மப்‌ பிரபுவான ராவ்‌ பகதூர்‌ வி. ரெங்கநாதம்‌ செட்டியார்‌ அவர்களால்‌ கட்டப்பட்ட வெங்கிடேஸ்‌ வரர்‌ ஹாஸ்ட்டல்‌ என்கிற ஒரு விடுதியில்‌ வசிக்கும்‌ பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும்‌ மகிழ்ச்சி யேற்பட்டு, வெற்றிபெற்ற தலைவர்களுக்குத்‌ தங்கள்‌ மகிழ்ச்சியையும்‌ மரியாதையையும்‌ காட்டிக்‌ கொள்வதற்காக, வெற்றி பெற்ற கனவான்களையும்‌ மற்றும்‌ உள்ள சில தலைவர்களையும்‌ தங்கள்‌ விடுதிக்கு விஜயம்‌ செய்து தங்கள்‌ மரியாதையைப்‌ பெற்று ஆசிர்வதித்துப்‌ போகும்படி வேண்டிக்‌ கொண்டார்கள்‌. பார்ப்பனரல்லாதாரால்‌ கட்டப்பட்ட அந்த விடுதியில்‌ 90 பிள்ளைகள்‌ வசித்தாலும்‌ அதில்‌ 65 பிள்ளைகள்‌. பார்ப்பனப்‌ பிள்ளைகளாயும்‌ 25 பிள்ளைகள்‌ மட்டும்‌ பார்ப்பனரல்லாத பிள்ளைகளாயிருந்தும்‌ மேற்படி 65 பார்ப்பனப்‌ பிள்ளைகளும்‌, பார்ப்பனரல்‌ லாதாரின்‌ தர்மத்தால்தானே இந்த விடுதியில்‌ நாம்‌ வசிக்கிறோம்‌ என்கிற நன்றி குடி அரசு - 1926 (2) 148. அறிதல்‌ இல்லாமல்‌, இம்மாதிரி பார்ப்பனரல்லாத தலைவர்களுக்குக்‌ காட்டும்‌ மரியாதையை “நாங்கள்‌ சகிக்க மாட்டோம்‌, அவற்றை நடக்கவும்‌ விடமாட்டோம்‌” என்று பல சூழ்ச்சிகள்‌ செய்து, அவற்றில்‌ வெற்றி பெறா மல்‌ போனதினால்‌ தலைவர்கள்‌ வரும்‌ சமயம்‌ பார்த்து வெளியேறினார்‌ களாம்‌. இந்தப்‌ பார்ப்பன மாணவர்கள்‌ உண்மையிலேயே யோக்கியமும்‌ நன்றியறிதலும்‌ சம உணர்ச்சியும்‌ போர்‌ வீரத்‌ தத்துவமும்‌ உடையவர்களா னால்‌ இவர்கள்‌ என்ன செய்திருக்க வேண்டும்‌? தாங்களும்‌ இந்த மகிழ்ச்சி யில்‌ கலந்து தங்களுக்குப்‌ பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்கிற வித்தியாச மும்‌ துவேஷமும்‌ இல்லை என்று காட்டிக்‌ கொண்டிருக்க வேண்டும்‌; அப்படிக்கில்லா விட்டால்‌ மனிதத்‌ தன்மையை உத்தேசித்தாவது சும்மா இருந்திருக்க வேண்டும்‌. அப்படிக்கில்லாமல்‌ தானம்‌ கொடுத்த மாட்டை பல்லைப்‌ பிடித்து பார்ப்பது போல்‌ தாங்கள்‌ வெளியேறினது எவ்வளவு அல்ப புத்தியையும்‌ நன்றி கெட்டத்‌ தன்மையையும்‌ காட்டுகிறது. நம்‌ நாட்‌ டுப்‌ பார்ப்பனர்களும்‌ அவர்களது பத்திரிகைகளும்‌ தங்களுக்குக்‌ கொஞ்சம்‌ கூட பார்ப்பனரல்லாதார்‌ மீது துவேஷ புத்தி இல்லையென்றும்‌ பார்ப்பன ரல்லாதார்தான்‌ இவற்றைக்‌ கிளப்பி விட்டுக்‌ கொண்டு வருகிறார்கள்‌ என்றும்‌ தினமும்‌ பிதற்றி வருகிறதை நாம்‌ பார்க்கிறோம்‌. ஆனால்‌, இப்போது இந்த சம்பவத்தைக்‌ கொண்டே பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ துவேஷம்‌, பொறாமை, வயிற்றெரிச்சல்‌, குடி கெடுக்கும்‌ தன்மை, நன்றி கெட்டதனம்‌. ஆகியவைகள்‌ பார்ப்பன மூளைகளிடமிருந்தே இருந்து வருகிறதா? பார்ப்பனரல்லாதாரிடம்‌ இருக்கிறதா? என்று கேட்கிறோம்‌. அவர்கள்‌ இவ்வ ளவு தூரம்‌ தங்களின்‌ துவேஷத்தைத்‌ தைரியமாய்‌ வெளிக்‌ காட்டிய பிறகும்‌, நாம்‌ இனியும்‌ சும்மாயிருப்பது சுத்தப்‌ பயித்தியக்காரத்‌ தனமென்றே சொல்லு வோம்‌. ஒவ்வொரு ஊரிலும்‌ ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும்‌ “அறிவிரி” அதாவது பாலர்‌ வகுப்பிலிருந்தே பிள்ளைகளுக்குப்‌ பார்ப்பனர்களின்‌ அட்டூழியத்தையும்‌ கொடுமையையும்‌ அவர்களால்‌ நாம்‌ அடைந்த கதியையும்‌ பாடப்‌ புத்தகமாய்‌ வைத்து சொல்லிக்‌ கொடுக்கும்‌ படியும்‌ சென்னையில்‌ மற்ற பொது மாணவர்கள்‌ ஆரம்பித்தது போல ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும்‌ பார்ப்பனரல்லாத பிள்ளைகள்‌ சங்கம்‌ என்பதாக ஒரு சங்கம்‌ ஸ்தாபித்து அதில்‌ தங்கள்‌ வகுப்பார்‌ முன்னேற்றத்திற்கு வேண்டிய கவலை செலுத்தி வரும்படி செய்ய வேண்டியது இது சமயம்‌ மிகவும்‌ அவசியமாயிருக்கிறது. மாணவர்கள்‌ இது சமயம்‌ அரசியலில்‌ பிரவேசிக்‌ காமலிருக்க வேண்டும்‌ என்பதை நாமும்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறோம்‌. ஆனால்‌ அவர்கள்‌ தங்கள்‌ சமூக விஷயங்களிலும்‌ சுயமரியாதை விஷயங்களிலும்‌ முன்னேற வேண்டியது அடிமைக்‌ கல்வியை விட முக்கியமானதென்றே சொல்லுவோம்‌. ஆதலால்‌ சென்னை மாணவர்களைப்‌ பின்பற்றி மற்றும்‌ வெளியிடங்களிலுள்ள மாணவர்களும்‌ நடந்து கொள்வார்கள்‌ என்று எதிர்பார்ப்பதோடு சென்னை மாணவர்களை மிகுதியும்‌ போற்றுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 15.08.1926 149 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 பிராமணீயத்தை ஒழித்தவர்கன்‌ பார்ப்பனரல்லாதார்‌ வைதிகச்‌ சடங்குகள்‌ என்று பெயர்‌ வைத்துக்‌ கொண்டு தங்கள்‌ குடும்பங்களில்‌ நடக்கும்‌ சுபா சுப காரியங்களுக்கு திதி, திவசம்‌ என்றோ, சிரார்த்தம்‌ என்றோ, தங்கள்‌ முன்னோர்களின்‌ ஞாபகார்த்த மாகச்‌ செய்யும்‌ காரியத்தை, முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்பச்‌ செய்யப்படும்‌ கிரிகை என்ற மூட நம்பிக்கையால்‌, அக்‌ காரியத்திற்கு *பிராமணர்‌”களை அழைத்து அதை அவர்களைக்‌ கொண்டே செய்ய வேண்டுமென, உடம்போடொட்டிய அழுக்குபோல்‌ தங்கள்‌ மனத்தில்‌ படியப்‌ பெற்று, ஒரு பார்ப்பனனைக்‌ கூட்டி வந்து பலவகைத்தான சன்மா னங்களை அப்பார்ப்பனனுக்கு அளித்து, அவன்‌ சொல்லும்‌ பிரகாரமெல்‌ லாம்‌ சொல்லி, அவன்‌ காலில்‌ விழுந்து விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம்‌ செய்து வருவதும்‌, அதேபோன்று கலியாணம்‌ முதலிய சுப காரியங்களுக்கும்‌ பார்ப்பனனை அழைத்து, மண மக்களுக்கு ஆயுள்‌ விருத்தியை யும்‌ புத்திர சம்பத்தையும்‌ அப்பார்ப்பனன்‌ இரக்ஷாபந்தனமளித்து வருவதாகப்‌ பிரேமைக்குள்ளாகி பார்ப்பனனைக்‌ கொண்டு செய்து வருவ தும்‌ - வீண்‌ அர்த்தமற்ற - பொருளற்ற - சுயமரியாதையை இழக்கச்‌ செய்யத்‌ தக்க - ஒரு கூட்டார்‌ தங்கள்‌ பிழைப்பைக்‌ கருதி செய்து வைத்து ஏமாற்றி வரும்‌ காரியமாகும்‌. இவ்வுண்மையைத்‌ தெரிந்த பலர்‌ சின்னாட்களாக அவ்வித மூடநம்‌ பிக்கைக்குள்ளாகாமல்‌ விழித்துக்‌ கொண்டனர்‌ - விழித்து வருகின்றனர்‌. இவ்‌ வாறு தங்கள்‌ சுபா சுப காரியங்களுக்குள்‌ பிராமணீயம்‌ வந்து நுழையாமல்‌ விரட்டியவர்களுள்‌ 14 கனவான்களின்‌ பெயரை சென்ற இதழில்‌ இதே தலை யங்கத்தின்‌ கீழ்‌ வெளியிட்டிருந்தோம்‌. இவ்விதழிலும்‌ பிராமணீயத்தை ஒழித்தவர்களுள்‌ சில கனவான்களின்‌ பெயரைக்‌ கீழே வெளியிட்டுள்ளோம்‌. இனியும்‌ அவ்வாறு சடங்குகள்‌ செய்வதில்‌ நம்பிக்கையில்லாதவர்கள்‌. பெயரைத்தெரியப்படுத்தினால்‌ வாரந்தோறும்‌ பத்திரிகையில்‌ பிரசுரித்து வரப்பெறும்‌. மேற்கூறிய பிரகாரம்‌ பிராமணீயத்தை விரட்டிய மற்ற கனவான்களின்‌ பெயர்களாவன :- 15. எஸ்‌.எ.கே. கலியப்பெருமாள்‌ நாயுடு, ஆஞ்சிநேய வார்ப்படத்‌ தொழிற்‌ சாலை, திருச்சி. குடி அரசு - 1926 (2) 150 151 16.5.0.8 . பரமசிவன்‌ செட்டியார்‌, கதர்‌ டெப்போ, திருச்சி.. 17.அ. சிவப்பிரகாசம்‌ பிள்ளை, தலைமைத்‌ தமிழாசிரியர்‌, அர்ச்‌ சூசையப்பர்‌ கலாசாலை, திருச்சி. 18. தி. திரவியம்‌ பிள்ளை, முனிசிபல்‌ கவுன்சிலர்‌, திருச்சி. 19. பி.ஏ. சுப்பிரமணிய பிள்ளை, இராகவ செட்டித்‌ தெருவு, திருச்சி. 20.ஈ.என்‌. வெங்கடப்‌ பெருமாள்‌ நாயுடு, பி.ஏ. பென்ஷன்‌ தாசில்தார்‌, ஈரோடு. 21. குவீராசாமி நாயுடு, ஈரோடு. 22 சி. கந்தசாமி, திருநெல்வேலி கதர்‌ நெசவுச்‌ சாலை, சாவடியகம்‌, திசையன்விளை. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 15.08.1926 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 கோயமுத்தூர்‌ வில்லா போர்டு தேர்தல்களும்‌ வேணானணர்களும்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டு பிரசிடெண்ட்‌ தேர்ந்தெடுத்தலின்‌ முடிவையும்‌ ஷே ஸ்தானத்திற்கு அபேட்சகராக நின்று தோல்வி அடைந்தவரின்‌ வகுப்பைச்‌ சேர்ந்த மெம்பர்களின்‌ ஏராளமான தொகைக ளையும்‌ கவனித்தால்‌ ஒரு விதமான ஆச்சரியமும்‌ , வியப்புமுண்டாகும்‌. ஆனால்‌, இந்த ஜில்லாவிலுள்ளவேளாளர்களைப்‌ பொருத்த மட்டும்‌ இந்த தேர்ந்தெடுத்தலின்‌ முடிவானது அநேக கிளர்ச்சியை உண்டு பண்ணக்‌ கூடியதாய்‌ இருக்கிறது. இந்த ஜில்லாவில்‌ பெரும்‌ பான்மையோர்‌. வேளாள குலத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ மற்றும்‌ தனவந்தர்களாகவும்‌ ஈகை முதலிய குணங்களில்‌ சிறந்தவர்களாகவும்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌ மற்ற குலங்களெல்லாம்‌ தத்தம்‌ முன்னேற்றத்தைப்‌ பற்றி வேண்டிய முயற்சிகள்‌. செய்து கொண்டிருக்கும்‌ போது இவர்கள்‌ மாத்திரம்‌ கட்சிப்‌ பிரதி கட்சிகளிலும்‌, மெளடீகத்‌ தன்மையிலும்‌, கல்வியறிவின்மையிலும்‌ மூழ்கி யிருப்பது மிகவும்‌ வருத்தத்தையுண்டு பண்ணுகிறது. நாகரீகம்‌ அதிகரித்து வரும்‌ இக்காலங்களிலுங்‌ கூட தங்களுடைய அற்ப பொறாமைகளையும்‌, குறுகிய நோக்கங்களையும்‌, வினோதங்களையும்‌ போக்கி ஒத்துழைத்து தங்கள்‌ ஜாதி அபிமானத்தையும்‌ அபிலிருத்தியையும்‌ சிறிதேனும்‌ கவனியா மல்‌ ஆனந்த மெளடகத்தில்‌ காலங்கழிப்பது பரிதபிக்கத்தக்கதே. இன்னும்‌, இக்குலத்தைச்‌ சேர்ந்த கெள ரவமும்‌ அந்தஸ்தும்‌ உடைய அங்கத்தினரின்‌. நோக்கம்‌ அதிகவிந்தையா மிருக்கிறது. தங்களில்‌ ஒருவரை பொறுப்பான. ஸ்தானத்திற்கு கொண்டு வரக்கூடிய சமயமும்‌ சக்தியும்‌ இருந்தும்‌ அவர்க ளுக்கு சிறிதேனும்‌ ஊக்கமும்‌, ஜாதி அபிமானமும்‌ ஒற்றுமையுமில்லை யென்பது நன்கு விளங்குகிறது. மற்றும்‌ தங்களுக்குள்ளே உள்ள சிறிய மனஸ்தாபங்களைப்‌ பெரிதாக நினைத்துக்‌ கொண்டும்‌, மனோபாவனை யான சந்தேகங்களை உண்டு பண்ணிக்‌ கொண்டும்‌, மற்றவர்களின்‌. சுவையான வார்த்தைகளினாலும்‌, வாக்குத்‌ தத்தங்களினாலும்‌ தங்கள்‌. நிலையை மறந்து நடந்து தங்களுக்கும்‌ தங்கள்‌ குலத்திற்கும்‌ அபகீர்த்தி யையும்‌ அவமானத்தையும்‌ உண்டாக்கினார்கள்‌. தங்கள்‌ பொறுப்பை மறந்து நடந்த காரியம்‌ தங்களைத்தான்‌ பற்றுமென்பதை நினைக்க வில்லை போலும்‌. வோட்‌ கொடுக்கிறோ மென்று உறுதியாய்ச்‌ சொல்லி, இறுதியில்‌ இம்மாதிரி செய்வது ஏனோ விஷமம்‌? இப்படி இருக்க குலத்தாரை நம்பி தோல்வியடைந்த அபேட்சகருக்கு ஒருவிதமான அபகீர்த்தியுமில்லை யென்றே சொல்லலாம்‌. குடி அரசு - 1926 (2) 152 ஆகையால்‌ நமது குல முன்னேற்றத்திற்காக நான்‌ ஒரு விண்ணப்‌ பஞ்‌ செய்து கொள்ளுகிறேன்‌. மேலே கண்ட விஷயமானது நமது குலத்தின்‌ கண்ணைத்‌ திறக்குமென்று நம்புகிறேன்‌. இனிமேலாவது நமது குலத்தினர்‌ ஒற்றுமையாயிருந்து முன்னேற்றமடையக்‌ கூடிய வழியைத்‌ தேடுவாராக. அ. பழனிசாமிக்‌ கவுண்டர்‌,பி-ஏ.,கோயமுத்தூர்‌ குறிப்பு : கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்களைப்‌ பற்றி அபேட்சகர்கள்‌ திருப்தியுடனிருந்த போதிலும்‌ பலரால்‌ பல கட்டுரைகள்‌. நமக்கு பிரசுரிப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன. அவர்கள்‌ பெரும்‌ பாலும்‌ ஒவ்வொன்றும்‌ தெரிந்தெடுக்கப்பட்டவருக்கும்‌ தெரிந்தெடுக்கப்படாத வருக்கும்‌ இரு சார்பாரை ஆதரித்தவர்களுக்கும்‌ மனம்‌ புண்படும்படியாகவும்‌ ஒருவருக்கொருவர்துவேஷத்தையும்‌ வைராக்கியத்தையும்‌ உண்டாக்கத்தக்க மாதிரியாகவும்‌ இருப்பதாகக்‌ காணப்படுவதால்‌ நாம்‌ அவைகளைப்‌ பிரகரிக்‌ காததற்காக மன்னிக்க வேண்டுகிறோம்‌. ஏனெனில்‌ பார்ப்பனர்களின்‌ கொடுமையிலிருந்தும்‌ தப்ப பார்ப்பன ரல்லாதாராகிய நாம்‌ ஒற்றுமையோடும்‌ உணர்ச்சியோடும்‌ இது சமயம்‌ செய்ய வேண்டிய வேலைகள்‌ எவ்வளவோ இருக்க, எவ்வகையிலும்‌ உயர்வு, தாழ்வு இல்லாத சமூகத்தார்‌ வெள்ளாளரென்றும்‌, வெள்ளாளரல்லாதவரென்றும்‌, வெள்ளாளரில்‌ பலவிதம்‌ என்றும்‌ ஒருவரையொருவர்‌ புண்படுத்தத்தக்க மாதிரியான உணர்ச்சி மிகவும்‌ அசம்பாவிதமானது. தேர்தலில்‌ நின்ற இருவர்களும்‌ வேளாளர்களேயாவார்கள்‌. இருவரை ஆதரித்தவர்களும்‌ மிகுதியும்‌ வேளாளர்களும்‌ தக்க அந்தஸ்தும்‌ கண்ணிய மும்‌ பொருந்தியவரேயாவார்கள்‌. இப்படியிருக்க, இது சமயத்தை ஆதார மாகக்‌ கொண்டு தங்கள்‌ சுய நலத்திற்காக உண்மையிலேயே வித்தியாசம்‌ உயர்வு, தாழ்வு இல்லாத வகுப்புக்கும்‌ வித்தியாசங்களிருப்பது போல்‌ பேச வருவது நன்மைகளான காரியமல்ல வென்றே கருதுவோம்‌. அல்லாமலும்‌ இப்படி யெல்லாம்‌ நூல்‌ பிடித்துக்‌ கொண்டே போனால்‌ ஒவ்வொரு தனி மனிதனும்‌ ஒவ்வொரு வகுப்பாய்‌ தான்‌ முடியும்‌. அப்பொழுது அது பார்ப்பனரல்லாதாரின்‌ சுயமரியாதையைத்‌ தடைப்படுத்தும்‌. ஆதலால்‌ தனிப்பட்ட சுயநலத்தை முன்னிட்டு அவ்வுணர்ச்சிகளை விட்டுவிட்டு ஒத்து ழைத்து பொது நலத்துக்கான காரியத்தில்‌ கட்டுப்பாடாய்‌ இரங்க வேண்டு மாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. (ப-ர்‌) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 15.08.1926 163 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. செண்ணையில்‌ குழுமிய சீர்‌ வபருங்கூட்டம்‌ ௬யறரால்யத்தைவிட ச௬ுயமரியாதையே பிரதானம்‌” வகுப்புத்‌ துவேஷத்தைக்‌ கினப்புகிறவர்கள்‌ மார்‌? யார்ப்பணர்கே. நால்வகை வகுப்பு நாட்மூல்‌ உதித்த வகை யார்ப்பணர்கன்‌ நம்மை ஏமாற்றி விட்டார்கள்‌. எப்பமு?' “மோக்ஷம்‌” “௬யறாஸ்யம்‌'” எண்கிற வார்த்தைகளால்‌. நாம்‌ போராடுவது சுமமரியாதைக்காகவே நான்‌ இன்று உங்கள்‌ முன்னிலையில்‌ பேசப்போகும்‌ விஷயமானது கேவலம்‌ தேர்தல்களைப்‌ பற்றியோ, தேர்தல்களில்‌ யாருக்கு ஒட்டுக்கொடுப்‌ பது என்பதைப்‌ பற்றியோ பேச வரவில்லை. இத்‌ தேர்தல்களில்‌ யார்‌ ஜெயித்‌ தாலும்‌ யார்‌ தோற்றாலும்‌ நமக்குப்‌ பெரிய லாபமும்‌ நஷ்டமும்‌ ஒன்றும்‌ ஏற்‌ பட்டு விடாது. ஆதலால்‌ அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. எனக்‌ குள்ள கவலை வெல்லாம்‌, மக்களின்‌ பெரும்‌ பகுதியினராகவும்‌ எல்லா வழி களிலும்‌ இன்னாட்டிற்கு முக்கியமானவர்களாகவும்‌ உள்ள நாம்‌ தாழ்ந்தவர்க ளென்றும்‌ அடிமைகளென்றும்‌ கருதப்பட்டு சுயமரியாதையற்று கிடக்கி றோம்‌. அன்னியர்களால்‌ விலங்குகளைப்‌ போல்‌ நடத்தப்படுகிறோம்‌. ஆத லால்‌ இவ்விதக்‌ குறைகள்‌ ஒழிய வழி தேட வேண்டியது இப்பொழுதுள்ள நமது முக்கியக்‌ கடமை என்பதேயாகும்‌. அவற்றிற்கு நம்மாலானதைச்‌ செய்ய வேண்டுமென்றும்‌ அதற்காக நீங்கள்‌ என்ன செய்யப்‌ போகிறீர்‌ களென்றும்‌ சொல்லித்‌ தெரிந்து போகவே இங்கு வந்திருக்கிறேன்‌. நமது தேசத்தில்‌ இப்போது ஒரு வகுப்பார்‌ சுயநலங்‌ கருதி “காங்கிரஸ்‌”, “தேசீயம்‌” “சுயராஜ்யம்‌” என்கிற பல செல்வாக்குள்ள பெயர்களைச்‌ சொல்லிக்‌ கொண்டு நமது சமூகத்தை அழித்துத்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்‌ கொள்ள இத்‌ தேர்தல்களை உபயோகப்படுத்திக்‌ கொள்ளுகிறபடியால்‌ அவ்‌ வேமாற்றத்தில்‌ நீங்கள்‌ ஏமாந்து போகக்‌ கூடாதென்று சொல்ல வந்திருக்கிறேன்‌ கரகோஷம்‌! குடி அரசு - 1926 (2) 154. தயவு செய்து இனி மேல்‌ கை தட்டாதீர்கள்‌. தற்காலம்‌ இந்நாட்டிலுள்ள ராஜீய வேஷங்கொண்ட பல பார்ப்பனர்‌. கள்‌ என்னை வகுப்புத்‌ துவேஷக்காரனென்றும்‌ வகுப்புக்‌ கலவரங்களை மூட்டிவிடுகிறவனென்றும்‌ சொல்லியும்‌ எழுதியும்‌ ஆள்களை விட்டுப்‌ பிரசாரம்‌ செய்தும்‌ வருகிறார்கள்‌. வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வேற்றுமை களும்‌ என்னால்‌ ஏற்பட்டதா? அல்லது நம்நாட்டுப்‌ பார்ப்பனர்களால்‌ ஏற்பட்டதா? என்பதை நீங்களே சற்று யோசித்துப்‌ பாருங்கள்‌. தயவு செய்து நீங்கள்‌ என்னோடு எழுந்து வருவீர்களானால்‌ இவ்வூருக்குள்‌ சுற்றிப்‌ பார்த்தால்‌, பார்ப்பனர்கள்‌ வைத்திருக்கும்‌ ஒவ்வொரு காப்பிக்‌ கடைகளிலும்‌ சாப்பாட்‌ டுக்‌ கடைகளிலும்‌, ரயில்களில்‌ உள்ள காப்பி சாப்பாட்டுக்‌ கடை களிலும்‌, சத்திரம்‌ சாவடிகளிலும்‌, கோயில்‌ குளங்களிலும்‌ இது பிராமணர்‌: களுக்கு, இது சூத்திரர்களுக்கு, பஞ்சமர்களுக்கும்‌ முகமதியர்களுக்கும்‌ கிறிஸ்துவர்களுக்கும்‌ இங்கு சாப்பாடு, பலகாரம்‌, தண்ணீர்‌ வகையறா முதலியன கொடுக்கப்பட மாட்டாது; இந்த இடத்தில்‌ சூத்திரர்கள்‌ தண்ணீர்‌. மொள்ளக்‌ கூடாது; இந்த இடத்தில்‌ சூத்திரர்கள்‌ குளிக்கக்‌ கூடாது ; இந்தப்‌ பள்ளிக்‌ கூடத்தில்‌ சூத்திரர்களை சேர்த்துக்‌ கொள்ள முடியாது; இன்னின்ன விஷயங்களை சூத்திரர்கள்‌ படிக்கக்‌ கூடாது; பிராமணர்கள்‌ மாத்திரம்‌ இது வரையில்‌ செல்லலாம்‌; சூத்திரர்கள்‌ இந்த இடத்திற்கப்புறம்‌ போகக்‌ கூடாது; இந்த வீதியில்‌ சூத்திரர்‌ குடியிருக்கக்கூடாது; இன்ன தெருவில்‌ பஞ்சமர்‌. நடக்கக்‌ கூடாது என்று இன்னும்‌ பலவாறாகப்‌ போர்டுகள்‌ போட்டும்‌ நிர்பந்‌ தங்கள்‌ ஏற்படுத்தியும்‌ பிரித்து வைத்துத்‌ துவேஷத்தையும்‌ வெறுப்பையும்‌ இழிவையும்‌ உண்டாக்கி வருவது நானா? அல்லது பார்ப்பனர்களா? என்‌ பதைக்‌ கவனியுங்கள்‌. தாங்களே நம்‌ ஜாதிகளைப்‌ பிரித்து நம்மை இழிவுபடுத்தித்‌ தாழ்த்தி வைத்து விட்டு ஏனையா இப்படிச்‌ செய்கிறீர்கள்‌ ? இது தர்மமா? நியாயமா? என்று கேட்டால்‌, நம்மை வகுப்புத்‌ துவேஷக்காரன்‌ என்றும்‌ வகுப்புப்‌ பிரிவினைக்காரன்‌ என்றும்‌ வகுப்புரிமைக்காரன்‌ என்றும்‌ சொல்லி கொன்று விடப்‌ பார்த்தால்‌ அதற்கு நான்‌ பயந்து கொள்ளுவேனா என்று கேட்கிறேன்‌. ரயில்‌ வே ஸ்டேஷன்களிலுள்ள ஓட்டல்களை எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. ரயிலில்‌ பெரும்பான்மையாய்ப்‌ பிரயாணம்‌ செய்கிறவர்கள்‌ நாமாயிருக்‌ கிறோம்‌. ஓட்டல்காரனுக்கு அதிகமான லாபம்‌ கொடுக்கிறவர்கள்‌ நாமாயி ருக்கிறோம்‌. ஆனால்‌ அந்த ஓட்டலுக்காக ரயில்வே அதிகாரிகள்‌ கொடுத்த இடத்தில்‌ முக்கால்‌ பாகத்திற்கு மேலாக தாங்கள்‌ எடுத்துக்‌ கொண்டு கொஞ்‌ சம்‌ இடத்தை நமக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த இடத்திலும்‌ எச்சில்‌ போடவும்‌ சாணி சட்டி விளக்குமார்‌ வகையறாக்களை வைக்கவும்‌ கை கழுவவும்‌ செய்கிறார்கள்‌. ஒரு பார்ப்பனன்‌ குஷ்டரோகியானாலும்‌ அவன்‌ நேரே சமயலறைக்குப்‌ போய்‌ சுடச்‌ சுட உள்ள பதார்த்தங்களில்‌ தனக்கு வேண்டுமானதை அடுப்பிற்குப்‌ பக்கத்திலிருந்தே எடுத்துச்சாப்பிட்டு 155 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. விடுகிறான்‌.நம்மில்‌ எவ்வளவு பெரிய மனிதர்களானாலும்‌ வெளியில்‌ நின்று கொண்டு நாலாணாவைக்‌ கையில்‌ தூக்கி காட்டிக்‌ கொண்டு, இடைச்சி மார்க்கு கட்டிப்‌ பால்‌ விளம்பரப்‌ படத்தில்‌ பெண்கள்‌ கூட்டம்‌ பால்‌ கேட்பது போல்‌ ஒரு கையைத்‌ தூக்கிக்‌ கொண்டு சாமி சாமி என்று கத்த வேண்டிய தாயிருக்கிறது. ஆறினதையும்‌ ஈ பூச்சி, புழுக்கள்‌ வீழ்ந்த தையும்‌ விற்காமல்‌ தேங்கினதையும்‌ நாம்‌ வாங்கிச்‌ சாப்பிட வேண்டியதாயிருக்கிறது. இந்த நிலையில்‌ வகுப்பு வித்தியாசத்தையும்‌ வகுப்புத்‌ துவேஷத்தையும்‌ வளர்க்கிறவர்கள்‌ நாமா? இந்தப்‌ பார்ப்பனர்களா? என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. நம்முடைய பணத்தைக்‌ கொண்டு மத சம்பந்தமான கல்விகளுக்‌ கென்றும்‌ வேத பாடசாலை என்றும்‌ பெரிய பெரிய பள்ளிக்கூடங்களைக்‌ கட்டிக்கொண்டு அதில்‌ பிராமணர்கள்தான்‌ படிக்கலாம்‌, சூத்திரர்கள்‌ படிக்கக்‌ கூடாது என்று சொல்லி நம்மைத்‌ தள்ளி வைத்து விடுகிறார்கள்‌. ஜாதி வித்தியாசத்தையும்‌ வகுப்புத்‌ துவேஷத்தையும்‌ வளர்க்கிறவர்கள்‌ நாமா? அவர்களா? நம்முடைய பணங்களிலேயே பெரிய பெரிய கோவில்கள்‌ கட்டப்பட்டு, நம்முடைய பணங்களைக்‌ கொண்டே பூஜைகள்‌ செய்யப்பட்டு வரும்‌ சுவாமிகளிடத்தில்‌ நம்மைப்‌ போகக்கூடாது என்று சொல்லுகிறார்கள்‌. இதனால்‌ வகுப்புத்‌ துவேஷத்தை உண்டாக்குகிறவர்கள்‌ நாமா? அவர்களா? ஆகவே இப்பொழுது ஜாதி வித்தியாசம்‌ வளரக்கூடாதென்பதும்‌ வகுப்புத்‌ துவேஷங்கள்‌ ஒழிய வேண்டுமென்பதும்தான்‌ நமது கொள்கை. அதற்காகத்தான்‌ நான்‌ பாடுபடுகிறேன்‌. ஜாதி வித்தியாசங்களான மக்கள்‌ உயர்வு, தாழ்வு என்பதை ஒழிப்பதற்கும்‌ வகுப்புத்‌ துவேஷங்கள்‌ ஒழிவதற்கும்‌ முட்டுக்கட்டையாயிருந்து வருகிறவர்கள்‌ நாமா? அந்தப்‌ பிராமணர்களா? என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. ஜாதி வித்தியாசம்‌ நிலைத்திருப்பதற்கும்‌ வகுப்புத்‌ துவேஷங்கள்‌ வளருவதற்கும்‌ நிரந்தரமான ஏற்பாட்டை பார்ப்பனர்களே செய்து வைத்துக்‌ கொண்டு நம்‌ மீது குறை கூறுகிறார்கள்‌. நாம்‌ இப்போது பார்ப்பனர்களைக்‌ கேட்பதெல்லாம்‌ எங்களையும்‌ சமமாகப்‌ பாவியுங்கள்‌, எங்களைத்‌ தாழ்ந்த வர்கள்‌ என்று சொல்லி இழிவுபடுத்தி எங்களுடைய சுயமரியாதையைக்‌ கொல்லாதீர்கள்‌ என்பதையன்றி வேறில்லை. இதை அவர்கள்‌ கொஞ்சமும்‌ கவனியாமல்‌ இந்த தேசத்தில்‌ 100-க்கு 97 பேர்களாயிருக்கிற நம்மை சூத்திரர்‌ களென்றும்‌ தாழ்ந்தவர்களென்றும்‌ சொல்லுவதோடல்லாமல்‌ நமக்கு இவர்கள்‌ தர்மகர்த்தாக்கள்‌ என்று பெயர்‌ வைத்துக்கொண்டு சர்க்காருக்கு உள்‌ உளவா யிருந்து எல்லா உத்தியோகங்களையும்‌ அதிகாரங்களையும்‌ இவர்களே கைப்பற்றிக்கொண்டு நமக்குக்‌ கொடுமை செய்துவருகிறார்கள்‌. நாம்‌ நமது சுயமரியாதைக்காகத்தான்‌ இவ்வளவு பிரயத்தனப்படுகிறோமேயல்லாமல்‌ கேவலம்‌ இந்த உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டல்ல. ஆனால்‌ நமது பார்ப்ப னர்கள்‌ இந்த உத்தியோகங்களைக்‌ கைப்பற்றிக்‌ கொண்டதன்‌ பலனாகவே குடி அரசு - 1926 (2) 156 நம்மை தங்களுக்கும்‌ சர்க்காருக்கும்‌ நிரந்தரமான அடிமைகளாக்கி நம்மீது ஆதிக்கம்‌ செலுத்தி வருகிறார்கள்‌. இவற்றிலிருந்து தப்பி நமது சுயமரியாதை. யைக்‌ காப்பாற்றிக்‌ கொள்வதற்காகவே இப்பார்ப்பனர்களை எப்படியாவது எல்லாவித உத்தியோகங்களிலிருந்தும்‌ ஒழிக்க வேண்டுமென்று கஷ்டப்‌ படுகிறோம்‌.பார்ப்பனர்களுக்கு வெட்கம்‌, வெட்கம்‌ என்கிற சப்தமும்‌ கரகோஷமும்‌! இவ்விதம்‌ நீங்கள்‌ கூச்சலிடுவதில்‌ பயனில்லை; கூச்சலிடுவதற்கா கவோ கரகோஷம்‌ செய்வதற்காகவோ நான்‌ உங்கள்‌ முன்னால்‌ பேச வர வில்லை. உத்தியோக விஷயத்தில்‌ மாத்திரம்‌ பார்ப்பனர்கள்‌ விஷயத்தில்‌ பொறாமையும்‌ துவேஷமும்‌ இருக்கிறதேயல்லாமல்‌ வைதீகச்‌ சடங்குகளில்‌ நீங்கள்‌ அவர்களை உங்களை விட உயர்ந்தவர்களென்றே எண்ணியிருக்‌ கிறீர்கள்‌. நீங்கள்‌ எவ்வளவு படித்தவர்களாயிருந்தாலும்‌, எவ்வளவு பெரிய பதவியிலும்‌ அதிகாரத்திலும்‌ இருந்தாலும்‌ இரண்டு காய்ந்த தர்ப்பைப்‌ புல்லைக்கொண்டு சாம்பலையோ நாமத்தையோ அடித்துக்‌ கொண்டு ஒரு பார்ப்பனன்‌ உங்கள்‌ வீட்டிற்கு வருவானேயானால்‌ “சுவாமி” என்று அவன்‌ காலில்‌ விழுகத்‌ தயாராயிருக்கிறீர்கள்‌. அவனுக்குப்‌ பணத்தைக்‌ கொடுத்தால்‌ உங்கள்‌ பெற்றோருக்கு மோக்ஷம்‌ கிடைக்கும்‌ என்கிற முட்டாள்‌ தனமான எண்ணம்‌ இன்னமும்‌ உங்கள்‌ ரத்தத்தில்‌ கலந்து கொண்டு இருக்கிறது. அவன்‌ கைப்பட தாலி எடுத்து கொடுத்து நீங்கள்‌ அதை கும்பிட்டு வாங்கி பெண்‌: களின்‌ கழுத்தில்‌ கட்டினால்தான்‌ உண்மையான கலியாணம்‌ என்று நினைக்‌ கிறீர்கள்‌; ஒரு பார்ப்பனன்‌ உங்கள்‌ வீட்டுப்‌ பெண்ணையும்‌ பிள்ளையையும்‌ படுக்கை அறைக்குள்‌ அனுப்பிக்‌ கதவைச்‌ சாத்தினால்தான்‌ நல்ல பிள்ளைகளைப்‌ பெற முடியுமென்று நினைக்கிறீர்கள்‌; ஒரு பார்ப்பனனுக்கு பணத்தைக்‌ கொட்டிக்‌ கொடுத்து அவன்‌ காலைக்‌ கழுவின தண்ணீரை: சாப்பிட்டால்தான்‌ உங்கள்‌ பாவம்‌ துலையுமென்றும்‌ நீங்கள்‌ மோக்ஷத்திற்குப்‌ போகக்‌ கூடுமென்றும்‌ நினைக்கிறீர்கள்‌. இவ்வித முட்டாள்தனமான மனப்‌ பான்மையை மாற்றிக்‌ கொள்ளத்‌ தயாராயிருக்கிறீர்களா? (ஆம்‌, ஆம்‌ என்கிற சப்தம்‌) அப்படியானால்‌ உங்களுடைய சந்தோஷங்களுக்குப்‌ பொருள்‌. உண்டு. அப்படிக்கில்லாமல்‌ வீண்‌ ஆரவாரங்களினாலும்‌ அற்ப சந்தோஷத்‌ தினாலும்‌ பலனென்ன? ஆதலால்‌ நாம்‌ இப்பொழுது செய்யும்‌ இந்தப்‌ போராட்டம்‌ சுய மரியாதைப்‌ போராட்டமேயல்லாமல்‌ உத்தியோகத்திற்காகவே செய்யும்‌ உத்தியோகப்‌ போராட்டமல்லவென்பதை நன்றாய்‌ உணருங்கள்‌. நமது சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்வதற்கு இவ்வித உத்தியோகங்கள்‌. சகாயமாயிருக்கும்‌. மோட்சம்‌ என்கிற வார்த்தையினாலும்‌, சுயராஜ்யம்‌ என்கிற வார்த்தையினாலும்‌, சமூக வாழ்க்கையிலும்‌ அரசியலிலும்‌ முறையே நம்மைப்‌ பார்ப்பனர்கள்‌ ஏமாற்றி ஆதிக்கம்‌ பெற்று விட்டார்கள்‌. இவ்விரண்டு விஷயங்களிலும்‌ பார்ப்பனர்களுக்குள்ள ஆதிக்கத்தை விரட்டி அடித்தால்‌ 157 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தான்‌ நாம்‌ சுயமரியாதை அடைய முடியும்‌. இந்தச்‌ சுய மரியாதைக்காக நாம்‌ இன்று, நேற்று மாத்திரம்‌ போராடவில்லை. ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்டும்‌, நாயர்‌, செட்டியார்‌ என்கிற மகான்களின்‌ இயக்கம்‌ ஏற்பட்டும்‌ சுமார்‌ பத்தாண்டுகள்‌. தானாகின்றன. இன்றைக்கு எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்ன தாகவே இப்பார்ப்பனரின்‌ கொடுமையை உணர்ந்த நம்‌ தமிழ்‌ மக்கள்‌ அதிலிருந்து தப்பவேண்டு மென்று எவ்வளவோ பிரயத்தனம்‌ செய்திருக்கிறார்கள்‌. நமது சித்தர்‌ களெல்லாம்‌ எவ்வளவோ தெளிவாய்ப்‌ பார்ப்பனர்களின்‌ அக்கிர மங்களை எடுத்துச்‌ சொல்லியிருக்கிறார்கள்‌. அதனால்தான்‌ நமது பார்ப்பனர்கள்‌ சித்தர்‌. நூல்களையெல்லாம்‌ ஒழித்து, சித்தர்‌ உபதேசங்களையெல்லாம்‌ மறைத்து இராமாயணம்‌, பாரதம்‌, அரிச்சந்திர புராணம்‌ முதலிய நூல்களைப்‌ பார்ப்பனர்களுக்கனுகூலமாக எழுதி அவற்றிக்குச்‌ செல்வாக்குண்டாக்கி, அவற்றைப்‌ படித்தால்‌ மோட்சம்‌ என்று சொல்லி நம்மை ஏமாற்றி விட்டார்‌. கள்‌. கபிலர்‌, பாய்ச்சலூரார்‌, ஒளவையார்‌, திருவள்ளுவர்‌ முதலிய பெரியோர்‌ கள்‌ செய்திருக்கும்‌ நூல்களினாலும்‌ அவர்களுடைய உபதேசங்‌ களினாலும்‌ இன்றைக்கு ஐயாயிரம்‌ வருடங்களுக்கு முன்பாகவே பார்ப்பனர்கள்‌. கொடுமைகளை வெளிப்படுத்தி அவைகளை ஒழிக்கப்‌ பிரயத்தனப்‌ பட்டிருக்கிறார்கள்‌. சமீபகாலத்தில்‌ புத்தர்‌, சமணர்‌ முதலியோர்களும்‌ பார்ப்பனர்கள்‌ கொடுமையை ஒழித்து மக்கள்‌ எல்லோரும்‌ சமம்‌ என்பதும்‌ அன்பும்‌ சமரச உணர்ச்சியும்‌ தான்‌ கடவுளென்பதும்‌ உலகத்திற்குணர்த்த வந்ததை இப்பார்ப்பனர்கள்‌ சகிக்‌ காமல்‌ இவர்கள்‌ பிரயத்தனத்தையெல்லாம்‌ ஒழித்து விட்டார்கள்‌. பார்ப்பனர்கள்‌ தங்களை உயந்த ஜாதியார்‌ என்று சொல்லிக்‌ கொண்ட காலத்தில்‌ பலவான்களாக இருந்தவர்கள்‌ அதை ஒப்புக்‌ கொள்ளாமல்‌ பலாத்‌ காரத்தை உபயோகப்படுத்த வந்த சமயத்தில்‌, தந்திரமாய்‌ நீங்கள்‌ க்ஷத்திரியர்‌. களாயிருந்து அரசாட்சி செய்யுங்கள்‌, நாங்கள்‌ உங்களுக்கு மந்திரி களாயிருந்து “யோசனை” சொல்லுகிறோமென்று சொல்லி அவர்களை ஏமாற்றி கைக்குள்‌ போட்டுக்‌ கொண்டார்கள்‌.கையில்‌ செல்வமும்‌ செல்வாக்கு முள்ள மற்றொரு கூட்டத்தார்‌ “நீங்கள்‌ எப்படி உயர்ந்த ஜாதியாகலாம்‌' என்று விவாதிக்கையில்‌ “நீங்கள்‌ வைசியர்களாக இருங்கள்‌, உங்களுக்குக்‌ கீழ்‌ அநேகர்‌ இருக்கிறார்களெ”ன்று சொல்லியும்‌ “உங்களுக்கும்‌ எங்களைப்‌ போல்‌ பூணூல்‌ போடுகிறோ' மென்றும்‌ சொல்லி அவர்களையும்‌ ஏமாற்றி கைக்குள்‌ போட்டுக்‌ கொண்டார்கள்‌. பிறகு பெரும்பான்மையாயிருந்த விவசாயக்‌ காரர்களையும்‌ கைத்‌ தொழிற்காரர்களையும்‌ பார்ப்பனர்களுக்கு முதல்‌ மூன்று வகைப்‌ பிரிவுக்காரர்களுக்கும்‌ வேலை செய்கிறவர்களென்று ஏற்படுத்தி விட்டார்கள்‌. அவர்களில்‌ பலர்‌ இதை ஒப்புக்‌ கொள்ளாமல்‌ வாதாடவே “உங்களுக்கும்‌ கீழாக ஒரு பிரிவாரை வைத்திருக்கிறோம்‌, அவர்களுக்கு நீங்களே தான்‌ எஜமானர்கள்‌, உங்கள்‌ இஷ்டம்‌ போல்‌ அவர்‌: களை நடத்திக்‌ கொள்ளலாம்‌” என்று சொல்லி சாந்தமே உருவாகவும்‌, சூது குடி அரசு - 1926 (2) 158 வாது தெரியாத சாது ஜனங்களாகவும்‌ இருந்தவர்களை பஞ்சமர்களென்று பெயர்‌ வைத்து அவர்களை ழை சூத்திரர்‌ என்பவர்களுக்குக்‌ காட்டிக்‌ கொடுத்து அவர்களையும்‌ ஏமாற்றி விட்டார்கள்‌. கடைசியாக வாயில்லாப்‌ பூச்சிகளாகிய ஒரு வகுப்பார்‌ தீண்டாதவர்களாகி துன்பப்‌ பட்டுக்‌ கொண்டிருக்‌ கிறார்கள்‌. இவ்விதக்‌ கொடுமை செய்தவர்களைத்தான்‌ நீங்கள்‌ இன்றைய தினம்‌ உங்கள்‌ மத குருவாய்‌ நினைத்துக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. இவ்விதக்‌ கொடுமை நம்மை விட்டு விலக வேண்டுமானால்‌ மத விஷயத்திலும்‌ அரசியல்‌ விஷயத்திலும்‌ நாம்‌ ஆதிக்கம்‌ பெற வேண்டும்‌. ஆக்கம்‌ பெற்று நமது சுயமரியாதையை அடைய முயற்சிக்க வேண்டும்‌. ஒரு சமூகத்திற்‌ கானாலும்‌ ஒரு தேசத்திற்கானாலும்‌ சுயராஜ்யத்தை விட சுயமரியாதையே பிரதானமான தென்பது எனது தாழ்மையானதும்‌ முடிவானதுமான கொள்கை. அச்‌ சுயமரியாதைக்கு மகாத்மாவின்‌ நிர்மாணத்‌ திட்டமும்‌ மறைவுபட்ட இந்த சமயத்தில்‌ அரசியலிலுள்ள சகல பதவிகளையும்‌ சகல ஸ்தானங்களையும்‌ சகல அதிகாரங்களையும்‌ சகல உத்தியோகங்களையும்‌ எப்படியாவது நாம்‌ கைப்பற்றியாக வேண்டும்‌. ஆதலால்‌ இப்பொழுது நடக்கிற தேர்தல்‌ ஸ்தானங்கள்‌ எல்லாம்‌ இக்கருத்துக்‌ கொண்ட பார்ப்பன ரல்லாதார்களே கைப்பற்றும்படி நாம்‌ செய்ய வேண்டும்‌. அதின்‌ மூலம்‌ நமது கருத்தை நிறைவேற்றிக்கொள்ள எவ்வெவ்‌ வழிகளில்‌ சாத்தியப்படுமோ அவ்வவ்வழிகளிலெல்லாம்‌ உழைக்க வேண்டும்‌. இதுதான்‌ நம்முடைய தேசீய வேலை.இதை விட்டு விட்டு காங்கிரஸ்‌ என்றும்‌ சுயராஜ்யம்‌ என்றும்‌, காங்கிரஸ்‌ மூலம்‌ சுயராஜ்யம்‌ அடையலாமென்றும்‌ சொல்லுவதெல்லாம்‌ பார்ப்பனர்‌ மூலம்‌ மோட்சமடையலாமென்று சொல்லுவது போலத்‌ தான்‌ ஆகும்‌. (தொடர்ச்சி : 22.08.1926 இதழில்‌! குறிப்பு : சென்னை திருவல்லிக்கேணியில்‌ 31.07:1926 இல்‌ நடைபெற்ற கூட்டத்தில்‌ சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 15.08.1926 159 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. செண்ணையில்‌ குழுமிய சீர்‌ வபருங்கூட்டம்‌ “௬யாாஸல்யத்தைவிட சுயமரியாதை பிரதானம்‌” “மகாத்மா காந்திக்கு மண்டையில்‌ மூனையில்லை”” எண்று சசாண்ண மகாண்‌ (1) இப்வபாமுது காங்கிரஸ்‌ தனைவராய்‌ விணங்குகிறார்‌ திரு.அர௱ுகோயாலாச்சாரியாரின்‌ காகசியம்‌ “ஊண்ணையினும்‌ வங்காளத்தைப்‌ யோல்‌ கவைரம்‌ மூட்ட பார்ப்பணர்கள்‌ மூயனுகிறார்கணா?”” பலனடைந்தவர்‌ பார்ப்பனரே காங்கிரசின்‌ ஆரம்பமே பார்ப்பனர்கள்‌ எப்படி உத்தியோகம்‌ சம்பாதிக்கலாம்‌ என்கிற கருத்தைக்‌ கொண்டுதான்‌ ஆரம்பிக்கப்பட்டதே யல்லாமல்‌ வேறல்ல. அது போலவே காங்கிரஸ்‌ ஏற்பட்டதற்குப்‌ பிறகுதான்‌ உத்தியோகங்களெல்லாம்‌ பார்ப்பன மயமாவதற்கு அநுகூலமேற்பட்டது. மகாத்மா காந்தி காங்கிரசை தலைமை வகித்து நடத்திய காலத்தில்‌ பார்ப்பனர்‌ களுக்கு ஆதிக்கமும்‌ செல்வாக்கும்‌ உத்தியோகமும்‌ குறையத்‌ தலைப்பட்‌ டது. அதனால்தான்‌ இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ மகாத்மாவை காங்கிரசை விட்டு ஓடும்படி செய்துவிட்டார்கள்‌. அதனாலேயேதான்‌ தமிழ்நாட்டில்‌ மகாத்மா காங்கிரசுக்காக உழைத்து வந்த பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும்‌ காங்கிரசை விட்டு ஓடும்‌ படி செய்து விட்டார்கள்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்டதின்‌ பலனாய்‌ பார்ப்பனர்கள்‌ லாபமடைந்தார்களே ஒழிய ஏழைகளுக்கும்‌ தொழி லாளர்களுக்கும்‌ குடியானவர்களுக்கும்‌ அதிக கஷ்டம்‌ தான்‌ ஏற்பட்டது. சீர்திருத்தத்தால்‌ விளைந்த கேடு உதாரணமாக காங்கிரசுக்கு முன்பாக 50 கோடி ரூபாயிக்குள்ளாகத்‌ தான்‌ நாம்‌ சர்க்காருக்கு வரிகொடுத்துக்‌ கொண்டு வந்தோம்‌. காங்கிரஸ்‌ குடி அரசு - 1926 (2) 160 பெருக்கப்‌ பெருக்க ஏழைகளுக்கும்‌ வரி பெருகிக்‌ கொண்டே வந்து 50 கோடி ரூபாயிலிருந்த வரி இன்றை தினம்‌ 160 கோடி ரூபாயில்‌ வந்து நிற்கிறது. காங்கிரஸ்‌ பெற்ற பிள்ளைகளான இரண்டு சீர்திருத்தங்களும்‌ தேசத்திற்கு கஷ்டத்தையும்‌ அதிக வரியையும்‌ ஒற்றுமைக்‌ குறைவையும்‌ ஜனங்களுக்கு பற்தோபஸ்துக்‌ குறைவையும்தான்‌ ஏற்படுத்தி இருக்கிறதே யல்லாமல்‌ வேறு ஒருவித நன்மையும்‌ உண்டாக்கவேயில்லை. இன்னும்‌ ஒரு சீர்திருத்தம்‌ வருமேயானால்‌ இனியும்‌ அதிகமான வரியும்‌ கஷ்டமும்‌ பந்தோபஸ்து குறைவும்‌ தான்‌ ஏற்படுமேயல்லாமல்‌ அநுகூலம்‌ ஒன்றும்‌ ஏற்படப்‌ போவதில்லை. இப்பொழுதிருக்கும்‌ காங்கிரஸ்‌ பார்ப்பன ஆதிக்‌ கத்திற்காக வேண்டி பொய்யும்‌ புரட்டும்‌ ஏமாற்றமும்‌ நிறைந்து கிடக்கின்றன. தூக்குமேடை! அதில்‌ ஏமாற்றுகிறவர்களுக்கும்‌ வஞ்சிக்கிறவர்களுக்கும்‌ சுயநலக்‌ காரர்களுக்கும்‌ பார்ப்பனர்களுக்கும்தான்‌ இடமிருக்கிறதே யல்லாமல்‌ யோக்கியர்களுக்கு இடமில்லாததோடு ஏழைகளுக்கனுகூலமான திட்டங்‌ களும்‌ அதில்‌ ஒன்றுகூட இல்லை. காங்கிரசின்‌ குற்றங்களை எடுத்து யாராவது வெளியில்‌ சொன்னால்‌ அவர்களை காங்கிரஸ்‌ துரோகி என்று சொல்லுகி றார்கள்‌. சர்க்காரின்‌ குற்றங்களை யாராவது வெளியில்‌ எடுத்துச்‌ சொன்னால்‌ எப்படி அவன்‌ ராஜத்‌ துரோகியாய்‌ விடுகிறானோ, பார்ப்பனர்‌ குற்றங்களை. யாராவது வெளியில்‌ எடுத்துச்‌ சொன்னால்‌ எப்படி அவன்‌ பிராமணத்‌ துவேஷியாய்‌ விடுகிறானோ, சாஸ்திரங்களின்‌ புரட்டுகளை யாராவது வெளி யில்‌ எடுத்து சொன்னால்‌ எப்படி அவன்‌ மதத்துரோகியாய்‌ விடுகிறானோ அது போலவே நமது பார்ப்பனர்களும்‌ தங்கள்‌ அநுகூலத்திற்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற காங்கிரஸ்‌ குற்றத்தை யாராவது பேசினால்‌ அவனைக்‌ காங்கிரஸ்‌ துரோகி என்பதோடு மாத்திரமல்லாமல்‌ தேசத்‌ துரோகி என்றும்கூட சொல்லி பிரசாரம்‌ செய்கிறார்கள்‌. இதற்காக வேண்டியே என்னை தூக்கில்‌ இடுவதற்காக நமது பார்ப்பனர்கள்‌ ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருக்கிறார்கள்‌. எனது நண்பர்கள்‌ ஸ்ரீமான்கள்‌ சக்கரை, ஆரியா இவர்களை தூக்கில்‌ போட்டு விட்டார்கள்‌. மற்றும்‌ ஸ்ரீமான்கள்‌ கலியாணசுந்தர முதலியார்‌, வரதராஜுலு நாயுடுகாரு இவர்களை மிரட்டிக்‌ கொண்டும்‌ இருக்கிறார்கள்‌. தலைவிரித்தாடும்‌ தற்காலத்‌ தலைவர்கள்‌ காங்கிரசைப்‌ பற்றி குற்றம்‌ சொல்லாத மனிதர்கள்‌ யாராவது இருக்கி றார்களா? ஒரு காலத்தில்‌ காங்கிரஸ்‌ தலைவர்களின்‌ பேரில்‌ செருப்பையும்‌ ஜோட்டையும்‌ வீசி யெறிந்துவிட்டு வெளியில்‌ வந்து விட்ட மகான்களின்‌ படம்‌ இன்றைய தினம்‌ உங்கள்‌ வீடுகளிலெல்லாம்‌ தொங்குகிறதா, இல்லையா? காங்கிரசையும்‌ காந்தியையும்‌ குழி தோண்டிப்‌ புதைக்க வேண்டுமென்று சொன்னவர்கள்‌ இன்றைய தினம்‌ பெரிய தலைவர்‌ களாகவில்லையா? 161 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 “மகாத்மாவிற்கு மண்டையில்‌ மூளை இல்லை” என்று சொன்னவர்களும்‌ மகாத்மா சொல்லுவது சட்டத்திற்கு விரோதமென்று சொல்லி அவரைக்‌ கைது செய்யச்‌ சொன்னவர்களும்‌ இன்றைய தினம்‌ காங்கிரசுக்கும்‌, சுயராஜ்யக்‌ கட்சிக்கும்‌ தலைவராக இல்லையா? இன்னும்‌ ஸ்ரீமதி பெஸண்ட்‌ அம்மையார்‌ முதற்கொண்டு, மகா மகாகனம்‌ ஸ்ரீனிவாச சாஸ்திரி முதற்‌ கொண்டு ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி அய்யர்‌, ரெங்கசாமி ஐயங்கார்‌ வரையிலும்‌ எத்தனையோ பேர்‌ காங்கிரசையும்‌ மகாத்மாவையும்‌ திட்டிக்கொண்டு அதன்‌ கொள்கைகளுக்கு விரோதமாய்‌ எதிர்ப்பிரசாரமும்‌ திருட்டுப்‌ பிரசாரமும்‌ செய்துகொண்டு இருந்தவர்கள்‌ இன்றைய தினம்‌ யோக்கியர்களாகி விடவில்லையா? அவர்களுக்கெல்லாம்‌ தூக்குக்‌ கிடை யாது: எங்களை மாத்திரம்‌ தூக்கில்‌ போட வேண்டுமாம்‌. காங்கிரஸ்‌ யோக்கியமாயிருந்த காலமாகிய மகாத்மா காங்கிரசில்‌ இருந்த காலத்தில்‌ இப்போதைய காங்கிரஸ்‌: தலைவர்களாகிய இந்தப்‌ பார்ப்பனர்களெல்லாம்‌ அப்பொழுது எங்கு போயிருந்தார்கள்‌? காங்கிரஸ்‌ யோக்கியப்‌ பொறுப்பற்று விபசாரித்தனமாயிருக்கிற காலத்‌ தில்‌ இப்பொழுது வந்து அதைக்கட்டி அணைந்து கொண்டாடுகிறார்கள்‌. இப்போதைய காங்கிரஸ்‌ தேசத்திற்கனுகூலமாக என்ன திட்டத்தை உடைத்தா யிருக்கிறது? என்ன காரியத்தைக்‌ கொண்டு காங்கிரசை நாம்‌ மதிக்கக்‌ கூடிய தாயிருக்கிறது? ஒரு ஸ்தாபனத்திற்கு நாம்‌ மதிப்புக்‌ கொடுப்பதாயிருந்தால்‌ அதனிடத்திலிருக்கிற கொள்கைக்காகவேயல்லாமல்‌ அதனுடைய பெயருக்‌ காக அல்ல. அதுபோலவே மகாத்மா காந்தியை நாம்‌ மதிப்பதும்‌ அவரிடத்‌ தில்‌ பக்தி செலுத்துவதும்‌ அவரிடத்திலுள்ள கொள்கைக்கும்‌, குணத்திற்கும்‌, நடவடிக்கைக்குமேயல்லாமல்‌ அவருடைய பெயருக்கும்‌, சரீரத்துக்கும்‌, யெளவன அழகுக்குமல்ல. ஆதலால்‌ காங்கிரசின்‌ குற்றத்தை வெளியில்‌ எடுத்துச்‌ சொல்வதினாலேயே ஒருவன்‌ தேசத்‌ துரோகியென்று அழைப்ப தென்றால்‌ அப்பேர்ப்பட்ட தேசத்‌ துரோகத்திற்கு நான்‌ கொஞ்சமும்‌ பயப்‌ படவில்லை. இராஜகோபாலாச்சாரியாரின்‌ இரகசியம்‌ 1923 - ஹுத்தில்‌ நடந்த சென்ற சட்டசபைத்‌ தேர்தலின்போது கூட நானும்‌ எனது நண்பர்கள்‌ ஸ்ரீமான்கள்‌ எஸ்‌.இராமநாதன்‌, தண்டபாணி பிள்ளை, ஆர்‌.சின்னைய பிள்ளை முதலிய அநேகர்‌ ஒத்துழையாமைக்கு விரோதமாய்ப்‌ புறப்பட்டு டில்லி ஸ்பெஷல்‌ காங்கிரஸ்‌ கட்டளைக்கு விரோத மாக எங்கள்‌ சொந்தத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள்‌ செலவு செய்து கொண்டு பிரசாரங்கள்‌ செய்தோம்‌. மறுபடியும்‌ என்னையேதான்‌ காங்கிரஸ்‌ கமிட்டிக்குத்‌ தலைவராகவும்‌ ஸ்ரீமான்‌ இராமநாதன்‌ அவர்களைக்‌ காரியதரிசியாகவும்‌ நியமித்தார்கள்‌. நாங்கள்‌ ஒப்புக்‌ கொள்ள மாட்டோம்‌ என்று கூட சொன்னோம்‌. ஆனால்‌ ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியார்‌. குடி அரசு - 1926 (2) 162 அவர்கள்‌, இப்பொழுது ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ அஸ்ஸாம்‌ காங்கிரஸில்‌ எல்லாம்‌ சரிப்படுத்தி விடுகிறேன்‌ என்று சொல்லி ஏமாற்றி ஆள்‌ சேர்த்து வருவதுபோல்‌, காக்கிநாடாக்‌ காங்கிரசில்‌ எல்லாம்‌ சரிப்படுத்தி விடுகிறேன்‌ என்று சொல்லி எங்களை ஒத்துக்‌ கொள்ளும்படி செய்தார்‌. காக்கிநாடா காங்கிரசில்‌ ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியார்தான்‌ எங்களிடம்‌ சொன்ன தற்கு விரோதமாய்‌ சட்ட சபைப்‌ பிரவேசத்தை ஆதரித்துத்‌ தீர்மானத்தை பிரேரேபித்தார்‌. அது முதற்‌ கொண்டே எங்களுக்கும்‌ அவருக்குமிருந்த கட்டுப்பாடும்‌ நம்பிக்கையும்‌ குலைந்து போய்‌ விட்டது. அதிலிருந்துதான்‌ ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியார்‌ பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவும்‌, நாங்கள்‌ பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாகவும்‌ இருந்து வருகிறோம்‌. ஆனால்‌ அவர்‌ இரகசியமாகவும்‌ தந்திரமாகவும்‌ செய்கிறார்‌: நாங்கள்‌ வெளிப்படையாகவும்‌ தைரியமாகவும்‌ செய்கிறோம்‌. கள்ளை நிறுத்துவது என்கிற பெயரை வைத்துக்‌ கொண்டு பார்ப்பனர்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுப்பதற்காக ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியார்‌ ஒரு இயக்கம்‌ என்று ஆரம்பித்துக்‌ கொண்டு ஊர்‌ ஊராய்ப்‌ பிரசாரம்‌ செய்தார்‌. அதன்‌ பலனாகத்‌ தான்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுப்‌ பதற்காக சில கிராமங்களுக்குச்‌ சென்று பிரசாரமும்‌ செய்தார்‌. அதனால்தான்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்காரின்‌ உண்மை நிலையைப்‌ பற்றி நானும்‌ எனது பத்திரிகையின்‌ மூலம்‌ பிரசாரம்‌ செய்தேன்‌. ஸ்ரீமான்‌ இராஜகோபா லாச்சாரியார்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்காரர்‌ கள்ளை நிறுத்துவதாக ஒப்புக்‌ கொண்‌ டார்கள்‌, ஆதலால்‌ அவர்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌ என்கிறார்‌: ஆனால்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்காரர்களோ, ஒருவர்‌ சட்டசபையில்‌ கள்ளை நிறுத்த முடி யாது என்கிறார்‌; மற்றொருவர்‌ முட்டுக்கட்டை போடுவோமென்கிறார்‌; வேறொருவர்‌ முட்டுக்‌ கட்டை போட முடியாது அரசாங்கத்தைத்‌ திணறச்‌ செய்யலாமென்கிறார்‌; பிரிதொருவர்‌ அரசாங்கத்தை அசைக்க முடியாது, இதன்‌ மூலம்‌ ஜனங்களுக்கு ஒரு படிப்பினை உண்டாக்கலாமென்கிறார்‌; இன்னொருவர்‌ படிப்பு ஒன்றும்‌ உண்டாக்க முடியாது: இரட்டை ஆட்சியை ஒழிக்கலாமென்கிறார்‌; மற்றொருவர்‌ இரட்டை ஆட்சியை ஒழிப்பதில்‌ ஒரு காரியமும்‌ முடிந்து விடாது, சர்க்கார்‌ சொல்லுகிறபடி கேட்கிற ஆள்கள்‌ போய்‌ உட்காருவதைவிட தேசீயவாதியாகிய நாம்‌ போய்‌ உட்காருவது நல்லதல்லவா என்கிறார்‌; வேறொருவர்‌ தேசீயவாதியானாலும்‌ சரி, யாரா னாலும்‌ சரி எப்படியாவது ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழிப்பதற்காகப்‌ போக வேண்டுமென்கிறார்‌. சென்னையைக்‌ கல்கத்தாவாக்க முயலுகிறார்களா?' வெளியில்‌ இப்படி பலவித அபிப்பிராய பேதங்களிருப்பதாகக்‌ காட்டிக்‌ கொண்டாலும்‌ உள்‌ அந்தரங்கத்தில்‌ இவர்கள்‌ எல்லோருக்கும்‌ ஒரே அபிப்பிராயந்தான்‌. அதென்ன வென்றால்‌ எப்படியாவது பார்ப்பனரல்லா தாருக்கு இதுசமயம்‌ கொஞ்ச நஞ்சமிருந்துவரும்‌ செல்வாக்கையும்‌, அதிகா ரங்களையும்‌, உத்தியோகங்களையும்‌ ஒழித்து அந்த ஸ்தானங்களையும்‌ 163 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பார்ப்பனர்களே கைப்பற்ற வேண்டுமென்பதுதான்‌. இந்த மாதிரி கெட்ட எண்ணங்கள்‌ என்றைக்கிருந்தாலும்‌ ஒரு நாளைக்கு நமது பார்ப்பனர்‌ களுக்கு ஆபத்தாய்த்தான்‌ முடியப்‌ போகிறது. உதாரணமாக, கல்கத்தாவில்‌ இரட்டையாட்சியை ஒழித்ததன்‌ பலன்தான்‌ அங்கு இந்து முஸ்லீம்‌ கலகமென்னும்‌ நெருப்பு பற்றி எரிந்துக்‌ கொண்டிருக்கிறது. கல்கத்தா இரட்டையாட்சியை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமே அங்குள்ள மகமதிய மந்திரிகளை ஒழிப்பதற்காக செய்த சூழ்ச்சிகளேயாகும்‌. மந்திரி களை ஒழித்து வெற்றி பெற்றதன்‌ பலன்‌ இந்து முஸ்லீம்‌ கலகமாய்ப்‌ போய்‌ விட்டது. அதுபோலவே சென்னையிலும்‌ பார்ப்பனரல்லாத மந்திரிகளை ஒழிக்க நமது பார்ப்பனர்கள்‌, காங்கிரஸ்‌ பெயராலும்‌ தேசத்தின்‌ பெயராலும்‌ செய்யும்‌ சூழ்ச்சிகள்‌ நிறைவேறுமானால்‌ என்ன நடக்குமென்பதை நீங்களே யோசித்துப்‌ பாருங்கள்‌. சென்ற வருடம்‌ சுயராஜ்யக்‌ கட்சிப்‌ பார்ப்பனர்கள்‌ செய்த சூழ்ச்சி வெற்றியடைந்ததினால்‌ இவ்‌ வருடம்‌ அத்தேர்தல்களில்‌ என்ன நடக்கிறதென்பதைக்‌ கவனித்தால்‌ நடக்கப்‌ போவது நன்றாய்‌ விளங்கும்‌. சென்ற வருடத்திய பஜனை எங்கே? கொடிகள்‌ எங்கே? மகாத்மாவின்‌ படமெங்கே? தேங்காய்‌ பழம்‌ பூஜையெங்கே? இவர்‌ களுக்காகப்‌ பிரசாரம்‌ செய்த ஸ்ரீமான்கள்‌ சக்கரைச்‌ செட்டியார்‌, டாக்டர்‌ வரத ராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார்‌ முதலிய பெரியார்களெங்கே? வீதிவீதிக்கு கூட்டமெங்கே? சோம்பேறிப்‌ பையன்களுக்குக்‌ காசு கொடுத்து பார்ப்பனரல்லாத பெரியார்களை திட்டச்‌ சொன்னதும்‌, அடிக்கச்‌ சொன்னது மான தைரியமெங்கே? ஒரு சிறு புரட்டு வெளியானதெங்கே? இவ்வளவு பலன்‌ கள்‌ காரியங்கள்‌ மறைபட்டிருந்தால்‌ இனி பெரும்‌ புரட்டு வெளியாய்‌ விட்டால்‌ இந்தப்‌ பார்ப்பனர்களின்‌ கதி என்ன ஆகுமென்று நினைக்கிறீர்‌ கள்‌? வங்காளத்தை விட எண்மடங்கு அதிகமாகுமா இல்லையா? அப்புறம்‌ யாரால்‌ இக்கலகங்களை அடக்க முடியும்‌. அரசாங்கத்தாரும்‌ நன்றாய்‌ வேடிக்கை. பார்த்துக்‌ கொண்டு சிரிப்பார்களேயொழிய ஒரு கட்சிக்கும்‌ சிபார்‌ சுக்கு வரமாட்டார்கள்‌. பின்னால்‌ கையில்‌ பலத்தவன்‌ காரியமாய்த்தான்‌ போய்‌ விடும்‌. பிராமணர்களே மந்திரியாயும்‌ போலீஸ்‌ அதிகாரியாகவும்‌ வந்தாலும்‌ கூட பார்ப்பனரல்லாதார்கள்தான்‌ போலீஸ்காரர்களாகவும்‌ பட்டா ளத்து சிப்பாய்களாவும்‌ இருப்பார்கள்‌. அதுசமயம்‌ மகாத்மா காந்தி வந்தா லும்‌ 4 நாள்‌ பட்டினி இருக்கத்தான்முடியுமே தவிர வேறு ஒரு காரிய மும்‌ செய்து விட முடியாது. ஆதலால்‌ இப்பொழுதிருக்கிற ஏதோ சில விஷமக்‌ கார பார்ப்பனர்கள்‌ தாங்கள்‌ வெகு புத்திசாலிகளென்றும்‌ தந்திரசாலி களென்றும்‌ நினைத்துக்‌ கொண்டு செய்வதின்‌ பலன்‌ நாளைய தினம்‌ ஒரு பாவமுமறியாத. இவர்களின்‌ குழந்தை குட்டிகளுக்கும்‌ மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ உள்ளவர்களுக்கும்‌ கஷ்டத்தை விளைவிக்குமென்று வருத்தப்‌ படாமலிருக்க முடியவில்லை. ஆதலால்‌ பார்ப்பனர்களில்‌ வாலிபர்‌ களாகவும்‌ பட்ச பாதமற்ற வர்களாகவும்‌, பரிசுத்தர்களாகவும்‌ இருக்கிறவர்கள்‌ தேச நன்மையையும்‌, தங்களது சமூக நன்மையையும்‌ உத்தேசித்து ஒன்று சேர்ந்து தங்கள்‌ குடி அரசு - 1926 (2) 164 சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணம்‌ வைத்துக்கொண்டு தேசத்தின்‌ பெயரால்‌ சாது ஜனங்களுக்குச்‌ செய்யும்‌ கொடுமையைத்‌ தடை செய்து கர்மபலனை அடையாமலிருக்கும்படி பிரயத்தனப்பட வேண்டியது அவர்களது கடமையாகும்‌. பார்ப்பனர்கள்‌ கடமை இவ்விஷயங்களைப்‌ பற்றி எடுத்து நான்‌ சொல்லுவதை நீங்கள்‌ அலட்சியமாய்‌ கருதிவிடக்கூடாது. என்னைப்‌ பொருத்தவரையிலும்‌ நான்‌ உண்மையாய்‌ உணர்வதையும்‌ எனக்கு உண்மை என்று பட்டதையுமே நான்‌ உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌. பார்ப்பனர்களை உதைத்துவிட முடியுமென்‌ றாவது இந்நாட்டை விட்டு ஓட்டிவிட முடியுமென்றாவது நான்‌ ஒரு காலமும்‌ நினைக்கவே இல்லை. எப்படியானாலும்‌ மகமதியர்‌ கிறிஸ்தவ சகோதரர்‌ களைப்‌ போலவே அவர்களும்‌ இந்த நாட்டிலேயே இருக்கவேண்டியதுதான்‌. ஆனால்‌ அவர்கள்‌ நம்பிக்கைக்குப்‌ பாத்திரர்களாகவும்‌ தேச நன்மைக்குற்ற வர்களாகவும்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. தேசத்தில்‌ அவர்களிடத்தில்‌ யாருக்கும்‌ நம்பிக்கையில்லை. சுயராஜ்யமா? சுயமரியாதையா? இக்காலத்தில்‌ நானும்‌ இந்தப்‌ பார்ப்பனர்களை நம்பி அவர்கள்‌ பின்னால்‌ திரிந்துகொண்டு ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ உத்தியோக வேட்டைக்‌ காரர்கள்‌ என்று சொன்னதுண்டு. ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு எதிரிடையாக வேலை செய்த காலமுமுண்டு.அப்படியிருக்க அவர்களைப்‌ பற்றி நான்‌ ஏன்‌ இப்பொ முது குறை கூறுகிறேன்‌. அவர்களால்‌ எனக்கு ஒரு கெடுதியும்‌ ஏற்பட்டு விடவில்லை. ஆனால்‌ அவர்களுடைய அந்தரங்கத்தைக்‌ கூடவேயிருந்து பார்த்ததில்‌ அவர்களை விட ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ ஆயிரம்‌ மடங்கு யோக்கியர்களென்பதே எனது அபிப்பிராயம்‌. பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ நன்மைக்கும்‌ பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்கும்‌ நம்மை உபயோகப்‌ படுத்திக்‌ கொண்டார்களென்பதையும்‌, இவர்களால்‌ என்றைக்கும்‌ நமது நாட்டிற்கு சுயராஜ்யம்‌ வராதென்பதையும்‌ நன்றாய்‌ நான்‌ அறிந்து கொண்‌: டேன்‌. சுயராஜ்யத்தை விட சுயமரியாதை தான்‌ இப்போது எனக்குப்‌ பெரிதா யிருக்கிறது. நமது சமூகத்திற்கு *சூத்திரன்‌' என்கிற பெயர்‌ இனி அரை நாழி கையும்‌ இருக்கக்கூடாது. நம்மை அடிமை என்றும்‌ வைப்பாட்டி மகன்‌ என்றும்‌ சண்டையில்‌ ஜெயித்த கைதிகளென்றும்‌ பொருள்கள்‌ கொண்ட “சூத்திரன்‌” என்கிற பெயரால்‌ அழைப்பதை எப்படி பொறுத்துக்‌ கொண்டிருக்கலாம்‌. ஆதலால்‌ சுயமதிப்பையே பிரதானமாகக்‌ கருதுவது ஒருக்காலும்‌ குற்ற மாகாது. இம்மாதிரி ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார்‌ கொடுமைப்படுத்தியும்‌ தாழ்மைப்‌ படுத்தியும்‌ தீண்டாதாராக்கியும்‌ நடத்திக்‌ கொண்டிருப்பதை விட மனதில்‌ லாதிருக்கும்‌ போது அந்த தேசம்‌ எப்படி சுயராஜ்யம்‌ அடைய முடியும்‌? 165 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யார்‌ சம்மதிக்கிறார்கள்‌ ? இவ்விதம்‌ தங்கள்‌ சுயமரியாதையைப்‌ பெறமுடியாத ஜனங்கள்‌ எப்படி சுயராஜ்யம்‌ பெறத்‌ தகுதியுடையவர்களாவார்கள்‌? வெள்ளைக்காரர்‌ கள்‌ நம்மைப்‌ பார்த்து உங்கள்‌ ராஜ்யத்தை நீங்களே வைத்துக்‌ கொள்ளுங்கள்‌, நாங்கள்‌ போகிறோம்‌ என்று சொன்னால்‌ ஏற்றுக்‌ கொள்ளுவதற்கு இந்திய ராகிய நம்மில்‌ யார்‌ தயாராயிருக்கிறோம்‌? யார்‌ ஏற்றுக்‌ கொள்வதை யார்‌ சம்மதிக்கத்‌ தயாராயிருக்கிறார்கள்‌ ? இந்துக்கள்‌ வசம்‌ ஒப்படைத்தால்‌ முஸ்லீம்கள்‌ சம்மதிப்பார்களா? இந்து முஸ்லீம்‌ இருவர்களும்‌ சம்மதித்தால்‌ கிறிஸ்தவர்கள்‌ சம்மதிப்பார்களா? இந்து முஸ்லீம்‌ கிறிஸ்தவர்கள்‌ மூவரும்‌ சம்மதித்தாலும்‌ தீண்டக்‌ கூடாது, தொடக்கூடாது, தெருவில்‌ நடக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்தி வைத்திருக்கும்‌ பஞ்சமர்கள்‌ என்று சொல்லும்‌ சகோதரர்கள்‌ சம்மதிப்பார்களா? முதலாவது இந்துக்களிலேயே யார்‌ ஏற்றுக்‌ கொள்வதையார்‌ சம்மதிக்கப்‌ போகிறார்கள்‌? பனகால்‌ அரசர்‌ ஏற்றுக்‌ கொள்‌ வதை நானும்‌ நீங்களும்‌ சம்மதிப்போம்‌ என்கிற குரல்‌) நானும்‌ நீங்களும்‌ சம்மதித்தால்‌ போதுமா? மயிலாப்பூர்‌ அய்யங்கார்‌, அய்யர்‌ சம்மதிப்பார்‌ களா? அல்லது பார்ப்பனர்கள்‌ ஏற்றுக்கொள்வதை நாம்‌ சம்மதிப்போமா? ஆகையால்‌ இதுசமயம்‌ ஒற்றுமைக்கும்‌, நம்பிக்கைக்கும்‌, சுயமரியாதைக்கும்‌ பாடுபடுவதை விட்டுவிட்டு சுயராஜ்யத்தைப்‌ பற்றிப்‌ பேசுவது வீண்‌ பேச்சேயாகும்‌. குறிப்பு சென்னை திருவல்விக்கேணியில்‌ 31071926 இல்‌ நடைபெற்ற கூட்டத்‌ தின்‌ சொற்பொழிவு தொடர்ச்சி. குடி அரசு - சொற்பொழிவு - 22.08.1926 குடி அரசு - 1926 (2) 166 €ேவஸ்தானச்‌ சட்டம்‌ யார்ப்பணக்‌ கட்சியிண்‌ கூழ்ச்சி வராம வராமுயாய்‌ ககர்க்கப்படுகிறது. பிரபல தேசயக்தர்கனின்‌ கருத்து சட்டப்பேரவையில்‌ வரப்போகும்‌ திருத்தத்தை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ எதிர்ப்பது “ தீண்டாமைக்குத்‌ துணைபோவதாகும்‌,” கூடாவொழுக்கமாகும்‌,” “புரட்டான போலிச்‌ செயலாகும்‌.” “ காங்கிரசுக்கு அழிவுதேடுவதாகும்‌.” திரு.ஈ.வெ.இராமசாமி நாயக்கர்‌ தந்திமூலம்‌ பத்திரிகைகளுக்கு அறிவித்ததாவது:- “தேச மகாசபையின்‌ பெயரால்‌, இந்துமத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச்‌ செயலாகும்‌. மகந்துகளையும்‌ மடாதிபதிகளையும்‌ தொங்கிக்‌ கொண்டு நிற்கும்‌ சயநலங்‌ கொண்ட பார்ப்பனர்களின்‌ இழிவான தந்திரங்கள்‌ வெளிப்படையாய்ப்‌ புலப்படுகின்றன. தென்னிந்தியப்‌ பார்ப்‌ பனரல்லாதாரின்‌ சார்பாக மசோதாவை நான்‌ முழுமனதுடன்‌ ஆதரிக்‌ கிறேன்‌.” (பப்‌) குடி அரசு - அறிவிப்பு - 22.08.1926 167 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வாப்யோகும்‌ கதர்தல்‌ தமிழர்களுக்கு ஓர்‌ தணிப்வபரும்‌ விண்ணப்பம்‌ வரப்போகும்‌ தேர்தல்கள்‌ தென்னிந்திய தமிழ்‌ மக்களுக்கு ஏற்பட்டி ருக்கும்‌ மிகவும்‌ நெருக்கடியான சந்தர்ப்பத்தில்‌ ஏற்படுகிறது. அதன்‌ முக்கிய நோக்கம்‌ நமது நாடு சுயராஜ்யம்‌ பெறுவதற்கென்று சொல்லிக்‌ கொள்ளப்‌ பட்டாலும்‌, சுயராஜ்யம்‌ என்பது சுயமரியாதையும்‌ சுயேச்சையும்‌ உள்ள சமூகத்துக்குத்தான்‌ பயன்படுமே அல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்ய மென்பதும்‌ பரராஜ்யமென்பதும்‌ வித்தியாசமற்றதேயாகும்‌. தென்னாட்டுத்‌ தமிழ்மக்கள்‌ பெரும்பாலும்‌ சுயமரியாதையற்று, சுயேச்சையற்று மலந்‌ தின்னும்‌ பன்றிகளுக்கும்‌ கழுதைகளுக்கும்‌ புழுக்களுக்குமுள்ள சுதந்திரமும்‌ சுயாதீனமுமின்றி கோடிக்கணக்கான மக்கள்‌ உழல்வதை யாரும்‌ மறுக்க முடியாது. இவர்களின்‌ பொருட்டும்‌, தேச முழுவதிலுள்ள இவர்‌ போன்றோர்‌ பொருட்டும்‌ விடுதலையை உத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால்‌ ஆறு வருடங்களுக்கு முன்‌ துவக்கப்பட்ட ஒத்துழையா இயக்கமானது பல்வேறு காரணங்களால்‌ வேருடன்‌ களையப்பட்டு விட்டது. இதன்‌ பலணாய்‌ ஏற்‌ பட்ட நிலைமையானது சுயேச்சையும்‌, சுயமரியாதையும்‌, சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு, அதிலும்‌ முக்கியமாய்‌ தென்னாட்டுத்‌ தமிழ்மக்களுக்கு முன்னிலும்‌ அதிக கேவலமான நிலையில்‌ கொண்டு வந்து விட்டுவிட்டது. பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்‌ நாட்டு ஜனங்களென்று சொல்லிக்‌ கொள்ளுவோரிலேயே ஒரு வகுப்பார்‌ தங்களுடைய சுயநலத்‌ தையே உத்தேசித்து பொது ஜனங்களிடையே வகுப்பு வித்தியாசத்தையும்‌ துவேஷத்தையும்‌ உண்டுபண்ணி தங்களை உயர்ந்தோரென்று சொல்லிக்‌ கொண்டு தங்கள்‌ உயர்விலும்‌ வாழ்விலுமே கண்ணுங்கருத்துமாயிருந்து தேசத்தையும்‌, மதத்தையும்‌, மற்ற சமூகங்களையும்‌ பாழாக்கியதுடன்‌ அந்நிய தேசத்தார்‌ நம்‌ நாட்டிடையே படையெடுத்து வந்த போதெல்லாம்‌ தங்கள்‌ நன்மையின்‌ பொருட்டே எதிரிகளுக்கு உளவு சொல்லியும்‌ தேசத்தையும்‌ மதத்தையும்‌ காட்டிக்‌ கொடுத்தும்‌ அவர்களிடமே மந்திரி முதலிய உத்தி யோகங்கள்‌ பெற்று செல்வாக்கடைந்தும்‌, நமது நாட்டாரை அடக்கியாள அவர்கள்‌ ஓர்‌ ஆயுதமாகவும்‌ பயன்பட்டு வந்திருக்கிறார்கள்‌. இதற்கு உதார ணமாக, இச்சுயநலக்‌ கூட்டத்தார்‌ தங்கள்‌ சூழ்ச்சியாலும்‌ தந்திரத்தாலும்‌ தாங்களே நமது மதாச்சாரியார்களாகவும்‌, குல குருக்களாகவும்‌, படித்தோர்‌. குடி அரசு - 1926 (2) 168 களாகவும்‌, தேச நன்மைக்கும்‌ சமூக நன்மைக்கும்‌ ஏற்பட்ட இயக்கங்களுக்கு தலைவர்களாகவும்‌, அரசாங்கத்தை நடத்த அவர்களுக்கு ஊழியர்‌ களாகவுமிருந்து அரசாங்கத்தை நடத்திக்‌ கொடுத்துக்‌ கொண்டும்‌, அதே சமயத்தில்‌ அரசாங்கத்திற்கு ஒற்றர்களாயிருந்து நாட்டின்‌ உயிர்‌ நாடியைக்‌ காட்டிக்‌ கொடுத்தும்‌ ஆகிய இவ்வளவு காரியங்களையும்‌ செய்து வருவது இக்கூட்டத்தார்தான்‌ என்பதை இப்பொழுதும்‌ காணலாம்‌. அல்லாமலும்‌ ஆதிகாலத்தில்‌ மக்கள்‌ ஒற்றுமைக்கும்‌ சமத்துவத்துக்‌ கும்‌, சகோதரத்துவத்துக்கும்‌, ஜீவகாருண்யத்துக்கும்‌, அஹிம்சைக்கும்‌ ஏற்பட்ட இயக்கங்களுக்கும்‌ சாதனங்களுக்கும்‌ விரோதிகளாயிருந்து தங்கள்‌ சுயநன்மைக்காகவே அவைகளை ஒழித்து தேசத்தை இக்‌ கெதிக்கு கொண்டு வந்தவர்களும்‌ இவர்களேதான்‌ என்பதை சரித்திரம்‌ மூலமாகவும்‌ நேரிலும்‌ காணலாம்‌. மகாத்மாவால்‌ ஏற்படுத்தப்பட்ட அஹிம்சா தர்மத்தோடு கூடிய விடுதலை இயக்கத்தை ஆரம்ப முதல்‌ இன்று வரையிலும்‌ பல சூழ்ச்சிகளா லும்‌ பாழாக்கினவர்கள்‌ இவர்களேயென்பதை எவரும்‌ மறுக்க மாட்டார்கள்‌. இதை மகாத்மா அவர்களே தம்முடைய இயக்கம்‌ சீர்குலைந்ததற்குக்‌ காரணம்‌ படித்த வகுப்பினர்தான்‌! படித்த வகுப்பினர்தான்‌! எனப்‌ பலமுறை கதறியிருக்‌ கிறார்‌. நாட்டில்‌ படித்த வகுப்பார்‌ யாரென்பதை நாம்‌ சொல்லத்‌ தேவை யில்லை. அல்லாமலும்‌, பெல்காம்‌ காங்கிரஸின்‌ அக்கிராசனப்‌ பிரசங்கத்தில்‌ இந்தியாவுக்கு பிரிட்டீஷார்‌ செய்த கெடுதியை விட பார்ப்பனர்கள்‌ செய்த கெடுதிகுறைவானதல்லவென்று மகாத்மாவே சொல்லியிருக்கிறார்‌. ஆதலால்‌ நமது நாடு முன்னேற்றமடையவோ, மக்கள்‌ யாவரும்‌ சமம்‌ என்னும்‌ உணர்ச்சி அடையவோ, எல்லோரும்‌ சமத்துவத்துடன்‌ வாழவோ, நம்மால்‌ ஏற்படுத்தப்படும்‌ இயக்கம்‌, தங்கள்‌ சூழ்ச்சியால்‌ பொது மக்களை ஏமாற்றி தங்கள்‌ மாயவலையில்‌ கட்டுப்படுத்தி எதற்கும்‌ தாங்களே முன்னணியிலிருந்து கொண்டு எதையும்‌ தங்கள்‌ செளகரியத்துக்கு உபயோகப்படக்கூடிய மாதிரியில்‌ திருப்பிக்‌ கொள்ளும்‌ நயவஞ்சகர்களான சுயநல வகுப்பார்‌ கையில்‌ சிக்காமல்‌ தப்ப வழி தேட வேண்டும்‌. அங்கனம்‌ நாம்‌ வழி தேடா விட்டால்‌ நம்‌ விடுதலைக்கென ஆரம்பிக்கப்படும்‌ எந்த இயக்கமும்‌, அதற்காக நம்மால்‌ செய்யப்படும்‌ எவ்வித தியாகமும்‌, அனுப விக்கப்படும்‌ எவ்வித கஷ்டமும்‌ பயன்தராததோடு இப்பொழுது நாமிருக்கும்‌ நிலையிலும்‌ இன்னும்‌ கீழிறங்க உதவியாகிவிடும்‌. ஆகையால்‌ வரப்போகும்‌ சட்டசபை முதலிய தேர்தல்களில்‌ காங்கிரசென்றோ சுயராஜ்ய மென்றோ தேசமென்றோ பார்ப்பனரின்‌ மாய்கையில்‌ விழுந்து அக்‌ கூட்டத்‌ தாருக்கு நமது ஓட்டுகளைக்‌ கொடுத்து ஏமாந்து போகாமலிருக்‌ கும்படி நாம்‌ எச்சரிக்கை செய்கிறோம்‌. தென்னாட்டில்‌ பொதுவாக இக்கூட்டத்தாரை நீக்கிய பொது ஜனங்களுக்கு பார்ப்பனரல்லாதார்‌ என்ற பெயர்‌ வழங்கப்‌ பட்டு வருகிறது. முக்கியமாக இதில்‌ கிறிஸ்துவர்கள்‌, முகமதியர்கள்‌, ஆங்கிலோ - இந்தியர்‌ முதலிய இந்துக்களல்லாதவர்களும்‌ பார்ப்பனரல்லாத வர்களே. இந்துக்களுக்குள்ளும்‌ பார்ப்பனர்‌ நீங்கிய மற்றவர்கள்‌ பார்ப்பனர்‌ களால்‌ 169 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஏற்படுத்தப்பட்ட பல ஜாதிப்‌ பெயர்கள்‌ சொல்லிக்‌ கொள்ளப்பட்டா லும்‌ அவர்களும்‌ பார்ப்பனரல்லாதவர்களே.அல்லாமலும்‌ தீண்டாதாரெனக்‌ கூறி தொடக்கூடாதவர்கள்‌, பார்க்கக்‌ கூடாதவர்கள்‌ என்று தள்ளி வைத்திருக்‌ கும்‌ ஒரு பெரும்‌ கூட்டத்தாரும்‌ பார்ப்பனரல்லாதவர்களே. இவர்கள்‌ யாரும்‌ நாம்‌ மேற்சொன்ன பார்ப்பனர்களின்‌ மாயவலையினின்றும்‌ தப்பி சுய மரியாதையுடன்‌ வாழ வேண்டுமானால்‌, தங்களுக்குள்‌ ஏற்பட்டிருக்‌ கும்‌ சிறு சிறு வகுப்பு வித்தியாசங்களையும்‌ பொருளற்ற ராஜீய அபிப்பிராய வித்தியாசங்களையும்‌ மறந்து விடுவதோடு தங்கள்‌ சுய நன்மைக்காக பார்ப்பனர்களுக்கு ஒற்றர்களாகவும்‌, காட்டிக்‌ கொடுப்பவர்களாகவும்‌ இருக்‌ கும்‌ சிறுமைக்‌ குணங்களை விட்டு எல்லோரும்‌ முன்னுக்கு வர வேண்டு மென்ற எண்ணத்துடன்‌, கூழ்ச்சியின்றியும்‌ துவேஷமின்றியும்‌ மனப்பூர்வமாக ஒன்றுபட்டு பார்ப்பனரல்லாதாருக்கே எல்லாப்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ கண்டிப்பாய்‌ தங்களது ஓட்டைக்‌ கொடுக்க வேண்டியது அவரவர்களின்‌ சுயமரியாதை தர்மமென்றே சொல்லுவோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 22.08.1926 குடி அரசு - 1926 (2) 170 திரு. சீணிவாசய்மாங்காரிண்‌ தைரியம்‌ திருவாளர்‌ எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌ அவர்கள்‌ தேவஸ்தான சட்டத்‌ தைப்‌ பற்றி எழுதும்போது “பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள்‌ தேவஸ்தான சட்டத்தை ஆதரிப்பதாக” மனப்பூர்த்தியாய்‌ வேண்டுமென்றே இல்லாத காரியத்தைச்‌ சொல்லுகிறார்‌. திரு.சீனிவாசய்யங்காருக்கு பொய்‌ சொல்லு வதிலும்‌ மறுபடியும்‌ அதை மறுத்து இல்லை என்று சொல்லுவதிலும்‌ அனுப வம்‌ அதிகமாகி அதன்‌ பலனாய்‌ எவ்வளவு திருப்பாட்டு கிடைத்தபோதிலும்‌ அதை ஏற்று ஏற்று அவர்‌ மானம்‌ நன்றாய்‌ மரத்துப்‌ போய்விட்டது. திருவாளர்‌ கள்‌ மாளவியா, ஜெயக்கர்‌, கெல்கர்‌, நரசிம்மராஜு, இராமலிங்க செட்டியார்‌, ஆந்திர தேசத்து தேசீயப்‌ பத்திரிகைகள்‌ முதலிய பிரபல கனவான்கள்‌. எல்லோரிடமும்‌ திரு.சீனிவாசய்யங்கார்‌ சொல்லியவற்றையெல்லாம்‌ வெகு தைரியமாய்‌ இல்லையென்று ஒரே அடியாய்‌ சொல்லிவிட்டார்‌. பத்திரிக்‌ கைகள்‌ பெரும்பாலும்‌ பார்ப்பன ஆதிக்கம்‌ உடையவைகளாகவே இருந்து விட்டதால்‌ அவைகள்‌ இவற்றைப்பற்றி ஒன்றும்‌ எழுதாமல்‌ திரு.அய்யங்கார்‌ புளுகுக்கு ஆதரவளித்து வருகின்றன. சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும்‌ நெஞ்சில்‌ உரம்‌ இல்லாததால்‌ இவற்றைப்‌ பற்றி ஒன்றும்‌ எழுதாமல்‌ தந்திரமாய்‌ இருந்து விட்டன. இதன்‌ பலனாய்‌ திரு. அய்யங்‌ காருக்கு பொய்‌ சொல்லுகிற விஷயத்தில்‌ வரவர தைரியம்‌ அதிகமாகி கொஞ்சம்கூட மானம்‌ வெட்கம்‌ பயம்‌ என்பது அடியோடு இல்லாமல்‌ போய்‌ இப்போது தேவஸ்தான சட்டத்தை பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதிகள்‌. ஆக்ஷபிக்கிறார்கள்‌ என்று எழுதியிருக்கிறார்‌. அப்படியானால்‌ அவர்கள்‌ பெயர்‌ என்ன? எப்போது ஆதரித்தார்கள்‌? பார்ப்பனரல்லாத காங்கிரஸ்‌ மெம்பர்களான திருவாளர்கள்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌, தண்டபாணி பிள்ளை, எஸ்‌.இராமநாதன்‌ முதலிய பழய கனவான்‌ களும்‌, காங்கிரசுக்காக தியாகம்‌ செய்தவர்‌ எல்லாம்‌ தேவஸ்தான சட்டத்தை ஆதரிக்கும்போது நமது ஸ்ரீமான்‌ அய்யங்காருக்கு இச்சட்டத்தை ஆக்ஷேபிக்க கிடைத்த காங்கிரஸ்‌ மெம்பர்கள்‌ யார்‌ என்பதை பொது ஜனங்களுக்குத்‌ தெரியப்‌ படுத்தினால்‌ கண்ணியமாயிருக்கும்‌. அஃதில்லாமல்‌ வக்கீல்வாதம்‌ பேசுவது போல்‌ மனச்சாக்ஷிக்கு விரோதமாய்‌ பொய்‌ பேசுவது எவ்வளவு மோசமான காரியம்‌ என்பதை உணரும்‌ வாசகர்கள்தான்‌ புத்தி சொல்ல வேண்டும்‌. 171 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 சென்ற இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்‌ காரர்கள்‌ “யோக்கியமுள்ள பார்ப்பனரல்லாதார்‌ யாரும்‌ காங்கிரசில்‌ இல்லை” என்று சொல்லும்போது அதற்கு மறுப்பாக திரு.சீனிவாசய்யங்கார்‌ கடற்‌ கரையில்‌ பேசும்போது காங்கிரசில்‌ பார்ப்பனரல்லாதார்‌ இல்லை என்று ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ சொல்வது தப்பு என்றும்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ உண்மை யான தலைவர்களாகிய திருவாளர்கள்‌ கலியாணசுந்தர முதலியார்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு போன்றவர்களெல்லாம்‌ இருக்கிறார்கள்‌ என்று சொல்லி அவர்களின்‌ எழுத்துக்களையும்‌ பிரசங்கங்களையும்‌ படித்துக்காட்டி பாமர ஜனங்களைத்‌ திருப்தி செய்தார்கள்‌. ஆனால்‌ இப்போது அவர்கள்‌ மாறுபட்ட அபிப்பிராயங்‌ கொண்டதும்‌ நமது திரு. அய்யங்கார்‌ காங்கிரசில்‌ வேறு பார்ப்பனரல்லாதார்‌ இருப்பதாகச்‌ சொல்ல வந்து விட்டார்‌.அது யாரை நினைத்‌ துக்‌ கொண்டு சொல்லுகிறாரோ தெரியவில்லை. ஒரு சமயம்‌ திருவாளர்கள்‌ ஜெயவேலு, பாவலர்‌, மயிலை இரத்தினசபாபதி முதலியார்‌, ஜனாப்கள்‌ ஷாபி முகமது, ஹமீத்கான்‌ ஆகிய இவர்களை நினைத்துக்‌ கொண்டு சொல்லு கிறாரோ அல்லது இன்னும்‌ யாரையாவது தன்னுடைய டிக்கட்‌ பாக்கட்டில்‌ வைத்துக்‌ கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. இந்தப்‌ பிரபு இவ்வளவும்‌ போதாமல்‌ அஸ்ஸாம்‌ காங்கிரசுக்குத்‌ தலைவராகப்‌ போகிறார்‌.பார்ப்பன சக்தி எவ்வளவு இருக்கிறது என்பதை இப்போதாவது தமிழ்‌ மக்கள்‌ உணர்வார்களா? குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 22.08.1926. குடி அரசு - 1926 (2) 172 | “விதவா விணாக வினக்கம்‌ பழுத்த ஞானமும்‌ நீடிய அனுபவமும்‌ கொண்ட அறிஞர்‌ திருசிரபுரம்‌ திருவாளர்‌ சி.பி.இராஜகோபால்‌ நாயுடு அவர்கள்‌ தாம்‌ ஆக்கிய விதவா விவாக விளக்கம்‌ என்னும்‌ புத்தக அச்சுப்‌ பிரதியை அனுப்பி எனது அபிப்‌ பிராயத்தை எழுதுமாறு எழுதியிருந்தார்‌. விதவா விவாகத்தைப்‌ பற்றி நான்‌ தீவிரக்‌ கருத்துக்கொண்டவனேயாகிலும்‌ போதிய அமயமும்‌ அவகாசமும்‌ வாய்த்திலாமையான்‌ அஃதினை ஊன்றிப்படித்து விரைவில்‌ எனது கருத்தினை வெளியிடவியலாது போயிற்று.பிறகு அப்‌ புத்தகம்‌ முடிவு பெற்று புத்தக ரூபமாய்க்‌ கிடைக்கப்‌ பெற்றேன்‌. அஃதினை அமைதியுடன்‌ படித்து எமக்குத்‌ தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன்‌. இந்திய நாட்டின்‌ ஆளுகை உரிமை இந்தியருக்கே கிடைக்க வேண்டுமென அரசியல்‌ சீர்திருத்தக்காரர்களும்‌, இந்திய மக்களுக்குள்‌ ளிருக்கும்‌ வகுப்புப்‌ பிரிவினையும்‌ ஜாதி வேற்றுமையும்‌ தொலைய வேண்டுமென்பதாக சமூக சீர்திருத்தக்காரர்களும்‌ போராடுகிறார்களேயன்றி பெண்‌ மக்களுள்‌ ஒரு பகுதியார்‌ அழிந்து வருவதை பாராமுகமாகவே பார்த்து வருகின்றனர்‌. (இயற்கை தேவியார்‌! சிருஷ்டிக்‌ கர்த்தா, மக்கட்‌ படைப்பில டங்கிய ஆண்‌ பெண்களை ஏற்றத்‌ தாழ்வுடன்‌ படைக்கவில்லை யென்பதை அறிவுடைய உலகம்‌ ஏற்கும்‌. அங்க அமைப்பிலன்றி அறிவின்‌ பெருக்கிலோ வீரத்தின்‌ மாண்பிலோ ஆண்‌ பெண்களுக்குள்‌ ஏற்றத்‌ தாழ்‌ வான வித்தியாசம்‌ காண இயலுமோ? இயலவே இயலாது. ஆடவரிலும்‌ சரி பெண்டிரிலும்‌ சரி, முறையே அறிவாளிகளும்‌, ஆண்மையுடையோரும்‌ அறிவிலிகளும்‌, பேடிகளும்‌ உண்டு. இவ்வாறிருக்க, திமிர்‌ படைத்த இந்த ஆண்‌ உலகம்‌ சாந்த குணபூஷணமான பெண்ணுலகைத்‌ தாழ்த்தி அடிமைப்படுத்தி வருதல்‌ முறையும்‌ தர்மமுமான செயலாகாது. ஹிந்து மத ஆண்‌ உலகம்‌ தங்களது பெண்‌ உலகத்தின்‌ மாட்டு. பூண்டொழுகும்‌ கொடுமைச்‌ செயல்கள்‌ பலவற்றிற்‌ இங்கு நாம்‌ விதவை களைப்‌ பற்றி மட்டும்‌ கவனிக்க வேண்டியுளது. உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப்‌ போயிருக்கும்‌ பழுத்த கிழவனே யாயினும்‌, தன்‌ மனைவியார்‌ இறந்து பட்டவுடன்‌ மறுமணம்‌ புரிய முயலுகின்றான்‌. அதுவும்‌ வனப்பு மிகுந்த - எழில்‌ பொருந்திய இளஞ்‌ சகோதரிகளையே தன்‌ மணத்திற்குத்‌ தேர்ந்தெடுக்கின்றான்‌. ஆயின்‌ ஓர்‌ 73 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பெண்‌ மகள்‌ தன்‌ கொழுநனை இழந்துவிட்டால்‌,அவள்‌ உலக இன்பத்‌ தையே சுவைத்தறியாதவளாயிருப்பினும்‌ - தன்‌ ஆயுட்கால முற்றும்‌ அந்தோ! தன்‌ இயற்கைக்‌ கட்புலனை இறுக மூடி,மனம்‌ நொந்து, வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகிறது. என்னே அறியாயம்‌! ஹிந்து சகோதரர்கள்‌ இவ்வாறு தங்கள்‌ சமூகம்‌ அநியாயமாய்‌ அழிந்து வருவதை பார்த்துக்‌ கொண்டு வருவது பெரும்‌ பாபகரமான செயலாகும்‌. முன்நாளில்‌ தன்‌ கணவனைப்‌ பறிகொடுத்த மனைவியும்‌ உடன்‌ கட்டையேறுதல்‌ வழக்கமாயிருந்தது. இக்கொடிய வழக்கத்தை அக்‌ காலத்‌ தில்‌ ஆங்கிலோ இந்திய வியாபாரக்‌ கூட்டத்தின்‌ தலைவராயிருந்த வாரன்‌ ஹேஸ்டிங்ஸும்‌, சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற இந்திய நாட்டு அறிவா ளிகளும்‌ எடுத்துக்‌ கொண்ட பெரு முயற்சியால்‌ நிறுத்தப்பட்டது. உடன்‌ கட்டை யேறுதலை நிறுத்துதற்காகப்‌ போராடிய அக்காலத்திலும்‌ ஆச்சாரமே அழிந்து போவதாகவும்‌ மதமே கெட்டுப்‌ போவதாகவும்‌ பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால்‌ நாளடைவில்‌ அக்‌ கூக்குரலும்‌ அடங்கி “ஸககமனம்‌” என்னும்‌ உடன்கட்டையேறுதலான கொலை வழக்க மும்‌ அறவே மறைந்தது. இதுபோழ்து நம்‌ நாட்டில்‌ விதவைகள்‌ மறுமணம்‌ செய்து கொள்ளலா காதென்னும்‌ வழக்கமிருப்பது பாரபட்சம்‌ நிரம்பிய கொடுமையான செய லாகும்‌. தன்‌ மனைவியை இழந்த கிழவன்‌ மறுமணம்‌ செய்து கொள்ளலா மென்றும்‌ தன்‌ கணவனை இழந்து மகப்‌ பேறு பெறாத இளமங்கை மறுமணம்‌ செய்து கொள்ளலாகாதென்றும்‌ கூறுவது நடுநிலைமை கொண்ட அறச்‌ செயலாகா. விதவைகள்‌ மறுமணம்‌ செய்து கொள்ளும்‌ வழக்கம்‌ கற்புக்குப்‌ பங்கம்‌ விளைப்பதாகும்‌ எனக்‌ கூறினால்‌ அது பொருந்தாது. விதவைகளை மறுமணம்‌ செய்விக்காதிருத்தலினாலேயே அவர்கள்‌ கற்பழிந்து மாய்‌ கின்றனர்‌. காமச்சுவை கருதும்‌ இளங்‌ கைம்பெண்கள்‌ படிற்றொழுக்கத்தில்‌ வீழ்ந்து, அதனால்‌ கருப்பந்தரித்து இரண்டோர்‌ திங்களுள்‌ சிசுஹத்தி தோஷத்திற்கு உள்ளாகின்றார்கள்‌. இப்பாவம்‌ யாரைச்‌ சாரும்‌? விதவை களை மறுமணம்‌ செய்து கொள்ளல்‌ ஆகாதென்று கட்டாயப்படுத்தி வரும்‌ பெற்றோர்களையே சாரும்‌. மறுமணம்‌ விரும்பாத பெண்களைத்‌ தவிர்த்து ஏனைய கைம்‌ பெண்களுக்கு மறுமணம்‌ செய்வித்தலே நன்று. விதவைகளின்‌ கலியாணத்தைப்‌ பற்றி இவ்வாறு எழுதும்‌ நான்‌ எழுத்தளவோடும்‌ சொல்லளவோடும்‌ ஆதரிக்கின்றேனா அன்றி செய்கை யிலும்‌ ஆதரித்துள்ளேனா என்ற ஐயம்‌ அன்பர்களுக்குத்‌ தோன்றலாம்‌. இதன்‌ பொருட்டேனும்‌ எனது கருத்தை பிரதிபலிக்கும்‌ செய்கையைக்‌ கூற விரும்புகிறேன்‌. நான்‌ கர்நாடக பலிஜவார்‌ வகுப்பைச்‌ சேர்ந்தவன்‌. எனது வகுப்பின்‌ பெண்மக்கள்‌ முக்காடுடன்‌ கோஷாவாக இருக்க வேண்டியவர்களெனவும்‌ குடி அரசு - 1926 (2) 74 விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பினரெனவும்‌ வழங்கப்படு பவர்கள்‌. நான்‌ பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும்‌ வைணவ சம்பிரதாயத்தையும்‌ கடுமையாய்‌ ஆதரிக்கும்‌ குடும்பம்‌. இப்படி யிருந்த போதிலும்‌ என்னுடைய 7-வது வயதிலிருந்தே மக்களில்‌ உயர்வு, தாழ்வு கற்பித்தலையும்‌ ஒருவர்‌ தொட்டதை மற்றொருவர்‌ சாப்பிடலாகா தெனச்‌ சொல்வதையும்‌ நான்‌ பரிகாசம்‌ செய்து வந்ததோடு யாரையும்‌ தொடுவதற்கும்‌ எவர்‌ தொட்டதையும்‌ சாப்பிடுவதற்கும்‌ நான்‌ சிறிதும்‌ பின்‌ வாங்கியதே கிடையாது. என்னை, இளம்‌ போதிலிருந்தே எங்கள்‌ வீட்டு ஆக்குப்‌ புரைக்குள்‌ செல்ல அனுமதிப்பதில்லை. நான்‌ தொட்ட சொம்பை எனது தகப்பனார்‌ தவிர மற்றையோர்‌ கழுவாமல்‌ உபயோகப்படுத்த மாட்டார்‌. கள்‌. எங்கள்‌ குடும்ப ஆச்சார அனுஷ்டானங்களைப்‌ பார்த்து பொறாமைப்‌ படுபவர்கள்‌ என்னைப்‌ பார்த்து சாந்தியடைந்து விடுவார்கள்‌. “*நாயக்கருக்கு அவர்கள்‌ ஆச்சாரத்திற்கேற்றாற்‌ போல்தான்‌ ஒரு பிள்ளை என்றாலும்‌ பிள்ளை நவமணியாய்ப்‌ பிறந்திருக்கிறது”” என்று சொல்லுவார்கள்‌. என்னு டைய 16-வது வயதிலேயே பெண்‌ மக்களை தனித்த முறையில்‌ பழக்கு வதும்‌: அவர்களுக்கென சில கட்டுத்‌ திட்டங்களை ஏற்பாடு செய்வதையும்‌ ஆண்‌: மக்களின்‌ அகம்பாவம்‌ என்று நினைத்து வந்தேன்‌. இவ்வாறாக, என்‌ தங்கை தனது இளம்‌ வயதிலேயே ஓர்‌ பெண்‌: குழந்தையையும்‌, ஓர்‌ ஆண்‌ குழந்தையையும்‌ விடுத்து விண்ணுற்றாள்‌. அவற்றுள்‌ “அம்மாயி” என்றழைக்கப்‌ பெறும்‌) அப்‌ பெண்‌ குழந்தைக்கு அதன்‌ 10-வது வயதில்‌ சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக்‌ கலியாணம்‌ செய்து வைத்தோம்‌. கலியாணம்‌ செய்த 60-ம்‌ நாள்‌ அப்பெண்ணின்‌ கணவன்‌ என்னும்‌ 13 -வயதுள்ள சிறு பையன்‌ பகல்‌ 2 மணிக்கு விஷபேதி யால்‌ விண்ணுற்றான்‌. அவன்‌ இறந்தான்‌ என்ற செய்தியைக்‌ கேட்டதும்‌ அப்பெண்‌ குழந்தை என்னிடம்‌ ஓடி வந்து, ““மாமா! எனக்குக்‌ கலியாணம்‌ செய்து வை என்று நான்‌ உன்னைக்‌ கேட்டேனா? இப்படி என்‌ தலையில்‌ கல்லைப்‌ போட்டாயே'” என்று ஓவென்று அலறிய சத்தத்தோடு என்‌ காலடி யில்‌ மண்டையில்‌ காயமுண்டாகும்படி திடீரென்று விழுந்தது. துக்கம்‌ விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண்‌ பெண்‌ உள்பட சுமார்‌ 600,700 பேர்கள்‌ அக்குழந்தையையும்‌ என்னையும்‌ பார்த்த வண்ணமாய்‌ கண்களி லிருந்து தாரை தாரையாய்‌ நீர்‌ வடித்தனர்‌. எனக்கும்‌ அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது. ஆனால்‌ கீழே கிடந்த அந்தக்‌ குழந்தையை நான்‌ கையைப்‌ பிடித்து தூக்கும்‌ போதே அதற்கு மறுபடியும்‌ கலியாணம்‌ செய்து விடுவது என்கிற உறுதியுடனேயே தூக்கினேன்‌. பிறகு அந்த பெண்‌ பக்குவமடைந்த ஒரு வருடத்திற்குப்‌ பின்‌ அதற்கு கலியாணம்‌ செய்ய நானும்‌ எனது மைத்துனரும்‌ முயற்சி செய்தோம்‌. இச்‌ செய்தி எனது பெற்றோருக்கும்‌ மற்றோருக்கும்‌ எட்டவே அவர்கள்‌ இதை தங்கள்‌ வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்துவிட்டது போலக்‌ கருதி 176 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 பெரிதும்‌ கவலைக்குள்ளானவர்களாகி நாங்கள்‌ பார்த்து வைத்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும்‌ கலைத்தார்கள்‌. முடிவில்‌ எனது மைத்துனரின்‌ இரண்டாந்தாரம்‌ மைத்துனரைப்‌ பிடித்து சரிசெய்து, எவரும்‌ அறியாவண்ணம்‌. பெண்ணையும்‌ மாப்பிள்ளையையும்‌ சிதம்பரத்திற்கழைத்‌ துச்‌ சென்று அங்கு கோயிலில்‌ கலியாணம்‌ செய்வித்து ஊருக்குக்‌ கூட்டி வந்தனர்‌. ஆனால்‌ நான்‌ அங்கு போகாமல்‌ ஊரிலேயே இருக்க வேண்டிய தாயிற்று. ஏனெனில்‌, அவர்கள்‌ போயுள்ள செய்தியை சுற்றத்தார்‌ அறிந்தால்‌ ஏதாவது மாப்பிள்ளையை தடைசெய்து விடுவார்களோ என்கிற பயத்தால்‌, நான்‌ ஊரிலிருந்தால்‌ கலியா ணத்திற்காக வெளியூருக்குப்‌ போயிருக்கிறார்க ளெனச்‌ சந்தேகமிருக்காது என்கிற எண்ணங்கொண்டேயாகும்‌. இக்‌ கலியா ணத்தின்‌ பலனாக இரு, மூன்று வருட காலம்‌ பந்துக்களுக்குள்‌ வேற்றுமை யும்‌ பிளவும்‌ ஏற்பட்டு ஜாதிக்‌ கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும்‌ சரிபட்டுப்‌ போயின. பெண்ணும்‌ மாப்பிள்ளையும்‌ ஒத்து வாழ்ந்து ஓர்‌ ஆண்‌ மகவைப்‌ பெற்றனர்‌. ஆனால்‌ துர்ரதிஷ்டவசமாக கொஞ்ச நாளையில்‌ அந்த இரண்டா வது புருஷனும்‌ இறந்துவிட்டான்‌ . இப்பொழுது தாயும்‌ மகனுமே க்ஷமமா யிருக்கிறார்கள்‌. இன்னமும்‌ எனது வகுப்பில்‌ 13 வயதுக்குக்‌ கீழ்ப்பட்ட விதவைக்‌ குழந்தைகள்‌ சிலர்‌ இருக்கின்றனர்‌. பாவம்‌ அக்‌ குழந்தைகளை அவர்களின்‌ பெற்றோர்கள்‌ தீண்டாதார்‌ போல்‌ கருதி நடத்துவதை தினமும்‌ பார்க்கபாவமாயிருக்கிறது. எவ்வளவோ இடருக்குள்ளாகப்பட்டு அக்‌ கலியாணத்தை முடித்து வைத்தோம்‌. ஆனால்‌ கடைசியில்‌ அந்த இரண்டாவது கணவனும்‌ மரிக்கவே விதவா விவாக விஷயத்தில்‌ தீவிரமாகத்தலையிட வேண்டுமென எனக்‌ கிருந்த கருத்துக்கு பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாயிற்று. விதவைகளின்‌ விஷயம்‌ நினைவிற்கு வரும்‌ போதும்‌ நேரில்‌ காண நேரும்‌ போதும்‌, உலக இயற்கை எளியாரை வலியார்‌ அடக்கி ஆண்டு ஹிம்‌ சிப்பதல்லாமல்‌ வேறல்லவென்றே முடிவு செய்வேன்‌. நமது ஹிந்து சமூகம்‌ எந்தக்‌ காலத்தில்‌ எவருடைய ஆதிக்கத்தில்‌ கட்டப்பட்டதோ, அன்றி மத மில்லாமல்‌ முறையில்லாமலிருந்து இயற்கையாகவே ஏதாவது கட்டுப்பாடு கள்‌ ஏற்பட்டு அவற்றை வலியவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ சுயநலத்திற்குத்‌ தக்கபடி திருப்பிக்‌ கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும்‌ பொதுவாய்‌ விதவைத்‌ தன்மை நிலைத்திருக்கும்‌ காரணத்தினாலேயே ஹிந்து மதமும்‌ ஹிந்து சமூகமும்‌ ஒரு காலத்தில்‌ அடியோடு அழிந்து போனாலும்‌ போகு மென்பதே எனது முடிவான கருத்து. அரசியல்‌ என்றும்‌ சமூகவியல்‌ என்றும்‌ ஜனாச்சார சீர்திருத்தவியல்‌ என்றும்‌ பெண்மக்கள்‌ முன்னேற்றமென்றும்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கும்‌ மக்களில்‌ பெரும்பான்மையோர்‌ இவற்றைத்‌ தங்களது வாழ்வுக்கும்‌ கீர்த்திக்‌ குடி அரசு - 1926 (2) 176 கும்‌ சுயநலத்திற்கும்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளுவோராக இருக்கிறார்‌ களே தவிர உண்மையில்‌ அக்கருத்துக்‌ கொண்டு உழைப்பவர்கள்‌ அரிதினுமரிதாகி விட்டனர்‌ என்று சொல்லுவதை மன்னிக்க வேண்டுகிறேன்‌. அன்றியும்‌ இவ்‌ விதத்துறைகளிலும்‌ சீர்திருத்தங்களிலும்‌ பாடுபடுபவர்‌ களாய்க்‌ காணப்படுவோரில்‌ பெரும்பாலோர்‌ தாங்கள்‌ செய்வது சரியென்ற தீர்மானம்‌ தங்களுக்கேயில்லாமல்‌ உலக மெய்ப்புக்குச்‌ செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள்‌. பெண்மக்கள்‌ முன்னேற்றத்தைப்‌ பற்றி பேசுவோர்‌ தங்கள்‌. வீட்டுப்‌ பெண்களைப்‌ படுதாவுக்குள்‌ வைத்துக்‌ கொண்டும்‌, விதவா விவாகத்தைப்‌ பற்றி பேசுவோர்‌ தங்கள்‌ குடும்பங்களில்‌ உள்ள விதவை களை காவல்‌ போட்டு விதவைத்‌ தன்மையைக்‌ காப்பாற்றிக்‌ கொண்டும்‌ இருக்கிறார்களே தவிர உண்மையில்‌ ஒரு சிறிதும்‌ தாங்கள்‌ நடவடிக்கையில்‌ காட்டுவதில்லை. இதன்‌ காரணம்‌ என்னவெனப்‌ பார்க்கும்‌ போது, பெண்‌ மக்கள்‌ என்று நினைக்கும்‌ போதே அவர்கள்‌ அடிமை, நமக்கடங்கினவர்கள்‌, கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள்‌ என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது என்றே நினைக்கிறோம்‌. இதனாலேயே அவர்களை விலங்குகளைப்போல்‌ நடத்தி வருகிறார்கள்‌. அவர்களுக்கு சுதந்திரங்‌ கொடுப்பது என்கிற விஷயத்‌ தைநினைக்கும்‌ போது செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கை யைச்‌ செய்ய நினைக்கிறது போலவே தோன்றுகிறது. அதனால்‌ மனித சமூகத்தில்‌ சரி பகுதியான எண்ணிக்கைக்கு பிறவியிலேயே சுதந்திரம்‌ இல்லை என்பது தானே இதன்‌ பொருள்‌? ஆடவருக்கு பெண்டிரை விட சிறிது வலிமை அதிகமாக ஏற்பட்ட குற்றந்தானே இம்மாதிரி ஒரு சரி சமமான சமூகத்தை சுதந்திரமில்லாமல்‌ அடிமைப்படுத்தும்‌ கொடுமையை அனுஷ்டிக்க வேண்டியதாயிற்று. இந்தத்‌ தத்துவமே வரிசைக்கிரமமாக மேலோங்கி எளியோரை வலியோரால்‌ அடிமையாக்கச்‌ செய்கிறது. உலகில்‌ மனித வர்க்கத்திற்கு அடிமைத்‌ தத்துவம்‌ ஒழிய வேண்டு மானால்‌ பெண்ணுலகை அடிமையாகக்‌ கருதி நடத்தும்‌ அகம்பாவமும்‌ கொடுமையும்‌ ஒழிய வேண்டும்‌. இது ஒழிந்த நிலையே சமத்துவம்‌ சுதந்திரம்‌ என்னும்‌ முளை முளைக்கும்‌ இடம்‌. உலகிலேயே மிகப்‌ பெரிய சீர்திருத்தக்காரரான மகாத்மா காந்தி யடிகள்‌ இந்து விதவைகளைப்‌ பற்றி அநேக சந்தர்ப்பங்களில்‌ பேசியும்‌ எழுதியும்‌ வந்திருக்கிறார்‌. அவற்றுள்‌ சென்ற ஆண்டு “நவஜீவன்‌” பத்திரி கையில்‌ மகாத்மா எழுதியிருக்கும்‌ விஷயத்தைக்‌ கவனித்தால்‌ விதவை களின்‌ விடுதலை சம்பந்தமாய்‌ மகாத்மா எவ்வளவு தூரம்‌ உழைக்கிறார்‌ என்பது புலனாகும்‌. அக்கட்டுரையின்‌ ஒரு சில பாகமாவது:- “பால்ய விதவைகளைக்‌ கட்டாயப்படுத்தி வைத்திருப்பது போன்று இயற்கைக்கு விரோதமான பொருள்‌ உலகில்‌ வேறொன்றும்‌ இல்லை என்‌ பது எனது திடமான நம்பிக்கை. விதவைத்‌ தன்மை என்பது எவ்விதத்திலும்‌ ஒரு தர்மமாகா. பலாத்காரத்தினால்‌ அநுஷ்‌ 177 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 டிக்கச்‌ செய்யும்‌ எவ்விதச்‌ செயலும்‌ அறமாகாது. பலாத்காரத்தினால்‌ நடத்தும்‌ விதவை வாழ்வு பாவமானது. பதினைந்து வயதுள்ள ஒரு பால்ய விதவை தானாகவே விதவை வாழ்வைக்‌ கொண்டிருக்கிறாள்‌ என்று சொல்லுவது, அவ்விதமாகச்‌ சொல்லுவோரின்‌ கொடூரச்‌ சுபாவத்தையும்‌ அறியாமையையுமே விளக்குகிறது” என்று எழுதிவிட்டு விதவைகள்‌ மறுமணம்‌ செய்துகொள்ள வேண்டு. மென்பதாக தன்‌ உள்ளன்போடும்‌ ஆவேசக்கிளர்ச்சியோடும்‌ மகாத்மா கூறிய மணி வாசகங்களில்‌ ஒரு சிலவற்றைக்‌ கவனிப்போம்‌. “அமைதியுடன்‌ தங்களுடைய துக்கத்தைச்‌ சகித்துக்‌ கொண்டு தங்களுடைய உண்மையான கருத்தைத்‌ தங்களின்‌ பெற்‌ றோர்‌ அல்லது போஷகர்களான ஸ்திரி புருஷர்களிடம்‌ தைரிய மாய்ச்‌ சொல்லிவிட வேண்டும்‌. அவர்கள்‌ அதை கவனிக்கா விட்டால்‌ தாங்களே ஒரு யோக்கியமான புருஷன்‌ கிடைத்தால்‌ உடனே விவாகம்‌ செய்து கொள்ளட்டும்‌. அதுவரையில்‌ யோக்கிய மான புருஷனை அடைய தமயந்தி சாவித்ரி முதலியவர்கள்‌ போல்‌ தவம்‌ செய்வதே ஏற்ற வழியாகும்‌. . ....... விதவைகளின்‌ போஷகர்கள்‌ இவற்றைச்‌ சரிவரக்‌ கவனியாவிடில்‌ பின்னால்‌ பச்சாதாபப்படுவார்‌ கள்‌.ஏனெனில்‌ நான்‌ ஒவ்வோரிடத்திலும்‌ துராசாரமே பார்த்துக்‌ கொண்டு வருகிறேன்‌. விதவைகளைப்‌ பலாத்காரமாய்‌ தடுத்து விதவைத்தன்மையை அநுஷ்டிக்கச்‌ செய்வதால்‌ விதவை களுக்கா வது, குடும்பத்திற்காவது அல்லது விதவா தர்மத்திற்காவது மேன்மை உண்டாகவே மாட்டாது. இம்மூன்று தத்துவங்களும்‌ நசித்து வருவதை என்‌ கண்களினாலேயே பார்த்துக்‌ கொண்டிருக்‌ கிறேன்‌. பால்ய விதவைகளே! நீங்களும்‌ உங்களைப்‌ பலவந்தப்‌ படுத்தி விதவைகளாக வைத்திருக்கும்‌ ஸ்திரி புருஷ வர்க்கங்களும்‌ இதை அறியுமாக” இவ்வாறாக, 1921- ம்‌ வருடத்திய ஜனசங்கியைப்படி ஹிந்து கைம்‌ பெண்களின்‌ தொகையினை நோக்குகையில்‌ ஐயகோ! என்‌ நெஞ்சு துடிக்கிறது! 1 வயதுள்ள விதவைகள்‌ 507 1 முதல்‌ 2 வயதுள்ள விதவைகள்‌ 494 2 முதல்‌ 3 வயதுள்ள விதவைகள்‌ 1257 3 முதல்‌ 4 வயதுள்ள விதவைகள்‌ 2837 4 முதல்‌ 5 வயதுள்ள விதவைகள்‌ 6707 ஆக மொத்தம்‌ 11892 5 முதல்‌ 10 வயதுள்ள விதவைகள்‌ 85,037 குடி அரசு - 1926 (2) 178 10 முதல்‌ 15 வயதுள்ள விதவைகள்‌ 232,147 15 முதல்‌ 20 வயதுள்ள விதவைகள்‌. 396172 20 முதல்‌ 25 வயதுள்ள விதவைகள்‌ 742820 25 முதல்‌ 30 வயதுள்ள விதவைகள்‌ 163720 ஆக மொத்த விதவைகள்‌ 26,31788 அல்லாமலும்‌ இத்தகைய விதவைத்‌ தன்மையானது பிரஜா உற்பத்‌ திக்கு பேரிடராயிருக்கிறது. நமது ஹிந்து மதத்திலிருந்து எவரேனும்‌ இரண்‌ டொருவரை பிற மதத்திற்கு மாற்றப்பட்டால்‌ நம்‌ மக்களுக்கு எவ்வளவோ துன்பம்‌ நேரிட்டுவிட்டதாகக்‌ கருதி பரிதாபப்படுகிறார்கள்‌. இதன்‌ காரணம்‌ நமது மதத்தினரில்‌ இருவர்‌ குறைந்து விட்டதால்‌ ஹிந்து சமூகத்திற்கு கஷ்டமும்‌ நஷ்டமும்‌ ஏற்பட்டு விட்டது என்பதினாலேயன்றோ? அந்த இரண்டு நபருக்கு இவ்வளவு துக்கமும்‌ துயரமும்‌ ஏற்படுமானால்‌ தற்காலம்‌ நமது இந்திய நாட்டிலுள்ள இருபத்தாறு லட்சத்து முப்பத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகளும்‌ கலியாணம்‌ செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால்‌ எத்துனை குழந்தைகள்‌ பெறக்‌ கூடும்‌. சராசரி மொத்தத்தில்‌ மூன்றில்‌ இரு மடங்குப்‌ பெண்கள்‌ 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம்‌ பெறுவதாக வைத்துக்கொண்டாலும்‌ தடவை ஒன்றுக்கு 87,726 குழந்தைகள்‌ வீதம்‌ வருடம்‌ ஒன்றுக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம்‌ கெடுத்துக்‌ கொண்டு வருகிறோம்‌. இது இரண்டொருவர்‌ மதமாறுவதால்‌ நஷ்டம்‌ வந்து விட்டதாகக்‌ கருதுவோருக்குப்‌ புலப்படுவதில்லை. பால்‌ மண மாறாத 5 வயதிற்குட்பட்ட இளங்குழந்தைகள்‌ மட்டிலும்‌ 11,892 பேர்‌ இருக்‌ கிறார்களென்பதையும்‌ தன்‌ பிறவிப்‌ பயனையே நாடுதற்கில்லாது, இன்பந்‌ துய்த்தற்கில்லாது, அடங்கி வைக்கப்பட்டிருக்கும்‌ 15 வயதிற்குட்பட்ட கைம்‌ பெண்கள்‌ 2,32.147 பேர்‌ இருக்கிறார்களென்பதையும்‌ கேட்கவே என்‌ குலை நடுங்குகிறது. இத்தகை படுமோசமான விதவைத்‌ தன்மையை எந்த நாகரீக உலகம்‌ ஏற்கும்‌? விதவைகளின்‌ கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜா ராம்‌ மோகன்ராய்‌, ஈஸ்வர சந்திர வித்யா சாகரர்‌, கோலாப்பூர்‌ மகாராஜா, சுரேந்திரநாத்‌ பானர்ஜி முதலிய அறிஞர்கள்‌ பாடுபட்டுழைத்தனர்‌. இது போழ்தும்‌ இத்தகைய சீர்திருத்தத்‌ துறையில்‌ பாஞ்சாலத்‌ தலைவர்கள்‌ பலர்‌. இறங்கி உழைத்து வருகின்றனர்‌. நமது நண்பர்‌ திருசிரபுரம்‌ திரு.சி.பிஇராஜகோபால நாயுடுகார்‌ விதவை களை ரக்ஷிப்பது என்னும்‌ பரோபகாரத்‌ துறையில்‌ இறங்கி, “ஆச்சாரம்‌” “வழக்கம்‌” என்று உளறும்‌ வைதீகப்‌ பைசாசங்களின்‌ பலமான எதிர்ப்புக்‌ கிடையே நுணுகிய ஆராய்ச்சியுடனும்‌ அனுபவத்துடனும்‌ “விதவா விவாக 79 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. விளக்கம்‌” என்னும்‌ புத்தகத்தை எழுதியிருக்கிறார்‌. இதில்‌ நம்நாட்டு மக்க ளுக்கு இருக்கும்‌ கஷ்டமும்‌ கொடுமையும்‌, அவர்களால்‌ ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌ ஏற்படும்‌ அபகீர்த்தியையும்‌, விதவைத்‌ தன்மையைக்‌ காப்பாற்றும்‌ பொருட்டு பெரிய பெரிய இழிச்சொல்லையும்‌ சகித்துக்‌ கொண்டிருக்கும்‌ சாதனையும்‌, விதவைத்‌ தன்மையைக்‌ காப்பாற்றும்‌ ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌ இவ்வித அபகீர்த்தி நேருகிறபடியால்‌ இது உலக வழக்கம்‌ என்று சமாதானப்‌ படுத்திக்கொள்ளும்‌ தன்மையும்‌ எவ்வளவு தைரியமாயும்‌ தெளிவாயும்‌ அனுபவமாயும்‌ தெரிவிக்கக்‌ கூடுமோ அதற்கும்‌ மேலாகவே அனைவரும்‌ சரி என்று ஒப்புக்கொள்ளத்தக்க வண்ணம்‌ விவரித்து எழுதியிருக்கிறார்‌. இப்‌ புத்தகத்தை வாசிப்பவர்கள்‌ எவ்வளவுதான்‌ “ஆச்சாரம்‌”, “பழக்கம்‌”, “வழக்கம்‌” என்னும்‌ மூடநம்பிக்கையில்‌ ஈடுப்பட்ட கல்‌ நெஞ்சர்களா யிருந்தாலும்‌ அவர்கள்‌ மனதை இளக்கி விதவைகள்‌ பால்‌ கருணைக்‌ காட்டும்‌ படி செய்து விடுமாதலால்‌, புத்தகம்‌ சிறியதாயிருப்பினும்‌. உலகிற்குப்‌ பயன்படக்‌ கூடிய வகையிலிருப்பதால்‌ இதை பெரிய நூல்‌ என்றே கூறவேண்டும்‌. இப்‌ புத்தகத்தால்‌ திருநாயுடுகார்‌ நம்‌ நாட்டிற்குப்‌ பெருந்‌ தொண்டு செய்தவராகிறார்‌. இது பற்றி திரு. நாயுடுகார்‌ அவர்களுக்கு நமது நாடும்‌ ஹிந்து மதமும்‌ பெண்டீருலகமும்‌ நன்றி செலுத்தப்‌ பெரிதும்‌ கடமைப்பட்டுள்ளது. குடி அரசு - நூல்‌ மதிப்புரை - 22.08.1926. குடி அரசு - 1926 (2) 180 யார்ப்பணரிண்‌ வவழகுண்டு ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ கும்பகோணத்தில்‌ பேசிய பேச்சைப்‌ பற்றி 18.8.26- ௨ “சுதேசமித்திரன்‌” தனது உப தலையங்கத்தில்‌ “அபத்தப்‌ பஞ்சாங்கம்‌” என்ற தலைப்பின்‌ கீழ்‌ ஸ்ரீமான்‌ இராமசாமி நாயக்கர்‌. எழுத்தும்‌ பிரசங்கங்களும்‌ வரவர விபரீதமாயிருக்கிறது என்றும்‌, நாயக்‌ கருக்கு சீக்கிரத்தில்‌ கவர்ன்மெண்டு அடிமை முத்திரை போடப்பட்டுவிடும்‌ என்றும்‌, நாயக்கர்‌ பேசுகையில்‌ எவ்வித காரணமில்லாமல்‌ சிறை சென்றதற்கு விசனப்படுகிறேன்‌ என்றும்‌, பிராமண சூழ்ச்சி வலையில்‌ அகப்பட்டுக்‌ கொண்டேன்‌ என்றும்‌ சொன்னதாக எழுதி, இதன்‌ மூலம்‌ நாயக்கருக்கு அசட்டுப்‌ பட்டம்‌ ஏற்பட்டு விட்டதாகவும்‌ நாயக்கரை ஒரு பிராமணனும்‌ ஏமாற்றி சிறைக்கனுப்ப வில்லை என்றும்‌ காங்கிரசினால்தான்‌ பனகால்‌ ராஜா வுக்கு மந்திரியானதென்றும்‌ நாயக்கருக்கு ராஜீய உலகில்‌ ஒரு முக்கிய ஸ்தானம்‌ கிடைத்ததென்றும்‌ அப்படி இருக்க, காங்கிரசை இகழ்வது மாதுரு துரோகமென்றும்‌ எழுதுகிறான்‌. இவற்றை நன்றாய்‌ ஆராய்ந்து நாயக்கர்‌. மாதுரு துரோகியா அல்லது “மித்திரன்‌” கூட்டத்தார்‌ மாதுரு காமியா என்பதை கவனிப்போம்‌. இப்பார்ப்பன “மித்திரன்‌” யோக்கியனாயும்‌ பயங்காளியா யில்லாத வணாயுமிருந்திருந்தால்‌ கும்பகோணத்தில்‌ நாயக்கர்‌ இரண்டரை மணி நேரம்‌. பேசிய பேச்சை கொஞ்சமாவது எழுதியிருக்க வேண்டும்‌. “மித்திரனே” நாயக்கரைப்‌ பற்றி எழுதுகையில்‌ நாயக்கர்‌ வெறும்‌ ஆளல்ல, ராஜீய உலகத்‌ தில்‌ (எந்த விதத்திலோ! ஒரு முக்கிய ஸ்தானம்‌ அடைந்தவர்‌ என்று ஒப்புக்‌ கொள்ளுகிறான்‌. அப்படியிருக்க, அப்படிப்பட்டவர்‌ பேசியதை பிரசுரிக்‌ காமல்‌ விட்டது எவ்வளவு அக்கிரமம்‌ என்பதை வாசகர்களே உணர வேண்டும்‌. நாயக்கர்‌ ஜெயிலுக்குப்‌ போனதைப்‌ பற்றி சொன்ன வார்த்தைகள்‌. என்னவென்றால்‌ இந்த பார்ப்பனர்களை நம்பி சுயராஜ்யத்திற்கு என்று ஜெயிலுக்குப்‌ போனது முட்டாள்தனமென்று உணருவதுடன்‌ இப்படிப்பட்ட வர்களை நம்பி ஜெயிலுக்குப்‌ போனோமே, இப்போது அதன்‌ பலன்கள்‌. சுயராஜ்யத்திற்கு உதவாமல்‌ பார்ப்பனராட்சிக்கு உதவுவதோடு பார்ப்பனரல்‌ லாதாரின்‌ அடிமைத்‌ தனத்திற்கும்‌ நிரந்தர தாழ்வுக்கும்‌ உபயோகப்படும்‌. படியாய்‌ விட்டதே என்று வருத்தப்படுவதுடன்‌ இக்காரியத்திற்கு நாமும்‌ துணை நின்றோமே என்று நினைத்து வெட்கப்படவேண்டியதாயுமிருக்கிறது என்றே பேசினார்‌. அல்லாமலும்‌ இனியும்‌ இந்த பார்ப்பன ஆதிக்க மிருக்கும்‌ 181 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வரை சுயராஜ்யத்திற்கென்று ஜெயிலுக்குப்‌ போவது பயித்தியக்‌ காரத்தனமாய்‌ முடியுமென்றே இன்னமும்‌ சொல்லுகிறோம்‌. ஏனெனில்‌ ஸ்ரீமான்கள்‌ நாயக்கர்‌, நாயுடு முதலிய பல ஆயிரக்‌ கணக்கான பேர்கள்‌ நமது நாட்டில்‌ ஜெயிலுக்குப்‌ போனதை சொல்லிக்‌ கொண்டு அதன்‌ பலனை நமது பார்ப்பனரே அனுபவிக்கிறார்கள்‌. தேச மக்களுக்கு அது கொஞ்சமும்‌ உபயோகப்படாமலே செய்து விட்டார்கள்‌. பார்ப்பன சூழ்ச்சி வலையில்‌ அகப்பட்டுக்‌ கொண்டேன்‌ என்று சொல்ல வர: வில்லை. பார்ப்பனர்களை நம்பினேன்‌ அவர்கள்‌ நம்பிக்கைத்‌ துரோகம்‌ செய்துவிட்டார்கள்‌ என்றே சொன்னோம்‌. ஸ்ரீமான்கள்‌ சீனிவாசய்யங்காரை: யும்‌, எ. ரெங்கசாமி அய்யங்காரையும்‌, எஸ்‌. சத்தியமூர்த்தி அய்யரையும்‌ நாம்‌ எப்பொழுதுமே நம்பவில்லை. அவர்களால்‌ ஏமாந்ததாகவும்‌ சொல்ல வில்லை.ஆனால்‌ ஸ்ரீமான்‌ சிஇராஜகோபாலாச்சாரியாரை நம்பினோம்‌; அவர்‌ மோசம்‌ செய்து விட்டார்‌. அவரை நம்பி மோசம்‌ போனோமே என்று தான்‌ வருத்தப்பட்டோம்‌. இதை மகாத்மா காந்தியிடமும்‌ நேரில்‌ சொன்‌ னோம்‌. இதற்காக “மித்திரன்‌” நாயக்கர்‌ ஏமாறுவதற்கு அவர்‌ சிறு பிள்ளையா சிறுபிள்ளைத்தனமா? என்று எழுதியிருக்கிறான்‌. நாயக்கர்‌ சிறு பிள்ளையா? கிழவனா? என்பதைப்‌ பற்றி கவலைப்பட வேண்டாம்‌. ஏனெனில்‌ நாயக்கர்‌. மாத்திரம்‌ பார்ப்பனர்களால்‌ ஏமாறவில்லை. கோடிக்கணக்கான பார்ப்பனரல்‌ லாத ஜனங்கள்‌ ஏமாந்து போனார்கள்‌; ஏமாந்து போகிறார்கள்‌; இன்னமும்‌ பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து கொண்டுதான்‌ வருகிறார்கள்‌. இவ்வளவும்‌ போதாமல்‌ மகாத்மா காந்தியே இப்பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து போய்விட்டதோடு “படித்தவர்களை நான்‌ நம்பினேன்‌ நம்பின அளவு பலனடைய வில்லை” என்றே சொல்லியிருக்கிறார்‌. படித்தவர்கள்‌ யார்‌ என்று கூட சொல்ல வேண்டுமா? நிற்க, ஜெயிலுக்குப்‌ போவதில்‌ இன்னமும்‌ நமக்கு சலிப்பு ஏற்பட்டுப்‌ போகவில்லை. பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஜெயிலுக்குப்‌ போவது தப்பு என்று மாத்திரம்‌ எண்ணுகிறோமே ஒழிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்ப தற்கு நாமும்‌ நம்‌ குடும்பமும்‌ நண்பர்களும்‌ இனியும்‌ எத்தனை தடவையா னாலும்‌ ஜெயிலுக்குப்‌ போகக்‌ காத்துக்‌ கொண்டுதானிருக்கிறோம்‌. சட்ட சபைத்‌ தேர்தல்கள்‌ முடிந்தவுடன்‌ கண்டிப்பாய்‌ அந்த பாக்கியம்‌ கிடைக்கு மென்றே மனைவியார்‌ சகிதம்‌ சந்தோஷத்துடன்‌ காத்துக்கொண்டே இருக்கி றோம்‌. அதற்கு வேண்டியகாரியங்கள்‌ நமது பார்ப்பனர்களால்‌ வெகு நாளாக வே நடந்து வருவதையும்‌ நாம்‌ அறிவோம்‌. தவிர காங்கிரசினால்தான்‌ நமக்கு யோக்கியதை வந்ததாக “மித்திரன்‌” எழுதுகிறான்‌. காங்கிரசினால்‌ நமக்கு யோக்கியதை வந்ததா? நம்‌ போன்றவர்‌. களால்‌ காங்கிரசுக்கும்‌ “மித்திரன்‌” கூட்டத்தாராய இப்பார்ப்பனர்களுக்கும்‌ யோக்கியதை வந்ததா? என்பதை வாசகர்களேதான்‌ அறிய வேண்டும்‌. நாயக்கர்‌ காங்கிரசுக்கு வரும்போது காங்கிரசுக்கு நாட்டில்‌ இருந்த குடி அரசு - 1926 (2) 182 யோக்கியதை யாரும்‌ அறியாததல்ல.யாரோ நான்கு படித்த பார்ப்பனர்க ளான அனாமதேயங்களும்‌, அன்னக்‌ காவடிகளும்‌ அதில்‌ சேர்ந்து பணம்‌ சம்பாதித்து வந்தார்கள்‌. அவைகளை வைத்துக்கொண்டுமாதம்‌10 ரூபாய்‌ கூட தங்கள்‌ வக்கீல்‌ உத்தியோகத்தில்‌ சம்பாதிக்க முடியாமலிருந்தவர்கள்‌ காங்கிரசில்‌ சேர்ந்து, பத்திரிகைகள்‌ போட்டு, வெறும்‌ அபத்தப்‌ பஞ்சாங்கத்‌ தையே எழுதி அதன்‌ பேரால்‌ மாதம்‌ 1000, 2000, 5000 ரூபாய்‌ வீதம்‌ நமது பொருளைக்‌ கொள்ளை அடித்துக்‌ கொண்டு வந்தார்கள்‌. அதல்லாமலும்‌ தாங்கள்‌ காங்கிரசில்‌ இருப்பதன்‌ மூலம்‌ சர்க்காருக்கு தேசத்தை காட்டிக்‌ கொடுத்தும்‌ தங்கள்‌ பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம்‌ சம்பாதித்து கொடுத்துக்‌ கொண்டும்‌ வந்தார்கள்‌. இந்த மாதிரி காங்கிரசைப்‌ பற்றி 100-க்கு 99 பேர்‌ பார்ப்பனரல்லாதாருக்கு யாதொரு விஷயமும்‌ தெரியாமலே இருந்தது. இந்த நிலையில்‌ இந்தக்‌ கூட்டத்தாரை ஒழிக்க சர்க்காரார்‌ அடக்கு முறைச்‌ சட்டங்கள்‌ போட்டதற்கும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ உதைபோட ஆரம்‌ பி. த்ததற்கும்‌ பயந்து கொண்டு மகாத்மாவையும்‌ நம்‌ போன்றவர்களையும்‌ தஞ்சமடைந்து அதிலிருந்து தப்பினார்கள்‌. இந்த நிலையில்‌ நாயக்கர்‌ போன்றவர்கள்‌ காங்கிரசுக்குள்‌ வரும்போது அவருடைய யோக்கியதையும்‌ காங்கிரசுக்‌ குப்‌ போன பின்பு அவருடைய யோக்கியதையும்‌ யோசித்துப்‌ பார்த்தால்‌ “மித்திரனின்‌” கூட்டத்தாருக்கு யோக்கியதை கிடைத்ததா? நாயக்‌ கருக்கு யோக்கியதை கிடைத்ததா? என்பது விளங்காமல்‌ போகாது. ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ காங்கிரசுக்கு வருமுன்‌ வருஷம்‌ 1000 ரூபாய்‌ வரு மானவரி செலுத்தி வந்தார்‌. பல பெரிய மில்லுகளுக்கு ஏஜண்டாக யிருந்தார்‌. சொந்தத்தில்‌ யந்திரசாலைகள்‌ வைத்து நடத்தி வந்தார்‌. இப்போது அவருக்கு வியாபாரத்தில்‌ ஒரு காசுகூட வருமானவரி இல்லை.அவர்‌ இருந்த ஏஜண்டு வேலைகளுக்கு அவருக்குப்‌ பின்னால்‌ வந்தவர்கள்‌ 4 லட்சம்‌ 5 லட்சக்‌ கணக்கான பணம்‌ சம்பாதித்திருக்கிறார்கள்‌. ஒத்துழையாமையின்‌ போது பதினாயிரக்கணக்கான ரூபாய்‌ பத்திரங்கள்‌ ஆதாரங்கள்‌ வாய்தா கடந்து நஷ்டமேற்பட்டது. உதாரணமாக ஒரு முப்பது ஆயிரம்‌ ரூபாய்‌ பத்திரம்‌ சம்பந்தமான விவகாரத்தில்‌ வழக்காடாமல்‌ அப்படியே அடியோடு விட்டு விடப்பட்டது.அப்போதைய காங்கிரஸ்‌ பிரசிடெண்டான ஸ்ரீமான்‌ சி.விஜய ராகவாச்சாரியாருக்கு இது நன்றாய்‌ தெரியும்‌. அதோடு அவர்‌ எதிர்‌ வழக்கா டும்படியும்‌, கண்டிப்பாய்‌ ஜெயித்து 30 ஆயிரம்‌ ரூபாயை பெறலாம்‌ என்றும்‌, தானே பீசில்லாமல்‌ வந்து பேசுவதாகவும்‌ நாயக்கரை எவ்வளவோ கட்டாயப்படுத்தினார்‌. ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ இப்போது சேலத்தில்‌ இருக்‌ கிறார்‌. யார்‌ வேண்டுமானாலும்‌ எழுதிக்‌ கேட்டுக்‌ கொள்ளலாம்‌. இன்னும்‌ நாயக்கர்‌ காங்கிரசுக்கு வருமுன்‌ முனிசிபல்‌ சேர்மென்‌, ஜில்லா - தாலூக்கா போர்டுமெம்பர்‌, ஆனரரி மேஜிஸ்ட்ரேட்டு முதலிய சர்க்கார்‌ சம்பந்தப்பட்ட பதவி வேலையிலும்‌ இருந்து வந்ததோடு ஒரே தாளில்‌ இவை அனைத்‌ 183 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தையும்‌ ராஜினாமா கொடுத்தார்‌. ராஜினாமா செய்த பிறகும்‌ இரட்டை முதல்‌ வகுப்பு பிரயாணப்படியும்‌, நாள்‌ ஒன்றுக்கு 100 ரூபாய்‌ வீதம்‌ கெளரவப்‌ படிப்பணமும்‌ சர்க்கார்‌ கொடுப்பதாகவும்‌ தெரிவித்து, இன்கம்டாக்ஸ்‌ அப்பீல்‌ போர்ட்டில்‌ கமீஷனராக இந்தியா கவர்மெண்டாரால்‌ நியமிக்கப்‌ பட்டவ ராகவுமிருந்தார்‌. சர்க்காரிலும்‌ அசிஸ்டெண்ட்‌ ரெக்ருட்டிங்‌ ஆபீசர்‌ வேலை கொடுக்கத்தக்கநம்பிக்கையுடையவராகவும்‌ இருந்தார்‌.(இது ராணுவ சம்மந்த மான உத்தியோகம்‌! இன்னும்‌ பல வகைகள்‌ இருந்தாலும்‌ இவைகளைப்‌ பற்றி எழுதுவது தற்பெருமைக்கு இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்‌ கொண்டதாகக்‌ கருதப்படும்‌ என்று அஞ்சுவதோடு இதையும்‌ தற்பெருமைக்கு எழுதுவதாகவே சிலர்‌ கருதுவார்கள்‌ என்று பயப்படுகிறோம்‌. ஆனாலும்‌ இப்பார்ப்பனர்களின்‌ அக்கிரமத்திற்குப்‌ பதில்‌ சொல்லாமலிருக்க முடிவ தில்லை. இவ்வைந்தாறு வருஷ காலத்தில்‌ வருஷம்‌ பதினாயிரக்கணக்கான ரூபாய்‌ சம்பார்த்தனையும்‌ போய்‌, கை முதலும்‌ எவ்வளவோ நஷ்டப்பட்டு மிருக்கிறோம்‌. ஸ்ரீமான்கள்‌ சத்திய மூர்த்தி சாஸ்திரிக்கோ, எ.ரெங்கசாமி அய்யங்காருக்கோ, எஸ்‌. சீனிவாசய்‌ யங்காருக்கோ, வி.எஸ்‌. சீனிவாச சாஸ்திரிக்கோ, பி.என்‌. சர்மாவுக்கோ, எம்‌.கே.ஆச்சாரிக்கோ மற்றும்‌ பல அய்யர்‌, ஆச்சாரியார்‌, சர்மாவுக்கோ காங்கிரசில்‌ சேர்ந்து எவ்வளவு ரூபாய்‌ எவ்வளவு கெளரவ நஷ்டம்‌ ஏற்‌ பட்டது? இவர்களிடம்‌ இருந்து காங்கிரசைக்‌ கழித்து விட்டால்‌ மீதி என்ன என்பதை இவர்களே யோசித்துப்‌ பார்க்கட்டும்‌. இப்படி இருக்க நாம்‌ காங்கிர சின்‌ மூலம்‌ யோக்கியதை அடைந்து விட்டதாக சொல்லுகிறார்கள்‌. இவ்வள வும்‌ போதாமல்‌ நம்மிடம்‌ பிராமணத்‌ துவேஷ மிருக்கிறது என்கிறார்கள்‌. நம்மிடம்‌ உண்மையில்‌ துவேஷமிருக்கிறதா, இவர்களிடம்‌ இருக்கிறதா? நம்மிடம்‌ இருக்குமானால்‌ குறைந்த அளவு அவர்கள்‌ நம்மைச்‌ சொல்லுவது போலவாவது நாமும்‌ அவர்களைச்‌ சொல்ல மாட்டோமா? அவர்கள்‌ நம்மை சூத்திரன்‌ என்று கூப்பிடுவதோடு, சூத்திரன்‌ என்றால்‌ வைப்பாட்டி மகன்‌, தாசி மகன்‌ என்று எழுதியே வைத்துக்‌ கொண்‌ டிருக்கிறார்களே, நாமும்‌ அவர்களை அந்த மாதிரி சொல்ல மாட்டோமா? சொன்னால்‌ தலை போய்‌ விடுமா? பார்ப்பனர்‌ விஷயத்தில்‌ அவர்கள்‌. யோக்கியதையைப்‌ பற்றி எவ்வளவோ உண்மைகளைக்கூட நாம்‌ சொல்லப்‌ பயப்படுகிறோமே. இப்படியெல்லாம்‌ நாம்‌ பயப்படும்போதே இவர்கள்‌. நம்மை இவ்வளவு தூரம்‌ ஒழிக்கப்‌ பார்க்கிறார்கள்‌. ஆனால்‌ இவைகளை எதிர்பார்த்தே இக்‌ கருமத்தில்‌ இறங்கினோமானதால்‌ இவைகளைப்‌ பற்றி ஒரு சிறிதும்‌ நாம்‌ கவலைப்படாமல்‌ இன்னும்‌ இப்‌ பார்ப்பனர்கள்‌ வெடிகுண்டுக்கு மார்பைக்‌ காட்டிக்‌ கொண்டுதான்‌ இருக்கிறோம்‌ என்பதாக உறுதி கூறுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 29.08.1926. குடி அரசு - 1926 (2) 184. யார்ப்பண அகராதி - சித்திரபுத்திரன்‌ காங்கிரஸ்‌ என்றால்‌ என்ன? வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஓடுக்கி பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்துவது. வெளியேற்றம்‌ என்றால்‌ என்ன? பார்ப்பனரல்லாதார்‌ சமூகத்தையும்‌, அவர்கள்‌ சுயமரியாதையையும்‌ ஒழிக்க மறுபடியும்‌ சில குல துரோகிகளை கூட்டிக்கொண்டு வாக்குத்‌ தத்தத்‌ தை மீறி மனச்சாக்ஷியின்‌ பேரால்‌ கட்டுப்பாடாய்‌ சட்டசபைக்குப்‌ போ வதுதான்‌. தொழிலாளிகள்‌ நன்மை என்றால்‌ என்ன? தொழிலாளிகளை ஏமாற்றி அவர்களுக்குத்‌ தலைவர்களாகி அவர்கள்‌ ஓட்டுப்பெற்று சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்களில்‌ ஸ்தானம்‌ பெற்று, தொழி லாளர்களையே விட்டு பார்ப்பனரல்லாதாரையும்‌, தலைவர்களையும்‌ ஈனத்‌ தனமாகவும்‌ இழித்‌ தன்மையாயும்‌ திட்டும்‌ படியும்‌ அடிக்கும்படியும்‌ கலகம்‌ செய்யும்படியும்‌ தூண்டி விடுவது. இந்துமத பரிபாலன சட்டத்தால்‌ இந்துமதம்‌ போய்விடுமே என்று பயப்படுகிறார்கள்‌ என்றால்‌ என்ன? பார்ப்பனருக்கு வரும்படி போய்விடுமே என்று பயப்படுவது. மத விஷயத்தில்‌ சர்க்கார்‌ பிரவேசிக்கிறார்களே என்றால்‌ என்ன? பார்ப்பனரல்லாதார்‌ பிரவேசிக்கிறார்களே என்பது. சட்டசபை கலையும்போது மத பரிபாலன சட்டத்தை நிறை வேற்றுகிறார்களே என்றால்‌ என்ன? பார்ப்பனரல்லாதார்‌ எல்லாம்‌ இம்மசோதாவை ஆட்சேபிப்பவர்க ளுக்கு மறுதேர்தலில்‌ ஓட்டுக்கொடுக்க மாட்டார்களே என்கிற பயம்‌ தான்‌. பார்ப்பனரல்லாத தலைவர்கள்‌ என்றால்‌ என்ன? 185 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பார்ப்பனர்‌ பார்த்து, போடு தோப்புக்‌ கரணம்‌ என்றால்‌ இதோ போடு. கிறேன்‌ எண்ணிக்கோ என்று சொல்பவர்களைத்தான்‌. பிராமணத்‌ துவேஷமென்றால்‌ என்ன? பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்கு பாடுபடுவதுதான்‌. சுயராஜ்யக்‌ கட்சியின்‌ கட்டுப்பாட்டிற்கு கட்டுப்படுவது என்றால்‌: என்ன? பார்ப்பனரல்லாதாரை ஒடுக்க பார்ப்பனர்‌ சொல்லுகிற படியெல்லாம்‌. கொஞ்சமும்‌ தவறாமல்‌ கட்டுப்பாடாய்‌ நடப்பதுதான்‌. காங்கிரஸ்‌ துரோகம்‌ என்றால்‌ என்ன? காங்கிரஸ்‌ பேரால்‌ பார்ப்பனர்‌ பாமர ஜனங்களை ஏமாற்றுவதை: வெளியிலெடுத்துச்‌ சொல்வதுதான்‌. காங்கிரஸ்‌ தோல்வி என்றால்‌ என்ன? பார்ப்பனருக்கும்‌ அவர்களின்‌ அடிமைகளுக்கும்‌ சட்ட சபையிலும்‌ ஸ்தல ஸ்தாபனங்களிலும்‌ இடம்‌ கிடைக்காமல்‌ போவதுதான்‌. பொது ஜனங்களுக்கு ராஜீய ஞானம்‌ இல்லையென்றால்‌ என்ன? பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப்‌ போடுவதுதான்‌. பொது ஜனங்கள்‌ ஏமாறவில்லை என்றால்‌ என்ன? பார்ப்பனருக்கு ஓட்டுப்‌ போடுவதுதான்‌. பிராமண விசுவாசம்‌ என்றால்‌ என்ன? கர்ப்பதான முகூர்த்தம்‌ முதல்‌ பிறந்து வளர்ந்து செத்தும்‌, செத்த பிறகும்‌ பார்ப்பனருக்கு பணம்‌ கொடுத்து சடங்கு செய்து பார்ப்பனர்கள்‌ தயவால்தான்‌ மோகத்திற்கு போகலாம்‌ என்று சொல்வதுதான்‌. தரும பூஷணம்‌ என்றால்‌ என்ன? ஆயிரக்கணக்கான ரூபாயை ஒரு பார்ப்பனரின்‌ காலில்‌ கொட்டி தங்க புஷ்பத்தால்‌ அருச்சனை செய்து அக்காலைக்‌ கழுவி அந்தத்‌ தண்ணீரை: சாப்பிடுவது தான்‌. செல்லுபடி இல்லாத எலெக்ஷன்‌ என்றால்‌ என்ன? பார்ப்பனர்‌ தோற்றுப்போகும்‌ எலக்ஷன்கள்தான்‌. நல்ல நிர்வாக அதிகாரி என்றால்‌ யார்‌? பார்ப்பனருக்கு உத்தியோகம்‌ கொடுப்பவன்தான்‌. குடி அரசு - 1926 (2) 186 கொடுமையான அதிகாரி என்றால்‌ யார்‌? பார்ப்பன சிப்பந்திகள்‌ செய்யும்‌ அயோக்கியத்தனத்தைக்‌ கண்டிப்பவன்தான்‌. மகா அயோக்கிய அதிகாரி என்றால்‌ என்ன? பார்ப்பன சிப்பந்திகள்‌ லஞ்சம்‌ வாங்குவதைக்‌ கண்டுபிடித்து இனிமேல்‌ இப்படிச்‌ செய்யாதே என்று சொல்லுகிறவன்தான்‌. சுதேச வைத்தியம்‌ என்றால்‌ என்ன? பார்ப்பனர்‌ மாத்திரம்‌ படிக்கத்தக்க வைத்திய முறையும்‌ பார்ப்பனர்‌ களே வைத்தியர்களாயிருந்து தீர்க்கத்தக்க வைத்தியமுமாகிய சமஸ்‌ கிருதத்தில்‌ உள்ள ஆயுர்வேத வைத்தியம்தான்‌. பரதேச வைத்தியம்‌ என்றால்‌ என்ன? பார்ப்பனரல்லாதார்‌ படிக்கத்தக்கதும்‌ பார்ப்பனரல்லாதார்‌ வைத்திய ராகத்‌ தக்கதுமான தமிழில்‌ உள்ள சித்த வைத்தியந்தான்‌. இந்தியாவுக்கு பொது பாஷை என்றால்‌ என்ன? பார்ப்பனர்‌ மாத்திரம்‌ படித்து இந்தியா பூராவும்‌ சுற்றிப்‌ பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த உபயோகப்படும்‌ ஹிந்தி பாஷை தான்‌. தமிழ்ச்சங்கம்‌ என்றால்‌ என்ன? அக்கிராசனாதிபதி பார்ப்பான்‌; உப அக்கிராசனாதிபதி பார்ப்பான்‌; காரியதரிசி பார்ப்பானாக இருக்கும்‌ சங்கம்தான்‌. தமிழ்‌ கலாசாலை என்றால்‌ என்ன? பிரின்ஸ்பால்‌ பார்ப்பனன்‌, உதவி பிரின்ஸ்பால்‌ பார்ப்பனன்‌, உபாத்‌ தியாயர்‌ பார்ப்பனன்‌, படிக்கும்‌ பிள்ளைகளும்‌ பார்ப்பனப்‌ பிள்ளைகளாய்‌ இருப்பதுதான்‌. சமஸ்கிருதத்‌ துரோகிகள்‌ என்றால்‌ யார்‌? தனித்தமிழ்‌ பேசுகிறவரும்‌ எழுதுகிறவரும்தான்‌. தமிழில்‌ தக்க ஆராய்ச்சியுடையவர்‌ என்றால்‌ யார்‌? சமஸ்கிருதத்தில்‌ இருந்துதான்‌ தமிழ்‌ வந்தது. தமிழுடன்‌ சமஸ்கிருத வார்த்தைகளையும்‌ சேர்த்துப்‌ பேசுவதுதான்‌ தமிழுக்கு அதிக யோக்கிய தையைக்‌ கொடுக்கும்‌ என்று சொல்லுபவர்தான்‌. தமிழில்‌ கொஞ்சமும்‌ ஆராய்ச்சி இல்லாதவன்‌ என்றால்‌ யார்‌? தமிழ்‌ தனிப்பாஷை, வேறு எந்த பாஷையின்‌ உதவியில்லாமலே அது 187 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 இருந்திருக்கிறது என்று சொல்லுபவன்தான்‌. தேசீயப்‌ பத்திரிகை - யோக்கியமான பத்திரிகை என்றால்‌ எது? பார்ப்பனர்களுக்கு விரோதமில்லாமல்‌ அவர்கள்‌ செய்யும்‌ அக்‌ கிரமங்களையெல்லாம்‌ மூடி வைத்துவிட்டு காங்கிரசைப்‌ போற்ற வேண்டும்‌, சுயராஜ்யக்‌ கட்சியில்தான்‌ தேசீயத்‌ திட்டம்‌ இருக்கிறது, அதை ஆதரித்து ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழிக்கவேண்டும்‌ என்று எழுதுவதுதான்‌. யோக்கியப்‌ பொறுப்பற்ற - தேசபக்தி இல்லாத பத்திரிகை என்றால்‌ எது? காங்கிரசின்‌ தற்கால யோக்கியதையையும்‌ அதில்‌ இருக்கும்‌ பார்ப்‌ பன குழ்ச்சியையும்‌ வெளியிலெழுதுவதும்‌, சுயராஜ்யக்‌ கட்சி சுத்தமாய்‌ பார்ப்பனக்‌ கட்சி என்று எழுதுவதுமான பத்திரிகைதான்‌. குடி அரசு - உரையாடல்‌ - 29.08.1926. குடி அரசு - 1926 (2) 188 தென்ணாட்டு ஐமீன்தாரர்களுக்கு ஆயத்து சென்னை சட்டசபைக்கு ஜமீன்தாரர்களின்‌ நன்மையை உத்தேசித்து சில ஸ்தானங்கள்‌ ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஸ்தானங்களுக்கு இதுவரையில்‌ அது எந்த உத்தேசத்தைக்‌ கொண்டு ஒதுக்கி வைக்கப்பட்டனவோ அது போலவே நபர்களும்‌ தெரிந்‌ தெடுக்கப்பட்டு வந்தனர்‌. ஏறக்குறைய ஜமீன்தார்கள்‌ என்கிற பாகுபாடு பெரும்பாலும்‌ பழைய காலத்தில்‌ அரசர்களாகவோ சிற்றரசர்களாகவோ பெரிய பாளையப்‌ பட்டுகளா கவோ அரசாங்கப்‌ பொறுப்பை வகித்தவர்களாகவோ மிக்க பெருமையோடு வாழ்ந்த குடும்பங்கள்‌ என்பதாகவோ இருந்த சமூகத்தை ஆங்கில அரசாக்ஷி ஏற்பட்ட பிறகும்‌ அவர்களை அந்‌ நிலைமையிலேயோ அல்லது அந்த சமூகத்தின்‌ ஞாபகக்‌ குறிப்பாவது இருக்கும்படியாகவோ கருதி நமது அரசாங்‌ கத்தார்‌ அவர்களை கெளரவிக்கும்‌ முகத்தான்‌ அவர்களுக்கென்று பல சட்ட திட்டங்களும்‌ சலுகைகளும்‌ கொடுத்து கூடியவரை அவைகள்‌ மறைந்து போவதற்கில்லாமலும்‌ அந்தந்த குடும்பங்களுக்கு ஒரு தனி கெளரவம்‌ இருக்கும்படியாகவும்‌ செய்து வருகிறார்கள்‌. இதன்‌ பலனாகவே நமது சென்னை சட்டசபைக்கும்‌ இந்த ஜமீன்‌ தாரர்களின்‌ நன்மையையும்‌ அவர்களது கெளரவத்தையும்‌ தனியே உத்தே சித்து அவர்களுக்கென்று சில ஸ்தானங்கள்‌ ஒதுக்கிவைத்து அவைகளுக்கு ஓட்டர்களையும்‌ அந்தக்‌ கூட்டத்தார்களுக்குள்ளாகவே ஏற்படுத்தி வைத்‌ திருக்கிறார்கள்‌. இதுவரையிலும்‌ ஏறக்குறைய அந்த ஸ்தானங்களுக்கு அந்த சமூகத்தாரிலேயே தெரிந்தெடுக்கப்பட்டும்‌ வந்திருக்கிறார்கள்‌. இந்த ஜமீன்தார்‌ சமூகம்‌ ஆதியில்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பனரல்லாதார்களாகவே ஏற்‌ பட்டுப்போய்‌ விட்டதாலும்‌ இவர்களுக்கு நாட்டில்‌ பெருத்த செல்வாக்கு இருப்பதோடு இதுசமயம்‌ நாட்டின்‌ பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத சமூகத்திற்குத்‌ தலைவர்களாகவும்‌ அக்கூட்டத்தாரிலேயே பலர்‌ ஏற்பட்டு விட்டதாலும்‌ அத்தலைவர்களும்‌ தாங்கள்‌ வெறும்‌ போகபோக்கியமே ஜமீன்தார்‌ தத்துவம்‌ என்று எண்ணாமல்‌ தங்கள்‌ சமூகத்தாரும்‌ ஆதியில்‌ தங்கள்‌ ஆளுகையில்‌ இருந்தவர்களுமான பார்ப்பனரல்லாதார்‌ நன்மைக்கு உழைக்கவேண்டும்‌ என்கிற எண்ணங்‌ கொண்டவர்களுமாகி தைரியமாய்‌ உழைக்க அவர்கள்‌ இப்போது வெளியில்‌ வந்து விட்டதாலும்‌ நமது பார்ப்பன 189 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சகோதரர்களுக்கு இது பொறுக்காமல்‌ இதுவரை பல ஜமீன்களுக்குத்‌ தாங்கள்‌. மந்திரிகளாகவோ, ஜமீன்தாரர்களுக்கு தாங்கள்‌ காரியதரிசிகளாகவோ இருந்து அவர்களில்‌ சிலரை கூடா ஒழுக்கங்களில்‌ சம்பந்தப்படுத்தியும்‌ விவகாரங்களில்‌ இழுத்துவிட்டும்‌ அவர்களை கடன்காரர்களாக்கவும்‌ அதின்‌ மூலம்‌ ஜமீன்களை இழக்கவும்‌ செய்து, அவற்றைத்‌ தாங்களே விலைக்கு வாங்கி ஜமீன்தார்களுமாகி இன்னமும்‌ கொஞ்ச நஞ்சம்‌ மீதி இருப்பவைக ளையும்‌ அடியுடன்‌ ஒழித்து அந்த மரியாதை, சொத்து சுகங்களையும்‌ தாங்கள்‌ கைப்பற்றி இருப்பதும்‌ போக ஜமீன்தாரர்களுக்கு தாங்களே பிரதிநிதியுமாக வேண்டும்‌ என்கிற எண்ணம்‌ கொண்டு இப்போது இதிலும்‌ சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்‌. அஃதென்னவென்றால்‌ சென்னை, செங்கல்பட்டு, நெல்லூர்‌ முதலிய ஜில்லாக்களின்‌ சார்பாய்‌ ஜமீன்தார்‌ தொகுதிக்கு இதுவரை தெரிந்தெடுக்கப்‌ பட்டு வந்த பனகால்‌ ராஜா அவர்கள்‌ இதுசமயம்‌ தென்னாட்டு மக்களின்‌ நன்மைக்கென ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனத்திற்குத்‌ தலைவராயிருப்பதாலும்‌. அவருடைய தலைமை ஸ்தானத்தை பார்ப்பனரல்லாத மக்களின்‌ இரண்‌: டொரு பார்ப்பன சிஷ்யர்கள்‌ தவிர மற்றெல்லா பார்ப்பனரல்லாதாராலும்‌ ஒப்புக்கொள்ளப்‌ படுவதினாலும்‌ இப்படிப்பட்ட தலைவர்‌ மறுபடியும்‌ தெரிந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்குப்‌ போவாரானால்‌ அங்கு பார்ப்பன சூழ்ச்சிகள்‌ மிகுதியும்‌ பாதிக்கப்பட்டு விடும்‌ என்றும்‌, பார்ப்பனரல்லாதார்‌. சமூகம்‌ சுயமரியாதையும்‌ முன்னேற்றத்தையுமடைந்து விடும்‌ என்றும்‌, ஜமீன்‌ முழுதையும்‌ பார்ப்பன ஜமீனாக்க முடியாதென்றும்‌ கருதி ஆத்திரப்பட்டு எப்படியாவது அவரை இந்தத்‌ தடவை சட்டசபைக்குத்‌ தெரிந்தெடுக்க விடாமல்‌ செய்வதற்காக, அவருக்கு விரோதமாய்‌ ஒரு பார்ப்பனர்‌ நிற்பதற்கு தந்திரத்துடனும்‌ சூழ்ச்சிகளுடனும்‌ வெகு மும்மரமாய்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்‌ பட்டு வருகின்றன. அதென்ன வென்றால்‌ தத்துவத்தில்‌ எவ்விதத்திலும்‌ ஜமீன்தார்களின்‌ பிரதிநிதி என்று சொல்லிக்‌ கொள்ளுவதற்கு அருகதை யில்லாத ஸ்ரீமான்‌ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌ என்கிற ஒரு பார்ப்பன வக்கீல்‌ பனகால்‌ ராஜாவை சட்ட சபைக்குத்‌ தெரிந்தெடுக்கப்படாமல்‌ செய்வ தற்காக அந்த ஸ்தானத்திற்குப்‌ போட்டி போடப்‌ போகிறார்‌. இதை உத்தே. சித்தே 4, 5 மாதங்களுக்கு முன்பாக @ 1&@ சுமார்‌ 2 - 3 ஆயிரம்‌ ரூபாய்‌ வரும்படி வரத்தக்க ஒரு சிறிய மிட்டாவை சொல்ப துகைக்கு விலைக்கு வாங்கி ஜமீன்தார்‌ கூட்டத்தில்‌ தானும்‌ ஒரு ஓட்டராகப்‌ பதிவு செய்து கொண்டும்‌ ராஜாவுக்கு எதிராக போட்டி போடத்‌ தீர்மானித்துக்‌ கொண்டும்‌ வேலை செய்து வருகிறார்‌. இந்த தொகுதிக்கு மொத்தம்‌ ஓட்டுகள்‌ சுமார்‌ எண்பத்தி ஐந்தே தான்‌. இவற்றில்‌ பார்ப்பன ஓட்டர்களின்‌ சங்கியை 20 அல்லது 22 இருக்கும்‌. இந்த இருபது பேர்‌ பார்ப்பனர்களாய்‌ உள்ள கூட்டத்தார்‌ இந்த ஸ்தானத்திற்கு நின்று 65 பேர்‌ பார்ப்பனரல்லாதாராயிருக்கும்‌ ஜமீன்தார்‌ கூட்டத்தாரை அவர்கள்‌ குடி அரசு - 1926 (2) 190 மூளையில்லாதவர்கள்‌ என்றும்‌ தன்‌ வக்கீல்‌ ஆதிக்கத்தில்‌ கட்டுப்பட்டவர்‌ களென்றும்‌ எண்ணி சுலபமாய்‌ ஏமாற்றி ஸ்தானம்பெற்று பார்ப்பனரல்லா தாரை ஒழித்துவிடலாம்‌ என்கிற தைரியத்தின்‌ பேரில்‌ கங்கணம்‌ கட்டிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. இதற்கு ஸ்ரீமான்கள்‌ எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌, டி.வி. வெங்கிட்டராம சாஸ்திரியார்‌, சி.பி.