1926-1-ocr

Collection: Kolathur Mani – Kudi Arasu Collection

கும ௮௬ 1926-1 பெரியாரின்‌ எழுத்தும்‌ கச்சம்‌ கொகுதி 2 பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ 29 இதழியலாளர்‌ குடியிருப்பு திருவள்ளுவர்‌ நகர்‌ - திருவான்மியூர்‌ சென்னை - 600 041 நுல்‌ விளக்கம்‌ நூலின்‌ பெயர்‌. குடி அரசு 1926-1 பொருள்‌. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ மொழி தமிழ்‌ பதிப்பாளர்‌. கொளத்தூர்‌ தாசெ.மணி பதிப்பு இரண்டாம்‌ பதிப்பு, 2008 உரிமை பதிப்பாளருக்கு. தாள்‌ வகை: நேச்சுரல்‌ ஷேட்‌ நூல்‌ அளவு 1/8 டெம்மி எழுத்து அளவு 1 புள்ளி பக்கங்கள்‌ 432 அட்டை வடிவமைப்பு ட்ராட்ஸ்கி மருது, செம்பட்டி இராசா கணினியாக்கம்‌. அசுரன்‌ ஊடகம்‌, திண்டுக்கல்‌ விலை உர. 200/ - வெளியீடு பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ 29 இதழியலாளர்‌ குடியிருப்பு திருவள்ளுவர்‌ நகர்‌ - திருவான்மியூர்‌. சென்னை - 600041 முதற்‌ பதிப்பிண்‌ வவணியிட்டாணர்‌ உரை ஆதிக்கத்‌ திமிரும்‌, அடிமை மனப்பாங்கும்‌ - தீண்டாமையும்‌, அறியா மையும்‌ - சுரண்டலும்‌, மிரண்டு கிடத்தலும்‌ என பன்னூறு ஆண்டுகளாய்‌ அசைவற்று, தேக்கமுற்றுக்‌ கிடந்த தமிழ்ச்‌ சமுதாயத்தில்‌ இருபதாம்‌ நூற்றாண்‌ டின்‌ தொடக்கத்தில்‌ - விழிப்பை, அதிர்வை, அசைவை ஏற்படுத்தியவற்றுள்‌ முதலிடமும்‌ பெரும்பங்கும்‌ வகித்த பெருமைக்குரியது “குடி அரசு” இதழ்‌. சிந்திக்கவே மறந்திருந்த சூத்திரர்களிடம்‌ - இதுகுறித்து சிந்திப்பதே பாவம்‌ என்று கருதப்பட்ட துறைகளில்‌ - கழுத்தில்‌ புண்‌ வலித்தாலும்‌ நுகத்தடியைக்‌ கண்டதும்‌ குனிந்து ஏற்கும்‌ மாடுகளாய்‌ “சூத்திரர்கள்‌” இழித்து, பழித்து, ஒதுக்கப்படுவதை- ஆரியப்‌ பார்ப்பனரும்‌, ஆதிக்கப்பிரிவினரும்‌ மட்டுமல்லாது, அடிமைச்‌ “சூத்திரரே” இது அதிகம்தான்‌ என மிரளும்‌ வகையில்‌ - கருத்துக்களைப்‌ பரப்பியது “குடி அரசு” இதழ்‌. அடித்தட்டு மக்கள்‌ உய்ய, உயர அரசியல்‌ விடுதலையே போதும்‌ என்பார்‌ நடுவில்‌ சமுதாய விடுதலையே, சுயமரியாதைத்‌ தன்னுணர்வே அனைத்து விடுதலைக்கும்‌ அடிப்படை என்றது ‘Gl அரசு' இதழ்‌. சிந்தனைப்‌ புரட்சியை ஏற்படுத்திய அந்த *குடி அரசு” ஏட்டில்‌ பெரியார்‌ எழுதியவற்றையும்‌, பேசியவற்றையும்‌ நாம்‌ அறிந்துகொள்ள எண்பது ஆண்டுகள்‌ காத்துக்கிடக்க நேரிட்டது பெரும்‌ கொடுமை. என்றாலும்‌, தந்தை பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌ தன்னிடமுள்ள சிறு சக்திகளைத்‌ திரட்டி 1925’ குடி அரசை வெளியிட்டதுபோல்‌, இப்போது 1926 ஆம்‌ ஆண்டின்‌ முதல்‌ ஆறுமாத “குடி அரசில்‌” உள்ள “பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌' இரண்டாம்‌ தொகுப்பாய்‌ வெளியிடுகிறது. பெரியார்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ மக்களிடம்‌ சேரவேண்டும்‌ என்ற தீரா வேட்கையோடு 1980 களில்‌ தங்களது மூன்று கோடை விடுமுறை நாள்களை முழுமையாய்‌ செலவிட்ட பெரியாரிய தொண்டர்களுக்கு எங்கள்‌ நெஞ்சம்‌ நெகிழ்ந்த நன்றிகள்‌. எடுத்தெழுதப்பட்டதன்‌ படிகளை எமக்கு கொடுத்துதவிய பெரியார்‌. மையத்‌ தோழர்களுக்கும்‌, அவ்வேளையில்‌ கிடைக்காத 2351926 குடிஅரசு இதழையும்‌, 2821926, 25.4.1926, 9.51926, 27.61926 இதழ்களில்‌ விடுபட்டி ருந்த பகுதிகளையும்‌ 03.01.1926 இதழின்‌ அட்டையையும்‌ தாங்கள்‌ பாதுகாத்து வைத்துள்ள நுண்படச்சுருளில்‌ இருந்து ஒளி அச்சு எடுத்துக்கொடுத்துதவிய சென்னை ரோஜா முத்தையா ஆய்வு - நூலகத்தாருக்கும்‌ அதற்குதவிய சென்னைத்‌ தோழர்கள்‌ தபசி. குமரன்‌, அன்பு. தனசேகரன்‌ ஆகியோருக்கும்‌ நன்றிகள்‌. 1925 குடி அரசு முதல்‌ தொகுப்பைப்‌ போன்றே இவ்விரண்டாம்‌ தொகுப்பையும்‌ வகைப்படுத்தி, பொருளடக்கம்‌, சொற்பொருள்‌ எழுதி, மெய்ப்பு பார்த்து உதவிய தோழர்‌ ப. தமிழ்க்குரிசில்‌ அவர்களுக்கும்‌, அவருக்கு உதவிய தோழர்‌ மே.கா. கிட்டு அவர்களுக்கும்‌ ஒளி அச்சு செய்த திண்டுக்கல்‌ அசுரன்‌ கணினி மையத்‌ தோழர்‌ தி.தாமரைக்கண்ணன்‌ அவர்‌. களுக்கும்‌, அட்டையை அழகுற வடிவமைத்து அச்சிட்ட தோழர்‌ யாக்கன்‌ அவர்களுக்கும்‌, அச்சிட்டு கொடுத்த சென்னை கிரியேட்டிவ்‌ கிராஃபிக்ஸ்‌ அச்சகத்தாருக்கும்‌, நூலாக்கத்தில்‌ அரிய ஆலோசனை வழங்கிய விடியல்‌ சிவா அவர்களுக்கும்‌ எங்கள்‌ நெஞ்சம்‌ நிறைந்த நன்றிகளை உவகையுடன்‌ கூறி நிறைவு கொள்கிறோம்‌. இதையொத்த தொகுப்புகளைத்‌ தொடர்ந்து வெளியிடத்‌ திட்ட மிட்டுள்ள எங்களுக்குப்‌ பெரியாரின்‌ எழுத்துக்கள்‌, சொற்பொழிவு ஒலிப்‌ பேழைகள்‌ உள்ளவர்கள்‌ அனுப்பியும்‌, குறைகளைச்‌ சுட்டிக்காட்டியும்‌, நூல்களை வாங்கியும்‌ ஊக்குவிக்குமாறு அன்புடன்‌ வேண்டுகிறோம்‌. 17.09. 2005 தோழமையுடன்‌ கொளத்தூர்‌ தா. செ. மணி தலைவர்‌, தந்தை பெரியார்‌ திராவிடர்‌ கழகம்‌. குடி அரசு -1926 (0 4 சுயமரியாதை இயக்கம்‌ பிறந்தது 1926 ஆம்‌ ஆண்டுக்கான இந்த முதல்‌ தொகுதி “பெரியார்‌ திராவிடர்‌. கழகத்தின்‌ இரண்டாவது பதிப்பாகும்‌.1926 இல்‌ முதல்‌ ஆறு மாத காலத்தில்‌ “குடி அரசு” பதிவு செய்த பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌ இத்தொகுப்பில்‌ இடம்பெற்றிருக்கின்றன. 2005 இல்‌ வெளியிட்ட முதற்‌ பதிப்பில்‌ இடம்‌ பெற்றிராத ஏராளமான கட்டுரைகள்‌ இதில்‌ அடங்கியுள்ளன. பெரியார்‌ காங்கிரசிலிருந்து விலகி சமுதாய விடுதலையில்‌ கால்‌ பதித்த காலகட்டம்‌ இப்பொழுதுதான்‌ தொடங்குகிறது. சமூகம்‌, அரசியல்‌, மொழி, கலாச்சாரம்‌ என பல்வேறு தளங்களில்‌ பெரியாரின்‌ சமூகப்பார்வை விரிந்து நிற்பதை இக்கட்டுரைகளில்‌ காணலாம்‌. தாழ்த்தப்பட்டோருக்குத்‌ தனிக்‌ கோவில்‌, தனிக்‌ கிணறு என காங்கிரஸ்‌ கட்சி முன்வைத்த திட்டங்களைக்‌ கடுமையாக எதிர்த்த பெரியார்‌ பொதுக்கோவில்கள்‌, பொதுக்கிணறுகள்‌. வரவேண்டுமென்று வலியுறுத்துவதோடு - தொடர்வண்டி உணவு நிலையங்‌ களில்‌ பார்ப்பனர்களுக்குத்‌ தனி இடம்‌ ஒதுக்குவதை எதிர்த்துக்‌ குரல்‌ கொடுக்‌. கிறார்‌. காந்தியை நேரில்‌ சந்தித்து பார்ப்பனர்‌ பற்றிய அவரது கருத்தை எதிர்த்து வாதம்‌ செய்கிறார்‌. கடவுள்‌ பக்திக்கும்‌ சமூக இழிவுகளுக்கும்‌ உள்ள தொடர்பை உணர்ந்த பெரியார்‌ “சூத்திரனைக்‌ கண்டு ஓடும்‌ சாமியைக்‌ கும்பிட்டாலென்ன? திருப்பிப்‌ போட்டு வேஷ்டி துவைத்தாலென்ன?” என்ற அதிரடியான கேள்வியை எழுப்புகிறார்‌. “பிராமணர்‌” என்ற சொல்லுக்கு மாற்றாக “பார்ப்பனர்‌” என்ற சொல்லைப்‌ பயன்படுத்தத்‌ தொடங்கியதும்‌ இக்‌ காலகட்டத்தில்‌ தான்‌. ஆட்சி நிர்வாகத்திலும்‌ மாற்றங்களையும்‌ வலியுறுத்தும்‌ அவர்‌, சமத்துவம்‌, சுயமரியாதை என்ற மானுட விடியல்‌ தத்துவங்‌ களை முன்‌ மொழிகிறார்‌. அனைவருக்கும்‌ சமத்துவமும்‌ சுயமரியாதையும்‌ கிடைத்தால்‌ அன்றி “சுயராஜ்ஜியம்‌” அர்த்தமிழந்து “ ஓர்‌ ஜாதியார்‌ பிழைப்பிற்கே. ஆதாரமாக இருக்கும்‌” என்று எச்சரிக்கிறார்‌. இதே ஆண்டில்‌ பெரியாரின்‌ இந்தி எதிர்ப்பும்‌ தொடங்குகிறது. சலனமே இல்லாமல்‌ தேங்கிக்கிடந்த அடிமைத்தமிழர்‌ வாழ்வில்‌ பெரியார்‌ தமது ஆணித்தரமானக்‌ கருத்துக்களால்‌ அசைவைத்‌ தொடங்கி வைத்த காலகட்டம்‌ இதுதான்‌. - பதிப்பாளர்‌ 5 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 o s e N o 20. பொருளடக்கம்‌ ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியார்‌. தேசிய காங்கிரஸ்‌ பிராமணரல்லாதார்‌ காங்கிரஸ்‌ கோவைஜில்லா செங்குந்தர்‌ மகாநாடு தமிழ்‌ மாகாண கோ-வம்சத்தினரின்‌ (கோவில்‌ பண்டாரங்கள்‌) இரண்டாவது மகாநாடு ஸ்ரீமான்‌ R. வீரய்யன்‌ கிராமப்‌ பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம்‌ கான்பூர்‌ தேசீய காங்கிரஸ்‌ தீர்மானம்‌ சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக்‌ கொண்டதினாலேயே கலியாணம்‌ நின்று போகுமா? பிராமணர்கள்‌ சூழ்ச்சி - “ஸ்ரீமான்‌. சத்தியமூர்த்தியின்‌ தன்னை அறியா மெய்யுரைகள்‌” செத்த பாம்பாட்டம்‌ தென்னாப்பிரிக்காவும்‌ ஜாலவித்தையும்‌ ககஷிக்காரன்‌ பணத்தைக்‌ கையாடிய ஓர்‌ பிராமணவக்கீல்‌ கதர்‌ இலாகா சிப்பந்திகள்‌ கோயமுத்தூர்‌ முனிசிபாலிட்டி 'வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ தேசபக்தர்களின்‌ யோக்கியதை மதுரைக்‌ கோயில்‌ பிரவேசம்‌ லேடி கோஷனும்‌ - நாடார்களும்‌ விஷமப்‌ பிரசாரம்‌- கதர்‌ பக்தி திருவாங்கூரில்‌ மறுபடியும்‌ சத்தியாக்கிரகம்‌ தயார்‌ - தயார்‌ கதர்பரீகைஷயில்‌ தவறு *சுதேசமித்திர'னின்‌ ஞானோதயம்‌ குடி அரசு - 1926 () 15 19 22 26 28 ஸ்ரீமான்‌ CS. இரத்தினபாபதி முதலியார்‌ அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்‌ பிறப்புரிமை சுயராஜ்யமா? சுயமரியாதையா? தென்‌ ஆப்பிரிக்கா பிரதிநிதிகள்‌. கோயமுத்தூர்‌ முனிசிபால்டியில்‌ சுயராஜ்ஜியக்கட்சியும்‌ தீண்டாமையும்‌ தென்னிந்திய ரெயில்வே ஆலோசனை கமிட்டி “அதனால்தான்‌ உங்கள்‌ வீட்டின்மேல்‌ காகம்‌ பறந்தது” ஸ்ரீமான்‌ ஸி. ராஜகோபாலாச்சாரியார்‌ ஈழவர்களின்‌ கோயிலுக்குள்‌ செல்ல புலையருக்கு அனுமதி பொன்னம்பல சுவாமி மடம்‌, ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்‌ குருபூஜை மகோற்சவம்‌ மெளலானா மகம்மதலியும்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவமும்‌ [ e கதரின்‌ தற்கால நிலை: சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ மெளலானா அப்துல்பாரி பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ அதன்‌ பிரசாரங்களும்‌ தலைவர்களின்‌ யோகம்‌ மகாத்மாவின்‌ நிலை: நன்றி பாராட்டுதல்‌ எலெக்ஷன்‌ தந்திரம்‌ ( தேர்தல்‌ வாக்குத்தத்தம்‌ ) சதியாலோசனை பேடிப்‌ போர்‌ திரு. முதலியார்‌ சட்டசபை தேர்தல்‌ செலவுக்குப்‌ பணவசூலும்‌ நம்‌ நாட்டின்‌ தலை எழுத்தும்‌ காங்கிரஸில்‌ இருக்க உரிமை உண்டா? பிராமணர்கள்‌ அகந்தையும்‌ சென்னை நகர பரிபாலன சபையும்‌ 107 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 61. 62. & “தருமத்தின்‌ மேல்‌ தருமம்‌” மதிமோச விளக்கம்‌ குறள்‌ ஓட்டர்களை ஏமாற்றுதல்‌ பிரசாரக்‌ கூட்டங்களில்‌ குழப்பம்‌ தற்கால நிலைமை சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ வேஷமும்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியாரின்‌ மனச்சாக்ஷியும்‌ மன்னிக்கவேண்டும்‌ ஏமாற்றுப்‌ பிரசாரம்‌. வங்காளத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ பிராமணர்களின்‌ சங்கங்கள்‌ பிராமண உபாத்தியாயர்களின்‌ பேரில்‌ உள்ள சந்தேகங்களுக்கு ஆதாரம்‌ பிராமணப்‌ பத்திரிகைகளின்‌ பிரசாரம்‌ உஷார்‌ ! உஷார்‌!! உஷார்‌!!! 'தமிழிற்குத்‌ துரோகமும்‌ ஹிந்தி பாஷையின்‌ இரகசியமும்‌. பாதிரிமார்களும்‌ ஆச்சாரியார்களும்‌ இந்து மகாசபையின்‌ உண்மை நிறம்‌! சக்கரை என்‌ நண்பரல்ல தெருவில்‌ நடத்தலும்‌ சர்க்காரின்‌ மனப்பான்மையும்‌ இந்து தேவஸ்தானசட்டம்‌ பாரதத்‌ தாயின்‌ துர்ப்பாக்கியம்‌. கதர்‌ சுயராஜ்ஜிய கக்ஷியின்‌ தேர்தல்‌ உறுதிமொழி நிறைவேற்றல்‌! ஓட்டர்களை ஏமாற்றும்‌ தந்திரம்‌ பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம்‌ ஒழிந்தது ஈரோடு முனிசிபாலிட்டி கோயமுத்தூரில்‌ காங்கிரஸ்‌ பிரசாரத்தின்‌ யோக்கியதை! குடி அரசு - 1926 () 97. 8 8 டிப்டி கலெக்டர்‌ உத்தியோகம்‌ கொங்கு வேளாளர்‌ மஹாநாட்டின்‌ தீர்மானத்தின்‌ பலன்‌ இதுவா வீரம்‌? இதுவா வீர மொழி? பி. வரதராஜலு நாயுடு - பிராமணர்களின்‌ கொடுமையும்‌ குறும்புத்தனமும்‌ ஹிந்து மஹாசபை வருண பேதவிளக்கம்‌ இரண்டே வாரம்‌ சுரணையற்ற பொய்‌: ஸ்ரீமான்‌ தங்கப்பெருமாள்‌ பிள்ளையின்‌ ஞாபகச்‌ சின்னம்‌ காந்தியம்‌. தொழிலாளர்‌ இயக்கம்‌ தற்கால நிலைமை சுயராஜ்யக்‌ கக்ஷியும்‌ மதுவிலக்கும்‌ “ஸ்ரீமான்‌ கலியாணசுந்திர முதலி”யாரின்‌. சுற்றுப்‌ பிரயாணம்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுவின்‌ சுற்றுப்‌ பிரயாணம்‌ தென்னாட்டுத்‌ தலைவர்களின்‌ சுற்றுப்‌ பிரயாணத்தின்‌ பெருமை வகுப்புவாரி உரிமை சுயராஜ்யக்‌ ககஷிக்கு நற்சாகஷிப்‌ பத்திரம்‌ சர்‌. செட்டியாரும்‌ டாக்டர்‌ அம்மையாரும்‌ மகாத்மாவுக்கு பொது ஜனங்களிடம்‌ உள்ள நம்பிக்கை. சுயராஜ்யக்‌ கக்ஷியும்‌ மகமதியரும்‌ போலீஸ்‌ நிர்வாகம்‌ சமாதானமும்‌ வந்தனமும்‌ தேசோபகாரி ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கட்ரமண அய்யங்காரின்‌ தர்ம விளம்பரம்‌ தீண்டாமை ராஜியின்‌ பலன்‌ சுயராஜ்யக்‌ ககஷியின்‌ கதி திரு. ஆர்‌.கே.ஷண்முகஞ்‌ செட்டியார்‌ 186 190 191 194 197 199 200 201 202 205 209 214 216 217 219 220 223 224 225 226 227 229 231 233 240 244 247 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 124. 125. சபர்மதி ராஜி - சுயராஜ்யக்‌ ககஷியும்‌ முகம்மதியரும்‌ . காந்தியடிகளும்‌ திரு. கலியாணசுந்திர முதலியாரும்‌ . மூட்டை சோதனை . சட்டசபைக்கு ஆள்பிடிக்கிற “தேர்தல்‌ கங்காணிகள்‌” . “சுதேசமித்திர”னின்‌ தேசபக்தி சத்தியமூர்த்தியும்‌ கதரும்‌ . இனி செய்ய வேண்டியது என்ன? நமது பத்திரிகை இந்தியா சட்டசபையும்‌ சென்னை பிராமணர்களும்‌ . மகாத்மாவின்‌ நன்றியறிதல்‌. . ஸ்தல ஸ்தாபனங்களில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ . பிராமண அகராதி வினா - விடை . “நவசக்தி” யின்‌ துக்கம்‌ - புது இறக்குமதி . மாயவரத்தில்‌ மும்மூர்த்திகள்‌ . நமது நிருபர்களுக்கு . காந்தியின்‌ மகிமை இரண்டு கிராம வாசிகளின்‌ சம்பாஷனை . சட்டகோர்ட்‌. பத்திராதிபருக்கும்‌ குடியானவனுக்கும்‌ சம்பாஷனை . அய்யங்கார்‌ தர்மம்‌ . சபர்மதி ராஜியின்‌ முறிவு . ஒத்தக்காகச்‌ செட்டியார்‌ பிராமணத்‌ தந்திரத்தின்‌ தோல்வி சுயராஜ்யக்‌ கட்சியார்‌ கார்ப்பொரேஷனில்‌ செய்த வேலை . எங்கும்‌ இராமசாமி நாயக்கர்‌ பம்பாயில்‌. பிராமணரல்லாதார்‌ மகாநாடு கோயமுத்தூரில்‌ பஞ்ச நிவாரண வேலையும்‌ ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும்‌ இந்து மகாசபை குடி அரசு - 1926 () 249 250 251 253 254 255 257 259 262 266 268 269 270 273 274 275 277 278 280 284 288 290 292 293 126. 127. 128. 129. 130. 131. 132. 1383. 134. 135. 136. 137. 138. 1389. 140. 141. 142. 148. 144. 145. 146. 147. 148. 149. 150. 11 தட்டிப்‌ பேச ஆளில்லாவிட்டால்‌ தம்பி சண்டப்‌ பிரசண்டன்‌ சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா? கல்பாத்தியும்‌ தெருவில்‌ நடக்காமையும்‌ இந்து மகாசபையின்‌ பலனும்‌ கிலாபத்தும்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி எல்லா இந்தியப்பிரசாரகராய்‌ விட்டாராம்‌ தேர்தல்‌ அபேக்ஷகர்கள்‌ ஆசை வெட்கமறியாது சுயராஜ்ஜியக்‌ கட்சியாரின்‌ வெளியேற்றம்‌ ஆதி திராவிடரும்‌ சுயராஜ்யக்‌ ககஷியும்‌ பட்டாபிஷேகம்‌ ஒத்துழையா நாற்றம்‌ வீசும்‌ சுயராஜ்யக்‌ கட்சி மெம்பர்களும்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டும்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌. சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ நிரூப நேயர்களுக்கு விண்ணப்பம்‌ மெளலானா முகமதலியின்‌ மத பக்தி பப்ளிக்‌ சர்வீஸ்‌ கமிஷன்‌ சர்க்கார்‌ ஊழிய சம்மந்தமான விசாரணைச்‌ சபை ஏழாயிரம்‌ பண்ணை பாலிய நாடார்‌ சங்கத்தின்‌. இரண்டாவதாண்டு கொண்டாட்டம்‌ மதமும்‌ மததர்ம பரிபாலனமும்‌ தொழிலாளர்‌ சங்கம்‌ தூய்மையுற வேண்டும்‌. திண்ணைப்பிரசாரம்‌ சுயராஜ்யக்‌ கட்சி திருவாங்கூரில்‌ பத்திரிக்கைச்‌ சட்டம்‌ தென்‌ இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில்‌ சாப்பாட்டு விடுதிகள்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌1 பிராமணப்‌ பத்திரிகைகளின்‌ அயோக்கியத்தனம்‌ எலெக்ஷன்‌ தந்திரம்‌ 297 300 301 304 307 308 311 313 315 318 320 322 323 324 326 329 333 339 345 353 357 359 361 369 372 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 151. முஸ்லிம்களும்‌ சுயராஜ்யக்‌ கட்சி பத்திரிகைகளும்‌. 152. பிராமணரல்லாதார்‌ இயக்கத்‌ தத்துவம்‌ 158. ஞானோதயம்‌ ( உண்மை உணர்ச்சி ) 154. ஒரு சேதி 155 தமிழர்கட்மை: 156. வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ T 157. இனி தாமதம்‌ வேண்டாம்‌ 158. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின்‌ வெற்றி 150. இதுஎண்னமானக்கேடு' 160. கோபியில்‌ திரு. சீனிவாசய்யங்கார்‌ நாடகக்‌ கம்பெனி 161. கோபியில்‌ மா பெருங்கூட்டம்‌ 162. நமது பார்ப்பனர்‌ “இரட்டை ஆட்சி” யைக்‌ கொல்லமுயல்வதின்‌ இரகசியம்‌ 163. அருஞ்சொல்‌ பொருள்‌ குடி அரசு - 1926 ) 375 376 388 393 395 397 402 407 408 410 413 422 428 12 பதிவுஎண்‌ 2041 [வாரப்பதிப்பு] .G Bentrnd அவம்‌ ழக 1 ச | ஈரோய்டினின்று ஞாயிது ! ளார்‌ ஓதும்‌ வெளி வருவதுல ப்பா அலு 141 | wni a3 கதனணு மார்கழி வலக டட) @rdjaidpme ன வல்வை இறுப்பூர்‌ சுத்த கத்தர்‌ ஜவுளிக்‌. 1 ' பெர்‌ கேஸ்கள்‌, சன்பேச்‌, கெள க்‌ த கத 73 ஒல்‌ வசம்‌ ன்‌ கடவை ம்‌ ஒன்‌ பனி AT PRI s செய்க்‌ வல்‌ க்சி பர்‌ துணிகளை உற்பத்தரெய்த. 3 க்களை Ay ந அப்டி துயர்குக்க முரத்தொகைைம்‌ முன்‌ ப ல்‌ 3 . & இந்தூர்‌ செட்கள்‌, பத்திரப்‌ இக்க | “ காங்ரெஸ்‌ அத்தாட்‌9 பெற்ற சுத்த கதர்‌! நி ௭௦ வருங்க பேஸ்டன்‌ விலை வீ வத இக்கும்‌ கீற்வ்ட dearhals குக்கு மாமல ற்ப அதான்‌ கக சிலை, அசா யு 13 வடட... ஓபரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 குடி அரசு - 1926 () ய்ங்மாண்‌ கராுகோயாலாச்சாரியார்‌ ஸ்ரீமான்‌. இராஜகோபாலாச்சாரியார்‌ வெளியிட்ட அறிக்கைகளில்‌, முதலில்‌ காங்கிரஸ்‌ தற்காலம்‌ பொது ஜனங்களுக்குச்‌ சேவை செய்ய எவ்விதத்‌ திட்டத்தையும்‌ உடைத்தாயிருக்கவில்லை என்றும்‌, காங்கிரசிற்கு இப்போ திருக்கும்‌ மதிப்பெல்லாம்‌, அது சென்ற நான்கு, ஐந்து வருடங்களாக தேசத்‌ துக்கு அநுகூலமான திட்டங்களை ஏற்படுத்திக்‌ கொண்டு அதற்காகப்‌ பல தலைவர்களும்‌, தொண்டர்களும்‌ கஷ்டங்களையும்‌, நஷ்டங்களையும்‌ ஏற்றுக்கொண்டு பெரிய தியாகங்களையும்‌ செய்து திட்டங்களை நிறைவேற்‌ றப்‌ பிரயத்தனப்பட்டதன்‌ பலணாய்‌ காங்கிரசுக்கு ஏற்பட்ட மதிப்பை வைத்துக்‌ கொண்டு, காங்கிரசின்‌ மூலமாய்‌ பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாகும்‌ படியான எவ்விதத்‌ திட்டமும்‌ அதில்‌ இல்லாமல்‌, பழைய நிலையின்‌ வாசனை யையே ஆதாரமாக வைத்துக்‌ கொண்டு, காங்கிரஸ்‌, காங்கிரசென்று சிலர்‌. சொல்லி வருகிறார்கள்‌. இப்படியே காங்கிரஸ்‌ இருக்குமேயானால்‌, இனிக்‌ கொஞ்சக்‌ காலத்தில்‌ காங்கிரஸ்‌ மதிப்பே போய்விடும்‌ என்றும்‌ எழுதிவிட்டு, காங்கிரஸிற்கு பூரண மது விலக்கையாவது திட்டமாய்‌ வைத்து அதை ஓட்டர்களுக்கு எடுத்துச்‌ சொல்லி ஓட்டுப்‌ பெற்று சட்டசபைக்குப்‌ போய்‌ ஒரே வருடத்தில்‌ மதுபானத்தை நிறுத்திவிடவேண்டும்‌ என்றும்‌ எழுதியிருந்தார்‌. இது எழுதின சமயம்‌ ஒத்துழையாதாருங்கூட இந்த தத்துவத்தோடு சட்ட சபைக்குப்‌ போய்‌ வேலை செய்ய வேண்டுமென்பது தான்‌ அவருடைய கருத்தாய்‌ இருந்தது. எப்படியெனில்‌, இதைப்பற்றி நம்மிடம்‌ யோசிக்கையில்‌, தானும்‌ சட்டசபைக்குப்‌ போவதில்‌ ஆக்ஷேபனை இல்லை என்றும்‌, இன்னும்‌ பல இடங்களுக்கு ஒத்துழையாதாரர்களையே நிறுத்த வேண்டும்‌ என்றும்‌ சொல்லி, அவர்களுடைய பெயர்களையும்‌ சொன்னார்‌. அதன்‌ பிறகு எழுதிய ஒரு வியாசத்தில்‌, “முட்டுக்கட்டை போட்டு அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச்‌ செய்யும்‌ பேச்சு இனி உதவாது, நாம்‌ ஒரே நோக்கத்துடன்‌, திடபுத்தியுடன்‌ உழைத்தோமானால்‌, மதுவிலக்கைச்‌ செய்து முடிக்கலாம்‌. அடுத்த தேர்தல்‌ களை, இந்த மதுவிலக்கு என்னும்‌ ஒரே விஷயத்தின்‌ மேல்‌ நடத்துங்கள்‌, சட்டசபைகளில்‌ தற்போது ஏழைகளுக்கு வேறு என்ன நல்ல தொண்டு செய்ய முடியும்‌” என்றும்‌, “மதுவிலக்கை சர்க்கார்‌ ஏற்றுக்‌ கொள்ளா விட்டால்‌, அரசாங்க வேலை முற்றிலும்‌ தடை செய்வது நியாயமாகும்‌. சென்னை சட்டசபையைப்‌ பொறுத்த வரையில்‌, சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ எதிர்ப்புத்‌ திட்டம்‌ காகிதமளவாகவே இருக்கிறது” என்று சுயராஜ்யக்‌ கக்ஷியினருக்கும்‌ மற்றும்‌ 15 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தேசீயவாதிகளுக்கும்‌ புத்தி சொல்லுவது போல்‌ ஒரு வியாசமும்‌ சமாதானமும்‌ எழுதியிருக்கிறார்‌. பிறகு சித்தூரில்‌ 22-12-25-ல்‌ நடைபெற்ற ஓர்‌ பொதுக்‌ கூட்டத்தில்‌ “சுயராஜ்யக்‌ ககஷியார்‌, முட்டுக்கட்டை போட வேண்டுமென்று சட்டசபைக்‌ குப்‌ போனவர்கள்‌ முட்டுக்கட்டை போட்டார்களா? அவர்களால்‌ போட முடியுமா? முட்டுக்கட்டைபோடுவதற்கு அங்கு ஏதாவது இடம்‌ இருக்கிறதா? ஆதலால்‌, நாம்‌ எல்லாரும்‌ ஒன்று சேர்ந்து வேலை செய்யக்கூடிய திட்டத்தைக்‌ கண்டு பிடிக்கவேண்டும்‌. அதற்கு மதுவிலக்குத்‌ திட்டம்‌ பொருத்தமான தென்றும்‌ எல்லாருக்கும்‌ பொதுவானதென்றும்‌ நினைக்கிறேன்‌. இதற்குக்‌ கவர்ன்மெண்டு முட்டுக்கட்டை போடுமானால்‌, கவர்ன்மெண்டு நடை பெறாமல்‌ முட்டுக்கட்டை போட இந்தத்‌ திட்டம்‌ உதவும்‌.ஆதலால்‌, ஜனங்கள்‌ இந்த மதுவிலக்குக்கு சாதகமானவர்களையே சட்டசபைக்கு அனுப்பினால்‌ கவர்ன்மெண்டு நடைபெறாமல்‌ முட்டுக்‌ கட்டை போட சாதகமாயிருக்கும்‌.. இதுதான்‌ பரஸ்பர ஒத்துழைப்புக்குச்‌ சாதகமாயிருக்கும்‌” என்று பேசி யிருக்கிறார்‌. பிறகு சேலத்தில்‌ டிசம்பர்‌ மாதம்‌ 24 - ந்‌ தேதி நடை பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில்‌ பேசியிருப்பதாவது:- “இதுவரையிலும்‌ கதர்‌, கள்ளு என்ற பல விஷயங்கள்‌ பேசப்பட்டு வந்தன. இனி மதுவிலக்கும்‌, சட்டசபைத்‌ தேர்தலும்‌ மாத்திரம்தான்‌ பேசப்படும்‌ என்று சொல்லிவிட்டு, தான்‌ மாறுதல்‌ வேண்டாத கக்ஷியைச்‌ சேர்ந்தவர்‌ என்றும்‌, சட்டசபைப்‌ பகிஷ்காரத்தில்‌ நம்பிக்கை உடையவர்‌. என்றும்‌, சட்டசபைக்குப்‌ போக விருப்பம்‌ இல்லாதவர்களைப்‌ போகும்படியும்‌, வோட்‌ செய்யும்படியும்‌ பலவந்தப்‌ படுத்துவதில்லை என்றும்‌, சட்டசபைக்குப்‌ போகிறவர்கள்‌ மதுவிலக்கைக்‌ கட்டாயமாக வலியுறுத்த வேண்டும்‌ என்றும்‌, அப்படி வலியுறுத்தினால்‌, கவர்ன்மெண்டுக்கு முட்டுக்கட்டை ஏற்படும்‌ என்றும்‌, ஆகையால்‌ இம்மாதிரி சட்டசபையில்‌ அடுத்த முறை மது விலக்கைப்‌ பூர்த்தியாய்‌ வேலை செய்கிறவர்களுக்கே வோட்‌ கொடுக்க வேண்டுமென்றும்‌, மதம்‌, ஜாதி, வகுப்பு, குல அபிமானம்‌ இவைகளைக்‌ கருதி வோட்டர்கள்‌ வோட்‌ செய்யக்கூடாது என்றும்நான்‌ வோட்டர்களைக்‌ கேட்டுக்கொள்ளுகிறேன்‌” என்றும்‌ பேசியிருக்கிறார்‌. அதோடல்லாமல்‌, இதையே தான்‌ ஓர்‌ பிரசாரமாகக்‌ கொண்டிருப்‌ பதாகவும்‌, ஆங்காங்கு போய்ப்‌ பிரசாரம்‌ செய்யப்‌ போவதாகவும்‌ சொல்லி யிருக்கிறார்‌. மேல்கண்ட இரண்டு வியாசங்கள்‌, இரண்டு உபந்யாசங்கள்‌ ஆக நான்கு சந்தர்ப்பத்திலும்‌, ஸ்ரீமான்‌. ஆச்சாரியாரின்‌ அபிப்ராயங்கள்‌ ஒன்றுக்‌ கொன்று எவ்வளவு மாறுபட்டிருக்கின்றது என்பதை ஊன்றிக்‌ கவனிப்பவர்‌. களுக்கு இதில்‌ ஏதோ ஓர்‌ இரகசியம்‌ இருக்கிறதென்பது நன்றாய்‌ வெளிப்‌ குடி அரசு - 1926 () 16 படும்‌. முதலில்‌, காங்கிரஸிற்கு ஓர்‌ யோக்கியதை உண்டாவதற்காக ஓர்‌ திட்டம்‌ வேண்டும்‌ என்று ஆரம்பித்து பூரண மதுவிலக்கை காங்கிரஸில்‌ ஓர்‌ திட்ட மாக வைத்து, சட்டசபைக்குப்‌ போய்‌ ஒரே வருடத்தில்‌ மதுபானத்தை நிறுத்தி விடவேண்டும்‌ என்று எழுதினார்‌. அதுசமயம்‌ சட்டசபையில்‌ தனக்கு ஒரு நம்பிக்கையும்‌, சட்டசபையின்‌ மூலமாய்‌ மதுவிலக்கை நிறுத்திவிடலாம்‌ என்கிற உறுதியும்‌ அவருக்கு இருந்து இருக்கிறது. அடுத்தாற்போல்‌ சட்ட சபையின்‌ மூலம்‌ கவர்ன்மெண்டு நடக்காமல்‌ முட்டுக்கட்டை போட முடியாதென்று சொல்லிவிட்டு, மறுபடியும்‌ நமது திட்டத்தைச்‌ சர்க்கார்‌ ஏற்றுக்‌ கொள்ளாவிட்டால்‌ முட்டுக்கட்டை போடலாமென்று சொல்லுகிறார்‌.மறுபடி யும்‌, தான்‌ மாறுதல்‌ வேண்டாதவ ரென்றும்‌, சட்டசபைக்குப்‌ போவதிலும்‌ வோட்‌ கொடுப்பதிலும்‌ நம்பிக்கை இல்லையென்றும்‌, போகிறதற்கு இஷ்டப்படுகிறவர்‌ இப்படி நடங்களென்றும்‌, ஜாதி, மத, வகுப்பு வித்தியா சங்களைக்‌ கவனிக்காமல்‌ வோட்‌ கொடுங்கள்‌ என்றும்‌ சொல்லிவிட்டு, தான்‌ அதைப்பற்றி பிரசாரம்‌ செய்யப்‌ போவதாகவும்‌ சொல்லுகிறார்‌. காஞ்சியில்‌, பாட்னாத்‌ தீர்மானத்தை, சுயராஜ்யக்‌ ககஷியார்‌ சொன்னபடி நடக்கவில்லை, சட்டசபைக்குப்‌ போவதில்‌ பிரயோஜனமுமில்லை என்று ஸ்ரீமான்‌. ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ எதிர்த்தபோது, அவ்வெதிர்ப்புக்கு விரோதமாய்‌ ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியார்‌, முதல்‌ பாகத்தை ஆதரிக்‌ கையில்‌ சட்டசபையில்‌ நம்பிக்கை இல்லாதவர்கள்‌, நம்பிக்கையுடன்‌ சட்ட சபைக்குச்‌ சென்று வேலை செய்பவர்களை ஏன்‌ குறை கூற வேண்டும்‌? என்று சொல்லிவிட்டு, அதற்கு ஓர்‌ உதாரணமும்‌ சொல்லிக்‌ காட்டினார்‌. அதாவது, மாமிசம்‌ சாப்பிடக்கூடாது என்று ஒரு சங்கம்‌ ஏற்படுத்திக்‌ கொள்ளுவதாய்‌ வைத்துக்கொள்ளுவோம்‌; அச்சங்கத்தில்‌ இருந்த சிலர்‌ நாங்கள்‌ சாப்பிட்டுத்‌ தான்‌ தீருவோம்‌ என்று சொல்லி சங்கத்தின்‌ அனுமதி பெற்றுவிட்டால்‌, அச்சங்கத்தில்‌ இருப்பவர்களுக்கு போனவர்களைப்‌ பார்த்து இந்த மாதிரி ஏன்‌ குழம்பு வைத்துச்‌ சாப்பிடவில்லை? ஏன்‌ பொறியல்‌ வைத்துச்‌ சாப்பிட வில்லை? என்று கேட்க என்ன அதிகாரம்‌ இருக்கிறதென்று சொல்லியும்‌, அவர்கள்‌ இஷ்டம்போல்‌ விட்டுவிட வேண்டுமென்றும்‌ பேசி தீர்மானத்தின்‌ முதல்‌ பாகத்தை ஆதரித்தார்‌. அப்படியிருக்க, இப்பொழுது சுயராஜ்யக்‌ ககஷியாருக்கு, அவர்கள்‌ ஜனங்களை எப்படி ஏமாற்ற முடியும்‌ என்பதற்கு யோசனை சொல்லிக்‌ கொடுப்பதுபோல்‌, மதுபானத்‌ திட்டத்தை அதில்‌ சேர்த்துக்‌ கொள்ளுங்கள்‌: இப்படிச்‌ சொன்னால்‌, ஜனங்களிடம்‌ வோட்டும்‌ பெற்றுக்கொள்ளலாம்‌; சட்டசபைக்குப்‌போய்‌ அப்படிச்‌ செய்யலாம்‌ இப்படிச்‌ செய்யலாமென்று தனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களை அவர்கள்‌ நம்பும்படி சொல்லுகிறார்‌. அதுமாத்திரமல்லாமல்‌ வோட்டர்களையும்‌, ஜாதி, மத, வகுப்புப்‌ பார்த்து வோட்‌ செய்யக்கூடாது; உங்களுக்கு அனுகூலமான காரியத்தைச்‌ செய்வதாக யார்‌ வாக்குக்‌ கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே வோட்‌ செய்ய 7 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வேண்டுமென்றும்‌ சொல்லுகிறார்‌. சட்டசபையில்‌ ஒரு காரியமும்‌ செய்ய முடியாதென்று நினைக்கிற ஒருவர்‌, இன்னின்ன காரியங்கள்‌ செய்வதாக யார்‌. வாக்கு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே வோட்‌ செய்யவேண்டுமென்றும்‌ சொல்லுகிறார்‌. சட்டசபையில்‌ ஒரு காரியமும்‌ செய்யமுடியாதென்று,நினைக்‌ கிற ஒருவர்‌ இன்னின்ன காரியங்கள்‌ செய்வதாக வாக்குக்‌ கொடுக்கிறவருக்கு வோட்‌ கொடுங்கள்‌ என்று சொல்வதானது, எவர்‌ பெரிய புரட்டுக்காரரோ அவருக்கு வோட்‌ கொடுங்கள்‌ என்று சொல்வதுதானே கருத்தென்று எண்ண வேண்டும்‌. சுயராஜ்யக்‌ ககஷியார்‌ சொன்னபடி நடக்கவுமில்லை; சொன்னபடி நடக்கவும்‌ முடியாது என்றும்‌ சொல்லிவிட்டு இன்னின்ன மாதிரி சொல்லி போய்‌ வோட்‌ கேளுங்கள்‌ என்று சொல்லுவதினாலும்‌, ஜாதி, மத, வகுப்பு வித்தியாசங்களில்லாமல்‌ வோட்‌ கொடுங்கள்‌ என்று சொல்லுவதினாலும்‌, ஒத்துழையாதார்‌ எல்லாம்‌ சட்டசபைக்குப்‌ போகவேண்டுமென்று நினைத்ததி னாலும்‌, அடுத்த தேர்தலில்‌ முன்போலவே, பிராமணரல்லாதார்களுக்கு சட்டசபையில்‌ ஆதிக்கம்‌ வந்துவிடுமோவென்று பயப்படுவதாயும்‌, அதற்கு ஏதோ சில வழிகள்‌ கண்டுபிடிப்பதாகவுந்தான்‌ இதிலிருந்து நாம்‌ யூகிக்க வேண்டியிருக்கிறதேயல்லாமல்‌, வேறு ஒன்றும்‌ நினைப்பதற்கிடமில்லை. ஆதலால்‌, வோட்டர்கள்‌ இந்த சட்டசபையானது, தேசத்திற்கு எவ்விதத்திலும்‌ நன்மை செய்ய முடியாது என்பதை நன்றாய்‌ உணர வேண்டும்‌. சர்க்காருக்கு விரோதமில்லாமல்‌, வகுப்பு நன்மைகளை உத்தேசித்து, ஏதாவது செய்து கொள்ள வேண்டுமானால்‌, அவைகளுக்கு மாத்திரம்‌ கொஞ்சம்‌ சட்டசபை உதவும்‌. இவ்விதமாகத்தான்‌ அவைகள்‌ ஆக்கப்பட்டு மிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட காரியங்களில்‌ முக்கிய கருத்துடையவர்கள்‌, அந்தந்த வகுப்பார்களையும்‌, அந்தந்த வகுப்புக்கு நன்மையான கொள்கை: யுடையவர்களையும்‌, சட்டசபைக்கு அனுப்ப வேண்டுமேயல்லாமல்‌, செய்ய முடியாத ஓர்‌ காரியத்தை உத்தேசித்து, செய்யக்கூடிய காரியங்களை அலக்ஷி யம்‌ செய்து வகுப்பு வித்தியாசமில்லாமல்‌, சட்டசபையை நிரப்பி விடூவோ மேயானால்‌, கஷ்டப்படும்‌ வகுப்பாரும்‌, தாழ்த்தப்பட்ட வகுப்பாரும்‌, பிற்பட்ட வகுப்பாரும்‌ இன்னும்‌ அதிகக்‌ கஷ்டப்படவும்‌, தாழ்த்தப்படவும்‌, பிற்பட வும்தான்‌ முடியுமென்பதை மனதில்‌ வைத்துக்கொள்ள வேண்டும்‌. ஆதலால்‌, சட்டசபை முதலிய தேர்தல்களில்‌ கலந்து கொள்ள வேண்டு மென்கிற ஆசையிருக்கிறவர்கள்‌, கண்டிப்பாய்‌ தங்கள்‌ வகுப்புநன்மையை மறந்துவிடக்‌ கூடாதென்று நாம்‌ எச்சரிக்கை செய்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 03.01.1926 குடி அரசு - 1926 () 18 தேசிய காங்கிரஸ்‌ இவ்வருடம்‌ கான்பூரில்‌ இந்தியாவின்‌ விடுதலைக்கு உழைக்கும்‌ சபையென்னும்‌, இந்திய தேசிய மகாநாடாகிய காங்கிரஸ்‌, கான்பூரில்‌ கூடிக்‌ கலைந்தது. இந்தியாவின்‌ விடுதலைக்கும்‌, இந்தியரின்‌ சுயமரியாதைக்கும்‌, அரசாங்கத்தை கொஞ்சமும்‌ எதிர்பாராமலும்‌, அவர்களின்‌ அரசியல்‌ மாய்கை களை உபயோகப்படுத்திக்‌ கொள்ளாமலும்‌, அவர்களோடு விலகியிருந்து நிர்மாணத்திட்டத்தை நிறைவேற்றி வைப்பதன்‌ மூலமாகவே தியாகத்திற்கும்‌ கஷ்ட நஷ்டத்திற்கும்‌, துணிவுகொண்டு உழைப்பதுதான்‌ உண்மையான சுயராஜ்ய மார்க்கம்‌ என்கிற உறுதியைக்‌ கொண்ட கூட்டத்தார்‌, இவ்வாண்டு கான்பூர்‌ காங்கிரஸில்‌ சரிவரக்‌ கலந்து கொள்ளவேயில்லை. மகாத்மா காந்தியும்‌ தான்‌ தனியாக நின்று நடத்துவதாய்‌ ஏற்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ கதர்‌ ஸ்தாபனமாகிய நூல்‌ நூற்கும்‌ சங்கத்தை ஏதாவது ஒழித்து விடுவார்களோ எனப்‌ பயந்து அதைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ளும்‌ வரை கூட இருந்து விட்டு, மற்றவைகளில்‌ அவரும்‌ கலந்து கொள்ளாமல்‌ காங்கிரஸ்‌ மகாநாட்டுக்குக்கூட வராமல்‌, மெல்ல நழுவி விட்டார்‌. காக்கிநாடாவில்‌ ஸ்ரீமான்‌ ஈவெ.இராமசாமி நாயக்கர்‌ “இன்னும்‌ இரண்டு வருடத்தில்‌ இந்த காங்கிரஸானது பழயபடி பேச்சை விற்றுப்‌ பிழைக்கும்‌ வக்கீல்‌ கூட்டத்தார்‌ வசமும்‌ படித்தவர்கள்‌. என்போர்‌ கைவசமும்‌ போய்விடப்‌ போகிறது; உண்மையாய்‌ தேசத்திற்கு உழைக்கிறவர்களுக்கு காங்கிரஸில்‌ இடம்‌ இருக்கப்‌ போவதில்லை. ஆங்கி லம்‌ படித்த சிலர்‌ தங்கள்‌ உத்தியோகமும்‌, பதவியும்‌ சம்பாதிப்பதற்காகவே காங்கிரஸ்‌ உபயோகப்படப்‌ போகிறது; இதற்கே ஸ்ரீமான்‌ சி. ராஜகோபாலாச்‌ சாரியார்‌ வழி திறந்து விட்டு விட்டார்‌. அவர்‌ தமது தியாகத்தின்‌ பலனாய்‌ அடைந்த செல்வாக்கை இப்போது தன்‌ கூட்டத்தவராகிய படித்த வகுப்பா ருடைய நன்மைக்கே உபயோகப்‌ படுத்துகிறார்‌” என்று கதறினது ஒரு எழுத்துக்கூட பொய்யாகாமல்‌ நடந்து போய்விட்டது. தமிழ்நாட்டில்‌ இருந்தும்‌, மற்றும்‌ பல மாகாணங்களிலிருந்தும்‌ ஒத்துழையாமையின்போது தியாகம்‌ செய்து சிறை சென்ற முக்கிய தேச பக்தர்கள்‌ அநேகமாய்‌ இந்தக்‌ காங்கிரஸிற்குப்‌ போகவே இல்லை. முந்திய வருஷங்‌ களில்‌, ஏழை மக்களும்‌ விவசாயிகளும்‌, தொழிலாளருமான தேச பக்தர்களே முக்கியப்‌ பிரதிநிதிகளாய்‌ இருந்தார்கள்‌. இவ்வருஷமோ, ஒத்துழையாமை உச்சத்தில்‌ இருக்கும்போது காங்கிரசைத்‌ திரும்பிக்கூட 19 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பார்க்காதவர்களும்‌, பெரும்பாலும்‌ ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார்‌. போன்றவர்களும்‌, பிராமணர்களுமே தமிழ்நாட்டின்‌ சார்பாக முக்கியப்‌ பிரதிநிதிகளாயிருந்திருக்கிறார்கள்‌. ஏறக்குறைய ஒவ்வொரு மாகாணத்‌ திலிருந்தும்‌ இதுபோலவே பொது ஜனங்களை ஏமாற்றி சட்டசபைப்‌ பதவி பெறவும்‌, உத்தியோகம்‌ பெறவும்‌, தங்கள்‌ வகுப்பு ஆதிக்கத்தைப்‌ பலப்படுத்‌ திக்‌ கொள்ளவும்‌ ஆசைப்பட்டவர்கள்தான்‌ போயிருக்கிறார்கள்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.. காங்கிரசின்‌ பிரதிநிதித்துவம்‌ இப்படி இருக்க, நிறைவேறின தீர்மானங்‌ களைப்‌ பற்றியோவென்றால்‌, எந்தெந்த சர்க்கார்‌ உத்தியோகத்தை ஒப்புக்‌ கொள்ளுவது; எந்தெந்த சர்க்கார்‌ உத்தியோகத்தை தள்ளிவிடுவது; எப்படிப்‌ பட்ட தீர்மானத்தைச்‌ செய்தால்‌ பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்‌ பெறலாம்‌ என்கிற விஷயங்களே காங்கிரஸின்‌ முக்கிய நேரங்களைக்‌ கவர்ந்துக்‌ கொண்டது. அவரவர்கள்‌ மாகாணத்தில்‌ உள்ள அவரவர்களுக்குரிய செளகரியத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டே சண்டைகள்‌ பிடிக்கப்பட்‌ டன. தமிழ்நாட்டு சுயராஜ்யக்‌ கட்சியாருக்கு, தமிழ்நாட்டில்‌ உத்தியோகம்‌ கிடைப்பதற்கு வழி இல்லாததால்‌, தமிழ்நாட்டுத்‌ தலைவர்‌ “சீ! இந்தப்‌ பழம்‌ புளிக்கும்‌” என்பது போல்‌ உத்தியோகமே பெறக்கூடாது என்று வாதாடினார்‌. கள்‌. ஆனாலும்‌ இந்தியா சட்டசபையில்‌, தங்களுக்கு கொஞ்சம்‌ செல்வாக்கு இருப்பதின்‌ நிமித்தம்‌, சில உத்தியோகம்‌ பெற செளகரியம்‌ இருப்பதால்‌ அங்குள்ளவைகளை மாத்திரம்‌ பெற்றுக்‌ கொள்வதில்‌ ஆக்ஷபனை இல்லை என்கின்றனர்‌. இதுபோலவே மத்திய மாகாணத்திலும்‌ சுயராஜ்யக்‌ கட்சியாருக்‌. குச்‌ சில உத்தியோகங்கள்‌ கிடைப்பதற்கு செளகரியம்‌ இருப்பதால்‌ அவர்கள்‌ அதைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என்கின்றனர்‌. இவ்விரண்டு கட்சியாரின்‌ விவாதமே காங்கிரசின்‌ நடவடிக்கையாய்ப்‌ போய்விட்டது. பழைய வழக்கம்‌ போல்‌ தமிழ்நாட்டுப்‌ பிராமணர்கள்‌ ஆதிக்கமே காங்கிரஸில்‌ இருந்ததால்‌ தமிழ்நாட்டு நிலைமையை அநூசரித்தே (தமிழ்‌ நாட்டிலும்‌ உத்தியோகம்‌ சம்பா திக்கக்கூடிய நிலைமை வருகிறவரையில்‌, இந்தியா சட்டசபை உத்தியோ கங்கள்‌ நீங்கலாக! சில உத்தியோகங்கள்‌ பெற்றுக்‌ கொள்ளக்கூடாது என்கிற தீர்மானம்‌ நிறைவேறிற்று. அதோடு பாமர ஓட்டர்களை ஏமாற்றத்தக்கதென்று சொல்லும்படியாக ஒரு தீர்மானமும்‌ நிறைவேற்றப்பட்டது. அதாவது, தங்கள்‌ கோரிக்கைகளை சர்க்கார்‌ ஏற்றுக்கொள்ளாவிட்டால்‌, பிப்ரவரி மாதத்தில்‌ கவுன்சில்‌ பதவியை ராஜிநாமாச்‌ செய்து விடுவதென்பது.இது தேசத்தாரை ஏமாற்றுவதற்கென்றே செய்த தீர்மானம்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. ஏனெனில்‌ மார்ச்சு மாதத்தில்‌ தானாகவே சட்டசபைகள்‌ கலையப்‌ போகிறது.அப்படியிருக்க மார்ச்‌ அல்லது ஏப்ரல்‌ மாதம்‌ கலையப்‌ போகும்‌ சட்டசபை ஸ்தானத்தை பிப்ரவரி மாதம்‌ 28-ந்‌ தேதிராஜிநாமாச்‌ செய்வதில்‌ சர்க்காரார்‌ பயந்துவிடுவார்களா? அல்லா மலும்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ கோரிக்கையை இதற்கு முன்‌ பல தடவைகளில்‌ குடி அரசு - 1926 () 20 நிறை வேற்றினதை சர்க்காரார்‌ ஏற்றுக்கொள்ளாமல்‌ குப்பைத்‌ தொட்டியில்‌ போட்டுவிட்டார்களே; அப்போது ஏன்‌ ராஜிநாமா செய்திருக்கக்கூடாது. பூனை கண்ணை மூடிக்‌ கொண்டு பால்‌ குடிப்பது போல்‌, இவைகளை யெல்லாம்‌ பொது ஜனங்கள்‌ அறிய மாட்டார்கள்‌ என நினைத்துக்கொண்டு எவ்வளவோ தந்திரமாகக்‌ காங்கிரசை நடத்தி விட்டார்கள்‌. 33 கோடி ஜனங்களின்‌ விடுதலைக்கும்‌, சுயமரியாதைக்கும்‌, சமத்துவத்‌ திற்கும்‌ உழைப்பதாகச்‌ சொல்லப்படும்‌, இந்திய தேசிய மகாநாடே சூது மகாநாடாய்ப்‌ போய்விடுமானால்‌, குட்டி மகாநாடுகளின்‌ யோக்கியதையைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமா? காங்கிரஸ்‌ தீர்மானத்தைப்‌ பற்றி கல்கத்தா “சர்வெண்டு” பத்திரிகை: எழுதுவதாவது:- “காங்கிரசில்‌ நிறைவேறின பண்டித நேருவின்‌ தீர்மானமானது மிகவும்‌ சாதுர்யமாக (ஜனங்கள்‌ இரண்டு விதமாக எண்ணும்படி) இருக்கிறது. அதாவது, காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சியாரிடம்‌ சரணாகதி அடைந்து விட்டது என்னும்‌ அபிப்ராயங்கொண்ட தத்துவத்தை வெளிப்படையாகச்‌ சொல்லுவதற்குப்‌ பதிலாக, காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சித்‌ திட்டத்தை எடுத்துக்‌ கொண்டு அதை நடத்த வேண்டும்‌ என்கிற வார்த்தைகளைக்‌ கொண்டு தந்திரமாய்‌ தீர்மானம்‌ அமைக்கப்பட்டு இருக்கிறது. ஜனங்களின்‌ ஓட்டுப்‌ பெறுவதற்காகவே பாமர ஜனங்களை ஏமாற்றத்‌ தக்க வண்ணம்‌ சர்க்காரைக்‌ கடைசி முறையாக சில திருத்தங்கள்‌ கேட்பது அது கிடைக்காவிட்டால்‌ வெளியே வந்து விடுவதென்றும்‌, சட்டமறுப்பு செய்யப்படும்‌ என்று சர்க்காரை மிரட்டுவதுமானதும்‌ சட்டசபைக்கு வெளி யில்‌ நிர்மாணத்திட்டம்‌ நடத்துவது என்கிற பேச்சளவில்‌ நிறைவேற்றக்‌ கூடிய திட்டமும்‌ அத்தீர்மானத்தில்‌ கண்டிருப்பதானது ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு மிகவும்‌ அநுகூலமானதுதான்‌.” இதிலிருந்து இவ்வருட தேசியக்‌ காங்கிரஸின்‌ போக்கை வாசகர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 03.01.1926. 21 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிராமணால்லாதார்‌ காங்கிரஸ்‌ சென்னை மாகாணத்தில்‌ உள்ள பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌, தமிழ்‌ நாட்டுப்‌ பிராமணர்களால்‌ சென்சார்‌ வைத்து, வெளி மாகாணங்களுக்குப்‌ போகாமலிருக்கும்படி தடுத்து வந்த பலத்த சூட்சிகளையும்‌ தாண்டிக்கொண்டு இப்போது இந்தியா முழுவதுமே பரவி வருகிறது. அகில இந்தியா பிராமண: ரல்லாத காங்கிரசுக்கு இது இரண்டாவது வருஷம்‌. தேசீயக்‌ காங்கிரஸ்‌ ஆதியில்‌ கூட்டப்பட்ட காலத்தில்‌ அதற்கு இந்தியா முழுவதுக்குமாக 75 பேர்கள்தான்‌ பிரதிநிதிகளாக வந்திருந்தார்கள்‌. அது நாளுக்கு நாள்‌ அடைய வேண்டிய வளர்ச்சியை அடைந்து மகாத்மா காலத்தில்‌ 5000-கணக்கான பிரதிநிதிகளை அடைந்து, எவ்வளவு மேல்‌ போக வேண்டுமோ அவ்வளவும்‌ போய்‌ இப்போது இறங்கு முகத்தில்‌ இருக்கிறது. இது இவ்விதமிருக்க, இந்தியா முழுவதுக்குமே பிராமணரல்லாதார்‌. மகாநாடு ஆரம்பித்து இரண்டு வருஷம்தான்‌ ஆகிறது.ஆரம்ப முதல்‌ வரு ஷத்தில்‌, ஆதி தேசீயக்‌ காங்கிரஸ்‌ போல்‌ பத்துக்‌ கணக்காய்‌ பிரதிநிதிகள்‌ இல்லாமல்‌, நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள்‌ பெல்காமில்‌ கூடினார்கள்‌. இரண்‌: டாம்‌ வருஷத்தில்‌ அம்ரோடி என்னும்‌ அமராவதியில்‌ 5000 பிரதிநிதிகள்‌ பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்‌. பதினாயிரக்கணக்கான ஜனங்கள்‌ இதில்‌ கலந்து கொண்டிருக்கிறார்கள்‌. இன்னும்‌, நாளாக ஆக அது என்ன நிலை வந்தெய்தும்‌ என்பது யோசனை யுள்ளவர்களுக்கு நன்றாய்‌ விளங்கும்‌. பிராமணரல்லாத இயக்கத்தின்‌ தலைவர்களாகிய ஸ்ரீமான்கள்‌ டாக்டர்‌ டி.எம்‌.நாயர்‌, ஸர்‌.பி.தியாகராய செட்டியார்‌ ஆகிய இவர்கள்‌ காலமானதற்குப்‌ பிறகு பிராமணரல்லாத பாமர ஜனங்களின்‌ உண்மை நிலையைச்‌ சரியாய்‌ அறியாதவர்களும்‌, அவர்களிடம்‌ பழகாதவர்களும்‌, பணக்காரர்களும்‌, பெரிய மிராஸ்தாரர்களும்‌, ராஜாக்களும்‌, ஜமின்தாரர்களும்‌, உத்தியோகஸ்‌ தர்களும்‌ தலைமை வைத்து நடத்துவதாயிருப்பதால்‌ பிராமணரல்லாத பாமர: ஜனங்களின்‌ முழு செல்வாக்கையும்‌ பெற காலதாமதமாகி வருகிறது. ஆனாலும்‌ பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌ என்று ஒரே கட்டுப்பாடான இயக்கம்‌ இந்தியா பூராவையும்‌ இன்னும்‌ சரியானபடி ஒன்றாய்ச்‌ சேர்க்கவில்லை யென்று வைத்துக்‌ கொண்டாலும்‌, ஆங்காங்கு சிறுசிறு கிராமங்களில்‌ கூட பிராமணாதிக்கத்தின்‌ கஷ்டங்களையும்‌ தந்திரங்களையும்‌ உணர்வதும்‌, அதிலிருந்து தப்ப தனித்தனியாய்‌ வழி தேடுவதுமான மார்க்கங்களில்‌ ஏதோ சிலர்‌ தவிர, (அதுவும்‌ பிராமணர்கள்‌ தயவு இல்லாமல்‌ அடியோடு பிழைக்க - குடி அரசு - 1926 () 22 முன்னுக்கு வர - தலைவராக முடியாமல்‌ இருக்கின்ற சிலர்‌ தவிர) மற்றெல்‌ லோரும்‌ ஈடுபட்டிருக்கிறார்கள்‌. பிராமணரல்லாதார்‌ வகுப்பில்‌ பிறந்த மகாத்மாவைப்‌ போல்‌ பார்ப்பனரல்லாதாரான ஓர்‌ உத்தமர்‌ இவ்வியக்கத்தைத்‌ தலைமை வகித்து நடத்துவார்களேயானால்‌, மூன்று வருடங்களுக்கு மேல்‌ இவ்வியக்கமே தேவையில்லாத அளவு முன்னேற்றமடையும்‌ என்பதில்‌ எள்ளளவும்‌ சந்தேகம்‌ இல்லை. இந்த பார்ப்பனரல்லாத காங்கிரஸ்‌, இனி வருஷா வருஷம்‌ ஒவ்வொரு பெரிய பட்டணங்களில்‌ கூடிக்கொண்டுதான்‌ வரும்‌. அப்படிக்‌ கூடுவதில்‌ தேசீயக்‌ காங்கிரஸ்‌ கூட்டுமிடங்களில்‌, இதைக்‌ கூட்டுவது நன்மை தரத்தக்கதல்ல என்பது நமது அபிப்ராயம்‌. ஏனெனில்‌ தேசீய காங்கிரஸ்‌ கூடுமிடங்களில்‌ பார்ப்பனரல்லாதார்‌ காங்கிரஸ்‌ கூடுவதாயி ருந்தால்‌ பிராமணரல்லாத ஜனங்கள்‌ ஆடம்பரமாயிருக்கும்‌ விஷயத்திற்கு மனம்‌ செலுத்துவார்களேயல்லாமல்‌ முக்கியமான விஷயங்களைச்‌ சரிவரக்‌ கவனிக்க மாட்டார்கள்‌. உதாரணமாக, கதரின்‌ மேன்மையை எடுத்துச்‌ சொல்‌ லவும்‌ குடியின்‌ கேட்டை ஒழிக்கவும்‌ பாமர ஜனங்கள்‌ உள்ள ஒரு இடத்தில்‌ ஒரு கூட்டம்‌ கூட்டி அதற்குப்‌ பக்கத்தில்‌, கழைக்‌ கூத்தனான ஒரு தொம்ப னையும்‌ மத்தளம்‌ தட்டி! ஆ! என்று சொல்லிக்‌ கொண்டிருக்கச்‌ செய்தால்‌ பாமர ஜனங்கள்‌ கழைக்கூத்தைப்‌ பார்க்கத்தான்‌ போவார்களேயல்லாமல்‌, கதரின்‌ மேன்மையையும்‌, குடியின்‌ தீமையையும்‌ கேட்க வரமாட்டார்கள்‌. அதுபோலவே, தேசீயக்‌ காங்கிரஸிற்குப்‌ பணம்‌ இருக்கிறது; தாராளமாய்‌ பணம்‌ செலவு செய்யும்‌ தலைவர்கள்‌ என்று சொல்லப்படுவோர்‌ வருவார்கள்‌; நல்ல பேச்சுக்காரர்‌ வருவார்கள்‌ என்று நினைத்து வேஷம்‌ பார்ப்பதிலேயே, பாமர ஜனங்களின்‌ கவனம்‌ இழுக்கப்பட்டுப்‌ போகும்‌. ஆதலால்‌, பார்ப்பன ரல்லாதார்‌ மகாநாட்டை தேசீயக்‌ காங்கிரஸ்‌ கூடாத இடத்தில்தான்‌ கூட்ட வேண்டும்‌. தேசீயக்‌ காங்கிரஸ்‌ தீர்மா னங்களைப்‌ போல்‌ சட்டசபைக்குப்‌ போகத்‌ தகுந்த மாதிரியும்‌ உத்தியோகம்‌ பெறத்தகுந்த மாதிரியுமான தீர்மானங்களை மாத்திரம்‌ போட்டுக்‌ கொள்ளாமல்‌, மகாத்மா காங்கிரஸ்‌ தீர்மானங்களைப்போல்‌ தேசத்திற்கும்‌ அநுகூலமுள்ளதாகவும்‌, கிராமம்‌ கிராமமாய்ப்‌ போய்‌ பிரசாரம்‌ செய்து கிராமவாசிகளுக்கு நன்மை பயக்கக்‌ கூடியதான தீர்மானங்களையே செய்ய வேண்டும்‌. செய்தபடி நடக்கவும்‌ வேண்டும்‌. தியாகம்‌ செய்வதற்கும்‌, கஷ்டப்படுவதற்கும்‌, துணிந்தவர்களே முன்‌ வந்து வேலை செய்ய வேண்டும்‌. காலரும்‌, டையும்‌, பூட்ஸும்‌, சராயும்‌, ஆங்கில தொப்பியுமுள்ளவர்கள்‌ பிராமணரல்லாதார்‌ நன்மையைப்‌ பற்றி பேசினாலாவது, தலைமை வகித்து நடத்தினாலாவது, அதோடு ஒரு பயனும்‌ விளையாது, அரசாங்கத்தார்‌ தயவிருந்தால்தான்‌ பிராமணரல்லாதார்‌ முற்‌ போக்கடைய முடியும்‌ என்ற எண்ணத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்‌. அரசாங்கத்தார்‌ தயவில்லாமலே முன்னுக்கு வரக்கூடிய நிலைமையை உண்டாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌. தனிப்பட்ட சுயநல எண்ணமில்லாமல்‌, பிராமணரல்லாதார்‌ கட்டுப்பாடாய்‌ உழைப்பதாயிருந்தால்‌, மகாத்மாவின்‌ 23 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஒத்துழையாமை தத்துவத்தாலும்‌, நிர்மாணத்‌ திட்டத்தாலுமே முன்னுக்கு வரலாம்‌.அந்த நிலைமையில்‌ ஏற்படுத்தப்படும்‌ முன்னேற்றம்தான்‌ நிலைத்து நிற்கக்‌ கூடியது. அப்படிக்கில்லாத முன்னேற்றம்‌ நிலையானதல்ல என்பதை பிராமணரல்லாதார்கள்‌ உணர வேண்டும்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 03.011926 குடி அரசு - 1926 ) 24 25 ௨ குஜஅ௮சச. e — — - அ. ன்தாமால்‌. காலத்திய சநிழிரிகை தாவல்‌ L R வைக்க உண்மையான கதர்‌: கெட்டியான கதர்‌. 2 அவிவ்‌ வ கண்‌ அன்‌ கணவன உடை வம்‌ முகக்‌ கவை வாவ எனி! P வள்ளல்‌ - i அவாசகான அம்சாரிபக்கன்‌ சோர்வு மன்ன Shrrafemt g பெர்தகை. | T e P e PSS = [ சரிதா 11 o o னில்‌ அத்த சால்சா கன: ச்‌ வினால்‌ வேண்ளெயாம்‌ நன்றே பலைக சத்வ. ஆதங்க ய்ய வளவதாவவம்‌, e அதான்‌. அடக்கம்‌ ] டைமண்ட்‌ பிரஸ்‌, ஈரோ ம்க்‌ வ! et பேநீலை மலர்க. சங ள்‌ அவரங i சத்தாக்க கரிந்த! ட அன்க ஹா புல்‌ களும்‌ ந 12 காரட்‌ சோல்ம்‌ கோங்க பிலேட்‌ மேல்‌ பிஸ்கெட்‌ ) o ramicsi ராச சரத்து யம இன்ப ப, ந்த கனக ச லான்‌ ன்‌ ந்‌ T e அப்‌ பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கோவை வில்லா ஊங்குந்தர்‌ மகாநா௫ நமது நாட்டில்‌ செங்குந்தர்‌ குலமானது தக்க பெருமையுடனும்‌, செல்வாக்குடனும்‌ இருந்து வருகிறது. ஆனாலும்‌, அதில்‌ பெண்களை கோவில்களின்‌ பேரால்‌ பொட்டுக்கட்டி தாசி வேசித்‌ தொழில்‌ செய்ய அநுமதிப்பதால்‌ அக்குலத்திற்கு ஒரு இழிவு இருக்கிறது என்பது மறைக்க முடியாத காரியமானாலும்‌, இச்சங்கம்‌ ஏற்பட்ட சென்ற 10 வருஷங்களுக்‌ குள்ளாக எவ்வளவோ சீர்திருத்தமடைந்துவிட்டது. இவ்வளவு தூரம்‌ முன்‌ னேற்றமடையும்படியான காரியம்‌ வேறு எந்த குல சங்கமும்‌ செய்யவே யில்லை. இக்குல முன்னேற்றத்திற்கு இச்சங்கத்தின்‌ மூலமாய்‌ பல குலாபி மானிகள்‌ உண்மையில்‌ பாடுபட்டதனால்தான்‌ இந்த யோக்கியதைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனாலும்‌ இது மாத்திரம்‌ போதாது. இக்‌ குலத்தின்‌ சில ஆண்களிடமும்‌ உள்ள சில குறைவுகளையும்‌ சீர்திருத்தம்‌ செய்ய வேண்டும்‌. அதாவது, நமது நாட்டில்‌ இக்‌ குலத்தாரில்‌ சிலர்‌ மேளம்‌ வாசிக்கும்‌ தொழிலை ஜீவனமாய்க்‌ கொண்டிருப்பதால்‌ ஒரு குறைவான பெயர்‌ இருந்து வருகிறது. இத்‌ தொழில்‌ காரணமாகவே ஆண்கள்‌ சுயமரியா தையைக்‌ கவனிக்காமல்‌ தங்களுக்குள்ளாகவே சிலர்‌ தங்களைத்‌ தாழ்ந்த வர்களாகக்‌ கருதிக்‌ கொண்டு மிகவும்‌ ஒடுங்கியும்‌ பதுங்கியும்‌ நடந்து கொள்கிறார்கள்‌ என்றும்‌, மணி ஒன்றுக்கு 100 ரூ. பெறக்கூடிய நாகசுர வித்து வானும்‌ சபைகளில்‌ சங்கீத ஞானமே இல்லாத ஒரு தற்குறியைக்‌ கண்டாலும்‌ அனுமார்‌ போல்‌ ஒடுங்குவதும்‌ கும்பிடுவதும்‌ தனது குலதர்மம்‌ என்று எண்ணுகிறார்‌ என்றும்‌, தேவக்‌ கோட்டையில்‌ ஒரு ஊர்வலத்தில்‌ 350 ரூ. பேசி நாகசுரம்‌ வாசிக்க வந்த ஒரு நாகசுரக்காரர்‌ வேர்வையைத்‌ துடைக்க தனது தோளின்‌ மேல்‌ ஒரு சிறு துணியை போட்டுக்கொண்டு வாசித்ததில்‌, அந்த மேல்‌ துணியை எடுக்காமல்‌ வாசிக்கக்‌ கூடாது என்று அவ்வூரில்‌ சிலர்‌ சொன்‌ னார்கள்‌ என்றும்‌, சங்கீதம்‌ கேழ்க்க 350 ரூபாயும்‌ 2-வது வகுப்பு படியும்‌ கொடுத்த ஒரு வித்துவானை தோளில்‌ துண்டு போட்டுக்கொண்டுகூட வாசிக்கக்‌ கூடாது என்று சொல்லும்போது நமது பிரபுக்கள்‌ சங்கீதத்தை எவ்வ ளவு மதிக்கிறார்கள்‌ என்பது தெரிகிறதென்றும்‌, ஆதலால்‌ அத்தொழிலை விட்டுவிட வேண்டுமென்றும்‌, சங்கீதத்திற்கு யோக்கியதை வரும்போது பார்த்துக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌, நமது ஜனங்களுக்கு இன்னமும்‌ பகுத்தறிவு கிடையாது என்றும்‌, உதாரணமாக ஒரு பிராமணன்‌ ஒத்து ஊதினாலும்‌, ஒரு தாசிக்கு பின்னின்று கொண்டு ஆர்மோனியம்‌ மீட்டினாலும்‌, நட்டுவாங்கம்‌ செய்தாலும்‌, அத்தாசிக்கு ஒரு நாயகனைப்‌ பிடித்து கொடுப்பதற்கு தூது குடி அரசு - 1926 () 26 நடந்தாலும்‌ அவனைப்‌ பார்த்து சுவாமி என்றுதான்‌ கூப்பிடுகிறார்கள்‌. தூதுக்‌ கடிதம்‌ வாங்கும்‌ போதே எழுந்து நின்றுதான்‌ வாங்குகிறார்கள்‌ என்றும்‌, ஆதலால்‌ இவ்வறியாமை நிலைமையிலுள்ள ஜனங்கள்‌ முன்னிலையில்‌ வித்துவானாயிருந்து மேளக்காரன்‌ என்கிற பெயர்‌ வாங்குவதைவிட வீதியில்‌ கல்‌ உடைத்தோ, தெருக்‌ கூட்டியோ முதலி யாராய்‌ வாழ்வது மேலென்றும்‌, அல்லாமலும்‌ சுபாவத்திலேயே நமக்கு ஆண்மைத்தனம்‌ வேண்டுமென்றும்‌, அனாவசியமாய்‌ நாம்‌ தாழ்ந்தவர்கள்‌ என்று எண்ணிக்‌ கொண்டு ஒருவரைக்‌ கும்பிடக்‌ கூடாது என்றும்‌, பிராமணர்கள்‌ முதலியவர்கள்‌ நமக்கு மேலான ஜாதி என்று எண்ணுவதே பெரிய நரகமென்றும்‌, பிராமணனுக்குப்‌ பணம்‌ கொடுப்பதால்‌ நமது பாவம்‌ போய்விடு மென்பதும்‌, பிராமணனுக்குப்‌ பணம்‌ கொடுப்பதால்‌ தமது பெற்றோர்கள்‌ மோக்ஷத்திற்குப்‌ போவார்களென்பதும்‌ அவர்கள்‌ படுக்கை விரித்தால்தான்‌ நல்ல சந்தானம்‌ உண்டாகுமென்பதுமாகிய எண்ணங்கள்தான்‌ நமது சுயமரியாதையைக்‌ கெடுத்து விடுகிறதென்றும்‌, அதோடு நமக்குத்‌ தாழ்ந்தவர்கள்‌ இருக்கிறார்கள்‌ என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம்‌ என்றும்‌, நமக்குக்‌ கீழ்‌ ஒருவரில்லை என்று உண்மையாய்‌ நினைப்போமானால்‌ நமக்கு மேலாக ஒருவன்‌ இருக்‌ கவே மாட்டான்‌ என்றும்‌, நாம்‌ அவற்றைக்‌ கவனியாமல்‌ நமக்கு உதவி செய்பவர்களையும்‌, பல வழிகளிலும்‌ நன்மை செய்கிறவர்களையும்‌, நம்மை பரிசுத்தமான காற்றை சுவாசிக்கும்படி செய்பவர்களையும்‌, சாதுக்களையும்‌ நமக்குக்‌ கீழானவர்கள்‌ என்று எண்ணின குற்றத்தின்‌ கரும பலன்‌ தத்துவத்தில்‌ நம்மைவிட ஒரு விதத்திலும்‌ மேலான யோக்கியரல்லாதவர்களும்‌, கீழ்‌ மக்க ளும்‌ நமது இரத்தத்தை உறிஞ்சியே ஜீவனம்‌ செய்ய வேண்டியவர்களும்‌, நமக்கு மேலான ஜாதியாரென்றும்‌ அவர்களை வணங்க வேண்டியது நமது மோக்ஷ சாதனமென்றும்‌ நினைக்கும்படி செய்து விட்டது. இக்குறைகள்‌ நீங்கின நிலைதான்‌ சமத்துவமென்பதும்‌, சமூக முன்னேற்றமென்பதும்‌ என்பதாக நான்‌ நினைக்கிறேன்‌. குறிப்பு :27. 28121925 இருநாள்‌ அவிநாசியில்‌ நடைபெற்ற கோவை மாவட்ட செங்குந்தர்‌ மாநாட்டில்‌ சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 10.01.1926 27 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தமிழ்‌ மாகாண 6கா-வம்சத்திணரின்‌ ( கோவில்‌ பண்டாரங்கள்‌ ) காண்டாவது மகாநா௫ நாளது தை மீ£11, 12 (1926 ஜனவரி 24,25) தேதி ஞாயிறு திங்கள்கிழமைகளில்‌ கொடுமுடி மகுடேஸ்வர சுவாமி கோவிலுக்‌ குப்‌ பக்கத்தில்‌ உள்ள சத்திரத்தில்‌ காரமடை ஸ்ரீமான்‌!!.கருப்பண்ண பண்டாரம்‌ அவர்கள்‌ தலைமையின்‌ கீழ்‌ தமிழ்‌ மாகாண கோ - வம்சத்தினரின்‌ 2-வது மகாநாடு நடைபெறும்‌:- அதே சந்தர்ப்பங்களில்‌ ஸ்ரீமதி வக்ஷிமி அம்மாள்‌ அக்ராசனத்‌ தின்‌ கீழ்‌ ஸ்ரீகள்மகாநாடும்‌, ஸ்ரீ கணபதி அக்ராசனத்தின்‌ கீழ்‌ மாணவர்‌ கள்‌ மகாநாடும்‌ நடைபெறும்‌. பலவிடங்களிலிருந்தும்‌ அநேக பிரபலஸ்தர்கள்‌ விஜயம்‌ செய்வதாய்‌ வாக்களித்திருக்கிறார்‌ கள்‌. ஆதலால்‌ எல்லா குலாபிமானி களும்‌ இதர சமூக கனவான்களும்‌ அவசியம்‌ விஜயம்‌ செய்ய வேண்டுமாய்‌ வேண்டப்படுகிறார்கள்‌:- - கொடுமுடி வரவேற்புக்‌ கமிட்டியார்‌. நமது குறிப்பு: - நமது தாலூக்காவில்‌ உள்ள சைவப்‌ பண்டாரங்களின்‌ முக்கிய கூட்ட மிதுவாகையால்‌, இத்தாலூக்கா வேளாள சமூகத்தார்‌ அனைவரும்‌ விஜயம்‌ செய்து அவர்கள்‌ முன்னேற்றத்துக்கான காரியங்களை அறிவுறுத்தி அச்‌ சமூகம்‌ முன்னேற்றமடைய உதவி செய்ய வேண்டியது முக்கியமான கடமை. ஏனெனில்‌, அவர்கள்தான்‌ பெரும்பாலும்‌ நமது கிராம தேவதைகள்‌ முதலிய கோவில்களில்‌ பூஜை செய்பவர்களாகவும்‌ தவசிப்பிள்ளைகளாகவும்‌ புஷ்பம்‌ தொடுப்பவர்களாகவுமிருப்பதால்‌ அவசியம்‌ அவர்கள்‌ முன்னேற்றத்தையும்‌ ஒழுக்க வழக்கங்களையும்‌ சீர்திருத்தம்‌ செய்ய வேண்டியது குடிமக்கள்‌ கடமையாகும்‌.. ( பத்திராதிபர்‌ ) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 10.01.1926 குடி அரசு - 1926 (1) 28 மஙீமாண்‌ R. விரய்யண்‌ கிராமப்‌ பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம்‌ தீண்டாதார்‌ வகுப்புப்‌ பிரதிநிதியாய்‌ சர்க்காரால்‌ நியமிக்கப்‌ பட்ட சட்ட சபை மெம்பரான ஸ்ரீமான்‌ ஆர்‌.வீரய்யன்‌ அவர்கள்‌ சென்னை கிராமப்‌ பஞ்‌ சாயத்து சட்டத்தில்‌ ஓரு திருத்தம்‌ கொண்டு வரப்‌ போவதாக சட்டசபைக்கு ஒரு முன்னறிக்கை அனுப்பியிருக்‌ கிறார்‌. அதாவது, அச்சட்டத்தின்‌ ஒரு பாகத்தில்‌ கிராமப்‌ பஞ்சாயத்து மெம்பர்கள்‌ ஸ்தானத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பாரிலிருந்து சில பிரதிநிதிகளை சர்க்கார்நியமிக்க வேண்டும்‌ என்கிற வாக்கியத்தைச்‌ சேர்த்துக்‌ கொள்ளும்படி அதில்‌ எழுதியிருக்கிறார்‌. அதற்கு அவர்‌ காரணம்‌ சொல்லுகையில்‌ தேர்தல்கள்‌ மூலமாக தீண்டாதார்‌ என்போர்கள்‌ ஸ்தானம்‌ பெற முடியாமலிருக்கிறபடியால்‌ முனிசிபாலிட்டி, ஜில்லா, தாலூகா போர்டுகள்‌ போல்‌ கிராமப்‌ பஞ்சா யத்து சபைக்கும்‌ தீண்டாதாருக்கும்‌ சர்க்கார்‌ நியமனம்‌ கிடைத்தால்‌ அல்லாமல்‌ ஸ்தானம்‌ பெற முடியா தாதலால்‌ சட்டத்தில்‌ இவ்வித திருத்தம்‌ இருக்க வேண்டியது உடன்‌ அவசிய மாகிறது என்று எழுதுகிறார்‌. நமது குறிப்பு:- இவற்றை நாம்‌ முழு மனதுடன்‌ ஆதரிக்கிறோம்‌. புருஷன்‌ பெண்‌: ஜாதியாய்‌ வாழுகின்றவர்களே புருஷன்‌ சரியானபடி பெண்‌ ஜாதியை ஆதரிக்‌ காவிட்டால்‌ சர்க்காருக்கு போவதையும்‌, தகப்பன்‌ பிள்ளை சர்க்காருக்கு போவதையும்‌, அண்ணன்‌ தம்பி சர்க்காருக்கு போவதையும்‌ நாம்‌ தினம்‌ அனுபவத்தில்‌ பார்க்கிறோம்‌. அதற்காக வேண்டித்தான்‌ , மனிதர்களுக்கு சர்க்கார்‌ என்பது கடவு ளால்‌ அளிக்கப்பட்டிருக்கிறது. நமது துர்‌அதிர்ஷ்டவசமாய்‌ தற்காலம்‌ நமக்கு இருக்கும்‌ சர்க்கார்‌ நமது நன்மைகளைவிட தங்கள்‌ நன்மையே பிரதானமாகக்‌ கருதுகிற ஒரு வியாபாரக்‌ கூட்டத்தாராய்‌ போய்விட்டபடியால்‌, தொட்டதற்‌ கெல்லாம்‌ இம்மாதிரி சர்க்காரிடம்‌ போகலாமா என்கிற ஒரு ஞானம்‌ சிற்சில சமயங்களில்‌ தோன்றுகிறது. ஆனாலும்‌ மகாத்மாவே இனி கொஞ்ச காலத்‌ திற்கு தம்மால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது என்று அலுத்துப்போன பிறகு 29 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தற்கால நிலைமையில்‌ ஏழைகளுக்கும்‌, திக்கற்றவர்களுக்கும்‌, பிற்பட்டவர்‌: களுக்கும்‌, பலக்‌ குறைவுள்ளவர்களுக்கும்‌, தாழ்த்தப்பட்டவர்களுக்கும்‌ சர்க்கார்‌ தவிர வேறு கதி என்ன இருக்கிறது? ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌. போன்றவர்களுக்கு தற்சமயம்‌ சர்க்கார்‌ தயவு வேண்டியதில்லை.ஏனென்றால்‌ கொஞ்ச நாளைக்கு முன்பாக சர்க்காருக்கு அனுகூலமாய்‌ இருந்து, மகாத்மா காந்தியைக்‌ கூட ஜெயிலுக்கு பிடிக்கும்படி யோசனை சொல்லி, சர்க்கார்‌ தயவு பெற்று உயர்‌ பதவியும்‌, உத்தியோகமும்‌, பணமும்‌, ஆள்களும்‌ நிறைய சம்பாதித்துக்‌ கொண்டாய்‌ விட்டது. தங்கள்‌ பதவி குறையாமல்‌ இருப்பதற்கு அநுகூலமாய்‌, தீண்டாதார்‌ முன்னேற்றமடைய கேள்க்கும்‌ வகுப்புவாரி உரிமையை எதிர்க்க ஸ்ரீமான்‌ ஐயவேலு போன்றவர்களையும்‌, கிருஸ்தவர்கள்‌ வகுப்பு வாரி உரிமைக்‌ கேட்பதை எதிர்க்க ஸ்ரீமான்‌ குழந்தை போன்றவர்‌. களையும்‌,மகமதியர்‌ வகுப்புவாரி உரிமைகள்‌ கேட்பதை எதிர்க்க ஜனாப்கள்‌ ஷாபி மகமது, அமீத்கான்‌ போன்றவர்களையும்‌, பிராமணரல்லாத இந்துக்கள்‌. வகுப்புவாரி உரிமைக்‌ கேட்பதை எதிர்க்க ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ போன்றவர்களையும்‌ அடைந்திருப்பதால்‌ அவருக்குக்‌ கவலை யில்லை. ஆனாலும்‌, இந்நான்கு வகுப்பார்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ வகுப்புக்‌ கென்று கூட்டும்‌ வகுப்பு மகாநாடுகளில்‌ தங்கள்‌ சுதந்திரங்களைக்‌ காக்க சர்க்கார்‌ தயவைத்தான்‌ நாடுகிறார்கள்‌. தீண்டாதார்‌ வகுப்பு மகாநாட்டிலும்‌, மகமதியர்கள்‌ மகாநாட்டிலும்‌, மற்றும்‌ பிராமணரல்லாதார்‌ மகாநாட்டிலும்‌ உரிமை தனித்‌ தேர்தல்‌ மூலமானா லும்‌, ஒதுக்கி வைப்பதன்‌ மூலமானாலும்‌ பெறவேண்டுமென்று கேட்பதெல்‌ லாம்‌ சர்க்காரிடம்தானே ஒழிய வேறு ஒருவரையுமல்ல. வகுப்புவாரிப்‌ பிரதி நிதித்துவம்‌ வேண்டும்‌, வேண்டாம்‌ என்பதும்‌ அந்தந்த வகுப்பு மகாநாடு களுக்குத்தான்‌ பாத்தியப்பட்டதே தவிர, ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரால்‌ சுவாதீனப்படுத்திக்கொண்ட தனிப்பட்ட ஒரு சிலர்களுக்கு அல்ல.ஆதலால்‌, ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ கேட்கும்‌ உரிமை மிகவும்‌ நியாயமானதென்றும்‌, அதுதான்‌ அவ்வகுப்பாரின்‌ அபிப்ராயமே தவிர காங்கிரஸிலிருக்கும்‌ ஸ்ரீமான்‌ ஜய வேலு போன்றவர்கள்‌ அபிப்ராயம்‌ அவ்வகுப்பார்‌ உடையது அல்லவென்‌ றும்‌, ஆதலால்‌ சட்டசபையில்‌ இருக்கும்‌ பிராமணரல்லாதார்‌ யாவரும்‌ இதை ஆதரித்து அவ்‌ வகுப்புக்குண்டான நியாயமான உரிமையை அளிக்க தாங்‌ கள்‌ தயாராயிருப்பதாகவும்‌ தெரிவிக்க வேண்டுமாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளு கிறோம்‌. இம்மாதிரி நாம்‌ ஒவ்வொரு வகுப்பாரின்‌ உரிமைகளையும்‌ அவர்‌ களுக்கு அளித்து எல்லோரும்‌ சமம்‌ என்கிற தத்துவத்தை முதலில்‌ நிலை நிறுத்தி விட்டோமானால்‌, நமது சர்க்கார்‌ கூட தமது வியாபாரத்‌ தந்திரத்தை விட்டு விட்டு யோக்கியமாய்‌ நடந்து கொண்டாலொழிய இந்தியாவில்‌ வாழ முடியாது என்று நினைக்கும்படியான நிலைமையை ஏற்படுத்தி விடலாம்‌. (ப-ர்‌) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 10.01.1926 குடி அரசு - 1926 M 20 காண்யடூர்‌ தேசீய காங்கிரஸ்‌ தீர்மானம்‌ கான்பூர்‌ காங்கிரஸ்‌ தீர்மானத்தைப்‌ பற்றி தேசீயப்‌ பத்திரிகைகளென்று தங்களைச்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ பத்திரிகைகளெல்லாம்‌ “கங்காதரா மாண்டாயோ! கங்காதரா மாண்டாயோ!” என்கின்ற கதைபோல்‌ ஒரே மூச்சாக கொஞ்சமும்‌ விசாரிக்காமலும்‌ யோசனையின்றியும்‌ “நல்ல தீர்மானம்‌! நல்ல தீர்மானம்‌!” என்றே எழுதிக்கொண்டு வருகின்றன. பொது ஜனங்களும்‌ இவற்றைப்‌ பற்றி சரிவரச்‌ சிந்திக்காமல்‌ பத்திரிகைகளை நம்பியே ஏமாந்து போகிறார்கள்‌. காங்கிரஸ்‌ தீர்மானத்தின்‌ முக்கிய தத்துவங்களெல்லாம்‌ இரண்டு, மூன்று விஷயங்களிலேயே அடங்கிப்போயிருக்கிறது.அதாவது, சட்டசபைகளைக்‌ காங்கிரஸ்‌ கைப்பற்ற வேண்டியது; அதற்காகக்‌ காங்கிரஸ்‌ பணத்தை உபயோகப்படுத்திக்‌ கொள்ளவேண்டியது. சட்ட மறுப்புத்தான்‌ நல்ல ஆய்தம்‌; ஆனால்‌, தேசம்‌ அதற்கு லாயக்கில்லை. நிர்மாணத்‌ திட்டத்தைப்‌ பொது ஜனங்களையே நிறைவேற்றி வைக்கச்‌ சொல்லிவிட வேண்டியது.சர்க்காரை இறுதியாகச்‌ சில விஷயங்களைக்‌ கேட்பது, அவர்கள்‌ ஒப்புக்‌ கொள்ளாவிட்டால்‌ சட்டசபைகளை விட்டு விலகிவிடுவதுமான விஷயங்கள்‌ தீர்மானிக்கப்‌ பட்டிருக்கிறது. சட்டசபை செல்லும்‌ நோக்கத்துடன்‌ ஸ்ரீமான்‌ தாஸ்‌ தலைமையாக யிருந்து, காங்கிரஸுக்கு விரோதமான பிரசாரம்‌ செய்து வரும்‌ காலத்திலேயே சட்டசபை பிரவேசம்‌ தேசீய விடுதலையை அளிக்காது, தேசீய ஒற்றுமை யைக்‌ குலைக்கும்‌ என்பதாக நாம்‌ ஆட்சேபித்த காலத்தில்‌ பல காரணங்கள்‌. சொன்னோம்‌.அதாவது, பல காரணங்களால்‌ சட்டசபையில்‌ நமக்கு யோக்கிய மான மெஜாரிட்டி கிடைக்காதென்றும்‌, ஒரு சமயம்‌ கிடைத்த போதிலும்‌, அதனால்‌ தேசத்திற்கு பிரயோஜனத்தை அளிக்கக்கூடிய மாதிரியில்‌ ஒரு வேலையும்‌ செய்து கொள்ள முடியாதென்றும்‌ சொல்லிவந்தோம்‌. சென்ற தேர்‌. தலில்‌ சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ சட்டசபைக்கு நின்றார்கள்‌; சில ஸ்தானங்க ளையும்‌ கைப்பற்றினார்கள்‌; சிற்சில மாகாணங்களில்‌ “மெஜாரிட்டி” அடைந்‌ தார்கள்‌; தங்களுடைய தீர்மானங்களையும்‌ நிறைவேற்றினார்கள்‌. இதன்‌ மூலம்‌ நாட்டிற்கு என்ன பலன்‌ உண்டாயிற்று? அலக்ஷியம்‌ செய்யப்பட்டுக்‌ கிடந்த பதவிகளில்‌ மோகம்‌ உண்டாகவும்‌, ஒருவருக்கொருவர்‌ அவநம்பிக்கை உண்டாகவும்‌,சர்க்காராரையே பயந்து நடுங்கும்படியாய்ச்‌ செய்த ஒத்துழை யாமைத்‌ தத்துவம்‌ ஒடுங்கவும்‌, மகாத்மா காந்தியும்‌ மற்றும்‌ பல தீவிர தேசத்‌ 31 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தொண்டர்களும்‌, காங்கிரசில்‌ ஒரு வேலையும்‌ செய்ய முடியாமல்‌ காங்கிரசை விட்டு விலகியிருக்க வேண்டியதுமான நிலைமையுமேயல்லாமல்‌ வேறென்ன செய்ய முடிந்தது? சட்டசபையில்‌ ஒத்துழையாமை செய்வதென்றும்‌, முட்டுக்கட்டை போடுவதென்றும்‌ சொல்லிப்போன சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மிதவாதிகளோடு சேர்ந்துக்‌ கொண்டு சர்க்காரை சீர்திருத்தம்‌ கேட்கவும்‌ அதைப்பற்றி விசாரிப்ப தற்காக ஒரு கூட்டத்தையும்‌, ஒரு கமிஷனையும்‌ நியமிக்கும்படி சர்க்காரைக்‌ கேட்கவும்‌, சர்க்காரின்‌ ராஜிய பாரத்திற்கு அநுகூலமாக அவர்களுக்கு யோசனை சொல்வதற்கு அவர்களால்‌ ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகளில்‌ அங்‌ கம்‌ பெறவும்‌, இந்திய சட்டசபையை ஒழுங்காய்‌ நடத்திக்‌ கொடுப்பதற்காக சர்க்காரால்‌ சம்பளம்‌ கொடுக்கப்பட்ட உத்தியோகமாகிய அக்ராசனாதிபதி பதவிகளை ஏற்றுக்கொண்டு சர்க்கார்‌ சட்டசபையை ஒழுங்காய்‌ நடத்திக்‌ கொடுக்கவும்‌ மாத்திரம்‌ முடிந்ததேயல்லாமல்‌ வேறு என்ன காரியம்‌ செய்ய முடிந்தது? மாகாண சட்டசபைகளிலும்‌ கல்கத்தா, மத்திய மாகாணம்‌ ஆகிய இரண்டிடங்களில்‌ மெஜாரிட்டியும்‌ பெற்றார்கள்‌. மந்திரிகள்‌ சம்பளத்தை நிராகரித்தார்கள்‌; குறைத்தார்கள்‌: மந்திரிகளும்‌ எடுபட்டார்கள்‌, தங்களுக்கு அநுகூலமான பல தீர்மானங்களையும்‌ செய்தார்கள்‌. இவ்வளவும்‌ செய்து என்ன பயன்‌? ஒரு மயிர்க்‌ காலளவு சர்க்காரின்‌ அக்கிரமமான ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததா? வங்காளத்தில்‌ நிராகரித்த சம்பளத்தை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ தாங்களே மறுபடியும்‌ அநுமதிக்க நேர்ந்தது. மத்திய மாகாணத்தில்‌ குறைக்கப்பட்ட மந்திரிகளின்‌ சம்பளத்தை மறுபடியும்‌ சுயராஜ்யக்‌ கட்சியா ராலேயே உயர்த்த நேர்ந்தது. மற்ற மாகாணங்களைப்‌ பற்றியோ வென்றால்‌ பிராமணர்‌-பிராமணரல்லாதார்‌ சண்டையும்‌ இந்து - முஸ்லீம்‌ சண்டையும்‌ பலப்பட்டது. ஓர்‌ காலத்தில்‌ கதர்மயமாயிருந்த மகமதியர்கள்‌ இன்றையதினம்‌. கதரென்றால்‌, அது ஓர்‌ மத விரோதமான சின்னமென்று கருதுகிறார்கள்‌. காங்கிரஸ்‌ தங்கள்‌ நன்மைக்கு மிகவும்‌ ஆதாரமானதென்று நினைத்த பிராமணரல்லாதார்‌ இன்றையத்தினம்‌ காங்கிரஸ்‌, பிராமணர்‌ ஆதிக்கங்‌ களுக்கு அநுகூலமானதென்று, பெரும்பான்மையான பிராமணரல்லாதார்‌. நினைக்கிறார்கள்‌.மங்கிப்‌ புகைந்துக்‌ கொண்டிருந்த ஜஸ்டிஸ்‌ கட்சி துலக்கம்‌ செய்யப்பட்டு இந்தியா முழுமையுமே பற்றிக்‌ கொண்டது. ஒத்துழையாமை யின்‌ பொருட்டு உடல்‌, பொருள்‌, ஆவி மூன்றையும்‌ தியாகம்‌ செய்யத்‌ தயாராயிருந்த தொண்டர்களில்‌ பெரும்பாலோர்‌, இன்றைய தினம்‌ வயிற்றுக்‌ கொடுமைக்காக தங்கள்‌ மனச்சாட்சிக்கு விரோதமாக கூலிக்கு எலெக்ஷன்‌ வேலை செய்ய நேர்ந்து விட்டது. இவ்வளவு காரியங்களைச்‌ சட்டசபைப்‌ பிரவேஷத்தின்‌ மூலமாக நன்றாய்‌ அறிந்துவிட்டு, மறுபடியும்‌ சட்டசபைக்குக்‌ காங்கிரஸ்காரர்கள்‌ போக வேண்டும்‌ என்றும்‌, காங்கிரஸ்‌ பணம்‌ அதற்காக செலவு பண்ணவேண்டும்‌ என்றும்‌, காங்கிரஸ்‌ ஸ்தாபனங்கள்‌ அதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும்‌ காங்கிரஸ்‌ தீர்மானிக்குமானால்‌ தேசத்திலுள்ளவர்‌. களுக்குக்‌ காங்கிரஸினிடம்‌ எப்படி மதிப்பு வரும்‌? இதே மாதிரி அடுத்த குடி அரசு - 1926 () 32 வருடமும்‌ தேர்தல்களில்‌ சட்டசபைக்கு நின்று ஸ்தானங்கள்‌ பெற்று, இன்னும்‌ கொஞ்சம்‌ அதிகமாகவே ஜெயம்‌ பெறுவதாகவே வைத்துக்‌ கொண்டாலும்‌, சட்டசபைகளில்‌ இதை விட வேறு வேலை என்ன செய்யக்கூடும்‌? இந்த வேலையையே திரும்பத்திரும்பச்‌ செய்துக்கொண்டு வருவதில்‌ தேசத்துக்கு என்ன பலன்‌ விளையும்‌? நிர்மாணத்‌ திட்டத்தைப்‌ பற்றிக்‌ கொஞ்சங்கூட கவலையில்லாத மாதிரியில்‌ காங்கிரஸ்‌ ஓர்‌ தீர்மானம்‌ செய்திருக்கிறது. அதாவது, நிர்மாணத்‌ திட்டத்தை ஜனங்களே நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று தீர்மானித்து இருக்கிறது. ஜனங்கள்‌ நிர்மாணத்‌ திட்டத்தை நிறைவேற்றி வைப்பதற்கு காங்கிரஸ்‌ எதற்காக யிருக்க வேண்டும்‌? காங்கிரஸ்‌ பணமெல்லாம்‌ சட்டசபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட வேண்டும்‌; காங்கிரஸ்காரர்கள்‌ இவ்வருஷம்‌ பூராவும்‌ எலெக்‌ஷன்‌ வேலையாய்‌ இருக்க வேண்டும்‌; நிர்மாணத்‌ திட்டங்களை ஜனங்கள்‌ பார்த்துக்கொள்ள வேண்டும்‌ என்று தீர்மானிப்பதில்‌ எவ்வளவு மோசமிருக்கிறதென்பதைப்‌ பொது ஜனங்கள்‌ நன்றாய்‌ அறிய வேண்டும்‌. காங்கிரஸ்‌ பிரசாரமில்லாமலும்‌, காங்கிரஸ்‌ தொண்டர்களின்‌ கட்டுப்பாடான வேலையில்லாமலும்‌ நிர்மாணத்‌ திட்டம்‌ எப்படி நிறைவேறும்‌? கதர்‌ வேலை ஒன்று மாத்திரம்‌ மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டார்‌. மற்றபடி மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, பல வகுப்பு ஒற்றுமை முதலிய காரியங்கள்‌ தேசத்தில்‌ ஏற்படாமல்‌ சுயராஜ்யம்‌ எப்படி ஏற்படும்‌? இவைகளை எல்லாம்‌ புறக்கணித்துவிட்டு சட்டசபைக்குப்‌ போவ தை மாத்திரம்‌ காங்கிரஸின்‌ நேரான வேலையாய்‌ வைத்துக்‌ கொள்ளுவதி னால்‌ படித்தவர்களுக்குச்‌ சில வேலையும்‌, பதவியும்‌, சம்பளமும்‌ கிடைக்கு மேயல்லாமல்‌ ஏழை ஜனங்களுக்கு - பொது ஜனங்களுக்கு - தொழிலாள ருக்கு என்ன பலன்‌ உண்டாகும்‌? ஆனதால்‌ தேச நன்மைக்கு இம்மாதிரி காங்கிரஸை எதிர்பார்ப்பது போல்‌ பயித்தியக்காரத்தனமான காரியம்‌ வேறொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயம்‌. இனி காங்கிரஸின்‌ யோக்கியதை பழய காலப்படி, உத்தியோகங்களை உற்பத்தி பண்ணவும்‌, கோர்ட்டுகளை உற்பத்தி பண்ணவும்‌, அதற்கேற்ற படிப்பான பள்ளிக்கூடங்களை உற்பத்தி பண்ணவும்‌ ஆன காரியத்தைச்‌ செய்யக்‌ கூடியதாயும்‌, காங்கிரஸ்காரர்கள்‌ இதற்காக சட்டசபை முதலிய தேர்த லில்‌ ஜெயம்‌ பெற வேண்டியதாயும்‌ இருக்குமேயல்லாமல்‌ வேறொரு காரியத்‌ திற்கும்‌ உபயோகப்பட முடியாது. இக்காரியங்களால்‌ குடியானவர்களுக்கு இனியும்‌ வரி அதிகமாக உயரப்‌ போகிறது. தொழிலாளிகளுக்கு இனியும்‌ வேலையற்று தரித்திரம்‌ அதிகமாகப்‌ போகிறது. கோர்ட்டுகளுக்கும்‌, வக்கீல்‌ களுக்கும்‌ வேலை ஏற்படுவதற்காக வேண்டி மதுபானத்தை அதிகப்படுத்த வேண்டியதாய்ப்‌ போகிறது. பிராமணர்கள்‌ தங்களுடைய செல்வாக்கினாலும்‌, சர்க்காருக்கு இரகசியமாய்‌ நன்மை செய்வதன்‌ மூலமாகவும்‌ தங்களுடைய ஆதிக்கத்தைப்‌ பலப்படுத்திக்‌ கொள்ள வழி ஏற்படப்‌ போகிறது. இதன்‌ பலனாய்‌ தீண்டாமையும்‌, பிறவியில்‌ உயர்வு தாழ்வும்‌ நிலைத்து நிற்கப்‌ போ கிறது. இம்மாதிரியான பலன்களை தரத்தக்கதான காங்கிரஸ்‌ தீர்மானங்களை 33 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நல்ல தீர்மானம்‌ என்று சொல்லிக்கொண்டு பத்திரிகைகளால்‌ பிழைக்க வேண்டியவர்களும்‌ ராஜீய விஷயங்களின்‌ பேரால்‌ பிழைக்க வேண்டிய வர்களும்‌ பாமர ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்‌. இந்நிலையுள்ள காங்கிரஸி னாலும்‌ அதன்‌ தற்கால தீர்மானங்களினாலும்‌ இந்தியாவிற்கு எந்த வழியி லேயும்‌ உண்மையான சுயராஜ்யம்‌ கிடைக்காது என்பதே நமது முடிவான அபிப்பிராயம்‌. உத்தியோக ஆசையுள்ளவர்கள்‌ போக, காங்கிரஸ்‌ பெயரால்‌ பிழைக்க வேண்டியவர்கள்‌ போக, மற்றவர்கள்‌ தங்கள்‌ சமூக நன்மைக்கும்‌, தேசநன்மைக்கும்‌,நிர்மாணத்‌ திட்டங்களை நிறைவேற்றுவதற்கும்‌, இம்மாதிரி. காங்கிரஸையே நம்பியிராமல்‌ நூற்போர்‌ சங்கம்‌ போல வேறு பல ஸ்தாபனங்‌ களை ஏற்பாடு செய்துக்கொண்டு அதன்‌ மூலமாக உழைக்கவும்‌ சட்டசபை யின்‌ மூலம்‌ இவற்றிற்கு ஏதாவது கொஞ்சம்‌ நஞ்சம்‌ அநுகூலம்‌ தேடிக்‌ கொள்ளலாம்‌ என்கிற மனசாகஷியுள்ளவர்கள்‌ அந்தந்த ஸ்தாபனங்கள்‌ மூல மாகவே சட்டசபைக்குச்‌ செல்வதுமான காரியங்களைச்‌ செய்வதும்தான்‌ தேச முன்னேற்றத்துக்கான காரியமென்பது நமது அபிப்ராயம்‌. மகாத்மா காந்தி அவர்களும்‌ கொஞ்ச காலம்‌ பொறுத்தாவது காங்கிர ஸைத்‌ தமது வழிக்கு அதாவது, தேசத்திற்கு உண்மையான சுயராஜ்யம்‌ சம்பாதித்துக்‌ கொடுப்பதற்கான வழிக்கு மறுபடியும்‌ கொண்டுவரக்‌ கூடு மென்று நினைப்பதும்‌, அதுவரையில்‌ மேற்கண்ட காரியங்களை அடியோடு விட்டு விடாமல்‌ தனி இயக்கப்‌ பொறுப்பிலாவது செய்துக்கொண்டு வர: வேண்டும்‌ என்பதும்‌ நமது அபிப்ராயத்துக்கு ஆதரவளிப்பதெனக்‌ கருதுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 10.01.1926 குடி அரசு - 1926 () 34 சீப்பை எடுத்து ஒனித்து வைத்துக்‌ கொண்டதிணாைய கலியாணம்‌ நிண்றா போகுமா? நமது “குடி அரசு” பத்திரிகைக்கு விரோதமாக சில பிராமணர்களும்‌, பிராமணரல்லாத சில வாரப்‌ பத்திராதிபர்களும்‌, வயிற்றுக்கில்லாமல்‌ கஷ்டப்‌ படும்‌ சில காங்கிரஸ்‌ தொண்டர்களென்போருக்குப்‌ பணம்‌ கொடுத்தும்‌. தங்களுடைய வாரப்‌ பத்திரிகைகளை இலவசமாக அனுப்பிக்‌ கொடுத்தும்‌. ஆட்களை ஏவிவிட்டு நாம்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியாரிடம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டு. பத்திரிகை நடத்துவதாகவும்‌ ஜெயிலுக்குப்‌ பயந்து கொண்டும்‌ பதவிகளுக்‌ காசைப்பட்டும்‌ சர்க்காருக்கனுகூலமாய்த்‌ திரும்பி விட்டதாகவும்‌, இன்னும்‌ பல இழிவான காரணங்களையும்‌ சொல்லி அதனால்‌ “குடிஅரசை” வாங்கி வாசிக்கக்‌ கூடாதென்றும்‌ ஆங்காங்கு திண்ணைப்‌ பிரசாரங்கள்‌ நடத்திவருவ தாய்‌ அடிக்கடி நமக்குத்‌ தகவல்கள்‌ எட்டிக்கொண்டே வருகின்றன. இவற்‌ றைப்‌ பற்றி நமது உப பத்திராதிபர்‌ இரண்டொரு இடங்களில்‌ நேரிலும்‌ பார்த்‌ திருக்கிறார்‌. “குடிஅரசு”க்கும்‌ அதன்‌ பத்திராதிபருக்கும்‌ செல்வாக்கு குறைத்தும்‌ போவதினாலேயே பிராமணரல்லாதாருடைய முன்னேற்றத்தை அடக்கி விடலாமென்று நினைப்பது “சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக்‌ கொண்டால்‌ கலியாணத்தையே நிறுத்திவிடலாம்‌” என்று நினைக்கிற அறி வீனத்தைப்‌ போற்தான்‌ முடியும்‌. இவ்வித விஷமப்‌ பிரசாரகர்கள்‌ இரண்‌ டொரு பத்திரிக்கையை திருப்பி அநுப்பிவிடச்‌ செய்தபோதிலும்‌, பத்திரிகை யின்‌ வளர்ச்சி நாம்‌ எதிர்பார்க்கிற அளவுக்கு மேல்‌ வளர்ந்து கொண்டு தான்‌ போகிறது. அது எப்படியானாலும்‌ நமக்கு கவலையில்லை. தேச விடுதலை யின்‌ பொருட்டும்‌, பிராமணரல்லாதார்‌ முன்னேற்றத்தின்‌ பொருட்டும்‌ நமது கருத்தை வெளியிட பத்திரிகையை வைத்துக்‌ கொண்டிருக்கிறோமே தவிர, பத்திரிகை நடத்தி அதனால்‌ பணம்‌ சம்பாதிப்பதற்காக அதை நாம்‌ வைத்துக்‌ கொண்டிருக்கவில்லை யென்பதை மாத்திரம்‌ அவர்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - அறிக்கை - 10.011926 35 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிராமணர்கள்‌ கூழ்ச்சி “ஸ்ரீமான்‌. சத்தியமூர்த்தியிண்‌ தண்ணை அறியா வெய்யுறைகள்‌” ஸ்ரீமான்‌ 5.சத்தியமூர்த்தி அவர்களின்‌ ராஜீய வாதத்தைப்‌ பற்றி நாம்‌ அநேக விஷயங்களில்‌ மாறான அபிப்ராயம்‌ கொண்டிருந்தாலும்‌, அவருக்கு ஆவேசம்‌ வரும்‌ காலங்களில்‌ தன்னை அறியாமலே ராஜ தந்திரத்தைக்‌ கையாளாமல்‌ உண்மையைக்‌ கொட்டிவிடுகிறார்‌ என்கிற சந்தோஷம்‌ நமக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. சமீப காலத்திற்கும்‌ இரண்டு சந்தர்ப்பங்களில்‌ இரண்டு உண்மையை தாராளமாய்‌ வெளியிட்டிருக்கிறார்‌. அவற்றில்‌ ஒன்று மிகவும்‌ முக்கியமானது. இது பிராமணரல்லாத பொது ஜனங்கள்‌ நன்றாய்‌ அறிய வேண்டிய விஷயம்‌. அதாவது, காங்கிரஸ்‌ தினம்‌ என்று டிசம்பர்‌. 26- ௨ சென்னை சவுந்தர்ய மகாலில்‌ ஸ்ரீமான்‌. யூராமராவ்‌ அக்ராசனத்தின்‌ கீழ்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி பிராமணரல்லாதார்‌ மகாநாட்டைப்பற்றி பேசுகை யில்‌ ஒரு பெரிய ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார்‌. அது வருமாறு:- “ஸ்ரீமான்‌ யாதவர்‌ இங்கு வந்து வகுப்புத்‌ துவேஷத்தை மூட்டப்‌ பார்த்தார்‌. சட்ட மெம்பர்‌ ( மனு.சர்‌. C.P. ராமசாமி அய்யர்‌) தாம்‌ பிராமண ரென்று பயந்து சட்டப்பிரகாரம்‌ கவனிக்காது விட்டுவிட்டார்‌. இவருக்கு தைரியமில்லாவிடில்‌ தம்‌ பதவியை ராஜீனாமா செய்துவிட்டு ஒரு பிராமணரல்லாதாரைக்‌ கொண்டு ஏன்‌ தக்கது செய்திருக்கக்‌ கூடாது.” (இது 27:12.25 சுதேசமித்திரன்‌ அனுபந்தம்‌ 7-வது பக்கம்‌ 4-வது கலம்‌ 24-வது முதல்‌ 32-வது வரி வரையில்‌) என்று பேசியிருக்கிறார்‌. இவ்வுரை களின்‌ மூலம்‌ பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்‌ பிராமணர்கள்‌ தங்கள்‌ அதிகார பதவியை எப்படி உபயோகப்படுத்திக்‌ கொள்கிறார்கள்‌ என்பதையும்‌, தாங்களாகச்‌ செய்யப்‌ பயப்படுகிற சந்தர்ப்பங்களில்‌ என்ன விதமான வழியைக்‌ கையாளுகிறார்கள்‌ என்கிற விஷயத்தையும்‌, பகிரங்கமாய்‌ எடுத்துக்‌ காட்டி விட்டார்‌. இது கல்பாத்தி விஷயத்தில்‌ தங்கள்‌ அதிகாரம்‌ எப்படி உபயோகப்படுத்தப்பட்டது என்பதும்‌, தாங்கள்‌ கொஞ்சம்‌ பயப்பட வேண்டிய சந்தர்ப்பமாகிய காஞ்சீபுரம்‌ மகாநாட்டில்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‌. வகுப்புவாரித்‌ தீர்மான விஷயத்தில்‌ ஒரு பிராமணரல்லாதாரைக்‌ கொண்டு அத்தீர்மானம்‌ ஒழுங்குக்கு விரோதமானது என்று தள்ளும்படி செய்ததும்‌, குடி அரசு - 1926 () 36 எப்படி தக்கது செய்யப்பட்டது என்பதும்‌ வாசகர்கள்‌ உணர்வதற்குச்‌ சரியான சந்தர்ப்பம்‌ என்று நினைக்கிறோம்‌:- இந்த இரண்டு விஷயத்திலும்‌ இருவகையில்‌ தாங்கள்‌ வெற்றி அடைந்ததை மனதில்‌ வைத்துக்கொண்டே வெற்றிமுரசு அடிக்கும்‌ ஆனந்‌ தத்தில்‌ உண்மையைக்‌ கக்கிவிட்டார்‌. இதைப்பற்றி பிராமணரல்லாதார்‌ சார்‌. பாக நாம்‌ நன்றி செலுத்துகிறோம்‌. ஆணாலும்‌, சட்டமெம்பரையும்‌, காஞ்சீபுரம்‌ மகாநாட்டுத்‌ தலைவரையும்‌ வெளியாக்கி சந்தியில்‌ இழுத்து விட்டுவிட்ட தினால்‌ அவர்களின்‌ மனக்கசப்புக்கு ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி ஆளாகாமல்‌ இருக்க முடியாதே என்பதற்கு நாம்‌ மிகவும்‌ வருந்துகிறோம்‌. தவிர “மதுவிலக்கு விஷயத்தில்‌ பிராமணரல்லாத மந்திரிகள்‌ என்ன சாதித்து விட்டார்கள்‌” என்று அடிக்கடி பிராமணப்‌ பத்திரிகைகளான இந்து, சுதேசமித்திரன்‌, சுயராஜ்யா முதலியவை பாமர ஜனங்களுக்கு பிராமணரல்‌ லாதார்‌ கட்சியின்‌ பேரில்‌ வெறுப்புண்டாகும்படி தங்கள்‌ பத்திரிகையின்‌ மூலம்‌ விஷமப்‌ பிரசாரம்‌ செய்வது யாவரும்‌ அறிந்த விஷயம்‌. போதாக்‌ குறைக்கு காஞ்சீபுரம்‌ மகாநாட்டிற்குப்‌ பிறகு என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியாரும்‌ மதுவிலக்கு என்கிற பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு ஸ்ரீமான்‌ 6. ராஜகோபாலாச்சாரியாரும்‌ புறப்பட்டிருக்கிறார்கள்‌. ஸ்ரீமான்‌ ஆச்சாரியாருக்குப்‌ பதில்‌ சொல்லும்‌ வகையில்‌ மதுவிலக்கைப்‌ பற்றி ஸ்ரீமான்‌ 5. சத்தியமூர்த்தி பேசுகையில்‌ “நாம்‌ சுயராஜ்யம்‌ பெற்றாலொழிய குடியை ஒழிக்க சட்டம்‌ ஏற்படுத்த முடியாது” என்று சொல்லியிருக்கிறார்‌. இதனால்‌ இப்பத்திரிகைகள்‌ பிராமணரல்லாத மந்திரிகள்‌ பேரில்‌ குறைகூறும்‌ கூற்றுக்கு என்ன ஆதாரம்‌ இருக்கிறது என்பதை வாசகர்களே அறிந்து கொள்ளலாம்‌... குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 10.01.1926 37 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 செத்த பாம்பாட்டம்‌ தமிழ்நாட்டின்‌ தேசீய பிராமணர்களின்‌ சூழ்ச்சிகளையும்‌, தந்திரங்‌ களையும்‌, தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார்‌ என்போருக்கு வெளி யாகும்‌ படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும்‌. அக்குருகுல இரகசி யத்தை வெளியாக்குவதற்காக நாம்‌ எடுத்துக்‌ கொண்ட முயற்சிக்கு தமிழ்‌ நாட்டிலுள்ள பிராமணப்‌ பத்திரிகைகளும்‌, பிராமணத்‌ தலைவர்களும்‌ எவ்வ ளவோ இடைஞ்சல்கள்‌ செய்துக்‌ கொண்டு வந்திருந்தாலும்‌, தமிழ்நாட்டி லுள்ள பிராமணரல்லாதார்‌ பத்திரிகைகளும்‌, பிராமணரல்லாதார்‌ தலைவர்‌: களும்‌ எவ்வளவோ உதவி செய்ததின்‌ பலனாய்‌ முடிவில்‌ வெற்றி கிடைத்த தோடு தமிழ்‌ நாட்டிற்கே ஓர்‌ புதிய உணர்ச்சியையும்‌ உண்டாக்கி வைத்து சேரன்மாதேவி குருகுலமும்‌ கலைந்து போய்விட்டது என்பது உலகமே அறியும்‌. அப்படியிருக்க, செத்த பாம்பை எடுத்து ஆட்டுவது போல்‌ குருகுலத்தால்‌ வயிறு வளர்த்த சில பிராமணர்கள்‌, குறிப்பாய்‌ ஸ்ரீமான்‌ தி.ரா. மகாதேவய்யர்‌ கொஞ்ச காலத்திற்கு முன்பு பத்திரிகைகளுக்கு ஒரு விளம்‌ பரம்‌ அனுப்பியிருக்கிறார்‌. அதில்‌ குருகுலம்‌ ஒழுங்காய்‌ நடந்து வருகிற பாவனையாகவும்‌, தானே அதில்‌ ஆச்சாரியாராய்‌ இருக்கிறது போலும்‌, சுயராஜ்யக்‌ கட்சியாரின்‌ தேசீயத்‌ திட்டம்‌ போல கல்விக்கு ஏதோ பல திட்டங்‌ கள்‌ வைத்திருப்பதுபோலும்‌, பாசாங்கு செய்து பிள்ளைகளை அனுப்பும்படி பெற்றோர்களைக்‌ கேட்கிறார்‌. பிராமணரல்லாத பெற்றோர்கள்‌ இம்மோச விளம்பரத்தை நம்பி தங்கள்‌ பிள்ளைகளை அனுப்பிக்கொடுத்து ஏமாந்து போகாமல்‌ இருக்கும்படி கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. குருகுலம்‌ அங்கு நன்றாய்‌ நடந்து கொண்டிருப்பதாய்‌, ஸ்ரீமான்‌ வ.வெ.சு. ஐயர்‌ சொல்லிக்கொண்ட காலத்திலேயே நாம்‌ அங்கு போயிருந்த சந்தர்ப்பங்களில்‌ பிள்ளைகள்‌ நடத்தப்படும்‌ முறையையும்‌ பார்த்தோம்‌. ஸ்ரீமான்‌.மகாதேவய்யர்‌ என்று சொல்லப்படுகிறவரும்‌, அவர்‌ குழந்தைகளும்‌ கூனி முறை என்பதாகப்‌ பேர்‌ வைத்துக்கொண்டு தாங்கள்‌ பழங்களும்‌, தேங்காயும்‌, வெல்லமும்‌, கரும்பும்‌, மாம்பழமும்‌, முந்திரிகைப்‌ பருப்பும்‌, பேரீச்சம்‌ பழமும்‌, சாரப்பருப்பும்‌ போன்றவைகளைச்‌ சாப்பிட்டுக்கொண்டு ஆஸ்ரமத்தில்‌ படிக்க வந்த மற்ற பிள்ளைகளுக்கு பிள்ளை ஒன்றுக்கு மீ£ ஒன்றுக்கு ரூ.13 வரையிலும்‌ பெற்றுக்கொண்டு மாதம்‌ ஒன்றுக்கு 4 ரூபாய்‌ கூடப்‌ பெறாத மாதிரியில்‌ கஞ்சி சாதமும்‌, அரிசிக்‌ களியும்‌, உப்பு காரமில்லாத அரிசி உப்புமாவும்‌, புளியில்லாத குழம்பும்‌ இம்மாதிரி பதார்த்தங்கள்‌, குடி அரசு - 1926 () 38 ஜெயிலைவிட மோசமான கவலையற்ற நிலையில்‌ பக்குவஞ்‌ செய்து போட்டுக்கொண்டு இருந்ததை நாமும்‌ நம்முடன்‌ வந்த மற்றும்‌ சில நண்பர்களும்‌ நேரிலேயே பார்த்தோம்‌. ஆதலால்‌, சுயராஜ்யம்‌ என்கிற பெயரினால்‌, ஜனங்கள்‌ ஏமாந்து போய்‌ அதற்குள்ளிருக்கும்‌ தந்திரங்களை அறியாமல்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்குள்‌ விழுவது போல்‌ குருகுலம்‌, ஆசிரமம்‌ என்கிற பெயர்களினால்‌, பெற்றோர்கள்‌ ஏமாந்து போய்‌ அதன்‌ ரகசியத்தை அறியாமல்‌ தங்கள்‌ பிள்ளைகளை அநுப்பி. பலி கொடுக்காதிருக்க வேண்டுமாய்க்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌. பொது ஜனங்களின்‌ நன்மையை உத்தேசித்து மனதார அறிந்ததையும்‌, நேரில்‌ பார்த்ததையும்தான்‌ இங்கு எழுதியிருக்கிறோமே தவிர, மற்றபடி வேறு. எந்தக்‌ காரணத்தையும்‌ உத்தேசித்தல்ல என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்‌ கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 10.01.1926 39 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தெண்ணாய்பிரிக்காவம்‌ கானவித்தையும்‌ தென்‌ ஆப்பிரிக்காவில்‌ இந்தியர்களை அவ்விடத்திய வெள்ளைக்‌ காரர்கள்‌ தீண்டாதார்‌ போல்‌ நடத்துவதாகவும்‌ தேசத்தின்‌ பிரஜைகளுக்குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல்‌ வெள்ளைக்காரர்கள்‌ சட்டம்‌ செய்‌ திருப்பதாகவும்‌, இக்காரணங்களால்‌ அங்கு பிழைப்பதற்காகப்‌ போன நமது சகோதரர்களான சுமார்‌ ஒன்றரை லக்ஷம்‌ இந்தியர்கள்‌ கஷ்டப்படுவதாகவும்‌ அதற்கு ஏதாவது பரிகாரம்‌ செய்து கொடுக்கும்படி நமது தேசீய காங்கிரஸை கேட்டுக்‌ கொள்வதற்காக சிலர்‌ அங்கிருந்து வந்திருந்தும்‌, அதற்கிணங்கி நமது தேசீய காங்கிரசும்‌ மகாத்மா அவர்களின்‌ அபிப்ராயப்படி ஓர்‌ தீர்மா னத்தையும்‌ நிறைவேற்றி, வந்திருந்தவர்கள்‌ கண்ணைத்‌ துடைத்து அநுப்பி விட்டதும்‌ வாசகர்கள்‌ அறிந்த விஷயம்‌. இதை அநுசரித்தே பிராமணரல்லாதார்‌ காங்கிரசும்‌ ஓர்‌ தீர்மானத்தைச்‌ செய்துவிட்டது. பத்திரிகைகளும்‌ இதைப்பற்றி எழுதி தங்கள்‌ கலங்களை: நிரப்பிக்‌ கொள்ளுவதற்கு ஓர்‌ சந்தர்ப்பத்தையும்‌ அடைந்து கொண்டது. முடி வென்ன? இவ்வித தீர்மானங்களால்‌ வெள்ளைக்காரர்கள்‌ பயப்படப்‌ போகிறார்களா? அல்லது தேசீய காங்கிரசினிடமாவது வெள்ளைக்காரர்க ளுக்கு மதிப்பிருக்கப்‌ போகிறதா? நமது தேசீய காங்கிரஸோ ஜாலவித்தைக்‌ காரனுடைய செய்கைகள்‌ போலாகிவிட்டது. ஜாலவித்தைக்காரன்‌ எப்படி ஜனங்களை ஏமாற்றுவதற்கு தனது பைக்குள்ளிருந்து ஒவ்வொரு சாமானை யும்‌ வரவழைத்துக்‌ காட்டிவிட்டு, கடைசியில்‌ எப்படி நம்மை காசு கேட்க வருகிறானோ, அது போலவே காங்கிரசிலும்‌ சிலரிருந்து ஜனங்கள்‌ சந்தோ ஷப்படும்படி பல தீர்மானங்களை எழுதிக்காட்டி விட்டு கடைசியாக நம்மிடம்‌. ஓட்டுக்கேட்க வந்து விட்டார்கள்‌. இவர்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது, இவர்களால்‌ என்னென்ன காரியம்‌ செய்ய முடியுமென்பது வெள்ளைக்காரர்‌ களுக்குத்‌ தெரியுமா? தெரியாதா? “குப்பை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்‌ வானமேறி சந்திரனைப்‌ பிடிப்பேனென்று” சொல்லுவது எவ்வளவு நம்பத்தகுந்ததாயிருக்கும்‌. அதுபோல, கல்பாத்தியில்‌ நமது கண்ணுக்கெதிரில்‌ நம்மிடம்‌ வாங்கித்தின்று பிழைக்க வேண்டியவர்கள்‌ அவர்களைவிட கோடிக்‌ கணக்காய்‌ அதிகமுள்ள சமூகத்தாரை - இந்த நாட்டாரை - இந்நாட்டு ஆதி மக்களை - தெருவில்‌ நடக்கக்‌ கூடாது; குளத்தில்‌ குளிக்கக்‌ கூடாது; கிட்ட வரக்கூடாது; கண்ணில்‌ தென்படக்‌ கூடாது; அவர்கள்‌ தெய்வத்தைக்‌ காணக்‌ கூடாது; அவர்கள்‌ வேதத்தைப்‌ படிக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்துவ தையும்‌ அதற்காக 144 போடுவதையும்‌ சகித்துக்கொண்டு இந்த 144 - ஐ மீற குடி அரசு - 1926 () 40 முடியாமல்‌ பயங்கொண்டு. புறமுதுகிட்டு ஓடிப்போகும்‌ கூட்டத்தார்‌ தென்‌ ணாப்பிரிக்கா வெள்ளையர்களை - துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, ஆகாயக்‌ கப்பல்‌ வைத்திருப்பவர்களை மிரட்டுவதென்றால்‌, அவர்கள்‌ எப்படி பயப்படக்கூடும்‌? நமது நாட்டிலுள்ள நம்மை அந்நிய நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள்‌ செய்யும்‌ கொடுமைகளை ஒழிப்பதற்கு நமக்கு யோக்கியதை இருந்து, ஒன்றுகூடி ஏதாவது ஓர்‌ முயற்சி செய்து வெற்றி பெற்றோமானால்‌ பிறநாட்டார்‌ நம்மைக்‌ கண்டால்‌ கொஞ்சமாவது மதிப்பார்கள்‌. அப்படிக்‌ கின்றி, நமது யோக்கியதை நமது நாட்டில்‌ இப்படி இருக்க தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களை - பீரங்கி. துப்பாக்கி, ஆகாயக்‌ கப்பல்‌, வெடிகுண்டு வைத்திருப்பவர்களை மிரட்டுவதில்‌ என்ன பிரயோஜனம்‌? உண்மையில்‌ தென்னாப்பிரிக்காவில்‌ வெள்ளைக்காரர்‌ நம்மை நடத்தும்‌ விஷயம்‌ நமக்கு அவமானமாயிருக்குமானால்‌ இந்தியாவில்‌ நம்மை ஒரு சிலர்‌ நடத்தும்‌ விஷயத்தை நாம்‌ சகித்துக்‌ கொண்டிருக்க முடியுமா? நமக்கு ரோஷமிருக்‌ கிறது என்பதை அந்நியருக்குக்‌ காட்டிக்கொள்ள வேண்டுமானால்‌, நமது உடலை, பொருளை, ஆவியை விடத்‌ தயாராயிருக்கிறோமா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும்‌. அதற்கு நாம்‌ தயாராயிருக்கிறோமென்று நம்‌ மனதே நமக்கு உறுதி சொல்லுமானால்‌ இவற்றுக்‌ கெல்லாம்‌ தீர்மானமே தேவையில்லை; மனதில்‌ நினைத்தவுடனேயே வழி திறந்து விடும்‌. சட்டங்க ளெல்லாம்‌ சாம்பலாய்ப்‌ போய்விடும்‌. அப்படிக்‌ கில்லாமல்‌, இம்மாதிரி ஜால வித்தையான தீர்மானங்களை வைத்துக்கொண்டு பிழைக்கப்‌ பார்க்கிறோம்‌; அதனால்‌ பணம்‌ சேர்க்கப்‌ பார்க்கிறோம்‌: பதவி பெறப்‌ பார்க்கிறோம்‌. இந்‌ நிலையில்‌ இத்தீர்மானங்களுக்கு எப்படி சக்தி உண்டாகும்‌? ஆதலால்‌, உண்மையாய்‌ இவ்வித கஷ்டங்களுக்குப்‌ பரிகாரம்‌ வேண்டுமானால்‌, மகாத்மா சொல்வது போல்‌ சத்தியாக்கிரகம்‌ செய்வதும்‌, அதன்‌ மூலமாய்‌ உடல்‌, பொருள்‌,ஆவி ஆகியவைகளைத்‌ துறக்கத்‌ தயாராயிருப்பதும்‌ தவிர. வெறும்‌ ஜாலவித்தைகளினால்‌ பலன்‌ ஏற்படாதென்பதை வணக்கத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 10.011926 41 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ககூறிக்காறண்‌ பணத்தைக்‌ கையாமுய ஓர்‌ பிராமண வக்கீல்‌ இரண்டொரு வாரங்களுக்கு முன்புதான்‌, சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல்‌ ஸ்ரீமான்‌ எம்‌.ஆர்‌. சுந்தரம்‌ ஐயர்‌ என்கிறவர்‌ ஆறுமாதக்‌ கடுங்காவலும்‌ 1000 ரூபாய்‌ அபராதமும்‌ பெற்றிருந்ததை எழுதியிருந்தோம்‌. இந்த வாரம்‌ மற்றொரு பிராமண வக்கீலின்‌ தண்டனையைப்‌ பற்றி எழுத நேர்ந்திருக்கிறது. அதாவது: சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல்‌ ஸ்ரீமான்‌ ஏ. துரைசாமி ஐயர்‌ என்பவர்‌ தனது கக்ஷிக்காரன்‌ பணத்தைக்‌ கையாடியதாக அவர்‌ மீது ஓர்‌ வழக்கு ஏற்பட்டு ருசுவானதின்பேரில்‌, அவர்‌ இனிமேல்‌, வக்கீல்‌ வேலையே செய்ய லாயக்கில்லையென்று சொல்லி அவருடைய பெயரை வக்கீல்‌ ஜாப்தாவிலி ருந்து நீக்கிவிடுமாறு ஐக்கோர்ட்‌ ஜட்ஜ்‌ தீர்ப்புச்‌ செய்துவிட்டார்‌. ககஷிக்காரன்‌ பணத்தைக்‌ கையாடாத வக்கீல்‌, வக்கீல்‌ வேலைக்கே லாயக்கில்லையென்று ஓர்பழமொழி சொல்லுவதுண்டு அதற்கேற்றாற்‌ போலவே நமது பக்கங்களில்‌ ககஷிக்காரன்‌ பணத்தைக்‌ கையாடாத வக்கீல்கள்‌ மிகவும்‌ அபூர்வம்‌. இப்‌ பொழுது எத்தனையோ வக்கீல்கள்‌ கக்ஷிக்காரர்களின்‌ பணத்தைப்‌ பல வழிகளிலும்‌ சாப்பிட்டுவிட்டு, கல்லுப்‌ போலிருக்கிறார்கள்‌. அப்படியிருக்க, ஸ்ரீமான்‌ ஏ. துரைசாமி ஐயருக்கு மாத்திரம்‌ ஏன்‌ இந்த தண்டனை ஏற்பட்டதோ தெரியவில்லை. உலகத்தில்‌ எத்தனையோ பெயர்கள்‌ திருடினாலும்‌, கொலை செய்தாலும்‌, போர்ஜரி செய்தாலும்‌, அகப்பட்டுக்‌ கொள்வதினாலும்‌, போலீசா ருக்கும்‌ நியாயாதிபதிகளுக்கும்‌ லஞ்சம்‌ கொடுக்காததாலும்‌, நன்றாய்க்‌ குண்டுப்‌ புரட்டு புரட்டத்‌ தெரிந்த வக்கீல்‌ வைக்காததினாலும்‌, தண்டனை யடைய நேர்வது போல்‌,ஐயோ பாவம்‌! நமது ஐயர்வாளும்‌ சிக்கிக்‌ கொண்டார்‌. போலும்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 10.01.1926 குடி அரசு - 1926 () 42 கதர்‌ இலாகா சிப்பந்திகள்‌ தமிழ்நாட்டில்‌ கதர்‌ ஸ்தாபனங்களுக்கு சம்பந்தப்பட்ட உத்தியோகங்‌ களில்‌ இருப்பவர்களில்‌ சிலர்‌ கதர்‌ கட்டாமல்‌ இருக்கிறார்கள்‌ என்றும்‌, கதர்‌. கிளை டிப்போக்களில்‌ கதர்‌ விற்பவர்கள்‌ கூட கதர்‌ கட்டாமல்‌ அன்னிய நாட்டுத்‌ துணியை அணிந்து கொண்டிருக்கிறார்கள்‌ என்றும்‌ அடிக்கடி நமக்குப்‌ புகார்கள்‌ வந்து கொண்டிருக்கின்றன. தற்காலம்‌ காங்கிரசிலிருப்‌ பவர்கள்‌ எப்போதும்‌ கதர்‌ அணிய வேண்டியது அவசியமில்லை என்று ஏற்பட்டு விட்டாலும்‌ கதர்‌ ஸ்தாபனங்களுக்கு அந்த சட்டம்‌ எட்டும்படியான காலம்‌ இன்னமும்‌ வரவில்லை என்றே நினைக்கிறோம்‌. அல்லாமலும்‌ கதர்‌ ஸ்தாபனங்களில்‌ ஊதியம்‌ பெற்றானாலும்‌, ஊதியம்‌ பெறாமலானாலும்‌, தொண்டு செய்பவர்கள்‌ கதர்‌ உடுத்தியாக வேண்டும்‌ என்கிற நிபந்தனை ஏற்படுத்துவது பாவமல்லவென்றே நினைக்கிறோம்‌. ஆதலால்‌, தமிழ்நாட்டு கதர்‌ கவர்னர்‌, கதர்‌ ஸ்தாபன சிப்பந்திகளுக்கு இதைப்பற்றி ஓர்‌ சுற்றுத்திரவு அனுப்ப வேணுமாய்‌ கோருகிறோம்‌. குடி அரசு - அறிக்கை - 10.01.1926 43 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கோயமுத்தூர்‌ முணிசியாலிட்மு கோயமுத்தூர்‌ முனிசிபாலி ட்டியின்‌ சென்ற வருடத்திய நிர்வாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அவ்வறிக்கையிலிருந்து பொதுவாக கோயமுத்தூர்‌ முனிசிபாலிட்டியின்‌ நிர்வாகம்‌ ஒழுங்காய்‌ நடைபெற்றிருப்‌ பதாகவே காணப்படுகிறது. ரோடுகள்‌ நன்றாயிருப்பதாகக்‌ கலைக்டர்‌ அபிப்‌ பிராயப்பட்டிருக்கிறார்‌. கல்வி விஷயத்தில்‌ கல்வி கற்க வேண்டிய சிறுவர்‌. களில்‌ 100-க்கு 99 பேர்‌ வீதம்‌ வாசிக்கின்றார்களென்றும்‌ பள்ளிக்‌ கூடங்களில்‌ சிறுவர்களான ஆண்களுக்கும்‌, பெண்களுக்கும்‌ நூல்‌ நூற்கவும்‌ நெய்யவும்‌, கற்றுக்கொடுக்கப்படுகின்றதென்றும்‌, ஆயுள்வேத வைத்தியசாலை மிகவும்‌ உபயோகப்பட்டு வருகின்றதென்றும்‌, அதில்‌ இவ்வருடத்தில்‌ 20,000 பேர்‌. களுக்கு மேலாக நோயாளிகள்‌ உதவிபெற்றிருக்கின்றார்களென்றும்‌, பிளேக்‌ நோய்‌ சென்ற வருடம்‌ கோயமுத்தூருக்குள்‌ வராமலே தடுக்கப்பட்டிருக்‌ கின்றதென்றும்‌, காலறா முதலிய தொத்து வியாதிகளும்‌ முன்னைய வருடங்‌ களைவிட மிகக்‌ குறைவாய்‌ இருந்திருக்கின்றதென்றும்‌, முனிசிபல்‌ செல்வ நிலை ஒழுங்காய்‌ இருக்கின்றதென்றும்‌, சப்‌ கமிட்டியார்கள்‌ ஊக்கத்துடன்‌ வேலை செய்திருக்கின்றார்களென்றும்‌, கவுன்சிலர்களும்‌ சேர்மனும்‌ ஒற்று மையாயிருப்பதால்‌ கவுன்சிலில்‌ சமாதானம்‌ ஏற்பட்டிருக்கின்றதென்று கலைக்டர்‌ எழுதியிருக்கின்றாரென்றும்‌ மற்றும்‌ பல விஷயங்களும்‌ குறிப்‌ பிட்டிருக்கிறது. இதற்காக சேர்மென்‌ ஸ்ரீமான்‌ 6.5. இரத்தினசபாபதி முதலி யாருக்கு கோயமுத்தூர்‌ வாசிகள்‌ மிகுதியும்‌ நன்றி பாராட்டக்‌ கடமைப்‌ பட்ட வர்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. ஆனால்‌, ஈரோடு முனிசிபாலிட்டியில்‌ இருக்கிறவர்கள்‌ இதைப்பார்த்து பொறாமைப்படாமலும்‌, வெட்கப்படாமலு மிருக்க முடியாது. கோயமுத்தூர்‌ சேர்மனைப்போல உள்ளுூர்வாசியாகவும்‌, உள்ளுர்‌ க்ஷமத்தில்‌ அக்கரை ஏற்படவேண்டியவர்களாகவும்‌ உள்ள ஒரு சேர்மன்‌ ஈரோட்டுக்கும்‌ ஏற்பட்டால்‌ ஓர்‌ காலத்தில்‌ இது போல்‌ சந்தோஷப்‌ படக்கூடும்‌. இது சமயம்‌ வீணாக ஆசைப்படுவதில்‌ பிரயோஜனமில்லை. குடி அரசு - செய்திக்‌ குறிப்பு - 10.01.1926 குடி அரசு - 1926 () 44 வகுப்புாரிப்‌ பிரதிநிதித்வம்‌ தேசபக்தர்கணிண்‌ யோக்கியதை “வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌” என்கிற பதத்தை நாம்‌ பொது ஜனங்களின்‌ ஞாபகத்திற்குக்‌ கொண்டுவந்தவுடனே, அதனால்‌ பிரதிகூலம்‌ அடையக்கூடிய ஜனங்கள்‌, தங்களால்‌ கூடிய தடைகளை யெல்லாம்‌ செய்ய மறுபடியும்‌ ஆரம்பித்துவிட்டார்கள்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ என்கிற உரிமையைப்‌ பற்றி நமது நாட்டில்‌ வெளிப்படையாக நாம்‌ அறிய சுமார்‌ 20 வருட காலங்களுக்கு மேலாகப்‌ பிரஸ்தாபிக்கப்பட்டு வந்திருந்தாலும்‌, சுமார்‌ 10 வருடங்களுக்கு முன்பாகவே ராஜீய ஸ்தாபனங்களில்‌ அது பிரவேசித்து முஸ்லீம்‌ சமூகத்தாருக்கு நமது தேசீய காங்கிரசின்‌ மூலமாகவே, அதாவது “தேசம்தான்‌ பிரதானம்‌; வகுப்புகள்‌ அதற்குப்‌ பிற்பட்டது” என்கிற தத்துவத்‌ தையே கொள்கையாக உடைய காங்கிரஸின்‌ மூலமாகவே அதை ஒப்புக்‌ கொண்டு சர்க்கார்‌ மூலமாய்‌ அதை அமுலுக்குக்‌ கொண்டு வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்பொழுது புழக்கத்திற்கு வந்துவிட்டது. அதோடு மாத்திரமல்லாமல்‌, காங்கிரஸ்‌ ஸ்தாபனங்களிலேயும்‌, அதி லுள்ள ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ அளிக்கப்பட்டும்‌ வந்திருக்கிறது. அதாவது, காங்கிரஸ்‌ என்பதை ராஜீய ஸ்தாபன நிர்வாகமாக வைத்துக்கொண்டால்‌, அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டி என்பது பார்லி மெண்ட்‌ போன்ற ஓர்‌ ஆட்சி சபைக்குச்‌ சமானமாகும்‌. அவ்வித ஆட்சி சபைக்கு இந்தியாவின்‌ சகல பிரஜைகளின்‌ சார்பாக 350 மெம்பர்கள்‌ ஒட்டு மொத்தம்‌ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில்‌ நமது தமிழ்நாட்டிற்கு மாத்திரம்‌ 25 ஸ்தானங்கள்‌ ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இருபத்தைந்துக்கும்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி விதிகளின்‌ 8- வது பிரிவில்‌ அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டிக்குத்‌ தேர்தல்‌ என்கிற தலைப்பின்‌ கீழ்‌ “நான்கு முஸ்லீம்கள்‌, ஒரு கிறிஸ்தவர்‌, தீண்டாதார்‌ என்று சொல்லப்படும்‌ ஒருவர்‌” ஆகிய இவர்‌ களையும்‌ இவர்களைத்‌ தவிர மொத்தத்தில்‌ அதிக வாக்கு பெற்ற 19 அங்கத்‌ தினர்களையும்‌ தேர்தல்‌ செய்ய வேண்டியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குப்‌ பெயரென்ன? இது வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமா? அல்லவா? அன்றியும்‌ 1917 - ம்‌ வருடத்தில்‌ பிராமணரல்லாதார்‌ ராஜீய உரிமைகள்‌ 45 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பெறுவதற்கும்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அடைவதற்கும்‌ டாக்டர்‌. டி.எம்‌.நாயர்‌ அவர்களால்‌ ஆரம்பிக்கப்பட்ட பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌ நாமெல்லோரும்‌ அறிந்ததே. அவ்வியக்கத்தின்‌ கொள்கைகளைப்பற்றி, அவ்வியக்கத்தில்‌ சேராதிருந்த சில பிராமணரல்லாதார்களும்‌ ஒப்புக்‌ கொண்டுதானிருந்தார்கள்‌. ஆனால்‌, அதனுடைய திட்டங்களிலும்‌ அவற்றை அடையும்‌ வழிகளிலும்‌ மாத்திரம்‌ அபிப்ராய பேதம்‌ ஏற்பட்டு அதற்காக அதில்‌ சேராமல்‌, அதே கொள்கைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு சென்னை மாகாணச்‌ சங்க மென்கிற பெயரால்‌ பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌ ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இவ்வியக்கம்‌ பிராமணரல்லாதார்‌ இயக்கமென்று சொல்லப்பட்டாலும்‌ உண்மையில்‌ பிராமணர்களுடைய பொருளும்‌, ஆதரிப்பும்‌, நடத்தும்‌ அதிகாரமும்‌ ஆகிய இவைகளே அவைகளில்‌ குடி கொண்டிருந்தன. அப்படியிருந்த போதிலும்‌ ராஜீய உரிமைகளுக்காகக்‌ காங்கிரசைப்‌ பின்பற்றுவதும்‌, பிராமணரல்லாதார்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ வம்‌ அடைவதுமே அதன்‌ கொள்கையாயிருந்ததென்பதில்‌ இப்போது யாருக்கும்‌ அபிப்பிராய பேதமில்லை. அதற்காதாரமாக 1919-ம்‌ வருடம்‌ அக்டோபர்‌ மாதம்‌ 1112 தேதிகளில்‌ ஈரோட்டில்‌ ஸ்ரீமான்‌ லாட்‌ கோவிந்ததாஸ்‌ அக்ராசனத்தின்‌ கீழ்‌ நடந்த “சென்னை மாகாணச்‌ சங்க கான்பரென்ஸ்‌” என்னும்‌ மகாநாட்டில்‌ உபசரணை அக்ராசனராயிருந்த ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ வரவேற்புப்‌ பிரசங்கத்தில்‌ 6- வது பக்கம்‌ “சென்னை மாகாணச்‌ சங்கத்தார்‌ வேலை” என்னும்‌ தலைப்பின்‌ கீழ்‌ 2-வது கலத்தில்‌, “தொழிலாளர்‌ 100-க்கு 99 பேர்‌. பிராமணரல்லாதாரேயாவர்‌. இவர்களுக்கு நலன்‌ செய்து வருவோர்‌ நமது இயக்கத்தில்‌ சேர்ந்தவரா? மற்றப்‌ போலி இயக்கத்தில்‌ சேர்ந்தவரா? தொழி லாளர்‌ இயக்கத்துக்கும்‌, முன்னேற்றத்துக்குமே காரணமாயுள்ள சென்னை மாகாணச்‌ சங்கத்தின்‌ அவசியத்தைப்‌ பற்றிக்‌ கூறவும்‌ வேண்டுமா? காங்கிரஸ்‌ கொள்கையைத்‌ தழுவுவதும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ பெற முயல்வதும்‌ இந்தியாவில்‌ பிறந்த அனைவரையும்‌ இந்தியரெனக்‌ கொண்டு அவரோடு சகோதரத்துவம்‌ பூண்டு தேச சேவையைச்‌ செய்வ துமே நமது சங்கத்தின்‌ பெரு நோக்கமாதலால்‌, அந்நந்நோக்கத்தை நிறைவேற்ற நமக்கென தனி யாகப்‌ பத்திரிகைகளும்‌.பிரசாரகர்களும்‌ வேண்டும்‌” என்று பேசியிருக்கிறார்‌. அதன்படியே இ மகாநாட்டிலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்தைப்‌ பற்றி ஸ்ரீமான்கள்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌, கேசவபிள்ளை முதலியோர்‌. களால்‌ விஷயாலோசனைக்‌ கமிட்டியில்‌ தயாரிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுவால்‌ மகாநாட்டில்‌ பிரேரேபிக்கப்பட்டதில்‌ ஸ்ரீமான்‌ தஞ்சை இராமச்சந்திரம்‌ செட்டியாரவர்களால்‌ ஆட்சேபிக்கப்பட அதற்கு ஸ்ரீமான்‌ நாயுடுவே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வக்‌ கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு இம்மகாநாட்டில்‌ இடமில்லையென்று சொன்னதின்‌ பேரில்‌ ஏகமனதாய்‌ நிறைவேறியிருக்கிறது. குடி அரசு - 1926 () 46 அல்லாமலும்‌ காக்கிநாடா காங்கிரஸிலும்‌ ஸ்ரீமான்‌ தாஸும்‌, கல்கத்தா மகமதியர்களும்‌ செய்து கொண்ட ஒப்பந்தத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ வத்தையே முக்கியமாகக்‌ குறித்து ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியார்‌ அவர்‌ களால்‌ பிரேரேபிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை சட்டசபையிலும்‌, இந்தியா சட்டசபையிலும்‌ மற்றும்‌ பல மாகாண சட்டசபைகளிலேயும்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்வத்தின்‌ பேரால்‌ இன்றைய தினமும்‌ இந்திய அங்கத்தி னர்கள்‌. உட்கார்ந்துக்‌ கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. ஸ்தல ஸ்தாபனங்களிலும்‌ மற்றும்‌ பல ராஜீய ஸ்தாபனங்களிலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்தின்‌ பெயரால்‌ தாழ்ந்த வகுப்பார்கள்‌ சர்க்காரால்‌ நியமனம்‌ பெற்று உட்கார்ந்துக்‌ கொண்டு தான்‌ வருகிறார்கள்‌. இன்றைய தினமும்‌, காஞ்சீபுரம்‌ மகாநாட்டில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிறிதித்‌ வம்‌ கூடாதென்று வாதாடின தீண்டாத வகுப்பைச்‌ சேர்ந்தவரென்று சொல்லும்‌ ஸ்ரீமான்‌ ஜெயவேலுவும்‌,மகமதியர்‌ வகுப்பைச்‌ சேர்ந்தவர்களான ஜனாப்கள்‌ ஷாபி மகமது, அமீத்கான்‌ இவர்களும்‌, வகுப்புவாரிப்பிரதிநிதித்வ கொள்கை: யின்‌ மூலமாய்‌ அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ ஸ்தானம்‌ வகித்துக்‌ கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. திருச்சியில்‌ இரண்டு வருடங்களுக்கு முன்‌ கூடின மாகாணக்‌ காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ ஸ்ரீமான்‌ ஈவெஇராமசாமி நாயக்கர்‌. அக்ராசனராயிருக்கும்‌ போது, ஜனாப்கள்‌ ஷாபி மகமது, சென்னை அப்துல்‌ ஹமீத்கான்‌ முதலியவர்கள்‌ தங்களுக்கு நான்கு ஸ்தானங்கள்‌ போதாதென்றும்‌ ஆறு ஸ்தானங்கள்‌ அளிக்கப்பட வேண்டுமென்றும்‌ விண்ணப்பம்‌ எழுதி மற்றும்‌ பல மகமதியர்களிடமும்‌ கையெழுத்து வாங்கிக்‌ கொடுத்திருக்கிறார்‌. கள்‌. கிறிஸ்தவ மதத்தைச்‌ சேர்ந்த ஸ்ரீமான்‌ குழந்தையும்‌ தங்கள்‌ வகுப்பாருக்‌ குள்ள வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்தின்‌ பலனை அநுபவத்திருக்கிறார்‌. அவருடைய பெயர்‌ இன்றையத்தினமும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வ “வோட்டர்‌ லிஸ்டில்‌” இருந்துதான்‌ வருகின்றது. இவ்வளவு பலம்‌ பெற்று அமுலில்‌ இருக்கும்‌ ஒரு அபிப்ராயத்தை -பொது ஜனங்களின்‌ விருப்பத்தை. தங்களுடைய பணப்‌ பெருக்கத்தாலும்‌ மித்திர பேதத்தாலும்‌ அழுத்தி விடலாமென்று நினைப்பது எவ்வளவு யோக்கியப்‌ பொறுப்பற்ற காரியமென்‌ பதைப்‌ பொதுஜனங்களே யோசிக்க வேண்டியது. அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ முதலியாரையும்‌, ஜனாப்கள்‌ ஷாபி மகமது, அமீத்கானையும்‌, ஸ்ரீமான்கள்‌ குழந்தை, ஜயவேலு முதலியவர்களையும்‌ பணங்காசு கொடுத்தோ, வேறு வழியில்‌ அவர்களை ஏமாற்றியோ, தாங்கள்‌ சுவாதீனம்‌ செய்து கொண்டதி னால்‌ இவர்களால்‌ என்ன காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொள்ள முடியும்‌? கூட்டங்‌ களிலெல்லாம்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரைத்‌ தலைமை வகிக்கச்‌ செய்யலாம்‌. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்தான்‌ தமிழ்நாட்டுத்‌ தலைவர்‌- தலைவரென சத்தம்‌ போடச்‌ செய்விக்கலாம்‌. ஆனால்‌, தேசத்தார்‌ இவர்களைப்‌ பின்பற்றச்‌ செய்யக்கூடுமா? இவர்கள்‌ வார்த்தையை தேசத்தார்‌ நம்பிவிடுவார்களா? நேற்றும்‌ முன்னும்‌ இவர்கள்‌ பேசியதையும்‌ இவர்களின்‌ நடத்தையையும்‌ பொது ஜனங்கள்‌ ஆராயமாட்டார்களா? எவ்வளவு நாளைக்குப்‌ பொது 47 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஜனங்களை ஏமாற்ற முடியும்‌? “தண்ணீரில்‌ விழுந்தவனைப்‌ பிடிக்க போய்த்‌ தானும்‌ ஆழ்ந்துவிட்ட கதை” போல்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌, ஸ்ரீமான்கள்‌ சீனி வாசய்யங்காருக்கும்‌ சி.இராஜகோபாலாச்சாரியாருக்கும்‌ உதவி செய்யப்‌ போய்‌ நாணய உலகத்திலிருந்து விலகி விட்டார்‌. பொது ஜனங்கள்‌ தன்னை எப்படி மதிக்கிறார்கள்‌ என்னும்‌ கவலையே இல்லாமல்‌ அதிக மதுபானம்‌ செய்தவர்கள்‌ தங்களை உலகத்தார்‌ எப்படி நினைக்கின்றார்களென்பதைப்‌ பற்றி கவலை இல்லாமல்‌ இடுப்புத்‌ துணி நழுவுவது கூடத்‌ தெரியாமல்‌ எப்படித்‌ திரிவார்களோ, அதுபோலவே நமது முதலியார்‌ தன்னையே சுவாதீனம்‌ இழந்து “ஒருவருட காலத்துக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்துக்கு விரோதமாய்‌ பிரசாரம்‌ செய்யப்போகிறேன்‌” என்று வீரகண்டாமணி ஆட்டு கிறார்‌. பக்கத்தில்‌ இருக்கும்‌ அவருடைய பிராமண நண்பர்கள்‌ “சபாஷ்‌, சபாஷ்‌” என்று கைதட்டுகிறார்கள்‌. இரண்டு பிராமணர்கள்‌ வாயினால்‌ சபாஷ்‌ என்று சொல்லப்படுவதைக்‌ கேட்டுக்‌ கொண்டு கூத்தாடுகின்றாரேயொழிய கோடிக்‌ கணக்கான மக்கள்‌ இவரை என்ன சொல்லுகிறார்களென்பதைக்‌ கவ னிக்கக்கூட நேரமில்லாமல்‌ மயங்கியிருக்கிறார்‌. பிராமணரல்லாத தொழிலா ளர்‌ அபிமானத்தால்‌ ஏற்பட்ட தன்னுடைய பத்திரிகையாகிய “நவசக்தி”யை அதன்‌ உண்மைப்‌ பெயருக்கேற்ப அதற்கு ஒன்பது வித சக்தியைக்‌ கற்பித்துக்‌ கொண்டு போகிறார்‌. அதாவது :- 1 வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ தான்‌ சென்னை மாகாணச்‌ சங்கத்திலி ருந்தபோது வேண்டும்‌ என்றார்‌. 2. பிறகு காஞ்சி அக்ராசனப்‌ பிரசங்கத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ வம்‌ காங்கிரஸில்‌ தான்‌ முட்டிக்கொள்ள வேண்டுமென்கிறார்‌. 3 அக்ராசனப்‌ பீடத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வ தீர்மானத்தை மகா. நாட்டில்‌ அநுமதிப்பது ஒழுங்குக்கு விரோதமானது என்கிறார்‌. 4 “நவசக்தி” பத்திரிகையில்‌ சுயராஜ்யக்‌ கட்சியை ஏற்றுக்கொள்ள தவர்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ வேண்டுமென்று கேட்பதற்குப்‌ பொருளேயில்லை என்கிறார்‌. 5 வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தை ஆதரித்து தான்‌ எங்கும்‌ பேசவே யில்லை என்கிறார்‌. 6. பிறகு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்தால்‌ நன்மையுமிருக்கிறது; தீமையுமிருக்கிறது என்கிறார்‌. 7 தற்கால நிலைக்கு எனக்‌ கேட்கப்பட்ட வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ குடி அரசு - 1926 () 48 வத்தை என்றுங்‌ கேட்டுக்கொண்டிருத்தல்‌ நியாயமா? என்கிறார்‌. 8 பிறகு ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழிப்பதற்காகக்‌ கேட்ட வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்தை உண்மையென்று நினைத்துக்‌ கொள்ளலாமா? என்கிறார்‌. 9 பின்பு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்திற்கு விரோதமாய்‌ தமிழ்‌ நாடெங்கும்‌ ஒரு வருடத்திற்குப்‌ பிரசாரம்‌ செய்யப்போகிறேன்‌ என்கிறார்‌. ( இதுயாரைக்‌ கெடுப்பதற்காகச்‌ சொன்னேன்‌ என்று நாளைக்குச்‌ சொல்லு வாரோ தெரியவில்லை) ஆகிய ஒன்பது சக்திகளும்‌ நமது முதலியாருக்கு எப்படி படிப்படி யாய்‌ உண்டாகி வந்திருக்கின்றதென்பதை “நவசக்தி” அன்பர்கள்‌ கவனிக்க வேண்டும்‌. இன்னும்‌ எத்தனை சக்திகள்‌ தொக்கி இருக்கின்றதோ ஸ்ரீமான்‌ முதலியாருக்கும்‌ கூடத்‌ தெரியாது என்றே நினைக்கிறோம்‌. நமது ஸ்ரீமான்‌ முதலியார்‌ தனது வாதத்துக்கு சக்தியில்லாத சமயங்‌ களில்‌ காந்தியடிகளின்‌ பெயரை இழுத்துவிட்டு விடுவது வழக்கம்‌. ஏனென்‌ றால்‌, அந்தப்‌ பெயரைச்‌ சொல்லி தப்பித்துக்‌ கொள்ளுவ தோடு, நவசக்தியின்‌ வாசகர்கள்‌ தன்னை காந்தி வழியில்நிற்போரென்று எண்ண வேண்டுமென்கிற ஆசை.அதாவது, மகாத்மா காந்தி சுயராஜ்யக்‌ கட்சியாருக்கு உதவி செய்யும்‌ படி சொல்லியிருக்கிறார்‌ என்பதை அடிக்கடி எழுதிக்‌ கொண்டு, தான்‌ அந்த சாக்கில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருக்கு உதவி செய்ய வழி தேடுவது. இப்‌ பொழுது சுயராஜ்யக்‌ கட்சிக்கு உதவி செய்வதுடன்‌ நிற்காமல்‌ பிராமணரல்லா தாருக்கு கெடுதி செய்யத்தகுந்த அளவுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்திற்கு இடையூறாய்ப்‌ புறப்படுவேனென்கிறார்‌. மகாத்மா காந்தி சுயராஜ்யக்‌ ககஷி' யாருக்கு உதவிசெய்யும்‌ திட்டத்தில்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்வத்திற்கு எதிர்‌ பிரசாரம்‌ செய்வதையும்‌ சேர்த்திருக்கின்றாரா என்பதைப்‌ பொது ஜனங்கள்‌ கவனிக்க மாட்டார்களென்று ஸ்ரீமான்‌ முதலியார்‌ நினைத்துவிட்டார்‌ போலும்‌. இவைகளெல்லாம்‌ எப்படி இருந்த போதிலும்‌ நமக்கு அதைப்பற்றி அதிக மான கவலை இல்லை. ஆனாலும்‌ ஒன்று மாத்திரம்‌ நாம்‌ சொல்லாமல்‌ இருக்க முடியவில்லை. தேசத்தின்‌ பேராலும்‌, சமூகத்தின்‌ பேராலும்‌, விடுதலையின்‌ பேராலும்‌, சுயராஜ்யத்தின்‌ பேராலும்‌, உரிமையின்‌ பேராலும்‌, காந்தியடிகளின்‌ பேராலும்‌ நமது நாட்டில்‌ கோடிக்‌ கணக்கான பாமர ஜனங்களின்‌ பிரதிநிதி களாய்‌ எப்பேர்ப்பட்ட யோக்கியர்கள்‌ வேலை செய்கிறார்கள்‌ என்பதும்‌, இவர்‌: களிடத்தில்‌ எவ்வளவு நாணயம்‌ இருக்கிறது என்பதும்‌, இவர்களுடைய “பொது சேவையின்‌” கருத்தென்ன என்பதும்‌ ஆகிய இவைகளை ஜனங்கள்‌ உணரவேண்டுமென்பது மாத்திரம்‌ நம்முடைய பெரிய கவலையாயிருக்கிறது. 15 ரூபாய்‌ சம்பளத்திற்காக முன்பின்‌ அறியாத ஜெர்மானியரோடும்‌ துருக்‌ கியரோடும்‌ சண்டை செய்வதற்காகப்‌ போய்‌ உயிர்விட்ட இந்து , மகமதியர்‌, கிறிஸ்தவர்கள்‌ உள்ள ஓர்‌ நாட்டில்‌, எவ்வளவோ பதவிகளுக்காகவும்‌, எவ்வ 49 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ளவோ சபாஷ்‌ பட்டங்களுக்காகவும்‌, எவ்வளவோ சம்பாதனைக்காகவும்‌ மானம்‌ விடுகிற ஜனங்கள்‌ அபூர்வமாகப்‌ போய்விடுமா? தேசத்திற்கு நல்ல காலம்‌ இருக்குமேயானால்‌, இவற்றை எல்லாம்‌ ஜெயித்துக்கொண்டு போனால்தான்‌ முடியுமே தவிர இவற்றை யெல்லாம்‌ ராஜி செய்துக்கொண்டு போவதாய்‌ இருந்தால்‌ ஒரு நாளும்‌ விடியாது; உரிமையும்‌ கிடையாது. குடி அரசு - தலையங்கம்‌ - 17.01.1926 குடி அரசு - 1926 () 50 மதுரைக்‌ கோயில்‌ பிரவேசம்‌ ழை கோஷனும்‌ - நாடார்களும்‌ மதுரை ஸ்ரீமான்‌ குப்புசாமி ஐயர்‌ என்கிற ஒரு பிராமணர்‌ சென்னை கவர்னரின்‌ மனைவியாரை, மதுரை மீனாக்ஷியம்மன்‌ கோவிலுக்குள்‌. அழைத்துப்‌ போய்‌ எல்லா இடங்களையும்‌ கூட்டிக்‌ காட்டினதாகவும்‌, மிகுந்த மரியாதை செய்ததாகவும்‌ அதற்கு நன்றியறிதலாய்‌ அம்மையார்‌, கோவிற்‌ புத்தகத்தில்‌ தம்மை மிக்க மரியாதையாக கோயிலுக்குள்‌ அழைத்துச்சென்று பல இடங்களையும்‌,நகைகளையும்‌, பொக்கிஷங்களையும்‌ காட்டின ஸ்ரீமான்‌ குப்புசாமி ஐயர்‌ முதலியோருக்கு நன்றி செலுத்துகிறேன்‌ என்று எழுதி நற்சா க்ஷிப்‌ பத்திரமும்‌ கொடுத்துவிட்டுப்‌ போனார்களாம்‌. இதை நாம்‌ ஆக்ஷேபிக்க வில்லை. ஆனாலும்‌, அந்த அம்மையார்‌ எவ்வளவு பெரிய அந்தஸ்து உடையவரானாலும்‌, அந்நிய நாட்டார்‌ - அந்நிய மதஸ்தர்‌- நமது மதத்தையும்‌ சாமிகளையும்‌ பார்த்து பரிகாசம்‌ பண்ணுகிறவர்கள்‌- நமது மதத்துக்கு விரோதமாய்‌ பிரசாரம்‌ செய்து நம்மவர்களை தங்கள்‌ மதத்துக்குச்‌ சேர்க்கி றதை ஆதரிப்பவர்கள்‌- நம்மை அஞ்ஞானிகளென்று சொல்லுகிறவர்கள்‌ - நம்மை அடக்கியாண்டு நமது இரத்தத்தை உறிஞ்சி வாழும்‌ ஜாதியைச்‌ சேர்ந்த வர்கள்‌ என்பதை யாரும்‌ மறுக்க முடியாது. அப்படியிருக்க, இப்படிப்பட்ட ஒருவரை நாம்‌ நமது கோவிலுக்குள்‌ மரியாதை விருதுகளுடன்‌ கூட்டிக்‌ கொண்டு போய்க்‌ காட்டி நற்சாக்ஷிப்‌ பத்திரம்‌ பெறுகிறோம்‌. அதே கோவிலுக்‌ குள்‌ நமது நாட்டார்‌, நமது மதஸ்தர்‌, நமது தெய்வத்திலும்‌ மதத்திலும்‌ நம்பிக்‌ கைக்‌ கொண்டு கண்டு தரிசிக்க ஆசைப்படுகிறவர்கள்‌ - நமது நாட்டின்‌ க்ஷமத்தையும்‌, மதத்தின்‌ க்ஷமத்தையும்‌ சதாகாலமும்‌ கோருகிறவர்கள்‌ - நீ கோயிலுக்குள்‌ பிரவேசிக்கக்‌ கூடாது: நீ தாழ்ந்த ஜாதி என்று உதைத்துத்‌ தள்ளினாலும்‌, உங்கள்‌ மதத்தை விட்டு வேறு மதத்திற்குப்‌ போகேன்‌; உங்கள்‌ சுவாமியை விட்டு வேறு சுவாமியைக்‌ கும்பிடேன்‌ என்று சொல்லிக்‌ கொண்டு நம்மை விட்டுப்‌ போகாமல்‌ நம்மையே வந்து கெஞ்சுகிறவர்கள்‌ - நமது நாட்டின்‌ க்ஷேமத்துக்கு உழைக்கிறவர்கள்‌ ஆகிய ஒரு பெரிய சமூகத்தாரான நமது நாடார்‌ சகோதரர்களை மாத்திரம்‌, அதே மீனாக்ஷியம்மனுக்கு உன்னு டைய பணம்‌ உதவும்‌ : உன்னுடைய பால்‌ உதவும்‌ : உன்‌ பேரால்‌ கட்டளை அர்ச்சனை செய்து பணம்‌ வாங்கிப்‌ பிழைக்கலாம்‌;உன்‌ வீட்டுக்குச்‌ சமீபத்தில்‌ மீனாக்ஷி வந்து நின்று கொண்டு தீபார்த்தனை செய்யலாம்‌; உன்‌ மண்டபத்‌ 51 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 திற்கு மீனாக்ஷி வந்து மண்டபக்‌ கட்டளைசெய்து கொள்ளலாம்‌; ஆனால்‌ நீ கோவிலுக்கும்‌ - கோவில்‌ வெளிச்சுற்றுப்‌ பிரகாரத்துக்குள்கூட நுழையக்‌ கூடாது; நீ நுழைந்தால்‌ எங்கள்‌ சுவாமிக்குச்‌ சக்தி குறைந்துபோகும்‌, கோவில்‌ கெட்டுப்போகும்‌, இந்து மதம்‌ போய்விடும்‌, வேதத்திற்கும்‌ சாஸ்திரங்களுக்‌ கும்‌ விரோதமாய்விடும்‌ என்று சொல்லுவோமானால்‌ நாமும்‌ மனிதர்கள்‌ தானா? தெய்வம்‌ ஒன்றிருக்குமானால்‌, சத்தியம்‌ ஒன்றிருக்குமானால்‌, தர்மம்‌ ஒன்றிருக்குமானால்‌ நம்மை அவைகள்‌ வாழ விடுமா? நமது நாடார்கள்‌ கோவிலுக்குள்‌ போவதனால்‌ இந்து மதம்‌ கெட்டுப்‌ போகுமானால்‌, அதுவும்‌ ஒரு மதமாகுமா? அம்‌ மாதிரியான மதம்‌ நமக்கு எதற்கு? நமது சகோதரர்‌ களான நாடார்கள்‌ கோவிலுக்குள்‌ போவதனால்‌ நமது சுவாமியின்‌ சக்தி குறைந்து போகுமென்று சொல்லுவோமேயானால்‌, அம்மாதிரியான சுவாமி யும்‌ சுவாமியாகுமா? தன்னைக்‌ கும்பிடாதவர்களும்‌ பரிகசிக்கிறவர்களும்‌ கோவிலுக்குள்‌ வருவதினால்‌ தன்‌ சக்தி குறைந்து போகாது: தன்‌ பக்தன்‌ கோவிலுக்குள்‌ வருவதனால்‌ தன்னைக்‌ கும்பிடுவத னால்‌ தன்‌ சக்தி குறைந்து போகுமென்பதானால்‌, அம்மாதிரியான சுவாமியைக்‌ கும்பிடுவதில்‌ என்ன பிரயோஜனம்‌? வேதங்களும்‌ சாஸ்திரங்களும்‌ நாடார்‌ சகோதரர்கள்‌ கோவி லுக்குள்‌ போய்‌ தங்கள்‌ தெய்வங்களை வணங்குவதற்கு அநுமதிக்கவில்லை யென்று சொன்னால்‌, அவைகளை நாம்‌ வேதமென்றும்‌, சாஸ்திரமென்றும்‌ சொல்லலாமா? வெள்ளைக்காரர்கள்‌ எப்படி நம்மைப்‌ பிரித்து வைத்து ஒருவ ருக்கொருவர்‌ ஒற்றுமைப்படாமலிருக்கும்படி செய்து வைத்திருக்கும்‌ தந்திரத்‌ தால்‌,33 கோடி ஜனங்களுக்குள்ள தேசத்தை, துப்பாக்கியையும்‌, பீரங்கியை யும்‌ காட்டிக்‌ கொண்டு அடக்கி ஆண்டு, நமது செல்வத்தைக்‌ கொள்ளை யடித்து வருகிறார்களோ அதுபோலவே பிராமணர்களும்‌ நம்மைப்‌ பல ஜாதிகளாகப்‌ பிரித்து ஒருவருக்கொருவர்‌ உயர்ந்தவர்‌, தாழ்ந்தவர்‌ என்கிற வித்தியாசங்களைக்‌ கற்பித்து நம்மிலேயே ஒருவருக்கொருவர்‌ உயர்ந்தவர்‌, தாழ்ந்தவர்‌ என்று சண்டையிட்டுக்‌ கொள்ளும்படியாகச்‌ செய்வித்து வேதம்‌, சாஸ்திரம்‌, புராணம்‌, வழக்கம்‌ என்கிற ஆயுதங்களால்‌ நம்மை அடக்கி ஆண்டு தாழ்மைப்படுத்தி, நமது இரத்தத்தை உறிஞ்சிப்‌ பிழைத்துக்கொண்டு வருகிறார்கள்‌. இதை அறியாமல்‌ பிராமணரல்லாத சகோதரர்களும்‌ தங்கள்‌ புத்தியை, தங்கள்‌ சுயநலத்திற்காகவோ அறியாமையினாலோ பறிகொடுத்து விட்டு, வெள்ளைக்காரர்களின்‌ அக்கிரமத்திற்குப்‌ பிராமணர்கள்‌ உதவி செய்வது போல்‌ இம்மாதிரி பிராமணர்களின்‌ அக்கிரமத்திற்குப்‌ பிராமண: ரல்லாதாரில்‌ சிலரே இரகசியத்தில்‌ உதவி செய்து கொண்டு தங்கள்‌ மானத்‌ தையும்‌ வெட்கத்தையும்‌ விட்டு பிராமணரல்லாதாருக்குத்‌ துரோகம்‌ செய்து வருகிறார்கள்‌. இம்மாதிரி குணம்‌ நமது சமூகத்திலிருந்து என்றைக்கு விலகுமோ அன்றுதான்‌ நமது நாடு சமத்துவமடையும்‌; சுயமரியாதை யுமடையும்‌.. குடி அரசு - கட்டுரை - 17.01.1926 குடி அரசு - 1926 () 52 விஷமய்‌ பிரசாரம்‌ - கதர்‌ பக்தி டாக்டர்‌ நடேசன்‌ சேலத்தில்‌ கதர்ச்‌ சாலையைத்‌ திறந்து வைத்ததினால்‌ பிராமணர்கள்‌ கட்சியான சுயராஜ்யக்‌ கட்சியாருக்குப்‌ பெரிய நடுக்கம்‌ ஏற்பட்டுப்‌ போய்விட்டது. ஏனென்றால்‌ கதரின்‌ பேரைச்‌ சொல்லிக்‌ கொண்டு, தாங்கள்‌ வோட்டர்களை ஏமாற்றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும்‌. அதைப்‌ பின்பற்றி விடுவார்களோவெனப்‌ பயந்து கொண்டு ஸ்ரீமான்‌ சத்திய மூர்த்தியும்‌ அவர்‌ கோஷ்டியாரும்‌ ஒவ்வொரு பிரசங்கத்திலும்‌, “டாக்டர்‌. நடேச முதலியார்‌ அந்நியஆடையை அணிந்து கொண்டு கதர்ச்‌ சாலையைத்‌ திறந்து வைத்தார்‌. இது பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காகச்‌ செய்த வேலை” யென்று ஓயாமல்‌ பேசியும்‌ வருகிறார்கள்‌; எழுதியும்‌ வருகிறார்கள்‌. இப்படிச்‌ செய்வது வெறும்‌ விஷமப்‌ பிரசாரமே தவிர, இதில்‌ யோக்கி யதை கொஞ்சமுமில்லை. முதலாவது, டாக்டர்‌ நடேச முதலியார்‌ கதர்ச்‌ சாலையை திறந்து வைக்கும்போதே டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு ஓர்‌ சீட்டில்‌ நீங்களேன்‌ கதர்‌ உடுத்தவில்லை என்று எழுதி அவரைக்‌ கேட்டார்‌. அதற்கு பதிலாய்டாக்டர்‌ நடேச முதலியார்‌ பேசுகையில்‌, தான்‌ அணிந்திருப்பது கதர்‌. தானென்றும்‌, தங்களுடைய கொள்கைப்படி பட்டும்‌ உள்நாட்டு யந்திரத்தால்‌ செய்யப்பட்ட நூலைக்‌ கொண்டு உள்நாட்டு நெசவுக்காரர்களால்‌ நெய்யப்‌ பட்ட துணியும்‌ கதர்‌ என்று பாவிப்பதாகவும்‌, அந்தக்‌ கொள்கைப்படியே நான்‌ இப்போது உள்நாட்டுப்‌ பட்டாடைதான்‌ அணிந்திருக்கிறேனென்றும்‌ சொன்னார்‌. மிதவாதிகளும்‌ சுயராஜ்யக்‌ ககஷியாரும்‌ இதே கொள்கையை உடையவர்கள்தான்‌. அதற்குக்‌ காரணமாகத்தான்‌ சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌, காங்கிரஸில்கூட கதர்‌ ஒரு நிர்ப்பந்தமாயிருக்கக்‌ கூடாதென்று ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்‌. நேற்று பெல்காம்‌ காங்கிரஸிலும்‌, கான்பூர்‌ காங்கிர ஸிலும்‌ ஸ்ரீமான்கள்‌ ஏ. ரெங்கசாமி ஐயங்கார்‌, சத்தியமூர்த்தி இவர்களும்‌, அபயங்கர்‌, ஜெயகர்‌, மூஞ்சி இவர்களும்‌ முறையே அந்நியநாட்டு நூலும்‌, ஜரிகையும்‌ கொண்ட வஸ்த்திரத்தைத்தான்‌ அணிந்து கொண்டிருந்தார்கள்‌. தாங்கள்‌ வோட்‌ பிரசாரம்‌ செய்யும்‌ போது மாத்திரம்‌ தங்கள்‌ கதருக்கு தங்கள்‌ இஷ்டம்‌ போல்‌ வியாக்கியானம்‌ செய்து கொள்ளலாம்‌: மற்றவர்கள்‌ மாத்திரம்‌ அவர்கள்‌ உண்மையான கொள்கையைப்‌ பின்பற்றுவதே பெரியதப்பிதமாகக்‌ கருதப்படுகிறது. இவ்வித சூழ்ச்சியால்‌ பிராமணரல்லாதாரை இந்தப்‌ பிராமணர்‌: கள்‌ எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றலாமென்றிருக்‌ கிறார்களோ தெரிய வில்லை. குடி அரசு - கட்டுரை - 17.01.1926. 