இராமசாமி அய்யர்‌ போன்ற பிரபல பார்ப்பனர்கள்‌ எல்லாம்‌ உள்‌ உளவாய்‌ இருந்து கொண்டு வேலைசெய்தும்‌ வருகிறார்கள்‌. தென்னாட்டு ஜமீன்தார்கள்‌ தொகுதிக்கு ஒரு பார்ப்பனர்‌- அதிலும்‌ வெகு சாதாரண பஞ்சாங்கப்‌ பார்ப்பன குடும்பத்தைச்‌ சேர்ந்தவர்‌ - ஜமீன்தாரர்கள்‌ கெடுவதினாலேயே பிழைக்க வேண்டியவராயுள்ள ஒரு வக்கீல்‌ - ஜமின்தாரர்கள்‌ எல்லோரும்‌ முட்டாள்கள்‌ புத்தியில்லாதவர்கள்‌ என்று சொல்லிக்‌ கொண்டிருப்பவர்‌ - ஜமீன்தார்கள்‌ ஒற்றுமையாகவோ மேன்மையாகவோ விவகார வில்லங்கங்களுக்கு மார்க்கமில்லாமலோ வாழ்வதாயிருந்தால்‌ தங்களுக்கு வரும்படியில்லாமல்‌ பட்டினி கிடக்க வேண்டியவரான வக்கீல்‌ கூட்டத்தைச்‌ சேர்ந்தவர்‌ - ஜமின்களும்‌ ஜமீன்‌ மைனர்களும்‌ தப்பு வழியிலும்‌, கூடா ஒழுக்கத்திலும்‌ நடந்தால்தான்‌ தங்கள்‌ சமூகத்தார்‌ பெரும்பாலும்‌ காலக்ஷேபம்‌ செய்யலாம்‌ என்கிற நிலையில்‌ உள்ள வகுப்பைச்‌ சேர்ந்தவர்‌ - அன்றியும்‌ எவ்வளவு பெரிய கல்வி, புத்தி, ஒழுக்கம்‌, பரம்பரை கண்ணியம்‌ உள்ள ஜமீன்தாரரானாலும்‌, பார்ப்பனரல்லாதார்‌ என்கிற காரணத்தால்‌ “சூத்திரன்‌” “வேசி மகன்‌” என்றும்‌, ஒரு அயோக்கிய ணாயிருந்தாலும்‌ மற்றும்‌ எவ்வளவு கூடா ஒழுக்கக்‌ காரனாயிருந்தாலும்கூட “பிராமணன்‌”, “உயர்ந்தவன்‌” என்று சொல்லிக்கொள்ளுபவராகவும்‌ இருக்கிற ஒருவர்‌ நம்நாட்டுப்‌ பழம்‌ பெருங்குடி மக்களான ஜமீன்தார்‌ கூட்டத்திற்கு பிரதிநிதியாக முன்‌ வந்திருக்கிறார்‌ என்றால்‌ இப்பார்ப்பனர்‌ களின்‌ தைரியத்‌ தையும்‌ துணிவையும்‌ நாம்‌ என்னவென்று சொல்லுவது? இது கேவலம்‌ தான்‌ வக்கீலாயிருப்பதாலும்‌ தன்னுடைய வக்கீல்‌ தொழில்‌ மாய்கையில்‌ ஜமீன்‌ குடும்பங்கள்‌ தனக்கு அடிமையாய்‌ கட்டுப்பட்டு கிடக்கிறது என்கிற அகம்‌ பாவத்தாலும்‌ இவ்வளவு முக்கியமான ஸ்தானத்தின்‌ யோக்கியதையை அழிக்கத்‌ துணிந்துவிட்டாரென்றே சொல்ல வேண்டும்‌. வக்கீல்கள்‌ என்றால்‌ ஜமீன்தாரர்கள்‌ பயப்படும்‌ காலமெல்லாம்‌ மலை யேறிப்‌ போய்விட்டது என்பதையும்‌ வக்கீல்‌ கூட்டத்திற்கு யோக்கியதை போய்விட்டது என்பதையும்‌ தாசிகள்‌ போல்‌ வக்கீல்களும்‌ தரகர்களை வைத்‌ தோ வாசற்படியில்‌ காத்துக்‌ கொண்டிருந்தோ ககரிக்‌ கார்களைத்‌ தேடிப்‌ பிடிக்க வேண்டிய நிலைமை வந்து விட்டதென்பதையும்‌ இவர்‌ மறந்து விட்டார்‌ போலும்‌. இவர்‌ எதற்காக ஜமீன்தார்‌ தொகுதிக்கு நிற்கிறார்‌? ஜமீன்‌ தார்‌ நன்மையில்‌ இவருக்கு என்ன அனுதாபம்‌ உண்டு? ஜமீன்‌ குடும்பத்தின்‌ பெருமையையும்‌ கட்டுப்பாட்டையும்‌ காப்பாற்ற இவருக்கு என்ன யோக்கி யதை உண்டு? அந்தக்‌ குடும்பங்கள்‌ ஒழியாமலும்‌ அந்தச்‌ சொத்துக்கள்‌ காப்பாற்றப்‌ படாமலிருப்பதைக்‌ காப்பாற்றவும்‌ இவருக்கு எந்த விதத்தில்‌ 191 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அக்கறை உண்டு பழைய ஜமீன்‌ குடும்பங்களின்‌ தர்மம்‌, தானம்‌, பரோபகாரம்‌. முதலியவைகள்‌ இவருக்குண்டா? சுயமரியாதைத்‌ தத்து வத்தைக்‌ காப்பாற்ற முடியுமா? பார்ப்பனர்களுக்கு எந்தப்‌ பதவி கிடைத்‌ தாலும்‌ தங்கள்‌ இயற்கை சுபாவம்‌ எப்படி மாறும்‌? உதாரணமாக, புதிய சீர்திருத்தத்தின்படி , ஜமீன்தார்‌ தொகுதிக்கென்று தனியாக ஸ்தானங்கள்‌ பிரிந்த காலத்திலேயே ஜமீன்தாரர்கள்‌ மற்ற சாதாரண ஓட்டர்களைப்போல்‌ போலிங்‌ ஸ்தானத்திற்கு வந்து வோட்டு போடும்படியாய்‌ இல்லாமல்‌ ஓட்டுச்‌ செய்யும்‌ கடுதாசிகளை ஜமீன்தாரர்களுக்கே நேரில்‌ போய்ச்‌ சேரும்படி தபாலில்‌ அனுப்பி அவர்கள்‌ ஒரு சமயம்‌ அயலூரிலிருந்‌ தாலும்‌ ஓட்டு செய்து திரும்பவும்‌ தபாலிலேயே அனுப்பிவிடும்படியான செளகரியம்‌ கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருப்பதை நமது ஸ்ரீமான்‌ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌ அவர்கள்‌ “சுக்கிலாம்‌ பரதாம்‌”” என்கிற போதே கண்ணைப்‌ பார்த்து குட்டிக்‌ கொள்வதுபோல்‌, இந்த சுதந்திரம்‌ ஜமீன்தாரர்களுக்கு வேண்டியதில்லை. ஜமீன்தார்கள்‌ போலிங்‌ ஆபிசுக்கு போய்‌ அங்கிருந்துதான்‌ தன்னுடைய ஓட்டுகளைக்‌ கொடுக்க வேண்டும்‌. என்கிற ஏற்பாடு செய்வதற்காக வேண்டிய சூழ்ச்சி செய்து, இதை ஜமின்தாரர்‌. களே கேட்டுக்‌ கொள்வது போல்‌ விண்ணப்பம்‌ எழுதி, தனக்குக்‌ கட்டுப்பட்ட ஜமின்தாரர்கள்‌ சிலரிடம்‌ கையெழுத்து வாங்கி சர்க்காருக்கு அனுப்பி விட்‌ டாராம்‌. இந்த அய்யர்‌ என்கிற வார்த்தையை நம்பி ஏமாந்த ஜமின்தாரர்‌ களில்‌ ஜயபூர்‌ மகாராஜாவும்‌ ஒருவர்‌ என அறிகிறோம்‌. பிறகு இரண்டொரு ஜமின்தாரர்களுக்கு இந்த விஷயம்‌ வெளியானதின்‌ பேரில்‌ பழையபடியே இருக்கட்டும்‌ என்று சர்க்காரைக்‌ கேட்டுக்கொண்டதினால்‌ ஜமீன்தார்கள்‌ கெளரவம்‌ ஸ்ரீமான்‌ அய்யர்‌ என்கிற ஜமீன்தார்‌ சூழ்ச்சியிலிருந்து தப்புவிக்‌ கப்பட்டதாம்‌. தபால்‌ மூலம்‌ ஓட்டு அனுப்பும்‌ சுதந்திரம்‌ சாதாரண ஆசாமி களாகிய யூனிவர்சிட்டி பட்டம்‌ பெற்றவர்களுக்குக்‌ கூட இருக்கிறது. அதாவது ஒரு மனிதன்‌ பி.எ. பாஸ்‌ செய்து மீ£ 35 ரூபாயுக்குத்‌ தன்‌ மனச்சாட்சியை விற்றுக்‌ கொண்டிருக்கிறவனாயிருந்தாலும்‌ அவனுக்கு ஓட்டுக்காகிதம்‌ தபாலில்‌ வரும்படி சட்டம்‌ செய்து வைத்துக்‌ கொண்டிருக்‌ கிறார்கள்‌. ஏன்‌? இந்த கூட்டத்தார்‌ முக்காலே மூன்று வீசமும்‌ பார்ப்பனர்‌. களாயிருப்பதால்‌ தங்களுக்கு இந்த கெளரவம்‌ வேண்டும்‌. ஜமீன்தார்கள்‌. பெரும்பாலும்‌ பார்ப்பனரல்லாதாராயிருக்கிறபடியால்‌ அவர்‌ ஓட்டு எடுக்கு மிடத்திற்குப்‌ போய்‌ ஒரு மாதம்‌ 35 ரூபாய்‌ பார்ப்பனன்‌ முன்னால்‌ கைகட்டிக்‌ கொண்டு ஓட்டுப்போட வேண்டும்‌ போலும்‌. ஓட்டுப்‌ போடுகிற இடத்திற்கு வந்தால்‌ அங்கு உள்ள பார்ப்பனரைக்‌ கொண்டு தந்திரம்‌ செய்து தனக்கு அனுகூலமாய்‌ ஓட்டு வாங்கிக்‌ கொள்ளலாம்‌ என்கிற ஆசையின்‌ பேரில்‌ ஜமின்தாரர்களின்‌ கெளரவமே குறைந்தாலும்‌ பரவாயில்லை என்று துணிந்து இந்த சுதந்திரத்தையும்‌ சுயமரியாதையையும்‌ இழக்கத்‌ துணிந்தார்‌ என்றால்‌ இதுபோலவே மற்ற காரியங்களும்‌ தங்கள்‌ சுயநலத்திற்காக இன்னும்‌ என்ன குடி அரசு - 1926 (2) 192 என்ன உரிமைகளை இழக்கத்‌ துணியமாட்டார்‌; மற்றவர்‌ களையும்‌ ஏமாற்ற மாட்டார்‌ என்பதை ஜமீன்தாரர்கள்தான்‌ உணர வேண்டும்‌. ஆதலால்‌ வரப்போகும்‌ தேர்தலில்‌ இந்த தொகுதியைச்‌ சேர்ந்த ஜமீன்‌ தாரர்கள்‌ எப்பாடுபட்டாவது ஜமீன்தார்‌ தொகுதி ஸ்தானத்திற்கு உண்மை யாகவும்‌ பாரம்பரியமாகவும்‌ சுயமரியாதையிலும்‌ ஜமீன்‌ தாரர்களின்‌ உரிமை களில்‌ கவலையுள்ளவர்களாகவும்‌ பார்த்தே தெரிந்தெடுத்தனுப்பி, தங்கள்‌ சமூகத்தின்‌ யோக்கியதையைக்‌ காப்பாற்றி முற்போக்கடைய பாடுபட வேண்டுமேயல்லாமல்‌“மகன்‌ செத்தாலும்‌ சம்மதம்‌,மருமகள்‌ தாலி அறுபட்‌ டால்‌ போதும்‌” என்கிற கொள்கைப்படி துவேஷத்தை முன்னிட்டோ பொறா மையை முன்னிட்டோ சொந்த அபிப்பிராயபேதத்தை முன்னிட்டோ தங்கள்‌ கடமைகளையும்‌ தர்மத்தையும்‌ அலக்ஷியம்‌ செய்து பார்ப்பன ரையோ வக்கீல்களையோ தெரிந்தெடுக்க நினைத்து தங்கள்‌ சமூகத்தையும்‌ பாரம்பரியமாய்‌ தங்களுக்கிருந்துவரும்‌ கண்ணியத்தையும்‌ சுயமரியாதை யையும்‌ இழந்து விடாமல்‌ பார்த்துக்கொள்ள வேண்டுமென்றே கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. தற்காலம்‌ நமது நாட்டில்‌ ஏற்பட்டிருக்கும்‌ பார்ப்பன ரல்லாதார்‌ முன்னேற்றத்தை ஒழிப்பதற்கு நமது பார்ப்பனர்கள்‌ செய்யும்‌ சூழ்ச்சி அறியாதார்‌ யாரும்‌ இல்லை. இப்படியிருக்க நமது ஜமீன்தார்‌. சமூகத்திற்கு இந்த தகவல்‌ எட்டி இருக்காது என்று நினைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாதாரின்‌ முற்போக்குக்கு இடையூறு செய்ய நமது பார்ப்பனர்‌. கள்‌ ஜமீன்தார்‌ சமூகத்தைப்‌ பிடிப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம்‌. நமது நாட்டு பண்டைப்‌ பெருமையையும்‌ பண்டை இலக்கி யங்களையும்‌ காட்டுவதற்கு அந்த ஒரு (ஜமீன்தார்‌ சமூகம்தான்‌ இருக்கிறது. அதிலும்‌ கையை வைத்து அதையும்‌ ஒழித்துவிட்டால்‌ பிறகு வெகு சுலபமாய்‌ பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது பார்ப்பனருக்கு அனுகூலமாய்‌ போய்விடும்‌. ஆதலால்தான்‌ இப்போது அதில்‌ கையை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்‌. இதுவரையில்‌ அவர்கள்‌ செய்து வந்த சூழ்ச்சிகளின்‌ பலனாக, நமக்கு ஆச்சாரியார்‌ என்னும்‌ மதத்தலைவர்கள்‌ பார்ப்பனர்‌, அரசியல்‌ தலைவர்‌ பார்ப்பனர்‌, நியாயாதிபதி பார்ப்பனர்‌, நியாயவாதி பார்ப்பனர்‌, உபதேசகர்த்தா பார்ப்பனர்‌, உபாத்தியாயர்‌ பார்ப்‌ பனர்‌, உத்தியோகஸ்தர்‌. பார்ப்பனர்‌, வைத்தியர்‌ பார்ப்பனர்‌, வைதீகச்‌ சடங்கு செய்யும்‌ வாத்தியார்‌. பார்ப்பனர்‌, நம்மையும்‌ நம்‌ பெற்றோர்களையும்‌ மோக்ஷத்திற்கனுப்புபவர்‌ பார்ப்பனர்‌, சங்கீத வித்துவான்‌ பார்ப்பனர்‌, நாட்டிய வித்துவான்‌ பார்ப்பனர்‌, தமிழ்‌ வித்துவான்‌ பார்ப்பனர்‌, தமிழ்ச்‌ சங்கத்‌ தலை வர்‌ பார்ப்பனர்‌, சோறு விற்கும்‌ ஓட்டல்காரர்‌ பார்ப்பனர்‌, சிற்றுண்டி விற்பவர்‌ பார்ப்பனர்‌, தூது செல்வோரும்‌ பார்ப்பனராகவே இருந்து அரசியல்‌ மதவியல்‌ சமூகவியல்‌ கலைகளின்‌ இயல்‌ நித்திய வாழ்க்கையின்‌ இயல்கள்‌ ஆகிய எல்லாவற்றிலும்‌ ஆதிக்கமடைந்து விட்டார்கள்‌. செல்வத்திலும்‌ ஆதிக்கம்‌ பெற்று வருகிறார்கள்‌. ஆனால்‌ நாம்‌ முன்‌ சொன்னதுபோல்‌ நமது பழங்கால பெருமையைக்‌ காட்டும்‌ ஜமீன்தார்கள்‌, மகாராஜாக்கள்‌ ஆகிய இவைகளில்‌ 193 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. இவர்களின்‌ ஆதிக்கம்‌ இதுவரை வளராமல்‌ இருந்து வந்தது. இப்பொழுது தான்‌ மெள்ள மெள்ள அவைகளிலும்‌ கையை வைக்கத்‌ துணிகிறார்கள்‌. ஜமீன்தார்‌ பிரபுக்களே! இன்று இப்பார்ப்பனர்‌ பசப்பு வார்த்தையைக்‌ கேட்டு ஏமாந்து போய்விட்டால்‌ நாளைய தினம்‌ என்ன பாடுபட்டாலும்‌ வராது. ஆதலால்‌ இவ்விஷயத்தில்‌ ஒவ்வொரு ஜமீன்‌ தாரர்களும்‌ தங்கள்‌ சுயமரியாதையையும்‌ கண்ணியத்தையும்‌ காப்பாற்றிக்‌ கொள்வார்களாக. குடி அரசு - தலையங்கம்‌ - 29.08.1926 குடி அரசு - 1926 (2) 194. யாரை யார்‌ மோசக்‌ ஊய்தார்கள்‌? ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ சென்னையில்‌ ஒரு கூட்டத்தில்‌ பேசும்‌ போது “பார்ப்பனராகிய நான்‌ யாரையும்‌ ஏமாற்றவில்லை, பார்ப்பனரல்லா தாராகிய ஈ.வெ.இராமசாமி நாயக்கர்‌ என்னை ஏமாற்றி விட்டார்‌” என்று சொன்னாராம்‌. நாயக்கர்‌ எந்த விதத்தில்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காரை ஏமாற்‌ நினார்‌. என்பதையும்‌ கூடவே சொல்லியிருந்தால்‌ கண்ணியமாயிருந்திருக்‌ கும்‌. அப்படிக்கில்லாமல்‌ பொதுப்படையாய்ச்‌ சொல்லுவது விஷமத்திற்‌ காக என்றே தான்‌ சொல்ல வேண்டும்‌. ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ திருச்சியில்‌ கூட்டிய மாகாணக்‌ காங்கிரஸ்‌ கமிட்டி பொதுக்கூட்டத்தில்‌ ஸ்ரீமான்‌ வரதராஜுலு நாயுடுகாரவர்கள்‌ பார்ப்பனரல்லாதார்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ விஷயமாய்‌ ஒரு தீர்மானம்‌ கொண்டுவந்த சமயத்தில்‌ நாயுடு காரைப்‌ பார்த்து “எப்படியாவது இந்த தீர்மானத்தை இதுசமயம்‌ வாபீசு வாங்கிக்‌ கொள்ளுங்கள்‌; மூன்று மாதம்‌ பொறுத்தவுடன்‌ இதற்கு நான்‌ வகை: செய்கிறேன்‌” என்று சொல்லி நாயக்கரையும்‌ ஸ்ரீமான்‌ நாயுடுகாரையும்‌ கெஞ்சி நம்பச்‌ செய்து அதைப்‌ பின்வாங்கிக்‌ கொள்ளும்படி செய்தார்‌. காஞ்சீபுரம்‌ மகாநாட்டில்‌ நாயக்கரும்‌, ஸ்ரீமான்‌ இராமநாதனும்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானம்‌ கொண்டு வந்த சமயத்திலும்‌ வெளிப்படையாய்‌ மகாநாட்டில்‌ பிரேரேபிக்க அக்கிராசனர்‌ வசம்‌ தீர்மானம்‌ ஒப்படைத்த சந்தர்ப்பத்தில்‌ நாயக்கரை ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ தனியாய்‌ கூட்டி வைத்து இது சமயம்‌ இதை வலியுறுத்தாதீர்கள்‌. மூன்று மாதத்தில்‌ எல்லாம்‌ சரிபடுத்தி விடுகிறேன்‌ என்று உறுதி கொடுத்தார்‌. இதற்கு சாட்சி ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ அக்கிராசனராக ஸ்ரீமான்‌ நாயுடுகாரால்‌ பிரேரே பித்து ஆமோதித்து நிறைவேறியபின்‌ தீர்மானம்‌ சபையோரால்‌ அங்கீகரிக்‌ கப்பட்டதாய்‌ ஏற்பட்ட பின்பும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ எழுந்து நின்று சபையோரைப்‌ பார்த்து “நீங்கள்‌ எல்லாம்‌ என்னைத்‌ தெரிந்தெடுத்தாலும்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ.இராமசாமி நாயக்கர்‌ என்னுடைய தேர்தலை ஒப்புக்‌ கொண்டதாக அவர்‌ வாயால்‌ சொன்னால்தான்‌ நான்‌ இந்த ஸ்தானத்தை ஏற்றுக்‌ கொள்ளுவேன்‌” என்று சொன்னார்‌. அதுசமயம்‌ ஸ்ரீமான்கள்‌ வரதராஜுலு நாயுடு, முதலியார்‌ முதலியவர்களும்‌ நாயக்கரைப்‌ பார்த்து “ஒப்புக்‌ கொண்டேன்‌” என்று சொல்லும்படி சொன்னதின்‌ பேரில்‌, நாயக்கர்‌ எழுந்து பேசும்போது தீர்மானம்‌ நிறைவேறிய பின்பு என்னை கேட்பதில்‌ 195 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பிரயோஜனமில்லை. ஆனாலும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ தலைவராய்‌ இருப்‌ பதில்‌ தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காரை விட உயர்ந்தவர்களும்‌ தாழ்ந்தவர்களும்‌ இந்த ஸ்தானத்தில்‌ இருந்திருக்‌ கிறார்கள்‌ என்றும்‌, ஆனால்‌ அய்யங்கார்‌ இடத்தில்‌ இதுசமயம்‌ தனக்கு உள்ள மனவருத்தமெல்லாம்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயத்தில்‌ அய்யங்‌ கார்‌. வாக்கு தவறி இருக்கிறார்‌ என்பதினாலேயேதான்‌ என்றும்‌, இனியாவது அவர்‌. சொன்ன வாக்கைக்‌ காப்பாற்றுவதானால்‌ தானும்‌ இத்தீர்மானத்தை ஒப்புக்‌ கொள்ளுவதாகவும்‌ சொல்லியிருக்கிறார்‌. இதிலிருந்து சமயம்‌ வரும்‌ போது வாக்குத்தத்தமும்‌ நம்பிக்கையும்‌ கொடுத்து சமயம்‌ தப்பினவுடன்‌ மோசம்‌. செய்கிறவர்கள்‌ பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? ஸ்ரீமான்‌ சி.பி. இராமசாமி அய்யர்‌ சட்டசபைக்கு நிற்கும்போது பார்ப்பனரல்லாதாருக்கு நம்பிக்கை கொடுத்து அவர்கள்‌ ஓட்டுப்பெற்று சர்க்கார்‌ அடிமையாகி 5500 சம்பளமுள்ள உத்தியோகமும்‌ பெற்று பார்ப்ப னரல்லாதாருக்கு விரோதமாய்‌ நடப்பது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?' வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்ட போது சில பார்ப்பனரல்லாத இளைஞர்களைப்‌ பிடித்து ஏமாற்றி தங்கள்‌ வசப்‌ படுத்திக்‌ கொண்டு “வகுப்புவாரி பிரதிநிதித்துவக்‌ கொள்கைகளை நாங்களும்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறோம்‌; ஆனால்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷி சர்க்காருக்கு அனு கூலமாயிருக்கிறது: அதை ஒழிக்க வேண்டும்‌” என்று சொல்லி அந்தக்‌ கக்ஷியும்‌ அந்தக்‌ கக்ஷிப்‌ பத்திரிகையும்‌ செல்வாக்கற்றுப்‌ போகும்படி செய்து அது முடிந்த உடன்‌ வேறு சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை சேர்த்துக்‌ கொண்டு “நீக்கு பெப்பெப்பே, நீ தாத்தக்கு பெப்‌ பெப்பே” என்று சொல்லி துரோகம்‌ செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? இம்மாதிரி தலைமுறை தலைமுறையாய்‌ வழி வழி வம்சமாய்‌ இனி பிறக்கப்போகும்‌ பார்ப்பனரல்லாதாரைத்‌ துரோகம்‌ செய்வதற்கு இனி பிறக்கப்‌ போகும்‌ பார்ப்பனருக்குக்கூட ஆதாரம்‌ தேடி வைப்பது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?' பனகால்‌ ராஜாவிடம்‌ போய்‌ ஜில்லா போர்டு மெம்பர்‌ வேலை வாங்கிக்‌ கொண்டு மூன்றாவது நாளே பனகால்‌ ராஜாவுக்கு விரோதமாய்‌ நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டுக்‌ கொடுத்து அவருக்கு துரோகம்‌ செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? பார்ப்பனரல்லாதார்‌ கட்டுப்பாட்டைக்‌ கலைப்பதற்காக பார்ப்பனரல்‌ லாதார்‌ கூட்டத்தில்‌ இருந்த ஒரு கனவானுக்கு நீதி இலாக்காவில்‌ பெரிய உத்தியோகம்‌ கொடுப்பதாய்‌ வாக்களித்து ஆசை காட்டி அவரைக்‌ கொண்டு பனகால்‌ ராஜாவின்மீது நம்பிக்கையில்லாத்‌ தீர்மானத்திற்கு ஓட்டுப்பெற்று பிறகு அவருக்கு வேலை கொடுக்காமல்‌ அவருக்கு என்று வாக்களித்த உத்தியோகத்தை பார்ப்பனருக்கே கொடுத்து வருவதின்‌ மூலம்‌ பார்ப்பன குடி அரசு - 1926 (2) 196 ரல்லாதாரை ஏமாற்றி துரோகம்‌ செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?' பார்ப்பனரல்லாதாருக்கு சில உத்தியோகம்‌ கிடைக்க வழி ஏற்பட்ட வுடன்‌ அரசியலில்‌ இனியும்‌ சீர்திருத்தங்கள்‌ ஏற்பட்டு விட்டால்‌ அதன்‌ பலனாய்‌ ஏற்படும்‌ உத்தியோகங்கள்‌ பார்ப்பனரல்லாதாருக்கு போய்விடுமே என்கிற குரோத புத்தியோடு எங்களுக்கு சீர்திருத்தமே வேண்டாமென்று சர்க்காருக்கு சொல்லுவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?' கல்பாத்தி தெருவில்‌ நடக்க சர்க்காரும்‌ ஜனப்பிரதிநிதி சபை என்னும்‌ சட்டசபையும்‌ ஒப்புக்கொண்ட பிறகுகூட “வேலையிருந்தால்‌ தான்‌ போக லாம்‌” என்கிற வியாக்கியானம்‌ செய்து பார்ப்பனரல்லாதாரின்‌ சுயமரியாதை யை ஒடுக்கி வைத்து அவர்களுக்குத்‌ துரோகம்‌ செய்து வருவது பார்ப்‌ பனரா? பார்ப்பனரல்லாதாரா?' எல்லைப்புற மகமதிய சமூகத்திற்கு மற்ற பாகத்திற்கு அளிக்கப்பட்டி ருக்கும்‌ சீர்திருத்தத்திற்கு சமமாகவாவது பாரபக்ஷமில்லாமல்‌ சீர்திருத்தம்‌ அளிக்கவேண்டும்‌ என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு விரோதமாய்‌ அதை எதிர்த்து தோற்கடித்து அச்சமூகத்திற்கு துரோகம்‌ செய்தது நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனரா ? பார்ப்பனரல்லாதாரா? மகமதியச்‌ சமூகத்திற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு அனேக மகமதிய தலைவர்களால்‌ சம்பாதிக்கப்பட்ட வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை ஒழிப்ப தற்காக பொறுப்பற்ற இரண்டு மகமதிய வாலிபர்களை பிரதிப்‌ பிரயோஜனம்‌ கொடுத்து அமர்த்திக்கொண்டு மகமதியர்களுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவமே வேண்டாம்‌ என்று சொல்லும்‌ படி செய்து மகமதிய சமூகத்திற்கும்‌ மதத்துக்கும்‌ துரோகம்‌ செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? இந்தியா சட்டசபைக்கு கிறிஸ்துவ சமூகத்திற்கு வகுப்புவாரிப்‌ பிரதி நிதித்துவம்‌ இல்லாததால்‌ மகமதியரல்லாத பொதுத்‌ தொகுதியின்‌ பேரால்‌ நிற்கும்‌ ஸ்ரீமான்‌ வி. சக்கரை செட்டியார்‌ அவர்களை பிராமணரல்லாத இயக்‌ கங்களும்‌, ஸ்தாபனங்களும்‌ ஆதரித்தும்‌ இந்தியா சட்டசபைக்கு தமிழ்நாடு சார்பாய்‌ ஏற்பட்டுள்ள ஸ்தானங்கள்‌ 6-ல்‌ 5-க்கு அய்யங்கார்களாகவே நின்று கொண்டு கிறிஸ்தவர்‌ என்பதைக்‌ கூட பார்க்காமல்‌, ஒரு அய்யங்கார்‌ பார்ப்ப னரே அதுவும்‌ கிறிஸ்தவ சமூகத்திற்குத்‌ தான்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லாமலே அனுகூலம்‌ செய்கிறேன்‌ என்று சொல்லும்‌ தலைவரே நின்று. கொண்டு அச்சமூகத்திற்கு துரோகம்‌ செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்‌ லாதாரா? இந்தக்‌ கொடுமை செய்துகொண்டும்‌ அச்சமூகத்திற்கு விரோதமாய்‌ ஒரு கிறிஸ்தவ வாலிபரை விலைக்கு வாங்கிக்கொண்டு அவர்‌ மூலம்‌ தம்‌ சமூகத்திற்கு வகுப்புவாரி உரிமையே வேண்டாமென்று சொல்லும்படி செய்து அச்சமூகத்திற்கு துரோகம்‌ செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்‌ லாதாரா? தொழிலாளர்‌ சமூகத்துக்கு பாடுபடுவதாய்‌ வேஷம்‌ போட்டு அச்‌ சமூகத்தை பல தந்திரங்களால்‌ சுவாதீனம்‌ செய்து கொண்டு அவர்களை 197 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஏமாற்றி அவர்களுக்குத்‌ தலைவராகியும்‌ அவர்கள்‌ ஓட்டுப்‌ பெற்று பதவி அடைந்தும்‌ கடைசியாய்‌ தொழிலாள ஸ்திரீகள்‌ கர்ப்பவதியாயிருந்து பிள்ளை பெற்ற சமயத்தில்கூட சிலநாள்‌ ஓய்வு கொடுக்கக்கூடாது என்று சட்டசபையில்‌ வாதாடி அந்த நலத்தைக்‌ கெடுத்து தொழிலாள சமூகத்திற்கும்‌ பெண்கள்‌ சமூகத்திற்கும்‌ துரோகம்‌ செய்தது நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?' தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு நாங்கள்‌ நன்மை செய்கிறோம்‌ என்று வாயால்‌ சொல்லிக்கொண்டு காரியத்தில்‌ அச்‌ சமூகத்தை இன்னமும்‌ தாழ்மைப்படுத்த அச்சமூகத்திலேயே ஒரு பொறுப்பற்ற ஏழையை விலைக்கு வாங்கிக்‌ கொண்டு அவரைக்‌ கொண்டே தங்கள்‌ சமூகத்திற்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ உரிமை வேண்டாம்‌ என்று பிரசாரம்‌ செய்யச்‌ செய்து அச்‌ சமூகத்திற்கு துரோகம்‌ செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? குழந்தைப்‌ பருவத்திலிருந்தே சுயமரியாதையையும்‌ சமத்துவத்தை யும்‌ வளர்ப்பதற்காக ஒரு குருகுலம்‌ ஆரம்பிப்பதாய்‌ சொல்லி பொது மக்களின்‌ சபையான காங்கிரசை நம்பச்‌ செய்து 10 ஆயிரம்‌ ரூபாய்‌ சாங்கி ஷன்‌ செய்யப்பட்டு, பார்ப்பனரல்லாத ஒரு காங்கிரஸ்‌ காரியதரிசி நிபந்‌ தனை எழுதி பணம்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டுமென்று சொல்ல, அவருக்‌ குத்‌ தெரியாமல்‌ மற்றொரு பார்ப்பன காரியதரிசியைப்‌ பிடித்து முறைக்கு விரோதமாக இரகசியமாய்‌ 5000 ரூபாய்க்குச்‌ செக்கு எழுதி ரூபாய்‌ வாங்கிக்‌ கொண்டு போய்‌ பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்‌ தை பார்த்தால்‌ பாவம்‌ என்று இருசார்பு குழந்தைகளுக்கும்‌ முளையி லிருந்தே வித்தியாசம்‌ கற்பித்து பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய்த்‌ தாழ்த்து வதற்காக அந்தப்பணத்தை உபயோகித்த துரோகத்தை செய்தது பார்ப்‌ பனரா? பார்ப்பனரல்லாதாரா?' காங்கிரசில்‌ தீண்டாமை ஒழிப்பது என்கிற தத்துவத்தை எல்லாரும்‌ ஒப்புக்கொள்வதாய்ச்‌ சொல்லி பார்ப்பனரல்லாதாரை யெல்லாம்‌ காங்கிரசில்‌ சேர்த்து ஜயிலுக்குப்‌ போகச்‌ செய்து, மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மான மூலமாய்ச்‌ சொன்னவுடன்‌ ராஜினாமா கொடுத்து வெளியில்‌ போய்‌ மகாத்மா காங்கிரசையே ஒழித்து பார்ப்பனக்‌ காங்கிர சாக்கி தேசத்திற்கும்‌ பார்ப்பனரல்லாத சமூகத்திற்கும்‌ துரோகம்‌ செய்தது பார்ப்ப னரா? பார்ப்பனரல்லாதாரா? பிறவியில்‌ உயர்வு தாழ்வு இல்லை, எல்லோரும்‌ சமம்‌ என்று சொல்லி, பார்ப்பனரல்லாதார்‌ ஓட்டுப்‌ பெற்று இந்தியா சட்டசபைக்குப்‌ போய்‌ பிரயாணச்‌ செலவின்‌ பேரால்‌ ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துக்‌ கொண்ட பிறகு ஒரு பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடுவதை ஒரு பார்ப்பன ரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌, தான்‌ ஒரு மாதம்‌ பட்டினி கிடப்பேன்‌ என்று சொல்லி பார்ப்பனரல்லாதாரை இழிவுப்படுத்தி துரோகம்‌ செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா? குடி அரசு - 1926 (2) 198 மகாத்மா காந்தியடிகளின்‌ கொள்கைக்கு “இந்து” பத்திரிகையும்‌ “சுதேச மித்திரன்‌” பத்திரிகையும்‌ விரோதமாய்‌ பிரசாரம்‌ செய்வதால்‌ காங்கிரசில்‌ ஒரு பத்திரிகை இருக்க வேண்டும்‌ என்று சொல்லி காங்கிரஸ்‌ பணத்திலும்‌ 10000 ரூபாய்‌ பெற்று பார்ப்பனரல்லாதாரிடமும்‌ பதினாயிரக்‌ கணக்கான ரூபாய்க்கு பங்குகள்‌ விற்று பணம்‌ பெற்று “சுயராஜ்யா” என்ற பத்திரிகை ஆரம்பித்து “அவன்‌ போனால்‌ கலகமாகிவிடும்‌ நான்‌ போனால்‌ செருப்பாலடித்து விட்டு வருகிறேன்‌” என்று சொல்லுவது போல்‌ “இந்து”, “சுதேசமித்திரனு'க்கு விரோத மாய்‌ பிரசாரம்‌ செய்வதாய்‌ சொல்லி இப்போது அவைகளுக்கு மேலாக பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாயும்‌ மகாத்மா காந்தியின்‌ காங்கிரசை ஆழக்குழியில்‌ போட்டு புதைப்பதற்கும்‌ வேலைசெய்து கொண்டு பங்குக்‌ கார்களையும்‌ பங்கு சேர்த்துக்‌ கொடுத்தவர்களையும்‌ வைது கொண்டு அச்சமூகத்‌ திற்கே துரோகம்‌ செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?' “ஆகையால்‌ தட்டிப்‌ பேச ஆளில்லாவிட்டால்‌ தம்பி சண்டப்‌ பிரசண்டன்‌” என்பது போல்‌ தன்னுடைய சம்பள சிப்பந்திகளை வைத்துக்‌ கொண்டு, தன்னிஷ்டப்படிப்‌ பேசி பத்திரிகையில்‌ பார்ப்பனரல்லாதார்‌. பார்ப்பனருக்கு துரோகம்‌ செய்து விட்டார்கள்‌ என்று சொல்லுவது எவ்வளவு நன்றி கெட்டத்தனம்‌? ஒவ்வொரு பார்ப்பனரும்‌ தனியாய்‌ நின்றுகொண்டு. தங்கள்‌ வாழ்வுகளையும்‌ தங்கள்‌ செல்வங்களையும்‌ போக போக்கியங்களை. யும்‌ நன்றாய்க்‌ கவனித்து இதெல்லாம்‌ யாரை ஏமாற்றி அனுபவிக்கிறோம்‌, யாரை துரோகம்‌ செய்து அனுபவிக்கிறோம்‌, எவ்வித நன்றி கெட்ட தன்மை யாய்‌ அனுபவிக்கிறோம்‌ என்று அவர்கள்‌ நிதானமாய்‌ யோசித்தால்‌ விளங்கா மல்‌ போகாது. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 29.08.1926 199 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஸ்ரீமான்‌ ஓ. கந்தசாமி கட்மயாரிடத்தில்‌ யார்ப்பணர்களுக்கன்ன அபிமானம்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஸ்ரீமான்‌ ஓ. கந்தசாமி செட்டியா ரிடம்‌ அனுதாபமிருந்து அவரை முனிசிபல்‌ கவுன்சிலராக்க வேண்டும்‌. என்கிற எண்ணம்‌ இருக்குமானால்‌ பார்ப்பனர்கள்‌ ஓட்டு அதிகமாயிருக்கும்‌. திருவல்லிக்கேணி வார்டில்‌ போட்டு கவுன்சிலர்‌ பதவியை ஏன்‌ அவருக்கு செய்து வைத்திருக்கக்கூடாது? பட்டத்தையும்‌ விட்ட “பரிசுத்தமான ஒத்து ழையா தத்துவம்‌ கொண்ட காங்கிரஸ்வாதி” இப்போது ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌. கூட்டத்தில்‌ நமது ஸ்ரீமான்‌ கந்தசாமி செட்டியாரை விட வேறு யார்‌ இருக்‌ கிறார்கள்‌? அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகள்‌ இன்னமும்‌ இதற்கு முன்னும்‌ வக்கீல்‌ உத்தியோகம்‌ செய்து வருகிறார்‌. சர்க்கார்‌ நியமன பதவிகளும்‌ சிலவற்றை வைத்துக்கொண்டிருக்கிறார்‌. இவரை விட ஸ்ரீமான்‌ செட்டியார்‌ எந்த விதத்தில்‌ குறைந்தவர்‌? அல்லாமலும்‌ இந்த பார்ப்பனர்‌. வார்த்தையைக்‌ கேட்டு நடந்ததின்‌ பலனாக பார்ப்பனரல்லாத சமூகத்தில்‌ செட்டியாருக்கு இதுசமயம்‌ செல்வாக்கும்‌ குறைந்துபோயிருக்கிறது. இந்த விஷயம்‌ சேப்பாக்கம்‌ டிவிஷனில்‌ செட்டியார்‌ தோல்வியுற்றதினாலும்‌ ராயப்பேட்டை டிவிஷனுக்கு பட்டம்விட்ட நமது செட்டியாரைப்‌ போடாமல்‌ பட்டம்‌ தாங்கும்‌ ஸ்ரீமான்‌ ராவ்பகதூர்‌ ஓ.ஏ.ஓ.கே. லக்ஷ்மணன்‌ செட்டியாரை இவர்களே பார்ப்பனர்கள்‌! போட்டதினாலேயும்‌ நன்றாய்‌ விளங்குகிறது. ஆதலால்‌ பார்ப்பனர்‌ அதிகமாயுள்ள வார்டுக்கு இவரை ஏன்‌ போட வில்லை? இதுதான்‌ போகட்டும்‌. சட்டசபைத்‌ தேர்தலிலாவது இந்த பார்ப்ப னர்களுக்கு நமது ஸ்ரீமான்‌ கந்தசாமி செட்டியாருக்கு ஒரு ஸ்தானம்‌ கிடைக்கச்‌ செய்ய வேண்டுமென்றிருந்தால்‌ பார்ப்பனர்கள்‌ மிகுதியுள்ளதும்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பனர்‌ சொல்லுகிறபடி ஓட்டுக்‌ கிடைப்பதுமான யூனிவர்‌ சிட்டி தொகுதிக்கு ஏன்‌ நிறுத்தக்‌ கூடாது. ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி படிப்பை யும்‌ அனுபோகத்தையும்‌ விட ஸ்ரீமான்செட்டியார்‌ எந்த விதத்தில்‌ தாழ்ந்தவர்‌? இவற்றை யோசிக்கும்போது “உங்கள்‌ வீட்டுக்கு வந்தால்‌ என்ன கொடுக்கிறாய்‌? எங்கள்‌ வீட்டுக்‌ கு வந்தால்‌ என்ன கொண்டு வருகிறாய்‌?” என்ற பழமொழிபோல்‌ இதைப்‌ பார்ப்பனர்களின்‌ சாவகாசம்‌ என்பது இதிலிருந்தாவது விளங்கவில்லையா? குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 29.08.1926 குடி அரசு - 1926 (2) 200 நமது துணை ஆசிரியர்‌ விகைகிறார்‌ “குடி அரசுக்குத்‌ துணை ஆசிரியராயிருந்து வரும்‌ திருவாளர்‌. மணவை ரெ. திருமலைசாமி செப்டெம்பர்‌ மாதம்‌ 1-ம்‌ தேதி முதல்‌ நமது ஆசிரியர்‌ குழாத்திலிருந்து விலகுகிறார்‌. இனி அவர்‌ ஐப்பசி மாதம்‌ முதல்‌ திருசிரபுரத்திலிருந்து அரசியல்‌, இலக்கியம்‌, சமத்துவம்‌ ஆகிய துறைகளில்‌ நின்று “சிவாஜி” என்ற பெயரை மருவி ஏழை மக்களின்‌ தோழனாய்‌ வெளி வரப்‌ போகும்‌ வாரப்‌ பத்திரிகையின்‌ ஆசிரிய பீடத்தை ஏற்றுக்‌ கொள்ளுவார்‌. இற்றைவரை “குடி அரசு” காரியாலயமிட்டு அவருக்குக்‌ கடிதம்‌ முதலியன எழுதி வந்த அன்பர்கள்‌ இனி திரு. மணவை. ரெ.திருமலைசாமி, காஜாப்பேட்டை, திருச்சிராப்பள்ளி என்ற விலாசத்திற்கு எழுதுமாறு தெரி வித்துக்‌ கொள்ளுகிறோம்‌. (பர்‌) குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 29.08.1926 201 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 comeomefupb சுயாாஸன்யக்‌ கட்சியும்‌ ஒத்துழையாமையையும்‌, மகாத்மா காந்தியையும்‌ ஒழிப்பதற்கென் றும்‌ நமது தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ பல சூழ்ச்சிகள்‌ செய்தும்‌ பயன்‌ படாமல்‌ போனது கண்டு, கடைசியாக வங்கத்து வீரரும்‌ ஸ்தோத்திரப்‌ பிரியருமான ஸ்ரீமான்‌ தாஸ்‌ அவர்களைப்‌ பிடித்து அவருக்குப்‌ பட்டா பிஷேகம்‌ செய்வதாய்‌ ஏமாற்றி அவரை விபூஷணராக்கி அவரைக்‌ கொண்டு தங்கள்‌ எண்ணிய எண்ணத்தை முடித்துக்‌ கொண்டார்கள்‌. அது சமயம்‌ தங்களுக்கென்று ஒரு கக்ஷியிருப்பதாயும்‌ அதற்கு பொது ஜனங்கள்‌ ஏமாறத்தக்க வண்ணம்‌ பஞ்சாப்‌, கிலாபத்‌ சுயராஜ்யக்‌ கடி என்று பெயரு மிட்டு ஒரு பொய்‌ மாயமானை சிருட்டித்தார்கள்‌. பெயர்‌ நீளமாயிருப்பதாக பலர்‌ பரிகாசம்‌ செய்யவே அதை சுயராஜ்யக்‌ கக்ஷி என்று சுருக்கிக்‌ கொண்டார்கள்‌. இக்கட்சியின்‌ உற்பத்தியையும்‌, வளர்ச்சியையும்‌ மனப்பூர்வ மாய்‌ அறிந்தும்‌ தன்‌ காலிலேயே நிற்கக்‌ கூடிய சக்தி இல்லாத சில தலைவர்‌: கள்‌ என்போர்களும்‌ தேசீயப்‌ பத்திரிகை என்பதுகளும்‌, அப்பொய்மானை எதிர்க்க சக்தியில்லாதவர்களாகி, சமயம்‌ வரும்போது நாமும்‌ ஒரு கல்லைத்‌ தூக்கிப்‌ போடலாம்‌ என்கிற எண்ணத்தை மனதில்‌ வைத்துக்கொண்டு வெளியில்‌ சுயராஜ்யக்‌ கடியை ஆதரிப்பவர்கள்‌ போலவே நடித்து தங்கள்‌ நிலையைக்‌ காப்பாற்றி வந்தார்கள்‌. இதன்‌ பலனாய்‌ இப்பொய்மானை எதிர்க்க யாராவது வெளிக்‌ கிளம்புவது என்றாலே பயப்பட வேண்டியதும்‌ ராஜீய உலகத்தில்‌ உயிருக்குத்‌ துணிய வேண்டியதும்‌ மிகவும்‌ அவசிய மாயிருந்துவிட்டதால்‌ வெகுசிலர்‌ கூட வெளிக்‌ கிளம்ப முடியாமல்‌ போய்‌ விட்டது. இந்த நிலைமையானது நமது பார்ப்பனர்களுக்கு பாமர ஜனங்‌ களை வஞ்சித்து பதவிகள்‌ பெறவும்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்‌ கொள்ள அதுகளை உபயோகித்துக்‌ கொள்ளவும்‌ வெகு அநுகூலமாய்ப்‌ போய்விட்டது. இதைக்‌ கண்டு இரண்டொருவர்‌ அரசியல்‌ உலகத்தையே துறந்து தங்கள்‌. சொந்தத்திற்கு ஏற்படக்‌ கூடிய பல துன்பங்களுக்கும்‌ கஷ்டங்களுக்கும்‌ துணிந்தும்‌ அரசியல்‌ உலகில்‌ கடுகத்தனை இடம்‌ இல்லா மல்‌ போனாலும்‌ உண்மைத்‌ தொண்டுக்கும்‌ சத்தியத்திற்கும்‌ யோக்கியதை இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு கை பார்த்தே தீருவோம்‌ என்று இறங்கி இப்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சிக்கும்‌, தந்திரத்திற்கும்‌, பழிக்கும்‌, விஷமப்‌ பிரசாரத்திற்கு கூலி கொடுத்து ஆள்களை விட்டு திட்டவும்‌, வைது எழுதவும்‌ செய்வித்த கொடுமைகளுக்கெல்லாம்‌ பயந்து ஓடாமல்‌ முகம்‌ கொடுத்ததின்‌ குடி அரசு - 1926 (2) 202 பலனாகவும்‌ இப்பொய்மானை பாமர ஜனங்கள்‌ கொஞ்ச மாவது உணரவும்‌, இப்‌ பொய்மானை நம்பி ஏமாந்த தலைவர்கள்‌ கண்‌ விழிக்கவும்‌, தன்‌ காலில்‌ நிற்க முடியாமல்‌ தவித்துக்‌ கொண்டு இரண்டும்‌ கெட்டானாய்‌ இருந்தவர்கள்‌. உறுதியுடன்‌ நிற்கவும்‌ முடிந்தது.ஆனால்‌ லாலா லஜபதிராய்‌ போன்ற வீரர்கள்‌ எல்லாம்‌ இப்பொய்மானால்‌ ஏமாற்றப்‌ பட்டார்கள்‌ என்றால்‌ மற்ற யார்‌. ஏமாந்ததைப்‌ பற்றி நாம்‌ குற்றம்‌ சொல்ல முடியும்‌. பல அரசியல்‌ தலைவர்கள்‌ ஏமாறவில்லையானாலும்‌ அதுசமயம்‌ வேறு மார்க்கமில்லாமல்‌ தெரிந்தே கட்டுப்பட்டிருக்க வேண்டியிருந்த தையும்‌ நாம்‌ ஒப்புக்‌ கொண்டுதானாக வேண்டும்‌. இந்த நிலைமையில்‌ இன்னமும்‌ சுயராஜ்யக்‌ கட்சி என்கிற பொய்மான்‌ சில புது ஆசாமிகளை ஏமாற்றிக்‌ கொண்டுதான்‌ வருகிறது. ஆதலால்‌ அதனிடத்தில்‌ உள்ள மாய்கையில்‌ பல சுயநலக்காரர்கள்‌ மயங்குவது பற்றி நமக்குக்‌ கவலையில்லை. ஆனால்‌ பாமர ஜனங்கள்‌ அதன்‌ மாய்கையில்‌ விழ இடங்கொடுக்கக்‌ கூடாதென்றே ஆசைப்படுகிறோம்‌. சுயராஜ்யக்‌ கட்சி என்பது எந்த வகையில்‌ நாட்டிற்கு அநுகூலமான கொள்கையை உடைத்தாயிருக்கிறது? எவ்விதத்‌ தலைவர்களை அது உடைத்‌ தாய்‌ இருக்கிறது அல்லது அதனிடத்தில்‌ எவ்வித கண்ணியமிருக்கிறது? அல்லது நமது நாட்டில்‌ எந்தக்‌ கூட்டத்தாரிடத்தில்‌ அதற்கு மதிப்பு இருக்கி றது இவைகளையெல்லாம்‌ பாமர ஜனங்கள்‌ அறியும்படி யோக்கியமான பத்திரிகைகள்‌ என்று சொல்லப்படுவதும்‌ உண்மையான அரசியல்‌ தலைவர்‌ கள்‌ என்போர்களும்‌ உண்மைத்‌ தொண்டர்களும்‌ தங்கள்‌ மனச்சாட்சி சொல்லுகிறபடியாவது வெளியிட்டிருப்பார்களானால்‌ ஒத்துழையாமையும்‌ காந்தியடிகளும்‌ ஒடுங்கியிருக்க முடியுமா? காலகதியில்‌ ஒடுங்கியிருந்தாலும்‌. இன்னமும்‌ தலையெடுக்காமலாவது இருந்திருக்க முடியுமா? என்றுதான்‌ நாம்‌ கேழ்க்கிறோம்‌. ஒத்துழையாமை ஒடுங்கினதற்கும்‌ மகாத்மா விலகிக்‌ கொண்டதற்கும்‌ நமது பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியே காரணமானாலும்‌ அச்‌ சூழ்ச்சிகளுக்கு ஆக்கமளித்த பார்ப்பனரல்லாத தேசீய பத்திரிகைகளும்‌, தேசீயத்‌ தலைவர்‌: களும்‌, தேசீயத்‌ தொண்டர்களுமே இதன்‌ பெரும்‌ பாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள்‌. ஒரு வீட்டில்‌ உள்ள சொத்துக்கள்‌ களவு போதைற்கு களவா ளியே காரணமானாலும்‌ கதவைத்‌ திறந்து வைத்து விட்டவர்களே அதிக காரணஸ்தர்கள்‌ ஆவார்கள்‌. ஆரம்பத்தில்‌ கதறினோம்‌ எல்லோரும்‌ இதற்கு உடந்தையாய்‌ இருக்கிறார்களே, அறியாமலா அல்லது வேண்டுமென்றா அல்லது நாம்‌ மாத்திரம்தான்‌ பைத்தியக்காரரா என்று கூட எழுதினோம்‌. நமது எதிரிகள்‌ ஆம்‌, ஒறே ஒரு பைத்தியக்காரன்தான்‌ ஈரோட்டில்‌ இருக்‌ கிறான்‌ என்று கூட எழுதிற்று. இப்பொழுது நாள்‌ ஆக ஆக அதிக பைத்தியக்‌ காரர்கள்‌ ஏற்பட்டுக்‌ கொண்டு வருகிறார்கள்‌. நாம்‌ பயித்தியக்காரரான வெகு நாள்‌ பொறுத்துதான்‌ மகாத்மாவும்‌ பயித்தியக்காரர்‌ ஆனார்‌. பிறகு அநேகம்‌ 203 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பயித்தியக்காரர்கள்‌ ஆனார்கள்‌. கடைசியாக லாலா லஜபதிராயும்‌ நம்மைப்‌ போலவே பயித்தியக்காரராகி விட்டார்‌. இப்போது நமது பார்ப்பனர்கள்‌ அவரை மிதவாதி என்றும்‌, பொறுத்தமற்ற நடவடிக்கைக்காரர்‌ என்றும்‌ வெள்‌: ளைக்காரரிடம்‌ சபாஷ்‌ பட்டம்‌ வாங்கி விட்டார்‌ என்றும்‌ சொல்லுவதோடு லாலா அவர்கள்‌ நிர்மாண வேலை செய்வதாய்‌ ஒப்புக்‌ கொண்டு என்னையும்‌ நம்பச்செய்து தங்கள்‌ ககஷியில்‌ சேர்த்துக்கொண்ட பிறகு (கொள்கை) நிர்மாண: வேலையைப்‌ பற்றி ஒன்றும்‌ செய்யவில்லை என்று கேட்டால்‌ அதற்கு மறு மொழி, தாங்கள்‌ செய்யாமல்‌ தேசத்தாரை ஏமாற்றி விட்டதற்கு வெட்கப்படாமல்‌ நீங்கள்‌ என்ன செய்தீர்கள்‌ என்று திருப்பிக்‌ கேட்டிருக்‌ கிறார்கள்‌. இன்னும்‌ லாலாஜி அவர்களை லாலாஜி சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேர்ந்து தனக்காக செய்து கொள்ளவேண்டிய அவசியம்‌ இருந்ததாகவும்‌ இப்போது அது தீர்ந்தவுடன்‌ அதைவிட்டு விலகி விட்டதாகவும்‌ ஒரு கெட்ட எண்ணமும்‌ கற்பிக்கப்படுகிறது. மற்றும்‌ பல கடுமொழிகளும்‌ உபயோகப்‌ படுத்தப்‌ பட்டிருக்கிறது. இது எவ்வளவு கொடுமை என்பதை வாசகர்கள்‌ யோசிக்க வேண்டும்‌. முதலாவதாக, இது பெயருக்கு மாத்திரம்‌ பண்டிட்‌ மோதிலால்‌ நேரு என்கிற ஒரு மத்திய மாகாண பார்ப்பனரால்‌ எழுதப்பட்டது என்று வெளி யில்‌ தெரிவதாயிருந்தாலும்‌ உண்மையில்‌ அது தமிழ்‌ நாட்டுப்‌ பார்ப்பனர்‌. ஒருவரால்‌ எழுதி, பண்டிதர்‌ பேரால்‌ வெளிப்படுத்தப்‌ பட்டிருக்க வேண்டும்‌ என்றே எண்ணுகிறோம்‌. எப்படி என்றால்‌ கவர்னர்‌ போன்றவர்களுக்கு ஏதாவது உபசாரப்‌ பத்திரமோ விண்ணப்பமோ கொடுத்தால்‌ அதற்கு பதில்‌ கவர்னரோ அல்லது கவர்னர்‌ பேராலோ கொடுக்கப்பட்டாலும்‌ அதை தயார்‌. செய்வது இலாக்கா காரியதரிசிதான்‌. அது போல்‌ இதை எழுதியவர்‌ இலாக்கா காரிய தரிசியாகிய ஸ்ரீமான்‌ எ.ரெங்கசாமி அய்யங்காராகத்தான்‌ இருக்க வேண்டும்‌. அது எப்படியிருந்த போதிலும்‌ இப்பார்ப்பனர்கள்‌ அபிப்பிராயத்‌ திற்கு யாராவது மாறுபட்டால்‌ அவர்கள்‌ வெள்ளைக்காரரின்‌ ஆள்‌, சுயநலக்காரர்‌, பொம்மை, தத்துவம்‌ உணராதவர்‌, துரோகி என்று சொல்லிவிடுகிறார்கள்‌. லாலாஜி அவர்கள்‌ யோக்கியதையையும்‌ இவ்விரு பார்ப்பனர்கள்‌ யோக்கியதையையும்‌ நினைத்துப்‌ பார்த்தால்‌ யார்‌ தேச பக்தர்கள்‌, யார்‌ சுயஜாதி பக்தர்கள்‌, யார்‌ சுயநல பக்தர்கள்‌ என்பது விளங்காமல்‌ போகாது. மத்திய மாகாண பார்ப்பனரான பண்டிதர்‌ அவர்கள்‌ பாமர ஜனங்களை ஏமாற்றி மாதம்‌ 10,20 ஆயிரம்‌ ரூபாய்‌ கொள்ளை அடித்துக்கொண்டு ராஜபோகம்‌ அனுபவித்துக்‌ கொண்டு தேசபக்தராய்‌ இருந்த காலத்தில்‌ லாலாஜி தூக்கிச்‌ செல்லப்பட்டதும்‌, அன்னிய நாடுகளில்‌ சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல்‌ திண்டாடினதும்‌ வருஷக்கணக்காய்‌ ஜெயிலில்‌ வதிந்ததையும்‌ உலகம்‌ அறியாதா? இந்த தமிழ்‌ நாட்டுப்‌ பார்ப்பனரான அய்யங்கார்கள்‌ இவர்‌ ஜெயிலுக்கு போனார்‌; அவர்‌. குடி அரசு - 1926 (2) 204 ஜெயிலுக்குப்‌ போனார்‌ என்று எழுதி தானும்‌ தன்‌ இனத்தாரும்‌ மாதம்‌ ஆயிரம்‌ இரண்டாயிரம்‌ கொள்ளையடித்துக்‌ கொண்டு தேச பக்தராயிருந்த (இருக்கிற) காலத்தில்‌ லாலாஜி ஜெயிலிலும்‌ வெளிநாடுகளிலும்‌ அவஸ்த்‌ தைப்பட்டுக்‌ கொண்டிருந்தவர்‌. இப்படிப்பட்டவர்‌ இந்த பார்ப்பனர்களுக்கு உள்ளாளா யில்லாவிட்டால்‌ உடனே ஒழிப்பதற்குத்‌ துணிந்து விடுகிறார்கள்‌. கண்ணியம்‌ அதன்‌ கொள்கைகளும்‌ தலைவர்களும்‌ இப்படி இருந்தாலும்‌ அதன்‌ கண்ணியம்‌ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்‌. கடைசி விஷயமாகிய சட்டசபையை விட்டு வெளியேறிய வெளி யேற்றத்தைப்‌ பற்றி யோசிப்போம்‌. சட்டசபை உபயோகமற்றதென்று வெளியேறியபின்‌ தேசப்‌ பொது நன்மையின்‌ அவசியத்தைப்‌ பற்றி அப்போதைக்கப்போது வரும்‌ விஷயங்‌ களை அனுசரித்துப்‌ போவதும்‌ போகாமலிருப்பதும்‌ கமிட்டியார்‌ தீர்மானிக்‌ கிறபடி நடந்துக்‌ கொள்வதென்று தீர்மானித்தார்கள்‌. இந்துமத பரிபாலன மசோதா விஷயத்தில்‌ கமிட்டியைக்‌ கேளாமல்‌ கமிட்டியின்‌ பேரால்‌ உத்திரவு போட்டு சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மசோதாவை எதிர்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்‌. பிறகு அதன்‌ தலைவர்‌ அதை ஆதரித்து அந்த உத்திரவு சட்டப்படி செல்லத்தக்கது என்றும்‌, கமிட்டி சாங்ஷன்‌ அவசியமில்லையென்றும்‌ சொன்‌ னார்‌. சுயராஜ்யக்‌ கட்சி முக்கிய மெம்பரான தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி காரியதரிசி சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்டசபைக்குப்‌ போய்‌ மசோதாவை எதிர்த்தால்‌ கட்சியை விட்டு விலகுவதாய்‌ சொன்னவர்‌, அவரும்‌ பத்திரிகைக்கு ஏதோ எழுதிவிட்டு விலகாமலே இருக்கிறார்‌. கமிட்டி மெம்பர்‌. ஒருவர்‌ கமிட்டி சாங்ஷன்‌ இல்லாமல்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்டசபைக்கு போனதைக்‌ கண்டித்து “2” வார்த்தை சொல்லி விட்டு கமிட்டி மெம்பராகத்‌ தான்‌ இருந்து வருகிறார்‌. இவ்வளவும்‌ பொறாமல்‌ அதன்‌ தலைவர்‌ மறுபடியும்‌ முன்‌ எழுதிய தற்கு விரோதமாய்‌ இந்துமத தர்ம மசோதா கட்சி விஷயமு மல்ல பொது விஷயமுமல்ல தனிப்பட்ட விஷயம்‌. அவரவர்கள்‌ இஷ்டப்‌ படி நடக்கலாம்‌ என்றார்‌. அப்படியானால்‌ சட்டசபையை விட்டு வெளி வந்ததற்கு என்ன அருத்தம்‌? கட்டுப்பாட்டுக்கு என்ன அருத்தம்‌? கமிட்டி நியமித்ததற்கு என்ன அருத்தம்‌? கமிட்டி மெம்பர்‌ மிரட்டுவதற்கு என்ன அருத்தம்‌? காரியதரிசி விலகுவதாய்ச்‌ சொன்ன வாக்குறுதிக்கு என்ன அருத்தம்‌? இது மாத்திரமா, வகுப்புப்‌ பிரசாரம்‌ என்கிற பெயரை வைத்துக்‌ கொண்டு பத்திரிகைகளின்‌ சுதந்திரத்தைப்‌ பிடுங்க இந்தியா சட்டசபையில்‌ சர்க்கார்‌ கொண்டு வந்த மசோதாவை எதிர்க்காமல்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌. கட்சிக்கட்டுப்பாடு என்கிற பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு அதை நிறை வேற்ற அநுகூலமாயிருந்ததற்கு என்ன அருத்தம்‌? 205 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யார்‌ மதிக்கிறார்கள்‌ கண்ணியம்‌ இப்படியிருந்தாலும்‌ அதை யார்‌ மதிக்கிறார்கள்‌ என்று பார்ப்போம்‌. சுயராஜ்யக்‌ கட்சியென்கிற பெயரை ஜனங்களுக்கு பித்தலாட்டம்‌ என்று சொல்லும்‌ வார்த்தைக்கு மாறு பெயராய்‌ உபயோகிக்கிறார்கள்‌. கும்பகோணம்‌ என்ற வார்த்தைக்கு எப்படி சூழ்ச்சி, மோசம்‌ என்கிற வார்த்தை அகராதியில்‌ இருக்கிறதோ அது போல்‌ சுயராஜ்யக்‌ கட்சியென்றால்‌ பார்ப்பனப்‌ பித்தலாட்டம்‌ என்கிற கருத்துடன்‌ சாதாரண மக்களிடையே பழக்கத்தில்‌ இருந்து வருகிறது. சர்க்காராருக்கும்‌ சுயராஜ்யக்‌ கட்சி என்றால்‌ வெகு பரிகாசமாய்‌ விட்டது. அதன்‌ மூலம்‌ சில தலைவர்‌ களுக்கும்‌ தொண்டர்களுக்கும்‌ உள்ள யோக்கியதையும்‌ குறைந்தது. பார்ப்பனர்‌ ஒருவர்‌. தவிர வேறு யாரிடத்திலும்‌ இது சமயம்‌ அக்கட்சிக்கு மதிப்புமில்லை. அதோடுமாத்திரமல்லாமல்‌ அக்கட்சிக்கு ஆதரவளித்தவர்‌ களுக்கும்‌ கெட்டபேர்‌ ஏற்பட்டுவிட்டது. ஒத்துழைப்புக்கு மதிப்பும்‌ செல்வாக்கும்‌ ஏற்பட்டது. பார்ப்பனர்‌ பிழைக்க வேண்டி இவ்வளவு மோச மானதும்‌ புரட்டானதுமான ஒரு கட்சியின்‌ பெயரைச்‌ சொல்லி சுயராஜ்யத்‌ திற்குப்‌ பாடுபடுவதாய்‌ பாமர ஜனங்களை ஏமாற்றி ஆதிக்கம்‌ பெற நினைத்த தின்‌ பலன்‌ பொது ஜனங்களுக்கு பார்ப்ப னர்‌ யோக்கியதை வெளியாக இது ஒரு சந்தர்ப்பமாக ஏற்பட்டதோடல்லாமல்‌ மகாத்மா செய்த வேலையும்‌ கெட்டு, சர்க்காரிடம்‌ பொது ஜனங்களுக்கு நம்பிக்கையும்‌, ஒத்துழைக்க வேண்டிய அவசியமும்‌ ஏற்பட்டுப்‌ போய்‌ விட்டது. இனியும்‌ கொஞ்ச காலத்திற்கு இப்பார்ப்பன சூழ்ச்சி நிலைத்திருக்கு மானால்‌ தற்காலம்‌ மக்களுக்கு இருப்பதாய்ச்‌ சொல்லப்படும்‌ சிறு சிறு உரிமை கள்‌ என்பது கூட சர்க்காரிடமே ஒப்படைக்க வேண்டிவருமென்றே பயப்படுகிறோம்‌. ஆதலால்‌ பொதுமக்கள்‌ இக்கட்சியை விளையாட்டுக்காவது ஆதரிக்காமல்‌ வரப்‌ போகும்‌ தேர்தலில்‌ குழி தோண்டிப்புதைக்க வேண்டும்‌ என்பதை ஞாபகமூட்டுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 05.09.1926 குடி அரசு - 1926 (2) 206 முணையி6லைய வருப்பு பார்ப்பனர்‌ தங்கள்‌ குழந்தைகளை சிறு பிராயம்‌ முதற்‌ கொண்டே நம்மை தாழ்ந்த ஜாதியார்‌ என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள்‌. அதாவது, தங்கள்‌ குழந்தைகளை “அடீ!(அடீ!! அவள்‌ மீது படாதடி; அவள்‌ சூத்திரச்சிடீ; அவள்‌ மீது பட்டு விட்டையே! போய்‌ பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா என்று பெண்‌ குழந்தைகளுக்கும்‌, அடே சூத்திரன்கள்‌ மேலெல்லாம்‌ பட்டு அவன்களை தொட்டூட்டு வந்துட்டையே! போ! போ! போயி குளிச்சூட்டு வா என்றும்‌, பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப்‌ போன வுடன்‌ பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும்‌ சொல்லி நம்மிடம்‌ அதுகளுக்கு ஒரு இழிவை சொல்லி கற்பிக்கிறார்கள்‌. அந்தக்‌ குழந்தைகள்‌ ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கு போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச்‌ சொல்லுகிறாய்‌ என்று கேட்டால்‌, “என்னடி அங்கு போய்‌ சூத்திரக்‌ குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை: எல்லாம்‌ தொட்டுவிட்டு இங்கு வந்து வீட்டிற்குள்‌ புகலாமா?” என்கிறார்கள்‌. இதிலிருந்து அந்தக்‌ குழந்தைகளுக்கு முளையில்‌ இருந்தே பிராமண: ரல்லாதாரிடம்‌ அருவருப்பும்‌, அவர்கள்‌ தொடக்‌ கூடாத ஜாதி என்கிற உணர்ச்‌ சியும்‌ ஏற்பட்டு விடுகிறது. இந்தக்‌ கொடுமைகளையெல்லாம்‌ நமது பெரியவர்கள்‌ அறிந்தேதான்‌ பார்ப்பனன்‌ என்பது அமங்கலவஸ்த்து வென்றும்‌, அவனைக்‌ காண்பதே சகுனத்‌ தடை, அதாவது கெட்ட சகுனம்‌ என்றும்‌, நாம்‌ போகும்‌ காரியங்கள்‌ அவன்‌ கண்ணுக்குத்‌ தெரிந்தால்‌ கூட அவற்றைக்‌ கெடுத்‌ துதான்‌ வாழப்‌ பார்ப்பான்‌ என்கிற எண்ணமும்‌ அதில்‌ வைத்து அவ்வளவு தாழ்மையாய்‌ கருதி அனுபவத்தில்‌ நமது பிள்ளைகளுக்‌ கும்‌ கற்றுக்‌ கொடுத்து வந்தார்கள்‌. ஆனால்‌, நாம்‌ அவற்றையெல்லாம்‌ மறந்து அதற்கு நேர்‌ விறோதமாய்‌ பார்ப்பனர்‌ எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும்‌ நம்ம குழந்தை களுக்கு அய்யர்‌ மேல்‌ பட்டுவிடாதே, அம்மாமி மேல்‌ பட்டு விடாதே, அவர்கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்று சொல்லுவதுடன்‌ நாமும்‌ நம்மைத்‌ தாழ்ந்தவர்கள்‌ என்றே நினைத்துக்‌ கொள்ளுகிறோம்‌. ஆதலால்‌ நமது குழந்தைகளுக்கும்‌ பள்ளிக்கூடப்‌ படிப்பிலிருந்தே இதை ஒருபாடமாய்‌ வைத்து இவைகளின்‌ உண்மைகளைப்‌ பற்றி சொல்லிக்‌ கொடுத்து அவர்கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான்‌ நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்‌. குடி அரசு - கட்டுரை - 05.09.1926. 207 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 தீண்டாமையும்‌ பார்ப்பனரும்‌ முணிசியல்‌ சட்டத்தில்‌ ம்ரீமாண்‌ வீரய்யணிண்‌ திருத்த மசோதா இவ்வாரம்‌ நடைபெற்ற சென்னை சட்டசபைக்கு ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ அவர்கள்‌ முனிசிபல்‌ சட்டத்திற்கு ஒரு திருத்த மசோதா அனுப்பியிருந்தார்‌. அதாவது “பொதுத்‌ தெருவை எவரேனும்‌ உபயோகிக்க முடியாமல்‌ தடுப்‌ பவருக்கு 100 ரூபாய்‌ வரையில்‌ அபராதம்‌ விதிக்கலாம்‌” என்று ஒரு பிரிவை அதில்‌ சேர்க்க வேண்டும்‌ என்று அனுப்பியிருந்தார்‌. அது பிரேரே பணைக்கு வரும்போது சில பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ ஜாதிப்‌ புத்தியின்படி அதைக்‌ கொல்ல சட்ட சம்பந்தமான ஆக்ஷேபணைகளை எழுப்பி விட்டார்‌ கள்‌. தாங்கள்‌. பார்ப்பனர்‌ சந்ததியார்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்வதால்‌ பெருமைப்‌ படும்‌. சில பார்ப்பனரல்லாதாரும்‌ ரகசிய வருணாசிரம தர்மிகளும்‌ அதற்கு உடந்தையாயிருந்து இந்த சபையில்‌ அதை நிறைவேறாமல்‌ செய்துவிட்டார்கள்‌. பொதுத்‌ தெருவை பொதுமக்கள்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்வதைத்‌ தடுத்தவர்களுக்கு அபராதம்‌ போடலாம்‌ என்றால்‌ அதை ஆகஷேபிப்பதற்கு நமது நாட்டில்‌ ஜனங்கள்‌ இருக்கும்‌ போதும்‌, அப்‌ பேர்ப்பட்டவர்களை சட்டசபைக்‌ குத்‌ தெரிந்தெடுக்கக்கூடிய பைத்தியக்கார ஓட்டர்கள்‌ நமது நாட்டில்‌ மலிந்தி ருக்கும்‌ போதும்‌, வெள்ளைக்காரரைப்‌ பார்த்து “நாங்கள்‌ சுயராஜ்யத்திற்கு தயாராகி விட்டோம்‌. எங்களிடம்‌ ராஜ்யத்தை ஒப்புவித்துவிட்டு நீங்கள்‌ போய்‌ விடுங்கள்‌” என்று சொல்வது எவ்வளவு மடத்தனம்‌ என்பதை வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. இம்மாதிரி ஜனங்கள்‌ மூலம்‌ வரும்‌ சுயராஜ்யம்‌ பொது மக்களுக்கு உபயோகப்படுமா என்பதை பொது மக்களே உணர வேண்டும்‌. ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ அவர்களும்‌ எம்‌.சி.ராஜா அவர்களும்‌ வெள்ளைக்கார அரசாங்கம்‌ இருப்பதின்‌ பலனாகத்தான்‌ சட்டசபைக்குப்‌ போகவும்‌, தங்கள்‌ சகோதரர்க ளாகிய 7 கோடி பேர்களுக்கு தெருவில்‌ நடக்கும்‌ உரிமையைக்‌ கேழ்க்கவும்‌ சந்தர்ப்பம்‌ கிடைத்தது. இப்பார்ப்பனர்கள்‌ காங்கிரசும்‌, அது கோரும்‌ சுயராஜ்யமும்‌ ஒரு சமயம்‌ நமக்குக்‌ கிடைத்து விடுவதாயிருந்தால்‌ ஸ்ரீமான்‌ கள்‌ வீரய்யனும்‌ ராஜாவும்‌ கோறும்‌ தெருவில்‌ நடக்கும்‌ பாத்தியம்‌ இவர்க ளுக்குக்‌ கிடைக்குமா வென்பதை ஒவ்வொருவரும்‌ நிதானமாய்‌ யோசித்துப்‌ குடி அரசு - 1926 (2) 208 பார்க்கும்படி வேண்டுகிறோம்‌. “குதிரை கீழே தள்ளியதுமல்லாமல்‌ போட்டுப்‌ புதைப்பதற்கு குழி தோண்டிற்று” என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. அதுபோல்‌ தீண்டாத வகுப்பார்‌ என்று ஒதுக்கி வைத்த ஸ்ரீமான்கள்‌ வீரய்யன்‌, எம்‌.சி. ராஜா, ஹைக்‌ கோர்ட்டு ஜட்ஜ்‌ கிருஷ்ணன்‌ ஆகியவர்களையும்‌ அவர்கள்‌ சகோதரர்களையும்‌ தாங்களும்‌ அனுமதிக்கக்‌ கூடாது, சர்க்காரும்‌ அவர்களுக்கு உதவி செய்யக்‌ கூடாது, அவர்களாகவும்‌ தலையெடுக்கக்‌ கூடாது என்று கொடுமைப்படுத்துவதினால்‌ அம்‌ மக்களுக்கு வேறு கதிதான்‌ என்ன? வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேழ்ப்பதும்‌ வகுப்புப்‌ பிரச்சினை களைக்கிளப்புவதும்‌ தேசத்‌ துரோகமென்று வெகுகலபத்தில்‌ நமது பார்ப்பனர்‌. கள்‌ சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி விடலாம்‌. ஸ்ரீமான்‌ ஜயவேலு போன்றவர்களைக்‌ கொண்டு மீ” 40, 50 ரூபாய்கள்‌ கொடுத்து ஸ்ரீமான்‌ ராஜாவையும்‌ வீரய்யனையும்‌ மற்றும்‌ இதுகளுக்காக உழைப்பவர்களையும்‌ வையும்படி செய்யலாம்‌. இதுகளுக்குப்‌ பயந்துக்‌ கொண்டு சிலரை அடங்கி இருக்கும்‌ படியும்‌ செய்து விடலாம்‌. ஆனால்‌ அவர்கள்‌ மனதில்‌ உள்ள வழிநடை சுதந்திர தாகத்தை அடக்கிவிட முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்‌. சென்ற மாதம்‌ நாம்‌ கும்பகோணம்‌ சென்றிருந்த போது அந்த டவுனில்‌ 3, 4 வீதிகளில்‌ அதாவது அய்யங்கார்‌ தெருவு, வியாசராயர்‌ அக்கிராரம்‌, பட்டாச்‌ சாரித்‌ தெருவு முதலியதுகளில்‌ இன்னமும்‌ சிலர்‌ நடக்கக்‌ கூடாது என்கிற கொடுமை இருந்துதான்‌ வருகிறது. இதோடு மற்றொரு வேடிக்கை, அதென்னவென்றால்‌ கூரத்தாழ்வார்‌ கோவில்‌ என்று ஒரு கோவில்‌ இருக்கிறது. அதற்குள்‌ பார்ப்பனரின்‌ காப்பிக்‌ கடை இருக்கிறது. அக்‌ காப்பிக்‌ கடைக்காக ஒரு கக்கூசு இருக்கிறது. அக்‌ கக்கூசு எடுக்க தீண்டப்‌ படாதவர்‌ தினமும்‌ இரண்டு தடவை மல பாண்டங்‌ களுடன்‌ போய்‌ வந்து கொண்டிருக்கிறார்‌. கூரத்தாழ்வார்‌ கோவிலை விட இந்த அய்யங்கார்‌ வீதியும்‌, வியாசராயர்‌ வீதியும்‌, பட்டாச்சாரி வீதியும்‌ நமது பார்ப்பனருக்கு உயர்ந்த தாய்ப்‌ போய்விட்டது. மல பாண்டத்துடன்‌ கோவிலுக்குள்‌ போய்‌ வருவதை விட வெறுங்‌ கையுடன்‌ நடப்பது நமது பார்ப்பனருக்கு அதிக பாவமாய்ப்‌ போய்‌ விட்டது. இவ்வளவு துப்பாக்கியும்‌, பீரங்கியும்‌, ஆகாயக்‌ கப்பலும்‌, பட்டாள மும்‌ இருந்தும்‌ வீதியில்‌ நடக்கவிடாமல்‌ உதைக்கிறார்கள்‌ என்றால்‌ இதுகள்‌ ஒழிந்த பிறகு இவர்கள்‌ என்னதான்‌ செய்ய மாட்டார்கள்‌. வெள்ளைக்காரர்கள்‌ வந்து B0 வருஷங்கள்தான்‌ ஆகிறது. இந்தக்‌ கொடுமை ஏற்பட்டு 1000-க்‌ கணக்கான வருஷங்கள்‌ ஆகிறது. ஏறக்குறைய வெள்ளைக்காரர்கள்‌ வந்த பிறகே இக்‌ கொடுமைகள்‌ கொஞ்சமாவது மாறுபாடு அடைந்திருக்கின்றன. ஆதலால்‌ வெள்ளைக்காரரை ஓட்டுவது இம்மக்களுக்கு உரிமைக்கும்‌ சுயமரியாதைக்‌ கும்‌ நன்மைப்‌ பயக்குமா? இப்பார்ப்பனீயத்தை அழிப்பது நன்மைப்‌ பயக்குமா? என்பது நாம்‌ சொல்லாமலே விளங்கும்‌. யாரோ இரண்டொரு பார்ப்பனர்‌ நம்ம வீட்டில்‌ சாப்பிடுவதாலும்‌ “தீண்டாதார்‌ தொட்டதை சாப்பிடுவதினாலும்‌ மக்கள்‌ உரிமை பெற்றுவிட முடியுமா? பார்ப்பனரிலும்‌. 209 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சில யோக்கியர்கள்‌ இருக்கிறார்கள்‌” என்று சில ஏமாந்த சோணகிரிகளை ஏய்க்கவே அவர்கள்‌ நம்ம வீட்டில்‌ சாப்பிடுவதே ஒழிய வேறில்லை என்றே உறுதியாய்ச்‌ சொல்லுவோம்‌. உதாரணமாக, ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியார்‌ குடியை ஒழிப்பதற்‌ காக சட்டசபைக்கு ஆட்களை அனுப்புகிறேன்‌ என்று சில பார்ப்பனர்களை அதுவும்‌ கள்‌ உற்பத்தி செய்து, கள்ளினால்‌ பணம்‌ சம்பாதித்து ஏழைகள்‌. வயிற்றில்‌ மண்ணைப்‌ போட்டு, அவர்கள்‌ தொழிலைக்‌ கெடுத்த பார்ப்பனர்‌. கள்‌ பின்னால்‌, அவருக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க கிராமம்‌ கிராமமாய்த்‌ திரிந்தாரே; இம்மாதிரி தெருவில்‌ நடக்கும்‌ உரிமையும்‌ கண்ணில்‌ தென்படும்‌ உரிமையும்‌ இல்லாமல்‌ தவித்துக்‌ கொண்டு பூச்சி புழுக்களிலும்‌ கேவலமாய்‌, நாய்‌ பன்றிகளை விட இழிவாய்‌ நடத்தப்பட்டு கொடுமைப்படும்‌ சகோதரர்‌. களுக்காக சட்டசபைக்கு ஏன்‌ ஆட்களை அனுப்பக்‌ கூடாது? மதுவை விலக்கத்‌ தீர்மானம்‌ செய்தால்‌ அது செல்லாது என்பதும்‌ அனுபோகத்தில்‌ நடக்காது என்பதும்‌ நன்றாய்த்‌ தெரிந்திருந்தும்‌ பார்ப்பனரல்லாத மந்திரிக்கும்‌ அவர்கள்‌ கட்சிக்கும்‌ கெட்ட பெயரை உண்டாக்கி அடுத்த தேர்தலுக்கு அவர்‌. கள்‌ சட்டசபைக்குப்‌ போக முடியாமல்‌ செய்து பார்ப்பனரையும்‌ அவர்கள்தம்‌ அடிமைகளையும்‌ சட்டசபைக்கு அனுப்ப முயற்சித்துப்‌ பார்த்தார்‌. ஆனால்‌ தீண்டாமை விலக்குக்காக ஆள்களை சட்டசபைக்கு அனுப்பினால்‌ அவர்கள்‌ மெஜாரிட்டியாய்‌ இருந்து செய்யும்‌ தீர்மானம்‌ நிறைவேறும்‌. நிறைவேறியபடி நடக்க சவுகரியமுண்டு. சர்க்கார்‌ இதில்‌ பிரவேசிக்க முடியாது. நாம்‌ சட்டம்‌ செய்து கொடுத்து விட்டால்‌ அவர்கள்‌ அதை நிறைவேற்றியே ஆக வேண்டும்‌. அப்படியானால்‌ அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடையூறாயிருக்‌ கும்‌ என்கிற எண்ணத்தினாலேயே அதைக்‌ கவனிக்காமல்‌ மூடி வைத்து விட்டார்‌. இப்போதும்‌ அதிக காலதாமத மேற்பட்டுவிடவில்லை. தீண்டாமை என்கிற ஒரு விஷயத்திற்கு மாத்திரம்‌ சட்டசபைக்குப்‌ போவதாய்‌ “தீண்டா மையில்‌ அனுதாபமுள்ள ஆச்சாரியார்‌” வெளிக்கிளம்பினால்‌ அவரை: ஆதரிக்க தமிழ்‌ மக்கள்‌ தயாராயிருக்கிறார்கள்‌. அது நிறைவேறுவதாய்‌ இருந்தால்‌ தேவஸ்தான மசோதா கூட அவ்வளவு அவசியமில்லை. யார்‌. வருவதானாலும்‌ ஒத்து வேலை செய்யவும்‌ தயாராயிருக்கிறோம்‌. பார்ப்பன ரல்லாதாராகிய ஜஸ்டிஸ்‌ கட்சி யாரும்‌ தயாராகவே இருக்கிறார்கள்‌. ஸ்ரீமான்‌ கள்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார்‌, இராமசாமி நாயக்கர்‌, ராமநாதன்‌ முதலிய வர்கள்‌ அந்தக்‌ காரியத்திற்காக சட்டசபைக்குப்‌ போகவும்கூட தயாராயிருப்‌ பார்கள்‌. அதை விட்டு விட்டு ஆகாத காரியத்‌ தைச்‌ சொல்லிக்‌ கொண்டு யோக்கியர்கள்‌ அல்லாதவர்களும்‌ கண்ணிய மற்றவர்களும்‌ மாத்திரம்‌ தன்னுடன்‌ வந்து சேரும்படியாகப் பார்த்து, அதற்காக ஒரு கட்சிப்‌ பேரை யும்‌ மகாத்மா பேரையும்‌ உபயோகப்படுத்திக்‌ கொண்டு தேச நன்மை, ஏழை கள்‌ நன்மை என்று ஏமாற்றும்‌ காலம்‌ மலையேறி விட்டதென்றும்‌, பொது ஜனங்கள்‌ இத்தந்திரக்காரப்‌ பார்ப்பனரை நன்றாய்‌ அறிந்துகொண்டார்கள்‌ என்றும்‌, வரப்போகும்‌ தேர்தலில்‌ அவர்களுக்கு நல்ல குடி அரசு - 1926 (2) 210 பாடம்‌ கற்பிக்கப்‌ போகிறார்கள்‌ என்றும்‌ சொல்லுவதோடு ஸ்ரீமான்களான வீரய்யன்‌ அவர்‌ களுக்கும்‌ எம்‌.சி.ராஜா அவர்களுக்கும்‌ உங்கள்‌ தீர்மானத்தை சில பார்ப்பனர்‌ சூழ்ச்சியால்‌ இந்த சட்டசபைக்‌ கூட்டத்தில்‌ தள்ளி வைக்க நேர்ந்தாலும்‌ அடுத்த கூட்டங்களில்‌ கண்டிப்பாய்‌ அது நிறைவேறவும்‌ அமுலில்‌ வரவும்‌ கூடிக்‌ காரியங்களைச்‌ செய்ய தயாராயிருக்கிறோம்‌ என்பதாக உறுதி கூறுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 05.09.1926 211 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 பூணா யார்ப்பணரிண்‌ கர்மபனை்‌ கண்டனக்‌ கூட்டம்‌ பூனா பிராமணர்கள்‌ பெரும்பாலும்‌ லோகமானிய திலகர்‌ என்றழைக்‌ கப்படும்‌ கடும்‌ வர்ணாசிரமியான ஸ்ரீமான்‌ திலகர்‌ ஜாதியைச்‌ சேர்ந்தவர்கள்‌. மகாத்மா காங்கிரசுக்கு முந்திய காங்கிரசுகள்‌ இப்போதைய காங்கிரசைப்‌ போலவே பார்ப்பனக்‌ காங்கிரசாயிருந்ததாலும்‌ இப்போதைய “தலைவர்கள்‌” ஸ்ரீமான்கள்‌ பண்டித நேரு, பண்டித சரோஜினி, எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌, எ. ரெங்கசாமி அய்யங்கார்‌, எம்‌.கே. ஆச்சாரியார்‌, சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள்‌ இந்திய தேசத்‌ தலைவர்களாயிருப்பது போலவே அப்போதும்‌ ஸ்ரீமான்கள்‌ திலகர்‌, மாளவியா முதலிய பார்ப்பனர்களே தலைவர்‌ களாயிருந்‌ தார்கள்‌. இப்போது இவர்கள்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகளாலும்‌ பிரசாரத்தாலும்‌ படம்‌ வைத்து கும்பிடத்‌ தகுந்தவர்களாயிருந்த போதிலும்‌, சமுதாய விஷயத்‌ திலும்‌ சமத்துவ விஷயத்திலும்‌ ஸ்ரீமான்‌ திலகர்‌ நமது ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியாருக்கு ஒரு படி முன்னால்‌ இருப்பவர்‌. அப்பேர்‌ பட்டவர்‌. பத்திரிகை உலகத்திலும்‌, பிரசார உலகத்திலும்‌, அரசியல்‌ உலகத்தி லும்‌ சிரேஷ்ட்டமாய்‌ விளங்கி செல்வாக்கோடு வாழ்ந்த ஊராகிய பூனா நகரத்தில்‌ பார்ப்பனா திக்கம்‌ எவ்வளவு வளர்ந்திருக்கும்‌, எவ்வளவு குடி கொண்டிருக்கும்‌ என்பது நாம்‌ சொல்லாமலே விளங்கும்‌. அதின்‌ பலனாய்‌ அவ்வூரில்‌ உள்ள பார்ப்பன ரல்லாதார்‌ தீண்டப்படாதாரைப்‌ போல்‌ கருதப்‌ படுவதுடன்‌ தண்ணீர்க்‌ குழாய்‌ முதற்கொண்டு பார்ப்பனருக்கு தனித்தனி யாய்‌ ஏற்பட்டு வந்ததும்‌, பார்ப்பரைல்லாதார்‌ பார்ப்பனப்‌ புரோகிதரைக்‌ கொண்டே வைதீகச்‌ சடங்குகள்‌ நடத்த வேண்டும்‌ என்கிற சட்டமிருக்கிறது மான கொடுமைகள்‌ நடத்த செளகரிய மேற்பட்டிருந்தது. ஆனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்டதின்‌ பலனாய்‌ அவ்விடத்திய பார்ப்பனரல்லாதார்‌ தங்கள்‌. சுயமரியாதையை உணர ஆரம்பித்தார்கள்‌. ஆரம்பித்து அவர்கள்‌ மனோ பாவம்‌ எதுவரை சென்றது என்று தெரிய வேண்டுமானால்‌ சென்ற வருஷம்‌ மத்திய மாகாணத்தில்‌ நடந்த பார்ப்பனரல்லாதார்‌ மகாநாட்டு அக்கிராசனர்‌ ஸ்ரீமான்‌ பாக்தே அவர்களின்‌ சொற்பொழிவையும்‌ அங்கு நடந்த திரு விளையாடல்களையும்‌ கவனித்தால்‌ தெரியவரும்‌. அதாவது, கொட்டகையில்‌ கட்டியிருந்த திலகர்‌ படத்தை எடுத்து எரிந்தும்‌, ஸ்ரீமான்‌ திலகரைப்‌ பற்றி அக்கிராசனர்‌ பேசும்‌ போது அவரைக்‌ கண்டித்ததும்‌, பிராமணர்களை: அடியோடு ஒழித்தால்‌ அல்லது சுயராஜ்யம்‌ வராது என்று சொன்னதும்‌, சில குடி அரசு - 1926 (2) 212 பார்ப்பனரையும்‌ அவர்களுக்கு அனுகூல மாயிருந்தவர்களையும்‌ தடியி.னால்‌ அடித்தும்‌, கத்தியில்‌ குத்தியும்‌ உபத்தி ரவப்படுத்தியதும்‌ ஆகிய இன்‌ னும்‌ பல காரியங்கள்‌ நிகழ்ந்தன. அல்லாமலும்‌ அது புகைந்து கொண்டே இருந்து இப்போது தெருவில்‌ நடக்கும்‌ பார்ப்பனப்‌ பெண்களைக்‌ கூட உபத்திரவப்‌ படுத்துவதாகவும்‌ தெரியவருகிறது. இவைகளை நாம்‌ பலமாய்‌ வெறுக்கி றோமானாலும்‌ இதைக்‌ கர்மபலன்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. இதற்காக பூனா பார்ப்பனர்கள்‌ சிவாஜி மந்திரத்தில்‌ ஆறாயிரம்‌ பேர்‌ கூடி பார்ப்பன ரல்லாதார்‌ பார்ப்பனரிடம்‌ துவேஷம்‌ கொண்டிருப்பதையும்‌, பார்ப்பன ஸ்திரீகளை பார்ப்பனரல்லாதார்‌ அவமதிப்பாய்ப்‌ பேசுவதையும்‌, மானபங்கப்‌ படுத்துவதையும்‌ ஒரு வருஷ காலமாக நடந்து வருவதை கவர்ன்மெண்டார்‌. பார்த்துக்‌ கொண்டு தெரியாதவர்கள்‌ போல்‌ இருப்பதாயும்‌ கூறி பார்ப்பனர்‌. மீது துவேஷம்‌ உண்டாகும்படி பார்ப்பனரல்லாதார்‌ பிரகரிக்‌ கும்‌ துண்டுப்‌ பிரசுரங்களை நிறுத்த கவர்ன்மெண்டார்‌ தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும்‌ பேசி, ஸ்ரீமான்‌ திலகரின்‌ மருமகப்‌ பிள்ளையாகிய ஸ்ரீமான்‌ கெல்கர்‌ உள்பட கண்டனத்‌ தீர்மானங்கள்‌ செய்து கவர்ன்மெண்டை உதவிக்கழைத்திருப்பதாய்‌ 31.8.26 ௨ மித்திரனால்‌ தெரிகிறது. இதில்‌ கவர்ன்மெண்டார்‌ என்ன செய்யக்கூடும்‌ என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரின்‌ நடவடிக்கையை உள்ளபடி எடுத்துச்‌ சொன்‌ னால்‌ யார்‌ என்ன செய்ய முடியும்‌? இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ சர்க்காரை சகாயத்‌ திற்கு கூப்பிடு வதை விட ஏன்‌ தங்களுடைய நடவடிக்கைகளை திருத்திக்‌ கொள்ளக்கூடாது. ஒரு மனிதன்‌ தனது கரும பலனை அடையாமல்‌ இருக்கும்படி செய்ய கடவுளாலும்‌ ஆகாதென்றால்‌ இந்த சர்க்காரால்‌ என்ன ஆய்‌ விடும்‌? ஆதலால்‌ இவைகளைப்‌ பற்றி சிபார்சுக்கு ஆள்களைக்‌ கூப்பிடுவதில்‌ பிரயோஜன மில்லை. பார்ப்பனர்‌ புத்திசாலிகளாயிருந்தால்‌ பூனா பார்ப்பன ருக்கும்‌ பார்ப்பன ஸ்திரிகளுக்கும்‌ ஏற்பட்ட இந்த வியாதிக்‌ குத்‌ தக்க பிராயச்சித்தம்‌ செய்து மற்ற நாடுகளுக்குப்‌ பரவாமல்‌ பந்தோபஸ்து செய்வதுதான்‌ ஒருக்கால்‌ முடியக்கூடிய காரியமாகலாம்‌. அஃதில்லாமல்‌ ஸ்ரீமான்கள்‌ ரெங்கசாமி அய்யங்காரும்‌, சத்தியமூர்த்தி சாஸ்திரிகளும்‌, எம்‌.கே.ஆச்சாரியாரும்‌, சீனிவாசய்யங்காரும்‌ சிராஜகோபாலாச்சாரியாரும்‌, சி.வி. வெங்கிட்டரமணய்‌ யங்காரும்‌ நடந்து கொள்ளுகிற மாதிரியும்‌, பார்ப்பனரல்லாதாருக்குள்‌ ளாகவே கட்சி ஏற்படுத்துவதும்‌, பார்ப்பனரல்லாதார்‌ கட்சியை அழிக்க சூழ்ச்சிசெய்வதும்‌ ஆகிய தந்திரங்கள்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பன சமூகத்தையே கர்மபலனை அடையச்‌ செய்யுமென்று உறுதி கூறுகிறோம்‌. இந்த பார்ப்பனத்‌ தலைவர்கள்‌ தங்களிடம்‌ கூலி வாங்கிப்‌ பிழைக்கும்‌ ஆள்களுடையவும்‌ தங்கள்‌ தயவுக்குக்‌ காத்திருக்கும்‌ ஆள்‌ களுடையவும்‌ மனோபாவத்தை மாத்திரம்‌ அறிந்திருக்கிறார்களே அல்லா மல்‌ மற்றபடி சுதந்திரமுள்ள பார்ப்பனரல்லாதார்‌ மனோபாவம்‌ என்ன என்பதையே அறியாமலிருப்பதற்கு நாம்‌ மிகவும்‌ பரிதாபப்படுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 05.09.1926 213 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஒரு சம்பாஷணை கருப்பண்ணன்‌ :-என்ன சுப்பண்ணா! இந்த பார்ப்பனர்‌ மாத்திரம்‌ சின்ன பையன்களுக்கெல்லாம்‌ கலியாணம்‌ செய்து விடுகிறார்களே. அதென்ன சங்கதி? சுப்பண்ணன்‌ :-ஓ! இது உனக்குத்‌ தெரியாதா? இவர்களுக்கு பிச்சை வாங்கி பிழைப்பதுதானே வேலை. ஆதலால்‌ நம்முடைய பெரிய வர்கள்‌ கலியாணமானவனுக்கு ஒரு அணா, கலியாணமாகாதவனுக்கு காலணா கொடுக்கிற வழக்கம்‌. ஆதலால்‌ சின்னப்‌ பையனுக்கும்‌ சின்னப்‌ பெண்ணுக்கும்‌ ஒரு அணா கிடைக்கட்டுமென்று கலியாணம்‌ செய்து விடுகிறார்கள்‌. கருப்பண்ணன்‌ :- அப்படியா! இதற்காகத்தானா இவ்வளவு பெரிய அனியாயம்‌. பிச்சை கொடுப்பவர்களுக்கு எப்படி கலியாணம்‌ ஆனதும்‌ ஆகாததும்‌ தெரியும்‌. சுப்பண்ணன்‌ :- கலியாணமான சின்னப்‌ பையன்கள்‌ வடக்‌ கயிறு போல பூணூலை மொத்தமாகப்‌ போட்டிருப்பார்கள்‌. கோவணம்‌ வைத்து வேஷ்டி கட்டிக்கொள்ளுவார்கள்‌. அந்தச்‌ சிறு பெண்களும்‌ கோவணம்‌ போட்டு சீலை கட்டிக்‌ கொள்ளுவார்கள்‌. தாலியை நன்றாய்‌ வெளியில்‌ காட்டிக்‌ கொள்ளுவார்கள்‌. கருப்பண்ணன்‌ :-சரி,சரி. இப்பொழுது எனக்கு நன்றாய்‌ விளங்கிற்று. இந்த பிச்சைக்‌ காசுக்காக எத்தனை பார்ப்பனப்‌ பெண்‌ தாலியருப்பது. அனியாயம்‌, அனியாயம்‌. குடி அரசு - உரையாடல்‌ - 05.09.1926. குடி அரசு - 1926 (2) 214. இந்துமத பரிமபாணை மசோதா இவ்வார சட்டசபைக்‌ கூட்டத்தில்‌ நமது பார்ப்பனர்களுக்கு எமனாய்‌ விளங்கும்‌ இந்துமத பரிபாலன மசோதா முக்கால்‌ பாகம்‌ பார்ப்பனர்களின்‌ பஞ்ச தந்திரங்களுக்கிடையில்‌ பெரும்‌ பாகம்‌ நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும்‌ நிறைவேற்றப்பட்டுமலையாளக்‌ குடிவார மசோதாவைப்‌ போல்‌ பூரண வெற்றி பெற வேண்டுகிறோம்‌. இவ்விரண்டு மசோதாவையும்‌ எதிர்த்தவர்களுக்கு அடுத்த தேர்தலில்‌ தக்கபடி புத்தி கற்பிப்பார்கள்‌ என்றே நம்புகிறோம்‌. குடி அரசு - சிறு குறிப்பு - 05.09.1926 215 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. மலையானக்‌ குழுவா மசோதா இவ்வார சட்டசபையில்‌ நமது பார்ப்பனர்கள்‌ கடும்‌ சூழ்ச்சிகளுக்‌ கிடையில்‌ மலையாளக்‌ குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டுவிட்டது. இனி மலையாளத்தில்‌ உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன்‌ மூலம்‌ வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதையும்‌ சந்தோஷத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்ளு கிறோம்‌. குடி அரசு - சிறு குறிப்பு - 05.09.1926 குடி அரசு - 1926 (2) 216 ஓர்‌ கவண்டுகோன்‌ பார்ப்பனரல்லாதாருக்கு ஒர்‌ வேண்டுகோள்‌ என்னும்‌ தலைப்பின்‌ கீழ்‌ 25726 ௨ குடிஅரசு” தலையங்கம்‌ எழுதி பார்ப்பனரல்லாதாரின்‌ சுயமரியா தையைக்‌ காக்கவும்‌, தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவப்படுத்தவும்‌, பொது அரசியல்‌ உரிமையை எல்லாச்‌ சமூகமும்‌ சமமாய்‌ அடைய இந்திய மக்க ளுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ பெறவும்‌, “குடி அரசின்‌ தத்துவங்‌ களை வைத்து சில திட்டங்களை வகுக்கவும்‌, அவற்றை தமிழ்‌ மக்கள்‌ சேர்ந்து கட்டுப்பாடாய்‌ நிறைவேற்றவும்‌, ஒரு அறிக்கை வெளியிடவும்‌, அவ்வறிக்‌ கையில்‌ பல கனவான்களின்‌ கையொப்பங்களையும்‌ சேர்த்து வெளியிட வேண்டுமென்ற விருப்பங்‌ கொண்டு யார்‌, யார்‌ இத்‌ தத்துவங்களை ஏற்றுக்‌ கொள்ள சம்மதிக்கிறார்களோ, அக்கனவான்கள்‌ பெயரை அவ்வறிக்கையில்‌ வெளியிட வேண்டும்‌.ஆகையால்‌ தங்கள்‌ தங்கள்‌ பெயரையும்‌ முழு விலாசத்‌ தையும்‌ சம்மதத்தையும்‌ எழுதியனுப்புமாறு வேண்டிக்‌ கொண்ட தில்‌ இதுவரை சுமார்‌ ஆயிரம்‌ பெயர்களுடைய கையெழுத்தும்‌ சம்மதமும்‌ நமக்குக்‌ கிடைத்திருக்கின்றன. இன்னும்‌ இத்‌ தத்துவங்களை ஏற்றுக்‌ கொள்ளும்‌ கனவான்கள்‌ தயவு செய்து சீக்கிரத்தில்‌ அனுப்பிக்‌ கொடுப்ப தோடு மற்றும்‌ இதை ஏற்றுக்‌ கொள்ளும்‌ தங்கள்‌ தங்கள்‌ நண்பர்களிடமும்‌ கையொப்பம்‌ வாங்கியனுப்ப வேண்டுகிறோம்‌. பார்ப்பனீயத்தை விட்டவர்‌ கள்‌ கையொப்பமும்‌ வந்து கொண்டிருக்கிறது. அவற்றை இனி அனுப்பு பவர்கள்‌ சென்னை “தமிழ்நாடு” பத்திரிகைக்கு அனுப்பினால்‌ அதைப்‌ பார்த்து “குடி அரசில்‌ பதிப்பிக்கப்படும்‌. இல்லாதவரை இரண்டு இடத்திற்‌ கும்‌ அனுப்புவது சிரமமாயிருக்கும்‌. ஆதலால்‌ “குடி அரசின்‌ தத்துவங்‌ களை ஒப்புக்கொள்ளும்‌ கையொப்பங்களை மட்டும்‌ நமக்கு அனுப்ப வேண்டுகிறோம்‌. குடி அரசு - வேண்டுகோள்‌ - 05.09.1926 217 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 யார்ப்பணறல்லாத யிரமுகர்கனின்‌ சற்றுப்‌ பிரயாணம்‌ இவ்வருட இறுதியில்‌ நடைபெறப்போகும்‌ இந்தியா சட்டசபை, சென்னை சட்டசபை முதலிய தேர்தல்களுக்கு கூடுமானவரை நமது பார்ப்பனர்கள்‌ பார்ப்பனரல்லாதாரை அழுத்தி, பார்ப்பன ஆட்சியை நிலைநாட்ட பல வழிகளிலும்‌ செய்து வரும்‌ சூழ்ச்சிகள்‌ நமது நாட்டில்‌ அறியாதார்‌ இருப்பார்கள்‌ என்று நாம்‌ நினைக்கவில்லை. ஆனாலும்‌ பார்ப்பனரல்லாதாரில்‌ சில சுயநலக்காரர்களையும்‌ வயிறு வளர்க்க வேறு வகையில்லாதவர்களையும்‌ ஆயுதமாகக்‌ கொண்டு பாமர மக்களை ஏமாற்ற நமது பார்ப்பனர்‌ செய்து வரும்‌ தந்திரங்களைக்‌ கண்டு நாம்‌ பயப்படாம லிருக்கவும்‌ முடியவில்லை. உதாரணமாக, தமிழ்‌ நாட்டில்‌ இந்தியா சட்டசபை தேர்தலுக்கும்‌ சென்னை சட்டசபைத்‌ தேர்தலுக்கும்‌ காங்கிரசின்‌ பேரைச்‌ சொல்லிக்கொண்டும்‌ சுயராஜ்யம்‌ பெறுவதற்‌ கென்றும்‌ நிறுத்தப்‌ பட்டிருக்கும்‌ ஆசாமிகளை கவனிக்கும்‌ போது பாமர ஜனங்கள்‌ இதை நம்பி இந்த ஆசாமிகளுக்கு ஓட்டுக்‌ கொடுத்து சட்டசபைகளுக்கு அனுப்பி விட்டால்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பன ஆட்சிக்கு வழி ஏற்பட்டுவிடுமென்பதில்‌ சந்தேக மில்லை. எப்படியெனில்‌ சென்னை முதல்‌ திருநெல்வேலி வரை யிலும்‌ நிறுத்தப்பட்டிருக்கும்‌ கனவான்கள்‌ சற்றேறக்குறைய எல்லோருமே பார்ப்பன. ஆதிக்கத்துக்குப்‌ பாடுபடுபவர்களும்‌, பார்ப்பன ஆதிக்கத்திற்கு சம்மதப்படு பவர்களுமாகவே காணப்படுகிறார்கள்‌. இந்த நிலைமையில்‌ சுத்த ரத்த ஓட்டமுள்ளவரும்‌ சுயமரியாதை உடையவருமான பார்ப்பன ரல்லாதார்‌ இதை: எப்படிச்‌ சகித்திருக்க முடியும்‌? என்பது நமக்கு விளங்க வில்லை. கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, தென்‌ னார்க்காடு, சென்னை முதலிய ஜில்லாக்கள்‌ ஒவ்வொன்றுக்கும்‌ ஒன்றுக்குக்‌ குறையாத பார்ப்பனரை நிறுத்தி இருக்கிறார்கள்‌. அதாவது ஸ்ரீமான்கள்‌ கோவைக்கு ஸி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார்‌, திருச்சிக்கு ஆர்‌. சேதுரத்தின மய்யர்‌, தஞ்சைக்கு கே. எஸ்‌. வெங்கிட்டராமய்யர்‌, தென்னார்க்காடுக்கு சீனிவாசய்யங்கார்‌, மதுரைக்கு முத்துகிருஷ்ணய்யர்‌, திருநெல்வேலிக்கு சாது கணபதி பந்துலு, மதுராசுக்கு மல்லையா முதலிய கனவான்களை நியமித்திருக்கிறார்கள்‌. இந்த கனவான்கள்‌ சென்ற நான்கு ஐந்து வருஷம்‌ காங்கிரசுக்காக என்ன செய்தார்கள்‌? எவ்வித தியாகத்தில்‌ ஈடுபட்டவர்கள்‌? நிர்மாணத்‌ திட்டத்தில்‌ குடி அரசு - 1926 (2) 218 எதில்‌ நம்பிக்கையுள்ளவர்கள்‌? பகிஷ்காரத்‌ திட்டத்தில்‌ எதை பின்‌ பற்றிய வர்கள்‌? எதை ஒப்புக்‌ கொள்ளுகிறவர்கள்‌? ஒத்துழையாமையின்‌ போது இவர்கள்‌ எங்கிருந்தார்கள்‌? தேவஸ்தான மசோதா விஷயத்திலும்‌ குருகுல விஷயத்திலும்‌ இவர்கள்‌ எப்படி நடந்து கொண்டார்கள்‌? குடியான வர்களுக்கும்‌, தொழிலாளிகளுக்கும்‌, ஏழைகளுக்கும்‌, இவர்களுக்கும்‌ என்ன சம்பந்தம்‌? ஆகிய இவைகளைப்‌ பற்றி யோசித்துப்‌ பார்த்தால்‌ எவ்வளவு முட்டாளாயிருந்தாலும்‌ இதன்‌ இரகசியம்‌ விளங்காமல்‌ போகாது. பத்திரிகை செல்வாக்காலும்‌ பணம்‌ கொடுத்து பிரசாரம்‌ செய்வதாலும்‌ பாமர மக்களின்‌ கண்ணைக்‌ கட்டிவிட்டு சட்டசபை ஸ்தானங்களை கொள்ளை யடித்துக்‌ கொண்டு போகப்‌ போகிறார்‌ கள்‌. இதைப்‌ பற்றி பார்ப்பனரல்லாத தேசீயப்‌ பத்திரிகைகள்‌ ஒரு எழுத்தா வது எழுதுவதில்லை. பார்ப்பனரல்லாத தேசீயத்‌ தலைவர்கள்‌ என்போரும்‌ ஒரு வார்த்தையாவது பேசுவதில்லை. நமது பார்ப்பனர்கள்‌ பார்த்து முனிசிப லாபீசில்‌ மகாத்மா படம்‌ தொங்கவிட ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ அனுமதிக்க வில்லை என்று ஒரு கட்டு கட்டிவிட்டால்‌ அதைப்பற்றி சரியாய்‌ விசாரிக்காமல்கூட “கங்காதரா மாண்டாயோ, கங்காதரா மாண்‌: டாயோ” என்று எல்லா பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும்‌ கூப்பாடு போட ஆரம்பித்து விடுகின்றன.ஆனால்‌ இம்மாதிரி கொடுமைகளைப்‌ பற்றிப்‌ பேச, எழுத பயப்படுகின்றன. என்ன செய்யலாம்‌ பார்ப்பன ஆட்சியின்‌ ஆதிக்கம்‌ அவ்வளவு வலுவடைந்திருக்கிறது: அவ்வளவு நடுங்கச்‌ செய்கிறது. பார்ப்ப னரைப்‌ பற்றி பார்ப்பனரல்லாதார்‌ ஏதாவது சொல்லி விட்டால்‌ ஏன்‌ சொன்‌ னான்‌, எதற்காகச்‌ சொன்னான்‌ என்று யோசிக்காமலும்‌ விசாரிக்காமலும்‌ வக்காலத்து வாங்கிக்கொண்டு சிபார்சுக்கு வந்து விடுகின்றன. பார்ப்பனர்கள்‌ சொல்லுவதும்‌, எழுதுவதும்‌ இதுகளின்‌ கண்களுக்குப்‌ புலப்படுவதே இல்லை. ஒவ்வொரு ஜில்லாவுக்கும்‌ நிறுத்தப்பட்டிருக்கும்‌ பார்ப்பனரல்லாத கனவான்களின்‌ பெயரைப்‌ பார்த்தாலோ பார்ப்பனாதிக்கத்திற்காக பார்ப்ப னரை விட ஒருபடி முன்னிற்பவர்களாகப்‌ பார்த்தே நிறுத்தப்பட்டிருக்கிறது. சென்னைக்கும்‌ செங்கல்பட்டுக்கும்‌, வட ஆர்க்காட்டிற்கும்‌, தென்‌ ஆர்க்காட்‌ டிற்கும்‌, தஞ்சைக்கும்‌, திருச்சிக்கும்‌ மற்ற ஜில்லாக்களுக்கும்‌ நிறுத்தப்பட்‌ டவர்கள்‌ யார்‌? சென்னைக்கு நிறுத்தப்பட்டவர்‌ ஒருவர்‌ தன்னையே பார்ப்பனர்‌ என்று நினைத்துக்‌ கொண்டு இருப்பவர்‌: மற்றவர்‌ பார்ப்பனரல்‌ லாதாருக்கு மூளையில்லை என்று சொல்லுபவர்‌. செங்கல்பட்டுக்கு நிறுத்தப்‌ பட்டவரோ ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியாரைவிட ஒருபடி மேல்பட்ட வருணாசிரமதர்மி, பார்ப்பனர்‌ தலைமேல்தான்‌ உலகம்‌ நிற்கிறதென்று நினைத்துக்‌ கொண்டிருப்பவர்‌. வட ஆர்க்காடோ சொல்ல வேண்டிய தில்லை. ஒருவர்‌ அப்புறத்திய ஜில்லாக்காரர்‌; மற்றவர்‌ இப்புறத்திய ஜில்லாக்‌ காரர்‌. அந்த ஜில்லாவுக்கு இதை விட வேறு அவமானமே வேண்டிய தில்லை. இருவரும்‌ பார்ப்பனர்‌ பார்த்து போடு கரணம்‌ என்றால்‌ இதோ போடுகிறேன்‌, எண்ணிக்‌ கொள்ளுங்கள்‌ என்கிறவர்கள்‌. இதே மாதிரியான ஆட்களைத்தான்‌ மற்ற ஜில்லாக்களுக்கும்‌ போட்டிருக்கிறார்கள்‌. தமிழ்‌ மக்களாகிய நாம்‌ இதைச்‌ 219 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சகித்துக்‌ கொண்டிருப்பதா என்றே கேட்கிறோம்‌. இந்த நாட்டு நன்மை தின்மை பெரும்பாலும்‌ யாருக்குச்‌ சேர்ந்தது? சட்டசபையின்‌ பலாபலனை அனுபவிப்பவர்கள்‌ யார்‌? யார்‌ வந்து யாரை நிறுத்துவது? சுத்த ரத்தோட்ட முள்ளவர்களுக்கு இதெல்லாம்‌ தோன்ற வேண்டாமா? யாரோ தெருவில்‌ போகிறவன்‌ காங்கிரசென்று சொல்லிக்‌ கொண்டு நம்ம வீட்டிற்குள்‌ புகுந்து எதை எடுத்துக்‌ கொண்டு போனாலும்‌ நாம்‌ கை கட்டிக்‌ கொண்டிருப்பதா? நாம்‌ என்ன பஞ்சபாண்ட வர்களாகி விட்டோமா? இன்றைக்கு பஞ்சபாண்‌: டவர்களாகி விட்டால்‌ நாளைக்கு வாவென்றால்‌ வருமா? இவற்றை நினைத்‌ தால்‌ இரத்தம்‌ துடிக்கிறதே, நெஞ்சம்‌ குமுருகிறதே, கேழ்வியில்லையா? இதுதானா தமிழ்‌ மக்கள்‌ அறிவு? இதுதானா தமிழ்‌ மக்கள்‌ வீரம்‌? வீணாக பாட்டிக்‌ கதை பேசுவதில்‌ லாபம்‌ இல்லை. தயவு செய்து விழித்தெழுங்கள்‌. தட்டி எழுப்ப ஆட்கள்‌ வரப்‌ போகிறது. அதாவது:- பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்ற தென்‌ ஜில்லாக்களில்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்கு அபேக்ஷகர்களைத்‌ தெரிந்‌ தெடுக்கவும்‌ அவர்களுக்குள்‌ பார்ப்பன சூழ்ச்சியின்‌ பலனால்‌ ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களை நீக்கி ஒற்றுமைப்படுத்தவும்‌ தேர்தலுக்கு நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களுக்கு பார்ப்பனரல்லாதார்‌ கட்டுப்பாடாய்‌ ஓட்டுச்‌ செய்து தேர்தல்களில்‌ வெற்றி பெறச்‌ செய்யவும்‌ பார்ப்பன ரல்லாத பிரமுகர்களான ராமனாதபுரம்‌ ராஜா, ஸ்ரீமான்கள்‌ உத்தமபாளையம்‌ சுப்பிரமணிய முதலியார்‌, திருநெல்வேலி மார்த்தாண்டம்‌ பிள்ளை முதலியவர்கள்‌ இம்மாதத்திற்குள்‌ சுற்றுப்‌ பிரயாணம்‌ வரப்போகிறார்‌. பனக்கால்‌ ராஜாவும்‌ வருவார்‌. ஆதலால்‌ ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள்‌ வரப்பட்டவர்களை வரவேற்று அங்கங்குள்ள நிலைமையை நன்றாய்‌ விளக்கி இப்பிரமுகர்கள்‌ மூலம்‌ பாமர ஜனங்கள்‌ உண்மை நிலை மையை அறியும்படி செய்து நம்மவர்கள்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றப்‌ படும்படியாக உதவி செய்ய வேணுமாய்ப்‌ பிரார்த்திக்கிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 05.09.1926 குடி அரசு - 1926 (2) 220 கேர்தல்‌ பழப்பிணை இவ்வாரம்‌ சென்னையில்‌ நடந்த முனிசிபல்‌ தேர்தல்களில்‌ பார்ப்பனர்‌. கட்சிக்கு இரண்டு ஸ்தானங்களும்‌, பார்ப்பனரல்லாத ககஷிக்கு ஒரு ஸ்தான மும்‌, இரண்டு கட்சிக்கும்‌ பொதுவான ௧௯ என்கிற கயேச்சைக்‌ கட்சி என்பா ருக்கு ஒரு ஸ்தானமும்‌ கிடைத்திருக்கிறது. பொதுப்படக்‌ கூறும்போது ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு சென்ற மாத தேர்தலில்‌ ஜயம்‌ கிடைத்தது போல்‌ பூரண ஜயம்‌ கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்‌. இப்‌ பூரண ஜயம்‌ பெறாததற்கு காரணம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியாரின்‌ அளவுக்கு மீறின நம்பிக்கையே அல்லாமல்‌ பார்ப்பனக்‌ கட்சியின்‌ சாமர்த்தியமும்‌ செல்வாக்கும்‌ அல்லவே அல்ல. அம்மன்‌ கோவில்‌ வார்டில்‌ ஜயம்‌ பெற்ற சுயேச்சைக்‌ கட்சி என்று சொல்லிக்‌ கொண்டவராகிய டாக்டர்‌ ஆசீர்வாத நாடார்‌, தான்‌ பார்ப்பனரல்‌ லாதார்‌ கட்சியாகிய ஜஸ்டிஸ்‌ கட்சியைச்‌ சேர்ந்தவன்‌ என்றும்‌ பார்ப்பனக்‌ கட்சி யாகிய சுயராஜ்யக்‌ கட்சியைச்‌ சேர்ந்தவன்‌ அல்ல வென்றும்‌ தன்னையே ஜஸ்டிஸ்‌ கட்சி அபேக்ஷகராய்‌ நிறுத்தும்படியும்‌ எவ்வளவோ தூரம்‌ கேட்டுக்‌ கொண்டும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ கவனியாமல்‌ ஒரே கட்சிக்கு இருவரை நிறுத்தியது போல்‌ நடந்து கொண்டது ஒரு பிசகு என்றே சொல்லுவோம்‌. அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ ஆசீர்வாத நாடார்‌ ஒரு சமயம்‌ ஏதாவது ஒரு விஷயத்‌ தில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி அபிப்பிராயத்தில்‌ மாறுபட்டாலும்‌ எந்த விதத்திலும்‌ பார்ப்பனர்‌ கட்சியில்‌ சேரவோ அவர்கள்‌ கைப்பிள்ளையாய்‌ இருக்கவோ ஒருக்காலும்‌ உடன்‌ படமாட்டார்‌ என்பது உறுதி . ஆதலால்‌ டாக்டர்‌ நாடார்‌. வெற்றி எவ்விதத்திலும்‌ பார்ப்பனர்‌ கட்சிக்கு அனுகூலம்‌ இல்லையென்றே சொல்லுவோம்‌. நிற்க, ஆர்பர்‌ டிவிஷனில்‌ பார்ப்பனர்‌ கட்சிக்கு போட்டியாய்‌ இரண்டு நபர்களை நிறுத்தியதும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியாரின்‌ யோசனை குறைவென்றே சொல்லுவோம்‌. பார்ப்பனருக்கு எதிராக 200 பேருக்கு மேல்‌ ஓட்டுச்செய்தும்‌ அது பாகமாய்ப்‌ பிரிந்ததால்‌ 138 ஓட்டுகள்‌ மாத்திரம்‌ கிடைக்‌ கப்பட்ட பார்ப்பனர்‌ கட்சி ஆசாமிக்கு வெற்றி கிடைக்க இடமேற்பட்டு விட்‌. டது. இதுபோல்தான்‌ இந்தியா சட்டசபைக்கு சென்ற தேர்தலில்‌ இரண்டு பார்ப்பனரல்லாதார்‌ நின்றதால்‌ ஸ்ரீமான்‌ எம்‌.கே.ஆச்சாரியாருக்கு சுலபமாய்‌ வெற்றிகிடைக்க இடமேற்பட்டது. இது தெரிந்திருந்தும்‌ இம்மாதிரி செய்த தாலும்‌ பார்ப்பனக்‌ கட்சியின்‌ ஆட்சியை சரியானபடி அந்த வார்டில்‌ ஓட்டர்‌. களுக்கு எடுத்துச்‌ சொல்லாததாலும்‌ பார்ப்பனர்‌ தங்களுக்கு வெற்றி என்று சொல்லிக்‌ கொள்ள இடமேற்பட்டு விட்டது. திருவல்லிக்கேணி வார்டில்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு வெற்றி ஏற்பட்டதில்‌ நமக்கு 221 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அதிசயம்‌ ஒன்றும்‌ இல்லை. ஏனெனில்‌ ஆயிரத்துச்‌ சில்லரை ஓட்டர்களில்‌ 800த்துச்‌ சில்லரை ஓட்டர்கள்‌ பார்ப்பன ஓட்டர்கள்‌. அந்த வார்டில்‌ ஒரு பூணுல்‌ போட்ட மரக்கட்டையை நிறுத்தி விட்டாலும்‌ அதற்கெதிரி டையாய்‌ மகாத்மா காந்தி வந்து நின்றாலும்‌ ஒரு பார்ப்பன ஓட்டுக்கூட கிடைக்காது. ஆதலால்‌ அந்த வார்டுக்கு ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்‌ அபேக்ஷகரை நிறுத்தாமல்‌ இருந்தது புத்திசாலித்தனமென்றே சொல்லுவோம்‌. அமீர்‌ மகால்‌ வார்டில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியைச்‌ சேர்ந்த ஸ்ரீமான்‌ ரங்க ராமானுஜத்திற்கு வெற்றி கிடைத்‌ திருக்கிறது. மொத்தத்தில்‌ ஐந்து ஸ்தானங்களில்‌ பார்ப்பனர்‌ கட்சிக்கு இரண்டு ஸ்தானம்‌ கிடைத்து விட்டது. இதை யோசிக்கும்‌ போது நமது நாட்டில்‌ இன்னமும்‌ எந்த விதத்திலேயோ பார்ப்பனர்‌ சூழ்ச்சிக்கு இடமிருக்கிற தென்றே சொல்லியாக வேண்டும்‌. ராயப்‌ பேட்டை டிவிஷன்‌ தேர்தல்‌ சட்ட சம்பந்தமான ஆக்ஷேபணையினால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு வெற்றியேற்பட்டால்‌ அதை நாம்‌ வெற்றியாகக்‌ கருதக்‌ கூடாது. அந்த விஷயம்‌ கோர்ட்டு மூலம்‌ மறுபடியும்‌ தேர்தலுக்கு வந்து பொது ஜனங்களிடையும்‌ ஓட்டர்களிடையும்‌ பார்ப்பன ஆட்சியை நன்றாய்‌ எடுத்துச்‌ சொல்ல சந்தர்ப்பம்‌ கிடைக்க வேண்டுமென்றே கோருகிறோம்‌. இந்த ஒரு விஷயத்தை முக்கியமாய்‌ உத்தேசித்தேதான்‌ நாமும்‌ தேர்தல்‌ பிரசங்கங்களில்‌ கலந்து கொள்ள ஆசைப்‌ படுகிறோம்‌. எப்படியாவது பார்ப்பன சூட்சியை வெட்டிப்‌ புதைக்கிற வரை: யில்‌ நமக்கு எத்தினை தோல்வி வந்தாலும்கூட நாம்‌ அதைப்பற்றி மனம்‌ தளரக்‌ கூடாது. உலகம்‌ இன்றோடு முடிவடைந்துவிடப்‌ போகிறதில்லை. ஆத லால்‌ பந்து அடிக்க உயரமாய்க்‌ கிளம்புவது போல்‌ அளவுக்கு மிஞ்சின நம்பிக்கையில்‌ இருந்தும்‌ மமதையில்‌ இருந்தும்‌ தட்டி எழுப்ப இம்மாதிரி சிறு சம்பவங்களை மனப்பூர்வமாய்‌ வரவேற்கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 05.09.1926 குடி அரசு - 1926 (2) 222 வைப்பாட்முக்‌ கதை சென்னையில்‌ ஒரு பொதுக்‌ கூட்டத்தில்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‌ பார்ப்பனர்‌ கோரும்‌ சுயராஜ்யம்‌ வந்துவிட்டால்‌ பார்ப்பனரல்லாத ஸ்ரீகளை பார்ப்பனர்‌ தங்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்க வேண்டும்‌ என்று சட்டம்‌ செய்து விடுவார்கள்‌ என்று சொன்னதாகவும்‌, அது பார்ப்பனரல்‌ லாதார்‌ சமூகத்திற்கே அவமானமாய்‌ விட்டதாகவும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்‌ யங்கார்‌ ஒரு கூட்டத்தில்‌ நீலிக்‌ கண்ணீர்‌ விட்டார்‌. இதைப்‌ பார்த்து அவரது இரண்டொரு பார்ப்பனரல்லாத சிஷ்யர்களும்‌ பின்பாட்டுப்‌ பாடி தங்கள்‌ சமூகத்திற்கு அவமானம்‌ ஏற்பட்டு விட்டதாக கூலி மாரடித்துக்‌ கொண்டார்‌. கள்‌. இவர்கள்‌ உண்மையிலேயே நாயக்கர்‌ சொன்னதற்காக மாரடித்துக்‌ கொண்டார்களா? அல்லது அய்யங்காரின்‌ உப்புக்காக மாரடித்துக்‌ கொண்‌: டார்களா? என்பதைக்‌ கவனிப்போம்‌. பார்ப்பனரல்லாதார்‌ ஸ்ரீகளைப்‌ பார்ப்பனர்கள்‌ வைப்பாட்டிகளாக இருக்க சட்டம்‌ செய்து விடுவார்கள்‌ என்று சொன்னதில்‌ என்ன தப்பு. இதற்கு முன்னமே அந்த சட்டம்‌ அமுலில்‌ இருக்கிறதை இவர்கள்‌ அறிந்தும்‌ இன்றுதான்‌ இதை நாயக்கர்‌ சொல்லக்‌ கேட்டவர்கள்‌ போல்‌ பாசாங்கு செய்கிறார்கள்‌. இந்து உலகத்தில்‌ பார்ப்பனர்‌. கள்‌ பார்ப்பன ரல்லாத இந்துக்களுக்கு என்ன பெயர்‌ கொடுத்திருக்கிறார்கள்‌. இந்துவா யிருந்தால்‌ பிராமணன்‌, க்ஷத்திரியர்‌, வைசியர்‌, சூத்திரன்‌, பஞ்சமர்‌. என்கிற ஐந்து வகுப்பில்தான்‌ சேர வேண்டும்‌. “கலியுகத்திலோ க்ஷத்திரிய ரும்‌ வைசியரும்‌ இல்லை” என்கிறார்கள்‌. ஓட்டல்களிலும்‌ பிராமணன்‌ சூத்திரன்‌ என்றுதான்‌ எழுதுகிறார்கள்‌. ஆதலால்‌ மீதி இருப்பது பிராமணன்‌, சூத்திரன்‌, பஞ்சமன்‌ ஆகிய மூன்று வகுப்பார்கள்‌. இதில்‌ பார்ப்பனர்‌ தவிர. மற்றவர்கள்‌ தங்களை பிராமணர்‌ என்று சொல்லிக்‌ கொள்ள முடியாது. அய்யங்கார்‌ சிஷ்யர்கள்‌ தங்களைப்‌ பஞ்சமர்கள்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொள்ள மாட்டார்கள்‌.ஆகவே இவர்கள்‌ சூத்திரர்‌ என்பதை மறுக்க முடியாது. சூத்திரன்‌ என்றால்‌ யார்‌? இந்து மதத்திற்கும்‌ வருணாசிரமத்திற்கும்‌ ஆதார மான மனுதர்ம சாஸ்திரம்‌ எட்டாம்‌ அத்தியாயம்‌ 415, 417 -வது சுலோகங்‌ களில்‌ சூத்திரன்‌ என்றால்‌ தேவடியாள்‌ மகன்‌ என்றும்‌, வைப்பாட்டி மகன்‌ என்றும்‌ எழுதியிருப்பதோடு இவர்கள்‌ வசமுள்ள பொருள்களை பலாத்‌ காரமாகவும்‌ பார்ப்பனர்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌, நமது பின்‌ சந்ததி களையும்‌ கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்‌. இது ஏன்‌? நமது நாட்டில்‌ சில பாகத்தில்‌ மாத்திரம்‌ அமுலில்‌ இல்லை என்றால்‌ பார்ப்பனர்‌ கோரும்‌ சுயராஜ்யம்‌ இல்லாததால்தான்‌ என்கிற பொருள்‌ கொண்டே அன்று 223 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சொன்னோம்‌ என்றும்‌ உறுதியாய்ச்‌ சொல்லுவோம்‌. ஆனால்‌ சில பாகத்தில்‌ இன்னமும்‌ அமுலில்‌ வைத்துக்‌ கொண்டும்‌ நமது சகோதரிகளை தங்கள்‌. வைப்பாட்டிகளாக்கிப்‌ பிள்ளைகள்‌ பெற்று உலகத்திலுள்ள ஓட்டல்களுக்கும்‌ காப்பிக்‌ கடைகளுக்கு மெல்லாம்‌ எச்சில்‌ எடுக்கவும்‌, எச்சில்‌ கிண்ணம்‌ கழுவவும்‌ அடிமைகளை வினியோகித்துக்‌ கொண்டுதான்‌ வருகிறார்கள்‌. இதனால்‌ இந்த சிங்கங்களுக்கு மானக்கேடு வரவில்லையா? அந்த சகோதரி கள்‌ இவர்களுடைய சகோதரிகள்‌ அல்லவா? கிராமத்து ஜனங்கள்‌ இந்தியன்‌ பினல்கோட்‌ சட்டத்தைப்‌ பற்றி வேடிக்கையாய்ப்‌ பேசிக்‌ கொள்வார்கள்‌. அதாவது, ஒரு மனிதனை ஒரு மனிதன்‌ செருப்பாலடிப்பதாய்ச்‌ சொன்னால்‌ ஆறு மாதம்‌ தண்டனை. அடித்து விட்டால்‌ ஒரு மாதம்தான்‌ தண்டனை என்பார்கள்‌.(அதென்னவென்றால்‌ அடித்தால்‌ அது அசால்ட்டு குற்றமாய்‌ விடுகிறதாம்‌. சொன்னால்‌ அது மான நஷ்டக்‌ குற்றமாகி விடுகிறதாம்‌) அது போல்‌ நமது சகோதரிகளை வைப்பாட்டிகளாய்‌ வைத்துக்‌ கொண்டிருப்‌ பவர்கள்‌ மேல்‌ கோபமில்லாமல்‌ அவர்கள்‌ பின்னால்‌ திரிந்து வயிறு வளர்த்துப்‌ பெருமை பெற்றுக்‌ கொண்டு இக்கொடுமையை வெளியி லெடுத்துச்‌ சொன்னவன்‌ மேல்‌ கோபப்படுவதானால்‌ இந்த சிப்பாய்களின்‌ கோபத்தின்‌ மதிப்பென்ன? என்பதை வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. சட்டசபையில்‌ மலையாளக்‌ குடிவார மசோதாவைப்‌ பற்றி ஸ்ரீமான்‌ கே.வி. ரெட்டி அவர்கள்‌ பேசும்‌ போது “நமது பெண்கள்‌ ருதுவானால்‌ அவர்களை முதல்‌ முதல்‌ பார்ப்பனர்தான்‌ புணர வேண்டும்‌ என்கிற சட்டம்‌ மலையாள நாட்டில்‌ அமுலில்‌ இருக்கிறது” என்று சொன்னாரே அதைக்‌ கேட்ட போது இந்த வீரர்களுக்கு மானக்கேடு ஏற்படவில்லையா என்று நாம்‌ கேழ்க்‌ கிறோம்‌. இந்த சிப்பாய்களை பார்ப்பனர்‌ காசும்‌ பார்ப்பனர்‌ தயவும்‌ இன்னம்‌ என்ன என்ன செய்யச்‌ சொல்லும்‌ என்பதை பொருமையுடன்‌ கவனிப்போம்‌. குடி அரசு - கட்டுரை - 05.09.1926. குடி அரசு - 1926 (2) 224 தனைனர்‌ பதவி வறும்‌ ஊறி நம்‌ நாட்டில்‌ தேர்தல்களில்‌ பதவிகள்‌ பெறுதல்‌, பட்டம்‌ பெறுதல்‌, சர்க்கார்‌ உத்தியோகம்‌ பெறுதல்‌ முதலிய பல காரியங்கள்‌ பெரும்பாலும்‌ முக்காலே மூணு வீசமும்‌ கண்ணியக்‌ குறைவாலும்‌ பொய்ப்‌ பிரசாரத்தாலும்‌ இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகிறது என்பதை சத்தியநெறியுடைய எவரும்‌ மறுக்க மாட்டார்கள்‌. ஆனால்‌ காங்கிரஸ்‌ பிரசி டெண்ட்‌ என்கிற ஸ்தானம்‌ கொஞ்ச காலமாய்‌ அப்படிக்கில்லாமல்‌ தனிப்‌ பட்ட மக்களின்‌ சுதந்திரத்திற்கு விடப்பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டு பிரசாரம்‌ பண்ணியும்‌ பணம்‌ செலவு செய்தும்‌, பொய்‌ வாக்குத்தத்தம்‌ செய்தும்‌ இதுவரை யாரும்‌ அந்த ஸ்தானத்தை அடைந்த தில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ்‌ வந்ததின்‌ பலனாய்‌ இப்போது இதற்கும்‌ மற்ற தேர்தல்களைப்‌ போலவே யோக்கியதைகள்‌ ஏற்பட்டுப்‌ போய்விட்டது. ஏனெனில்‌ மற்ற தேர்தல்களையும்‌ பட்டங்களையும்‌ உத்தியோகங்க. ளையும்‌ பெறநமது பார்ப்பனர்கள்‌ என்னென்ன முறைகள்‌ கையாண்டு அதன்‌ யோக்கியதையைக்‌ கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும்‌ பிரவேசித்து விட்டார்கள்‌. ஸ்ரீமான்‌ எஸ்‌. சீனிவாசய்யங்காருக்கு காங்கிரஸ்‌. பிரசிடெண்ட்‌ வேலை கிடைப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும்‌ ஒவ்‌ வொரு சென்னை பார்ப்பனர்‌ போய்‌ பிரசாரம்‌ செய்யவும்‌ ஆங்காங்குள்ள காங்கிரஸ்‌ கமிட்டிகளில்‌ பிரதானமாயுள்ளவர்களில்‌ யாராவது பணங்‌ காசு வாங்கக்‌ கூடியவர்களாயிருந்தால்‌ அவர்களையும்‌ திருப்தி செய்தும்‌, பதவி ஆசையுள்ளவர்களாயிருந்தால்‌ அவைகளையும்‌ பற்றி பொய்‌ வாக்குத்‌ தத்தம்‌ செய்தும்‌ ஓட்டுகள்‌ பெற பிரசாரம்‌ செய்ததால்‌ உண்மையிலேயே அதிக ஓட்டுப்‌ பெற்றவரும்‌ இன்னும்‌ பெற இருந்தவருமான டாக்டர்‌ அன்சாரி அவர்கள்‌ இவற்றை அறிந்தே இந்த பிரசிடெண்ட்‌ உத்தியோகம்‌ என்‌ போன்றவர்களுக்கு லாயக்கில்லை; இதெல்லாம்‌ பெரிய மனிதர்கள்‌. என்கிறவர்களுக்கு வேண்டிய பதவி என்று பரிகாசமாய்ச்‌ சொல்லி விலகிக்‌ கொண்டார்‌. அடுத்தபடி அதிக ஓட்டுக்‌ கிடைக்கப்‌ பெற இருந்த ஜனாப்‌ மஷ்ருல்‌ ஹக்‌ என்னும்‌ பெரியாரும்‌ இவ்வித இழிவுப்‌ பிரசாரத்தில்‌ இரங்க மனமில்லா 225 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தவராகி இம்மாதிரி போட்டிபோடுவதானால்‌ எனக்கு வேண்டாம்‌, கண்ணிய மாய்‌ வருவதானால்‌ வரட்டும்‌ என்றே சொல்லி போட்டியில்‌ இருந்து அறவே விலகிவிட்டார்‌. எவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக்‌ கொண்டதானாலும்‌ எவ்வளவு பரிசுத்தமானதானாலும்‌ நமது பார்ப்பனர்‌ அதில்‌ கலந்தால்‌ அதில்‌ யோக்கியதை பார்ப்பனீயத்திற்கு தகுந்தபடி ஆகி விடுகிறது என்பதை பொது ஜனங்கள்‌ அறிவதற்காகவே இதைக்‌ குறிப்பிடுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 05.09.1926 குடி அரசு - 1926 (2) 226 ஷ்டபுத்திரனும்‌ 6, . சென்ற ஜுலை 1525, 26 நாட்களில்‌ இக்கொழும்பில்‌ நடந்தேறிய இந்திய வாலிபர்‌ சங்க ஆண்டுவிழாவிற்கு தலைமை வகிக்க திருவுளங்‌ கொண்டு இனனாடடைந்து அறிய உயறிய சொற்பொழிவுகள்‌ சில நிகழ்த்தி தாய்நாடு போந்த உண்மை தேசபக்தரும்‌ நம்‌ தமிழணங்கின்‌. திருக்குமாரருமாகிய உயர்திரு. கலியாணசுந்தர முதலியாரவர்கள்‌ இவ்வூ ரையடைந்து சொற்பொழிவுகள்‌ நிகழ்த்தி பிரஷர்‌ சென்றதைப்பற்றி இக்கொழும்பு மாநகரில்‌ கெளரவ நடேசையரவர்களால்‌ பிராமண ரல்லாதாரின்‌ உதவியாலும்‌ முயர்ச்சியாலும்‌ நடத்தப்படுகிற தேசபக்த னென்னும்‌ தமிழ்ப்பத்திரிகையை தற்பொழுது பி.பி. அய்யங்கார்‌ என்பவ ரால்‌ நடத்தப்படுகிறதாம்‌. இப்‌ பக்தனுக்கும்‌ முதலியாருக்கும்‌ என்ன வருத்தம்‌? இப்பத்திரிகைக்கு எவ்விதத்திலாவது ஏதாவது உதவியோ சந்தா அல்லது விளம்பரம்‌ சேர்த்துக்கொடுத்தோர்களும்‌, காங்கிரஸ்‌. காரர்களும்‌ போலி தேசாபிமானிகளும்‌ பொதுக்காரியங்களுக்கென்று பணம்‌ திரட்ட வருவோரும்‌, பணக்காரர்‌, செட்டிகள்‌, பிராமணர்கள்‌ முதலிய வர்களில்‌ எவராவது இந்நாட்டிற்கு வருவதாகயிருந்தால்‌ உடனே போற்றிப்‌ புகழ்ந்து “நல்வரவாகுக” என்றும்‌ தாய்நாடு செல்வதாகயிருந்தால்‌ சென்று வருகவென்றும்‌ பத்தி பத்தியாக அவர்களை சிறப்பித்து எழுதுகிற இப்பக்தனுக்கு இப்பெரிய தமிழ்நாட்டு தவப்புதல்வர்‌ வருவது தெரியா மலா போய்விட்டது? டிப்ட்டி காந்தியும்‌ மகாத்மாவிற்கு மூளையில்லை. என்றவரும்‌ வந்திருப்பார்களானால்‌ என்ன நடக்கும்‌? இப்பக்தனும்‌ தற்பொழுது கும்பகர்ணன்‌ வேலையை ஓப்புக்கொண்டுள்ள காந்தி சங்கமும்‌ இந்நகரில்‌ இருந்தென்ன பலன்‌? இச்சங்கமும்‌ பத்திரிகையும்‌ ஒன்றுபட்டு தென்‌இந்திய மக்களின்‌ தலைவர்களில்‌ ஒருவருமான ஸ்ரீ முதலியாரை வரவேற்று உபசரித்து முக்கியமான இடங்களில்‌ இன்னும்‌ சில கூட்டங்களைக்‌ கூட்டுவித்து சம்ரம்மாக வழியனுப்பி வைத்தால்‌ இன்னும்‌ எவ்வளவு சிறப்பாக இருக்கும்‌. ஏதோ கடனுக்கெழுதுவது போல்‌ பக்தன்‌ மட்டும்‌ முதலியார்‌ கண்டிக்குப்‌ போகிறதைப்‌ பற்றி ஓர்‌ மூலையில்‌ குறித்திருந்தது. அதுவும்‌ பக்தனை ஆதரிப்போரின்‌ கோபத்திற்காளாகும்‌ படி நேருமோவென்றும்‌ தமது பிரதிநிதியை பேட்டிகண்டு பேசியதற்காக வுமே எழுதியிருக்க வேண்டும்‌. இவ்வளவு தூரம்‌ பக்தனுக்கு திரு.முதலி யாரின்‌ பேரில்‌ வெறுப்புண்டாக காரணமென்ன? அன்னாரும்‌ பிராமணர்‌ களின்‌ சூழ்ச்சியைக்‌ கண்டித்து பிராமணரல்லாதாரின்‌ சுயமரியாதையை ஆதரிப்பதாக இருப்பதால்‌ தான்‌ இப்பக்தன்‌ அப்‌ பெரியாரைப்‌ பற்றி வரவேற்றுபசரித்து வழியனுப்பி உபசாரம்‌ கூராததால்‌ அவருக்கு ஒன்றும்‌ குறைவில்லை. அதனால்‌ பக்தரின்‌ துவேஷபுத்தி வெளியாவதோடு பழிச்‌ 227 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 சொல்தான்‌ கிடைத்திருக்கிறது. இனியாவது இம்மாதிரி பொதுமக்களிடை வகுப்பு வேற்றுமையில்லாமலும்‌ ஆத்திரத்திற்காளாகாமலும்‌ உயரிய நோக்கங்‌ கொண்டு உண்மையுடன்‌ உழைத்து உலாவி வருவானாக.. ( உண்மையுரைப்போன்‌ ) குறிப்பு : இப்பார்ப்பனார்கள்‌ நமது சுயமரியாதைக்கு முழு எதிரிகள்‌ என்று தெரிந்திருந்தும்‌ இவர்களை அழைத்துக்‌ கொண்டு நமது ஸ்ரீமான்‌ முதலி யாரும்‌ ஆர்‌.கே.ஷண்முகம்‌ செட்டியாரும்‌ ஊர்‌ ஊராய்த்‌ திரிந்து இப்‌ பார்ப்‌ பனர்களுக்குக்‌ கிடைக்கும்‌ கல்லடியையும்‌ சாணி அடியையும்‌ மீத்து வைத்த தோடு இவர்களை நாக்குக்‌ கூசாமல்‌ தலைவர்கள்‌ என்று சொல்லி பாமர ஜனங்களுக்கு அறிமுகம்‌ செய்வித்து ஒரு மணிநேரம்‌ இரண்டு மணிநேரம்‌ தொண்டை கிழியச்‌ செய்த பிரசங்கங்களையே ஒரு அங்குலம்‌ ஒண்ணரை அங்குலம்‌ அதுவும்‌ பொய்யும்‌ புளுகுமாய்‌ பிரசுரித்துவிட்டு அங்கு பேசுவ தற்கே இடம்‌ கிடைக்காத ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி போன்றவர்களை பெருத்த கரகோஷத்தினிடையே பேசினார்‌ என்று மூன்று கலம்‌ நான்கு கலம்‌ எழுது கிறவர்கள்‌ இந்த நாட்டு விஷயமும்‌ இப்பார்ப்பனர்கள்‌ அக்கிரமமும்‌ தெரியாத கொளும்பு தேசத்தில்‌ பேசியதை ஒரு பார்ப்பனப்‌ பத்திரிகை போடவில்லை. என்று சொல்வது தேளால்‌ கடிபட்டவன்‌ இதென்ன வலிக்‌ குதே என்று சொல்வது போல்‌ இருக்கிறது. கொழும்புத்‌ தமிழ்‌ மக்கள்‌ இவ்‌ விதப்‌ பார்ப்பனர்‌ பத்திரிகைகளை ஆதரிப்பது நமக்கு ஆச்சரியமா யிருக்கிறது. (ப-ர்‌) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 05.09.1926 குடி அரசு - 1926 (2) 228 செண்ணனை பார்ப்பணால்லாத வாலிய சங்கம்‌ எனதருமை வாலிப சகோதரர்களே! இச்சங்கத்திற்குப்‌ பார்ப்பனரல்லாத வாலிபர்‌ சங்கம்‌ எனப்‌ பெயரிட்‌ டிருப்பதே பார்ப்பனரல்லாதாராகிய நமது பிற்கால க்ஷேமத்தில்‌ மிகுதியும்‌ நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இன்றைய தினம்‌ வாலிபர்களாயிருக்கிற உங்க ளில்‌ இருந்துதான்‌ புத்த பகவானும்‌, மகாத்மா காந்தியும்‌, நாயர்‌ பெருமானும்‌, தியாகராயரும்‌ போன்றோர்‌ தோன்ற வேண்டும்‌. இவர்கள்‌ எல்லாம்‌ உங்க ளைப்‌ போல்‌ வாலிபர்களாயிருந்தவர்கள்தான்‌. எந்தத்‌ தேசமும்‌ எந்தச்‌ சமூக மும்‌ பெரும்பாலும்‌ அவ்வத்‌ தேசத்திய வாலிபர்களைக்‌ கொண்டுதான்‌ முன்‌ வந்திருக்கிறதே அல்லாமல்‌ பெரியோர்களையும்‌ முதியோர்களையும்‌ கொண்‌ டல்ல.உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்ட பெரியோர்களிடம்‌ பொது நலமும்‌ தியாக புத்தியும்‌ காண்பது மிகவும்‌ அரிது. சுயநலந்தான்‌ வளர்த்து கொண்டு போகும்‌. அவர்கள்‌ பொதுநலத்திற்கு உழைப்பதாய்க்‌ காணப்படுவது அவர்களுடைய சுயநலத்தை உத்தேசித்துத்தான்‌ என்று உறுதியாய்ச்‌ சொல்லுவேன்‌. மகாத்மா வைப்‌ போலவும்‌ நாயர்‌ பெருமான்‌ போலவும்‌ தியாகராயர்‌ போலவும்‌ சிலரே உண்மையான பெரியோர்களாய்‌ இருக்கக்கூடும்‌. உதாரணமாக, நாயர்‌ பெரு மானுக்கும்‌ தியாகராயருக்கும்‌ பதிலாக வந்த கஷ்டத்தை ஈடு செய்ய முடிய வில்லை என்பதை அனுபவத்தில்‌ அறிந்து விட்டோம்‌. 33 கோடி மக்களில்‌ மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக இன்னொருவரை நினைக்க முடியாம லிருக்கிறது. ஆதலால்‌ உலக வாழ்க்கையில்‌ ஈடுபடாத வாலிபர்கள்‌ ஆகிய உங்களுடைய மனம்தான்‌ பொது நலத்திற்கு ஏற்ற பரிசுத்தமான தன்மை யுடையது. உங்களிடம்தான்‌ எவ்வித தியாகத்தையும்‌ எதிர்பார்க்கலாம்‌. ஆனால்‌ இதுபோழ்து நமது நாட்டில்‌ வாலிபர்‌ முன்னிலையில்‌ மிகவும்‌ மலிந்து கிடப்பது ராஜீய விஷயம்‌. அது உங்களைப்‌ போன்ற வாலிபர்க ளுக்கு மிகவும்‌ ஆபத்தான காரியம்‌ என்று எச்சரிக்கை செய்கிறேன்‌. பொதுவாகவே ராஜீய விஷயமென்பது ஒரு நாணயக்‌ குறைவான காரியம்‌. இதைப்பற்றி அனேகம்‌ பெரியோர்கள்‌ ராஜீய விஷயத்தில்‌ ஈடுபடுவ தென்பதை மனிதன்‌ எல்லாவித அயோக்கியத்தனமான காரியங்களையும்‌ செய்து பார்த்தும்‌ பிழைக்க முடியாவிட்டால்‌ கடைசியாகப்‌ பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக்‌ கொள்ளத்தக்க அயோக்கியத்தனம்‌ என்று சொல்லி இருக்கிறார்கள்‌. என்னு டைய ஆறேழு வருஷ கால அனுபவத்தினால்‌ அது 229 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சரி என்றே உணர்கிறேன்‌. ஆதலால்‌ உற்சாகமாகப்‌ பேசும்‌ வயிற்றுப்‌ பிழைப்பு அரசியல்வாதிகளைக்‌ கண்டும்‌ அவர்கள்‌ பேச்சைக்‌ கேட்டும்‌ ஏமாந்து போகாதீர்கள்‌. உண்மையான அரசியல்‌ சுதந்திரத்திற்கு இருக்க வேண்டிய பக்குவமே வேறு. நம்‌ மக்களுக்கு இருக்க வேண்டிய நிலை மையே வேறு. இந்த நாட்டுக்கு எந்த விதத்திலும்‌ இப்போது அரசியல்‌ சுதந்திரம்‌ அவ்வளவு முக்கியமான தல்ல. இந்நாட்டு மனித சமூகத்திற்கு வேண்டியதெல்லாம்‌ முதலில்‌ சுயமரியாதைதான்‌. அதுதான்‌ ஒவ்வொரு மனிதனுக்கும்‌ பிறப்புரிமை. பார்ப்பனரல்லாத வாலிபர்களாகிய உங்களிட மிருந்து உங்கள்‌ சமூகம்‌ இது சமயம்‌ எதிர்பார்ப்பதெல்லாம்‌ சுயமரியாதை யைக்‌ காப்பாற்றிக்‌ கொடுக்கும்‌. படியாகத்‌ தான்‌. பார்ப்பனரல்லாத சமூகத்தில்‌ பெரிய மனிதர்களானாலும்‌ சரி, அரசியலில்‌ பெரிய உத்தியோகம்‌ பெற்றவர்‌ களானாலும்‌ சரி, சிறந்த மனிதர்களானாலும்‌ சரி, துடிக்கும்‌ ரத்தமுள்ள உங்களைப்‌ போன்ற வாலிபர்களானாலும்‌ சரி, தற்போது சுயமரியாதை யற்றுத்தானிருக்கிறார்கள்‌ என்பதை உணருங்கள்‌. இன்னும்‌ எவ்வளவு பெரிய அரசியல்‌ உரிமையும்‌, உத்தியோகமும்‌, பதவியும்‌, கீர்த்தியும்‌ பெற்று வாழ்ந்தாலும்‌ அவையெல்லாம்‌ தனித்தனி மனிதன்‌ அனுபவித்து ஒழியத்தக்கதேயல்லாமல்‌ அவர்கள்‌ சாகும்‌ போதே அவர்களுடைய சந்ததிகள்‌ சுயமரியாதையற்றுத்தான்‌ நடைப்‌ பிணமாய்‌ இருந்து சாவார்கள்‌. ஆதலால்‌ உங்கள்‌ உழைப்பு பொது நலமும்‌ தியாகமும்‌ சுயமரியாதை பெறுவதற்குத்தான்‌ இருக்க வேண்டும்‌. ஆனால்‌ நமது நாட்டில்‌ நமது அரசியல்‌ சுதந்திரத்தை விட நமது சுயமரியாதைக்‌ குத்தான்‌ விரோதிகள்‌ அதிக மாயிருக்கிறார்கள்‌. ஆதலால்‌ இவ்வேலையில்‌ இறங்குவதில்‌ அஞ்சாமையும்‌ மன உறுதியும்‌ சலிப்பின்மையும்‌ இருக்க வேண்டும்‌. ஏனெனில்‌ நமது சுயமரியாதைக்கு எதிரிகள்‌ பெரும்பாலும்‌ நமது நாட்டிலேயே இருக்கும்‌ பார்ப்பனர்களே ஆனதால்‌ அவர்களை வெல்லு வது சுலபமான காரியமல்ல. இதற்கு ஒற்றுமையும்‌ தியாகமும்‌ வேண்டும்‌. இதுகள்‌ உங்களிடம்தான்‌ எதிர்பார்க்கலாம்‌. ஆதலால்‌ உங்களுக்குத்‌ தன்னம்‌ பிக்கையும்‌ வேண்டும்‌: உங்களுக்குள்‌ இருக்கும்‌ பல குருட்டு நம்பிக்கை களும்‌ ஒழிய வேண்டும்‌. இதற்கு முதலாவது பிறவி காரணமாய்‌ உங்களை விட உயர்ந்த மக்கள்‌ இருக்கிறார்கள்‌ என்பதையும்‌, உங்களை விட தாழ்ந்த மக்கள்‌ இருக்கிறார்கள்‌ என்பதையும்‌ உங்கள்‌ மனதைவிட்டு அறவே வெளி யேற்ற வேண்டும்‌. உங்கள்‌ வாழ்க்கைச்‌ சடங்குகளிலும்‌ வைதீகச்‌ சடங்கு களிலும்‌ உங்களை விட பார்ப்பனர்கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்கிற எண்ணம்‌ ஒழிய வேண்டும்‌. பார்ப்பனரல்லாதாரில்‌ பார்ப்பனரல்லாதாருக்குழைப்ப தாய்ச்‌ சொல்லும்‌ வெகு பெரியார்களுக்கு இந்தக்‌ குருட்டு நம்பிக்கை இருக்கிறதை நான்‌ பார்க்கிறேன்‌. உங்கள்‌ கலியாண காலங்களில்‌ பார்ப்பனர்‌. இருந்து நடத்தி வைத்தால்தான்‌ அக்‌ கலியாணம்‌ செல்லுபடி உள்ளதென்றும்‌. நல்ல வாழ்க்கை ஏற்படும்‌ என்றும்‌ நம்புகிறீர்கள்‌. உங்கள்‌ சாந்தி முகூர்த்தத்‌ திற்கு பார்ப்பனர்‌ பக்கத்தில்‌ இருந்து வீட்டிற்குள்‌ தள்ளிக்‌ கதவு மூடினால்‌ தான்‌ நல்ல குழந்தை பிறக்குமென்று நம்புகிறீர்கள்‌. உங்கள்‌ பெரியோர்களை குடி அரசு - 1926 (2) 220 நீங்கள்‌ பார்ப்பனருக்குப்‌ பணம்‌ கொடுத்து மோக்ஷமடையச்‌ செய்யலாம்‌ என்று நம்புகிறீர்கள்‌. இவற்றை ஒழியுங்கள்‌: ஒழிக்கப்‌ பிரசாரம்‌ செய்யுங்கள்‌. நமக்குத்‌ தாழ்ந்தவர்கள்‌ இருக்கிறார்கள்‌ என்கிற மனப்பான்மை உள்ளவர்கள்‌. இந்தப்‌ பிரசாரத்திற்கு கொஞ்சமும்‌ உதவ மாட்டார்கள்‌. உங்களுக்குள்‌. சரியான கட்டுப்பாடு வேண்டும்‌. ஒவ்வொரு ஊர்களிலும்‌ பார்ப்பனரல்லாத வாலிபர்‌ சங்கம்‌ ஏற்படுத்த வேண்டும்‌. இதற்கென்றே சிலர்‌ புறப்பட வேண்டும்‌. இதற்குப்‌ பொருள்‌ வேண்டும்‌. பொருள்‌ இல்லாமல்‌ ஒரு காரிய மும்‌ நடக்காது. மகாத்மா காந்திக்கும்‌ ஒரு கோடி ரூபாய்‌ சேர்ந்ததால்தான்‌ இவ்வளவு காரியங்கள்‌ செய்ய முடிந்தது. இன்னும்‌ ஒரு கோடி அவர்‌ கையில்‌ இருந்தால்‌ இன்னும்‌ இரண்டு வருஷத்திற்கு அவரது ஒத்துழையாமை நிலைத்திருக்கும்‌. ஆதலால்‌ பொருள்‌ மிகவும்‌ அவசியமானது. இதற்காகப்‌ பொருள்‌ சேர்க்க வேண்டும்‌. கடைசியாக பிச்சை எடுக்கவும்‌ தயாராயிருக்க வேண்டும்‌. சரியான படி கணக்கு வைக்க வேண்டும்‌. யார்‌ இதில்‌ மும்மர மாய்‌ வேலை செய்கிறார்‌ களோ அவர்களை ஒழிக்க நமது எதிரிகள்‌ பெரும்‌. பழிகளைச்‌ சுமத்துவார்கள்‌. அதற்குப்‌ பயப்படுவதனால்‌ நாம்‌ ஒரு காரியத்‌ திற்கும்‌ உதவ மாட்டோம்‌. அனேக கஷ்ட நஷ்டங்களைப்‌ பொறுத்துக்‌ கொண்டு வேலை செய்வது எப்படிதியாகத்தில்‌ சேர்ந்ததோ அது போலவே எதிரிகளின்‌ பழியை லக்ஷி யம்‌ செய்யாமலும்‌ அதனால்‌ நம்முடைய பெயர்‌ கெட்டுப்போகுமே என்று பயப்படாமலும்‌ கெட்டாலும்‌ அனாவசியம்‌ என்று எண்ணிக்‌ கொண்டு வேலை செய்வதும்‌ ஒரு பெரும்‌ தியாகம்தான்‌. மகாத்மா மீதில்‌ என்ன என்ன பழியோ நமது பார்ப்பனர்கள்‌ கட்டி விட்டார்கள்‌. அவரது அஞ்சாமையும்‌ பரிசுத்தத்‌ தன்மையும்‌ எதிரிகளின்‌ பழிகளை எல்லாம்‌ சாம்பலாக்கிவிட்டன. உங்களுடைய விடுமுறை நாட்களை வீணாக்காதீர்கள்‌. இச்‌ சங்கத்தைப்‌ பற்றி நமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில்‌ இதன்‌ காரியதரிசி ஸ்ரீமான்‌ TR சுந்தரம்பிள்ளையவர்கள்‌ உண்மையான ஊக்க முள்ளவர்‌. அவரிடம்‌ அற்புதசக்தி இருக்கிறது. அவர்‌ பிடித்த காரியத்தை சாதிக்கும்‌ ஆவேசம்‌ உடையவர்‌. அவர்‌ கோயமுத்தூரில்‌ தங்கியிருந்த சில நாளில்‌ அபூர்வ வேலை செய்திருக்கிறார்‌. ஸ்ரீமான்‌ 6.5.இரத்தினசபாபதி முதலியாரின்‌ அளவு கடந்த வெற்றிக்கு நமது பிள்ளை அவர்கள்‌ முக்கியக்‌ காரண மாவார்‌.உங்கள்‌ சங்கத்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ ஆரியா ஒரு உண்மை வீரர்‌. அவரைப்‌ பற்றி நான்‌ உங்களுக்கு சொல்வது தகப்பன்‌ வீட்டுப்‌ பெருமையை தங்கை தமையனுக்கு எடுத்துச்‌ சொல்வது போலிருக்கிறது. ஏனென்றால்‌ நீங்கள்‌ சென்னையில்‌ இருந்து நேரில்‌ பார்த்து வருகிறீர்கள்‌. அவருடைய எதிரிகள்‌ அவரைப்‌ பற்றி என்ன என்னமோ கரடி விட்டாலும்‌ அவர்‌ அதை ஒரு சிறிதும்‌ லக்ஷியம்‌ செய்யாமல்‌ கருமமே கண்ணா யிருக்கிறார்‌. இப்படிப்‌ பட்ட வீரர்கள்‌ நமது சங்கத்திற்குக்‌ கிடைத்தது நமது பாக்கியம்‌. தவிர வரப்போகும்‌ தேர்தல்களில்‌ உங்கள்‌ சமூகத்தின்‌ சுயமரியாதைக்‌ 231 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. குப்‌ பாடுபடுபவர்களுக்கு வெற்றி சம்பாதித்துக்‌ கொடுங்கள்‌. பார்ப்பன வாலிபர்கள்‌ தேர்தலில்‌ எவ்வளவு வேலை செய்கிறார்கள்‌ என்பதைப்‌ பாருங்கள்‌. பார்ப்பன ஆதிக்கத்திற்குப்‌ பாடுபடுபவர்க்கு அவர்கள்‌ தங்கள்‌ படிப்பைக்‌ கூட விட்டு விட்டு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்கப்‌ பாடுபடுகிறார்கள்‌. ஆதலால்‌ நீங்களும்‌ அவர்களைப்‌ போலவே வீதி வீதியாய்‌ ஊர்‌ ஊராய்த்‌ திரிந்து உங்கள்‌ சுயமரியாதைக்கு வெற்றி அளியுங்கள்‌. படுக்கையில்‌ இருந்து எழும்போது இன்று உங்கள்‌ சமூகத்தின்‌ சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்‌. படுக்கைக்குப்‌ போகும்‌ போது இன்று என்ன செய்தோம்‌ என்று நினையுங்கள்‌. ஒன்றும்‌ செய்யாத நாள்‌ வீணாய்ப்‌ போனதாகவும்‌, உங்கள்‌ வாழ்வில்‌ ஒரு நாள்‌ குறைந்ததாகவும்‌ நினையுங்கள்‌. ஒவ்வொரு வாலிபரும்‌ தங்கள்‌ உமையை உணருங்கள்‌. உங்கள்‌ சுயமரியாதைக்கு உங்கள்‌ உயிரைக்‌ கொடுக்கும்‌ பாக்கியத்தை அடைய தபசு இருங்கள்‌ . இனி எனக்கு விடை தாருங்கள்‌. கை குலுக்கிப்‌ போகிறேன்‌ (பெருத்த கரகோஷம்‌! குறிப்பு : 1926 ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதக்‌ கடைசியில்‌ சென்னை சர்தியாகராயர்‌ நினைவுச்சின்ன கட்டடத்தில்‌ பார்ப்பனரல்லாத வாலிபர்‌ சங்கம்‌ சார்பாக நடைபெற்ற கூட்டத்தில்‌தலைமை வகித்து ஆற்றிய உரை. குடி அரசு - சொற்பொழிவு - 12.09.1926 குடி அரசு - 1926 (2) 232 L OpDBETG வில்லாவக்கு சட்டசபை NBUSRPHTHBET பார்ப்பனர்‌ ஆயுதமாகிய காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாக வடஆற்காடு ஜில்லாவுக்கு மைலாப்பூர்‌ அய்யங்கார்‌ *சுவாமி”களால்‌ சட்ட சபைக்கு நிறுத்தின பான்மையும்‌, நிறுத்தப்பட்ட மூன்று கனவான்களின்‌ யோக்கியதையைப்‌ பற்றியும்‌, ஆரணி, ஆற்காடு ஜில்லா காங்கிரஸ்வாதி ஒருவர்‌ எழுதிய கடிதத்தை வேறு இடத்தில்‌ பிரசுரித்திருக்கிறோம்‌. அதை ஊன்றிப்‌ படிப்பவர்களுக்கு அய்யங்கார்‌ சூழ்ச்சிகளின்‌ தத்துவம்‌ விளங்கா மல்‌ போகாது. அதிற்கண்ட ஸ்ரீமான்‌ செட்டியார்‌ பார்ப்பனரல்லாதாரிடம்‌ வரும்‌ போது நானும்‌ பார்ப்பனரல்லாத வகுப்பைச்‌ சேர்ந்தவன்‌. எப்படி யாவது நமது நாட்டுப்‌ பார்ப்பனீயத்தை ஒழித்தால்தான்‌ சுயராஜ்யம்‌ வரும்‌ என்று சொல்லு வார்‌. பார்ப்பனர்‌ இடம்‌ செல்லும்‌ போது “ஏமி சுவாமிலூ மனக்கெப்புடு அமாவாச சூத்திரவாள்ளரு எப்புடு அமாவாச” என்று கேட்பார்‌. அதாவது “என்ன சுவாமிகளே நமக்கு என்றைக்கு அமாவாசை, சூத்திரன்களுக்கு என்றைக்கு அமாவாசை” என்று கேட்டல்‌. அல்லாமலும்‌ காங்கிரஸ்‌ வாதி எழுதியிருப்பது போல்‌ தனக்கு லாபம்‌ இல்லாமல்‌ அவரிடம்‌ ஒரு காரியமும்‌ இருக்காது. நமது மந்திரிகளைக்‌ காணும்போது நான்‌ பார்ப்பனர்‌ கூடவே இருந்து அவர்களை ஒழித்து விட்டு வந்து விடுகிறேன்‌. சற்று பொறுங்கள்‌. என்பார்‌. ஸ்ரீ சர்‌.சி.பி.அய்யரிடம்‌ போகும்‌ போது ஜஸ்டிஸ்‌ கட்சியைக்‌ குழி வெட்டிப்‌ புதைக்க நாள்‌ ஆச்சுது ; முதலில்‌ என்‌ மகனுக்கு ஒரு உத்தியோகங்‌ கொடு என்பார்‌. மொத்தத்தில்‌ “நீக்கு பெப்‌ பெப்பே நீ தாத்தரு பெப்‌ பெப்பே” என்று இரண்டு பேரையும்‌ ஏமாற்றி விடுவார்‌. தன்‌ வீடுதான்‌ அவருக்கு தேசம்‌, தன்‌ பிள்ளை குட்டிகள்தான்‌ அவருக்கு தேச மக்கள்‌. இப்படிப்பட்ட தேச பக்தர்களாகவே பார்த்து போட்டுக்‌ கொண்டு இருக்கிறார்கள்‌. இதை அறிந்து அந்த ஜில்லாவாசிகள்‌ இப்போது இரண்டு மூன்று கன வான்கள்‌ அந்த ஜில்லாவாசிகளாகவும்‌ பொது வாழ்க்கையில்‌ சுயநலமின்றி உழைத்து வருபவர்களாகவும்‌ பார்த்து நிறுத்தி இருக்கிறார்களாம்‌; அதாவது ஆரணி ஸ்ரீமான்‌ 61பரசுராம்‌ நாயக்கர்‌ அவர்‌ களையும்‌, வேலூர்‌ சேர்மெனும்‌ ஜில்லா போர்டு தலைவருமான ஸ்ரீமான்‌ கரூர்‌ கிருஷ்ணசாமி நாயுடுகார்‌ அவர்களையும்‌ கேட்டுக்‌ கொண்டதில்‌ அவர்களும்‌ சம்மதம்‌ கொடுத்து விட்டதாய்த்‌ தெரிகிறது. மற்றொரு ஸ்தானத்திற்கு யாரை நியமிப்பார்களோ 233 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தெரியவில்லை. எப்படியாவது இந்த கனவான்களைப்‌ பற்றி அந்த ஜில்லா வாசிகளுக்கு நாம்‌ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அல்லாமலும்‌ இவர்களின்‌ யோக்கியதாம்‌ சத்தை அந்த ஜில்லாவாசிகளுக்கு அறிவிப்பதை விடபார்ப்பனர்களால்‌ நிறுத்தப்பட்டிருக்கும்‌ கனவான்களின்‌ யோக்கியதாம்‌ சத்தை அஜ்ஜில்லா பாமர ஜனங்களும்‌ ஓட்டர்களும்‌ கொஞ்சமாவது அறியும்‌ படி செய்து விட்‌ டால்‌ கண்டிப்பாய்‌ அந்த ஜில்லாவாசிகளால்‌ நிறுத்தப்பட்ட கனவான்களே போட்டியன்னியில்‌ தெரிந்தெடுக்கப்பட்டார்கள்‌ என்று சொல்லும்படியாக வெற்றி பெறுவார்கள்‌ என்பது உறுதி என்றே சொல்லு கிறோம்‌. (ப-ர்‌) குடி அரசு - வேண்டுகோள்‌ - 12.09.1926. குடி அரசு - 1926 (2) 234 மங்மாண்‌ $ணிவாசய்மாங்காரிண்‌ ஆசை நமது ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்காரும்‌ அவரது கோஷ்டியாரும்‌ காங்கிரஸ்‌ பிரசாரம்‌ என்கிற பெயரை வைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாத சமூகத்தை அடியோடு அழிப்பதற்காக ஆங்காங்கு செய்து வரும்‌ பிரசாரத்‌ தைப்‌ பற்றி நாம்‌ அடிக்கடி எழுதி வருகிறோம்‌. அதன்‌ மூலம்‌ அவர்கள்‌. கோருவது என்ன என்பதையும்‌ அவர்களின்‌ ஆசை என்ன என்பதையும்‌ பொதுமக்கள்‌ ஒருவாறு அறிந்திருக்கலாம்‌.ஆனால்‌ சமீபகாலமாய்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌ பல பதவிகள்‌ அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவர்‌, தமிழ்நாடு சுயராஜ்ய கக்ஷித்‌ தலைவர்‌, எல்லா இந்திய சுயராஜ்ய கட்சித்‌ தலைவர்‌, எல்லா இந்திய காங்கிரஸ்‌ தலைவர்‌ ஆகிய பதவிகள்‌ அடையக்‌ கோரி செய்து வந்த பிரயத்தனங்கள்‌ பலித்து விட்டதின்‌ பலனாய்த்‌ தலை கிறுகிறுத்துப்போய்‌ குடிகாரன்‌ வெறிகாரன்‌ பேசுவது போல்‌ பேசத்‌ தொடங்கி விட்டார்‌. இதன்‌ பலனாய்‌ அவரது உள்ளக்‌ கிடக்கை அப்படியே வெளியாய்‌ விட்டது. அதென்னவெனில்‌ இம்மாதம்‌ 10 ௨ “தமிழ்‌” சுயராஜ்யாவில்‌ 6-ம்‌ பக்கத்தில்‌ அரசாங்கத்தார்‌ என்ன செய்கிறார்கள்‌ என்கிற தலையங்கத்தின்‌ கீழ்‌ - ஸ்ரீமான்கள்‌ ஈவெ.