53 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 திருவாங்கூறில்‌ மறுபமுயும்‌ சத்தியாக்கிரகம்‌ தயார்‌ - தயார்‌ தமிழ்நாடு கணது கடமையைச்‌ வய்யத்‌ தயாறாயிருக்கிறது (டாக்டர்‌ 10.ர.நாயுடு எழுதுகிறார்‌) திருவாங்கூர்‌ சமஸ்தானத்தில்‌ புண்ணிய கேஷத்திரங்களாக பல ஸ்தலங்கள்‌ இருக்கின்றன. அவைகளில்‌ வடக்கே வைக்கமும்‌, மத்தியில்‌ திருவனந்தபுரமும்‌, தெற்கே சுசீந்திரமும்‌ முக்கிய க்ஷேத்திரங்களாகும்‌. வைக்கம்‌ சத்தியாக்‌ கிரகத்தின்‌ பயனாய்‌ வைக்கம்‌ கோயிலைச்‌ சுற்றியுள்ள ரோட்டுகள்‌ ஜாதி உயர்வு தாழ்வு இன்றி சகல பிரஜைகளுக்கும்‌ சமமாய்‌ உபயோகிக்க விட்டாய்‌ விட்டது. மற்றும்‌ சில ரோட்டுகளை சமமாய்‌ உபயோ கிக்க அரசாங்கத்தார்‌ வேண்டிய உதவி செய்திருக்கிறார்கள்‌, ஆதலால்‌ திருவாங்கூரிலும்‌, சுசீந்திரத்‌ திலும்‌, கோயிலைச்சுற்றியுள்ள பொது ரோட்டு களில்‌, மகாராஜாவின்‌ எல்லாப்‌ பிரஜைகளுக்கும்‌ நடக்க உரிமை வேண்டு மென்று முயற்சிகள்‌ நடந்து வரு கின்றன. இந்த தை மீ” 5-ந்‌ தேதி மாலை 4 மணிக்கு சுசீந்திரம்‌ கோவிலைச்‌ சுற்றி சகல இந்து ஜாதியாரையும்‌ அழைத்‌ துச்‌ செல்லுவதாய்‌ தீர்மானம்‌ செய்திருக்கிறது. இதைப்பற்றிச்‌ சர்க்காருக்கும்‌, கோவில்‌ அதிகாரிகளுக்கும்‌, மார்கழி மீ”28-ந்‌ தேதி முன்னறிக்கை கொடுக்‌ கப்பட்டிருக்கிறது. உரிமை தடுக்கப்பட்டால்‌ சத்தியாக்கிரகம்‌ நடத்தவும்‌ வேண்டிய ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகின்றன. நமது குறிப்பு - இம்மாதிரி நாகர்கோவிலைச்‌ சேர்ந்த கோட்டார்‌ டாக்டர்‌ எம்‌. பெரு மாள்‌ நாயுடு அவர்கள்‌ நமக்கு எழுதியிருக்கிறார்‌. மழைவிட்டும்‌ தூற்றல்‌ விட வில்லை என்று சொல்லுவது போல்‌ வைக்கத்தில்‌ சத்தியாக்கிரகம்‌ செய்து தெருவில்‌ நடக்கும்‌ உரிமை பெற்றால்‌, அது வைக்கத்திற்கு மாத்திரம்தான்‌ செல்லும்‌; மற்ற இடங்களுக்குச்‌ செல்லாது என்கிற வியாக்கியானம்‌ செய்து கொண்டு,அங்குள்ள வர்ணாசிரமிகள்‌ மறுபடியும்‌ உபத்திரவம்‌ செய்வதாய்த்‌ தெரிகிறது. வைக்கம்‌ சத்தியாக்கிரகம்‌ சம்பந்தமாய்‌ திருவாங்கூர்‌ அரசாங்கத்‌ குடி அரசு - 1926 () 54 தார்‌ எவ்விதமான உத்திரவும்‌ போடவேயில்லை. வைக்கம்‌ சத்தியாக்கிரகத்‌ திற்குச்‌ சர்க்கார்‌ செய்த தெல்லாம்‌ தெருவில்‌ ஜனங்களைத்‌ தடுக்க நிறுத்தி யிருந்த போலீஸ்காரர்களை எடுத்துவிட்டதுதான்‌ அவர்கள்‌ செய்த வேலை. இதற்காக ஓர்‌ உத்திரவு போடும்படி சர்க்காரைக்‌ கேட்டதற்கு அவர்கள்‌. “தாங்கள்‌ வெகு வருஷங்களுக்கு முன்பதாகவே, பொது ரஸ்தாக்களும்‌, பொதுக்குளங்களும்‌ ஜாதிமத வித்தியாசமில்லாமல்‌ பொது ஜனங்கள்‌ அநுபவிக்கத்தக்கது என்று உத்திரவு போட்டிருக்கிறோம்‌”” என்று மறுமொழி சொல்லிவிட்டார்கள்‌. ஆதலால்‌, இப்பொழுது சர்க்காரார்‌ பேரில்‌ குற்றம்‌ கூற இடமில்லை. பிராமணர்களொழிந்த, நாயர்‌ முதலிய பிராமணரல்லாத உயர்ந்த ஜாதியாரென்று சொல்லப்படுகிறவர்களும்‌, தங்கள்‌ வகுப்பு மகாநாடுகளின்‌ மூலமாக பொது ரஸ்தாக்களிலும்‌, பொதுக்குளங்களிலும்‌, சகல இந்துக்களும்‌ தாராளமாய்‌ நடமாடலாமென்கிற தீர்மானத்தையும்‌ ஏகமனதாய்த்‌ தீர்மானித்‌ திருக்கிறார்கள்‌. ஆதலால்‌, இப்பொழுது சம உரிமைக்கு இடைஞ்சலா யிருப்பவர்கள்‌ பிராமணர்களென்று தான்‌ சொல்ல வேண்டியிருக்கிறது. இம்மாதிரி ஒவ்வொரு காரியங்களுக்கும்‌ சம உரிமைக்கு விரோதமாய்‌ நின்று கொண்டு மனிதர்களைக்‌ கொடுமைப்படுத்தும்‌ இந்த ஜாதியார்‌, எத்தனை நாளைக்கு இப்படியே வாழக்‌ கூடுமென்று நினைக்கிறார்களோ தெரிய வில்லை. தமிழ்நாட்டுச்‌ சகோதரர்களே! சுசீந்திரத்தில்‌ டாக்டர்‌ எம்‌. பெருமாள்‌ நாயுடு அவர்கள்‌ எழுதியிருப்பதுபோல்‌ சத்தியாக்கிரகம்‌ செய்யவேண்டிய அவசியமேற்படுமேயானால்‌, வைக்கம்‌ சத்தியாக்கிரகத்துக்கு நமது கடமை: யைச்‌ செய்தது போலவே, சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகத்துக்கும்‌ நாம்‌ தயாரா யிருக்க வேண்டும்‌. தமிழ்நாட்டின்‌ சார்பாக டாக்டர்‌ எம்‌. பெருமாள்‌ நாயுடு அவர்களுக்கு, தமிழ்நாடு தனது கடமையைச்‌ செய்யத்‌ தவறாது என்று வாக்குக்‌ கொடுக்கிறோம்‌. (ப-ர்‌.) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 17.011926 55 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கதர்‌ பரிகை”ஷையில்‌ தவறு எல்லாம்‌ நண்மைக்கே அந்தணர்பேட்டை கதர்‌ விஷயமாய்‌ கதர்‌ போர்டு அதிகாரிகள்‌ பரீகைஷ செய்துப்‌ பார்க்கவேண்டிய அவசியம்‌ ஏற்பட்டது. ஏனென்றால்‌, அவ்‌ விடம்‌ தயார்‌ செய்யப்பட்ட கதர்த்‌ துணிகளில்‌ சிலது நூல்‌ சன்னமாயும்‌ ஒரே மாதிரியாயும்‌ இருந்ததோடு, அதிகக்‌ கெட்டியாகவும்‌, பார்வைக்கு மில்‌ துணி போலவும்‌ இருந்தது. இவ்வளவு நல்ல துணி சுத்தமான கதர்‌ துணியாய்‌, இவ்வளவு குறைந்த அதாவது சாதாரண கதர்த்‌ துணி விலைக்கு கொஞ்சம்‌ ஏறக்குறைய இருக்குமா என்கிற சந்தேகத்தின்‌ பேரில்‌ அதை அநுபோக சாலிகளான இரண்டொருவருக்கு பரீக்ஷக்காக அனுப்பப்பட்டது. பரீகைஷ யில்‌, பரீக்ஷகர்கள்‌ அது கதராயிருக்க முடியாதென்று அபிப்ராயப்பட்டதால்‌, உடனே அதற்கு கதர்‌ போர்டாரால்‌ அளிக்கப்பட்டிருந்த நற்சாக்ஷிப்‌ பத்திரத்தை வாப்பீசு அனுப்பும்படி எழுதிவிட்டு பத்திரிகைகளுக்கும்‌ அந்தணர்பேட்டை கதர்‌ சுத்தமான கதர்‌ அல்ல என்பதாக அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகு அந்தணர்பேட்டைக்‌ கதராலயத்தார்‌ தங்கள்‌ ஆவலாதியைத்‌ தெரிவித்துக்‌ கொண்டதன்‌ பேரில்‌, காரியதரிசி ஸ்ரீமான்‌ ராமநாதன்‌ நேரில்‌ போய்‌ பார்த்து அந்தணர்பேட்டைக்‌ கதர்‌ சுத்தமான கதர்‌ என்றும்‌, அதில்‌ எவ்வித வித்தியாசமும்‌ இல்லை என்றும்‌ மனப்பூர்வமாய்‌ அறிந்ததின்‌ பேரில்‌ பரிகை்ஷயில்‌ தவறிப்‌ போனதற்கும்‌ அந்தணர்பேட்டை கதராலயத்திற்கு. கெட்டபேர்‌ ஏற்படவேண்டி வந்ததற்கும்‌ தாம்‌ மிகவும்‌ வருந்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்‌. அதை முடிவில்‌ பிரசுரித்திருக்கிறோம்‌. கதர்‌ போர்டார்‌. பரீகைஷயில்‌ தவறிவிட்டதினால்‌ முடிவாக அந்தணர்பேட்டை கதருக்கு உண்மையில்‌ நன்மை ஏற்பட்டதே தவிர, கெடுதி ஒன்றும்‌ ஏற்படவில்லை. எப்படி என்றால்‌, தமிழ்நாடு கதர்போர்டார்‌ தமிழ்நாட்டில்‌ சுமார்‌ முப்பது நாற்பது கதர்ச்‌ சாலைகளுக்கு மேல்‌ சுத்தமான கதர்‌ என்பதாக நற்சாக்ஷிப்‌ பத்திரம்‌ கொடுத்திருந்தபோதிலும்‌ அவையெல்லாம்‌ உத்தேசத்தின்‌ பேரிலும்‌, மனிதர்களுடைய யோக்கியதையின்‌ பேரிலும்‌, அக்கம்‌ பக்கம்‌ விசாரித்ததின்‌ பேரிலும்‌, ஆள்களை விட்டு அறிந்து வரச்சொல்லுவதின்‌ பேரிலும்தான்‌ நம்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தணர்பேட்டைக்கும்‌ முன்‌ இப்படித்தான்‌ கொடுக்கப்பட்டது. ஆனால்‌, இப்பொழுது காரியதரிசி ஸ்ரீமான்‌ ராமநாதன்‌ அந்தணர்பேட்டைக்கு நேரில்‌ போய்‌ ஒவ்வொரு தறிகளையும்‌ ஒவ்வொரு குடி அரசு - 1926 () 56 ராட்டைகளையும்‌ வேலை செய்யும்‌ போது நேரில்‌ பார்த்தும்‌, கணக்குகளை ஆதியோடந்தமாய்‌ பரிசோதித்துப்‌ பார்த்தும்‌ பல வழிகளிலும்‌ சந்தேகமற திருப்தியடைந்து மறுபடியும்‌ புதிதாக நற்சாக்ஷிப்‌ பத்திரம்‌ கொடுக்கப்‌ பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில்‌ கதர்‌ போர்டாரால்‌ நற்சாக்ஷிப்‌ பத்திரம்‌ பெற்ற சுமார்‌ 30, 40 கதர்ச்சாலைகளில்‌ ஒன்றாவது, அந்தணர்பேட்டை கதர்ச்‌ சாலைபோல்‌ அவ்வளவு தூரம்‌ பரீக்ஷ செய்து திருப்தி அடைந்து கொடுக்கப்பட்டிருக்காது என்றே நினைக்கிறோம்‌. ஆதலால்‌ அந்தணர்‌. பேட்டை கதர்ச்‌ சாலையை கதர்‌ போர்டார்‌ சந்தேகப்பட்டு அதன்‌ நற்சாகஷிப்‌ பத்திரத்தை ஒரு தடவைரத்து செய்து மறுபடியும்‌ கொடுத்ததானது ழெ கதர்ச்‌ சாலையானது தனது பரிசுத்தத்தைப்பற்றி நெருப்பில்‌ குளித்து வெளியில்‌ வந்தது போல்‌ ஆகிவிட்டது. எதுவும்‌ நன்மைக்காகத்தான்‌ என்று பெரியவர்‌. கள்‌ சொல்லும்‌ வாக்கு இது விஷயத்தில்‌ சரியாய்‌ பலித்திருக்கிறது. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 17.01.1926 57 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 “சுதேசமித்திரணிண்‌ காணோதயம்‌ ஜுலை 15716 ௨ “மித்திர”ன்‌ “இந்து மத தர்ம ஸ்தாபனங்கள்‌ சரியாக நடக்கும்படி செய்யத்தக்க சட்டம்‌ ஒன்று. இயற்றப்பட வேண்டு மென்பதை எல்லோரும்‌ ஒப்புக்கொள்வார்கள்‌” என்று எழுதியிருக்‌ கிறான்‌. மதவிஷயத்‌ தில்‌ அரசாங்கத்தார்‌ பிரவேசிக்கக்‌ கூடாது என்று எழுதி இதுவரை பாமரர்களை ஏமாற்றி வந்த பார்ப்பன மித்திரனுக்கு இப்போதாவது சர்க்காரால்‌ சட்டம்‌ ஒன்று செய்யப்பட வேண்டும்‌ என்று சொல்லும்படியான புத்தி வந்ததற்கு நாம்‌ மகிழ்கிறோம்‌. ஆனால்‌ இந்தப்புத்தி தானாகத்‌ தோன்ற வில்லை. ஸ்ரீமான்கள்‌ வரதராஜுலு நாயுடுகாரும்‌, ஈ.வெ.இராமசாமி நாயக்‌ கரும்‌ தேவஸ்தானச்‌ சட்டத்தை ஆதரித்தும்‌ அதை எதிற்கும்‌ பார்ப்பனர்‌. களின்‌ சூழ்க்ஷியைப்‌ பொது ஜனங்கள்‌ அறியும்படி செய்ததின்‌ பலனாகவும்‌ இதை ஒப்புக்கொள்ளாவிட்டால்‌ தங்களுக்கு ஓட்டுக்கிடைக்காமல்‌ போகு மோன்கிற பயமும்‌ பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திர'” னை “இந்துமத. ஸ்தாபனம்‌ சரியாக நடக்க ஒரு சட்டம்‌ அவசியம்‌” என்று சொல்லும்படி செய்து விட்டது. ஆனால்‌ “மித்திரன்‌” அதின்‌ கீழாகவே “இந்த சட்டமானது தர்மங்கள்‌ சரியாக நடைபெறும்படி செய்வதற்கு மாத்திரம்‌ உத்தேசிக்கப்‌ பட்டதாக இருக்க வேண்டும்‌” என்கிறான்‌. அப்படியானால்‌ இப்போதிருக்‌ கும்‌ சட்டம்‌ கோயில்களில்‌ இருக்கும்‌ “கல்லுசாமி”களை யெல்லாம்‌ பிடுங்கி எறிந்துவிட்டு, அந்த ஸ்தானத்தில்‌ ஸ்ரீமான்கள்‌ பனக்கால்‌ ராஜாவும்‌ வரத ராஜுலு நாயுடுகாரும்‌, இராமசாமி நாயக்கரும்‌ உட்கார்ந்து கொண்டு இந்தப்‌ பார்ப்பனர்களைக்‌ கொண்டு அபிஷேகமும்‌ பூஜையும்‌ செய்யும்படி கேட்பார்கள்‌ என்று “மித்திரன்‌” உண்மையிலேயே பயப்படுகிறானா அல்‌ லது இந்த முகாந்திரத்தைச்‌ சொல்லி அதை ஒழிக்க சூழ்க்ஷி செய்கிறானா என்பதை வாசகர்கள்‌ உணர்வார்களாக. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 18.07.1926 குடி அரசு - 1926 () 58 ம்ங்மான்‌ 6.5.கரத்தினசயாபதி முதலியார்‌ அவர்களுக்கு ஒரு பகிரங்க கமுதம்‌ ஐயா, தாங்கள்‌ தென்‌ இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும்‌ கமிட்டியில்‌ ஒரு அங்கத்தினராயிருப்பது பற்றி மிகவும்‌ சந்தோ ஷமே. ஆனால்‌, அதில்‌ தாங்கள்‌ இருந்து கொண்டு செய்கிற வேலைகள்‌ ஒன்றும்‌ புதிதாயாவது, முக்கியமானதாகவாவது தெரியவில்லை. அதாவது, கக்கூஸ்ரிப்பேர்‌ செய்வதும்‌, வண்டியில்‌ சிற்றுண்டி வழங்கு வதும்‌, வண்டியின்‌ நேரங்களை மாற்றுவதுமான காரியங்கள்‌ ஆகிய எதுவும்‌ பொது ஜனங்களுக்கு விசேஷ நன்மை எதுவும்‌ செய்துவிடாது. தங்கள்‌ காலத்தில்‌ ஏதாவது ஒரு நிரந்தரமான நன்மை செய்ததாயிருக்க வேண்டு மானால்‌ - பெரும்பான்மையான ஜனங்களின்‌ உணர்ச்சிகளைத்‌ தாங்கள்‌ மதித்தவர்களாயிருக்க வேண்டுமானால்‌ - ஒரு காரியம்‌ செய்தால்‌ போதும்‌. அதைச்‌ செய்துவிட்டு தங்கள்‌ வேலையை ராஜீநாமா செய்துவிட்டாலும்‌ சரி அல்லது அந்தப்படி செய்ய தாங்கள்‌ பிரயத்தனப்பட்டு முடியாமல்‌ போனால்‌, தாங்கள்‌ ராஜீநாமா கொடுத்துவிட்டு வந்துவிட்டாலும்‌ சரி. அதாவது, தென்‌ இந்தியா ரெயில்வேகாரர்கள்‌ ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில்‌ கட்டிடம்‌ கட்டி ஓட்டல்‌ வகை யறாவுக்கு பிராமணர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்‌. அவைகளை வாங்கி ஓட்டல்‌ வைத்திருக்கும்‌ பிராமணர்கள்‌ சரிபகுதி இடத்தை ஒதுக்கி பிராமணர்‌ களுக்கு மாத்திரம்‌ என்று போர்டு போட்டு விட்டு, மற்ற பகுதியில்‌ எச்சிலை போடவும்‌, கை கழுவவும்‌ இடம்‌ செய்வதோடு, அந்த இடம்‌ பிராமணரல்‌ லாதாருக்கு என்றும்‌, சில இடங்களில்‌ சூத்திரர்களுக்கு என்றும்‌ போர்டு போட்டு விடுகிறார்கள்‌. இது நியாயமா? 100-க்கு 3 '/, பேர்‌ உள்ள பிராமணர்‌: களுக்கு பாதி இடம்‌ 100-க்கு 96 ', பேர்‌ உள்ள பல வகுப்பாரடங்கிய பிராமண ரல்லாதாருக்கு பாதி இடம்‌ என்றாய்ப்‌ பிரிப்பது ஒழுங்கானதாகுமா? எதற்காக பொது ஸ்தலத்தில்‌ ஒரு வகுப்பாருக்கு மாத்திரம்‌, அதுவும்‌100-ல்‌ 3, பேருக்கு தனி இடம்‌ ஏற்படுத்த வேண்டும்‌? வெள்ளைக்காரர்‌ தமக்கு மாத்திரம்‌ தனி வண்டி ஏற்படுத்திக்‌ கொள்வதற்கு நாம்‌ எவ்வளவு ஆக்ஷேபணை செய்கி றோம்‌. அல்லாமலும்‌ அது நமக்கு எவ்வளவு அவமானமாயிருக்கிறது.. அப்படியிருக்க இது ஏன்‌ தங்களுக்குத்‌ தோன்றுவதில்லை? பிராமணர்கள்‌. தனியாய்ச்‌ சாப்பிடுவதால்‌ நமக்குக்‌ கவலையில்லை. அந்தப்படி அவர்கள்‌ 59 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சாப்பிட வேண்டும்‌ என்று நினைப்பதும்‌, அதற்காக பிராமணருக்கு மாத்திரம்‌ என்று போர்டு போடுவதும்‌ எதை உத்தேசித்து? நம்மை தாழ்ந்த ஜாதியார்‌. என்று எண்ணியல்லவா? இது நமது ஜாதி இழிவைக்‌ குறிக்கும்‌ ஒரு நிரந்தர மான அடையாளமும்‌ ஆதாரமுமல்லவா? இவ்வித பிரிவினைகளும்‌ போர்டுகளும்‌ இருப்பது சுயமரியாதை உள்ள ஒருவன்‌ இம்மாதிரியான போர்டுகளைப்‌ பார்க்கிறபோது அவனுடைய இரத்தம்‌ துடிக்குமா? துடிக்‌ காதா? மனம்‌ பதறுமா? பதறாதா? இதற்கு நீங்கள்‌ என்ன செய்கிறீர்கள்‌? ஆத லால்‌, தயவு செய்து அடுத்த ஆலோசனை சபைக்‌ கூட்டத்தில்‌ இதைப்‌ பற்றி ஒரு பிரேரேபனை கொண்டு போக வேணுமாய்க்‌ கோருகிறேன்‌. அதாவது:- “தென்‌இந்திய ரெயில்வே ஸ்டேஷன்களில்‌ உள்ள ஒவ்வொரு போஜன சாலைகளிலும்‌ பிராமணர்க்கு மட்டும்‌ என்றும்‌, பிராமணரல்லா தாருக்கு என்றும்‌ இடங்களை பாகுபடுத்தி போர்டு போடுவது, பிராமணரல்லா தார்‌ பிறவியிலேயே தாழ்ந்தவர்கள்‌ என்பதைக்‌ காட்டுவதற்கு ஏற்பட்ட அறிகுறி போல்‌ இருப்பதோடு பிராமணரல்லாதார்‌ சுயமரியாதைக்கு விரோத மாய்‌ இருப்பதாலும்‌ அதைப்‌ பார்க்கும்‌ போதெல்லாம்‌ பிராமணரல்லாதார்‌. மனம்‌ புண்படுவதாலும்‌ இந்த பாகுபாட்டை ஒழித்து சமமாய்‌ நடத்தும்படி ஏற்பாடு செய்யவேண்டும்‌.” - சித்திரபுத்திரன்‌ குடி அரசு - கடிதம்‌ - 17.01.1926 குடி அரசு - 1926 () 60 பிறப்புரிமை ௬சயறரான்யமா? ச௬ுயமரியாகையா? நமது நாட்டில்‌ உள்ள பொதுமக்கள்‌ ஒருவருக்கொருவர்‌ தங்கள்‌ கூழ்ச்சிகளாலும்‌ தந்திரங்களினாலும்‌ ஒருவரையொருவர்‌ இழிவுபடுத்தியும்‌ அடிமைப்படுத்தியும்‌ கொடுமைச்‌ செய்து வருவதின்‌ பலனாய்‌, அந்நிய அரசாங்கத்தின்‌ கீழ்‌ ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம்‌. இத்துன்பம்‌ நமக்கு ஒழிய வேண்டுமானால்‌ நாம்‌ பிறரைச்‌ செய்யும்‌ துன்பம்‌ ஒழிய வேண்டும்‌. அந்நிய அரசாங்கத்தார்‌ நம்மைச்‌ செய்யும்‌ கொடுமையை ஒரு தட்டில்‌ வைத்து, நம்‌ நாட்டில்‌ சிலர்‌ நமக்குச்‌ செய்யும்‌ கொடுமையையும்‌ நம்மைக்‌ கொண்டு மற்றவர்களைச்‌ செய்யச்‌ செய்யும்‌ கொடுமையையும்‌ ஒரு தட்டில்‌ வைத்துத்‌ தூக்கிப்‌ பார்த்தால்‌ அரசாங்கத்தின்‌ கொடுமையை விட நம்மவர்களின்‌ கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும்‌. நமது நாட்டில்‌ சில வேஷக்காரர்கள்‌ சுயராஜ்யம்‌ என்கிற பதமும்‌, சுதந்திரம்‌ என்கிற பதமும்‌, உரிமை என்கிற பதமும்‌, வாழ்க்கையை உத்தே சித்து வாயளவில்‌ பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில்‌ அழுக்குப்‌ படாமல்‌ காலங்கழிக்கப்‌ பார்க்கின்றார்களேயல்லாமல்‌, அதற்காகச்‌ செய்ய வேண்டிய காரியங்களில்‌ தங்களுக்குச்‌ செய்ய யோக்கியதை இல்லாவிட்டா லும்‌ வேறு யாராவது செய்தாலும்‌ தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமேயென்கிற பயத்தால்‌ அதற்கு வேண்டிய முட்டுக்‌ கட்டைகளைப்‌ போட்டு தாங்களே முன்னணியிலிருக்க வேண்டிய மாதிரியில்‌ ராஜீயவாதிக சென்னும்‌ பேரால்‌ வாழ்ந்து வருகின்றார்கள்‌. நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா? சுயமரியாதையா? சுயராஜ்யம்‌ எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப்‌ பிழைக்கின்ற அநேகர்‌, சுவராஜ்யம்‌ இன்னதென்பதைப்‌ பற்றி ஒரு வார்த்தை யாவது சொன்னவர்களல்ல. அதை ஜனங்கள்‌ அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள்‌ செய்து வருகின்றார்கள்‌. மகாத்மா காந்தி அவர்கள்‌. சுமார்‌ ஐந்து வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம்‌ ஓர்‌. கூட்டத்தில்‌ பேசும்‌ போது, “என்னுடைய சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள யோக்கியதை இல்லாமல்‌ இருக்குமானால்‌, நான்‌ சுயராஜ்யத்தை விரும்புவதில்‌ அர்த்தமே இல்லை” யென்று சொல்லியிருக்கிறார்‌. மனித னுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும்‌ தன்மானத்தைக்‌ காப்பாற்றிக்‌ 61 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கொள்ளுவதுதான்‌ பிறப்புரிமையேயல்லாமல்‌, அரசியலான ராஜீயமென்னும்‌ சுயராஜ்யம்‌ ஒருக்காலும்‌ பிறப்புரிமை ஆகமாட்டாது. ராஜீய பாரமானது ஒரு தொண்டு. வீதி கூட்டுவதும்‌, விளக்கு போடுவதும்‌, காவல்‌ காப்பதும்‌ எப்படி சேவையாயிருக்கின்றதோ, அதுபோலவே, ராஜீய பாரமென்பதும்‌ ஒரு சேவைதான்‌. தேசத்தில்‌ அவனவனது வாழ்க்கைக்கும்‌ அல்லது பொது நன்மைக்கும்‌ எப்படி பல தொழில்கள்‌ இருக்கின்னவோ, அதுபோல ராஜீய பாரமென்பதும்‌ ஒரு தொழில்தான்‌. இத்‌ தொழிலை இன்னார்தான்‌ செய்ய வேண்டுமென்றாவது, இன்னார்க்குத்‌ தான்‌ உரிமை என்றாவது “கடவுள்‌” யாருக்கும்‌ பிரித்துக்‌ கொடுக்கவே இல்லை. மனிதராகப்‌ பிறந்தவர்கள்‌ எல்லோரும்‌ ஊமை, கூன்‌, குருடு, செவிடு உட்பட இதற்கு அருகர்கள்தான்‌. ஆதலால்‌, இவ்வுரிமையை எல்லோரும்‌ சமமாய்‌ அடைய வேண்டியதுதான்‌. ஆனபோதிலும்‌, மனித ஜென்மத்திற்கு இக்கேவல ஆட்சி பிறப்புரிமை என்று சொல்ல முடியாது. மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும்‌ பரோபகார மென்பதுமேதான்‌. சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்கு சுயராஜ்யம்‌ அவசியமே இல்லாததாகும்‌. சுயராஜ்யம்‌ இல்லாத எந்த மனிதனுக்கும்‌ கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும்‌. சுயமரியாதை அற்றவனைப்‌ பிணமென்று தான்‌ சொல்லவேண்டும்‌.அப்படிப்‌ பார்க்கின்றபோது நமது தேசத்தில்‌ சுயமரி யாதை அற்று பூச்சி புழுக்கள்‌ போலும்‌, நாய்கள்‌ பன்றிகள்‌ போலும்‌, பிசாசுகள்‌ அரக்கர்கள்‌ போலும்‌ வாழும்‌ ஜனங்கள்‌ கோடிக்‌ கணக்காய்‌ இருக்கின்றனர்‌. லக்ஷக்கணக்காய்‌ தினம்‌ பிறக்கின்றனர்‌. இச்சமூகத்திற்கு சுயராஜ்யம்‌ எதற்கு? உதாரணமாக, மனித உடல்‌ தாங்கிய ஒருவன்‌ அவனுடைய தெய்வத்‌ தைக்‌ காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன்‌ எப்படி சுயமரியாதையுள்ள வனாவான்‌. அந்த சமூகத்திற்கு சுயராஜ்யம்‌ எதற்கு? எந்த ராஜ்யமிருந்தால்‌ தான்‌ அவர்களுக்கு கவலையென்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரை சுயமரி யாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும்‌ ஒரு ராட்சஸ சமூகத்தார்‌ சுபராஜ்ய மடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும்‌ சேர்ந்துதான்‌ சுயராஜ்யம்‌ தேடுவது என்று சொல்லுவோ மானால்‌ அவர்கள்‌ தங்கள்‌ தெய்வங்களைக்‌ காணவும்‌ தரிசிக்கவும்‌ முடியாத படியும்‌, தெருவில்‌ நடக்கவும்‌, கண்ணில்‌ தென்படவும்‌ முடியாத படியும்‌ வைத்து இருப்பதற்குக்‌ காரணம்‌ சுயராஜ்யம்‌ இல்லாமைதானா?' அந்நிய ராஜ்யம்‌ நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச்‌ சொல்லவேயில்லை.எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டோ அந்நிய ராஜீயபாரங்கள்‌ நமது நாட்டிற்கு ஏற்படாமலிருக்குமேயானால்‌, இந்த சுயமரியாதை இன்னதென்று உணர்வதற்குக்‌ கூட நமக்குச்‌ செளகரியம்‌ கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின்‌ சுயமரியாதைக்கு விரோதமா யிருப்பது, நம்‌ நாட்டார்‌ சிலரின்‌ ஆதிக்கத்தினாலேயல்லாமல்‌, அந்நிய அரசாங்கத்தின்‌ ஆதிக்கத்தினாலல்ல. ஆனால்‌, நமது நாட்டில்‌ பெரும்பா குடி அரசு - 1926 () 62 லோர்‌ சுயமரியாதை அற்றிருக்கும்‌ தன்மை, அந்நிய அரசாங்கத்தாருக்கு அநுகூலமாயிருப்பதினால்‌ இக்கொடுமைகளைப்‌ போக்க அவர்களுக்கு அதிகக்‌ கவலையில்லை. ஆனபோதிலும்‌, அவர்களுடைய தத்துவம்‌ ஒரு நாளும்‌ இவ்வித சுயமரியாதைக்‌ கேடுக்கு அநுகூலமாய்‌ இருப்பதில்லை. ஒரு தேசம்‌ சுதந்திர மடைய வேண்டும்‌ என்ற உண்மையான கவலை இருக்குமானால்‌, அக்‌ கவலைக்கு அவர்கள்‌ அருகர்களா? இல்லையா வென்பதை பரிக்ஷிக்க வேண்டுமானால்‌, அவர்கள்‌ சுயமரியாதை உள்ளவர்களா? இல்லையா வென்பதிலிருந்துதான்‌ அவர்களுடைய அருகதை வெளிப்படும்‌. அஃதில்லாமல்‌ சுதந்திரத்திற்காக செய்யப்படும்‌ எவ்வித முயற்சிகளும்‌ தனிப்‌ பட்டவர்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌, வாழ்க்கை நலத்திற்கும்‌, சுயமரியாதை இல்லாத நிலைமையை பலப்படுத்தவும்தான்‌ ஆகுமேயல்லாமல்‌ வேறொன்‌ றுக்கும்‌ உதவாது. அதை உத்தேசித்தேதான்‌ மகாத்மா காந்தியும்‌, சுதந்திரம்‌ பெறுவதற்காக ஏற்பட்ட திட்டங்களே சுயமரியாதை அடைவதற்கான திட்டங்‌ களாகப்‌ போட்டு விட்டார்‌. தீண்டாமை ஒழிய வேண்டும்‌ என்று சொல்லு வதும்‌ கதர்‌ அணிய வேண்டும்‌ என்று சொல்லுவதும்‌ நம்‌ நாட்டு மக்களின்‌ சுயமரியாதையின்‌ ஜீவ நாடிகள்‌. ஒரு மனிதனை மற்றொரு மனிதன்‌ தெருவில்‌ நடக்கவும்‌, பக்கத்தில்‌ வரவும்‌, கண்ணில்‌ தென்படவும்‌, அவனது தெய்வத்‌ தைக்‌ கண்டு தரிசிக்கவும்‌ முடியாமற்படி வைத்திருக்கிற வரையில்‌ சுயமரி யாதை இல்லையென்றும்‌, அப்படிப்பட்டவனுக்கு சுதந்திரமென்பது ஒரு மனிதன்‌ தன்‌ உடலிற்‌ போதிய சக்தியிருந்தாலும்‌, ஜீவனத்துக்கு வேண்டிய அளவு தொழிலில்லாமல்‌ வைத்திருப்பதானால்‌, அவன்‌ எவ்விதத்திலும்‌ சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும்‌, ஜீவனத்திற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கத்தான்‌ நேரிடுமென்றும்‌ கருதியே, பெரும்பான்மையான ஏழைகளுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும்‌ வற்புறுத்தி வந்தார்‌. மற்றவர்களை அடிமைப்படுத்தி வைப்பதினா லேயே வாழ முடியும்‌ என்கிற நிலைமை யடைந்து நமது நாட்டில்‌ உள்ள ஒரு சமூகத்தார்‌, இத்திட்டத்தை அடியோடு ஒழிக்க பழையபடி தங்களுடைய ஆதிக்கத்தைப்‌ பலப்படுத்திக்கொள்ளத்‌ தகுந்த மாதிரியில்‌ ஜெயம்‌ பெற்று வருகிறார்கள்‌. இந்நிலைமையில்‌ “சுதந்திரம்‌” “சுயராஜ்யம்‌” “உரிமை” என்கிற வார்த்‌ தைகள்‌ தேச ஜனங்களுக்குப்‌ பெரிய இழிவுக்கும்‌ கொடுமைக்கும்‌ ஆதார மானதுதான்‌. ஆதலால்‌, நமது தேசம்‌ உண்மையான உரிமை அடைய பாடுபட வேண்டுமானால்‌ மக்களின்‌ சுயமரியாதைக்காகத்தான்‌ முதலில்‌ பாடு பட வேண்டும்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 24.01.1926. 63 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தெண்‌ ஆப்பிரிக்கா பிரதிநிதிகள்‌ தென்‌ ஆப்பிரிக்காப்‌ பிரதிநிதிகள்‌ நாளது 24-ந்‌ தேதி கோயமுத்தூர்‌ ஜில்லாவாகிய நமது ஜில்லாவுக்கு வரப்போவதாக அறிந்து மிகவும்‌ சந்தோஷிப்பதோடு, மனப்‌ பூர்த்தியாய்‌ வரவேற்கிறோம்‌. தென்‌ ஆப்பிரிக்காக்‌ கவர்ன்மெண்டார்‌ தென்‌ ஆப்பிரிக்காவிற்குக்‌ குடியேறின இந்திய சகோதரர்‌. களுக்குச்‌ செய்து வரும்‌ ஆணவம்‌ பொருந்திய கொடுமைகள்‌ சுயமரியாதை யுள்ள சமூகத்தாருக்குச்‌ சகிக்க முடியாதிருப்பினும்‌ - உயிரைத்‌ துறந்தாவது தங்களுடைய சுயமரியாதையைக்‌ காப்பாற்றிக்‌ கொள்ள வேண்டிய அவசிய முள்ளதாயிருப்பினும்‌, இக்கஷ்டத்தை நீக்குவதற்குத்‌ தென்‌ ஆப்பிரிக்கா இந்தியர்கள்‌ தமிழ்நாட்டில்‌ சுற்றுப்பிரயாணம்‌ செய்வதில்‌ காதறுந்த ஊசியளவு பிரயோஜனமாவது உண்டாகுமாவென்பது நமக்குச்‌ சந்தேகமாகவேயிருக்‌ கிறது. ஆயிரம்‌ தென்ணாப்பிரிக்கா கவர்ன்மெண்டைக்‌ கசக்கிப்‌ பிழிந்து சத்து எடுத்ததற்குச்‌ சமானமான தமிழ்நாட்டுப்‌ பிராமணர்கள்‌ சிலர்‌, அதாவது, தமிழ்‌ நாட்டில்‌ தங்களுக்கு முந்தியுள்ள பூர்வீகக்‌ குடிகளாகவும்‌ தங்கள்‌ நாட்டா ராகவும்‌ இருக்கிற ஜனங்களைத்‌ தொடக்கூடாதவர்கள்‌, தெருவில்‌ நடக்கக்‌ கூடாதவர்கள்‌, கண்ணில்‌ தென்படக்‌ கூடாதவர்கள்‌, அவர்கள்‌ தெய்வத்தைக்‌ காணக்‌ கூடாதவர்கள்‌, அவர்கள்‌ மத- வேத மென்பதைப்‌ படிக்கக்‌ கூடாதவர்‌ கள்‌ என்று கொடுமைப்படுத்தி வைத்திருக்கிற ஒரு கூட்டத்தார்‌ - இக்‌ கொடு மைகளுக்கு ஆதாரமாக ஸ்மிருதிகளையும்‌, சாஸ்திரங்களையும்‌, புராணங்‌ களையும்‌ சட்டமாக வைத்துக்‌ கொண்டிருக்கிற ஒரு கூட்டத்தார்‌- இக்கொடு மைகளை ஒழிக்கப்‌ பாடுபட்ட மகாத்மா காந்தி போன்றவர்களை மூலையில்‌ உட்கார வைத்த ஒரு கூட்டத்தார்‌ - இக்‌ கொடுமைகளை நிலைநிறுத்த வர்ணாசிரம ஸ்தாபனங்களையும்‌ “பிராமணன்‌” ஆகிய பத்திரிகைகளையும்‌ வைத்துக்கொண்டும்‌ இக்கொடுமைப்படுகிறவர்களிலேயே சில சுயமரியாதை யற்றவர்களையும்‌, சமூகத்‌ துரோகிகளையும்‌ பலவழிகளில்‌ தங்கள்‌ சுவாதினப்‌ படுத்திக்கொண்டும்‌ பிரசாரம்‌ செய்யும்‌ ஒரு கூட்டத்தார்‌ - இத்‌ தென்னாப்‌ பிரிக்கா தூதர்களை ஊர்‌ ஊராய்‌ கூட்டிக்கொண்டு திரிவதினாலும்‌, இவர்‌. களைக்‌ காட்டி, வரப்போகும்‌ எலெக்ஷனுக்கு தங்களுக்கு வோட்‌ கிடைக்கும்‌ படியான மாதிரியில்‌ சூழ்ச்சிப்‌ பிரசாரம்‌ செய்வதினாலேயும்‌ தென்ணாப்பிரிக்கா இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடக்கூடும்‌. இம்மாதிரியான ஜனங்களின்‌ தந்திரங்களால்‌ நடத்தப்படும்‌ பிரசாரம்‌ தென்னாப்பிரிக்கா சகோதரர்களுக்கு எவ்விதம்‌ பயன்படும்‌ என்பதை மாத்திரம்‌ நாம்‌ வெளியில்‌ சொல்லாமலிருக்க முடியவில்லை. குடி அரசு - 1926 () 64 ஆனால்‌, ஆங்காங்கு கூட்டிக்கொண்டு போவதில்‌ அவர்கள்‌ இவர்‌ களுக்கு உபசாரம்‌ படித்துக்‌ கொடுக்கவில்லை; இவர்கள்‌ அவர்களுக்குச்‌ சாப்பாடு போடவில்லை; இவர்கள்‌ அவர்களுக்கு வண்டி கொடுக்கவில்லை என்று இம்மாதிரி ஒரு கக்ஷியாரின்‌ மேல்‌ பொது ஜனங்களுக்குத்‌ துவேஷ முண்டாகும்படியான விஷமப்‌ பிரசாரம்‌ செய்ய மாத்திரம்‌ உபயோகப்படு மென்பதை நாம்‌ மறைக்க முடியாது. குடி அரசு - கட்டுரை - 24.01.1926. 65 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கோயமுத்தூர்‌ முணிசியால்மூயில்‌ சுயாால்லியக்கட்சியும்‌ தீண்டாமையும்‌ கோயமுத்தூர்‌ முனிசிபல்‌ மீட்டிங்கு 18-1-26ந்‌ தேதி நடந்தது. அன்று ஸ்ரீமான்‌ காலஞ்சென்ற சுல்தான்‌ சாய்ப்பு அவர்களுக்கு அநுதாபத்‌ தீர்மானம்‌ ஒன்று நிறைவேற்றினார்கள்‌. இரண்டாவது ஒரு முக்கியமான தீர்மானம்‌ ஆலோசனைக்கு வந்தது. பாப்பானாயக்கன்பாளையத்தில்‌ இரண்டு இரவு பாடசாலை யிருந்து வருகிறது. ஒன்று “ஜாதி இந்துக்கள்‌” இரவு பாட சாலை, இன்னொன்று “பஞ்சமர்‌” இரவு பாட சாலை. இரண்டு பாடசாலையும்‌ முனிசி பால்ட்டியால்‌ நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஜாதி இந்துக்கள்‌ இரவு பாட சாலைக்கு அதிக வாடகை வேண்டுமென்றும்‌ இன்னொரு உதவி உபாத்தி யாயர்‌ வேண்டு மென்றும்‌, பஞ்சமர்‌ பாடசாலைக்கு 5 ரூபாய்‌ வாடகை வேண்டுமென்றும்‌, அப்பாடசாலைக்‌ கட்டிடக்காரர்கள்‌, விண்ணப்பம்‌ செய்து கொண்டிருக்கிறார்கள்‌. இவ்விஷயம்‌ மீட்டிங்கில்‌ ஆலோசனைக்கு வந்த போது ஸ்ரீமான்‌ வி.அருனாசலம்‌ செட்டியாரவர்கள்‌ பஞ்சமர்‌ பாட சாலையில்‌ 8 பிள்ளைகள்‌ தானிருப்பதால்‌ அதற்கு தனிப்‌ பாடசாலை வேண்டியதில்லை யென்றும்‌ ஜாதி இந்து பாடசாலையில்‌ இந்த 8 பிள்ளை களைச்‌ சேர்த்துக்‌ கொண்டு ஒரு உதவி உபாத்தியாயரும்‌,15 ருபாய்‌ வாடகை யும்‌ வேணுமானால்‌ கொடுத்து விடலாமென்றும்‌ சொன்னார்‌. சுயராஜ்யக்‌ கட்சியைச்‌ சேர்ந்த ஸ்ரீமான்‌ சி. எம்‌.ராமச்சந்திரஞ்செட்டியாரவர்கள்‌, பஞ்சமப்‌ பிள்ளைகளை இந்துக்கள்‌ பாடசாலையில்‌ சேர்க்கக்‌ கூடாதென்று ஆக் பித்து விட்டார்‌. காரணம்‌ கிராமத்தில்‌ தகறார்‌ உண்டாகும்‌ என்று சொல்லி விட்டார்‌. இந்த ஸ்ரீமான்‌ ராமச்சந்திரஞ்செட்டியார்‌ தான்‌, கோயமுத்தூர்‌ முனிசி பால்டியில்‌ காங்கிரஸ்சுயராஜ்யக்கட்சி கவுன்சிலராகத்‌ தேர்ந்தெடுத்து மாலை சூட்டியவர்‌. இன்னும்‌ இவர்‌ டிஸ்ரிக்டு எடுகேஷனல்‌ கவுன்சில்‌ பிரசிடெண்டு. இத்தகைய உத்தமர்‌ பிராமணர்கள்‌ புன்சிரிப்புக்கு மயங்கி காலமறியாமற்‌ போனதுதான்‌ விந்தை. கிராமப்பள்ளிக்கூடம்‌, அதுவும்‌ முனிசிபல்‌ பொதுப்‌ பள்ளிக்கூடம்‌ இதில்‌ பஞ்சம பிள்ளைகளைச்‌ சேர்த்துக்கொள்ள ஆக்ஷேபிப்‌ பாரானால்‌ இவர்‌ எப்படி காங்கிரஸ்‌ கட்சியை ஆதரிப்பவராவார்‌. இவர்‌. பிராமணர்‌ பிரசாரத்தால்‌ ஸ்தானம்‌ பெற்றதற்காகத்‌ தீண்டாமை விலக்குக்கு இவ்வளவு தடையாய்‌ இருக்கலாமா? அநேக இடங்களில்‌ இவர்‌ ஜாதிபேதம்‌ இல்லையென்றும்‌, தீண்டாமை இல்லையென்றும்‌ பேசியிருக்கிறார்‌. இப்படிப்‌ பட்டவர்‌, மேளவாத்தியத்துடன்‌ பூமாலையிட்டு பிராமணர்கள்‌ ஊர்கோலம்‌ குடி அரசு - 1926 () 66 செய்து வைத்ததற்காக தன்‌ மனச்சாக்ஷிக்கு மாராய்‌ தீண்டாமை விஷயத்தில்‌ இவ்வளவு தலையிடுவாறானால்‌, எவ்வாறு நம்‌ நாட்டில்‌ ஏழை பஞ்சம மக்களுக்கு சமத்துவமும்‌, கல்வியும்‌ கொடுக்கமுடியும்‌. கிராம இரவு பாட சாலை அக்ரஹாரமில்லாத இடம்‌. இந்த பாடசாலையில்‌ பஞ்சம பிள்ளைகள்‌ சேர்க்கக்‌ கூடாதென்று ஒரு தனி இரவு பாடசாலை வைப்பானேன்‌? கல்வி யிலாகாவுக்கு இத்தகைய மெம்பர்களிருப்பதால்‌ ஏழை பஞ்சமர்கள்‌ பாடு திண்டாட்டமாகி விடுவதல்லாமல்‌ கசாப்புக்கடைகாரருக்கு ஜீவகாருண்ய சங்கத்துப்‌ பிரசிடெண்டு வேலை கொடுத்தது போலாகும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌ ஓர்‌ நிருபர்‌ குடி அரசு - கட்டுரை - 24.01.1926. 67 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தெண்ணிந்திய ஷவாயில்&வே ஆலோசனை கமிட்மு இம்மாதம்‌ 27-ந்‌ தேதியன்று சென்னையில்‌ நடைபெறப்போகும்‌, தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக்‌ கமிட்டிக்கூட்டத்தில்‌, கீழ்க்கண்ட தீர்மானங்களை கொண்டுவரப்‌ போவதாக, டெ கமிட்டி மெம்பர்‌, கோய முத்தூர்‌ ஸ்ரீ மான்‌. சி.எஸ்‌. இரத்தினசபாபதி முதலியாரவர்கள்‌ தெரிவிக்கிறார்‌. @ ரெயில்வே பிளாட்பாரத்தில்‌ பிரயாணிகளுக்கு தண்ணீர்‌ கொடுப்‌ பதில்‌ எவ்வித வித்தியாசமும்‌ பாராட்டக்கூடாது. @ ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இங்கிலீஸ்‌ உணவுச்சாலைக்கு, ஐரோப்பியர்களோ அன்றி இந்தியர்களோ சென்றால்‌ அவர்கள்‌ யாவரையும்‌ ஒன்று போலவே நடத்தவேண்டும்‌. மற்றும்‌, ரெயில்‌ வண்டியிலிருந்து கொண்டே உணவைத்‌ தருவித்தாலும்‌, அப்போதும்‌ ஐரோப்பியர்‌, இந்தியர்‌. என்கிற வித்தியாசமின்றியே நடத்தவேண்டும்‌. இங்ஙனம்‌ செய்ய டெ உணவுச்சாலைகளை நிர்வகிக்கும்‌ மெஸர்ஸ்‌ ஸ்பென்ஸர்‌ கம்பெனியாரை: இச்சபை கேட்டுக்கொள்ளுகிறது. (3) ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இந்திய உணவுச்சாலைகளில்‌ எவ்வித ஜாதிவித்தியாசமும்‌ பாராட்டலாகாது. ஜாதி வேற்றுமையைக்‌ காட்டக்‌ கூடிய - இப்போதுள்ள சாதனங்களை- உடனே நீக்கி விடவேண்‌ டும்‌. மேலும்‌, ஒவ்வொரு போஜன சாலையிலும்‌, சகல ஜாதியார்களிலும்‌, மரக்கறி பதார்த்தங்கள்‌ உட்கொள்ளுபவர்களுக்கென்றும்‌, மாமிச ஆகார வகைகள்‌ உட்கொள்ளுபவர்களுக்கென்றும்‌ இரண்டு இடங்கள்‌ பிரிக்கப்பட வேண்டும்‌. முன்னர்‌ கூறிய பிரிவிற்கு, பிராமண சமையற்காரரையும்‌, பின்னர்‌ கூறிய பிரிவிற்கு மகமதிய சமையற்காரரையோ, அல்லது ரஜபுத்ர சமையற்‌ காரரையோ நியமிக்கவேண்டும்‌. ஒவ்வொரு பிரிவிலும்‌ பெண்களுக்கென தனி இடங்கள்‌ ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்‌, (4)இப்பொழுதுள்ள கோயமுத்தூர்‌ ரெயில்வே ஸ்டேஷனை ஒரு ஜங்ஷனாக மாற்றவேண்டும்‌. நமது குறிப்பு:- தீர்மானங்களின்‌ பிரேரேபனைகளை நாம்‌ மனப்பூர்வமாய்‌ ஆதரிப்ப குடி அரசு - 1926 () 68 தோடு மிகவும்‌ பாராட்டுகிறோம்‌. உண்மையிலேயே இத்தீர்மானங்கள்‌ வெகு காலத்திற்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டியது. தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக்‌ கமிட்டியிலுள்ள மற்ற கனவான்களும்‌ இதை ஆதரித்து அமுலுக்குக்‌ கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டுமாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. ஆனால்‌, பிராமண சமையற்காரரையே நியமிக்க வேண்டு மென்பதற்குப்‌ பொருள்‌ விளங்கவில்லை. (ப-ர்‌.) குறிப்பு:- 27-1-26- ந்‌ தேதி நடைபெறப்போகும்‌ தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக்‌ கமிட்டிக்‌ கூட்டத்தில்‌ நிறைவேற்றப்‌ போகும்‌ தீர்மானங்களை இநஇரத்தின சபாபதி தெரிவித்தது பற்றிய செய்தி விளக்கக்‌ குறிப்பு. குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 24.01.1926 69 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 “அதணால்தான்‌ உங்கள்‌ விட்முண்மேல்‌ காகம்‌ பறந்தது” சிறுபிள்ளைகள்‌ ஒருவருக்குகொருவர்‌ சண்டை போட்டுக்‌ கொள்ளும்‌. போது - சரியான தோஷம்‌ சொல்லுவதற்கு வழியில்லாதபோது கோபத்தில்‌ வெறியால்‌ ஏதாவதொன்றைச்‌ சொல்லி வைவதற்கு ஒருவன்‌ மற்றவனைப்‌ பார்த்து அதினால்தான்‌ உங்கள்‌ வீட்டின்‌ மேல்‌ காக்காய்‌ பறந்தது என்று சொல்வதுண்டு. அதுபோலவே, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வத்தைப்‌ பற்றி குற்றம்‌ சொல்ல வகை இல்லாமற்‌ போனால்‌ ஏதாவது சொல்லித்‌ தீர வேண்டிய நிலைமைக்கு ஸ்ரீமான்‌ கலியாணகந்திர முதலியார்‌ வந்துவிட்டதால்‌, சென்ற வாரத்திற்கு முந்தின பத்திரிகையில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ என்கிற தலைப்பின்‌ கீழ்‌ முஸ்லீம்‌ லீக்‌ தீர்மானத்தைப்‌ பற்றி எழுதிவிட்டு வகுப்பு வாரி தீர்மானம்‌ தப்பு என்கிறதற்கு ஆதாரமாக முஸ்லீம்‌ லீக்கில்‌ மெளலானா முகமதலிக்கும்‌, ஸர்‌. அப்துல்‌ ரஹீமுக்கும்‌ டி தீர்மான விஷயத்தில்‌ ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தை எடுத்துக்காட்டி இவ்வித அபிப்பிராய பேதம்‌ உண்டாவதால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ கூடாது என்கிறார்‌. இருவருக்‌ கும்‌ அபிப்பிராயபேதம்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டுமா? வேண்‌: டாமா? என்கிற விஷயத்தில்‌ இல்லவே இல்லை என்பதையும்‌ அதற்காக ஏற்படுத்தும்‌ திட்டத்தில்தான்‌ என்பதையும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அறிந்தி ருந்தும்‌ இதைப்‌ பொதுஜனங்களுக்கு திரித்துக்கூற வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது பற்றி நாம்‌ பரிதாபப்‌ படுகிறோம்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ கூற்றுப்‌ போலவே அபிப்பிராய பேதம்‌ இருந்திருந்தாலும்‌ அதற்காக அத்‌ தத்துவமே வேண்டாமென்று சொல்லி விடலாமா? சுயராஜ்ய விஷயமான தீர்‌ மான விஷயத்தில்‌, அபிப்பிராய பேதமேற்பட்டால்‌ அதற்காக சுயராஜ்யமே வேண்டாமா? என்று நாம்‌ கேட்கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 24.01.1926 குடி அரசு - 1926 () 70 யங்மாண்‌ ஸி. ராக€கோயாலாச்சாரியார்‌ “கள்ளின்‌ வெற்றியே வெற்றி” என்ற தலைப்பின்‌ கீழ்‌ “அரசாங்கத்தார்‌ நடத்திவரும்‌ பொல்லாத கள்ளுக்கடைகளை மூட வழி தேடுங்கள்‌” என்று சொன்னேன்‌. அதற்கு வகுப்புவாரிக்காரரும்‌ ஜஸ்டிஸ்‌ ககஷியாரும்‌ இன்னும்‌ சிலரும்‌ தன்னைப்‌ பற்றி சந்தேகப்படுகிறார்கள்‌ என்று சொல்லுகிறார்‌. ஆனால்‌, ககஷியார்கள்‌ இவர்பேரில்‌ சந்தேகப்படுவதற்கு சொல்லும்‌ காரணங்களுக்கு மாத்திரம்‌ பதில்‌ சொல்லுவதில்லை. சந்தடி சாக்கில்‌ ஜஸ்டிஸ்‌ ககதியைப்‌ பற்றி சொல்லும்‌ போது “நியாயக்‌ கட்சி “பிராமணரல்லாதார்‌ - ஜஸ்டிஸ்‌ கக்ஷி) என்று பெயர்‌ வைத்துக்‌ கொண்டு சிறு வகுப்பார்களை பிராமணர்களை ) அநியாயமாய்‌ (= யோக்கியமான பிராமணர்களின்‌ மேல்‌ அபாண்டமான பழிகளைச்‌ சொல்லி? பசு பலத்தால்‌ (= மிருக பலத்தால்‌) ஒடுக்கியாள -அவர்களுக்கு மேலே போக) முயலும்‌ 6வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்வம்‌ கேட்கும்‌ ) safuray (= பிரசாரம்‌ செய்யும்‌ ககஷியாரை) நான்‌ ஆதரிப்பதாய்‌ -பிராமணராகப்‌ பிறந்த நான்‌ ஆதரிப்பதாய்‌? ஏன்‌ எண்ணுகிறீர்கள்‌(-பிராமணர்களே பயித்தியக்‌ காரத்தனமாய்‌ ஏன்‌ எண்ணுகிறீர்கள்‌! என்று எழுதுகிறார்‌.” இதிலிருந்தே ஸ்ரீமான்‌ ஆச்சாரியாரின்‌ பரிசுத்தத்‌ தன்மையும்‌, பிராமணர்களையும்‌ பிராமணரல்லாதாரையும்‌ சமமாய்‌ நினைக்கும்‌ தன்மையும்‌ வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. அன்றியும்‌ ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ ஒரே அடியாய்‌ கள்ளையே நிறுத்தி விடப்‌ போவதாகவும்‌ அப்புண்ணிய காரியத்தை வகுப்பு வாரிக்காரரும்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கரும்‌ ஜஸ்டிஸ்காரரும்‌ மற்றும்‌ பல பிராமண ரல்லாதாரும்‌) ஆக்ஷேபிப்பதாயும்‌, பாமர ஓட்டர்கள்‌ நினைக்கும்படி மிகவும்‌ துக்கப்படுகிறார்‌. ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ இதுவரை கள்ளை நிறுத்த காரியத்தில்‌ நடக்கக்‌ கூடியதாய்‌ என்ன வழி சொல்லி இருக்கிறார்‌? சட்ட மறுப்பின்‌ பேரால்‌ சில பேர்‌, முட்டுக்கட்டையின்‌ பேரால்‌ சில பேர்‌, சுயராஜ்யத்‌ தின்‌ பேரால்‌ சில பேர்‌, வெற்றி மேல்‌ வெற்றியின்‌ பேரால்‌ சில பேர்‌ சட்ட சபைக்கு போகப்‌ பார்ப்பது போல்‌ கள்ளை ஒழிப்பதன்‌ பேரால்‌ தனக்கு வேண்டிய சில பேரோ அல்லது தானோ சட்டசபைக்கு போகப்‌ பார்க்கிறார்‌. கள்ளை விலக்க சட்ட சபை உதவுமானால்‌ மகாத்மா அதை விட்டுவிடுவாரா? அல்லது கள்ளுக்கடை மறியலுக்காக ஜெயிலுக்குப்‌ போய்‌ மூத்திரச்‌ சட்டியில்‌ கஞ்சி வாங்கி குடித்த வர்கள்‌ சட்டசபைக்கு போகப்‌ பயப்படுவார்களா? அல்லது அவர்களுக்கு 71 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 யோக்கியதை இல்லையா? இதையெல்லாம்‌ பொது ஜனங்கள்‌ யோசிக்க மாட்டார்கள்‌ என்றும்‌ பொது ஜனங்களை சுத்த முட்டாள்‌ கள்தானே என்றும்‌ நினைத்துக்‌ கொண்டதால்‌ இவ்வித தந்திர வழிகளில்‌ தன்‌ காரியத்தை நிறைவேற்றிக்‌ கொள்ள துணிந்து விட்டார்‌ என்றுதான்‌ எண்ண வேண்டி யிருக்கிறது. கள்ளை நிறுத்த சட்டம்‌ செய்ய சட்டசபைக்கு போகலாம்‌ என்பவர்‌ தீண்டாமை ஒழிக்க சட்டம்‌ செய்ய சட்டசபைக்கு போகலாம்‌ என்று ஏன்‌ சொல்லக்‌ கூடாது? அப்படிச்‌ சொன்னால்‌ ஒரு சமயம்‌ சர்க்காரார்‌ தீண்டாமை ஒழிய சட்டம்‌ செய்ய சுலபத்தில்‌ ஒப்புக்‌ கொள்ளுவார்கள்‌. பிராமண சட்ட சபை மெம்பர்கள்‌ ஆக்ஷேபனை பலிக்காமல்‌ போய்‌ காரியத்தில்‌ ஒரு சமயம்‌ தீண்டாமை ஒழிந்தாலும்‌ ஒழிந்து போகும்‌. ஆதலால்‌, அதை ஒழிக்க முடியாத இடமாகிய ஜனங்களிடமே சொல்லிக்‌ கொண்டு காலத்தை நடத்தலாம்‌. கள்ளையும்‌ ஒழிக்க முடியாத இடமாகிய சர்க்கார்‌ சட்டசபையிடமே சொல்லிக்‌ கொண்டிருக்கலாம்‌. எப்படியாவது ராஜீய பேச்சு ரதம்‌ ஓடிக்‌ கொண்டிருக்க வேண்டும்‌ என்கிற எண்ணம்‌ போலும்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 24.01.1926 குடி அரசு - 1926 () 72 ஈழவர்களிண்‌ கோயினுக்குள்‌ சல்லை புயையருக்கு அனுமதி கொச்சி, திருவாங்கூர்‌ சமஸ்தானங்களில்‌ சென்ற சில வருடங்களாக கவர்ன்மெண்டாரது பரிபாலனத்துக்கு உட்பட்டிருக்கும்‌ ஆலயங்களுக்கும்‌ சென்று தொழ தங்களுக்கு அநுமதியளிக்க வேண்டுமென்று ஈழவர்கள்‌' கிளர்ச்சி செய்து வந்த விஷயத்தை வாசகர்கள்‌ மறந்திருக்க முடியாது. எனினும்‌, இவர்களுக்குச்‌ சொந்தமான கோயில்கள்‌ கொச்சி, திருவிதாங்கூர்‌. சமஸ்தானங்களிலிருந்தபோதிலும்‌, இவர்கள்‌ தங்களிலும்‌ கீழ்ப்பட்டவர்‌ களாகக்‌ கருதப்படும்‌ புலையர்களை அவற்றுள்‌ அநுமதிக்கிறார்களா என்கிற சந்தேகம்‌ பொதுஜனங்களுக்கு இருந்து வந்தது. இந்த சந்தேகத்தைப்‌ போக்கிக்‌ கொள்ளுவதற்காக அவர்கள்‌ தங்களுடைய எல்லா கோவில்களுக்‌ குள்ளும்‌ புலையர்‌ முதலிய தாழ்ந்த ஜாதியார்‌ என்போரை விட முயற்சி செய்து வருகின்‌ றார்கள்‌. அல்லாமலும்‌ ஏற்கனவே சில கோயில்களுக்குள்‌ புலையர்கள்‌ செல்ல அநுமதி யளித்து விட்டனர்‌.மற்ற கோயில்களிலும்‌ இதே மாதிரி புலையர்களை அநுமதிக்கும்படி வைதீக கோஷ்டியாரைத்‌ தூண்ட சீர்திருத்தக்‌ கோஷ்டியார்‌ சகல முயற்சிகளையும்‌ செய்து வருகின்றார்கள்‌. பல்லுருத்தி பவானீஸ்வர கோவிலுக்குத்‌ தெற்கே, ஸ்ரீமான்‌ கே. நாராண னுக்குச்‌ சொந்தமான ஈழவக்‌ கோயிலுக்குள்‌ செல்ல புலையர்களுக்கு முதல்‌ முதலாக அநுமதியளிக்கப்‌ பட்டது. ஸ்ரீ நாராணகுருவின்‌ பிரதம சீடரான சுவாமி போதானந்தர்‌ தானே புலையர்களைக்‌ கோயிலுக்குள்‌ பிரதட்சணமாக அழைத்துச்‌ சென்று அங்கு அவர்களுக்குப்‌ பிரசாதங்கள்‌ வழங்கினார்‌.சுவாமி சத்திய விரதன்‌ என்பவரும்‌ ஸ்ரீமான்‌ கே. ஐயப்பனும்‌ தங்களுக்கும்‌, கீழ்‌ நிலை மையிலுள்ளவர்களுக்கும்‌ உள்ள வித்தியாசங்களைப்‌ போக்கிக்‌ கொள்ளக்‌ கூடிய அவசியத்தைப்‌ பற்றிப்‌ பேசுகையில்‌ சமீபத்தில்‌ பல்லுருத்தியில்‌ புலையருடன்‌ சமபந்தி போஜனம்‌ செய்ததற்காக ஈழவர்களுக்கு ஏற்பட்டி. ருந்த மனஸ்தாபங்களைத்‌ தாங்கள்‌ போக்கி விட்டதாகவும்‌ கூறினார்‌. கும்ப மாதத்தில்‌ தங்கள்‌ தோட்டத்தில்‌ பறிக்கும்‌ எல்லா தேங்காய்களையும்‌ இவ்வூரி லுள்ள (கொச்சி ஈழவர்கள்‌ பள்ளிக்கூடங்கட்கு செலவிற்கு நிதி சேர்ப்ப தற்காக கொடுத்துவிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டதாகத்‌ தகவல்‌ எட்டியிருக்கிறது. குடி அரசு - செய்தி விளக்கக்‌ குறிப்பு - 24.01.1926 73 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வபொண்ணம்பல சுவாமி மடம்‌ ம்‌ சிதம்பரா சுவாமிகள்‌ கர பூலை மகோற்சவம்‌ சென்ற இரத்தாவி வருடம்‌ தை மீ£24-ந்‌ தேதி விதேகமுக்தி எய்தின, ஸ்ரீ காசி வாசி சிதம்பர சுவாமிகளின்‌ குருபூஜை மகோற்சவம்‌, நாளது தை 15 18 - தேதி மங்களவாரம்‌ திருவாதிரை நட்சத்திரத்தில்‌ வருட குருபூஜை வைபவத்‌ திருநாள்‌ நடைபெறும்‌. அன்பர்கள்‌ யாவரும்‌ வந்திருந்து இருமை நலன்‌ பெற்று உய்ய திருவருளை விழைகின்றோம்‌ என ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள்‌ மடத்து ஸ்ரீபரஞ்சோதி சுவாமிகள்‌ எழுதுகிறார்‌. நமது குறிப்பு:- தென்னாட்டிலுள்ள பல்வேறு மடங்களிலும்‌ ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள்‌ மடமானது வைதீகப்‌ போர்வை போர்த்த லெளகீக மடமாயிராமல்‌, உண்மையில்‌ ஜீவன்களிடத்தில்‌ அன்பும்‌, சமரசத்‌ தன்மையும்‌ கொண்டு விளங்குவதை நாம்‌ நேரில்‌ பார்த்திருக்கிறோம்‌. அதற்குத்‌ தற்கால மடாதிபதி யாயிருக்கும்‌ ஸ்ரீ பரஞ்ஜோதி சுவாமி அவர்கள்‌ நமது மகாத்மா அவர்களின்‌ கொள்கையைச்‌ சிரமேற்கொண்டு அநுபவத்தில்‌ நடைபெற உழைத்து வருபவர்‌. அத்துடன்‌ மடத்தில்‌ கதர்‌ உற்பத்தியும்‌, பிரசாரமும்‌ நடைபெற்று வருகிறது. வருடத்தில்‌ லக்ஷக்கணக்காய்‌ வரும்படியுள்ள பல மடங்கள்‌ சோம்பேறி மடங்களாய்‌ விளங்குவதை நாம்‌ நேரில்‌ பார்க்கிறோம்‌. அவைகள்‌ நமது ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள்‌ மடத்தையும்‌, ஸ்ரீ பரஞ்ஜோதி சுவாமிகளின்‌ உள்ளத்தையும்‌ பின்பற்றினால்‌ தமிழ்நாடும்‌ ஜீவன்களும்‌ முக்தி யடைய ஏற்ற சமயமாய்‌ விளங்கும்‌. (ப-ர்‌) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 24.01.1926 குடி அரசு - 1926 () 74 வமெனலாணா மகம்மதலியும்‌ வகுப்புவாரி பிரதிநிதித்துவமும்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாச சாஸ்திரியார்‌ அவர்கள்‌ சமீபத்தில்‌ தனது பத்திரி கையில்‌ “மெளலானா மகம்மதலி அவர்கள்‌ மகாத்மா காந்தியுடன்‌ கொஞ்சக்‌ காலம்‌ தேசீய நோக்கத்தோடு வேலை செய்த பிறகு மறுபடியும்‌ தன்னுடைய பழைய குணப்படி ஹிந்து - முஸ்லீம்‌ வேறுபாட்டைக்‌ கருதுகிறார்‌” என்று எழுதியதற்கு விடையாக மெளலானா அவர்கள்‌ எழுதிய கீழ்க்கண்ட பாகத்தை தமிழர்களுக்கு அறிவுருத்துகிறோம்‌. “வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமானது ஏட்டுச்‌ சுறக்காய்‌ அல்லவென்று ஸ்ரீமான்‌ சாஸ்திரியாருக்குநான்‌ வெளிப்படையாய்ச்‌ சொல்லுகிறேன்‌.நம்முள்‌ குறைந்த தொகுதியாயுள்ள வகுப்பாருக்கு நம்மிடத்திலுள்ள அவநம்பிக்‌ கையும்‌, நாம்‌ முற்காலத்தில்‌ செய்த அநீதிகளுடைய கர்ம பலனும்தான்‌ இவ்வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமென்று நாம்‌ ஒப்புக்கொள்ள வேண்டும்‌. அவநம்பிக்கை ஏற்படுகிற இடங்களில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுத்தே தீர வேண்டும்‌. ஸ்தல ஸ்தாபனங்களென்றாவது பள்ளிக்கூடங்க ளென்றாவது இக்கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால்‌, இவ்வவநம்பிக்கை எவ்வளவு காலம்‌ நீடித்திருக்க வேண்டுமென்பது பெரு வாரியான மற்ற சமூகங்களின்‌ கையில்தானிருக்கிறது. முதலாவதாக ஹிந்துக்‌. கள்‌ தங்கள்‌ மதத்தைச்‌ சேர்ந்த தாழ்ந்த வகுப்பாரென்று கருதப்படுகின்றவர்‌. களை மனிதர்களாகவும்‌, சகோதரர்களாவும்‌ நடத்தக்‌ கற்றுக்கொள்ளட்டும்‌. தேசியத்‌ திற்கு பெரும்‌ பகையான ஜாதி என்னும்‌ பேயை அவர்கள்‌ அடியோடு ஓட்டட்‌ டும்‌. ஒரு முஸல்மானின்‌ தாழ்ந்த நிலை தங்களுடைய தாழ்மைதான்‌' என்று கருதி தேசீய முயற்சியினால்‌ அத்தாழ்மை உயர்த்தப்பட வேண்டு மென்றும்‌, ஹிந்துக்கள்‌ மாத்திரம்‌ முற்போக்கடையாமல்‌ தேசமே முற்போக்‌ கடைய வேண்டுமானால்‌ ஹிந்துக்கள்‌ இந்நோக்கத்துடன்‌ பாடுபடவேண்டு மென்றும்‌ அவர்கள்‌ காட்டட்டும்‌. அப்படிக்‌ காட்டினால்‌ ஒரு முஸல்மானாவது தனிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்கமாட்டானென்று ஸ்ரீமான்‌ சாஸ்திரியாருக்கு உறுதி கூறுகிறேன்‌.” ஸ்ரீமான்‌ சாஸ்திரியாரும்‌ மற்றும்‌ சில ஹிந்து மக்களும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு ஒரு தடவை இடங்‌ கொடுத்தால்‌ அது எந்நாளும்‌ மறையாமல்‌ வளர்ந்து தேசீயத்தைக்‌ கெடுக்கும்‌ என்று சொல்லுகிறார்கள்‌. 75 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஆனால்‌, சிறுபான்மையோருடைய அவநம்பிக்கையாலேற்பட்ட இவ்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அந்த அவ நம்பிக்கைக்குக்‌ காரணமில்லை என்று ஹிந்துக்கள்‌ வாக்கினாலல்லாது செய்கையினால்‌ என்றைக்கு ரூபிக்கின்‌ றார்களோ, அன்றே இவ்வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ மறைந்துவிடும்‌. தங்கள்‌ மதத்தினர்களுக்கு நன்மை தேடிக்கொண்ட ஹிந்துக்கள்‌ படிப்பிலும்‌ செல்வத்திலும்‌ தாழ்மை அடைந்திருக்கும்‌ முஸ்லீம்களுக்கு என்ன நன்மை செய்தார்களென்று தேடிப்‌ பார்க்கட்டும்‌. உண்மையில்‌ ஹிந்துக்கள்‌ தேசத்தை விட தங்கள்‌ மதத்தையே முக்கியமாகக்‌ கருதுகிறார்கள்‌. மேலும்‌ தங்கள்‌ மதத்தையும்‌ விட தங்கள்‌ ஜாதியையே பிரதானமாகக்‌ கருதுகிறார்களென்றும்‌ சொல்லுவேன்‌. நமது சாஸ்திரியாரின்‌ இனத்தவர்கள்‌ தங்களுடைய ஜாதி அபிமானத்தை வெளிக்குக்‌ காட்டிக்‌ கொள்ளாவிட்டாலும்‌ இவ்‌ விஷயத்தில்‌ மற்ற ஹிந்துக்களைப்‌ போலவே நடந்து கொள்ளுகிறார்கள்‌. நான்‌ ஒரு ஹிந்துவாயிருந்து ஸ்ரீமான்‌ சாஸ்திரியாரைப்போல்‌ தேச ஊழியன்‌ என்று பெயர்‌ வைத்துக்கொண்டேனேயானால்‌ இந்தியன்‌ என்னும்‌ முறையிலும்‌ தேச ஊழியன்‌ என்னும்‌ முறையிலும்‌ நமது தேசத்தில்‌ தாழ்த்தப்பட்ட வகுப்பி னர்க்கு ஊழியஞ்செய்து அவர்களை உயர்த்தவும்‌, சிறு தொகையினரா கியவர்களை மற்ற சமூகத்தினரைப்போல்‌ நல்ல ஸ்திதிக்கு கொண்டு வரப்‌ பாடுபட்டும்‌ அவர்கள்‌ நம்பிக்கையைப்‌ பெறுவேன்‌.ஒரு சங்கிலியின்‌ பலம்‌ அதில்‌ பலம்‌ குறைந்திருக்கும்‌ ஒரு கொக்கியின்‌ பலத்தைவிட அதிகமல்ல. இவ்வுண்மை ஹிந்து தலைவர்களில்‌ அநேகருக்கு இன்னும்‌ புலப்பட வில்லை. நமது ராஜீய வாழ்க்கையில்‌ போட்டி பலத்திருக்கிறது. பலஹீனர்‌ களை ஆதரிப்பாரில்லை. ஒரு ஹிந்து குடும்பத்தில்‌ சரீர திடமுள்ளவன்‌ தனக்‌ காகவல்லாது அக்‌ குடும்பத்தின்‌ பலஹீனருக்காகவே பாடுபடுகிறான்‌. இக்‌ குலதர்மத்தை ஹிந்துக்கள்‌ தங்கள்‌ ராஜீய வாழ்க்கையிலும்‌ நடத்தினால்தான்‌ நன்மை பயக்கும்‌. இப்பொழுது ஸ்ரீமான்‌ சாஸ்திரியாருடைய மாகாணத்தில்‌ பிராமண: ரல்லாதார்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை தழுவி நிற்கிறார்கள்‌. முஸல்‌ மான்களை மாத்திரம்‌ குறைகூற இடமில்லை. முஸ்லீம்களுக்கு அநீதி வழங்கப்படும்‌ வட இந்தியாவில்‌, முஸ்லீம்கள்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கோருவதும்‌, பிராமணராதிக்கத்தினால்‌ பிராமணரல்லாதாருக்கு அநீதி வழங்கப்படும்‌ தென்னாட்டில்‌ பிராமணரல்லாதார்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ கேட்பதுவும்‌, இவ்வநீதிகளின்‌ கர்மபலன்தானென்று சொல்ல வேண்டும்‌. இவ்வுண்மையை எந்த ஹிந்துவாவது மறுக்க முடியுமாவென்று நான்‌ கேட்கிறேன்‌. ஜாதி வேறுபாடென்னும்‌ அக்கிரமத்தைக்‌ கையாண்டு தீண்டாமை, நெருங்காமை - என்னும்‌ அநீதிகளை ரகஷித்து வரும்‌ ஒரு சமூகத்தார்‌ தாங்களிழைக்கும்‌ குற்றங்களைத்‌ திருத்தாமல்‌ தாங்கள்தான்‌ தேசீய நோக்கமுடையவர்களென்று பெருமை பேசி மற்றவர்களை குறுகிய நோக்க. முடையவர்களென்று இழிவுபடுத்துவது சகஜம்‌. நான்‌ இவ்வுண்மையை பல குடி அரசு - 1926 () 76 தடவை யெடுத்துச்‌ சொல்லியும்‌ என்னையும்‌ முஸ்லீம்களையும்‌ எதிர்க்கிறவர்‌. கள்‌, ஜாதி அபிமானமுள்ளவர்களின்‌ குறுகிய நோக்கத்தைக்‌ காண்கின்றார்‌ களில்லை. குடி அரசு - கட்டுரை - 31.01.1926 77 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தணித்தமிழ்‌ கட்டூுரைகன்‌ இப்பெயர்‌ கொண்ட புத்தகமொன்று வரப்பெற்றோம்‌. இஃது பல்லா வரம்‌, வித்யோதயா மகளிர்‌ கல்லூரியின்‌ தமிழாசிரியர்‌ ஸ்ரீமதி நாகை நீலாம்‌ பிகை அம்மையாரால்‌ எழுதப்பட்டது. தமிழ்‌ பாஷையின்‌ வளர்ச்சி தினே தினே குறைந்துகொண்டுவரும்‌ இக்காலத்தில்‌ வடமொழி கலவாது, தனித்‌ தமிழில்‌ கட்டுரைகள்‌ வரையப்பட்டு, அதுவும்‌ ஓர்‌ புத்தக ரூபமாக வெளி வந்திருப்பது தமிழுலகுக்கு ஓர்‌ நல்விருந்தென்றே கூறுவோம்‌. இத்தகைய புஸ்தகங்களே தமிழ்‌ வளர்ச்சிக்கு உற்ற சாதனங்களாகும்‌. நமக்கு அநுப்பப்‌ பட்டுள்ள இப்புத்தகத்தின்கண்‌ வடமொழிச்‌ சொற்கள்‌ எங்கணும்‌ கண்டோ மில்லை. அதன்‌ அருமை பெருமையை நன்கு விளக்குவான்‌ வேண்டி “தமிழில்‌ வடமொழி கலத்தல்‌ ஆகாது” என்னும்‌ கட்டுரையை இதனடியில்‌ பிரசுரித்திருக்கின்றோம்‌. இப்புத்தகத்தின்‌ விலை ஒரு ரூபா நான்கணாவாகும்‌. இத்தகைய பல புத்தகங்களை வெளியிடுமாறு கடவுள்‌ அநுக்கிரகம்‌ இச்‌ சகோதரிக்குக்‌ கிடைக்குமாக. குடி அரசு - நூல்‌ மதிப்புரை - 31011926 குடி அரசு - 1926 () 78 கதரிண்‌ தற்கா நிலை சென்ற மாதம்‌ “யங்‌ இந்தியா” பத்திரிகையில்‌ இந்தியா ஒட்டுக்குமாக கதர்‌ உற்பத்தியும்‌ செலவும்‌ குறிக்கப்பட்டிருந்தது. (அதில்‌ உற்பத்தியை விட செலவு அதிகமாகக்‌ காட்டப்பட்டிருந்த போதிலும்‌ அதற்குக்‌ காரணம்‌ சில புள்ளிகளில்‌ ஏதாவது கணக்குத்‌ தவறுதலாக இரட்டிக்கப்பட்டிருக்கலாம்‌ என்று குறிக்கப்பட்டிருக்கிறது? அக்கணக்கில்‌ இந்தியாவில்‌ மொத்தம்‌ சென்ற வருடத்திற்கு கதர்‌. உற்பத்தி ரூ. 19 லக்ஷம்‌. இப்பத்தொன்பது லக்ஷத்தில்‌ சில பாகம்‌ சிலோன்‌, மலேயா, தென்‌ ஆப்பிரிக்கா முதலிய இந்தியாவை விட்டு வெளி நாடுகளுக்‌ குப்‌ போன வகையில்‌ லக்ஷ ரூபாய்‌ கழித்தாலும்‌ 18 லக்ஷத்திற்குக்‌ குறையாமல்‌ இந்தியாவில்‌ செலவாகி இருப்பதாகத்‌ தெரிகிறது. இந்தியாவின்‌ ஜனத்தொகை: 3117, கோடி. இவர்களுக்கு வருஷம்‌ ஒன்றுக்கு தேவையுள்ள துணி ஏறக்‌ குறைய 130 கோடி ரூபாய்‌ பெறுமானமுள்ளது. இவற்றில்‌ 65 கோடி ரூபாய்‌ பெறுமான முள்ள துணி அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்‌ பட்டும்‌, 65 கோடி ரூபாய்‌ பெறுமான துணி இந்தியாவிலேயே யந்திர நூலைக்‌ கொண்டு யந்திரங்கள்‌ மூலமாகவும்‌ கைத்தறிகள்‌ மூலமாகவும்‌ உற்பத்தி செய்யப்படுவதிலும்‌ ஈடாகி வருகிறது. ஆகக்கூடி டெ 130 கோடி ரூபாய்‌ துணிகளையும்‌ 30 கோடி துணி உடுக்கக்கூடிய ஜனங்களுக்குப்‌ பங்கிட்டுக்‌ கொடுத்தோமானால்‌, ஆள்‌ ஒன்றுக்கு சற்றேறக்குறைய நாலரை ரூபாய்‌ துணி வீதம்‌ செலவாவதாக கணக்கு ஏற்படுகிறது. இந்தக்‌ கணக்குப்படி டி கதர்‌ உற்பத்தி மொத்தத்‌ துகையாகிய 18 லக்ஷத்தை ழி நாலரை ரூபாய்‌ வீதமே பங்கிட்டு கொடுப்‌ போமேயானால்‌ இந்தியா மொத்தத்திற்கும்‌ 4 லக்ஷம்‌ ஜனங்கள்தான்‌ கதர்‌ கட்டுகிறவர்களாவார்கள்‌. 30 கோடிக்கு 4 லக்ஷம்‌ பங்கிட்டால்‌, இந்தியாவில்‌ உள்ள மனிதர்‌ 1000-க்கு ஒன்றேகால்‌ மனிதர்‌ வீதம்தான்‌ கதர்‌ கட்டுவதாகக்‌ கணக்கு ஆகிறது. இதில்‌ உற்பத்தியின்‌ அளவும்‌ 130 கோடி ரூபாய்க்கு 19 லக்ஷம்‌ பிரித்துப்‌ பார்த்தோமேயானால்‌ (1000-க்கு 1 7,) ஆயிர ரூபாய்க்கு ஒண்ணரைரூபாய்‌ வீதம்தான்‌ கதர்‌ உற்பத்தி ஆகியிருக்கிறது. மகாத்மா சுமார்‌ 5 வருட காலம்‌ இடைவிடாமல்‌ கதரைப்பற்றி பேசியும்‌ காங்கிரசின்‌ பேரால்‌ வசூல்‌ செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயில்‌ ஏறக்குறைய முக்கால்‌ கோடி ரூபாய்‌ வரையில்‌ கதருக்காக செலவு செய்தும்‌, இந்தியா முழுமையிலும்‌ உள்ள 79 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 காங்கிரஸ்‌ ஸ்தாபனங்களின்‌ முக்கியமான நேரமெல்லாம்‌ கதருக்காகச்‌ செலவழித்தும்‌ சுமார்‌ 25000 பேர்‌ வரையில்‌ ஜெயிலுக்குப்‌ போய்‌ வந்தவர்‌. களும்‌, கதர்‌ கதர்‌ என்று கதர்‌ பிரசாரம்‌ செய்தும்‌, இதுவரையில்‌ ஆயிரம்‌ மனிதருக்கு ஒண்ணேகால்‌ மனிதர்‌ வீதம்தான்‌ கதர்‌ உடுத்தியிருக்கிறார்கள்‌ என்றும்‌ இந்தியாவுக்கு வேண்டிய துணிகளில்‌ (ஆயிரம்‌) 1000 ரூபாய்க்கு ஒண்ணரை ரூபாய்‌ வீதம்தான்‌ கதர்‌ உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறதென்றும்‌ கணக்கு ஏற்படுமானால்‌, மகாத்மாவின்‌ எண்ணப்படி கதர்‌ தத்துவம்‌ நிறைவேறுமா என்பதில்‌ கொஞ்சமும்‌ நம்பிக்கையேற்பட இடமில்லாம லிருப்பதோடு, இந்தியாவைப்‌ பிடித்த தரித்திரமும்‌ ஏழ்மை நிலையும்‌, சீக்கிரத்தில்‌ மாறும்‌ என்று நினைப்பதற்கும்‌ இடமில்லாமல்‌ இருக்கிறது. இது மாத்திரமல்லாமல்‌ ராஜீய அபிப்ராயங்கள்‌ மாறுபட்டதினாலும்‌, காங்கிரசுக்கு கதரிடத்தில்‌ காரியத்தில்‌ நடத்த நம்பிக்கையில்லாமல்‌ போனதிலிருந்தும்‌, கதரின்‌ வளர்ச்சி குன்ற ஆரம்பித்திருப்பதாகவே கருத இடமேற்பட்டு விட்டது. இதுவரை கதர்‌ கட்டிவந்த ஜனங்களில்‌ பெரும்‌ பான்மையோர்‌ ராஜீய பிரதானத்தைக்‌ கருதியே கட்டி வந்தார்கள்‌. அதுவும்‌ ஏறக்குறைய செல்வந்தர்களும்‌, நடுத்தர வகுப்பாரும்‌ கட்ட முடிந்ததே அல்லாமல்‌ அந்நிய நாட்டுத்‌ துணிக்கும்‌ கதர்‌ துணிக்கும்‌ உள்ள விலை வித்தி யாசத்தால்‌ ஏழை மக்கள்‌ கட்ட முடியாமலே இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில்‌ கதர்‌ திட்டத்தை காங்கிரசிலிருந்து பிரித்து தனி ஸ்தாபனமாக்கி நடத்தி வருவதில்‌ ஏறக்குறைய காங்கிரசின்‌ போக்கில்‌ நம்பிக்கையற்றவர்‌. களும்‌, மாறுபட்டவர்களும்‌ (அதாவது, ஒத்துழையாமை தத்துவத்திலேயே நம்பிக்கை உள்ளவர்களே! கதர்‌ இயக்கத்தில்‌ பெரிதும்‌ ஈடுபட்டிருக்கிறார்கள்‌. காங்கிரசின்‌ பேரால்‌ காங்கிரஸ்‌ திட்டத்தை நிறைவேற்றுவதென்பது, தேர்தல்‌ களில்‌ போட்டி போட்டு சட்டசபை ஸ்தல ஸ்தாபனம்‌, உத்தியோகம்‌ முதலியது களை கைப்பற்‌ றுவதே காங்கிரஸ்‌ வேலையாக காங்கிரஸ்காரர்கள்‌ என்போர்‌. செய்வதாலும்‌, கதரின்‌ மேன்மையையும்‌, அவசியத்தையும்‌ தகுந்தபடி பிரசாரம்‌ செய்ய போதிய வசதி இல்லாததோடு, ஏதாவது கொஞ்சம்‌ நஞ்சம்‌ பிரசாரம்‌ செய்வதாயிருந்தால்‌ அது காங்கிரஸ்‌ தேர்தல்‌ பிரசாரங்களைத்‌ தாக்குவதாய்‌ கருதப்படுகிறபடியாலும்‌, பிரசாரத்திற்கு இல்லாமலே போய்‌ விடுகிறது. அல்லாமலும்‌ காங்கிரசில்‌ ககரை கண்ணியமான ஸ்தானத்தில்‌ வைக்காமல்‌, கலகத்துக்கும்‌, ஒற்றுமைக்‌ குறைவிற்கும்‌ ஆஸ்பதமான தேர்தல்‌ பிரசார சமயத்திற்கு மாத்திரமென்ற கண்ணியமற்ற ஸ்தானத்தில்‌ அதை வைத்துவிட்டதால்‌ கதரினிடத்தில்‌ பெரிய அருவருப்பை வளரச்‌ செய்ய இடமுண்டாகி வருகிறது. அதாவது, தேர்தல்களுக்கு அபேக்ஷகராய்‌ நிற்பவர்‌ ஓட்டு பெறுவ தற்கு ஓட்டர்களுக்கு பணம்‌ கொடுத்து ஓட்டு வாங்குவது எப்படியோ அது போல்‌ ஓட்டர்களிடம்‌ தாங்கள்‌ கதர்‌ கட்டுவதைக்‌ காட்டி ஏமாற்றி வோட்டு வாங்குவதான காரியத்திற்கு உபயோகப்படுவதாயிருக்கிறது. குடி அரசு - 1926 () 80 இம்மாதிரி நிலை கதருக்கு ஏற்பட்ட காரணத்தினால்‌ கதர்‌ கட்டு பவர்களை பொது ஜனங்கள்‌ சந்தேகிக்கவும்‌ சுயகாரியத்திற்காக வேஷத்தின்‌ பொருட்டு கதர்‌ உபயோகிப்பதாகவும்‌ கருதப்படுகிறபடியால்‌ அதன்‌ வளர்ச்சி குறைகிறது. இப்போக்குக்கு ஏதாவது தக்க மாறுதல்‌ ஏற்படாத பக்ஷம்‌, கதருக்‌ காகச்‌ செய்யும்‌ பிரயத்தனங்கள்‌ எல்லாம்‌ வீணாய்ப்‌ போய்விடுமோ என்கிற பயம்‌ பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆதலால்‌ கதர்‌ ஸ்தாபனங்கள்‌ இதில்‌ தகுந்தபடி கவலை யெடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அப்படிக்கில்லாமல்‌, கைவசம்‌ இருக்கும்‌ பணம்‌ செல வாகும்‌ வரை காரியம்‌ நடத்தி பெருமை அடைந்து கொண்டு வந்து பணம்‌ தீர்ந்தவுடன்‌, கடையைக்‌ கட்டி விட்டால்‌ கதரின்‌ நிலை, கண்டிப்பாய்‌ ஒரு காலத்தில்‌ கதர்‌ உற்பத்தி பண்ணினோம்‌; அது அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று எதிர்‌ காலத்தில்‌ சரித்திரம்‌ சொல்லக்கூடிய மாதிரியில்தான்‌ வந்து முடியும்‌ என்பதையும்‌ எச்சரிக்கை செய்கிறோம்‌. ஒத்துழையாமையின்‌ கதையும்‌ கைப்பணம்‌ தீர்ந்தவுடன்‌ ஒரு காலத்‌ தில்‌ அப்படியிருந்தது, இப்படியிருந்தது என்று சொல்லக்‌ கூடியதாய்‌ போய்விட்டதை நேரில்‌ பார்த்தாய்விட்டது. இந்தக்கதி கதருக்கும்‌ ஏன்‌ வராது என்பதற்கு ஒன்றும்‌ காவல்‌ இல்லை. ஆதலால்‌, ஒவ்வொரு ஜில்லாவிலும்‌ தாலூக்காவிலும்‌ கதரைப்‌ பற்றி கொஞ்சமும்‌ சந்தேகமும்‌ அபிப்ராயபேதமும்‌ இல்லாதவர்களைக்‌ கொண்டு கதர்ச்‌ சங்கம்‌ என்பதாக சிறுசிறு சங்கங்களை ஸ்தாபிக்க வேண்டும்‌. தக்க பிரசாரர்களையும்‌ நியமித்து சரியானபடி கதர்‌ பிரசாரமும்‌ செய்ய வேண்டும்‌ என்பதை நாம்‌ மிகவும்‌ வற்புறுத்துகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 31.011926 81 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ திருவாங்கூர்‌ சமஸ்தானத்தைச்‌ சேர்ந்த சுசீந்திரம்‌ என்னுமிடத்தில்‌ சத்தியாக்கிரகம்‌ நடைபெறும்‌ விஷயத்தைப்‌ பற்றி இதற்கு முன்‌ நமது பத்திரிகை மூலமாகத்‌ தெரியப்படுத்தியிருப்பதை வாசகர்களறிவார்கள்‌. அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின்‌ விஷயத்தையும்‌ இந்த இதழ்‌ 3-வது பக்கம்‌ பிரசுரித்திருக்கிறோம்‌. வைக்கம்‌ சத்தியாக்கிரகம்‌ முடிவடைந்து வெகுநாட்களாகிவிட வில்லை. அதற்குள்ளாக மற்றோர்‌ இடத்தில்‌ சமத்வத்தை நிலைநாட்ட தோன்றியுள்ள சத்தியாக்கிரகத்தைக்‌ காண நாம்‌ மகிழ்ச்சியுறுகிறோம்‌. அநீதியும்‌, அக்கிரமமும்‌ தொலைய வேண்டுமானால்‌ வெறும்‌ சட்டங்களா லும்‌, எழுத்தாலும்‌, பேச்சாலும்‌ முடியாதென்றும்‌, சத்தியாக்கிரகமும்‌, தியாக முமே உற்ற சாதனமாகுமென்றும்‌ பல தடவைகளில்‌ வற்புறுத்தியிருக்கிறோம்‌. நமது நாட்டில்‌ ஜாதிக்‌ கொடுமையும்‌, பிறவியினால்‌ உயர்வு - தாழ்வு என்னும்‌ அகங்காரமும்‌ உடனே தொலைய வேண்டியது அவசியமாகும்‌. இக்கொடு மைகளை ஓர்‌ பக்கத்தில்‌ வைத்துக்கொண்டே, ஜம்பமாக தென்‌ ஆப்பிரிக்கா இந்தியருக்காகப்‌ பரிந்து பேசுவதும்‌, எழுதுவதும்‌, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்‌. களின்‌ நன்மையையே பெரிதும்‌ கவனிப்பதுபோல்‌ நடித்து நீலிக்கண்ணீர்‌. விடுவதும்‌ தன்‌ மனசாக்ஷி அறியச்‌ செய்யும்‌ மகத்தான அக்கிரமமேயன்றி வேறல்ல... மேலும்‌, இவர்கள்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு, பொதுஜனங்களை ஏமாற்றுவதும்‌, எலெக்ஷன்‌ பிரசாரம்‌ செய்வதும்‌ மிக்க மோசமான செய்கை யாகும்‌. தாங்கள்‌ பிழைக்க வேண்டும்‌, தங்கள்‌ மக்கள்‌ நன்றாயிருக்க வேண்டும்‌, தங்கள்‌ சமூகத்தார்‌ மேன்மையான ஸ்திதியிலிருக்க வேண்டும்‌, மற்றவர்கள்‌ அவர்களுக்குக்‌ கீழ்ப்பட்டிருக்க வேண்டும்‌ என்ற எண்ணமுடை யவர்களாய்‌, சாஸ்திரங்களையும்‌, புராணங்களையும்‌, இதிகாசங்களையும்‌,மனு தர்மசாஸ்திரம்‌ என்னும்‌ அயோக்கிய நூலொன்றையும்‌ காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பதுடன்‌, தங்கள்‌ கட்சியைப்‌ பலப்படுத்திக்கொள்ள சுயமரியா தையற்ற - ஆண்மையற்ற சிலரைச்‌ சேர்த்துக்கொண்டும்‌ செய்யும்‌ சூழ்ச்சி களெல்லாம்‌ நொறுக்கப்படவேண்டுமாயின்‌, பொதுமக்கள்‌ சர்வ ஜாக்கிரதை யுடனிருந்து விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்‌. இவைகளை யெல்லாம்‌ சுட்டிக்‌ காட்டவல்லது சுயமரியாதையும்‌, சத்தியாக்கிரகமும்‌, உண்மையான தியாகமுமே என்றுகூறலாம்‌.. குடி அரசு - 1926 () 82 நமது நாட்டிலேயே பிறப்பால்‌ மனிதர்களாயிருந்தும்‌, தாழ்த்தப்பட்ட வர்கள்‌ - கண்ணில்‌ தென்படக்‌ கூடாதவர்கள்‌ - தங்கள்‌ தெய்வங்களைத்‌ தரிசிக்கக்‌ கூடாதவர்கள்‌ - தங்கள்‌ வேதத்தைப்‌ படிக்கக்‌ கூடாதவர்கள்‌ என எத்தனையோ லக்ஷம்‌ பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம்‌. நாய்களுக்கும்‌, பன்றிகளுக்கும்‌ கொடுத்துள்ள உரிமையைக்கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம்‌. இந்நிலைமையில்‌ நமக்கு சுயராஜ்யமும்‌, விடுதலையும்‌ அத்தியாவசியமா? அல்லது முன்‌ கூறியவர்களின்‌ முன்னேற்றமும்‌, சுயமரியா தையும்‌ அத்தியாவசியமா வென்பதை பொது ஜனங்களே சிந்திக்க வேண்டும்‌. சமத்வம்‌, சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள யாவருக்கும்‌ ஏற்பட்டாலன்றி, அதற்கு முன்னர்‌ கிடைக்கும்‌ சுயராஜ்யம்‌ ஓர்‌ ஜாதியார்‌. பிழைப்பதற்கு ஆதாரமாயிருக்குமேயல்லாது வேறல்ல. சுயராஜ்யம்‌ கிடைக்‌ கும்‌ முன்‌, நம்மவர்களுக்குள்‌ எவ்விஷயத்திலும்‌ ஒற்றுமை , சமத்வம்‌, சுயமரி யாதை ஏற்படக்கூடிய விதமான வேலைகளைச்செய்து கொள்ள வேண்டியது மிக்க அவசியமாயிருக்கின்றது. சமத்வம்‌ ஏற்படுமானால்‌ பிராமணர்கள்‌ பாடு திண்டாட்டமாகிவிடுமென்பது உண்மையே. முன்னர்‌ கூறிய நூல்களைக்‌ காட்டிக்‌ கொண்டு பிராமணர்கள்‌ வயிறு வளர்ப்பது நின்று போய்விடும்‌. சுய மரியாதை உண்டாகிவிடுமானால்‌ பிராமணர்கள்‌ நிலைமை இப்போதிருப்பது போலிராமல்‌ கீழ்‌ நிலையடையலாம்‌. இங்ஙனம்‌ நேரிடுமென்பதைக்‌ கருத்‌ தாகக்‌ கொண்டே, ராஜீய பிராமணர்களாகட்டும்‌, சில சர்க்கார்‌ உத்தியோக பிராமணர்களாகட்டும்‌ அவர்கள்‌ மிதவாதிகளோ, சுயேச்சைக்‌ ககியோ, ஆச்சாரியாரோ, ஐயங்காரோ, ஐயரோ, பந்துலுவோ எவராயிருந்த போதிலும்‌ சரி ஒன்று கூடிக்கொண்டு பிராமணரல்லாதாரை - தமிழர்களை எதிர்த்து நிற்கின்றார்கள்‌. நிற்க, பிராமணர்கள்‌ அநியாயம்‌ தமிழ்நாட்டில்‌ மட்டுமல்ல திருவிதாங்‌ கூரிலும்‌ அதிகமாக இருக்கின்றதை வைக்கம்‌ சத்தியாக்கிரகத்தின்‌ மூலியமாய்‌ யாவரும்‌ அறிவார்கள்‌. திருவாங்கூர்‌ கவர்ன்மெண்டார்‌ இவ்வநியாயங்க ளுக்கு உடந்தையாயிருக்கின்றார்களோவெனச்‌ சிலர்‌ சந்தேகிக்கக்கூடும்‌. திருவிதாங்கூர்‌ ராஜ்யத்திலுள்ள பொது ரஸ்தாக்களும்‌, பொதுக்‌ குளங்களும்‌ ஜாதிமத வித்தியாசமில்லாமல்‌ பொது ஜனங்கள்‌ அநுபவிக்கலாம்‌ என சில வருடங்களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்றனர்‌. ஆக கவர்ன்‌ மெண்டார்‌ பேரில்‌ குற்றமில்லை. பிராமணர்கள்‌ தவிர்த்த ஏனைய ஜாதி யார்களாகிய நாயர்‌ முதலானவர்கள்‌ தங்கள்‌ சமூக மகாநாடுகளில்‌, பொது ரஸ்தாக்களிலும்‌, பொதுக்‌ குளங்களிலும்‌ ஜாதி மத வித்தியாசங்‌ காட்டலாகாது எனத்‌ தீர்மானம்‌ செய்திருக்கின்றனர்‌ - செய்து வருகின்றனர்‌. ஆக பொது ஜனங்களின்‌ சமத்துவத்துக்கும்‌ - சுயமரியாதைக்கும்‌ இடைஞ்சலாயிருப்ப வர்கள்‌ பிராமணர்களேயாகும்‌. இதிலும்‌ மலையாள நம்பூதிரிப்‌ பிராமணர்‌ களைவிட அங்கு பிழைக்கவும்‌ அங்குள்ள கோயிற்‌ சோற்றைச்‌ சாப்பிடவும்‌ சென்றுள்ள தமிழ்நாட்டுப்‌ பிராமணர்களே அதிக இடைஞ்சல்‌ செய்பவர்க 83 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ளென்று கூறத்‌ தக்க ஆதாரமுண்டு. இவர்களின்‌ இடைஞ்சல்களும்‌, தொந்தரவும்‌ தொலைய வேண்டுமா னால்‌, சத்தியாக்கிரகந்தான்‌ சிறந்த வழி. சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ ஆரம்பிக்‌ கப்பட்டிருக்கும்‌ நோக்கமெல்லாம்‌ சமத்வத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்‌. தமிழ்நாட்டினர்‌, வைக்கம்‌ சத்தியாக்கிரகத்திற்கு எவ்வாறு பணம்‌: கொடுத்தும்‌, ஆட்கள்‌ உதவியும்‌, ஒத்தாசை செய்தார்களோ அவ்வாறே சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகத்திற்கும்‌, தாங்கள்‌ நன்கொடையளித்தும்‌ ஆட்கள்‌ உதவியும்‌ முழு ஒத்தாசையும்‌ அளிப்பார்களென்று நம்புகிறோம்‌. பிராமணர்கள்‌ பலரும்‌, மற்ற வகுப்பைச்‌ சார்ந்த சில சுயநலக்காரர்‌: களும்‌ இச்சத்தியாக்கிரகத்திற்கு எதிரிடையாயிருப்பார்களென்பது உண்‌. மையே. இத்தகைய குறுகிய நோக்கமுடையோர்‌ வெகு சிலரேயானபடியால்‌ பொது மக்கள்‌ இவர்களைப்‌ பற்றிக்‌ கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள்‌ ககமை எதுவோ எதுநியாயமென தங்கள்‌ மனதில்‌ படுகிறதோ அதை மாத்திரம்‌ கெட்டியாகப்‌ பிடித்துக்கொண்டு இப்பேர்ப்பட்ட சமயத்தில்‌, இத்த கைய சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனக்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. தமிழ்நாட்டு தேசீய வாலிபர்களானாலும்‌ சரி, மற்றும்‌ எந்தக்‌ கக்ஷியைச்‌ சேர்ந்த எவரேயானாலும்‌ சரி அனைவரும்‌ சத்தியாக்கிரகத்திற்குத்‌ தொண்டு செய்ய அவசியமேற்படும்‌ போது தயாராயிருக்க வேண்டுமெனக்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. தமிழ்நாட்டார்‌ சுசீந்திரத்தில்‌ உரிமைப்‌ போர்‌ நடப்பதற்கு தங்களால்‌ இயன்ற நன்கொடையைக்‌ கொடுக்கவும்‌ தயாராயிருக்க வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்‌. சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ வெற்றி பெருமாகுக ! குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 31.01.1926 குடி அரசு - 1926 () 84 வஹெனலானா அங்தூல்பாரி உத்தம தேசபக்தரும்‌, முஸ்லீம்களுள்‌ சிறந்த ஞானவான்‌ எனக்‌ கொண்டாடத்தக்கவருமாகிய மெளலானா அப்துல்பாரி அவர்கள்‌ சமீபத்தில்‌ மரணமடைந்தாரெனக்‌ கேள்விப்பட மிகவும்‌ வருந்துகிறோம்‌. இவருடைய பெருத்த ஆதரவைக்‌ கொண்டே கிலாபத்‌ இயக்கமாகிய மத விஷயத்தில்‌ மகாத்மா காந்தி தலையிட்டுழைக்கும்படியாயிற்று. காலஞ்‌ சென்ற மெளலானா அவர்கள்‌, முஸ்லீம்களின்‌ மத கல்வி விஷயத்தில்‌ எடுத்துக்‌ கொண்ட சிரத்தை. கொஞ்சமல்ல.இத்தகைய பெரியார்‌ காலஞ்சென்றது மகமதிய சமூகத்துக்கே. பெருத்த நஷ்டமாகும்‌ என்பதை நாம்‌ எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. (ப-ர்‌) குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 31.01.1926 85 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ அதன்‌ யிரசாஈங்களும்‌ அடுத்துவரும்‌ சட்டசபைத்‌ தேர்தல்களில்‌ பிராமணரல்லாதார்‌. முன்னேற்றத்தில்‌ கவலையுள்ள எந்த பிராமணரல்லாதாரும்‌ ஜெயம்‌ பெற முடியாதபடி விஷமப்‌ பிரசாரங்கள்‌ செய்து பிராமணர்களும்‌ அவர்கள்‌ தாளத்‌ திற்குத்‌ தகுந்தபடி ஆடும்படியான பிராமணரல்லாதார்களையுமே சட்டசபை யைக்‌ கைப்பற்றும்படியான மாதிரிக்கு வேலைகள்‌ செய்யப்பட்டு வருகிற தைப்‌ பிராமணரல்லாத பாமர ஜனங்கள்‌ இன்னமும்‌ அறியாமல்‌ ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்‌. இதற்கு அநுகூலமாகவே சில பிராமண: ரல்லாத பத்திரிகைகளும்‌, தலைவர்கள்‌ என்போர்களும்‌, தொண்டர்கள்‌ என்போர்களும்‌ ஒத்துப்‌ பாடிக்கொண்டே வருகிறார்கள்‌. ஆனாலும்‌ இப்‌ பத்திரிகைகளும்‌, தலைவர்களும்‌, தொண்டர்களும்‌ தற்காலம்‌ செல்வாக்கும்‌, பெருமையும்‌, ஜீவனோபாய மார்க்கம்‌ அடைந்து இருந்தபோதிலும்‌, தேர்தல்‌ கள்‌ முடிந்து பிராமணர்கள்‌ காரியம்‌ முடிந்தவுடனே காதறுந்த ஊசிபோல கருதப்படுவார்கள்‌ என்பதில்‌ யாதொரு சந்தேகமும்‌ இருக்காது. ஆனாலும்‌, இப்பொழுது ஏன்‌ பிராமணர்களும்‌ அவர்கள்‌ பத்திரிகைகளும்‌ அதிகமான பிரயத்தனங்கள்‌ எடுத்துக்கொண்டு இவ்வளவு பணங்கள்‌ செலவு செய்து பிரசாரங்கள்‌ செய்கிறார்கள்‌ என்கிற விஷயத்தில்‌ சிலருக்கு அதன்‌ அவசியம்‌ விளங்காமலேயிருக்கிறது. இப்பிரசாரங்களின்‌ முக்கியக்‌ காரணம்‌ அடுத்தூற்‌ போல்‌ ஏதோ சில ராஜீயசீர்திருத்தங்கள்‌ என்பது ஏற்படப்‌ போகிறது என்பதாக பிராமணர்களின்‌ கவலையாயிருக்கிறது. அச்சீர்திருத்தங்களுக்காக 1920 -ம்‌ வருடத்திய சீர்திருத்தங்கள்‌ வழங்க வேண்டிய அரசாங்கத்தார்‌ ஒரு விசார ணைக்‌ கமிட்டி ஏற்படுத்தியது போல்‌, இப்பொழுதும்‌ ஒரு விசாரணைக்‌ கமிட்டி ஏற்படுத்துவார்கள்‌. அக்கமிட்டி ஏறக்குறைய 1927 லோ அல்லது 1928 - ம்‌ வருடத்திலோ அமலுக்கு வந்து ஆங்காங்கு சென்று விசாரணைகள்‌ செய்யத்‌ தொடங்கும்‌. .அவ்விசாரணையில்‌ பிராமணரல்லாதார்‌ தங்கள்‌ நிலை மையையும்‌ தேவைகளையும்‌ உள்ளபடி ஒற்றுமையாய்ச்‌ சொல்லிவிட்டால்‌, அது பிராமணர்களுக்கு பெரிய ஆபத்தாய்‌ முடிந்துவிடும்‌ என்கிற பயம்‌ வைத்து 1920 - ம்‌ வருஷத்திய சீர்திருத்த விசாரணையின்‌ போது ஜஸ்டிஸ்‌ ககஷிக்கு விரோத மாய்‌ சென்னை மாகாண சங்கம்‌ என்று ஒன்றை ஸ்தாபித்து அதற்குப்‌ பத்திரிகைகளையும்‌ ஸ்தாபித்து பிரசாரங்களுக்கு ஆள்களை ஏற்‌ படுத்தி அதற்கு பணங்கள்‌ உதவ சூழ்ச்சிகள்‌ செய்து, ஜஸ்டிஸ்‌ ககஷியின்‌ குடி அரசு - 1926 () 86 அபிப்ராயம்‌ நிறைவேற்றவொட்டாமல்‌ செய்தது போல்‌, இப்பொழுதும்‌ பிராமணரல்லாதாரில்‌ சிலரையும்‌ சில பத்திரிகைகளையும்‌ சுவாதீனம்‌ செய்து பிராமணரல்லாதாரின்‌ தேவைக்கு விரோதமாய்ப்‌ பிரசாரம்‌ செய்விக்க வேண்‌: டியது தங்கள்‌ அவசிய மாய்‌ போய்விட்டது. ஆனால்‌ 1920-ம்‌ வருஷத்திய சீர்திருத்தத்தில்‌ பிராமணரல்லாதாரை ஏமாற்றி சரி செய்து கொள்ள ஸ்ரீமான்‌ சி.பி.ராமசாமி அய்யர்‌ செலவுக்குப்‌ பணம்‌ முதலியவைகளும்‌, பிரசார ஏற்பாடு கிரமம்‌ முதலியவைகளும்‌ செய்யும்‌ வேலையை ஏற்றுக்‌ கொண்டிருந்தார்‌. இப்போது 1930-ம்‌ வருடத்திய சீர்திருத்தத்திற்கு பிராமணரல்லாதாரை வஞ்சிக்க செலவுக்குப்‌ பணமும்‌ பிரசார ஏற்பாடும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌ ஏற்றுக்‌ கொண்டிருக்கிறார்‌. பிராமணரல்லாதார்களில்‌ அப்பொழுது யார்‌ யாரை தங்கள்‌ வசப்‌ படுத்திக்கொண்டார்களோ, அதுபோலவே இப்பொழுதும்‌ ஏறக்குறைய அதே ஆள்களே அவர்கள்‌ வசப்பட்டிருக்கின்றனர்‌. அவைகளின்‌ இரகசியத்தை யும்‌ சிலர்‌ கோப மயக்கத்தில்‌ வெளியிட்டிருப்பதையும்‌ கூட கவனித்திருக்‌ கலாம்‌. அதாவது, ஜஸ்டிஸ்‌ ககஷியை ஒடுக்க (பாமர ஜனங்களை ஏமாற்றித்‌ தான்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்கப்பட்டது என்று சொல்லியிருப்‌ பதைக்‌ கவனித்தால்‌ நன்றாய்‌ விளங்கும்‌. சென்ற “சீர்திருத்த” விசாரணையின்‌ போதே சென்னை மாகாணச்‌ சங்கம்‌ என்னும்‌ ஒரு துரோகச்‌ சங்கம்‌ தோன்றி யிருந்திராதிருக்குமாயின்‌ பிராமணரல்லாதார்‌ தங்கள்‌ சமூக நன்மைக்காக எதிர்பார்த்த நன்மைகள்‌ ஏறக்குறைய அடைந்தே இருக்கக்கூடும்‌. இப்பொழு தாவது அதை அடைய மார்க்கமில்லாமல்‌ பிராமணரல்லாத மக்களையே சுவாதீனப்‌ படுத்திக்‌ கொண்டு கொடுமை செய்வதோடு தங்கள்‌ பத்திரிகை. களிலும்‌ இதையே முக்கிய கொள்கையாக வைத்துப்‌ பாடுபடுகின்றன. இவற்றை பிராமணரல்லாத பாமர ஜனங்கள்‌ நம்பி மோசம்‌ போகிறார்கள்‌. அதாவது, நாம்‌ வெளியிடங்களுக்கு பல காரியமாய்ச்‌ சென்ற சந்தர்ப்‌ பங்களில்‌ சந்திக்க நேர்ந்த சில பிராமணரல்லாத சகோதரர்கள்‌ நம்மிடம்‌ வந்து மிகுந்த பரிதாபப்படுவதை நேரில்‌ பார்த்தோம்‌. எப்படியெனில்‌, நம்மைப்‌ பார்த்து, “ஐயா, தங்களைத்தானே தமிழ்நாட்டு உண்மையான தேசபக்தர்‌ என்று எண்ணியிருந்தோம்‌. தாங்களே இப்பொழுது ஜஸ்டிஸ்‌ கக்ஷியில்‌ சேர்ந்து விட்டீர்களே. எங்களை இப்படிக்‌ கைவிட்டு விடலாமா? தாங்களே இப்படிச்‌ செய்தால்‌ போலி தேசபக்தர்களைப்பற்றி சொல்லவும்‌ வேண்டுமா? இனி நாங்கள்‌ யாரை நம்புவது” என்று கவலைப்பட்டார்கள்‌. நான்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியில்‌ சேர்ந்ததாய்‌ தாங்கள்‌ எப்படி தெரிந்தீர்கள்‌ என்று கேட்டால்‌ “சுயராஜ்யா” “சுதேசமித்திரன்‌” பத்திரிகைகளின்‌ மூலமாய்‌ அறிந்தோம்‌ என்று சொல்லுகிறார்கள்‌. சரி, நான்‌ ஜஸ்டிஸ்‌ ககஷியில்‌ சேர்ந்‌ தேனா இல்லையா என்பதைப்‌ பற்றி அப்புறம்‌ பேசிக்கொள்ளலாம்‌, ஜஸ்டிஸ்‌ கக்ஷி என்றால்‌ என்ன அவ்வளவு பாவமான கக்ஷியாய்ப்‌ போய்‌ விட்டது என்று கேட்டால்‌, 87 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 - அக்கட்சிக்குக்‌ கதரில்‌ நம்பிக்கையில்லை. 2. உத்தியோக ஆசை. 3. ஜெயிலுக்குப்‌ போன தேசபக்தர்களுக்கு செளகரியம்‌ செய்யக்‌ கூடாது என்று அதன்‌ தலைவர்‌ ஸர்‌. செட்டியார்‌ சொன்னார்‌. 4. தஞ்சாவூர்‌ ஜில்லா விவசாயிகளுக்கு நிலத்தீர்வை உயர்த்தக்கூடாது என்று சட்டசபையில்‌ வாதாடியபோது ஜஸ்டிஸ்‌ ககஷியார்‌ அதை ஆதரிக்காமல்‌ எதிரிடையாய்‌ வோட்டுக்‌ கொடுத்தார்கள்‌. ஆகிய இக்காரியங்களை நாங்கள்‌ மிகவும்‌ முக்கியமானதாய்க்‌ கருதுகி றோம்‌. ஆதலால்‌, இம்மாதிரிக்‌ ககஷியை தாங்கள்‌ ஆதரிக்கலாமா என்று கேட்கிறார்கள்‌. இது போலத்தான்‌ மற்றும்‌ பாமர ஜனங்கள்‌ நினைத்திருப்‌ பார்கள்‌ என்பதும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரிடம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டு. பிரசாரம்‌ செய்யும்‌ பிராமணரல்லாத தொண்டர்களும்‌ இதைத்தான்‌ சொல்லிப்‌ பிரசாரம்‌ செய்துவருகிறார்கள்‌ என்பதும்‌ நமக்கு இதிலிருந்து நன்றாய்‌ விளங்கிற்று. 1- வது, ஜஸ்டிஸ்‌ ககடிக்குக்‌ கதரில்‌ நம்பிக்கையில்லை என்பது ஒரு முக்கியமான குறைவுதான்‌. தற்காலம்‌ இந்தியாவிலுள்ள எந்த கக்ஷிக்கு கதரில்‌ நம்பிக்கையிருக்கிறது? மிதவாதக்‌ கக்ஷிக்கு நம்பிக்கையிருக்கிறதா? சுயேச்சைக்‌ ககஷிக்கு நம்பிக்கையிருக்கிறதா? பெசண்ட்‌ ககஷிக்கு நம்பிக்கை இருக்கிறதா? அல்லது காங்கிரஸ்‌ கக்ஷிக்காவது நம்பிக்கை இருக்கிறதா? நூற்போர்‌ சங்கத்தில்‌ இந்தியா ஒட்டுக்குமாக அங்கத்தினராயிருக்கிற சுமார்‌. 3000 பேரைத்‌ தவிர மற்ற ராஜீயவாதிகளுக்குக்‌ கதரில்‌ நம்பிக்கையில்லை என்றே சொல்ல வேண்டும்‌. நம்பிக்கை இருந்திருக்குமேயானால்‌, அவரவர்கள்‌ ராஜீய திட்டத்தில்‌ கதர்‌ முதன்மையான ஸ்தானம்‌ பெற்றிருக்கும்‌. அல்லாமலும்‌ சுயராஜ்யக்‌ ககடிக்குக்‌ கதரில்‌ நம்பிக்கையில்லாத காரணத்தாலேதான்‌ காங்கிரஸை விட்டு கதரை வெளியேற்ற வேண்டியதாயிற்று என்பதில்‌ சந்தேகமுண்டா? அப்படிக்‌ கிருக்க சுயராஜ்யக்‌ கடியை ஆதரிப்பவர்களைப்பற்றி கவலை கொள்ளாமல்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியைப்‌ பற்றி மாத்திரம்‌ ஏன்‌ இவ்வளவு ஆத்திரப்பட வேண்டும்‌? 2 - வது, உத்தியோக ஆசை என்பது. உத்தியோக ஆசை நமது நாட்டில்‌ எந்தக்‌ கக்ஷிக்கு இல்லை? மேல்கண்ட பல கக்ஷிகள்‌ உத்தியோகம்‌ வகிக்கிறதா? இல்லையா? சுயராஜ்யக்‌ கக்ஷியாரும்‌ உத்தியோகம்‌ வகிக்கிறார்‌. களா? இல்லையா? அவர்களும்‌ சர்க்காரிடம்‌ 4000, 5000 சம்பளம்‌ வாங்கி வருகிறார்களா? இல்லையா? இதைப்பற்றி அவர்களுக்கு சாதகமான பத்திரி கைகளாகிய “நவசக்தி”, “தமிழ்நாடு” ஆகிய பத்திரிகைகளே ஸ்ரீமான்கள்‌ பட்டேல்‌, நேரு, ரெங்கசாமி ஐயங்கார்‌ முதலியோர்கள்‌ பார்க்கும்‌ வேலைக்கும்‌ தம்பே முதலியவர்கள்‌ பார்க்கும்‌ வேலைக்கும்‌ வித்தியாசமில்லை என்று குடி அரசு - 1926 () 88 எழுதியதைக்‌ கவனித்தால்‌ விளங்காதா? சில மாகாணங்களில்‌ முக்கியமாய்த்‌ தமிழ்நாட்டில்‌ சுயராஜ்யக்‌ ககஷியாருக்கு உத்தியோகம்‌ கிடைப்பது கஷ்டமா யிருக்கிறபடியால்‌ சீ . அந்தப்‌ பழம்‌ புளிக்கும்‌ என்று ஏமாற்றி வோட்டு வாங்கப்‌ பார்க்கிறார்கள்‌. கிடைக்கும்‌ போலிருந்தால்‌ உடனே பெற்றுக்‌ கொள்ளுவார்கள்‌. காங்கிரஸ்‌ செக்ரட்டேரியான ஸ்ரீமான்‌ & ரெங்கசாமி ஐயங்‌ காரும்‌, சுயராஜ்யக்‌ கக்ஷி செக்ரட்டேரியான ஸ்ரீமான்‌ 1. ஆதிநாராயண செட்டியாரும்‌, தம்‌ மக்களுக்கு நூற்றுக்கணக்கான சம்பளம்‌ பெறத்தக்க உத்தியோகம்‌ சம்பாதித்துக்‌ கொடுத்திருக்கிறார்களா? இல்லையா? அன்றியும்‌ தங்கள்‌ திட்டத்திலாவது உத்தியோகம்‌ கூடாது என்று ஏற்படுத்திக்‌ கொண்டி ருக்கிறார்களா? அது சமயம்‌ போல்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌ என்று தானே எழுதிவைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. 3-வது, ஜெயிலுக்கு போனவர்களுக்குச்‌ சவுகரியம்‌ செய்யக்கூடாது என்று ஸர்‌.செட்டியார்‌ சொன்னது. இந்த வார்த்தைதான்‌ சிலருக்குப்‌ பெரிய ஆதாரமாயிருக்கிறது. இதை: வைத்துக்‌ கொண்டுதான்‌ ஸ்ரீமான்‌ பாஷ்யம்‌ ஐயங்காரும்‌, ஸ்ரீமான்‌ சத்திய மூர்த்தியும்‌, அவர்கள்‌ நண்பர்‌ ஜனாப்‌ ஷாபி மகமதும்‌ தியாகராய செட்டியார்‌. தமிழ்நாட்டு “டயர்‌” என்று சொன்னார்கள்‌. இன்னமும்‌ அதையே சில வயிற்றுச்சோற்று தேசபக்தர்களும்‌ சொல்லிக்‌ கொண்டு பிராமணர்களுக்கு வோட்டு வாங்கிக்‌ கொடுக்கிறார்கள்‌. ஸர்‌. செட்டியார்‌ சொன்னதை உண்மையென்றே வைத்துக்‌ கொள்ளு வோம்‌. ஏன்‌ அப்படிச்‌ சொன்னார்‌? எதற்காக அப்படிச்‌ சொன்னார்‌? என்ப தைக்‌ கவனிக்க வேண்டாமா? அவருக்கு ஜெயிலுக்குப்‌ போய்‌ அவஸ்தைப்‌ பட்ட ஸ்ரீமான்கள்‌ வரதராஜுலு நாயுடு, எஸ்‌. ராமநாதன்‌, ஈ.வெ. ராமசாமி நாயக்கர்‌ அவர்‌ மைத்துனனாகிய தேவ நாயக்கர்‌ முதலானவர்களிடம்‌ ஸர்‌. செட்டியாருக்கு விரோதமோ, குரோதமோ, சுயராஜ்யம்‌ வந்து விடுமோ? என்னமோ என்கிற பயமா? இப்படிச்‌ சொல்லித்தான்‌ ஏதாவது பணமோ உத்தி யோகமோ சம்பாதித்துக்‌ கொள்ளலாம்‌ என்கிற சுயநலமா? என்பதைக்‌ கவனிக்க வேண்டாமா? முதலாவது ஸர்‌. செட்டியார்‌ ஒத்துழையாமைத்‌ தத்துவம்‌ ஒழுங்காய்‌ நடைபெறும்‌ என்கிற நம்பிக்கையில்லாதவர்‌. ஒத்துழையாமைத்‌ தத்துவத்தில்‌ பிராமணரல்லாதார்‌ ஈடுபட்டு உழைப்பதில்‌ அதன்‌ பயனை பிராமணர்கள்‌ அடைவார்கள்‌ என்கிற தீர்க்கதரிசனமுள்ளவர்‌. அல்லாமலும்‌ ஒத்துழையா மையின்‌ பேரால்‌ பிராமணரல்லாதாரில்‌ சில பொறுக்கு மணிகள்‌ தங்கள்‌ முன்னேற்றத்தை கெடுத்துக்‌ கொள்கிறார்களே என்கிற விசனமுடையவர்‌. இவ்வித குணமுள்ள ஒருவர்‌ மக்கள்‌ ஜெயிலுக்குப்‌ போவதை எப்படி ஆதரிக்‌ கக்கூடும்‌? அதோடு, அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச்‌ செய்து கொடுக்க எப்படி மனம்‌ வரும்‌? ஜெயிலுக்குப்‌ போகிறவர்களுக்கு சவுகரி யம்‌ செய்து கொடுப்பதாயிருந்தால்‌, வெளியில்‌ கஞ்சிக்கில்லாமல்‌ திரிகிற 89 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஏழைமக்கள்‌ எல்லோரும்‌ தான்‌ ஜெயிலுக்குப்‌ போய்‌ விடுவார்கள்‌. அல்லா மலும்‌ ஜெயிலுக்குப்‌ போவது தப்பு என்று நினைக்கிறவர்‌ இன்னும்‌ அநேகம்‌ பேருக்கு ஜெயில்‌ ஆசை உண்டகும்படியாக சவுகரியங்கள்‌ செய்து கொடுக்க எப்படி சம்மதிப்பார்‌? இதை யோசிக்க வேண்டாமா? இது ஒருபுறம்‌ இருந்‌ தாலும்‌, சுயராஜ்யக்‌ கக்ஷித்‌ தலைவரான காலஞ்‌ சென்ற தேசபந்து தாஸை ஒரு சமயத்தில்‌ பார்த்து “ஜெயிலுக்குப்‌ போயிருக்கும்‌ தேசபக்தர்களைக்‌ கவனிக்‌ காமல்‌ சட்ட சபைக்குப்‌ போக ஆசைப்படுவதின்‌ மூலம்‌ சர்க்காருக்கு உதவி செய்கிறீர்களே” என்று கேட்டதற்கு “ஜெயிலுக்கு போனவர்களைப்‌ பற்றிக்‌ கவலையில்லை. வெளியில்‌ வயிறு வளர்க்க யோக்கியதை இல்லாத கஞ்சிக்கு வகையற்றவர்களே தான்‌ போயிருக்கிறார்கள்‌”” என்று சொன்னார்‌. அது மாத்திரம்‌ குற்றமில்லையா? அப்பேர்ப்பட்டவர்களின்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டுகூட நம்‌ நாட்டுப்‌ பிராமணர்கள்‌ பிழைக்கவில்லையா? ஸர்‌. செட்டி யார்‌ சொன்னது மோசமானதா? தேசபந்து தாஸ்‌ சொன்னது மோசமானதா?' இதைப்பற்றி யோசிக்க வேண்டாமா? அன்றியும்‌ தமிழ்நாட்டுத்‌ தலைவர்‌ அநேக தேசபக்தர்களுக்கு தன்‌ வகுப்பு நலத்திற்காக கஞ்சி வார்க்கும்‌ தர்மப்‌ பிரபு ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர: முதலியார்‌ வாயாலேயே, ஒரு ஒப்பற்றத்‌ தலைவர்‌ என்று சொல்லப்படும்‌ பெரியாரான ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ ஒத்துழையாமை அன்கான்ஸ்ட்‌. டிடியூஷனல்‌- சட்ட விரோதமானது, ஆதலால்‌ காங்கிரஸ்‌ ஸ்தாபனங்களை யெல்லாம்‌ சட்ட விரோதமான கூட்டமாகத்‌ தீர்மானித்து, காங்கிரஸ்‌ மெம்பர்‌. களையெல்லாம்‌ மகாத்மா உள்பட ஜெயிலில்‌ அடைத்து ஒத்துழையாமை யையே ஒழித்துவிட வேண்டுமென்று சொன்னாரே! இது குற்றமில்லையா? இவரை இன்றையத்‌ தினம்‌ தமிழ்நாட்டுத்‌ தலைவராகக்‌ கொள்ளவில்லையா? இவர்‌ சொன்னது மோசமானதா? ஸர்‌.செட்டியார்‌ சொன்னது மோசமானதா? அப்பேர்ப்பட்ட ஸர்‌.செட்டியாரை ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ தனக்கு மந்திரிபதவி வேண்டும்‌ என்று கேட்டதை விட ஸர்‌.செட்டியார்‌ சொன்னது மோசமானதா? 4-வது, தஞ்சை ஜில்லா நிலத்‌ தீர்வையைக்‌ குறைப்பதற்கு ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ விரோதமாயிருந்ததாகச்‌ சொல்வது. இதைப்‌ பாமர ஜனங்கள்‌ சரியானபடி உணருவதற்கே மார்க்கமில்‌ லாமல்‌ விஷமப்‌ பிரசாரம்‌ நடப்பதால்‌ ஏமாந்து போக நேரிடுகிறதேயன்றி, இதில்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ குற்றமென்ன என்பதே விளங்கவில்லை. முதலா வது தஞ்சை நிலத்தீர்வை விஷயம்‌ கக௯தியைச்‌ சேர்ந்ததே அல்ல. ஜஸ்டிஸ்‌ ககஷி மெம்பர்கள்‌ சில பேர்‌ வரி உயர்த்தக்‌ கூடாது என்பதற்கே ஓட்டுக்‌ கொடுத்தார்கள்‌. ஜஸ்டிஸ்‌ ௧௯9 அல்லாத மெம்பர்கள்‌ பல பேர்‌ வரி உயர்த்த வேண்டும்‌ என்பதற்கே ஓட்டுக்‌ கொடுத்தார்கள்‌. ஏனெனில்‌, வரி உயர்த்தினது தஞ்சை ஜில்லாவுக்கு மாத்திரம்‌ அல்ல. குடி அரசு - 1926 () 90 30 வருடத்திற்கு ஒரு தரம்‌ ரீ செட்டில்மெண்ட்‌ என்கிற சர்க்கார்‌ சட்டப்படி, ஒவ்வொரு ஜில்லாவையும்‌ 30 வருடத்திற்கு ஒரு தரம்‌ அளந்து சர்வே செய்து ரூபாய்க்கு இவ்வளவு அதிகப்படுத்துவது என்கிற முறைப்படி அனேக ஜில்லாக்களை அளந்து சர்வே செய்து வரி அதிகப்படுத்திவிட்டு, தஞ்சை ஜில்லாவுக்கு வந்து அளந்து வரி போடும்‌ போது தஞ்சை ஜில்லாக்காரர்‌. ஆகஷேபித்தால்‌ எப்படி ஒப்புக்‌ கொள்ளக்கூடும்‌? உதாரணமாக, ஒரு முனிசி பாலிட்டியில்‌ 5 வருடத்திற்கு ஒரு தரம்‌ கவனித்து வரி போடுகிறது என்கிற சட்டப்படி கவனித்து வரிபோடும்‌ முறை துவக்கப்பட்டு 20 வீதிகளுக்கு வரி உயர்த்திப்‌ போட்டு விட்டு 21- வது வீதிக்கு வரிபோட வரும்போது தங்கள்‌ வீதிக்கு மாத்திரம்‌ வரி உயர்த்தக்கூடாது என்று அவ்வீதிக்காரர்‌ பேரால்‌ அவ்வீதிக்‌ கவுன்சிலர்கள்‌ வாதாடினால்‌ மற்ற கவுன்சிலர்கள்‌ ஒப்புக்‌கொள்ளு வார்களா? ஒரு சமயம்‌ அறியாமையினால்‌ ஒப்புக்‌ கொண்டாலும்‌, சர்க்கார்‌. சம்மதிப்பார்களா? அது போலவே, மற்ற ஜில்லாக்களுக்குப்‌ போட்டு அமுலில்‌ வருவதை தஞ்சை ஜில்லாவில்‌ மாத்திரம்‌ எப்படி இல்லாமல்‌ செய்ய முடியும்‌? தஞ்சை ஜில்லாவில்‌ பிராமண மிராசுதாரர்‌ அதிகமாயிருப்பதால்‌, தஞ்சைக்கு மாத்திரம்‌ ஒரு சட்டம்‌; மற்ற ஜில்லாவுக்கு வேறு சட்டமா? வேறு பல ஜில்லாக்களைச்‌ சேர்ந்த தேசீய மெம்பர்கள்‌ கூட இத்தீர்மானத்தை எதிர்த்திருக்கிறார்கள்‌. அப்படியிருக்க இது எப்படி ஜஸ்டிஸ்‌ கக்ஷியின்‌ மீது குற்றமாகும்‌ என்பதைப்‌ பாமர ஜனங்கள்‌ அறிவதில்லை. அல்லாமலும்‌ இதற்காக வரி கொடா இயக்கம்‌ என்று ஒரு பித்தலாட்ட இயக்கம்‌ கூட தஞ்சை ஜில்லாக்காரர்கள்‌ ஆரம்பித்தார்கள்‌. இதைக்‌ கூட காங்கிரஸில்‌ முக்கியஸ்தர்‌. - இப்போது பிராமணர்களால்‌ பெரிதும்‌ கொண்டாடப்படுபவரான ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌ தஞ்சையில்‌ நடக்கும்‌ வரி கொடா இயக்கம்‌ சுத்தப்‌ பொய்யான இயக்க மென்றும்‌ பத்திரிகை இயக்கமென்றும்‌ கூடச்‌ சொன்‌ னார்‌. அதைப்‌ பற்றி பேசுவோர்‌ யாரையும்‌ காணோம்‌. இப்போது அவரை: பிராமணர்கள்‌ லோககுருவுக்கு அடுத்தபடியில்‌ கொண்டாடு கிறார்கள்‌. தங்கள்‌ நன்மைக்கு கொஞ்சம்‌ விரோதமாய்‌ யாராவது பேசினால்‌ மாரிசன்‌ என்று சொல்லி விடுகிறார்கள்‌. தங்கள்‌ நன்மைக்கு அநுகூலமாய்‌ தங்கள்‌ தாளத்திற்கு ஏற்றாற்போல்‌ ஆடினால்‌ மகா சத்தியகீர்த்தி, உத்தமர்‌ என்று சொல்லி விடுகிறார்கள்‌. ஆகிய இம்மாதிரி பிரசாரங்களால்‌ நமது ஜனங்‌ கள்‌ அடியோடு ஏமாந்துபோய்‌ பரிதபிக்கிறார்கள்‌ என்பது நிதர்சனமாயிருக்‌ கிறது. ஆதலால்‌, பிராமணரல்லாதார்‌ ஏதாவது முற்போக்கடைய வேண்டு மானால்‌, சுயமரியாதையோடு வாழ வேண்டுமானால்‌, தங்கள்‌ சமூகத்து பாமர: ஜனங்கள்‌ உண்மையை அறியும்படியும்‌, பிராமணப்‌ பிரசாரத்தால்‌ ஏமாந்து சமூகத்‌ துரோகிகள்‌ ஆகாதபடியும்‌ செய்யத்‌ தகுந்த பிரசாரங்கள்‌ நடைபெற வேண்டும்‌. ஜஸ்டிஸ்‌ ககஷியின்‌ உண்மையை பொது ஜனங்கள்‌ அறியும்படி யும்‌, பொது ஜனங்களுக்கு அக்கட்சியில்‌ உண்மையாய்‌ என்ன குறை இருக்‌ கிறது என்பது உணர்ந்து, ஏதாவது இருந்தால்‌ அதைத்‌ திருத்த வசதி உண்டாகும்படியும்‌ வேண்டிய ஏற்பாடுகள்‌ பிராமணரல்லாதார்‌ வகுப்பில்‌ 9 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அக்கறை உள்ளவர்கள்‌ உடனே செய்ய வேண்டியது மிகவும்‌ அவசியம்‌ என்பதையும்‌ இது சமயம்‌ ஏமாந்து போய்‌ விட்டோமானால்‌ பிறகு ஐயோ என்றாலும்‌ வராது, அம்மா என்றாலும்‌ வராது என்பதையும்‌ உணரக்‌ கோருகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 07.02.1926. குடி அரசு - 1926 () 92 தனைனர்கனின்‌ Guirsid சட்டசபை வோட்டுப்‌ பிரசாரத்திற்கு 15730 ரூபாய்‌ சம்பளத்திலும்‌ L5 30 ரூபாய்‌ பத்தாவிலும்‌ ஆக மீ” 60 ரூபாயில்‌ பிரசாரகர்களை நியமிக்க தமிழ்நாடு காங்கிரஸ்‌ நிர்வாகக்‌ கமிட்டி அதன்‌ அக்ராசனருக்குப்‌ பூரண அதிகாரம்‌ கொடுத்திருக்கிறது. இனி தேசியத்‌ தொண்டர்‌ என்போருக்கு இது கை முதலில்லாத வியா பாரமாய்ப்‌ போய்விட்டது. ஒத்துழையாமை மும்மரமாக நடந்த காலத்தில்‌ ஆவேசத்தின்‌ காரணமாய்‌ ஜெயிலுக்குப்‌ போய்வந்து பட்டணங்களிலும்‌, கிராமந்தரங்களிலும்‌ செல்வாக்குப்‌ பெற்று இப்போது கஞ்சிக்கில்லாமல்‌ திருட வும்‌, ஒருவரிடம்‌ கூலி வாங்கிக்‌ கொண்டு ஒருவரைத்‌ திட்டவும்‌, அடிக்கவும்‌ செய்து கொண்டிருக்கும்‌ தொண்டர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம்‌ ஏற்பட்டது தொண்டர்களின்‌ யோகம்தான்‌. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ போன்ற தலைவர்கள்‌, இப்படி ஒரு தீர்மான மில்லாமலிருக்கும்‌ போதே இம்மாதிரியான தொண்டர்களைக்‌ கொண்டு தலைவராகியிருக்க, காங்கிரஸிலே இம்‌ மாதிரி ஓர்‌ தீர்மானமும்‌ அதன்‌ அதிகா ரமும்‌ அவர்‌ கையிலே இருக்க ஏற்பட்டதானது, தொண்டர்களின்‌ யோகத்தை விட தலைவர்களின்‌ யோகமே பெரிதெனச்‌ சொல்ல வேண்டும்‌. இனி ஒவ்வொரு ஊரிலும்‌ சுயராஜ்யக்‌ கக்ஷித்‌ தலைவர்களுக்கு “ஜெய்‌” சப்தம்‌ வானத்தைப்‌ பிளக்கும்‌. ஜஸ்டிஸ்‌ கக்ஷியைத்‌ திட்டும்‌ சப்தம்‌ மேல்‌ உலகத்தையும்‌ நடுக்குறச்‌ செய்யும்‌. சுயராஜ்யக்‌ கக்ஷியை ஒப்புக்‌ கொள்ளாதவர்கள்‌ வெளி ஊர்களில்‌ மீட்டிங்கு போட முடியாது, போட்டாலும்‌ விளக்கு வராது, வந்தாலும்‌ கல்லுகளும்‌, மண்ணுகளும்‌, கேள்விகளும்‌ பறக்கும்‌. மிஞ்சி இத்தனையும்‌ சகித்துக்‌ கொண்டு நடத்தினாலும்‌ பத்திரிகை களில்‌ வராது. கூச்சலும்‌ குழப்பமும்‌ மீட்டிங்கைக்‌ கலைக்கும்‌. இதெல்லாம்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ பணமும்‌, காங்கிரஸ்‌ பணமும்‌ செய்தாலும்‌ பிராம ணப்‌ பத்திரிகை ஜஸ்டிஸ்‌ கக்ஷியும்‌ சுயராஜ்யக்‌ ககஷியை ஒப்புக்‌ கொள்ளாத வர்களும்‌ செய்ததெனப்‌ பிரசாரங்கள்‌ செய்யும்‌. ஆதலால்‌ சுயராஜ்யக்‌ கக்ஷிக்கு இனி மேல்‌ என்ன குறை! இம்மாதிரி சுயராஜ்யக்‌ கட்சியே! நீ நீடுழி வாழ்க!! குடி அரசு - கட்டுரை - 07.02.1926 93 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 காந்தி அடிகளின்‌ திரேக நிலையும்‌ மனப்பான்மை நிலையும்‌ அசை வற்றுப்‌ போய்விட்டது என்பது அவருக்கு அடிக்கடி ஏற்படும்‌ காயலா மூல மாகவும்‌ அவர்‌ அடிக்கடி வெளிப்படுத்தும்‌ அபிப்ராயம்‌ மூலமாகவும்‌ நன்கு வெளியாகிறது. அவருக்கு மன உறுதியுள்ள காலத்தில்‌ காயலாவே ஏற்படுவ தில்லை. ஏற்பட்டாலும்‌ இயற்கை முறைகளிலேயே சவுக்கியப்படுத்திக்‌ கொள்வார்‌. இப்பொழுதோ அவருக்கு கொய்னாவும்‌ இஞ்சக்ஷனும்‌ தேவை யாய்ப்‌ போய்விட்டது. ஆதலால்‌ இயற்கை சிகிச்சையில்‌ உள்ள உறுதி ஆட்டம்‌ கொடுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்‌. அதுபோலவே ராஜீய விஷயத்தில்‌ இருந்த உறுதிகளும்‌ ஆட்டம்‌ கொடுத்து விட்டதாகவே கருத வேண்டியதாய்‌ விட்டது. மகாத்மா ஜெயிலில்‌ இருந்து வந்தவுடன்‌ இருந்த மனநிலையும்‌, ஸ்ரீமான்கள்‌ தாஸ்‌, நேரு இவர்கள்‌ கேட்டுக்கொண்ட பின்‌ ஏற்பட்ட மனநிலையும்‌, கல்கத்தா ஒப்பந்த மனநிலையும்‌, பாட்னா ஒப்பந்த மனநிலையும்‌, தான்‌ ஓய்வு எடுத்துக்‌ கொண்ட மனநிலையும்‌, தனக்கு நம்பிக்கையில்லாத திட்டத்திற்கு தான்‌ தன்னால்‌ கூடிய உதவி செய்வதாகச்‌ சொல்லும்‌ மனநிலையும்‌ பார்த்தால்‌ தயவு தாக்ஷண்ணியம்‌, கருணை என்பதுகள்‌ நமது மகாத்மாவை ஆவாகனப்படுத்திக்கொண்டு பாத்திரா பாத்திரமறியாமலே மகாத்மாவை ஆட்டி வைக்கின்றன. இவ்வளவும்‌ போதா மல்‌ ஸ்ரீமான்‌ சிராஜகோபாலாச்சாரியார்‌ அவர்கள்‌ விஷயத்திலோ இவைகள்‌. தலைகால்‌ கூட தெரியாமல்‌ ஆட்டி வைக்கின்றது. ஸ்ரீமான்‌ தாஸ்‌, நேரு இவர்கள்‌ விஷயத்திலேயே அவர்கள்‌ சொல்லு வதுபோலெல்லாம்‌ மகாத்மா ஆடினாரென்றால்‌ ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ விஷயத்தில்‌ கேட்கவும்‌ வேண்டுமா? ஆச்சாரியார்‌ நினைப்பது போலெல்‌ லாம்‌ ஆடினால்தானே சரியாகவிருக்கும்‌. ஆதலால்‌ அதற்கு ஏற்றாற்‌ போலவே இப்பொழுது மகாத்மா ஆடிவருகிறார்‌.. ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ :- மகாத்மாவே! நான்‌ பிரிட்டீஷ்‌ கோர்ட்டுக்குப்‌ போய்‌ எனது வக்கீல்‌ சாமார்த்தியத்தால்‌ ஆர்க்கியுமெண்ட்‌ செய்து ஒரு கேசு ஜெயித்து வந்தேன்‌.ஆனால்‌, ஜனங்கள்‌ சந்தேகப்படுகிறார்கள்‌.தயவு செய்து இதற்கு. ஆசி கூறுங்கள்‌. குடி அரசு - 1926 () 94 மகாத்மா:- ஆ ஆ ! ரொம்பவும்‌ சரி. அதுதானே ஒத்துழையாமையின்‌ அடிப்படை. யாரோ என்னமோ சொல்லட்டும்‌. நீங்கள்‌ பயப்படாதீர்கள்‌. ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌:- மகாத்மாவே! மதுவிலக்கு என்கிற கொள்கையை வைத்து சுயராஜ்யக்‌ கட்சியின்‌ பேரால்‌ எனது பிராமண வகுப்பாருக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க வேண்டும்‌. தயவு செய்து இதையும்‌ ஆதரித்து ஆசி கூறுங்கள்‌. மகாத்மா :- ஆ! ஆ! ஆக்ஷபணை என்ன, நீங்கள்‌ செய்தது ரொம்பவும்‌ சரி. சுயராஜ்யக்‌ கட்சியார்‌ பரம உத்தமர்கள்‌. அவர்கள்‌ மதுவிலக்கை: ஏற்றுக்‌ கொண்டது தேசத்திற்கே பெரிய லாபம்‌. அவர்களே ஜெயிக்க வேண்டும்‌. நீங்களும்‌ அவர்களுக்கு வேலை செய்வதுதான்‌ மோக்ஷம்‌. ௬ சமயம்‌ மகாத்மா இவ்வாட்ட மான மன உறுதிகளின்‌ பலனால்‌ பின்னால்‌ எல்லாம்‌ சரிப்படுத்திக்‌ கொள்‌ ளலாம்‌ என்று நம்பிக்கை கொண்டு இருக்கலாம்‌. உதைத்த கால்‌ புழுப்பதற்கு முன்‌ அடிவயிற்றில்‌ சீ கட்டும்‌ போலிருக்கிறதே அதற்கு என்ன செய்வது என்கிற கவலையும்‌, மறுபடியும்‌ நமது நாட்டை நடத்த வேண்டிய நிலை நமது மகாத்மாவுக்கு வருமானால்‌ இப்பொழுது மகாத்மாவை ஆட்டமுறச்‌ செய்தவர்களே அந்தக்‌ காலத்திலும்‌ வந்து குறுக்கிட்டு இந்த மாறுதல்களை யெல்லாம்‌ எடுத்துக்காட்டி மறுபடியும்‌ உபத்திரவம்‌ செய்ய வந்து விடுவார்‌. களே என்கிற பயமும்தான்‌ இவற்றைப்‌ பற்றி கவலைப்பட வைக்கிறதே அல்லாமல்‌ மற்றபடி மகாத்மாவினிடம்‌ எவ்விதச்‌ சந்தேகமோ, கற்பனையோ யாருக்கும்‌ கொஞ்சமும்‌ இருக்காது என்றே உறுதி கூறுவோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 07.02.1926 95 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நண்றி மாராட்௫ுதல்‌ உண்மைச்‌ சகோதரர்களே! “குடி அரசு” 34-வது இதழ்‌ (27-12-25) ஒன்பதாவது பக்கத்தில்‌ “குடி அரசு”க்குப்‌ புது ஆண்டு சன்மானம்‌ என்பதாக ஒரு சிறு வேண்டுகோள்‌ விடுத்திருந்தோம்‌. அவ்வேண்டுகோளைச்‌ சகோதரர்கள்‌ மதித்துக்‌ கனப்‌ படுத்தியதற்கு அதாவது 1-1-26 - ந்‌ தேதியிலிருந்து 31-1-26 - ந்‌ தேதி முடிய ஜனவரி மீ£த்தில்‌ 307 சந்தாதாரர்கள்‌ ஷி வேண்டுகோளை உத்தேசித்துத்‌ தாங்களாகவும்‌, தங்கள்‌ நண்பர்கள்‌ மூலமாகவும்‌ சந்தாதாரர்களாகச்‌ சேர்ந்தும்‌, இரண்டொருவர்‌ சிறு தொகை உதவியும்‌ கனப்படுத்தியதோடு கொழும்பு, மதுரை, திருச்சி, நாகை, கோவை முதலிய ஊர்களில்‌ “குடிஅரசி”ன்‌ அபிமான ஏஜண்டுகள்‌, தங்கள்‌ சில்லரை விற்பனையை ஜனவரி மாதத்தில்‌ ஒன்று இரண்டாய்‌, மூன்றாய்ப்‌ பெருக்கியும்‌, “குடி அரசி”ன்‌ முன்னேற்றத்தில்‌ பொறுப்பு எடுத்துக்‌ கொண்டதற்கும்‌ குடிஅரசின்‌ சார்பாகவும்‌, பிராமண ரல்லாதார்‌ பாமர மக்கள்‌- தீண்டப்படாத மக்கள்‌ சார்பாகவும்‌ நாம்‌ நெஞ்சார நன்றி பாராட்டுகிறோம்‌. “குடிஅரசு” வாரம்‌ இருமுறை - மும்முறை - தினப்பதிப்பு ஆகிய வைகளாக மாறவேண்டும்‌ என்பதாக ஆசைபட்டு, அதற்குற்ற வழிகளைச்‌ சொன்னவர்களுக்கும்‌ பலவிதங்களில்‌ உதவி செய்வதாகச்‌ சொன்னவர்‌ களுக்கும்‌, மற்றும்‌ “குடி அரசி” னிடம்‌ தங்களுக்குப்‌ பூரண நம்பிக்கை யிருப்பதாகச்‌ சொல்லி நமக்கு ஊக்கமூட்டியவர்களுக்கும்‌ நமது மனமார்ந்த நன்றியறிதலைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. தவிர “குடி அரசை” வாரப்‌ பதிப்பிலிருந்து இது சமயம்‌ எவ்விதமாகவும்‌ மாற்ற சக்தியற்றவராய்‌ இருக்‌ கிறோம்‌. ஏனெனில்‌, 1 நமது “குடி அரசு” வியாபாரப்‌ பத்திரிகையாயில்லாமல்‌ பிரசாரப்‌ பத்திரிகை என்பதை உத்தேசித்து குறைந்த சந்தா வைத்திருப்பதால்‌ நஷ்ட மடைய நேரிட்டிருப்பதோடு அதிக நஷ்டமடையவும்‌ இதுசமயம்‌ செளகரிய மில்லாதிருக்கிறது. 2அன்றியும்‌, அதன்‌ பத்திராதிபரான ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ ஒவ்வொரு வாரமும்‌ 2 அல்லது 3 நாள்‌ பிரசாரத்திற்கு வெளியூர்‌ களுக்குப்‌ போக வேண்டியதாயுமிருக்கிறது. குடி அரசு - 1926 () 96 3 கதர்‌ வேலைக்கும்‌ காலத்தைச்‌ செலவிட வேண்டியிருக்கிறதோடு. இன்னும்‌ பல காரணங்களாலும்‌ இது சமயம்‌ மாற்ற முடியாமலிருப்பதற்கு மன்னிக்கவும்‌. வேண்டுமானால்‌ வேறு கனவான்கள்‌ யாராவது ஏற்றுக்கொண்டு நடத்துவதாய்‌ இருந்தால்‌, அவர்களிடம்‌ சர்வ சுதந்திரத்துடன்‌ “குடி அரசு” பத்திரிகையை ஒப்புக்‌ கொடுத்துவிட்டு “குடி அரசுக்கு ஊதியமில்லாத உதவியைச்‌ செய்வதில்‌ யாதொரு ஆக்ஷேபனையும்‌ இல்லை என்பதையும்‌ உண்மையாய்த்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 07.02 1926 97 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஷன்‌ தந்திரம்‌ (தேர்தல்‌ வாக்கத்தத்தம்‌ ) “சித்திரபுத்திரன்‌ தமிழ்நாட்டில்‌ பிராமணாதிக்கம்‌ வலுவடைவதற்காக, வரப்போகும்‌ சட்டசபைத்‌ தேர்தல்களில்‌ பிராமணர்களும்‌ மற்றும்‌ பிராமணர்களின்‌ பிராமணரல்லாத அடிமைகளும்‌ பிராமணாதிக்கத்தின்‌ சார்பாய்‌ எப்படியாவது ஸ்தானம்‌ பெற்று, இதுவரையிலும்‌ பிராமணரல்லாதார்‌ இயக்கங்களின்‌ மூலமாகவும்‌, மகாத்மாவின்‌ ஒத்துழையாக்‌ கொள்கையின்‌ நிர்மாணத்‌ திட்டங்‌ கள்‌ மூலமாகவும்‌ ஒரு சிறிதளவு முன்னேறியிருக்கும்‌ பிராமணரல்லாதார்‌. முன்னேற்றத்தையும்‌, தேச நலத்தையும்‌, அடியோடழித்து ஆதிக்கம்‌ பெற காங்கிரஸின்‌ பெயரால்‌ நமது நாட்டுப்‌ பிராமணர்களின்‌ சூழ்ச்சிக்‌ கொடி வானமளாவப்‌ பறக்கிறது. இக்கொடியை பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்கள்‌. தாங்கித்‌ திரிகின்றார்களெனச்‌ சொல்ல வெட்கப்படுகின்றேனாயினும்‌ உண்மையைச்‌ சொல்ல அஞ்சுவது அதைவிட வெட்கக்‌ கேடாதலின்‌ சொல்‌ லாமல்‌ விடுவதற்கில்லை. 1 தற்காலம்‌ இந்திய தேசிய காங்கிரஸ்‌ என்று சொல்லும்‌ விடுதலை இயக்கமானது பெரும்பாலும்‌ பிராமணர்கள்‌ கையில்‌ சிக்கிக்‌ கொண்ட தென்பதை யாவராலும்‌ மறுக்க முடியாது. 2 காங்கிரஸின்‌ தலைவர்‌ ஸ்ரீமதி சரோஜனி தேவியாராவார்‌. அந்த அம்மையார்‌ பிராமணரல்லாதாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாலும்‌ இவர்‌: பிராமண ஸ்திரீ யென்பதில்‌ எவருக்கும்‌ சந்தேகமிருக்காது. 3.அதன்‌ காரியதரிசிகளோ தமிழ்நாட்டுப்‌ பிராமணர்கள்‌ இருவர்‌. ஒருவர்‌ ஸ்ரீமான்‌ ஏ. ரெங்கசாமி ஐயங்கார்‌. அவருடைய மனப்பான்மையும்‌, பிரசாரமும்‌, வாழ்வும்‌ பிராமணரல்லாதாரைத்‌ தீண்டாதாராக்கி, பிராமணாதிக்‌ கமே உலகத்தையெல்லாம்‌ ஆட்கொள்ள வேண்டுமென்கிற கருத்துள்ளவர்‌ என்பதை எவரும்‌ ஆக்ஷ்பிக்க முடியாது. அவர்‌ நடத்தும்‌ சுதேசமித்திரன்‌. பத்திரிகைக்குப்‌ பயந்து நமது நாட்டிலுள்ள எத்தனை பிராமணரல்லாத “வீரர்‌ குடி அரசு - 1926 () 98 கள்‌” சர்க்கஸ்காரனிடம்‌ அகப்பட்ட புலியைப்போல்‌ நடந்து வருகின்றார்‌. களென்பதும்‌, அப்பத்திரிகையின்‌ பிரசாரத்தால்‌ எவ்வளவு தூரம்‌ பிராமண ரல்லாதார்‌ முற்போக்கு அழுத்தப்பட்டு வருகின்றதென்பதும்‌ உலகமறிந்த விஷயமே. 4 மற்றொரு காரியதரிசி ஸ்ரீமான்‌ கே. சந்தானம்‌ என்று சொல்லும்‌ (யஞ்சாபிலுள்ள ) தமிழ்நாட்டு ஐயங்கார்‌ பிராமணர்‌. இவர்‌ மைலாப்பூர்‌ ஐயங்‌ கார்‌ வக்கீலான ஸ்ரீமான்‌ கே. பாஷியத்தின்‌ சகோதரராவார்‌. “இந்தியப்‌ பிராம ணாதிக்கத்தின்‌ சங்கத்தின்‌ சார்பாய்‌ இதர ஒவ்வொரு மாகாணங்களுக்கும்‌ சென்றிருப்பது போல, பஞ்சாப்‌ மாகாணத்துக்குச்‌ சென்றுள்ள பிரசார ஏஜண்டு இவர்‌ என்பதையும்‌” எவரும்‌ மறுக்க முடியாது. 5 காங்கிரஸின்‌ (டிக்டேட்டர்‌ ) என்னும்‌ சர்வாதிகாரியான ஸ்ரீமான்‌ மோதிலால்‌ நேரு அவர்கள்‌ வெளிப்படையாய்‌ மாமிசம்‌ சாப்பிட்டாலும்‌ மது வருந்தினாலும்‌ பிராமணர்‌, பிராமணரே என்பதில்‌ யாருக்கும்‌ சந்தேகம்‌ இல்லை. 6.மற்றும்‌ தமிழ்நாட்டின்‌ சார்பாய்‌ காங்கிரஸ்‌ நிர்வாகத்தில்‌ ஸ்தானம்‌ பெற்றவரும்‌ இந்‌ நாட்டுக்கேற்ற திட்டம்‌ வகுப்பவருமான ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனி வாசய்யங்காரும்‌ எப்படியிருந்தபோதிலும்‌ அவரும்‌ பிராமணரே என்பதை நான்‌ எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. 7. தமிழ்நாட்டுப்‌ பிராமணர்களின்‌ சூழ்ச்சிக்குக்‌ கடுகளவும்‌ பின்வாங்‌ காத, மஹாராஷ்டிர தேசத்துப்‌ பிராமணரில்‌ ஸ்ரீமான்‌ அபயங்கார்‌ என்னும்‌ பிராமணரும்‌ காங்கிரஸின்‌ நிர்வாக அங்கத்தினர்‌ என்பதையும்‌ எடுத்துக்‌ காட்ட வேண்டியதில்லை. 8. மற்றபடி மகாத்மா காந்தி, மெளலானா மகமதலி, ஸ்ரீமான்‌ ஜம்னலால்‌ பஜாஜ்‌ இவர்கள்‌ அங்கத்தினர்களாயிருந்தாலும்‌, தள்ள முடியாமல்‌ தாக்ஷண்‌ யத்திற்குக்‌ கட்டுப்பட்டுத்‌ தங்கள்‌ பெயரைக்‌ கொடுத்து நிர்வாகத்தில்‌ கலக்கா மலிருக்கின்றவர்கள்‌ என்பதும்‌ நான்‌ எடுத்துக்‌ கூறத்‌ தேவையில்லை. 8.லாலா லஜபதிராய்‌ அவர்களோ பஞ்சாப்‌ மாகாணத்தில்‌ மெஜாரிட்டி. யாயிருக்கும்‌ மகமதிய சமூகத்தாரிடம்‌ சந்தேகமும்‌ பயமுங்கொண்டு, பிராம ணாதிக்க சபையாகிய இந்து மகாசபையிடம்‌ அடைக்கலம்‌ புகுந்தவர்‌. 10.மீதியாயிருப்பவர்‌ ஸ்ரீமான்‌ சென்குப்தா. அவர்‌ வைசியராயிருந்த போதிலும்‌ தமிழ்நாட்டு ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்திக்கு ஒப்பான சத்தியமூர்த்தி யாவார்‌. அவருக்கும்‌ நமது சத்தியமூர்த்தி ஐயரைப்‌ போலவே மீட்டிங்குக்கு ஓர்‌ உடையும்‌,வீட்டில்‌ ஓர்‌ உடையும்‌, வெள்ளைக்காரரைப்‌ பார்க்க ஓர்‌ உடையு மாக ஆக மூவுடை தரிப்பவர்‌. அவருக்கு உலகமே கல்கத்தா கார்பொரேஷன்‌ பிரசிடெண்டு ஸ்தானம்தான்‌. 99 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஆகிய இவர்கள்தான்‌ 33 கோடி இந்தியருக்கும்‌ ஜாதகமெழுது பவர்கள்‌. அப்படியிருந்தாலும்‌, தமிழ்நாட்டுக்கு ஜாதகம்‌ எழுதுகிறவர்கள்‌, குறிப்பாகவும்‌ சிறப்பாகவும்‌ ஸ்ரீமான்கள்‌ ஏ . ரெங்கசாமி ஐயங்கார்‌, கே. சந்தானம்‌ ஐயங்கார்‌, எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ ஆகிய மூன்று ஐயங்கார்‌ “சுவாமி கள்‌” என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவர்களுக்கு சாரதியா யிருப்பவர்‌ பாரதப்‌ போருக்கு கிருஷ்ணன்‌ போல பிராமணாதிக்கப்‌ போருக்கு நமது ஸ்ரீமான்‌ சி.ராஜகோபாலாச்சாரியார்‌ “சுவாமிகள்‌” அமர்ந்திருக்கிறார்‌. அவருக்கு தமிழ்நாட்டின்‌ பெரும்பாகத்தில்‌ நல்ல பிள்ளையென்கிற பெயருண்டு. ஆதலால்‌, தமிழ்நாட்டு விடுதலை இயக்கம்‌ இவ்வய்யங்கார்‌ “சுவாமி” களிடத்திலேயே அடங்கிவிட்டது. இதை அநுசரித்து தேர்தல்‌ பிரசாரமும்‌ வெளிக்கிளம்பி விட்டது. இதற்காக ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ காங்கிரஸ்‌. கட்சியின்‌ வேலைத்திட்டம்‌ என்கிற ஒரு ஆயுதத்தை வெளிப்படுத்தியிருக்‌ கிறார்‌. அதனுடைய உத்தேசம்‌ தமிழ்நாட்டுப்‌ பிராமணரல்லாதாரை ஏமாற்று வதற்கு இவ்வாயுதம்‌ போதுமா, போதாதாவென்று பரீகைஷ பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட முதல்‌ ஆயுதமென்றே நினைக்கிறேன்‌. அத்திட்டத்தில்‌ உள்ள. தத்துவங்களாவன:- 1 இரட்டையாட்சியில்‌ உண்மையான அதிகாரமும்‌ பொறுப்பும்‌ இல்லை யென்பதும்‌ அதில்‌ சச்சரவுக்கும்‌ பிளவுக்கும்தான்‌இடமிருக்‌ கிறதென்பது. 2. இம்முறை அமுலுக்கு வந்த 6 வருட அநுபவத்தில்‌ அதிகச்‌ செலவும்‌ வீண்‌ பிரயாசையும்‌ ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல்‌ ஜனங்க ளுக்கு எவ்வித நன்மையும்‌ செய்ய ஏதுமில்லாமலிருப்பதால்‌ இம்முறையை நிராகரிக்கும்படி வோட்டர்களைக்‌ காங்கிரஸ்‌ கட்சி வேண்டிக்‌ கொள்ளுகிறது. 3. ஆறு வருஷமாய்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ மந்திரி பதவிகளை வகித்து வருகிறார்கள்‌: அவர்கள்‌ ஜனங்களுக்கு நம்பிக்கை பெறத்தக்க ஒரு காரியத்தையும்‌ செய்யவில்லை; சுயராஜ்யமடைவதற்குப்‌ பாதகம்‌. செய்திருக்கிறார்கள்‌. ஆதலால்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியாருக்கு வோட்‌ செய்யாமல்‌ காங்கிரஸ்காரர்களுக்கே வோட்‌ செய்து சட்டசபைக்கு அனுப்பவேண்டுமென்பது. 4. காங்கிரஸ்‌ கட்சி அபேக்ஷகர்கள்‌ அப்போதைக்கப்போது காங்கிரஸ்‌ கமிட்டியாரால்‌ பிறப்பிக்கப்படும்‌ உத்திரவுப்படி நடப்பதாகப்‌ பிரமாணம்‌ செய்வார்கள்‌ என்பது. குடி அரசு - 1926 N 100 5. தேசத்திற்கு விடுதலை அளிக்க வல்லது சாத்வீக சட்டமறுப்புத்‌ தான்‌ என்றும்‌, ஆனால்‌ தேசம்‌ அதற்குத்‌ தயாராயில்லை யென்றும்‌, ஆதலால்‌ காங்கிரஸ்‌ கட்சியானது சுயராஜ்யத்திற்கு தடை விளைவிக்கக்கூடிய காரியங்கள்‌ சர்க்காரால்‌ செய்யப்பட்டாலும்‌, மற்றவர்களால்‌ செய்யப்பட்டாலும்‌, எதிர்த்துப்‌ போராடுவதென்றும்‌ உறுதி கூறுகிறது. 6. கான்பூர்‌ காங்கிரஸ்‌ தீர்மானத்தில்‌ சொல்லியுள்ள நிபந்தனை களுக்கு சர்க்காரார்‌ திருப்தியான பதிலளிக்கும்‌ வரை உத்தியோகம்‌. ஏற்காத கொள்கையை அநுசரிக்கின்றதென்றும்‌, நிர்மாணத்‌ திட்டத்தைச்‌ சட்டசபையில்‌ நிறைவேற்றி வைக்கப்‌ பாடுபடு மென்றும்‌, எல்லா ஜாதியினருக்கும்‌ சம அந்தஸ்தும்‌ சந்தர்ப்பங்‌ களும்‌ அளிக்கவேண்டுமென்பதை ஆதரிப்பதாகவும்‌, சென்னை சட்டசபையில்‌ பூரண மதுவிலக்குக்காக அதிகப்படி எதிர்த்துப்‌ போராடுமென்றும்‌, இன்னும்‌ பல ஆசை வார்த்தைகளையும்‌ சென்ற தேர்தல்களில்‌ கொடுத்த வாக்குறுதிகளை விட இன்னும்‌ சில புதிய வாக்குறுதிகளையும்‌ கொடுத்திருப்பதாகக்‌ காண்கிறது. இவைகளுக்குச்‌ சமாதானம்‌ எழுதுவதற்கு முன்‌ ஒரு சிறு பழமொழி யைச்‌ சொல்லி விளக்கிவிட்டு பின்னால்‌ சமாதானம்‌ சொல்வேன்‌. ஒரு பிராமணன்‌ ஒரு கலியாணத்தில்‌ தட்சணை வாங்கும்‌ போது ஆத்மஸ்துதி, பரநிந்தை, திரவியாபேட்சை ஆகிய மூன்றையும்‌ வெறுத்து, நான்கு வேதம்‌, ஆறு சாஸ்திரம்‌, அறுபத்துநாலு கலைக்கியானத்தையும்‌ நெட்டுருப்‌ பண்ணி யிருக்கும்‌ பெரிய கனபாடியாகிய எனக்கும்‌ 2 அணா, எதிரில்‌ நிற்கும்‌ ஒன்றும்‌ தெரியாத தற்குறிக்கும்‌ 2 அணாவா? என்று சொன்னார்‌ என்பதாக ஓர்‌. பழமொழி சொல்லுவதுண்டு. இதில்‌ எந்தெந்த குணத்தை வெறுத்ததாகச்‌ சொல்லுகிறாரோ, அவையெல்லாம்‌ அந்த சொல்லும்‌ வார்த்தையிலேயே அவருடன்‌ தலை சிறந்து விளங்குவதைப்‌ பார்க்கலாம்‌, அதாவது ஆத்மஸ்‌ துதி இல்லையென்கிறார்‌; நாலு வேதம்‌, ஆறு சாஸ்திரம்‌ முதலியவற்றை நெட்டுருப்பண்ணின கனபாடிகள்‌ என்று சொல்லுகிறார்‌. பரநிந்தையை வெறுத்தேனென்கிறார்‌; எதிரில்‌ இருப்போனை ஒன்றுந்‌ தெரியாத தற்குறி என்கிறார்‌. திரவியாபேட்சை இல்லை என்கிறார்‌; அவனுக்கும்‌ இரண்டணா எனக்கும்‌ இரண்டணாவா என்கிறார்‌. இது போல நமது சுயராஜ்யக்‌ கட்சிக்காக காங்கிரஸ்‌ போட்டிருக்கும்‌ திட்டமும்‌ இருக்கிறது. அதாவது, 1 “மேல்கண்ட காங்கிரஸ்‌ திட்டத்தில்‌ இரட்டையாட்சியில்‌ உண்மை: யான அதிகாரமும்‌, பொறுப்பும்‌ இல்லையென்பதும்‌, அதில்‌ 101 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சச்சரவுக்கும்‌, பிளவுக்கும்தான்‌ இடமிருக்கிறதென்பது.” சுயராஜ்யக்‌ கட்சியார்‌ இம்மாதிரி நினைப்பது வாஸ்தவமானால்‌ இவர்‌ கள்‌ அவ்விரட்டையாட்சி ஸ்தாபனத்தைக்‌ கைப்பற்ற வேண்டிய அவசிய மென்ன? அந்த ஸ்தாபனத்தில்‌ பொறுப்புமில்லை; சச்சரவுக்கும்‌ இடமிருக்‌ கிறது என்று சொல்லுகிறார்கள்‌. அப்படியானால்‌ பொறுப்புள்ளவர்களும்‌, சச்சரவு வேண்டாதவர்களுமான யோக்கியர்களாகிய சுயராஜ்யக்‌ கட்சி யாருக்கு அங்கு என்ன வேலை? இதிலிருக்கும்‌ இரகசியத்தை வாசகர்‌ கள்‌ தான்‌ தயவு செய்து கவனிக்க வேண்டும்‌. 2.“இம்முறை அமலுக்கு வந்த 6 வருஷ அநுபவத்தில்‌ அதிகச்‌ செலவும்‌ வீண்‌ பிரயாசையும்‌ ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல்‌, ஜனங்‌ களுக்கு எவ்வித நன்மையும்‌ செய்ய ஏதுவில்லாமலிருப்பதால்‌, இம்முறையை நிரா கரிக்கும்‌ படி வோட்டர்களைக்‌ காங்கிரஸ்‌ கட்சி வேண்டிக்‌ கொள்ளுகிறது” என்பது. அதிகச்‌ சிலவும்‌, வீண்‌ பிரயாசையும்‌ ஏற்பட்டு ஜனங்களுக்கு எவ்வித நன்மையும்‌ செய்ய ஏதுவில்லாத ஸ்தாபனத்தைக்‌ காங்கிரஸ்காரர்‌ நிராகரிப்ப தென்றால்‌ அதற்கு அர்த்தமென்ன? மகாத்மா காந்தி சொன்னபடி அந்த ஸ்தானங்களையே நிராகரிப்பதா? அல்லது அந்த ஸ்தானங்களில்‌ உள்ளவர்‌. களை வெருட்டிவிட்டு தேச மக்கள்‌ பணச்‌ சிலவில்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌. போய்‌ உட்கார்ந்துக்கொண்டு, அந்த ஸ்தானங்களால்‌ உண்டாகக்‌ கூடிய காரியமாகிய, அதிகச்‌ சிலவையும்‌, வீண்‌ பிரயாசையையும்‌, கட்சிப்‌ பிளவு களையும்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ செய்ய காங்கிரஸ்காரர்கள்‌ வோட்டு சம்பாதித்‌ துக்‌ கொடுப்பதாவென்பதை ஊன்றிக்‌ கவனித்தால்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ காங்கிரஸ்‌ திட்டத்தின்‌ தத்துவம்‌ வெளியாகும்‌. 3“ஆறு வருஷமாய்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ மந்திரி பதவிகளை வகித்து வருகிறார்கள்‌; அவர்கள்‌ ஜனங்களுக்கு நம்பிக்கை பெறத்தக்க ஒரு காரியத்தையும்‌ செய்யவில்லை. சுயராஜ்யமடைவதற்குப்‌ பாதகம்‌ செய்திருக்கிறார்கள்‌. ஆதலால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியாருக்கு வோட்‌ செய்யாமல்‌ காங்கிரஸ்காரர்களுக்கே வோட்‌ செய்து சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்‌” என்பது. இரட்டையாட்சியின்‌ அமைப்பு பொது ஜனங்களுக்கு ஒரு நன்மை யும்‌ செய்ய முடியாதென்றும்‌, அதில்‌ நன்மை செய்யக்கூடிய ஒரு விதமான யோக்கியதையும்‌ இல்லையென்பதும்‌, சச்சரவுக்கும்‌, பிளவுக்கும்‌ இடமிருக்‌ கிறதென்பதையும்‌ காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டு, மறுபடியும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்கள்‌ ஒன்றும்‌ செய்யவில்லையென்று அவர்கள்‌ மீது பழி சொல்லு வதின்‌ அர்த்த மென்ன? அந்த ஸ்தானங்களில்‌ இடமிருந்து நன்மை செய்‌ குடி அரசு - 1926 N 102 யவோ, பொறுப்‌ பேற்கவோ இடமிருந்து, ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்‌ செய்யாம லிருந்திருந்தால்‌ ஒரு சமயம்‌ ஜஸ்டிஸ்‌ ககஷிக்காரர்‌ பேரில்‌ குற்றம்‌ சொல்ல லாம்‌. அப்படி யிருக்க செய்வதற்கு இடமில்லாத ஓர்‌ காரியத்தை ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்‌ செய்யவில்லையென்று சொல்வது யோக்கியமாகுமா? அவ்வள வுடன்றிற்காமல்‌, அவன்‌ கிடக்கிறான்‌ குடிகாரன்‌ எனக்கு இரண்டு திராம்‌ வாரு என்பது போல்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியாருக்கு வோட்‌ செய்யாதேயுங்கள்‌ எங்களுக்கு வோட்‌ செய்யுங்கள்‌ என்று சொல்லுவது இருக்கிறது. இம்மாதிரியான நாணயமற்ற வார்த்தைகள்‌ தனிப்பட்ட ஹோதாவில்‌ ஒவ்வொருவர்‌ சொல்லிக்‌ கொண்டு போனாலும்‌ ஒரு விதத்தில்‌ சகிக்கலாம்‌. ஆனால்‌, காங்கிரஸின்‌ பேரால்‌ இம்மாதிரியான ஆபாசங்கள்‌ வெளியிடுவதை எப்படி சகித்துக்‌ கொண்டிருக்க முடியுமென்பதை வாசகர்கள்தான்‌ உணர்ந்து கொள்ள வேண்டும்‌. 4 “காங்கிரஸ்‌ கட்சி அபேக்ஷகர்‌ அப்போதைக்கப்போது காங்கிரஸ்‌ கமிட்டியாரால்‌ பிறப்பிக்கப்படும்‌ உத்திரவுப்படி நடப்பதாகப்‌ பிரமா ணம்‌ செய்வார்கள்‌” என்பது. சந்தையும்‌ ஒருவருடைய தாயிருந்து அதில்‌ கொள்ளையடிப்பதும்‌ அவராகவேயிருந்து விட்டால்‌ அப்புறம்‌ அவர்களைக்‌ கேட்கிறவர்கள்‌ யார்‌? அதுபோல காங்கிரசும்‌, காங்கிரஸ்‌ நிர்வாகமும்‌, சட்டசபைக்குப்‌ போகிறவர்களும்‌ ஒரே கூட்டத்தினரா யிருக்கும்‌ போது வேறு யாருக்கு ஜவாப்தாரியாயிருக்கக்‌ கூடும்‌? வேறு யார்தான்‌ இவர்களைக்‌ கேட்கக்கூடும்‌. மிஞ்சி யாராவது கேட்டால்‌ கேட்பவர்களை ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்களென்று சொல்லிவிடுகிறார்கள்‌. ஆதலால்‌, இந்தவாக்குறுதிகளினால்‌ என்ன பிரயோஜனம்‌? 5 “தேசத்திற்கு விடுதலை அளிக்கவல்லது சாத்வீக சட்ட மறுப்புத்தான்‌ என்றும்‌, ஆனால்‌ தேசம்‌ அதற்குத்‌ தயாராயில்லை யென்றும்‌, ஆத லால்‌ காங்கிரஸ்‌ கட்சியானது சுயராஜ்யத்திற்கு தடை விளைவிக்கக்‌ கூடிய காரியங்கள்‌ சர்க்காரால்‌ செய்யப்பட்டாலும்‌, மற்றவர்களால்‌ செய்யப்‌ பட்டாலும்‌ எதிர்த்துப்‌ போராடுவதென்றும்‌ உறுதி கூறுகிறது” என்பது. சட்ட மறுப்பினால்தான்‌ தேசத்திற்கு விடுதலையென்று வாயில்‌ சொல்லிவிட்டு, தேசம்‌ சட்ட மறுப்புக்கு லாயக்கில்லையென்று சொல்லுவதா யிருந்தால்‌ சட்ட மறுப்பைப்‌ பற்றி பேசுவதில்‌ பிரயோஜனம்‌ என்ன? சட்ட மறுப்பைப்‌ பற்றி பேசுகிற சுயராஜ்யக்‌ கட்சியாரும்‌ “சட்ட மறுப்பு என்கிற வார்த்தை சுயராஜ்யக்‌ கட்சியிலிருந்து வருவதால்‌” சுயராஜ்யக்‌ கட்சியை நான்‌ மெச்சுகிறேனென்று சொல்லும்‌, திரை மறைவிலிருக்கும்‌ சுயராஜ்யக்‌ கட்சி யாரும்‌ ஆகியவர்களுக்கு, சட்டமறுப்பு நமது தேசத்தில்‌ மும்முரமாக இருந்த காலத்தில்‌ இவர்களுக்கு அதில்‌ நம்பிக்கையிருந்ததா? ஆயிரக்கணக்கான 103 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தொண்டர்கள்‌ தமிழ்நாட்டில்‌ சட்ட மறுப்புச்‌ செய்து ஜெயிலுக்குப்‌ போகும்‌ போது இச்சட்ட மறுப்பு வீரர்கள்‌ என்ன செய்து கொண்டிருந்தார்கள்‌? இவர்க ளுக்குச்‌ சந்தர்ப்பம்‌ கிடைக்க வில்லையா? சட்ட மறுப்பு இருக்கிற காலத்தில்‌, நம்பிக்கையில்லை, நம்பிக்கையில்லை என்று சொல்லி வக்கீல்‌ உத்தியோ கத்திலும்‌, பத்திரிகை உத்தியோகத்திலும்‌ மாதம்‌ 1000,10000 மாகப்‌ பணம்‌ சம்பாதித்துக்‌ கொண்டிருந்ததோடு, சட்ட மறுப்பையும்‌ தோல்வியுறச்‌ செய்து விட்டு தேசமெல்லாம்‌ ஒற்றுமையாயிருந்து ஒருமிக்கச்‌ செய்தும்‌, தோல்வி யுற்றுப்‌ போன சட்ட மறுப்பைப்‌ பாமர ஜனங்களை ஏமாற்ற வாயிற்‌ சொல்லு வதும்‌, அதுவும்‌ சட்டமறுப்புக்‌ காலத்தில்‌ ஒளிந்து கொண்டு திரிந்த பயங்காளிகள்‌ வாயில்‌ வருவதும்‌,யோசித்துப்‌ பார்த்தால்‌ இவையெல்லாம்‌ பாமர ஜனங்களுக்கு விளங்காமற்‌ போகாது. ஸ்ரீமான்கள்‌ சீனிவாசய்யங்‌ காரும்‌, ஏ. ரெங்கசாமி ஐயங்காரும்‌, சத்தியமூர்த்தியும்‌, சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரும்‌, ஆதிநாராயண செட்டியாரும்‌, திரு. வி. கலியாணசுந்தர: முதலியாரும்‌, எம்‌.கே. ஆச்சாரியாரும்‌ சட்ட மறுப்பைப்‌ பற்றிப்‌ பேசுவதும்‌, சட்ட மறுப்புக்‌ காங்கிரஸில்‌ இருப்பதி னால்‌ நாங்கள்‌ சந்தோஷப்படுகிறோம்‌, ஆதலால்‌, சுயராஜ்யக்‌ கக்ஷிக்கு வோட்‌ கொடுங்களென்று சொல்லுவதும்‌ எவ்வளவு கண்ணியமற்ற காரியமென்பது வாசகர்கள்தான்‌ அறியவேண்டும்‌. சட்ட சபையில்‌, சுயராஜ்யத்துக்கு விரோதமான காரியத்தை எதிர்த்துப்‌ போராடுவோமென்று சொல்லுகிறவர்கள்‌ எங்கெங்கு போராடி என்னென்ன பலனை அடைந்தார்கள்‌? பூரண மெஜாரிட்டியுள்ள மாகாணங்களிலாவது போராடி பலன்‌ அடைய முடிந்ததா? 6.“கான்பூர்‌ காங்கிரஸ்‌ தீர்மானத்தில்‌ சொல்லியுள்ள நிபந்தனைக ளுக்கு சர்க்காரார்‌ திருப்தியான பதிலளிக்கும்‌ வரை உத்தியோகம்‌ ஏற்காத கொள்கையை அநுசரிக்கின்றதென்றும்‌, நிர்மாணத்‌ திட்டத்தைச்‌ சட்டசபையில்‌ நிறைவேற்றி வைக்கப்‌ பாடுபடுமென்றும்‌, எல்லா ஜாதியினருக்‌ கும்‌ சம அந்தஸ்தும்‌, சந்தர்ப்பங்களும்‌ அளிக்க வேண்டுமென்பதை ஆதரிப்ப தாகவும்‌, சென்னை சட்டசபையில்‌ பூரண மதுவிலக்குக்காக அதிகப்படி எதிர்த்துப்‌ போராடுமென்றும்‌, வாக்குறுதிப்படி நடப்போம்‌ என்றும்‌ சொல்லுவது”. சகல சமூகத்துக்கும்‌ சம அந்தஸ்துக்‌ கொடுக்கிறவர்கள்‌ சென்ற வருடம்‌ இந்தியா சட்டசபைக்கும்‌, இராஜாங்க சபைக்கும்‌ எத்தனை பிராமணர்‌ களை நிறுத்தினார்கள்‌? எத்தனை பிராமணரல்லாதாரை நிறுத்தினார்கள்‌? என்பதைக்‌ கணக்குப்‌ பார்த்தால்‌ இந்த வார்த்தையின்‌ உண்மை தெரியும்‌. தாழ்ந்த வகுப்பாருக்கு சுயராஜ்யக்‌ ககஷியின்‌ மூலம்‌ தேர்தலுக்காக என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள்‌? எம்‌ மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்‌? ஸ்ரீமான்‌ ஜயவேலுக்கு பத்து, ஐந்து கொடுத்து கூட்டிக்‌ கொண்டு திரிவதினாலேயே தாழ்ந்த வகுப்புக்கு நன்மை செய்ததாக ஏற்பட்டு போய்விடுமா? அல்லாமலும்‌ மதுவிலக்குக்காக முக்கியமாய்‌ வேலை செய்யப்‌ போவதாக ஓர்‌ ஆசை வார்த்தைக்‌ காட்டுகிறார்கள்‌. இது ஸ்ரீமான்‌ குடி அரசு - 1926 N 104 ராஜகோபாலாச்சாரியாரால்‌ சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ வெற்றிக்கு ஏற்பட்ட ஓர்‌. புதிய மருந்து. இதை எப்படிப்‌ பொது மக்கள்‌ நம்ப முடியும்‌? “ஒன்றுக்கும்‌ உதவாத சட்டசபையில்‌ - சச்சரவுகளும்‌, பிளவுகளும்‌, அதிக சிலவும்‌, வீண்‌: வேலையும்‌ ஏற்படும்‌ சட்டசபையில்‌” எப்படி மதுவை விலக்க முடியும்‌? இவ்வளவு தூரம்‌ ஜனங்களை ஏமாற்றத்‌ துணிந்த சத்தியக்கீர்த்திகளால்‌ தேசத்திற்கு நன்மைகள்‌ ஏற்படும்‌ என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்‌ தனமென்பதை வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. மேலும்‌, சர்க்காரிடம்‌ தேச நன்மைக்காக இப்போதுள்ள சட்ட சபை களில்‌ கேட்கக்கூடிய காரியம்‌ ஒன்றுமில்லையென்றும்‌, ஆகக்கூடியதும்‌ ஒன்றுமில்லையென்றும்‌ மகாத்மா காந்தி முதல்‌ காங்கிரஸிலுள்ள ஒவ்வொரு வரும்‌ ஒப்புக்கொண்டுதான்‌ காங்கிரஸில்‌ ஒத்துழையாமைத்‌ திட்டம்‌ நிறை வேறிற்று. அப்படி இருக்க இப்பொழுது மாத்திரம்‌ சட்டசபையில்‌ என்ன காரியம்‌ கேட்கமுடியும்‌? ஆனாலும்‌ சுயராஜ்யக்‌ ககஷியின்‌ சர்வாதிகாரியான ஸ்ரீமான்‌ நேரு உள்பட பலர்‌ மிதவாதக்‌ கட்சியாரையும்‌ சேர்த்துக்‌ கொண்டு பல தேவைகளைக்‌ கேட்டு பெரும்பான்மையான வோட்டுகளால்‌ சட்ட சபையில்‌ நிறைவேற்றியும்‌, சர்க்காரார்‌ அவற்றைக்‌ குப்பைத்‌ தொட்டியில்‌ போட்டுவிட்டதையும்‌ பார்த்துவிட்டு, மறுபடியும்‌ சர்க்காரைக்‌ கேட்கிறோம்‌ என்று சொல்லுவதின்‌ அர்த்தமென்ன? அப்படியே இருந்தாலும்‌ சர்க்காரார்‌. திருப்தியான பதில்‌ அளித்தார்களா? இல்லையாவென்று சொல்லுவதற்கு அதிகாரி யார்‌? யார்‌ கேட்கிறார்களோ அவர்களேதான்‌ பெரும்பாலும்‌ அதிகாரிகளாயிருக்கின்‌ றார்கள்‌. தமிழ்நாட்டுப்‌ பிராமணர்கள்‌ கைக்கு மந்திரி ஸ்தானங்கள்‌ கிடைக்கக்‌ கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டால்‌, சர்க்காரார்‌. சுயராஜ்யக்‌ ககஷிக்கு தக்க பதிலளித்து விட்டார்களென்றுதான்‌ அர்த்தம்‌! அந்த நிலைமை ஏற்படும்‌ வரை சர்க்கார்‌ தக்க பதில்‌ அளிக்கவில்லையென்று தான்‌ சொல்லிக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. அல்லாமலும்‌ அதுவரை உத்தியோகங்‌ களை ஒப்புக்‌ கொள்ளுவ தில்லையென்று சொல்லுவதற்குத்‌ தான்‌ அர்த்தம்‌ எங்கேயிருக்கிறது. ஸ்ரீமான்கள்‌ நேரு உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொண்டாகி விட்டது; படேல்‌ உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொண்டாகிவிட்டது; ஏ. ரெங்கசாமி ஐயங்காரும்‌ உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொண்டாகிவிட்டது: மற்றும்‌ பல சுயராஜ்யக்‌ கட்சிப்‌ பதிவிரதைகளும்‌ உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொண்டாகி விட்டது.அது மாத்திரமல்ல சுயராஜ்யக்‌ கட்சியில்‌ இப்போதுள்ள மெம்பர்‌. களிலும்‌ ராவ்சாஹிப்‌, ராவ்பஹதூர்‌, திவான்‌ பஹதூர்களும்‌, தாலூக்கா போர்டு, ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி, யூனியன்‌, பஞ்சாயத்து, செனட்சபை, ஜெயில்‌ கமிட்டி முதலிய பல ஸ்தானங்களில்‌ சர்க்கார்‌ தபவை நாடிநியமனம்‌ பெற்ற மெம்பர்களும்‌ நிறைந்திருக்கிறபோது நாங்கள்‌ சர்க்கார்‌ உத்தியோகத்‌ தைப்‌ பெறமாட்டோமென்று சொல்லுவது எவ்வளவு யோக்கிய மான பேச்சென்பதை வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. சம்பளமில்லாத இந்த உத்தியோகங்களையே பெறுவதற்கு ஆத்திரப்‌ 105 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பட்டுக்‌ கொண்டு திரிகிறவர்கள்‌ சம்பளமுள்ள உத்தியோகம்‌ கிடைப்ப தாயிருந்தால்‌ இவர்கள்‌ வேண்டாமெனச்‌ சொல்லி விடுவார்களென்று சொன்னால்‌ எந்த பயித்தியக்காரனாவது நம்பிவிடுவானா?அல்லாமலும்‌ வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களென்றும்‌ மறுபடியும்‌ ஓர்‌ முறை சொல்லி புதுப்புது வாக்குறுதிகள்‌ செய்வதை யார்‌ நம்பமுடியும்‌? மூன்று வருடங்க ளுக்கு முன்‌ செய்த வாக்குறுதிகளெல்லாம்‌ இப்போது எங்கே போய்விட்டது? சட்டசபையில்‌ போக்குவரத்து வழிச்சிலவுகூட வாங்க மாட்டோமென்று சொல்லிப்போன சுயராஜ்யக்‌ கட்சிப்‌ பிரபுக்கள்‌ பொய்‌ பில்‌ கொடுத்து ஒன்று இரண்டாகப்‌ பணம்‌ வாங்குவதை நன்றாய்ப்‌ பார்க்கிறோம்‌. இதைப்‌ பற்றி யாராவது கேட்டால்‌, ஐயோ பாவம்‌! பிழைத்துப்‌ போகட்டுமே, அவருக்கு இதைத்‌ தவிர வேறு வழி என்னவென்று சொல்லி மழுப்பி விடுகிறார்கள்‌. இப்படியிருக்க, இவர்கள்‌ வாக்குத்தத்தத்தை வேகமாய்‌ ஓடுகிற தண்ணீரில்‌ தான்‌ எழுதி வைக்க வேண்டும்‌. பொய்ச்‌ சத்தியம்‌ செய்கிறவர்கள்‌, இனிமேல்‌ பொய்ச்‌ சத்தியம்‌ செய்வதில்லையென்று ஓர்‌ புதுச்‌ சத்தியம்‌ செய்தால்‌, அது பழைய சத்தியத்தோடு சேருவதற்கு எத்தனை நாள்‌ ஆகும்‌. அல்லாமலும்‌ தேர்தல்களுக்காகச்‌ செய்யும்‌ சத்தியங்களில்‌ குற்றம்‌ கண்டுபிடிக்கக்‌ கூடா தென்றே “காங்கிரஸ்‌ மநுதர்ம சாஸ்திரம்‌” சொல்லுகிறது. அப்படியிருக்க இவைகளினாலெல்லாம்‌ என்ன காரியம்‌ ஆகிவிடும்‌. தற்காலம்‌ மந்திரி பதவியை வகிக்கும்‌ பிராமணரல்லாதார்‌ செல்வாக்கை எப்படியாவது ஒழித்து, அதைப்‌ பிராமணாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டுமென்பதே நமது பிராமணர்களின்‌ முக்கியத்‌ தத்துவமாகப்‌ போய்விட்டது என்பதை நான்‌ நெருப்பின்‌ மேல்‌ நின்று சொல்லவும்‌ தயங்கேன்‌. அம்மாதிரி செய்வதற்கும்‌ அவர்களுக்கு பாத்தியமுண்டு என்பதையும்‌ நான்‌ ஒருக்காலும்‌ மறுக்க மாட்டேன்‌. ஆனால்‌, அதற்காகக்‌ காங்கிரஸின்‌ பெயரையும்‌ மகாத்மாவின்‌ பெயரையும்‌ தேசத்திற்காகத்‌ தியாகம்‌ செய்த, கஷ்டப்பட்ட - தேச பக்தர்களின்‌ செய்கையின்‌ பலனையும்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளுவதைத்தான்‌ விபசா ரத்தனத்தைக்‌ காட்டிலும்‌ இழிவான காரியமென்பதை சொல்லி இவ்வியா சத்தை முடிக்கிறேன்‌. குடி அரசு - கட்டுரை - 07.02.1926 குடி அரசு - 1926 N 106 சதியாலோசனை தேசீய பிராமணர்களென்போரும்‌, தேசீயப்‌ பிராமணப்‌ பத்திரிகை களென்பதுவும்‌ பிராமணரல்லாதாரை எவ்விதத்தில்‌ அடக்கியாள்வது என்‌ னும்‌ விஷயமாய்‌ பெரிய சதியாலோசனைகள்‌ செய்து, பிராமணரல்லாதார்‌ செலவிலும்‌, பிராமணரல்லாதார்‌ உழைப்பிலும்‌ தங்கள்‌ காரியத்தை நடத்தி வருகிறது. பிராமணரல்லாதார்களில்‌ பாமர ஜனங்களும்‌ (தங்களது அறியாமை யினாலும்‌) சோற்றுப்‌ பிரசாரகர்களும்‌, இவர்களுக்கனுகூலமாயிருந்து தங்கள்‌ சமூகத்தின்‌ சுயமரியாதையையே பாழாக்கி வருகின்றார்கள்‌. தன்னுடைய சாமர்த்தியத்தினால்‌ பிராமணரல்லாதாரில்‌ பெரும்பாலோர்‌ தன்னை நம்பும்படி செய்து, அவர்களுக்குத்‌ தலைவருமாகி அச்செல்வாக்கால்‌ மகாத்மாவின்‌ பிரதம சீடராகி ஒரு நிலையான நல்ல பெயரை ஏற்படுத்திக்‌ கொண்ட ஸ்ரீமான்‌ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்‌ இப்பொழுது தமது சுயரூபத்தைக்‌ காட்டத்‌ துணிந்து விட்டார்‌. ஒவ்வொரு நாளும்‌ சட்டசபைத்‌ தேர்தலுக்கு சுய ராஜ்யக்‌ கக்ஷியாருக்கே வோட்‌ செய்யுங்கள்‌: மதுவிலக்குச்‌ செய்ய அவர்கள்‌ ஒப்புக்‌ கொண்டார்கள்‌ என்று விளம்பரம்‌ போட்டு வருகிறார்‌. சுயராஜ்யக்‌ ககஷியாரால்‌ எப்படி மது விலக்குச்‌ செய்யக்கூடும்‌ என்பதைப்‌ பற்றி அநேக தடவைகளில்‌ இவரே மறுத்துப்‌ பேசியிருக்கிறார்‌. சுயராஜ்யக்‌ ககஷி காரிய தரிசியாகிய ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியும்‌ சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ மூலம்‌ மது விலக்குச்‌ செய்ய முடியாதென்று சொல்லியிருக்கிறார்‌. சுயராஜ்யக்‌ கட்சியின்‌ ஆதிக்கத்தால்‌ காங்கிரஸ்‌ காரியதரிசியாகிய ஸ்ரீமான்‌ ரெங்கசாமி ஐயங்காரும்‌ தமது பத்திரிகையின்‌ மூலம்‌ தினமும்‌ சாராயம்‌ விற்றுப்‌ பணம்‌ சம்பாதித்துக்‌ கொண்டுதான்‌ வருகிறார்‌. கோயமுத்தூர்‌ ஜில்லா சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவ ராகிய ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணஐயங்காரோ இன்னமும்‌ தமது மரங்களில்‌ கள்ளுற்பத்தி செய்வதன்‌ மூலம்‌ பணம்‌ சம்பாதித்துக்‌ கொண்டு தான்‌ வருகிறார்‌. சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவர்களுக்கோ இன்னமும்‌ மதுபானம்‌ இல்லாவிட்டால்‌ ஒரு காரியமும்‌ செய்ய முடியாது. இவ்வளவும்‌ ஒருபுறமிருக்க, ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியாரே, சட்டசபைக்குப்‌ போவதைப்‌ பற்றிப்‌ பேசுகையில்‌ வெளியில்‌ சட்ட மறுப்பைச்‌ செய்து கள்ளை நிறுத்துவதென்றும்‌, காசிக்குப்‌ போக முடியாவிட்டால்‌ சட்ட சபைக்கும்‌ போய்‌ கள்ளைக்‌ குடிக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்வதற்கு அநுகூலமாயிருக்கிற சட்டசபையாகிய கள்ளுக்‌ கடைக்குப்‌ போவதாவென்று பேசியிருக்கிறார்‌. இவ்வார்த்தை சொன்னதற்காக, இவர்பேரில்‌ குற்றப்‌ பத்திரிகை படிப்பதற்கு ஒரு தீர்மானத்தை ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி கொண்டு 107 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வந்து ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியார்‌ சட்டசபையைக்‌ கள்ளுக்கடை எனச்‌ சொன்னது தப்பிதமென்றும்‌ அளவுக்கு மிஞ்சிக்‌ கண்டித்து காரியக்‌ கமிட்டி யில்‌ பேசியிருக்கிறார்‌. இதை ஸ்ரீமான்கள்‌ எம்‌.கே ஆச்சாரியாரும்‌, டி.ஆதி நாராயண செட்டியாரும்‌ ஆதரித்து வைது பேசினார்கள்‌. அது சமயம்‌ ஸ்ரீமான்‌ ஈவெ.இராமசாமி நாயக்கர்‌ எதிர்த்து (சட்டசபையைப்‌ பற்றி) நிர்மாணத்‌ திட்டங்களையும்‌, விடுதலையையும்‌ பொறுத்த வரையிலும்‌ ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியார்‌ சொன்னதுபோல்‌ சட்டசபைகள்‌ கள்ளுக்கடைகள்‌ தானென்றும்‌ பேசித்‌ தீர்மானத்தைத்‌ தோற்கடித்தார்‌. இப்படியெல்லாமிருக்க இப்பொழுது சட்டசபையில்‌ கள்ளை ஒழிப்ப தற்கு அநுகூலமிருக்கிறது; சென்ற வருடம்‌ கள்ளுக்கடையாயிருந்த சட்ட சபையானது இவ்வருஷம்‌ காசிக்குச்‌ சமானமாகி விட்டது. ஆதலால்‌ மேல்‌ கண்ட கள்ளு உற்பத்திக்காரரும்‌, கள்ளு விற்பனைக்காரரும்‌, கள்ளு குடிப்‌ பவர்களும்‌, கள்ளு குடிப்பவர்களினால்‌ ஜீவனம்‌ செய்பவர்களும்‌, சட்டசபை யால்‌ கள்ளை நிறுத்த முடியாதென்கிற தீர்மானமுள்ளவர்களுமான சுயராஜ்யக்‌ கட்சியாருக்கே வோட்‌ கொடுங்கள்‌ என்று உபதேசம்‌ செய்ய வந்து விட்டார்‌. இதையும்‌ பிராமணப்‌ பத்திரிகைகள்‌ கரைகட்டி விளம்பரம்‌ செய்கின்றன. இதில்‌ எவ்வளவு சதியாலோசனைகள்‌ இருக்கின்ற தென்பதையும்‌ பிராமண ரல்லாதாரை ஒழிப்பதற்கு என்ன வேண்டுமானாலும்‌ செய்யலாமென்று இத்தேசீய பிராமணர்களும்‌, அவர்கள்‌ பத்திரிகைகளும்‌ கங்கணங்‌ கட்டிக்‌ கொண்டு இருக்கின்றன வென்பதையும்‌ பொது மக்கள்‌ உணர்ந்து ஏமாந்து போகாமலிருக்கும்படி வேண்டிக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 07.02.1926. குடி அரசு - 1926 N 108 யேழப்‌ யோர்‌ நமது நாட்டில்‌ பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்‌ ஏற்பட்டிருக்கும்‌ பல பத்திரிகைகளின்‌ தலையெழுத்து உண்மையை எழுதி வீரப்போர்‌ நடத்த யோக்கியதையின்றி பொய்யை எழுதி பேடிப்‌ போர்‌ நடத்தும்படியாக ஏற்‌ பட்டுப்‌ போய்விட்டது. உதாரணமாக, வட ஆற்காடு சட்டசபை உப தேர்த லைப்பற்றி ஸ்ரீமான்‌ வெங்கிட்டரங்கம்‌ நாயுடுவுக்கு விரோதமாகவும்‌, ஸ்ரீமான்‌ பத்மநாப முதலியாருக்கு அநுகூலமாகவும்‌ நாம்‌ பிரசாரம்‌ செய்யப்‌ போவதா கவும்‌, அதற்குக்‌ காரணம்‌ “முன்னவர்‌ சுயராஜ்யக்‌ ககஷியாரென்றும்‌ பின்ன வர்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியாரென்றும்‌ சொல்லிக்‌ கொள்ளுவதுதானென்றும்‌” எழுதி யிருக்கின்றன. இப்படியே இன்னும்‌ அநேக பொய்யான விஷயங்களை எழுதியும்‌, மெய்யான விஷயங்களை மறைத்தும்‌ எழுதுவதை தமது தொழி லாகக்‌ கொண்டிருக்கின்றன. சட்டசபைத்‌ தத்துவத்தில்‌, ஸ்ரீமான்கள்‌ வெங்கிட்‌ டரங்கம்‌ நாயுடுவுக்கும்‌ பத்மநாப முதலியாருக்கும்‌ ஒரு வித்தியாசத்தையும்‌ கற்பிக்க இடமிருப்பதாக நாம்‌ கருதவில்லை. ஸ்ரீமான்‌ வெங்கிட்டரங்கம்‌ நாயுடு சட்டசபைக்குச்‌ செல்வதினால்‌ நமக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமென்றோ, ஸ்ரீமான்‌ பத்மநாப முதலியார்‌ சட்டசபைக்குச்‌ செல்லுவதில்‌ பெரிய நன்மை விளைந்து விடுமென்றோ நாம்‌ கருதவில்லை... இதுவரையிலும்‌ இதற்காக ஒருவருக்கநுகூலமாகவோ மற்றொருவருக்‌. குப்‌ பிரதிகூலம்‌ செய்யவோ நாம்‌ எண்ணவுமில்லை. அப்படி அநுகூலமாக வும்‌ பிரதிகூலமாகவும்‌ இவர்கள்‌ தேர்தலில்‌ பிரசாரம்‌ செய்ய வேண்டியது இதுசமயம்‌ அவசியமுமில்லை என்பதே நமது முடிவு.அவசியமென்று கருதி னால்‌ கட்சியையோ சட்டத்தையோ பழியையோ கருதி பயந்து கொண்டிருக்‌ கப்‌ போவதுமில்லை. ஸ்ரீமான்‌ நாயுடுவையும்‌ நமக்கு 6.7 வருஷங்களாகத்‌ தெரியும்‌. அவர்‌ எவ்வளவுதான்‌ பிராமணர்களோடு கட்டிப்புரண்டு திரிந்தா லும்‌, அவருடைய அந்தரங்கமானது பிராமணரல்லாதார்‌ விஷயத்தில்‌ அநு தாபமாகவேதானிருப்பதை அறிந்திருக்கிறோம்‌. இவ்வறிவுக்கு மாறுதல்‌ ஏற்படுகிற காலத்தில்‌ நமது கடமை என்னவென்பது நமக்கே தெரியும்‌. ஸ்ரீமான்‌ முதலியாரைப்‌ பற்றி நல்லவரென்றும்‌, பரோபகார உழைப்பில்‌ கொஞ்சக்‌ காலமாக ஈடுபட்டவரென்றும்‌ கேள்விப்பட்டதேயல்லாமல்‌ நேரில்‌ பார்த்ததே இல்லை. அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ முதலியாருக்கு விரோதமாயும்‌, ஸ்ரீமான்‌ நாயுடுவுக்கு அநுகூலமாகவும்‌ சமீபத்தில்‌ செய்யப்படுகிற தேர்தல்‌ 109 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிரசாரங்களிலும்‌, பிரசாரகர்கள்‌ ஸ்ரீமான்‌ முதலியாரைப்‌ பற்றி கண்ணிய மாகவே பேசி வருவதாகவும்‌ பத்திரிகைகளில்‌ பார்க்கிறோம்‌. ஆதலால்‌ இவ்விருவர்களில்‌ இதுசமயம்‌ உயர்வு தாழ்வு காண முடிய வில்லை. இப்படியிருக்க பிராமணப்‌ பத்திரிகைகளும்‌, பிராமண ஆதரவுபெற்ற பத்திரிகைகளும்‌ இம்மாதிரியான பொய்களைப்‌ பரப்பிவிடுவது பலனளிக்‌ காதென்பதையும்‌ இப்படிப்பட்ட காரியங்களினால்‌ அவைகளின்‌ யோக்கி யதை இன்னும்‌ அதிகமாக தாழ்த்தப்படுமென்பதையும்‌ குறிப்பிடுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 07.02.1926 குடி அரசு - 1926 N 10 திரு. முதலியார்‌ இதுகாறும்‌ திரை மறைவிலிருந்து ஒப்பாரி வைத்த திரு. வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள்‌ இப்பொழுது வெட்ட வெளிச்சத்தில்‌ வந்துவிட்டார்கள்‌. சென்னைக்‌ கடற்கரையில்‌ சமீபத்தில்‌ கூடிய ஒரு கூட்டத்‌ தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிதிதித்துவத்துக்கு எதிர்ப்பிரசாரம்‌ செய்யப்போவதாக விளம்பரம்‌ செய்துவிட்டார்‌. முதலியாரவர்களின்‌ இவ்வுறுதி நிலையை மிகப்பாராட்டுகின்றோம்‌. நெருக்கடியான சமயங்களில்‌ “வழ வழ” பாடுவதே திரு. முதலியாரவர்கள்‌ இயல்பு. அந்நிலை மாறி தன்‌ அபிப்பிராயத்தை முதலியாரவர்கள்‌ ஒரு வழிப்படுத்தியது போற்றத்தக்கதே. ஆனால்‌ இந்‌ நிலையைக்‌ காஞ்சி மகாநாட்டின்‌ போது கொண்டிருக்கலாகாதா? உண்மை யாகவே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தில்‌ முதலியாரவர்களுக்கு நம்பிக்கையில்லாதிருந்திருந்தால்‌, திரு நாயக்கரவர்களின்‌ தீர்மானத்தை மகாநாட்டில்‌ பிரேரேபனை செய்ய அனுமதி கொடுத்து, தன்‌ முழுபலத்தோடு அதை எதிர்த்திருக்கலாம்‌. ¢ வீரம்‌ வீரம்‌” என்னும்‌ மொழிகளை, தன்‌ அக்கிரா சனப்‌ பிரசங்கம்‌ முழுதும்‌ அடுக்கி வைத்த திரு.முதலியாரவர்களுக்கு அவ்‌ “வீரம்‌ இல்லாதுபோயிற்று! குறுக்குவழியிலிறங்கி தன்‌ குலத்துக்கு வினை தேடி, தமிழுலகத்தில்‌ தான்‌ பெற்றிருந்த மதிப்பையும்‌ ஹோமஞ்‌ செய்து விட்டார்கள்‌. இப்பொழுது முதலியாரவர்கள்கூடப்‌ பக்கமேளம்‌ போடும்‌ பார்ப்பனக்கூட்டத்தார்‌ எதிர்பார்த்தும்‌ இதுவே.டாக்டர்‌ நாயுடு, திரு.முதலி யார்‌ திரு நாயக்கர்‌ ஆகிய மூவருக்கும்‌ தமிழ்நாட்டில்‌ ஏற்பட்டிருக்கும்‌ மதிப்பைக்‌ குறைக்க அன்னோர்‌ வெகுநாளாக முயற்சி செய்து வருவதை தமிழுலகம்‌ அறியாதா? அவர்கள்‌ விரும்பியவண்ணமே திரு.முதலியார வர்கள்‌ காஞ்சியில்‌ பலியானார்கள்‌. பாக்கியிருவரையும்‌ படுகுழியில்‌ வீழ்த்த அவர்கள்‌ தருணம்‌ நோக்கியிருக்கிறார்கள்‌: திண்ணைப்‌ பிரசாரமும்‌ செய்‌ கிறார்கள்‌.அவ்விருவர்‌ விதியும்‌ எப்படியோ? ஈசனே அறிவன்‌; பிராமணரல்லாதார்‌ பலர்‌ நீங்கி நிற்கும்போது “ ஜஸ்டிஸ்‌” இயக்கம்‌ எவ்வாறு பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌ ஆகும்‌ என்கிறார்‌ நமது அண்ணா முதலியார்‌. தற்கால காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ சிறு தேருருட்டி விளையாடிய காலத்திலேயே காங்கிரஸ்‌ வீரர்களாய்‌ விளங்கிய திரு. விபின சந்திரபாலர்‌, சுரேந்திரநாத்‌ பார்னர்ஜி ஆகிய தாராளக்‌ கட்சியாரும்‌, திரு. கெல்கர்‌, ஜெயகர்‌, ஆகிய சுயேச்சைக்‌ கட்சியாரும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியாரும்‌ சேராத காங்கிரஸ்‌ எவ்வாறு“ நாஷணல்‌ காங்கிரஸ்‌, ஆகுமென்பதை முதலியாரவர்கள்‌ ஏனோ m பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சிந்திக்கவில்லை. ஸ்ரீமான்கள்‌. ஸ்ரீனிவாசய்யங்கார்‌, சத்தியமூர்த்தி , அரங்க சாமி ஐயங்கார்‌ மூவரிலும்‌ இந்தியா லயித்து விட்டதா ? ஸ்ரீனிவாசய்யங்கார்‌. கோஷ்டியாரும்‌ திரு. முதலியாரவர்கள்‌ போன்ற விபீஷ்ணர்களும்‌ சேர்ந்‌ திருப்பதினால்‌ மட்டும்‌ காங்கிரஸ்‌ நாஷணல்‌ காங்கிரஸ்‌ ஆய்விடும்‌ போலும்‌. குடி அரசு - கட்டுரை - 07.02.1926. குடி அரசு - 1926 N 112 சட்டசயை தேர்தல்‌ சுவைக்கப்‌ பண வசூனும்‌ நம்‌ நாட்முண்‌ தலை எழுத்தும்‌ வரப்போகும்‌ சட்டசபைக்குப்‌ பிராமணர்களும்‌ அவர்களுக்கடங்கின மற்ற வகுப்பாருமே சட்டசபையைக்‌ கைப்பற்றத்தகுந்த மாதிரிக்குப்‌ பிரசாரம்‌ செய்ய நிதி வசூல்‌ செய்ய வேண்டியதே காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ என்னும்‌ நம்‌ பிராமணத்‌ தலைவர்களுக்கு முக்கிய வேலையாய்ப்‌ போய்விட்டது. அதற்‌ காகச்‌ செய்யப்படும்‌ பல தந்திரங்களில்‌, மடாதிபதிகளை ஏய்த்துப்‌ பணம்‌ வாங்குவதும்‌ முக்கிய சூழ்ச்சிகளில்‌ ஒன்றாக இப்போது அமுலில்‌ இருக்‌ கிறதை வாசகர்கள்‌ அறிந்ததே. அதற்கு ஆதாரமாகவே ஸ்ரீமான்கள்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும்‌, சீனிவாசய்யங்காரும்‌ அடிக்கடி மடாதிபதி களைப்‌ போய்‌ பார்ப்பதும்‌ ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தியும்‌, சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரும்‌ சட்டசபைகளில்‌ பிரயோஜனமில்லாத தத்துவங்களைக்‌ கொண்டு தேவஸ்தான மசோதாவைத்‌ திருத்தவும்‌ மாற்றவும்‌ அடிக்கடி பிரேரேபனைகள்‌ கொண்டு வருவதும்‌, உபயோகமற்ற கேள்விகளைக்‌ கேட்பதுமான காரியங்களைச்‌ செய்தும்‌ மடாதிபதிகளையும்‌ மகந்துக்களை யும்‌ ஏமாற்றப்‌ பார்க்கிறதைக்‌ கவனித்தாலே உண்மை விளங்கும்‌. சட்டசபை யில்‌ பிராமணரல்லாதாருக்குள்ளாகவே, மந்திரி ககஷியார்‌ என்றும்‌ அவர்க ளுக்கு விரோதமாக பொறாமையின்‌ பேரிலோ அல்லது மந்திரிகளின்‌ நடத்தைக்‌ குறைவினாலோ பிரிந்திருக்கும்‌ எதிர்க்ககஷியாரும்‌ இத்தேவஸ்‌ தான விஷயம்‌ சட்டசபையில்‌ வரும்போது ஒற்றுமையாயிருந்து சட்டத்துக்கு அநுகூலமாய்‌ வோட்டு கொடுப்பதும்‌, பிராமணர்கள்‌ எல்லாம்‌ ஒற்றுமையா யிருந்து ஷி சட்டத்தை எப்படியாவது ஒழிப்பதற்கு அநுகூலமாய்‌ இருந்து வோட்டு கொடுப்பதும்‌ கவனிக்கிறவர்களுக்கு தேவஸ்தான சட்ட விஷயமான கிளர்ச்சி பிராமணர்‌ - பிராமணரல்லாதார்‌ என்கிற வகுப்பு வேற்றுமைக்‌ கிளர்ச்சியில்‌ சேர்ந்தது என்பது விளங்கும்‌. இப்படி இருக்க, பிராமணரல்லாத மடாதிபதிகளும்‌ கொஞ்சமும்‌ தங்கள்‌ மடத்தின்‌ சொத்துக்கள்‌ யாருடையது என்பதையும்‌, யாருக்காக தாங்கள்‌ இருக்கிறார்கள்‌ என்பதையும்‌ கவனிக்காமல்‌ தங்கள்‌ போகத்தையும்‌, போக்கியத்தையும்‌ பிரதானமாகக்‌ கருதிக்கொண்டு, அநாவசியமாய்‌ மடத்துச்‌ சொத்தை திருடி பிராமணர்களுக்குக்‌ கொடுத்து பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்‌ இச்சட்டத்தை ஒழிக்கப்‌ பார்க்கிறார்கள்‌. நமது நாட்டின்‌ 116. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தலையெழுத்துக்களில்‌ எதற்கென்றுதான்‌ நாம்‌ அழ முடியும்‌! கஷயரோகம்‌ போல்‌ நம்நாட்டைப்‌ பிடித்து நாளுக்கு நாள்‌ அறித்துக்‌ கொண்டுவரும்‌ அரசாட்சியின்‌ கீழ்‌ இருப்பதற்கழுவதா? அல்லது நமது நாட்டை அந்நிய ஆட்சிக்குக்‌ காட்டிக்‌ கொடுத்து நமக்குள்‌ இருந்து கொண்டே குடியைக்‌ கெடுத்து நம்மைத்‌ தீண்டாதாராக்கி வைத்திருக்கும்‌ பிராமணத்‌ தர்மத்திற்‌ கழுவதா? அல்லது நம்மவரிலேயே சிலர்‌ தமது சமூகத்தையே மறந்து தனது வாழ்வையும்‌, பெருமையையும்‌, போக போக்கியத்தையுமே பிரதானமாய்க்‌ கருதி நமக்குள்‌ இருந்து கொண்டே நம்மைப்‌ பிராமணருக்குக்‌ காட்டிக்‌ கொடுத்தும்‌, அவர்களுக்கு அடிமையாகச்‌ செய்வதுமான பிராமணரல்லாத மடாதிபதிகள்‌ என்றும்‌, தேசீய வாதிகள்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொண்டு வாழும்‌ கோடாலிக்‌ காம்புகளுக்கு அழுவதா? நம்‌ நாட்டின்‌ தலைவிதி யாரே அறிவார்‌! குடி அரசு - கட்டுரை - 14.02.1926 குடி அரசு - 1926 N 114. காங்கிரஸில்‌ இருக்க உரிமை உண்டா? சுயராஜ்யக்‌ கட்சியின்‌ கொள்கையை ஏற்றுக்‌ கொள்ளாதவர்களும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி, மிதவாத கட்சி, தேசீயக்‌ கட்சி ஆகியவைகளைச்‌ சேர்ந்தவர்‌ களும்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துபவர்களும்‌, சுயராஜ்யக்‌ கட்சி பிராமணக்‌ கட்சி என்று முடிவு செய்துக்‌ கொண்டிருக்கிறவர்களும்‌, பழய ஒத்துழையாமைத்‌ தத்துவத்திலேயே நம்பிக்கை இருக்கிறவர்களும்‌, சுயராஜ்யக்‌ கட்சி பிராமணரல்லாதாரை ஒடுக்க வந்த கட்சியென்று நினைத்து சுயராஜ்யக்‌ கட்சியை பஹிஷ்கரிக்கவோ அதை ஒழிக்கவோ பிரசாரம்‌ செய்ய வேண்டுமென்கிறவர்களும்‌, நிர்மாணத்‌ திட்டத்தில்‌ நம்பிக்கை இல்லாதவர்‌ களும்‌ காங்கிரஸில்‌ இருக்கலாமா? என்றும்‌ இவர்களில்‌ யாரையாவது காங்கிரஸை விட்டுப்போகச்‌ சொல்ல யாருக்காவது உரிமை உண்டா? என்றும்‌ இன்னும்‌ பலர்‌ பலவிதமாக நம்மை நேரிலும்‌, எழுத்து மூலமாகவும்‌ அடிக்கடி கேட்டு வருகிறார்கள்‌. இந்தியா நீதியும்‌ அமைதியுமான வழிகளில்‌ சுயராஜ்யம்‌ பெறவேண்டும்‌ என்கிற தத்துவத்தை ஒப்புக்கொள்ளுபவர்களான எல்லோரும்‌ காங்கிரஸிலிருக்க பாத்தியமுடைவர்கள்‌.அதின்‌ திட்டங்களில்‌ அவநம்பிக்கையும்‌ அபிப்பிராய பேதமும்‌, எதிர்ப்‌ பிரசாரம்‌ செய்ய வேண்டிய அவசியமும்‌ இருப்பதினாலேயே காங்கிரஸை விட்டுப்‌ போய்விட வேண்டும்‌ என்று யாரும்‌ நினைக்க வேண்டியதில்லை. உதாரணமாக, கயா காங்கிரஸ்‌ தீர்மானத்திற்கு விரோதமாய்‌ பிரசாரம்‌ செய்த ஸ்ரீமான்‌ தாஸ்‌ - நேரு கோஷ்டி யாரும்‌ தமிழ்நாட்டில்‌ டில்லி காக்கிநாடா காங்கிரசுக்கு விரோத மாய்ப்‌ பிரசாரம்‌ செய்த ஸ்ரீமான்கள்‌ சி. ராஜகோபாலாச்சாரியார்‌, ஈ.வெ. ராம சாமி நாயக்கர்‌, எஸ்‌. ராமநாதன்‌ முதலி யோரின்‌ அபிப்பிராயம்‌ கொண்ட கோஷ்டியாரும்‌ காங்கிரஸிலிருந்து கொண்டே தங்கள்‌ பிரசாரத்தை செய்து வந்திருக்கிறார்கள்‌. என்பதையும்‌, இனியும்‌ தங்களுக்கு இஷ்டமில்லாத விஷயங்களில்‌ செய்து கொண்டுமிருக்கிறார்கள்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 14.02.1926 118 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிராமணர்கள்‌ அகந்தையும்‌ சசண்ணை நகர யரிபாணை சபையும்‌ காங்கிரசின்‌ பெயரையும்‌, காந்தியடிகள்‌ பெயரையும்‌, ஜெயிலுக்குப்‌ போய்‌ கஷ்டப்பட்ட தேசபக்தர்களின்‌ பெயரையும்‌, ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்‌ கார்பணத்தையும்‌, சில பிராமணரல்லாத வயிற்றுப்‌ பிழைப்புத்‌ தலைவர்களின்‌ சமூகத்‌ துரோகத்தையும்‌, கஞ்சிக்கு வகையற்ற சில தொண்டர்களின்‌ காலித்‌ தனத்தையும்‌ ஆதாரமாய்‌ வைத்துக்‌ கொண்டு சென்னை நகர பரிபாலன சபை யாகிய கார்பொரேஷனுக்குப்‌ போன சுயராஜ்யக்‌ கட்சி மெம்பர்களில்‌ சில கனவான்கள்‌, கார்பொரேஷனையே குட்டிச்‌ சுவராக்குவதோடு இந்தியர்கள்‌. சுய ஆட்சிக்கு கொஞ்சமும்‌ அருகரல்லர்‌ - மானமுடையவரல்லர்‌- விடுதலை: அடையத் தகுதியற்றவர்‌ என்பதை வைரக்கல்லில்‌ பொன்‌ எழுத்தால்‌ எழுதப்‌ பாடுபட்டு வருகிறார்கள்‌. சுயராஜ்யக்‌ கட்சியார்‌ என்று சொல்லிக்‌ கொண்டு கார்பொரேஷனுக்குச்‌ சில பிராமணரல்லாத கனவான்கள்‌ போயிருந்த போதிலும்‌, அதற்குப்‌ பிராம ணர்கள்‌ பணமும்‌ பிராமணப்‌ பத்திரிகைகளின்‌ பிரசாரமுமேதான்‌ முக்கியமா யிருந்தபடியால்‌, இவர்களும்‌ அப்பிராமணர்கள்‌ தாளத்திற்குத்‌ தகுந்தபடி ஆடவேண்டியதாய்ப்‌ போயிற்று. அதன்‌ பலனாகவே கார்பொரேஷன்‌ கமிஷ னரான ஸ்ரீமான்‌ வெங்கிட்டநாராயண நாயுடு என்கிற பிராமணரல்லாத கார்பொரேஷன்‌ கமிஷனர்‌ ஒருவரை எப்படியாவது ஒழித்து அந்த ஸ்தானத்‌ தில்‌ ஒரு பிராமண ரையோ அல்லது தங்கள்‌ தாளத்திற்குத்‌ தகுந்தபடி ஆடும்‌ பிராமணரல்லாத ஒரு சமூகத்‌ துரோகியையோ கொண்டுவந்து வைக்கத்‌ தங்களால்‌ கூடுமான அக்கிரமங்களையெல்லாம்‌ செய்து வருகிறார்கள்‌. இதைப்பற்றி பிராமணப்‌ பத்திரிகைகளில்‌ வரும்‌ விஷயங்களைப்‌ பார்த்தாலே அதன்‌ சிறுமைக்குணம்‌ நன்றாய்‌ விளங்கும்‌. கார்பொரேஷனுக்கு மெம்பராய்‌ போயிருப்பவர்கள்‌ யோக்கியதையையும்‌, தாங்கள்‌ என்னென்ன விதமான நடவடிக்கைகளால்‌ இந்த ஸ்தானம்‌ பெற்றோம்‌ என்கிற விஷயத்தையும்‌ தங்கள்‌ நெஞ்சில்‌ கையை வைத்துப்‌ பார்ப்பார்களானால்‌ இவ்வித சிறுமைக்‌ குணத்திற்கு தாங்கள்‌ அருகர்கள்தான்‌ என்பதைத்‌ தவிர வேறொன்றும்‌ விளங்காது. ஸ்ரீமான்‌ வெங்கிட்ட நாராயணா சம்பளத்தின்மீது பொறாமைப்‌ பட்டு அவர்‌ சம்பளத்தைக்‌ குறைக்க வேண்டும்‌ என்று ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி பிராமணர்‌ சட்டசபைக்கு ஒரு தீர்மானம்‌ கொண்டு வந்து இருக்கிறார்‌. குடி அரசு - 1926 N 116. அல்லாமலும்‌, கார்பொரேஷன்‌ கமிஷனரை சர்க்கார்‌ நியமிக்கக்கூடாது, தாங்களே (தங்கள்‌ அடிமையை! நியமிக்க வேண்டும்‌ என்று ஒரு தீர்மானமும்‌ கொண்டு வந்திருக்கிறார்கள்‌. அல்லாமலும்‌, அற்ப விஷயங்களையெல்லாம்‌ வேண்டுமென்றே அதிகப்படுத்தி கார்பொரேஷன்‌ சபையை ஓடக்கால்‌ தெரு மாதிரி செய்கிறார்கள்‌. கமிஷனர்‌ வீட்டில்‌ ஒரு குழாய்‌ மாற்றி வைத்ததற்காகவும்‌, அவர்‌. வீட்டில்‌ இருந்த தண்ணீர்‌ தேக்கத்தை கார்பொரேஷன்‌ சிப்பந்திகளைக்‌ கொண்டு வெளியாக்கியதற்காகவும்‌, இந்தியர்களின்‌ யோக்கியதையை பாதிக்கும்படியாய்‌ ஆயிரக்கணக்கான கேள்விகளும்‌ பிராமணப்‌ பத்திரிகை களில்‌ “இந்தக்‌ கமிஷனர்‌ இனி உதவாது” என்கிற தலையங்கத்தின்‌ கீழ்‌ இழிவுப்‌ பிரசாரங்களும்‌ நடக்கிறது. இந்த உத்தியோகத்தில்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்ட நாராயணாவுக்கு முன்‌ இருந்த ஐரோப்பியர்‌, இந்தியர்‌ முதலிய கமிஷனர்கள்‌ காலத்தில்‌ இருந்த சம்பளமும்‌- நியமனமும்‌ முனிசிபல்‌ சிப்பந்திகள்‌ குடும்ப சகிதமாய்‌ கமிஷனர்கள்‌ வீட்டுக்குப்‌ போய்‌ வேலை செய்ததும்‌, அவர்கள்‌ இஷ்டம்‌ போல்‌ எல்லாம்‌ ஆடினதும்‌ இவர்களுக்கு கொஞ்சமும்‌ கவலையை உண்டு பண்ணவேயில்லை . ஆனால்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்ட நாராயணா பிராமணரல்லாத இந்துவாகிவிட்டதால்‌ பிராமணர்‌ களுக்குப்‌ பொறுக்கமுடியவில்லை. மற்றபடி பிராமண அதிகாரிகள்‌ ஒவ்வோ ரிடங்களில்‌ செய்யும்‌ கொடுமைகள்‌ கணக்கு வழக்கில்லை . உதாரணமாக, சென்ற ஒரு வருஷத்திற்குள்ளாக கவர்மெண்டு பிராமண அதிகாரிகளில்‌ சிலர்‌. ராமகிருஷ்ணா ஹோம்‌ நிதி என்னும்‌ பெயரால்‌, நாடகமாடிக்‌ கொண்டு ஆங்காங்குள்ள சர்க்கார்‌ சிப்பந்திகளைக்‌ கொண்டு 1000,5000, 10000 ரூபாய்‌ களுக்கு டிக்கட்‌ விற்றுக்‌ கொடுக்கும்படி செய்து, கிராம அதிகாரிகளை யும்‌, குடித்தனக்காரர்களையும்‌, வியாபாரிகளையும்‌ நெருக்கி டிக்கட்‌ 1- க்கு 10 ரூ. வீதம்‌ ஆள்‌ ஒன்றுக்கு 2,4-5.10 டிக்கட்டுகள்‌ வீதம்‌ கட்டாயப்படுத்தி அவர்கள்‌ தலையில்‌ கட்டி தெண்டம்‌ வசூல்‌ செய்வது போல்‌ பணம்‌ வசூல்‌ செய்தார்கள்‌- செய்கிறார்கள்‌-செய்யவும்‌ போகிறார்கள்‌. இதைப்‌ பற்றி கேட்ப தற்கு ஒரு பிராமணனையும்‌ காணோம்‌. ஒரு சுயராஜ்யக்‌ கட்சி மெம்பரையும்‌ காணோம்‌. ஏன்‌? நாடக அதிகாரி பிராமணர்‌ - வசூலிக்கும்‌ அதிகாரிகள்‌ பெரும்பாலும்‌ பிராமணர்கள்‌ - இந்தப்‌ பணத்தை அநுபவிப்பதும்‌ ராமகிருஷ்ணா மடம்‌ என்று சொல்லப்படும்‌ பிராமண ஆதிக்கமுள்ள பிராமண மடம்‌. இது நிற்க, கவர்னர்‌ முதலியவர்களுக்கும்‌ 1.0.5. உத்தியோகஸ்தர்களும்‌ ஆகிய வெள்ளைக்காரர்கள்‌ இதைவிட அதிகமாகச்‌ செய்வதை கேட்பதற்கும்‌ ஆளில்லை. ஏனென்றால்‌ பெரும்பாலும்‌ இந்த பிராமணர்களே இருந்து பல ஆபாசங்களை நடத்திக்‌ கொடுக்கிறார்கள்‌. இம்மாதிரி நாம்‌ எழுதுவதால்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்ட நாராயணாவோ மற்றும்‌ பல பிராமணரல்லாத அதிகாரி களோ பொதுச்‌ சொத்தையனுபவிக்க வேண்டும்‌. அதைப்‌ பிராமணர்கள்‌ 117. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 விட்டுவிடவேண்டும்‌ என்பது நமது அபிப்ராயமல்ல. குரோதத்தையும்‌, துவே ஷத்தையும்‌, பொறாமையையுமே முக்கியக்‌ காரணமாக வைத்துக்கொண்டு அற்ப விஷயங்களில்‌ பிரவேசித்து ஒரு மனிதன்‌ பிராமணரல்லாதாரராய்‌ இருப்பதால்‌ அவரைக்‌ கெடுக்க வேண்டும்‌ என்கிற குஷியின்‌ பேரில்‌ செய்யும்‌ அயோக்கியத்தனமான காரியங்களை நாம்‌ கண்டிக்காமல்‌ இருக்க முடியாது. அல்லாமலும்‌, நமது பிராமணர்களுக்குக்‌ கார்பொரேஷனில்‌ கொஞ்சம்‌ செல்வாக்கு ஏற்பட்டவுடன்‌ ஒரு பிராமணரல்லாத அதிகாரியை அதுவும்‌ லஞ்சம்‌ லாவணம்‌, பொய்‌ புரட்டு இல்லாத கண்டிப்புவாதியானவரும்‌ கெட்டிக்‌ காரரும்‌ என்று பிராமணர்களாலேயே சொல்லப்பட்டு வந்தவரான ஒரு முக்கியஸ்தரையே ஒழிக்கப்‌ பார்ப்பார்களானால்‌ , இவர்கள்‌ கைக்கு மந்திரி உத்தியோகமும்‌ சட்டம்‌ செய்யும்‌ அதிகாரமும்‌ வந்துவிட்டால்‌ கபடம்‌, சூது அறியாத பிராமணரல்லாத பாமர மக்களின்‌ தலையெழுத்து என்ன ஆகும்‌ என்பதைப்‌ பிராமணர்கள்‌ பின்னால்‌ கவிபாடிக்‌ கொண்டும்‌, அவர்களை தலைவராக்கிக்‌ கொண்டும்‌ பிழைக்க நினைக்கும்‌ பிராமணரல்லாத குள்ள நரிகளையும்‌ தங்கள்‌ சுயநலத்தை உத்தேசித்து பிராமணர்களுக்கு ஆக்கம்‌ தேடிக்கொடுத்து பதவி அடைய நினைக்கும்‌ பிராமணரல்லாத சுயகாரியப்‌ புலிகளையும்‌ யோசித்துப்‌ பார்க்கும்படி கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 14.02.1926 குடி அரசு - 1926 N 118 மகாத்மாவிண்‌ ஓய்ஷ மகாத்மா ஓய்வு எடுத்துக்‌ கொண்டார்‌ என்பது உலகுக்கே தெரியும்‌. ஆனால்‌, அவர்‌ ஓய்வெடுத்துக்‌ கொண்டாலும்‌ அவரின்‌ பொல்லாத வேளை என்பது அவரை ஓயவிடுவதில்லை. அவரது நண்பர்கள்‌ என்போர்கள்‌ அவரை மறுபடியும்‌ வழுக்கலில்‌ சறுக்கி விட்டுக்‌ கொண்டே வருகிறார்கள்‌. சட்டசபையில்‌ நம்பிக்கையில்லாததால்‌ சுயராஜ்யக்‌ கட்சியைத்‌ தான்‌ ஒப்புக்‌ கொள்ளமுடியாது என்று சொல்லி ஓய்வெடுத்துக்‌ கொண்டவரை மறுபடி மறுபடியும்‌ தொந்தரவு செய்து அவர்‌ காலைப்பிடித்து சாணியை மிதிக்க வைக்கிறார்கள்‌. இருந்தாலும்‌ மகாத்மா தடியும்‌ முறியாமல்‌ பாம்பும்‌ சாகாமல்‌ அடிக்கிறார்‌. அதை விளம்பர சவுகரியக்காரர்‌ தங்கள்‌ சவுகரியத்திற்குத்‌ தக்கபடிமாற்றி விளம்பரப்படுத்தி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்‌. மகாத்மா இவ்வாரம்‌ “யங்‌ இந்தியாவில்‌” சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மதுபானத்தை விலக்கு வதற்கு முயற்சி செய்வதைத்‌ தங்களுடைய வேலைத்திட்டத்தில்‌ சேர்த்துக்‌ கொண்டது பற்றி ஏழைகளின்‌ நண்பர்கள்‌ பாராட்ட வேண்டும்‌ என்றும்‌, குடியினால்‌ கெடுதி ஏழைகளுக்குத்தான்‌ அதிகமென்றும்‌, ஆனால்‌ இதை சுயராஜ்யக்‌ கட்சியாரே செய்யவேண்டு மென்பதில்லை; இதர கட்சியாரும்‌ செய்ய வேண்டியது என்றும்‌ எழுதிவிட்டு ஸ்ரீமான்‌ சிராஜகோபாலாச்சாரியார்‌. சாமர்த்தியமாய்‌ மதுவிலக்கைப்‌ பற்றி எழுதியிருக்கிறார்‌ என்றும்‌, மதுவிலக்கு விஷயம்‌ ஜனங்களுக்கு ராஜீய விஷயத்தை உண்டுபண்ண ஒரு வழி என்றும்‌ எழுதியிருக்கிறார்‌. இவ்வளவும்‌ மற்றொருவருடைய கட்டாயத்திற்காக எழுதப்பட்டதாகவே தோன்றுகிறதேயல்லாமல்‌, தானாக எழுதினதாக அதில்‌ ஒரு வரிகூடத்‌ தென்படவில்லை. அப்படி இருக்குமானால்‌ , இம்மாதிரி அவர்‌ சொல்லுகிறார்‌; இவர்‌ செய்கிறார்‌; அதற்குதவும்‌; இதற்குதவும்‌ என்கிற வழ வழ எழுத்தே எழுதியிருக்கமாட்டார்‌. அல்லாமலும்‌, மதுபான விலக்கை: சட்டசபையின்‌ மூலம்‌ நிறுத்தி விடலாம்‌ என்கிற எண்ணமாவது மதுவிலக்‌ குக்கு சட்டசபையில்‌ உபயோகப்படுத்திக்கொள்ளலாம்‌ என்கிற எண்ண மாவது அதனிடத்தில்‌ தொனிக்காதபடி ஜாக்கிரதையாகவே எழுதியிருக்‌ கிறார்‌. இவைகளில்‌ மகாத்மாவுக்கு நம்பிக்கையிருக்குமானால்‌, அவர்‌ தன்‌ பழைய கதையை எழுதப்‌ புறப்படுவாரா? மனிதன்‌ ஓய்ந்து போய்‌ மேலால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாத போதுதான்‌ உட்கார்ந்து பழைய கதை பேசுவது மற்றும்‌ லார்ட்‌ மார்லி போன்ற பெரிய ராஜீய தந்திரிகள்‌ எல்லாம்‌ தாங்கள்‌ ஓய்ந்து போன பிறகுதான்‌ தங்கள்‌ தங்கள்‌ பழைய கதையை எழுத ஆரம்பித்‌ தார்கள்‌. ஆதலால்‌, நமது மகாத்மா அவர்கள்‌, தான்‌ செய்ய வேண்டியது 119 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 செய்தாய்விட்டது என்றும்‌, இனி இவர்களிடத்தில்‌ மேலாக ஒன்றும்‌ செய்ய முடியாது என்றும்‌ தீர்மானித்துக்‌ கொண்டு தான்‌ ஓய்வெடுத்ததாகச்‌ சொல்லி தன்‌ பழைய கதையை எழுதுகிறேன்‌ என்று உட்கார்ந்து விட்டார்‌. ஆனாலும்‌, நமது நாட்டு பிராமணர்கள்‌ இந்த நல்ல பேருடன்‌ ஓய்வெ டுக்க விடக்கூடாது; விட்டால்‌ அவர்‌ காலத்திற்குப்‌ பிறகு அவருக்குப்‌ பெருமை நிலைத்து விடும்‌; ஆதலால்‌ அவர்‌ இருக்கும்‌ போதே அவர்‌ பெருமையையும்‌ உறுதியான எண்ணத்தையும்‌ எப்படியாவது ஒழித்துவிட வேண்டும்‌; ஒரு பிராமணரல்லாத பெரியார்‌ நம்‌ நாட்டில்‌ பூஜிக்கத்தகுந்தவர்‌, புகழத்‌ தகுந்தவர்‌ என்று இருக்கக்கூடாது என்கிற கெட்ட எண்ணம்‌ வைத்து, மகாத்மாவுக்கு இவர்கள்‌ செய்த நன்றிக்கு கூலி வாங்குவது போல்‌, நினைத்த படியெல்லாம்‌ அவரிடம்‌ வேலை வாங்கி அவருடைய பரிசுத்த தன்மையை கெடுக்கப்‌ பார்க்கிறார்கள்‌. இப்படியெல்லாம்‌ செய்வதாலும்‌ கடைசியாய்‌ இந்தியாவில்‌ கஷ்டப்படும்‌ ஏழை மக்களான பிராமணரல்லாதார்‌ இதை நம்பி ஏமாறுவதாலும்‌, அவர்கள்‌ தலையில்தான்‌ போய்‌ விழுகிறது! நமக்குப்‌ புத்தி யில்லாவிட்டால்‌ யார்‌ என்ன செய்வார்கள்‌? குடி அரசு - கட்டுரை - 14.02.1926 குடி அரசு - 1926 N 120 “தருமத்தின்‌ மேல்‌ தருமம்‌” கோவை ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமண அய்யங்கார்‌ மகாத்மா காந்திக்கு பணமனுப்பியதாகவும்‌, மகாத்மா பெற்றுக்‌ கொண்டு வந்தனமனுப்‌ பியதாகவும்‌ பல பத்திரிகைகளில்‌ வெளியாயிருந்தும்‌, பொது ஜனங்கள்‌ அது ஒரு பெரிய துகையாய்‌ அதாவது நாலு ஐந்து ஆறு ஸ்தானங்கள்‌ கொண்ட தாயிருக்கலாம்‌ என்று நினைத்ததும்‌ ஞாபகமிருக்கலாம்‌. ஆனால்‌, இப்போது சரியான இடத்திலிருந்து வந்துள்ள தகவல்படி அத்தொகை மிகச்சிறிய தொகையென்றும்‌ மூன்று ஸ்தானங்கள்‌ கொண்டதுதான்‌ என்றும்‌ தெரிய வருகிறது. ஆயிரக்கணக்காய்‌ கொடுத்த கனவான்களின்‌ பெயரெல்லாம்‌ மூடிவைக்கப்பட்டு நூற்றுக்கணக்காய்‌ கொடுத்த கனவான்கள்‌ பெயர்‌ சந்து பொந்துகளிலெல்லாம்‌ அடிபடும்படியாயிருப்பதும்‌, அதுவும்‌ உண்மைக்கு விரோதமாய்‌ ஜனங்கள்‌ நினைத்து ஏமாறும்படி இருப்பதும்‌, பிராமணப்‌ பத்திரிகைகளின்‌ விளம்பரமும்‌, எலெக்ஷன்‌ தந்திரமும்தானே அல்லாமல்‌ வேறு என்னவென்று சொல்லுவது. இதுபோலவே ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமண ஐயங்காரின்‌ மற்றொரு தர்மம்‌, அதாவது 2 லக்ஷ ரூபாய்‌ தர்மம்‌; அதற்குக்‌ காலும்‌ இல்லை தலையும்‌ இல்லை. ஆனால்‌, அத்தர்மத்தை துவக்க ஸ்ரீமதி சரோஜினி வருகிறார்‌; ஸ்ரீமான்‌ நேரு வருகிறார்‌ என்று அசோசியேட்‌ பிரஸ்‌ முதல்‌ அடிபடுகிறது. எலெக்ஷன்‌ தீர்ந்தவுடன்‌ இந்த சப்தங்கள்‌ அடங்கிப்போகும்‌. எலெக்‌ஷன்‌ வேஷம்‌ போட்டுக்கொண்டால்‌ அதற்கு தகுந்தபடிஆடித்தானேஆகவேண்‌ டும்‌. ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியாரே ஆடும்போது ஐயோ பாவம்‌! ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரைப்‌ பற்றி சொல்லவும்‌ வேண்டுமா? இவர்கள்‌ பேரில்‌ குற்றம்‌ சொல்லுவதில்‌ பயனென்ன? இவ்விடங்களுக்கு நம்‌ ஆள்களே திரைபிடித்து திரியவும்‌, இதை நம்பி ஏமாறவும்‌ தயாராயிருக்கும்‌ போது அவர்கள்‌ இங்ஙனம்‌ செய்யாமல்‌ வேறு என்ன செய்யக்‌ கூடும்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 14.02.1926 121 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 மதிகமோச விளக்கம்‌ ஸ்ரீமான்‌. தூசிராஜகோபால பூபதியவர்களால்‌ இயற்றியதும்‌, சென்னை, பெரம்பூர்‌ பாரக்ஸ்‌, செல்வபதி செட்டிகம்பெனியாரால்‌ அச்சிடப்‌ பட்டதுமான “மதிமோச விளக்கம்‌” என்னும்‌ புத்தகம்‌ நமது பார்வைக்கு வந்தது. அப்புத்தகத்தில்‌ பொது ஜனங்களை ஏமாற்றிப்‌ பிழைக்கக்கூடிய வேஷக்காரர்களும்‌, தந்திரக்காரர்களும்‌, பொய்யர்களும்‌, பித்தலாட்டக்காரர்‌. களும்‌ எப்படி தங்களுடைய தந்திரம்‌, புரட்டு, பொய்‌, பித்தலாட்டம்‌ முதலிய வைகளை எப்படி ஜனங்களிடம்‌ உபயோகப்படுத்தி வஞ்சிக்கிறார்கள்‌ என்ப தைப்‌ பாமர ஜனங்களும்‌ சுலபத்தில்‌ அறியும்படியாக சுமார்‌ 130 அத்தி யாயங்களாகப்‌ பிரித்து, அவற்றில்‌ 130 விதத்‌ தந்திரங்களை உதாரணமாக எடுத்துக்காட்டி, பெரிய ஸைசில்‌ 225 பக்கங்களாகவும்‌, டெ புரட்டுகளுக்கேற்ற பல சித்திரங்களையும்‌ கொண்டு எளிய நடையில்‌ தெளிவாய்ப்‌ பிரசுரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதை வாங்கிப்‌ படித்தால்‌, ஒவ்வொருவரும்‌ உலகத்திலுள்ள சகல ஏமாற்றங்களையும்‌ சுலபமாய்‌ அறியலாம்‌. இப்புத்தகத்‌ தின்‌ விலை புத்தகத்தின்‌ அளவுக்கும்‌ விஷயத்திற்கும்‌ மிகக்‌ குறைந்ததென்று சொல்லத்தகுந்த ஒரு ரூபாய்தான்‌. ஆகையால்‌, ஒவ்வொருவரும்‌ இப்புத்த கத்தை வாங்கி வாசித்து புத்திசாலிகளாக வேண்டுமாய்‌ விரும்புகிறோம்‌. குடி அரசு - நூல்‌ மதிப்புரை - 14.02.1926 குடி அரசு - 1926 N 122 குறன நல்லாண்மை யென்பது ஒருவருக்குத்‌ தான்‌ பிறந்த இல்‌ ஆண்மை ஆக்கிக்கொளல்‌. நாயனார்‌ அவர்கள்‌ குறளில்‌,நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத்‌ தான்‌ பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல்‌ என உரைத்திருக்கின்றதையும்‌, அதன்‌ கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப்படுவது தன்‌ குடியை உயர்த்திக்‌ கொள்வது என்பதையும்‌ அனைவரும்‌ உணர்ந்திருப்பார்கள்‌. ஆனால்‌, நமதுநாட்டில்‌ ஆண்மைக்காகப்பாடுபடுகின்றோமென்று சொல்லிக்‌ கொள்ளுகிறவர்கள்‌ நல்லாண்மை ஏற்பட வேண்டுமானால்‌ வகுப்பு நலனையும்‌ குல நலனையும்‌ மறந்துவிட வேண்டும்‌; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும்‌ என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச்‌ சொல்லி, பாமர ஜனங்களாகிய தம்‌ குலத்தாருக்கே துரோகம்‌ செய்து, அவர்‌. களைக்‌ காட்டிக்‌ கொடுத்து, அந்நிய குலத்தாருக்கு ஒற்றர்களாகி, அவர்‌ பின்‌ னால்‌ திரிந்து வயிறு வளர்ப்பதையும்‌, தத்தமக்கு ஆக்கந்தேடிக்‌ கொள்ளு வதையும்‌ நாம்‌ பார்க்கும்‌ போது நமது குலம்‌ எவ்வளவு இழிவான நிலைமை யில்‌ இருக்கிறது என்பதும்‌ விளங்கும்‌. தற்கால ராஜீய உலகத்தில்‌ எவனாவது ஒருவன்‌ தன்‌ வகுப்பு முன்னேற்‌ த்தைப்‌ பற்றிப்‌ பேசுவதும்‌, மற்றும்‌ தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப்‌ பற்றிப்‌ பேசுவதும்‌ தேசத்‌ துரோகமெனவும்‌, ஆண்மைத்‌ துரோகமெனவும்‌ மதிக்கப்‌ பட்டுப்‌ போகிறது. இந்நிலையும்‌ நமது நாட்டின்‌ பிற்பட்ட வகுப்பாருடைய வும்‌, தாழ்த்தப்பட்ட வகுப்பாருடையவும்‌ ஈனஸ்திதியை விளக்குவதோடு, முற்பட்ட வகுப்பாருடையவும்‌ உயர்ந்த வகுப்பாருடையவும்‌ ஆதிக்கத்தை யும்‌ எடுத்துக்‌ காட்டுகிறது. தமிழ்நாட்டில்‌ நல்லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள்‌ மிகுந்திருந்த போதிலும்‌ அவைகள்‌ முற்பட்ட வகுப்பாருக்கும்‌, உயர்ந்த வகுப்பாருக்கும்‌ பயந்து கொண்டு, வகுப்புநலனை நாடுவதும்‌, இல்‌ லாண்மை யாக்கிக்‌ கொள்ளுவதும்‌ நல்லாண்மை ஆகாதென்றும்‌ சொல்லி தங்கள்‌ பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில்‌ ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும்‌ தங்கள்‌ தங்கள்‌ ஆண்மைகளை அடையவும்‌, நாட்டு நலன்‌ களில்‌ சமஉரிமை அடையவும்‌ மார்க்கமில்லாதிருக்கும்போது தேச உரிமை யும்‌, நாட்டு உரிமையும்‌ யாருக்கு? வகுப்புரிமை பெற்றால்‌ வகுப்புச்‌ சச்சரவு 123 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 களை உண்டாக்கும்‌ எனச்‌ சொல்லிக்‌ கொண்டு பல வகுப்புரிமைகளையும்‌ நாசமாக்கி, ஒரு வகுப்பார்‌ சகல உரிமைகளையும்‌ அடைந்து முன்‌ நிற்பதை மற்ற வகுப்பார்‌ பார்த்துக்‌ கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும்‌ என்று சொல்லுவதில்‌ எவ்வளவு யோக்கியமிருக்கும்‌? நமது நாட்டில்‌ பல வகுப்புகளிருந்த போதிலும்‌ ஒவ்வொரு வகுப்பையும்‌ கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும்‌. ஆக்கம்‌ பல வகுப்புகளுக்குள்‌ சரிவரப்‌ போய்ச்‌ சேர மார்க்கமிருக்கிறதா? என்பதைக்‌ கவனித்து வேலை செய்தால்‌ அது தேசத்தையே முன்னுக்குக்‌ கொண்டு வந்ததாகும்‌. அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம்‌ கூட்டிக்கொண்டு, அவர்கள்‌ மெச்சும்படி அவர்கள்‌ பின்னாலும்‌ திரிந்து கொண்டு, நாட்டுநலம்‌, நாட்டுநலம்‌ என்று சொல்லிக்‌ கொண்டும்‌, வகுப்பு நலத்தைத்‌ தேடினால்‌ நாடு கெட்டுப்போகும்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொண்டு திரிந்தால்‌ ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்‌? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின்‌ க்ஷேமேத்தையும்‌ பொறுத்ததா? ஒரு வகுப்பாரின்‌ க்ஷமேத்தை மாத்திரம்‌ பொறுத்ததா? உண்மை நாட்டுநலம்‌ தேடுவோர்‌ தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும்‌, பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும்‌ தேடுவதைத்தான்‌ நாட்டுநலமென்று நினைப்பார்கள்‌. நாடு என்‌ பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம்‌ ஏற்பட்டதல்ல. “வகுப்பு நலன்‌ தேடுவது என்றால்‌ நமது நாடு பல வகுப்புகளை: உடைத்தாயிருக்கிறது. ஆதலால்‌ பல வகுப்பாருடைய நலனையும்‌ தேடுவ தாய்‌ ஏற்படும்‌ ;, அப்போது அது முடியாத காரியமாகிவிடும்‌; ஆதலால்‌ நாட்டு. நலம்‌, நாட்டுநலம்‌ என்று பொதுவாய்ச்‌ சொல்லிக்‌ கொண்டிருப்பதுதான்‌ அநுகூலமானது” என்று சிலர்‌ சொல்லுகிறார்கள்‌. நமது நாடு பல வகுப்பாரைக்‌ கொண்டதாகவே எந்தக்‌ காரணத்தினாலோ ஏற்பட்டுப்‌ போய்விட்டது. பல வகுப்பாருக்கும்‌ நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியது தான்‌ நாட்டின்‌ நலன்‌ தேடுவோரின்‌ கடமை. நாட்டுநலன்‌ தேடுவோரின்‌ ஒவ்வொரு திட்டமும்‌ சகல வகுப்பாரின்‌ நம்பிக்கைக்கும்‌ ஏற்றதாய்த்தான்‌ இருக்க வேண்டும்‌ தற்போது நமது நாட்டில்‌ வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில்‌ வகுப்புரிமைக்கு ஆவலாயும்‌, ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும்‌ இருப்பது மூன்றே வகுப்புத்தான்‌. அவை பிராமணர்‌-பிராமணரல்லாத இந்துக்கள்‌ -பஞ்சமர்‌ என்று சொல்லக்‌ கூடிய மூன்று வகுப்பார்தான்‌.இதை எல்லோருமே சர்க்கார்‌ உள்பட - நாட்டு உரிமை தேடுவோர்‌ உள்பட - எல்லோரும்‌ ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர்‌-தமிழர்‌-கர்நாடகர்‌-கேரளர்‌ என்கிற பிரிவைச்‌ சொல்லி ஜனங்களை ஏய்க்க வேண்டியதில்லை . இவற்றைத்‌ தனித்தனியாகவே பிரிக்கவேண்டு. மென்று காங்கிரஸ்‌ ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும்‌ அதுபோலவே பிரித்தாகிவிட்டது.ஆதலால்‌ அதைப்‌ பற்றிக்‌ கவலையில்லை. எனவே மேற்‌ சொன்ன மூன்று வகுப்பார்தான்‌ ஒருவருக்கொருவர்‌ அவநம்பிக்கையுடனி ருக்கிறார்கள்‌. “இவர்களுக்கு உரிமை வழங்கிவிட்டால்‌, இவர்களுக்குள்ளா குடி அரசு - 1926 N 124. கவே பல வகுப்புகள்‌ கிளம்பும்‌” என்று சிலர்‌ சொல்லி ஜனங்கள்‌ புத்தியைக்‌ கலைக்கக்கூடும்‌. அப்படியிருந்தாலும்‌, சகல வகுப்பாரின்‌ நலனையும்‌ கவனிக்கத்தகுந்த திட்டம்‌ போடுவதற்கு முடியாதென்று பயப்பட வேண்டிய தில்லை. வகுப்புகளுக்குத்‌ தகுந்தபடி உத்தியோகங்களும்‌ ஸ்தானங்களும்‌ அமைக்கவும்‌ சவுகரியமிருக்கிறது. 3 '/, கோடி ஜனங்கள்‌ உள்ள இங்கிலாந்து பார்லிமெண்டில்‌ 700 மெம்பர்கள்‌ இருந்து ராஜீய பாரம்‌ செய்கிறார்கள்‌. ஆதலினால்‌ நமது நாட்டிலும்‌ சகல வகுப்பாரையும்‌ ராஜீய பாரத்தில்‌ சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல்‌ வகுப்புப்‌ படியும்‌, 5000,6000 ரூபாய்‌ சம்பளமும்‌ கொடுக்காமல்‌ 3-வது வகுப்புப்‌ படிச்‌ செலவும்‌ 400, 300 சம்பளமும்‌ கொடுத்தால்‌ எல்லாம்‌ சரிக்கட்டிப்‌ போகும்‌. அப்போது அதிகப்‌ போட்டி இருக்காது. ஆதலால்‌ வகுப்புரிமையைப்‌ பற்றி பயப்பட வேண்டிய தில்லை. அல்லாமலும்‌, நமது நாட்டில்‌ அதிகமான பிரிவினைகள்‌ இருக்கிற தாக நினைத்துக்‌ கொள்ளுகின்றோமேயல்லாமல்‌, வாஸ்தவத்தில்‌ அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர்களும்‌ தாங்கள்‌ ஒரு வகுப்பென்றும்‌, தங்களைத்‌ தவிர மற்றவர்களில்‌ சூத்திரர்‌ - பஞ்சமர்‌ என இரண்டு வகுப்புகள்‌ தான்‌ இருப்பதாக ஒப்புக்‌ கொள்ளுகிறார்கள்‌. பிராமணரல்லாதாரும்‌ மேற்‌ சொன்ன பிராமணரல்லாதார்‌ எல்லாம்‌ ஒரு வகுப்பென்றும்‌, தங்களுக்குக்‌ கீழ்‌ பஞ்சமர்‌ என்று ஒரு வகுப்பும்‌ இருப்பதாகத்தான்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறார்கள்‌. பஞ்சமர்கள்‌, தாங்கள்‌ ஒரு வகுப்பென்றும்‌, மற்றவர்கள்‌ தங்களுக்கு மேற்‌ பட்ட வகுப்பென்றும்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறார்கள்‌. இம்மூன்று வகுப்பாரும்‌ தங்களில்‌ ஒருவருக்கொருவர்‌ வித்தியாசமிருப்பதாகக்‌ கற்பித்துக்‌ கொள்ளுவ தால்‌, இம்‌ மூவருக்கும்தான்‌ ஒருவருக்கொருவர்‌ நம்பிக்கையுண்டாகும்படி தக்க உரிமைகள்‌ ஏற்பட வேண்டியது மிகவும்‌ அவசியமானதாகும்‌. இம்‌ மூவரும்‌ தங்களுக்கும்‌ ஒருவருக்கொருவர்‌ உயர்வு-தாழ்வு இல்லை; எல்லோரும்‌ சமம்தான்‌; மனித உரிமையை அடைவதில்‌ நாம்‌ ஒருவருக்‌ கொருவர்‌ உயர்ந்தவர்‌ தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில்‌ வகுப்புரிமையைப்‌ பற்றிய கவலையே வேண்டியதுமில்லை. வகுப்பின்‌ பேரால்‌ உரிமையும்‌ கேட்க அவசியம்‌ ஏற்படாது. அப்படிக்கில்லாமல்‌ பல வகுப்பாரும்‌ சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச்‌ சம்பாதித்தால்‌, அதை ஒரு வகுப்பாரே அநுபவிப்பதற்கு அநுகூலமாகவும்‌, மற்ற வகுப்பார்கள்‌ சூத்திரர்கள்‌ என்றும்‌, பிற்பட்டவரென்றும்‌, தீண்டாதார்கள்‌ என்றும்‌, தெருவில்‌ நடக்கவும்‌-கண்ணில்‌ தென்படவும்‌ அருகர்களல்லவென்றும்‌, ஒரு வகுப்பார்‌. ஒரு வகுப்பாரால்‌ கருதப்படுகின்ற போது, வகுப்புரிமையைக்‌ கவனிக்காமல்‌ நாட்டுரிமையைக்‌ கவனிக்க வேண்டுமென்று சொல்லுவது நல்லாண்மை யல்லாததும்‌,அர்த்தமில்லாததும்‌,பித்தலாட்ட உரிமையாகவுமே தான்‌ முடியும்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 14.02.1926. 125 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஓட்டர்களை ஏமாற்றுதல்‌ ம்ரீமாண்‌ சி. இராககோபாலாச்சாரியார்‌ முதலிய பிராமணர்கனிண்‌ தந்திரம்‌ சென்ற சில காலமாக பிராமணரல்லாதார்‌ பெரும்பாலும்‌ சட்ட சபைகளிலும்‌, தாலூகா , ஜில்லா போர்டு, முனிசிபாலிடி முதலிய ஸ்தல ஸ்தாப னங்களிலும்‌ மெஜாரிட்டியாராக ஏற்பட்டு, பிராமணரல்லாதாரின்‌ முன்னேற்‌ றத்தைக்‌ கவனித்துக்‌ கொண்டு வருவதில்‌ தென்னாட்டுப்‌ பிராமணர்கள்‌ மனம்‌: பொறாதவராகி பொறாமையுங்‌ கெட்ட எண்ணமுங்‌ கொண்டு, எப்படியாவது பிராமணரல்லாதாரைச்‌ சட்டசபைகளிலிருந்தும்‌, ஸ்தல ஸ்தாபனங்களிலி ருந்தும்‌ விரட்டியடித்து, முன்போலவே தங்கள்‌ ஆதிக்கத்தைப்‌ பலப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்கிற எண்ணத்தின்‌ பேரில்‌ சகல பிரயத்தனங்களையும்‌ செய்து வருகிறார்கள்‌. பிராமணரல்லாதாரில்‌ சில ராஜீயவாதிகளென்போர்‌ இவற்றை நன்றாய்‌ அறிந்திருந்தும்‌, தங்கள்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்கும்‌, வாழ்க்கை நலனுக்கும்‌, கீர்த்திக்கும்‌ ஆசைப்பட்டுக்‌ கொண்டு பிராமணர்களின்‌ வாலைப்‌ பிடித்துக்‌ கொண்டு திரிவதோடல்லாமல்‌, பிராமணரல்லாத சமூகத்தாருக்கே கேடு சூழும்படி வாழ்ந்து வருகிறார்கள்‌. அல்லாமலும்‌, பிராமணரல்லாத தேசீயப்‌ பத்திரிகைகள்‌ என்று சொல்லப்படும்‌ பல பத்திரிகைகளும்‌ தங்களுக்கென ஒரு கொள்கையில்லாமலும்‌, மனிதத்‌ தன்மையும்‌, ஆண்மைத்‌ தனமும்‌ இல்லாமலும்‌ பத்திரிகை நடத்துவதும்‌, பணம்‌ சம்பாதிப்பதும்தான்‌ மோக்ஷ சாதனமெனக்‌ கருதிக்கொண்டு, சமயத்திற்குத்‌ தகுந்தபடி நடந்து கொண்டு தங்கள்‌ சமூக முன்னேற்றத்தைப்‌ பாழாக்கிக்‌ கொண்டு வருகின்றன. அன்றியும்‌, பிராமணரல்லாதாரிலேயே சில படித்தவர்களென்போரும்‌ பிரபுக்‌ களென்போரும்‌, தங்கள்‌ தேசத்தையும்‌ சமூகத்தையும்‌, மனச்சாகஷியையும்‌ விற்று விட்டு எப்படி நடந்து கொண்டால்‌ சட்டசபைக்குப்‌ போகலாம்‌; பதவி கள்‌ பெறலாம்‌; உத்தியோகம்‌ சம்பாதிக்கலாம்‌ என்கிற கருத்துக்‌ கொண்டவர்‌. களாகி அவர்களும்‌ சமயம்‌ போல்‌ நடந்து வருகிறார்கள்‌. ஆகிய மேற்கண்ட வர்களெல்லாம்‌ இம்மாதிரி தங்கள்‌ சுயநலத்தை மாத்திரம்‌ கவனித்து நடப்ப தால்‌ பிராமணாதிக்கத்தை நிலை நிறுத்தப்‌ பாடுபட்டு வரும்‌ பிராமணர்களுக்கு குடி அரசு - 1926 N 126 மிகவும்‌ அநுகூலம்‌ ஏற்பட்டு, அவர்கள்‌ வஞ்சகம்‌ சுலபத்தில்‌ ஈடேறும்படி யாயிருந்து வருகிறது. இம்மாதிரியான காரியங்களால்‌ பொது ஜனங்களும்‌ இவர்கள்‌ வஞ்சகத்தை அறிய முடியாமற்போய்‌ விடுகிறது. இதனால்‌ பிராமணர்களுக்கும்‌ பிராமணரல்லாதாரை என்ன வேண்டுமானாலும்‌ சூழ்ச்சி கள்‌ செய்யலாம்‌; இதை வெளியாக்குவதற்கு மார்க்கமில்லாமல்‌ பிராமண ரல்லாத தலைவர்களென்‌ போரையும்‌, பத்திராசிரிய்களென்போரையும்‌ திசைக்‌ கட்டுக்கட்டி, அடக்கி, சுவாதீனப்படுத்தி வைத்துக்‌ கொண்டிருக்கி றோம்‌ என்கிற அகம்பாவத்தின்‌ பேரில்‌, அண்டப்‌ புரட்டுகளும்‌, ஆகாசப்‌ புரட்டுகளும்‌ புரட்டி வருகிறார்கள்‌. சென்ற சட்டசபைத்‌ தேர்தல்களில்‌ முட்டுக்கட்டைபோடுவதற்காகவும்‌, ஒத்துழையாமை செய்வதற்காகவும்‌ சட்ட சபைக்குப்‌ போகிறோம்‌ என்று சொல்லிப்‌ போய்‌, தங்கள்‌ பிள்ளை குட்டிகளுக்‌ கும்‌, இனத்தாருக்கும்‌ உத்தியோகம்‌ சம்பாதித்துக்‌ கொடுப்பதிலேயும்‌, அடுத்த தேர்தலிலும்‌ சட்டசபைக்குத்‌ தாங்களே போவதற்கு ஆக்கந்‌ தேடிக்‌ கொள்ளு வதிலேயும்‌ கவலையாயிருந்து விட்டு, மறுபடியும்‌ இவ்வருடம்‌ மதுவிலக்கை: அடியோடு ஒழித்து விடுகின்றோம்‌ என்று சொல்லுவதின்‌ பேரால்‌ வோட்டர்‌: களை ஏமாற்றி சட்டசபைக்குப்‌ போகப்‌ பார்க்கிறார்கள்‌. இதற்கு அநுகூலமாக காங்கிரசையும்‌ உபயோகப்படுத்திக்கொள்ளுவ தோடு மகாத்மாவின்‌ பெயரையும்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளுகிறார்கள்‌. அல்லாமலும்‌, உண்மையான ஒத்துழையாதாரென்றும்‌, யோக்கியரென்றும்‌, சொல்லும்படியாக ஓர்‌ காலத்தில்‌ பொது ஜனங்களின்‌ அபிப்ராயம்‌ பெற்று விட்ட ஸ்ரீமான்‌ சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும்‌ இச்சூழ்ச்சியின்‌ பெரும்‌ பாகத்தைத்‌ தானே ஏற்றுக்கொண்டு நடத்தி வருகிறார்‌. சென்ற சில வாரங்களாக, பிராமணர்களுக்கே வோட்‌ கொடுங்கள்‌ என்று சொல்லுவதற்குப்‌ பதிலாக, சுயராஜ்யக்‌ கட்சியாருக்கே வோட்‌ கொடுங்கள்‌; அவர்கள்‌ சட்டசபை களில்‌ கள்ளை நிறுத்துவார்கள்‌ என்று தைரியமாய்‌ பாமர ஜனங்களை ஏமாற்று கிறார்‌. இதைக்‌ கண்டு சில பாமர ஜனங்கள்‌ ஏமாந்து போகக்‌ கூடுமாதலால்‌, ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியாரின்‌ யோக்கியதையைப்‌ பொது ஜனங்கள்‌. அறியச்‌ செய்ய வேண்டியது நமது கடமையாகிவிட்டது. சட்டசபையைப்‌ பற்றி சென்ற ஆண்டுக்கு முன்னாண்டில்‌, பொது ஜனங்களிடம்‌ நல்ல பெயர்‌ பெற பிரயத்தனப்பட்டுக்‌ கொண்டிருந்த காலத்தில்‌ ஸ்ரீமான்‌ இராஜகோபா லாச்சாரியார்‌ சட்டசபை என்கிற தலைப்பின்‌ கீழ்‌ வெளியிட்டிருக்கும்‌ நோட்டீசில்‌ கண்ட அபிப்ராயங்களை வெளியிடுகிறோம்‌. அதாவது:- “இனி நடக்கப்‌ போகும்‌ சட்டசபைத்‌ தேர்தல்களில்‌ சேராமலும்‌, எந்த அபேகஷகருக்கும்‌ வாக்குக்‌ கொடுக்காமலும்‌, தேசபக்தர்கள்‌ யாவரும்‌ அபே க்ஷகர்களாக நிற்காமலும்‌ இருக்க வேண்டியது நம்முடைய கடமை. இதற்கு முக்கிய காரணங்களாவன : - 1 சட்டசபைக்குப்‌ போவதில்‌ ஜனங்களுக்கு ஒரு பிரயோஜனமும்‌ உண்டாகாததோடு சிறு விஷயங்களில்‌ கவனம்‌ செலுத்தி பெரிய 127. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 விஷயங்களை மறக்கும்படி செய்துவிடும்‌. 2. இராணுவ பலத்தாலும்‌, தங்கள்‌ மிருக பலத்தாலும்‌ ஆண்டுவரும்‌ அரசாங்கத்தார்‌,நம்முடைய சம்மதத்தின்‌ பேரிலும்‌ சமாதானத்தின்‌ பேரிலும்‌ ஆண்டு வருவதாகச்‌ சொல்லித்‌ திரிய இடங்‌ கொடுத்‌ தவர்களாவோம்‌. 3. சட்டசபையைப்‌ பகிஷ்காரம்‌ செய்ய 1920-ம்‌ வருடத்தில்‌ இருந்த காரணங்கள்‌ இப்போதும்‌ இருந்து கொண்டு வருகின்றன. 4. அரசாங்கத்தார்‌ சட்டசபை விஷயமாகச்‌ செய்திருக்கும்‌ விதிகளின்‌ படி, அதிகார வர்க்கத்தாருடைய செயல்களை சட்டசபை அங்கத்‌ தினர்களால்‌ தடுக்க முடியவே முடியாது. சர்வ அதிகாரமும்‌, அதிகார வர்க்கத்தார்‌ வைத்துக்கொண்டிருப்பதோடு நம்முடைய பிரதிநிதிகள்‌ அதிகாரவர்க்கத்தின்‌ ஏமாற்றுதலுக்கும்‌ உட்பட்டுப்‌ போவார்கள்‌. 5. நாம்‌ செய்ய வேண்டிய வேலைகள்‌, கதர்ப்‌ பிரசாரம்‌, தீண்டாமை யொழித்தல்‌, ஜாதி ஒற்றுமையை வளர்த்தல்‌ முதலிய பல வேலைகளிருக்க, இவைகளை விட்டு வோட்டுகள்‌ சம்பாதிக்கவும்‌, சட்டசபைக்குள்‌ சென்று காலத்தையும்‌ பணத்தையும்‌ வீணாக்‌ குவதும்‌ தவறாகும்‌. 6. சட்டசபைக்குள்‌ சென்று இராஜபக்தி சத்தியம்‌ செய்வதும்‌, சட்டசபை வேலையைச்‌ சரிவரச்‌ செய்வேனென்று பிரமாணம்‌ கொடுப்பதும்‌ நமது சுயமரியாதைக்கும்‌ மனச்சாக்ஷிக்கும்‌ விரோதமாகும்‌. 7. தற்போது அமைக்கப்பட்டுள்ள சட்டசபைகள்‌, உபயோகமில்லை யென்று உலகமே கோஷித்துக்‌ கொண்டிருக்க நாம்‌ அவைகளுக்‌ குள்‌ பிரவேசிப்பது நகைப்பிற்கிடமாகும்‌. 8 சட்டசபைக்குள்‌ நமது உண்மைத்‌ தலைவர்களெல்லாம்‌ சென்று விட்டால்‌, காங்கிரஸ்‌ மகாசபைக்கிருக்கும்‌ கெளரவமெல்லாம்‌ குறைந்து, சட்டசபைகளுக்கு மதிப்பு வளர்ந்து சர்க்கார்‌ ஆட்சி நிலைபெற்று விடும்‌. 9. அல்லாமலும்‌, நமக்குள்‌ இருந்துவரும்‌ ஜாதிச்‌ சண்டைகளும்‌ பொறாமைகளும்‌ அதிகமாகும்‌. 10. காங்கிரஸ்காரர்கள்‌ சட்டசபைகளைக்‌ கவனியாமலிருந்தால்‌ பொறா மைக்கிடமில்லாமல்‌ ஒற்றுமை வளரும்‌.” குடி அரசு - 1926 N 128 இவ்விதமாக சுமார்‌ 10 அபிப்ராயங்களைச்‌ சென்ற தேர்தலுக்குச்‌ சொன்னவரும்‌, இனியும்‌ தான்‌ ஒத்துழையாதாரராகவே இருக்கிறேன்‌ என்று சொல்லுபவருமான ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ இவ்வாண்டு பிராமணர்களை சட்ட சபைக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து கொண்டு சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ சார்பாய்‌ பல விளம்பரங்கள்‌ செய்துக்‌ கொண்டு வருகிறார்‌. அதாவது: - 1. காங்கிரஸ்‌ கக்ஷியார்‌ கள்ளை ஒழிக்க உறுதிமொழி கொடுத்து விட்டார்கள்‌. ஆதலால்‌, அவர்களுக்கு வோட்‌ கொடுங்கள்‌ என்றும்‌, 2௨ கள்ளையும்‌ சாராயத்தையும்‌ ஒழிக்க காங்கிரஸ்‌ ககஷியார்கள்‌ சட்ட சபைக்குள்‌ கடும்‌ போர்‌ புரிவார்கள்‌, அறிந்தீர்களா? ஆதலால்‌, அவர்களுக்கு கொடுங்களென்றும்‌, 3. மகாஜனங்களே ! காங்கிரஸ்‌ கட்சியார்‌ பூரண மதுவிலக்குக்காக பிடிவாதப்‌ போர்‌ நடத்துவார்கள்‌. ஆதலால்‌, அவர்களுக்கு வோட்‌ கொடுங்கள்‌ என்றும்‌, 4. கள்ளை நிறுத்தக்‌ காங்கிரஸின்‌ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வோட்‌ கொடுங்களென்றும்‌, இன்னும்‌ பல இம்மாதிரி வெளிப்படையாகவும்‌ பொருள்படும்படியாகவும்‌ எழுதிக்‌ கொண்டே வருகிறார்‌. தான்‌ போகுமிடங்களிலும்‌ இம்மாதிரியே சுய ராஜ்யக்‌ கக்ஷிக்காரருக்கு வோட்‌ செய்யும்‌ படியும்‌, பிராமணரல்‌ லாதார்களை ஜஸ்டிஸ்‌ கக்ஷியின்‌ பேரால்‌ தந்திரமாய்த்‌ தாக்கிக்‌ கொண்டு அவர்களுக்கு வோட்‌ செய்யக்கூடாதென்கிற விதமாகவும்‌ பேசி வருகிறார்‌. ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியாருடைய யோக்கியதையே இப்படியி ருக்குமானால்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியின்‌ யோக்கியதையைப்‌ பற்றி எடுத்துச்‌ சொல்லவும்‌ வேண்டுமா? ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியார்‌ கொஞ்ச நாளைக்கு முன்பு கள்ளை ஒழிப்பதாகச்‌ சொல்லி சட்டசபைக்குப்‌ போகலாம்‌ என்று சுயராஜ்யக்‌ ககஷியாருக்கு ஒரு யுக்தி சொல்லிக்‌ கொடுத்த காலத்தில்‌, ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ மீது சந்தேகப்பட்டு, 1 சட்டசபையின்‌ மூலம்‌ கள்ளை ஒழிக்க முடியாதென்றும்‌, 2. சுயராஜ்யம்‌ வந்தாலொழிய கள்ளை ஒழிக்க முடியாதென்றும்‌, 3. 25வருடத்தில்‌ கள்ளை ஒழிக்க ஒரு திட்டம்போடவேண்டுமென்றும்‌, 4. சட்டசபையின்‌ மூலம்‌ ஒரு காரியமும்‌ செய்ய முடியாதென்று அர 129 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சியல்‌ s 1 முன்‌ சாட்சியங்‌ கொடுத்தும்‌, 5. ஸ்ரீமான்‌ இராஜகோபாலாச்சாரியாரே கலால்‌ இலாகா மந்திரியாய்‌ வந்தாலும்கூட கள்ளை நிறுத்திவிட முடியாதென்றும்‌, 6. ஆதலால்‌, ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ சொல்லுவது நடவாத காரிய மென்றும்‌, இதில்‌ என்னமோ தந்திரமிருக்கிறது. என்று இம்மாதிரி சொல்லிக்‌ கொண்டிருந்த ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி, தன்னை மந்திரியாய்‌ நியமித்தால்‌ உடனே கள்ளை நிறுத்திவிடுகின்றேனெனச்‌ சொல்லு வதும்‌, கள்ளை நிறுத்தப்‌ பாடுபடுவதாய்‌ ஸ்ரீமான்‌ ஆச்சாரியாருக்கு உறுதி கூறியிருப்பதாகச்‌ சொல்லுவதும்‌, ஸ்ரீமான்‌ ஆச்சாரியாரும்‌, இம்மாதிரி யான ஆள்களுக்கு வோட்‌ வாங்கிக்‌ கொடுக்கப்‌ பொது ஜனங்களை வஞ்சிப்‌ பதும்‌ எவ்வளவு யோக்கியமான காரியமென்பதை வாசகர்கள்தான்‌ கவனிக்க வேண்டும்‌. இதைக்‌ கவனிக்கின்ற போது சந்தைக்‌ கடைகளில்‌ மாட்டுத்‌ தரகர்கள்‌ செய்யும்‌ பித்தலாட்டங்கள்‌ நமது ஞாபகத்திற்கு வருகின்றது. மாட்டுக்கடைப்‌ பித்தலாட்டம்‌ சந்தைக்கடைகளில்‌ சிலர்‌ தங்களுடைய உபயோகமற்ற மாடுகளை வயிறு நிறையத்‌ தண்ணீரை நிரப்பிக்‌ கொண்டுவந்து விற்பதற்காக கொண்டு வருவார்கள்‌. அவ்விடங்களில்‌ விற்றுக்‌ கொடுப்பதற்காகத்‌ தரகர்கள்‌ இருப்‌ பார்கள்‌. அவர்களில்‌ இருவர்‌, அம்மாட்டுக்காரர்களிடம்‌ இரகசியமாக நல்ல விலைக்கு விற்றுக்‌ கொடுத்தால்‌ தங்களுக்கு இவ்வளவு கொடுக்க வேண்டு மென்றும்‌, அப்படிக்கில்லாவிட்டால்‌,மாட்டினுடைய யோக்கியதையை வெளி யிற்‌ சொல்லிவிடுவோமென்றும்‌ சொல்லி அவனிடம்‌ தக்கபடி தரகு பேசிக்‌ கொண்டு, தங்கள்‌ மாட்டை விற்றுக்‌ கொடுப்பதற்குப்‌ பிரயத்தனப்‌ படுவார்கள்‌. அப்பொழுது தரகர்கள்‌ இருவருமே, ஒருவன்‌ மாட்டுக்காரனாகவும்‌, மற்றொ ருவன் மாடு வாங்குகிறவனைப்போல்‌ வேஷம்‌ போட்டுக்‌ கொண்டு உண்மை யாய்‌ மாடு வாங்குகிறவர்கள்‌ யாராவது அவ்வழியாகப்‌ போகும்போது, மாட்டின்‌ ஆசனத்தின்‌ வழியாய்‌ மாட்டுத்தினசு என்கிற பூச்சியை உள்ளே செலுத்தி அம்மாட்டைக்‌ குதிக்கச்செய்து கொண்டு, ஒருவருக்கொருவர்‌. விலைபேசுவது போல்‌ பேசிக்‌ கொண்டிருப்பார்கள்‌. உண்மையாய்‌ மாடு வாங்குகிறவன்‌ இதை வாஸ்தவமென்று நினைத்து, மாடு தினசு குடைவதைப்‌ பொறுக்கமாட்டாமல்‌ அங்குமிங்கும்‌ தாவிக்‌ குதிப்பதைக்‌ கண்டு, இது மிகவும்‌ சுறுசுறுப்பான மாடு என்று நினைத்துக்கொண்டு சமீபத்தில்‌ வந்தால்‌, தரகர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ அது 20 ரூபாய்‌ பெறாத மாடாயிருந்தபோதிலும்‌ , இவன்‌ 60 ரூபாய்க்கு கேட்பது போல்‌ கேட்பதும்‌, அவன்‌ 100 ரூபாய்க்கு குறைந்து கொடுக்கமாட்டேனென்று சொல்லுவதும்‌, மற்றவன்‌ அது 6 மாசத்திற்கு முன்னேயல்லவா 100 ரூபாய்‌ விலை இருந்தது; இப்பொழுது விலை இறங்கிவிட்டது; இந்த 60 ரூபாய்தான்‌ பெறும்‌; அதற்கு மேல்‌ முடியாது எனப்‌ குடி அரசு - 1926 N 130 பேசிக்‌ கொண்டிருப்பதும்‌, உண்மையாய்‌ வாங்குகிறவன்‌, மாட்டைத்‌ தொட்டுப்பார்க்க வந்தால்‌ 60 ரூபாய்க்குக்‌ கேட்கிறது போல்‌ நடித்த தரகன்‌, அது விற்கிற மாடல்ல; 60 ரூபாய்க்கு நான்‌ முன்னமே வாங்கியாகிவிட்டது போமய்யா போம்‌ என்று சொல்லுவதும்‌, மாட்டுக்காரன்‌ போல்‌ நடித்தவன்‌ இல்லய்யா அது 100 ரூபாய்‌ மாடு நான்‌ 60 ரூபாய்க்கு கொடுக்கமாட்டேன்‌; அவர்‌ கிடக்கிறார்‌;நீங்கள்‌ வேண்டுமானால்‌ பாருங்கள்‌ என்று சொல்லுவதும்‌, மாடு வாங்க வந்தவன்‌ இவர்கள்‌ நடிப்பதைப்‌ பார்த்து உண்மை தானென நம்பி ஏமாந்து, மாடு தினசு குடைச்சல்‌ பொறுக்க மாட்டாமல்‌ குதிப்பதைப்‌ பார்த்து, சுறுசுறுப்பான மாடென்றும்‌ இவர்கள்‌ விலை கேட்பதைப்‌ பார்த்து உண்மை யாயிருக்குமென்று நம்பியும்‌, பின்னும்‌ விற்பதாய்‌ நடிக்கும்‌ தரகன்‌, வாங்கு கின்றவனைப்‌ பார்த்து, இந்த மாடு சரியாய்‌ வேலை செய்யாவிட்டால்‌ கொண்டு வந்து விட்டுவிடுங்கள்‌; தீனிச்‌ செலவு, வட்டியெல்லாம்‌ சேர்த்துக்‌ கொடுத்துவிடுகிறேன்‌ என்று சொல்லும்‌ வஞ்சக வாக்குறுதிகளையும்‌ நம்பி வாங்கி விடுவான்‌.அவன்‌ வாங்கிவிட்டதும்‌, பணத்தை மூவருமாகச்‌ சேர்ந்து பங்கு போட்டுக்‌ கொண்டு சப்பை மாட்டை அவன்‌ தலையில்‌ கட்டி விட்டு ஓடிப்‌ போவார்கள்‌. பிறகு மாடு வாங்கினவன்‌ வீடு கொண்டு போய்ச்‌ சேர்ப்பதே பெரிய கஷ்டமாய்ப்‌ போய்‌ விடும்‌ . தினசு செத்துக்‌ குடைச்சல்‌ நின்று போனதற்கப்‌ புறம்‌ மாடு மூத்திரம்‌ பெய்யவும்‌, சாணி போடவும்‌ கூட எழுந்து நிற்பதற்குச்‌ சக்தியில்லாமல்‌ படுக்கையிலேயே இவைகள்‌ கழிக்க வேண்டியதாக இருக்கும்‌. அதுபோல, நமது சப்பை மாட்டுக்காரனாகிய சர்க்காருக்கு விற்றுக்‌ கொடுப்பவர்களாகிய ஸ்ரீமான்கள்‌ இராஜகோபாலாச்சாரியார்‌, சீனிவாசய்யங்‌ கார்‌, சத்தியமூர்த்தி போன்ற தரகர்கள்‌, மாடு வாங்கும்‌ குடியானவர்களாகிய பிராமணரல்லாத பாமர வோட்டர்‌ ஜனங்கள்‌ தலையில்‌ சப்பை மாட்டைக்‌ கட்டுவது போல்‌ அவர்கள்‌ வோட்டை வாங்கி தாங்கள்‌ சட்ட சபைக்குப்‌ போய்‌ விலையைப்‌ பங்கு போட்டுக்‌ கொள்ளுவது போல்‌, தாங்களும்‌ தங்கள்‌ பிள்ளை குட்டிகளும்‌ இனத்தார்களும்‌ உத்தியோகம்‌ சம்பாதித்துக்‌ கொண்டு மாடு வாங்கினவன்‌ அதிக விலைபோட்டு வாங்கி சப்பை மாட்டைக்‌ கட்டி அழுவது போல்‌, பிராமணரல்லாதார்கள்‌ தாழ்ந்த நிலையில்‌ தீண்டாதவர்‌ களைப்போல்‌ அவஸ்தைப்படுவது இம்மாதிரி சம்பவங்களுக்குப்‌ பொருத்த மானதென்று எடுத்துக்காட்டத்‌ தேவையில்லை. குடி அரசு - கட்டுரை - 14.02.1926. 131 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிரசாரக்‌ கூட்டங்களில்‌ குழப்பம்‌ தற்காலம்‌ சுயராஜ்யக்‌ ககஷிப்‌ பிரசாரத்திற்காக ஸ்ரீமான்கள்‌ சீனிவாசய்‌ யங்கார்‌, கலியாணசுந்தர முதலியார்‌ முதலியோர்‌ ஆங்காங்கு செல்லுவதும்‌ சட்டசபை அபேகஷகர்களைத்‌ தங்கள்‌ ககஷிக்கு இழுப்பதுமான பிரசாரங்கள்‌ நடந்து வருவதைப்‌ பத்திரிகை வாயிலாக அறிகிறோம்‌. அதோடு கூடவே ஒவ்வொரு கூட்டங்களிலும்‌ குழப்பங்களும்‌ கச்சல்களும்‌ நடப்பதும்‌ பார்க்கிறோம்‌. உதாரணமாக, மதுரையில்‌ மீட்டிங்கு நடக்கவிடாமற்‌ செய்ததும்‌ கும்ப கோணத்தில்‌ போலீஸ்‌ உதவியினால்‌ தலைவர்கள்‌ என்போர்‌ வீடு போய்ச்‌ சேர்ந்ததும்‌, காஞ்சீபுரத்தில்‌ கேள்விகளும்‌ குழப்பங்களும்‌ நடந்ததும்‌ பத்திரி கைகள்‌ மூலமாகவும்‌ நிருபர்கள்‌ மூலமாகவும்‌ தெரிய வருகிறது. இம்மா திரியான காரியங்களை நாம்‌ மனப்பூர்த்தியாக வெறுக்கிறோம்‌. பிரசாரகர்கள்‌ என்ன கருத்தோடு வந்த போதிலும்‌ அவர்கள்‌ சொல்லுவது முழுமையும்‌ பொறுமையாய்க்‌ கேட்டுவிட்டு மறுப்பு ஏதாவது இருந்தால்‌ பேசுவதற்கு அவகாசம்‌ கேட்க வேண்டியது, அக்கூட்டத்தார்‌ அதை மறுப்பார்களானால்‌ பேசாமலிருந்து விட்டு அடுத்தநாள்‌ ஒரு கூட்டத்தைக்‌ கூட்டி நமது அபிப்பி ராயத்தைச்‌ சொல்ல வேண்டுமேயல்லாமல்‌, குழப்பம்‌ செய்வதோ, பேச முடியாமற்‌ தடுப்பதோ போலீஸ்‌ தயவைக்‌ கொண்டு வீடு போகச்‌ செய்வதோ மிகவும்‌ இழிவான காரியமென்றே சொல்லுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 14.02.1926 குடி அரசு - 1926 N 132 தற்காமைஙிஸைமை யாகைகாட்மூல்‌ வசாற்வாமழிஷ நமது நாட்டின்‌ தற்கால நிலைமையைப்‌ பற்றி பேசுவதென்றால்‌ நினைக்கும்போதே வேதனையாகவும்‌ துக்கமாயும்‌ இருக்கிறது. எவ்வளவோ பெருமையாக இருந்ததாகச்‌ சொல்லப்படும்‌ நமது நாடு இன்று இருக்கும்‌ நிலை, அந்நிய ஆகஷிக்கு அடிமையாகி- அந்நிய ஆக்வி என்றால்‌ மனிதத்‌ தன்மைக்கு அந்நிய - அதாவது, மனிதனுக்கு மனிதன்‌ பிடித்து தின்னும்‌ மாதிரியில்‌ வலியவனுக்கு எளியவன்‌ ஆகாரமாய்‌ நடைபெற்று வருகின்றது. நமது நாட்டின்‌ மதக்‌ கொள்கைகளின்‌ பலன்களில்‌ இவ்வந்நிய ஆட்சி ஒன்‌ றென்றும்‌, மதத்தின்‌ பேரால்‌ நம்‌ தேசத்துக்கு ஏற்பட்ட கெடுதியின்‌ பலனாய்‌ நமது நாடு இக்கெதியை அடைந்தது, ஆதலால்‌ வெறும்‌ ராஜீய சீர்திருத்‌ தத்தைப்‌ பேசிக்‌ கொண்டிருப்பதில்‌ பிரயோஜனமில்லை, நமது மதத்தின்‌ பேரால்‌ ஏற்பட்ட ஜாதி வித்தியாசங்களில்‌ மனிதர்கள்‌ பிறவியிலேயே பிராம ணன்‌ உயர்ந்த ஜாதியான்‌ என்பதும்‌, பஞ்சமன்‌ தாழ்ந்த ஜாதியானென்பதும்‌ நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாது நமது நாடு சுதந்திரமும்‌, சுயமரியா தையும்‌, சுய ஆட்சியும்‌ பெற்று வாழ முடியாது. தீண்டாமை யென்பது ஓர்‌ மதத்திலும்‌, நாட்டிலுமிருப்பது அம்மதத்திற்கே பெரிய இழிவு. பிறவியி லேயே உயர்ந்த ஜாதியாரென்று ஓர்‌ கூட்டத்தாரைக்‌ கொண்டாடுவது, அந்த நாட்டின்‌ சுயமரியாதைக்கும்‌ மற்றும்‌ பல வகுப்புக்குள்‌ பெரிய இழிவுக்கும்‌ ஆதாரமாகும்‌. ஆதலால்‌ நமது நாட்டில்‌ மனிதப்‌ பிறவியில்‌ உள்ள உயர்வுத்‌ தாழ்வு வித்தியாசங்களை வேரோடு களைந்து எறிவதுதான்‌ தேசத்துக்கும்‌, சமூகத்துக்கும்‌ ஓர்‌ மனிதன்‌ செய்ய வேண்டிய முக்கியக்‌ கடமை. இவற்றை விட்டுவிட்டு ராஜாங்கத்தினிடத்தில்‌ சட்டசபைகள்‌ முதலிய ஸ்தாபனங்களின்‌ மூலம்‌ தேசத்திற்கு சீர்திருத்தம்‌ பெறுவேனென்று சொல்லுவது பொது தேச சேவையாகாது. அது சுயநலம்‌, சுய ஜாதி நலச்‌ சேவையே தானாகும்‌. ராஜீய விஷயத்திலும்‌ ஏதாவது சிறு பாகமாவது நமது நாட்டுக்கு உபயோகப்படும்‌. படியாக வேலை செய்ய வேண்டுமானால்‌ அது எல்லா ராஜீய உரிமைகளும்‌ நமது நாட்டு சகல வகுப்பாருக்கும்‌ சமனாய்‌ கிடைக்கும்படி ஏற்பாடு செய்வது தான்‌ ஜாதி வகுப்பு வித்தியாசங்களின்‌ கொடுமைகளை ஒழிக்கும்‌. இவ்விஷ யங்களில்‌ கவலை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ பொதுவாக நாடு, நாடு என்று பேசிக்கொண்டு காலத்தைக்‌ கடத்துவது, சுயகாரியத்தை கவனிப்பதோடு அல்லாது, நாட்டுக்கு ஒரு க்ஷமத்தையும்‌ விளைவிக்காது. வகுப்பு 133 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சமஉரிமைகளை அலக்ஷியம்‌ செய்துவிட்டு ராஜீய உரிமை என்று பேசிக்‌ கொண்டு நடத்தப்படும்‌ எந்தக்‌ காரியத்தையும்‌, சம உரிமைகள்‌ இல்லாத வகுப்புகள்‌ பின்பற்ற முடியாது. அவைகள்‌ வந்து, வகுப்புரிமை சமமாய்‌ அடையும்‌ வரையில்‌ குறுக்கிட்டுக்‌ கொண்டுதான்‌ இருக்கும்‌. ஒரு வகுப்பாரை: ஏமாற்றி ஒரு வகுப்பார்‌ முன்னேறுவதற்கான ராஜீய இயக்கங்களை தேச நல இயக்கமெனக்‌ கொண்டு பொதுமக்கள்‌ ஏமாந்து பின்பற்றுவதும்‌, அதற்கும்‌ சில அறியாதார்களும்‌ சுயநலக்காரர்களும்‌ ஆக்கங்‌ கொடுத்து வந்தாலும்‌ முடிவில்‌ அது வீழ்ந்து போகுமென்பது உறுதி. அதற்கு உதாரணமாக ராஜீய உரிமை பெறுவதற்கு தலைசிறந்து விளங்குவதாய்ச்‌ சொல்லப்படும்‌ சுயராஜ்யக்‌ கட்சி யென்னும்‌ ஓர்‌ போலிக்‌ கட்சி தென்னாடு போன்ற பல இடங்‌ களில்‌ பாமர ஜனங்களை ஏமாற்றி வந்தாலும்‌, அநேக இடங்களில்‌ அதன்‌ உண்மைத்‌ தெரிந்து அது உடைபட்டும்‌ இழிவுபட்டும்‌ வருகின்றது. அது வரப்போகும்‌ சட்டசபை முதலிய தேர்தல்களில்‌ ஆக்கம்‌ பெற பலவித சூழ்ச்சி களும்‌ விளம்பரங்களும்‌ செய்து வருகின்றது. சென்ற தேர்தல்களில்‌ அக்கட்சி செய்த சூழ்ச்சிகளையும்‌, வாக்குத்‌ தவறுதல்களையும்‌ நாணயக்‌ குறைவுகளை யும்‌ பொதுஜனங்கள்‌ அறிந்திருந்தும்‌ இவ்வருடம்‌ அவைகள்‌ அறியாமல்‌ மனிதர்கள்‌ கலங்குகிறார்கள்‌. அதற்கு காரணம்‌ ஸ்ரீமான்‌ சி.இராஜகோபாலாச்‌ சாரியார்‌ போன்றவர்கள்‌ இக்கட்சிக்கு அதுகூலமாய்‌ வேலை செய்வது தான்‌. ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ சுயராஜ்யக்‌ கட்சியை ஆதரிப்பதின்‌ நோக்கமெல்லாம்‌ சட்டசபையை பெரும்பாலும்‌ பிராமணர்களே கைப்பற்ற வேண்டுமென்கிற எண்ணந்தானென்று நான்‌ நினைக்கிறேன்‌. ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி போன்றோர்‌. கள்‌ செய்யும்‌ ஆர்ப்பாட்டங்களெல்லாம்‌ பிராமணரல்லாத தலைவர்களைப்‌ பற்றி பிராமணரல்லாதாருக்குள்ளாகவே அருவருப்பு ஏற்பட்டு பிராமண ரல்லாத வோட்டர்களெல்லாம்‌ பிராமணர்களுக்கே வோட்‌ கொடுத்து சட்ட சபையை பிராமணாதிக்க சபையாக மாற்றவேண்டும்‌ என்கிற கருத்துக்‌ கொண்டுதானென்றும்‌, தற்காலச்‌ சட்டசபைகளும்‌ தங்கள்‌ தங்கள்‌ வகுப்பு நலத்தை நாடு வோருக்கு மாத்திரம்‌ ஏதாவது கொஞ்சம்‌ பிரயோஜனப்படுமேயல்லாமல்‌ வேறொரு காரியத்திற்கும்‌, அதாவது வரிப்பளுவை குறைக்கவோ, மது பானத்தை ஒழிக்கவோ, உண்மையான சுய ஆட்சிப்‌ பெறவோ, ஏழைகள்‌ பிழைக்கவோ, தரித்திரத்தை ஒழிக்கவோ, தொழிலாளர்களைக்‌ காப்பாற்றவோ முடியாது. ஆதலால்‌ வகுப்பு சமத்துவத்திற்கும்‌, வகுப்புரிமைக்கும்‌, வகுப்பு முன்னேற்றத்திற்கும்‌ பாடுபட வேண்டும்‌ என்னும்‌ கவலையுள்ளவர்கள்‌ சட்டசபைக்குப்‌ போவதாய்‌ இருந்தால்‌, அவ்வித உண்மையைச்‌ சொல்லி போவதுதான்‌ ஒழுங்கு, பொதுஜனங்களும்‌ சட்டசபையின்‌ மூலம்‌ இக்காரியங்‌ களைச்சீர்த்திருத்தம்‌ செய்து கொள்ளலாமென்று நினைத்தால்‌ வகுப்புரிமை யையும்‌ வகுப்பு சுயமரியாதையையும்‌ பற்றி சட்டசபையில்‌ உழைக்கிறேன்‌ என்று மனப்பூர்வமாய்‌ ஒப்புக்கொள்ளுகின்றவர்களுக்குத்தான்‌ வோட்டுக்‌ கொடுக்க வேண்டும்‌, மற்றபடி அதை செய்கிறோம்‌ இதை செய்கிறோம்‌ என்று குடி அரசு - 1926 N 134 முடியாத காரியங்களைச்‌ சொல்லி ஏமாற்றுகிறவர்கள்‌ வார்த்தையை நம்பி பிராமணாதிக்கத்தை நிலைநிறுத்தப்‌ பாடுபடும்‌ பிராமணர்களுக்கோ, அவர்கள்‌ உதவியாலும்‌, அவர்கள்‌ பிரசாரத்தாலும்‌, சட்டசபைக்குப்‌ போய்‌ அவர்களுக்கு அடிமையாயிருக்கும்‌ ஆட்களுக்கோ வோட்டுக்‌ கொடுத்து இழிவுபடாமல்‌ ஜாக்கிரதையாயும்‌, உங்கள்‌ கையாலேயே கொள்ளிக்‌ கட்டை யை எடுத்து உங்கள்‌ தலையை சொறிந்துக்‌ கொள்வது போல்‌ இராமல்‌ வோட்‌. விஷயத்தில்‌ நீங்கள்‌ புத்திசாலித்தனமாய்‌ இருக்க வேண்டுமென்றும்‌, வகுப்புநலன்‌, வகுப்புரிமை ஆகியவைகள்‌ சட்டசபையிற்‌ போய்‌ அடையவேண்டிய அவசியம்‌ இல்லை; வெளியிலேயே பார்த்துக்‌ கொள்ள முடியும்‌. “ஆதலால்‌, தேச நலத்திற்கு தாங்கள்‌ பாடுபட வேண்டும்‌” என்கிற எண்ணம்‌ யாருக்காவது இருக்குமானால்‌, அவர்கள்‌ கண்டிப்பாய்‌ சட்ட சபையைப்‌ பகிஷ்காரம்‌ செய்துவிட்டு கதர்‌ அணிவதிலும்‌ கதர்‌ உற்பத்தி செய்வதிலும்‌, தீண்டாமையை ஒழிப்பதிலும்‌ பிரயத்தனப்படவேண்டும்‌. கதரை நாம்‌ கை விட்டு விட்டு அந்நியதுணியை ஆதரித்ததினாற்தான்‌ நமது நாட்டில்‌ பெரும்பாலும்‌ தொழிலாளிகளாயிருக்கிற ஏழைகளுக்குத்‌ தொழில்‌ அற்றுபோய்‌ விட்டது. ஓர்‌ காலத்தில்‌ இந்திய ஸ்திரீ தர்மத்தைப்‌ பற்றி எவ்வ ளவோ பெருமையாய்‌ எழுதி வைத்துக்கொண்டும்‌ பேசிக்‌ கொண்டுமிருந்த இந்திய ஸ்திரி தர்மம்‌ மிகவும்‌ இழிவான நிலையில்‌ இருக்கிறதென்றும்‌, கற்பு என்பது நமது நாட்டுப்‌ பெரும்பான்மையான ஸ்திரிகளுக்குக்‌ காக்கப்படாத கடினத்‌ தத்துவமாய்‌ போய்விட்டது. ஜீவனத்திற்காக விபசாரம்‌ செய்ய வேண்‌: டிய ஸ்திரீகள்‌ நமது நாட்டில்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்துக்‌ கொண்டு வருவதற்கு நமது நாட்டுக்‌ கைராட்டினங்கள்‌ அருகிப்போனதுதான்‌ காரணம்‌ தொழிலாளி களின்‌ தரித்திரத்தை ஒழித்து ஸ்திரீகளின்‌ தர்மத்தைக்‌ காப்பாற்ற வேண்டுமா னால்‌, கதரைக்‌ கைக்கொண்டல்லாமல்‌ வேறு ஒரு சாதனத்தாலும்‌ முடியாது, நமது நாட்டுப்பெருமையை ஒழிக்க ஸ்திரீ தர்மங்களை அழித்து, தொழிலாளர்‌: களையும்‌, ஏழைகளையும்‌ பட்டினிப்போட்டு , நாம்‌ இக்கதியில்‌ இருப்பதற்குக்‌. காரணம்‌ நாம்‌ சர்க்கார்‌ பேரிலேயே சொல்லுவது முழுவதும்‌ உண்மையாகாது, சர்க்காரிடம்‌ ஒரு பாகம்‌ இருந்த போதிலும்‌, பெரும்பாகம்‌ நாமேதான்‌ காரண மாய்‌ இருந்து வருகிறோம்‌. நாம்‌ எல்லோரும்‌ கதரை உடுத்துவதாயிருந்தால்‌ நமது சர்க்காருக்கு நமது நாட்டின்‌ பேரில்‌ இவ்வளவு ஆசையிருக்காது; நமது ஜனங்களுக்கும்‌ இவ்வளவு பட்டினி கிடக்கமுடியாது; நமது நாட்டுப்‌ பொருள்களும்‌ அந்நிய நாட்டுக்குக்‌ கொள்ளை போகாது. உதாரணமாக, ஒரு மனிதன்‌ 12 அணாவுக்கு ஒரு கெஜம்‌ அந்நிய நாட்டு மல்‌ துணி வாங்குவானேயானால்‌, அவன்‌ 10 அணா 9 பைசா நமது நாட்டிலிருந்து அந்நிய நாட்டுக்கு அனுப்பிக்‌ கொடுத்து 10 அணா 9பைசா செலவில்‌ தங்கள்‌ வாழ்நாளைக்‌ கழிக்கக்கூடிய இரண்டு குடும்பத்தை நமது நாட்டில்‌ பட்டினி போட்டதற்கு பொறுப்பாளியாகிறான்‌. ஒரு கெஜம்‌ மல்லில்‌ உள்ள பஞ்சின்‌ விலை ஒன்றேகால்‌ அணாதான்‌ பெறும்‌; 135 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பாக்கி பத்தே முக்காலணாவும்‌ அதன்‌ நூல்‌ நூற்பதற்கும்‌, நெசவுக்குமாகவும்‌ அந்நிய நாட்டினருக்குக்‌ கொடுக்கிறோம்‌. அந்த நூற்றல்‌ வேலையை நமது சகோதரிகளுக்குக்‌ கொடுத்து அந்த நெசவு வேலையை நமது சகோதரர்‌ களான நெசவுக்காரர்களுக்குக்‌ கொடுத்து இருந்தால்‌, இந்த இரண்டு குடும்பங்‌ களும்‌ ஒருநாள்‌ காலத்தை கழித்து இருக்குமா? அல்லவா? ஒரு கெஜம்‌ அந்நிய நாட்டுத்‌ துணி வாங்குவதினாலேயே ஒரு நாளைக்கு 2 குடும்பங்‌ களை பட்டினி போடத்தகுந்த பணத்தை அந்நிய நாட்டுக்கு அனுப்புகின்றோ மென்றால்‌, நீங்கள்‌ அணிந்துக்‌ கொண்டிருக்கும்‌ இவ்வளவு துணிக்கும்‌, நீங்கள்‌ வருடமெல்லாம்‌ வாங்கும்‌ கோடிக்கணக்கான கெஜத்‌ துணிக்கும்‌, எவ்வளவு பேரைப்‌ பட்டினி போட்டிருக்கின்றீர்களென்று கவனித்துப்‌ பாருங்‌ கள்‌. எவ்வளவு ஸ்திரீகளை தொழிற்‌ செய்ய வகையில்லாமல்‌ தெருவில்‌ முடுக்கி அவர்களின்‌ கற்பை இழக்கக்‌ கட்டாயப்படுத்துகின்றீர்களென்பதை நினைத்துப்பாருங்கள்‌. ஆதலால்‌, மடங்கள்‌ கட்டுவதும்‌, அன்னதானம்‌ செய்வதும்‌, மடாதிபதி களென்போருக்குப்‌ பணத்தைக்‌ கொடுத்து சோம்பேறிகளுக்குப்‌ பொங்கிப்‌ போடச்‌ செய்து, அவர்கள்‌ காலை கழுவின தண்ணீரைத்‌ தீர்த்தமென்று உட்‌. கொள்வதும்‌, புண்ணியமும்‌, மோக்ஷமும்‌, அன்னதானமும்‌, ஜீவ காருண்ய மும்‌, பாவமன்னிப்பும்‌ ஒருக்காலும்‌ ஆகவே ஆகாது. ஆகையினால்‌, நீங்கள்‌ ஒவ்வொருவரும்‌ கதரை ஆதரித்து தேசத்‌ தைக்‌ காப்பாற்ற வேண்டும்‌. தேவஸ்தான ஆக்டைப்‌ பற்றி சில வார்த்தைகள்‌ சொல்ல வேண்டுமென்று காரியதரிசி ஸ்ரீமான்‌ மாணிக்கம்பிள்ளை அவர்கள்‌ கட்டளை இடுவதால்‌ அதைப்‌ பற்றியும்‌ சில வார்த்தைகள்‌ சொல்லுகிறேன்‌. சிலர்‌ உங்களை ஏமாற்றி தேவஸ்தான ஆக்டானது, ஹிந்து மதத்திற்கு பெரிய ஆபத்து; ஹிந்து மத தர்ம ஸ்தாபனங்களிலும்‌, ஹிந்து மதத்‌ தத்துவத்‌ திலும்‌ சர்க்காரார்‌ பிரவேசித்து விட்டார்கள்‌;ஜஸ்டிஸ்‌ கட்சியாரென்று சொல்‌ லப்படும்‌ பிராமணரல்லாத மந்திரிகள்‌ அதற்கு இடங்கொடுத்து மதத்‌ துரோகி களாகி விட்டார்கள்‌; அவர்களை அந்த ஸ்தானத்தை விட்டு அகற்றி விட்டு தேவஸ்தான சட்டத்தை அழிக்கக்‌ கூடியவர்களுக்கும்‌, அழிப்பதாய்‌ சொல்லி வாக்குறுதி கொடுக்கிறவர்களுக்குமே நீங்கள்‌ வோட்டுக்‌ கொடுத்து அவர்‌. களை சட்டசபைக்கு அனுப்பவேண்டுமென்றும்‌ மற்றும்‌ பல மாதிரியாகவும்‌ பலர்‌ சூழ்ச்சிப்‌ பிரசாரம்‌ செய்து வருகிறார்கள்‌. பிராமணரல்லாதாரிலேயும்‌ பலர்‌ இதை நம்பிக்கொண்டும்‌, சிலர்‌: பிராமணர்களிடத்தில்‌ பணம்‌ வாங்கிக்கொண்டும்‌, அவர்கள்‌ தயவை எதிர்ப்‌ பார்த்துக்கொண்டும்‌ இதேமாதிரி சொல்லிக்‌ கொண்டு திரிகிறார்கள்‌. நீங்கள்‌ இவற்றைக்‌ கொஞ்சமும்‌ நம்பக்கூடாது. முதலாவது நமது தர்ம ஸ்தாபனங்‌ களும்‌, மடாதிபதிகளும்‌ யோக்கியமாய்‌ நடந்து வருகிறார்களா வென்பதை நீங்களே யோசித்துப்‌ பார்க்க வேண்டும்‌. மதத்தை உத்தேசித்துத்‌ தர்ம ஸ்தாப னங்களின்‌ பேரால்‌ ஹிந்து மடாதிபதிகளுக்கும்‌, ஹிந்துக்‌ கோவில்களுக்கும்‌, குடி அரசு - 1926 N 136 வருடம்‌ ஒன்றுக்கு 2 கோடி ரூபாய்‌ வரும்படி வருகிறதென்றும்‌, இந்த 2 கோடி ரூபாயில்‌ பெரும்‌ பாகம்‌ தாஸி - வேசிகளும்‌, கள்ளு-சாராயமும்‌, வக்கீல்களும்‌ - கோர்ட்டுகளும்‌, சோம்பேறி பிராமணர்களும்‌, மற்றும்‌ உபயோகமற்ற ஆட்களும்‌ சாப்பிட்டுக்கொண்டு ஹிந்து மதத்தின்‌ பெருமையையும்‌, பிராமணரல்லாதாரின்‌ சுயமரியாதையையும்‌ அழித்து இழிவை உண்டாக்கவும்‌ உபயோகப்படுகின்றதேயல்லாமல்‌, தேசத்திற்காவது, மதத்திற்காவது, தமிழ்‌ நாட்டில்‌ உரிமையுள்ளவர்களும்‌, பெரும்பான்மையானவர்களுமான பிராமண: ரல்லாதாருக்காவது எள்ளளவு பயன்படுகிறதா? இவற்றைக்‌ காங்கிரஸ்‌ ஏற்பட்ட காலமுதற்கொண்டே அதாவது 30, 40 வருடக்‌ காலமாகவே நம்‌ நாட்டவர்‌ அறிந்து காங்கிரஸ்களிலேயும்‌, மாகாண ஜில்லா தாலூகா மகா நாடுகளிலேயும்‌ தேவஸ்தான ஆக்ட்‌ ஏற்படுத்தும்படி பிரேரேபனைகள்‌ கொண்டு வந்து சர்க்காரைக்‌ கேட்டுக்கொண்டு வந்திருக்‌ கின்றார்கள்‌. இந்த 2 கோடி ரூபாயும்‌ வரும்படி வருவதற்குப்‌ பொது ஜனங்கள்‌ எவ்வளவு கஷ்டப்பட்டுச்‌ சம்பாதித்துக்‌ கொடுத்திருக்க வேண்டும்‌. கொண்டு வந்து கொடுப்பவர்கள்‌ எவ்வளவு செலவு செய்து கொண்டு -கஷ்டப்பட்டுக்‌ கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டும்‌. உதாரணமாக, திருப்பதி தேவஸ்‌ தானத்திற்கு வருஷத்தில்‌ சுமார்‌ 20 லக்ஷம்‌ ரூபாய்‌ வரும்படி வருகிறது. இந்த 20 லக்ஷ ரூபாய்‌ இமயமலை முதல்‌ கன்னியாகுமரி வரையிலுமுள்ள ஹிந்துக்களால்‌ வழிச்‌ சிலவு செய்து கொண்டு போய்‌, கால்‌- அரை- ஒன்று- பத்து- நூறு- ஆயிரம்‌- பதினாயிரமாக ஹிந்துமத பக்தர்கள்‌ என்போர்களால்‌ செலுத்தப்படுகிறது. இப்படிச்‌ செலுத்த சிலவு தொகை 20 லக்ஷத்துக்கு குறையாமல்‌ 30 லக்ஷமென்றுக்‌ கூடச்‌ சொல்லலாம்‌. ஆக திருப்பதி கோவிலுக்‌ காக மாத்திரம்‌, இந்துக்களுடைய பணம்‌ இந்து மதத்தின்‌ பேரால்‌ வருஷம்‌ ஒன்றுக்கு 50 லக்ஷம்‌ செலவாகிறதென்றால்‌, இன்னும்‌ மற்றுமுள்ள கோவில்‌ களுக்கும்‌, நதிகளுக்கும்‌ ஆக எவ்வளவு கோடி ரூபாய்‌ செலவாய்க்‌ கொண்டி ருக்கும்‌. ஒட்டு மொத்தம்‌ கணக்குப்‌ பார்த்தால்‌ தமிழ்‌ நாட்டில்‌ மதத்திற்காக, கோவில்களுக்கும்‌, வைதீகச்‌ சடங்குகளுக்கும்‌, பிராமணர்களுக்காகவும்‌ ஹிந்துக்களால்‌ செலவு செய்யப்படும்‌ பணம்‌ சர்க்காரால்‌ வசூல்‌ செய்யப்படும்‌ வரி வசூல்‌ பணத்திற்கு கூடுதலாயிருக்குமே தவிர குறையாதென்பதுதான்‌ எனது அபிப்ராயம்‌. எப்படியென்றால்‌ ஒரு விதத்திலும்‌ சர்க்காருக்குக்‌ காலணாக்கூட வரி கொடுக்க அவசியமில்லாதவன்‌, மதத்தின்‌ பேரால்‌ கோவிலுக்கும்‌, வைதீகச்‌ சடங்குகளுக்கும்‌ , குருக்களுக்கும்‌, மடாதிபதிகளுக்‌ குமாக1-10 ரூபாய்‌ கணக்காக ஏறக்குறைய ஒவ்வொரு வருமே செலவு செய்து கொண்டுதான்‌ வருகிறார்கள்‌. ஆகையால்‌ சர்க்கார்‌ வரியைவிட மதவரி அதிகமிருக்குமென்பதில்‌ நீங்கள்‌ யாரும்‌ ஆச்சரியப்படமாட்டீர்கள்‌. இப்படிச்‌ செலவு செய்தும்‌, மதம்‌ என்றால்‌ என்ன? தெய்வம்‌ என்றால்‌ என்ன? புண்ணியம்‌ பாவம்‌ என்றால்‌ என்ன? என்பது கூடத்‌ தெரிவதற்கில்லாமல்‌, பிராமணனை வணங்கிக்‌ கொண்டு, அவன்‌ சொற்படியும்‌ அவன்‌ எழுதி வைத்த புத்தகப்படியும்‌ 137 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நடப்பது தான்‌ ஹிந்து மதமென்றும்‌, பிராமணன்‌ தனது வரும்படிக்காகக்‌ காட்டிக்‌ கொடுத்து பூஜை செய்வதுதான்‌ தெய்வமென்றும்‌ அவன்பிழைக்க வழி ஏற்படுத்துவதுதான்‌ கோவிலென்றும்‌, பிராமணனுக்குக்‌ கொடுப்பது தான்‌ புண்ணியமென்றும்‌, அவனுக்கு கொடுக்கக்‌ கூடாதென்று சொல்லுவதுதான்‌ பாவமென்றும்‌, அறிந்து கொண்டு இருக்கின்றோமேயல்லாமல்‌ இவ்வறி வுக்கே இவ்வளவு பணச்‌ செலவும்‌ உபயோகப்படுகிறதே அல்லாமல்‌, உண்மையில்‌ ஆத்மார்த்தத்திற்கென்று சொல்லப்படும்‌ ஹிந்து மதத்திற்கு ஏதாவது பிரயோஜனப்படுகிறதா? ஹிந்து மதமே இன்னதென்று, ஹிந்துக்‌ களிலேயே 100-க்கு 99 Y/, ஹிந்துக்களுக்கு இன்னமும்‌ தெரியவே தெரியாது. ஒரு மகமதியரை மகமதிய மதம்‌ என்னவென்று கேட்டால்‌ தங்களுடைய மதத்‌ திற்கு “மகமது நபி” ஆதாரப்‌ புருஷரென்றும்‌, மகமதுவின்‌ கற்பனைப்படி நடப்பதென்றும்‌, மகமதுவைப்‌ பின்பற்றுவதென்றும்‌ சொல்லுவார்‌. ஒரு கிறிஸ்தவரைக்‌ கேட்டால்‌ தங்கள்‌ மதத்திற்கு கிருஸ்துநாதர்‌ ஆதார புருஷரென்றும்‌, கிருஸ்துவைப்‌ பின்பற்றுவதென்றும்‌, கிருஸ்துவின்‌ கற்பனைப்படி நடப்பதென்றும்‌ சொல்லுவார்‌. அதுபோல்‌ ஒரு ஹிந்துவைக்‌ கேட்டால்‌ தங்கள்‌ மதத்திற்கு தாங்கள்‌ யாருடைய கற்பனைப்படி நடக்கிற தென்றும்‌, யாருடைய கற்பனையை பின்பற்றுகிறார்களென்றும்‌ தங்களுக்கு யார்மத கர்த்தாவென்றும்‌ சொல்லுவதற்கோ, தெரிந்தவர்கள்‌ இருக்கிறார்களா வென்றும்‌ தாங்கள்‌ யாரைப்‌ பின்பற்றுகிறோமென்றும்‌, தாங்கள்‌ யார்‌. கற்பனைப்‌ படி நடக்கிறோமென்றும்‌ சொல்லத்‌ தகுந்தவர்‌ 1000 - ல்‌ ஒருவர்‌. கூட இருப்பதாகச்‌ சொல்ல முடியாது.ஆனால்‌ “இதெல்லாம்‌ நமக்கு எதற்கு? ஐயர்‌ சொன்னால்‌ சரி என்றும்‌, அதெல்லாம்‌ கேட்பதுகூட பாவமென்றும்‌” சொல்லத்தான்‌ கற்றிருக்கிறார்கள்‌. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்‌ மதத்‌ திற்காக, நம்‌ மதத்தினர்களால்‌ செலவு செய்யப்பட்டுவிட்டு, மதம்‌ இன்ன தென்றே அறியாதிருப்பார்களானால்‌, அம்‌ மதம்‌ எப்படி ஒரு தேசத்தில்‌ நிலைத்திருக்கமுடியும்‌? இம்மாதிரி மதத்திற்குக்‌ கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்‌, தூங்காமலும்‌, சாப்பிடாமலும்‌, பட்டினி கிடந்து கொண்டு அநாவசி யமாய்‌ ஏன்‌ செலவு செய்யப்பட வேண்டும்‌? மதத்திற்காக செலவு செய்து பாப்பரான குடும்பங்கள்‌ நமது நாட்டில்‌ வருடத்திற்கு வருடம்‌ எவ்வளவு வளர்ந்துக்‌ கொண்டு வருகின்றது. வைதீகச்‌ சடங்குகளுக்காகச்‌ செலவு செய்து பாப்பராய்க்‌ கொண்டு வரும்‌ குடும்பங்கள்‌ எவ்வளவு வளர்ந்துகொண்டு வருகின்றது. இவற்றைப்பற்றி இதுவரை யார்‌. கவனித்து இருக்கிறார்கள்‌? இவற்றை எல்லாம்‌ உணர்ந்துதான்‌ தற்காலமுள்ள பிராமணரல்லாத மந்திரிகள்‌ பிரயத்தனப்பட்டு தேவஸ்தானச்‌ சட்டமென்‌ பதாக ஓர்‌ சட்டம்‌ உண்டாக்கியிருக்கிறார்கள்‌. அச்சட்டத்தில்‌ குற்றமுள்ள பாகம்‌ இன்னதுதான்‌ என்று நாளது வரையில்‌ ஒருவராவது எடுத்துக்‌ காட்டவே யில்லை. வீணாக மதம்‌ போச்சு, மதம்‌ போச்சு என்று சப்தமிடு கின்றார்‌. களேயல்லாமல்‌ குற்றமென்னவென்று சொல்லுவதைக்‌ காணோம்‌. பாமர குடி அரசு - 1926 N 138 ஜனங்களையும்‌, ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ இந்த சட்டத்தைச்‌ செய்தனர்‌ என்கிற காரணத்திற்காக சட்டத்தை சந்தேகிக்கும்படி சில பிராமணர்களும்‌, பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ பிரசாரம்‌ செய்து வெற்றிப்‌ பெற்று வருகின்றனர்‌. ஏனெனில்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி என்றாலே, அது தேசத்‌ துரோகக்‌ கட்சி என ஜனங்கள்‌ நினைக்‌ கும்படியாக பிராமணர்களும்‌ அவர்களால்‌ கீர்த்திப்‌ பெற்று வயிறு வளர்க்கும்‌ பிராமணரல்லாதாரும்‌ பொய்ப்‌ பிரசாரம்‌ செய்து ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ பேரில்‌ ஒருவித தப்பபிப்பிராயத்தை ஜனங்களுக்குள்‌ உண்டாக்கி வைத்து விட்டப்‌ படியால்‌ பாமர ஜனங்களும்‌ ஏமாந்து நம்பி விடுகிறார்கள்‌. இதனால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியாரால்‌ நமது நாட்டுக்கு விளைந்திருக்கும்‌ நன்மைகளும்‌ மறைந்து போவதோடல்லாமல்‌ அதையே ஜனங்கள்‌ விரோத மாக நினைக்கும்படியாயும்‌ ஏற்பட்டு வருகின்றது. காரணமென்னவென்றால்‌ இந்தச்‌ சட்டத்தின்படி தர்மச்‌ சொத்துக்களை பிராமணர்களேதான்‌ சாப்பிட வேண்டும்‌ என்பதும்‌ பிராமணர்களுக்குக்‌ கொடுத்தால்தான்‌ புண்ணியம்‌ என்பதும்‌ பிராமணர்கள்தான்‌ இந்து மத தத்துவத்தை அறியலாமென்பதும்‌ பிராமணன்தான்‌ சாமியைத்‌ தொடலாம்‌, பிராமணன்தான்‌ வேதம்‌ முதலியவை படிக்கலாமென்பதும்‌, அவனுக்கு பணம்‌ கொடுத்தாற்தான்‌ சாமி தயவு சம்பா திக்கலாமென எண்ணுவதுமான குருட்டு நம்பிக்கைகள்‌ நமது நாட்டில்‌ ஒழிந்து போய்விடும்‌. ஆதலாற்தான்‌ பிராமணர்கள்‌ இதை எதிர்க்கிறார்கள்‌: சட்டசபை களிலும்‌ இதை ஒழிப்பதற்குப்‌ பிரயத்தனப்படுகிறார்கள்‌: ஐக்கோர்ட்டிலும்‌ வியாஜ்யம்‌ தொடுத்திருக்கின்றார்கள்‌. மடாதிபதிகளென்போர்களிலும்‌ ஆச்சாரியார்களென்போர்களிலும்‌; லோககுருவென்போர்களிலும்‌ பலர்‌ இப்‌ பிராமணர்களுக்கு பணத்தைக்‌ கொடுத்துச்‌ சீமைக்கு அனுப்புவதும்‌, சட்ட சபையில்‌ ஸ்தானம்‌ சம்பாதிப்பதற்காக வோட்டர்களுக்கு லஞ்சம்‌ கொடுப்‌ பதற்கும்‌ பிரசாரர்களுக்கு, பிராமணர்களுக்கு வோட்‌ வாங்கிக்‌ கொடுப்பதாகச்‌ செலவுக்குப்‌ பணம்‌ கொடுத்துக்‌ கொண்டும்‌ வருகின்றார்கள்‌. ஆதலால்‌ நீங்கள்‌ இவற்றைக்‌ கண்டு ஏமாந்து போகாமல்‌ உங்களிடத்தில்‌ யார்‌ வந்து வோட்‌ கேட்டாலும்‌, உங்களுக்கு கொடுக்க இஷ்டமிருக்கும்‌ பக்ஷத்தில்‌ தேவஸ்தான ஆக்டைக்‌ கெடுக்காமல்‌ காப்பாற்றுகிறோம்‌ என்று யார்‌ சொல்லு கின்றார்களோ அவர்களிடம்‌ பிரமாணம்‌ வாங்கிக்‌ கொண்டு அவர்களுக்கே வோட்‌ கொடுக்கவேண்டும்‌. அப்படிக்கில்லாமல்‌ ஏமாந்து நீங்கள்‌ உங்களு டைய வோட்டுகளை கவலையற்றுப்‌ பொய்ப்‌ பிரசாரங்களைக்‌ கண்டு ஏமாந்து அநாவசியமாய்‌ உபயோகப்படுத்தி விடுவீர்களேயானால்‌ பின்னால்‌ உங்கள்‌ தேசத்திற்கும்‌ மதத்திற்கும்‌, சமூகத்திற்கும்‌, பெரிய ஆபத்து ஏற்படுவதோடு நீங்களும்‌ தீண்டாதார்களாகிவிடுவீர்களென்பதை ஞாபகப்படுத்துகிறேன்‌. குறிப்பு 15121926 ஆம்‌ நாள்‌ பாலக்காட்டில்‌ சொற்பொழிவு குடி அரசு - சொற்பொழிவு - 28.02.1926 139 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுயாரால்யக்‌ ககூறியிண்‌ Gaiapapib ஜஸ்மூஸ்‌ ககூஷியாரிண்‌ மணச்சாக்ஷியும்‌ சென்னை கார்பொரேஷனிலிருக்கும்‌ சுயராஜ்யக்‌ கட்சி அங்கத்தினர்‌ கள்‌ தங்களுக்கு நம்பிக்கையில்லாததும்‌, தாங்கள்‌ செய்யாததும்‌, தாங்கள்‌ எதிர்ப்பதுமான கதர்‌ ராட்டினம்‌ என்னும்‌ விஷயங்களைக்‌ கார்ப்பொ ரேஷனுக்குள்‌ புகுத்தி, பிராமணரல்லாதார்‌ பேரில்‌ பழியையும்‌ வெறுப்பையும்‌ பொது ஜனங்களுக்கு உண்டாக்குவதற்காக பல தந்திரங்கள்‌ செய்கின்றார்கள்‌. அதாவது கார்பொரேஷன்‌ சிப்பந்திகள்‌ கட்டாயமாக கதர்‌ உடுத்த வேண்டும்‌. என்கிற ஓர்‌ தீர்மானத்தையும்‌, கார்பொரேஷன்‌ பள்ளிக்கூடங்களில்‌ படிக்கும்‌ பிள்ளைகளெல்லாம்‌ கைராட்டினம்‌ சுற்ற வேண்டுமென்கிற தீர்மானத்தையும்‌ நிறைவேற்றியிருக்கிறார்கள்‌. இவ்விரு தீர்மானங்களையும்‌ சுயராஜ்யக்‌ ககஷியார்‌ தங்கள்‌ திட்டத்தில்‌ ஒன்றாய்‌ ஒப்புக்‌ கொள்ளுவதுமில்லை; தாங்களும்‌ நடவடிக்கையில்‌ செய்வதில்லை.கதரைப்பற்றிக்‌ கார்பொரேஷன்‌ சபைக்கு வரும்போது மாத்திரமும்‌, வோட்டுக்‌ கேட்கும்‌ போது மாத்திர. மும்தான்‌ கதர்‌ கட்டிக்‌ கொள்ளவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறார்கள்‌. ராட்டினத்தைப்‌ பற்றியோவென்றால்‌, அது மகாத்மா பார்த்துக்கொள்ள வேண்டுமென்று விட்டு விட்டார்கள்‌. இப்படி இருக்க இதை கார்பொரேஷன்‌ சிப்பந்திகளுக்கு கட்டாயப்படுத்த சுயராஜ்யக்‌ ககஷியாருக்கு யோக்கியதை ஏது? அப்படி இவர்கள்‌ ஏதாவது தீர்மானம்‌ கொண்டு வருவதாயிருந்தாலும்‌, சம்பளம்‌ வாங்கும்போது மாத்திரம்‌ கதர்‌ கட்டவேண்டுமென்று தீர்மானித்தால்‌ அது சுயராஜ்யக்‌ கொள்கைக்கு யோக்கியமானதாயிருக்கும்‌! அப்படிக்கில்‌ லாமல்‌, தாங்கள்‌ மாத்திரம்‌ வேஷத்துக்குக்‌ கதர்‌ கட்டவேண்டும்‌, சிப்பந்திகள்‌ மாத்திரம்‌ எப்போதும்‌ கதர்‌ கட்டவேண்டுமென்று சொன்னால்‌, குடிகாரர்கள்‌ மதுவிலக்குப்‌ பிரசாரம்‌ செய்வது போலிருக்கின்றது. ராட்டினத்தைப்‌ பற்றியும்‌ இவர்கள்‌ தீர்மானம்‌ செய்வது, தாங்களும்‌ ராட்டினம்‌ சுற்றாமல்‌, ராட்டினச்‌ சங்கத்தில்‌ தாங்கள்‌ மெம்பராக இல்லாமல்‌,தங்கள்‌ பிள்ளைகளும்‌ ராட்டினம்‌ சுற்றாமல்‌, ராட்டினம்‌ சுற்றுகிறவர்களையும்‌ பார்த்துச்‌ சிரித்துக்கொண்டும்‌ பரிகாசம்‌ செய்து கொண்டும்‌ பள்ளிக்கூடத்துப்‌ பிள்ளைகளை ராட்டினம்‌ சுற்றக்‌ கட்டாயப்படுத்துவது விபசாரிகள்‌ கற்புப்‌ பிரசாரம்‌ செய்வது போலிருக்கின்றது. எனினும்‌, இம்மாதிரியான தீர்மானங்களைப்‌ பொது ஸ்தாபனங்களில்‌ கொண்டு வந்து பேசுவதின்‌ கருத்து, இவர்களைப்‌ போல்‌ வேஷம்‌ போட இஷ்டமில்லாத ஜஸ்டிஸ்‌ கக்ஷி முதலிய பிராமணரல்லாத குடி அரசு - 1926 N 140 மெம்பர்கள்‌ தங்கள்‌ மனச்சாக்ஷியை எடுத்துச்‌ சொல்லுவதின்‌ மூலம்‌, ஜனங்களுக்கு அவர்களிடம்‌ ஒரு வெறுப்பை உண்டாக்குவதற்கு கண்டு பிடிக்கப்பட்ட ஓர்‌ சூழ்ச்சியென்பது கடுகளவுள்ள ஞானமுள்ளவர்களுக்கும்‌ நன்றாய்‌ விளங்கும்‌. எப்படியென்றால்‌ காங்கிரசில்‌ கதரையும்‌, ராட்டினத்‌ தையும்‌ கட்டாயமாக மகாத்மா பிரேரேபிக்கும்‌ போது, ஸ்ரீமான்கள்‌ மோதி லால்‌ நேரு, சீனிவாசய்யங்கார்‌, ரெங்கசாமி ஐயங்கார்‌, சத்தியமூர்த்தி முதலிய பிராமணர்கள்‌ எதிர்த்துப்‌ பேசி அத்தீர்மானத்தைத்‌ தோற்‌ கடித்தது தேச பக்தியும்‌ மனச்சாக்ஷியும்படி நடந்ததாயும்‌ ஆகிவிடுகிறது! கார்பொரேஷன்‌ கூட்டத்தில்‌ ஸ்ரீமான்கள்‌ பி.வரதராஜுலு நாயுடு, சுந்தரராவு நாயுடு, ஓ. தணி காசலம்‌ செட்டியார்‌ முதலிய பிராமணரல்லாதார்கள்‌ எதிர்த்தது தேசத்‌ துரோகமும்‌ அக்கிரமமும்‌ ஆகி விடுகிறது. இதை யோசிக்கும்‌ போது நமது நாட்டு ராஜீய வாழ்வு பிராமணர்கள்‌ செய்வதெல்லாம்‌ தேசபக்தியென்று சொல்வதாகவும்‌, பிராமணரல்லாதார்‌ செய்வதெல்லாம்‌ தேசத்‌ துரோகமென்று சொல்வதாகவும்‌ ஏற்பட்டு விட்டதாகத்தான்‌ தீர்மானிக்கவேண்டும்‌. அதோடல்லாமல்‌ பிராமணரல்லாதாரிலேயே சிலபேர்‌ இவற்றை ஆதரிக்கவும்‌ இவ்வித பிராமணர்களுக்கு செல்வாக்கு தேடிக்‌ கொடுக்கவும்‌ பிராமணர்கள்‌. வாலைப்‌ பிடித்துக்கொண்டும்‌, கவி பாடிக்கொண்டும்‌ திரியவும்‌ அவர்கள்‌ செய்வது சரி, சரியென்று தங்கள்‌ பத்திரிகைகளில்‌ முழக்கம்‌ செய்யவும்‌ தயாராயிருக்கும்‌ போது நாம்‌ யாரை நோவது? குடி அரசு - கட்டுரை - 28.02.1926. 141 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 மண்ணிக்க வண்டும்‌ அச்சு எந்திரம்‌ ஒடிந்து போனதால்‌ சென்ற வார பத்திரிகை அனுப்ப முடியாமல்‌ போய்விட்டது பற்றி சந்தாதாரர்கள்‌ மன்னிக்க வேண்டுமாய்‌ பிரார்த்திக்கிறேன்‌. - ஈ.வெ.ராமசாமி குடி அரசு - அறிவிப்பு - 28.02.1926 குடி அரசு - 1926 N 142 ஏமாற்றுப்‌ பிரசாரம்‌ ஸ்ரீமான்கள்‌ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்‌ காந்தியின்‌ பிரதிநிதி யென்கிற பேரைச்சொல்லிக்‌ கொண்டும்‌, திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌. பிராமணரல்லாதார்‌ பிரதிநிதி என்கிற பெயரைச்‌ சொல்லிக்கொண்டும்‌, ஸ்ரீமான்கள்‌ ஏ.ரெங்கசாமி ஐயங்கார்‌, எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌, எஸ்‌. சத்திய மூர்த்தி ஆகியவர்கள்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ பேரைச்‌ சொல்லிக்கொண்டும்‌ காங்கிரஸ்‌ சார்பாக தேசத்திற்கு நன்மை செய்கிறவர்கள்‌ போல்‌ நடித்து,நமது நாட்டில்‌ ஏமாற்றுப்‌ பிரசாரம்‌ செய்து வருகின்றார்கள்‌. அப்படிச்‌ செய்வதிலும்‌, இவர்கள்‌ சொல்லிவரும்‌ விஷயங்கள்‌ ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத தாய்‌, கொஞ்சம்‌ புத்தியுள்ளவனும்‌ இவர்களுடைய புரட்டுகளை அறிந்து கொள்ளக்கூடிய மாதிரியில்‌ பேசி வருவது நமக்கே ஆச்சரியமாய்‌ இருக்‌ கின்றது. அதாவது:- பிராமணர்களின்‌ கக்ஷியாகிய தமிழ்நாட்டு சுயராஜ்யக்‌ ககஷிக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்கும்‌ விஷயத்தில்‌ “பிராமணரல்லாதார்‌ பிரதிநிதியான” முதலியார்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்டசபையில்‌ ஒத்துழையாமை செய்வார்‌. கள்‌; ஆதலால்‌ அவர்களுக்கு வோட்டுக்‌ கொடுங்களென்கிறார்‌. ஸ்ரீமான்‌ ஆச்சாரியாரோ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்டசபையில்‌ மதுவிலக்கு செய்வார்‌. கள்‌; ஆதலால்‌ அவர்களுக்கு வோட்‌ செய்யுங்கள்‌ என்கிறார்‌. சுயராஜ்யக்‌ கக்ஷியாரோ உத்தியோகமும்‌ ஒப்புக்கொள்ளமாட்டோம்‌, வெளியிலும்‌ வந்து விடுவோம்‌ என்கிறார்கள்‌. காங்கிரஸோ சர்க்காரிடம்‌ இந்தியாவின்‌ சார்பாய்‌ ஓர்‌ சீர்திருத்தத்‌ திட்டம்‌ கொடுத்தது. அதை ஒப்புக்கொள்ளச்‌ செய்யப்‌ பார்ப்பது; சர்க்கார்‌ ஒப்புக்கொள்ளாவிட்டால்‌, உடனே சட்டசபையை விட்டு வெளியே வந்துவிட வேண்டியது என்று கட்டளை யிட்டிருக்கிறது. சர்க்காரோ இந்தியா சட்டசபையில்‌ சீர்திருத்த சம்பந்தமாய்‌ நிறைவேறின ஓர்‌. தீர்மானத்தை நிராகரித்து குப்பைத்‌ தொட்டியில்‌ போட்டு விட்டதோடல்லாமல்‌, சென்ற வாரம்‌ இராஜாங்க சபையிலும்‌ “உங்கள்‌ திட்டத்தை ஏற்றுக்‌ கொள்ளவும்‌ முடியாது; உங்களுக்கு நல்லபுத்தி வரும்வரை உங்களைப்‌ பற்றிக்‌ கவனிக்கப்‌ படவும்‌ மாட்டாது” என்று சொல்லியாகிவிட்டது. இந்த நிலைமையில்‌ சட்டசபையில்‌ வோட்டுக்‌ கேட்பதின்‌ கருத்தென்ன வென்பதை வாசகர்கள்தான்‌ உணர வேண்டும்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ சொல்லுகிறபடி சட்டசபையில்‌ ஒத்துழையாமை 143 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 செய்வதாயிருந்தால்‌, ஒரு தடவை சுயராஜ்யக்‌ கட்சியாரின்‌ திட்டத்தை நிராகரித்தும்‌ சென்ற வாரத்தில்‌ இராஜாங்க சபையில்‌ இந்தியர்கள்‌, எவ்வித. சீர்திருத்தத்துக்கும்‌ லாயக்கில்லை யென்றும்‌, உங்களுக்குப்‌ புத்தி வரும்‌ வரை: ஒன்றும்‌ கொடுக்கப்படமாட்டாதென்றும்‌ சர்க்காரார்‌ சொன்ன பிறகு கூட, சுயராஜ்யக்‌ ககஷியார்‌ சட்டசபைக்குப்‌ போக வோட்டு வாங்கிக்‌ கொடுப்பதற்கு ஏன்‌ ஊர்‌, ஊராய்த்‌ திரிகிறாரோ நமக்கு விளங்கவில்லை. நமது முதலியா ருடைய அகராதியில்‌ உதைத்த காலுக்கு முத்தமிட்டுப்‌ பல்லைக்‌ கெஞ்சுவது தான்‌ ஒத்துழையாமைக்கு அர்த்தம்‌ போலிருக்கிறது. ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ சொல்லுவது அதைவிட வேடிக்கையாயிருக்‌ கிறது. “திடீரென்று சட்டசபையை விட்டு வெளியே வந்து விடுவதையும்‌, ஒத்துழையாமை உணர்ச்சி உள்ளவர்களையும்‌, உத்தியோகம்‌ ஒப்புக்கொள்‌ ளாதவர்களையும்‌” வைத்துக்‌ கொண்டு அவர்களுக்கு வோட்‌ வாங்கிக்‌ கொடுத்து, சட்டசபையில்‌ எப்படி கள்ளை நிறுத்த முடியுமோ நமக்குப்‌ புரிய வில்லை. கள்ளை நிறுத்த வேண்டுமென தீர்மானம்‌ கொண்டு வருவ தாயிருந்தால்‌ அதன்‌ வரும்படியில்‌ நடைபெறும்‌ சர்க்காருக்கு அதனாலேற்‌ படும்‌ நஷ்டத்துக்குத்‌ தகுந்தபடி வரவு- செலவுத்‌ திட்டம்‌ போட்டுக்‌ கொடுக்க வேண்டும்‌. கள்ளை நிறுத்தும்‌ தீர்மானத்தையும்‌, வரவு-செலவு திட்டத்தையும்‌ சர்க்காரார்‌ ஒப்புக்கொள்ளவேண்டும்‌; அவ்விலாக்காக்களை நடத்த உத்தி யோகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌.இவ்வளவிற்கும்‌ இவர்கள்‌ சம்மதித்‌ தாலும்‌ சர்க்காரார்‌ பூரண மதுவிலக்கை ஒப்புக்கொள்ள வேண்டும்‌. அதற்காக இவர்கள்‌ திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்‌. இவர்களுக்கு உத்தியோகம்‌ கொடுக்கவும்‌ சம்மதிக்க வேண்டும்‌. இவ்வளவும்‌ நடப்பதாயிருந்தாலும்‌ சீர்திருத்த திட்டத்தைச்‌ சர்க்காரார்‌ ஒப்புக்கொள்ளா விட்டால்‌ இவர்கள்‌ வெளி யிலும்‌ வந்து விட வேண்டும்‌. இப்படியிருக்க சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ மது விலக்கைச்‌ செய்து விடுவார்கள்‌ என்று சொல்லுவது எப்படி ஜனங்கள்‌ நம்புவார்களென்று இவர்‌ நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஸ்ரீமான்‌ ஆச்சாரியார்‌ அகராதியில்‌, அண்டப்‌ புரட்டோ, ஆகாசப்‌ புளுகோ சொல்லி பிராமணரல்லாத வோட்டர்களை ஏமாற்றி, வோட்டு வாங்கிக்கொடுத்து மதுவருந்தும்‌ - மது விற்கும்‌ - மது உற்பத்திசெய்யும்‌- சட்டசபை மூலம்‌ மது ஒழிக்க முடியாது என்று சொல்லும்‌ பிராமணர்களையும்‌, பிராமணர்கள்‌ தாளத்துக்குத்‌ தகுந்தபடி ஆடும்‌ சில பிராமணரல்லாதாரையும்‌, சட்டசபையில்‌ நிரப்பி, பிராமணரல்லாதாரை ஒடுக்கி ஒழித்துப்‌ பிராமண ஆதிக்கத்தை நிலைநிறுத்தப்‌ பார்ப்பதுதான்‌ மது விலக்குப்‌ பிரசாரம்‌ என்பதற்கு அர்த்தம்‌ போலும்‌. “ஜஸ்டிஸ்‌ கட்சியாரும்‌ மிதவாதக்‌ கட்சியாரும்‌ சுயேட்சைக்‌ கட்சி யாரும்‌ ஒத்துழைப்புக்காரர்கள்‌; நாங்கள்‌ பரஸ்பர ஒத்துழைப்புக்‌ கூடச்‌ செய்ய மாட்டோம்‌; கவர்ன்மெண்ட்டுக்கு தோல்வி மேல்‌ தோல்வி ஏற்படுத்தி விடு வோம்‌: எங்கள்‌ சொற்படி சர்க்கார்‌ கேட்காவிட்டால்‌ சட்டசபையை விட்டு விலகி வந்துவிடுவோம்‌; உத்தியோகம்‌ ஏற்கமாட்டோம்‌; இரட்டை ஆட்சி உள்ள சட்டசபையில்‌ அதிகாரமுமில்லை, பொறுப்பும்‌ இல்லை; வீண்‌ சண்‌ குடி அரசு - 1926 (N 144 டைக்கும்‌, கட்சிக்கும்‌, அதிகச்‌ செலவிற்கும்தான்‌ அதிக இடமிருக்கின்றது. ஆதலால்‌ அதை உடைத்தெறிய வேண்டும்‌ என்று சொல்லும்‌ சுயராஜ்யக்‌ ககஷியாருக்கு சட்டசபையில்‌ எந்தக்‌ காரியம்‌ செய்ய பொறுப்பேற்றுக்‌ கொள்ள முடியும்‌? தவிர பட்டதாரிகளும்‌, சர்க்கார்‌ நியமன உத்தியோகம்‌ பெற்றவர்களும்‌ சென்ற தேர்தலில்‌ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்‌ றாமல்‌ 1000, 5000 சம்பளம்‌ வரும்‌ பெரிய உத்தியோகங்களையும்‌, பதவி களையும்‌ பெற்றுக்கொண்டு, அவைகளின்‌ மூலம்‌ சர்க்காருக்கு உதவி செய்து வரும்‌ கக்ஷியாராகிய இவர்கள்‌ எப்படி வாக்குத்தத்தப்படி நடக்க முடியும்‌? எப்படி இவர்கள்‌ ஏதாவது ஓர்‌ நிலையில்‌ நிற்க முடியும்‌? கள்ளை ஒழிக்க சர்க்கார்‌ சம்மதம்‌ வேண்டும்‌. மூன்று வருடக்‌ காலமாவது விடாமல்‌ சட்டசபை யிலிருக்க வேண்டும்‌; சட்டசபையின்‌ மூலம்‌ கள்ளை ஒழிக்கலாமென்ற நம்பிக்கை வேண்டும்‌. ஆகிய இக்கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்கள்‌ போல்‌ நடிப்பவர்கள்‌ எப்படி சட்டசபைக்கு போகப்‌ பிரியப்படுகின்றார்கள்‌ என்பது வாசகர்களே யோசித்துப்‌ பார்த்தால்‌ இதன்‌ இரகசியம்‌ நன்றாய்‌ விளங்கும்‌. இவர்கள்‌ அகராதியில்‌ சுயராஜ்யக்‌ கட்சி என்பதற்கு என்ன வேண்டுமானாலும்‌ சொல்லி, ஜனங்களை ஏமாற்றித்‌ தாங்கள்‌ சட்டசபையில்‌ போய்‌ உட்கார்ந்துக்‌ கொண்டு பிராமணரல்லாதாரால்‌ செய்திருக்கும்‌ தேவஸ்‌ தான சட்டம்‌, கல்விச்‌ சட்டம்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஆகிய சிறிதள வாவது பிராமணரல்லாதாருக்கு அநுகூலமாயிருக்கும்‌ விஷயங்களை ஒழித்து, அதிகாரத்திலும்‌ பதவியிலுமிருக்கும்‌ பிராமணரல்லாதாரையெல்லாம்‌. வெளியில்‌ இழுத்து விட்டுத்‌ தாங்கள்‌ போய்‌ அந்த ஸ்தானங்களில்‌ உட்கார்ந்துக்‌ கொண்டு சர்க்காருக்கு ஒற்றர்களாயிருந்து, தங்கள்‌ இனத்தாருக்‌ கெல்லாம்‌ உத்தியோகம்‌ வாங்கிக்‌ கொடுத்து, பிராமணரல்லாதாரை அடியோடு நசுக்குவதுதான்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு அர்த்தம்‌ போலும்‌. இதைப்பற்றி பம்பாய்‌ மாகாணத்தில்‌, திலகர்‌ பத்திரிகை யென்று சொல்லப்படும்‌ “மராட்டா” என்கிற ஓர்‌ பிராமணப்‌ பத்திரிகை எழுதியிருப்பதைப்‌ பார்த்தாலே “தமிழ்நாட்டு ராஜீய பிராமணர்களின்‌ யோக்கியதை நன்றாய்‌ விளங்கும்‌. அதாவது:- “தமிழ்நாட்டுக்‌ காங்கிரஸ்‌ கமிட்டியார்‌ வெளியிட்டிருக்கும்‌ தேர்தல்‌ விளம்பரமானது கான்பூர்‌ காங்கிரஸ்‌ தீர்மானத்துக்கு விரோதமாயிருக்கிறது. சட்டசபைகளைவிட்டு விலகுதலும்‌ தடை வேலை செய்வதும்‌ தங்களுடைய திட்டமென்று சொல்லிக்‌ கொண்டு, அதே சமயத்தில்‌ கள்ளை ஒழிக்கப்‌ பிரயாசைப்படுகின்றோமெனச்‌ சொல்லுவது ஒன்றுக்கொன்று பொருத்தமா யில்லை. காங்கிரஸ்காரர்கள்‌ அடுத்த தேர்தலில்‌ நாணயமாய்‌ நடந்து கொள்வ தானால்‌, முட்டுக்‌ கட்டை போடுவதன்‌ மூலம்‌ சட்டசபையில்‌ வேலை செய்வோமென்று தான்‌ சொல்லிப்‌ போய்ப்‌ போராட வேண்டுமேயொழிய, குடியை ஒழிக்கப்போகிறோம்‌ என்று சொல்லிப்‌ போகப்‌ பார்ப்பது பாமர: ஜனங்களின்‌ கண்களில்‌ மண்ணைத்‌ தூவுவதான துரோகம்‌ செய்ததாகும்‌”. இதற்குக்‌ காந்தியடிகளைப்‌ பின்பற்றுவோர்‌ என்று சொல்லிக்‌ கொள்‌ 145 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ளும்‌ ஸ்ரீமான்‌ முதலியாரும்‌, காந்தியடிகளின்‌ சிஷ்யர்‌ என்று பொது ஜனங்கள்‌ கருதும்படி நடக்கும்‌ ஸ்ரீமான்‌ ஆச்சாரியாரும்‌ ஏதாவது பதில்‌ சொல்லு வார்களா? அல்லது “திட்டு வந்து பெட்டி நிறைகிறதா, துட்டு வந்து பெட்டி நிறைகிறதா” என்ற பழமொழிப்‌ படிக்கு யாரோ, எவரோ நம்மை எப்படியும்‌ சொல்லிக்‌ கொள்ளட்டும்‌; நமக்கு கொஞ்சம்‌ நஞ்சம்‌ உள்ள நற்‌ பெயரைக்‌ கொண்டு பிராமணாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளலாம்‌ என்று தங்கள்‌. ஏமாற்றுப்‌ பிரசாரத்தை நடத்திக்‌ கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. குடி அரசு - தலையங்கம்‌ - 28.02.1926. குடி அரசு - 1926 N 146 வங்கானத்தில்‌ வகுப்புவாரிய்‌ பிரதிநிதித்துவம்‌ இம்‌ மாதம்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கும்‌ வங்காள சட்டசபையில்‌ சுயராஜ்யக்‌ கட்சியைச்‌ சேர்ந்த ஒரு பிராமணரல்லாத அங்கத்தினர்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பற்றி ஒரு தீர்மானம்‌ கொண்டு வந்தார்‌. அதாவது:- “இம்மாகாணத்தில்‌ பற்பல வகுப்பினருடைய ஜனத்‌ தொகைக்குத்‌ தக்கபடி இந்த சபைக்குப்‌ பிரதிநிதிகள்‌ தேர்ந்தெடுக்கப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்‌” என்கிற தீர்மானத்தைப்‌ பிரேரேபித்தார்‌. குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களான ஆங்கிலோ-இந்தியர்‌, ஐரோப்பியர்‌, இந்திய கிருஸ்தவர்‌ முதலியவர்கள்‌ தங்களுக்கு ஒன்றுமில்லாமல்‌ போய்விடுமோ எனப்‌ பயந்து இதை ஆக்ஷேபிக்கத்‌ தொடங்கினார்கள்‌. ஸர்‌. அப்துர்‌ ரஹிம்‌ இவ்வகுப்பார்களுக்கும்‌ சரியான பிரதிநிதித்துவம்‌ கிடைக்கும்‌ படியாக ஒரு திருத்தம்‌ அசல்‌ தீர்மானத்தோடு சேர்த்தார்‌. அதாவது:- “குறைந்த வகுப்பினர்‌ முதலியவர்களுக்கும்‌ போதுமான பிரதிநிதித்‌ துவம்‌ ஏற்படுத்திக்‌ கொடுக்க வேண்டும்‌” என்ற திருத்தத்தை பிரேரேபித்தார்‌. இதற்கு விரோதமாயிருந்த சிலர்‌, காஞ்சீபுரத்தில்‌ செய்த தந்திரத்தைப்‌ போலவே சட்டம்‌ ஒழுங்கு என்பதன்‌ பேரால்‌ இதை நசுக்கிவிடப்‌ பார்த்தார்‌. கள்‌. ஆனால்‌ அக்கூட்டத்தின்‌ தலைவர்‌ காஞ்சீபுரத்‌ தலைவர்‌ போல்‌ இல்லா மல்‌ நேர்மையும்‌ தன்‌ காலிலேயே நின்று கொள்ளக்கூடிய சக்தியும்‌ வாய்ந்த வராயிருந்தபடியால்‌, இத்தீர்மானங்கள்‌ ஒழுங்குதான்‌ என்று சொல்லி ஓட்டுக்கு விடப்போகும்‌ தருவாயில்‌, அக்கிராசனாதிபதியை வம்புச்‌ சண்டைக்கு இழுப்பது போல்‌ சிலர்‌ அத்துக்கு மீறிப்‌ பேசி தாங்கள்‌ அக்கிராசனாதிபதியால்‌ வெளியிலனுப்பப்படவேண்டுமென்றே நடந்து கொண்டு வெளியில்‌ போய்‌ விட்டார்கள்‌.