இராமசாமி நாயக்கரும்‌ சுரேந்திரநாத்‌ ஆரியாவும்‌ அரசி யல்‌ என்று கூறிக்‌ கொண்டு வகுப்புத்‌ துவேஷங்களை உண்டு பண்ணிக்‌ கொண்டு வருகிறார்கள்‌. அவர்கள்‌ இந்த துவேஷத்தை இதுகளுக்கு ஊட்டி விடுகின்றனர்‌. காங்கிரஸ்வாதிகளைச்‌ சிறையிலடைத்த அரசாங்கம்‌ இப்பொழுது ஏன்‌ இதை பார்த்துக்‌ கொண்டு சும்மா இருக்கிறது. சென்னை கவர்ன்மெண்டாரும்‌ அட்வொகேட்‌ ஜெனரலும்‌ சட்ட மெம்பரும்‌ என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்‌ என்று நான்‌ அவர்களைக்‌ கேட்கிறேன்‌. இதற்கு அவர்கள்‌ பதிலளிக்க வேண்டும்‌ என்றும்‌, ஸ்ரீமான்கள்‌. ஈவெ.இராமசாமி நாயக்கர்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, சக்கரை ஆகியோர்‌. காங்கிரசை விட்டுப்‌ போய்‌ விட்டதால்‌ காங்கிரஸ்‌ சுத்தமடைந்து வருகிறது என்றும்‌, இவர்கள்‌ கொஞ்ச நாளைக்கு முன்பே போயிருந்தால்‌ நாம்‌ சீக்கிரம்‌ முன்னேற்றமடைந்திருப்போம்‌ என்றும்‌, தலைவர்‌ பதவி கிடைக்காததால்‌ கட்சியைவிட்டு ஓடுவது யோக்கியமல்லவென்றும்‌, இத்தகையவர்கள்‌ காங்கிர சைவிட்டு ஒழிவது நமக்குத்தான்‌ அனுகூலமென்றும்‌ பேசியிருக்கிறார்‌. இது போலவேபம்பாய்‌ மாகாண மந்திரி கனம்‌ யாதவர்‌ சென்னை மாகாணத்திற்கு வந்தபோது ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி அய்யர்‌ அவர்களும்‌ பேசியிருக்கிறார்‌. 235 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. அதாவது, சென்ற ஹுடிசம்பர்‌-மீ*26 சென்னை சவுந்தர்யமஹாலில்‌ பேசும்‌ போது ஸ்ரீமான்‌ யாதவர்‌ இங்கு வந்து வகுப்புத்‌ துவேஷத்தை மூட்டப்‌ பார்த்தார்‌. சட்ட மெம்பர்‌ (சர்‌. 62. ராமசாமி அய்யர்‌! தாம்‌ பிராமண ரென்று பயந்து கொண்டு அவரைச்‌ சட்டப்பிரகாரம்‌ கவனிக்காது விட்டு விட்டார்‌. இவருக்குத்‌ தைரியமில்லாவிடில்‌ தம்‌ பதவியை இராஜினாமாச்‌ செய்துவிட்டு ஒரு பிராமணரல்லாதாரைக்‌ கொண்டு ஏன்‌ தாக்கீது செய்திருக்கக்‌ கூடாது என்று பேசியிருக்கிறார்‌. (இது 271225 சுதேசமித்திரன்‌ 7-வது பக்கம்‌ இதுகளில்‌ இருந்து இந்தப்‌ பிராமணர்களின்‌ சுயராஜ்யம்‌ என்ன? அவர்களின்‌ ஆசை என்ன என்பதை நன்றாய்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. ஸ்ரீமான்கள்‌ இராமசாமி நாயக்கரும்‌ ஆரியாவும்‌ யாதவரும்‌ வகுப்‌ புத்‌ துவேஷத்தை உண்டாக்குகிறார்களா? அல்லது ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌. மடாதிபதிகளையும்‌ குடியானவர்களையும்‌ ஏமாற்றிக்‌ கொள்ளை யடித்து பணத்தைக்‌ காலிப்‌ பையன்களுக்கும்‌, சில்லரைப்‌ பையன்களுக்கும்‌ கொடுத்து பார்ப்பனரல்லாத மக்களை அடிக்கவும்‌, வையவுமான காலித்‌ தனம்‌ செய்வித்து சமாதானத்துக்கு பங்கம்‌ விளைவிக்கிறாரா என்று நாம்‌ கேட்கிறோம்‌. நமது அய்யங்கார்‌ கோருகிறபடி ஸ்ரீமான்கள்‌ ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும்‌ ஆரியாவையும்‌ சர்க்காரார்‌ ஜெயிலில்‌ போட்டு விட்டால்‌ பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விடலாம்‌ என்று நினைக்கிறாரா? சென்னை மாகாணத்தில்‌ உள்ள நாலு கோடி மக்களில்‌ இவ்‌ விரண்டுபேர்‌. போய்‌ விட்டால்‌ பாக்கி உள்ளவர்களின்‌ நிலைமையைக்‌ கொஞ்சமாவது யோசித்தாரா என்றுதான்‌ கேட்கிறோம்‌. ஏதோ வயிற்றுக்‌ கொடுமையின்‌ பலனாகவோ பேராசையின்‌ பலனாகவோ சில பார்ப்பனரல்லாத பதர்கள்‌. அய்யங்கார்‌ வாலைப்‌ பிடித்துக்‌ கொண்டு திரிவதினாலேயே நான்கு கோடி மக்களையும்‌ இது போலவே எண்ணி விட்டாரா என்றும்தான்‌ நாம்‌ கேட்‌ கிறோம்‌. சட்டசபைத்‌ தேர்தல்கள்‌ தீர்ந்தவுடன்‌ ஆயிரக்கணக்கான பார்ப்பன ரல்லாத வாலிபர்களும்‌ முதியோர்களும்‌ அய்யங்கார்‌ சொன்னாலும்‌ சொல்லாவிட்டாலும்‌, இஷ்டப்பட்டாலும்‌, படாவிட்டாலும்‌ ஒத்துழையாக்‌ காலத்தில்‌ ஜெயிலுக்குப்‌ போன அவசரத்தை விட அதி வேகமாக இப்‌ பார்ப்பனீய ஆதிக்கத்தை அழிப்பதற்குக்‌ கும்பல்‌ கும்பலாக ஜெயிலுக்குப்‌ போகத்தான்‌ போகிறார்கள்‌. அப்போது நமது ஸ்ரீமான்கள்‌ ஸ்ரீனிவாசய்யங்‌ காருக்கும்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கும்‌ இதைப்‌ பார்த்து சந்தோஷப்‌ படக்‌ கூட நேரமிருக்காது என்றே உறுதி கூறுவோம்‌. ஸ்ரீமான்‌ நாயக்கரும்‌ ஆரியாவும்‌ யாதவரும்‌ என்ன கொடுமை செய்தார்கள்‌? அவர்கள்‌ செய்த கொடுமைக்கு பீனல்கோட்‌ சட்டத்தில்‌ தண்டிக்கும்படியான பிரிவு இல்‌ லையா? இருந்தால்‌ இவர்கள்‌ ஏன்‌ நடவடிக்கை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ அட்வொகேட்‌ ஜெனரலையும்‌ சட்ட மெம்பரையும்‌ கெஞ்ச வேண்டும்‌? இதிலிருந்தே ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ அட்வொகேட்‌ ஜெனரலாயிருந்த போது குடி அரசு - 1926 (2) 236 எப்படி நடந்து கொண்டிருந்தார்‌ என்பதும்‌ இப்பொழுதும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காருக்கு அட்வொகேட்‌ ஜெனரல்‌ வேலையோ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு சட்ட மெம்பர்‌ ஸ்தானமோ கிடைத்தால்‌ என்ன செய்வார்கள்‌ என்பதையும்‌ நாம்‌ எடுத்துக்‌ கூற வேண்டியதில்லை. அல்லாமலும்‌ ஸ்ரீமான்கள்‌ நாயக்கர்‌, டாக்டர்‌ நாயுடுகார்‌, சக்கரை இவர்கள்‌. காங்கிரசை விட்டுப்‌ போனதால்‌ காங்கிரஸ்‌ பரிசுத்தமாய்‌ விட்டதாம்‌. இது உண்மையாயிருக்குமானால்‌ டாக்டர்‌ நாயுடுவை இராஜினாமாவை வாப்பீசு வாங்கிக்‌ கொள்ளும்படி ஸ்ரீமான்‌ அய்யங்‌ கார்‌ தந்தியும்‌ ஆளையும்‌ அனுப்பிக்‌ கெஞ்சி இருப்பானேன்‌? சென்ற மாதம்‌ நாயக்கர்‌ சென்னைக்கு வந்திருந்தபோது கூட “தமிழ்நாடு ஆபிசுகுத்‌ தூது அனுப்பி நாயக்கருக்கு என்ன வேண்டும்‌? தாம்‌ கூட்டத்திற்கு வருவதற்கு என்ன நிபந்தனை கேட்கிறார்‌?” என்று ராஜி செய்வதற்குத்‌ தூது ஆள்‌ அனுப்புவானேன்‌? எப்படி ஆனாலும்‌ இப்போது அய்யங்காரிடம்‌ பல்லைக்‌ கெஞ்சி வயிறு வளர்க்கவோ பதவி பெறவோ ஆசையுள்ள ஆட்கள்‌ தவிர மற்ற சுயமரியாதையும்‌ சுயேச்சையுமுள்ளவர்கள்‌ வெளியில்‌ போய்விட்ட தால்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்கு உழைக்கத்‌ தகுந்தபடி காங்கிரஸ்‌ பரிசுத்தப்‌ பட்டு போய்‌ விட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்‌. தலைவர்‌ பதவி கிடைக்காததால்‌ காங்கிரசை விட்டு நாயக்கர்‌ நாயுடு கார்‌ முதலியவர்கள்‌ ஓடி விட்டதாகச்‌ சொல்லுகிறாரே, எந்தத்‌ தலைவர்‌ பதவி யாருக்குக்‌ கிடைக்கவில்லை? யார்‌ ஆசைப்பட்டார்கள்‌? என்பதற்கு ஒரு சின்ன ஆதாரமாவது சொல்லி இருந்தால்‌ கொஞ்சமாவது அதில்‌ கண்ணிய மிருப்பதாய்‌ நினைக்கலாம்‌. நிற்க இவ்விஷயங்களையெல்லாம்‌ தேர்தல்‌ காலத்தில்‌ நமது பார்ப்ப னர்கள்‌ எடுத்துச்‌ சொல்லி வருவதற்கு நாம்‌ மகிழ்ச்சி அடைய வேண்டி யதுதான்‌. சீக்கிரத்தில்‌ மகாத்மா காந்தியையும்‌ இது போலவே வெளிப்‌ படையாய்‌ பேசக்‌ கூடிய காலம்‌ வரும்‌ என்றே எதிர்பார்க்கிறோம்‌. என்றா லும்‌ தேர்தல்‌ விஷயங்களில்‌ பார்ப்பன ஓட்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும்‌ ஞானம்‌ போல்‌ நமது மக்களுக்கு ஏற்பட முடியாதபடி இதுவரை நமது தேர்தல்கள்‌ நடத்தப்பட்டு வந்திருப்பதால்‌ இந்தப்பார்ப்பனர்களுக்கு இம்மாதிரி பேசத்‌ தகுந்த அளவு தைரியமேற்பட்டிருக்கிறது . பார்ப்பன ஓட்டர்கள்‌ கொஞ்சம்‌ மிகுதியாய்‌ இருந்தாலும்‌ அந்தத்‌ தொகுதிகளில்‌ எந்த விதத்திலும்‌ பார்ப்பன ரல்லாதாருக்கு வெற்றி கிடைப்பது என்பது கனவிலும்‌ நினைக்க முடியாத காரியம்‌. ஆனால்‌ 70 ஆயிரம்‌ ஓட்டர்களில்‌ 5 ஆயிரம்‌ ஓட்டர்கள்‌ பார்ப்பனராயிருந்தாலும்‌ கூட அதில்‌ பார்ப்பனர்கள்‌ நின்று வெற்றி பெற்று வருவதை நாம்‌ தினமும்‌ பார்த்து வருகிறோம்‌. ஆதலால்‌ இப்போது பொதுநல சேவையில்‌ ஈடுபட்டிருக்கிறவர்கள்‌ செய்ய வேண்டிய வேலையெல்லாம்‌ ஓட்டர்களுக்கு ஞானமுண்டாகும்படி செய்வதுதான்‌ இம்மாதிரி பேச்சுக்களுக்கும்‌ காரியங்களுக்கும்‌ தக்க சமாதானமென்றே 237 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சொல்லுவோம்‌. இது சமயம்‌ நமது தமிழ்‌ நாட்டில்‌ உள்ள பார்ப்பனரல்லாத பத்திரிகைகள்‌ பெரும்பாலும்‌ ஏதோ கதைகளை எழுதி வயிறு வளர்ப்பதில்‌ காலத்தைச்‌ செலுத்துகிறதே அல்லாமல்‌ இவ்வார்த்தைகளையும்‌ செய்கை: களையும்‌ கொஞ்சமும்‌ லட்சியம்‌ செய்வதற்கில்லாதபடி தங்கள்‌ தோல்களை அவ்வளவு மொத்தமாக்கிக்‌ கொண்டிருப்பதற்கு வருந்தாமலிருக்கமுடியாது. குடி அரசு - தலையங்கம்‌ - 12.09.1926. குடி அரசு - 1926 (2) 238 ய்ஙீமாண்‌ சீணிணாசய்மாங்காரின்‌ சமத்துவ ஞானம்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ திருவல்லிக்கேணி கடற்கரையில்‌ தனது வெற்றிக்‌ கொண்டாட்டத்தில்‌ பேசும்‌ போது சமத்துவத்தைப்‌ பற்றிச்‌ சொன்‌ னதில்‌ “ஜாதி வித்தியாசத்தை சமூக விஷயங்களில்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. அரசியல்‌ விஷயத்தில்‌ அது வேண்டாம்‌” என்று சொன்னதாக 6 -ந்‌ தேதி *மித்திரனில்‌” காணப்படுகிறது. இதன்‌ தத்துவம்‌ என்ன என்பதை அவர்‌. பின்னால்‌ திரியும்‌ கோடாரிக்‌ காம்புகள்‌ யோசிக்க வேண்டும்‌ என்று வேண்டிக்‌ கொள்ளுகிறோம்‌. சமூக விஷயத்தில்‌ ஜாதி வித்தியாசம்‌ என்றால்‌ என்ன? அவர்கள்‌ பிராமணர்கள்‌ நாம்‌ சூத்திரர்கள்‌ என்பதை வைத்துக்‌ கொள்ள வேண்டியதும்‌ பிறவியிலேயே அவர்கள்‌ உயர்ந்தவர்கள்‌, நாம்‌ தாழ்ந்தவர்கள்‌ என்கிறதும்‌ தானா அல்லவா? அல்லாமல்‌ எல்லோரும்‌ சமம்‌ என்கிற கருத்தாயிருந்தால்‌ சமூக விஷயத்தில்‌ ஜாதி வித்தியாசம்‌ எதற்காக இருக்க வேண்டும்‌ என்கிறார்‌. தவிர அரசியலில்‌ ஜாதி வித்தியாசம்‌ வேண்டாம்‌ என்றால்‌ அதனின்‌ தத்துவம்‌ என்ன? அரசியலில்‌ உள்ள எல்லா சுதந்திரங்களையும்‌ பதவி களையும்‌ உத்தியோகங்களையும்‌ ஜாதி வித்தியாசமில்லாமல்‌ **படித்த வர்களும்‌ கெட்டிக்காரர்களும்‌ தகுதியுடையவர்களும்‌” ஆகிய நாங்களே பார்த்துக்கொள்ளுகிறோம்‌. இதில்‌ ஜாதி வித்தியாசம்‌ வேண்டியதில்லை; யார்‌. அனுபவித்தாலென்ன, எல்லாம்‌ சமம்‌ என்று ஏமாற்றுவதும்‌ இதில்‌ யாரும்‌ ஜாதி உரிமை காட்டக்‌ கூடாது என்பதுதானா அல்லவா? இதையும்‌ நமது கோடாரிக்‌ காம்புகள்‌ கேட்டுக்‌ கொண்டு இன்னமும்‌ அவர்‌ பின்னால்‌ திரிவது என்றால்‌ இதில்‌ ஏதாவது இரகசியம்‌ இருக்குமா? இல்லையா? என்பதைப்‌ பொது ஜனங்களே உணரட்டும்‌. குடி அரசு - வேண்டுகோள்‌ - 12.09.1926. 239 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சேவையும்‌ பாராட்டுதனும்‌ கனவான்களே! நான்‌ உங்கள்‌ அழைப்பிற்கு வந்தேனேயொழிய பிரசங்கம்‌ செய்ய வரவில்லை. முதலியாரைப்‌ பற்றி சில வார்த்தைகள்‌ சொல்லும்படி அக்கி ராசனர்‌ கட்டளையிட்டார்‌. நான்‌ அவரை மன்னிக்கும்படி கேட்டுக்‌ கொள்ளு கிறேன்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ எனது நண்பர்‌; அவரைப்‌ பற்றி நான்‌ புகழ்‌ பேசுவது எனக்கும்‌ ஒழுங்கல்ல:; ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களும்‌ இதைப்‌ பொறுக்கமாட்டார்‌. அல்லாமலும்‌ இது சமயம்‌ அவர்‌ தேர்தல்‌ வேலையில்‌ இருக்கிறார்‌. நான்‌ ஏதாவது இப்பொழுது அவரைப்‌ பற்றி பேசுவதாயிருந்‌ தாலும்‌ அதை பொது ஜனங்களோ அல்லது அவர்‌ போன்ற அபேக்ஷகர்களோ முதலியாருக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க நான்‌ அவரைப்‌ புகழ்வதாய்‌ நினைக்கக்‌ கூடும்‌. தவிரவும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களும்‌ இம்மாதிரி. ஆடம்பரத்தையும்‌ வரவேற்பையும்‌ விரும்பும்‌ சுபாவமுடையவரல்லர்‌. என்பது என்னுடைய அனுபவம்‌. ஆனால்‌ என்ன செய்வார்‌ பாவம்‌. இந்தக்‌ காலத்தில்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்கு நிற்பவர்களுக்கு இந்த மாதிரி ஆடம்‌ பரமும்‌ வரவேற்பும்‌ விளம்பரங்களுமே பிரதான யோக்கியதாம்சமாய்ப்‌ போய்விட்டதால்‌, இவரும்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்கு நிற்பதால்‌, இந்த வேஷத்தையும்‌ போட்டுக்‌ கொள்ள வேண்டியதாயிற்று. பொது ஜனங்களும்‌ தாங்கள்‌ தெரிந்தெடுக்கும்‌ கனவான்களிடம்‌ இத்தகைய விளம்பரங்க எைத்தான்‌ எதிர்பார்க்கிறார்களே அல்லாமல்‌ உண்மையான பொது நலத்திற்‌ குத்‌ தேவையான யோக்கியதையை எதிர்பார்ப்பதில்லை. இதன்‌ பலனாக பொது நல நன்மையை நாடி உழைப்பவர்கள்‌ இப்பதவிகளுக்கு வர முடியா மல்‌ போன தொன்று, வந்தாலும்‌ அவர்களை அறிந்து தெரிந்தெடுப்பதற்கு ஓட்டர்களுக்கு ஞானமில்லாமல்‌ போனது ஒன்று ஆகிய இந்த இரண்டு குணங்களும்தான்‌ இப்போதிய சீர்திருத்தத்தின்‌ பலனாய்‌ ஏற்பட்ட தேர்தல்‌ களின்‌ தத்துவமாய்ப்‌ போய்விட்டது. இதன்‌ பலனாகவே அந்த ஸ்தானங்க ளும்‌ பொது நலத்திற்கு யோக்கியதை அற்றதாகப்‌ போய்‌ விட்டன. உதாரண மாக, எவ்வளவு பொது நல ஊழியர்களாயிருந்தாலும்‌ எவ்வளவு சுயநல மற்றவர்களாயிருந்தாலும்‌ எவ்வளவு பெரிய தியாகத்திற்கும்‌ தயாராயிருப்ப வர்களானாலும்‌ தற்கால சட்டசபைக்கு நிற்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்‌. அல்லாமலும்‌ இதற்கு நேர்‌ விரோதமாய்‌ எவ்வளவு சுயகாரியப்‌ குடி அரசு - 1926 (2) 240 புலிகளாயிருந்தாலும்‌, எவ்வளவு தூரம்‌ ஏழை மக்களையும்‌, குடியான வர்களையும்‌, தொழிலாளர்களையும்‌, சர்க்காருக்குப்‌ பலி கொடுத்துத்‌ தங்கள்‌ யோக்கியதையையும்‌ தங்களுக்கும்‌ தங்கள்‌ பிள்ளை குட்டிகளுக்கும்‌ உத்தி யோகத்தையும்‌ சம்பாதித்துக்‌ கொள்ளுபவர்களானாலும்‌ எவ்வளவு சிறிய தியாகத்திற்கும்‌ பயப்படுபவர்களானாலும்‌ இப்படிப்‌ பட்டவர்களே தற்கால சட்டசபைக்கு நிற்க சவுகரியமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள்‌. ஏன்‌? சட்ட சபைக்கு நிற்பதென்றால்‌ பத்தாயிரம்‌, இருபதாயிரம்‌, ஐம்பதாயிரம்‌ ரூபாய்கள்‌ செலவழிக்கத்‌ தயாராயிருக்க வேண்டும்‌. ஆதலால்‌ பணக்காரர்கள்தான்‌ இந்த வேலைக்கு லாயக்காய்ப்‌ போய்விட்டார்கள்‌. தேச பக்தர்களுக்கும்‌ பொதுநல சேவைக்காரருக்கும்‌ பணம்‌ இருக்காது. பணக்காரர்கள்‌ என்பதே தேசத்தை யும்‌ ஏழைகளையும்‌ குடியானவர்களையும்‌ தொழிலாளிகளையும்‌ கெடுத்துத்‌ தான்‌ பணம்‌ சம்பாதித்தவர்கள்‌ என்பது சத்தியம்‌. யோக்கியர்களுக்கும்‌ தேச பக்தர்களுக்கும்‌ பணம்‌ சம்பாதிக்கும்‌ வழிக்கும்‌ வெகு தூரம்‌. ஆதலால்‌ அவர்கள்‌ ஏழைகளாய்த்தான்‌ இருப்பார்கள்‌. அல்லாமலும்‌ ஓட்டர்களோ மிகுதியும்‌ ஏழைகள்‌, மிகுதியும்‌ பாமர ஜனங்கள்‌. இவர்களை விலைக்கு வாங்குவது வெகு சுலபம்‌.அம்மாதிரி காரியத்திற்கு உண்மையான பொது நல ஊழியர்கள்‌ சம்மதிக்க மாட்டார்கள்‌. தேர்தலுக்கு நிற்பதானால்‌ கணக்குப்‌ பிள்ளை, மணியக்காரர்‌, பள்ளிக்கூடத்து உபாத்தியாயர்கள்‌ முதலியவர்கள்‌ தயவு வேண்டியதாய்ப்‌ போய்விட்டது. அவர்களோ அரை வயிற்றுக்‌ கஞ்சிக்‌ கும்‌ மார்க்கமில்லாத சம்பளத்தை உடையவர்கள்‌. அன்றியும்‌ அந்தந்த கிராமத்தில்‌ செல்வாக்குள்ளவர்கள்‌, நாட்டாமைக்காரர்கள்‌, பெருத்த குடித்‌ தனக்காரர்கள்‌ இவர்கள்‌ தயவும்‌ வேண்டும்‌. இப்படிப்பட்டவர்களில்‌ 100-க்கு 90 பேர்‌ கடன்காரர்கள்‌, ஐப்தி வாரண்ட்‌ முதலிய கஷ்டத்தில்‌ சிக்கித்‌ தத்தளித்‌ துக்கொண்டிருக்கிறவர்கள்‌. இந்த இரண்டு கூட்டத்திலும்‌ உத்தமமானவர்கள்‌. சிலர்‌ இருப்பது எனக்குத்‌ தெரியும்‌. ஆனாலும்‌ பெரும்‌ பான்மையோர்கள்‌. இந்த நிலையில்‌ இருப்பதால்‌ தேர்தலில்‌ நிற்பவர்கள்‌ இதை உபயோகப்‌ படுத்திக்கொள்ளுகிறார்கள்‌. உதாரணமாக,“ஓட்டர்களைக்‌ கூட்டிவந்து ஓட்டு வாங்கிக்‌ கொடுப்பதற்கும்‌ அவர்களுக்கு தாகத்திற்கு உதவுவதற்கும்‌ செலவுக்காக வைத்துக்கொள்ளுங்கள்‌” என்று கணக்கு மணியக்காரர்களிடம்‌ ஓட்டு எண்ணிக்கைக்குத்‌ தகுந்தபடி 100, 200 ரூபாய்களை சட்டசபைக்கு நிற்பவர்கள்‌ வலியக்‌ கொடுக்கிறார்கள்‌. இதை எப்படி வேண்டாம்‌ என்று சொல்ல மனம்‌ வரும்‌.அது போலவே பெரிய குடித்தனக்காரரைப்‌ பார்த்து “என்னுடைய தேர்தலுக்கு வேலை செய்யக்கூட தங்களுக்கு சாவகாச மில்லைப்‌ போல்‌ இருக்கிறது. ஏதோ ஒரு பாக்கி தீர்க்கும்‌ விஷயமாய்த்‌ தாங்கள்‌ அடிக்கடி திரிவதாகக்‌ கேள்விப்‌ பட்டேன்‌. இந்தாருங்கள்‌ ஆயிரமோ, ஐயாயிரமோ கொண்டுவந்திருக்கிறேன்‌. பாண்‌ டோ அட மானமோ எழுதிக்கொடுத்து இன்றைக்கே பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌. எலக்ஷன்‌' தீர்ந்த பிறகு இக்‌ கடனைக்‌ கட்டிவிடலாம்‌” என்று சொன்னால்‌ எந்த மிராசு தாரர்களாவது வேண்டாமென்று சொல்லுவார்களா? காலமோ பஞ்சகாலம்‌. 3, 241 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 4 வருஷமாய்‌ மழையில்லை. என்ன செய்வார்கள்‌? இம்‌ மாதிரியே தேர்தலுக்கு நிற்கிறவர்கள்‌ பொது ஜனங்களை நாணயக்‌ குறை வாய்‌ நடக்கக்‌ கட்டாயப்‌ படுத்தி விடுகிறார்கள்‌. இதன்‌ மூலம்‌ ஒரு பணமில்‌ லாதவனோ அல்லது பணமிருந்தும்‌ இம்மாதிரி நாணயக்குறைவான காரியங்களுக்குக்‌ கட்டுப்படாதவனோ சட்டசபைக்கு நிற்க மார்க்கமில்லா மலே போய்விட்டது. ஆதலால்‌ பொது நல சேவையும்‌ பொதுநலப்‌ பாராட்டு தலும்‌ உண்மையான பொதுநல சேவையாயும்‌ உண்மையான பாராட்டுத லாயும்‌ இல்லை. சேவைக்கு வருகிறவர்களுக்கும்‌ உள்‌ எண்ணம்‌ சுயநல மாய்‌ விட்டது. பாராட்டுகிறவர்களுக்கும்‌ உள்‌ எண்ணம்‌ சுயநலத்திற்காகவே ஆய்விட்டது. இந்த நிலைமையில்‌ உண்மையான பொதுநலச்‌ சேவை செய்கிறவர்களின்‌ கடமை என்னவென்றால்‌ போலிப்‌ பொதுநலச்‌ சேவை செய்கிறவர்களை: வெளிப்படுத்துவதும்‌ சுயநலத்துக்காக பாமர ஜனங்களை ஏமாற்றி, ஓட்டு வாங்கிக்‌ கொடுக்கும்‌ தரகர்களின்‌ ஏமாற்றத்திலிருந்து தப்பு விப்பதும்தான்‌ பொதுநலச்‌ சேவையும்‌ பாராட்டுதலும்‌ ஆகும்‌ என்று அபிப்‌ பிராயப்படுகிறேன்‌. இதற்காக மன்னிக்கவும்‌. குறிப்பு : கோவை ஜில்லா போர்டு தலைவராகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட திரூ.சி.எஸ்‌. இரத்தின சபாபதி முதலியார்‌ அவர்களுக்கு கொடுமுடி மக்கள்‌ சார்பில்‌ உபசாரப்‌ பத்திர வழங்கும்‌ விழாவில்‌ சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 19.09.1926 குடி அரசு - 1926 (2) 242 யார்ப்பணர்‌ தேர்தல்‌ முழக்கம்‌ சென்னையில்‌ தேர்தல்‌ முழக்கம்‌ தெருத்தெருவாய்‌ முழங்குகிறது. பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஸ்ரீமான்கள்‌ எஸ்‌.சீனிவாச அய்யங்கார்‌, எஸ்‌. சத்தியமூர்த்தி சாஸ்திரிகள்‌, எ.ரெங்கசாமி அய்யங்கார்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌. முதலியவர்கள்‌ மடாதிபதிகள்‌ பணத்தாலும்‌ மகந்துகள்‌ பணத்தாலும்‌ தெருத்‌ தெருவாய்‌, ஜில்லா ஜில்லாவாய்ப்‌ பார்ப்பனரல்லாத சில கயவர்களையும்‌ சேர்த்துக்‌ கொண்டு தேர்தல்‌ முழக்கம்‌ செய்கிறார்கள்‌. அம்முழக்கத்தில்‌ உபயோகிக்கும்‌ தந்திரங்கள்‌ என்னவென்று பார்ப்போமானால்‌, பார்ப்பன ரல்லாதார்‌ முற்போக்குக்காக ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வரும்‌ இயக்கங்‌ கள்‌ மீது, பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி தூஷணை செய்வதும்‌, தேசத்திற்கும்‌ பார்ப்பனரல்லாத மக்களுக்கும்‌ உழைத்து வரும்‌ தலைவர்கள்‌ மீதும்‌ தொண்டர்கள்‌ மீதும்‌, பொல்லாப்பு களையும்‌ பழிகளையும்‌ சொல்லி அவர்களிடம்‌ பொது ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகும்படி செய்வதுமாகவே இருக்கின்றன. இதன்‌ பயணய்ப்‌ பார்ப்பனரல்லாத பாமர மக்களை ஏமாற்றி அவர்கள்‌ ஓட்டு பெற்று சென்னை சட்டசபை, இந்தியா சட்ட சபை முதலிய ஸ்தானங்கள்‌ பெற்று அவற்றின்‌ மூலம்‌ ஏற்பட்ட உத்தியோகங்கள்‌ அதிகாரங்கள்‌ முழுவதையும்‌ தங்கள்‌ இனத்தவர்களாகிய பார்ப்பனர்களுக்கே கிடைக்கும்‌ படிச்‌ செய்து பார்ப்பன ரல்லாதாரை நுழையக்கூடாதவர்களாகவும்‌ மற்றும்‌ நிரந்தர ஈனஸ்திதி யிலேயே இருக்கும்படியானவர்களாகவும்‌ செய்தும்‌ வரப்பார்க்கிறார்கள்‌. குறிப்பாய்‌ பார்ப்பனரல்லாதாருக்கு உழைக்கும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியையும்‌, அதன்‌ தலைவர்களில்‌ பிரமுகர்களான ஸ்ரீமான்கள்‌ பனகால்‌ அரசர்‌, ஏ.ராமசாமி முதலியார்‌ ஆகிய இருவர்களையும்தான்‌ இப்‌ போது நமது பார்ப்பனர்கள்‌. முக்கிய விரோதிகளாய்‌ நினைத்துக்‌ கொண்டு அவர்களை எந்த வழியிலாவது ஒழிப்பதே தங்கள்‌ கடனாய்‌ வைத்து “காங்கிரஸ்‌” “தேசம்‌” “சுயராஜ்யம்‌” என்கிற ஆயுதங்களை அதற்காக உபயோகித்து வருகிறார்கள்‌. அதோடு மாத்திரமல்லாமல்‌ ஸ்ரீமான்‌ பனகால்‌ அரசர்‌ மீதும்‌ ஏ. ராமசாமி முதலியார்‌ மீதும்‌ சில ஈனத்தனமான பழிகளையும்‌ சுமத்தி வருகிறார்கள்‌ என்றும்‌ அறிகி றோம்‌. அவைகள்‌ என்ன வென்றால்‌ தங்கள்‌ அதிகாரத்தின்‌ கீழ்‌ உள்ள காரியங்களைச்‌ செய்வதில்‌ பணம்‌ சம்பாதிக்கிறார்கள்‌ என்று சொல்லி வருவ தோடு சில பார்ப்பனரல்லாத பதர்களையும்‌ கொண்டு வெளியிடங்களிலும்‌ வக்கீல்‌ குமாஸ்தா பார்ப்பனன்‌, ஓட்டல்காரப்‌ பார்ப்பனன்‌, பொதுப்‌ பெண்‌: 243 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. களிடம்‌ தூது செல்லும்‌ பார்ப்பனன்‌ முதலானவர்கள்‌ உட்பட பிரசாரம்‌ செய்யவும்‌ இரகசிய சுற்றத்‌ திரவுகள்‌ பறந்து திண்ணைப்‌ பிரசாரங்கள்‌ நடந்து வருகின்றன. அதோடு மாத்திர மல்லாமல்‌ தங்கள்‌ சுயநலத்தை மனதில்‌ வைத்து வெளிக்குப்‌ பார்ப்பன ரல்லாதார்க்கு உழைப்பதாக வேஷம்‌ போட்டுக்‌ கொண்டு ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேர்ந்து தங்கள்‌ எண்ணம்‌ ஈடேறாமல்‌ ஏமாற்ற மடைந்து வெளிவந்த சில பச்சோந்திகளும்‌ இதற்குத்‌ துணை புரிந்து வருகிறார்கள்‌ என்பதாகவும்‌ தெரிய வருகிறது. யார்‌ எப்படி கத்தினாலும்‌ கத்தட்டும்‌. இதைப்‌ பற்றிப்‌ பொதுஜனங்களுக்கு ஒரு வார்த்தை மாத்திரம்‌ சொல்லுவோம்‌. இவர்கள்‌ சொல்லுகிற மாதிரி பணம்‌ சம்பாதிக்க வேண்டும்‌ என்கிற ஆசை ஸ்ரீமான்‌ பனகால்‌ அரசருக்கோ ஸ்ரீமான்‌ ஏ. ராமசாமி முதலியாருக்கோ இருக்கு மானால்‌ மலையாளக்‌ குடிவார மசோதாவினும்‌ இந்துமத பரிபாலன மசோதா வினும்‌ எவ்வளவு லக்ஷ ரூபாய்‌ சம்பாதித்‌ திருக்கக்‌ கூடும்‌ என்பதை பகுத்தறிவைக்‌ கொண்டு யோசித்துப்‌ பார்த்தால்‌ தெரியவரும்‌. உபயோக மில்லாத வெறும்‌ பார்ப்பனர்களுக்கு பல மடாதிபதி களும்‌ மகந்துக்களும்‌ மலையாள ஜன்மிகளும்‌ லக்ஷக்கணக்கான ரூபாய்‌ செலவு செய்ததாகத்‌ தெரிகிறது. இந்தப்‌ பார்ப்பனர்களால்‌ இந்தக்‌ காரியமாகும்‌ என்ற நம்பிக்‌ கையே இல்லாமல்‌ சூதாடுவது போல்‌ இவ்வளவு பணம்‌ செலவு செய்திருக்கிறார்கள்‌. ஸ்ரீமான்‌ பனகால்‌ அரசரோ ஸ்ரீமான்‌ ராமசாமி முதலியாரோ இந்து மத பரிபாலன சட்டத்தை முழுவதும்‌ நிறுத்திக்‌ கொள்ளத்‌ தேவையில்லை; ஒரு கோவிலையும்‌ நான்கு மடங்களையும்‌ மாத்திரம்‌ இச்சட்டத்திலிருந்து விலக்குவதானால்‌ 7 லக்ஷ ரூபாய்‌ கொடுக்க ஆள்கள்‌ இன்றைய தினமும்‌ தயாராயிருக்கிறார்கள்‌ என்றும்‌, இதை முடித்துக்‌ கொடுக்‌ கும்‌ தரகருக்கு பதினாயிரக்கணக்கான பொன்னும்‌ பீதாம்பர சால்வையும்‌ தயாராயிருக்கிறதென்றே நாம்‌ கேள்விப்‌ படுகிறோம்‌. இதிலிருந்தே நூறு, இருநூறு, ஐந்நூறு வீதம்‌ சிறு சிறு பதவிகளுக்கு பணம்‌ வாங்குவது என்பது உண்மையானால்‌ இந்த லக்ஷக்கணக்கான ரூபாயை வேண்டாம்‌ என்று சொல்லுவார்களா? என்பதைப்‌பொது ஜனங்கள்‌ யோசித்துப்‌ பார்க்க மாட்டார்‌. களா என்கிற ஞானம்‌ கூட இல்லாமலே இவ்வித இழிவான தன்மையில்‌ பிரசாரங்கள்‌ செய்கிறார்கள்‌. அல்லாமலும்‌ இவர்களுக்கு எதிரிடையாய்‌ நிறுத்தப்‌ பட்டிருக்கும்‌ கனவான்களும்‌ இவற்றையே வெளியில்‌ பேசுகிறார்‌. கள்‌ என்றும்‌ நமது காதுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து நமது மக்கள்‌ தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்‌ நமது பார்ப்பனர்‌ கள்‌ தங்கள்‌ சுயநலத்திற்காக எதையும்‌ செய்ய அஞ்ச மாட்டார்கள்‌ என்பது தான்‌. ஜமீன்தார்கள்‌ மத்தியிலும்‌ செங்கல்பட்டு ஜில்லாவாசிகள்‌ மத்தியிலும்‌ தான்‌ இவ்வித ஈனத்தனமான பிரசாரம்‌ அதிகமாய்‌ நடத்தப்பட்டு வருவதாகவே கேள்விப்படுகிறோம்‌. பார்ப்பனரல்லாத மக்களுக்குள்‌ கொஞ்சமாவது மூளை இருக்கிறது, பகுத்தறிவு இருக்கிறது என்பது வெளியாக வேண்டு மானால்‌, அது முக்கியமாய்‌ செங்கல்பட்டு ஜில்லாவாசிகளிடம்‌ இருந்து தான்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமூகம்‌ எதிர்பார்க்கிறதென்றே சொல்லுவோம்‌. சென்னை குடி அரசு - 1926 (2) 244 சட்ட சபைக்கு ஸ்ரீமான்‌ ராமசாமி முதலியார்‌ வரக்கூடாது என்கிற எண்ணங்‌ கொண்டே நமது பார்ப்பனர்கள்‌ செங்கல்‌ பட்டு ஜில்லா தொகுதிக்குத்‌ தங்கள்‌ சார்பாகப்‌ பார்ப்பனரல்லாதாரையே நிறுத்தி அவருக்கு எதிராய்ப்‌ போட்டி போடச்‌ செய்து தாங்கள்‌ தங்கள்‌ பணத்தைக்‌ கொண்டும்‌, மகந்துக்கள்‌ பணத்தைக்‌ கொண்டும்‌ பிரசாரம்‌ செய்து வருகிறார்கள்‌. சென்னை சட்ட சபையில்‌ இப்‌ பார்ப்பனர்‌ போடும்‌ கச்சலுக்கும்‌ அவர்கள்‌ கிளப்பிவிடும்‌ விவகாரங்களுக்கும்‌, சட்ட சம்பந்தமான சிக்கல்களுக்கும்‌ ஆப்படித்த மாதிரி பதில்‌ சொல்லி அவர்களை அடக்கி வைக்கத்‌ தகுந்த சக்தி ஸ்ரீமான்‌ ஏ. ராமசாமி முதலியார்‌ அவர்களிடம்‌ இருப்பதினால்தான்‌ நமது பார்ப்பனருக்கு அவர்‌ எதிரியாய்த்‌ தோன்றுகிறார்‌. உதாரணமாக, சென்னை சட்டசபையில்‌ கொஞ்ச நாளைக்கு முன்‌ ஒரு பார்ப்பன சட்டசபை மெம்பர்‌ ஒரு பார்ப்பன ரல்லாத உத்தியோகஸ்தரைக்‌ கெடுக்க எண்ணங்‌ கொண்டு அவர்‌ பேரில்‌ ஒரு பழியைச்‌ சுமத்தி அதாவது குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்‌. தேர்தல்‌ விஷயத்தில்‌ பிரவேசித்திருக்கிறார்‌; அவரைப்‌ பற்றி விசாரிக்க வேண்டும்‌; ஆதலால்‌ சபை நடவடிக்கை களை ஒத்தி வைக்க வேண்டும்‌ என்று ஒரு தீர்மானம்‌ கொண்டு வந்தார்‌. இதைப்பற்றி பிரமாதமாய்ப்‌ பேசி அந்த உத்தியோ கஸ்தரைப்‌ பற்றி கெட்ட அபிப்பிராயம்‌ உண்டாகும்படி செய்‌ தும்‌அவரை ஒழிக்க சட்ட மெம்பருக்கு அதிகாரம்‌ கொடுக்கப்போகும்‌ சமயத்‌ தில்‌ ஸ்ரீமான்‌ ஏ.ராமசாமி முதலியார்‌ சட்டசபைக்கு வந்து விஷயம்‌ இன்ன தென்று தெரிந்‌ ததும்‌ உடனே ஆம்‌, ஆம்‌ தக்க நடவடிக்கை எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌; இன்னும்‌ இரண்‌ டொரு உத்தியோகஸ்தர்களைப்‌ பற்றியும்‌ நான்‌ கேள்விப்‌ பட்டேன்‌ அவரை யும்‌ அந்த லிஸ்ட்டில்‌ சேர்த்துக்‌ கொள்ளுங்கள்‌ என்று சொல்லி ஒரு பார்ப்பன ஜில்லா கலெக்டர்‌ பெயரையும்‌ ஒரு பார்ப்பன சப்‌ ஜட்ஜி பெயரையும்‌ சூசனை காட்டினார்‌. உடனே பார்ப்பன சட்ட மெம்‌ பரே பார்ப்பன சட்டசபை மெம்பரை கெஞ்சிக்‌ கேட்டுக்‌ கொண்டு தன்னு டைய பிரேரே பணையை வாபீசு வாங்கிக்‌ கொள்ளவே வெகு பாடுபடும்படி செய்து விட்டார்‌. இம்மாதிரி அவர்‌ ஒருவர்‌ அங்கிருந்து கொண்டு பார்ப்பன ரல்லாதார்‌ விஷயத்திலும்‌ பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்‌ விஷயத்‌ திலும்‌ எவ்வளவோ பாடுபட்டு வருவது பார்ப்பனர்‌ கண்களில்‌ ஊசி குத்துவது போல்‌ இருப்பதால்‌ அவருக்கு எதிரிடையாய்‌ செங்கல்பட்டு ஜில்லா தொகுதி ஒரு பார்ப்பனரல்லாதாரையே நிறுத்தி முன்‌ சொன்னது போல்‌ மகந்துக்கள்‌ பணத்தை செலவு செய்து சில பார்ப்பனரல்லாதாரைக்‌ கொண்டே பிரசாரம்‌ செய்கிறார்கள்‌. ஸ்ரீமான்‌ எஸ்‌. சீனிவாசய்யங்காரும்‌ தான்‌ தூங்கும்‌ போதும்‌ சாப்பிடும்‌ போதும்‌ மற்றும்‌ ஒவ்வொரு சமயத்திலும்‌ ஸ்ரீமான்‌ ஏ.ராமசாமி முதலியார்‌ உருவமே தம்‌ முன்‌ தோன்றுவதாகவும்‌ அவரை ஒழிப்பதே தமது வெற்றி என்றும்‌ அந்த விஷயத்திலேயே தமது முழுக்கவனத்தையும்‌ பலத்தையும்‌ செலுத்தப்போவதாகவும்‌ சொல்லியிருக்கிறார்‌. இதற்காகவே இஜ்ஜில்லா மிராசுதாரர்களையும்‌ ஜமீன்தாரர்களையும்‌ சுவாதினப்படுத்திக்‌ கொண்டு உள்நாட்டு சண்டைகளையும்‌ கக்ஷிகளையும்‌ கிளப்பி விட்டுக்‌ 245 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கொண்டும்‌ வருகிறார்‌. ஆதலால்‌ செங்கல்‌ பட்டு ஜில்லாவாசிகள்‌ இந்த சமயம்‌ தங்கள்‌ புத்திகளையும்‌ மனச்சாக்ஷி களையும்‌ பார்ப்பனர்‌ சூழ்ச்சிக்கும்‌ தந்திரத்திற்கும்‌ பறி கொடுத்து விடாமல்‌ நமது நாட்டு நிலைமையும்‌ நமது பார்ப்பனரல்லாதார்‌ வகுப்பு நிலைமை யையும்‌ கவனித்து புத்திசாலித்தனமாய்‌ நடந்து கொள்ள வேண்டு கிறோம்‌. செங்கல்பட்டு ஜில்லா ஜமின்தாரர்கள்‌. தங்களை எவ்வளவு பெரிய ஜாதியார்‌ என்று சொல்லிக்‌ கொண்டாலும்‌ தாங்கள்‌ எவ்வளவு பெரிய வர்ணாசிரம தர்மி என்று சொல்லிக்‌ கொண்டாலும்‌, பார்ப்பனர்‌ அகராதியில்‌ அவர்களை சூத்திரர்கள்‌ என்றுதான்‌ குறிக்கப்பட்டி ருக்கிறதே அல்லாமல்‌, ஜமீன்தார்கள்‌ வேறு பிறவி என்று இல்லவே இல்லை. ஆகையால்‌ உள்நாட்டு கட்சி விவ காரத்தின்‌ பலனாய்‌ பார்ப்பனர்களின்‌ கையாளாயிருக்கக்‌ கூடாது என்று ஜமீன்தாரர்களையும்‌ மிராசுதாரர்களையும்‌ மறுமுறை வேண்டிக்கொள்ளு கிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 19.09.1926. குடி அரசு - 1926 (2) 246 பிராமணீயத்தை ஒழிப்பலைண்றால்‌ எண்ண? கும்பகோணத்து “பிராமணனின்‌ ' லன்னையும்‌ சீற்றமும்‌ பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில்‌ பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும்‌ அவர்களுக்குப்‌ போகும்‌ பிச்சைக்‌ காசையும்‌ பிச்சைச்‌ சாமான்‌ களையும்‌ நிறுத்துவதும்‌ என்பதே நமது கருத்து என்பதாகப்‌ பலர்‌ அபிப்‌ பிராயப்படுவதாகக்‌ கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால்‌ வயிறு வளர்க்கும்‌ சில பார்ப்பனரல்லாதாரும்‌ ,சில பார்ப்பனரும்‌, பார்ப்பனப்‌ பத்திரி கைகளும்‌, “பிராமணன்‌” என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகை யும்‌ கூச்சல்‌ போடுகின்றதுகள்‌. பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம்‌ எந்தக்‌ கருத்தின்‌ பேரில்‌ தொடங்கினோம்‌ என்றால்‌ நம்மைவிடப்‌ பார்ப்பனன்‌ உயர்ந்தவன்‌ என்று எண்ணுவதும்‌, அவன்‌ பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக்‌ கொண்டிருக்கும்‌ வஞ்சக சாஸ்திரங்களையும்‌, பொய்ச்‌ சுருதிகளை யும்‌, புரட்டு ஆகமங்களையும்‌ நம்புகிற மூடநம்பிக்கையையும்‌ நமது மனதை விட்டு அகற்றுவதும்‌,நம்மை விடப்‌ பஞ்சமன்‌ என்பவன்‌ தாழ்ந்த வன்‌ என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான்‌ முதன்மை யாகக்‌ கருதித்‌ தொடங்கினோமேயல்லாமல்‌ வேறல்ல. உதாரணமாக, பார்ப்பனனை நாம்‌ ஏன்‌ “சுவாமி” என்று கூப்பிட வேண்டும்‌? அவனைக்‌ கண்டால்‌ நாம்‌ தான்‌ முதலில்‌ கும்பிட வேண்டும்‌ என்கிற மனப்பான்மை நம்மிடத்தில்‌ ஏன்‌ இருக்க வேண்டும்‌? பார்ப்பனரும்‌ ஏன்‌ அதை எதிர்‌ பார்க்கவேண்டும்‌? அவனுக்குப்‌ பணம்‌ கொடுப்பதும்‌ சாப்பாடு போடு வதும்‌ புண்ணியம்‌ என்று ஏன்‌ நாம்‌ நினைக்க வேண்டும்‌? இது போன்ற பல உயர்வுகள்‌ நம்‌ போன்ற நம்மிலும்‌ பல வழிகளில்‌ தாழ்ந்தவனாயிருக்கிற வனுக்கு பார்ப்பனனாகப்‌ பிறந்தான்‌ என்கிற காரணத்திற்காக ஏன்‌ கொடுக்க வேண்டும்‌? அல்லாமலும்‌ நம்மை விட எந்த விதத்திலும்‌ தாழ்மையில்லாதவனையும்‌ நம்மிலும்‌ பல விதத்தில்‌ உயர்குணங்கள்‌ கொண்டவனையும்‌ போலிப்‌ பிறவிக்காரணமாக நாம்‌ ஏன்‌ தாழ்ந்தவன்‌ என்று சொல்ல வேண்டும்‌? அவன்‌ நம்மைக்‌ கும்பிடும்படி ஏன்‌ நாம்‌ எதிர்பார்க்க வேண்டும்‌? ஒருவனை நாம்‌ தொட்டால்‌ தோஷம்‌ என்று நாம்‌ ஏன்‌ நினைக்க வேண்டும்‌? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்ஞானத்தை, மூடநம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்சகத்‌ தத்துவத்தை ஒழிப்பதல்லாமல்‌ பிச்சை எடுக்கும்‌ பார்ப்பனர்‌ மேல்‌ 247 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 துவேஷங்கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. உதாரணமாக, பார்ப்பனனுக்கு பிச்சைக்‌ கொடுப்பதை நாம்‌ வேண்டாமென்று சொல்ல வரவில்லை. ஆனால்‌ அவனுக்குக்‌ கொடுப்பது புண்ணியம்‌; மோக்ஷத்திற்கு கொடுக்கும்‌ விலை என்கிற மூட நம்பிக்கையின்‌ பேரில்‌ கொடுத்து ஏமாறாதீர்கள்‌ என்றுதான்‌ சொல்லுகிறோம்‌. கஞ்சிக்கில்‌ லாமல்‌ கஷ்டப்படுகிறான்‌, பாடுபட்டுத்‌ தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில்‌ இருக்கிறான்‌ என்று காணப்பட்டால்‌ கண்டிப்பாய்‌ அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம்‌. இந்த நிலை *பிராமணனிடம்‌” கண்டாலும்‌ சரி “பஞ்சமனிடம்‌” கண்டாலும்‌ சரி உடனே உதவ வேண்டியது மனிதனின்‌ ஆண்மையிலும்‌ சுயமரியாதை யிலும்‌ பட்ட தென்று கூடச்‌ சொல்லு வோம்‌. உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள்‌ ஆன மனிதன்‌ தெருவில்‌ உயிர்‌ போகுந்‌ தருவாயில்‌ இருக்கும்‌ போது “பாயாசத்திற்கு குங்குமப்பூ போதவில்லை; அக்கார வடிசிலுக்குப்‌ பச்சைக்‌ கற்பூரம்‌ போத வில்லை என்ன சமாராதனை செய்து விட்டான்‌ லோபிப்‌ பயல்‌” என்று சொல்லுகிற காளைத்‌ தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம்‌ என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும்‌ என்பதையும்‌ தான்‌ பிராமணீயத்தில்‌ இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்‌. “பிராமணன்‌” என்கிற ஒரு பத்திரிகை “பஞ்சாங்கப்‌” பிராமணர்களை உண்மைப்‌ பிராமணர்கள்‌ தாழ்வாய்க்‌ கருதுவதாகவும்‌, அவர்களுக்கு அவ்விழிதொழில்‌ கூடாதென்றும்‌, அவர்கள்‌ வேறு தொழிலில்‌ பிரவேசிக்க வேண்டுமென்றே தான்‌ விரும்புவதாகவும்‌, ஜம்பமாய்‌ எழுதிவிட்டுப்‌ பார்ப்‌ பனர்‌ “இவ்விழிதொழில்‌” செய்வதற்குப்‌ பார்ப்பனரல்லாதார்‌ காரணஸ்த ராயிருக்கக்‌ கூடாது என்று கேட்டுக்‌ கொள்ளும்‌ “தமிழ்நாடு” பத்திரிகை மீது சீறி விழுவதன்‌ காரணம்‌ இன்னதென்று தெரியவில்லை. தவிர பார்ப்பனர்‌. களில்‌ இவ்விழி தொழிலில்‌ ஜீவித்து வருபவர்கள்‌ பதினாயிரத்திலொருவர்‌: கூட இல்லை என்றும்‌, மற்றவர்கள்‌ எல்லாம்‌ கெளரவமான தொழிலில்‌ வாழ்‌ கிறார்கள்‌ என்றும்‌ ஜம்பம்‌ பேசிக்‌ கொள்ளுகிறது. ஆனால்‌ ஸ்ரீமான்‌ சத்திய மூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில்‌ ஒருவர்தான்‌ உத்தியோகம்‌ காப்பி ஓட்டல்‌ முதலிய இழி தொழில்களில்‌ இருக்கிறார்கள்‌; மற்றவர்கள்‌ எல்லாம்‌ மகா பரிசுத்த பிராமணீயத்‌ தொழிலாகிய பஞ்சாங்கத்‌ தொழிலில்‌ இருக்கிறார்கள்‌; அவர்களிடத்தில்‌ பார்ப்பனரல்லாதாருக்குத்‌ துவேஷம்‌ ஏன்‌: இருக்க வேண்டும்‌? என்று பேசியிருக்கிறார்‌. ஆதலால்‌, உத்தமமான தொழில்‌ இன்னது, இழி தொழில்‌ இன்னது என்பதுகளிலேயே இவ்விரு பார்ப்பனர்‌. களுக்கும்‌ வித்தியாசமிருப்பதால்‌ நாம்‌ இதில்‌ கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும்‌ பதினாயிரத்தில்‌ ஒருவன்தான்‌ பஞ்சாங்கப்‌ பிராமணன்‌ என்பதை மாத்திரம்‌ நாம்‌ மறுக்கிறோம்‌. இன்றைய தினம்‌ உத்தியோக முறையில்‌ உயர்ந்த ஸ்தானம்‌ வகித்தும்‌, மாதம்‌ பதினாயிரம்‌ இருபதினாயிரம்‌ சம்பாதித்து வரும்‌ பிராமணர்கள்‌ என்று குடி அரசு - 1926 (2) 248 சொல்லிக்‌ கொள்ளுபவரான ஸ்ரீமான்கள்‌ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌. அவர்கள்‌, நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள்‌, சி.பி.ராமசாமி அய்யர்‌ அவர்கள்‌, எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌ அவர்கள்‌, டி.ஆர்‌. வெங்கிட்டராம சாஸ்திரிகள்‌,மகா மகாகனம்‌ பட்டம்‌ பெற்ற ஸ்ரீனிவாச சாஸ்திரிகள்‌, சர்‌. சிவசாமி அய்யர்‌. அவர்கள்‌ முதலியவர்கள்‌ உட்பட அனேக சாதாரண உத்தியோகப்‌ பிராமணர்‌ களும்‌, அரசியல்‌ பிராமணர்களும்‌, சன்னிதானங்கள்‌, மடாதிபதிகள்‌, மகந்து கள்‌ என்று சொல்லத்தகுந்த பல வைதீகப்‌ பிராமணர்‌ களும்‌, சிலர்‌ பஞ்சாங்கப்‌ பிராமணர்களின்‌ சந்ததிகள்‌, சிலர்‌ பஞ்சாங்கப்‌ பிராமணர்களின்‌ பிள்ளைகள்‌, பலர்‌ பஞ்சாங்கப்‌ பிராமணர்களின்‌ சகோதரர்கள்‌, பலர்‌ உத்தியோகத்திலும்‌, வைதீகத்திலும்‌, பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும்‌ வயிறு வளர்க்கிறவர்கள்‌. என்பதை மாத்திரம்‌ தெரியப்படுத்திக்‌ கொள்ளாமல்‌ இருக்க முடியவில்லை. “பிராமணன்‌” உண்மையிலேயே இந்த “இழி தொழிலாகிய” பஞ்சாங்கத்‌ தொழிலைச்‌ செய்வதிலிருந்தும்‌ மூட நம்பிக்கையில்‌ பார்ப்பனரல்லாத மக்களை இறக்கி அவர்களால்‌ வயிறு வளர்க்கும்‌ தொழிலிலிருந்தும்‌ *பிராமணர்களை”க்‌ கடைத்‌ தேற்றி “பிராமணன்‌'சொல்லுகிறபடி அவர்களை “கெளரவமான” வாழ்க்கையில்‌ நடக்கும்படி செய்யும்‌ பிரசாரத்திற்கு நம்மை யும்‌ அழைத்தால்‌ நாமும்‌ ஒத்துழைக்கத்‌ தயாராயிருக்கிறோம்‌. நாம்‌ பிராமணீயத்தை விட்டவர்கள்‌ பெயர்களைப்‌ போட்டு வருவது போலவே பஞ்சாங்கத்‌ தொழிலாகிய “இழிதொழிலை விட்ட பிராமணர்‌” பெயர்களையும்‌ வாரா வாரம்‌ “பிராமணன்‌” பத்திரிகை கொண்டு வெளி வருவானானால்‌ நாம்‌ பிராமணனை மிகுதியும்‌ போற்றுவோம்‌. அதில்லாமல்‌ எழுத்தில்‌ மாத்திரம்‌ காட்டுவதில்‌ என்ன பயன்‌? தாசிகளைக்‌ கேட்டால்கூட அவர்கள்‌ தங்கள்‌ தொழில்‌ இழி தொழிலென்று ஒப்புக்‌ கொள்ளுகிறார்கள்‌. ஆனால்‌ இருட்டானவுடன்‌ தெருவில்‌ நடப்பவனைப்‌ பார்த்து கண்ணடிப்ப தில்‌ பின்‌ வாங்குவதில்லை.வக்கீல்களும்‌ அது போலவே தங்கள்‌ தொழிலை இழி தொழில்‌ என்று ஒப்புக்‌ கொள்ளுகிறார்கள்‌. ஆனால்‌ தாசிகள்‌ புருஷர்‌. களைத்‌ தேடுவது போல்‌ வாயிற்படியிலும்‌ ரயில்வே பிளாட்பாரத்திலும்‌ காத்திருந்து கட்சிக்காரர்களைத்‌ தேடுவதில்‌ குறைவில்லை. அதுபோல பிராமணனும்‌ பஞ்சாங்கத்‌ தொழில்‌ இழி தொழில்‌ என்று வாயில்‌ ஒப்புக்‌ கொண்டதைப்‌ பற்றி நாம்‌ மிகுதியும்‌ சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில்‌ காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில்‌ இல்லாமல்‌ செய்ய பிரயத்தனப்படுவானானால்‌ அத்தொழிலின்‌ பலனாய்‌ மூட நம்பிக்கையில்‌ ஈடுபட்டுச்‌ சுயமரியாதை இன்றிக்‌ கிடக்கும்‌ கோடிக்‌ கணக்கான பார்ப்பன ரல்லாத மக்களுக்குச்‌ சுயமரியாதைக்கு வழிகாட்டின பலம்‌ பார்ப்பனர்களுக்கு கிடைக்குமென்று தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 19.09.1926 249 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ய்ங்மாண்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ AFL IPUINIT ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. சண்முகம்‌ செட்டியார்‌ அவர்கள்‌ இம்மாதம்‌ 16-ல்‌ கோவையிலிருந்து கொழும்பு மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குப்‌ பிரயாண: மாகிறார்‌. பிரிட்டிஷ்‌ ஏகாதிபத்தியத்திலுள்ள பார்லிமெண்ட்‌ பிரதிநிதிகள்‌. எல்லோரையும்‌ ஆஸ்ற்றிய அரசாங்கத்தார்‌ தருவித்து ஒவ்வொரு பார்லி மெண்டின்‌ நடவடிக்கைகளையும்‌ போக்கையும்‌ பற்றி எடுத்துப்‌ பேசி ஒருவ ருக்கொருவர்‌ தங்கள்‌ தங்கள்‌ அபிப்பிராயங்களை பரிமாறிக்‌ கொள்வதற்‌ கும்‌ நன்மையான முறைகளை ஒவ்வொருவரும்‌ ஒருங்கே கையாளவும்‌, தீமையின்‌ முறைகளைக்‌ கைவிடவும்‌ ஒரு பயிற்சி ஏற்படுவதற்காக கூடப்‌ படும்‌ ஏகாதிபத்தியம்‌ மந்திராலோசனை சபைகளின்‌ பிரதிநிதிகள்‌ கூட்ட மொன்று ஆஸ்த்திரேலியா அரசாங்கத்தாரால்‌ கூட்டப்படுகிறது. இக்கூட்டத்‌ திற்குப்‌ பிரிட்டிஷாருக்குள்ள “குடியேற்ற நாடுகளின்‌ பார்லிமெண்ட்‌” என்று சொல்லப்படும்‌, மந்திராலோசனை சபையார்கள்‌ எல்லாம்‌ தங்கள்‌ தங்கள்‌. சபைச்சார்பாக பல பிரதிநிதிகளை தெரிந்தெடுத்தனுப்புகிறார்கள்‌. அது போலவே நமது இந்தியாவுக்கும்‌ ஷிமகாநாட்டுக்கு இந்திய பிரதிநிதி யாக இந்தியா சட்டசபையாரும்‌ நமது ராஜாங்க சபையாரும்‌ நமது ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியாரையும்‌ மற்றொரு ஐரோப்பியரையும்‌ தெரிந்‌ தெடுத்திருக்கிறார்கள்‌. டெமகாநாட்டுக்குச்‌ செல்லும்‌ சுமார்‌ 50 பிரதிநிதிகளில்‌ நமது செட்டியார்‌ ஒருவர்தான்‌ கருப்பு மனிதர்‌. மற்றவர்கள்‌ எல்லோரும்‌. வெள்ளைக்காரர்‌. அல்லாமலும்‌ இந்த மகாநாட்டுக்குப்‌ பிரதிநிதிகளை அனுப்‌ புவதில்‌ முக்கியமாய்‌ கவனித்த விஷயம்‌ அரசியல்‌ மந்திராலோசனை அறி வும்‌, அரசியல்‌ அனுபவமும்‌, ஆங்கில பாஷா ஞானமும்‌, வாக்கு வன்மை யும்‌, பொறுப்பையுமே பிரதானமாகக்‌ கருதப்பட்டிருக்கிறது. இவ்வளவு உயர்‌. குணங்களோடு கூடிய ஒரு இந்தியர்‌, இந்திய பாமர ஜனங்‌ களின்‌ பிரதிநிதி சபை என்று சொல்லிக்‌ கொள்வதான இந்திய சட்டசபையும்‌, மிராஸ்தார்கள்‌ பிரதிநிதி சபை என்று சொல்லப்படுவதான அரசாங்க சபையும்‌ நமது ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. சண்முகம்‌ செட்டியார்தான்‌ என்றும்‌, அவரே இம்மகாநாட்டுக்குப்‌ போகத்‌ தகுந்தவர்‌ என்றும்‌ கருதி. அவரையே ரெ சபைகள்‌ மனப்பூர்வமாய்த்‌ தெரிந்தெடுத்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒருவர்‌ இவ்வளவு பொறுப்புள்ள காரியத்திற்குப்‌ போவதைப்‌ பற்றியும்‌, அவரின்‌ யோக்கியதாம்‌ சங்களைப்‌ பற்றியும்‌, போகும்‌ காரியங்களின்‌ விபரத்தைப்‌ பற்றியும்‌, நமது நாட்டுப்‌ பாமர ஜனங்கள்‌ அறியும்‌ பொருட்டு, இது வரையில்‌ ஒரு பார்ப்‌ பனப்‌ பத்திரிகையும்‌ வெளிப்படுத்தவேயில்லை. இந்த மாதிரி ஸ்தானங்களுக்கு யாராவது ஒரு குடி அரசு - 1926 (2) 250 அனாம தேயப்‌ பார்ப்பனன்‌ ஒருவன்‌ போவானேயானால்‌ அவனைப்‌ பற்றி பெரிய பெரிய தலையங்கங்களும்‌, பட்டங்களும்‌, (இண்டர்வியூ ) “பேட்டி கண்டு பேசிய அபிப்பிராயங்களும்‌” பத்தி பத்தியாய்‌ விளங்கும்‌. ஆங்காங்கு பல உபசாரப்‌ பத்திரிகை களும்‌, வழியனுப்பு உபசாரங்களும்‌ நடக்காதன கூட நடந்தவனவாக நிரூபங்கள்‌ நிறையும்‌. இதுவரை எத்தனையோ பார்ப்பனர்கள்‌. நமது ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்களைப்‌ போல்‌ பொது ஜனங்களால்‌ தெரிந்‌ தெடுக்கப்படாமல்‌ இந்தியாவுக்குத்‌ துரோகம்‌ செய்வதற்கென்றே சர்க்கார்‌ ஊழியராகச்‌ சர்க்காரார்‌ சொல்லிக்‌ கொடுத்த வார்த்தையைக்கிளிப்பிள்ளைப்‌ போல்‌ போய்ச்‌ சொல்லி விட்டு வரவும்‌, தன்‌ இஷ்டப்படி ஒரு வார்த்தைகூட சொல்ல அதிகாரமில்லாத நிலையில்‌ அடிமையாய்ச்‌ சென்ற பார்ப்பனர்‌: களைப்‌ பற்றி கூட நமது பார்ப்பன பத்திரிகைகள்‌ எவ்வளவு எழுதி இருக்கின்றன என்பது வாசகர்களுக்குத்‌ தெரியும்‌. அப்படியிருக்க பொது ஜனங்களால்‌ தெரிந்தெடுக்கப்பட்ட நமது செட்டியாரைப்‌ பற்றி ஒரு வார்த்தையாவது எந்த பத்திரிகையாவது எழுதிற்றா? மகாத்மா காந்தியைச்‌ சிறைக்கனுப்ப உதவியாயிருந்த ஸ்ரீமான்‌ சீனிவாச சாஸ்திரிகளும்‌, காங்கிரஸ்‌ பெயரைச்‌ சொல்லி ஓட்டுப்‌ பெற்று மாதம்‌ 5500 ரூபாய்‌ சம்பளத்திற்காக சர்க்கார்‌ அடிமையான ஸ்ரீமான்‌ சி.பி.ராமசாமி அய்யரும்‌, காங்கிரஸினால்‌ பஹிஷ்கரிக்கப்பட்ட ஏகாதிபத்திய கண்காட்சிக்கு இந்தியாவின்‌ சார்பாய்ச்‌ சென்ற சர்க்கார்‌ ஊழியரான ஸ்ரீமான்‌ டி.விஜ யராகவாச்சாரியாரும்‌, வெளி நாடுகளுக்குப்‌ போன காலங்களில்‌ அவர்கள்‌ படம்‌, அவர்கள்‌ புகழ்‌, சரித்திரம்‌, பேட்டிக்‌ கண்டு பேசிய விபரம்‌ முதலியதுகளை இப்பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ எவ்வளவு விளம்பரங்கள்‌ செய்தன என்பது யாவருக்கும்‌ தெரியும்‌. இம்மூவர்களும்‌ சுயராஜ்யத்திற்காக பாடுபடுவதாய்ச்‌ சொல்லும்‌ நமது பார்ப்பன பத்திரிகைக்காரர்‌ அபிப்பிராயத்திற்கும்‌. காங்கிரசுக்கும்‌ சுயராஜ்ய கட்சிக்கும்‌ முற்றும்‌ மாறுபட்டவர்களாயிருந்தும்‌ அவர்களை விளம்பரப்‌ படுத்துவதில்‌ நமது “இந்து” “சுதேசமித்திரன்‌”, “சுயராஜ்ய, “நியூ இந்தியா” முதலிய “தேசீயப்‌ பத்திரிகைகள்‌” கொஞ்சமும்‌ பின்‌ வாங்க வில்லை. ஆனால்‌ நமது ஸ்ரீமான்‌ ஆர்‌.கே.சண்முகம்‌ செட்டியார்‌ அவர்கள்‌ காங்கிரஸ்‌ வாதி, சுயராஜ்யக்‌ கக்ஷி “கொரடா', தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டிக்‌ காரியதரிசி. இவ்வளவு யோக்கியதையுடன்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ கட்சி, பார்ப்பனக்‌ கட்சி என்கிற உண்மையை பாமர ஜனங்கள்‌ அறியாதபடி மறைக்கவும்‌, இப்‌ பார்ப்பனர்கள்‌ வெளியில்‌ போய்‌ பார்ப்பனப்‌ பிரசாரம்‌ செய்வதில்‌ கல்லடி, சாணி உருண்டை, மலச்சட்டி முதலியதுகள்‌ பார்ப்பனர்‌ பேரில்‌ விழாமல்‌ காக்க வுமான காரியத்திற்குப்‌ பார்ப்பன ஆயுதமாயிருந்து இப்‌ பார்ப்பன அபிப்பி ராயந்தான்‌ இந்திய தேசிய அபிப்பிராயமென்றும்‌, சொல்லி வந்த இப்படிப்‌ பட்ட ஒரு உபகாரிக்கே இவர்கள்‌ இவ்வளவு துரோகம்‌ செய்வார்களானால்‌ மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுமை செய்ய மாட்டார்கள்‌. இன்றைய தினமும்‌ நமது சென்னை மாகாணத்தை எடுத்துக்‌ கொண்டாலும்‌ ஏறக்குறைய 4 கோடி ஜனங்களுக்குள்‌ விஷயங்களைப்‌ பாகுபடுத்தி மக்களுக்கு நன்றாய்‌ 251 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. விளங்கும்படி செய்யவும்‌, விவகார ஞானத்துடன்‌ விவகரிக்கவும்‌, எதிரிகளின்‌ சூழ்ச்சிகளை அறியவும்‌ தக்க யோக்கியதை உடையவர்கள்‌ எந்த வகுப்பி லிருக்கின்றார்கள்‌ என்றால்‌ பார்ப்பனரல்லாதார்‌ வகுப்பில்தான்‌ இருக்கிறார்‌. கள்‌. அவர்களில்‌ சிறந்தவர்‌ கள்‌ என்று சொல்லத்‌ தக்கவர்கள்‌ யார்‌ என்று பார்த்தால்‌ நமது ஸ்ரீமான்‌ கள்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ அவர்‌ களையும்‌, சென்னை ஸ்ரீமான்‌ ஏ. ராமசாமி முதலியார்‌ அவர்களையுமே சொல்ல வேண்டும்‌. அப்படிப்பட்ட இருவரும்‌ பிரகாசிக்கப்படாமல்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌ என்னவென்று யோசித்தால்‌ நமது பார்ப்பனப்‌ பத்திரிகைகளின்‌ விஷமமேயல்லாமல்‌ வேறல்ல. எத்தனையோ “ஆகா வழிகள்‌” பார்ப்பனர்‌ என்கிற காரணத்திற்‌ காக “தலைவர்களாய்‌' பிரகாசிக்கி றார்கள்‌. இதன்‌ காரணம்‌ என்ன வென்றால்‌ இப்படிப்பட்டவர்கள்‌ பார்ப்பனர்‌ என்பதற்காகத்‌ தான்‌. உதாரணமாய்‌, சுயராஜ்ஜியக்‌ கட்சித்‌ தலைவர்‌, தமிழ்‌ நாட்டுத்‌ தலைவர்‌, காங்கிரஸ்‌ தலைவர்‌ என்று விளம்பரம்‌ முழங்கும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரின்‌ அறிவிற்கும்‌ ஆற்றலுக்கும்‌ இக்கனவான்களின்‌ அறிவுக்கும்‌ ஆற்றலுக்கும்‌ ஒத்துப்‌ பார்த்தால்‌ எவ்வளவு வித்தியாசமிருக்‌ கிறது என்பதைக்‌ காணலாம்‌. ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ சட்ட ஞானத்தில்‌ நிபுணரா யிருக்கலாம்‌; அது போலவே மற்றொருவர்‌ சித்திரம்‌ எழுதும்‌ ஞானத்தில்‌ நிபுணராயிருக்கலாம்‌; மற்றொரு வர்‌ கவிப்பாடுவதில்‌ நிபுணராயிருக்கலாம்‌; மற்றொருவர்‌ செருப்புத்‌ தைப்பதில்‌ நிபுணராயிருக்கலாம்‌. இம்மாதிரி பல கலை ஞானங்களுக்கு நிபுணராயிருப்பதற்கும்‌ உலக ஞான அறிவுக்கும்‌ எவ்வளவோ வித்தியாச முண்டு. இக்‌ கலை “நிபுணத்துவம்‌” கூட சூழ்ச்சி யினால்‌ பெற்று விடலாம்‌. இதைப்பற்றி மற்றொரு சமயம்‌ விரிக்கலாம்‌. நிற்க, ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ இந்தச்‌ சமயத்தில்‌, தான்‌ ஆஸ்திரேலியாவுக்குப்‌ போகத்‌ துணிந்‌ ததை நாம்‌ யோசிக்கும்‌ போது அவரது ஊக்கத்‌ தையும்‌, தேசாபிமானத்தை யும்‌, உறுதியையும்‌ யாரும்‌ போற்றாம லிருக்க முடியாது. ஏனெனில்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ அடுத்து நடக்கப்‌ போகும்‌ இந்தியா சட்டசபைத்‌ தேர்தலில்‌ ஒரு அபேக்ஷகராய்‌ கோயமுத்தூர்‌, நீலகிரி, சேலம்‌, வடஆற்காடு ஆகிய நான்குஜில்லாக்களின்‌ சார்பாய்‌ நிற்கிறார்‌. இவருக்கெதி ராகப்‌ பலர்‌ நிற்கிறார்கள்‌. இனியும்‌ நிற்கநினைப்பார்கள்‌.ஸ்ரீமான்‌ செட்டியார்‌. அவர்கள்‌ தேர்தலுக்கு முன்‌ திரும்பி வரவும்‌ முடியாது . அப்படியிருந்தும்‌ தேர்தலைக்‌ கூட அவ்வளவு லட்சியம்‌ செய்யாமல்‌ போகத்‌ துணிந்தது நாம்‌ மிகுதியும்‌ பாராட்டத்தக்கதுதான்‌. செட்டியார்‌ அவர்கள்‌ அரசியல்‌ அபிப்பி ராயத்தில்‌ பார்ப்பனக்‌ கட்சியான சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேர்ந்திருந்தாலும்‌ மற்றும்‌ எல்லாக்‌ கட்சியாரின்‌ நம்பிக்கையையும்‌ பெற்றிருக்கிறார்‌ என்றே சொல்வ தோடு முழுதும்‌ பார்ப்பனர்‌ கை ஆயுதமாக இல்லையென்றே சொல்ல வேண்டும்‌. தற்காலம்‌ நமது நாட்டில்‌ பேருக்குப்‌ பல கட்சிகள்‌ இருந்‌ தாலும்‌, அதைப்‌ பாகுபடுத்தினால்‌, இரண்டு கட்சிகள்தான்‌ விளங்கும்‌. ஒன்று பார்ப்பனர்‌ கட்சி, மற்றொன்று பார்ப்பனரல்லாத கட்சி. இரண்டு கட்சியிலும்‌ சுயநலக்காரர்‌ இருந்தாலும்‌ அபிப்பிராயம்‌ இரண்டுந்தான்‌. அதில்‌ பார்ப்பன குடி அரசு - 1926 (2) 252 ஆதிக்க அபிப்பிராயம்‌ பார்ப்பனரல்லாதார்‌ ஆதிக்க அபிப்பிராயம்‌- இரண்டு தான்‌. இவற்றிற்கு ஆதாரம்‌ விவாதத்திலிருப்பதும்‌ இரண்டுதான்‌. அரசியலில்‌, அதாவது ஒன்று பார்ப்பனர்‌-பார்ப்பனரல்லாதார்‌ என்கின்ற வகுப்புவாரி வாக்காளர்‌ உரிமைக்‌ கொண்ட வகுப்புவாரி பிரதிநிதித்து வமும்‌, சமூகவிய லில்‌ மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு, தாழ்வு என்கிற வித்தி யாசத்தை ஒழிப்பதற்கு அஸ்திவாரமாய்‌ ஏற்படுத்தப்‌ பட்டிருக்கும்‌ இந்துமத தர்ம பரிபாலன சட்டமும்‌ தான்‌. இவ்விரண்டையும்‌ நிறைவேற்ற பார்ப்பனரல்லாதாரும்‌ இவ்விரண்டை யும்‌ அழிக்கப்‌ பார்ப்பனர்களும்‌ போடும்‌ சண்டைதான்‌ இப்போது பல கட்சிகளாய்‌ விளங்குகிறது. ஆன போதிலும்‌ இவ்விரு தத்துவங்களையும்‌ நிறைவேற்றவும்‌, அழிக்கவும்‌ இரு கட்சியாரும்‌ மற்ற கட்சிகளிலிருந்து ஆசாமிகளைப்‌ பலவித சூழ்ச்சிகளினாலும்‌, கூடா ஒழுக்கத்தினாலும்‌, சுவாதினப்படுத்திக்‌ கொண்டிருக்கிறார்கள்‌ என்பதை நாம்‌ மறைக்க முடியாது. ஆனாலும்‌ நமது செட்டியார்‌ அவர்கள்‌ இவ்விரு அபிப்பிராயங்களிலும்‌ தனது மனச்‌ சாட்சியில்‌ ஒரு கடுகத்தனையாவது பார்ப்பனருக்கு விற்காமல்‌ பார்ப்பனர்‌ கட்சியாகிய சுயராஜ்யக்‌ கட்சியிலிருக்கிறார்‌ என்பதை நாம்‌ சொல்லத்‌ தேவையில்லை. உதாரணமாக காஞ்சீபுரம்‌ அரசியல்‌ மகாநாட்டின்‌ போது ஸ்ரீமான்‌ டி.எ.ராமலிங்கஞ்‌ செட்டியார்‌ அவர்களின்‌ தலைமையின்‌ கீழ்‌ கூடிய எல்லா கட்சி பார்ப்பனரல்லாதார்‌ மகாநாட்டில்‌ ஸ்ரீமான்‌ இராமசாமி நாயக்கராலும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌. ராமநாதன்‌ அவர்களாலும்‌ பிரேரேபித்து ஆமோதிக்க ஏற்படுத்திய வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ தீர்மானத்தை தயார்‌ செய்தவரே ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்மு கம்‌ செட்டியார்‌ அவர்கள்‌ தான்‌. இரண்டாவதான இந்துமத பரிபாலன சட்டத்தைப்‌ பற்றி, நமது பார்ப்பனர்கள்‌. சுயராஜ்யக்‌ கட்சி என்பது பார்ப்பனக்‌ கட்சிதான்‌ என்பதை உலகத்தார்‌. உணருவதற்கு அனுகூலமாய்‌ அடுத்த சட்டசபையில்‌ வரப்‌ போகும்‌ இந்துமத பரிபாலன மசோதாவைச்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ யார்ப்பனருக்காக! எதிர்க்க வேண்டும்‌, வெளியேறின வீரர்கள்‌ சட்டத்திட்டங்களை மீறிக்‌ கூட உள்ளே போக வேண்டுமென்று பார்ப்பனர்‌ அறிக்கை விட்டிருந்‌ தும்‌, நமது ஸ்ரீமான்‌ ஆர்‌.கே.ஷண்முகம்‌ செட்டியார்‌ ஒருவர்‌ மாத்திரந்தான்‌ தைரியமாய்‌ வெளி யில்‌ வந்து இந்துமத பரிபாலன சட்டவிஷயம்‌ அரசியல்‌ விஷயமல்ல. அது பிராமணர்‌ - பிராமணரல்லாதார்‌ என்கின்ற வகுப்பு விஷயம்‌. ஆதலால்‌, இதை ஆதரிப்‌ பவர்களோ எதிர்ப்பவர்களோ தனி ஹோதாவில்‌ வகுப்பு முறையில்‌ எதிர்க்கலாமே ஒழிய அரசியல்‌ தத்துவ முறையில்‌ எதிர்க்கக்கூடாது. அப்படி எதிர்த்தால்‌, தான்‌ சுயராஜ்யக்‌ கட்சியையும்‌, காங்கிரஸையும்‌ கூட விட்டு வெளியேற வேண்டு இருக்கும்‌ என்று பார்ப்பனர்‌ திடுக்கிடும்படியும்‌, தான்‌ பார்ப்பனர்‌ அடிமை அல்ல என்பதை மக்கள்‌ உணரும்படியும்‌, இறுதிக்‌ கடிதம்‌ வெளியிட்டார்‌. இதிலிருந்து வேறு எந்தக்‌ காரியங்களுக்குக்கென்றோ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ எந்தக்‌ கட்சியிலிருந்த போதிலும்‌ நாட்டின்‌ நலத்திற்கும்‌, பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்கும்‌, சமத்துவத்திற்கும்‌ ஏற்படும்‌ பிரச்சினைகளில்‌, தனது இரத்தம்‌ பார்ப்பனரல்லாதார்‌ இரத்தம்‌ 2563 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. என்பதையும்‌, தான்‌ பரிசுத்தமான பார்ப்பனரல்லாதார்‌ சந்ததி என்பதையும்‌ தாராளமாய்க்‌ காட்டிக்‌ கொண்டார்‌. இதை உத்தேசித்தே பார்ப்பனரல்லாதார்‌. கட்சியாகிய “ஜஸ்டிஸ்‌ கட்சி” சார்பாய்‌ நின்றிருந்த ஸ்ரீமான்‌ எம்‌. சம்பந்த முதலியார்‌ அவர்களும்‌ ஸ்ரீமான்‌ செட்டியாருக்குப்‌ போட்டியாய்‌ நிற்பதி லிருந்து விலகிக்கொண்டு செட்டியாருக்கு உறுதி கொடுத்து வழியனுப்பி யிருக்கிறார்‌. அக்கட்சியாரும்‌ இனி வேறு யாரையும்‌ செட்டியாருக்குப்‌ போட்டியாய்‌ நிறுத்த மாட்டார்கள்‌ என்றே நினைக்கிறோம்‌. சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனரும்‌ ஸ்ரீமான்‌ செட்டியாருக்கு போட்டியாய்‌ யாரையும்‌ நிறுத்த மாட்டார்கள்‌ என்றே தோன்றுகிறது. ஆனால்‌ சென்னை சட்டசபைக்கு நிற்கும்‌ சுயராஜ்யக்‌ கட்சி கனவான்களில்‌ இரண்‌ டொருவர்‌ தங்களுக்கு சென்னை சட்டசபை ஸ்தானம்‌ கிடைப்பது சந்தேகம்‌ என்று பட்டால்‌ மாத்திரம்‌ கட்சிப்‌ பெயர்களை விட்டு விலகி சுயேச்சை வாதியாக நிற்பார்கள்‌ என்று பலரால்‌ ஊகிக்கப்படுகிறது. ஆன போதிலும்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ இந்த நான்கு ஜில்லாவாசிகளான ஓட்டரிடத்தில்‌ உறுதிவைத்தே, தான்‌ போன சமயம்‌ பார்த்து, தான்‌ இந்நாட்டிலில்லாத அந்த விஷயத்தை உபயோகப்‌ படுத்திக்‌ கொண்டு இந்த ஸ்தானத்திற்கு நிற்பார்க ளேயானால்‌ அவர்களுக்கு டி ஓட்டர்கள்‌ தகுந்த புத்திக்‌ கற்பிப்பார்‌ என்று நம்பி தனது பிரயாணத்தை உறுதிச்‌ செய்துக்‌ கொண்டு புறப்பட்டு விட்டார்‌. ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ ஆஸ்திரேலியாவுக்குப்‌ போய்‌ வருவ தினாலாவது, இந்தியா சட்டசபை ஸ்தானத்திற்குப்‌ போட்டியின்றி தேர்ந்‌ தெடுக்கப்படுவதினாலாவது, தேசத்திற்குப்‌ பிரமாதமான நன்மைஏற்பட்டு விடும்‌ என்றாவது சுயராஜ்யம்‌ கிடைத்துவிடுமென்றாவது நாம்‌ ஒரு சிறிதும்‌ நம்பி செட்டியார்‌ அவர்களை வெற்றி பெற ஆசீர்வதிக்கவில்லை. ஆனால்‌ செட்டியார்‌ போன்றவர்கள்‌ பார்ப்பனரைப்‌ போலவே காங்கிரஸ்‌ பெயரையும்‌, சுயராஜ்யக்‌ கட்சிப்‌ பெயரையும்‌ சொல்லிக்‌ கொண்டாலும்‌ சர்க்கார்‌ பதவிக ளுக்கும்‌, உத்தியோகங்களுக்கும்‌ அதாவது ஜட்ஜிகளாகவோ, சட்ட மெம்பர்‌. களாகவோ, அட்வொகேட்‌ ஜெனரலாகவோ வருவாரானால்‌ பார்ப்பனரல்‌ லாதார்‌ மக்களது சுயமரியாதையை ஒழிக்க தெருவில்‌ நடக்க வேண்டா மென்றும்‌, கோவிலுக்குள்‌ போக வேண்டாமென்றும்‌, சட்டப்படி குற்றமென்‌ றும்‌, வகுப்புத்‌ துவேஷத்தைக்‌ கிளப்பியதால்‌ பிடித்து ஜெயிலில்‌ போடு என்றும்‌ அட்வொகேட்‌ ஜெனரலும்‌ சட்ட மெம்பரும்‌ ஏன்‌ சட்டபடி ஸ்ரீமான்கள்‌ இராமசாமி நாயக்கர்‌ மீதும்‌, ஆரியா மீதும்‌, கனம்‌ மந்திரி யானவர்‌. மீதும்‌ நடவடிக்கை எடுத்துக்‌ கொள்ளவில்லை யென்றும்‌, கேட்கவா வது சுயமரியாதையின்‌ எதிரிகளான நமது பார்ப்பனர்களுக்கு தைரிய மில்லாமலி ருக்கத்‌ தகுந்த அளவுக்காவது பிரயோஜனப்படாதா? என்கிற ஆசையின்‌ பேரிலேயே செட்டியார்‌ போன்ற மனப்பான்மை உள்ளவர்களை நாம்‌ ஆதரிக்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 19.09.1926 குடி அரசு - 1926 (2) 254 தற்கா நிலைமையும்‌ நமது கடமையும்‌ சகோதரி சகோதரர்களே! நான்‌ இந்த ஊில்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ மகாநாடு நடந்த பிறகு இன்று தான்‌ முதல்‌ தடவையாக வந்திருக்கிறேன்‌. இந்தக்‌ காஞ்சீபுரம்‌ நமது சரித்திர புராணக்‌ காலங்களில்‌ எப்படி முக்கியமானதோ அது போலவே தற்கால அரசியல்‌ சமூகவியல்‌ முதலிய இயக்கங்களின்‌ சரித்திரத்திற்கும்‌ முக்கிய மானதாக இருந்து வருகிறது. ஸ்ரீமதி பெசண்டம்மையாரின்‌ ஹோம்‌ ரூல்‌ இயக்கம்‌ தேசத்தில்‌ செல்லுபடியற்றதாக ஏற்படுவதற்கும்‌, பெசண்டம்மை யாரின்‌ அரசியல்‌ வாழ்வில்‌ மாற்றம்‌ ஏற்படவும்‌, இந்தக்‌ காஞ்சீபுரத்தில்‌ ஸ்ரீமதி சரோஜினியம்மாள்‌ அக்கிராசனத்தின்‌ கீழ்க்‌ கூடிய சென்னை மாகாண கான்‌ பரன்சில்தான்‌ அஸ்திவாரம்‌ போடப்பட்டது. அது போலவே காங்கிரஸ்‌ இயக்‌ கம்‌ தேசத்தில்‌ செல்லுபடியற்றதாகவும்‌, சுயராஜ்யக்‌ கட்சிக்கு உளைமாந்தை வரவும்‌, பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சி வெளியாகவும்‌ இந்தக்‌ காஞ்சீபுரத்தில்‌ ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ தலைமையில்‌ கூடிய தமிழ்நாடு மகாநாட்டில்‌ தான்‌ அஸ்திவாரம்‌ போடப்பட்டது. காஞ்சீபுரம்‌ மகாநாட்டிற்கு அப்புறம்‌ தமிழ்நாட்டில்‌ மாத்திரமல்லாமல்‌ இந்தியா தேசத்தி லேயே அரசியலிலும்‌ சமூகயியல்களிலும்‌ பெரிய மாறுதல்களும்‌ ஏற்பட்டி ருப்பது உங்களுக்குத்‌ தெரியாததல்ல. பொதுவாகப்‌ பார்க்கும்‌ போது ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாண சுந்தர முதலியார்‌ அவர்கள்‌ தலைமையின்‌ கீழ்‌ நடந்த மகாநாட்டுச்‌ சம்பவங்கள்‌ நன்மைக்கு ஏற்பட்ட தென்றே தான்‌ சொல்ல வேண்டும்‌. அப்போது நடந்த சம்பவங்கள்‌ அம்மாதிரி நடந்திருக்கவில்லை யானால்‌ நாம்‌ எவ்வளவோ ஏமாந்து போயிருப்போம்‌. அச்சம்பவமே நம்மெல்லோரையும்‌ கண்விழிக்கச்‌ செய்தது. தவிர “தற்கால நிலைமையும்‌ நமது கடமையும்‌” என்பது பார்ப்பன ரல்லாதவர்களின்‌ தற்கால நிலைமை யும்‌, பார்ப்பனரல்லாதார்களாகிய நமது கடமையும்‌ என்பதுதான்‌ இன்றைய விஷயமாதலால்‌, காஞ்சீபுரம்‌ மகாநாட்டிலிருந்தே நமது நிலைமையும்‌ நமது கடமையும்‌ என்ன என்பதை நீங்கள்‌ நன்றாய்‌ அறிந்திருப்பீர்கள்‌. அம்‌ மகாநாட்டில்‌ அம்மாதிரி நடைபெறாமலிருந்தால்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ கட்சி, சுயராஜ்யம்‌, உரிமை ஆகிய வார்த்தைகள்‌ நம்மை ஏமாற்றி நாம்‌ என்றென்றும்‌ தலையெடுக்க முடியாமல்‌, நமது பார்ப்பனர்களால்‌ அழுத்தப்பட்டுக்‌ கிடக்க நேரிட்டிருக்கும்‌. இந்நாட்டின்‌ சுக துக்கத்திற்குப்‌ பொறுப்பானவர்களும்‌, பெரும்பான்மையானவர்களுமான நாம்‌ காங்கிரஸ்‌ பெயரால்‌ நமது 256 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பார்ப்பனர்களாலும்‌ அவர்களது அடிமைப்‌ பிரசாரகர்களாலும்‌ ஏமாந்து, நமது நலனைக்‌ கெடுத்துக்‌ கொள்வதோடல்லாமல்‌, நமது நன்மைக்கு என்று ஏற்பட்டதான பிராமணரல்லாதார்‌ இயக்கமாகிய ஜஸ்டிஸ்‌ கட்சியையும்‌ ஒடுக்கியிருப்பார்கள்‌. தற்கால காங்கிரஸ்‌ நமக்கு எவ்வளவு தூரம்‌ கெடுதி செய்திருக்கிறது என்பதும்‌, அதனால்‌ நமக்கு எந்தக்‌ காலத்திலும்‌ நன்மை இல்லாததோடு நமது சமூகத்திற்கே அது பெரிய ஆபத்தாயிருக்கிற தென்பதும்‌ நான்‌ சொல்லாமலே நீங்கள்‌ எல்லோரும்‌ அறிந்த விஷயம்‌. இந்தக்‌ காங்கிரசின்‌ மூலம்‌ நமக்காவது நமது நாட்டிற்காவது அனுகூலமான திட்டங்‌ கள்‌ ஏதாவது இருக்கின்றனவா? என்பதை நன்றாய்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. பார்ப்பனரல்லாதாரில்‌ சிலர்‌ காங்கிரசில்‌ சேர்ந்ததும்‌, அதற்காக உழைத்ததும்‌, கஷ்டப்பட்டதும்‌, நஷ்டப்பட்டதும்‌, சிறை சென்றதும்‌ எதை உத்தேசித்து என்றால்‌ மகாத்மா திட்டங்களாகிய கதரும்‌, தீண்டாமையும்‌, ஒற்றுமையும்‌, மதுவிலக்கும்‌ மிகுதியும்‌ பார்ப்பன ரல்லாதாராகிய நமது சமூகத்திற்கே நன்மை: விளைவிப்பதும்‌, தரித்திரத்தை ஒழிப்பதும்‌, சுயமரியாதையையும்‌ சமத்துவத்‌ தையும்‌ அளிப்ப தும்‌ ஆன வழிகளுக்கு அனுகூலமாயிருந்ததால்தான்‌ நாம்‌ அதில்‌ முழு மனதோடு இறங்கி உழைத்து வந்தோம்‌. இத்திட்டங்கள்‌. நிறைவேறினால்‌ நமது பார்ப்பனர்கள்‌ வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடு மென்று நினைத்து அவர்கள்‌ இவற்றை காங்கிரசிலிருந்து விலக்கப்‌ பிரயத்தனப்பட்டு அதில்‌ வெற்றியு மடைந்து, இப்போது காங்கிரசையே தங்கள்‌ ஒரு வகுப்புக்கு மாத்திரம்‌ அனுகூலமாக வும்‌ மற்ற வகுப்பாருக்கு ஆபத்து உண்டாக்கத்தக்க மாதிரி யாகவும்‌ அமைத்துக்‌ கொண்டார்கள்‌. இப்போதைய காங்கிரசில்‌ நிர்மாணத்‌ திட்டமே தாவது இருக்கிறதா? என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. கதரை அடியோடு காங்கிரசிலிருந்து ஒழித்து விட்ட தோடு அதை ஒரு கண்ணியக்‌ குறைவாகவும்‌ கருதும்படி செய்து விட்டார்கள்‌. அதாவது, காங்கிரசுக்காரர்கள்‌ ஓட்டுக்‌ கேட்கும்‌ போது மாத்திரம்‌ கதரைக்‌ கட்டிக்கொள்ளவேண்டிய மாதிரியில்‌ தீர்மானம்‌ செய்திருக்கிறார்கள்‌. இதனால்‌ உண்மையிலேயே ஒருவன்‌ கதரிடம்‌ அபிமானம்‌ கொண்டு கட்டி இருந்தா லும்‌, பொது ஜனங்கள்‌ அவனைப்பார்த்தால்‌ சந்தேகிக்கப்படும்படியாகவும்‌ இவன்‌ திருட்டு ஆசாமி பொது ஜனங்களை ஏமாற்றி ஓட்டு வாங்க கதர்‌ கட்டி இருக்கிறான்‌ என்று பொது ஜனங்கள்‌ நினைக்கும்படியும்‌ செய்து விட்டார்கள்‌. இதனால்‌எவ்வித அவமானத்திற்கும்‌ கட்டுப்பட தைரியமிருக்கிறவர்தான்‌ கதர்‌. கட்டிக்கொள்ள முடிகிறது. இதனாலேயே தன்மானத்தில்‌ லக்ஷியமுள்ளவர்‌: கள்‌ கதர்‌ கட்டப்‌ பயப்படுகிறார்கள்‌. தீண்டாமை விஷய மாவது காங்கிரசில்‌ இருக்கிறதா? என்று பாருங்கள்‌.தீண்டாதவர்களையும்‌ நம்மையும்‌ கண்ணில்‌ பார்ப்பதற்கே நமது பார்ப்பனர்கள்‌ சம்மதிப்பதில்லை. இது குருகுல விவாதத்‌ தில்‌ நன்றாய்‌ தெரிந்திருப்பீர்கள்‌. இரண்டாவது, மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம்‌ செய்தவுடன்‌ ஸ்ரீமான்கள்‌ சி.ராஜகோபாலாச்‌ சாரியார்‌, ராஜன்‌, சாஸ்திரி போன்றவர்களே காங்கிரஸ்‌ கமிட்டியினின்றும்‌ ராஜினாமாச்‌ செய்து விட்டார்கள்‌ என்றால்‌ மற்றப்‌ பார்ப்பனர்களைப்‌ பற்றி குடி அரசு - 1926 (2) 256 நினைக்கவும்‌ வேண்டுமா? ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ பேசும்போதெல்லாம்‌ அரசியலில்‌ தீண்டாமையைக்‌ கலக்காதீர்கள்‌ என்று பேசி வருகிறார்‌. ஸ்ரீமான்‌ எம்‌.கே.ஆச்சாரியார்‌ “பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடுவதைப் பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌ ஒரு மாதம்‌ பட்டினி இருப்பேன்‌” என்று சொல்லிக்‌ காங்கிரஸ்‌ கமிட்டியிலிருந்து ஓடிப்போய்‌ விட்டார்‌. இதிலிருந்து காங்கிரசில்‌ தீண்டாமை விலக்கு இருக்கிறதா? என்று பாருங்கள்‌.மதுவிலக்‌ காவது காங்கிர சிலிருக்கிறதா? என்றால்‌ ஸ்ரீமான்‌ சி. ராஜகோபாலாச்சாரியார்‌ பாமர ஜனங்‌ களை ஏமாற்றிப்‌ பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க கருதி மாத்திரம்‌ இவ்‌ வருஷம்‌ “மதுவிலக்குச்‌ செய்ய சம்மதித்தவர்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌” என்றார்‌. ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சட்டசபையில்‌ மதுவிலக்குச்‌ செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்‌. பிறகும்‌ ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌. மதுவிலக்கு என்று சொல்லிக்‌ கொண்டு மது உற்பத்தி செய்பவர்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்கப்‌ பிரசாரம்‌ செய்தார்‌. இப்பவும்‌ காங்கிரசிலுள்ள தலைவர்‌. களில்‌ 100-க்கு 90 பேர்களில்‌ மது உற்பத்தி செய்கிறவர்கள்‌ சிலரும்‌, விற்பவர்கள்‌ சிலரும்‌, அருந்துபவர்கள்‌ சிலரு மாகவே இருக்கிறார்கள்‌. இன்றும்‌ நாளையும்‌ காங்கிரஸ்‌ காரியதரிசியான ஸ்ரீமான்‌ எ.ரெங்கசாமி அய்யங்கார்‌ சாராயம்‌, பிராந்தி விற்பனையில்‌ பணம்‌ சம்பாதித்துக்‌ கொண்டு. தான்‌ வருகிறார்‌. இன்னமும்‌ சில சுயராஜ்யப்‌ பார்ப்பனர்‌ கள்ளுக்கு மரம்‌ விட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌. ஒற்றுமைக்காகவா வது ஏதாவது திட்டம்‌ காங்கிர சில்‌ இருக்கிறதா என்றால்‌ அதுவும்‌ ஒன்றுமில்லை. காங்கிரசிலிருந்து ஸ்ரீமான்கள்‌ இராமசாமி நாயக்கர்‌, வரதராஜுலு, கலியாண சுந்தர முதலியார்‌, ஆரியா, சக்கரை, தண்டபாணி பிள்ளை முதலிய பார்ப்பனரல்லாதார்கள்‌. போய்‌ விட்ட தால்‌ காங்கிரஸ்‌ பரிசுத்தமாய்‌ விட்டது என்கிறார்கள்‌ நமது பார்ப்பனர்கள்‌. அல்லாமலும்‌ ஸ்ரீமான்கள்‌ ஆரியாவை யும்‌ ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும்‌ ஜெயிலில்‌ பிடித்துப்‌ போட வேண்டு மென்று கவர்னரையும்‌ பார்ப்பன அதிகாரிகளையும்‌ கெஞ்சுகிறார்கள்‌; விண்ணப்பமும்‌ போட்டிருக்‌ கிறார்கள்‌ நமது பார்ப்பனத்‌ தலைவர்கள்‌. இந்து முஸ்லீம்‌ ஒற்றுமையாவது இருக்கிறதா என்று பார்த்தால்‌ மகமதியர்களுக்கு சுயராஜ்யம்‌ கொடுக்கக்‌ கூடாது என்று காங்கிரசின்‌ பேராலேயே இந்தியா சட்டசபையில்‌ ஆக்ஷேபித்‌ துச்‌ சர்க்காரோடு சேர்ந்து ஓட்டு கொடுத்திருக்‌ கிறார்கள்‌. ஒருவரை யொருவர்‌ சந்தேகிக்காமலிருக்கவும்‌, ஒருவரை ஒருவர்‌ மோசம்‌ செய்யாமலிருக்கவும்‌, எல்லோரும்‌ சம உரிமை அடையவும்‌ தக்க பந்தோபஸ்தான வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டுமென்றால்‌, அதைப்பற்றி காங்கிரசுக்குள்ளாகவே பேசக்‌ கூடாது என்று பார்ப்பனரல்லா தாரைக்‌ கொண்டே சொல்லி விட்டார்‌. கள்‌. ஆனால்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷி ஏற்பட்ட போது அதைக்‌ கொல்ல எண்ணி பார்ப்பனரல்லாதாரான ஸ்ரீமான்கள்‌ நாயுடு, முதலியார்‌ இவர்களை வசப்படுத்‌ திக்‌ கொண்டு “தேசீய பார்ப்பனரல்லாதார்‌ சங்கம்‌” என்பதாக ஒன்றை ஏற்படுத்தச்‌ செய்து அதன்‌ மூலம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தையும்‌ கேட்டுவிட்டுப்‌ பார்ப்பனரல்லாதாருக்குள்‌ கட்சி ஏற்பட்டதும்‌, இப்போது 257 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பார்ப்பனரல்லாதா ருக்கே பணங்‌ கொடுத்து அதை எதிர்க்கச்‌ சொல்லுவதோடு. தாங்களும்‌ அநேக சூழ்ச்சி செய்து வருகிறார்கள்‌. ஆகிய இக்‌ காரணங்களால்‌ காங்கிரசில்‌ தேசத்துக்கு அநுகூலமான திட்டம்‌ ஏதாவது கொஞ்சமாவது இருக்கிறதா? என்று நீங்கள்‌ நன்றாய்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்‌ களுக்கு ஆதிக்கம்‌ வரவும்‌, உத்தியோகம்‌ வரவும்‌, பார்ப்பனரல்லாதார்‌. தாழ்த்தப்படவும்‌, உத்தியோகங்களிலிருந்து விலக்கப்‌ படவும்‌ நாம்‌ காங்கிரசில்‌ சேர வேண்டுமா? காங்கிரஸ்‌ தேசத்திற்கு அது கூலமாக இருந்தால்‌ மகாத்மா காந்தியும்‌ லாலா லஜபதிராயும்‌ ஏன்‌ காங்கிர சுக்கு உழைக்காமல்‌ ஒதுங்கி இருக்கிறார்கள்‌. ஸ்ரீமான்கள்‌ நாயுடு, முதலியார்‌, ஆரியா, தண்டபாணி பிள்ளை. முதலியவர்களும்‌ ஒதுங்கியிருப்பதோடு என்‌ போன்றவர்கள்‌ இந்த மாதிரி காங்கிரசுக்கு எதிர்ப்‌ பிரசாரமும்‌ ஏன்‌ செய்கிறோம்‌? இவற்றை நன்றாய்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்கள்‌ உங்களை ஏமாற்றவே காங்கிரஸ்‌ என்ற ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள்‌. “சம உரிமையும்‌, வகுப்புச்சுதந்திரமும்‌, சுயமரியாதையும்‌ இல்லாத நாட்டிற்கு (காங்கிரஸ்‌ போன்று அரசியல்‌ இயக்கம்‌. இருப்பது அறிவுடைமை ஆகாது. அதை ஒழிக்க வேண்டியது அறிவுடை யோர்‌ கடமை” என்ற பொருள்‌ பட “காங்கிரஸ்‌ காங்கிரஸ்‌” என்று கதறிக்‌ கொண்‌ டிருந்த ஸ்ரீமான்‌ கலியாண சுந்தர முதலியாரே எழுதியிருக்கிறார்‌. இனிமேல்‌, தான்‌ அரசியலில்‌ (காங்கிர சில்‌ உழைப்பதில்லை என்றும்‌, மக்கள்‌ சமத்துவத்திற்குழைப்பதாகவும்‌ விரதம்‌ எடுத்துக்‌ கொண்டிருக்கிறார்‌. இதுவரை அரசியலுக்குழைத்ததற்காகத்‌ தனது அறியாமையின்‌ பொருட்டு என்னைப்‌ போலவே விசனப்பட்டும்‌ இருக்கிறார்‌. ஆதலால்‌ சகோதரர்களே! பார்ப்பனருக்காவது அவர்களால்‌ நிறுத்தப்பட்ட நமது கோடரிக்‌ காம்பு களுக்காவது வரும்‌ தேர்தல்களில்‌ நீங்கள்‌ கண்டிப்பாய்‌ ஓட்டுச்‌ செய்யாதீர்கள்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ மூலம்‌ நிர்மாணத்‌ திட்டத்தை நடத்தவே நான்‌ பாடுபடு. கிறேன்‌. பார்ப்பனரின்‌ எதிர்ப்பும்‌ சூழ்ச்சியும்‌ அடக்கப்பட்டு விட்டால்‌ கண்டிப்‌ பாய்‌ நிர்மாணத்‌ திட்டத்தை ஜஸ்டிஸ்‌ கட்சி மூலம்‌ நிறைவேற்றலாம்‌. நிர்மாணத்‌. திட்டம்தான்‌ முக்கியமாய்‌ பார்ப்பனரல்லாதாருக்கு விடுதலை அழிப்பது. எவ்விதத்திலும்‌ பார்ப்பனர்கள்‌ நிர்மாணத்‌ திட்டத்திற்கு அநுகூலமாயிருக்க. மாட்டார்கள்‌. அதோடு அதை பார்ப்பனரல்லாதார்‌ நடத்த வும்‌ பார்ப்பன ஆதிக்கம்‌ இடம்‌ கொடுக்க மாட்டாது. ஆதலால்‌ பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு உதவி செய்யுங்கள்‌. அடுத்த தேர்தலில்‌ நீங்கள்‌. உங்கள்‌ முன்னேற்றத்திற்கும்‌, சுயமரியாதைக்கும்‌ மாத்திரமே ஓட்டுக்‌ கொடுங்கள்‌. கண்டிப்பாய்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ கட்சி என்கிற மாய வலை யில்‌ சிக்கி ஏமாந்து போகாதீர்கள்‌ என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்‌ கிறேன்‌. குறிப்பு : 20.09.1926 இல்‌ காஞ்சீபுரத்தில்‌ நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்‌ சொற்பொழிவு, குடி அரசு - சொற்பொழிவு - 26.09.1926 குடி அரசு - 1926 (2) 258 கோயமுத்தூர்‌ வில்லா சட்டசபைத்‌ கேர்தல்‌ நிலைமை கோயமுத்தூர்‌ ஜில்லாவில்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்கு ஏற்பட்ட 3 ஸ்தா னங்களுக்கு இதுவரை ஐந்து கனவான்கள்‌ நிற்கிறார்கள்‌. அவர்கள்‌ ஸ்ரீமான்‌ சி.எஸ்‌.ரத்தினசபாபதி முதலியார்‌, வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌, டி.எ. ராமலிங்கம்‌ செட்டியார்‌, சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார்‌, பட்டக்காரர்‌ வேணாவுடையாக்‌ கவுண்டர்‌ ஆகிய ஐந்து கனவான்கள்‌. இவர்களுள்‌ ஸ்ரீமான்கள்‌ வெங்கிட்டரமணய்யங்கார்‌, ராமலிங்கம்‌ செட்டியார்‌, வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ ஆகிய மூவரும்‌ இதற்கு முன்‌ இரண்டு தடவை 6 வருஷம்‌ சட்டசபையிலிருந்து அப்பதவியையும்‌ பெருமையையும்‌ அனு பவித்து வந்தவர்கள்‌. இவர்கள்‌ இதுவரை என்ன செய்தார்கள்‌ என்பதைப்‌ பற்றி நமக்கு அதிகக்‌ கவலையில்லை. ஏனெனில்‌ சட்டசபையில்‌ அரசியல்‌ சம்பந்தமாய்‌ ஒரு காரியமும்‌ செய்ய முடியாது என்பது நமது தாழ்மையான தும்‌ உறுதியானதுமான அபிப்பிராயம்‌. ஆனால்‌ அதன்‌ மூலம்‌ தங்கள்‌ தங்கள்‌. சமூகத்தின்‌ சுயமரியாதைக்கு ஏதாவது உழைக்க அதை உபயோகப்‌ படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்பதோடு அப்பதவி ஒரு கெளரவமும்‌ அந்தஸ்து முள்ள ஸ்தானம்‌ என்றே தான்‌ சொல்ல வேண்டும்‌. இந்த நிலையில்‌ இந்த பழைய மெம்பர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ சமூக நன்மைக்கு ஏதாவது உழைத்து வந்திருக்‌ கிறார்களா என்பதும்‌ இக்கெளரவ அந்தஸ்தை அடைய இற்‌ ஜில்லாவிலேயே இவர்களேதான்‌ நிரந்தரமான யோக்கியதையுடைய வர்களா? அல்லது வேறு யாரும்‌ இல்லையா? என்பதும்‌ யோசிக்கத்‌ தக்கன. ஸ்ரீமான்‌ ஐயங்காரவர்கள்‌ கூடுமானவரை தனது சமூகமான பார்ப்பனர்‌ சமூகத்தின்‌ முன்னேற்றத்திற்கும்‌, ஆதிக்கத்திற்கும்‌ மிகுதியும்‌ உழைத்து வந்ததோடு, பார்ப்பனரல்லாத சமூக முன்னேற்றத்திற்கும்‌, அக்கட்சி கொள்கைக்கும்‌, அச்‌ சமூகத்தார்‌ உத்தியோகம்‌ முதலியன பெறுவதற்‌ கும்‌ எவ்வளவு முட்டுக்கட்டை போட வேண்டுமோ அவ்வளவும்‌ போட்டு வந்தவர்‌. உதாரணமாக, தேவஸ்தான சட்ட விஷயத்‌ திலும்‌ வகுப்புவாரி பிரதி நிதித்துவ விஷயத்திலும்‌ எதிரிடையாய்‌ இருந்து வந்ததோடு பார்ப்பன ரல்லாத மந்திரிகளிடம்‌ தனக்கு வேண்டிய காரியங்கள்‌. செய்துகொண்டு, பல கமிட்டிகளிடம்‌ ஜில்லா போர்டிலும்‌ மெம்பர்‌ ஸ்தானமும்‌ பெற்றுக்‌ கொண்டு அரசாங்க நிருவாகத்தில்‌ பார்ப்பனரல்லாதார்‌ ஆதிக்கத்தை ஒழித்துப்‌ பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த எவ்வளவோ சூழ்ச்சியும்‌ 259 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. செய்து மந்திரிகள்‌ பேரில்‌ நம்பிக்கையில்லை என்கிற தீர்மானமும்‌ கொண்டு வந்த வர்‌. மற்ற இரு கனவான்களான ஸ்ரீமான்கள்‌ செட்டியார்‌, கவுண்டர்‌ ஆகிய இருவர்களும்‌ தேவஸ்தான சட்டத்திலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவத்திலும்‌ பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாயிருந்தாலும்‌ ஸ்ரீமான்‌ செட்டியாரவர்கள்‌ உத்தியோக விஷயமாய்‌ மந்திரிகளோடு அபிப்பிராய பேதப்பட்ட காரணத்தால்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியாகிய ஜஸ்டிஸ்‌ கட்சி யையே அழிக்க முயற்சி செய்ததோடு ஸ்ரீமான்‌ கவுண்டர்‌ அவர்களையும்‌ வசப்படுத்திக்‌ கொண்டு, பார்ப்பனரல்லாத மந்திரிகள்‌ பேரில்‌ நம்பிக்கை யில்லாத தீர்மானத்திற்கு உடந்தையாயிருந்து மந்திரிகளுக்கு விரோதமாய்‌ ஓட்டு செய்து கொண்டு வந்தவர்‌. ஸ்ரீமான்‌ கவுண்டர்‌ அவர்களோ தனக்கென சுயேச்சை யில்லாது அரசியலிலும்‌ சமுதாயயியலிலும்‌ ஸ்ரீமான்‌ செட்டியார வர்களையே கண்‌ மூடிக்‌ கொண்டு பின்பற்றி வந்தவர்‌ - வருகிறவர்‌ என்றே சொல்லலாம்‌. இதற்கு ரஜு என்னவென்றால்‌ செட்டியாருடன்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியிலிருந்து வெளி வந்ததுடன்‌ அவரோடு நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு ஓட்டு கொடுத்‌ ததும்‌, ஸ்ரீமான்‌ செட்டியாரோடு தஞ்சை தேசீய பிராமணரல்லாத மகாநாட்டுக்‌ கொள்கைகளை ஒப்புக்கொண்டதும்‌, சட்ட சபையை விட்டு வெளிவந்ததாக சுயராஜ்யக்‌ கட்சியார்‌ ஆடிய பொய்‌ நாடகத்தில்‌ செட்டியாருடன்‌ தானும்‌ கலந்து கொண்டதும்‌, சுயராஜ்யக்‌ கட்சியார்‌ தலைமையில்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்கு ஸ்ரீமான்‌ செட்டியாருடன்‌ தானும்‌ நின்றதும்‌, சுயராஜ்யக்‌ கட்சியார்‌ நிபந்தனையில்‌ செட்டியாரோடு தானும்‌ கையெழுத்திட்டதுடன்‌ சுயராஜ்யக்‌ கட்சியிலிருந்து விலகி விட்டதாக ஸ்ரீமான்‌ செட்டியாரவர்கள்‌ எழுதிய ஒரு பரிகசிக்கத்‌ தகுந்த அர்த்த மில்லாத கடிதத்தில்‌ தானும்‌ கையெழுத்‌ திட்டதும்‌ ஆகிய காரியங்களே போதிய சான்றாகும்‌. அரசியல்‌ விஷயங்களில்‌ ஸ்ரீமான்‌ கவுண்டரவர்கள்‌ இப்படியிருந்‌ தாலும்‌ பொதுவாய்‌ சமூக முன்னேற்றத்தில்‌ குற்றம்‌ சொல்வ தற்கு இடமில்லாம லேயே கூடியவரை நடந்து வந்திருக்கிறார்கள்‌ என்பதை யாரும்‌ ஒப்புக்கொள்‌ வார்கள்‌. கதர்‌ விஷயத்தில்‌ ஸ்ரீமான்‌ செட்டியாரவர்களுக்கு சுத்த சுத்தமாய்‌ நம்பிக்கை யில்லாவிட்டாலும்‌ ஸ்ரீமான்‌ ஐயங்காரவர்கள்‌ வெளிக்குத்‌ தெரிய எலக்ஷன்‌ வரையில்‌ கதர்‌ கட்டுவதானாலும்‌ ஸ்ரீமான்‌ கவுண்டரவர்கள்‌ கதரின்‌ உண்மைத்‌ தத்துவத்தை அறிந்து மனப்பூர்வமாய்‌ அதை ஆதரித்து அனுப வத்திலும்‌ நடத்தி வருகிறவர்‌. மதுவிலக்கு விஷயத்தில்‌ மற்றவர்களைப்‌ போல பொய்‌ நாடகம்‌ நடிக்காமல்‌ உண்மையிலேயே பாடுபடுவதுடன்‌ தனது மரங்க ளைக்‌ கள்ளுக்கு விடாமல்‌ இருக்கிறார்‌. ஸ்ரீமான்‌ சி.எஸ்‌. இரத்தின சபாபதி முதலியார்‌ அவர்களோ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியிலும்‌ அவர்களது முன்னேற்றத்திலும்‌ தீவிரமானதும்‌ மாறுபாடில்லாததுமான மன உறுதி உடையவர்‌; சென்ற சட்ட சபைத்‌ தேர்தலில்‌ நின்று பலவிதமாய்‌ ஓட்டுப்‌ பிரிந்ததால்‌ வெற்றியடையாமல்‌ போனவர்‌; ஜில்லா போர்டு தலைவராய்‌ தெரிந்தெடுக்கப்பட்டிருப்பவர்‌: இதுவரையில்‌ அப்‌ பதவியை அடையாத புதியவர்‌ சட்டசபையில்‌ பெருத்த அரசியல்‌ கொள்கையைப்‌ பற்றியோ பெரிய குடி அரசு - 1926 (2) 260 உத்தியோகங்களை அடைய வேண்டு மென்பதைப்‌ பற்றியோ முறையே நம்பிக்கையும்‌ ஆசையும்‌ இல்லாதவர்‌. பட்டக்காரர்‌ ஸ்ரீமான்‌ வேணாவுடை யாக்‌ கவுண்டர்‌ அவர்களைப்‌ பற்றியோவென்றால்‌ இத்தொகுதியின்‌ ஓட்டர்‌. களின்‌ பெரும்‌ பகுதியான வகுப்பைச்‌ சேர்ந்தவர்‌: இதுவரையிலும்‌ அப்‌ பதவியை அடையா தவர்‌; பெரிய சமூகமாகிய நம்‌ நாட்டு வேளாள சமூகத்‌ தலைவர்‌; சுயராஜ்யக்‌ கட்சியின்‌ பேரால்‌ நிற்பதாக தெரியப்படுத்தப்பட்டவர்‌; ஸ்ரீமான்‌ ஐயங்காரு டன்‌ சேர்ந்து வேலை செய்பவர்‌: ஐயங்காருக்கு முதல்‌ ஓட்டு போட்டு பிறகு தனக்கு ஓட்டுப்‌ போடும்படி கேட்பவர்‌; ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ தன்னை உபயோகப்படுத்திக்‌ கொள்வதையும்‌ அனுமதித்துக்‌ கொண்டிருப்பவர்‌. சட்டசபைக்கு வர வேண்டும்‌ என்கிற இஷ்டமுடையவ ரானாலும்‌ மற்ற நான்கு கனவான்‌ களைப்போல்‌ அவ்வளவு ஆசையும்‌ ஆத்திரமும்‌ கவலையுமுள்ளவரல்ல. பொது ஜனங்கள்‌ நம்மை தேர்ந்தெடுத்‌ தனுப்பினால்‌ சந்தோஷம்‌, இல்லாவிட்டால்‌ ஓட்டர்களின்‌ இஷ்டம்‌ என்று சொல்லுபவரே அல்லாமல்‌ பணம்‌ செலவு செய்தோ, தந்திரங்கள்‌ செய்தோ, கட்சி உண்டாக்கியோ, ஆளைத்‌ தூக்கி ஆள்மேல்‌ போட்டோ, வேறு ஆட்‌ களை உபயோகித்து கட்சி, பிரதி கட்சிகளை உபயோகப்படுத்திக்கொண்டோ சட்டசபைக்‌ குப்‌ போக வேண்டும்‌ என்கிற தீவிர கவலையுடையவர்‌ அல்ல. இப்படியெல்லாம்‌ இருந்தாலும்‌ இந்த 5 கனவான்கள்‌ நிற்பதில்‌ யாராவது மூன்று பேருக்குத்தான்‌ சட்டசபை ஸ்தானம்‌ கிடைக்கக்கூடும்‌. 2 கனவான்‌ களுக்கு தோல்வி நிச்சயம்‌. இப்போதிருக்கும்‌ நிலையில்‌ அது யாராயிருக்‌ கலாம்‌ என்று ஞான திருஷ்டியில்‌ பார்ப்போமானால்‌ நமது நாட்டின்‌ உண்மை பிரதிநிதிகளான குடியானவர்‌ களுக்குத்‌ தான்‌ தோல்வி ஏற்படக்கூடும்‌ என்று சொல்லுவதற்கு நாம்‌ மிகுதியும்‌ வருத்தப்படுவதோடு, இதற்காக அவ்விரு கனவான்களையும்‌ நம்மை மன்னிக்கும்படி வேண்டுகிறோம்‌. ஏன்‌ இப்படிச்‌ சொல்லுகிறோம்‌ என்றால்‌ இந்த ஜில்லா ஓட்டர்‌ தொகுதிப்படி ஓட்டர்கள்‌ மொத்தம்‌ 70000 பேரா யிருந்தாலும்‌ நாற்பத்தி ஐயாயிரம்‌ பேருக்கு மேலாக வேளாளக்‌ கவுண்டர்‌ களாகவே இருந்தும்‌ அவர்களுக்குள்‌ சமூகக்‌ கவலை என்பதே ஒரு சிறிதும்‌ இல்லை. ஒற்றுமையும்‌ கட்டுப்பாடும்‌ இல்லை. பெரிய பெரிய மிராசுதாரர்களான கவுண்டர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர்‌ பொறாமையும்‌ அசூயையும்‌ இருப்பதோடு தங்களுக்கு வேண்டாதபோது சமூகக்‌ கட்டுப்‌ பாடாவது அபிமானமாவது மதிக்கப்படாமலும்‌ தங்களுக்கு வேண்டிய போது சமூகப்‌ பேரையும்‌ கட்டுப்பாட்டையும்‌ சொல்லிக்‌ கொண்டு வருவதுமாய்‌ இருப்பதால்‌ அச்சமூகத்தில்‌ இதுவரை உண்மையான கட்டுப்‌ பாடு வளர்வ தற்கு இடம்‌ இல்லாமல்‌ போய்விட்டது. நாம்‌ விசாரித்து அறிந்த வரையில்‌ வேளாளக்‌ கவுண்டர்‌ கனவான்களே இப்போது நிற்கிற கனவான்‌ களிடம்‌ கொஞ்சமாவது பற்றுகள்‌ இருப்பதாக காட்டிக்‌ கொள்வதே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்‌ ஒரு உள்பாக கிராமத்திற்கு போய்‌ இருந்தபோது அங்கேயே ஒரு யோக்கியமான வேளாளக்‌ கனவானைக்‌ கண்டு பேசிக்‌ கொண்டு இருக்கையில்‌ வேடிக்கையாக வரப்போகும்‌ சட்டசபைத்‌ தேர்தலில்‌ 261 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தாங்கள்‌ யாருக்கு ஓட்டுச்‌ செய்யப்‌ போகிறீர்கள்‌ என்று கேட்டதில்‌ உடனே மறுமொழியாக ஒரு ஓட்டு ஐயங்காருக்குப்‌ போடுவோம்‌. பாக்கி உள்ள இரண்டு ஓட்டுகள்‌ நீங்கள்‌ சொல்லுகிறபடி போடுவோம்‌ என்றார்கள்‌. மற்ற அந்த இரண்டு ஓட்டுக்கும்‌ உங்களுக்கு கொஞ்சமாவது குறிப்பு இல்லையா என்று நாம்‌ கேட்டதற்கு அவர்‌ ஒன்று முதலியாருக்கு போடலாம்‌ என்று இருக்கிறோம்‌. மீதியுள்ளதை செட்டியாருக்கு போட்டால்‌ போகுது என்று அசார்சமாய்‌ சொன்னார்கள்‌. ஸ்ரீமான்‌ ஐயங்காரைப்‌ பற்றி மாத்திரம்‌ உங்க ளுக்கு என்ன அவ்வளவு கவலை என்று கேட்டோம்‌. அதற்கு உடனே பதிலாக ஐயங்கார்‌ இதோடு இரண்டு மூன்று முறை நம்மை பார்த்தார்‌. “உலக சேவை” என்கிற பத்திரிகை ஒன்று அனுப்பி வருகிறார்‌. இம்மாதிரி நம்மைத்‌ தேடி வந்து கேழ்ப்பவர்களை விட்டு விட்டு பின்னை யாருக்கு ஓட்டு செய்வது என்று கேட்டார்‌. ஸ்ரீமான்கள்‌ பட்டக்காரரும்‌, கவுண்டரும்‌ உங்கள்‌ இனத்தாரல்‌ லவா? அவர்கள்‌ உங்களை நம்பித்தானே நின்று இருக்கிறார்கள்‌. நீங்கள்‌ அவர்களைப்‌ பற்றியே நினைக்காமல்‌ வேறு யார்‌ யார்‌ பெயரையோ சொல்லு கிறீர்களே என்று நாம்‌ கேழ்க்க, அவர்கள்‌ நம்ம இனத்தார்‌ அல்ல. ஒருவர்‌ பட்டக்காரர்‌ ஜாதியைச்‌ சேர்ந்தவர்‌ மற்றவர்‌ கவுண்டர்‌ ஜாதியைச்‌ சேர்ந்தவர்‌. நாங்கள்‌ காட்டுக்‌ குடியானவர்கள்‌ ஜாதியைச்‌ சேர்ந்தவர்கள்‌ என்றும்‌ தனக்கு இவர்கள்‌ பெயரில்‌ அருவருப்பு இருப்பது போல்‌ சொன்னார்‌. ஏனையா இப்படிச்‌ சொல்லுகிறீர்கள்‌; அவர்களும்‌ வேளாளர்‌ கள்தானே என்று கேழ்க்க, ஓட்டுக்‌ கேட்கும்‌ போது மாத்திரம்‌ எல்லாம்‌ ஒரு ஜாதி என்று சொன்னால்‌ போதுமா? பட்டக்காரர்கள்‌ என்பவர்கள்‌ நாங்கள்‌ தொட்ட சொம்பை கவிழ்த்து தான்‌ வைக்க வேண்டும்‌. அதன்‌ பேரில்‌ தண்ணீர்‌. தெளித்துதான்‌ எடுப்பார்கள்‌. அவர்கள்‌ சாப்பிடுவதை நாங்கள்‌ பார்க்கக்‌ கூடாது. எங்கள்‌ வீட்டில்‌ அவர்கள்‌ ஜலபானம்‌ கூட செய்ய மாட்டார்கள்‌. நாங்கள்‌ அவர்களை பட்டக்காரர்‌ எசமாங்கோ என்று கூப்பிட மாத்திரம்‌ ஆசைப்படுகிறார்களே யொழிய எங்களுடைய சுக துக்கங்களில்‌ அவர்‌. களுக்கு கொஞ்சமும்‌ கவலை இல்லை. எங்களுக்காக அவர்கள்‌ ஒரு வேலையும்‌ செய்வதில்லை என்று சொன்னார்‌. பிறகுகவுண்டர்‌ அவர்களைப்‌ பற்றி ஏன்‌ அலக்ஷியமாகப்‌ பேசுகிறீர்கள்‌ என்று கேழ்க்க, அவரும்‌ அப்படித்‌ தான்‌ எங்களிடம்‌ வந்து ஓட்டு கேழ்ப்பதையே அவமானமாகக்‌ கருதுபவர்‌; தங்களை ஒரு தனி சமூகம்‌ என்று நினைத்துக்‌ கொண்டு இருப்பவர்‌; சர்க்காரில்‌ பெரிய உத்தியோகத்தில்‌ இருக்கிற வீட்டார்‌ போல்‌ அதிகாரத்‌ தோரணையுடன்‌ நடந்து கொள்ளுகிறவர்கள்‌ அல்லாமலும்‌ வேளாளர்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு சகல கவுரவங்களும்‌ தங்கள்‌ குடும்பத்திற்கே வேண்டும்‌ என்று சொல்லுகிறவர்கள்‌. உதாரணமாக, பெரிய கவுண்டர்‌. சட்டசபை மெம்பர்‌, அதற்கிளையவர்‌ தாலூக்காபோர்டு பிரசி டெண்ட்‌, அதற்கிளையவர்‌ ஜில்லா போர்டு வைஸ்‌ பிரசிடெண்ட்‌ (இது நிஜமல்ல, அவர்கள்‌ சொந்தக்காரர்கள்‌ என்று சொன்னோம்‌! இவ்வளவும்‌ இருக்க ஜில்லா போர்டு பிரசிடெண்டும்‌ தன்‌ தம்பிக்கே வேண்டுமாம்‌. இரண்டு தடவை ஆறு குடி அரசு - 1926 (2) 262 வருஷம்‌ சட்டசபை மெம்பராய்‌ இருந்துவிட்டு மறுபடியும்‌ தானே சட்டசபைக்குப்‌ போக வேண்டுமாம்‌. என்ன ஆசை? மற்ற வெள்ளாளர்‌ யாராவது இந்த உத்தியோகங்கள்‌ பார்க்கக்‌ கூடாதா? இவர்களேதானா வேளாளர்‌ கூட்டத்திலேயே யோக்கியதை உள்ளவர்கள்‌ என்று சொன்னார்‌. நான்‌ இதுகளைக்‌ கேட்டதும்‌ மிகுதியும்‌ வருத்தமுற்று இம்மாதிரி வகுப்புகள்‌ எப்படி முன்னுக்கு வரும்‌ என்றும்‌ இந்த ஒரு வகுப்பாரை நம்பித்தானே சர்க்கார்‌ முதல்‌ எல்லா ஜனங்களும்‌ பிழைக்கிறார்கள்‌. இப்படி இருக்க இவர்களுக்கும்‌ இப்படி அபிப்பி ராயபேதமிருக்கிறதே என்று வருத்தப்பட்டு. மற்ற மூவர்கள்‌ எந்த விதத்தில்‌ இருவர்களைவிட உயர்ந்தவர்கள்‌ என்று கேழ்க்க,மற்றவர்களாவது இரண்டு கோணை எழுத்து (இங்கிலீஷ்‌! படித்திருக்‌. கிறார்கள்‌. ஏதோ ஒரு சங்கதிப்‌ போல்‌ நேராகச்‌ சொல்லிக்‌ கொள்ளலாம்‌. சட்டசபைக்கு நிற்கும்‌ பட்டக்காரர்‌ வீட்டுக்கும்‌ கவுண்டர்‌ வீட்டுக்கும்‌ போனால்‌ பந்தக்‌ காலைக்‌ கட்டிக்‌ கொண்டுதானே நிற்க வேண்டும்‌ என்று சொன்னார்கள்‌. இதைக்‌ கேட்டவுடன்‌ இங்கிலீஷ்‌ படிப்புக்கும்‌ குடியான வர்கள்‌ நன்மைக்கும்‌ ஒரு சம்மந்தமும்‌ இல்லை என்றும்‌ இம்மாதிரி நீங்கள்‌. நினைப்பதே உங்கள்‌ சமூகத்திற்கே கெடுதி என்றே சொன்னதோடு குடியான கனவான்களையே தெரிந்தெடுக்க வேண்டிய அவசியத்தையும்‌ அவர்கள்‌. எந்த விதத்திலும்‌ மற்ற மூவர்‌ களுக்கு இளைத்தவர்கள்‌ அல்லவென்றும்‌ தக்கப்படி சொல்லி கூடிய வரை அவரின்‌ மனதைத்‌ திருப்பிவிட்டு நாம்‌ போன காரியத்தையும்‌ பார்த்து விட்டுத்‌ திரும்பி வந்து விட்டோம்‌. இந்த ஜில்லா சட்டசபைக்குக்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பனரல்லாதாராகவும்‌ அதுவும்‌ மூன்று பேரும்‌ குடியானவர்களாகவுமே போக வேண்டுமென்பதே நமது உண்மை யான ஆசை. அந்த நிலைமை நமக்கு வருகிறவரை சட்டசபைகள்‌ என்பது நமக்கு ஆபத்தான கெட்ட சபைகள்‌ என்றே சொல்லுவோம்‌. ஒரு தேசத்தின்‌ நன்மை அந்த தேசத்துக்‌ குடியானவர்கள்‌ நன்மையைத்தான்‌ பிரதானமாகக்‌ கொண்டதே அல்லாமல்‌ வக்கீல்களுக்கும்‌ லேவாதேவிக்காரருக்கும்‌ சம்மந்தமே இல்லை. அல்லாமலும்‌ நாட்டின்‌ ஆதிக்கம்‌ பார்ப்பனர்‌ கையில்‌ வருவது அந்த நாட்டிற்கே கேடாகும்‌. உதாரணமாக, சுமார்‌ 2000 வருஷங்‌ களுக்கு முன்னாலேயே ஒளவை பிராட்டியார்‌ மந்திரித்‌ தன்மை யாரிடம்‌ இருக்க வேண்டும்‌ என்று ஒரு அரசன்‌ கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்‌ “துலாலே நாடு கெடும்‌, நுந்தமரால்‌ வெஞ்சமராம்‌, கோ லால்‌ குடிய னைத்தும்‌ கொள்ளைப்போம்‌ - நாலாவான்‌ மந்திரியுமாவான்‌ வழிக்குத்‌ துணையாவான்‌” என்று ஒரு பாட்டுப்‌ பாடி இருக்கிறார்‌. அது ஒளவையார்‌ புராணத்திலும்‌ தனிப்பாடல்‌ திரட்டிலும்‌ இருக்கிறது. அதன்‌ பொருள்‌ என்னவென்றால்‌ நூலை அணிந்தவர்களாகிய பார்ப்பனர்‌ கையில்‌ அதிகாரம்‌. இருந்தால்‌ அந்த நாடு கெட்டுப்போகும்‌ என்றும்‌ அதற்கடுத்த அரசர்களிடம்‌ அதிகாரம்‌ இருந்தால்‌ தேசத்தில்‌ கலகம்‌ நடைபெறும்‌ என்றும்‌ தராசு கோலுடைய வணிகர்கள்‌ இடங்களில்‌ அதிகாரம்‌ வந்தால்‌ செல்வத்தைக்‌ கொள்ளையடித்து சேர்ப்பதிலேயே கவலையாயிருப்பார்கள்‌ என்றும்‌ 263 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. நாலாவான்‌ என்று சொல்லப்பட்ட வேளாளர்கள்தான்‌ மந்திரி பதவி முதல்‌ கொண்டு நம்பிக்கைக்கும்‌ உரியவர்கள்‌ என்றும்‌ பொருள்‌ கொண்ட பாட்டை பாடி இருக்கிறார்‌. அல்லாமலும்‌ 45000 வேளாள ஓட்டர்கள்‌ தொகுதி கொண்ட வகுப்பார்‌ அந்தத்‌ தொகுதிக்கு தங்கள்‌ வகுப்பிலிருந்து ஒரு பிரதிநிதி அனுப்ப முடியாமல்‌ 5000 ஓட்டர்‌ தொகுதி கொண்ட ஒரு பார்ப்பனர்‌ 100 - க்கு 97 பேர்‌ கொண்ட ஜனத்தொகுதிக்கு பாக்கி 65 ஆயிரம்‌ ஓட்டர்களை ஏமாற்றி பிரதிநிதியாய்‌ வரச்‌ செய்வதென்றால்‌ இதைவிட அந்தத்‌ தொகுதிக்‌ கும்‌ அந்த நாட்டுக்கும்‌ மானக்கேடான காரியம்‌ வேறு எதுவும்‌ இல்லை. சட்டசபை ஸ்தானத்தைப்‌ பொருத்தவரை அந்தப்‌ பதவியை அனுபவிப்‌ பதற்கோ தங்கள்‌ சமூகத்தின்‌ முன்னேற்றத்தை கவனிப்பதற்கோ மற்றவர்‌. களைவிட இவ்விரு கவுண்டர்‌ கனவான்களும்‌ ஒரு விதத்திலும்‌ தாழ்ந்த வர்கள்‌ அல்ல என்று நாம்‌ பந்தயம்‌ கூறுவோம்‌. கவுண்டர்கள்‌ இருவரும்‌ இப்பொழுதும்‌ ஒற்றுமையோடு வேலை செய்யப்‌ பிரயத்தனப்பட்டால்‌ கிராமக்‌ குடியானவர்களின்‌ தப்பபிப்பிராயத்தை மாற்றி வெற்றி பெறக்‌ கூடும்‌ என்றே நினைக்கிறோம்‌. கோவை ஜில்லா போர்டு தலைவர்‌ தேர்தல்‌ நடக்கும்‌ வரை: கவுண்டர்‌, செட்டியார்‌, முதலியார்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ வேளாளர்‌. களான மூன்று பார்ப்பனரல்லாதார்களே இவ்வருஷம்‌ வெற்றிப்‌ பெறக்‌ கூடிய நிலைமை நமது ஜில்லாவில்‌ ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமை உண்டாக்கு வதற்கு நாமும்‌ எவ்வளவோ பங்கெடுத்துக்‌ கொண்டோம்‌. அப்படி இருக்க இப்போது எப்படியோ அந்த நிலைமை மாறிவிட்டது. இப்போதும்‌ தக்க முயற்சி எடுத்துக்‌ கொண்டால்‌ இரு கவுண்டர்‌ கனவான்களில்‌ யாராவது ஒருவராவது வெற்றி பெறச்‌ செளகரியமிருக்கிறதென்றே சொல்லுவோம்‌. அதாவது இரண்டு கனவான்களில்‌ யாராவது ஒருவர்‌ மற்ற கவுண்டர்‌. கனவானுக்காகப்‌ பின்வாங்கிக்‌ கொள்ளவேண்டும்‌. இதில்‌ பட்டக்காரக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ வாங்கிக்‌ கொள்வதே அதிக அனுகூலம்‌. நாம்‌ இப்படிச்‌ சொல்வதால்‌, ஸ்ரீமான்‌ பட்டக்காரர்‌ வேணாவுடையக்‌ கவுண்டர்‌ சட்டசபைக்கு வரக்கூடாதென்றா வது அவரைவிட ஸ்ரீமான்‌ வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ உயர்ந்தவர்கள்‌ என்றாவது நாம்‌ சொல்வதாக யாரும்‌ நினைக்கக்‌ கூடாது என்று கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. பட்டக்காரக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ அதிக காலதாமதமான பிறகு வந்திருக்கிறார்கள்‌ என்பதும்‌ தனக்குள்ளாகவே மற்றவர்களைப்‌ போல்‌ அவ்வளவு தீவிரமான பிரசாரம்‌ செய்வதற்கு யோசித்‌ துக்‌ கொண்டிருக்கிறார்‌ என்றே கேள்விப்படுகிறோம்‌. மற்றபடி சட்டசபைப்‌ பெருமையையும்‌ பதவியையும்‌ அடைய ஸ்ரீமான்‌ கவுண்டர்‌ அவர்களைவிட பட்டக்காரர்‌ அவர்கள்‌ உரிமை உள்ளவர்கள்‌ என்று தான்‌ சொல்லுகிறோம்‌. பாக்கி இருக்கும்‌ பார்ப்பனரல்லாத கனவான்கள்‌ மூவரும்‌ ஸ்ரீமான்‌ பழையக்‌ கோட்டை பட்டக்காரர்‌ அவர்களும்‌ மற்றும்‌ பல பிரபலஸ்தர்களும்‌ ஒரு அறிக்கையில்‌ கையொப்பமிட வேண்டும்‌. எலக்ஷனுக்கு என்று ஒரு பிரசாரக்‌ கமிட்டி ஏற்பாடு செய்து அதன்‌ மூலம்‌ ஒற்றுமை யாய்‌ தந்திர மந்திரமில்லாமல்‌ வெளிப்படையாய்‌ பிரசாரம்‌ செய்ய வேண்டும்‌. இம்மாதிரி ஒரு ஏற்பாடும்‌ குடி அரசு - 1926 (2) 264 இல்லாமல்‌ யார்‌ பின்வாங்கிக்‌ கொண்டாலும்‌ பிரயோஜனப்‌ படாது என்றே சொல்லுவோம்‌. இப்படிக்கு செய்ய முடியா விட்டால்‌ ஸ்ரீமான்‌ வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ அவர்களாவது தயவு செய்து கொஞ்சம்‌ கவலை வைத்துத்தான்‌ தனியாய்‌ ஓட்டர்களை எல்லாம்‌ ஒரு தடவை நேரில்‌ போய்ப்‌ பார்க்க முயற்சி செய்ய வேண்டும்‌. இப்போது ஸ்ரீமான்‌ வெங்கிட்ட ரமணய்யங்கார்‌ அவர்களுக்கு இருக்கும்‌ சட்டசபை யோக்கியதை கள்‌ எல்லாம்‌ ஒவ்வொரு கிராமத்தையும்‌ இரண்டு தரம்‌, மூன்று தரம்‌ போய்ப்‌ பார்த்துதான்‌ முக்கியமாய்‌ ஏற்பட்டன. அவர்‌ பணம்‌ செலவு செய்கிறார்‌ என்பதைப்‌ பற்றிக்கூட அவ்வளவு நாம்‌ கவலைப்பட வேண்டியதில்லை யாதலால்‌ ஸ்ரீமான்‌ வி.சி.வி. கவுண்டர்‌ அவர்களும்‌ தயவுசெய்து எல்லா கிராமத்தையும்‌ ஒரு தடவையாவது பார்த்து வரவேண்டும்‌ என்று மறுபடியும்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.அனாவசியமாக சில யோக்கியமான குடியானவர்க ளுக்குள்‌ இருந்து வரும்‌ தப்பபிப்பிராயத்தை மாற்ற பிரயத்தனப்பட வேண்டி யது அதைவிட முக்கியமானதாகும்‌. நமது ஜில்லாவுக்கு சுயமரியா தையும்‌, பகுத்தறிவும்‌ இருப்பது மெய்ப்பிக்க வேண்டுமானால்‌ ஸ்ரீமான்‌ வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ உள்பட மூன்று பார்ப்பனரல்லாத கனவான்‌ களே வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்‌. இச்ஜில்லாவின்‌ ஓட்டர்‌ களுக்கு ஓட்டின்‌ உமையை எடுத்துச்‌ சொல்லி அவர்களை உண்மையான ஓட்டருக்கு தகுதி உடையவர்களாக்கி வைத்திருக்க வேண்டியது ஸ்ரீமான்‌ கவுண்டரின்‌ கடமையாய்‌ இருக்கிறது. அக்‌ கடமையை அவர்‌ சரியாய்‌ செய்யாத குற்றத்திற்காக கவுண்டர்‌ தோல்வி அடைந்தால்‌ அது ஆச்சரியமா காது. ஆனால்‌ அச்‌ சமூகத்திற்கே மானக்கேடாகும்‌. ஆதலால்‌ இச்ஜில்லா பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ சுயநலத்தையும்‌, ஒருவரை: ஒருவர்‌ மோசஞ்‌ செய்ய நினைத்திருப்பதையும்‌, ஒருவர்‌ பேரில்‌ ஒருவர்‌ புறங்கூறிக்‌ கொண்டு திரிவதையும்‌, ஒருவரை ஒருவர்‌ நம்பாமல்‌ மோசம்‌ போவதையும்‌ விட்டு விட்டு உண்மையாய்‌ ஒன்றுபட்டு பிரசாரம்‌ செய்தால்‌ வெற்றி பெறலாம்‌ என்றும்‌ இப்பொழுதும்‌ அதிக காலதாமதமாகி விடவில்லை என்றும்‌ விண்ணப்பம்‌ செய்து கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 26.09.1926. 265 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தமிழ்நாட்டுத்‌ தனைவர்கள்‌ காஞ்சீபுரம்‌ மஹாநாட்டில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளையாவதற்கு தமிழ்நாட்டுத்‌ தலைவர்கள்‌ என்று சொல்லப்படும்‌ ஸ்ரீமான்கள்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ அவர்களும்‌ டாக்டர்‌ வரத ராஜுலு நாயுடு அவர்களும்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு இருந்தார்கள்‌ என்று நாம்‌ அப்போது எழுதியிருந்தோம்‌. பிறகு எப்படியோ நாட்டின்‌ நல்ல காலத்தின்‌ பலனாய்‌ இவ்விருவர்களும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரை பிரிந்த தல்லாமல்‌, அவர்‌ தலைமை வகிக்கும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியிலும்‌ தாங்கள்‌ இருப்பது சரியல்ல என்று கருதி ஏதோ சாக்கைச்‌ சொல்லிக்‌ கொண்டு வெளியே வந்து விட்டார்கள்‌. இவ்விரு கனவான்களும்‌ தைரியமாய்‌ வெளி வந்த காரணம்‌ மறுபடியும்‌ தங்களில்‌ யாரும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காருடன்‌ போய்‌ சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர்‌ காட்டிக்‌ கொடுக்க நினைக்க மாட்டார்கள்‌ என்கிற பரஸ்பர நம்பிக்கைதான்‌ அய்யங்காரின்‌ “பூளவாக்‌ கையும்‌”, “அரசியல்‌ யோக்கியதையும்‌” தைரியமாய்‌ வெளியிட இடம்‌ கொடுத்தது என்பதை நாம்‌ சொல்லத்‌ தேவையில்லை. அதற்கு உதாரணம்‌, ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ தனதுபத்திரிகையில்‌ “உரிமையில்லா நாட்டில்‌ அரசியல்‌ கட்சிகள்‌ வளர்ப்பது நாட்டைக்‌ குழியில்‌ வீழ்த்துவதாக முடியும்‌” என்றும்‌ “தற்கால கல்வியுடையோர்‌ என்று சொல்லப்படுவோர்‌ சாதி வேற்றுமைகளைக்‌ கிளப்பி விடுவதில்‌ கண்ணுங்‌ கருத்துமாயிருக்‌ கிறார்கள்‌” என்றும்‌ எழுதியிருப்பதே போதுமானது . இதன்‌ பொருள்‌ என்ன? நமது நாட்டில்‌ அரசியல்‌ கட்சிகள்‌ என்பது காங்கிரஸ்‌ முதலிய கட்சி கள்தான்‌. இதுகளை: வளர்ப்பது நாட்டை படுகுழியில்‌ வீழ்த்துமென்றால்‌ காங்கிரசை வளர: விட்டால்‌ நாடு நாசமடையும்‌ என்பதுதானே பொருள்‌. ஆதலால்‌ காங்கிரசை ஒழிக்க வேண்டியது ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌ போன்றவர்‌ களின்‌ கடமை என்பதில்‌ சந்தேகமில்லை. தற்காலக்‌ கல்வி யுடையோர்‌ ஜாதி வேற்றுமையை வளர்த்துகிறார்கள்‌ என்றால்‌ தற்கால கல்வி என்பது ஆங்கிலம்‌. என்பதையும்‌ அதைப்‌ படித்தவர்கள்‌ என்பது நமது நாட்டில்‌ பெரும்‌ பாலும்‌ பார்ப்பனர்கள்தான்‌ என்பதையும்‌ ஒருவரும்‌ ஆக்ஷேபிக்க மாட்டார்‌ கள்‌. இன்னமும்‌ எவ்வளவோ விளக்கமாய்‌ தற்கால அரசியல்‌ நிலைமையைப்‌ பற்றியும்‌ பார்ப்பனர்‌ சூழ்ச்சியைப்‌ பற்றியும்‌ எழுதியும்‌ பேசியும்‌ வந்த ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களுக்கு இப்போது ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ ஸ்ரீமான்கள்‌ ராமசாமி நாயக்கரையும்‌ ஆரியா வையும்‌ ஜெயிலில்‌ வைக்க வேண்டுமென்று. குடி அரசு - 1926 (2) 266 சொன்ன பிறகும்‌ ஸ்ரீமான்கள்‌ நாயக்கர்‌, நாயுடு.சக்கரை, ஆரியா முதலிய வர்கள்‌ காங்கிரசை விட்டுப்‌ போய்‌ விட்டதினால்‌ காங்கிரஸ்‌ பரிசுத்தமாய்ப்‌ போய்‌ விட்டது என்று சொன்ன பிறகும்‌ நாட்டைக்‌ கெடுக்கும்‌ அரசியலும்‌ படித்த வகுப்பாராகிய அய்யங்‌ காரும்‌ முறையே உத்தமமானதும்‌ பரிசுத்த மானது மாகப்‌ போய்‌ இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்ற பழைய பல்லவியும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வகுப்பு வேற்றுமையை வளர்க்‌ கிறது என்கிற பல்லவியும்‌ பாட ஆரம்பித்து விட்டார்‌. இதோடு நில்லாமல்‌ “அய்யங்காரின்‌ அட்ட காசம்‌” என்கிற தலைப்பின்‌ கீழ்‌ “தமிழ்நாடு” அய்யங்காரின்‌ நடத்தையைக்‌ கண்டித்த பின்பு நமது ஸ்ரீமான்‌ முதலியார்‌. அவர்கள்‌ அய்யங்காருடன்‌ கொஞ்சிக்‌ குலாவ வேண்டிய அவசியமும்‌, அய்யங்காருக்கு வரப்போகும்‌ தேர்தலில்‌ தொழிலாளர்கள்‌ ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க வேண்டிய அவசிய மும்‌ வந்து விட்டது என்றால்‌ இதைப்பற்றி நாம்‌ என்ன சொல்வது. ஸ்ரீமான்‌ அய்யங்காருக்கு நமது தொழிலாளரை அறிமுகம்‌ செய்து வைத்து அய்யங்கார்‌ தொழிலாளருக்கு பாடுபடுவார்‌ என்று சொல்லி தொழிலாளரின்‌ ஓட்டுகளை அய்யங்காருக்கு வாங்கிக்‌ கொடுத்து ஸ்ரீமான்‌ சக்கரை செட்டியாரை தோற்கடிக்க வைப்பதில்‌ ஸ்ரீமான்‌ முதலியாருக்கு வரும்‌ லாபமென்ன? என்றுதான்‌ நாம்‌ கேட்கிறோம்‌. இதன்‌ ரகசியம்‌ நமக்கு விளங்க வில்லை. அதுவும்‌ அல்லாமல்‌ தன்னுடைய நண்பர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ ஸ்ரீமான்‌ நாயுடுகார்‌ அய்யங்காருடன்‌ யுத்தம்‌ ஆரம்பித்திருக்‌ கும்‌ போதும்‌ நாயக்கரை ஜெயிலில்‌ வைக்க அய்யங்கார்‌ பிரயத்தனப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ போதும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ அய்யங்கார்‌ பின்னால்‌ திரிவதென்றால்‌ எவ்வளவு பொறுமை யுள்ளவனுக்கும்‌ மனம்‌ பதருமா இல்லையா? இது வெண்ணெய்‌ திரண்டு வரும்போது சட்டியை உடைப்பது போலில்லையா? இதை எழுதும்‌ போது நமக்கு மிகுதியும்‌ சங்கடமாகத்தான்‌ இருந்தது. என்ன செய்யலாம்‌? ஸ்ரீமான்‌ முதலியாரது இம்மாதிரி எழுத்தும்‌ பேச்சும்‌ செய்கையும்‌ நமது பொறுமையையும்‌ சகிப்புத்‌ தன்மையையும்‌ வென்று விட்டதற்கு ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களை நம்மை மன்னிக்கும்படி வேண்டுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 26.09.1926 267 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. இந்துமத பாரிபாணை மசோதாளவும்‌ யார்ப்பணர்கள்‌ சூழ்ச்சியும்‌ யனகால்‌ நாகாவுக்கே Ges! தென்னாட்டுப்‌ பார்ப்பனர்களின்‌ எவ்வளவோ சூழ்ச்சிக்கும்‌ தப்பி இந்துமத பரிபாலன மசோதா என்று சொல்லப்படும்‌ தேவஸ்தான மசோதா சட்டசபையில்‌ சட்டமாக நிறைவேறி விட்டது. தேவஸ்தான சட்டம்‌ சட்ட சபைக்கு வந்தவுடன்‌ பலர்‌ அதை முட்டித்‌ தள்ளிவிட என்ன என்னமோ சூழ்ச்சிகள்‌ செய்து பார்த்தும்‌ சுமார்‌ 500 திருத்தப்‌ பிரேரேபணைகளைக்‌ கொண்டு வந்து தங்களால்‌ ஆனவரையில்‌ அதை ஒழிக்கப்‌ பார்த்தார்கள்‌. கடைசியாகப்‌ பொது ஜனங்களின்‌ அதிகப்‌ படியான பிரதிநிதிகளும்‌ சர்க்காரும்‌ இவைகளுக்குக்‌ கொஞ்சமும்‌ மனந்‌ தளராமல்‌ ஒரே உறுதியாய்‌ இருந்து சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள்‌.திருத்தப்‌ பிரேரேபணைகளின்‌ யோக்கியதைகளைச்‌ சரியாய்‌ கவனித்து வந்தவர்களுக்கும்‌ சட்ட சம்மந்த மாய்‌ கிளப்பப்‌ பட்டஆகே்ஷ்பணைகளை சரியாய்‌ கவனித்து வந்தவர்களுக்‌ கும்‌, இச்சட்டத்தை ஆக்ஷேபித்தவர்கள்‌ கருத்து என்ன என்பது விளங்கா மல்‌ போகாது. இதில்‌ பொதுமக்கள்‌ கவனத்தைக்‌ கவரத்தக்க ஒரு திருத்தப்‌ பிரேரே பணையைப்‌ பற்றி இதில்‌ பிரஸ்தாபிப்போம்‌. அதாவது எல்லா கோவில்களிலும்‌ பஞ்சமர்கள்‌ என்றும்‌ ஒடுக்கப்பட்டவர்கள்‌ என்றும்‌ சொல்லப்படும்‌ வகுப்பாரும்‌ கோவில்களுக்குள்‌ சென்று சுவாமி தரிசனம்‌ செய்ய உரிமை இருக்கத்தக்க வண்ணம்‌ ஒரு திருத்தப்‌ பிரேரேபணையைக்‌ கொண்டுவறந்தார்கள்‌. இந்த திருத்தப்‌ பிரேரேபணை யானது தாழ்ந்த வகுப்பார்‌. என்பவர்கள்‌ தெருவில்கூட நடக்கக்கூடாது என்று வாதாடும்‌ கூட்டத்தாராகிய பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியாலேயே இரண்டு வித உத்தேசத்‌ துடன்‌ கொண்டு வரப்பட்டது. அதாவது, அதை ஒப்புக்‌ கொண்டாலும்‌ கஷ்டம்‌, ஒப்புக்‌ கொள்ளா விட்டாலும்‌ கஷ்டம்‌ என்கிற “இரட்டை வெட்டில்‌” ஜஸ்டிஸ்‌ ககஷியாரைக்‌ கொண்டுவந்து சங்கட நிலையில்‌ நிறுத்தச்‌ செய்த குயுக்தியான தந்திரமாகும்‌. எப்படியெனில்‌ அதை ஒப்புக்‌ கொண்‌ டால்‌ அச்சட்டத்தையே நிறைவேறாமல்‌ செய்ய நமது பார்ப்பனர்களுக்கு சவுகரியமேற்பட்டுவிடும்‌. முதலாவது, இச்சட்டத்தை சட்டசபைக்கு மறுபடியும்‌ கொண்டு வரவேண்டி யிருந்த அவசியமென்னவென்றால்‌ அதில்‌ சில சட்ட சம்பந்தமான குறைகள்‌ குடி அரசு - 1926 (2) 268 இருந்து விட்டதுதான்‌. அக்‌ குற்றங்களை நிவர்த்தி செய்து அமுலுக்குக்‌ கொண்டு வருவதற்காக மறுபடியும்‌ சில சிறு திருத்தங்களோடு சட்டசபை மூலமாய்‌ நிறைவேற்றி இந்தியா கவர்ன்மெண்ட்டுக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. இச்சட்டத்தை மறுபடியும்‌ சட்டசபைக்கு கொண்டுவர வைசிராய்‌ பிரவுவிடம்‌ பனகால்‌ அரசர்‌ அனுமதி கேட்கச்‌ சென்ற இரண்டு மாதத்திற்கு முன்‌ டில்லி போயிருந்தபோது நமது பார்ப்பனர்கள்‌ இங்கிருந்து சில மடாதிபதிகள்‌ பேரால்‌ பல தந்திகளும்‌ மகஜர்களும்‌ அனுப்பி சட்டத்தில்‌ அதிக திருத்தம்‌ செய்யப்‌ போகிறார்கள்‌ என்றும்‌, இதனால்‌ மதம்‌ கெட்டுப்‌ போய்விடும்‌ என்றும்‌, பெரிய கலகம்‌ ஏற்படும்‌ என்றும்‌ மிரட்டினார்‌ கள்‌.இதை. நம்பி வைசிராய்‌ பிரபு பனகால்‌ அரசருக்கு சில குறிப்பிட்ட நிபந்தனையின்‌ மேல்‌ மறுபடியும்‌ திருத்த மசோதா கொண்டு வர அனுமதி கொடுத்தார்‌. இது நமது பார்ப்பனர்களுக்கு நன்றாய்‌ தெரியும்‌. ஆதலால்‌ சட்டத்தில்‌ ஏதாவது பிரமாதமான திருத்தங்கள்‌ செய்து அதை மந்திரி ஒப்புக்‌ கொண்டால்‌ இதை. ஆதாரமாய்‌ வைத்துக்‌ கொண்டு வைசிராய்‌ பிரபுவிடம்‌ போய்‌ பழக்கத்திற்கு விரோதம்‌, வழக்கத்திற்கு விரோதம்‌, சாஸ்திரத்திற்கு விரோதம்‌, வேதத்திற்கு விரோதம்‌, மதத்திற்கு விரோதமென்று மாரடித்து அவர்‌ அனுமதி கிடைக்க விடாமல்‌ செய்து அதை செல்லுபடியற்ற தாக்கி சட்டத்தையே ஒழித்து விடலாம்‌ என்கிற கெட்ட எண்ணத்தின்‌ பேரிலும்‌, ஒரு சமயம்‌ இதை மந்திரி ஒப்புக்‌கொள்ளாவிட்டால்‌ தாழ்ந்த வகுப்பார்‌ என்கிறவர்களைத்‌ தூக்கி விட்டு அவர்களிடம்‌ போய்‌ நாங்கள்‌ உங்களை கோவிலுக்குள்‌ விட அனு மதிக்கும்‌ படியான சட்டம்‌ செய்யத்‌ திருத்தம்‌ கொண்டு வந்தோம்‌; அதை உங்கள்‌. ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்தானே தோற்கடித்து விட்டார்கள்‌; இதிலிருந்து தாழ்ந்த வகுப்பாருக்கு நாங்கள்‌ உதவியாயிருக்கிறோமா? ஜஸ்டிஸ்‌ sl யார்‌. உதவியாயிருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்ளுங்களென்று சொல்லி, ஜஸ்டிஸ்‌ ககஷியார்‌ பேரில்‌ தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்குத்‌ துவே ஷத்தை. உண்டாக்கி விடலாம்‌ என்கிற கெட்ட எண்ணத்தின்‌ பேரிலும்‌ இத்‌ திருத்தத்தை. கொண்டு வந்தார்கள்‌. இதை லக்ஷியம்‌ செய்யாமல்‌ மந்திரி கட்சியார்‌. தைரியமாய்‌ எதிர்த்துத்‌ தோற்கடிக்கச்‌ செய்தது அவர்களின்‌ புத்தி சாலித்‌ தனத்தைக்‌ காட்டுகிறது. ஏனெனில்‌ தாழ்த்தப்பட்ட வகுப்பாரின்‌ நிஷ்டூரம்‌ வருமே என்பதாகப்‌ பயந்து திருத்தத்தை ஒப்புக்‌ கொண்டிருப்‌ பார்களே யானால்‌ கண்டிப்பாய்‌ வைசிராய்‌ பிரபு சட்டத்தையே நிராகரித்‌ திருப்பார்‌. அப்படி நிராகரிக்கப்பட்டு அமுலுக்கு வரமுடியாத சட்டத்தில்‌ எந்த பிரேரே பணையை சேர்த்தால்‌ தான்‌ என்ன பிரயோஜனம்‌? ஆதலால்‌ ஏதாவது ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதற்கு எல்லா அனுமதியும்‌ பெற்று அது முதலில்‌ அமுலுக்கு வரும்படி செய்து கொண்டால்‌ பிறகு தனித்‌ தனியாய்‌ இவ்விதத்‌ திருத்தம்‌ கொண்டு வருவதில்‌ யாருக்கு ஆகூஷ்பணை இருக்கிறது என்று பார்த்தால்‌ அப்பொழுது தான்‌ இந்தப்‌ பார்ப்பனரின்‌ தாராள குணமும்‌ அவர்கள்‌ சிஷ்யர்களின்‌ தாராள குணமும்‌ நன்றாய்த்‌ தெரியும்‌. இதைப்‌ பற்றி நாம்‌ ஸ்ரீமான்‌ ஆர்‌.வீரய்யன்‌ அவர்களைக்‌ கண்டு பேசியதில்‌ அவர்கள்‌. 269 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 இப்பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சியை நன்றாய்‌ அறிந்திருப்பதாகவே தெரிய வந்தது. அவர்‌ சொன்ன தென்ன வென்றால்‌ “இச்‌ சட்டத்திற்கு வைசிராய்‌ பிரபு சம்மதம்‌ கொடுக்காமல்‌ நிராகரித்து விடுவதற்கு ஆதாரம்‌ வேண்டு மென்றே இத்‌ திருத்தம்‌ கொண்டு வந்தார்கள்‌ என்றே எனக்குத்‌ தோன்றிற்று. இதுபாசாகி இருந்தால்‌ கண்டிப்பாய்‌ இந்த சட்டம்‌ முழுதுமே நிராகரிக்கப்பட்டு அடிப்‌ பட்டுப்போகும்‌” என்பதும்‌ எனக்குப்‌ பட்டது என்று சொன்னார்‌. அப்படியானால்‌ தாங்களும்‌ ஏன்‌ இதை ஆதரித்தீர்கள்‌ என்று கேட்டதில்‌ “நான்‌ ஆதரித்திராவிடில்‌ இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ எனக்கும்‌ என்‌ சமூகத்தா ருக்கும்‌ கோவில்‌ பிரவேசம்‌ கிடைப்பதில்‌ சம்மதம்‌ இல்லை என்று கட்டி விட்டு, பின்னால்‌ சமயம்‌ வரும்போது நானும்‌ கோவில்‌ பிரவேசத்தை எதிர்த்தவன்‌ என்கிற ரிக்கார்டு செய்து கொள்வார்கள்‌. ஆதலால்‌ தான்‌ நான்‌ ஆதரித்தே னேயொழிய வேறல்ல” என்ற பொருள்‌ படச்‌ சொன்னார்‌. உண்மையில்‌ இப்பார்ப்பனர்கள்‌ தாழ்த்தப்பட்டவர்களைக்‌ கோவிலுக்குள்‌. செல்லவோ சம உரிமை கொடுக்கவோ இஷ்டப்பட்டு அத்தீர்‌ மானம்‌ கொண்டு வந்திருப்பார்களேயானால்‌ இப்பொழுதும்‌ ஒன்னும்‌ முழுகிப்‌ போய்‌ விட வில்லை, சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ என்கிற பார்ப்பனர்‌ “நாங்கள்‌ தெரிந்தெ. டுக்கப்‌ பட்டால்‌ தாழ்ந்த வகுப்பார்‌ என்று சொல்லப்‌ படுகிற இந்துக்கள்‌. எல்லோரையும்‌ சென்னை மாகாணத்தில்‌ பொதுவாயுள்ள எல்லா கோவில்‌ களுக்குள்ளும்‌ பிரவேசிப்பதைத்‌ தடுப்பவர்களுக்கு 6 மாதம்‌ தண்டனையும்‌ 1000 ரூபாய்‌ அபராதமும்‌ போடப்படும்‌” என்று இந்தியன்‌ பீனல்‌ கோடில்‌ ஒரு திருத்தமும்‌ தேவஸ்தான சட்டத்தில்‌ ஒரு திருத்தமும்‌ கொண்டு வருகிறோம்‌. என்று எழுதி விளம்பரப்படுத்தட்டுமே பார்ப்போம்‌. இப்படி செய்வார்களா னால்‌ எலெக்‌ஷனில்‌ இவர்கள்‌ வெற்றி பெற எல்லோரும்‌ முயற்சி செய்யலாம்‌. அதில்லாமல்‌ உள்ள சட்டத்தையும்‌ கூடப்‌ போடுவதற்காக தந்திரம்‌ செய்து கொண்டு நீலிக்‌ கண்ணீர்‌ விட்டால்‌, ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ இதற்கு ஏமாந்து விடத்தக்க அவ்வளவு பைத்தியக்காரா என்றுதான்‌ நாம்‌ கேழ்க்கிறோம்‌. பொதுவாக செல்வாக்குள்ள பத்திரிகைகள்‌ எல்லாம்‌ பார்ப்பனர்கள்‌ கையில்‌ இருப்பதால்‌ அவர்கள்‌ தங்கள்‌ பத்திரிகை யில்‌ இந்தப்‌ பித்தலாட்டங்களை வெளிப்படுத்தாமல்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி யாரிடம்‌ பொதுஜனங்களுக்கு வெறுப்பும்‌ துவேஷமும்‌ உண்டாகும்படி தாறு மாறாக உண்மைக்கு விரோதமாய்‌ எழுதி வந்ததின்‌ பலனாய்‌ பாமர ஜனங்கள்‌ ஏமாந்து விட்டார்கள்‌ என்றே சொல்லு வோம்‌. இவ்விஷயத்தைப்‌ பற்றி சில தாழ்த்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தும்‌. நாடார்‌ வகுப்பாரிடமிருந்தும்‌ பார்ப்‌ பனரல்லாத கட்சியார்‌ பேரில்‌ குறைகூறி பல கடிதங்கள்‌ வந்து கொண்டி ருக்கின்றன. அதற்காகவே இதை எழுது கிறோம்‌. இம்மாதிரி பார்ப்பனர்களால்‌ கட்டி விட்டுக்‌ கொண்டிருக்கும்‌ விஷமங்களுக்கு எவ்வளவுதான்‌ பதில்‌ சொல்லிக்‌ கொண்டிருக்க முடியும்‌. பார்ப்பனப்‌ பத்திரிகைகளே தமிழ்நாட்டில்‌ பெரும்பாலும்‌ செல்வாக்குப்‌ பெற்று உலவி வருவதாலும்‌ பார்ப்பனரல்லாத பத்திரிகைகள்‌ பெரும்பாலும்‌ குடி அரசு - 1926 (2) 270 இதைப்‌ பற்றி ஒரு சிறிதும்‌ கவலைப்படாமல்‌ வயிற்றுப்‌ பிழைப்பையோ போலித்‌ தலை மைப்‌ பதவியையோ தாக்ஷண்ணியத்தையோ நோக்கமாகக்‌ கொண்டு நடந்து வருவதால்‌ உண்மை அறிய முடியாமல்‌ போகிறது. பார்ப்பனப்‌ பத்திரிகை களை நம்பி ஏமாந்து போய்‌ தங்கள்‌ சமூகத்திற்கு குழி வெட்டிக்‌ கொள்ளா திருக்குமாறும்‌ பார்ப்பனருக்கும்‌ அவரது சிஷ்யர்களுக்‌ கும்‌ ஓட்டுச்‌ செய்யாதிருக்குமாறும்‌ எச்சரிக்கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 26.09.1926 271 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 செண்ணை வாசிகனோே எண்ண வசய்யப்‌ போகிறிர்கன்‌ 2 “சித்திரபுத்திரன்‌ ஈரோடு ராமசாமி நாயக்கர்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்திர முதலியார்‌, ஆரியா, சக்கரை செட்டியார்‌ , தண்டபாணி பிள்ளை, பாஞ்சால சிங்கம்‌ லாலா லஜபதிராய்‌, பம்பாய்‌ புலி ஜயகர்‌ ஆகிய பார்ப்பனரல்லாத காங்கிரஸ்‌ தியாகிகளை யெல்லாம்‌ காங்கிரசை விட்டுப்‌ போகும்படி துரத்திவிட்டு இவர்கள்‌ எல்லாம்‌ காங்கிரசை விட்டுப்‌ போய்‌ விட்டதால்‌ காங்கிரஸ்‌ பரிசுத்தமாய்‌ போய்விட்டதென்று சொன்னவரும்‌ இன்னமும்‌ வக்கீல்‌ தொழிலில்‌ மாதம்‌ 10,000 சம்பாதித்துக்‌ கொண்டு இருப்ப வரும்‌, நேற்று காங்கிரசில்‌ வந்து சேர்ந்தவருமான ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்‌ யங்கார்‌ என்கிற பார்ப்பனருக்கு ஓட்டுக்‌ கொடுக்கப்‌ போகிறீர்களா? அல்லது பி.ஏ.பி.