பிறகு வெளியே போகப்பட்டவர்கள்‌ ஒன்று கூடி அக்கிராசனாதி பதியை நீக்கிவிட ஒரு தீர்மானம்‌ கொண்டு வருவதாகச்‌ சொல்லிக்‌ கொண்டு உள்ளே வந்தார்கள்‌. அத்தீர்மானத்தையும்‌ அங்கீகரித்து அக்கிராசனாதிபதி ஓட்டுக்கு விட்டதில்‌ அக்கிராசனாதிபதியை நீக்கி விட வேண்டும்‌ என்கிற தீர்மானம்‌ தோல்வியுற்றது. ஆனபோதிலும்‌ நிறைவேறின வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ தீர்மானத்தை எப்படியாவது ஒழிக்க மறுபடியும்‌ சிலர்‌ கூடிக்‌ கொண்டு யோசனை செய்வதாய்த்‌ தெரியவருகிறது. குடி அரசு - கட்டுரை - 28.02.1926 147 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிராமணார்கனின்‌ சங்கங்கள்‌ பிறவியில்‌ உயர்வு தாழ்வு உண்டு என்பதையும்‌, அவற்றில்‌ பிராமணர்‌: களாகிய தாங்கள்தான்‌ உயர்ந்தவர்கள்‌ என்பதையும்‌ நிலை நிறுத்த இதுசமயம்‌ நமது நாட்டில்‌ ஆங்காங்கு பிராமண சங்கங்கள்‌ இரகசியமாயும்‌ வெளிப்‌ படையாயும்‌ ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது தேசீய பிராமணர்கள்‌ நம்மி டம்‌ வரும்போது எல்லோரும்‌ சமம்‌ என்று சொல்லிக்‌ கொண்டும்‌, தீண்டாமை, உயர்வு - தாழ்வு இவைகளை ஒழிக்கப்‌ போகிறோம்‌ என்று சொல்லிக்‌ கொண்டும்‌ வோட்டுப்‌ பெறுவதும்‌, பிராமண சங்கங்களுக்குப்‌ போய்‌ தீண்டா மையையும்‌ உயர்வு தாழ்வையும்‌ நிலை நிறுத்த அவர்களுக்கு வழி சொல்லிக்‌ கொடுப்பதும்‌ அதற்கநுகூலமாய்‌ நம்முடைய வோட்டு பலன்களை உபயோகப்படுத்துவதுமாக இருக்கிறார்கள்‌. இவற்றை நம்மில்‌ பலர்‌ அறிந்தும்‌ தங்கள்‌ சுய நலத்தை முன்னிட்டு அறியாதவர்போல்‌ நடித்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக்‌ கொடுத்தும்‌, பிராமண சங்கங்களை ஆதரித்தும்‌ திரிகிறார்‌. கள்‌. இதை அறிய வோட்டர்களுக்கு இன்னமும்‌ யோக்கியதை வரவில்லை என்றால்‌ இந்த வோட்டர்களின்‌ பிரதிநிதிகள்‌ எப்படி நமது நாட்டுக்குப்‌ பிரதிநிதிகளாவார்கள்‌? குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 28.02.1926. குடி அரசு - 1926 N 148 பிராமண உயபாத்தியாயர்கணிண்‌ பேரில்‌ உன்ன பிப்ரவரி மாதம்‌ 19-ந்‌ தேதி கோயமுத்தூரில்‌ நடந்த ஜில்லாக்‌ கல்விச்‌ சபைக்‌ கூட்டத்தில்‌ சட்டசபை மெம்பரான ஸ்ரீமான்‌ ஆர்‌.வீரய்யன்‌ ஒரு தீர்மானம்‌ கொண்டுவந்தார்‌. அதாவது, “அழுத்தப்பட்ட வகுப்பைச்‌ சேர்ந்த பிள்ளைகள்‌ பள்ளிக்கூடத்தில்‌ அதிகமாகப்‌ படிப்பதற்காகப்‌ பொதுப்பள்ளிக்‌ கூடங்களுக்கு, தாலூகாபோர்டு, ஜில்லாபோர்டு, முனிசிபல்‌ கவுன்சில்‌ முதலிய வற்றின்‌ தலைவர்கள்‌ பிராமணரல்லாத உபாத்தியாயர்களையே நியமிக்க வேண்டும்‌. இப்பொழுதுள்ள ஒரு பிராமண உபாத்தியாயர்‌ வேறு பள்ளிக்‌ கூடங்களுக்கு மாற்றி விட வேண்டும்‌” என்பதாகப்‌ பிரேரேபித்தார்‌. இதை ஜனாப்‌ கலந்தர்‌ சாயபு ஆமோதித்தார்‌. இதை ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார்‌ இத்தீர்மானம்‌ பிராமணர்களைக்‌ குறைகூறுவதாயிருக்கிறது என்ற காரணத்தால்‌ ஒழுங்குத்‌ தவறென்ற ஆக்ஷேபனை கிளப்பியதில்‌ தலைவர்‌ இவ்வித தீர்மானம்‌ கொண்டுவர யாருக்கும்‌ அவகாசம்‌ உண்டென்‌ றும்‌ ஒழுங்கானதுதான்‌ என்பதாகவும்‌ சொல்லி விட்டார்‌. பிறகு இது வெளிப்படையாய்‌ ஒரு வகுப்பாரைப்‌ பாதிக்கிறது என்று சிலர்‌ கருதியதால்‌, கோயமுத்தூர்‌ ஜில்லாபோர்டு பிரசிடெண்டும்‌ - அந்நகர்‌ முனிசிபல்‌ சேர்‌ மெனுமான ஸ்ரீமான்‌ சி.எஸ்‌. இரத்தினசபாபதி முதலியார்‌ முழு தீர்மானத்‌ திற்குமாக ஒரு திருத்தம்‌ கொண்டு வந்தார்‌. அதாவது, “லோகல்‌ போர்டு. முனிசிபாலிட்டி இவைகளின்‌ அக்கிராசனாதிபதிகள்‌, தங்கள்‌ அதிகாரத்தின்‌ கீழ்‌ உள்ள பாடசாலைக்கு அழுத்தப்பட்ட வகுப்புப்பிள்ளைகள்‌ தாராளமாய்ச்‌ சேர்த்துக்‌ கொள்ளத்தக்க உபாத்தியாயர்களையே நியமிக்க இக்கல்விச்‌ சபை சிபார்சு செய்கிறது” என்று பிரேரேபித்தார்‌. தீர்மானம்‌ தெளிவாயில்லாததால்‌ ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ திருத்தத்தை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டதின்‌ காரணமாய்‌, அசல்‌ பிரேரேபனை தோல்வியுற்றுப்‌ போய்‌ விட்டது. வாசகர்கள்‌ இதிலிருந்தே கீழ்தர பள்ளிக்கூடத்திலிருந்தே தாழ்த்தப்பட்ட வகுப்புப்‌ பிள்ளைகளின்‌ படிப்புக்குப்‌ பிராமண உபாத்தியாயர்களால்‌ எவ்வளவு தடை இருக்கிறது என்பதை ஊகித்துக்‌ கொள்ளலாம்‌. குடி அரசு - கட்டுரை - 28.02.1926. 149 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிராமணப்‌ பத்திரிகைகளிண்‌ பிரசாரம்‌ உஷார்‌ ! ஊஷார்‌!! உஷார்‌!!! “சித்திரபுத்திரன்‌ பொது ஜனங்கள்‌ தேசத்தின்‌ உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப்‌ பத்திரிகைகள்‌ என்று சொல்லுவார்கள்‌. ஆனால்‌, அவை நமது நாட்டின்‌ உண்மை நிலையை மறைத்துப்‌ பொய்யைச்‌ சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக்‌ கெடுத்து ஒருவர்‌ பிழைப்ப தற்குத்தான்‌ அவை முழுவதும்‌ ஆதாரமாயிருந்து வருகிறது.நமது நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌, பெரும்பான்மையான மக்கள்‌ தங்கள்‌ முன்னோர்கள்‌. எவ்வளவு பெருமை உடையவர்களாயும்‌, இத்‌ தேசத்தையே ஆண்டவர்‌. கள௱யும்‌, பராக்கிரமசாலிகளாகவும்‌ இருந்து வந்திருந்த போதிலும்‌ இன்றையத்‌ தினம்‌ “பிற்பட்டவர்‌”களாகவும்‌, “சூத்திரர்‌ களாகவும்‌ இருப்பது ஏன்‌? இதற்குப்‌ பொறுப்பாளி யார்‌ என்று பார்த்தால்‌ அது நமது நாட்டுப்‌ பத்திரிகை களேயாகும்‌. தற்காலம்‌ நமது நாட்டில்‌ செல்வாக்குப்‌ பெற்று பெரும்பாலோர்‌. கையிலும்‌ ஊசலாடுவது பிராமணப்‌ பத்திரிகைகளே அல்லவா? அப்பத்‌ திரிகைகளுக்கு அவ்வவ்விடங்களின்‌ சமாச்சாரங்களை எழுதியனுப்பும்‌ நிரூபர்களும்‌ பிராமணர்களே அல்லவா? அப்‌ பத்திரிகைகளுக்கு ஏஜெண்டு களாயிருந்து விற்றுக்‌ கொடுப்பவர்களும்‌ பெரும்பாலும்‌ பிராமணர்களே. அல்லவா? அப்படி இருந்தும்‌ அதற்குப்‌ பணம்‌ கொடுத்து வாங்கிப்‌ படித்து கெட்டுப்போகிறவர்கள்‌ பிராமணரல்லாதார்களாகவே மாத்திரம்‌ இருக்கிறார்‌. கள்‌. பிராமணப்‌ பத்திரிகைகள்‌ இதுசமயம்‌ நமது நாட்டில்‌ ஒவ்வொரு பட்டிணங்களிலும்‌, கிராமங்களிலும்‌ பிரவேசித்திருக்கின்றது. அங்குள்ள படிக்கத்‌ தகுந்த ஒவ்வொருவரும்‌ அப்பத்திரிகைகளைப்‌ படிப்பதும்‌, அவற்‌ றை உண்மை என்று நம்புவதும்‌, மற்றவர்களுக்கு அவற்றை எடுத்துச்‌ சொல்லு வதுமான வழிகளில்‌ பிராமணப்‌ பத்திரிகைகளின்‌ அபிப்ராயத்தை தேச மெல்லாம்‌ பரப்பச்‌ செய்துவிடுகின்றன. சாதாரணமாய்‌ நமது கிராமங்க ளிலுள்ள பாமர ஜனங்களும்‌ “சுதேசமித்திரன்‌” என்னும்‌ பிராமணப்‌ பத்திரிகையின்‌ அபிப்பிராயத்தைத்தான்‌ உண்மையான ராஜீய அபிப்ராய மென்றும்‌, அது யார்‌ யாரைத்‌ தலைவர்‌ என்று சொல்லுகிறதோ அவர்களைத்‌ குடி அரசு - 1926 N 150 தலைவர்கள்‌ என்றும்‌, அது யார்‌ யாரைத்‌ தேசத்‌ துரோகியென்று சொல்லு கிறதோ அவர்களைத்‌ தேசத்‌ துரோகி என்றும்‌, அது சொல்லுகிறபடியெல்லாம்‌ நடப்பதும்‌ நினைப்பதும்தான்‌ தேச கைங்கரியமென்றும்‌ நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. அதுபோலவே மற்றும்‌ “சுயராஜ்யா” என்னும்‌ ஒரு தமிழ்‌ தினசரிப்‌ பத்திரிகையும்‌ பிராமணர்களால்‌ நடத்தப்பட்டாலும்‌ பிராமண: ரல்லாதாரை ஏமாற்றுவதற்காக வேண்டி அதன்‌ உண்மைப்‌ பத்திராதி பர்கள்‌ பெயரை மறைத்து பிராமணரல்லாதார்‌ பெயரைப்‌ போட்டு ஏமாற்றி வருகிறார்‌. கள்‌. உண்மையில்‌ அதன்‌ ஆசிரியர்கள்‌ ஒரு ஐயங்கார்‌ பிராமணரும்‌ ஒரு விபூதிப்‌ பிராமணருமாயிருக்க அது வெளியில்‌ தெரிந்தால்‌ அப்பத்திரிகை யைப்‌ பிராமணப்‌ பத்திரிகை யென்று பாமர ஜனங்கள்‌ நினைத்து விடுவார்கள்‌ என்று வேண்டுமென்றே மறைத்துவிட்டு, ஒத்துழையாமையில்‌ ஈடுபட்டுத்‌ தங்கள்‌ உத்தியோகங்களை விட்டு கஷ்டப்பட்டதால்‌ செல்வாக்கு ஏற்பட்டி ருக்கும்‌ ஸ்ரீமான்கள்‌ கிருபாநிதி, திரிகூட சுந்தரம்பிள்ளை ஆகிய இருவர்‌ பெயர்களைக்‌ காட்டித்‌ தங்கள்‌ நன்மைக்கான அபிப்ராயங்களை ரெயார்கள்‌. அபிப்ராயமென்று நினைக்கும்படி ஜனங்களுக்குள்‌ புகுத்தி வருகிறார்கள்‌. இந்த பிராமணரல்லாத கனவான்களும்‌ கொஞ்சமும்‌ கவலையில்லாமல்‌ இவ்வித செய்கைக்குத்‌ தங்கள்‌ பெயரைக்‌ கொடுத்திருக்கிறார்கள்‌. பெரும்பாலும்‌ இப்பத்திரிகைகளுக்கு மூலதனம்‌ ஏறக்குறைய முக்கால்‌ பாகம்‌ பிராமணரல்லாதார்களுடையதே. அதை வாங்கி வாசித்து அவர்க ளுக்கு லாபம்‌ கொடுக்கிறவர்களும்‌ பிராமணரல்லாதார்களே. இவ்வளவு இருந்தாலும்‌ இப்பத்திரிகைகளைக்‌ கண்டால்‌ பிராமணரல்லாத தலைவர்கள்‌. என்போர்களிலும்‌, பத்திராதிபர்கள்‌ என்போர்களிலும்‌ பெரும்பாலோர்‌. பூனையைக்‌ கண்ட எலி போல்‌ நடுங்குகிறார்கள்‌. தங்கள்‌ ஜாதகத்தையே அவர்களிடம்‌ ஒப்படைத்து விட்டு அந்த பிராமணப்‌ பத்திரிகைகளையே தங்களுக்கு பலன்‌ எழுதும்படி பல்லைக்‌ கெஞ்சிக்‌ கொண்டு திரிகிறார்கள்‌. மகாத்மா போன்றவர்களே இப்பிராமணப்‌ பத்திரிகைகளைக்‌ கண்டால்‌ சில சமயங்களில்‌ பயப்பட்டு சமயோசிதமாய்‌ நடக்க வேண்டியிருக்கிற தென்றால்‌ ஐயோ! பாவம்‌ மற்ற ஆகாசக்‌ கோட்டைகளைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்‌ டுமா? அப்புறம்‌ குட்டித்தலைவர்கள்‌, தொண்டர்கள்‌ என்போர்களைப்‌ பற்றிக்‌ கேட்கவும்‌ வேண்டுமா? இம்மாதிரி ஒரு பெரிய சமூகத்தையே அதன்‌ தலைவர்கள்‌ என்போ ரையே இப்பத்திரிகைகள்‌ அடக்கி ஆண்டுக்கொண்டு, தங்கள்‌ ஆதிக்‌ கத்தைப்‌ பலப்படுத்திக்‌ கொண்டு வருவதை எத்தனை நாள்களுக்குத்தான்‌ சகித்துக்கொண்டு வருவதென நினைத்து சரியான மனிதர்கள்‌ என்போர்‌ யாரா வது துணிந்து இதன்‌ தந்திரத்தை வெளிப்படுத்தக்‌ கொஞ்சம்‌ பிரயத்தனப்‌ பட்டால்‌ அவர்களை அடியோடு ஒழிக்க பிராமணப்‌ பத்திரிகைகளும்‌, பிராமணத்‌ தலைவர்களும்‌, பிராமண அதிகாரிகளும்‌ எல்லாரும்‌ ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்‌. அந்த சமயங்களில்‌ அய்யர்‌ - அய்யங்கார்‌ - 151 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஆச்சாரியார்‌ - ராவு என்கிற பேதமே இல்லாமலும்‌ மிதவாதி - சுயராஜ்யக்‌ கட்சி - ஒத்துழையாக்‌ கட்சி -காந்தி சிஷ்யக்‌ கட்சி - சர்க்கார்‌ உத்தியோகஸ்தர்‌. என்கிற வித்தியாசமே இல்லாமலும்‌, ஒரே கட்டுப்பாடு - கம்பியில்லாத தந்திபோல்‌ ஒரே அபிப்ராயம்‌, ஆளுக்கொரு வேலை; அதாவது பத்திரிகை களில்‌ வைவதொருவர்‌; பிரசங்கம்‌ மூலம்‌ வைவதொருவர்‌; பணம்‌ கொடுத்து வையச்‌ சொல்லுவது ஒருவர்‌; காந்தியிடம்‌ சாடி சொல்லுவது ஒருவர்‌; சர்க்கா ருக்குக்‌ காட்டிக்‌ கொடுப்பது ஒருவர்‌; அதிகாரத்தைக்‌ கொண்டு நசுக்குபவர்‌. ஒருவர்‌: ஆக ஒவ்வொருவரும்‌ தங்களாலானதை உடனே செய்யப்‌ புறப்படு வதன்‌ மூலம்‌ எப்பேர்ப்பட்டவனையும்‌ நடுங்கச்‌ செய்து விடுகிறார்கள்‌. உதாரணமாக, ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ நிலைமையைப்‌ பார்த்தாலே இதன்‌ உண்மை பொது ஜனங்களுக்கு நன்றாய்‌ விளங்கும்‌. சென்ற வருஷ மெல்லாம்‌ சுயராஜ்யக்‌ கட்சியை வைது கொண்டிருந்தவரும்‌, கொஞ்ச நாளைக்கு முன்பெல்லாம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டு. இருந்தவரும்‌, செல்வச்‌ செருக்கும்‌ செல்வாக்குப்‌ பெருக்கும்‌ நிலைக்காது என்று ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்காருக்கு சாபம்‌ கொடுத்தவரும்‌ வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம்‌ பெற காங்கிரஸ்தான்‌ தகுந்த இடம்‌ என்று காஞ்சி அக்ராசனப்‌ பிரசாரத்தில்‌ சொன்னவரும்‌, ஸ்ரீமான்‌ ஈவெ.இராமசாமி நாயக்கர்‌. தமிழ்நாடு காங்கிரஸ்‌ தலைவரானபோது, ஸ்ரீமான்கள்‌ வ.வெ.ச. அய்யர்‌, சீனிவாசய்யங்கார்‌ சிஷ்யர்கள்‌ முதலியவர்கள்‌ ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ மீது நம்பிக்கையில்லா தீர்மானம்‌ கொண்டு வந்த காலத்தில்‌ “ஒரு பிராமணரல்‌ லாதாரான ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ அக்ராசனம்‌ வகிப்பதைப்‌ பொறுக்க மாட்டாமல்‌ பிராமணர்கள்‌ இந்த நம்பிக்கை இல்லாத்‌ தீர்மானம்‌ கொண்டு வந்திருக்கிறார்கள்‌; சட்டசபையில்‌ செய்வது போலவே இங்கும்‌ செய்கிறீர்களா வென்று கேட்டவருமான நமது முதலியார்‌, இப்போது தன்னை மாரீசன்‌ என்று சொன்னவரும்‌, காந்தியடிகளுக்குப்‌ புத்தியில்லை என்று சொன்னவரும்‌, ஒத்துழையாமை சட்ட விரோதமென்று சொன்ன வருமான ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ பின்னால்‌ திரிந்து கொண்டும்‌, அந்த ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரையே தமிழ்நாட்டுக்குத்‌ தலைவராக்கப்‌ பாடு பட்டுக்‌ கொண்டும்‌, சுயராஜ்யக்‌ கட்சி யோக்கியமான கட்சியென்றும்‌, அதனிடமும்‌ அதன்‌ தலைவரிடமும்‌ ஒத்துழையாமை வாசனை அடிக்கின்ற தென்றும்‌, சட்டமறுப்பு அக்கட்சியில்‌ தொக்கியிருக்கின்றதென்றும்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கூடாது என்றும்‌, முன்‌ தான்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்டது கூட ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒழிப்பதற்கென்றும்‌, காங்கிரஸில்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்கக்‌ கூடாது என்றும்‌, சுயராஜ்யக்‌ கட்சிக்கே வோட்டுக்‌ கொடுங்களென்றும்‌ சொல்லுவதானால்‌, அதன்‌ சக்தி எவ்வள வென்பது ஒருவர்‌ சொல்லாமலே விளங்கும்‌. இவ்வளவு பயமும்‌,மாறுதலும்‌ இப்பேர்ப்பட்டவர்களுக்கெல்லாம்‌ வரக்‌ காரணமென்ன? பாமர ஜனங்கள்‌. பிராமணப்‌ பத்திரிகைகளை வாங்கிப்‌ படிப்பதும்‌, பிராமணத்‌ தலைவர்களை கொண்டாடுவதும்‌ அவர்கள்‌ சூழ்ச்சிகளை அறியாமலிருப்பதும்‌, அவர்கள்‌ குடி அரசு - 1926 N 152 கையிலிருக்கும்‌ அதிகாரங்களுக்குப்‌ பயப்படுவதுமே அல்லாமல்‌ வேறு என்ன? ஆதலால்‌ ஆங்காங்குள்ள பிராமணரல்லாத பிரமுகர்கள்‌ தங்கள்‌ சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்றிருந்தால்‌, தங்கள்‌ சமூகம்‌ இம்மாதிரி ஏமாறியவர்கள்‌ ஆகாமல்‌ இருக்கவேண்டுமென்று விரும்பினால்‌, ஒவ்வொரு கிராமத்திலும்‌, ஒவ்வொரு குடிசையிலும்‌ “திராவிடன்‌,” “குடி அரசு” முதலியவைகள்‌ போன்ற உண்மை உரைக்கும்‌ பத்திரிகைகளைச்‌ செலுத்த வேண்டும்‌. உண்மை உரைப்பதன்‌ மூலம்‌ அதன்‌ ஆசிரியர்கள்‌. பிராமண அதிகாரத்தால்‌ ஜெயிலுக்குப்‌ போக வேண்டிய அவசியம்‌ ஏற்பட்டா லும்‌ தயாராய்த்தான்‌ இருப்பார்கள்‌. ஆதலால்‌ வஞ்சகப்‌ பத்திரிகைகளைப்‌ பார்த்து மோசம்‌ போகாமலிருக்கச்‌ செய்யவேண்டும்‌. இந்தக்‌ காரியங்களை நீங்கள்‌ செய்யாமலிருந்தால்‌ வரப்போகும்‌ சட்டசபை எலெக்ஷனில்‌ பிராமணரல்லாதார்‌ கண்டிப்பாய்‌ தோற்கடிக்கப்‌ பட்டு போவார்கள்‌. ஸ்ரீமான்கள்‌ டி.எம்‌.நாயரும்‌, ஸர்‌.பி.டி. செட்டியாரும்‌ எவ்வளவோ அரும்பாடுபட்டு பிடித்துக்‌ கொடுத்த கோட்டையை மறுபடியும்‌ பிராமணர்கள்‌ சுவாதீனப்படுத்திக்‌ கொண்டு உங்களை வெளியாக்கிவிடப்‌ போகிறார்கள்‌. அப்புறம்‌ 10 வருடமோ, 100 வருடமோ கடவுளுக்குத்தான்‌ தெரியும்‌.வீணாய்ச்‌ சர்க்காரை நம்பிக்‌ கொண்டிருப்பதில்‌ பிரயோஜனமில்லை. சர்க்கார்‌ எந்தக்‌ கை வலுக்குமோ அந்தக்‌ கையில்‌ சேர்ந்து விடுவார்கள்‌. இப்பொழுதே சர்க்காருக்குப்‌ பிராமணர்களிடத்தில்‌ பயம்‌ வந்து விட்டது. அவர்கள்தான்‌ அடுத்த சட்ட சபையில்‌ ஜெயிக்கப்‌ போகிறார்கள்‌ என்று எண்ணிக்‌ கொண்டு அவர்களை இப்பொழுது இருந்தே தடவிக்கொடுத்துக்‌ கொண்டு வருகிறார்கள்‌. பிராமணரல்லாதாரே எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!!! குடி அரசு - கட்டுரை - 28.02.1926 153 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தமிழிற்கத்‌ துரோகமும்‌ ஹிந்தி பாஷையிண்‌ இரகசியமும்‌ - சித்திரபுத்திரன்‌ நமது நாட்டின்‌ க்ஷமத்திற்காக என்று எந்தக்‌ காரியம்‌ ஆரம்பிக்கப்‌ பட்டாலும்‌, அவற்றை நம்‌ நாட்டுப்‌ பிராமணர்கள்‌ கைப்பற்றிக்‌ கொண்டு அதனால்‌ தாங்கள்‌ பிழைக்கும்படியாகவும்‌, நமக்கு பெரிய ஆபத்து விளையும்படியாகவே செய்து விடுகிறார்கள்‌. எதுபோலென்றால்‌; நமது சர்க்கார்‌ நமக்குச்‌ சுயராஜ்யம்‌ கொடுப்பதாய்‌ சொல்லி முதல்‌ தடவை, இரண்டாந்‌ தடவையாகக்‌ கொடுக்கப்பட்டு வந்த சீர்திருத்தங்கள்‌ என்பது, நமது நாட்டுக்கு அதிக வரி போடவும்‌, ஜாதிச்‌ சண்டைகளும்‌, பொறாமையும்‌ மேலிட்டு ஒருவரையொருவர்‌ ஏமாற்றுவதன்‌ மூலம்‌ ஒற்றுமைக்‌ குறைவு ஏற்படவும்‌, கைத்தொழில்கள்‌ அற்றுப்‌ போய்‌ நாளுக்கு நாம்‌ மனச்சாக்ஷி யையும்‌, கற்பையும்‌ விற்று ஜீவிக்கும்படி ஏழைகள்‌ அதிகமாகவும்‌, அரசாங்கத்‌ தார்‌ உத்தேசம்‌ நிறைவேறத்தக்க வண்ணம்‌ நமது நாட்டுப்‌ பணம்‌ கொள்ளை போகவும்‌, உபயோகப்படுவது போலவும்‌, நமது மக்கள்‌ படிக்க வேண்டும்‌ என்கிற எண்ணத்தின்‌ பேரில்‌ சர்க்காரை பள்ளிக்‌ கூடம்‌ வைக்கும்படி நாம்‌ கேட்டுக்‌ கொள்வதினால்‌ அந்தப்படிப்பு நம்‌ நாட்டுக்குத்‌ துரோகம்‌ செய்யத்‌ தக்க அளவுக்குச்‌ சர்க்கார்‌ ஆக்ஷிக்கு அனுகூலமாய்‌ இருப்பது போலவும்‌ ஆய்விடுகின்றது. அதுபோலவே நமது தமிழ்நாட்டில்‌ ஹிந்தி பிரசாரமும்‌ பெரும்பாலும்‌ பிராமணர்களுக்கே அனுகூலத்திற்காக செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை ஹிந்திக்காகச்‌ செலவாயிருக்கும்‌ பணத்தில்‌ பெரும்பாகம்‌ பிராமணரல்லாதாருடையது என்பதில்‌ யாருக்கும்‌ சந்தேகம்‌ இருக்காது.ஹிந்தி படித்தவர்களில்‌ 100-க்கு 97 பேர்‌ பிராமணர்களாகவே இருக்கிறார்கள்‌. தமிழ்நாட்டின்‌ மொத்தத்‌ தொகையில்‌ 100-க்கு 97 பேர்‌ பிராமணரல்லாதாராய்‌ குடி அரசு - 1926 N 154 இருந்தும்‌ 100-க்கு மூன்று வீதம்‌ உள்ள பிராமணர்கள்தான்‌ ஹிந்தி படித்தவர்களில்‌ 100 - க்கு 97 பேர்களாயிருக்கின்றார்கள்‌. பிராமணரல்லாதார்‌. 100-க்கு 3 பேராவது ஹிந்தி படித்திருப்பார்களோ வென்பது சந்தேகம்‌. இந்த படிப்பின்‌ எண்ணிக்கை எப்படி இருந்தாலும்‌, நமக்கு அதைப்பற்றி அதிகக்‌ கவலை ஒன்றும்‌ இல்லை.ஆனால்‌ இதில்‌ 100-ல்‌ ஒரு பங்கு கவலைகூட தமிழ்‌ பாஷைக்கு எடுத்துக்‌ கொள்ளுவதில்லை என்பதையும்‌ ஹிந்தி படித்த பிராமணர்களால்‌ நமக்கு ஏற்படும்‌ கெடுதியையும்‌ நினைக்கும்போது, இதைப்‌ பற்றி வருந்தாமலும்‌, இம்மாதிரி பலன்‌ தரத்தக்க ஹிந்திக்கு நாம்‌ பாடுபட்ட முட்டாள்‌ தனத்திற்கும்‌, நாம்‌ பணம்‌ கொடுத்த பயித்தியக்காரத்தனத்திற்கும்‌ வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. இந்த ஹிந்தி பாஷையானது, நம்‌ பணத்தில்‌ - நம்‌ பிரயத்தனத்தில்‌ - நமது நாட்டில்‌ பல பிராமணர்கள்‌ படித்து வெளிமாகாணங்களுக்குப்‌ போய்‌, ஆங்காங்கு நமக்கு விரோதமாய்‌ பிரசாரம்‌ செய்வதும்‌, நம்மை சூத்திரர்கள்‌, புத்தி இல்லாதவர்கள்‌, முட்டாள்கள்‌ என்றும்‌, தென்னாட்டுப்பிராமணரல்லாதாருக்கு மூளை இல்லை என்றும்‌ சொல்லுவதும்‌, வெளி மாகாணங்களில்‌ உள்ள வர்த்தமான பத்திரிகைகளில்‌ போய்‌ அமர்ந்து கொண்டு பிராமணாதிக்கத்தை தேசமெல்லாம்‌ நிலை நிறுத்தவும்‌, பிராமணரல்‌ லாதாரை அழுத்தப்‌ பிரசாரம்‌ செய்யவும்‌, வெளிமாகாண காங்கிரஸ்‌ முதலிய பொது ஸ்தாபனங்களிலும்‌ இவர்களே தலைவர்களாகவும்‌, அவற்றில்‌ மாதம்‌ 100, 200, 300 வீதம்‌ சம்பளம்‌ பெற்றுப்‌ பிழைப்பதுமான காரியத்திற்கல்லாமல்‌, வேறு வழியில்‌ நமக்கு ஒரு பலனையும்‌ அளிப்பதில்லை. இவ்விஷயத்தைப்‌ பற்றி முன்‌ ஒரு சமயம்‌,ஹிந்தி பிரசாரத்திற்காக நம்மிடம்‌ பணம்‌ பறிக்க நமது பிராமணர்களால்‌ வெளி மாகாணத்திலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்ரீமான்‌ புருஷோத்தம தாஸ்‌ தாண்டன்‌ என்பவரை நேரில்‌ கண்டு, இவ்விஷயத்தை அவரிடம்‌ ஒருவர்‌ நேரில்‌ தெரிவித்ததில்‌-அதாவது பணம்‌ மாத்திரம்‌ பிராமணரல்லாதாரிடம்‌ வசூல்‌ செய்கிறீர்களே; இது வரையில்‌ ஹிந்தி படித்த பிள்ளைகள்‌ எல்லாம்‌ 100- க்கு 95 பிராமணப்‌ பிள்ளைகளேதான்‌ படித்திருக்‌ கின்றன; அதன்‌ உபாத்தியாயர்களும்‌ 100 - க்கு 97 பேர்‌ பிராமணர்களா கவேதான்‌ இருக்கின்றார்கள்‌. இதன்‌ காரணமென்ன? சில பிராமணரல்லாத வாலிபர்கள்‌ உபாத்தியாயர்களாகப்‌ பயிற்சி பெற இஷ்டப்பட்டு வந்தவர்‌. களையும்‌, சரியாய்‌ நடத்தாமல்‌ வெளியேற்றப்பட்டதாகவும்‌ என்னிடம்‌ புகார்கள்‌ வந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில்‌ இதற்காக பிராமணரல்லா தாரை ஹிந்திக்குப்‌ பணம்‌ கேட்பது சரியா என்று சொன்னதற்கு, இவ்வள வையும்‌ கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும்‌ விசாரித்து தெரியப்படுத்து வதாய்‌ சொல்லிப்‌ போனவர்‌ இதுவரை ஒரு சங்கதியும்‌ தெரிவிக்கவில்லை. அல்லாமலும்‌ முன்போலவே காரியங்கள்‌ மாத்திரம்‌ நடந்து வருகின்றது. இதே மாதிரி நமது நாட்டுப்‌ பிராமணர்கள்‌, இந்‌ நாட்டாரைத்‌ தங்களால்‌ ஏய்க்க முடியாது என்று தெரிகிற சமயத்தில்‌ வெளி மாகாணத்தில்‌ இருந்து ஒருவரைக்‌ கூட்டி வந்து ஏமாற்றி தங்கள்‌ காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது. 155 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 உதாரணமாக, சுயராஜ்யக்‌ கட்சி என்கிற பிராமணக்‌ கட்சிக்கு நமது நாட்டில்‌ யோக்கியதை இல்லாத காலத்தில்‌, ஸ்ரீமான்‌ தேசபந்து தாஸைக்‌ கூட்டி வந்து செல்வாக்கு சம்பாதித்துக்‌ கொண்டார்கள்‌. இந்து மகாசபை என்கிற பிராமண வர்ணாசிரம தர்ம சபைக்கு நமது நாட்டில்‌ யோக்கியதை சம்பா திக்க, ஸ்ரீமான்‌ லாலா லஜபதிராயைக்‌ கூட்டி வந்து ஏமாற்றினார்கள்‌. காக்கி நாடா காங்கிரஸில்‌ சட்டசபைப்‌ பிரவேசத்திற்கு ஆதரவு கொடுத்ததால்‌ தனக்குக்‌ கொஞ்சம்‌ செல்வாக்கு குறைந்து போய்விட்டதெனப்‌ பயந்த பிராமணர்‌: ஒருவர்‌ ஸ்ரீமான்கள்‌ பஜாஜையும்‌, பாங்கரையும்‌ தருவித்து ஊர்‌ ஊராய்த்‌ திரிந்து, உபசாரப்‌ பத்திரம்‌ பெற்று, ஜனங்களை ஏமாற்றி யோக்கிய தையை நிலை நிறுத்தினார்‌. இனி மகாத்மாவையும்‌ கூட்டி வந்து ஏமாற்றப்‌ போகிறார்‌. இம்மாதிரியாகவே இது சமயமும்‌, ஹிந்தியை பொதுபாஷை ஆக்க வேண்‌: டும்‌ என்கிற கவலை உள்ளவர்கள்‌ போல்‌ தேசத்தின்‌ பேரால்‌ ஆங்காங்கு பல பிராமணர்கள்‌ பேசுவதும்‌, அதைச்‌ சர்க்கார்‌ பள்ளிக்கூடம்‌ முதலிய இடங்‌ களில்‌ கட்டாயப்‌ பாடமாக்கப்‌ பிரயத்தனப்படுவதும்‌ யார்‌ நன்‌ மைக்கு? இனி கொஞ்ச காலத்துக்குள்‌ ஹிந்திப்‌ பிரசாரத்தின்‌ பலனை அநுபவிக்கப்‌ போகி றோம்‌. பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில்‌ ஹிந்தியும்‌ ஒன்‌ றாய்‌ முடியும்‌ போலிருக்கிறது. பொதுவாய்‌ ஹிந்தி என்பது வெளி மாகாணங்‌ களில்‌ பிராமண மத பிரசாரம்‌ செய்ய தர்ப்பித்து செய்யும்‌ வித்தையாய்‌ விட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப்‌ பாமர ஜனங்கள்‌ அறிவதே யில்லை. இரண்டொருவருக்கு அதன்‌ இரகசியம்‌ தெரிந்தாலும்‌, பிராமணர்‌: களுக்குப்‌ பயந்துக்‌ கொண்டு தாங்களும்‌ ஒத்துப்‌ பாடிவிடுகின்றனர்‌. யாராவது துணிந்து வெளியில்‌ சொன்னால்‌ இவர்களைத்‌ தேசத்‌ துரோகி என்று சொல்லி விடுகிறார்கள்‌. சமஸ்கிகுதம்‌ இதல்லாமல்‌, நமது நாட்டில்‌ சமஸ்கிருத பாஷைக்காக எவ்வளவு லக்ஷம்‌ ரூபாய்‌ செலவாகிறது! அது அவ்வளவும்‌ யாருடைய பணம்‌? சமஸ்கிருதத்திற்கென்று தனியாய்‌, எவ்வளவோ பள்ளிக்‌ கூடங்கள்‌ இருக்கின்‌ றன. இதில்‌ படிக்கிறவர்கள்‌ எல்லாம்‌ யார்‌? இதன்‌ உபாத்தியாயர்கள்‌ யார்‌? பிராமணரல்லாத உபாத்தியாயரையாவது, பிராமணரல்லாத பிள்ளைகளையா வது இதில்‌ சேர்த்துக்‌ கொள்ளுகின்றார்களா? அரசாங்கத்திலாவது சமஸ்கிரு தத்திற்கு இருக்கின்ற யோக்கியதை தமிழுக்கு இருக்கிறதா? இச்‌ சமஸ்கிரு தம்பிராமணரல்லாதார்‌ - தாழ்ந்தவர்கள்‌ - சூத்திரர்‌ - பிற்பட்டவர்‌- அடிமைகள்‌ என்பதற்கு ஆதாரமாயிருக்கின்றதே தவிர வேறு எதற்காவது - நாட்டிற்காவதுஉபயோகப்படுகிறதா? தமிழ்‌ ஹிந்தியும்‌, சமஸ்கிருதமும்‌ இப்படியிருக்கத்‌ தமிழைப்‌ பற்றியோ குடி அரசு - 1926 N 156 வென்றால்‌, தமிழ்நாட்டில்‌ தமிழுக்கென்று தனியாய்‌ எத்தனைப்‌ பள்ளிக்கூடம்‌. இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு இருக்கும்‌ பள்ளிக்கூடம்‌ அளவில்‌ நாலில்‌ ஒரு பங்காவது இருக்கிறதா? பிராமணரல்லாத தமிழ்‌ வித்துவான்கள்‌. பேராவது பொது ஜனங்களுக்குத்‌ தெரியக்‌ கூடியதாய்‌ இருக்கிறதா? பிரம்மஸ்ரீ உவெ. சாமிநாதய்யர்‌, ஸ்ரீலஸ்ரீ. ராகவய்யங்கார்‌ இன்னும்‌ ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீ. அய்யர்‌, ஐயங்கார்‌, ஆச்சாரியார்‌, ராவு, சர்மா என்று பிராமணர்கள்‌ பெயர்தான்‌ தமிழ்‌ வித்துவான்கள்‌ லிஸ்டிலும்‌ அடிபடுகிறதேயல்லாமல்‌ பிராமணரல்லாதார்‌ பெயர்‌ தெரிகிறதா? இந்த பிராமணர்கள்தான்‌ பழைய தமிழ்க்‌ காவியங்களின்‌ ஏட்டுப்‌ பிரதிகளைப்‌ பிராமணரல்லாதாரிடம்‌ இருந்து வாங்கி, அதை தங்கள்‌. பிராமண மதத்திற்குத்‌ தகுந்தபடி மொழி பெயர்த்துக்‌ கொண்டு, அதை அச்சடிக்கப்‌ பிராமணரல்லாதாரிடமே யாசகமாய்ப்‌ பணம்‌ வாங்கி, அச்சுப்‌ போட்டு, புஸ்தகம்‌ 1-க்கு 10, 15 ரூபாய்‌ என்று விற்றுக்‌ கொள்ளை அடித்து லக்ஷக்‌ கணக்காகப்‌ பணம்‌ சேர்த்துக்‌ கொள்ளுகின்றார்கள்‌. நிற்க, சர்க்காரில்‌ தமிழுக்கு ஏதோ பெரிய யோக்யதை கொடுப்பது போல்‌ வேஷம்‌ போட்டு ஒரு தமிழ்‌ அகராதி எழுதக்‌ கமிட்டி ஏற்படுத்தினார்கள்‌. அதில்‌ (தமிழுக்கு வார்த்தைகள்‌ கண்டுபிடித்து அர்த்தமெழுதத்‌ தமிழ்‌ படித்த தமிழர்‌- பிராமண ரல்லாத புலவர்களும்‌, பண்டிதர்களும்‌ எத்தனையோ பெயர்‌ இருக்க அக்‌ கமிட்டிக்கு) நமது சார்பாய்‌ பிராமணர்களே அங்கத்தினர்களாய்‌ நியமிக்கப்‌ பட்டு இருக்கிறார்கள்‌. இதற்காக லக்ஷக்கணக்கான நம்‌ ரூபாய்களை வருஷக்‌ கணக்காய்த்‌ தின்று கொண்டிருக்கிறார்கள்‌. இந்த பிராமணர்களால்‌ ஏற்பட்ட தமிழ்‌ தான்‌ - தமிழ்‌ அகராதிதான்‌- தமிழ்நாட்டிற்கு தமிழாய்‌ - தமிழுக்கு ஆதாரமாய்‌ விளங்கப்‌ போகிறது. இது இப்படியிருக்க, மதுரையம்பதியில்‌ தமிழ்ச்சங்கமென்று ஒரு சங்கமிருக்கிறது. ஆண்டவனே! இதன்‌ கதை வெளியில்‌ சொன்னால்‌ வெட்கக்‌ கேடு. இது பிராமணரல்லாதாரின்‌ பயித்தியக்காரத்தனத்தையும்‌ முட்டாள்‌. தனத்தையும்‌ நிலை நிறுத்தக்‌ கல்லின்‌ மேல்‌ எழுத்துக்கு நேராயிருக்‌ கிறது. அங்குள்ள தமிழ்‌ பரிகைஷ அதிகாரிகளும்‌, தமிழ்ச்‌ சங்கத்திற்கு வருஷாந்திரப்‌ பிரசிடெண்டுகளும்‌100- க்கு 90 பேர்‌ பிராமணர்கள்‌. அதிலும்‌ “வீடு பிரித்துப்‌ போட்டிருக்கிறது” என்று சொல்லுவதற்கு “வீடு அவுத்துப்‌ போட்டிருக்கிறது” என்று பேசும்‌ படியான பிராமணர்களை அக்கிராசனராகத்‌ தெரிந்தெடுப்பதும்‌ இச்சங்கத்திற்கு நற்சாக்ஷிப்‌ பத்திரங்களாகும்‌. சமஸ்கிருதச்‌ சங்கத்தில்‌ எங்காவது பிராமணரல்லாதார்‌ பரீக்ஷ அதிகாரியாய்‌ இல்லாவிட்டாலும்‌, அங்கத்தினர்களாகவாவது சேர்த்துக்‌ கொள்ளப்படுகிறதா? இப்பொழுது எங்கேயோ தமிழ்‌ காலேஜ்‌ என்று ஒன்று ஏற்படுத்தி இருக்கின்றார்களாம்‌. அதன்‌ அதிகாரிகளும்‌, படிக்கும்‌ பிள்ளைகளும்‌, அளவுக்கு மிஞ்சி பிராமணர்களே.அதன்‌ செலவுக்கு மாத்திரம்‌ பணம்‌ பிராமணரல்லாதாருடை யது. நமது பிள்ளைகளின்‌ படிப்புக்கு அரசாங்கத்தினர்‌ மூலமாய்த்‌ தமிழ்ப்‌ புஸ்தகம்‌ எழுதிக்‌ கொடுப்பவர்களும்‌ பெரும்பாலும்‌ பிராமணர்களே.அவர்‌. கள்‌ தமிழ்ப் புஸ்தகம்‌ என்று பெயர்‌ வைத்து அப்புஸ்தகத்தில்‌ முக்கால்‌ பாகம்‌ 157 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சமஸ்கிருத வார்த்தைகளையே நிரப்பி பிராமண வர்ணாசிரமத்தைப்‌ பலப்ப டுத்துவதான விஷயங்களை நமது சிறு பிள்ளைகளுக்கும்‌ இரத்தத்தில்‌ கலரும்படியான கதைகளையும்‌, வாசகங்களையுமே எழுதிப்‌ பணமும்‌ சம்பாதித்துக்‌ கொள்ளுகிறார்கள்‌. நம்மில்‌ யாராவது, “தமிழ்ப்‌ புஸ்தகம்‌ என்பது சுத்த தமிழில்‌ எழுத வேண்டாமா? அவற்றிற்கு ஏற்ற தமிழ்‌ வார்த்தைகள்‌ இல்லையா? நமது தமிழ்‌ நாட்டின்‌ பழக்க வழக்கம்‌, நாகரீகம்‌ அதில்‌ இருக்க வேண்டாமா?” என்று கேட்‌ டால்‌ நம்மவர்களுக்குள்ளாகவே பாஷாபிமானம்‌, பாஷாபிமானம்‌ என்று பேசி நம்மை ஏமாற்றுபவரும்‌ பிராமண சிஷ்யர்களுமான சிலர்‌ உடனே பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்கிக்‌ கொண்டு சமஸ்கிருத வார்த்தைகள்‌ தமிழில்‌ கலந்தால்‌ தமிழுக்கு யோக்கியதை குறைந்து போகாது: அப்படிக்‌ கலருவதுதான்‌ பாஷையின்‌ முன்னேற்றம்‌; பழையன கழிதலும்‌, புதியன புகுதலும்‌ வழுவல கால வகையினால்‌ என்று சமாதானம்‌ சொல்லுவதோடு இதிலும்‌ ஜாதித்‌ துவேஷம்‌ என்கிறார்கள்‌. அப்படியானால்‌ தமிழ்‌ வார்த்தைக சோடு அடிக்கடி இங்கிலீஷ்‌ முதலிய பாஷை சொற்களை கலந்து பேசுவதில்‌ - எழுதுவதில்‌ என்ன குற்றம்‌? நமது வீட்டுப்‌ பெண்களிடம்‌ “நாம்‌ தண்ணீர்‌ கொண்டு வா” என்று சொல்லுவதற்குப்‌ பதிலாக, நம்மால்‌ சரியான உச்சரிப்பை உச்சரிக்கவும்‌, தமிழில்‌ எழுதவும்‌, பழக்கமும்‌, செளகரியமும்‌ இல்லாத சமஸ்கிருத வார்த்தை யாகிய “ஜலம்‌ கொண்டுவா, ஜலம்‌ கொண்டுவா” என்று சொல்லுவது குற்ற மில்லையானால்‌, அதற்குப்‌ பதிலாக “வாட்டர்‌ கொண்டு வா” என்று ஆங்கிலச்‌ சொல்‌ சொல்லுவதில்‌ தப்பென்ன? தனித்தமிழ்‌ என்கிற பதத்திற்கும்‌, பாஷாபிமானம்‌ என்கிற பதத்திற்கும்‌ பொருள்தான்‌ என்ன? இம்மாதிரி பாஷாபிமானத்திலிருந்தே இவர்களது தேசாபிமானத்தின்‌ யோக்கியதையை யும்‌ அறிந்துக்‌ கொள்ளலாம்‌. பழையன கழிந்து புதியன புகுவதாயிருந்தால்‌ நமக்குக்‌ கவலை இல்லை; புதியவை வந்து பலாத்காரத்தில்‌ புகுந்துக்கொண்டு பழையவைகளைக்‌ கழுத்தைப்‌ பிடித்து தள்ளுவதனால்‌ அதையும்‌ சகித்துக்‌ கொண்டு அதற்கு வக்காலத்துப்‌ பேசுவது என்பது பாஷைத்‌ துரோகமும்‌ சமூகத்‌ துரோகமும்‌ ஆவதோடல்லாமல்‌, தமிழ்த்தாயின்‌ கற்பை, தமிழ்த்‌ துரோகிகளுக்கு சுயநலத்திற்காக விற்றவர்கள்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. இம்மாதிரியே மற்றும்‌ நமது அரசியல்‌, மதம்‌, பாஷை, கல்வி, ஆசாரம்‌ , நாகரீகம்‌ முதலியவைகளில்‌ பிராமணர்கள்‌ எவ்வளவு தூரம்‌ ஆதிக்கம்‌ பெற்று இருக்கிறார்கள்‌ என்பதும்‌, அவ்வாதிக்கத்திற்கு நம்மவர்களிலேயே எவ்வளவு பேர்‌ நம்மைக்‌ காட்டிக்‌ கொடுத்துக்‌ கொண்டு வாழ்கிறார்கள்‌ என்பதும்‌, ஒவ்‌ வொரு பிராமணரல்லாதாரும்‌ சுயநலத்தை விட்டு நடுநிலைமையிலிருந்து யோசிப்பார்களானால்‌ விளங்காமற்‌ போகாது. குடி அரசு - கட்டுரை - 07.03.1926. குடி அரசு - 1926 N 158 யாதிரிமார்களும்‌ ஆச்சாரியார்களும்‌ நம்‌ நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால்‌ ஒரு வித பக்தியும்‌ மரியாதையும்‌ அவர்களிடம்‌ ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள்‌ இரகசி யத்தை நமது மக்கள்‌ உணரவே முடியாமல்‌ போய்‌ விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள்‌ என்போர்‌ ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத்‌ தூண்‌ போன்ற வர்கள்‌.சுருக்கமாய்‌ ஒரு வார்த்தையில்‌ சொல்லுவதானால்‌ அரசாங்கத் திற்கும்‌, இந்தியக்‌ குடி மக்களுக்கும்‌ இடையில்‌ உள்ள ஒற்றர்கள்‌ என்றுதான்‌ அவர்களைச்‌ சொல்லவேண்டும்‌. அப்பாதிரிமார்களிலேயும்‌ உண்மையாய்‌ கிருஸ்துநாதருடைய கட்டளைப்படி நடக்கக்‌ கூடியவர்களோ, நடக்க வேண்‌ டும்‌ என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர்‌ இருக்கலாம்‌. நாம்‌ நமது கண்ணுக்‌ குத்‌ தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப்‌ பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம்‌. ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக்‌ கைப்பற்ற வேண்டுமானால்‌, எப்படி திருடன்‌ ஒரு வீட்டில்‌ திருடு வதானால்‌ கன்னம்‌ வைத்து துவாரம்‌ செய்துகொண்டு முதலில்‌ தன்‌ காலை விட்டு பார்ப்பானோ அதுபோல்‌ பாதிரிமார்களை, அதாவது மதக்‌ குருக்கள்‌ என்பவர்களை முதலில்‌ அனுப்புவது என்பது ஒருவித தந்திரம்‌. உதாரணமாக, நமது நாட்டில்‌ பிராமணர்கள்‌ எப்படி தங்கள்‌ மதத்தைக்‌ காக்க -பரப்ப- தங்களுக்குள்ளாகவே ஒருவரை லோககுரு என்றும்‌, ஆச்சாரியார்‌ என்றும்‌, மடாதிபதிகள்‌ என்றும்‌, மகந்துகள்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொண்டு அவர்களுக்கு மற்றவர்கள்‌ பார்த்து பயந்து பக்தி கொள்ளும்‌ வண்ணம்‌ அணிவிடை பணிவிடைகள்‌ செய்வதும்‌ கை வாய்‌ பொத்திப்‌ பேசுவதும்‌, சுவாமிகள்‌, சுவாமிகள்‌ என்று கூப்பிடுவதும்‌, அடியேன்‌, அடியேன்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுவதுமான தந்திரங்களைச்‌ செய்து தங்கள்‌ மதப்‌ பிரசாரம்‌ செய்து மதப்‌ பிரசாரம்‌ என்பது பிராமணர்கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்றும்‌, தன்னைத்‌ தவிர மற்றவர்கள்‌ தாழ்ந்தவர்கள்‌ என்றும்‌ படும்படியான மனப்பான்மையை உண்டாக்கி விடுவது? தங்கள்‌ உயர்‌ வாழ்க்கையை நிலைநிறுத்த ஆக்கந்‌ தேடிக்‌ கொள்ளுகிறார்களோ, அதுபோல்‌ ஐரோப்பியர்களும்‌ தங்களுக்குள்‌ ஒருவரை மதக்குரு என்பதாக பேர்‌ வைத்து நமது நாட்டுக்கு அனுப்புவதும்‌, அவர்‌ நமது நாட்டின்‌ இரகசியங்களையும்‌ இங்குள்ள ஜனங்களின்‌ யோக்கி யதைகளையும்‌ அறிய மதப்‌ பிரசாரம்‌ செய்வதுபோல்‌ ஏழை மக்களிடையும்‌ பாமர மக்களிடையும்‌ இடம்‌ பொருள்‌, ஏவல்‌ என்கிற சவுகரியங்களால்‌ திரிந்து பழகி அவர்களை தங்கள்‌ மதத்திலும்‌ சேர்த்துக்‌ கொண்டு, தங்கள்‌ சுவாதி னமும்‌ செய்து கொண்டு நம்‌ நாட்டு இரகசியங்களை அறிந்து, பிறகு 159 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நாட்டையே சுவாதீனப்‌ படுத்திக்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்‌ செய்வது மாயிருக்கிறது. இந்தப்‌ பாதிரிகள்‌ பெரும்பாலும்‌ நமது குருக்களைப்‌ போலவே பார்வைக்கு கண்ணை மூடிக்‌ கொண்டு, ஜபம்‌ செய்பவர்களா யிருந்தாலும்‌, அந்தரங்கத்தில்‌ இவர்களும்‌ அவர்களைப்‌ போலவே பெரிய ராஜதந்திரிகளாய்த்தான்‌ இருப்பார்கள்‌. ராஜதந்திரம்‌ என்றால்தான்‌ தெரியுமே! அதாவது, பொய்‌ சொல்லலாம்‌; உள்‌ ஒன்று வைத்துப்‌ புறம்பொன்று பேசலாம்‌; மோசம்‌ செய்யலாம்‌. நம்பிக்கைத்‌ துரோகம்‌ செய்யலாம்‌: அதாவது ஒரு காரியத்தைச்‌ சாதிக்க வேண்டுமானால்‌ எதையும்‌ இன்னும்‌ என்ன வேண்டு மானாலும்‌ செய்யலாம்‌. ஆனால்‌, இதற்கு ஒரு விலக்குண்டு. அதாவது இவ்வளவும்‌ தனது சுயநலத்திற்காகச்‌ செய்யக்கூடாது; பொது நன்மைக்காக என்று செய்யலாம்‌; என்றும்‌ இதற்காதாரமாகவும்‌ “பொய்மையும்‌ வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனில்‌” என்கிற குறளையும்‌ சொல்லி விடுவார்கள்‌. இதை நமது லோகமான்யர்களில்‌ அநேகர்‌ ஒப்புக்‌ கொண்டாலும்‌ நமது ராஜீயவாதிகளில்‌ 100 - க்கு 99 முக்கால்‌ பேர்‌ ஒப்புக்கொண்டாலும்‌ - காரியத்தில்‌ செய்து வந்தாலும்‌ மகாத்மா காந்தியடிகள்‌ மாத்திரம்‌ இதைக்‌ கண்டிப்பாய்‌ ஒப்புக்கொள்வது இல்லை. இம்மாதிரி ராஜ தந்திரத்தில்‌ அவருக்கு நம்பிக்கையுமில்லை என்றுதான்‌ சொல்வார்கள்‌.ஆனால்‌ தாக்ஷண்‌: யத்தாலும்‌, வாத்சல்லியத்தாலும்‌, கருணையினாலும்‌ சில சமயங்களில்‌ ஏமாந்து போய்விடுகிறார்‌ என்று பலர்‌ சந்தேகப்பட சொல்லிக்‌ கொள்ளக்‌ கூடும்‌. ஆனால்‌ அவரது சிஷ்யர்கள்‌ வெகு பேருக்கு ராஜதந்திரத்தில்‌ நம்பிக்கையுண்டு. ஒவ்வொரு ஊரிலும்‌ பிராமணர்கள்‌ எப்படி கக்ஷி, பிரதி ககஷி. உண்டாக்கி ஆளைத்தூக்கி ஆள்மேல்‌ போட்டு ஒரு கக்ஷியில்‌ தாங்கள்‌ சேர்ந்துக்‌ கொண்டு பீசில்லாமல்‌ பேசுவதும்‌, விலையில்லாமல்‌ கூட தீர்ப்புக்‌ கொடுப்பதுமாயிருக்கிறார்களோ, அது போலவே ஆங்காங்கு உள்ள பாதிரி மார்களும்‌, தங்களுக்கு அநுகூலமாக ஒரு கக்ஷியில்‌ சேர்ந்துக்‌ கொள்ளு வதும்‌, வழியில்லா வழியில்‌ அவர்களது அக்கிரமங்களுக்கு அநுகூலம்‌ செய்வதுமான காரியங்களால்‌ தங்கள்‌ எண்ணங்களை நிறைவேற்றிக்‌ கொள்ளுகிறார்கள்‌.ராஜீய விஷயங்களிலும்‌ யார்‌ பேரைச்‌ சொன்னால்‌ தங்கள்‌ காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொள்ளலாம்‌ என்கிற எண்ணத்தை வைத்துக்‌ கொண்டு, எப்படி நமது பிராமணர்களில்‌ பலர்‌ இரவும்‌ பகலும்‌ உள்ளத்தில்‌ மகாத்மாவை திட்டிக்‌ கொண்டிருந்‌ தாலும்‌ அவர்கள்‌ கொள்கைகளை அழிக்க பிரயத்தனப்பட்டாலும்‌ வெளியில்‌, அவர்‌ பேரைச்‌ சொல்லிக்‌ கொண்டு தங்கள்‌ காரியங்களை சாதித்துக்‌ கொள்ளுகிறார்களோ அது போலும்‌ ஒத்து ழையாமைத்‌ தத்துவத்திற்கு யோக்கியதை இருக்கிற காலத்தில்‌ மனதில்‌ ஒத்துழைத்து பதவியும்‌ பணமும்‌ சம்பாதிக்க ஆசை இருந்தாலும்‌, ஒத்துழை யாமையின்‌ பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு, எப்படி தங்கள்‌ காரியத்தை. நிறைவேற்றிக்‌ கொள்ளுகிறார்களோ, அது போலவே இப்பாதிரிமார்களும்‌ மகாத்மாவின்‌ கொள்கை உண்மையில்‌ தங்கள்‌ உத்தேசத்திற்கு குடி அரசு - 1926 N 160 விரோதமாயிருந்தாலும்‌, மகாத்மா பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டு தங்கள்‌ காரியத்திற்கு ஆக்கம்‌ தேடுவதும்‌, சுயராஜ்யக்‌ கக்ஷியில்‌ உள்ள புரட்டுகளும்‌ பித்தலாட்டங்களும்‌ அதை நடத்துவோரின்‌ நாணயக்‌ குறைவுகளும்‌ தங்களுக்கு நன்றாய்த்‌ தெரிந்திருந்தாலும்‌, இக்ககஷிக்கு யோக்கியதை ஏற்‌ பட்டால்‌ தங்கள்‌ காரியங்களை தாராளமாய்‌ நடத்தலாம்‌ என்றும்‌, இக்ககஷியின்‌ பலனால்‌ தங்கள்‌ நாட்டுக்கும்‌ தங்கள்‌ கவர்ன்மெண்ட்டுக்கும்‌ நிம்மதி ஏற்பட்டு தாராளமாய்‌ தங்கள்‌ காரியம்‌ நடந்தேறுமென்பதையும்‌ மனதில்‌ வைத்துக்‌ கொண்டு அக்கக்ஷியையும்‌ ககஷியாளர்களையும்‌ பாராட்டுவதும்‌ அநு போகத்தில்‌ பார்த்து வருகிறோம்‌. அப்படிக்கில்லாமல்‌ இருந்தால்‌ அஹிம்சை, சத்தியம்‌ முதவியது கொண்ட ஒத்துழையாமையைப்‌ பற்றி குற்றம்‌ சொல்லி இந்தியர்களுக்கு புத்தியில்லை என்று சொன்ன பாதிரிகள்‌, பொய்யும்‌ புரட்டும்‌ மோசமும்‌ கொண்ட சுயராஜ்யக்‌ க௯௮ி ஏற்பட்ட பிறகு இப்போதுதான்‌ இந்தி யர்களுக்கு புத்திவந்திருக்கிறது என்று சொல்லுவார்களா? ஆதரிப்பார்‌ களா? என்பதை நுட்பமாய்‌ கவனிப்பவர்களுக்குத்‌ தெரியாமற்‌ போகாது. இந்தியர்‌. களுக்கு சுவாமியார்‌, குரு, சன்யாசி, துறவி என்கிற பதங்கள்‌ மிகுதியும்‌ மரியாதை செய்யத்தக்கதாகி விட்டதால்‌, நம்மை ஏய்க்க வேண்டியவர்கள்‌. இந்தவேஷத்தைப்‌ போட்டுக்கொண்டு நம்மை ஏய்த்துத்‌ தங்கள்‌ காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொள்ளுகின்றார்கள்‌. அப்படிக்கில்லாம லிருக்கும்‌ பக்ஷத்தில்‌ நம்மை ஏமாற்றி நம்மை இழிவுபடுத்தி நமது இரத்தத்தை உறிஞ்ச வந்த பாதிரி மார்களுக்கும்‌, சங்கராச்சாரியார்களுக்கும்‌, லோக குருக்களுக்கும்‌, மடாதிபதி களுக்கும்‌, மகந்துகளுக்கும்‌ நாம்‌ இவ்வளவு குருட்டு பக்தி வைப்போமா? குடி அரசு - கட்டுரை - 07.03.1926 161 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 இந்து மகாசபையின்‌ உண்மை நிறம்‌! சிரத்தாணந்தரே அறிந்து விலகிக்‌ வகாண்டார்‌ நமது நாட்டில்‌ இந்து மகாசபை என்னும்‌ பேரால்‌ ஒரு பிராமண: வர்ணாஸ்ரம சபை ஏற்பட்டிருப்பதைப்பற்றி நாம்‌ பல முறை - அது, இந்தியா வை அந்நியருக்கு காட்டிக்‌ கொடுப்பதற்கு ஆதரவாயிருந்த - இருக்கிற பிராமண வர்ணாஸ்ரமத்தை நிலை நிறுத்தவும்‌, இந்துக்களும்‌, முஸ்லீம்களும்‌ ஒன்றுபட முடியாதபடி மத்தியில்‌ ஒரு தடைக்கல்லாயிருக்கவும்‌ (ஏனென்றால்‌ இந்துக்களும்‌, முஸ்லீம்களும்‌ ஒன்றாய்‌ விட்டால்‌ சர்க்காரை விட வர்ணாஸ்‌. ரமிகளுக்கு பெரிய ஆபத்து) ஏற்பட்டதென்றும்‌; பிராமண சூழ்ச்சிகள்‌ பல வற்றில்‌ இதொன்று எனவும்‌ பேசியும்‌, எழுதியும்‌ வந்திருக்கிறோம்‌. அதற்கு ஆதாரமாகவும்‌ தமிழ்‌ நாட்டிலுள்ள இந்து மகாசபைக்கு வடிகட்டின வர்ணாஸ்‌ ரமியான ஸ்ரீமான்‌ TR ராமச்சந்திரய்யர்‌ அக்கிராசனராயிருப்பதும்‌: ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக்‌ குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமண: ரல்லாத குழந்தை பார்த்து விட்டால்‌ ஒரு மாதம்‌ பட்டினிக்‌ கிடப்பேன்‌ என்று சொன்ன ஸ்ரீமான்‌ MK ஆச்சாரியார்‌ முதலியோர்‌ முக்கியஸ்தர்களாகவும்‌ இருப்பதோடல்லாமல்‌, தமிழ்‌ நாட்டிலுள்ள கிளை இந்து மகாசபைகள்‌ இரண்‌: டொன்றில்‌ தீண்டாமையை ஒழிப்பது தப்பு என்றும்‌, இது விஷயத்தில்‌ பிராமணர்கள்‌ முயற்சியாயிருந்து அதை எதிர்க்க வேண்டும்‌ என்றும்‌, தீர்மானித்திருப்பதையும்‌ எடுத்துக்‌ காட்டியிருக்கிறோம்‌. அல்லாமலும்‌ அதன்‌ அதிமுக்கியஸ்தர்களில்‌ முக்கியஸ்தரான ஸ்ரீமான்‌ பண்டித மாளவியா அவர்‌. கள்‌ இந்து மகாசபையில்‌ பேசும்போது, தீண்டாமை ஒழிய வேண்டும்‌ என்று பேசுவதும்‌, வர்ணாஸ்ரம பரிபாலன சபையிலிருக்கும்‌ போது தீண்டாமையை ஒழிக்கக்‌ கூடாது என்கிற தீர்மானங்கள்‌ நிறைவேற்றுவதுமாயிருக்கிற தந்திரங்‌ களையும்‌, தீண்டாதாருக்கு மிக உருக்கமாய்ப்‌ பரிந்து பேசுவது போல்‌ சிற்சில சமயங்களில்‌ மாய்மாலக்‌ கண்ணீர்‌ விடுவதையும்‌ எடுத்துக்‌ காட்டியிருக்‌ கிறோம்‌. இந்து மகாசபையின்‌ தந்திரத்தை அறிய இவ்வளவும்‌ போதாது என்று சொல்லுகிறவர்களுக்கு மறுபடியும்‌ ஆதாரங்கள்‌ காட்டவும்‌, பண்டித மாளவியா அவர்களின்‌ உள்‌ கருத்தையும்‌, உண்மை நிறத்தையும்‌, ஆசார திருத்தத்தில்‌ அவருக்குள்ள கவலையின்‌ நிலைமையையும்‌ வெளியார்‌ அறிய சமீபத்தில்‌ மற்றொரு சம்பவமும்‌ நடந்திருக்கிறது. அதாவது, இந்து மகா சபையின்‌ ஒரு கூட்டத்தில்‌ விதவைகள்‌ புனர்விவாகம்‌ செய்து கொள்ளலாம்‌ என்பதாக ஒரு தீர்மானம்‌ ஏகமானதாய்‌ ஒரு பெரிய விஷயாலோசனைக்‌ குடி அரசு - 1926 N 162 கமிட்டியில்‌ நிறைவேறிற்றாம்‌. இது விஷயத்தைப்‌ பண்டித மாளவியா கேள்விப்பட்டதும்‌ இவ்விஷயம்‌ மகாநாட்டுக்கு கொண்டு வரப்பட்டால்‌ மகாநாட்டுப்‌ பந்தலைக்கூட நான்‌ எட்டிப்‌ பார்க்க மாட்டேன்‌ என்று சொல்லி விட்டார்‌. இதை அறிந்த சுவாமி சிரத்தாநந்தர்‌ உடனே இந்து மகாசபை நிர்வாகத்திலிருந்து விலகிக்‌ கொண்டார்‌. ஆதலால்‌, இந்து மகாசபை வர்ணாஸ்‌ ரமசபை என்பதற்கும்‌, ஆசார திருத்தக்காரர்களை ஏமாற்ற ஏற்பட்டதென்‌ பதற்கும்‌ இவற்றை விட இன்னும்‌ என்ன ஆதாரங்கள்‌ வேண்டுமோ நமக்குத்‌ தெரியவில்லை. இவ்வளவையும்‌ அறிந்து நம்மவரில்‌ சிலர்‌ வேண்டுமென்றே இந்து மகாசபை, இந்துக்கள்‌ என்போர்கள்‌ எல்லோருக்கும்‌ பொதுவானது, பொதுவானது; என்று சொல்லுவார்களானால்‌ அதற்கு நாம்‌ என்ன செய்ய லாம்‌? உண்மையில்‌ தூங்குகிறவர்களைத்‌ தட்டி எழுப்பலாம்‌; ஞாபகத்துட னேயே வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டு தூங்குவது போல்‌ படுத்திருப்பவர்களை எப்படி எழுப்புவது? தடி கொண்டு தான்‌ தட்ட வேண்டும்‌. குடி அரசு - கட்டுரை - 07.03.1926. 163 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சக்கரை எண்‌ நண்பாலை ( நண்றி வட்ட தண்மை ) சென்னை கார்பொரேஷன்‌ தேர்தலின்‌ போது சென்னை கார்பொரே ஷனை பிராமணக்‌ கார்பொரேஷனாக்க ஸ்ரீமான்கள்‌ சக்கரை செட்டியாரும்‌, ஆதிகேசவ நாயக்கரும்‌, பிராமணரல்லாதார்‌ பலரும்‌ அரும்பாடு பட்டார்கள்‌; தங்கள்‌ வகுப்பாரை வைதார்கள்‌; தேசத்‌ துரோகி என்றார்கள்‌; சமூகத்‌ துரோகி என்றார்கள்‌: இன்னும்‌ ஒரு மயிர்க்காலுக்கு ஒரு பொய்யும்‌ சொல்லி பாமர: ஜனங்களை ஏமாற்றி பிராமண கார்பொரேஷன்‌ ஆக்கினார்கள்‌. பிறகு, இவர்கள்‌ கதி என்ன ஆயிற்று? ஸ்ரீமான்‌ ஆதிகேசவ நாயக்கரைப்பற்றி எங்கு தேடிப்‌ பார்த்தாலும்‌ ஆசாமி இருக்கிற இடமே தெரியாமல்‌ ஒழித்து விட்டார்‌. கள்‌. ஸ்ரீமான்‌ சக்கரை செட்டியாரைப்‌ பற்றியோவென்றால்‌ நினைப்பதற்கே. மயிர்‌ கூச்சல்‌ எடுக்கிறது. அதாவது, சென்ற வாரம்‌ கார்பொரேஷன்‌ மீட்டிங்‌ கில்‌ ஸ்ரீமான்‌ சக்கரை செட்டியார்‌ தனது அருகில்‌ இருந்த ஒரு பிராமண நண்பரிடம்‌ தனது நண்பர்‌ என்கிற முறையில்‌, ஏதோ சில வார்த்தைகள்‌ பேசிக்‌ கொண்டிருந்தாராம்‌. அதை ஒண்டிக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த மற்றொரு பிராமண மெம்பர்‌ உடனே அதை கார்பொரேஷன்‌ பிரசிடெண்ட்‌ இடம்‌ சாடி சொன்னாராம்‌.பிரசிடெண்ட்‌ அப்படி சொன்னது தப்பு என்றாராம்‌. அவ்வார்த்‌ தைகள்‌ மீட்டிங்கில்‌ 094௮ ஆய்‌ மீட்டிங்குக்காக பேசவில்லை; நான்‌ என்‌ நண்பராகிய ஸ்ரீமான்‌ புர்றா சத்திய நாராயணாவிடம்‌ தனிப்பட்ட ஓதாவில்‌ பேசினேன்‌. அதற்கும்‌ மீட்டிங்குக்கும்‌ சம்பந்தமில்லை என்றாராம்‌. உடனே ஸ்ரீமான்‌ புர்றா சத்திய நாராயணா என்னும்‌ பிராமண மெம்பர்‌ எழுந்து “சக்‌ கரை செட்டியார்‌ என்‌ நண்பனல்ல” என்றாராம்‌. விவாதத்தின்‌ தன்மை எப்படி யோ இருக்கட்டும்‌, அதைப்பற்றி நாம்‌ இங்கு ஒன்றும்‌ பேச வரவில்லை. ஆனால்‌ இச்சம்பவத்தை நினைக்கும்போது Dr. நாயர்‌ பெருமான்‌ தமிழ்‌ நாட்டுக்காக - தமிழுக்காக லண்டனில்‌ உயிர்‌ துறந்த காலத்தில்‌ அங்கிருந்த தமிழ்நாட்டுப்‌ பிராமணர்கள்‌ நடந்துக்‌ கொண்ட நடவடிக்கை நமது ஞாபகத்‌ துக்கு வந்ததோடு நமது இரு கண்களிலும்‌ கண்ணீர்வந்து காகிதத்தை நனைத்தது. இந்த ஸ்ரீமான்‌ புர்றாவின்‌ எலெக்ஷனுக்கு ஸ்ரீமான்‌ சக்கரை பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்‌ எவ்வளவு பாடுபட்டார்‌; இந்த சக்க ரையை இந்த பிராமணர்கள்‌ எத்தனைக்‌ கூட்டங்களுக்கு கூட்டிக்‌ கொண்டு போய் நமது நண்பர்‌,நமது தலைவர்‌ சக்கரை செட்டியார்‌ என்று அக்கிராசனம்‌. குடி அரசு - 1926 N 164 வகிக்கச்‌ செய்து ஜேய்‌ போட்டார்கள்‌. தங்கள்‌ காரியம்‌ முடிந்த உடன்‌ இத்தனையும்‌ மறந்து ஒரு நல்ல சந்தர்ப்பத்தில்‌ சக்கரை என்‌ நண்பனல்ல என்று ஒரு பிராமணர்‌ சொல்லுவாரானால்‌ சக்கரை தனியாய்‌ சமுத்திரக்கரை: ஓரத்தில்‌ நின்றிருந்தால்‌, சமுத்திரத்தில்‌ தள்ளுவதற்கு அஞ்சுவார்களா? இவ்வளவையும்‌ செய்து விட்டு “சக்கரை செட்டியாரின்‌ அடங்காத்தனம்‌”' என்று பிராமணப்‌ பத்திரிகைகள்‌ தலையங்கம்‌ போட்டு சக்கரை செட்டியா ரையே கண்டித்தெழுதுகின்றன. சக்கரை முதலிய சக்கரை போன்றவர்கள்‌. கதியே இப்படி இருக்குமானால்‌ குழந்தை போன்ற குழந்தைகளின்‌ கதி என்னாகுமென்பதற்கு யாரும்‌ ஜோசியம்‌ கூறத்‌ தேவை இல்லை. ஸ்ரீமான்‌ புர்றா சக்கரை செட்டியாரைக்‌ காட்டிக்கொடுக்க ஆசையிருக்கும்‌ பக்ஷம்‌ ஸ்ரீமான்‌ புர்றா தனது நன்றிகெட்ட தன்மையைக்‌ காட்டாமலே நடந்துக்‌ கொள்ள வழியில்லாமல்‌ போகவில்லை. கண்ணியமாய்‌ எழுந்து ஸ்ரீமான்‌ சக்கரை என்னிடம்‌ மெம்பர்‌ என்கிற ஓதாவில்‌ தான்‌ பேசினார்‌; இவ்‌ வார்த்தைகள்‌ சபைக்குச்‌ சொந்தமானதுதான்‌; எங்கள்‌ சுய காரியத்தைச்‌ சேர்ந்த தல்ல என்று சொல்லியிருந்தால்‌ நாம்‌ அதில்‌ குற்றம்‌ சொல்ல நியாயமில்லை. அப்படிக்கில்லாமல்‌ “சக்கரை என்‌ நண்பனல்ல” என்று சொல்வது எவ்வளவு நன்றி கெட்டத்தனம்‌, கொலை பாதகத்‌ தனம்‌ என்பதை வாசகர்களே யோசிக்க வேண்டும்‌. இந்த பிராமணர்கள்‌ கண்ணுக்கு, ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌, சுயராஜ்யக்‌ கக்ஷி வகுப்புப்‌ பூசலை உண்டாக்குகிறது என்று சொன்னவுடன்‌ மாரீசனாய்த்‌ தோன்றிவிட்டார்‌ . ஸ்ரீமான்‌ வரதராஜுலு நாயுடு பிராமணக்‌ குழந்தை சாப்பிடுவதை பிராமணரல்லாத குழந்தை பார்த்தால்கூட குற்றமா என்று கேட்டதற்கு தென்னாட்டுத்‌ திலகர்‌ கூட மாறி விட்டது போலத்‌ தோன்றிவிட்டார்‌: ஸ்ரீமான்‌ ராமசாமி நாயக்கர்‌ மக்கள்‌ பிறவியில்‌ உயர்வு தாழ்வு இல்லை என்று சொன்னதற்கும்‌ வகுப்புவாரி உரிமை கேட்டதற்கும்‌ காங்கிரஸ்‌ துரோகி ஆய்விட்டதோடு ழெ பிராமணர்களுக்கு இம்மூவரையும்‌ காங்கிரஸிலிருந்து விலக்க வேண்டியிருந்தது : ஸ்ரீமான்‌ ஆரியாவை அடிக்க வேண்டியிருந்தது; சீமான்‌ சக்கரை செட்டியாரை நண்பரல்லாதவராக்க வேண்டியதாய்‌ விட்டது. செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பதை. அடியோடு மறந்து விட்டார்கள்‌. அல்லாமலும்‌ இப்போது ஸ்ரீமான்கள்‌ முதலியாரும்‌, நாயுடுவும்‌ சுயராஜ்யக்‌ ககஷி வகுப்புப்‌ பூசலை உண்டாக்கும்‌ என்று சொன்னது தப்பு: அதை மன்னிக்க வேண்டும்‌. நாங்கள்‌ முன்‌ வேண்டுமென்று சொல்லிக்‌ கொண்டிருந்த வகுப்பு உரிமை கேழ்ப்பதுதான்‌ வகுப்புப்‌ பூசலை உண்டாக்கும்‌; சுயராஜ்யக்‌ கக்ஷிதான்‌ சத்தியமான கக்ஷி என்று சொன்ன இந்த பிராமணர்கள்‌ கண்ணுக்கு அவ்விருவர்களும்‌ சுக்கிரீவன்‌, அங்கதன்‌ போல காணப்படுகிறார்கள்‌. மற்றவர்கள்‌ இன்னமும்‌. மாறாததால்‌ காங்கிரஸை விட்டு விலக்க மதுரையில்‌ சட்டம்‌ செய்ய வேண்டிய தாய்ப்‌ போய்விட்டது. பிராமண தர்மத்தின்‌ பழங்கதை படித்தவர்களுக்கும்‌ அவர்களோடு பழகினவர்களுக்கும்‌ இதில்‌ ஒன்றும்‌ ஆச்சரியம்‌ இருப்பதாய்த்‌ தோன்ற 165 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வில்லை. ஆனால்‌, இவற்றையெல்லாம்‌ பார்த்துக்‌ கொண்டு அநுபவித்துக்‌ கொண்டு இருக்கும்‌, பிராமணரல்லாதாரில்‌ சிலர்‌ இன்னமும்‌ இம்மாதிரி பிராமணர்கள்‌ பின்னால்‌ கவி பாடிக்கொண்டு, தங்கள்‌ மனச்சாகஷிக்கு விரோத. மாய்‌ அவர்களைத்‌ தலைவர்‌, தலைவர்‌ என்று சொல்லிக்‌ கொண்டு அவர்‌. களுக்கு ஆக்கம்‌ தேடிக்கொடுத்து வயிறு வளர்க்கிறார்களே, இதை நினைக்‌ கும்‌ போதுதான்‌ வெட்கம்‌ உண்டாகிறது. இந்த பிராமணர்களின்‌ காலைக்‌ கழுவித்‌ தண்ணீரைத்‌ தீர்த்தமாகக்‌ குடித்துக்‌ கொண்டிருக்கும்‌ வரையில்தான்‌; தங்கள்‌ கூடத்‌ திரியும்‌ பிராமணரல்லாதாரை ஆதரிப்பார்கள்‌. அது முடிந்த வுடன்‌ அல்லது கொஞ்சம்‌ மாறினவுடன்‌ பிராமணத்‌ துவேஷி, காங்கிரஸ்‌ துவேஷி என்கிற பட்டமும்‌ முன்னவர்களுக்கு நடந்த கதியும்‌ தான்‌ நமக்கும்‌ கிடைக்கும்‌ என்கிற எண்ணம்‌ பிராமணரல்லாத தலைவர்‌ என்போர்களுக்கும்‌ தொண்டர்கள்‌ என்போர்களுக்கும்‌ உண்மையாகவே தோன்றவில்லையா? அல்லது நடக்கிறவரையில்‌ நடக்கட்டும்‌ நமது காலத்தைக்‌ கழிப்போம்‌ என்கிற பேராசையா என்பதுதான்‌ நமக்குப்‌ புலப்படவில்லை. குடி அரசு - கட்டுரை - 07.03.1926. குடி அரசு - 1926 N 166 தெருவில்‌ நடத்தனும்‌ சர்க்காரிண்‌ மணப்பாண்மையும்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா உடுமலைப்பேட்டை தாலூக்கா குமரலிங்கம்‌ என்னும்‌ கிராம அக்கிரஹாரத்தில்‌ ஒரு சர்க்கார்‌ பொது தபாலாபீஸ்‌ இருந்து வந்தது.அவ்வூர்‌ அக்கிரஹாரவாசிகளாகிய பிராமணர்கள்‌ தாழ்ந்த வகுப்பார்‌. என்று சொல்லப்படும்‌ ஆதி திராவிடர்களை தீண்டாதார்‌ என்னும்‌ காரணத்‌ தால்‌ அந்தத்‌ தபால்‌ ஆபீஸுக்குச்‌ செல்லவும்‌ அவ்வீதியில்‌ நடக்கவும்‌ விடுவ தில்லை. அதைப்பற்றி ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ சட்டசபையில்‌ ஒரு கேள்வி கேட்டார்‌. அதாவது, 1924 @ செப்டம்பர்‌ - மீ£ 25- ௨ சகல பொதுத்‌ தெருக்களிலும்‌ சகல ஜாதி மனிதர்களும்‌ நடக்கலாம்‌ யாரும்‌ ஆகஷ்பிக்கக்‌ கூடாது என்ற 2660 - ம்‌ நெம்பர்‌ அரசாங்க உத்தரவு குமரலிங்கம்‌ பிராமணர்‌. களுக்குத்‌ தெரிந்திருந்தும்‌, அவர்கள்‌ ஆதிதிராவிடர்களை தெருவில்‌ நடக்கவிடாமல்‌ தடுக்கிறார்களே: இதைப்பற்றி கேள்வியில்லையா என்று கேட்டார்‌. அதற்கு சர்க்கார்‌ மெம்பர்‌ பதிலளித்‌ ததாவது:- இது விஷயத்தைப்‌ பற்றி போஸ்ட்‌ மாஸ்டர்‌ ஜனரலுக்கு எழுதி யிருக்கிறது; அவரும்‌ Ghg தபாலா பீஸை வேறு வீதிக்கு “மாற்றி விட்டார்‌” என்று பதிலளித்தாராம்‌. இந்தப்‌ பதிலைப்‌ பார்த்தால்‌, சாத்தூருக்கு தடம்‌ எது என்று ஒருவர்‌ கேட்டால்‌, சாரா யம்‌ திராம்‌ அஞ்சணா என்று பதில்‌ சொல்லுவது போலிருக்கிறது. 2660 நெ. சர்க்கார்‌ உத்தரவுப்படி வீதியில்‌ மனிதர்‌ நடக்கும்‌ உரிமையைப்‌ பிராமணர்‌: பிடுங்கிக்‌ கொள்ளுகிறார்களே என்று கேட்டால்‌ போஸ்டாபீசு வேறு வீதிக்கு மாற்றப்பட்டு விட்டது என்று சொல்லும்‌ பதில்‌ டெ கேள்விக்கு சமாதானமா குமா? ஸ்ரீமான்‌ வீரய்யனுக்கும்‌ நமக்கும்‌ போஸ்ட்டாபீஸைப்‌ பற்றியா அதிக கவலை? இவ்‌ விஷயங்களைக்‌ கவனிக்கும்போது குழந்தையையும்‌ கிள்ளி விட்டு தொட்டிலையும்‌ ஆட்டுவது போலிருக்கிறது. இது போலவே பாலக்‌ காட்டிலும்‌, கல்பாத்தி தெருவு பொதுத்‌ தெருவு அங்கு யாரும்‌ நடக்கலாம்‌ என்று சொல்லி விட்டு, இவர்கள்‌ வார்த்தையை நம்பி நடந்தவர்கள்‌ அங்குள்‌ ளவர்களால்‌ அடிபட்ட பிறகு, இப்படி அடித்து விட்டார்களே என்று சொன்‌ னால்‌ நீ ஏன்‌ அங்கு போனாய்‌ என்று கேட்டு விட்டார்கள்‌. மறுபடியும்‌ ஒரு தடவை அங்கு நடந்ததற்காக கேஸ்‌ ஏற்பட்டு மேஜிஸ்ட்ரேட்‌ கோர்ட்டின்‌ மூலம்‌, நடந்தது குற்றமில்லை என்று விடுதலையாகியும்கூட, மறுபடியும்‌ நடக்கும்போது வழி மறித்து அடித்துப்‌ பயப்படுத்தி நடந்தவரிடமிருந்து அந்த வீதிக்குபுண்யார்ச்சனை செய்ய 10 ரூபாய்க்கு பாண்டு எழுதி வாங்கிக்‌ கொண்‌ 167 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 டார்களாம்‌. இதைப்பற்றி கேஸ்‌ நடப்பதாகவும்‌ தெரிகிறது. இம்‌ மாதிரியெல்லாம்‌ வேடிக்‌ கைப்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பது நல்ல சர்க்காருக்கு அழகாகுமா? நல்ல அரசு என்பது தன்னால்‌ - தன்‌ பரிசனத்தால்‌, திருடரால்‌, அயோக்கியர்‌ முதலியவர்களால்‌, தன்‌ குடி ஜனங்களுக்குத்‌ தீங்கு வராமல்‌ பார்த்துக்கொள்ள வேண்டாமா? அதை விட்டுவிட்டு ஒருவனைப்‌ பார்த்து நீ நட, வந்ததுக்கு நானாச்சுது என்பதும்‌, மற்றவனைப்‌ பார்த்து நீ விடாதே, வந்ததுக்கு நாணச்சுது என்பதும்‌, இரண்டு பேரும்‌ உதைபோட்டுக்‌ கொண்டும்‌ வக்கீலுக்கும்‌, போலீஸாருக்கும்‌ அதிகாரிகளுக்கும்‌ பணங்கொடுத்து வாயுங்‌ கையுமாய்‌ அலைவதைப்‌ பார்த்து, இப்படியும்‌ நம்ம ஆள்களுக்கு ஒரு வரும்படி ஆச்சுதே என்றும்‌ ஒருவருக்கொருவர்‌ சுலபமாய்‌ உதை போட்டுக்‌ கொள்ளும்படி செய்துவிட்டோமே என்றும்‌ சிரித்துக்‌ கொண்டு வேடிக்கைப்‌ பார்ப்பதை நல்ல சர்க்கார்‌ என்று சொல்ல முடியுமா? ஸ்ரீமான்‌ வீரைய்யன்‌ இம்மாதிரி பித்தலாட்டமான சட்ட சபையைக்‌ கட்டி அழுவதை விட, மகாத்மா சொல்படி சத்தியாக்கிரகம்‌ செய்து குறைந்தது ஒரு ஆயிரம்‌ தொண்டர்களையாவது ஜெயிலுக்கு அனுப்பவோ, அவசிய மானால்‌ உயிரைக்‌ கொடுக்கச்‌ செய்யவோ தயாராயிருப்பாரானால்‌, நம்‌ நாட்டிலுள்ள கோடிக்‌ கணக்கான ஆதி திராவிட மக்களை நரகத்திலிருந்து விடுதலை செய்தவராவார்‌. குடி அரசு - கட்டுரை - 07.03.4926 குடி அரசு - 1926 N 168 இந்து தேவஸ்காண சட்டம்‌ இந்து தேவஸ்தான சட்டத்தைப்‌ பற்றி பாமர ஜனங்களை ஏமாற்ற தமிழ்நாட்டு தேசிய பிராமணர்களில்‌ பெரும்பாலோர்‌ செய்த கிளர்ச்சி. ஸ்ரீமான்‌ கள்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‌, வரதராஜுலு நாயுடு முதலியவர்கள்‌ போட்ட வெடி குண்டினால்‌ நசுக்குண்டு போயிருந்தாலும்‌, வேறு விதமான பல தந்திரங்கள்‌ இன்னமும்‌ நடந்து கொண்டுதான்‌ இருக்கிறது. அதாவது, வைசிராய்‌ இதற்கு அநுமதி கொடுக்கச்‌ செய்யாமலிருப்பதற்கு எவ்வளவோ பாடு பட்டார்கள்‌. அதுவும்‌ தோல்வியுற்றது. இந்தியா சட்டசபையில்‌ எவ்வ ளவோ தந்திரம்‌ செய்தார்கள்‌. அதிலும்‌ தோல்வியுற்றது. சீமைக்குப்‌ போய்‌ சக்கரவர்த்தியின்‌ மூலம்‌ இச்சட்டத்தை அழிக்கப்‌ பார்த்தார்கள்‌. அதிலும்‌ தோல்வியுற்றது. கடைசியாக தங்கள்‌ சட்ட ஞான தந்திரத்தைக்‌ கொண்டு ஹைகோர்ட்டைப்‌ பிடித்தார்கள்‌. அங்கு ஏதோ கொஞ்சம்‌ ஜயமடைகிறார்கள்‌ போல்‌ தோன்றுகிறது. அதாவது, பல மடாதிபதிகள்‌ பேரால்‌ அவர்களிடம்‌. வக்காலத்து வாங்கி இச்சட்டமே சட்டப்படி செல்லாதென்றோ, இச்சட்டம்‌ செய்ய சட்டசபைக்கு சட்டமில்லை என்றோ, வாதம்‌ சொல்லி வழக்குத்‌ தொடர்ந்திருக்கிறார்கள்‌. வழக்கின்‌ தன்மையைப்‌ பற்றி இது சமயம்‌ நாம்‌ ஒன்றும்‌ சொல்லுவதில்லை. ஆனால்‌, ஒரு விஷயம்‌. சட்டசபையில்‌ பிரேரேபனை வந்து மெஜாரிட்டியாரால்‌ தீர்மானம்‌ நிறைவேறி, கவர்னர்‌. சம்மதம்‌ பெற்று, இந்தியா சட்டசபையிலும்‌ ஒப்புக்கொள்ளப்பட்டு ராஜப்‌ பிரதிநிதியும்‌ சம்மதம்‌ கொடுத்து, சக்கரவர்த்தியும்‌ ஏற்றுக்கொண்டு அமுலுக்கு வந்த ஒரு காரியம்‌ இவ்வளவும்‌ தப்பின பிறகும்‌ பூரா உறுதியாய்‌ விட்டது என்று நினைப்பதற்கு இடமில்லையானால்‌, இம்மாதிரி அரசாங்க அமைப்‌ பைப்‌ பற்றி நாம்‌ என்னவென்று நினைப்பது? அரசாங்கமென்றால்‌ கையில்‌ பலத்தவன்‌ காரியம்‌ என்றுதான்‌ நினைக்க வேண்டியிருக்கிறது. திருவண்ணா மலையில்‌ உள்ள ஒரு மடாதிபதியின்‌ பிராதின்‌ பேரில்‌ தேவஸ்தான சட்டத்‌ தைக்‌ கொஞ்சக்‌ காலத்திற்கு அம்மடத்து காரியத்தில்‌ கோர்ட்டார்‌ பிரவேசிக்‌ கும்‌ விஷயத்தில்‌ தற்காலிகமாக தடைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தமிழ்‌ பத்திரிகைகளில்‌ பார்த்தோம்‌. பிராமணப்‌ பத்திரிகைகள்‌ சாதாரணமாய்‌ இம்மாதிரி விஷயங்களைப்‌ பற்றி எழுதும்‌ போது தலைப்பில்‌ ஜட்ஜுகள்‌. பெயர்‌ எழுதுவதுண்டு. ஆனால்‌ இந்த வழக்கைப்‌ பற்றி எழுதும்‌ போது இன்ன ஜட்ஜு இம்மாதிரி தீர்ப்புக்‌ கூறினார்‌ என்று எழுதவேயில்லை. தொடர்ந்தும்‌ பார்த்தோம்‌; காணப்படவேயில்லை. இதினால்‌ பெயர்‌ எழுதினால்‌ ஜட்ஜு பிராமணரா, பிராமணரல்லாதாரா என்பதை ஜனங்கள்‌ அறிந்து விடுவார்களே 169 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 என்கிற எண்ணம்‌ கொண்டோ என்னமோ, ஜட்ஜுகள்‌ பெயரைக்கூட இம்மாதிரி சந்தர்ப்பங்களில்‌ எழுதப்‌ பயப்படுவதாயிருந்தால்‌, இவர்கள்‌. தந்திரத்தை என்னென்று சொல்வது? இவற்றைக்‌ கவனிக்கும்‌ போது என்னமாவது செய்து, யாரையாவது பிடித்து இச்‌ சட்டத்தை ஒழிக்கும்‌ வரை: ஓயமாட்டார்கள்‌ என்பது திண்ணம்‌ . அதற்கேற்றாற்போல்‌ தோட்டி முதல்‌ தொண்டமான்‌ வரை அநேக இலாகாக்களில்‌, இவர்களாகவே இவர்கள்‌ ஆதிக்கமாகவே இருக்கிறது. போதாக்‌ குறைக்கு அடுத்து வரும்‌ சட்ட சபையும்‌ இவர்கள்‌ மயமாகப்‌ பகீரதப்‌ பிரயத்தனங்கள்‌ நடக்கின்றது. ஹை கோர்ட்டில்‌ தேவஸ்தான சட்டம்‌ அடிபட்டாலும்‌ அடிபடாவிட்டாலும்‌ அடுத்த சட்டசபை இவர்கள்‌ மயமாகி இவர்கள்‌ இஷ்டம்‌ போல்‌ ரெ சட்டத்தை உருக்‌ குலையச்‌ செய்யும்‌ வரையில்‌ டி சட்டம்‌ அமுலில்லாமல்‌ வைத்திருந்தாலும்‌ போதும்‌. கேஸின்‌ முடிவு எப்படியோ ஆகட்டும்‌ என்பது சிலரின்‌ எண்ணம்‌. அம்மாதிரி எண்ணக்காரர்களுக்கு இவ்வுத்திரவு வெற்றி கொடுத்திருக்கிற தென்றே சொல்லலாம்‌. மற்றவைகள்‌ ஹைகோர்ட்‌ முடிவைப்‌ பொறுத்திருக்‌. கிறது என்பது ஒரு பக்கமிருந்தாலும்‌ முக்கியமாய்‌ அடுத்த சட்டசபைத்‌ தேர்தலையே பொறுத்திருக்கிறது என்பதுதான்‌ நமது அபிப்ராயம்‌. ஆதலால்‌, தேவஸ்தான சட்டத்தையும்‌ ஒரு கையில்‌ ஆதரித்துக்‌ கொண்டு, சட்டத்தை ஒழிக்க நினைக்கும்‌ பிராமணர்களுக்கும்‌ மற்றொரு கையில்‌ வோட்‌ வாங்கிக்‌ கொடுத்துக்‌ கொண்டிருக்கிறார்களே. அவர்களது உத்தேசம்‌ என்ன என்பதை நாம்‌ அறிய முடியவில்லை. குடி அரசு - கட்டுரை - 07.03.4926 குடி அரசு - 1926 N 170 கங்கப்வருமான்‌ யாறதத்‌ தாயிண்‌ தூர்ப்பாக்கியம்‌ தமிழ்நாட்டின்‌ அருந்தவப்பயன்‌, நமது ஆருயிர்‌ நண்பர்‌ ஸ்ரீமான்‌ வா.மு. தங்கப்பெருமாள்‌ பிள்ளை இம்மாதம்‌ 6 - ந்‌ தேதி காலை 4 மணிக்கு உயிர்‌ நீத்தார்‌ என்னும்‌ சேதியை எழுதவே மெய்‌ நடுங்குகிறது. அவருக்கு இன்னமும்‌ ஆண்டு முப்பது கட ஆகவில்லை. அவர்‌ ஈரோடு முனிசிபல்‌ எல்லைக்குள்‌ கருங்கல்‌ பாளையம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ வாத்தியார்‌ வீடு என்று சொல்லும்படியான புராதனமும்‌ கண்ணியமும்‌ வாய்ந்த ஒரு வைணவ வேளாள செல்வக்‌ குடும்பத்திற்குச்‌ செல்வமாய்‌ பிறந்தவர்‌. அவரது இளம்‌ வயதிலே, அதாவது12- வது வயதிலேயே தந்தை இறந்து போனார்‌. ஆயினும்‌ சிறிய தந்தையார்‌ ஆதரணையால்‌ கல்வி கற்கப்பட்டு தனது 21- வது வயதில்‌ BA பட்டம்‌ பெற்று, 24 - வது வயதில்‌ உடபட்டமும்‌ பெற்று, ஈரோடு ஜில்லா முனிசிபு கோர்ட்டில்‌ 1921- ம்‌ வருஷத்தில்‌ வக்கீல்‌ தொழிலை ஆரம்‌ பித்தார்‌. ஆரம்பித்த மாதமே 200 ரூபாய்‌ வரும்படி கிடைத்தது. அடுத்தமாதம்‌ 250 ரூ. வரும்படி கிடைத்தது. மற்றும்‌ இரண்டொரு மாதங்களிலேயே மாதம்‌ 300 ரூபாய்க்கு மேல்‌ வரும்படி வந்து கொண்டிருக்கும்படியான நிலைமை ஏற்பட்டதோடு ஊருக்குள்‌ பிரபலமும்‌ செல்வாக்கும்‌ ஏற்பட்டு தான்‌ படித்து வந்த மகாஜன ஹைஸ்கூல்‌ என்னும்‌ பள்ளிக்கூடத்திற்கு ஒரு நிர்வாக அங்கத்‌ தினராயும்‌, ஈரோடு நகர பரிபாலன சபைக்கு நிர்வாக அங்கத்தினராகவும்‌ தெரிந்தெடுக்கும்‌ படியான பொதுஜன அபிப்ராயத்தைப்‌ பெற்றார்‌. அவர்‌. தனக்கு விபரம்‌ தெரிந்த காலம்‌ முதலே பொது விஷயங்களில்‌ ஊக்கமும்‌ தன்னைப்‌ போன்ற இளம்‌ வாலிபர்களின்‌ மிகுதியான கூட்டுறவும்‌ தமிழ்‌ பாஷையினிடம்‌ ஒருவித தனிப்‌ பற்றுதலும்‌ உடையவராயிருந்ததோடு தனது ஊராகிய கருங்கல்‌ பாளையத்தில்‌ ஒரு சிறு வாசகசாலை என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதன்‌ மூலம்‌ பொதுநல விஷயங்களையும்‌ தமிழர்‌ பெருமை யையும்‌ பற்றி அடிக்கடி தமது நண்பர்களிடம்‌ பேசுவதும்‌ அவ்வாசக சாலைக்கு வருஷா வருஷம்‌ ஆண்டுவிழா என்னும்‌ பேரால்‌ தமிழ்‌ நாட்டுப்‌ பெரியார்களை அதாவது, ஸ்ரீமான்கள்‌ பாரதியார்‌, வரதராஜுலு நாயுடு, வ.வெ.ஸு ஐயர்‌, திரு.வி.க. முதலியார்‌, மூ.வெ. நாட்டார்‌ முதலியவர்களைத்‌ தருவித்து கொண்டாட்டங்கள்‌ நடத்துவதுமான விஷயங்களில்‌ பெரிதும்‌ தனது சகாக்களோடு ஊக்கங்காட்டி வந்தவர்‌. இந்நிலையில்‌ 4, 5 மாதம்‌ கூட 171 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தனது வக்கீல்‌ தொழில்‌ நடத்தியிருக்க மாட்டார்‌, இதற்குள்ளாக காந்திய டிகளின்‌ ஒத்துழையா இயக்கம்‌ ஆரம்பமாயிற்று. தனது வக்கீல்‌ தொழி லோடு ஒத்துழையா இயக்க சம்பந்தமான பொதுக்கூட்டங்கள்‌ ஈரோட்டில்‌ நடை பெற்று வந்த சமயங்களில்‌ நமது பிள்ளை அவர்களே அநேகமாய்‌ அக்கிரா சனம்‌ வகிக்க கேட்டுக்‌ கொள்ளப்படுவதும்‌ இவரது அக்கிராசனத்தின்‌ கீழ்‌ ஸ்ரீமான்‌ ஈவெ. ராமசாமி நாயக்கர்‌ முதலியோர்‌ பேசுவதும்‌ வழக்கமாகியிருந்‌ தது.இப்படியே இருக்க ஒரு நாள்‌ கூட்டத்தில்‌ நமது பிள்ளையவர்கள்‌ தனது முடிவுரையில்‌ தான்‌ நாளை முதல்‌ கொண்டு வக்கீல்‌ தொழிலுக்குப்‌ போவதில்லை என்கிற சேதியை அறிவித்துவிட்டார்‌. இவ்வறிவிப்பானது அக்‌ கூட்டத்தில்‌ இருந்த அனைவருக்கும்‌ அவரிடம்‌ அளவு கடந்த பக்தியும்‌ அன்பும்‌ ஏற்படுத்திவிட்டது. பிறகு காங்கிரஸ்‌ நிர்வாகத்திலும்‌ அவர்‌ இழுக்கப்‌ பட்டார்‌. உடனே ஜில்லா காரியதரிசி ஆனார்‌. அடுத்தாற்‌ போல்‌ மாகாண நிர்வாகசபை அங்கத்தினரானார்‌. பெயர்‌ பெற்ற ஈரோடு கள்ளுக்கடை மறியலில்‌ இவர்‌ குற்றஞ்‌ சாட்டப்பட்டு நாயக்கர்‌ உள்பட 40 தொண்டர்களோடு. மேஜிஸ்ட்ரேட்டால்‌ தண்டிக்கப்பட்டு சிறைவாசமிருந்தார்‌. சிறையினின்று வெளிவந்ததும்‌, அதிமும்மரமாக ஜில்லா முழுதும்‌ சுற்றும்‌ படியான வேளை யில்‌ தனது மெல்லிய சரீரத்தின்‌ சவுகரியங்களையும்‌ தனது வாழ்க்கை போகத்தின்‌ பழக்கங்களையும்‌ கொஞ்சமும்‌ கவனியாமல்‌ கிராமம்‌ கிராமமாய்‌ திரிந்து வேலை செய்து வந்தார்‌. இன்னிலையில்‌ ஜில்லா தலைவராகவும்‌ மாகாண காரியதரிசியுமானார்‌. இதன்‌ பலனாய்‌ மாகாணமெல்லாம்‌ சுற்றவும்‌ திருச்சியில்‌ மாகாண கமிட்டி காரியாலயத்திற்குத்‌ தன்‌ பத்தினி சகிதமாய்‌ போய்‌ மாதக்‌ கணக்காய்‌ குடியுமிருக்கவும்‌ செய்து வந்தார்‌. ராஜீயநிலை மாறி நிலைகுலைந்ததின்‌ பலனாய்‌, காங்கிரஸ்‌ நிர்வாகத்தில்‌ கலந்து கொள்ள இஷ்ட மற்றவராகி, சகலவித நிர்வாகத்திலிருந்தும்‌ விலகிக்‌ கொண்டு “குடி அரசு” என்னும்‌ பத்திரிகையை ஆரம்பித்து நடத்த முற்பட்டார்‌. இது சமயம்‌ கதர்‌. போர்டு காரியதரிசி பதவியையும்‌ ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்‌ பட்டதாலும்‌ உடல்‌ நலிவு ஏற்பட்டு படுக்கையில்‌ கிடக்கத்தக்க அசவுகரியத்தோடு இருந்‌ ததாலும்‌, “குடி அரசு” நிர்வாகத்தை நாயக்கரிடம்‌ ஒப்புவித்து விட்டு விலகி னார்‌. அடுத்தாற்போல்‌, உடல்‌ நலம்‌ செய்து கொள்ள சென்னைக்குப்‌ போகவேண்டியிருந்ததால்‌, கதர்‌ போர்டு காரியதரிசி பதவியையும்‌ ஸ்ரீமான்‌ நாயக்கரிடம்‌ ஒப்புவித்துவிட்டு சென்னைக்குப்‌ போனார்‌. அங்கும்‌ ஒன்று இரண்டு மாதம்‌ இருந்து சிகிச்சை செய்து கொண்டார்‌. பின்‌ வைத்தியர்கள்‌. அநுமதியின்‌ பேரில்‌ ஊருக்கு வந்து 3,4 மாத காலம்‌ படுக்கை யிலேயேயிருந்து சிகிச்சை செய்து வந்தார்‌. என்ன செய்தும்‌ அதிசாரக்‌ கழிச்சல்‌ என்னும்‌ அவருக்கு ஏற்பட்ட வியாதி குணப்படாமல்‌ அவரது முடிவுக்கே கூற்றுவனாயிருந்து கொள்ளை கொண்டு விட்டது. படுக்கையில்‌ இருக்கும்போதும்‌ எழுதுவதும்‌, படிப்பதும்‌, சவுக்கியமான பிறகு தேசத்திற்கு, என்ன செய்வது என்று வேலைத்‌ திட்டம்‌ போடுவதிலும்‌ காலத்தைக்‌ கழிப்பார்‌. யாரிடமும்‌ கடினமாகப்‌ பேசமாட்டார்‌. ஒருவருக்கும்‌ மனவருத்தம்‌ ஏற்படும்‌ குடி அரசு - 1926 N 172 படி நடக்க மாட்டார்‌. தான்‌ சொல்லுவது உண்மையானாலும்‌ அதனால்‌ யாருக்காவது சலிப்பு ஏற்படும்‌ என்று பட்டால்‌ பயந்து நிறுத்திக்‌ கொள்வார்‌. தாராளக்கையன்‌. தமிழ்நாட்டுத்‌ தொண்டர்கள்‌ என்போர்‌ அநேகர்‌ அவரிடம்‌ வந்து அடிக்கடி ஏதாவது பெற்று போவார்கள்‌. நண்பர்களுக்கு சமயங்களில்‌ அவரைப்போல்‌ உதவி செய்பவர்கள்‌ மிகச்‌ சிலர்தானிருப்பார்கள்‌. இல்லை என்று சொல்வதானால்‌ தனக்கும்‌ ஒரு பெரிய பாவத்தைச்‌ செய்கிறோமே என்று நடுங்குவார்‌. தமிழிலும்‌ ஆங்கிலத்திலும்‌ அநேக புத்தகங்கள்‌ வாசித்‌ தவர்‌. தமிழ்‌ நாட்டிலுள்ள தமிழ்‌ ஆராய்ச்சிக்காரர்களில்‌ நமது பிள்ளையும்‌ ஒரு முக்கியமானவர்‌ என்று சொல்லவேண்டும்‌. அவர்‌ காரியாலயம்‌ ஒரு புத்தகாலயம்போல்‌ இருக்கும்‌. ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று எப்பொழுது பார்த்தாலும்‌ இதே வேலைதான்‌. நமது நாட்டில்‌ மக்கள்‌ உயர்வு தாழ்வு என்பது எப்படி ஒழியும்‌ என்கிற கவலை அவருக்குள்ள மற்ற எல்லாக்‌ கவலையையும்‌ விட முன்னின்று கொண்டேயிருந்தது. முடிவாய்க்‌ கூறு மிடத்து தன்னலத்‌ தியாகத்தில்‌ ஈடற்ற ஒரு தேசபக்தர்‌- உண்மைத்‌ தொண்டர்‌- அஞ்சா நெஞ்சர்‌ - ஆருயிர்த்‌ தோழர்‌-தமிழ்நாட்டின்‌ ஒரு முக்கிய உருபு- கோவை ஜில்லாவின்‌ வலக்கண்‌-ஈரோட்டின்‌ முடி மறைந்ததென்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. இப்பேர்ப்பட்ட ஒரு ரத்தினத்தைப்‌ பிரிந்த அவரது குடும்பத்தார்‌, ஆருயிர்ப்‌ போன்ற மனைவி, பரதன்‌ போன்ற தம்பி முதலி யோர்களுக்கும்‌, கன்றை இழந்த தாய்‌ போன்ற தமிழ்‌ மக்களுக்கும்‌ ஈசனே ஆறுதல்‌ அளிப்பாராக. குடி அரசு - தலையங்கம்‌ - 07.03.1926. 172 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கதா சபாநாயகரவர்களே, சபையோர்களே! இந்த மகாநாட்டில்‌ எனக்கு முன்‌ பேசிய கனவான்கள்‌ ஒவ்வொரு வரும்‌ முக்கியமாக கதர்‌, மதுவிலக்கு, தீண்டாமை என மூன்று விஷயங்‌ களைத்தான்‌ சொல்லியிருக்கிறார்கள்‌. நான்‌ அதிகம்‌ சொல்ல வேண்டிய தில்லை. ஏதோ என்‌ மனதிலுள்ள சில விஷயங்களைச்‌ சொல்ல அநுமதி கொடுத்ததால்‌ சொல்லுகிறேன்‌. கொங்குவேளாள குலத்தினர்‌ இத்துடன்‌ மூன்று மகாநாடு கூடியாகி விட்டது. சற்று உணர்ச்சியையும்‌ கொடுத்திருக்கிறது. மகாநாட்டிற்கு வேளாள சமூகத்தினர்‌ திருவிழாவுக்கு வருவதுபோல்‌ எண்ணி வருகிறார்கள்‌. காப்பியும்‌ சாப்பாடும்‌ சாப்பிட்டுவிட்டுப்‌ போய்விடுகிறார்கள்‌. இந்த சமூகத்தார்களிருக்‌ கும்‌ நிலைமைக்கு இச்சங்கம்‌ இந்த வேலை செய்தது போதியதல்ல.. இச்சமூகத்தின்‌ கஷ்டந்தான்‌ நாட்டின்‌ கஷ்டமாகும்‌. இச்சமூகத்தின்‌ முன்னேற்‌ றந்தான்‌ நாட்டின்‌ முன்னேற்றமாகும்‌. கதரும்‌, மதுவிலக்கும்‌ உங்கள்‌ சமூகத்‌ தினர்‌ செய்யாதது பெருங்குறை. உபசரணைக்‌ கமிட்டித்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ £ரத்தினசபாபதிக்‌ கவுண்டர்‌ கதரைப்‌ பற்றித்‌ தமது பிரசங்கத்தில்‌ குறிப்பிட வில்லையென்று ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியாரவர்கள்‌ குறிப்பிட்டார்‌. அதன்‌ காரணம்‌ வேறொன்றுமில்லை; அவர்‌ கதர்‌ கட்டவில்லை; ஆதலால்‌ அவர்‌ குறிப்பிடவுமில்லை. கதரை மனிதன்‌ கட்டினாலும்‌, மரங்‌ கட்டினாலும்‌, யார்‌ கட்டினாலும்‌ அதன்‌ பலனை நீங்கள்தான்‌ அடைகிறீர்கள்‌. பஞ்சமென்று சொல்வது வியாபாரிக்கல்ல, வக்கீலுக்கல்ல, உத்தியோகஸ்தனுக்கல்ல, பஞ்சத்தால்‌ குடிக்கக்‌ கூட தண்ணீர்‌ இல்லையென்றால்‌ யாருக்கில்லை? குடியா னவர்களுக்குத்‌ தானில்லை.ஆகையால்‌, பஞ்சம்‌ என்றால்‌ குடியானவர்களுக்‌ குத்‌ தான்‌ என்று கருத வேண்டும்‌. பஞ்சம்‌ வரக்காரணம்‌ விளையாமையினா லல்ல; பணமில்லாமையினாலல்ல; முன்‌ காலத்தைவிடத்‌ தற்காலம்‌ ஊர்‌ நத்தம்‌, மலை, புறம்போக்கு எல்லாம்‌ விளைவு செய்யப்படுகிறது. விளைவும்‌ குறைந்ததாகக்‌ காணோம்‌. தானியங்கள்‌, பருத்தி, மிளகாய்‌, நிலக்கடலை, தானியம்‌ முதலிய சரக்குகள்‌ எல்லாம்‌ தற்காலத்தில்‌ முன்னைவிட 1-க்கு நாலு பாகம்‌ அதிக விலைக்கே விற்கப்படுகிறது. எத்தனை பணம்‌ வந்தாலும்‌ நம்‌ நாட்டில்‌ பணம்‌ தங்கமார்க்கமில்லாமல்‌ போயிற்று. பண்டம்‌ மாற்றிக்‌ கொண்டு. பணமில்லாமலே அக்காலத்தில்‌ பஞ்சமின்றிப்‌ பிழைத்தோம்‌. கொஞ்சம்‌ பணம்‌ வந்தாலும்‌ புதைத்து வைப்போம்‌. அக்‌ காலத்தில்‌ பஞ்சமில்லை. குடி அரசு - 1926 N 174 இத்தனை பணம்‌ வந்தாலும்‌ இக்காலத்தில்‌ எவ்வளவு பெரிய குடும்ப மாயிருந்தாலும்‌ கலியாணம்‌ வந்தாலும்‌ இழவு வந்தாலும்‌ நா யாரிடந்தான்‌ போக வேண்டி வந்துவிட்டது. அநேக குடும்பங்கள்‌ இன்சால்‌ வெண்டு விண்ணப்பம்‌ போட வேண்டியதாய்த்தானிருக்கிறது. சாதாரணக்‌ க்கோட்டை குடியானவர்கள்‌ நிலை எப்படி இருக்கிறதென்று யோசித்துப்‌ பாருங்கள்‌. பட்டணங்களுக்கு வந்து பால்‌, விறகு விற்றுப்‌ பிழைக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு பஞ்சம்‌ வரக்‌ காரணம்‌ வேலையில்லை, தொழிலை யெல்லாம்‌ மற்றவர்களுக்குக்‌ கொடுத்து விட்டோம்‌. ஆகையால்‌, நம்‌ நாட்டு ஏழை மக்கள்‌ வெளிநாட்டுக்குப்‌ போவதைத்‌ தடுக்க முடியவில்லை. காங்கய நாட்டில்‌ ஏழைக்‌ குடியானவர்கள்‌ கட்டில்‌, சட்டி, பானையுடன்‌ பஞ்சத்தால்‌ வெளிநாடு செல்வதைக்‌ கண்டு விசனமடைந்தேன்‌. அவர்கள்‌ வெளிநாடு சென்றும்‌ கால்ரா, பெரு வயிறு இவைகளால்‌ கஷ்டப்பட்டு அநேகர்‌ மாண்டும்‌ போ யினர்‌. இந்தப்‌ பஞ்சம்‌ நமக்கு எது வந்தாலும்‌ தீராது. சர்க்கார்‌ உத்தியோகம்‌ வந்தாலும்‌ தீராது. சர்க்கார்‌ கொடுக்கும்‌ சுயராஜ்யம்‌ வந்தாலும்‌ தீராது. எந்த நிலை நமக்கு நன்மை, எந்த நிலை நமக்குத்‌ தீமை என்பதைக்‌ கவனிக்க வேண்டும்‌? அவரவர்கள்‌ கையிலேயே தொழிலிருக்கிறது. ராட்டினம்‌ ஒன்று நம்மை விட்டுப்‌ போனதும்‌, அநேக பணத்தை நாம்‌ இழக்க நேரிட்டது.மிஷின்‌ கள்‌ வந்த பின்னே தான்‌ நமக்குப்‌ பங்கம்‌ வந்தது. ஒரு நெல்லு மூட்டை குத்தி னால்‌ இரு குடும்பம்‌ ஒரு நாள்‌ வயிறார சாப்பிட ஏழைகளுக்கு வழியிருந்தது. இம்மாதிரி ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு சாப்பாடு கிடைத்து வந்தது. இப்போது ஆயிரக்கணக்கான ஏழைகளின்‌ வாயில்‌ மண்ணைப்‌ போட்டு விட்டு நெல்மிஷின்‌ என்ற பிசாசு அந்த லாபத்தைக்‌ கொண்டு போய்‌ விடு கிறது. பருத்தி நூல்‌ மிஷின்களும்‌ அப்படியேதான்‌. ஒருநாள்‌ 1-க்கு 40 ஆயிரம்‌ பேர்‌ நூற்கும்‌ நூலை ஒரு மிஷின்‌ நூற்றுவிடுகிறது. அந்த கூலி, 40 ஆயிரம்‌ குடும்பத்தை பட்டினிப்‌ போட்டுவிட்டு முதலாளிக்குத்‌ தான்‌ போய்ச்‌ சேருகிறது. இதில்‌ சில நூற்றுக்கணக்கான கூலிகளுக்குத்தான்‌ கூலி கிடைக்கிறது. ஆகையால்‌ ஒரு மிஷின்‌ முதலாளிக்கு லாபத்தையும்‌ சில பேருக்கு சொற்ப கூலியையும்‌ கொடுத்துவிட்டு ஒருநாள்‌ 1- க்கு 40 ஆயிரம்‌ ஏழைகள்‌ வாயில்‌ மண்ணைப்‌ போடுகிறது. 3 ராத்தர்‌ பஞ்சு எடையுள்ள ஒரு மல்‌ பீஸில்‌1- 4 - 0 ரூபாய்‌ பஞ்சுக்கு விலை நமக்குக்‌ கிடைக்கிறது. பாக்கி பீஸ்‌1- க்கு 13-12-0 ரூபாய்‌ அந்நிய நாடு போய்விடுகிறது. அந்த 13 -12- 0 ரூபாயை நம்‌ நாட்டில்‌ நிறுத்தவேண்டும்‌. காங்கயம்‌ பிர்க்காவில்‌ பஞ்ச நிவாரண வேலை செய்ததாக சிலர்‌ பெயர்‌ பெற்றுக்‌ கொண்டார்கள்‌. அது சரியான நிவாரண வேலையென்று சொல்ல முடியாது. உண்மையில்‌ பஞ்ச நிவாரண வேலை செய்தது மகாத்மா காந்திதான்‌. திருப்பூர்‌, காங்கயம்‌ பக்கம்‌ பஞ்சத்தில்‌ வாடிய ஏழைகளை அரைக்‌ கஞ்சியாவது ஊற்றிக்‌ காப்பாற்றியது கைராட்டினம்‌ தான்‌. அதனால்தான்‌ மகாத்மா மில்‌ தொழிலை ஆதரிக்க வில்லை. கதர்‌ கொஞ்சம்‌ விலை அதிகமாயிருந்தாலும்‌ கொஞ்ச காலம்‌ பொறுத்துக்‌ கொள்ள வேண்டியதுதான்‌. டிராமா, காப்பி, பீடி, வக்கீல்‌ இவை 175 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 களுக்கு செலவாவதில்‌ கதருக்கு கொஞ்சம்‌ உபயோகிக்கலாம்‌. ஆகையால்‌, நாம்‌ விட்டுவிட்ட தொழிலை மீண்டும்‌ கொள்ளவேண்டும்‌. போய்விட்ட யோக்கியதையை சம்பாதிக்காதவர்கள்‌ எப்படிப்‌ புது யோக்கியதையை சம்பாதிக்கப்‌ போகிறீர்கள்‌? குடியைப்பற்றிக்கூட எனக்கு முதலில்‌ அவ்வளவு கவலையில்லை, கதரைக்‌ கட்டுங்கள்‌, குடியை விட கதர்‌ பிரதானமானது என்றுதான்‌ சொல்லுவேன்‌. குறிப்பு: 20.226ஆம்‌ தேதி பொள்ளச்சியில்‌ நடைபெற்ற கொங்குவேளாளர்‌. 3ஆவது மகாநாட்டு சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 07.03.4926 குடி அரசு - 1926 N 176 சுயாரான்னிய ககூறியிண்‌ கேர்தல்‌ உறுதிவமாழி நிறைவேற்றல்‌! சுயராஜ்ஜியக்‌ ககஷித்‌ தலைவரான ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாஸய்யங்கார்‌, செல்லுமிடங்களிலெல்லாம்‌ ஜஸ்ட்டிஸ்‌ ககஷியார்‌ கவர்ன்மென்டு விருந்து களுக்குப்‌ போகிறார்கள்‌. கவர்னர்‌ முதலிய கவர்ன்மென்டு உத்தியோகஸ்‌ தர்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள்‌. நாங்கள்‌ விருந்துக்கும்‌ போகோம்‌; விருந்தும்‌ கொடுக்கமாட்டோம்‌; ஆதலால்‌ நாங்கள்‌ ஒத்துழையாமை வாசனைக்காரர்‌ என்று உறுதிமொழி கூறி ஓட்டு கேட்கிறார்‌. இவ்வுறுதிமொழிக்கு ஜாமீன்‌ கொடுப்பது போல்‌ ஸ்ரீமான்‌ சி.ராஜ கோபாலாச்சாரியாரும்‌ சுயராஜ்யா ககஷியார்‌ உறுதிமொழிப்படி நடப்பார்கள்‌ அதற்கு நான்‌ ஜாமீன்‌ என்று மேலொப்பமும்‌ போடுகிறார்‌. மேலொப்ப கையெ முத்து முடிவதற்குள்ளாகவே சுயராஜ்யக்‌ ௧௯௮ முக்கியஸ்தரான சென்னை கார்ப்பரேஷன்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ சாமி வெங்கிடாசலம்‌ செட்டியார்‌ கவர்ன ருக்கும்‌ சர்க்கார்‌ உத்தியோகஸ்தருக்கும்‌ விருந்து கொடுத்து வருகிறார்‌. தேர்தல்‌ பாக்கியிருக்கும்போதே இவ்வளவு நாணயமாய்‌ நடப்பவர்‌. கள்‌ தேர்தல்‌ முற்றும்‌ நடந்த பிறகு என்ன செய்வார்கள்‌ என்பதை ஜாமீன்‌ தாரான ஸ்ரீமான்‌ ஆச்சாரியாரையும்‌ சாக்ஷிக்‌ கையெழுத்து போடுபவரான ஸ்ரீமான்‌ முதலியாரையும்‌ நம்புபவர்கள்‌ தான்‌ பதில்‌ சொல்லவேண்டும்‌... குடி அரசு - செய்தி விளக்கக்‌ குறிப்பு - 07.03.1926 177. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஓட்ர்களை ஏமாற்றும்‌ தந்திரம்‌ இவ்வாரம்‌ பத்திரிகைகளெல்லாம்‌ ஒரே மூச்சாய்‌ சுயராஜ்யக்‌ ககஷியார்‌. சட்டசபைகளை விட்டு வெளியேறி விட்டார்கள்‌, வெளியேறி விட்டார்க ளென்று சுயராஜ்யக்‌ க௯ஷியாருக்காக வஞ்சகப்‌ பிரசாரங்கள்‌ செய்து வருகின்‌ றன. சுயராஜ்யக்‌ ககஷியார்‌ எப்பொழுது விலகினார்கள்‌? எதற்காக விலகினார்‌. கள்‌? எவ்வளவு நாளைக்கு விலகியிருப்பார்கள்‌? விலகிய பின்‌ இவர்களு டைய வேலை என்ன? இந்த நான்கு விஷயங்களையும்‌ கவனித்துப்‌ பார்த்தால்‌ சுயராஜ்யக்‌ ககஷியாரின்‌ தந்திரம்‌ பொது ஜனங்களுக்கு விளங்கா மற்‌ போகாது. எப்போது விலகினார்கள்‌? இருக்கவேண்டிய நாளெல்லாம்‌ இருந்து விட்டு அடைய வேண்டிய பெருமையையும்‌, உத்தியோகத்தையும்‌, பணத்தையும்‌, தங்கள்‌ பிள்ளைக ளுக்கு உத்தியோகத்தையும்‌ சம்பாதித்துக்‌ கொண்டு கடைசியாய்‌ சட்டசபை வேலையெல்லாம்‌ முடிந்து, காலாவதி முடிய ஒரு வாரமிருக்கும்போது விலகி விட்டோம்‌! விலகி விட்டோம்‌!! என்று ஆடம்பரம்‌ செய்கிறார்கள்‌. எதற்காக விலகினார்கள்‌? விலகி விட்டோமென்று பொதுஜனங்களை ஏமாற்றி மறுபடியும்‌ தங்களுக்கே வோட்டுப்‌ போடும்படி செய்து மறுபடியும்‌ தாங்களே போய்‌ முன்னிலும்‌ பலமாய்‌ உட்கார்ந்துக்‌ கொள்ளுவதற்காக விலகினார்கள்‌. அல்லா மல்‌ தங்களுடைய காரியமொன்றும்‌ பலிக்காததினால்‌ தங்களுக்கே வெட்கம்‌ வந்தோ, அல்லது சர்க்காருக்கு ஒரு உணர்ச்சி உண்டாவதற்கோ விலகி னவர்களல்ல.. எவ்வளவு நாளைக்கு விலகியிருப்பார்கள்‌?' அடியோடு ஒன்றும்‌ ராஜிநாமாக்‌ கொடுத்து வெளியில்‌ வந்தவர்‌ களல்ல. மறுபடியும்‌ நாளைக்கு வேண்டுமானாலும்‌ இவர்கள்‌ போவதற்கு இடம்‌ வைத்துக்‌ கொண்டுதானிருக்கிறார்கள்‌. மறுபடியும்‌ உள்ளே போய்‌ மூன்று வருடம்‌ உட்கார்ந்து, பதவியும்‌, உத்தியோகமும்‌, பணமும்‌ சம்பாதித்‌ துக்கொள்ள சவுகரியம்‌ கிடைக்கிற வரையில்தான்‌ வெளியிலிருப்பார்கள்‌. குடி அரசு - 1926 N 178 விலகின பின்‌ இவர்களுடைய வேலை என்ன? வோட்டர்களிடம்‌ போய்‌ நாங்கள்‌ வெளியில்‌ வந்து விட்டோம்‌; எங்க ளுடைய வீரப்‌ பிரதாபத்தைப்‌ பார்த்தீர்களா? ஆதலால்‌ எங்களை மறுபடியும்‌ அனுப்புங்களென்று வோட்டர்களை ஏமாற்றுவதுதான்‌ இவர்களுடைய முக்கிய வேலை.இவர்களின்‌ நிலையோ சட்டசபையை விட்டு வெளியேறுங்‌ காலத்தில்‌ கக்ஷித்‌ தலைவர்‌ பண்டிதநேரு சொல்லியதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்‌. “சர்க்காரை நாங்கள்‌ பயமுறுத்தவில்லை; சர்க்காருக்கு மகத்தான அதிகாரங்கள்‌ உண்டு; சர்க்காரை எதிர்க்கத்‌ தகுந்த பலம்‌ எங்களிடம்‌ கிடை யாது; தேசத்தில்‌ சமூக வேற்றுமை ஏற்பட்டு ஒற்றுமைக்‌ குலைந்திருக்கிறது. ஆதலால்‌, சட்டமறுப்புச்‌ செய்ய எங்களால்‌ ஆகாது. இந்த நிலைமையில்‌ சட்டசபையில்‌ நாங்களிருப்பதில்‌ பிரயோஜனமில்லை. இவ்வளவு பலமுள்ள பெரிய சர்க்காரை ஒழித்துவிடும்‌ நோக்கத்துடன்‌ நாங்கள்‌ வெளியே போக: வில்லை. நாங்கள்‌ ஆசைப்பட்டாலும்‌ அது ஆகிற காரியமல்ல. எவ்வளவு கெஞ்சிக்‌ கூத்தாடியும்‌, எங்கள்‌ நோக்கங்களை அடைய முடியவில்லை என்றே வெளியே போகிறோம்‌. வெகு நாளைக்கு முன்னமேயே நாங்கள்‌ சட்டசபையை விட்டுப்‌ போயிருக்க வேண்டும்‌; சர்க்காருடைய தந்திரம்‌ எங்களை ஏமாற்றிவிட்டது. ஆதலால்‌ நாங்கள்‌ இங்கிருப்பதில்‌ பிரயோ ஜனமில்லை, போய்‌ வருகிறோம்‌” என்று சொல்லியிருக்கிறார்‌. இது உண்மை யான விஷயம்‌. ஆனால்‌, ஒரு கக்ஷியார்‌ இந்த உண்மையை அறிந்து இந்த தத்துவத்திற்காக வெளியானது உண்மையாய்‌ இருந்து அவர்களுக்கு சுய மரியாதையும்‌ யோக்கியப்‌ பொறுப்பும்‌ இருக்குமானால்‌ மறுபடியும்‌ தாங்கள்‌. விட்டுவந்த சட்டசபையைத்‌ திரும்பிப்‌ பார்ப்பார்களா? மற்றவை மறுமுறை விபரமாய்‌ எழுதுவோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 14.03.1926. 179 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 யிராமணர்களுக்க ஒரு கை ஒழந்தது மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம்‌ ஒழிந்தது -சித்திரபுத்திரன்‌ சென்னை சட்டசபையில்‌ கொழுத்த சம்பளம்‌ பெறும்‌ மந்திரிகளை: பொறாமைக்‌ கொண்டு வேண்டுமென்றே உபத்திரவப்படுத்த நமது பிராமணர்‌: களுக்கு ஸ்ரீமான்கள்‌ ராமலிங்க ரெட்டியார்‌ அவர்களும்‌ &ராமலிங்க செட்டியார்‌ அவர்களும்‌ வலக்கை இடக்கை போல்‌ கொஞ்சக்‌ காலமாய்‌ இருந்து வருகிறார்கள்‌. இதில்‌ ஸ்ரீமான்‌ ரெட்டியாருக்கு மாதம்‌ 2000 ரூபாய்‌ சம்பளத்தில்‌ ஒரு உத்தியோகம்‌ கிடைத்துவிட்டது. இதனால்‌ பிராமணர்க ளுக்கு ஒரு கை ஒடிந்ததென்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. மந்திரிகளுக்கும்‌ ஒரு உபத்திரவம்‌ குறைந்தது என்றுதான்‌ சொல்லவேண்டும்‌. இதுபோலவே நமது ஸ்ரீமான்‌ செட்டியார்‌ அவர்களுக்கும்‌ ஒரு உத்தியோகம்‌ ஏற்பட்டு விட்‌ டால்‌ பிராமணர்களின்‌ மற்றொரு கையும்‌ தற்கால சாந்தியாய்‌ ஒடியும்‌. மந்திரிகளின்‌ முழு உபத்திரவமும்‌ நீங்கிப்‌ போகும்‌. மந்திரிகளின்‌ அறியாமை யினால்‌ ஒரு நல்ல சந்தர்ப்பத்தை மந்திரிகள்‌ நழுவ விட்டுவிட்டார்கள்‌. அதாவது, சட்டசபை பிரசிடெண்டு உத்தியோகத்தை செட்டியாருக்கு கொடுக்கத்‌ தவறிவிட்டதுதான்‌. இதை மந்திரிகளின்‌ மன்னிக்க முடியாத குற்ற மென்றுதான்‌ சொல்வேன்‌. இவ்விருவருக்கும்‌ தயவுக்காக யாரும்‌ உத்தி யோகம்‌ கொடுக்க வேண்டியதில்லை. இருவரும்‌ அந்தந்த ஸ்தானங்களுக்கு மிகவும்‌ பொருத்தமானவர்கள்‌ - உரியவர்கள்‌ என்றே சொல்வேன்‌. (அந்த ஸ்தானங்கள்‌ பொதுமக்களுக்கு உபயோகப்படக்‌ கூடியதா அல்லவா என்பது வேறுவிஷயம்‌ அவரவர்‌ உரிமை அவரவர்களுக்கு அளிக்கப்படாவிட்டால்‌ விதியை எதிர்பார்த்து பொறுமையுடனிருந்து பெருவோர்‌ சிலர்‌; விதியையும்‌ பொறுமையையும்‌ வீதியிலெறிந்து விட்டு யுத்தம்‌ செய்து பெறுவோர்‌ சிலர்‌; அவ்வித யுத்தம்‌ சிலர்‌ தர்ம வழியில்‌ செய்வார்கள்‌; சிலர்‌ அது நீங்கிய வழியில்‌ செய்வார்கள்‌. ஆனால்‌, நமது மந்திரிகள்‌ இவர்களின்‌ தர்ம யுத்தத்‌ திற்கு மடங்காத மந்திரிகளாய்ப்‌ போய்விட்டதால்‌ பிராமணர்களோடு சேர்ந்து கொண்டு யுத்தம்‌ புரிய வேண்டியதாயிற்று- வேண்டியதாயுமிருக்கிறது. ராமாயணம்‌ என்னும்‌ கதைப்படி ராமரே தனது உரிமையைப்‌ பெற “ராக்ஷ தர்களில்‌ ஒருவரான விபூஷணனுடன்‌ ஒப்பந்தம்‌ பேசிக்கொண்டுஅவனை ஆழ்வாராக்கி ரவணனோடு சண்டை செய்ய வேண்டியிருந்ததென்றால்‌, குடி அரசு - 1926 N 180 நமது ஸ்ரீமான்கள்‌ ரெட்டியாரும்‌ செட்டியாரும்‌ பிராமணர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களைத்‌ தலைவர்களாக்கி உரிமை பெறுவது தப்பாகுமா?' சரியோ - தப்போ தமிழ்‌ மந்திரி பதவியின்‌ முதல்‌ சந்தர்ப்பத்தை ஸ்ரீமான்‌ செட்டியாருக்கு கொடுத்திருக்க வேண்டியது கிரமமானதாகும்‌. செட்டியாரின்‌ அவசரமும்‌ மந்திரிகளின்‌ வீம்பும்‌ இக்கிரமத்திலிருந்து தவறும்படி செய்து விட்டது. இவர்கள்‌ இருவரின்‌ தவறுதல்கள்‌ தமிழ்‌ மக்களை பெரிதும்‌ துன்பத்திற்காளாக்கப்‌ போகிறது. ஆகையால்‌, இனியாவதுமந்திரிகள்‌ ஸ்ரீமான்‌ செட்டியாருடன்‌ ராஜி பேசிக்‌ கொண்டு அந்த உபத்திரவத்திலிருந்தும்‌ தப்பித்துக்‌ கொள்ள வழிதேட வேண்டியது. இல்லாவிட்டால்‌ “குடிக்க முடியா மல்‌ போனால்‌ கவிழ்த்த வேண்டியது” என்கிற தத்துவம்‌ தலை சிறந்து விளங்கும்‌. ஆத்துத்‌ தண்ணீரை அப்பா குடி, அய்யா குடி என்று சொல்ல வேண்டியதுதான்‌. குடி அரசு - கட்டுரை - 14.03.1926 181 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஈட முணிசியாலிட்மு ஈரோடு முனிசிபாலிட்டியின்‌ சேர்மன்‌ நடத்தையைப்‌ பற்றி கவுன்சிலர்‌. கள்‌ அடிக்கடி கோர்ட்டுகளுக்குப்‌ போக ஏற்பட்டதைப்‌ பற்றியும்‌, அரசாங்கத்‌ தாருக்கு அடிக்கடி புகார்கள்‌ போய்க்‌ கொண்டிருப்பது பற்றியும்‌ இதற்கு முன்‌ பல தடவைகளில்‌ குறிப்பிட்டிருக்கின்றோம்‌. இவற்றில்‌ சிங்காரவன விஷயமாக நிறைவேறின ஓர்‌ ஒழுங்கான தீர்மானத்தை விட்டு விட்டு, நிறை வேறாத ஓர்‌ தீர்மானத்தை நிறைவேறியதாக கெட்ட எண்ணங்‌ கொண்டு பொய்யாகவும்‌ அக்கிரமமாகவும்‌ நடவடிக்கைப்‌ புத்தகத்தில்‌ பதிந்து கொண்டார்‌ என்கிற காரணம்‌ கொண்டு ஸ்ரீமான்கள்‌ கே.ஏ.ஷேக்‌ தாவூத்‌ சாயபு, மு.ச. முத்துக்கருப்பன்‌ செட்டியார்‌ முதலியவர்கள்‌ இத்தீர்மானம்‌ நிறைவேற்ற வொட்டாதபடி தற்கால தடை உத்திரவு பெற்றிருந்த விஷயம்‌ நேயர்களறிந்திருக்கலாம்‌. அதன்‌ பிறகு இதே சேர்மன்‌ ஸ்ரீமான்‌ ஸ்ரீனிவாச முதலியார்‌ முனிசிபல்‌ பண விஷயங்களில்‌ நாணயமாய்‌ நடந்துக்‌ கொள்ள வில்லை யென்பதாக பல புகார்கள்‌ அதிகாரிகளுக்கு எட்டியிருப்பதன்‌ பலனாய்‌, சிவில்‌ கோர்ட்டு விவகாரங்களை ராஜி செய்துகொள்ள வேண்டியது சேர்மனுக்கு அவசியமாய்ப்‌ போய்விட்டது. அதை முன்னிட்டே தற்காலம்‌ கோர்ட்டிலிருக்கும்‌ பொய்த்‌ தீர்மான விவகாரம்‌, ராஜி செய்து கொள்ள ஏற்பாடாகி, விவகாரத்துக்கு ஆதாரமாயிருந்த தீர்மானத்‌ தை நடவடிக்கைப்‌ புஸ்தகங்களிலிருந்து எடுத்து விடுவதற்காக ஓர்‌ கூட்டம்‌ கூடி, அந்தக்‌ கூட்டத்தில்‌ எடுபட தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அத்தீர்மானமாவது:- “ஒ-1-25-ந்‌ தேதி முனிசிபல்‌ மீட்டிங்கில்‌ நிறைவேறியதாகச்‌ சொல்லப்‌ படும்‌ ஓர்‌ தீர்மானமானது அது உண்மையிலேயே நிறைவேறவில்லை யென்கிற காரணத்தால்‌, சில கவுன்சிலர்களுக்குள்ளாகவே உரசல்‌ ஏற்பட்ட தோடு, முக்கியமாய்‌ முனிசிபல்‌ நிர்வாகத்திற்குக்‌ கேடாய்‌ இருப்பதால்‌ நடவ டிக்கைப்‌ புஸ்தகத்திலுள்ள ஷி தீர்மானத்தை மறைந்து போகும்படி அடித்து விடவேண்டியது” என்று முனிசிபாலிட்டியிலுள்ள பூரா கவுன்சிலர்களும்‌ ஆஜராகி ஏகமனதாய்த்‌ தீர்மானிக்கப்பட்டது! சேர்மன்‌ அவர்கள்‌ இத்தீர்மானத்தின்‌ வாசகம்‌ ரொம்பக்‌ கடுமையாயும்‌, தனது நாணயத்தைப்‌ பாதிக்கக்‌ கூடியதாகவும்‌ இருக்கிறதென்று எவ்வளவோ சொல்லியும்‌, கவுன்சிலர்கள்‌ அதுதான்‌ உண்மையென்று ஒரே பிடிவாதமாய்‌ அப்படியே நிறைவேற்றினார்கள்‌. இதன்‌ பலனாய்‌ முனிசீப்‌ கோர்ட்டில்‌ இப்போது நடைபெற்று வரும்‌ விவகாரம்‌ பின்வாங்கிக்‌ கொள்ளப்படும்‌. குடி அரசு - 1926 N 182 இப்பணப்புழக்கமான விஷயங்களைப்‌ பற்றிப்‌ பின்னர்‌ விரிவா யெழுதுவோம்‌. நமது நாட்டில்‌ முனிசிபல்‌ நிர்வாகமானது சிற்சில இடங்களில்‌ மிகக்‌ கேவலமாயும்‌, நாணயக்‌ குறைவாயும்‌ நடைபெறும்‌ விஷயங்கள்‌ அரசாங்கத்‌ தாருக்குத்‌ தெரிந்திருந்தும்‌ அலக்ஷியமாயிருந்து வருவதினால்‌ முனிசிபல்‌ நிர்வாகிகள்‌ என்ன வேண்டுமானாலும்‌ செய்யத்‌ துணிந்து விடுகிறார்கள்‌. சர்க்காரார்‌ சிறு விஷயங்களையே கவனித்துத்‌ தகுந்தபடி எச்சரிக்கை செய்தி ருப்பார்களானால்‌ அநேக பெரிய குற்றங்கள்‌ நேரிடுவதற்கே வழியில்லாமற்‌ போயிருக்கும்‌. முனிசிபல்‌ இலாகாவுக்கும்‌ கெட்டபெயர்‌ ஏற்படவும்‌, குற்றம்‌ சொல்லவும்‌ இடமில்லாமலிருந்திருக்கும்‌. இனியாவது மந்திரிகள்‌ கவனித்து தக்கது செய்வார்களென்று நினைக்கிறோம்‌. இவ்விஷயம்‌ மந்திரிகள்‌ ஞாபகத்‌ திற்குக்‌கொண்டுபோகவேண்டுமென்று நாள்‌ இது வரையில்‌ நினைக்கவே யில்லை. ஆனால்‌, நிலைமை நாளுக்கு நாம்‌ ரொம்பவும்‌ கேவலப்பட்டு வருவதோடு வெறு வாயை மென்றுகொண்டிருக்கும்‌ நமது மந்திரிகளின்‌ எதிரி. களுக்கு அவல்‌ கிடைத்தது போலாகுமென்றே இதைக்‌ குறிப்பிடுகிறோம்‌.. குடி அரசு - கட்டுரை - 14.03.1926 183 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கோயமுத்தூரில்‌ காங்கிரஸ்‌ பிரசாரத்தின்‌ €மோக்கியதை ! சில தினங்களுக்குமுன்‌ கோயமுத்தூர்‌ சேர்மெனின்‌ சில பிராமண: விரோதிகளும்‌, அவர்கள்‌ வாலைப்பிடித்துக்கொண்டு வயிறு வளர்க்கும்‌ சில பிராமணரல்லாதாரும்‌ சேர்ந்து காங்கிரஸ்‌ மீட்டிங்கு என்பதாக பெயர்‌ வைத்து காங்கிரஸ்‌ கொடியுடன்‌ டவுன்ஹாலில்‌, ஒரு கூட்டம்‌ கூடினார்கள்‌. அக்கூட்டத்தில்‌ ஒரு பிராமணர்‌ அக்ராசனம்‌ வகிக்கவும்‌, மற்றொரு பிராம ணர்‌ பேசவும்‌ சில பிராமணர்கள்‌ உட்கார்ந்து கொண்டு சிரிக்கவுமாய்‌ இருந்‌ தது. இந்நிலைமையில்‌ பேசிய பிராமணர்‌, சேர்மெனையும்‌, மற்றும்‌ சில பிராமணரல்லாத கவுன்சிலர்களையும்‌, வைதுகொண்டே வரும்‌ போது, மற்ற பிராமணர்கள்‌ சிரிக்கும்‌ ஆனந்தத்தில்‌ மூழ்கியிருக்க உபந்யாசகர்‌ முனிசிபல்‌ கவுன்சில்களில்‌ சேர்மெனுக்கு அனுகூலமாயிருக்கும்‌ கவுன்சிலர்‌ களெல்லாம்‌ கைதூக்கும்‌ கழுதைகள்‌ என்று சொன்னார்‌. கூட்டத்திலிருந்த ஒருவர்‌, உடனே அடங்காக்‌ கோபப்பட்டு, உபந்யாசகரை அவமானப்படுத்தவும்‌, துன்புறுத்த வும்‌ பிரயத்தனப்பட்டார்‌. அவர்‌ பக்கத்திலிருந்த ஒருவர்‌, அதை தடுத்துப்‌ பக்கத்தில்‌ தேசியக்‌ கொடியும்‌ மகாத்மாகாந்தியின்‌ படமும்‌ இருக்கிறது போலிருக்கிறது, உபந்யாசகர்‌ மேல்படுவதினால்‌ நமக்குக்‌ கவலையொன்று மில்லை; தேசீயக்கொடியின்‌ மீது விழுந்தால்‌ பெரிய தோசமல்லவா, ஆதலால்‌ மீட்டிங்கு கலைந்து வெளியில்‌ வந்த பிறகு நீங்கள்‌ அவரை என்ன வேண்டுமானாலும்‌ செய்யலாம்‌ என்று சொல்லித்‌ தடுத்துவிட்டார்‌. மீட்டிங்கு கலைந்தபிறகு, உபந்யாசகர்களுக்குப்‌ புத்தி கற்பிக்க வேண்டுமென்று தயாராகயிருந்தார்கள்‌. இது விசயத்தை கூட்டத்து அக்ராசனாதிபதி அறிந்து, உபந்யாசகர்‌ இம்மாதிரி இழிதன்மையாய்‌ பேசியதற்காக மன்னிப்புக்‌ கேட்டுக்‌ கொண்டதின்‌ பேரிலும்‌, மற்றும்‌ சில பெரியவர்கள்‌ பிரயத்தனப்பூர்வமாய்‌ இதை அடக்கியதன்‌ பேரிலும்‌, விசயம்‌ அவ்வளவோடு நின்று விட்டதாய்த்‌ தெரிகிறது. இதிலிருந்து மகாத்மாவின்‌ பெயரும்‌ அவருடைய கொடியும்‌ எவ்வளவு யோக்கியப்‌ பொருப்பில்லாமல்‌ உபயோகப்படுகின்றதென்றும்‌, காங்கிரஸ்‌ கூட்டமும்‌, காங்கிரஸ்‌ செல்வாக்கும்‌ எவ்வளவு அல்பத்தனமும்‌, நீச்சத்தனமுமான காரியங்களுக்கு உபயோகப்படுகின்றதென்பதையும்‌, கோடிக்கணக்கான ரூபாய்களைச்‌ செலவு செய்து, பதினாயிரக்கணக்கான பேர்‌. ஜெயிலுக்கு போய்‌, நூற்றுக்கணக்கான பேர்கள்‌ பிராணனை விட்டு, செல்‌ வாக்கும்‌, பெருமையும்‌ சம்பாதித்த நமது இந்திய தேசீய காங்கிரஸானது, குடி அரசு - 1926 N 184 இழிமக்கள்‌ கையிலும்‌, காங்கிரசிற்காக யாதொரு விதமான உதவியும்‌ செய்யாத சுயநலக்காரர்கள்‌ கையிலும்‌ சிக்கிக்கொண்டு, தங்கள்‌ வயிற்று பிழைப்புக்கு பணங்‌ கொடுக்காதவர்களையும்‌ வையவும்‌ பிராமணர்களிடம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டு பிராமணரல்லாதாரைத்‌ தூற்றவும்‌ உபயோகப்‌ படுகிறது. இம்மாதிரி ஜனங்கள்‌ உள்ளவரை நமது நாட்டுக்கு விடுதலை யென்பது கனவேயாகும்‌. ஒரு நிரூபர்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 14.03.1926 185 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 முப்மு கலக்டர்‌ உத்தியோகம்‌ இவ்வுத்தியோகமானது நமது நாட்டின்‌ ராஜ்ய பாரத்திற்குக்‌ கடுகளவு உபயோகமும்‌ இல்லாமல்‌ - வெறும்‌ தபாலாபீசைப்‌ போல்‌ காகிதம்‌ வாங்கி மேலாபீசுக்கு அனுப்புவதும்‌ - அரசாங்க ஜாதியாரின்‌ சுய நன்மைக்காகவே இருந்து நமது பணத்தின்‌ ஒரு முக்கிய பாகத்தைச்‌ செலவு செய்து கொண்டும்‌. வருகிறது. சுமார்‌ 30 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜில்லாவை 4-4 தாலூக்‌ காக்கள்‌ கொண்ட 2 டிவிஷன்‌ அல்லது மூன்று டிவிஷன்களாகப்‌ பிரித்து சப்‌ கலெக்டர்‌ என்பவருக்கு ஒரு டிவிஷனும்‌ ஹெட்‌ அஸிஸ்டெண்டு கலெக்டர்‌. என்பவருக்கு ஒரு டிவிஷனும்‌, அஸிஸ்டெண்டு கலெக்டர்‌ என்பவரை ஜில்லாக்‌ கலெக்டர்‌ என்பவர்‌ தன்னிடம்‌ வைத்துக்கொண்டு அவருக்கு ஒரு சின்ன டிவிஷனுமாய்‌ கொடுத்து வந்தார்கள்‌. அப்படியிருந்தாலும்‌ அவர்‌. களுக்குப்‌ பலவேலைகள்‌ இருக்கும்‌. அதாவது கிரிமினல்‌ கேசு விசாரணை கள்‌, கிரிமினல்‌ அப்பீல்கள்‌, ரிவின்யூ வேலைகள்‌ முனிசிபாலிட்டி மேற்‌ பார்வை, தாலூகா போர்டு மேற்பார்வை, இன்கம்டாக்ஸ்‌ போடும்‌ விஷயம்‌, நீர்க்கூலி விதிப்பது, சிவாஜிநாமா உத்திரவு முதலியவைகள்‌ போடுவது, நேரில்‌ பார்ப்பதும்‌ ஆகிய வேலைகள்‌ இருக்கும்‌. இவருக்குக்‌ கீழே உள்ள தாசில்தா ருக்கும்‌ ரிவின்யூ வேலையுடன்‌ கிரிமினல்‌ வேலையும்‌ நிறைய இருக்கும்‌. இப்போது மூன்று டிவிஷனை, 2-2 தாலூக்காக்கள்‌ கொண்ட 5 டிவிஷன்‌ களாக்கி 5 டிப்டிக்‌ கலெக்டர்களுக்குக்‌ கொடுத்து கலெக்டருக்கும்‌ உதவிக்காக ஒருடிப்டிக்‌ கலெக்டர்‌ கொடுத்து, ஆக ஜில்லா ஒன்றுக்கு அய்ந்து, ஆறு டிப்டி கலெக்டர்களாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்‌. அல்லாமலும்‌, தாசில்தார்களுக்கு இருந்த கிரிமினல்‌ உத்தியோகத்‌ தையும்‌ பிரித்து சப்‌ மாஜிஸ்ட்ரேடு என்றும்‌, டிப்டி தாசில்தார்‌ என்றும்‌ உத்தி யோகங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு அதை ஒப்புவித்துவிட்டு, டிவிஷ னல்‌ ஆபீஸர்‌ அல்லது டிப்டி கலெக்டர்கள்‌ என்பவர்களுக்கு இருந்த ரிவின்யூு வேலைகளையும்‌ பெரும்பாலும்‌ தாசில்தார்களுக்கே கொடுத்து விட்டார்கள்‌. அல்லாமலும்‌ அவர்களுக்கு இருந்த மற்ற வேலைகளும்‌ - அதாவது முனிசிபல்‌ சம்பந்தமான வேலைகள்‌ , தாலூகா போர்டு சம்மந்த மான வேலைகள்‌ இவைகள்‌ முழுவதிலும்‌ டிப்டி கலெக்டருக்கு ஒரு வேலையும்‌ இல்லாமல்‌ போய்விட்டது. இன்கம்டாக்ஸ்‌ வேலையும்‌ டிப்டி கலெக்டர்களிடமிருந்து பிடுங்கி இன்கம்டக்ஸ்‌ ஆபீஸர்‌ என்ற ஜில்லா ஒன்றுக்கு 2 அல்லது மூன்று பேர்‌ வீதம்‌ கொண்ட வேறு டிபார்ட்மெண்டு குடி அரசு - 1926 N 186 ஏற்படுத்தி அவர்கள்‌ வசம்‌ ஒப்புவிக்கப்பட்டுப்‌ போய்விட்டது. முக்கிய பட்டணங்களில்‌ முதல்வகுப்பு பெஞ்சு கோர்ட்டு ஏற்படுத்தி விட்டதால்‌ கிரிமி னல்‌ அப்பீல்களும்‌ குறைந்து போய்விட்டது. பல தாசில்தார்களுக்கு முதல்‌ வகுப்புக்‌ கிரிமினல்‌ அதிகாரம்‌ கொடுக்கப்பட்டதால்‌ டிப்டி கலெக்டர்கள்‌ விசாரிக்கத்‌ தகுந்த கேஸ்களும்‌ தாசில்தார்களுக்கு அனுப்பத்‌ தகுந்ததாய்ப்‌ போய்விட்டது. இவ்வளவு அதிகாரங்களும்‌, வேலைகளும்‌ குறைந்திருக்க, எண்ணிக்கையும்‌ சம்பளமும்‌ குறையாமல்‌, அதிகாரம்‌ குறைந்து விட்டதால்‌ மேல்வரும்படியும்‌ குறைந்திருக்கும்‌ என்கிற எண்ணங்கொண்டு செய்தது போல்‌ பிறர்‌ நினைக்கும்படி சம்பளங்களையும்‌ ஒன்றுக்கு ஒன்றரையாய்‌ உயர்த்தப்பட்டும்‌ போய்விட்டது. சாதாரணமாய்‌ இப்பொழுது டிப்டி கலெக்டர்‌. என்பதும்‌, டிப்டி கலெக்டர்‌ ஆபீஸ்‌ என்பதும்‌ ஒரு தபாலாபீசைப்‌ போல்‌ கீழே இருந்து வரும்‌ காகிதங்களை முத்திரை போடுவது போல்‌ டிப்டி கலெக்டர்‌. கையெழுத்துப்‌ போட்டு மேலே அனுப்புவதும்‌, மேலே இருந்துவரும்‌ காகிதங்களை டி வீதம்‌ கீழே அனுப்புவதுமான வேலைகளைத்‌ தவிர டிப்டி கலெக்டர்களுக்கென்று என்ன அசல்‌ (ஒரிஜனல்‌ வொர்கி வேலை இருக்கிறது? டிப்டி கலெக்டர்கள்‌ 500,600, 800, 1000, 1200 என்று சம்பளங்களை வாங்கிக்கொண்டு ஆபீஸ்களுக்கு வந்து மேஜையின்‌ மேலே முழங்கையை வைத்து, தாவாக்கொட்டையை உள்ளங்கைகளில்‌ தாங்கிக்கொண்டு குறிப்பில்‌ (டைரியில்‌) என்ன வேலை செய்ததாக எழுதிக்காட்டலாம்‌ என்று யோசிப்‌ பதும்‌, பிரயாணச்‌ செலவு பெற டிராவலிங்‌ அலவன்ஸ்‌) நாளைக்கு எந்த ஊர்‌. போகலாம்‌ என்பதும்‌, கலெக்டர்‌ தயவு பெற யார்‌ பேரில்‌, என்ன விதமான ரகசிய யாதாஸ்து (கான்பிடென்ஷியல்‌ ரிப்போர்ட்‌) எழுதலாம்‌ என்கிற யோசனையும்‌, கலெக்டர்களுக்கு மீனும்‌, முட்டையும்‌, கோழியும்‌, ஆடும்‌ வாங்கிக்‌ கொடுப்பதும்‌ துரைசானி தயவு சம்பாதிக்க வாசற்படியில்‌ காத்தி ருந்து, மூக்கு நிலத்தில்‌ படும்படி குனிந்து சலாம்‌ போடுவதுமல்லாமல்‌, வேறு ஒரு தொழிலுமே இல்லாமல்‌ போய்விட்டதோடு, அநாவசியமாய்‌ ரிவின்யூ வேலைகளை இரட்டிக்கவும்‌, காலதாமதமாகவும்‌, பொதுஜனங்களுக்கும்‌ ஒரு வேலை ஆகவேண்டுமானால்‌ தாசில்தார்‌ தயவு, தாசில்தார்‌ ஆபீஸ்‌ குமாஸ்‌ தாக்கள்‌, சேவகர்கள்‌ தயவு சம்பாதிப்பதோடல்லாமல்‌ டிப்டி கலெக்டர்‌ தயவும்‌, அந்த ஆபீஸ்‌ குமாஸ்தா சேவகர்கள்‌ முதலியவர்கள்‌ தயவும்‌ பெற வேண்டியது அவசியமான இரட்டிப்பு கஷ்டமும்‌, நஷ்டமும்‌, காலதாமதமும்‌ ஆகும்படியாய்‌ ஏற்பட்டு விடுகிறது. இந்த ஒரு இலாகாவால்‌ நமது வரிப்பணத்தில்‌ ஏறக்குறைய ரூ1- க்கு ஒரு அணா வீதம்‌ அநாவசியச்‌ செலவு ஆகிறது. அதாவது:- நமது மாகாணத்தில்‌ இது சமயம்‌ ஏறக்குறைய 150 காயம்பர்மனெண்ட்‌ டிப்டிக்‌ கலெக்டர்களும்‌, சுமார்‌ 90 அல்லது 100 ஆக்டிங்‌ டிப்டிக்‌ கலெக்டர்களும்‌ இருக்கின்றார்கள்‌. இந்த 150 பேருக்கும்‌ ஆள்‌1- க்கு மாதம்‌ 1-க்கு 300 ரூபாய்‌ முதல்‌ 1200 ரூபாய்‌ வரை சம்பளம்‌ கொடுக்கப்‌ 187 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 படுகின்றன. ஆக்டிங்‌ டிப்டி கலெக்டர்களும்‌ மாதம்‌ 300 ரூ. குறையாமல்‌ 500 ரூ.வரை கூட வாங்குகிறார்கள்‌. இவர்களுக்காக என்ன குறைந்தாலும்‌ நமது மாகாணத்தில்‌ மட்டும்‌150 ஆபீஸ்கள்‌ வரை டிப்டிகலெக்டர்‌ ஆபீஸ்‌ என்ற பெயராலேயே இருந்து வரு கிறது. இவர்களுக்கு குமாஸ்தாக்கள்‌ 80 ரூ. சுமாரில்‌ 2 பேர்‌, 35 முதல்‌ 60 ரூ. சுமாரில்‌ 3 பேர்‌ ஆக 5 குமாஸ்தாக்களுக்கு குறையாமலும்‌, பியூன்கள்‌ என்று சொல்லும்‌ பில்லை சேவகர்கள்‌ 5 பேரும்‌, இவர்களுக்கும்‌ சராசரி மீ£ 75 ரூபாயும்‌, கண்டிஞ்செண்ட்‌ மீ 200 ரூபாயும்‌, பிரயாணச்‌ செலவு (டிராவலிங்‌ அலவன்ஸ்‌) மீ 250 ரூபாயும்‌, ஆக ஒரு டிப்டிகலெக்டர்‌ ஆபீசுக்கு மாதத்தில்‌ சராசரி கட்டட வாடகை உட்பட 1600 ரூபாய்‌ வீதம்‌, வருடத்திற்கு சுமார்‌ 20000 ரூபாயும்‌, இம்மாதிரி 150 ஆபீஸ்களுக்கு 30,00,000 ரூ. (முப்பது லக்ஷம்‌ ரூபாய்‌! இவர்களுக்குப்‌ பென்ஷன்‌, லீவு வகையறா, ஆக்டிங்‌ டிப்டிக்‌ கலெக்டர்கள்‌ முதலியவைகளும்‌ சேர்த்தால்‌, அதுவும்‌ கிட்டத்தட்ட 4 அல்லது 5 லக்ஷம்‌ ரூபாய்க்கு குறையாது. ஆக, சுமார்‌ வருடம்‌ 1- க்கு 35 லக்ஷம்‌ ரூபாய்‌ செலவாகிறது. இதல்லாமல்‌ ஜனங்கள்‌ இவர்கள்‌ தயவு பெறக்‌ கொடுக்கும்‌ விலையும்‌, சப்ளையும்‌, மற்றும்‌ பல இழிதொழில்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ எவ்வளவோ பணம்‌ செலவாகிறது. ஆக இவ்வளவும்‌ குடிகளுடைய பணம்‌ அநாவசிய மாய்ச்‌ செலவாவதோடு அலைச்சல்‌, ஒழுக்கக்‌ குறைவு எவ்வளவு ஏற்படு கின்றன. இதல்லாமல்‌ இந்த உத்தியோகங்களுக்குப்‌ போட்டி போடுவதன்‌ மூலம்‌ நம்மில்‌ படித்தவர்கள்‌, புத்திசாலிகள்‌ என்று சொல்லத்தக்கவர்கள்‌ எவ்‌ வளவு தூரம்‌ தங்கள்‌ மனச்சாகஷியைவிற்கவும்‌ அடிமையாகவும்‌ நேரிடு கிறது. இவற்றை நமது நாட்டினர்‌ கவனிப்பதில்லை. நமது நாட்டினரை ஏமாற்றிச்‌ சட்டசபைக்குப்‌ போகும்‌ படித்தவர்கள்‌, புத்திசாலிகள்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ பிரதிநிதிகளும்‌ இதைப்பற்றிப்‌ பேசப்‌ பயப்படுகிறார்கள்‌. ஏனென்‌ றால்‌, இம்‌ மாதிரி உத்தியோகங்‌ களைக்‌ கொண்டு தானே தங்கள்‌ இனத்தார்கள்‌ பிழைக்க முடியும்‌; சர்க்காருக்கும்‌ இம்‌ மாதிரி உத்தியோகமான பல துண்டுகள்‌ கைவச மிருந்தால்தானே கடிக்க வருவதற்கெறிந்தது போல்‌ ஆளுக்கொரு துண்டு வீசலாம்‌. சர்க்கார்‌ ஜாதியார்‌ பிழைக்கவும்‌ படித்த ஜாதியார்‌ பிழைக்க வும்‌ ஏழை ஜனங்கள்‌ பணம்‌ எவ்வளவு வீணாகிறது. இம்மாதிரி அதிகச்‌ செலவும்‌ இன்னமும்‌ போலீஸ்‌ இலாகாவில்‌ சர்க்கில்‌ இன்ஸ்பெக்டர்‌ என்கிற தெண்ட உத்தியோகத்திற்கு அழுகும்‌ செலவும்‌, டெட்லெட்டர்‌ ஆபீஸ்‌ என்று சொல்லத்‌ தகுந்த ரிவின்யு போர்டு ஆபீசும்‌ ஒழிந்தால்‌, கள்ளு வரும்படி நின்றால்‌ சர்க்கார்‌ எப்படி நடைபெறும்‌ என்று யாரும்‌ பயப்பட வேண்டியதே. இல்லை. இதைக்‌ கவனிப்பவர்கள்‌ யாரும்‌ இல்லை. இரண்டொரு வருடங்‌ களுக்கு முன்புடிப்டி தாசில்தார்களைக்‌ குறைத்துவிடலாம்‌ என்று சர்க்காரே யோசனை செய்து பொதுஜன அபிப்பிராயம்‌ கேட்ட போது நம்‌ ஜில்லா சட்ட குடி அரசு - 1926 N 188 சபை மெம்பர்‌ ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார்‌ அதை எடுக்கக்‌ கூடாது: எடுத்தால்‌ பிராமணர்களுக்கு வேலை குறைந்து போகும்‌ என்ற கருத்துடன்‌ அதை எதிர்த்து அவ்வுத்தேசத்தைப்‌ பாழாக்கிவிட்டார்‌. எலும்புருக்கு வியாதி மாதிரி இந்த உத்தியோகங்களும்‌ இம்மாதிரி சட்டசபை மெம்பர்‌ ஜாதியும்‌ நமது நாட்டுக்குப்‌ பெரிய ஆபத்தாயிருக்கிறது. குடி அரசு - கட்டுரை - 21.03.1926 189 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கொங்கு 6வேணானா்‌ மஹாநாட்மண்‌ தீர்மானத்தின்‌ பண்‌ ஈரோடு தாலூக்கா வாயப்பாடி சாராயக்கடை 1-3-26 தேதி ஏலம்‌ போடப்பட்டது. அவ்வூர்‌ பிரபல மிராசுதாரரும்‌ கொங்கு வேளாள குலத்‌ தினருமான ஸ்ரீமான்‌ ரத்தினசாமிக்‌ கவுண்டர்‌ குமாரர்‌ முத்துசாமிக்‌ கவுண்டர்‌ ஏலமாகுமிடத்துக்கு விஜயம்‌ செய்து வேளாள குலத்தினர்‌ யாரும்‌ வாயப்பாடி சாராயக்கடையை எடுக்கக்கூடாதென்று கேட்டுக்கொண்டார்‌. அவர்‌ கேட்டுக்‌ கொண்டதற்கிணங்கி, ஏலம்‌ கூற வந்திருந்த வேளாள குலத்தினர்‌ ஏலம்‌ கூறா மல்‌ நின்றுவிட்டனர்‌. வேளாள குலத்தினர்‌ நின்றுவிடவே மற்றெவரும்‌ ஏலம்‌ கூறவில்லை. அதிகாரிகள்‌ என்ன முயற்சித்தும்‌ ஒருவரும்‌ கடை எடுக்க வில்லையென்று கேட்டு சந்தோஷிக்கிறோம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 21.03.1926 குடி அரசு - 1926 N 190 துவா வி௱ாம்‌2 துவா விர வமாழி? நமது நாட்டுப்‌ பத்திரிகைகளில்‌ ஒன்றுகூடத்‌ தவறாமல்‌ அதாவது பிராமணப்‌ பத்திரிகைகள்‌, பிராமணரல்லாத பத்திரிகைகள்‌, மகமதியப்‌ பத்திரிகைகள்‌ ஆகிய அனைத்தும்‌ சுயராஜ்யக்‌ கட்சியினர்‌ சட்டசபைகளை விட்டு வெளியேறினதை மெச்சியும்‌, ஆதரித்தும்‌ வெளியேறினதற்கு பண்டிதநேரு சொல்லிய காரணங்களை “பண்டிதரின்‌ வீர மொழிகள்‌” என மகுடமிட்டும்‌ பிரசுரிக்கின்றன. பிராமணப்‌ பத்திரிகைகளைப்‌ பற்றியோ, அவர்களால்‌ ஆட்கொள்ளப்பட்ட பத்திரிகைகளைப்‌ பற்றியோ கவலைப்‌ படாது தள்ளிவிடினும்‌ மற்றைய சுயேச்சை பத்திரிகைகளுக்காவது ஆத்மா உண்டா? இல்லையா? என்பதும்‌ உண்மையை அறிய ஆற்றலுண்டா? இல்லையா? என்பதும்‌ அல்லது எல்லாமிருந்தும்‌ தன்‌ காலில்‌ நிற்கச்‌ சக்தி யற்று கூட்டத்தில்‌ கோவிந்தா போட்டுக்‌ கொண்டுகாலங்கடத்துகிறார்களா வென்பதும்‌, அல்லது முரட்டு வெள்ளத்தில்‌ நாம்‌ எப்படி எதிர்‌ நீச்சல்‌ நீந்துவது என்று பயந்து பொறுப்பு இழந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார்‌. களாவென்பதும்‌, அல்லது ராஜதந்திரம்‌ என்றால்‌ சிலர்‌ எதுவேண்டுமாணாலும்‌, என்ன வேண்டுமென்றாலும்‌ செய்யலாம்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருக்‌ கிறார்களே, அதுபோல நினைத்து அதைப்‌ பின்பற்றுகிறார்களாவென்பதும்‌, அல்லது நிர்வாண தேசத்தில்‌ கோவணம்‌ கட்டுகிறவன்‌ பயித்தியக்காரன்‌ ஆவது போல்‌, பித்தலாட்ட அரசியல்‌ கூட்டத்திலிருந்து கொண்டு நாம்‌ ஒருவன்‌ மாத்திரம்‌ உண்மை பேசி ஏன்‌ பயித்தியக்காரனாக வேண்டும்‌ என்று பயந்து கொண்டிருக்கிறார்களாவென்பதும்‌ நமக்கு ஒன்றுமே விளங்க வில்லை. இவர்களில்‌ சுயநலத்திற்காகவும்‌, ராஜ தந்திரத்திற்காகவும்‌, எழுதுப வர்களைப்‌ பற்றி நாம்‌ ஒரு சிறிதுகூட கவலைப்படவே இல்லை.தமிழ்நாட்டுப்‌ பத்திரிகைகளில்‌ இரண்டொரு பத்திரிகைகளை அதாவது சுயநலத்திற்கோ, சுயவாழ்விற்கோ அல்லாமல்‌ பொது நலத்திற்கென்றும்‌ உண்மை வெளியீட்டிற்‌ கென்றும்‌ உழைத்து வருகிற தென்று நாம்‌ கருதியிருக்கும்‌ பத்திரிகைகளுக்கு மறுபடியும்‌ ஒரு முறை “வெளியேறி” யதைப்‌ பற்றியும்‌ “வீரமொழி'” யைப்‌ பற்றியும்‌ ஞாபகப்படுத்துகிறோம்‌. அதாவது, வெளியேறியிருக்கிறவர்கள்‌ ஒவ்‌ வொருவரும்‌ ராஜிநாமா செய்யாமல்‌ சட்டசபை அங்கத்தினர்‌ என்னும்‌ பதவியை வைத்துக்கொண்டேதான்‌ இருக்கிறார்கள்‌ என்பதையும்‌, இப்‌ பதவியின்‌ செல்வாக்கையும்‌, வெளியில்‌ வந்து விட்டோம்‌ என்று சொல்லும்‌ தந்திரத்தையும்‌, புரட்டையும்‌ ஆதாரமாய்‌ வைத்துப்‌ பொது ஜனங்களை ஏமாற்றி வோட்டு வாங்கி மறுபடியும்‌ சட்டசபைக்குள்‌ நுழைவதற்காகவே 191 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வெளியில்‌ வந்திருக்கிறார்கள்‌ என்பதையும்‌, இதற்காதாரமாக வெளியில்‌ வந்தவர்களில்‌ அநேகம்‌ பேர்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ கொள்கைகள்‌ என்று சொல்லப்படுவதையும்‌, காங்கிரஸ்‌ கொள்கை என்று சொல்லப்படுவதையும்‌, நிர்மாணத்திட்டத்தின்‌ தத்துவங்களையும்‌ கொஞ்சங்கூட ஒப்புக்‌ கொள்ளாத வர்கள்‌ என்பதையும்‌, அதாவது சிலர்‌ பட்டதாரிகளாகவும்‌, சிலர்‌ சர்க்காரின்‌ பல நியமனப்‌ பதவி பெற்றவர்களாகவும்‌, சிலர்‌ கதரில்‌ நம்பிக்கை இல்லாதவர்‌: களாகவும்‌, சிலர்‌ தீண்டாமையில்‌ நம்பிக்கை இல்லாதவர்களாகவும்‌, சிலர்‌ மதுவிலக்கில்‌ கவலையுள்ளவர்கள்‌ போல்‌ வாயால்‌ மட்டும்‌ பேசிவிட்டு மது உற்பத்தியிலும்‌, மது விற்பனையிலும்‌, மதுபானத்திலும்‌ வாழ்கிறவர்க ளாகவும்‌ இருப்பதை ஒவ்வொருவரும்‌ நடுநிலைமையிலிருந்து கவனித்துப்‌ பார்த்தால்‌ விளங்காமல்‌ போகாது. “நேருவின்‌ வீர மொழி” என்பதை மறுபடியும்‌ ஞாபகப்படுத்துகிறோம்‌. பண்டித நேரு கடைசியாய்ச்‌ சொன்னதாவது:- சர்க்காரை நாங்கள்‌ பயமுறுத்தவில்லை. சர்க்காருக்கு மகத்தான அதிகாரங்களுண்டு. சர்க்காரை எதிர்க்கும்‌ பலம்‌ எங்களுக்கு இல்லை. தேசத்தில்‌ சமூக வேற்றுமையால்‌ ஒற்றுமையில்லை. ஆதலால்‌ சட்டமறுப்புச்‌ செய்ய எங்களால்‌ ஆகாது. உளக இந்த நிலைமையில்‌ நாங்கள்‌ சட்டசபையில்‌ இருப்பது பிரயோஜனம்‌ இல்லை. 7. இவ்வளவு பலமுள்ள பெரிய சர்க்காரை ஒழித்துவிடும்‌ நோக்கத்‌ துடன்‌ நாங்கள்‌ வெளியேறவில்லை. நாங்கள்‌ ஆசைப்பட்டாலும்‌ அது ஆகிற காரியமும்‌ அல்ல. 9. சர்க்காரை நாங்கள்‌ எவ்வளவு அடி பணிந்து கெஞ்சியும்‌ எங்கள்‌ நோக்கங்களை அடைய முடியவில்லை... 10. அதனாலேயே வெளியே போகிறோம்‌. 1. வெகுநாளைக்கு முன்னரே நாங்கள்‌ வெளியே போய்‌ இருக்க சர்க்காரின்‌ தந்திரத்தால்‌ நாங்கள்‌ ஏமாந்து போய்விட்டோம்‌. இனி நாங்கள்‌ இங்கு இருப்பதில்‌ யாதொரு பிரயோஜனமும்‌ இல்லை. இந்த பொம்மை சபைகளில்‌ இனி எங்களுக்கு வேலை இல்லை. தேசத்தின்‌ மானத்தைக்‌ காப்பாற்றிக்‌ கொள்வதற்காக நாங்கள்‌ வெளியே போகிறோம்‌. என்று சொல்லி இருக்கிறார்‌. சத இந்த தத்துவம்‌ கொண்ட வாக்கியங்களில்‌ எந்த வரியிலாவது எந்த வார்த்தையிலாவது வீரமிருக்கிறதா? வென்பதை கவனித்துப்‌ பார்க்கும்‌ படியும்‌, கோழைத்தனமும்‌ முதுகு காட்டி ஓடுந்தன்மையுமாவது இல்லாமல்‌ இருக்கிறதா? என்பதை மனதறியச்‌ சொல்லும்படி வணக்கத்துடன்‌ கேட்டுக்‌ குடி அரசு - 1926 N 192 கொள்ளுகிறோம்‌. பத்திராதிபர்களாக இருப்பவர்கள்‌ தேசத்திற்கு நன்மை செய்யா விட்டாலும்‌, தேசமக்களை நல்வழிப்படுத்தா விட்டாலும்‌, தேசத்‌ துரோகமும்‌ கொலைபாதகமுமாவது செய்யாமல்‌ இருக்க வேண்டாமா என்றுதான்‌ ஆசைப்படுகிறோம்‌. மகாத்மா காந்தியைப்‌ பின்பற்று கிறோம்‌ என்று தப்பித்துக்‌ கொள்ளுகிறவர்களை உண்மையில்‌ மகாத்மா காந்தியையே பின்பற்றுகிறார்களா என்று மனதில்‌ கை வைத்துப்‌ பார்க்கும்‌ படிக்கும்‌ பிரார்த்திக்கிறோம்‌. நிற்க, மேற்கூறிய பல வாக்கியங்களால்‌ பண்டித நேருவால்‌ வர்ணிக்கப்‌ பட்ட சட்டசபைகளுக்கு சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மறுபடியும்‌ எதற்காகப்‌ போக வேண்டும்‌? பொது ஜனங்களும்‌ எதற்காக இவர்களுக்கு வோட்டுச்‌ செய்ய வேண்டும்‌? முதலாவது சுயராஜ்யக்‌ கட்சி என்பது எதற்காக நமது நாட்டிலி ருக்க வேண்டும்‌? சட்டசபையாலேயே ஒரு காரியமும்‌ செய்ய முடியாது; சட்டமறுப்புக்கும்‌ தேசம்‌ தயாராயில்லை; தாங்கள்‌ சட்டசபையில்‌ பெரும்‌ பான்மையோராக இருந்து பல தீர்மானங்கள்‌ செய்தும்‌ யாதொரு பலனும்‌ இல்லை என்று ஆகிவிட்டால்‌ மறுபடியும்‌ சட்டசபையில்‌ புகுவதில்‌ பயன்‌ என்ன? வெளிவருவதில்‌ பயன்‌ என்ன? மெஜாரிட்டியாராயிருப்பதில்‌ பயனென்ன? ஆகிய இவைகளைக்‌ கவனித்துப்‌ பார்ப்பார்களானால்‌ உண்‌. மை விளங்காமல்‌ போகாது. பத்திரிகைகள்‌ விஷயம்‌ இப்படி இருந்தாலும்‌ ஆங்காங்கு நடக்கும்‌ பிரசாரங்களின்‌ தன்மையோ வெளியில்‌ எடுத்துச்‌ சொல்வதற்குக்கூட வெட்கமாயிருக்கிறது. தேசத்தின்‌ பெயரால்‌ தியாகம்‌ செய்ததாயும்‌, சிறைக்குச்‌ சென்றதாயும்‌ சொல்லப்பட்டவர்களில்‌ பலர்‌ தங்கள்‌ அறியாமையாலும்‌, வயிற்றுக்‌ கொடுமையாலும்‌, சயநலத்தினாலும்‌, பலஹீனத்‌ தினாலும்‌ கட்டுண்டு இப்‌ போலித்‌ தொண்டு பிரசாரத்தில்‌ இறங்கி தேசம்‌ பாழாகும்‌ வண்ணம்‌ பாமர ஜனங்களிடையே பிரசாரம்‌ செய்து வருகிறார்கள்‌. இதைப்பற்றி நாம்‌ மிகுதியும்‌ வருத்தப்பட வேண்டியதாயிருந்தாலும்‌, பாமர ஜனங்கள்‌ அடியோடு மூடர்கள்‌ என்று நம்புவதற்கில்லாமல்‌, இப்போலிப்‌ பிரசாரங்கள்‌ நடக்கும்‌ கூட்டங்களிலெல்லாம்‌ கூட்டத்திற்கு வரும்‌ ஜனங்கள்‌ ஏமாந்து கேட்டுக்‌ கொண்டிருக்காமல்‌ பிரசாரர்களின்‌ சூழ்ச்சிகளை அறிந்தி ருப்பதற்கு ஆதாரமாய்‌ பல கேள்விகள்‌ கேட்பதும்‌, அதற்குப்‌ பதில்‌ சொல்ல முடியாமல்‌ பிரசாரகர்கள்‌ கூட்டத்தை அவசரத்தில்‌ முடித்துக்கொண்டு ஓடுவதும்‌, கேள்வி கேட்பவர்களுக்கு லஞ்சம்‌ கொடுத்து வாயடக்குவதுமான காரியங்களால்‌ பொது ஜனங்கள்‌ இன்னமும்‌ சரியானபடி ஏமாறவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. குடி அரசு - தலையங்கம்‌ - 21.03.1926. 193 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பி. வரதரானு நாயு௫ - பிராமணர்களிண்‌ லககாடுமையும்‌ கறும்புத்தனமும்‌ -சித்திரபுத்திரன்‌ மாயவரம்‌ முனிசிபாலிட்டியில்‌ ஸ்ரீமான்‌ வரதராஜலு நாயுடுவுக்கு ஒரு வரவேற்புப்‌ பத்திரம்‌ வாசித்துக்‌ கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம்‌ வந்தபொழுது, சில பிராமணர்கள்‌ அதை எதிர்த்தார்கள்‌. இவர்கள்‌ எதிர்ப்பை அலட்சியம்‌ செய்து மற்ற கவுன்சிலர்கள்‌ ஒரேயடியாய்‌ நிறைவேற்றி விட்டார்‌. கள்‌. தங்கள்‌ ஆக்ஷேபனை பலிக்கவில்லை என்று நினைத்த டி பிராமணர்கள்‌ அதோடு சும்மாயிராமல்‌ அரசாங்கத்தாருக்கு அடியிற்‌ கண்டபடி தந்தி கொடுத்தார்கள்‌. அதாவது “மாயவரம்‌ முனிசிபாலிட்டியார்‌. டாக்டர்‌ வரதராஜலு நாயுடுவுக்கு உபசாரப்‌ பத்திரம்‌ வாசித்துக்‌ கொடுத்தால்‌ மாயவரத்தில்‌ சமாதானத்திற்கு மிகவும்‌ பங்கம்‌ வரும்‌. ஆதலால்‌, அரசாங்‌ கத்தார்‌ இத்தீர்மானத்தை நிராகரித்து விடவேண்டும்‌ என்று கண்டிருந்ததாம்‌. இது எவ்வளவு அயோக்கியத்தனமான காரியம்‌ என்பதை வாசகர்கள்தான்‌ முடிவு செய்யவேண்டும்‌. ஸ்ரீமான்கள்‌ சீனிவாசய்யங்கார்‌, கலியாணசுந்தர: முதலியார்‌, ராஜகோபாலாச்சாரியார்‌ முதலியவர்களுக்கு வாசித்துக்‌ கொடுக்‌ கும்‌ உபசாரப்‌ பத்திரங்கள்‌ சமாதானத்தை விளைவிக்கும்‌; டாக்டர்‌ நாயுடுவுக்கு வாசித்துக்‌ கொடுக்கும்‌ உபசாரப்‌ பத்திரம்‌ சமாதான பங்கம்‌ விளைவிக்கும்‌ என்றால்‌, அய்யங்கார்‌, ஆச்சாரியார்‌, முதலியார்‌ முதலானவர்களிடம்‌ உள்ள எந்த குணம்டாக்டர்‌ நாயுடுவிடம்‌ இல்லை அல்லது அவர்களிடமில்லாத எந்த குணம்‌ டாக்டர்‌ நாயுடுவிடம்‌ இருக்கிறது? எந்த விதத்தில்‌ அம்மூவருக்கும்‌ டாக்டர்‌ நாயுடு இளைத்தவர்‌? பின்னும்‌ சிற்சில சமயங்களில்‌ டாக்டர்‌ நாயுடு அவர்கள்‌ சில பிராமணர்களின்‌ அயோக்கியத்தனத்தைப்‌ பற்றிச்‌ சொன்ன போதிலும்‌, மறு சமயத்திலேயே அயோக்கியணாயிருந்தாலும்‌ தேசீயவாதி யாயிருந்தால்‌ ஓட்டு கொடுங்கள்‌ என்றுகூட சொல்லி அயோக்கியர்களுக்‌ கெல்லாம்‌ வேஷம்‌ போட்டுக்கொள்ள ஒரு போக்கிடமும்‌ காட்டி இருக்கிறார்‌. அதோடு ஸ்ரீமான்‌ திரு.வி.க. முதலியாரவர்களைப்‌ போலவே இவரும்‌ ஒரு சமயத்தில்‌ ஒரு மகாநாட்டில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ தீர்மானம்‌ பிரேரே பித்திருந்தாலும்‌ இப்பொழுது பிராமணர்களுக்கு அநுகூலமாக வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டாமென்கிறார்‌. இவ்வளவு நன்றி செய்தவர்களிடமும்‌. நமது பிராமணர்கள்‌ இம்மாதிரி நடந்து கொள்வார்களானால்‌ இப்பிராமணர்‌ குடி அரசு - 1926 N 194 களின்‌ நன்றியறிதலை என்னென்று சொல்வது? இதேடாக்டர்‌ நாயுடுவை இந்த பிராமணக்‌ கூட்டத்தார்‌ வண்டியில்‌ வைத்து இழுக்கவில்லையா? தென்‌ னாட்டுத்‌ திலகர்‌ என்று சொல்லவில்லையா? அவர்‌ படத்தை ஆசாரத்திலும்‌, படுக்கை இடத்திலும்‌, பூஜை இடத்திலும்‌ வைத்திருக்கவில்லையா? இப்பொழுது ஏன்‌ அவர்‌ பேரில்‌ இவ்வளவு வெறுப்பு? எந்தப்‌ பத்திரிகை. யாவது இப்பிராமணர்களின்‌ நடத்தையைப்‌ பற்றி ஒரு வார்த்தையாவது எழுதினதா? இம்மாதிரி ஸ்ரீமான்கள்‌ சீனிவாசய்யங்காருக்கோ, ராஜகோபாலாச்‌ சாரிக்கோ உபசாரப்‌ பத்திரம்‌ கூடாது என்று இரண்டு பிராமணரல்லாத கவுன்சிலர்கள்‌ ஏதாவது வாயைத்‌ திறந்திருந்தால்‌ இந்த தேசீய பத்திரிகைகள்‌ என்று சொல்லும்‌ பித்தலாட்டப்‌ பத்திரிகைகளும்‌, அவர்களால்‌ வயிறு வளர்க்‌ கும்‌ தொண்டர்களும்‌ இப்பிராமணரல்லாதார்‌ குடியை அடியோடு கெடுப்பதற்‌ கல்லவா வகை தேடி இருப்பார்கள்‌. வெள்ளைக்காரர்கள்‌ எப்படி தங்கள்‌ இனத்தாரை யாராவது ஒரு இந்தியர்‌ தொட்டுவிட்டால்‌ அதை சர்க்காரோடு யுத்தம்‌ என்று ஆக்கி இராணுவச்‌ சட்டத்தை அமுலில்‌ கொண்டு வந்து விடுவதும்‌,யாராவது ஒரு வெள்ளைக்காரன்‌ இந்தியனைக்‌ கொன்றுவிட்டால்‌ அது அசால்ட்டாகி 10 ரூ.அபராதத்தோடு போய்விடுகிறதோ அது போலவே, பிராமணரல்லாதார்‌ யாராவது பிராமணர்களை ஏதாவது சொல்லிவிட்டால்‌ அது தேசத்‌ துரோகமாகி அவர்களை அடியோடு ஒழிக்கப்‌ பார்ப்பதும்‌, பிராமணரல்லாதாரை பிராமணர்‌ என்ன செய்தாலும்‌ அது தேசச்‌ சேவையும்‌ ஆகிவிடுகிறது. இவர்கள்‌ யோக்கியதையைப்‌ பார்த்தால்‌ வெள்ளைக்காரர்‌. ஆயிரம்‌ மடங்கு யோக்கியர்கள்‌ என்று நெருப்பின்‌ மேல்‌ நின்று சொன்‌ னாலும்‌ கால்‌ வேகாது என்று கூட சொல்லலாம்‌. கேவலம்‌ இந்த உபசாரப்‌ பத்திரத்தைப் பற்றி நமக்குக்‌ கவலை இல்லை. அதற்கு மதிப்பிருந்த முட்டாள்‌. அபிப்பிராயம்‌ வெகு நாட்களுக்கு முன்னே போய்விட்டது. மகாத்மாவுக்கும்‌ உபசாரப்‌ பத்திரம்‌, அன்னவரைக்‌ கொலை செய்தவர்களுக்கும்தான்‌ உபசாரப்‌ பத்திரம்‌, யோக்கியனுக்கும்‌ உபசாரப்‌ பத்திரம்‌, திருடனுக்கும்‌ உபசாரப்‌ பத்திரம்‌. உபசாரப்‌ பத்திரம்‌ வாங்க யோக்கியதையில்லாதவன்‌ இனி நமது இந்தியாவில்‌ இல்லை என்பதே நமதுஅபிப்பிராயம்‌. ஆதலால்‌, அதைப்பற்றி கவலை இல்லை.டாக்டர்‌ நாயுடுவும்‌ இதைப்‌ பிரதானமாய்‌ எண்ணியிருக்க மாட்டார்‌. அவர்‌ வீட்டு சமையலறைச்‌ சுவர்கள்‌ பூராவும்‌ சட்டம்‌ போட்ட உபசாரப்‌ படங்களாலேயே மறைக்கப்‌ பட்டிருக்கிறது. ஆனால்‌ இந்த பிராமண மனப்பான்மையை இன்னும்‌ நமது பாமர ஜனங்கள்‌ அறியவில்‌ லையே என்றுதான்‌ நாம்‌ விசனிக்கிறோம்‌. தேசத்திற்காக மூன்று முறை ஜெயிலுக்குப்‌ போனார்‌; கேப்பை மாவு அரைத்தார்‌; ஸ்ரீமான்‌ சீனிவாசய்‌ யங்காரைப்‌ போலவே பதினாயிரக்கணக்காக ரூபாய்‌ செலவு செய்தார்‌. ஆனால்‌, சீனிவாசய்யங்காராவது கட்சிக்காரன்‌ பணத்தில்‌ கேசுக்காகப்‌ போய்‌ உபசாரப்‌ பத்திரம்‌ பெற்று வருவார்‌. இவர்‌ தன்‌ சொந்தப்‌ பணத்தையே செலவு செய்து கொண்டுபோய்‌ உபசாரப்‌ பத்திரம்‌ பெறுவார்‌. இதிலிருந்து நாம்‌ நினைக்கவேண்டியது என்ன வென்றால்‌, பிராமணர்களின்‌ பேராசைக்கு 195 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 விரோதமான ஒரு சிறு காரியத்தையாவது எந்த பிராமணரல்லாதாராயினும்‌ செய்ய நினைத்து விட்டால்‌ அவர்‌ குடியைக்‌ கெடுக்க இப்பிராமணர்களும்‌ கொஞ்சமும்‌ பயப்படமாட்டார்கள்‌ என்பதும்‌, இதற்குப்‌ பயந்து கொண்டே தான்‌ நமது பிராமணரல்லாதார்‌ எவ்வளவு படித்தவர்களாயிருந்தாலும்‌, எவ்‌ வளவு பணக்காரராக இருந்தாலும்‌ பிராமணர்களைக்‌ கண்டால்‌ நடுங்குகிறார்‌. களென்பதும்‌, அவர்கள்‌ வாலைப்‌ பிடித்துக்கொண்டு திரிகிறார்கள்‌ என்பதும்‌ விளங்குகிறது. படித்தவர்களும்‌ பணக்காரர்களுமே இப்படி இருந்தால்‌ வெறும்‌ ஆசாமிகள்‌ சங்கதியைப்‌ பற்றிக்‌ கேட்கவும்‌ வேண்டுமா? பிராமணரல்லாதார்‌ நிலை பரிதாபம்‌ ! பரிதாபம்‌ ! பரிதாபம்‌ !!! குடி அரசு - கட்டுரை - 21.03.1926 குடி அரசு - 1926 N 196 ஹிந்து மஹாசபை ஹிந்து மஹாசபையைப்‌ பற்றி நாம்‌ பல தடவைகளில்‌ அது வர்ணா சிரம சபை என்றும்‌, இந்து முஸ்லீம்‌ ஒற்றுமைக்கு விரோதமான சபை என்றும்‌, பிராமணாதிக்கத்திற்காக உழைக்கும்‌ சபை என்றும்‌ எழுதி வந்தது வாசகர்‌. களுக்கு ஞாபகமிருக்கலாம்‌. சில நண்பர்களுக்கு இவ்வாறு எழுதியதைப்‌ பற்றி மனவருத்தம்‌ ஏற்பட்டிருந்தாலும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ இப்பொழுது வரவர அதன்‌ யோக்கியதை நாம்‌ எழுதியபடியே முழுவதும்‌ வெளியாகி விட்டது. அதாவது, விதவா விவாகத்‌ தீர்மானம்‌ ஹிந்து மஹாசபை மஹா நாட்டின்‌ விஷயாலோசனைக்‌ கமிட்டியில்‌ நிறைவேறினதும்‌, அதன்‌ அக்கிரா சனராகிய பண்டித மாளவியா மஹாநாட்டுப்‌ பந்தல்‌ பக்கம்‌ கூட எட்டிப்‌ பார்க்கமாட்டேன்‌ என்று அத்தீர்மானத்திற்கு ஆதாரமாயிருந்தவர்களை விரட்டித்‌ தீர்மானத்தையே மஹாநாட்டிற்கும்‌ கொண்டு வரவிடாமல்‌ நசுக்கி விட்டார்‌. பின்னர்‌ தீண்டாமையைப்‌ பற்றின தீர்மானம்‌ மஹாநாட்டில்‌ நிறை வேறினவுடன்‌ சபையில்‌ உள்ளவர்களெல்லாம்‌ எழுந்து ஓடிப்போய்‌ விட்டார்களாம்‌. ஆதலால்‌ தலைவர்கள்‌ எழுந்து போனவர்களை அழைத்து வந்து இத்தீர்மானத்தின்‌ ரகசியத்தை எடுத்துரைத்து, அதாவது இத்தீர்மா னத்தில்‌ தீண்டாமை ஒழியத்‌ தகுந்த மாதிரி எந்த விதமான ஏற்பாடும்‌ நாங்கள்‌ செய்துவிடவில்லை. பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக வேண்டி ஏதோ தீண்டாமையில்‌ அக்கறையுள்ளவர்கள்‌ போல்‌ காட்டுவதற்காகச்‌ செய்யப்‌ பட்டதே ஒழிய வேறல்ல என்று பொருள்படும்படி பேசி அத்திர்மானத்தில்‌ யாதொரு சத்துமில்லை என்கிற ரகசியத்தை வெளிக்காட்டி, அதுவும்‌ ஏற்பாடு செய்யுங்களென்று கேட்டுக்‌ கொள்ளுகிறோமேயல்லாமல்‌ வேறில்லை. உங்களுக்கு இஷ்டமிருந்தால்‌ செய்யுங்கள்‌, இல்லாவிட்டால்‌ வேண்டாம்‌. வெளிப்‌ பிரசாரத்திற்கு இம்மாதிரி தீர்மானங்களையெல்லாம்‌ நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. காரியத்தில்‌ செய்யவில்லையானால்‌ பரவாயில்லை.அது உங்கள்‌ இஷ்டம்‌ என்று சொன்ன பிறகுக்‌ கூட வெளியே போனவர்கள்‌ போயே தீர்ந்தார்களாம்‌. இதோடு ஹிந்து மஹாசபையின்‌ தீர்மானங்களையும்‌, உரிமைகளையும்‌ காப்பாற்றுவதாக வாக்களிப்பவர்களுக்கு மாத்திரமே வோட்டு கிடைக்கும்படி பிரசாரம்‌ செய்ய வேண்டும்‌ என்று தீர்மானித்துக்‌ கொண்டார்களாம்‌. இதிலிருந்து அறியக்‌ கிடப்பதென்னவென்றால்‌ விதவா விவாகத்தையும்‌, தீண்டாமை ஒழிப்பதையும்‌ ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்கு ஹிந்து மஹாசபை எதிர்‌ பிரசாரம்‌ செய்யும்‌ என்பதும்‌, மகாத்மா காந்தியடி களே சட்டசபைக்கு நிற்பினும்‌ அவருக்குக்கூட வோட்டுக்‌ கொடுக்கக்‌ 197 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கூடாதென்றேதான்‌ சொல்லும்‌. இதுவே அதன்‌ கொள்கையுமாகும்‌ என்பதை இப்பொழுதாவது வாசகர்கள்‌ உணர்வார்கள்‌ என்று நினைக்கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 21.03.1926 குடி அரசு - 1926 N 198 வருண பேத விளக்கம்‌ “வருணபேத விளக்கம்‌” என்னும்‌ புத்தகம்‌ காலஞ்சென்ற திரு.ம. மாசி லாமணி அவர்களால்‌ எழுதப்பட்டு தென்னிந்திய பெளத்த சங்கத்தினா தரவில்‌ ஸ்ரீ சித்தார்த்த புத்தக சாலையாரால்‌ பதிப்பித்து பிரசுரிக்கப்பட்டது. இப்புத்தகம்‌ வருணபேதத்தின்‌ இரகசியங்களையும்‌, ஆதிகாலத்திலிருந்தே, பிராமணர்களின்‌ சூழ்ச்சிகளையும்‌, தயவு தாக்ஷண்யமில்லாமல்‌ தைரியமாய்‌ விளக்குகிறது. இப்புத்தகத்தை வாங்கிப்‌ படிப்பவர்‌ இவ்விஷயங்களைப்‌ பற்றி நமது “குடி அரசு” எழுதிவரும்‌ விஷயங்கள்‌ இப்புத்தகத்திலிருந்து எடுத்‌ தெழுதப்பட்டதோ அல்லது குடி அரசிலிருந்து எடுத்து இப்புத்தகம்‌ எழுதப்பட்டதோ என்று நினைக்கும்படி பெரும்‌ பாகம்‌ ஒத்திருக்கும்‌. ஆத லால்‌, சிற்சில விஷயங்களில்‌ அபிப்பிராய பேதம்‌ இருந்தபோதிலும்‌ ஜாதி உயர்வு-தாழ்வு இரகசியம்‌ அறிய ஆவல்‌ கொண்டவர்கள்‌ இதனை வாங்கி வாசிக்க சிபார்சு செய்கிறோம்‌. இதன்‌ விலை அணா 0-4-0. குடி அரசு - நூல்‌ மதிப்புரை - 21.03.1926 199 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 காண்டே வாறம்‌ நமது “குடிஅரசு"ப்‌ பத்திரிகை கொஞ்ச காலமாக கூலி அச்சுக்‌ கூடத்‌ தில்‌ பதிப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால்‌, அவ்வச்சுக்‌ கூடத்தால்‌ பல தடவை களில்‌ எதிர்பாராத தாமதங்களுடன்‌ காலந்தவறி பத்திரிகை வெளியாக வேண்டி ஏற்பட்டதினிமித்தம்‌, சந்தாதாரர்களில்‌ பலர்‌ ஏமாற்றமடைய நேர்ந்த. தால்‌ தங்கள்‌ மனவருத்தத்தையும்‌ கோபத்தையும்‌ தெரிவித்து வருகிறார்கள்‌. “குடி அரசு” எத்தனை விதமான எதிரிகளின்‌ சூக்ஷிக்கும்‌, கொடுமைக்கும்‌ தப்புவித்து நடந்து வருகிறது என்பதை அவர்கள்‌ அறிவதில்லை. ஆதலின்‌, பத்திரிகையை இரண்டொரு வாரத்திற்கு மட்டும்‌ நிறுத்தி வேறு அச்சுக்கூடம்‌ ஏற்பாடு செய்து, கூடியவரை காலந்‌ தவறாது அனுப்பிவர ஏற்பாடு செய்ய சில யந்திரங்களும்‌ எழுத்துக்களும்‌ வந்திருக்கிறது. இனியும்‌ சில சாமான்கள்‌ வாங்க சென்னைக்கு ஆள்‌ போகிறது. ஆதலால்‌, அதுவரை வாசகர்களை மன்னிக்கும்படி வேண்டுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 28.03.1926 குடி அரசு - 1926 N 200 சுரணையற்ற வாய்‌ நல்ல சமயத்தில்‌ 2 வாரத்திற்குப்‌ பத்திரிகை தாமதிக்க ஏற்பட்டதானது நமக்கு மிகுதியும்‌ ஏமாற்றத்தைக்‌ கொடுத்து விட்டதோடு வாசகர்களுக்கும்‌ விளக்க முடியாத ஏமாற்றம்‌ ஏற்பட்டிருக்கும்‌ என்றே நினைக்கிறோம்‌. இவ்வாரம்‌ எழுத வேண்டிய விஷயங்கள்‌ அநேகம்‌. அவற்றில்‌ பிராமணப்‌ பத்திரிகைகளின்‌ கொடுமையை எடுத்துக்காட்ட வேண்டியது மிகுதியும்‌ அவசியமான சமயம்‌. அவைகளை விளக்க இதில்‌ இடமில்லை. கோவை தாலூக்கா மகாநாட்டைப்‌ பற்றியும்‌ கோவை பொது மீட்டிங்கைப்‌ பற்றியும்‌, சுதேசமித்திரன்‌ சணையற்ற வெறும்‌ பொய்யையே பிரசரித்திருக்கின்றது. அவற்றுள்‌ 100 - க்கு 90 பொய்‌ என்பதை வாசகர்‌ உணர வேண்டுகிறோம்‌. குடி அரசு - அறிவிப்பு - 28.03.1926 201 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ம்ஙீமாண்‌ தாங்கப்வபருமான்‌ பின்னையிண்‌ வெள்ளக்கிணற்றில்‌ ஸ்ரீமான்‌.எஸ்‌.இராமநாதனின்‌ அக்ராசனத்தின்‌ கீழ்‌ நடைபெற்ற கோயமுத்தூர்‌ தாஜூக்கா மகாநாட்டில்‌, அடியிற்கண்ட தீர்மானம்‌ நிறைவேறிற்று. தமிழ்நாட்டு அருந்தவப்‌ புதல்வரும்‌ மாகாண காங்கிரஸ்‌ கமிட்டியின்‌ காரியதரிசியும்‌, ஜில்லா காங்கிரஸ்‌ கமிட்டியின்‌ தலை வரும்‌, கோவை தாலூக்கா மகாநாட்டின்‌ அக்ராசனரும்‌, மாகாண காங்கிரஸ்‌ நிர்வாக சபையின்‌ அங்கத்தினரும்‌. கதர்போர்டின்‌ காரியதரிசியும்‌, ஆகிய இவைகளா யிருந்தவரும்‌. உண்மைத்‌ தியாக மூர்த்தியுமாகிய ஈரோடு ஸ்ரீமான்‌. வா. மு. தங்கப்பெருமாள்‌ பிள்ளையவர்கள்‌ காலஞ்சென்றதைக்‌ குறித்து இம்‌ மகாநாடு ஆழ்ந்த துக்கக்தை அடைவதோடு, அவர்‌ குடும்பத்தாருக்கு அநு தாபத்தைத்‌ தெரிவித்துக்கொள்ளுகிறது. காலமான நம்நாட்டுப்‌ பெருந்தேசாபிமானியும்‌. நமது ஜில்லாவாசியு மான ஸ்ரீமான்‌. தங்கப்பெருமாள்‌ பிள்ளையின்‌ ஞாபகச்சின்னமாகவும்‌, அவரது போதனைகளைப்‌ பரப்ப ஓர்‌ சாதனமாகவும்‌, இந்த ஜில்லாவில்‌ ஓர்‌. ஸ்தாபனம்‌ ஏற்பாடு செய்யவேண்டுமென்றும்‌, அதற்காகப்‌ பொருள்‌ சேர்த்தல்‌ முதலிய வேண்டுவன செய்ய, கீழ்க்கண்ட கனவான்களை ஓர்‌ கமிட்டியாக நியமித்திருப்பதாய்த்‌ தீர்மானித்திருக்கிறது. கமிட்டி அங்கத்தினர்‌ ஸ்ரீமான்கள்‌ஈ.வெ.இராமசாமி நாயக்கர்‌, அக்ராசனர்‌, எஸ்‌. இராமநாதன்‌, காரியதரிசி. ஈரோடு, எம்‌. எஸ்‌. முத்துக்கருப்பன்‌ செட்டியார்‌,பொக்கிஷதார்‌. கோயமுத்தூர்‌, டி.ஏ.இராமலிங்கம்‌ செட்டியார்‌, சி.வி,வெங்கட்டரமணய்யங்‌ கார்‌, வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌, ஆர்‌.கே, ஷண்முகம்‌ செட்டியார்‌, அத்திப்பாளையம்‌ என்‌.இராமகிருஷ்ண நாயக்கர்‌, திருப்பூர்‌ கே.ஆர்‌. ஈஸ்வர மூர்த்திக்‌ கவுண்டர்‌ - அங்கத்தினர்கள்‌. நமது குறிப்பு : இம்‌ முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியதை நாம்‌ மிகுதியும்‌ குடி அரசு - 1926 N 202 பாராட்டுகிறோம்‌. பொது ஜனங்களும்‌ அவரது ஞாபகக்‌ குறிப்பிற்குத்‌ தங்கள்‌ தங்களாலான உதவியைச்‌ செய்ய வேண்டுமாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. பணம்‌ அனுப்புகிறவர்கள்‌ ஈரோடு ஸ்ரீமான்‌ எம்‌.எஸ்‌.முத்துக்கருப்பன்‌ செட்டியாரவர்கள்‌ பேருக்கு அனுப்பிக்‌ கொடுக்க வேண்டுமாய்க்‌ கோருகி றோம்‌. இத்தீர்மானம்‌ நிறைவேறியவுடன்‌ ஸ்ரீமான்கள்‌ டி.எ. இராமலிங்கம்‌ செட்டியார்‌, ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌, வி.சி.வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌, சி.வி.வெங்கிட்டரமண ஐயங்கார்‌, ஆர்‌. கே. ஷண்முகம்‌ செட்டியார்‌ ஆகிய ஐவர்களும்‌ ஆளுக்கு 100 ரூபாய்‌ வீதம்‌ 500 ரூபாய்க்குக்‌ கையொப்பம்‌ செய்ததை முழு மனதுடன்‌ பாராட்டுகிறோம்‌. முக்கிய குறிப்பு இப்பேர்ப்பட்ட பிராமணரல்லாத தேச பக்தர்‌ காலமானதைக்‌ குறித்து பிராமண பத்திரிகைகளில்‌ தலைசிறந்து விளங்கும்‌ “ஹிந்து” பத்திரிகை ஒரு வார்த்தையாவது எழுதவே இல்லை. இப்பத்திரிகையைத்தான்‌ நமது டாக்டர்‌. வரதராஜுலு நாயுடு அவர்கள்‌ மகாத்மாவிடம்‌ யோக்கியமான பத்திரிகை: என்று சொன்னாராம்‌. குடி அரசு - பத்திராதிபர்‌ குறிப்பு - 28.03.1926 203 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 திவு எண்‌ நய! sanjur காற்றி மாற்கு. பப்பி விவ அனுக காந்தீய காந்தீயம்‌ என்பது மகாத்மா காந்தியை மூல புருஷராய்‌ வைத்து அவரது சரித்திரத்தையும்‌, கொள்கையையும்‌, அதன்‌ பலனையும்‌ பற்றியது. எப்படி சைவம்‌ என்பது சிவனை முதன்மையாகக்‌ கொண்டதோ, வைணவம்‌ என்பது விஷ்ணுவை முதன்மையாகக்‌ கொண்டதோ, ராமாயணம்‌ என்பது எப்படி ராமரை முதன்மையாகக்‌ கொண்டதோ அதுபோல்‌ காந்தீயம்‌ என்பது காந்தியை முதன்மையாகக்‌ கொண்டது. இவற்றில்‌ மக்களுக்காக மகாத்மா காந்தி ஏற்படுத்திய கொள்கைகளும்‌ அதற்காக அவரது சேவையும்‌ அவரது தியாகமும்‌ முதன்மையானது. அதனால்‌ ஏற்பட்ட பலன்களும்‌ நிகழ்ச்சிகளும்‌ இரண்டாவதாகச்‌ சொல்லலாம்‌ தங்கள்‌ தங்கள்‌ சுயநலத்துக்காக வாழ்கிறவர்‌ கள்‌ எவ்வளவு பெரியவர்களென்று சொல்லிக்‌ கொண்டபோதிலும்‌ அவர்கள்‌ சாதாரண மனிதர்களாகத்தான்‌ உலகத்தினரால்‌ கருதப்படுவார்கள்‌. உலகத்‌ துக்காக வாழ்கிறவர்கள்‌ எவ்வளவு சிறியவர்களாக இருந்த போதிலும்‌ மகாத்‌ மாவாகத்தான்‌ கருதப்படுவார்கள்‌. அப்படியானால்‌ உலகத்துக்காக வாழ்கிற தாகச்‌ சொல்லிக்‌ கொண்டு எத்தனையோ தலைவர்களிருக்கின்றார்களே. i நாமும்‌ அவர்களை எல்லாம்‌ தலைவர்கள்‌ தலைவர்களென்கிறோமே, ஏன்‌ அதனில்‌ காந்தியை மாத்திரம்‌ மகாத்மா என்று சொல்லவேண்டும்‌ என்கிறதாக ஒரு கேள்வி பிறக்கலாம்‌. மகாத்மாவைத்‌ தவிர மற்ற தலைவர்களெல்லாம்‌ பிறத்தி கத்தர்‌ வியாபாரிகமக்கு யாருக்கு சொல்ல மாத்திரம்‌ தெரிந்தவர்களேயல்லாமல்‌ அதுபோல நடக்க. அ ணதயஷ முடியாதவர்களும்‌, நடக்க இஷ்டமில்லாதவர்களுமாகவே இருப்பார்கள்‌; மகன ண வன்க ஆனால்‌, மகாத்மாவோ சொல்லுகிறபடி நடப்பவர்‌, நடக்கக்கூடியதையே o சொல்லுபவர்‌. இந்தக்‌ குணந்தான்‌ அவரை மகாத்மாவாக்கியது. அவர்‌. [அன்த | இவல விசாக வழ நீங்‌. பலவ அ்தவ்கல்‌ B | Tir அவர்‌ இந்தியாவின்‌ விடுதலை என்பது ஏழைகள்‌ விடுதலையைத்தான்‌ குறிக்‌ குடி அரசு - 1926 ) 204. 205 ட... ஓபரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கும்‌.மகாத்மாவின்‌ சுயராஜ்யமே ஒடுக்கப்பட்டவர்களுக்கும்‌ தாழ்த்தப்பட்ட வர்களுக்கும்‌ சுயமரியாதையையும்‌ சமத்துவத்தையுமே அடிப்படையாகக்‌ கொண்டது. அவருடைய சேவை என்பது தியாகத்தையும்‌ கஷ்டமனுபவிப்‌ பதையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டது. இந்தக்‌ காரணங்களால்‌ அவர்‌ தானா கவே மகாத்மா ஆகிவிட்டார்‌. உபசாரப்‌ பத்திரங்களில்லையே, வண்டியில்‌ லையே, ஊர்வலமில்லையே என்று விசாரப்படுகிறவர்களும்‌, ஊர்வலத்தை யும்‌ உபசாரப்‌ பத்திரத்தையும்‌ நாடிக்கொண்டு திரிகிறவர்களும்‌, தங்களைத்‌ தலைவர்களென்று சொல்ல வேண்டுமென்று பணம்‌ கொடுத்து சொல்லச்‌ செய்‌ வோர்களும்‌ பாமர ஜனங்களை ஏமாற்றி தாங்களும்‌ தங்கள்‌ குலத்தார்களும்‌ மாத்திரம்‌ மேன்மையடைய வேண்டுமென்று நினைத்துக்‌ கொண்டுஅலைவ தையும்‌ தேச சேவை, பொது ஜன சேவை என்று சொல்லிக்‌ கொண்டு திரிவார்‌ களேயானால்‌ அவர்கள்‌ எப்படி மகாத்மாவாகக்‌ கூடும்‌? பதவிகளையும்‌ பட்டங்களையும்‌ மனதில்‌ குறிப்புக்‌ கொண்டு சுயராஜ்யம்‌ சம்பாதிப்பதற்காக சட்டசபைக்குப்‌ போகிறேன்‌ என்று சொல்லுகிறவர்களும்‌ அதற்கு வோட்டு சம்பாதிப்பதற்காக பணத்தைக்‌ கொடுத்து பலரைக்‌ கூட்டிக்‌ கொண்டு தங்களைத்‌ தலைவர்கள்‌, தலைவர்கள்‌ என்று சொல்லும்படி செய்கிறவர்களும்‌ எப்படி மகாத்மா ஆகக்கூடும்‌. முதல்‌ முதல்‌ பாமர ஜனங்களுக்கு காந்தி யென்று ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று அறியவே தென்னாப்பிரிக்காவில்‌ இந்தியர்களின்‌ சுயமரியாதைக்காக தானும்‌ தன்‌ குடும்பமும்‌ கூட்டோடு சிறை சென்றதும்‌ அங்கு நினைக்க வொண்ணாத கொடுமைகளையெல்லாம்‌ அநு பவித்ததுந்தான்‌ முக்கியக்‌ காரணங்கள்‌. அதற்குப்‌ பிறகு இந்திய மக்களுக்கு இந்தியாவிலேயே சுயமரியாதை, சமத்துவம்‌ வேண்டுமென்ற சேவையில்‌ இறங்கியதே 2 - வது காரணம்‌. அதற்குப்‌ பிறகு ஏழை மக்களுக்கு வேண்டிய உண்மையான சுயராஜ்யத்தைக்‌ கண்டு பிடித்து அதற்காக அஞ்சாது உண்மை பேசி பதினாயிரக்கணக்கான ஜனங்களைப்‌ பின்பற்றும்படி செய்து தானும்‌ அவர்களுமாய்‌ சிறை சென்றதே மூன்றாவது காரணம்‌. இன்னமும்‌ அவரு டைய கருத்தும்‌ உழைப்பும்‌ ஏழைகளையே பிரதானமாய்க்‌ கொண்டிருக்‌ கிறது. ஆனால்‌, ஏழைகள்‌ விடுதலை பெற்றால்‌, தாழ்த்தப்பட்டவர்கள்‌ சுய மரியாதையடைந்தால்‌, ஒதுக்கப்பட்டவர்கள்‌ சமத்துவமடைந்தால்‌ பிரபுக ளென்போருக்கும்‌ படித்தவர்களென்போருக்கும்‌ உயர்ந்த ஜாதியாரென்‌ போருக்கும்‌ தனி யோக்கியதை இருக்காது என்கிற காரணத்தினால்‌ இம்மூவர்‌ களும்‌ மகாத்மாவுக்கு எதிரிகளாயிருக்க வேண்டிய அவசிய மேற்பட்டுப்‌ போய்விட்டது. அதன்‌ பலனாய்‌ மகாத்மாவின்‌ கொள்கைகள்‌ கொஞ்சங்‌ கொஞ்சமாய்‌ ஓய்வு பெற வேண்டியதாயிருக்கிறது. காந்தியமென்னும்‌ ஏழை களை விடுதலை செய்ய ஏற்பட்ட இயக்கத்தை பரப்ப, ஆயுதமாய்க்‌ கொண்ட காங்கிரஸ்‌ என்னும்‌ சபையானது படித்தவர்கள்‌ வசமும்‌ உயர்ந்த ஜாதியார்‌. என்று சொல்லுகிறவர்கள்‌ வசமும்‌ செல்வவான்கள்‌ வசமும்‌ சிக்குண்டு போய்விட்டபடியால்‌ படித்தவர்களுக்கு உத்தியோகம்‌ சம்பாதிப்பதற்கும்‌, மேல்‌ ஜாதியாரென்போருக்கு தங்களுடைய உயர்ந்த ஜாதித்‌ தத்துவத்தை குடி அரசு - 1926 N 206 நிலை நிறுத்திக்‌ கொள்வதற்கும்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளத்‌ தக்கதாய்ப்‌ போய்விட்டதோடு ஏழைகளின்‌ நிலைமை நாளுக்கு நாள்‌ அதோ கதியாய்‌ ஒரு வேளைக்‌ கஞ்சிக்கு 2 - தரம்‌ மூன்று தரம்‌ தங்களுடைய கற்பை விற்க வேண்டிய ஸ்திரீகளையும்‌ ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஏழை மக்களின்‌ துரோகிகளின்‌ பின்னால்‌ திரிந்து கொண்டு அவர்களை இந்திரன்‌ சந்திரன்‌ என்று பாமர ஜனங்களிடம்‌ புகழ்ந்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக்‌ கொடுக்க தங்கள்‌ மனச்சாக்ஷியை விற்கத்தகுந்த ஆண்களையும்‌ லக்ஷக்கணக்‌ காய்‌ பெருக்கி வருகிறது. இவ்வுண்மையறிந்த மகாத்மா இவர்களோடிருக்க மனம்‌ பொறாதவராகி தனியே பிரிந்து ஏழைகளுக்கு உழைப்பதற்கென்று ராட்டினமும்‌ கையுமாய்‌ உட்கார்ந்து கொண்டு இரவும்‌ பகலும்‌ ராட்டினத்தைச்‌ சுற்றிக்கொண்டு ஏழைகளிடத்தில்‌ அன்பிருக்கிறவர்களெல்லாம்‌ ராட்டினத்‌ தைச்‌ சுற்றுங்கள்‌, கதரை உடுத்துங்கள்‌, ஏழைகளைக்‌ காப்பாற்றுங்கள்‌, சட்ட சபையில்‌ ஏழைகளுக்கான காரியம்‌ ஒன்றுமில்லை; தேச விடுதலைக்கு சட்ட சபையினால்‌ ஒரு பலனும்‌ உண்டாகாது; எனக்கு அதில்‌ கொஞ்சமும்‌ நம்பிக்கையில்லை யென்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்‌. இதுதான்‌ காந்தீயம்‌ என்பது. காந்தீயம்‌ என்பதைச்‌ சுருக்கமாய்ச்‌ சொல்வதானால்‌ ராட்டி னம்‌ சுற்றுவதும்‌ கதர்‌ உடுத்துவதும்தான்‌ என்று சொல்லலாம்‌. மகாத்மாவின்‌ சுயராஜ்யம்‌ என்பதையும்‌ சுருக்கமாய்ச்‌ சொல்லுவதானால்‌ தீண்டாமையை ஒழிப்பதும்‌ கதர்‌ உடுத்துவதும்தான்‌ என்று சொல்லலாம்‌. ஏறக்குறைய 30,40 வருஷங்களாக நமது ஜனங்கள்‌ சட்டசபைக்கு போய்க்கொண்டும்‌ வந்து கொண்டுந்தானிருக்கிறார்கள்‌. சர்க்காரிடமிருந்தும்‌ பல சீர்திருத்தங்களையும்‌ பெற்று அதன்‌ மூலமாய்‌ அநேக பதவிகளையும்‌ உத்தியோகங்களையும்‌ அடைந்துமிருக்கிறார்கள்‌. உதாரணமாய்‌, ராஜப்‌ பிரதிநிதி என்கிற ஒரு உத்தியோகம்‌ தவிர மற்றபடி கவர்னர்‌, நிர்வாகசபை அங்கத்தினர்‌, மந்திரி, ரெவின்யூ போர்டு அங்கத்தினர்‌ முதலிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகங்களும்‌ கலைக்டர்‌, ஜட்ஜு, கமிஷனர்‌ முதலிய அதிகாரம்‌ வாய்ந்த உத்தியோகங்களும்‌ இந்தியர்கள்‌ வகித்து வருகிறார்கள்‌. இதுகளினால்‌ ஏழை மக்களுக்கு இதுவரையில்‌ என்ன பலன்‌ கிடைத்திருக்‌ கிறது. சட்டசபை இல்லாத காலத்தில்‌ இருந்ததைவிட சட்டசபை ஏற்பட்ட பிறகு மக்களுக்கு நிர்ப்பந்தங்கள்‌ அதிகமாகவும்‌, சீர்திருத்தங்கள்‌ இல்லாத காலத்திலிருந்ததைவிட ஏழைகளுக்கு வரி அதிகமாகவும்‌, தரித்திரங்கள்‌' அதிகமாகவும்‌ ஏற்பட்டு இருக்கிறதேயல்லாமல்‌ என்ன தேசத்துக்கு பலன்‌: ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளின்‌ பிரதிநிதிகள்‌ என்று சொல்லி ஏழைகளை ஏமாற்றி சட்டசபைக்குப்‌ போனவர்கள்‌ தங்களுக்கும்‌, தங்கள்‌ பிள்ளை குட்டிக ளுக்கும்‌, தங்கள்‌ ஜாதியார்களுக்கும்‌ பல உத்தியோகத்தையும்‌ நிரந்தரமான பதவியையும்‌ சம்பாதித்துக்‌ கொண்டார்கள்‌. இனியும்‌ அதற்காகத்தான்‌ படித்தவர்களும்‌ உயர்ந்த ஜாதியாரென்பவர்களும்‌ ஏழைகளை ஏமாற்றி வருகிறார்கள்‌. ஆகையால்‌ சட்டசபைப்‌ பயித்தியத்தை மறந்து விடுங்கள்‌: ஏழைகளைக்‌ கவனியுங்கள்‌: காந்தியை நினையுங்கள்‌: ஏழைகள்‌ வாயில்‌ 207 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 மண்ணைப்‌ போட்டுவிட்டு துணியின்‌ மூலமாகவும்‌ மற்றும்‌ அந்நிய நாட்டு சாமான்கள்‌ மூலமாகவும்‌ அந்நிய நாட்டுக்கு அனுப்பும்‌ பணத்தை நிறுத்துங்கள்‌; நீங்கள்‌ கட்டியிருக்கும்‌ அந்நிய நாட்டுத்‌ துணியின்‌ ஒவ்வொரு இழை நூலும்‌ கிராமத்து ஸ்ரீகளான உங்கள்‌ சகோதரிகளைக்‌ கஞ்சிக்கு அலைய விட்டுவிட்டு அவர்களுக்குக்‌ கிடைக்க வேண்டிய கூலியை அந்நிய நாட்டுக்குக்‌ கொண்டு போய்‌ விட்டது. நீங்கள்‌ 15 ரூபாய்‌ போட்டு வாங்கும்‌ 1 பீஸ்‌ மல்‌ துணியில்‌ ஒண்ணரை ரூபாய்‌ பொரும்படியான பஞ்சுதானிருக்கிறது. பாக்கி ஏழை மக்களுக்குக்‌ கிடைக்க வேண்டிய கூலியாகிய 13-8-0 ரூபாய்‌ அந்நிய நாட்டுக்குப்‌ போய்விட்டது. இந்த 13-8-0 ரூபாயில்லாமல்‌ நம்‌ நாட்டில்‌ எத்தனை குடும்பம்‌ பட்டினி இருக்கிறதென்பதை நினைத்துப்‌ பாருங்கள்‌. இந்த மல்‌ துணிக்குப்‌ பதிலாய்‌ கதர்‌ துணியை வாங்கிக்‌ கட்டியிருப்பீர்களா னால்‌ அவ்வளவு பணமும்‌ ஏழைத்‌ தொழிலாளர்களுக்கும்‌ விவசாயிகளுக்‌ குந்தானே போய்ச்‌ சேர்ந்திருக்கும்‌. உங்களுக்கு ஜீவகாருண்யம்‌ இருக்குமே யானால்‌ கதரை வாங்கிக்‌ கட்டாமலிருந்திருப்பீர்களா? அன்னதான மென்றாலென்ன? பாயாசத்திற்கு பாதாமிப்பருப்பு போதவில்லை என்று சொல்லித்‌ திரியும்‌ சோம்பேறிகளுக்கு சமையல்‌ செய்து போடுவதில்தான்‌ அன்னதானம்‌ என்று நினைக்கிறீர்களே தவிர பசியால்‌ வாடி தங்களது கற்பையும்‌ தர்மங்களையும்‌ இழந்து திரியும்‌ சகோதரி, சகோதரர்களுக்கு கஞ்சிகிடைக்கும்‌ வழியை கொஞ்சமும்‌ கவனிக்காமலிருக்கிறீர்கள்‌. இனி யாவது சட்டசபைப்‌ பயித்தியத்தையும்‌, படித்தவர்களும்‌ உயர்ந்த ஜாதியா ரென்பவர்களும்‌ தங்கள்‌ உத்தியோகத்திற்கும்‌, உயர்ந்த தன்மையை நிலை நிறுத்திக்‌ கொள்ளுவதற்கும்‌ கூலி கொடுத்து ஆள்களைக்‌ கூட்டிக்கொண்டு வந்து உங்களை ஏமாற்றுவதையும்‌ மறந்து, மகாத்மா காந்தியையும்‌ ஏழைக ளையும்‌ பார்த்து நீங்கள்‌ எல்லோரும்‌ கதர்‌ உடுத்த வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்ளுகிறேன்‌. இதுதான்‌ உண்மையான காந்தீயமாகும்‌. காந்தி படத்தை வைத்துக்‌ கொண்டு பூஜை செய்வதும்‌ காந்தி பெயரைச்‌ சொல்லிக்கொண்டு சட்ட சபைக்குப்‌ போவதும்‌ ஒருக்காலும்‌ காந்தீயமாகாது என்று உங்களுக்கு நான்‌ வணக்கத்துடன்‌ தெரியப்படுத்திக்‌ கொள்கிறேன்‌. குறிப்பு- திருவாளர்‌ தேசாபிமானச்‌ சங்கத்தின்‌ நான்காவது ஆண்டுநிறைவு விழா 24-3-26 லிருந்து 28-3-26 வரை தொடர்ந்து ஐந்து தினங்கள்‌ நடை பெற்றது. இதில்‌ 28-3-26 - நீ தேதி தலைமை வகித்து காந்தீயம்‌ என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 18.04.1926 குடி அரசு - 1926 N 208 தொழிலாளர்‌ இயக்கம்‌ தற்கா நிலைமை தற்காலம்‌ நமது நாட்டிலுள்ள தொழிலாளர்‌ இயக்கங்கள்‌ என்று சொல்லப்பட்டவைகள்‌ எடுப்பார்‌ கைக்‌ குழந்தைகள்‌ போல்‌ தங்களுக்கென எவ்வித சக்தியும்‌ இல்லாமலும்‌, தங்களுக்கு தேவை இன்னதென்றுகூட அறிய முடியாமலும்‌, தாங்களே தங்கள்‌ சங்கத்தை நடத்திக்கொள்ள சக்தியற்றவர்‌. களாகவும்‌ இருந்து கொண்டிருப்பதுமல்லாமல்‌ சுயநலத்துக்காகவும்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காகவும்‌ அரசியலில்‌ சம்பந்தப்பட்டு அரசியல்‌ பேரைச்‌ சொல்லிக்‌ கொண்டு வாழும்‌ சில பொறுப்பற்றவர்கள்‌ தொழிலாளர்களில்‌ வாயாடிகளாக வும்செல்வாக்குற்றவர்களாகவும்‌ இருப்பவர்களை பணங்‌ கொடுத்தோ உதவி செய்தோ அவர்கள்‌ மூலமாய்த்‌ தங்களை தொழிலாளர்களுக்குத்‌ தலைவர்‌ களாகும்படிச்‌ செய்து, அதன்‌ மூலமாய்‌ தலைமை பெற்ற சில சுயநலக்காரர்‌: களை தங்களுக்குத்‌ தலைவர்களாகவைத்துக்‌ கொண்டு அவர்கள்‌ சொல்லுகிற படி ஆடவும்‌ ஒருவரை அடியென்றால்‌ அடிக்கவும்‌ திட்டும்படி சொன்னால்‌ திட்டவும்‌ இம்மாதிரியான காரியங்களைச்‌ செய்து கொண்டு அவர்களின்‌ கை ஆளுகள்‌ போலிருந்து அந்நியரின்‌ நன்மைக்காக தங்கள்‌ சங்கங்களை விட்டுக்கொடுக்கும்படியான நிலைமையிலிருந்து வருகிறது. இவ்விதமான நிலைமையிலுள்ள சங்கங்கள்‌ நாட்டிற்காவது தொழிலாளர்களுக்காவது என்ன நன்மையைக்‌ கொடுக்கமுடியும்‌. உண்மையாகவே நம்நாட்டுத்‌ தொழிலாளர்களுக்கு தங்களுக்குள்ளாகவே ஒரு தலைவரை ஏற்படுத்திக்‌ கொண்டு தங்கள்‌ நன்மைக்கு உழைக்க தங்களுக்குச்‌ சக்தியில்லையானால்‌ அரசியலில்‌ தங்களை விளம்பரப்படுத்திக்‌ கொண்டு வாழும்‌ பொறுப்பற்றவர்‌. களும்‌ சுயநலக்காரர்களுமான அரசியல்‌ தலைவர்களை விட - பிராமணத்‌ தலைவர்களைவிட - அவர்கள்‌ சொற்படி ஆடும்‌ தலைவர்களை விட இத்‌ தொழிலாளர்களின்‌ உண்மையான முதலாளிமார்களே மேலானவர்கள்‌ என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஏனெனில்‌, அரசியல்‌ தலைவர்களென்போர்‌ தொழிலாளர்களுக்குத்‌ தாங்கள்‌ தலைவர்களாயிருக்கிறோமென்கிற பெருமை யினாலும்‌ அவர்களிடம்‌ தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாய்‌ பிறர்‌ நம்பும்படி செய்து கொள்வதாலும்‌ முதலாளிகளை விரட்டி தங்கள்‌ சொந்த நன்மை பெறுவதும்‌, தங்கள்‌ பிள்ளைக்‌ குட்டிகளுக்கும்‌ இனத்தார்களுக்கும்‌ முதலா ளிகள்‌ தயவு பெற்று உத்தியோகங்கள்‌ சம்பாதித்துக்‌ கொடுப்பதும்‌, தங்கள்‌ தேர்தல்‌ காலங்களில்‌ வோட்டுகள்‌ பெறவும்‌, தங்களுக்கு வேண்டிய வேறு அப க்ஷகர்களுக்கும்‌ வோட்டு வாங்கிக்‌ கொடுக்க பிரதிப்‌ பிரயோஜனம்‌ 20 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பெறுவதுமான காரியங்களுக்காகவே பிரயத்தனப்பட்டு தொழிலாளர்‌ தலை வர்களாகிறார்களேயல்லாமல்‌ உண்மையில்‌ இவ்வரசியல்‌ தலைவர்களும்‌ பிராமணத்‌ தலைவர்களும்‌ தொழிலாளர்‌ தலைவர்களாகுவதற்கு எவ்வித யோக்கியதை உடையவர்களுமல்ல, நம்பிக்கையுடையவர்களுமல்ல என்‌ பதே நம்முடைய அபிப்பிராயம்‌.அல்லாமலும்‌ முதலாளிமார்கள்‌ தொழிலாளர்‌: களுக்கு ஏதாவது நன்மையோ தீமையோ செய்ய வேண்டுமானால்‌ இம்மாதிரி. தலைவர்களுக்கு வேறே பலமாதிரி லஞ்சம்‌ கொடுக்க வேண்டி வருகிறது. எது நன்மை? எது தீமை? என்று அறிய முடியாத பாமர தொழிலாளிகள்‌ தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரை எடுத்துக்‌ கொள்ள யோக்கியதையும்‌ ஆசாமியும்‌ இல்லையானால்‌ அவ்வித யோக்கியதை வரும்வரை தங்களுக்கு சங்கம்‌ வேண்டாமென்றிருப்பதே நலமென்றுகூடச்‌ சொல்லலாம்‌.அப்படிக்‌ கில்லாமல்‌ கண்டிப்பாய்‌ தங்களுக்கு ஒரு சங்கம்‌ இருந்துதான்‌ தீரவேண்டு மென்கிற பயித்தியமிருக்குமானால்‌ இவ்வித அரசியல்‌ தலைவர்களை விட முதலாளிகள்‌ தலைமை அதிக மோசமானதல்லவென்பதே நமது அபிப்‌ பிராயம்‌. அரசியல்‌ தலைவர்கள்‌ நமது தொழிலாளர்களை உபயோகப்‌ படுத்திக்‌ கொள்ளுவதை பல தடவைகளில்‌ நாம்‌ நேரிலேயே பார்த்திருக்‌ கிறோம்‌. உதாரணமாக கொஞ்ச காலத்துக்கு முன்பு கோகலே ஹால்‌, செளந்‌ தர்ய மஹால்‌, மகாஜன சபை முதலிய பல இடங்களில்‌ நடந்த அரசியல்‌ சம்பந்தமான கூட்டங்களின்‌ தீர்மானங்களுக்கும்‌ தேர்தல்களுக்கும்‌ தொழி லாளர்களின்‌ வோட்டுப்‌ பெற்று வெற்றி பெறுவதற்காக தொழிலாளர்களி லேயே சில தரகர்களும்‌ அரசியல்காரர்களில்‌ சில தலைவர்களென்போர்‌ களும்‌ முறையே பணம்‌ வாங்கிக்‌ கொண்டும்‌ பணம்‌ சிலவு செய்தும்‌ வோட்டுச்‌ சம்பாதித்துக்‌ கொடுத்ததும்‌ பெற்றதும்‌ நேரிலறிவோம்‌. அல்லாம லும்‌ சமீபகாலத்தில்‌ நடந்த காங்கிரஸ்‌ பெயரைச்‌ சொல்லிக்கொண்டு பிராமணர்‌: பிராமணரல்லாதார்‌ கக்ஷித்‌ தேர்தல்களுக்கும்‌, தொழிலாளர்‌ தரகர்‌ களும்‌ தலைவர்களும்‌ முறையே 200-300 பணம்‌ பெற்றும்‌, சுயநலத்தைக்‌ கோரியும்‌ பிராமணர்களுக்கும்‌ பிராமணர்கள்‌ கக்ஷிக்கும்‌ தொழிலாளர்களின்‌ வோட்டுகளை சேகரித்துக்‌ கொடுத்ததை கேட்டு அறிவோம்‌. இந்நிலையி லுள்ள நமது தொழிலாள சகோதரர்களுக்கு சங்கமிருந்து என்ன பிரயோ ஜனம்‌? சங்கமில்லாமலிருந்தாலாவது வோட்டுக்‌ கொடுப்பதன்‌ பலன்‌ தங்களுக்கு நேரே வந்தாலும்‌ வரலாம்‌. இம்மாதிரி தலைவர்களைக்‌ கொண்ட சங்கமிருக்கிற காரணத்தால்‌ வேறு ஒருவர்‌ சுயநலத்துக்கு இரண்டுமறியாத தொழிலாளர்கள்‌ தங்களது வோட்டுகளை வீணாய்‌ உபயோகிக்க நேரிடுவதும்‌ இதன்‌ கிரையத்தை மற்றவர்கள்‌ அநுபவிக்க நேரிடுகிறதுமாய்‌ முடிகிறது. இப்பொழுதுகூட சில அரசியல்‌ தலைவர்‌ என்போர்களும்‌, தொழிலாளர்‌ தரகர்களும்‌ தொழிலாளர்‌. களிடம்‌ கவலையும்‌ அன்பும்‌ இருப்பது போல்‌ காட்டுவதும்‌ அவர்களுக்குத்‌ தாங்கள்‌ பாடுபடுகிறவர்கள்‌ போலப்‌ பாசாங்கு செய்வதும்‌, உஷார்‌ உஷார்‌. என்று சொல்லுவதும்‌, விஷமிகள்‌ சூழ்ச்சியில்‌ சிக்காதீர்கள்‌, பழய சங்கத்தைக்‌ காப்பாற்றுங்கள்‌ என்று சொல்லுவதும்‌, பக்கத்தில்‌ வரப்‌ குடி அரசு - 1926 N 210 போகும்‌ தேர்தல்களுக்கு வோட்டுச்‌ சேகரிக்கவும்‌, பணம்‌ சம்பாதிக்கவும்‌ கருத்துக்‌ கொண்டுதான்‌ என்பதாக நாம்‌ கோபுரத்தின்‌ மேலிருந்து கூவுவோம்‌. அல்லாமலும்‌ இப்பொழுது தொழிலாளர்களுக்குத்‌ தலைவர்களா யிருக்கிறவர்களெல்லோரும்‌ ஏதாவது ஒருவிதத்தில்‌ முதலாளிகளாய்த்‌ தானிருக்கிறார்கள்‌. ஒவ்வொரு தலைவர்களென்போர்களும்‌ அநேகமாய்‌ தங்களிடம்‌ 500,10050,3020 கணக்கான தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகிற முதலாளிகளும்‌ அவர்கள்‌ உழைப்பில்‌ வாழுகிறவர்களுமாயிருக்‌ கிறார்களே தவிர உண்மையில்‌ தொழிலாளர்களுக்கு அநுகூலமாயிருக்க வேண்டியவர்களாயில்லை. விவசாய சங்கத்துக்கு வியாபாரிகள்‌ தலைவர்‌ களாயிருப்பது போலவும்‌, பிராமணரல்லாதார்களுக்கு பிராமணர்கள்‌ மதகுரு வாயிருப்பது போலவும்‌, இந்தியாவை ஐரோப்பா ஆளுவது போலவும்‌ நமது தொழிலாளிகளுக்கு அரசியல்‌ தலைவர்கள்‌ என்று சொல்லும்படியானவர்கள்‌ தலைவர்களாயிருக்கிறார்கள்‌ என்று சொல்லுவது கொஞ்சமும்‌ குற்றமாகாது. அரசியல்‌ தலைவர்களான கசாப்புக்‌ கடைக்காரன்‌ மூலமாய்‌ நமது தொழிலாளி கள்‌ முதலாளிகளுக்கு உணவாவதைவிட நேரிலேயே போய்விட்டால்‌ ஒரு சமயமில்லாவிட்டாலும்‌ ஒரு சமயத்தில்‌ முதலாளிகளுக்கு ஈவு இரக்கமுண்டா னாலும்‌ உண்டாகலாம்‌. அல்லாமலும்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ தாங்கள்‌ தங்கள்‌ நன்மைக்காக ஏற்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ பல அரசியல்‌ ககஷிகளை தொழிலாளர்‌ சங்கங்‌ களுக்குள்‌ நுழைய வைத்து அதன்‌ காரணமாய்‌ தொழிலாளர்‌ சங்கங்களுக்‌ குள்ளும்‌ ககதிகளை உண்டுபண்ணி அநாவசியமாய்‌ பொது ஜனங்களிடத்‌ திலும்‌ முதலாளிமார்களிடத்திலும்‌ வீண்‌ வெறுப்புகளையும்‌ துவேஷத்தையும்‌ உண்டாக்கி தொழிலாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்கள்‌. தொழிலா எர்களுக்கு வேலை செய்வதற்கும்‌ தற்கால அரசியல்‌ கக்ஷிகளுக்கும்‌ என்ன சம்மந்தமிருக்கிறது.மகாத்மா கொள்கையைப்‌ போல்‌ தொழிலாளர்‌ நன்மையே தேச விடுதலை என்கிற கொள்கையுடையது. அரசியல்‌ கக்ஷிகளாயிருந்தால்‌ அது நமது தொழிலாளர்‌ சங்கத்தில்‌ பிரவேசிப்பதைப்பற்றி நமக்குக்‌ கவலை யில்லை.அப்படிக்கில்லாமல்‌ தொழிலாளர்கள்‌ வோட்டுப்‌ பெற்று உத்தியோக மும்‌ பதவியும்‌ பணமும்‌ சம்பாதிப்பதற்காய்‌ ஏற்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌ சுயராஜ்யக்‌ க௯ஷி முதலிய பல அரசியல்‌ கக்ஷிகளும்‌ அவற்றின்‌ தத்துவங்‌ களை ஒத்துக்‌ கொண்டிருக்கும்‌ காங்கிரஸ்‌ முதலியவைகளும்‌ தொழிலாளர்‌. களுக்கு என்ன நன்மை செய்யக்‌ கூடும்‌? உண்மையிலேயே தொழிலாளர்‌ தரகர்களுக்கு எந்த ககஷியார்‌ அதிகம்‌ பணங்‌ கொடுக்கிறார்களோ அந்தக்‌ கக்ஷியில்‌ தொழிலாளர்கள்‌ சேருகிறதாயிருக்கிறதேயல்லாமல்‌ கக்ஷியின்‌ தத்துவத்தை அறிந்து சேருவதாயில்லை. பிராமணர்களிடம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்ட தொழிலாளர்களால்‌ வசவு கேட்கும்‌ ஜஸ்டிஸ்‌ ௧௯9 கூட தொழிலா ளர்கள்‌ தங்கள்‌ வகுப்பார்களென்கிற காரணத்தினால்‌ தொழிலாளர்‌ களுக்கு பல நன்மைகள்‌ செய்திருக்கிறதை நாம்‌ கேட்டிருக்கிறோம்‌.அதாவது, 211 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சென்னையில்‌ சில வருஷங்களுக்கு முன்‌ ஏற்பட்ட தொழிலாளர்‌ வேலை நிறுத்தங்களில்‌ சில பிராமணத்‌ தலைவர்கள்‌ தொழிலாளர்‌ சங்கத்தைக்‌ கை விட்டு விட்டபோதும்‌ சில பிராமணர்கள்‌ சர்க்கார்‌ தயவுக்கு ஆசைப்பட்டு தங்கள்‌ உத்தியோகத்தைக்‌ கொடுமையாய்‌ நடத்தி தொழிலாளர்களை இம்சித்து பிரமோஷன்‌ பெற்ற காலத்திலும்‌ ஸ்ரீமான்‌ ஸர்‌. பி.தியாகராஜ செட்டி யாரும்‌ அவருடைய கக்ஷி மந்திரிகளும்தான்‌ தொழிலாளர்களையும்‌ சில தொழிலாளர்‌ தலைவர்களையும்‌ நாடு கடத்த வொட்டாமலும்‌, சுட்டுக்கொல்ல முடியாமலும்‌ காப்பாற்றியிருக்கிறார்கள்‌. இந்த ரகசியங்கள்‌ தொழிலாளர்‌ களின்‌ இரண்டொரு உண்மைத்‌ தலைவர்கள்‌ இன்னமும்‌ மறவாமல்‌ சொல்லிக்‌. கொண்டுதானிருக்கிறார்கள்‌. பழைய கதைகள்‌ வேண்டாமென்று வைத்துக்‌ கொள்வதானாலும்‌ இப்பொழுதும்‌ தொழிலாளர்களுக்குத்‌ தலைவர்களா யிருக்கும்‌ இவ்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ தொழிலாளிகளிடம்‌ உண்மையான அன்பு இருக்குமேயானால்‌ சென்னை, நாகை, கோவை முதலிய இடங்களில்‌ தங்கள்‌ கக்ஷிக்காக நிறுத்தப்‌ போகும்‌ சட்டசபை ஸ்தானங்களுக்கு தொழி லாளர்களிலேயே சில பிரதிநிதிகளை ஏன்‌ நிறுத்தக்‌ கூடாது. தொழிலாளர்‌ களில்‌ சட்டசபையில்‌ நிறுத்தக்கூடிய யோக்கியதையுள்ளவர்கள்‌ இல்லை யென்று சொல்வார்களா? சென்னையிலும்‌, நாகையிலும்‌, கோவையிலும்‌ இத்தலைவர்களின்‌ உபதேசத்தால்‌ வேலைகளைப்‌ போக்கடிக்கப்பட்டு பிழைப்புக்குக்கூட கஷ்டப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ யோக்யமும்‌, அந்தஸ்த்‌ தும்‌, அறிவும்‌, ஆற்றலுமுடைய பல தொழிலாளர்களி லிருந்து கொண்டுதானி ருக்கிறார்கள்‌. அவர்களில்‌ சிலரை ஏன்‌ நிறுத்தக்‌ கூடாது. பஞ்சமர்‌, தீண்டாதவர்‌ என்று சொல்லக்‌ கூடிய கூட்டங்களிலிருந்து கூட நமது சர்க்கா ரார்‌ சிலரை சட்டசபைக்கு நியமித்ததின்‌ பலனாய்‌ அவர்களால்‌ அந்த வகுப்பு களுக்கு இப்போது எவ்வளவு நன்மை ஏற்பட்டிருக்கிறது. அல்லாமலும்‌ நிர்வாக மெம்பர்‌ வேலை கொடுத்தாலும்‌ மந்திரி வேலை கொடுத்தாலும்‌ பார்க்கத்‌ தகுந்தவர்களாயிருக்கிறார்கள்‌. அல்லாமலும்‌ இப்பொழுது சட்ட சபையிலிருக்கிற அநேகம்‌ பேரைவிட தேச நலத்திலும்‌ சமூக நலத்திலும்‌ இவர்கள்‌ உழைப்பு உயர்ந்ததென்றே சொல்லலாம்‌. அது போலவே நமது தொழிலாளர்‌ கூட்டங்களிலேயும்‌ அநேகர்கள்‌ இருக்கிறார்களென்றே சொல்லுவோம்‌. மேல்‌ நாடு முதலிய இடங்களிலும்‌ தொழிலாளர்களுக்கென்று தனிக்‌ கக்ஷியும்‌ தொழிலாளர்கள்‌ பிரதிநிதிகளாக தொழிலாளர்களே இருக்கி றார்களல்லாமல்‌ தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களல்லாதவர்களும்‌, முதலாளிமார்களும்‌, அரசியல்‌ உத்தியோக ஆசை கொண்டவர்களும்‌ தலைவர்களாகவும்‌ பிரதிநிதிகளாயிருப்பதில்லை. ஆதலால்‌ தொழிலாளர்‌ களும்‌ இது சமயம்‌ கண்‌ விழித்துக்கொண்டு அரசியல்‌ பதவிகளுக்கும்‌ ஸ்தானங்களுக்கும்‌ தங்கள்‌ பிரதிநிதிகளை நிறுத்தும்படி தங்களுக்குத்‌ தலை வர்களென்று சொல்லிக்‌ கொண்டிருப்பவர்களைக்‌ கேட்க வேண்டியது. அவர்‌. கள்‌ சம்மதிக்காவிட்டால்‌ அத்தலைவர்களிடமிருந்து விலகி தாங்களே தங்களுக்குள்‌ ஒருவரை இப்பதவிகளுக்கு தெரிந்தெடுத்து அபேக்ஷகர்களாக குடி அரசு - 1926 N 212 நிறுத்தி ஒற்றுமையாய்‌ வேலை செய்துப்‌ பார்க்க வேண்டியது. இதிலிருந்‌ தாவது தொழிலாளர்களுக்கு தங்கள்‌ நன்மைக்கு உழைக்கிற உண்மைத்‌ தலைவர்கள்‌ யார்‌? தங்களுடைய சுயநலத்துக்கு தொழிலாளர்களை உபயோ கப்படுத்திக்‌ கொள்ள உழைக்கும்‌ போலித்‌ தலைவர்கள்‌ யாரென்று விளங்கும்‌. ஆடு நனைகிறதென்று ஓநாய்‌ அழுவது போல்‌ இதுவரையிலும்‌ உங்களை ஏமாற்றி வோட்டுக்கும்‌ பெருமைக்கும்‌ உங்களை உபயோகப்படுத்திக்‌ கொண்டிருந்த போலித்‌ தலைவர்களை இனியும்‌ நீங்கள்‌ நம்பாதீர்கள்‌. மகாத்மா காந்தியால்‌ உலகம்‌ போலிகளை அறிந்து கொண்டு வருகிறது. நீங்கள்‌ மாத்திரம்‌ ஏன்‌ இன்னும்‌ கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறீர்கள்‌. கண்‌ விழியுங்கள்‌. இது சமயம்‌ ஏமாந்தால்‌ இனி வெகு நாளைக்கு உங்களுக்கு விமோஜனமில்லை. போலிகளை விட்டு விலகுங்கள்‌! விலகுங்கள்‌!!! விலகுங்கள்‌!!! குடி அரசு - கட்டுரை - 18.04.1926 213 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுயாால்யக்‌ ககூறியும்‌ மதுவிலக்கும்‌ தெண்ணாட்டு பிராமணர்‌ சக்தி பிராமணக்‌ கக்ஷியாகிய சுயராஜ்யக்‌ கக்ஷி சட்டசபைகளில்‌ மது விலக்கு செய்யும்‌ ஆதலால்‌ அவர்களுக்கு வோட்டுக்‌ கொடுங்களென்று இன்னமும்‌ ஸ்ரீமான்‌ சி.ராஜகோபாலாச்சாரியார்‌ பிரசாரம்‌ செய்து வருவது பொதுஜனங்களுக்குத்‌ தெரியும்‌. ஆனால்‌, மதுவிலக்குக்கும்‌ சுயராஜ்ய கக்ஷிக்‌ கும்‌ எவ்வளவு பொருத்தமிருக்கிறது என்பதை ஓட்டர்கள்‌ நினைத்துப்‌ பார்க்கவேண்டும்‌. 1. சுயராஜ்யக்‌ ககஷித்‌ தலைவர்‌ பண்டிதர்‌, வட இந்தியாவில்‌ சாராயம்‌ காய்ச்சும்‌ ஒரு பெரிய கம்பெனியில்‌ பங்குக்காரர்‌ என்று கேள்விப்‌ படுகிறோம்‌. அல்லாமலும்‌ மதுவருந்துவது குற்றமல்ல வென்று நினைத்து அளவாய்க்‌ குடிக்கும்‌ மேல்‌ நாட்டு நாகரிகத்தில்‌ ஈடுபட்டவர்‌. 2. சுயராஜ்யக்‌ கக்ஷித்‌ தலைவரை நடத்துகிறவரும்‌ சுயராஜ்யக்‌ கக்ஷி' யைத்‌ தோற்றுவித்தவரும்‌ காங்கிரஸ்‌ காரியதரிசியுமான ஸ்ரீமான்‌ ஏ. ரெங்க சாமி அய்யங்கார்‌ ஒவ்வொரு வீட்டிலும்‌ பிராந்தி என்னும்‌ சாராயம்‌ வைத்திருக்க வேண்டியது அவசியம்‌ என்று விளம்பரம்‌ செய்து சாராயம்‌ விற்கிறவர்‌. 3. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரைப்‌ பற்றிச்‌ சொல்ல வேண்டியதில்லை. 4. ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரோ தன்‌ தென்னை மரத்தில்‌ கள்‌ உற்பத்தி செய்வதில்‌ பணம்‌ சம்பாதிக்கிறவர்‌. அவர்‌ இல்லையென்று சொன்னாலும்‌, சிலருக்குப்‌ பணம்‌ கொடுத்து இல்லையென்று எழுதச்‌ சொன்னாலும்‌, பொள்ளாச்சி கான்பரன்சுக்கு போக ஸ்ரீமான்கள்‌ சி. ராஜ கோபாலாச்சாரியாரும்‌ ஈ.வெ. ராமசாமி நாயக்கரும்‌ ரயிலில்‌ பிரயா ணம்‌ செய்யும்போது கிணத்துக்கடவு ஸ்டேஷனண்டை வண்டி நின்றதும்‌ ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார்‌ தோப்பில்‌ உள்ள மரங்களில்‌ கள்ளுமுட்டி கட்டியிருந்ததை ஒருவர்‌ காட்டி நேரில்‌ பார்த்தார்கள்‌. இவர்கள்‌ சட்டசபைகளில்‌ கள்ளை நிறுத்துகிறவர்கள்‌: ஸ்ரீமான்‌ சி.ராஜ குடி அரசு - 1926 N 214 கோபாலாச்சாரியார்‌ இவர்களுக்கு பிராமணரல்லாதாரின்‌ வோட்டுகளை' வாங்கிக்‌ கொடுப்பவர்‌; பிராமண சக்தியின்‌ வலிமை என்னே! என்னே! இவர்கள்கூடத் திரியும்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியாரின்‌ தன்மை என்னே! என்னே! குடி அரசு - கட்டுரை - 18.04.1926 215 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 “ம்ரீமாண்‌ கலியாணகந்திர முதலி யாரின்‌ சற்றுப்‌ பிரயாணம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தால்‌ வகுப்புத்‌ துவேஷம்‌ உண்டாகி விடும்‌ என்று பயப்படுவதாய்ச்‌ சொல்லிக்கொண்டு அதற்கெதிர்ப்‌ பிரசாரம்‌ செய்ய பிராமணர்களுடன்‌ சுற்றுப்‌ பிரயாணம்‌ செய்யும்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலி யாணசுந்திர முதலியார்‌ அவர்கள்‌ ஆங்காங்கு கண்ட காட்சியைப்‌ பற்றி சொல்லும்‌ போதும்‌, எழுதும்‌ போதும்‌, தான்‌ போனவிடங்களில்‌ வகுப்புத்‌ துவேஷங்கள்‌ விளங்கிக்‌ கொண்டிருப்பதாய்ச்‌ சொல்லுகிறார்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வெகுகாலமாய்‌ இல்லாமலிருந்தும்‌ நாட்டில்‌ ஏன்‌ வகுப்புத்‌ துவேஷங்கள்‌ ஏற்பட்டிருக்க வேண்டும்‌? இம்மாதிரி வகுப்புத்துவேஷங்கள்‌. நாட்டில்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஏற்பட்ட தினாலா ஏற்படாததினாலா? என்பதை நமது ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌. தயவு செய்து பிராமணர்கள்‌ இல்லாத சமயத்தில்‌ தனியே உட்கார்ந்து தனது நெஞ்சில்‌ கையை வைத்துப்‌ பார்க்கும்படி வேண்டிக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 18.04.1926 குடி அரசு - 1926 N 216 டாக்டர்‌ வாகராசுனு நாயுடவிண்‌ சுற்றுப்‌ பிரமாணம்‌ டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு அவர்கள்‌ தனது சுற்றுப்‌ பிரயாணத்தில்‌ நாகப்பட்டணம்‌ முனிசிபல்‌ உபசாரப்‌ பத்திரத்திற்கு பதிலளிக்கும்போது வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டுமென்று பேசினார்‌. அதாவது பஞ்சமர்‌. முதலிய சிறுபான்மையோருக்கு தனித்‌ தொகுதி வகுத்து தேர்தல்‌ முறையை அளிக்க வேண்டும்‌ என்று பேசியிருக்கிறார்‌. (இது 21-3-26 தமிழ்நாடு பத்திரிகையின்‌ 7- வது பக்கம்‌ 23, 24, 25, 26- வது வரிகளில்‌ பிரசுரமாயிருக்‌. கிறது! நாம்‌ கேழ்க்கும்‌ முதல்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இதேதான்‌. இது சமயம்‌ பஞ்சமர்களுக்கு டாக்டர்‌ நாயுடு சொல்லுகிறபடி செய்தால்கூட போது மானது. ஆனாலும்‌ பஞ்சமர்‌ சிறுபான்மையோரல்ல என்பதை டாக்டர்‌ நாயுடு அவர்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. பஞ்சமர்‌ என்போர்‌ இந்தியா வில்‌ ஐந்தாவது வகுப்பார்‌ என்று சொல்லுவது நிஜமல்லாமலிருந்‌ தாலும்‌ தேச மொத்த ஜனத்‌ தொகையில்‌ 5-ல்‌ ஒன்றுக்கு மேலாயிருக்கிறார்கள்‌. இந்த கணக்கு டாக்டர்‌ நாயுடு அவர்களுக்குத்‌ தெரிந்ததுதான்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியா ருடைய வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தின்‌ தத்துவமும்‌ இதுதான்‌. அதாவது தனித்‌ தொகுதி வகுத்து, தேர்தல்‌ முறையை அளிக்க வேண்டுமென்றுதான்‌ கேள்க்கிறார்கள்‌. நாமும்‌ அதைத்தான்‌ ஆதரிக்கிறோம்‌. டாக்டர்‌ நாயுடு அவர்கள்‌ சொல்லுவது பஞ்சமருக்கும்‌ சிறுபான்மையோருக்கும்‌ என்கிறார்‌. நாம்‌ சொல்லுவதும்‌ அதேதான்‌. அதாவது பிராமணர்‌, பிராமணரல்லாதார்‌, பஞ்சமர்‌ என மூன்று பிரிவுகளாகப்‌ பிரிக்கும்படி கேள்க்கிறோம்‌. டாக்டர்‌. நாயுடு அவர்கள்‌ சொல்லுவது போல்‌ இம்மூன்று பிரிவில்‌ பஞ்சமருக்கும்‌ சிறுபான்மையோராகிய பிராமணருக்கும்‌ தனித்தொகுதி வகுத்து தேர்தல்‌ முறை அளித்துவிட்டால்‌ பாக்கியிருப்பவர்களுக்கு தானாகவே தனித்‌ தொகுதியும்‌ தேர்தல்‌ முறையும்‌ ஏற்பட்டுவிடுகிறது. மற்றபடி கிறிஸ்தவர்‌, மகமதியர்‌, ஐரோப்பியர்‌, ஆங்கிலோ இந்தியர்‌ முதலிய வகுப்பார்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டுப்‌ போயிருக்கிறது. மற்றபடி எந்த விதத்தில்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி பிராமணரல்லாதார்‌ கேள்க்கும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கும்‌, டாக்டர்‌ நாயுடு போன்ற சுயராஜ்யக்‌ கட்சியை ஆதரிக்கும்‌ பிராமணரல்லாதார்‌. கேள்க்கும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கும்‌, ஸ்ரீமான்கள்‌ எஸ்‌.ராமநாதன்‌, ஆரியா, சக்கரைச்‌ செட்டியார்‌, தண்டபாணி பிள்ளை, ஈ.வெ.இராமசாமி நாயக்கர்‌ முதலியோர்‌ போன்ற பிராமணரல்லாதார்‌ கேள்க்கும்‌ வகுப்புவாரிப்‌ 217 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிரதிநிதித்துவத்திற்கும்‌ வித்தியாசமிருக்கிறதோ நமக்கு விளங்கவில்லை. இதையறிந்தே தான்‌ நாம்‌ பலதடவைகளில்‌ டாக்டர்‌ நாயுடு அவர்கள்‌ தனது அந்தரங்கத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு விரோதியல்லவென்றும்‌ ஏதோசிற்சில சந்தர்ப்பங்களில்‌ மாத்திரம்‌ ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணகந்திர முதலியார்‌ அவர்களோடு போட்டி போட்டு பிராமணர்களுக்கு நல்ல பிள்ளை யாக வேண்டுமென்கிற சமயங்களில்‌ டாக்டர்‌ நாயுடுவும்‌ முதலியாரைப்‌ போலவே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கூடாது என்று சொல்லவேண்டி யதாய்ப்‌ போய்விடுகிறது என்று கருதியே எழுதியிருக்கிறோம்‌. ஆனாலும்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாண சுந்திர முதலியார்‌ தான்‌ கொஞ்ச காலத்திற்கு முன்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்டது ஜஸ்டிஸ்‌ கட்சியை ஒடுக்குவதற்காக என்று இப்போது சொல்வதுபோல்‌ நமது டாக்டரும்‌ நாகப்பட்டணத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டுமென்பதற்கு ஏதாவது காரணமோ வியாக்கியானமோ சொல்லி, மறுபடியும்‌ வேதாளம்‌ முருங்கை மரத்திலேறினா லும்‌ ஏறலாம்‌. ஆதலால்‌,டாக்டர்‌ நாயுடு முதலியோர்கள்‌ சந்தர்ப்பங்களை உத்தேசித்துச்‌ சொல்லும்‌ வியாக்கியானங்களில்‌ கருத்தைச்‌ செலுத்தாமல்‌ அவர்களின்‌ அந்தரங்கத்தை மாத்திரம்‌ தெரிந்து கொள்ளும்படி வேண்டுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 18.04.1926 குடி அரசு - 1926 N 218. தெண்ணாட்டுத்‌ தனைவர்கனின்‌ சுற்றுப்‌ பிரயாணத்தின்‌ வருமை தென்னாட்டுத்‌ தலைவர்கள்‌ என்று சொல்லப்படுவோர்கள்‌ வோட்டு வேட்டையென்னும்‌ சுற்றுப்‌ பிரயாணங்களில்‌ ஆங்காங்கு நடக்கும்‌ திரு விளையாடல்களை பிராமணப்‌ பத்திரிகைகள்‌ மறைத்து விட்டு தங்களுக்குப்‌ பெருமை உண்டாகும்படியாக இல்லாத சங்கதிகளையும்‌, நடக்காத கெளரவங்‌ களையும்‌ எழுதி பாமர ஜனங்களை ஏமாற்றி வருகிறது. பிராமணரல்லாத வாரப்‌ பத்திரிகைகள்‌ சிலதும்‌ உண்மைகளை மறைத்துவிடுகிறது. தலைவர்‌ களின்‌ சுற்றுப்‌ பிரயாணங்களின்‌ யோக்கியதையை அறியவேண்டுமானால்‌ “திராவிடன்‌” பத்திரிகையை வாங்கிப்‌ படித்தால்‌ உண்மை விளங்கும்‌. சுய ராஜ்யக்‌ கட்சியை எதிர்ப்பவர்களுக்கும்‌ பிராமணரல்லாதார்களுக்காக பாடு படும்‌ பிராமணரல்லாதார்‌ கட்சிக்கும்‌ பிராமணர்களின்‌ யோக்கியதையை தைரியமாய்‌ எடுத்து சொல்லுகிறவர்களுக்கும்‌ யோக்கியதையும்‌ மதிப்பும்‌ இருக்கிறதா என்பதையும்‌ நன்றாய்‌ அறியலாம்‌. தூத்துக்குடியில்‌ நடந்த விஷயங்களும்‌ திருச்சியில்‌ நடந்த விஷயங்களும்‌ தலைவர்களைக்‌ கேட்ட கேள்விகளும்‌ அதற்குத்‌ தலைவர்கள்‌ சொன்ன பதில்களையும்‌ பிராமணப்‌ பத்திரிகைகள்‌ பிரசுரிக்காமல்‌ விட்டுவிட்டிருக்கிறது. ஆகையால்‌ அப்பத்திரி கைகளின்‌ பொய்‌ ஆதாரங்களையும்‌ பொய்த்‌ தலையங்கங்களையும்‌ கண்டு ஏமாந்து போகாமல்‌ இருக்கும்படியாய்க்‌ கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 18.04.1926 219 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வகுப்புவாரி உரிமை வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பற்றி வலியுறுத்த ஆரம்பித்த பிறகு தமிழ்நாடு ராஜீய உலகத்தில்‌ ஒரு பெரிய மாறுதல்‌ ஏற்பட்டதோடு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு அநுகூலமாயிருக்கும்‌ சில தேசபக்தர்‌. களுக்கு காங்கிரசில்‌ செல்வாக்கில்லாமலடிப்பதோடு காங்கிரஸையே பிராமண மயமாக்க அவசியம்‌ ஏற்பட்டதும்‌, பிராமணரல்லாதாரில்‌ யாருக்கா வது காங்கிரஸ்‌ பெயரைச்‌ சொல்லிக்கொள்ள வேண்டுமானால்‌ அவர்கள்‌. பிராமணர்கள்‌ தயவு பெற வேண்டியிருப்பதால்‌ பிராமணர்களுக்கு பயப்பட்டு. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தை எதிர்க்கவேண்டிய அவசியமேற்படவும்‌ ஏற்பட்டிருப்பது நேயர்களுக்குத்‌ தெரிந்த விஷயமே. வகுப்புவாரிப்‌ பிரதி நிதித்துவத்தை ஒரு நாளும்‌ பிராமணர்கள்‌ ஒப்புக்கொள்ள மாட்டார்கள்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ எங்கு ஏற்பட்டுப்‌ போகுமோ என்கிற பயத்‌ தால்‌ தான்‌ பிராமணர்கள்‌ சர்க்காரைத்‌ தொங்கிக்‌ கொண்டிருப்பதும்‌ ஒரு சர்க்கார்‌ இவர்களுக்கு விரோதமாயிருந்தால்‌ வேறொரு சர்க்காரை தயார்‌. செய்வதுமாயிருக்கிறார்கள்‌. அதற்குப்‌ பயந்து கொண்டுதான்‌ வரும்‌ சர்க்கார்‌. களும்‌ பிராமணர்களுக்கு சுவாதீனமாய்ப்‌ போய்‌ விடுகிறார்கள்‌. நம்‌ நாடு ஏதாவது ஒரு காலத்தில்‌ “இயற்கைக்கு விரோதமாய்‌” நம்‌ நாட்டார்களாலேயே ஆளப்படுகிறது என்கிற யோக்கியதை அடையுமானால்‌ அது கண்டிப்பாய்‌ வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம்‌ வழங்கப்பட்டதால்தான்‌ முடியும்‌ என்று வைரக்‌ கல்லில்‌ எழுதி வைப்போம்‌. அது ஏற்படும்‌ வரை இந்தியாவை இந்தியர்‌ ஆட்சி புரிவது என்பதைத்‌ தூர தள்ளி வைத்துவிடவேண்டியதுதான்‌. நமது வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்‌ துவத்திற்கு பிராமணர்கள்‌ மாத்திரம்‌ விரோதிகளல்ல. அந்நிய அரசாங்கத்‌ தாரும்‌ விரோதிகள்‌ என்பதை உணரவேண்டும்‌. ஏனென்றால்‌ எவ்வளவுக்‌ கெவ்வளவுநமக்குள்‌ சண்டையும்‌ சச்சரவும்‌ ஏற்பட்டு ஒற்றுமைக்‌ குறைவாய்‌ இருக்கிறோமோ அவ்வளவுக்‌ கவ்வளவு அந்நிய ஆக்ஷியின்‌ எல்லை நீண்டு கொண்டிருக்கும்‌. நமக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுத்து நம்‌ எல்லோரையும்‌ உத்தியோகத்திற்கும்‌ பதவிக்கும்‌ சண்டை போட்டுக்‌ கொள்‌: ளாமல்‌ அவரவர்களுக்குள்ளது அவரவர்கள்‌ அடையும்படி செய்து ஒருவரை ஒருவர்‌ தின்னாமல்‌ செய்துவிட்டால்‌ பிறகு எல்லோரும்‌ ஒற்றுமையாய்‌ விடு. வார்கள்‌. இதனால்‌ அந்நிய ஆக்ஷிக்கு ஆபத்து. ஆதலால்‌ இந்தத்‌ தத்துவம்‌ எப்போதும்‌ அந்நிய அரசாங்கத்திற்கு விரோதமானது. குடி அரசு - 1926 N 220 “பெருங்கூட்டத்தை சிறு கூட்டம்‌ ஆள வேண்டுமானால்‌ சிறு கூட்டத்தார்‌ பெருங்கூட்டத்தை ஒருவருக்கொருவர்‌ பொறாமையும்‌ துவேஷ மும்‌ ஏற்படும்படி செய்து பிரித்து வைத்து கலகத்தை உண்டாக்கி விட்டால்‌ தாராளமாய்‌ ஆளலாம்‌” என்று ஒரு பழமொழி உண்டு அதுபோல்‌ சர்க்காரின்‌ நடவடிக்கை; அதுவே நமது பிராமணர்களின்‌ நடவடிக்கை. இதை நம்மில்‌ பலர்‌ அறிவதில்லை; அறிந்தாலும்‌ எப்படி பிராமணர்களுக்கு நல்ல பிள்ளை யாகலாம்‌ என்பதில்தான்‌ அதிகக்‌ கவலை. ஆங்கில அரசாங்கத்தின்‌ 150 வரு ஷத்திற்கு மேற்பட்ட ஆ க்ஷியின்‌ பலனாய்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லாததின்‌ பலனாய்‌ பிராமணரல்லாத வகுப்புகள்‌ எவ்வளவு முற்போக்‌ கடைந்திருக்கிறது என்று பார்த்தால்‌ உண்மை பிராமணரல்லாத ரத்தம்‌ ஓடும்‌ மனிதன்‌ துடிக்காமல்‌ இருக்கமாட்டான்‌. நம்‌ தென்னாட்டு அரசாகஷியில்‌ பிராமணரல்லாதார்‌ நிலை எப்படி இருக்கிறது; பிராமணர்கள்‌ நிலை எப்படி யிருக்கிறது என்பது கீழ்க்கண்ட கணக்குகளினால்‌ அறிந்து கொள்ளக்‌ கோரு கிறோம்‌. நமது அரசாங்கத்‌ தில்‌ 35 ரூபாய்‌ சம்பளத்திற்கு கீழ்ப்பட்ட உத்தியோ கங்களில்‌, அதாவது வாசல்‌ கூட்டுவது, மேஜை துடைப்பது, பங்கா இழுப்பது, அதிகாரிகளுக்கு கால்‌ கை அழுத்துவது முதலிய வேலைகளில்‌ பிராமண: ரல்லாதவர்‌ 37125 பெயர்கள்‌ இருக்கிறார்கள்‌. பிராமணர்கள்‌ 1810 பெயர்‌. மாத்திரமே இருக்கிறார்கள்‌. இவர்களும்‌ சம்பளம்‌ குறைவாயிருந்தாலும்‌ தளுக்காய்‌ மேலதிகாரிகளை ஏமாற்றி ஷி வேலைகள்‌ பார்க்காமல்‌ அதிகாரம்‌ செலுத்தி வருவார்கள்‌. 35-க்கு மேல்பட்டு 100 ரூபாய்‌ வரை சம்பளம்‌ உள்ள உத்தியோகத்தில்‌ பிராமணரல்லாதார்‌ 7003, பிராமணர்களோ 10,934. இந்த இடத்திலேயே நம்மைவிட பிராமணர்கள்‌ 4000 பேர்‌ அதிகமாகிவிட்டார்கள்‌. 100-க்கு மேல்பட்டு சுமார்‌ 250ரூ. வரை உள்ள உத்தியோகத்தில்‌ பிராமணர்‌. 2679 பேரும்‌ பிராமணரல்லாதார்‌ 1666 பேருமாயிருக்கிறார்கள்‌. இந்த இடத்‌ தில்‌ பிராமணரல்லாதாரை விட பிராமணர்கள்‌ 1000 பேர்‌ அதிகமாயிருக்‌ கிறார்கள்‌. 250 ரூபாய்க்கு மேல்பட்டு உத்தியோகங்களில்‌ பிராமணர்கள்‌ 594, பிராமணரல்லாதார்‌ 280 பேர்கள்‌ இருக்கிறார்கள்‌. இந்த இடத்தில்‌ ஒன்றுக்கு இரண்டிற்கு மேல்‌ போய்விட்டார்கள்‌. கலெக்டர்‌ உத்தியோகத்தில்‌ 11 உத்தியோகம்‌ இந்தியர்கள்‌ வகிப்பதில்‌ 9 பேர்‌ பிராமணர்கள்‌. இந்த இடத்தில்‌ ஒன்றுக்கு ஐந்தாய்‌ விட்டார்கள்‌. ரிவின்யூ போர்டில்‌ உள்ள ஒரு இந்திய மெம்பர்‌ உத்தியோகத்தில்‌ பிராமணர்தான்‌ இருக்கிறார்‌. இந்தியருக்கு கொடுக்‌ கப்பட்ட கைத்தொழில்‌ டைரக்டர்‌ வேலையில்‌ பிராமணரே இருக்கிறார்‌. அரசாங்கக்‌ காரியதரிசி வேலையில்‌ உள்ள இந்தியரும்‌ பிராமணரே. 200 ஜில்லா முன்சீப்புகளில்‌ 150 பேர்‌ பிராமணர்கள்‌; 61 சப்‌ ஜட்ஜுகளில்‌ 45 பேர்‌ பிராமணர்கள்‌; ஜில்லா ஜட்ஜுகளில்‌ 7 பேர்‌ பிராமணர்கள்‌. அதாவது எடுபிடி உத்தியோகங்களில்‌ பிராமணரல்லாதாரும்‌ 100,500.1000, 2000, 3000 உள்ள உத்தியோகங்களில்‌ பிராமணர்களும்‌ அநுபவிக்கிறார்கள்‌. வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டாம்‌ என்று சொல்லும்‌ ஸ்ரீமான்‌ திரு.வி. கலி 22] பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 யாணசுந்தர முதலியார்‌ அவர்களை நாம்‌ ஒரு கேள்வி கேள்க்கின்றோம்‌ அதாவது: இவ்வித 1000, 2000, 3000 உள்ள உத்தியோகங்கள்‌ பிராமணரல்லாத இந்துக்கள்‌ என்போராகிய100 - ல்‌ 70 பேருக்கு மேலாக இருக்கும்‌ பிராமண ரல்லாதாருக்கு குறைவாயிருப்பதற்கும்‌, 100-6 3 பேராயிருக்கும்‌ பிராமணர்‌: களுக்கு ஏகபோகமாயிருப்பதும்‌ யோக்கியதை இல்லாததாலா? வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லாததாலா? என்று கேள்ப்பதோடு ஸ்ரீமான்‌ முதலியார்‌ கோரும்‌ சுயராஜ்யமோ சீர்திருத்தமோ வரவர பிராமணர்களுக்கு உத்தியோ கம்‌ பெருக்கமாகுமா? அல்லது ஏழைகளுக்கு வரி குறைந்து தொழிலாளி களுக்கு தொழில்‌ கிடைக்குமா? என்று கேள்க்கிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 18.04.1926. குடி அரசு - 1926 N 222 சுயாரான்யக்‌ ககூறிக்கு நற்சாக்ரிப்‌ பத்திரம்‌ ராஜீய உலகத்திலும்‌ சீர்திருத்த உலகத்திலும்‌ ஸ்ரீமான்‌ சி.விஜயராகவாச்‌ சாரியாரும்‌ ஸ்வாமி சிரத்தானந்தரும்‌ முறையே பேர்‌ போனவர்கள்‌. முதல்வர்‌. காங்கிரசுக்கே அக்கிராசனாதிபதியாயிருந்தவர்‌. இரண்டாவதவர்‌ மனித சமூகத்தின்‌ சம உரிமைக்கு உண்மையாய்ப்‌ பாடுபடுகிறவர்‌. இவர்களிருவரும்‌. சுயராஜ்யக்‌ கக்ஷியைப்‌ பற்றி சொல்லுவதாவது:- 1-வது, சி. விஜயராகவாச்சாரியார்‌ : “கான்பூர்‌ காங்கிரஸ்‌ தீர்மானம்‌ ஒழுங்கில்லையென்பது என்‌ அபிப்பிராயம்‌. காங்கிரஸ்‌ ஒரு கோவிலுக்கு சமானம்‌. அதை சிலர்‌ மாத்திரம்‌ பிடித்துக்கொண்டு பிறருக்கு அதில்‌ தொழும்‌ பாத்திய தையைத்‌ தடுக்கக்கூடாது. ஒரு பெரிய சந்நியாசியாகிய மகாத்மா காந்தியை ஏமாற்றி கான்பூரில்‌ அத்தீர்மானத்தை காங்கிரஸில்‌ நிறைவேற்றப்‌ பட்டிருக்கிறதென்பதே என்‌ அபிப்பிராயம்‌. காங்கிரஸ்‌ 40 வருஷத்திற்கு முன்னாலேற்பட்டது. அப்பொழுது சட்டசபை இல்லை, சட்டசபைக்காக காங்கிரஸ்‌ ஏற்படவில்லை.” 2-வது, ஸ்வாமி சிரத்தானந்தர்‌ : “சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ சட்டசபை யினின்றும்‌ வெளிவந்ததும்‌ சட்டமறுப்பு ஆரம்பித்திருந்தால்‌ அதை சரியான கக்ஷியென்று சொல்லலாம்‌. பிரயோஜனமில்லையென்று வெளிவந்தபின்‌ மறுபடியும்‌ சட்டசபைக்குப்‌ போகிறோமென்பதை எப்படி நாம்‌ ஒப்புக்கொள்ள முடியும்‌.” குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 18.04.1926. 223 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சர்‌. வசட்முயாரும்‌ டாக்டர்‌ அம்மையாரும்‌ ஒத்துழையாமையின்‌ போது ஜயிலுக்கு ஜனங்கள்‌ போய்க்‌ கொண்டி ருந்ததை ஒப்புக்கொள்ளாத ஸர்‌.பி. தியாகராய செட்டியார்‌ ஜயிலுக்குப்‌ போன ஸ்ரீமான்‌ எஸ்‌.ராமநாதன்‌ அவர்களுக்கு பிரத்தியேக செளகரியம்‌ செய்து கொடுக்க சம்மதிக்கவில்லையாம்‌. இது குற்றமல்ல வென்று கஷ்டப்பட்ட ஸ்ரீமான்‌ எஸ்‌.ராமநாதனே ஒப்புக்கொண்டாலும்‌, மறைந்து வேடிக்கைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த நமது பிராமணர்களுக்கு ஸர்‌.செட்டியார்‌ “டயராய்‌” விட்டார்‌. அவருடைய கக்ஷி தேசத்துரோக கக்ஷியாய்ப்‌ போய்விட்டது. ஆனால்‌ பஞ்சாப்‌ படுகொலையானபோது ஸ்ரீமதி பெசண்டம்மையார்‌ “ஜலி யன்‌ வாலாபார்க்கில்‌ நிரபராதிகளை டயர்‌ சுட்டது சரி: இவர்கள்‌ கல்லு போட்‌ டார்கள்‌; அதற்கு டயர்‌ குண்டு போட்டார்‌; இதிலொன்றும்‌ தப்பில்லை” என்று சொன்னார்‌. அதைப்பற்றி கேள்ப்பாரில்லை. அவருடனும்‌ அந்தம்மாள்‌ கக்ஷியிலும்‌ அநேக பெரிய “மதிப்பு வாய்ந்த” பிராமணர்கள்‌ சூழ்ந்து கொண்டு சபை நடுவிலிருத்தி ஆட்டத்துக்குத்‌ தகுந்த தாளம்‌ போடுகிறார்கள்‌. ஏன்‌? அந்தம்மாள்‌ பிராமணர்களுக்கு அநுகூலமாய்‌ இருந்துகொண்டு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கூடாது என்கிறார்‌. தனக்குள்ள செல்வாக்கை பிராமணர்களுக்கு உத்தியோகங்கள்‌ வாங்கிக்‌ கொடுப்பதிலும்‌ அதற்குத்‌ தகுந்த திட்டம்‌ போடுவதிலும்‌ சிலவிடுகிறார்‌. அல்லாமலும்‌ ஜலியன்‌ வாலா பார்க்கில்‌ குண்டுபட்டு இறந்த குழந்தைக்‌ குட்டிகளும்‌ அவமானப்படுத்தப்‌ பட்ட பெண்களும்‌ ஏறக்குறைய எல்லோரும்‌ பிராமணரல்லாதவர்கள்‌. ஆதலால்‌, அந்தம்மாளுக்கு பிராமண அநுசரணை தாராளமாய்‌ இருக்கிறது. அப்படி இல்லாததால்‌ ஸர்‌. செட்டியாருக்கு பிராமணர்களைத்‌ தவிர பிராமண: ரல்லாதாரிலும்‌ சில துரோகிகள்‌ இருக்கிறார்கள்‌. என்னே காலத்தின்‌ கோலம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 18.04.1926 குடி அரசு - 1926 N 224 மகாத்மாவக்கு பொது ஊணைங்களிடம்‌ உன்ன நம்பிக்கை கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு நூல்‌ சந்தாதாரர்‌, தன்‌ கைப்பட நூற்று நூற்போர்‌ சங்கத்திற்கு அனுப்பிவரும்‌ நூல்களை தனக்கு திருப்பி அனுப்பி னால்‌ அதன்‌ கிரையத்தை கொடுத்துவிடுவதாகவும்‌, அந்த நூலைக்கொண்டு நெய்த துணியை அணிய தான்‌ ஆசைப்படுவதாகவும்‌ எழுதியிருந்தாராம்‌. அதற்கு மகாத்மா பதில்‌ எழுதுகையில்‌ அவரவர்கள்‌ நூலை அவரவர்களுக்கு திருப்பி அனுப்பிவிட்டால்‌ மறுபடியும்‌ அந்த நூலையே சந்தாவுக்கு அனுப்பி விடுவார்கள்‌ ஆதலால்‌, அந்த நூலை சலவை செய்து அனுப்பக்கூடும்‌ என்று எழுதினாராம்‌. தினம்‌ நூற்று, மாதா மாதம்‌ நூல்‌ அனுப்புகிறோம்‌ என்று பிரமாணம்‌ செய்து உறுதிமொழியில்‌ கையொப்பமிட்ட நூல்‌ சந்தாதாரரிடமே. இவ்வளவு அவநம்பிக்கை இருக்குமானால்‌ மற்றவர்‌ களிடம்‌ எவ்வளவு நம்பிக்கை இருக்கும்‌? இதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு முன்‌ மகாத்மாவுக்கு வெறும்‌ ஆள்களிடம்‌ இருந்த நம்பிக்கைக்கூட, உறுதிமொழி கொடுத்தவர்‌. களிடம்‌ இல்லைபோல்‌ இருக்கிறது. தன்னிடம்‌ இருக்கும்‌ உறுதி, ஆட்டம்‌ கொடுத்தவுடன்‌ எல்லாரிடமும்‌ சந்தேகப்படுவது இயற்கைதான்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 18.04.1926 225 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுயாரால்யக்‌ ககூறியும்‌ மகமதியரும்‌ “மகமதியர்கள்‌ பெரும்பான்மையாயுள்ள இந்தியாவின்‌ வட எல்லைப்‌ புற மாகாணங்களுக்கு இந்தியாவின்‌ மற்ற பாகங்களைப்‌ போலாவது சீர்திருத்‌ தங்கள்‌ வழங்கப்படவேண்டும்‌”” என்ற ஒரு தீர்மானத்தை இந்தியா சட்ட சபையில்‌ ஒரு மகமதிய கனவான்‌ பிரேரேபித்தபோது சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ அதை எதிர்த்துத்‌ தோற்கடிப்பதற்கு அநுகூலமாயிருந்தார்களாம்‌. சில மகமதிய கனவான்கள்‌ சுயராஜ்யக்‌ கக்ஷித்‌ தலைவரான பண்டித நேருவை எங்கள்‌ விஷயத்தில்‌ ஏன்‌ இப்படிச்‌ செய்தீர்கள்‌ என்று கேட்டதற்கு சீர்திருத்‌ தமே போதுமானதல்ல, உபயோகப்படக்கூடியதல்ல; ஆதலால்‌ அது உங்க ளுக்கு ஆகாது: அதினால்தான்‌ நாங்கள்‌ ஆக்ஷபித்தோம்‌ என்று பதில்‌ சொன்னாராம்‌. சுயராஜ்யக்‌ க௯ஷி பிராமணருக்கு மாத்திரம்‌ சீர்திருத்தத்தின்‌ பலனாய்‌ ஏற்பட்ட சட்டசபையும்‌, அதில்‌ ஏற்படும்‌ கமிட்டிஅங்கத்தினர்‌ பதவி யும்‌ 4000, 5000 சம்பளமுள்ள சட்டசபை அக்கிராசனம்‌ முதலிய ஸ்தானங்‌ களும்‌ சுயராஜ்யம்‌ பெற உபயோகப்படுத்திக்‌ கொள்ளக்கூடியதும்‌ அதற்குப்‌ போதுமானதுமாயிருக்கிறது. ஆனால்‌, எல்லைப்புற மகமதியர்களுக்கு மாத்திரம்‌ பிரயோஜனமில்லையாம்‌, போறாதாம்‌. இது சிறு குழந்தைகள்‌ ஏதாவது கேட்டால்‌ தொடாதே கடித்துவிடும்‌ என்று சொல்லுவது போலிருக்‌ கிறது. இம்மாதிரி சுயராஜ்யக்‌ கக்ஷியில்‌ எப்படித்தான்‌ உண்மையான மகமதி யர்கள்‌ சேருகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும்‌ இரண்டொரு ஆசாமி களைத்‌ தவிர பெரும்பாலும்‌ புத்தியுள்ள மகமதியர்களெல்லாம்‌ சுயராஜ்யக்‌ கக்ஷியினின்றும்‌ விலகி விட்டார்களென்றே சொல்லலாம்‌. அந்த இரண்டொ ருவர்களைப்‌ பற்றிக்கூட நாம்‌ ஆச்சரியப்படக்‌ காரணமில்லை. ஏனென்றால்‌ பிராமணரல்லாதாரிலேயே பிராமணர்களின்‌ சூழ்ச்சி அறிந்த சிலர்‌ தங்களை அறிவாளிகள்‌ என்று சொல்லிக்‌ கொண்டு பிராமணர்களின்‌ வாலைப்‌ பிடித்துக்‌ கொண்டு திரிவார்களேயானால்‌ மகமதியரைப்பற்றி நாம்‌ ஆச்சரியப்பட என்னநியாயமிருக்கிறது. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 18.04.1926. குடி அரசு - 1926 N 226 Gunebeiv நிர்வாகம்‌ கொஞ்சகாலமாக போலீஸ்‌ நிர்வாகம்‌ வெகு தடபுடலாக இருந்து வருவ தாகவே சொல்லலாம்‌. வீதிகளில்‌ முக்கு முக்குக்கு போலீஸாரை நிறுத்தி வண்டிகளையும்‌ மோட்டார்களையும்‌ இடம்‌ வலம்‌ பிரித்து அனுப்புவது வெகு மும்முரமாயிருக்கிறது. இது ஒரு விதத்தில்‌ நன்மை ஆனாலும்‌ 15 அடி 20 அடி உள்ள குறுகிய ரோட்டுகளில்‌ கூட போலீஸார்‌ நடுவில்‌ நின்று கொண்டு. வண்டிகளை இடம்‌ வலம்‌ பிரிப்பது வேடிக்கையாயிருக்கிறது. ஒவ்வொரு சமயங்களில்‌ போலீஸார்‌ பாடு உயிருக்கே ஆபத்தாய்‌ விடும்‌ போலிருக்கிறது. சிற்சில போலீஸார்‌ தங்கள்‌ மேல்‌ வண்டி ஏறட்டுமென்றே உறுதியாய்‌ விலகா மல்‌ நிற்கிறார்கள்‌. அது சமயங்களில்‌ வண்டிக்காரர்கள்‌ பாடு வெகு கஷ்ட மாய்ப்‌ போய்விடுகிறது. அல்லாமல்‌ இந்த கொடுமையான வெய்யிலில்‌ போலீஸ்காரர்கள்‌ அசையாமல்‌ நின்று கொண்டிருப்பதானது போலீஸாருக்கு பெரிய தண்டனை என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌. பார்க்கிறவர்கள்‌ கண்‌ ணுக்கு இந்த போலீஸார்களின்‌ நிலை மிகப்‌ பரிதாபமாகவே காணப்‌ படுகிறதும்‌ தவிர மாதம்‌ 20, 25 ரூபாய்‌ சம்பளமும்‌ லீவு, பென்ஷன்‌, உடுப்பு வகையறாக்களுக்கு குறைந்தது மாதம்‌ 10 ரூபாய்‌ சிலவுகளும்‌ ஆக மாதம்‌ 35 ரூபாய்‌ சம்பளம்‌ கொடுக்கும்‌ ஆள்களை நடுரோட்டில்‌ வெய்யிலில்‌ கைகாட்டி மரம்‌ போல்‌ நிறுத்தி வண்டிகளை இடது புறம்‌ விடு, வலது புறம்‌ விடு என்பதற்குத்தானா உபயோகப்படுத்த வேண்டும்‌. இந்த ஆளுகளுக்கு எஜமானர்களாய்‌ இருக்க 100,200,500 சம்பளமுள்ள உத்தியோகஸ்தர்கள்‌ வேண்டுமா? இவற்றைக்‌ கவனிக்க சட்டசபை மெம்பர்கள்‌ இல்லை. எந்த உத்தியோகமானாலும்‌ எங்கள்‌ ஜாதிக்கு கொடு என்பதற்கு மாத்திரம்‌ சட்டசபையில்‌ மெம்பர்களுக்கு குறைவில்லை. வண்டி விலக்கி இடம்‌ வலம்‌ விடுவதற்கென்று ஒரு இலாக்கா வைத்து அவற்றிற்கு மாதம்‌ 12 அல்லது 15 ரூ. கொடுத்தால்‌ 1000-க்‌ கணக்கான ஆள்கள்‌ கிடைக்கும்‌. அதை விட்டுவிட்டு 10 15,20 ஹு அநுபோகம்‌ பெற்ற 20, 25 ரூபாய்‌ ஆளுகளைக்‌ கொண்டு இந்த வேலை வாங்குவது ஸாது ஜனங்களின்‌ வரிப்பணம்‌ கேழ்ப்பாரற்று சிலவாகிறது என்பதைத்‌ தவிர வேறு என்ன சொல்லலாம்‌. அல்லாமலும்‌ போலீஸாரெல்லாம்‌ பிராமணரல்லாதாராய்‌ போய்விட்டபடியாலும்‌, மேலதி காரிகள்‌ எல்லாம்‌ பிராமணராய்‌ அமைந்து விட்டதாலும்‌ போலீஸ்‌ கான்ஸ்டேபிள்கள்‌ நாயிலும்‌ கடையாய்‌ நடத்தப்படுகிறார்கள்‌. அவர்களை மேலதிகாரிகள்‌ பேசும்‌ வார்த்தைகளோ சில சேரியில்‌ பேசிக்கொள்வது போல்‌ 227 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அடே, போடா, வாடா என்பதோடு நாய்‌, கழுதை, எருமை இதுகளுக்குப்‌ பிறந்தவன்‌ என்று பேசுவதோடல்லாமல்‌ பெண்டு பிள்ளைகளும்‌ சில சமயங்களில்‌ தடுமாறிப்‌ போகிறதாம்‌. வெள்ளைக்கார அதிகாரிகள்‌ இவற்றைக்‌ கொஞ்சமும்‌ கவனிப்பதில்லை. போலீஸ்‌ இலாக்காவில்‌ போலீஸாரை மனிதர்களாக பாவிக்கவேண்டுமென்றால்‌ குறைந்தது ஒவ்வொரு இடங்‌ களிலும்‌ சர்க்கிள்‌ இன்ஸ்பெக்டரோ அல்லது சப்‌ இன்ஸ்பெக்‌ டரோ யாராவது ஒருவர்‌ பிராமணரல்லாதாராயிருக்கும்படி பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. அப்படிக்கில்லாமல்‌ சிற்சில சமயங்களில்‌ டிப்டி சூப்ரெண்ட்‌, சர்க்கிள்‌. இன்ஸ்பெக்டர்‌, சப்‌ இன்ஸ்பெக்டர்‌, ஹெட்‌ கான்ஸ்டேபிள்‌, ரைட்டர்‌ ஆகிய எல்லோரும்‌ பிராமணர்களாய்‌ அமைந்து விடுகிறார்கள்‌. இம்மாதிரி சமயங்‌ களில்‌ பிராமணரல்லாத போலீஸ்‌ கான்ஸ்டேபிள்கள்‌ பாடுநரக வேதனைதான்‌. ரைட்டர்‌ முதல்‌ ஒவ்வொரு பிராமண உத்தியோகஸ்தருக்கும்‌ இரண்டு இரண்டு ஆள்கள்‌ வீட்டு வேலைக்கு வேண்டியிருக்கிறது. போகாவிட்டால்‌ பிரமோஷன்‌ இல்லை. கஷ்ட்டமான டூட்டி கொடுத்து அவர்களைக்‌ கொடுமை செய்வது அல்லாமலும்‌ வரும்படி வரக்கூடிய பிராதுகள்‌ ஏதாவது வந்தால்‌ அதுகளைப்‌ பங்கிட்டு நிரவி இவர்களுக்கும்‌ கொடுக்காமல்‌ பிராமண: போலீஸ்‌ கான்ஸ்டேபிள்‌, ஹெட்‌ கான்ஸ்டேபிள்‌ இவர்களுக்குள்ளாகவே சரி செய்துக்‌ கொள்வது. இன்னம்‌ இதில்‌ எழுதக்கூடாத எவ்வளவோ கொடுமை கள்‌ பிராமணரல்லாத கான்ஸ்டேபிள்கள்‌ அநுபவிக்க நேரிடுகிறது. பிராமண: ரல்லாதாரிலேயே சிலர்‌ பிராமணர்களுக்குள்‌ நுழைந்துக்‌ கொண்டு இவ்வித காரியங்களுக்கும்‌ உடந்தையாயிருப்பதால்‌ பிராமணரல்லாதாரின்‌ நிலை இப்படி இருக்க வேண்டியிருக்கிறது. இந்த கஷ்டங்கள்‌ என்று துலையுமோ நமக்குத்‌ தெரிய வில்லை. குடி அரசு - கட்டுரை - 18.04.1926 குடி அரசு - 1926 N 228 சமாதானமும்‌ வந்தனமும்‌ நமது “குடி அரசு” இரண்டு வாரம்‌ நிறுத்தப்பட்டதைப்‌ பற்றி அநேக ஆவலாதிகள்‌ வந்தன. அவற்றில்‌ ஒன்று இன்றுயார்‌ முகத்தில்‌ முழித்தேனோ “குடி அரசு” வரவில்லையென்றும்‌, மற்றொன்று “குடி அரசு” வராததால்‌ இன்று முழுதும்‌ சாப்பிட மனமில்லை யென்றும்‌, மற்றொன்று “குடி அரசை” ஒழுங்காய்‌ அனுப்புவதானால்‌ அனுப்புங்கள்‌ இல்லாவிட்டால்‌ நிறுத்திவிட்டு என்‌ பணத்தை திருப்பி அனுப்புங்கள்‌, பத்திரிகை திங்கட்‌ கிழமை தபால்‌ நேரத்திற்குக்‌ கிடைக்காவிட்டால்‌ மனம்‌ வருத்தப்படும்‌ என்றும்‌, ஒரு மகமதிய கனவான்‌ மற்றொன்று இந்த ஒரு பத்திரிகையை ஒழுங்காய்‌ நடத்த முடியா விட்டால்‌ எப்படி உங்களை பிராமணரல்லாதார்‌ பின்பற்ற முடியும்‌, இது ஒன்றுதான்‌ உள்ள நிலைமையை எழுதுவதால்‌ அது கிடைக்கா விட்டால்‌ மனது அவ்வளவு வருத்தப்படுகிறது என்றும்‌, மற்றொருவர்‌ திராவிடர்க ளுக்கு ஆசையிருக்கிறதே தவிர பிராமணர்கள்‌ போல்‌ காரியம்‌ நடத்தத்தக்க சக்தியில்லை, வீணாய்‌ அவர்களுடன்‌ போட்டி போட்டு என்ன செய்வது, இந்த ஒரு சிறிய பத்திரிகையை சரியாய்‌ நடத்தத்‌ தங்களால்‌ ஆகவில்லையே, வெறும்‌ வாய்ப்‌ பேச்சில்‌ என்ன பலன்‌ என்றும்‌, இன்னும்‌ பல விதமாகப்‌ பலர்‌. எழுதியிருக்கிறார்கள்‌. இந்தக்‌ குற்றங்களை அன்போடு ஏற்றுக்‌ கொள்ளு கிறேன்‌. ஆனால்‌ நான்‌ ஒருவன்‌, ராஜீய உலகத்தில்‌ எனக்கு சகாயம்‌ செய்ய யாரும்‌ தைரியமாய்‌ வர பயப்படுகிறார்கள்‌. வருவதானால்‌ சர்க்கார்‌ பயம்‌, பிராமணர்கள்‌ பயம்‌ இவ்விருவரின்‌ இடைஞ்சல்கள்‌ இவைகளுக்குத்‌ தயாரா யிருக்கவேண்டும்‌. தபால்‌ தகரார்‌, ரயில்வே தகரார்‌ அல்லாமலும்‌ நானே பத்திரிகை முழுதும்‌ எழுத வேண்டும்‌. இவ்வளவும்‌ இருப்பதோடு பண நஷ்டம்‌ ஒரு புறம்‌ அடைந்து வரவேண்டியிருக்கிறது. அல்லாமலும்‌ வாரம்‌ ஒரு தடவை வெளியூர்களுக்கு பிரசாரத்திற்கும்‌ போகவேண்டும்‌. ஒருநாள்‌. பிரசாரத்திற்கு 3 நாள்‌ மெனக்கேடு. அதாவது போக வர 2 நாள்‌, பிரசாரம்‌ ஒரு நாள்‌. இவ்வளவு கஷ்டமும்‌ பண நஷ்டமும்‌ ஏற்படுவதைக்‌ கவனியாமல்‌ ஆவலாதிகள்‌ மாத்திரம்‌ ஏற்பட்டால்‌ என்ன செய்யக்கூடும்‌. இந்தத்தடவை கூட சொந்த அச்சுக்கூடம்‌ ஏற்படுத்த முடியவில்லை. கோயமுத்தூரிலுள்ள ஸ்டார்‌ பிரஸ்‌ லிமிடெட்‌ கம்பெனியார்‌ தங்களிடம்‌ மீதியாய்‌ ஒரு டிரடிலும்‌, ஒரு டிம்மி பிரஸும்‌ ரிப்பேர்‌ செய்து ஈரோட்டில்‌ ஒரு பிராஞ்ச்‌ ஏற்படுத்து வதாயும்‌ அதற்கு வேண்டிய எழுத்துக்கள்‌ முதலியதுகளில்‌ தங்களுக்குப்‌ போதுமானது போக பாக்கிக்கு மகா ஸ்ரீ சா.ராமசாமி நாயக்கர்‌ போட்டுக்‌ கொண்டு அந்தத்‌ துகையை ஷேராக எடுத்துக்‌ கொள்வதென்றும்‌ முன்‌ நாம்‌ 229 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 இங்கு கொடுத்த கூலியாகிய பாரம்‌ 1- க்கு 4 ரூபாய்‌ வீதம்‌ கூலி போட்டு பத்திரிகையை ஸ்ரீமான்‌ சா. ராமசாமி நாயக்கரைக்‌ கொண்டே பத்திரிகை நடத்திக்‌ கொடுப்பதாகவும்‌ ஒப்புக்‌ கொண்டதால்‌ அந்தப்‌ படி ஏற்பாடு செய்து இவ்வாரம்‌ பத்திரிகை தொடங்கியிருக்கிறது. இன்னமும்‌ சாமான்கள்‌ சரியாய்‌ வந்து சேரவில்லை. ஆனாலும்‌ 2 வாரத்தில்‌ பத்திரிகை அனுப்புவதாய்‌ சொன்னபடிக்கு அவசரத்தில்‌ உள்ள சாமான்களைக்‌ கொண்டு ஏதோ ஒரு விதத்தில்‌ இந்த வாரத்தில்‌ வெளியாக்கிவிட்டோம்‌.எல்லா சாமானும்‌ காலத்தில்‌ வருமென்று நினைத்து இவ்வாரம்‌ 16 பக்கம்‌ நெம்பர்‌ போட்டு அச்சேறிய பின்பு சாமான்கள்‌ வராததால்‌ வழக்கம்‌ போல்‌ 12 பக்கமாகவே பத்திரிகை: போடப்பட்டிருக்கிறது. ஈரோட்டில்‌ பிராஞ்ச்‌ வைத்த ஸ்டார்‌ பிரஸ்‌ லிமிடெட்‌ கம்பெனியார்‌ லாபத்திற்கு வைத்திருந்தபோதிலும்‌ அதில்‌ பங்கெடுத்துக்‌ கொண்டு நமக்கு சரியாய்‌ பத்திரிகை நடத்திக்‌ கொடுப்பதாய்‌ முன்‌ வந்ததின்‌ மேனேஜிங்‌ டைரெக்டர்‌ எனது மைத்துனர்‌ ஸ்ரீமான்‌ சா.ராமசாமி நாயக்கரவர்களுக்கும்‌ நமது சார்பாகவும்‌ “குடிஅரசு” சந்தாதாரர்கள்‌. சார்பாகவும்‌ வந்தனமளிக்கின்றோம்‌. குடி அரசு - அறிக்கை - 18.04.1926 குடி அரசு - 1926 N 230 கதேகசோயகாரி நம்‌ நாட்டில்‌ நாளுக்கு நாள்‌ மேல்‌ நாடுகளைப்போல்‌ பத்திரிகைகள்‌ பெருகி வருகின்றன. ஆனால்‌, அவ்வாறு தோன்றும்‌ பத்திரிகைகளில்‌ நாட்டின்‌ நலங்கருதி உண்மையான தொண்டாற்றி வருவதுதான்‌ வழக்க மில்லாமலிருந்து வருகிறது. காரணமென்ன வெனில்‌ பத்திரிகைகள்‌ ஆரம்‌ பிக்கும்போது அதன்‌ ஆசிரியர்கள்‌ எவ்வளவு உண்மையான நோக்கத்தோடு ஆரம்பித்தாலும்‌ ஆரம்பித்த பின்னர்‌ பத்திரிகை வளர்ச்சியின்‌ அவசியத்தை. பத்திராதிபர்‌ கருத வேண்டி வந்துவிடுகிறது. பத்திரிகை வளர்ச்சியையும்‌ அதனால்‌ தமது கால க்ஷேமத்தையும்‌ எதிர்பார்க்கும்‌ பத்திராதிபர்கள்‌ பத்திரிகையின்‌ கொள்கைகளை தங்கள்‌ மனச்சாட்சிப்படி நடத்திக்கொண்டு போக முடிகிறதில்லை. அப்படிப்பட்ட பத்திரிகைகள்‌ பொது ஜனங்களை சீர்திருத்தத்‌ தமது கொள்கை களை ஜனங்கள்‌ பின்பற்றும்படி செய்ய முடியா மல்‌ எந்த சமயத்தில்‌ எப்படி நடந்தால்‌ தனக்குப்‌ பெரும்பான்மையான ஜனங்‌ களின்‌ ஆதரவும்‌ செல்வாக்குள்ள ஜாதியாரின்‌ தயவும்‌ கிடைக்குமோ அப்படி நடந்துகொண்டு தனது மனச்சாகதியை விற்றுவிட வேண்டிவருகிறது. இது நம்‌ நாட்டின்‌ துரதிஷ்டமே.தமிழர்களின்‌ நலங்கருதி உண்மையாக உழைக்கும்‌ பத்திரிகைகள்‌ நாட்டிற்‌ சொற்பமாயினும்‌ ரங்கூனில்‌ நடைபெற்றுவரும்‌. “தேசோபகாரி” என்னும்‌ வாராந்திரத்‌ தமிழ்ப்‌ பத்திரிகையானது ஆரம்ப நிலையில்‌ எவ்வாறிருப்பினும்‌ நாளுக்கு நாள்‌ நமக்கு அவசியமான சமத்து வத்தையும்‌ சம உரிமையையும்‌ ஆதரித்து வருவது பற்றி நாம்‌ பெரிதும்‌ மகிழ்‌ வெய்துகிறோம்‌. அதன்‌ ஆசிரியர்‌ ஒத்துழையாமைக்‌ காலத்தில்‌ சிறை சென்றவர்‌: இன்றும்‌ சிறையில்‌ வதிகிறார்‌. நல்ல தியாகம்‌ செய்தவர்‌. “தேசோ பகாரி” வாரம்‌ ஒரு முறையாயிருந்து வாரம்‌ இருமுறையானதினாலேயே பத்திரிகையின்‌ வளர்ச்சி நமக்குப்‌ புலப்படுகிறது. ஆகையால்‌ மேற்படி பத்திரிகையை பொது ஜனங்கள்‌ ஆதரிக்கக்‌ கோருகிறோம்‌. குடி அரசு - அறிக்கை - 18.044926 231 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 g e குடி அரசு - 1926 0) it ச்‌ னிவைகிம்மம்‌. = பழகத்‌ ம்க்‌ ண்ண ஏனபைடை ரக ஆத 100 ரதா கு 5 e Tl 232 - சித்திரபுத்திரன்‌ சட்டசபைத்‌ தேர்தல்கள்‌ சமீபத்தில்‌ வர வர அபேகஷ்கர்கள்‌ அதிக மாய்‌ விளம்பரமாகும்படி செய்து கொள்வது எங்கும்‌ சகஜமானது. இதில்‌ அபேக்ஷகர்கள்‌ முன்‌ செய்த வேலைகளையும்‌ பின்‌ செய்யப்‌ போகிற வேலைகளையும்‌ சொல்லுவதும்‌ இயற்கை. ஆனால்‌, நமது ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார்‌ அந்த இரண்டுமல்லாத புதிய ஒரு முறையைக்‌ கண்டுபிடித்திருக்கிறார்‌.அதென்னவெனில்‌:- ஒரு பெரிய தர்ம விளம்பரம்‌. அதாவது, தான்‌ 2 லக்ஷம்‌ ரூபாய்‌ தனது சொத்திலிருந்து தர்மம்‌ செய்ய இருப்பதாகவும்‌, அந்த தர்மங்கள்‌ இன்ன இன்னாருக்கு உபயோகப்படத்தகுந்தது என்றும்‌ சில ஓட்டர்களுக்கும்‌ வோட்டுத்‌ தரகர்களுக்கும்‌ வாயில்‌ தண்ணீர்‌ ஊரும்படி வாய்பறை, பத்திரிகை. பறையடிப்பதோடு நில்லாமல்‌ திறப்பு விழாப்‌ பறையும்‌ அடித்தாகிவிட்டது. ஆனால்‌, நடந்த விஷயந்தான்‌ என்ன? “தர்ம பிரபு” ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்கார்‌ திறப்புவிழா ஆரம்பத்தில்‌ தனது தர்மத்தின்‌ பெருமையைப்பற்றி பேசியவைகளின்‌ சுருக்கம்‌ இதில்‌ குறிப்பிடுகிறோம்‌. இதிலிருந்தே பல விஷயம்‌ தெரிந்து கொள்ளலாம்‌. இது 14.4.26-ம்‌ தேதி “சுதேசமித்திரன்‌” 6-வது பக்கம்‌ 2-வது 3-வது கலங்களில்‌ காணப்படு கிறதாவது:- 1 “எனது நண்பர்களும்‌ பொது ஜனங்களும்‌ என்னை முனிசிபல்‌: கவுன்சிலர்‌ பதவிக்கும்‌ தாலூகா போர்டு பதவிக்கும்‌ தெரிந்‌ தெடுத்தனர்‌. சேர்மெனாகவும்‌ தெரிந்தெடுக்கப்பட்டேன்‌. சென்னை சட்டசபைக்கும்‌ தெரிந்தெடுக்கப்பட்டேன்‌. 1923 -ம்‌ வருஷம்‌ இந்தியா சட்டசபைக்குத்‌ தெரிந்தெடுக்கப்பட்டேன்‌. ( இது உண்மையல்ல - பார்‌. ) பொது ஜனங்கள்‌ என்னிடம்‌ நடந்து கொண்ட அன்பைப்‌ பார்த்ததும்‌ என்னுடைய வருவாயில்‌ ஒரு குறிப்பிட்ட பாகத்தை தர்மத்திற்காகச்‌ சிலவிடத்‌ தீர்மானித்தேன்‌. என்னுடைய சொத்தில்‌ ஒரு பகுதியை 233 _.......... ஓபரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தர்மத்திற்காக ஒதுக்கிவைக்க வேண்டுமென்றும்‌ தீர்மானித்தேன்‌. 1924 - ல்‌ இதனை பகிரங்கப்படுத்த ஆதியில்‌ உத்தேசித்தேன்‌. அப்பொழுது எனக்குப்‌ பெரும்‌ பொருள்‌ நஷ்டமானதால்‌ நான்‌ இதை பகிரங்கப்படுத்துவதை ஒதுக்கி வைக்க நேர்ந்தது.1925 - ல்‌ முன்‌ வருஷத்தை விட அதிக நஷ்டம்‌ ஏற்பட்டதால்‌ இவ்வருஷத்‌ தில்தான்‌ எனது எண்ணத்தை பஹிரங்கப்படுத்த முடிந்தது. இவ்வருஷத்திலும்‌ எனது செல்வ நிலை சீர்பெற்று விட்டதாகக்‌ கூற முடியாவிட்டாலும்‌ நான்‌ எனது எண்ணத்தை பஹிரங்கப்படுத்து வதை ஒத்தி வைத்துக்கொண்டு போக விரும்பவில்லை. இன்று எனது தர்மத்தின்‌ அங்குரார்ப்பண விழா நடைபெறும்‌ பொழுது அதற்கு ஆசி கூற நீங்கள்‌ எனது வேண்டுகோளுக்கிணங்கி வந்திருக்கிறீர்கள்‌. தர்மத்திற்காக ஒதுக்கி வைக்கத்‌ தீர்மானித்திருக்கும்‌ நிலத்தின்‌ மதிப்பு 2 லக்ஷம்‌ ரூபாய்‌ பெறுமென்று கருதுகிறேன்‌. இந்‌ நிலங்களுடன்‌ கொஞ்சம்‌ ரொக்கமும்‌ ஒரு வீடும்‌ தர்மத்திற்காக ஒதுக்கி வைக்கலாமென்று உத்தேசித்திருக்கிறேன்‌. இதனைப்‌ பதிவு செய்ய 2000 ரூபாய்க்கு மேல்‌ சிலவாகும்‌. ஆனாலும்‌, சீக்கிரம்‌ சாஸனம்‌ பதிவு செய்யப்படும்‌. அந்த சாஸனப்படி இந்த சொத்தில்‌ கிடைக்கும்‌ வருஷ வரும்படி 10,000 ரூபாயைக்‌ கொண்டு அடுத்த வருஷம்‌ சிலவு செய்யப்‌ படவேண்டியிருக்கும்‌. முதல்‌ வருடமான இவ்வருடச்‌ சிலவுக்காக 10,000 ரூபாய்‌ ரொக்க. மாய்ச்‌ சிலவு செய்திருக்கிறேன்‌. @ தர்ம சொத்தின்‌ மொத்த வரும்படியில்‌ கால்பங்கு கோவில்களுக்கும்‌, மதக்‌ காரியங்களுக்கும்‌ சாதாரண: நிலைமையில்‌ சிலவிடப்படும்‌. (ஆ மற்றொரு கால்பங்கு, கீழ்த்தர வகுப்பிலுள்ள ஏழை களுக்காக சிலவிடப்படும்‌. (இ. மற்றொரு கால்பங்கு, இந்த ஜில்லா கிராமங்களிலுள்ளவர்‌. களின்‌ உதவிக்காக சிலவு செய்யப்படும்‌. ) மற்றொரு கால்பங்கு, கல்விக்கும்‌, கைத்தொழில்‌ கல்விக்கும்‌ சிலவிடப்படும்‌. வ இப்பணத்தை எவ்வெவ்வழிகளில்‌ சிலவிடப்படும்‌ என்பதை டிரஸ்டிகளே நிர்ணயிப்பார்கள்‌. குடி அரசு - 1926 N 234 ஊ டிரஸ்டிகள்‌ பதவிக்கு பல வகுப்பினரும்‌ தெரிந்தெடுப்‌ பார்கள்‌. எனது குடும்பத்தைச்‌ சேர்ந்த சிலரும்‌ டிரஸ்டிகள்‌ பதவி வகிப்பார்கள்‌.டிரஸ்டிகளைப்‌ பற்றி “சுதேச மித்திர னில்‌” மேற்கண்டபடி கண்டிருக்கிறது. 15.426 - ன்‌ “சுயராஜ்யா” வில்‌ “ஸ்ரீமான்‌ சி.வி. வெங்கிட்டரமணய்‌ யங்கார்‌, அவரது மனைவி, அவர்‌ குமாரன்‌ காயமான மெம்பர்களாவார்கள்‌” என்று கண்டிருக்கிறது. (பர்‌? ) பின்வரும்‌ வருவாயை எப்படிகிலவிடவேண்டுமென்று தற்பொழுது சொல்ல எவராலும்‌ முடியாது என்று நான்‌ சொல்லுவதை நீங்கள்‌. ஒப்புக்‌ கொள்வீர்கள்‌ என்று நம்புகிறேன்‌. ஏனெனில்‌, இது டிரஸ்டி களால்‌ நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம்‌. தற்பொழுது பல தர்ம காரியங்களுக்கு பணம்‌ உதவப்படுவதுடன்‌ 6 இராப்‌ பள்ளிக்கூடம்‌,ஒரு இலவச வாசகசாலை, ஒரு பெண்‌ பள்ளிக்‌ கூடம்‌, ஒரு பெண்‌ பாடசாலை முதலியவற்றை நடத்தவும்‌ ஏழைக ளுக்கு அடிக்கடி அன்னமளிக்கவும்‌ ஏற்பாடு செய்ய உத்தேசித்‌ திருக்கிறேன்‌. இத்துடன்‌ தேசீய வேலை செய்யும்‌ பல தமிழ்‌ பத்திரிகைகளுக்கு பொருளுதவி செய்ய நான்‌ உத்தேசித்திருக்கிறேன்‌. அல்லாமலும்‌ கிராமத்தில்‌ உருவான வேலை செய்ய உத்தேசித்‌ திருக்கிறேன்‌. ஆனால்‌, சிலவுக்கு மாத்திரம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டு முணுமுணுக்காமல்‌ வேலை செய்ய முன்‌ வருபவர்களைப்‌ பொருத்தே இக்காரியம்‌ நடைபெற வேண்டியிருக்கிறது. சுப்பிரியின்‌ ஊழியம்‌ எனக்குக்‌ கிடைத்திருப்பது பற்றி சந்தோஷிக்கின்றேன்‌. ஆனால்‌, இன்னும்‌ அவர்‌ போன்றவர்கள்‌ இன்னும்‌ சிலர்வேண்டும்‌.” சீனிவாசய்யங்கார்‌ ஒரு சிறிய உபந்நியாசம்‌ செய்தார்‌. (அவர்‌ இந்த விளம்பர தர்மப்‌ புரட்டின்‌ இரகசியத்தை ஜாடையாய்‌ வெளியில்‌ காட்டினார்‌. அதனால்‌ அதை இங்கு வெளியிடவில்லை.) இல்லா விட்டால்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ உபந்நியாசம்‌ கூடவெளியிட முடியாமல்‌ விட்டுவிட முடியுமா? 1 235 இத்தர்மம்‌ செய்ய எண்ணுவதற்கு ஏற்பட்ட அவசியம்‌ என்ன என்பதை விளக்குகையில்‌, தன்னை சில பதவிகளுக்கு ஜனங்கள்‌ தெரிந்தெடுத்ததினால்‌ 1918-ல்‌ தன்னிடம்‌ ஜனங்களுக்கு அன்பு இருப்பதாய்‌ அறிந்து இத்தர்மம்‌ செய்ய தீர்மானித்தாராம்‌. அதாவது, பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வரப்போகும்‌ சட்டசபைத்தேர்தலில்‌ இவரை தெரிந்தெடுக்கா விட்டால்‌ இவரிடம்‌ ஜனங்கள்‌ அன்பு வைத்திருப்பதாக நினைத்துக்‌ கொண்டிருக்கும்‌ எண்ணம்‌ என்னவாகும்‌? அதனால்‌ இத்தர்மம்‌ செய்ய நினைத்திருப்பது என்னவாகும்‌ என்பதை வாசகர்கள்தான்‌ யோசிக்கவேண்டும்‌. இதை வெளிப்படுத்தவே மூன்று வருஷமாயிற்றாம்‌. காரணம்‌ 1924-ல்‌ நஷ்டம்‌,1925-ல்‌ அதைவிட நஷ்டம்‌, 1926 ஆரம்பத்திலேயே அதாவது, நஷ்டம்‌ ஈடேறாமல்‌ இருக்கும்‌ போதே இனியும்‌ ஒத்தி வைக்காமல்‌ அதை வெளிப்படுத்திவிடவேண்டிய காரணம்‌ ஏற்பட்டுவிட்டது. அதென்னவென்றால்‌ வரப்போகும்‌ சட்டசபைத்‌ தேர்தல்களுக்காகவல்லாமல்‌ வேறு என்ன காரணம்‌ இருக்கக்‌ கூடும்‌. அப்படியானால்‌ ஒரு தேர்தலுக்கு தர்மம்‌ செய்ய நினைத்து மற்றொரு தேர்தலுக்கு அதை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. இதனின்று தர்மத்தின்‌ தத்துவமறியலாம்‌. இத்தர்மத்திற்காக ஒதுக்கி வைக்கத்‌ தீர்மானித்த சொத்தின்‌ மதிப்பு 2 லக்ஷம்‌ பெறுமாம்‌. இதோடு. இன்னமும்‌ கொஞ்சம்‌ ரொக்கமும்‌ ஒரு வீடும்‌ ஒதுக்க உத்தேசமாம்‌. சீக்கிரம்‌ சாஸனம்‌ பதிவு செய்யப்படுமாம்‌. இதிலிருந்து எல்லாம்‌ தீர்மானம்‌, உத்தேசம்‌, பதிவு செய்யப்படும்‌ என்கிற எதிர்‌ காலத்தி லிருக்கிறதே தவிர நடந்திருப்பது ஒன்றுமில்லை. ஆனால்‌ அங்கு ரார்ப்பணத்‌ திருவிழா (ஆரம்பக்கொண்டாட்டம்‌) மாத்திரம்‌ நடந்தாய்‌ விட்டது. “தமிழ்நாட்டுக்‌ கர்ணன்‌” “பெரிய தர்மம்‌” “இரண்டு தர்மங்கள்‌ “இந்தியாவின்‌ தர்மம்‌” என்கிற தலைப்புகளுடன்‌ பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ பிரசாரகர்களும்‌ தர்மத்தில்‌ பங்குபெற நினைக்கும்‌ பிரசாரர்களும்‌, பிராமணரல்லாத பத்திரிகைகளும்‌, எழுத்துப்‌ பறையும்‌, பிரசங்கப்‌ பறையும்‌ ஆரம்பித்தாய்‌ விட்டது. அந்த சாஸனப்படி, எந்த சாஸனப்படி? இனி செய்யப்‌ போகும்‌ சாஸனப்படி: விடப்போகும்‌ சொத்தில்‌ கிடைக்கப்போகும்‌ வருஷ வரும்படி ரூ. 10,000. இதை சிலவு செய்யப்போகும்‌ காலம்‌ அடுத்த வருஷம்‌. இந்த வருஷத்திற்கோ 10,000 சிலவு செய்தாகிவிட்டது. எப்படி சிலவு செய்யப்பட்டிருக்கிறதென்றால்‌:- கால்பங்கு கோவில்களுக்கும்‌, மதக்‌ காரியங்களுக்கும்‌. அதாவது யாவரும்‌ போய்‌ தரிசிக்க முடியாத கோவில்களுக்கும்‌, பிராமணன்‌ உயர்ந்தவன்‌, அவரொழிந்த மற்றவர்‌ சூத்திரர்‌ - தீண்டாதவர்‌ என்கிற குடி அரசு - 1926 N 236 வர்ணாசிரமத்திற்கும்‌ சிலவிடப்படும்‌. (ஆ) மற்றொரு கால்பங்கு கீழ்த்தர வகுப்பிலுள்ள ஏழைகளுக்கு. [1] (ஊ) 237 அது யாரோ! வோட்டுப்‌ போடுகிறவர்களோ, வோட்டு வாங்கிக்‌ கொடுப்பவர்களோ, இதற்குப்‌ பணம்‌ வாங்குகிறவர்கள்தானே கீழ்த்தர வகுப்பாயிருக்கமுடியும்‌. அதுவும்‌ செலவிடப்படுமாம்‌. எப்பொழுது? இவ்வருஷத்திற்கு முன்னமே சிலவு செய்தாய்‌ விட்டது! மற்றொரு பகுதி இந்த ஜில்லா கிராமங்களில்‌ உள்ளவர்களுக்கு உதவி செய்யப்படும்‌. அது எதற்காக? கிராமத்திலுள்ளவர்கள்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு அய்யங்காருக்கு வோட்டுபோட ஓடிவருவதற்கு! அதுவும்‌ இவ்‌ வருஷத்திற்கு செலவு செய்தாய்‌ விட்டது! மற்றொரு கால்‌ பங்கு கல்விக்கும்‌ கைத்‌ தொழிலுக்கும்‌. என்ன கல்வி, என்ன கைத்தொழில்‌. கடவுளுக்குத்‌ தான்‌ தெரியும்‌. நூல்‌ நூற்பதும்‌ நெசவு நெய்வதுமான தொழில்‌ நம்ம அய்யங்காருக்கு ஆபத்து. ஏனென்றால்‌, அவரே கான்பூர்‌ காங்கிரஸில்‌ பேசும்போது தனது பணம்‌ 3 லக்ஷம்‌ நூற்கிற மில்லிலும்‌, நெய்கிற மில்லிலும்‌ போடப்‌ பட்டிருப்பதாய்‌ சொல்லியிருக்கிறார்‌. ராட்டினமும்‌, கைத்தறியும்‌ ஏற்படுத்திவிட்டால்‌ 3 லக்ஷம்‌ ரூபாய்‌ போட்ட யந்திரத்தை கொளுவடிப்பதா? கத்தி செய்வதா? ஆதலால்‌ அதுவும்‌ முடியாது. ஆனாலும்‌ இவ்வருஷத்துக்கு சிலவு செய்தாய்விட்டது! இப்பணங்களை எவ்வெவ்‌ வழிகளில்‌ சிலவு செய்வது என்பதைப்‌ பற்றி டிரஸ்டிகளே நிர்ணயிப்பார்களாம்‌. இதனால்‌ மேலே சொன்ன தெல்லாம்‌ அடிபட்டுப்‌ போய்விட்டது. அந்த டிரஸ்டிகள்‌ பதவிக்கோ இனிமேல்‌ பல வகுப்பினரும்‌ தெரிந்தெடுப்பார்களாம்‌. எந்த வகுப்பினர்‌? ஒரு சமயம்‌ வடகலை அய்யங்கார்‌ வகுப்பினரும்‌, தென்கலை அய்யங்கார்‌ வகுப்பினராக வுமிருக்கலாம்‌. அதுவும்‌ யார்‌ தெரிந்தெடுப்பவர்கள்‌? தெரிந்தெடுப்‌ பை இன்னும்‌ கொஞ்சம்‌ விஸ்தரிக்க வேண்டுமானால்‌ அய்யங்கார்‌ புதல்வியும்‌ மாப்பிள்ளையும்‌ சேரலாம்‌. இது போதாதா? இதுவும்‌ போதாவிட்டால்‌ “சுதேசமித்திரன்‌” பத்திராதிபரான தனது சம்பந்‌ தியை சேர்த்துக்‌ கொள்வது. அடேயப்பா! விளங்குகிற தர்மத்திற்கு இதுபோதாதா? இதற்கு ஆதாரம்‌ “சுயராஜ்யா”விலேயே இருக்கிறது. மறுபடியும்‌ வேதாளம்‌ முருங்கை மரத்திலேறியதைப்‌ போல்‌ பின்வரும்‌ வருவாயை அதாவது தன்னுடைய தர்ம சொத்திலிருந்து வரும்படியை எப்படி சிலவிட வேண்டுமென்று தற்பொழுதே சொல்ல எவராலும்‌ முடியாது. (இது தான்‌ “இத்தர்மத்திற்கு” ஒரு காப்புத்‌ திரவியம்‌. அதாவது பின்னால்‌ தன்னிஷ்டப்படியெல்லாம்‌ பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சொல்லிக்‌ கொள்வதற்கு ஒரு செளகரியமான செக்ஷன்‌ -பிரிவு! ஏனெனில்‌ இனிமேல்‌ (தெரிந்தெடுக்கப்‌ போகும்‌) டிரஸ்டிகளால்‌ நிர்ணயிக்கப்படவேண்டிய விஷயம்‌. போச்சு, போச்சு, இந்த பிரிவினால்‌ எல்லாம்‌ போச்சுது. மேலெழுதியதையெல்லாம்‌ அடித்துவிடவேண்டியதுதான்‌. இந்த சமயத்தில்‌ ஒரு சின்ன கதை ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது ஓர்‌ மாஜிஸ்ட்ரேட்‌ கச்சேரிக்கு ஒரு அடிதடி பிராது வந்தது. அதில்‌ ஒரு சாக்ஷியை விசாரிக்கும்‌ போது அந்த சாக்ஷி பேரில்‌ மாஜிஸ்ட்ரேட்டுக்கு கொஞ்சம்‌ கண்ணுண்டு. (ஏனென்றால்‌ அவன்‌ அடிக்கடி இந்த மாதிரி சாக்ஷிக்கு வருகிறவன்‌! அவன்‌ சாக்ஷி சொல்ல பெட்டிமேலேறியவுடன்‌ ஊர்‌, பெயர்‌, தகப்பன்‌ பெயர்‌, ஜாதி, வயது முதலியவைகள்‌ கேட்கப்பட்டவுடன்‌ பிரமாணம்‌ வாங்கப்பட்டது. அதாவது “சர்வ வல்லமையுள்ள தெய்வத்திற்கு முன்பாக நான்‌ சொல்லுவதெல்லாம்‌ நிஜம்‌; நிஜம்‌ தவிர வேறொன்றுமில்லை” என்று சொன்னான்‌. இது சொன்னவுடன்‌ மாஜிஸ்ட்ரேட்‌ சாக்ஷியைப்‌ பார்த்து “உண்மை சொல்ல வேண்டும்‌”. பத்திரம்‌. அப்புறம்‌ தெரியுமா? என்று மிரட்டினார்‌. சாக்ஷி பார்த்தான்‌; எஜமானரே காதில்‌ கேட்டதை சொல்லட்டுமா, கண்ணில்‌ பார்த்ததை சொல்லட்டுமா என்று மிகுந்த பயபக்தியோடு கேட்‌ பவன்‌ போல்‌ கேட்டான்‌. மாஜிஸ்ட்ரேட்‌ அதிகார தோரணையில்‌ கண்ணில்‌ பார்த்ததைத்தான்‌ சொல்லவேண்டும்‌; காதில்‌ கேட்டதைப்பற்றி நமக்கு கவலை யில்லை. ஊரில்‌ என்ன என்னமோ பேசிக்‌ கொள்வார்கள்‌; அதையெல்லாம்‌. நம்பி ஒரு காரியம்‌ செய்ய முடியாது என்று சொன்னார்‌. சாக்ஷி உடனே மாஜிஸ்ட்ரேட்‌ காலில்‌ விழுந்து எஜமானரே நான்‌ முன்னே சொன்னதெல்லாம்‌. தயவு செய்து அழித்துவிடுங்கள்‌. என்‌ தகப்பனார்‌ யார்‌ என்பதும்‌ நான்‌ கண்ணில்‌ பார்த்ததில்லை; எந்த ஜாதியில்‌ பிறந்தவன்‌ என்பதும்‌ கண்ணில்‌ பார்த்ததில்லை; இதெல்லாம்‌ பிறத்தியாரால்‌ கேள்விப்பட்டதுதான்‌ என்று கெஞ்சினான்‌. மாஜிஸ்ட்ரேட்‌ அதைப்பற்றி கவலையில்லை மற்றதைப்‌ பற்றி சொல்‌ என்றார்‌. சாக்ஷி வேண்டாம்‌, வேண்டாம்‌ சர்வ வல்லமையுள்ள தெய்வத்திற்கு முன்பாக என்று சத்தியம்‌ செய்தாய்‌ விட்டது; கண்ணில்‌ பாராத சங்கதியையும்‌ நமக்கு முழுதும்‌ நிஜம்‌ என்று தெரியாத சங்கதிகளையும்‌ சொல்ல முடியாது என்று வாதாடினான்‌. கதையில்‌ இன்னும்‌ சில விஷயம்‌ வரும்‌. அது இந்த வியாசத்திற்கு சம்மந்தப்பட்டதல்ல. அது போல்‌ நமது அய்யங்காரின்‌ தர்ம சாஸனமும்‌ அதாவது தன்னை நம்புவதாயிருந்தால்‌ தான்‌ சொல்வதையெல்லாம்‌ கேட்க வேண்டும்‌. நம்பா விட்டால்‌ டிரஸ்டிகளைத்‌ தான்‌ கேட்க வேண்டும்‌. தனக்கு ஒன்றும்‌ தெரியாது என்பது போலிருக்கிறது. 8 டிரஸ்டிகளைத்தான்‌ கேட்கவேண்டுமென்று முடிவாகச்‌ சொல்லி விட்டால்‌ தன்னிடம்‌ யாரும்‌ வராவிட்டால்‌ என்ன செய்கிறது என்று அதற்காக மறுபடியும்‌ தற்பொழுதும்‌ பல தர்ம காரியங்களுக்கு குடி அரசு - 1926 N 238 239 பணம்‌ உதவப்படும்‌. அதாவது 6 இராப்‌ பள்ளிக்கூடம்‌, ஒரு பெண்‌: பாடசாலை, ஒரு பெண்‌ பள்ளிக்கூடம்‌ (பாடசாலைக்கும்‌ பள்ளிக்கூடத்‌ திற்கும்‌ என்ன வித்தியாசமோ; அது அய்யங்கார்‌ அகராதியைத்தான்‌ பார்க்கவேண்டும்‌ ஒரு இலவச வாசக சாலை | அதற்கு வரும்‌ பத்திரிகைகள்‌ எல்லாம்‌ அய்யங்கார்‌ கோஷ்டியாரும்‌, அய்யங்காரிடம்‌ பணம்‌ வாங்குபவர்களும்‌ போடும்‌ பத்திரிகைகள்தான்‌ வரவேண்டும்‌ என்கிற கருத்தோ என்னமோ. அப்புறம்‌ ஏழைகளுக்கு அடிக்கடி அன்னமளிப்பது. வோட்டு சம்பாதிக்கும்‌ கிராமப்‌ பிரசாரகர்கள்‌ கோய முத்தூர்‌ வருவதால்‌ அவர்களுக்கு சாப்பாடு போட வேண்டாமா? அதற்காக தனது வீட்டில்‌ டிரஸ்ட்டிகள்‌ உள்பட அன்னசத்திரம்‌. 9. இவ்வளவும்‌ போதாமல்‌ இன்னும்‌ ஒரு பெரிய விளம்பரம்‌, அதாவது தேசீய வேலை செய்யும்‌ சில தமிழ்‌ பத்திரிகைகளுக்கும்‌ பொருளுதவி செய்ய உத்தேசங்‌ கொண்டுள்ளேன்‌ என்பது. இது எந்த முறையில்‌, டிரஸ்டி முறையிலா? அப்படியானால்‌ இவருக்கு அதிகார: மேயில்லை. இந்த வருஷத்திற்கு செய்தும்‌ ஆகிவிட்டது! ஒரு சமயம்‌ சட்டசபை அபேக்ஷகர்‌ முறையிலோ வென்றால்‌ அது வேறே தர்மம்‌. இதில்‌ சொல்ல வேண்டியதில்லை.அந்த இரகசியம்‌ நமக்கு சுலபத்தில்‌ தெரியாது. இப்பொழுது அதைச்‌ சொல்லவும்‌ கூடாது. பத்திராதிபர்‌ களின்‌ விண்ணப்பங்கள்‌ வந்தபின்‌ மேல்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌. 10. இவ்வளவும்‌ அல்லாமல்‌ கிராமங்களில்‌ சில உருவான வேலை களைச்‌ செய்ய உத்தேசித்திருக்கிறார்‌. அதற்கு பிரசாரகர்கள்‌ யோக்கி யர்களாய்‌ கிடைத்தால்‌ மாத்திரம்‌ பணம்‌ கொடுக்கப்படுமாம்‌. ஆனாலும்‌ சுப்பிரி என்கிற ஒரு யோக்கியரின்‌ ஊழியம்‌ மாத்திரம்‌ இப்போது அவருக்குக்‌ கிடைத்திருக்கிறதாம்‌. கிராமத்தில்‌ உருவான வேலை என்ன? அய்யங்கார்‌ தர்மப்‌ பிரபு, கலியுகக்‌ கர்ணன்‌, பஞ்ச நிவாரண வேலை செய்தவர்‌, பருத்திச்‌ செடி பிடுங்குவதை நிறுத்தின வர்‌, ஓட்டு கொடுத்தால்‌ அதற்குப்‌ பதிலாக பெரியதர்மம்‌ செய்வார்‌, பாலங்கட்டிக்‌ கொடுப்பார்‌ என்று சொல்லக்‌ கூடியவர்கள்‌ வேண்டும்‌. அதுவும்‌ இரகசியம்‌. விண்ணப்பங்கள்‌ வந்த பிறகு பார்த்துக்‌ கொள்ள லாம்‌. இந்த கோலாகல திருநாளுக்கு வந்த ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்‌ கார்‌ ஏமாந்து போனதையும்‌ தான்‌ வெட்கப்பட்டதையும்‌ சுதேச மித்திரன்‌ ரிப்போர்ட்டருக்கு எழுத முடியவில்லையோ, எழுதினதை பத்திரிகையில்‌ போடவில்லையோ, விசாரித்து பாக்கி விஷயத்தையும்‌ தெரிந்து, விட்டுப்போனதையும்‌ சேர்த்து மறுபடி சாவகாசப்பட்டபோது எழுதுகிறேன்‌. குடி அரசு - கட்டுரை - 25.04.1926. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தீண்டாமை “இந்தக்‌ கிணற்றைத்‌ திறந்து வைக்கும்‌ வேலையை, ஒரு பெருமை யெனக்கருதிநீங்கள்‌ எனக்களித்திருந்தாலும்‌ உண்மையில்‌ எனக்கு அதைத்‌ திறந்து வைக்கக்‌ கொஞ்சமும்‌ மனமில்லை. அல்லாமலும்‌ இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில்‌ கலந்து கொள்ளுகிறேன்‌. ஆதி திராவிடர்களுக்கென்று தனிக்‌ கிணறுகள்‌. வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்பிராயம்‌. இவ்வாறு தனிக்‌ கிணறுகள்‌ வெட்டுவது, ஆதி திராவிடர்கள்‌ நம்மைவிடத்‌ தாழ்ந்தவர்கள்‌, அவர்கள்‌ நம்முடன்‌ கலக்கத்‌ தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும்‌ ஞாபகக்‌ குறிப்பும்‌ ஏற்படுத்துவதாகத்தான்‌ அர்த்தமாகும்‌. எதற்காக அவர்களுக்குத்‌ தனிக்கிணறு வெட்டவேண்டும்‌? சிலர்‌ ஆதி திராவிடர்‌ களுக்கு நன்மை செய்வதாக வேஷம்‌ போட்டு தாங்கள்‌ உயர்ந்தவர்கள்‌ என்பதை நிலை நிறுத்திக்‌ கொள்ளத்தான்‌ இவ்வித தர்மங்கள்‌ உதவும்‌. நமது கிணறு குளங்களில்‌ ஆதி திராவிடர்களை ஏன்‌ தண்ணீர்‌ எடுக்க அநுமதிக்‌ கலாகாது? பக்ஷிகளும்‌ மிருகங்களும்‌ குளங்களில்‌ தண்ணீர்‌ சாப்பிடுவதில்‌ லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர்‌ வருகிறது என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? அதில்‌ என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத்‌ தெரியாதா? இவ்விதத்‌ தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள்‌ எடுத்து சாப்பிட்டு விடுவ தனால்‌ என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்‌.” “நீங்கள்‌ எனக்களித்த வரவேற்புப்‌ பத்திரத்தில்‌ உங்களுக்காக நான்‌ அதிகவேலை செய்திருப்பதாகச்‌ சொல்லிப்‌ புகழ்ந்திருக்கிறீர்கள்‌. அது கொஞ்சமும்‌ உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான்‌ ஒரு காரியமும்‌ செய்யவேயில்லை. ஆதி திராவிடர்‌ முன்னேற்றத்திற்கு உழைப்பதாய்‌ நினைத்துக்‌ கொள்வதும்‌ ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச்‌ சொல்லு வதும்‌ வேஷத்திற்காகத்தான்‌ உழைக்கிறவர்களும்‌ பேசுகிறவர்களுமாயிருப்‌ பார்களென்பது எனது அபிப்பிராயம்‌. அதாவது, இந்தியாவின்‌ நன்மைக்காக ஐரோப்பியர்கள்‌ இந்தியாவை ஆளுகிறார்கள்‌ என்பது போலத்தான்‌ ஆகுமே யல்லாமல்‌ வேறல்ல. நான்‌ அப்படி நினைக்கவேயில்லை.” “பறையர்‌ என்கிற ஒரு ஜாதிப்‌ பெயர்‌ நம்‌ நாட்டிலிருப்பதால்தான்‌ “சூத்திரர்‌” என்கிற ஒரு ஜாதிப்‌ பெயர்‌ நம்‌ நாட்டிலிருக்கிறது. “பறையர்‌” என்கிற ஜாதிப்‌ பெயரை விட “சூத்திரர்‌” என்கிற ஜாதிப்‌ பெயர்‌ மிக்க இழி வானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில்‌ பதிவிரதைகளும்‌, சரியான குடி அரசு - 1926 N 240 ஒரே தாய்க்கும்‌, தகப்பனுக்கும்‌ பிறந்தவர்களுமிருக்கலாம்‌. சூத்திரர்களில்‌ அப்படியிருக்க இடமேயில்லை. ஏனென்றால்‌ “சூத்திரச்சி” என்றால்‌ தாசி, வேசி என்றுதான்‌ பொருள்‌. “சூத்திரன்‌” என்றால்‌ தாசி மகன்‌, வேசி மகன்‌ என்றுதான்‌ பொருள்‌. இதை ஒப்புக்கொள்ளாதவன்‌ இந்து ஆகமாட்டான்‌ என்பது சாஸ்திர சம்மதம்‌. ஆகையால்‌ என்‌ போன்ற “சூத்திரன்‌” என்று சொல்லப்படுபவன்‌ “பறையர்கள்‌” என்று சொல்லப்படுவோர்களுக்கு உழைப்பதாகச்‌ சொல்லுவதெல்லாம்‌ “சூத்திரர்கள்‌” என்று தம்மை யாரும்‌ கருதக்கூடாது என்பதற்காகத்தானேயல்லாமல்‌ வேறல்ல. ஆகையால்‌, எனக்காக நான்‌ பாடுபடுவதென்பது உங்கள்‌ கண்ணுக்கு உங்களுக்காகப்‌ பாடுபடுவதாய்த்‌ தோன்றுகிறது. உங்களைத்‌ தாழ்மையாய்‌ கருதும்‌ ஸ்திரி களும்‌, புருஷர்களும்‌ தாங்கள்‌ பிறரால்‌ உங்களை விடக்‌ கேவலமாய்‌ தாழ்மை யாய்க்‌ கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத்‌ தாழ்ந்தவர்களாக நினைக்‌ கும்‌ அறியாமையால்‌, தங்களை மற்றவர்கள்‌ தாழ்மையாய்‌ நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த்‌ தோன்றுவதில்லை. இந்த லக்ஷணத்தில்‌ உங்களிடம்‌ தப்பிதம்‌ கண்டுபிடித்து, “உங்கள்‌ உடம்பில்‌ துர்வாடை அடிக்கிறது, நீங்கள்‌ ஸ்நானம்‌ செய்வதில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டு மாமிசம்‌ சாப்பிடுகிறீர்கள்‌, மதுவருந்துகிறீர்கள்‌. இதை விட்டுவிடுங்கள்‌” என்று ஞானோபதேசம்‌ செய்கிறார்கள்‌. நீங்கள்‌ வேஷ்டி துவைக்காமலும்‌ குளிக்காமலும்‌ இருப்பதற்கு யார்‌ ஜவாப்தாரி என்பதை அவர்கள்‌ உணருவதில்லை. உங்களுக்குக்‌ குடிக்கவே தண்ணீ ரில்லையென்றால்‌ குளிப்பதெப்படி வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும்‌ நாற்றமும்‌ உங்கள்‌ கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன்‌. குளிக்கவும்‌. வேஷ்டி துவைக்கவும்‌, பல்‌ துலக்கவும்‌ தண்ணீர்‌ கொடுக்காமல்‌, மகந்துகள்‌ என்போரையும்‌, சங்கராச்சாரிகள்‌ என்போரையும்‌ கொண்டு வந்து வீட்டில டைத்து வைத்து விட்டால்‌ அவர்கள்‌ துணி அழுக்கில்லாமல்‌ இருக்குமா? அவர்கள்‌ உடம்பும்‌ வாயும்‌ நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப்‌ பாருங்கள்‌.நாமே ஒருவனை பட்டினி போட்டுவைத்து, அவன்‌ இறந்துபோன பிறகு பட்டினியினால்‌ இறந்துபோய்‌ விட்டான்‌ பாவி என்று சொன்னால்‌, யார்‌. “பாவி” யென்பதை நினைத்துப்‌ பாருங்கள்‌. அல்லாமலும்‌, மாடு தின்பதும்‌, மதுவருந்துவதும்‌, நீங்கள்‌ “பறையர்‌”களாயிருப்பதற்குக்‌ காரணமென்று சொல்லுவது கொஞ்சமும்‌ யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக்‌ கொண்டும்‌ மதுவருந்திக்‌ கொண்டும்‌ இருக்கிறவர்கள்தான்‌ இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள்‌. தவிரவும்‌, நீங்கள்‌ மாடு சாப்பிடுவதன்‌ குற்றம்‌ உங்களைச்‌ சேர்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப்‌ போல சரியானபடி சம்பாதிக்கவும்‌, தாராளமாய்‌ சாப்பிடவும்‌, தெருவில்‌ நடக்க வும்‌, தாராளமாய்‌ எங்கும்‌ போய்‌ வேலை செய்து சம்பாதிக்கவும்‌ வழி யில்லாமல்‌ செய்துவிட்டதால்‌ கொஞ்சப்‌ பணத்தில்‌ அதிக ஆகாரம்‌ ஆகக்‌ கூடியதான மாட்டு மாமிசத்தைப்‌ புசிக்க வேண்டியதாயிற்று. மாட்டு மாமி சத்தை அநுமதிக்கும்‌ மதத்தைச்‌ சேர்ந்த மகமதியரிலும்‌ கிறிஸ்தவரிலும்‌ கூட 24] பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சிலர்‌ கைப்பணந்‌ தாராளமாய்க்‌ கிடைப்பதாயிருந்தால்‌ நாங்கள்‌ மாட்டு மாமிசம்‌ சாப்பிடுகிற வழக்கம்‌ இல்லை என்று சொல்லுகிறார்கள்‌. ஆதலால்‌, நமது நாட்டார்‌ மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தரித்திரந்‌ தான்‌ முக்கியக்‌ காரணம்‌. அல்லாமலும்‌, மாட்டு மாமிசம்‌ சாப்பிடுவது ஆடு, கோழி, மீன்‌, பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவம ஈய்ப்‌ போய்விட்டது. கோழியும்‌, மீனும்‌, பன்றியும்‌ எச்சிலையும்‌, பூச்சு புழுக்க ளையும்‌, அழுக்குகளையும்‌, மலத்தையும்‌ சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச்‌ சாப்பிடுகிற வட நாட்டு “பிராமணர்கள்‌” முதல்‌ தென்னாட்டு “சூத்திரர்‌ கள்‌” வரை நல்ல ஜாதியாயும்‌, தொடக்கூடியவர்களாயுமிருக்கும்‌ போது, புல்லும்‌ பருத்திக்‌ கொட்டையும்‌, தவிடும்‌, புண்ணாக்கும்‌ சாப்பிடுகிற மாட்டி றைச்சி சாப்பிடுவதனால்‌ மாத்திரம்‌ எப்படி ஒரு மனிதன்‌ தாழ்ந்த வனாவான்‌. அப்படிப்‌ பார்த்தாலும்‌ மாடு சாப்பிடுகிறவர்களையெல்லாம்‌ “தொடாதே”, “தெருவில்‌ நடக்காதே” , “குளத்தில்‌ தண்ணீர்‌ சாப்பிடாதே”, “ஊருக்குள்‌ குடியிருக்காதே” என்று சொல்லுகிறார்களா? இது வீணாய்‌, வேண்டுமென்றே உங்களைத்‌ தாழ்த்தி வைப்பதற்காகச்‌ சொல்லும்‌ ஒரு யோக்கியப்‌ பொறுப்பற்ற காரணமேயல்லாமல்‌ உண்மையான காரணமல்ல என்பதுதான்‌ எனது முடிவு. மதுவையும்‌ மாட்டு மாமிசத்தையும்‌ தள்ள வேண்டும்‌ என்பதை நான்‌ ஆக்ஷ பிக்க வரவில்லை. மதுவையும்‌ மாட்டு மாமிசத்தையும்‌ தள்ளினால்தான்‌ உங்கள்‌ ஜாதி உயரும்‌ என்று சிலர்‌ சொல்லும்‌ அயோக்கியத்தனமான காரணத்‌ தை நான்‌ ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக மதுவையும்‌ மாட்டு மாமிசத்தையும்‌ விடுங்களென்று கேட்க மாட்டேன்‌. அதற்காக நீங்கள்‌ விடுவதும்‌ அவ்வளவு அவசியமில்லை. நம்‌ நாட்டில்‌ தென்னை, பனை மரங்களில்‌ ஊறும்‌ கள்ளும்‌, காய்ச்சும்‌ சாராயமும்‌ வெளிநாடுகளிலிருந்து வரும்‌ சாராய தினுசுகளும்‌ சென்னை மாகாணத்தில்‌ மாத்திரம்‌ சுமார்‌ 15, 20 கோடி ரூபாய்‌ பொரும்படியானதையெல்லாம்‌ நீங்களேவா குடித்து விடுகிறீர்‌. கள்‌? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும்‌ நம்பமாட்டார்கள்‌. ஆதலால்‌, ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டு விட வேண்டுமானால்‌, மற்றவர்கள்‌ முதலில்‌ விடட்டும்‌. மதுபானம்‌ மனிதனின்‌ ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறேன்‌. மதுவிலக்குக்காக நானும்‌ சிறிது தொண்டு செய்திருக்‌ கிறேன்‌. ஆனால்‌, ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும்‌ சாப்பிடும்‌ மதுவிலக்கு ஒன்றும்‌ தடை செய்வதில்லை. ஆகையால்‌, மதுவிலக்கும்‌ மாமிச விலக்கும்‌ ஜாதி உயர்வுக்கு அவசியம்‌ என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும்‌ பொய்‌. அல்லாமலும்‌ உங்களிடமும்‌ சில குற்றங்கள்‌ இருக்கிறதை சொல்லா மலிருக்க முடியவில்லை. அதாவது, நீங்களாகவே உங்கள்‌ ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக்‌ கொள்ளுகிறீர்கள்‌. அநாவசியமாய்‌ யாரைக்‌ கண்டாலும்‌ “சுவாமி” என்று கும்பிடுகிறீர்கள்‌.நீங்கள்‌ தாழ்ந்தவர்கள்‌ என்கிற எண்ணம்‌ உங்கள்‌ ரத்தத்தில்‌ கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும்‌ . ஒரு குடி அரசு - 1926 N 242 மனிதனைப்‌ பார்த்தால்‌ அவனுக்கும்‌ உங்களுக்கும்‌ என்ன வித்தியாசம்‌ என்கிற எண்ணம்‌ உங்கள்‌ மனதில்‌ உதிக்க வேண்டும்‌. சுயமரியாதையில்‌ கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும்‌ உயராது. அவனவனுக்கே, தான்‌ மனிதன்‌ என்கிற உணர்ச்சி வரவேண்டும்‌. நீங்கள்‌ இனிமேல்‌ யாரையும்‌ “சுவாமி” என்று கூப்பிடக்‌ கூடாது. வேண்டுமானால்‌ “ஐயா என்று கூப்பிடுங்‌ கள்‌.நீங்களாகவே பதுங்குவதும்‌ ஒதுங்குவதுமான துர்க்குணங்கள்‌ உங்களை விட்டுப்‌ போகவேண்டும்‌. அன்றுதான்‌ நீங்கள்‌ சமத்துவமாக நடத்தப்‌ படுவீர்கள்‌. குறிப்பு:- காரைக்குடி-சிராவயலில்‌ நடைபெற்ற காந்தி வாசக சாலையின்‌ ஆண்டு நிறைவு விழா மற்றும்‌ காந்தி கிணறு திறப்பு விழாவில்‌ 6-4-26 - ந்‌ தேதி ஆற்றிய சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 25.04.1926 243 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ராசியிண்‌ பணை சுயாரான்யக்‌ ககூறியிண்‌ கதி “பயித்தியம்‌ தெளிந்து போய்விட்டது. உலக்கையை எடுத்துக்‌ கொண்டுவா கோவணங்‌ கட்டிக்கொள்கிறேன்‌.” என்று ஒரு பழமொழி யுண்டு. அதாவது, ஒரு வாலிபனுக்குப்‌ பெண்ணாசையால்‌ பயித்தியம்‌ பிடித்‌ திருந்தது. அவன்‌ கோவணமுமில்லாமல்‌ நிர்வாணமாய்த்‌ திரிந்து கொண்டி ருப்பது வழக்கம்‌. அதனால்‌ ஜனங்கள்‌ அவனைப்‌ பிடித்து விலங்‌ கிட்டு ஒரு அறையில்‌ மூடி வைத்திருந்தார்கள்‌. கொஞ்சநாள்‌ பொறுத்து அவ்‌ வாலிபன்‌ “தனக்கு பயித்தியம்‌ தெளிந்து விட்டது. உலக்கை எடுத்துக்கொண்டு வாருங்கள்‌, அதைக்‌ கோவணமாகக்‌ கட்டிக்கொள்கிறேன்‌” என்று சொன்னா னாம்‌. அது போல்‌ நமது ராஜீயக்‌ கக்ஷிகளுக்குள்‌ ராஜி ஏற்பட்டுப்‌ போய்‌ விட்டதாம்‌; காங்கிரசுக்கும்‌ நல்ல காலமாம்‌; தங்கள்‌ கக்ஷிக்கும்‌ இனிமேல்‌ குறைவில்லையாம்‌; இனி எல்லோரும்‌ ஒத்து வேலைசெய்ய வேண்டியது தான்‌ பாக்கியாம்‌ என்பதாக இன்னும்‌ என்னென்னவோ எழுதி பிராமணப்‌ பத்திரிகைகள்‌ ஏமாற்றுப்‌ பிரசாரம்‌ செய்கின்றன. பயித்தியம்‌ தெளிந்ததாகச்‌ சொல்லுபவன்‌ எப்படி உலக்கையை கோவணம்‌ கட்டிக்கொள்ளலாம்‌ என்று நினைத்தானோ அதேபோல்‌ சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ மந்திரி வேலை ஒப்புக்கொள்ளுவதை “காங்கிரஸ்‌” கட்டளைப்படி நடப்பது என்று தீர்மா வித்து ராஜியாய்‌ விட்டார்கள்‌. இதிலிருந்து என்ன விளங்குகிறது? மந்திரி வேலையைப்‌ பெறும்‌ ஆசையை மனதில்‌ வைத்துக்‌ கொண்டு சட்டசபையில்‌ “ஒத்துழையாமை” என்றும்‌, “உத்தியோகம்‌ ஒப்புக்கொள்ளுவதில்லை” என்றும்‌, “முட்டுக்கட்டை” என்றும்‌ சொல்லிக்‌ கொண்டு வோட்டர்களை ஏமாற்ற நினைத்த தந்திரமும்‌ ரகசியமும்‌ இப்போது வெளியாய்‌ விட்டது. முதலில்‌ ஒத்துழையாதாராயிருந்து சட்டசபைக்குள்‌ “ஒத்துழையாமை”, “முட்டுக்கட்டை” என்று மாறி கடைசியாய்‌ பரஸ்பர ஒத்துழைப்பாளருடன்‌ ராஜி செய்துகொள்ளுவது என்கிற சாக்கை வைத்துக்‌ கொண்டு மந்திரிவேலை கிடைத்தால்‌ ஒத்துழைப்பது இல்லாவிட்டால்‌ அப்பதவி கிடைக்கும்‌ வரையில்‌ “ஓத்துழையாமை”, “முட்டுக்கட்டை” என்று சொல்லிக்‌ கொண்டிருப்பது என்கிற ராஜிக்கு வந்தாகி விட்டது. சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ உள்‌ குட்டை வெளிப்படுத்திய பெருமை ஸ்ரீமான்‌ ஜெயகருக்குத்தான்‌ சேரவேண்டும்‌. குடி அரசு - 1926 (N 244 இந்த ராஜியின்‌ பலனாய்‌ ஐரோப்பிய மகாயுத்தத்தில்‌ 14 நிபந்த னைகள்‌ ஏற்படுத்தின. அமெரிக்கா பிரசிடெண்ட்‌ வில்சன்‌ துரைக்கு இருந்த பெருமை இப்போது எலெக்ஷன்‌ உலகத்தில்‌ ஸ்ரீமான்‌ ஜெயகருக்கு ஏற்பட்டி ருக்கிறது. ஐயோ பாவம்‌! தலைவர்‌ பண்டிதர்‌ நேருவும்‌, அவரின்‌ வாலான ஸ்ரீமான்‌ ரெங்கசாமி ஐயங்காரும்‌ ஸ்ரீமான்‌ ஜெயகர்‌ பெயரைச்‌ சொல்லித்‌ திரிய வேண்டிய வேலை ஏற்பட்டுவிட்டது. இனி இவர்கள்‌, ஆடுகளுக்கு எவ்வித உபயோகமும்‌ இல்லாமல்‌ கழுத்தில்‌ தொங்கிக்‌ கொண்டிருக்கும்‌ “தாடி” என்று சொல்லக்கூடிய இரண்டு மாமிசத்‌ துண்டுகளைப்‌ போல்‌ ராஜீய உலகத்தில்‌ எவ்வித பிரயோஜனமும்‌ இல்லாமல்‌ இவ்விரண்டு பிராமணர்களும்‌ ஆகிவிட்டார்கள்‌ . ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருக்கோ வயிற்றுக்‌ கடுப்புதான்‌ ஏற்பட்டிருக்கும்‌. அடுத்த காங்கிரசுக்கு ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரே பிரசிடெண்ட்‌ ஆகலாம்‌ என்று நினைத்திருந்தார்‌. அவரின்‌ சிஷ்யர்களான பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ “நமது சொந்த நிரூபர்‌” என்ற பெயரால்‌ தூக்கி விட்டுக்கொண்டிருந்தன. முன்‌ ஒரு காலத்தில்‌ ஸ்ரீமான்‌ திலகர்‌ இறந்த உடன்‌ “இனி இந்தியாவுக்கு திலகர்‌ லோகமான்ய சீனிவாசய்யங்கார்தான்‌” என்று “இந்து” பத்திரிகை முதல்‌ எல்லா பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ தம்பட்டம்‌ அடித்து வந்தன. கடைசியாய்‌ காந்தி வந்ததும்‌ ஐயங்கார்‌ கொஞ்ச காலம்‌ அஞ்ஞாதவாசம்‌ செய்யவேண்டியதாயிற்று. அது போலவே மகாத்மா காங்கிரஸை விட்டு ஒழிந்ததும்‌, மறுபடியும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரை அந்த இடத்தில்‌ இருத்த பிராமணப்‌ பத்திரிகைகள்‌ பாடுபட்டன. ஐயங்காரின்‌ துரதிருஷ்டத்தால்‌ இப்போது ஜெயகர்‌ முளைத்துவிட்டார்‌. இனி ஐயங்கா ருக்கு காங்கிரஸ்‌ பிரசிடெண்ட்‌ பதவி கிடைப்பது சந்தேகந்தான்‌. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரைப்பற்றி ஒரு நண்பர்‌ நம்மிடம்‌ அடிக்கடி சொல்லிக்‌ கொண்டிருப்பார்‌. அவர்‌ ஸ்ரீனிவாசய்யங்கார்‌ பிரசாரத்தைப்‌ பற்றி ஏன்‌ நீங்கள்‌ மிகுதியும்‌ கவலை எடுத்துக்‌ கொள்ளுகிறீர்கள்‌? அவருடைய ஜாதகக்‌ குறிப்பே “அவர்‌ தொட்டது துலங்காது” என்று இருக்கிறது. ஐயங்கார்‌ தட புடல்‌ எல்லாம்‌ அவர்‌ பணம்‌ சிலவு செய்கிற வரையில்தான்‌. சிலவு நின்றதும்‌. தானாகவே அமர்ந்து விடுவார்‌. இதுவரையில்‌ அவர்‌ எதாவது ஒரு காரியத்தில்‌ முடிவான வெற்றியடைந்திருக்கிறாரா? அவர்‌ பின்னால்‌ திரியும்‌ சிஷ்யக்‌ கோடிகள்‌ அவரைத்‌ தலைவர்‌, தலைவர்‌ என்று சொல்லிக்கொண்டு திரிவ தோடு சரியாய்ப்‌ போய்விடும்‌ என்று சொல்லுவது வழக்கம்‌. அது போலவே நடந்து வருகிறது. முதலாவதாக, நமது ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருக்கு சென்னை சட்டசபையில்‌ தன்‌ கக்ஷியான சுயராஜ்யக்‌ ககஷி உருப்படும்‌ என்கிற நம்பிக்‌ கையே இல்லாமல்‌ போய்விட்டது. இதுவரை அவர்‌ கூட சேர்ந்திருக்கும்‌ ஆள்களெல்லாம்‌ “ஜஸ்டிஸ்‌” ககஷியிலிருந்து பார்த்து உத்தியோகம்‌ கிடைக்‌ காமல்‌ வெளியே வந்தவர்களும்‌ “ஜஸ்டிஸ்‌” கக்ஷியில்‌ நீக்கப்பட்ட அதன்‌ விரோதிகளுமே தவிர வேறு எவராவது புதிதாக சேர்ந்திருக்கிறார்களா? “ஜஸ்டிஸ்‌” கக்ஷியார்‌ பழயபடி ஏதாவது கொடுப்பதாகச்‌ சொன்னால்‌, போவ 245 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தில்லை என்று சொல்லக்‌ கூடியவர்கள்‌ எவராவது இருக்கிறார்களா? என்பது அவருக்கே தெரியும்‌. அல்லாமலும்‌ இவ்வளவு ஆர்ப்பாட்டத்தோடு ஸ்ரீமான்‌ முதலியார்‌ போன்றவர்களைப்‌ பின்னால்‌ இழுத்துக்கொண்டு ஊர்‌ ஊராய்த்‌ திரிந்தும்‌ இம்மாதம்‌ 18 - ௨ சட்டசபைகளுக்கு ஆள்களை நிறுத்துவதற்‌ கென்று சென்னை மகாஜனசபைக்‌ கட்டிடத்தில்‌ போட்ட நிர்வாகக்‌ கூட்டத்‌ தின்‌ ரகசியம்‌ 8 நாளாகியும்‌ இன்னும்‌ வரவில்லை. “திராவிடன்‌” பத்திரி கையில்‌ மாத்திரம்‌ கொஞ்சம்‌ வெளிவந்திருக்கிறது. நிறுத்த ஆளில்லாமல்‌ இவர்கள்‌ படும்‌ கஷ்டம்‌ கடவுளுக்குத்தான்‌ தெரியும்‌. இதிலிருந்தே சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ யோக்கியதையும்‌, ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரின்‌ பணம்‌ செலவானதின்‌ பலனும்‌, முதலியார்‌ உதவியின்‌ பலனும்‌ ஒருவாறு அறிந்து கொள்ளலாம்‌. இதன்‌ பலணாய்த்தான்‌ ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ சென்னை சட்டசபைக்கு நின்றால்‌ தனக்கு ஆகுமோ ஆகாதோ என்று பயந்தும்‌, பிராமண வோட்டுக்களே நிறைந்த யூனிவர்சிட்டி ஸ்தானத்‌ திற்கு தான்‌ நிற்பதானால்‌ சென்னை சட்டசபையில்‌ அடிக்கடி வாயாடித்தனம்‌. செய்யக்‌ கூடிய ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்திக்கு வேறு கதியென்ன? என்று நினைத்தும்‌, சென்னையில்‌ மந்திரி வேலையை எதிர்பார்ப்பது, குழந்தை அம்புலியைக்‌ கையில்‌ பிடிக்க ஆசைப்படுவது போலாகுமென்று கருதி, சென்னை சட்டசபை ஆசையையும்‌ விட்டு இந்தியா சட்டசபைக்குத்‌ தலைவ ராகப்‌ பார்த்தார்‌. அங்கும்‌ ஸ்ரீமான்‌ ஜெயகர்‌ முளைத்துவிட்டார்‌. இனி என்ன செய்வார்‌? பாவம்‌! நேருகளும்‌ ஐயங்கார்களுமே இக்கதியாகி விட்டால்‌ இவர்கள்‌. பெற்றெடுத்த சுயராஜ்யக்‌ க௯ஷி அழிந்து விட்டதா? இல்லையா? என்று கூடக்‌ கேட்க வேண்டுமா? நமக்கு அதைப்பற்றிக்கூட அதிக பரிதாபம்‌ இல்லை. இனி ஐயங்கார்‌ அவர்களின்‌ வலக்கை, இடக்கைகளான ஸ்ரீமான்கள்‌ முதலி யார்கள்‌ கதியும்‌, நாயுடுகள்‌ கதியும்‌ என்ன ஆகும்‌ என்பதும்‌ இவர்களை நம்பி அக்கக்ஷியில்‌ சேர்ந்த மற்றவர்கள்‌ கதி என்ன ஆகும்‌ என்பதும்தான்‌ நமது பரிதாபம்‌. அம்மிக்கல்‌ போன்ற இவர்களே ஆகாசத்தில்‌ பறக்கும்போது மற்றவர்களைப்‌ பற்றி கேட்கவும்‌ வேண்டுமா? வாசகர்களே தெரிந்து கொள்ளலாம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 25.04.1926 குடி அரசு - 1926 N 246 திரு. ஆர்‌.