எல்‌., 20 வருஷத்திற்கு முன்‌ படித்திருந்தும்‌ நாளது வரை வக்கீல்‌ உத்தியோகத்திற்கு போகாதவரும்‌ பள்ளியில்‌ படிக்கும்போதுமுதலே தேசத்திற்காகப்‌ பேசி, தேச பக்தராயிருந்த பார்ப்பனரல்லாதூர்‌ நன்மையின்‌ பொருட்டு லண்டனுக்குப்‌ போனவருமான ஸ்ரீமான்‌ வி. சக்கரை செட்டியார்‌. என்கிற பார்ப்பனரல்லா தாருக்கு ஓட்டுச்‌ செய்கிறீர்களா? தேசத்திற்காக 5 வருஷ காலம்‌ ஜெயிலுக்குப்‌ போன ஸ்ரீமான்‌ ஆரியா வையும்‌, பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்காக மூன்று முறை ஐயிலுக்குப்‌ போன ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும்‌ ஜயிலில்‌ போட வேண்டுமென்று பார்ப்பன அட்வொகேட்‌ ஜெனரலையும்‌ பார்ப்பன சட்ட மெம்பரையும்‌ கெஞ்சும்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌ என்னும்‌ பார்ப்பனருக்கு ஓட்டுப்‌ போடப்‌ போகிறீர்களா? அல்லது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான்‌ சக்கரைச்‌ செட்டி யாருக்கு ஓட்டுப்‌ போடப்‌ போகிறீர்களா? பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும்‌, பார்ப்பனரல்லாதார்‌ ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார்‌ இப்பொழுது பார்த்து வரும்‌ உத்தியோகங்களையெல்லாம்‌ பிடுங்கி பார்ப்பனர்‌. கையில்‌ கொடுத்து விட்டு பார்ப்பனரல்லாதார்‌ சூத்திரர்‌, பார்ப்பன ரின்‌ வைப்பாட்டி மக்கள்‌ என்னும்‌ கொள்கையை நிலைநிறுத்தப்‌ பாடுபடும்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌ என்னும்‌ பார்ப்பனருக்கு ஓட்டுப்‌ போடப்‌ போகிறீர்களா? அல்லது பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்கும்‌, மனுசத்‌ குடி அரசு - 1926 (2) 272 தன்மைக்கும்‌, தேச விடுதலைக்கும்‌ உழைக்கும்‌ ஸ்ரீமான்‌ வி. சக்கரை செட்டியாரான பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப்போடப்‌ போகிறீர்களா? இதில்தான்‌ உங்கள்‌ மூளையின்‌ தத்துவம்‌ விளங்கப்‌ போகிறது. குடி அரசு - கட்டுரை - 26.09.1926. 272 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 யணகால்‌ நாகாவின்‌ உனறலா? யார்ப்மணர்கணிண்‌ யபோக்கிரித்தணமா? (மித்திரணின்‌ விஷமம்‌ ) தென்‌ ஆப்ரிக்காவில்‌ இருந்து வந்த தூதர்களுக்கு சென்னை மந்திரிகள்‌ ஒரு விருந்து நடத்தியிருக்கிறார்கள்‌ . அவ்விருந்தில்‌ அத்தூதர்‌. களை பனகால்‌ ராஜா பாராட்டிப்‌ பேசுகையில்‌ பிரிட்டிஷ்‌ அரசாங்கத்தால்‌ ஏற்பட்ட பல நன்மைகளைப்‌ பற்றியும்‌, தென்னாப்பிரிகா போன்ற பல குடியேற்ற நாட்டின்‌ சம்பந்தத்தைப்‌ பற்றியும்‌ சில வார்த்தைகளும்‌ சொல்லி விட்டு இந்தியாவிலிருக்கும்‌ சில பண்டைக்கால நாகரிகத்தின்‌ வேறுபாடு களுக்காக எங்களைத்‌ தாழ்வாய்‌ கருதக்கூடாது, தற்கால சமூக சம்பிரதாயங்‌ களுக்கு அதுகள்‌ பிடிக்காமல்‌ இருப்பது வாஸ்தவம்தான்‌ ஆனால்‌ அவை துரிதமாக மறைந்து வருகிறது என்று சந்தோஷத்துடன்‌ தெரிவிக்கிறேன்‌ என்று பேசியிருக்கிறார்‌. (இது சுதேசமித்திரனிலேயே இருக்கிறது) இந்த வார்த்தைகளுக்காக மித்திரன்‌ “பனகால்‌ ராஜாவின்‌ உளறல்‌” என்று போக்கிரித்‌ தனமான தலையங்கமிட்டு இதைக்‌ குறிப்பிட்டிருப்பதுடன்‌ “தேசாபிமானமற்ற மந்திரி” என்கிற தலையங்கங்‌ கொண்ட வியாசமும்‌ எழுதியிருக்கிறான்‌. அதோடு தென்னாப்பிரிக்காவில்‌ உள்ள தங்கள்‌ கோவில்களில்‌ “நாய்களும்‌, கருப்பு மனிதர்களும்‌ உள்ளே வரக்கூடாது” என்று விளம்பரம்‌ எழுதி ஒட்டியிருப்பதற்காக மிகவும்‌ வருந்துவதாக நீலிக்கண்ணீர்‌ விட்டு இந்தக்‌ காரணங்களால்‌ குடியேற்ற நாட்டு சம்பந்தத்தால்‌ இந்தியா கவுரவக்‌ குறைவை அடைந்திருக்கிறது என்றும்‌ எழுதியிருக்கிறான்‌. திரும்பவும்‌ இந்தியாவிலி ருக்கும்‌ பல கெடுதலான நாகரீகத்திற்கும்‌ சமாதானமாக இங்கிலாந்தில்‌ எல்லோரும்‌ மிதமாய்‌ குடிக்கிறார்களாதலால்‌ அந்த நாகரிகத்திற்கும்‌ இந்த நாகரிகத்திற்கும்‌ சரியாய்‌ போய்விட்ட தென்றும்‌ கொஞ்சமும்‌ வெட்கமில்‌ லாமல்‌ எழுதுகிறான்‌. இன்னும்‌ இதுபோல்‌ பலதுகள்‌ எழுதிவிட்டு பனகால்‌ ராஜா தன்னை வெகுஜனப்‌ பிரதிநிதி என்று சொல்லிக்‌ கொண்டது தப்பிதம்‌ என்றும்‌, இனி அப்படிச்‌ சொல்லிக்‌ கொள்ளச்‌ செய்யாமல்‌ செய்துவிட வேண்டும்‌ என்றும்‌ எழுதி முடித்திருக்கிறான்‌. இதில்‌ எவ்வளவு அயோக்கி யத்தனமும்‌, ஆணவமும்‌, இழிகுணமும்‌ இருக்கிறதென்பதை வாசகர்கள்‌ நன்றாய்‌ கவனிக்க வேண்டும்‌.நமது மக்களின்‌ அறியாமையால்‌ தங்களுடைய பத்திரிகை பாமர மக்களை ஏமாற்றத்தக்கதாக இருக்கிறது என்கிற ஒரு குடி அரசு - 1926 (2) 274 காரணத்தினாலேயே நமது பார்ப்பனர்கள்‌ பார்ப்பனரல்லாதாராகிய நம்மை அடியோடு அழுத்துவதற்கு என்ன என்ன சூழ்ச்சிகள்‌ செய்கிறார்கள்‌. என்பதை இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்‌. இந்தியாவுக்குப்‌ பார்ப்பனர்‌. கொடுமையில்‌ ஏற்பட்ட “நாகரீகத்தை” கனம்‌ பனகால்‌ ராஜா எடுத்துச்‌ சொல்லாவிட்டால்‌ தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரருக்குத்‌ தெரியாமல்‌ போகுமென்று “மித்திரன்‌” நினைத்துக்‌ கொண்டு ஆத்திரப்பட்டி ருக்கின்றான்‌ போலும்‌.இது எவ்வளவு அறிவீனம்‌. ஐரோப்பாவில்‌ குளிருக்காகவும்‌, ஜீரண: சக்திக்காகவும்‌, சிறு அளவாகக்‌ குடிக்கும்‌ சாராயத்திற்கும்‌ நமது நாட்டு நாகரீகத்திற்கும்‌ ஒப்பிட்டிருப்பது எவ்வளவு மோசமானது என்பது நாம்‌ சொல்லாவிட்டாலும்‌ வாசகர்களுக்கு விளங்காமல்‌ போகாது. இந்த நாட்டுக்கு பிச்சை எடுக்க வந்த ஒரு கூட்டத்தார்‌ தங்களை பிராமணர்கள்‌ என்றும்‌, உயர்ந்த ஜாதியார்‌ என்றும்‌, லோக குரு என்றும்‌, மகந்துகள்‌ என்றும்‌, ஆச்சாரியார்கள்‌ என்றும்‌ இந்நாட்டு வாசிகளை ஏமாற்றி தங்கள்‌ கால்களை கழுவின தண்ணீரை வெள்ளியும்‌ தங்கமும்‌ கொடுத்து வாங்கிக்‌ குடித்தால்‌ மோட்ச வீடு திறக்கப்படுமென்று ஏமாற்றும்‌ அயோக்கியத்‌ தனம்‌, ஐரோப்பா வில்‌ குளிருக்காகவும்‌ ஜீரண சக்திக்காகவும்‌ என்று அந்த நாட்டு சீதோஷ்ண ஸ்திதியைஅநுசரித்து சிறு அளவாகக்‌ குடிக்கும்‌ சாராயத்திற்கு ஒப்பு ஆகுமா? இந்நாட்டுப்‌ பார்ப்பனர்‌ தாங்கள்‌ எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தாலும்‌. திருடர்களாக இருந்தாலும்‌ தாங்கள்‌ ஒரு வகுப்பில்‌ பிறந்து விட்ட காரணத்‌ தினாலேயே தங்களை உயர்ந்த ஜாதியார்‌ என்று சொல்லிக்‌ கொண்டும்‌, மகாத்மாவானாலும்‌ எவ்வளவு யோக்கியர்களானாலும்‌ தர்ம ஸ்ரேஷ்டர்களா னாலும்‌ தியாகிகளானாலும்‌ ஒரு வகுப்பில்‌ பிறந்தார்கள்‌ என்கிற காரணத்‌ திற்காகவே சூத்திரன்‌, வேசி மகன்‌, அடிமை என்று கூப்பிடும்‌ அக்கிரமத்‌ திற்கும்‌ ஐரோப்பியர்கள்‌ சிறு அளவாய்‌ குடிக்கும்‌ சாராயத்திற்கும்‌ ஒப்பாய்‌ விடுமா? தவிர தென்னாப்பிரிக்கா கோவில்களில்‌ நாய்களும்‌ கருப்பு மனிதர்‌. களும்‌ போகக்கூடாது என்று போர்டுகள்‌ போட்ட தினாலேயே கருப்பு மனித ருக்கு அவமானம்‌ வந்து விட்டதாகவும்‌, இதினா லேயே இப்படிப்பட்ட குடி யேற்ற நாட்டு சம்பந்தத்தை பனகால்‌ ராஜா வெறுக்காதது தேசாபிமானமற்றது என்றும்‌ எழுதி இருக்கிறான்‌. வெள்ளையர்‌ கள்‌ தங்கள்‌ சொந்தக்‌ கோவிலில்‌ நாய்களையும்‌ கருப்பு மனிதர்களையும்‌ விடாததற்காக அவர்களை வெறுக்க வேண்டுமானால்‌ நமது பார்ப்பனர்‌ நமது பணத்தைச்‌ செலவு செய்து போடப்‌ பட்ட நமது ரோட்டில்‌ நாயும்‌, பன்றியும்‌, கழுதையும்‌, மலமும்‌, மூத்திரச்‌ சட்டியும்‌ போகலாம்‌, ஆனால்‌ இந்‌ நாட்டு மக்கள்‌ நடக்கக்‌ கூடாது என்று சொல்லுபவர்களை என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறோம்‌? பூனை, செத்துப்‌ புழுத்த எலியைத்‌ தூக்கிக்‌ கொண்டு புழு கீழே உதிர உதிர உள்ளே போகலாம்‌, பார்ப்பனர்‌ குஷ்டரோகியானாலும்‌ விபசாரி வீட்டு மாமாவானாலும்‌ கோவிலுக்குள்‌ திருடவும்‌, புரட்டுப்‌ பண்ணவும்‌, சுவாமி சொத்தைக்‌ கொள்ளையடிக்கவும்‌ சுவாமியிடம்‌ போகலாம்‌, சுவாமியைத்‌ தொடலாம்‌, ஆனால்‌ நமது பணத்தைச்‌ செலவு செய்து கட்டிய கோவிலுக்குள்‌. 275 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. நாம்‌ மாத்திரம்‌ பக்தியோடு பரிசுத்தத்‌ தன்மையோடு சுவாமியைக்‌ கும்பிடக்‌ கூட சுவாமி பக்கத்தில்‌ போகக்கூடாது என்றால்‌ இவர்களை என்ன செய்ய வேண்டும்‌? தங்கள்‌ பெண்கள்‌ எல்லாம்‌ பிராமண ஸ்திரீகள்‌;நமது பெண்களை எவ்வளவு பதிவிரதைகள்‌ ஆனாலும்‌ சூத்திரச்சிகள்‌ என்று ஒரு கூட்டத்தார்‌. சொல்வதானால்‌ அவர்களை என்ன செய்ய வேண்டும்‌? இம்மாதிரி கொடுமை செய்பவர்களையெல்லாம்‌ வைத்துக்‌ கொண்டும்‌, அவர்களோடு உறவாடிக்‌ கொண்டும்‌, அவர்களை வணங்கிக்‌ கொண்டும்‌, மலையாளம்‌ முதலிய இடங்களில்‌ அவர்களுக்கு நமது ஸ்ரீகளை அனுபவத்திற்கு விட்டுக்‌ கொண்டும்‌ இருக்கவேண்டும்‌ என்று எதிர்பார்க்கும்‌ மித்திரனுக்கு. தென்னாப்பிரிக்கா தூதுவர்களை வரவேற்கையில்‌ அவர்களைப்‌ புகழ்ந்து பேசிய நமது பனகால்‌ ராஜாவின்‌ பேச்சுக்கள்‌ தேசாபிமானமற்றதாகிவிட்ட தென்றால்‌ இம்மித்திரன்‌ கூட்டத்‌ தாரோடு உறவாடிக்‌ கொண்டும்‌, அவர்கள்‌ அக்கிரமங்களையும்‌ அயோக்‌ கியத்தனங்களையும்‌ சகித்துக்‌ கொண்டும்‌ இருப்பவர்களுடைய செய்கை தேசத்துரோகம்‌ ஆவதோடு, இப்படிப்பட்ட பார்ப்பனர்‌ சம்பந்தத்‌ தால்‌ இந்தியா சுயமரியாதை அற்றுக்‌ கிடக்கிறதா இல்லையா? என்று நமது பார்ப்பனரையும்‌, மித்திரனையும்‌ கேட்கிறோம்‌. தவிர பனகால்‌ ராஜா அவர்‌ கள்‌ இந்‌ நாட்டுப்‌ பிரதிநிதி என்று சொல்லுகிறார்‌. என்றும்‌, இனி அப்படிச்‌ சொல்லிக்‌ கொள்ள செய்யக்கூடாது என்றும்‌ சொல்லு கிறான்‌. இதிலிருந்து இதுவரை பனகால்‌ ராஜாவை பொது ஜனங்களின்‌ பிரதிநிதி என்று சொல்லிக்‌ கொள்ள பொது ஜனங்கள்‌ உரிமை கொடுத்திருக்‌ கிறார்கள்‌ என்பதை மித்திரன்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறான்‌ என்பது வெளியாகிறது. ஆனால்‌ இனிமேல்‌ அவரைத்‌ தள்ளிவிட வேண்டுமென்கிறான்‌. அப்படி யானால்‌, மற்றபடி யாரை பொது ஜனங்களின்‌ பிரதிநிதி என்று சொல்ல வேண்டு மென்று மித்திரன்‌ ஆசைப்படுகிறான்‌ என்பது நமக்கு விளங்க வில்லை. நாயுடு, நாயக்கர்‌ முதலியோர்‌ காங்கிரசை விட்டு ஒழிந்ததால்‌ காங்கிரஸ்‌ பரிசுத்தமாய்‌ விட்டது என்றும்‌, நாயக்கரையும்‌ ஆரியாவையும்‌ ஏன்‌ இன்னமும்‌ ஜெயிலில்‌ பிடித்து அடைக்கவில்லை என்று சர்க்காரையும்‌ பார்ப்பன உத்தியோகஸ்தரையும்‌ கெஞ்சும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காரையா? பார்ப்பனரல்லாதாரை ஒழிக்கவும்‌ பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டவும்‌, பணங்காசு செலவு செய்து பிரசாரம்‌ செய்து மகாத்மா காங்கிரசின்‌ யோக்கி யதையையும்‌ கெடுத்து, தன்னை காங்கிரஸ்‌ தலைவராக்கிக்‌ கொண்ட ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரையா? ஒரு பிராமணக்‌ குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌ ஒரு மாதம்‌ பட்டினி கிடப்பேன்‌ என்று சொன்ன ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியாரையா? சென்னை பார்ப்பன ரல்லாத மகாநாட்டுக்குத்‌ தலைமை வகித்து வந்த கனம்‌ யாதவர்‌ என்கிற பார்ப்பனரல்லாத பம்பாய்‌ மந்திரியை ஏன்‌ சிறையிலடைக்கக்‌ கூடாது என்று கேட்ட ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகளையா? மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு, தாழ்வு இல்லை என்று சொன்னவுடன்‌ காங்கிரஸ்‌ கமிட்டியிலிருந்து ராஜினாமா கொடுத்துத்‌ தன்னுடைய இஷ்டர்‌ களையும்‌ ராஜினாமா கொடுக்கச்‌ செய்து குடி அரசு - 1926 (2) 276 தொழிலாளர்கள்‌ வயிற்றில்‌ மண்‌ ணைப்‌ போட்டுக்‌ கொண்டிருப்பவரும்‌ கள்ளு உற்பத்தி செய்பவருமான பார்ப்பனருக்கு ஓட்டுவாங்கிக்‌ கொடுக்க கிராமம்‌ கிராமமாய்த்‌ திரிந்த ஸ்ரீமான்‌ சி.ராஜகோபாலாச்சாரியாரையா? கல்பாத்தி பொதுத்‌ தெருவில்‌ யார்‌ வேண்டுமானாலும்‌ நடக்கலாம்‌ என்று சட்டசபைத்‌ தீர்மானத்தின்‌ பேரில்‌ சர்க்கார்‌ உத்திரவு போட்டிருந்தும்‌, வேலையிருந்தால்தான்‌ போகலாம்‌ என்று வியாக்யானம்‌ செய்த சட்டமெம்பர்‌. ஸ்ரீமான்‌ சி.பி.ராமசாமி அய்யர்‌ அவர்க ளையா? மகாத்மாவை சிறையில டைத்து ஆறு வருஷம்‌ தண்டிப்பதற்கு உதவியாயிருந்து சர்க்காருக்கு தைரியம்‌ சொல்லி தன்‌ மக்களுக்கு பெரிய பெரிய உத்தியோகம்‌ சம்பாதித்துக்‌ கொண்ட ஸ்ரீமான்‌ மகா மகாகனம்‌ ஸ்ரீனிவாச சாஸ்திரிகளையா? ரெளலட்‌ ஆக்டுக்கு கையொப்பமிட்ட ஸ்ரீமான்‌ குமாரசாமி சாஸ்திரிகளையா? சுதேச மித்திரன்‌ பத்திரிகை ஒழுங்காயில்லை; மகாத்மா காந்திக்கும்‌ பார்ப்பன ரல்லாதார்‌ நன்மைக்கும்‌ விரோதமாய்‌ எழுதி வருகிறது; ஆதலால்‌ காங்கிரசி லிருந்து பத்தாயிரம்‌ ரூபாய்‌ கொடுத்தால்‌ பொதுவாகவும்‌ சத்தியமாகவும்‌ எழுதி வருகிறோம்‌ என்று சொல்லிப்‌ பொதுப்‌ பணத்திலிருந்து பத்தாயிரம்‌ பெற்று “அவன்‌ போனால்‌ கலகமாகி விடும்‌:நான்‌ போனால்‌ செருப்பாலடித்து விட்டு வருகிறேன்‌ என்று ஒருவன்‌ சொன்னானாம்‌” அதுபோல்‌ சுதேச மித்திரனை விட கேவலமாய்‌ பார்ப்பனரல்லாதாருக்கு துரோகம்‌ செய்துவரும்‌. ஸ்ரீமான்‌ பிரகாசம்‌ அவர்களையா? சென்னை நகரப்‌ பொதுமக்கள்‌ பிரதிநிதி யாக இந்தியா சட்டசபைக்குப்‌ போய்‌ அதன்‌ பலனாய்‌ படிக்காத தன்‌ மக்க ளுக்கு எல்லாம்‌ 400, 500 ரூபாய்‌ சம்பள முள்ள உத்தியோ கங்களை சம்பாதித்‌ துக்‌ கொண்ட ஸ்ரீமான்‌ டி. ரங்காச்சாரியார்‌ அவர்களையா? பார்ப்பனரல்லா தாரை ஒழிப்பதற்கென்றே பார்ப்பனர்‌ அல்லாதார்‌ பணத்திலேயே பத்திரிகை. நடத்தும்‌ ....ஸ்ரீமான்‌ எ.ரெங்கசாமி அய்யங்கார்‌ அவர்களையா? அல்லது வேறு அய்யர்‌, அய்யங்கார்‌, ஆச்சாரியார்‌, சர்மா, சாஸ்திரியார்‌ முதலியவர்‌. களையா? என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரல்லாத மக்களின்‌ ஒற்றுமையற்ற நிலையையும்‌, தங்கள்‌ பத்திரிகை பலத்தின்‌ ஆணவத்தையும்‌, பாமர ஜனங்களின்‌ அறியாமையையும்‌ அறிந்த பார்ப்பனர்கள்‌ இவ்வளவு தான்‌ சொல்லுவார்களா? இன்னமும்‌ அதிகமாய்ச்‌ சொல்லுவார்களா?' என்பதைப்‌ பற்றி நாம்‌ யோசிக்கவே வேண்டியதில்லை. குடி அரசு - கட்டுரை - 03.10.1926 277 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 “காங்கிரஸ்‌ விணம்பர சபை” நமது பார்ப்பனர்கள்‌ பாமர ஜனங்களை ஏமாற்றும்‌ பொருட்டும்‌ வஞ்சிக்கும்‌ பொருட்டும்‌ “காங்கிரஸ்‌ விளம்பர சபை” என்பதாக ஒரு யோக்கியப்‌ பொறுப்பற்றதும்‌, அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை: வெளிக்குக்‌ காட்டி அதன்‌ பேரால்‌ பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாயும்‌, பார்ப்பனரல்லாதார்‌ பேரிலும்‌ அவர்கள்‌ இயக்கத்தின்‌ பேரிலும்‌ பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம்‌ முதலியதுகள்‌ உண்டாகும்படியும்‌ பல கட்டுக்‌ கதைகளை ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி அய்யர்‌ எழுதி வருகிறார்‌. இது எவ்வளவு கெட்ட எண்ணமும்‌ வஞ்சகப்‌ புத்தியும்‌ கொண்டது என்பது நாம்‌ எடுத்துக்‌ காட்ட வேண்டியதில்லை. இதுகள்‌ ஒவ்வொன்றுக்கும்‌ பதிலெழுத வேண்டுமானால்‌ அதற்கென்றே தனிப்‌ பத்திரிகையும்‌ ஆள்களும்‌ வேண்டும்‌. ஆனால்‌ “ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம்‌” என்பது போல்‌ ஒரு விஷயத்தை விளக்குகிறோம்‌. அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத்‌ தில்‌ மூடுவண்டியில்‌ அகப்பட்டு திக்கு முக்காடி இறந்து போன சம்பவத்தைக்‌ குறித்து 22926 ௨ சுதேசமித்திரனில்‌ பார்ப்பனரல்லா தார்‌ கட்சியாகிய ஜஸ்டிஸ்‌: ககஷியார்‌ இதைப்பற்றி ஒன்றும்‌ செய்யவில்லை என்றும்‌ மற்றவர்கள்‌ செய்ததற்கு விரோதமாயிருந்ததாகவும்‌ எழுதியிருக்‌ கிறது. இது எவ்வளவு பெரிய அக்கிரமம்‌. மூடு வண்டி கொலைபாதகம்‌ விஷயமாய்‌ சட்டசபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம்‌ கொண்டு வந்தவர்‌. அப்போது ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ முக்கிய ஸ்தா னத்தையும்‌ ஒரு மந்திரிக்கு காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியாரே ஆவார்‌. அவர்‌ அதற்காக ஏற்பட்ட கமிட்டியில்‌ முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய்‌ பலமாய்‌ வாதாடிய வரும்‌ ரெ ஜஸ்டிஸ்‌ கட்சி அங்கத்த வரே ஆவர்‌.ஆனால்‌ அக்கமிட்டியில்‌ இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்த வர்‌ ஒரு பார்ப்பனரே ஆகும்‌. அவர்தான்‌ ஸ்ரீமான்‌ மஞ்சேரி ராமய்யர்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி அங்கத்தினர்‌ மலை யாள மாப்பிள்‌ ளைகளுக்கு அனுகூலமா யும்‌ சில வெள்ளைக்காரருக்கு விரோதமாயும்‌ அபிப்பிராயம்‌ கொடுத்ததால்‌ தான்‌ அந்தரிப்போர்ட்‌ வெளி யில்‌ வராமல்‌ போய்‌ விட்டது. ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ அந்த காலத்தில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி பிரதிநிதியாக இருந்‌ தார்‌ என்பதை ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி ஒப்புக்‌ கொள்ளுகிறாரா? மறுக்கிறாரா? இம்மாதிரி வேண்டு மென்றே ஜனங்களை ஏமாற்ற இந்தப்‌ பார்ப்பனர்‌ எழுதும்‌ எழுத்தும்‌, பேசும்‌ பேச்சும்‌ சூழ்ச்சித்‌ தனமானது என்று இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு விளங்கவில்லையா? குடி அரசு - கட்டுரை - 03.10.1926 குடி அரசு - 1926 (2) 278 ரநாயப்பேட்டைத்‌ தேர்தல்‌ யார்ப்பணர்கணிண்‌ சட்ட வாணம்‌ ஸ்ரீமான்‌ பி.எஸ்‌. குருசாமி நாயுடு அவர்களும்‌ ஸ்ரீமான்‌ ஒ.எ.ஓ.கே. லட்சுமணன்‌ செட்டியார்‌ அவர்களும்‌ ராயப்பேட்டை டிவிசன்‌ நகரசபைத்‌ தேர்தலுக்கு அபேக்ஷகர்கள்‌. இதில்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ நியமனத்‌ தேதியில்‌ கெளரவ மாஜிஸ்திரேட்டாக இருந்ததால்‌ சட்டப்படி அபேக்ஷக ராயிருக்க அருகரல்லவென்று கமிஷனர்‌ அவரை நீக்கித்‌ தேர்தல்‌ நடத்த உத்திரவிட்டார்‌. இதன்‌ மேல்‌ அத்‌ தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள்‌ சென்னை ஸ்மால்‌ காஸ்‌ கோர்ட்டில்‌ ஒரு பார்ப்பன நீதிபதியிடம்‌ தடை உத்திரவு வாங்கினார்கள்‌. அது அவரிடமே நிவர்த்தி செய்யப்பட்டும்‌, மறுபடியும்‌ இதன்‌ பேரில்‌ நமது பார்ப்பனர்‌ ஹைக்‌ கோர்ட்டில்‌ பார்ப்பன ரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம்‌ ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள்‌. இதையும்‌ அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந்‌ தேதிக்குள்‌ தேர்தல்‌ நடத்த மூன்று ஜட்ஜிகளால்‌ உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள்‌ உத்திரவிற்கு விரோதமாய்‌ மறுபடியும்‌ ஒரு பார்ப்பன ஹைகோர்ட்‌ ஜட்ஜிடம்‌ நமது பார்ப்‌ பனர்‌ அத்தேர்தலையும்‌ நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள்‌. இந்த நிலையில்‌ சென்னை பிரதம நீதிபதி அவர்கள்‌ இந்த நடவடிக்கையில்‌ சந்தேகப்பட்டு மூன்று ஜட்ஜிகள்‌ கூடி பைசல்‌ செய்த ஒரு விஷயத்தை மறுபடியும்‌ ஒரு ஜட்ஜிடம்‌ போய்‌ எப்படி மாற்றிக்‌ கொள்ள லாம்‌ என்று கூட கோர்ட்டில்‌ பார்ப்பன வக்கீல்களைக்‌ கேட்டிருப்பதாகவும்‌ அதற்கு அவர்கள்‌ சட்ட சம்பந்தமான ஆதாரமிருப்பதாகவும்‌ ஒரிஜினல்‌ என்ற கார ணத்தை உத்தேசித்து அங்கு போனதாகவும்‌ சொல்லி திருப்தி செய்திருக்‌ கிறார்கள்‌.அப்படியானால்‌ அதையும்‌ என்னிடமே ஏன்‌ கொண்டு வந்திருக்கக்‌ கூடாது என்றும்‌ பிரதம நீதிபதி அவர்கள்‌ கேட்டிருக்கிறார்கள்‌. அதற்கு சட்ட சம்பந்தமான சமாதானமாக அந்த காரணம்‌ இந்தக்‌ கோர்ட்டுக்கு வரக்‌ கூடியதல்ல என்று சொன்னதாக தெரிய வருகிறது. இதைப்‌ பார்த்தால்‌ சட்ட மியற்றுவது பார்ப்பனர்‌; அதை விவாதிப்‌ பது பார்ப்பனர்‌: அதற்கு தீர்ப்புச்‌ சொல்லுவதும்‌ பெரும்பாலும்‌ பார்ப்பனர்‌ என்று ஏற்படு கிறது. இந்நிலையில்‌ பார்ப்பனர்‌ - பார்ப்பனரல்லாதார்‌ என்கிற வகுப்பு உணர்ச்சி உள்ள விவகாரங்‌ களில்‌ பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம்‌ கிடைக்குமென்று உறுதியாய்‌ நம்ப இடமிருக்கிறதா? என்பதை முடிவு செய்யும்‌ பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 03.10.1926 279 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 கோயமுத்தூர்‌ வில்லா சட்டசபைத்‌ கேர்தல்‌ நமது ஜில்லா சட்டசபைத்‌ தேர்தல்‌ விஷயமாக சென்ற இதழில்‌ ஒரு வியாசம்‌ எழுதப்பட்டிருந்ததை நேயர்கள்‌ வாசித்திருக்கக்‌ கூடும்‌. அவ்வியாசத்தின்‌ வேண்டுகோட்படியே குடியான வகுப்பைச்‌ சேர்ந்த அபேக்ஷகர்களான இரண்டு கவுண்டர்‌ கனவான்களில்‌ ஒரு கனவானான ஸ்ரீமான்‌ வி.சி.வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ பின்வாங்கிக்‌ கொண்டதாக கேள்விப்படுகிறோம்‌. தங்கள்‌ சமூக நன்மையை உத்தேசித்து தங்கள்‌ சமூகத்‌ தாரில்‌ யாராவது ஒரு கனவான்‌ சட்டசபைக்கு வரவேண்டும்‌ என்கிற ஒரே எண்ணத்தின்‌ பேரில்‌ மற்றொரு கவுண்டர்‌ கனவானுக்காக விட்டுக்‌ கொடுத்த ஸ்ரீமான்‌ வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ அவர்களின்‌ பெருந்‌ தன்மை யையும்‌ குலாபிமானத்தையும்‌ நாம்‌ மனமாரப்‌ போற்றுகிறோம்‌. நாம்‌ முந்திய வார இதழில்‌ எழுதியது போலவே ஒருவர்‌ பின்வாங்கிக்‌ கொண்டதினாலே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல்‌ சட்டசபை ஸ்தானம்‌ கிடைத்து விடும்‌ என்று நம்பி அஸ்வாரஸ்யமாய்‌ இருந்துவிடக்‌ கூடாது என்றும்‌ தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம்‌ கிராமமாய்‌ வேளாள சமூக பிரசாரகர்களைக்‌ கொண்டு பிரசாரம்‌ செய்து கிராமத்து குடியான மக்களு டைய மனதைத்‌ திருப்ப முயற்சி செய்ய வேண்டும்‌ என்றும்‌ அப்படிக்கில்‌ லாமல்‌, அஸ்வாரஸ்யமாயிருந்தால்‌ கண்டிப்பாய்‌ ஏமாற்றமடைய நேரிடும்‌. என்றும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு ஸ்ரீமான்‌ சங்கரண்டாம்‌ பாளையப்‌ பட்டக்காரக்‌ கவுண்டர்‌ அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டியது அவசிய மென்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - அறிக்கை - 03.10.1926 குடி அரசு - 1926 (2) 280 தீண்டாமை விலக்குச்‌ சட்டம்‌ “பொதுத்‌ தெருக்களில்‌ எவரையேனும்‌ நடக்கக்கூடாது என்று தடுப்பவருக்கு 100 ரூபாய்‌ வரையில்‌ அபராதம்‌ போடலாம்‌” என்கிறதாக ஒரு பிரிவை சென்னை ஜில்லா லோக்கல்‌ போர்டு சட்டங்களில்‌ ஒரு பிரிவாகச்‌ சேர்த்துக்‌ கொள்ளவேண்டும்‌ என்று ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ அவர்கள்‌ கொண்டு வந்த தீர்மானம்‌ சட்டசபையில்‌ நிறைவேறி விட்டதாகவும்‌, முனிசிபாலிட்டி சட்டத்திலும்‌ இவ்வித திருத்தம்‌ செய்யவேண்டுமென்று கொண்டு வரப்பட்ட திருத்தம்‌ தான்‌ ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும்‌ ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ அவர்களால்‌ தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பு : இவ்வித சட்டம்‌ செய்யப்பட்டது பற்றி நாம்‌ மிகுதியும்‌ களிப்பெய்துகிறோமானாலும்‌ பார்ப்பன வக்கீல்களும்‌ பார்ப்பன நீதிபதிகளும்‌ இச்சட்டம்‌ செய்தவர்‌ கருத்துப்படி பலளளிக்கச்‌ சம்மதிப்பார்களா? அவர்‌. களது சட்ட ஞானமும்‌ பாஷ்ய ஞானமும்‌ இச்சட்டத்தை உயிருடன்‌ வைத்‌ திருக்கச்‌ சம்மதிக்குமா என்று கேட்கிறோம்‌? (ப-ர்‌) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 03.10.1926 281 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 “கசிய அறிக்கை” மேல்படி தலையங்கம்‌ கொண்ட அறிக்கையொன்று சென்னை “தமிழ்நாடு” காரியாலயத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்டதை வேறு இடத்தில்‌ பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இதை அனுசரித்து ஸ்ரீமான்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌ அவர்களால்‌ ஒரு அச்சடித்த அழைப்புக்‌ கார்டும்‌ சிலருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவ்வழைப்புக்கு யாவரும்‌ போக வேண்டுமென்றே வேண்டிக்‌ கொள்ளுகிறோம்‌ . ஸ்ரீமான்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‌ தாயாருக்கு இது சமயம்‌ கடினமான காயலா வாயிருக்கிற படியால்‌ 9-ந்‌ தேதிக்கு சென்னை போக அவருக்கு சவுகரியமாயிருக்குமோ இருக்‌ காதோ என்பது சந்தேகமாயினும்‌ அது பற்றி நமது அபிப்பிராயத்தை தெரிவிக்கக்‌ கடமைப்பட்டிருக்கிறோம்‌. தேசீய அறிக்கையில்‌ குறித்திருக்‌ கும்‌ ஒரு விஷயத்தை நாமும்‌ பலமாய்‌ ஆதரிக்கிறோம்‌. அதாவது, “சுயராஜ்யக்‌ கக்ஷிபிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க்‌ கட்டுப்பாடாகப்‌ பிரசாரம்‌ செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்னும்‌ வளர விட்டுக்கொண்டே போனால்‌ பிராமணரல்லாதாருக்குக்‌ கெடுதல்‌ வரும்‌” என்ப தாகும்‌. இந்த அபிப்பிராயத்தை நாம்‌ இரண்டு வருஷத்திற்கு முன்ன தாகவே கொண்டுள்‌ ளோம்‌.ஆதலால்‌ “தமிழ்நாடு”ம்‌ டாக்டர்‌ நாயுடுகார்‌ அவர்களும்‌ இப்போது இதை வெளிப்படையாய்‌ வலியுறுத்த முன்‌ வந்ததற்குப்‌ பார்ப்பனரல்லாத மக்கள்‌ அவர்களுக்கு நன்றி செலுத்தக்‌ கடமைப்பட்டிருப்பதுடன்‌ இதற்காக ஸ்ரீமான்‌ டாக்டர்‌ நாயுடு அவர்கள்‌ எடுத்துக்‌ கொள்ளும்‌ எவ்வித முயற்சிக்கும்‌. ஆதரவளிக்க வேண்டியது தமிழ்‌ மக்கள்‌ கடமை என்றே சொல்லுவோம்‌. ஆனால்‌ காங்கிரஸ்‌ என்னும்‌ விஷயத்தில்‌ டாக்டர்‌ நாயுடு அவர்கள்‌ அபிப்பி ராயத்தை நாம்‌ ஆதரிக்க முடியாததற்கு மிகுதியும்‌ வருந்துகிறோம்‌. கயராஜ்‌ யம்‌ என்னும்‌ தேசீய உணர்ச்சியில்‌ டாக்டர்‌ நாயுடு அவர்களுக்கு நாம்‌ மேம்பட்டவரல்ல வென்றா லும்‌ குறைந்தவரல்ல என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுவதோடு சுய ராஜ்யத்தை விட மக்கள்‌ சுயமரியாதையே சிறந்ததென்‌ பதும்‌, அதுவே மக்களின்‌ பிறப்புரிமை என்பதும்‌ நமது அபிப்பிராயம்‌. அல்லாமலும்‌ காங்கிரஸ்‌ என்கிற விஷயத்திலும்‌ அதில்‌ உள்ள கொள்கையை உத்தேசித்து தான்‌ அதனிடம்‌ மக்கள்‌ பக்தி செலுத்தவேண்டுமே அல்லாமல்‌ காங்கிரஸ்‌ என்கிற பெயருக்கே பக்தி செலுத்த வேண்டும்‌ என்று சொல்லு வதை நாம்‌ ஒப்புக்‌ கொள்ள முடியாததற்கும்‌ மன்னிக்க வேண்டுகிறோம்‌. உதாரணமாக, பிராமணன்‌ என்பவன்‌ மதிக்கத்தக்கவன்‌ என்றால்‌ பிராமணன்‌ குடி அரசு - 1926 (2) 282 என்கிற பெயரை உடைத்தாயிருப்பதற்காகவா? அல்லது பிராமணர்‌ என்பதற்கு ஏற்பட்ட கொள்கையை உடைத்தாயிருப்பதற்காகவா? அன்றியும்‌ நமது டாக்டர்‌ நாயுடுகாரு அவர்களே சுயராஜ்யக்‌ கட்சியை முன்பெல்லாம்‌. ஆதரித்த காலத்திலும்‌ தேச முன்னேற்றத்தை உத்தேசித்துதான்‌ தாம்‌ அதை ஆதரிப்பதாகச்‌ சொல்லி வந்தார்‌. ஏனெனில்‌ அதனிடத்தில்‌ சில ஒப்புக்‌ கொள்ளத்தக்க கொள்கை இருப்பதாலேயே என்று வைத்துக்‌ கொள்ளலாம்‌. ஆனால்‌ இப்போதும்‌ அதே பெயரும்‌, அதே கொள்கையும்‌, அதே திட்டமும்‌ இருக்கும்‌ போதே “சுயராஜ்யக்‌ கட்சி பிராமணக்‌ கட்சி; அது அடுத்த தேர்தலில்‌ வெற்றி பெற்‌ றால்‌ பிராமணரல்லாதாருடைய கதி அதோகதியாய்‌ போய்விடும்‌” என்று “தமிழ்நாடு” மூலமாய்‌ எழுதியிருக்கிறார்‌. இதுபோல வேதான்‌ நாமும்‌ காங்கிரஸ்‌ என்பது பார்ப்பனர்களும்‌ படித்தவர்களும்‌ முறையே பார்ப்பனரல்லாதாரையும்‌ பாமர மக்களையும்‌ ஏமாற்றி உத்தி யோகம்‌ பதவி முதலியதுகள்‌ பெற்று வாழ ஏற்பட்டு அதற்கேற்ற கொள்கை களே அதனில்‌ இருத்தப்பட்டிருக்கிறது என்றும்‌, மத்தியில்‌ மகாத்மா தலைமை வகித்து நடத்திய காலத்தில்‌ சுயமரியாதை, உண்மையான சுயராஜ்‌ யம்‌ முதலியவைகள்‌ அடையத்தக்க கொள்கைகள்‌ அவற்றில்‌ இருந்தது என்றும்‌, இப்போது பழையபடி பார்ப்பனர்‌, படித்தவர்‌ ஆகியவருக்கு அநுகூலமாகவும்‌ மக்கள்‌ சுயமரியாதைக்கும்‌ பார்ப்பனரல்லாதாருக்கும்‌ ஆபத்தானதாகவும்‌ உள்ள கொள்கைகளே காங்கிரசில்‌ வைக்கப்பட்‌ டுப்‌ போய்விட்டதால்‌ மக்கள்‌ சுயமரியாதையையும்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமத்து வத்தையும்‌ உத்தேசித்து காங்கிரசை திருத்தவோ அழிக்கவோ வேண்டியது பொது மக்களின்‌ கடமை என்றும்‌, ஏனெனில்‌ காங்கிரசுக்கு இது சமயம்‌ கொள்கை என்பதே இல்லாமல்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ கொள்கைகளைத்தான்‌ அப்படியே தனது கொள்கையாக ஏற்றுக்‌ கொண்டுவிட்டதென்றும்‌ சுயராஜ்‌ யக்‌ கட்சி கொள்கைகளோ பார்ப்பனரல்லாதாரை அழிக்கக்‌ கட்டுப்‌ பாடாய்ப்‌ பார்ப்பனர்கள்‌ செய்து வரும்‌ சூழ்ச்சி என்றும்‌ இதை டாக்டர்‌ நாயுடுகார்‌. அவர்களே ஒப்புக்‌ கொள்ளுகிறார்‌ என்றும்‌ சொல்லுகிறோம்‌. தேசீய உணர்ச்சி மக்களுக்குள்‌ விளங்க வேண்டும்‌ என்கிற டாக்டர்‌ நாயுடுகாரின்‌ அபிப்பிராயத்தையும்‌ நாம்‌ மனமார ஆதரிக்கிறோம்‌. ஆனால்‌ இது இன்னது என்று விளக்கப்பட வேண்டும்‌. அதற்காக ஏற்படுத்தப்படும்‌ இயக்கத்திற்கும்‌ முயற்சிக்கும்‌ தேசீய உணர்ச்சிக்கேற்ற கொள்கைகளை அமைக்கவேண்டும்‌. அப்படிக்கில்லாமல்‌ புண்ணியம்‌, தருமம்‌, மோக்ஷம்‌, தெய்வம்‌ என்கிற பெயரைச்சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள்‌ வயிறு வளர்ப்‌ பது போல்‌ சுயராஜ்யம்‌, உரிமை, தேசீய உணர்ச்சி, சர்க்காரை எதிர்த்தல்‌, காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ கட்சி என்கிற பெயர்களைச்‌ சொல்லிக்‌ கொண்டு பாமர: மக்களை ஏமாற்றி பலர்‌ வயிறு பிழைக்கும்படியும்‌ உத்தியோகம்‌ பெறும்‌ படியும்‌ செய்துவிடக்‌ கூடாது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. அல்லாமலும்‌ சுயராஜ்யக்‌ கட்சியோடு ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒப்பிடு 283 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. வதிலும்‌ நாம்‌, டாக்டர்‌ நாயுடுகாரு அவர்களின்‌ அபிப்பிராயத்திற்கு சற்று மாறுபட நேர்ந்ததற்கும்‌ மன்னிக்கவேண்டுகிறோம்‌. சுயராஜ்யக்‌ கட்சியைப்‌ பற்றி டாக்டர்‌ நாயுடுகாரே அது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய்‌ கட்டுப்பாடாகப்‌ பிரசாரம்‌ செய்யும்‌ கட்சி என்று ஒப்புக்கொண்டு விட்டதால்‌ இனி நாம்‌ அதன்‌ கேட்டைப்‌ பற்றி பேச வேண்டியதில்லை. இப்படியிருக்க ஜஸ்டிஸ்‌ கட்சியை அதற்குச்‌ சமமாய்ச்‌ சொல்லக்‌ காரணம்‌ என்ன? ஜஸ்டிஸ்‌ கட்சியானது பார்ப்பனரல்லாதார்‌ நன்மைக்காக ஏற்பட்டது என்றும்‌, அது நமது நாட்டுப்‌ பார்ப்பனரல்லாதாருடைய கட்சி என்றும்‌, அது பார்ப்பனரல்லா தாருக்கு பல நன்மைகள்‌ செய்திருக்கிறது என்றும்‌ டாக்டர்‌ நாயுடுகாரே பல தடவைகளில்‌ பேசியும்‌ “*தமிழ்நாட்டில்‌”” எழுதியும்‌ இருக்கிறார்‌. அதற்கும்‌ பல ஆதாரங்கள்‌ இருக்கின்றன. அப்படிக்கு இருக்க அந்த கட்சியை பார்ப்பனரல்லாதாரை அழிக்க கட்டுப்பாடாய்‌ வேலை செய்யும்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு சமமாக எப்படி சொல்லக்கூடும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ உத்தியோகம்‌ பெறுகிறார்கள்‌ என்று சொல்வதானால்‌ உத்தியோகம்‌ பெறக்கூடாது என்று எந்த தேசீய திட்டம்‌ சொல்லுகிறது. காங்கிரசிலாகட்டும்‌ வேறு எதிலாகட்டும்‌ சர்க்காரோடு ஒத்துழையாமை என்பதே கிடையாது. உத்தியோகங்களோ இருக்கின்றன: இதை என்ன செய்வது. ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ இந்த உத்தியோகங்‌ களை வேண்டாமென்று சொல்வதன்‌ மூலம்‌ சுயமரியாதைக்காவது சுயராஜ்யத்‌ திற்காவது காங்கிரசுக்காவது லாபமுண்டா? அப்படியிருக்க ஜஸ்டிஸ்‌ கட்சி யார்‌ உத்தியோகம்‌ பெறுகிறார்‌, உத்தியோகம்‌ பெறுகிறார்‌ என்று சொல்லுவதின்‌ அர்த்தமென்ன? மொத்தத்தில்‌ நமது தேசத்தில்‌ உள்ள உத்தியோகம்தான்‌ எவ்வளவு? காங்கிரஸ்காரர்கள்‌ என்று சொல்லிக்‌ கொண்ட பிராமணர்கள்‌ அனுபவிப்பது எவ்வளவு? மிதவாதிகள்‌ என்று சொல்லிக்‌ கொண்ட பிராமணர்கள்‌ அனுபவிப்பது எவ்வளவு? இவர்கள்‌ சந்ததிகள்‌ அனுபவிப்‌ பது எவ்வளவு? உண்மையில்‌ ஒன்றிலும்‌ சேராத மக்கள்‌ அனுபவிப்பது எவ்வளவு? இந்தக்‌ கணக்குப்‌ பார்த்தால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ அனுபவிப்பது எவ்வளவு? என்பதும்‌, அதினால்‌ சர்க்காருக்கு ஏற்பட்டு விட்டதாகச்‌ சொல்லும்‌ பலம்‌ எவ்வளவு? என்பதும்‌, அவர்கள்‌ அனுபவிக்காவிட்டால்‌ சர்க்கார்‌ பலம்‌ எவ்வளவு குறையும்‌ என்பதும்‌, அதோடு பார்ப்பனரல்லாதார்‌. கதி என்னவாகும்‌என்பதும்‌ விளங்காமல்‌ போகாது. பொதுவாக ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ அரசியல்‌ திட்டத்தை ஒத்துழையா மனப்பான்மை கொண்டவர்கள்‌ எவரும்‌ ஆதரிக்க முடியாது என்பதை நாமும்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறோ மானாலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ நன்மையை உத்தேசித்து ஜஸ்டிஸ்‌ கட்சியு டனும்‌ அவசியமேற்பட்டால்‌ சர்க்காருடன்‌ ஒத்துழைப்பதாக டாக்டர்‌ நாயுடு காரு அவர்கள்‌ சொல்லியுமிருக்கிறார்‌. ஆதலால்‌ டாக்டர்‌ நாயுடு காரு வாக்குப்படியே சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய்‌ பார்ப்பனரல்லாதாரை அடியோடு ஒழிக்க கட்டுப்பாடாய்‌ வேலை செய்கிற ககஷியாய்ப்‌ போய்விட்டதால்‌ பார்ப்பனரல்லாதார்‌ நன்மைக்கு உழைக்கிறவர்‌. கள்‌ சர்க்காரோடு ஒத்துழைக்காவிட்டாலும்‌ ஜஸ்டிஸ்‌ கியா ரோடாவது குடி அரசு - 1926 (2) 284 ஒத்துழைக்கக்‌ கடமைப்பட்டிருக்கிறார்கள்‌. அதுவும்‌ இல்லா விட்டாலும்‌ அதற்கு கெடுதி செய்யாமலாவது இருக்கக்‌ கடமைப்பட்டிருக்‌ கிறார்கள்‌. பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படப்‌ போகும்‌ ஆபத்தை நீக்கும்‌ பொருட்டும்‌ தேசீய உணர்ச்சியை வளர்க்கும்‌ பொருட்டும்‌ 81026 - ல்‌ அல்லது 91026 -6 சென்னை “தமிழ்நாடு” ஆபீசில்‌ கூட்டப்படும்‌ தேசீயவாதிகள்‌ மகாநாட்டுக்கு இதை விண்ணப்பித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 03.10.1926 285 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. நவசக்தி இத்‌ தலைப்பைக்‌ கண்டவுடன்‌ “நவசக்தி”க்கும்‌ “குடிஅரசு'க்கும்‌ ஏதா வது போர்‌ நிகழுமோ என பலர்‌ சங்கடப்படவும்‌, பலர்‌ சந்தோஷப்‌ படவும்‌, பலர்‌ வேடிக்கைப்‌ பார்க்கலாம்‌ என்று நினைக்கவும்‌ இடங்‌ கொடுக்குமோ என்று நினைக்கிறோம்‌. ஆனாலும்‌ அம்மாதிரியாக எதிர்பார்ப்பவர்கள்‌ கண்டிப்பாய்‌ ஏமாற்றமடையக்‌ கூடும்‌. நிற்க, சென்ற “குடி அரசு” இதழில்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்காரை ஸ்ரீமான்‌ முதலியாரவர்கள்‌ தொழிலாளர்‌ சங்கத்திற்கு அழைத்து அவரை அறிமுகப்படுத்தி வைத்ததைப்‌ பற்றி எழுதி யிருந்தோம்‌. அதைக்‌ கண்டு அவரது “நவசக்தி” *குடிஅரசை' ச்சீறி இருக்‌ கிறது. ஆனால்‌ அதற்காக நாம்‌ சீற்றம்‌ கொள்ளவில்லை. தொழிலாளருக்‌ கென்றே அவதரித்தவர்‌ எனத்‌ தொழிலாளரின்‌ நன்மதிப்பையும்‌, பின்பற்று தலையும்‌ பெரிதும்‌ பெற்ற ஸ்ரீமான்‌ முதலியாரவர்கள்‌ வாக்கால்‌ “ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ தொழிலாளர்‌ விஷயத்தில்‌ மிகுந்த சிரத்தை உள்ளவர்‌ என்றும்‌, காங்கிரஸ்‌ அக்கிராசனப்‌ பிரசங்கத்தில்‌ தொழிலாளரைப்‌ பற்றிக்‌ கூற வேண்டும்‌ என்றும்‌, ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ சட்டசபையில்‌ தொழிலாளருக்கு ஏற்ற சீர்திருத்தங்கள்‌ செய்ய வேண்டு மென்றும்‌” கேட்டுக்கொண்டால்‌ இந்தத்‌ தேர்தல்‌ காலத்தில்‌ தங்கள்‌ ஓட்டுகளை வினியோகிக்கும்‌ விஷயத்தி லாகட்டும்‌, தேர்தலுக்கு உதவி செய்யும்‌ விஷயத்திலாகட்டும்‌ தொழிலாளர்‌: களின்‌ மனப்பான்மை என்னவாகும்‌ என்பதுதான்‌ நமது கவலையே ஒழிய “நவசக்தி” சொல்லுகிறபடி பிரசாரத்தில்‌ கலவாது விலகி நிற்கும்‌ ஸ்ரீமான்‌ முதலியாரை “குடிஅரசு” வலிய ஈர்க்கவில்லை என்பதை உறுதி கூறு கிறோம்‌. ஆனால்‌ ஒரு சந்தேகம்‌; ஓட்டுகள்‌ இருக்கும்‌ தொழிலாளர்‌ சகோ தரர்களிடம்‌ தேர்தலுக்கு நிற்கும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காரை அழைத்துப்‌ போய்‌, அய்யங்கார்‌. தொழிலாளருக்கு உழைத்தவர்‌, அவர்‌ இன்னமும்‌ உழைக்க வேண்டும்‌, தொழிலாளருக்கு சட்டசபையில்‌ இன்னது செய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்கொண்டால்‌ (24.9.26 சுதேசமித்திரனில்‌ காண்க) இது வெளிப்படை யான பிரசாரமல்ல என்று ஒப்புக்‌ கொள்ளுவதானாலும்‌ மறைமுகமான பிரசாரம்‌ என்றாவது எண்ண, இந்த சந்தர்ப்பம்‌ இடம்‌ கொடுக்குமா கொடுக்காதா என்பதைப்‌ பொது மக்களே சொல்லட்டும்‌! அல்லாமலும்‌ ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ நாயுடு, ஆரியா, நாயக்கர்‌, சக்கரை செட்டியார்‌ ஆகிய இவ்வளவு பெயரையும்‌ வைது கொண்டும்‌ ஜெயிலில்‌ வைக்கப்‌ பிரயத்தனப்பட்டுக்‌ கொண்டும்‌ இருக்கிற ஒருவரைப்‌ பற்றி இது குடி அரசு - 1926 (2) 286 சமயம்‌ நல்லுரை பகரவேண்டிய அவசியம்‌ நமது முதலியாரவர்களுக்கு வருமானால்‌ அதைப்பற்றி யார்‌ மனந்தான்‌ வெதும்பாமல்‌ இருக்கும்‌. இவற்றைப்‌ பற்றி “குடி அரசு” பிரஸ்தாபித்ததைக்‌ கண்டு *நவசக்தி” சீறி விழுந்து “குடி அரசு' வெறுக்கத்தக்க உரைகளைப்‌ பெய்திருக்கிறது'” என்று எழுதி இருக்கிறதின்‌ திறத்தை அறிய பொது மக்களுக்கே விட்டு விடுகி றோம்‌. அல்லாமலும்‌ நவசக்தியையோ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களையோ இவ்‌ விஷயத்தில்‌ குற்றம்‌ சொல்ல வேண்டும்‌ என்னும்‌ எண்ணத்துடன்‌ ஒரு எழுத்தும்‌ எழுதவில்லை என்று தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌ . குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 03.10.1926 287 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 இந்தியாவிண்‌ “ஏக தணைவரான யங்மாண்‌ எஸ்‌. சீணிவாசய்யாங்காரிண்‌ முழுவாண கைறியம்‌ எல்லா இந்திய காங்கிரஸ்‌ தலைவரும்‌, எல்லா இந்திய சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவரும்‌, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவரும்‌, தென்னாட்‌ டுப்‌ பார்ப்பனத்‌ தலைவரும்‌, மாஜி அட்வொகேட்‌ ஜெனரலும்‌ ஆகிய “ஏக தலைவரான' ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்காருக்கு இன்னும்‌ மூன்று லக்ஷியம்‌ தான்‌ இருக்கிறதாம்‌. அதாவது:- 1 ஸ்ரீமான்கள்‌ ஏ.ராமசாமி முதலியாரவர்களையும்‌, பனகால்‌ ராஜா வையும்‌ சென்னை சட்டசபையில்‌ ஸ்தானம்‌ பெறாதபடி செய்து விடவேண்டும்‌. 2. தான்‌ இந்தியா சட்டசபைக்குத்‌ தெரிந்தெடுக்கப்பட வேண்டும்‌. 3. ஸ்ரீமான்கள்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும்‌, ஆரியாவையும்‌ ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்‌. ஆகிய இம்மூன்று லக்ஷியங்களும்‌ நிறைவேறிவிட்டால்‌ பிறகு, தான்‌ ராஜீய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம்‌. ஏனெனில்‌ ஒரு மனித னுக்குச்‌ செல்வம்‌, பெண்‌,கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான்‌ லக்ஷியமான தூகுமாம்‌. அவற்றில்‌ முதல்‌ இரண்டைப்பற்றி தான்‌ திருப்தியடைந்தாய்‌ விட்ட தாம்‌. மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்னபடி சென்னை சட்ட சபையில்‌ ஸ்ரீமான்கள்‌ ஏ.ராமசாமிமுதலியார்‌, பனகால்‌ அரசர்‌. ஆகியவர்களும்‌ இந்தியா சட்டசபைக்குப்‌ போகாமல்‌ இருக்கும்படி தடை செய்வதும்‌, ஸ்ரீமான்கள்‌ நாயக்கர்‌, ஆரியா ஆகியவர்கள்‌ தன்னைத்‌ தூற்று வதும்‌ ஆகிய காரியங்கள்தான்‌ தடங்கலாயிருக்கிறதாம்‌. அய்யோ பாவம்‌! இம்மூன்று காரியங்களும்‌ அய்யங்கார்‌ இஷ்டம்‌ போல்‌ நிறைவேறினா லாவது அய்யங்காரின்‌ கடைசி லக்ஷியம்‌ நிறைவேறுமா என்பது நமக்கு சந்தேகமாகவே இருக்கிறது. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 03.10.1926 குடி அரசு - 1926 (2) 288 செண்ணைத்‌ கொழிலானர்களும்‌ கேர்தல்‌ கூட்டங்களும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ அவர்கள்‌ தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களால்‌ அறிமுகம்‌ செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்களால்‌ ஏற்படுத்தப்படும்‌ கூட்டங்களில்‌ ஆலைத்‌ தொழிலாளர்கள்‌ கலகம்‌ செய்வதாக “திராவிடனில்‌” காணப்படு கிறது. இதில்‌ உண்மை இருக்கிறதோ இல்லையோ: ஆனாலும்‌ நாம்‌ நமது தொழிலாளர்‌, பார்ப்பனரல்லாதார்‌ ஆகிய சகோதரர்களை ஒன்று கேட்கிறோம்‌. அதாவது, நவம்பர்‌ மாதம்‌ 8 @ (சட்டசபைத்‌ தேர்தல்‌ தீர்ந்த தற்குப்‌)பிறகு இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும்‌ இப்போது அவர்கள்‌ நியமித்துக்‌ கொண்டிருக்கும்‌ பார்ப்பன ரல்லாதார்களை. யாவது திரும்பிப்‌ பார்ப்பார்களா, கவனிப்பார்களா என்பதை தயவு செய்து யோசித்துப்‌ பார்க்கும்படி வேண்டுகிறோம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 03101926 289 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. உண்மையான தீயாவணி தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து, பெருவாரியான இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும்‌ ஆனந்தத்தையும்‌ கொடுத்து தங்கள்‌ குழந்தை குட்டிகள்‌, மக்கள்‌, மருமக்கள்‌ முதலானவர்களோடு களிக்‌ கும்‌ ஒரு பெரிய பண்டிகையாகும்‌. அப்பண்டிகையன்று ஏழையானாலும்‌ பணக்காரனானாலும்‌ கூலிக்காரனானாலும்‌ முதலாளியானாலும்‌ பண்டிகை: யை அனுபவிப்பதில்‌ வித்தியாசமில்லாமல்‌ தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத்‌ தகுந்தபடி ஸ்நானம்‌ செய்வதும்‌, புது வஸ்திரங்களை அணிவதும்‌, பலகாரங்‌ களை உண்பதும்‌ முக்கிய கொள்கையாகும்‌. இக்கொள்கைகள்‌ எந்த தத்துவங்களைக்‌ கொண்டு ஏற்படுத்தப்பட்டு என்பதில்‌ எவ்வளவு அபிப்பி ராய பேதங்கள்‌ இருந்த போதிலும்‌, பொதுவாய்‌ மக்கள்‌ சந்தோஷத்திற்கு புதிய வஸ்திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதானால்‌ ஏழைத்‌ தொழிலா எருக்கு ஒரு விடுதலையும்‌ ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லா மல்‌ ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்‌.தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும்‌ களிப்பும்‌ பலவிதமாயிருந்தாலும்‌, பெரும்பாலும்‌ மேற்படி தீபாவளியானது ஏழைத்‌ தொழிலாளர்களுக்கு பெருந்‌ துரோகத்தை செய்வ தற்கே வருவதாகவும்‌ போவதாகவும்‌ ஏற்பட்டு விட்டது. இவ்வித துரோகத்‌ திற்கு பணக்காரர்களும்‌ உத்தியோகஸ்தர்களுமேதான்‌ பெரும்பாலும்‌ ஆதரவளிப்‌ பவர்களாயிருக்கிறார்கள்‌. காரணமென்னவென்றால்‌ பட்டு சேலைகளும்‌, பட்டு துப்பட்டாக்களும்‌, சரிகை சேலைகளும்‌, சரிகை துப்பட்‌ டாக்களும்‌, மல்லுகளும்‌, சல்லாக்களும்‌ இவர்கள்தான்‌ வாங்குகிறார்கள்‌. அதோடு இவர்களைப்‌ பார்த்து இவர்களைப்‌ போல்‌ நடிக்க வேண்டுமென்‌ கிற சிலர்‌. தங்களுக்குத்‌ தகுதியில்லாதிருந்தாலும்‌, கஷ்டப்பட்டு இவற்றையே வாங்க ஆசைப்படுகிறார்கள்‌. கூலிக்காரர்களாகவும்‌ ஏழைகளாகவும்‌ உள்ளவர்‌. களுக்கு இந்த முதலாளிகளும்‌ பணக்காரர்களுமாயிருப்பவர்கள்‌ துணி வாங்கிக்‌ கொடுக்கும்‌ முறையிலும்‌ வெளிநாடுகளிலிருந்து வந்த துணிக ளையே வாங்கிக்‌ கொடுக்கவும்‌ செய்கிறார்கள்‌. இத்தியாதி காரணங்களால்‌ தீபாவளி வருகிறது என்றால்‌ பெரும்பாலும்‌ ஏழை நூற்புக்காரர்களுக்கும்‌, கை நெசவுக்காரர்களுக்கும்‌ பெரியதுரோகமும்‌ கொடுமையும்‌ வரப்போ கிறது என்றுதான்‌ அஞ்ச வேண்டியதாக இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின்‌ சகாப்தமானது இத்தீபாவளிப்‌ பண்டிகையை தேசத்திற்கும்‌ ஏழை மக்க ளுக்கும்‌ உண்மையான சந்தோஷத்தையும்‌ நன்மையையும்‌ கொடுக்கத்‌ குடி அரசு - 1926 (2) 290 தக்கதான பரிசுத்த பண்டிகையாக்க வேண்டுமென்று மூன்று நான்கு வருஷங்களாக எவ்வளவோ பிரயத்தனங்கள்‌ பட்டும்‌ இன்னும்‌ அது சரியான பலனை கொடுக்குமென்று நம்புவதற்கு இடமில்லாமலிருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு தீபாவளி வருவதாயிருந்தால்‌ தங்கள்‌ மக்களையும்‌ , மரு மக்களையும்‌ சேர்த்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும்‌ பார்த்து உனக்கு எந்த மாதிரி பட்டு வேண்டும்‌? உனக்கு என்ன மாதிரி துப்பட்டா வேண்டும்‌? என்று கேட்பதும்‌, என்ன மாதிரியான பட்டோ, துப்பட்டாவோ, சேலையோ வாங்கினால்‌ அவர்கள்‌ திருப்தி அடைவார்கள்‌ என்பதையும்‌ மாத்திரம்‌ யோசிக்கிறார்களே ஒழிய, என்ன மாதிரி துணி வாங்கினால்‌ நம்‌ நாட்டில்‌ தினம்‌ ஒரு வேளை வயிறார கஞ்சி குடிப்பதற்குகூட மார்க்கமில்‌ லாமல்‌ தங்கள்‌ மானத்தையும்‌ கற்பையும்‌ விற்று ஜீவிக்க வேண்டி கட்டாயப்‌ படுத்தப்படுகிற ஏழை நூல்‌ நூற்பவர்களையும்‌ கை நெசவுக்காரர்‌ களையும்‌ திருப்தி செய்வதற்கு உதவும்‌ என்று இவர்கள்‌ கொஞ்சம்கூட எண்ணுவதே யில்லை. கிராமங்களில்‌ கஞ்சிக்குக்‌ கஷ்டப்பட்டு பட்டணங்களுக்கு வந்து தெருத்‌ தெருவாய்‌ அலையும்‌ ஸ்திரீகள்‌ நம்‌ சகோதரிகள்‌ என்பதை கொஞ்ச மும்‌ கவனிப்பதில்லை. இந்த ஸ்திரிகளின்‌ வாழ்வும்‌, தாழ்வும்‌ நமக்கும்‌ சம்பந்தப்பட்டதென்பதை கொஞ்ச மும்‌ உணர்வதில்லை. நெசவுத்‌ தொழிற்‌ காரர்கள்‌ தங்களுக்குச்‌ சரியான தொழிலில்லாமல்‌ வெளி நாடுகளுக்குக்‌ கூலி களாகச்‌ சென்று வெள்ளைக்காரத்‌ தோட்டக்காரர்களிடமும்‌ கங்காணிகளிட மும்‌ தங்கள்‌ பெண்டு பிள்ளைகளையும்‌ பறிகொடுத்து, மானங்கெட்டு, கற்பிழந்து கஷ்டப்படுகிறார்களேயென்று கொஞ்சமும்‌ கவலைப்படுவதே யில்லை. அவர்களும்‌ நம்முடைய சகோதரிகள்தானே. அவர்கள்‌ கற்பும்‌ மானமும்‌ கெட்டு கஞ்சிக்கு அலைய நாம்‌ தானே காரணமாயிருந்து வருகிறோம்‌ என்று கொஞ்சமும்‌ சிந்திப்ப தேயில்லை. உத்தியோகமும்‌, பணமும்‌, அந்தஸ்தும்‌ வந்தால்‌ முதலாவது தேசாபிமானம்‌ ஓடிப்போய்‌ விடுகிறது. ஏழைகளிடத்தில்‌ அன்பும்‌ ,தயாளமும்‌ ஏற்படும்‌ வழி அடைபட்டுப்‌ போய்விடுகிறது. இவைகளை யெல்லாம்‌ பார்க்கும்‌ பொழுது ஒரு தூக்குத்‌ தண்டனை உள்ளவருக்கு தூக்கிலிடும்‌ தேதி கிட்ட வரவர எவ்வளவு பயமும்‌ கஷ்டமும்‌ ஏற்படுமோ, அதுபோல்‌ தீபாவளி வருகிற தென்றால்‌ தீபாவளி நாள்‌ கிட்ட நெருங்க நெருங்க ஐயோ! நம்‌ ஏழைக்‌ கூலிக்கார ஸ்திரீகள்‌ வயிற்றிலும்‌ வாயிலும்‌ மண்ணைப்‌ போடுவதான காரியங்கள்‌ நடைபெறப்‌ போகிற நாள்‌ வரப்‌ போகிறதே! வரப்‌ போகிறதே! என்ற பயமும்‌ கஷ்டமும்‌ மனவேதனையும்‌ ஏற்படச்செய்கிறது. எவ்வளவோ நன்மைக்காக ஏற்பட்ட பண்டிகை இக்‌ கொடுமைக்கு உதவவா வர வேண்டும்‌? என்று மனம்‌ பதறுகிறது. நமது நாட்டில்‌ நன்மைக்காக ஏற்பட்ட காரியங்‌ களெல்லாம்‌ எப்படி தீமைக்கு உதவப்பட்டு வருகிறதோ அதுபோல நமது தீபாவளியும்‌ இவ்வளவு பெரிய தீமைக்கு ஆளாகிறதே என்று தேச க்ஷேமத்‌ தில்‌ கவலையுள்ளவர்களும்‌ ஏழைகளிடத்தில்‌ அன்புள்ளவர்களும்‌ கவலைப்‌ படாமலிருக்கமுடியா தென்றே நம்புகிறோம்‌. தீபாவளியின்‌ போது 291 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அர்த்தமில்லாமல்‌ சுடும்‌ வெடி மருந்து, பட்டாசுக்காக நம்‌ நாட்டிலிருந்து எவ்வளவு பணம்‌ வெளி நாட்டிற்‌ குப்‌ போகிறதென்பதை நமது நாட்டு ஜனங்கள்‌ அறிவதேயில்லை. ஏதோ சிலர்‌ அறிந்தாலும்‌ அதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. ஒரு தேசம்‌ முன்னுக்கு வரவேண்டுமானால்‌ அத்தேச மக்களுக்கு கடுகளவாவது தேசாபி மானமும்‌, பரோபகார எண்ண மும்‌ ஏற்பட்டால்தான்‌ முன்னுக்கு வரமுடியும்‌. அது இல்லாத நாடு எவ்விதத்தி லும்‌ முன்னுக்கு வராது. ஆதலால்‌, இவ்வருஷ தீபாவளியை தேச விடுதலைக்‌ கும்‌ ஏழைகளின்‌ கஷ்டம்‌ நீங்குவதற்கும்‌ ஏழைத்‌ தொழிலாள சகோதர சகோதரிகள்‌ நன்மைக்கும்‌ உப யோகப்‌ படும்படி கொண்டாட வேண்டுமா னால்‌ பணக்காரர்கள்‌, உத்தி யோகஸ்தர்கள்‌, வக்கீல்கள்‌, முதலாளிகள்‌ முதல்‌ ஏழைகள்‌, கூலிக்காரர்கள்‌, நடுத்தர வகுப்பினர்‌ முதலிய எல்லோரும்‌ தீபாவளி யின்‌ பொருட்டு தங்களுக்காகவும்‌ தங்கள்‌ பெண்டு பிள்ளைகள்‌, மக்கள்‌, மருமக்கள்‌, வேலைக்காரர்கள்‌, ஏழைகள்‌ முதலியவர்களுடைய ஒவ்வொரு வருடைய திருப்திக்காகவும்‌ செலவு செய்ய நினைக்கும்‌ ஒவ்வொரு பைசாவும்‌ நம்‌ நாட்டிலேயே இருக்குமா? நம்நாட்டில்‌ கஞ்சிக்கில்லாமல்‌ திண்டாடும்‌ ஏழை களுக்கும்‌, கூலிக்கார சகோதர சகோதரிகளுக்கும்‌ போய்ச்‌ சேருமா? அவர்‌ கள்‌ திருப்தி அடைவார்களா? என்று யோசித்துப்‌ பார்த்தே செய்ய வேண்டி யது முக்கியமான கடமையாகும்‌. அப்படிச்‌ செய்வது வாஸ்தவமானால்‌ துணி வாங்குவதில்‌ வெளி நாட்டுக்குப்‌ பணம்‌ போகும்படியான பட்டோ, சரிகையோ, வெளிநாட்டு மல்லோ, சல்லாவோ, இன்னும்‌ பலமாதிரியான வெளிநாட்டு சாமான்க ளையோ வாங்காமல்‌ நம்நாட்டில்‌ நம்‌ ஏழைச்‌ சகோதரிகளால்‌ கைராட்டினத்‌ தில்‌ - நூற்கப்பட்டு ஏழைச்‌ சகோதரர்களால்‌ கைத்தறியில்‌ நெய்யப்பட்டது மான கதர்‌ துணியையே வாங்க வேண்டும்‌; அதையே உடுத்தவேண்டும்‌; அதன்‌ தத்துவத்தை நமது மக்கள்‌, மருமக்கள்‌, பெண்டு பிள்ளைகளுக்குச்‌ சொல்லி அதையே அவர்களையும்‌ உடுத்தச்‌ செய்ய வேண்டும்‌. இதனால்‌ எத்தனை ஏழைக்‌ குடும்பங்களில்‌ தீபாவளி எவ்வளவு சந்தோஷமாய்‌ நடைபெறும்‌. இப்படிச்‌ செய்யாவிட்டால்‌ எத்தனைக்‌ குடும்பங்களுக்கு தீபாவளி இல்லாமல்‌ போய்விடும்‌ என்பதையும்‌ அறியாதவர்களுக்கு எடுத்துச்‌ சொல்ல வேண்டியது ஒவ்வொருவரின்‌ கடமையாகும்‌. இப்படியே ஒவ்வொருவரும்‌ நினைத்து எல்லோரும்‌ கதர்‌ வாங்க ஆரம்பித்தால்‌ ஒரு சமயம்‌ எல்லோருக்கும்‌ கதர்‌ கிடைப்பது கஷ்டமாய்ப்‌ போனாலும்‌ போக லாம்‌. ஆதலால்‌ இந்த எண்ணம்‌ உள்ள தேசாபிமானிகளும்‌ ஏழைக்கிரங்கு பவர்களும்‌ இப்பொழுதே கதர்‌ வாங்கி வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. புதுப்‌ பாளையத்திலும்‌ திருப்பூரிலும்‌ இன்னும்‌ சில இடங்களிலும்‌ மொத்தமாய்‌ கதர்‌ கிடைக்கும்‌. ஈரோடு, சேலம்‌, மதுரைதிருநெல்வேலி, காரைக்குடி, விருதுநகர்‌, திருச்சி, தஞ்சாவூர்‌, மன்னார்‌ குடி, கோயமுத்தூர்‌. கடலூர்‌, மதராஸ்‌,மாயவரம்‌, வேலூர்‌, ராஜபாளையம்‌ முதலிய இடங்களில்‌ காங்கிரஸ்‌ டெப்போவும்‌ காங்கிரஸ்‌ நற்சாக்ஷிப்‌ பத்திரம்‌ பெற்ற கதர்க்‌ கடைகளும்‌ இருக்கின்றன. குடி அரசு - 1926 (2) 292 சர்க்கா சங்கத்தார்‌ கூடுமானவரை விசாரித்து சுத்தமாய்‌ கதர்‌ உற்பத்தி செய்பவர்களுக்கும்‌ விற்பவர்களுக்கும்‌ காங்கிரஸ்‌ நற்சாக்ஷிப்‌ பத்திரங்களும்‌ கொடுத்திருக்கிறார்கள்‌. வாங்குகிறவர்கள்‌ தயவு செய்து கவனித்து சுத்த கதராய்ப்‌ பார்த்து வாங்க வேண்டும்‌. போலி கதர்‌, மில்‌ நூல்‌ கதர்‌, வெளிநாட்டு நூல்‌ கதர்‌ இவைகள்‌ வாங்குவதால்‌ தேசத்திற்கோ ஏழைச்‌ சகோதர சகோதரிகளுக்கோ ஒருவித நன்மையும்‌ உண்டாகப்‌ போவதில்லை. (குடி நூல்‌) ஈ.வெ.ரா குடி அரசு - கட்டுரை - 10.10.1926 293 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. டாக்டர்‌ வாரகராச ey நாமரட௫வுக்குப்‌ பூச்சாண்மு காட்டல்‌ ஸ்ரீமான்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு சுயராஜ்யக்‌ கட்சியைப்‌ பார்ப்‌ பனர்‌ கட்சி என்றும்‌, அதை ஒழிக்க வேண்டும்‌ என்றும்‌, தேர்தலில்‌ சுயராஜ்யக்‌ கட்சி வெற்றி பெற்றால்‌ பார்ப்பன ஆதிக்கம்‌ ஓங்குவதுடன்‌ பார்ப்பன ரல்லாதாருக்கு மீளாத ஆபத்து வரும்‌ என்றும்‌ சொன்னதிலிருந்து, நமது பார்ப்பனரும்‌, அவர்களிடம்‌ கூலி பெற்று வயிறு வளர்க்கும்‌ கூலிகளும்‌, பத்திரிகைகளும்‌ டாக்டர்‌ நாயுடுவுக்குப்‌ பூச்சாண்டி காட்ட ஆரம்பித்து விட்டார்கள்‌. அதாவது “நாயுடு சங்கதியை வெளிப்படுத்தப்‌ போகிறோம்‌. அவர்‌ ஜயிலில்‌ நடந்து கொண்டதை வெளிப்படுத்துகிறோம்‌”” என்று என்ன என்னமோ ஈனத்தனமாய்க்‌ கூச்சல்‌ போடுகின்றார்கள்‌. அப்படியானால்‌ டாக்டர்‌ நாயுடுவின்‌ செய்கை என்ன என்பதை ஒரு கை பார்த்தே விடலாம்‌. சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவர்களைப்‌ போல்‌ கள்‌, சாராயம்‌ , பிராந்தி, சாப்பிடு கிறாரா? சுயராஜ்யக்‌ கட்சி பிரதானிகள்‌ போல்‌ தேவடியாளைக்‌ கூட்டிக்‌ கொண்டு ஊர்‌ ஊராய்த்‌ திரிகிறாரா? அல்லது போன இடங்களிலெல்லாம்‌ குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம்‌ பிராந்தி விற்றுப்‌ பணம்‌ சம்பாதிக்‌ கிறாரா? பத்திரிகையில்‌ பேர்‌ போடுவதாகவும்‌ படம்‌ போடுவதாகவும்‌ சொல்லிப்‌ பணம்‌ சம்பாதித்தாரா? பத்திரிகைச்‌ செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம்‌ பணம்‌ வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம்‌ சம்பாதித்‌ துக்‌ கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில்‌ மல்‌ துணியும்‌, பெண்சாதிக்குப்‌ பட்டு, சல்லா முதலிய அன்னிய நாட்டுத்‌ துணியும்‌ உபயோகித்துக்‌ கொண்டு மேடைக்கு வரும்‌ போது கதர்‌ கட்டிக்‌ கொண்டு வந்து பொது ஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்‌ தனமாய்‌ சர்க்கார்‌. அதிகாரிகளிடம்‌ கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக்‌ கொண்டாரா? மந்திரி உத்தி யோகம்‌ வேண்டுமென்று யார்‌ காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தி யோகங்களையும்‌ பதவிகளையும்‌ பெறலாமென்று தனது உத்தியோகத்தை ராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா? அல்லது இன்னமும்‌ தனக்கு ஏதாவது ஒரு உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? எந்த விதத்தில்‌ அவர்‌ “பூளவாக்கை” வெளிப்படுத்தக்‌ கூடும்‌ என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதியில்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி பலமாய்‌ ஆரம்பித்த காலத்திலும்‌, அதைக்‌ கொல்ல இம்மாதிரியே சுக்கிரீவனைப்‌ போலவும்‌ விபூஷஒணனைப்‌ போலவும்‌ அனுமார்களைப்‌ குடி அரசு - 1926 (2) 294 போலவும்‌ ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு வையும்‌ கலியாணசுந்திர முதலியாரையும்‌ மற்றும்‌ பல பேர்களையும்‌ தங்கள்‌ சுவாதீனப்படுத்திக்‌ கொண்டு அவர்களுக்கு ஜாதி, குல அபிமானம்‌ இல்லாமல்‌ செய்தும்‌, அவர்‌ கள்‌ மூலமாய்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியைத்‌ தலையெடுக்க வொட்டாமல்‌ செய்ய பாடுபட்டதுமல்லாமல்‌ இப்பொழுதும்‌ அவர்களை மிரட்டிப்‌ பூச்சாண்டி காட்டுவதானால்‌ இவர்கள்‌ பூச்சாண்டிக்கு யார்தான்‌ பயப்படுவார்‌. கள்‌? இவர்கள்‌, இவர்களைப்‌ பற்றி வெளியாக்கப்‌ போகும்‌ விஷயம்‌. என்னவென்றுதான்‌ ஒரு கை பார்க்கலாம்‌ என்றே தயாராயிருக்கிறோம்‌. இதன்‌ பலனாகவாவது அரசியல்‌ துறையிலுள்ள எல்லாருடைய யோக்கியதை யையும்‌ வெளியாக்கக்‌ கூடுமென நினைத்தே அவற்றை மனப்பூர்வமாய்‌ வரவேற்கிறோம்‌ . குடி அரசு - கட்டுரை - 10.10.1926 295 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. 5000 ரூபாய்‌ இணாம்‌ தமிழ்நாட்டுச்‌ சார்பாக இந்திய சட்டசபைக்குச்‌ சென்ற தடவை ஒருவர்‌. தவிர எல்லோரும்‌ ஐயங்கார்‌ பார்ப்பனர்களாகவே நின்றார்கள்‌. இந்தத்‌ தடவையும்‌ அதேமாதிரி எல்லோரும்‌ ஐயங்கார்‌ பார்ப்பனர்களாகவே நிற்கிறார்கள்‌. பார்ப்பனரல்லாதார்‌ சார்பாய்‌ இந்திய சட்டசபைக்கு சென்னை நகரத்‌ தொகுதிக்கு நிற்கும்‌ ஸ்ரீமான்‌ சக்கரை செட்டியாருக்கு விரோதமாய்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ நிற்கிறார்‌. எப்படியாவது ஸ்ரீமான்‌ சக்கரை: செட்டியாரை தோற்கடித்துத்தான்‌ வெற்றிபெற ஆசைப்பட்டு பணங்‌ கொடுத்து ஆள்களைச்‌ சேர்த்து பொய்ப்‌ பிரசாரம்‌ செய்கிறார்‌. இதற்காகத்‌ தன்னைப்‌ பெரிய தியாகி என்று சொல்லச்‌ சொல்லுகிறார்‌; தனக்கு ஓட்டுக்‌ கொடுத்தால்‌ சீக்கிரம்‌ சுயராஜ்யம்‌ வருமென்று சொல்லச்‌ சொல்லுகிறார்‌. ஆனால்‌ ஒருவராவது இதுவரை ஐயங்கார்‌ என்ன தியாகம்‌ செய்தார்‌ என்று சொல்லவில்லை. ஒருவராவது இதுவரை ஐயங்காரின்‌ சுயராஜ்யத்‌ திட்டம்‌ இன்னது என்று சொல்லவில்லை. ஐயங்கார்‌ தியாகமெல்லாம்‌ வக்கீல்‌ உத்தி யோகத்தில்‌ மாதம்‌ பத்தாயிரம்‌ இருபதாயிரம்‌ சம்பாதித்துப்‌ பணம்‌ சேர்த்து வருவதோடு, காலி ஆசாமிகளுக்கும்‌ கொஞ்சம்‌ கூலி கொடுத்து பார்ப்பனரல்‌ லாதார்‌ கட்சியையும்‌ பார்ப்பனரல்லாதார்‌ தலைவர்களையும்‌ திட்டும்படி சொல்லுவதும்‌, கூட்டங்களில்‌ கலகம்‌ செய்யச்‌ செய்வதும்‌, பணம்‌ கொடுத்துப்‌ பிரசாரம்‌ செய்து காங்கிரஸ்‌ தலைவர்‌ பதவி பெற்றதுமானவை தவிர வேறு என்ன என்ன தியாகங்கள்‌ செய்திருக்கிறார்‌ என்று சொல்லுகிற வர்களுக்கு 5000 ரூபாய்‌ இனாம்‌. ஸ்ரீமான்‌ ஐயங்காரின்‌ சுயராஜ்யத்‌ திட்டம்‌ பார்ப்பனரல்லாத கட்சியை ஒழித்து, பார்ப்பனரல்லாத மந்திரிகளைத்‌ தள்ளிவிட்டு, அந்த ஸ்தானத்தில்‌ தாங்களும்‌ தங்கள்‌ இனத்தாரும்‌ உட்கார்ந்து கொண்டு.பார்ப்பனரல்லாதார்‌. அனுபவித்து வருவதாய்ச்‌ சொல்லும்‌ அதிகாரங்களையும்‌, வேறு பதவிக. ளையும்‌, உத்தியோகங்களையும்‌ பிடுங்கிப்‌ பார்ப்பனர்களுக்குக்‌ கொடுத்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதைத்‌ தவிர உண்மையான சுயராஜ்யத்‌ திட்டம்‌ ஏதாவது அவருள்ளத்தில்‌ இருக்கிறதா என்று கண்டு பிடித்துச்‌ சொல்லுகிறவர்களுக்கு 1000 ரூபாய்‌ இனாம்‌. ஸ்ரீமான்‌ ஐயங்காருக்காகப்‌ பிரசாரம்‌ செய்கிறவர்களிலாவது மேடைமேல்‌ நின்று பேசுகிறவர்களிலாவது பத்திரிகையில்‌ எழுதுகிறவர்களிலாவது ஸ்ரீமான்‌ ஐயங்காரிடம்‌ கூலி குடி அரசு - 1926 (2) 296 வாங்காமல்‌ பேசுகிற எழுதுகிற ஒரு நபரையாவது காட்டுபவர்களுக்கு 1500 ரூபாய்‌ இனாம்‌. இப்போது அவர்‌ கூலி கொடுத்து பொய்ப்‌ பிரசாரம்‌ செய்விக்கும்‌ ஆள்‌ களையாவது கூட்டத்தில்‌ கலகம்‌ செய்விக்கும்‌ ஆள்களையாவது நவம்பர்‌ மாதம்‌ 8-ந்‌ தேதி எலெக்ஷன்‌) ஆனபிறகு கிட்டத்தில்‌ சேர்ப்பார்‌ என்று ரூபிப்பவருக்கு 2000 ரூபாய்‌ இனாம்‌. சென்னை வாசிகளே! சக்கரை செட்டியாரின்‌ தோல்வி பார்ப்பன ரல்லாதாரின்‌ தோல்வியாகும்‌. ஐயங்காரின்‌ வெற்றி பார்ப்பன ஆதிக்கத்திற்கு வெற்றி ஆகும்‌. ஆதலால்‌ வீணாகக்‌ கூலிக்கு மாரடிப்பவர்கள்‌ வார்த்தை களை நம்பி மோசம்‌ போகாதீர்கள்‌. குடி அரசு - கட்டுரை - 10.10.1926 297 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வெற்றி நமதே சட்டசபைத்‌ தேர்தலில்‌ யார்ப்பணால்லாதார்‌ கட்சிக்கு வவற்றி உறுதி சென்னை மாகாண சட்டசபை முதலியவைகளுக்கு இம்மாதம்‌ நாலாம்‌ தேதி அபேக்ஷகர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டு விட்டது. அபேக் கர்கள்‌ பற்பல க௯ஷிகளின்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு நியமனம்‌ பெற்று இருந்தாலும்‌ அவர்கள்‌ பெரும்பாலும்‌ பார்ப்பனர்‌ கட்சி, பார்ப்பனரல்லாதார்‌. கட்சி என்னும்‌ இரண்டு கட்சிகளுக்குள்ளாகவே ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌ சிலர்‌ இரு கட்சிகளையும்‌ பற்றி லட்சிய மில்லாமல்‌ தங்கள்‌ சுயநல மொன்றையே பிரதானமாய்க்‌ கருதி நின்றிருக்‌ கலாம்‌. அதாவது, பார்ப்பன ரல்லாதார்களில்‌ யார்‌ யார்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ பேரால்‌ நிறுத்தப்பட்டிருக்‌ கிறார்களோ அவர்களில்‌ பெரும்பாலோர்‌ சுயநலத்தை உத்தேசித்தே அக்கட்சியின்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு இருக்கிறார்கள்‌. உதாரணமாக, சுயராஜ்யக்‌ கட்சியில்‌ இருக்கும்‌ பார்ப்பன ரல்லாதாராகிய ஸ்ரீமான்கள்‌ முத்தையா முதலியார்‌, துளசிராம்‌ போன்ற பலரைச்‌ சொல்லலாம்‌. இவர்கள்‌ முதலில்‌ ஜஸ்டிஸ்‌ ககஷியில்‌ இருந்து மனஸ்தாபத்துடன்‌ விலகினவர்கள்‌. இப்போது சுயராஜ்யக்‌ கட்சியின்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொள்ளுகிறார்கள்‌. இதற்குக்‌ காரணம்‌ இதுசமயம்‌ பார்ப்பனர்‌ தயவில்லாமல்‌ சட்டசபைக்கு வர முடியாது என்கிற பயமும்‌, எதிர்க்‌ கட்சியில்‌ இருந்து மிரட்டினால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ பயந்து கொண்டு ஏதாவது உத்தியோகம்‌ கொடுக்க மாட்டார்களா என்கிற தந்திரமும்‌ தான்‌. பார்ப்பனர்களும்‌ எப்படியாவது யாரைக்‌ கொண்டாவது ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழித்து விடவேண்டும்‌ என்கிற கொள்கை யுடையவர்களாயிருப்பதால்‌ அங்கு யார்‌ சண்டை போட்டுக்‌ கொண்டு வருகிறவர்களானாலும்‌, அவரைப்‌ பூரண கும்பத்துடன்‌ வரவேற்கிறார்கள்‌. மற்றும்‌ பலர்‌ தாங்கள்‌ இதுசமயம்‌ சுயராஜ்யக்‌ கட்சிப்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டால்‌ பார்ப்பனர்‌ உதவி செய்து சட்டசபைக்குத்‌ தெரிந்தெடுக்கச்‌ செய்து விடுவார்கள்‌; பிறகு எப்படி வேண்டுமானாலும்‌ திரும்பிவிடலாம்‌ என்கிற எண்ணத்தின்‌ பேரிலேயே அந்தக்‌ கட்சியின்‌ பெயரைத்‌ தற்கால சாந்தியாகச்‌ சொல்லிக்கொண்டு நின்றிருக்கிறார்களே அல்லாமல்‌ உண்மை யான கட்சிப்‌ பற்று என்று சொல்லவே முடியாது. மற்றும்‌ பலருக்கு எந்தக்‌ கட்சியின்‌ பெயரையும்‌ சொல்லிக்‌ கொள்வதற்கு தைரியமில்லாதவர்களாகி குடி அரசு - 1926 (2) 298 ஒரு கட்சியிலும்‌ சேராதவர்கள்‌ என்று சொல்லிக்கொண்டு சுயேச்சைவாதி களாக நின்றிருக்கிறார்கள்‌. இம்மாதிரி இதுவரை சென்னை சட்டசபைக்குப்‌ பொதுத்‌ தேர்தலில்‌ நின்ற எல்லா அபேகஷகர்களிலும்‌ 64 பேர்‌ சுயராஜ்யக்‌ கட்சி காங்கிரஸ்‌ கட்சி என்றும்‌ சொல்லிக்‌ கொள்பவர்கள்‌; 56 பேர்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி என்றும்‌ 61 பேர்‌ சுயேச்சைவாதிகள்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொள்பவர்களாக நின்றிருந்த போதி லும்‌, சுயராஜ்யக்‌ கட்சித்‌ திட்டத்தின்படி பணம்‌ கொடுத்து முச்சலிக்காவில்‌ கையெழுத்துச்‌ செய்திருப்பவர்கள்‌ 10 அல்லது15 பேர்‌ கூட இருக்கமாட்டார்‌. கள்‌. அன்றியும்‌ எலக்ஷன்‌ நடப்பதற்குள்ளாகக்‌ கட்சி மாறுகிறவர்கள்‌ பலர்‌ இருக்கலாம்‌. எலக்ஷன்‌ ஆனவுடன்‌ மாறுகிறவர்கள்‌ பலர்‌ இருக்கலாம்‌. உதாரணமாக, ஸ்ரீமான்கள்‌ திருச்சி சேதுரத்தினமய்யர்‌, டி.எ.ராமலிங்கம்‌ செட்டியார்‌ போன்றவர்கள்‌ நாட்டில்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்குச்‌ செல்வாக்கிருக்‌ கிறது என்கிற எண்ணத்தின்‌ பேரில்‌ சுயராஜ்யக்‌ கட்சித்‌ திட்டத்தில்‌ கையொப்‌ பமிட்டு ரூபாயும்‌ கொடுத்தவர்கள்‌; இப்போது அக்கட்சிக்கு தேசத்தில்‌ செல்வாக்கு இல்லை என்று தெரிந்தவுடன்‌ தங்களை சுயேச்சைக்‌ கட்சியார்‌. கள்‌ என்று விளம்பரப்படுத்திக்‌ கொண்டார்கள்‌. எப்படி இருந்த போதிலும்‌ சட்டசபைகளில்‌ சுயராஜ்யக்‌ கட்சி என்கிற பார்ப்பனர்‌ கட்சியும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி என்கிற பார்ப்பனரல்லாதார்‌ கட்சியும்‌ தன்‌ தன்‌ நோக்கங்களை நிறை வேற்றும்‌ போது பார்ப்பனர்கள்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்குத்தான்‌ ஓட்டுச்‌ செய்வார்கள்‌. பார்ப்பனரல்லாதார்‌ பெரும்பாலும்‌ சிலர்‌ தவிர மற்றவர்கள்‌ பார்ப்பனரல்லாதார்‌. முன்னேற்றத்திற்குத்தான்‌ ஓட்டுச்‌ செய்வார்கள்‌ என்பது உறுதி. உதாரணமாக, தேவஸ்தான மசோதா வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்‌ தீர்மானம்‌ முதலியவை களில்‌ ஸ்ரீமான்கள்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌, டி.எ. ராமலிங்கம்‌ செட்டியார்‌ ஆகியவர்கள்‌ செய்கையைப்‌ பார்க்கலாம்‌. இது போலவேதான்‌ சுயேச்சைவாதிகள்‌ என்பாருள்‌ பெரும்பாலோரும்‌ நடந்து கொள்ளுவார்கள்‌. ஆதலால்‌ சுயேச்சைவாதிகளில்‌ உள்ள பார்ப்பனர்களை சுயராஜ்யக்‌ கட்சி யிலும்‌, பார்ப்பனரல்லாதாரை ஜஸ்டிஸ்‌ கட்சியிலும்‌ சேர்த்‌ துத்‌ தான்‌ கணக்குப்‌ பார்க்க வேண்டும்‌. மற்றும்‌ தேர்தல்‌ ஆனபிறகு சில பேர்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ இருந்தும்‌ மெல்ல மெல்ல சுயேச்சை வாதியாகி கடைசியாக ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு வரக்கூடும்‌. ஏனெனில்‌ இதுசமயம்‌ சுயராஜ்‌ யக்‌ கட்சி என்கிற பார்ப்பனர்‌. கட்சிக்குத்தான்‌ பிரசாரம்‌ செய்யவும்‌ மக்களை ஏமாற்றவும்‌ பத்திரிகைகளும்‌ மடாதிபதிகள்‌ பணமும்‌ கூலி ஆட்களும்‌ தாராளமாய்‌ இருப்பதால்‌ அதன்‌ பெயரைச்‌ சொன்னால்தான்‌ அநுகூலங்‌ கிடைக்குமென்று நம்பும்படியாக நமது பார்ப்பனர்கள்‌ பொய்ப்‌ பிரசாரம்‌ செய்துவிட்டதால்‌ இப்போது அந்தப்படி சொல்லிக்‌ கொள்ள வேண்டிய தாயிற்று. ஆனால்‌ சுயேச்சைவாதிகளிலும்‌, சுயராஜ்யக்‌ கக்ஷியாரிலும்‌ பலபேர்‌ ஜஸ்டிஸ்‌ ககஷிக்கு வந்து சேருவார்கள்‌ என்று எதிர்ப்பார்ப்பது போல்‌ ஜஸ்டிஸ்‌ ககஷியிலிருந்து சுயராஜ்யக்‌ கக்ஷிக்கு யாராவது வந்து சேரு வார்களா என்று எதிர்பார்க்க முடியாது. இதை ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியும்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகளும்‌ ஒப்புக்‌ கொள்ளுகின்றன. 299 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஏனெனில்‌ அப்படிச்‌ சேருகிறவர்களாயிருந்தால்‌ இப்போதே பார்ப்பனர்‌. விளம்பரங்களைக்‌ கண்டு மயங்கிப்போய்‌ அதில்‌ போய்ச்‌ சேர்ந்திருப்பார்‌ கள்‌. ஆதலால்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ எவ்வளவு ஜால வித்தை செய்தாலும்‌, எவ்வளவு பொய்ப்‌ பிரசாரம்‌ செய்தாலும்‌, அடுத்துக்‌ கூடும்‌ சட்டசபை பார்ப்பன ஆதிக்கத்திற்கு உலை வைக்கக்‌ கூடியதாகத்தான்‌ முடியும்‌. நமது பார்ப்ப னர்கள்‌ தங்கள்‌ ஆதிக்கத்திற்கு எவ்வளவோ சூழ்ச்சிகள்‌ செய்து எத்தனையோ பார்ப்பனரல்லாத ஆட்களைச்‌ சுவாதீனம்‌ செய்து பார்த்தார்‌ கள்‌. ஒரே நிலையாய்‌ ஒரு வருஷமாவது பார்ப்பனரோடு இருந்த ஒரு பார்ப்பன ரல்லாதார்‌ பெயரையாவது கண்டுபிடிக்கக்‌ கூடுமானால்‌ பார்ப்பனரல்லாதா ரால்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியைக்‌ கெடுக்கக்‌ கூடும்‌ என்று நினைக்கலாம்‌. இதுவரை பார்ப்பனர்கூடச்‌ சேர்ந்திருந்த பார்ப்பனரல்லாதார்‌ எல்லோரும்‌. பார்ப்பனர்‌ யோக்கியதை அறிந்து ஒவ்வொருவராக வெளி வந்து கொண்டு தான்‌ இருக்கிறார்கள்‌. இனியும்‌ வெளிவரத்தக்க ஆட்கள்தான்‌ அவர்களோடு இருக்கிறார்களே தவிர அவர்களுக்கு அனுகூலமாக யோக்கியமுள்ள ஒருவராவது இது சமயம்‌ அவர்களிடம்‌ இல்லை. உதாரண மாக, சென்னை பார்ப்பன பிரசங்க மேடைகளில்‌ இருக்கும்‌ ஆட்‌ களைக்‌ கவனித்துப்‌ பார்த்தாலே தெரியவரும்‌. ஆகையால்‌ வரப்போகும்‌ தேர்தலின்‌ முடிவானது சென்ற வருஷம்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியில்‌ இருந்த சட்ட சபை மெம்பர்‌. களின்‌ எண்ணிக்கையை விட குறைந்தது 10 அங்கத்தினரா வது அதிகமாயி. ருக்குமே தவிர எவ்விதத்திலும்‌ குறையாது. வீணாக ஸ்ரீமான்கள்‌ சத்திய மூர்த்தியின்‌ “புரட்டையும்‌” சுதேச மித்திரனின்‌ “புளுகை யும்‌” கண்டு யாரும்‌ மயங்க வேண்டியதில்லை என்றும்‌, எந்த விதத்திலாவது அடுத்த வருஷத்திய சட்டசபையில்‌ பார்ப்பனர்‌ கை உயர்ந்து விடுமோ என யாரும்‌ கவலைப்பட வேண்டியதில்லை என்றும்‌ உறுதி கூறுவோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 10.1026 குடி அரசு - 1926 (2) 300 யாருக்கு ஓட்டு ககாடப்பது - சித்திரபுத்திரன்‌ ராஜு: என்னப்பா சுந்தரம்‌ சட்டசபை எலக்ஷன்‌ வந்து விட்டதே, கண்டவர்கள்‌ எல்லாம்‌ அபேகஷகராய்‌ நிற்கிறார்களே இவர்களில்‌ யாருக்கு ஓட்டுப்‌ போடுவது. சுந்தரம்‌: யாருக்கோ ஒருவருக்குப்‌ போட்டால்‌ போகிறது. நாம்‌ என்ன ஒத்துழையாதாரா? யாருக்கும்‌ போடுவதில்லை என்று சொல்லுவ தற்கு. அதெல்லாம்‌ மலையேறிப்‌ போய்விட்டது. இப்பொழுதெல்லாம்‌ ஒத்துழைப்பேற்பட்டதோடு ஒருவருக்கொருவர்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு ஒத்துழைப்‌ பதாய்ப்‌ போய்விட்டது. ராஜு:நீ சொல்லுவது சரிதான்‌. ஆனாலும்‌, அதிலும்‌ தராதரம்‌ இல்லையா? சுந்தரம்‌: தராதரம்‌ என்ன? சுயராஜ்ஜியக்‌ கட்சிக்காரருக்குத்தான்‌ போட்டு விடேன்‌. ராஜு: அதென்ன அவ்வளவு அசார்சமாய்ச்‌ சொல்லுகிறாய்‌. சுயராஜ்ஜியக்‌ கட்சி என்றால்‌ என்ன? அதன்‌ கொள்கை என்ன? அதன்றி வேறு கட்சிகள்‌ என்ன என்ன இருக்கிறது? இவைகள்‌ தெரிய வேண்டாமா? சுந்தரம்‌: ஓஹோ ! இதுவே இன்னமும்‌ உனக்குத்‌ தெரியாதோ. சரி சரி, நீ சரியான தற்குறி போல்‌ இருக்கிறாய்‌. சுயராஜ்யக்‌ கட்சி என்பது அரசியல்‌ கட்சி என்று பெயர்‌. அது முதலில்‌ ஒத்துழையாமை கொண்ட மகாத்மா காங்கிரசுக்கு விரோதமாய்‌ மகாத்மா ஜெயிலில்‌ இருக்கும்‌ சமயம்‌ பார்த்து நமது பார்ப்பனர்கள்‌ அதைக்‌ கொல்லுவதென்றே தேசபந்து தாஸ்‌ என்கிற ஒரு பார்ப்பனரல்லாத நபரை முன்னால்‌ வைத்துக்‌ கொண்டு ஆரம்பித்த கட்சி. தேசபந்து தாசுக்கு ஒத்துழையாமையின்‌ பலனாய்‌ கொஞ்சம்‌ செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அதை நமது பார்ப்பனர்கள்‌ இதற்கு அவரை உபயோகப்‌ படுத்தும்படி செய்துவிட்டார்கள்‌. வெளியில்‌ வந்த மகாத்மாவும்‌ தேசபந்து 201 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 தாஸை எதிர்க்க இஷ்டமில்லாததால்‌ தாக்ஷண்‌ ணியத்திற்குக்‌ கட்டுப்பட்டு கொஞ்சங்‌ கொஞ்சமாக விட்டுக்‌ கொடுத்துக்‌ கொண்டே வந்து கடைசியாக தானும்‌ விலகி விட்டார்‌. இதன்‌ மத்தியில்‌ தாசரும்‌ செத்துப்‌ போனார்‌. கடைசி யாக இந்த சுயராஜ்ஜியக்‌ கட்சி என்பது நமது பார்ப்பனர்கள்‌ கைக்கே வந்து சேர்ந்தது. அவர்கள்‌ இதை சர்க்காரை எதிர்ப்பதற்கு என்று சொல்லிக்‌ கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்காக உபயோகித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. இதுதான்‌ சுயராஜ்ஜியக்‌ கட்சி என்பது. மற்றொரு கட்சி ஜஸ்டிஸ்‌ கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது ஆதியில்‌ பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்திற்காக இரண்டு உத்தம தேசபக்தர்களான ஸ்ரீமான்கள்‌ டி.எம்‌. நாயர்‌ அவர்களாலும்‌ சர்‌.பி.டிதியாகராய செட்டியாராலும்‌ ஏற்பட்டது. இதற்கும்‌ நமது பார்ப்பனர்கள்‌ ஒத்துழையாமையை கொல்ல செய்த சூழ்ச்சி போலவே ஸ்ரீமான்கள்‌ வரத ராஜுலு நாயுடு, கலியாண சுந்தர முதலியார்‌ என்கிற சில பார்ப்பன ரல்லாதாரைச்‌ சேர்த்துக்‌ கொண்டு அவர்களைத்‌ தலைவர்களாக்கி அவர்கள்‌ மூலமாகவே எவ்வளவோ சூழ்ச்சி கள்‌ செய்து இதையும்‌ கொல்லப்‌ பார்த்தார்‌. கள்‌. என்ன செய்தும்‌ எவ்வளவோ தத்துக்கும்‌ ஆபத்துக்கும்‌ தப்பி பார்ப்ப னரல்லாதார்‌ என்கிற ஒரு கூட்டம்‌ தென்னாட்டிலிருக்கிறது என்றும்‌, அவர்‌. களும்‌ மனித வர்க்கத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ என்றும்‌ உலகமறியச்‌ செய்த தோடு, மக்களுக்குச்‌ சுயமரியாதை என்ற ஒன்று இருக்கிறது. அதை அடை வதுதான்‌ மக்களின்‌ பிறப்புரிமை என்று போதித்து பார்ப்பனர்‌ ஏகபோகமாய்‌ அனுபவிக்கும்‌ அரசாங்க அதிகாரம்‌, ஆதிக்கம்‌, பதவி, உத்தியோகம்‌ முதலியதுகளில்‌ சிலதாவது பார்ப்பனல்லாதாருக்கும்‌ கிடைக்கும்படி செய்ததல்லாமல்‌ பார்ப்பனரல்லாத பெரும்பான்மையான மக்களான ஒடுக்கப்பட்டவர்கள்‌ முதலானவர்களுக்கும்‌ ஒரு உணர்ச்சியை உண்டாக்கி அவர்களையும்‌ மனிதராக்கப்‌ பாடுபட்டு வருகிறது. இதுதான்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி என்பது. சுயேச்சைக்‌ கட்சி என்பது தனித்தனி மனிதனுக்கு ஒவ்வொரு கட்சி என்று அர்த்தம்‌. சமயம்போல்‌ பார்த்துக்‌ கொள்வதுதான்‌ இதன்‌ கொள்கை. ஆகிய இக்கட்சிகள்தான்‌ இப்போதைய தேர்தல்‌ உலகத்தில்‌ அடிபடுகிறது. ராஜு: அப்படியானால்‌ என்ன ஆதாரத்தைக்‌ கொண்டு சுயராஜ்யக்‌ கட்சிக்கு ஓட்டுப்‌ போட்டால்‌ போகுது என்று சொன்னாய்‌. சுந்தரம்‌: ஆதாரம்‌ ஒன்றுமில்லை. காங்கிரஸ்‌, சுயராஜ்யம்‌, சர்க்காரை எதிர்த்தல்‌ என்கிற வார்த்தைகளைச்‌ சொல்லுகிறார்களே அதனால்‌ அதற்குப்‌ போட்டால்‌ போகுது என்று சொன்னேன்‌. ராஜு: நீ என்ன சுத்தப்‌ பயித்தியக்காரனாய்‌ இருக்கிறாய்‌! காங்கிரஸ்‌, சுயராஜ்யம்‌, சர்க்காரை எதிர்த்தல்‌ என்று எவராவது வாயில்‌ சொல்லிக்‌ கொண்டால்‌ அவருக்கு ஓட்டுப்‌ போடுகிறதா? இதற்கா நமது பெரியோர்கள்‌ நமக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுத்தார்கள்‌. நீயே இப்படி நினைத்தால்‌ சாதாரண பாமர ஜனங்கள்‌ என்ன நினைக்கமாட்டார்கள்‌. சுயராஜ்யம்‌ என்றால்‌ என்ன? குடி அரசு - 1926 (2) 302 சர்க்காரை எதிர்ப்பது என்றால்‌ என்ன? இதற்கு உதவும்படியான கொள்கை ஏதாவது அவர்களிடம்‌ இருக்கிறதா? இதுகளை யோசிக்க வேண்டாமா? முதலிலேயே சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனரிடம்‌ சிக்கிக்கொண்டது என்று சொல்லி விட்டாய்‌. பார்ப்பனர்கள்‌ எல்லோரும்‌ சர்க்கார்‌ உத்தியோகத்திலும்‌ வக்கீல்‌ உத்தியோகத்திலும்‌ இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ எப்படி சுயராஜ்யத்‌ திற்குப்‌ பாடுபட சம்மதிப்பார்கள்‌. நமக்கு உண்மையான சுயராஜ்யம்‌ வருமா னால்‌ இம்மாதிரி சர்க்கார்‌ உத்தியோகங்களும்‌ ஒழிந்துபோகும்‌; கோர்ட்டு களும்‌ ஒழிந்துபோகும்‌. அப்பொழுது இப்பார்ப்பனர்கள்‌ தர்ப்பைப்‌ புல்லைக்கொண்டுதான்‌ பிழைக்க வேண்டிவரும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ பலனாய்‌ தர்ப்பைப்‌ புல்லுக்கும்‌ நமது நாட்டில்‌ செலாவணி குறைந்து போய்விட்டது. ஆதலால்‌ எந்தக்‌ காரணத்தை முன்னிட்டும்‌ பார்ப்பனர்கள்‌ சுயராஜ்யத்திற்கு அனுகூலமாயிருக்கவே மாட்டார்கள்‌. சர்க்காரை எதிர்ப்பது என்பதோ சுத்தப்‌ புரட்டு. சர்க்காரை எப்படி எதிர்ப்பது? கத்தி கொண்டா? துப்பாக்கி கொண்டா? எப்படி எதிர்க்க முடியும்‌. சட்டசபையில்‌ போய்‌ கத்தினால்‌ யார்‌ கேட்கிறார்கள்‌? வாய்‌ வலிப்பதுதான்‌ மீதியே அல்லாமல்‌ காரியம்‌ ஒன்றும்‌ பலியாது. உண்மையாக சர்க்காரை எதிர்க்க வேண்டு மானால்‌ சர்க்காரை பணியச்‌ செய்ய வேண்டுமானால்‌ ஒத்துழையாமை, சட்டமறுப்பு ஆகியவைகளைத்‌ தவிர மற்ற வழிகளில்‌ எதிர்ப்பதாகச்‌ சொல்லுபவர்கள்‌ ஒண்ணாம்‌ நம்பர்‌ திருட்டு ஆசாமிகள்‌ என்றே நினைத்துக்‌ கொள்‌. ஒத்துழையாமைக்காவது சட்ட மறுப்புக்காவது இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ ஒருக்காலும்‌ முன்வர மாட்டார்கள்‌. உதாரணம்‌ வேண்டுமானாலும்‌ பார்த்துக்‌ கொள்‌. ஒத்துழையாமையைச்‌ சட்ட விரோதம்‌ என்று சொன்னவர்களும்‌, ஒத்துழையாமைக்கு உலை வைத்தவர்களும்‌, சட்ட மறுப்பின்‌ போது தலைமறைவாய்த்‌ திரிந்தவர்களும்‌, மக்கள்‌ கூட்டம்‌ கூட்டமாய்‌ ஜெயிலுக்‌ குப்‌ போய்க்‌ கொண்டிருந்த காலத்தில்‌ மாதம்‌ 1000, 2000, 10000 ரூபாய்‌ சம்பாதித்துக்‌ கொண்டு உல்லாசமாய்‌ வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருந்த வர்களும்‌ நமது பார்ப்பனர்களே ஆவார்கள்‌. அவர்கள்தான்‌ இப்போது சர்க்‌ காரை எதிர்க்கிறோம்‌ என்று சொல்லுகிறவர்கள்‌. இவைகளை எப்படி நம்புவது? இதுவரை நான்‌ உன்னை பகுத்தறிவுள்ளவன்‌ என்று நினைத்திருந்தேன்‌ நீ என்ன சுத்த சூன்னியனாயிருக்கிறையே! சுந்தரம்‌ : சரி சரி, நீ சும்மா திட்ட வேண்டாம்‌. நாம்‌ இரண்டு பேருமே யோசிக்கலாமே. யாருக்குத்தான்‌ ஓட்டுப்‌ போடலாம்‌ சொல்‌ பார்ப்போம்‌ . ராஜு: அரசியல்‌ விஷயமாய்ப்‌ பேசினால்‌ ஒத்துழைப்பு ஒத்து ழையாமை என்கிற இரண்டு நிலைமைகள்தான்‌ உண்டு. அரசியல்‌ இயக்கம்‌ என்று சொல்லப்படும்‌ காங்கிரஸில்‌ ஒத்துழையாமை திட்டம்‌ இல்லை என்றால்‌ மரியாதையாய்‌ ஒத்துழைப்பை ஏற்றுக்‌ கொள்ள வேண்டியதுதான்‌ யோக்கிய மானது. இதற்கு மத்தியில்‌ மத்தியஸ்தம்‌ ஒன்றும்‌ கிடையாது. உண்மையான 303 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சுயராஜ்யம்‌ ஒத்துழையாமையினாலல்லது எந்த வழியிலும்‌ ஒத்துழைப்பின்‌ மூலம்‌ வரவே வராது. சட்டசபைக்குள்‌ நுழைவது கலப்பில்லாத ஒத்து ழைப்பே தவிர வேறல்ல. ஆதலால்‌ சர்க்காரை எதிர்க்கிறேன்‌, எனக்கு ஓட்டுக்‌ கொடு என்று சொல்லுகிற பொய்யனை விட சர்க்காரோடு ஒத்து உழைக்கிறேன்‌, எனக்கு ஓட்டுக்‌ கொடு என்று சொல்லுகிற மெய்‌ பேசுகிறவனே யோக்கியன்‌ என்று சொல்லுவேன்‌. அல்லாமலும்‌ இதுசமயம்‌ சுயராஜ்யக்‌ கட்சி மூலமோ வேறு எந்தக்‌ கட்சி மூலமோ அரசியல்‌ சம்பந்தமான எதையும்‌ எதிர்பார்க்க முடியாது. மற்றபடி இதுசமயம்‌ மக்களுக்கு வேண்டியது சமத்துவமும்‌ சுயமரியாதையும்‌ என்பதை நீ மறுக்க மாட்டாய்‌. அந்தபடி சமத்துவம்‌ சுயமரியாதை என்பதை எந்தக்‌ கட்சியின்‌ மூலமாய்‌ அடையலாம்‌ என்று பார்த்தால்‌ இவைகள்‌ கண்டிப்பாய்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ மூலம்‌ அடைய முடியவே முடியாது. சுந்தரம்‌: அதென்ன அப்படிச்‌ சொல்லுகிறாய்‌. சுயராஜ்யக்‌ கட்சியார்‌ அதற்கு விரோதமாய்‌ இருக்கிறார்களா? ராஜு : உனக்குத்‌ தெரியாதா? கட்சியின்‌ பேரால்‌ தேவஸ்தான மசோதாவை எதிர்க்க வேண்டுமென்று உத்திரவு போட்டார்களே அதன்‌ அர்த்தமென்ன? வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பற்றி பேசவே கூடாது என்கிறார்களே அதன்‌ அருத்தமென்ன? மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு, தாழ்வு இல்லையென்று தீர்மானம்‌ செய்தவுடன்‌ காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ ராஜினாமாச்‌ செய்தார்களே அதன்‌ அர்த்தமென்ன? பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌ ஒரு மாதம்‌ பட்டினி கிடப்பேன்‌ என்று சொன்னார்களே அதன்‌ அர்த்தமென்ன? குருகுலத்தில்‌ மக்கள்‌ எல்லோருக்கும்‌ சமஉரிமை கொடுக்க வேண்டும்‌ என்று மகாத்மா சொல்லியும்‌ கேட்காமல்‌ அது அவரவர்கள்‌ இஷ்டம்‌ என்றார்களே அதன்‌ அருத்தமென்ன? தீண்டாமை விலக்கைப்‌ பற்றியோ, சமத்துவத்தைப்‌ பற்றியோ, சுயராஜ்யக்‌ கட்சியில்‌ பேசக்கூடாது என்று தலைவர்ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ பல தடவை சொல்லியிருக்கிறாரே அதன்‌ அருத்த மென்ன? பார்ப்பனப்‌ புரோகிதனைக்‌ கூப்பிட்டாலும்‌ கூப்பிடா விட்டாலும்‌ அவனுக்குப்‌ பணம்‌ கொடுத்துத்‌ தான்‌ தீரவேண்டும்‌ என்று பம்பாய்‌ சட்ட சபையில்‌ சொன்னார்களே அதன்‌ அருத்தமென்ன? தாங்கள்‌ அனுபவிக்கும்‌ அரசியல்‌ சீர்திருத்தம்‌ எல்லைப்புற மகமதியர்கள்‌ அனுபவிக்கக்கூடாது என்று எதிர்த்தார்களே அதனுடைய அருத்தமென்ன? பார்ப்பனர்கள்‌ அனுபவிக்கும்‌ உத்தியோகங்களைப்‌ போலவே பார்ப்பனரல்லாதாரும்‌ அந்த கணக்குப்படி அனுபவிக்க வேண்டு மானால்‌ அதை வகுப்புத்‌ துவேஷம்‌ என்கிறார்களே அதன்‌ அருத்தமென்ன? உனக்கு இன்னம்‌ இதே போல்‌ எவ்வளவு சங்கதி வேண்டும்‌. சுந்தரம்‌ : அப்படியானால்‌ யாருக்கு ஓட்டுச்‌ செய்யலாம்‌ என்கிறாய்‌. குடி அரசு - 1926 (2) 304 ராஜு : நீ தான்‌ சொல்லேன்‌. சுந்தரம்‌ : சொல்லுவதென்ன, இப்பொழுது இருக்கும்‌ நிலைமையைப்‌ பார்த்தால்‌ அரசியல்‌ சுதந்திரத்திற்கு கவலைப்படுவதில்‌ யாதொரு பிரயோசன மும்‌ இல்லை என்று தீர்மானமாய்‌ விட்டது. சமூக சமத்துவமும்‌,சுயமரியாதையும்‌ அடைய வேண்டுமானால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியினால்தான்‌ முடியும்‌. தேவஸ்தான சட்டம்‌, வகுப்புவாரி உரிமை முதலிய விஷயங்களில்‌ அக்கக்ஷியார்‌ கொள்கை என்ன என்பது விளக்கமாய்‌ போய்விட்டது. இவைகளை நடத்தி வைக்க வேண்டுமானால்‌ சட்டசபைக்கும்‌ செல்ல வேண்டியதும்‌, பல உத்தியோகங்களை ஏற்றுக்‌ கொள்ள வேண்டியதும்‌, சர்க்காரோடு ஒத்துழைக்க வேண்டியதும்‌ மிகவும்‌ அவசியமானதாகும்‌. இக்‌ காரியங்களை ஜஸ்டிஸ்‌ கட்சி கண்ணிய மாக ஒப்புக்‌ கொள்ளுகிறது. .ஆதலால்‌ ஓட்டுச்‌ செய்வதாயிருந்தால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்குத்தான்‌ ஓட்டுச்‌ செய்ய வேண்டும்‌. ஒத்துழையாமைக்‌ காரராயிருந்தால்‌ யாருக்கும்‌ ஓட்டுச்‌ செய்ய வேண்டியதில்லை. இந்த இரண்டு மார்க்கத்தைத்‌ தவிர வேறு மார்க்கமில்லை என்று எனக்கு தோன்றுகிறது. ராஜு: உனக்கு மாத்திரம்‌ தோன்றுவது என்பது என்ன? புத்திசாலி களுக்கும்‌ யோக்கியர்களுக்கும்‌ இதுதான்‌ தோன்றும்‌. ஆதலால்‌ அதுவே சரி. சுந்தரம்‌: எலக்‌ஷன்‌ நாள்‌ கிட்ட நெருங்கி வருகிறது. இதை பாமர ஜனங்கள்‌ அறியும்படியும்‌ பார்ப்பனர்கள்‌ ஏமாற்றுதலில்‌ விழுகாத படிக்கும்‌ செய்யவேண்டியது நமது கடமை.ஆதலால்‌ நான்‌ அந்த வேலையை ஏற்றுக்‌ கொள்ளுகிறேன்‌. எனக்கு உத்திரவு கொடு. நமஸ்காரம்‌. ராஜு : சரி, போய்விட்டு வா. உஷார்‌ ! உஷார்‌!! ஜாக்கிரதை! குடி அரசு - உரையாடல்‌ - 10.0.1926 305 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. PP *மற்வுறாரு இந்தியத்‌ தலைவர்‌” பண்டித மோதிலால்‌ நேரு அவர்கள்‌ தனக்கு அசெளகரியம்‌ ஏற்படும்‌. போதெல்லாம்‌ நம்‌ தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்களில்‌ ஒருவரைத்தான்‌ பதில்‌ ஆக்டிங்‌) தலைவராய்‌ நியமிப்பது வழக்கம்‌. அது போலவே சென்ற வாரமும்‌ தனக்கு லாகூரில்‌ இருக்க சவுகரியமில்லாததால்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌. சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது ஸ்தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார்‌. முதல்‌ தடவை ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருக்கு அழைப்புவந்தது. மறுதடவை ஸ்ரீமான்‌ ௭. ரங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம்‌ தடவை ஸ்ரீமான்‌ எஸ்‌. சத்தியமூர்த்தி சாஸ்திரி களுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந்‌ தடவை கும்பகோணம்‌ சக்கரவர்த்தி ஐயங்‌ காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம்‌. “இந்தியாவின்‌ பாக்கியமே பாக்கியம்‌.அதிலும்‌ தமிழ்நாட்டின்‌ பாக்கியமே பாக்கியம்‌.” குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 10.10.1926 குடி அரசு - 1926 (2) 306 ந்தமிழ்ச்‌ வி (மாத வனணியிடு ) நாகரீகத்தில்‌ சிறந்து விளங்கும்‌ நாடுகளில்‌ பத்திரிகைகள்‌ தலை சிறந்து நிற்கும்‌. மேனாடுகளை நோக்க நமது நாட்டில்‌ பத்திரிகைகளின்‌ தொகையும்‌ செல்வாக்கும்‌ குறைவுதான்‌. பல அறிஞர்களின்‌ உள்ளக்‌ கருத்துக்களை: ஒருங்கு திரட்டி உணர்த்தலால்‌ மக்கள்‌ அறிவை பண்படுத்து தலில்‌ பத்திரிகைகள்‌ வல்லன.நமது நாட்டில்‌ தினசரி, வாரப்பத்திரிகைகள்‌ “அரசியல்‌ கிளர்ச்சியில்‌” பாய்ந்து செல்லும்‌ வேகத்தில்‌ சமூக சீர்திருத்த விஷயத்தில்‌ அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில்‌ இருக்கின்‌ றன. கல்வி, சமயம்‌, தத்துவம்‌, சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில்‌ எல்லாருக்கும்‌ பயன்படத்தக்க ஒரு ஸ்திரமான திருத்தம்‌ ஏற்பட்டால்தான்‌ நமது சமூகத்தை பிணித்திருக்கும்‌ குருட்டு நம்பிக்கைகள்‌ ஒழியும்‌. இத்துறையில்‌ வேலை செய்யவல்லன மாத வெளியீடுகளேயாகும்‌. ஏனெனில்‌ அறிஞர்கள்‌ சாவதா னமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில்‌ வெளி வர இயலும்‌. தமிழ்நாட்டில்‌ அத்தகைய திங்கள்‌ வெளியீடுகளிற்‌ சிறந்தது நமது “செந்‌ தமிழ்ச்‌ செல்வி” எனத்‌ துணிந்து கூறலாம்‌. இதில்‌ பெரும்பாலும்‌ ஆங்கிலத்‌ திலும்‌ தமிழிலும்‌ வல்லவர்களான பேரறிஞர்களின்‌ ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனீயத்தின்‌ மாயப்புரட்டுகள்‌ வெளியாக்கப்‌ படுகின்றன. தமிழர்‌ நாகரிகம்‌ தெள்ளத்தெரிய விளக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளும்‌ புதிய மேனாட்டுச்‌ சாஸ்திர முறை களும்‌ ஆராய்ச்சி வல்லுநரால்‌ பொருத்தமாய்‌ எழுதப்படுகின்‌ றன.மதுரைத்‌ தமிழ்ச்‌ சங்கத்தினின்றும்‌ மாதம்‌ தோறும்‌ வெளியாகும்‌ “செந்தமிழ்‌” வெளி யீடு பார்ப்பன கோஷ்டியிலகப்பட்டுப்‌ பார்ப்பனமயமாகிக்‌ கொண்டிருக்கிறது. அதைத்‌ தோற்றுவித்த ஸ்ரீமான்‌ பாண்டித்துரைத்‌ தேவரவர்களின்‌ உத்தேசம்‌ அடியோடு புறக்கணிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாதார்‌ பொருள்‌ ஏராளமாயிருந்தும்‌ சேதுபதி மஹாராஜா தலைவராயிருந்தும்‌ தமிழ்ச்‌ சங்கத்தையும்‌ அதைச்‌ சார்ந்த கலாசாலையையும்‌ “செந்தமிழ்‌” மாத சஞ்சி கையையும்‌ பார்ப்பனராதிக்கத்தில்‌ ஒப்படைக்கப்பட்டிருப்பது பரிதபிக்கத்‌ தக்கது. இக்குறைகளைக்‌ கண்டே பல தமிழபிமானிகள்‌ தென்‌ இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகம்‌ என்னும்‌ பெயரால்‌ மற்றொரு உண்மைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ கண்டனர்‌. மதுரை தமிழ்ச்‌ சங்கத்தைப்போல்‌, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகத்துக்கு புதுக்கோட்டை மஹாராஜா, ராமநாதபுரம்‌ 207. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 மஹாராஜா, ஏனைய ஜமீன்தார்கள்‌, நாட்டுக்கோட்டை நகரத்தார்‌ பிரபுக்கள்‌. முதலியோருடைய நன்கொடைகளும்‌ ஆதரவும்‌ இல்லையாயி னும்‌ அது தோன்றிய குறுகிய காலத்துள்‌ நாவலர்‌ பதிப்பு, சங்கப்‌ பதிப்பு ஆகியவைகளையும்‌ தோற்கடிக்கத்தக்க நிலைமையில்‌ பல பழைய புதிய நூல்களை அது வெளியேற்றியிருக்கிறது. ஒரு சிறு பிழையுங்‌ காண முடி யாது. பெரும்பாலும்‌ புத்தக கட்டடங்களும்‌ நவீன முறையில்‌ கண்கவர்‌ வனப்பினவாயிருக்கும்‌. நாம்‌ தலைப்பிற்‌ குறித்த “செந்தமிழ்ச்‌ செல்வி£யும்‌ இக்கழகத்தினின்றும்‌ வெளி வருவதுதான்‌. உயர்திருவாளர்கள்‌ கா. சுப்பிர மணியப்‌ பிள்ளையவர்கள்‌, எம்‌.ஏ., எம்‌.எல்‌., பா.வே.மாணிக்க நாயக்கர்‌ போன்ற இரு மொழிப்‌ புலவர்களின்‌ பேராதரவு பெற்ற “ செந்தமிழ்ச்‌ செல்வி” யின்‌ மாட்சியை விரிக்கவும்‌ வேண்டுமோ? தமிழ்‌ மக்களின்‌ முன்‌ னேற்றங்கருதி உழைக்கும்‌ சென்னை பச்சையப்பன்‌ கல்லூரி தமிழ்ப்பேரா சிரியர்‌ மணி.திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது, “செல்வியின்‌ ஆசிரியரார்கள்‌. வடமொழிக்‌ கலப்பில்லாத “தனிச்‌ செந்தமிழ்‌ நடை” படிக்கப்‌ படிக்க இனிக்கும்‌. ஒவ்வொரு தமிழ்‌ மகனும்‌ தமிழ்‌ மகளும்‌ அன்புடன்‌ வரவேற்று ஆதரிப்பாராக. வருட சந்தா உள்நாடு. ரூ.3-0-0 வெளிநாடு ரூ.3-8-0 கிடைக்குமிடம்‌ :- திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகம்‌ (லிமிடெட்‌),306 லிங்க செட்டி தெரு, சென்னை. குடி அரசு - நூல்‌ மதிப்புரை - 10.10.1926. குடி அரசு - 1926 (2) 308 தெண்ணாட்டு ஐமீண்தாறர்களுக்கு ஒரு வேண்டுகோன்‌ சென்னை மாகாண வட மத்தியபாக ஜமீன்‌ தொகுதியான சித்தூர்‌, செங்கல்பட்டு, சென்னை, கடப்பை, கர்நூல்‌, பல்லாரி, அனந்தப்பூர்‌ ஆகிய ஜில்லாக்களின்‌ ஜமீன்தார்கள்‌ பிரதிநிதியாக சென்னை சட்டசபைக்கு வரப்போகும்‌ தேர்தலுக்கு கனம்‌ பனகால்‌ ராஜா அவர்களுக்குப்‌ போட்டியாக சென்னை ஹைகோர்ட்‌ வக்கீல்‌ ஸ்ரீமான்‌ அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்‌ என்கிற ஒரு பார்ப்பனர்‌, ஜமீன்தார்‌ என்கிற பேரால்‌ நிற்கிற விஷயம்‌ எல்லோரும்‌ அறிந்ததே. சுமார்‌ ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நாம்‌ இதைப்‌ பற்றி எழுதியிருந்தோம்‌. ஸ்ரீமான்‌ அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்‌ சட்ட சபைக்கு நிற்கும்‌ நோக்கமெல்லாம்‌ எவ்வகையிலாவது பனகால்‌ ராஜாவை சட்டசபையிலிருந்து துரத்திவிட்டுப்‌ பார்ப்பன ஆதிக்கத்தைச்‌ சட்ட சபையில்‌ நிலை நிறுத்த வேண்டும்‌ என்கிற எண்ணமே. ஆதலால்‌ பார்ப்பன ரல்லாத ஜமீன்தார்கள்‌ ஓட்டுகளே 100க்கு 75 பேராக இருந்தும்‌ பனகால்‌ ராஜாவின்‌ விரோதிகளான இரண்டொரு ஜமீன்தாரர்களின்‌ ஆதரவையும்‌ ஸ்ரீமான்‌ அல்லாடி ஐயரின்‌ வக்கீல்‌ உத்தியோகத்தின்‌ பலனாய்‌ அடிமை கொண்ட சில ஜமீன்தாரர்களுடைய உதவியையும்‌, மற்றும்‌ கடனில்‌ சிக்கி அவஸ்தைப்‌ பட்டுக்கொண்டிருக்கும்‌ சில ஜமீன்தாரர்களுடைய நிலைமை யையும்‌ ஆதரவாய்க்‌ கொண்டு நிற்கத்‌ துணிந்திருக்கிறார்‌. ஆனால்‌ இம்மூவித ஜமீன்தாரர்களை அதாவது ஜமீனுக்கு ஜமீன்‌ விரோதமும்‌, ஜமின்தாரர்‌. களுக்கு கோர்ட்களில்‌ விவகாரமும்‌, ஜமீன்தாரர்களுக்குக்‌ கடனும்‌ ஆகிய இக்கஷ்டங்கள்‌ ஜமீன்‌ தாரர்களுக்கு மாத்திரமே அல்லாமல்‌ மற்றும்‌ இந்‌ நாட்டிலுள்ள பெருங்குடி மக்களுக்கும்‌ உண்டாவதற்கே காரண பூதர்களா யிருப்பவர்கள்‌ நம்நாட்டுப்‌ பார்ப்பனரும்‌ பெரும்பாலும்‌ பார்ப்பன வக்கீல்‌ களுமேயாவார்கள்‌ என்பது ஜமீன்‌ சமூகம்‌ அறியாததல்ல. அன்றி இனியும்‌ நம்நாட்டில்‌ நமது பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்குள்‌ இம்‌ மாதிரியான கலகத்‌ தையும்‌ விவகாரத்தையும்‌ அநாவசியச்‌ செலவையும்‌ ஏற்படுத்தி வைத்து அதன்‌ மூலம்‌ அவர்களை பல விதத்திலும்‌ தங்களுக்கு அடிமைப்‌ படுத்தி வைத்துத்தான்‌ வாழ வேண்டி யிருக்கிறார்களே அல்லாமல்‌ வேறு மார்க்கம்‌ அவர்களுக்கு இல்லையென்பதும்‌ உலகமறிந்த விஷயம்‌. அப்படி யிருக்க நம்‌ நாட்டின்‌ பழம்‌ பெருங்குடி மக்களும்‌ ராஜவம்சத்தினருமான ஜமீன்தார்‌. தொகுதிக்கு ஒரு பார்ப்பனர்‌ அபேக்ஷ்கராக நிற்க நேர்ந்திருக்‌ கிறதென்றால்‌ 209 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அத்தொகுதியின்‌ பிற்கால நிலைமையைப்‌ பற்றி யாரும்‌ கவலைப்படாம லிருக்க முடியாது. புதிய சீர்‌ திருத்த சந்தர்ப்பத்தில்‌ ஜமின்தார்‌ களுக்கென்று தொகுதிகளை வகுத்து அவைகளுக்‌ கென்று சில ஸ்தானங்‌ களையும்‌ ஒதுக்கி வைத்தது இவ்வித வக்கீல்‌ பார்ப்பனர்கள்‌ கைப்பற்றுவதற்‌ காகத்தானா? என்பதை ஒவ்வொரு ஜமீன்தாரரும்‌ நடுநிலையிலிருந்து சிந்தித்துப்‌ பார்ப்பார்களேயானால்‌ அதன்‌ உண்மை விளங்காமல்‌ போகாது. ஜமீன்தார்‌. களின்‌ நன்மையை ஒரு வக்கீல்‌ - அதிலும்‌ ஜமீன்தாரர்களின்‌ ரத்தத்தை உறிஞ்சிப்‌ பிழைக்கும்‌ பார்ப்பனராயிருக்கிற ஒரு வக்கீல்‌ எவ்வழி யில்‌ பாதுகாக்க முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை. தவிரவும்‌, ஸ்ரீமான்‌ அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்‌ ஜமீன்‌ தொகுதியின்‌ மூலம்‌ நிற்பதினு டையவும்‌. அதிலும்‌ பனகால்‌ ராஜாவுக்குப்‌ போட்டியாயிருப்பதினுடை யவும்‌ ரகஸ்யம்‌ தான்‌ என்ன? ஜமீன்தார்‌ தொகுதியின்‌ நன்மையை உத்தேசித்தா? அல்லது பனகால்‌ ராஜா பேரில்‌ உள்ள மனஸ்தாபத்தை உத்தேசித்தா? என்று பார்ப்போமானால்‌ இவ்விரண்டும்‌ அல்லவென்பது நன்றாய்‌ விளங்கும்‌. எப்படியெனில்‌ ஜமீன்தார்‌ நன்மையிலோ வக்கீல்‌ அய்யருக்கு கவலை இருக்க நியாயமே இல்லை. பனகால்‌ ராஜாவுக்கும்‌ ஸ்ரீமான்‌ ஐயருக்‌ கும்‌ நேரிட்டு விரோதம்‌ இருப்பதாயும்‌ சொல்லுவதற்கில்லை. ஆனால்‌ வேறு காரண மொன்றிருக்க வேண்டும்‌. அதென்னவென்றால்‌, தற்காலம்‌ பார்ப்பனரல்லா தார்‌ முன்னேற்றத்திற்கென்று ஏற்பட்டிருக்கும்‌ ஸ்தாபனத்‌ திற்கு பனகால்‌ ராஜா தலைமை வகித்திருப்பதும்‌ அத்தலைமையின்‌ பலனாய்‌ பார்ப்பன ஆதிக்கம்‌ தடைபட நேர்வதுமாயிருக்கிற ஒரே எண்ணத்தாலேயே அவரை எப்படியா வது தலைமை ஸ்தானத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்‌ என்கிற பெருங்‌ கவலையோடு நமது நாட்டுப்‌ பார்ப்பனர்களெல்லாம்‌ ஒன்றுகூடி சதியா லோசனை செய்து, ஸ்ரீமான்‌ அல்லாடி அய்யரைக்‌ கேட்டுக்‌ கொண்டதற்‌ கிணங்க அவர்‌ நிற்கிறார்‌. இதற்கு ஸ்ரீமான்கள்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌, டி.வி. வெங்கட்டராம அய்யர்‌, சி.பி.ராம சாமி அய்யர்‌ முதலிய பார்ப்பனர்கள்‌ உள்‌ உளவாக இருந்து கொண்டு ஜமீன்தாரர்களைப்‌ பல வழிகளிலும்‌ வேட்டை யாடுகிறார்கள்‌. அதன்‌ ரகஸ்யத்தை இதில்‌ எழுதவே முடியாத மாதிரியில்‌ இருப்பதோடு மற்றும்‌ பலர்‌ பணத்தை மூட்டை மூட்டையாக வைத்துக்‌ கொண்டு ஜமீன்தாரர்‌ களின்‌ வீடு வீடாய்‌ அலைகிறார்களெனவும்‌ தெரிய வருகிறது. இப்பொழுது ஸ்ரீமான்‌ அல்லாடி ஐயரின்‌ வெற்றி ஜமீன்தாரர்களின்‌ வெற்றியா? அல்லது பார்ப்பனர்களின்‌ வெற்றியா? என்பதும்‌ பனகால்‌ ராஜாவின்‌ தோல்வி தனிப்‌ பட்ட அவருடைய சொந்த தோல்வியா? அல்லது பார்ப்பனரல்லாத சமூகத்தினுடையவும்‌ ஜமீன்தார்‌ தத்துவத்தினுடையவும்‌ தோல்வியா? என்ப தையும்‌ இந்நாட்டுப்‌ பெருங்குடி மக்களின்‌ பொறுப்புள்ள தலைவர்களாகிய ஜமீன்தார்‌ சமூகத்தார்‌ உணர வேண்டுமாய்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. தேர்தல்‌ தீருகிற வரையிலும்‌ நமது பார்ப்பனர்கள்‌ ஜமீன்தாரர்களை எஜமானரென்றும்‌, ராஜாவென்றும்‌, மஹாராஜாவென்றும்‌, தலைவரென்றும்‌ சொல்லி ஏமாற்றுவார்கள்‌. தேர்தல்‌ தீர்ந்த உடனே குடி அரசு - 1926 (2) 310 அவர்களுடைய வாசலில்‌ போய்‌ நின்றால்‌ கூட நீ யார்‌? எந்த ஊர்‌? என்றுதான்‌ கேட்பார்கள்‌. இந்த ஒரு முக்கியமான தென்னாட்டின்‌ சோதனை காலத்தில்‌, ஜமீன்தார்‌, பிரபுக்கள்‌ தங்களுடைய பொறுப்புகளை பார்ப்பனர்‌. களின்‌ சூழ்ச்சிக்கு விற்று விடுவார்‌ களேயானால்‌ தங்கள்‌ ஜமீன்தார்‌ சமூகத்தை தாங்களே கெடுத்துக்‌ கொள்வ தோடல்லாமல்‌, பார்ப்பனரல்லாதாரின்‌ உயிர்‌. நாடியைப்‌ பார்ப்பனர்‌ கையில்‌ கொடுத்து நசுக்கிக்‌ கொல்லச்‌ செய்தவர்களே. ஆவார்கள்‌. ஆதலால்‌ ஜமீன்‌ பிரபுக்களே இத்தேர்தலில்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பனரல்லாத உங்கள்‌ பிரதிநிதியையே ஆதரித்துப்‌ பார்ப்பனரல்லா தாரின்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்ற வேண்டுமாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 17.10.1926 211 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 “குழ அ௱சு” வாசகர்களுக்கு ஓர்‌ உண்மையான முண்ணறிவிப்பு அன்புள்ள வாசகர்களே! இதுசமயம்‌ நமது “குடி அரசு” வாரா வாரம்‌ 4000 பிரதிகள்‌ வரை போய்க்‌ கொண்டிருந்தாலும்‌, சட்டசபைத்‌ தேர்தல்‌ தீர்ந்த அடுத்த வாரம்‌ முதல்‌ கொண்டே சுமார்‌ 1000 அல்லது 1500 பிரதிகள்‌ திடீரென்று குறைந்து சுமார்‌ 2500 பிரதிகள்‌ போலத்தான்‌ போக நேரிடும்‌. ஏனெனில்‌, சட்டசபைத்‌ தேர்தலின்‌ பொருட்டு நமது பார்ப்பனர்‌ செய்துவரும்‌ பொய்ப்‌ பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி “குடி அரசு'க்கு முன்பணமாக சந்தா வந்தாலும்‌ வராவிட்டாலும்‌ இதுவரை அனுப்பிக்‌ கொண்டே வந்தோம்‌. இதனால்‌ பெருத்த நஷ்டமும்‌ நேரிட்டிருக்கு மென்று சொல்லத்‌ தேவையில்லை. ஆதலால்‌ சில பாக்கிதாரருக்கு மாத்திரம்‌ வி.பி.பி.மூலம்‌ அனுப்பிப்‌ பார்க்க விருக்கிறோம்‌. தேர்தல்‌ முடிந்த உடன்‌ விஃபி.திருப்பியவர்களுக்கும்‌ சந்தா பாக்கிதாரர்களுக்கும்‌, முன்‌ பணமனுப்பாதவர்களுக்கும்‌ பத்திரிகைகள்‌ அனுப்பப்படமாட்டா. நிற்க, தேர்தல்‌ முடிந்த பின்னர்‌ நமது “குடி அரசு” அரசியலையே முக்கியமாய்க்‌ கருதாமல்‌ மக்களின்‌ சுயமரியாதையைக்‌ கெடுக்கும்‌ பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான வேதம்‌, சாஸ்திரம்‌, ஸ்மிருதி, இதி காசம்‌, புராணம்‌ என்று சொல்லப்பட்ட ஆரிய சம்மந்தமான நூல்களிலும்‌, செயல்களிலுமுள்ள தந்திரங்களையும்‌, புரட்டுகளையும்‌, பக்ஷபாதங்களை யும்‌, வஞ்சனைகளையும்‌ தெள்ளத்தெளிய விளக்குவதோடு அந்நூல்களி லுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ சுயநலத்திற்காக எப்படி மறைத்தும்‌, திருத்தியும்‌, தப்பு வியாக்யானப்படுத்திக்‌ கூறியும்‌, நம்மை ஏமாற்றி வருகிறார்கள்‌ என்பதையும்‌ முறையே வெளியிடுதலையே பிரதான மாய்க்‌ கருதி தக்க ஏற்பாடு செய்துள்ளோம்‌. ஆதலால்‌ சந்தா பாக்கியுள்ளவர்‌ கள்‌ சந்தாத்‌ தொகையை அனுப்பியும்‌ மற்றவர்கள்‌ புது சந்தாதாரர்களாகச்‌ சேர்ந்தும்‌ “குடி அரசை” ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம்‌ மனப்பூர்வ விநயமாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. - ஈ.வெ.இராமசாமி குடி அரசு - அறிவிப்பு - 17.10.1926 குடி அரசு - 1926 (2) 312 சோதனை காலம்‌ சென்னை மாகாணத்தில்‌ சிறப்பாய்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள தமிழ்‌ மக்கள்‌ பார்ப்பனீய ஆதிக்கத்தின்‌ பலனாய்‌ கட்டுக்‌ குலைந்து, தாழ்த்தப்‌ பட்டு சுயமரியாதையை இழந்து, நாட்டின்‌ நலத்தை மறந்து “மூலபலச்‌ சண்டை” என்பது போல்‌ தம்மில்‌ ஒருவர்‌ மேல்‌ ஒருவர்‌ பகைமை கொண்டு அரசியலிலும்‌ சமூக இயலிலும்‌ மீளா அடிமையாகி உழல்வதைக்‌ கண்ட பெரியார்களான ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ நாயர்‌, தியாகராயர்‌, மகாத்மா காந்தி ஆகியோர்‌ முறையே பார்ப்பனரல்லாதார்‌ இயக்கமென்றும்‌, ஒத்துழை யாமை இயக்கமென்றும்‌ பல இயக்கங்களைத்‌ தோற்றுவித்தனர்‌. இவற்றை அறிந்த நமது பார்ப்பனர்கள்‌ தங்களது கட்டுப்பாட்டாலும்‌, செல்வத்தாலும்‌, சூழ்ச்சியாலும்‌, அதிகார வசதியாலும்‌ பார்ப்பனரல்லாதாரைக்‌ கொண்டே பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்தைக்‌ கொல்லவும்‌, மகாத்மாவின்‌ ஒத்துழை யாமை இயக்கத்தை ஒழிக்கவும்‌ முயற்சி செய்து வெற்றிக்குறியைக்‌ கண்டு விட்டார்கள்‌ என்றே சொல்லலாம்‌. பார்ப்பனரின்‌ இவ்வெற்றிக்‌ குறிக்கு தமிழ்‌ நாட்டைப்‌ பொறுத்த வரை ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌, திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ போன்றோர்களும்‌ இந்தியா தேசத்தைப்‌ பொறுத்தவரை தேசபந்து தாசரும்‌ பார்ப்பன மாய்கையில்‌ பட நேர்ந்ததே மூல காரணம்‌ என்று சொல்வது எவ்வகையிலும்‌ மிகையாகாது. ஏனெனில்‌ 1917 ஹுவாக்கில்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அடிப்படையாய்க்‌ கொண்டு. ஜஸ்டிஸ்‌ கட்சி என்ற பெயரால்‌ பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்‌ திற்கென ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தை ஒழிப்பதற்கென்றே பார்ப்பனரால்‌ பார்ப்பனர்‌. பண உதவியில்‌ அதே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தையே அடிப்படை யாக வைத்து, “சென்னை மாகாணச்‌ சங்கம்‌” என்கிற போலிப்‌ பார்ப்பனரல்லா தார்‌ கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ நாயுடு, முதலியார்‌ போன்றார்கள்‌ ஆதரவாயில்லாதிருந்தால்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி இதுவரை அது ஏற்றுக்கொண்ட வேலையின்‌ பலனை நமக்க ளிக்காமல்‌ இருந்திருக்க நியாயமே இல்லை. இக்‌ கனவான்கள்‌ இப்போதைய ஜஸ்டிஸ்‌ கட்சியை குறை சொல்லக்‌ காரணம்‌ கண்டுபிடிப்பதாயிருந்தாலும்‌ டாக்டர்‌ நாயர்‌, சர்‌. செட்டியார்‌. ஆகிய கனவான்களையும்‌ அவர்கள்‌ ஆரம்பித்த அடிப்படையான நோக்கங்‌ களையும்‌ பல தடவைகளில்‌ ஒப்புக்கொண்டே இருக்கிறார்கள்‌. அப்படி இருந்தும்‌ அக்கட்சியில்‌ தங்களுக்கு குற்றமாய்த்‌ தோன்றும்‌ பாகங்களைத்‌ திருத்த கொஞ்சமும்‌ முயலாமல்‌ அதன்‌ எதிரிகளுக்கு அனுகூலமாயிருக்‌ கும்படி மேலும்‌ மேலும்‌ அக்கட்சியைக்‌ குற்றம்‌ சொல்லிக்கொண்டும்‌ பாமர: 313 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஜனங்களுக்கு அதனிடை வெறுப்பும்‌ அதன்‌ எதிரிகளிடை அன்பும்‌ உண்டாகும்படி செய்துவருவது நாட்டினுடையவும்‌,தமிழ்‌ மக்களினுடையவும்‌ நல்ல காலமின்மையையே காட்டுகிறது. இவ்‌ விஷயம்‌ சென்றவாரம்‌ “தமிழ்நாடு” ஆபீசில்‌ கூடிய “தேசிய மகாநாடு” என்னும்‌ கூட்டத்தின்‌ நடவடிக்கைகளைக்‌ கவனித்தவர்‌ களுக்கு விபரம்‌ நன்றாய்‌ விளங்கும்‌. அதன்‌ அறிக்கையின்‌ சுருக்கமாவது:- சுயநலம்‌ கருதும்‌ தனி நபர்களும்‌ , கட்சியாளரும்‌ தங்களுக்குச்‌ சாதகமாக பிரசாரம்‌ செய்து வருகின்றனர்‌. ஒரு கட்சி சமூக சுதந்திரத்தையும்‌ மற்றொரு கட்சி அரசியல்‌ சுதந்திரத்‌ தையும்‌ மறுத்து வருகின்றன. ஒத்துழையா இயக்கம்‌ நிறுத்தப்பட்ட பின்னர்‌ தேசீய வேலை திட்டத்‌ தில்‌ சமூக வேலையை சுயராஜ்யக்‌ கட்சியினர்‌ கைவிட்டு விட்டனர்‌. சுயராஜ்யக்‌ கட்சி பிராமண வகுப்பிற்கு அதிக சலுகை காட்ட ஆரம்‌ பித்து விட்டது. ஜஸ்டிஸ்‌ கட்சி பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்ற உத்தேசத்துடன்‌ ஆரம்பிக்கப்பட்டது. அத்திட்டத்தை நிறைவேற்ற அது ஒன்றும்‌ செய்ய வில்லை... பிராமணர்களுக்குப்‌ பதிலாகப்‌ படித்த பிராமணரல்லாதாருக்கு வேலை செய்து கொடுக்கவே இவர்கள்‌ கவனம்‌ செலுத்தி வந்திருக்கிறார்கள்‌. இந்த முயற்சியில்‌ வகுப்பு உரிமையை உத்தேசித்து அரசியல்‌ சுதந்திரத்தை விட்டுக்‌ கொடுத்து விட்டது. என்ற குறிப்புகளுடன்‌; “இரு கக்ஷிகளையும்‌ பொதுஜனங்கள்‌ ஆதரிக்‌ கக்‌ கூடாது என்றும்‌ தனிப்பட்ட மனிதர்களின்‌ யோக்கியதையைப்‌ பொறுத்து ஓட்டுச்‌ செய்ய வேண்டு” மென்ற கருத்து அடங்கிய ஒருதீர்மான மும்‌ செய்த தோடு ஏறக்குறைய அவ்விரு கட்சிகளின்‌ வேலைத்‌ திட்டங்‌ களையே தங்க ளது நோக்கமாகவும்‌ வைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசினால்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்ட கட்சியாகிய சுயராஜ்யக்‌ கட்சிக்கு ஓட்டுக்‌ கொடுக்கக்‌ கூடாது என்று சொல்லுவதற்கும்‌ அதற்கு விரோதமாக வேலை செய்வதற்‌ கும்‌ தேசீயக்‌ கட்சி என்பது தீர்மானம்‌ செய்திருக்கிறதைப்‌ பார்க்கிற போது சுயராஜ்‌ யக்‌ கட்சியின்‌ திட்டத்தை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்‌ தேசீய சபை அல்ல வென்பதையும்‌, அக்காங்கிரசை தேசீயக்‌ கட்சி ஒப்புக்‌ கொள்ள வில்லை என்பதையும்‌, தைரியமாக வெளியிலெடுத்துக்‌ காட்டிவிட்டதைப்‌ பொறுத்த வரையில்‌ நாம்‌ அதைப்‌ பாராட்டாமலிருக்க முடியவில்லை.ஆனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியை எந்த ஆதாரத்தைக்‌ கொண்டு தேசீயக்‌ கட்சி என்பது குற்றம்‌ சொல்லுகிறது? என்பதுதான்‌ நமக்கு விளங்கவில்லை. தேசீயக்‌ கட்சிக்கு தனிப்பட்ட மனிதர்கள்‌ நடவடிக்கை பிடிக்கவில்லையா? அல்லது கட்சிகள்‌ குடி அரசு - 1926 (2) 314 கொள்கைகள்‌ பிடிக்கவில்லையா? என்பதே நமக்கு விளங்கவில்லை. தனிப்பட்ட மனிதர்கள்‌ நடவடிக்கைகள்‌ பிடிக்க வில்லையானால்‌ கட்சிகளைக்‌ கைப்பற்றி அம்மனிதர்கள்‌ தங்கள்‌ நடவடிக்கை களுக்கு கட்சிகளை உபயோகப்படுத்திக்‌ கொள்ளாமல்‌ செய்ய வேண்டும்‌. அல்லது மனிதர்கள்‌ பிடித்து கட்சிகள்‌ பிடிக்க வில்லையானால்‌ அம்‌ மனிதர்களை சுவாதீனப்‌ படுத்திக்கொண்டு கட்சிகளை ஒழிக்க வேண்டும்‌. இரண்டுமில்லாமல்‌ இன்ன கட்சியின்‌ இன்ன கொள்கை தப்பு என்று அறிவிக்காமலும்‌, இன்ன கட்சியைச்‌ சேர்ந்த இன்னாரின்‌ நடவடிக்கை தப்பு என்று அறிவிக்காமலும்‌ கண்களை மூடிக்கொண்டு அந்த கொள்கை களையும்‌ அந்த மனிதர்களையுமே குற்றம்‌ சொல்லிக்கொண்டு வேறு கட்சி என்று ஒன்றை ஆரம்பிப்பதில்‌ நாட்டுக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகத்‌ திற்கோ என்ன லாபம்‌ என்பது விளங்கவில்லை. ஜஸ்டிஸ்‌ கட்சியினர்‌ அரசியல்‌ விஷயத்தில்‌ இந்த தேசீயக்‌ கட்சியார்‌ என்போர்‌. கோருகிற சுயராஜ்யத்தைத்தான்‌ அதிவிரைவில்‌ அடைய வேண்டும்‌ என்ற கொள்கையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்‌. சமூக விஷயத்‌ திலும்‌ இந்த தேசீயக்‌ கட்சியார்‌ நோக்கத்தை விட ஒருபடி அதிகமாகவே தங்களது கொள்கை யாகவும்‌ வைத்துக்‌ கொண்டிருப்பதோடு பார்ப்பன ஆதிக்கத்திற்கு அநுகூலமாக பார்ப்பனர்‌ கைப்பற்றி இருக்கும்‌ உத்தியோகங்களையும்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமூகத்திற்கு அநுகூலமாக கிடைக்கும்படி செய்திருக்‌ கிறார்கள்‌. இப்படி இருக்க எந்த வகையில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி பிற்போக்கானது என்பதையும்‌, எந்த விதத்திலும்‌ அது ராஜீய சுதந்திரத்தை மறுக்கிறது என்பதையும்‌, தேசீயக்‌ கட்சி என்பது பொது மக்களுக்கு விளங்க வைக்க வில்லை. அன்றியும்‌ சமூக முன்னேற்றத்துடன்‌ ஆரம்பிக்கப்‌ பட்ட ஜஸ்டிஸ்‌ கட்சி அத்திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று தேசீய அறிக்கை சொல்லுகிறது. எவ்வகையில்‌ அது நிறைவேற்றி வைக்கவில்லை என்று சொல்ல முடியுமா? சமூக முன்னேற்றத்திற்காக முதலாவதாய்‌ வகுப்பு வாரித்‌ திட்டத்தை வலியுறுத்துகிறது. தனது சமூகத்தாருக்குப்‌ பார்ப்பனர்கள்‌ போலவே அரசியலில்‌ உத்தியோகம்‌ கிடைக்கப்‌ போராடி வருகிறது. சில துறைகளில்‌ செய்துமிருப்பதாய்‌ தேசீய அறிக்கையே ஒப்புக்‌ கொள்ளுகிறது. சமத்துவத்திற்கும்‌ மதவித்தியாசமின்மைக்குமாக மலையாளக்‌ குடிவார மசோ தா, தேவஸ்தான மசோதா முதலியன கொண்டு வந்து நிறைவேற்றியுமிருக்‌ கிறது. மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு முதலியவற்றிற்கும்‌ இப்போதைய நிலைமையில்‌ தன்னால்‌ கூடுமானதைச்‌ செய்துமிருக்கிறது.. நிற்க, வகுப்புரிமையை உத்தேசித்து அரசியல்‌ சுதந்திரத்தை விட்டுக்‌ கொடுத்ததாய்‌ தேசீய அறிக்கை சொல்லுகிறது. எந்த விதமான சுதந்திரத்தை ஜஸ்டிஸ்‌ கட்சி விட்டுக்‌ கொடுத்தது? அதுவுமல்லாமலும்‌ தற்கால அரசியல்‌ நிர்வாகத்தில்‌ வேறு எந்தக்‌ கட்சியாவது “சுதந்திரத்தை” விட்டுக்கொடுக்க மாட்டேன்‌ என்று சொல்லி நிறுத்திக்‌ கொள்ளத்தக்க சுதந்திரமுள்ள அரசியல்‌ கட்சி ஏதாவது இருக்கிறதா என்று தேசீய அறிக்கை சொல்ல முடியுமா? ஆகையால்‌, தேசீய அறிக்கை என்னும்‌ பேரால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியைப்‌ பற்றி 315 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. குற்றம்‌ சொல்லியிருக்கும்‌ விஷயங்கள்‌ அவ்வளவும்‌ அர்த்தமற்றதும்‌ பொருத்தமற்றதுமென்றேதான்‌ சொல்ல வேண்டியிருக்கிறதே அல்லாமல்‌ அதில்‌ ஒரு சிறிதும்‌ உண்மையும்‌ நியாயமும்‌ இல்லை என்றே சொல்லுவோம்‌. இம்மாதிரி ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில்‌ அர்த்தமற்ற தேசியத்தின்‌ பெயரையும்‌ பொறுப்புள்ள சமூகத்தின்‌ பெயரையும்‌ சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம்‌ புறப்பட்டு, அதற்கு தேசீயக்‌ கட்சி என்றும்‌ பெயர்‌ வைத்துக்கொண்டு தங்கள்‌ மனம்‌ போனபடி காரியங்களை நடத்துவதென்பது தமிழ்நாட்டிற்கும்‌, தமிழ்‌ மக்களுக்கும்‌ சோதனை காலம்‌ என்றே சொல்ல வேண்டும்‌. நமது நாட்டின்‌ பொல்லாத வேளையின்‌ பலனாக ஓட்டுரிமை இன்னது என்பதையே நமது பாமர மக்களான 100-க்கு 90 பேர்‌ இன்னமும்‌ அறிந்து கொள்ள முடியாமலே செய்து வந்திருக்கிறோம்‌. ஓட்டுரிமை அறிவிக்காமலே போலி அரசியலின்‌ பேரால்‌ பாமர மக்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுத்ததானது இப்போது நமது நாடும்‌ நமது சமூகமும்‌ அடிமைப்படவும்‌, சுயமரியாதை இழக்கவுமேதான்‌ உபயோகப்‌ படுத்தப்பட்டு வருகிறது. எப்படியெனில்‌ நமது நாட்டில்‌ பார்ப்பனர்களுக்கும்‌ ஓட்டு இருக்கிறது. பார்ப்பனரல்லா தாருக்கும்‌ ஓட்டு இருக்கிறது. பார்ப்பன ஓட்டுகள்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பனர்‌ களுக்கே போகிறது. அதுபோல்‌ பார்ப்பனரல்லாதார்‌ ஓட்டுகள்‌ பார்ப்பன ரல்லாதாருக்குப்‌ போவதில்லை. பார்ப்பனர்களால்‌ ஏமாற்றப்பட்டு பார்ப்பன ருக்கே போகக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. உதாரணமாக, திருச்சி ஜில்லா போர்டு பிரசிடெண்ட்டு தேர்தலில்‌ 100 - க்கு80 பேருக்கு மேல்‌ பார்ப்பனரல்லாத மெம்பர்களாக இருந்தும்‌ ஒரு பார்ப்பனர்தான்‌ வெற்றி பெற்றார்‌. சென்ற சட்டசபைத்‌ தேர்தல்களிலும்‌ கோயமுத்தூர்‌. தஞ்சை, தென்‌ஆற்காடு, திருச்சி, சென்னை முதலிய ஜில்லாக்களில்‌ 100 க்கு 90 பேருக்கு மேலாக பார்ப்பனரல்லாத ஓட்டர்களே இருந்தும்‌ பார்ப்பனர்கள்‌ வெற்றி பெற்றிருக்கிறார்கள்‌. எந்த வழியில்‌ தோல்வியுற்ற பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களை விட வெற்றிபெற்ற பார்ப்பன அபேகஷுகர்கள்‌ சிறந்தவர்‌ கள்‌ என்பது நமக்கு விளங்கவில்லை. சென்ற தேர்தலில்‌ கோயமுத்தூர்‌. ஜில்லாவில்‌ ஸ்ரீமான்கள்‌ சி.எஸ்‌.இரத்தினசபாபதி முதலியார்‌ தோல்வியுற்றார்‌; ஸ்ரீமான்‌ சி.வி.