கே.ஷண்முகக்‌ AFL IPUIMT அஷ்டதிக்குப்‌ பாலகர்களான ஐயங்கார்‌ கோஷ்டியார்‌ சமீபத்தில்‌ தமிழ்‌ நாடெங்கும்‌ சுற்றுப்பிரயாணம்‌ செய்து வரும்போது திரு. ஆர்‌.கே. ஷண்முகஞ்‌ செட்டியாரவர்களை பல கேள்விகளால்‌ தூத்துக்குடியிலும்‌, திருச்சியிலும்‌ வளைத்துக்‌ கொண்டார்கள்‌. அக்கேள்விகளுள்‌ முக்கியமான இரண்டிற்கு உண்மையிலே தன்னுள்ளத்திலே உறையும்‌ அபிப்பிராயத்தை வெளிப்‌ படையாய்க்‌ கூறிவிட்டார்‌. அவை வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்து வத்தைப்‌ பற்றியும்‌ ஹிந்துமத பரிபாலனச்‌ சட்டத்தைப்‌ பற்றியுமாகும்‌. திருஷண்முகஞ்‌ செட்டியார்‌ இவற்றிற்குப்‌ பதிலளிக்கு முகத்தான்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமே நாட்டின்‌ அமைதியைக்‌ காக்கவல்ல தென்றும்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்காகக்‌ காங்கிரசிலும்‌ போராடப்‌ போவதாகவும்‌ கூறியுள்ளார்‌. மத பரிபாலனச்‌ சட்டத்தைப்பற்றிக்‌ கூறும்போது இச்சட்டம்‌ அருமையானதொரு சட்டமென்றும்‌, சட்ட சபையில்‌ இச்சட்டம்‌ நிறைவேற்றப்‌ பெறுதற்குத்‌ தன்னுடைய உதவியையும்‌ அக்காலத்தில்‌ கொடுத்திருப்பதாகவும்‌, இனி காங்கிரசோ அல்லது மற்றையோர்களோ அச்சட்டத்தை அழிப்பதற்கு முற்பட்டால்‌ தன்னுடைய முழு பலத்தையும்‌ செலுத்தி அச்சட்டத்தை நிலைநாட்ட முயலுவேன்‌ என்றும்‌ திரு.செட்டியார்‌ விடையிறுத்துள்ளார்‌. இவ்வாறு தன்னுள்ளத்திலே உறையும்‌ எண்ணத்தை தைரியமாய்க்‌ கூறியது ஆச்சரியத்தைக்‌ கொடுக்காது. ஐயங்கார்‌ கோஷ்டியில்‌ சேர்ந்து தாளம்‌ போடும்‌ உண்மைத்‌ தமிழர்‌ பலருக்கும்‌ இத்தகைய கொள்‌ கையே உண்டென்பதை நாம்‌ தனித்துத்‌ தெரிந்து கொண்டதிலிருந்து அறிவோம்‌. ஆனால்‌, திருஷண்முகஞ்‌ செட்டியாரைப்‌ போன்று மற்றையோர்‌. தைரியமாய்‌ வெளியில்‌ எடுத்துக்‌ கூறப்‌ பின்வாங்குவதற்குக்‌ காரணமில்லாம லில்லை. திரு.ஷண்முகஞ்‌ செட்டியார்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சட்டசபை அபேகஷகராய்‌ நிற்பினும்‌ அவருக்கு பார்ப்பனர்‌ உதவி வேண்டியதே யில்லை. ஐயங்கார்‌ கோஷ்டியின்‌ எத்தகைய உதவியுமில்லாமலேயே யெல்‌ லாம்‌ நடக்கும்‌. ஆதலினாலேயே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தையும்‌ தேவஸ்தான சட்டத்தையும்‌ தைரியமாய்‌ ஆதரிக்கத்‌ தலைப்பட்டார்‌. ஆனால்‌ ஐயங்காரைச்‌ சுற்றிவரும்‌ மற்றையரோ பாவம்‌! கோழைகள்‌- காலில்‌ பலமில்லாதவர்கள்‌ - முதுகெலும்பில்லாக்‌ கூனிகள்‌. இவர்கள்‌ நடப்பதற்கும்‌ நிமிர்வதற்கும்‌ ஐயங்கார்‌ கோஷ்டியை எதிர்நோக்க வேண்டிய வர்கள்‌. பத்திரிகை நடத்துவோருக்கு அக்கோஷ்டியின்‌ உதவியும்‌ ஆதரிப்பும்‌ 247 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 இல்லாவிடில்‌ பத்திரிகை அடங்கி ஓடுங்கி விடும்‌. சட்டசபைக்கு நிற்போருக்‌. கும்‌ அப்படியே. வேறு பலருக்கும்‌ அவ்வத்துறையில்‌ வெவ்வேறு வகையி லேயே அக்கோஷ்டியின்‌ ஆதரிப்பு வேண்டியதாகிறது. இதற்காக தங்களது மனச்சாட்சியையும்‌ கெளரவத்தையும்‌ இழந்து வருவதோடல்லாமல்‌ தங்க ளுக்கு மட்டுமல்லாது தங்கள்‌ பின்‌ சந்ததிகளுக்கும்‌ குழிதோண்டிக்‌ கொண்டவர்களாகிறோம்‌ என்பது அவர்களுக்குத்‌ தெரிவதில்லை. திரு.ஷண்முகஞ்‌ செட்டியாரல்லாது வேறு எவராலேனும்‌ இவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால்‌ இதுவரை அவர்‌ “மாரீசனாக”வும்‌ “தேசத்‌ துரோகி” யாகவும்‌ மாறியிருப்பார்‌. ஆனாலும்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ தத்தம்‌ ஜாதிப்‌ புத்திப்படியே நடந்து வருகின்றன. தூத்துக்குடியிலும்‌, திருச்சி யிலும்‌ மேற்கண்ட இரு முக்கிய விஷயங்களையும்‌ திரு.ஷண்முகஞ்‌ செட்டி யாரால்‌ ஸ்பஷ்டமாக எடுத்துக்‌ கூறப்பட்டிருந்தும்‌ உண்மைக்கு மாறாக பாமரரை ஏமாற்றும்‌ வழியில்‌ அவைகளைப்‌ பிரசுரிக்காமல்‌ மறைத்துவிட்டது சின்னத்தனமேயாகும்‌. இவ்விஷயத்தை “திராவிடன்‌” ஒன்றே தெளிவாகக்‌ கூறியது.ஆதலால்‌ உண்மை எங்கிருக்கிறதென்பதை பொது ஜனங்களையே அறிந்துகொள்ள விட்டுவிடுகிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 25.04.1926. குடி அரசு - 1926 N 248 சபர்மதி ரானி சபர்மதி ஆச்சிரமத்தில்‌ மகாத்மா காந்தி முன்னிலையில்‌ சுயராஜ்யக்‌ ககஷிக்கும்‌ பரஸ்பர ஒத்துழைப்புக்‌ ககஷிக்கும்‌ ராஜி ஏற்பட்டுவிட்டதாம்‌. ஆனால்‌, மகாத்மா அதில்‌ கலந்து கொள்ளவே கிடையாது. மகாத்மா காந்திக்கு முன்னிலையில்‌ சபர்மதி ஆச்சிரமத்தில்‌ ராஜி யேற்பட்டுவிட்டதென்று சொன்னால்‌, அதில்‌ ஒரு பெருமையும்‌, பொதுஜனங்களுக்கு ஒரு நம்பிக்‌ கையும்‌ ஏற்பட்டுவிடுமென்ற எண்ணத்தினால்‌ செய்த சூழ்ச்சியேயல்லாமல்‌ வேறல்ல. ராஜியால்‌ விளைந்த பலன்‌, நாளுக்கு நாள்‌ நகர்ந்துதடி அம்மானே என்றபடி சுயராஜ்யக்‌ ககஷியார்‌ உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொள்ளுவதுதான்‌. அதாவது, “மந்திரிகள்‌ தங்களுடைய கடமைகளைச்‌ சரியாக நடத்து வதற்கு அவசியமான அதிகாரம்‌, பொறுப்பு, சுயமாகச்‌ செய்வதற்கு சக்தி முதலியவை கொடுக்கப்பட்டால்‌ கவர்ன்மெண்ட்‌ போதுமான அளவு இணங்கிவிட்டதாகக்‌ கருதி சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்ளலாம்‌. மந்திரி பதவிக்கு அவ்வித பொறுப்‌ பும்‌ சுதந்திரமும்‌ கொடுத்திருக்கிறார்களா இல்லையா என்கிற விஷயம்‌ அந்தந்த மாகாண சட்டசபை மெம்பர்களே தீர்மானித்துக்‌ கொள்ள வேண்டியது. திரு. ஜெயகரும்‌ திரு. நேருவும்‌ இதை ஊர்ஜிதம்‌ செய்ய வேண்டியது.” ஓப்பம்‌:- சரோஜனி நாயுடு, மோதிலால்‌ நேரு, லஜபதிராய்‌,எம்‌.ஆர்‌. ஜெயகர்‌, என்‌.சி. கெல்கர்‌, பி.எஸ்‌. ஆனே, டி.வி. கோகலே, ஓகலே. முதலில்‌ கவர்ன்மெண்டார்‌ இணங்கி வந்தால்‌ உத்தியோகம்‌ ஒப்புக்‌ கொள்வது என்று காங்கிரஸில்‌ தீர்மானித்தார்கள்‌. சர்க்கார்‌ இணங்கி வர வில்லை; சட்டசபையை விட்டு வெளிவந்தாய்‌ விட்டது. இப்போது மந்திரி களுக்கு அதிகாரம்‌ கொடுத்தால்‌ ஒப்புக்கொள்ளுவது என்று தீர்மானித்தாய்‌ விட்டது. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 25.04.1926 249 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுயாரால்யக்‌ ககூதியும்‌ முகம்மதியரும்‌ சென்ற வாரம்‌ நமது பத்திரிகையில்‌ இதே தலைப்பின்‌ கீழ்‌ வெளிவந்த விஷயத்தை நேயர்கள்‌ அறிவார்கள்‌. அதில்‌ எல்லைப்புற மாகாண சீர்திருத்தத்தைக்‌ கோரிய சுயராஜ்யக்‌ க௯ஷியைச்‌ சேர்ந்த முகம்மதியர்களின்‌ பிரேரணையை, பண்டித நேரு முதலிய சுயராஜ்யக்‌ கக்ஷியைச்‌ சேர்ந்த தலைவர்கள்‌ சில மொண்டிச்‌ சமாதானங்களைச்‌ சொல்லி முகம்மதியர்கட்கு விரோதமாய்‌ அரசாங்கத்தார்‌ சார்பில்‌ வோட்டுக்கொடுத்து அத்திர்மானத்தை வீழ்த்தியதினால்‌ சுயமரியாதையுள்ள முகமதியர்கள்‌ சுயராஜ்யக்‌ ககஷியி னின்று விலகிக்‌ கொண்டனர்‌ என்று எழுதியிருந்தோம்‌. அக்க்ஷியிலுள்ள. முகமதிய பிரதமருள்‌ ஒருவரான மெளல்வி மகமது ஷாபி அவர்கள்‌, தான்‌ சுயராஜ்யக்‌ கக்ஷியிலிருந்து விலகிக்‌ கொண்டதோடல்லாது இந்தியா சட்ட சபை ஸ்தானத்திலிருந்தும்‌ விலகிக்‌ கொண்டதாகத்‌ தெரிகிறது. இது நாம்‌ கூறி யதை பலப்படுத்தும்‌. தன்‌ காலில்‌ நிற்கக்கூடிய சுயமரியாதையுள்ள எவரும்‌ இனி அக்கக்ஷியிலிருக்க மாட்டாரென்பது துணிபு, குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 25.04.1926 குடி அரசு - 1926 N 250 காந்தியமுகளும்‌ திரு. கலியாணசுந்திர முதலியாரும்‌ “நவசக்தி” ஆசிரியர்‌ திரு.வி.கலியாணசுந்திர முதலியார்‌ ஒரு பெரிய காங்கிரஸ்‌ பக்தராம்‌. காந்தியடிகள்‌ கீறிய கோட்டைத்‌ தாண்டாதவராம்‌. இத்தகைய சீரியர்‌ சின்னாட்களாக “காங்கிரஸ்‌ தலைவர்‌'களெனப்படும்‌ சிலரு டன்‌ சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டில்‌ திக்‌ விஜயம்‌ செய்து வருகின்றார்‌. இவரு டன்‌ சேர்ந்து வருபவர்கள்‌ உண்மையான காங்கிரஸ்வாதிகளா? என்பதையும்‌, வாஸ்தவத்திலேயே தேச நன்மைக்கு பாடுபடுகிறவர்களா வென்பதையும்‌ கவனிப்போம்‌. உண்மையான காங்கிரஸ்காரர்‌ யார்‌ ? என்ப தைப்பற்றி காந்தி அடிகள்‌ கூறுவதாவது. காங்கிரஸ்காரருக்கு பின்வரும்‌ லக்ஷணங்கள்‌ இருக்க வேண்டும்‌. 1 கதரில்‌ பூரண நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. அவர்‌ தற்காலிக உடையாகவோ அல்லது வெளி வேஷத்திற்கான உடையாகவோ கதரை அணிபவராக இருக்கக்கூடாது. உண்மையான ஆர்வத்துடன்‌ கதர்‌ அணிபவராக இருக்க வேண்டும்‌. 2. தீண்டாமை விலக்கில்‌ நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும்‌. தீண்டத்தகாதவரென கூறப்படுகிறவருடன்‌ அவர்‌ தாராளமாகக்‌ கலந்துறவாடக்‌ கூடியவராயிருக்க வேண்டும்‌. பல வகுப்பின. ருள்ளும்‌ ஒற்றுமை இருக்க வேண்டும்‌ என்பதில்‌ நம்பிக்கைக்‌ கொண்டவராக இருக்க வேண்டும்‌. 3. அஹிம்சை, சத்தியம்‌ ஆகிய காங்கிரஸ்‌ கோட்பாட்டில்‌ நம்பிக்கைக்‌ கொண்டவராயிருக்க வேண்டும்‌. காந்தி அடிகளார்‌ வகுத்துள்ள மேற்கண்ட நெறிப்படி திரு. முதலி யாரைக்‌ கூட்டிக்கொண்டு போகும்‌ ஐயங்காரின்‌ கோஷ்டியினருள்‌ எவராவது இருக்கிறாரா? அந்நெறிப்படியே இருக்கிறவர்களாயிருந்தால்‌ திரு. முதலியா ரைப்‌ பற்றியாதல்‌, அவரால்‌ துணை புரியப்‌ பெறும்‌ கோஷ்டியாரைப்‌ பற்றியா 251 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தல்‌ இங்கு எழுத நேரிடாது. அக்கோஷ்டியிலிருப்போர்‌ அனைவரும்‌ காங்கிரஸ்‌ நெறிக்கு நேர்மாறாக நடப்பவரேயாகும்‌. திரு. சீனிவாசய்யங்கார்‌. கதரில்‌ கொஞ்சமும்‌ நம்பிக்கையில்லாதவர்‌. சமீபத்தில்‌ அவர்‌ கோவைக்கு வந்திருக்கும்‌ போது கதர்‌ விஷயம்‌ காங்கிரஸில்‌ சேர்க்கப்பட்டதால்தான்‌ காங்கிரஸ்‌ குட்டிச்‌ சுவராய்ப்‌ போயிற்றென்றும்‌ இன்னமும்‌ நூல்‌ நூற்போர்‌. சங்கமும்‌, கதர்‌ போர்டும்‌ காங்கிரசுடன்‌ சம்பந்தம்‌ வைத்திருப்பதாலேயே காங்கிரஸ்‌ இயக்கம்‌ க$ணித்து வருவதாகவும்‌ மற்றும்‌ வேறு பலவாறாக தனது நண்பர்களுடன்‌ பேசிக்‌ கொண்டிருந்தாரென நம்பத்தக்க இடத்திலிருந்து நமக்கு செய்தி வந்திருக்கிறது. இது முதலாவது லக்ஷணத்திற்கு முரணானது. குருகுலக்‌ கிளர்ச்சி கிளம்பியபோது பிராமணரல்லாத குழந்தைகளுக்கு பிராமணக்‌ குழந்தைகளுடன்‌ சமபந்தி போஜனம்‌ அளிக்கக்கூடாதென சிலர்‌. வாதாடியபோது அதற்கு அனுகூலமாய்‌ நடந்து கொண்டவர்‌. இது மகாத்மா கூறிய 2-வது 3-வதுலெக்ஷணங்களுக்கு முரணானது ஆகும்‌. ஆகவே இவர்‌ எப்படி காங்கிரஸ்காரராவார்‌. இவர்‌ தேச விடுதலைக்கும்‌, பிராமணரல்‌ லாதாருக்கும்‌ முற்றும்‌ நேர்‌ விரோதியாவார்‌. இதை திரு. முதலியாரால்‌ மறுக்க முடியுமா? திரு. சத்தியமூர்த்தியும்‌ கதரில்‌ கொஞ்சமும்‌ நம்பிக்கை இல்லாதவ ரென்றே கூறவேண்டும்‌. சமயத்திற்குத்‌ தக்கபடி நடப்பவரேயாகும்‌. திரு.எம்‌. கே. ஆச்சாரியாரைப்பற்றி நாம்‌ கூற வேண்டியதில்லை. பிராமணக்‌ குழந்தை ஒன்று பிராமணரல்லாத குழந்தை முன்‌ சாப்பிட்டதாக கேள்விப்பட்டால்‌ ஒரு மாதம்‌ உண்ணாவிரதம்‌ அனுஷ்டிப்போம்‌ என்று கூறிய மகான்‌. இவர்தானா பல வகுப்பினரையும்‌ ஒன்றுபடுத்தப்‌ போகிறவர்‌? தீண்டாமையை விலக்கப்‌ போகிறவர்‌? திரு.சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரைப்‌ பற்றி நாம்‌ சொல்ல வேண்டியதில்லை... காங்கிரஸ்காரர்‌ என்று சொல்லிக்கொள்ளுவதற்கே கொஞ்சமும்‌ யோக்கியதை இல்லாத இவர்களையெல்லாம்‌ காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ என்று கபடு சூதற்ற பாமரர்களிடம்‌ கூறி, அவர்களுக்கு வோட்டுச்‌ சேகரித்துத்‌ தர: ஊர்‌ ஊராய்த்‌ திரியும்‌ திரு. கலியாணசுந்தர முதலியாரது செய்கை எப்படி காந்தியடிகளை ஆதரிப்பதாகும்‌? “எம்‌ காந்தியடிகளார்‌”, “எம்‌ மகாத்மா”, “எம்‌ சத்திய உர”. “எம்‌ சாந்தமூர்த்தி” என்று மகாத்மா காந்தியை தனக்கே சொந்தமாக்கிப்‌ பேசிவரும்‌ திரு. முதலியார்‌, மகாத்மா கூறிய லக்ஷணங்‌ களுக்கு எவற்றானும்‌ பொருந்தாதவர்களை காங்கிரஸ்‌ தலைவர்கள்‌ என்று கூறி அவர்களுக்கு வோட்டு சேகரித்துத்‌ தருவதின்‌ ரகசியம்‌ என்ன? என்‌ பதை வாசகர்கள்தான்‌ அறிய வேண்டும்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 25.04.1926 குடி அரசு - 1926 N 252 மட்டை கசசோதணை பிராமணர்கள்‌ தங்கள்‌ பிண்ணால்‌ திரியும்‌ பிராமணால்லாதாரிடம்‌ வைத்திருக்கும்‌ மதிப்பு சென்ற மாதத்திற்கு முன்‌ மதுரையில்‌ நடந்த மாகாண காங்கிரஸ்‌ கமிட்டிக்‌ கூட்டம்‌ முடிந்து எல்லோரும்‌ திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருடைய சட்டைப்‌ பையிலி ருந்த சிறு பணப்பை காணாமல்‌ போய்விட்டதாம்‌. இதற்காக வேண்டி அவர்க ளுடன்‌ சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின்‌ மூட்டையையும்‌ மடியையும்‌ சோதனைப்‌ போட்டுப்‌ பார்த்ததாக ஒரு நிரூபர்‌ எழுதியிருக்கிறார்‌. இதை நாம்‌ கேட்கும்‌ போது நமது காதில்‌ நாராசம்‌ காய்ச்சி ஊற்றியது. போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள்‌ ஒருவர்‌ 5,6 வருஷமாய்‌ காங்கிரஸிலுழைத்துவரும்‌ அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டி அங்கத்தினர்‌. மற்றொருவர்‌ செல்வாக்கும்‌ மதிப்புமுள்ள பிரபலஸ்தர்‌. இவர்கள்‌ இருவரும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ பணப்பைக்‌ காணா மல்‌ போனதற்காக எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டானாலும்‌, தங்கள்‌ மூட்டை யைப்‌ பிரித்துக்‌ காட்டினதற்கு நாம்‌ மிகவும்‌ வெட்கப்படுகிறோம்‌. அல்லாம லும்‌ இந்தப்‌ பிராமணர்களுக்கு இவர்களைப்‌ பரிசோதனை செய்யும்படி யானதோர்‌ தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின்‌ நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும்‌ சிலருக்கு எந்த சமயத்தில்‌ என்ன மரியா தைகள்‌ கிடைக்குமோ கடவுளுக்குத்தான்‌ தெரியும்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 25.04.1926 253 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சட்டசபைக்கு ஆன்‌ பிழுக்கிற “ நதர்தல்‌ கங்காணிகள்‌” தமிழ்நாட்டிலே நிலவும்‌ பத்திரிகைகளில்‌ பெரும்பாலும்‌ தனது மனசாக்ஷிக்கு விரோதமாக எழுதி தன்‌ சுயமரியாதையை இழந்து வருகின்றன. முதுகெலும்பில்லாமல்‌ இருக்கும்‌ இவைகள்‌, எவ்வளவுதான்‌ யோக்கியதை யாயிருப்பதுபோல - போலித்தனமாக கைவீசி காலுதறி நடப்பதாகப்பாவனை செய்துவரினும்‌ அவைகளுக்கு முதுகெலும்பில்லாத தத்துவத்தை நாட்டார்‌ அறியாமலிருக்க மாட்டார்கள்‌.இப்பத்திரிகைகளெல்லாம்‌ உண்மையறிய முடி யாமலோ, பலக்குறைவாலோ வேண்டுமென்றே சூழ்ச்சிக்காரர்கள்‌ பக்கமாக வேயிருந்து வருகின்றன. ஆனால்‌ பிறருடைய உதவியை நாடாது தன்‌ கால்‌ பலத்திலேயேநிற்கக்கூடிய பத்திரிகைகளில்‌ ஒன்றாகிய நமது “நாடார்‌ குலமித்‌ திரன்‌” சுயராஜ்யக்‌ கக்ஷியினுடைய சூழ்ச்சியின்‌ உண்மை கண்டு தைரியமாய்‌ வெளிவந்து எழுதியிருப்பதில்‌ ஒருசிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்‌. “சட்டசபைக்கு ஆள்பிடிக்கிற கங்காணிமார்கள்‌ (சுயராஜ்யக்‌ கக்ஷி யார்‌) தேசமெங்கும்‌ உலாவித்‌ திரிகின்றனர்‌. .. சொற்‌ கேளாப்‌ பிள்ளையினால்‌ குலத்துக்கனமென்ற பழமொழி இவர்களுக்கே தகு மென்று மகாத்மா காந்தி மெளன யோகத்திலிருந்து விட்டார்‌. நமது நேரு கங்காணி, தமது தோழர்களையெல்லாம்‌ பிரிய விட்டு விட்டுத்‌ துடித்துக்‌ கொண்டிருக்கிறார்‌. ஸ்ரீனிவாசக்‌ கங்காணி ஆள்‌ பிடிக்கிற வேலையை வெகு துரிதமாய்‌ நடத்திக்கொண்டு வருகிறார்‌. ஒவ்வொரு முக்கிய விடத்திலும்‌ கங்காணியாபீஸ்கள்‌ இரகசிய மாய்‌ அமைத்து வருகிறார்‌.” இவ்வுரைகள்‌ சீனிவாசய்யங்கார்‌ கோஷ்டிக்கு ஒரு பீரங்கி வெடி போலவே தோன்றும்‌. சுயராஜ்யக்‌ ககஷியின்‌ கபடக்‌ கோட்டையைத்‌ தகர்ப்ப தில்‌ நாடார்குல மித்திரனும்‌ நமக்குதவியாய்‌ பங்கெடுத்துக்‌ கொண்டிருப்ப தற்கு நம்‌ மனப்பூர்வமான நன்றி செலுத்துகிறோம்‌. குடி அரசு - அறிக்கை - 25.04.1926 குடி அரசு - 1926 N 254 [ e flm”me o B பெருந்தேசபக்தர்களெனப்‌ படாடோபம்‌ செய்து வருகின்றவர்க ளான பிராமணர்கள்‌ இந்தியாவின்‌ சுயராஜ்யத்திற்காகப்‌ பாடுபடுபவர்களல்ல வென்றும்‌, அவர்கள்‌ செய்துவரும்‌ ஆரவாரமனைத்தும்‌ தங்கள்‌ இனத்தவர்‌. களான பிராமணர்கள்‌ மல்கிய பிராமண ராஜ்யம்‌ நிலைநாட்டவேயல்லாமல்‌ வேறில்லை யென்று நாம்‌ பன்முறை கூறிவந்திருக்கிறோம்‌. நாளடைவில்‌ இவ்வுண்மை புலனாகிவருகிறதென்பதை அடியிற்காணும்‌ உரைகளால்‌ அறிந்து கொள்ளலாம்‌. திரு. விபினசந்திரபாலகர்‌ சமீபத்தில்‌ நடந்த கல்கத்தா இந்து முஸ்லீம்‌ சச்சரவைப்‌ பற்றி எழுதுங்‌ காலையில்‌, இத்தகைய அமளி நாட்டில்‌ பரவாதிருக்க வேண்டுமானால்‌ விரைவில்‌ சுய ஆட்சி கொடுக்க வேண்டு மென வரைந்து விட்டு, தற்சமயம்‌ “சட்டம்‌ ஒழுங்கு சம்மந்தப்பட்ட பொறுப்பும்‌ மந்திரிகள்‌ வசம்‌ ஒப்புவிக்கப்பட்டால்‌ அவர்கள்‌ ஜாதி வேற்று மை பாராமல்‌ சரியாக வேலை நடத்துவார்கள்‌” என்றும்‌ எழுதியுள்ளார்‌. ஒருவகையில்‌ திரு.பாலரின்‌ கருத்து போற்றத்தக்க தொன்றாகும்‌. ஏனெனில்‌ மந்திரிகள்‌ ஜனங்களின்‌ பிரதிநிதிகளாதலாலும்‌ அவர்கள்‌ பாமர மக்களிடம்‌ நெருங்கிப்‌ பழகியவர்களாதலாலும்‌ நாட்டில்‌ அமைதி நிலவ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்றாப்போல்‌ “சட்டம்‌ போலீஸ்‌” வகைகளை சீர்பெற நிர்வகிப்பார்கள்‌. திரு. பாலரின்‌ கருத்தைப்பற்றி “சுதேசமித்திரன்‌” தன்‌ 19 -4 -26 உ பத்திரிகையின்‌ உபதலையங்கமொன்றில்‌ பொருத்தமற்ற சில போலிக்‌ காரணங்களை எழுதிவிட்டு “ மந்திரிகள்‌ வசம்‌ போலீஸ்‌ டிபார்ட்டு மெண்டி ருந்தால்‌ நலமென்று சொல்வதன்‌ பொருள்‌ நன்கு விளங்கவில்லை” என்று வரைந்து அதைக்‌ கண்டித்துள்ளான்‌. இது “ சுதேசமித்திர”” னின்‌ இயற்கைக்‌ குணமாகும்‌. இப்போது போலீஸ்‌ நிர்வாகமும்‌ சட்டமும்‌ சட்ட மெம்பர்‌ என அழைக்கப்பெறும்‌ கெவர்னரால்‌ நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாக மெம்பரி டமிருக்கிறது. அதிலும்‌ சென்னையைப்‌ பொறுத்த அளவில்‌ “சுதேச மித்தர”னின்‌ இனத்தைச்‌ சேர்ந்த பிராமணரொருவரிடமிருப்பதால்‌ அதைப்‌ பிடிங்கி மந்திரிகள்‌ வசம்‌ ஒப்புவிக்க “சுதேசமித்திர” னுக்கு எவ்வாறு மனந்‌ துணியும்‌ ? மந்திரிகள்‌ பிராமணரல்லாதவரன்றோ? 255 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சமீபத்தில்‌ நடந்த சட்டசபைக்‌ கூட்டமொன்றில்‌ மந்திரிக்‌ கட்சி யைச்‌ சேர்ந்த ஒருவர்‌, போலீஸ்‌ நிர்வாகமும்‌ சட்டமும்‌ ஒரு குறிப்பிட்ட வகுப்பார்‌. பிராமணர்‌! கையிலிருப்பதால்‌ அதனால்‌ எவ்வித நியாயமும்‌ நன்மையும்‌ பெருதற்கில்லாமல்‌ போய்விடுகிறதென்று பல முகாந்தரங்‌ களுடன்‌ எடுத்துக்‌ கூறியதை பொது ஜனங்கள்‌ ஞாபகப்படுத்தி, ஜனப்‌ பிரதிநிதித்துவம்‌, கொண்ட சுயாட்சிக்குப்‌ போராடுவதாக வாய்ப்‌ பறை யறைந்து வரும்‌ “சுதேசமித்திரன்‌” எழுப்பியுள்ள இவ்வாதத்தையும்‌ ஒப்‌ பிட்டுப்‌ பார்த்து அதன்‌ கபட மனத்தை அறிந்துகொள்ள வேண்டுகிறோம்‌. கெவர்னரால்‌ நியமிக்கப்படுபவரிடமி ருந்தாலும்‌ பரவாயில்லை, ஜனப்பிரதி நிதிகளான மந்திரிகளிடம்‌ பிராமண: ரல்லாத மந்திரிகளிடம்‌ ) சட்டமும்‌ போலீஸ்‌ நிர்வாகமும்‌ போகலாதென்பது “மகன்‌ இறந்தாலும்‌ பாவா யில்லை, மருமகள்‌ தாலி அறுபட்டால்‌ போதும்‌ என்பது போல்‌ “மித்திரன்‌” வாதம்‌ செய்கிறான்‌. வர வர பிராமணர்களின்‌ நோக்கம்‌ வெளியாகி வருவதை நாட்டார்‌. அறிய வேண்டுகிறோம்‌. பொது மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பு மிகுந்த பிரதிநிதிகளிடம்‌ ஒப்புவித்தலைக்‌ காட்டிலும்‌ அதிகார வர்க்கத்தின்‌ அடிப்‌ பீடமான கெவர்னரால்‌ நியமிக்கப்படும்‌ ஒருவரிடம்‌ நிர்வாகத்தை ஒப்படைத்தலே மேல்‌ என்று கூறும்‌ “பிராமணமித்திரன்‌”, நாளடைவில்‌, “இந்தியாவுக்கு சுய ஆட்சி கொடுப்பதைக்காட்டிலும்‌ இப்பொழுது இருக்கும்‌ ஆட்சியே மேல்‌” என்று ஏன்‌ கூற மாட்டான்‌. ஏனெனில்‌ சர்க்கார்‌ வசம்‌ அதிகாரம்‌ இருந்தால்‌ எப்படியாவது சர்க்காரை ஏமாற்றி உத்தியோகம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. ஜனங்களிடம்‌ இருந்தால்‌ அதிகக்‌ கஷ்டப்பட்டு பணச்செலவு செய்து ஜனங்களை ஏமாற்ற வேண்டி வருகிறது. ஆதலால்‌ இதனின்று, பிராமணர்கள்‌ சுயராஜ்யத்திற்காகப்‌ பாடுபடும்‌ யோக்கிதையை பொது ஜனங்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌. குடி அரசு - கட்டுரை - 25. 04.1926 குடி அரசு - 1926 N 256 சத்தியமூர்த்தியும்‌ கதரும்‌ சில மாதங்களுக்கு முன்னர்‌ சேலத்திலே கதர்‌ சாலையைத்‌ திறந்து வைத்த சென்னை டாக்டர்‌ சி. நடேச முதலியார்‌ அதுசமயம்‌ கதராடை அணிந்து வராமல்‌ சுதேச பட்டுடைகளைத்‌ தரித்திருந்ததைப்பற்றி பிராமண: சிகாமணியான ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி எள்ளி நகையாடினார்‌. அதாவது, டாக்டர்‌ முதலியார்‌ மில்லில்‌ நெசவான பட்டாடை தரித்துக்கொண்டு கதர்‌. சாலையைத்‌ திறந்து வைத்ததானது, கொள்கைக்காக நெற்றியில்‌ விபூதியும்‌ வயிற்றுப்‌ பிழைப்புக்காக வயிற்றில்‌ நாமமும்‌ தரித்திருப்பவன்‌ கதையாக. யிருக்கிறதென்று கூறினார்‌. அதற்கு டாக்டர்‌ முதலியார்‌ இந்தியாவில்‌ கையி னால்‌ நெசவானாலும்‌ ஆலை நெசவானாலும்‌ இரண்டையும்‌ சுதேசிய மென்றே தாம்‌ கருதுவதாகவும்‌ ஆகையால்‌ சுதேசியத்தை ஆதரிக்க வேண்டியதே எங்கள்‌ கொள்கை என்றும்‌ உள்ளதை வெளிப்படையாகக்‌ கூறினார்‌. ஆனால்‌ சத்தியத்திற்கே உழைக்கிறோமென்று சொல்லும்‌ சத்திய கீர்த்தியின்‌ பிள்ளைகளான சத்தியவந்தர்‌ குலத்திலுதித்த நித்தியங்கத்தி “ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி புதுவருஷத்‌ திருநாளன்று திருவல்லிக்கேணி கடற்கரையில்‌ நடந்த பெருங்கூட்டத்தில்‌ முற்றிலும்‌ பரதேசி மயமாய்‌ விளங்‌ கினார்‌” என்று “லோகோபகாரி”யில்‌ பாரி எழுதியிருக்கிறார்‌. இப்படியிருக்க, கொள்கைக்காகத்‌ திருநீறும்‌, பிழைப்புக்காக திரு நாம மும்‌ போட்டுக்‌ கொண்டலையும்‌ பாசாண்டி என இப்பொழுது ஸ்ரீமான்‌ சத்திய மூர்த்தியை அழைப்பதா? அல்லதுடாக்டர்‌ முதலியாரை அழைப்பதா? ஆம்‌. பிராமணர்கள்‌ செய்தால்‌ அது மருந்துக்காகச்‌ செய்ததாய்ப்‌ போய்‌ விடுகிறது. பிராமணரல்லாதார்‌ எது செய்தாலும்‌ அது வயிற்றுக்கில்லாமல்‌ செய்தா னென்றாகிவிடுகிறது. ஏனென்றால்‌ செல்வாக்குள்ள பத்திரிகைகள்‌ பிராமணர்‌ கைவசம்‌ சிக்கியிருக்கிறது. நமது ஜனங்களும்‌ அதையேதான்‌ பார்க்கிறார்கள்‌. லோகோபகாரியையும்‌, நாடார்குல மித்திரனையும்‌, குடியரசையும்‌ பார்த்தால்‌ அது தேசத்‌ துரோகமாய்விடும்‌. ஏன்‌ பிராமணர்கள்‌ என்னதான்‌ சொல்ல மாட்டார்கள்‌? குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 25.04.1926 257 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 3 ர இமா நாயக்கர்‌, T சுத்த கத்தர்‌ ஜவுவிகள்‌- == F o ன்ன வன்‌, அ ட்ட அ g et பண்டும்‌, வி.பி, அனுப்பலுடிவாத வெளிறு: அது தாத்சொலைவல்‌ ன்‌ வைஸிக வாணாள்‌ எைததியாம்‌ யார்‌ செய்ப ரர g B ks காவன: e IR e ஸ்‌ அத்தாகஷி பெற்ற சுத்த கதர்‌. கல்கி ன்‌ க்கம்‌ ம்‌ "அப்த்‌ மற வொண்ுகத்‌ 13 | 5 ட அனுபவம்‌, சுத்த கதர்‌ ஜவுனிக ந. இனனநன்‌: சர்பத்‌ கத்தரஇனகா: நை A ஆர்‌ எம்‌எல்‌ சிறம்பாம்‌ செட்டர்‌, முத்தாக G கத்தர்‌ ஒப்பேரு நிருபர்‌. [சென்‌ 93] கத்தர்‌ வியாபங்ரிகலக்கு ஜ்‌ கற்பக விதாயகர்‌ அதர்‌ நிறயம்‌. லண னா குடி அரசு - 1926 0) ணி வசய்ய வேண்முயது எண்ண? மத்திய மாகாண அரசாங்கத்தார்‌ மந்திரிகளுக்கென்று மாற்றப்பட்டி ரந்த இலாக்காக்களை எடுத்துக்கொண்டு இனிமேல்‌ மந்திரிகள்‌ இல்லாமலே சகல நிர்வாகத்தையும்‌ தாங்களே நடத்துவதென்று தீர்மானித்து விட்டார்கள்‌. இதன்‌ பலனாய்‌ இரட்டையாட்சி ஒழிந்ததென்றே வைத்துக்‌ கொள்ளலாம்‌. மத்திய மாகாணத்தில்‌ இரட்டை ஆட்சியை ஒழித்த பெருமையை சுயராஜ்யக்‌ கக்ஷியாருக்கே கொடுத்து விடலாம்‌. சுயராஜ்யக்‌ கட்சியாருக்கு இந்தப்‌ பெரு மையை உண்டாக்கிக்‌ கொடுத்த பெருமையைமகாத்மா சொற்படி நடப்பதாகச்‌ சொல்லிக்கொண்டு சுயராஜ்யக்‌ கட்சிக்கு உதவி செய்த ஸ்ரீமான்‌ முதலியார்‌. போன்ற உண்மைச்‌ சிஷ்யர்களுக்குக்‌ கொடுத்துவிடலாம்‌. ஆனால்‌ தேசத்‌ திற்கு இதனால்‌ என்ன லாபம்‌. மந்திரிகளின்‌ சம்பளம்‌ சர்க்காருக்கு இதனால்‌ மீதியாய்‌ விட்டது. இரட்டை ஆட்சி ஒழிந்து சர்க்காரின்‌ எதேச்சாதிகார ஒத்தை. ஆட்சி உறுதியாய்‌ விட்டது. சுயராஜ்யம்‌ கிடைத்து விட்டதா? உரிமை கிடைத்து விட்டதா? சுயராஜ்யத்திற்காவது உரிமைக்காவது ஏதாவதொரு அறிகுறியாவது ஏற்பட்டிருக்கிறதா? இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு இரட்டை ஆட்சியை ஒழிக்கப்‌ போன சுயராஜ்யக்‌ கட்சியாருக்கு மறுபடியும்‌ சட்டசபையில்‌ என்ன வேலை? சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சென்ற தேர்தலில்‌ நின்ற காலத்தில்‌ ஓட்டர்களிடம்‌ கொடுத்த வாக்குறுதி என்ன? “சட்டசபைக்கு எங்களை அனுப்புங்கள்‌: நாங்கள்‌ அங்கு போய்‌ முட்டுக்கட்டை போட்டு இரட்டை ஆட்சியை ஒழித்து சர்க்காரை நடைபெறாமல்‌ செய்து விடுகிறோம்‌. அப்படி எங்களால்‌ செய்ய முடியவில்லையானால்‌ சட்டசபையை விட்டு விலகிவந்து ஜனங்களிடம்‌ பிரசாரம்‌ செய்து சட்ட மறுப்பை ஆரம்பிக்‌ கிறோம்‌” என்று சொன்னார்களல்லவா? இப்பொழுது அந்தப்படி செய்தார்‌ களா? சட்ட சபைக்குப்‌ போன உடனேயே முட்டுக்கட்டை போட தங்களால்‌ முடியவில்லை யென்று தெரிந்தும்‌, இரட்டை ஆட்சியை ஒழித்துங்கூட சர்க்கார்‌ நின்று விடவில்லையென்று தெரிந்தும்‌. இரண்டரை வருஷகாலம்‌ சட்டசபைப்‌ பெருமையை அடைத்துக்கொண்டு மறுதேர்தல்‌ வருகின்ற சமயம்‌ பார்த்து, “எங்களால்‌ சபையில்‌ ஒரு காரியமும்‌ செய்ய முடியவில்லை; சர்க்காரை எங்களால்‌ ஜெயிக்க முடியாது : கெஞ்சியும்‌ பார்த்தோம்‌; கூத்தாடியும்‌ பார்த்தோம்‌; சர்க்கார்‌ எங்களைக்‌ கொஞ்சமும்‌ லெக்ஷியங்கூட செய்யவில்லை: சட்டமறுப்புக்கும்‌ தேசம்‌ தயாராயில்லை: நாங்கள்‌ இனி இங்கிருப்பதில்‌ பிரயோஜனமுமில்லை. ஜனங்களிடம்‌ இந்த விஷயத்தை எடுத்துச்‌ சொல்லுவதற்காக நாங்கள்‌ வெளியே போகிறோம்‌” என்று சொல்லிக்‌ 289 ௨... ஓபரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கொண்டு வெளியில்‌ வந்தவர்கள்‌ உண்மையில்‌ யோக்கியர்களாயிருப்‌ பார்களானால்‌ இனி செய்ய வேண்டிய வேலையென்ன? நிர்மாணத்‌ திட்டத்‌ தையாவது நிறைவேற்ற வேண்டும்‌. அல்லது சட்ட மறுப்புக்காவது தேசத்தை தயார்‌ செய்யவேண்டும்‌. இரண்டையும்‌ விட்டுவிட்டு “மறுபடியும்‌ நாங்கள்‌ சட்டசபைக்குப்‌ போகிறோம்‌. எங்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌” என்று பொது ஜனங்களைக்‌ கேட்பதிலும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ போன்றவர்கள்‌, “சுயராஜ்யக்‌ கட்சியார்‌ வானத்தை வில்லாய்‌ வளைத்து விடுவார்கள்‌; மணலைக்‌ கயிறாய்த்‌ திரித்து விடுவார்கள்‌; சுயராஜ்யக்‌ ககஷியார்‌ ஒருவர்தான்‌ தேசத்தில்‌ யோக்கியர்‌. கள்‌: அவர்கள்தான்‌ சொல்லுகிறபடி நடக்கிறவர்கள்‌: அவர்கள்‌ மேல்‌ ஒத்துழையா வாசனை வீசுகிறது, ஆதலால்‌ அவர்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்‌ கள்‌” என்று ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க ஊரூராய்த்‌ திரிவதிலும்‌ ஏதாவது யோக்கியப்‌ பொறுப்பு இருக்கிறதா? பாமர ஜனங்களுக்குப்‌ போதுமான அறி வில்லை யென்பதையும்‌, தங்களுடைய ஓட்டுக்களை யோக்கிதா யோக்கிதை அறிந்து ஓட்டுக்‌ கொடுக்கும்‌ சக்தியில்லை யென்பதையும்‌ ஆதாரமாக வைத்துக்‌ கொண்டு. நமது நாட்டில்‌ ஒரு கூட்டத்தார்‌ தேச சேவை என்கிற பெயரால்‌ இம்மாதிரி அயோக்கியத்தனமான காரியங்களையெல்லாம்‌ செய்யத்‌ துணிவார்களேயானால்‌ பாமர ஜனங்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக்‌ கொடுப்ப தனால்‌ என்ன பலன்‌ கிடைக்கும்‌? இம்மாதிரி பொறுப்பற்ற ஓட்டுரிமை நமது தேசத்தில்‌ இல்லாதிருந்திருக்குமானால்‌ மேற்கண்ட ஆள்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள்‌ செய்ய இடமேற்பட்டிருக்காது. ஓட்டர்களுக்கு அறிவில்லை யென்று சொல்லுகிறபோது யாருக்கும்‌ கோபம்‌ வருவதில்லை. ஆனால்‌ இம்மாதிரி அறிவில்லாதவர்களை ஏமாற்றும்‌ ஜனங்கள்‌ மலிந்து கிடக்கும்‌ இந்த நாடு இது சமயம்‌ எவ்விதத்தில்‌ உரிமை பெற யோக்கிதை உடையது என்று எவராவது கேட்பார்களேயானால்‌ உடனே அவர்கள்‌ பேரில்‌ கோபித்‌ துக்கொள்வார்கள்‌. “தேசத்துரோகி” என்று சத்தம்‌ போட்டுவிடுவார்கள்‌. அறிவில்லாத பாமர ஜனங்கள்‌ நிறைந்த நாடு என்பதற்கும்‌, உரிமை பெற யோக்கியதை இல்லாத நாடு என்று சொல்லுவதற்கும்‌ அதிக வித்தியாசம்‌ இருப்பதாக நமக்குத்‌ தெரியவில்லை. பெரும்பான்மையோரான பாமர ஜனங்களை உரிமைபெற யோக்கியதை உடையவர்களாக்க வேண்டு மென்கிற எண்ணங்கொண்டே “மகாத்மா காந்தி” எவ்வள வோ கஷ்டப்‌ பட்டுப்‌ பார்த்தார்‌. எத்தனையோ உண்மையாளர்களும்‌ அவரைப்‌ பின்பற்றி யும்‌ பார்த்தார்கள்‌. கடைசியாய்‌ மானமற்றவர்களும்‌ நாணயமற்றவர்களுமே ஜெயித்தார்கள்‌. மகாத்மா “இந்தப்‌ பாவிகள்‌ நமது நாட்டில்‌ உள்ளவரை ஏழை மக்கள்‌ உரிமையடைய யோக்கியதையுடையவர்களாக மாட்டார்கள்‌” என்கிற முடிவின்‌ பேரில்‌ இவர்களை விட்டே விலகி, ஏதோ தன்னாலானதைத்‌ தனித்து செய்து வருகிறார்‌. இனி, தேசம்‌ கையில்‌ வலுத்தவன்‌ காரியமாய்ப்‌ போய்‌ விட்டது. எவனுக்கு மானமில்லையோ, எவன்‌ தைரியமாய்‌ பொய்‌ சொல்லக்‌ கூடியவனோ, எவன்‌ பணம்‌ செலவு செய்து சிஷ்யர்களைச்‌ சேர்த்து தன்னைத்‌ தலைவனாக்கிக்‌ கொள்ள சக்தியுடைய வனோ, அவனுக்கு ஏழைகள்‌ குடி அரசு - 1926 N 260 அடிமையாகத்‌ தகுந்த நிலைமைக்கு வந்துவிட்டது. இந்த நிலைமையில்‌ தேச பக்தர்கள்‌ செய்யவேண்டிய வேலை யென்ன என்பதை ஒவ்வொரு உண்மை தேசபக்தர்களும்‌ ஆராய்ந்துப்‌ பார்க்க வேண்டும்‌. தேசத்துக்கு உரிமை சம்பாதிக்கிறோமென்று சொல்லிக்‌ கொண்டு அயோக்கியர்கள்‌ பாமரர்களை: வஞ்சிக்க இடங்கொடுப்பதா அல்லது இவர்களின்‌ யோக்கியதையை பாமர ஜனங்களுக்குத்‌ தைரியமாய்‌ எடுத்துச்‌ சொல்லி உரிமை அடைய யோக்கியதையுடையவர்களாக்குவதா? என்பதே நமது கேள்வி. குடி அரசு - கட்டுரை - 02.05.1926. 261 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நமது பத்திரிகை “குடி அரசு” ஆரம்பமாகி ஒரு வருஷம்‌ முடிந்து இரண்டாம்‌ வருஷம்‌ ஆரம்பமாகிவிட்டது. இவ்வொரு வருஷ காலமும்‌ “குடி அரசு” தன்னால்‌ கூடியதை ஒளிக்காமல்‌ உண்மையோடு உழைத்து வந்திருக்கிறது என்பதைப்‌ பற்றி நாமே உணர்ந்து திருப்தி அடைகிறோம்‌. “குடி அரசை” ஆதரித்தும்‌ ஆசி கூறியும்‌ வரும்‌ சமாசாரக்‌ கடிதங்களிலிருந்தே இதை உணரு கிறோம்‌. இதுவரை “குடிஅரசி” ன்‌ தொண்டைப்‌ பற்றிச்‌ சிலாகித்து சுமார்‌ முந்நூறு நானூறு கடிதங்களும்‌ “குடிஅரசி"ன்‌ மீது குற்றம்‌ சுமத்தி சுமார்‌ 34 கடிதங்‌ களும்‌ நமக்குக்‌ கிடைத்திருக்கின்றன. சிலாக்கியமாய்‌ எழுதியவர்‌: களைப்‌ பற்றி இதில்‌ எழுத இடமில்லை; எழுதினாலும்‌ தற்புகழ்ச்சியாக முடியும்‌. ஆனாலும்‌ குற்றங்‌ கூறி எழுதியவர்களைப்‌ பற்றி எழுதுவதற்கு இதில்‌ இடமுண்டு. அதாவது, குற்றங்கண்டு எழுதிய கனவான்கள்‌ நான்கு பேர்‌; யாரென்றால்‌, 1ஸ்ரீமான்‌ எ. ரெங்கராம்‌ நாயக்கர்‌, ஆனைமலை. 2 ஸ்ரீமான்‌ சுப்பிரமணிய ஐயர்‌, நெரூர்‌. 3. ஸ்ரீமான்‌ இராஜரெத்தின முதலியார்‌, காஞ்சீவரம்‌. 4. ஸ்ரீமான்‌ அ. குப்புசாமி முதலியார்‌ , வேலூர்‌. இவர்களுள்‌ முதலாவதவர்‌ எழுதியதாவது:- “உமது பத்திரிகையின்‌ நோக்கம்‌ நல்லதேயாயினும்‌ அதன்‌ போக்கு நமக்குப்‌ பிடிக்கவில்லை” என்றும்‌, இரண்டாவதவர்‌, “தாங்கள்‌ செய்து வரும்‌ வேலையை ஜஸ்டிஸ்‌ கட்சியாரே செய்து வருவதால்‌ இதை விட உபயோகமாகமுள்ளதான பழய ஒத்துழையாமையிலிறங்கி வேலை செய்வீர்களானால்‌ நாங்கள்‌ அநேகம்‌ பேர்‌. தங்களைப்‌ பின்பற்றத்‌ தயாராயிருக்கிறோம்‌”” என்றும்‌, மூன்றாவது, நான்காவ தவர்‌ மிகவும்‌ கடினமான வார்த்தைகளால்‌ அதாவது, “உமக்குப்‌ புத்தி கெட்டுப்‌ போய்விட்டது: ஜஸ்டிஸ்‌ கட்சியை ஆதரிக்கத்‌ துடங்கி விட்டீர்கள்‌; நீர்‌. யோக்கியர்‌ அல்ல” என்று எழுதியதோடு ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்கையும்‌ செய்து எழுதியிருக்கிறார்கள்‌. இதுவரை நமக்குள்ள சுமார்‌ இரண்டாயிரம்‌ சந்தாதாரர்களில்‌ இந்‌ நால்வர்‌ அதிருப்திக்கே உள்ளாயிருக்கிறோம்‌. இன்னும்‌ அதிகமாயிருக்கலா மென்று சிலர்‌ நினைக்கக்‌ கூடுமென்றே அவர்கள்‌ பெயரையும்‌ காட்டி விட்‌ குடி அரசு - 1926 N 262 டோம்‌. அல்லாமலும்‌ சுமார்‌ 10, 12 பேர்‌ வரையிலும்‌ காரணம்‌ சொல்லாமல்‌ பத்திரிகை இனி அனுப்ப வேண்டாம்‌ என்று எழுதினார்கள்‌. பத்திரிகை களிலேயும்‌ நமது போக்கை “பிராமணன்‌” என்கிற ஒரு கும்பகோணப்‌ பத்திரிகையும்‌ “தேசபந்து” என்கிற ஒரு சென்னைப்‌ பத்திரிகையும்தான்‌ இதுவரை அடிக்கடி பலமாய்க்‌ கண்டித்து எழுதி வருகின்றன. சர்க்காரும்‌ நமது பத்திரிகை விஷயத்தில்‌ கவனம்‌ செலுத்தித்தான்‌ வருகிறார்கள்‌. என்பதற்கு உதாரணமாக நமக்கு எச்சரிக்கைகள்‌ கொடுப்பதிலிருந்தும்‌, நமது பத்திரிகையில்‌ குறிப்பிடும்‌ அரசாங்கம்‌ சம்பந்தமானவையும்‌ அரசாங்க உத்தியோகஸ்தர்‌ சம்பந்தமான விஷயங்களையும்‌ கவனித்து கடிதப்‌ போக்குவரத்துக்கள்‌ நடத்துவதிலிருந்தும்‌ தெரிகிறோம்‌. மற்றபடி நமது பத்திரிகையைப்‌ பற்றி நம்மிடம்‌ நேரில்‌ பேசுகிற வர்களில்‌ சிலர்‌ “எல்லாம்‌ சரி, பிராமணர்களைத்‌ திட்டுகிறீர்கள்‌.அது போனா லும்‌ போகட்டும்‌, அதிக கடினமான வார்த்தைகளால்‌ திட்டுகிறீர்கள்‌. அது சில சமயங்களில்‌ நமது “குடிஅரசு” பத்திரிகையின்‌ யோக்கியதையைக்‌ கெடுத்து விடுகிறது” என்கிறார்கள்‌. இவ்விரண்டும்‌ உண்மையாயுமிருக்கலாம்‌. அதற்கு நாம்‌ என்ன செய்வது? இதன்‌ ஆசிரியர்‌ முதலில்‌ சர்க்காருக்கு எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தாரோ அதைவிட அதிகமாகத்தான்‌ பிராமணர்‌: களுக்கு நல்ல பிள்ளையாக இருந்து வந்தவர்‌. சர்க்கார்‌ சார்பாக எத்தனையோ கலெக்டர்கள்‌,நிர்வாக பதவி அங்கத்தினர்கள்‌ முதலிய வர்களின்‌ சிநேகமும்‌ கவர்னர்‌ முதலியோரின்‌ நன்றியறிதல்‌ கடிதங்களும்‌ பட்டம்‌ முதலியவை களுக்கு சிபார்சுகளும்‌ பெற்றிருந்தாரோ, அதுபோலவே அநேக பிராமணர்‌: களின்‌ சிநேகமும்‌, உள்ளன்பும்‌, உபசாரப்‌ பத்திரங்களும்‌, தலைவர்‌ பட்டங்‌ களும்‌ பெற்றவர்தான்‌. ஆனால்‌, அவர்‌ சர்க்காரின்‌ குற்றங்களை எடுத்துச்‌ சொல்லும்‌ போதும்‌, சர்க்காரை கடினமான வார்த்தைகளால்‌ திட்டும்போதும்‌, அதற்காக ஜெயிலுக்குப்‌ போகும்‌ போதும்‌, “நாயக்கர்‌ வெகு தைரியசாலி”, “உண்மையான தேசபக்தர்‌”, “வீரர்‌ ” என்கிற பெயர்‌ பெற்றார்‌. ஆனால்‌, அவர்‌: பிராமணர்கள்‌ குற்றத்தை எடுத்துச்‌ சொல்லும்போதும்‌, அதற்‌ கேற்ற “கடின பதங்கள்‌” உபயோகிக்கும்போதும்‌ பிராமணத்‌ துவேஷியாகி விடுகிறார்‌. “கடின பதம்‌” என்றால்‌ என்ன? பதங்களைப்‌ பார்த்தால்‌ போதுமா? குற்றங்‌ களையும்‌ குற்றம்‌ செய்யும்‌ ஆட்களையும்‌ பார்க்க வேண்டாமா? குதிரையை அடிப்பதானால்‌ கொரடாவை மேலே படும்படி வீசினால்‌ போதும்‌; எருமையை அடிப்பதானால்‌ பெரிய தடி எடுத்துத்தான்‌ ஓங்கி அடிக்க வேண்டும்‌: யானையை அடிப்பதாய்‌ இருந்தால்‌ கூர்மையான இரும்புத்தடி (அங்குசம்‌) கொண்டு குத்த வேண்டும்‌. இவற்றை அறியாமல்‌ பேசுவதில்‌ என்ன பலன்‌? பிராமணர்களிடம்‌ நமக்குத்‌ துவேஷமில்லை. அவர்கள்‌ சூழ்ச்சிக்கு நமது நாட்டில்‌ யோக்கியதை இருக்கும்‌ வரை நமக்கு விடுதலை யில்லை என்பது நமது துணிபு. ஆகவே, இவ்விரண்டில்‌ பிராமணர்‌ புன்சிரிப்பை எதிர்‌. பார்ப்பதா? விடுதலையை எதிர்பார்ப்பதா? 263 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நமது மக்களுக்கு பிராமண சூழ்ச்சியை அறிய சக்தியில்லை. பிராமணர்களின்‌ வெகுகாலத்திய சூழ்ச்சிப்‌ பிரசாரத்தால்‌ அவர்களிடம்‌ ஏற்பட்டிருக்கும்‌ “பக்தி” காரணமாய்‌ நமது பதங்கள்‌ சிலருக்குக்‌ கடினமாகக்‌ காணப்படுகிறது. அவர்களால்‌ நமது குடி கெடுவது நமக்குக்‌ கடினமாய்த்‌ தோன்றுவதில்லை. நாமும்‌ முதலில்‌ மரியாதையாகத்தான்‌ எழுதுகிறோம்‌. அவர்களுக்கு அது சரியானபடி தைக்காததால்‌ தைக்கும்படி எழுதுகிறோம்‌. அதிலும்‌ பிரயோஜனமில்லை. ஆதலால்‌, நமது மக்களுக்குத்‌ தெரியும்படி எழுதுகிறோம்‌. “குடிஅரசு” எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநல வாழ்‌ வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய்‌ உண்மையாய்‌ நடக்‌ கக்கூடிய காலம்‌ வரை நடக்கும்‌. அவ்விதம்‌ நடக்க அதற்கு யோக்கியதை: இல்லையானால்‌ தானே மறைந்து விடுமேயல்லாமல்‌ மானங்கெட்டு விலங்கு களைப்போல்‌ உயிர்‌ வாழாது. “குடிஅரசு” தோன்றிய பிறகு அது ராஜீய உலகத்திலும்‌ சமூக உலகத்‌ திலும்‌ பெரிய மாறுதல்‌ ஏற்படுத்தியிருக்கிறது என்று பலர்‌ நமக்கு எழுதி யிருப்பதை நாமும்‌ உபயோகப்படுத்திக்‌ கொள்ளுகிறோம்‌. “குடி அரசு” ஆசிரியருக்கு உண்மை நண்பர்களாய்‌ இருந்து வந்த ஸ்ரீமான்களான டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌ முதலியவர்‌ களின்‌ கூட்டுறவு “குடி அரசு”க்குக்‌ கிடைத்திருக்குமேயானால்‌ அல்லது குறைந்த பக்ஷம்‌ அவர்களுடைய எதிர்ப்பாவது இல்லாதிருக்குமானால்‌ இன்னும்‌ பெரிய மாறுதல்‌ ஏற்பட்டிருக்கும்‌. என்ன செய்வது? உள்ளதைக்‌ கொண்டு திருப்தி அடைய வேண்டியதுதான்‌. இவ்வருஷத்தில்‌ “குடி அரசுக்கு அதிக வேலையிருக்கிறது. அதாவது, வரப்போகும்‌ தேர்தலுக்காக ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ சென்னைப்‌ பிரசங்கத்தில்‌ காங்கிரஸின்‌ பேரால்‌ பிராம ணர்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க ஊளூராய்‌, கிராமம்‌ கிராமமாய்‌, தெருத்‌ தெருவாய்த்‌ திரிந்து தனது தொண்டைக்‌ கிழியும்‌ வரை கிழிந்தாலுங்கூட! பிரசாரம்‌ செய்யப்‌ போவதாய்‌ சொல்லியிருக்கிறார்‌. ஸ்ரீமான்‌ சி.ராஜகோபா லாச்சாரியார்‌ மதுவிலக்கின்‌ பெயரால்‌ பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க பத்திரிகைகளில்‌ கோடு கட்டிய குறள்களை எழுதிக்கொண்டு வருகிறார்‌. ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ தன்‌ பணத்‌ திமிராலும்‌,மடாதிபதிகள்‌ மகந்துகள்‌ பணத்‌ திமிராலும்‌, கஞ்சிக்கில்லாத பிராமணரல்லாத பிரசாரர்களை நியமித்து விஷமப்‌ பிரசாரம்‌ செய்வதன்‌ மூலமும்‌ பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுக்க உறுதி கொண்டிருக்கிறார்‌. டாக்டர்‌ நாயுடு அவர்களோ, எந்தக்‌ கட்சி ஜெயிக்கும்‌ எந்தக்‌ கட்சி தோற்கும்‌ என்று ஜோசியம்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறார்‌. குடி அரசு - 1926 N 264 ஸ்ரீமான்கள்‌ சர்க்கரைச்‌ செட்டியார்‌, சுரேந்திரநாத்‌ ஆரியா , எஸ்‌. ராம நாதன்‌, தண்டபாணி பிள்ளை போன்றவர்கள்‌ மனதில்‌ மாத்திரம்‌ வேகமா யிருக்கிறார்களே ஒழிய வெளியில்‌ வந்து அவர்களைப்‌ போல்‌ வேலை செய்ய கவலையில்லாதவர்களாய்‌ இருக்கிறார்கள்‌. இந்த நிலைமையில்‌ “குடி அரசுக்கு இருக்கும்‌ பொறுப்பையும்‌ கஷ்டத்தையும்‌ நினைத்துப்‌ பாருங்கள்‌. “குடிஅரசின்‌” போக்கையும்‌ அதன்‌ தொண்டையும்‌ விரும்பு கிறவர்‌ கள்‌ இது சமயம்‌ முன்‌ வந்து உதவாவிடில்‌ எதிர்பார்க்கும்‌ பலனை அடைய முடியாது.அதாவது ஒவ்வொரு பட்டணங்களிலும்‌ “குடி அரசுக்கு கெளரவ ஏஜண்டுகள்‌ முன்வர வேண்டும்‌. அவர்கள்‌ பத்திரிகையைத்‌ தெருத்‌ தெரு வாய்‌ விற்க வேண்டும்‌.சந்தாதாரர்களைச்‌ சேர்க்க வேண்டும்‌. நமது முன்னேற்‌ றத்திற்கு விரோதமான பத்திரிகைகளை விலக்கச்‌ செய்யவேண்டும்‌. இனி ஒன்றிரண்டு மாதங்களுக்கும்‌ ஆயிரம்‌ இரண்டாயிரம்‌ சந்தா தாரர்கள்‌ அதிகமாகச்‌ சேரவேண்டும்‌. ஆங்காங்கு உள்ளவர்கள்‌ கிராமம்‌ கிராமமாய்ச்‌ சென்று சந்தாதாரர்களைச்‌ சேர்க்க வேண்டும்‌. இது சமயம்‌ பிராமண சூழ்ச்சிகளைத்‌ தைரியமாய்‌ வெளிப்படுத்த இரண்டே பத்திரிகைகள்‌. உழைத்து வருகின்றன. அதாவது “திராவிடன்‌” என்னும்‌ தினசரியும்‌ “ குடிஅரசு” என்னும்‌ வாராந்திரமுமேயாகும்‌. “திராவிட னும்‌ “குடி அரசு”ம்‌ குறைந்தது கிராமத்திற்கு ஒன்றாவது போகும்‌ படி வேலை செய்ய வேண்டும்‌. பிராமணர்கள்‌ தங்களை ஆதரித்து தங்களுக்கு ஓட்டுச்‌ செய்யும்படி பிரசாரம்‌ செய்ய ஒவ்வொரு முக்கிய பட்டணங்களிலும்‌ பிராமணரல்லா தாரைக்‌ கொண்டே பத்திரிகை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள்‌. சில இடங்களிலும்‌ ஏற்பாடாகி விட்டது. இன்னும்‌ பல இடங்களில்‌ ஏற்படப்‌ போகிறது. இதை உணருங்கள்‌, இதற்குத்‌ தகுந்தபடி நடவுங்கள்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 02.05.1926 265 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 இந்தியா சட்டசபையும்‌ செண்ணை பிராமணர்களும்‌ ஆந்திரா காங்கிரஸ்‌ கமிட்டியார்கள்‌ இந்தியா சட்டசபைத்‌ தேர்தலுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தியாய்‌ விட்டது. அதாவது, மூன்று ஸ்தானங்களுக்‌ கும்‌ மூன்று பிராமணர்களையே நிறுத்தியாய்‌ விட்டது. அவர்களின்‌ பெயர்‌. ளாவன- 1.வி.வி.ஜோகைய பந்துலு உடி.பிரகாசம்‌ பந்துலு 3.சி. துரைசாமி அய்யங்கார்‌. முதல்‌ இரண்டு பேர்களும்‌ தெலுங்குப்‌ பிராமணர்கள்‌; மூன்றாவதவர்‌ தமிழ்‌ அய்யங்கார்‌ பிராமணர்‌. ஆக மூன்று பேரும்‌ பிராமணர்களேயாவார்‌. கள்‌. ஆந்திரா தேசம்‌ சுமார்‌ 10 ஜில்லாக்களையுடையது. இதில்‌ நூற்றைம்பது லக்ஷம்‌ ஜனங்களுக்கு மேல்‌ மகமதியரல்லாதவர்கள்‌. அதாவது (பிராமண: ரல்லாது) இந்துக்கள்‌. இந்த ஒன்றே முக்கால்‌ கோடி பிராமணரல்லாதவர்கள்‌ அடங்கிய சமூகத்தில்‌ இந்தியா சட்டசபைக்கு அபேக்ஷகராய்‌ நிற்பதற்கு ஒரு பிராமணரல்லாதார்கூட கிடைக்கவில்லை என்றால்‌, அதாவது இந்தியா சட்டசபைக்கு நிற்க ஒரு பிராமணரல்லாதாருக்குக்‌ கட யோக்கியதை இல்லை என்றால்‌ இவர்கள்‌ சுயராஜ்யம்‌ அடைய எப்படி யோக்கியதை உடைய வராவார்கள்‌. மகமதியர்களில்‌ யோக்கியதை உள்ளவர்கள்‌ இருக்கிறார்கள்‌. கிறிஸ்த வர்களில்‌ யோக்கியதை உள்ளவர்கள்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌, பிராமண ரல்லாத இந்துக்களில்‌ மாத்திரம்‌ யோக்கியதை உடையவர்கள்‌ இல்லாமல்‌ போய்விட்டார்கள்‌. காரணமென்ன? மகமதியருக்கும்‌ கிறிஸ்தவர்களுக்கும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்‌ அவர்‌. களில்‌ யோக்கியதை உள்ளவர்கள்‌ இருக்கிறார்கள்‌ . பிராமணர்‌ அல்லா தாருக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லை. அதனால்‌ அவர்களில்‌ யோக்கியதை உடையவர்கள்‌ இல்லை. இதுதான்‌ காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம்‌ உண்டா ? என்று “வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தைத்‌” துலைக்கக்‌ கங்கணம்‌ கட்டிக்கொண்டு தனது தொண்டையைக்‌ கிழித்துக்‌ கொள்ளத்‌ தயாராயிருக்கும்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களை வணக்கத்துடன்‌ கேட்கிறோம்‌. குடி அரசு - 1926 N 266 இனி தமிழ்நாட்டின்‌ கதி எப்படி இருக்கிறதோ! இன்னும்‌ தெரிய வில்லை. ஆனாலும்‌ சென்னைக்கு ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ செங்கல்‌ பட்டு, தென்னாற்காடு இவைகளுக்கு ஸ்ரீமான்‌ எம்‌.கே.ஆச்சாரியார்‌, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம்‌ இவைகளுக்கு ஸ்ரீமான்‌ சேஷய்யங்கார்‌; இவரில்லாவிட்டால்‌ வேறு ஒரு அய்யங்கார்‌: தஞ்சை, திருச்சி இதுகளுக்கு ஸ்ரீமான்‌ ஏ. ரெங்கசாமி அய்யங்கார்‌. கோயமுத்தூர்‌, சேலம்‌, நீலகிரி இவை களுக்கு ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகஞ்‌ செட்டியார்‌ பேர்‌ அடிபடுகிறது. ஆன போதிலும்‌ “கலியுகக்‌ கர்ணனான” ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்கா ருக்கு கோயமுத்தூர்‌ ஜில்லாவில்‌ சென்னை சட்டசபைக்கு ஓட்டுக்‌ கிடைக்‌ காது. ஸ்ரீமான்‌ இரத்தினசபாபதி முதலியார்‌ ஜெயித்து விடுவார்‌ என்கிற சந்தேகம்‌ வருமானால்‌ ஸ்ரீமான்‌ செட்டியார்‌ பாடு ஆபத்துதான்‌. சுயராஜ்யக்‌ கட்சியில்‌ இருந்து விலகியாவது இன்னொரு 2. 3 லக்ஷ ரூபாய்‌ தர்ம விளம்பரம்‌ செய்தாவது இந்தியா சட்டசபைக்கு நின்று விடுவார்‌ . அப்புறம்‌ செட்டியார்‌ பாடு மறுபடியும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சிக்குப்‌ போக வேண்டியதுதான்‌. இதன்‌ முடிவு ஸ்ரீமான்‌ சி. எஸ்‌. இரத்தினசபாபதி முதலியார்‌ கோயமுத்தூர்‌ ஜில்லாபோர்டு பிரசிடெண்டு எலெக்ஷனில்‌ பெறும்‌ ஜெயம்‌ அல்லது தோல்வியில்‌ அடங்‌ கியிருக்கிறது. ஆகவே இந்தியா சட்டசபைக்கு தமிழ்நாடு சார்பாக 4 அய்யங்கார்‌ உறுதி. ஒரு அய்யங்கார்‌ சந்தேகம்‌. தமிழ்நாட்டில்‌ இந்தியா சட்ட சபைக்குப்‌ போக யோக்கியதை உள்ளவர்கள்‌ அய்யங்கார்‌ ஜாதியார்தானா? பிராமணரல்லாதாரில்‌ எவரும்‌ இல்லையா? வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைத்தால்‌ இந்த ஸ்தானங்களுக்குப்‌ பிராமணரல்லாதார்‌ நிற்காமல்‌ காலியாகி சர்க்கார்‌ நாமினேஷனுக்குப்‌ போய்விடுமா என்று ஸ்ரீமான்‌ முதலியார்‌. அவர்களை கேட்கிறோம்‌. சென்னை சட்டசபையைப்‌ பற்றி பின்னால்‌ எழுதுவோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 02.05.1926. 267 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 மகாத்மாவின்‌ நண்றியறிதல்‌ சபர்மதியில்‌ ராஜி ஒப்பந்தம்‌ முடிந்த பிறகு ஸ்ரீமான்‌ ஜெயக்கர்‌ மகாத்மா விடம்‌ சென்று இந்த ராஜீயை உண்டு பண்ணியதிற்காக தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்‌” என்று சொன்னாராம்‌ . அதற்கு மகாத்மா “நானும்‌ உங்க ளுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்‌” என்று சொன்னாராம்‌. மகாத்மா எதற்காக இந்த விஷயத்தில்‌ ஸ்ரீ ஜெயக்கருக்கு நன்றி செலுத்த வேண்டும்‌. என்கிற கேள்வி இதில்‌ பிறக்கக்‌ கூடும்‌. அது எதற்கு என்று யோசிப்போமானால்‌, சுயராஜ்யக்‌ கக்ஷியார்‌ உத்தி யோகம்‌ ஒப்புக்கொள்ளாத தன்மையின்‌ திருட்டுத்தனத்தை வெளியாக்கிய தற்காகத்தான்‌. குடி அரசு - பெட்டிச்‌ செய்தி - 02.05.1926 குடி அரசு - 1926 N 268 ஸ்தல ஸ்தாபணங்கனில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமே தற்கால அரசியல்‌ முறைக்கு ஏற்ற தென்றும்‌, வகுப்புப்‌ பூசலும்‌ சமயச்‌ சண்டையும்‌ கிளம்பாமலிருப்பதற்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ நல்குவதே ஏற்ற மருந்தென்றும்‌ அறிஞர்‌ பலரும்‌ கூறுகின்றனர்‌. சென்ற ஏப்ரல்‌ மாதம்‌ 10 - ௨ பெங்களூர்‌ முனிசிபல்‌ சபையார்‌. இத்தகைய சிறந்ததொரு முடிவுக்கு வந்துள்ளார்கள்‌. அச்சபையில்‌ இனி எவரேனும்‌ ஓர்‌ எஞ்சினீர்‌ நியமனஞ்‌ செய்யப்படுவாரெனின்‌ அவர்‌. பிராமணரல்லாதவராயிருத்தல்‌ வேண்டுமென தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டு பல பார்ப்பனர்களின்‌ எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது. மற்ற நகரசபைகளுக்கெல்லாம்‌ ஓர்‌ வழி காட்டியாய்‌ நடந்து கொண்ட பெங்களூர்‌ நகரசபையைப்‌ போற்றுகிறோம்‌. நம்‌ நாட்டிலுள்ள இதர முனிசிபல்‌ சபை, ஜில்லா போர்டு போன்ற ஸ்தல ஸ்தாபனங்களும்‌ பெங்களூர்‌ நகரசபையைப்‌ போன்று உத்தியோகம்‌ நியமிப்பதில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தைக்‌ கையாடினால்‌ பெரிதும்‌ நலம்‌ பயக்குமென்று கூறுகிறோம்‌. நாட்டிலே தற்காலம்‌ வகுப்புப்‌ பகை வளர்ந்து வருவதற்குக்‌ காரணம்‌ சமூக வாரியாக உத்தியோகம்‌ நல்கப்படவில்லை என்பது பற்றியேயாகும்‌. ஆதலால்‌, தற்காலம்‌ குடிமக்கள்‌ கையிலிருக்கக்‌ கூடிய ஸ்தல ஸ்தாபனங்கள்‌. அனைத்தும்‌ பெங்களூர்‌ முனிசிபல்‌ சபை போன்று சமூக வாரியாக உத்தி யோகம்‌ நல்கி சகலரும்‌ ஒத்து வாழ வழி தேடுமென நம்புகிறோம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 02.05.1926 269 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிராமண அகராதி விணா - விடை வினா ஆச்சிரமம்‌ என்றால்‌ என்ன? விடை காந்தர்வ விவாகமும்‌ ராக்ஷச விவாஹமும்‌ நடக்கு மிடங்கள்‌. வினா சுயராஜ்யம்‌ என்றால்‌ என்ன? விடை பிராமணர்கள்‌ உத்தியோகமும்‌ பதவியும்‌ அதிகாரமும்‌ பெறுவதுதான்‌ சுயராஜ்யம்‌. வினா பிராமணரல்லாதார்களுக்கு உத்தியோகமும்‌ பதவியும்‌ அதிகாரமும்‌ வந்தால்‌ அதற்குப்‌ பெயரென்ன? விடை அது அதிகார வர்க்கத்தின்‌ ஆட்சி அல்லது அன்னிய ஆட்சி. வினா தேச சேவை யென்றால்‌ என்ன? விடை பிராமணர்கள்‌ பின்னால்‌ திரிந்துகொண்டு ஜஸ்டிஸ்‌ கட்சி யைத்திட்டுவது போல்‌ பிராமணரல்லாதாரைத்‌ திட்டுவதும்‌, பிராமணர்களிடம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டு அவர்களை “தலைவர்‌”, “தமிழ்நாட்டுக்‌ கர்ணன்‌”, “கலியுகக்‌ கர்ணன்‌', *மகாத்மாவின்‌ சிஷ்யர்‌” என்று சொல்லி பிராமண: ரல்லாதாரை வஞ்சித்து பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுப்பதுதான்‌ தேச சேவை ஆகும்‌. வினா தேசத்‌ துரோகம்‌ என்றால்‌ என்ன? விடை பிராமணரல்லாதார்‌ நன்மையைப்‌ பற்றிப்‌ பேசுவதும்‌ எழுதுவதும்‌ தேசத்‌ துரோகமாகும்‌. வினா பிராயச்சித்தமில்லாத, மன்னிக்க முடியாத தேசத்துரோகம்‌ என்றால்‌ என்ன ? விடை: பிராமணர்களுடைய சூழ்ச்சிகளையும்‌, தந்திரங்களையும்‌, அயோக்கியத்தனங்களையும்‌ வெளியிலெடுத்துச்‌ சொல்லு குடி அரசு - 1926 N 270 வினா விடை வினா விடை வினா விடை வினா விடை வினா விடை வினா விடை வினா விடை 271 வதும்‌ எழுதுவதும்‌ மன்னிக்கமுடியாத துரோகமாகும்‌. மதுவிலக்குப்‌ பிரசாரம்‌ என்றால்‌ என்ன? தான்‌ மதுவருந்திக்‌ கொண்டும்‌, தனது மரத்தில்‌ கள்ளு முட்டி கட்டித்‌ தொங்கவிட்டுக்‌ கொண்டும்‌, தனது பத்திரிகைகளில்‌ ஒவ்வொரு மனிதனும்‌ வீட்டில்‌ சாராயம்‌ வைத்திருக்க வேண்டுமென்று எழுதிக்கொண்டும்‌, தன்னை சட்டசபைக்கு அனுப்பினால்‌ மதுவை ஒழித்து விடுகிறேன்‌ என்று சொல்லுவதும்‌, இப்படிப்பட்டவர்‌ களுக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌ என்று சொல்லுவதும்‌ மதுவிலக்கு பிரசாரமாகும்‌.. சரியான ஜனப்பிரதிநிதி சபை என்றால்‌ என்ன? எல்லோரும்‌ பிராமணர்களாய்‌ அமர்ந்திருப்பதுதான்‌ சரியான ஜனப்பிரதிநிதி சபையாகும்‌. அடுத்தபடியான ஜனப்பிரதிநிதி சபை என்றால்‌ என்ன? பிராமணர்களும்‌, அவர்‌ சொல்படி கேட்கும்‌ பிராமண: ரல்லாதார்களும்‌ அமர்ந்திருப்பது இரண்டாந்தர ஜனப்‌ பிரதிநிதி சபையாகும்‌. ஜனப்பிரதிநிதி இல்லாத சபை என்றால்‌ என்ன? பிராமணர்கள்‌ மெஜாரிட்டியாய்‌ இல்லாத சபை எவ்விதத்‌ திலும்‌ ஜனப்பிரதிநிதி சபையாகமாட்டாது.. புத்தியுள்ள ஜனங்கள்‌ என்றால்‌ யார்‌? பிராமணர்கள்‌ வண்டி வண்டியாய்‌ பொய்யும்‌ புளுகும்‌ அளந்தாலும்‌ அதையெல்லாம்‌ கேட்டுக்கொண்டு சரி சரி யென்று பேசாமல்‌ இருப்பவர்கள்‌ புத்தியுள்ள ஜனங்கள்‌. குழப்பக்காரர்கள்‌, காலிகள்‌ என்றால்‌ யார்‌? பிராமணர்கள்‌ வண்டி வண்டியாய்‌ பொய்யையும்‌ புளு கையும்‌ அளக்கும்போது குறுக்கே யாராவது கேள்வி கேட்‌ டால்‌ அவர்கள்‌ காலிகள்‌. குழப்பக்காரர்கள்‌ ஆகிவிடுவார்கள்‌. தேசீயப்‌ பத்திரிகை என்றால்‌ என்ன? பிராமணர்களின்‌ படம்‌ போட்டுக்கொண்டும்‌, பிராமணர்‌ களைத்‌ தலைவர்‌ என்றும்‌, பிராமணர்கள்‌ கட்சிக்கு ஓட்டு பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கொடுங்கள்‌ என்றும்‌, பிராமணர்களைப்‌ புகழ்ந்து எழுதிக்‌ கொண்டும்‌, தேவஸ்தான சட்டத்தையும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தையும்‌ கண்டித்துக்‌ கொண்டும்‌ அல்லது அதைப்‌ பற்றி பேசாமல்‌ வாயை மூடிக்கொண்டும்‌ இருக்‌ கிற பத்திரிகைகள்தான்‌ தேசீயப்‌ பத்திரிகைகள்‌ ஆகும்‌. வினா : தேசத்துரோகப்‌ பத்திரிகை என்றால்‌ என்ன? விடை : பிராமணர்களின்‌ தந்திரங்களை எடுத்து எழுதுவதும்‌, பிராமணரல்லாதார்களின்‌ பெருமையைப்‌ பற்றி எழுது வதும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தையும்‌ தேவஸ்தான சட்டத்தையும்‌ ஆதரித்து எழுதுவதுமான பத்திரிகைகள்‌ தேசத்‌ துரோகமான பத்திரிகைகள்‌ ஆகும்‌. குடி அரசு - உரையாடல்‌ - 02.05.1926 குடி அரசு - 1926 N 272 [ க்தி டன்‌ o . “சுயராஜ்யக்‌ கக்ஷி அழிந்து ஒழிய வேண்டுமென்பது திரு. ராஜ கோபாலாச்சாரியாரின்‌ கருத்தெனத்‌ தெரிய வருகிறது” என்று “நவசக்தி” தன்‌ 30.426 ௨ தலையங்கத்தில்‌ துக்கப்பட்டு ஆச்சாரியார்‌ மீது சீறுகிறது. சுய ராஜ்யக்‌ கட்சியின்‌ தோற்றத்தால்‌ காந்தியடிகள்‌ ஒடுங்கினார்‌, ஒற்றுமை குலைந்தது, ஒத்துழையாமை மறைந்தது, வகுப்புப்‌ பூசல்‌ கிளம்பியது என்று சதா ஓலமிட்டுக்‌ கொண்டிருந்த “நவசக்தி*க்கு இப்பொழுது சுயராஜ்யக்‌ கட்சி ஒழிந்து போவதில்‌ இவ்வளவு கவலை வரக்‌ காரணம்‌ தெரியவில்லை. சுய ராஜ்யக்‌ கட்சி ஒழிந்தால்‌ உலகம்‌ முழுகிப்‌ போகுமோ அல்லது “நவசக்தி”க்கு செல்வாக்கு குறைந்துப்‌ போகுமோ என்கிற இரகசியத்தை நாம்‌ அறிய வில்லை. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 02.05.1926 273 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 புது இறக்குமதி இந்தியாவுக்குப்‌ புதிதாக ஒரு கவர்னர்‌ உத்தியோகம்‌, ஒரு லார்ட்‌ பட்டம்‌, ஒரு ரைட்‌ ஆனரபிள்‌ பட்டம்‌ ஆக மூன்று புதுமைகள்‌ இறக்குமதி ஆகிவந்தது. அந்த மூன்றும்‌ பிராமணர்களுக்கே போய்விட்டது. அதாவது 51.சின்னா, லார்ட்‌ சின்னா, ரைட்‌ ஆனரபிள்‌ சீனிவாச சாஸ்திரி ஆகிய மூன்று பிராமணர்களுக்கும்‌, பிளேக்கோ, இன்புளுவென்சாவோ, எக்ஸ்‌ சேஞ்சு நாணய மாற்றுப்‌ பஞ்சமோ முதலிய புதுவியாதிகள்‌ இறக்குமதி யானால்‌ அது முழுமையும்‌ பிராமணரல்லாதாருக்குத்தான்‌ கிடைக்கிறது. பிராமணரல்லா தூரின்‌ பாக்கியமே பாக்கியம்‌. குடி அரசு - பெட்டிச்‌ செய்தி - 02.05.1926 குடி அரசு - 1926 N 274 மாயவாத்தில்‌ மும்மூர்த்திகள்‌ சில தினங்களுக்கு முன்பாக மாயவரத்தில்‌ மும்மூர்த்திகள்‌ வந்து சபை கூடிரகசிய யோசனைகள்‌ செய்து முடிவான தீர்மானங்கள்‌ செய்து கொண்டு போயிருக்கிறார்கள்‌. அவர்கள்‌ 1 ரைட்‌ ஆனரபிள்‌ சீனிவாச சாஸ்திரியார்‌ 2 சட்ட மெம்பர்‌ சர்.சி.பி. ராமசாமி ஐயர்‌ 3. அட்வகேட்‌ ஜெனரல்‌ கனம்‌ வெங்‌ கட்டராம சாஸ்திரியார்‌ ஆகிய மூவருமேயாகும்‌. இந்த மும்மூர்த்திகளும்‌ சேர்ந்து தற்கால நிலைமையில்‌ பிராமணர்கள்‌ எப்படி உத்தியோகங்கள்‌' பெறுவது, பிராமண வக்கீல்கள்‌ இனி எப்படி பிழைப்பது, பிராமணரல்லா தார்களை ஏய்ப்பதற்கு வழி யென்ன என்று யோசித்து முடிவு செய்துகொண்டு போயிருக்கிறார்களென்றே நினைக்கிறோம்‌. எல்லாம்‌ ரகசியத்திலேயே யிருக்கிறது. குதிரை எப்பொழுது முட்டையிடுமோ பார்ப்போம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 02.05.1926 275 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ௧௬ குஜு அர. ட கவா விளக்‌ | TR னாள்‌ பெறிஎண்ஹாுல்‌, உடலே க்க கதம்‌ கவினி ல்க இயக. ல்‌ கதன்‌ சங்கலி oy A b i ராவா பண்றுபோ ஸ்‌ இன்பன்‌ i விடா வப்‌! எ ணவ WP ம்‌ தன்ன T ன்னை -y iy e கலகம்‌ i i, வம்பை பகலை Tod B v e அகாயாப்பு, கட காத ஆனிய el னர Qb ஐதே னம! Hiphea டக 1y o b i) சல்‌ தேம, பகட்க இலும்‌: ஸ்ரீராமபிரான்‌ அழ்ந்த, நறரசல்லேட (மென்‌ இரா வறுஸ்வரிவ இரகசியம்‌?! என்றும்‌ ஒர்தாள்‌ முற்திலும்‌ இர! g மாடும்‌ ல்கியல்கவும்‌ Gk காக கைமதிலது, வரின்‌ ஈழ்ுர்கள்‌ட அம்பிகள்‌. = L ) ன்‌ 3 கக்கல்‌ s காணும்‌ அன்னச்‌ இர பண்‌ இக்‌ யவ கேடி வத எடு ல்க அம்‌ க்‌ கெள இலியா, பி. பஸ்‌ போம்பையடு அன்கோ ங்‌ ஸ்‌ ந்‌ ர்‌ பண்ட மிக்கும்‌ oy ey -y rill aride பெனில்‌ த்‌ நருத்சோப்பல்விப்‌ 1] oottt . et T i LT R TR ஆ T எ வாமி எியால்‌ ட்டது. குடி அரசு - 1926 (1) 276 o நமது நிருபர்களுக்கு நமது *குடி அரசு” மீது அன்பு கொண்டு அடிக்கடி பற்பல முக்கிய விடயம்‌ பற்றி கட்டுரை வரைந்து வரும்‌ அன்பர்களுக்கு நமது நன்றியறி தலைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. தமிழகத்தின்‌ முன்னேற்றத்தில்‌. ஆர்வங்‌ கொண்டு எழுதப்பெறும்‌ அவர்களின்‌ ஒவ்வொரு வாக்கியத்தையும்‌ போற்றுகிறோம்‌. ஆனால்‌ “குடி அரசுக்கு விஷயதானம்‌ செய்வோரில்‌ பலர்‌ , நமது பத்திரிகை வாரப்‌ பத்திரிகை என்பதையும்‌ சிறிய அளவில்‌ பெரிய விஷயங்‌. களை எடுத்துச்‌ சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையும்‌ அவர்கள்‌ கருதுவ தில்லையென்றே நினைக்கவேண்டி யிருக்கிறது. நமது கட்டுரைக்‌ கர்த்தாக்‌ கள்‌ பக்கம்‌ பக்கமாய்‌ வரைந்த நீண்ட கட்டுரைகளை அனுப்பிவிடுகிறார்கள்‌. நாள்தோறும்‌ வரும்‌ இக்கட்டுரைகளை மட்டிலும்‌ பூராவும்‌ பிரசுரிப்‌ பதாக வைத்துக்‌ கொண்டாலும்‌ 12 பக்கங்களுக்கு மேலாகி விடும்‌. அக்‌ கட்டுரைகளைச்‌ சுருக்கி வெளியிடுவதென்றாலும்‌ அதனை ஆக்கியோரின்‌ கருத்து புலனாகாது போய்விடுமென அஞ்ச வேண்டியிருக்கிறது. ஆகவே, மிகுந்த மன வருத்தத்துடன்‌ கஷ்டத்தோடு இத்தகைய கட்டுரைகளை தள்ளி விட நேருகிறது. ஆகையால்‌, நமது நிரூப நேயர்கள்‌ அன்பு கூர்ந்து இனி வரையும்‌ கட்டுரைகளை மிகச்‌ சுருக்கி தெளிவாக இங்கியில்‌ எழுதி அனுப்புமாறு கேட்டுக்‌ கொள்ளுகிறோம்‌. சுருங்கச்‌ சொல்லி விளங்க வைத்தலே நன்று. (ப-ர்‌) குடி அரசு - அறிக்கை - 09.05.1926 277. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 காந்தியிண்‌ மகிமை கரண்டு கிராம வாசிகணிண்‌ சம்பாஷணை சாமுண்டி” ஏ, அண்ணே மதுரை வீரா! எல்லோரும்‌ காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்‌ கிறதா? மதுரைவீரன்‌: மகிமை என்றால்‌ என்ன ?' சாமுண்டி: மகிமை என்றால்‌ தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லை கற்கண்டு செய்கிறது; சாணியை சந்தனம்‌ செய்கிறது; கள்ளை பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்‌. மதுரைவீரன்‌: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல்லாம்‌ அவருடைய சிஷ்யப்‌ பிள்ளைகள்‌ செய்துவிடுவார்கள்‌. அதிலும்‌ தமிழ்‌ நாட்டிலிருக்‌ கும்‌ குட்டி மகாத்மாக்கள்‌ இப்பொழுது கூட செய்து வருகிறார்கள்‌. இது ஒரு அதிசயமா? சாமுண்டி” அதிசயம்‌ சொல்லுகிறேன்‌ கேளு. சேலம்‌ ஸ்ரீமான்‌ ஆதிநாராயணச்‌ செட்டியாருக்கு வட ஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பராயிருக்‌ கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம்‌ சென்னைக்‌ கார்பொரேஷனைப்‌ பாரு - பார்த்தாயா? இன்னம்‌ கேளு: இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன்‌ பார்‌. ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது. இதைவிட இன்னம்‌ என்ன பெரிய சித்து வேணும்‌. இந்த சித்துக்கள்‌ எல்லாம்‌ அவருடைய பெயர்‌ என்கிற மந்திரத்தைச்‌ சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள்‌ குட்டி மகாத்மாக்கள்‌ வேலை செய்யப்‌ போகிறார்கள்‌. அப்பொழுது மகாத்மா வின்‌ மகிமையை ஒரு கை பார்க்கிறாயா? குடி அரசு - 1926 N 278 மதுரைவீரன்‌ : ஓட்டக்‌ காசு உடைந்த சலங்கை, செல்லாக்காசு, செம்பு, பித்தளைத்‌ துண்டு இதுகள்‌ எல்லாம்‌ இந்தியா சட்டசபைக்கும்‌ சென்னை சட்டசபைக்கும்‌ போய்‌ நாற்காலியில்‌ உட்கார்ந்து கொண்டு ஐயம்மார்‌ சொற்படி ஆடப்‌ போகின்றதுகள்‌. இதைவிட இன்னும்‌ என்ன மகிமை வேண்டும்‌? சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும்‌ போதும்‌. மகாத்மாவின்‌ பெயரைச்‌ சொன்னாலே இவ்வளவு காரியம்‌ நடக்கிறதா! இனி அந்த மகான்‌ தங்களுக்கு சுவாதீனமாய்‌ விட்டால்‌ எவ்வளவு நடக்காது?சரி சரி, இனி மேல்‌ பேசுவதில்லை! குடி அரசு - உரையாடல்‌ - 09.05.1926 279 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சட்ட கோர்ட்‌ பத்திராதிபருக்கம்‌ கழுயானவனுக்கும்‌ சம்பாஷணை குடியானவன்‌: அய்யா, பத்திராதிபரே! சில வக்கீல்கள்‌ இரண்டு கக்ஷியிலும்‌ பீஸ்‌ வாங்கு கிறார்களாமே, இது வாஸ்தவமா? பத்திராதிபர்‌ : ஏன்‌ ? அதனால்‌ என்ன தப்பிதம்‌. ஒரு கக்ஷியில்‌ பீஸ்‌ வாங்கும்போது இரண்டு கக்ஷியில்‌ வாங்கினாலென்ன? மூன்று கக்ஷியில்‌ வாங்குகிற வக்கீல்கள்‌ கூட இருக்கிறார்கள்‌. அதனால்‌ என்ன தப்பு? குடியானவன்‌: மூன்று கக்ஷியென்றால்‌ என்ன? எனக்கு தெரியவில்லையே. பத்திராதிபர்‌: இது தெரியாதா? வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகிய மூன்று கட்சி. குடியானவன்‌: சாட்சி எதற்காகக்‌ கொடுப்பார்‌? பத்திராதிபர்‌: சாட்சி திருடி இருப்பார்‌, ஜெயிலுக்குப்‌ போயிருப்பார்‌, கடன்காரராயிருப்பார்‌, பொய்‌ சாட்சி சொல்லியிருப்பார்‌, அதிகாரிகளுக்கு லஞ்சம்‌ வாங்கிக்‌ கொடுத்திருப்பார்‌, இந்த வக்கீலைப்பற்றி ஏதாவது பேசி யிருப்பார்‌. இவைகளையெல்லாம்‌ கட்சிக்காரர்கள்‌ பேச்சைக்‌ கேட்டுக்‌ கொண்டு பப்ளிக்‌ கோர்ட்டில்‌ அவமானப்படுத்தாமல்‌ இருப்பதற்காக சாட்சி களும்‌ வக்கீலுக்குப்‌ பணம்‌ கொடுப்பதுண்டு. குடியானவன்‌: இப்படி இரண்டு மூன்று பேரிடம்‌ பணம்‌ வாங்கினால்‌ அது யோக்கியமாகுமா? பத்திராதிபர்‌: ஏன்‌? ஒருவனிடம்‌ வாங்குவது மாத்திரம்‌ எப்படி யோக்கியமாகும்‌? அந்தப்‌ பணமும்‌ அக்கிரமமாகத்தானே வாங்குகிறார்கள்‌. ஏதோ பொய்யோ, புளுகோ, பித்தலாட்டமோ, தந்திரமோ செய்து அவனுக்கு கேஸ்‌ ஜெயித்து கொடுப்பதாகத்தானே வாங்குகிறார்கள்‌. இது எப்படி யோக்கியமாகும்‌? அதிகாரிகள்‌ லஞ்சம்‌ வாங்கிக்‌ கொண்டு ஞாய விரோத மாய்த்‌ தீர்ப்புச்‌ செய்வதற்கும்‌, வக்கீல்கள்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டு ஞாய விரோதமாய்த்‌ தீர்ப்புப்‌ பெற பாடுபடுவதற்கும்‌ வித்தியாசமிருப்பதாக எனக்குத்‌ தோன்றவில்லை. வக்கீல்‌ ஞாயப்படி பேசுவானேயானால்‌ அது குடி அரசு - 1926 N 280 ஒழுங்குதான்‌. அப்படியானால்‌ வக்கீலே வேண்டியதில்லை. உள்ளதை கட்சிக்காரனே அதிகாரியிடம்‌ சொன்னால்‌ நியாயப்படி நடந்து விடுகிறது. வக்கீல்‌ எதற்கு? ஒரு சமயம்‌ சட்டம்‌ எடுத்துக்‌ காட்டுவதற்கு என்று சொல்ல லாம்‌. சட்டம்‌ இரண்டு கட்சிக்கும்தான்‌ அநுகூலமாயிருக்கிறது. வாதி வக்கீல்‌ ஒரு மதராஸ்‌ சட்ட புஸ்தகம்‌ காட்டினால்‌ பிரதிவாதி வக்கீலும்‌ ஒரு கல்கத்தா சட்ட புஸ்தகம்‌ காட்டுவார்‌. அப்பீலுக்குப்‌ போனால்‌ அங்கே பம்பாய்‌, அலஹா பாத்‌ அல்லது வேறு சட்ட புஸ்தகங்கள்‌. ஐகோர்ட்டுக்கு போனால்‌ அங்கே சீமைப்‌ புஸ்தகங்கள்‌ காட்டப்படும்‌. இதனால்‌ வக்கீலுக்குப்‌ பணம்‌ கொடுப்‌ பதில்‌ லாபமென்ன? சில ஊர்களில்‌ ஒருவருக்கொருவர்‌ சண்டை வந்து விட்டால்‌ ஒருவன்‌ சில போக்கிரிகளுக்கு கள்ளு வாங்கிக்‌ கொடுத்து மற்ற வனை அடிக்கும்படி சொல்லுவதையும்‌, அடிபட்டவன்‌ அதே போக்கிரிக ளுக்கு சாராயம்‌ வாங்கிக்‌ கொடுத்து முதலில்‌ அடிக்கச்‌ சொன்னவனையே திருப்பி அடிக்கச்‌ சொல்லுவதையும்‌ நாம்‌ பார்க்கிறோமல்லவா? அதுபோல்‌ தான்‌ வக்கீல்கள்‌ வைப்பதும்‌. நான்‌ பணம்‌ கொடுத்தால்‌ எனக்கு; நீ பணம்‌ கொடுத்தால்‌ உனக்கு: இரண்டு பேரும்‌ பணம்‌ கொடுத்தால்‌ இரண்டு பேருக்கும்‌. இதில்‌ தப்பு என்ன? குடியானவன்‌: அப்படியானால்‌ வக்கீல்கள்‌ இரண்டு கட்சியிலும்‌ பணம்‌ வாங்கக்‌ கூடாது என்று சர்க்கார்‌ சட்டமிருக்கிறதே, அதென்ன? பத்திராதிபர்‌: சர்க்கார்‌ சட்டத்தைப்‌ பற்றி கவலைப்படாதே. அதே சட்டத்தில்‌ வக்கீல்கள்‌ தங்கள்‌ மனச்சாட்சிக்கு விரோதமாய்‌ எதுவும்‌ பேசலாம்‌ என்றிருக்கிறதே பார்த்தாயா? அல்லாமலும்‌ இந்த கூட்டத்தில்‌ இருந்துதானே சர்க்காரார்‌ முனி சீப்பு முதல்‌ ஐகோர்ட்டு ஜட்ஜு வரையிலும்‌ பொருக்கி எடுக்‌ கிறார்கள்‌ என்பதும்‌ அவர்கள்‌ தான்‌ இந்த சட்டத்தை நிறைவேற்றுகிறவர்கள்‌ என்பதும்‌ உனக்குத்‌ தெரியாதா? குடியானவன்‌: அப்படியானால்‌ எப்படித்தான்‌ நியாயம்‌ கண்டு பிடிக்கிறது? பத்திராதிபர்‌: நியாயம்‌ கண்டுபிடிக்க வேண்டும்‌ என்கிற கவலை யாருக்கு இருக்கிறது என்று நினைக்கிறாய்‌. வக்கீலுக்கும்‌ இல்லை; அதி காரிக்கும்‌ இல்லை; சர்க்காருக்கும்‌ இல்லை. சர்க்காரார்‌ வக்கீலைக்‌ கொண்டு சட்டம்‌ செய்திருக்கிறார்கள்‌. அந்த வக்கீல்களைக்‌ கொண்டுதான்‌ நிறைவேற்று கிறார்கள்‌. அந்த சட்டபடி எல்லோரும்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. உதாரண மாக, ஒருவன்‌ மற்றவனுக்குப்‌ பணம்‌ கொடுக்க வேண்டும்‌; கோர்ட்டில்‌ பிராது செய்தால்‌ கொடுத்தவன்‌ கொடுத்ததாய்ச்‌ சொல்லுகிறான்‌. வாங்கினவன்‌ வாங்கினதாய்‌ ஒப்புக்கொள்ளுகிறான்‌. ஆனால்‌ சட்டப்படி கொடுக்க வேண்‌ டிய தில்லையென்றாய்விடுகிறது. அதுபோலவே ஒருவன்‌ மற்றொருவனைக்‌ கொன்று விடுகிறான்‌. செத்துப்‌ போனதும்‌ நிஜம்‌, கொன்றதும்‌ நிஜம்‌. ஆனால்‌ அவன்‌ சட்டப்படி சாகவில்லை, சட்டபடி ௬ுஜுவாகவில்லை, ௬ுஜுவானாலும்‌ சட்டப்படி கொலை அல்ல என்று தீர்மானமாகி விடுகிறது. இவைகளைப்‌ 281 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பார்த்ததில்லையா? கோர்ட்டு என்றால்‌ (லா கோர்ட்டு! சட்டகோர்ட்டு தானே? சட்டப்படி உண்டா? இல்லையா ? என்று தானே பார்க்கிறார்கள்‌. நியாயக்‌ கோர்ட்டு அல்லவே! நியாயப்படி செய்தாரா இல்லையா? என்று பார்ப்ப தில்லையே.ஆதலால்‌ வக்கீல்களைப்‌ பற்றியும்‌ குற்றம்‌ சொல்லாதே; அதிகாரி களைப்‌ பற்றியும்‌ குற்றம்‌ சொல்லாதே; சர்க்காரைப்‌ பற்றியும்‌ குற்றம்‌ சொல்‌ லாதே; இதற்கெல்லாம்‌ ஆதாரமாயிருக்கிற அய்யமாரைப்‌ பற்றி வேண்டு மானால்‌ சொல்லிக்‌ கொள்‌. இல்லாவிட்டால்‌, இதெல்லாம்‌ தெரிந்தும்‌ மறுபடி யும்‌ உனக்குப்‌ புத்தி வருவதில்லையே.ஆதலால்‌ உன்னையே வேண்டு மானால்‌ சொல்லிக்கொள்‌. குடியானவன்‌: அப்படியானால்‌ கோர்ட்டுக்குப்‌ போவதே சுத்தப்‌ பயித்தியக்காரத்தனம்தான்‌ என்று படுகிறது. கடன்‌ வாங்கினவனே தின்றாலும்‌. பரவாயில்லை. அவனிடத்தில்‌ வசூல்‌ செய்வதாய்‌ நினைத்துக்‌ கொண்டு அநியாயமாய்‌ வக்கீலுக்கும்‌, சர்க்காருக்கும்‌, உத்தியோகஸ்தர்களுக்கும்‌ அழுவது புத்தியில்லாத்தனம்தான்‌ என்றும்‌ படுகிறது. இதற்கு ஏதாவது வழியில்லையா? பத்திராதிபர்‌: வழியென்ன? வக்கீல்கள்‌ ஒழிய வேண்டும்‌. அவர்கள்‌. ஒழிந்தால்‌ முதலாவது சர்க்காரார்‌ யோக்கியமாய்‌ நடப்பார்கள்‌; ஜனங்களும்‌. யோக்கியமாய்‌ நடப்பார்கள்‌; நாட்டில்‌ அக்கிரமம்‌ அதிகமாய்‌ நடக்காது. குடியானவன்‌: அப்படியானால்‌ பிறகு யேன்‌ சர்க்காரார்‌ வருஷத்துக்கு வருஷம்‌ வக்கீல்களையும்‌ கோர்ட்டுகளையும்‌ அதிகப்படுத்திக்கொண்டே வருகிறார்கள்‌? பத்திராதிபர்‌: நமது நாட்டில்‌ பார்ப்பனர்‌ என்று ஒரு ஜாதியிருக்கிறது. அதுதான்‌ நமது அய்யர்மார்கள்‌. அவர்களுக்கு உடலில்‌ பலம்‌ இல்லை: பாடு பட்டுத்‌ தின்னக்‌ கையாலாகாது; தலைமுறை தலைமுறையாய்‌ ஊரார்‌ முதலைத்‌ தின்றே வழக்கம்‌; அதுவும்‌ நகத்தில்‌ அழுக்குப்‌ படாமல்‌ அதிகாரம்‌ பண்ணியே தின்னுகிற பேர்வழிகள்‌. அத்துடன்‌ அவர்களுக்கு, கொஞ்சம்‌ தந்திரமும்‌ தெரியும்‌. அதற்கேற்றாற்போல்‌ நமக்கு வாய்த்த சர்க்காரோ சொல்ல வேண்டியதில்லை. இவர்கள்‌ அய்யமாரை விட ஒன்னாம்‌ நெம்பர்‌ பேர்‌. வழிகள்‌.அய்யமாராவது இங்கேயே தின்று கழித்து விடுகிறார்கள்‌. சர்க்காரோ மூட்டை கட்டிக்‌ கொண்டு போகிற ஆசாமிகள்‌. இவர்கள்‌ இரண்டு பேருக்கும்‌ அநுகூலமான ஒரு பிழைப்பு வேண்டுமானால்‌ கூட்டுக்‌ கொள்ளை அடிப்பது போல்‌ இருக்க வேண்டும்‌. ஆதலால்‌ அதற்கேற்றது இந்த வக்கீல்‌ பிழைப்பும்‌ கோர்ட்டுகளுந்தான்‌.அதனால்தான்‌ சர்க்காரும்‌ இதை வளர்த்துக்கொண்டே போகிறார்கள்‌. குடியானவன்‌: சர்க்காரும்‌ பார்ப்பாரும்‌ பிழைக்க நமது ஜனங்கள்‌ இவ்வளவு கஷ்டப்படுகிறதா? இது என்ன சர்க்கார்‌? இது என்ன பார்ப்பார்‌? இவர்கள்‌ பிழைக்க நாம்‌ கெடுகிறதா? இத்தனை அநியாயமா? குடி அரசு - 1926 N 282 பத்திராதிபர்‌: இதுதானா பெரிய அநியாயம்‌; கள்ளுக்கடை, சாராயக்‌ கடையைப்‌ பார்‌. கள்ளு உற்பத்தி செய்வது நாம்‌, விற்பது நாம்‌, குடிப்பது நாம்‌, குடி கெடுவது நாம்‌, இதனால்‌ பிழைப்பது வக்கீல்‌ என்கிற அய்யமாரும்‌, சர்க்காரும்‌, அவர்கள்‌ உத்தியோகஸ்தர்களும்‌ தானே. இவ்வளவு பணமும்‌ இவர்கள்‌ தானே பங்குபோட்டுக்‌ கொள்ளுகிறார்கள்‌. குடியானவன்‌: இதற்கு என்னதான்‌ செய்வது? பத்திராதிபர்‌: என்ன செய்தாலும்‌ முடியாது. மகாத்மா காந்தி சொன்னபடி செய்வதுதான்‌ இதற்கு மருந்து. குடியானவன்‌ஃமகாத்மா காந்தி இப்பொழுது வர வர என்னமோ வழ வழ என்று போய்‌ விட்டார்‌ என்று சொல்லிக்‌ கொள்ளுகிறார்களே!. பத்திராதிபர்‌: இப்பொழுது வழவழ என்று இருந்தால்‌ உனக்கென்ன? முன்‌ அவர்‌ சொன்னதும்‌ எழுதினதும்‌ அப்படியேதான்‌ இருக்கிறது. இப்பொ முது அதில்‌ ஒன்றும்‌ எவருக்கும்‌ சந்தேகமில்லை. ஆதலால்‌ அந்தப்படி குடியானவன்‌: அதெல்லாம்‌ உங்களைப்‌ போலொத்தவர்கள்‌ தான்‌ நடத்தி வைக்க வேண்டும்‌. நாங்களாக நடப்பதென்றால்‌ ஆகக்‌ கூடிய காரியமல்ல. பத்திராதிபர்‌: ஆகட்டும்‌. இப்பொழுது என்னமோ இன்னும்‌ 6, 7 மாதத்திற்கு நாட்டில்‌ அயோக்கியர்களுக்கு கொஞ்சம்‌ செல்வாக்கு அதிகமாக இருக்கும்‌. பின்னால்‌ எல்லாம்‌ சரிபட்டுப்‌ போகும்‌. பிறகு நீங்களாகவே நடந்து கொள்ளுவீர்கள்‌. சரி போய்‌ வாருங்கள்‌. குடி அரசு - உரையாடல்‌ - 09.05.1926 283 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அய்மாங்கார்‌ தர்மம்‌ -சித்திரபுத்திரன்‌ கோவை ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்கார்‌ தர்மத்தின்‌ இரகசியம்‌ *குடி அரசில்‌” வெளியானதினால்‌ ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ முதல்‌ பல பிராமணர்‌: களுக்கும்‌, அவரது தர்மத்தில்‌ பங்கு கொண்ட - கொள்ள இருக்கும்‌ சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள்‌, பிரசாரகர்கள்‌ என்போருக்கும்‌ ஆத்திரங்‌ கிளம்பிவிட்டது. தர்மத்தைப்‌ பற்றி நமக்கு பொறாமையா? யார்‌ தர்மம்‌ செய்வ தாயிருந்தாலும்‌, அது என்ன தர்மமாயிருந்தாலும்‌, பொதுவாக உண்மைத்‌ தர்மம்‌ என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும்‌ அதை வெறுக்க மாட்டார்கள்‌. ஆனால்‌ பொது ஜனங்களை ஏமாற்றச்‌ செய்யும்‌ ஒரு சூழ்ச்சிக்கு தர்மம்‌ என்று பெயர்‌ கொடுப்பதனால்‌ அறிவுள்ளவன்‌ - யோக்கியன்‌ பொது ஜனங்கள்‌ ஏமாறும்படி பார்த்துக்‌ கொண்டிருக்கவே மாட்டான்‌. அப்படிப்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பவன்‌ கோழையும்‌ சுயநலவாதியுமே ஆவான்‌. கோவை ஜில்லாவில்‌ உண்மையான தர்மம்‌ செய்த பிரபுக்களில்லா மலில்லை. உதாரணமாக கோவைக்கடுத்த பீளமேடு என்னும்‌ ஊரில்‌ ஸ்ரீமான்‌ கள்‌ பி.எஸ்‌. கோவிந்தசாமி நாயுடு அன்‌ சன்ஸ்‌ என்கிற பிரபல நாயுடு கன வான்கள்‌ குடும்பம்‌ இருந்து வருகிறது. அவர்கள்‌ தக்க செல்வமுள்ளவர்கள்‌. 20 லட்ச ரூபாய்‌ மூலதனமுள்ள ஒரு பெரிய நூல்‌ மில்லை நிர்வகித்து வருகிறார்கள்‌. இவர்கள்‌ பொதுஜன உபகாரத்தில்‌ இறங்கினார்கள்‌. 30, 40 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ ஒரு பெரிய பள்ளிக்கூடம்‌ கட்டினார்கள்‌. அதற்கு பதினாயிரக்கணக்கான பூமி விட்டார்கள்‌. மாணவர்களுக்கு விடுதி(ஹாஸ்டல்‌! ஏற்படுத்தினார்கள்‌. இளைஞர்கள்‌ விவசாயமும்‌ கைத்தொழிலும்‌ கற்க ஒரு தொழிற்சாலை யேற்பாடு செய்தார்கள்‌. இதற்காக தங்கள்‌ குடும்ப சொத்தில்‌ ஒரு பாகத்தையும்‌ தங்களுக்கு மில்லில்‌ வரும்‌ வருஷவாரி வரும்படியில்‌ ஒரு பாகத்தையும்‌ இத்தர்மத்திற்கு எழுதி வைத்தார்கள்‌. இப்பொழுதும்‌ கோய முத்தூருக்கு யார்‌ போனாலும்‌ இவற்றைத்‌ தெரிந்து கொள்ளலாம்‌. இதில்‌ இரகசியம்‌ ஒன்றுமில்லை. இந்த தர்மம்‌ தாலூகா, ஜில்லா போர்டு எலெக்‌ஷ னுக்காகவோ சட்டசபை எலெக்ஷனுக்காகவோ அவர்கள்‌ செய்ய வில்லை. இத்தர்மம்‌ செய்ததைக்‌ கூலி கொடுத்து ஆள்‌ வைத்து விளம்பரப்‌ படுத்தவில்லை. அவர்களது தர்மமும்‌ தானாகவே வருஷக்கணக்காய்‌ நாளுக்குநாள்‌ விருத்தியாகிக்‌ கொண்டே வருகிறது. சமிபத்தில்‌ சென்னிமலை குடி அரசு - 1926 N 284 வேட்டுவபாளையம்‌ பூசாரி என்கிற ஒரு பக்தர்பதினாயிரக்கணக்கான ரூபாய்‌ பெறுமான சொத்தை தர்ம சாசனம்‌ எழுதி அந்நியர்‌ கையிலேயே ஒப்புவித்து விட்டார்‌.அதற்கு ஒரு விளம்பரமும்‌ அவர்‌ செய்யவேயில்லை. இவற்றைவிட வெகு சமீபத்திலுள்ள கொடுமுடியில்‌ ஸ்ரீமான்‌ பெரியண்ணஞ்‌ செட்டியார்‌ என்கிற ஒரு கனவான்‌ சில நாட்களுக்கு முன்‌ 15,000 ரூபாய்‌ பெறுமானமுள்ள பூமியும்‌,8000 ரூபாய்க்கு கட்டடமும்‌ கட்டிக்‌ கொடுத்து, இப்போது மறுபடியும்‌ 50,000 ரூபாய்க்கு மேல்‌ பெறும்படியான சொத்துக்களை கொடுமுடி சங்கர வித்தியாசாலை என்கிற பள்ளிக்கூடத்திற்கு செட்டில்மெண்டு மூலம்‌ எழுதி வைத்து சுவாதீனமும்‌ செய்து விட்டார்‌. மேற்கொண்டு ரொக்கப்‌ பணமாக 2.000 ரூபாய்‌ ஸ்கூல்‌ பண்டுக்குக்‌ கொடுத்து மிருக்கிறார்‌. இவர்‌ எவ்வித திறப்புவிழாவும்‌ அங்குரார்ப்பண விழாவும்‌ செய்யவில்லை; விளம்பரமும்‌ செய்யவில்லை. பத்திரிகைக்காரருக்குப்‌ பணங்கொடுத்துப்‌ போடச்‌ சொல்லவுமில்லை.மகாத்மா காந்தி, பண்டித நேரு, ஸ்ரீமதி சரோஜனி முதலிய பெரியார்களுக்குத்‌ தனது தர்மப்‌ பெருமையை எழுதவுமில்லை. இப்படியெல்லாமிருக்க, கேவலம்‌, ஒரு சட்டசபை ஓட்டுப்‌ பெற - எதிர்‌ அபேக்ஷ்கரைத்‌ தோற்கடிக்க - இவ்வளவு தந்திரங்களும்‌ மந்திரங்களும்‌ செய்தால்‌ செய்தவர்‌ மிகப்‌ பெரியவராய்ப்‌ போய்‌ விடுகிறார்‌. அதை வெளியில்‌ எடுத்துச்‌ சொல்லுபவர்‌ அயோக்கியர்களாய்ப்‌ போய்விடு கிறார்கள்‌ என்றால்‌ மக்கள்‌ நிலையை என்ன வென்று சொல்லுவது. ஸ்ரீமான்‌ ஐயங்காரைப்போல்‌ தைரியமாய்‌ தர்ம விளம்பரம்‌ செய்ய எவராவது பின்‌ வாங்கினால்‌ அவர்கள்‌ தோல்வியுற வேண்டியதா? இந்த தைரியத்திற்காக மாத்திரம்‌ ஐயங்கார்‌ வெற்றியுறவேண்டியதா? சட்டசபை மெம்பராவதற்கு இந்த தைரியம்தானா யோக்கியதை? ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌. இவ்வளவு விளம்பரம்‌ ஏன்‌ செய்ய வேண்டும்‌ இவரும்‌ இரண்டு தடவை- ஆறு வருஷகாலம்‌ - சட்டசபைப்‌ பதவியை அடைந்து அனுபவித்தாய்‌ விட்டது: இனி வேறொருவர்தான்‌ அனுபவிக்கட்டுமே; யார்‌ வீட்டு சொத்து. இந்த ஜில்லாவில்‌ 60,000 ஓட்டர்கள்‌ இருந்தால்‌ சுமார்‌ 3,000 ஓட்டர்கள்கூட பிராமணர்கள்‌ இருக்க மாட்டார்கள்‌. 57,000 பிராமணரல்லாத ஓட்டர்கள்‌' இருக்கும்‌ ஒரு ஸ்தானத்திற்கு 3,000 ஓட்டுள்ள பிராமணர்‌ எத்தனை தடவை அந்தப்‌ பதவியை அனுபவிப்பது? ஆறு வருஷம்‌ பார்த்தது போதுமென்று இவர்‌ ஏன்‌ கெளரவமாய்‌ விலகிவிடக்‌ கூடாது? கோயமுத்தூர்‌ ஜில்லாவில்‌ சட்டசபைப்‌ பதவியை அனுபவிக்க இவரைவிட வேறு நபர்கள்‌ இல்லையா? கேவலம்‌ இந்தப்‌ பதவி பெற இவ்வளவு தந்திரம்‌ செய்து 57,000 பேரையும்‌ ஏமாற்றி சட்டசபைக்குப்‌ போகிறவர்‌, போனபின்‌ இவரால்‌ ஜனங்கள்‌ என்ன பலன்‌ அடைய முடியும்‌? இம்மாதிரி பேராசையுள்ளவர்கள்‌ எவ்வளவு காலத்‌ திற்கு ஜனங்களை ஏமாற்ற முடியும்‌. ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ விளம்பரமும்‌ வெற்றி யும்‌ ஏதாவது சாமர்த்தியத்தையும்‌, சக்தியையும்‌, தேச பக்தியையும்‌, நாணயத்‌ தையும்‌, தகுதியையும்‌ பொறுத்திருக்கிறதா? ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ பணத்தையும்‌, 285 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தந்திரத்தையும்‌, விளம்பரத்தையும்‌ பிராமணரல்லாதார்‌ சமூகத்‌ துரோகத்‌ தையும்‌ அவர்களது முட்டாள்தனத்தையும்‌ தானே அடிப்படையாகக்‌ கொண்டிருக்கிறது. இதை உத்தேசித்துத்தானே அனுபவசாலிகள்‌, அரசியலில்‌ பணத்‌ திமிரும்‌, தந்திரமும்‌, சூழ்ச்சி விளம்பரமும்‌, சமூகத்‌ துரோகமும்‌, அறியாமையால்‌ நேரும்‌ நஷ்டமும்‌, ஏற்படாமல்‌ இருக்க வேண்டுமானால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஏற்பட வேண்டும்‌ என்று கதறுகிறார்கள்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஏற்பட்டிருந்தால்‌ ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ 6 வருஷம்‌ அனுபவித்துவிட்டு இன்னும்‌ 3 வருஷத்திற்கு இவ்வளவு விளம்பரம்‌ செய்வாரா? முதலாவது, ஒரு வருஷத்திற்காவது இவருக்கு முறை வருமா? 30 ஆயிரம்‌ அல்லது 50 ஆயிரம்‌ செலவு செய்தாலும்‌ கிடைத்து விடுமா? 2 லக்ஷமல்ல, 10 லக்ஷம்‌ என்று தர்ம விளம்பரம்‌ செய்தாலும்‌ ஆகி விடுமா? கோயமுத்தூர்‌ ஜில்லாவானது தமிழ்நாட்டில்‌ ஒரு குறிப்பிட்ட ஜில்லா. ஸ்ரீமான்‌ ஐயங்காரைப்‌ போல்‌ எத்தனையோ பணக்காரரும்‌, பட்டக்காரரும்‌, ஜமின்தாரரும்‌, சக்தியுள்ளவர்களும்‌, அவரைவிட தகுதியும்‌ உரிமை யுமுள்ளவர்களுமிருக்க ஐயங்காரே அடிக்கடி வரவேண்டுமென்பது “வேதக்‌ கட்டளையா, சாஸ்திர சம்மதமா? மனுதர்மமா?” இந்த ஒரு சிறு பதவியே பிராமணரல்லாதார்‌ 100-க்கு 97 பேர்‌ உள்ள சமூகத்தை இவ்வளவு மோசம்‌ செய்யுமானால்‌ இன்னும்‌ பெரிய பதவிகள்‌ - சுயராஜ்யப்‌ பரிபாலனம்‌ போன்ற ராஜா மந்திரிப்‌ பதவிகள்‌ - இன்னும்‌ எவ்வளவு மோசத்தை விளைவிக்காது? தவிரவும்‌ இந்த நியாயமான சங்கதியை நாம்‌ எழுதும்‌ போதே ஸ்ரீமான்‌ ஐயங்காருக்கும்‌ அவரது சிஷ்யக்‌ கோடிகளுக்கும்‌ சிப்பந்தி கோடிகளுக்கும்‌ இவ்வளவு ஆத்திரமும்‌ கோபமும்‌ மனவருத்தமும்‌ வருமானால்‌, தமிழ்‌ நாட்டிற்கே ஏன்‌ - இந்தியா தேசத்திற்கே ராகு கேதுகள்‌ போல்‌ இருக்கும்‌ பிராமணப்‌ பத்திரிகைகளும்‌, பிராமணப்‌ பிரசாரகர்களும்‌, அவர்களால்‌ ஆட்கொள்ளப்பட்ட பிராமணரல்லாத பிரசாரகர்களும்‌ உண்மைக்கு விரோத மாய்‌ இரவும்‌ பகலும்‌ பிராமணரல்லாதார்‌ மீது பொய்யும்‌, பித்தலாட்டங்களும்‌ சொல்லி விஷமப்‌ பிரசாரம்‌ செய்கின்றார்களே, அதனால்‌ பிராமணரல்‌ லாதார்களுக்கு எவ்வளவு சங்கடமும்‌, ஆத்திரமும்‌, கோபமும்‌ வராது? “குடி அரசு” போன்ற பத்திரிகையாவது சுமார்‌ 10 பிராமண சந்தாதாரர்‌ களைக்கூட உடைத்தானதாயிருக்காது. அதிலும்‌ 7 பேர்‌ கெளரவ சந்தாதாரர்‌. களாயிருப்பார்கள்‌. “சுயராஜ்யா”, “சுதேசமித்திரன்‌” போன்ற பத்திரிகைகள்‌ பிராமணரல்லாதார்‌ பணத்திலேயே நடக்கிறது. பிராமணரல்லாதார்‌ தங்கள்‌ பணத்தையே கொடுத்து தங்கள்‌ சமூகத்தையே பாழாக்குவதற்கு உடந்தையா யிருப்பது போல்‌ அவைகளுக்கு சந்தாதாரர்களாயிருக்கிறார்கள்‌. இதைக்‌ கேட்பவர்களுக்கு எவ்வளவு மனவேதனை ஏற்படும்‌. ஒவ்வொரு நாளும்‌ இந்தப்‌ பத்திரிகைகளில்‌ பிராமணரல்லாதார்களைப்பற்றி எழுதும்‌ பொய்யும்‌ புளுகும்‌ கணக்கு வழக்கில்லை. அதைக்‌ கவனிக்கவோ, திருத்தவோ, கோபப்‌ படவோ, ஆத்திரப்படவோ ஆளில்லை. “குடி அரசு” உண்மையை- தன்‌ மனதிற்கு உண்மையென்று பட்டதை எழுதினால்‌ இதற்கு - இவ்வளவு அடா துடியா? குடி அரசு - 1926 0) 286 ஸ்ரீமான்‌ ஐயங்காருக்குத்தான்‌ பணமிருக்கிறது; பத்திரிகைகள்‌ இருக்கின்றன: பணம்‌ வாங்கிக்‌ கொண்டு பேசவும்‌ எழுதவும்‌ ஆளுகள்‌ இருக்கிறார்கள்‌. இதனால்‌ எவ்வளவு அக்கிரமம்‌ செய்தாலும்‌ தாராளமாய்ப்‌ பெரிய மனிதராய்‌ விடுகிறார்‌. இவைகள்‌ இல்லாதவர்கள்‌ கதி என்ன ஆவது? எவ்வளவு யோக்கியர்களாயிருந்தாலும்‌, தேசபக்தர்களாயிருந்தாலும்‌ அவர்கள்‌ யோக்கியதை வெளிவருவதற்கில்லை. வெளிவராவிட்டாலும்‌ அவசியமில்லை; அவர்களுடைய தொண்டு தேசத்திற்குப்‌ பிரயோஜனமில்‌ லாததோடு அயோக்கியர்கள்‌ செய்கையும்‌ அயோக்கியத்தனமும்‌ உலகத்தில்‌ மதிக்கப்பட்டு மலிந்து போகிறதே என்பதுதான்‌ நமது உண்மையான சங்கடம்‌. அல்லாமலும்‌ தென்னாட்டில்‌ தென்னாட்டாரின்‌ பிரதிநிதிகள்‌ ஸ்ரீமான்கள்‌. சென்னை ஏ ரெங்கசாமி ஐயங்கார்‌, எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌, எஸ்‌.சத்தியமூர்த்தி ஐயர்‌, எம்‌.கே.ஆச்சாரியார்‌, கோவை சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார்‌, கும்ப கோணம்‌ சக்கிரவர்த்தி ஐயங்கார்‌ ஆகிய இவர்கள்தானா? இவர்களைவிட யோக்கியர்களும்‌ தேச பக்தர்களும்‌ வேறு எவரும்‌ நமது நாட்டில்‌ இல்லையா? இவர்களிடம்‌ பணம்‌ வாங்கிக்‌ கொண்டு பேசுகிறவர்களும்‌ எழுதுகிறவர்‌. களுந்தானா “தேசத்‌ தொண்டர்‌”, “தேச பக்தர்‌”. இவர்களுக்கு எப்படி இந்தப்‌ பதவி வந்தது? பணமும்‌ பத்திரிகையும்‌ தங்கள்‌ கைவசமிருப்பதோடு, யோக்கி யமற்ற வழியில்‌ செலவிடுவதும்‌ எழுதுவதுமான குணத்தினால்தானா அல்லவா? தமிழ்நாட்டின்‌ சார்பாக சபர்மதி ராஜி ஒப்பந்தத்திற்குப்‌ போயிருப்பவர்‌. கள்‌ எத்தனை பேர்‌? ஸ்ரீமான்கள்‌ சீனிவாசய்யங்கார்‌, ரெங்கசாமி ஐயங்கார்‌, சத்தியமூர்த்தி ஐயர்‌ ஆகிய இவர்கள்‌ செய்துவரும்‌ ராஜியை ஒப்புக்‌ கொள்ள வாவது இவர்களை யோக்கியர்கள்‌ என்று சொல்லவாவது தமிழ்‌ நாட்டில்‌ எத்தனை பேர்‌ இருக்கிறார்கள்‌. இவர்களைத்‌ தலைவர்கள்‌ என்று சொல்லும்‌ நமது ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியாரையே சத்தியமாய்க்‌ கேட்ப்‌ போம்‌. இவர்கள்‌ தலைவர்களா? இவர்களை யோக்கியர்கள்‌ என்று அவர்‌. கருதுகிறாரா? இவர்கள்‌ சொற்படி நடக்க தயாராயிருக்கிறாரா? ஒன்றிற்கு மில்லை. இப்படியிருக்க இவர்கள்‌ எப்படித்‌ தலைவர்கள்‌ ஆகிறார்கள்‌? பணமும்‌ ஆளும்‌ பத்திரிகையும்‌ தான்‌ காரணம்‌. அநேக யோக்கியர்களும்‌ உண்மை தேசபக்தர்களும்‌ அவர்களது இன்றியமையாத தொண்டும்‌ தேசத்திற்கு உபயோகப்படாமல்‌ ஏன்‌ மறைந்து கிடக்கிறது. பணமும்‌ ஆளும்‌ பத்திரிகையும்‌ இல்லாததால்தான்‌. ஆதலால்‌ பாமர ஜனங்கள்‌ ஓட்டர்கள்‌ இவ்விளம்பரங்களை நம்பி ஏமாறாமலும்‌ அநாவசியமாய்‌ அந்நியரை வைகி றார்கள்‌ என்று நினைத்து நம்மீது அவசரப்பட்டு ஆத்திரப்படாமலும்‌ உண்மையை அறியும்படி வேண்டுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 09.05.1926. 287 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சபர்மதி prefular மூறிஷ சுயராஜ்யக்‌ கட்சியாருக்கும்‌ பரஸ்பர ஒத்துழைப்பாளர்களுக்கும்‌ வெளிப்படையாய்‌ உள்ள வித்தியாசமெல்லாம்‌ கவர்ன்மெண்டார்‌ இணங்கி வந்தால்‌ 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும்‌, கவர்ன்மெண்டார்‌ எவ்வளவு இணங்கி வருகிறார்களோ அவ்வளவுக்குத்‌ தகுந்தபடி 1000, 5,000 சம்பளமுள்ள உத்தி யோகங்களை ஏற்றுக்‌ கொண்டு அதற்குத்‌ தகுந்தபடி நடந்துக்‌ கொள்வ தென்பது பின்னவருடையதுமான வெளிப்படை கொள்கைகளாகும்‌. இந்தக்‌ கொள்கைக்கும்‌ மிதவாதம்‌, ஜஸ்டீஸ்‌, பெசண்டம்மையார்‌ ஆகியோர்களு டைய கட்சிக்‌ கொள்கைக்கும்‌ யாதொரு விதமான வித்தியாசமும்‌ வெளிப்‌ படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக்‌ கட்சிக்கும்‌ மேற்‌ கண்ட மற்ற கட்சிகளுக்கும்‌ அந்தரங்கத்தில்‌ யாதொரு விதமான வித்தியாச முமில்லை. சுயராஜ்யக்‌ கட்சி “சாத்தமுதில்‌ மல அமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப்‌ போல்‌ வாறு” என்பது போல்‌ கவர்ன்மெண்டார்‌ இணங்கி வந்தால்‌ உத்தியோகம்‌ ஏற்றுக்‌ கொள்வதென்று சொல்லுவது, ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு தமிழ்நாட்டு ஐயங்கார்‌ கோஷ்டிகள்‌ செய்த சூழ்ச்சியே யல்லாமல்‌ வேறல்ல. ஏனென்றால்‌ அவர்கள்‌ தமிழ்நாட்டில்‌ ஜஸ்டீஸ்‌ கட்சி யாரைப்‌ போலவும்‌, மிதவாதக்‌ கட்சியாரைப்‌ போலவும்‌, தாங்களும்‌ உத்தி யோகம்‌ பெற்றுக்‌ கொள்ளுவதற்கு வந்துவிட்டோமென்று சொன்னால்‌ பாமர ஜனங்கள்‌ ஏமாற மாட்டார்கள்‌ என்று நினைத்து அதற்காக கண்டுபிடித்த தந்திரமாகும்‌. இந்த தந்திரக்காரரே சுயராஜ்யக்‌ கட்சியிலும்‌ காங்கிரசிலும்‌. ஆதிக்கம்‌ செலுத்துகிறவர்களானதினால்‌ அவைகளிலும்‌ தங்கள்‌ தந்திரங்‌ களை நிறைவேற்றிக்‌ கொண்டார்கள்‌. பம்பாய்க்காரரும்‌, மஹாராஷ்டிரக்கார ரும்‌ இவர்களைப்‌ போலவே உத்தியோக வேட்டைக்காரர்களானதினாலும்‌, அங்குள்ள பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு இவ்வளவு தந்திரம்‌ வேண்டிய தில்லையானதினாலும்‌, அவர்கள்‌ இவர்களுடைய தந்திரத்தை வெளிப்படுத்த முன்வந்தார்கள்‌. அவர்கள்‌ கட்சி வலுக்க ஆரம்பிக்கவே அவர்களை எதிர்த்துநிற்க யோக்கியதையில்லாத சுயராஜ்யக்‌ கட்சியார்‌, பம்பாய்‌- மராட்டா மாகாணக்காரர்களின்‌ காலுக்குள்‌ நுழைந்து அவர்களுடன்‌ ராஜி செய்து கொள்ள சபர்மதி ஆச்சிரமத்தின்‌ பெயரையும்‌ மகாத்மாவின்‌ பெயரையும்‌ உபயோகப்‌ படுத்திக்கொண்டு “புதுத்‌ திருடன்‌”, “பழய திருடன்‌” ஆகிய இருவரும்‌ இனிமேல்‌ திருடப்‌ போவதில்‌ ஒரே முறையைத்தான்‌ உபயோகப்‌ குடி அரசு - 1926 N 288 படுத்திக்‌ கொள்ள வேண்டுமே தவிர ஆளுக்கு ஒரு முறையை அனுசரித்து ஒருவருக்‌ கொருவர்‌ காட்டிக்‌ கொடுக்கலாகாது என்ற ராஜிக்கு வந்தார்கள்‌. இந்த ராஜியை மேற்கண்ட திருட்டில்‌ பங்குள்ளவர்களெல்லாம்‌ ஆனந்த மாய்ப்‌ பாராட்டினார்கள்‌. ஆனால்‌, தமிழ்நாட்டிலுள்ள பங்குக்காரர்களுக்கு இதற்கு முன்னமேயே மூக்கு அழுகிப்‌ போயிருந்த படியினால்‌ இந்த ராஜியைப்‌ பாராட்ட ஆரம்பித்தால்‌ மூக்கில்‌ புழு உண்டாகிவிடுமோவென்று அஞ்சி அந்த ராஜியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள்‌ போல்‌ பொய்ய முகை அழுதார்கள்‌. தமிழ்நாட்டுக்கு பெரிய சந்தோஷ சமாச்சாரம்‌ கொண்டுவருவது போல்‌ இந்த ராஜி சங்கதியைக்‌ கொண்டுவந்த ஐயங்கார்‌ கோஷ்டிக்குத்‌ தமிழ்‌ நாட்டுப்‌ பங்குக்காரர்களின்‌ அழுகை பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இவ்‌ “வெச்சரிக்கை”யைத்‌ தூக்கிக்‌ கொண்டு மறுபடியும்‌ ஆமதாபாத்துக்கு ஓடி னார்கள்‌. தலைவர்‌ பண்டித நேருவைப்‌ பிடித்து ஒரு கரணம்‌ போடச்‌ சொன்‌ னார்கள்‌. அவர்‌ அப்படியே ஒரு அந்தர்‌ அடித்தார்‌. இவ்வந்தரை ஜெயகர்‌. கெல்கர்‌ கூட்டத்தார்‌ மதிக்காமல்‌ அவரவர்‌ கையாலானதை அவரவர் பார்த்துக்‌ கொள்வதென்பதன்‌ முடிவின்‌ பேரில்‌ ராஜி முறிந்தது என்கிற பெயரோடு கலைந்து விட்டார்கள்‌. இந்த ராஜி முறிவுக்குப்‌ பண்டித நேரு ஒரு சமாதானம்‌ சொல்லுகிறார்‌. அது எதுபோலென்றால்‌, தேங்காய்‌ திருடுவதற்காக ஒரு திருடன்‌ தென்னை மரத்தின்மேல்‌ ஏறினான்‌; மரக்காரன்‌ கண்டு கொண்ட வுடன்‌ திருடன்‌ தானாகவே கீழே இறங்கி வந்தான்‌. மரக்காரன்‌ திருடனைப்‌ பார்த்து ஏன்‌ மரத்தின்‌ மேல்‌ ஏறினாய்‌ என்று கேட்டான்‌. திருடன்‌ கன்று குட்டிக்குப்‌ புல்லுப்‌ பிடுங்கப்‌ போனேன்‌ என்று சொன்னான்‌. மரக்காரன்‌ தென்னை மரத்தின்‌ மீது புல்‌ ஏதுவென்று கேட்டான்‌. திருடன்‌ அதனால்தான்‌ கீழே இறங்கி வந்து விட்டேன்‌ என்று சொன்னான்‌. அதைப்போல்‌ பண்டித நேரு என்கிற பிராமணர்‌ சமாதானமும்‌, தமிழ்நாட்டு ஐயங்கார்‌ என்கிற பிராமணர்‌ சமாதானமுமிருக்கிறது. பண்டித நேரு யோக்கியமான நிலைமை யில்‌ இந்த சமாதானம்‌ செய்து கொண்டிருப்பாரேயானால்‌ தனது சமாதானத்தை தன்னைப்‌ பின்பற்றுவோர்‌ ஒப்புக்கொள்ள மாட்டேன்‌ என்று சொன்னவு டனே தலைமைப்‌ பதவியிலிருந்து விலகியிருப்பார்‌. இதுதான்‌ சுயமரியா தைக்கு லக்ஷணம்‌. அதை விடுத்து “நான்‌ அப்படி நினைத்தேன்‌; இப்படி நினைத்தேன்‌; கன்றுக்குட்டிக்குப்‌ புல்லுப்‌ பிடுங்கப்‌ போனேன்‌; இல்லாததால்‌ திரும்பி வந்துவிட்டேன்‌” என்று சொல்லுவது சுயராஜ்யக்‌ கட்சியின்‌ யோக்கிய தையைப்‌ பற்றியும்‌ அது பிராமணருடைய கட்சியென்பதாகவும்‌, அது யோக்கி யமான கட்சி அல்ல வென்றும்‌ நாம்‌ இதுவரையிலும்‌ எழுதியும்‌ பேசியும்‌ வந்ததை வெட்ட வெளிச்சமாய்‌ மெய்ப்பிடித்துக்‌ காட்டி விட்டது என்றே திருப்தி அடைகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 09.05.1926 289 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஓத்தக்கா௬ச்‌ வட்முயார்‌ பிராமணத்‌ தந்திரத்தின்‌ தோல்வி பனகால்‌ ராஜா மந்திரியாயிருந்து மாதம்‌ ரூ. 4333- 5 - 4 சம்பளம்‌ வாங்குவதில்‌ பொறாமை கொண்ட சில பிராமணர்‌ பனகால்‌ ராஜா கட்சியிலி ருந்தே ஆசாபங்கமடைந்த ஸ்ரீமான்‌. ஓ. கந்தசாமி செட்டியார்‌ என்கிற ஒருவரைப்‌ பிடித்து பனகால்‌ ராஜாவின்‌ மீது ஏவிவிட்டு, திரை மறைவிலி ருந்து சூஸ்திரக்‌ கயிராட்டி வந்தார்கள்‌. அளவுக்கு மிஞ்சி கயிற்றை ஆட்டின. தன்‌ பலனாய்க்‌ கயிறு அறுந்துபோய்‌ ஸ்ரீமான்‌ செட்டியாரின்‌ தலை உடைந்து நிரந்தரமான வடு இருக்கும்‌ படியாய்‌ ஒரு பெரிய தளும்பு ஏற்பட்டுவிட்டது. விஷயமென்ன?' பனகால்‌ ராஜாவை ஸ்ரீமான்‌ செட்டியார்‌ ஒரு கூட்டத்தில்‌ இகழ்ச்சி யாய்ப்‌ பேசினார்‌; மற்றொரு கூட்டத்தில்‌ ஸ்ரீமான்‌ செட்டியாரை பனகால்‌ ராஜா இகழ்ச்சியாய்ப்‌ பேசினார்‌ . இது அரசியல்‌ உலகில்‌ சாதாரணமாய்‌ நடக்கிற விஷயங்கள்தான்‌. அநாவசியமாய்‌ இந்த சம்பவத்தில்‌ பிராமணர்கள்‌ புகுந்து செட்டியாருக்கு ஏதோ பெரிய மானநஷ்டம்‌ வந்துவிட்டதாகவும்‌, அதற்காக சில பிராமணர்கள்‌ பரிதாபப்பட்டு ஸ்ரீமான்‌ செட்டியாருக்கு ஏதோ பெரிய பரிகாரம்‌ தேடிக்‌ கொடுத்து விடுவதாகவும்‌ பாசாங்கு செய்து, நீதி ஸ்தலத்திற்கு இழுத்துவிட்டு செட்டியாருக்கு என்றென்றைக்கும்‌ நிரந்தரமாய்‌ மானநஷ்டம்‌ வராமல்‌ செய்துவிட்டார்கள்‌. (அதாவது கொஞ்சமாவது மானமிருக்கும்‌ படியாகச்‌ செய்திருந்தால்தானே இனி மானநஷ்டம்‌ வரும்‌. தீர்ப்பின்‌ தத்துவம்‌ பனகால்‌ ராஜா செட்டியாரை கூலிக்கு மாரடிப்பது! என்று சொன்னது நிஜம்‌. செட்டியார்‌ பேசினதற்கு பனகால்‌ ராஜா பதில்பேச வேண்டியதுதான்‌. ஜஸ்டிஸ்‌ கட்சியாரிடமிருந்து செட்டியார்‌ ரூ.5000 வாங்கினதும்‌ நிஜம்‌. செட்டி யார்‌ அதை வாங்கவில்லை என்று சொல்லுவது பொய்யும்‌ யோக்கியப்‌ பொறுப்பற்றதுமாகும்‌. செட்டியாருக்கும்‌ அவரது புதல்விக்கும்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியார்‌ உத்தியோகம்‌ கொடுக்காததினால்‌ கோபம்‌ வந்துவிட்டதாய்த்‌ தெரிகிறது. ஸ்ரீமான்‌ செட்டியாருடைய மானநஷ்டம்‌ தேசத்திலே நடமாட்டமுள்ள சின்ன நாணயமான ஒரு பைசாவுக்குத்தான்‌ சமானமான குடி அரசு - 1926 N 290 தாகும்‌. இந்த மாதிரி பனகால்‌ ராஜா பேசுவதற்கு ஸ்ரீமான்‌ செட்டியாரே இடங்கொடுத்தவரானதினாலே செலவு தொகைக்‌ கொடுக்கப்பட மாட்டாது, என்கிற தத்துவங்‌ கொண்ட தீர்ப்பை அளித்து விட்டார்‌. இதனால்‌ என்ன விளைந்தது? பனகால்‌ ராஜாவுக்குக்‌்கொஞ்சம்‌ பணம்‌ செலவாயிற்று ஸ்ரீமான்‌ செட்டியாருக்கு என்றென்றைக்கும்‌ மான நஷ்டம்‌ ஏற்படாமலாயிற்று. பிராமணர்களுக்கு வேடிக்கை பார்த்தது மிச்சம்‌. ஒருவரிடம்‌ பணம்‌ வாங்கிக்கொண்டு மற்றொருவரை திட்டினா லென்ன, ஒருவர்‌ பணங்கொடுக்காததற்காக அவரைத்‌ திட்டினாலென்ன? ஆகவே எப்படியும்‌ பணத்திற்காக திட்டினதாய்‌ நீதிபதியின்‌ தீர்ப்பிலிருந்து தொனிக்கிறது. இந்த வழக்கை விசாரித்த ஜட்ஜ்‌ வெள்ளைக்காரராயில்லாமல்‌ கருப்புக்காரராயிருந்தால்‌ என்னவாகியிருக்குமென்பதை வாசகர்களையே அறிந்து கொள்ள விட்டு விடுகிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 09.05.1926 291 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுயாரான்யக்‌ கட்சியார்‌ கார்ப்வபாரோஷணில்‌ லசய்த வலை சுயராஜ்யக்‌ கட்சியார்‌ என்கிற பிராமணர்கள்‌ சென்னைக்‌ கார்ப்பொ ரேஷனைக்‌ கைப்பற்ற ஆட்களை நிறுத்தி ஸ்ரீமான்‌ திரு. வி. கலியாணசுந்தர முதலியாரை சுவாதீனம்‌ செய்து கொண்டு மூலைமுடுக்கெல்லாம்‌ ஜஸ்டீஸ்‌: கட்சியாரை வைது பிரசங்கம்‌ செய்த காலத்தில்‌ தாங்கள்‌ மிகுதியும்‌ யோக்கியர்‌. கள்‌ என்றும்‌, ஜஸ்டீஸ்‌ கட்சியார்‌ தேசத்‌ துரோகிகள்‌ என்றும்‌, கார்ப்பொரேஷ னுக்குத்‌ தாங்கள்‌ மெம்பர்களானால்‌ ஜனங்களுக்கு அதிக அனுகூலம்‌ செய்வோம்‌ என்றும்‌, வரிகளைக்‌ குறைப்போம்‌ என்றும்‌ பொய்‌ மூட்டைகளை அளந்தார்கள்‌. இப்பொய்‌ மூட்டைகளை ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியா ரும்‌ தலையில்‌ தூக்கிக்கொண்டு போய்‌ ஓட்டர்கள்‌ வீட்டில்‌ கொட்டினார்‌.இப்‌ பொய்யர்கள்‌ வெற்றியடைந்து கார்ப்பொரேஷன்‌ மெம்பர்களான பிறகு அவர்கள்‌ யோக்கியதை என்ன என்பதை சென்னை வியாபாரிகள்‌ சங்கத்‌ தாரால்‌ செய்த தீர்மானங்களிலிருந்தே பொது ஜனங்கள்‌ அறிந்து கொள்ள லாம்‌. அதாவது:- “வியாபார சுணக்கத்தால்‌ வியாபாரம்‌ நடப்பதே கஷ்டமாயிருக்கும்‌ போது வியாபாரிகளின்‌ தொழில்‌ வரியைக்‌ கார்ப்பொரேஷன்‌ கவுன்சிலர்கள்‌. 100-க்கு 25 வீதம்‌ அதிகமாக உயர்த்தியதை இச்‌ சங்கம்‌ பலமாகக்‌ கண்டிக்கிறது என்றும்‌, வரி உயர்வு தீர்மானத்தை இந்த டிவிஷன்‌ கவுன்சிலரே ஆமோதித்‌ ததையும்‌ பிரசிடெண்டு இதற்கு அனுகூலமாய்‌ ஓட்டுக்‌ கொடுத்ததையும்‌ இம்மகாநாடு இன்னும்‌ பலமாய்க்‌ கண்டிக்கிறது... இந்த டிவிஷனின்‌ சுகாதார நிலைமை மிகக்‌ கேவலமாயிருப்பதற்காகவும்‌, இதை கார்ப்பொரேஷன்‌ கவுன்சிலர்கள்‌ கவனிக்காமலிருப்பதற்காகவும்‌ இச்சங்கம்‌ வருந்துகிறது”/ என்று தீர்மானித்திருக்கிறார்கள்‌. சுயராஜ்யக்‌ கட்சியார்‌ எலெக்ஷன்‌ போது ஓட்டர்களிடம்‌ கொடுக்கும்‌ வாக்குத்‌ தத்தத்திற்கும்‌ அதன்‌ பிறகு அவர்கள்‌. நடந்து கொள்ளும்‌ யோக்கியதைக்கும்‌ அவர்களுக்கு ஓட்டு வாங்‌ கிக்‌ கொடுக்கும்‌ ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின்‌ யோக்கிய தைக்கும்‌ இதைவிட வேறு என்ன உதாரணம்‌ வேண்டும்‌. கார்ப்பொரேஷனில்‌ வரி, சுகாதாரம்‌ என்னும்‌ இரண்டு முக்கிய காரியம்‌ உண்டு. இந்த இரண்டு முக்கிய காரியத்திலும்‌ இவர்கள்‌ யோக்கியதையைப்‌ பார்த்த ஓட்டர்கள்‌ இனி யாவது சுய புத்தியுடன்‌ நடப்பார்களா? குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 09.05.1926 குடி அரசு - 1926 N 292 எங்கும்‌ இராமசாமி நாயக்கர்‌ யாம்பாயில்‌ பிராமணரல்லாதார்‌ மகாநா௫ சென்னை மாகாணப்‌ பிராமணர்கள்‌ சென்னையில்‌ மாத்திரம்தான்‌ பிராமணர்‌ - பிராமணரல்லாதார்‌ வித்தியாசமும்‌ “வகுப்புத்‌ துவேஷமும்‌” ஏற்பட்டிருப்பதாகவும்‌, அதை ஸ்ரீமான்‌ ஈ வெ. இராமசாமி நாயக்கர்‌ வளர்த்து வருவதாகவும்‌, அவர்‌ பேச்சை எவரும்‌ கேட்கக்‌ கூடாது என்றும்‌, அவர்‌. சொல்லுவதை எவரும்‌ நம்பக்கூடாது என்றும்‌, அவர்‌ பேரில்‌ பல குற்றங்‌ களைக்‌ கற்பித்து பிராமணர்களும்‌, பிராமணப்‌ பத்திரிகைகளும்‌, அவர்களைத்‌ தலைவராகக்‌ கொண்ட ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌ போன்ற வர்களும்‌, அவர்களிடம்‌ பணம்‌ வாங்கிக்கொண்டு எழுதும்‌ - பேசும்‌ சிப்பந்தி கோடிகளும்‌ அவர்கள்‌ தயவால்‌ பதவிபெற நினைக்கும்‌ சில சுயகாரியப்‌ புலிகளும்‌ சதா காலமும்‌ கையொடிய, தொண்டை கிழிய எழுதியும்‌,பேசியும்‌ வருகிறார்கள்‌. இப்பொழுது மத்திய மாகாணத்திலும்‌ (மஹாராஷ்ட்டிர மாகாணத்தில்‌) பம்பாய்‌ மாகாணத்திலும்‌ பிராமணரல்லாதார்‌ மகாநாடுகள்‌ என்றும்‌ “வகுப்புத்‌ துவேஷங்கள்‌” வளர்ந்து வருகிறது. பஞ்சாபிலும்‌ கல்கத்தாவிலும்‌ இந்து முஸ்லீம்‌ சச்சரவுகள்‌ இல்லாவிட்டால்‌ அங்கும்‌ பிராமணர்‌- பிராமண: ரல்லாதார்‌ “வகுப்புத்துவேஷங்கள்‌”” வளரும்‌.ஆதலால்‌ இராமசாமி நாயக்கர்‌ சென்னையில்‌ மாத்திரம்‌ இல்லை; இந்தியாவெங்கும்‌ இராமசாமி நாயக்கர்‌ மயமாய்த்தான்‌ இருக்கிறது. சென்னையில்‌ 4 பேர்‌ கூலிக்கு மாரடிப்பதால்‌ இராமசாமியை ஒழித்துவிட முடியாது. சின்னாட்களுக்கு முன்‌ இவர்கள்‌ சென்னையில்‌ சில காலிகளை ஏவி விட்டு ஸ்ரீமான்‌ சர்‌. தியாகராயச்‌ செட்டியாரை அடிக்க முயற்சித்து அவர்‌. வீட்டு ஜன்னல்‌ கண்ணாடிகள்‌ முதலியவற்றையும்‌ உடைத்தார்கள்‌. அதிலும்‌ இந்த இயக்கம்‌ அழிந்துவிடவில்லை.அதற்குப்‌ பிறகு ஸ்ரீமான்‌ சுரேந்திரநாத்‌ ஆரியாஅவர்களையும்‌ அடிக்கும்படி செய்தார்கள்‌. அதனாலும்‌, இவர்களுக்‌ குப்‌ பயந்துகொண்டு இயக்கம்‌ போய்விடவில்லை. சமீபத்தில்‌ பேரார்‌ மாகா ணத்தைச்‌ சேர்ந்த அமராவதியில்‌, 2- வது அகில இந்திய பிராமணரல்லாதார்‌. காங்கிரஸின்‌ காரியதரிசியாயும்‌, பிராமணரல்லாதாரின்‌ பேருழைப்பாளராக வுமிருக்கும்‌ ஸ்ரீமான்‌ அமிர்த்காரை சில காலிகளைக்‌ கொண்டு பலமாய்‌ 293 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அடித்து விட்டார்கள்‌. இதனாலும்‌ பிராமணரல்லாதார்‌ இயக்கம்‌ ஒழிந்து விட வில்லை.இவர்கள்‌ கெட்ட எண்ணங்கொண்டு தூற்றத்‌ தூற்ற, அடிக்க அடிக்க பந்து கிளம்புவதைப்போல்‌ இயக்கம்‌ இந்தியாவெங்கும்‌ கிளம்பி பரவிக்‌ கொண்டுதான்‌ வருகிறது. குடி அரசு - அறிக்கை - 09.05.1926 குடி அரசு - 1926 N 294 கோயமுத்தூரில்‌ பஞ்ச நிவாரண வேலையும்‌ யங்மாண்‌ சி.வி. வவங்கிட்டாமணய்யங்காரும்‌ கோயமுத்தூரில்‌ பஞ்ச நிவாரண வேலைக்காக ரூ.2102-8-0 செலவாகி யிருக்கிறது. கிராமத்து ஜனங்கள்‌ இந்தப்‌ பணம்‌ ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்‌ யங்கார்‌ தான்‌ கையிலிருந்து செலவு செய்ததாக நினைக்கும்படி பல தந்திரங்‌ கள்‌ செய்ததோடு சில காங்கிரஸ்‌ தொண்டர்கள்‌ என்போரும்‌ ஸ்ரீமான்‌ ஐயங்‌ கார்‌ பின்‌ சென்று ஓட்டு வாங்க, பஞ்சப்படி போட்ட ஐயங்கார்‌ என்று அவருக்‌ குப்‌ பெயர்‌ வாங்கிக்‌ கொடுத்து கிராமத்து ஜனங்களை ஏமாற்றியிருக்கிறார்‌. கள்‌. இதன்‌ இரகசியம்‌ என்ன வென்றால்‌ பஞ்ச நிவாரண வேலைக்காக பொது ஜனங்களிடமிருந்து வசூலாகி வந்த பணத்தை ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்‌ யங்கார்‌ தூக்கி ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்காரிடம்‌ கொடுத்து, செலவு செய்யும்படி சொல்லியிருக்கிறார்‌. அந்தப்‌ பணத்தை வாங்கி, தான்‌ செலவு செய்ததாக அவர்‌ நடித்திருக்கிறார்‌. இந்த நடிப்புக்கு காங்கிரஸ்‌ தொண்டர்கள்‌. திரைப்பிடித்து இருக்கிறார்கள்‌. இவ்வளவுதான்‌ இரகசியம்‌. இதை 3-5-26 ௨ “சுதேசமித்திரன்‌” பத்திரிகையிலேயே பார்க்கலாம்‌. குடி அரசு - செய்தி விளக்கம்‌ - 09.05.1926 295 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 இந்து மகாசபை இந்துக்களும்‌ முஸ்லீம்களும்‌ ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால்‌ நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம்‌ நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும்‌. ஏனெனில்‌ சிறு வகுப்பாயுள்ளவர்கள்‌ வாழ வேண்டுமானால்‌ பெருவகுப்பாய்‌ உள்ளவர்களை ஒருவருக்கொருவர்‌. உதைத்துக்‌ கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால்தான்‌ முடியும்‌ என்பது ஒரு பழமொழி. அப்பழமொழிக்கிணங்கவே சர்க்காராரும்‌ பிரித்தாள பல தந்திரங்கள்‌ செய்து அதில்‌ வெற்றிபெற்று வருகிறார்கள்‌. அதுபோலவே நமது பிராமணர்களும்‌ பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள்‌ பிரிவி னையுண்டாக்கி ஒருவருக்கொருவர்‌ துவேஷமும்‌ பொறாமையும்‌ நிரந்தர: மாய்க்‌ கொள்ளும்படி பல தந்திரங்கள்‌ ஆதியிலிருந்தே செய்து வந்திருக்‌ கிறார்கள்‌. அவைகளின்‌ குறிப்புதான்‌ இன்றைய தினம்‌ இந்தியாவைக்‌ காட்டிக்‌ கொடுக்கும்‌ வர்ணாசிரமமும்‌ பஞ்சமர்‌ என்னும்‌ ஜாதியும்‌. இதை மகாத்மா எப்படியாவது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம்‌ என்று எண்ணியவுடன்‌, நமது பிராமணர்கள்‌ புது தந்திரம்‌ ஒன்று செய்திருக்‌ கிறார்கள்‌. அதுதான்‌ “இந்து மகாசபை”. அது இந்துக்களை மாத்திரம்‌ நிரந்தர மாய்ப்‌ பிரித்து வைப்பதோடல்லாமல்‌ இந்து முஸ்லீம்‌ ஒற்றுமையும்‌ நிரந்தர மாய்‌ ஏற்படாமலிருப்பதற்கு செய்த சூழ்ச்சியாகும்‌. தற்காலம்‌ தேசமெங்கும்‌ ஏற்பட்டிருக்கும்‌ இந்து முஸ்லீம்‌ கலவரத்திற்கு இந்து மகாசபையே காரணம்‌ என்பது நாம்‌ சொல்லாமலே விளங்கும்‌. தற்கால பிராமணீயம்‌ உள்ளவரை தேசம்‌ உருப்படப்‌ போவதில்லை என்பது நிதர்சனமாகி வருகிறது. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 09.05.1926 குடி அரசு - 1926 N 296 இட்முப்‌ கபச ஆனில்லாவிட்டால்‌ தம்பி சண்டப்‌ பிரசண்டனண்‌ தொழிலானர்‌ மத்தியில்‌ ஓட்டும்‌ பிரசாரம்‌ - சித்திரபுத்திரன்‌ சென்னை எம்‌.எஸ்‌.எம்‌. ரயில்வே தொழிலாளர்‌ கூட்டத்தில்‌ ஸ்ரீமான்‌ எம்‌. கே. ஆச்சாரியார்‌ அருமையான மாயப்பிரசங்கம்‌ ஒன்று செய்தார்‌. அப்பொழுது அவர்‌ சொல்லியுள்ளவைகளில்‌ முக்கியமானது இரண்டு விஷயம்‌. அதாவது, “உங்களுக்கு அரசாங்க சட்டசபைகளில்‌ பிரதிநிதித்து வம்‌ கிடையாது. அது கிடைக்கிற வரையில்‌ எங்களை அங்கீகரிக்க வேண்‌ டும்‌” என்று பேசியிருக்கிறார்‌. ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌ ஒரு பிராமணர்‌, அதோடு அளவுக்கு மிஞ்சிய வருணாசிரம தர்மி. ஒரு பிராமணக்‌ குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை ஒருவேளை பார்த்து விட்டால்‌ ஒரு மாதத்திற்கு உண்ணாவிரதமிருப்பேன்‌ என்று சொன்னவர்‌. அல்லாமலும்‌, பிராமணன்‌ அயோக்கியனாயிருந்தாலும்‌, ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரிடம்‌ கூலிக்காரனாயிருந்தாலும்‌, குஷ்டரோகியாயிருந்‌ தாலும்‌ அவன்‌ பிறவியிலேயே உயர்ந்தவன்‌. மற்றவன்‌ சூத்திரன்‌ ஒரு யோக்கியனானாலும்‌ சுயமரியாதை உள்ளவனானாலும்‌ அவன்‌ தாசி மகன்‌; அடிமை; அவன்‌ பிறவியிலேயே பிராமணனுக்கு வேலை செய்யப்‌ பிறந்த வன்‌ என்று சொல்லும்‌ வருணாசிரம சபைக்குத்‌ தலைவர்‌ . இவர்‌ 100- க்கு 99 பேர்‌ பிராமணரல்லாதாராயுள்ள தொழிலாளர்‌ களுக்கு எப்படித்‌ தலைவராவார்‌; உபதேசம்‌ செய்ய யோக்கியதை உடைய வராவார்‌ என்பது நமக்கு விளங்கவில்லை. அல்லாமலும்‌ இவரை எப்படி பேசச்‌ சொல்லி “7,000” தொழிலாளர்களும்‌ உட்கார்ந்து கேட்டார்களோ தெரியவில்லை. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரின்‌ செல்வச்‌ செருக்கும்‌ செல்‌ வாக்குப்‌ பெருக்கும்‌ தேசத்தில்‌ எவ்வளவு வேலை செய்கிறது. ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ பணமே 7000 பேரை உட்கார்ந்து கேட்கும்படி செய்கிறது. ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ பணமே ஒருவரை உபதேசம்‌ செய்யச்‌ செய்கிறது. தொழிலாளர்களுக்கு சட்டசபையில்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லையென்று மாயக்‌ கண்ணீர்‌ விடும்‌ ஸ்ரீமான்‌ எம்‌.கே.ஆச்சாரியார்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌. 297 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சார்பாய்‌ ஏன்‌ ஒரு தொழிலாளியை சட்டசபைக்கு அனுப்பக்‌ கூடாது? “சுய ராஜ்யக்‌ கட்சிக்கு தேசத்தில்‌ செல்வாக்கு இருக்கிறது; கட்டுப்பாடு இருக்கிறது; ஒத்துழையாமை நாற்றமடிக்கிறது. அது வொன்றே தற்கால அரசியல்‌ கட்சிகளில்‌ முதன்மையானது” என்று தொண்டை கிழியக்‌ கத்தி ஓட்டு வாங்கித்‌ தருகிறவரும்‌ இதற்கு முன்‌ பல தேர்தல்களில்‌ சுயராஜ்யக்‌ கட்சி யாருக்குத்‌ தொழிலாளர்களின்‌ ஓட்டுகளை வாங்கிக்‌ கொடுத்தவருமான ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌ போன்றவர்களும்‌ இருக்கிறார்கள்‌. இந்தியா சட்டசபைக்கு சென்னை மாகாணத்தின்‌ சார்பாய்‌10 ஸ்தானங்களுக்கு மேலாக இருக்கிறது. அவைகளுக்கு பிராமணரல்லாதார்களில்‌ ஆள்கள்‌. கிடைக்கவில்லை என்று வெறும்‌ அய்யங்கார்களாக நிற்கிறார்களே; ஏன்‌ ஒரு தொழிலாளிக்கு விட்டுக்‌ கொடுத்து ஒரு அய்யங்கார்‌ விலகிக்‌ கொள்ளக்‌ கூடாது? தொழிலாளர்களுக்கு “கடவுள்‌ போல இருக்கும்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்‌ யங்காரே தான்‌ நிற்கும்‌ ஸ்தானத்தை தொழிலாளர்களுக்குக்‌ கொடுக்கட்டுமே. இல்லாவிட்டாலும்‌ “தொழிலாளர்களே உஷார்‌, உஷார்‌ ! ஏமாறாதீர்கள்‌! ஜஸ்டிஸ்‌ கட்சியாருடன்‌ சேராதீர்கள்‌! முதலாளிகளுக்குக்‌ காட்டிக்‌ கொடுத்து விடுவார்கள்‌! பழய சங்கத்தை ஆதரியுங்கள்‌ ! வஞ்சகர்‌ வார்த்தையைக்‌ கேளாதீர்கள்‌!” என்று சதா சர்வகாலமும்‌ அசரீரி பொழிகின்ற *சுதேசமித்‌ திரன்‌” பத்திராதிபரும்‌ தொழிலாளர்களுக்கு “கிருஷ்ண பகவான்‌” போன்றவ ருமான ஸ்ரீமான்‌ ஏ. ரெங்கசாமி அய்யங்கார்‌ தஞ்சை திருச்சி ஜில்லாவில்‌ தான்‌ நிற்கப்‌ போவதிலிருந்து விலகிக்‌ கொண்டு ஏன்‌ தொழிலாளருக்காக தனது ஸ்தானத்தை விட்டுக்‌ கொடுக்கக்‌ கூடாது? இவர்களில்‌ ஒருவரும்‌ ஒப்ப வில்லையானால்‌ உபதேசியரான ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியாரே தான்‌ விலகிக்கொண்டு தனது ஸ்தானத்தை ஏன்‌ தொழிலாளருக்கு விட்டுக்‌ கொடுக்கக்‌ கூடாது? ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காருக்கு சொத்திருக்கிறது, மாதம்‌ 10,000 ரூபாய்‌ வரும்படி வருகிறது. ஏ. ரெங்கசாமி ஐயங்காருக்கு மாதம்‌ 1000 ரூபாய்‌ சம்பளம்‌ வருகிறது; அவர்‌ மகனுக்கு சர்க்கார்‌ உத்தியோகத்தில்‌ மாதம்‌ 500 ரூ. சம்பளம்‌ வருகிறது; அவர்‌ தம்பிக்கு சர்க்கார்‌ உத்தியோகத்தில்‌ மாதம்‌ 1500 ரூபாய்‌ சம்பளம்‌ வருகிறது. எம்‌.கே.ஆச்சாரியாருக்கு சொத்து இல்லா விட்டாலும்‌ இந்த மூன்று வருஷம்‌ வாங்கின இந்தியா சட்டசபைப்‌ பிரயாணப்‌ படிச்‌ செலவு இன்னும்‌ 56 வருஷத்திற்குப்போதுமானதாய்‌ இருக்கிறது. இப்படி இருக்க, இவர்களுக்கு ஏன்‌ இத்தனை ஆசை. ஏழைத்‌ தொழிலாளர்‌ தினம்‌ 8 அணா,10 அணா, 1 ரூபாய்‌ சம்பாதிக்கும்‌ கஷ்ட ஜீவனக்காரர்கள்‌; அதிலும்‌ பிராமணரல்லாதார்கள்‌ ஏன்‌ ஒருவர்‌ இந்தியா சட்டசபைக்குப்‌ போய்‌ பதவியும்‌ பணமும்‌ தங்கள்‌ கஞ்சிக்கில்லாத பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகமும்‌ சம்பாதித்துக்‌ கொள்ளக்கூடாது? இந்த அய்யங்கார்களுக்கே இந்தியா சட்ட சபை கோயில்‌ மானியமா? இவற்றை மறந்துவிட்டு தொழிலாளர்‌ கூட்டத்தில்‌ “உங்களுக்குப்‌ பிரதிநிதித்துவம்‌ சர்க்காரார்‌ வாங்கிக்‌ கொடுக்கவில்லை, ஜஸ்டிஸ்காரர்‌ உதவி செய்யவில்லை, ஆதலால்‌ எங்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்‌ கள்‌” என்றால்‌ என்ன அருத்தம்‌? இப்பொழுது இருக்கும்‌ தொகுதியில்‌ குடி அரசு - 1926 N 298 தொழிலாளர்‌ சட்டசபைக்குப்‌ போனால்‌ கதவு மூடிக்கொள்ளுமா? சட்டசபை மண்டபம்‌ இடிந்து இவர்கள்‌ தலையில்‌ விழுந்து விடுமா? எவ்வளவு நெஞ்சு தைரியமாய்த்‌ தொழிலாளர்‌ மத்தியில்‌ ஓட்டுப்‌ பிரசாரம்‌ செய்ய இந்த அய்யங்கார்களுக்கு தைரியம்‌ வந்து விட்டது.““தட்டிப்பேச ஆளில்லா விட்‌ டால்‌, தம்பி சண்டப்‌ பிரசண்டன்‌” என்பது போல்‌ ஏழைத்‌ தொழிலாளர்‌ கள்‌ அப்பாவிகள்‌; அவர்களும்‌ கொஞ்சம்‌ வாய்‌ படைத்தவர்‌ புத்தியை அய்யங்‌ கார்‌ பணம்‌ என்னும்‌ கிரகணம்‌ தீண்டிவிட்டது; இவர்கள்‌ அடித்த மூப்புத்‌ தான்‌ என்று நினைத்துக்‌ கொண்டார்கள்‌ போலும்‌. இந்த லக்ஷணத்தில்‌ ஸ்ரீமதி அலமேலு மங்கைத்‌ தாயாரம்மாள்‌ ஏதோ ஒரு தொழிலாளர்‌ கூட்டத்தில்‌ ராஜியவாதிகளைத்‌ “திருட்டுப்‌ பசங்கள்‌” என்று நினைத்து ராஜீயவாதிகளுடன்‌ சம்மந்தப்படாதீர்கள்‌ என்று சொன்னதற்கு “சுதேசமித்திர'” னாகிய ஐயங்கார்‌. பிள்ளைக்கு மூக்கு மேல்‌ கோபம்‌ வந்து விட்டதே ஒழிய தங்கள்‌ பித்த லாட்டங்களுக்குக்‌ கொஞ்சமும்‌ வெட்கப்படவேயில்லை. இருந்தால்தானே வரும்‌. ஸ்ரீமதி தாயாரம்மாள்‌ மாத்திரம்‌ இப்படிச்‌ சொல்லவில்லை. அநேக பெரியோர்களும்‌ அனுபவசாலிகளும்‌ உண்மைத்‌ தேசபக்தர்களும்‌ கதறிக்‌ கொண்டுதான்‌ வருகிறார்கள்‌. அய்யங்கார்‌ பணம்‌ இதைக்‌ கவனிக்கச்‌ செய்வ தில்லை. நமது தொழிலாளர்களுக்கு இந்த பிராமண அரசியல்வாதிகளின்‌ சூழ்ச்சிகளை அறிய யோக்கியதை வரும்‌ வரை நமது தொழிலாளர்களுக்கு விடுதலையில்லை என்று காய்ந்த எண்ணெய்க்‌ குடத்தில்‌ கட கையை விடுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 16.05.1926 299 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 செண்ணை ஓட்டர்களுக்கு இணியாவது புத்தி வருமா? சென்னைக்‌ கார்ப்பரேஷனில்‌ சுயராஜ்யக்‌ கட்சியாரின்‌ தலைக்‌ கொழுப்பு ஒரு நிலையில்‌ நிற்காமல்‌ தலை கிருகிருவென்று சுற்றுவதாகவே தெரிகிறது. ஏமாந்துபோன சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமோ வராதோ நமக்குத்‌ தெரியவில்லை. அதன்‌ பிரசிடெண்டு ஸ்ரீமான்‌ சாமி வெங்கிடாசலம்‌ செட்டியார்‌ கார்ப்பரேஷனை தனது முன்னோர்கள்‌ வீட்டுச்‌ சொத்து போல்‌ நினைத்து தனக்கே உரிமையாக்கிக்‌ கொண்டதாகத்‌ தெரிகிறது. இவர்கள்‌ கையில்‌ ராஜீய பாரத்தையும்‌ மந்திரி பதவிகளையும்‌ ஒப்புவித்து விட்டால்‌ நாடு துலங்கிப்‌ போகும்‌ போலவே இருக்கிறது. அதா வது 3-5-26-ல்‌ ஒரு மீட்டிங்கு போட்டார்‌. அய்யங்கார்‌ சிஷ்யர்‌ ஒருவர்‌ அன்று வரமுடியாததால்‌ உடனே மாற்றி விட்டார்‌ . அடிக்கடி இம்மாதிரி மீட்டிங்‌ போடுவதும்‌, தங்கள்‌ கட்சி ஆள்களில்‌ ஒரு பூனைக்‌ குட்டிக்கு வர அசவு கரியம்‌ ஏற்பட்டாலும்‌ அதற்காக மீட்டிங்‌கை தனது இஷ்டப்படி ஒத்தி வைத்து விடுவதுமே வேலையாயிருக்கிறார்‌. இதுபோல்‌ இதற்குமுன்‌ பலதடவைகளில்‌ நடந்திருக்கிறது. தங்கள்‌. கட்சியில்‌ ஒரு ஆள்‌ வரமுடியாவிட்டால்‌ தங்கள்‌ கட்சி தோற்றுப்‌ போகக்‌ கூடிய நிலையில்‌ இருக்கிற சுயராஜ்யக்‌ கட்சிக்கு எவ்வளவு பலமிருக்கிறது என்பது பொதுஜனங்களுக்கு எடுத்துச்‌ சொல்லவேண்டியதில்லை. சென்னைக்‌ கார்ப்பரேஷனில்‌ சுயராஜ்யக்‌ கட்சி கவுன்சிலர்களைப்‌ போல்‌ கார்ப்பொரேஷன்‌ கவுன்சிலர்‌ வேலையும்‌ அய்யங்காருக்கு சிஷ்யத்துவமும்‌ மாத்திரமல்லாத வேறு பல வேலை உள்ள கனவான்கள்‌ பலபேர்‌ இருக்கிறார்‌. கள்‌ என்பதை கார்ப்பொரேஷன்‌ சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவர்‌ உணராமல்‌ தன்‌ இஷ்டம்‌ போல்‌ மீட்டிங்‌ போடுவதும்‌ ஒத்தி வைப்பதுமான எதேச்சாதி காரமான வேலைகளைச்‌ செய்வது தனது அதிகாரத்தை அக்கிரம வழியில்‌ உபயோகப்படுத்துகிறார்‌ என்று சொல்லாமல்‌ வேறு என்னவென்று சொல்லு வது. ஜஸ்டிஸ்‌ கட்சியாரை நினைத்ததற்கெல்லாம்‌ “அதிகார துஷ்பிரயோ கம்‌”,*“அதிகார துஷ்பிரயோகம்‌” என்று ஓயாமல்‌ தம்பட்டமடிக்குமிவர்கள்‌ இம்மாதிரி கார்ப்பரேஷன்‌ தலைவர்‌ செய்கைக்கு என்ன பெயர்‌ கொடுப்‌ பார்கள்‌. “கண்ணியமற்ற சூழ்க்ஷி” எனப்‌ பெயர்‌ கொடுப்பார்கள்‌. எந்தப்‌ பெய ரைக்‌ கொடுத்தாலும்‌ நமக்குக்‌ கவலையில்லை. இனிமேலாவது சென்னை ஓட்டர்களுக்குப்‌ புத்தி வருமா? குடி அரசு - கட்டுரை - 16.05.1926 குடி அரசு - 1926 N 200 கல்யாத்தியும்‌ வஹருவில்‌ நடக்காமையும்‌ மலையாளம்‌ ஜில்லாவைச்‌ சேர்ந்த பாலக்காடு முனிசிபல்‌ எல்லைக்‌ குள்‌ கல்பாத்தி என்கிற பாகம்‌ பிராமணர்கள்‌ முக்கியமாய்‌ வசிக்கும்‌ பாகம்‌. அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள்‌ எல்லாம்‌ முனிசிபாலிட்டி யாரைச்‌ சேர்ந்தது. அதைப்‌ பழுது பார்த்தல்‌, பராமரித்தல்‌ எல்லாம்‌ முனிசிபல்‌ செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும்‌ அங்கிருக்கும்‌ பிராமணர்கள்‌ அத்தெருவின்‌ வழியாய்‌ “பஞ்சமர்கள்‌” என்று சொல்லுவோர்‌. களையும்‌ “தீயர்‌” என்று சொல்லுவோர்களையும்‌ நடப்பதற்கு விடுவதில்லை. அத்தெருக்களின்‌ முகப்புகளில்‌ உள்ள பல வியாபாரக்‌ கடைகளிலும்‌ பிராமணர்கள்‌ வந்து சாமான்கள்‌ வாங்கினால்‌ அதைத்‌ தங்கள்‌ வீட்டுக்குத்‌ தூக்கிச்‌ செல்ல மகமதியக்‌ கூலிகளையாவது, கிறிஸ்தவக்‌ கூலிகளையாவது அமர்த்தி எடுத்துக்‌ கொண்டு போவதே தவிர ஷி இந்து கூலிகளை எடுக்க விடுவதில்லை. இதற்காகவே அக்கடைகளுக்குப்‌ பக்கத்தில்‌ மகமதிய கிறிஸ்‌. துவக்‌ கூலிகள்‌ அதிகமாய்‌ நின்று கொண்டிருப்பார்கள்‌. அல்லாமலும்‌ அந்த வீதிகளில்‌ உத்தியோகஸ்தர்களும்‌ குடி இருக்கி றார்கள்‌.