வெங்‌ கிட்ட ரமணய்யங்கார்‌ வெற்றி பெற்றார்‌. இதில்‌ ஸ்ரீமான்‌ முதலியாரை விட ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ எந்த விதத்திலாவது உயரிய கொள்கையையோ நோக்கமோ உடையவர்‌ என்று யாராவது சொல்ல முடியுமா? சென்ற தேர்தலில்‌ இந்த ஸ்தானத்திற்கும்‌ ஸ்ரீமான்‌ முதலியாரைத்‌ தெரிந்தெடுத்திருந்தால்‌ தேவஸ்தான சட்டத்தை எதிர்க்க பார்ப்பனர்‌ கட்சிக்கு ஒரு நபர்‌ அதிகமாக இருக்குமா அல்லது ஸ்ரீமான்‌ அய்யங்காரைத்‌ தெரிந்தெடுத்த ஓட்டர்கள்‌ அய்யங்காரை தேவஸ்தான சட்டத்தை எதிர்க்கச்‌ சொன்னார்களா? எதிர்க்கஆசை கொண்டவர்களா? மறுபடியும்தான்‌ ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ நிற்கிறார்‌. இம்மாதிரியே தென்‌ஆற்காடு ஜில்லா ஓட்டர்களும்‌ அந்த ஜில்லா பிரதிநிதி என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ ஒரு அய்யங்காரை தேவஸ்தான சட்டத்தை எதிர்க்கச்‌ சொன்னார்களா? அந்த ஜில்லாவின்‌ குடி அரசு - 1926 (2) 316 சார்பாய்‌ இவ்வருஷமும்‌ அதே அய்யங்கார்‌ நிற்கிறார்‌. மற்றும்‌ சில ஜில்லாக்‌ களிலும்‌ தேவஸ்தான சட்டத்தை எதிர்த்த அய்யர்‌, அய்யங்கார்கள்‌ போட்டி யன்னியில்‌ கூட தெரிந்தெடுத்ததாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்‌. இவையெல்லாம்‌ எதைக்‌ காட்டுகிறது. நமது ஓட்டர்களை நாம்‌ சரியானபடி அவர்கள்‌ ஓட்டுரிமையை அறியும்படி செய்யவில்லை என்பதைக்‌ காட்டுகிறதா இல்லையா? இம்மாதிரி பாமர ஜனங்களிடத்தில்‌ மறுபடியும்‌ குழப்பமான தேசீய அறிக்கைகளும்‌, தேசீயக்‌ கட்சிகளும்‌ புறப்பட்டால்‌ “கீழே விழுந்த குழந்தைக்கு அரிவாமணை உதவியது” போல்‌ பார்ப்பனரல்லாத பாமர ஓட்டர்களை அவர்களுக்குச்‌ சமத்துவமும்‌ சுயமரியாதையும்‌ கொடுக்க இஷ்டமில்லாத அவர்களது எதிரிகள்‌ ஏமாற்ற அனுகூலமாயிருக்குமென்‌ பதில்‌ சந்தேகமென்ன? அல்லா மலும்‌ ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகள்‌ காங்கிரஸ்‌ விளம்பரசபை என்னும்‌ பெயராலும்‌, எ.ரங்கசாமி அய்யங்கார்‌ காங்கிரஸ்‌ காரியதரிசி என்னும்‌ பெயராலும்‌, எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ காங்கிரஸ்‌ தலைவர்‌, சுயராஜ்யக்‌ கட்சியின்‌ தலைவர்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியின்‌ தலைவர்‌ தென்னாட்டுத்‌ தியாக மூர்த்தி என்னும்‌ பெயராலும்‌, சி.ராஜகோ பாலாச்சாரியார்‌ தென்னாட்டு காந்தி என்னும்‌ பெயராலும்‌, சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார்‌ பருத்திச்செடி அய்யர்‌: தர்மப்பிரபு என்னும்‌ பெயராலும்‌, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌ ஜமீன்தார்‌ என்னும்‌ பெயராலும்‌, எம்‌.கே. ஆச்சாரியார்‌ காந்தி சிஷ்யர்‌ என்னும்‌ பெயராலும்‌, சி.பி.ராமசாமி அய்யர்‌ சட்ட மெம்பர்‌ என்னும்பெயராலும்‌, டி. ஆர்‌. வெங்கிட்டராம சாஸ்திரிகள்‌ அட்வெகேட்‌ ஜனரல்‌ என்னும்‌ பெயராலும்‌,மகா மகாகனம்‌ சீனிவாச சாஸ்திரி. கள்‌ கோகலேவுக்குப்பின்‌ வந்தவர்‌ என்னும்‌ பெயராலும்‌ மற்றும்‌ எத்த னையோ பார்ப்பன கனவான்கள்‌ ஐகோர்ட்டு ஜட்ஜி முதல்‌ அட்டெண்டர்‌ என்னும்‌ பதவிகள்‌ பெயராலும்‌, சென்னையில்‌ சில காலிகள்‌ காங்கிரஸ்‌ தொண்டர்‌ என்னும்‌ பெயராலும்‌, சில தொழிலாளர்கள்‌ சுயராஜ்யம்‌ என்னும்‌ பெயராலும்‌, சில போலீசு அதிகாரிகள்‌ சமாதானம்‌ ஒழுங்கு என்னும்‌ பெயராலும்‌, சில பார்ப்பனரல்லாத தலைவர்கள்‌ வாயை மூடி வேடிக்கைப்‌ பார்த்துக்கொண்டும்‌, சிலர்‌ காங்கிரஸ்‌ கட்டளையின்‌ பெய ராலும்‌, சிலர்‌ தேசம்‌, அரசியல்‌, உரிமை, சுயராஜ்யம்‌, சுதந்திரம்‌, சர்க்காரை எதிர்த்தல்‌, அதிகார வர்க்கத்துடன்‌ போர்புரிதல்‌ என்னும்‌ வார்த்தைகள்‌ பேராலும்‌ செய்துவரும்‌ திருவிளையாடல்கள்‌ போதாதென்று தேசீயக்‌ ககஷி என்று ஒன்று புறப்பட்டி ருப்பது தமிழ்‌ நாட்டினினுடையவும்‌ தமிழ்‌ மக்களு டையவும்‌ நெருக்கடியான சோதனை காலம்‌ என்றே சொல்லுவோம்‌. இந்த சோதனை காலத்தில்‌ தமிழ்‌ நாட்டையும்‌ தமிழ்‌ மக்களையும்‌ இயற்கை தேவி தான்‌ காப்பாற்ற வேண்டும்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 17.10.1926 317 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ubioner சீஙிவாச சாஸ்திரியார்‌ கொல்லை வருவில்‌ ஊசி விற்பணை மகா மகாகனம்‌ ஸ்ரீநிவாச சாஸ்திரியார்‌ வரப்போகும்‌ தேர்தலில்‌ பார்ப்பனர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக ஊர்‌ ஊராய்‌ பிரசங்கம்‌ செய்து வருகிறார்‌. இந்த முறையில்‌ கோயமுத்தூருக்கும்‌ வந்து மாணவர்‌ சங்கத்திலும்‌ “வகுப்பு வாதத்தால்‌ ஏற்படும்‌ தீங்கு” என்பதைப்‌ பற்றி பேசியிருக்கிறார்‌. வகுப்பு வாதத்திற்கு ஏற்பட்ட கட்சி தன்னை ஜனநாயகக்‌ கட்சியென்றும்‌, தேசீயக்‌ கட்சி என்றும்‌ சொல்லிக்‌ கொள்வது தகாது என்றும்‌, இதைப்போல்‌ இந்திய ராஜீயத்‌ துறையில்‌ அதிகமான கேட்டை விளைவிப்‌ பது வேறெது வுமில்லை என்றும்‌ கூறுகிறார்‌. இதில்‌ எவ்வளவு புரட்டுகள்‌ இருக்கின்றன என்பதை யோசியுங்கள்‌. முதலாவது, ஸ்ரீமான்‌ சாஸ்திரி இந்திய மக்களின்‌ சார்பாக பேசுவதற்கே யோக்கியதை அற்றவர்‌ என்பதே நமதபிப்பிராயம்‌. அவர்‌ நமது சர்க்காருக்கு உள்‌ உளவாயிருந்து தனக்குப்‌ பெரிய அந்தஸ்தும்‌ பட்டமும்‌ பதவியும்‌ பெற்றுக்‌ கொண்டு தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கும்‌ பெரிய பெரிய உத்தி யோகத்தை வாங்கிக்‌ கொண்டவர்‌. அல்லாமலும்‌.தேசத்திற்காகவும்‌ ஜனநாயக தத்துவத்திற்காகவும்‌ பாடுபட வந்த அவதார மூர்த்தியாகிய மகாத்மா காந்தியை “அராஜகர்‌” என்றும்‌, அவரை சும்மா வைத்துக்‌ கொண்டி ருந்தால்‌ ராஜ்யமே கெட்டுப்‌ போய்விடும்‌ என்றும்‌, சர்க்காருக்கு உபதேசித்து அவரை: ஜெயிலில்‌ வைக்க சர்க்காருக்கு உதவியாயிருப்பதற்காக பதவி பெற்றவர்‌. ஜனநாயக தத்துவம்‌ முறையே அடைவதற்காக பாரதமாதா முடிவு செய்து கொண்டு அதன்‌ மக்கள்‌ பதினாயிரக்கணக்கான பெயரை ஜெயிலுக்குள்‌ தள்ளிக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது வெள்ளைக்காரர்களுக்கு அனுகூலமாய்ப்‌ பேசிக்‌ கொண்டும்‌, மகாத்மாவை அடக்கினால்தான்‌ இவ்வியக்கம்‌ அடங்குமென்றும்‌ சொல்லிக்‌ கொண்டு, தான்‌ மேல்நாடுகளில்‌ உல்லாசப்‌ பிரயாணம்‌ செய்து வெள்ளைக்‌ காரருடன்‌ விருந்துண்டு கொண்டு கேளிக்கை யாயிருந்தவர்‌. ஜனநாயக தத்துவத்திற்காக நாளிதுவரை ஸ்ரீமான்‌ ஸ்ரீநிவாச சாஸ்திரியாரால்‌ ஒரு காதொடிந்த ஊசிக்கு சமானமான உதவியா வது உண்டா? வகுப்புவாதம்‌ கூடாது என்று சொல்ல பிராமணருக்கு யோக்கியதை ஏது? பிராமணன்‌ வகுப்பு வாதத்தையே அடிப்படையாகக்‌ கொண்ட வன்‌. எப்பொழுது ஒரு மனிதன்‌ தான்‌ உயர்ந்த வகுப்பைச்‌ சேர்ந்தவன்‌ என்று குடி அரசு - 1926 (2) 318 சொல்லிக்‌ கொள்கிறானோ அப்பொழுதே அவனிடத்தில்‌ தன்னுடைய வகுப்பு உயர்ந்த வகுப்பு மற்றவர்கள்‌ தன்னிலும்‌ தாழ்ந்த வகுப்பு என்கிற வகுப்புவாதம்‌ இருக்கிறதா இல்லையா? முதலில்‌, தான்‌ அதை விட்டு விட்டுப்‌ பார்ப்பனர்களையும்‌ அதை விடச்‌ செய்த பிறகு வகுப்பு வாதம்‌ கூடாது என்று உபதேசிக்க வந்தால்‌ அப்போது ஸ்ரீமான்‌ சாஸ்திரியாருக்கு பேச உரிமை உண்டு. தங்கள்‌ வகுப்பு உயர்ந்த வகுப்பு என்பதைப்‌ பற்றியும்‌ யாரும்‌ ஆக்ஷேபிக்கக்கூடாது; அது அப்படியே இருக்க வேண்டும்‌; அதற்கு வேண்டிய பிரயத்தனமும்‌ செய்யவேண்டும்‌: மற்றவர்கள்‌ மாத்திரம்‌ வகுப்பைப்‌ பற்றிப்‌ பேசக்கூடாது; தாழ்ந்த வகுப்பாரா கவே இருக்க வேண்டும்‌. என்று சாஸ்திரியார்‌ கனவு கண்டால்‌ அதற்கு மற்றவர்கள்‌ இடம்‌ கொடுப்பார்‌. கள்‌ என்று சாஸ்திரியார்‌ நினைக்கிறார்‌ போல இருக்கிறது. அல்லாமலும்‌ பிராமணனால்தான்‌ வகுப்புவாதம்‌ ஏற்பட்டது. ஆதலால்‌ அவனிடத்தில்‌ இருப்பதை ஒழித்தால்‌ தான்‌ வகுப்புப்‌ பிசாசுநம்‌ நாட்டை விட்டுத்‌ தொலையும்‌ என்று நாம்‌ சொல்லும்‌ போது பிராமணன்‌ வந்து இதில்‌ நியாயாதிபதியாயிருக்க இடமேது? திருடனையே தன்‌ திருட்டுக்கு நியாயாதிபதியாய்‌ வைத்தால்‌ அவன்‌ தன்னை தண்டித்துக்‌ கொள்வானா? அதுபோல்‌ பார்ப்பனன்‌ குற்றவாளி என்றால்‌ பார்ப்பனனே வந்து நான்‌ குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லிக்‌ கொள்ள பாத்திய மேது? சாஸ்திரியார்‌ பார்ப்பனன்‌ என்கிற முறை யில்‌ வேண்டுமானால்‌ தன்னிடம்‌ குற்றமில்லை என்று வாதாடிக்‌ கொள்ள லாமேயொழிய, தான்‌ நடு நிலைமைக்காரர்‌ போல்‌ வேஷம்‌ போட்டுக்‌ கொண்டு மாணவர்களுக்கு உப தேசம்‌ பண்ண யோக்கியதை ஏது? என்று தான்‌ நாம்‌ கேட்கிறோம்‌. ஆனால்‌ இதிலும்‌ அதிகமான பார்ப்பன சூழ்ச்சி களைக்‌ கண்டு தேறியிருக்கும்‌ கோவை பார்ப்பனரல்லாத மாணாக்கர்‌ முன்னிலையில்‌ பார்ப்பன சாஸ்திரி யாரின்‌ உபதேசம்‌ “கொல்லத்‌ தெருவில்‌ ஊசி விற்கப்‌ போனதற்கு சமானமே யொழிய வேறில்லை” என்பதே நமதபிப்பிராயம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 17.10.1926. 319 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கோயமுத்தூர்‌ வில்லா தேர்தல்‌ கோயமுத்தூர்‌ ஜில்லாவின்‌ சார்பாக சென்னை சட்டசபைக்குப்‌ பார்ப்பனரல்லாத அபேகஷகர்கள்‌ மூன்று பேரும்‌ பார்ப்பன அபேக்ஷகர்‌. ஒருவரும்‌ ஆக நான்கு அபேக்ஷகர்கள்‌ நிற்கிறார்கள்‌. இந்நான்கு கனவான்‌ களும்‌ பெயருக்கு மாத்திரம்‌ தனித்தனிக்‌ ககஷியைச்‌ சேர்ந்ததாகச்‌ சொல்லிக்‌ கொண்டாலும்‌ தத்துவத்தில்‌ பார்ப்பனரல்லாத ககஷிக்கு மூன்று பேரும்‌, பார்ப்‌ பனக்‌ ககஷிக்கு ஒருவருமாய்‌ இருக்கிறார்கள்‌ என்றே சொல்ல வேண்டும்‌. உதாரணமாக, ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ தேவஸ்தான மசோதாவையும்‌, வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவத்தையும்‌ எதிர்ப்பதினாலும்‌, ஸ்ரீமான்‌ செட்டியார்‌ முதலா னவர்கள்‌ இவ்‌ விரண்டையும்‌ மனப்பூர்வமாய்‌ ஆதரிப்பதினாலும்‌ தெரிந்து கொள்ளலாம்‌. நாம்‌ இதற்கு முன்‌ பல தடவைகளில்‌ எழுதி வந்தது போலவே சட்டசபைகள்‌ மூலம்‌ குடிமக்களுக்கு எவ்வித அரசியல்‌ நன்மையும்‌ செய்ய முடியவே முடியாது என்பதை இப்பொழுதும்‌ சொல்லுகிறோம்‌. ஆனால்‌ வேளாள குடிமக்கள்‌ இந்நாட்டில்‌ உள்ள மற்ற எல்லா மக்களைவிட உயர்ந்த தன்மை உடையவர்களாயிருந்தாலும்‌ பார்ப்பன ஆதிக்கத்தில்‌ சிக்கி விவ காரம்‌ முதலியவைகளால்‌ குடி கெடுவதையும்‌ வைதீகச்‌ சடங்குகளால்‌ தாழ்த்தப்பட்டு அடிமைகளாவதிலிருந்தும்‌ தப்புவிக்க உபயோகப்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்று சொல்லுவோம்‌. ஆனால்‌ பல காரியங்கள்‌ செய்திருப்‌ பதாய்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்கார்‌ போன்ற பல பார்ப்பனர்கள்‌ பத்திரிகைகள்‌ மூலமும்‌ விளம்பரங்கள்‌ மூலமும்‌ பறையடிப்பதெல்லாம்‌ குடியான மக்களை ஏமாற்றச்‌ செய்யும்‌ வெறும்‌ மோசடியே தவிர வேறில்லை. அதுபோலவே அதைப்‌ பார்த்து பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களும்‌ குடியானவர்களை ஏமாற்ற பார்ப்பனர்களைப்‌ பின்பற்றி பொய்‌ விளம்பரம்‌. செய்ய வேண்டி ஏற்படுகிறது. உண்மையில்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்‌ யங்கார்‌ போன்றவர்கள்‌ வெளிப்படுத்தி இருக்கும்‌ வேலைகளின்‌ இரகசியங்‌ களை அறிந்தால்‌ அது ஸ்ரீமான்‌ அய்யங்காரால்‌ நடந்ததா? அல்லது ஸ்ரீமான்‌ கள்‌ டி.எ.இராமலிங்கம்‌ செட்டியார்‌, சி.எஸ்‌. இரத்தினசபாபதி முதலியார்‌ போன்றவர்களின்‌ பிரயத்தனத்தால்‌ நடந்ததா என்பது நன்றாய்‌ விளங்கும்‌. ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ விளம்பரம்‌ செய்து கொள்வதில்‌ அதிக ஆசை உள்ள வராகவும்‌ அதைப்பற்றி பிரத்தியார்‌ தன்னை எவ்வளவு கேவலமாகப்‌ பேசினாலும்‌ அதைக்‌ கொஞ்சமும்‌ லட்சியம்‌ செய்யாமல்‌ எப்படியாவது சட்ட சபைக்குப்‌ போனால்‌ போதும்‌ என்கிற கவலை உள்ளவருமானதால்‌ எவ்வளவு தூரம்‌ குடியானவர்களை ஏய்க்கலாமோ அவ்வளவு தூரம்‌ விளம்பரப்படுத்திக்‌ குடி அரசு - 1926 (2) 320 கொள்ளுகிறார்‌. ஸ்ரீமான்கள்‌ செட்டியாரும்‌, முதலியாரும்‌ தங்களைப்‌ புத்தி சாலிகள்‌ கேவலமாய்‌ நினைப்பார்களே என்று பயப்படுவதாலும்‌ தற்புகழ்ச்சி செய்து கொள்ள வெட்கப்படு வதாலும்‌ அவர்களின்‌ உண்மையான பெருமை களும்‌ செய்த வேலைகளும்‌ கூட வெளியாருக்குத்‌ தெரிவதற்கிடமில்லாமல்‌ இருக்கிறது. ஸ்ரீமான்‌ வேணாவுடையாக்‌ கவுண்டர்‌ அவர்களுக்கு இதில்‌ அநு போகமில்லாததாலும்‌ அவரும்‌ விளம்பரம்‌ செய்து கொள்ள வெட்கப்‌ படுவதாலும்‌ அவரது நிலைமையும்‌ சரிவர ஓட்டர்கள்‌ உணர்வதற்கில்லாமல்‌ இருக்கிறது. ஆதலால்‌ பார்ப்பனரல்லாத ஓட்டர்கள்‌ வெறும்‌ விளம்பரங்க ளைக்‌ கண்டு ஏமாறாமல்‌ பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களையே ஆதரிக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. குறிப்பாய்‌ இச்சில்லா வேளா ளக்‌ கவுண்டர்‌ கனவான்கள்‌ எவ்வளவுக்கெவ்வளவு தங்களுடைய ஓட்டுக ளைப்‌ பார்ப்பன அபேக்ஷகருக்குக்‌ கொடுக்கிறார்களோ அவ்வளவுக்கவ்‌ வளவு தங்கள்‌ வகுப்புத்‌ தலைவராகிய ஸ்ரீமான்‌ பட்டக்காரர்‌ வேணாவுடை யாக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ சட்டசபைக்குத்‌ தெரிந்தெடுக்கப்படுவதைக்‌ கண்டிப்பாய்‌ தடைப்படுத்தும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 17.10.1926 221 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 மார்க்வகட்‌ நினவைரம்‌ - சித்திரபுத்திரன்‌ சட்டசபை ஓட்டு ஒன்றுக்கு 1முதல்‌ ரூ ஒரு கிராமத்தின்‌ மொத்த ஓட்டுகளுக்கு மணியக்காரருக்கு ரூ400 கணக்குப்‌ பிள்ளைக்கு ரூ.50 பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ரூ.25 கிராமாந்திரங்களில்‌ செல்வாக்குள்ள குடித்தனக்காரருக்கு ரூ.5000 முதல்‌ 15000 வரை கடன்‌ முனிசிபல்‌ சேர்மென்களுக்கு 51000 முதல்‌ ரூ.1500 வரை கடன்‌ வைஸ்‌ சேர்மென்களுக்கு ரூ.250 முதல்‌ ரூ. 500 போலிங்‌ ஆபீசர்கள்‌ நிலவரம்‌ பஜாரில்‌ இன்னும்‌ புதுசரக்கு வராததால்‌ வாங்குவாரில்லை. முனிசிபல்‌ ஓட்டுகளுக்கு இவ்வாரம்‌ ஓட்டு ஒன்றுக்கு ரூ.5 முதல்‌ ரூ15வரை சேர்மென்களுக்கு ரூ150 வைஸ்‌ சேர்மென்களுக்கு 250 20 ஓட்டு 30 ஓட்டுள்ள தொகுதிகளில்‌ ஓட்டு ஒன்றுக்கு ரூ.150 முதல்‌ ரூ.250 வரை *போலிங்‌ஆபீசர்கள்‌ விஷயம்‌ கேழ்ப்போருக்கு மாத்திரம்‌ தெரிவிக்கப்‌ படும்‌. பஜார்‌ நோக்கம்‌ இன்னமும்‌ துகை உயரும்‌ போல்‌ இருக்கிறது. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 17.40.1926 குடி அரசு - 1926 (2) 322 தீயாவனி கதர்‌! கதர்‌!! கதர்‌! 1! தீபாவளியை தேசபக்திக்கு உபயோகப்படுத்திக்‌ கொள்ளப்‌ போகிறீர்‌ களா? அல்லது தேசத்‌ துரோகத்திற்கு உபயோகப்படுத்தப்‌ போகிறீர்களா? நாளிது ஐப்பசி 15719 ௨ க்குச்‌ சரியான நவம்பர்‌ மீ” 4 ௨ வியாழக்‌ கிழமை இந்நாட்டுப்‌ பெரும்பான்மையான மக்கள்‌ மிகுதியும்‌ கொண்டாடத்‌ தக்க தீபாவளி என்னும்‌ பண்டிகை வரப்‌ போகிறது. அப்பண்டிகை கொண்டா டுவது என்பதற்கு எண்ணெய்‌ ஸ்நானம்‌ செய்து புதிய வஸ்திர மணிந்து பட்டாசு சுட்டு பலகாரம்‌ சாப்பிடுவதுதான்‌ முக்கியச்‌ சடங்காக இருக்கிறது. இவற்றுள்‌ எண்ணெய்‌ ஸ்நானம்‌ செய்வதிலும்‌ பலகாரம்‌ செய்து சாப்பிடு வதிலும்‌ நமது நாட்டிற்கு எவ்விதக்‌ கெடுதியும்‌ இல்லை. ஆனாலும்‌ புதிய வஸ்திரமணிவது என்பது முக்கியமாக ஏழைகளின்‌ வாயில்‌ மண்ணைப்‌ போட்டு அவர்களைப்‌ பட்டினி கிடக்கச்‌ செய்வதற்கும்‌ பெரும்‌ பாலும்‌ நமது நாட்டுச்‌ செல்வத்தை அன்னிய நாட்டார்‌ கொள்ளை கொண்டு போவதற்குமே உதவுகிறது. நமது நாட்டிற்கும்‌ நமது நாட்டுப்‌ பெரும்‌ பான்மையான மக்க ளுக்கும்‌ நலமும்‌ நல்வாழ்வும்‌ உண்டாக பெரியோர்‌ களால்‌ ஏற்படுத்தப்பட்ட பண்டிகையானது, இப்போது அதற்கு நேர்‌ விரோதமான பலனைக்‌ கொடுத்து வருகிறது. எப்படியெனில்‌ நாம்‌ நமக்கு ஒருவருஷ அனுபவத்திற்கு வேண்‌ டிய துணிகளில்‌ கிட்டத்தட்ட பகுதிக்குக்‌ குறையாமல்‌ தீபாவளிக்‌ கென்றே வாங்கிவிடுகிறோம்‌. அன்றியும்‌ செல்வந்‌ தர்களாயிருப்பவர்கள்‌ மக்கள்‌, மருமக்கள்‌ முதலானவர்களை சந்தோஷிப்‌ பதற்கென்று பட்டு, சரிகை, அழகு, வழவழப்பு, மெதுவு என்கிற வகையில்‌ அதிகமான பணத்தைச்‌ செலவு செய்து வருகிறார்கள்‌. இவைகளில்‌ செலவிடும்‌ பணம்‌ அவ்வளவும்‌ கதரைத்‌ தவிர. அதாவது கைராட்டினத்தால்‌ நூற்ற நூலைக்‌ கொண்டு கைத்தறியால்‌ நெய்த துணி அல்லாமல்‌ மற்றபடி வேறு எதை வாங்குவதாலும்‌ ஏழைகள்‌ தொழிலற்று. பட்டினி கிடக்கவும்‌ நமது செல்வங்கள்‌ வெளிநாட்டிற்குப்‌ போகவுமே உபயோகப்படுகிறது. நீங்கள்‌ பட்டும்‌ சரிகையும்‌ அன்னிய நாட்டு வஸ்திரமும்‌ உள்நாட்டு யந்திர வஸ்திரமும்‌ வாங்கி அழகு பார்ப்பதின்‌ மூலம்‌ நமது நாட்டு ஏழைகள்‌ பட்டினி கிடந்து நமது நாட்டு செல்வம்‌ அன்னிய நாட்டுக்குப்‌ போவது நியாயமாகுமா? நீங்கள்‌ கதர்‌ அல்லாததை அணிவதின்‌ தத்துவம்‌ 323 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. என்ன? “எனக்கு இந்த நாட்டினிலாவது இந்நாட்டு ஏழை மக்களிடத்திலாவது அன்பு கிடையாது” என்று சீட்டெழுதி நெற்றியில்‌ ஒட்டிக்‌ கொள்ளுகிறீர்கள்‌. காரியத்தில்‌ இப்படிச்‌ செய்து விட்டு “நானும்‌ சுயராஜ்யவாதி, தேசபக்தன்‌, ஏழை களின்‌ நண்பன்‌, தொழிலாளரின்‌ நண்பன்‌” என்று வாய்பறை அடித்து பாமர மக்களை ஏமாற்றுகிறீர்கள்‌. சுயராஜ்யம்‌ என்றால்‌ என்ன? நாட்டின்‌ தரித்திரம்‌ ஒழிந்து ஏழைகளும்‌ தொழிலாளிகளும்‌ வயிறார உண்ணும்படி செய்து நமது நாட்டு செல்வத்தை அன்னியர்‌ கொள்ளை கொள்ளாமல்‌ இருக்கும்படி செய்வது தானே அல்லாமல்‌ படித்த கூட்டத்தார்‌ உத்தியோகத்தின்‌ மூலமாயும்‌ பணக்கார: கூட்டத்தார்‌ யந்திரங்கள்‌ மூலம்‌ விளம்பரம்‌ செய்வது மூலமாகவும்‌ பணம்‌ சம்பாதிப்பது அல்ல. இதனால்தான்‌ மகாத்மா “ராட்டினம்தான்‌ சுயராஜ்ய மளிக்கவல்லது'”” என்று சொல்வதோடு “உத்தியோகமும்‌ யந்திரங்களும்‌ சுயராஜ்யத்தை தூரமாக்குவதோடு தடைபடுத்தும்‌” என்கிறார்‌. செல்வ வான்களின்‌ செல்வமும்‌ செல்வத்‌ திமிரும்‌ ஏழைகளுக்கு உபயோகப்பட வேண்டுமானால்‌, செல்வவான்கள்‌ தங்களுக்கு ஏழைகளியத்‌ தில்‌ அன்பு இருக்கிறது என்று காட்ட வேண்டுமானால்‌, அன்னிய நாட்டார்‌ கொள்ளை. கொண்டு போக உபயோகப்படாமலிருக்க வேண்டுமானால்‌, கதரை வாங்கி அணிவதை விட வேறு மார்க்கமில்லை. மாணாக்கர்கள்‌ தங்களுக்கு தேசத்தினிடத்திலும்‌ தேசத்துப்‌ பெரும்பான்மையான ஏழை மக்களிடத்திலும்‌. பக்தியும்‌ அன்புமிருக்கிறது என்பது உண்மையானால்‌ அவர்கள்‌ கதரைத்தான்‌ வாங்கி அணிய வேண்டும்‌. விவசாயிகளும்‌ தொழிலாளர்களும்‌, கூலிக்காரர்‌ களும்‌ தங்களுக்கும்‌, தங்கள்‌ சகோதர விவசாயிகள்‌, தொழிலாளர்கள்‌, கூலிக்காரர்கள்‌ முதலியவர்களுக்கும்‌ நன்மை செய்பவர்களானால்‌ அவர்கள்‌ கண்டிப்பாய்‌ கதரையேதான்‌ வாங்கி அணிய வேண்டும்‌. இவர்கள்‌ வாங்கும்‌ ஒவ்வொரு ஜான்‌ நீளமுள்ள அன்னியதுணியும்‌ யந்திரத் துணியும்‌ குறைந்தது ஒவ்வொரு ஜான்‌ வயிற்றை பட்டினி போடுகிறது. உதாரணமாக, 20 கஜம்‌ நீளமுள்ள 1703 நெம்பர்‌ மல்‌ பீசு 1-க்கு 15 ரூபாய்‌ விலை கொடுத்து வாங்கு கிறோம்‌. அதன்‌ இடை சுமார்‌ மூன்று ராத்தல்தான்‌ இருக்கும்‌. அந்த மூன்று ராத்தல்‌ பஞ்சும்‌ நம்மிடமிருந்துதான்‌ 1-8-0 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்‌. அதை தங்கள்‌ நாட்டிற்குக்‌ கொண்டு போய்‌ நூலாய்‌ நூற்று துணியாய்‌ நெய்து வெள்ளைக்‌ களிமண்ணையும்‌ கொழுப்பையும்‌ பூசி அழகும்‌ வழவழப்பும்‌ மினுமினுப்பும்‌ செய்து நமது தலையிலேயே கட்டுவதற்காகக்‌ கொண்டு வருகிறார்கள்‌. நாமும்‌ மயங்கி சங்கராச்சாரியாருக்கு காணிக்கை வைப்பது போல்‌ 15 ரூபாய்‌ வைத்து விட்டு வாங்கிக்‌ கட்டி அழகுபடுத்திக்‌ கொள்ளு கிறோம்‌. இந்த பதினைந்து ரூபாயில்‌ பஞ்சுக்‌ கிரையம்‌ ரூ.1-8-0 போனால்‌ மீதி ரூ. 13-8-0 யாருக்குப்‌ போய்‌ சேருகிறது? அது யாருடைய பணம்‌? யாருக்குச்‌ சேர வேண்டியது? என்று பார்த்தால்‌ அதன்‌ உண்மை விளங்கும்‌. மேல்படி 13-8-0 ரூபாயும்‌ 6000 மைல்‌ பறந்து போய்விட்டது. இந்த மாதிரி நாம்‌ அன்னியத்‌ துணி வாங்காமல்‌ கதர்‌ துணியை வாங்குவோமானால்‌ அது குடி அரசு - 1926 (2) 324 நமது நாட்டு ஏழைப்‌ பெண்மக்கள்‌ நூற்பதின்‌ பலனாய்‌ ஏழைக்‌ குடும்‌ பங்களுக்‌ குப்‌ போய்ச்‌ சேர்ந்திருக்கும்‌. நமது நாட்டு ஏழை கை நெசவுக்‌ காரர்களுக்‌ குப்‌ போய்ச்‌ சேர்ந்திருக்கும்‌ ஏழைக்‌ குடும்பத்திற்கும்‌ ஏழைத்‌ தொழிலாளி களுக்கும்‌ போய்ச்‌ சேரவேண்டிய அந்த13-8-0 ரூபாயும்‌ அவர்க ளுடைய பணமல்லவா? இந்த 13-8-0 ரூபாயும்‌ அவர்களுக்குப்‌ போய்ச்‌ சேராமல்‌ தடுத்து அவர்களைப்‌ பட்டினிப்போட்டு அவர்களது வயிற்றுப்‌ பிழைப்‌ புக்கு அவர்கள்‌ கற்பையும்‌ சுயமரியாதையையும்‌ கூட மனச்சாகஷியையும்‌ விற்கச்‌ செய்வது அன்னியத்‌ துணி வாங்கினவர்களாகிய நாமா அல்லவா? ஆதலால்‌, வரப்போகும்‌ தீபாவளியை அதன்‌ உண்மையான தத்து வத்தில்‌ கொண்டாட வேண்டுமானால்‌ கதர்‌ வாங்கி அணிவதை விட வேறு வழியில்லை. இதை உத்தேசித்தே மகாத்மா அகில பாரத சர்க்கா சங்கம்‌ என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதற்கும்‌ பல லக்ஷ ரூபாய்களை முதலாக வைத்து நாடுகள்‌ தோறும்‌ கிளைச்‌ சங்கங்கள்‌ ஏற்படுத்தி கதர்‌ உற்பத்தி செய்யச்‌ செய்து ஜில்லா தலைமை நகரங்கள்‌, முக்கியப்‌ பட்டணங்கள்‌ ஆகிய வைகள்‌ தோறும்‌ கதர்‌ கடைகள்‌ வைத்து சுத்தமான கதர்‌ விற்க ஏற்பாடு செய்திருக்கிறார்‌. அல்லா மலும்‌ நல்ல மரத்தில்‌ புல்லுருவி ஏற்பட்டது போல்‌ இவ்வுத்தமமான சேவைக்கு ஆபத்தாக நமது மக்களிலேயே சிலர்‌ போலிக்‌ கதரை உற்பத்தி செய்து அதை யும்‌ கதர்‌ என்றே பாமர ஜனங்கள்‌ நம்பும்படி செய்து விற்று வருவதன்‌ மூலம்‌ கத்தர்‌ இயக்கத்தைக்‌ கொன்றவர்களாகிறார்‌. கள்‌. சத்தியாக்கிரகமோ சட்டமறுப்போ செய்தாலொழிய இம்மாதிரியான துரோக செய்கைகளை நிறுத்த முடியாதாதலால்‌ அவைகளை கூடுமான வரையிலாவது குறைக்க உத்தேசித்து சுத்தமான கதர்‌ விற்பனைக்கும்‌ போலிக்‌ கதர்‌ விற்பனைக்கும்‌ வித்தியாசம்‌ தெரிவதற்காக சர்க்கா சங்கத்தா ரால்‌ விற்பனைக்‌ கடைகளை பரிசோதிக்க பரிசோதகர்களை நியமித்து கூடுமான வரை பரிசோதிக்கப்பட்டு சுத்தமான கதர்‌ விற்பவர்களுக்கும்‌ உற்பத்தி செய்பவர்களுக்கும்‌ சர்க்கா சங்கத்தாரால்‌ அத்தாக்ஷிப்‌ பத்திரம்‌ கொடுக்கப்‌ பட்டு வருகிறது. ஆகையால்‌ கதர்‌ வாங்குகிற ஒவ்வொருவரும்‌ கதர்‌ வாங்குவதில்‌ கவலை யீனமாயிராமல்‌ தாங்கள்‌ வாங்கும்‌ கடைகளிலும்‌ கதர்‌ விற்கும்‌ மற்ற நபர்‌ களிடமும்‌அகில பாரத சர்க்கா சங்க தமிழ்நாடு காரியதரிசி யான ஸ்ரீமான்‌ எஸ்‌.ராமநாதன்‌ அவர்களால்‌ கையொப்பமிட்ட நடைமுதல்‌ காலத்து அத்தாட்சிப்‌ பத்திரம்‌ இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாய்ப்‌ பார்த்து வாங்குங்கள்‌. சிலர்‌ பழய அத்தாட்சிப்‌ பத்திரம்‌ வைத்‌ திருப்பார்கள்‌. அது நடைமுதல்‌ காலத்துக்குச்‌ செல்லாது என்பதையும்‌ கவனிக்க வேண்டுமாய்க்‌ கோரு கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 24.10.1926. 325 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஈட முணிசியாலிட்மு நாளது அக்டோபர்‌ 519 - தேதியின்‌ சுதேசமித்திரனில்‌ “ஸ்ரீமான்‌ ஈவெ.ராமசாமி நாயக்கருக்கு ஒரு மறுப்பு” என்னும்‌ தலையங்கத்தின்‌ கீழ்‌ ஈரோடு சேர்மென்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீநிவாச முதலியாரவர்களுடைய கடிதம்‌ பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில்‌ ஸ்ரீமான்‌ நாயக்கர்‌, ஸ்ரீமான்‌ ஸ்ரீநிவாச முதலியாரவர்களைப்‌ பற்றி எழுதியிருந்ததற்குப்‌ பதில்‌ அனுப்பி பிரசுரம்‌ செய்யும்படி கேட்டுக்‌ கொண்டதாகவும்‌ ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ அப்படிச்‌ செய்ய வில்லையென்றும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ எழுதியிருக்கிறார்‌. அது உண்மைக்கு விரோதமானது. ஸ்ரீமான்‌ முதலியார்‌ “குடி அரசு*க்கு எழுதிய மறுப்பில்‌ ஸ்ரீமான்‌ நாயக்கருக்கும்‌ தனக்கும்‌ பழைய விரோதமிருப்பதாகக்‌ குறிப்பிட்டு சில விஷயங்கள்‌ எழுதியிருந்தார்‌. அவ்விரோதத்‌ தன்மையைப்‌ பொறுத்தவரை விவகரிக்காமல்‌ நிறுத்தி விட்டு அவர்‌ மறுத்த விஷயத்திற்கு மாத்திரம்‌ அவருடைய மறுப்பையும்‌ அவற்றிற்குச்‌ சமாதானத்தையும்‌ முறையே வெளியிடத்‌ தீர்மானித்தே ஸ்ரீமான்‌ முதலியார்‌ பொய்யென்று மறுத்த மூன்று முக்கிய விஷயங்களை அப்படியே எடுத்தெழுதி அவற்றிற்கு சமாதானம்‌ தக்க ஆதாரத்துடனும்‌ தேதி கையெழுத்து முதலியதுகளுடனும்‌ எழுதிவிட்டு இவற்றையும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ மறுக்கிறாராவென்று குறிப்பும்‌ எழுதி அதன்‌ பதில்‌ வந்த உடன்‌ மற்றும்‌ முதலியாரின்‌ மறுப்பை வெளியிடுவதாகவும்‌ எழுதியிரூந்‌ தோம்‌, அதற்கு உண்டு, இல்லை என்ற இரண்டிலொரு விஷயத்தை எழுதா மல்‌ ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ பேரில்‌ குற்றஞ்‌ சொல்லிக்கொண்டு “மித்திரனை” அபயங்‌ கொண்டதின்‌ கருத்து நமக்கு விளங்கவில்லை. ஆனபோதிலும்‌ “மித்திரன்‌” அதைப்‌ பிரசுரித்திருப்பதைப்‌ பற்றி நாம்‌ மிகவும்‌ திருப்தியடை கிறோம்‌. ஏனெனில்‌ இதன்‌ மூலம்‌ * குடிஅரசு” பத்திரிகையோ அல்லது நாயக்கரோ உண்மை பேசுகிறார்களா? அல்லது ஸ்ரீமான்‌ முதலியாரைப்‌ பற்றி வேண்டுமென்றே பழி கூறுகிறார்களா? என்பது வெளியாக மற்று மொரு சந்தர்ப்பம்‌ கிடைத்த தல்லவா என்கிற சந்தோஷம்தான்‌. “மித்தி ரனில்‌” பிரசுரித்த ஸ்ரீமான்‌ முதலியா ரவர்கள்‌ மறுப்பில்‌ முன்பாகம்‌ மூன்று விஷயங்களைக்‌ கொண்டிருக்கிறது.அவையாவன:- 1 முனிசிபல்‌ பணத்தை ஸ்ரீமான்‌ முதலியார்‌ சொந்த உபயோகப்‌ குடி அரசு - 1926 (2) 326 படுத்தியதாய்‌ “குடி அரசு” சொல்வது முற்றிலும்‌ பொய்‌. 2. இது விஷயமாய்‌ ஒரு கவுன்சிலர்‌ தன்னை கேள்வி கேட்டதாய்‌ சொல்லுவதும்‌ பொய்‌. 3. மற்றொரு கவுன்சிலர்‌ கணக்குப்‌ பார்க்க வேண்டிக்‌ கொண்டார்‌. என்று சொல்லுவதும்‌ பொய்‌. என்று எழுதிவிட்டு மற்றும்‌ சில விஷயங்களுக்கு நீண்ட சமாதா னங்கள்‌ எழுதப்பட்டிருக்கின்றன. ஸ்ரீமான்‌ முதலியார்‌ பொய்யென்று சொல்‌ லும்‌ ஷெமூன்று விஷயங்களுக்கும்‌ “குடி அரசு” தனது 10:10.26 தேதி இதழில்‌ பதில்‌ எழுதியிருக்கிறது. அதாவது, முனிசிபல்‌ பணத்தை சொந்த உபயோகப்படுத்தவில்லை என்ப தற்குப்‌ பதில்‌ 1925 - வருஷம்‌ ஜுன்‌ மீ£19 தேதி எவ்வித ஆதாரமும்‌ இல்லாமல்‌ 700 ரூபாய்க்கு தன்‌ பேருக்கே செக்‌ எழுதி ரூபா பெற்று ஜுன்‌ 15726 தேதி ஈரோடு அர்பன்‌ பாங்கியில்‌ 750 ரூபா தனது சொந்தக்‌ கடனின்‌ பாக்கிக்காக கட்டப்பட்டிருக்கிறது. 50 ரூபா கிடைக்காதலால்‌ 5, 6 நாள்‌ பணம்‌ கையில்‌ வைக்கப்பட்டிருந்தது. இந்த 50 ரூபா ஒரு வழியில்‌ கிடைத்தபிறகு அதையும்‌ சேர்த்து அர்பன்‌ பாங்கியில்‌ கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முனி சிபல்‌ செக்‌ புஸ்தகத்தில்‌ அர்பன்‌ பாங்கு கணக்கு ஆதாரங்கள்‌ இருக்கின்றன. 2 இதைப்பற்றி கவுன்சிலரும்‌ கேள்வி கேட்கவில்லை என்பதற்குச்‌ சமாதானம்‌ அப்போது கவுன்சிலராயிருந்த ஸ்ரீமான்‌ £.5.கணபதி ஐயர்‌ அவர்கள்‌ சேர்மன்‌ அவர்கள்‌ தன்‌ பேருக்கே செக்‌ எழுதி 700 ரூபா அட்‌ வான்ஸ்‌ என்று எடுத்துக்‌ கொண்டது உண்மையா? அப்படியானால்‌ அதை ஏதாவது ஒரு கவுன்சில்‌ தீர்மானத்தை முன்னிட்டு எடுத்துக்‌ கொண்டதா? அல்லது கவுன்சில்‌ தீர்மானத்தை எதிர்பார்த்து என்றெடுத்து பின்னால்‌ சரிசெய்து விடலாமென்றா? என இம்மாதிரி பல கேள்விகள்‌ (இன்டர்‌ புலே ஷன்கள்‌! எழுதி சேர்மனுக்கனுப்பி இதற்கு வரவு தேதி போட்ட ரசீதும்‌ வாங்கியிருக்கிறார்‌. அதன்‌ நகலும்‌ பிரசுரிக்க நமக்கனுப்பி இருக்கிறார்‌. இதற்கு நாளது வரை சேர்மனால்‌ யாதொரு பதிலும்‌ அளிக்கப்படவே யில்லை. 3.மற்றொரு கவுன்சிலர்‌ கணக்குக்‌ கேட்டது பொய்யென்பது, அப்போது கவுன்சிலராயிருந்த ஸ்ரீமான்‌ MS. முத்துக்கருப்பன்‌ செட்டியார்‌. அவர்கள்‌ 5.12. 25 தேதியில்‌ சேர்மன்‌ அவர்களுக்கு முனிசிபல்‌ ஆபிஸ்‌ குறிப்புப்‌ புஸ்தகமும்‌ சிட்டாவும்‌ செக்‌ புஸ்தகமும்‌ பார்க்க உத்தரவு கோரி ஒரு கடிதம்‌ எழுதி சேர்மனுக்குச்‌ சேர்ப்பித்து அதற்கும்‌ வரவு தேதி போட்ட ரசீது வாங்கி வைத்திருக்கிறார்‌. இதற்குப்‌ பதில்‌ சேர்மன்‌ ஸ்ரீநிவாச முதலியார்‌ அவர்களால்‌ கவுன்சிலர்‌ கணக்கைப்‌ பார்க்க வேண்டுமென்று எழுதிய வேண்டுகோள்‌ படிக்கப்பட்டது. முனிசிபல்‌ ஆக்ட்‌ 20,21,34 பிரிவுப்படிஅது போன்ற கணக்குப்‌ பார்க்க கவுன்சிலர்களுக்கு உரிமையில்லாததால்‌ அனுமதிக்க முடியாது என்று பதிலெழுதியிருக்கிறார்‌. இதற்கு மேல்‌ மறுபடி 327 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யும்‌ எவ்வளவோ தகராறுகள்‌ நடந்திருக்கின்றன. இதற்கு ஆதாரங்களும்‌ நமக்கு ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்களால்‌ பிரசுரிக்கஅனுப்பப்பட்டிருக்கிறது. இவற்றை ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ உண்மை யென்றோ அல்லது கற்பனை என்றோ சொல்லாமல்‌ நாயக்கர்‌ மீதும்‌ “குடி அரசு” மீதும்‌ குற்றம்‌ சொல்லி வீண்பழி சுமத்துவது தர்மமாகுமா? தவிர, சேர்மனின்‌ இம்மாதிரியான நடவடிக்கையின்‌ பலனாகவும்‌ அரசாங்கத்தார்‌ இவற்றை அனுமதித்து வருவதன்‌ பலனாகவும்‌ பொறுப்புள்ள. அதாவது வருஷம்‌ 1000, 2000 ரூ. இன்கம்டாக்ஸ்‌ செலுத்துகிற கவுன்‌ சிலர்களும்‌ வருஷம்‌ 2000, 3000 ரூபாய்‌ சர்க்கார்‌ கந்தாயம்‌ செலுத்துகிற கவுன்‌ சிலர்களும்‌ சர்க்காரால்‌ நியமிக்கப்பட்ட பென்ஷன்‌ தாசீல்தார்‌ போன்ற கவுன்‌ சிலர்களும்‌ ஆக 12 பேர்‌ தங்கள்‌ கவுன்சிலர்‌ பதவியை ராஜினாமா கொடுத்து விட்டு வெளியிலும்‌ வந்து விட்டார்கள்‌. இதோடு மாத்திர மல்லாமல்‌ ஈரோடு வக்கீல்‌ சங்கத்தார்‌ ஒன்று கூடி தங்கள்‌ சங்கத்தின்‌ மூலம்‌ டெ கவுன்சிலர்கள்‌ ராஜினாமா கொடுத்ததைப்பற்றிக்‌ கவலை எடுத்துக்‌ கொண்டு முனிசிபல்‌ நிர்வாகத்தைத்‌ திருத்தவும்‌, இப்பேர்ப்பட்ட குற்றங்‌ களுக்கு இடமில்லாமல்‌ சரிவர நடத்தவும்‌, வக்கீல்‌ சங்கத்தார்‌ முயற்சியெடுத்‌ துக்கொள்ள வேண்டு மென்று ஒரு தீர்மானமும்‌ கொண்டு வந்தார்கள்‌. அந்த வக்கீல்‌ சங்கத்துக்கும்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீநிவாச முதலியாரவர்களே பார்ப்பன ரல்லாதார்‌ என்கிற சலுகையின்‌ பேரில்‌ தலைவராயிருக்க நேர்ந்தமையால்‌ இத்தீர்மானத்தை தலைவர்‌ முறையில்‌ நிராகரித்தும்‌, அவரில்லாமலே உப தலைவரைக்‌ கொண்டுவக்கீல்‌ சங்கக்‌ கூட்டம்‌ கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ராஜினாமா செய்யப்பட்ட கவுன்சிலர்‌ ஸ்தானத்துக்கு சங்கத்தின்‌ சார்பாய்‌ ஒரு வக்கீலை யும்‌ நிறுத்தி சேர்மெனின்‌ இவ்வித நடவடிக்கைகளை பொதுஜனங்களுக்கு எடுத்துச்‌ சொல்லி வெற்றியும்‌ பெற்றிருக்கிறார்கள்‌. ஸ்ரீமான்‌ ஸ்ரீநிவாச முதலியாரவர்கள்‌ கொஞ்சமாவது சுயமரியாதையுடை வராயிருந்திருந்தால்‌ தன்னுடைய தலைமை ஸ்தானம்‌ மற்ற அங்கத்தினர்‌ களால்‌ அலக்ஷியம்‌ செய்யப்பட்டதற்கு உடனே ராஜினாமா செய்திருப்பார்‌. அப்படியில்லாமல்‌ அவர்களாகத்‌ தன்னை வெளியிலனுப்புகிற வரையில்‌ அதில்‌ அட்டைப்‌ போல்‌ ஒட்டிக்கொண்டேயிருக்கிறார்‌. தவிர எடுத்ததற்‌ கெல்லாம்‌ நாயக்கருக்‌ கும்‌ தனக்கும்‌ விரோதம்‌ என்கிற ஒரு பல்லவி பாடிக்கொண்டே தன்னுடைய சகல அக்கிரமங்களிலிருந்தும்‌ தப்பித்துக்‌ கொள்ளப்‌ பார்க்கிறார்‌ .நாயக்கருக்‌ கும்‌ முதலியாருக்கும்‌ என்ன விரோதம்‌ என்பதைப்‌ பொது ஜனங்கள்‌ அறிந்துகொள்ள வேண்டியது. இது சமயம்‌ மிகவும்‌ அவசியம்‌ தான்‌. ஏனெனில்‌ ஜனங்கள்‌ உண்மை அறிவதற்கு அது ஒரு அநுகூலமாயிருக்கு மென்பதே சுமார்‌ 17, 18 வருஷங்களுக்கு முன்பாக ஈரோட்டுக்கு ஒரு பார்ப்பனரல்லாதார்‌ வக்கீல்‌ வேண்டுமென்கிற எண்ணத்‌ தின்‌ பேரில்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீநிவாச முதலியாரவர்களை நாயக்கர்‌ முன்பின்‌ அறியாதவராயிருந்தாலும்‌ கோயமுத்தூர்‌ ஸ்ரீமான்‌ வேணு கோபால்‌ பிள்ளை அவர்களின்‌ வேண்டு குடி அரசு - 1926 (2) 328 கோளின்படி ஸ்ரீமான்‌ முதலியாரைத்‌ வருவித்து அவருக்கு வேண்டிய சவுகரியமும்‌ செய்து கொடுத்து வெகு நேசமாயிருந்து வந்ததில்‌, அதுசமயம்‌ ஏற்பட்ட முனிசிபல்‌ சேர்மென்‌ தேர்தலில்‌ ஸ்ரீமான்‌ முதலியாருக்கும்‌ மற்றொரு கனவானுக்கும்‌ நேர்ந்த போட்டியில்‌ நாயக்கருக்கும்‌ ஸ்ரீமான்‌ முதலியாருக்கும்‌ ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தால்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌. சேர்மென்‌ ஆனதும்‌ தனது அதிகாரத்தை துஷ்பிர யோகம்‌ செய்து நாயக்கர்‌ தனது வீட்டில்‌ சில பிரபல சங்கீத வித்வான்‌௧ளைக்‌ கொண்டு ஒரு பாட்டுக்‌ கச்சேரி நடத்த ஏற்பாடு செய்திருந்த சமயத்தில்‌ லைசென்சில்‌ லாமல்‌ நடத்தக்‌ கூடாது என்று தடுத்து போலீசாரையும்‌ போய்‌ தடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்‌. நாயக்கர்‌ சேர்மென்‌ உத்திரவையும்‌ போலீசார்‌ தடங்கலையும்‌ மீறி சட்டமறுப்பு செய்து பாட்டுக்‌ கச்சேரியை நடத்தி விட்டதால்‌ நாயக்கரை: யும்‌அவர்‌ தமயனாரையும்‌ பிராசிகூஷன்‌ செய்தார்‌. இந்த பிராசிகூஷன்‌ சட்ட சபையில்‌ கேள்வி கேட்கப்பட்டு கவர்மெண்டராலேயே பின்வாங்கிக்‌ (வித்திட்ரா) கொள்ளப்பட்டது. இதைத்தான்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌, “நான்‌ சேர்மெணாயிருக்கும்‌ போது நாயக்கர்‌ பேரில்‌ நடவடிக்கை எடுத்துக்‌ கொண்‌ டேன்‌. அதனால்‌ எங்கள்‌ இருவருக்கும்‌ விரோதம்‌ விரோதம்‌” என்று தொட்ட தற்கெல்லாம்‌ பல்லவி பாடுவது, அதற்கப்புறம்‌ இருவரும்‌ நேசபாவமாகவே இருந்திருப்பதைக்‌ காட்டாமல்‌ தனது குற்றங்களுக்கெல்லாம்‌ இந்த ஒரு சமாதானமே போதுமென்று நினைத்தால்‌ அதன்‌ தன்மையைப்‌ பொது ஜனங்களே அறிந்து கொள்ளட்டும்‌. குடி அரசு - கட்டுரை - 24.10.1926. 329 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தமிழ்ப்வபாழில்‌ அண்பர்கட்கு வேண்டுகோன்‌ தஞ்சாவூர்‌ “கரந்தை தமிழ்ச்சங்க”த்தினின்றும்‌ “தமிழ்ப்‌ பொழில்‌” என்னும்‌ பெயரிய ஒரு திங்கள்‌ வெளியீடு தமிழறிஞர்‌ திருவாளர்‌ ஆர்‌.வேங்க டாசலம்‌ பிள்ளையவர்களை ஆசிரியராகக்‌ கொண்டு ஓராண்டு வெளிப்‌ போந்து நற்பயன்‌ அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம்‌ என்றும்‌ இடைய றாது உரிய காலங்களில்‌ வெளிவரற்குறிய சில முன்‌ ஏற்பாடுகள்‌ செய்தற்‌ பொருட்டுப்‌ “பொழில்‌” சிறிது காலந்தாழ்ந்து வெளிவரும்‌ என முன்னர்‌. அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல்‌ மிகுதியால்‌ சிறிய காலஅளவு கொஞ்சம்‌ பெரிதாக நீண்டது. முன்‌ ஏற்பாடுகள்‌ முன்னரே செய்யப்பட்டிருக்‌ கின்றன. நிற்க, “தமிழ்ப்‌ பொழிலி”ன்‌ முன்னேற்றங்‌ கருதி உழைக்க ஆங்கில மும்‌ தமிழும்‌ கற்று வல்ல அறிஞராகிய திருவாளர்கள்‌ நீ.கந்தசாமி பிள்ளை யவர்கள்‌, எம்‌. ஆர்‌.ஏ.எஸ்‌., அரசர்மடம்‌ பள்ளிக்கூட தமிழாசிரியர்‌ சாமி சிதம்பர உடையாரவர்கள்‌ ஆகிய இருவரும்‌ முன்‌ வந்துள்ளார்கள்‌. இவருள்‌. முன்னவர்‌ உதவி ஆசிரியர்‌, பின்னவர்‌ உடனின்று துணை செய்தலேயன்றி வெளியிடங்‌ கட்குச்‌ சென்று பொழிற்கு அன்பர்களைத்‌ திரட்டும்‌ உதவியாளர்‌. ஆவார்‌. திருவாளர்‌ உடையாரவர்கள்‌ தாம்‌ எய்தி வந்த ஊதியத்தினையும்‌ விட்டு விட்டுத்‌ (தமது சுருங்கிய செலவுகளை மட்டும்‌ பெற்றுக்கொண்டு! தொண்டு செய்ய முன்வந்திருப்பது மிகப்‌ பாராட்டற்பாலது. செந்தமிழ்ச்‌ செல்வர்கள்‌, ஊதியம்‌ கருதாது தமிழ்த்‌ தொண்டொன்றே கருதித்‌ தனித்‌ தீந்தமிழில்‌ வெளிவரும்‌ பொழிலைப் புரந்து தமிழ்த்தாயைப்‌ போற்றி வருமாறு வேண்டுகிறோம்‌. (ப-ர்‌) குடி அரசு - வேண்டுகோள்‌ - 24.10.1926. குடி அரசு - 1926 (2) 330 €யோக்கியமாண பார்ப்பணர்‌ ஒருவாாவதூ உண்டா? வரப்போகும்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்குப்‌ பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகப்‌ பார்ப்பனர்கள்‌ எல்லோரும்‌ அதாவது, உத்தியோக பார்ப்பனர்‌, வக்கீல்‌ பார்ப்பனர்‌, மிதவாதப்‌ பார்ப்பனர்‌, பஞ்சாங்கப்‌ பார்ப்பனர்‌, வாத்தியார்‌. பார்ப்பனர்‌, ஒத்துழையாமைப்‌ பார்ப்பனர்‌ ஆகிய எல்லோரும்‌ ஒன்றுகூடி அவரவர்கள்‌ தங்களுக்கும்‌ எவ்வித அபிப்பிராய பேதமும்‌ இல்லாமல்‌, ஏதாவது கொஞ்சம்‌ இருந்தாலும்‌ அதை அடியோடு மறந்து விட்டு ஒரேமாதிரி பிரசாரம்‌ செய்து வருகிறார்கள்‌ என்பதைப்பற்றி பல தடவை எழுதி இருக்கிறோம்‌. உதாரணமாக உத்தியோகப்‌ பார்ப்பனர்கள்‌ விஷயமாய்‌, சர்சி.பி. அய்யர்‌ அவர்கள்‌ ஜினிவா மகாநாட்டுக்கு அனுப்பப்‌ பட்டபோது “இந்து”, “சுதேசமித்திரன்‌', 'சுயராஜ்யா”முதலிய பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ இது சமயம்‌ போகிறாரே என்று ஓலமிட்டதிலிருந்தே தெரிந்திருக்கலாம்‌. மிதவாதப்‌ பார்ப்பனர்கள்‌ விஷயத்தில்‌ மகா மகாகனம்‌ சீனிவாச சாஸ்திரியார்‌ “இந்திய ஊழிய சங்கம்‌ வெந்து போனதற்காக பணம்‌ சேர்க்‌ கிறேன்‌” என்கிற பேரால்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஆங்காங்கு சென்று பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்தைப்‌ பற்றி வைது பேசுவதிலிருந்தே தெரிய லாம்‌. வக்கீல்‌ பார்ப்பனர்கள்‌ விஷயத்தில்‌ “ஜமீன்தார்‌ தொகுதிக்கு நிற்‌ கிறேன்‌” என்ற பெயரை வைத்துக்‌ கொண்டு பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்‌ தலைவரையே தோற்கடிக்க ஜமீன்தார்கள்‌ இடம்‌ பிரசாரம்‌ செய்வதிலும்‌ பணம்‌ செலவு செய்வதிலுமே பார்க்கலாம்‌. உபாத்தியாய பார்ப்பனர்கள்‌ விஷயத்திலோ என்றால்‌, உபாத்தியாயர்கள்‌ ஆங்காங்கு “உபாத்தியாயர்கள்‌ மகாநாடு” என்று கூடி அதற்குப்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்துக்கு விரோதி களாயிருப்பவர்களையும்‌ பார்ப்பனர்களையுமே அழைத்து தலைமை வகிக்கச்‌ செய்து ஒவ்வொரு உபாத்தியாயரும்‌ தேர்தல்களில்‌ பார்ப்பன ருக்கே. வேலை செய்யவேண்டும்‌ என்று இரகசியத்‌ தீர்மானங்கள்‌ செய்து கொண்டு போவதிலிருந்தும்‌ அவர்கள்‌ அக்கூட்டங்களில்‌ பேசுவதிலிருந்‌ தும்‌ தெரிந்துகொள்ளலாம்‌. பஞ்சாங்கப்‌ பார்ப்பனர்கள்‌ என்கிற விஷயத்‌ திலோ லோக குருக்கள்‌, மகந்துகள்‌, மடாதிபதிகள்‌ என்கிற ஆசாமிகள்‌ பணம்‌ கொடுப்பதிலிருந்தும்‌ அவர்களது காரியஸ்தர்களுக்கும்‌ முக்கிய சிஷ்யர்களுக்கும்‌ ஊர்‌ ஊர்களில்‌ இருக்கும்‌ ஆசாமிகளுக்கும்‌ இரகசிய 331 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. “ஸ்ரீமுகங்கள்‌” அனுப்பும்‌ விஷயத்திலிருந்தும்‌ நன்றாய்‌ அறிந்து கொள்ள லாம்‌. ஒத்துழையா பார்ப்பனர்‌ என்றும்‌ யோக்கியமான பார்ப்பனர்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொள்பவர்களிலோ இவற்றையெல்லாம்‌ விட ஆபத்தாயிருக்‌ கிறது. உதாரணமாக, மகாத்மா காந்தியின்‌ சிஷ்ய கோடிகளின்‌ சட்டாம்‌ பிள்ளையாகிய தமிழ்நாட்டுக்‌ காந்தி ஸ்ரீமான்‌ சி.ராஜகோபாலாச்‌ சாரியார்‌. அவர்களும்‌ அவர்களுடையபார்ப்பன சிஷ்யர்களும்‌ செய்துவரும்‌ பிரசாரம்‌. மற்றெல்லாவற்றையும்‌ விட மீறின தாயிருக்கிறது. ஸ்ரீமான்‌ ஆச்சாரியாரின்‌ கோடு கட்டிய குறள்களும்‌ “கருப்பாயி, பாவாயி” சம்பாஷணைகளும்‌ “பொய்மான்‌ வேட்டை” வியாசங்களும்‌, “கள்ளு நிறுத்தும்‌ பிரசாரங்களும்‌” எவ்வளவு விஷமத்‌ தன்மை பொருந்தியிருக்‌ கிறது என்பதை நாம்‌ விளக்கிக்‌ காட்ட வேண்டிய தில்லை. ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகளும்‌ எம்‌.கே. ஆச்சார்ய சுவாமிகளும்‌ கலம்‌ கலமாய்‌ பக்கம்‌ பக்கமாய்‌ எழுதித்‌ தள்ளுவதும்‌ சரி, நமது ஆச்சாரியார்‌ அவர்கள்‌ இரண்டு வரி எழுதி கோடு கட்டுவதும்‌ சரி, பத்து கல எழுத்தின்‌ விஷம்‌ இந்த இரண்டு வரி எழுத்தில்‌ இருக்கும்‌. உதாரணமாக, “நாட்டுக்கு நல்ல காலம்‌ வந்து விட்டது. சுயராஜ்யக்‌ கட்சியார்‌. கள்ளை நிறுத்தி விட ஒப்புக்‌ கொண்டார்கள்‌. ஓடுங்கள்‌, ஓடுங்கள்‌ எல்லோ ரும்‌ ஓடிப்போய்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு ஓட்டு செய்துவிட்டு வாருங்கள்‌” என்பது போல்‌ எழுதிக்‌ கொண்டி ருந்தார்‌. இவற்றையெல்லாம்விட ஒரு பெரிய விஷமம்‌ இவரது குறள்‌ களுக்கு மகாத்மாவின்‌ மேலொப்பமும்‌ வாங்கி விட்டார்‌. பிறகு என்ன காரணத்தாலோ கொஞ்சகாலம்‌ அஞ்ஞாத வாசமாய்‌ இரகசிய பிரசாரத்‌ திலிருந்தவர்‌ இப்போது மறுபடியும்‌ தைரியமாய்‌ வெளிப்‌ பட்டு வெளிப்‌ படையான பிரசாரத்திலிறங்கியிருக்கிறார்‌. இறக்கின வர்தான்‌ தனியாக ஊர்‌ ஊராய்ப்‌ போகாமல்‌ கூட ஒரு பார்ப்பனரல்லாத பிரசாரகரையும்‌ அழைத்துக்‌ கொண்டுபோய்‌ அவரை மனதாரப்‌ பொய்யும்‌ புளுகும்‌ அளக்கச்‌ செய்து இவர்‌ பக்கத்திலிருந்து அந்த பொய்களை பாமர ஜனங்கள்‌ நம்பும்படி செய்து கடைசியாக சுயராஜ்யக்‌ கட்சிக்கு ஓட்டுச்‌ செய்யுங்கள்‌ என்று சொல்லி உறுதிப்‌ படுத்திவிட்டு வருகிறார்‌. சமீபத்தில்‌ சேலம்‌ ஜில்லா சுயராஜ்யக்‌ கட்சி அபேகஷகருக்காக சேலத்திற்கு தானும்‌ ஸ்ரீமான்‌ கந்தசாமிப்‌ பிள்ளையுமாய்‌ கூட்டம்‌ கூட்டி அக்கூட்டத்தில்‌ தான்‌ பக்கத்‌ துணையாய்‌ இருந்து கொண்டு ஸ்ரீமான்‌ கந்தசாமிப்‌ பிள்ளை அவர்களை விட்டு ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ பேரில்‌ பொய்யும்‌ புளுகும்‌ சொல்லி வையும்படி செய்திருக்கிறார்‌. அவற்றில்‌ ஒரு புளுகு மலையாள மாப்பிள்ளை மூடு வண்டிக்‌ கொடுமையைப்‌ பற்றி சட்ட சபையில்‌ கேள்வி கேட்டதில்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ மாப்பிள்ளைகளுக்கு விரோதமாய்‌ கை தூக்கினார்கள்‌ என்றும்‌, ஜஸ்டிஸ்‌ ககஷியார்‌ உப்புவரியை இரட்டிக்க மன்றாடி போராடி உயர்த்தினார்கள்‌ என்றும்‌, பல தியாகிகளை: வைதார்கள்‌ என்றும்‌, கள்ளுகளை ஒழிக்கவில்லை என்றும்‌, கல்விக்கு ஒன்றும்‌ செய்யவில்லை என்றும்‌ பேசச்‌ செய்திருக்கிறார்‌. உண்மையில்‌ மலையாளக்‌ கலவரத்தின்‌ மூடுவண்டி சம்பவத்தைப்‌ பற்றி கேள்வி கேட்டவர்‌ ஒரு பார்ப்பனரல்லாதார்‌ என்பதும்‌ அதுவும்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியைச்‌ சேர்ந்தவர்‌. குடி அரசு - 1926 (2) 332 என்பதும்‌ அதிலும்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷி மந்திரிகளின்‌ உத்தியோக தோரணை: காரியதரிசியான ஸ்ரீமான்‌ ஆர்‌.கே.ஷண்முகம்‌ செட்டியார்‌ என்பதும்‌ நமது ஆச்சாரி யாருக்குத்‌ தெரியும்‌. உப்பு வரியை இரட்டிக்க மன்றாடிப்‌ போராடி னார்கள்‌ என்பதும்‌ அடியோடு பொய்‌. உப்பு வரியை உயர்த்தவும்‌ குறைக்கவும்‌ சென்னை சட்ட சபைக்கு அதிகாரமே இல்லை.அது சுயராஜ்யக்‌ ககஷி யாரும்‌ சுயேச்சைக்‌ ககஷியாரும்‌ சேர்ந்து மெஜார்ட்டி யாய்‌ உட்கார்ந்திருந்த இந்தியா சட்டசபைக்குக்‌ கட்டுப்பட்ட விஷயம்‌; அவர்களது அதிகாரத்திற்கு கட்டுப்‌ பட்டது. இதுவும்‌ நமது ஆச்சாரியாருக்‌ குத்‌ தெரியும்‌. மந்திரிகள்‌ கள்ளை ஒழிக்கவில்லை என்பதும்‌ தப்பு, சட்டசபையின்‌ மூலம்‌ கள்ளை ஒழிக்க முடியாது என்று ஸ்ரீமான்கள்‌ ஆச்சாரியாரும்‌ சத்தியமூர்த்தியும்‌ எத்த னையோ தடவை எழுதியும்‌ பேசியும்‌ இருக்கிறார்கள்‌. மகாத்மா காந்தியும்‌ சட்டசபை மூலம்‌ கள்ளை ஒழிக்க முடியாதென்றே சொல்லியிருக்கிறார்‌. அப்படியிருக்க, மந்திரிகள்‌ கள்ளை ஒழிக்கவில்லையென்று சொல்வதில்‌ எவ்வளவு புரட்டு இருக்கிறது. தவிர ஸ்ரீமான்‌ தாஸ்‌ முதலானவர்களை கிரிமினல்‌ குற்றவாளிகள்‌ என்று ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ சொன்னார்‌ என்று சொல்லு வதும்‌ பெரும்‌ பொய்‌. ஸ்ரீமான்‌ தாசைப்‌ பற்றி அவர்கள்‌ யாரும்‌ கொலைகாரர்‌, திருடர்‌ என்று சொல்லவே இல்லை. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரைப்‌ போலவே ஸ்ரீமான்‌ தியாகராய செட்டியா ருக்கும்‌ ஒத்துழையாத்திட்டம்‌ பிடிக்காததால்‌ அத்திட்டத்தின்‌ கீழ்‌ ஜயிலுக்‌ குப்‌ போனவர்களை தனிமரியாதை கொடுத்து ஆதரிக்கக்‌ கூடாது என்று சொன்னார்‌. தேசபந்து தாசர்‌ நாக்பூர்‌ கொடி சத்தியாக்கிரகத்தில்‌ ஜயிலுக்குப்‌ போனவர்களை காங்கிரஸின்‌ மூலம்‌ ஆதரிக்கவேண்டுமென்று ஒருவர்‌ சொன்னபோது கொடி சத்தியாக்கிரகத்தில்‌ ஜயிலுக்குப்‌ போனவர்கள்‌ கஞ்சிக்கில்லாத தத்தாரிகள்‌ அவர்களை ஆதரிக்கக்கூடாது என்று தேசபந்து தாஸ்‌ சொன்னார்‌. அப்படிச்‌ சொன்னவ ருடைய உருவத்தை சுதேசமித்திரன்‌ ஆபீசில்‌ வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி சொல்லுவதற்கு ஆள்கள்‌ நமது பார்ப்பனர்களுக்குக்‌ கிடைப்பதில்லை. தவிர, பார்ப்பனரல்லாதார்‌ படிப்புக்கு ஜஸ்டிஸ்‌ ககஷியார்‌ யாதொரு கவலையும்‌ எடுத்துக்கொள்ளவில்லையென்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. இது மேற்கண்டவைகள்‌ எல்லாவற்றையும்விட வேண்டுமென்றே மனதறிந்து சொல்லும்‌ பெரிய பொய்‌. கடவுள்‌ என்று ஒருவர்‌ இருப்பது உண்மையாயிருந்‌ தால்‌ இந்த வார்த்தைகள்‌ சொல்லும்போதே சொன்னவர்‌ கண்ணையும்‌ வாயையும்‌ சொல்லச்‌ செய்தவரின்‌ கண்ணையும்‌ குயுத்தியை யும்‌ உடனே பிடுங்கி இருப்பார்‌ என்றே சொல்லவேண்டும்‌.ஜஸ்டிஸ்‌ மந்திரிகள்‌ வந்த பிறகு நமது மாகாணத்தில்‌ இலவசக்‌ கல்வியும்‌ கட்டாயக்‌ கல்வியும்‌ ஏற்பாடு செய்து அநேக இடங்களில்‌ அமுலில்‌ கொண்டு வந்திருக்கிறார்கள்‌. 5 வயது முதல்‌ 12 வயது வரை ஒவ்வொரு குழந்தையும்‌ கண்டிப்பாய்‌ படிக்க வைத்தாக வேண்டும்‌.இல்லாவிட்டால்‌ பெற்றோர்‌ களுக்கு தண்டனை என்று சட்டமும்‌ செய்திருக்கிறார்கள்‌. அதன்‌ மூலம்‌ படிக்கும்‌ லக்ஷக்கணக்கான பிள்ளைகளில்‌ 333 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. 100-க்கு 99 பேர்‌ பார்ப்பனரல்லாதார்‌. இதுவும்‌ நமது ஆச்சாரியாருக்கு நன்றாய்த்தெரியும்‌. இந்த மாதிரி “உயர்ந்த தத்துவமுள்ளவர்கள்‌, பொதுவானவர்கள்‌, உண்மையான தேசபக்தர்கள்‌” என்று சொல்லப்பட்ட கூட்டத்தைச்‌ சேர்ந்த மேல்கண்ட பார்ப்பனர்களின்‌ விஷமப்‌ பிரசாரமே இப்படி இருந்தால்‌ மற்ற சாதாரணப்‌ பார்ப்பனர்களின்‌ விஷமப்‌ பிரசாரங்கள்‌ எவ்வளவு பொய்யை யும்‌ புளுகையும்‌ கொண்டிருக்கும்‌ என்பதை வாசகர்களே யோசித்துப்‌ பார்க்கட்டும்‌. தவிர, ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ பேசும்போது “ஸ்ரீமான்‌ முனுசாமிக்‌ கவுண்டர்‌ எக்காரணம்‌ பற்றியும்‌ ஜஸ்டிஸ்‌ ககஷியார்‌ மாய வலையில்‌ அகப்‌ படமாட்டார்‌; காங்கிரஸ்‌ கட்சியிலேயே இருப்பார்‌ என்று பொது ஜனங்க ளுக்கு ஜாமீன்‌ கொடுத்திருக்கிறார்‌. இதன்‌ ரகசியம்‌ என்ன? ஸ்ரீமான்‌ முனு சாமிக்‌ கவுண்டர்‌ ஒரு சமயம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டால்‌ தங்கள்‌ அடிமையாக இருக்க வேண்டுமென்று கவுண்டரிடம்‌ உறுதிமொழி வாங்குவதுதானே. காங்‌ கிரஸ்‌ கட்டளைகள்‌ என்ன அவ்வளவு யோக்கியமானது? காங்கிரசின்‌ யோக்‌ கியதையையும்‌ நாணயத்தையும்‌ பார்க்க ஒரே ஒரு உதாரணம்‌ போதாதா? சட்டசபையை விட்டு எல்லோரும்‌ வெளிக்‌ கிளம்பினதும்‌ மறுபடியும்‌ உள்ளே. நுழைந்ததும்‌ யோசித்துப்‌ பார்த்தால்‌ ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ போன்றவர்கள்‌ கடுகளவாவது யோக்கியப்‌ பொறுப்புள்ளவர்களாயிருப்பார்‌ களானால்‌ சுய ராஜ்ஜியக்‌ கட்சி அபேக்ஷ்கருக்கு ஓட்டு போடும்படி சொல்ல மனம்‌ வருமா? ஸ்ரீமான்‌ சர்‌.பி. தியாகராய செட்டியார்‌ அவர்கள்‌ ஒரு காலத்தில்‌ அரசியல்‌ பார்ப்பனர்கள்‌ எல்லாம்‌ அயோக்கியர்கள்‌ என்று சொன்னார்‌ என்று சமீபத்தில்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌ எழுதியிருந்தார்‌. இதிலி ருந்து ஸ்ரீமான்‌ செட்டியாருக்காவது ஒரு வித தெளிவு இருந்ததாய்‌ தெரிய வருகிறது. ஆனால்‌ நமக்கு வேறு எந்த இயல்‌ பார்ப்பனர்கள்‌ தான்‌ யோக்கியர்‌ என்று சொல்ல முடியாமல்‌ இருக்கிறது. ஆதலால்‌ வரப்போகும்‌ தேர்தல்களில்‌ பார்ப்பனரல்லாத பொதுமக்கள்‌ எந்தக்‌ காரணம்‌ கொண்டும்‌ ஏமாந்து போய்‌ பார்ப்பனருக்கு ஓட்டு செய்து தங்கள்‌ சமூக முன்னேற்‌ றத்திற்கே தடையும்‌ அழிவையும்‌ தேடிக்‌ கொள்ளாமல்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பனரல்லாதாருக்கே. ஓட்டு செய்து தங்கள்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாய்க்‌ கோருகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 24.10.1926 குடி அரசு - 1926 (2) 334 335 ஸ்மூஸ்‌ ககூறி கணவாண்களே! நீங்கள்‌ உண்மையாய்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ நண்பர்களானால்‌ உடனே கதரை உடுத்துங்கள்‌. அதுதான்‌ உங்களுக்கு பரீகைஷ. கதர்‌ தரித்திரத்தைப்‌ போக்கி எல்லோருக்கும்‌ விடுதலை அளிக்கும்‌. “காங்கிரஸ்‌ சுயராஜ்ஜியம்‌” பார்ப்பனருக்கு மாத்திரம்‌ உத்தி யோகமும்‌ ஆதிக்கமும்‌ அளிக்கும்‌. குடி அரசு - பெட்டிச்‌ செய்தி - 24.10.1926 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 €வனான கணவணாண்கனிண்‌ வபாறுப்பு கோயமுத்தூர்‌ ஜில்லா சட்டசபைத்‌ தேர்தலுக்கு மூன்று ஸ்தானங்‌ களுக்கு நான்கு கனவான்கள்‌ நிற்கிறார்கள்‌. மூன்று கனவான்கள்தான்‌ வெற்றி பெறக்கூடும்‌. இதில்‌ தோல்வியடைவது யார்‌ என்கிற விஷயத்தில்‌ உண்மை யை ஒழிக்காமல்‌ வெளியிட வேண்டுமானால்‌, இது சமயம்‌ உள்ள நிலைமை யின்படி, ஸ்ரீமான்‌ சங்கராண்டாம்பாளையம்‌ பட்டக்காரர்‌ வேணாவுடையாக்‌ கவுண்டர்‌ அவர்களாவது அல்லது CV. வெங்கிட்டரமணய்யங்கார்‌ அவர்க எளாவது தோல்வியடைய நேரிடுமென்றுதான்‌ சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுள்‌ ஸ்ரீமான்‌ பட்டக்காரக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ தோல்வியடைய நேரிட்டால்‌ இச்சில்லா வாசிகள்‌ பெரும்பான்மையாக உள்ளதும்‌ பொறுப்பும்‌ அந்தஸ்துமுள்ளதுமான வேளாள சமூகத்திற்கு தங்களது சமூக நலத்தை நாடும்‌ யோக்கியதை இல்லையென்றுதான்‌ சொல்ல வேண்டி வருமென்று சொல்லவே பயப்படுகிறோம்‌. ஆனால்‌ அச்சமூகத்திய தலைவரும்‌ பிரதிநிதி யுமான ஸ்ரீமான்‌ பட்டக்காரக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ தோல்வியடை வதில்‌ ஆச்சரியமொன்றுமில்லை என்றும்‌ சொல்லுவோம்‌. ஏனெனில்‌ சென்ற தேர்த லிலும்‌ இதே மாதிரி அதாவது கொங்குவேளாள சமூகத்திற்கே இரண்டு கண்கள்‌ என்று சொல்லத்தகுந்த மாதிரியில்‌ இச்சில்லாவில்‌ இரண்டு வகைப்‌ பெரியார்கள்‌ உண்டு.அவர்கள்‌ கனம்‌ தங்கிய ஊத்துக்குளி ஜமீன்தார்‌ போன்ற ஜமீன்தார்களும்‌ கனம்‌ பழயகோட்டைப்‌ பட்டக்காரர்‌ முதலிய பட்டக்கார. கனவான்களுமேயாவார்கள்‌. அடுத்தாப்போல்‌ அச்சமூக பிரமுகர்களிலும்‌ பிரமுகராயிருப்பவர்கள்‌ ஸ்ரீமான்‌ V.C வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌. இப்பேர்ப்பட்ட தலைவர்களையும்‌, பெரியார்களையும்‌, பிரமுகர்களையும்‌, நமது கொங்கு வேளாள சமூகம்‌ உடைத்தாயிருப்பதற்கு மிகுதியும்‌ பெருமையும்‌ பாராட்டிக்‌ கொள்ள வேண்டியிருப்பதோடு அப்பெருமைகள்‌ சிறப்புற்று விளங்க ஒவ்வொருவரும்‌ உழைக்க வேண்டும்‌. அப்படியிருக்க சென்ற 3 வருஷத்திற்கு முன்னிட்ட சட்டசபைத்‌ தேர்தலில்‌ ஊத்துக்குளி ஜமின்தார வர்களைத்‌ தோல்வியடையச்‌ செய்து விட்டார்கள்‌. அது மாத்திரமல்லாமல்‌ ஸ்ரீமான்‌ வெள்ளியங்‌ கிரிக்கவுண்டர்‌ அவர்களையும்‌ தோல்விக்கு மிக சமீபத்தில்‌ நிற்கும்படி செய்து விட்டார்கள்‌. அது சமயம்‌ ஒத்துழையாமையிலீடுபட்டிருந்த சிலரும்‌ ஸ்ரீமான்‌ கவுண்டர்‌ அவர்களுக்கு தோல்வி ஏற்படுமோ என அஞ்சி தங்களது கொள்கை களையும்‌ விட்டு கவுண்டருக்காகப்‌ பிரசாரம்‌ செய்து மூன்றாவதாராக வெற்றி பெறச்‌ செய்ததும்‌ நாம்‌ அறிவோம்‌.அதோடு வேளாள சமூகத்தாரல்லாத வரும்‌ வேளாளர்களை. குடி அரசு - 1926 (2) 336 சரிசமமாகக்‌ கூட நடத்தாமல்‌ இழிவாய்‌ நடத்துகிற வரும்‌ வேளாள இரத்தத்தை உறிஞ்சியே வாழ வேண்டிய சமூகத்தாராகிய ஸ்ரீமான்‌ 0). வெங்கிட்ட ரமணய்யங்கார்‌ அவர்கள்‌ எல்லோரையும்விட அதிகமான ஓட்டுப்‌ பெறும்‌ படியாகவும்‌ செய்த நமது கொங்கு வேளாள சமூகத்தில்‌ இவ்‌ வருஷமும்‌ அவர்களுடைய தலைவரான பட்டக்காரக்‌ கவுண்டர்‌ தோல்வியுற்றால்‌ ஆச்சாரியப்படுவதற்கில்லை என்று சொன்‌ னோம்‌. அல்லாமலும்‌, ஸ்ரீமான்கள்‌ ஜமீன்தாரும்‌ தோல்வியுற்று வெள்ளியங்‌ கிரி. கவுண்டரும்‌ குறைந்த ஓட்டுப்‌ பெறவும்‌ அநுமதித்து சும்மாயிருந்து விட்ட பட்டக்காரக்‌ கவுண்டர்‌ தோல்வியுறுவது கருமபலன்‌ என்று கூட கருமபலனில்‌ நம்பிக்கை உள்ளவர்கள்‌ கண்டிப்பாய்‌ ஒப்புக்‌ கொள்ளு வார்கள்‌. ஆனால்‌, நாம்‌ ஓட்டு செய்வதாயிருந்தால்‌ முதலாவது ஸ்ரீமான்‌ பட்டக்கார வேணாவுடையாக்‌ கவுண்டருக்கும்‌, இரண்டாவது முதலியாருக்‌ கும்‌, மூன்றாவதாக செட்டியாருக்கும்தான்‌ போடுவோமே ஒழிய எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ அய்யங்காருக்குப்‌ போடவே மாட்டோம்‌. இதற்குக்‌ காரணம்‌ சொல்லுவதற்கு முன்‌ ஒரு விஷயத்தை எல்லோரும்‌ மனதில்‌ வைத்துக்கொள்ள வேண்டியது. அதாவது தற்கால அமைப்பின்‌ படி சட்டசபைக்குப்‌ போவதன்‌ மூலம்‌ அரசியல்‌ சம்பந்தமாய்‌ எவ்வித காரியமும்‌ செய்ய முடியாது. 1. கந்தாயம்‌, வரி, வட்டம்‌ முதலியதுகளைக்‌ குறைத்துக்கொள்ள முடியவே முடியாது. 2. வசூல்‌ செய்த கந்தாயங்களையும்‌ வரிகளையும்‌ நம்மிஷ்டம்‌ போல்‌ சிலவு செய்யவும்‌ சர்க்கார்‌ இஷ்டம்‌ போல்‌ சிலவு செய்வதைத்‌ தடுக்‌ கவும்‌ முடியாது. 3. வேளாள சமூகத்தையே அழிப்பதற்காதாரமான வியாஜ்ஜியம்‌, விவகாரம்‌, கோர்ட்டு முதலிய விஷயங்களில்‌ குடியானவர்களுக்‌ கனுகூலமான எவ்வித சீர்திருத்தங்கள்‌ கூட செய்ய முடியாது. எங்காவது செய்யக்கூடிய வழிகள்‌ இருந்தாலும்‌ அதனாலேயே பிழைக்கப்‌ பிறந்த நமது பார்ப்பனர்கள்‌ கொஞ்சமும்‌ இடம்‌ கொடுக்கவுமாட்டார்கள்‌. 4. கள்‌, சாராய உற்பத்தியையோ விற்பனையையோ குறைக்கமுடிய வே முடியாது. ஏனெனில்‌, குடியானவர்கள்‌ குடிப்பதற்காக கொடுக்கும்பணத்திலிருந்துதான்‌ பார்ப்பனர்கள்‌ படிக்கவேண்டும்‌. குடியானவர்கள்‌ குடித்துக்‌ கெடும்‌ பணத்திலிருந்து தான்‌ பார்ப்பனர்கள்‌ பிழைக்க வேண்டும்‌. அந்த மாதிரி நிலையில்‌ 337 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சர்க்காரார்‌ குடி தத்துவத்தை வைத்திருக்கிறார்கள்‌. இம்மாதிரியே பொது ஜனங்களுக்கோ குறிப்பாய்‌ வேளாள சமூகத்திற்கோ சட்டசபை மூலம்‌ஒரு காரியமும்‌ செய்துகொள்ள முடியாது. மற்றபடி எதனால்‌ கவுண்டரவர்களுக்கு முதலில்‌ ஓட்டு போடு வோமென்றால்‌ சட்டசபை மெம்பர்‌ என்பது ஒரு பதவி, பெருமை, கீர்த்தி முதலியதுகளுக்கு௨பயோகமானது. இம்மாதிரி பதவி, கீர்த்தி, பெருமை முதலியதுகள்‌ அடைய பாத்தியமுள்ளவர்கள்‌ இந்நாட்டு பெரும்பான்மை யும்‌ முக்கியமுமான வகுப்பாகிய வேளாள சமூகத்தினரானதினாலும்‌ சென்ற ஆறு. வருஷமாய்‌ அதிலிருந்து பெருமை அடையாத புதியவராயிருக்கிற தினாலும்‌ ஒரு பெருமையை ஒருவரே அட்டை போல்‌ ஒட்டிக்‌ கொண்டு சாகளவும்‌ வேறொருவருக்கு விடாமல்‌ அனுபவிப்பதைவிட ஆளுக்கொரு தரம்‌ அனுபவிக்கலாம்‌ என்கிற முறைப்படியும்‌ கவுண்டருக்‌ குத்தான்‌ ஓட்டு செய்ய வேண்டும்‌. இந்தத்‌ தத்துவத்தை உத்தேசித்தே ஸ்ரீமான்‌ வி.சி. வெள்‌ ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ அவர்களும்‌ புதிதாய்‌ ஒருவருக்கு இப்‌ பதவியை அளிக்க வேண்டு மென்ற எண்ணங்கொண்டே தனக்குக்‌ கண்டிப்‌ பாய்‌ சட்ட சபை மெம்பர்‌ ஆகி விடும்‌ என்கிற உறுதியிருந்தும்‌ புதிதாக ஒருவருக்கு கொடுக்க வேண்டுமென்று கண்ணியமாய்‌ விலகிக்‌ கொண்டார்‌. ஆனாலும்‌ பட்டக்காரக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ நின்றிருந்தாலும்‌ தானும்‌ நின்றிருந்தால்‌ அதில்‌ தப்பு ஒன்றும்‌ சொல்ல முடியாது. ஆனால்‌ ஸ்ரீமான்‌ வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ தாங்கள்‌ சமூகத்தாரின்‌ குலாபிமானத்தைச்‌ சென்ற தேர்தலில்‌ கண்டு கொண்ட அனுபவத்திலிருந்து ஒரு கவுண்டருக்காவது நமது வேளாள சகோதரர்கள்‌ போடுவார்களோ போட மாட்டார்களோ என்பது உறுதி இல்லாதிருக்கும்போது இருவர்‌ நின்றால்‌ நாளை எல்லோரும்‌ இதனாலேயே போய்‌ விட்டது என்று சொல்லுவார்கள்‌ என்று பயந்து கொண்‌: டும்‌ எப்படியாவது நமது வகுப்பார்‌ ஒருவராவது கஷ்டமில்லாமல்‌ வரட்டு மென்கிற பெரு நோக்கத்துடன்‌ விலகிக்‌ கொண்டார்‌. அதற்காக வாவது பட்டக்காரக்‌ கவுண்டருக்கு ஒவ்வொருவரும்‌ முதலாவதாக ஓட்டுப்‌ போடக்‌ கடமைப்‌ பட்டிருக்கிறார்கள்‌ . ஸ்ரீமான்‌ சி.எஸ்‌.ரத்தினசபாபதி முதலியாரவர்களுக்கும்‌ இதுபோன்ற காரணம்தான்‌. அதாவது, இதற்குமுன்‌ இப்பதவியிலிருந்தவரல்ல. சென்ற தடவை இந்த ஸ்தானத்திற்கு நின்று ஏராளமான செலவு செய்து தோல்வி யுற்றவர்‌. ஜில்லா பொதுமக்கள்‌ பலரால்‌ நல்லவர்‌ என்று கொண்டாடப்‌ பட்டவர்‌. மற்றும்‌ பல நல்ல சுபாவங்களுமுடையவர்‌.அடுத்தபடியாக ஸ்ரீமான்‌ டிஎராம லிங்க செட்டியார்‌ அவர்கள்‌ இதற்கு முன்‌ இரண்டு தடவை அப்பதவி வகித்‌ தவராயிருந்தாலும்‌ குடியான சமூகத்திலாவது பார்ப்பனரல்லாதார்‌. சமூகத்தி லாவது வேறு யாரும்‌ இன்னொரு அபேக்ஷக ராக நிற்கவுமில்லை. அல்லா மலும்‌ பார்ப்பனரல்லாத சமூகத்தவர்‌ பெரும்‌ பான்மையான ஜனங்கள்‌. குடி அரசு - 1926 (2) 338 எதிர்‌ பார்க்கப்படுகிறதான பணமும்‌ படிப்பும்‌ உள்ளவர்‌. பல நல்ல சுபாவங்‌ களுமுள்ளவர்‌. இப்பதவி அனுபவிக்க ஆசைப்படத்தகுந்த யோக்கிய தையுமுடையவர்‌. இந்தக்‌ காரணங்களோடு மற்றொன்று என்னவென்றால்‌ மக்கள்‌ யாவரும்‌ கடவுள்‌ முன்னிலையில்‌ சமம்‌ என்றும்‌ பிறவியில்‌ மக்களுக்‌ குள்‌ உயர்வு தாழ்வைக்‌ கற்பித்து ஒருவரை ஒருவர்‌ இழிவுபடுத்துவது தப்பு என்கிறதுமான கொள்கைகளை இம்மூவரும்‌ உடையவர்கள்‌. தற்காலம்‌ நமது பிரதிநிதியாக சட்டசபைக்குப்‌ போக இந்த ஒரு யோக்கியதையேதான்‌ நம்மைப்‌ பொறுத்தவரையில்‌ முக்கியமானது என்று எண்ணுவதால்தான்‌ நாம்‌ ஓட்டுப்‌ போடுவதாயி ரூந்தால்‌ இதுசமயம்‌ இம்மூவருக்கேதான்‌ ஓட்டுச்‌ செய்வோம்‌ என்று சொல்ல நேரிட்டது. அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ சி.வி.வெங்‌ கிட்டரமணய்யங்காருக்கு ஏன்‌ போடக்கூடாது என்பதற்கும்‌ சில காரணங்கள்‌ சொல்லாவிட்டால்‌ பொதுஜனங்கள்‌ திருப்தியடைய மாட்டார்கள்‌ என்றே எண்ணுவதால்‌ அதையும்‌ சொல்லுகிறோம்‌. ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்கார்‌ சட்டசபைக்கு போவதற்குச்‌ சொல்லும்‌ அரசியல்‌ காரணங்களை நாம்‌ ஒப்புக்‌ கொள்வதில்லை, அவரு டைய கட்சியான சுயராஜ்யக்‌ கட்சி என்பதை நாம்‌ ஒரு புரட்டுக்‌ கட்சி என்றும்‌ கட்சியின்‌ பேரால்‌ சட்டசபையை விட்டு வெளியில்‌ வந்தவர்‌ மறுபடி கட்சி உத்திரவு இல்லாமல்‌ உள்ளே போனவர்‌. அது பார்ப்பனரல்லாதாரைத்‌ தாழ்த்த வும்‌, பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும்‌ ஏற்பட்ட பார்ப்பனக்‌ கட்சி என்பதே நமதபிப்பிராயம்‌. தன்னை ஒரு சமயம்‌ காங்கிரசுக்காரர்‌ என்று சொல்லிக்‌ கொள்ளக்கூடும்‌ என்றால்‌, காங்கிரஸ்‌ கட்டளை சட்டசபைக்குப்‌ போகக்கூடாது என்று இருந்த காலத்தில்‌ அதைமீறி சட்டசபைக்குப்‌ போனவர்‌; காங்கிரசுக்‌ கட்டளைப்படி அநேக தேசபக்தர்கள்‌ கள்ளுக்கடை மறியல்‌ செய்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள்‌ ஜெயிலுக்குப்‌ போய்க்‌ கொண்டிருந்த காலத்தில்‌ தனது ஆயிரக்கணக்கான தென்னை மரங்களில்‌ முட்டி கட்டி கள்ளுற்பத்தி செய்து பதினாயிரக்கணக்கான ரூபாய்‌ சம்பாதித்‌ துக்‌ கொண்டிருந்தவர்‌. ஒத்துழையாமைக்காக இந்தியாவில்‌ முப்பதாயிரம்‌ பேர்‌ ஜெயிலுக்குப்‌ போயிருக்கும்‌ போது இவர்‌ சட்டசபையில்‌ மெத்தை போட்ட நாற்காலியில்‌ உட்கார்ந்து காற்று வாங்கிக்கொண்டு அரசாங்கத்‌ தாரோடு ஒத்துப்‌ பாடிக்‌ கொண்டு வந்தவர்‌; தன்னை ஒரு ஒத்துழையாதான்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுவாரா என்றால்‌ அரசாங்கத்‌ தயவில்‌ ஜில்லா போர்டு மெம்பரும்‌, கல்விச்‌ சங்கத்‌ தலைவர்‌ பதவியும்‌ அரசாங்க நியமன மாய்ப்‌ பெற்றவர்‌; ஒரு சமயம்‌ நிர்மாணத்‌ திட்ட மாகிய கதர்‌, தீண்டாமை, மதுவிலக்கு இதுகளுக்கு அநுகூலமாய்‌ இருப்பவர்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுவாரேயானால்‌, யந்திர நெசவு மில்லை வைத்து தினம்‌ ஒன்றுக்கு பதினாயிரக்கணக்கான கெஜம்‌ துணிகளை தனது யந்திரத்தின்‌ மூலம்‌ உற்பத்தி செய்து தினம்‌ பதினாயிரக்‌ கணக்கான நெசவுக்காரர்‌ தொழிலைக்‌ கெடுத்து அவர்கள்‌ வயிற்றில்‌ மண்ணைப்‌ போட்டுக்‌ கொண்டு இருப்பவர்‌; எப்படி 339 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தன்னை கதரில்‌ நம்பிக்‌ கை உள்ளவர்‌, கதருக்கு ஆதரவு அளிப்பவர்‌ என்று சொல்லிக்கொள்ள முடியும்‌? எலெக்ஷன்‌ தீரும்வரை பொது ஜனங்களை ஏய்ப்பதற்காக கதர்‌ கட்டிக்‌ கொண்டிருந்தால்‌ போதுமா? தீண்டாமையில்‌ கவலை உள்ளவர்‌ என்று தன்னைச்‌ சொல்லிக்‌ கொள்ளு வாரானால்‌ முதலாவது தேவஸ்தான மசோதாவை ஆககபித்திருக்க முடியுமா? அவரைப்போல்கல்வியும்‌ செல்வமும்‌ அவரைவிட அழகும்‌ குணமும்‌ உள்ள. குடியானவர்களையே சூத்திரர்‌ என்றும்‌, தான்‌ சாப்பிடு வதைப்‌ பார்க்கக்‌ கூடாது என்றும்‌, தொட்டு விட்டால்‌ தீட்டாய்ப்‌ போய்‌ விட்டது என்றும்‌ சொல்லுபவர்‌ “சக்கிலிப்‌ பரையர்‌” என்று சொல்லும்‌ சகோதரர்களாகியவர்‌. களை கிட்டவரவொட்டுவாரா? மதுவிலக்கைப்‌ பற்றியோவென்றால்‌, முன்னமேயே பேசிப்பேசி தீர்ந்து போய்‌ விட்டது. ஒரு சமயம்‌ தேர்தலுக்காக ஏதாவது முட்டி இறக்கியிருப்பாரேயானால்‌ சட்டசபை தீர்ந்தவுடன்‌ பத்தி லேயே மறுபடியும்‌ இறக்கின முட்டிகள்‌ ஒன்றுக்குப்‌ பத்தாய்‌ மரம்‌ ஏறப்‌ போகிறது. இவ்வளவும்‌ தவிர தன்னை நமது சகோதர வகுப்பார்‌ என்று சொல்லிக்கொள்ளுவா ரேயானால்‌ எப்படி இவர்கள்‌ வகுப்பு நமக்கு சகோதர வகுப்பாகும்‌. நாம்‌ நமது நாட்டி லுள்ள எந்த வகுப்பாரோடு சேர்ந்து அவ்‌ வகுப்பாரில்‌ கலந்து கொள்ள வேண்டுமானாலும்‌ கலந்து கொள்ளலாம்‌. உதாரணமாக, நாம்‌ ஐரோப்பாவுக்குப்‌ போய்‌ சிலகாலம்‌ இருந்து விட்டு வந்தால்‌ ஐரோப்பியராய்‌ விடலாம்‌. ஐரோப்பிய சம்பந்தம்‌ வைத்துக்‌ கொண்டால்‌ சட்டைக்‌ காரராய்‌ விடலாம்‌. மகமதுவைப்‌ பின்பற்றி தலையை மொட்டை அடித்து லுங்கி கட்டி அல்லாவை வணங்கினால்‌ மகம்மதியராய்‌ விடலாம்‌. ஏசுவைப்‌ பின்‌ பற்றி கழுத்தில்‌ சிலுவைப்‌ போட்டுக்‌ கொண்டால்‌ கிறிஸ்து வராகி விடலாம்‌. இவ்வளவு பெயரையும்‌ நாம்‌ சகோதரர்‌ என்று கூப்பிடலாம்‌. அவர்கள்‌ நம்மை சகோதரர்‌ என்று கூப்பிடலாம்‌. ஆனால்‌ நாம்‌ என்ன செய்தால்‌ பிராமணனாகலாம்‌? பூமியில்‌ பிறந்துவிட்டால்‌ சாகும்‌ வரை அவன்‌ வேறு. நாம்‌ வேறு; எந்த விதத்திலும்‌ ஒன்றாக முடியாத பார்ப்பனீயம்‌ என்னும்‌ பெரிய தடைமத்தியில்‌ இருக்கிறது. ஆதலால்‌, இந்நிலையில்‌ நமக்கும்‌ பார்ப்பனருக்கும்‌ எவ்வித சம்பந்‌ தமோ ஒற்றுமையோ ஒருவர்‌ நன்மையில்‌ மற்றவருக்கு கவலையோ இருக்கிற தென்பதெல்லாம்‌ புரட்டேயொழிய உண்மையல்ல. ஆதலால்‌, ஓட்டுப்போட இஷ்டமுள்ள இச்சில்லா பார்ப்பனரல்லாத ஓட்டர்களும்‌ குறிப்பாய்‌ வேளாள ஓட்டர்களும்‌ தங்கள்‌ தங்கள்‌ ஓட்டுக்களைக்‌ கண்டிப்‌ பாய்‌ முன்கூறிய வரிசைப்படிபார்ப்பனரல்லாத மூவருக்கே போடும்படி வேண்டிக்‌ கொள்ளு கிறோம்‌. எந்த விதத்திலாவது பார்ப்பன ஓட்டர்கள்‌ ஒருவராவது பார்ப்பனரை: விட்டு பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுக்‌ கொடுப்‌ பார்கள்‌ என்று நம்பவே வேண்டியதில்லை. பெரும்பான்மையான பார்ப்பன மக்கள்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காருக்கு தனி வோட்டுகளே போடுவார்கள்‌. சிலர்‌ மீதி ஓட்டுகளை: ஸ்ரீமான்‌ செட்டியாருக்கும்‌ முதலியாருக்குமாவது செய்வார்களே ஒழிய குடி அரசு - 1926 (2) 340 ஸ்ரீமான்‌ கவுண்டருக்குக்‌ கண்டிப்பாய்‌ செய்ய மாட்டார்கள்‌. ஏனெனில்‌ தோல்வி அடைவது ஸ்ரீமான்‌ கவுண்டரா அய்யங்‌ காரா என்பதாகவே இருப்பதால்தான்‌. ஆதலால்‌ அய்யங்காருக்கு போடப்‌ பட்ட ஒவ்வொரு ஓட்டுக்களும்‌ பட்டக்காரக்‌ கவுண்டரைத்‌ தோற்கடிக்‌ கத்தக்கது என்று மறுபடியும்‌ சொல்லுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 24.40.1926. 24] பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 மகானை நசன்‌ கோயமுத்தூரிலிருந்து வெளியாகும்‌ “மகாஜன நேசன்‌” என்னும்‌ ஒரு சகோதரப்‌ பத்திரிகை “கோயமுத்தூர்‌ ஜில்லா தேர்தலும்‌ கவுண்டரும்‌” என்கிற தலையங்கத்தின்‌ கீழ்‌ ஒரு வியாசத்தை பிரசுரித்துவிட்டு அதன்‌ கீழ்‌ பத்திராதிபர்‌ குறிப்பாய்‌, “இவ்வியாசத்தை பிரசுரம்‌ செய்ததின்‌ நோக்கம்‌ யாதெனில்‌ “குடி அரசுப்‌ பத்திரிகையின்‌ மேல்‌ ஜனங்களுக்கு இருக்கும்‌ அதிருப்தியைப்‌ போக்கி உண்மைத்‌ தொண்டு புரியும்படி தூண்டுதற்பொ ட்டே வியாசத்தைச்‌ சற்று அப்பத்திரிகையை உயர்த்திப்‌ பேச இடமளித்‌ தோம்‌” என்று எழுதி ஆசிரியர்‌ என்று கையொப்பமிட்டிருக்கிறார்‌. இதில்‌ இவ்விதம்‌ குறிப்பு எழுதியது அப்பத்திரிகை நடந்து கொள்ள வேண்டிய தன்மைக்கு மீறினதென்றும்‌ “குடி அரசின்‌ மீது பொதுஜனங்‌ களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்குமானால்‌ அதைப்‌ போக்குவதற்கும்‌ “குடிஅரசு” உண்மைத்‌ தொண்டு செய்யாமலிருந்தால்‌ அதைச்‌ செய்யும்படி செய்வதற்கும்‌ “மகாஜன நேசன்‌' அணுக வேண்டியவழி இது வல்லவென்றும்‌ *நேசனுக்கும்‌” அழுந்திக்‌ கிடந்த பொறாமை இது ஒரு சந்தர்ப்ப மாய்‌“நேசனை'” அறியாமலே நேர்ந்து விட்டதென்று மாத்திரம்‌ இதுசமயம்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 24.10.1926 குடி அரசு - 1926 (2) 342 வகுப்புத்‌ துவேஷிகள்‌ யார்‌? யார்ப்பண பிரசாரத்தின்‌ கண்மை மகா மகாகனம்‌ பொருந்திய ஸ்ரீமான்‌ சாஸ்திரியார்‌ அவர்கள்‌ தென்‌ ஆப்பிரிக்கா ரவுண்ட்‌ டேபிள்‌ கான்பரன்சுக்கு சர்க்காரால்‌ நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி “இந்து” பத்திரிகை பிரமாதமாய்‌ எழுதி இருப்பதோடு, அவரது படத்தையும்‌ தனது பத்திரிகையில்‌ போட்டு அவரை விளம்பரப்‌ படுத்தியிருக்கிறது. ஸ்ரீமான்‌ சாஸ்திரிகள்‌ இந்து பத்திரிகையின்‌ கோஷ்டிக்கும்‌ அதன்‌ கொள்கையான சுயராஜ்யக்‌ கட்சிக்கும்‌ விரோதமானவர்‌. அப்படி யிருந்தும்‌ அதாவது தங்களது கோஷ்டிக்கும்‌ தங்களது கொள்கைக்கும்‌ விரோதமாயிருந்தும்‌ ஸ்ரீமான்‌ சாஸ்திரியார்‌ பார்ப்பனர்‌ என்கிற காரணத்துக்‌ காக அவரை விளம்பரப்படுத்தி தூக்கி விடுகிறது. அதுபோலவே ஸ்ரீமான்‌ சர்‌.சி.பி. ராமசாமி அய்யர்‌ அவர்களும்‌ சர்க்கார்‌ உத்தியோகஸ்தராயிருந்தும்‌, சுயராஜ்யக்‌ கட்சிக்கு விரோதமாய்ப்‌ பேசிக்கொண்டிருந்தும்‌ சர்க்கார்‌. மனுஷனாக மேல்‌ நாட்டுக்குப்‌ போயிருந்தும்கூட அவரது பிரயாணத்தையும்‌, வருகை, வரவேற்பு, உபசாரம்‌ முதலியதுகளையும்‌, சென்றிருந்த இடத்தில்‌ நடந்த விசேஷங்‌ களையும்‌ பேட்டி கண்டு பேசியதுகளையும்‌ பார்ப்பனர்‌. என்கிற காரணத்திற்‌ காக படம்‌ போட்டுத்‌ தனது பத்திரிகையில்‌ பிரசுரித்து விளம்பரப்படுத்தி யிருக்கிறது. ஸ்ரீமான்‌ ஸ்ரீவிஜயராகவாச்சாரியார்‌ என்கிற வரும்‌, ஒரு பார்ப்பனரும்‌ சர்க்கார்‌ ஊழியர்‌ என்கிற முறையில்‌ மேல்நாட்டுக்‌ குப்‌ போயும்‌ சுயராஜ்யத்திற்கு இந்துக்கள்‌ இன்னும்‌ பக்குவம்‌ இல்லை என்றுகூடச்‌ சொல்லியும்‌ சுயராஜ்யக்‌ கட்சி வேஷத்திற்கு விரோதமாய்ப்‌ பேசியும்‌, பிரிட்டிஷ்‌ அரசாங்கம்‌ இந்தியாவுக்கு ஏற்பட்டது இந்தியாவின்‌ பாக்கியம்‌ என்றும்‌, கடவுள்‌ அருள்‌ என்றும்‌ பேசியும்‌, பிரிட்டிஷாரின்‌ பெயரை: இந்தியர்கள்‌ பெறும்‌ குழந்தைகளுக்கு வைக்க வேண்டிய மாதிரிக்கும்‌, தான்‌ நிர்வாக சபை மெம்பர்‌ வேலை பெறத்தக்க அளவுக்கும்‌ ராஜபக்தி காட்டியு மிருக்கிறார்‌. அப்படிப்பட்டவர்‌ ஒரு பார்ப்பனர்‌ என்கிற காரணத்துக்காக அவரது பிரயாணத்தையும்‌ வரவையும்‌ அங்கு போய்‌ செய்ததையும்‌ பேட்டி கண்டு பேசியதையும்‌ படம்‌ போட்டு விளம்பரப்‌ படுத்தியிருக்கிறது. கோயமுத்தூர்‌ ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ அவர்கள்‌. பார்ப்பனரல்லாத கட்சியிலிருந்து விலகி பார்ப்பனர்‌ கக்ஷியான சுயராஜ்யக்‌ கக்ஷியினராயும்‌, அக்கட்சியில்‌ முக்கிய கொரடாவாயுமிருந்தும்‌ தமிழ்நாடு 343 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. காங்கிரஸ்‌ கமிட்டி காரியதரிசியாயிருந்தும்‌ பார்ப்பனர்‌ சொல்லுகிற பக்கங்‌ களிலும்‌ கூட்டங்களிலும்‌ அவர்களுக்குக்‌ கிடைக்கும்‌ அவமரியாதைகளை' யெல்லாம்‌ தான்‌ முன்னிருந்து காப்பாற்றியும்‌ பார்ப்பனர்கள்‌ “தங்கள்‌ கக்ஷியிலும்‌ ஒரு யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார்‌ இருக்கிறார்‌” என்று சொல்லிக்‌ கொள்ளுவதற்கு உடந்ததாயிருந்திருப்பதுமல்லாமல்‌ ஆஸ்ட்ரே லியா பார்லிமெண்ட்‌ கான்பரன்ஸ்‌ என்கிற ஒரு முக்கிய கூட்டத்திற்கு இந்தியாவின்‌ பொது மக்கள்‌ சார்பாய்‌ பொதுமக்கள்‌ பிரதிநிதிகளால்‌ தெரிந்‌ தெடுக்கப்பட்டும்‌ போயிருக்கிறார்‌. இப்படிப்பட்ட ஒருவரைப்‌ பற்றி அவர்‌. பார்ப்பனரல்லாதார்‌ என்கிற காரணத்தினாலேயே பிரயாணமும்‌ இல்லை, உபசரிப்பும்‌ இல்லை, அவரது படமும்‌ இல்லை அங்குபோய்ச்‌ சேர்ந்தாரா? இல்லையா? அது விபர மும்‌ இல்லை. அவர்‌ ஆஸ்ட்ரேலியாவில்‌ என்ன செய்கிறார்‌ என்ற தகவலும்‌ இல்லை. ஒன்றும்‌ இல்லாமல்‌ ஏதோ ஒரு அநாம தேயம்‌ போல்‌ கொஞ்சம்‌ கூட கணக்கிலேயே சேர்க்காமல்‌ வேண்டுமென்றே அடக்கி வைத்து அலகரியப்‌ படுத்தி இருக்கிறார்கள்‌. தங்கள்‌ சுயநலத்திற்‌ காக “சுயராஜ்யக்‌ கட்சிக்கு மற்‌ றொரு மெம்பர்‌ போட்டியில்லாமல்‌ தெரிந்‌ தெடுக்கப்பட்டார்‌” என்று சொல்லிக்கொள்ள மாத்திரம்‌ அவரது பெயரை உபயோகித்துக்‌ கொள்ளுகிறார்கள்‌. மற்றபடி வெகு ஜாக்கிரதையாய்‌ விலகிக்‌ கொண்டு வருகிறார்கள்‌. இந்தப்படி இவர்கள்‌ நடந்து கொண்டு மற்றவர்களை மாத்திரம்‌ வகுப்புத்‌ துவேஷம்‌ வகுப்புத்‌ துவேஷம்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுகிற இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ தங்களது நடவடிக்கைகளையும்‌ தங்களி டம்‌ இருக்கும்‌ வகுப்புத்‌ துவேஷத்தையும்‌ பிறத்தியார்‌ அறிய மாட்டார்கள்‌ என்றும்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌ எல்லாம்‌ முட்டாள்கள்‌, இந்த சூழ்ச்சியை அறிய சக்தியற்றவர்கள்‌ பார்ப்பனரல்லாப்‌ பத்திரிகைகளும்‌ எல்லாம்‌ சுத்தப்‌ பயங்கொள்ளிகள்‌ தங்கள்‌ சமூகத்தைக்‌ காட்டிக்‌ கொடுத்து வயிறு வளர்ப்‌ பவர்கள்‌ என்று நினைத்துக்‌ கொண்டு தாராளமாய்‌ தங்கள்‌ வகுப்புப்‌ பிரசாரம்‌ செய்கிறார்கள்‌. இதிலிருந்தாவது வகுப்புத்‌ துவேஷக்காரர்கள்‌ பார்ப்பனர்‌. களும்‌ அவர்களுடைய பத்திரிகைகளுமா? அல்லது பார்ப்பனரல்லாதாரும்‌ அவர்களுடைய பத்திரிகைகளுமா? என்று பொது ஜனங்கள்‌ யோசித்துப்‌ பார்க்கும்படி கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. அதோடு வரப்போகும்‌ தேர்தலி லும்‌ இப்பார்ப்பனர்களுக்கு தக்க பாடம்‌ கற்பிக்க வேண்டுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 24.10.1926 குடி அரசு - 1926 (2) 344 கைவயமுத்து போடக்‌ கூடாது இந்து மத பரிபாலன மசோதா என்னும்‌ இந்து தேவஸ்தான மசோதா இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்‌ சென்னை சட்டசபையில்‌, நமது பார்ப்பனரின்‌ கடுமையான எதிர்ப்பை ஜெயித்து நிறைவேறி, அரசாங்கத்தார்‌. சம்மதம்‌ பெற்று சுமார்‌ 2 வருஷ காலம்‌ அமுலிலும்‌ இருந்து வந்த பிறகும்‌ நமது பார்ப்பனர்கள்‌ அதில்‌ சில சட்ட சம்மந்தமான பிரச்சினைகளைக்‌ கிளப்பி ஹைக்கோர்ட்டில்‌ தங்களுக்குள்ள சட்ட ஞானத்தையும்‌ செல்வாக்‌ கையும்‌ கொண்டு விவகாரம்‌ தொடுத்து அச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்க பிரயத்தனப்பட்டதால்‌ மறுபடியும்‌ ஒருமுறை அச்சட்டம்‌ சட்டசபைக்கு வர: நேர்ந்தது. அந்தப்படி சட்டசபைக்கு வந்த சமயத்தில்‌ நமது பார்ப்பனர்கள்‌ ராஜீய இயக்கங்களையும்‌ ஸ்தாபனங்களையும்‌ தாங்கள்‌ கைப்பற்றிக்‌ கொண்ட தனால்‌ தங்களுக்கு இருக்கும்‌ செல்வாக்கைக்‌ கொண்டு சில பார்ப்பனரல்லாத சட்ட சபை அங்கத்தவர்களை (அவர்கள்‌ எப்படிப்பட்டவர்கள்‌ என்றால்‌ இந்த. தேவஸ்தான சட்டம்‌ ஆரம்பத்தில்‌ அதாவது 3, 4 வருஷங்களுக்கு முன்னால்‌ தயாரிக்கும்‌ போது கூட உதவியாயிருந்த வர்களும்‌ இச்சட்டத்தை ஏற்படுத்தத்‌ தீவிர முயற்சி யெடுத்துக்‌ கொண்டவர்‌ களுமாவார்கள்‌! தங்கள்‌ சுபாவ வஞ்சகத்தாலும்‌, பிரித்தாளும்‌ தத்துவத்‌ தாலும்‌,அவர்களுக்கு ஆசை வார்த்தைகள்‌ காட்டி சுவாதீனம்‌ செய்து கொண்டு அரசியல்‌ காரணம்‌ என்னும்‌ பெயரையும்‌, பொதுஜன நன்மை என்னும்‌ பெயரையும்‌, மத சம்பந்தமான நன்மைக்காக என்னும்‌ பெயரையும்‌ வைத்துக்கொண்டும்‌ எவ்‌ வளவு வேஷங்கள்‌ போட்டாலும்‌ ஜெயிக்க மாட்டோம்‌ என்று தெரிந்திருந்‌ தும்‌ எப்படியாவது அதை தாமதப்படுத்தி சென்ற சட்டசபை கலைவதற்குள்‌ நிறைவேறாதபடிசெய்து விட்டால்‌ பிறகு கலைந்து புதிதாய்‌ கூடும்‌ சபையில்‌ வேறு ஏதாவது தந்திரங்கள்‌ செய்து கொள்ளலாம்‌ என்று சுமார்‌ 500 திருத்தப்‌ பிரேரேப ணைகள்‌ என்னும்‌ பேரால்‌ எவ்வளவோ தந்திரங்கள்‌ செய்து பார்த்தும்‌, ஸ்ரீமான்‌ பனகால்‌ ராஜா அவர்களின்‌ உறுதியினாலும்‌ ஸ்ரீமான்கள்‌ ஏ. ராமசாமி முதலியார்‌, பி.டி. ராஜன்‌, டாக்டர்‌ நடேச முதலியார்‌, டி.எ. ராம லிங்கம்‌ செட்டி யார்‌ முதலியவர்‌ களின்‌ பலமான உதவியினாலும்‌ மறுபடியும்‌ முன்போலவே நிறைவேற்றி வைஸிராய்‌ பிரபுவின்‌ அனுமதிக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்‌ நிலையில்‌ கூட அதை எப்படியாவது ராஜப்‌ பிரதிநிதியின்‌ அனுமதி கிடைக்க வொட்டாமல்‌ செய்து அச்சட்டத்தை அழிக்கவேண்டும்‌ என்கிற எண்ணத்தின்‌ மேல்‌ பொது ஜனங்கள்‌ பேரால்‌ பல தந்திரங்கள்‌ செய்யப்பட்டு வருகின்றன. அதாவது, சில மடாதிபதிகளும்‌ 345 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. மகந்துகளும்‌ பணம்‌ செலவு செய்து பொதுமக்கள்‌ பேரால்‌ வைஸிராய்‌ பிரபுவுக்கு ஒரு விண்ணப்பம்‌ தயார்‌ செய்து பாமர மக்களின்‌ கையெழுத்து வாங்க பிரயத்தனங்கள்‌ நடை பெற்று வருகிறது. அவ்விண்ணப்பங்களை “இந்து”முதலிய பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ தங்கள்‌ பத்திரிகைகளில்‌ வைத்து அனுப்பி சந்தாதாரர்களாக ஆங்காங்குள்ள பார்ப்பன வக்கீல்களையும்‌ மிராசுதாரர்களையும்‌ கையெழுத்து வாங்கி வைஸிராய்‌ பிரபுக்கு அனுப்பும்படியாகவும்‌ செய்திருக்கின்றன. இது போலவே மலையாளக்‌ குடிவார மசோதா என்று ஒரு சட்டம்‌ சட்டசபையில்‌ நிறைவேற்றி இருப்பதையும்‌ அரசாங்கத்தாரின்‌ சம்மதம்‌ பெற்று அமுலுக்கு வரச்‌ செய்யாதபடி ரகஸ்யமாக நமது பார்ப்பனர்களால்‌ பலமான பிரசாரம்‌ செய்யப்பட்டும்‌ வருகின்றது. இவ்‌ விரண்டு சட்டங்களுக்கும்‌ விரோதமாய்ப்‌ பிரசாரம்‌ செய்ய முறையே மகந்துகளாலும்‌ மலையாள ஜன்மிகளாலும்‌ ஏராளமாக அதாவது லக்ஷக்கணக்கான பணமும்‌ உதவப்பட்டு வருகின்றது. அப் பணம்தான்‌ சட்ட சபை முதலிய ஸ்தாபனங்களில்‌ பார்ப்பனக்‌ கட்சிக்கு ஆள்சேர்க்க இப்போ தும்‌ சென்னை மாகாணம்‌ முழுதும்‌ தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்டு வருவதோடுபார்ப்பனைல்லாதார்‌ தேர்தல்‌ கூட்டங்‌ களில்‌ கல்லெறிதல்‌, கலகம்‌ செய்தல்‌, காலித்தனம்‌ செய்தல்‌ முதலிய காரியங்க ளுக்கு ஆதாரமாயுமிருந்து வருகிறது. ஆதலால்‌, இம்‌ மாதிரியான சூழ்ச்சி களையும்‌, போலி விண்ணப்பங்களையும்‌, விஷமப்‌ பிரசாரங்களையும்‌, காலித்தனங்களையும்‌ எதிர்த்து நிற்க வேண்டிய தோடு பார்ப்பனரின்‌ விஷமப்‌ பிரசாரங்களிலும்‌ போலி விளம்பரங்களிலும்‌ பார்ப்பனரல்லாத பாமர மக்கள்‌ மயங்கி ஏமாந்து போகாமல்‌ இருக்கும்‌ படிக்கும்‌ முயற்சிகள்‌ எடுத்துக்கொண்டு தக்க பிரசாரம்‌ செய்ய வேண்டுமென்று தெரிவித்துக்‌ கொள்ளுவதோடு பார்ப்பனர்களாலும்‌ அவர்களது கூலிகளாலும்‌ கொண்டு வரப்படும்‌ எவ்வித விண்ணப்பங்களிலும்‌ கண்டிப்பாய்‌ கையெழுத்திடாம லும்‌ இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 24.10.1926 குடி அரசு - 1926 (2) 346 பொய்ச்‌ சமாதானம்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ மண்ணடியில்‌ ஸ்ரீமான்‌ முதலியாரைப்‌ பற்றி ஒன்றும்‌ பேசவில்லை, ஒன்றும்‌ பேசவில்லை என்று அய்யங்கார்‌ பத்திரிகைகளும்‌ அவரிடம்‌ கூலி வாங்கும்‌ பத்திரிகைகளும்‌ விளம்பரப்‌ படுத்திய வண்ணமாகவே இருக்கின்றன. அய்யங்கார்‌ சொன்னதாக வைத்துக்‌ கொண்டாலும்‌ யாருக்கும்‌ ஒன்றும்‌ முழுகிப்‌ போகவில்லை. தொழிலாளிகளை ஏமாற்றும்‌ விஷயத்தில்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காருக்கு ஸ்ரீமான்‌ கலியாணசுந்திர முதலியார்‌ தயவு வேண்டி வந்து விட்டதால்‌ கூலி கொடுத்து மறுக்கிறார்‌. ஆனால்‌ நன்னிலத்தில்‌ ஸ்ரீமான்‌ நாயுடுகாரை தென்னாட்டுத்‌ திலகரும்‌ மாறி விட்டார்‌, முதலியார்‌ மாரீசனாய்‌ விட்டார்‌, ஆரியாவும்‌ நாயக்கரும்‌ வெளிப்‌ படையாய்‌ காங்கிரசுக்கு விரோதமாய்ப்‌ போய்‌ விட்டார்கள்‌; இவர்களை காங்கிரசை விட்டு வெளியாக்கி காங்கிரசை சுத்தப்படுத்தும்‌ வேலையையே இவ்வருஷம்‌ செய்யப்போகிறேன்‌ என்று சொன்னதோடு கூட்டத்தில்‌ இருந்த ஒருவர்‌ முதலியார்‌ கூடவா மாறி விட்டார்‌ என்று கேட்டதற்கு ஏழு கிணத்து வீதியில்‌ போய்‌ கேட்டால்‌ தெரியு மென்று சொன்னாரே; இதுகள்‌ அப்போதே பல பத்திரிகைகள்‌ இருந்ததே அதுகளை ஏன்‌ மறுக்கவில்லை? அல்லாமலும்‌ அப்போது தான்‌, டாக்டர்‌ நாயுடுவைப்‌ பற்றி பேசவில்லை மற்றவர்களைப்‌ பற்றித்தான்‌ பேசினேன்‌ என்று சொன்னதோடு, டாக்டர்‌ நாயுடுவுக்கும்‌ கடிதம்‌ கூட எழுதினார்‌. இவை கள்‌ உண்மையா இல்லையா? அப்படியிருக்க இப்போது முதலியாரைப்‌ பற்றி ஒன்றும்‌ பேசவில்லை என்பதை இவ்வளவு விளம்பரப்‌ படுத்த வேண்டிய அவசியமென்ன? முதலியார்‌ வசமிருக்கும்‌ வாயில்லாப்‌ பூச்சி களாகிய தொழி லாள சகோதரர்களை ஏமாற்றி அவர்களது ஓட்டுக்களை ஸ்ரீமான்‌ முதலியார்‌ மூலம்‌ பெறுவதற்கல்லாமல்‌ வேறு காரண மென்ன? ஓட்டுத்‌ தீர்ந்த மறுநாள்‌ ஸ்ரீமான்‌ முதலியாரும்‌ இன்னும்‌ அவரை விடபெரியவர்களும்‌ காங்கிரசை விட்டு ஒழிந்தாலல்லாமல்‌ ஸ்ரீமான்‌ அய்யங்‌ கார்‌ காரியம்‌ நடக்காது என்பது ஸ்ரீமான்‌ முதலியாருக்குத்‌ தெரியா விட்டா லும்‌ தெருவில்‌ போகிறவர்களுக்கெல்லாம்‌ தெரியும்‌. ஸ்ரீமான்‌ முதலியாரோ, நாயுடுகாரோ, நாயக்கரோ, ஆரியாவோ, சக்கரையோ இன்னும்‌ யார்‌ போய்‌ விட்டாலும்‌ அய்யங்காருக்கு எவ்விதக்‌ குறைவும்‌ வந்து விடாது என்பது நமக்கு நன்றாய்‌ தெரியும்‌. இவர்களுக்குப்‌ பதிலாக ஸ்ரீமான்கள்‌ பாவலர்‌, கந்தசாமி செட்டியார்‌, குப்புசாமி முதலியார்‌, அண்ணாமலைப்‌ பிள்ளை, இரத்தினசபாபதி முதலியார்‌,மாரிமுத்து பிள்ளை, ஷாபி மகம்மது, அமித்கான்‌, 347 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. குழந்தை, ஆதிகேசவ நாயக்கர்‌ முதலிய கனவான்கள்‌ இருக்‌ கிறார்கள்‌ என்பதும்‌ இவர்களும்‌ விலகி விட்டால்‌ இவர்களை விட இன்னும்‌ மேலான ஆயிரம்‌ பேர்கள்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காருக்குக்‌ கிடைப்‌ பார்கள்‌ என்பதும்‌, நமது உறுதியே ஒழிய முதலியார்‌ நின்று போனால்‌ அய்யங்கார்‌ கல்யாணம்‌ நின்றுவிடும்‌ என்று நாம்‌ நினைக்கவில்லை. பொது வாக நமது அய்யங்கார்‌, அய்யர்‌ முதலியவர்கள்‌ தங்கள்‌ ஆதிக்கத்திற்கு ஆள்‌ சேர்க்கும்‌ விதத்தையும்‌, அவர்களை ஒழிக்கும்‌ விதத்தையும்‌, அவர்‌ களுக்கு பதிலிகள்‌ நியமிக்கும்‌ விஷயத்தையும்‌ பொது ஜனங்கள்‌ உணர வேண்டுமென்றே குறிப்பிட்டோமே அல்லாமல்‌ வேறல்ல... குடி அரசு - கட்டுரை - 24.10.1926 குடி அரசு - 1926 (2) 348 சர்‌.சி.பி. Suiuniar விஸமம்‌ சென்னையில்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ பேரால்‌ நடைபெற்று வந்த காலித்‌ தனங்களும்‌ போலீசாரின்‌ அலக்ஷியமும்‌, சர்‌.சி.பி.ராமசாமி அய்யர்‌ அவர்கள்‌ இந்தியாவை விட்டு கப்பலேறியும்‌ அடங்கிக்‌ கிடந்தது. இப்போது அவர்‌. ஜினிவாவிலிருந்து இந்தியாவுக்கு வர கப்பலில்‌ காலடி வைத்த உடன்‌ பழைய படி ஆரம்பமாய்‌ விட்டது. காலிகள்‌ கூட்டங்களில்‌ கல்லெறியவும்‌, மோட்டார்‌. டயர்களைக்‌ கிழிக்கவும்‌, பலவந்தமாய்த்‌ தாக்கவும்‌ ஆரம்பித்து விட்டார்கள்‌. அவர்‌ சென்னைக்கு வந்து சேர்ந்ததும்‌ காலித்தனங்களும்‌, போலீசைப்‌ பற்றி பயமற்ற தன்மையும்‌ கடைத்தெரு விலும்‌ மூர்‌ மார்க்கட்டிலும்‌ விற்க ஆரம்பமாய்‌ விட்டது. இது எங்குபோய்‌ நிற்குமோ தெரியவில்லை.“முள்‌ வாழையின்‌ மேல்‌ பட்டாலும்‌ வாழைக்‌ குத்தான்‌ கேடு, வாழை முள்ளின்‌ மேல்‌ பட்டாலும்‌ வாழைக்குத்தான்‌ கேடு” என்பது போல்‌ காலித்தனம்‌ நடந்தாலும்‌ பார்ப்பனரல்லாதாருக்குத்‌ தான்‌ உபத்திரவம்‌. அதை அடக்கப்‌ பிரயத்தனப்‌ பட்டாலும்‌ பார்ப்பனரல்லா தாருக்குத்தான்‌ உபத்திரவம்‌ என்கிற நிலையில்‌ நமது பார்ப்பனர்கள்‌ நம்மை வைத்துக்‌ கொண்டு தங்கள்‌ சூழ்ச்சி ரதத்தை ஓட்டுகிறார்கள்‌. குடி அரசு - சிறு குறிப்பு - 24.10.4926 349 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ககூறிகள்‌ தயவு செய்து ஊன்றிப்‌ பழயுாங்கள்‌, உங்கள்‌ நண்பர்கனையும்‌ பழக்கச்‌ ஊால்னுங்கன்‌. அடுத்த வாரம்‌ நடைபெறப்போகும்‌ சட்டசபைத்‌ தேர்தலில்‌ பெரும்‌ பாகம்‌ இரண்டு க௯ஷிகளின்‌ பெயர்களே அடிபடுகின்றன. அவற்றின்‌ பெயர்‌. களுள்‌ ஒன்று ஜஸ்டிஸ்‌ க௯ஷி, மற்றொன்று சுயராஜ்யக்‌ கட்சி. இவை தவிர. சுயேச்சைக்காரர்‌ என்று சிலர்‌ சொல்லிக்‌ கொள்வதும்‌ உண்டு. சுயேச்சைக்‌ கக்ஷி ஆனால்‌ அச்சுயேச்சைக்காரர்களுக்கு மெய்யாகவாவது, பொய்‌ யாக வாவது, வேஷத்திற்காவது ஒரு ஸ்தா்பனமோ கொள்கையோ இல்லாமலும்‌ சுயேச்சை என்றால்‌ சட்டசபையில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தன்னிஷ்டம்‌. போல்‌ தான்‌ நடந்து கொள்வதைத்‌ தவிர வேறு எவ்வித இயக்கத்திற்கும்‌ கொள்கைக்கும்‌ கட்டுப்பட்டவர்கள்‌ அல்ல என்பதே அதன்‌ கருத்து. அல்லா மலும்‌, அவர்களில்‌ (சுயேச்சைக்காரர்‌ என்பவர்களில்‌) ஒருவருக்கொருவர்‌. கட்டுப்‌ பட்டவர்கள்‌ அல்ல என்பதும்‌, குறைந்தது இரண்டு பேராவது சேர்ந்து ஒரு அபிப்பிராயம்‌ கொண்டவர்கள்‌ என்று சொல்லுவதற்கும்‌ போது மான ஒற்றுமை இல்லாதவர்கள்‌. அப்பெயர்‌ கொண்டவர்கள்‌ பெரும்பாலும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி, சுயராஜ்யக்‌ கட்சி என்கிற இரண்டு கட்சிக்கும்‌ நல்ல பிள்ளை களாக நடக்க வேண்டுமென்கிற எண்ணமும்‌ தேசத்தில்‌ எந்தக்‌ கக்ஷிக்கு செல்வாக்கு இருக்கிறது என்ற உறுதி இல்லாமையும்‌ இது சமயம்‌ எந்தக்‌ கட்சியின்‌ பெயராவது சொல்லிக்‌ கொண்டால்‌ தங்களுக்கு ஒருசமயம்‌ ஓட்டுக்‌ கிடைக்காமல்‌ போகுமோ என்கிற பயமுள்ளவர்களேயாவார்கள்‌. ஆதலால்‌ இப்படிப்பட்ட இவர்கள்‌ ஒரு சமயம்‌ வெற்றி பெற்றால்‌ அநேக மாய்ப்‌ பார்ப்பனர்கள்‌ எல்லாம்‌ பார்ப்பனக்‌ கட்சியான சுயராஜ்யக்‌ கட்சியி லாவது அல்லது அக்கட்சிக்‌ கொள்கைக்கு அநுகூலமாகவாவது இருப்பார்‌. களேயொழிய எந்த விதத்திலும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு அநுகூலமாக இருக்க மாட்டார்கள்‌. அதிலுள்ள பார்ப்பனரல்லாதாரும்‌ அது போலவே ஒரு சமயம்‌ வெற்றிபெற்றால்‌ உத்தியோகம்‌ பதவி முதலிய விஷயங்களில்‌ ஜஸ்டிஸ்‌: கட்சியாருடன்‌ பிணங்கிக்‌ கொண்டவர்கள்‌ தவிர மற்றபடி உள்ள பார்ப்பன குடி அரசு - 1926 (2) 350 ரல்லாதார்‌ அநேகமாய்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேருவதோ அல்லது ஜஸ்டிஸ்‌ கட்சிக்‌ கொள்கைக்கு அநுகூலமாயிருப்பதோ ஆகிய இம்மாதிரிதான்‌ இருக்கக்‌ கூடும்‌. நிரம்பவும்‌ ஜாக்கிரதையான சுயேட்சைக்‌ கட்சியார்‌ என்போர்‌. ஜெயித்த உடன்‌ எந்தக்‌ கட்சி வெற்றி பெறுமோ அதில்‌ சேர்ந்து விடுவார்கள்‌. ஆதலால்‌ சுயேச்சைக்‌ கட்சி என்பதைப்பற்றி இதுசமயம்‌ நாம்‌ விவரிக்கத்‌ தேவையில்லை. மற்றக்‌ ககஷிகளும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி, சுயராஜ்யக்‌ கட்சி என்கிற இரு கட்சிகளைப்‌ பற்றியோ வென்றால்‌ இவ்விரண்டும்‌ தேசத்தின்‌ உண்மையான சுயராஜ்யத்திற்கு அடிப்ப டையான கொள்கையை உடையவையல்ல. உண்மையான சுயராஜ்‌ யத்திற்கு அடிப்படையான கொள்கைகள்‌ உள்ள மகாத்மாவின்‌ ஒத்துழை யாக்‌ காங்கிரஸ்‌ திட்டத்திற்கு இவ்விரண்டு கக்ஷிகளுமே விரோதமா யிருந்தன. ஆனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியானது அக்கொள்கைகளிலும்‌ திட்டத்‌ திலும்‌ நம்பிக்கை இல்லாமல்‌ காங்கிரசுக்கு வெளியில்‌ இருந்து கொண்டு அதற்கு விரோதம்‌ செய்து கொண்டிருந்தது. சுயராஜ்யக்‌ கட்சியார்‌ என்பாரோ அப்படிச்‌ செய்யத்‌ தக்க தைரியமில்லாததால்‌ காங்கிரசுக்குள்‌ புகுந்து கூடஇருந்தே காங்கிரசின்‌ குடியைக்‌ கெடுப்பதுபோல்‌ காங்கிரசின்‌ கொள்கைகளைக்‌ கெடுத்து அதன்‌ யோக்கியத்தையும்‌ அழித்து அதை வெட்டிப்‌ புதைக்க வேண்டிய நிலைமையில்‌ கொண்டுவந்து விட்டு விட்டார்‌ கள்‌. இதன்‌ பலனால்‌ உண்மை சுயராஜ்யத்‌ திட்டம்‌ என்பது இரண்டு கட்சியிலும்‌ இல்லை, இவ்விரண்டு கட்சியும்‌ உண்மை சுயராஜ்யத்திற்கு விரோதமாகவே இருக்கின்றன. அல்லாமலும்‌ அரசியல்‌ சம்பந்தப்பட்ட வரையிலும்‌ கூட இரண்டு கட்சியில்‌ எதையும்‌ நாம்‌ நம்பவோ ஒப்புக்‌ கொள்ளவோ முடியாத நிலைமையில்‌ இருக்கிறோம்‌. மற்றபடி மதம்‌, சமூகம்‌, சமுதாயம்‌, சமத்துவம்‌ ஆகிய விஷயங்களில்‌ மாத்திரம்‌ ஒரு கட்சி உரிமை பெறவும்‌, மற்றொரு கட்சி மறுக்கவுமாக இரண்டு கட்சியும்‌ தீவிர கவலை கொண்டு உழைத்து வந்து இருக்கின்றன. அதாவது சுயராஜ்யக்‌ கட்சி என்னும்‌ பார்ப்பனக்‌ கட்சியின்‌ கவலையெல்லாம்‌ மத விஷயத்திலாவது, சமுதாய விஷயத்திலாவது, சமத்துவ உரிமை மற்ற சமூகத்‌ தாரும்‌ அடை யாமலிருக்க வேண்டுமென்று மறுப்பதோடு அதற்கென்றே காங்கிரசின்‌ பெயரையும்‌ உபயோகப்படுத்தி வருகிறது. மற்றொரு கட்சியானது மேற்‌ கண்ட மத, சமுதாய, சமத்துவ உரிமையையே அடிப்படையாய்க்‌ கொண்டு அதை எவ்வழியிலாவது பெறுவதற்கென்று ஜஸ்டிஸ்‌ கட்சி என்ற ஒரு கட்சியை நிருமாணித்துக்‌ கொண்டிருக்கிறது. ஆனால்‌ இவ்விரு கட்சி களும்‌ பொது ஜனங்களின்‌ செல்வாக்கைப்‌ பெறவும்‌ ஒரு கட்சி மற்றொரு கட்சிக்குப்‌ பொது ஜனங்களிடம்‌ செல்வாக்கில்லாமல்‌ செய்யவும்‌ கருதியே தங்கள்‌ தங்கள்‌ கட்சிகளின்‌ அடிப்படைத்‌ தத்துவம்‌ “சுயராஜ்யம்‌” பெறுவது என்று சொல்லிப்‌ பொது மக்களை ஏய்க்கின்றன. பொதுவாய்‌ நோக்குமிடத்து இரண்டு கட்சிகளும்‌ 38 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஒவ்வொரு கருத்தில்‌ சுயராஜ்யத்திற்கு விரோதமான தத்துவமுள்ள கட்சிகள்‌ என்றே சொல்ல வேண்டும்‌. “சுயராஜ்யம்‌” என்பது வந்து விட்டால்‌ இரண்டு கட்சிக்கும்‌ ஒவ்வொரு வழியில்‌ ஆபத்தாகவே இருக்கும்‌. சுயராஜ்யக்‌ க்ஷி எப்படியெனில்‌ மகாத்மா கோரும்‌ சுயராஜ்யம்‌ அடைவதோ அதற்குத்‌ தகுதி ஆவதோ நமது பார்ப்பனர்களான சுயராஜ்யக்‌ கட்சியார்‌ ஒரு போதும்‌ சம்மதிக்க முடியாது. ஏனெனில்‌ மகாத்மாவின்‌ சுயராஜ்யத்தில்‌ ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. ஆங்கிலப்‌ படிப்பு ஆதிக்கத்‌ திலிருக்காது. தற்கால மாதிரி யான கோர்ட்டுகள்‌ இரா. இம்மாதிரியான கோர்ட்டுகளுக்கு சதா வேலையிருக்கும்படியான மதுபானம்‌ ஒழிந்து, கட்சி பிரதி கட்சிகள்‌: விவகாரங்கள்‌ முதலியவைகளும்‌ உண்டாக இடமிருக்காது.கதர்‌ திட்டங்கள்‌ ஈடேறினால்‌, நமது தேசத்து செல்வத்தை கொள்ளை கொண்டு போகத்தக்க அரசாங்கம்‌ நமது நாட்டில்‌ வலுப்பெற்றிருக்க முடியாது. இவைகளெல்லாம்‌ ஒழிந்து போகுமானால்‌ வெள்ளைக்காரர்கள்‌ ஒரு சமயம்‌ நமது நாட்டில்‌ இருக்க முடிந்தாலும்‌ முடியுமே அல்லாமல்‌ கண்டிப்பாய்‌ நமது நாட்டில்‌ பார்ப்பனர்கள்‌ வாழவே முடியாது. தீண்டாமை எதனாலென்றால்‌, ஜாதி உயர்வு தாழ்வு ஒழிவதால்‌ பார்ப்பனர்களுக்கு சமூக விஷயத்தில்‌ எவ்வித ஆதிக்கமும்‌ யோக்கியதையும்‌ இல்லாததோடு நமது நாட்டில்‌ தற்காலமுள்ள தெருப்‌ பிச்சைக்காரர்களுக்கும்‌, நாடோடிப்‌ பிச்சைக்‌ காரர்களுக்கும்‌ உள்ள மரியாதைதான்‌ இருக்க முடியும்‌. ஆதலால்‌ ஜாதி உயர்வு தாழ்வை ஒழிக்கப்‌ பார்ப்பனக்‌ காங்கிரசும்‌ பார்ப்பன சுயராஜ்யக்‌ கட்சியும்‌ சம்மதிக்க மாட்டா. ஆங்கிலப்‌ படிப்பு ஆங்கிலப்‌ படிப்பு ஒழிந்தால்‌ பார்ப்பனர்களுக்கு உத்தியோக வாழ்க்கை கொஞ்சமும்‌ கிடையாது. அந்தப்படி பார்ப்பனர்களுக்கு அநுகூல மானதெனக்‌ கருதியே “காங்கிரஸ்‌” மூலமாகவே வளர்த்து வரப்படுகிறது. எனவே, ஆங்கிலம்‌ ஒழிந்த அன்றே பார்ப்பன உத்தியோக ஆதிக்கமும்‌ ஒழிந்து போவதோடு தூது செல்வதல்லாமல்‌ மற்றெவ்வித உத்தியோகத்‌ திற்கும்‌ அவர்கள்‌ அருகர்களாக மாட்டார்கள்‌.ஆதலால்‌, ஆங்கிலப்‌ பள்ளிக்‌ கூடத்தை ஒழிக்கவும்‌, பார்ப்பனக்‌ காங்கிரஸ்‌, பார்ப்பன சுயராஜ்யக்‌ கக்ஷி ஒருநாளும்‌ சம்மதிக்காது. தற்கால கோர்ட்டுகள்‌ கோர்ட்டுகள்‌ ஒழிந்தால்‌ பார்ப்பன அதிகாரத்திற்கும்‌ ஆதிக்கத்திற்கும்‌ குடி அரசு - 1926 (2) 352 போக போக்கியத்திற்கும்‌ எவ்வளவு ஆபத்து ஏற்படும்‌ என்பதை நாம்‌ சொல்ல வேண்டியதே இல்லை. படித்தவர்களான பார்ப்பன உத்தியோகஸ்‌ தர்களும்‌ பார்ப்பன வக்கீல்களும்‌ பிழைப்பதற்காக கோர்ட்டுகளேயொழிய பொதுமக்களுக்கு நியாயம்‌ வழங்கவோ விவகாரத்தை ஒழிக்கவோ ஏற்பட்ட தல்ல என்பதை நாம்‌ சொல்லத்‌ தேவையில்லை. ஆதலால்‌ கோர்ட்டுகள்‌ ஒழியும்‌ படியான சுயராஜ்யம்‌ வர ஒரு கஷணம்கூட நமது பார்ப்பனக்‌ காங்கிர சும்‌ பார்ப்பன சுயராஜ்யக்‌ கட்சியும்‌ சம்மதிக்கவே சம்மதிக்காது. மதுவிலக்கு கோர்ட்டுகள்‌ இருந்தாலும்‌ அதற்கு சதா வேலை கொடுக்கத்தக்க மதுபானம்‌ ஒழிந்து விட்டால்‌ கலகங்கள்‌ ஏற்படுமா? ககஷிப்‌ பிரதி ககஷிகள்‌ ஏற்படுமா? மதுபானக்‌ கடை போர்டு பலகைகள்‌ ஒழிந்தால்‌ அந்த நிமிஷத்‌ திலேயே வக்கீல்‌ போர்டு பலகைகளும்‌ எடுபட்டுப்‌ போகும்‌ என்பதும்‌ உத்தி யோக அளவும்‌ குறைந்து விடும்‌ என்பதும்‌ உலகம்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்‌ டதுதான்‌. ஆதலால்‌ பார்ப்பனக்‌ காங்கிரசோ பார்ப்பன சுயராஜ்யக்‌ கடி யோ மதுவிலக்கைக்‌ கனவிலும்‌ ஒப்புக்‌ கொள்ளாது. கதர்‌ நமது நாட்டுச்‌ செல்வம்‌ கோடி கோடியாய்‌ வெளிநாட்டுக்குக்‌ கொள்ளை போய்‌, நமது ஏழை மக்களையும்‌ தொழிலின்றிப்‌ பட்டினி போட்டு வைப்பதற்‌ காதாரமான அந்நியத்‌ துணி, யந்திரத்‌ துணி முதலியவை ஒழியத்‌ தக்ககதர்த் திட்டம்‌ நிறைவேறினால்‌ கொள்ளை கொள்ளும்‌ அந்நிய அரசாங்‌ கத்தார்‌ ஆதிக்கம்‌ இங்கு நிலைபெறவே பெறாது. அந்நிய அரசாங்கம்‌ இல்லா விட்டால்‌ பார்ப்பன ஆதிக்கம்‌ நிலைத்திருக்க முடியவே முடியாது. ஆதலால்‌ கதர்‌ திட்டத்தையும்‌ பார்ப்பனக்‌ காங்கிரசோ பார்ப்பன சுயராஜ்யக்‌ கட்சியோ ஒப்புக்கொள்ள முடியவே முடியாது. ஜஸ்டிஸ்‌ கட்சி அதுபோலவே பார்ப்பனர்‌ கோரும்படியான சுயராஜ்யம்‌ ஏற்படு வதை பார்ப்பனரல்லாத மக்கள்‌ கட்சியாகிய ஜஸ்டிஸ்‌ கட்சி ஒரு நாளும்‌ சம்மதிக்காது. ஏனெனில்‌ பார்ப்பனர்‌ கோரும்‌ சுயராஜ்யமெல்லாம்‌ முன்‌ சொன்ன மகாத்மா சுயராஜ்யக்‌ கொள்கையை அடியோடு ஒழித்து விடுவதல்‌ லாமல்பார்ப்பனர்கள்‌ பிழைக்கத்‌ தகுந்த மாதிரி பல உத்தியோகங்களும்‌ பதவி களும்‌ சம்பாதிப்பதுடன்‌ பார்ப்பனர்‌ ஆதிக்கம்‌ நிலைத்திருத்தத்தக்க திட்டங்‌ களையே வைத்துக்‌ கொண்டிருப்பதும்‌ அல்லாமல்‌ பார்ப்பனரல்லா தார்‌. விடுதலைக்கும்‌ சுயமரியாதைக்கும்‌ விரோதமாக முட்டுக்கட்டை போடுவ தையே கொள்கையாகவும்‌ வைத்திருப்பதால்‌ பார்ப்பனரல்லாத மக்கள்‌ கட்சியாகிய ஜஸ்டிஸ்‌ கட்சி இதை ஒருநாளும்‌ அனுமதிக்காது என்று சொன்னோம்‌. ஆனாலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி ஏற்பட்டதின்‌ பின்னால்‌ 353 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பார்ப்பனரல்லாதார்‌ சமூகங்களுக்கு சமத்துவம்‌ சுயமரியாதை என்கிற துறைகளில்‌ எவ்வளவோ முன்னேற்றம்‌ ஏற்பட்டிருப்பதை பிரத்தியக்ஷத்தில்‌ பார்க்கலாம்‌.. ஜஸ்டிஸ்‌ கட்சியால்‌ ஏற்பட்ட பலன்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி என்று ஒரு கட்சி ஏற்பட்டிராவிடில்‌ ஹைகோர்ட்‌ ஜட்ஜுகளில்‌ இன்றைய தினம்‌ ஐந்து ஜட்ஜுகள்‌ அதாவது ஸ்ரீமான்கள்‌ கனம்‌ கி. கிருஷ்ணன்‌ “தீண்டாத வகுப்பைச்‌ சேர்ந்தவர்‌,” தேவதாஸ்‌ கிறிஸ்த வர்‌, வெங்கிடுசுப்பராவ்‌ ஆந்திர தேசத்து கோமட்லு செட்டியார்‌ வகுப்பைச்‌ சேர்ந்தவர்‌, மாதவன்‌ நாயர்‌ மலையாள நாயர்‌ வகுப்பு, சுந்தரம்‌ செட்டியார்‌ தமிழ்நாடு கோமட்லு வகுப்பு ஆகிய ஐந்து பார்ப்பனரல்லாத கனவான்கள்‌ ஹைக்கோர்ட்‌ ஜட்ஜுகளாக முடியுமா? ஐஸ்டிஸ்‌ கட்சி இல்லாத காலத்தில்‌ ஸ்ரீமான்‌ சங்கரன்‌ நாயர்‌ அவர்களை அவரது சாமர்த்தியத்தை மெச்சி சர்க்காரர்‌ ஹைகோர்ட்‌ ஜட்ஜு பதவிக்கு சிபார்சு செய்த காலத்தில்‌ நமது பார்ப்பனர்கள்‌ ஒன்று கூடி சூத்திரனுக்கு ஹைகோர்ட்‌ ஜட்ஜு பதவி கொடுத்து விட்டால்‌ தாங்கள்‌ அவரை “பிரபுவே” என்று கூப்பிடவேண்டி இருக்கு மென்றும்‌, அந்த ஜட்ஜு அதிகாரத்தால்‌ பல பார்ப்பனரல்லாதாரை முனிச்ீப்பு களாக்கி விடுவார்கள்‌ என்றும்‌, பிறகு அந்த முனிசீப்புகளைத்‌ தாங்கள்‌ *எஜமானே', “சமூகமே” என்று கூப்பிட வேண்டி வருமே என்றும்‌, இவர்கள்‌ செல்வாக்கால்‌ பல பார்ப்பனரல்லாத வக்கீல்கள்‌ தோன்றி தங்கள்‌ தொழிலுக்‌ குப்‌ போட்டி போட வந்து விடுவார்கள்‌ என்றும்‌ கருதி காலஞ்‌ சென்ற கன வான்களாகியபாஷ்யம்‌ ஐயங்கார்‌, கஸ்தூரி ரங்கய்யங்கார்‌ முதலிய பார்ப்பனர்‌ கள்‌ கவர்னரை நேரில்‌ பார்த்தும்‌, சீமைக்குத்‌ தந்தி கொடுத்தும்‌, சர்‌.சங்கர: நாயருக்குக்‌ கிடைக்க வேண்டிய உத்தியோகத்தை வெகு காலம்‌ தடைப்‌ படுத்தி வைத்திருந்தமை உலகமறிந்த இரகசியம்‌. நமக்கு இந்த இரகசியத்தை ஒரு பார்ப்பனக்‌ காங்கிரஸ்‌ தலைவர்தான்‌ முதன்முதல்‌ சொன்னார்‌. வகுப்புவாரி உரிமை ஜஸ்டிஸ்‌ கட்சி இல்லாவிட்டால்‌ சென்னை அரசாங்க நிர்வாக சபையில்‌ மாதம்‌ 5000, 6000 ரூபாய்‌ சம்பளம்‌ வாங்கத்தக்க நிர்வாக சபையில்‌ மெம்பராக கனம்‌ அபீபுல்லா, கனம்‌ மகம்மது உஸ்மான்‌ ஆகிய இரண்டு மகம்மதியர்கள்‌ வரமுடியுமா? சென்னை சட்ட சபைக்கு மாதம்‌ 2000 ரூ. சம்பளம்‌ வாங்கத்தக்க ஒரு கிறிஸ்தவர்‌ தலைவராக வரமுடியுமா? ஸ்ரீமான்கள்‌ சுப்பராய ரெட்டியார்‌, ராமராய நிங்கார்‌, கேவி.ரெட்டி நாயுடு பாத்ரோ, சிவஞானம்‌ பிள்ளை முதலிய பார்ப்பனரல்லாதார்கள்‌ மந்திரிகளாக வரமுடியுமா? ஸ்ரீமான்கள்‌ எம்‌.ஸி.ராஜா, மருதபிள்ளை, ஆர்‌.வீரய்யன்‌, குருசாமி முதலிய (பஞ்சமர்‌ என்று பார்ப்பனர்‌. களால்‌ சொல்லப்பட்ட) கனவான்கள்‌ சட்டசபை மெம்பராக வந்திருக்க குடி அரசு - 1926 (2) 354 முடியுமா? ஸ்ரீமான்கள்‌ சர்‌.ஆர்‌. வெங்கிட்டரத்தினம்‌, சி. ஆர்‌. ரெட்டி முதலியவர்கள்‌ மீ£2000 ரூ.சம்பளம்‌ வாங்கத்‌ தகுந்த கல்வி இலாக்கா வைஸ்‌ சான்சலராக வந்திருக்க முடியுமா? ஸ்ரீமான்‌ ஜே. வெங்கிட்ட நாராயண நாயுடு கார்ப்பரேஷன்‌ கமிஷனராக வந்திருக்க முடியுமா? ஜஸ்டிஸ்‌ கட்சியே இல்லாதிருக்கும்‌ பட்சத்தில்‌ நமது பார்ப்பனர்கள்‌ ட நாயுடுகாரை உத்தி யோகத்தில்‌ வைத்திருப்பார்களா? ஸ்ரீமான்‌ சண்முகம்‌ செட்டியார்‌ ஏகாதிபத்‌ திய பார்லிமெண்டு மகாநாட்டுக்கு ஆஸ்திரேலியாவுக்குப்‌ போயிருக்க முடியுமா? சர்க்கார்‌ உத்தியோ. இப்பொழுது அரசாங்க உத்தியோகத்தில்‌ இருக்கும்‌ இவ்வளவு எண்ணிக்கை உள்ள பார்ப்பனரல்லாத கலெக்டர்கள்‌, ஜட்ஜுகள்‌, சப்‌ ஜட்ஜு கள்‌, முனிசீப்புகள்‌, டிப்டி கலெக்டர்கள்‌, தாசில்தார்கள்‌, மேஜிஸ்திரேட்டுகள்‌, சூப்பிரண்டுகள்‌, டெப்டி சூப்பிரண்டுகள்‌, சர்க்கிள்‌ இன்ஸ்பெக்டர்கள்‌, சப்‌ இன்ஸ்பெக்டர்கள்‌, உயர்பதவி இஞ்சினீர்கள்‌, டாக்டர்கள்‌ ஆகிய அதிகார மும்‌ செல்வாக்குமுள்ள உத்தியோகங்கள்‌ பார்ப்பனரல்லாதாருக்குக்‌ கிடைத்திருக்குமா? ஸ்தல ஸ்தாபனம்‌ இன்னமும்‌ ஜில்லா போர்டு தாலூக்காபோர்டு மெம்பர்கள்‌, பிரசி டெண்டுகள்‌, முனிசிபல்‌ சேர்மென்கள்‌, கவுன்சிலர்கள்‌, பெஞ்சி மேஜிஸ்‌ திரேட்டுகள்‌, யூனியன்‌ சேர்மென்கள்‌, பிரசிடெண்டுகள்‌ ஆகியவர்கள்‌ இவ்வளவு பார்ப்பனரல்லாதார்கள்‌ வந்திருக்க முடியுமா? ஜஸ்டிஸ்‌ கட்சியே இல்லாதிருக்குமானால்‌.. அரசியல்‌ தலைவர்கள்‌ அரசியல்‌ சங்கங்களிலாவது ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்திர முதலியார்‌, தண்டபாணி பிள்ளை, சிங்காரவேலு செட்டியார்‌, பாவலர்‌, குப்புசாமி முதலியார்‌, அண்ணாமலை பிள்ளை, வெங்கிடு கிருஷ்‌ ணபிள்ளை, ராமசாமி நாயக்கர்‌, சக்கரை செட்டியார்‌, மயிலை ரத்தினசபாபதி முதலியார்‌, முனுசாமி கவுண்டர்‌, அமீத்கான்‌ சாயபு, ஷாபி மகம்மது சாயபு, மாரிமுத்து பிள்ளை முதலிய எத்தனையோ கனவான்கள்‌ தலைவர்களாகவும்‌ தொண்டர்களாகவும்‌ வந்திருக்க முடியுமா? முடியுமென்று சொல்லுவார்‌ களானால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி இல்லாதபோது ஐந்தைந்து வருஷம்‌ ஜெயிலுக்குப்‌ போன உண்மையான தேசபக்தர்களான ஸ்ரீமான்‌ வ.உ.சிதம்பரம்பிள்ளை முதலிய கனவான்கள்‌ உண்மையான தேசத்‌ துரோகிகளான பல பார்ப்பனர்‌: கள்‌ மூட்டை தூக்கியும்‌, அவர்களை “சுவாமிகளே” என்று கூப்பிட்டுக்‌ கொண்டும்‌. அவர்கள்‌ வாலைப்‌ பிடித்து திரிந்தால்‌ மாத்திரம்‌ வாழும்‌ படியான 385 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. நிலைமையில்‌ இருக்கவில்லையா? அவர்களைவிடவா இந்தக்‌ கனவான்கள்‌. அதிகமான தேசபக்தி, தியாகம்‌, கஷ்டம்‌, சிறைவாசம்‌ முதலியவைகள்‌. உடைத்தானவர்கள்‌. ஒத்துழையா மனப்பான்மை ஆனால்‌ இதுகளினால்‌ மக்களுக்கு என்ன லாபம்‌? தேசத்திற்கு என்ன லாபம்‌? என்று சிலர்‌ கேட்கலாம்‌. இந்தக்‌ கேள்வி ஒத்துழையா மனப்பான்மை கொண்டவர்கள்‌ கேட்கத்தக்கதுதான்‌. ஆனால்‌ நாம்‌ இவைகளை அவர்களுக்‌ குச்‌ சொல்லவில்லை. இந்த ஸ்தானங்களுக்கும்‌ உத்தியோகத்திற்கும்‌ மதிப்பு கொடுக்கும்‌ பார்ப்பனரல்லாத மக்களுக்கே சொல்லுகிறோம்‌. ஒத்துழையாதா ருக்கும்‌ ஒன்று சொல்லுகிறோம்‌. ஜஸ்டிஸ்‌ கட்சி இல்லாதிருந்தால்‌ இந்தப்‌ பதவியும்‌ அதிகாரமும்‌ ஆயிரக்கணக்கான சம்பளமும்‌ பார்ப்பனருக்குப்‌ போயிருக்குமா? பார்ப்பனரல்லாதார்களுக்குக்‌ கிடைத்திருக்குமா? 10 வருஷ காலமாய்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி ஏற்பட்டு எவ்வளவு கஷ்டம்‌, நஷ்டம்‌, சூழ்ச்சியும்‌, விபூஷணாழ்வார்கள்‌ துரோகமும்‌,கோடாரிக்‌ காம்புகள்‌ கொடுமையும்‌ ஆகிய முதலியவை மலிந்து அதன்‌ கடமையைச்‌ செய்ய விடாது தடுத்தும்‌ இதுவரை: அதனால்‌ ஏற்பட்டிருக்கும்‌ நன்மைகள்‌ இவைகளானால்‌ இக்கொடுமைகளும்‌ சூழ்ச்சிகளும்‌ இல்லாதிருந்தால்‌ எவ்வளவு நன்மைகள்‌ உண்டாகி இருக்கும்‌? எல்லாவற்றிற்கும்‌ மேற்பட்ட தன்மை நன்மையோ தீமையோ எது எப்படியிருந்தாலும்‌ இந்து மத பரிபாலன மசோதா என்னும்‌ தேவஸ்தான உரிமை மசோதாவும்‌, மலை யாளக்‌ குடிவார மசோதா என்னும்‌ மலையாளப்‌ பெண்கள்‌ கற்பைக்‌ காக்கும்‌ மசோதாவும்‌ நிறைவேற்றப்பட்டதானது தமிழ்‌ மக்கள்‌ லக்ஷக்கணக்கான பேர்‌ பிராணனைக்‌ கொடுத்தாலும்‌ கோடிக்‌ கணக்கான பொன்‌ திரவியத்தைக்‌ கொடுத்தாலும்‌ சாதிக்க முடியுமா? இதன்‌ அருமை இவ்விரண்டு தத்துவங்‌ களிலும்‌ பார்ப்பனர்கள்‌ இதுவரை செய்து வந்த அக்கிரமங்களை அறியத்‌ தகுந்த கவனிப்பாளர்களுக்குத்‌ தான்‌ தெரியுமே அல்லாமல்‌ மற்றவர்களுக்கு விளங்காது. ஆதலால்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியைப்‌ பற்றி நமது பார்ப்பனர்கள்‌ தூற்றுவதும்‌ ஆட்களை விட்டு திட்டச்‌ செய்வதும்‌ அக்கக்ஷியின்‌ உழைப்‌ பினால்‌ பார்ப்பனரல்லாதார்களுக்கு ஏற்படும்‌ நன்மைகளை ஒழிப்பதற்கும்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்கு பங்கமில்லாமல்‌ பார்த்துக்‌ கொள்வதற்காகவே இவ்வளவு பிரயத்தனங்களும்‌ சூழ்ச்சிகளும்‌ செய்கிறார்களேயொழிய வேறில்லை. இவற்றை நமது மக்கள்‌ அறியாமலும்‌, அறிந்தும்‌ பலர்‌: லட்சியமில்லாமலும்‌, லட்சியமிருந்‌ தாலும்‌ தங்கள்‌ சுயநலத்தைக்‌ கருதியும்‌ பார்ப்பனர்களுக்கு ஆளாயிருந்து இவ்வளவு முக்கிய மானதும்‌ அவசிய மானதுமான இயக்கத்திற்கு விரோதமாய்ப்‌ பார்ப்பனர்‌ செய்யும்‌ சூழ்ச்சி களுக்கு துணை நிற்கிறார்கள்‌. குடி அரசு - 1926 (2) 356 ஜஸ்டிஸ்‌ கக்ஷி அரசியல்‌ உரிமைக்கு விரோதமா? பலர்‌ இக்கட்சியை வெகு சுலபமாக அரசியல்‌ உரிமைக்கு விரோத மான கட்சி என்று சொல்லி பாமர மக்களை ஏமாற்றி விடுகிறார்கள்‌. அரசியல்‌ உரிமைக்கு எக்கட்சியாவது அநுகூலமாய்‌ உழைக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? அரசியல்‌ உரிமை என்றால்‌ என்ன? என்றாவது யாரா வது இதுவரை பாமர மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்களா? முதலாவது, சுய ராஜ்யம்‌ என்றாலாவது என்ன என்று எந்த தலைவர்களாவது தேசீயப்‌ பத்திரிகைகளாவது விளக்கியிருக்கின்றனவா? படித்தவர்கள்‌ உத்தியோக மும்‌, பதவியும்‌, பணமும்‌ சம்பாதிப்பதுதானே சுயராஜ்யமாகவோ அரசியல்‌ தந்திரமாகவோ விளங்கி வருகிறது. காங்கிரஸ்‌ காங்கிரஸ்‌ ஏற்பட்ட காலம்‌ முதல்‌ கொண்டு நாளது வரை (மகாத்மா காங்கிரசாகிய 2, 3 வருஷம்‌ காங்கிரஸ்‌ போக) காங்கிரசின்‌ மூலம்‌ மக்கள்‌ அடைந்த நன்மை என்ன? காங்கிரஸ்‌ ஏற்படுவதற்கு முன்னால்‌ இந்திய மக்கள்‌. அரசாங்கத்தாருக்குச்‌ செலுத்தி வந்த வரியைவிட இப்போது மூன்று பங்கு வரிகள்‌ அதிகமாய்ச்‌ செலுத்துகிறார்கள்‌. அதாவது காங்கிரசுக்கு முன்‌ அரசாங்கத்திற்கு மக்கள்‌ செலுத்திய வரி 50 கோடி ரூபாயைவிட குறைந்தது இப்போது காங்கிரசின்‌ பலனாகவும்‌ சீர்திருத்தங்களின்‌ பலனாகவும்‌ அரசாங்‌ கத்திற்கு மக்கள்‌ செலுத்த வேண்டி ஏற்பட்ட வரி 150 கோடி ரூபாயை விட அதிகமானது. காங்கிரசுக்கு முன்னால்‌ நமது மக்கள்‌ குடித்துக்‌ கொண்டிருந்த கள்ளு சாராயத்தை விட காங்கிரசும்‌ அதன்‌ பலனாய்‌ ஏற்பட்ட சீர்திருத்‌ த்திற்கு பின்னால்‌ ஒன்றுக்கு 10 பங்கு குடி அதிகமாகிவிட்டது. அதாவது காங்கிரசுக்கு முன்னால்‌ சர்க்காருக்கு கள்‌, சாராயம்‌ முதலிய விற்பனையில்‌ கிடைத்த ரூபாய்‌ 2 கோடி காங்கிரசுக்கும்‌ அதன்‌ பலனாய்‌ ஏற்பட்ட சீர்திருத்‌ தங்களுக்கும்‌ பின்னால்‌ சர்க்காருக்கு கள்‌, சாராயம்‌ முதலிய விற்பனையில்‌ கிடைக்கும்‌ ரூபாய்‌ 20 கோடி. காங்கிரசுக்கு முன்னால்‌ நமது நாட்டில்‌ ஏற்பட்டிருந்த கோர்ட்டுகளுக்கும்‌ உத்தியோகங்களுக்கும்‌, காங்கிரசுக்குப்‌ பின்னால்‌ ஏற்பட்ட உத்தியோகங்களுக்கும்‌ கணக்குப்‌ பார்த்தால்‌ ஒன்றுக்கு நான்கு ஐந்து ஆகி விட்டது. அதாவது, காங்கிரசுக்கு முன்‌ ஒரு ஜில்லாவுக்கு 2 முனிசீப்பு கோர்ட்டுகள்‌ இருந்திருந்தால்‌ காங்கிரசுக்கும்‌ சீர்திருத்‌ த்திற்கும்‌ பின்பு 810 முனிசீப்பு கோர்ட்டுகளாகி விட்டன. ஒரு ஜில்லா வுக்கு 2 உதவிக்‌ கலெக்டர்கள்‌ இருந்தால்‌ இப்போது 5, 6 உதவிக்‌ கலெக்டர்‌ களாக உயர்வு ஆகிவிட்டது. காங்கிரசுக்கு முன்பு இருந்த சம்பளத்தைவிட ஒன்றுக்கு இரண்டு மூன்று பங்கு வீதம்‌ உயர்ந்து விட்டது. காங்கிரசுக்கு முன்னால்‌ நமது நாட்டுத்‌ தொழிலாளிகளுக்கு இருந்த தொழில்களில்‌ 8 -6 ஒரு பங்கு கூட 387 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. காங்கிரசுக்குப்‌ பின்னால்‌ கிடையாது. காங்கிரசுக்கு முன்னால்‌ இருந்த செல்வமும்‌ செழிப்பும்‌ இப்போது மறைந்து போய்‌ காங்கிரசும்‌ சீர்திருத்தமும்‌ ஏற்பட்ட பிறகு தரித்திரமும்‌ பட்டினியும்‌ அதிகமாகி விட்டது. ஆனால்‌ காங்கிரசுக்கு முன்‌ விளைந்த விளை பொருள்களை விடவும்‌ அதன்‌ விலைகளை விடவும்‌ ஒன்றுக்கு மூன்றாய்‌ விளை பொருள்கள்‌ விளைந்தும்‌ தரித்திரமாகி விட்டது. காங்கிரசுக்கு முன்னால்‌ நமது பணம்‌ எவ்வளவு வெளிநாட்டுக்குப்‌ போய்க்‌ கொண்டிருந்ததோ அதைவிட பதின்மடங்கு காங்கிரசுக்குப்‌ பின்னால்‌ துணிக்கும்‌ மற்ற சாமான்‌ களுக்குமாக வெளிநாட்டுக்‌ குப்‌ போகிறது. தேசத்தில்‌ காங்கிரசுக்கு முன்‌ இருந்த ஒற்றுமை அடியோடு கலைந்துபோய்‌ இந்து, மகம்மதிய, கிறிஸ்தவ மத விரோதங்களும்‌, இந்துக்‌ களுக்குள்‌ பிராமணர்‌ - பிராமணரல்லாதார்‌ விரோதங்களும்‌, பிராமணர்களுக்‌ குள்‌ ஐயங்கார்‌ ஸ்மார்த்தர்‌ மாத்துவர்‌ என்கிற விரோதமும்‌, அய்யங்காரில்‌ வடகலை தென்கலை விரோதங்களும்‌, இதுபோலவே பார்ப்பனரல்லாதாருக்‌ குள்‌ ஆந்திர தேசத்தான்‌, தமிழ்நாட்‌ டான்‌, கேரளத்தான்‌ என்கிற பாகுபாடும்‌, தமிழ்நாட்டாருக்குள்‌ பிராமணரல்‌ லாதாரிலேயே திராவிடர்‌ - ஆதிதிராவிடர்‌. என்கிற வித்தியாசமும்‌ இன்ன மும்‌ எத்தனையோ பாகுபாடும்‌, அபிப்பிராய பேதமும்‌ வளர்ந்து விட்டன. காங்கிரசுக்கு முன்‌ தாய்‌ பிள்ளைகள்‌ பந்துக்கள்‌ போல பழகி வந்த ஒரு கிராமத்தார்‌ காங்கிரசும்‌ அதன்‌ பலனாய்‌ ஏற்பட்ட சீர்திருத்தத்தின்‌ மூலம்‌ உண்டான தேர்தல்‌ (எலக்ஷன்‌/களால்‌ கிராமங்களுக்‌ குள்‌ கட்சியும்‌, அண்ணன்‌ தம்பிகளுக்குள்‌ விரோதமும்‌, குடும்பங்களில்‌ கலகமும்‌ உண்டாயிருக்கின்றன. காங்கிரசுக்கு முன்னால்‌ அதிகாரிகளிடத்தி லும்‌ மக்களிடத்திலும்‌ இருந்த நாணயமும்‌ கண்ணியமும்‌ காங்கிரசுக்குப்‌ பின்னால்‌ அடியோடு மாறி ஹைகோர்ட்டு முதல்‌ கிராமாதிகாரி கோர்ட்டு வரை லஞ்சம்‌ வாங்குவதைப்‌ பற்றி அதிகாரிகள்‌ அருவருக்காமலும்‌ மக்கள்‌: கொடுப்பதற்கு பின்வாங்காமலும்‌ ஏற்பட்டுப்‌ போய்‌ விட்டது. காங்கிரசுக்கு முன்‌ இருந்த நீதிக்கும்‌ நிருவாகத்திற்கும்‌ காங்கிரசுக்குப்‌ பின்னால்‌ ஏற்பட்ட நீதிக்‌ கும்‌ நிருவாகத்திற்கும்‌ மலையும்‌ சமுத்திரமும்‌ போன்ற வித்தியாசமேற்‌ பட்டு விட்டது. பணக்காரனுக்கு எவ்வித தீர்ப்பு வேண்டுமானாலும்‌ கிடைக்கத்‌ தக்கதாகவும்‌ ஏழைகளுக்கு நீதி என்பதே குதிரைக்‌ கொம்பாக வும்‌ போய்‌ விட்டது. எந்த விதத்தில்‌ எந்த விதத்தில்‌ காங்கிரசினாலும்‌ அது பெற்றெடுத்த சீர்திருத்‌ தங்களி னாலும்‌ மக்கள்‌ அநுகூலமடைந்திருக்கிறார்கள்‌ என்று யாராவது சொல்ல முடியும்‌? அறியாமையின்‌ பலனாகவும்‌ மாயையின்‌ பலனாகவும்‌ நமக்குப்‌ பல நன்மைகள்‌ ஏற்பட்டிருப்பதாய்ச்‌ சொல்லும்‌ காரியங்கள்‌ எல்லாம்‌ தேசத்தின்‌ கெடுதிக்கும்‌ மக்களின்‌ தரித்திரத்திற்கும்‌ ஆதார மாயிருக்கிறதே அல்லாமல்‌ ஊன்றிப்‌ பார்த்தால்‌ கடுகளவு நன்மையும்‌ ஏற்பட்டதில்லை. குடி அரசு - 1926 (2) 358 உண்மையாய்‌ காங்கிரசினால்‌ ஏற்பட்ட லாபம்‌ என்னவென்றால்‌ காங்கிரசினால்‌ ஏற்பட்ட உண்மையான லாபம்‌ என்னவென்றால்‌ காங்கிரசுக்கு முன்பு பிச்சையெடுத்த பார்ப்பனனும்‌, தூது சென்ற பார்ப்பன னும்‌, பஞ்சாங்கம்‌ சொல்லி வயிறு வளர்த்த பார்ப்பனனும்‌ காங்கிரசின்‌ பலனாய்‌ வைசிராய்‌ நிருவாகசபை மெம்பர்‌, கவர்னர்‌ நிருவாகசபை மெம்பர்‌, கலெக்டர்‌, மாதம்‌ 10,000, 20,000 சம்பாதிக்கத்தக்க வக்கீல்கள்‌, ஜமீன்தார்கள்‌, திவான்‌ பகதூர்‌, சர்‌, மகா மகாகனம்‌ முதலிய பட்டங்கள்‌, பெரிய பெரிய பங்களாக்கள்‌, மோட்டார்‌ வண்டிகள்‌, செலூன்‌, முதல்‌ வகுப்பு இரண்டாவது வகுப்பு பிரயாணம்‌, அவரவர்கள்‌ பெண்டு பிள்ளைகள்‌ 1,000, 10,000 பெறத்தக்க வயிர ஓலை, அட்டிகை, காப்பு, வளையல்கள்‌ ,100, 200 பெரும்‌ படியான சேலைகள்‌, 30,40 பெறும்படியான ரவிக்கைகள்‌ அணிவது முதலியது களோடு, திருடினாலும்‌, குடித்தாலும்‌, சூதாடினாலும்‌, விபசாரத்திற்கு தரகு வாங்கினாலும்‌, விபசாரத்தால்‌ கால்‌ கை அழுகினாலும்‌ தங்களை பிராமணர்‌ கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்று சொல்லிக்கொள்ளுவதைப்‌ பலப்படுத்திக்‌ கொள்ளவுமான காரியங்களுக்கு உபயோகப்பட்ட தல்லாமல்‌, காங்கிரசுக்கு முன்னாலும்‌ ஆங்கிலேயர்‌ இந்நாட்டுக்கு வருவதற்கு முன்னாலும்‌ அரசர்களாகவும்‌, ஜமீன்தாரர்களாகவும்‌, பாளையக்காரர்களாக வும்‌, பாரம்பரியமாய்‌ பெருங்குடி மக்களாகவும்‌ வாழ்ந்து வந்தவர்கள்‌ காங்கிரசின்‌ பலனாய்‌ பிற்பட்ட வகுப்பார்களாகவும்‌, பங்கா இழுப்பவர்‌ களாகவும்‌, கூலிகளாகவும்‌, கூலி கூட கிடைக்காமல்‌ வெளி நாடுகளுக்கு வயிறு பிழைக்க பெண்டு பிள்ளைகளைக்‌ கூட்டிக்கொண்டு குடிபோகவுமான நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்‌. ஆதலால்‌ ஆதலால்‌ பார்ப்பனரல்லாத மக்களே காங்கிரஸ்‌ என்னும்‌ மாய வலை யில்‌ சிக்கி பார்ப்பனர்களால்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமூகம்‌ இதுவரை அழிந்த தும்‌ அழுத்தப்‌ பட்டதும்‌ போதாமல்‌ இனியும்‌ தாழ்ந்து பார்ப்பனர்களால்‌ மிதிபட்டு அழிந்து போகாமல்‌ தற்காத்துக்‌ கொள்ள வேண்டியது உங்கள்‌ ஒவ்வொருவருடையவும்‌ கடமையாகும்‌. இது வரை ஏமாந்து வந்திருப்‌ பதைக்‌ கொஞ்சமாவது கவனித்து பார்ப்பனரல்லாதார்‌ நிலைமை காங்கிர சுக்கு முன்‌ எப்படியிருந்தது காங்கிரசுக்குப்‌ பின்‌ எப்படியிருக்கிறது, நம்‌ நாட்டுப்‌ பார்ப்பனரின்‌ நிலைமை காங்கிரசுக்கு முன்‌ எப்படியிருந்தது காங்கிரசுக்குப்‌ 359 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பின்‌ எப்படியிருக்கிறது என்று பழம்பெரும்‌ அனுபவசாலி களைக்‌ கேளுங்‌ கள்‌. நானும்‌ தேசபக்தன்‌ என்று சொல்லும்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்‌ கத்துக்குட்டி களை நம்பி மோசம்‌ போகாதீர்கள்‌. டாக்டர்‌ நாயர்‌ பெருமான்‌ மகாத்மா காந்தி டாக்டர்‌ நாயர்‌ பெருமானைவிட நீங்கள்‌ பெரிய தேசபக்தர்கள்‌ என்றா வது அநுபவசாலிகள்‌ என்றாவது, மகாத்மா காந்தியைவிட பெரிய தியாகி கள்‌: என்றாவது காங்கிரஸ்‌ பக்தர்கள்‌ என்றாவது நினைத்துக்‌ கொள்ளாதீர்கள்‌. டாக்‌ டர்‌ நாயர்‌ ஏன்‌ காங்கிரஸ்‌ கட்சியை விட்டு விலகி பார்ப்பனரல்லாதார்‌ கட்சி ஏற்படுத்தினார்‌ என்பதை நன்றாக யோசித்துப்‌ பாருங்கள்‌. பணத்திற்கா, உத்தியோகத்திற்கா, பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதையைக்‌ காக்கவா என்பதை யோசியுங்கள்‌. மகாத்மா காந்தி ஏன்‌ காங்கிரஸ்‌ நிர்வாகத்திலிருந்து விலகி ராட்டினம்‌ சுற்றுகிறார்‌. அவரைவிட நீங்களும்‌ இந்தப்‌ பார்ப்பனர்‌ களும்‌ அதிக ராஜீய ஞானம்‌ உடையவர்களா? சட்டசபை மூலம்‌ அரசியல்‌ நன்மை ஏற்படுமானால்‌ மகாத்மா சும்மா இருப்பாரா என்பதை யோசியுங்‌ கள்‌. கண்டிப்பாய்‌ பார்ப்பனர்‌ சட்டசபைக்குப்‌ போவது பார்ப்பனரல்லாதார்‌. முன்னேற்றத்தைத்‌ தடுப்பதற்கே அல்லாமல்‌ வேறல்ல! வேறல்ல!! வேறல்ல வேயல்ல!!! பார்ப்பனரல்லாதார்‌ (ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌! சட்டசபைக்குப்‌ போவது பார்ப்பனரல்லாதார்‌ நன்மைக்கும்‌ முன்னேற்றத்திற்கும்‌ அவர்களது சுய மரியாதையைக்காக்கவுமே அல்லாமல்‌ சர்க்காருக்கு அநுகூலத்திற்காக அல்லவே அல்ல! அல்லவே அல்ல!! அல்லவே அல்ல!!! இது சத்தியம்‌. சர்க்காருக்கு உதவியாகவும்‌, ஒத்துழைப்பாளராகவும்‌, ஒற்றர்களாகவும்‌ இருப்பது பார்ப்பனர்களே தான்‌! பார்ப்பனர்களே தான்‌!! சத்தியமாய்‌ பார்ப்பனர்களேதான்‌!! முடிவுரை நாளது நவம்பர்‌ மீ£8 ௨ வரப்‌ போகும்‌ சட்டசபைத்‌ தேர்தல்களில்‌ ஓட்டுப்‌ போட இஷ்டமிருந்தால்‌ உங்கள்‌ மனதை உறுதிப்படுத்திக்‌ கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கே ஓட்டுப்‌ போடுவதென்று முடிவு செய்து கண்டிப்பாய்‌ பார்ப்பனருக்கோ அவரால்‌ நிறுத்தப்பட்டிருக்கும்‌ காங்கிரசு சுயராஜ்யக்‌ கட்சி என்று சொல்லும்‌ ஆட்களுக்கோ ஓட்டுப்‌ போடுவதில்லை என்று சத்தியம்‌ செய்துகொண்டு உங்கள்‌ இனத்தார்களையும்‌ நண்பர்‌ களையும்‌ இம்மாதிரி செய்யும்படி தூண்டி பார்ப்பனரல்லாத கட்சியாகிய சுயமரியாதைக்‌ கட்சிக்கு வெற்றி கொடுத்துப்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ சுயமரியாதையைக்‌ காக்க பிரார்த்திக்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 31.10.1926 குடி அரசு - 1926 (2) 360 யார்ப்பணரிண்‌ கணவ பலிக்காது வரப்போகும்‌ தேர்தலில்‌ பார்ப்பனர்களின்‌ வெற்றியும்‌ தோல்வியும்‌ ஸ்ரீமான்கள்‌ பனகால்‌ ராஜா, ஏ.ராமசாமி முதலியார்‌ ஆகிய இருவர்களின்‌ வெற்றியையும்‌ தோல்வியையும்‌ பொறுத்திருப்பதாகவே நமது பார்ப்பனர்‌ கள்‌ எல்லோரும்‌ ஒன்று சேர்ந்து கனவு கண்டு கொண்டு லக்ஷக்கணக்கான ரூபாய்களையும்‌ சர்வப்‌ பிரயத்தனத்தையும்‌ இதற்காகவே செலவழித்து வருவ தோடு பஞ்சதந்திரங்களையும்‌ செய்து வருகிறார்கள்‌. அல்லாமலும்‌, மற்ற இடங்களிலும்‌ தங்கள்‌ கட்சி ஆட்களே வெற்றி பெறுவதற்காக ஓட்டர்‌ களை: ஏமாற்றும்‌ பொருட்டு பனகால்‌ ராஜா தேர்தலில்‌ தோற்றுவிட்டா ரென்றும்‌, ஸ்ரீமான்‌ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌ வெற்றிபெற்றுவிட்டா ரென்றும்‌, மற்றும்‌ பல விடங்களில்‌ பார்ப்பனக்‌ கட்சியே வெற்றிபெறுமென்‌ றும்‌, ஆதலால்‌ அல்லாடி அவர்களே அடுத்த தடவைக்கு முதல்‌ மந்திரியாக நியமிக்கப்படப்‌ போகிறாரென்றும்‌ பொய்க்‌ கட்டுகள்‌ கட்டிவிட்டுப்‌ பஞ்சாங்‌ கப்‌ பார்ப்பனர்‌, காபி ஓட்டல்‌ பார்ப்பனர்‌, வக்கீல்‌ குமாஸ்தா பார்ப்பனர்‌, பரிசாரகப்‌ பார்ப்பனர்‌ முதல்‌ கொண்டு எல்லா பார்ப்பனர்களும்‌ திண்ணைப்‌ பிரசாரம்‌ செய்து வருகிறார்கள்‌. ஆனால்‌ இவ்வித திண்ணைப்‌ பிரசாரங்‌ களுக்கெல்லாம்‌ பார்ப்பனரல்லாத ஓட்டர்கள்‌ மாறிவிடுவார்கள்‌ என்று நினைப்பது கனவாகவே முடியும்‌. தற்காலம்‌ சென்னை மாகாணத்தைப்‌ பொறுத்தவரையில்‌ தேர்தல்‌ முடிவுகள்‌ சென்ற தேர்தலில்‌ அதாவது சென்ற மூன்று வருஷ காலமும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்கு எவ்வளவு பலமிருந்ததோ அதைவிட அதிக மாகவே குறிப்பிடத்தக்க பலமிருக்குமென்றே சொல்லத்தகுந்த மாதிரிக்கே. வெற்றி கிடைக்குமென்றே சொல்லலாம்‌. உதாரணமாக, ஆந்திர மாகாணத்தில்‌ எவ்வளவு குறைந்தாலும்‌ சென்ற வருஷத்தை விட சுமார்‌ 10 ஸ்தானங்‌ களுக்குக்‌ குறையாமலே ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு முன்னிலும்‌ அதிக மான நபர்கள்‌ வெற்றி பெறுவார்கள்‌ என்கிற உறுதி ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலும்‌ ஆந்திர நாட்டைப்‌ போல்‌ அவ்வளவு அதிகமான நபர்கள்‌ முன்னிலும்‌ அதிகமாய்‌ வெற்றிபெறுவது சந்தேகமேயானாலும்‌, குறைந்தது 3, 4 நபர்களாவது அதிகமாக வெற்றி பெறுவதில்‌ ஆக்ஷபணை யில்லை. உதாரணமாக, கோயமுத்தூர்‌ ஜில்லாவில்‌ சென்ற தேர்தலில்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு மூன்று மெம்பர்கள்‌ அநுகூலமாய்‌ வெற்றி பெற்றார்கள்‌. இவ்‌ வருஷமோ ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார்‌ ஒருவர்தான்‌ 361 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பார்ப்பனக்‌ கட்சியின்‌ சார்பாக நிற்கிறார்‌. அவருக்கு வெற்றி கிடைப்பது இப்போது பெரிய சந்தேகத்தில்‌ வந்துவிட்டது. மீதி இரு ஸ்தானங்களில்‌ வெற்றி பெறுகிறவர்களில்‌ ஒருவர்‌ கண்டிப்பாய்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியைச்‌ சேர்ந்‌ தவர்‌. மற்றவரும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி கொள்கையையே உடையவர்‌. எப்படியா னாலும்‌, சுயராஜ்யக்‌ கட்சி என்கிற பார்ப்பனக்‌ கட்சிக்கு 2 ஸ்தானம்‌ இழக்கப்‌ பட்டுப்‌ போய்விட்டது என்பதும்‌, ஒன்று கஷ்டத்தில்‌ இருக்கிறது என்பதும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி என்கிற பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்கு 2 ஸ்தானம்‌ கூடுதல்‌ என்பதும்‌ உறுதியாகி விட்டதென்றே சொல்லலாம்‌ . இதுபோலவே தஞ்சை ஜில்லாவிலும்‌ சென்ற தேர்தலில்‌ பார்ப்பனக்‌ கட்சிக்கே மூன்று ஸ்தானங்களும்‌ அநுகூலமாக வெற்றி பெற்றிருந்தன. இவ்வருஷம்‌ ஒரு ஸ்தானமாவது கிடைக்குமா வென்பதே சந்தேகமாயிருக்‌ கிறது. அந்த ஜில்லாவிலுள்ள மூன்று ஸ்தானங்களுக்கு பார்ப்பனக்‌ கட்சியின்‌ சார்பாய்‌ நிறுத்தப்பட்டிருந்த மூன்று கனவான்களுமே தங்களுக்குக்‌ கிடைப்பது சந்தேகம்‌ என்பதாய்‌ கருதி தனித்தனியாய்‌ கட்சியின்‌ பெயரை விட்டுவிட்டு பிரசாரம்‌ செய்ய ஆரம்பித்து விட்டார்கள்‌. ஸ்ரீமான்‌ முத்தையா முதலியாரவர்கள்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌, காங்கிரசைப்‌ பற்றியாவது சுயராஜ்யக்‌ கட்சியைப்‌ பற்றியாவது ஒரு வார்த்தைகூட குறிப்பிடவேயில்லை. தவிர பார்ப்பனக்‌ கட்சித்‌ தலைவர்களான ஸ்ரீமான்கள்‌ எ. ரெங்கசாமி அய்யங்‌ கார்‌, ஸ்ரீநிவாச அய்யங்கார்‌ அவர்களும்‌, ஸ்ரீமான்‌ முத்தையா முதலியார்‌ அவர்களின்‌ பேரில்‌ சந்தேகப்பட்டுக்‌ கொண்டு ஸ்ரீமான்கள்‌ சிவசுப்பிரமணிய அய்யருக்கும்‌ மருதவாணம்‌ பிள்ளைக்‌ குமே ஓட்டுப்‌ போடும்படிக்‌ கேட்டு வருகிறார்கள்‌. ஸ்ரீமான்‌ முத்தையா முதலியாரும்‌ தனக்குக்‌ கட்டுப்‌ பட்ட இடத்தில்‌ தனி ஓட்டுகளே கிடைக்கும்‌ படியாகவும்‌ மற்றவிடத்தில்‌ தனக்கு ஒரு ஓட்டு போட்டு விட்டு மற்றவை களை வேறு யாருக்கு வேண்டுமா னாலும்‌ போட்டுக்‌ கொள்ளுங்கள்‌ என்றும்‌ வேலை செய்து வருகிறார்‌. அவர்‌. வெற்றி பெற்றாலும்‌ கண்டிப்பாய்‌ பார்ப்பனர்‌ கட்சியுடன்‌ சேருவதில்லை யென்றே சொல்லி விட்டார்‌. மற்ற இருவர்களோ ஸ்ரீமான்‌ குன்னியூர்‌ அய்யர்‌. என்கிற கனவான்‌ தனக்கு ஆனாலும்‌ சரி, ஆகாவிட்டாலும்‌ சரி என்கிற கவலையற்று இருக்கிறார்‌. ஸ்ரீமான்‌ மருதவாணம்‌ பிள்ளையோ சென்ற வருஷத்தில்‌ செலவு செய்ததில்‌ 4-ல்‌ ஒரு பாகம்கூட இவ்வருஷம்‌ செலழிக்க மனமில்லாதவராய்‌ நடக்கிறபடி நடக்கட்டும்‌ என்றிருக்கிறார்கள்‌. மற்றபடி பார்ப்பனரல்லாத கட்சியைச்‌ சேர்ந்த இரண்டு கனவான்களும்‌, அதாவது ஸ்ரீமான்கள்‌ பூண்டி வாண்டையார்‌, நெடும்பலம்‌ முதலியார்‌ ஆகிய இருவர்கள்‌ ஒற்றுமையாகவே வேலை செய்கிறார்கள்‌. எவ்விதத்திலும்‌ இவ்விருவருக்கும்‌ வெற்றிக்‌ குறிகள்‌ வெளிப்படையாயிருக்கின்றன. ஏனெ னில்‌ இவ்விருவர்‌ களும்‌ மற்ற அபேக்ஷகர்களைவிட பணக்காரர்கள்‌. அதா வது ஒருவருக்கு சுமார்‌ 1000 வேலியும்‌ மற்றவருக்கு சுமார்‌ 500 வேலியும்‌ நிலம்‌ உண்டு. அல்லாமலும்‌ சென்ற தேர்தலில்‌ செலவு செய்து சலிப்‌ படையாதவர்கள்‌. தங்கள்‌ தங்களுக்கு கட்டுப்பட்டது என்று சொல்லும்‌ குடி அரசு - 1926 (2) 362 படியாக தனித்தனியாய்‌ 2, 3 தாலுக்காக்களில்‌ செல்வாக்குள்ளவர்கள்‌. தனி வோட்டுகள்‌ வேண்டுமானால்‌ 10,000 கணக்கான ஓட்டுகள்‌ பெறக்‌ கூடிய வர்கள்‌. அல்லாமலும்‌ நமது பார்ப்பனர்களின்‌ வார்த்தையைக்‌ கேட்டு அரசியல்‌ கட்சிகளின்‌ பெயர்களைச்‌ சொல்லிக்‌ கொண்டு இதுவரை எவ்வித நாணயக்‌ குறைவான பெயர்களும்‌ அடைந்தவர்களல்ல. தஞ்சை ஜில்லா விலுள்ள பார்ப்பனரல்லாதார்‌ கட்சியைச்‌ சேர்ந்த ஜில்லா போர்டு பிரசி டெண்டு நான்கைந்து தாஜூக்காபோர்டு பிரசிடெண்டுகள்‌ மற்றும்‌ பல பெரிய கனவான்கள்‌ ஆகியவர்கள்‌ எல்லாம்‌ இவ்விருவர்களுக்கே வேலை செய்‌ கின்றார்கள்‌. ஆதலால்‌ இவர்களுக்கே வெற்றி கிடைப்பது உறுதியென்றே சொல்லி விடலாம்‌. அதிலும்‌, ஸ்ரீமான்‌ வாண்டையாருக்கு இப்பொழுதே எழுதி வைத்து விடலாம்‌. சுயேச்சைவாதியென்று சொல்லப்பட்ட ஸ்ரீமான்‌ நாடிமுத்துப்‌ பிள்ளை அவர்களுக்கும்‌ வெற்றிக்‌ குறிகள்‌ பலமாகக்‌ காணப்‌ படுகின்றன. பார்ப்பனரல்லாதார்‌ கட்சி அபேக்ஷகர்களும்‌ தங்களுக்கு இரண்டு ஓட்டுப்போக பாக்கியை ஸ்ரீமான்‌ நாடிமுத்துப்‌ பிள்ளைக்கே போடும்‌ படி பிரசாரம்‌ செய்கிறார்கள்‌. ஸ்ரீமான்கள்‌ மருதவாணம்‌ பிள்ளை, குன்னியூர்‌ அய்யர்‌ ஆகிய இருவர்களும்‌ தங்களுக்கு இரண்டு ஓட்டுப்‌ போட்டு,மீதியை ஸ்ரீமான்‌ நாடிமுத்துப்‌ பிள்ளை அவர்களுக்கே போடும்படி சொல்லுகிறார்கள்‌. ஸ்ரீமான்‌ முத்தையா முதலியாரும்‌ ஸ்ரீமான்‌ நாடிமுத்துப்‌ பிள்ளைக்கு அநுகூலமாயிருப்பதன்‌ மூலம்‌ அவருடைய சகாயமும்‌ பெறலாமென்று கருதி அவருக்கு அநுகூலமாயிருக்கிறார்‌. ஆகவே, பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்கு இரண்டு ஸ்தானமும்‌, சுயேச்சைக்‌ கட்சி என்கிற ஸ்ரீமான்‌ நாடிமுத்து பிள்ளைக்கு ஒரு ஸ்தானமும்தான்‌ கிடைக்கும்‌. இதில்‌ ஏதாவது தவறும்‌ பட்சத்தில்‌ ஒரே ஒரு ஸ்தானம்‌ தான்‌ மாறலாம்‌.அதுவும்‌ இப்போது சுயராஜ்யக்‌ கட்சி என்னும்‌ பார்ப்பனக்‌ கட்சியிலிருந்து பிரிந்திருக்‌ கும்‌ ஸ்ரீமான்‌ முத்தையா முதலியாருக்குத்‌ தான்‌ கிடைக்கலாம்‌. அது தவறும்‌ பக்ஷம்‌ ஸ்ரீமான்‌ மருதவாணம்‌ பிள்ளைக்கு கிடைக்குமேயல்லாமல்‌ கண்டிப்‌ பாய்‌ அய்யருக்கு கிடைக்காது. அந்த ஜில்லாவைப்‌ பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதார்‌ என்கிற வகுப்பு உணர்ச்சி அவ்வளவு நன்றாக விளங்குகிறது. ஆதலால்‌ சென்ற வருஷத்தைவிடப்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்கு அதிக ஸ்தானங்களே கிடைக்கும்‌. இதுபோலவே மற்ற ஜில்லாக்களிலும்‌ இதை அனுசரித்தேதான்‌ இருக்‌ கிறது. அல்லாமலும்‌ சென்ற இரண்டு தேர்தல்களிலும்‌ பார்ப்பனர்கள்‌ வார்த்‌ தையை நம்பி ஏமாந்து போனவர்களும்‌, தங்கள்‌ நன்மையையும்‌ நல்ல பெய ரையும்‌ கெடுத்துக்‌ கொண்ட பலருக்கு இவ்வருஷம்‌ புத்தி வந்துமிருக்கிறது. ஆதலால்‌ எவ்வகையிலும்‌ பார்ப்பனக்‌ கட்சி தலையெடுப்பதற்கு இடமில்‌ லாமல்‌ இருப்பதோடு பார்ப்பனரல்லாதார்‌ கட்சி மேலும்‌ மேலும்‌ உரம்‌ பெற்று வருகிறது. தவிர,பனகால்‌ ராஜா விஷயத்தில்‌ வெற்றிக்கு எவ்விதத்திலும்‌ சந்தேக 363 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. மேயில்லை. இதுவரை பதிவுசெய்து அனுப்பியிருக்கும்‌ ஓட்டுக்‌ களிலேயே மெஜாரிட்டி ஏற்பட்டிருப்பதாகவே தக்க ஆதாரத்தின்‌ மீது நம்பத்‌ தகுந்த இடத்திலிருந்து தகவல்கள்‌ கிடைத்திருக்கின்றன. ஸ்ரீமான்‌ ஏ.ராமசாமி முதலியாரைப்பற்றியோவென்றால்‌ வெற்றி யைப்‌ பற்றி எவ்விதத்திலும்‌ ஆக்ஷபணை சொல்வதற்கே சிறிதுமிட மில்லை. ஆனால்‌ பார்ப்பனர்களுக்கு சூழ்ச்சியும்‌, தந்திரமும்‌ , வஞ்சகமும்‌ கூடிய பிரசாரங்கள்‌ செய்வதற்கு பல வழிகளில்‌ சவுகரியமிருந்தது. அதுபோன்ற சவுகரியங்கள்‌ பார்ப்பனரல்லாதாருக்கு இல்லை. உதாரணமாக, பார்ப்பனர்‌. தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும்‌ பனகால்‌ ராஜா, ஸ்ரீமான்‌ ராமசாமி முதலியார்‌ போன்றவர்கள்‌ வெளியிடங்களுக்குப்‌ போய்‌ பிரசாரம்‌ செய்வதற்கில்லாமல்‌ அவர்கள்‌ தொகுதிகளில்‌ எதிர்‌ அபேகஷகர்களை நிறுத்தி இவ்விருவர்களையும்‌ அவரவர்கள்‌ தொகுதி யிலேயே கட்டிப்போட்டு விட்டார்கள்‌. ஆனால்‌ தாங்கள்‌ மாத்திரம்‌, அதாவது ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார்‌ இருவரும்‌ தங்களது சூழ்ச்சிகளால்‌ போட்டியின்றி தெரிந்தெடுக்கத்தக்க மாதிரி ஏற்பாடு செய்து கொண்டு மற்றத்‌ தொகுதிகளில்‌ பார்ப்பனரல்லாதாருக்கு எதிராய்ப்‌ பிரசாரம்‌ செய்யத்தக்க இடம்‌ செய்து கொண்டார்கள்‌. அல்லாமலும்‌, தேர்த லுக்கு சவுகரியமாய்‌ தங்கள்‌ ஆதிக்கத்தில்‌ உள்ள இலாக்கா உத்தியோகஸ்தர்‌ களை ஆங்காங்கு மாற்றி பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய்‌ இரகசிய பிரசாரம்‌ செய்ய சவுகரியம்‌ செய்து கொண்டார்கள்‌. தவிர செலவு செய்யவும்‌, காங்கிரஸ்‌ பணம்‌, மடாதிபதிகள்‌ பணம்‌, மகந்துகள்‌ பணம்‌ முதலிய பல பொதுப்‌ பணங்கள்‌ லட்சக்கணக்காய்‌ இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. செல்வாக்கு பெற்று விட்ட பத்திரிகைகளாகிய “இந்து”, "சுதேசமித்திரன்‌, *சுயராஜ்யா” முதலிய பத்திரிகைகளும்‌ அவர்கள்‌ சுவாதீனத்தில்‌ இருக்கின்‌ றன. மற்றும்‌ ஒவ்வொரு ஜில்லாவிலும்‌ ஒவ்வொரு பார்ப்பனப்‌ பத்திரிகையும்‌ இருக்கிறது. பார்ப்பன ரல்லாத பல பத்திரிகைகளையும்‌ விலை கொடுத்தும்‌, மிரட்டியும்‌, கட்டிப்‌ போட்டுவிட்டார்கள்‌. இவ்விரண்டிலும்‌ கட்டுப்படாத பார்ப்பனரல்லாதார்‌. பத்திரிகைகளிலும்‌ ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பார்ப்பன ஒற்றர்களை அனுப்பித்‌ தங்களுக்கு அநுகூலமாய்‌ திருப்பி விட்டார்கள்‌. மிகுதியும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கஷ்ட நஷ்டங்களாலும்‌, தியாகத்‌ தாலும்‌ செல்வாக்கு பெற்றுவிட்ட காங்கிரஸ்‌ முதலிய தேசீய இயக்கங்கள்‌ என்பனவற்றையும்‌ கைப்பற்றி மற்றவர்கள்‌ உள்ளே நுழையாதபடி முற்‌ றுகை போட்டுக்‌ கொண்டார்கள்‌. காங்கிரசின்‌ மூலம்‌ பொது ஜனங்களுக்கு அறிமுகமான தொண்டர்களையும்‌ அவர்களது வயிற்றுக்‌ கொடுமையின்‌ காரணமாக பலவழிகளிலும்‌ தங்களுடைய அடிமைகளாக்கிக்‌ கொண்டார்‌ கள்‌. இனியும்‌ இதில்‌ எழுதத்தகாத பல வழிகளிலும்‌ செல்வாக்குள்ளவர்கள்‌ பிரபலஸ்தர்கள்‌. என்கிற பேர்‌ வழிகளையும்‌ உள்‌ சட்டப்பையில்‌ போட்டிருக்கிறார்கள்‌. இவ்வளவு சவுகரியங்கள்‌ பார்ப்பனர்களுக்கு இருந்தும்‌ ஒரு மயிர்க்காலாவது தங்கள்‌ தங்களது நிலையை இருப்பிடத்தை விட்டு அசைக்க முடியாமல்‌ குடி அரசு - 1926 (2) 264 போய்‌ விட்டதோடு பார்ப்பனரல்லாதார்‌ எவ்வளவோ முன்னுக்கு வர: சவுகரியமும்‌ ஏற்பட்டிருப்பதைப்‌ பார்க்கும்போது நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டு விட்ட தென்றேதான்‌ சொல்லவேண்டும்‌. ஆதலால்‌, பார்ப்பனர்களின்‌ திண்ணைப்‌ பிரசாரத்தை யாரும்‌ நம்பி மோசம்‌ போக வேண்டாம்‌ என்று வேண்டிக்‌ கொள்வதோடு எவ்விதத்திலும்‌ பார்ப்பனர்‌ தங்கள்‌ கட்சி வெற்றி பெறுமென்று காணும்‌ அவர்களது கனவு பலிக்காதென்றே உறுதி கூறுவோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 3110.1926 365 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. கல்பாத்தி மலையாளத்தைச்‌ சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில்‌ ஈழவர்‌, தீயர்‌ சகோதரர்கள்‌ நடக்கக்கூடாது என்கிற உபத்திரவம்‌ இருந்து வருவதும்‌, அதில்‌ பிரவேசிக்கப்‌ பல வருஷ காலமாய்‌ பலர்‌ முயற்சித்து வருவதும்‌ வாசகர்‌ அறிந்திருக்கலாம்‌. இதை உத்தேசித்து சென்னை சட்டசபையில்‌, “பொதுத்‌ தெருக்களில்‌ யாரும்‌ நடக்கலாம்‌” என்று ஒரு தீர்மானம்‌ நிறை வேற்றியதும்‌ ஞாபகமிருக்கலாம்‌. அத்தீர்மானம்‌ அமுலுக்கு வருவதற்கில்‌ லாமல்‌ “வேலையிருந்தால்தான்‌ போகலாம்‌” என்று சட்ட மெம்பர்‌ வியாக்‌ யானம்‌ செய்ததும்‌ ஞாபகமிருக்கலாம்‌. ஆனால்‌, சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களும்‌ பலர்‌ செல்ல முயற்சித்தும்‌ அவர்களுக்கு 144 உத்திரவு போடச்‌ செய்ததும்‌ ஞாபகமிருக்கலாம்‌. மற்றும்‌ சில சமயங்களில்‌ சிலர்‌ மீறிச்‌ சென்று அவர்கள்‌ பேரில்‌ நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டு களில்‌ விசார ணையாகி விடுதலை ஆனதும்‌ ஞாபகமிருக்கலாம்‌. மற்றொரு சமயம்‌ ஆரிய சமாஜி என்கிற முறையில்‌ ஒருவர்‌ சென்ற பொழுது அவரைத்‌ தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச்‌ சில பார்ப்பனர்கள்‌ பேரில்‌ நடவ டிக்கை நடத்தப்‌ பட்டு தண்டிக்கப்பட்டதும்‌ ஞாபகமிருக்கலாம்‌. இப்போது இம்மாதம்‌ கல்பாத்தியில்‌ ரதோற்சவமான படியால்‌ மறுபடியும்‌ ஈழவர்கள்‌ எங்கு பிரவேசித்துவிடப்‌ போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப்‌ பார்ப்பனர்கள்‌ இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள்‌ செய்து வருவ தாய்த்‌ தெரிகிறது. அங்குள்ள ஒரு பார்ப்பன மாஜிஸ்ட்ரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார்‌. முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. “பார்ப்பனரல்லாதார்‌ நன்மை காங்கிரஸ்‌ மூலம்தான்‌ ஏற்படும்‌” என்று சொல்லும்‌ காங்கிரஸ்‌ பார்ப்பனர்கள்‌ இது சமயம்‌ “திருட னைத்‌ தேள்‌ கொட்டியது போல்‌” மெளனம்‌ சாதிக்கிறார்கள்‌. பார்ப்பனரல்‌ லாதார்‌ கட்சியும்‌, அவர்களுடைய பொதுமக்கள்‌ உணர்ச்‌ சியும்‌ இவ்வளவு பலப்பட்டிருக்கிறபோதும்‌, சட்டங்களும்‌ அநுகூலமாயிருக்கிற போதும்‌, தேர்‌ தல்‌ சண்டை இருக்கிறபோதும்‌ தெருவில்‌ நடக்கும்‌ உரிமை கூட இல்லாமல்‌ நம்மைக்‌ கொடுமைப்படுத்தத்‌ தயாராயிருப்பார்களேயானால்‌, இவர்கள்‌. கைக்கு ராஜ்யமே வந்து விட்டால்‌ நம்மை என்ன செய்ய மாட்டார்‌ கள்‌ என்பதை நன்றாய்‌ யோசித்துச்‌ சட்டசபைத்‌ தேர்தலில்‌ பார்ப்பனர்‌ களுக்குத்‌ தக்க புத்தி கற்பிக்கக்‌ கோருகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 31.10.1926 குடி அரசு - 1926 (2) 366 கலியாண சந்தமுயில்‌ தாலி கட்டுவதை மறந்து விடாதீர்கன்‌ சட்டசபைத்‌ தேர்தல்களில்‌ மக்கள்‌ அபரிமிதமான ஊக்கத்தில்‌ இருப்பதால்‌ தீபாவளிக்குக்‌ கதரை மறந்து விடுவார்களோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களைப்‌ பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதார்‌ கட்சியினால்‌ ஏற்படும்‌ நன்மைகளைவிட, பதின்‌ மடங்கு நிரந்தர மான நன்மைகள்‌, கதரினால்‌ பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத சமூக மாகிய ஏழைச்‌ சகோதரி சகோதரர்களுக்கு ஏற்படும்‌ என்பதை மறவாதீர்கள்‌. ஏழைகளுக்கு கஞ்சி வார்க்காமல்‌ என்ன சுதந்திரமோ, சுயராஜ்யமோ பெற்றா லும்‌ அது உண்மையான சுயராஜ்யமாகாது. பார்ப்பனரல்லாத சகோதரர்கள்‌ ஒவ்வொருவரும்‌ சுயநலத்தை உத்தேசித்து அல்லாமல்‌ உண்மையாய்ப்‌ பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்களாயிருந்தால்‌, கதரின்‌ மூலமாகத்தான்‌ வெளியாகும்‌. கதரை மதிக்காத பார்ப்பனரல்லாதார்‌ கட்சி ஜெயிப்பதும்‌, பார்ப்பனரல்லாதாரை அழுத்தப்‌ புறப்பட்ட காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சி ஜெயிப்பதும்‌ ஒன்றுதான்‌. ஆதலால்‌ கலியாண சந்தடியில்‌ தாலி கட்டுவதை மறந்தது போல்‌ தேர்தல்‌ தடபுடலில்‌ கதரை மறந்து விடாதீர்கள்‌. குடி அரசு - சிறு குறிப்பு - 31101926 267. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 காலித்தணத்தை கக்க சர்க்கார்‌ உத்திரவ சென்னையில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்கள்‌ தேர்தல்‌ பிரசாரத்திற்கென்று ஏற்பாடு செய்யும்‌ கூட்டங்களிளெல்லாம்‌ மயிலைப்‌ பார்ப்பனர்கள்‌ கூலி கொடுத்து காலிகளை விட்டு குழப்பமும்‌ கலகமும்‌ செய்து வந்ததையும்‌, போலீசாரர்கள்‌ இதைப்‌ பற்றி சரியான நடவடிக்கை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ கவலை ஈனமாயிருந்ததையும்‌ அறிந்த ஜஸ்டிஸ்‌ கட்சி பிரமுகர்கள்‌ கவர்னர்‌. பிரபுவைக்‌ கண்டு இக்காலித்தனத்தை “நீங்கள்‌ அடக்க வழி செய்கிறீர்களா? அல்லது நாங்களே அடக்க ஏற்பாடு செய்வதா?” என்று இறுதி பிரேரே பணை செய்தார்கள்‌. அதற்கு கவர்னர்‌ பிரபு தானே தக்கது செய்வதாய்‌ ஒப்புக்‌ கொண்டு தேர்தல்‌ கூட்டங்களைப்‌ பற்றிய அரசாங்க உத்திரவு என்பதாக ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறார்‌. அவ்வுத்திரவின்‌ சாரமாவது: காலிகள்‌ கூட்டத்தில்‌ வந்து கூட்டத்தை கலைப்பார்கள்‌ என்று யாருக்‌ காவது தோன்றி அதிகாரிகளைக்‌ கேட்டுக்‌ கொண்டால்‌, அவர்களுக்காக அக்கூட்டத்தை ஒழுங்காய்‌ நடத்திக்‌ கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை: அதிகாரிகள்‌ செய்ய வேண்டியது என்றும்‌, கூட்டத்தின்‌ அமைதிக்கு கெடுதி இல்லாமல்‌ யாராவது கேள்வி கேட்டால்‌ அனுமதிக்க வேண்டுமென்றும்‌ பிறப்பித்திருக்கிறார்கள்‌. இவ்வுத்திரவினால்‌, இவ்வுத்திரவிற்கு முன்னாலேயே கலகம்‌ செய்து கூட்டத்தை கலைக்கக்‌ கொடுத்த கூலிகள்‌ எல்லாம்வீணாய்ப்‌ போய்விட்டது. தவிர கலகம்‌ செய்வதற்காக கூலி வாங்கிப்‌ பிழைக்கலாம்‌ என்று நினைத்து வேறு வேலைகளையும்‌ விட்டு இதை நம்பி இருந்தவர்கள்‌ வாயிலும்‌ மண்‌ விழுந்து விட்டது. யாரும்‌ கேள்வி கேட்க மாட்டார்கள்‌. ஆள்‌ பலத்தில்‌ நின்றுகொண்டு சண்டப்‌ பிரசண்டமாய்‌ பொய்யும்‌ புளுகும்‌ வண்டி வண்டி யாய்‌ அளக்கலாம்‌ என்று நினைத்திருந்த “வீரர்கள்‌” இனி கூட்டத்தில்‌ பேசுவதில்லையென்று உறுதி செய்து கொள்ள வேண்டியதாய்விட்டது. “ஐயோ பாவம்‌! வேறு கூட்டத்தில்‌ கலகமும்‌ செய்யக்‌ கூடாது: தாங்களும்‌ மேடையில்‌ நின்று பொய்யும்‌ புளுகும்‌ அளக்கக்‌ கூடாது” என்றால்‌ “இது என்ன அக்கிரமமான உத்திரவு”, எப்படி ஜனங்களை ஏமாற்றுவது? இதற்கு ஏதாவது சட்ட சம்மந்தமான ஆக்ஷேபனை இருக்கிறதா என்று பார்க்க குடி அரசு - 1926 (2) 368 வேண்டும்‌. அல்லது இவ்வுத்திரவுப்‌ போடக்‌ கூடிய இடத்திலாவது ஒரு பார்ப்பனரையே அதிகாரியாய்‌ வைக்கச்‌ செய்து, அதை கேன்சல்‌ செய்ய வேண்டும்‌. இவ்விரண்டிலொன்று செய்யா விட்டால்‌ எப்படி தேர்தலில்‌ ஜெயிக்க முடியும்‌” என்று சுயராஜ்யக்‌ கட்சியார்‌ நினைக்கும்படியாய்‌ விட்டது. சர்க்கார்‌ “அக்கிரமத்திற்கு”” யார்‌ என்ன செய்ய முடியும்‌? சட்டத்தை யாவது மீறலாமென்றாலோ 100, 200 கொடுத்தாவதும்‌ ஜெயிலுக்குப்‌ போக ஆள்‌ கிடைப்பதில்லை. சட்ட மெம்பரிடத்திலும்‌ அட்வகேட்‌ ஜெனர லிடத்திலும்‌ போய்‌ முறையிட்டுப்‌ பார்ப்பதைத்‌ தவிர வேறு வழி இல்லாமல்‌ போய்‌ விட்டது.ஐயோ பாவம்‌! குடி அரசு - கட்டுரை - 3110.1926 269 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 எண்‌. தண்டபாணி கம்வபணி தண்டபாணி கம்பெனியின்‌ வியாபார ஸ்தலத்தைப்‌ பற்றி ஒரு விளம்பரம்‌ அடுத்த பத்தியில்‌ பிரகரித்திருக்கிறோம்‌. பொது ஜனங்கள்‌ வெளி யிலிருந்து சாமான்‌ தருவிப்பதில்‌ பல பேருக்கு ஆர்டர்‌ அனுப்பி ஏமாந்து விடுகிறார்கள்‌. இக்‌ கஷ்டம்‌ நிவர்த்தியாவதற்காகவே தேசபக்தர்‌ ஸ்ரீமான்‌ என்‌. தண்டபாணி பிள்ளை அவர்கள்‌ சென்னையில்‌ ஒரு வியா பாரக்‌ கம்பெனி ஏற்படுத்தி நடத்தி வருகிறார்‌. இக்கம்பெனிக்கு யாரும்‌ நம்பிக்கையாய்‌ எவ்வளவு பணத்திற்கு வேண்டுமானாலும்‌ ஆர்டர்‌ அனுப்பலாம்‌. அத்துடன்‌ எவ்வளவு தொகையும்‌ முன்பணமாக அனுப்ப லாம்‌ என்று தைரியமாய்‌ சிபார்சு செய்கிறோம்‌. குடி அரசு - செய்தி அறிவிப்பு - 07.114926 குடி அரசு - 1926 (2) 370 வாய்யோகும்‌ ஊசண்ணை சட்டசபைத்‌ க€ேர்கனும்‌ பார்ப்பணால்லாதார்‌ கடமையும்‌ சகோதரர்களே! சட்டசபை பார்ப்பனரல்லாதார்‌ இன்றைய விஷயம்‌, வரும்‌ சட்டசபைத்‌ தேர்தலும்‌ பார்ப்பனரல்‌ லாதார்‌ கடமையும்‌ என்பதைத்‌ தாங்கள்‌ துண்டு விளம்பரம்‌ மூலம்‌ அறிந்‌ திருப்பீர்கள்‌. ஒத்துழையாமையில்‌ நான்‌ தொண்டு செய்து கொண்டிருந்த காலத்தில்‌, இந்தத்‌ தேர்தல்‌, பார்ப்பனரல்லாதார்‌ என்கிற இரண்டு வார்த்தை களையும்‌ நான்‌ பெரிதும்‌ அநாவசியமாய்க்‌ கருதி வந்ததோடு பொது மக்க ளிடையிலும்‌ இவ்விரண்டிலும்‌ கவலை செலுத்தாதீர்கள்‌ என்றும்‌ பிரசாரம்‌ செய்து வந்தவன்‌. ஆனால்‌ மகாத்மாவின்‌ ஒத்துழையாமைக்‌ காங்கிரஸ்‌ மறைந்து விடவே, இவை இரண்டும்‌ இப்போது லக்ஷியம்‌ பெறத்தக்கவை யாகிவிட்டன. மகாத்மாவின்‌ காங்கிரசில்‌ இருந்த கொள்கைகள்‌ சட்ட சபையை பஹிஷ்காரம்‌. செய்ய வேண்டியதா யிருந்தாலும்‌, பார்ப்பனர்‌ - பார்ப்பனரல்லாதார்‌ என்கிற வித்தியாசமில்லாமல்‌ மக்கள்‌ ஒன்று சேர்ந்து தொண்டு செய்யவும்‌, அதனால்‌ ஏற்படும்‌ பலன்‌ எல்லா சமூகத்தாருக்கும்‌ சமத்துவமும்‌, சம உரிமையும்‌ கிடைக்‌ கத்தக்கதாகவும்‌ இருந்ததாலும்‌ அவற்‌ றில்‌ இவ்விரு வார்த்தைகளுக்கும்‌ இடமில்லாதிருந்தது. பார்ப்பனர்கள்‌ தேச மக்கள்‌ சமத்துவத்தையும்‌ சம உரிமையையும்‌ அடைவதை ஒப்புக்‌ கொள்ள முடியாத நமது நாட்டுப்‌ பார்ப்பனர்களும்‌, சட்டசபையை பஹிஷ்கரிப்பதனால்‌ உத்தியோகமும்‌ ஆதிக்கமும்‌ பெற முடியாதே எனப்‌ பயந்த பார்ப்பனருமேதான்‌ ஒத்துழையாமைத்‌ திட்டத்தை அடியோடு காங்கிர சிலிருந்து எடுத்துவிட முயற்சி செய்தவர்கள்‌. நான்‌ முன்னமேயே சொன்னேன்‌ இம்‌ முயற்சிக்கு விரோதமாய்‌ தமிழ்நாட்டில்‌ நான்‌ எவ்வளவு தூரம்‌ பிரயத்தனப்பட்டேன்‌ என்பதும்‌ ஒத்துழையாமைத்‌ திட்டம்‌ மறைவுபட்டால்‌ தேசத்தில்‌ மக்களின்‌ ஒற்றுமை குலைந்து வகுப்புப்‌ பிணக்குகளும்‌ வகுப்பு 271 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வாதமும்‌ தலையெடுக்கும்‌ என்றும்‌ ஒத்துழையாமையின்‌ பலனாய்‌ பொது ஜனங்கள்‌ கையில்‌ இருக்கும்‌ காங்கிரசு, வக்கீல்கள்‌ கைக்கும்‌ செல்வந்தர்கள்‌ கைக்குமே போய்விடுமேயல்லாமல்‌ பெரும்பான்மை மக்களாகிய ஏழைக்‌ குடியானவர்கள்‌, தொழிலாளிகள்‌ முதலியோர்களுக்கு காங்கிரசில்‌ எவ்வித ஸ்தானமும்‌ இல்லாமல்‌ ஏமாற்றப்பட வேண்டிவரும்‌ என்றும்‌, தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள்‌ விஷயத்தில்‌ கவலை செலுத்தும்‌ தன்மை போய்‌ உயர்ந்த வகுப்பார்‌ என்கிறவர்கள்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை பலப்படுத்திக்‌ கொள்ள உபயோகப்படுத்தப்படும்‌ என்றும்‌ வெளிப்படையாய்‌ காக்கிநாடா காங்கிர சின்‌ போது அங்கு கூடிய ஒரு தனிக்‌ கூட்டத்திலும்‌ மற்றும்‌ பல மாகாண மகா நாட்டின்‌ போதும்‌ பேசியிருக்கிறேன்‌. நமது பார்ப்பனர்‌. தேசபந்து தாசை வசப்படுத்திக்‌ கொண்டு அவரால்‌ நமது தமிழ்நாட்டில்‌ பிரசாரம்‌ செய்விக்கும்‌ போதும்‌ நான்‌ ஊர்‌ ஊராய்த்‌ திரிந்து எதிர்ப்‌ பிரசாரம்‌ செய்து மிருக்கிறேன்‌. கடைசியாய்‌ பெல்காமிலும்‌ மகாத்மாவினிடம்‌ நேரிலேயே சொன்னதில்‌ அவர்‌ இன்னும்‌ 3 மாதத்தில்‌ இதை மாற்றி விடுகிறேன்‌ என்றுகூடச்‌ சொன்னார்‌. இவ்வளவும்‌ நான்‌ செய்தும்‌ ஒத்துழையாமையை அழிப்பதிலும்‌ மகாத்மாவை விலக்குவதிலும்‌ நமது பார்ப்பனர்‌ தாங்கள்‌ செய்த பிரயத்தனத்‌ தில்‌ வெற்றி பெற்று தேசீயசபை என்கிற காங்கிரசையும்‌ தங்கள்‌ ஆதிக்கத்‌ திற்கு ஆயுதமாயும்‌ செய்து கொண்டார்கள்‌. இதன்‌ பலனாக நான்‌ முன்‌ சொன்னது போல்‌ பார்ப்பனரல்லாதார்‌ பார்ப்பனர்களால்‌ பார்ப்பன ஆதிக்கத்‌ திற்காக ஏமாற்றப்‌ படவும்‌ சமத்துவமும்‌ சம உரிமையும்‌ அடியோடு மறுக்‌ கப்படவும்‌ நேரிட்டது. நமது பார்ப்பனரின்‌ பொய்மானாம்‌ காங்கிரஸ்‌ என்னும்‌ மாய்கைக்கு இனி நமது நாட்டில்‌ கடுகளவு இடம்‌ கொடுத்தாலும்‌ அது பார்ப்பனரல்லாதார்‌ சமூகத்திற்கு மலையளவு கெடுதி யைச்‌ செய்வ தோடு பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்கே குழி தோண்டிய தாய்‌ விடும்‌. நானே முன்‌ அணியில்‌ நிற்பேன்‌ உண்மையில்‌ காங்கிரசோ மற்ற எந்த சாதனமோ தேச மக்களுக்கு சுயமரியாதையையும்‌ விடுதலையையும்‌ அளிப்பதானால்‌ மற்றெல்லோரை யும்‌ விட நானே காங்கிரசின்‌ முன்னணியில்‌ நிற்பேன்‌. நாளைக்கும்‌ காங்‌ கிரசோ மற்றெந்த சாதனமோ எல்லா மக்களின்‌ முன்னேற்றத்திற்கும்‌ சமத்து வத்திற்கும்‌ அநுகூலமாய்‌ ஏற்பட்டால்‌ எவ்வித ஆபத்து வருவதானாலும்‌ நானே அதின்‌ முன்னணியில்‌ நிற்பேன்‌. அழிக்கப்‌ பின்வாங்க மாட்டேன்‌ அதுபோலவே பொதுமக்களின்‌ சுயமரியாதைக்கும்‌, உரிமைக்கும்‌, விடுதலைக்கும்‌ ஆபத்தான இயக்கம்‌ என்று எதையாவது நான்‌ கருதினால்‌ அதை அடியோடு அழிக்கக்‌ கொஞ்சமும்‌ பின்‌ வாங்க மாட்டேன்‌. எவ்வித பழியோ, அபகீர்த்தியோ, ஆபத்தோ வருவதானாலும்‌ அவற்றைக்‌ கொஞ்ச குடி அரசு - 1926 (2) 372 மும்‌ லக்ஷியம்‌ செய்யாமல்‌ என்னால்‌ கூடியதைச்‌ செய்துதான்‌ தீருவேன்‌. நான்‌ செய்த தொண்டு நான்‌ பொது வாழ்வில்‌ உழைக்க ஆரம்பித்த பிறகு இக்கொள்கையை என்னால்‌ கூடியவரை அனுசரித்து வந்திருக்கிறேன்‌. உதாரணமாக, ஹோம்‌. ரூல்‌ கிளர்ச்சியின்போதும்‌ ஈரோட்டில்‌ நடந்த கொடித்‌ தகராறில்‌ நானே முன்ன ணியில்‌ இருந்ததும்‌, என்‌ வீட்டில்‌ கொடி கட்டினதும்‌, ஜஸ்டிஸ்‌ க்ஷி ஆரம்‌ பித்த காலத்தில்‌ அது “தேசத்‌ துரோகமான கக்ஷி” என்று நமது பார்ப்பனர்கள்‌ செய்த பிரசாரத்தில்‌ ஏமாந்து போய்‌ அதற்கு எதிராக சென்னை மாகாணச்‌ சங்கம்‌ ஏற்படுத்துவதற்காக கூட்டின முதல்‌ கூட்டத்‌ திற்கு என்னுடைய முழு ஆதரவையும்‌ கொடுப்பதாக வாக்களித்து 1000 ரூபாய்‌ தந்தியில்‌ வாக்களித்து அனுப்பியதும்‌, அக்‌ கூட்டத்திற்கும்‌ முன்‌ னணியில்‌ இருந்து மகாநாடுகள்‌. முதலியவை நடத்தியதும்‌ உப அக்கிராச னாதிபதியாயிருந்ததும்‌ பிறகு ஹோம்‌ ரூல்‌ கிளர்ச்சியில்‌ உள்ள சில புரட்டு கள்‌ வெளியானதும்‌ அதை ஒழிப்பதற்கென்று “நேஷனலிஸ்ட்‌ அசோசி யேசன்‌” என்பதாக சென்னை யில்‌ ஒரு தேசீய சபை ஸ்தாபித்த காலத்தில்‌ அதிலும்‌ முன்னணியிலிருந்து அச்சபைக்கு தமிழ்நாடு காரியதரிசியா யிருந்ததும்‌ மற்றும்‌ அதற்குப்‌ பிறகும்‌ முன்னும்‌ தேசீய சம்பந்தமான எல்லா விஷயங்களிலும்‌ (மனப்பூர்வமாய்‌! எவ்விதக்‌ கஷ்டத்தையும்‌ பொருட்படுத்‌ தாமல்‌ ஊழியம்‌ செய்ததையும்‌ நீங்கள்‌ நேரில்‌ பார்த்திருப்பீர்கள்‌.அப்படிப்‌ பட்டஒருவன்‌ இன்று ஏன்‌ தற்கால காங்கிரசு பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஆபத்து என்று சொல்ல வந்திருக்கி றேன்‌ என்பதை சற்று யோசியுங்கள்‌. காங்கிரசால்‌ வரும்‌ பெருமையையோ சுயராஜ்யத்தையோ அடைய எனக்கு இஷ்டமில்லாததாலா? அல்லது சுயராஜ்யத்திற்கு விரோதமாயிருந்தால்‌ அரசாங்கத்தாரிடம்‌ ஏதாவது பட்டம்‌ பதவி அல்லது எனது மக்களுக்கு உத்தியோகம்‌ முதலியவை பெறலா மென்றா? எனக்கு இனி எப்பேர்ப்பட்ட பட்டமும்‌ கிடைக்காது; உத்தியோக மும்‌ கிடைக்காது; எனக்குப்‌ பிள்ளை குட்டிகளும்‌ இல்லை.மற்றபடி ஜஸ்டிஸ்‌ கட்சியாரால்‌ ஏதாவது ஜீவனத்திற்கு ஆதாரமோ அல்லது கவுரவ உத்தியோகங்களோ அடையலாம்‌ என்று நினைக்கிறேன்‌ என்றாலோ நான்‌ எல்லா உத்தியோகங்களும்‌ பார்த்து இராஜினாமா கொடுத்துவிட்டு ஒத்து ழையாமைக்கு வந்தவன்‌. ஆனரரி மேஜிஸ்டிரேட்‌ ஒன்றரை வருஷத்தில்‌ இராஜினாமா கொடுத்த வன்‌. தாலூக்காபோர்டு மெம்பர்‌ இரண்டு வருஷத்தில்‌ இராஜினாமா கொடுத்தவன்‌. ஜில்லா போர்டு மெம்பர்‌ 2 வருஷத்தில்‌ இராஜி னாமா கொடுத்தவன்‌. முனி சிபல்‌ சேர்மென்‌ பதவி ஒன்றரை வருஷத்தில்‌ இராஜினாமா கொடுத்தவன்‌. ஆகவே இனி எந்த உத்தியோகம்‌ நான்‌ பார்க்க ஆசை கொள்ள வேண்டும்‌? ஆசை கொண்டால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி தயவில்லா மல்‌ கிடைக்காதா என்பதை நீங்களே நடுநிலைமையிலிருந்து யோசித்துப்‌ பாருங்கள்‌. எனது தாஜூக்கா தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்டாக மாத்திரம்‌ இருக்கிறேன்‌. ஆனால்‌ இது சுமார்‌ 15 வருஷத்திற்கு மேல்பட்டு பார்த்து 373 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. வருகிற வேலையானதாலும்‌ இதற்கு மற்றொருவர்‌ தயவும்‌ வேண்டியதில்லை. ஆதலால்‌ எதை உத்தே சித்து நான்‌ காங்கிரசை வேண்டுமென்று குற்றம்‌ சொல்ல நினைப்பேன்‌ என்பதை நீங்களே யோசியுங்கள்‌. பார்ப்பனர்‌ சொல்வதைக்‌ கேளாதீர்கள்‌ ஆனால்‌ நமது பார்ப்பனர்கள்‌, தங்களுடைய ஆதிக்கத்திற்கு அநு கூலமாய்‌ உழைக்கிறவன்‌ எவ்வித அயோக்கியனானாலும்‌ அவனை தேச பக்தன்‌ என்பார்கள்‌. அவர்கள்‌ நன்மைக்குக்‌ கடுகளவு விரோதம்‌ ஏற்படத்‌ தக்கதாக எவராவது நடந்து விட்டால்‌ எல்லாப்‌ பார்ப்பனர்களுக்கும்‌ கம்பியில்‌ லாத தந்திபோல்‌ எல்லோருக்கும்‌ ஏக காலத்தில்‌ உதயமாகி எல்லோரும்‌ கூடிக்‌ கொண்டு தேசத்‌ துரோகி, தேசத்‌ துரோகி என்று பயம்‌ காட்டி விடுவார்கள்‌. ஸ்ரீமான்கள்‌ பாவலரும்‌, குபீல்‌ சுந்திரேசரும்‌, குப்புசாமி முதலியா ரும்‌, குழந்தையும்‌, சக்கரவர்த்தி அய்யங்காரும்‌ நமது பார்ப்பனர்கள்‌ உதடு களில்‌ தேச பக்தர்களாய்‌ உருளுவதும்‌ லாலா லஜபதிராய்‌, டாக்டர்‌ வரத ராஜுலு, ராமசாமி நாயக்கர்‌ முதலியோர்கள்‌ தேசத்‌ துரோகிகளாய்‌ விளங்கு வதும்‌ இதன்‌ தத்துவமே தான்‌. ஆதலால்‌ நீங்கள்‌ இவை ஒன்றையும்‌ லட்சியம்‌ செய்யாமல்‌ நான்‌ சொல்லுவதை கவனமாய்க்‌ கேட்டு எது சரி எது தப்பு என்பதாக உங்கள்‌ புத்தியைக்‌ கொண்டே நன்றாய்‌ யோசித்துப்‌ பார்த்து உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாய்ச்‌ செய்ய முன்‌ வாருங்கள்‌. குருட்டு நம்பிக்கைக்கோ, பயங்கொள்ளித்‌ தனத்திற்கோ, உங்கள்‌ தனித்த சுயநன்மைக்கோ கட்டுப்பட்டு சொந்த புத்தியையும்‌, பகுத்தறிவையும்‌ பறிகொடுத்து விடாதீர்கள்‌ என்று முதலில்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறேன்‌. காங்கிரசால்‌ பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மை சகோதரர்களே! காங்கிரஸ்‌ என்பதை நமது நாட்டையும்‌ இந்நாட்டி லுள்ள பெரும்பான்மையான நமது சமூகத்தையும்‌ அழிக்க வந்த ஒரு அரக்கனென்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. காங்கிரஸ்‌ என்கிற ஒரு விஷத்‌ தன்மை நமது நாட்டில்‌ ஏற்பட்டுப்‌ பரவாதிருந்திருக்குமானால்‌ முதலாவது, நமது நாட்டில்‌ அந்நிய ஆட்சி இவ்வளவு பலமாய்‌ ஆதிக்கம்‌ பெற்று இருக்காது. இரண்டாவது, இவ்வந்நிய ஆட்சி பலமாய்‌ ஆதிக்கம்‌ பெறவும்‌ அதற்கு ஒற்றர்களாயிருந்தும்‌, அஸ்திவாரம்‌ போலும்‌, தூண்கள்‌ போலுமி ருந்தும்‌ அவ்வந்நிய ஆட்சி இந்‌ நாட்டிலிருப்பதாலேயே வாழக்‌ கூடியவர்‌. களான நமது பார்ப்பனர்‌ ஆதிக்கமும்‌ நமது நாட்டில்‌ இவ்வளவு தூரம்‌ வளர்ந்திருக்காது. இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ ஒன்றா ஆற்றோரங்களில்‌ காலை மாலைகளில்‌ மூக்கைப்‌ பிடித்து முணுமுணுத்துக்‌ கொண்டிருந்து விட்டு நம்மிடம்‌ பிச்சை எடுத்து வயிறு வளர்த்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. அல்லது வேறு ஏதாவது ஒரு தேசத்துக்குப்‌ போய்‌ அத்தேச மக்களின்‌ மேல்‌ குடி அரசு - 1926 (2) 374 ஆதிக்கம்‌ செலுத்த வேற்றரசர்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு வந்து வைக்க பிரயத்தனப்பட்டுக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. அப்படிக்கெல்லாம்‌ இல்லாமல்‌ சுவாமி கைவல்லியம்‌ அவர்கள்‌ சொல்லுவது போல்‌ இப்போது பார்ப்பனப்‌ பெண்களுக்கு வைர அட்டிகை, பட்டுப்‌ புடவை, கால்‌ ஜோடு, கைத்‌ துணி, மோட்டார்‌ கார்‌, பங்களா பீச்சுக்‌ காத்தும்‌, புருஷர்களுக்கு 5,000, 10,000 சம்பளம்‌, புல்‌ சூட்டு, சர்‌, மகாகனம்‌, மகா மகோபாத்தியாயர்‌ முதலிய பட்டம்‌, முதலாவது- இரண்டாவது வகுப்பு வண்டி பிரயாணம்‌, ஐரோப்பா-ஆஸ்திரே லியா தூது ஆகியதுகள்‌ இப்பார்ப்பனர்களுக்கு கிடைக்க வழியேது? இவைகள்‌ இவர்களுக்கு இவர்கள்‌ பெரியோர்‌ தேடிய சொத்தா? ஜாதித்‌ தொழிலா? வேதக்‌ கட்டளையா? பாரம்பரிய அநுபவமா? என்பதைக்‌ கவனித்தீர்களானால்‌ நன்றாய்‌ விளங்கும்‌. காங்கிரசால்‌ பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட கெடுதி காங்கிரஸ்‌ இல்லாதிருக்குமானால்‌ பார்ப்பனரல்லாதார்‌ நிலை இவ்வ ளவு கேவலமாயிருக்குமா? காங்கிரசுக்கும்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்கும்‌ முன்‌ னால்‌ இருந்தப்‌ பார்ப்பனரல்லாதார்‌ பெருமக்கள்‌ குடும்பங்கள்‌ எல்லாம்‌ எங்கே? மோக்ஷம்‌ மோக்ஷம்‌, தர்மம்‌ தர்மம்‌, புண்ணியம்‌ புண்ணியம்‌ என்று சொல்லி அநேக குடும்பங்களை மூட நம்பிக்கையிலும்‌ முட்டாள்‌ தனத்திலும்‌. இறக்கி அவர்கள்‌ செல்வத்தைக்‌ கொள்ளை கொண்டு பல குடும்பங்களைக்‌ கெடுத்து விட்டார்கள்‌. சுயராஜ்யம்‌, விடுதலை, ஹோம்‌ ரூல்‌, உரிமை என்ப தாகச்‌ சொல்லி மக்களை ஏமாற்றி இவர்கள்‌ அரசியல்‌ உத்தியோகம்‌ பெற்று ஜட்ஜிகளாகவும்‌ வக்கீல்களாகவும்‌ வந்து விவகாரம்‌ என்கிற வழியில்‌ லஞ்சமாகவும்‌ பீசாகவும்‌ பெருங்குடி மக்களின்‌ செல்வங்களைக்‌ கொள்ளை அடித்து ஓட்டாண்டி ஆக்கிவிட்டார்கள்‌. இப்போது நமது நாட்டில்‌ பெரும்‌ பணக்காரர்கள்‌ யார்‌? குடியானவர்களுக்‌ கும்‌ ஜமீன்தாரர்களுக்கும்‌ இருந்த பூமிகள்‌ எல்லாம்‌ எங்கே? ஒரு பாகம்‌ மடம்‌, ஆச்சாரியார்‌, அர்ச்சகர்‌ என்கிற பார்ப்பனர்கள்‌ வசம்‌ மானியமாகவும்‌ மற்றொரு பாகம்‌ ஜட்ஜி, கலெக்டர்‌, வக்கீல்‌, நிர்வாகசபை மெம்பர்கள்‌, அரசாங்கத்திற்கு சிநேகிதர்கள்‌, ராஜ பக்தர்கள்‌, தேச பக்தர்கள்‌ என்கிற பார்ப்பனர்களுக்குமாக மாறி இருக்கிறதே அல்லாமல்‌ வேறு எங்கே இருக்கிறது? இன்றைக்கும்‌ நாளைக்கும்‌ தர்மம்‌ செய்ததாலும்‌ விவகாரம்‌ செய்ததாலும்‌ கெட்டுப்‌ போன குடிகளிடமிருந்து விற்கப்படும்‌ பூமிகளும்‌ ஜமீன்களும்‌ கோர்ட்‌ ஏலத்தில்‌ விடப்படும்‌ பூமிகளும்‌ ஜமீன்களும்‌ யார்‌ ஏலத்தில்‌ எடுக்கிறார்கள்‌? இன்றைய தினம்‌ லக்ஷாதிபதியாய்‌ இருக்கும்‌ பார்ப்பனர்களை மூன்று தலைமுறைக்கு முன்‌ அவர்கள்‌ எப்படி இருந்தார்கள்‌ என்று கொடி வழிப்‌ பட்டி எடுத்துப்‌ பார்த்தால்‌ ரிஷிமூலம்‌ நதி மூலம்‌ பார்ப்பது போல்தான்‌ இருக்கும்‌. ஆனால்‌ அவர்கள்‌ இந்த உயர்‌ நிலைக்கு வரக்‌ காரணமென்ன? என்பதற்கு இந்த காங்கிரசும்‌ மூட பக்தியு மல்லாமல்‌ வேறு என்ன காரணம்‌ சொல்ல முடியும்‌? 278. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 புண்ணியமும்‌ சுயராஜ்யமும்‌ ( புண்ணியம்‌ ) உண்மையாக பார்ப்பனருக்குக்‌ கொடுப்பது புண்ணியமானால்‌ பார்ப்பனருக்குக்‌ கொடுத்த குடும்பங்கள்‌ எல்லாம்‌ இன்று அரைக்‌ கஞ்சிக்கு ஆவலாய்‌ பறக்கக்‌ காரணம்‌ என்ன? உண்மையில்‌ காங்கிரசு சுயராஜ்ய மளிக்குமானால்‌ நாட்டு மக்களுக்கு வரியும்‌, அறியாமையும்‌, விவகாரம்‌ வில்லங்கங்களும்‌, அடிமைப்‌ போட்டியும்‌, தரித்திரமும்‌, தொழில்‌ குறைவும்‌ நாளுக்கு நாள்‌ விஷம்‌ ஏறுவது போல்‌ வளருவதற்குக்‌ காரணம்‌ என்ன? உதாரணமாக, தஞ்சாவூர்‌ மகாராஜா செய்த தர்மமும்‌ அவர்கள்‌ அந்த ஜில்லா பார்ப்பனர்‌ குடும்பங்களுக்கு விட்ட மானியமும்‌, கட்டின சத்திரங்களும்‌, அதில்‌ சாப்பிடும்‌ பார்ப்பனர்களின்‌ எண்ணிக்கையையும்‌ பார்த்தால்‌ மகாத்மா காந்திக்கும்கூட வயிறு வேகும்‌. அப்படிக்‌ கொடுத்த தஞ்சாவூர்‌ மகாராஜாவின்‌ ராஜாங்கம்‌ இன்று இருக்குமிடத்தைக்‌ காணோம்‌. சேரனும்‌, சோழனும்‌, பாண்டியனும்‌ செய்த தருமமும்‌, கட்டிய கோவிலும்‌, வெட்டிய ஆறுகளும்‌, விட்ட மானியங்களும்‌ இன்றும்‌ பார்க்கலாம்‌ நாளையும்‌ பார்க்கலாம்‌: அவர்‌: கள்‌ அரசாங்கமெங்கே? சந்ததி எங்கே? இன்னும்‌ எங்கள்‌ குடும்பத்திலும்‌ செய்த தர்மமும்‌ சமாராதனையும்‌ கொஞ்சமென்று சொல்ல முடியாது. குளிப்பும்‌, பூஜையும்‌, போடும்‌ நாமமும்‌ இன்னம்‌ ஒரு ஐந்தாறு தலைமுறைக்கு எங்கள்‌ பின்‌ சந்ததியார்‌ செய்யா விட்டாலும்‌ தாங்கும்படி அவ்வளவு செய்திருக்கிறார்கள்‌. என்ன ஆச்சுது? மாணிக்கம்போல்‌ சீமைக்குப்போய்‌ படித்துவிட்டு வந்த 22 வய துள்ள ஒரே பையனும்‌ மற்றும்‌ ஒரே பெண்ணும்‌ க்ஷயரோகத்தால்‌ முன்‌ பின்‌ மூன்று மாத வித்தியாசத்தில்‌ இறந்துபோனார்கள்‌. பார்ப்பனர்களுக்கு போளி, பேணி, லட்டு, ஜிலேபி, சேமியா பாயாசத்துடன்‌ சமாராதனை செய்து என்‌ தாயார்‌ தகப்பனார்‌ இடுப்பு கட்டிக்‌ கொண்டு ஆயிரக்கணக்கான எச்சிலை களைத்‌ தாங்களே எடுத்து எறிவார்கள்‌. வேறு யாராவது எடுத்தால்‌ அந்தப்‌ புண்ணியத்தில்‌ அவர்களுக்‌ கும்‌ பங்குபோய்விடுமாம்‌. அவ்வளவு அழுத்தத்‌ தன்மையோடு புண்ணி யம்‌ சம்பாதித்தார்கள்‌. என்ன பலன்‌ கண்டார்கள்‌? ஆயுள்‌ வளர்ந்ததா? சந்ததி வளர்ந்ததா? செல்வம்‌ வளர்ந்ததா? இரண்டு தங்கைகளுக்கும்‌ உள்ள ஒரே பெண்ணுக்கு 10 வயதில்‌ செல்லக்‌ கலியாணம்‌ செய்தார்கள்‌. அது சரியாய்‌ 60 வது நாளில்‌ தாலி அறுத்தது. அதற்கு மறுபடியும்‌ எங்கள்‌ குலத்தி லில்லாத வழக்கப்படி மறுவிவாகமும்‌ செய்து வைத்தேன்‌. மறுபடியும்‌ 15-வது வயதில்‌ தாலி அறுத்துவிட்டது. என்ன பாக்கியம்‌ கிடைத்தது. இதை எல்லாம்‌ சொன்னால்‌ அவரவர்‌ தலைவிதிக்கு யார்‌ என்ன செய்வார்கள்‌ என்று சொல்லிவிடுவார்கள்‌. அவரவர்‌ தலைவிதிப்படி நடக்கும்‌ காரியத்‌ திற்காக இந்த ஆட்களுக்கு சமாராதனை செய்வதும்‌ சத்திரம்‌ கோவில்‌ கட்டுவதும்‌ மானியம்‌ விடுவதும்‌ கல்விதானம்‌ கன்னிகாதானம்‌ பூமிதானம்‌ செய்வதும்‌ குடி அரசு - 1926 (2) 376 சக்கரவர்த்தி தலைபோட்ட தங்கப்பவுனால்‌ பாதபூஜை அட்டோத்திரம்‌ சஹஸ்திரோத்திரம்‌ செய்து அவர்களது கால்கழுவி தீர்த்தம்‌ சாப்பிடுவதும்‌ எதற்காக என்றுதான்‌ கேட்கிறேன்‌. அதுபோலவே சுயராஜ்யம்‌ என்னும்‌ பேரால்‌ பொது ஜனங்களை ஏமாற்றி வருஷம்‌ ஒருமுறை தேசியக்‌ கூட்டம்‌ என்று பல பார்ப்பனர்கள்‌ முக்கியஸ்தராயிருந்து கூடி மேடையில்‌ ஏறி தங்களை விளம்பரம்‌ செய்து கொண்டு பொது ஜனங்கள்‌ பேரால்‌ சர்க்காரில்‌ கோர்ட்டுகளையும்‌ உத்தியோ கங்களையும்‌ அதிகப்படுத்திக்கொண்டு தாங்களும்‌ தங்கள்‌ மக்கள்‌ மரு மக்கள்‌ அண்ணன்‌ தம்பி சுற்றத்தார்‌ ஆகிய இவர்கள்‌ 1000, 2000, 5000, 10000 ரூபாய்‌ சம்பளமுள்ள உத்தியோகங்களைப்‌ பெற்றுக்கொண்டு அது களுக்காக சர்க்காருக்கு ஏற்படும்‌ செலவுக்காக மறுபடியும்‌ மக்கள்‌ தலை யிலேயே தாங்க முடியாத அதிகவரி போட்டும்‌ இவ்வுத்தியோகங்கள்‌ இவர்‌ களுக்கு கொடுத்ததற்கு பதிலாக நம்‌ நாட்டிலிருந்து கோடிக்கணக்கான செல்‌ வம்‌ அந்நிய நாட்டிற்கும்‌ அந்நிய நாட்டு சாமான்கள்‌ நாம்‌ வாங்குவதன்‌ மூலம்‌ கொள்ளை அடிக்கப்பட்டு நாம்‌ சுயமரியாதையற்று பாப்பராய்‌ விடுகிறோம்‌. காங்கிரசை வளர விட்டால்‌ இன்னமும்‌, காங்கிரஸ்‌ வளர வளர பார்ப்பனர்‌ அதிகாரமும்‌ அவர்‌ களுக்கு உத்தியோகமும்‌ அவ்வுத்தியோகத்திற்கு ஏற்றதும்‌ தேசத்துக்கு துரோகமானதுமான படிப்பும்‌ ஜனங்களுக்கு அதிக வரியும்‌ வெள்ளைக்‌ காரருக்கு அதிகமான ஆதிக்கமும்‌ நாட்டில்‌ ஒற்றுமைக்‌ குறைவும்‌ துவேஷங்‌ களும்‌ ஒருவரையொருவர்‌ ஏமாற்றலும்‌ அடிமைக்குப்‌ போட்டிபோடலும்‌ ஆகிய கொடுமைகள்‌ அதிகப்படுமே அல்லாமல்‌, எல்லாவிதத்திலும்‌ நாட்டிற்கு ஒரு கடுகளாவாவது நன்மை இல்லை. காங்கிரசில்‌ நன்மை இருந்தால்‌ நன்மையிருந்தால்‌ மகாத்மாவும்‌ லாலா லஜபதிராயும்‌ காங்கிரஸ்‌ நிருவா கத்தை விட்டு ஓடுவார்களா? சுயராஜ்யக்‌ கட்சியை எதிர்ப்பார்களா? என்‌ பதை நன்றாய்‌ யோசியுங்கள்‌. உதாரணமாக, எல்லா இந்திய காங்கிரஸ்‌ ஏற்பட்ட பிறகுதான்‌ அரசாங்கத்திற்கு நாம்‌ செலுத்திய வரி அதிகமாயிற்று. காங்கிரசுக்குப்‌ பிறகு அதாவது, காங்கிரஸ்‌ ஏற்படுவதற்கு முன்னால்‌ நமது சர்க்காரார்‌. வருஷம்‌ 1-க்கு நம்மிடமிருந்து வசூல்‌ செய்த வரி 50 கோடி ரூபாய்க்‌ குள்ளாகவே இருந்தது. காங்கிரஸ்‌ ஏற்பட்ட பிறகு ஒன்றுக்கு மூன்றாய்‌ 150 277. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 கோடி ரூபாய்க்கு மேலாய்விட்டது. காங்கிரசுக்கு முன்னால்‌ ராணுவச்‌ செலவு வருஷம்‌1-க்கு 15 கோடியாயிருந்தது. காங்கிரசுக்குப்‌ பின்பு 76 கோடி வரை: யிலும்‌ ஏறி இப்போது ஒத்துழையாமையின்‌ பலனாய்‌ 52 கோடி ஆயிருக்‌ கிறது. குடியும்‌ காங்கிரசுக்கு முன்பு வருஷம்‌ ஒன்றுக்கு சர்க்காருக்கு வரவு இரண்டரைக்‌ கோடி ரூபாயிலிருந்தது. இப்போது இருபது கோடிக்கு வந்திருக்கிறது. ரயில்‌ சார்ஜ்ஜு விஷயத்திலும்‌ காங்கிரசுக்கு முன்னால்‌ மைல்‌ ஒன்றுக்கு ஒன்றரைக்‌ காசு வீதம்‌ இருந்தது. இப்போது நாலரைக்‌ காசுக்கு வந்து விட்டது. இம்மாதிரியாகவே கார்டு, கவர்‌. பத்திரம்‌, ஸ்டாம்பு, கோர்ட்‌ செலவு, அரிசி, பருப்பு, உப்பு, காற்று, தண்ணீர்‌, நெருப்பு வரையில்‌ காங்கிரசுக்கு முன்‌ எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்பதும்‌ கடைசியாய்‌ பார்ப்பனரல்லாதவர் நிலை காங்கிரசுக்கு முன்‌ எப்படி இருந்தது? பின்‌ எப்படி இருக்கிறது? என்று பார்த்தாலும்‌ நன்றாய்‌ விளங்கும்‌. ஆதலால்‌ இனி அரை: நிமிடமாவது நமது நாட்டில்‌ காங்கிரஸ்‌ இருப்பதைப்‌ போல்‌ நமக்கும்‌, நமது நாட்டிற்கும்‌ ஆபத்தான சாதனம்‌ வேறொன்றுமில்லை. இதுசமயம்‌ நமக்கு வேண்டியது அன்றியும்‌ இதுசமயம்‌ நமக்கு வேண்டியது சுயமரியாதையே ஒழிய பார்ப்பனர்‌ மூலம்‌ வரும்‌ மோக்ஷமும்‌ சுயராஜ்யமும்‌ அல்லவே அல்ல. ஆதலால்‌ வரப்போகும்‌ தேர்தலில்‌ உங்களுக்கு ஓட்டுச்‌ செய்ய இஷ்டப்பட்டால்‌, சுயராஜ்யம்‌ என்று சொல்லிக்கொண்டு உங்களிடம்‌ வந்து யார்‌ ஓட்டுக்‌ கேட்டாலும்‌ அவர்களை வடிகட்டின அயோக்கியர்கள்‌, தேசத்‌ துரோகிகள்‌, சுயகாரியப்‌ புலிகள்‌ என்று நினைத்துக்‌ கொள்ளுங்கள்‌. சுய மரியாதைக்கு என்று யார்‌ வந்து ஓட்டுக்‌ கேட்டாலும்‌ தாராளமாய்க்‌ கொடுங்‌ கள்‌. அதனால்‌ ஒரு சமயம்‌ நன்மை இல்லாவிட்டாலும்‌ தீமை இல்லை. சுயராஜ்யம்‌ என்று நினைத்து ஓட்டுச்‌ செய்வீர்களானால்‌ கொள்ளிக்கட்‌ டையை எடுத்து தலை யைச்‌ சொரிந்துக்‌ கொண்டதையே ஒக்கும்‌. உண்மை யான சுயராஜ்யம்‌ மகாத்மா திட்டத்தில்தான்‌ இருக்கிறது. உண்மையான சுயமரியாதை ஜஸ்டிஸ்‌ ககஷி திட்டத்தில்தான்‌ இருக்கிறது. நமது பார்ப்பன ரிடமோ அவர்கள்‌ கை வசமுள்ள காங்கிரசிடமோ சுயராஜ்யக்‌ கட்சியிடமோ பார்ப்பன ஆதிக்கத்‌ திட்டம்தான்‌ இருக்கிறது. ஆதலால்‌ ஏமாந்து விடாதீர்கள்‌ - தீபாவளியின்‌ போது ஏழைகளையும்‌ தொழிலாளர்களையும்‌ தேசத்தையும்‌ மறந்து இவர்களுக்கு துரோகிகளாகாமல்‌ கதரை உடுத்துங்கள்‌. குறிப்பு:1926 அக்டோபர்‌ கடைசி வாரத்திலும்‌ நவம்பர்முதல்‌ வாரத்திலும்‌ திருச்சி தஞ்சை, கும்பகோணம்‌, திருநெல்வேலி முதலிய இடங்களில்‌ நிகழ்த்திய சுயமரியாதைப்‌ பிரசார சொற்பொழிவுகள்‌. குடி அரசு - சொற்பொழிவு - 07.111926 குடி அரசு - 1926 (2) 378 சட்டசபைத்‌ தேர்தல்‌ அடுத்து வரப்போகும்‌ சட்டசபைத்‌ தேர்தல்‌ பிரசாரங்களைப்‌ பற்றி இதுவே கடைசித்‌ தடவையாக இருக்கும்‌. ஏனெனில்‌ அடுத்த திங்கட்‌ கிழமை தேர்தல்‌ நடக்கப்‌ போகிறது. தேர்தல்‌ பிரசாரம்‌ ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்‌ களானபடியால்‌ இவ்வளவு நாள்‌ எழுதாத விஷயங்கள்‌ ஒன்றும்‌ இன்று புதிதாக எழுதப்‌ போவதில்லை. சுருக்கமாகச்‌ சொல்லவேண்டு மானால்‌ தேர்தல்கள்‌ என்பது ஒரு பெரிய சூதாட்டத்திற்குச்‌ சமானமானதாகி விட்டது. தேர்தலில்‌ இறங்குகிறவர்களோ எவ்வெவ்‌ வழிகளில்‌ பாமர மக்களை: ஏமாற்றி வெற்றி பெறலாம்‌ என்பதில்‌ கருத்தாயிருக்கிறார்களே ஒழிய தேர்தலில்‌ வெற்றி பெறுவதன்‌ மூலம்‌ பொது ஜனங்களுக்கு எப்படி உழைக்கலாம்‌ என்பதைப்‌ பற்றிக்‌ கவலையே இல்லை. தேர்தலில்‌ வெற்றி பெற வேண்டியவர்களுக்குப்‌ பொய்யும்‌, ஏமாற்றலும்‌, தந்திரங்களும்‌, சூழ்ச்சி களும்‌, பணச்செலவும்தான்‌ யோக்கியாதாம்சங்களாய்ப்‌ போய்விட்டதே தவிர. பரோபகாரம்‌, சத்தியம்‌, நீதி இவைகள்‌ கொஞ்சமும்‌ யோக்கியதை அற்றதாய்ப்‌ போய்விட்டன. ஓட்டர்களும்‌ ஆடம்பரத்தையும்‌ விளம்பரத்‌ தையும்‌ தங்களது சுயநலத்தையுமே விரும்புகிறார்களே ஒழிய யோக்கியத்‌ தன்மை யையோ நாட்டின்‌ க்ஷமத்தையோ குலாபிமானத்தையோ கொஞ்ச மும்‌ கவனிப்பதில்லை.இம்மாதிரி தேர்தல்களாலும்‌ அபேக்ஷகர்களாலும்‌, L LT களாலும்‌ தேசத்திற்கோ மக்களுக்கோ குலத்திற்கோ என்ன நன்மை ஏற்படப்‌ போகின்றது என்பது நமக்கே விளங்கவில்லை. நம்நாட்டுத்‌ தேர்தலில்‌ இப்போது இருக்கும்‌ கட்சிகள்‌ எல்லாம்‌ பிராமணர்‌ பிராமண ரல்லாதார்‌ என்கிற இரண்டே கட்சிதான்‌. இதில்‌ பார்ப்பனர்களுக்கு உள்ள நோக்கமும்‌ யோக்கியதையும்‌ என்ன என்று பார்ப்போமானால்‌ பார்ப்பனர்‌ கள்‌ தேசம்‌, சுயராஜ்யம்‌, தியாகம்‌, மகாத்மா, சர்க்காரை எதிர்த்தல்‌ ஆகிய வார்த்தைகளைச்‌ சொல்லிக்‌ கொண்டும்‌ பார்ப்பனரல்லாதாரை தேசத்‌ துரோகிகள்‌, சர்க்கார்‌. அடிமைகள்‌, வகுப்புவாதிகள்‌ என்று சொல்லிக்‌ கொண்டும்‌ பொது மக்களை. ஏமாற்றி தாங்கள்‌ ஆதிக்கம்‌ பெறவேண்டும்‌ என்கிற ஒரே நோக்கத்தைத்‌ தவிர. வேறொன்றுமில்லை. இவை எல்லோருக்கும்‌ வெளிப்படையாய்த்‌ தெரிந்த விஷயமே அல்லாமல்‌ மறை வானவையல்ல. இதற்காக இவர்கள்‌ கையாளும்‌ வழிகளோ பொய்ப்‌ பிரசாரம்‌ செய்வதும்‌, எதிரி பேரில்‌ பழி சுமத்துவதும்‌, கூலி கொடுத்து ஆள்களை வைத்து எதிரிகளை வையச்‌ செய்வதும்‌, காலித்‌ தனங்கள்‌ செய்வ தும்‌, பணம்‌ கொடுத்து ஓட்டு வாங்குவதும்‌ ஆகியவைகளே முக்கியமானவை. பார்ப்பனரல்லாதாரின்‌ நோக்கமோ ஆயிரக்கணக்கான 379 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. வருஷங்களாய்‌ பார்ப்பனர்களால்‌ தாங்கள்‌ ஏமாற்றப்பட்டு வந்ததின்‌ காரண மாய்‌ சுயமரியாதையற்று சமத்துவமற்று மனிதத்‌ தன்மையற்று அடிமைத்‌ தனத்தில்‌ ஆழ்ந்து கிடப்பதிலிருந்து வெளியேற வேண்டும்‌ என்கிற ஒரே நோக்கத்தோடு எந்தெந்த வழிகளில்‌ பார்ப்பனர்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்களோ அவ்வழிகளை அடைத்தும்‌ அதற்கு எதெதை ஆயுதமாக உபயோகித்து வருகிறார்களோ அந்த ஆயுதங்களையும்‌ கைப்‌ பற்ற வேண்டுமென்பதே அவர்களது முயற்சியாகும்‌. இதுதான்‌ நாளைய தேர்தலின்‌ இரு கட்சியின்‌ தத்துவமும்‌ முடிவான லக்ஷியங்களுமாகும்‌. இந்த லகஷியத்தில்‌ நமது பார்ப்பனர்கள்‌ நம்மை இதுவரை ஏய்த்து வந்தது போல்‌ இனி ஏய்க்க முடியாது என்று தைரியமாய்ச்‌ சொல்லு வோம்‌. பாமர மக்கள்‌: ஏறக்குறைய பார்ப்பனர்களின்‌ நோக்கங்களையும்‌ தந்திரங்களையும்‌ அறிந்து கொண்டார்கள்‌ என்றே சொல்ல வேண்டும்‌. எதனால்‌ நாம்‌ இப்படிச்‌ சொல்லுகி றோம்‌ என்றால்‌ பார்ப்பனர்களுக்கும்‌ அவர்களது பிரசாரங்களுக்கும்‌ நாட்டில்‌ உள்ள மதிப்பைப்‌ பார்த்தாலே தெரியவரும்‌. தமிழ்நாட்டில்‌ எந்த ஊரிலானா லும்‌ கிராமத்திலானாலும்‌ ஒரு பார்ப்பனர்‌ தானாகப்‌ போய்‌ ஒரு கூட்டம்‌ கூட்டி பேசுவதற்கு யோக்கியதை யில்லாமல்‌ போய்‌ விட்டது. எங்கே போவதானா லும்‌ கூட ஒரு பார்ப்பனரல்‌ லாதார்‌ இருந்தால்தான்‌ இவர்கள்‌ பேச முடிகிறது. உதாரணமாக, சென்னை யில்‌ பேசக்‌ கூடிய பார்ப்பனர்கள்‌ எவ்வளவோ பெயர்கள்‌ இருந்தும்‌ இப்‌ பார்ப்பனரல்லாத ஆள்களுக்கு கூலி கொடுத்துத்‌ தான்‌ மேடைகளில்‌ பிரசாரம்‌ செய்யச்‌ செய்ய முடிகிறதே அல்லாமல்‌ பார்ப்பனர்கள்‌ மேடையில்‌ ஏறி பேச முடிவதில்லை. வெளியிடங்களிலும்‌ இவர்கள்‌ போய்‌ பேச ஆரம்பித்தால்‌ கலகம்‌ நடக்காமல்‌ இருப்பதும்‌ இல்லை. இது எல்லாம்‌ எதைக்‌ காட்டுகின்றன என்றால்‌ தேசத்தில்‌ இவர்களது யோக்கியதையைப்‌ பாமர ஜனங்கள்‌ அறிந்து கொண்டதையே காட்டுகின்றது. இதை அனுசரித்‌ துதான்‌ வரப்போகும்‌ தேர்தல்களின்‌ முடிவும்‌ ஏற்படப்‌ போகிறது. நமது எதிரிகள்‌ தங்கள்‌ முழு பலத்தையும்‌ கொண்டு வேலை செய்தது முக்கியமாய்‌ இரண்டு ஸ்தானங்களில்தான்‌. அதாவது, பனகால்‌ ராஜாவின்‌ ஸ்தானத்தில்‌ ஸ்ரீமான்‌ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌ அவர்‌. களை நிறுத்தியும்‌ ஸ்ரீமான்‌ ஏ.ராமசாமி முதலியார்‌ அவர்கள்‌ ஸ்தானத்தில்‌ ஸ்ரீமான்‌ ஒரு முத்துரங்க முதலியார்‌ என்பவரை நிறுத்தியும்‌ எவ்வளவோ பணச்‌ செலவும்‌ சூழ்ச்சியும்‌ செய்து போட்டிப்‌ போட்டு வேலை செய்து வந்தார்கள்‌. ஆனபோதிலும்‌ ஸ்ரீமான்கள்‌ பனகால்‌ ராஜாவுக்கும்‌, ஏ.ராமசாமி முதலியாருக்கும்‌ வெற்றி நிச்சயம்‌ என்பது உறுதியாகி விட்டது. மற்றும்‌ பல இடங்களிலும்‌ இது போலவே வெற்றி கிடைக்கப்‌ போகிறது என்பதிலும்‌ சந்தேகமில்லை. ஆனால்‌ ஒரு சில இடங்களில்‌ மாத்திரம்‌ பார்ப்பனர்‌ பொய்ப்‌ பிரசாரங்களுக்கு மதிப்பு இருக்கிறதாகத்‌ தோன்றுகிறது. அதுவும்‌ பார்ப்பனர்‌. கள்‌ நேரிட்டுச்‌ செய்வதாயில்லாமல்‌ பார்ப்பனரல்லாதாரைக்‌ கொண்டு செய்‌ விக்கும்‌ இடங்களில்தான்‌ பாமர ஜனங்கள்‌ ஏமாற்றமடைகிறார்கள்‌. இதுவரை: எந்தப்‌ பார்ப்பனராவது பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்கு அநுகூல மாய்‌ பிரசாரம்‌ குடி அரசு - 1926 (2) 380 செய்ய வந்திருக்கிறாரா? என்றால்‌ ஒருவர்‌ கூட இல்லை யென்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம்‌ இருந்தாலும்‌ தங்கள்‌ வகுப்பு விஷயத்தில்‌ எல்லோரும்‌ ஒன்று சேருவது அவர்‌ களிடமிருந்து நாம்‌ கற்றுக்‌ கொள்ளவேண்டிய விஷயம்‌. பார்ப்பனரல்‌ லாதாரிலோ இந்தக்‌ குணம்‌ குறைவு என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. கேவலம்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காக தங்கள்‌ குலத்தையும்‌ சுயமரியாதையையும்‌ விற்கும்‌ படியான இழிகுணம்‌ படைத்த ஜனங்கள்‌ இருப்பதானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே மானக்கேடான காரியம்‌. இம்மாதிரி கூலிக்கு மாரடிக்கும்‌ ஆள்கள்‌ நமது வகுப்பில்‌ இருக்கிற காரணத்தினாலேயேதான்‌ இவ்வருடத்‌ தேர்தலில்‌ நமது பார்ப்பனர்‌ இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்‌ செய்ய முன்‌ வந்தார்கள்‌. இல்லாதவரை இதற்குள்ளாக மூட்டைகளைக்‌ கட்டிக்‌ கொண்டு பஞ்சாங்கத்திற்கே புறப்பட்டிருப்பார்கள்‌. என்ன செய்யலாம்‌? இழி மக்களைப்‌ பெற்ற தாய்‌, அதன்‌ பலனை அடைந்துதான்‌ தீர வேண்டும்‌. ஆனபோதிலும்‌ இம்மாதிரி கூலித்தொண்டர்கள்‌ வார்த்தையில்‌ மயங்கி தங்களது ஓட்டுரிமையை பார்ப்பனர்களுக்கோ அல்லது அவர்களது கட்சியாகிய சுயராஜ்ய கட்சியார்களுக்கோ கொடுத்து தங்களது முன்னேற்றத்தை தடை செய்துக்‌ கொள்ள மாட்டார்கள்‌ என்றே நினைக்கிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 07.11.1926 281 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 சுயாரான்யக்‌ கட்சி பார்ப்பணர்‌ கட்சி என்பதற்கு உதாரணம்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு விரோதமாக வடநாட்டில்‌ லாலா லஜபதிராயவர்‌ களும்‌ பண்டித மாளவியா அவர்களும்‌ வேலை செய்து வருவது உண்மை. ஆனால்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ தேர்தல்களில்‌ தங்கள்‌ கட்சிக்கு ஆட்களை நிறுத்தியதில்‌ லாலா லஜபதிராயவர்களுக்கு விரோதமாய்‌ மாத்திரம்‌ நிறுத்தி யிருக்கிறார்களே யொழிய பண்டித மாளவியாவுக்கு எதிரியாய்‌ யாரையும்‌ நிறுத்தவேயில்லை. இதன்‌ காரணம்‌ என்னவென்றால்‌ லாலாஜி வருணாசிரம தர்மத்தில்‌ நம்பிக்கையும்‌ கவலையும்‌ இல்லாதவர்‌: பண்டிதரோ வருணாசிரம தர்மத்தை நிலை நிறுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிரந்தரப்படுத்தவே ஒவ்‌ வொரு நிமிடமும்‌ உயிர்‌ வாழ்பவர்‌. ஆதலால்‌ பண்டிதருக்கு எதிரியில்லா மல்‌ செய்துவிட்டு லாலாஜிக்கு மாத்திரம்‌ எதிரியை நியமித்திருக்கிறார்கள்‌. சுயராஜ்யக்‌ கட்சி பார்ப்பனர்‌ கட்சி என்பதற்கு புத்திசாலிகளுக்கு வேறு என்ன உதாரணம்‌ வேண்டும்‌. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 07.11.1926 குடி அரசு - 1926 (2) 382 காங்கிரஸ்‌ தலைவியாகிய ம்ரீமதி சரோளிணி தேவியின்‌ வாக்கு “னஸ்மூஸ்‌ கட்சியை நாண்‌ வாவேற்கிறேண்‌ “நான்‌ தென்னிந்திய பார்ப்பனர்களின்‌ யோக்கியதையை நன்றா யறிவேன்‌. அப்பொல்லாப்‌ பார்ப்பனர்களின்‌ கொடுமையினால்தான்‌ பார்ப்பன ரல்லாதாரியக்கம்‌ உண்டாக வேண்டியதாயிற்று. அவர்கள்‌ தங்களை உயர்‌. வாய்க்‌ கருதிக்கொள்ளும்‌ அகம்பாவத்தை நான்‌ பலமாய்‌ வெறுக்கிறேன்‌. பார்ப்பனரல்லாதாரியக்கம்தான்‌ எல்லா வகுப்பாரும்‌ சமமாய்‌ முன்னேற்‌ றமடைவதற்கு உதவியாயிருக்கிறது. எல்லா வகுப்பாருக்கும்‌ சமமான உரிமை: பங்கு கிடைக்குமட்டும்‌ இந்த பார்ப்பனரல்லாதாரியக்கம்‌ (ஜஸ்டிஸ்‌ கட்சி! உயிருடன்‌ இருக்க வேண்டியது மிகவும்‌ அவசியம்‌. ஆதலால்‌ இந்த பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்தை (ஜஸ்டிஸ்‌ கட்சியை! நான்‌ மனப்பூர்வமாய்‌ வரவேற்கிறேன்‌. பார்ப்பனரல்லாதார்‌ தங்களுடைய நிலை மையை அறிந்து நியாயமான உரிமை பெறுவதற்கு இது சமயம்‌ விழித்துக்‌ கொண்டதைப்‌ பற்றி நான்‌ மிகவும்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌” என பெல்‌ காமில்‌ 1924-ஹு கூடிய அகில இந்திய பிராமணரல்லாதார்‌ காங்கிரஸ்‌ மஹா நாட்டில்‌ தேசீய காங்கிரஸ்‌: தலைவியான ஸ்ரீமதி சரோஜினி தேவியே பேசி யிருக்கிறார்‌ களென்றால்‌ மற்றபடி அதன்‌ பெருமையைச்‌ சொல்ல வேண்டுமா? ஆதலால்‌ இத்‌ தேர்தலில்‌ சமத்துவத்திலும்‌ சுயமரியாதையிலும்‌ கவலையுள்ள யோக்கிய மான பார்ப்பரைல்லாதார்‌ யாருக்கு ஓட்டுச்‌ செய்ய வேண்டுமென்பதைப்‌ பற்றி நாம்‌ சொல்ல வேண்டியதில்லையென்றே நினைக்கிறோம்‌. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 07.1.1926 383 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யார்ப்பணர்கணால்‌ வந்த விணை மலையாளக்‌ குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள்‌. இனி தேவஸ்தான மசோதாவை ஒழிப்பதுதான்‌ பாக்கி. இனியும்‌ பார்ப்பனர்களுக்‌ காவது அவர்களால்‌ நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக்‌ கொடுப்பீர்களானால்‌ நமது கதி அதோ கதிதான்‌. மலையாளக்‌ குடிவார மசோதா சட்டசபையில்‌ நிறைவேற்றக்‌ கொண்டு. வந்த காலத்தில்‌ பார்ப்பன சட்ட மெம்பரான சர்‌. சி.பி. ராமசாமி ஐயரவர்கள்‌ ஆணவத்தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக்‌ கொண்டு நிராகரிக்கச்‌ செய்து அமுலுக்கு வராமல்‌ செய்து விடுவேன்‌ என்று வீரம்‌ கூறியது வாசகர்கள்‌ அறிந்திருக்கலாம்‌. இப்போது அவர்‌ சொன்னது போலவே சட்டசபையில்‌ பெரும்பான்மையோரால்‌ நிறைவேறின இச்‌ சட்டத்தை ஏதோ சில நொண்டிச்‌ சாக்குகளுடன்‌ கவர்னர்‌ பிரபு நிராகரித்து விட்டார்‌ . நமது நாட்டில்‌ வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின்‌ கீழ்‌ நாம்‌ பாசாணத்தில்‌ புழு இருப்பது போல்‌ காலந்தள்ள வேண்டியவர்களாயிருக்‌ கிறோம்‌. நம்முடைய மேன்மைகளும்‌ முன்னேற்றங்களும்‌ வெள்ளைக்‌ காரருக்கோ பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக்‌ கடுகளவு இடைஞ்‌ சல்‌ செய்வதாயிருந்தாலும்‌ கொஞ்சமும்‌ தயவு தாட்சண்யம்‌ இல்லாமல்‌ அடியோடு நசுக்கி விடுகிறார்கள்‌. அரசாங்கத்தார்‌ எந்தக்‌ கட்சி ஜெயிக்குதோ அந்தக்‌ கட்சியைத்‌ தான்‌ ஆதரிப்பார்களேயல்லாமல்‌ நியாயம்‌ சத்தியம்‌ என்பவை களைக்‌ கொஞ்சமும்‌ கவனிக்க மாட்டார்கள்‌.ஆதலால்‌ அடுத்த சட்டசபையில்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி வெற்றி பெறாமல்‌ போய்‌ பார்ப்பனர்‌ வெற்றிபெற ஏற்படுமானால்‌ பாக்கி இருக்கும்‌ தேவஸ்தான மசோதாவையும்‌ கண்டிப்பாய்‌ ஒழித்து விடுவார்கள்‌. இதை உத்தேசித்தாவது இனியும்‌ பார்ப்பனர்களுக்‌ காவது அவர்களால்‌ நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக்‌ கொடுப்பீர்களானால்‌ நமது கதி அதோ கதிதான்‌. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 07.11.1926 குடி அரசு - 1926 (2) 384 சுயாாஸ்யக்‌ கட்சிக்கு தேசத்தினுன்ன செல்வாக்கு “ஒசன்றவிடவம௰ல்லாம்‌ சிறுமை” சுயராஜ்யக்‌ கட்சியார்‌ இதுவரை தங்களுக்குத்‌ தேசத்தில்‌ பிரமாத மான செல்வாக்கு இருப்பதாகவும்‌ செல்லுமிடங்களிலெல்லாம்‌ தங்கள்‌ கட்சிக்குப்‌ பெரிய ஆதரவு இருக்கிறதென்றும்‌ பறையடித்துக்‌ கொண்டு வந்தது வாசகர்கள்‌ அறிந்திருக்கலாம்‌.ஆனால்‌, இதனுடைய உண்மை கடந்த ஒருமாத காலமாக ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி, ஏ.ரெங்கசாமி அய்யங்கார்‌, பண்டித நேரு முதலிய பார்ப்பனர்கள்‌ பிரசாரத்திற்கென்று எங்கெங்கு செல்லுகிறார்களோ அங்கெல்லாம்‌ இவர்களது இரகசியம்‌ வெளியாகி பொது ஜனங்களால்‌ கேட்கப்பட்ட கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்லமுடியாமல்‌ கூட்டத்தைக்‌ கலைத்து விட்டு ஓடின வண்ணமாகவே இருக்கிறார்கள்‌. உதாரணமாக, கும்பகோணத்தில்‌ ஸ்ரீமான்‌ ரெங்கசாமி அய்யங்கார்‌ அவர்கள்‌. பொதுஸ்தலங்களில்‌ கூட்டம்‌ போட முடியாமல்‌ ஒரு கட்டிடத்திற்குள்‌ கூட்டம்‌. போட்டும்‌ அங்கும்‌ பொது ஜனங்கள்‌ ஒரு அக்கிரா சனரைப்‌ பிரேரேபிக்க பார்ப்பனர்கள்‌ வேறு ஒருவரைப்‌ பிரேரேபிக்க கடைசியாய்‌ அய்யங்கார்‌. போலீசார்‌ தயவு தேட வேண்டியதாயிற்று. மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி அய்யரவர்கள்‌ சென்ற காலத்திலும்‌ கூட்டங்களிலும்‌ பொது ஜனங்கள்‌ கேட்கும்‌ கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்ல முடியாமல்‌ கூட்டத்தைக்‌ கலைத்து விட்டு ஓடும்படியாய்‌ விட்டது. பண்டித நேரு அவர்களும்‌ செல்லுகிற இடங்களில்‌ கூட்டங்களில்‌ கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்ல முடியாமல்‌ திணறுகிறார்‌. இவைகள்‌ “சுதேசமித்திரன்‌” பத்திரிகையில்‌ பார்த்தால்‌ தென்படாது. திராவிடன்‌, வட நாட்டுப்‌ பத்திரிகை. கள்‌ ஆகியவைகளில்‌ காணலாம்‌. இவர்கள்‌ பேச்சைக்‌ கேட்க இஷ்டமில்லாத ஜனங்களும்‌ மற்றும்‌ கேட்கும்‌ கேள்விகளால்‌ இவர்‌ களது யோக்கியத்தையே வெளியாக்கும்‌ ஜனங்களும்‌ இவர்களுக்கு ஓட்டுப்‌ போட்டு சட்ட சபைக்கு அனுப்புவார்களா? பொது ஜனங்களே யோசித்துப்‌ பார்க்கட்டும்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 07.11.4926 385 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பனகால்‌ அரசர்‌ வவற்றி கனவான்களே! பார்ப்பனரல்லாதார்‌ கட்சித்‌ தலைவரான கனம்‌ பனகால்‌ அரசரின்‌ வெற்றிக்காக இக்கூட்டம்‌ கூட்டி நாம்‌ கொண்டாட வேண்டுமென்பது அவ்வ ளவு அவசியமானதல்ல என்பது எனது அபிப்பிராயம்‌. ஆனால்‌ நமது முன்னேற்றத்திற்கு எதிரிகளாயுள்ளவர்கள்‌ நமது பனகால்‌ அரசர்‌ வெற்றிக்குத்‌ தடையாக செய்த சூழ்ச்சிகளும்‌, முயற்சிகளும்‌, அக்கிரமமான செய்கை: களும்‌ பொதுமக்களின்‌ உணர்ச்சியைப்‌ பலமாகக்‌ கிளப்பி விட்டுவிட்டது. அதுமாத்திரம்‌ அல்லாமல்‌ “பனகால்‌ வீழ்ந்தார்‌, பார்ப்பனரல்‌ லாதார்‌ கட்சிக்கு சாவு மணி” என்பதாகவும்‌, மற்றும்‌ மேடைகளில்‌ பேசும்‌ சோமாறிகள்‌ “பனகாலை வெட்டிப்‌ புதைத்தாகிவிட்டதென்றும்‌ கொள்ளி வைத்தாகி விட்டதென்றும்‌ பலமாதிரி லுச்சத்தனமாகப்‌ பேசி வந்ததாலும்‌ சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ என்று சொல்லுபவர்களில்‌ சிலரும்‌ அவரைப்‌ பற்றி மிகுதியும்‌ ஈனத்தனமாய்‌ பேசி வந்ததாலும்‌ பார்ப்பனரல்லாத பெருவாரி மக்களுக்கு பனகால்‌ அரசரிடம்‌ ஒருவித அன்பு ஏற்பட இடம்‌ கொடுத்தது. அதற்காக கொண்டாட வேண்டியதாயிற்று. உதாரணமாக, நானும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.ராமநாதன்‌ அவர்களும்‌ மதுரை பிளாட்பாரத்தில்‌ ரயில்‌ வண்டியிலி ருந்தபடியே சில கனவான்களோடு பேசிக்‌ கொண்டிருக்கையில்‌ எங்கள்‌ அறைக்கு அடுத்த அறையில்‌ இருந்த ஒரு பார்ப்பனத்‌ “தலைவர்‌” மற்றொரு பார்ப்பனத்‌ தலைவரோடு” பேசிக்‌ கொண்டிருக்கையில்‌ **அவனொரு முட்டாள்‌, அயோக்கியன்‌; அவனை அடக்கநீரே தக்கவர்‌; அவன்‌ ஒழிந்தால்‌ அந்த ஸ்தானத்திற்கு நீங்கள்தான்‌ தகுந்தவர்‌” என்று இம்மாதிரியாக இன்னும்‌. அநேக அல்ப வார்த்தைகளால்‌ குடிகாரர்‌ வெறிகாரர்‌ பேசுவது போல்‌ பேசினார்‌. அந்த மதுரைத்‌ “தலைவருக்கு” இது பிடிக்காமல்‌ தனது அருவருப்‌ பைக்‌ கூட காட்டினார்‌. இன்னும்‌ எத்தனையோ இதுபோல்‌ நடந்தன. இவ்வளவு பெயர்களால்‌ வசவு கேட்டவரும்‌ ஒழிந்து போனார்‌; செத்துப்‌ போனார்‌; குழியில்‌ புதைக்கப்பட்டு போனார்‌ என்று சொல்லப்பட்ட வருமான ஒருவர்‌ “உயிரோடிருக்கிறார்‌, பிழைத்து விட்டார்‌” என்கிற செய்தி யைக்‌ கேட்டால்‌ சந்தோஷப்படாமல்‌ இருக்க முடியுமா? இது ஒருபுறமிருந்‌ தாலும்‌ தேர்தல்‌ விஷயத்திலும்‌ நமது சுயமரியாதைக்கு எதிரிகளான பார்ப்பனர்‌. பனகாலைத்‌ தோற்கடித்து விட்டால்‌ தங்கள்‌ ஆதிக்கம்‌ நிரந்தரமாய்‌ நிலை குடி அரசு - 1926 (2) 386 நிறுத்தப்பட்டுவிடும்‌ என்கிற அபிப்பிராயத்‌ தின்‌ பேரில்‌ பனகாலை வெற்றி பெறாமல்‌ செய்வதற்குப்‌ பட்ட பாடுகள்‌ கணக்கு வழக்கில்லை என்பதும்‌ உங்கள்‌ எல்லோருக்கும்‌ தெரியும்‌. ஐகோர்ட்‌ ஜட்ஜிகள்‌, ஜில்லா ஜட்ஜிகள்‌, சப்‌ ஜட்ஜிகள்‌, ஜில்லா கலெக்டர்‌, அரசாங்க நிருவாகசபை மெம்பர்கள்‌ ஆகிய பெரிய உத்தியோகமுள்ள கூட்டங்களில்‌ பலரும்‌, போலீசு நிர்வாக உத்தியோக கூட்டங்களில்‌ பலரும்‌, பெருத்த லேவாதேவிக்‌ கூட்டங்களில்‌ பலரும்‌ ஒன்று சேர்ந்து ஜமீன்தார்‌ களின்‌ ஓட்டுகளை ஸ்ரீமான்‌ அல்லாடி அய்யருக்கு வாங்கிக்‌ கொடுப்பதற்‌ காக பட்ட பாடுகள்‌ இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாதென்று கேள்விப்‌ பட்டேன்‌. இன்னும்‌ எத்தனை ஜமீன்தார்களின்‌ விவகாரத்தைக்‌ காட்டி மிரட்டியும்‌, ஆசை வார்த்தைச்‌ சொல்லியும்‌, எத்தனை ஜமீன்தார்கள்‌ கடனைக்‌ காட்டி மிரட்டியும்‌ ஆசை வார்த்தைச்‌ சொல்லியும்‌, கொடுமை செய்தும்‌ ஓட்டுகள்‌ வாங்கப்‌ பிரயத்தனப்பட்டதையும்‌ கேள்விப்‌ பட்டேன்‌. இவைகள்‌ பொய்யானாலும்‌ சரி மெய்யானாலும்‌ சரி இவ்வளவுக்கும்‌ தப்பி வெற்றி பெற்று விட்டார்‌ என்றால்‌ கேட்போருக்குக்‌ கொண்டாட்டம்‌ ஏற்படுமா? ஏற்படாதா? இவ்வளவுதான்‌ கொண்டாட்டத் திற்கு காரணமே யல்லாமல்‌ பனகால்‌ சட்டசபை மூலம்‌ நமக்கு வேண்டியதை யெல்லாம்‌ சாதித்து விடுவார்‌ என்று எனக்கு எள்ளளவும்‌ நம்பிக்கை கிடையாது. இவர்கள்‌ போன்றவர்கள்‌ தோல்வியுற்றால்தான்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌ விழிப்பார்கள்‌. சட்டசபையைப்‌ பற்றி எனது அபிப்பி ராயம்‌ தங்களுக்குத்‌ தெரியும்‌. சட்ட சபையில்‌ ஆகிற காரியம்‌ ஒருபுற மிருந்தாலும்‌ சட்டசபைத்‌ தேர்தல்‌ முறையே நம்ம நாட்டுக்குக்‌ கேடானது என்பது எனது பலமான அபிப்பிராயம்‌. இம்மாதிரி தேர்தல்‌ மூலம்‌ பிரதிநிதித்‌ துவம்‌ அளிப்பது என்பது கலால்‌ இலாக்கா மூலம்‌ குடியை ஒழிப்பது என்பது போலத்தான்‌ ஏற்படும்‌. இத்தேர்தல்‌ முறை நமது நாட்டுக்கு வருமுன்‌ மக்களி டை இவ்வளவு ஒழுக்க ஈனமும்‌ கண்ணியக்‌ குறைவும்‌ இல்லவே இல்லை... உதாரணமாக, இந்த சட்டசபைப்‌ பிரதிநிதித்துவம்‌ சுமார்‌ முப்பது வருஷங்களுக்கு முன்னால்‌ இருந்த மாதிரியானது இப்போது இருந்ததைப்‌ போலல்லாமல்‌ எவ்வளவு கண்ணியமானதாயிருந்தது. அதாவது, சென்னை மாகாணத்திற்கு மூன்றே சட்டசபை மெம்பர்கள்‌ தெரிந்தெடுக்கப்படுவார்கள்‌. அவர்களும்‌ கூடியவரையில்‌ ஸ்ரீமான்கள்‌ சேலம்‌ சி.விஜயராகவாச்சாரியார்‌, ரத்தினசபாபதி முதலியார்‌ , ஜம்பு லிங்க முதலியார்‌ போன்ற கூடுமானவரை கண்ணியமுள்ளவர்களாய்‌ இருந்தார்கள்‌. இவர்களைத்‌ தெரிந்தெடுக்கும்‌ ஓட்டர்கள்‌ தொகையோ எல்லாம்‌ சேர்ந்து மாகாணத்திற்கே சுமார்‌ 100 பேர்கள்‌ தான்‌ இருப்பார்கள்‌. அதாவது, ஒவ்வொரு முனிசிபல்‌ சபைக்கு ஒரு ஓட்டு வீதம்‌ ஜனப்‌ பிரதிநிதி சபைகளுக்கு ஓட்டு இருந்து வந்தது. இதனால்‌ பணம்‌ கொடுத்து ஓட்டு வாங்கவும்‌ பணம்‌ வாங்கி ஓட்டுக்‌ கொடுக்கவும்‌ வழியில்லாமல்‌ இருந்தது. அதற்குப்‌ பிறகு 1910 -ல்‌ ஏற்பட்ட சீர்திருத்தம்‌ 8 ஜில்லாவுக்கு 1 மெம்பர்‌ என்பது மாறி 3 ஜில்லாவுக்கு 1 மெம்பர்‌ வீதமும்‌, 8 ஜில்லாவுக்கு முப்பது, நாற்பது ஓட்டர்கள்‌ என்பது மாறி 3 ஜில்லாவுக்கு 300 287 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஓட்டர்கள்‌ வீதமும்‌ ஏற்பட்டது. அந்த ஓட்டர்கள்‌ குறைந்த அளவு ஞானம்‌ உள்ளவர்களாகவாவது இருந்தார்கள்‌. எப்படியென்றால்‌ தாலூக்காபோர்டு மெம்பர்‌, முனிசிபல்‌ கவுன்சிலர்‌, ஜில்லா போர்டு மெம்பர்‌ என்கிற ஏதாவது ஒரு யோக்கியதாம்சம்‌ உடையவர்‌ களாகவே இருந்தார்கள்‌. இந்தத்‌ தொகுதி யிலும்‌ ஓட்டர்களை ஏமாற்ற முடியாமலும்‌ கணக்குப்பிள்ளை, மணியக்கார்‌, வாத்தியார்‌, பிரசாரகர்‌ முதலிய தரகர்களுக்கு பணம்‌ கொடுத்து ஓட்டுச்‌ சேகரிக்க முடியாமலும்‌ கூடியவரை வெகு சிலரே பணத்திற்கு ஆசைப்படத்‌ தக்கதாகவும்‌ வெகுசிலரே கொடுக்கத்‌ தக்கதாகவும்‌ இருந்து வந்தது. இப்போது 1920 வருஷத்திய சீர்திருத்தத்தில்‌ 3 ஜில்லாவுக்கு ஒருவர்‌ மெம்பர்‌ இருந்தது போய்‌ ஒரு ஜில்லாவுக்கு 3 மெம்பர்‌ வீதமும்‌, மூன்று ஜில்லாவுக்கு 300 ஓட்டர்கள்‌ இருந்தது மாறி ஒரு ஜில்லாவுக்கு எழுபது ஆயிரம்‌ ஓட்டர்கள்‌ வீதமும்‌ ஏற்பட்டதின்‌ பலனாய்‌ ஏய்க்க சக்தி படைத்தவனும்‌, பணம்‌ செலவு செய்ய சக்தி படைத்தவனும்‌ சட்டசபைக்குப்‌ பிரதிநிதியாகத்தக்க யோக்கிய தையாய்‌ முடிந்து விட்டது. 2 அணா கொடுத்தால்‌ தங்கள்‌ வோட்டுகளை யாருக்கு வேண்டுமானாலும்‌ கொடுக்கத்தக்கவர்களாகவும்‌ ஒரு குடம்‌ கள்ளுக்கு 30 அல்லது 40 ஓட்டுகள்‌ கிடைக்கும்படியாகவும்‌ வோட்டர்‌ நிலை மை ஏற்பட்டுப்‌ போய்விட்டது. இப்படி நான்‌ சொல்லுவதால்‌ 30 வருஷத்‌ திற்கு முன்‌ சட்டசபை மூலம்‌ நமக்கு கிடைத்து வந்த நன்மை இப்போது போய்விட்டது என்று சொல்லவரவில்லை. அதுவும்‌ உபயோகமில்லாதது. ஆனாலும்‌ சட்டசபைத்‌ தேர்தல்‌ முறையில்‌ அபேக்ஷகர்கள்‌ யோக்கியதையும்‌ ஓட்டர்கள்‌ யோக்கியதையும்‌ மிகுதியும்‌ கேவலப்பட்டு விட்டதோடு தேசத்தில்‌ மக்களிடை அயோக்கியத்தனமும்‌ நாணயக்‌ குறைவும்‌ பரவு வதற்கு இம்முறைகள்‌ அதிக ஆஸ்பதமாயிருக்கிறதென்றே சொல்லுகிறேன்‌. இனியும்‌ காங்கிரசோ சுயராஜ்யக்‌ கட்சியோ வாங்கிக்‌ கொடுக்கப்‌ போகும்‌ அடுத்த சீர்திருத்தத்தில்‌ மனிதப்‌ பிறவியாய்‌ பிறந்து 20 வயதிற்கு மேற்பட்ட ஆண்‌, பெண்‌ சகலருக்கும்‌ ஓட்டுரிமையும்‌ அபேக்ஷக உரிமையும்‌ வழங்கு வது என்று வந்துவிட்டால்‌ தேசத்தில்‌ எவ்வளவு பித்தலாட்டம்‌, சூழ்ச்சி, அயோக்கியத்தனம்‌, நாணயக்‌ குறைவு முதலிய ஒழுக்க ஈனங்கள்‌ ஏற்படும்‌. என்பதை நீங்களே யோசித்துப்‌ பாருங்கள்‌. நான்‌ இப்படிச்‌ சொல்லுவதால்‌ மக்களுக்கு சுதந்திரம்‌ வேண்டாமென்று சொல்லுவதாக யாரும்‌ நினைக்கக்‌ கூடாது. மக்களை கண்ணியக்‌ குறைவிலும்‌ ஒழுக்க ஈனத்திலும்‌ கொண்டு வந்துவிடும்‌ சுதந்திரங்கள்‌ வளர்ந்து கொண்டே போனால்‌ மக்கள்‌ கதி என்ன ஆவது? இத்தேர்தல்‌ மூலம்‌ உண்மையான சுதந்திரம்‌ வருவதாயிருந்தால்‌ முதலாவது நமது சுயமரியாதைக்கும்‌ சுதந்திரத்திற்கும்‌ பிறவி எதிரிகளான இப்பார்ப்பனர்கள்‌ சுதந்திரம்‌ வேண்டுமென்று சர்க்காரை கேட்டிருப்பார்‌ களா? கேட்டாலும்‌ அவர்களது பங்காளிகளான வெள்ளைக்காரர்கள்‌ கொடுத்திருப்‌ பார்களா? என்பதை நீங்களே நன்றாய்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌, சுதந்திரம்‌ கொடுப்பதற்கும்‌ ஓட்டுரிமை கொடுப்பதற்கும்‌ சர்க்காருக்காவது பார்ப்பனர்‌. களுக்காவது நமக்கு வேண்டியது இன்னது என்பது தெரியாதா? மதுபா குடி அரசு - 1926 (2) 388 னத்தை நிறுத்த சட்டசபை மூலம்தான்‌ சண்டை போட வேண்டுமா? உத்தி யோகம்‌ கொடுக்க சட்டசபை மூலம்தான்‌ கேட்க வேண்டுமா? தீண்டாமை ஒழிய சட்டசபையில்தான்‌ தீர்மானம்‌ கொண்டுவர வேண்டுமா? 150 வருஷமாய்‌ நம்மை ஆண்ட ஒரு அரசாங்கத்திற்கு நமக்கு வேண்டியதை சட்டசபை மூலம்‌ கேளுங்கள்‌ என்றால்‌ இது போகாத ஊருக்கு தடம்‌ காட்டுவதேயல்லாமல்‌ வேறென்ன? “கொக்குத்‌ தலையில்‌ வெண்ணெய்‌ வைத்து” அது உருகி கண்ணை மூடும்போது அதை பிடித்துக்‌ கொள்ளலாம்‌ என்பது போலில்லையா? உண்மையாய்‌ சர்க்காரும்‌ பார்ப்பனரும்‌ செய்ய வேண்டுமென்று கருதினால்‌ சட்டசபை இல்லாமல்‌ செய்ய முடியாதா? அதுதான்‌ அப்படி என்றாலும்‌ உண்மையாகவே இப்போது சட்டசபை மெம்பர்களுக்கு என்ன யோக்கியதையைக்‌ கண்டு ஓட்டர்கள்‌ ஓட்டு செய்கிறார்கள்‌ என்பதையாவது பாருங்கள்‌. ஒரு மெம்ப ருக்கு ரோட்டு மேஸ்திரி ஓட்டுப்‌ போடச்‌ சொன்னார்‌ என்பதும்‌, மற்றொரு மெம்பருக்கு வக்கீல்களும்‌ வக்கீல்‌ குமாஸ்தாக்களும்‌ ஓட்டுப்‌ போடச்‌ சொன்னார்கள்‌ என்பதும்‌, மற்றொரு மெம்பருக்கு கவுண்டர்‌ ஓட்டுப்‌ போடச்‌ சொன்னார்‌. என்பதும்‌, மற்றொரு மெம்‌ பருக்கு பட்டக்காரர்‌ ஓட்டுப்போடச்‌ சொன்னார்‌. என்பதும்‌ ஆகிய இவைகள்‌ தானே யோக்கியதையாய்‌ இருக்கிறதே அல்லாமல்‌ வேறென்ன? இது தவிர இந்த மெம்பர்களும்‌ ஓட்டுப்‌ பெற எவ்வளவு பொய்யும்‌ புளுகும்‌ அளக்க வேண்டியிருந்தது. எவ்வளவு அக்கிரமங்கள்‌ செய்ய வேண்டி இருக்கிறது? சட்டசபை வேலையான பிறகு இந்த ஓட்டர்களுக்கும்‌ மெம்பர்களுக்கும்‌ மறு தேர்தல்‌ வரை ஏதாவது சம்பந்தமுண்டா? எந்த ஓட்டரையாவது மெம்பர்களுக்கு அடையாளம்‌ தெரியுமா? இந்த ஓட்டர்களின்‌ தேவை இன்னது என்று மெம்பர்களுக்குத்‌ தெரியுமா? மெம்பர்களின்‌ சக்தி, யோக்கியதை, அவர்‌ களது எண்ணம்‌ இன்னது என்று ஓட்டர்களுக்குத்‌ தெரியுமா? என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. வீணாய்‌ நமது மக்களை பிரித்து வைத்து அவர்‌ களை கண்ணியக்‌ குறைவில்‌ பழக்கி ஏமாற்றிப்‌ பிழைக்க சர்க்காரும்‌ பார்ப்‌ பனரும்‌ சேர்ந்து செய்த சூழ்ச்சியில்‌ நமது மக்கள்‌ அறியாமல்‌ சிக்கிக்‌ கொண்டு வெளியேற வகை தெரியாமல்‌ நாசமாய்ப்‌ போகிறார்களே அல்லா மல்‌ இத்தேர்தலால்‌ வேறு என்ன நடக்கிறது. இவ்வித தேர்தல்‌ முறைகளை இந்நிலையில்‌ வளரவிடுவது நமது நாட்டுக்குப்‌ பெருங்‌ கேடாகுமென்று மறுமுறையும்‌ சொல்லுகிறேன்‌. நிற்க, தேர்தல்‌ யோக்கியதைக்கு படித்தவர்கள்‌ படியாதவர்கள்‌ என இரண்டு பிரிவுகள்‌ சொல்லிக்‌ கொள்ளப்படுகிறது. நமது நாட்டில்‌ படித்தவர்‌. களுக்கும்‌, படியாதவர்களுக்கும்‌ என்ன தாரதம்மியம்‌ இருக்கிறது. படிக்காத வன்‌ என்பவன்‌ குற்றம்‌ செய்கிறான்‌ என்று வைத்துக்‌ கொண்டால்‌ படித்தவன்‌ என்பவன்‌ அக்குற்றத்திற்கு தக்க தண்டனையடையாமல்‌ செய்து விடுவித்து, மறுபடியும்‌ அதே குற்றத்தைச்‌ செய்யத்‌ தூண்டுகிறான்‌. குற்றம்‌ செய்தவன்‌ தண்டனை அடையத்தக்க நீதி நமது நாட்டில்‌ 389 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. வழங்கினால்‌ இவ்வளவு குற்றங்கள்‌ நமது நாட்டில்‌ வளருமா? இதற்கு இடையூறாயிருப்பவர்கள்‌ படித்தவர்களா? படிக்காதவர்களா? என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. ஒரு வக்கீல்‌ ஒரு சமயத்தில்‌ தனது பெருமையை சொல்லிக்‌ கொள்ளும்போது 22 தடவை கொலை செய்தவனை 22 தடவை தப்பித்து வைத்தேன்‌ என்று சொல்லிக்‌ கொண்டாராம்‌. இதுதான்‌ படித்தவர்‌. களின்‌ மேன்மை. இன்னமும்‌ படித்தவர்கள்‌ செய்யும்‌ அக்கிரமங்களையும்‌ படியாதவர்கள்‌ செய்யும்‌ அக்கிரமங்களையும்‌ பார்த்தால்‌ படித்தவர்களில்‌ 100- க்கு 90 பேர்‌ அயோக்கியர்கள்‌ இருந்தால்‌, படியாதவர்களில்‌ 100-க்கு 10 கூட அகப்‌ படமாட்டான்‌. இம்மாதிரியான படிப்பை படிப்பு என்று சொல்லி அதற்கு, யோக்கியதை கொடுத்து வந்தால்‌ அந்த நாடு ஒழுக்கமடையுமா? யோக்கிய மடையுமா? ஆதலால்‌ தற்கால யோக்கியதையும்‌ தேர்தலும்‌ தேச க்ஷேமத்தின்‌ பிரதிநிதித்துவத்திற்கு யோக்கியமானதல்ல என்பதே நமதபிப்‌ பிராயம்‌. தேச க்ஷேமத்திற்கு வேலை செய்பவர்களுக்கு சட்ட சபையில்‌ ஒரு வேலையும்‌ இல்லை. இந்த ஜில்லாவுக்கு இவ்வருஷம்‌ பிரதிநிதிகளாய்‌ நிற்கும்‌ 4 மெம்பர்‌. களும்‌ செய்த பணச்‌ செலவும்‌ பட்ட கஷ்டங்களும்‌ சட்ட சபைத்‌ தேர்தலுக்கு செலவு செய்யாமல்‌ ஓட்டர்களுக்கு ஓட்டின்‌ தன்மையை படிப்பிப்பதிலோ உண்மையான பொது நல சேவையைச்‌ செய்வதிலோ செலவழித்திருந்தால்‌ ஒரு வருஷத்தில்‌ இந்த ஜில்லாவுக்கு எவ்வளவோ நன்மைகள்‌ ஏற்பட்டி ருக்கும்‌ என்றே சொல்லுவோம்‌. ஆதலால்‌ பனகால்‌ ராஜாவின்‌ வெற்றி விஷயத்தில்‌ நமது பார்ப்பனர்கள்‌ எண்ணம்‌ பலிக்க வில்லை என்பதைப்‌ பொறுத்தவரை நாம்‌ திருப்திக்‌ கொள்ள வேண்டிய தோடு நமது முற்போக்‌ குக்கு இடையூறாக எவ்வளவு தூரம்‌ நமது பார்ப்பனர்‌ கள்‌ முயற்சி செய்கிறார்‌. கள்‌ என்பதை பாமர ஜனங்களும்‌ தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாய்‌ ஏற்பட்டது என்பதைப்‌ பொறுத்தவரையும்தான்‌ கொண்டாடத்தக்கதே அல்லா மல்‌ நாட்டிற்கோ, சமூகத்திற்கோ பிரமாதமான நன்மை எதுவும்‌ இதனாலேயே உண்டாகி விடாது. சட்டசபை அங்கத்தினர்‌ என்பது சர்க்கார்‌ உத்தியோகம்‌, பட்டம்‌ முதலியதுகள்‌ போல ஒரு பதவியே அல்லாமல்‌ வேறல்ல. உத்தி யோகம்‌ பெறுவதற்கும்‌ பட்டம்‌ பெறுவதற்கும்‌ சர்க்கார்‌ உத்தியோகஸ்தர்‌. களுக்கும்‌ நிர்வாக அதிகாரிகளுக்கும்‌ பணம்‌ செலவு செய்ய வேண்டும்‌. சட்டசபை மெம்பர்‌ பதவி பெறுவதற்கு பிரசாரகர்களுக்கும்‌ தரகர்களுக்கும்‌ ஓட்டர்களுக்கும்‌ பணம்‌ செலவு செய்ய வேண்டும்‌. இவ்வளவுதான்‌ வித்தியாசமே ஒழிய வேறொன்றும்‌ பிரமாத வித்தியாசமில்லை. அதிக செலவில்லாமல்‌ இப்பதவி கிடைப்பதானால்‌ ஏன்‌ நம்ம வருக்கே கிடைக்கக்‌ கூடாது என்று பார்ப்பனரல்லாதார்‌ ஆசைப்பட பாத்தியமுண்டு என்பதையும்‌ ஞாபக மூட்டுகிறேன்‌. குறிப்பு:-10.117926,இல்‌ கோவை டவுன்ஹாவில்‌ நடைபெற்ற பனகால்‌ அரசர்‌: வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியில்‌ ஆற்றிய உரை. குடி அரசு - சொற்பொழிவு - 14.11.1926 குடி அரசு - 1926 (2) 390 ககூஷிப்‌ பாட்டு யார்ப்பணப்‌ பத்திரிகைகனின்‌ கண்கட்டு கால வித்தை சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்‌ அங்கத்‌ தினர்களைப்‌ பற்றி க௯ஷி பிரித்தெழுதுவதன்‌ மூலம்‌ பார்ப்பனக்‌ கக்ஷிக்கு அதிகமான ஆள்கள்‌ தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதாய்‌ பொது ஜனங்களையும்‌, சர்க்காரையும்‌ ஏமாற்றுவதற்காக “சுதேசமித்திரன்‌”, “இந்து”, “சுயராஜ்யா” முதலிய பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ செய்துவரும்‌ கண்‌ கட்டு ஜால வித்தை கள்‌ கணக்கு வழக்கு இல்லை. இதுகளை நம்பி ஏதோ சில பாமர ஜனங்கள்‌ ஏமாந்து போகக்கூடுமே தவிர யாரை ஏமாற்றுவதற்காக இப்பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ இஜ்ஜால வித்தைகள்‌ செய்கின்னனவோ அவர்கள்‌, அதாவது சர்க்காரும்‌ பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களும்‌ ஒருக்காலமும்‌ ஏமாறப்‌ போவதில்லை என்பது உறுதி. முதலாவதாக ஒரு விஷயத்தை சந்தோஷத்தோடு தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. அதாவது, நமது நாட்டுப்‌ பார்ப்பனர்‌ தங்களைத்‌ தவிரவும்‌ தங்களது அடிமைகளைத்‌ தவிரவும்‌ வேறு ஒருவரையும்‌ கிட்டத்தில்‌ அணுகவொட்டாத மாதிரியில்‌ சுயராஜ்யக்‌ கட்சி என்பதாக ஒன்றை ஏற்படுத்திக்‌ கொண்டு அநேக பார்ப்பனரல்லாத அரசியல்‌ பாஷாண்டிகளின்‌ ஆதரவையும்‌ விலை கொடுத்து வாங்கி அதனா லேயே பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திவிடலாம்‌ என்பதாகக்‌ கருதி பொய்‌ அமக்களம்‌ செய்து வந்த சுயராஜ்யக்‌ கட்சி என்கிற விஷக்‌ காற்று இந்த தேர்த லில்‌ தலைக்‌ காட்டாமல்‌ ஒழிந்து போய்விட்டது என்பதும்‌ அதை நமது பார்ப்பனர்களே வாயினால்‌ சொல்லிக்‌ கொள்ளக்கூட வெட்கப்படும்‌ படி ஆய்‌ விட்டதென்பதும்‌ உறுதியாகிவிட்டது. எப்படியெனில்‌ மற்ற மாகாணங்களைப்‌ பற்றி தேர்தல்‌ விஷயங்களை எழுதுகிறபோது மாத்திரம்‌ சுயராஜ்யக்‌ கட்சி, சுயேச்சைக்‌ கட்சி என்று எழுதுகிறார்களே தவிர நமது மாகாணத்தைப்‌ பற்றி எழுதும்‌ போது சுயராஜ்யக்‌ கட்சி என்பதை விட்டு விட்டு காங்கிரஸ்‌ கட்சி, சுயேச்சைக்‌ கட்சி, ஜஸ்டிஸ்‌ கட்சி என்று எழுதுகிறார்‌ கள்‌. தேர்தல்‌ ஆரம்ப காலத்தில்‌ அபேட்சகர்களைப்‌ பொருக்கி எடுத்த காலத்தில்‌ காங்கிரஸ்‌ கட்சியாக நிறுத்தப்பட்ட அபேட்சகர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌? அவர்களில்‌ காங்கிரஸ்‌ கொள்கைப்படிநிபந்தனைகளில்‌ கையெ ழுத்து போட்டு, காங்கிரஸ்‌ நிபந்தனைப்படி ஆயிரம்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ டிபாசிட்‌ கட்டி நின்றவர்கள்‌. 391 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. எத்தனைப்‌ பேர்‌? இவர்களில்‌ ஜெயித்தவர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌? தோற்றவர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌ என்று கணக்குப்‌ பார்த்தால்‌ தெரியவரும்‌. இவர்களில்‌ பார்ப்பன காங்கிரசு தீர்மானப்படி உத்தியோகம்‌ கிடைத்தால்‌ ஒப்புக்கொள்ள சம்மதமில்லாதவர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌? சட்டசபையில்‌ ஒத்துழையாமை செய்யப்‌ போயிருப்பவர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌? மகாத்மா சொல்வது போல்‌ காங்கிரஸ்காரர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌? 4 அணா சந்தா பணம்‌ கொடுத்து காங்கிரஸ்‌ மெம்பர்கள்‌ ஆனவர்கள்‌ எத்தனைப்‌ பேர்‌? என்று கணக்குப்‌ பார்த்தால்‌ இக்கட்சி ஜாலத்தின்‌ ரகசியம்‌ தெரியும்‌. தாங்கள்‌ இதுவரை தெரிந்தெடுக்கப்பட்டதாய்‌ எழுதிக்கொள்ளும்‌ பெயர்களையே “இந்து” ஒரு விதமாகவும்‌ “சுதேசமித்திரன்‌” ஒருவித மாக வும்‌, “சுயராஜ்யா” ஒரு விதமாகவும்‌ கட்சிப்‌ பெயர்கள்‌ எழுதி வருகின்றன. “சுதேசமித்திரனே” ஒருவருக்கே ஒரு நாளைக்கு ஒரு கட்சிப்‌ பெயரும்‌, மற்றொரு நாளைக்கு மற்றொரு கட்சிப்‌ பெயரும்‌ கொடுக்கிறது. ஸ்ரீமான்‌ பானோஜி ராவ்‌ என்பவரைப்பற்றியும்‌ இன்னும்‌ சிலரைப்‌ பற்றியும்‌ மாறிமாறி எழுதி வருகிறது. இது இப்படி இருந்தாலும்‌ காங்கிரஸ்‌ கட்சி என்கிற தலைப்பில்‌ மித்திரனும்‌, இந்துவும்‌, சுயராஜ்யாவும்‌ பிரசுரித்திருக்கும்‌ நபர்கள்‌ சர்க்காரிடம்‌ அபேட்சக நியமன்‌ சீட்டுகள்‌ கொடுக்கும்போது அவர்கள்‌ கலெக்டரிடம்‌ சொன்ன கட்சி எது என்று பார்த்தால்‌ இவற்றுள்‌ 4 -ல்‌ ஒரு பங்காவது சுயராஜ்யக்‌ கட்சியா யிருக்குமா அல்லது காங்கிரஸ்‌ நிபந்தனைப்‌ படி கையெழுத்திட்டு பணம்‌ கட்டியவர்களாயிருக்குமா? என்பது தெரியும்‌. அல்லாமலும்‌ காங்கிரஸ்‌ கட்சிக்கு 34 பேர்கள்‌ என்று போட்டுக்‌ கொண்டதில்‌ இவ்வளவு புரட்டு இருந்தாலும்‌ காங்கிரஸ்‌ கட்சிக்கு கொள்கை என்ன? அவர்கள்‌ சட்டசபையில்‌ செய்ய உத்தேசித்திருக்கும்‌ வேலை என்ன? என்பது யாருக்காவது தெரியுமா? அல்லது “காங்கிரஸ்‌”கட்சி மெம்‌ பர்களுக்காவது தெரியுமா? குரங்காட்டி குரங்குகளை ஆட்டுவது போல்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்‌ யங்காரான குரங்காட்டி உத்தியோகம்‌ சம்பாதித்துக்‌ கொடுப்பேன்‌ என்கிற தடியை கையில்‌ வைத்துக்‌ கொண்டு “காங்கிரஸ்‌ கட்சி” சட்டசபை மெம்பர்‌. களான குரங்குகளை தன்னிஷ்டப்படி உட்கார்‌, எழுந்திரு, சட்டசபையை விட்டு வெளியில்‌ வா, உள்ளே போ என்பதான கரணங்களைப்‌ போடச்‌ சொல்வதல்லாமல்‌ வேறு என்ன காரியம்‌ காங்கிரஸ்‌ திட்டமாக நடத்தப்‌ பட்டது? இது தவிர சுயேச்சைவாதிகள்‌ என்பதற்காவது பொருள்‌ என்ன? பார்ப்பனர்‌ கட்சி மூலம்‌ உத்தியோகம்‌ கிடைப்பதானால்‌ அவர்களோடு சேர்ந்து கை தூக்கவும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி மூலம்‌ உத்தியோகம்‌ கிடைப்பதானால்‌ அவர்களோடு சேர்ந்து கை தூக்கவும்‌ அல்லாது அவர்‌. களுக்கு ஏதாவது கொள்கை உண்டா? இது தவிர ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு குறைந்த எண்ணிக்கை போட்டிருப்பதால்‌ அக்கட்சிக்கு என்ன நஷ்டம்‌? ஜஸ்டிஸ்‌ கட்சி அல்லாதாரெல்லாம்‌ அக்கட்சி கொள்கைக்கு விரோதம்‌ என்று அருத்தமா?' குடி அரசு - 1926 (2) 392 ஜஸ்டிஸ்‌ கட்சி கொள்கையும்‌ திட்டமும்‌ என்ன? முறையே பார்ப்பனரல்‌ லாதார்‌ முன்னேற்றமும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமும்‌ தானே. இதற்கு விரோதமாக “காங்கிரஸ்‌ கட்சியைச்‌” சேர்ந்த பார்ப்பனரல்லா தாரிலும்‌ சுயேச்சைக்‌ கட்சியைச்‌ சேர்ந்த பார்ப்பனரல்லாதாரிலும்‌ எத்தனைப்‌ பேர்‌. இருக்கி றார்கள்‌ என்று சொல்ல முடியுமா? ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று பார்ப்பனரல்லாதார்‌ தவிர மற்றபடி அதுகளிலுள்ள எல்லா பார்ப்பன ரல்லாதாரும்‌ இக்கொள்கைகளை ஒப்புக்‌ கொண்டவர்களே தவிர வேறில்லை. ஆகையால்‌ பார்ப்பனர்களின்‌ கட்சி ஜாலத்தைப்‌ பற்றி யாரும்‌ ஏமாந்து போய்‌ கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில்‌ உள்ள தெல்லாம்‌ இரண்டே கட்சி. ஒன்று பார்ப்பன ஆதிக்கத்திற்கு பாடுபடும்‌ கட்சி, மற்றொன்று பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்கு பாடுபடும்‌ கட்சி. இரண்டிலும்‌ வாய்‌ வைக்கும்‌ அலிக்‌ கட்சி என்கிற தனி நபர்கள்‌ சிலர்‌ இருக்கலாம்‌.அவர்‌ களைப்‌ பற்றி கவலை இல்லை. ஆதலால்‌ இந்த இரண்டு கட்சிகளின்‌ தோல்வியும்‌ வெற்றியும்‌ பார்ப்பனர்களின்‌ கட்சி ஜாலத்தில்‌ முடிந்து விடும்‌ என்று யாரும்‌ நினைக்க மாட்டார்கள்‌.வரப்போகும்‌ கமிஷனில்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்து வத்தை ஒழிக்கவும்‌ கூடப்போகும்‌ புது சட்டசபையில்‌ தேவஸ்தான மசோ தாவை ஒழிக்கவும்‌ ஏற்பட்டால்‌ மாத்திரம்‌ “பார்ப்பன ஆதிக்கக்‌ கட்சிக்கோ”, “காங்கிரஸ்‌ கட்சிக்கோ” வெற்றியும்‌ பார்ப்பனரல்‌ லாதார்‌ சுயமரியாதைக்‌ கட்சிக்கு தோல்வியும்‌ என்று சொல்லலாமே தவிர மற்றபடி வெற்றி தோல்வி ஒன்றுமில்லை. இதைத்‌ தவிர மலையாளக்‌ குடிவார மசோதாவை சர்க்காரைக்‌ கொண்டு அழித்தவகையில்‌ பார்ப்பனக்‌ கட்சிக்கு ஒரு வெற்றி தான்‌. காங்‌ கிரஸ்‌ கட்சி சுயராஜ்யம்‌ சம்பாதிக்கும்‌, தேசத்தை விடுதலை செய்யும்‌ என்று சொல்லுவதும்‌, பார்ப்பனர்‌ அல்லாதார்‌ கட்சியை ஜஸ்டிஸ்‌ கட்சி, உத்தியோகக்‌ கட்சி, தேசத்‌ துரோகக்‌ கட்சி என்று சொல்லுவதும்‌ பார்ப்பனரினது அயோக்கியத்தனமும்‌ பார்ப்பனரல்லா தாரினது அறியாமையும்‌ மற்றும்‌ சிலரினது வயிற்றுக்‌ கொடுமையுமே அல்லாது வேறில்லை என்று உறுதி கூறுவோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 14.11.1926 393 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தக்க சமயம்‌ சட்டசபைத்‌ தேர்தல்‌ முழுவ ஒன்றும்‌ முழுகிப்‌ கபாய்விடவில்ை சட்டசபைத்‌ தேர்தல்களின்‌ முடிவானது தமிழ்நாட்டில்‌ நாம்‌ எதிர்பார்த்ததற்குச்‌ சிறிது மாறாய்‌ ஏற்பட்டு இருக்கிறது. ஆனபோதிலும்‌ இதில்‌ ஒன்றும்‌ ஆச்சரியப்படத்தக்கதில்லை. பாமர மக்களுக்கு போதுமான அறிவு உண்டாகும்படி செய்வதற்கு முந்தி அவர்கள்‌ வசம்‌ ஓட்டு என்னும்‌ ஆயுதத்தைக்‌ கொடுத்த பிறகு அது அவர்களையே கெடுத்துக்‌ கொள்ள உபயோகப்‌ படுத்தப்பட்டால்‌ அதற்காக யாரும்‌ ஓட்டர்களைக்‌ குற்றம்‌ சொல்ல முடியாது. எனினும்‌ இதுவரை வெளிவந்திருக்கும்‌ தேர்தல்‌ முடிவு களின்படி பார்ப்பனரல்லாதார்‌ பயப்படத்தக்க மாதிரி ஒன்றும்‌ ஏற்பட்டு விடவில்லை. பொதுவாக நாம்‌ சட்டசபை மூலம்‌ அரசியல்‌ சம்பந்தமான ஒரு காரியத்தையும்‌ செய்து கொள்ள முடியாது என்று அநேக தடவைகளில்‌ எழுதியும்‌ பேசியும்‌ வந்திருப்பது வாசகர்களுக்கு நன்றாய்த்‌ தெரியும்‌. பார்ப்பனரல்லாதார்‌ சமூக சம்பந்தமாக பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதைக்கு பார்ப்பனரல்லாதார்‌ செய்யும்‌ முயற்சிக்கு பார்ப்பனர்கள்‌ சட்டசபையின்‌ மூலம்‌ இடையூறு உண்டாக்காமல்‌ இருக்கச்‌ செய்யலாம்‌ என்கிற ஒரே எண்ணத்துடன்‌ மாத்திரம்‌ சட்டசபையில்‌ நம்பிக்கை உள்ளவர்களை இன்ன கொள்கைக்காரர்களுக்கு ஓட்டுச்‌ செய்ய வேண்டுமென்று கேட்டுக்‌ கொண்‌ டோமே தவிர இன்னும்‌ சுயராஜ்யமோ சுயமரியாதையோ சட்டசபையில்‌ கிடைத்துவிடும்‌ என்பதற்‌ கல்ல. எந்த விதத்திலும்‌ சென்ற தேர்தல்‌ முடிவைவிட இத்தேர்தல்‌ முடிவு அதிகமான பார்ப்பனர்களை சட்டசபைக்கு தெரிந்தெடுத்து அனுப்பிவிட வில்லை. இரண்டாவது பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதை விஷயத்திலாவது வகுப்புவாரி உரிமை பெறும்‌ விஷயத்‌ திலாவது அதிகமான எதிரிகள்‌ சட்ட சபைக்கு தெரிந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்‌ என்றும்‌ சொல்லி விடுவதற்கு மில்லை. உத்தியோக ஆசையின்‌ காரணமாகவும்‌ சுயநலத்தின்‌ மூலமாகவும்‌ பல பார்ப்பனரல்லாதார்‌ தாங்கள்‌ தெரிந்தெடுக்கப்படுவதற்கு பார்ப்பனர்களின்‌ உதவியை நாடியே தீர வேண்டியதாயிற்று. ஏனெனில்‌ ஓட்டர்களோ பாமர ஜனங்கள்‌; மொத்தத்தில்‌ 100-க்கு 75 பேருக்கு மேலாகவே ஓட்டுரிமை இன்னதென்றறியாத அப்பாவிகள்‌; அதில்‌ பலர்‌ ஓட்டுக்களை சுயநலத்திற்கும்‌ பண விலைக்கும்‌ விற்க வேண்டிய அவசியமுடையவர்கள்‌. இவை குடி அரசு - 1926 (2) 394 இரண்டுமல்லாமலும்‌ எப்படி நமது மக்களின்‌ 100-க்கு 90 பேருக்கு மேல்‌ மோக்ஷம்‌, புண்ணியம்‌, தருமம்‌ என்று 1000-க்கணக்கான வருஷங்களாக வைதீகத்தில்‌ பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அறிவிலிகளாய்‌ மூட நம்பிக்கையில்‌ கட்டுண்டு இருக்கின்றார்களோ அது போல்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யம்‌, வரி குறைவு, அரிசி ரூபாய்க்கு 8 படி என்கிற லெளகீக “அறிவீனத்‌”திலும்‌ பேராசையிலும்‌ சுமார்‌ 40 வருஷ காலமாய்‌ முழுகி இருக்கிறவர்கள்‌. அது மாத்திரமல்லாமல்‌ மேல்படி வைதீகத்தின்‌ பேரால்‌ பார்ப்பனர்‌ தங்கள்‌ வயிறு வளர்க்க ஏற்படுத்‌ தப்பட்ட வேதம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌ என்பவைகளை தங்களுக்கே பொய்‌ புரட்டு என்று தெரிந்திருந்‌ தாலும்‌ அவைகளை பாடம்‌ பண்ணிக்கொண்டும்‌ வைதீக வேஷம்‌ போட்டுக்‌ கொண்டும்‌ பாஷாண்டிகளாய்‌ புராணப்‌ பிரசங்கம்‌ செய்து கொண்டும்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடம்‌ கொடுத்து வயிறு வளர்த்து கீர்த்தி சம்பாதித்துக்‌ கொண்டு சில பார்ப்பனரல்லாதார்கள்‌ திரிவது போலவே இந்த லெளகீகத்திலும்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யம்‌, உரிமை, தேசம்‌, தேசியம்‌, சர்க்காரை எதிர்த்தல்‌, அரசாங்கத்தைத்‌ தகர்த்தல்‌, முட்டுக்‌ கட்டை ஆகிய சொற்களை சொல்லிக்கொண்டு சாண்‌ வயிறு வளர்க்கவும்‌ பொய்ப்‌ புகழ்‌ சம்பாதிக்கவும்‌ திரியும்‌ ஒரு போலி அரசியல்‌ பாஷாண்டிக்‌ கூட்டத்தார்‌ பார்ப்பனரல்லாதாரி லேயே உண்டு. பெரும்பாலும்‌ சமூகத்திற்கும்‌ நாட்டிற்‌ கும்‌ கேட்டை வளர்க்கும்‌ பார்ப்பனீயத்திற்கும்‌ பார்ப்பன ஆதிக்கத்திற்கும்‌ ஆதி முதல்‌ இன்றுவரை உதவி செய்து வந்து நமது சுயமரியாதையை ஒழித்தவர்கள்‌ இப்‌ பாஷாண்டிக்‌ கூட்டத்தாரேயாவர்‌. ஒரு காலத்தில்‌ மகாத்மா ஒத்துழையாமை யை குலைத்தது சுயராஜ்யக்‌ கட்சியல்ல. ஒத்துழையாமை யில்‌ ஒரு காலும்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ ஒரு காலும்‌ வைத்துக்‌ கொண்டு “ஒத்துழையாமை தான்‌ தேசத்திற்கு விடுதலை அளிக்க வல்லது, சுயராஜ்யக்‌ கட்சிதான்‌ தீவிரமான தேசீய கொள்கை உடையது” என்று சொல்லிக்‌ கொண்டு இருதலைப்‌ பாம்புகளாய்‌ வாழ்வை நடத்திய வெளவால்‌ கட்சி யார்களால்தான்‌ ஒத்துழை யாமை ஒழிந்தது என்று சொன்னது போல்‌ இப்போது பார்ப்பனரல்லாதார்‌. சமூக சுதந்திரத்திற்கும்‌ சுயமரியாதைக்கும்‌ இந்த பாஷாண்டிகளே காரண மாயிருக்கிறார்கள்‌ என்று சொல்வது மிகை யாகாது. இவ்வித பல நிலைமை கள்‌ பார்ப்பனர்களுக்கு அநுகூலமாய்‌ இருப்பதோடு இவைகள்‌ அனைத்‌ தையும்‌ தங்களுக்கு ஒழுங்காய்‌ உப யோகப்படுத்திக்‌ கொள்ள சகல வசதியும்‌ உடைத்தாயிருக்கிறார்கள்‌. முதலாவது அவர்கள்‌ பிறரை ஏமாற்றியே பிழைக்க. வேண்டிய யோக்கியதையில்‌ பாரம்பரியமாய்‌ தலைமுறை தலைமுறையாய்‌ இருந்து வருவதால்‌ ஏமாற்‌ றத்தக்க வழிகள்‌ இன்னதென்றும்‌ அதற்குற்ற சாதனங்கள்‌ இன்னதென்றும்‌ அறிந்திருப்பதோடு இத்தொழிலில்‌ கைதேர்ந்த அநுபவமும்‌ ஆற்றலுமுடையவர்களாகவும்‌ நம்மில்‌ பல பாஷாண்டிகளை எப்படி தங்கள்‌ வசமாக்கி நம்மை ஏமாற்றச்‌ செய்யலாம்‌ என்கிற வகை: தெரிந்தவர்களாகவும்‌ இருக்கிறார்கள்‌. அதற்கேற்றார்போல்‌ நமக்கு ஏற்பட்ட அரசாங்க வர்க்கத்தாரும்‌ அவர்களைப்போலவே மக்கள்‌ அறிவீனத்தினா 395 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. லேயே பிழைக்கத்தக்க வர்க்கமாக அமைந்து அறிவீனத்தை வளர்த்துக்‌ கொண்டே வந்திருக்கிறார்‌ கள்‌. வியாஜ்ஜியக்காரர்களை ஏமாற்ற எப்படி வக்கீலும்‌ அவர்களது (டவுட்‌ கள்‌! புரோக்கர்களும்‌ ஒன்று சேருகிறார்களோ! வாலிபர்களை ஏமாற்ற எப்படி வேசிகளும்‌ அவர்களது தரகர்களும்‌ ஒன்று சேருகிறார்களோ அது போலவே நமது மக்களை ஏமாற்ற அரசாங்க வர்க்கத்‌ தாரும்‌ பார்ப்பனர்‌ களும்‌ ஒன்று சேர்ந்து நமது பாஷாண்டிகளது உதவியால்‌ நமது அறிவீனத்தை வளர்க்க வேண்டியதாயிற்று. ஆனபோதிலும்‌ நமது நிலை முன்‌ தேர்தல்‌ காலத்தில்‌ இருந்ததை விட இந்த தேர்தலின்‌ பலனாய்‌ ஒன்றும்‌ பிற்போக்கடைந்து விடவில்லை. முன்‌ தேர்தலை விட இப்போது சில ஸ்தானங்கள்‌ நமது கொள்கையில்‌ லகஷியமில்லாதார்‌ வசம்‌ போய்விட்டது என்று சொல்லுவதானால்‌ அது வெறும்‌ மாய்கைதானே ஒழிய அதனால்‌ நமது முற்போக்குக்கு ஒன்றும்‌ அதிகமான கெடுதி ஏற்பட்டு விடாது. நல்ல அறிவோடு யோசித்துப்‌ பார்த்தால்‌ நமது முற்போக்குக்கு நன்மை என்றே சொல்லலாம்‌. அதாவது இத்தேர்தல்‌ முடிவு மூலம்‌ நமக்கு உள்ள குறை என்ன என்பதை உணரவும்‌, அதை திருத்த ஊக்கத்தோடு முயலவும்‌ இத்‌ தேர்தல்‌ முடிவு தூண்ட ஏற்பட்டது. உத்தியோகம்‌ பெறுவது மாத்திரம்தான்‌ பார்ப்பன ரல்லாதார்‌ கட்சியின்‌ கொள்கை என்பது வாஸ்தவமானால்‌ மாத்திரம்‌ இத்‌ தேர்தலால்‌ பார்ப்பனரல்லாதாருக்கு தோல்வி என்று சொல்லலாம்‌.பார்ப்பன ரல்லாதார்‌ சுயமரியாதைக்கும்‌ முற்போக்குக்கும்‌ இக்‌ கட்சி ஏற்பட்டது என்று சொல்லுவதானால்‌ தேர்தல்‌ முடிவு பார்ப்பனரல்லாதா ருக்கு அநுகூலம்‌ என்றே சொல்லுவோம்‌. இதுதேர்தல்‌ முடிவைப்‌ பார்த்த பிறகு & புளிக்கும்‌ என்று சொல்வதல்ல. தேர்தல்‌ முடிவுக்கு முன்பே இதை நினைத்தோம்‌. உதாரணமாக சென்ற மாதக்‌ கடைசியில்‌ சேரமாதேவியில்‌ ஸ்ரீமான்கள்‌: ஜோசப்‌, எஸ்‌.ராமநாதன்‌, ராய சொக்கலிங்கம்‌, காசி விஸ்வ நாதம்‌, பிச்சயப்பா, சுப்பிரமணியம்‌ முதலிய பல முக்கியஸ்தர்கள்‌ கூடி பார்ப்பனரல்லாதார்‌. சுயமரியாதையைப்‌ பற்றியும்‌ முற்போக்கைப்பற்றியும்‌ பேசி அதற்காக என்ன செய்வது என்பதைப்‌ பற்றி யோசித்துக்‌ கொண்டி ரந்த சமயத்தில்‌ நமது சமூகத்திற்கு முற்போக்கேற்பட அறிகுறி வேண்டு மானால்‌ வரப்‌ போகும்‌ தேர்தலில்‌ பனகால்‌ அரசரும்‌ ராமசாமி முதலியாரும்‌ மற்றும்‌ இரண்டொரு வரும்‌ ஆகிய சக்தியும்‌, அறிவும்‌, ஊக்கமும்‌ உள்ள குறிப்பிட்ட 10 கனவான்களுக்காவது தோல்வி ஏற்பட வேண்டும்‌ என்றும்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி முதன்‌ மந்திரியாகவும்‌ ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணய்‌ யங்கார்‌ இரண்டாவது மந்திரியாகவும்‌, ஜனாப்‌ அமீத்கான்‌ மூன்றாவது மந்திரியாகவும்‌ வரவேண்டுமென்றும்‌ பிரார்த்தித்தோம்‌. கோவையில்‌ பனகால்‌ அரசர்‌ வெற்றிக்‌ கூட்டத்திலும்‌ இந்தக்‌ கருத்தை வெளி யிட்டிருக்கிறோம்‌. ஆதலால்‌ இம்முடிவைக்‌ கண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களோ, வாலிபர்‌ களோ, தொண்டர்களோ மனச்சலிப்புக்‌ கொள்ளக்‌ கூடாது. இம்முடிவு நாம்‌ செய்கிற வேலைக்கும்‌ செய்யப்‌ போகும்‌ வேலைக்கும்‌ வழியை ஒழுங்கு படுத்தி இருக்கிறது. மக்களின்‌ அறியா மையை விளக்கதக்க சமயமாயும்‌ குடி அரசு - 1926 (2) 396 ஏற்பட்டிருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்களுக்காக தியாகம்‌ செய்யத்‌ தயாராயிருப்பவர்களையும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி உத்தியோகத்திற்கு ஏற்பட்டதா அன்றி உண்மையாக அச்சமூகத்தின்‌ முற்போக்குக்காக ஏற்பட்டதா என்று பரீக்ஷிப்பதற்கும்‌ ஒரு உரைக்கல்லாய்‌ இருக்கிறது. ஸ்ரீமான்கள்‌ ராமசாமி முதலியார்‌, தணிகாசலம்‌ செட்டியார்‌, நடேச முதலியார்‌ போன்ற பார்ப்பன ரல்லாதார்‌ கட்சித்‌ தலைவர்‌ களின்‌ சமூக பக்தியைப்‌ பொது ஜனங்கள்‌ அறி வதற்கு ஒரு அவகாசமும்‌ கிடைத்திருக்கிறது. இனி ஏற்படப்‌ போகும்‌ பார்ப்பன அடக்கு முறைக்கு மார்பு கொடுக்கும்‌ வீரர்கள்‌ யார்‌. என்பதையும்‌ நமது சமூகத்தார்‌ அறிய காலம்‌ வந்திருக்கிறது. ஆதலால்‌ உலகம்‌ இதோடு முடிந்து விட்ட தென்றாவது சட்டசபையைத்‌ தவிர. சுயமரியாதைத்‌ தொண்டிற்கு வேறு இடமில்லை என்றாவது சட்டசபைக்கு இத்தேர்தல்தான்‌ முடிவான தேர்தல்‌ என்றாவது கருதி யாரும்‌ நம்பிக்கையை விட்டுவிட வேண்டியதில்லை. ஒத்துழையாமைக்கு யோக்கியதை ஏற்பட்ட தெல்லாம்‌ தியாகமும்‌ தன்னல மறுப்புமே அல்லாமல்‌ சட்டசபையாலல்ல.. ஆதலால்‌, சுயமரியாதைக்கு உழைக்க இஷ்டமுள்ளவர்களும்‌ அவ்வுழைப்‌ பினால்‌ ஏற்படக்கூடிய கஷ்டங்களை அனுபவிக்கத்‌ தயாராயிருப்பவர்களும்‌ வெளியில்‌ வர இதுவே தக்க சமயம்‌. அதற்குற்ற நமது வேலைத்‌ திட்டத்தை யும்‌ வெகு சீக்கி ரத்தில்‌ வெளியிட எண்ணியுள்ளோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 14.111926 397 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஸ்முஸ்‌ கக்ஷிக்கு ஓர்‌ எச்சரிக்கை சமய சஞ்சீவிக்‌ கூட்டம்‌ சட்டசபைத்‌ தேர்தலின்‌ முடிவுகளைக்‌ கண்டு பலர்‌ பலவிதமாக அக்கட்சியை தாக்கிப்‌ பேசவும்‌ எழுதவும்‌ ஆரம்பித்து விட்டார்கள்‌. உலக வாசனை இன்னதென்றே அறியாது சமயத்துக்கு தக்கபடி மனிதர்களுக்குத்‌ தக்கபடி இச்சகம்‌ பேசி வயிறு வளர்ப்பவர்கள்‌ இந்த சமயத்தில்‌ பெரிய மேதாவிகளைப்போல்‌ அக்கட்சிக்குஞாணோபதேசம்‌ செய்ய வந்து விட்டார்‌. கள்‌. இக்கூட்டத்தார்‌ காங்கிரசுக்கென்று தங்கள்‌ சுயநலம்‌ கருதாமல்‌ ஒரு காதொடிந்த ஊசியளவு உதவியும்‌ செய்திருக்க மாட்டார்கள்‌;: அல்லது ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ மூலம்‌ எவ்விதமான நன்மையுமாவது அடை யாமலும்‌ இருந்திருக்க மாட்டார்கள்‌. அல்லாமலும்‌ நெருக்கடி ஏற்பட்ட காலத்தில்‌ சுவற்றுமேல்‌ பூனையாகவும்‌, சமயத்திற்கு தகுந்தபடியும்‌, தங்களது சுயநலத்திற்கு ஆதாரமாகவும்‌ அவ்வப்போது நடந்தும்‌, பேசியும்‌, எழுதியும்‌ காலங்கழித்து வந்த இவர்கள்‌ இப்போது “வகுப்பு வாதத்தால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு தோல்வி என்றும்‌ தேசீய வாதத்தால்‌ காங்கிரஸ்‌ கட்சிக்கு வெற்றி ஏற்பட்டது என்றும்‌ ஆதலால்‌ வகுப்பு வாதத்தை விட்டு விட்டு தேசீய வாதத்தில்‌ சேருங்கள்‌” என்றும்‌ பார்ப்பனர்‌ மகிழும்படி பேசுகிறார்கள்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியார்கள்‌ ஜெயித்து விட்டார்கள்‌ என்று பார்ப்பனப்‌ பத்திரிகை கள்‌ கலம்‌ போட்டு எழுதி இருக்குமானால்‌ அப்போது இந்த சமய சஞ்சீவி கள்‌ என்ன எழுதுவார்கள்‌ பேசுவார்கள்‌ என்பதை யோசித்துப்‌ பார்த்தால்‌ இதற்கு மாறாக “காங்கிரஸ்‌ தேச நன்மையை மறந்து ஒரு வகுப்பாருடைய அநுகூலத்திற்கு வசப்படுத்திக்‌ கொள்ளப்பட்டது; காங்கிரஸினால்‌ சுயராஜ்யக்‌ கட்சி வகுப்புப்‌ பூசல்‌ கிளப்பிவிட்டது; அதனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு வெற்றி ஏற்பட்டது: ஆதலால்‌ காங்கிரஸ்காரர்‌ வகுப்புகளுக்கு ஆதாரமான கொள்கைகளை விட்டு தேச காரியத்தில்‌ பிரவேசிக்க வேண்‌ டும்‌” என்று எழுதுவார்கள்‌. அது போலவே இப்போது வேதாந்தம்‌ பேசும்‌ மேதாவிகள்‌: பேசியும்‌, எழுதியும்‌ வந்திருக்கிறார்கள்‌. இதைப்‌ பற்றியும்‌ ஆச்சரியப்பட வில்லை. உலகம்‌ உள்ளவரை இப்படி ஒரு கூட்டம்‌ இருந்து தான்‌ வரும்‌. ஆண்மையோடு வாழ முடியாத நிலைமையை அடைந்தவர்‌ கள்‌ தங்களுக்‌ கோ ஒருவித கொள்கையும்‌ அற்றவர்கள்‌. ஓடுகிற மாட்டின்‌ வாலைப்‌ பிடித்து முறுக்குவார்களே தவிர ஓடாத மாட்டை ஓட்டுவிக்க முயலவே மாட்டார்கள்‌. குடி அரசு - 1926 (2) 398 வகுப்புத்‌ துவேஷமென்றால்‌ என்ன? அது யாரிடம்‌ இருக்கிறது? உண்மையாக வகுப்புத்‌ துவேஷம்‌, வகுப்பு வாதம்‌, தேசீயம்‌, உரிமை என்பதற்கு இவர்களுடைய பொருள்தான்‌ என்ன? பார்ப்பனர்‌ தங்கள்‌ சுயநலத்திற்கு ஒன்றைச்‌ சொன்னால்‌, இவர்களும்‌ கூடவே கோவிந்தா போடுவதுதான்‌ தேசியமென்பதற்கு அருத்தமா? உண்மையாகவே வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ பார்ப்பனர்களிடம்‌ இருக்கிறதா? ஜஸ்டிஸ்‌ கட்சியினிடம்‌ இருக்கிறதா? என்பதை இவர்கள்‌ உணராதவர்களா? நான்‌ உயர்ந்த ஜாதி, நீ தாழ்ந்த ஜாதி என்று சொல்லுபவனிடம்‌ வகுப்புத்‌ துவேஷ @b வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அல்லது நீயும்‌ நானும்‌ சமமான ஜாதிதான்‌; நம்மில்‌ உயர்வு இல்லை: தாழ்வு இல்லை என்கிறவர்களிடம்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? நான்‌ கடவுள்‌ தலை யில்‌ பிறந்தேன்‌; நீ காலில்‌ பிறந்தாய்‌; நான்‌ உயர்ந்தவன்‌ - பிராமணன்‌, நீ தாழ்ந்தவன்‌ - வேசிமகன்‌, வைப்பாட்டி மகன்‌, சூத்திரன்‌ என்று சொல்லுபவ னிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? நீயும்‌ நானும்‌ ஒரே இடத்திலிருந்துதான்‌ பிறந்தோம்‌; நீ பிராமணனுமல்ல, நான்‌ வைப்‌ பாட்டி மகனுமல்ல; நாம்‌ இருவரும்‌ சகோதரர்கள்‌ என்று சொல்லுகிற ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அல்லது தெய்வம்‌ என்றும்‌ தீர்த்தம்‌ என்றும்‌ மோக்ஷமென்றும்‌ புண்ணிய மென்றும்‌ தர்மமென்றும்‌ தானமென்றும்‌ உன்‌ சொத்தும்‌ வரும்படியும்‌ எங்களுக்கே கொடுக்க வேண்டும்‌; அதுகள்‌ எல்லாம்‌ எங்களுக்கேதான்‌ சேர வேண்டும்‌; நாங்கள்‌ உயர்ந்த ஜாதியாரானதால்‌ அவற்றை எங்கள்‌ இஷ்டம்‌ போல்‌ விநியோகித்துக்‌ கொண்டு நாங்களே சாப்பிடுவோம்‌; நீங்கள்‌ தாழ்ந்த ஜாதியாரானதால்‌ உங்களுக்கு தாகத்திற்குத்‌ தண்ணீர்‌ கொடுத்தாலும்‌ தோஷம்‌; ஆதலால்‌ அதில்‌ ஒன்றும்‌ பாத்தியமில்லை, கொடுத்ததிற்கும்‌ நீங்கள்‌ கணக்குக்கூட கேட்கக்‌ கூடாது என்று சொல்லுகிறவர்களிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? நீ கேட்கிறபடியும்‌ அதற்கு மேலும்‌ உன்‌ இழவுக்கு அழுது விடுகிறோம்‌; ஆனால்‌ அதுகளுக்கு கணக்கு மாத்திரம்‌ காட்டு என்று கேட்பவர்களிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அல்லது எங்கள்‌ கால்‌ கழுவின தண்ணீரை தீர்த்தமாக சாப்பிடுவதுதான்‌ உங்களுக்குப்‌ புண்ணியம்‌;நாங்கள்‌ உங்களைத்‌ தொட்டால்‌, கிட்ட வந்தால்‌, தெருவில்‌ நடக்க விட்டால்‌, கண்ணால்‌ கண்டால்‌ கூட எங்களுக்குப்‌ பாவம்‌ என்று சொல்லுகிறவர்களிடம்‌ வகுப்பு துவேஷ மும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? உங்கள்‌ கால்களைக்‌ கழுவின தண்‌ ணீரை: வேண்டுமானாலும்‌ குடிக்கிறோம்‌; அதற்குப்‌ பணம்‌ வேண்டுமானா லும்‌ கொடுக்கிறோம்‌; எங்களையும்‌ உள்ளே விடுங்கள்‌ : தெருவில்‌ நடக்க விடுங்கள்‌ என்று கேட்பவர்களிடம்‌ வகுப்பு வாதமும்‌ வகுப்பு துவேஷமும்‌ இருக்கிறதா? 399 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பார்ப்பனரில்‌ பெரிய தேசீயவாதியும்‌ காங்கிரஸ்காரருமான ஸ்ரீமான்‌ வி. கிருஷ்ணசாமி அய்யர்‌ தர்மப்‌ பள்ளிக்கூடம்‌ வைத்தார்‌. அதற்கு பெரிய பண்டும்‌ வைத்தார்‌. ஆனால்‌ அதில்‌ பார்ப்பனர்கள்‌ மாத்திரம்‌ படிக்கலாமே ஒழிய பார்ப்பனரல்லாதார்கள்‌ படிக்கக்‌ கூடாது என்று எழுதி வைத்திருக்‌ கிறார்‌. இவரிடம்‌ வகுப்புதுவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அல்லது திருப்பதியில்‌ பார்ப்பனரல்லாதார்‌ பணத்தில்‌ ஒரு பள்ளிக்கூடம்‌ ஏற்பட்டு இருந்தும்‌ அதில்‌ பார்ப்பனரல்லாதார்‌ பிள்ளைகளையும்‌ சேர்த்துக்‌ கொள்ளுங்கள்‌ ஐயா என்று கெஞ்சுபவர்களிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? பார்ப்பனரல்லாதாரான தஞ்சாவூர்‌ மகாராஜா சுமார்‌ வருஷம்‌ இரண்டு லட்சம்‌ ரூபாய்‌ வரும்படி வரும்படியான சொத்துக்களை தர்மமாக விட்டிருக்கிறார்‌. அதை ஸ்ரீமான்‌ எம்‌.கே.ராமாநுஜாச்சாரியார்‌ ஜில்லா போர்டு அக்கி ராசனராயிருக்கும்‌ வரை அய்யங்கார்‌ பார்ப்பனப்‌ பிள்ளை களே. சாப்பிட்டுக்‌ கொண்டும்‌, பார்ப்பனப்‌ பிள்ளைகளே சம்பளமில்லாமல்‌ படித்துக்‌ கொண்டும்‌, அய்யங்கார்‌ பார்ப்பன உபாத்தியாயர்களே உத்தியோ கம்‌ பெற்றுக்‌ கொண்டும்‌ லட்சக்கணக்கான ரூபாயை அனுபவித்து வந்தார்‌ கள்‌. வாசல்‌ பெருக்கவும்‌ எச்சிலை எடுக்கவும்‌ தவிர வேறு காரியத்திற்கு பார்ப்பனரல்லாதார்களை உள்ளே விடாமல்‌ அடித்துக்‌ கொண்டிருந்தாரே அவரிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருந்ததா? அல்லது இப்போது பார்ப்பனரல்லாத ஸ்ரீமான்‌ பன்னீர்செல்வம்‌ ஜில்லாபோர்டு பிரசி டெண்டாகவும்‌ ஸ்ரீமான்‌ உமா மகேஸ்வரம்‌ பிள்ளை தாலூக்காபோர்டு பிரசி டெண்டாகவும்‌ வந்ததால்‌ பார்ப்பனரும்‌ பார்ப்பனரல்லாதாரும்‌ சாப்பிடும்‌ படியாகவும்‌, சம்பளமில்லாமல்‌ படிக்கும்படியாகவும்‌, பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களும்‌ உத்தியோகம்‌ பெறும்படியாகவும்‌ செய்தார்களே இவர்களிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்புவாதமும்‌ இருக்கிறதா? பார்ப்பனரல்லாத பெண்கள்‌ ருதுவானால்‌ பார்ப்பனர்கள்தான்‌ முதல்‌ முதல்‌ சாந்தி முகூர்த்தம்‌ செய்ய வேண்டும்‌; பார்ப்பனர்களுக்கெல்லாம்‌ பார்ப்பனரல்லாத பெண்கள்தான்‌ வைப்பாட்டிகளாயிருக்க வேண்டும்‌; ஒரு பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாத பெண்ணை சம்போகத்திற்கு கூப்பிட்டால்‌ உடனே அவள்‌ புருஷன்‌ கூட்டிக்‌ கொண்டு வந்து படுக்கையை விரித்து படுக்க வைத்துவிட்டுப்‌ போக வேண்டும்‌. இல்லாவிட்டால்‌ நரகம்‌ கிடைக்‌ கும்‌; நரகத்துக்கு பயப்படாவிட்டால்‌ ஊரை விட்டு வெளியே ஓடிப்போக வேண்டும்‌ என்கிற கொடுமை தீர மலையாளக்‌ குடிவார மசோதா கொண்டு வந்தால்‌ அதை ஒழிக்கப்‌ பாடுப்பட்ட ஸ்ரீமான்‌ சி.பி. ராமசாமி அய்யரிடம்‌ வகுப்புதுவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? இக்‌ கொடுமை ஒழிக்க மசோதா கொண்டு வந்த ஸ்ரீமான்‌ சி.