அவர்கள்‌ வீட்டுக்கும்‌ ஆபீஸ்‌ சம்மந்தமான காகிதம்‌ போக்குவரத்து முதலியவைகளுக்கும்‌ மகமதிய, கிறிஸ்தவ , பிராமண, நாயர்‌ ஆகிய ஜாதி யிலேயே குமாஸ்தா, பியூன்‌ முதலியவைகளை நியமித்துக்‌ கொள்வதே அல்லாமல்‌ தீயர்‌, ஈழவர்‌ என்கிற வகுப்பார்களை நியமிப்பதில்லை. தவிரவும்‌ சென்னையிலிருந்து கள்ளிக்கோட்டைக்குப்‌ போய்க்‌ கொண்டிருக்கும்‌ நேர்‌. ரஸ்தாவில்தான்‌ பாலக்காடு டவுன்‌ பெரிய கடைவீதி இருக்கிறது. அக்கடை வீதிதான்‌ பெரிய மண்டிக்கடை, மளிகைக்கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, பலகாரக்கடை, வெத்திலை பாக்குக்கடை, புகையிலை மண்டி முதலிய வியாபாரங்கள்‌ நடக்கும்‌ வியாபார ஸ்தலமாய்‌ இருக்கிறது.இதுவும்‌ முனிசிபல்‌ பொது ரஸ்தாவாகும்‌. இதிலும்‌ சேரி மக்கள்‌ முதலிய சில தாழ்ந்த ஜாதியார்‌. என்போர்கள்‌ நடக்கக்‌ கூடாது. இந்தக்‌ கடை வீதிகளிலும்‌ ரெ தாழ்ந்த ஜாதி யார்‌ கூலிவேலை செய்யவுங்‌ கூடாது. தங்களுக்கு வேண்டிய சாமான்கள்‌ வாங்கவும்‌ கூடாது. வேறு யாரிடமாவது, ஒரு மகமதியர்‌ மூலமாகவோ, கிறிஸ்‌: தவர்‌ மூலமாகவோ “உயர்ந்த ஜாதி” இந்து மூலமாகவோதான்‌ காசு கொடுத்து வாங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. ஆனால்‌ இந்தக்‌ கடைவீதியில்தான்‌ சர்க்கார்‌. போலீஸ்‌ ஸ்டேசன்‌ இருக்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை, போர்ஜரி, விபசாரம்‌ முதலிய வழக்கு 201 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 களில்‌ சம்பந்தப்பட்ட குற்றவாளியாகவோ, தண்டித்த கைதியாகவோ இருந்தால்‌ அந்த வீதி வழியாக போலீசு ஸ்டேஷனுக்கு போலீசுகாரர்கள்‌ கை விலங்கிட்டோ சங்கிலியில்‌ பிணைத்துக்‌ கட்டியோ கூட்டிக்கொண்டு போவதை அடிக்கடி பார்க்கலாம்‌. யோக்கியமானவன்தான்‌ அவ்வழியில்‌ நடக்கக்‌ கூடாது. இவ்விஷயங்களைப்‌ பற்றி சுமார்‌ 7,8 வருஷங்களுக்கு முன்‌ ஒரு தடவை சில கனவான்கள்‌ யோசித்து கல்பாத்தி வழியாக சில தாழ்ந்த வகுப்பார்‌ என்கிறவர்களை அழைத்துச்‌ செல்ல முயற்சித்தார்கள்‌. அதுசமயம்‌. கல்பாத்தி பிராமணர்கள்‌ “பொது கடை வீதிகளில்‌ பிராமணரல்லா தவர்கள்தான்‌ மகமதியர்‌, கிறிஸ்துவர்கள்‌, ஈழவர்கள்‌ உள்பட அநேகம்பேர்‌. இருக்கிறார்கள்‌; அந்த வழியிலேயே தாழ்ந்த ஜாதியார்‌ நடக்கக்‌ கூடாது என்று அவர்கள்‌ சொல்லும்‌ போது, நாங்கள்‌ மாத்திரம்‌ எப்படி எங்கள்‌ தெருவில்‌ நடக்க விடுவோம்‌” என்றார்கள்‌. அதன்‌ பிறகு உடனே சிலர்‌ சில தாழ்ந்த ஜாதிக்காரரை அழைத்துக்‌ கொண்டு கடைவீதியின்‌ வழியாய்‌ நடக்க ஆரம்‌ பித்தர்கள்‌. ஆனால்‌ அந்தக்‌ கடைவீதியானது பெயருக்கு மாத்திரம்‌ பல வகுப்புக்காரர்கள்‌ அடங்கிய வியாபாரக்‌ கூட்டக்காரரால்‌ வியாபாரம்‌ செய்‌ யப்பட்ட வீதியாயிருந்ததே ஒழிய ஏறக்‌ குறைய எல்லா முக்கிய வியாபாரி களும்‌ கல்பாத்தி முதலிய பிராமண அக்கிரகாரங்களில்‌ உள்ள பிராமணர்‌: களிடத்தில்‌ கடன்‌ வாங்கியவர்களாகவே இருந்ததால்‌ அந்த பிராமணர்களின்‌ இஷ்டத்திற்கு விரோதமாய்‌ நடக்க சக்தியற்றவர்களாகவே இருந்து அந்தப்‌ பிராமணர்கள்‌ தயவுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டியவர்களானதால்‌ இந்த வியாபாரிகள்‌ கடைவீதியிலும்‌ தாழ்ந்த ஜாதிக்காரர்‌ பிரவேசத்தைத்‌ தடுத்‌ தார்கள்‌. தடுத்ததோடு பிரவேசித்த தாழ்ந்த வகுப்பார்களை நன்றாய்‌ அடித்‌ தார்கள்‌. அதன்மேல்‌ பிராது ஏற்பட்டு அடித்ததற்காக சில செல்வமும்‌ செல்வாக்கும்‌ உள்ள வியாபாரிகள்‌ அபராத தண்டனையும்‌ அடைந்தார்கள்‌. அதற்குப்‌ பிறகு எவரும்‌ செல்லவும்‌ தடுக்கவும்‌ பிரவேசிக்கவுமில்லை. சென்ற வருஷத்தில்‌ வைக்கம்‌ சத்தியாக்கிரகத்திற்குப்‌ பிறகு மறுபடியும்‌ கல்பாத்தி அக்கிரகாரத்திற்குள்‌ ஈழவர்கள்‌ பிரவேசிக்க முயன்றார்கள்‌. அது சமயம்‌ சட்டசபையிலும்‌ எல்லா பொது ரஸ்தாவிலும்‌ எல்லா ஜாதியாரும்‌ போகலாம்‌. என்று ஒரு தீர்மானத்தையும்‌ நிறைவேற்றினார்கள்‌. அது அமுலுக்கு வரும்‌ போது சட்ட மெம்பர்‌ சர்‌. 6.2 ராமசாமி அய்யர்‌ தயவில்‌ “வேலையிருந்தால்‌ தான்‌ போகவேண்டும்‌” என்கிற வியாக்கியானம்‌ செய்யப்பட்டுப்‌ போய்‌ அந்த தீர்மானத்தை குழிதோண்டிப்‌ புதைக்கப்பட்டது. பிறகு சில ஈழவர்கள்‌ ஆரிய சமாஜத்தில்‌ சேர்ந்து மதம்மாறி அவ்வழியே நடந்தார்கள்‌. அவர்கள்‌ மீதும்‌ பிராது கொடுக்கப்பட்டு விடுதலை ஏற்பட்டது. இப்போது மறுபடியும்‌ விடுதலை பெற்ற அதே ஆசாமி, அதாவது ஸ்ரீமான்‌ சங்கரன்‌ என்னும்‌ பத்திரப்‌ பதிவு இலாகா குமாஸ்தா தன்‌ எஜமானன்‌ வீட்டுக்கு சர்க்கார்‌ காரிய மாய்ப்‌ போகும்‌ போது சில பிராமணர்கள்‌ அவரை வழிமறித்து உபத்திரவம்‌ செய்து, அவர்‌ நடந்த வீதியை பரிசுத்தம்‌ செய்வதற்கென 10 ரூபாய்க்கு ஒரு பிராமிசரி எழுதி வாங்கிக்‌ கொண்டு விட்டு விட்டார்கள்‌. இதைப்பற்றி நியாய குடி அரசு - 1926 N 302 ஸ்தலத்தில்‌ பிராது நடந்து கடைசியாக இவ்வாரத்தில்‌ தடுத்த பிராமணர்‌ களுக்கு ஆள்‌ ஒன்றுக்கு 30 ரூ.வீதம்‌ அபராதமும்‌ போடப்பட்டது. இத்தோடு இது முடியும்‌ விஷயமாகவும்‌ இல்லை. மறுபடியும்‌ கடைவீதிகளில்‌ தாழ்ந்த ஜாதியார்‌ நடக்கக்கூடாது என்பதை சிலர்‌ வற்புறுத்தி பிரசாரம்‌ செய்து வரு கிறார்கள்‌. ஆனாலும்‌ இதுசமயம்‌ பாலக்காடு பெரிய கடை வீதி வியாபாரிகள்‌: சுலபத்தில்‌ ஏமாறக்கூடியவர்கள்‌ அல்ல. தாங்கள்‌ சென்ற தடவை தடுத்ததே நியாயமல்ல என்பதை நன்றாய்‌ உணர்ந்திருக்கிறார்கள்‌; ஆதலால்‌ சீக்கிரத்தில்‌ தாழ்ந்த வகுப்பாருக்கு கடைவீதி பிரவேசமாவது கிடைக்குமென்று நம்பு கிறோம்‌. அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ.ராமசாமி நாயக்கர்‌ இராமநாதபுரம்‌, தஞ்சை ஜில்லா சுற்றுப்பயணம்‌ முடிந்த பிறகு இதற்காகவே மறுபடியும்‌ பாலக்காடு போக உத்தேசித்திருக்கிறார்‌. குடி அரசு - கட்டுரை - 16.05.1926 303 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 இந்து மகாசபையின்‌ யலனும்‌ கிலாபத்தும்‌ டில்லியில்‌ கூடிய கிலாபத்‌ மகாநாட்டில்‌ மெளலானா மலிக்‌ ஒரு தீர்மானத்தின்‌ பேரில்‌ பேசுகையில்‌ “எங்காவது இந்து முஸ்லீம்‌ கலவரம்‌. ஏற்பட்டால்‌ தற்காப்பிற்கான வழியை மாத்திரம்‌ இத்தீர்மானம்‌ கூறுவதாயிருக்‌. கிறது. ஆனால்‌ இந்து சகோதரருடன்‌ ஒற்றுமை ஏற்படுத்த முடியும்‌ என்று இன்னமும்‌ தாம்‌ நம்புவதால்‌...” என்று சொல்லிக்கொண்டிருக்கும்‌ போதே சபையோர்கள்‌ கூச்சலிட்டு “இந்துக்களை சகோதரர்‌ என்று சொன்னது தப்பு” என்றும்‌ அதை வாப்பீசு வாங்கிக்கொள்ள வேண்டும்‌ என்றும்‌ கோபாவேசத்‌ துடன்‌ கூறினார்களாம்‌. கடைசியாக மெளலானா ஷவுகத்தலி பலதடவை கெஞ்சிக்கேட்டுக்‌ கொண்டதன்‌ பேரில்‌ கூச்சல்‌ அடங்கிற்றாம்‌. இதைப்பற்றி கூச்சல்‌ போட்டவர்கள்‌ பேரில்‌ நமக்கு ஒன்றும்‌ அதிருப்தியும்‌ ஆச்சரியமும்‌ இல்லை; ஆனால்‌ இதிலிருந்து மகமதிய சகோதரர்களின்‌ மனோபாவம்‌ எது வரை பாய்ந்திருக்கிறது என்று இப்போதாவது இந்துக்கள்‌ தெரிந்து கொள்‌ ளலாம்‌. இவ்வித மனோபாவம்‌ ஏற்படக்‌ காரணமென்ன? நம்‌ தேசத்து வைதீகப்‌ பிராமணர்களின்‌ இந்து மகாசபை செய்த பழிக்கு இந்து சமூகத்தார்‌ அனைவருமே மகமதியரின்‌ இவ்விதத்‌ துவேஷத்திற்கு ஆளாகிறார்கள்‌. இதுபோலவே சுயமரியாதை உள்ள ஒரு இந்து பிராமணரல்லாதவன்‌ மனுதர்ம சாஸ்திரத்தைப்‌ படித்துப்‌ பார்த்தால்‌ பிராமணர்களை சகோதரர்கள்‌ என்று சொல்ல மனம்‌ வருமா? “சூத்திரன்‌ என்பவன்‌ பிராமணனின்‌ வைப்‌ பாட்டிமகன்‌; பிராமணனுக்கு வேலை செய்யவே பிறந்தவன்‌; அவன்‌ சொத்து வைத்திருக்க உரிமையில்லை; உரிமை மீறி வைத்திருந்தாலும்‌ பிராமணர்கள்‌ பலாத்காரமாய்‌ பிடுங்கிக்‌ கொள்ளலாம்‌; பிராமணரல்லாத இந்துக்கள்‌ எல்லாம்‌ “சூத்திரர்கள்‌; சூத்திர ஸ்திரீகள்‌ பிராமணர்களுக்கு உரியவர்கள்‌; பிராமண: ஸ்திரீகளை “சூத்திரர்‌” கள்‌ மனதில்‌ நினைத்தாலே அவனது உயிர்‌ நிலையை அறுத்துவிட வேண்டும்‌” என இம்மாதிரி இன்னும்‌ பலவாறாக எழுதி வைத்‌ திருப்பதுதான்‌ இந்து மதத்திற்கு ஆதாரமாயிருக்கிறது.அதுபோலவே மகமதி யர்கள்‌ விஷயத்திலும்‌ “மகமதியர்‌ என்றால்‌ மிலேச்சர்கள்‌, அவர்களைத்‌ தொட்டால்‌ தொட்ட விரலை வெட்டிவிட வேண்டும்‌” என இம்மாதிரி எழுதி வைத்துக்கொண்டு இருப்பதோடல்லாமல்‌ அவர்களை எதிர்ப்பதற்கும்‌ குடி அரசு - 1926 N 304 வருணாசிரமம்‌ நிலைப்பதற்கும்‌ என்றே இந்து மகாசபை என்ற ஒரு சபை யையும்‌ வைத்துக்கொண்டு அதில்‌ மகமதியர்‌ மசூதிகளுக்கு முன்‌ (மகமதி யர்கள்‌ மனம்‌ புண்படும்படி இந்துக்கள்‌ மேளம்‌ அடித்துக்கொண்டு போக வேண்டும்‌ என்றும்‌, இதற்கு மகமதியர்கள்‌ ஆக்ஷேபித்தால்‌ கவர்ன்மெண்‌ டார்‌. பிரவேசித்து மகமதியர்களை அடக்கி தங்களுக்கு மேளம்‌ அடிக்க வசதி செய்து கொடுக்க வேண்டும்‌ என்று கவர்மெண்டைக்‌ கெஞ்சுவதாகவும்‌ ஒரு தீர்மானம்‌ செய்து கொண்டு, மகமதியர்களை வலிய வம்புக்கிழுத்தால்‌ அவர்‌. கள்‌ எப்படி நம்மை சகோதரர்கள்‌ என்று கூப்பிட சம்மதிப்பார்கள்‌. மேளம்‌ அடிப்பது என்பது இந்துக்களது கொண்டாட்டத்தின்‌ அறிகுறி. மகமதியர்கள்‌. ஆக்ஷேபிப்பது என்பது அவர்கள்‌ மதக்கட்டளையாகிய குரான்‌ என்னும்‌ வேதத்தின்‌ பேரால்‌ என்கிறார்கள்‌. பிராமணணாய்ப்‌ பிறக்காதவன்‌ எல்லாம்‌. பிராமணனின்‌ வைப்பாட்டி மகன்‌ என்று சொல்லுகிற ஒரு சாஸ்திரத்தின்‌ ஆதாரத்தின்‌ கீழ்‌ இந்துவாயிருக்கும்‌ அவமானத்தை விட, மகமதியருடைய மதக்கட்டளைக்காக இந்துக்கள்‌ தங்கள்‌ கொண்டாட்டத்தையோ சந்தோஷத்‌ தையோ கொஞ்ச நேரம்‌ நிறுத்தி வைப்பது என்பது இந்து சமூகத்திற்கு பெரிய அவமானம்‌ என்பதாக நாம்‌ கருதவில்லை. மகமதியர்களாவது நமது நாட்டை பிராமணர்கள்‌ காட்டிக்‌ கொடுத்ததின்‌ பலனாய்‌ ஜெயித்து, இந்த பிராமணர்‌. களையே மந்திரிகளாக வைத்து அரசாக்ஷி செய்த காலத்தில்‌, இந்த பிராமணர்‌: கள்‌ உதவியைக்‌ கொண்டே தங்களை உயர்ந்த ஜாதியராகவும்‌ நம்மைத்‌ தூழ்ந்த ஜாதியராகவும்‌ கருத ஏற்பட்டு, அதன்‌ பலனாய்‌ அவர்கள்‌ மதக்கட்ட ளையை நம்‌ மீதும்‌ நிறைவேற்ற செளகரியம்‌ செய்து கொண்டார்கள்‌. இந்த பிராமணர்களோ நம்மிடம்‌ பிச்சை வாங்கித்தின்று கொண்டே அவர்கள்‌ உண்மையாய்‌ நம்பாததும்‌, வேண்டுமென்றே நம்மைத்‌ தலைமுறை தலை முறையாய்‌ தாழ்த்திவைத்து நோகாமல்‌ - நகத்தில்‌ அழுக்குப்படாமல்‌ பிழைப்‌ பதற்காக வேண்டி வஞ்சக எண்ணத்தோடு நிரந்தர சூழ்ச்சி செய்து நம்மை அவர்கள்‌ கண்ணில்‌ தென்படக்‌ கூடாது, தெருவில்‌ நடக்கக்‌ கூடாது, கிட்ட வரக்‌ கூடாது, பேசக்கூடாது, தொடக்கூடாது, கோயிலுக்குள்‌ போகக்‌ கூடாது, “வேதத்தை” படிக்கக்கூடாது என்கிற கொடுமைகளை செய்து வைத்திருக்‌ கிறார்கள்‌. இதை மாற்ற நம்மால்‌ முடியுமானால்‌, கண்டிப்பாய்‌ நமது மத சம்பந்த மான ஊர்வலத்தில்‌ மேளம்‌ அடிப்பதை ஒருக்காலும்‌ மகமதியர்களால்‌ நிறுத்த முடியவே முடியாது. அல்லாமலும்‌ எப்படியாவது நாமும்‌ அவர்களும்‌ ராஜிக்கு வந்துவிடுவோம்‌. அப்படிக்கில்லாமல்‌ பிராமண இந்து மகாசபை, பிராமணரல்லாதார்‌ தலையில்‌ ஒரு காலும்‌, மகமதியர்‌ தலையில்‌ ஒரு காலும்‌ வைத்து இருவரையும்‌ அழுத்தி நசுக்கப்‌ பார்த்தால்‌ இந்த பிராமணர்களை இருவரும்‌ எப்படி உண்மையான சகோதரர்கள்‌ என்று கூப்பிட மனம்‌ வரும்‌? போலித்தனத்திற்கு “சகோதரர்கள்‌” என்று 1000 தடவை வேண்டுமானாலும்‌ ஏமாற்றுவதற்காக சொல்லலாம்‌. ஆனால்‌, அதனால்‌ ஒரு பலனும்‌ உண்டா காது. இந்த கொடுமைகளின்‌ பலனாய்‌ ஏற்பட்ட துவேஷங்கள்‌ நீங்கி, 305 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 உண்மையான சகோதரத்துவம்‌ ஏற்படாமல்‌, காங்கிரஸ்‌- சுயராஜ்யம்‌- உரிமை- விடுதலை என்று பேசுவதெல்லாம்‌ பிராமணர்கள்‌ உத்தியோகம்‌ பெறத்தான்‌ உதவுமேயல்லாமல்‌ மக்கள்‌ உண்மை சுயராஜ்யம்‌ பெற உதவவே உதவாது. குடி அரசு - கட்டுரை - 16.05.1926 குடி அரசு - 1926 N 306 ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி எல்லா இந்தியப்‌ யிரசாரகராய்‌ விட்டாராம்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டியின்‌ சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச்‌ சேர்க்கப்‌ பட்டிருப்பதாகக்‌ காங்கி ரஸ்‌ காரியதரிசி ஸ்ரீமான்‌ ஏ. ரெங்கசாமி ஐயங்கார்‌ அறிவிக்கிறார்‌, என்று “சுதேசமித்திரனில்‌” குறிப்பிட்டிருக்கிறது. பொதுத்‌ தேர்தலையொட்டி அவர்‌. இந்தியா முழுவதும்‌ சுற்றுப்பிரயாணம்‌ செய்வாராம்‌. சரி, இவரை யார்‌ நியமித்‌ தார்கள்‌? ஸ்ரீமான்‌ ஏ.ரெங்கசாமி ஐயங்கார்‌ நியமித்தார்‌: ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும்‌ சுற்றுப்பிரயாணம்‌ செய்கிறார்‌. யாருடைய பணம்‌? ஊரார்‌: பொதுப்‌ பணம்‌. என்ன பிரசாரம்‌? பிராமணத்‌ தேர்தல்‌ பிரசாரம்‌. அதாவது பொது ஜனங்கள்‌ பணத்தில்‌ மாகாணம்‌ மாகாணமாய்ச்‌ சுற்றி “தமிழ்நாட்டில்‌ பிராமணரல்லாதார்‌ என்கிற அப்பிராமணக்‌ கூட்டம்‌ ஒன்று இருக்கிறது; அவர்கள்‌ எல்லோரும்‌ தேசத்துரோகிகள்‌; அவர்களுக்கு மூளை கிடையாது; பிராமணர்கள்தான்‌ பெரிய தேசபக்தர்கள்‌; மகா புத்திசாலிகள்‌; அதிலும்‌ நானும்‌ ஸ்ரீமான்கள்‌ ஏ. ரெங்கசாமி ஐயங்காரும்‌. எஸ்‌.சீனிவாசய்யங்காரும்‌. சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரும்‌, எம்‌.கே. ஆச்சாரியாருந்தான்‌ மகாமகா புத்திசாலிகள்‌, தேசபக்தர்கள்‌; ஒத்துழையாமையின்‌ போது நாங்கள்தான்‌ முன்னணியிலிருந்து மிகவும்‌ கஷ்டப்பட்டு பெரிய பெரிய தியாகம்‌ செய்தவர்கள்‌; கதர்‌, மதுவிலக்கு,தீண்டாமை முதலியவைகளில்‌ அதிக நம்பிக்‌ கையுடையவர்கள்‌: காரியத்திலும்‌ நடத்துகிறவர்கள்‌. அதனால்‌ தான்‌ தமிழ்‌ நாட்டு உண்மை தேச பக்தர்களான ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌. போன்றவர்கள்‌ எங்கள்‌ ஐயரையே தமிழ்நாட்டிற்குத்‌ தலைவர்களாகத்‌ தெரிந்‌ தெடுத்து எங்களையே பின்பற்றுகிறார்கள்‌. நாங்கள்தான்‌ தமிழ்நாட்டுக்குத்‌ தலைமை வகிக்க யோக்கியதை உள்ளவர்கள்‌; எங்களைத்‌ தவிர மற்றவர்க. ளெல்லாம்‌ தேசத்‌ துரோகிகளும்‌ வகுப்பு நலன்‌ நாடுபவர்களுமான குறுகிய புத்தியுடையவர்கள்‌”” என்று பிரசாரம்‌ செய்து எல்லா இந்தியத்‌ தலைவரா வார்கள்‌. மற்றபடி வேறு என்ன பிரசாரம்‌ செய்யக்‌ கூடும்‌? தமிழ்நாடே! உன்‌ தலைவிதிதான்‌ என்ன? உன்னை இத்‌ “தலைவர்‌” களுக்குக்‌ காட்டிக்‌ கொடுத்த “தர்மசீலர்‌ "களுக்கு ஆயுள்தான்‌ எவ்வளவோ?... குடி அரசு - கட்டுரை - 16.05.1926 207 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தேர்தல்‌ அபேகூறகர்கன்‌ சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாய்‌ சென்னை சட்டசபைக்கும்‌ இந்தியா சட்டசபைக்கும்‌ வரப்போகும்‌ தேர்தல்களுக்கு ஐயங்கார்‌ கோஷ்டியாரால்‌ அபேக்ஷகர்களை நியமனம்‌ செய்திருப்பதாகப்‌ பத்திரிகைகளில்‌ வெளி வந்திருக்கிறது. இதனை எல்லா இந்திய காங்கிரஸ்‌ கமிட்டியாரும்‌ ஒப்புக்‌ கொண்டு உறுதிபடுத்தியாய்‌ விட்டதாம்‌. ஆனாலும்‌ இன்னும்‌ பல ஜில்லாக்‌ களுக்கு அபேக்ஷகர்களைப்்‌ பூர்த்தி செய்யாமல்‌ காலியாக விட்டுவைத்திருக்‌ கிறார்கள்‌. அது எதற்காக வென்றால்‌ தாங்கள்‌ இதுவரை நியமித்த பட்டிய லானது பிராமணரல்லாதவர்களையே அதிகமாய்‌ நியமித்ததாகப்‌ பொது ஜனங்களை நம்பும்படி செய்வதற்காகவும்‌, பிராமணர்களை நியமிக்கப்‌ போகும்‌ ஸ்தானங்களையெல்லாம்‌ காலியாக வைத்து பின்னால்‌ சமயம்‌ பார்த்து ஜில்லாவுக்கு ஒவ்வொருவராகச்‌ சேர்த்துக்கொள்ளும்‌ தந்திரத்திற்‌ காகவுமே தான்‌ என்று சொல்லுவோம்‌. உதாரணமாக, தஞ்சை ஜில்லாவுக்கு ஒரு ஸ்தானம்‌ காலி. இதற்கு ஒரு ஐயரோ, ஐயங்காரோ திரைமறைவில்‌ இருக்கிறார்‌. அவர்‌ பெயரை இப்போது சொன்னால்‌ கலகம்‌ ஏற்பட்டுவிடும்‌. ஆதலால்‌ மூடு மந்திரமாகவே வைத்தி ருந்து, சமயம்‌ பார்த்து அந்தப்‌ பெயரை வெளிப்படுத்தி விடுவார்கள்‌. ஜனங்‌ கள்‌ ஒரு சமயம்‌ ஒப்பமாட்டார்கள்‌ என்று தெரிந்தால்‌ பிராமணரல்லாதாரிலே ஒரு ஆகாவளியைப்‌ பெயருக்கு மாத்திரம்‌ போட்டு, ஐயரோ ஐயங்காரோ சுயேச்சையாய்‌ நின்று சுலபத்தில்‌ தட்டிக்‌ கொண்டுபோய்‌ விடும்படி செய்வார்‌. கள்‌. மற்ற ஜில்லாக்கள்‌ விஷயத்திலும்‌ இதே இரகசியக்‌ கருத்துதான்‌. இந்த தந்திரத்திற்கு எப்படியாவது, பணச்செலவு செய்தாவது பிராமணரல்லாத “தலைவர்களையும்‌” பிரசாரகர்களையும்‌ உட்படுத்திக்‌ கொள்ளுவார்கள்‌. ஓட்டர்களும்‌ இதை அறியாமல்‌ “ஐயோ, பாவம்‌ ஸ்ரீமான்‌ ஐயங்காரும்‌ முதலி யாரும்‌ தன்னாலானவரை பிராமணரல்லாதாரையே நிறுத்தப்‌ பார்த்தார்கள்‌; ஆட்கள்‌ கிடைக்கவில்லையே, என்ன செய்வது” என்று நம்பி ஏமாற அனுகூலமாயிருக்கும்‌ என்கிற முன்னெச்சரிக்கையுடனேயே பல ஸ்தானங்‌ கள்‌ காலியாக விடப்பட்டிருக்கின்றன. ஆனபோதிலும்‌ இப்பொழுது உறுதி படுத்தப்பட்ட அபேக்ஷகர்களை வைத்துக்கொண்டு நமது பிராமணர்கள்‌ செய்யப்‌ போகும்‌ வேலை என்னவென்று பார்ப்போமானால்‌ மகாத்மா பெயரா லும்‌, காங்கிரஸ்‌ பெயராலும்‌, சுயராஜ்யக்‌ கட்சி பெயராலும்‌, ஜெயிலுக்குப்‌ போய்‌ கஷ்டப்பட்ட தேசபக்தர்கள்‌ பெயராலும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியை திட்டுவது போல்‌ பிராமணரல்லாதார்களைத்‌ திட்டிக்கொண்டு தங்களுக்குள்‌ தங்கள்‌ குடி அரசு - 1926 N 208 சொற்படி ஆடத்‌ தயாராயிருக்கும்‌ ஆள்களுக்கும்‌ ஓட்டுப்பிரசாரம்‌ செய்வ தைத்‌ தவிர வேறு வேலையில்லை. இதற்காக பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ பிராமணப்‌ பிரசாரகர்களும்‌ ஏற்கனவே தங்கள்‌ கைவசமிருந்த போதிலும்‌ தற்காலம்‌ உள்ள நிலைமையில்‌ பிராமணரல்லாத பிரசாரகர்களும்‌ பிராமண: ரல்லாத பத்திரிகைகளும்‌ இல்லாமல்‌ பிராமணரல்லாதார்களை ஏமாற்ற முடியாமலிருப்பதால்‌ அதற்காக தேர்தல்‌ முடியும்‌ வரை சிலரைப்‌ பணம்‌ கொடுத்து சுவாதீனம்‌ செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்படி சுவாதீனப்படுத்திக்‌ கொண்டாலும்‌ சிற்சில பிராமணரல்லாதார்‌ மூலமாகவும்‌ அவர்களது பத்திரிகை மூலமாகவும்‌ இவர்கள்‌ புரட்டும்‌ பித்தலாட்டங்களும்‌ வெளியாகி விடுகிறபடியால்‌, அவர்களை அடக்கவும்‌ அவர்கள்‌ பெயரில்‌ ஏதாவது பழிசுமத்தி அவர்கள்‌ வார்த்தையை பிறர்‌ நம்பாமலிருக்கும்படி செய்யவேண்டிய அவசியமும்‌ இப்போது பிராமணர்களுக்கு ஏற்பட்டுப்‌ போயிருக்கிறது. இதற்காக வேண்டி கோவை கனவான்‌ ஒருவர்‌ சில யுக்திகள்‌: கண்டுபிடித்து, அதாவது முதலாவதாக இப்போது ஸ்ரீமான்‌ ஈவெ.இராமசாமி நாயக்கரைப்‌ பற்றி பலவாறான தூஷணைகளைக்‌ கொண்ட துண்டுப்‌ பிரசுரங்‌ களையும்‌ தூஷணையானப்‌ பத்திரிகைப்‌ பிரசாரங்களையும்‌ மற்றும்‌ பல காரியங்களையும்‌ ஆரம்பித்திருக்கிறார்‌. அதென்னவென்றால்‌, 1 ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ ஈரோடு முனிசிபல்‌ சேர்ம ணாயிருந்த காலத்தில்‌ சில தவறுகள்‌ செய்திருக்கிறார்‌. 2. தங்களது குடும்ப சத்திர தர்மத்தை நடத்துகிற விஷயத்தில்‌ தனது கொள்கைக்கு விரோதமாய்‌ நடந்து வருகிறார்‌. 3. ஜஸ்டீஸ்‌ ககஷியில்‌ சேர்ந்து விட்டார்‌. 4. ஜஸ்டீஸ்‌ ககஷியாரிடம்‌ திரவியம்‌, வாகனம்‌ முதலிய சகாயம்‌ பெற்றுப்‌ பிரசாரம்‌ செய்கிறார்‌. 5. சர்க்காருக்கு அடிமையாகி விட்டார்‌. ஆகிய இவைகளைப்‌ பத்திரிகைகள்‌ மூலமாகவும்‌, துண்டுப்‌ பிரசுரங்கள்‌ மூலமாகவும்‌, கூலிப்‌ பிரசாரகர்கள்‌ மூலம்‌ திண்ணைப்‌ பிரசார மாகவும்‌ ஓட்டர்களுக்கு வினியோகம்‌ செய்து வருகிறார்‌. இனியும்‌, வேறு சில சதியாலோசனைகளும்‌ நடந்து வருகின்றன. இவற்றைப்பற்றி மறுப்புரை எழுதும்படி பல நண்பர்கள்‌ அவசரமும்‌ ஆத்திரமுங்‌ கொண்டு நமக்குப்‌ பலவிதமான கடிதங்கள்‌ எழுதியிருக்கிறார்கள்‌. ஆனால்‌ இவ்வாரத்தில்‌ நமக்கு வெளியில்‌ போக வேண்டிய வேலைகள்‌ இருப்பதாலும்‌ இன்னும்‌ என்னென்ன விதமான விஷம விஷயங்கள்‌ கிளம்பப்போகிறது என்று 309 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பார்த்து முடிவாக சமாதானம்‌ எழுதலாம்‌ என்கிற காரணத்தாலும்‌ இவ்வாரம்‌ அவைகளைப்‌ பற்றி ஒன்றும்‌ எழுதவில்லை. அடுத்த வாரமோ அல்லது அதற்கடுத்த வாரமோ ஸ்ரீமான்‌ நாயக்கரைப்‌ பற்றி பத்திரிகையில்‌ கண்ட விஷயங்களையும்‌, துண்டுப்‌ பிரசுரங்களில்‌ கண்ட விஷயங்களையும்‌, வாய்ப்‌ பிரசாரத்தில்‌ சொன்னதாகத்‌ தெரியவந்த விஷயங்களையும்‌ சுருக்கமாக நமது பத்திரிகையில்‌ எழுதி தக்க சமாதானம்‌ கூறுவோமாதலால்‌, சில நண்பர்‌ களை தயவுசெய்து அவசரப்படவேண்டாமென்று கேட்டுக்‌ கொள்ளு கிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 16.05.1926. குடி அரசு - 1926 N 210 அசை வட்கமறியாதூு ௬மாராஸ்சியக்‌ கட்சியாரிண்‌ வணியேற்றம்‌ “சுவற்றுக்‌ கீரையை வழித்துப்‌ போடடி சுரணைக்‌ கெட்ட வெள்‌: ளாட்டி” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு ஸ்திரீ கீரை கடைந்து தன்‌ கணவனுக்குச்‌ சாதம்‌ போட்டு கீரை பரிமாரினாள்‌. கணவன்‌ மனதில்‌ எதையோ வைத்துக்கொண்டு கோபம்‌ வந்து விட்டதுபோல பாசாங்கு செய்து கீரை பக்குவம்‌ நன்றாக இல்லையில்லை என்று கீரையை வாரி சுவற்றின்‌ மீது இறைத்துவிட்டு எழுந்து போய்‌ படுத்துக்‌ கொண்டான்‌. ஸ்திரீயும்‌ அந்த இலையை இழுத்து வைத்து விட்டு மீதி இருந்ததைப்‌ போட்டு சாப்பிட்டு விட்டுப்‌ படுத்துக்‌ கொண்டாள்‌. சிறிது நேரத்திற்குப்‌ பிறகு கணவனுக்குப்‌ பசி ஏற்பட்டது. மறுபடியும்‌ வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போடச்‌ சொன்‌ னான்‌. அந்த மனைவி முன்‌ இழுத்து வைத்திருந்த இலையையே பக்கத்தில்‌ இழுத்து விட்டுவிட்டு நின்று கொண்டாள்‌. இலையில்‌ வெறும்‌ சாதம்‌ மாத்திரம்‌ தான்‌ இருந்தது. கணவன்‌, மனைவியைப்‌ பார்த்து “இந்த சாதத்திற்கு ஏதாவது கரி வைத்துத்‌ தொலை, தொட்டு சாப்பிட” என்று சொன்னான்‌. அதற்கு மனைவி கரியில்லை என்று சொன்னாள்‌. பழய கீரையாவது வை என்றான்‌. அதற்கவள்‌ “தாங்கள்‌ கீரை நன்றாகயில்லை என்று வேண்டாமெனச்‌ சொன்ன தால்‌ நான்‌ எல்லாம்‌ சாப்பிட்டுவிட்டேன்‌” என்று சொன்னாள்‌. கணவன்‌ மிகுந்த கோபத்துடன்‌ “அதோ தெரிகிறதே அந்த சுவற்றுக்‌ கீரையை வழித்துப்போடடி சுரணைக்‌ கெட்ட வெள்ளாட்டி” என்று சொன்னான்‌. மனைவி “ நானா, நீங்களா, சுரணைக்‌ கெட்டவர்‌” என்று சொல்லி சுவற்றிலிருந்ததை சுரண்டிப்‌ போட்டாள்‌. கணவன்‌ பேசாமல்‌ சாப்பிட்டுவிட்டுப்‌ போனான்‌ என்பதாக ஒரு கதை உண்டு. அதைப்போல்‌ இருக்கிறார்கள்‌, சர்க்காரோடு கோபித்துக்‌ கொண்டு சட்டசபையை விட்டு வெளிவந்த சிப்பாய்கள்‌. நாளது மாதம்‌ 17- ந்‌ தேதி கல்கத்தா சட்டசபைக்‌ கூட்டமொன்று நடக்‌ கிறதாம்‌. அதற்கு “வெளியேறிய' சுயராஜ்யக்‌ கட்சியார்‌ மறுபடியும்‌ போகப்‌ போகிறார்களாம்‌. இதற்குக்‌ காரணம்‌ என்னவென்றால்‌ சட்டசபையில்‌ அவச ரச்‌ சட்டமொன்று வரப்போகிறதாம்‌. அதை இவர்கள்‌ போய்‌ எதிர்க்கப்‌ போகி றார்களாம்‌. சர்க்காரார்‌ அவசரச்‌ சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்தால்‌ இவர்கள்‌ தடுப்பினால்‌ நின்றுவிடுமா? நின்றுவிடுமென்று நினைப்‌ பார்களேயாகில்‌ சட்டசபையிடம்‌ இவர்களுக்கு நம்பிக்கையிருப்பதாக 211 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அருத்தமாகவில்லையா? அப்படிப்பட்டவர்கள்‌ ஏன்‌ வெளியில்‌ வந்ததாகச்‌ சொல்லிக்‌ கொள்ள வேண்டும்‌? இதற்காக தலைவர்‌ பண்டித நேரு ஏன்‌ “வீர மொழி” பேச வேண்டும்‌. ஒரு தடவை சட்டசபைப்‌ பிரயாணச்‌ செலவைத்‌ தியாகம்‌ செய்ய சக்தியில்லாத சுயராஜ்யக்‌ கட்சி “வெளியேறி விட்டோம்‌” என்று சொல்லுவது நகைப்பிற்கு இடமாயிருப்பதை சிறிதும்‌ அறியவில்லை. “ஆசை வெட்கமறியாது” என்பதற்கு நமது சுயராஜ்யக்‌ கட்சியே சரியான உதாரணம்‌. ஆனாலும்‌ இவைகளெல்லாம்‌ நமது ஓட்டர்கள்‌ புத்திக்கு சுலபத்தில்‌ படப்‌ போவதில்லை.என்ன செய்யலாம்‌? நல்லகாலம்‌ வரும்போது தானாகவே புத்திவரும்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 16.05.1926 குடி அரசு - 1926 N 312 ஆதி திராவிடரும்‌ ச௬ுயாராஸ்யக்‌ கக்ஷியும்‌ “சுதேசமித்திரன்‌” என்னும்‌ பிராமணப்‌ பத்திரிகை ஆதி திராவிடர்க ளுக்கு ஜஸ்டீஸ்‌ கட்சியார்‌ ஒன்றும்‌ செய்யவில்லை என்றும்‌, தங்கள்‌ கூட்டத்‌ தார்‌ ஆதி திராவிடர்களுக்கு சுவர்க்க வாசலைத்‌ திறந்து விடப்‌ போவதாகவும்‌, இனியாவது தங்களை வந்து சரணமடையும்படி உபதேசிக்கிறது. ஜஸ்டீஸ்‌ கட்சியார்‌ ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்தார்களோ, இல்லையோ? அதைப்‌ பற்றி அதிக கவலை வேண்டாம்‌. அது ஆதி திராவிடர்களுக்கே தெரியும்‌. ஆனால்‌ காங்கிரசின்‌ ஆதிக்கத்தை அடைந்த சுயராஜ்யக்‌ கட்சியார்‌. ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்‌? என்ன பதவி கொடுத்‌ தூர்கள்‌? என்ன உத்தியோகம்‌ தந்தார்கள்‌? இந்தியா சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரை நிறுத்தினார்களா? நிறுத்த ஆளில்லாமல்‌ திண்டாடும்‌ சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரையாவது நிறுத்தினார்களா? சென்னை கார்ப்பரேஷன்‌ கவுன்சிலுக்கு ஆதி திராவிட வகுப்பில்‌ பிறந்த ஒருவரை: யாவது நிறுத்தினார்களா? வேறு வகையில்‌ இவர்கள்‌ மட்டிலும்‌ என்ன சாதித்து விட்டார்கள்‌? ஒரு சமயம்‌ ஆதி திராவிடர்களில்‌ எவராவது ஒருவருக்கு அதுவும்‌ தன்னோடு கூடத்‌ தன்னைத்‌ தலைவர்‌ என்று சொல்லித்‌ திரிய - அதுவும்‌ வீட்டில்‌ பட்டினி, சுத்தமாய்‌ செலவுக்கில்லை என்று கேட்கும்‌ போதும்‌ - நீ கொடுக்கிறாயா ஜஸ்டீஸ்‌ கட்சியில்‌ சேரட்டுமா என்று மிரட்டும்‌. போதும்‌ - ஒன்றோ இரண்டோ ரூபாய்கள்‌ பிச்சை போடுவதுபோல்‌ கொடுத்‌ துக்‌ கொண்டு வந்திருக்கிறதைத்‌ தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள்‌? அல்லது ஆதி திராவிடர்களுக்கு வகுப்புவாரி உரிமை வாங்கித்‌ தர சம்மதிக்‌ கிறார்களா? வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்று சொன்னாலே, சொல்ப வனை, “ஜஸ்டீஸ்‌ கட்சியில்‌ சேர்ந்து விட்டான்‌, பாவி,துரோகி” என்று சொல்லு கிறார்கள்‌. இவர்களை நம்பி என்ன பலனை அடைய முடியும்‌? காஞ்சீவரத்‌ தில்‌ கூடிய பிராமணரல்லாதார்களாவது எல்லோரும்‌ ஒன்றாய்ச்சேர்ந்து ஏக. மனதாய்‌ ஆதி திராவிடர்களுக்கு, அவர்கள்‌ எண்ணிக்கைக்குத்‌ தகுந்த அளவுக்கு மேலாகக்‌ கூட சட்டசபை, கார்ப்பரேஷன்‌, உத்தியோகம்‌, பதவி ஆகிய எல்லாவற்றிலும்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுப்பதாய்த்‌ தீர்மானித்‌ தார்களே; அதைக்‌ கெடுத்தவர்கள்‌ யார்‌? சுயராஜ்யக்‌ கட்சியின்‌ “மாபெருந்‌ தலைவரான” ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரும்‌ “காந்தி சிஷ்யரும்‌ ஒப்பற்ற தலைவருமான” ஸ்ரீமான்‌ சிராஜகோபாலாச்சாரியாரும்‌ கூடி சதியாலோசனை செய்து ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியாரையும்‌ கெடுத்து, இத்தீர்மானம்‌ காங்கிரஸ்‌ மகாநாட்டிற்கே கொண்டு வரக்‌ கூடாது என்று தடுத்துவிட்டார்கள்‌. 313 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தீர்மானம்‌ கொண்டுவரக்கூட சம்மதிக்காத காங்கிரஸ்‌ தலைவரும்‌, சுயராஜ்யக்‌ கட்சித்‌ தலைவரும்‌ தீர்மானத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்களா? என்பது ஆதி திராவிடர்களுக்குத்‌ தெரியமுடியாமல்‌ போகாது. ஜஸ்டீஸ்‌ கட்சியாரா வது ஆதிதிராவிடர்கள்‌ கேட்கும்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ சரியான தென்றும்‌, அதற்காக தாங்கள்‌ போராடியும்‌, அதை தங்கள்‌ கட்சியின்‌ முக்கியக்‌ கொள்கையாகவும்‌ வைத்திருக்கிறார்கள்‌. அவர்கள்‌ கூச்சல்‌ போட்டதன்‌ பலனாய்த்தான்‌ ஸ்ரீமான்கள்‌ எம்‌.சி.ராஜா, வீரய்யன்‌ முதலிய மணிகள்‌ ஆதி திராவிட வகுப்பில்‌ இருக்கிறார்கள்‌ என்றாவது பிறத்தியாருக்குத்‌ தெரியும்‌ படியாய்‌ இருக்கிறது. அது இல்லாவிட்டால்‌ இவர்களுக்கு சட்டசபை ஏது? கான்பரன்ஸ்‌ ஏது? தீர்மானம்‌ ஏது? “எங்கள்‌ கட்சியில்‌ வந்து சேருங்கள்‌, நாங்கள்‌ சாதித்து விடுகிறோம்‌” என்று பிராமணர்கள்‌ கூப்பிடுவது ஏது? ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ பணம்‌ ஒன்றிரண்டு ரூபாய்கூட ஆதி திராவிடர்‌: களுக்காவது கிடைப்பதேது?' குடி அரசு - கட்டுரை - 23.05.1926. குடி அரசு - 1926 N 314 யட்டாபிகேகம்‌ மச்சாண்‌ இறந்தால்‌ நல்லதாச்சு அவருடைய கம்பனி நமக்காச்‌௬ - சித்திரபுத்திரன்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்காருக்கு எல்லா இந்தியத்‌ தலைமைப்‌ பட்டாபிஷேகம்‌ ஆகிவிட்டது. ஆனால்‌ அது இரண்டு மாதத்திற்கு என்று சொல்லப்பட்டாலும்‌ காயமானதென்பதுதான்‌ நமது அபிப்பிராயம்‌. பண்டித நேரு இரண்டுமாதத்திற்கு ஓய்வு எடுத்துக்‌ கொள்ளுகிறதாய்ச்‌ சொல்லி, தனது விசேஷ அதிகாரத்தால்‌ ஸ்ரீமான்‌ ஐயங்காருக்குப்‌ பட்டாபிஷேகம்‌ செய்து தலைமைப்‌ பதவியை அவர்‌ தலையில்‌ சூட்டிவிட்டுப்‌ போய்விட்டார்‌. இது மகாத்மா ஓய்வெடுத்துக்‌ கொண்டது போலவேதான்‌ முடியும்‌. “வெற்றிமேல்‌ வெற்றி ஏற்பட்டு, இரட்டை ஆட்சி மடிந்தவுடன்‌'” அதற்குமேல்‌ என்ன செய்வ தென்று தெரியாமல்‌ ஸ்ரீமான்‌ சி.ஆர்‌.தாஸ்‌ நிரந்தர ஓய்வெடுத்துக்‌ கொண்டார்‌. சுயராஜ்யக்‌ கட்சி வெற்றி அடைந்து காங்கிரசையே தனக்குள்‌ ஐக்கியப்‌ படுத்திக்‌ கொண்டவுடன்‌ இனி நமக்கு இங்கென்ன வேலை என்று மகாத்மா ஓய்வெடுத்துக்‌ கொண்டார்‌. அதோடுநிர்மாணத்‌ திட்டங்களும்‌ ஓய்வெடுத்துக்‌ கொண்டன. இப்போது பண்டித நேரு ராஜி ஒப்பந்தம்‌ முடிந்தவுடன்‌ இனி எப்படி ஜனங்கள்‌ முகத்தில்‌ விழிப்பது என்று ஓய்வெடுத்துக்‌ கொண்டார்‌. இது எதற்காகவோ தெரியவில்லை. சட்டசபையை விட்டு வெளியேறின வீரத்‌ திற்கா? அந்த வீரத்தைக்‌ காப்பாற்றி மறுபடியும்‌ சட்டசபையை எட்டிப்‌ பார்க்காமல்‌ இருக்கிற சுத்தத்திற்கா? சபர்மதியில்‌ பரஸ்பர ஒத்துழைப்பாளருக்‌ கும்‌ தங்களுக்கும்‌ ஏற்பட்ட ராஜியை கண்ணியமாய்‌ நடத்தி வைத்துக்‌ கொ டுத்த ஆண்மைக்கா, சத்தியத்திற்கா? எதற்கென்று அறியமுடியவில்லை. ஆனாலும்‌ “நான்‌ பரஸ்பர ஒத்துழையாதாரிடம்‌ செய்துகொண்டு கையெ முத்துப்‌ போட்ட ராஜியை எப்பொழுது நிறைவேற்றி வைக்க முடியவில்‌ லையோ தன்னைப்‌ பின்பற்றுவோர்கள்‌ தனது வார்த்தையை எப்பொழுது மதிக்கவில்லையோ அப்பொழுதே, பண்டிதர்‌ “சுயமரியாதை உள்ளவரா யிருந்தால்‌ தலைமைப்‌ பதவியிலிருந்து விலகியிருப்பார்‌. இதுதான்‌ சுயமரியா தைக்கு லக்ஷணம்‌” என்று “குடி அரசு” “சபர்மதி ராஜியின்‌ முறிவு” என்கிற தலையங்கத்தில்‌ எழுதியிருந்தது. அது போலவே பண்டிதர்‌ சுயமரியாதை யைக்‌ காட்டுவதற்கே ஓய்வெடுத்துக்‌ கொண்டாரென்றால்‌ நிரம்பவும்‌ 315 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சரியென்றே சொல்லலாம்‌. ஆனால்‌ நமது தமிழ்நாட்டுப்‌ பிராமணர்களுக்கோ “ மச்சான்‌ இறந்தால்‌ நல்லதாச்சு, அவருடைய கம்பளி நமக்காச்சு'” என்கிற முறைப்படி பண்டித நேரு விலகினதைப்பற்றி கவலையில்லை; அவர்‌ தலைமை ஸ்தானம்‌ இவருக்குப்‌ பட்டாபிஷேகமாய்விட்டதே, அதுவே போதும்‌ என்கிற சந்தோஷத்தில்‌ ஆழ்ந்திருக்கிறார்கள்‌. தமிழ்நாட்டுப்‌ பிராமணர்களை, அதிலும்‌ அய்யங்கார்‌ கூட்டத்தை நம்பினவர்கள்‌ இதுவரை: யார்‌ உருப்படியாகியிருக்கிறார்கள்‌? ஆனாலும்‌ ஓய்வு கிடைப்பது மாத்திரம்‌ நிச்சயம்‌. ஸ்ரீமான்களான ரெங்கசாமி ஐயங்காரை நம்பி ஸ்ரீமான்‌ தாஸ்‌ ஓய்வெ டுத்துக்‌ கொண்டார்‌; ராஜகோபாலாச்சாரியாரை நம்பி மகாத்மா ஓய்வெடுத்துக்‌ கொண்டார்‌; சீனிவாசய்யங்காரை நம்பி பண்டிதர்‌ ஓய்வெடுத்துக்‌ கொண்டார்‌. அம்மூவர்‌ சக்தியும்‌ இம்மூவருக்குள்ளாகவே ஆவாகனமாகியிருக்கிறது. இனி தமிழ்நாட்டிற்கு ஒன்றும்‌ குறைவில்லை. எடுத்த காரியம்‌ யாவினும்‌ வெற்றி. யாருக்கு? பிராமணர்களுக்கு. இந்திய அரசியல்‌ வாழ்‌ வென்பது பிராமணர்‌ வாழ்வுக்கேற்பட்டதென்று நாம்‌ பலமுறை சொல்லி வந்திருக்‌ கிறோம்‌ - சொல்லியும்‌ வருகிறோம்‌ - இனியும்‌ சொல்லுவோம்‌. அனுபவ சாலிகளான நமது முன்னோர்‌ பலரும்‌ சொல்லியிருக்கிறார்கள்‌. இதை நம்மில்‌ பலரும்‌ அறிந்திருக்கிறார்கள்‌. ஆனால்‌ என்ன செய்வது? பிராமணர்களின்‌ செல்வாக்குப்‌ பெருக்கும்‌, அதிகாரப்‌ பெருக்கும்‌, செல்வப்‌ பெருக்கும்‌ பிராமணரல்லாதாரில்‌ இதை அறிந்த பலரையும்‌ “சூரிய சந்திரர்களை: கிரகணம்‌ தீண்டி” மறைப்பதைப்‌ போல மறைத்து விடுகிறது. என்‌ செய்வது? ஜஸ்டீஸ்‌ கக்ஷி ஏற்பட்ட காலத்தில்‌ அந்த ககஷியார்‌ இதைச்‌ சொன்னபோது பிராமணரல்லாதாரின்‌ பிரதிநிதிகள்‌ என்று சொல்லிக்‌ கொண்டு பிராமணர்‌: களுக்கு முன்னணியிலிருந்து அதை ஒடுக்கி வீரகண்டாமணி அணிந்த நமது டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ ஆகியோர்‌. கதி இன்று எப்படி இருக்கிறது? டாக்டர்‌ நாயுடு அஞ்ஞாதவாசம்‌ செய்கிறார்‌; என்ன செய்வதென்று தெரியாமல்‌ திகைக்கிறார்‌; இனி என்ன பெயர்‌ வைத்துக்‌ கொண்டு மறுபடியும்‌ வெளியாகலாமென்று பதைக்கிறார்‌; அடியோடு அவரை பிராமணர்கள்‌ கைவிட்டுவிட்டார்கள்‌.சென்னை சட்டசபைக்கு சேலம்‌ ஜில்லா அபேக்ஷகர்களை நிறுத்த சேலத்திற்கு வந்த சீனிவாசய்யங்கார்‌ நமது டாக்டர்‌. நாயுடுவுக்குத்‌ தெரிவிக்கவில்லை: அவர்‌ வீட்டுக்கு வரவுமில்லை; அவரைக்‌ கலந்து பேசவுமில்லை என்றால்‌ டாக்டர்‌ நாயுடுவைப்‌ பற்றி இந்த பிராமணர்‌: கள்‌ எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள்‌ என்பது புலனாகும்‌. இந்த பிராமணர்களுடன்‌ அவர்‌ திரியும்‌ போது மகாத்மா வந்தாலும்‌ டாக்டர்‌ வீட்டில்‌ தான்‌ இறக்குவது, தேசபந்து தாஸ்‌ வந்தாலும்‌ டாக்டர்‌ வீட்டில்‌ தான்‌ இறக்கு வது, இன்னும்‌ யார்‌ வந்தாலும்‌ டாக்டர்‌ வீட்டில்தான்‌ இறக்குவது. இப்போது இந்த பிராமணர்களுக்கு அவருடைய வீடு “அதிகார வர்க்கத்தார்‌” வீடாய்‌ விட்டது. டாக்டர்‌ நாயுடு அவர்கள்‌ செய்த குற்றம்தான்‌ என்ன? இங்கொரு கால்‌, அங்கொரு கால்‌ வைத்திருப்பதுதான்‌. அதாவது சுயராஜியக்‌ கட்சியை இரவு பகலாய்‌ ஆதரித்தாலும்‌ ஜஸ்டீஸ்‌ கட்சியை பிராமணர்களின்‌ ஆசைதீர திட்டினாலும்‌, தேவஸ்தான சட்டத்தை ஆதரிக்கவும்‌, குருகுலப்‌ புரட்டுகளை குடி அரசு - 1926 M 216 வெளியாக்கவும்‌ உதவியாயிருந்ததுதான்‌ பெரிய குற்றம்‌. சரி, நமது ஸ்ரீமான்‌ திரு. வி.கலியாணசுந்தர முதலியார்‌ கதியோ, இந்த பிராமணர்கள்‌ பின்‌ சென்றால்தான்‌ அவர்‌ பெயர்‌ பத்திரிகையில்‌ போடப்படும்‌, அதுவும்‌ அவர்‌ ஜஸ்டீஸ்‌ கட்சியை நன்றாய்‌ திட்ட வேண்டும்‌; திட்டினதில்‌ ஒன்று சொல்லியிருந்தால்‌, கூட இரண்டு சேர்த்துதான்‌ பிராமணப்‌ பத்திரிகை யில்‌ பிரசுரிக்கப்படும்‌; அதற்கும்‌ சம்மதித்தால்தான்‌ கூடக்‌ கூட்டிக்கொண்டு போகமுடியும்‌: இல்லாவிட்டால்‌ அதுவும்‌ இல்லை; டாக்டர்‌ நாயுடுபோல்‌ மூலையில்‌ உட்கார வேண்டியதுதான்‌. “அரை அந்தணர்‌” , “முழு அந்தணர்‌” என்று சொல்லப்படும்‌ பிராமண பக்தர்கள்‌ பிராமண விஸ்வாசிகளான இவர்கள்‌ சங்கதியே இப்படி இருக்குமானால்‌ “பிராமணத்‌ துவேஷியான” ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கரை இன்னும்‌ உலகத்தில்‌ வைத்திருப்பதே நமது பிராமணர்களின்‌ தர்ம சிந்தையல்லவா? மற்றவர்களைப்‌ பற்றியும்‌ கேட்கவேண்டுமோ? தமிழ்‌ நாட்டில்‌ பிராமணரல்லாதார்‌ ராஜீய வாழ்வினால்‌ பிழைக்க வேண்டுமென்‌ றாலும்‌ சரி, தேசபக்தர்களாக வேண்டுமென்றாலும்‌ சரி, பிராமணர்களிடம்‌ லைசென்ஸு பெறாமல்‌ முடியாது என்கிற நிலைமையிலிருக்கிறது. ஆதலால்‌ ஸ்ரீமான்கள்‌ நாயுடு, முதலியார்‌ இவர்களின்‌நிலைமையை அறிந்தவர்கள்‌ சில “குட்டி தேச பக்தர்கள்‌” “வயிற்றுச்சோத்து தேசபக்தர்கள்‌” பிராமணரல்லா தாரை திட்டுவதைப்‌ பற்றியும்‌ பத்திரிகைகளில்‌ தாறுமாறாய்‌ எழுதுவதைப்‌ பற்றியும்‌ கேட்கவும்‌ வேண்டுமா? அதைப்‌ பற்றி பேசவும்‌ வேண்டுமா? குடி அரசு - கட்டுரை - 23.05.1926. 317 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஒத்துமையா நாற்றம்‌ வீசும்‌ சுயாரான்யக்‌ கட்சி ஹம்பர்களும்‌ கோயமுத்தூர்‌ வில்லா போர்டும்‌ கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டின்‌ கூட்டமொன்று பிரசிடெண்டு ராவ்‌ சாஹிப்‌ சி. எஸ்‌.இரத்தினசபாபதி முதலியார்‌ அக்கிராசனத்தின்‌ கீழ்‌ கூடிற்று. இக்‌ கூட்டத்திற்கு 40 அங்கத்தினர்கள்‌ வந்திருந்தார்கள்‌. ஏனெனில்‌, ஸ்ரீமான்‌ முதலியாரது நியமனம்‌ பெற்ற பிரசிடெண்டு உத்தியோக காலத்தில்‌ இந்தக்‌ கூட்டம்‌ கடைசி கூட்டமாகும்‌. ஆதலால்‌ ஸ்ரீமான்‌ முதலியாருக்கு ஜில்லா போர்டு மெம்பர்களின்‌ நன்றியறிதலைக்‌ காட்டவும்‌ வந்தனங்‌ கூறவும்‌ “சுயராஜ்யக்‌ கட்சி அங்கத்தினர்கள்‌” உள்பட ஏறக்குறைய எல்லா மெம்பர்‌: களுமே வந்‌ திருந்தார்கள்‌.அப்பொழுது இம்மாதம்‌ 30- ௨கோயமுத்தூருக்கு விஜயம்‌ செய்யப்போகும்‌ கவர்னர்‌ துரை அவர்களுக்கு ஜில்லா போர்டின்‌ சார்பாய்‌ ஒரு உபசாரப்‌ பத்திரம்‌ படித்துக்கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம்‌ வந்துவிட்டது.அக்கூட்டத்தில்‌ ஒத்துழையா நாற்றம்‌ வீசும்‌ சுயராஜ்‌ யக்‌ கட்சி மெம்பர்களான ஸ்ரீமான்‌ ராவ்‌ பஹதூர்‌ டி.எ.இராமலிங்கஞ்‌ செட்டியா ரும்‌ ஜில்லா போர்டுக்கு சர்க்காரால்‌ நியமனம்‌ பெற்ற மெம்பரான ஸ்ரீமான்‌ சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரும்‌ மெம்பர்களாய்‌ ஆஜராகியிருந்தார்கள்‌. உபசாரப்பத்திரத்தோடு போகாமல்‌ உபசாரப்‌ பத்திரத்திற்கு 350 ரூபாய்‌ செலவு செய்ய வேண்டும்‌ என்று அக்கிராசனர்‌ ஒரு தீர்மானங்‌ கொண்டு வந்தார்‌. “ஓத்துழையாமை நாற்றங்‌”கொண்ட ஸ்ரீமான்கள்‌ செட்டியார்‌ நிலைமையும்‌ ஐயங்கார்‌ நிலைமையும்‌ கஷ்டமாய்ப்‌ போய்விட்டது. தங்களது ஒத்துழையாமை நாற்றத்தை வெளியில்‌ காட்டி அத்தீர்மானத்தை எதிர்த்‌ தாலோ ஸ்ரீமான்‌ செட்டியாரின்‌ வயிற்றுக்குள்‌ இருக்கும்‌ ராவ்‌ பஹதூர்‌ பட்டத்‌ தையும்‌, ஐயங்கார்‌ வயிற்றுக்குள்ளிருக்கும்‌ ஜில்லா போர்டு நியமனத்தையும்‌ வெளியில்‌ கக்க வேண்டியதாயிருக்கிறது. சர்க்காரிடம்‌ பெற்றிருக்கும்‌ தயவுக்காக அத்தீர்மானத்தை ஆதரித்தாலோ தங்கள்‌ மேல்‌ வீசுவதாகச்‌ சொல்‌ லும்‌ ஒத்துழையாமை நாற்றம்‌ மறைந்து போகும்‌; பிறகு சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாய்‌ ஓட்டுக்‌ கிடைக்காது என்கிற பயம்‌. என்‌ செய்வார்கள்‌ பாவம்‌! திருட னைத்தேள்‌ கொட்டியது போல்‌ செட்டியார்‌ மெளனமாயிருந்தார்‌. ஐயங்காரோ வாதத்தில்‌ கலந்து கொண்டு 350 ரூபாய்க்குமேல்‌ செலவு செய்யக்கூடாது என்று உரத்துப்‌ பேசி “ஒத்துழையாமை” யைக்‌ காட்டிக்‌ கொண்டார்‌. குடி அரசு - 1926 N 318 தீர்மானமே 350 ரூபாய்க்கு மாத்திரம்‌ இருக்கும்போது ஐயங்கார்‌ 350 ரூபாய்க்கு மேல்‌ போகக்கூடாது என்றால்‌ என்ன அருத்தமோ தெரியவில்லை. ஒரு வீட்டில்‌ ஒருவன்‌ திருடி விட்டான்‌. அவனைப்‌ பிடித்து மேஜஸ்ட்ரேட்‌ கோர்ட்டாரால்‌ விசாரிக்கப்பட்டு மேஜஸ்ட்ரேட்‌ 15 அடி அடிக்கும்படி தீர்ப்புச்‌ சொன்னார்‌. தீர்ப்புச்‌ சொல்லும்போது கோர்ட்டில்‌ கூட்டமிருந்ததால்‌ அக்‌ கூட்டத்தார்‌ தனது திருட்டை மறந்து சாமர்த்தியத்தை அறியும்படி, திருடின வன்‌ மேஜஸ்ட்ரேட்டைப்‌ பார்த்து “15 அடிதான்‌ அடிக்க வேண்டும்‌; அதற்கு மேல்‌ ஒரு அடி விழுந்துதோ - அப்புறம்‌ தெரியும்‌ நம்ம சங்கதி” என்று வீர: மொழி பேசினானாம்‌. அதைப்போல்‌ நமது ஐயங்கார்‌ 350 ரூபாய்க்கு மேல்‌ செலவு செய்யக்கூடாது என்று கண்டித்துப்‌ பேசி அங்கு வந்திருந்த மெம்பர்களுக்கு தனது “ஒத்துழையாமை நாற்றத்தைக்‌"' காட்டிவிட்டார்‌. பிறகு உபசாரப்‌ பத்திரம்‌ தயாரிக்க ஏற்படுத்திய கமிட்டியில்‌ ஐயங்கார்‌, செட்டியார்‌ முதலியோரது பெயர்‌ சேர்க்கப்பட்டது. ஸ்ரீமான்‌ ஐயங்கார்‌ ஜாடை காட்டி தமது பெயரை விலக்கி விடும்படி கேட்டுக்கொண்டாராம்‌. செட்டியார்‌ அதைக்கூட சொல்லவில்லையாம்‌. கவர்னரை சந்திக்கும்‌ சந்தர்ப்பத்தை இழக்கச்‌ செட்டியாருக்கு மனமில்லை; ஐயங்காருக்கோ சம்மனில்லாமல்‌ ஆஜராகிக்‌ கொள்ளலாம்‌ என்கிற தைரியம்‌. ஓட்டர்களின்‌ பையித்தியக்காரத்தனமானது இவர்களை இவ்வளவு புத்திசாலித்தனமாய்‌ நடந்து கொள்ளச்‌ செய்கிறது. என்ன செய்வது! இந்தியா வின்‌ சுயராஜ்யம்‌ இப்படிப்பட்ட தேசீய வீரர்கள்‌. (9) கையில்‌ சிக்கிக்‌ கிடக்‌ கிறது. நிற்க, இது நடந்த பிறகு பிரசிடெண்டு ஸ்ரீமான்‌ சி.எஸ்‌.இரத்தினசபாபதி முதலியாரின்‌ பிரசிடெண்டு வேலையைப்‌ பாராட்டி அடியில்‌ கண்ட தீர்மானம்‌. ஏக மனதாய் நிறைவேறியது. அதாவது, “இந்த போர்டின்‌ பிரசிடெண்டாக ராவ்‌ சாகிப்‌ சி.எஸ்‌.இரத்தினசபாபதி முதலியார்‌ 3 வருஷ காலமாய்‌ மிகவும்‌ போற்றும்‌ படியாய்‌ இந்த போர்டின்‌ வேலைகளைச்சரிவர நடத்தினதற்காகவும்‌ இந்த ஜில்லாவில்‌ ஸ்தல ஸ்தாபன சுய ஆட்சி என்ற சுயராஜ்ய பரிபாலன விஷயத்தில்‌ சம்பந்தப்பட்ட எல்லோரிடமும்‌ அன்னியோன்னியமாய்‌ ஒத்து ழைத்து அபிவிருத்தியைக்‌ காட்டியதற்காகவும்‌, இந்த போர்டார்‌ புகழ்வதுடன்‌ தங்களது உண்மையான வந்தனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறார்கள்‌” என்கிற தீர்மானத்தை ஊத்துக்குளி ஜமீன்தார்‌ குமார ராஜா அவர்கள்‌ பிரேரே பிக்க ஏகமனதாய்‌ நிறைவேறிற்று. ஒத்துழையாதாரோ, சுயராஜ்யக்‌ கட்சிக்கார ரோ தவிர வேறு யாராவது ஸ்தல ஸ்தாபனங்களைக்‌ கைப்பற்றி நிருவாகம்‌. நடத்தினால்‌ ஸ்தல ஸ்தாபனங்களின்‌ மீது இடி விழுந்துவிடும்‌ என்று சொல்லும்‌ “காங்கிரஸ்‌ விஸ்வாசிகள்‌'” ஒத்துழையாதாரும்‌ சுயராஜ்யக்‌ கட்சியா ரும்‌ அல்லாத ஸ்ரீமான்‌ ராவ்‌ சாகிப்‌ சி.எஸ்‌. இரத்தினசபாபதி முதலியார்‌ நிர்‌ வாகம்‌ நடத்தியும்‌ ஸ்தல ஸ்தாபனங்களில்‌ இடி விழுந்து விடாமல்‌ அபி விருத்தி பெற்றிருக்கிறதற்கு என்ன பதில்‌ சொல்லுவார்களோ தெரியவில்லை. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 23.05.1926. 319 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஸ்ரீமாண்‌ திரு.வி.கலியாணசுந்தா முதலியார்‌ ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ செங்கற்பட்டு ஜில்லாவில்‌ பிராமணர்களுக்காக பிரசாரம்‌ செய்து வருகையில்‌ பல்லாவரத்‌ தில்‌ ஒரு பிராமணர்‌ அக்கிராசனத்தின்‌ கீழ்‌ பிராமணர்களின்‌ நற்சாக்ஷிப்‌ பத்திரமான வரவேற்புப்‌ பத்திரம்‌ பெற்றுக்கொண்டு தனது திருவாக்கால்‌ “மேல்‌ நாட்டாருக்கு வயது 42, கீழ்‌ நாட்டாருக்கு வயது 22; நமது நாட்டில்‌ பஞ்சம்‌ அதிகம்‌; ஆதலால்‌ ஸ்ரீமான்‌ ௭. இராமசாமி முதலியாருக்கு ஓட்டுக்‌ கொடுக்காதீர்கள்‌. அவர்‌ அடாத செயல்கள்‌ செய்வதால்தான்‌ அவருக்கு ஓட்டுக்‌ கொடுக்கக்‌ கூடாது என்று சொல்லுகிறேன்‌. ஸ்ரீமான்கள்‌ எம்‌.கே. ஆச்சாரியார்‌ வகையறாக்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌” என்று பேசினாராம்‌. இவருக்கு ஆத்மா இருக்கிறதா என்பதே நமது சந்தேகம்‌. ஐயோ! நமது முதலியாரின்‌ புத்தி இப்படியும்‌ சபலமாய்ப்‌ போகுமென்று நாம்‌ எந்தக்‌ காலத்திலும்‌ எதிர்பார்த்ததேயில்லை. ஸ்ரீமான்கள்‌ எம்‌.கே.ஆச்சாரியார்‌, சத்தியமூர்த்தி, எ.ரெங்கசாமி ஐயங்கார்‌ வகையறாக்களைவிட - இவர்களது நாணயத்தைவிட - ஸ்ரீமான்‌ எ. இராமசாமி முதலியார்‌ எந்த விதத்தில்‌ தாழ்ந்த வர்‌? நமது முதலியாருக்கு என்ன கெடுதி செய்தார்‌; என்ன அடாத செய்கை: செய்து விட்டார்‌? அல்லது அவர்கள்‌ “கக்ஷிக்கும்‌” இவர்கள்‌ “கக்ஷிக்கும்‌” வித்தியாசம்தான்‌ என்ன? ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ கோயமுத்தூரில்‌ பேசிக்‌ கொண்டிருக்கும்போது தனது முழு வேலையும்‌ செங்கல்பட்டு ஜில்லாவி லேயே இருப்பதாகவும்‌, தன்னுடைய “கணங்களை” யெல்லாம்‌ அங்கேயே அனுப்பி எப்படியாவது ஸ்ரீமான்‌ எ. இராமசாமி முதலியாரை ஒழித்துவிடப்‌ போவதாயும்‌ உறுதி சொன்னாராம்‌. அவரது திருவாக்கைப்‌ பரிபாலிக்க நமது முதலியார்மர உரி தரித்துக்கொண்டு செங்கல்பட்டு ஜில்லாவுக்குப்‌ புறப்பட்டு விட்டார்‌ போலும்‌. அல்லது பிராமண அக்கிராசனமும்‌ பிராமண “நற்சாக்ஷிப்‌ பத்திரமும்‌” நமது முதலியாரை மயக்கி விட்டது போலும்‌. இந்தப்‌ பிராமணர்‌: களே நமது. முதலியாருக்கு வரவேற்புப்‌ படித்துக்‌ கொடுத்தாலும்‌ “உண்மை அந்தணர்‌” என்று வெளியில்‌ சொன்னாலும்‌ இவரைப்‌ பற்றி இந்த பிராமணர்கள்‌ மனதில்‌ என்ன நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்களென்பதை ஒரு சிறிதாவது ஞாபகப்படுத்திப்‌ பார்த்தாரா? இப்படி ஒரு ஆசாமியை தங்கள்‌. வசப்படுத்திக்‌ கொண்டு, அவர்‌ வகுப்பார்‌ மீதே வசைமொழிப்‌ புராணம்‌ பாடும்படி செய்து நமது காரியத்தை சாதித்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்றுதான்‌ நினைப்பார்கள்‌. அவர்கள்‌ வேலை முடிந்த பிறகு திரு.முதலியாரை குடி அரசு - 1926 N 320 கண்ணெடுத்துப்‌ பார்ப்பார்களா? சுயராஜ்யக்‌ கக்ஷியின்‌ அயோக்கியத்‌ தனத்தை ஒரு நாள்‌ வெளியில்‌ எடுத்துச்‌ சொன்னதற்குத்தானே “சாது” முதலியார்‌. “உண்மை அந்தண” முதலியார்‌, “மாரீச” முதலியாராக மாற்றப்பட்டார்‌? “மேல்‌ நாட்டாருக்கு வயது 42 - கீழ்‌ நாட்டாருக்கு வயது 22 - ஆத. லால்‌ எம்‌.கே.ஆச்சாரியாருக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌, எ. இராமசாமி முதலியா ருக்கு ஓட்டுக்‌ கொடுக்காதீர்கள்‌” என்று சொன்னால்‌ என்ன அருத்தம்‌? எம்‌.கே. ஆச்சாரியார்‌ பிரம்மாவா? எல்லோர்‌ தலையிலும்‌ நூறு, நூறு வயது என்று எழுதி விடுவாரா? அல்லது எ. இராமசாமி முதலியார்‌ எமனா? 22 வயதி லேயே எல்லோரையும்‌ கொண்டுபோய்‌ விடுகிறாரா? ஐயோ! பாவம்‌! திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின்‌ கல்வியும்‌ - பாண்டித்தியமும்‌ - பிராமண: ரல்லாதார்‌ பிறவியும்‌ செங்கல்பட்டு ஜில்லா பாமர ஜனங்களிடம்‌ போய்‌ “மேல்‌ நாட்டாருக்கு 42- வயது, கீழ்‌ நாட்டாருக்கு 22 - வயது. ஆதலால்‌ இராமசாமி முதலியாருக்கு ஓட்டுப்‌ போடாதீர்கள்‌; எம்‌.கே. ஆச்சாரியாருக்குப்‌ போடுங்‌ கள்‌” என்று சொல்லுவதற்குத்‌ தானா பிரயோஜனப்படவேண்டும்‌. இவை யனைத்தையும்‌ பாமர ஜனங்கள்‌ அறியும்‌ நாள்‌ எதுவோ அதுதான்‌ விடுதலை நாள்‌. அதுவரை ஸ்ரீமான்‌ கலியாணசுந்தர முதலியார்‌ போன்றோர்கள்‌. நாள்தான்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 23.05.1926. 321 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ சுசீந்திரம்‌ சத்தியாக்கிரகம்‌ ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல்‌ நிறுத்தப்‌ பட்டதாகவும்‌ சீக்கிரத்தில்‌ எல்லாப்‌ பிரஜைகளுக்கும்‌ அனுகூலமான முடிவை திருவாங்கூர்‌ அரசாங்கத்தாரால்‌ நடத்தி வைக்கப்படும்‌ என்றும்‌ பிரஸ்தாபம்‌ வந்தது. ஆனால்‌ ஏறக்குறைய சத்தியாக்கிரகம்‌ நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்‌ திற்கு மேலாகியும்‌ இன்னமும்‌ அதைப்பற்றி ஒரு விபரமும்‌ தெரிவதற்‌ கில்லாமல்‌ கிணற்றில்‌ கல்லு போட்டதுபோல்‌ மூடுமந்திரமாயிருக்கிறது.. கமிஷனர்‌ பிட்டு துரை மிகவும்‌ நல்லவர்‌. எல்லாருக்கும்‌ சம உரிமை கிடைக்க வேண்டும்‌ என்பதில்‌ அக்கரை உள்ளவர்‌. ஆனால்‌ திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும்‌ மலையாள பிராமணர்கள்‌ தயவைப்‌ பெற்று புகாரில்‌ லாமல்‌ காலந்தாட்டிவிட்டுப்‌ போகலாம்‌ என்கிற ஆசையுள்ளவராம்‌. இவர்க ளின்‌ நிலைமையை நாம்‌ கவனித்துக்‌ கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால்‌ சத்தியாக்கிரகத்தை மறுபடியும்‌ துவக்கும்படி வேண்டுகிறோம்‌. குடி அரசு - வேண்டுகோள்‌ - 23.05.1926 குடி அரசு - 1926 N 322 நிருப கநயர்களுக்க விண்ணப்பம்‌ “குடி அரசு” பத்திரிகை மிகவும்‌ குறைந்த அளவுள்ளது. அதில்‌ 10 பக்கங்கள்‌ விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும்‌ பல வர்த்தமானங்‌ களும்‌ நிரூபங்களும்‌ வந்து குவிந்து பத்திரிகை ஏற்படுத்தியதின்‌ கருத்தை நிறைவேற்ற முடியாமல்‌ கஷ்டப்படுத்துகிறது. நிரூபர்களும்‌ வர்த்தமானம்‌ தெரிவிப்பவர்களும்‌ நமது பத்திரிகையை தினசரி என்று கருதிக்கொண்டிருக்‌ கிறார்கள்‌ என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆதலால்‌ நாம்‌ உடனுக்கு டன்‌ பிரசுரிக்கவில்லை என்று நிரூப நேயர்கள்‌ நம்மீது வருத்தப்படாமல்‌ இருக்கும்படி வேண்டுகிறோம்‌. பல தேச வர்த்தமானங்களை நாம்‌ பிரசுரிப்ப தில்லையென்றுகூட நம்மீது பல சந்தாதாரர்களுக்கு சலிப்பிருப்பதாய்த்‌ தெரி கிறது. அவர்களும்‌ நமது கருத்தையும்‌ நிலையையும்‌ அறிந்து மன்னிப்‌ பார்கள்‌ என்றே நம்புகிறோம்‌. நமது பத்திரிகை வர்த்தமானப்‌ பத்திரிகை அல்லவென்றும்‌, பிரசாரப்‌ பத்திரிகை என்றும்‌ மறுபடியும்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. ஆதலால்‌ நிரூபங்களாலும்‌ வர்த்தமானங்களாலும்‌ நமது பத்திரிகையின்‌ உத்தேசத்தைக்‌ கெடுக்காமலும்‌ வர்த்தமானம்‌ இல்லையே! என்று கருதி அலக்ஷியம்‌ செய்யாமலும்‌ இருக்கும்படி பிரார்த்திக்கிறோம்‌. பத்திராதிபர்‌ குடி அரசு - அறிக்கை - 23.05.1926 323 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வஹமெனலாணா முகமதலியினண்‌ மத பக்தி மெளலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில்‌ பேசும்‌ போது இஸ்லாத்தை அழிக்க விரும்புவோரின்‌ கையிலிருந்து அதைக்‌ காப்பாற்ற வேண்டுமென்‌ றும்‌ இதுசமயம்‌ இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிறதென்றும்‌ சொல்லி வருகையில்‌ “நாம்‌ இந்துக்களுடன்‌ நேசபாவமாயிருக்கத்‌ தயார்‌. ஆனால்‌ நம்மோடு சண்டைபோட இந்துக்கள்‌ விரும்பும்‌ பக்ஷத்தில்‌ இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும்‌ 21 கோடி இந்துக்களைப்‌ பணிய வைக்கமுடியும்‌. நமது நபிகள்‌ நாயகம்‌ காலத்தில்‌ 15 பேர்‌ சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள்‌. ஆகையால்‌ 7 கோடி மகம்மதியர்கள்‌ 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்டமல்ல” என்று சொன்னாராம்‌. இதை சுதேசமித்திரன்‌” இந்துக்களுக்கு மகம்மதியர்கள்‌ பேரில்‌ துவேஷம்‌ உண்டாகும்படி “மெளலானா முகமதலியின்‌ முழக்கம்‌” என்கிற தலைப்பின்‌ கீழ்‌ இதை எழுதியிருக்கிறது. மெளலானா பேசியவைகளில்‌ நமக்கொன்றும்‌ ஆச்சரியமில்லை. மெளலானா கணக்கில்‌ தவறிவிட்டார்‌ என்று எண்ணுகிறோம்‌.21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ்லீம்கள்‌ தேவையில்லை. இதே 21 கோடி இந்துக்கள்‌ என்போர்களை முக்கால்‌ கோடிக்‌ கும்‌ குறைவான பிராமணர்கள்‌ ஆயிரக்கணக்கான வருஷங்களாய்‌ தலையெ டுக்க வொட்டாமல்‌ பணிய வைத்திருக்கவில்லையா? விபசாரத்‌ தரகில்‌ ஜீவிக்‌ கும்‌ பிராமணனை கூட ஜமீன்தாரரான பிராமணரல்லாத இந்து தூதுக்‌ கடிதம்‌ வாங்கும்‌ போதும்‌ “சுவாமி” என்று கூப்பிடவும்‌, தலைவணங்கி கும்பிடவும்‌ அவன்‌ ஆசீர்வாதம்‌ சொல்லி கடிதம்‌ கொடுக்கவும்‌ தானே நடந்து வருகிறது. ஒரு சமூகம்‌ எவ்வளவு பெரிய எண்ணிக்கை உள்ளதானாலும்‌ தங்களுக்குள்‌ அன்பும்‌ ஒற்றுமையும்‌ இல்லாமல்‌ ஒருவரை ஒருவர்‌ தீண்டாதவராய்‌ , பார்க்கக்‌ கூடாதவராய்‌ மதித்துக்கொண்டு மக்களைப்‌ பிரித்து வைத்து ஒருவர்‌ உழைப்‌ பில்‌ ஒருவர்‌ பிழைக்க நினைத்துக்கொண்டு இருப்பவர்களை உள்ளே வைத்திருக்கும்‌ வரையில்‌ மிகச்‌ சிலரால்‌ பணிய வைத்து விடலாம்‌. இதற்கனு கூலமாக நமது நாட்டில்‌ “பிராமணீயம்‌” இருக்கும்வரை நம்மை யார்‌ வேண்டு மானாலும்‌, எப்படி வேண்டுமானாலும்‌ சுலபமாய்‌ பணிய வைக்கமுடியும்‌. ஆதலால்‌ மெளலானா சொல்லுவதில்‌ கணக்குத்‌ தவறு இருக்கிறதே தவிர அதிசயம்‌ ஒன்றும்‌ இல்லை.அவரும்‌ நாம்‌ மகமதியர்களோடு சண்டைபோட நினைத்தால்தான்‌ தன்னால்‌ இந்துக்களை பணிய வைக்க முடியும்‌ என்கிறாரே தவிர மற்றபடி பிராமணர்களை தங்களுக்கு அன்னமளிப்பவர்களை பணிய குடி அரசு - 1926 N 324 வைத்திருப்பதைப்போல்‌ அல்ல. ஆதலால்‌ மெளலானா சொன்னதில்‌ யாரும்‌ குற்றங்‌ கருதமாட்டார்கள்‌ என்றே நினைக்கிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 23.05.1926 325 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பப்ணிக்‌ சர்வீஸ்‌ கமிஷன்‌ சர்க்கார்‌ ஊழிய சம்மந்தமாண விசாரணைச்‌ சபை இந்தியாவில்‌ சர்க்கார்‌ உத்தியோகஸ்தர்கள்‌ சம்பந்தமான விஷயத்‌ தைப்‌ பற்றி விசாரித்து அறிந்து தக்கபடி செய்வது என்ற பெயரை வைத்துக்‌ கொண்டு அதற்காக பப்ளிக்‌ சர்வீஸ்‌ கமிஷன்‌ என்று ஒரு கமிட்டியை அரசாங்‌ கத்தார்‌ நியமித்து இருக்கிறார்கள்‌. அக்கமிட்டிக்கு இந்தியர்களின்‌ சார்பாய்‌ - இந்துக்களின்‌ சார்பாய்‌ நியமிக்கப்பட்டிருக்கும்‌ அங்கத்தினர்‌ ஒரு தமிழ்‌ நாட்டுப்‌ பிராமணர்‌. இந்தியாவிலிருக்கும்‌ 33 கோடி ஜனங்களில்‌ முக்கால்‌ கோடி ஜனங்கள்‌ கொண்ட வகுப்பார்களான ஒரு சிறு சமூகமான பிராமண: கோஷ்டியில்‌ இருந்து ஒருவரைப்‌ பொறுக்கி எடுத்திருக்கிறார்கள்‌. இவர்‌. இந்தியாவிலுள்ள மனிதவர்க்கத்திற்கே உயர்ந்த ஜாதியார்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ ஜாதியைச்‌ சேர்ந்தவர்‌. அதிலும்‌ ஐயங்கார்‌ ஜாதியைச்‌ சேர்ந்தவர்‌. இந்தியர்களின்‌ சர்க்கார்‌ உத்தியோக சம்பந்தமான விஷயங்கள்‌ இப்போது இவர்‌ கையில்தான்‌ அடங்கியிருக்கிறது. இனி இந்தியர்களின்‌ தலை யெழுத்தையும்‌ ஜாதகத்தையும்‌ கணிப்பவர்‌ இந்த பிராமணர்தான்‌. சர்க்கா ராரும்‌ எந்த ஆசாமியைப்‌ பிடித்தால்‌ தங்கள்‌ சொல்படி ஆடுவாரோ, தாங்கள்‌ எழுதி வைத்ததில்‌ கையெழுத்துப்‌ போடுவாரோ, அந்த ஆசாமிகளைப்‌ பார்த்துதான்‌ நியமிப்பார்கள்‌. இந்த பிராமணரே இதே சர்க்கார்‌ உத்தியோகத்‌ தில்‌ 250 ரூபாய்‌ சம்பளத்திலிருந்து சர்க்காரின்‌ தாளத்திற்கு தகுந்தபடி ஆடி சர்க்காரின்‌ நம்பிக்கைப்‌ பெற்று சர்‌. பட்டம்‌ பெற்று இப்போது 3500 ரூபாய்‌ சம்பளத்துடன்‌ இந்தப்‌ பொறுப்புள்ள உத்தியோகத்திற்கு வந்திருக்கிறார்‌. சர்க்காராரும்‌ பொறுப்புள்ள உத்தியோகங்கள்‌ எதானாலும்‌ இந்தியர்களுக்குக்‌ கொடுப்பதாயிருந்தால்‌ அவைகளை பிராமணர்களுக்கேதான்‌ கொடுத்து வரு கிறார்கள்‌. சர்க்காராருக்கு எப்பொழுதும்‌ பிராமணரல்லாதாரிடம்‌ நம்பிக்‌ கையேகிடையாது, சர்க்காரார்‌ இந்தியர்கள்‌ தலையில்‌ கைவைக்க உத்தேசித்து ஏதாவது ஒரு காரியம்‌ செய்ய வேண்டுமென்றால்‌ அவைகளுக்கு பிராமணர்‌: களைத்தான்‌ நம்புவார்கள்‌. உதாரணமாக, மக்களை மிருகங்களிலும்‌ கேவல மாய்‌ அடக்கி ஆளுவதற்கென்று ரெளலட்‌ ஆக்ட்டு ஏற்படுத்த நியமித்த ரெளலட்‌ கமிட்டிக்கு இந்தியர்கள்‌ சார்பாய்‌ ஒரு பிராமணரைத்தான்‌ நியமித்‌ தார்கள்‌. (மகாகனம்‌ சாஸ்திரியார்‌? குடி அரசு - 1926 N 326 இந்தியர்களுக்கு அவர்களின்‌ ஜீவனத்திற்கு மாதம்‌ என்ன செலவு பிடிக்கும்‌ என்று தெரிந்துகொள்ளுவதற்கு ஐயங்கார்‌ பிராமணர்‌ அபிப்பிரா யத்தைத்தான்‌ எடுத்துக்கொண்டார்கள்‌. அதாவது “இந்து” ப்‌ பத்திரிகையின்‌ ஆசிரியராய்‌ இருந்த ஸ்ரீமான்‌ கஸ்தூரி ரெங்கய்யங்காரின்‌ தமயனாரும்‌ இப்போது இந்துப்‌ பத்திரிகைக்கு ஆசிரியராய்‌ இருக்கும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.ரெங்கசாமி அய்யங்காருக்கு தகப்பணாருமான ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்‌ யங்கார்‌ என்கிற ஐயங்கார்தான்‌ யோசனை சொன்னார்‌. என்ன யோசனை ? ஒரு இந்துவின்‌ ஜீவனத்திற்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூபாய்‌ 2 -8 - 0 ( இரண்டரை ரூபாய்‌) இருந்தால்‌ போதுமென்று சொன்னார்‌. இன்னமும்‌ இப்படியே நமது தலையில்‌ கையை வைக்க நியமித்த ஒவ்வொரு கமிஷனுக்கும்‌ பிராமணர்‌ களைத்தான்‌ பிடிக்கிற வழக்கம்‌. அதுமாத்திரமல்ல, ஒத்துழையாமையை ஒடுக்க சட்டமறுப்புக்‌ கமிட்டி என்று ஒரு கமிட்டி ஏற்பட்டது. அதிலும்‌ சென்னைமாகாணமச்‌ சார்பாய்‌ இரண்டு ஐயங்கார்‌ பிராமணர்கள்தான்‌ நியமிக்‌ கப்பட்டார்கள்‌. மகாத்மா காந்தியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமென்கிற அவசியம்‌ நமது சர்க்காருக்கு வந்த போது அதற்காகவும்‌ மகாகனம்‌ வி.சீனிவாச சாஸ்திரியார்‌ என்கிற ஒரு பிராமணரைக்‌ கொண்டு அபிப்பிராயம்‌ சொல்லச்‌ செய்து மகாத்மாவை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்‌. இதுமாத்திரமல்ல “இந்துமதப்‌ புராணக்‌ காலங்களிலேயே” ஏதாவது புரட்டுக்கோ, வஞ்சகத்திற்கோ, கொடுமைக்கோ, கொலைக்கோ, ஒருவர்‌. அவசியமிருந்தால்‌ அதற்கும்‌ பிராமணர்களாகவே இருந்திருப்பதாகவும்‌ கடவுளே மனிதராய்‌ வந்து மேற்படி காரியங்களை செய்யவேண்டியிருந்‌ தாலும்‌ பிராமண அவதாரங்களையே யெடுத்திருப்பதாகவும்‌ சொல்லப்‌ படுகிறது. அப்படியிருக்க இப்போது மாத்திரம்‌ அது எப்படி பொய்த்துப்‌ போகும்‌. வாயில்‌ மாத்திரம்‌ “ஒத்துழையாமை” என்பார்கள்‌; “முட்டுக்கட்டை” என்பார்கள்‌; “சுயராஜ்யம்‌” என்பார்கள்‌; “சர்க்காரை ஸ்தம்பிக்கச்‌ செய்வது” என்பார்கள்‌; “உத்தியோகம்‌ ஒப்புக்கொள்வதில்லை” என்பார்கள்‌; காரியத்தி லுள்ள உத்தியோகங்களை அவர்களே ஆவாகனப்படுத்திக்‌ கொள்வார்கள்‌. மந்திரிகள்‌ உத்தியோக ஆசைபிடித்தவர்கள்‌ என்று சொல்லி ஆள்‌ வைத்து பிரசாரம்‌ செய்து பாமர ஜனங்களை ஏமாற்றுகிறார்கள்‌. ஆனால்‌ மந்திரிகள்‌. சர்க்கார்‌ தயவில்‌ ஒரு உத்தியோகமும்‌ பெறவேயில்லை. அவர்கள்‌ கட்சியார்‌. சட்டசபைக்குப்‌ பொதுஜனங்களால்‌ பெரும்பான்மையாய்த்‌ தெரிந்தெடுக்கப்‌ பட்டார்கள்‌. அதன்‌ பலனாய்‌ அவர்களுக்கு அந்தப்‌ பதவி சீர்திருத்தச்‌ சட்டப்‌ படி கிடைத்தது. ஆனால்‌ பிராமணர்களுக்கு எந்தச்‌ சட்டப்படி கிடைத்தது? சர்க்கார்‌ தயவென்கிற சட்டப்படி கிடைத்தது. சர்க்கார்‌ சொன்னபடியெல்லாம்‌. ஆடி, குடிகள்‌ தலையில்‌ கையை வைத்து சர்க்காருக்கு அனுகூலம்‌ செய்து கொடுத்ததன்‌ பலனாய்‌ அவர்களுக்குக்‌ கிடைத்தது. இது சமயம்‌ உயர்ந்த உத்தியோகமெல்லாம்‌ யாரிடமிருக்கிறது? வெள்ளைக்காரர்களுக்கு அடுத்‌ தாப்போல்‌ பிராமணர்களிடம்தான்‌ இருக்கிறது. பொறுப்புள்ள உத்தியோக. மெல்லாம்‌ பெரும்பான்மையாய்‌ அனுபவித்து வருகிறார்கள்‌.நிர்வாக சபை மெம்பர்‌ பிராமணர்‌. ரூபாய்‌ 5333-5-4, ரிவனியு போர்டு மெம்பர்‌ பிராமணர்‌: 327 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ரூ.3500, ஐக்கோர்ட்டு ஜட்ஜிகள்‌ பிராமணர்கள்‌ ரூ 3500. ஜில்லா ஜட்ஜிகள்‌ பிராமணர்கள்‌: சப்‌ ஜட்ஜிகள்‌ பிராமணர்கள்‌: ஜில்லா முனிசிப்கள்‌ பிராமணர்கள்‌; கலெக்டர்கள்‌ பிராமணர்கள்‌; டிப்டி கலெக்டர்கள்‌ பிராமணர்‌ கள்‌; அட்வகேட்‌ ஜெனரல்‌ பிராமணர்‌; அரசாங்கக்‌ காரியதரிசிகள்‌ பிராமணர்‌ கள்‌;கைத்தொழில்‌ இலாக்கா டைரக்டர்‌ பிராமணர்‌. இன்னமும்‌ 1000,2000, 3000 சம்பளம்‌ உள்ள எந்த இலாகாவை எடுத்துக்கொண்டாலும்‌ பிராமணர்களே பெரும்பான்மையாய்‌ நிறைந்துகொண்டு பனகால்‌ ராஜா அப்படிச்‌ செய்தார்‌, பாத்ரோ இப்படிச்‌ செய்தார்‌, சிவஞானம்பிள்ளை ஒன்றும்‌ செய்யவில்லை என்பதாகக்‌ கூலியாள்‌ வைத்து தூற்றிக்கொண்டு பொது ஜனங்களையும்‌ ஏமாற்றி இவர்களை சர்க்காருக்கு காட்டிக்கொடுத்து அங்கும்‌ உத்தியோகம்‌ பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள்‌. இதை அறியாமல்‌ சில பிராமணரல்லாதார்‌. இந்த பிராமணர்கள்‌ தின்று கழித்த எச்சிலையை தங்களுக்குப்‌ போட மாட்டார்களா என்று அவர்கள்‌ பின்னால்‌ சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்‌. இப்படியே நடந்து கொண்டிருந்தால்‌ பிராமணரல்லாதார்‌ கதிதான்‌ என்னாவது? இதை ஒருவரும்‌ கவனிப்பாரில்லையே. நம்மை சிலர்‌ உத்தியோக ஆசை பிடித்தவர்‌ என்று சொன்னாலும்‌ சரி, ஒத்துழைப்பவன்‌ என்று சொன்னாலும்‌ சரி, ஜஸ்டீஸ்‌ கட்சிக்காரன்‌ என்று சொன்னாலும்‌ சரி.இவ்‌ விதம்‌ ஒரு வகுப்பு நம்மைத்‌ “தீண்டாதார்‌” “வேசி மக்கள்‌” என்று சொல்லிக்‌ காலில்‌ வைத்து அழுத்திக்‌ கொண்டு அதிகாரங்களையும்‌ பதவிகளையும்‌ பெற்றுக்‌ கொண்டு போக, மற்றவர்கள்‌ கீழே போய்க்கொண்டிருப்பதென்றால்‌, இது பிராமணரல்லாத சமூகத்திற்கே அவமானகரமான காரியம்‌ என்றே சொல்லுவோம்‌. அதிலும்‌ நமது சர்க்காருக்கும்‌ பிராமணரல்லாதார்‌ என்றால்‌ மிகவும்‌ அலக்ஷியமாய்‌ மதிக்கும்படியாகி விட்டது. இதற்குப்‌ பிராமணரல்‌ லாதாரிலேயே பிராமணர்களுடன்‌ சுற்றித்‌ திரியும்‌ சில சமூகத்‌ துரோகிகள்‌ காரணமாயிருந்தாலும்‌ பிராமணரல்லாதாருக்குள்ளும்‌ சில கட்டுப்பாடுகளும்‌ ஒற்றுமையும்‌ தேவையிருக்கிறது. கடுகளவு தியாக புத்தியோடு பிராமண: ரல்லாதார்‌ கலந்து வேலை செய்வார்களானால்‌ இந்த சர்க்காரை ஆட்டி வைக்கலாம்‌. ஆனாலும்‌ நமது பிராமணர்கள்‌ அதற்கு இடம்‌ கொடுக்க மாட்டார்கள்‌. என்றாலும்‌ இது முடியாத காரியமல்ல. நமது பாமர ஜனங்க ளுக்கு நாம்‌ செய்ய வேண்டிய பிரசாரம்‌ எவ்வளவோ பாக்கியிருக்கிறது. பிராமணரல்லாதார்களுக்கு இனி ஒவ்வொரு வினாடியும்‌ மிகுந்த விலை உயர்ந்ததாகும்‌. ஒவ்வொரு பிராமணரல்லாதாரும்‌ இனி உறங்கக்‌ கூடாது. மகாத்மாவின்‌ நிர்மாணத்‌ திட்டமாகிய கதர்‌, தீண்டாமை விலக்கு ஆகிய இரண்டுமே பிராமணரல்லாதாரின்‌ ஜீவ நாடியாகும்‌. இதன்‌ மூலமாய்த்தான்‌ கடைத்தேற முடியும்‌. உத்தியோக வேட்டையில்‌ பிராமணரைப்‌ பின்பற்றும்‌ பிராமணரல்லாதாருக்கு இதன்‌ மகிமை தெரியாது. ஆதலால்‌ உண்மை பிராமணரல்லாதாரே! எழுங்கள்‌!! கிராமப்‌ பிரசாரம்‌ செய்யுங்கள்‌! கிராம மெங்கும்‌ “திராவிட”னையும்‌ “குடி அரசையும்‌ பரவச்‌ செய்யுங்கள்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 23.05.1926 குடி அரசு - 1926 N 328 ஏழாயிரம்‌ பண்ணை பாலிய நாட௱ர்‌ சங்கத்திண்‌ கரண்டாவதாண்்‌டு கொண்டாட்டம்‌ அன்புள்ள வாலிப நாடார்‌ சகோதரர்களே! தங்கள்‌ சங்கத்தின்‌ நோக்கங்களைக்‌ காண எனக்கு மிகவும்‌ சந்தோஷ மாயிருக்கிறது. முதலாவது நோக்கமாக “நாடார்‌ சமூகம்‌ அபிவிருத்தி அடை யும்படி செய்தல்‌” என்று வைத்திருக்கிறீர்கள்‌. இதுதான்‌ உண்மையான நாடாராய்‌ பிறந்தவர்கள்‌ செய்ய வேண்டிய காரியம்‌. “நல்லாண்மை என்பது ஒருவருக்குத்‌ தான்‌ பிறந்த இல்லாண்மை யாக்கிக்‌ கொளல்‌” என்று நாயனார்‌ சொல்லியிருப்பதின்‌ தத்துவம்‌ இதுதான்‌. ஒவ்வொரு சமூகமும்‌ தன்‌ சமூக முன்னேற்றத்தை சீர்திருத்திக்கொண்டு பிறகு எல்லாச்‌ சமூகத்தின்‌ நன்மை யையும்‌ பொதுநன்மையையும்‌ கவனித்தால்தான்‌ அது முறையாகவும்‌ பயனளிக்கக்‌ கூடியதாகவும்‌ இருக்கும்‌. அஃதில்லாமல்‌ தங்கள்‌ சமூகம்‌ சுயமரியாதை அற்றதாகவும்‌, தீண்டாத சமூகமாகவும்‌ இருப்பதை லக்ஷியம்‌ செய்யாமலும்‌, அதைப்‌ பற்றி உணர்ச்சியில்லாமலும்‌, நான்‌ தேசபக்தன்‌, பொது ஜனசேவை செய்பவன்‌ என்று சொல்லிக்கொண்டு பொது உரிமை, பொதுச்‌ சுதந்திரம்‌ என்று பேசுவதெல்லாம்‌ பொருளற்றதும்‌ அறியாமையும்‌ தனது சுய நலத்திற்கும்‌ சுயகீர்த்திக்கும்‌ பாடுபடுவதுமே ஒழிய வேறல்ல. ஏனெனில்‌ நமது நாடு எக்காரணம்‌ பற்றியோ பல சமூகங்களாக அமைக்கப்பட்டு போனதோடு ஒவ்வொரு சமூகங்களுக்கும்‌ நிரந்தரமான குறைகள்‌ ஏற்பட்டு சமூகக்‌ கொடுமைகளால்‌ அழுந்திக்‌ கிடக்கின்றதுடன்‌ தேச நன்மை, பொது நன்மை, சுதந்திரம்‌, விடுதலை என்று ஏற்படுவதெல்லாம்‌ ஒரு சமூகத்திற்கு நன்மை, ஒரு சமூகத்திற்கு தீமை, ஒரு சமூகத்திற்கு அதிக சுதந்திரம்‌, ஒரு சமூகத்திற்கு அதிகமான அடிமைத்‌ தனம்‌ என்பதான பலனைத்தான்‌ கொடுத்து வருகிறதே யல்லாமல்‌ எல்லாச்‌ சமூகத்திற்கும்‌ சமமான நன்மை, சுதந்திரம்‌, விடுதலை ஏற்படுவதில்லை. ஏனெனில்‌ சில சமூகம்‌ எக்காரணம்‌ பற்றியோ முன்ன ணியில்‌ இருந்து, கிடைக்கும்‌ நன்மைகளை அபகரித்துக்‌ கொள்ளுகின்றன. பல சமூகம்‌ பின்னணியில்‌ இருந்து அன்னிய சமூகத்திற்கு உழைத்துவிட்டு தேய்ந்துகொண்டு வருகின்றன. உதாரணமாக, நமது நாட்டில்‌ காங்கிரஸ்‌ இல்லாதபோது பிராமணரல்லாத சமூகத்திற்கு அரசியலிலும்‌ பொதுவியலி லும்‌ இருந்த சுதந்திரமும்‌ செல்வாக்கும்‌ காங்கிரஸ்‌ ஏற்பட்ட பிறகு நாளுக்கு 329 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நாள்‌ குறைந்துகொண்டே வந்துவிட்டது. அரசியலிலும்‌ பொதுவியலிலும்‌ இப்போது அதிகமான செல்வாக்கு பிராமணர்களுக்குத்தான்‌ இருக்கிறது. பிராமணரல்லாதாரில்‌ நாடார்‌ சமூகத்திற்கு அதிக குறைவாய்த்தான்‌ இருக்கிறது. இந்த நாடார்‌ சமூகமும்‌ தங்களுக்கென ஒரு சமூகத்தை வைத்துக்‌ கொண்டு சமீபகாலமாய்‌ அதற்கென்று உழைக்காமலிருந்திருந்து, வெறும்‌ தேசபக்தியையும்‌ சுதந்திரத்தையும்‌ பேசிக்கொண்டு பொருளற்ற “தேச பக்தர்களாய்‌” “காங்கிரஸ்காரர்களாய்‌” இருந்திருந்தால்‌ உங்கள்‌ நிலை என்ன மாயிருந்திருக்கும்‌. வழி நடை பாத்தியம்‌ கூட அடைந்திருக்க மாட்டீர்கள்‌. தீண்டாதவர்கள்‌ கூட்டத்திலேயே இன்னும்‌ இருந்திருப்பீர்கள்‌. உங்கள்‌. பெரியார்கள்‌ சிலர்‌ நாடார்‌ மகாஜன சபை என்று ஒரு சபை ஏற்படுத்தி அதின்‌ மூலம்‌ உங்கள்‌ சமூகத்திற்கு கொஞ்சம்‌ சுயமரியாதை சம்பாதித்துக்‌ கொடுத்த பிறகு இப்பொழுது உங்களில்‌ பலர்‌ “தேசபக்தர்களாய்‌” வந்து விட்டார்கள்‌. தனி சமூக முன்னேற்றத்திற்கு ஸ்தாபனமில்லாத, உழைப்பாளிகள்‌ இல்லாத பல சமூகங்களின்‌ கதி இப்போது என்னமாயிருக்கிறது? “சக்கிலி” “பறையர்‌” “பள்ளர்‌” என்கிற பல பரம்பரையாய்‌ பொதுஜன உழைப்பாளிகளாய்‌ இருந்து வரும்‌ சமூகங்களின்‌ கதி எப்படி இருக்கிறது? இந்திய சமூகத்திற்கு அரசாங்கத்‌ தாராலும்‌ காலக்‌ கிரமத்தாலும்‌ பல *சீர்திருத்தங்கள்‌” வந்தும்‌ இந்தக்‌ கூட்டத்‌ தாருக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. சர்க்கார்‌ தயவிருந்தால்தானே தெருவில்‌ நடக்கலாம்‌, மனிதர்கள்‌ கண்களில்‌ தென்படலாம்‌ என்றிருக்கிறது. அவர்களுக்கும்‌ தங்கள்‌ சமூக முன்னேற்றச்‌ சங்கங்கள்‌ இருக்குமானால்‌ கூடியவரை அவர்களும்‌ குறைந்த பக்ஷம்‌ உணர்ச்சியுள்ளவர்களாகவாவது ஆகி இருப்பார்கள்‌. மகமதிய கிறிஸ்துவ சகோதரர்கள்‌ தங்கள்‌ சமூக முன்னேற்ற சங்கத்தின்‌ மூலமாய்‌ சுயமரியாதை பெற்றார்களே ஒழிய “காங்கிர சினாலும்‌” “தேசபக்தியினாலும்‌” அல்லவே அல்ல.ஆதலால்‌ மற்ற சமூகத்தா ரிடம்‌ சமஉரிமை பெற்றுக்கொண்டு பிறகு பொது நலத்திற்கு பாடுபட்டால்‌ பிறகு பொது உரிமை சமமாய்‌ அடைய முடியும்‌. ஆதலால்‌ நாடார்‌ சமூக முன்னேற்றத்தை உங்கள்‌ சங்க நோக்கத்தில்‌ முதன்மையாய்‌ வைத்திருப்பது பற்றி நான்‌ மிகுதியும்‌ சந்தோஷப்படுகிறேன்‌. இது சரியான அளவு கைகூட எல்லாம்‌ வல்ல சக்தியை பிரார்த்திக்கிறேன்‌. இரண்டாவது நோக்கம்‌ “நாடார்‌ ஜன சங்கத்தின்‌ நோக்கங்களை அமுலுக்கு கொண்டுவரல்‌.” இது மிகவும்‌ முக்கியமான நோக்கமாகும்‌. நோக்கங்களை அமுலுக்குக்‌ கொண்டுவராத - கொண்டுவரமுடியாத சங்கங்கள்‌ இருந்தாலும்‌ ஒன்றுதான்‌; இறந்தாலும்‌ ஒன்றுதான்‌. வேஷத்திற்கும்‌ பெருமைக்கும்‌ வெறும்‌ தீர்மானங்களைச்‌ செய்வதில்‌ பலனில்லை. பொது ஜனங்களை ஏமாற்ற பல தீர்மானங்களையும்‌, சுயநலத்திற்காக அமுலுக்குக்‌ கொண்டுவர சில தீர்மானங்களையுமுடைய தற்கால காங்கிரசின்‌ கதி என்ன வாயிருக்கிறது. உண்மையிலேயே பொதுஜன நன்மைக்கான பல தீர்மானங்‌ கள்‌ ஏற்படுத்தி அதை அமுலுக்குக்‌ கொண்டுவர பாடுபட்ட மகாத்மாவின்‌ தலைமையின்‌ கீழிருந்த காங்கிரசுக்கு தேசத்தில்‌ எவ்வளவு யோக்கியதை குடி அரசு - 1926 N 330 இருந்தது. பொதுஜனங்களை ஏமாற்ற நிர்மாணத்‌ திட்டத்தை எழுதி வைத்து விட்டு சுயநலத்திற்கான சட்டசபை உத்தியோகம்‌ முதலிய தீர்மானங்களை அமுலுக்கு கொண்டுவரும்‌ சபையாய்‌ காங்கிரஸ்‌ இருப்பதால்‌ அதனிடம்‌ பொதுஜனங்களுக்கும்‌ மதிப்பில்லை; அதனால்‌ பொதுஜன நன்மையும்‌ ஏற்படப்‌ போவதில்லை. இனியும்‌ கொஞ்ச காலத்திற்கு இப்படியே இருக்குமா னால்‌ காங்கிரஸ்‌ என்பது ஒரு அருவருக்கத்தக்க சாதனமாய்ப்‌ போய்விடும்‌. அதுபோலவே நாடார்‌ மகாஜன சங்கமும்‌ தங்கள்‌ சமூகத்திற்கு ஏற்பட்ட திட்டங்களை அமுலுக்குக்‌ கொண்டுவரப்‌ பிரயத்தனப்படாமல்‌, அச்‌ சங்க வாலிபர்கள்‌ தேசபக்தி என்றும்‌ பொதுஜன நன்மை என்றும்‌ சொல்லித்‌ திரிவதானது சமூகத்‌ துரோகமாவதோடல்லாமல்‌ தாயைப்‌ பட்டினி போட்டு வைத்துக்கொண்டு பிராமண சமாராதனை செய்தவனுக்குச்‌ சமானமாவார்கள்‌. ஆதலால்‌ உங்களது இரண்டாவது நோக்கம்‌ மிகவும்‌ பாராட்டத்தக்கதும்‌ ஓர்‌. பரிசுத்தமான நாடார்‌ வாலிபன்‌ செய்யக்கூடியதுமாகும்‌ என்றே சொல்லுவேன்‌. மூன்றாவது நோக்கம்‌ “நாடார்களுக்கும்‌ இதர வகுப்பினருக்கும்‌ ஐக்கிய உணர்ச்சியை உண்டுபண்ணுவது” என்பது. இது மிகவும்‌ புத்திசாலித்‌ தனுடையதாகும்‌. அதாவது முதலாவதாக உங்கள்‌ சமூகத்தை முன்னேற்றிக்‌ கொண்டு, இரண்டாவதாக உங்கள்‌ ஜன சமூகத்தின்‌ குறைவுகளுக்குச்‌ செய்யப்‌ பட்டதீர்மானங்களை வெல்லாம்‌ காரியத்தில்‌ நிறைவேற்றிக்கொண்டு, மூன்றா வதாக மற்ற வகுப்பாரிடம்‌ ஐக்கிய உணர்ச்சியை உண்டுபண்ணல்‌ என்பது தான்‌ காரியத்தில்‌ ஆகக்கூடிய காரியம்‌.அவனவன்‌ வகுப்பு மற்றவகுப்பாரால்‌ தீண்டாத வகுப்பாகவும்‌ சுயமரியாதை அற்ற வகுப்பாகவுமாய்‌ இருக்கும்‌ போது மற்ற வகுப்பாரிடம்‌ ஐக்கிய உணர்ச்சி எப்படி உண்டாக முடியும்‌? மற்ற வகுப்பார்தான்‌ எப்படி ஐக்கியமாயிருக்கச்‌ சம்மதிப்பார்கள்‌? ஆதலால்‌ இதை மூன்றாவதாக வைத்த நோக்கமும்‌ பிரயத்தனமும்‌ மிகவும்‌ சரியானதே. நான்காவது “வாசகசாலை ஏற்படுத்தல்‌” என்பது. இதுவும்‌ முக்கிய மானதுதான்‌. வெறும்‌ BA பரீகைஷயிலாவது, 14.&.பரீகை்ஷயிலாவது, பண்டித பரீகைஷயிலாவது, கனபாடி பரீக்ஷயிலாவது, சிரோமணி, மஹாமஹோ பாத்தியாய பரீக்ஷையிலாவது அறிவு வரவே வராது. இவ்வளவும்‌ படித்து முட்டாள்களாகவும்‌ அயோக்கியர்களாகவும்‌ வெகு பேர்‌ இருக்கிறார்கள்‌. இவைகள்‌ ஒன்றும்‌ படிக்காத கையெழுத்துக்கூட போடத்‌ தெரியாதவர்களும்‌ புத்திசாலிகளும்‌ யோக்கியர்களும்‌ பலர்‌ இருக்கிறார்கள்‌. புத்தகப்‌ படிப்பு “வித்தை” யாகுமே தவிர கல்வியாகாது. பல புத்தகங்களை வாசித்த ஒரு மனி தனும்‌ சரி, பல புத்தகங்களை உடைய ஒரு அலமாரியும்‌ சரி, இரண்டும்‌ ஒன்றுதான்‌. பெயரில்‌ மாத்திரம்தான்‌ வித்தியாசம்‌. அதாவது முன்னையது நடை அலமாரி; பின்னையது நிலை அலமாரி . பல புஸ்தகங்களைப்‌ படித்து அவைகளில்‌ கேட்கும்‌ கேள்விகளுக்குப்‌ பதிலளித்து பரீக்ஷையில்‌ தேறின மஹாமஹோபாத்தியாய - பண்டித பட்டம்‌ பெற்றவனும்‌ ஒன்றுதான்‌; பல வழிகளில்‌ செருப்புத்‌ தைக்கும்‌ வழிகளை அறிந்து அதுசம்பந்தமான 331 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கேள்விகளுக்குப்‌ பதிலளித்து, பரீகை்ஷயில்‌ தேறி அதில்‌ பட்டம்‌ பெற்றவனும்‌ ஒன்றுதான்‌. புத்தகத்தைப்‌ படித்து ஒப்புவிப்பது மனப்பாட வித்தை, செருப்‌ பைத்தைத்துக்‌ காட்டுவது தொழில்‌ வித்தை. இருவரும்‌ “வித்தை” யாளர்களே தவிர கல்வியாளர்கள்‌, அறிவாளர்கள்‌ ஆகமாட்டார்கள்‌. உண்மையான கல்வி யாளர்களாக வேண்டுமானால்‌ உலக அனுபவத்தையும்‌ இயற்கை அனுபவத்‌ தையும்‌ அறியவேண்டும்‌. இதை உத்தேசித்தேதான்‌ “ஒத்தது அறிவான்‌ உயிர்‌ வாழ்வான்‌ மற்றையான்‌ செத்தாருள்‌ வைக்கப்படும்‌” என்றும்‌ “உலகத்தோடொட்ட வொழுகல்‌ பல கற்றும்‌ கல்லாரறிவிலாதார்‌” என்றும்‌ நாயனார்‌ சொல்லியிருக்கிறார்‌. ஆதலால்‌ இவ்வித அறிவுப்‌ பெருக்கத்திற்கும்‌ கல்விக்கும்‌ சங்கமும்‌ யாத்திரையும்‌ வேண்டும்‌. உலக யாத்திரைக்குச்‌ சக்தி யற்றவர்கள்‌ பல தேச வர்த்தமானங்களையாவது அறிய வசதி ஏற்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.அதற்குதான்‌ வாசகசாலை என்பது. ( தொடர்ச்சி 30.05.1925 குடிஅரசு குறிப்பு - ஏழாயிரம்‌ பண்ணையில்‌ 16:5.26- ஆம்‌ தேதிநடைபெற்ற பாலிய நாடார்‌ சங்கத்தின்‌ இரண்டாவது ஆண்டு கொண்டாட்ட தலைமை உரை: குடி அரசு - சொற்பொழிவு - 23.05.1926 குடி அரசு - 1926 N 332 மகமும்‌ மததர்ம பரிபானைமும்‌ செண்ணை ஹிந்துமத தர்ம பரிமானைச்‌ சட்டமும்‌ அதன்‌ விறோதிகளும்‌ உங்களுடைய சங்கத்தின்‌ ஐந்தாவது நோக்கம்‌ மததர்ம பரிபாலனங்‌ களை ஒழுங்காக நடைபெறச்‌ செய்தல்‌ என்பது. இது தற்காலம்‌ நாடார்‌ சமூகத்‌ திற்கு மாத்திரமல்ல, இந்து மதத்திற்கே - இந்தியாவிற்கே - ஏன்‌ உலகத்திற்கே மிகவும்‌ அவசியமானது. கடவுள்‌ என்றால்‌ என்ன? குறிப்பாகவும்‌ சிறப்பாகவும்‌ கடவுள்‌ என்பது என்ன என்பதைப்‌ பற்றியும்‌, மதம்‌ என்பது என்ன என்பதைப்‌ பற்றியும்‌, தர்மம்‌ என்பது என்ன என்பதைப்‌ பற்றியும்‌, பரிபாலனம்‌ என்பது என்ன என்பதைப்‌ பற்றியும்‌ இந்துக்‌ கள்‌ என்போர்களில்‌ ஆயிரத்திற்‌ கொருவருக்குக்‌ கூட குறைந்த அளவு ஞானமுமில்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜன சமூகத்திற்கு கேடான காரியம்‌ வேறெதுவும்‌ இல்லை. நம்மில்‌ அநேகர்‌ கடவுள்‌ என்றால்‌ என்ன என்று நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. கடவுள்‌ நம்மைப்‌ போல்‌ மனித உருவத்தோடு இருப்பதாயும்‌; அதற்கு பெண்டாட்டி, பிள்ளை, தாய்‌ , தகப்பன்‌, வீடு வாசல்‌, சொத்து சுகம்‌ உண்டென்றும்‌, அதற்கும்‌ கல்யாணம்‌, ருது, சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம்‌, பிள்ளைப்பேறு உண்டென்றும்‌ இப்படி ஆயிரக்கணக்கான கடவுள்‌ ஆயிரக்கணக்கான பெயரினால்‌ இருக்கிற தாகவும்‌ அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, தீபாராதனையோ, உற்சவமோ செய்வது தான்‌ பக்தி என்பதாகவும்‌ நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. ஹிந்து மதம்‌ எது? அதுபோலவே மதம்‌ என்பதையும்‌ நெற்றியில்‌ நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவதுதான்‌ இந்துமதம்‌ என்றும்‌, ஒருவரை ஒருவர்‌. தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லுவதைத்‌ தான்‌ இந்து மதம்‌ என்றும்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. இம்மாதிரி சுவாமிகளுக்குக்‌ கோயில்‌ கட்டு வதையும்‌, உற்சவம்‌ நடத்துவிப்பதையும்‌, இந்த உற்சவத்திற்கு வரும்‌ ஜனங்‌ களுக்கு மடம்‌ கட்டுவதும்‌, சத்திரம்‌ கட்டுவதும்‌, சாப்பாடு போடுவதும்‌ தர்மம்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. இவ்வித காரியத்தை பிரசாரம்‌. 333 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 செய்வதையும்‌ இவ்வித காரியங்களை நிர்வகிப்பதையும்‌ இதற்காகப்‌ பொது ஜனங்கள்‌ பொருளை செலவு செய்வதையும்‌ பரிபாலனம்‌ என்று நினைக்‌ கிறார்கள்‌. கடவுளும்‌ மதமும்‌ இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம்‌ - அதாவது அஸ்திவாரத்‌ திலேயே பலவீனம்‌ - நாம்‌ கடவுளையும்‌ மதத்தையும்‌ அறிந்திருக்கும்‌ பான்‌ மையேதான்‌. இந்தப்‌ பான்மையுள்ள சமூகம்‌ உருப்படியாவதற்கு மார்க்கமே யில்லை.தொட்டதற்கெல்லாம்‌ “கடவுள்‌ செயல்‌” என்பதும்‌ நமது தேவைகளை யெல்லாம்‌, நமது பிரயத்தனமில்லாமல்‌, கடவுளை ஏமாற்றி அடைந்துவிட லாம்‌ என்கிற பேராசைப்‌ பயித்தியமும்‌ நம்மைவிட்டு நீங்க வேண்டும்‌. கடவுள்‌ கை,கால்‌, கண்‌. மூக்குடன்‌ மனிதனைப்போல்‌ எங்கேயோ ஓரிடத்தில்‌ இருக்கிறார்‌, அவரை நினைத்தாலோ, பணிந்தாலோ, “தேங்காய்‌ பழம்‌ உடைத்து பொங்கல்‌ வைத்து பூஜை செய்தாலோ, பூசாரிக்குப்‌ பணம்‌ கொடுத்‌ தாலோ மனிதனாய்ப்‌ பிறந்ததற்கு செய்ய வேண்டிய கடன்‌ தீர்ந்து விட்டது, மனிதன்‌ செய்யும்‌ தப்பிதம்‌ எல்லாம்‌ தீர்ந்து விட்டது என்று எண்ணுகிற எண்ணத்தைப்போல்‌ ஒரு முட்டாள்தனமான எண்ணம்‌ வேறொன்றுமே யில்லை.மனிதர்கள்‌ இவ்வளவு அக்கிரமங்கள்‌ செய்யக்‌ காரணமே, கடவுளை சரியானபடி உணராததும்‌ உணர்ந்திருப்பதாய்‌ நினைக்கும்‌ பலர்‌, கடவுளை வணங்கி மன்னிப்புக்‌ கேட்டால்‌ மன்னித்துவிடுவார்‌ என்கிற நம்பிக்‌ கையும்‌ தான்‌. கடவுள்‌ ஒருவர்‌ இருக்கிறார்‌, அவர்‌ எல்லாவற்றையும்‌ அறிந்து கொண்டு இருக்கிறார்‌ என்று எண்ணுகிற மக்களிலேயே 1000-தில்‌ ஒருவன்‌ கூட கடவுள்‌. கட்டளைக்குப்‌ பயந்து நடப்பது அருமையாய்த்தான்‌ இருக்கிறது. இவற்‌ நிற்குக்‌ காரணம்‌ இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும்‌ உண்மை யான கடவுள்‌ தன்மையையும்‌ அறியாததேதான்‌. கடவுளின்‌ கட்டளை எது? கடவுள்‌ கட்டளை என்று சொல்லுவது ஒவ்வொரு தேசத்திற்கும்‌ ஒவ்‌ வொரு ஜாதிக்கும்‌ ஒவ்வொரு விதமாக இருந்து வருவதை நாம்‌ காண்கிறோம்‌. இவைகளை எப்படி கடவுள்‌ கட்டளையாக மதிக்கப்படும்‌. அது போலவே பாவ புண்ணியம்‌ என்பது தேசத்திற்கு ஒரு விதமாகவும்‌ மதத்திற்கொரு விதமாகவும்‌ ஜாதிக்கொரு விதமாகவும்தான்‌ கருதப்படுகிறது. நமது கல்யா ணங்களிலேயே மதத்திற்கு மதம்‌ வித்தியாசம்‌; ஜாதிக்கு ஜாதி வித்தியாசம்‌. சிலர்‌ தனது சிறிய தகப்பனார்‌, பெரிய தகப்பனார்‌ புத்திரியை மணக்கிறார்கள்‌; சிலர்‌ அத்தை மாமன்‌ புத்திரியை மணக்கிறார்கள்‌; சிலர்‌ யாரையும்‌ மணக்‌ கிறார்கள்‌. ஆகார விஷயத்திலோ சிலர்‌ பசுவை உண்ணுவது பாவம்‌ என்கிறார்‌. கள்‌, சிலர்‌ பன்றியை உண்பது பாவம்‌ என்கிறார்கள்‌. சிலர்‌ கோழியை உண்பது பாவம்‌ என்கிறார்கள்‌, ஜெந்துக்களிலேயே சிலர்‌ பசுவை அடித்து துன்புறுத்தி குடி அரசு - 1926 N 334 வேலை வாங்கலாம்‌, ஆனால்‌ பாம்பை அடிப்பது பாவம்‌ என்கிறார்கள்‌. சிலர்‌. எந்த ஜீவனையும்‌ வதைக்கக்‌ கூடாது என்கிறார்கள்‌. சிலர்‌ எல்லா ஜீவனும்‌ மனிதன்‌ தன்‌ இஷ்டம்போல்‌ அனுபவிப்பதற்குத்தான்‌ படைக்கப்பட்டது என்கிறார்கள்‌. இந்த நிலையில்‌ எது உண்மை? எது கடவுள்‌ கட்டளை? எது பாவம்‌? என்று எப்படி உணர முடியும்‌. இவற்றைப்பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப்‌ புகுந்தால்‌ உடனே அவரை நாஸ்திகர்‌ என்று சொல்லுவதும்‌, இதெல்‌ லாம்‌ உனக்கு எதற்காக வேண்டும்‌ பெரியவர்கள்‌ சொன்னபடியும்‌, நடந்த படியும்‌ நடக்கவேண்டியதுதானே என்றும்‌ சொல்லி விடுவார்கள்‌. “பெரியவர்கள்‌” யார்‌? பெரியவர்கள்‌ யார்‌ என்று யோசிக்கப்‌ போனால்‌ அதிலிருக்கும்‌ கஷ்‌ டத்திற்கு அளவே இல்லை. அன்றியும்‌ அவர்கள்‌ சொன்னதையும்‌ நடந்த தையும்‌ கவனிக்கப்‌ போனால்‌ அதிலுள்ள கஷ்டத்திற்கும்‌ வியவகாரத்திற்கும்‌ முடிவேயில்லை. உதாரணமாக சிலர்‌ “வேதம்‌” என்று ஒன்றைச்‌ சொல்லி அதன்படி எல்லாரும்‌ நடக்க வேண்டும்‌ என்று சொல்லுவார்கள்‌. அதில்‌ என்ன சொல்லியிருக்கிறது, நான்‌ பார்க்கலாமா என்றால்‌, அது கடவுளால்‌ சொல்லப்‌ பட்டது, அதை நீ பார்ப்பது பாவம்‌, நான்‌ சொல்லுவதைத்தான்‌ நம்ப வேண்டும்‌ என்பார்கள்‌. உலகத்தில்‌ எத்தனைக்‌ கடவுள்‌ இருப்பார்கள்‌. ஒரு கடவுள்‌ தானே! அவர்‌ சொல்லியிருப்பாரானால்‌ அது உலகத்திற்கெல்லாம்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால்‌, கிருஸ்து, மகம்மது முதலிய மதங்களும்‌ இந்தியா தவிர மற்ற தேசங்களும்‌ இதை ஒப்புக்‌ கொள்ளும்படி கடவுள்‌ ஏன்‌ செய்யவில்லை? ஆனதனால்‌ இது கடவுள்‌ சொன்னார்‌ என்பது பொய்‌ என்று யாராவது சொன்னால்‌ உடனே அவனை “வேதப்‌ பிரஷ்டன்‌” என்று சொல்லி விடுவார்கள்‌. இம்மாதிரி மூடுமந்திர மானதும்‌ இயற்கைக்கும்‌ அனுபவத்திற்கும்‌ நாணயத்திற்கும்‌ விரோதமானது மான கொள்கைகள்‌ நமது நாட்டில்‌ இந்து மதத்தின்‌ பெயரால்‌ இருந்துகொண்டு ஒரு பெருஞ்‌ சமூகத்தையே தேய்ந்து போகும்படி செய்வதோடு - இதன்‌ பரி பாலனம்‌ என்னும்‌ பெயரால்‌ தேசத்தின்‌ நேரமும்‌ அறிவும்‌ பொருளும்‌ அளவற்று அநாவசியமாய்ச்‌ செலவாகியும்‌ வருகிறது. மதத்திற்கொரு கடவுளா? மதத்திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற்கொரு வேதமா? மதத்திற்கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும்‌ மோக்ஷத்திற்கும்‌. நரகத்திற்கும்‌ வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும்‌ இருக்கவே முடி யாது. பெரியவர்கள்‌ கோவிலில்‌ சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும்‌ குழந்தை எப்படி ஒன்றும்‌ அறியாமலும்‌, மனதில்‌ ஒன்றும்‌ நினைக்காமலும்‌ தானும்‌ கைகூப்பி கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும்‌ தெய்வம்‌-மதம்‌- தர்மம்‌ என்கிற சொற்கள்‌ மற்றவர்கள்‌ சொல்லுவதைக்கேட்டு அர்த்தமில்‌ 335 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 லாமல்‌ நமக்குள்‌ பதிந்துவிட்டன. இது போலவே பக்தி- தொண்டு - அஹிம்சை என்னும்‌ பதங்களும்‌ அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப்‌ பார்ப்போமேயானால்‌ நம்மிடையில்‌ உள்ள மக்களிடம்‌ காட்டும்‌ அன்புதான்‌ நாம்‌ பக்தி செய்யத்தக்க கடவுள்‌: அவர்களுக்குச்‌ செய்யும்‌ தொண்டுதான்‌ கடவுள்‌ தொண்டு; அம்மக்களின்‌ விடுதலைதான்‌ மோக்ஷம்‌; அச்ஜீவன்களிடம்‌ கருணை காட்டுவதும்‌ அவைகள்‌ வேதனைப்படா மலிருப்பதும்தான்‌ அஹிம்சை. அஹிம்சை எது? மாமிசம்‌ சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அஹிம்சையாகாது. பகுத்தறிவுள்ள மக்களை கஷ்டப்படுத்தாமல்‌, அவர்கள்‌ மனவேதனை அடையச்‌ செய்யாமல்‌ இருப்பதும்‌, அவர்களுடைய கஷ்டத்தையும்‌ அடி மைத்‌ தனத்தையும்‌ நீக்க உழைப்பதும்தான்‌ அஹிம்சையாகும்‌. மாட்டு மாமிசம்‌ சாப்பிடாமலிருந்து விட்டு, மாட்டை வண்டியில்‌ கட்டி சுமக்க மாட்டாத பாரம்‌ வைத்து தினம்‌ கஷ்டப்படுத்துவது ஒருக்காலும்‌ அஹிம்சை யாகாது. இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும்‌ மற்றொரு ஜீவனுக்கு உபத்திரவமும்‌ கொடுமையும்‌ செய்யாமலிருப்பதுதான்‌ அஹிம்சை. ஆச்சாரம்‌ மனிதனுக்கு மனிதன்‌ பார்ப்பது பாவம்‌, தெருவில்‌ நடப்பது பாவம்‌ என்று சொல்லிக்கொண்டும்‌ பட்டை நாமம்‌ போட்டுக்‌ கொண்டும்‌ பஞ்ச கச்சம்‌ வைத்து வேஷ்டி கட்டிக்கொண்டும்‌ வாயால்‌ “ராம்‌ ராம்‌” என்று ஜபித்துக்‌ கொண்டும்‌ இருந்தால்‌ அது ஆச்சாரமும்‌ பக்தியுமாய்விடுமா? சத்திரமும்‌ சாப்பாடும்‌. நம்மைச்‌ சுற்றி கோடிக்கணக்கான மக்கள்‌ குடியிருக்க நிழல்‌ இல்லாம லும்‌ இரண்டு நாளைக்கு ஒருவேளை கூட சாப்பிட சக்தியில்லாமல்‌ தரித்திரத்‌ தால்‌ வாடிக்‌ கொண்டிருக்கும்‌ போது சோம்பேறிகளும்‌, விபசாரிகளும்‌ தங்கும்‌ படி மடங்களும்‌ சத்திரங்களும்‌ கட்டுவதும்‌, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு “பாயசத்திற்கு குங்குமப்பூ போட வில்லை”, “பொங்கலுக்கு பாதாமி பருப்பு போதவில்லை” என்று சொல்லிவிட்டுப்‌ போகும்‌ தடியர்களுக்கு பொங்கிப்‌ போடுவதும்‌, சமாராதனை செய்வதும்‌ தர்மமாகுமா? இவைகளை உணராமல்‌ சுயநலக்காரர்கள்‌ தங்கள்‌ நன்மைக்கு எழுதி வைத்திருக்கும்‌ ஆபாசக்‌ களஞ்சி யங்களை நம்பிக்கொண்டு நமது பொருள்‌, நேரம்‌, அறிவு முதலியவற்றை வீணே பாழாக்குகிறோம்‌. குடி அரசு - 1926 N 336 ஆச்சாரியார்‌ கொடுமை இவற்றை இந்துக்கள்‌ என்போர்களோ இந்து மத ஆச்சாரியார்கள்‌ என்போர்களோ சிறிதும்‌ கவலையற்று தங்களது வாழ்வுக்கு இதைத்‌ தொழிலாய்‌ வைத்துக்கொண்டு காலங்‌ கழித்து வருகிறார்கள்‌. இப்படி நடந்து வருவது சில தனிப்பட்ட நபர்களுக்கும்‌ சில தனிப்பட்ட வகுப்புகளுக்கும்‌ அனுகூலமாயிருப்பதால்‌ இவ்வாபாசங்களை வெளியார்‌ அறியாமலிருப்ப தற்கு அவ்வகுப்பாரின்‌ கட்டுப்பாடான சூழ்ச்சியும்‌ மற்ற வகுப்பாரின்‌ அறியாமையும்‌ உதவி செய்து வருகிறது. நமது சென்னை மாகாணத்தில்‌ மாத்திரம்‌ இந்து மத சம்மந்தமான சடங்குகள்‌ பெயராலும்‌, மதப்‌ பெயராலும்‌, தெய்வங்கள்‌ பெயராலும்‌ வருடம்‌ 1-க்கு 10 கோடி ரூ. க்கு அதிகமாக செலவாகி வருகிறது என்று சொல்லுவது அதிகமாகாது.அதாவது எவ்வளவு யாத்திரை ஸ்தலம்‌, எவ்வளவு வேண்டுதல்‌ ஸ்தலம்‌, எவ்வளவு உற்சவ ஸ்தலம்‌, எவ்வளவு மதச்சடங்குகள்‌ இவைகளுக்கேற்படும்‌ செலவு, மெனக்‌ கேடு இவைகளைக்‌ கணக்குப்‌ பார்த்தால்‌ எவ்வளவு 10 கோடி ரூபாயாகும்‌? இதனால்‌ என்ன பலனை அடைகிறார்கள்‌? மனதில்‌ ஏற்படும்‌ ஒரு குருட்டு நம்பிக்கையாலும்‌ இதனால்‌ லாபமடையும்‌ வகுப்பார்களால்‌ ஏமாற்றப்படுவ தாலும்தானே நமது மக்கள்‌ இவ்வித கஷ்ட நஷ்ட மெனக்கேடுகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. அல்லாமலும்‌ இதனால்‌ எவ்வளவு அடிமைப்‌ புத்தி வளர்கிறது? மத தர்ம பரிபாலனம்‌ இவ்விஷயங்களையெல்லாம்‌ ஒழுங்குபடுத்தவும்‌ இம்மாதிரி கஷ்ட நஷ்ட மெனக்கேடுகள்‌ ஏற்படாமலும்‌ அவை உண்மையில்‌ பலளளிக்கத்தக்க வழியில்‌ உபயோகப்படவும்‌ வேண்டிய முயற்சிகள்‌ எடுத்துக்‌ கொள்வதுதான்‌ மத தர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச்‌ செய்தல்‌ என்பது. இவற்‌ றைஉத்தேசித்தே இந்துமத பரிபாலன சட்டம்‌ என்று சென்னை சட்டசபையில்‌ ஒரு சட்டம்‌ கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும்‌ அச்சட்டம்‌ பண சம்பந்தமான வரவுசெலவுகளை தணிக்கை பார்க்கக்‌ கூடியதாய்‌ இருக்கிறதே. தவிர நான்‌ மேலே சொல்லியுள்ள குற்றங்களை நிவர்த்தி செய்யத்தக்கது என்று சொல்லமுடியாது. ஆனாலும்‌ இவ்வளவாவது எவ்வளவோ சூழ்ச்சிக்‌ கிடையில்‌ நிறைவேற்றி முடித்தவர்களின்‌ வீரத்தைப்‌ போற்றாமலிருக்க முடியாது. ஆனாலும்‌ இன்னமும்‌ அச்சட்டத்தை ஒழிப்பதற்கு அதனால்‌ இப்போது கொள்ளையடிக்க முடியாத ஒரு வகுப்பாரால்‌ எவ்வளவோ காரியங்கள்‌ நடைபெற்று வருகின்றன. ஸ்ரீமான்கள்‌ 5. சீனிவாசய்யங்கார்‌, 6. ராஜகோபாலாச்சாரியார்‌ முதலியவர்கள்‌ “சுயராஜ்யக்‌ கட்சி” பெயரைச்‌ சொல்லிக்‌ கொண்டும்‌ கள்ளு நிறுத்துவதென்பதைச்‌ சொல்லிக்கொண்டும்‌. சட்டசபைக்கு ஆள்‌ பிடிப்பதும்‌ அவர்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுப்பதும்‌ இதே கருத்தைக்‌ கொண்டுதான்‌. நமது மதத்தின்‌ பெயரால்‌ நமது மக்களிட 337 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 மிருந்து கோடிக்கணக்காய்‌ வசூலாகும்‌ பணத்திற்கு கணக்குக்‌ கேட்பது கூட நமது அய்யங்கார்‌ - ஆச்சாரியார்‌ கூட்டங்களுக்கு கஷ்டமாய்‌ இருப்பதன்‌ காரணம்‌ என்னவென்பதை ஊன்றிக்‌ கவனித்தால்‌ யாவருக்கும்‌ அதன்‌ இரகசியம்‌ விளங்கும்‌. ஆதலால்‌ தர்ம பரிபாலன மென்பது ஒவ்வொரு மனிதனும்‌ கவலையெடுத்துக்‌ கொண்டு அது பிரயோஜனப்‌ படத்தக்க வழியில்‌ உழைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின்‌ முக்கியமான கடமை. அப்பேர்ப்பட்ட கடமையை நீங்கள்‌ ஐந்தாவது கொள்கையாக வைத்திருப்‌ பதைப்‌ பற்றி நான்‌ மிகுதியும்‌ போற்றுகிறேன்‌. ஆகவே, உங்கள்‌ சங்கம்‌ நீடூழி வாழ்ந்து அதன்‌ கொள்கைகள்‌ பூராவும்‌ நிறைவேறி தங்கள்‌ சமூகத்திற்கும்‌ நாட்டிற்கும்‌ தக்க பலனையளிக்க எல்லாம்‌ வல்ல சக்தியை வேண்டுகிறேன்‌. குறிப்பு:- ஏழாயிரம்‌ பண்ணையில்‌ 16:5.26 - ஆம்‌ நாள்‌நடைபெற்ற பாவிய நாடார்சங்கத்தின்‌ இரண்டாவது ஆண்டு கொண்டாட்ட தலைமை 2 @y - தொடர்ச்சி? குடி அரசு - சொற்பொழிவு - 30.05.1926 குடி அரசு - 1926 N 338 தொழிலானர்‌ சங்கம்‌ தூ£ய்மையுற வேண்டும்‌ அரசியல்‌ கட்சிக்குள்‌ அடைக்கலம்‌ புகலாகாது, தண்‌ கையே தணக்குதவி சகோதரர்களே! நான்‌ இதுவரை எந்த தொழிலாளர்‌ சங்கத்திலும்‌ பேசியதேயில்லை. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுவுடன்‌ இரண்டொரு சங்கங்களுக்குப்‌ போயிருக்‌ கிறேன்‌. ஈரோட்டில்‌ கூடிய தொழிலாளர்‌ மகாநாட்டில்‌ உபசரணைத்‌ தலைவ ராக இருந்து இரண்டொரு வார்த்தைகள்‌ பேசியிருக்கிறேன்‌. தொழிலாளர்‌ சங்கம்‌ பொதுவாய்‌ தொழிலாளர்‌ சங்கம்‌ என்றாலே எனக்கு அதனிடத்தில்‌ விருப்பமிருப்பதில்லை.அதில்‌ ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத்‌ தோன்று வதில்லை. சில வெறும்‌ வெளி ஆசாமிகள்‌ அதை தங்கள்‌ நன்மைக்கும்‌ கீர்த்‌ திக்கும்‌ ஏற்படுத்திக்‌ கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம்‌. அல்லாமலும்‌ நமது நாட்டில்‌ உண்மையான தொழிலாளிகளே கிடையாது. தொழிலாளர்‌ யார்‌? நமது நாட்டில்‌ இப்போது தொழிலாளிகள்‌ என்று சொல்லப்படுவோ ரெல்லாம்‌ தொழிலாளிகளல்ல. அவர்கள்‌ எல்லாம்‌ கூலிக்காரர்கள்தான்‌ . தொழிலாளி என்பவன்‌ நாட்டின்‌ நன்மைக்கான ஒரு தொழிலைக்‌ கற்று அத்‌ தொழிலைத்‌ தானாகவே சுயேச்சையுடன்‌ செய்து, அதன்‌ பலன்‌ முழுவ தையும்‌ தானும்‌ தன்‌ நாட்டு மக்களும்‌ அடையும்படியான முறையில்‌ தொழில்‌ செய்பவன்தான்‌ தொழிலாளி. நீங்கள்‌ அப்படியில்லை. ஏதோ ஒரு முதலாளி யின்‌ கீழ்‌ தினக்கூலிக்கமர்ந்து, உங்களுக்கு எவ்வித சுதந்திரமுமில்லாமல்‌ முதலாளி சொல்லுகிறபடி செய்துவிட்டு, அதன்‌ பலன்‌ முழுவதையும்‌ அவனே அடையும்‌ படி செய்து, உங்கள்‌ ஜீவனத்திற்குக்‌ கூட போதுமானதா யில்லாத கூலியை வாங்கிப்‌ பிழைக்கிறீர்கள்‌. ஒரு முதலாளிக்குக்‌ கீழ்‌ வேலை செய்து கூலி வாங்குபவன்‌ எவ்வளவு பெரிய கூலிக்காரனானாலும்‌ அவன்‌ கூலிக்காரன்தான்‌; அடிமை தான்‌. 339 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தொழிலாளியும்‌ தொழிலும்‌. தொழிலுக்கும்‌ உங்களுக்கும்‌ என்ன சம்பந்தம்‌? தொழிலின்‌ பலனுக்கும்‌ உங்களுக்கும்‌ என்ன சம்பந்தம்‌? தொழிலின்‌ அருமை உங்களுக்கு ஏதாவது தெரியுமா? காலையில்‌ பட்டறைக்குள்‌ போய்‌ புகுந்தால்‌ மாலை வரை அவன்‌ சொல்லுகிறபடி உழைக்க வேண்டியது; வாரத்திற்‌ கொருமுறை கூலி வாங்கிக்கொள்ள வேண்டியது. தெருக்களில்‌ கூலிக்கு மூட்டை தூக்கி அவ்வப்போது கூலிவாங்கும்‌ நபருக்கும்‌ உங்களுக்கும்‌ என்ன வித்தியாசம்‌? அவர்கள்‌ தங்களுக்கு கூலி போதாது, அதிக பாரமா யிருக்கிறது, இன்னும்‌ சேர்த்துக்‌ கொடு என்று முதலாளியைக்‌ கேட்பதற்கும்‌ நீங்கள்‌ சங்கம்‌ என்று பெயர்‌ வைத்துக்கொண்டு செய்யும்‌ தீர்மானங்களுக்கும்‌. என்ன வித்தியாசம்‌? சில சமயங்களில்‌ கூலிக்காரனாவது தான்‌ தூக்கும்‌ பாரத்தையும்‌, தூக்கிக்கொண்டு செல்லும்‌ தூரத்தையும்‌ அறிந்து கூலி அதிகம்‌ கேட்கிறான்‌. நீங்கள்‌ அதுகூடயில்லை. உங்கள்‌ தொழிலின்‌ அருமை இன்னதென்று கூட உங்களுக்குத்‌ தெரியாமல்‌ முதலாளியைப்‌ பார்த்து, நீ இவ்வளவு ரூபாய்‌ கொள்ளையடிக்கிறாயே, நீ இவ்வளவு சுகப்படுகிறாயே என்கிற பொறாமையின்‌ மேல்‌, ஏன்‌ எனக்கு இன்னும்‌ கொஞ்சம்‌ கூலி சேர்த்துக்‌ கொடுக்கக்‌ கூடாது என்று பல்லைக்‌ கெஞ்சுகிறீர்கள்‌. தனித்தனியாய்‌ கெஞ்சுவதற்குப்‌ பதிலாய்‌ நாலு பேர்‌ சேர்ந்து கெஞ்சுவதைத்‌ தொழிலாளர்‌. சங்கம்‌ என்கிறீர்கள்‌. அதுவும்‌ உங்களுக்குக்‌ கெஞ்சிக்‌ கேட்க சக்தியில்லா மல்‌, உங்கள்‌ தொழிலிலோ உங்கள்‌ கஷ்டத்திலோ கொஞ்சமும்‌ சம்பந்தமில்‌ லாத ஒருவரை உங்கள்‌ சங்கத்‌ தலைவராயும்‌ காரியதரிசியாயும்‌ சில சமயங்‌ களில்‌ நிர்வாகஸ்தர்களாயும்‌ வைத்துக்‌ கொண்டு கூலியை உயர்த்தும்படி கேட்கிறீர்கள்‌. தற்காலத்‌ தலைவர்களால்‌ பயனில்லை ஒரு முதலாளியிடம்‌ வேறொருவன்‌ போய்‌ “ஐயா! உங்களிடம்‌ உள்ள கூலிக்காரர்களுக்கு கூலி போதவில்லை, கொஞ்சம்‌ சேர்த்து கொடுங்கள்‌” என்று சொன்னால்‌ அந்த முதலாளிக்கு கூலிக்காரர்களிடம்‌ என்ன மதிப்பு இருக்கும்‌.அதுபோலவே உங்கள்‌ சவுகரியத்திற்கு வேறு ஒருவன்‌ போராடு கிறான்‌ என்றால்‌ உங்களுக்கு உங்களுடைய தேவை இன்னதென்று கூடத்‌ தெரியவில்லை என்பது தானே பொருள்‌. பள்ளிக்கூடத்துப்‌ பிள்ளைகள்‌ உபாத்தியாயரிடம்‌ போய்‌ “எனக்கு வயிறு வலிக்கிறதென்று எங்கள்‌ தாயார்‌. சொன்னார்கள்‌. ஆதலால்‌ இன்றைக்கு லீவு கொடுங்கள்‌” என்று கேட்பது போலவே நீங்கள்‌ வேறொருவரை உங்கள்‌ சங்கத்திற்கு தலைவராக வைத்துக்‌ கொண்டு காரியங்களைச்‌ செய்வதும்‌, உங்களுக்கு சம்பந்தமில்லாதவைக ளைப்‌ பின்பற்றுவதுமாகும்‌. வெளியிலிருந்து உங்களுக்குத்‌ தலைவர்களாய்‌ வருகிறவர்களுக்கு முதலாவது உங்கள்‌ வேலையிலுள்ள கஷ்டமும்‌, உங்களுக்கு இருக்கிற கஷ்டமும்‌ அவர்களுக்கு எப்படித்‌ தெரியும்‌? குடி அரசு - 1926 N 240 உதாரணமாக, இது சமயம்‌ நமது நாட்டு தொழிலாளர்‌ சங்கத்‌ தலைவர்களை எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. யாருக்காவது உங்கள்‌ தொழிலின்‌ அருமை தெரி யுமா? உங்கள்‌ கஷ்டத்தின்‌ கொடுமை தெரியுமா? அவர்‌ தனது கீர்த்திக்காக உங்களுக்கு தலைவராய்‌ இருப்பார்‌. அவர்‌ ஒரு தொழிலும்‌ செய்யாமல்‌ மாதம்‌ 500,1000, 5000, 10000 என்று பொது ஜனங்களின்‌ பணத்தை உங்கள்‌ முதலாளி களைப்‌ போலவே கொள்ளை அடித்து சுகபோகமனுபவித்துக்‌ கொண்டு, தனது சுயநலத்தை நாடிக்‌ கொண்டிருப்பவராயிருப்பார்‌. அவர்களால்‌ உங்க ளுக்கு எந்தத்‌ துறையில்‌ அனுகூலம்‌ கிடைக்கக்கூடும்‌. அவர்களைக்‌ கண்‌ டால்‌ உங்கள்‌ முதலாளிமார்கள்‌ எப்படி மதிக்கக்கூடும்‌. இதே முகாந்தரங்‌ களால்‌ தான்‌ நமது நாட்டு தொழிலாளர்‌ சங்கங்கள்‌ என்பது இதுவரை உருப்படி யாகாமல்‌ போனதற்குக்‌ காரணம்‌. வேலைநிறுத்தமும்‌ தலைவர்களும்‌ அநேக இடங்களில்‌ வேலைநிறுத்தம்‌, வெளியேற்றம்‌ நிகழ்கிறது. இவைகள்‌ ஏற்பட்டு என்ன பலன்‌ கிடைத்தது? அதன்‌ பலனாய்‌ எவ்வளவு தொழிலாளிகளுக்கு வேலை போய்‌ கஷ்டமுண்டாயிற்று? இவற்றை எந்தத்‌ தலைவர்‌ கவனித்தார்‌? பல தொழிலாளி, தலைவர்கள்‌ வார்த்தையைக்‌ கேட்ட தின்‌ பலனாய்‌ வயிறாரக்‌ கஞ்சியில்லாமல்‌ கஷ்டப்பட்டுக்‌ கொண்டுதானிருக்‌ கிறார்கள்‌. அவர்களை நடத்தின தலைவர்கள்‌ இன்றைய தினம்‌ முன்னிலும்‌ அதிகமான கீர்த்தியுடனும்‌ வரும்படியுடனும்‌ வயிறு வெடிக்கச்‌ சாப்பிட்டுக்‌ கொண்டுதானிருக்கிறார்கள்‌. மற்றும்‌ பல தலைவர்கள்‌ தங்கள்‌ பிள்ளை குட்டி களுக்கு உங்கள்‌ முதலாளிமார்களிடம்‌ உத்தியோகம்‌ பெற்றுக்‌ கொண்டுதானி ருக்கிறார்கள்‌. விளக்கைப்‌ பிடித்துக்கொண்டு கிணற்றில்‌ விழுவதுபோல்‌ வெளியார்களை உங்கள்‌ சங்கத்‌ தலைவர்களாய்‌ வைத்துக்‌ கொண்டிருக்‌ கிறிர்கள்‌. தொழிலாளரும்‌ அரசியலும்‌ அதுமாத்திரமல்ல, உங்கள்‌ சங்கதியே உங்களுக்குத்‌ தெரியாமல்‌ இப்படித்‌ திண்டாடும்போது, சூதாட்டத்திற்குச்‌ சமானமான அரசியல்‌ ககஷிகளில்‌ உங்கள்‌ சங்கங்களை நுழைத்துக்‌ கொள்ளுகிறீர்கள்‌: தனித்தனி யாகவும்‌ நுழைகிறீர்கள்‌. கூலிக்காரனுக்கும்‌ அரசியலுக்கும்‌ வெகுதூரம்‌. அரசியல்‌ என்றால்‌ என்ன என்பது உங்களுக்குத்‌ தெரியுமா? உங்கள்‌ வயிற்‌ றுக்கு கூலி கேட்கவே உங்களுக்குத்‌ தெரியவில்லையானால்‌, உலகத்துக்கு தேவையை நீங்கள்‌ அறிவதெப்படி? உங்களுக்கு இருக்கும்‌ வியாதி இன்ன தென்று கண்டுபிடிக்க உங்களால்‌ முடியாமலிருக்கும்போது நீங்கள்‌ ஊரா ருக்கு வைத்தியம்‌ செய்வதென்பது சிரிப்பாயிருக்கவில்லையா? உங்களு டைய அரசியல்‌ என்ன? முதலியாரை வண்டியில்‌ வைத்து இழுக்கலாமா?' நாயுடுவை வண்டியில்‌ வைத்து இழுக்கலாமா? அய்யங்காரை வண்டியில்‌ 241 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வைத்து இழுக்கலாமா? நாயக்கரை வண்டியில்‌ வைத்து இழுக்கலாமா?' என்பது போன்றவையும்‌, யாரை சட்டசபைக்கு அனுப்பலாம்‌, யாருக்கு “ஜே” போடலாம்‌? யாருக்கு ஓட்டுச்‌ செய்யலாம்‌? என்பது தானே. நீங்கள்‌ வண்டி சவாரி செய்யலாமா? நீங்கள்‌ சட்டசபைக்குப்போய்‌ உங்கள்‌ தேவைகளை: கவனிக்கலாமா? என்கிற கவலையே உங்களுக்கில்லையே. எப்பேர்ப்பட்ட உண்மைத்‌ தலைவர்கள்‌ மகாத்மா போன்றவர்கள்‌ அரசியல்‌ என்பதை உதறித்‌ தள்ளிவிட்டு, ஏழைகள்‌ கஷ்டத்தை நிவர்த்திக்க வேண்டும்‌, ஒடுக்கப்பட்டவர்‌. களையும்‌ தாழ்த்தப்பட்டவர்களையும்‌ விடுதலை செய்ய வேண்டும்‌ என்று தனியே இருந்து இரவும்‌ பகலும்‌ உழைக்கும்போது உங்களுக்கென்ன அரசியல்‌ அழுகின்றது. இப்பொழுது அரசியலில்‌ உழலும்‌ யாருக்காவது விடுதலை என்றால்‌ என்ன? உரிமை என்றால்‌ என்ன? சுயராஜ்யம்‌ என்றால்‌ என்ன? தொழிலாளர்‌ விடுதலை என்றால்‌ என்ன? என்பது தெரியுமா? எப்பொ முதாவது வாயைத்‌ திறந்து சொல்லியிருக்கிறார்களா? வயிற்றுப்‌ பிழைப்‌ புக்கும்‌ உத்தியோகத்திற்கும்‌ “உரிமை', “உரிமை”, சுயராஜ்யம்‌”, “சுயராஜ்யம்‌”, “தொழிலாளர்‌, “தொழிலாளர்‌” என்று கத்தினால்‌ நீங்களும்‌ அதில்‌ சேர்ந்துக்‌ கத்துவதா? உங்கள்‌ நிலைமையை இன்னதென்று அறியாமல்‌ இப்படி மோசக்‌ காரர்களுடன்‌ சேர்ந்து அவர்களை உங்கள்‌ தலைவர்களாக்கிக்‌ கொண்டு அவர்கள்‌ பின்னால்‌ திரிந்தீர்களானால்‌, நீங்கள்‌ மற்றவர்களை வண்டியில்‌ வைத்து இழுக்கவும்‌, உங்கள்‌ கழுத்தில்‌ கயிறு கட்டி சந்தைகளில்‌ கொண்டு போய்‌ விற்கவும்தான்‌ நீங்கள்‌ ஆளாவீர்களே தவிர ஒருக்காலும்‌ நீங்கள்‌ மனிதர்கள்‌ போல்‌ வாழமுடியாது. கண்டிப்பாய்‌ அரசியலில்‌ நீங்கள்‌ சேரவே கூடாது.அரசியல்‌ உங்களி டம் வந்து சேரட்டும்‌. அரசியல்காரர்‌ உங்களைத்‌ தலைவர்களாகக்‌ கொள்ளட்‌ டும்‌.அப்பேர்ப்பட்ட நாளை எதிர்பாருங்கள்‌. சங்கங்களைப்‌ புதுப்பியுங்கள்‌ உங்கள்‌ சங்கங்களுக்கெல்லாம்‌ நீங்களே தலைவர்களாகுங்கள்‌. உங்கள்‌ நாட்டுத்‌ தொழிலாளர்‌ சங்கங்கள்‌ எல்லாவற்றையும்‌ ஒன்று சேருங்கள்‌. பிறகு தொழிலாளர்‌ கக்ஷி என்று ஒரு பொதுக்‌ கட்சியை ஏற்படுத்துங்கள்‌. அதில்‌ உங்கள்‌ தொழிலின்‌ பலன்‌ முழுவதையும்‌ நீங்களே அடையத்தக்க. தாகவும்‌ தொழிலாளர்களுக்கு வேண்டிய நன்மைகளையும்‌, பொதுமக்க ளுக்கு வேண்டிய நன்மைகளையும்‌ கொள்கையாக வைத்துப்‌ பரப்புங்கள்‌. அதில்‌ எல்லோரையும்‌ வந்து சேரும்படி செய்யுங்கள்‌. தொழிலாளர்‌ கட்சி நாட்டையாளும்படி செய்யுங்கள்‌. அதைவிட்டுவிட்டு எடுப்பார்‌ கைக்‌ குழந்‌ தையாய்த்‌ திரிவது தொழிலாளர்‌ உலகத்திற்கே மானக்கேடு. உங்கள்‌ நிலை என்ன? மாடு கன்றுகள்‌ வளர்க்கிறவர்களாவது அவைகளிடம்‌ வேலை வாங்‌ கின பிறகு நிழலில்‌ கட்டுகிறார்கள்‌; வேளா வேளைக்குத்‌ தண்ணீர்‌ காட்டு கிறார்கள்‌. உங்களுக்கு அந்த செளகரியம்‌ கூட எங்கேயிருக்கிறது. பகலெல்‌ குடி அரசு - 1926 N 342 லாம்‌ உழைக்க வேண்டியது, கூலி வாங்க வேண்டியது, அதை குடிக்கோ, கூத்திக்கோ, சூதுக்கோ சிலவு செய்யவேண்டியது; பட்டினி கிடக்கவேண்டி யது; பெய்யும்‌ மழையும்‌ அடிக்கும்‌ வெய்யிலும்‌ உங்கள்‌ மேலேயே பட வேண்டியது என்கிற கேவல நிலைமையிலிருக்கிறீர்கள்‌. உங்களில்‌ இரண்‌: டொருவர்‌ சுகப்படுவதை நினைக்காதீர்கள்‌. பெரும்பான்மையாய்‌ எப்படி யிருக்கிறீர்கள்‌? இதைப்பற்றி யாருக்கும்‌ கவலையில்லை. உங்கள்‌ ஓட்டுக ளுக்கு மாத்திரம்‌ அதிக கிராக்கி. யாராவது பணம்‌ கொடுத்து அல்லது யாருக்‌ காவது பணம்‌ கொடுத்து உங்கள்‌ ஓட்டுகளை வாங்கி பதவியைப்‌ பெற்று விடுகிறார்கள்‌. நீங்களே தலைவராகுங்கள்‌ ஆதலால்‌, இன்று முதல்‌ அரசியலையும்‌ அரசியல்காரரையும்‌ மறந்து விடுங்கள்‌. உங்கள்‌ சங்கத்திற்கும்‌ வருஷாந்திரக்‌ கொண்டாட்டங்களுக்கும்‌ தொழிலாளர்களையே தலைவர்களாய்‌ ஏற்படுத்துங்கள்‌. அவர்களுக்கு சக்தி யில்லையே என்று குறைகூறாதீர்கள்‌. அது உங்களுக்கு அவமானம்‌. அதை விட மோசமானவர்களை நீங்கள்‌ தலைவர்கள்‌ என்கிறீர்கள்‌. அயோக்கியர்‌. களைவிட முட்டாள்கள்‌ நல்லவர்கள்‌ என்றே சொல்லுவேன்‌. இருக்கிறவர்‌. களை வைத்துக்கொண்டு காரியம்‌ நடத்துங்கள்‌. கூடிய சீக்கிரம்‌ எல்லாம்‌ சரிபட்டுப்‌ போகும்‌. நான்‌ ஒரு சிறு கதை கேழ்விப்பட்டிருக்கிறேன்‌.ஒரு குளத்‌ திலுள்ள தவளைகள்‌ ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவர்‌ வேண்டு மென்று கடவுளைக்‌ கேட்டதாகவும்‌, கடவுள்‌ ஒரு மரக்கட்டையைத்‌ தலைவ ராகக்‌ கொடுத்ததாகவும்‌, அம்மரக்கட்டை ஒன்றும்‌ செய்யாமல்‌ சும்மா இருந்த தாகவும்‌, பிறகு தவளைகள்‌ கடவுளிடம்‌ எங்களுக்குக்‌ கொடுத்த தலைவர்‌. உபயோகமில்லையென்று வேறு தலைவர்‌ வேண்டுமென்று கேட்டதாகவும்‌, கடவுள்‌ ஒரு பாம்பைத்‌ தலைவராகக்‌ கொடுத்ததாகவும்‌, அந்த பாம்பு தினமும்‌ 0 தவளைகளைத்‌ தின்று வந்ததாகவும்‌, பிறகு தவளைகள்‌ கடவுளை நோக்கி தங்களுக்குக்‌ கொடுத்த தலைவரை எடுத்துக்‌ கொள்ளும்படி வேண்டி தங்கள்‌ காரியத்தை வேறொரு தலைவரில்லாமல்‌ தாங்களே பார்த்து வந்ததாகவும்‌ சொல்லப்படுகிறது. அதுபோல்‌ உங்களிலேயே உங்களுக்குத்‌ தலைவர்களும்‌, காரியதரிசியும்‌, நிர்வாகிகளும்‌ கிடைக்கவில்லையானால்‌ கண்டிப்பாய்‌ உங்களுக்கு சங்கம்‌ வேண்டாம்‌. இந்த நிலையில்‌ நீங்களும்‌ சங்கம்‌ வைத்து நடத்த சக்தியற்றவர்கள்‌. உங்களுக்குள்‌ தலைவர்‌ ஏற்பட்டு நடத்த சக்தி வரும்‌ வரை முதலாளிகளை அனுசரித்தே பிழையுங்கள்‌. வீணாக “குளத்தைக்‌ கலக்கிப்‌ பிராந்துக்கு விட்டது போல்‌' உங்கள்‌ உழைப்பால்‌ உங்கள்‌ முதலாளி மார்‌ பிழைப்பதோடல்லாமல்‌, உங்களால்‌ மோசக்காரர்‌ பிழைக்கும்படி செய்து நீங்கள்‌ கஷ்டப்படாதீர்கள்‌. நீங்கள்‌ என்னைக்‌ கூப்பிட்ட போதே இதைத்தான்‌ சொல்ல நினைத்தேன்‌. இதுதான்‌ உங்கள்‌ சம்பந்தமான என்னுடைய அபிப்ராயம்‌. 343 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அடுத்தபடியாக நீங்கள்‌ spey ஆதரிக்க வேண்டும்‌. தொழிலாளரா யிருப்பவன்‌ முதலாவது செய்ய வேண்டிய வேலை மற்றொரு தொழிலா ளியை ஆதரிப்பதுதான்‌. ஆதலால்‌ கிராமத்து பெண்மணிகள்‌,நமது சகோதரி கள்‌ தொழிலற்று கூலியுமற்று தனக்கும்‌ தனது பிள்ளைக்குட்டிகளுக்கும்‌ ஆகாரமில்லாமல்‌ பட்டினிகிடந்து, விபசாரம்‌ செய்யத்தக்க நிலையில்‌ இருக்கும்போது, நீங்கள்‌ அவர்களை அலட்சியம்‌ செய்து அவர்களது தொழிலை ஆதரிக்காமல்‌ மல்‌ துணிகளையும்‌ மில்‌ துணிகளையும்‌ ஆதரிப்ப தானது மிகவும்‌ பாதகமான காரியமாகும்‌. கதரை ஆதரித்தால்‌ நீங்கள்‌ காலக்கிரமத்தில்‌ கூலிக்காரர்கள்‌ என்கிற பெயர்‌ மாறி உண்மையான தொழி லாளியாவீர்கள்‌. குறிப்பு நாகை தென்‌ இந்தியா ரெயில்வே தொழிலாளர்‌ சங்கக்‌ கூட்டத்தில்‌ 25.05.1926 ல்‌ ஆற்றிய சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 30.05.1926 குடி அரசு - 1926 N 344 திண்ணைப்‌ பிரசாரம்‌ ஸ்ரீமான்‌ CV. வெங்கிட்டரமணய்யங்காரின்‌ தேர்தல்‌ சூழ்ச்சிகளைப்‌ பற்றியும்‌ அது சம்பந்தமான அவரது தரும விளம்பரத்தைப்பற்றியும்‌ பல விஷயங்கள்‌ “குடி அரசில்‌” தோன்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கும்‌. ஸ்ரீமான்‌ அய்யங்காருக்கு பொது ஜனங்கள்‌ திருப்தி அடையதக்கவண்ணம்‌. இவைகளுக்கு பதில்‌ சொல்ல கொஞ்சமும்‌ சக்தியில்லாமல்‌ போய்விட்ட தால்‌ பிராமண தந்திரத்தை உபயோகித்து பொது ஜனங்களை ஏமாற்றப்‌ பார்க்கிறார்‌. அய்யங்கார்‌ தென்னை மரத்தில்‌ கள்ளு இறக்கப்படுகிறது என்று எழுதியதற்கு, நாளதுவரை அய்யங்கார்‌ திருவாக்கால்‌ யாதொரு தகவலும்‌ இல்லவே இல்லை. கூலிக்கு ஆள்களைப்பிடித்து, தென்னை மரத்தில்‌ இப்போது கள்ளு முட்டிகள்‌ இல்லை என்றும்‌, இந்த ஒரு வருஷத்திற்குள்‌ ஒரு குறிப்பிட்ட தோப்பில்‌ கள்ளு கலயம்‌ கட்டியதை ரூபிப்போருக்கு 100 ரூபாய்‌ இனாம்‌: கொடுக்கப்படும்‌ என்றும்‌ அய்யங்காரின்‌ நடத்தைக்கு பொறுப்பில்லாத யாரையோ பிடித்து எழுதச்சொல்லுகிறாரே தவிற, “எனது தோப்புகளில்‌ நான்‌ கள்ளுக்கு மரம்‌ விடவில்லை” “அவற்றில்‌ ஒன்றிலும்‌ முட்டி கட்டினதில்லை” என்று இதுவரை சொல்லவே இல்லை. அவரது தர்ம விளம்பரத்தைப்‌ பற்றி நாம்‌ எழுதியதற்கும்‌ இதுபோலவே கூலி ஆள்‌ களைப்‌ பிடித்து தன்னை “தர்மப்பிரபு” வென்றும்‌, “கலியுக கர்ணன்‌” என்றும்‌, “தமிழ்நாட்டு தர்மமூர்த்தி” என்றும்‌எழுதச்‌ சொல்லுவதோடு தனது தர்மத்தின்‌ இரகசியத்தைப்‌ பற்றி வெளியிட்டது குற்றமென்றும்‌ எழுதச்‌ சொல்லுகிறாரே யொழிய, இன்ன- இன்ன சொத்து இவ்வளவு ரூபாய்‌ பொறுமானது, இன்ன-இன்ன தர்மத்திற்காக ஒதுக்கி வைத்து, இன்ன - இன்னாரை பரிபாலகராக நியமித்து, இன்ன முறையில்‌ நடக்கும்படி, இன்ன தேதியில்‌ தர்மசாசனம்‌ எழுதி வைத்திருக்‌ கிறது என்று ஒரு வார்த்தையில்‌ பதில்‌ சொல்லாமல்‌, வீணாக பத்திரிகை. காரர்களுக்குப்‌ பணம்கொடுத்து தனது படத்தைப்‌ போடச்சொல்லுவதும்‌, இதன்‌ இரகசியத்தை வெளியிட்டவர்களை திட்டச்‌ சொல்லுவதும்‌ *அசோசியேடட்‌ பிரசு'க்கு தந்தி கொடுப்பதுமான காரியத்‌ தில்‌, ஏமாற்றப்‌ பார்ப்பதில்‌ பயன்‌ என்ன? இதோடுமாத்திரம்‌ இல்லாமல்‌ “குடி அரசு” பத்திரி கைக்கு எதிர்ப்பிரசாரமும்‌ அதன்‌ ஆசிரியர்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ மீது பழி சுமத்தும்‌ பிரசாரமும்‌ செய்வ தில்‌ என்ன பலன்‌ அடையக்‌ கூடும்‌? ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ மீது பழி சுமத்துவதினாலேயே ஸ்ரீமான்‌ அய்யங்‌ காரின்‌ நடவடிக்கைகள்‌ யோக்கியமானதாகிவிடுமா? இதைப்பற்றி பொது ஜனங்கள்‌ என்ன நினைப்பார்கள்‌ என்பதை அறியாமலேயே விஷயப்‌ 345 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பிரசாரம்‌ நடத்த ஆரம்பித்துவிட்டார்‌. அதாவது இரண்டொ ருவருக்குப்பணம்‌. கொடுத்து துண்டு பிரசுரங்கள்‌ போடச்‌ செய்தது. அத்‌ துண்டு பிரசுரத்தில்‌ குறிப்பிட்டுள்ள விஷயத்தில்‌ முக்கியமானவைகளுக்கு சமாதானம்‌ சொல்வோம்‌. முனிசிபல்‌ நிர்வாகம்‌ முதலாவதாக நாயக்கர்‌ சேர்மேனாகயிருந்த காலத்தில்‌ ஒரு குளத்துக்‌ கட்டிட கல்லுகளை தனது சினேகிதர்‌ பெயருக்கு கொடுத்து தான்‌ உபயோகப்‌ படுத்திக்‌ கொண்டார்‌ என்பது, - இது சுத்தப்‌ பொய்யான விஷயம்‌. அந்த குளத்தை மூடவும்‌ அதற்காக அதிலுள்ள கல்லுகளை பிரித்துக்கொள்ள வுமான ஒப்பந்தத்தின்‌ பேரில்‌ ஒருவருக்கு முனிசிபல்‌ கவுன்சில்‌ தீர்மானப்‌ படி கன்றாக்ட்டு கொடுக்கப்பட்டது. அந்த கன்றாக்ட்டு நிறைவேறுவதற்கு இல்லாமல்‌ பக்கத்து வீட்டுக்காரர்‌ முனிசிபாலிட்டி மீது கோர்ட்டில்‌ வழக்‌ கைத்‌ தொடரவே அது நின்றுபோய்‌ 5, 6-வருஷம்‌ பொறுத்து இப்போது அந்த குளம்‌ முனிசிபாலிட்டிக்கு சம்பந்தப்பட்டதல்ல, சர்க்காருக்கு சம்பந்‌ தப்பட்டதல்லது என்று ஏற்பட்டு அந்த கல்லுகளை நாயக்கர்‌ நிர்வாகத்திற்குட்‌ பட்ட ஈரோடு தேவஸ்தானத்திற்காக ஜில்லா கலெக்டர்‌ 25-ரூபாயுக்குக்‌ கொடுத்து விட்டார்‌. இப்போதுதான்‌ அவைகள்‌ எடுக்கப்பட்டு தேவஸ்தானத்‌ தில்‌ 2,000 ரூபாய்‌ செலவு செய்து கட்டிடம்‌ ஆகிறது. அந்த கல்‌ பிரித்த குளத்தை முனிசிபாலிடி யார்‌ சொந்த செலவில்‌ மூடிவருகிறார்கள்‌. இன்ன மும்‌ அவ்விரண்டு வேலைகளும்‌ நடந்து வருகின்றன. ஆனால்‌ நாயக்கர்‌ கவுன்சில்‌ தீர்மானப்படி ஒருவருக்கு கன்றாக்ட்டுக்குக்‌ கொடுத்தது சுமார்‌ 350 ரூபாய்‌ பொறுமான மண்‌ கொண்டுவந்து கொட்டி குளத்தை மூடும்படியான பொறுப்புக்கு பதிலாகத்‌ தான்‌ கொடுத்ததே தவிற சும்மா கொடுத்ததல்ல. அது நின்றுபட்டுபோய்‌ விட்டதால்‌ முனிசிபாலிட்டிக்குதான்‌ இப்போது நஷ்டம்‌. இரண்டாவது, தனது தமயனார்‌ மரக்கடையில்‌ மரம்‌ வாங்கும்‌ கண்டி ஷன்‌ பேரில்‌ முனிசிபல்‌ வேலைகளை ஒரு கன்றாக்டருக்கு கொடுத்ததாய்‌ குறிப்பிட்டிருக்கிறது. இதுவும்‌ உண்மையல்ல. இந்தப்பழி சம்பந்தப்பட்ட வேலையின்‌ மரத்தின்‌ மதிப்பு சுமார்‌ ஐநூறு ரூபாய்‌ இருக்கும்‌. இதில்‌ பல கடைகளில்‌ கன்றாக்ட்டர்‌ மரம்‌ வாங்கினார்‌. நாயக்கர்‌ சிபார்சு பேரில்‌ சிலர்‌ மரம்‌ கொடுத்ததுண்டு. அந்த மரக்கடைக்காரருக்கு பணங்கூட கொடுக்காமல்‌ கன்றாக்ட்டுதார்‌ கடன்‌ கொடுக்கச்‌ சக்தியற்றவராய்விட்டார்‌. இதில்‌ நாயக்கர்‌ தமயனாருக்கு லாபமும்‌ இல்லை, நஷ்டமும்‌ இல்லை. மூன்றாவது, முனிசிபாலிட்டியில்‌ ஒரு கட்டடம்‌ பிரித்த பழய சாமான்‌ களை தன்‌ மைத்துனர்‌ பேருக்கு ஏலத்தில்‌ எடுத்து தன்‌ சொந்த உபயோகப்‌ படுத்திக்‌ கொண்டார்‌ என்பது - இதுவும்‌ உண்மையல்ல. இது ஒரு பக்கத்து கிராமத்து முதலியாருக்காக அவர்‌ கூட்டாளியாயிருந்த நாயக்கரின்‌ மைத்துனர்‌ கவுன்சிலின்‌ பகிரங்க ஏலத்தில்‌ எடுத்துப்பிரித்து கிராமத்திற்கு குடி அரசு - 1926 N 346 அனுப்பப்பட்டது. கட்டிடத்தின்‌ பேரில்‌ இருந்த பழய சாமான்களை மதிப்புத்‌ தெரியாமல்‌ போட்டியில்‌ 300ரூபாய்க்கு ஏலத்தில்‌ கூறி ஏமாந்து விட்டார்கள்‌. ஆதலால்‌ இதில்‌ நாயக்கருக்கு எவ்வித சம்பாத்தியமும்‌ இல்லை. நான்காவது, நாயக்கர்‌ சேர்மனாயிருக்கும்போது குரங்குடாப்புக்கும்‌ (முன்தாள்வாரம்‌! சுண்ணாம்பு சூளைக்கும்‌ குப்பை கொட்டி வைப்பதற்கும்‌ மிட்டாய்‌ கடைக்கும்‌ , ஆப்பக்காரி, புட்டுக்காரிகளுக்கும்‌ வரி விதித்தார்‌ என்பது, குரங்குடாப்பு, சுண்ணாம்புச்சூளை, குப்பை சேகரிப்பு, மிட்டாய்க்‌ கடை முதலியவைகள்‌ முனிசிபல்‌ சட்டப்படி வரி கொடுக்கக்‌ கடைமைப்‌ பட்டதேயல்லாமல்‌ நாயக்கர்‌ இஷ்டத்தைப்‌ பொறுத்ததல்ல. ஆப்பக்‌ காரிக்‌ கும்‌, புட்டுக்காரிக்கும்‌ வரி போடப்பட்டது என்பது உண்மையல்ல. ஐந்தாவது, ஸ்பெஷல்‌ ஆபிசை வைத்து முனிசிபாலிடியில்‌ வரி போட்டது என்பது வாஸ்தவந்தான்‌. அதனால்‌ யாருக்கும்‌ நஷ்டமில்லை. கவுன்சிலர்கள்‌ ஓட்டர்களிடம்‌ உள்ள விருப்பு வெறுப்புக்களால்‌ சில சமயங்‌ களில்‌ தவறி நடந்ததாக ஜனங்கள்‌ கருதுவதுண்டு. இது எங்கும்‌ சகஜம்தான்‌. ஆதலால்‌ அதற்கு ஒரு தனி நபரை கவுன்சில்‌ சாங்ஷன்‌ பேரில்‌ ஏற்படுத்திய துண்டு. ஆனால்‌ அதற்கடுத்த தடைவையில்‌ கவுன்சிலர்களே வரி போட்டதில்‌ முன்பு போட்டதைவிட உயர்த்தினார்களே ஒழிய ஒன்றையும்‌ குறைத்து விடவில்லை. ஆறாவது, நாயக்கர்‌ பேரில்‌ சில குற்றம்‌ ஏற்பட்டதால்‌ கலெக்டர்‌ விசாரணைக்கு வரும்‌ சமயம்‌ பார்த்து ராஜீனாமா கொடுத்தார்‌ என்பது,- இது வேண்டுமென்றெ சொல்லும்‌ பொய்‌. நாயக்கருடைய ராஜீனாமாவில்‌ காரணம்‌ சொல்லியிருக்கிறது.அதாவது முனிசிபல்‌ நிர்வாகத்தில்‌ சேர்மெ னின்‌ தீர்ப்பை கலெக்டர்‌ மாற்றியதற்காகவே ராஜீநாமா செய்யப்பட்டது.அந்த ராஜீநாமாவில்‌ சுயமரியாதை உள்ள எவனும்‌ இனி முனிசிபல்‌ சேர்மனா யிருக்க முடியாதென்றே எழுதப்பட்டது. நாயக்கர்‌ தன்‌ ராஜீநாமாவை பின்வாங்கி கொள்ளும்படி கலெக்டரும்‌, நிர்வாகசபை மெம்பரும்‌ எவ்வள வோ நல்ல வார்த்தை சொன்னார்கள்‌. அதுசமயம்‌ நாயக்கருக்கு சர்க்காரால்‌ பட்டம்‌ தர. சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும்‌ சொல்லப்பட்டது. அப்படி இருந்தும்‌ அவர்‌ ஒப்புக்கொள்ளவில்லை. நாயக்கரின்‌ ராஜீனாமா காரண மாகவே முனிசிபாலிடிகளில்‌ கலெக்டர்களுக்கு உள்ள அதிகாரங்களை பிடிங்கிக்‌ கொள்ளப்பட்டது. இவ்வாறு பிடுங்குவதற்காக டாக்டர்‌ நாயரும்‌ ஸ்ரீமான்‌ எம்‌.சம்பந்தமுதலியாரும்‌ பி.வி.