கிருஷ்ணன்‌ நாயரிடம்‌ வகுப்பு துவேஷ மும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? பொது ஜனங்கள்‌ பணத்தால்‌ ரிபேர்‌. செய்யப்படுவதும்‌ பொது ஜனங்களின்‌ பணத்தால்‌ நிர்வகிக்கப்பட்டு குடி அரசு - 1926 (2) 400 வருவதுமான அநேக முனிசிபல்‌ தெருக்களில்‌ பன்றி, நாய்‌, மலச்‌ சட்டி, மல வண்டி, பிணம்‌ முதலியதுகள்‌ போகலாம்‌ மனிதன்‌ மாத்திரம்‌ ஏன்‌ போகக்‌ கூடாது. ஏனென்றால்‌ நாங்கள்‌ பிராமணர்கள்‌, நீங்கள்‌ தாழ்ந்தவர்கள்‌ ஆதலால்‌ நடக்கக்கூடாது என்று சொல்லுபவர்களிடம்‌ வகுப்பு துவேஷ மும்‌, வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அல்லது நாங்களும்‌ மனிதர்கள்தானே, நாய்‌, கழுதை, பன்றியைப்‌ போலாவது எங்களை நினைக்க வேண்டாமா என்று கேட்பவர்களிடம்‌ வகுப்பு வாதமும்‌, வகுப்பு துவேஷமும்‌ இருக்‌ கிறதா? நீயும்நானும்‌ இந்துமதம்‌ ;இந்து மதத்திற்கு ஆதாரம்‌ வேதம்‌; நான்தான்‌ அதைப்படிக்க யோக்கியதை உள்ளவன்‌; நீ சூத்திரனானதால்‌ அதைப்‌ படிக்கக்கூடாது என்று சொல்லுபவர்களிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? எங்கள்‌ மத ஆதாரத்தையாவது படிக்கக்‌ கூடாதா? நாங்கள்‌ என்ன அவ்வளவு தாழ்ந்தவர்களா? அது எதில்‌ இப்படி சொல்லியிருக்கிறது: அதையாவது பார்க்கக்‌ கூடாதா? என்று கேட்பவர்‌. களிடம்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌, வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? மக்களுக்கு சமத்துவமும்‌ ஆண்மையும்‌ சுயமரியாதையும்‌ சம்பாதித்துக்‌ கொடுப்பதாய்‌ பார்ப்பனரல்லாதாரிலேயே மிகுதியும்‌ கொடுக்கப்பட்ட பணத்திலும்‌ காங்கிரஸ்‌ பொதுப்‌ பணத்திலும்‌ குருகுல ஆச்சிரமம்‌ வைத்து பார்ப்பனக்‌ குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்தால்‌ பாவம்‌ என்று சொல்லுகிறவர்களிடம்‌ வகுப்பு வாதமும்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ இருக்‌ கிறதா? எங்கள்‌ பணத்தையே வாங்கிக்கொண்டு எங்கள்‌ குழந்தைகளுக்கே தாழ்வையும்‌ சின்னத்தனத்தை யும்‌ சிறு வயது முதலே படிப்பிக்கிறீர்களே இது தர்மமாகுமா என்று கேட்கிற வர்களிடம்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌, வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? ஒரு பிராமணக்‌ குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌ ஒரு மாதம்‌ பட்டினி கிடப்பேன்‌ என்று சொன்ன ஸ்ரீமான்‌ எம்‌.கே.ஆச்சாரியாரிடம்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அவருக்குப்‌ போட்டியாய்‌ நின்ற ஸ்ரீமான்‌ முத்தையா முதலி யாரிடம்‌ வகுப்பு வாதமும்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ இருக்கிறதா? தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ “மக்கள்‌ பிறவியில்‌ வகுப்பு வித்தியாசம்‌ இல்லை” என்கிற ஒரு தீர்மானம்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ. ராமசாமி நாயக்கராலும்‌, எஸ்‌. ராம நாதன்‌ அவர்களாலும்‌ கொண்டு வந்து நிறைவேற்றியவுடன்‌ காங்கிரசை விட்டு வெளியே போன எம்‌.கே.ஆச்சாரியாருக்கும்‌ காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ இருந்து ராஜீனாமா கொடுத்து விட்ட ஸ்ரீமான்கள்‌ சி.ராஜகோபாலாச்சாரியார்‌, டாக்டர்‌ ராஜன்‌, டாக்டர்‌ சாஸ்திரி, சந்தானம்‌, வரதாச்சாரி ஆகிய பார்ப்பனர்‌. களிடமும்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அல்லது இத்‌ தீர்மானம்‌ கொண்டு வந்தவர்களிடமும்‌ ஆதரித்தவர்களிடமும்‌ இருக்கிறதா? முனிசிபாலிட்டி பொதுக்‌ குழாயில்‌ தங்கள்‌ வகுப்பார்களைத்‌ தவிர 401 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. மற்ற வகுப்பார்‌ தண்ணீர்‌ பிடிக்கக்கூடாது என்றும்‌, இன்ன படித்துறையில்‌ தங்கள்‌ வகுப்பார்களைத்‌ தவிர தண்ணீர்‌ மொள்ளக்‌ கூடாது, குளிக்கக்‌ கூடாது என்றும்‌, இன்ன படித்துறையில்‌ தங்கள்‌ தூரமான ஸ்திரீகளைத்‌ தவிர வேறு யாரும்‌ துணி துவைக்கக்‌ கூடாது என்றும்‌ சொல்லி இடம்‌ ஒதுக்கி வைத்துக்‌ கொள்ளுகிறவர்களிடம்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? அல்லது எல்லோரும்‌ தண்ணீர்‌ மொள்ளலாம்‌; எல்லோரும்‌ தண்ணீர்‌ பிடிக்கலாம்‌; எல்லா பெண்டுகளும்‌ குளிக்கலாம்‌, துவைக்கலாம்‌ என்று சொல்லுகிறவர்களிடம்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? பார்ப்பனரல்லாதார்‌ லட்சக்கணக்காய்‌ செலவு செய்து கோவில்‌ கட்டினால்‌ நீ சூத்திரன்‌, நீ வைசியன்‌, நீ வாணியன்‌, நீ நாடான்‌, நீ பஞ்சமன்‌.நீ இதுவரை வரலாம்‌, நீ இதுவரை வரலாம்‌, நீ வாசற்படி கிட்டக்கூட வரக்‌ கூடாது, நீ தெரு மதிலைக்கூட தொடக்‌ கூடாது, நீ தெரு வழிக்‌ கூட நடக்கக்‌ கூடாது என்று சொல்லுகிறவர்களிடம்‌ வகுப்பு வாதமும்‌ வகுப்பு துவேஷ மும்‌ இருக்கிறதா? அல்லது சுவாமி, சுவாமி கொஞ்சம்‌ கண்ணால்‌ பார்த்து ஓடிப்‌ போகிறோமே, கொஞ்சம்‌ காலைத்‌ தொட்டு கும்பிட்டு விட்டு ஓடிப்‌ போகிறோமே என்று கெஞ்சுகிறவர்களிடம்‌ வகுப்பு துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இருக்கிறதா? இன்னமும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியையும்‌ அதன்‌ தலைவர்‌. களையும்‌ வகுப்புத்துவேஷக்‌ கட்சி, வகுப்புவாதக்‌ கட்சி என்கிறவர்கள்‌ நன்றாய்‌ யோசித்து சுயராஜ்யக்‌ கட்சியிலோ, காங்கிரஸ்‌ கட்சியிலோ, ஒத்து ழையாமைக்‌ கட்சியிலோ எந்தப்‌ பார்ப்பனத்‌ தலைவராவது வகுப்புத்‌ துவேஷமும்‌ வகுப்பு வாதமும்‌ இல்லாதவர்கள்‌ இருக்கிறார்களா? என்பதை யும்‌, சுயராஜ்யக்‌ கட்சியிலோ காங்கிரசிலோ வகுப்புத்‌ துவேஷமோ வகுப்பு வாதமோ நீங்கக்கூடிய ஏதாவது ஒரு திட்டம்‌ நடைமுறையிலாவது எழுத்தி லாவது இருக்கிறதா? என்பதையும்‌ சுயநலத்தையும்‌ அறிவீனத்தையும்‌ விட்டு நடுநிலையில்‌ இருந்து யோசித்துப்‌ பார்த்தார்களானால்‌ அவர்களுக்கு உண்மை தெரியாமல்‌ போகாது. ஜஸ்டிஸ்‌ கட்சியை வகுப்புத்‌ துவேஷம்‌ வகுப்பு வாதம்‌ என்று சொல்லுகிற - எழுதுகிற எத்தனையோ மேதாவிகள்‌ தங்களது உண்மையான தாயும்‌ தகப்பனுக்கும்‌ பொதுவாய்‌ தங்கள்‌ நெஞ்சில்‌ கையை வைத்துப்‌ பார்ப்‌ பார்களானால்‌ தாங்கள்‌ உண்மை பேசுகிறார்களா? பார்ப்பனர்கள்‌ புன்சிரிப்புக்கோ, தங்களது வயிறு வளர்ப்புக்கோ, சுயநலத்‌ திற்கோ பேசுகிறார்களா? அல்லது தேசத்திற்கோ தங்களது சமூகத்திற்கோ பேசுகிறார்களா? என்பது விளங்காமல்‌ போகாது. இவைகளுக்கு பயப்படக்கூடாது இக்கூட்டங்களை நாம்‌ கணக்கில்‌ வைக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுகளை மதிக்காமலும்‌ இதன்‌ எதிர்ப்புகளுக்கு சளைக்காமலும்‌ இருக்கத்தக்க நிலைமை எப்பொழுது பார்ப்பனரல்லாதார்‌ கட்சிக்கு வருகி குடி அரசு - 1926 (2) 402 றதோ அன்றுதான்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌,வகுப்பு வாதமும்‌, வகுப்பு ஆதிக்க மும்‌ ஒழிந்து மக்களுக்கு சுயமரியாதை ஏற்படுமே அல்லாமல்‌ இதுகளை மதித்துக்‌ கொண்டும்‌ இந்த எதிர்ப்புகளுக்குப்‌ பயந்து கொண்டும்‌ உள்ளவரை: சுயமரியாதை உண்டாகாது. சுயமரியாதை என்பது கிள்ளுக்கீரை அல்ல. அதை அடைந்த சமூகமானாலும்‌ தனி மனிதனானாலும்‌ அவனுக்கு உலகமே தூசுக்கு சமானமாக இருக்கும்‌. அச்சமூகத்தாரை எந்த அரசாங்க மும்‌ அக்கிரமமாய்‌ ஆளமுடியாது. அதன்‌ மேல்‌ எந்த வகுப்பும்‌ ஆதிக்கம்‌ செலுத்த முடியாது. பார்ப்பனரல்லாத மக்களின்‌ அறிவீனத்தையும்‌ சுய மரியாதையில்‌ லக்ஷியமற்றிருக்கும்‌ விலங்குத்‌ தன்மையையும்‌ விளக்க இத்தேர்தலின்‌ முடிவை விட வேறு என்ன சாக்ஷி வேண்டும்‌? சர்க்கார்‌ தயவையும்‌ எதிர்பார்க்க முடியாது இதில்‌ தோல்வியுற்றவர்கள்‌ பார்ப்பனரல்லாதாரின்‌ நன்மைக்கும்‌ சுயமரியாதைக்கும்‌ உழைப்பவர்களானால்‌ அவர்கள்‌ சட்டசபையையும்‌ சர்க்காரையும்‌ லட்சியம்‌ செய்வார்களா? எந்த உலகத்திலாவது அன்னிய அர. சாங்கத்தார்‌ - ஒரு தேச மக்களின்‌ அறிவீனத்தாலும்‌ சொரணையற்ற தன்மை யிலும்‌ ஆண்டு கொண்டிருக்கும்‌ அரசாங்கத்தார்‌ - மக்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காகவே மானத்தையும்‌, கற்பையும்‌, மனசாகஷியையும்‌ விற்கும்‌ படியான நிலைமையில்‌ தனது பிரஜைகளை வைத்திருந்தாலொழிய அரை நிமிஷமும்‌ ஆளமுடியாத அரசாங்கத்தார்‌ - அந்நாட்டு மக்களின்‌ சுய மரியாதைக்கு உதவியாயிருப்பார்களா? நமது தற்கால வாழ்வு நிலை பொய்யா? அன்றியும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சி, தங்களுக்கு இருப்பதாய்ச்‌ சொல்லும்‌ குறைகள்‌ இல்லை என்றாவது தாங்கள்‌ முன்னேற வேண்டு மென்று கோருவது குற்றமென்றாவது இப்போது அவர்கள்‌ மற்ற வகுப்பார்‌ களால்‌ தாழ்வாய்‌ மதிக்கப்படாமல்‌ சமத்துவத்துடனும்‌ சுயமரியாதையுடனும்‌ வாழ்கிறார்கள்‌ என்றாவது யாராவது சொல்ல முடியுமா? முதலாவது சர்க்‌ காராரே நம்மை காங்கிரஸ்‌ ஏற்பட்டதற்குப்‌ பிறகு பிற்பட்ட வகுப்பிலேயே சேர்த்து இருக்கிறார்கள்‌. பார்ப்பனர்களோ நம்மை பஞ்சமர்கள்‌ என்றும்‌ சூத்திரர்கள்‌ நாலாவது வகுப்பார்‌ என்றும்‌ சொல்லுவதோடு வைதீகத்தில்‌ நம்மை சிஷ்யர்களாக்கி வைத்திருக்கிறார்கள்‌ என்பதில்‌ யாருக்காவது ஆக்ஷேபணை உண்டா? மற்றபடி ஜாதி வகுப்பு வைதீக நிலைமைகளை விட்டு விட்டு அரசியலிலும்‌ லெளகீகத்திலும்‌ நமக்குத்‌ தக்க உரிமை வேண்டுமென்றால்‌ நீ படிக்கவில்லை, உனக்குப்‌ புத்தியில்லை, உங்களுக்கு வேலை பார்க்க சக்தி யில்லை, நிர்வாகத்‌ திறமை இல்லை என்று சொல்லு கிறார்களே இவைகள்‌ உண்மையாய்‌ இருந்தாலும்‌ சரி பொய்யாயிருந்தாலும்‌ சரி இந்தக்‌ காரணத்தாலோ அல்லது இப்படிச்‌ சொல்லுவதாலோ நாம்‌ 403 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பின்னமடைந்து இருக்கிறோம்‌ என்பதையும்‌ யாராவது மறுக்க முடியுமா? ஏமாந்து போகக்கூடாது ஆகவே, இந்த நிலைமையிலிருந்து விடுதலையாகி முற்போக்‌ கடைய வேண்டுமா? வேண்டாமா? இதற்கு என்ன வழி என்பதை இப்பொழுது “வகுப்பு துவேஷம்‌ தோல்வியுற்றது” என்று பிதற்றும்‌ எந்த மேதாவியாவது இதுவரை சொன்னாரா? அல்லது செய்து காட்டினாரா? ஒன்றுமில்லாமல்‌ எதையோ தனக்கே புரியாமல்‌ கூட்டத்தில்‌ “கோவிந்தா” போட்டுக்‌ கொண்டு இருந்து விட்டும்‌ இப்போது பார்ப்பனர்கள்‌ கை உயர்ந்த தாக கனவு கண்டு கொண்டும்‌ “வகுப்பு வாதம்‌ தோற்றது”, “வகுப்பு துவேஷம்‌ தோற்றது” என்று சொல்லுகிற வார்த்தைகளை பார்ப்பனரல்‌ லாதார்‌ கேட்டு ஏமாந்து போகக்கூடாது. நாம்‌ சுயமரியாதையைக்‌ கோரு வதும்‌ அதற்கான நமது கொள்கைகளும்‌ செய்கைகளும்‌ வகுப்பு வாத மானாலும்‌ சரி, வகுப்பு துவேஷமானாலும்‌ சரி, நாஸ்திகமானாலும்‌ சரி, ராஜ துரோகமானாலும்‌ சரி வேதத்‌ துரோகமானாலும்‌ சரி நரகசித்தியாவதாணா லும்‌ சரி, நமது கோரிக்கை கை கூடும்‌ வரை உழைக்க வேண்டியதேயல்‌ லாமல்‌ அவர்‌ என்ன சொல்லு கிறார்‌? இவர்‌ என்ன சொல்லுகிறார்‌? சட்டம்‌ என்ன சொல்லுகிறது? என்பவைகளைக்‌ கவனிக்கவே கூடாது என்று எச்சரிக்கிறோம்‌. நமது எண்ணம்‌ நல்ல எண்ணமா? கெட்ட எண்ணமா? நமது சுயமரியாதைக்கும்‌ சமத்துவத்திற்கும்‌ பாடுபடுகிறோமா? அல்லது யாரிடத்‌ திலாவது துவேஷத்தினாலாவது துரோகம்‌ செய்ய வேண்டும்‌ என்ற எண்ணத்தினாலாவது மற்றவர்களுடைய நியாயமான சுதந்திரத்தைப்‌ பிடுங்‌ கிக்கொள்ள வேண்டுமென்றாவது பாடுபடுகிறோமா என்பதான இவை களை மாத்திரம்தான்‌ நாம்‌ நன்றாய்‌ கவனமாய்‌ நடுநிலையிலிருந்து சிந்தித்து ஒரு முடிவுக்குவர வேண்டுமே அல்லாமல்‌ மற்றபடி யோசிப்பது நமது வெற்றிக்கு இடையூறாகும்‌. எந்த விதத்திலும்‌ நமது திட்டங்களை மாற்றக்‌ கூடாது. எனவே எந்தக்‌ காரணத்தை முன்னிட்டும்‌ நமது சுயமரியாதைத்‌ திட்டங்களையும்‌ முன்னேறும்‌ பிரயத்தனங்களையும்‌ கைவிட்டு விடக்‌ கூடாது என்றும்‌ எச்சரிக்கை செய்கிறோம்‌. இன்னும்‌ 3 ஹ்‌ பொறுத்துதான்‌ அனேகமாய்‌ சட்டசபைத்‌ தேர்தல்‌ வரும்‌. ஒரு சமயம்‌ இப்போது இருக்கும்‌ நிலையைப்‌ பார்த்தால்‌ மத்தியில்‌ ஒரு தரம்‌ கலைத்து மறுபடியும்‌ தேர்தல்‌ நடத்த வேண்டிய அவசியம்‌ வந்தாலும்‌ வரும்‌. எப்படி ஆனாலும்‌ அதைப்‌ பற்றி கவலையுமில்லை. அதற்காக நாம்‌ இப்போது கவலைகொள்ள வேண்‌: டிய அவசியமுமில்லை. நமது சுயமரியாதையின்‌ கொடிய எதிரியான பார்ப்பனியத்தைச்‌ சுட்டு வீழ்த்துங்கள்‌ ! அதைக்‌ கொன்று குழி தோண்டிப்‌ புதையுங்கள்‌! புதைத்தவுடனே அக்குழியில்‌ இருந்தே உண்மையான குடி அரசு - 1926 (2) 404 சுயராஜ்ஜியம்‌ முளைக்கும்‌. அது எந்த வகுப்பாருக்கும்‌ இடைஞ்சலா யிருக்காது, சர்க்காருக்கும்‌ இடைஞ்சலாயிருக்காது. பேராசைக்காரருக்கு மாத்திரம்‌ கொஞ்சம்‌ அதிருப்தியாயிருக்குமே அல்லாமல்‌ வேறில்லை. அதுவும்‌ நாம்‌ உண்மையாய்‌ வேலை செய்வதைக்‌ கண்டால்‌ தானாகவே சரி பட்டுப்போகும்‌. ஆதலால்‌ பார்ப்பனர்கள்‌ பத்திரிகைகளையும்‌ அவர்க ளது திண்ணைப்‌ பிரசாரங்களையும்‌ வயிறு வளர்ப்புப்‌ பத்திரிகைகளையும்‌, வயிற்றுச்‌ சோத்து தேசபக்தர்களின்‌ ஆரவாரங்களையும்‌ கண்டு ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ மருண்டு தங்கள்‌ கொள்கைகளுக்கு பொது மக்களிடம்‌ செல்‌ வாக்கு இல்லையென்றோ தங்களுக்கு பொது மக்கள்‌ ஆதர வில்லை யென்றோ நினைத்துத்‌ தங்களது கொள்கைகளை மாற்றிக்‌ கொள்ள நினைப்‌ பார்களானால்‌ அது தற்கொலைக்‌ கொள்கையேயாகும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌. பாமரமக்களை திருப்தி செய்ய என்று வேறு எப்பேர்ப்பட்ட கொள்கைகளை ஏற்படுத்திக்‌ கொண்டாலும்‌ நமது சுயமரியாதையின்‌ எதிரிகளான பார்ப்பனர்கள்‌ அதையும்‌ ஒழிக்கத்தக்க மற்றொரு கொள்கை ஆரம்பிக்கக்‌ கூடிய தந்திர சக்தி வாய்ந்தவர்கள்‌ என்பதையும்‌ நினைப்பூட்டுகிறோம்‌. சுயமரியாதைக்கும்‌ சமூக சமத்துவத்திற்கும்‌ இன்னும்‌ தீவிரமான திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமே அல்லாது இதிலிருந்து கொஞ்சமும்‌ பின்‌ போகக்‌ கூடாது. கதரையும்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி திட்டத்தில்‌ பார்ப்பனரல்லாதாருக்கே மிகுதியும்‌ உதவத்தக்க கதர்‌ திட்டத்தையும்‌ இன்றியமையாததாக வைத்துக்‌ கொள்ள வேண்டுமென்பதையும்‌ வற்புறுத்துகிறோம்‌. நமது கட்மை பாமர மக்களிடை இவைகளை சரியானபடி பிரசாரம்‌ செய்யவும்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சிப்‌ பிரசாரங்களால்‌ நமது பாமர மக்கள்‌ ஏமாறாதிருக்‌ கவும்‌ தகுந்த பிரசாரங்கள்‌ செய்ய வேண்டும்‌. இவ்விஷயத்தில்‌ எவ்வளவுக்‌ கெவ்வளவு அசார்சமாயிருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது காரி யம்‌ குந்தகப்பட்டுப்‌ போகும்‌ என்பதை அழுத்திக்‌ கூறுகிறோம்‌. மற்றபடி அரசியல்‌ விஷயமாய்‌ அரசாங்கத்தோடு ஒத்துழையாமை செய்வதாகவோ அரசாங்கம்‌ நடைபெறாமல்‌ முட்டுக்கட்டைபோடுவதாகவோ பார்ப்பனர்‌ கள்‌. சொல்லுவதை அடியோடு புரட்டு என்றே சொல்வோம்‌. ஆகையால்‌ அவைகளை நாமும்‌ சொல்ல வேண்டியதில்லை. இவைகளைப்பற்றி மகாத்மா காந்தி நடத்துவதாய்ச்‌ சொன்னால்‌ மாத்திரம்‌ கவனிக்கலாமே ஒழிய சுயநலக்‌ கூட்டத்தால்‌, பாமர மக்களை ஏமாற்றுவதற்கென்றே காங்கிரஸ்‌ பெயர்‌ வைத்து செய்யும்‌ புரட்டுகளுக்கும்‌ ஏமாற்றுப்‌ பிரசாரங்களுக்கும்‌ நாமும்‌ பங்கெடுத்துக்‌ கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. கூடுமான வரை அப்புரட்டுகள்‌' 405 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வெளியாவதற்கு தைரியமாய்‌ பிரசாரம்‌ செய்ய வேண்டும்‌. ஜில்லாக்கள்‌ தோறும்‌ ஒவ்வொரு வாரப்பத்திரிகைகள்‌ ஏற்பட வேண்டும்‌.எந்த விதத்திலும்‌ பார்ப்பன சம்பந்தமில்லாமலே அவைகள்‌ நடைபெற வேண்டும்‌. வைதீக விஷயத்திலும்‌, லெளகீக விஷயத்திலும்‌, அரசியல்‌ விஷயத்திலும்‌ பார்ப்பனர்‌ செய்யும்‌ புரட்டுகளை தைரியமாய்‌ வெளியிட வேண்டும்‌. ஒவ்வொரு மிராசுதாரர்கள்‌ அதன்‌ நஷ்டங்களை ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. போலித்‌ தலைவர்‌ களையும்‌, போலி தேசீயப்‌ பத்திரிகைகளையும்‌, வயிற்றுச்‌ சோற்று தேச பக்தர்கள்‌ யோக்கியதையையும்‌ துணிந்து வெளியாக்க வேண்டும்‌. இவைகளையெல்லாம்‌ செய்யாமல்‌ தேர்தல்கள்‌ சமயத்தில்‌ 1000,10000, 50000. செலவழிப்பதில்‌ ஒரு பயனும்‌ உண்டாகாது. பார்ப்பனப்‌ பிரசாரங்களையும்‌, பார்ப்பனப்‌ பத்திரிகைகளை யும்‌, பார்ப்பனத்‌ தலைவர்கள்‌ தந்திரங்களையும்‌, பார்ப்பன மடாதிபதிகள்‌ மகந்துக்கள்‌ செய்யும்‌ செலவுகளையும்‌ பார்த்தாவது நாம்‌ விஷயங்களை அறிந்துக்‌ கொள்ள வேண்டாமா? எதை ஆதாரமாக வைத்து பாமர ஜனங்‌ கள்‌ ஒரு அபிப்பிராயம்‌ கொள்ளுகிறார்கள்‌ என்பது தெரியாதா? எதை ஆதாரமாய்‌ வைத்து பாமர ஜனங்களின்‌ ஓட்டுப்‌ பெறுகிறார்கள்‌ என்பது தெரியாதா? வெற்றியும்‌ தோல்வியும்‌ எதைப்‌ பொறுத்திருக்கிறது என்பது தெரியாதா? இந்த விஷயங்களை அறிந்தவன்‌ உண்மையான தொண்டனா யிருந்தால்‌ ஒருக்காலும்‌ வெற்றி தோல்வியைப்‌ பற்றிக்‌ கவலைப்படாமல்‌ பாமர ஜனங்களுக்கு உண்மையைப்‌ புகட்டுவதிலேயே கண்ணுங்‌ கருத்து மாயிருப்பான்‌. ஆதலால்‌ நாம்‌ செய்ய வேண்டிய வேலையெல்லாம்‌ நமது தற்கால கொள்கைகளை மக்களிடம்‌ பரவச்‌ செய்வதற்கு முயல வேண்டி யதே அல்லாமல்‌ மக்களைத்‌ திருப்திச்‌ செய்யவோ அவர்களை ஏமாற்றவோ தகுந்தபடி கொள்கைகளை மாற்றுவதல்ல என்பதை வலியுறுத்துவதுடன்‌ கொள்கைகளை மாற்றுவது சமூகத்‌ தற்கொலையாகும்‌ என்பதை மறுபடியும்‌ எச்சரிக்கை செய்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 21.11.4926 குடி அரசு - 1926 (2) 406 நாகைத்‌ வதாழிலானர்‌ சங்கம்‌ நாகை தென்‌இந்திய ரயில்வே தொழிலாளருக்கும்‌ ஷி ரயில்வே அதிகாரிகளுக்கும்‌ நாகையை விட்டு பொன்மலைக்கு தொழிலாளர்‌ குடிபோக வேண்டிய விஷயமாய்‌ ஏற்பட்ட சிறு தகராறு தீர்ந்து விட்டதாகத்‌ தெரிந்து சந்தோஷமடைகிறோம்‌. ஆனாலும்‌ மத்தியஸ்த தீர்ப்பினால்‌ தொழிலாளருக்கு எவ்வித லாபமும்‌ சவுகரியமும்‌ ஏற்பட்டிருப்பதாய்ச்‌ சொல்ல கொஞ்சமும்‌ இடமில்லை. தொழிலாளர்களுக்கு வெகு காலமாக இருக்கும்‌ சுதந்திரங்களை' ரயில்வே அதிகாரிகள்‌ பிடுங்கிக்‌ கொள்வதாய்ச்‌ சொன்னதில்‌ மத்தியஸ்தர்‌. வந்து பிடுங்கிக்‌ கொள்வது சரியல்லவென்று சொல்லி விட்டதினால்‌ தொழிலாளருக்கு லாபம்‌ என்ன? இத்தகராறு ரயில்வேக்காரர்கள்‌ முன்‌ யோசனையின்மேல்‌ செய்த கெட்டிக்காரத்தனமான தந்திரமே அல்லாமல்‌ வேறல்ல. ஏனெனில்‌ வெகு காலமாய்‌ வீடு வாசல்‌ களுடன்‌ வாழ்ந்து வந்த தொழிலாளர்களை ஊரைவிட்டு வேறு ஊருக்கு வாருங்கள்‌ என்று கூப்பிட்டால்‌ யாருக்கும்‌ வர இஷ்டமிருக்காது என்பதை உணர்ந்தும்‌ இதற்காக ஏதாவது அதிகப்படியான சுதந்திரங்கள்‌ கேட்பார்கள்‌ என்று எண்ணியே முன்‌ ஜாக்கிரதையுடன்‌ ஏற்கனவே இருக்கிற சுதந்திரத்தை யும்‌ பிடுங்கிக்‌ கொள்வோம்‌ என்று சொன்னால்‌ மத்தியஸ்தத்திற்கு வருகிற வர்கள்‌ அப்போது “அதிக சுதந்திரமும்‌ । வேண்டாம்‌; இருக்கிற சுதந்திரங்க ளையும்‌ பிடுங்கிக்‌ கொள்ள வேண்டாம்‌” என்று பைசல்‌ செய்து விடுவார்கள்‌ என்று செய்ததுவே தவிர வேறில்லை. ஆனபோதிலும்‌ தொழிலாளர்கள்‌ கண்ணியமுடன்‌ ஒப்புக்‌ கொண்டது மிகவும்‌ பாராட்டத்தக்கதே. ஆனாலும்‌ தொழிலாளர்கள்‌ கட்டுப்‌ பாட்டுடன்‌ இருந்து தங்களது கிரமமான நன்மை களையும்‌ பிரதிநிதித்துவங்களையும்‌ பெருக்கிக்‌ கொள்ள வேண்டியது மிகவும்‌ அவசியமானதாகும்‌. நமது மாகாணத்தில்‌ உள்ள தொழிலாளர்‌ சங்‌ கங்களிலெல்லாம்‌ நாகை தொழிலாளர்‌ சங்கமே கூடியவரை உண்மையான சங்கமென்றே சொல்லலாம்‌. அது மற்ற சென்னை முதலிய சங்கங்களைப்‌ போல்‌ “தலைவர்களின்‌” நலத்திற்கும்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌ ஆயுத மாயிராமல்‌ தங்கள்‌ காலிலேயே நிற்கத்‌ தகுந்த யோக்கியதையை அடைந்‌ திருப்பதைப்‌ பற்றி மிகுதியும்‌ பாராட்டுகிறோம்‌. அதற்குத்‌ தலைவராக தொழிலாளர்கள்‌ தங்களுக்குள்‌ ஒருவரையே தெரிந்தெடுத்துக்‌ கொண்டது அச்சங்கத்தின்‌ முற்போக்குக்கும்‌ நமது மாகாணத்தில்‌ அதுவே ஆதிக்கம்‌ பெற்ற சங்கமாகப்‌ போகிற தென்பதற்கும்‌ அறிகுறியாகும்‌. இனியும்‌ 407. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அச்சங்கம்‌ அரசியல்‌ சூழ்ச்சியிலிருந்தும்‌ முழுதும்‌ விடுபட்டுவிட்டால்‌ அதனால்‌ நமது மாகாணத்து மற்ற தொழிலாளர்‌ சங்கங்கள்‌ எவ்வளவோ பயனடையத்தக்க மாதிரிக்கும்‌ பின்பற்றத்தக்க மாதிரிக்கும்‌ வந்துவிடும்‌ என்றும்‌ உறுதி கூறுவோம்‌. அதன்‌ நிருவாகஸ்தர்களும்‌ தங்களுக்குள்‌ ஏதாவது சிறு அபிப்பிராய பேதங்கள்‌ இருந்தால்‌ அதை தொழிலாளர்கள்‌ நன்மைக்காக விட்டுக்‌ கொடுத்து ஒற்றுமையுடன்‌ உழைத்து தொழிலாளர்‌. உலகத்துக்கு நன்மை செய்யுமாறு வேண்டுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 21.11.1926 குடி அரசு - 1926 (2) 408 இதுகூட வகுப்பு துவேஷமா? திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன்‌ கோவிலில்‌ சமஸ்கிருதத்தில்‌ வேத பாராயணம்‌ செய்த பிறகு தமிழில்‌ தேவார பாராய ணமும்‌ செய்த பிறகு எல்லோருக்கும்‌ விபூதி பிரசாதம்‌ கொடுக்க வேண்டும்‌ என்பதாக கோவில்‌ அதிகாரிகள்‌ ஏற்பாடு செய்தார்களாம்‌. அங்கு வேத பாராய ணம்‌ செய்து வந்த பார்ப்பனர்கள்‌ தேவார பாராயணம்‌ செய்த பிறகு விபூதி பிரசாதம்‌ வாங்குவது தங்கள்‌ உயர்வுக்குக்‌ குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம்‌ செய்து கொண்டிருக்கிறார்கள்‌ என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில்‌ பிரசுரித்திருக்கிறோம்‌. கோவிலில்‌ தேவா ரம்‌ படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத்‌ துவேஷமாய்ப்‌ படுகிறதாயிருந்தால்‌ பிறகு எங்கு போய்த்தான்‌ பிழைக்கிறது. தேவாரம்‌ படிக்காததினால்‌ மோக்ஷம்‌ கெட்டுப்போய்‌ விட்டது என்ப தாக நாம்‌ பயப்படவில்லை.மக்களிடம்‌ அன்பு செய்வதைத்தான்‌ கடவுள்‌ பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல்‌ வேத பாராயணமும்‌ தேவார பாராய ணமும்தான்‌ கடவுள்‌ பக்தி என்று நாம்‌ நினைப்பதில்லை. ஆனாலும்‌ தமிழ்‌ மொழி என்றால்‌ இந்தப்‌ பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்‌ வருவா னேன்‌ என்பதுதான்‌ நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டு பிரயாணத்தில்‌ ஒரு சமயம்‌ அங்கு போக நேரிடினும்‌ நேரும்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 21114926 409 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வகுப்புணாரி பிரதிநிதித்துவம்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ என்பது இந்திய மக்களில்‌ பார்ப்பனர்‌ தவிர மற்றெல்லா வகுப்பார்களாலும்‌ வெகு காலமாக அதாவது இந்திய பிரதி நிதித்துவம்‌ என்கிற வார்த்தை என்றைக்கு ஏற்பட்டதோ அது முதல்‌ அரசாங்‌ கத்தாரைக்‌ கேட்டு வரப்படும்‌ ஒரு கோரிக்கை. இக்கோரிக்கை ஏற்பட்ட காலமுதல்‌ இந்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ - குறிப்பாய்‌ தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ பல வழிகளிலும்‌ தந்திரங்களிலும்‌ கூழ்ச்சிகளிலும்‌ அது ஈடேறாமல்‌ இருப்பதற்காக வெகு பாடுபட்டு வந்திருக்‌ கிறார்கள்‌. என்ன பாடுபட்டும்‌ அரசியல்‌ இயக்கங்களான காங்கிரசும்‌ அரசாங்‌ கமும்‌ அதை ஒப்புக்கொண்டு அது ஒரு அளவு அமுலில்‌ வரவும்‌ ஏற்பாடு செய்தாய்‌ விட்டது. உதாரணமாக, இந்தியாவிலுள்ள இந்திய மக்களில்‌ மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும்‌, சீக்கியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும்‌, கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானங்க. ளென்றும்‌, மகம்மதியரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்றும்‌, மகம்மதியரல்லாதாரில்‌ பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்‌ றும்‌, பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ ஆகியவர்களுக்கு பொதுவில்‌ இத்தனை ஸ்தானங்களென்றும்‌ பிரிக்கப்பட்டு 6, 7 வருஷ காலமாய்‌ அதாவது மூன்று தேர்தலாய்‌ அமுலில்‌ வந்தாய்‌ விட்டது. அது போலவே காங்கிரசிலும்‌ கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும்‌ மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும்‌ பார்ப்பனர்களுக்கும்‌ பார்ப்பனரல்லாதாருக்கும்‌. சேர்த்து மொத்தத்தில்‌ இத்தனை ஸ்தானமென்றும்‌ தீண்டாத வகுப்பார்‌ என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும்‌ ஒதுக்கப்பட்டு அதுவும்‌ சுமார்‌ 5, 6 வருஷ காலமாய்‌ அமுலில்‌ இருந்தும்‌ வருகிறது என்பதும்‌ எல்லோரும்‌ அறிந்த விஷயமே. இப்போது அதில்‌ பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்கிற விஷயத்தில்‌ வகுத்திருக்கும்‌ முறை காரியத்தில்‌ பிரயோசனப்படாததாயும்‌ ஒற்றுமைக்கும்‌ முன்னேற்றத்திற்கும்‌ இடையூறாயும்‌ இருப்பதால்‌ அதையும்‌ தெளிவுபடுத்திவிட வேண்டும்‌ என்பதே இப்போது வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்று சொல்வதின்‌ பொருளே அல்லாமல்‌ புதிதாக ஒன்றும்‌ ஏற்பாடு செய்யவோ அல்லது கண்டு பிடிக்கவோ யாரும்‌ கோரவில்லை. இக்‌ கொள்கைகளை அரசாங்கத்தாரும்‌ சுமார்‌ 85 வருஷங்களுக்கு முன்னாலேயே ஒப்புக்‌ கொண்டு 1840 -ம்‌ வரு ஷத்தின்‌ 125 வது ஸ்டேன்டிங்‌ ஆர்டரில்‌ விவரமாக சொல்லியிருக்கிறார்கள்‌. குடி அரசு - 1926 (2) 410 அக்காலத்தில்‌ இந்தியாவில்‌ நிர்வாகம்‌ செய்த வெள்ளைக்காரர்களும்‌ இதை. வற்புறுத்தி இருக்கிறார்கள்‌. ஆனாலும்‌ சகல உத்தியோகங்களும்‌ பதவிகளும்‌ அரசாங்கத்தார்‌ கைவசமே இருந்து அவர்களே ஏறக்குறைய சரிவர வினியோகித்து வந்த தால்‌ அதற்காக யாரும்‌ கொள்கை ஒன்று ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இருந்து வரவில்லை. ஆனால்‌ காங்கிரஸ்‌ என்பதாக ஒரு ஸ்தாபனத்தை சிருஷ்டித்துக்‌ கொண்டு அதை தேசப்‌ பிரதிநிதித்துவம்‌ பொருந்தியது என்று சொல்லி அரசாங்கத்தை மிரட்டி அவர்கள்‌ மூலம்‌ சில பதவிகளும்‌, பிரதிநிதித்‌ துவங்களும்‌ அதிகமாய்‌ வினியோகிக்க செய்ததில்‌ அவைகள்‌ காங்கிரசில்‌ உழன்று கொண்டிருக்கிற பார்ப்பனர்களான ஒரு கூட்டத்தாருக்கே போய்ச்‌ சேருவதைப்‌ பார்த்த உடனும்‌ மற்றவர்கள்‌ காங்கிர. சில்‌ ஆதிக்கம்‌ பெறமுடியாமலும்‌ மற்றவர்களுக்கும்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைக்க முடியாமலும்‌ கட்டுப்பாடாய்‌ பார்ப்பனர்கள்‌ சூழ்ச்சி செய்ததின்‌ பலனாகவும்‌ காங்கிரசில்‌ விசேஷ தீவிரவாதிகளாய்‌ இருந்த பார்ப்பனரல்லா தார்களில்‌ வடநாட்டில்‌ மகம்மதியர்களும்‌ தென்னாட்டில்‌ மகம்மதியரல்லா தார்களுமான பார்ப்பனரல்லாதாரும்‌ காங்கிரசினால்‌ ஏற்படும்‌ உத்தியோகங்க ளையும்‌ பதவிகளையும்‌ பிரதிநிதித்துவங்களையும்‌ எங்களுக்கும்‌ சமமாய்‌ விகிதாச்சாரம்‌ பங்கு கொடுக்க வேண்டும்‌ என்றும்‌, இல்லாவிட்டால்‌ காங்கிர. சிற்கு விரோதமாயிருந்து அரசாங்கத்தாரிடமிருந்து நேரில்‌ பெற பிரயத்‌ தனம்‌ செய்வோம்‌ என்றும்‌ வாதாடியதில்‌ காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள்‌ மகம்மதி யர்களுக்கு மாத்திரம்‌ ஒப்புக்கொண்டு மற்றபடி மகம்மதியரல்லாத பார்ப்பன ரல்லாதாருக்கு ஒப்புக்‌ கொள்ளாமல்‌ ஆக்ஷேபணை செய்தார்கள்‌. இதன்‌ பலனாய்‌ அப்போது அரசியல்‌ வாழ்விலும்‌, காங்கிரசிலும்‌, பிரதான ஸ்தானத்‌ திலும்‌, அதுபோகத்திலும்‌ இருந்த ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ நாயர்‌, தியாக ராய செட்டியார்‌ போன்றவர்கள்‌ தென்னிந்தியர்களின்‌ நல உரிமைச்‌ சங்கம்‌ என்ப தாக ஒன்றை ஏற்பாடு செய்து அதில்‌ தென்னிந்தியாவிலுள்ள பார்ப்பனரல்‌ லாத மக்கள்‌ எல்லோரையும்‌ சேர்த்து காங்கிரஸ்‌ என்பது பார்ப்பன முன்னேற்‌ நத்திற்கு ஏற்படுத்திய ஆயுதமே ஒழிய ஜனப்‌ பிரதிநிதித்துவம்‌ பொருந்தி யதோ அல்லது எல்லா மக்களும்‌ சம உரிமை அடையத்தக்கினதோ அல்ல வென்றும்‌, சுயராஜ்யம்‌ என்பது பார்ப்பன ராஜ்யமே அல்லா மல்‌ பொது மக்கள்‌ ராஜ்யம்‌ அல்லவென்றும்‌ பிரசாரம்‌ செய்ததின்‌ பலனாய்‌ காங்கிரஸ்‌ ஆதிக்கமும்‌ குலையத்‌ தலைப்பட்டது. இதை அறிந்த பார்ப்பனர்‌ கள்‌ ஒன்று கூடி யோசித்து ஒரு தந்திரம்‌ செய்தார்கள்‌. அதென்ன வென்றால்‌ இப்போது ஸ்ரீமான்கள்‌ சக்கரை, ஆரியா, ஈவெ. ராமசாமி நாயக்கர்‌ முதலிய காங்கிரசில்‌ ஈடுபட்டிருந்தவர்களின்‌ அபிப்பிராயத்தையும்‌, அவர்களது பத்திரிகை களையும்‌ எதிர்க்க எப்படி ஸ்ரீமான்கள்‌ மயிலை ரெத்தின சபா பதி முதலியார்‌, பாவலர்‌, குப்புசாமி முதலியார்‌ என்கிற பெயர்‌ உள்ளவர்‌ களை தலைவர்‌. களாக்கியும்‌ “தேசபந்து” என்கிற பெயர்‌ கொண்ட பத்திரி கையை உண்டு பண்ணவும்‌ முயற்சிகளைச்‌ செய்தார்களோ அதுபோலவே அப்போதும்‌ 411 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு என்கிற கனவான்களை தலைவர்களாக்கி “தேசபக்தன்‌” என்ற பத்திரிகையையும்‌ உண்டாக்கி டாக்டர்‌ நாயர்‌ முயற்சிகளை ஒழிக்க பிரயத்‌ தனப்பட்டார்கள்‌. அதனால்‌ அச்சமயம்‌ பார்ப்பனர்களின்‌ யோக்கியதை யையும்‌ டாக்டர்‌ நாயர்‌ போன்ற தேசபக்தர்கள்‌ எடுத்துச்‌ சொன்னவைகளை தேசம்‌ நம்பியதே அல்லாமல்‌ ஸ்ரீமான்கள்‌ நாயுடு, முதலியார்‌, “தேசபக்தன்‌” போன்றவர்கள்‌ சொல்லுவதை ஜனங்கள்‌ காது கொடுக்காததால்‌ அதற்காக வேறு தந்திரம்‌ எடுத்து, எதுபோலவென்றால்‌ மகாத்மாவின்‌ ஒத்துழையாமை ஆரம்ப மானவுடன்‌ தென்னாட்டுப்‌ பார்ப்பனர்களும்‌ அவர்களது பத்திரிகை களும்‌ விரோதமாயிருந்தும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீநிவாசய்யங்கார்‌ ஒத்துழை யாமை சட்டவிரோதமென்று சொல்லியும்‌ ஸ்ரீமான்‌ கஸ்தூரி ரங்க அய்யங்‌ கார்‌, எ.ரங்கசாமி அய்யங்கார்‌, எஸ்‌. சத்தியமூர்த்தி முதலியவர்கள்‌ சென்னை ராஜதானி காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ இருந்து ராஜினாமா கொடுத்து விட்டு வெளி யில்‌ போய்‌ எவ்வளவோ தூரம்‌ மகாத்மாவையும்‌ ஒத்துழையாமை யையும்‌ தாக்கிப்‌ பேசியும்‌ எழுதியும்‌ இவர்கள்‌ ஜபம்‌ செல்லாததால்‌ நுழைந்து கொடுத்து உள்ளே போய்‌ கூட இருந்தே ஒத்துழையாமையைக்‌ குலைத்தார்‌. களோ அதுபோல்‌ தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கத்தார்‌ கேட்கும்‌ வகுப்பு வாரி உரிமையை நாங்களும்‌ ஒப்புக்‌ கொள்கிறோம்‌. ஆனால்‌ காங்கிரசை எதிர்க்கக்‌ கூடாது என்பதாக இப்போது போலவே தேச பக்தி வேஷத்தைப்‌ போட்டு, அதற்கெதிராக ஒரு சங்கத்தையும்‌ ஸ்தாபிக்கச்‌ செய்து அதற்கு வேண்டிய பணங்களையும்‌ பிரசாரங்களுக்கும்‌ பத்திரிகை நடத்துவதற்கும்‌ பணத்தையும்‌ கொடுத்து பார்ப்பனரல்லாதாரை இரண்டாகப்‌ பிரித்து அச்‌ சங்கத்திற்கு கொஞ்சம்‌ கொஞ்சமாக மதிப்பு குறையச்‌ செய்தார்‌ கள்‌. அச்‌ சங்கத்தின்‌ மதிப்பு குறைந்து விட்டது என்று தெரிந்தவுடனும்‌ இவர்கள்‌ பணம்‌. கொடுத்து ஏற்படுத்தின சென்னை மாகாணச்‌ சங்கமும்‌ இப்பார்ப்பனர்களின்‌ யோக்கியதையை அறிந்து கொண்டது என்று தெரிந்த உடனும்‌ இச்சங்கத்‌ தையும்‌ ஒழிப்பதற்குச்‌ சூழ்ச்சி செய்து இச்சங்கத்தில்‌ முக்கியமாய்‌ இருந்தவர்‌. களையும்‌ வசப்படுத்தி இதையும்‌ அடியோடு ஒழித்து விட்டார்கள்‌. இதன்‌ பலனாய்‌ என்ன ஏற்பட்டது? டாக்டர்‌ நாயர்‌ கட்சியாகிய தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கத்தார்‌ கேட்ட வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ மும்‌ போய்‌ அதற்‌ கெதிரிடையாய்த்‌ தாங்களும்‌ அதையே கோருவதாகச்‌ சொல்லிய சென்னை மாகாணச்‌ சங்கத்தார்‌ கோரிய வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ கொண்ட தேசபக்தியும்‌ போய்‌, பழைய பார்ப்பன ஆதிக்கமே ஏற்பட்டு இதற்கு உதவி செய்த ஸ்ரீமான்கள்‌ கலியாணசுந்தர முதலியாரும்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகாரும்‌ பார்ப்பனர்கள்‌ மேல்‌ பிணக்கு கொண்டு காங்கிரஸ்‌ நிர்வாகத்தி லிருந்து விலகுவதாய்‌ மிரட்டியும்‌ “நீங்கள்‌ போனால்‌ வேறொரு முதலியா ரையும்‌ நாயுடுகாரும்‌ சேர்த்துக்‌ கொள்ளத்‌ தெரியும்‌” என்று சொல்லி வெளியி லேயே அனுப்பி விட்டு தங்கள்‌ ஆதிக்கத்தையும்‌ நிலைநிறுத்திக்‌ கொள்ள ஏற்பாடு செய்து வருவதும்‌ உலகம்‌ அறிந்தது. குடி அரசு - 1926 (2) 412. இதுபோலவே பார்ப்பனரல்லாத சங்கத்திற்கு அநுகூலமாய்‌ சாக்ஷி சொல்ல சீமைக்குப்போன டாக்டர்‌ நாயர்‌, ஸ்ரீமான்‌ எல்‌.கே. துளசிராம்‌ இவர்‌: களுக்கு மாறாக ஸ்ரீமான்களான ஒரு சக்கரைச்‌ செட்டியாரையும்‌ ஒரு செஞ்சையாவையும்‌ சீமைக்குப்‌ பணம்‌ கொடுத்து அனுப்பினார்கள்‌. இப்‌ போது இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ யோக்கியதையை அறிந்து ஸ்ரீமான்‌ சக்கரைச்‌ செட்டியார்‌ அவர்களை விட்டு விலகியதும்‌ அதற்குப்‌ பதிலாக ஸ்ரீமான்கள்‌ ஒரு ஓகந்தசாமி செட்டியார்‌ என்பவரையும்‌ முன்‌ பார்ப்பனரல்லாதாருக்காக சாக்ஷி சொல்ல சீமைக்குப்‌ போயிருந்த எல்‌.கே. துளசிராம்‌ என்பவரையும்‌ ஆசை வார்த்தைகள்‌ சொல்லி தங்கள்‌ பக்கம்‌ சேர்த்துக்கொண்டு அப்போது ஸ்ரீமான்‌ சக்கரைச்‌ செட்டியார்‌ செய்த வேலையை இவர்களைக்‌ கொண்டு செய்து வருகிறதோடு அவருக்குப்‌ பதிலாய்‌ இவர்களை உபயோகித்துக்‌ கொள்ளப்‌ போகிறார்கள்‌. இவ்வளவு தீவிரமாகவும்‌, இவ்வளவு பிரயத்‌ தனமாகவும்‌, இவ்வளவு செலவு செய்து கொண்டு இது சமயம்‌ இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்திற்கு விரோதமாய்‌ கட்சி சேர்த்து கிறதின்‌ முக்கிய நோக்கமென்னவென்றால்‌ 1920 ஹு த்தில்‌ சில “சீர்திருத்‌ தங்கள்‌” அரசாங்கத்தார்‌ நமக்கு வழங்கியிருப்பதாகச்‌ சொன்ன யாதாஸ்தில்‌ “இன்னும்‌ பத்து வருஷம்‌ சென்ற உடன்‌ இப்போது கொடுத்த சீர்திருத்தத்தை எப்படி உபயோகித்திருக்கிறீர்கள்‌, மேல்கொண்டு உங்களுக்கு சீர்திருத்தம்‌ கொடுத்தால்‌ அதை சரியாய்‌ உபயோகித்துக்‌ கொள்ளக்கூடிய யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்கிறதை பரிக்ஷித்துப்‌ பார்த்து இன்னும்‌ சில சீர்திருத்தம்‌ கொடுப்போம்‌” என்று சொல்லியிருக்கிறார்கள்‌. அதன்படி சர்க்கார்‌ வழக்கம்‌ போல்‌ 1928 லோ 1929 லோ ஒரு கமிஷனை நியமிக்கப்‌ போகிறார்கள்‌. அந்த கமிஷனில்‌ நமது பார்ப்பனர்களுக்கு மேல்‌ கொண்டு “சீர்த்திருத்தம்‌” கொடுத்தாலும்‌ சரி, கொடுத்திருப்பதையும்‌ பிடுங்கிக்‌ கொண்டாலும்‌ சரி அதைப்‌ பற்றியெல்லாம்‌ கொஞ்சமும்‌ கவலை யில்லை. எப்படியாவது வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்பதை ஒழித்து விட்டால்‌ அதுவே பார்ப்பனர்களுக்கு சுயராஜ்யமளித்த மாதிரியாகையால்‌ அதை ஒழிக்கக்‌ கட்சியும்‌, பலத்தையும்‌ சேர்க்கத்தான்‌ இவ்வளவு தந்திரங்‌ களும்‌ சூழ்ச்சிகளும்‌ பணச்செலவும்‌ செய்வதே தவிர வேறில்லை. அதனால்‌ தான்‌ பார்ப்பனர்‌ என்ற கூட்டமே அடியோடு ஆண்‌ பெண்‌ அடங்கலும்‌ கட்சி பேதம்‌, அபிப்பிராய பேதம்‌ இன்றி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்‌. இதற்‌ காகவே ஸ்ரீமான்‌ சி. ராஜகோபாலாச்சாரியாரும்‌ அடிக்கடி பட்டணம்‌ போவ தும்‌ ஸ்ரீமான்‌ சீநிவாசய்யங்கார்‌ வெற்றிக்காக காத்திருப்பதும்‌ அவர்கள்‌ கூட்டங்‌ களில்‌ பேசுவதும்‌ வகுப்புவாதம்‌ மாத்திரம்‌ கூடாது என்பதும்‌ ஆகிய தந்திரங்‌ களை செய்து வருவதும்‌ ஸ்ரீமான்‌ சீநிவாச சாஸ்திரிகள்‌ வகுப்புவாதம்‌ கூடாது என்பதும்‌ பார்ப்பனரல்லாதாரிலும்‌ மகம்மதியர்‌ களிலும்‌ கிறிஸ்தவர்களிலும்‌ தீண்டாதார்‌ என்னும்‌ வகுப்புகளிலும்‌ கூலி கொடுத்து ஆள்களைப்‌ பிடித்து வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கூடாது என்று சொல்லச்‌ செய்வதும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை அரசியலில்‌ பேசக்‌ கூடாது என்று சொல்லச்‌ 43 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. செய்வதுமான காரியங்களைச்‌ செய்து வருகிறார்கள்‌. ஆதலால்‌, தமிழ்‌ மக்கள்‌ இதுசமயம்‌ ஏமாந்து போகாமல்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தின்‌ அவசியத்‌ தையும்‌, அதற்கெதிரிடையாய்ப்‌ பார்ப்பனர்கள்‌ செய்யும்‌ பிரசாரத்தின்‌ நோக்கத்தையும்‌, பார்ப்பனர்களுக்காக வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய்‌ பார்ப்பனர்‌ அல்லாதார்‌ கூலிப்பிரசாரம்‌ செய்யும்‌ நோக்கத்தை யும்‌, அவர்களுடைய யோக்கியதைகளையும்‌ முன்‌ பின்‌ அபிப்பிராயங்க ளையும்‌ பாமர மக்கள்‌ சரியாக உணரும்படியான பிரசாரங்களைச்‌ செய்து எப்படியாவது அதை அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையே செய்ய வேண்டி வற்புறுத்து கிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 21.11.1926 குடி அரசு - 1926 (2) 414. “வற்றிக்‌ வாண்டாட்ட” விளம்பரம்‌ வெற்றிக்‌ கொண்டாட்டம்‌ என்னும்‌ பேரால்‌ நமது பார்ப்பனர்கள்‌. தங்களது பார்ப்பனப்‌ பிரசாரங்களை மறுதேர்தல்களுக்கும்‌ கூட சேர்த்து இப்பொழுதிலிருந்தே நடத்த ஆரம்பித்து விட்டார்கள்‌. யாரோ வெகு பேர்‌. கள்‌ இவர்களை உத்தியோகம்‌ ஏற்றுக்கொள்ளும்படியும்‌ மந்திரி சபை களை அமைக்கும்படியும்‌ கேட்டுக்கொண்டது போலவும்‌ வாக்காளர்களுக்குத்‌ தாங்கள்‌ கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டி மந்திரி பதவிகளை மறுப்பது போலவும்‌ வேஷம்‌ போடுகிறார்கள்‌. இதைப்‌ பாமர ஜனங்களும்‌ நம்பி “ஆ! ஆ!! நமது பார்ப்பனர்கள்‌ என்ன, சுயராஜ்யக்‌ கட்சிக்காரர்கள்‌. என்ன, காங்கிரசுக்காரர்கள்‌ என்ன! ஆகிய ஸ்ரீமான்கள்‌ ஸ்ரீநிவாசய்யங்கார்‌, சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி அய்யங்கார்‌ முதலியவர்கள்‌ எவ்வளவு நாணயக்‌ காரர்கள்‌ மந்திரி உத்தியோகத்தைக்‌ கூட வேண்டாமென்று சொல்லி விட்டார்கள்‌” என்று இவர்களைப்‌ பாராட்டுவதில்‌ ஏமாந்து போனாலும்‌ போவார்கள்‌. இப்பொழுது ஜயித்தவர்கள்‌ யார்‌? பார்ப்பனர்களா? சுயராஜ்யக்‌ கட்சியாரா? காங்கிரசுக்காரர்களா? யார்‌ என்று தக்க ஆதாரத்துடன்‌ பதில்‌ சொல்ல யார்‌ தயாராயிருக்கிறார்கள்‌? கட்சி என்பதற்கு என்ன பொருள்‌? சுதேசமித்திரனும்‌ இந்துவுமான பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ கலம்‌ கட்டி எழுதி விட்டால்‌ அதுவே முடிவு என்று அர்த்தமா? கட்சியாக மித்திரன்‌ குறித்‌ துள்ள கணக்குப்படி காங்கிரசுக்காரர்கள்‌ என்போர்கள்‌ 47 பேரில்‌ காங்கிரஸ்‌ மெம்பர்கள்‌ எத்தனை பேர்‌? எது முதல்‌ இவர்கள்‌ காங்கிரஸ்காரர்கள்‌? என்றைய தினம்‌ கையெழுத்‌ துப்‌ போட்டு சேர்ந்தார்கள்‌? காங்கிரசில்‌ எந்தக்‌ கொள்கைகளைப்‌ பின்பற்றினார்கள்‌? மித்திரனும்‌ இந்துவும்‌ கண்ணை மூடிக்‌ கொண்டால்‌ உலகமே கண்ணை மூடிக்‌ கொண்டதாக அருத்தமா? ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி முதல்‌ எந்த பிராமணராவது தங்களை காங்கிரசுக்காரர்‌ என்று சொல்ல அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா? சத்தியமூர்த்தி இந்த 5 வருஷ காலத்தில்‌ என்றைக்காவது ஒரு நாள்‌ காங்கிரஸ்‌ கொள்கைப்படி நடந்ததாகச்‌ சொல்ல முடியுமா? என்றைக்காவது ஒரு நாள்‌ சர்க்காரின்‌ குற்றங்களைப்‌ பற்றி சர்க்கரைக்‌ கண்டித்து பேசியதாகவோ, சர்க்கார்‌ உத்தி ரவுகளை மறுத்ததாகவோ, சர்க்கார்‌ தயவை எதிர்பாராததாகவோ இருந்த தாகச்‌ சொல்ல முடியுமா? அல்லது சர்க்காரிலிருந்து ஏதாவது ஒரு உத்தி யோகம்‌ கிடைப்பதாயிருந்து வேண்டாம்‌ என்று சொன்னதாக யாராவது சொல்ல முடியுமா? அல்லது இன்றைய தினமாவது நமது சர்க்காரால்‌ கொடுக்‌ கப்பட்ட 415 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஏதாவது ஒரு கவுரவ மெம்பர்‌ ஸ்தானம்‌ தான்‌ அடைந்திருக்‌ கவில்லை என்று சொல்ல முடியுமா? மித்திரன்‌ கலத்தில்‌ “தலைவர்‌” தலைப்பில்‌ பேர்‌ போட்டவர்‌ யோக்கியதையே இப்படி இருந்தால்‌ மற்றபடி அந்தக்‌ கூட்ட யோக்கியதையைச்‌ சொல்ல வேண்டுமா? அந்த வரிசையில்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ இல்லையா? கவுரவ சர்க்கார்‌ உத்தியோகஸ்தர்கள்‌ இல்லையா? நேற்று ஒரு கட்சிப்‌ பேர்‌ இன்று ஒரு கட்சிப்‌ பேர்‌ சொன்னவர்‌ கள்‌ இல்லையா? நாளைய தினம்‌ வேறு கட்சிக்குப்‌ போகிறவர்கள்‌ இல்லையா? இவர்கள்‌. எல்லோரும்‌ மித்திரனுக்கு காங்கிரசுக்‌ காரர்கள்‌ என்று எப்படித்‌ தெரியும்‌? ஸ்ரீமான்‌ வேணாவுடையக்‌ கவுண்டர்‌ காங்கிரசுக்காரரா? ஸ்ரீமான்‌ ராவ்‌ பஹதூர்‌ சி.வி.எஸ்‌. நரசிம்ம ராஜு காங்கிரஸ்‌ உத்தியோகம்‌ ஏற்றுக்கொள்ளும்‌ என்று ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌ சொன்னதை நம்பி வந்தேன்‌; இப்போது அவர்‌ பொய்‌ பேசுகிறார்‌: ஆதலால்‌ நான்‌ சுயராஜ்யக்‌ கட்சியையும்‌ காங்கிரசையும்‌ விட்டுப்‌ போகிறேன்‌ என்று சொல்லிப்‌ போன வர்தானே? ஸ்ரீமான்‌ முத்தையா முதலியார்‌ தனது பிரசார அறிக்கையில்‌ காங்கிரஸ்‌ திட்டத்தையே ஒப்புக்‌ கொள்ளாமலும்‌ காங்கிரஸ்‌ என்கிற வார்த்தையைக்‌ கூட பிரஸ்தாபிக்காமலும்‌ காங்கிரஸ்‌ கொள்கைக்கு விரோத மாகவே நான்‌ சட்டசபையில்‌ அது செய்கிறேன்‌ இது செய்கிறேன்‌ என்று சொல்லி எழுதி ஓட்டு வாங்கினவர்தானே? ஸ்ரீமான்‌ சேதுரத்தினமய்யர்‌ தான்‌ காங்கிரஸ்வாதி என்று சொல்லாமலும்‌ சொல்லுவதற்குப்‌ பயந்து கொண்டும்‌ வேறு பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு அபேக்ஷகராய்‌ நின்றவர்‌ தானே? அதுபோலவே ஜனாப்‌ டாஜுடீனும்‌ தான்‌ சுயராஜ்யக்‌ கட்சியாரோடு சேருவ தில்லை என்று தனது சமூகத்தாருக்கு வாக்கு கொடுத்தவர்தானே? ஸ்ரீமான்‌ கோபால்‌ மேனனுக்கும்‌ காங்கிரசுக்கும்‌ என்ன சம்பந்தம்‌? அவர்‌ காங்கிரஸ்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு நின்றாரா? ஸ்ரீமான்‌ யூராமசாமி அய்யருக்கு காங்கிரஸ்‌ என்றால்‌ என்ன என்று தெரியுமா? அவர்‌ காங்கிரஸ்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு நின்றாரா? இரண்டு ஆடுகள்‌ போட்ட சண்டையின்‌ பலனாக ஒழுகின ரத்தத்தை குடித்து வந்தவர்தானே? இதில்‌ யாரைப்பற்றி எழுதுவது? யாரின்‌ காங்கிரஸ்‌ பக்தியைப்‌ பற்றி வர்ணிப்பது? ஸ்ரீமான்‌ எல்‌.கே. துளசிராம்‌ என்றைக்கு காங்கிரஸ்‌ மெம்பர்‌ ஆனார்‌? மகாத்மாவிடம்‌ பதினாயிரம்‌ சர்க்கா மதுரையில்‌ சுற்ற வைக்கிறேன்‌ என்றாரே அன்றைக்கா? தேவஸ்தான மசோதா செய்யும்போது பனகால்‌ கூடவே இருந்தாரே அன்றைக்கா? பார்ப்பனரல்லாதார்‌ சார்பாக காங்கிரசின்‌ அக்‌ கிரமங்களை எடுத்துச்‌ சொல்ல சீமைக்குப்‌ போனாரே அன்றைக்கா? அல்லது மதுரைக்‌ கலெக்டரிடம்‌ சட்டசபை அபேக்ஷக விண்ணப்பம்‌ போடும்போது தன்னைக்‌ காங்கிரசுக்காரர்‌ அல்லவென்றும்‌ சுயராஜ்யக்‌ கட்சிகாரர்‌ அல்ல வென்றும்‌ தாம்‌ சுயேச்சை, தாராள கொள்கைக்காரர்‌ என்று வாக்கு மூலம்‌ கொடுத்தாரே அன்றைக்கா? அல்லது ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி அய்யர்‌ அவர்‌ கள்‌ மதுரை பிளாட்பாரத்தில்‌ ஸ்ரீமான்‌ துளசிராம்‌ அவர்களை, பனகால்‌ ஒழிந்து விட்டார்‌; தங்களை நான்‌ மந்திரியாக்கப்‌ போகிறேன்‌ என்று வாக்கு கொடுத்‌ தாரே குடி அரசு - 1926 (2) 416 அன்றைக்கா? என்றைக்கு என்று மித்திரன்‌ சொல்லக்கூடுமா? உத்தி யோகங்களுக்கு ஆசைப்பட்டு மந்திரி கட்சி என்று பனகாலின்‌ வாலைப்‌ பிடித்துக்‌ கொண்டு திரிந்து உத்தியோகம்‌ பட்டம்‌ பதவிகள்‌ எதிர்பார்த்தபடி கிடைக்காததால்‌ ஏமாந்து போய்‌ மந்திரி கக்ஷியுடன்‌ சண்டைபோட்டுக்‌ கொண்டு வந்த சிலரை தாங்கள்‌ ஆசை வார்த்தைகள்‌ சொல்லி ஏமாற்றி தங்கள்‌ ஆளுகள்‌ என்று பெயர்‌ கொண்டதினாலேயே அவர்கள்‌ காங்கிரசுக்‌ காரர்கள்‌ ஆகிவிடுவார்களா? உத்தியோகம்‌ இல்லை யென்று தெரிந்தால்‌ இவர்களுடன்‌ இருப்பார்களா? உத்தியோகம்‌ கிடைப்பதாயிருந்து ஒப்புக்‌ கொள்வதாகவே இருந்தால்‌ இப்போது வாக்குத்தத்தம்‌ செய்து சேர்ந்திருக்‌ கும்‌ ஆட்களுக்கெல்லாம்‌ உத்தியோகம்‌ கொடுக்க முடியுமா? கொடுக்கா விட்டால்‌ இந்தப்‌ பார்ப்பனர்களை விட்டு மறுபடியும்‌ பனகாலிடம்‌ போய்‌ சேரமாட்டார்களா? மூன்று மந்திரி, மூன்று காரியதரிசி, ஒரு பிரசிடெண்ட்‌ ஆக 7 ஸ்தானங்களை “50 காங்கிரஸ்கார” ருக்கும்‌ “25 சுயேச்சைக்கார” ருக்கும்‌ ஆக 75 பேருக்கு எப்படி பங்கிட்டுக்‌ கொடுக்க முடியும்‌? அப்படி கொடுப்பதாயிருந்தால்‌ பார்ப்பனர்களுக்கும்‌ கொடுக்க வேண்டாமா? மகம்‌ மதியர்களுக்கும்‌ கொடுக்க வேண்டாமா? கிறிஸ்தவர்களுக்கும்‌ கொடுக்க வேண்டாமா? அல்லது இவர்கள்‌ ஒப்புக்‌ கொள்ளவில்லை என்றால்‌ கவர்ன்‌ மெண்டு ஆபீசு கதவடைத்துப்‌ போகுமா? வெற்றி! வெற்றி! என்று வெள்ளிக்‌ கோலில்‌ அடிபடுவதைத்‌ தவிர தேசத்திற்கோ சமூகத்திற்கோ அல்லது பார்ப்பனரல்லாதாருக்கோ முக்கால்‌ துட்டு லாபமுண்டா? பணங்களை வாரி இறைத்ததுதான்‌ பலன்‌; தொண்டைக்‌ கிழிய கத்தினதுதான்‌ பலன்‌; அல்லாமல்‌ சாதிப்பது ஒன்றுமில்லை என்ப தோடு மறுபடியும்‌ பனகால்‌ ராஜ்யத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்‌ கப்‌ போகிறார்கள்‌ என்பது உறுதி என்றே சொல்வோம்‌. இதுகள்‌ எல்லாம்‌ பொது ஜனங்களுக்குத்‌ தெரியாது என்று நினைத்து கலம்‌ போட்டு 47 பேர்க ளின்‌ பெயர்களை எழுதி விட்டால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி செத்துப்‌ போய்விடும்‌. இங்கி லீஷ்‌ அரசாங்கம்‌ மத்தியதரைக்‌ கடலில்‌ மூழ்கிப்போகும்‌, தாங்கள்‌ போய்‌ கை கொடுத்து மறுபடியும்‌ கூட்டி வரலாம்‌, அதன்‌ மூலம்‌ பார்ப்பனர்‌ ஆதிக்கம்‌ நிலைத்துவிடும்‌ என்று நினைத்துக்கொண்டு கனவு கண்டதாகத்‌ தெரிகிறது. அதைப்பற்றி இங்கு யாருக்கும்‌ கவலையில்லை. இன்னமும்‌ 98 பெயர்களையும்‌ காங்கிரசுக்காரர்கள்‌ என்று சொல்லிக்‌ கொண்டு அவர்கள்‌ படத்தையும்‌ போட்டுக்‌ கொண்டாலும்‌ நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. இப்பொழுது எப்படித்‌ தங்களை சுயராஜ்யக்‌ கட்சிக்காரர்‌ என்று சொல்லிக்‌ கொள்ளவே பயப்படும்படியாக ஆகிவிட்டதோ அது போலவே அடுத்த தேர்தலுக்குள்‌ தங்களை காங்கிரசுக்காரர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளவும்‌ “தேசபக்தர்கள்‌” என்று சொல்லிக்‌ கொள்ளவும்‌ பயப்படும்படியான காலத்தை இவர்களுடைய “தேசபக்தி” கொண்டுவரப்‌ போகிறது நமக்குத்‌ தெரியும்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ கொள்கையை இதுவரையில்‌ யாரும்‌ தப்பு என்று சொல்லி 417 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 காங்கிரசுக்காரருக்கோ சுயராஜ்யக்‌ கட்சிக்காரருக்கோ ஓட்டு கொடுத்து விடவில்லை என்பதும்‌ நாம்‌ அறிவோம்‌. பாமர மக்களை ஏமாற்றி யதிலும்‌. மகந்துக்களுனுடையவும்‌ மடாதிபதிகளினுடையவும்‌ பணங்காசு செலவு செய்ததிலும்‌ தந்திரத்திலும்‌ வஞ்சகத்திலும்‌ ஓட்டுக்‌ கிடைக்கிறதே அல்லாமல்‌ சர்க்காருக்கு 10 ரூபாய்‌ பூமி கந்தாயம்‌ கொடுக்கும்‌ ஒவ்வொரு ஓட்டரும்‌. தேசத்தின்‌ தத்துவத்தையும்‌ நிற்பவர்களின்‌ யோக்கியதையும்‌ காங்கிரசின்‌ நாணயத்தையும்‌ கவனித்து ஓட்டுக்‌ கொடுத்தார்கள்‌ என்று யாரா வது சொல்ல முடியுமா? என்று கேட்கிறோம்‌. பார்ப்பனப்‌ பத்திரிகைகள்தான்‌ இம்மாதிரி புரட்டுகளைச்‌ செய்கிறது என்று சொன்னால்‌ பார்ப்பனரல்லா தாரால்‌ நடத்தப்படும்‌ சில பத்திரிகைகளும்‌ “ஈ அடித்தான்‌ காப்பி” என்று சொல்வது போல்‌ கொஞ்சமும்‌ முன்பின்‌ யோசிக்காமலும்‌ பகுத்தறிவை உபயோகப்‌ படுத்தாமலும்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகளின்‌ கூற்றை அப்படியே எடுத்து காப்பி அடித்திருக்கின்றன. அதோடு மாத்திரமில்லாமல்‌ அவை களையே பின்பற்றி தங்கள்‌ அபிப்பிராயமும்‌ எழுதுகின்றன. இவற்றை நினைக்கும்‌ போது நமது மக்களின்‌ நிலையைக்‌ குறித்து வெட்கப்படாம லிருக்க முடியவில்லை... ஆதலால்‌ இதுகளுக்குத்‌ தக்க மருந்து, யார்‌ மந்திரியாய்‌ வருவார்கள்‌? யார்‌ அரசாங்கத்தை நடத்தப்‌ போகிறார்கள்‌? யார்‌ அரசாங்கத்தை தகர்க்கப்‌ போகிறார்கள்‌? என்பதல்ல. அதைப்பற்றி கவலையும்‌ வேண்டியதில்லை. எப்படி பாமர மக்களை இக்கொடுமையிலிருந்து தப்புவிக்கிறது என்கிற விசயத்தில்தான்‌ நமது நாட்டினிடமோ சமூகத்தினிடமோ உண்மையான கவலை உள்ளவர்கள்‌ செய்ய வேண்டியது என்பதாகத்‌ தெரிவித்துக்‌ கொள்ளு கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 21.11.4926 குடி அரசு - 1926 (2) 418. யார்ப்பண்யத்தை ஒழித்த கல்யாணங்கள்‌ சேலம்‌ அடுத்த தாதம்பட்டி என்னும்‌ கிராமத்தில்‌ பல்ஜிய நாயுடு வகுப்பைச்‌ சேர்ந்த வீடுகளில்‌ மூன்று கல்யாணங்கள்‌ வெகு விமரிசையாய்‌ நடந்தன. அம்மூன்று கல்யாணங்களுக்கும்‌ பார்ப்பன புரோகிதர்கள்‌. இல்லாமல்‌ பார்ப்பனரல்லாதாரைக்‌ கொண்டே முகூர்த்தம்‌ செய்விக்கப்‌ பட்டது. இவைகளில்‌ ஒரு கல்யாண வீட்டுக்காரருக்கு மாத்திரம்‌ ஆரம்பத்‌ தில்‌ நாம்‌ ஏன்‌ இதை முதன்‌ முதலாகச்‌ செய்ய வேண்டும்‌, மற்றும்‌ யாராவது செய்த பிறகு நாம்‌ செய்யலாம்‌ என்கிற எண்ணம்‌ மனதுக்குள்ளாக இருந்‌ திருக்கிறது. அதற்கேற்றாப்‌ போல்‌ அவர்‌ ஒரு பார்ப்பனப்‌ புரோகிதரையும்‌ தருவித்து விட்டார்‌. ஆனால்‌ மற்ற இரண்டு கல்யாண வீட்டுக்காரரும்‌ தைரியமாய்ச்‌ செய்ய ஆரம்பித்த பிறகும்‌ ஈரோட்டிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்த ஸ்ரீமான்களான அ.கோவிந்த நாயக்கர்‌, வெ. முத்து நாயக்கர்‌, ரா. துரைசாமி நாயக்கர்‌, வெ. எல்ல நாயக்கர்‌, எ.எல்ல நாயக்கர்‌, கே. ராமசாமி நாயக்கர்‌, ஈ.வெ. ராமசாமி நாயக்கர்‌ முதலிய இன்னும்‌ பல கனவான்கள்‌. சொன்ன பிறகும்‌ தான்‌ தருவித்த பார்ப்பனப்‌ புரோகிதருக்கு ஏதோ பணம்‌ கொடுத்தனுப்பி விட்டு அவரும்‌ பார்ப்பனரல்லாதாரைக்‌ கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்‌ தையும்‌ நடத்திக்‌ கொண்டார்‌. ஆகவே, இந்த மூன்று கல்யாணங்களும்‌ எவ்வித சடங்குக்கும்‌ பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்தி ருந்த மற்ற பந்து மித்திரர்களும்‌ தங்கள்‌ தங்கள்‌ வீட்டு சுபா சுபகாரியங்களை யும்‌ இனி பார்ப்பனரல்லாதாரைக்‌ கொண்டே செய்து கொள்வது என்னும்‌ அபிப்பிராயத்தையும்‌ தெரிவித்துக்‌ கொண்டார்கள்‌. இந்த வகுப்பார்‌ பார்ப்பனீயத்தை நீக்கி கல்யாணம்‌ செய்த கெளரவம்‌. சேலம்‌ தாதம்பட்டிக்கே கிடைத்ததோடு மற்றவர்களுக்கும்‌ வழி காட்டின பெருமையும்‌ அவர்களுக்கு கிடைத்ததைப்‌ பற்றி நாம்‌ மிகுதியும்‌ மகிழ்ச்சி அடைகிறோம்‌. அதோடு இதற்கு முக்கியமாய்‌ நின்று வேலை செய்த ஸ்ரீமான்கள்‌ எல்ல நாயக்கர்‌, கே. ராமசாமி நாயக்கர்‌ முதலிய கனவான்‌ களையும்‌ பாராட்டுகிறோம்‌ குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 21.11.4926 419 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பின்னை வாத்திற்குப்‌ போய்ப்‌ புருஷணைய்‌ பறி கொடுப்பதா? கொனண்கைக்காக மந்திரி பதவியா? மந்திரி மகவிக்காக ககான்கையா? பணகால்‌ ராஜா அவர்கள்‌ மந்திரி பதவிகளை பங்கிட்டுக்‌ கொள்ளும்‌ விஷயத்தில்‌ சட்டசபை சம்பந்தப்பட்ட வரையில்‌ “ஜஸ்டிஸ்‌ கட்சி” அல்லது பிராமணரல்லாதார்‌ என்கிற கட்சிப்‌ பெயரைக்‌ கூட விட்டுவிட்டு அதற்கு வேறு பெயர்‌ வைத்துக்‌ கொள்ள சம்மதித்ததாக “மித்திரன்‌” முதலிய பத்திரிகைகளில்‌ காணப்படுகிறது. “*செருப்புக்காகக்‌ காலா? காலுக்காகச்‌ செருப்பா?” என்னும்‌ பழமொழி போல்‌ கட்சிக்காக மந்திரியா, மந்திரிக்காக கட்சியா? மந்திரி உத்தியோ கத்திற்காக கட்சியின்‌ பெயரை மாற்றிக்கொள்ள சம்மதித்த பணகால்‌ ராஜாவின்‌ நிலைமையை யாரும்‌ கண்டிக்காமலிருக்க முடியாது. சட்டசபையில்‌ பணகால்‌ அரசர்‌, தானும்‌ தனது கட்சியாரும்‌ பார்ப்‌ பனரல்லாதார்‌ கட்சிப்‌ பிரதிநிதி என்பதை மாற்றிக்‌ கொள்வார்களேயானால்‌ சட்டசபையைப்‌ பொறுத்த வரையில்‌ வேறு யாருடைய பிரதிநிதி என்று சொல்லிக்‌ கொள்ள அருகதையுடையவர்கள்‌ ஆவார்கள்‌.டாக்டர்‌ நாயரவர்‌. களும்‌ சர்‌. தியாகராய செட்டியாரவர்களும்‌ எந்த சமயத்திலும்‌ தவ்களுடைய கட்சிப்‌ பெயரையோ கொள்கையையோ ஒரு கடுகளவு மாற்றிக்‌ கொள்வ தற்கும்‌ எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சந்தர்ப்பத்திலும்‌ சிறிதும்‌ சம்மதித்த வர்களல்லர்‌. அந்த உறுதி அவர்‌ களிடத்தில்‌ இருந்ததினாலேயே பார்ப்பன ரல்லாதார்களுக்கே ஒரு அந்தஸ்து இருந்து வந்திருக்கிறது. அவர்கள்‌ காலத்தில்‌ நடந்த இரண்டு தேர்தல்களிலும்‌ பூரண வெற்றி பெற்று மந்திரிகளை நியமிக்கும்‌ யோக்கியதைகளையும்‌ அடைந்திருந்தார்கள்‌. அவர்கள்‌ காலமான பிறகு அது போல்‌ உறுதியும்‌ நேர்மையுமில்லாத தலைவர்கள்‌ மூலம்‌ அக்கட்சி நடைபெற வேண்டியிருந்தபடியால்‌ பார்ப்பனர்கள்‌ சூழ்ச்சி இக்கட்சியை வெகு சுலபத்தில்‌ கலைக்கத்‌ தைரியம்‌ கொண்டு விட்டது. ஒரு சிறு மாறுதல்‌ ஏற்பட்ட காரணத்தினாலேயே ஒரு நெருக்கடி யான சமயத்தை சமாளிக்க முடியாமல்‌ கட்சியின்‌ பெயரை விட்டு விட சம்மதித்தது கொஞ்ச மாவது சுயமரியாதையுள்ளவர்களும்‌ சுயநலமற்றவர்களும்‌ செய்யும்‌ காரியமென்று சொல்ல முடியாது. பணகால்‌ அரசர்‌ உண்மையிலேயே உறுதியும்‌ குடி அரசு - 1926 (2) 420 சுயமரியாதையும்‌ உள்ளவராகயிருந்தால்‌, கவர்னர்‌ பிரபு தன்னை அழைக்காமல்‌ வேறு ஒருவரை அழைத்து, மந்திரி சபையை அமைக்கும்‌ படி கேட்டதன்‌ பின்‌ கண்டிப்பாய்‌ மந்திரி விஷயத்தைப்‌ பற்றி எந்த விதத்திலும்‌ கலந்து கொள்ளாமலிருப்பதே அறிவுடைமையும்‌ சுயமரியாதை யுமாகும்‌. எப்பொழுது கவர்னர்‌ பிரபு தன்னைக்‌ கூப்பிடவில்லையோ அப்போழுதே தான்‌ தலைமை வகித்து நடத்தும்‌ கட்சியாகிய பார்ப்பன ரல்லாதார்‌ கட்சி சிறுபான்மைக்‌ கட்சி என்றோ தோல்வியடைந்த கட்சி என்றோ கவர்னர்‌ பிரபு நினைத்து விட்டாரென்பது அர்த்தமா அல்லவா? அப்படி அவர்‌ நினைத்த பிறகு அம்மந்திரி பதவியை எந்த வழியிலாவது ஏற்பது மானமுடைமை யாகுமா? கவர்னரே மறுபடியும்‌ பனகால்‌ அரசரைக்‌ கூப்பிடுவதாயிருந்தாலும்‌ மாட்டேன்‌ என்று சொல்லிவிட்டு சட்டசபைக்கு வெளியில்‌ இருந்து கொண்டு தீவிரப்பிரசாரம்‌ செய்து தங்கள்‌ கட்சியார்‌ சிறுபான்மையோரா பெரும்‌ பான்மையோரா என்பதை கவர்னர்‌ அறியும்‌ படிச்‌ செய்வதும்‌ சர்க்காரின்‌ யோக்கியதையையும்‌ பார்ப்பனர்களின்‌ சூழ்ச்சி யையும்‌ பொது மக்கள்‌ அறியும்படி செய்வதும்‌ முக்கியக்‌ கடமையாகும்‌. அப்படிக்கில்லாமல்‌, க௯ஷி, மந்திரிசபை நியமிக்க முயற்சி செய்வதிலோ அல்லது மற்றவர்கள்‌ முயற்சி செய்தால்‌ அதில்‌ தானும்‌ அல்லது தனது கட்சியாரும்‌ ஒன்றிரண்டு மந்திரி ஸ்தானத்தை ஒப்புக்‌ கொள்வதிலோ கவலை செலுத்துவார்களேயானால்‌ அடுத்த மூன்று வருஷத்திற்குப்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியும்‌ அவர்களது கொள்கையும்‌ ஸ்தம்பிக்கப்பட்டுப்‌ போய்விடும்‌ என்றே எச்சரிக்கை செய்வோம்‌.ஜஸ்டிஸ்‌ கட்சி அடுத்த மூன்று வருஷ காலத்துக்கு மந்திரி பதவி விஷயத்தில்‌ சம்பந்தப்படாமலிருந்து விடுமேயானால்‌ பொது மக்கள்‌ அக்‌ கட்சியின்‌ கொள்கையை முன்னிலும்‌ பதின்‌ மடங்கு வேகத்தோடு ஈடேற்றி வைப்பதற்குத்‌ தானாகவே முன்‌ வருவார்கள்‌. அரசாங்கத்தாரும்‌ ஒருவர்‌ பேரில்‌ ஒருவரை தூண்டிவிட்டு வேடிக்கைப்‌ பார்க்கும்‌ தன்மையிலிருந்தும்‌ கொஞ்சம்‌ மாறுவார்கள்‌. அடுத்து வரப்போகும்‌ மூன்று வருஷ காலத்துக்‌ குள்ளாக மந்திரி பதவி இல்லாவிட்டால்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌ அடியோடு ஒழிந்து போய்‌ விடுவார்களா? ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ மந்திரி பதவி இல்லா விட்டால்‌ செத்துப்‌ போக வேண்டியதுதானா? ஒரு மயிர்‌ உதிர்ந்து போனால்‌ கவரிமான்‌ வாழா தென்பார்கள்‌. அப்படிப்போல்‌ ஒரு மந்திரி பதவி போய்‌ விட்டால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி வாழ முடியாதா? மந்திரி பதவிக்காகவா இக்கட்சி ஏற்பட்டது? அப்படியானால்‌ அது ஒழிந்து போக வேண்டியதுதான்‌; அப்படிக்‌ கில்லாமல்‌ பார்ப்பனரல்லாத மக்களின்‌ சுயமரியாதைக்காக ஏற்படும்‌ கட்சியா யிருக்குமானால்‌ அது மந்திரி சபையை மறந்து வெளியில்‌ வந்து ஆண்மை யுடன்‌ போராட வேண்டியதுதானேயொழிய கட்சிப்‌ பெயரை மாற்றியாவது பதவி பெற நினைப்பது சுயமரியாதைக்காகப்‌ பாடுபடும்‌ தலைவர்களின்‌ கடமை அல்லவென்றே சொல்லுவோம்‌. சட்டசபையின்‌ மூலமும்‌ மந்திரி பதவியின்‌ மூலமும்‌ நாட்டுக்கு ஒரு பலனும்‌ ஏற்பட்டு விடாதென்பதை நாம்‌ பல தடவை சொல்லியிருக்கிறோம்‌. ஆறு வருஷ காலம்‌ இப்பதவியை 421 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 அநுபவித்தவர்களும்‌ பெரும்பாலும்‌ இதே அபிப்பிராயத்தை சொல்லி யிருக்கிறார்கள்‌. அன்றியும்‌ பார்ப்பனரல்லாத மக்களின்‌ சுயமரியாதையின்‌ எல்லை முழுவதும்‌ சட்டசபையின்‌ மூலம்‌ அடைந்து விடலாம்‌ என்பதும்‌ பகற்‌ கனவேயாகும்‌.நமது சுயமரியாதையின்‌ எதிரிகளால்‌ ஏற்படும்‌ சூழ்ச்சி களில்‌ ஒரு சிறிது ஒழிக்க முடியுமானாலும்‌ இச்சிறு நன்மைக்காக கட்சியின்‌ பேரையே பலி கொடுப்பது பிள்ளை வரத்திற்குப்‌ போய்‌ புருஷனைப்‌ பறிகொடுத்ததற்‌ கொப்பாகுமே தவிர வேறல்ல. தவிரவும்‌ ஏதாவதொரு கட்சிக்குத்‌ தலைவர்களாயிருப்பவர்களுக்கு ஏதாவதொரு பதவியோ அதிகாரமோ கிடைக்கக்‌ கூடிய சந்தர்ப்ப மேற்பட்டாலே அக்கட்சிக்கு முடிவு காலமென்றுதான்‌ சொல்லவேண்டும்‌. ஏனெனில்‌ அதிகார பதவி களிலிருப்பவர்கள்‌ ஒருக்காலும்‌ யோக்கியமாய்‌ நடந்து கொள்ள முடியவே முடியாது. அவ்வதிகாரத்தைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ளவும்‌, கட்சி சேர்க்கவும்‌ அநேக அயோக்கியத்தனமான காரியங்கள்‌ செய்ய வேண்டியதோடு மற்ற வர்கள்‌ செய்யும்‌ அக்கிரமங்களையும்‌ நாணயக்‌ குறைவுகளையும்‌ அநு மதிக்க வேண்டியும்‌ வரும்‌. ஆதலால்‌ நிவர்த்தி இல்லாத சமயங்களில்‌ மாத்தி ரம்‌ ஏதோ பதவிகளை ஏற்றுக்‌ கொள்ளலாமே தவிர மற்றபடி பதவிகளை வகிப்பது கட்சிக்கு ஆபத்தாகவே முடியும்‌. பணகால்‌ அரசர்‌ சென்ற மூன்று வருஷங்களாக மந்திரி பதவியில்லாமல்‌ வெளியிலிருந்திருப்பாரானால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ நிலைமை தேர்தலில்‌ வேறு மாதிரியாயிருந்திருக்கு மென்று உறுதியாய்‌ சொல்லுவோம்‌. சர்‌.தியாகராய பெருமானுக்கிருந்த மதிப்‌ பெல்லாம்‌ அவர்‌ வெளியிலிருந்ததினால்தானே யொழிய மந்திரியா யிருந்த தினாலல்ல. ஆதலால்‌ என்ன வரினும்‌ கட்சியையும்‌ கட்சிப்‌ பெயரை யும்‌ விட்டுக்‌ கொடுக்காமலும்‌ தலைவர்களாயிருப்பவர்கள்‌ பதவிகளில்‌ பிரவே சிக்காமலும்‌ இருப்பதே கட்சியைக்‌ காப்பாற்றுவதாகும்‌. தவிரவும்‌ மந்திரி பதவியை ஏற்பவர்கள்‌ வாங்கும்‌ சம்பளங்கள்‌ ஒரு குறிப்பிட்ட சிறு தொகை தவிர மற்றவை கட்சிப்‌ பிரசாரத்திற்கே ஒப்படைக்கப்பட வேண்டும்‌. அது முடியாதாயின்‌ மந்திரியின்‌ சம்பளத்தை வருஷம்‌ ஒன்றுக்கு பதினாயிரம்‌ ரூபாய்களுக்குள்ளாகவே நிர்ணயிக்க வேண்டும்‌. அப்பொழுது தான்‌ பதவிகளுக்கு இத்தனை ஆத்திரங்களும்‌ பதவியிலிருப்பவர்கள்‌ மேல்‌ இவ்வளவு பொறாமைகளும்‌ விரோதிகளும்‌ ஏற்படமுடியாது. பதவிகளை ஏற்ற பிறகும்‌ பதவிகளைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள இவ்வளவு அக்கிரமங்‌ களும்‌ செய்ய வேண்டி வராது. அரசியலிலானாலும்‌ சுயமரியாதையிலானா லும்‌ கட்சி நலத்துக்கென்று சட்டசபைக்கு நிற்பவர்கள்‌ மிகவும்‌ அருமையா கவே இருக்கிறார்கள்‌. ஏறக்குறைய இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்‌ சுமார்‌ நூறு பேர்க ளிலும்‌ 2 அல்லது 3 பேராவது கட்சியையோ தேசத்‌ தையோ சமூகத்தையோ சுயமரியாதையையோ லட்சியம்‌ செய்து சட்ட சபைக்கு வந்தார்களென்று யாராவது சொல்ல முடியுமா? அப்படி இருந்தால்‌ கவர்னர்‌. பிரபு வாலழைக்கப்பட்ட ஸ்ரீமான்‌ நரசிம்ம ராஜு அவர்கள்‌ மூன்று மாதத்தில்‌ ஆறு கட்சி மாறியிருப்பாரா? பனகால்‌ அரசர்‌ கட்சிப்‌ பெயரை மாற்றச்‌ குடி அரசு - 1926 (2) 422 சம்மதிப்பாரா? ஸ்ரீமான்‌ ஐயங்காரவர்கள்‌ பதினாயிரக்கணக்கான புரட்டுப்‌ பேசியிருப்பாரா? ஸ்ரீமான்‌ ஆச்சாரியாரவர்கள்‌ ஆயிரத்தெட்டு சூழ்ச்சிகள்‌ செய்வாரா? கட்சித்‌ தலைவர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுபவர்‌ களின்‌ நிலைமையே இப்படியிருந்தால்‌ மற்றபடி வாலர்களின்‌ யோக்கியதை யைப்பற்றி எழுத ஆரம்பித்தால்‌ அது படிப்பதற்கே அருவருக்கத்தக்கதாகு மென்றே நினைக்கிறோம்‌. ஆதலால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி என்பதோ பார்ப்பன ரல்லாதார்‌ கட்சி என்பதோ மக்களுக்குப்‌ பயன்‌ அளிக்க வேண்டுமானால்‌ இம்மாதிரி நிலைமைகளிலும்‌ இம்மாதிரி தலைவர்களிடமும்‌ சிக்கி அல்லல்‌ படாமல்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டியதோடு நமது சுயமரியாதைக்கு எதிரிகளான பார்ப்பனர்களும்‌ மற்றவர்களும்‌ தேர்தல்‌ முடிவுகளைக்‌ கூறிக்‌ கொண்டு ஜஸ்டிஸ்‌ கட்சி மாண்டு விட்டது; பார்ப்பனரல்லாதார்‌ கட்சி செத்தது; வகுப்புத்‌ துவேஷக்‌ கட்சியை பொது ஜனங்கள்‌ விரும்பவில்லை என்று பசப்பி ஓலமிட்டுத்‌ திரிவதற்கு அநுகூலமாக நடந்து கொள்ளாமல்‌ மன உறுதியுடனும்‌ சுயமரியாதையுடனும்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. கட்சி என்று சொல்லுவ தெல்லாம்‌ அதிலுள்ள கொள்கைகளுடையவும்‌ திட்டங்‌ களுடையவும்‌ மதிப்பைப்‌ பொறுத்ததே ஒழிய ஆள்களின்‌ மதிப்பையும்‌ ஆள்‌ கூட்டத்தின்‌ எண்ணிக்கையையும்‌ பொறுத்தது அல்ல. ஆதலால்‌, கொள்கையையும்‌ உறுதியையும்‌ கடைப்பிடித்த சிலரையாவது கொண்டு பார்ப்பனரல்லாதார்‌ கட்சி கட்டுப்பாடாய்‌ வேலை செய்யாத பக்ஷம்‌ அடுத்த. மூன்று வருஷத்திற்குள்‌ கண்டிப்பாய்‌ இருக்குமிடம்‌ தெரியாமல்‌ மறைந்து விடுமென்றே கவலையுடன்‌ எச்சரிக்கை செய்கிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 28.11.1926 423 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. டாக்டர்‌ வாகராச-னு நாமர௫ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு அவர்கள்‌ “மந்திரிசபை” என்னும்‌ தலைப்பிட்டு தமிழ்நாடு பத்திரிகையில்‌ எழுதி இருக்கும்‌ வியாசம்‌ பாமர: மக்களை குழப்பமடையச்‌ செய்யக்‌ கூடியதாயிருப்பதால்‌ நிலைமையைத்‌ தெளிவு படுத்த வேண்டி அவ்வியாசத்தின்‌ போக்கைப்‌ பற்றிச்‌ சிறிது ஆராய வேண்டியிருக்கிறது. டாக்டர்‌ நாயுடுகாரு வியாசத்தில்‌ குறிப்பிட்டிருக்கும்‌ சில முக்கிய விஷயங்களை இதில்‌ குறிப்பிடுகிறோம்‌. “ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ மகாநாட்டில்‌ நான்‌ வேண்டிக்‌ கொண்டபடியும்‌, தேசீய சங்கத்தின்‌ அறிக்கைப்‌ படியும்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கோ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கோ பெரும்பான்மை யான ஸ்தானங்கள்‌ கிடைக்கமுடியாமல்‌ செய்து விட்டதைக்‌ கண்டு நான்‌ மிகவும்‌ சந்தோஷப்படுகிறேன்‌” என்று எழுதியிருக்கிறார்‌. இதில்‌ கடுகளவு உண்மை யாவதிருக்கிறதா? டாக்டர்‌ நாயுடுகாரு கணக்குப்‌ படிக்கே சுயராஜ்‌ யக்‌ கட்சிக்கு 46 ஸ்தானங்கள்‌ என்று போட்டிருக்கிறார்‌. ஒட்டு மொத்தம்‌ தொண்ணூற்றாறு என்றும்‌ போட்டிருக்கிறார்‌. இவர்களில்‌ கட்சி இல்லாத ஐரோப்பியர்களை நீக்கிவிட்டால்‌, டாக்டர்‌ கணக்குப்படியே சுயராஜ்யக்‌ கட்சிக்காரர்‌ மெஜாரிட்டி யாகி இருக்கிறார்கள்‌ என்பதை நாயுடுகாரு ஒப்புக்‌ கொள்ளத்தான்‌ வேண்டும்‌. அப்படி இருக்க தனது வார்த்தையை தேசத்தார்‌. கேட்டு அதன்படி நடந்தார்கள்‌ என்று பெருமை பாராட்டிக்‌ கொள்வதில்‌ எவ்வளவு அசட்டுத்‌ தனம்‌ இருக்கிறது என்பது அறிஞர்களுக்குத்‌ தெரியா மல்‌ போகாது. இதனால்டாக்டர்‌ நாயுடுகாரு அடையும்‌ பெருமையைப்‌ பற்றி நமக்கு சந்தோஷமே ஆனாலும்‌, பாமர மக்களை இது ஏமாற்றுகிறதே என்கிற விஷயத்தில்‌ உண்மையை வெளிப்படுத்தாமல்‌ இருக்கக்‌ கூட வில்லை. முதலாவது நாயுடுகாரு ஸ்ரீ வில்லிபுத்தூரிலும்‌ தேசீய அறிக்கை யிலும்‌ யோக்கியர்களுக்கு ஓட்டுச்‌ செய்யுங்கள்‌ என்று வெளிப்படுத்தினாரே அல்லாமல்‌ ஒரு கட்சியும்‌ மெஜாரிட்டியாராக வராமல்‌ இருக்கும்படி ஓட்டுச்‌ செய்யுங்கள்‌ என்று சொல்லவும்‌ இல்லை. இந்நிலைமையில்‌ டாக்டர்‌. எக்கட்சியைத்‌ தனக்கு பிடித்த யோக்கியமானவர்கள்‌ என்கிறார்‌? ஜனங்கள்‌ எக்கட்சியை அயோக்கியமானவர்கள்‌ என்று தள்ளிவிட்டதாகச்‌ சொல்லு கிறார்‌? பெரும்பான்மையானவர்கள்‌ தெரிந்தெடுக்கப்பட்டதாய்‌ நாயுடுகாரே சொல்லும்‌ கட்சியான சுயராஜ்யக்‌ கட்சியை நாயுடுகாரே பிராமணக்‌ கட்சி என்கிறார்‌. அல்லாமலும்‌ அது கட்டுப்பாடாக பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்‌ பிரசாரம்‌ செய்வதின்‌ பலனாய்‌ ஜாதித்‌ துவேஷம்‌ வளருவதோடு. குடி அரசு - 1926 (2) 424 தேசீய வாழ்க்கைக்கும்‌ ஆபத்து ஏற்பட்டு வருகிறது என்றும்‌ தனது தனி தேசீய அறிக்கையில்‌ குறிப்பிட்டிருக்கிறார்‌. அப்படி இருக்க அக்கட்சியை பெரும்பான்மையாய்‌ தெரிந்தெடுப்பதாய்‌ நாயுடுகாரே ஒப்புக்‌ கொண்டிருக்‌ கையில்‌ நாயுடுகாரு வார்த்தையை தேசம்‌ மதித்ததாக பெருமை பாராட்டிக்‌ கொள்ள இடமெங்கே? தவிர ஜஸ்டிஸ்‌ கட்சி தோல்வியைப்‌ பார்த்து பலர்‌. அதிலிருந்து விலகி சுயேச்சைக்‌ கட்சியில்‌ சேர்ந்திருப்பதாகவும்‌, சுயராஜ்யக்‌ கட்சி வெற்றியைப்‌ பார்த்து சுயேச்சைக்‌ கட்சியார்‌ சிலர்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேர்ந்திருப்பதாகவும்‌ சொல்லுகிறார்‌. இதனாலும்‌ நாயுடுகார்‌ சொல்லியபடி ஜனங்கள்‌ “தக்க யோக்கியர்களை” பெருவாரியாகவும்‌ தெரிந்தெடுத்ததாக அவரே ஒப்புக்‌ கொள்ளவும்‌ முடியாது. தவிர “ராஜீய விஷயத்தில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியின்‌ கொள்கைகளை நான்‌ எப்போதும்‌ ஆதரித்தது கிடையாது. ஜஸ்டிஸ்‌ கட்சியை விட சுயராஜ்யக்‌ கட்சியே சிலாக்கியமானது என்று பல தடவை சொல்லியிருப்பது போலவே இப்போதும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி மந்திரி சபை அமைப்பதைவிட சுயராஜ்யக்‌ கட்சி அமைப்பதே சிலாக்கியமானது என்று நினைக்கிறேன்‌” என்று சொல்லுகிறார்‌. இதிலும்‌ கொஞ்சமாவது யோக்கியப்‌ பொறுப்பு இருக்கிறதா என்பதை வாசகர்களே உணர வேண்டும்‌. தோற்றுப்‌ போனதாகச்‌ சொல்லும்‌ கட்சியை குறை சொல்லுவதற்கு நாயுடு காரைப்‌ போன்றவர்களே வேண்டுமென்பதில்லை. தெருவில்‌ போகும்‌ பிச்சைக்‌ காரன்கூட தாராளமாய்ச்‌ சொல்லிவிடலாம்‌. பொறுப்புள்ளவர்கள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ நாயுடுகாரைப்‌ போன்றவர்கள்‌ காரணம்‌ காட்டி இரண்டிற்குமுள்ள தாரதன்மையையும்‌ காட்டிச்‌ சொன்னால்‌ அது அழகாயும்‌ கண்ணியமாயுமிருக்கும்‌. டாக்டர்‌ நாயுடுகாரவர்களே மற்றொரு சமயத்தில்‌ “சுயராஜ்யக்‌ கட்சி பிராமணக்‌ கட்சி, அடுத்த தேர்தலில்‌ அது வெற்றி பெற்றால்‌ பிராமணரல்லாதாரு டைய கதி அதோகதியாய்ப்‌ போய்விடும்‌ என்பது நமது பலமான நம்பிக்கை” என்று சொல்லி இருக்கிறார்‌. அல்லாமலும்‌ சுயராஜ்யக்‌ கட்சியால்‌ தேசீய வாழ்க்கைக்கு ஆபத்தேற்பட்டு வருகிறது. கட்டுப்பாடாக பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்‌ பிரசாரம்‌ செய்து வருகிறது. அது வெற்றி பெற்றால்‌ பிராமணரல்லாதாருடைய கதி அதோகதியாய்ப்‌ போய்‌ விடும்‌ என்று சொல்லியும்‌ எழுதியும்‌ இருக்கும்‌ டாக்டர்‌ நாயுடுகாரு அவர்கள்‌ இப்போது “சுயராஜ்யக்‌ கட்சி மற்றெல்லா வற்றையும்‌ விட மேலானது. அக்கட்சி மந்திரிசபை அமைப்பதே சிலாக்கிய மானது” என்று சொல்லுவதானால்‌ டாக்டர்‌ நாயுடுகாருக்கு தேசீயக்‌ கவலை யாவது பிராமணரல்லாதார்‌ அபிமானமாவது இருக்கிறதாக யாராவது சொல்லமுடியுமா? மறுபடியும்‌ “தேசீய வாழ்க்கைக்கு ஆபத்தானதும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கதியை அதோகதியாக்கும்‌ பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய்க்‌ கட்டுப்பாடாய்‌ வேலை செய்யும்‌ பிராமணக்‌ கட்சியுமான (இவை நாயுடுகாரே சொன்ன வார்த்தைகள்‌! சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்ள மறுப்பார்களானால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ பெற்று விடுவது நிச்சயம்‌. அப்படிச்‌ செய்வது நாட்டிற்கு நன்மை அல்ல” என்று 425 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. எழுதுகிறார்‌. ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்‌ மந்திரி பதவி ஒப்புக்‌ கொண்டால்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்காரரைவிட நாட்டிற்கோ தேசீயத்திற்கோ என்ன கெடுதி வந்து விடும்‌ என்று நாயுடுகாரு பயப்படுகிறார்‌ என்பதும்‌, சுயராஜ்யக்‌ கட்சியாரால்‌ என்ன நன்மை எதிர்பார்க்கிறார்‌ என்பதும்‌ விளங்கவில்லை. தவிர சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மந்திரி சபை அமைக்க மறுப்பார்களானால்‌ முன்னால்‌ சட்டசபை பஹிஷ்காரத்தால்‌ ஏற்பட்ட கெடுதல்‌ வந்து சேரு மென்று எச்சரிக்கை செய்கிறேன்‌ என்று எழுதுகிறார்‌. சட்டசபை பஹிஷ்‌ காரத்தால்‌ என்ன கெடுதி ஏற்பட்டது? சென்ற மூன்று வருஷமாக சட்டசபை ஏற்பினால்‌ என்ன நன்மை விளைந்தது? டாக்டர்‌ நாயுடுகாரு சட்டசபை பஹிஷ்காரத்திற்கு பிரசாரம்‌ செய்தாரா இல்லையா? சட்டசபையில்‌ பலனில்லை என்று சொன்னாரா இல்லையா? தவிர, “தான்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்‌ காரரல்லவானாலும்‌ மகாத்மா காந்தி எப்படி சுயராஜ்யக்‌ கட்சிக்காரரல்லாத காங்கிரசுக்காரரோ, அது போன்ற காங்கிரசுக்காரர்‌” என்று தனது நிலையை விளக்கியிருக்கிறார்‌. அப்படியானால்‌ மகாத்மா சட்டசபைக்குப்‌ போய்‌ சுயராஜ்யக்‌ கட்சியை (நாயுடுகாரு கொள்கையில்‌) மந்திரி பதவிகளை ஒப்புக்‌ கொள்ளச்‌ சொன்னாரா? ஆதலால்‌ நாட்டிற்கு என்ன கெடுதி? எப்படி நேரிடும்‌. என்று பயப்படுகிறார்‌ என்பது வாசகர்கள்தான்‌ கண்டுபிடிக்க வேண்‌ டியதாயிருக்கிறது. தவிர “மந்திரிசிபையை அமைக்கும்படி சத்தியமூர்த்தி யைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌” என்று எழுதியிருக்கிறார்‌. மந்திரிசபை அமைக்க சத்தியமூர்த்திக்கு என்ன பாத்தியமிருக்கிறது என்று கருதினாரோ தெரியவில்லை. சட்டசபையில்‌ சுயராஜ்யக்கட்சித்‌ தலைவரா? அல்லது பார்ப்பனர்‌ - பார்ப்பனரல்லாதார்‌ என்கிற பொது மக்களால்‌ தெரிந்‌ தெடுக்கப்‌ பட்டவரா? அல்லது கவர்னரால்‌ கூப்பிட்டுக்‌ கேட்கப்பட்டவரா? எந்த முறையில்‌ அவர்‌ மந்திரிசபை அமைக்க வேண்டியவர்‌? எந்த முறை யில்‌ நாயுடுகார்‌ கட்டளை இட வேண்டியவர்‌? என்பது வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. தவிர “சுயராஜ்யக்‌ கட்சியார்‌ தேவஸ்தான சட்டத்தை எதிர்ப்பார்‌. களே; பிராமணரல்லாதாருக்கு விரோதம்‌ செய்வார்களே என்று சிலர்‌ பயப்‌ படலாம்‌. சுயேச்சைவாதிகள்‌ பலமில்லாமல்‌ அவர்களால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது. சுயேச்சைவாதிகளில்‌ ஒன்று இரண்டு பேரைத்‌ தவிர மற்றவர்கள்‌ அனைவரும்‌ பிராமணரல்லாதார்‌. ஆகையால்‌ தேவஸ்தானச்‌ சட்டத்தைத்‌ தொலைக்கவோ பிராமணியத்திற்காக வேலை செய்யவோ சுயராஜ்யக்‌ கட்சியார்களால்‌ ஒரு நாளும்‌ முடியாது” என்று சொல்லுகிறார்‌. அப்படியா னால்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ எல்லோரும்‌ பார்ப்பனர்களா? நாயுடுகாரு கணக்குப்படி வெள்ளைக்காரர்களை நீக்கி 13 பேர்கள்தான்‌ சுயேச்சைக்‌ கட்சியிலிருப்பதாய்‌ ஏற்படுகிறது. இந்த பதின்மூன்று பேர்களில்‌ சில பார்ப்பனர்களை நீக்கிவிட்டால்‌ 10 பேர்தான்‌ ஆகிறது. நாயுடுகார்‌ கணக்குப்‌ படிக்குள்ள ஜஸ்டிஸ்‌ கட்சி 28 பேரும்‌ சுயேச்சை 10 பேரும்‌ சேர்ந்தாலும்‌ சுயராஜ்யக்‌ கட்சியை வெல்ல முடியாத மைனாரிட்டியில்‌ தானே இருக்கிறது. அப்படிக்கு இருக்க தேவஸ்தான சட்டத்தை ஒழிக்கவோ பிராமணீயத்திற்கு குடி அரசு - 1926 (2) 426 வேலை செய்யவோ ஒரு நாளும்‌ முடியாது என்று எந்தக்‌ கணக்கில்‌ சொல்லு கிறார்‌ என்பதும்‌ வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. இது தவிர “சுயராஜ்யக்‌ கட்சியார்‌ தேவஸ்தானச்‌ சட்டத்தை எதிர்க்காமல்‌ இருந்தால்‌ பெரும்பான்மை யான ஸ்தானத்தைப்‌ பெற்று இருக்கலாம்‌. இப்பொழுதாவது சுயராஜ்யக்‌ கட்சிக்கு புத்தி வந்திருக்குமென்று நம்புகிறேன்‌” என்று சொல்லுகிறார்‌. அப்படியானால்‌ தேவஸ்தானச்‌ சட்டத்தைக்‌ கொண்டு வந்து ஆதரித்தவர்கள்‌ பெரும்பான்மையாய்‌ வந்திருக்கிறார்கள்‌ என்று நாயுடுகாரு கருதுகிறாரா? என்பதையும்‌ வாசகர்கள்தான்‌ முடிவு கட்ட வேண்டும்‌. தவிர, “மேலும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியைவிட நமது மாகாணத்தில்‌ ராஜீய விஷயத்தில்‌ சிலாக்கிய மானது சுயராஜ்யக்‌ கட்சியை விட வேறில்லை என்று தான்‌ நான்‌ சொல்லுகிறேனே ஒழிய அதில்‌ சேர்ந்திருப்பவர்கள்‌ அனைவரும்‌ பரிபூரண யோக்கியர்கள்‌ என்று நான்‌ சொல்ல வரவில்லை” என்கிறார்‌. தேசீய வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கிறவர்களாகவும்‌ பார்ப்பனரல்லாதார்‌. கதியை அதோகதியாக்கக்‌ கூடியவர்கள்‌ என்றும்‌ நாயுடுகாராலேயே ஒப்புக்‌ கொள்ளப்‌ பட்டவர்கள்‌ எப்படி ராஜீய விஷயத்தில்‌ சிலாக்கியமானவர்கள்‌ என்று நாயுடு காரு எப்படி கருதுகிறார்‌ என்பதும்‌ நமக்கும்‌ விளங்கவில்லை. தவிர “1929 ம்‌ வருஷத்தில்‌ அதிக சுதந்திரங்கள்‌ கொடுப்பதைப்‌ பற்றி யோசிக்க ராயல்‌ கமிஷன்‌ நியமிக்கப்படுமாகையால்‌ அச்சபையில்‌ தேசாபி மானமுள்ள மந்திரி சபையிருப்பதுதான்‌ நாட்டிற்கு நன்மையாகுமாதலால்‌ இதை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ யோசிக்க வேண்டுமென்று” அவர்களைக்‌ கெஞ்சுகிறார்‌. ராயல்‌ கமிஷனில்‌ நாயுடுகாரே ஒப்புக்கொள்ளும்‌ பார்ப்பனக்‌ கட்சியாகிய சுயராஜ்யக்‌ கட்சியால்‌ நாட்டிற்கு என்ன நன்மை விளையும்‌. பார்ப்பனீயத்தை வளர்க்க வந்த சுயராஜ்யக்‌ கட்சியால்‌ நாட்டிற்கு என்ன நன்மை எதிர்பார்க்கிறார்‌ என்பதும்‌ விளங்கவில்லை. தவிர, “ராமநாதபுரம்‌ ராஜா மந்திரிசபை அமைக்க சுயராஜ்யக்‌ கட்சியார்‌ உதவி செய்யவேண்டும்‌” என்று பிரார்த்திக்கிறார்‌. ராஜா அவர்களின்‌ தேசீயக்கொள்கை என்ன? ஒத்துழையாமையா? ஜஸ்டிஸ்‌ கட்சிக்‌ கொள்கையில்‌ எதற்கு மாறுபட்டவர்‌? சுயராஜ்யக்‌ கட்சிக்‌ கொள்கையில்‌ எதை ஒப்புக்‌ கொண்டவர்‌? ராஜா அவர்‌: களிடம்‌ எவ்விதமான தேசீயக்‌ கொள்கைகளைக்‌ கண்டு நாயுடுகாரு மயங்கு கிறார்‌ என்பதும்‌ நமக்கு விளங்கவில்லை. இம்மாதிரி இன்னமும்‌ என்ன என்னமோ எழுதி இருக்கிறார்‌. அவற்றை எல்லாம்‌ ஒரே சமயத்தில்‌ ஆராய்வது முடியாத காரியம்‌. இவரைப்‌ போலவே ஸ்ரீமான்‌ ஜார்ஜ்‌ ஜோசப்‌ அவர்களும்‌ பலவிதமாக எழுதி இருக்‌ கிறார்‌.மற்றும்‌ பல ஒத்துழையாதார்‌ என்போர்களும்‌ என்ன என்னமோ பேசியிருக்கிறார்கள்‌.. ஆகவே இவர்கள்‌ நாட்டின்‌ பெரிய நெருக்கடியும்‌ கலாட்டாவும்‌ ஏற்படுகிற சமயத்தில்‌ பொதுமக்கள்‌ தங்களை மறந்துவிட்டால்‌ என்ன செய்கிறது என்று ஏதாவது எழுதுவதன்‌ மூலம்‌ தலையைக்‌ காட்டிக்‌ கொள்வதில்‌ நமக்கு ஆக்ஷேபனை இல்லை. ஆனால்‌ வஞ்சகர்களாலும்‌ சூழ்ச்சிக்காரர்களாலும்‌ ஏற்கனவே ஏமாந்து கிடக்கும்‌ நமது பாமர ஜனங்கள்‌ இவ்வித அர்த்தமற்றதும்‌ 427 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 சமயத்திற்குத்‌ தக்கதுமான விஷயங்களால்‌ எவ்வ ளவு தூரம்‌ இன்னமும்‌ ஏமாற்றப்படுவார்கள்‌ என்பதைப்‌ பற்றித்‌ தான்‌ நாம்‌ கவலைப்பட்டு விளக்கவேண்டி இருக்கிறதே தவிர வேறில்லை. முதலாவது ஸ்ரீமான்கள்‌: நாயுடுகாரும்‌ ஜார்ஜ்‌ ஜோசப்பும்‌ இப்போது ஏற்பட்ட வெற்றி யையும்‌ தோல்வியையும்‌ நமது நாட்டின்‌ உண்மையான பிரதிநிதித்துவம்‌ என்றும்‌ நாணயமான காரியங்களால்‌ ஏற்பட்ட வெற்றி தோல்வியென்றும்‌ மனப்‌ பூர்த்தி யாய்‌ ஒப்புக்கொள்ளுகிறார்களா? மந்திரி பதவிகளைப்‌ பற்றி இவர்களுக்கு ஏன்‌ இவ்வளவு கவலை? சட்டசபை உபயோகமற்றது என்றும்‌ மந்திரிகளுக்கு சுயேச்சை அதிகாரமில்லை என்றும்‌, அரசியல்‌ கொள்கை களோ, கட்சிகளோ, வகுப்புக்‌ கொள்கைகளோ, கட்சிகளோ நாட்டின்‌ நன்‌ மைக்கு உற்றதாக இல்லையென்றும்‌ சொல்லி வருகிறவர்கள்‌, விலகினவர்‌ கள்‌, நீயே வா, நீயே வா.நீ எடுத்துக்கொள்‌ மந்திரிபதவியை; நீ எடுத்துக்‌ கொள்‌ பதவி அமைப்பை என்று சொல்லுவதில்‌ என்ன நியாயமும்‌ பொறுப்‌ பும்‌ இருக்கிறது? உண்மையில்‌ இவர்களுக்குப்‌ பொறுப்போ நாட்டினிடம்‌ பக்தியோ இருக்கு மானால்‌ “இப்போதைய நிலைமையில்‌ ஜனப்‌ பொறுப்பாட்சிக்கு தக்க திட்டங்கள்‌ ஒன்றும்‌ அரசியலில்‌ இல்லை; ஜனப்‌ பொறுப்பாட்சியை வகித்து நடத்தத்தக்க கட்சியோ மக்கள்‌ செல்வாக்கிலும்‌ இல்லை; ஆதலால்‌ மந்திரி சபை வேண்டியதில்லை. மந்திரிசபையின்‌ மூலம்‌ சர்க்காரார்‌ மக்களை ஏமாற்றித்‌ தங்கள்‌ ஆதிக்கத்தை செலுத்தும்படி விடக்கூடாது; தேசீயக்‌ கவலை உள்ளவர்கள்‌ யாரும்‌ பதவியை ஒப்புக்கொள்ளாமல்‌ “ஜஸ்‌ டிஸ்‌ கட்சியும்‌” அரசாங்க அடிமைக்‌ கட்சியும்‌ சர்க்காரும்‌ சேர்ந்து அமைக்‌ கப்‌ போகும்‌ மந்திரிசபையை எதிர்த்து “வங்காளம்‌”, “மத்திய மாகாணம்‌” போல்‌ மந்திரி களை ஒழிக்க வேண்டும்‌” என்று சொல்வார்களானால்‌ ஏதோ வார்த்தை அளவிலாவது சீர்திருத்தத்தை வெறுக்கிறோம்‌ என்றாவது காட்டிக்‌ கொள்ள இடமுண்டாகும்‌. பாமர ஜனங்களுக்கும்‌ “தேசீயத்தில்‌” கவலையுண்டாகும்‌. அதை விட்டு விட்டு நாக்கில்‌ தண்ணீர்‌ சொட்டிக்‌ கொண்டு “நீ ஒப்புக்‌ கொள்‌, நீ ஒப்புக்‌ கொள்‌” என்று சொல்லுவதின்‌ அருத்த மென்ன? சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மந்திரி பதவியை ஒப்புக்கொண்டால்‌ “தேசீயம்‌” வளர்ந்து விடுமா? “வகுப்புத்துவேஷம்‌” ஒழிந்துவிடுமா? “வகுப்புக்‌ குறைகள்‌” நீங்கி விடுமா? என்பது நமக்கு விளங்கவில்லை. இவைகளை யெல்லாம்‌ நினைக்கும்‌ போது நமது நாட்டின்‌ விடுதலைக்கும்‌ மக்களின்‌ சுயமரியாதைக்கும்‌ நாளுக்கு நாள்‌: எதிரிகளும்‌ தடைகளும்‌ அதிகமாய்க்‌ கொண்டு வருகிறது என்று எண்ண வேண்டியிருக்கிறதே தவிர அநுகூலம்‌ ஏற்பட்டுக்‌ கொண்டு வருகிறதென்று சொல்லுவதற்கே இடம்‌ இல்லையென்றே வருந்துகிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 28.11.1926 குடி அரசு - 1926 (2) 428 இணி எண்ண சய்ய€வண்டும்‌? சென்னை மாகாண நிர்வாகத்திற்கு புதிய மந்திரிகள்‌ நியமன மாய்விட்டது. அதாவது, ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ p. சுப்பராயன்‌, A. ரங்கநாத முதலியார்‌, RN. ஆரோக்கியசாமி முதலியார்‌ ஆகிய மூன்று கனவான்கள்‌ நியமனம்‌ பெற்றுவிட்டார்கள்‌. இவர்களுள்‌ முறையே ஒருவர்‌ ஜமீன்தார்‌. ஒருவர்‌ பிரம்மஞான சங்கத்தார்‌. ஒருவர்‌ சர்க்கார்‌ பென்ஷன்‌ உத்தியோ ஆனபோதிலும்‌ இவர்கள்‌ தங்களுக்கு என்று யாதொரு தனி கொள்கையும்‌, இயக்கமும்‌ இல்லாதவர்களாகையால்‌ தனித்தனியாக சமயம்‌ போல்‌ அவர்களுக்குத்‌ தோன்றியபடி நிர்வாகத்தை நடத்திக்‌ கொண்டு போவார்கள்‌ என்றேதான்‌ நாம்‌ நினைக்க வேண்டும்‌. அதோடு மந்திரிகள்‌. மூவரும்‌ பார்ப்பனரல்லாதார்கள்தான்‌ என்று சொல்வதாயிருந்தாலும்‌ தங்கள்‌ தங்கள்‌ காலிலேயே நிற்கத்தகுந்த பொதுஜன ஆதரவோ, கட்சி பலமோ, கொள்கை பலமோ இல்லாதவர்கள்‌. ஆதலால்‌ நமது முன்னேற்றத்தின்‌ எதிரிகளான பார்ப்பனர்களின்‌ தயவில்லாமல்‌ அரை நிமிஷமும்‌ உயிர்வாழ முடியாதவர்கள்‌. ஆனதால்‌ இம்மந்திரி நியமனம்‌ பார்ப்பனர்களுக்கு அனு கூலமே தவிர பார்ப்பனரல்லாதார்களுக்கு ஒன்றும்‌ அனுகூலம்‌ இல்லை யென்றே சொல்லவேண்டும்‌. தேசத்திற்கு மந்திரிகளால்‌ நன்மையோ தீமை யோ ஏற்படக்கூடும்‌ என்று ஒருபொழுதும்‌ நாம்‌ எண்ணியதும்‌ கூறியதும்‌ இல்லை.ஆதலால்‌ தேச முன்னேற்றத்திற்கு இவர்களிடமிருந்து நாம்‌ ஒன்றும்‌ எதிர்பார்க்கவில்லை. நிற்க, இனி ஜஸ்டிஸ்‌ கட்சி என்ன செய்யப்‌ போகிறது. அடுத்த தேர்தல்‌ வரையில்‌ அதாவது இன்னும்‌ மூன்று வருஷ காலத்திற்கு மந்திரி பதவி காலமாய்‌ விட்டதற்கு துக்கம்‌ கொண்டாடப்‌ போகிறதா அல்லது உருப்படியான ஏதாவது ஒரு பிரசாரத்தை செய்து பார்ப்‌ பன ஆதிக்கத்தை அழித்து பார்ப்பனரல்லாத மக்களின்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றப்‌ போகிறதா என்பது தான்‌ நமது கவலை. உண்மையில்‌ மந்திரி பதவி போய்‌ விட்டதால்‌ பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்திற்கு ஒன்றும்‌ தடை ஏற்பட்டு விடவில்லை. தற்கால மந்திரி பதவியால்‌ பார்ப்பனரல்லா தாருக்கு அதிகமான கெடுதி ஏற்பட்டு விடுவதாய்‌ வைத்துக்கொண்டாலும்‌ அது என்னவாயிருக்கக்‌ கூடும்‌. பார்ப்பனரல்லாதாருக்கு சர்க்கார்‌ உத்தியோக மில்லாமல்‌ செய்யக்கூடும்‌. சர்க்கார்‌ உத்தியோகங்களில்‌ இருக்கும்‌ பார்ப்பன ரல்லாதார்‌. 429 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பலருக்கு உத்தியோகம்‌ போகக்கூடும்‌. இதற்கு மேல்‌ ஒரு கடுகளவு கெடுதிகூட ஏற்பட கொஞ்சமும்‌ இடமில்லை. இதைத்தவிர வேறு ஒரு கெடுதியும்‌ பார்ப்பனரல்லாதாருக்கு செய்துவிடவும்‌ முடியாது. செய்யவும்‌ அதில்‌ இடமில்லை. இம்மாதிரி மாறுதல்‌ ஏற்பட்ட சமயத்தில்‌ நமது நாட்டு. மக்கள்‌ இனிமேல்‌ என்ன செய்ய வேண்டும்‌ என்கிற யோசனை யின்பேரில்‌ தலைவர்கள்‌ என்போர்களே எதிர்பார்த்துக்‌ கொண்டிருக்கையில்‌ “ஜஸ்டிஸ்‌” “திராவிடன்‌” ஆகிய கட்சிப்‌ பத்திரிகைகள்‌ யாதொரு தகவலும்‌ தெரிவிக்கா மல்‌ வாய்மூடிக்‌ கொண்டிருப்பதின்‌ இரகசியம்‌ விளங்கவில்லை. இதைக்‌ கவனிக்கும்‌ போது அக்கட்சித்‌ தலைவர்களுக்கு இனியும்‌ மந்திரி பைத்தியம்‌ இருப்பதாகவே எண்ண வேண்டியிருக்கிறது. ஆதலால்‌ இனியும்‌ இது போலவே வாய்மூடிக்‌ கொண்டிருக்காமல்‌ உடனே கோயமுத்‌ தூர்‌, திருச்சி, மதுரை ஆகிய மூன்று இடங்களில்‌ ஏதாவது ஒரு இடத்தில்‌ ஒரு பார்ப்பன ரல்லாதார்‌ மகாநாடு கூட்டி இனியும்‌ தீவிரமான திட்டம்‌ வகுத்து பார்ப்பனர்‌. அடக்கு முறையையும்‌ சூழ்ச்சிகளையும்‌ எதிர்த்து நின்று உடனே வேலை செய்யத்‌ தொடங்கவேண்டும்‌. இல்லையேல்‌ நமது எதிரி கள்‌ “பார்ப்பன ரல்லாதார்‌ கட்சி உத்தியோகக்‌ கட்சி என்பதும்‌ பார்ப்பனரல்‌ லாதார்‌ கட்சி ஒழிந்தது” என்பதும்‌ நிஜம்‌ என்று எண்ண இடமுண்டாகி விடும்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 05.12.1926. குடி அரசு - 1926 (2) 420 “வராய்‌ வபாய்‌ முற்றும்‌ வபாய்‌” அணா வெய்‌ வமய்‌ முற்றும்‌ வமய்‌ எங்கே? ஸ்ரீமான்‌ கல்யாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ தேர்தல்கள்‌ விஷயத்‌ தில்‌ பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகவும்‌ பார்ப்பனர்களுக்கு அநுகூலமாகவும்‌ தேசபக்தியைச்‌ சாக்காட்டிக்‌ கொண்டு பிரசாரம்‌ செய்து வந்ததை பல தடவைகளில்‌ நாம்‌ பலமாய்க்‌ கண்டித்திருப்பது நேயர்களுக்‌ குத்‌ தெரிந்திருக்கும்‌. கடைசியாக ஸ்ரீமான்‌ A ராமசாமி முதலியாருக்கு விரோதமாக செங்கல்பட்டு ஜில்லாவில்‌ பாமர மக்களிடையில்‌ போய்‌ சீமை யிலுள்ள மனிதர்களுக்கு சராசரி வயது 50 என்றும்‌, நமது நாட்டிலுள்ள மக்களுக்கு சராசரி வயது 25 என்றும்‌, அதற்குக்‌ காரணம்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியும்‌ ராமசாமி முதலியார்தான்‌ என்றும்‌, ஆதலால்‌ அவருக்கு ஓட்டுச்‌ செய்ய வேண்டாம்‌ என்றும்‌ இன்னமும்‌ இதுபோல்‌ பல விஷயங்கள்‌ பேசியதாக பத்திரிகைகளில்‌ பார்த்து கண்டித்‌ தெழுதி இருந்தோம்‌. அதுசமயம்‌ நான்‌ அப்படிப்‌ பேசவில்லை என்றும்‌, பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ பத்திரிகையில்‌ அப்படி எழுதிக்‌ கொண்டார்கள்‌ என்றும்‌ அவர்‌ சொன்னார்‌. அதற்குப்‌ பிறகு கூட ஸ்ரீமான்‌ சக்கரை செட்டியாருக்கு விரோதமாய்த்‌ தொழிலாளர்‌ சங்கங்க ளுக்கு ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரை அழைத்துப்போய்‌ அய்யங்கார்‌ அவர்கள்‌ இந்தியா சட்டசபையிலும்‌ காங்கிரசிலும்‌ தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டு மென்றும்‌, உதவி செய்வார்‌ என்றும்‌ சிபார்சு செய்தார்‌. அதுசமயம்‌ நாம்‌ கண்டித்தெழுதியிருந்த போதும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்‌ கள்‌, நான்‌ அறிமுகம்‌ செய்து வைத்தேனே ஒழிய சிபார்சு செய்யவில்லை என்று எழுதியதோடு “குடி அரசு” இழி மொழிகளை எழுதி இருக்கிற தென்று எழுதியிருந்தார்‌. அதன்பிறகு கொஞ்ச நாள்‌ பொறுத்து ஸ்ரீமான்‌ சக்கரை செட்டியாருக்கு விரோதமாகவே தேர்தலில்‌, ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்‌ காரையே ஆதரிக்க வேண்டுமென்று ஸ்ரீமுகமும்‌ அனுப்பினார்‌. இதை “சுதேச மித்திரன்‌” முதலிய பத்திரிகைகள்‌ பிரசுரித்திருந்ததோடு பார்ப்பனர்‌ கள்‌ அதைத்‌ துண்டுப்‌ பிரசுரங்களாகவும்‌ வழங்கினார்கள்‌. இதைப்‌ பற்றியும்‌ நாம்‌ எழுதினால்‌ இதற்கும்‌ ஏதாவது சமாதானம்‌ சொல்லுவாரென்றே கருதி சும்மாயிருந்தோம்‌. கடைசியாக ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகள்‌ தேர்தலில்‌ வெற்றிபெற்ற தமது “வீரப்பிரதாபத்தை முழக்கி வெற்றிச்‌ 431 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சங்கூதுகையில்‌” ஸ்ரீமான்களான வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர: முதலியார்‌, ராமசாமி நாயக்கர்‌ முதலிய எத்தனையோ பார்ப்பனரல்லாதார்‌. எதிர்த்தும்‌ வெற்றி பெற்றுவிட்டேன்‌ என்று எழுதி இருந்தார்‌. இதைப்‌ பார்த்ததும்‌ வந்துவிட்டது கோபம்‌ நமது முதலியாருக்கு! எழுந்தார்‌ பேனாக்‌ கோடாலியைப்‌ பிடித்தார்‌! “பொய்‌ பொய்‌, முற்றும்‌ பொய்‌” என சத்திய மூர்த்தியைப்‌ பிளந்தார்‌. ஏன்‌? பார்ப்பனத்‌ தலைவர்‌ நமது சத்தியமூர்த்தி களேயாவர்‌. வஷிஷ்டர்‌ வாயால்‌ பிரம்மரிஷிப்‌ பட்டம்‌ பெற்றால்தான்‌ மற்ற ரிஷிகள்‌ மதிப்பார்கள்‌. அப்படிப்‌ போல ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி வாயால்‌ திரு.முதலியார்‌ அவர்களைப்‌ புகழா விட்டாலும்‌ இகழாமலாவதிருந்தால்‌ தான்‌ பார்ப்பனர்கள்‌ முதலியாரைத்‌ திரும்பியாவது பார்ப்பார்கள்‌. ஆதலால்‌ சத்தியமூர்த்தியைப்‌ பிளக்க வேண்டிய அவசியம்‌ வந்து என்ன எழுதினார்‌. என்றால்‌, தான்‌ தேர்தல்‌ பிரசாரத்தில்‌ கலவாதிருந்தாலும்கூட தேர்தலுக்கு 2 நாள்‌ முன்னதாகக்‌ கூட ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரை ஆதரித்துக்‌ கூறிய உரைகள்‌ பல பத்திரிகைகளில்‌ வெளியாயிற்று. அவ்வுரைகள்‌ துண்டுப்‌ பிரசுரங்களாகவும்‌ விளங்கிற்று... ஆதலால்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியின்‌ கூற்று “பொய்‌ பொய்‌ முற்றிலும்‌ பொய்‌” என்று சாக்ஷி ஆதாரங்களுடன்‌ பிளந்திருக்கிறார்‌. அப்படியானால்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ தேர்தலில்‌ கலவாதிருக்கப்‌ போவதாகச்‌ சொன்னதும்‌ சுயராஜ்யக்‌ கட்சியாலும்‌ கட்சித்‌ தலைவர்களாலும்‌ வகுப்புப்‌ பூசலும்‌ வகுப்பு வாதமும்‌ நமது நாட்டில்‌ ஏற்‌ பட்டது என்றதும்‌ அரசியல்‌ சங்கங்களை வளரவிடுவது நாட்டிற்குக்‌ கேடு என்றதும்‌ நம்மவர்களுக்கு விரோதமாகவோ பார்ப்பனர்களுக்கு அனுகூல மாகவோ வேலை செய்யவில்லை என்றதும்‌ மெய்‌ மெய்‌ முற்றும்‌ மெய்‌ என்று சொல்வதற்குச்‌ சாட்சி ஆதாரமெங்கே என்று கேட்கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 05.12.1926 குடி அரசு - 1926 (2) 432 சங்கரநாராயணர்‌ கோவினுக்கள்‌ கக்க௬ம்‌ மிதியமுயும்‌ திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவிலென்னும்‌ சங்கர நாராயணன்‌ கோவிலானது அச்சில்லாவில்‌ உள்ள முக்கிய கோவில்களுள்‌. ஒன்று. அக்கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள்‌ வரும்படி உண்டு. லோககுரு என்றும்‌ சங்கராச்சாரியார்‌ சுவாமிகள்‌ என்றும்‌ சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின்‌ குருவானவர்‌ இம்மாதம்‌ அவ்வூருக்கு வந்து அக்‌ கோவி லை தனக்கும்‌ தனது பரிவாரத்திற்கும்‌ ஜாகையாக வைத்துக்‌ கொண்டார்‌. அதோடல்லாமல்‌ “சுவாமிகளின்‌” திருக்‌ கக்கூசும்‌ அக்‌ கோவிலுக்குள்‌. ளாகவே கட்டப்பட்டு “சுவாமி களின்‌” திரு மலமும்‌ கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அக்கோவில்‌ டிரஸ்டி கனவான்களில்‌ பார்ப்பன ரல்லாதார்‌ அதிகமாய்‌ (மெஜாரிட்டியாய்‌) இருந்தும்‌ இதை ஆக்ஷேபிக்கத்‌ தைரியமில்லை.ஏனென்றால்‌ அவ்வூர்‌ அதிகாரிகள்‌ எல்லாம்‌ குட்டிசுவாமிகள்‌ குழாங்களாகவே இருக்கின்றன. அதோடு மாத்திரமில்லாமல்‌ “சுவாமிகள்‌” சங்கரநாராயண சுவாமியை திருக்கண்‌ பார்ப்பதாயிருந்தாலும்‌, திரு மிதியடியை தாங்கிய திரு பாதத்துடனேதான்‌ மூலஸ்தானத்திற்குப்‌ போய்த்‌ திருக்கண்‌ பார்த்தருளினாராம்‌. அதோடு மாத்திரமல்லாமல்‌ “சுவாமிகள்‌” கோவிலுக்குள்‌ நுழையும்‌ போது திரு மேனாவில்‌ திருப்‌ பள்ளிக்கொண்ட கோலத்துடனேயே சென்றாராம்‌. மாமிக்கோர்‌ மாமியுண்‌ டானால்‌ சுவாமிக்‌ கோர்‌ சுவாமி வேண்டாமா? அதுதான்‌ நமது “லோக குரு” “சங்கராச்சாரியார்‌” , சுவாமிகள்‌” போலும்‌. “சுவாமிகளின்‌” இந்த வைப வங்களையும்‌, தெய்வத்‌ தன்மையையும்‌ கண்ட திருநெல்வேலி நெல்லையப்‌ பர்‌ சுவாமி கோவில்‌ பக்தர்களும்‌, தர்ம கர்த்தாக்களும்‌ குறைந்த பக்ஷம்‌ நெல்லையப்பர்‌ கோவிலுக்குள்‌ “சுவாமிகளின்‌” திருக்‌ கக்கூசாவது கட்டப்‌ படாமல்‌ இருக்க வேண்டுமென்று கருதி லக்ஷக்கணக்கான துண்டு விளம்‌ பரங்கள்‌ போட்டும்‌ தர்மகர்த்தாக்களுக்கு நோட்டீசு விட்டும்‌ சத்தியாக்‌ கிரகம்‌ செய்வதாய்‌ பய முறுத்தியும்‌ ஆர்பாட்டம்‌ செய்து “சுவாமிகளின்‌” திருக்‌ கக்கூசை திருக்‌ கோவிலுக்குள்‌ கட்டாமலிருக்கத்‌ தக்க ஏற்பாடு செய்து விட்டார்கள்‌. இது தவிர, நெல்லையப்பர்‌ சுவாமி கோவிலுக்கு முன்னால்‌ “சங்கராசாரிய சுவாமிகள்‌” வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்‌ காரப்‌ பந்தல்கள்‌ போட அனுமதித்ததின்‌ பலனாய்‌ அஷ்டமி உற்சவத்தின்‌ போது நெல்லையப்பர்‌ சுவாமி எழுந்தருளுகையில்‌ பந்தல்‌ சமீபம்‌ வந்தவுடன்‌ 433 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தாழ்ந்தும்‌ குனிந்தும்‌ வெளியே வரவும்‌ உள்ளே போகவும்‌ ஏற்பட்டது. இதைப்‌ பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந்தாலும்‌ “சங்கராசாரிய சுவாமி”களும்‌ அவரது திருக்கூட்டத்தாரும்‌ இல்லா விட்டால்‌ நெல்லையப்‌ பருக்கு இவ்வளவு மகத்துவமும்‌ இவ்வளவு வேலி நிலமும்‌ இவ்வளவு சொத்துக்களும்‌ சுகங்களும்‌ ஏது? ஆதலால்‌ “சங்கரா சாரிய சுவாமிகளின்‌” “பந்தலுக்கு நெல்லையப்பர்‌ தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியது தான்‌.” குடி அரசு - கட்டுரை - 05.12.1926 குடி அரசு - 1926 (2) 434 கோவை ஸில்லா சட்டசபைத்‌ தேர்தல்‌ முழுவ கோயமுத்தூர்‌ ஜில்லா சட்டசபைத்‌ தேர்தல்‌ முடிவு இச்சில்லா வாசி களில்‌ பெரும்பான்மையான பேர்கள்‌ மாத்திரமில்லாமல்‌ வெளி ஜில்லா மக்களும்‌ மிகுந்த ஏமாற்றத்தையும்‌ வருத்தத்தையுமே அடைந்தார்கள்‌ என்பதாகவே அறிகிறோம்‌. என்னவெனில்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்‌ யங்கார்‌ அவர்கள்‌ 100 ஓட்டு வித்தியாசத்தில்‌ வெற்றிபெற்றதும்‌ ஸ்ரீமான்‌ ராமலிங்கஞ்‌ செட்டியார்‌ அவர்கள்‌ 100 ஓட்டு வித்தியாசத்தில்‌ தோல்விய டைந்ததும்‌ கேட்போருக்கு கர்ண கடூரமாயிருந்திருக்குமென்பதில்‌ அதிசய மில்லை. ஆனால்‌ அத்தேர்தலுக்காக ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ செய்த பணச்‌ செலவும்‌ முயற்சியும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ அவர்கள்‌ செலவு செய்த தில்‌ 10-ல்‌ ஒரு பாகம்கூட இருக்காது. அதாவது ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ அவர்‌. களுக்கு 50 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவாகி இருந்தால்‌ ஸ்ரீமான்‌ செட்டியாருக்கு ரூபாய்‌ ஐயாயிரத்துக்குள்ளாகத்தான்‌ இருக்குமென்பார்கள்‌. ஆனபோதிலும்‌ பொது மக்களுக்கு செட்டியாரவர்கள்‌ இடத்தில்‌ ஒருவித மதிப்பு உண்டு. அதாவது சட்டசபை விஷயத்திலும்‌ வரவு செலவு சிக்கன விஷயத்திலும்‌ அநுபோகம்‌ உள்ளவர்‌ என்றும்‌ அவர்‌ மந்திரியாக வரவேண்டும்‌ என்றும்‌ நினைத்து விரும்புவதுண்டு. அப்படிப்பட்டவர்கள்‌ முன்னால்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ தோல்வியடைந்தால்‌ அது வருத்தப்படுத்‌ தத்தான்‌ செய்யும்‌. ஆனால்‌ இத்‌ தோல்விக்கு அய்யங்கார்‌ ஒரு சிறிதும்‌ காரணரல்லர்‌. பார்ப்பனரல்லாதார்‌ நன்மைக்காக ஏற்பட்ட கட்சியான ஜஸ்டிஸ்கட்சி பிரமுகர்களாலேயே செட்டியார்‌ தோல்விக்கு இடமேற்பட்டு விட்டது. கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டு பிரசிடெண்ட்‌ தேர்தல்‌ சம்பந்தமாக ஒரு கூட்டத்தார்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ மீது அதிருப்தி கொள்ள இடமேற்பட்டு விட்டது. அதோடு ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ அதன்‌ பனை அடைய தந்திரங்கள்‌ செய்து அவ்வதிருப்தியைத்‌ தனக்கு அனுகூலமாகத்‌ திருப்பிக்‌ கொண்டார்‌.அந்தக்‌ காரணமே ஸ்ரீமான்கள்‌ செட்டியார்‌ தோல்வி யடையவும்‌ ஐயங்கார்‌ வெற்றி பெறவும்‌ பெரிதும்‌ அனுகூலமாயிருந்து விட்டது. டிஸ்டிரிக்‌ போர்டு எலெக்‌ஷன்‌ மனஸ்தாபம்‌ குறைந்தது 3000 ஓட்டு களுக்குக்‌ குறையாமல்‌ செட்டியாருக்கு விரோதமாய்‌ பதிவு செய்யவும்‌, குறைந்தது 1500 ஓட்டுகளுக்கு குறையாமல்‌ ஐயங்காருக்கு அனுகூலமாய்‌ பதிவு செய்யவும்‌ 435 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. இடமேற்பட்டுவிட்டது. டிஸ்டிரிக்‌ போர்டு மனஸ்தாபம்‌ இல்லாமலிருந்தால்‌ செட்டியாருக்கு 17,000 ஓட்டுகள்‌ கிடைத்திருக்கும்‌. ஸ்ரீமான்‌ அய்யங்‌ காருக்கும்‌ 10,000 ஓட்டுகளுக்கு உள்ளாகவேதான்‌ கிடைத்திருக்கும்‌. இந்தக்‌ காரணத்தாலும்‌ திருச்சி நகரத்‌ தொகுதி தேர்தல்‌ மாதிரியினாலும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ என்று பெயர்‌ சொல்லிக்‌ கொண்டு இருந்த சில கனவான்‌ களிடத்தில்‌ அவர்களது “கட்சி பக்திகள்‌” நன்றாய்‌ விளங்க இடமேற்பட்டு விட்டது. சுயநலங்கள்‌ தோன்றும்‌ போது கட்சி வாதங்கள்‌ பறந்துபோய்‌ விடுகிறது என்பதற்கு இவைகள்‌ ஓர்‌ உதாரணம்‌. நிற்க, ஸ்ரீமான்கள்‌ இரத்தின சபாபதி முதலியார்‌ அவர்களும்‌ பட்டக்காரர்‌ வேணாவுடையாக்‌ கவுண்டர்‌ அவர்களும்‌ வெற்றி பெற்றதில்‌ நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை. பதிவான ஓட்டுகளில்‌ 100-க்கு 75 ஓட்டுகள்‌ குடி யானவர்களுடையது. அவர்கள்‌ ஸ்ரீமான்கள்‌ முதலியார்‌ அவர்களையும்‌ பட்டக்காரர்‌ அவர்களையும்‌ மனப்பூர்த்தியாய்‌ ஆதரிக்கக்‌ கடமைப்பட்டவர்களே. ஆனால்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களுக்கும்‌ பட்டக்காரர்‌ அவர்களுக்கும்‌ வெற்றி ஏற்பட்ட சந்தோஷத்‌ தின்‌ தன்மைக்கு மேலாகவே ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்களுக்கு தோல்வியானதைக்‌ குறித்து ஏற்பட்ட வருத்தம்‌ அதிகமென்றே சொல்லு வோம்‌. தோற்றவர்கள்‌ பேரில்‌ குற்றம்‌ சொல்வது அதர்மமானதாலும்‌ உண்மை யாகவே நாம்‌ ஒன்றும்‌ சொல்வ தற்குமில்லை.ஆனாலும்‌ பொது ஜனங்களை வசியப்‌ படுத்தத்தக்க படிப்பும்‌ நமது செட்டியார்‌ அவர்களுக்கு இனியும்‌ கொஞ்சம்‌ அதிகமாக வேண்டுமென்று மாத்திரம்‌ சொல்லுவோம்‌. மற்றபடி மற்றவர்கள்‌ வெற்றி பெறுவதற்கும்‌ செட்டியார்‌ அவர்கள்‌ தோல்வியுறுவதற்‌ கும்மதிக்கத்‌ தகுந்த வேறு வித்தியாசமான காரணங்கள்‌ ஒன்றும்‌ கொஞ்சமும்‌ இல்லை என்பதே நமது அபிப்பிராயம்‌. எந்தவிதத்திலும்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌. அவர்கள்‌ தோல்வியைப்‌ பற்றி பொது ஜனங்கள்‌ வருத்தப்‌ படுகிறார்கள்‌. என்பதையும்‌ செட்டியாருக்கு விரோதமாக வேலை செய்தவர்களில்‌ பெரும்‌ பாலோரும்‌ கூட தாங்கள்‌ நடந்துகொண்டதை குற்றமாக எண்ணி தங்களுக்‌ குள்ளாகவே வருத்தப்படுகிறார்கள்‌ என்பதையும்‌ நாம்‌ நன்றாக அறிகிறோம்‌. இதனால்‌ செட்டியாருக்கு பெருத்த ஏமாற்றம்‌ என்பதையும்‌ தெரிவிக்கிறோம்‌. அதாவது 100 ஓட்டில்‌ அதுவும்‌ தனக்கும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காருக்கும்‌ வித்தியாசமாக ஏற்பட்டு தோல்வியடைய நேர்ந்ததும்‌ வெற்றி பெற்றிருந்தால்‌ செட்டியார்‌ அவர்களை முதல்‌ மந்திரியாகவும்‌ மற்ற 2 மந்திரிகளைக்கூட நியமிக்கும்‌ அதிகாரமுடைய வராயிருக்கக்‌ கூடிய உறுதியான சந்தர்ப்பத்தில்‌ தோல்வி ஏற்பட நேர்ந்ததும்‌ அவருடைய எதிரிக்கும்‌ பரிதாபமாக இருக்கு மானால்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்கள்‌ ஏமாற்றமடைந்ததாக நினைப்பதும்‌ வருத்தப்படுவதும்‌ அதிசயமாகுமா? ஆதலால்‌ இதிலிருந்தாவது தோல்வி யடைந்தவர்களும்‌ தோல்வி அடையச்‌ செய்தவர்களும்‌ ஒரு படிப்பினை பெறுவர்கள்‌ என்றே நம்புகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 05.12.1926. குடி அரசு - 1926 (2) 436 “மக விஷயத்தில்‌ சர்க்காரைய்‌ பிரவேசிக்கச்‌ செய்யாத பார்ப்பனர்கள்‌” கேவா பாராயணத்திற்க தடை உத்திரவு (கல்சங்ஷன்‌ ) நமது பார்ப்பனர்கள்‌ தென்காசி கோவிலில்‌ சுவாமியுடனும்‌, தேவாரத்‌ துடனும்‌ ஒத்துழையாமையும்‌ பஹிஷ்காரமும்‌ செய்ய நேர்ந்தது போலவே சங்கரன்‌ கோவிலிலும்‌ செய்ய நேரிட்டுவிட்டால்‌, தங்கள்‌ வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப்‌ பயந்து சங்கரன்‌ கோவில்‌ டிஸ்டிரிக்ட்‌ முனிச்ப்பு கோர்ட்டில்‌ வியாஜ்ஜியம்‌ தொடுத்து தங்களுக்கு பிரசாதம்‌ கொடுக்காததற்கு முந்தி தேவாரம்‌ படிக்கக்கூடாது என்று (இஞ்சங்ஷன்‌! தடை உத்திரவு வாங்கி விட்டார்களாம்‌. கோவில்‌ அதிகாரிகள்‌ அதை அப்பீல்‌ செய்ய பிரயத்தனப்‌ பட்டுக்‌ கொண்டிருக்கிறார்களாம்‌. “இந்துமத சம்பந்தமான விஷயத்தில்‌ சர்க்காரார்‌ மூலமாய்‌ நமது இந்துக்கள்‌ பணங்‌ காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில்‌ சர்க்காரை பிரவேசிக்க விட்டுவிட்டார்கள்‌” என்று மாய்மாலக்‌ கண்ணீர்‌ விடும்‌ நமது பார்ப்பனர்கள்‌ தேவார பாராயணம்‌. செய்வதை நிறுத்த சர்க்காரிடம்‌ போயிருப்பதும்‌, இந்துக்கள்‌ அல்லாதவர்கள்‌. கூட ஒரு சமயம்‌ இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச்‌ செய்வதும்‌, இந்துமதத்தில்‌ சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்‌! ஏன்‌? பார்ப்பனர்‌ கோர்ட்டுக்கு போனால்‌ மதபக்தி; பார்ப்பனரல்லாதார்‌ கணக்கு கேட்டால்‌ மதத்துரோகம்‌. போலும்‌! குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 05.12.1926 437 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சந்தா நேயர்களுக்கு நமது ‘Gl அரசு பத்திரிகை சரிவரக்‌ கிடைப்பதில்லை யென்று - நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள்‌ குறை கூறி அடிக்கடி எழுதிக்‌ கொண்டே வருகிறார்கள்‌. நாங்கள்‌ யாதொரு தடையும்‌ தாமதமுமின்றி கிரமமாய்‌ பத்திரி கைகளை அனுப்பிக்‌ கொண்டுதான்‌ வருகிறோம்‌. நேயர்கள்‌ கூறும்‌ குறை களுக்கு உற்ற காரணங்கள்‌ நமக்கு விளங்கவில்லை. தயை கூர்ந்து அந்தந்தத்‌ தபாலாபீசுகளின்‌ போஸ்ட்‌ மாஸ்டர்களுக்கு குறை கூறும்‌ நேயர்கள்‌ எழுதிக்‌ கேட்டு எமக்கும்‌ அறிவித்தால்‌ மேலதி காரிகளுக்குத்‌ தெரிவித்து தக்க ஏற்பாடுகள்‌ செய்ய இயலும்‌ என்பதை இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. - பத்திராதிபர்‌ - குடி அரசு - அறிவிப்பு - 05.12.1926 குடி அரசு - 1926 (2) 438 வகுப்பு வாதம்‌ ஒழிந்ததா? அனல்து முண்ணினும்‌ அதிக பலம்‌ வற்றதா? அது பார்ப்பணரிடம்‌ கருக்கிறகா? அல்ைது யார்ப்பணால்லாதாரிடம்‌ இருக்கிறதா? இவ்வாண்டு நடந்த சட்டசபைத்‌ தேர்தல்‌ மூலம்‌ பூனை கண்ணை மூடிக்‌ கொண்டால்‌ உலகமே கண்ணை மூடிக்‌ கொள்ளும்‌ என்று நினைத்து பேசுவது போல்‌ நமது பார்ப்பனர்கள்‌ வகுப்பு வாதம்‌ ஒழிந்தது என்று கத்திக்‌ கொண்டு வேஷப்பிரசாரம்‌ செய்கிறார்கள்‌. ஆனால்‌ தேர்தல்‌ வகுப்பு வாதத்தை ஆதாரமாக வைத்துக்‌ கொண்டே நேரிடையாகவும்‌, மறைமுக மாகவும்‌, சூழ்ச்சியாகவும்‌ நடைபெற்று வந்திருக்கிறது என்பதை பொது ஜனங்‌ கள்‌ அறியமாட்டார்கள்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌ . அதாவது, இந்தியா சட்டசபைக்கு சென்னை நகரத்‌ தொகுதிக்கு ஒரு ஸ்தானம்‌ உண்டு. அந்த ஒரு ஸ்தானத்திற்கு மூன்று தடவையும்‌ பார்ப்பனர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்‌. மற்ற 23 ஜில்லாக்களுக்கு 9 ஸ்தானங்கள்‌ உண்டு. இந்த 10 ஸ்தானங்களுக்கு 8 பார்ப்பனர்‌: அதில்‌ 6 அய்யங்கார்‌. அதாவது ஸ்ரீமான்கள்‌ 1சீநிவாசய்யங்கார்‌, 2. எம்‌.கே. ஆச்‌ சாரியார்‌, 3. துரைசாமி அய்யங்கார்‌, 4. எரங்கசாமி அய்யங்கார்‌, 5. சேஷய்‌ யங்கார்‌, 6. கே.வி. ரங்கசாமி அய்யங்கார்‌, 7. ஜே. கையாபந்தலு, 8. டி. பிரகாசம்‌ பந்துலு ஆகிய 8 பார்ப்பனர்களும்‌ 2 பார்ப்பனரல்லாதார்‌ அதாவது ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியாரும்‌ மற்றொரு ஆந்திர தேசத்தார்‌ அவர்‌ பார்ப்பனரா அல்லவா என்பது கூட தெரியவில்லை. ஸ்ரீமான்‌ ஷண்முகம்‌ செட்டியார்‌ அவர்களும்கூட பார்ப்பனர்களுக்கு அடிமையாயில்லாதிருந்தால்‌ அந்த ஸ்தானமும்‌ மற்றொரு அய்யங்காருக்கு போயிருக்கும்‌ என்பதே உறுதி. இது வகுப்பு வாதமும்‌, வகுப்புச்‌ சலுகையும்‌, வகுப்புப்‌ பிரசாரமும்‌ இல்லாமல்‌ பொது நோக்கில்‌ நடந்ததா? அப்படியானால்‌ சென்னை மாகாணமாகிய இந்த 24 ஜில்லாக்களிலும்‌ இந்திய சட்டசபைக்கு யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார்‌ ஸ்ரீமான்‌ சீறிவாசய்‌ யங்காரைத்‌ தலைவர்‌ என்று பிரசாரம்‌ செய்த ஸ்ரீமான்‌ ஆர்‌.கே ஷண்முகம்‌ செட்டியாரைத்‌ தவிர வேறு ஆள்‌ கிடையாதா? இந்த 8 பார்ப்பன அய்யங்‌ கார்களைத்‌ தவிர: தேசாபிமானமும்‌ தேசபக்தியும்‌ உள்ளவர்கள்‌ இல்லையா? இந்த 8 பார்ப்பன 439 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. அய்யங்கார்களைப்‌ போல்‌ அதாவது, ஒரு பார்ப்பன குழந்தை ஒரு வேளை சாப்பிடுவதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌ ஒரு மாதம்‌. பட்டினி கிடப்பேன்‌ என்று சொன்ன பார்ப்பனர்களைப்போல்‌ வகுப்பு வித்தியாசமில்லாதவர்கள்‌ இல்லையா? என்று தான்‌ கேட்கிறோம்‌.ஏறக்குறைய இத்தேர்தல்களில்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌ வேண்டுமானால்‌ வகுப்பு நலத்தையும்‌ வகுப்புவாதத்தையும்‌ மறந்திருக்கிறார்களே ஒழிய எந்தப்‌ பார்ப்பனராவது வகுப்பு வாதத்தை விட்டுக்‌ கொடுத்தாரா? ஒவ்வொரு ஊர்‌ தேர்தலிலும்‌ உதாரணமாக திருநெல்வேலி ஜில்லாவில்‌ நாடார்‌ சகோதரர்‌ ஒருவரை சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேர்த்துக்‌ கொண்டு ஒரு பார்ப்பனர்‌ வேலை செய்தாரே, நாடார்‌ கனவானுக்கு பார்ப்‌ பனர்கள்‌ ஓட்டு செய்தார்களா? ஓட்டுப்‌ பிரசாரம்‌ செய்யும்‌ போதே கூட ஜாயிண்டாக நின்ற பார்ப்பனர்‌ நாடார்‌ அபேக்ஷகரை, பிராமணாள்‌ வீட்டுக்குள்‌ நீங்கள்‌ வரக்கூடாது என்று வெளியில்‌ நிறுத்திவிட்டு உள்ளே போய்‌ தனக்கு மாத்திரம்‌ தனி வோட்டு கேட்டுவிட்டு வெளியில்‌ வந்து உங்களுக்கும்‌ போடுவதாய்‌ ஒப்புக்‌ கொண்டார்கள்‌ என்று சொல்லி ஏமாற்றி னார்கள்‌. கடைசியாக முடிவு பார்க்கும்‌ போது பார்ப்பனர்‌ ஓட்டுக்கள்‌ மாத்திரம்‌ பார்ப்பனருக்கும்‌, நாடார்‌ ஓட்டுக்கள்‌. மாத்திரம்‌ நாடாருக்கும்‌ கிடைத்தது. அய்யருக்கு 6000 ஓட்டு, நாடாருக்கு 5000 ஓட்டு. இதுதான்‌ வகுப்புவாதம்‌ புதைக்கப்பட்ட தேர்தல்களாம்‌! மற்ற இடங்‌ களிலும்‌ பார்ப்பனர்கள்‌ பார்ப்பனருக்கும்‌ பார்ப்பனரல்லாதார்‌ 2 பேருக்குமாக அதாவது, “மீ சொம்மு மா சொம்மு மா சொம்மு மா சொம்மு” உங்கள்‌ சொத்து எங்களு டையது எங்கள்‌ சொத்து எங்களுடையது என்கிற மாதிரியாக நடந்திருக்கிறது. இதிலிருந்து வகுப்பு உணர்ச்சி யாரிடம்‌ இருக்கிறது? இனி யாருக்கு ஏற்பட வேண்டும்‌ என்பதையும்‌ அது ஒழிய வேண்டுமானால்‌ முதலில்‌ யாரிடம்‌ ஒழிய வேண்டும்‌ என்பதையும்‌ யோசித்தால்‌ விளங்காமல்‌ போகாது. அதோடு வகுப்பு வாதம்‌ கூடாது என்று பேசும்‌ சில நாடார்‌ வாலிபர்‌. களையும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ என்று சொல்லும்‌ பார்ப்பனரல்லா தாரிடம்‌ வகுப்பு வாதம்‌ காரியத்தி லிருக்கிறதா? சுயராஜ்யக்‌ கட்சியார்‌ என்று சொல்லும்‌. பார்ப்பனர்களிடம்‌ வகுப்புவாதம்‌ காரியத்திலிருக்கிறதா? என்ப தையும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இருந்தால்‌ தேசத்தின்‌ பேரால்‌ ஸ்தா னம்‌ பெறாமல்‌ சர்க்கார்‌ தயவில்‌ ஸ்தானம்‌ பெற நேரிடுமா? என்பதையும்‌ யோசித்துப்‌ பார்த்து நடுநிலைமையில்‌ இருந்து உண்மை அறிய வேண்டு கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 1212.1926 குடி அரசு - 1926 (2) 440 யார்ப்பணால்லாதார்‌ மகாநா௫ சென்ற வாரம்‌ “குடி அரசு” தலையங்கத்தில்‌ இனி என்ன செய்ய வேண்டும்‌ என்பதைப்‌ பற்றி எழுதி இருந்தோம்‌. அதுபோலவே ஜஸ்டிஸ்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ இம்மாத கடைசி வாரத்தில்‌ மதுரையில்‌ ஒரு பார்ப்பன ரல்லாதார்‌ மகாநாடு கூட்டப்‌ போவதாக அறிந்து சந்தோஷமடைகிறோம்‌. கூட்டுவதில்‌ காங்கிரஸ்‌ மகாநாடுகள்‌ என்ற பெயரால்‌ பார்ப்பனர்கள்‌ கூட்டம்‌. கூடி பொது மக்களை ஏமாற்றி தங்கள்‌ வகுப்பார்‌ ஸ்தல ஸ்தாபனங்களிலும்‌. சட்டசபைகளிலும்‌ ஸ்தானம்‌ பெற சூழ்ச்சிகள்‌ செய்வது போலவும்‌ , சர்க்கார்‌ உத்தியோகம்‌ பெற தந்திரங்கள்‌ செய்வது போலவும்‌ இல்லாமல்‌ நாட்டிற்கும்‌, சிறப்பாக பார்ப்பனரல்லாதாருக்கும்‌ உண்மையான நன்மைகள்‌ ஏற்படும்‌. படியாகவும்‌, பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதை காப்பாற்றப்படும்‌ படியாக வும்‌, ஏற்ற கொள்கைகளை வைத்து அதற்கான திட்டங்களை வகுத்து காரியத்தில்‌ நடத்த முயலவேண்டுமென்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளு கிறோம்‌. தலைவர்கள்‌ கவனிக்க வேண்டிய விஷயங்களாவன:- மகாநாட்டுக்கு பலவித ராஜிய அபிப்பிராயமுள்ள பார்ப்பனரல்‌: லாதார்களை எல்லாம்‌ அழைக்க வேண்டும்‌. யார்‌ யாருடைய உண்மை யான கூட்டுறவும்‌ ஒத்துழைப்பும்‌ எவ்வளவுக்‌ கெவ்வளவு கிடைக்குமோ அவைகளையெல்லாம்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. தலைவர்களாயிருப்பவர்கள்‌ பிரசார வேலைகளை ஆறுமாத காலத்திற்காவது தொடர்ந்து முறையாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்‌. குறைந்தது 5 லக்ஷ ரூபாயிக்கு குறையாமல்‌ பண்டு சேர்க்க வேண்டும்‌. தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களும்‌, வக்கீல்‌ களும்‌ தங்கள்‌ வரும்படிகளில்‌ ஏதாவது ஒரு பாகத்தை மாதா மாதம்‌ கொடுத்து வரும்படியாக ஏற்பாடு செய்து அவற்றை ஒழுங்காய்‌ வசூலிக்க ஏற்பாடுகளும்‌ செய்யவேண்டும்‌. மாதம்‌ தோறும்‌ வரவு செலவு கணக்குகள்‌ வெளியாக வேண்டும்‌. 441 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஒவ்வொரு ஜில்லாவிலும்‌ தாலூக்காவிலும்‌ தக்க கிராமங்களிலும்‌ பார்ப்பனரல்லாதார்‌ சுயமரியாதை சபைகள்‌ ஏற்பாடு செய்ய வேண்டும்‌... ஜில்லாக்கள்‌ தோறும்‌ காரியதரிசியையும்‌ பிரசாரகரையும்‌ நியமித்து நமது கொள்கைகளை பரவச்‌ செய்ய வேண்டும்‌. தமிழ்‌ தினசரி பத்திரிகையை இன்னமும்‌ கொஞ்சம்‌ பலப்படுத்தி குறைந்த பக்ஷம்‌ 10,000 பிரதிகளாவது தமிழ்நாட்டில்‌ உலாவும்படி செய்ய வேண்டும்‌. கொள்கைகளாவன இந்திய மக்கள்‌ கயமரியாதையையும்‌ சுயராஜ்யத்தையுமடைய முக்கிய சாதனமான கதரை ஒவ்வொருவரும்‌ இன்றியமையாத சாதன மாய்க்‌ கொள்ள வேண்டியதோடு கதரை அணிவது முக்கியக்‌ கடமை களில்‌ ஒன்றாய்க்‌ கொள்ள வேண்டும்‌. தீண்டாமையை அடியோடு ஒழிப்பதோடு மக்கள்‌ பிறவியில்‌: உயர்வு தாழ்வு இல்லை என்கின்ற தத்துவத்தை திரிகரண சுத்தியாய்‌ ஒப்புக்‌ கொள்ள வேண்டும்‌. மது விலக்கு நாட்டிற்கே அவசியமானாலும்‌ சிறப்பாய்‌ பார்ப்பன. ரல்லாத மக்களுக்கே மிக மிக அவசியமானபடியால்‌ அதை ஒழிக்க வேண்டி யதையும்‌ முக்கியக்‌ கடமையாய்க்‌ கொள்ள வேண்டும்‌. கோர்ட்டு விவகாரங்களே பார்ப்பனரல்லாத மக்கள்‌ அடிமைத்‌ தன்மைக்கும்‌, குடும்ப அழிவுக்கும்‌, செல்வங்கள்‌ ஒழிவதற்கும்‌ அடிப்‌ படையான ஆதாரமாயிருப்பதால்‌ சகல விவகாரங்களையும்‌ பஞ்‌ சாயத்து மூலமாக பைசல்‌ செய்ய வசதி ஏற்படுத்தி கோர்ட்‌ விவகாரங்‌ களை ஒழிக்க வழி தேட வேண்டும்‌. ஆகிய இக்கொள்கைகளை அடிப்படையாக வைத்து காரியத்தில்‌ கொண்டு வரக்கூடிய அளவுக்கு திட்டங்களை ஏற்படுத்தி பிரசார வேலை செய்ய வேண்டும்‌. இதல்லாமல்‌ உத்தியோகங்களையும்‌ பதவிகளையும்‌ பெறுவது மாத்திரமே, பார்ப்பனரல்லாதார்‌ இயக்கங்களின்‌ கொள்கை என்றும்‌ திட்ட மென்றும்‌ பிறர்‌ நினைக்கும்‌ படியாகவாவது நடந்து கொண்டால்‌ உத்தி யோகத்திற்கும்‌ பதவிக்கும்‌ ஆசைப்பட்டவர்கள்‌ போக மற்றவர்கள்‌ இச்சங்‌ கத்தில்‌ சேர மாட்டார்கள்‌ என்பதையும்‌, பதவிக்கும்‌ உத்தியோகத்துக்கும்‌ ஆசைப்பட்டவர்கள்‌ உள்ள சங்கம்‌ ஒரு நாளும்‌ உருப்படாது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. நாம்‌ அறிந்தபடி இம்மாதக்‌ கடைசியில்‌ மதுரையில்‌ கூட்டப்‌ போகும்‌ பார்ப்பனரல்லாதார்‌ மகாநாட்டுக்கு கூடுவதாயிருந்தால்‌ ஒவ்வொரு ஜில்லா தாலூக்காகிராமங்களிலிருந்தும்‌ ஏராளமான கனவான்கள்‌ வர வேண்டும்‌. குடி அரசு - 1926 (2) 442 அசார்சமாயிருக்கக்‌ கூடாது. சர்க்கார்‌ அதிகாரிகள்‌ கூட வருவதில்‌ யாதொரு ஆக்ஷேபணையும்‌ இராது என்றே நினைக்கிறோம்‌. இது ஒரு ( குறிப்பிட்ட சமூக) ஜாதிய மகாநாடே அல்லாமல்‌ ராஜீய மகாநாடு அல்லவென்றே சொல்லுகிறோம்‌. உதாரணமாக பிராமணர்‌ மகாநாடு என்றும்‌ வருணாசிரம தர்ம பரி பாலன மகாநாடு என்றும்‌ ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு என்றும்‌ பல மகாநாடுகள்‌ பார்ப்பனர்கள்‌ கூட்டுவதில்‌ அநேக உத்தியோகஸ்தர்கள்‌. பங்கெடுத்துக்‌ கொள்ளுகிறார்கள்‌.அதுபோலவே மற்ற சமூகத்தார்‌ கூட்டும்‌ சமூக மகாநாடுகளிலும்‌ அந்தந்த சமூகத்தார்‌ பங்கெடுத்துக்‌ கொள்ளுகிறார்‌ கள்‌.ஆதலால்‌ பார்ப்பனரல்லாதார்‌ மகாநாட்டுக்கு வரயாரும்‌ எந்த உத்தியோ கஸ்தர்களும்‌ பயப்பட வேண்டியதில்லை. வீணாக நம்‌ உத்தியோகஸ்தர்கள்‌ பயப்படுவதினாலேயே நமது உத்தியோகஸ்தர்களுக்கு பெரும்பாலும்‌ சுய மரியாதை இல்லாமல்‌ போகக்கூட நேரிடுகிறது. ஆகையால்‌ பெருவாரியான ஜனங்கள்‌ ஆஜராகி ஒற்றுமைப்பட்டு நடவடிக்கையில்‌ கலந்து நமது சுயமரியாதைக்கும்‌ முற்போக்குக்குமான காரியத்தைச்‌ செய்ய வேண்டுமாய்‌ விண்ணப்பித்துக்‌ கொள்ளுகிறோம்‌. இதுபோன்ற சமயம்‌ இனி கிடைக்காது என்பதையும்‌ ஞாபகமூட்டுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 12.12.1926 443 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யார்ப்பணர்கணிண்‌ தலைக்‌ கொழுப்பு தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌, தற்காலம்‌ ஐகோர்ட்‌, நிர்வாக சபை முதலிய ஆதிக்கம்‌ உள்ள பதவிகளிலும்‌ மற்றும்‌ அதிகாரம்‌ உள்ள பதவிகளிலும்‌ வக்கீல்‌ முதலிய செல்வாக்குள்ள பதவிகளிலும்‌ ஏகபோக மாய்‌ அமர்ந்திருப்பதின்‌ மமதையினாலும்‌, பார்ப்பனரல்லாதாரில்‌ சில பதர்கள்‌, வயிற்றுக்‌ கொடுமையாலும்‌ பேராசையினாலும்‌ சுயமரியாதையற்று பார்ப்பனர்கள்‌ பாதம்‌ வருடித்‌ திரிவதினாலும்‌, வேறு பல வழிகளிலும்‌ பார்ப்பன மாய்கையில்‌ பல உணர்ச்சியற்ற ஜமீன்தார்‌ மிராஸ்தார்‌ முதலிய செல்வந்த வாலிபர்கள்‌ அவர்களுக்கு சர்வ சுவாதீனப்பட்டு கிடப்பதாலும்‌, பொதுவாகப்‌ பார்ப்பனரல்லாதார்‌ அறிவீனத்தால்‌ கட்சி, பிரதி கட்சி விவகார வில்லங்கங்கள்‌ முதலியவைகளினால்‌ பார்ப்பனர்‌ களுக்கு அடிமைப்‌ பட்டு கிடப்பதினாலும்‌, பாமர மக்கள்‌ உண்மை நிலையை அறியாதபடி பார்ப்பனர்‌: கள்‌ செய்யும்‌ சூழ்ச்சிப்‌ பிரசாரங்களாலும்‌ சமீப தேர்தல்களில்‌ பார்ப்பனர்கள்‌ தங்களுக்கு வெற்றி கிடைத்ததாய்ச்‌ சொல்லிக்‌ கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்பதை யாவரும்‌ ஒப்புக்‌ கொள்ளுவார்கள்‌. இவ்வெற்றி நிலையைத்‌ தாங்க முடியாமல்‌ நமது பார்ப்பனர்கள்‌ தலைக்கு கொழுப்பேறி தலை கால்‌ தெரியாமல்‌ ஆடுவதை நாம்‌ வரிசையாகப்‌ பார்த்து வருகிறோம்‌. உதாரணமாக, இந்த ஒரு மாத காலத்திற்குள்‌ எவ்வளவு அகந்தையும்‌ ஆணவமும்‌ கொண்ட செய்கைகள்‌ பார்ப்பனர்களால்‌ நடத்தப்பட்டிருக்‌ கின்றன என்பதைக்‌ கவனித்தவர்களுக்கு பார்ப்பனர்களின்‌ தலை கொழுப்புத்‌ தன்மை விளங்காமல்‌ போகாது. ர்பொரேஷன்‌ சென்னை கார்பொரேஷனில்‌ கவுன்சிலர்கள்‌ என்கிற பெயர்‌ வைத்துக்‌ கொண்டு கார்பொரேஷனில்‌ நடத்தும்‌ குறும்புத்‌ தனத்திற்கும்‌ அளவே இல்லை. குழந்தை பாதுகாப்பு ஆஸ்பத்திரிக்குச்‌ சென்று, அங்கு அவ்வாஸ்‌ பத்திரியின்‌ தலைவி இல்லை என்பதை அறிந்தும்‌ அங்குள்ள மருத்துவப்‌ பெண்களிடம்‌ அடாபிடியாய்‌ நடந்து கொண்டதும்‌, அருவருக்கத்‌ தகுந்த கேள்விகள்‌ கேட்டு அப்பெண்களைஅவமானப்படுத்தியதும்‌ இவ்வளவும்‌ செய்துவிட்டு பின்னும்‌ அவ்வுதவியற்ற பெண்களை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்று கொடுமை செய்ததையும்‌ பார்க்கிற போதும்‌ ஸ்ரீமான்‌ கோபதி குடி அரசு - 1926 (2) 444 நாராயணசாமி செட்டியார்‌ என்கின்ற நாயுடு கார்பரேஷன்‌ பிரசி டெண்டாய்‌ வந்து விட்டாரே என்கின்ற ஆத்திரத்தினாலும்‌ தாங்கள்‌ ஆட்டுகிறபடி ஆடக்கூடியவர்‌ வரவில்லையே என்கின்ற ஆத்திரத்தினா லும்‌ கார்பரேஷ னில்‌ நடந்து கொள்ளும்‌ யோக்கியதையும்‌ மீன்‌ கடை, கள்ளுக்‌ கடை, குச்சுக்கார வீதி இதுகளில்‌ நடப்பது போன்ற இழிவான வாக்குவாதங்களும்‌ மானங்கெட்ட வெளியேற்றங்களும்‌ அதிகபிரசிங்கித்‌ தனங்களும்‌ அளவுக்கு மிஞ்சி நடப்பதும்‌ பத்திரிகைகள்‌ தங்கள்‌ வசம்‌ இருக்‌ கின்றன என்கின்ற காரணத்தால்‌ நடந்த விஷயங்களைத்‌ திரித்தும்‌ பொய்‌ களைச்‌ சேர்த்தும்‌ ஜனங்கள்‌ தப்பாய்‌ நம்பும்‌ படியாக பிரசுரித்து வருவதும்‌ மற்றும்‌ காங்கிரஸ்‌ என்னும்‌ பேரால்‌ காலிகளையும்‌, அன்னக்‌ காவடிகளை யும்‌, பேராசைக்கார களிமண்‌ தலைகளையும்‌ சேர்த்துக்‌ கொண்டு அவர்களை விட்டு ஈனத்தன மாய்‌ பார்ப்பனரல்லாத தலைவர்களையும்‌ தொண்டர்களையும்‌ வையும்படி செய்வதும்‌, அடிக்கும்படி செய்வதுமான காரியங்கள்‌ செய்வதும்‌ சகிக்க முடியாததாயுமிருப்பதும்‌ பார்த்து வருகிறோம்‌. ஸ்ரீமான்‌ பக்கிரிசாமிப்‌ பிள்ளை பொது ஜனங்கள்‌ பணகால்‌ ஆட்சியை மறுக்கிறார்களென்று கட்டி விடுவதற்காக பொது ஜனங்கள்‌ பேரால்‌ தங்களிலேயே சில காலிகளை விட்டு மீட்டிங்கு கூட்டச்‌ செய்து அம்‌ மீட்டிங்குகளில்‌ தாங்களே போய்‌ இருந்து கொண்டு இரணியனைப்‌ போல்‌ தன்னையே தலைவரென்று சொல்ல வேண்டு மென்று “ஸ்ரீநிவாசய்யங்காருக்கு ஜே” என்று சொல்லும்படி கட்டாயப்‌ படுத்தினதும்‌, அப்படிச்‌ சொல்ல மறுத்த ஸ்ரீமான்‌ பக்கிரிசாமி என்கின்ற வாலிபரைப்‌ பிடித்து போக்கிரிகளை விட்டு கடுமையாய்‌ அடிக்கச்‌ செய்ததும்‌, அவர்‌ தான்‌ செத்தாலும்‌ சரியென்று சீனிவாசய்யங்காருக்கு ஜே! சொல்லாமல்‌ அடிபட்டு ஜெனரல்‌ ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப்‌ பட்ட தும்‌, தமிழ்‌ மகாநாடு என்கின்ற பெயரால்‌ கோகலே ஹாலில்‌ நடத்தப்பட்ட ஐயங்கார்‌. கூட்டத்திற்குச்‌ சென்றிருந்த ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை அவர்‌ களை அடித்து உதைத்து அவமானப்படுத்தி விட்டால்‌ தமிழ்நாட்டிலுள்ள மற்ற பார்ப்பனரல்லாத வாலிபர்களும்‌ பயந்து பார்ப்பனர்களின்‌ அயோக்‌ கியத்‌ தனத்தை வெளியி லெடுத்துச்‌ சொல்லாமலிருக்கச்‌ செய்துவிடலா மென்கிற எண்ணத்தின்‌ பேரில்‌ அவரை இப்‌ பார்ப்பனர்கள்‌ கூலிகளை விட்டு உபத்திர வித்ததைப்‌ பார்க்கும்‌ போதும்‌ சுத்தமான பார்ப்பனரல்லாதார் ரத்த ஓட்டமுள்ள எந்த மனிதனுடைய ரத்தமும்‌ கொதிக்காமல்‌ இருக்காது. ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை ஆகஸ்டு 15723 ௨ யிலேயே4 அணா சந்தா கொடுத்து காங்கிரஸ்‌ மெம்பராகச்‌ சேர்ந்து 15 223 நெம்பர்‌ ரசீது வாங்கி 445 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யிருக்கிறார்‌. ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை உண்மையான கயராஜ்யத்திற்கு ஒரு நாளும்‌ எதிரியல்ல. ஆனால்‌ பார்ப்பனர்‌ ஆதிக்கம்தான்‌ சுயராஜ்யம்‌ என்று சொல்லப்படும்‌ சுயராஜ்யத்திற்குத்‌ தான்‌ எதிரியாயிருக்கிறார்‌. பார்ப்பன ஆதிக்க சுயராஜ்யத்தின்‌ சூழ்ச்சிகளை தாராளமாய்‌ ஜனங்களுக்கு எடுத்துச்‌ சொல்லுகிறார்‌. இதற்காகத்தான்‌ அவரைப்‌ பார்ப்பனர்கள்‌ ஒழிக்கப்‌ பார்க்கி றார்கள்‌. அதற்கு அவர்‌ பயப்படுவதில்லை. ஆதலால்‌ தமிழ்நாடு மகாநாட்‌ டிற்கும்‌ ஒரு பிரதிநிதியாய்ப்‌ போக ஆசைப்பட்டார்‌. பிரதிநிதிப்‌ பத்திரம்‌ பெற்றார்‌. பிரதிநிதிக்‌ கட்டணம்‌ ரூ. 2 ம்‌ செலுத்தினார்‌. காங்கிரஸ்‌ கமிட்டி குமாஸ்தாவிடம்‌ 61 நெ. பிரதிநிதி டிக்கெட்டும்‌ பெற்றார்‌. இதன்‌ பயனாய்‌ தாராளமாய்‌ உள்ளே விடப்பட்டார்‌. உள்ளே போய்‌ தனது சகாக்களிடம்‌ உட்கார்ந்தார்‌. இதைப்‌ பார்த்த பார்ப்பனர்களுக்கு ஆத்திரம்‌ வந்துவிட்டது. ஏனெனில்‌ காங்கிரஸ்‌ என்பதும்‌ கான்பரன்ஸ்கள்‌ என்பதும்‌, நமது நாட்டுப்‌ பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ தாய்‌ தகப்பன்மார்கள்‌ தங்களது ஆதிக்கத்‌ திற்குத்‌ தேடிவைத்த சொத்துக்களாக நினைத்துக்‌ கொண்டிருப்பதால்‌ தங்கள்‌. குண்டியைத்‌ தாங்கி பூட்ஸைத்‌ துடைத்து காலைக்‌ கழுவிச்‌ சாப்பிடசம்‌ மதித்த ஆள்களைத்‌ தவிர மற்றவர்கள்‌ உள்ளே வரக்கூடாது என்கின்ற ஆணவம்‌ அவர்களுக்கு உண்டு. அதனால்‌ ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை யைக்‌ கண்டு. ஆத்திரப்பட்டது ஆச்சரியமல்ல. வெளியாக்க சூழ்ச்சி ஆதலால்‌ ஸ்ரீமான்‌ பிள்ளையை வெளியாக்க எண்ணி ஸ்ரீமான்‌ ரங்கசாமி அய்யங்காரால்‌ பாவலர்‌ என்கின்ற ஒரு பார்ப்பனரல்லாதாரை ஏவி விடப்பட்டது. அவர்‌ முதலாவதாக சட்டப்படி ஸ்ரீமான்‌ பிள்ளை உள்ளே. வந்தாரா? அல்லது சட்ட விரோதமாய்‌ வந்தாரா? என்பதைக்‌ கவனிப்ப தற்காக பிரதிநிதி ரிஜிஸ்டரை பரிசோதித்தார்‌; அதில்‌ 61-வது நெம்பர்‌ பிரதி நிதியாக பதிவு செய்யப்பட்டு கட்டணமும்‌ வரவு வைக்கப்பட்டிருந்தது. அதின்‌ மேல்‌ ஒன்றும்‌ செய்ய முடியாமல்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரி களை யோசனை கேட்டார்‌. ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரிகள்‌ ஒரு யுக்தி செய்தார்‌. அதென்னவென்றால்‌ ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளைக்கு பிரதிநிதி சீட்டுப்பெற பிரதிநிதி சர்டிபிகேட்‌ கொடுத்த தஞ்சை காங்கிரஸ்‌ கமிட்டி காரியதரிசியான ஸ்ரீமான்‌ வெங்கிடகிருஷ்ணப்பிள்ளை என்கிற ஒரு பார்ப்பனரல்லாதாரைப்‌ பிடித்து அவ்வுரிமைச்‌ சீட்டை எப்படியாவது ரத்து செய்வித்து ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளையின்‌ டிக்கெட்டை மெல்ல ஏமாற்றி வாங்கிக்‌ கொண்டு டிக்கெட்டில்லாமல்‌ வந்தார்‌ என்கிற பெயரை வைத்து வெளியிலனுப்பிவிட தோது சொல்லிக்‌ கொடுத்தார்‌. ஆனால்‌ ஸ்ரீமான்‌ வெங்கிடகிருஷ்ணப்பிள்ளை ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளையின்‌ டிக்கெட்‌ டைப்‌ பெற பல வழிகளில்‌ முயன்றும்‌ முடியாததால்‌ ஸ்ரீமான்கள்‌ சத்திய மூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார்‌, சீனிவாசய்யங்கார்‌ முதலியவர்கள்‌ வேறு வழியில்‌ ஸ்ரீமான்‌ பிள்ளையை வெளியாக்க யோசனை செய்ய வேண்டிய தாய்‌ விட்டது. குடி அரசு - 1926 (2) 446 மறுநாள்‌ சம்பவம்‌ இந்தநிலையில்‌ அன்றைய மகாநாட்டின்‌ விஷயம்‌ முடிந்து விட்டதால்‌ மகாநாடு கலைக்கப்பட்டு விட்டது. ஸ்ரீமான்‌ பிள்ளையவர்கள்‌ அதே டிக்கெட்டைக்‌ கொண்டு மறுநாள்‌ மகாநாட்டிற்கும்‌ சென்றிருக்கிறார்‌.டிக்கெட்‌ பரிசோதகர்கள்‌, ஸ்ரீமான்‌ பிள்ளையின்‌ டிக்கெட்டை பரிசோதித்து மறு நாளும்‌ உள்ளே விட்டிருக்கிறார்கள்‌. அப்படி இருக்க மறுபடியும்‌ முத லாவதாக ஒரு பார்ப்பன வாலண்டியர்‌ ஸ்ரீமான்‌ பிள்ளையின்‌ பக்கத்தில்‌ போய்‌ அவரை: வெளியில்‌ போகும்படி சொல்லச்‌ செய்தார்கள்‌. பிள்ளை மறுத்தார்‌. டிக்கெட்டைப்‌ பிடுங்கிக்‌ கொள்ளும்‌ நோக்கத்துடன்‌ டெலிகேட்‌ டிக்கெட்டை காட்டும்‌ படி கேட்டார்கள்‌ . ஸ்ரீமான்‌ பிள்ளை மடியில்‌ வைத்துக்‌ கொண்டு மற்றவர்களையும்‌ பரிசோதித்தால்‌ நானும்‌ காட்டுவேன்‌ என்றார்‌. பிறகு அவரை மேடை மீது உட்காரக்‌ கூடாது என்று சொன்னார்கள்‌. பிள்ளை: அலக்ஷியமாயிருக்கவே ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார்‌, சீனிவாசய்யங்கார்‌ ஆகியவர்கள்‌ ஸ்ரீமான்‌ குழந்தை என்கிற ஒரு பார்ப்பன ரல்லாதாரைக்‌ கூப்பிட்டு ஸ்ரீமான்‌ பிள்ளையை வெளியாக்கக்‌ கட்டளை யிட்டார்கள்‌. அவர்பலபார்ப்பனத்‌ தொண்டர்களை அழைத்து வந்து ஸ்ரீமான்‌ பிள்ளையை தூக்கச்‌ சொன்னார்‌. தொண்டர்கள்‌ அடியோடு தூக்கவே ஸ்ரீமான்‌ பிள்ளை மேல்‌ கிளம்பிய நிலையில்‌ சபையோர்களைப்‌ பார்த்து சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்‌. இந்த சமயத்தில்‌ ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌ தன்‌ கைத்தடியால்‌ குத்தினார்‌. உடனே மற்ற பார்ப்பனர்‌ களும்‌ கிளம்பி இவரை வெளியாக்கும்படி சத்தம்‌ போட்டிருக்‌ கிறார்கள்‌. இவ்வளவு பேரையும்‌ உதறித்‌ தள்ளி விட்டு மறுபடியும்‌ கொஞ்சம்‌ முன்னேறி உட்கார்ந்து கொண்டார்‌. இந்த சமயத்தில்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி அய்யர்‌ எழுந்து அவனுக்கு இங்கு வேலையில்லை; வெளியில்‌ பிடித்துத்‌ தள்ளுங்கள்‌. என்றும்‌, ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ எழுந்து என்னை வைத வனுக்கு இங்கு என்ன வேலை, வெளியில்‌ தள்ளுங்கள்‌; முடியா விட்டால்‌ இவன்‌ டெலிகேட்‌ அல்லவென்று சொல்லி விடும்‌ என்று ஸ்ரீமான்‌ ஏ.ரங்க சாமி அய்யங்காருக்கு உத்திரவு போடவும்‌, ஸ்ரீமான்‌ ஏ.ரங்கசாமி அய்யங்கார்‌ எழுந்து “ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை காங்கிரஸ்‌ மெம்பரும்‌ அல்ல டெலிகேட்டும்‌ அல்ல” என்று விளம்பரம்‌ (டிக்ளேர்‌) செய்யவும்‌, கூட்டத்தில்‌ இருந்த பார்ப்பனர்கள்‌ “அவனுக்கு ஸ்ரீமான்‌ பிள்ளைக்கு ஸ்ரீமான்‌ என்று சொல்லக்‌ கூடாது” என்று கத்தியும்‌ கடைசியாக தங்களால்‌ ஸ்ரீமான்‌ பிள்ளை யை வெளியேற்ற முடியாமல்‌ போனதால்‌ ஸ்ரீமான்‌ எ. ரங்கசாமி அய்யங்கார்‌ எழுந்து “கீழே விழுந்தும்‌ மீசையில்‌ மண்‌ படவில்லை” என்பது போல்‌ “ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை மன்னிப்புக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌” என்று சொல்லி தங்கள்‌ பிகுவைக்‌ காப்பாற்றிக்‌ கொண்டார்கள்‌. பின்னர்‌ அக்கிரா சனர்‌ இதைக்‌ கவனித்து ஸ்ரீமான்‌ பிள்ளையைப்‌ பக்கத்தில்‌ அழைத்து விபரங்‌ களைக்‌ 447 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 கேட்டு அவருக்கு அங்கிருக்க உரிமை உண்டென்று தனது பக்கத்‌ தில்‌ உட்காரச்‌ செய்து கொண்டார்‌. இவ்வளவையும்‌ நடக்கும்‌ போது பார்த்தி ருந்த பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ எல்லாவற்றையும்‌ மறைத்து விட்டு “தண்ட பாணி பிள்ளை திருவிளையாடல்‌” என்று தலையங்கமிட்டு பொய்யும்‌ புரட்டும்‌ எழுதி இருக்கின்றன. ஸ்ரீமான்‌ குழந்தையினிடம்‌ அபயம்‌ மறுபடியும்‌ ஸ்ரீமான்‌ குழந்தை என்னும்‌ ஒரு பார்ப்பனரல்லாத கிறிஸ்தவர்‌ பேரால்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ ஒரு கடிதம்‌ பிரசுரித்திருக்‌ கின்றன. இதை குழந்தைகள்‌ கூட நம்ப முடியாது. என்ன வென்றால்‌ ஸ்ரீமான்‌ கள்‌ சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார்‌, சீனிவாசய்யங்கார்‌, ஸ்ரீமான்‌ குழந்தையை அபயமடைந்து அவர்‌ காலுக்குள்புகுந்து “எங்களப்பன்‌ குதிருக்குள்‌ இல்லை” என்பது போல்‌ பார்ப்பனர்கள்‌ இச்சம்பவத்திற்குப்‌ பொறுப்பாளிகள்‌ அல்ல என்று அவர்‌ பேரால்‌ எழுதிக்‌ கொண்டிருக்‌ கிறார்கள்‌. அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை ஒழுங்கு முறைப்படி பிறப்பிக்கப்படாத டிக்கெட்டுடன்‌ வந்தார்‌ என்றும்‌, தான்‌ தான்‌ அவரைத்‌ தூக்கிச்‌ செல்ல தொண்டர்களை ஏவினதாகவும்‌ அவர்‌ சரியானபடி டிக்‌ கெட்டைவைத்துக்‌ கொண்டிருந்ததாகவும்‌ காங்கிரசுக்கு விரோதியானதா லும்‌, மகாத்மா காந்தியை மோசக்காரர்‌ என்று சொன்னதாலுமே பிள்ளை அங்கு இருக்கக்‌ கூடாதென்று கருதி அம்மாதிரி செய்ததாகவும்‌ வீரமாய்‌ எழுதிவிட்டு இது போலவே மற்றவர்களுக்கும்‌ நடக்கும்‌ என்றும்‌ ஒரு ஸ்ரீமான்‌ குழந்தை யின்‌ பேரால்‌ எழுதியிருக்கிறார்கள்‌. இவைகளையெல்‌ லாம்‌ கவனிக்கும்‌ போது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தலை கொழுத்திருக்‌ கிறது? பார்ப்பன ரல்லாதவர்கள்‌ எவ்வளவு சுயமரியாதையற்று இருக்கிறார்கள்‌? சீர்காழி ஸ்ரீமான்‌ சாமிநாத செட்டியார்‌ தவிர அக்கூட்டத்திலிருந்த பார்ப்பனரல்லாத அம்மாஞ்சிகள்‌ வாயை மூடிக்‌ கொண்டிருந்திருக்கிறார்கள்‌ என்றால்‌ இதற்கு எதை சமாதானமாகச்‌ சொல்லுவது. மானம்‌, வெட்கம்‌, சுயமரியாதை என்பது சிலருக்கு தங்கள்‌ தங்கள்‌ பெண்டு பிள்ளைகளை கையைப்‌ பிடித்து இழுப்பது தான்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌ போல்‌ தோன்றுகிறது. இச்சம்பவம்‌ இதற்கு சமானம்‌ அல்ல என்று நினைத்து விட்டார்கள்‌ போல்‌ இருக்கிறது. இப்படிப்பட்ட ஜனங்களையுடைய சமூகம்‌ சுயராஜ்யத்திற்கு லாயக்கா? என்று தான்‌ கேட்கிறோம்‌. சுயமரியாதை இல்லா மல்‌ சுயராஜ்யம்‌ சம்பாதிப்பது சுயமரியாதை அற்றவன்‌ கலியாணம்‌ செய்து கொண்டால்‌ அப்‌ பெண்ணின்‌ கதி என்னவோ அது போல்தான்‌ முடியும்‌. ஆதலால்‌ பார்ப்பன ரல்லாத மக்கள்‌, முதல்‌ முதல்‌ சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள முயல வேண்டும்‌ அதிலேயே சுயராஜ்யமிருக்கிறது. ஆதலால்‌ பார்ப்பனர்களுக்கு குலாமாகவும்‌ கால்‌ வருடிகளாகவும்‌ குடி அரசு - 1926 (2) 448 இருந்து வயிறு வளர்ப்பதை விட மானக்‌ கேடானதும்‌ சுயமரியாதையற்றது மான காரியம்‌ உலகில்‌ வேறொன்றுமில்லை என்பதாக உணர்ந்து ஒவ்வொரு வரும்‌ பார்ப்பனரல்லாத சுயமரியாதைச்‌ சங்கத்தை ஆதரித்து முதலில்‌ சுயமரியாதையை அடைவார்களாக. குடி அரசு - கட்டுரை - 12121926 449 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. தெண்காசியில்‌ பார்ப்பணர்கள்‌ ஒத்துமையாமையும்‌ பகிஷ்காரமும்‌ கதவடைய்பும்‌ தென்காசி சிவன்‌ கோவிலில்‌ பார்ப்பனர்களின்‌ வேத பாராயணத்‌ தைப்‌ போலவே தமிழ்‌ மக்களின்‌ தேவாரப்‌ பாராயணமும்‌ செய்யப்பட வேண்டும்‌ என்பதாகக்‌ கருதி தேவாரப்‌ பாராயணம்‌ ஆன பிறகு பிரசாதம்‌ கொடுக்கப்பட வேண்டும்‌ என்று தேவஸ்தான போர்டாரும்‌ கமிட்டியாரும்‌ தர்மகர்த்தாக்‌ களும்‌ உத்திரவு போட்டதினால்‌ அப்பேர்ப்பட்ட சுவாமி தெரிசனமும்‌ பிரசாதமும்‌ தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும்‌ பஹிஞஷ்காரமும்‌ செய்து அவ்வூர்‌ பார்ப்பனர்கள்‌ எல்லாம்‌ ஒன்று கூடி பார்ப்பன ஸ்ரீகள்‌, புருஷர்கள்‌, குழந்தை குட்டிகள்‌ சகிதம்‌ யாரும்‌ அக்‌ கோவிலுக்குப்‌ போகக்‌ கூடாது என்றும்‌, சுவாமியை தரிசிக்கக்‌ கூடாதென்றும்‌ பரிசாரகம்‌ முதலிய வேலையைச்‌ செய்யக்‌ கூடாது என்றும்‌, சுவாமி தங்கள்‌ வீதிக்கு எழுந்தருளி வந்தாலும்‌ ஒவ்வொரு பார்ப்பனரும்‌ வீதி தெருக்‌ கதவை அடைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ தீர்மானம்‌ செய்து கொண்டு அந்தப்படி அமுலிலும்‌ நடத்தி வருகிறார்கள்‌ என்கின்ற விபரம்‌ அறிய மிகவும்‌ சந்தோஷமடைகிறோம்‌. ஏனெனில்‌ பார்ப்பனர்கள்‌ பஹிஷ்‌ காரம்‌ செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள்‌ பட்டமார்களைக்‌ கொண்டு கோவிலதிகாரிகள்‌ வேலை வாங்கி வருகிறார்கள்‌. இது போலவே மற்ற ஊர்களிலும்‌ உள்ள பார்ப்பனர்களும்‌ மற்ற கோவில்களோடும்‌ சுவாமிக சோடும்‌ ஒத்துழை யாமையும்‌ பஹிஷ்காரமும்‌ செய்து விடுவார்களேயானால்‌ நமது தெய்வங்‌ களைப்‌ பிடித்த சனியனும்‌ நமது மதங்களைப்‌ பிடித்த கிரகங்களும்‌ அடி யோடு ஒழிந்து யோக்கியமானதும்‌ உண்மையானதுமாக விளங்கும்‌. குடி அரசு - கட்டுரை - 1212.1926 குடி அரசு - 1926 (2) 450 சுயமரியாதைச்‌ சங்க ஸ்காபனம்‌ சகோதரர்களே! இந்த எனது சுற்றுப்‌ பிரயாணத்தின்‌ நோக்கம்‌ இன்னது என்பதை “குடி அரசு” பத்திரிகையின்‌ மூலம்‌ ஏறக்குறைய ஒரு வருஷ காலமாக தெரியப்‌ படுத்திக்கொண்டு வந்திருக்கிறேன்‌. சென்ற வருஷம்‌ காஞ்சீபுரத்தில்‌ நடந்த தமிழ்நாடு அரசியல்‌ மகாநாட்டிலிருந்தே நமது சுயமரியாதையைக்‌ காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம்‌ வேண்டும்‌ என்பதாக பலமுறை பேசி யும்‌ எழுதியும்‌ வந்திருக்கிறேன்‌. அவற்றை நீங்கள்‌ எல்லோரும்‌ ஏகமன தாய்‌ ஒப்புக்‌ கொண்டதாலும்‌ வரவேற்பதாய்‌ தெரிவித்துக்‌ கொண்டதாலும்‌ என்னுடைய அபிப்பிராயம்‌ முன்னிலும்‌ அதிகமாகப்‌ பலப்பட்டது. அதை உத்தேசித்தே தான்‌ உங்கள்‌ விருப்பத்திற்கிணங்கி வந்திருக்கிறேன்‌. இச்‌ சங்கத்தின்‌ நோக்கங்களையும்‌, கொள்கைகளையும்‌ இதற்கு முன்‌ இரண்‌ டொரு சமயங்களில்‌ இவ்விடம்‌ வந்தக்காலத்திலும்‌ சுருக்கமாக எடுத்துச்‌ சொல்லி இருக்கின்றேன்‌. இந்த தேசத்தில்‌ 22 கோடி மக்களுக்கு மேலாக இருக்கும்‌ நாம்‌ வெகு சொற்பமான எண்ணிக்கையுள்ளவர்களால்‌ நாம்‌ எவ்வித பொறுப்பாளிகளல்லாத பிறவி காரணமாய்‌ எவ்வளவு இழிவாயும்‌, தாழ்மையாயும்‌ கருதப்பட்டு விலங்கு, பூச்சி, புழுக்களிலும்‌ கேவலமாய்‌ நடத்தப்படுகிறோம்‌ என்பதை ஒவ்வொருவரும்‌ அறிந்தே இருக்கிறோம்‌. இதைப்‌ போக்கிக்‌ கொள்வதற்காக நமது முன்னோர்கள்‌ ஆயிரக்கணக்கான வருஷங்களாக எவ்வளவோ முயற்சித்து வந்திருக்கிறார்கள்‌. நமது இழிவை யும்‌ தாழ்வையும்‌ நீக்கி நமக்கு சுயமரியாதையும்‌ சமத்துவமும்‌ அளிப்பதற்‌ கென்றே கபிலர்‌, புத்தர்‌, ராமானுஜர்‌ போன்ற எவ்வளவோ பெரியார்கள்‌ அவதாரமும்‌ செய்து இதற்காகவே உயிரையும்‌ விட்டார்கள்‌. எவ்வளவு செய்தும்‌ நமது இழிவினாலும்‌ தாழ்மையினாலும்‌ சுயமரியாதையில்‌ லட்சிய மின்மையினாலும்‌ வாழ வேண்டிய இயற்கை நிலை படைத்த நமது எதிரிகள்‌ யார்ப்பனர்கள்‌! அவ்வப்போது அதற்குத்‌ தகுந்த சூழ்ச்சிகள்‌ செய்து நம்மில்‌ சிலரையே தங்கள்‌ ஆயுதமாகக்‌ கொண்டு அம்‌ முயற்சிகளையெல்லாம்‌ அழித்துக்‌ கொண்டே வந்திருக்கிறார்கள்‌. எவ்வளவு அழித்தாலும்‌ எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும்‌ எவ்வளவு தோல்வி ஏற்பட்டாலும்‌ மேலும்‌ மேலும்‌ இவ்விழிந்த தன்மைகளாலான கொடுமையிலிருந்து நீங்க வேண்டும்‌ என்கிற அவா மாத்திரம்‌ நமக்கு நாளுக்குநாள்‌ வளர்ந்து கொண்டே வந்ததே அல்லாமல்‌ குறையவே இல்லை.அதோடு, பொதுஜன அபிப்பிராயமும்‌ ஒன்று. 451 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. போலவே இருந்து வருகிறது. ஆதலால்‌ இவ்விழிவுகளை நீக்கி நமது சுயமரியாதையைப்‌ பெறுவதற்கும்‌ காப்பதற்கும்‌ இதுவே தக்க சமயம்‌. இது விஷயத்தில்‌ நாம்‌ எல்லோரும்‌ ஒற்றுமையுடன்‌ கூடி ஒரே அபிப்பிராயமாக இருந்து தீவிர முயற்சி எடுத்து உழைக்க வேண்டும்‌. நமது முயற்சிக்கும்‌ உழைப்புக்கும்‌ பலவித எதிர்ப்புகளும்‌ பழிப்புகளும்‌, பொய்‌ கற்பனை களும்‌, பழிகளும்‌ நமது சுயமரியாதையின்‌ எதிரிகளால்‌ பார்ப்பனர்‌ களாலும்‌ அவர்களது கூலிகளாலும்‌ ஏற்படும்‌. அதாவது நம்மிலேயே பலர்‌ அவர்‌. களோடு சேர்ந்துக்‌ கொண்டு தங்களது வாழ்விற்கும்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்‌ குமாக தேசாபிமானம்‌ என்னும்‌ போர்வையைப்‌ போர்த்திக்கொண்டு நமது இயக்கத்திற்கு கேடு சூழ எதிரிகளுக்கு அனுகூலமாயிருப்பார்கள்‌. இவை களையெல்லாம்‌ நாம்‌ பொருட்படுத்தக்‌ கூடாது. நாம்‌ யாருக்காவது கெடுதி செய்ய நினைக்கிறோமா? யாருடைய கிரமமான உரிமைகளையாவது பறிக்கிறோமா? நமது சுயமரியாதைக்கு பாடுபடுகிறோமேயல்லாமல்‌ மற்ற வர்கள்‌ சுயமரியாதைக்கு நாம்‌ விரோதிகளா யிருக்கிறோமா? நமது வீட்டுப்‌ பொருள்‌ கொள்ளைப்‌ போகாமல்‌ நமது வீட்டுக்‌ கதவை தாழிட்டு பந்தோ பஸ்து செய்தால்‌ நமது பொருளைக்‌ கொள்ளை கொண்டே பிழைக்‌ கக்‌ காத்திருக்கும்‌ திருடர்களுக்கு நாம்‌ கெடுதி செய்தவர்களாவோமா? அவர்‌. களைப்‌ பட்டினி போட்டப்‌ பாவத்திற்காளாவோமா? இதனால்‌ மற்றொருவரை: மோசம்‌ செய்து உயிர்‌ வாழ்வது வாழ்வல்லவென்றும்‌ திருடிப்‌ பிழைப்பது ஒரு பிழைப்பல்ல வென்றும்‌ திருடனுக்குத்‌ தோன்றும்‌ படி செய்து அவனைக்‌ கண்ணியமான தனது உழைப்பினால்‌ வாழும்படி தூண்டுவதாகாதா?' இதற்காகத்‌ திருடன்‌ நம்‌ பேரில்‌ கோபித்துக்‌ கொண்டால்‌ அதற்கு நாம்‌ என்ன செய்வது? நாம்‌ சுயமரியாதை அடைய வேண்டுமா? வேண்டாமா? நமது இழிவுகளும்‌ தாழ்வுகளும்‌ ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பவை களைத்தான்‌ நாம்‌ கவனிக்க வேண்டுமே ஒழிய அவர்‌ என்ன சொல்லுகிறார்‌. இவர்‌ என்ன எண்ணுகிறார்‌ என்பதைப்‌ பற்றி நாம்‌ அதிக கவனம்‌ செலுத்தக்‌ கூடாது. இப்போது சர்க்கார்‌ சட்ட மெம்பராயிருப்பவரும்‌ தனது சரீரத்தில்‌ ஒவ்வொரு அணுவும்‌ ஒவ்வொரு மூச்சும்‌, பார்ப்பன மயமாயிருப்பவருமான சர்‌.சி.பி.ராமசாமி அய்யர்‌ என்கிற ஒரு பார்ப்பனரே சென்ற ஹு நாடார்‌. மகாநாட்டில்‌ அக்கிராசனம்‌ வகித்துப்‌ பேசு கையில்‌ குறிப்பிட்டிருப்பதாவது:- “ராஜரீகத்திலும்‌ வியாபார விவகாரங்களிலும்‌ ஐரோப்பியர்கள்‌ நமக்கு மேலானவர்கள்‌ போல்‌ நடக்கவிடக்‌ கூடாது என்றும்‌ சமத்து வமாகவே நடக்கச்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌ இந்தியர்களாகிய நாம்‌ கூறி வருகின்றோம்‌. காங்கிரசும்‌ முஸ்லீம்‌ லீக்கும்‌ ஆரம்ப முதற்‌ கொண்டே இந்த லட்சியத்தை பலவழிகளிலும்‌ எடுத்துரைத்து அமுலுக்குக்‌ கொண்டு வர முயற்சிக்கின்றன. அப்படி இருக்கும்‌ பொழுது அது போலவே தற்செயலாகவோ துர்‌ அதிர்ஷ்ட வசமாக வோநம்மில்‌ தாழ்ந்தவர்களாக நம்மால்‌ கருதப்பட்டவர்கள்‌ உயர்ந்த வகுப்பார்களுடன்‌ போராடித்‌ தாங்களும்‌ அவர்‌ களுக்குச்‌ சமமான குடி அரசு - 1926 (2) 452 வர்கள்‌ என்பதை நிலை நாட்டிக்‌ கொள்ள முயற்சிக்கின்றனர்‌. இந்தப்‌ போராட்டம்‌ கட்டாயம்‌ நடக்க வேண்டியது தான்‌. இது மிகவும்‌ அவசிய மானதாகும்‌. ஆரம்ப திசையில்‌ ஒரு சமூகம்‌ மற்றொரு சமூகத்தின்‌ மீது குரோதம்‌ கொண்டு அதனைத்‌ தாக்கவும்‌ வேண்டி வரும்‌. வழக்கம்‌ என்னும்‌ பெயரால்‌ இருந்து வரும்‌ இம்மாதிரி அநுஷ்டானங்களை மாற்றி தங்கள்‌ தங்கள்‌ உரிமைகளை ஸ்தாபித்‌ துக்‌ கொள்ள முயலும்போது ஒருவருக்கொருவர்‌ மனஸ்தாபங்களும்‌ சச்சரவுகளும்‌ ஏற்படுவது சகஜமே. சமூக சமத்துவங்களுக்கு இந்‌ நிலை இன்றியமையாயது என்பதைத்‌ தீர்க்க திருஷ்டி உள்ளவர்கள்‌ உணர்ந்தே தீருவார்கள்‌”' என்று பேசியிருக்கிறார்‌. அல்லாமலும்‌ உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாரும்‌ ஒவ்வொரு மதத்தாரும்‌ ஒவ்வொரு சமூகத்தாரும்‌ ஒவ்வொரு வகுப்பாரும்‌ தங்கள்‌ தங்கள்‌ குறைகளை நீக்கிக்‌ கொள்ளவும்‌ முன்னேற்ற மடையவும்‌ தங்கள்‌ தங்கள்‌ தேசத்தின்‌ பெயராலோ, மதத்தின்‌ பெயராலோ, சமூகத்தின்‌ பெயராலோ, வகுப்பின்‌ பெயராலோ ஒவ்வொரு இயக்கங்களை: ஏற்பாடு செய்து கொண்டும்‌ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ முன்‌ னேறி ஆதிக்கம்‌ பெற முயற்சித்து வருவதை நாம்‌ பார்த்து வருகிறோம்‌. உதாரணமாக ஆசியா, ஐரோப்பா,அமெரிக்கா, ஜப்பான்‌ முதலிய தேசத்தார்‌ தங்கள்‌ தங்கள்‌ நாட்டின்‌ பேரால்‌ பல இயக்கங்களும்‌ மகம்மது, கிறிஸ்து, புத்தர்‌ முதலிய மதஸ்தர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ மதத்தின்‌ பேராலும்‌ அதாவது முஸ்லீம்கள்‌ “முஸ்லீம்‌ லீக்‌”, “மஜிலிஸ்‌ உலாமா*, *ஜெமேயதுல்‌ உலாமா” முதலிய சங்கங்களும்‌ எல்லா இந்திய கிறிஸ்தவ சங்கம்‌, புரட்டெஸ்‌ டெண்ட்‌ லீக்‌ முதலிய சங்கங்களும்‌ இருப்பதைப்‌ பார்த்துவருகிறோம்‌. அது போலவே நமது நாட்டில்‌ அரசாங்கத்தாரால்‌ மகம்மதியரல்லாதார்‌ என்றழைக்‌ கப்படும்‌ வகுப்பாராகிய பார்ப்பனர்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ வகுப்பார்களுக்குள்ளும்‌ பொதுவில்‌ என இந்து மகாசபை என்றும்‌, பார்ப்பனர்களால்‌ பிராமண மகாசபை என்றும்‌, ஆரிய தர்ம பரி பாலன சபை என்றும்‌, வர்ணாசிரம தர்ம பரிபாலன சபை என்றும்‌ பல ஸ்தாபனங்களும்‌ ஸ்தாபித்து மகாநாடுகளும்‌ நடத்தப்பட்டு வருவ தையும்‌ அதில்‌ தங்களது உயர்வுகளையும்‌ ஆதிக்கத்தையும்‌ நிலைநிறுத்த கொள்கை: களையும்‌ திட்டங்களையும்‌ தீர்மானித்து “பிராமணன்‌” முதலிய பல பத்திரிகைகள்‌ மூலம்‌ பிரசாரத்துடன்‌ அமுலில்‌ நடத்தி வருவதையும்‌ பார்த்து வருகிறோம்‌. அவர்களுக்குள்‌ உள்‌ வகுப்பில்‌ ஸ்மார்த்த பிராமணர்‌, வைணவப்‌ பிராமணர்‌, மாத்துவப்‌ பிராமணர்‌, மகாராஷ்டிரப்‌ பிராமணர்‌, செளராஷ்டிர பிராமணர்‌, விஸ்வ பிராமணர்‌ என சங்கங்களும்‌ ஏற்படுத்தி பிரசாரங்கள்‌ செய்து வருவதையும்‌ பார்த்து வருகிறோம்‌. அதுபோலவே பார்ப்பனரல்லாதார்‌ (திராவிடர்‌, தமிழர்‌ களுக்குள்ளும்‌ பொதுவில்‌ தென்னிந்‌ தியநல உரிமைச்‌ சங்கம்‌, பார்ப்பனரல்லாத சங்கம்‌ என்னும்‌ ஸ்தாபனங்‌ களை 4563 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஸ்தாபித்து மகாநாடுகள்‌ கூட்டி அதற்கேற்ற கொள்கைகளையும்‌ திட்டங்க ளையும்‌ வகுத்து பிரசங்கங்கள்‌ மூலமாகவும்‌ “ஜஸ்டிஸ்‌”, “திராவி டன்‌” முதலிய பத்திரிகைகள்‌ மூலமாகவும்‌ பிரசாரங்கள்‌ செய்து வருவதையும்‌ சைவ சமய சங்கம்‌, வைணவ சமய சங்கம்‌ என்றும்‌ மற்றும்‌ உள்‌ வகுப்புகள்‌ பேரால்‌ ஆதிதிராவிட சங்கமென்றும்‌, சோழிய வேளாள சங்கமென்றும்‌, தொண்டை மண்டல வேளாளர்‌ சங்கமென்றும்‌, கொங்கு வேளாளர்‌ சங்கமென்றும்‌, வன்னிய குல க்ஷத்திரிய சங்கமென்றும்‌, பலிஜ வாரு சங்கமென்றும்‌, கம்மவாரு சங்கமென்றும்‌, பார்க்கவகுல சங்கமென்றும்‌, முத்திரிய சங்கமென்‌ றும்‌, சேனைத்தலைவர்‌ சங்கமென்றும்‌, அருந்ததியர்‌ சங்கமென்றும்‌, மருத்து வர்‌ சங்கமென்றும்‌, குலாலர்‌ சங்க மென்றும்‌, இந்திர குலாதிபர்‌ சங்கமென்றும்‌, ரசபுத்திரர்‌ சங்கமென்றும்‌, தன வைசிய சங்க மென்றும்‌, ஆரிய வைசிய சங்கமென்றும்‌, காசுக்கார செட்டியார்கள்‌ சங்க மென்றும்‌, பன்னிரண்டாம்‌ செட்டியார்கள்‌ சங்கமென்றும்‌, ஐந்நூற்றான்‌ செட்டி யார்‌ சங்கமென்றும்‌, அறுபத்திநாலுமனை செட்டியார்‌ சங்கமென்றும்‌, இருபத்தி நாலு குலச்‌ செட்டியார்‌ சங்கமென்றும்‌, விஸ்வகர்ம சங்கமென்றும்‌, சிவாச்சார்கள்‌ சங்க மென்றும்‌ இன்னும்‌ இதுபோன்ற எத்தனையோ வகுப்பார்‌ சங்கங்களை ஸ்தாபித்துக்‌ கொண்டு தங்களது குறைகளைப்‌ போக்கிக்‌ கொள்ளவும்‌ அன்னியர்களால்‌ தங்களுக்கு இழைக்கப்படும்‌ கொடுமை களிலிருந்து தப்பிக்‌ கொள்ளவும்‌, தங்களது சுயமரியாதைக்கும்‌ சமத்துவத்‌ திற்கும்‌ தடையா யிருக்கும்‌ சாதனங்களை விலக்கவும்‌ முயற்சித்து வருவதை யும்‌ பார்த்து வருகிறோம்‌. இப்படிச்‌ செய்து வருவதை சில சமயங்களில்‌ மற்றொரு சமூகத்‌ தாருக்கு அதிருப்தியைக்‌ கொடுக்கக்‌ கூடியதாக விருந்‌ தாலும்‌ இருக்கலாம்‌. அதற்காக மற்றவர்கள்‌ மேல்‌ குற்றம்‌ சொல்வதில்‌ பொருள்‌ இல்லை. உதாரணமாக ஆரியர்களாகிய பார்ப்பனர்கள்‌ ஆரிய தர்ம பரிபாலன சபை மூலமாயும்‌ வருணாசிரம தர்ம பரிபாலன சபை மூலமாயும்‌ என்ன கோரு வார்கள்‌? வருணாசிரம தர்மம்‌ நிலைக்க வேண்டு மென்றும்‌, தாங்கள்‌ உயர்ந்த ஜாதியார்கள்‌ என்றும்‌, மற்றவர்கள்‌ சூத்திரர்கள்‌ (தங்களது வைப்பாட்டி, வேசி மக்கள்‌) என்றும்‌, பஞ்சமர்கள்‌ (சண்டாளர்கள்‌) என்றும்‌ உள்ள தர்மம்‌ நிலைத்திருக்க வேண்டு மென்றும்‌, இச்‌ சூத்திரர்களும்‌ பஞ்சமர்களும்‌ வருணாசிரம தர்மத்திற்கு விரோதமாய்‌ சுயமரியாதை அடைய விரும்புவதும்‌ சமத்துவமும்‌ சுதந்திரமும்‌ அடைய விரும்புவதும்‌ தங்களது ஆரிய தர்மத்‌ துக்கு கெடுதி என்றும்‌, வருணாகிரம தர்மமும்‌ ஆரிய தர்மமும்‌ காப்பாற்றப்பட வேண்டுமென்றும்‌, சூத்திரத்‌ தன்மையையும்‌ பஞ்சமத்‌ தன்மையையும்‌ மறைய விடக்‌ கூடாது என்றும்‌, அதை மறைக்கச்‌ செய்ய ஏற்படுத்தப்படும்‌ இயக்கங்‌ களுக்கும்‌ முயற்சிகளுக்கும்‌ விரோதமாயிருந்து பலவித சூழ்ச்சிகளாலும்‌ தந்திரங்களாலும்‌ அவ்வியக்கங்களையும்‌ முயற்சிகளையும்‌ அழிக்க வேண்டும்‌ என்றும்‌ பேசி அதற்கு வேண்டிய தீர்மானங்கள்‌ செய்வார்களே ஒழிய தங்களது வருணாசிரம தர்மங்கள்‌ கெட ஒருக்காலும்‌ சம்மதிக்க மாட்டார்கள்‌. அதுபோலவே மற்ற வகுப்பார்களும்‌ முன்னேறி தங்களது குடி அரசு - 1926 (2) 454 பிறப்புரிமைகளான சுயமரியாதையையும்‌ சமத்துவத்‌ தையும்‌ வேண்டு மானால்‌ அதற்கெதிராயுள்ள ஆரியதர்மமும்‌ வருணாசிரம தர்மமும்‌ தங்கள்‌ தோலில்‌ ஏறாமலும்‌ அதனால்‌ தங்களுக்கு கெடுதி ஏற்படாமலும்‌ எவ்வளவு தூரம்‌ தடுக்க வேண்டுமோ அவ்வளவு தூரம்‌ தடுக்க வேண்டியதுதான்‌.ஆரிய தர்மக்‌ கொள்கைகளும்‌ வருணாசிரம தர்மக்‌ கொள்கைகளும்‌ நமது சுயமரியா தைக்கும்‌ சமத்துவத்திற்கும்‌ எவ்வளவு தூரம்‌ கொடுமை இழைக்கின்றன என்பதை வெளியிலெடுத்துச்‌ சொல்ல வேண்டியது தான்‌. இதனால்‌ ஒருவரையொருவர்‌ துவேஷமென்றோ துரோக மென்றோ சொல்லிக்‌ கொள்‌: வது கொஞ்சமும்‌ பொருந்தாது. ஆனால்‌ செல்வாக்கில்லாதவர்களின்‌ சுயமரியாதைக்‌ கொள்கை செல்வாக்குள்ளவர்களின்‌ சுயநலக்‌ கொள்கைக்கு விரோதமாயிருக்குமானால்‌ அச்‌ செல்வாக்கின்‌ மூலம்‌ செல்வாக்கில்லாதவர்‌: களுக்குப்‌ பல கெடுதிகளும்‌ இடையூறுகளும்‌ ஏற்படுவது சகஜம்‌ தான்‌. உண்மையாக சுயமரியாதைக்கும்‌ சமத்துவத்திற்‌ கும்‌ உழைப்பவர்கள்‌ இவைகளுக்குப்‌ பின்வாங்கக்‌ கூடாது. வருவது வரட்டும்‌ என்று தைரியமாய்‌ தலை கொடுக்க வேண்டும்‌. உதாரணமாக, நமது சுய மரியாதைக்கும்‌, சமத்துவத்திற்கும்‌ என்று கவலை எடுத்து அதில்‌ உள்ள கஷ்டங்களை நாம்‌ வெளியிலெடுத்துச்‌ சொல்ல ஆரம்பித்த உடன்‌ பார்ப்பனர்களால்‌ பிராமணத்‌ துவேஷிகள்‌ என்றும்‌ வகுப்பு வாதக்காரர்கள்‌ என்றும்‌ தேசத்‌ துரோகிகள்‌. என்றும்‌ நாஸ்தீகர்கள்‌ என்றும்‌ குற்றம்‌ சொல்லப்பட்டு விட்டோம்‌. இதையும்‌ நமது பாமர ஜனங்கள்‌ நம்பும்படியாகவும்‌ ஆகிவிடுகிறது. காரணம்‌ என்ன வென்றால்‌ தற்கால அரசியலிலும்‌ வைதீகத்திலும்‌ பார்ப்பனர்களுக்கு செல்வாக்கும்‌ ஆதிக்கமும்‌ இருப்பதுதானே ஒழிய வேறில்லை. அச்‌ செல்வாக்கும்‌ ஆதிக்கமுமே நமக்கு இவ்வளவு கொடுமைகள்‌ இழைக்க இடம்‌ கொடுக்கிறது. முதலாவது, வகுப்பு வாதமும்‌ வகுப்புத்‌ துவேஷமும்‌ நம்மிடம்‌ எங்கே இருக்கிறது? பிராமணர்‌ - பிராமணரல்லாதார்‌ என்கிற பிரிவினை யாரிடமிருந்து உண்டாயிற்று? கோவில்களிலும்‌, தீர்த்தங்களிலும்‌, நதிகளிலும்‌, பள்ளிக்கூடங்களிலும்‌, வாசம்‌ செய்யும்‌ தெருக்‌ களிலும்‌, ஓட்டல்களிலும்‌, காப்பிக்‌ கடைகளிலும்‌ பிராமணர்‌, சூத்திரர்‌: என்கின்ற பிரிவும்‌ முறையே உயர்வு தாழ்வு என்கிற பாகுபாடுகளும்‌ பார்ப்பனரல்லாதாராகிய நம்மால்‌ ஏற்பட்டதா? அல்லது பார்ப்பனர்களால்‌ ஏற்பட்டதா? என்று யோசித்தால்‌ நம்மை யாராவது வகுப்புத்‌ துவேஷி என்றோ வகுப்புவாதக்காரர்‌ என்றோ சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள்‌ தங்கள்‌ உயர்வையும்‌ ஆதிக்கத்தையும்‌ உண்டாக்கிக்‌ கொள்வதும்‌ நம்மைத்‌ தாழ்ந்த நிலையிலும்‌ இழிதன்மையிலும்‌ இருக்கும்படி செய்வதும்‌ கொஞ்ச மாவது குற்றம்‌ என்று அவர்கள்‌ நினைப்பதில்லை. ஆனால்‌ நாம்‌ அவர்‌ களால்‌ தாழ்மையாயும்‌ இழிவாயும்‌ கருதப்படாமல்‌ சமத்துவமாக சுயமரியா தையுடன்‌ நடத்தப்பட வேண்டுமென்று நினைப்பது மாத்திரம்‌ குற்றமாய்‌ விடுகிறது. எப்படியெனில்‌ 455 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஆரிய தர்ம பரிபாலனம்‌ வர்ணாசிரம பரிபாலனம்‌ இதனால்‌ தீண்டாமை சூத்திரன்‌ இவைகள்‌ நிலைத்திருப்பது ஆகியவைகள்‌. தெய்வீக இயக்கம்‌, ஆஸ்தீக இயக்கம்‌ என்கிறார்கள்‌. சூத்திரன்‌, தீண்‌. டாமை ஆகியவை ஒழிக்கும்‌ இயக்கம்‌ நாஸ்திக இயக்கம்‌ பிராமணத்‌ துவேஷ இயக்கம்‌ என்று சொல்லுகிறார்கள்‌ . ஐ. நம்முடன்‌ அவர்கள்‌ பேசுவதும்‌ நம்மை அவர்கள்‌ பார்ப்‌ பதும்‌ அவர்களுக்குப்‌ பாவம்‌, தோஷம்‌ என்கிறார்கள்‌. ஆனால்‌ நாம்‌ அவர்கள்‌ காலில்‌ விழுவதும்‌ சுவாமி என்று கும்பிடுவதும்‌ நமக்கு புண்‌. ணியம்‌ என்கிறார்கள்‌. 3. நாம்‌ தொட்டதையோ பார்த்ததையோ நமக்குக்‌ கொடுத்த பிறகு அவர்களுக்குக்‌ கொடுப்பதையோ தோஷம்‌ என்கிறார்கள்‌. அவர்‌. கள்‌ எச்சிலையோ கால்‌ கழுவின தண்ணீரையோ நாம்‌ சாப்பிடுவது மோகம்‌ என்கிறார்கள்‌. 4. நம்மோடு அவர்கள்‌ பேசும்‌ போது அவர்களதுபூணூலை காதில்‌ சுற்றிக்‌ கொள்வார்கள்‌. (ஏனென்றால்‌ பார்ப்பனர்கள்‌ மல, ஜலம்‌ கழிக்கும்‌ போது அவர்களது சரீரம்‌ அசுத்தமாய்‌ விடுகிறபடியால்‌ அசுத்தப்‌ பட்ட சரீரத்தில்‌ பூணூல்‌ தரித்திருப்பது தோஷம்‌. ஆதலால்‌ காதில்‌ சுற்றிக்‌ கொண்டு இருந்து தேகம்‌ பரிசுத்தமான பின்பு தோளில்‌ போட்டுக்‌ கொள்வார்கள்‌. அது போலவே சூத்திரனாகிய நம்முடன்‌ பேசும்போதும்‌ அவர்களது திரேகம்‌ அசுத்தப்பட்டு போகிறதாம்‌.) 8. நாம்‌ அவர்களுடன்‌ பேசும்‌ போது வாய்‌ பொத்திக்கொள்ள வேண்டும்‌. (ஏனென்றால்‌ வாயிலிருந்து வரும்‌ காற்று அவர்கள்‌ மீது பட்டு விடுமாம்‌? இம்மாதிரி ஆயிரக்கணக்கான உதாரணங்களைக்‌ காணலாம்‌. இந்‌ நிலையில்‌ நமது முன்னேற்றத்தின்‌ எதிரிகள்‌ நம்மை வகுப்புத்‌ துவேஷக்‌ காரர்கள்‌ என்றோ நாஸ்தீகர்கள்‌ என்றோ சொல்லுவார்களே என பயந்து நமது ஜீவாதாரமான உரிமைகளை அறியச்‌ செய்ய வேண்டிய கடமைகளில்‌ இருந்து கொஞ்சமும்‌ பின்‌ வாங்கிக்‌ கொள்ளக்‌ கூடாது. அரசியல்‌ விஷயங்களில்‌ நமது தற்கால யோக்கியதை என்ன என்பதைக்‌ கவனித்துப்‌ பாருங்கள்‌. பார்ப்பனர்‌. கள்‌ உத்தியோகம்‌ சம்பாதிப்பதற்காக ஏற்படுத்திக்‌ கொண்ட இயக்கத்தை. அவர்கள்‌ தேசீய இயக்கம்‌ என்பதாக பெயரை வைத்துக்‌ கொண்டு நம்‌ பேராலே நமது நாட்டிற்கும்‌ நமது வகுப்பிற்கும்‌ கேடான காரியங்களைச்‌ செய்து அரசாங்கத்‌ தாருக்கு அநுகூலம்‌ செய்து கொடுத்து 1000, 2000, 5000, 7000 ரூபாய்கள்‌ சம்பளமுள்ள உத்தியோகங்‌ களையும்‌ சம்பாதித்துக்‌ கொண்டும்‌ கோர்ட்டுகள்‌ என்றும்‌ பள்ளிக்கூடங்கள்‌ என்றும்‌ அரசாங்கத்‌ திற்கும்‌ தங்களுக்கும்‌ அநுகூலமான ஸ்தானங்களையும்‌ அரசாங்கத்திற்குள்‌ உளவாயிருந்து ஏற்பாடு செய்து கொண்டு அதின்‌ மூல மாய்‌ பிழைத்து குடி அரசு - 1926 (2) 456 வருகிறார்கள்‌.நாம்‌ ஏதாவது இதுகளில்‌ ஆசைப்பட்டால்‌ நமக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்‌. யோக்கியதை உண்டாக்கிக்‌ கொள்ளலாம்‌ என்று பிரயத்தனப்பட்டால்‌ தேசத்‌ துரோகி, வகுப்‌ புத்‌ துரோகி என்று சொல்லி விடுகிறார்கள்‌. ஆதலால்‌ இவ்வித கஷ்டங்களில்‌ இருந்து வரும்‌ நமது சமூகத்திற்கும்‌ நாட்டிற்கும்‌ சுயமரியாதையும்‌ விடுதலை யும்‌ ஏற்படவும்‌ நமக்கென்று ஒரு தனி இயக்கம்‌ இருந்துதான்‌ ஆக வேண்டும்‌. அவ்வியக்கத்தில்‌ நாம்‌ எல்லோரும்‌ ஈடுபட்டு ஒற்றுமையாய்‌ உழைக்க வேண்டும்‌. குறிப்பு - நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை ஆகிய ஊர்களில்‌ 28.11.1926 முதல்‌ 3.12.1926 வரை ஆற்றிய உரைகளின்‌ சுருக்கம்‌ . குடி அரசு - சொற்பொழிவு - 19.12.1926 457 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. யார்ப்பண்ய சம்பாஷணை - சித்திரபுத்திரன்‌ மணி: ஏன்டா சேஷா | நம்ம தலைவர்களான ஸ்ரீமான்கள்‌ சீனிவாசய்யங்கார்‌,சத்தியமூர்த்தி , ரெங்கசாமி அய்யங்கார்‌ சீனிவாச சாஸ்திரி, சிவசாமி அய்யர்‌, 6.2. அய்யர்‌ மற்றுமுள்ள பிராமணோத்தமர்கள்‌ எல்லாம்‌ இந்த எலக்‌ஷனில்‌ எவ்வளவோ பாடுபட்டு மடாதிபதிகள்‌ மகந்துகள்‌. பணத்தை லட்சக்கணக்காக செலவு செய்து ஜெயித்து விட்டோம்‌, ஜெயித்து விட்டோம்‌ என்று தப்பட்டை அடித்தார்களே, கடைசியில்‌ பார்க்கிறபோது பழையபடி மூன்று சூத்திரர்கள்‌ தானே மந்திரிகளாய்‌ விட்டார்கள்‌. இதில்‌ என்ன நமக்கு லாபம்‌. ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார்‌. ॥06ஆச்சாரியார்‌, வெங்கிட்டரமணய்யங்கார்‌ இவர்களெல்லாம்‌ மந்திரிகளாய்‌ வருவார்கள்‌ என்றல்லவா நாம்‌ எல்லோரும்‌ எவ்வளவோ பாடுபட்டோம்‌. கணக்கு, மணியக்காரர்‌, காப்பிக்‌ கடை, பஞ்சாங்கம்‌, புரோகிதம்‌, வக்கீல்‌ குமாஸ்தா, வக்கீல்‌, முனிசீப்‌, ஜட்ஜ்‌, நிர்வாக சபை எல்லாம்‌ பாடுபட்டும்‌ பழையபடி சூத்திர ராஜாங்கம்தானே ஆகிவிட்டது. சேஷன்‌: மணி! நீ என்ன பெரிய முட்டாளாயிருக்கிறாயே. நமக்கு எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா? இந்தப்‌ பணகால்‌ ராஜாவை ஒழிச்சமே அது ஒன்றே போதுமே. மணி: பணகால்‌ என்ன அவ்வளவு மோசமான ஆசாமியா? சேஷன்‌: அட பயித்தியமே! நம்ம கூட்டத்திற்கே இந்த ஆள்‌ பெரிய எமனாக வல்லவா 6 வருஷமாய்‌ வந்து உட்கார்ந்துக்‌ கொண்டு பிராமணாள்‌ வாயில்‌ நிரந்தரமாய்‌ மண்ணை போடத்தக்க மாதிரி எவ்வளவோ வேலை செய்து சூத்திரர்களை யெல்லாம்‌ கை தூக்கி விட்டார்‌. நீயே நன்றாய்‌ கவனித்துப்‌ பார்‌. பணகால்‌ மந்திரியானபிறகு, சூத்திரன்களில்‌ எவனாவது பிராமணனைக்‌ கண்டால்‌ சுவாமி என்கிறானா? கும்பிடுகிறானா? பிராமணன்‌ என்கிற மரியாதை வைத்துப்‌ பேசுகிறானா? இதை நினைத்தால்‌ வயிறு எரிகிறதே. மணி: நீ சொல்வது தப்பு. இன்னமும்‌ கிராமாந்திரங்களில்‌ எவ்வளவு குடி அரசு - 1926 (2) 458 பெரிய மிராஸ்தாரானாலும்‌ ஒரு சின்ன பிராமணப்‌ பையனைக்‌ கண்டால்‌ எழுந்து நிற்கிறான்‌. வாங்க, வாங்க சாமி என்று குனிந்து கும்பிடுகிறான்‌. இந்தப்‌ பையன்‌ அடே போடா வாடா என்று பேசினாலும்‌ அவர்கள்‌ அதை இழி வாய்க்‌ கருதுவதில்லை. கிராமாந்திரங்களில்‌ தாசிகள்‌ பிராமணாளியத்‌ தில்‌ பணமே வாங்குவதில்லை. பிராமணன்‌ என்றால்‌ இன்னம்‌ எவ்வளவோ காரியங்கள்‌ நடக்கிறது. சும்மா பனகால்‌ மீதில்‌ வீண்‌ பழி சுமத்துகிறாயே. சேஷன்‌:அடமண்டுவே! நீ பட்டிக்காட்டான்‌ ஆனதினால்‌ கிராமத்து சங்கதியை கட்டிக்‌ கொண்டு அழுகிறாய்‌. பட்டண வாசல்களில்‌ நடக்கும்‌ அபாயம்‌ உனக்கு என்ன தெரியும்‌? காப்பிக்கடையில்‌ போய்‌ பார்‌. முன்னெல்லாம்‌ சுவாமி சுவாமி ஒரு இட்டெலி கொண்டு வாருங்கள்‌ என்று வணக்கமாய்‌ கேட்பார்கள்‌. இப்போது ஓய்‌ ஐயரே இட்டிலி கொண்டு வா என்று அதிகாரம்‌ பண்ணுகிறான்‌. வக்கீல்களைக்‌ கண்டால்‌ நடுங்குகிறவர்கள்‌ இப்போது குடியானவன்‌ கூட வாய்யா போய்யா என்கிறான்‌. தாசி வீட்டிற்‌ குப்‌ போனால்‌ பிச்சை எடுக்கிற பார்ப்பானுக்கு தேவடியா ஒரு கேடா என்கி றாள்‌. பெரிய பெரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தில்‌ எல்லாம்‌ சூத்திரன்‌ களே வந்துவிட்டார்கள்‌. தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இது களில்‌ கூத்திரன்களே நிறைந்து விட்டார்கள்‌. ஒரு பிராமணன்‌ அந்தஸ்துக்கு வரவேண்டுமானால்‌ எவ்வளவோ திருப்தி செய்ய வேண்டியதாயிருக்கிறது. பனகாலினால்‌ பிராமணனுக்கு எவ்வளவு கஷ்டம்‌ தெரியுமோ? பட்டிக்‌ காட்டான்‌ நீ என்ன கண்டாய்‌! மணி: நீ சொல்லுகிறபடி எனக்குத்‌ தோன்றவில்லையே. எங்கு பார்த்தாலும்‌ முனிசீப்புகள்‌, ஜட்ஜுகள்‌, அங்குள்ள குமாஸ்தாக்கள்‌ எல்லாம்‌ நம்ம பிராமணாளாகத்தானே இருக்கிறார்கள்‌. நீ நன்றாய்‌ கவனித்து பாரு. சேஷன்‌: சரி! சரி! அது ஒன்றுதான்‌ நமது தலைவர்கள்‌ எவ்வளவோ கஷ்டப்பட்டு சூத்திரன்கள்‌ கைக்குப்‌ போகாமல்‌ வைத்திருக்கிறார்கள்‌. அதுதான்‌ உன்‌ கண்ணுக்கு தெரிகிறதாக்கும்‌. இதில்‌ பனகாலுக்கு ஒரு அதிகா ரமும்‌ இல்லை தெரியுமா? அல்லாமலும்‌ அந்த இலாக்கா சட்ட மெம்பர்‌ என்கின்ற பேரால்‌ நமது பிரம்மஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர்வாளண்டையில்‌ இருக்கிறது. அல்லாமலும்‌ அந்த அதிகாரமுள்ள ஐகோர்ட்‌ ஜட்ஜிகளுக்கு எவ்வளவோ நல்ல பிள்ளைகளாய்‌ நம்மவர்கள்‌ நடந்து கொண்டிருப்பதால்‌ அதில்‌ நம்மிடவளே ரொம்பி இருக்கிறார்கள்‌. இல்லாவிட்டால்‌ எத்தனை சாயபு முனிசீப்பாய்‌ விடுவார்‌? எத்தனை கிறிஸ்தவர்‌ முனிசீப்பாய்‌ விடு வார்‌? எத்தனை கவரை நாயுடு, முதலி, செட்டி, பிள்ளை முதலிய ஆள்கள்‌ முனிசீப்‌, ஜட்ஜிகளாக வந்து விடுவார்கள்‌ தெரியுமா? ஒரு மலையாளி ஐகோர்ட்டுக்கு வந்ததில்‌ எத்தனை ஜட்ஜி, முனிசீப்புகள்‌ மலையாளிகளாக வந்து விட்டார்கள்‌ பார்‌. என்னமோ நம்முடைய நல்லவேளை சுயமரியாதை உள்ள சூத்திரன்கள்‌' ஐகோர்ட்டில்‌ சரியானபடி இல்லாததால்‌ நம்ம பாடு இவ்வளவிலாவது இருக்கிறது. 459. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 மணி: மற்ற இலாக்காக்களில்‌ நம்மிடவாள்‌ இல்லையென்றா சொல்லு கிறாய்‌. சேஷன்‌: இருந்தென்ன பிரயோஜனம்‌. நாமே ஏகபோகமாய்‌ அனுப வித்து வந்தது போய்‌ இப்போது அவர்களும்‌ நமக்கு கிட்டக்‌ கிட்ட சரியாய்‌ வந்து விடுவார்களே. மெடிகல்‌ இலாக்கா என்கிற வைத்திய இலாக்காவிலும்‌ இந்த பனகால்‌ வெள்ளைக்காரன்கள்‌ தலையிலும்‌ கையை வைத்து எல்லாம்‌. சூத்திரன்‌ களாகவே கொண்டு வந்தாய்‌ விட்டது. அதனால்தான்‌ வெள்ளைக்‌ காரர்களுக்கும்‌ பனகாலைக்‌ கண்டால்‌ பிடிக்கிறதில்லை. மணி: வெள்ளைக்காரனை ஒழித்தது நல்லது தானே? சேஷன்‌: நீ சுத்த அசடாயிருக்கிறாயே! நீ பிராமண விந்தே அல்ல போல்‌ இருக்கிறது. வெள்ளைக்காரன்‌ இல்லாவிட்டால்‌ நம்ம பாடு ஆபத்து தானே. அது தெரியுமா? வெள்ளைக்காரனை எப்படியாவது சரிபடுத்திக்‌ கொண்டு நாம்‌ சுகமாக காலம்‌ கழிக்கலாம்‌. சூத்திரன்கள்‌ வந்து விட்டால்‌ நம்ம கதி அதோ கதிதான்‌. அவன்‌ சூத்திரன்களையே தேடித்‌ தேடி உத்தி யோகத்திற்கு நியமிப்பான்‌. வெள்ளைக்காரனைச்‌ சரிபடுத்த நமக்குத்‌ தெரிந்த. தந்திரமும்‌ நமக்குள்ள செளகரியமும்‌ சூத்திரன்களுக்குக்‌ கிடையாது. இருந்‌ தாலும்‌ செய்ய மாட்டார்கள்‌. பிராமணாதிக்கம்‌ வேண்டுமானால்‌ வெள்ளைக்‌ கார உத்தியோகமும்‌ ஆதிக்கமும்‌ இருப்பதே மேல்‌. மணி: அப்படியானால்‌ நம்ம பிராமணாள்தானே சுயராஜ்யம்‌ வேணும்‌, சுயராஜ்யம்‌ வேணும்‌ என்றும்‌, இரட்டை ஆட்சி ஒழிய வேண்டும்‌ என்றும்‌, பூரா சுயராஜ்யம்‌ அதாவது வெள்ளைக்கார ஆதிக்கமேகூடாது என்றும்‌ சத்தம்‌ போடுகிறார்கள்‌. அப்படி இருக்க நீ வெள்ளைக்கார ஆதிக்கம்தான்‌ பிராமணாளுக்கு நல்லது என்கிறாயே! அதன்‌ இரகசிய மென்ன? சேஷன்‌: அட கேனமே! அதெல்லாம்‌ சும்மா, சும்மா. வெள்ளைக்‌ காருக்கும்‌ நமக்கும்‌ இரகசிய ஒப்பந்தம்‌. “நான்‌ நோகாமல்‌ அடிக்கிறேன்‌ நீ ஓயாமல்‌ அழு” என்கிற மாதிரி சூத்திரன்களை ஏமாற்ற நம்மிட பெரியவாள்‌ ஏற்பாடு செய்து வைத்த தந்திரம்‌. உண்மையான சுயராஜ்யம்‌ வந்தால்‌ பிராமணாள்‌ சங்கதி பெரிய ஆபத்தாயல்லவா முடியும்‌. இவ்வளவு உத்தியோகமும்‌, பணமும்‌, அதிகாரமும்‌, பதவியும்‌ பிராமணாளுக்குக்‌ கிடைத்து விடுமா? எல்லாவற்றையும்‌ சூத்திரன்கள்‌ பிடுங்கிக்‌ கொள்வார்கள்‌. ஒரு சப்பட்டைமந்திரி உத்தியோகப்‌ பனகாலால்‌ எத்தனை சூத்திரன்‌ களுக்கு உத்தியோகம்‌ வந்து விட்டது. இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்பதன்‌ இரகசியம்‌ உனக்குத்‌ தெரியாதா? எல்லா உத்தியோகமும்‌ அதிகாரமும்‌ வெள்ளைக்காரன்‌ கையிலே இருக்க வேண்டும்‌.எங்களுக்கு கொடுத்தது தப்பு. அது சூத்திரன்களுக்கே அநுகூலமாய்‌ போய்விட்டது. இப்படி ஆகுமென்று குடி அரசு - 1926 (2) 460 தெரியாமல்‌ கேட்டு விட்டோம்‌. ஆதலால்‌ திரும்பவும்‌ நீயே எடுத்துக்‌ கொண்டு ஒத்தை ஆட்சி ஆக்கிக்‌ கொள்‌ என்பதுதான்‌ அதன்‌ தத்துவம்‌. மணி : அது சரி, பூரா சுதந்திரம்‌ என்பது என்ன? சேஷன்‌: அது ரொம்ப இரகசியம்‌. விளையாட்டுக்காவது அப்படிச்‌ சொன்னால்‌ தான்‌ பாமர ஜனங்கள்‌ நம்முடன்‌ சேருவார்கள்‌. தவிர, கதர்‌, தீண்டாமை, மதுவிலக்கு இதெல்லாம்‌ பனகால்‌ எடுத்துக்‌ கொண்டு வேலை செய்யப்போவதாக கேள்விப்பட்டதால்‌ அதற்கும்‌ மேலாக மிகவும்‌ தீவிர மான கொள்கை நம்மிடம்‌ இருப்பதாக ஜனங்கள்‌ நினைக்கும்படி காட்டிக்‌ கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான்‌ இந்த தோது செய்தார்கள்‌. தவிரவும்‌ இப்படிச்‌ சொன்னால்தான்‌ வெள்ளைக்காரரும்‌ நம்மையே நம்புவார்கள்‌. ஏனென்றால்‌ ஒரு சமயம்‌ அம்மாதிரி கிளர்ச்சி ஏற்பட்டு விட்டால்‌ என்ன செய்கிறது என்று பயந்து நம்மிடவாள்‌ இடமே எல்லா பெரிய உத்தியோகத்‌ தையும்‌ நம்பிக்‌ கொடுத்து வைப்பான்‌. சூத்திரனிடம்‌ கொடுத்தால்‌ ஒரு சமயம்‌ தங்களை எதிர்த்தாலும்‌ எதிர்த்து விடுவார்கள்‌ என்கிற பயம்‌ இப்போதும்‌ வெள்ளைக்‌ காரருக்கு உண்டு. உண்மையான முழுச்‌ சுதந்திரம்‌ கேட்பவர்கள்‌ நடந்து கொள்வதைப்‌ பார்த்தே நீ தெரிந்து கொள்ளக்‌ கூடாதா? விடிந்தெழுந்தால்‌ வெள்ளைக்‌ காரர்களிட கச்சேரிக்கு போய்‌ அவர்களைக்‌ கெஞ்சி மீ” 10, 20 ஆயிரம்‌ வக்கீலிலும்‌, ஜட்ஜிலும்‌, முனிசீப்பிலும்‌, கலெக்டர்‌ முதலிய பல உத்தியோகத்‌ திலும்‌ சம்பாதிப்பவர்கள்‌ வெள்ளைக்காரர்களை ஓட்டுவதாக சொல்ல முடியுமா? மணி: சரி, அப்படியானால்‌ பனகால்‌ போனது பிராமணாளுக்கு நல்லதாச்சுது. சில சூத்திரன்களும்‌ பணகால்‌ போகணும்‌ போகணும்‌ என்று கத்தினான்களே அதென்ன? சேஷன்‌: அதெல்லாம்‌ நம்‌ ஸ்ரீநிவாசய்யங்கார்‌ மடாதிபதிகளிடம்‌ வாங்கின பணத்தைக்கொண்டு சில சூத்திரன்களுக்கு கூலி கொடுத்து கத்தச்‌ சொன்னது தானே. நிஜமாலுமா அவன்கள்‌ கத்தினான்கள்‌? மணி: அது சரி, மறுபடியும்‌ வந்திருக்கும்‌ சூத்திர மந்திரிகள்‌ பணகால்‌ மாதிரி ஆகமாட்டார்களா? சேஷன்‌: ஒருக்காலும்‌ ஆகமாட்டார்கள்‌. மணி: அதென்ன அவ்வளவு தைரியம்‌? சேஷன்‌ : இந்த மந்திரிகள்‌ மூன்று பேரும்‌ நம்‌ தலைவர்களால்‌ சாணியில்‌ பிடித்த பிள்ளையார்கள்‌ போல்தானே. நாம்‌ சொல்லுகிறபடி கேட்டுக்‌ கொண்டிருக்கிற வரையில்‌ அவர்கள்‌ பிள்ளையார்கள்‌ மந்திரிகள்‌! தான்‌. கொஞ்சம்‌ தவறினால்‌ உடனே சாணிப்‌ பிள்ளையாரை எருவாமுட்டை 461 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 (நம்பிக்கை இல்லாத தீர்மானம்‌) தட்டி விட மாட்டார்களா? அந்த பயம்‌ அவர்களுக்கும்‌ உண்டு. இவ்வளவு பாடுபட்ட நம்மடவாளுக்கு இது தெரியா மல்‌ இருக்குமென்றா நினைத்தாய்‌? தவிரவும்‌ சூத்திரன்களைக்‌ கொண்டே சூத்திரன்கள்‌ கண்ணைக்‌ குத்துவது நல்லதே ஒழிய நாம்‌ பிரவேசித்தால்‌ பார்ப்பான்‌ செய்து விட்டான்‌ என்று கூப்பாடு போடுவான்கள்‌. உதாரணமாக காஞ்சீபுரம்‌ மகாநாட்டில்‌ ஒருவன்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ தீர்மானம்‌ கொண்டு வந்ததற்கு ஒரு சூத்திரன்‌ பிரசிடெண்டாயிருந்ததினால்தான்‌ நமது தலைவர்கள்‌ வெகு சுலபத்தில்‌ அத்‌ தீர்மானத்தை மீட்டிங்குக்‌ கூட கொண்டு வராமல்‌ தள்ளச்‌ செய்ய சவுகரியமாயிருந்தது. பாமர ஜனங்களும்‌ நம்பி னார்கள்‌. அப்படிக்கில்லாமல்‌ ஒரு பிராமணன்‌ அந்த ஸ்தானத்தில்‌ இருந்தி ருந்தால்‌ கட்டாயம்‌ அத்தீர்மானம்‌ நிறைவேறியேயிருக்கும்‌. அல்லாமலும்‌ அத்தீர்மானத்தை ஒரு பிராமணன்‌ தள்ளியிருந்தால்‌ பெரிய கூப்பாடு போட்டிருப்பான்கள்‌. ஆதலால்‌ இப்படி இருப்பதுதான்‌ நல்லது. மணி: சரி !சரி! எனக்கு இப்போதுதான்‌ புரிந்தது. நானும்‌ இனிமேல்‌ இம்முறைகளைக்‌ கைக்கொள்ளுகிறேன்‌. குடி அரசு - உரையாடல்‌ - 19.12.1926 குடி அரசு - 1926 (2) 462 மதுரையில்‌ பார்ப்பணால்லாதார்‌ மகாநா௫ நாளது டிசம்பர்‌ 15725, 26 - ந்‌ தேதி சனி, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ மதுரை மாநகரில்‌ பார்ப்பனரல்லாத மக்களின்‌ மகாநாடு கூட்டப்போகும்‌ விபரம்‌ சென்ற வாரத்திதழிலேயே தெரிவித்திருக்கிறோம்‌. இம்மகாநாடு பார்ப்பனரல்லாதார்‌ களுக்கு மிகவும்‌ முக்கிய மகாநாடாகும்‌. பெரும்பாலும்‌ நமது மக்களின்‌ பிற்கால நிலைமை இதன்‌ மூலமாகவே இச்சமயம்‌ நிர்ணய மாக வேண்டியிருக்கிறது. பார்ப்பனரல்லாதாரிடம்‌ கவலை உள்ளவர்கள்‌ என்றும்‌ பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்கள்‌ என்றும்‌ பறையடித்துக்‌ கொள்ளுபவர்கள்‌ அவசியம்‌ தவறாமல்‌ இம்மகாநாட்டிற்கு வந்து கலந்து தங்களது அபிப்பிராயத்தையும்‌ சொல்லி ஒப்பச்‌ செய்து மேலால்‌ நடந்து கொள்ள வேண்டிய விபரத்திற்கு ஒரு திட்டம்‌ ஏற்பாடு செய்ய உதவி புரிய வேண்டும்‌. மகாநாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பனரல்லா தாருக்கும்‌ பொதுவானதென்றே சொல்லுவோம்‌. பொறாமையாலோ துவேஷ புத்தியினாலோ மகாநாட்டிற்கு வராமலிருந்துவிட்டு பின்னால்‌ “அது தப்பு இது தப்பு: இது யாரோ சிலர்‌ கூடிக்‌ கொண்டு நடத்திய மகாநாடு: ஆதலால்‌ என்னைக்‌ கட்டுப்படுத்தாது; இதில்‌ சேராதவர்கள்‌ அனேகர்‌ இருக்கிறார்கள்‌” என்று நோணா வட்டம்‌ பேசுவதில்‌ ஒரு பயனும்‌ இராததோடு இவ்வித செய்கை சமூகத்‌ துரோகம்‌ சமயோசித வயிற்றுப்‌ பிழைப்பேயாகும்‌. “தவிர மகாநாட்டின்‌ தீர்மானம்‌ என்னவானாலும்‌ ஏற்றுக்‌ கொள்ளத்‌ தயாராயிருக்‌ கிறோம்‌. ஆதலால்‌ நாம்‌ போக வேண்டிய அவசியமில்லை” என்பதாக சோம்பேறி வேதாந்தம்‌ பேசாமல்‌ வேறு விதமான தவிர்க்க முடியாத சந்தர்ப்‌ பம்‌ ஏற்பட்டாலன்றி மற்றபடி கூடிய வரையில்‌ எல்லா முக்கிய கனவான்‌ களுமே ஆஜராக வேண்டு மென்றே வேண்டுகிறோம்‌. நமது மக்கள்‌ தங்கள்‌ வாழ்‌ நாள்களில்‌ எவ்வளவோ பணமும்‌ எவ்வளவோ காலமும்‌ வீணாய்‌ விரையம்‌ செய்து வருகிறார்கள்‌ என்பதை யாரும்‌ மறுக்க முடியாது. அப்படி யிருக்க இவ்வுத்தமமானதும்‌ சுயமதிப்புள்ள ஒவ்வொரு மனிதனின்‌ கடமை யானதுமான இந்த முக்கியமான கூட்டத்திற்குப்‌ போவதை ஒரு செல வாகவோ காலப்‌ போக்காகவோ கருதக்‌ கூடாது என்றும்‌ வேண்டிக்‌ கொள்‌ ளுகிறோம்‌. ஆனால்‌ சிலர்‌ அதாவது பார்ப்பனர்‌ புன்சிரிப்புக்கு ஆசைப்‌ பட்டவர்களும்‌ பார்ப்பனரின்‌ மனக்கோணலுக்கு பயப்பட்டவர்களும்‌ தனக்‌ கென ஒரு கொள்கையில்லாமல்‌ வலுத்த கையோடு சேர்ந்துக்‌ கொண்டு 463 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. ஞானோபதேசம்‌ செய்து தங்களது மனிதத்‌ தன்மையை காப்பாற்றப்‌ பிழைப்பவர்களும்‌ சுலபத்தில்‌ வர தைரியம்‌ கொள்ளமாட்டார்கள்‌ என்பதை யும்‌ நாம்‌ நன்றாய்‌ உணர்வோம்‌. அப்பேர்ப்பட்டவர்களைப்‌ பற்றி நாம்‌ குற்றம்‌ கூறாமல்‌ உண்மையிலேயே பரிதாபப்படுகிறோமானாலும்‌ அவர்‌ களால்‌ நேரிடும்‌ கெடுதியை இனிச்‌ சகிக்க முடியாதென்பதையும்‌ வணக்‌ கத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. நிற்க, இம்‌ மகாநாடு பார்ப்பனர்‌ களின்‌ கான்பரன்ஸ்‌ மகாநாடு களைப்‌ போல்‌ 12 ஜில்லா விலுள்ள 2 '/, கோடி மக்களுக்கும்‌ பிரதிநிதித்‌ துவம்‌ பொருந்திய அரசியல்‌ சபை என்று வேஷம்‌ போட்டுக்‌ கொண்டு தங்கள்‌ சொற்படி ஆடும்‌ சோனகிரிகளான 100 அல்லது 50 பெயர்களை தமிழ்நாட்டுப்‌ பிரதிநிதிகள்‌ என்று வைத்துக்‌ கொண்டு தங்கள்‌ அபிப்பிராயத்‌ துக்கு மாறுபட்டவர்கள்‌ உள்ளே வரமுடியாதபடி தந்திரங்கள்‌. செய்து மீறி யாராவது வந்து விட்டால்‌ அவர்களை அடித்து துரத்தி தங்கள்‌ இஷ்டம்‌ போல்‌ தங்களுக்கு அநுகூலமானபடி தீர்மானங்‌ களை நிறைவேற்றிக்‌ கொள்ளும்‌ பார்ப்பன சூழ்ச்சி மகாநாடுகள்‌ போல்‌ அல்லாமல்‌, ஆயிரக்கணக்கான உண்மை சுதந்திரப்‌ பிரதிநிதிகள்‌ வந்து கூட வேண்டுமென்பதாகவும்‌ வேண்டிக்‌ கொள்ளுகிறோம்‌. ராஜாக்கள்‌, ஜமீன்‌ தாரர்கள்‌, மிராஸ்தார்கள்‌, குடியானவர்கள்‌, தொழிலாளர்கள்‌, கூலிக்‌ காரர்கள்‌, வியாபாரிகள்‌, உத்தியோகஸ்தர்கள்‌, பெண்‌ மக்கள்‌ ஆகிய எல்லா வகை யாரும்‌ தவறாமல்‌ விஜயம்‌ செய்து மகாநாட்டின்‌ கெளரவத்தைக்‌ காப்பாற்ற வேண்டியது தமிழ்‌ மக்களின்‌ கடமையாகும்‌. ஒவ்வொரு ஜில்லா தாலூக்கா கிராமங்களிலுமுள்ள பார்ப்பனரல்லாதார்‌ உணர்ச்சியுள்ள ஒவ்வொரு குலாபிமானிகளும்‌ தங்களால்‌ கூடுமான வரை பிரதிநிதிகளைச்‌ சேர்த்து அழைத்துக்‌ கொண்டு வரவேண்டுமென்றும்‌ தெரியப்படுத்திக்‌ கொள்ளு கிறோம்‌. வெறும்‌ உத்தியோகமும்‌, பட்டமும்‌, முனிசிபல்‌, தாலுக்கா, ஜில்லா போர்டு மெம்பர்‌ பதவியும்‌ பெறும்‌ வரை தன்னை பார்ப்பனரல்லாதார்‌. உணர்ச்சிக்காரர்‌ என்று சொல்லிக்கொண்டு தங்கள்‌ காரியம்‌ ஆனவுடனோ அல்லது இனி இவர்களால்‌ நமக்கு ஆக வேண்டியதொன்றுமில்லை, இனி மேல்‌ இம்மாதிரி காரியங்களுக்கு பார்ப்பனர்களின்‌ தயவுதான்‌ வேண்டும்‌ என்பதாக நினைத்து வரவில்லை என்று அன்னியர்‌ மனசில்‌ நினைக்கவோ அல்லது வெளியில்‌ சொல்லவோ இடம்‌ வைக்காமல்‌ இந்நிலையில்‌ உள்ள கனவான்களும்‌ அவசியம்‌ விஜயம்‌ செய்ய வேண்டுமாய்‌ வேண்டுகிறோம்‌. இவ்வளவு தூரம்‌ நாம்‌ ஏன்‌ எழுதுகிறோ மென்றால்‌ கோடிக்கணக்கான நமது சமூகத்தின்‌ பேரால்‌ உள்ள ஸ்தாபனமும்‌ மகாநாடும்‌ நமது எதிரிகளாலும்‌ அவர்களது கூலிகளாலும்‌ குற்றம்‌ சொல்லுவ தற்கிடமில்லாமலும்‌ இவ்வளவு நாள்‌ இருந்தது போல்‌ பொது மக்கள்‌ பாரா முகமாய்‌ இல்லாமல்‌ அதனிடம்‌ பக்தி செலுத்தத்‌ தக்க தன்மையுடையதாகவும்‌ தக்க பயனளிக்கக்‌ கூடிய தாகவும்‌ இருக்க வேண்டுமென்கிற ஒரே ஆசையேயல்லாமல்‌ வேறல்ல. தென்னாட்டிலுள்ள சுயமரியாதைச்‌ சங்கத்தைச்‌ சேர்ந்த அங்கத்தினர்களும்‌ குடி அரசு - 1926 (2) 464 பிரமுகர்களும்‌ அவசியம்‌ தக்க பிரதிநிதிகளோடு வர வேண்டுமென்றும்‌ பிரத்தி யோகமாய்‌ வேண்டுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 19.42.1926 465 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. புது ஆண்டு பரிசு 1927 - @ ஜனவரி-மீ” த்தில்‌ *குடி அரசு”ப்‌ பிரதியின்‌ எண்ணிக்கை 5000 த்தையாவது தாண்டிவிட வேண்டாமா? அப்படியானால்‌ ஒவ்வொருவரும்‌ மும்மூன்று புது சந்தாதாரர்களைச்‌ சேர்த்துக்கொடுங்கள்‌:- அப்படிக்கில்லாமல்‌ குடிஅரசே! குணக்குன்றே! அஞ்சா வீரமே! உண்மை அவதாரமே! கயமரியாதைச்‌ சூரியனே! என்று கவி பாடுவதில்‌ ஒரு பலனுமில்லை. டுங்கள்‌. காரியத்தில்‌ க குடி அரசு - வேண்டுகோள்‌ - 19.12.1926 குடி அரசு - 1926 (2) 466 மகாத்மா காந்தி காங்கிரஸிற்கு போகம்‌ ஈகசியமும்‌ காங்கிரசிண்‌ பிரதிநிதித்துவ தண்மையும்‌ சென்ற - @ கான்பூர்‌ காங்கிரசின்‌ போது மகாத்மா காந்தி காங்கிரஸ்‌ காரியங்களில்‌ இருந்து விலகிக்‌ கொண்டது முதல்‌ இது வரையில்‌ எவ்வித. காரியங்களிலாவது நிர்வாகத்திலாவது கொஞ்சமும்‌ கலந்து கொள்ளாமல்‌ இருப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ஆனால்‌ இவ்வருஷம்‌ பரிசுத்தமாய்‌ பார்ப்பனர்களினுடையவும்‌ படித்தவர்களுடையவும்‌ காங்கிரசாய்ப்‌ போய்‌ விட்டதால்‌ பொது ஜனங்‌ களும்‌. மகாத்மாவைப்‌ போலவே காங்கிரஸ்‌ காரியங்களிலிருந்து பெரும்‌ பான்மையாய்‌ விலகி வருகிறார்கள்‌ என்பதை நமது பார்ப்பனர்கள்‌ உணர்ந்து பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக பண்டித மோதிலால்‌ நேரு என்கிற பார்ப்ப னரை விட்டு மகாத்மா காந்தியை காங்கிரசில்‌ கொண்டுவந்து காட்டி ஏமாற்று வதற்கு சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள்‌. ஆனால்‌ மகாத்மா இந்த தந்திரத்தை அறிந்தே “நான்‌ காங்கிரஸுகு வேடிக்கைப்‌ பார்க்கப்‌ போகிறேனே அல்லாமல்‌ காங்கிரஸ்‌ காரியத்தில்‌ கலந்து கொள்ளப்‌ போவதில்லை” என்று பொது ஜனங்களுக்கு அறிவித்து விட்டார்‌. ஏனென்‌ றால்‌ மகாத்மா பெயரையும்‌ மற்றும்‌ ஜெயிலுக்குப்‌ போன தேச பக்தர்கள்‌ பெயரையும்‌ சொல்லிப்‌ பொது ஜனங்களை ஏமாற்றி சட்டசபைக்கும்‌ முனிசி பாலிட்டி தாலூக்காபோர்டுக்கும்‌ நமது பார்ப்பனர்‌ போனது அவருக்கு நன்றாய்த்‌ தெரியுமாதலால்‌, இனியும்‌ பொது ஜனங்கள்‌ ஏமாறாதிருக்க வெளிப்படுத்தி விட்டார்‌. ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியார்‌ இம்மாத ஆரம்‌ பத்தில்‌ மகாத்மா வைப்‌ பார்க்கப்‌ போயிருந்த இரகசியமும்‌ இதுவே தான்‌. எப்படியாவது மகாத்மாவை கையைப்‌ பிடித்து சாணியை அள்ளச்‌ செய்வது போல்‌ கட்டாயப்‌ படுத்தி காங்கிரஸுக்குப்‌ போகச்‌ செய்து பார்ப்பன காங்‌ கிரஸ்‌ அல்ல, மகாத்மா காங்கிரஸ்தான்‌ என்று சொல்லி பார்ப்பன ஆதிக்கத்‌ திற்கு ஆதாரம்‌ தேடவே அவர்‌ கஷ்டப்பட்டிருக்கிறார்‌. அது மாத்திரமல்லாமல்‌ காங்கிரஸுக்கு தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பனரல்லாதார்களும்‌ வந்திருந்தார்கள்‌ என்று பேர்‌ பண்ணுவதற்காக சில பார்ப்பனரல்லாத கூலிகளுக்கும்‌ ரயில்‌ சார்ஜ்ஜும்‌ டெலிகேட்‌ கட்டண மும்‌, 467 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. சோறு, காப்பி, உப்புமா முதலியதுகளும்‌ கொடுத்து கூட்டிக்‌ கொண்டு போகப்‌ போகிறார்கள்‌. அதற்கு வயிற்றுச்‌ சோற்று “தேசபக்தர்‌” களாகவே பலர்‌. விண்ணப்பம்‌ போட்டிருப்பதாகவே தெரிகிறது. ஆனால்‌ அய்யங்கார்‌ பூரண: நம்பிக்கைக்குப்‌ பாத்திரமான கூலிகள்‌ மாத்திரம்தான்‌ இதில்‌ தெரிந்தெடுக்கப்படுவார்கள்‌. 33 கோடி ஜனங்களுக்குப்‌ பிரதிநிதித்துவம்‌ என்று பார்ப்பனர்களால்‌ பறையடிக்கும்‌ காங்கிரசின்‌ யோக்கியதை என்ன என்பதும்‌, அதை நடத்துகிறவர்கள்‌ யார்‌ என்பதும்‌, இதைப்‌ பார்த்து ஏமாறு கிறவர்கள்‌ யார்‌ என்பதும்‌, இதனால்‌ பலனடைகிறவர்கள்‌ யார்‌ என்பதும்‌ கடுகளவு சுயமரியாதையோடு யோசித்தால்‌ களிமண்‌ மூளைக்காரருக்கும்‌ விளங்காமல்‌ போகாது. அதாவது எல்லா இந்திய காங்கிரஸ்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌, மாஜித்‌ தலைவர்‌ சரோஜினி தேவி பார்ப்பனத்‌ தியார்‌, காரியதரிசி ஸ்ரீமான்‌ ஏ.ரங்கசாமி அய்யங்கார்‌, உதவி காரியதரிசி ஸ்ரீமான்‌ ராஜாராவு, காங்கிரஸில்‌ பிரதான ஆதிக்கம்‌ பெற்ற எல்லா இந்திய சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவர்‌ பண்டித மோதிலால்‌ நேரு, ஒரு காரியதரிசி ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரி, தமிழ்‌ மாகாண காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவர்‌. ஸ்ரீனிவாசய்யங்கார்‌. மாஜித்‌ தலைவர்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌, காரிய தரிசி சத்தியமூர்த்தி சாஸ்திரி, குமாஸ்தாக்கள்‌, மானேஜர்கள்‌, பார்ப்பனர்கள்‌ ஆர்‌.கே.ஷண்முகம்‌ செட்டியாரை தேவஸ்தான ஆக்டை ஆதரித்ததற்காக கமிட்டியில்‌ இருந்து நீக்கியாய்‌ விட்டது! தமிழ்‌ மாகாண சுயராஜ்யக்‌ ககஷித்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌, காரியதரிசி ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி, சென்னை சட்டசபையில்‌ சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி, ஆந்திரா மாகாண மகாநாட்டுத்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ டி.பிரகாசம்‌, பிராமணர்‌: தமிழ்‌ மாகாண கான்பரன்ஸ்‌ மகாநாட்டுத்‌ தலைவர்‌ கே.வி.ரங்கசாமி அய்யங்கார்‌ உபசரணைத்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ ஏ.ரெங்கசாமி அய்யங்கார்‌ (ஆனால்‌ “குடிஅரசு' க்குப்‌ பயந்து கொண்டு ஏ.ரெங்கசாமி அய்யங்கார்‌. மூலவராயிருந்து பார்ப்பனரல்லாதாரில்‌ ஒரு உற்சவரைப்‌ பிடித்து தன்‌ இஷ்டப்படி காரியத்தை நடத்தி பொது ஜனங்களை ஏமாற்றினார்‌! தமிழ்‌ மாகாண மகாநாட்டிலோ இரண்டு தலைவர்களும்‌ தங்கள்‌ பிரசங்கங்களைப்‌ படித்ததும்‌ ஆங்கிலத்தில்‌. மாநாட்டுக்கு 12 ஜில்லாக்களும்‌ 2, கோடி ஜனங்களுக்கும்‌ பிரதிநிதிகளாகப்‌ போயிருந்த டெலிகேட்டுகள்‌ 200 க்குள்‌. அதிலும்‌ பார்ப்பனர்கள்‌ 100-க்கு 75. சென்னை மாகாணத்தில்‌ நடைபெறும்‌ “தேசீயப்‌ பத்திரிகை'களோ நான்கு. “இந்து” அய்யங்கார்‌ எடிட்டர்‌, “மித்திரன்‌” அய்யங்கார்‌ எடிட்டர்‌, “சுயராஜ்யா” பந்தலு எடிட்டர்‌, “தமிழ்‌ சுயராஜ்யா* அய்யர்‌ எடிட்டர்‌, “காங்கிரஸ்‌ விளம்பர சபை” சத்தியமூர்த்தி அய்யர்‌ எடிட்டர்‌, ஆங்காங்கு நிரூபர்கள்‌ அய்யர்‌. அய்யங்கார்‌, சர்மா, ராவு, சாஸ்திரி. பார்ப்பனரல்லாத கனவான்களும்‌ கலந்திருக்கிறார்கள்‌ என்பதற்கு ஆதாரமோ ஸ்ரீமான்‌ அமீத்கான்‌ சாயபு, ஷாபி மகம்மது சாயபு, பாவலர்‌, குப்புசாமி முதலியார்‌, அண்ணாமலைப்‌ பிள்ளை, வெங்கிடு கிருஷ்ணப்‌ பிள்ளை, குழந்தை, ஜயவேலு இவர்களே முக்கியமாய்‌ காரியத்தில்‌ கலந்து குடி அரசு - 1926 (2) 468 கொள்ளும்‌ சகல வகுப்புப்‌ பிரதிநிதித்துவமும்‌ பொருந்திய பார்ப்பனரல்லா தாராயிருக்கிறார்கள்‌. பெயர்‌ கடன்‌ கொடுப்பதற்கோ ஸ்ரீமான்கள்‌ மருத வானம்‌ பிள்ளை: எழுதிக்‌ கொடுத்ததை வாசிப்பதற்கோ ஸ்ரீமான்கள்‌ கோவிந்தராஜ முதலியார்‌, முத்துரங்க முதலியார்‌; சமயத்தில்‌ ஒத்தாசை செய்வதற்கோ “தமிழ்‌ நாட்டுத்‌ தலைவர்கள்‌”. ஆகவே தமிழ்நாட்டின்‌ பிரதிநிதித்துவம்‌ இதற்குள்‌. அடக்கி விட்டது. ஆதலால்‌ சுயராஜ்யத்திற்கும்‌, சுயமரியாதைக்கும்‌, வகுப்பு உரிமைக்கும்‌ என்ன குறை என்பதை வாசகர்‌ களே உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்‌. குடி அரசு - கட்டுரை - 19.12.1926 469 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 “தமிழ்நாடு காண்பாண்ஸின்‌”” யோக்கியதை நமது பார்ப்பனர்கள்‌ தமிழ்நாடு கான்பரன்ஸ்‌ என்பதாக பெயர்‌ வைத்து தமிழ்நாட்டுப்‌ பொது மக்களின்‌ பேரால்‌ ஒரு மகாநாடு என்று ஒரு சிறு கூட்டம்‌ கூட்டி அதன்‌ மூலம்‌ தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்‌ கொள்ள எவ்வளவோ தந்திரங்களும்‌ சூழ்ச்சிகளும்‌ செய்தும்‌ கடைசியாக மகாநாட்டின்‌ உண்மை வேஷம்‌ வெளியாகி விட்டது.மகாநாட்டுக்கு உபசரணைக்‌ கமிட்டித்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ கோவிந்தராஜுலு முதலியார்‌ அவர்கள்‌ அவசரத்தில்‌ பிடித்து வைத்த பிள்ளையாரைப்‌ போல்‌ கொண்டு வந்து வைக்கப்பட்ட வராவார்‌. அவர்‌ கிளிப்பிள்ளையைப்‌ போல்‌ சொல்லிக்‌ கொடுத்ததைச்‌ சொல்லும்‌ நல்ல சுபாவமுள்ளவர்‌ என்பதும்‌ பெஸன்டம்‌ மையார்‌ காலம்‌ முதல்‌ கொண்டும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்கு விரோதமாய்‌ ஆரம்பிக்கப்பட்ட சென்னை மாகாணச்‌ சங்கமென்னும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ மருவிய காங்கிரஸ்‌ கொள்கையுடைய பார்ப்பனரல்லாதார்‌ சங்கம்‌ ஏற்பட்டது முதல்‌ கொண்டும்‌ பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாய்‌ நடந்து பார்ப்பனர்களின்‌ நம்பிக்கைக்குப்‌ பாத்திரமானவர்‌. அன்னவரைப்‌ பிடித்து உபசரணை அக்கிராசனர்‌ வேஷம்‌ போட்டு பார்ப்பனரல்லாதார்‌ இயக்கத்தை நன்றாய்‌ வையும்படி ஏவினர்‌. ஸ்ரீமான்‌ முதலியாரும்‌ தன்னை நம்பி அக்கிராசனராக்கியவர்களுக்கு நம்பிக்கைத்‌ துரோகம்‌ செய்யாமல்‌ ஆசை தீர ஒரு மூச்சு பார்ப்பனரல்லாதார்‌. புத்திசாலித்தனத்தை இகழ்ந்தும்‌ பார்ப்பனரின்‌ புத்திசாலித்தனத்தை புகழ்ந்தும்‌ பேசி பார்ப்பன ரல்லாதார்‌ இயக்கத்தையும்‌ குறை கூறி தனது நடனத்தை முடித்துக்‌ கொண்டார்‌. மகாநாட்டுத்‌ தலைவரோ சொல்ல வேண்டியதில்லை. பெரிய வருணாசிரம தர்மப்‌ பார்ப்பனர்‌. நமது நாட்டுப்‌ பார்ப்பனரல்லாதார்‌. பத்திரிகைகளில்‌ சிலதுக்கு கொள்கையும்‌ இல்லை, சில சமயங்களில்‌ மானமும்‌ இல்லை என்று சொல்லி விடலாம்‌. எப்படியாவது பொழுது விழுந்து பொழுது புலர்ந்தால்‌ போதும்‌ மற்றபடி உண்மையைப்‌ பற்றிக்‌ கவலையில்லை. ஒரு சமயத்தில்‌ பார்ப்பனர்கள்‌ அயோக்கியர்கள்‌ என்பார்கள்‌. ஆனால்‌ ஸ்ரீமான்கள்‌: சத்தியமூர்த்தி சாஸ்திரி, ரங்கசாமி அய்யங்கார்‌, சீனிவாசய்யங்கார்‌ இவர்கள்‌ மூவர்‌ மாத்திரம்‌ யோக்கியர்கள்‌ என்பார்கள்‌. மற்றொரு சமயம்‌ ராஜகோ பாலாச்சாரியார்‌ மாத்திரம்‌ யோக்கியர்‌ என்பார்கள்‌. மற்றொரு சமயம்‌ சதா சிவய்யர்‌ மாத்திரம்‌ யோக்கியர்‌ என்பார்கள்‌. மற்றொரு சமயம்‌ அரசியல்‌ பார்ப்பனர்கள்‌ மாத்திரம்‌ அயோக்கியர்கள்‌ ஸ்ரீமான்‌ K V. ரங்கசாமி அய்யங்‌ கார்‌ யோக்கியர்‌ என்பார்கள்‌. ஸ்ரீமான்‌ K.V, ரங்கசாமி அய்யங்கார்‌ எந்தப்‌ பார்ப்பனர்‌? பஞ்சாங்கப்‌ பார்ப்பனரா? அல்லது வருணாசிரம பார்ப்பனரா? குடி அரசு - 1926 (2) 470 அல்லது அரசியல்‌ பார்ப்பனரா? என்பதைச்‌ சொல்லமாட்டார்‌ கள்‌. இந்த நிலைமையில்‌ ஸ்ரீமான்‌ K. ரங்கசாமி அய்யங்காருக்கு யோக்கியர்‌ பட்டம்‌ எப்படிக்‌ கட்டினார்கள்‌? எதற்காக அவரை “அரசியல்‌ பார்ப்பனர்‌ கள்‌ எல்லாம்‌ அயோக்கியர்‌” என்று ஒப்புக்‌ கொள்ளப்பட்டவராலேயே “முதல்‌ முதல்‌” தெரிந்தெடுக்கப்பட்டாரோ தெரியவில்லை. அந்த மகானுக்கு தெய்வானுகூலத்தால்‌ ஒரு சவுகரியம்‌ உண்டு. அதாவது “அங்கு என்ன நடந்தது. எனக்கு ஒன்றும்‌ கேட்க வில்லையே” என்று சொல்லி தப்பித்துக்‌ கொள்ளக்‌ கூடும்‌. இதைத்‌ தவிர வேறு எந்த வழியில்‌ தமிழ்‌ மாகாண மகாநாட்டுக்கு தலைவர்‌ யோக்கியதை பெற்றவர்‌ என்பதும்‌ தெரியவில்லை. தேசத்திற்காக, நாட்டிற்காக, சமத்துவத்திற்காக, ஒத்துழையாமைக்காக, முட்டுக்கட்டைக்காக என்ன செய்தார்‌. ராஜாங்க சபைக்குப்‌ போனார்‌, சட்ட சபைக்குப்‌ போனார்‌ என்பதைத்‌ தவிர செய்ததென்ன? ஒன்றும்‌ செய்ய வேண்டாம்‌ என்றாலும்‌, யோக்கியமாக வாவது நடந்து கொண்டாரா என்று பார்த்தால்‌ அயோக்கியத்தனமாக ஒரு உதாரணக்கதை சொல்லியிருக்கிறார்‌. ஒரு பார்ப்பனரல்லாதாருக்காவது இக்‌ கதையின்‌ இழிவு தெரியவில்லை. அதோடு மாத்திரமல்ல அவரைப்‌ புகழ்ந்து மிருக்கிறார்கள்‌. ஐயோ! நமது மானங்கெட்டத்‌ தன்மையை என்ன வென்று சொல்லுவது. அவர்‌ உதாரண மாகச்‌ சொன்ன கதை என்னவென்றால்‌ “கூண்டில்‌ அடைபட்டுக்‌ கிடந்த புலியை ஒரு பிராமணர்‌ விடுவித்து விட்டாராம்‌. அந்தப்‌ புலி வெளியே வந்து அவனையே தின்னப்‌ பிரயத்தனப்பட்டதாம்‌. இந்த விசுவாசத்‌ துரோகத்தை வேறு யாவரும்‌ கேட்கவில்லையாம்‌. கடைசியாக ஒரு நரியிடம்‌ போய்‌ பிராமணர்‌ அழுதாராம்‌. நரி வந்து பஞ்சாயத்து செய்யும்‌ போது புலி எப்படியிருந்தது, பிராமணன்‌ எப்படித்‌ திறந்து விட்டான்‌ என்பதை நேரில்‌ பார்க்க ஆசைப்பட்டதால்‌ பழையபடி புலி உள்ளே போய்‌ தான்‌ இருந்த மாதிரியை காட்டிற்றாம்‌. பிராமணரை கதவை இருகப்‌ பூட்டி விட்டு தன்‌ வேலைக்குப்‌ போகும்படி நரி சொல்லிக்‌ கொடுத்‌ ததாம்‌.” அது போல்‌ பார்ப்பனர்கள்‌ பார்ப்பனரல்லாதாராகிய புலிகள்‌ கூண்டுக்குள்‌ அடை பட்டிருந்ததை வெளியாக்கினதாகவும்‌, விசுவாசங்‌ கெட்டப்‌ பார்ப்பனரல்லா தார்‌ வெளியாக்கிய பார்ப்பனர்களை வைததாகவும்‌, சூசனை காட்டியிருக்‌ கிறார்‌. இதில்‌ நரிகள்‌ யாரோ தெரியவில்லை. ஸ்ரீமான்கள்‌ குழந்தை, குப்பு சாமி முதலியார்‌, ஷாபி மகம்மது சாயபு, அமீத்கான்‌ சாயபு, பாவலர்‌, கோவிந்தராஜுலு முதலியார்‌, சாமி வெங்கிடாசலம்‌ செட்டியார்‌ ஆகியவர்‌. களோஅல்லது ஸ்ரீமான்கள்‌ கலியாணசுந்தர முதலியார்‌, டாக்டர்‌ வரத ராஜுலு நாயுடுகாரு. RK ஷண்முகம்‌ செட்டியார்‌, வெங்கிடபதி ராஜு, முத்தையா முதலியார்‌ போன்றவர்களோ அல்லது பணம்‌ கொடுத்த மடாதி பதிகள்‌ மகந்துகள்‌ முதலியவர்களோ அல்லது ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி சாஸ்திரி, ரங்கசாமி அய்யங்காரோ அல்லது எஸ்‌.சீனிவாசய்யங்காரோ அல்லது வெள்ளைக்காரர்கள்தானோ இன்னாரைத்‌ தான்‌ ஸ்ரீமான்‌ KV. ரங்க சாமி அய்யங்கார்‌ மனதில்‌ குறித்துச்‌ சொன்னார்‌ என்பது விளங்கவில்லை. அது 471 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. எப்படியானாலும்‌ பார்ப்பனரல்லாதாருக்கு இக்கதை எவ்வளவு இழிவைக்‌ கொடுக்கிறது என்பதை மாத்திரம்‌ குறிப்பிடுகிறோம்‌. தவிர ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரைப்‌ பற்றி புகழ்ந்திருப்பதை நோக்கும்போது ஸ்ரீமான்‌ ரங்கசாமி அய்யங்கார்‌ யோக்கியதை மண்டுகளுக்கும்‌ விளங்காமல்‌ போகாது. அவர்‌ புகழ்வதாவது: “தீர்க்க தரிசனமுடைய தலைவர்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ மக்களின்‌ அறியாமையை போக்கி, ஜாதி பேதத்தை ஒழிக்க அவரது முயற்சியே பயனளித்தது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய எல்லா குணமும்‌ அவரிடம்‌ இருக்கின்றன. அவரது அறிவின்‌ திறமையும்‌, தியாக உணர்ச்சியும்‌, தேசாபிமானமும்‌, பெருந்தன்மையும்‌ பாராட்டத்‌ தக்கது. அவரில்லாதிருந்தால்‌ நமது கட்சி என்னவாயிருக்கும்‌?” என்று பேசியிருக்கிறார்‌. இதிலிருந்து ஸ்ரீமான்‌ ரங்கசாமி அய்யங்காரின்‌ மன உணர்ச்சி இப்படிப்பட்டதென யாரும்‌ சுலபத்தில்‌ அறியலாம்‌. இவரை சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகள்‌ வானமளாவப்‌ புகழ்ந்ததின்‌ இரகசியம்‌ நமக்கு விளங்கவில்லை. அக்கிராசனர்‌, தலைவர்‌ ஆகியவர்களின்‌ குணங்‌ கள்‌ இப்படி என்றால்‌ நடந்த தீர்மானங்களின்‌ கதி என்னவென்று பார்ப்போம்‌. ஒன்பது தீர்மானங்கள்‌. அதாவது: 1 இறந்து போனவர்களுக்கு அனுதாபம்‌.இது வழக்கப்‌ பிர காரம்‌! 2. சர்க்கா சங்கத்தார்‌ வேலையைப்‌ பாராட்டியும்‌ காங்கிரஸ்‌ காரர்‌ கதர்‌ கட்ட கோரியும்‌ ஒரு தீர்மானம்‌. (இதற்காக தங்களுக்குள்‌ ஒரு திட்டமும்‌ இல்லை; பிரசாரமும்‌ இல்லை. பேருக்குமாத்திரம்‌ தீர்மானம்‌ போட்டதாக பொது ஜனங்களை ஏமாற்றச்‌ செய்யத்‌ தந்திரமே ஒழிய இதில்‌ காரியம்‌ ஏதாவது இருக்கிறதா! 3. தீண்டாமையை ஒழிக்க காங்கிரசுக்கு சிபார்சு செய்வதாக ஒரு தீர்மானம்‌. (குமிழ்‌ நாடு காங்கிரஸ்‌ கமிட்டிக்கு இதில்‌ ஒரு வேலையும்‌ இல்லை; ஒரு பிரசாரமும்‌ இல்லை; காங்கிரசிலும்‌ தீண்டாமை ஒழிய வேண்டும்‌ என்பதாக ஒரு தீர்மானம்‌ ஏற்படலாம்‌.இதில்‌ தீண்டாமை ஒழிய வழி உண்டா? ஏதாவது திட்டமோ பிரசாரமோ செய்ய இடமிருக்கிறதா? ஆதலால்‌ இதுவும்‌ பாமர ஜனங்களை ஏய்க்கச்‌ செய்த சூழ்ச்சி? 4. அந்தமான்‌ தீவிலுள்ள மாப்பிள்ளைமார்களைப்‌ பற்றி ஒரு தீர்மானம்‌.(இது பழய காலத்து காங்கிரஸ்படி ஒரு விண்ணப்பம்‌.தவிரவும்‌ மகம்மதியர்களை ஏமாற்றுவதற்கென்று ஏற்படுத்தின எழுத்து தீர்மானம்‌. இதற்கும்‌ காங்கிரஸ்‌ கமிட்டிக்கு திட்டமோ வழியோ கிடையாது? 8. ஸ்தலஸ்தாபனங்களை காங்கிரஸ்‌ கைப்பற்ற வேண்டும்‌. (இதற்கு மாத்திரம்‌ காங்கிரஸ்‌ பிரசாரம்‌, காங்கிரஸ்‌ பணம்‌ செலவு எல்லாம்‌ உண்டு. எப்படி என்றால்‌ காங்கிரஸ்‌ கைப்பற்ற வேண்டுவதற்கு செலவும்‌ பிரசாரமும்‌ செய்யலாம்‌. இது பார்ப்பனரல்லாதார்‌ பெரு வாரியாய்‌ ஸ்தல குடி அரசு - 1926 (2) 472 ஸ்தாபனத்தில்‌ இருப்பதை ஒழித்துப்‌ பார்ப்பனர்‌ கைப்‌ பற்றச்‌ செய்யும்‌ சூழ்ச்சி. அடுத்த வருஷம்‌ பூராவும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி இந்த வேலையில்தான்‌ இருக்கப்‌ போகிறது என்பது உறுதி? 6. இந்தியா பூரண சுதந்திரமடைவதே லக்ஷியமாய்க்‌ கொள்ள வேண்டும்‌ என்பது. (இது பெரிய புரட்டான தீர்மானம்‌ என்று தான்‌ சொல்ல வேண்டும்‌. பூரண சுதந்திரமென்றால்‌ அர்த்தம்‌ என்ன என்று சொல்ல வில்லை. சுயராஜ்யம்‌ என்றால்‌ அருத்தம்‌ சொல்லாமல்‌ ஏய்ப்பது போலவே இதுவும்‌ ஒரு புரட்டான வார்த்தை. பாமர ஜனங்‌ களை ஏய்ப்பதற்கு செய்யப்பட்ட தீர்மானமே அல்லாமல்‌ பலனுள்ள தல்ல? 7 தஞ்சை ஜில்லா போர்டு ரயில்களைக்‌ குறித்தது. (இது தஞ்சாவூர்‌ ஜில்லா போர்டை பார்ப்பனமயமாக்க ஏற்படுத்திக்‌ கொண்ட ஆரம்ப சூழ்ச்சி? 8 தொழிலாளர்கள்‌ முன்னேற்றத்திற்கு காங்கிரஸ்‌ மகாசபை பிரசாரம்‌ செய்து தீவிரமாய்‌ உழைக்க வேண்டும்‌ என்பது. (இதற்கு மாத்‌ திரம்‌ காங்கிரஸ்‌ பிரசாரம்‌ செய்ய வேண்டுமென்று தீர்மானம்‌ போட்டுக்‌ கொள்வது. தொழிலாளர்களை சுவாதீனம்‌ செய்து ஓட்டுப்‌ பெறவே அல்லாமல்‌ வேறல்ல. கதருக்கும்‌ தீண்டாமைக்கும்‌ காங்கிரஸ்‌ பிரசாரம்‌ செய்ய தீர்மானம்‌ போடாமல்‌ சும்மா வேண்டுதலையும்‌, சிபார்சும்‌ மாத்தி ரம்‌ செய்திருக்கிறது . ஆனால்‌ ஸ்தல சுயாட்சியைக்‌ கைப்பற்றவும்‌ தொழிலாளர்கள்‌ ஓட்டுப்‌ பெறவும்‌ மாத்திரம்‌ காங்கிரஸ்‌ பணம்‌ செலவு செய்ய வேண்டுமாம்‌? 9 தென்ணப்பிரிக்காவில்‌ உள்ள இந்தியமக்கள்‌ சம உரிமை பெற ஒரு தீர்மானம்‌.(இதைப்போல்‌ மானங்‌ கெட்டதும்‌ திருட்டுத்‌ தனமா னதுமான தீர்மானம்‌ வேறு எதுவுமே இல்லையென்று சொல்லலாம்‌. ஏனென்றால்‌ இந்தியாவில்‌ இருக்கும்‌ இந்திய மக்கள்‌ குழந்தைகள்‌. சாப்பிடுவதை கண்ணில்‌ பார்க்கும்‌ சமத்துவம்‌ அடைவதானால்‌ ஒரு மாதம்‌ பட்டினி கிடக்கும்‌ யோக்கியர்கள்‌ தென்னாப்பிரிக்காவில்‌ உள்ள மக்களுடைய சமத்துவத்திற்கு தீர்மானம்‌ போடுவதில்‌ எவ்வளவு யோக்‌ கியதை இருக்கும்‌. இந்தியாவில்‌ உள்ள இந்திய மக்கள்‌ தெருவில்‌ நடக்க வேண்டு மானால்‌ வேலை இருந்தால்தான்‌ போகலாம்‌ என்று வியாக்யானம்‌ செய்து மறுக்கும்‌ பிரபுக்கள்‌ தென்னாப்பிரிக்கா மக்கள்‌ சமத்துவத்திற்கு தீர்மானம்‌. போடுவது உண்மையானதாயிருக்குமா? இந்தியாவில்‌ இருக்கும்‌ இந்திய மக்கள்‌ தங்கள்‌ கடவுளைப்‌ பார்க்கக்‌ கூடாது; அவர்‌ அவர்கள்‌ வேதத்தைப்‌ படிக்கக்‌ கூடாது என்று சொல்லுகிற யோக்கியர்கள்‌ தென்னாப்பிரிக்கா மக்களுக்கு சமத்துவம்‌ கொடுக்கத்‌ தீர்மானம்‌ போடுவதில்‌ ஏதாவது நாணயம்‌ இருக்குமா? 472 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஆக 9 தீர்மானங்களும்‌ எவ்வளவு மோசமானது என்பதும்‌ பாமர மக்களை எவ்வளவு தூரம்‌ ஏமாற்றக்‌ கூடியது என்பதும்‌ வாசகர்களே யோசித்துப்‌ பார்க்க வேண்டியது. இதையெல்லாம்விட ஒரு இரகசியம்‌ என்ன வென்றால்‌ “மகாத்மா காந்தியின்‌ தலைமையில்‌ இம்‌ மகாநாட்டிற்கு நம்பிக்கை. இருக்கிறது” என்று ஒருவரால்‌ கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வெளியிலேயே விவகரிக்க கொண்டு வராமல்‌, விலை கொடுத்து அடக்கி விட்டதுதான்‌. இதிலிருந்து மகாத்மாவிடம்‌ மகாநாட்டுக்கு உள்ள பக்தியும்‌ மகாத்மா கொள்கைகளை ஒப்புக்‌ கொள்ளும்‌ யோக்கியதையும்‌ விளங்காமல்‌ போகாது. மற்றபடி மகாநாட்டிற்குப்‌ போன உண்மையான தேசபக்தர்களி டமும்‌ உண்மையான தியாகிகளிடமும்‌ மகாநாட்டில்‌ இருந்த ஆள்களுக்கு எவ்வளவு அன்பு இருந்தது என்பதும்‌ அங்குள்ள மற்ற ஆள்‌ களுக்கு யோக்கியதை இன்னது என்பதையும்‌ ஸ்ரீமான்‌ தண்டபாணிபிள்ளை அவர்‌. கள்‌ விஷயத்தில்‌ இருந்து தெரிந்து கொண்டிருக்கலாம்‌. குடி அரசு - கட்டுரை - 26.12.1926 குடி அரசு - 1926 (2) 474 சுயாரான்யக்‌ கட்சிப்‌ பார்ப்பணரின்‌ பதிவிரதா தண்மை சென்னையின்‌ யோக்கியதையை அறிந்து போக வெளியிடங்‌ களிலிருந்து யார்‌ வந்தாலும்‌ அவர்களை நமது பார்ப்பனர்கள்‌ எப்படியாவது மயக்கி குல்லாய்‌ போட்டு தங்கள்‌ சுவாதீனம்‌ செய்து கொள்ளும்‌ தந்திரமும்‌ செளகரியமும்‌ நம்மவர்களிடத்தில்‌ இல்லை என்பதை எல்லோரும்‌ அறிந்த விஷயம்‌. தேவஸ்தான சட்ட சம்மந்தமாய்‌ இந்தியா நிர்வாக சபை மெம்பர்‌. ஸ்ரீமான்‌ எஸ்‌. ஆர்‌. தாஸ்‌ இங்கு வந்த பொழுது அவருக்குப்‌ பார்ப்பனர்கள்‌ செய்த விருந்தும்‌, பெண்களைக்‌ கொண்டு ஆடல்‌ பாடல்‌ கச்சேரிகள்‌ செய்ததும்‌, மடாதிபதி மகந்துகளையும்‌ கூட்டி அறிமுகம்‌ செய்து வைத்த தும்‌, அந்த விருந்துக்கு ஒத்துழையாத பார்ப்பனர்‌ என்பவர்கள்‌ முட்டுக்‌ கட்டை பார்ப்பனர்‌ என்பவர்கள்‌, பூரண சுயேச்சை பார்ப்பனர்‌ என்பவர்க ளும்‌, அரசாங்க உத்தியோகஸ்தர்‌ வெள்ளைக்காரர்கள்‌ ஆகியவர்களின்‌ அரசாங்க சம்மந்தமான களியாட்டு காரியங்களில்‌ கலந்து கொள்ளக்‌ கூடாது என்ற பார்ப்பனர்களும்‌, காந்தி குல்லாயும்‌ தேசீயக்‌ கொடியும்‌ பிடித்து இரும்புச்‌ சட்டத்தைத்‌ துலைக்க வேண்டும்‌ என்று சொல்லித்‌ திரியும்‌ பார்ப்‌ பனரும்‌, “அரசாங்கத்திற்கு குலாமல்லாத” பார்ப்பனர்களும்‌, மற்றவர்களை நக்கிப்‌ பொருக்கி, குலாம்‌, சர்க்கார்‌, பூஜாரி என்று சொல்லும்‌ பார்ப்பனர்‌ களும்‌, சென்று நன்றாய்‌ தின்று குடித்து களியாட்டத்தில்‌ கலந்திருந்தது எல்லோருக்‌. கும்‌ தெரிந்த விஷயமே. அது போலவே இம்மாதத்திலும்‌ இந்தியா நிர்வாக சபையில்‌ இருந்து சர்‌ அலெக்ஸாந்தர்‌ மட்டிமென்‌ என்கிற ஒரு துரை மகன்‌ வெள்ளைக்காரர்‌ வந்ததற்கு அதே ஸ்ரீமான்‌ ரங்காச்சாரியார்‌ கொடுத்த விருந்திற்கு ஒத்துழையாமை, முட்டுக்கட்டை, சர்க்கார்‌ சம்மந்த விருந்து பஹிஷ்காரம்‌, பூரண சுயேச்சை ஆகிய பல பார்ப்பனர்களின்‌ தத்துவ தலைவருமான ஸ்ரீமான்கள்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌, எ.ரங்கசாமி அய்யங்கார்‌. முதலியவர்கள்‌ போய்‌ உண்டு, குடித்து, களித்து புரண்டதோடு ஒன்றாய்‌ உட்கார்ந்து படம்‌ பிடித்துக்‌ கொண்டார்கள்‌ என்றால்‌ இதன்‌ அர்த்தமென்ன? “ஒரு ஊரில்‌ ஒரு புராணப்‌ பிரசங்கியார்‌ ஒரு விதவா ஸ்ரீ ரத்தினத்தை. வைப்பாக வைத்துக்‌ கொண்டிருந்தார்‌. ஒரு நாள்‌ அவர்‌ புராணப்‌ பிரசங்கம்‌ செய்யும்‌ போது விதவா சம்மந்தம்‌ கூடாது என்றும்‌, அது இருவருக்கும்‌ பாவமென்றும்‌, மேல்‌ லோகத்தில்‌ நெருப்பில்‌ காச்சிய இரும்புத்‌ தூணைக்‌ கட்டி 475 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. பிடிக்கச்‌ சொல்லுவார்கள்‌ என்றும்‌, அதனால்‌ சிரேய்சு குறைந்து போகு மென்றும்‌ இன்னமும்‌ பலவிதமாக ஞானோ பதேசம்‌ செய்தார்‌. சாஸ்திரியாரின்‌ வைப்பாட்டியான விதவை அம்மாள்‌ அவர்களும்‌ அந்தப்‌ பிரசங்கத்திற்குப்‌ போயிருந்தார்கள்‌. சாஸ்திரியார்‌ வீட்டுக்கு வந்த உடன்‌ நீர்‌ இனிமேல்‌ என்னைத்‌ தொடாதீர்‌! இவ்வளவு பாவமும்‌ தோஷமும்‌ மேல்‌ லோகத்தில்‌ இவ்வளவு கஷ்டமும்‌ இருக்கிற சங்கதி எனக்கு இது வரையில்‌ தெரிவிக்‌ காமல்‌ சாஸ்திரிகள்‌ சம்மந்தத்தால்‌ மோக்ஷம்‌ புண்ணியம்‌ என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர்‌! போதும்‌, போதும்‌ எட்டி நில்லும்‌ என்று சொல்லி விட்டாள்‌. சாஸ்திரியார்‌ உடனே அம்மாள்‌ காலில்‌ விழுந்து நான்‌ அது ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்கச்‌ சொன்னதே தவிர நமக்கும்‌ உனக்கும்‌ அது கட்டுப்படுத்தாது. எங்காவது ஒரு ஸ்திரீ எவ்வளவுதான்‌ பதி விரதை யானாலும்‌ புருஷனில்லாமல்‌ இருக்க முடியுமா? புருஷன்தானாகட்டும்‌ எப்படிப்பட்டவனானாலும்‌ ஸ்திரீ இல்லாமல்‌ இருக்க முடியுமா? இயற்கைக்கு விரோதமாய்‌ எங்காவது பாவ மும்‌ தோஷமும்‌ ஏற்படுமா?” என்று சாஸ்திரி யார்‌ வேதாந்தம்‌ போதித்தாராம்‌. அது போல்‌ நமது சென்னைப்‌ பார்ப்பனர்கள்‌ வெளியில்‌ செய்யும்‌ புராணப்‌ பிரசங்கம்‌ வேறு, தாங்கள்‌ நடந்து கொள்ளும்‌ இயற்கை வேதாந்தம்‌ வேறு. இதை நமது பாமர ஜனங்கள்‌ சரிவர உணராமல்‌ ஏமாந்து போகிறார்கள்‌. என்ன செய்வது? வயிற்றுக்‌ கொடுமையும்‌ பேராசை யும்‌ நம்மவர்களைப்‌ போட்டு நசுக்கும்‌ போது எப்படி யோக்கியமாகவும்‌ ஏமாறாமலும்‌ இருக்க முடியும்‌. குடி அரசு - கட்டுரை - 26.12.1926. குடி அரசு - 1926 (2) 476 யார்ப்பணறால்லாதார்‌ மகாநாட்டுத்‌ கனைவர்களுக்க ஒரு விண்ணப்பம்‌ சென்னை மாகாணத்தில்‌ சிறப்பாக தமிழ்‌ நாட்டில்‌ சுமார்‌ 10 வருஷங்‌ களுக்கு முன்பாக பார்ப்பனரல்லாதார்‌ சங்கம்‌ ஏற்பட்டதும்‌ அதை ஏற்படுத்த ஸ்ரீமான்‌ டாக்டர்‌ நாயர்‌ அவர்கள்‌ முதன்மையாகவும்‌, சர்‌.தியாகராய செட்டி யார்‌ உதவியாகவும்‌ இருந்து அதை உலகினர்‌ ஒப்புக்‌ கொள்ளும்படி செய்து, தங்களது கொள்கைகளையும்‌ நிலை நிறுத்தியது உலகமறிந்த விஷயம்‌. ஆனால்‌ இன்றைய தினம்‌ நம்மில்‌ பெரும்பான்மையான மக்கள்‌ அக்கட்சியின்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொள்ளவே வெட்கப்படுகிறார்கள்‌. காரணமென்ன? தமிழ்நாட்டில்‌ இக்கட்சியின்‌ கொள்கைகளைப்‌ பிரசாரம்‌ செய்ய பணமில்லாதிருந்ததா? பத்திரிகை இல்லாதிருந்ததா? உத்தியோக மும்‌, அதிகாரமும்‌ இல்லாமலிருந்ததா? எல்லாமிருந்தும்‌ இக்கதகி ஆவா னேன்‌? எதிரிகளின்‌ சூழ்ச்சியும்‌ தந்திரமும்‌ என்று சொல்லலாம்‌. ஸ்ரீமான்கள்‌ நாயரும்‌ செட்டியாரும்‌ உள்ள காலத்திலும்‌ இவ்வெதிரிகள்‌ இருந்தவர்கள்‌ தானே? இப்பொழுது மாத்திரம்‌ இவர்கள்‌ சூழ்ச்சி பலிப்பானேன்‌? ஒருசமயம்‌ நமக்குள்‌. ளாகவே எதிரிகள்‌ ஏற்பட்டுவிட்டார்கள்‌ என்று சொல்லலாம்‌. அப்படியானால்‌ இனிமேலாவது நமக்குள்ளாக எதிரிகள்‌ ஏற்படா மலிருக்க இப்போது என்ன செய்யப்‌ போகிறோம்‌? இனிமேலாவது எதிரி களின்‌ சூழ்ச்சியிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யப்‌ போகிறோம்‌? மகாநாடு கூடிக்‌ கலைந்தால்‌ போதுமா? முதலாவது, நம்முடைய லட்சியம்‌ என்ன என்பதை பாமர ஜனங்கள்‌ அறியும்படி செய்திருக்கிறோமா? பாமர ஜனங்களின்‌ அனுதாபத்தை பெற நாம்‌ ஏதாவது வழி செய்தோமா? கவலை யாவது கொண்டோமா? மக்களின்‌ உண்மையான தேவை என்ன என்பதி லாவது நாம்‌ அபிப்பிராய பேதமில்லாமல்‌ இருக்கிறோமா? நமது நாட்டினி டமாவது, நமது மக்களிடமாவது அபிமானம்‌ உள்ளவர்கள்‌ என்ப தற்கு நம்மிடம்‌ ஏதாவது ஒரு அடையாளமிருக்கிறதா? உத்தியோகங்கள்‌ பெற்‌ றோம்‌; பட்டங்கள்‌ பெற்றோம்‌; பதவிகள்‌ பெற்றோம்‌. இதனால்‌ நமது மக்க ளுக்கு அடிப்படையான நன்மை என்ன செய்தோம்‌? பார்ப்பன ஆதிக்கம்‌ வளராமல்‌ இருக்க இவைகளை உபயோகித்துக்‌ கொண்டோம்‌ என்கிற வரை யில்‌ இவற்றைப்‌ பெற்றது சரி.பாமர ஜனங்கள்‌ மூட நம்பிக்கையுடையவராய்‌, 477 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 ஏழை ஜனங்களாய்‌, தொழிலாளர்களாய்‌, கூலிகளாய்‌ உள்ள நமது மக்களின்‌ குறைகளை நீக்கி என்ன நன்மையை உண்டாக்கினோம்‌? பார்ப்பன மாய்கையில்‌ மூழ்கி, விவகாரத்தில்‌ சிக்கி அல்லல்பட்டு அழியும்‌ குடியான வர்களுக்கு நாம்‌ என்ன செய்தோம்‌? அறிவீனத்தில்‌ மூழ்கி மதுவருந்தி, ஒழுக்கங்‌ கெட்டு நாசமாகும்‌ ஏழைக்‌ குடும்பங்களுக்கு என்ன பந்தோபஸ்து செய்தோம்‌? உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொண்ட அளவில்‌ உத்தியோகத்தைக்‌ கொண்டு எவ்வளவு செய்யக்‌ கூடுமோ அவ்வளவு செய்திருக்கிறோம்‌ என்கிற பதில்‌ போதுமா? உத்தியோ கத்திற்கு வெளியில்‌ செய்யக்‌ கூடிய வேலைகளில்‌ ஏதாவது செய்தோமா? நமது மனதையே நாம்‌ கேட்டுப்‌ பார்ப்போம்‌. நமது எதிரிகளான பார்ப்பனர்கள்‌ தேசத்தின்‌ பெயரையும்‌ காங்கிரஸ்‌ பெயரையும்‌ சுயராஜ்யம்‌, உரிமை என்கிற பெயர்களையும்‌ வைத்துக்‌ கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி உத்தியோக மும்‌ பதவியும்‌ பெற்று தங்கள்‌ ஆதிக்கத்தை பலப்படுத்திக்‌ கொள்ளுகி றார்களே அதுபோலவும்‌, நம்மில்‌ பல கூலிகள்‌ பார்ப்பனருக்கு ஒத்துப்பாடி அவர்‌: களும்‌ தேசம்‌, சுயராஜ்யம்‌, தேசீயம்‌, உரிமை என்பவைகளைச்‌ சொல்லி வயிர்‌ வளர்க்கிறார்களே அதுபோலவும்‌ நாமும்‌ செய்தால்‌ பார்ப்பனரல்லாத மக்கள்‌ முன்னேறி விடுவார்களா? இவற்றை மகாநாட்டுக்கு வரும்‌ பொது ஜனங்கள்‌ நன்றாய்‌ யோசிக்க விரும்புகிறோம்‌. உத்தியோகம்‌ பதவி பட்டம்‌ பெற வேண்டாமென்று நாம்‌ இப்போது சொல்ல வரவில்லை. ஆனால்‌ அதுவே நமது லட்சியமல்லவென்பதையும்‌ அதனாலேயே நமது குறைகள்‌ முழுவ தும்‌ நிவர்த்தியாகி விடாது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளாமலிருக்க முடியவில்லை. ஆதலால்‌ உண்மையில்‌ பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றத்‌ திற்கு தகுந்த கொள்கைகளும்‌ திட்டங்களும்‌ வகுத்து பாமர மக்களிடை தாராளமாய்‌ பிரசாரம்‌ செய்யத்தகுந்த ஏற்பாடுகள்‌ செய்ய வேண்டும்‌. உத்தம மான தலைவர்களையும்‌, உண்மையான தொண்டர்களையும்‌, உறுதியான கொள்கைகளையும்‌, யோக்கியமான பிரசாரகர்களையும்‌ கொண்டு சரியான படி ஒரு வருஷத்திற்கு வேலை செய்தால்‌ நமது சமூகம்‌ சுயமரியாதை யையும்‌ சுதந்திரத்தையும்‌ அடைந்து விடலாம்‌. இதற்கு முதலா வது எல்லோரும்‌ கதரை ஒப்புக்‌ கொள்ள வேண்டும்‌. தீண்டாமை விஷயத்தில்‌ வெளிப்படையாய்ச்‌ சொல்லி விட வேண்டும்‌. அதாவது மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு தாழ்வு இல்லை என்று ஒப்புக்‌ கொள்ள வேண்டும்‌. இந்த இரண்டு விஷயத்தில்‌ ஆக்ஷேபணை உள்ளவர்கள்‌ சுதந்திரத்துக்கும்‌ சுயமரியாதைக்‌ கும்‌ விரோதிகள்‌ என்றே சொல்லுவோம்‌. அங்கத்தினர்‌ உறுதி மொழிப்‌ பத்திரத்திலேயே இவைகள்‌ குறிக்கப்படவேண்டும்‌.மற்றபடி “ஒத்துழையா மையோ “ஒத்துழைப்போ”, “பரஸ்பர ஒத்துழைப்போ”, “முட்டுக்கட்‌ டையோ', “சட்டவரம்பிற்கு உள்பட்ட கிளர்ச்சியோ', “வெளிப்பட்ட கிளர்ச்சியோ', “பிரிட்டீஷ்‌ குடைக்குள்‌ சுராஜ்யமோ', “குடைக்கு வெளி யில்‌ சுயராஜ்யமோ', “இரட்டை ஆட்சியோ”, “ஒத்தை ஆட்சியோ”, “சாதா ரண: சுயராஜ்யமோ', “பூரண சுயராஜ்யமோ', அவரவர்கள்‌ கொள்கை அவர்‌. குடி அரசு - 1926 (2) 478 களுடனேயே இருக்கட்டும்‌. இது சமயம்‌ இவைகள்‌ எல்லாம்‌ அடியோடு புரட்டு என்றும்‌ பார்ப்பனர்களும்‌, ஆங்கிலம்‌ படித்தவர்களும்‌, பாமர: ஜனங்களையும்‌ சர்க்காரையும்‌ ஏமாற்றி வயிறு வளர்க்கச்‌ செய்யும்‌ தந்திரங்கள்‌ என்றும்‌ நாம்‌ உறுதியாய்‌ நம்புவதால்‌ அதைப்பற்றி யாருக்காவது கெடுதியோ நன்மையோ ஒன்றும்‌ ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆதலால்‌ அவைகள்‌ ஒவ்வொரு மனிதனின்‌ தனித்தனி அபிப்பிராயமாய்‌ இருந்து கொள்ளலாமே தவிர சங்கத்தின்‌ கொள்கைகளில்‌ கலக்க வேண்டியதில்லை. சுயமரியாதை: யும்‌ சுதந்திரமும்‌ பெறுவது என்பதை லட்சியமாக வைத்துக்‌ கொண்டாலே போதுமென்று நினைக்கிறோம்‌. ஏனெனில்‌ பார்ப்பனரல்லாதார்‌ என்றால்‌ பார்ப்பனரல்லாதார்‌ சமூகத்தில்‌ 100 - க்கு - 90 பேர்களாயிருக்கும்‌ பாமர: மக்களையும்‌ ஏழை மக்களையும்‌ குறிக்குமே அல்லாமல்‌ 100-க்கு 5 பேர்‌ கூட இல்லாத ராஜாக்களையும்‌ ஜமீன்தாரர்களையும்‌ பிரபுக்களையும்‌ வக்கீல்‌ களையும்‌ மாத்திரம்‌ குறிக்காது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றம்‌ என்பதும்‌ 100-க்கு 90 பேர்களின்‌ முன்னேற்றத்தையும்‌ சேர்த்து குறிக்குமேயல்லாது 100- க்கு 5 பேர்களின்‌ முன்னேற்றத்தை மாத்திரம்‌ குறிக்காது என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளு கிறோம்‌. இச்சங்கம்‌ உண்மையான பார்ப்பனரல்லாதார்‌ முன்னேற்றச்‌ சங்‌ கமா அல்லது யாரோ சில குறிப்பிட்ட நபர்களின்‌ முன்னேற்றச்‌ சங்கமா என்பது வெளியாக இது ஒரு தக்க சமயமாய்‌ ஏற்பட்டு விட்டதால்‌ ஒவ்‌ வொரு தலைவரும்‌ பொறுப்புடனும்‌ புத்திசாலித்தனத்துடன்‌ நடந்து கொள்ளவேண்டும்‌ என்பதாக விண்ணப்பித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 26.12.1926. 479 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 வகுப்புணாரி பிரதிநிதித்துவம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்றால்‌ நமது பார்ப்பனர்கள்‌ ஒரே கூச்சலாக “தேசம்‌ போச்சுது”, “ஒற்றுமை குலைந்தது”, “வகுப்பு வாதம்‌ மிகக்‌ கெட்டது” என்று ஒரே கச்சலாக எல்லாப்‌ பார்ப்பனர்களும்‌ ஒன்றாய்க்‌ கூப்பாடு போடுவதுடன்‌ கூலி கொடுத்தும்‌ நம்மவர்களைப்‌ பிடித்தும்‌ அப்படியே கத்தச்‌ சொல்வதும்‌ நாம்‌ எல்லோரும்‌ அறிந்த விஷயமே. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை ஏன்‌ பார்ப்பனர்கள்‌ எதிர்க்கிறார்கள்‌ என்பதற்கு காரணம்‌ ஸ்ரீமான்‌ சிராஜகோபாலாச்சாரியார்‌ கொஞ்ச நாளைக்கு முன்பு “பொய்‌ மான்‌ வேட்டை” என்று நவசக்திக்கு எழுதிய ஒரு வியாசத்‌ தில்‌ தன்னை அறியாமலே காட்டிவிட்டார்‌. அதாவது, “வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்பது பார்ப்பனர்களை இனி நீங்கள்‌ நாட்டுக்குத்‌ தொண்டு செய்ய வேண்டியதில்லையென்று ஒதுக்கி வைப்பதாகும்‌. பல்லாயிர: வருஷங்களாக நாட்டுக்குத்‌ தொண்டு செய்து வந்த ஒரு ஜாதியினரை இவ்வளவு சுலபத்தில்‌ (வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தின்‌ மூலம்‌ ) ஓதுக்கி விட முடியாது. அறிவும்‌ பயிற்சியும்‌ திறமையும்‌ கொண்டவர்கள்‌ நாட்டிற்கு வேண்டும்‌” என்று சொல்லியிருக்கிறார்‌. இதில்‌ உள்ள மற்ற அம்சங்களைப்‌ பற்றி இப்போது கவனிக்காவிட்டாலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ பார்ப்பனருக்குத்தான்‌ கெடுதி என்பதாக அவரே வெளியிட்டிருக்கும்‌ போது மற்ற பார்ப்பனர்கள்‌ ஆக்ஷேபிப்பதற்குக்‌ காரணம்‌ வேண்டுமா? அது மாத்திரமல்லாமல்‌ இப்‌ பார்ப்பனர்கள்‌ தங்களுக்கு கெடுதி என்று வெளிப்‌ படையாய்ச்‌ சொல்லிக்‌ கொள்ள யோக்கியதையும்‌ தைரியமும்‌ இல்லாததால்‌ தேசத்திற்கு கெடுதி என்று வெள்ளைக்காரர்கள்‌ சொன்னார்கள்‌; ஜெர்மா னியர்கள்‌ சொன்னார்கள்‌: ஜப்பானியர்கள்‌ சொன்னார்கள்‌; துருக்கியர்கள்‌ சொன்னார்கள்‌ என்றும்‌ சமாதானமும்‌, ஆதாரமும்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சொல்வதானது “பள்ளிக்கூடத்து குழந்தைகள்‌, பள்ளிக்கூடம்‌ போக திருட்டுத்தனம்‌ செய்து விட்டு மறுநாள்‌ போகும்போது உபாத்தியாயர்‌ நேற்று ஏன்‌ பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று கேட்டால்‌ எனக்கு நேற்று வயிற்று வலி சார்‌ என்கிறதும்‌, வயிற்று வலி என்றால்‌ என்ன என்று கேட்டால்‌ அதென்னமோ எங்கள்‌ அம்மா சொன்னாங்க சார்‌ என்கிறதும்‌,” போல்‌ இருக்‌ கிறது. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கெடுதி, கெடுதி, என்றால்‌ யாருக்குக்‌ கெடுதி? பார்ப்பனருக்குக்‌ கெடுதி. இதற்காக அவர்கள்‌ மற்றவர்களை ஒருவருக்கொருவர்‌ உதை போட்டுக்‌ கொள்ளும்படியும்‌, வைது கொள்ளும்‌ படியும்‌, தங்களை வந்து அடைக்கலம்‌ புகும்படியும்‌ செய்து வருகிறார்கள்‌. குடி அரசு - 1926 (2) 480 கொஞ்ச நாளைக்கு முன்பு வைசிராய்‌ பிரபுவும்‌ கவர்னர்‌ பிரபுவும்‌ “வகுப்பு வாதம்‌ கூடாது” என்று சொன்னார்கள்‌ என்றும்‌ அதை தங்களுக்கு ஆதரவாய்‌ வைத்துக்‌ கொண்டும்‌ பெரிய ஆர்ப்பாட்டம்‌ செய்தார்கள்‌. கடைசியாய்‌ பார்க்கிறபோது மேன்மை தங்கிய வைசிராய்‌ பிரபுக்கும்‌ கவர்னர்‌ பிரபுக்கும்‌ முதலாளிகளான வெள்‌ ளைக்காரர்கள்‌ கான்பூரில்‌ கூடிய எல்லா இந்தியா ஐரோப்பிய சங்கத்தின்‌ மகாநாட்டில்‌ இந்தியாவின்‌ இயற்கை நிலையை உத்தேசித்து வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இந்தியாவுக்கு அவசியம்‌ வழங்க வேண்டும்‌ என்பதாகவே பேசியிருக்கிறார்கள்‌. தவிரவும்‌ தற்காலம்‌ நடை பெறும்‌ அரசியல்‌ விவகாரங்‌ களில்‌ வகுப்புப்‌ பிரச்சினைகள்‌ இல்லாத இலாக்காவோ, ஸ்தாபனமோ, தேர்தல்களோ கண்டிப்பாய்‌ இல்லை என்றே சொல்லலாம்‌. தவிரவும்‌ அரசாங்கத்தாரால்‌ அளிக்கப்படும்‌ உத்தி யோகங்களும்‌, நியமனப்‌ பதவிகளும்‌, வகுப்புப்‌ பிரச்சினையின்‌ பயனாகவே அழிக்கப்பட்டு வருவதும்‌ பொது ஜனங்களாலும்‌ கேழ்க்கப்பட்டு வருவதும்‌ இரகசியமானதல்ல. அப்படியானால்‌ எதற்காக இனியும்‌ கேழ்க்க வேண்டும்‌ என்கிற கேள்வி பிறக்கலாம்‌. உத்தியோகங்களும்‌ பதவிகளும்‌ சர்க்கார்‌ தயவாலும்‌, தேர்தல்‌ களில்‌ ஸ்தானங்கள்‌ பார்ப்பனர்களின்‌ தயவாலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ பெறக்‌ கூடியதாயிருப்பதால்‌ மக்கள்‌ தங்கள்‌. தங்கள்‌ தேச சமூக நலத்தையே கவனிக்காமல்‌ அனேக சமயங்களில்‌ தேசத்தையும்‌ வகுப்பையும்‌ சர்க்காருக்கும்‌ பார்ப்பனருக்கும்‌ காட்டிக்‌ கொடுத்தும்‌ துரோகம்‌ செய்து ஸ்தானம்‌ பெற வேண்டியிருக்கிறது. உதாரணமாக சட்டத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அளிக்கப்‌ பட்டிருந்‌ தால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு வியாக்யானம்‌ செய்வதிலேயே ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ போன்றவர்கள்‌ சமயத்திற்குத்‌ தகுந்தபடி பார்ப்பனர்களுக்கு பயந்துக்‌ கொண்டு பேச வேண்டியதில்லை. ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ அரசியலில்‌ தலையிடும்‌ போதே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவக்‌ கட்சியார்‌ மூலமாகவே அ , ஆ படித்தவர்‌. ஸ்ரீமான்‌ டி.எ. ராமலிங்கம்‌ செட்டியாரும்‌ அதுபோலவே வகுப்புப்‌ பேரைச்‌ சொன்னதினால்தான்‌ அரசியல்‌ உலகில்‌ அன்னியர்களுக்கு மனிதர்களாக காணப்படுகிறார்‌. ஸ்ரீமான்‌ முத்தையா முதலியார்‌ வகுப்புவாரிப்‌ பேச்சு வெளியான பிறகுதான்‌ அரசியல்‌ உலகில்‌ அப்படி ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று தெரியப்பட்டார்‌. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு என்பவரும்‌ வகுப்புவாரிப்‌ பேச்சில்லாமல்‌ இருந்தால்‌ பூதக்கண்ணாடி வைத்துப்‌ பார்த்தாலும்‌ அரசியலில்‌ கண்ணுக்குத்‌ தென்படாத நிலையில்‌ இருப்பார்‌. ஸ்ரீமான்‌ திரு.வி.கல்‌ யாணசுந்திர முதலியார்‌ என்பவரும்‌ எந்தக்‌ காரணத்தை முன்னிட்டும்‌ பொது மக்கள்‌ ஞாபகத்துக்கு வரக்கூடாதவராகவே இருந்திருப்பார்‌. இம்‌ மாதிரிச்‌ செய்ய நமது பார்ப்பனருக்கு சக்தி உண்டு. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ கொள்கை முற்ற முற்றத்தான்‌ ஸ்ரீமான்கள்‌ பாவலர்‌, குப்புசாமி முதலியார்‌, குழந்தை, வெங்கிட கிருஷ்ண பிள்ளை, ஷாபி மகம்மது சாயபு, அமீத்‌ கான்‌ சாயபு முதலிய கனவான்கள்‌ பெயரும்‌ பிரபலமாகவும்‌, அவர்களே பார்ப்பனரல்லாதார்‌ தலைவர்களாகவும்‌ இடம்‌ ஏற்பட்டுக்‌ கொண்டு வருகிறது. 481 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி -3 (தலைவர்‌ பட்டம்‌ ஒருவருக்கே சாஸ்வதமா?) அல்லாமலும்‌ வகுப்புவாரி உரிமை சட்டத்தில்‌ இல்லாததால்தான்‌ எல்லாத்‌ தலைவர்களும்‌ ஒரு நாள்‌ வகுப்புவாரி உரிமை கேட்கவும்‌, மறு நாளைக்கு வேண்டாம்‌ என்கவும்‌, ஒரு நாள்‌ காங்கிரஸ்தான்‌ நாட்டுக்கு நல்லதென்கவும்‌, மறு நாளைக்கு எல்லோருக்‌. கும்‌ உரிமை இல்லாத நாட்டில்‌ காங்கிரஸ்‌ கேட்டை விளைவிக்குமென்கவும்‌, ஒருநாள்‌ செல்வச்செருக்கும்‌ செல்வாக்குப்‌ பெருக்கும்‌ நிலைக்காதென்கவும்‌, மறுநாளைக்கு ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்‌ கார்தான்‌ யோக்கியமான தலைவர்‌ என்கவும்‌, ஒரு நாளைக்கு ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி கையில்‌ ஜால்ரா கொடுக்க வும்‌, மறு நாளைக்கு ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியைக்‌ கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச்‌ சொல்லவும்‌ நேரிடு கிறது. இப்படிப்பட்ட கனவான்களையே இன்னமும்‌ தாராளமாய்‌ ஆயிரக்‌ கணக்காய்‌ நமது பார்ப்பனர்கள்‌ சிருஷ்டிக்‌ கவும்‌ அழிக்கவும்‌ முடிகிறது. இந்த தைரியத்தால்தான்‌ ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளை போன்றவர்களை அரசியல்‌ மகாநாட்டிலிருந்து அடித்து துரத்தி விடலாம்‌ என்கிற தைரியமும்‌ அவர்களுக்கு உண்டாகிறது. 1919 ஹிக்‌ கடைசியில்‌ திருச்சினாப்பள்ளி தில்லை நாயகம்‌ பிள்ளை படித்துறையில்‌ பார்ப்பனப்‌ பெண்கள்‌ தண்ணீர்‌ மொள்ளக்‌ கூட யோக்கியதை இல்லாமல்‌ நடுக்கமுற்றுக்‌ கிடந்த காலத்தில்‌ இந்தப்‌ பார்ப்பனர்களுக்கு ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளையும்‌, வரதராஜுலு நாயுடுவும்‌, கலியாணசுந்திர. முதலியாரும்‌ வீரர்கள்‌ போலவும்‌, தென்னாட்டுத்‌ திலகர்கள்‌ போலவும்‌, சாதுக்கள்‌ போலவும்‌ காணப்பட்டார்கள்‌. அவர்களை திருச்சிக்கு கூட்டிக்‌ கொண்டு போயும்‌ பார்ப்பனரல்லாதார்‌ கட்சியை திட்டச்‌ செய்தும்‌, வையச்‌ செய்தும்‌ தாங்களும்‌ தங்களது பெண்களும்‌ தாராளமாய்த்‌ தெருவில்‌ நடக்கும்‌ யோக்கியதைப்‌ பெற்றார்கள்‌. இப்போது இவர்களுக்குப்‌ பதிலாய்‌ ஸ்ரீமான்கள்‌ பாவலர்‌, குப்புசாமி முதலியார்‌, குழந்தை முதலியவர்களை ஏற்பாடு செய்து கொண்டவுடன்‌ இவர்களையே அதாவது ஸ்ரீமான்‌ தண்டபாணி பிள்ளையை அடிக்கவும்‌ வரதராஜுலு நாயுடுவை ஒழிக்கவும்‌ கல்யாணசுந்திர முதலியாரை மிரட்டவும்‌ துணிந்து வெற்றி பெற்றும்‌ வரு கிறார்கள்‌. அதற்குப்‌ பயந்து கொண்டு இவர்களும்‌ நிமிடத்திற்கு ஒரு வேடம்‌ போடவும்‌ துணிகிறார்கள்‌. ஆதலால்‌ பார்ப்பனர்களுக்கு நம்முடைய தலைவர்களை ஆக்கவும்‌ அழிக்கவும்‌ சக்தியில்லாமல்‌ செய்ய வேண்டுமானாலும்‌ பார்ப்பனர்‌ தயவும்‌ சர்க்கார்‌ தயவும்‌ இருந்தால்தான்‌ தலைவராகலாம்‌, பதவி பெறலாம்‌, மந்திரி யாகலாம்‌, உத்தியோகம்‌ பெறலாம்‌ என்கிற எண்ணத்தால்‌ தேசத்தையும்‌ சமூகத்தையும்‌ பார்ப்பனருக்கு விட்டுக்‌ கொடுக்காமலிருக்க வேண்டுமானா லும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்பது சட்டத்தில்‌ ஏற்கப்பட்டுவிட வேண்டுமே அல்லாமல்‌ சர்க்கார்‌ தயவிலும்‌ பார்ப்பனர்‌ தயவிலும்‌ இருக்கக்‌ கூடாது என்பதுதான்‌ நமது கக்ஷி. குடி அரசு - கட்டுரை - 26.12.1926. குடி அரசு - 1926 (2) 482 மைசூரில்‌ வகுப்பு வாதம்‌ மைசூர்‌ அரசாங்கத்தில்‌ பார்ப்பனரல்லாதார்‌ விஷயம்‌ கொஞ்சம்‌ கவனிக்கப்பட்டு அரசாங்க உத்தியோகத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கவனிக்கப்பட்டு வருகிறது. இதை ஒழிக்க அங்கும்‌ பல பார்ப்பனர்கள்‌ பிரயத்தனப்பட்டு சட்ட மூலமாய்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைத்‌ தடுக்க தீர்மானங்கள்‌ கொண்டு வந்தவண்ணமாயிருக்கிறார்கள்‌. வகுப்புவாரி பிரதி நிதித்துவம்‌ வேண்டாம்‌ என்பதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள்‌ சொல்லும்‌ காரணம்‌ எல்லாம்‌ திறமையைப்‌ பார்த்து உத்தியோகம்‌ கொடுக்க வேண்‌ டுமே அல்லாமல்‌ வகுப்புக்‌ கணக்குப்‌ பார்த்துக்‌ கொடுக்கக்‌ கூடாது என்‌ கிறார்கள்‌. அப்படியானால்‌ உலகத்தில்‌ பார்ப்பனர்களைத்‌ தவிர திறமை சாலிகள்‌ வேறு வகுப்பில்‌ இல்லை என்பதே இவர்களுடைய அபிப்பிராய மாய்‌ இருக்கிறது. இந்த அகம்பாவம்‌ என்றைக்குப்‌ பார்ப்பனர்களிடமிருந்து ஒழிகிறதோ அன்று தான்‌ இந்தியாவில்‌ பார்ப்பனர்களும்‌ வாழலாம்‌ என்று சொல்லக்‌ கடமைப்‌ பட்டிருக்கிறோம்‌. அதில்லாமல்‌ இருவரும்‌ ஒத்து வாழ்வதென்பது முடியாத காரணம்‌ என்றே சொல்லுவோம்‌. நிற்க, எந்த உத்தியோகத்தில்‌ பார்ப்பனரல்லாதாரைவிடபார்ப்பனர்‌ கள்‌ திறமைசாலிகள்‌ என்று சொல்லிக்‌ கொள்ள முடியும்‌? இதுசமயம்‌ சென்னை மாகாணத்தில்‌ எந்த உத்தியோகத்தில்‌ பார்ப்பனருக்கும்‌ பார்ப்பன ரல்லாதாருக்‌ கும்‌ திறமை வித்தியாசம்‌ கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது? அல்லது ஒழுக்கத்‌ திலாவது கண்ணியத்திலாவது பார்ப்பனரல்லாதார்‌ எந்த விதத்தில்‌ பார்ப்பனர்‌. களை விட அதிகமாக குற்றம்‌ சொல்லக்‌ கூடியவர்களா யிருக்கிறார்கள்‌? காங்கிரஸ்‌ என்கிற பார்ப்பனர்‌ உத்தியோகம்‌ சம்பாதிக்கும்‌ இயக்கம்‌ ஆரம்‌ பிக்கு முன்பு நமது நாட்டில்‌ 100 -க்கு 90 பேர்‌ பார்ப்பன ரல்லாதார்களாகவே உத்தியோகங்களில்‌ அமர்ந்திருந்தார்கள்‌. காங்கிரஸ்‌ ஏற்பட்ட பிறகுதான்‌ பார்ப்பனர்‌ ஏகபோகமாய்‌ இவ்வளவு அதிகமான உத்தி யோகங்கள்‌ உற்பத்தி செய்யவும்‌ அடையவும்‌ நேர்ந்தது .அதற்கு முன்‌ திறமையைப்‌ பற்றி பேச்சே இல்லாமலிருந்தது. “ஒண்ட வந்த பிடாரி ஊர்‌ பிடாரி ஆனது” போல்‌ பார்ப்பனரல்லாதாருக்கு திறமை இல்லை என்று சொல்லக்கூட நமது பார்ப்ப னர்களுக்கு தைரியம்‌ வந்துவிட்டது. அல்லா மலும்‌ பார்ப்பனர்கள்‌ நமது நாட்டிற்கு வருமுன்‌ இந்நாட்டின்‌ ராஜிய பாரமே பார்ப்பனரல்லாதாரிடம்‌ இருந்ததை நமது பார்ப்பனர்கள்‌ நன்றாய்‌ அறிவார்‌ கள்‌.அந்த ராஜாக்களிடம்‌ இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ பிச்சை வாங்கி உண்டதற்‌ கும்‌ இன்னமும்‌ ஆதாரம்‌ 483 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2. வைத்திருக்கிறார்கள்‌. அப்படியிருக்க இப்போது திறமையைப்‌ பற்றி பேசும்‌ படியான ஆணவம்‌ வந்து விட்டதானது பார்ப்பனரல்லாதாரின்‌ பைத்தியக்‌ காரத்தனத்தைக்‌ காட்டுகிறது. சர்‌. சங்கர நாயர்‌, சர்‌. அப்துல்‌ ரஹீம்‌ போன்றவர்கள்‌ எந்த பார்ப்பன ஜட்ஜிக்கு இளைத்தவர்கள்‌? ஸ்ரீமான்‌ பி.வி. மாணிக்கம்நாயக்கர்‌ எந்த பார்ப்பன இன்ஜினீயருக்கு இளைத்தவர்‌? ஸ்ரீமான்‌ வெங்கிட்ட நாராயணா எந்த பார்ப்பன கலெக்டருக்கு இளைத்தவர்‌? டாக்டர்‌ குருசாமி முதலியார்‌. எந்த பார்ப்பன டாக்டருக்கு இளைத்தவர்‌? ஸ்ரீமான்‌ சி. ஆர்‌. ரெட்டி எந்த பார்ப்பன கல்வி இலாக்கா அதிகாரிக்கு இளைத்தவர்‌? சர்‌. மகமது அபீ புல்லாவும்‌, சர்‌.மகமது உசுமானும்‌ எந்த பார்ப்பன நிர்வாக சபை மெம்பர்‌ களுக்கு இளைத்தவர்கள்‌? ஸ்ரீமான்‌ எல்‌.டி.சாமிக்கண்ணு பிள்ளை எந்தப்‌ பார்ப்பன கல்வியாளருக்கு இளைத்தவர்‌? டாக்டர்‌ நாயர்‌ எந்த பார்ப்பன தேசீயவாதிக்கு இளைத்தவர்‌? இவர்களையெல்லாம்‌ பார்ப்பனர்கள்‌ சூழ்ச்சி செய்து வேண்டுமென்றே பிரகாசமடையாமல்‌ செய்துவிட்டு அகம்பாவத்‌ தாலும்‌, அயோக்கியத்தனத்தாலும்‌ திறமை, திறமை என்று பேசி இன்னமும்‌ ஏய்க்கப்‌ பார்க்கிறார்கள்‌. ஆதலால்‌ இத்திறமையை காட்டவாவது வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ பஞ்சமர்கள்‌ என்று சொல்லப்படுவோர்கள்‌ முதற்‌ கொண்டு சற்று நமது பார்ப்பனர்களுக்கு அறிவுருத்த வேண்டியது சுய மரியாதை உள்ளவர்கள்‌ கடமை என்றே சொல்லுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 26.12.1926 குடி அரசு - 1926 (2) 484 அருஞ்கசால்‌ வாருன்‌ அசார்சமாய்‌ அசூயை அஞ்ஞானம்‌ அபகீர்த்தி அபயம்‌ அமயம்‌ அருமைக்காரர்‌ ஆக்குப்புரை ஆஸ்தபம்‌ இச்சகம்‌ இடை இத்துணை இரங்குதல்‌ இரக்ஷாபந்தனம்‌ ஈனஸ்திதி உபசரணை உளைமாந்தை கர்ணகடூரம்‌ காமியர்‌. காயலா காலகதி குச்சு புகுந்து குலாம்‌ கும்பகோணம்‌ வேலை 485 - பொருட்படுத்தாமல்‌ - அவதூறு, பொறாமை: - அறியாமை - இகழ்ச்சி - அடைக்கலம்‌ - பொழுது, உரிய காலம்‌ - கொங்குவேளாளர்‌ சமூகத்தில்‌ மண: விழாவை நிறைவேற்றும்‌ அதே சமூகத்தைச்‌ சார்ந்த ஒருவர்‌ - சமையற்கூடம்‌ - இடம்‌,பற்றுக்கோடு - நேரில்‌ புகழ்தல்‌ - எடை - இவ்வளவு - ஈடுபடுதல்‌ - மந்திராட்சர யந்திரக்‌ காப்பு - இழிநிலை, கீழ்நிலை - வரவேற்பு - கடுமையான நோய்‌, உட்புண்‌ - செவிக்கு கடுமையாக - காமவேட்கையுள்ளவர்‌. - காய்ச்சல்‌, உடல்நலக்குறைவு - காலப்போக்கு, விதி - சேலையின்‌ முன்‌ மடியை இழுத்து - அடிமை - சூழ்ச்சி செய்தல்‌, மோசடி செய்தல்‌ பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 சங்கதன்‌ சுத்தி சம்ரம்மாக சமாராதனை சர்க்கா சல்லா சிசுஹத்தி சிரார்த்தம்‌ சிலாகித்தல்‌ சுற்றுத்திரவு சூசனை தத்தம்‌ தத்தாரிகள்‌ தத்துக்கும்‌ தர்ப்பணம்‌ தவக்கப்பட்ட தாரதம்மியம்‌ தாயாதி திருப்பாட்டு தின்மை: தீர்க்க திருஷ்டி துராசாரம்‌ தூர்த்தகன்‌ தூஷண தோமர்கள்‌. நடை முதல்‌ நசித்து நிஷ்டூரம்‌ பஞ்சாங்கத்திற்கே பங்கா குடி அரசு - 1926 (2) மதம்‌ மாறியோரை மீண்டும்‌ இந்துக்‌ களாக்கும்‌ சடங்கு களிப்பாக, நிறைவாக பார்ப்பனருக்கு உணவளித்தல்‌ கை இராட்டினம்‌ (நூல்‌ நூற்பது) மெல்லிய துணி கருச்சிதைவு இறந்தோர்க்குச்‌ செய்யும்‌ சடங்கு புகழ்தல்‌ சுற்றறிக்கை குறிப்பு ஈகை, கொடை கண்டபடி திரிவோர்‌. பாய்ச்சலுக்கும்‌ தேவர்களுக்கும்‌ முனிவர்களுக்கும்‌ பிதிரருக்கும்‌ நீர்க்கடன்‌ தாமதம்‌, தடைபட்ட ஏற்றத்‌ தாழ்வு ஒருகுடியில்‌ பிறந்த உரிமைப்‌ பங்காளி வசைச்‌ சொல்‌ தீமை தொலை நோக்குப்‌ பார்வை ஒழுக்கக்‌ கேடு, தீயொழுக்கம்‌ காம வெறியன்‌, கொடியோன்‌ பழி, இகழ்ச்சி கூட்டத்தார்‌. நடப்பிலுள்ள ஆண்டு அழித்து கொடுமை புரோகிதத்‌ தொழிலுக்கே கூரையில்‌ தொங்கவிடப்பட்டு வெளி யில்‌ இருக்கும்‌ ஆள்‌ கயிற்றை இழுக்க விசிறிபோல்‌ காற்றை வீசும்‌ ஓர்‌ அமைப்பு 486 படிற்றொழுக்கம்‌ பரிசாரகம்‌ பரோபகாரம்‌ பறபறக்கும்‌ பக்ஷபாதங்கள்‌ பாப்பர்‌. பாராயணம்‌: பரிசாரகன்‌ பாரியாள்‌. பாஷாண்டி பாச(ஷாணம்‌ பிரத்தியகத்தில்‌ பிரஸ்தாபித்தல்‌ பீஸாப்பிடாமல்‌ பிரீதி பூளவாக்கை: மரித்தல்‌ மிட்டா ஜன்மிகள்‌ லூச்சாத்தனமாக மாதுரு துரோகி மாதுரு காமி 487 - காமம்‌ - ஏவற்றொழில்‌, சமையல்‌ தொழில்‌ - பிறர்க்குச்‌ செய்யும்‌ உதவி - மிக விரைதல்‌ - ஒரு தலைச்‌ சார்பாக - பொருளிலி, இல்லாதவன்‌, நொடித்தவன்‌ - முறைப்படி ஓதுதல்‌ - சமையற்காரன்‌, ஏவற்காரன்‌ - மனைவி - சமய நூல்‌ வல்லோன்‌ - நஞ்சு - காட்சியில்‌, காட்சியளவில்‌ - அறிவித்தல்‌ - வழிவழி உரிமையாகாமல்‌ - விருப்பம்‌, விழைவு, அன்பு - தகுதி - இறப்பு - வட்டார ஆட்சியாளன்‌ - நிலவுடைமையாளர்கள்‌ - கீழ்த்தரமாக - தாய்க்கு இரண்டகம்‌ செய்வோன்‌ - தாய்மீது காமுறுவோன்‌ பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 3 குடி அரசு - 1926 (2) 488