நரசிம்மஅய்யரும்‌ அதிகமாய்‌ வாதாடியிருக்கிறார்கள்‌. அக்காலத்திய “இந்து” “சுதேசமித்திரன்‌” “தேச பத்தன்‌” முதலிய பத்திரிகைகள்கூட தலையங்கம்‌ எழுதியிருக்கின்றன. ஏழாவது, நாயக்கர்‌ ஒத்துழையா இயக்கத்தில்‌ தலைவராயிருந்தபோது தனது இனத்தாருக்குப்‌ பல நன்மைகள்‌ செய்ததினிமித்தம்‌ ஒத்துழையா தாரிடம்‌ செல்வாக்கில்லாமல்‌ போய்விட்ட காரணத்தால்‌ இப்போது ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேரப்பார்க்கிறார்‌ என்பது, நாயக்கர்‌ ஒத்துழையாமையில்‌ தலைவரா 247 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 யிருந்தபோது தனது இனத்தாருக்கு நன்மை செய்ததானது எல்லாரையும்‌ ஜெயிலுக்கு அழைத்துக்கொண்டு போனதைத்‌ தவிற வேறு உதவி ஒன்றும்‌ செய்யவில்லை. ஈரோட்டிலிருந்து ஜெயிலுக்குப்போன 40 தொண்டர்களில்‌ 13 பேர்‌ நாயக்கர்‌ இனத்தவர்கள்‌. அல்லாமலும்‌ இது விஷயமும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ நாயக்கர்‌ சேர்ந்து வாரிக்கொள்ளும்‌ விஷயமும்‌, நோட்டீஸ்‌ வினி யோகம்‌ செய்யும்‌ ஸ்ரீமான்‌ அய்யங்காரைவிட பொதுஜனங்களுக்கு அதிக மாய்த்‌ தெரியும்‌. ஆதலால்‌ இதைப்பற்றி அதிகம்‌ சொல்ல வேண்டியதில்லை. ஜஸ்டிஸ்‌ கக்ஷிப்‌ பணமா? மற்றபடி திண்ணைப்‌ பிரசாரமாக, நாயக்கர்‌ பனகால்‌ ராஜாவிடம்‌ பணம்‌ வாங்கி கொண்டார்‌ என்பதும்‌, பனகால்‌ ராஜா மோட்டார்வண்டி கொடுத்தார்‌. என்பதும்‌, ஜஸ்டிஸ்கட்சி மோட்டார்‌ சவாரி என்பதும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சி அச்சுக்‌ கூடம்‌ என்பதும்‌ அவர்கள்‌ காகிதம்‌ வாங்கித்‌ தருகிறார்கள்‌ என்பதுமான சில விஷயங்கள்‌ - பனகால்‌ ராஜா பணம்‌ கொடுக்கவும்‌ நாயக்‌ கர்‌ வாங்கவுமான யோக்கியதையில்‌ நாயக்கரை கடவுள்‌ வைக்கவில்லை. பனகால்‌ ராஜா மோட்டாரில்‌ நாயக்கர்‌ போகிறார்‌ என்பதும்‌, அய்யங்கா ரோடு இன்னும்‌ சில பிராமணர்கள்‌ சேர்ந்து கட்டிவிட்ட கட்டு. இது உண்மையா என்று கும்பகோணம்‌, குடியாத்தம்‌, மதுரை முதலிய இடங்களில்‌ இருந்து இது விஷயமாய்‌ நமக்கு கடிதங்களும்‌ வந்தன. இது தங்கள்‌ பணம்‌ கொடுத்து பிரசாரம்‌ செய்வதையும்‌ தங்கள்‌ மோட்டாரில்‌ பிரசாரர்களை கூட்டிக்கொண்டு. போய்‌ கிராமப்‌ பிரசாரம்‌ செய்வதையும்‌ நாயக்கர்‌ பலமாய்க்‌ கண்டிப்பதால்‌ அதற்குப்‌ பதிலாக கட்டி விட்ட பொய்‌ கட்டு. இந்தக்‌ கட்டை பிராமணர்களிடம்‌ பணம்‌ வாங்கிப்பிழைக்கிறவர்‌. களும்‌ உபயோகித்துக்‌ கொள்ளுகிறார்கள்‌. ஏனென்றால்‌ “நாயக்கரே பணம்‌ வாங்கிக்கொண்டு பிரசாரம்‌ செய்யும்போது நான்‌ வாங்கினால்‌ என்ன, என்று சொல்லிக்கொள்வதற்கு அனுகூலமாயிருப்பதற்காகவே அல்லாமல்‌ வேறில்லை.அதைப்பற்றி நாயக்கருக்குக்‌ கவலையில்லை. ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ அச்சுக்கூடம்‌ என்பதும்‌ அவர்கள்‌ காகிதம்‌ வாங்கித்தருகிறார்கள்‌ என்பதும்‌ மிகவும்‌ அக்கிரமமான பொய்க்கட்டு. இதற்கு பதில்‌ சொல்லவேண்டியதேயில்லை. இது அய்யங்கார்‌ பணம்‌ கொடுத்து பத்திரிகை நடத்துவதிலிருந்தும்‌ அய்யங்காரிடம்‌ பணம்‌ வாங்கிக்கொண்டு நடத்துவதிலிருந்தும்‌ பிறருடைய பழிக்குத்‌ தப்பித்துக்‌ கொள்வதற்கென்றே கற்பனை செய்து கொண்டதல்லாமல்‌ வேறில்லை. தவிற மே மாதம்‌ 6-ந்தேதி தமிழ்‌ “சுயராஜ்யா'”வில்‌ ஒரு கந்தசாமி நாயக்கர்‌ என்பவர்‌ பெயரால்‌ எழுதப்பட்ட விஷயங்களைப்படித்தால்‌ எழுதின. விஷயம்‌ முழுதும்‌ பத்திரிக்கையில்‌ போடப்பட்டதாய்‌ நினைக்க முடிய வில்லை. நாயக்கருக்கு அனுகூலமானதான சிலதையோ, அல்லது அதிக குற்றமானதான சிலதையோ, மத்தியில்‌.மத்தியில்‌ நீக்கிவிட்டதாகத்‌ தெரிகிறது. குடி அரசு - 1926 N 348 அதில்‌ வெளியானவைகளில்‌ முக்கியமான சிலவற்றிற்கு மாத்‌ திரம்‌ சமாதானம்‌ சொல்லவேண்டியது அவசியம்‌ என்று நினைக்கிறோம்‌. சத்திர நிர்வாகம்‌ அதாவது, நாயக்கர்‌ தகப்பனார்‌ மாதம்‌ 1-க்கு 1000ரூ. வரும்படியான சொத்துக்கள்‌ தர்மத்திற்கு விட்டிருப்பதாகவும்‌, இந்த தர்மம்‌ நாயக்கர்‌. பார்வைக்கு வந்ததில்‌ தகப்பனார்‌ இஷ்டப்படி சாதுக்களுக்கு சதாவிர்த்தியும்‌, சுவாமி அபிஷேகமும்‌ நடந்து வருகிறதா என்று கேட்கிறார்‌. சாப்பாடும்‌ பூஜையும்‌ நடந்து வருவதோடு வேறு பல தர்மங்களும்‌ நடந்துதான்‌ வருகின்றன. இவ்வளவு தர்மம்‌ செய்யக்கூடியவர்‌ சேர்மெனாயிருந்த காலத்தில்‌ ஆப்பக்காரிக்கு வரி போடலாமா என்பது ஆப்பக்காரி எவருக்கும்‌ வரி போடவில்லை. மற்றும்‌ சட்டத்திற்கு விரோதமாயாவதும்‌ நியாயத்திற்கு விரோதமாயாவது எவருக்கும்‌ வரி போடவில்லை. வைக்கத்தில்‌ தீண்டாதார்‌. பொது தெருவில்‌ நடக்க சம்சார சகிதமாக போய்‌ சத்தியாகிரகம்‌ செய்தவர்‌. தனது தகப்பனாரால்‌ கட்டப்பட்ட பொது சத்திரத்திலும்‌, பொது விநாயக ரிடத்திலும்‌, பொது கிணற்றிலும்‌ தீண்டாதார்‌ போகக்கூடாது என்ற சத்தியாக்‌ கிரகம்‌ செய்துவருவது உண்மையா என்பது. இது உண்மையல்ல. சத்திரம்‌ பொது சத்திரமல்லவானாலும்‌ இந்துக்களுக்கென்றே கட்டப்பட்டதானாலும்‌ ஜாதி.மதம்‌, தீண்டாத வகுப்பு என்கிற காரணத்தால்‌ யாருக்கும்‌ அதில்‌ பிரவே சிக்க ஆக்ஷபணை கிடையாது. சுகாதார விதியை அனுசரித்து மாத்திரம்‌ ஆக்ஷேபனை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதுவும்‌ விதியாய்‌ மாத்திரம்‌ இருக்கிறதே தவிற அமுலில்‌ இல்லை. மேற்படி சத்திரத்தில்‌ உள்ள இரண்டு பாகங்களில்‌ ஒன்று “பிரமாண ருக்கு” மற்றொன்று “சூத்திரருக்கு” என்று எழுதியிருப்பதற்கு இவர்‌ என்ன பதில்‌ சொல்லுகிறார்‌ என்பது - இதுவெகுகாலத்திற்கு முன்‌ நாயக்கர்‌ தகப்பனாரால்‌ ஒரு பலகையில்‌ எழுதிவிக்கப்பட்டதாகும்‌. இப்பொழுது மறைந்துபோயிருப்பது வாஸ்தவம்‌, ஆனால்‌ கவனமாய்‌ படித்தால்‌ தெரியும்‌ படியாகத்‌ தான்‌ இருக்கிறது. இதை இதுவரை நாயக்கர்‌ அவ்வளவு முக்கிய மானதாய்க்‌ கவனிக்கவில்லை. இதைப்பற்றி பத்திரிகையில்‌ பார்த்ததும்‌, இதற்கு சமாதானம்‌ எழுதிவிட்டு, இப்படி எழுதியிருப்பது சுத்தமாய்‌ மறைந்து போகும்படி அழித்துவிட தீர்மானித்து விட்டார்‌; அழித்துமாகி விட்டது. ஆனாலும்‌ இந்தப்பிரிவுகள்‌ இந்தப்படி அமுலில்லை. யார்‌ வேண்டுமானா லும்‌ எந்த பாகத்திலும்‌ இறங்கலாம்‌. இது வெகுகாலமாய்‌ நடந்து வருகிறது. ஆனால்‌ ஒரு கட்டுப்பாடுண்டு. அதென்னவென்றால்‌ ஒரு பாகம்‌ சைவ உணவுக்காரருக்கும்‌ மற்றபாகம்‌ மாமிச உணவுக்காரருக்கும்‌ என்று அங்‌ குள்ள சத்திர மேற்பார்வைகாரனால்‌ பிரயாணிகளுக்குச்‌ சொல்லப்படும்‌. இது 349 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நாயக்கர்‌ தனது தகப்பனாருக்கு திவசம்‌ செய்கிறார்‌ என்பதும்‌ பார்ப்ப னரை அதற்காக அழைக்கிறார்‌ என்பதும்‌ - இது உண்மையல்ல. திவசம்‌ மாத்திரமல்ல, வைதீக சடங்கு ஒன்றையும்‌ நாயக்கர்‌ செய்து கொள்வதே கிடையாது. நாயக்கர்‌ தகப்பனாருக்கு நாயக்கர்‌ தமயனார்‌ திவசம்‌ செய்வதா யிருந்தாலும்‌ அவர்‌ ஸ்ரீரங்கத்திற்கு போய்ச்‌ செய்வார்‌, அல்லது வேறு வீட்டில்‌ செய்வார்‌. திவச தினத்திலெல்லாம்‌ நாயக்கர்‌ தனது வீட்டில்‌ மாமிசம்‌ பக்குவம்‌ செய்து தகப்பனார்‌ இறந்த தினத்தைத்‌ தனது சினேகிதர்களுடன்‌ கொண்டா டுவார்‌. ஏனென்றால்‌ நாயக்கர்‌ தகப்பனார்‌ மாமிசத்தில்‌ அதிகப்‌ பிரியமுள்ளவர்‌. என்பதுதான்‌. கண்டிப்பது குற்றமா? மகாத்மா முதல்‌ எல்லா தேசபக்தர்களையும்‌ பத்திரிகையில்‌ திட்டு கிறார்‌ என்பது- நாயக்கர்‌ திட்ட வேண்டுமென்று யாரையும்‌ திட்டுவதில்லை. குற்றமென்று தனக்குபட்டால்‌ அதை தாக்ஷண்யமில்லாமல்‌ கண்டிக்கிறார்‌. என்பதை அவரே ஒப்புக்கொள்ளுகிறார்‌. அதில்‌ ஒன்றும்‌ பெரிய பாவமிருப்‌ பதாய்‌ அவர்‌ கருதவில்லை. அம்மாதிரி தைரியமாய்‌ மனதில்பட்டதை வெளியில்‌ சொல்லாமல்‌ மூடிவைக்க வேண்டுமென்றால்‌ பத்திரிகையே நடத்த வேண்டியதில்லை. “குடி அரசு” வயிற்று பிழைப்பிற்கு நடத்தப்படும்‌ பத்திரிகையல்ல. எந்த தனிக்குடும்பத்தின்‌ ஜீவனத்திற்கும்‌ “குடி அரசு” நடத்தப்படுவதில்லை. உண்மையை தனது மனதுக்குப்‌ பட்டதை வெளியில்‌ எழுதக்கூடாது என்கிற நிர்ப்பந்தம்‌ வரும்போது “குடி அரசு” தானாகவே மறைந்துவிடும்‌; நாயக்கரும்‌ ஜெயிலில்‌ இருப்பார்‌. காங்கிரசில்‌ சேர்ந்தவர்கள்‌ ஜெயிலுக்குப்‌ போனவர்கள்‌, சோம்பேறி கள்‌, திருடர்கள்‌, வக்கீல்கள்‌ வரும்படியில்லாததால்‌ ஜெயிலுக்குப்‌ போனார்‌. கள்‌ என்று நாயக்கர்‌ எல்லாரையும்‌ தூஷிக்கிறார்‌ என்பது. எல்லாரையும்‌ அப்படித்‌ தூஷிப்பதில்லை. அப்படியானால்‌ நாயக்கரும்‌ அதில்‌ சேர்ந்தவர்‌. தான்‌ என்று ஆகுமல்லவா? ஒத்துழையாமை சமயத்தில்‌ உள்ள வேகமானது, உண்மையானவர்கள்‌ பலரையும்‌ அப்படிப்பட்டவர்கள்‌ பலரையும்‌ சேர்த்துத்‌ தான்‌ ஜெயிலுக்குள்‌ தள்ளிற்று. வெளியில்‌ வந்தபிறகு அவரவர்கள்‌ யோக்கி யதை ஒருவரும்‌ சொல்லாமலேதான்‌ வெளிப்பட்டு வருகிறது. ஜெயிலுக்குப்‌ போன பல தலைவர்கள்‌ சங்கதியும்‌, பல தொண்டர்கள்‌ சங்கதியும்‌, பல தேச பக்தர்கள்‌ சங்கதியும்‌ உலகம்‌ அறிந்ததுதான்‌. இதில்‌ ஒன்றும்‌ இரகசியமில்லை. அஹிம்சைக்கு விரோதமா. அஹிம்சா தர்மத்தைப்‌ பற்றி பிரசங்கம்‌ செய்பவர்‌ மாமிசம்‌ சாப்பிட லாமா என்பது- ஆம்‌, உள்ளூரில்‌ தினமும்‌, வெளியூர்களில்‌ கிடைக்கிற இடத்திலும்‌ நாயக்கர்‌ மாமிசம்‌ சாப்பிடுவதுண்டு. அஹிம்சா தர்மம்‌ என்பது மாமிசம்‌ சாப்பிடுவதால்‌ கெட்டுப்போகாது. கத்திரிக்காய்‌ சாப்பிடுவதற்கும்‌ குடி அரசு - 1926 N 350 பால்‌, தயிர்‌ சாப்பிடுவதற்கும்‌ கோழிமுட்டை சாப்பிடுவதற்கும்‌, ஆடு, மாடு சாப்பிடுவதற்கும்‌ ஒன்றும்‌ வித்தியாசமில்லை என்பது நாயக்கரின்‌ கொள்கை. அஹிம்சா தர்மம்‌ என்பது ஜீவன்களை ஹிம்சைப்‌ படுத்தக்‌ கூடாது என்பதேயாகும்‌. இதில்‌ ஜீவன்கள்‌ என்று சொல்லி விட்டால்‌ எறும்பை மிதிக்காமல்‌ இருக்க முடியாது, பாம்பை அடிக்காமல்‌ இருக்க முடியாது, குதி ரையை ஓடும்படி அடிக்காமல்‌ முடியாது, மாட்டை பாரம்‌ வைத்து இழுக்கச்‌ செய்யாமலும்‌ ஏர்‌ உழுகச்‌ செய்யாமலும்‌ முடியாது. எந்த ஜீவனையும்‌ கழுத்‌ தில்‌ கயிறு கட்டி தொழுவத்தில்‌ கட்டுவதே ஹிம்சையாய்த்தான்‌ முடியும்‌. திருடனுக்கு நமது வீட்டுக்‌ கதவை தாளிட்டு விட்டால்‌ கஷ்டமாகத்தான்‌ இருக்கும்‌. அயோக்கியர்களுக்கு அவர்கள்‌ குற்றத்தை எடுத்துச்‌ சொன்னால்‌ அவர்கள்‌ மனம்‌ வேதனைப்படத்தான்‌ செய்யும்‌. ஏமாற்றுகிறவனுக்கு ஜனங்கள்‌ ஏமாறாவிட்டால்‌ அது அவனுக்கு ஹிம்சையாகத்தான்‌ இருக்கும்‌. குற்றவாளிகளைத்‌ தண்டித்தால்‌ அது அவர்களுக்கு கொடுமையாகத்தான்‌ இருக்கும்‌. எதை ஹிம்சை என்பது? எதை ஹிம்சை அல்லாதது என்பது ஆதலால்‌ நம்மைப்போல்‌ பகுத்தறிவுள்ள மக்களை நியாயமற்ற முறையில்‌ ஹிம்சிப்பதும்‌ கொடுமைப்படுத்துவதும்‌ நமது நியாயமற்ற முறையால்‌ நம்மைப்போன்ற ஜீவன்கள்‌ மனம்‌ கஷ்டப்படுவதும்‌, நமது பேராசையின்‌ பொருட்டு மற்றவர்களை மனம்‌ பதைக்கச்‌ செய்வதும்‌, நமது வாழ்வின்‌ பொருட்டு மற்ற ஜீவன்களை தாழ்மையாய்க்‌ கருதி அதன்‌ உரிமையை அடையவொட்டாமல்‌ தடுப்பதும்‌ ஹிம்சையின்‌ வகைகளாகும்‌. மாமிசம்‌ சாப்பிடுவது ஹிம்சை என்று சொல்லி விட்டால்‌ உலகத்தில்‌ 100க்கு 99பேர்‌ மாமிசம்‌ சாப்பிடுபவர்களாய்த்தான்‌ இருக்கிறார்கள்‌. மக்களல்லாத ஜீவன்‌ களில்‌ 100க்கு 99 ஜீவன்களும்‌ மாமிசம்‌ சாப்பிடுவதாய்தான்‌ இருக்கின்றன. இயற்கையின்‌ தத்துவமே ஒரு ஜீவன்‌ அடையும்‌ ஹிம்சையால்தான்‌ மற்றொரு ஜீவன்‌ வாழ்கின்றது. ஆதலால்‌ மக்களைப்‌ பொறுத்தவரை அஹிம்‌ சைக்கு லக்ஷனம்‌ கற்பிப்பதில்‌ அது பிற மக்களுக்கு முறையற்ற ஹிம்சையாய்‌ இருக்கக்கூடாது என்கிற வரையில்தான்‌ அஹிம்சையை அநுஷ்டிக்க முடியும்‌. அப்படியல்லவென்றால்‌ மாமிசம்‌ சாப்பிடாதவர்களை எல்லாம்‌ அதனாலேயே அஹிம்சா தர்ம முடையவர்கள்‌ என்று சொல்ல முடியுமா? ஜஸ்டிஸ்‌ கட்சி வண்டி நாயக்கர்‌ ஒரு மோட்டார்‌ வாங்கி இருக்கிறார்‌. அது கோயமுத்தூர்‌ ஸ்ரீமான்‌ சி.எஸ்‌. இரத்தினசபாபதி முதலியாரிடம்‌ வாங்கியது. அது ஒரு பழய வண்டி, ஸ்ரீமான்‌ முதலியாருக்கு 25ரூபாய்க்கு ஒரு லாட்டரி சீட்டில்‌ வந்தது. சென்ற தேர்தலுக்கு அவர்‌ உபயோகப்படுத்திக்கொண்டு அதை 500 ரூபாய்க்கு விற்கும்படி ஒரு கம்பெனிக்காரரிடம்‌ விட்டிருந்தார்‌. நாயக்கர்‌ குறைந்த விலையில்‌ ஒரு இரண்டாவது கைமாறிய மோட்டார்‌ வாங்க பிரயத்‌ தனப்‌ பட்டத்தில்‌ ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ வண்டியைக்கூட பார்க்கப்பட்டு கடைசியில்‌ ஸ்ரீமான்‌ முதலியார்‌ வண்டி பார்க்கப்பட்டது. இது ஐயங்‌ 351 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 காருக்கே தெரியும்‌. அவரும்‌ தனது வண்டியை கூட்டிக்கொண்டுபோய்‌ காண்பித்தார்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ வண்டியோ ரிப்பேர்‌ தேவையானதினால்‌ குறைந்த விலைக்கு அதாவது 300ரூபாய்க்குக்‌ கிடைக்ககூடியதாகச்‌ சொல்லப்பட்டது. அதை வாங்கி சுமார்‌ 200ரூபாய்‌ வரை இப்போதுரிப்பேர்‌. செலவு செய்யப்‌ பட்டிருக்கிறது. அதுவுமல்லாமல்‌ தற்கால செளகரியத்திற்கு இரண்டுடையர்‌ டியூப்‌ 240ரூபாய்க்கு சென்னைக்கு எழுதியிருக்கிறது. வண்டி ஈரோட்டிற்கு கொண்டுவந்து சுமார்‌ 4 மாதமாகிறது. இன்னமும்‌ ரிப்பேரில்‌ தானிருக்கிறது. ஒரு நாளாவது அதில்‌ ஏறி ஒரு பிரசாரத்திற்கும்‌ போகவில்லை. ஸ்ரீமான்‌ 0.5. இரத்தினசபாபதி முதலியாரிடம்‌ வாங்கியதால்‌ ஒரு சமயம்‌ இந்த முகாந்திரங்களைக்கொண்டு ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ திண்ணைப்‌ பிரசாரத்தில்‌ *பனகால்‌ ராஜா வண்டி” “ஜஸ்டிஸ்‌ கட்சி வண்டி” என்று சொல்கிறாரோ என்னமோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும்‌ நமக்குக்‌ கவலையில்லை. சமாதானம்‌ எழுத வேண்டியவைகள்‌ இன்னம்‌ சிலது இருக்கிறது. இவ்வாரம்‌ வியாழன்‌, சனி இரண்டு நாள்‌ மாத்திரம்தான்‌ ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ ஈரோட்டி லிருக்க முடிந்தது. ஆதலால்‌ அதிகமாய்‌ எழுத முடியவில்லை. மற்றொரு சமயம்‌ விவரமாய்‌ எழுதப்படும்‌. முடிவு இவ்வளவும்‌ “தமிழ்நாட்டுக்கர்ணனான” ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்‌ யங்கார்‌ தர்மத்தின்‌ திருவிளையாடல்களே. ஆனபோதிலும்‌ நமக்கு கவலையில்லை. இந்த விஷயங்கள்‌ திண்ணைப்‌ பிரசாரங்களாய்‌ இல்லாமல்‌ துண்டு பிரசுரம்‌ மூலமாகவும்‌, பத்திரிகை பிரசார மூலமாகவும்‌ நடத்தப்‌ பட்டது. ஒரு வகையில்‌ நமக்கு அதிக சந்தோஷமே. இதன்‌ மூலமாகவாவது நாயக்கர்‌: பேரில்‌ உள்ள குற்றமென்ன? நாயக்கர்‌ செய்த தப்பிதமென்ன? இவ்வளவு எதிரிகளும்‌ சேர்ந்து நாயக்கர்‌ பேரில்‌ வலை போட்டு அரித்தும்‌ கண்டுபிடிக்கப்பட்ட குற்றம்தான்‌ என்ன என்பது பொது ஜனங்களுக்கு அறிய ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்காருக்கு நாம்‌ மனப்பூர்வமான நன்றி செலுத்தக்‌ கடமைப்பட்டிருக்கிறோம்‌.. இம்மாதிரியான பழிகள்‌ எவ்வளவு வந்தாலும்‌ அதனால்‌ எவ்வளவு கெட்டபெயர்‌ வந்தாலும்‌ இவைகளுக்குப்‌ பயந்துகொண்டோ எந்தவிதமான நிர்பந்தங்களுக்கு பயந்து கொண்டோ நாயக்கர்‌ தனது முயற்சியை விட்டு விடுவாரோ என்று வாசகர்கள்‌ சந்தேகப்பட வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்கிறோம்‌. ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ ஒத்துழையாமையில்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி தலைவராயிருக்கும்போது ஏற்பட்ட பழிகள்‌ அநேகம்‌. அவற்றை சாவகாச மாய்‌ எழுதுவோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 30.05.1926 குடி அரசு - 1926 N 352 சுயாரான்யக்‌ கட்சி - சித்திரபுத்திரன்‌ தென்னாட்டு அய்யங்கார்‌ பிராமணர்களால்‌ சுயராஜ்யக்‌ கட்சி ஆக்கப்‌ பட்டிருந்தாலும்‌ அதற்குப்‌ பிறப்பிடமாகவும்‌ முதல்‌ பலியாகவும்‌ கொடுக்கப்‌ பட்டது வங்காளமும்‌ பிராமணர்‌ வலையில்‌ சிக்கி ஏமாந்த தேசபந்து தாசருமே யாகும்‌. எப்படியோ, தேசபந்து தாஸ்‌ தனது குற்றத்தை உணர்ந்து வருத்தப்‌ படுவதற்கு முன்னும்‌ உலகத்தார்‌ திட்டும்‌ வார்த்தைகள்‌ தன்‌ காதுக்கு எட்டு வதற்கு முன்னும்‌ பரமபதமடைந்துவிட்டார்‌. தென்னாட்டு பிராமணர்களும்‌ அவருக்கு தென்னாட்டில்‌ கோவில்‌ கட்டி, உருவம்‌ வைத்து, பிரதிஷ்டை செய்துவைத்து விட்டார்கள்‌. விபூஷஒணஆழ்வார்‌ உருவத்திற்கு வைணவக்‌ கோவில்களில்‌ கிடைத்திருக்கும்‌ இடத்திற்கு மேலாகவே நமது தாஸர்‌ உருவத்‌ திற்கு “சுதேசமித்திரன்‌” ஆபீசில்‌ இடம்‌ கிடைத்து விட்டது. அதுமாத்தி ரமல்லாமல்‌ நம்நாட்டு பிராமணச்‌ சூழ்ச்சிக்கும்‌ நமது தாஸர்‌ வாழ்க்கையே அடிக்கடி “வேதக்‌ கட்டளையாக” எடுத்துச்‌ சொல்லப்படுகிறது. ஆனால்‌ அவர்‌ பிறந்த வங்காளத்தில்‌ தாஸர்‌ வாக்கு சிரிப்பாய்‌ சிரிக்கிறது. அவர்‌: சிஷ்யர்களும்‌ அவருடைய உபதேசங்களைக்‌ காற்றில்‌ பறக்கவிட்டு விட்டார்‌ கள்‌. கல்கத்தா இந்து முஸ்லீம்‌ ஒப்பந்தமும்‌ இந்து முஸ்லீம்‌ ஒற்றுமையும்‌ இப்போது எவ்வாறு இருக்கிறது? கல்கத்தா இந்து முஸ்லீம்‌ கலவரமும்‌ வங்காள மாகாண மகாநாடு நடவடிக்கையும்‌ கவனித்தவர்கள்‌ வங்காளத்தில்‌ தாஸருக்கு என்ன மதிப்புக்‌ கொடுத்திருக்கிறார்கள்‌ என்பது விளங்கும்‌. “500 பிரதிநிதிகள்‌ ஒன்றுகூடி வங்காள ஒப்பந்தத்தை ரத்து செய்தார்கள்‌” என்கிற செய்தி எட்டியிருக்கிறது. இது சட்டப்படி செல்லுமா இல்லையா ? என்பதைப்‌ பற்றி நமக்குக்‌ கவலையில்லை. வங்காளத்தில்‌ சுயராஜ்யக்‌ கட்சிக்கு உள்ள செல்வாக்கையோ அல்லது சுயராஜ்யக்‌ கட்சிக்கு எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது என்கிற விஷயத்தையோ இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்‌. அல்லாமலும்‌, சட்டசபைகளை விட்டு வெளியேறிய கனவான்களில்‌ வங்காள சட்டசபைக்காரர்கள்தான்‌ மறுபடியும்‌ சட்டசபைக்குள்‌ “அவசரச்‌ சட்டத்தைத்‌ தடுக்கிறோம்‌” என்கிற பெயரின்‌ பேரில்‌ முதல்‌ முதல்‌ உள்ளே நுழைந்தவர்கள்‌, நுழைந்து சட்டத்தைத்‌ தடுத்தார்களா? இவர்களால்‌ தடுக்க முடிந்ததா? அன்றைய பிரயாணப்படி சுயராஜ்யக்‌ கட்சி மெம்பர்களுக்கு லாபமாயிற்று. சுயராஜ்யக்‌ கட்சி மெம்பர்களும்‌ இருந்துதான்‌ அவசரச்‌ சட்டம்‌ சட்டசபையில்‌ 353 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நிறைவேறிற்று என்கிற கெளரவம்‌ சர்க்காருக்கு கிடைத்தது. இதனால்‌ கஷ்டப்‌ படுகிறவர்கள்‌ பொது ஜனங்கள்‌. சென்னை மாகாணத்தின்‌ யோக்கியதையோ வெளியில்‌ பேச வெட்கக்‌ கேடு. அய்யங்கார்களும்‌, அய்யர்களும்தான்‌ சுயராஜ்யக்‌ ககஷிக்கு மெம்பர்‌. கள்‌. மற்றபடி யாருக்காவது உத்தியோகமோ, பதவியோ, வயிற்றுக்குக்‌ கஞ்சி யோ கொடுப்பதாய்ச்‌ சொன்னால்தான்‌ இவர்களுக்கு பிராமணரல்லாதார்‌. களில்‌ சத்தம்‌ போடவோ, கூடத்‌ திரியவோ இரண்டொரு ஆட்கள்‌ கிடைக்கும்‌. அது நின்று போனவுடனே அந்த ஆட்களே இவர்கள்‌ பேரில்‌ திரும்பிக்‌ கொள்ளுவார்கள்‌. சென்னை மாகாணத்தில்‌ உத்தியோகம்‌ கிடைக்காததினால்‌ மந்திரிகள்‌ பேரில்‌ கோபித்துக்‌ கொண்டும்‌, காங்கிரசில்‌ சேர்ந்து வீராப்பு பேசுவதற்கு வெட்கப்பட்டுக்‌ கொண்டும்‌, சர்க்காருக்கு நல்ல பிள்ளைகளாய்‌ நடக்க ஆசைப்பட்டுக்‌ கொண்டும்‌ இருந்த சுயேச்சைக்‌ கக்ஷியார்‌ என்கிற ஒரு கூட்டத்தார்‌, தங்களுக்கு தேசத்தில்‌ அடியோடு மதிப்பில்லை என்பதை அறிந்து, தங்கள்‌ மானம்‌ வெட்கத்தையெல்லாம்‌ சுட்டெரித்து, தாங்கள்‌ விடிய விடிய குற்றம்‌ சொல்லி பரிகாசம்‌ செய்து கொண்டிருந்த கக்ஷியாகிய சுயராஜ்யக்‌ கக்ஷியில்‌ சரண்‌ புகுந்தார்கள்‌. சுயராஜ்யக்‌ ககஷியாருக்கும்‌ இவர்‌. களை விட வேறு கதியில்லாததால்‌ அவர்களையும்‌ இவர்கள்‌ அழைத்தார்கள்‌. இதைப்பற்றி அவர்களைக்‌ கேட்டதற்கு, சுயராஜ்யக்‌ கூடிக்‌ கொள்கையை நாங்கள்‌ ஒப்புக்‌ கொள்ளவில்லை, ஒற்றுமையை உத்தேசித்து ஒப்பந்தத்தில்‌ மாத்திரம்‌ கையெழுத்துப்‌ போட்டோம்‌ என்று சொன்னார்கள்‌. (என்ன ஒப்பந்‌ தம்‌? இரண்டு பேரும்‌ சேர்ந்து பாமர ஜனங்களை ஏமாற்றலாம்‌; கிடைப்பதில்‌ ஆளுக்குப்‌ பாதி வைத்துக்‌ கொள்ளலாம்‌ என்கிற ஒப்பந்தம்‌) அந்த ஒப்பந்தத்‌ தின்பலனாய்‌ சட்டசபை அபேட்சகர்களாய்‌ சுயராஜ்யக்‌ கட்சியாராலும்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்டு விட்டார்கள்‌. ஆனால்‌, இப்போது பரஸ்பர ஒத்துழையாதார்‌ என்கிற மற்றொரு கக்ஷியார்‌ சென்னை மாகாணம்‌ தவிர மற்ற மாகாணங்களில்‌ தலைசிறந்து விளங்குவதால்‌ சுயேச்சைக்‌ கக்ஷிக்காரர்கள்‌ ஒவ்வொருவராய்‌ இப்போது பரஸ்பர ஒத்துழையாதார்‌ கக்ஷியில்‌ சேருகிறார்கள்‌. சுயேச்சைக்‌ கட்சித்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ வெங்கட்டபதி ராஜு என்பவர்‌ தன்னை சுயராஜ்யக்‌ கட்சி யின்‌ சார்பாய்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌ சட்டசபைக்கு நிறுத்தாமல்‌ ஒரு பிராமண னை நிறுத்தி விட்டதால்‌, அவர்‌ சுயராஜ்யக்‌ கட்சியை விட்டுவிட்டு பரஸ்பர: ஒத்துழைப்புக்‌ கட்சியில்‌ சேர்ந்து விட்டார்‌. மற்றபடி, சுயராஜ்யக்‌ கட்சியின்‌ சார்பாக சட்டசபைக்கு நிறுத்தப்படும்‌ ஆள்களின்‌ யோக்கியதைகளைப்‌ பற்றியோ கேட்க வேண்டியதில்லை. மானம்‌, வெட்கம்‌, சத்தியம்‌, தேசபக்தி, நாணயம்‌ ஆகிய குணங்களைச்‌ சுட்டெரித்த பரிசுத்தவான்களாகப்‌ பார்த்தே நியமிக்கிறார்கள்‌. பிரசாரத்துக்கு வெளியில்‌ போகும்போது கூட்டிக்கொண்டு போகும்‌ ஆட்களைப்‌ பற்றியோ சொல்லத்‌ தேவையில்லை. அய்யங்கார்‌ மடி யிலிருக்கும்‌ பணம்‌ காணாமல்‌ போய்விட்டால்‌ மடியைப்‌ பிரித்து மூட்டையை அவிழ்த்து பரிசோதிக்கும்படியான நவமணிகளைத்தான்‌ கூட்டிப்‌ போவார்‌. குடி அரசு -1926 (0 354 கள்‌. பிரசங்கத்தின்‌ தோணையோ பிராமணரல்லாதவர்களுக்கெல்லாம்‌ நாங்கள்தான்‌ பிரதிநிதிகள்‌; எங்களோடுதான்‌ எல்லா பிராமணரல்லாதார்களும்‌. சேர்ந்திருக்கிறார்கள்‌; எங்கள்‌ அங்கத்தவர்களும்‌ எங்கள்‌ பிரசாரகர்களும்‌ பிராமணரல்லாதார்கள்தான்‌ என்று பறையடிப்பார்கள்‌. அங்கத்தவர்களோ சட்டசபைக்கு நிற்பவர்கள்‌; பிரசாரகர்களோ இரண்டணா காணாவிட்டாலும்‌ மடியை அவிழ்த்துக்‌ காட்ட வேண்டியவர்கள்‌. இந்த நிலைமையில்‌ நாட்‌ டையே கலக்குகிறார்கள்‌. சட்டசபை உத்தியோக ஆசை பிடித்தவர்கள்‌ தவிர, சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சர்க்காருக்கு ஒரு நாலணாவாவது வரி கொடுக்கக்கூடிய குடியானவர்கள்‌ எத்தனை பேர்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ அங்கத்தினர்‌ அல்லது இந்த பிரசார உத்தியோகம்‌ போய்‌ விட்டால்‌ வேறுவழியில்‌ தங்களது மனச்சா ௯ஷியை விற்காமல்‌ ஜீவனம்‌ செய்யலாம்‌ என்று சொல்லக்கூடிய பிரசாரகர்கள்‌ எத்தனை பேர்‌ இவர்களோடு இருக்கிறார்கள்‌. இவர்கள்‌ தந்திரத்தையும்‌ சூழ்ச்சியையும்‌ அறியாமல்‌, இதனால்‌ தேசபக்தர்களாகலாமா என்று நினைத்துக்கொண்டு ஏதாவது ஒன்றிரண்டு உத்தமர்கள்‌ இருந்தாலும்‌ இருக்கலாம்‌. அவர்களைப்‌ பற்றி கவலையில்லை. தாங்கள்தான்‌ பிராமணரல்லாதார்‌ பிரதிநிதிகள்‌: தங்கள்‌ கட்சியில்தான்‌ பிராமணரல்லாதார்‌ இருக்கிறார்கள்‌ என்று சொல்லிக்கொள்ள இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. உண்மையில்‌ பிராமணரல்லாத அறிவாளி களோ, செல்வவான்களோ, முக்கியஸ்தர்களோ, தேசபக்தர்களோ, சுயராஜ்யக்‌ கட்சியிலாவது, காங்கிரசிலாவது இருப்பார்களானால்‌ இந்தியா சட்டசபைக்கு நிறுத்த இவர்களுக்கு பிராமணரல்லாதாரில்‌ ஆள்கள்‌ கிடைக்காமல்‌ போவா னேன்‌. வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, தென்‌ ஆர்க்காடு ஆகிய மூன்று ஜில்லாவில்‌ ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரிக்கு சமானமான ஆள்கூட இவர்கள்‌. கக்ஷியில்‌ பிராமணரல்லாதாரில்‌ கிடைக்கவில்லையா? பெரிய மிராசுதார்‌ களும்‌ அறிவாளிகளும்‌ உள்ள திருச்சி, தஞ்சை ஆகிய ஜில்லாக்களில்‌ ஸ்ரீமான்‌ ஏ. ரங்கசாமி அய்யங்காருக்கு சமானமானவர்கள்‌ கூட கிடைக்க வில்லையா? எவ்வளவோ செல்வவான்களும்‌ அறிவாளிகளும்‌ ஜமீன்தார்களும்‌, தேசபக்தர்களும்‌ நிறைந்த மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம்‌ ஆகிய ஜில்லாக்களில்‌ ஸ்ரீமான்‌ ச்ஷய்யங்காருக்கு சமானமானவர்கள்‌ கூட கிடைக்க வில்லையா? சென்னையில்‌ உள்ள அவ்வளவு பெரிய பிராமணரல்லாத பிரமுகர்களில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரைத்‌ தவிர வேறு யாரும்‌ கிடைக்கவில்லையா? அப்படியானால்‌ இந்த பிராமணர்கள்‌ வெட்கமில்லா மல்‌ எப்படித்‌ தங்களை பிராமணரல்லாதார்‌ பிரதிநிதிகள்‌ என்று சொல்லிக்‌ கொள்ள முடியும்‌? ஏதோ சில பிராமணரல்லாதார்‌ அறியாமையாலும்‌, வயிற்றுக்‌ கொடுமையாலும்‌ இவர்கள்‌ பின்னால்‌ திரிந்தால்‌ அவர்களை வைத்துக்‌ கொண்ட இவர்கள்‌ பிராமணரல்லாதார்‌ பிரதிநிதிகளாய்‌ விடுவார்‌ களா? தமிழ்நாட்டில்‌ உள்ள பிராமணரல்லாதார்‌ எல்லாரையும்‌ தங்கள்‌ 355 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பின்னால்‌ திரிகிற சிலரைப்‌ போலவே நினைத்து விட்டார்களா? இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஜஸ்டிஸ்‌ கட்சியாராவது பிறரால்‌ உத்தி யோக ஆசைபிடித்தவர்கள்‌ என்று சொல்லப்பட்டாலும்‌ பிராமணரல்லா தார்களைத்‌ தவிர வேறு யாரும்‌ அவர்கள்‌ அங்கத்தினரல்ல. அவர்கள்‌ கூட்டங்களிலும்‌, மகாநாடுகளிலும்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ கட்சியார்‌ கூடுகிற கூட்டத்தைவிட எத்தனையோ மடங்கு அதிகமாய்க்‌ கூடுகிறார்கள்‌. எல்லா உத்தியோகமும்‌ தங்களுக்கே வரவேண்டுமென்று அவர்கள்‌ பாடுபட்டு உத்தியோகத்திற்கு ஒவ்வொரு ஆள்கள்‌ வீத மாத்திரம்‌ அந்தக்‌ கட்சியில்‌ இருப்பதாய்‌ வைத்துக்‌ கொண்டாலும்‌, அந்த எண்ணிக்கையும்‌ இந்த காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சி பிராமணர்களைவிட - இவர்களோடு திரியும்‌ பிராமணரல்லாதார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாய்த்தானிருக்‌ கும்‌.மதுரை மாகாண காங்கிரஸ்‌ கமிட்டிக்‌ கூட்டத்தையும்‌ சென்னை, கோவை, மதுரை நிர்வாகக்‌ கமிட்டி கூட்டத்தையும்‌ தமிழ்நாட்டின்‌ சார்பாய்‌ எல்லா இந்திய காங்கிரசிற்கும்‌ சபர்மதி ஒப்பந்தத்திற்கும்‌ போன கூட்டத்தையும்‌ எண்ணிப்‌ பார்த்துவிட்டு, இவர்கள்‌ பொதுக்கூட்டத்திற்கும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி பொதுக்‌ கூட்டத்திற்கும்‌ வரும்‌ ஜனங்களையும்‌ அதிலுள்ள பிராமணர்‌ -பிராம ணரல்லாதாரின்‌ எண்ணிக்கையும்‌ பார்த்தால்‌ எது பொது ஜனங்கள்‌ பிரதிறிதித்‌ துவம்‌ பொருந்தியது? எது பிராமணரல்லாதார்‌ பிரதிநிதித்துவம்‌ பொருந்தி யது? எது பிராமணர்கள்‌ பிரதிநிதித்துவம்‌ பொருந்தியது? என்பது கடுகளவு மூளை உள்ளவனுக்கும்‌ விளங்காமல்‌ போகாது. நமது நாட்டில்‌ பிராமணப்‌ பத்திரிகைகள்‌ பிராமண சூழ்ச்சியில்‌ செல்வாக்குப்‌ பெற்றுவிட்டதினாலும்‌, பிராமண வக்கீல்கள்‌ செல்வாக்குப்‌ பெற்றுவிட்டதாலும்‌, உத்தியோகங்களிலும்‌, பிராமணர்கள்‌ செல்வாக்குப்‌ பெற்றுவிட்டதாலும்‌, பாமர ஜனங்கள்‌ ஏமாறவும்‌ பயப்படவும்‌ ஏற்பட்டுப்‌ போய்விட்டதால்‌ பிராமணரல்லாதாரை பிராமணர்கள்‌ ஏமாற்ற வசதி ஏற்பட்டு விட்டது. ஆதலால்‌ பிராமணரல்லாத உண்மை தேசபக்தர்கள்‌ சிலராவது ஒன்றுகூடி இந்த பிராமணர்கள்‌, காங்கிரஸ்‌ என்பதன்‌ பெயராலும்‌, மகாத்மா வின்‌ பெயராலும்‌, சுயராஜ்யக்‌ கட்சி என்பதன்‌ பெயராலும்‌ செய்யும்‌ புரட்டு களையும்‌, பித்தலாட்டங்களையும்‌ பாமர ஜனங்கள்‌ அறியும்படி வெளியிலெ டுத்துச்‌ சொல்லவும்‌, சொல்லக்கூடிய பத்திரிகைகளை அவர்களிடம்‌ பரப்ப வுமான தொண்டை கொஞ்ச காலத்திற்காவது செய்து வந்தால்‌ நமது நிலை இப்படி எடுப்பார்‌ கைக்‌ குழந்தையாய்‌ இனி இருக்க முடியாது என்றே சொல்லுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 30.05.1926 குடி அரசு - 1926 N 356 5 கவரில்‌ பத்திரிக்கைச்‌ சட்டம்‌ திருவாங்கூர்‌ சமஸ்தானத்தில்‌ கொஞ்ச காலமாக சில புதுமைகள்‌ நடந்து வருகின்றன. அவற்றுள்‌ அரசாங்கம்‌ சமீபத்தில்‌ பத்திரிகைகள்‌ மீது தொடுத்துள்ள பாண முறையும்‌ ஒன்றாகும்‌. திருவாங்கூர்‌ சமஸ்தானத்திற்கு தாய்‌ அரசாங்கமாய்‌ விளங்கும்‌ இந்திய அரசாங்கத்தில்‌ கூட இத்தகைய சட்டம்‌ இது சமயம்‌ இல்லையென்றே சொல்லலாம்‌. இப்பொழுது செய்துள்ள சட்டப்படி திருவாங்கூர்‌ சமஸ்தானத்தில்‌ பத்திரிகை நடத்துவோர்‌ ஜாமீனாக முதலில்‌ ரூபாய்‌ 500 கட்ட வேண்டும்‌. பத்திரிகையில்‌ ஏதாவது குற்றங்‌ காணப்பட்டால்‌ ஜாமீன்‌ தொகையான ஐநூறு ரூபாயும்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டுவிடும்‌. அதன்‌ பிறகு அப்பத்திரிகை நடை பெற வேண்டுமானால்‌, அரசாங்கம்‌ சம்மதித்தால்‌ ரூ. 2,500 ஜாமின்‌ கட்ட வேண்டும்‌. மறுபடியும்‌ குற்றங்‌ காணப்பட்டால்‌ அத்தொகை பறிமுதலாவ தோடு பத்திரிகையும்‌ அழிந்தொழிய வேண்டியதுதான்‌. இதுவே இப்பொழுது திவானாகயிருந்து லீவின்‌ பேரில்‌ சென்றிருக்கும்‌ திவான்‌ வாட்ஸ்‌ துரைமகனா ரின்‌ பெரு முயற்சியால்‌ பிரயோகிக்கப்பட்ட அருமையான சட்டம்‌. சுதந்திரத்தையும்‌ உரிமையையும்‌ நோக்காகக்‌ கொண்டே பத்திரிகை: நடத்தப்படுவதாகும்‌. பத்திரிகை நடத்த வேண்டிய உரிமையையும்‌ சுதந்திரத்‌ தையும்‌ பறித்து விட்டால்‌ அப்பத்திரிகை நடந்தென்ன? நடக்காமல்‌ அழிந்‌ தென்ன? ஆட்சி முறையில்‌ குற்றங்‌ கண்டவிடத்துக்‌ கடிந்தும்‌, குணங்‌ கண்ட விடத்துப்‌ போற்றியும்‌ வருவதே பத்திரிகையின்‌ இயல்பு, “இடிப்பாரை இல்லாத வேமரா மன்னன்‌ கெடுப்பா ரிலானுங்‌ கெடும்‌.” என்னும்‌ தமிழ்‌ வேதப்படி, குற்றங்கண்ட விடத்தில்‌ இடித்துக்கூறும்‌ அமைச்சன்‌ இல்லாவிட்டால்‌, கெடுப்பான்‌ இல்லாவிட்டாலும்‌ அரசன்‌ கெடு வான்‌ என்பதைப்‌ போல, குற்றங்‌ கடிந்தும்‌, குணம்‌ புகழ்ந்தும்‌ பேசும்‌ பத்திரி கைகளுக்கு வாய்‌ பூட்டிடுதல்‌ திருவாங்கூர்‌ சமஸ்தானத்திற்கே அவமான மாகும்‌... இதை உணர்ந்து மேன்மை தங்கிய ரீஜண்ட்‌ மகாராணியார்‌ இந்த புதிய பத்திரிகைச்‌ சட்டத்தை ரத்து செய்வதே கண்ணியம்‌ பொருந்திய செயலாகும்‌. இல்லாக்கால்‌ தன்னுடைய பிரஜைகள்‌ தன்‌ ஆக்கினையை மீறி சிறை செல்வ 357 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தால்‌ தானே பணிந்து வாபஸ்‌ பெற வேண்டிய நிலை சம்பவிக்கும்‌ யென்‌ பதையும்‌ வணக்கத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. அல்லாமலும்‌, இது தற்காலம்‌ ஆட்சி செலுத்தும்‌ ரீஜண்ட்‌ மகாராணி யாரிடம்‌ நாம்‌ எதிர்பார்த்த குணங்களுக்கு முற்றும்‌ விரோதமாயிருக்‌ கிறது. அமைதியாகவும்‌ குடிகள்‌ விரும்பும்‌ முறைப்‌ படியும்‌ ஆட்சி செலுத்த வேண்‌: டியது நல்லரசின்‌ முறை. அப்படிச்‌ செலுத்த தன்னால்‌ முடியாவிட்டால்‌ தன்னிடம்‌ பிரஜைகள்‌ நல்லபிப்பிராயம்‌ கொண்டுள்ள இக்காலத்திலேயே தன்னுடைய ரீஜண்ட்‌ பதவியிலிருந்து விலகி வேறு ஒருவரிடம்‌ ஒப்புவித்து பழி பாவங்களிலிருந்து தப்புவித்துக்‌ கொள்ளுவதே நல்லது. இல்லாவிட்டால்‌ இவ்வாறான கொடுங்கோலாட்சிக்குத்‌ தன்னை பாத்திரமாக்கிக்‌ கொள்வது புத்திசாலித்தனமாகாதென்றே சொல்லுவோம்‌. இனி, திருவாங்கூர்‌ பிரஜைகள்‌ இக்கொடுமையைச்‌ சகித்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது. அரசாங்கம்‌ மூச்சடைத்துத்‌ திணறும்படி செய்தல்‌ வேண்டும்‌. அரசாங்கம்‌ ஒத்து வராவிட்டால்‌ அரசாங்கத்திற்கு (டிபாசிட்டு! ஜாமீன்‌ தொகை கட்டாமலேயே ஒவ்வொருவரும்‌ பத்திரிகைகள்‌ வெளியிட முன்‌ வரவேண்டும்‌. அதனால்‌ அரசாங்கத்தார்‌ கைது செய்வரேல்‌ ஜெயிலுக்‌ குப்போகத்‌ தயாராயிருக்க வேண்டும்‌. இப்படியே ஒவ்வொரு நாளும்‌ தினம்‌ 10,20-பத்திரிகைகள்‌ வீதம்‌ ஆரம்பித்து, அதனால்‌ உறுதியுடன்‌ தினம்‌ 10.20- பேர்‌ ஜெயிலுக்குப்‌ போய்‌ ஜெயிலை நிரப்பிக்‌ கொண்டேயிருந்தால்‌ அப்பொ முது அரசாங்கம்‌ தானே பணிந்துவிடும்‌ என்று திருவாங்கூர்‌ பிரஜைகளுக்கு விண்ணப்பம்‌ செய்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - வேண்டுகோள்‌ - 06.06.1926 குடி அரசு - 1926 N 358 தெண்‌ இந்திய ரயில்வே ஸ்டேஷண்களணில்‌ சாப்பாட்டு வி௫திகன்‌ இதைப்பற்றி “குடி அரசு” பத்திரிகையில்‌ இதற்கு முன்‌ இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம்‌.தென்‌ இந்தியரயில்வே ஆலோசனைக்‌ கமிட்டி யாரும்‌ ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றிபல ஆலோசனைகள்‌ சொன்‌ னார்கள்‌. பிராமணாதிக்கம்‌ நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான்‌ சொல்லி என்ன பிரயோஜனம்‌? தஞ்சாவூர்‌ ரயில்வே ஸ்டேஷனில்‌ உள்ள இந்தியர்‌ சாப்பாட்டு விடுதி யை நாம்‌ இவ்வாரம்‌ பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின்‌ மேல்‌ கட்டப்பட்‌ டுள்ள இடத்தில்‌ சமையல்‌ செய்யும்‌ பாகம்‌ போக பாக்கியிடத்தில்‌ நாலில்‌ மூன்று பாகத்தைத்‌ தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில்‌ ஒரு பாகத்தை “சூத்திரர்‌”, “பஞ்சமர்‌” , “மகமதியர்‌”, “கிறிஸ்தவர்‌”, “ஆங்கிலோ இந்தியர்‌” என்கின்ற பிராமணரல்லாதவருக்‌ கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும்‌, கை கழுவு வதற்கும்‌, வாய்‌ கொப்பளிப்பதற்கும்‌, விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம்‌ வைப்பதற்கும்‌, எச்சில்‌ பாத்திரம்‌ சமையல்‌ பாத்திரம்‌ கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும்‌ இந்த இடத்தையே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளைப்‌ பற்றி யாராவது கேட்டால்‌, கேட்பவர்களை வகுப்பு துவேஷத்தை கிளப்புகிறார்கள்‌; இது மிகவும்‌ அற்பத்‌ தனமானது என்று நமது பிராமணர்கள்‌ சொல்லுகிறார்கள்‌; எழுதுகிறார்கள்‌; அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள்‌ தயவில்‌ பிழைக்கும்‌ பிராமணரல்லாத பத்திராதிபர்களும்கூட ஒத்துப்‌ பாடுகிறார்கள்‌. ரயிலில்‌ பிரயாணம்‌ செய்து ரயில்வே கம்பெனிக்கு பணம்‌ கொடுக்கும்‌ ஜனங்கள்‌ பெரும்பாலும்‌ எந்த வகுப்பார்‌? அவர்களின்‌ எண்ணிக்கையென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர்‌ பிராமணரல்லாதாராயும்‌ நூற்றுக்கு மூன்று பேர்‌ பிராமணர்களாயிருந்‌ தும்‌, உள்ள இடத்தில்‌ நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக்கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக்கொடுத்‌ திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும்‌ வைத்திருக்கிறார்கள்‌ என்றால்‌ இவர்கள்‌ கைக்கு ராஜீயபாரம்‌ வந்துவிட்டால்‌ இந்தப்‌ பிராமணர்கள்‌ பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம்‌ 359 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஒதுக்கி வைப்பார்கள்‌? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை “உரிமை பெரிதா”, “வகுப்பு பெரிதா” என்று பொய்‌ வேதாந்தம்‌ பேசி வயிறு வளர்க்கும்‌ “உத்தம தேசபக்தர்களை” வணக்கத்துடன்‌ கேட்கிறோம்‌. குடி அரசு - விமர்சனம்‌ - 06.06.1926 குடி அரசு - 1926 N 260 வகுப்புணாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ 1 வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பற்றி ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி திருச்சி - லால்குடியில்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ தலைமையின்கீழ்‌ ஒரு பிரசங்கம்‌ செய்ததாக ஜூன்‌ முதல்‌ தேதி “மித்திரனில்‌”, “வகுப்பு வேற்றுமை யின்‌ கேடுகள்‌” என்ற தலைப்பியின்‌ கீழ்‌ பத்தி பத்தியாக எழுதப்பட்டி ருக்கிறது. அவற்றில்‌ அவர்‌ சொல்லும்‌ ஆக்ஷபனைகளாவன:- 1 இந்தியாவில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமானது லார்ட்‌ மிண்டோ, காலஞ்சென்ற கோகலே இவர்களுடைய ஆலோசனையால்‌ ஏற்பட்டது. 2௨. முகமதியரைப்‌ பிரிதி செய்ய வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தில்‌ இறங்கிவிட்டார்கள்‌. 3. கோகலே ஒப்புக்கொள்ளாதிருந்தால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவம்‌ ஏற்பட்டிருக்காது. 4. வகுப்புவாரியை லார்ட்‌ மிண்டோ ஒப்புக்‌ கொண்டதற்கு லார்ட்‌ மார்லி கோபித்துக்‌ கொண்டிருக்கிறார்‌. 5. இதனால்‌ ஒவ்வொருவரும்‌ தன்‌ தன்‌ வகுப்பு நலனை நாடுகிறார்களே அல்லாமல்‌ சமஸ்தானத்தின்‌ சார்பாக பற்றைக்‌ காட்டுவதில்லை. 6. சில்லரை வகுப்பினர்‌ கிராம யூனியன்‌ முதற்கொண்டு, ராஜாங்க சபை வரை ஒவ்வொன்றுக்கும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கோருகிறார்கள்‌. 7. கவர்ன்மெண்ட்‌ நிர்வாக சபையில்‌ கூட வகுப்புவாரிப்‌ பிரதி நிதித்துவம்‌ கேட்கத்‌ தயங்கவில்லை. 8 இவர்களை திருப்தி செய்வதென்றால்‌ சென்னைக்கு மாத்திரம்‌ 261 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஆயிரம்‌ நிர்வாக சபை மெம்பர்‌ ஸ்தானம்‌ வேண்டும்‌. லக்ஷுமணபுரியில்‌ வகுப்பு ஒப்பந்தம்‌ ஏற்பட்டது. காங்கிரஸ்‌ காரர்கள்‌ தைரியமில்லாததால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு. உடன்பட்டார்கள்‌ . மாண்டேகு, செம்ஸ்‌ போர்ட்‌ இருவரும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவத்திற்கு விரோதமாயிருந்தாலும்‌ அதிகார வர்க்கம்‌ அவ்வித மிருக்க மாட்டார்கள்‌. ஏனென்றால்‌ அவர்கள்‌ அதைக்‌ கொண்டுதான்‌ இங்கு நீடித்து இருக்கிறார்கள்‌. இந்துக்களும்‌ முஸல்மான்களும்‌ தங்கள்‌ வகுப்பை எண்ணாமல்‌ ஒன்றுபட்டால்‌ அரசாங்க எதேச்சாதிகாரம்‌ ஒழிந்துபோய்விடும்‌. தற்சமயம்‌ இத்தேசத்தில்‌ நடக்கும்‌ வகுப்பு மகாநாடுகள்‌ நடப்பதைப்‌ பார்த்தால்‌ அரசாங்க விஷயமாக யார்‌ என்ன நினைக்கிறார்கள்‌ என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வகுப்பும்‌ பிரிந்து பல உப வகுப்புகளாய்‌ போவதைப்‌ பார்த்தால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு எல்லையில்லாமல்‌ போய்விடும்‌. இதனால்‌ சட்டசபைகள்‌ வகுப்புக்‌ காக்ஷி சாலையாக முடியும்‌. இதோடு நிற்காமல்‌ உத்தியோகங்களிலும்‌ ஸ்தல ஸ்தாபனங்கள்‌. கல்வி போர்டுகளிலும்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்பார்கள்‌. உத்தியோகம்‌ பெற்றால்‌ பெற்றவருக்கு நன்மையே தவிர வகுப்புக்கு என்ன நன்மை. 100-க்கு 5 பேருக்கு மேல்‌ உத்தியோகம்‌ கொடுப்பது சாத்தியப்‌ படாது. ஒவ்வொரு வகுப்பைச்‌ சேர்ந்த உத்தியோகஸ்தரும்‌ தங்களு டைய வகுப்புக்கு என்ன செய்வதென்று எண்ணுவார்களே தவிர தேசத்தைக்‌ கவனிக்கமாட்டார்கள்‌ . குடி அரசு - 1926 N 362 20. 23. 24. 26. 28. 363 ஒவ்வொரு வகுப்பாரும்‌ தங்கள்‌ வகுப்பார்‌ எத்தனை பேர்‌ உத்தி யோகம்‌ பார்க்கிறார்கள்‌ என்கிற கணக்குப்‌ பார்ப்பதிலேயே இருப்‌ பார்களே ஒழிய தேசத்தைக்‌ கவனிக்க மாட்டார்கள்‌. ஸ்தல ஸ்தாபனம்‌, கல்வித்துறை முதலியவற்றிற்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அநாவசியம்‌. தாழ்ந்த வகுப்பிற்கு நியமனமாகிறதே என்பதை ஒருவாறு அறிந்துகொள்ளலாம்‌. ஆனால்‌ அவர்கள்‌ விஷயத்தில்‌ ஓட்டுரிமையைத்‌ தாராளமாக்கி இதரத்‌ தொகுதிக்கு சமமாய்‌ தேர்தல்‌ நடத்துவது நலம்‌. ஓட்டர்‌ ஜாப்தாவில்‌ 100 ஓட்டர்கள்‌ இருந்து அவர்களில்‌ 25 பேர்‌. ஆதி திராவிட ஓட்டர்களாயுமிருந்து அவர்களும்‌ பேட்டைக்கு ஐவராக பரவியுமிருந்தால்‌ அந்த பேட்டைகளுக்கு தெரிந்தெடுக்கும்‌ மற்ற வகுப்பார்கள்‌ ஆதி திராவிடரின்‌ நன்மையைக்‌ கவனித்துக்‌ கொள்ளுவார்கள்‌. 125 ஆதி திராவிடருக்கு ஒரு ஆதி திராவிட பிரதிநிதியை விட இந்த ஐந்து வேறு வகுப்புப்‌ பிரதிநிதிகள்‌ நல்ல வேலை செய்ய முடியும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லாமலிருந்தால்தான்‌ இவ்வித நன்மை ஏற்படக்கூடும்‌. சட்டசபை விஷயத்தில்‌ முஸல்மான்களுக்கும்‌ பிரத்தியேகப்‌ பிரதி நிதித்துவம்‌ இருந்து வருகிறது. ஐரோப்பியரும்‌ ஆங்கிலோ இந்தியரும்‌ தனிப்‌ பிரதிநிதித்துவம்‌ பெற்று இருக்கிறார்கள்‌. கிறிஸ்தவர்களைப்‌ பற்றிய வரையில்‌ அவர்களில்‌ புத்திசாலிகளான. கே.டி.பால்‌ முதலியவர்கள்‌ வகுப்புவாரியை கண்டிக்கிறார்கள்‌. கல்வியில்‌ சிறந்ததும்‌ முன்னேற்றமடைந்ததுமான இவ்வகுப்பினர்‌. பொதுத்‌ தொகுதியில்‌ தேர்தலில்‌ நிற்க பூரண சம்மதமாயிருக்‌ கிறார்கள்‌. சென்னையில்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரின்‌ திறமை வாய்ந்த தலைமையின்‌ கீழ்‌ இந்துக்கள்‌ பிரதானமாயுள்ள பேட்டைகளில்‌ முஸ்லீம்களையும்‌ கிறிஸ்தவர்களையும்‌ நிறுத்தி வெற்றி பெற்றி ருக்கிறோம்‌. பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 29. 30. 31 32 33 34. 35. 36. 37. ஐரோப்பியர்‌ மிகவும்‌ சொல்ப துகையினரானதாலும்‌ கவர்ன்மெண்ட்‌ ஐரோப்பிய கவர்ன்மெண்ட்‌ ஆனதாலும்‌ அவர்களுக்கு விசேஷ பிரதிநிதித்துவம்‌ அவசியம்‌. “ஆங்கிலோ இந்தியர்‌” களில்‌ நல்ல புத்தியுள்ளவர்கள்‌ நம்மோடு சேர்ந்துழைக்கத்‌ தயாராயிருக்கிறார்கள்‌. முஸல்மான்களுடைய பாஷை, மத வித்தியாசத்தை உத்தேசித்து அவர்களுக்குப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுக்கலாமா என யோசிக்கலாம்‌. ஆனால்‌ 20 வருஷமாய்‌ கொடுத்து இதுவரை ஒரு நன்மையும்‌ ஏற்படவில்லை... நான்‌ சட்டசபையிலிருந்த 3 வருஷத்திலும்‌ வகுப்புப்‌ பிரச்சனை வந்ததே கிடையாது. ஜஸ்டிஸ்‌ மந்திரிகள்‌ சில சமயங்களில்‌ வேண்டு. மென்றே வகுப்புப்‌ பிரச்சனையாக்கிக்‌ கொண்டு வந்ததுண்டு. வட இந்தியாவிலுள்ள இந்து முஸ்லீம்‌ சச்சரவுகள்‌ வகுப்புவாரி உரிமைக்கு ஏற்பட்டதல்ல. வகுப்புரிமை பெற்றதனால்‌ ஏற்பட்டது. மகமதலி ஜின்னா, பண்டித மாளவியா ஆகிய இவர்கள்‌ அல்ப வகுப்புப்‌ பெருமையை பாராட்டி நிற்கிறார்கள்‌. சர்‌. அப்துல்‌ ரஹீம்‌ புதிதாக இந்த கோஷ்டியில்‌ கலந்திருக்கிறார்‌.. இம்மாகாணத்தில்‌ 50 ஆயிரம்‌ வகுப்பினருக்கும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ என்கிற ஒரு போலி பிரதிநிதித்துவம்‌ இருந்து வருகிறது. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமென்பது 100-க்கு 3 பேரடங்கிய ஒரு வகுப்பினரை நிர்மூலமாக்கவும்‌ அவர்‌ கழுத்தை மற்றவர்‌ அறுக்க வும்‌ ஏற்பட்டிருக்கிறதே தவிர வேறில்லை. கூர்ஜரத்தார்‌ மகாத்மா காந்தியை கொடுத்திருக்கிறார்கள்‌. வங்‌ காளத்தார்‌ அரவிந்தரையும்‌ தாகூரையும்‌ கொடுத்திருக்கிறார்கள்‌. தென்னிந்திய பிராமணர்‌ தேச விடுதலைக்காக தியாகம்‌ செய்துள்ள ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்காரை அளித்திருக்கிறார்கள்‌. குடி அரசு - 1926 N 364 நமது பதில்‌ இந்த விஷயங்கள்‌ பதில்‌ சொல்ல வேண்டிய அவ்வளவு அவசிய மில்லாததென்றே சொல்லலாம்‌. ஏனென்றால்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி பேசி யிருப்பதிலிருந்தே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தின்‌ அவசியம்‌ விளங்கு கிறது. 1- 2- 3 வது, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ காலஞ்சென்ற கோகலே யின்‌ ஆலோசனையினால்‌ ஏற்பட்டது என்று இவரே சொல்லுகிறார்‌. இதன்‌ நன்மை தீமைகளைப்‌ பகுத்து உணர கோகலேயைவிட இந்தியாவிலேயே வேறு ஒருவர்‌ இருந்தார்‌ என்று யாராலும்‌ சொல்ல முடியாது.மகாத்மாவுக்கும்‌ ஸ்ரீமான்‌ ஈவெ.இராமசாமி நாயக்கருக்கும்‌ இந்தியாவிலேயே யோக்கியமான பிராமணன்‌ இல்லை என்கிற வாதம்‌ நிகழ்ந்த போது அது சமயம்‌ மகாத்மா “ஒருவர்‌ கூட இல்லை என்று சொல்லக்கூடாது, நான்‌ ஒரு யோக்கியமான பிராமணனைப்‌ பார்த்திருக்கிறேன்‌. அவர்தான்‌ கோகலே” என்று சொன்ன தோடு அதற்குப்‌ பல உதாரணங்களையும்‌ சொல்லி “மனிதர்களில்‌ அவருக்கு மேம்பட்ட மனிதரை தான்‌ பார்த்ததில்லை” என்று சொன்னார்‌. இது சில தென்னாட்டு பிராமணர்களையும்‌ வைத்துக்‌ கொண்டுதான்‌ சொன்னார்‌. இப்பேர்ப்பட்ட ஒரு உத்தம பிராமணராலும்‌, உத்தம தேசபக்தராலும்‌, கொஞ்ச மும்‌ சுயநலமற்ற தியாகியாலும்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்ட வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு, ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தியும்‌, கலியாணசுந்தர முதலியாரும்‌, குழந்தையும்‌, ஜனாப்கள்‌ ஹமீத்கானும்‌, ஷாபியும்‌, ஸ்ரீமான்‌ ஜயவேலும்‌ எந்த விதத்தில்‌ யோக்கியதை உடையவர்கள்‌ என்பதை வாசகர்‌. களே யோசித்துப்‌ பார்க்க வேண்டும்‌. கோகலேயிக்கு இல்லாத தேசபக்தியும்‌, ஒற்றுமையும்‌, சுயராஜ்யமும்‌, விடுதலையும்‌, சுதந்திரமும்‌ இவர்களுக்கு உதய மாகிவிட்டதா? இந்தக்‌ குழாத்தில்‌ இருப்பவருள்‌, மகாத்மாவினால்‌ தியாகத்‌ திற்கு அழைத்த காலத்தில்‌ உத்தியோகம்‌ விட்டவர்கள்‌ யார்‌? கோர்ட்டை பகிஷ்கரித்தவர்கள்‌ யார்‌? ஜெயிலுக்குப்‌ போனவர்கள்‌ யார்‌? பொருள்‌ நஷ்ட மடைந்தவர்கள்‌ யார்‌? மகாத்மா சொன்னபடி ஏதாவது ஒரு காரியம்‌ செய்தவர்‌. கள்‌ இதில்‌ யார்‌ இருக்கிறார்கள்‌? ஆதலால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டும்‌ என்பதற்கு கோகலேயைவிட இனி வேறு எவர்‌ ஒப்புக்கொள்ள வேண்டும்‌ என்பது நமக்கு விளங்கவில்லை. 4- வது,லார்ட்‌ மிண்டோ ஒப்புக்‌ கொண்டதைப்‌ பற்றி லார்ட்‌ மார்லி கோபித்துக்‌ கொண்டார்‌ என்கிறார்‌. இந்தியாவுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுத்தால்‌ அவர்‌ களுக்குள்‌ உள்ள க௯ஷி சண்டைகள்‌ அடங்கிவிடும்‌; எல்லோரும்‌ ஒன்று சேர்ந்து விடுவார்கள்‌. எப்படி என்றால்‌ ஆளுக்கு ஒரு இலை போட்டு சாப்பாடு போட்டால்‌ ஒருவருக்கொருவர்‌ சண்டை போட்டுக்‌ கொள்ள முடி யாது; மொத்தமாய்‌ அவர்கள்‌ முன்னால்‌ கொட்டி விட்டால்‌ ஒருவருக்‌ கொருவர்‌ சண்டை போட்டு கையில்‌ பலத்தவன்‌ காரியமாகிவிடும்‌.அப்பொ 365 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 முது நமக்கு இவர்களை அடக்கியாள ஆளும்‌ சேரும்‌ : செளகரியமாயும்‌ இருக்கும்‌ என்கிற எண்ணத்தின்‌ பேரில்‌ மார்லி பிரபு கோபித்துக்‌ கொண்டார்‌. அப்படிக்கில்லாமல்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி சொல்வது போல்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இந்தியரை நிரந்தரமாய்‌ பிரித்து வைத்துவிடுமென்று இருக்குமேயானால்‌ அந்நிய அரசாங்கத்தார்‌ உடனே கொடுத்துவிட்டு மறுவேலை பார்ப்பார்கள்‌. இதனால்‌ ஒருவருக்கொருவர்‌ ஏற்படும்‌ சச்சரவை ஒழித்துவிடும்‌: ஒன்று சேர்ந்து விடுவார்கள்‌ என்று நினைத்துதான்‌ மார்லி கோபித்ததும்‌ அரசாங்கத்தார்‌ ஒப்புக்கொள்ள மறுப்பதும்‌ என்பதை வாசகர்கள்‌ இதிலிருந்தே உணர்ந்து கொள்வார்கள்‌. 5-வது, ஒவ்வொரு மனிதனும்‌ வகுப்புநலனை நாடுவானேயல்லாமல்‌ சமஸ்தானத்தின்‌ சார்பாக பற்றைக்‌ காட்டமாட்டான்‌ என்கிறார்‌. இதில்‌ சமஸ்தானம்‌ என்பது நமக்குப்‌ புரியவில்லை. அது திருட்டு வார்த்தையா யிருக்கிறது. அரசாங்கத்தாரை நோக்கி இந்தியர்களுக்கு வகுப்பு உரிமை கொடுக்க வேண்டாம்‌; கொடுத்தால்‌ உங்களிடம்‌ பற்று இருக்காது; தங்கள்‌ காரியத்தில்‌ ஜாக்கிரதையாயிருப்பார்கள்‌ என்று சர்க்காருக்கு உள்‌ ஆளா யிருந்து எச்சரிக்கை செய்வதாயிருக்கிறது. முதலாவதாக, மனிதன்‌ தத்தம்‌ வகுப்பைத்தான்‌ கவனிக்க வேண்டும்‌. எல்லா வகுப்புகளும்‌ தன்‌ வகுப்பைச்‌ சீராக்கிக்‌ கொண்டால்‌ எல்லா வகுப்பு களையும்‌ கொண்ட தேசம்‌ உடனே சீராய்‌ விடும்‌. அதில்லாமல்‌ பல வகுப்பார்‌. இருந்து கொண்டு ஒரு வகுப்பாரை மற்றொரு வகுப்பார்‌ ஏமாற்றிக்‌ கொண்டி ருக்கும்‌ வரை எப்படி ஒற்றுமை ஏற்படும்‌? எப்படி விடுதலை ஏற்படும்‌? என்பதை வாசகர்களே கவனிக்க வேண்டுகிறோம்‌. ஒரு தோட்டத்தின்‌ வெள்ளாமைக்கு தண்ணீர்‌ பாய்ச்சுவதனால்‌ அந்தத்‌ தண்ணீர்‌ தோட்டத்தில்‌ உள்ள சகல பாகத்திற்கும்‌ தண்ணீர்‌ போய்‌ சேரும்‌ படியிருந்தால்‌ நல்ல விளைவு உண்டாகும்‌. அப்படிக்கில்லாமல்‌ சிற்சில பாகத்திற்கு தண்ணீர்‌. போய்‌ சேர வழியில்லாமல்‌ தடங்கலாயும்‌ மேடாயும்‌ இருக்க தண்ணீர்‌ பாய்ச்சினால்‌ பல பாகம்‌ வறண்டு போவதோடு அதிக தண்ணீர்‌ கொண்ட பாகத்தின்‌ வெள்ளாமை மாத்திரம்‌ சில சமயங்களில்‌ நன்றாய்‌ விளைந்தாலும்‌ சில சமயங்களில்‌ அழுகிப்போகும்‌. அதுபோல்‌ அரசாங்கத்தின்‌ மூலம்‌ பெறும்‌ உரிமையாகிய தண்ணீர்‌ பல வகுப்பு ஜனங்களாகிய தோட்டத்திற்கு சமமாய்ப்‌ பாயும்படி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது முதலாவதவசியமானதாகும்‌. 6-வது, சில்லரை வகுப்பும்‌ பிரதிநிதித்துவம்‌ கோருகிறார்கள்‌ என்‌ கிறார்‌. சில்லரை வகுப்பார்களும்‌ மனிதர்களா, அல்லவா? இந்தியர்களா, அல்லவா? அவர்களுக்கும்‌ மற்றவர்கள்‌ அநுபவம்‌ கோர பாத்தியமுண்டா, இல்லையா? உண்டு என்று ஒப்புக்கொள்வதானால்‌ அவர்களுக்கும்‌ விகிதா சார உரிமை கொடுக்கத்தான்‌ வேண்டும்‌. எப்படி கொடுப்பதென்பதைப்‌ பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கொடுக்க சம்மதித்தால்‌ வழி தானாய்‌ தென்படும்‌. குடி அரசு - 1926 N 366 7-வது, கவர்மெண்டு நிர்வாக சபையிலும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்து வமா? என்கிறார்‌. ஆம்‌. அங்கும்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்டதால்தான்‌ முஸ்லீம்‌ களுக்காக டாக்டர்‌ மகமது உஸ்மானுக்கு ஒரு ஸ்தானம்‌ கிடைத்தது. இல்லா விட்டால்‌ இந்த பிராமணர்கள்‌ கொடுக்க சம்மதிப்பார்களா? வகுப்புரிமை கேட்பதற்கு முன்‌ அந்த ஸ்தானங்கள்‌ ஸ்ரீமான்கள்‌ கிருஷ்ணசாமி ஐயர்‌, சிவசாமி ஐயர்‌, ராஜகோபாலாச்சாரி என்கிற பிராமணக்‌ கூட்டத்திற்குத்தானே ஏகபோகமாய்‌ இருந்தது? ஆகையால்‌ இதைக்‌ கேட்டதில்‌ என்ன தப்பு? 8-வது, இம்மாதிரியானால்‌ சென்னைக்கு மாத்திரம்‌ ஆயிரம்‌ நிர்வாக சபை மெம்பர்‌ பதவிவேண்டும்‌ என்கிறார்‌. ஆயிரம்‌ நிர்வாக சபை பதவிகள்‌ வேண்டியதில்லை. சம்பளம்‌ 5,333 - 5 - 4 வாகயிருப்பதால்‌ அதிகம்‌ தேவையிருப்பதாயும்‌, அதிகமாக்க முடியாததாயும்‌ தோன்றுகிறது. சம்பளத்தையும்‌ போக்கியத்தையும்‌ குறைத்து சரியான பொறுப்பை வைத்து நிர்வாக சபையை சட்டசபைக்குள்‌ கட்டுப்ப டுத்தி விட்டால்‌ அந்த இடத்தில்‌ வகுப்புப்‌ பிரிவினைக்கு இடமில்லை. இன்ன மும்‌ கொஞ்சம்‌ அதிகமான நிர்வாக சபை மெம்பர்‌ பதவிகளும்‌ உயரும்‌. அப்பொழுது அதில்‌ ஒன்றும்‌ கஷ்டமிருக்காது. 9-வது, லக்ஷுமணபுரி காங்கிரசுக்கு தைரியமில்லாததால்‌ வகுப்பு உரிமையை ஒப்புக்கொண்டது என்கிறார்‌. இதிலிருந்து காங்கிரஸ்‌ வகுப்புரி மையை ஒப்புக்கொண்டது நிஜம்‌ என்று ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது லக்ஷுமணபுரி காங்கிரஸ்காரரை விட ஸ்ரீமான்கள்‌ சத்தியமூர்த்தி, ராஜ கோபாலாச்சாரி, சீனிவாசய்யங்கார்‌, ரங்கசாமி அய்யங்கார்‌ இவர்களுடைய காங்கிரசுக்கு அதிக தைரியமிருப்பதால்‌ ஸ்ரீமான்கள்‌ முதலியார்‌, குழந்தை, ஜயவேலு, ஹமீத்கான்‌, ஷாபி முதலிய கனவான்களோடு எதிர்த்து நிற்கிறார்‌. கள்‌ என்பதும்‌ புலனாகிறது. தமிழ்நாட்டு மக்கள்‌ இந்தத்‌ தலைவர்கள்‌ தைரி யத்தையும்‌ அவர்களின்‌ கணங்களின்‌ வீரத்தையும்‌ ஒரு கை பார்க்கத்தான்‌ போகிறார்கள்‌. இவர்கள்‌ தைரியத்தாலும்‌, வீரத்தாலும்‌ வகுப்புரிமை மறைந்து போகிறதா? அல்லது நிலை நிற்கப்‌ போகிறதா? என்பதே பின்னால்‌ பார்க்க இருக்கும்‌ தத்துவம்‌. 10,11,12-வது, மாண்டேகு, செம்ஸ்‌ போர்ட்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்‌ துவத்திற்கு விரோதமாயிருந்தாலும்‌ அதிகார வர்க்கம்‌ அவ்விதமாயிருக்காது என்கிறார்‌. இது பொருளற்ற சொல்லாயும்‌ முன்னுக்குப்பின்‌ முரணாயுமிருக்கிறது. மாண்டேகு, செம்ஸ்‌ போர்ட்‌ என்றால்‌ அவர்கள்‌ யார்‌? அதிகார வர்க்கம்‌ என்றால்‌ அவர்கள்‌ யார்‌? வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுத்தால்‌ வகுப்‌ புச்‌ சச்சரவு உண்டாகும்‌, அதனால்‌ தாங்களும்‌ நீடித்திருக்கலாம்‌ என்பது வாஸ்தவமானால்‌ அதிகார வர்க்கம்‌ உடனே கொடுத்து விடாதா? மாண்டேகு 267 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 செம்ஸ்‌ போர்ட்‌ உள்பட்ட அதிகார வர்க்கம்‌ ஏன்‌ கொடுக்க மாட்டேன்‌ என்கி றார்கள்‌. கோகலேயின்‌ பிடிவாதத்தின்‌ மேல்‌ கொஞ்சம்‌ மாத்திரம்‌ கொடுப்‌ பானேன்‌? பாக்கியும்‌ கொடுத்தால்‌ சர்க்கார்‌ தயவை யாரும்‌ எதிர்பார்க்க மாட்‌ டார்கள்‌: எல்லோரும்‌ சேர்ந்து சர்க்கார்‌ மேல்‌ பாய்ந்து விடுவார்கள்‌ என்று பயந்து கொண்டே வகுப்புக்கு வகுப்பு பொறாமைப்படவும்‌, முட்டவிடவும்‌, ஒரு வகுப்புக்கு அதிக உரிமையும்‌ மற்றொரு வகுப்புக்கு ஒன்றுமில்லாமலும்‌ செய்கிறார்கள்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 06.06.1926 குடி அரசு - 1926 N 368 பிராமணப்‌ பத்திரிகைகளின்‌ அமோக்கியத்தனம்‌ நம்‌ நாட்டு பிராமணப்‌ பத்திரிகைகளும்‌ அதன்‌ பிராமண நிரூபர்‌ களும்‌ செய்து வரும்‌ அயோக்கியத்தனங்களைப்‌ பற்றி நமது பத்திரிகையில்‌ கடுக ளவு சுத்த ரத்தம்‌ உள்ளவர்களுக்கும்‌ இனி இம்மாதிரி நடக்காமலிருக்‌ கும்படியும்‌, மானம்‌, வெட்கம்‌ வந்து தீரும்படியும்‌ பல தடவைகளில்‌ எழுதி வந்திருக்கிறோம்‌. அநேகக்‌ கூட்டங்களிலும்‌ நன்றாய்ப்‌ படும்படி பேசியும்‌ வந்திருக்கிறோம்‌. வேறொரு கூட்டத்தாராய்‌ இருந்தால்‌, ஒன்று யோக்கியர்‌. களாகி இருப்பார்கள்‌ அல்லது தற்கொலையாவது புரிந்து கொண்டிருப்‌ பார்கள்‌. ஆனால்‌, என்ன சொன்னாலும்‌ தங்கள்‌ காரியமானால்‌ போதும்‌ என்கிற எண்ணத்தின்‌ பேரில்‌ மற்றவர்களை எப்படியாவது ஒழித்து வயிறு வளர்ப்பதற்கு மனுஷ சுபாவத்தையே உதறிவிட்டு மேலும்‌ மேலும்‌ அயோக்‌ கியத்தனமான காரியங்களையே செய்து வருகிறார்கள்‌. இந்த மானமற்ற, கூட்டத்தை நமது நாட்டில்‌ இப்படியே வைத்துக்‌ கொண்டு நாம்‌ எப்படி விடுதலையடைய முடியும்‌? ஸ்ரீமான்‌ ஈ.வெ.இராமசாமி நாயக்கர்‌ நாகை தொழிலாளர்‌ கூட்டத்தில்‌ பேசியவற்றைப்‌ பற்றி “இந்து”, “சுதேசமித்திரன்‌” பத்திரிகைகள்‌ அதன்‌ நிரூபர்கள்‌ எழுதுகிறார்கள்‌ என்று எழுதியிருப்பதானது வேண்டுமென்றே எழுதியிருக்கும்‌ அயோக்கியத்தனமான எழுத்துக்களாகும்‌. நல்ல ஜாதியான்களாயிருந்தால்‌ நாயக்கர்‌ பேசியவற்றை எழுதி அதற்கு தகுந்த மறுப்புகளை எழுதும்‌. அப்படிக்கில்லாமல்‌ பாமர ஜனங்களை ஏமாற்றிப்‌ பிழைக்கிற ஜாதியானதால்‌ பேசியவைகளையும்‌ விட்டு, நடந்த விஷயங்க ளையும்‌ விட்டு, நடக்காததை எழுதி வயிறு வளர்க்க ஆசைப்படுகிறது. அக்கூட்டத்தின்‌ முடிவில்‌ சங்க உதவி அக்கிராசனர்‌ எழுந்து ஸ்ரீமான்‌ நாயக்‌ கரின்‌ அபிப்ராயந்தான்‌ தனது அபிப்பிராயமென்றும்‌ இவ்வருஷம்‌ சங்க ஆண்டு விழாவுக்கு ஒரு தொழிலாளரையே அக்கிராசனராய்த்‌ தெரிந்தெடுக்‌ கப்‌ போவதாயும்‌, ஆனால்‌ சங்கத்தில்‌ உள்ள சில அங்கத்தினர்‌ ராஜீய விஷ யங்களில்‌ பிரவேசித்து சங்க நடவடிக்கையைக்‌ கெடுக்கிறார்கள்‌ என்றும்‌, உதாரணமாக சங்கத்தின்‌ சார்பாய்‌ ஒரு கதர்‌ டிப்போ வைப்பதை சங்கத்தில்‌ உள்ள சுயராஜ்யக்‌ கட்சியைச்‌ சேர்ந்த அங்கத்தினரே கெடுத்தார்‌ என்றும்‌, இன்னும்‌ பலவிதமாய்‌ ராஜீய அபிப்ராயங்களை சங்கத்தில்‌ கொண்டு வந்து விட்டு சங்கத்தை ஒழுங்காய்‌ நடைபெற முடியாமல்‌ சூழ்ச்சிகள்‌ செய்‌ 369 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கிறார்கள்‌ என்றும்‌, ஆதலால்‌ தான்‌ இதில்‌ ஸ்தானம்‌ வைப்பதில்‌ பிரயோ ஜனமில்லை என்றும்‌ சொல்லி ராஜிநாமா கடிதத்தை வாசித்தார்‌. சங்க காரியதரிசியும்‌ இதை ஒட்டியே சில வார்த்தைகள்‌ சொன்னார்‌. பிறகு, பலர்‌ கேட்டுக்‌ கொண்டதின்‌ பேரில்‌ அதைத்‌ திருப்பி வாங்கிக்கொண்டார்‌. இப்படி இருக்க ஸ்ரீமான்‌ நாயக்கர்‌ சொல்லுவதைத்‌ தான்‌ ஒப்புக்‌ கொள்ளவில்லை என்றும்‌, அந்நியர்கள்தான்‌ சங்கத்திற்கு உதவி தலைவராயிருக்க வேண்டு மென்று சொல்லி அதற்காகவே தான்‌ ராஜிநாமா செய்வதாக சொன்னா ரென்றும்‌ * இந்து”, “சுதேசமித்திரன்‌” பத்திரிகைகள்‌ எழுதியிருக்கின்றன. இது யோக்கியமானதாகுமா? நாம்‌ கடினமான பதம்‌ உபயோகிப்பதாய்ச்‌ சொல்லும்‌. மிருதுவான பதக்காரர்கள்‌ இதற்கு என்ன பதில்‌ சொல்லுவார்கள்‌? தொழிலாளர்‌ சங்கத்தில்‌ தொழிலாளி அல்லாதவர்கள்‌ ஆதிக்கம்‌ இருக்கக்‌ கூடாது என்றால்‌, இந்த அய்யர்‌, அய்யங்கார்‌ கூட்டங்களுக்கு இவ்வளவு ஆத்திரம்‌ வந்து, இவ்வளவு அல்பத்தனமான காரியம்‌ செய்வானேன்‌? டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு அவர்கள்கூட தொழிலாளர்‌. நிர்வாகத்தில்‌ அந்நியர்‌ கூடாது என்பதை ஒப்புக்கொள்ளுகிறார்‌. பாவம்‌! ஏழைத்‌ தொழிலாளரான வாயில்லாப்‌ பூச்சிகளை ஏமாற்றி, தலைவர்களாகி, அவர்களின்‌ ஓட்டு வாங்கி, பிராமணரல்லாதார்‌ தலையில்‌ கையை வைப்ப தற்கு யாராவது விரோதமாயிருந்தால்‌ அவர்களை அடியோடு ஒழிப்பதற்கு இவ்வளவு கொலை பாதகம்‌ செய்யவேண்டுமா? இதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன்‌ ஸ்ரீமதி அலர்மேலு மங்கைத்‌ தாயாரம்மாள்‌ சொன்ன காலத்திலும்‌ இந்தப்‌ பிராமணப்புலிகள்‌ சீறி விழுந்தனர்‌. இந்த பிராமண: சிகாமணிகளுக்கு தொழிலாளிகளிடம்‌ அன்பு இருக்குமானால்‌ வெளியிலிருந்து செய்யட்டுமே. முனிசிபல்‌ எலக்ஷனில்‌ யாராவது ஒரு தொழிலாளியை நிறுத்தி ஓட்டு வாங்கிக்கொடுக்கட்டுமே. சட்டசபைக்கு யாரையாவது நிறுத்தி ஓட்டு வாங்கிக்‌ கொடுக்கட்டுமே. ஸ்ரீமான்‌ புர்ரா, பாஷ்யம்‌,மல்லய்யா, ஈஎல்‌.அய்யர்‌ ஆகிய இந்த பிராமணர்களுக்காக பணம்‌ சிலவு செய்து கவுன்சிலராக்குகிறவர்கள்‌ ஏன்‌ இந்த தொழிலாளிகளில்‌ ஒன்று. இரண்டு ஆள்களுக்கு செய்யக்கூடாது. அதையெல்லாம்‌ விட்டு விட்டு தொழிலாளிகளுக்கு என்ன வேண்டும்‌ என்பதே தெரியாத சில பொறுப்பற்ற பிராமணர்கள்‌ ஒன்று சேர்ந்து கொள்வதும்‌, நாங்கள்‌ தான்‌ தொழிலாளிகளுக்கு தர்மகர்த்தா, எங்களுக்கு ஓட்டுக்‌ கொடுங்கள்‌. உங்களுக்கு சாதித்து விடு கிறோம்‌ என்று அவர்களை ஏமாற்றுவதும்‌ அதற்கேற்றாற்‌ போல்‌ தொழிலாளி கள்‌ கூட்டத்தில்‌ ஏதாவது ஒன்று இரண்டு வாயாடிகளை ஏதேனும்‌ கொடுத்து சுவாதீனம்‌ செய்துக்‌ கொண்டு அவர்கள்‌ தயவில்‌ உபசாரப்‌ பத்திரம்‌, மாலை, வண்டி சவாரி, “ஜேய்‌” முதலியவைகள்‌ அநுபவிப்பதுமான காரியங்களுக்கு மாத்திரம்‌ தொழிலாளிகளின்‌ தலைவர்களாக வேண்டுமானால்‌ இது எப்படி நடக்கும்‌? இனியாவது நமது தொழிலாள சகோதரர்கள்‌ இந்த பொய்யர்கள்‌, வம்பர்கள்‌, சுயநலப்‌ புலிகள்‌ ஆகிய கூட்டத்தாருக்கு இடம்‌ கொடுக்காமல்‌ குடி அரசு - 1926 N 270 தங்கள்‌ காலிலேயே தாங்கள்‌ நிற்கும்படியான யோக்கியதையை அடைய வேண்டுகிறோம்‌. அதோடு கூடவே இந்தப்‌ பார்ப்பனப்‌ பத்திரிகைகளையும்‌ நம்பி மோசம்‌ போகாதீர்கள்‌ என்று எச்சரிக்கை செய்கிறோம்‌. குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 06.06.1926. 371 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 க்ஷன்‌ தந்திரம்‌ திருப்பூர்‌ கால்நடைக்‌ காட்சி - சித்திரபுத்திரன்‌ திருப்பூர்‌ கால்நடைக்‌ காட்சியானது 2,3 வருஷங்களுக்கு முன்னால்‌ சென்ற சட்டசபைத்‌ தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதற்குப்‌ பிறகு இப்போது இவ்வருஷ சட்டசபை எலெக்ஷன்‌ போதுதான்‌ கூட்டப்பட்டிருக்‌ கிறது. அப்படிக்‌ கூட்டப்பட்ட போதிலும்‌ அதில்‌ நடத்தப்பட்ட சடங்குகள்‌ ஒவ்‌ வொன்றும்‌ சட்டசபை மெம்பர்களின்‌ ஓட்டுப்‌ பிரசாரத்தில்‌ குறி கொண்டே நடத்தப்பட்ட மாதிரியாகவே யிருந்தது. அந்தக்‌ குறியின்‌ வேகத்தில்‌ வழக்க. மான ஒழுங்கு முறைகள்கூட சிதறப்பட்டு போனதோடு மக்களுக்கு இயற்கை: யாய்‌ இருக்கவேண்டிய அபிமானமும்‌ பறந்தோடி விட்டது. விவசாயம்‌ என்பது மாற்றப்பட்ட இலாக்காக்களில்‌ ஒன்றான அபி விருத்தி இலாகாவைச்‌ சேர்ந்தது. அதை நிர்வகித்து வருகிறவர்‌ பிராமண: ரல்லாதார்‌ கட்சியைச்‌ சேர்ந்த ஸ்ரீமான்‌ சர்‌.டி.என்‌. சிவஞானம்‌ பிள்ளை அவர்கள்‌. இப்படி இருக்க கவர்னர்‌ அவர்களைக்‌ கொண்டு கால்நடைக்‌ காட்சி யைத்‌ திறக்கச்‌ செய்வதும்‌ ஸ்ரீமான்‌ சர்‌.சிஃபி. ராமசாமி அய்யர்‌ அவர்‌ களைக்‌ கொண்டு பரிசு வழங்கச்‌ செய்வதுமான காரியங்கள்‌ நடத்தப்பட்டி ருக்கிறது. முன்‌ ஒரு சமயம்‌ இதே திருப்பூரில்‌ தாலூகா போர்டு கட்டடத்திற்கு அஸ்திவாரக்‌ கல்‌ நாட்ட ஸ்ரீமான்‌ சி.பி.ராமசாமி அய்யர்‌ அவர்களை: திருப்பூர்க்காரர்கள்‌ அழைத்தபோது ஸ்ரீமான்‌ ஐயர்‌ அவர்கள்‌, தாலூகா போர்டு மாற்றப்பட்ட இலாகாவாகிய மந்திரி பனகால்‌ ராஜா அவர்கள்‌ ஆதிக்கத்திற்குக்‌ கட்டுப்பட்டதென்றும்‌, தான்‌ அதில்‌ பிரவேசிக்க முடியாதென்றும்‌ சொன்னவர்‌, இதுசமயம்‌ அதே மாதிரி மாற்றப்பட்ட இலாக்காவாகிய ஸ்ரீமான்‌ டி.என்‌.சிவ ஞானம்‌ பிள்ளை அவர்கள்‌ ஆதிக்கத்தில்‌ இருக்கும்‌ இலாக்காவுக்கு எப்படி ஏற்றுக்கொண்டார்‌ என்பது விளங்கவில்லை. ஒரு சமயம்‌, மாற்றப்பட்ட இலாகாவில்‌ மந்திரிகளுக்கு அப்போதிருந்த செல்வாக்கு இப்போதில்லாமல்‌ இருக்கலாம்‌ என்று வைத்துக்‌ கொண்டாலும்‌, விவசாயக்‌ கட்சி நடத்திய பிரமுகர்‌ ஸ்ரீமான்‌ வி.சி.வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌ அவர்கள்‌ இந்த இலாக்கா மந்திரியை அலக்ஷியம்‌ செய்த காரணம்‌ என்னவோ? ஒருசமயம்‌, தானும்‌ குடி அரசு - 1926 N 272 ஸ்ரீமான்‌ டி.எ.இராமலிங்கம்‌ செட்டியார்‌ அவர்களும்‌, ஆர்‌. கே. ஷண்முகஞ்‌ செட்டியார்‌ அவர்களும்‌ பிராமணரல்லாதார்‌ கட்சியை விட்டு சட்டசபை எலெக்ஷனை உத்தேசித்து இப்போது புதிதாய்‌ பிராமணர்‌ கட்சியான சுயராஜ்‌ யக்‌ கட்சியில்‌ சேர்ந்து விட்டதால்‌ அக்கட்சிக்கு ஒரு ரகசிய சூத்திரராயிருக்‌ கும்‌ பிராமண மந்திரியான சி.பி. ராமசாமி அய்யர்‌ அவர்களுக்கு கெளரவம்‌ கொடுத்து அவர்களால்‌ தங்களுக்கு எலெக்ஷனில்‌ வெற்றி உண்டாக விளம்பரம்‌ செய்யச்‌ சொன்னார்கள்‌ போலும்‌.அதை உத்தேசித்தே ஸ்ரீமான்‌ சிபி.அய்யர்‌ அவர்களும்‌ தனது பிரசங்கத்தில்‌ ஓட்டர்கள்‌ கவனித்து இவர்க ளுக்கே ஓட்டு செய்யத்தக்க வண்ணம்‌ “மேல்‌ பவானி திட்டமானது இப்போது சென்னை சட்டசபையிலுள்ள உங்கள்‌ பிரதிநிதிகளான ஸ்ரீமான்கள்‌ வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டர்‌, டி.எ இராமலிங்கம்‌ செட்டியார்‌, சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார்‌ ஆகிய இவர்களால்‌ வற்புறுத்தப்பட்டதின்‌ பேரில்‌ மேட்டூர்‌ திட்டம்‌ கவனிக்கப்பட்டதாகவும்‌, மறுபடியும்‌ G மூன்று பிரதிநிதிகளும்‌ நிர்பந்தித்தால்‌ காரியம்‌ நடக்குமென்றும்‌” சொல்லுகிறார்‌. இதன்‌ அர்த்தம்‌ என்ன? அடுத்த தேர்தலுக்கு மறுபடியும்‌ இந்த மூன்று கனவான்களுக்கே ஓட்டு செய்யுங்கள்‌, உங்கள்‌ பூமிக்கு வாய்க்கால்‌ வரும்‌ என்று சொல்லு வதுதானே அல்லாமல்‌ வேறென்ன? சீமான்‌ சி.ராஜகோபாலாச்சாரியார்‌ என்கிற பிராமணரவர்கள்‌ இந்த மூன்று பேருக்கே ஓட்டு கொடுங்கள்‌, கள்ளு உலகத்தை விட்டே ஓடிவிடும்‌ என்கிறார்‌. சீமான்‌ எஸ்‌. சீனிவாசய்யங்கார்‌ என்கிற பிராமணரவர்கள்‌ இந்த. மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள்‌ சுயராஜ்யம்‌ வந்துவிடும்‌ என்கிறார்‌. சீமான்‌ சத்தியமூர்த்தி என்கிற பிராமணரவர்கள்‌ இந்த மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள்‌ பனகால்‌ ராஜா கம்பெனியை பாப்பராக்கிவிடலாம்‌ என்கிறார்‌. சீமான்‌ ஏ. ரங்கசாமிஅய்யங்கார்‌ என்கிற பிராமணரவர்கள்‌ இந்த மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள்‌ முட்டுக்‌ கட்டை போடலாம்‌ என்கிறார்‌. சர்‌.சி.பி. ராமசாமிஅய்யர்‌ என்கிற பிராமணரவர்களோ இந்த மூன்று பேருக்கே ஓட்டு செய்யுங்கள்‌ உங்கள்‌ பூமிக்கு தண்ணீர்‌ பாய்ச்சலாம்‌ என்கிறார்‌. இத்தனை பிராமணர்கள்‌ இம்மூவரும்‌ சட்டசபைக்கு வரவேண்டுமென்று பாடுபடுவதின்‌ நோக்கமென்ன? எப்படியாவது பிராமணரல்லாதார்‌ கட்டுப்பாட்டை உடைத்து, தங்கள்‌ பின்னால்‌ தங்கள்‌ சொற்படி ஆடும்‌ பிராமணரல்லாதாரைக்‌ கூடுமானவரை சட்ட சபைக்கும்‌ இழுத்து எப்படியாவது பிராமணரல்லாதார்‌. இயக்கத்தை அடியோடு துலைத்து பிராமணாதிக்கத்தை நிலை நிறுத்து வதற்கல்லாமல்‌ வேறென்ன? அப்படிக்கில்லையென்றால்‌ சீமான்‌ சிராஜகோ பாலாச்சாரியார்‌ ஓட்டுப்‌ பிரசாரத்துக்கு வரக்‌ காரணமென்ன? சர்‌.சி.பி.அய்யர்‌. இந்த மூன்று பேரால்‌ திட்டம்‌ ஒப்புக்‌ கொள்ளப்பட்டது, இந்த மூன்று பேரும்‌. வலியுறுத்தினால்‌ தண்ணீர்‌ வரும்‌ என்று சொல்லக்‌ காரணமென்ன? இந்த மூன்றில்‌ இரண்டு பேருக்கும்‌ தங்கள்‌ சமூகம்‌ எக்கேடு கெட்டாலும்‌ தங்க ளுக்கு அக்கறையில்லை. எப்படியாவது தங்களுக்கு சட்டசபை மெம்ப ரானால்‌ போதும்‌ என்கிற நிலையில்‌ “என்‌ மகன்‌ செத்தாலும்‌ மருமகள்‌ தாலிய 373 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 றுத்தால்‌ போதும்‌” என்கிற மாதிரி பிராமணர்கள்‌ பின்னால்‌ திரிகின்றார்கள்‌. தங்களுக்கு, தங்கள்‌ இனத்தாரிடம்‌ ஏதாவது ஓட்டு வேண்டு மென்றி ருந்தால்‌ அப்போது மாத்திரம்‌ நானும்‌ வேளாள குலம்‌ நீங்களும்‌ வேளாள குலம்‌ வேளாளர்‌ ஓட்டு வேளாளர்‌ அல்லாதாருக்கு போகலாமா? ஜாதி அபி மானம்‌ வேண்டாமா? என்று உபதேசம்‌ செய்து ஓட்டு கேட்பதும்‌, தாங்கள்‌. வேறு ஒருவருக்கு ஏதாவது செய்யத்‌ தகுந்த சந்தர்ப்பம்‌ இருக்கும்‌ போது அந்த ஜாதியை மறந்துவிட்டு வேறு ஒருவருக்கு, அதுவும்‌ தங்களை சூத்திரன்‌, தாசி மகன்‌, அடிமை என்று சொல்லும்‌ பிராமண வகுப்புக்கு, அதுவும்‌ சர்க்கார்‌ ஊழியருக்கு அதை உபயோகிப்பதுமாயிருந்தால்‌ குலாபிமானத்தின்‌ பேரில்‌ ஒருவரைப்‌ போய்‌ ஓட்டுக்‌ கேட்க இவர்களுக்கு யோக்கியதை ஏது? சீமான்‌ டி.என்‌.சிவஞானம்‌ பிள்ளை அவர்கள்‌ நல்ல கொழுத்த வேளாளர்‌; சீமான்கள்‌. வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்டரும்‌, டி.எ.இராமலிங்கள்‌ செட்டியாரும்‌ வேளாளர்கள்‌. அவருக்கு இவர்கள்‌ என்ன பெருமை தந்தார்கள்‌? அல்லாமலும்‌ எலெக்ஷன்‌ சமயம்‌ பார்த்து கண்காக்ஷி எதற்கு கூட்ட வேண்டும்‌. இதனால்‌ எவ்வளவு செலவு. வந்த அதிகாரிகள்‌ பொது ஜனங்கள்‌ பணத்தில்‌ வந்திருக்கிறார்கள்‌. அங்கு வந்த பதினாயிரக்கணக்கான பொது ஜனங்களும்‌ எவ்வளவு பணத்தை சிலவு செய்து கொண்டு வந்திருக்க வேண்டும்‌? எவ்வளவு பேர்‌ இதன்‌ பயனாக சூதாட்டத்தில்‌ நஷ்டமடைந்‌ திருக்க வேண்டும்‌? இதனால்‌ யாருக்கு என்ன லாபம்‌? சர்‌.சிஃபி.அய்யர்‌ வந்து சீமான்கள்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார்‌, வி.சி. வெள்ளியங்கிரிக்‌ கவுண்‌: டர்‌, டிஎ.இராமலிங்கள்‌ செட்டியார்‌ ஆகிய இவர்களுக்கு ஓட்டு கொடுங்கள்‌ என்று ஜாடையாய்‌ (அதுவும்‌ பிராமண நன்மையை உத்தேசித்து) சிபார்சு செய்வதற்கு பொது ஜனங்கள்‌ பணத்தில்‌ இவ்வளவு ஆடம்பரம்‌ செய்யப்‌ பட்டது என்றால்‌ இதன்‌ உண்மையறிந்த யாருக்குத்தான்‌ மனம்‌ வேதனை உண்டாகாது? நம்நாட்டு பாமர ஜனங்கள்‌ இதை அறியாமல்‌ எவ்வளவு பேர்‌. எவ்வளவு பணம்‌ சிலவு செய்து கொண்டு வந்து வேடிக்கைப்‌ பார்த்துப்‌ போனார்கள்‌? தெருக்‌ கூத்துக்கும்‌ கால்நடைக்‌ காகஷிக்கும்‌ என்ன வித்தியா சம்‌? கூத்தாடியும்‌ ஜனங்களுக்கு ஒரு நல்ல படிப்பு ஏற்படக்‌ கூத்தாடுவதாய்‌ சொல்லுகிறான்‌, கண்காக்ஷியும்‌ ஜனங்களுக்கு விவசாய ஞானம்‌ ஏற்படுத்து வதற்கு என்று சொல்லுகிறார்கள்‌. இரண்டின்‌ உள்கருத்தும்‌ சுயநலம்‌ அல்லாமல்‌ வேறு என்ன? குடி அரசு - கட்டுரை - 06.06.1926 குடி அரசு - 1926 N 374 முஸ்லிம்களும்‌ ௬யாறாஸ்யக்‌ கட்சி பத்திரிகைகளும்‌ “படிக்கிறது பகவத்கீதை குடிக்கிறது குடக்‌ கள்‌” என்னும்‌ கதையாய்‌ சுயராஜ்ஜியக்‌ கட்சியாரும்‌ அவர்களது பத்திரிகைகளும்‌ நடந்து வருகின்றன. ஹிந்து-முஸ்லீம்‌ ஒற்றுமைப்பட வேண்டும்‌. அதற்காகவே நாங்கள்‌ பாடுபடுகிறோம்‌ என வாய்‌ வேதாந்தம்‌ பேசி வரும்‌ சுயராஜ்யக்‌ கட்சியார்‌, முஸ்மிம்களுக்கு முரணாய்‌ நடந்து வருவதையும்‌; எல்லைப்புற மாகாண: சீர்திருத்தத்‌ தீர்மானத்தில்‌ முஸ்லீம்களுக்கு விரோதமாய்‌ நடந்து கொண்டதையும்‌, கல்கத்தா நகர டிப்டிமேயராக இருக்கும்‌ ஜனாப்‌ எச்‌.எஸ்‌. ஷுஹரவர்தி என்னும்‌ முஸ்லீம்‌, சுயராஜ்யக்‌ கட்சி அங்கத்தினராயிருந்தும்‌ அவரை டிப்டி மேயர்‌ பதவியினின்று விலக்க வேண்டு மென்ற கருத்துடன்‌ மற்ற சுயராஜ்யக்‌ கட்சி ஹிந்துக்கள்‌ ஐரோப்பியர்களை துணைக்கு அழைத்‌ துக்கொண்டு செய்‌ துள்ள தீர்மானத்தையும்‌, சுயராஜ்யக்‌ கட்சி பத்திரிகைகள்‌. முஸ்லீம்களை மாற்‌ றாந்தாய்க்‌ குழந்தைகளைப்‌ போல்‌ பாவித்து எழுதி வரு வதையும்‌ நாம்‌ அறிவதைவிட முஸ்லீம்கள்‌ நன்றாய்‌ அறிவார்கள்‌. நாட்‌ டிலே வீறு கொண்டு முழங்கிய ஒத்துழையாமையை ஒடுக்குவதற்குத்‌ தன்னால்‌ ஏற்படுத்தப்பட்ட சுயராஜ்யக்‌ கட்சியில்‌ முகமதி யர்களையும்‌ சேர்த்து பலந்தேடிக்‌ கொள்ளு வதற்காக ஏற்பாடு செய்த “கல்கத்தா பாக்ட்‌”” என்னும்‌ ஹிந்து முஸ்லீம்‌ ஒற்றுமையை உண்டாக்கியவரான தேசபந்து சித்தரஞ்சன்‌ தாசரால்‌ தோற்று விக்கப்பட்ட “பார்வர்டு” பத்திரிகை இப்பொ ழுது ஹிந்து - முஸ்லீம்‌ ஒற்று மைக்கு நேர்மாறாக எழுதி வருகின்றது. சமீபத்தில்‌ நடந்த ஹிந்து - முஸ்லீம்‌ கலவரத்தின்‌ போது ஹிந்து - முஸ்லீம்‌ கலவரத்தை வளர்க்கக்கூடிய விதமாய்‌ (முஸ்லீம்களுக்கு விரோதமாய்‌! “பார்வர்டு” பத்திரிகை எழுதிவந்ததால்‌ அப்‌ பத்திரிகை மீது அரசாங்கத்தார்‌ வழக்குத்‌ தொடர்ந்து அதன்‌ ஆசிரியரிடம்‌ 500 ரூபாய்க்கு ஜாமீன்‌ வாங்கி யுள்ளார்கள்‌. எனவே இவற்றினின்று விளங்கும்‌ உண்மைதான்‌ என்ன? இந்த சுயராஜ்யக்‌ கட்சியாரால்‌ ஹிந்து முஸ்லீம்‌ ஒற்றுமை ஏற்படுமா? ஏற்படவே ஏற்படாது. இந்தக்‌ கட்சியாரை நம்பி அவர்களுடன்‌ சேர்ந்து உழைக்கும்‌ முஸ்லீம்கள்‌ மண்‌ குதிரையை நம்பி ஆற்றில்‌ இறங்கியோன்‌ கதிக்கே வந்து சேருவார்கள்‌. குடி அரசு - கட்டுரை - 13.06.1926 375 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 & e ர்‌ கயக்கத்‌ தத்‌ ம்‌ தற்கால காங்கிரசால்‌ யிராமணால்லாதாருக்க வந்த A5G சகோதிரர்களே! இன்று கூட்டப்பட்ட கூட்டமானது பிராமணரல்லாதார்‌ என்கிற ஒரு வகுப்புசம்பந்தமான கூட்டம்‌. இக்கூட்டத்தில்‌ நான்‌ இன்று பிராமணரல்லாதார்‌. வகுப்பு முன்னேற்றம்‌ என்கிற விஷயத்தைப்‌ பற்றி பேசப்‌ போகிறேன்‌. மாறுதல்‌ வேண்டாதார்‌ வகுப்பைப்‌ பற்றி பேசலாமா? மகாத்மா காந்தியின்‌ ஒத்துழையாமை காங்கிரஸ்காரன்‌, அதிலும்‌ வைதீக ஒத்துழையாதாரரன்‌, மாறுதல்‌ வேண்டாதவன்‌ என்று சொல்லப்பட்ட ஒருவன்‌ வகுப்பைப்‌ பற்றி பேசுவது பொருந்துமா என்று சிலருக்குத்‌ தோன்ற லாம்‌. வைதீக ஒத்துழையாமைக்காரன்‌ என்றால்‌, ஒருவன்‌ கழுத்தை ஒருவன்‌ அறுக்கும்போது பார்த்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌ என்பவனல்ல, ஒருவன்‌. சொத்தை ஒருவன்‌ கொள்ளை அடித்துக்கொண்டு போனால்‌ வழியைத்‌ திறந்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்பவனல்ல என்பதை முதலில்‌ அவர்களுக்குத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறேன்‌. அல்லாமலும்‌ மகாத்‌ மாவின்‌ காங்கிரஸும்‌ அவரது ஒத்துழையாமையும்‌ நிர்மாணத்‌ திட்டமும்‌ காங்கிரசிலிருந்து வெளிப்பட்டு மறைந்து கொண்டும்‌ வருகிறது.நிர்மாணத்‌ திட்டங்கொண்ட ஒத்துழையாமைக்‌ காங்கிரஸின்‌ போது வகுப்பு விஷயத்‌ தைப்‌ பற்றி எவரும்‌ யோசிக்கவேயில்லை. அதில்‌ உயர்வு-தாழ்வு என்கிற வித்தியாச மேயல்லாமல்‌ எல்லா வகுப்புக்கும்‌ சமத்துவமும்‌, சுயமரியாதை யும்‌, ஏழை - பணக்காரர்‌ என்கிற வித்தியாசமேயில்லாமல்‌ எல்லோருக்கும்‌ க்ஷேமமும்‌, ஆங்கிலம்‌ படித்தவன்‌-படியாதவன்‌ என்கிற வேறுபாடு இல்லா மல்‌ எல்லோருக்கும்‌ சம யோக்கியதையும்‌ உண்டாக செளகரியமிருந்ததால்‌ என்‌ போன்றவர்கள்‌ வகுப்பு என்பதை மறந்து மகாத்மா காங்கிரசிலும்‌ ஒத்துழையாமையிலும்‌ நிர்மாணத்‌ திட்டத்திலும்‌ உழைத்து வந்தோம்‌. ஒத்துழையாமைக்கு முன்னும்‌ வகுப்பிற்கே உழைத்தேன்‌ மகாத்மா காங்கிரசுக்கு முன்பே நான்‌, வகுப்பு முன்னேற்றத்தில்‌ குடி அரசு - 1926 N 376 கவலை உள்ளவனாகத்தான்‌ இருந்தேன்‌. அதாவது பிராமணரல்லாதாருக்காக இப்பொழுது உள்ள தென்‌ இந்திய நல உரிமைச்‌ சங்கம்‌ என்பது போன்ற ஏறக்குறைய இதே கொள்கை உடைய சென்னை மாகாணச்‌ சங்கம்‌ என்கிற ஒரு சங்கம்‌ இருந்ததும்‌, அதில்‌ என்‌ போன்றவர்கள்‌ முக்கியப்‌ பங்கெடுத்து உழைத்ததும்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌. அது எதற்காகயிருந்தது? பிராமண ரல்லாதார்‌ முன்னேற்றத்திற்கு காங்கிரஸ்‌ போதாது என்றும்‌,நமக்கென்று ஒரு தனியான இயக்கம்‌ இருக்கவேண்டுமென்றும்‌, இப்பொழுது காங்கிரசிலுள்ள பிராமணரல்லாதார்‌ எல்லோரும்‌ ஒன்று கூடித்தான்‌ அச்சங்கத்தின்‌ மூலம்‌ பிராமணரல்லாதார்‌ முன்னேற்றத்திற்குழைத்ததும்‌, நமது முன்னேற்றத்திற்காக வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ முதலியவைகளை நாம்‌ வலியுறுத்தி வந்ததும்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌. காங்கிரஸினால்‌ ஏற்பட்ட தீவினை இன்னும்‌ என்னுடைய அபிப்ராயம்‌ என்னவென்றால்‌ நமது நாட்டில்‌ காங்கிரஸ்‌ என்கிற ஒரு இயக்கம்‌ இல்லாவிட்டால்‌ நமக்கு வகுப்பு முன்னேற்ற இயக்கமே தேவையில்லை என்றே சொல்லுவேன்‌. நமது நாட்டில்‌ என்று காங்கிரஸ்‌ ஏற்பட்டதோ அன்றே பிராமணரல்லாதாருக்கு சனியன்‌ பிடித்தது. உதாரணமாக, தமிழ்நாட்டில்‌ காங்கிரஸ்‌ வருவதற்கு முன்‌ பெரிய மனிதர்கள்‌ என்போரும்‌, படித்தவர்கள்‌ என்போரும்‌, தலைவர்கள்‌ என்போரும்‌, தேச பக்தர்‌ கள்‌ என்போரும்‌, பிராமணரல்லாதவர்களாகவேயிருந்தார்கள்‌. ஜில்லா முன்சீப்புகள்‌, சிரஸ்தார்கள்‌, தாசில்தார்கள்‌, இன்ஸ்பெக்டர்கள்‌ ஆகிய இவ்‌ வுத்தியோகங்கள்‌ தான்‌ அக்காலத்தில்‌ இந்தியர்களுக்கு அதிகமாய்‌ வழங்கப்‌ பட்டன. காங்கிரஸுக்கு முன்‌ உத்தியோக யோக்கியதை இவைகளில்‌ நூற்றுக்கு 99 பேர்‌ நாயுடு, முதலியார்‌, பிள்ளை, சாயபு ஆகிய இவர்கள்தான்‌ இருப்பார்கள்‌. இவர்கள்‌ உத்தியோக கண்ணியமும்‌ தர்பாரும்‌ இக்காலத்திலுள்ள ஒரு கலெக்டருக்காவது,நிர்வாகசபை மெம்பருக்‌ காவது கிடையாது. எனக்குத்‌ தெரிய ஒரு நாயுடு இந்த ஜில்லா சிரஸ்தாரா யிருந்தார்‌. அவரை “கலெக்டர்‌ கூப்பிடுகிறார்‌” என்று யாராவது கூப்பிட்டால்‌ “பத்து நிமிஷத்தில்‌ வருகிறேன்‌” என்றுதான்‌ சொல்லுவார்‌.15 நிமிஷம்‌ கழித்து மெத்தைக்குப்‌ போவார்‌: காலில்‌ ஜோடும்‌, ஒரு கையில்‌ தடியும்‌, மற்றொரு கையில்‌ சுருட்டுமாய்‌ மெத்தை ஏறுவார்‌. கலெக்டர்‌ முன்னால்‌ மேஜையின்‌ மேல்‌ சுருட்டையும்‌ தடியையும்‌ வைத்து விட்டு “என்னைக்‌ கூப்பிட்ட விஷயம்‌ என்ன?” என்று கேட்பார்‌. காரியம்‌ முடிந்ததும்‌ சுருட்டும்‌ தடியும்‌ எடுத்துக்‌ கொண்டு வருவார்‌. போலீஸ்‌ ஹெட்குவார்ட்டர்‌ இன்ஸ்பெக்டராக நாயுடு ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ கலெக்டர்‌, சூப்பிரன்டெண்ட்‌ முதலிய வெள்‌: ளைக்கார அதிகாரிகளுடன்‌ சிநேகிதர்கள்‌ போல பேசுவார்‌, உறவாடுவார்‌. 377 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நாயுடுவைத்‌ திடீரென்று கூப்பிட முடியாது. நாயுடுவின்‌ சந்தர்ப்பந்‌ தெரிந்து தான்‌ கூப்பிட வேண்டும்‌. இதுபோலவே அக்காலத்தில்‌ தக்க குடும்ப பரம்‌ பரையும்‌, யோக்கியமும்‌, அந்தஸ்தும்‌, கண்ணியமும்‌ உள்ளவர்கள்‌ பெரிய உத்தியோகம்‌ வகிப்பார்கள்‌. அப்போதைய உத்தியோகங்களுக்கு வேண்டிய யோக்கியதை இவைதான்‌. காங்கிரஸுக்குப்‌ பின்‌ உத்தியோக யோக்கியதை காங்கிரஸ்‌ ஏற்பட்ட பிறகு உத்தியோகத்தின்‌ யோக்கியதை அடியோடு மாறிவிட்டது. முனிசிபாலிட்டி விளக்கு வெளிச்சத்தில்‌ படித்தவனானாலும்‌. சரி, பஞ்சாங்கம்‌ சொல்லி பிச்சை எடுத்தவன்‌ மகனானாலும்‌ சரி, தூது சென்று பிழைப்பவன்‌ மகனானாலும்‌ சரி, உருப்‌ போடத்‌ தெரிந்து கிராமபோன்‌ மிஷின்‌. போல பார்த்ததை உருப்‌ போட்டு எழுதத்‌ தெரிந்து, மற்ற விதத்தில்‌ எப்படிப்‌ பட்டவனானாலும்‌ சரி, அவன்தான்‌ உத்தியோகத்திற்கு லாயக்குள்ளவனாகப்‌ போய்விட்டான்‌. இதனால்‌ தெருப்பிச்சை யெடுப்போரெல்லாம்‌ உத்தி யோகத்திற்கு லாயக்குள்ளவர்களாகி விட்டார்கள்‌. பரம்பரையாய்‌ பெருங்‌ குடும்பமாய்‌, தேசத்தையே கோட்டைக்‌ கொத்தளங்களோடு அரசாண்டவர்‌. களாய்‌, சுயமரியாதையோடு வாழ்ந்தவர்களாய்‌ உள்ள பிராமணனல்லாத குடும்பங்கள்‌ பின்னடைய ஏற்பட்டு விட்டன. இதன்‌ பலனாய்‌ உத்தியோகங்‌ களுக்கும்‌ மதிப்பு குறைந்துவிட்டன. பிராமணர்‌ உத்தியோகம்‌ பெற்ற வழி காங்கிரஸின்‌ ஆதி சூழ்ச்சியே பிராமணர்கள்‌ எப்படி உத்தியோகம்‌ சம்பாதிப்பது என்கிற அஸ்திவாரத்தின்‌ மேல்‌ கட்டப்பட்டதாகும்‌. அதற்கு ஏற்றாற்போல்‌ அந்த ஜாதிக்கு சுபாவமாய்‌ உள்ள உருப்போடும்‌ வித்தை யையே உத்தியோகத்திற்கு யோக்கியதையாய்‌ வைத்து, அதற்கேற்ற பள்ளிக்‌ கூடங்களை விருத்தி செய்தார்கள்‌. இதன்‌ மூலம்‌ உத்தியோகம்‌ பெற்ற பிராமணர்களால்‌ வெள்ளைக்காரர்களுக்குப்‌ பல விதத்திலும்‌ உபயோக மிருந்ததால்‌ அவர்களும்‌ இந்த பிராமணர்களுக்கு அநுகூலமான உத்தியோக யோக்கியதையையே பரப்பி விட்டார்கள்‌. இப்போது வர வர மேற்படி உத்தியோகங்களின்‌ யோக்கியதையும்‌ குறைந்து விட்டது. பிராமண - பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்களுக்குள்ள பேதம்‌ பெரும்பாலும்‌ வெள்ளைக்கார அதிகாரிகளுக்குள்ள சகல தேவை களையும்‌ நிறைவேற்றி வைக்கக்‌ கூடியவர்களும்‌, சுயமரியாதை அற்றவர்‌. களும்‌, மனச்சாக்ஷியை இழந்தவர்களும்தான்‌ நல்ல டிப்டி கலெக்டர்‌, நல்ல முனிசீபு, நல்ல தாசில்தார்‌ ,நல்ல மேஜிஸ்ட்ரேட்‌, நல்ல இன்ஸ்பெக்டர்களாய்‌ விளங்குகிறார்கள்‌. இந்த உத்தியோகத்திற்கே இவ்வளவு யோக்கியதை. குடி அரசு - 1926 N 378 வேண்டுமானால்‌ இன்னும்‌ பெரிய உத்தியோகத்திற்கு எவ்வளவு யோக்கி யதை வேண்டும்‌? இந்த முறையில்‌ பிராமணரல்லாத வகுப்பார்‌ உத்தியோகம்‌ பெற அஞ்சுகிறார்கள்‌. துணிந்து யாராவது ஒப்புக்கொண்டாலும்‌ மேற்படி யோக்கியதையில்லாத காரணத்தால்‌ நல்ல உத்தியோகஸ்தர்களாக ஆவ தில்லை. தமிழரின்‌ தாழ்வுக்கு காங்கிரஸே காரணம்‌ இம்மாதிரி காங்கிரஸ்‌ நமது நாட்டில்‌ ஏற்படாமலிருந்தால்‌ நமது ஜனங்களின்‌ யோக்கியதை இவ்வளவு கேவலமாய்ப்‌ போயிருக்காது; உத்தி யோகங்களின்‌ யோக்கியதையும்‌ இவ்வளவு இழிவான நிலைமைக்கு வந்தி ருக்காது: வெள்ளைக்காரரும்‌ இவ்வளவு கொடுமையான முறையில்‌ ஆளத்‌ துணியமாட்டார்கள்‌. ஆதலால்‌ பிராமணரல்லாதார்‌ நிலைமையை இவ்வளவு கேவலத்திற்குக்‌ கொண்டுவந்து விட்டதற்கு முக்கியக்‌ காரணங்களில்‌ இந்த காங்கிரஸும்‌ பிரதானமானது. காங்கிரஸ்‌ என்பதே உத்தியோகம்‌ பெற ஏற்பட்டதுதான்‌. அது நமது நாட்டு பிராமணர்களால்‌ வளர்க்கப்பட்டு வந்த தால்‌ பிராமணர்கள்‌ உத்தியோகம்‌ பெறத்தக்க வழியில்‌ நிலை நின்று விட்டது. எந்த அந்தஸ்தும்‌, எந்த உத்தியோகமும்‌, எந்தப்‌ பதவியும்‌, எந்தப்‌ பெரிய உத்தியோகஸ்தனையும்‌ நீங்கள்‌ எடுத்துக்‌ கொண்டீர்களானால்‌ அப்பதவியும்‌ உத்தியோகமும்‌ காங்கிரஸின்‌ பலனாக ஏற்பட்டதாகத்‌ தானிருக்கும்‌. தமிழர்‌ முன்னேற தற்கால காங்கிரஸ்‌ அழிய வேண்டும்‌ இனி பிராமணரல்லாதார்‌ சமூகத்திற்கு ஏதாவது யோக்கியதை உண்‌: டாக வேண்டுமானால்‌ இந்த காங்கிரஸ்‌ ஒழிய வேண்டும்‌. இது உள்ள வரை: பிராமணரல்லாதார்‌ உருப்படியாக முடியாது. மகாத்மா காங்கிரஸ்‌ ஏற்பட வேண்டும்‌. ஆனால்சிலர்‌ என்னை இப்படிப்பட்ட காங்கிரஸில்‌ நீ ஏன்‌ இன்னமும்‌ இருக்கிறாய்‌ என்று கேட்கலாம்‌. இப்பொழுது பிராமண உத்தியோகத்திற்கு உழைத்து வரும்‌ காங்கிரஸை மகாத்மா காங்கிரஸ்‌ போல்‌ அதாவது இரண்‌ டொரு வருஷத்திற்கு முன்‌ மூன்று நான்கு வருஷ காலம்‌ இருந்து வந்த காங்கிரஸைப்‌ போல்‌ சகல வகுப்பாருக்கும்‌ சமமான நன்மை வரும்படியாக உண்மையான ஒத்துழையாமைக்‌ காங்கிரஸாக மறுபடியும்‌ மாற்ற வேண்டும்‌ என்கிற ஒரு ஆசையால்தானேயல்லாமல்‌ வேறல்ல. அப்படி மாறும்‌ பக்ஷத்‌ தில்‌ இப்போதுள்ள சுயநலத்தலைவர்கள்‌ மறைந்து விடுவார்கள்‌. சிற்சில சமயங்களில்‌ மகாத்மா பேசுவதைப்‌ பார்த்தால்‌ ஒரு சமயம்‌ மறுபடியும்‌ அந்த நிலைமைக்குப்‌ பாடுபடலாம்‌ என்கிற நம்பிக்கை கொஞ்சங்‌ கொஞ்சம்‌ இருந்து வருகிறது. அந்த நம்பிக்கை ஒழிந்துவிட்டால்‌ காங்கிரஸில்‌ நான்‌ இருக்க மாட்‌ டேன்‌. ஆதலால்‌ பிராமணரல்லாதார்‌ வகுப்பு நன்மையைப்‌ பற்றி பேசுவதும்‌ 379 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 காங்கிரசின்‌ குற்றங்களை எடுத்துச்‌ சொல்லுவதும்‌ காங்கிரசிலிருப்பதற்கு யோக்கியதை குறைவாகமாட்டாது. கூக்குரல்‌ போடுவது யாருக்கு ஆபத்து ? தவிர ஸ்ரீமான்‌ ஆரியா பேசும்போது சில பிராமணர்கள்‌ சொந்த விஷயங்களைப்‌ பற்றி பேசக்கூடாது என்று கூச்சல்‌ போட்டார்கள்‌. அது ஒப்பத்தக்கதல்ல. பேசுவதைக்‌ கேட்க வேண்டும்‌; பேசுவதில்‌ குற்றமிருந்தால்‌ அதற்கு சமாதானம்‌ கேட்கலாம்‌: அப்படிக்கில்லாமல்‌ கூச்சல்போட்டு கூட்டத்‌ தைக்‌ கலைக்கலாம்‌ என்று எண்ணுவது பயித்தியக்காரத்தனமாகவே முடியும்‌. நான்கு நாளைக்கு முன்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரும்‌ அவரது கோஷ்டியும்‌ இதே இடத்தில்‌ அளந்து கொட்டின வசையும்‌, திட்டும்‌ கணக்கா? வழக்கா? பிராமணரல்லாதார்கள்‌ பொறுமையுடன்‌ அவ்வளவையும்‌ சகித்துக்‌ கொண்டி ருக்கவில்லையா? அவர்களுக்கு இந்த சில பிராமணர்களைப்‌ போல்‌ கூச்சல்‌ போடத்‌ தெரியாமல்‌ போய்விட்டது என்று நினைக்கிறீர்களா? எப்பொழுதும்‌. பிரசங்க கூட்டத்தில்‌ கூச்சல்‌ போடுவது கெட்ட வழக்கம்‌.நான்‌ அடிக்கடி இதை கண்டித்தே வருகிறேன்‌. இந்த வழக்கம்‌ மிஞ்சி விட்டால்‌ யாருக்கு ஆபத்து என்பதை நினைத்துப்‌ பாருங்கள்‌. ஐயங்காருக்கும்‌ எனக்கும்‌ வித்தியாசம்‌ நான்‌ எவரைப்‌ பற்றியும்‌ குற்றஞ்சொல்ல வேண்டுமென்கிற ஆசை யுடையவனல்ல. நேற்று இங்குவந்த ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரும்‌ என்னைப்‌ போல்‌ சமூக ஊழியர்தான்‌. எனக்கு அவரிடத்தில்‌ வெறுப்பில்லை. நான்‌ ஏதாவது என்‌ சொந்தத்திற்கு உயில்‌ எழுதுவதாயிருந்தால்‌ அவரைத்தான்‌ யோசனை கேட்பேன்‌ . அவரும்‌ என்னைப்‌ பற்றி தனியாய்ப்‌ பேசினபோது தனது நண்பர்களிடம்‌ என்னை மிகவும்‌ நம்புவதாகவும்‌, என்னிடம்‌ சூது வாது இல்லையென்றும்‌ பேசியிருக்கிறார்‌. நான்‌ எப்படி பிராமணரல்லாதார்‌ சமூகம்‌ முன்னேற்றமடைய வேண்டுமென்று பாடுபடுகிறேனோ, அதுபோலவே அவர்‌ பிராமண சமூகம்‌ முன்னேற வேண்டுமென்று பாடுபடுகிறார்‌. ஆகவே இரண்டு பேருடைய நோக்கத்திலும்‌ உழைப்பிலும்‌ வித்தியாசமில்லை. ஆனால் நான்‌ உண்மையைச்‌ சொல்லிக்கொண்டு எனது சமூகத்திற்குப்‌ பாடு படுகிறேன்‌. அவர்‌ பொய்யைச்‌ சொல்லிக்கொண்டு அவருடைய சமூகத்‌ திற்குப்‌ பாடுபடுகிறார்‌. அதாவது, நான்‌ பிராமணரல்லாதார்‌ பெயரைச்‌ சொல்லு கிறேன்‌; அவர்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ ககஷி, மகாத்மா, ஜெயிலுக்குப்‌ போன தேசபக்தர்கள்‌ என்கிற பெயரைச்‌ சொல்லிக்கொண்டு பிராமணருக்குப்‌ பாடுபடுகிறார்‌. கொஞ்ச நாளைக்கு முன்‌ சென்னைக்கு முனிசிபல்‌ தேர்தலின்‌ போது ஓட்டர்கள்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ போயிருந்தேன்‌. அங்கு நான்‌ பேசிய இரண்‌ டொரு கூட்டத்தில்‌ “தேர்தலில்‌ ஒரு பிரயோஜனமும்‌ இல்லை அதனால்‌ ஒரு குடி அரசு - 1926 N 280 பலனும்‌ செய்ய முடியாது. அது ஒரு பதவி. அதில்‌ உங்களுக்கு மோகமிருந்‌ தால்‌ பிராமணரல்லாதாருக்குக்‌ கொடுங்கள்‌” என்று தைரியமாய்ச்‌ சொல்லி வந்தேன்‌. ஆனால்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ அப்படிச்‌ செய்யவில்லை. ஒரு பிராமணரை நிறுத்தி, மறைமுகமாய்‌ காங்கிரஸ்‌, சுயராஜ்யக்‌ க்ஷி பெயரைச்‌ சொல்லிக்கொண்டு முனிசிபாலிடியில்‌ ஏழைகளுக்கு அப்படிச்‌ செய்கிறோம்‌; இப்படிச்‌ செய்கிறோம்‌; வரியைக்‌ குறைக்கிறோம்‌ என்று பொய்‌ சொன்னதல்‌ லாமல்‌; மகாத்மா ஜெயிலுக்குப்‌ போனார்‌, வரதராஜுலு நாயுடு இரண்டு முறை ஜெயிலுக்குப்‌ போனார்‌, இராமசாமி நாயக்கர்‌ மூன்று முறை ஜெயிலுக்குப்‌ போனார்‌, ஆனதினால்‌ ஸ்ரீமான்‌ இ.எல்‌. ஐயருக்கு ஓட்டுப்‌ போடுங்கள்‌ என்று விளம்பரம்‌ போட்டு ஓட்டு வாங்கினார்‌.அவர்கள்‌ ஜெயிலுக்குப்‌ போனதன்‌ பலனை இவர்கள்‌ அடைய என்ன வார்சு பாத்தியம்‌? இதுதான்‌ எனக்கும்‌ அவருக்கும்‌ உள்ள வித்தியாசம்‌. சமூகம்‌ அழிவதை பார்த்துக்‌ கொண்டிருப்பதா? அவரவர்கள்‌ சமூகத்திற்கு அவரவர்கள்‌ பாடுபடுவதை நான்‌ ஆக்ஷ பிக்கவில்லை. ஆனால்‌ பொதுஜனங்களை - பாமர மக்களை ஏமாற்றிக்‌ கொண்டும்‌, சுயராஜ்யம்‌, உரிமை என்று சொல்லிக்‌ கொண்டும்‌, பிராமண ரல்லாத பிரமுகர்களை சர்க்கார்‌ உத்தியோகம்‌ பெறுகிறவர்கள்‌ - தேசத்‌ துரோகிகள்‌ என்று திட்டிக்கொண்டு வைவதற்காக பிராமணரல்லாதாரிலேயே வேறு வழியில்‌ பிழைக்க முடியாத சில ஆளுகளுக்குப்‌ பணம்கொடுத்து உத்தியோக ஆசை பிடித்த சில ஆள்களை ஆசை வார்த்தைச்‌ சொல்லி தங்கள்‌ வசப்படுத்திக்‌ கொண்டு ஜஸ்டிஸ்‌ க௯ஷி என்கிற பெயரால்‌ பிராமணரல்‌ லாத சமூகத்தையே அடிமையாக்க- தீண்டாதவர்களாக்கப்‌ பார்த்தால்‌ அதை எப்படி சகிக்க முடியும்‌? எந்த சமூகத்திலும்‌ இப்படிப்பட்ட சுயநலக்கார ஆள்கள்‌ இரண்டொருவர்‌ இருக்கத்தான்‌ செய்வார்கள்‌. அப்படிப்பட்ட ஆள்‌ களை இவர்கள்‌ உபயோகித்துக்‌ கொண்டு ஒரு பெரிய சமூகத்தையே அழிக்கப்‌ பார்க்கிறார்கள்‌. காங்கிரஸ்‌ பெயரால்‌ உத்தியோகம்‌ பிராமணர்களுக்கோ அல்லது அவர்கள்‌ கட்சியான காங்கிரஸ்‌, சுய ராஜ்யக்‌ கட்சிக்கோ, எதற்கு உத்தியோக ஆசையில்லை? பிராமண ஐகோர்ட்‌ ஜட்ஜுகள்‌ எல்லாம்‌ காங்கிரசின்‌ பெயரால்‌ உத்தியோகம்‌ சம்பாதித்தவர்கள்‌ தான்‌. நிர்வாகசபை மெம்பர்கள்‌ ஸ்ரீமான்கள்‌ கிருஷ்ணசாமி ஐயர்‌, சர்‌. சி.பி. ராமசாமி அய்யர்‌ ஆகியவர்கள்‌ காங்கிரஸின்‌ பெயரால்‌ உத்தியோகம்‌ சம்பா தித்தவர்களேயாகும்‌. பிராமணரல்லாதார்‌ கட்சியாரை மாத்திரம்‌ உத்தியோக வேட்டைக்காரர்கள்‌ என்பதற்குப்‌ பொருளென்ன? ஜஸ்டிஸ்‌ ககஷிக்காரர்கள்‌ உத்தியோகம்‌ சம்பாதித்துக்‌ கொண்டார்கள்‌ என்று பொறாமைப்‌ பிரசாரம்‌ 281 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 செய்வதில்‌ ஏதாவது அவர்களுக்குக்‌ கொஞ்சமாவது அறிவிருக்கிறதா?' கண்ணியமாய்‌ சட்டசபை சென்ற ஜஸ்டிஸ்‌ கக்ஷி ஜஸ்டிஸ்‌ கட்சிக்காரர்‌ சுயராஜ்யக்‌ கட்சியாரைப்‌ போல்‌ ஏதாவது பொய்‌ சொல்லி ஓட்டர்களை ஏமாற்றி சட்டசபைக்குப்‌ போனார்களா? ஒருக்காலும்‌ இல்லை. ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌ கண்ணியமாய்‌ ஓட்டர்களிடம்‌ சென்று “நாங்கள்‌ காங்கிரஸைச்‌ சேர்ந்தவர்கள்‌ அல்ல; காங்கிரஸ்‌ பிராமணர்களின்‌ நன்மையின்‌ பொருட்டு ஏற்படுத்தப்‌ பட்டது: நாங்கள்‌ பிராமணரல்லாதார்‌ நன்மையின்‌ பொருட்டு பாடுபடுகிறோம்‌; நாங்கள்‌ பொய்யான ஒத்துழையாமைக்காரரல்ல; சீர்திருத்தத்தை ஏற்று சட்டசபைக்குச்‌ சென்று சர்க்காரோடு ஒத்துழைத்து சர்க்கார்‌ உத்தியோகங்களை ஏற்று, பிராமணரல்லாதாருக்கும்‌ தேசத்துக்கும்‌ எங்களால்‌ கூடியதைச்‌ செய்வோம்‌” என்று சொல்லி சட்டசபைக்குள்‌ நுழைந்‌ தார்கள்‌. ஓட்டர்களும்‌ அதை ஏற்றுக்கொண்டு அவர்களையே அனுப்பி னார்கள்‌. அப்படி இருக்க அவர்கள்‌ உத்தியோகம்‌ சம்பாதித்துக்‌ கொண்டார்‌. கள்‌ என்று சொல்லிப்‌ பொறாமைப்படுவதில்‌ என்ன பிரயோஜனம்‌. சுயராஜ்யக்‌ கட்சியார்‌ பிரயாணப்‌ படி கூட வாங்குவதில்லை என்று சொல்லி சட்டசபைக்‌ குப்‌போய்‌ தினக்கூலி பெறக்கூடிய கமிட்டி பதவியும்‌, மாதச்‌ சம்பளம்‌ பெறக்‌ கூடிய உத்தியோகமும்‌ பிரயாணப்‌ படியும்‌ பெற்று, சர்க்காருக்கும்‌ அநுகூலமா யிருந்து சர்க்கார்‌ எதிர்பார்த்ததற்கு மேல்‌ ஒத்துழைப்பதைப்‌ பற்றி கொஞ்சமும்‌ வெட்கப்படாமல்‌ மேடைக்கு வந்து பொது ஜனங்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டமான காரியம்‌? அதிகச்‌ சம்பளம்‌ சுயராஜ்யக்‌ கட்சி உபதலைவர்‌ ஸ்ரீமான்‌ பட்டேல்‌ மாதம்‌ 4000 ரூபாய்‌ சம்பளம்‌ வாங்குகிறார்‌. இது யாருடைய பணம்‌? இது பொது ஜனங்களின்‌ பணமல்லவா? காங்கிரசையும்‌ ஒத்துழையாமையையும்‌ சுயராஜ்யக்‌ கட்சியை யும்‌ சேர்ந்த “தேசபக்தர்‌” பட்டேலுக்கு மாதம்‌ 4000 ரூபாய்‌ எதற்காக வேண்டும்‌? அவர்‌ உடுத்திக்‌ கொள்ள 6 முழக்கதர்‌ போதும்‌, குடியிருக்க ஒரு குச்சு வீடு போதும்‌. இப்படிப்பட்ட தேசத்‌ தொண்டருக்கு மாதம்‌ ரூ. 11-4-0 இருந்தால்‌ போதும்‌. இவருக்கு மாதம்‌ 4000 ரூபாய்‌ எதற்கு? இது உத்தியோகம்‌. பெறுவதில்லை என்று போனவர்‌ பெறும்‌ சம்பளம்‌. இவருக்கே மாதம்‌ 4000 ரூபாய்‌ வேண்டியதிருந்தால்‌ உத்தியோகம்‌ பெறப்‌ போனவர்‌, பெரிய ராஜ குடும்பத்தைச்‌ சேர்ந்தவர்களுக்கு மாதம்‌ 4000 ரூபாய்‌ என்றால்‌ எது அதிகம்‌? யாருக்கு உத்தியோக ஆசை? இதில்‌ யார்‌ யோக்கியர்கள்‌? என்பதை நீங்களே யோசியுங்கள்‌. சம்பளம்‌ குறைத்துக்‌ கொண்டது யார்‌? அல்லாமலும்‌ நமது பிராமணரல்லாத மந்திரிகள்‌ “பணத்தாசை குடி அரசு - 1926 N 382 பிடித்தவர்கள்‌” என்று சொல்லுபவர்கள்‌, தாங்களாகவே மாதம்‌ 5000 ரூபாய்‌ சம்பளத்தை 4000 மாக ஆக்கிக்‌ கொண்டார்கள்‌. வருஷம்‌ ஒன்றுக்கு ஒரு லக்ஷத்துப்‌ பதினெட்டாயிரம்‌ ரூபாய்‌ வேண்டாமென்று சொல்லி விட்டார்கள்‌. 6 வருஷத்திற்கு 7 லட்ச ரூபாய்‌ அவர்களுக்கு வருவதை வேண்டாமென்று சொல்லி விட்டார்கள்‌. காங்கிரஸ்‌ காரியதரிசியாயிருந்தும்‌ தேசத்தாருக்குப்‌ பாடுபடுவதாய்ச்‌ சொல்லியும்‌, நமது ஓட்டுப்‌ பெற்று சட்டசபைக்குப்‌ போய்‌ உத்தியோகம்‌ பெற்ற பிராமணர்‌ சர்‌.சி.பி.ராமசாமி அய்யர்‌ எவ்வளவு ரூபாய்‌ சம்பளத்தில்‌ குறைத்துக்கொண்டார்‌? பொதுஜனங்களுக்கு - ஏழைகளுக்கு உழைப்பவர்கள்‌ என்றும்‌, தேச விடுதலைக்காக உழைப்பவர்கள்‌ என்றும்‌, பிரயாணப்‌ படி வாங்குவதில்லை என்றும்‌ சட்டசபைக்குப்‌ போன ஸ்ரீமான்‌ எ.ரெங்கசாமி அய்யங்கார்‌, எம்‌.கே. ஆச்சாரியார்‌ இவர்கள்‌ எவ்வளவு படிப்‌ பணமும்‌ கமிட்டிப்‌ பணமும்‌ குறைத்துக்‌ கொண்டார்கள்‌? பாமர ஜனங்கள்‌. பயித்தியக்காரராய்‌ இருப்பதால்‌ இவர்கள்‌ பிராமணரல்லாதாரை கங்கணம்‌. கட்டிக்‌ கொண்டு ஊர்‌ ஊராய்த்‌ திரிகிறார்கள்‌. இவர்கள்‌ யார்‌? அல்லாமலும்‌, ஜஸ்டிஸ்‌ கட்சியார்‌, தங்கள்‌ இனத்தார்களுக்கு உத்தி யோகம்‌ கொடுப்பதாகவும்‌ நாமிநேஷன்‌ செய்வதாகவும்‌ மந்திரிகள்‌ பேரில்‌ குற்றம்‌ சுமத்துகிறார்கள்‌. மந்திரிகள்‌ பிராமணர்களுக்குக்‌ கொடுக்கும்‌ உத்தி யோகத்தை இவர்கள்‌ வெளியில்‌ சொல்லுகிறார்களா? ஸ்ரீமான்கள்‌ தணிகா சலம்‌ செட்டியாருக்கும்‌, சி.எஸ்‌.இரத்தினசபாபதி முதலியாருக்கும்‌ நாமி நேஷன்‌ செய்தால்‌ அதிகாரத்‌ துஷ்பிரயோகம்‌ என்கிறார்கள்‌. ஸ்ரீமான்கள்‌ சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு கோயமுத்தூர்‌ ஜில்லா போர்டு மெம்ப ரும்‌, டி.எம்‌. நரசிம்மாச்சாரியாருக்கு கடப்பை ஜில்லா போர்டு பிரசிடெண்ட்‌ டும்‌, சர்‌.டி.தேசிகாச்சாரியாருக்கு திருச்சி ஜில்லா போர்டு பிரசிடெண்டுமான பதவிகளுக்கு நாமிநேஷன்‌ செய்தார்களே இவர்களெல்லாம்‌ பிராமண: ரல்லாதார்களா? அல்லது பிராமணரல்லாதார்‌ கக்ஷியைச்‌ சேர்ந்தவர்களா? இந்த பிராமணர்கள்‌ மந்திரிகளிடம்‌ உத்தியோகம்‌ பெற்றுக்‌ கொண்டதைப்‌ பற்றி எந்த பிராமணர்களாவது, பிராமணப்‌ பத்திரிகைகளாவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுகின்றதா? எலெக்ஷன்‌ நாணயம்‌ தவிர, இந்தக்‌ காலத்து எலெக்ஷன்களாவது யோக்கியமாய்‌ நடக்‌ கின்றதா? எலெக்ஷன்களுக்கு நிற்கிற ஆள்கள்‌ ஓட்டர்களுக்குப்‌ பணங்‌ கொடுத்துப்‌ பழக்கி அவர்களின்‌ நாணயத்தைக்‌ கெடுத்து விட்டதால்‌ யோக்கியர்கள்‌ எலெக்‌ஷனில்‌ வர யோக்கியமில்லாமல்‌ போய்விட்டது. அப்படியில்லையானால்‌ ஒவ்வொருவருக்கும்‌ இருபது, முப்பதாயிரம்‌ ரூபாய்‌ செலவாகக்‌ காரணமென்ன? அல்லாமலும்‌ சட்டசபையில்‌ நடக்கும்‌ காரியந்‌ 383 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தான்‌ என்ன? எப்படியிருக்கிறது? எப்படியாவது பிராமணரல்லாதார்‌. கெட்டவர்கள்‌-புத்தியில்லாதவர்கள்‌ என்கிற பெயரை தேசத்தில்‌ பரப்பி, பாமர: ஜனங்களை வஞ்சிக்க வேண்டும்‌; பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்‌. களையும்‌ கெடுக்க வேண்டும்‌. இதுதான்‌ சுயராஜ்யக்‌ கட்சி என்கிற பிராமணர்‌. களின்‌ கட்சிக்கொள்கை. திரு. இராமசாமி முதலியார்‌ இல்லாவிட்டால்‌ உதாரணமாக, ஒரு சமயம்‌ சட்டசபையில்‌ ஸ்ரீமான்‌ எ.இராமசாமி முதலியார்‌ இல்லாத சமயம்‌ பார்த்து “சுத்தவீரரான'! ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி “வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள ஒரு பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்‌ எலெக்ஷனில்‌ பிராமணரல்லாதாருக்காகப்‌ பிரயத்தனப்படுகிறார்‌. அவரைப்‌ பற்றி விசாரித்து அவரைத்‌ தூக்கில்‌ போட வேண்டும்‌. இது மகா முக்கியமான காரியம்‌. ஆதலால்‌ சட்ட சபையின்‌ மற்ற காரியங்களை கட்டி வைத்துவிட்டு இதைக்‌ கவனிக்க வேண்டும்‌” என்று ஒரு பெரிய தீர்மானம்‌ கொண்டு வந்தார்‌. தட்டிப்‌ பேச அதுசமயம்‌ அங்கு ஆளில்லை. பிரசிடெண்ட்‌ இந்த தீர்மானம்‌ ஒழுங்கானதா என்று கேட்டார்‌. இருபதாவது நூற்றாண்டின்‌ “மனு” வான சர்‌.சி.பி. ராமசாமி ஐயர்‌, “ஆஹா! மிகவும்‌ ஒழுங்கானது” என்று சொல்லி விட்டார்‌. சரியென்று சத்தியமூர்த்தி ஐயர்‌ வாதம்‌ தொடங்கிவிட்டார்‌. பிராமண ரல்லாத உத்தியோகஸ்தருக்கு சுருக்கு மாட்டியாய்‌ விட்டது; இழுப்பதுதான்‌ தாமதம்‌. இந்த சமயத்தில்‌ ஸ்ரீமான்‌ எ. இராமசாமி முதலியார்‌ சட்ட சபைக்குள்‌ நுழைந்தார்‌. என்ன நடக்கிறது என்று பார்த்தார்‌. நடக்கிற விஷயத்தைத்‌ தெரிந்து கொண்டார்‌. உடனே ஸ்ரீமான்‌ முதலியார்‌ எழுந்து, “அது நிரம்பவும்‌ முக்கியமான காரியம்‌. இதைச்‌ செய்து விட்டுத்‌ தான்‌ மற்ற காரியங்களைக்‌ கவனிக்க வேண்டும்‌. நானும்‌ இந்தத்‌ தீர்மானம்‌ கொண்டுவர வேண்டுமென்று தான்‌ இருந்தேன்‌. எனது நண்பர்‌ சத்தியமூர்த்தி கொண்டு வந்ததற்கு வந்தனம்‌. செலுத்துகிறேன்‌. சட்டமெம்பர்‌ இதை அனுமதித்ததற்கும்‌ வந்தனம்‌ செலுத்துகிறேன்‌” என்று சொல்லிவிட்டு “இன்னும்‌ இரண்டொரு நபர்கள்‌ பெயரையும்‌ அந்த ஜாப்தாவில்‌ சேர்த்துக்கொள்ளுங்கள்‌'” என்று சொல்லி, இரண்டொரு ஐயங்கார்‌ ஜில்லா முனிசீப்‌ பெயர்களையும்‌, ஐயர்‌ சப்‌ ஜட்ஜு பெயர்களையும்‌ சொன்னார்‌. உடனே சட்ட மெம்பருக்கும்‌ “வீரருக்கும்‌” நாக்கு வறண்டு போய்‌ பேச வாய்‌ வராமல்‌ திக்குமுக்காடி “வீரர்‌” சத்தியமூர்த்தி ஐயரை “மனு” ராமசாமி ஐயர்‌ பிரேரேபனையை வாபீஸ்‌ வாங்கிக்‌ கொள்ளும்‌ படி பல்லைக்‌ காட்டி கெஞ்ச ஆரம்பித்து விட்டார்‌. வீரரும்‌ பின்வாங்கிக்‌ கொண்டார்‌. மற்ற பொம்மைகளெல்லாம்‌ சிரித்தனர்‌. ஸ்ரீமான்‌ எ. இராமசாமி முதலியார்‌ அன்றையக்‌ கூட்டத்தில்‌ இல்லாதிருந்தால்‌ அந்தப்‌ பிராமண ரல்லாதார்‌ ஓலை “மனு” ஐயரால்‌ கிழிக்கப்பட்டே இருக்கும்‌. இதுதான்‌ சட்டசபை வேலை. குடி அரசு - 1926 N 384 மற்றொரு சமயம்‌ அபிஷியல்‌ ரெபரி (Offical ளிஸ)என்கிற சுமார்‌: மாதம்‌ 1000 ரூபாய்‌ சம்பளமுள்ள ஒரு உத்தியோகம்‌ தற்கால சாந்தியாய்‌ ஆக்கப்படும்‌ போது, சுயராஜ்யக்‌ கட்சி மெம்பர்கள்‌ ஆக்ஷேபித்தார்கள்‌. அது சர்க்கார்‌ மெம்பர்கள்‌ தயவில்‌ நிறைவேறி கடைசியாய்‌ ஒரு பிராமணருக்கு அந்த உத்தியோகம்‌ கொடுக்கப்பட்டு மறுபடியும்‌ அது காயமாக்க சட்ட சபைக்கு வரும்போது சுயராஜ்யக்‌ கட்சி மெம்பர்கள்‌ தாராளமாய்‌ நிறைவேறச்‌ செய்தார்கள்‌. ஏன்‌? அந்த உத்தியோகம்‌ ஒரு பிராமணருக்குக்‌ கிடைத்தது. சத்தியம்‌ தவறிய திகு. சத்தியமூர்த்தி மற்றொரு சமயம்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியும்‌ ஸ்ரீமான்‌ எ.இராமசாமி முதலியாரும்‌ சீமைக்குப்‌ போயிருந்தபோது, ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி, ஸ்ரீமான்‌ இராமசாமி முதலியாரைப்‌ பார்த்து “நம்‌ நாட்டிலுள்ள பிராமணர்‌ -பிராமண ரல்லாதார்‌ விஷயம்‌ வெள்ளைக்காரர்களிடம்‌ பேசக்‌ கூடாது: அதைப்பற்றி நமது நாட்டில்‌ பேசிக்‌ கொள்ளலாம்‌; இங்கு பேசினால்‌ எதிரிக்கு இளப்பமாய்ப்‌ போய்விடும்‌. நானும்‌ ஜஸ்டிஸ்‌ கக்ஷியைப்பற்றி பேசுவதில்லை” என்று கேட்டுக்‌ கொண்டாராம்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ அதற்கிணங்கி அங்கு இருக்கும்‌ வரை பிராமணரைப்‌ பற்றி ஒரு வார்த்தைகூடப்‌ பேசவில்லையாம்‌. ஸ்ரீமான்‌ முதலியார்‌ சீமையை விட்டுப்‌ புறப்பட்டு கப்பல்‌ ஏறியவுடன்‌ சத்தியமூர்த்தி ஐயர்‌ தாங்கள்‌ செய்துகொண்ட சத்தியத்தை மீறி மூட்டையை அவிழ்த்து விட்டாராம்‌. இவற்றைப்‌ பத்திரிகைகளில்‌ கூட நீங்கள்‌ பார்த்திருக்கலாம்‌. இம்மாதிரி கூட்டத்துடன்‌ போராடுவதென்றால்‌ லேசான காரியமல்ல. ஆதலால்‌ பிராமணரல்லாதார்‌ இதுசமயம்‌ சுயராஜ்யம்‌, உரிமை, விடுதலை, முட்டுக்கட்டை என்கிற போலி வார்த்தைகளைக்‌ கண்டு ஏமாந்து விடக்‌ கூடாது என்பதுதான்‌ என்னுடைய வேண்டுகோள்‌. சட்டசபையோ, முனிசிபாலிட்டியோ , இவைகளில்‌ ஏதாவது தேசத்‌ திற்கோ, சுயராஜ்யத்திற்கோ, ஏழை மக்களுக்கோ ஒரு பிரயோஜனமும்‌ தராது. அது ஒரு பதவி. அல்லாமலும்‌, தாழ்ந்து கிடக்கும்‌ பிற்போக்கடைந்திருக்கும்‌. வகுப்பார்‌ உயர்ந்த வகுப்பார்‌ என்பவர்கள்‌ காலில்‌ சிக்கி மிதிபடாமல்‌ இருப்ப தற்கு ஏதாவது வேண்டுமானால்‌ உபயோகப்படலாம்‌. அம்மாதிரி அதை உபயோகப்படுத்திக்‌ கொள்ள நம்பிக்கையும்‌ ஆசையும்‌ உள்ளவர்கள்‌, அப்‌ பதவிகளை தங்கள்‌ சமூகத்தில்‌ அக்கறை உள்ள சமூகத்தார்களுக்கு கொடுக்க வேண்டுமேயல்லாமல்‌ மற்றபடி சுயராஜ்யம்‌, தேசம்‌, உரிமை என்று எண்ணி ஏமாந்து சமூகக்‌ கவலையில்லாதவர்களுக்கோ பிராமணர்களுக்கோ கொடுக்கக்‌ கூடாது என்பதுதான்‌ நீங்கள்‌ கடைசியாக உணர வேண்டியது. சமூகமே பெரிது மெளலானாக்கள்‌ மகமதலி, ஷவுகத்தலி, கிச்சுலு போன்ற வீரர்களின்‌ அபிப்பிராயமென்ன? அவர்களைப்‌ பற்றி பிராமணப்‌ பத்திரிகைகள்‌ பலவாறு 385 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தூற்றினாலும்‌ அவர்கள்‌ பேரால்‌ துவேஷம்‌ உண்டாகும்படி எழுதினாலும்‌ அவர்கள்‌ தைரியமாய்ச்‌ சொல்லுவது என்ன? நமது சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின்‌ சுயமரியாதை தான்‌ முக்கியமானது என்கிறார்கள்‌.அதுபோலவே பிராமணரல்லாதாராகிய நமக்கு சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின்‌ சுய மரியாதைதான்‌ முக்கியமானது. உதாரணமாக, சட்டசபையில்‌ கல்பாத்தித்‌ தெருவில்‌ எல்லோரும்‌ நடக்கலாம்‌; அதாவது பொதுத்‌ தெருவில்‌ மகாராஜா சக்கரவர்த்தியின்‌ பிரஜைகள்‌ எல்லோருக்கும்‌ சம உரிமை உண்டு என்று தீர்மானம்‌ நிறைவேறிற்று. அடுத்த நாள்‌ “வேலை இருந்தால்தான்‌ போகலாம்‌” என்று பிராமண சட்டமெம்பர்‌ அத்‌ தீர்மானத்திற்கு வியாக்கியானம்‌ எழுதி விட்டார்‌. அந்த ஸ்தானத்தில்‌ ஸ்ரீமான்‌ ஆர்‌. வீரய்யன்‌ இருந்தால்‌ இந்தப்படி வியாக்யானம்‌ செய்திருப்பாரா என்று யோசித்துப்‌ பாருங்கள்‌. நமக்கு சுயராஜ்யம்‌ வந்தாலும்‌ இத்தகைய பிராமண சட்டமெம்பர்கள்‌ இப்படித்தானே வியாக்கியானம்‌ செய்வார்கள்‌. ஆதலால்‌ சுயராஜ்யம்‌ இல்லா விட்டாலும்‌ ஸ்ரீமான்‌ வீரய்யன்‌ போன்றவர்கள்‌ அந்த உத்தியோகத்திற்கு வரும்படியான வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இருந்தால்‌ சுயமரியாதை ஏற்படுமா? இல்லையா? சுயமரியாதை ஏற்படாமல்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவமும்‌ நம்பிக்கையும்‌ ஏற்படாமல்‌ நாம்‌ எப்படி சுயராஜ்யத்தைப்‌ பற்றி பேசமுடியும்‌? யார்‌ சம்மதிப்பார்கள்‌? நம்மிடமே சகல அதிகாரங்களையும்‌ சகல ராஜீயபாரத்தையும்‌ யாரா வது ஒப்புவித்து விடுவதாயிருந்தால்‌ பெற்றுக்கொள்ள நாம்‌ இப்போது தயாராயிருக்கிறோமா என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌. உதாரணமாக, இந்த நாட்டிற்கே இப்பொழுது வைஸ்ராயாக இருக்கும்‌ லார்டு இர்வின்‌ துரை: பட்டாள முத்திரையையும்‌ , கஜானா சாவியையும்‌ கொண்டுவந்து கொடுத்து நம்மை எடுத்துக்‌ கொள்ளச்‌ சொன்னால்‌, நம்மில்‌ எடுத்துக்கொள்ள யார்‌. சம்மதிப்பார்கள்‌? முதலாவது பிராமணர்கள்‌ வந்து எடுப்பார்கள்‌. அதை பிராமணரல்லாத ஹிந்துக்கள்‌ ஆதிதிராவிடர்கள்‌, மகமதியர்கள்‌, கிறிஸ்தவர்‌ கள்‌ முதலான வகுப்பார்‌ சம்மதிப்பார்களா? பிராமணரல்லாத ஹிந்துக்கள்‌ எடுத்துக்‌ கொள்ளுவதாயிருந்தால்‌ பிராமணர்கள்‌ சம்மதிப்பார்களா? பிராமண ௬ம்‌ பிராமணரல்லாதவர்களுமாகிய ஹிந்துக்கள்‌ ராஜியாய்‌ எடுத்துக்‌ கொள்ளுவதானால்‌ மகமதியர்‌ சம்மதிப்பார்களா? இந்த மூவரும்‌ சம்மதித்து ஒப்புக்கொண்டால்‌ கிறிஸ்தவர்கள்‌ சம்மதிப்பார்களா? இந்த நால்வரும்‌ ராஜியாய்‌ விட்டாலும்‌ தெருவில்‌ நடக்கவும்‌ குடிக்கத்‌ தண்ணீர்‌ மொள்ளவும்‌ கூட பாத்தியமில்லாமல்‌ வைத்திருக்கும்‌ ஆதி திராவிடர்‌ என்கிற கூட்டத்தார்‌. சம்மதிப்பார்களா? ஒவ்வொரு கூட்டத்தாரும்‌ இர்வின்‌ பிரபுவின்‌ காலைப்‌ பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர்‌, “ஐயா! இந்தப்‌ பாவிகளிடம்‌ ஒப்புவித்து விட்டுப்‌ போனால்‌ எங்கள்‌ கதி என்னாவது என்றும்‌ ஜாதி வித்தியாசமில்லாத ஜாதியாராகிய உங்கள்‌ ராஜீய பாரத்திலே நாங்கள்‌ “மிலேச்சர்‌”, நாங்கள்‌ “தாசி மக்கள்‌”, நாங்கள்‌ “அஞ்ஞானி” நாங்கள்‌ “முரடர்கள்‌”, நாங்கள்‌ தெருவில்‌ குடி அரசு - 1926 N 386 நடக்க - கண்ணில்‌ பார்க்க - கிட்டவர - சுவாமியைக்‌ கும்பிட முடியாத அவ்வளவு தாழ்ந்தவர்களாயிருக்கும்‌ போது, ஜாதித்‌ திமிர்‌, கூட்டத்‌ திமிர்‌, ஒற்றுமைத்திமிர்‌. அரசாங்கச்சலுகைத்‌ திமிர்‌ பிடித்த இவர்களிடத்தில்‌ பட்டாளத்தையும்‌, கஜானாச்‌ சாவியையும்‌ கொடுத்து விட்டுப்போனால்‌ எங்களை நாய்‌ பன்றிகளைவிட கேவலமாய்‌ நடத்துவார்கள்‌. கழுத்தில்‌ கயிறு கட்டி சந்தையில்‌ விற்பார்கள்‌. ஆதலால்‌, ஐயனே! நீங்கள்‌ போய்‌ விடாதீர்கள்‌” என்று ஒவ்வொருவரும்‌ குறுக்கே படுத்துக்‌ கொள்வார்களா இல்லையா? நீங்களே யோசித்துப்‌ பாருங்கள்‌. உங்களை ஏமாற்ற வாயில்‌ சுயராஜ்யம்‌, உரிமை, ஒற்றுமை என்று பேசுவதில்‌ என்ன பிரயோஜனம்‌? மகாத்மா இதை அறியாமலா தன்னை ஒரு வைஸிராய்‌ “சுயராஜ்யம்‌ என்றால்‌ என்ன? என்னதான்‌ வேண்டும்‌?” என்று கேட்ட காலத்தில்‌ “சுயராஜ்யம்‌ அடைய என்‌ ஜனங்கள்‌ இன்னமும்‌ தயாராக வேண்டும்‌. அதற்குத்தான்‌ நான்‌ தயார்‌ செய்து கொண்டு வருகிறேன்‌. அந்தத்‌ தயார்தான்‌ எனது நிர்மாணத்‌ திட்டம்‌” என்று சொன்னார்‌. நிர்மாணத்‌ திட்டம்‌ நிறைவேறாமல்‌ மகாத்மாவினாலேயே பெறுவ தற்குப்‌ பாரமாயிருந்த சுயராஜ்யம்‌, நிர்மாணத்‌ திட்டத்தைப்‌ புதைத்த நமது சீனிவாசய்யங்கார்‌ கோஷ்டிக்கு மிக லேசாய்ப்‌ போய்‌ விட்டதென்றால்‌ அதன்‌ தத்துவத்தை நீங்களே யோசித்துப்‌ பாருங்கள்‌. சுயராஜ்யம்‌ வந்தால்‌ நமது நிலை என்ன? மகமதியர்‌ நிலை என்ன? கிறிஸ்தவர்‌ நிலை என்ன? என்பது தீர்மானமாகிவிட வேண்டும்‌. இல்லாதவரை ஒருவரை ஒருவர்‌ கொன்றுத்‌ தின்பதுதான்‌ நமது நாட்டில்‌ நடைபெறும்‌. உத்தியோகமும்‌, அதிகாரமும்‌, பதவியும்‌ ஒருக்காலமும்‌ சுயராஜ்யமாகாது. சுயமரியாதையுடன்‌ ஒற்றுமை யால்‌ தாங்கள்‌ தங்கள்‌ ஜீவனத்திற்காக தங்கள்‌ தங்கள்‌ மனசாக்ஷியையும்‌ கற்பையும்‌ விற்காமல்‌ ஜீவனம்‌ செய்வதுதான்‌ சுயராஜ்யம்‌; இதற்கு நிர்மாணத்‌ திட்டந்தான்‌ முக்கியமானது. இவைகள்‌ எல்லாவற்றிலும்‌ கதரும்‌, தீண்டாமை ஒழிப்பதும்‌ மிகவும்‌ முக்கியமானது. ஆதலால்‌ நீங்கள்‌ ஒவ்வொருவரும்‌ கதர்‌ உடுத்துங்கள்‌; தீண்டாமையை அறவே ஒழியுங்கள்‌; வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டி எல்லோருடைய நம்பிக்கையையும்‌ பெறுங்கள்‌. இல்லாதவரை: துவேஷம்‌ வளர்ந்து கொண்டுதான்‌ வரும்‌. இப்போது பாமர ஜனங்களை ஏமாற்றி சிலர்‌ பதவிக்கு வந்துவிடுவதால்‌ அதனால்‌ ஏற்படும்‌ பலன்‌ பின்னால்‌ அவர்கள்‌ சந்ததியாருக்கு ஆபத்தாய்‌ முடியும்‌ என்பதை ஞாபகத்தில்‌ வையுங்‌ கள்‌. ஆதலால்‌ எல்லோரும்‌ ஒன்று கூடி ஒரு திட்டம்‌ போட்டு ஒருவருக்‌ கொருவர்‌ நம்பிக்கை உண்டாக்கி பிற்கால வாழ்வை பயமற்றதாக்கிக்‌ கொள்ளுங்கள்‌. குறிப்பு- கோயமுத்தூர்டவுன்ஹால்‌ மைதானத்தில்‌ தென்‌இந்தியநலஉரிமைச்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ 3005.26 இல்‌ நடத்தப்பட்ட மகாநாட்டில்‌ சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 15.06.1926 387 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 ஞாகணோதயம்‌ (உண்மை உணர்ச்சி) சென்ற வாரம்‌ தலையங்கத்தில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி லால்குடியில்‌ செய்த பிரசங்கத்தை 37 பிரிவுகளாய்ப்‌ பிரித்து அவற்றில்‌ 12 பிரிவுகள்‌ வரைக்கும்‌ பதில்‌ எழுதிவிட்டு மீதி 25 பிரிவுகளுக்கும்‌ “நவசக்தி”க்கும்‌ இவ்வாரம்‌ பதிலெழுதுவதாயிருந்‌ தோம்‌. அல்லாமலும்‌ ஸ்ரீமான்‌ எஸ்‌.சீனிவாசய்யங்கார்‌ கம்பெனியார்‌ கோபிச்‌ செட்டிபாளையத்தில்‌ நடத்திய ஓட்டு வேட்டை நாடகத்தைப்‌ பற்றியும்‌ இவ்வாரம்‌ எழுத நினைத்திருந்தோம்‌. நாம்‌ கொஞ்சமும்‌ எதிர்பாராத விதமாய்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ தனது “நவசக்தி” தலையங்கத்தில்‌ “பட்டம்‌ கூடாது” என்கிற தலைப்பில்‌ தனது கையொப்பத்‌ துடன்‌ எழுதியுள்ள விஷயமும்‌, அதை அநுசரித்து ஸ்ரீமான்‌ டாக்டர்‌ வரத ராஜுலு நாயுடு அவர்கள்‌ பத்திரிகையாகிய “தமிழ்நாடு” பத்திரிகையின்‌ தலையங்கத்தில்‌ “பட்ட வேட்டை” என்ற தலைப்பின்‌ கீழ்‌ எழுதியுள்ள விஷயமும்‌ இவ்‌ வாரத்திய முக்கிய சம்பவமாகக்‌ கருதி “நவசக்திக்கு பதில்‌ எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து முன்‌ குறிப்பிட்ட விஷயங்களை ஒத்தி வைத்துவிட்டு இவற்றைப்பற்றி எழுதவேண்டிய அவசரமும்‌ அவசியமும்‌ வந்து விட்டது. ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ பொதுக்‌ கூட்டத்திலோ நிர்வாகக்‌ கூட்டத்திலோ அடியிற்‌ கண்ட தீர்மானத்தைக்‌ கொண்டுவர உறுதி கொண்டிருப்பதாய்‌ அவரது பத்திரி கையில்‌ காணக்கிடக்கின்றது.அதாவது:- 1 காங்கிரஸில்‌ சேரும்‌ ஒவ்வொருவரும்‌ என்றும்‌ எவ்வேளையிலும்‌ கதர்‌ தரித்தே தீர வேண்டும்‌. குறிப்பிட்ட சிலபோழ்து கதர்‌ தரித்தல்‌ என்னும்‌ விதி நீக்கப்படல்‌ வேண்டும்‌. 2. சட்டசபைத்‌ தலைவர்‌ பதவி வகித்தல்‌, அரசாங்க தொடர்புடைய கூட்டங்களில்‌ கலத்தல்‌, பட்டமேற்றல்‌ இன்னோரன்ன பிற விலக்கப்‌ படல்‌ வேண்டும்‌. இப்பதவிகளேற்றுள்ள அன்பர்கள்‌ உடனே அவைகளில்‌ இருந்து விலகிவிடல்‌ வேண்டும்‌. இன்னோரன்ன பிற என்பது “அரசாங்கத்தார்‌ தயவால்‌ பெறும்‌ நியமனம்‌” ஆகிய இவைகள்‌ குடி அரசு - 1926 N 388 3. தேர்தல்‌ காலங்களில்‌ நாட்டுக்குரிய அறநெறியை கடைப்பிடித்து ஒழுகுதல்‌ வேண்டும்‌. இவற்றை ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களால்‌ ஸ்ரீமான்‌ ஈ.வெ. இராமசாமி நாயக்கர்‌ அக்கிராசனம்‌ வகித்த திருவண்ணாமலை மாகாண மகாநாட்டிலும்‌, ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களே அக்கிராசனம்‌ வகித்த காஞ்சீபுரம்‌ மாகாண: மகாநாட்டிலும்‌ வலியுறுத்தப்‌ பட்டதை பொது ஜனங்கள்‌ அறிவார்கள்‌. ஆனால்‌ இந்நிபந்தனைகள்‌ இம்மாகாண மகாநாடுகளுக்கு அடுத்தடுத்து கூடிய காங்கிரஸ்களினால்‌ நிராகரிக்கப்பட்டும்‌ போயிற்று. ஆயினும்‌ தமிழ்‌ நாட்டு பிராமணர்கள்‌ தங்கள்‌ கட்சிக்கு ஆள்‌ சேர்ப்பதற்காக மாகாண மகா நாடுகளில்‌ ஒப்புக்‌ கொள்ளுவதும்‌, எல்லா இந்திய காங்கிரசில்‌ தங்கள்‌ செல்‌ வாக்கைக்‌ கொண்டு இவற்றை உதறித்‌ தள்ளிவிடுவதுமாகவே நடந்து வந்திருக்கிறது. ஆன போதிலும்‌ இந்தக்‌ கூட்டத்தார்‌, ஸ்ரீமான்‌ முதலியார்‌. போன்றவர்களை தாங்கள்‌ உபயோகித்துக்‌ கொள்ளுவதற்காகவே “உங்கள்‌ இஷ்டப்படியே செய்யலாம்‌”. “ உங்கள்‌ இஷ்டப்படியே செய்யலாம்‌” என்று ஆசை வார்த்தை சொல்லி அவர்களை ஏமாற்றி தங்கள்‌ சுவாதீனப்படுத்தி வந்திருக்கிறார்கள்‌. பல நாளைய திருடன்‌ ஒரு நாளைக்கு அகப்படுவான்‌ என்பது போல்‌ தமிழ்நாட்டின்‌ சார்பாய்‌ ஐயங்கார்‌ கூட்டத்தாரால்‌ ஸ்ரீமான்கள்‌ நாயுடுகார்‌, முதலியார்‌ ஆகியவர்கள்‌ பெயரால்‌ சட்டசபைக்குப்‌ பொறுக்கி எடுத்த ஆள்களின்‌ யோக்கியதையைப்‌ பார்த்தவுடன்‌ ஐயங்கார்‌ கோஷ்டியின்‌ தந்திரம்‌ ஸ்ரீமான்கள்‌ முதலியாரவர்களுக்கும்‌, நாயுடுகாருக்கும்‌ ஞானோதய மாகி விட்டதென்றே சொல்லுவோம்‌. இவர்கள்‌ எவ்வளவுதான்‌ சகித்துக்‌ கொண்டு இன்னமும்‌ பார்க்கலாம்‌, இன்னமும்‌ பார்க்கலாம்‌ என்று பொறுமை காட்டி வந்தாலும்‌ பிராமணர்களின்‌ அளவுக்கு மீறிய சூழ்ச்சியானது ஸ்ரீமான்‌ முதலியாரின்‌ மனசாக்ஷியை வெல்ல முடியவில்லை. ஆதலால்‌ இனி பொறுமை காட்டுவது தமிழ்‌ மக்களுக்கு ஆபத்தாய்‌ முடியும்‌ என்பதை உணர்ந்து, இப்போது ஸ்ரீமான்கள்‌ முதலியாரவர்களுக்கும்‌ நாயுடுகாருக்கும்‌ ஐயங்கார்‌ கூட்டத்தை இரண்டிலொன்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்‌. அதாவது, “சட்டசபையில்‌ ஒத்துழையாமையா? சட்டசபையில்‌ உத்தி யோகமா?” என்பதுதான்‌. இதன்‌ பலனாய்‌ நாயக்கரை காங்கிரஸ்‌ நிர்வாக சபையை விட்டு வெளி யேற்று முன்னமே ஸ்ரீமான்கள்‌ முதலியாரும்‌ நாயுடுகாருமே வெளியேற ஏற்படுமென்றே நினைக்கிறோம்‌. அவ்வாறு நேரும்‌ போது, நாம்‌ நமது முழு ஆதரவுடன்‌ அவர்களைப்‌ பின்பற்றத்‌ தயாராயிருக்கிறோம்‌. ஏனெனில்‌ ஐயங்‌ கார்‌ கோஷ்டியானது ஒருக்காலும்‌ சட்டசபையில்‌ முதலியார்‌ கோரும்‌ ஒத்துழையாமைக்குச்‌ சம்மதிக்காது. ஐயங்கார்‌ கோஷ்டி அகராதியில்‌ ஒத்துழையாமைக்குப்‌ பொருள்‌ சட்டசபையில்‌ பிராமணரல்லாத மந்திரிகளை விரட்டி விட்டு, பிராமண மந்திரிகளோ அல்லது ஐயங்கார்‌ சொல்லுகிறபடி ஆடுகிற மந்திரிகளோ அமர்ந்து பிராமணாதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான்‌ 389 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 என்பது உலகமறிந்ததாகும்‌. இப்போது ஸ்ரீமான்கள்‌ முதலியார்‌ அவர்கள்‌. கோருவது போலும்‌, நாயுடுகார்‌ கோருவது போலும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியோ, நிர்வாக சபையோ தீர்மானிக்குமானால்‌ முதலாவதாக ஸ்ரீமான்‌ கள்‌ ராவ்பஹதூர்‌ டி.எ. இராமலிங்கம்‌ செட்டியார்‌ அவர்களும்‌, சி.வி.வெங்‌ கிட்டரமணய்யங்கார்‌ அவர்களும்‌ காங்கிரசின்‌ சார்பாய்‌ நிற்க முடியாது. இருவரும்‌ பட்டத்தையும்‌, நியமனத்தையும்‌ முறையே விட வேண்டியதுதான்‌. ஒருசமயம்‌ விட்டாலும்‌ விடுவார்கள்‌; அல்லது பணம்‌ சிலவு செய்யலாம்‌ என்கிற தைரியத்தால்‌ காங்கிரஸையே விட்டுவிட்டு தனியாய்‌ நின்றாலும்‌ நிற்பார்கள்‌ என்றே வைத்துக்‌ கொண்டாலும்‌, இவைகளாலேயே ஐயங்கார்‌ கோஷ்டிக்கு ஸ்ரீமான்கள்‌ முதலியார்‌ நாயுடுகார்‌ உபத்திரவம்‌ தீர்ந்து போகாது என்றே தோன்றுகிறது. ஏனெனில்‌ மாதம்‌ 4000 ரூபாய்‌ வரும்படி உள்ள சட்ட சபைத்‌ தலைவர்‌ உத்தியோகத்தையும்‌ விட்டுவிடும்படி வேண்டுகிறார்கள்‌. இது முடியவே முடியாது என்றுதான்‌ நினைக்கிறோம்‌. ஆதலால்‌ இவ்வாரம்‌ மிகுதி போற்றற்குரிய வாரமேயாகும்‌. மற்றபடி “குடி அரசு' பத்திரிகை, ஸ்ரீமான்கள்‌ முதலியார்‌, நாயுடுகார்‌ ஆகியவர்களைப்‌ பற்றி கொஞ்சமும்‌ தயவு தாக்ஷணியம்‌, பழய விஸ்வாசம்‌ என்பவைகளைக்‌ கவனியாமல்‌ தாக்கி எழுதி வந்ததை வாசகர்கள்‌ அறிந்திருப்பார்கள்‌. அவை எதுவும்‌ ஸ்ரீமான்கள்‌ கலியாணசுந்தர முதலியார்‌ அவர்களையும்‌, டாக்டர்‌. நாயுடுகாரையும்‌ சொந்தத்தில்‌ உத்தேசித்தல்லவென்பதும்‌, பட்டம்‌ உத்தி யோகம்‌ பெறும்‌ பிராமணர்களுக்கு அநுகூலமாய்‌ இருக்கிறார்களேயென்று நினைத்தேயல்லாமல்‌ வேறல்ல என்பதையும்‌ எல்லோரும்‌ அறிந்திருப்பார்‌. கள்‌. முதலியாருக்கும்‌, நாயுடுகாருக்கும்‌, நாயக்கருக்கும்‌ சொந்தத்தில்‌ எவ்வித அபிப்பிராய பேதமோ, சந்தேகமோ, குரோதமோ, விரோதமோ உண்மையாய்‌ இல்லை யென்றே சொல்லுவோம்‌. ஆனால்‌ பிராமணர்கள்‌ போல்‌ தங்கள்‌ தங்கள்‌ கொள்கையை கட்டி வைத்து தங்கள்‌ சுயநலத்திற்கு ஒன்று கூடி ஒற்றுமையாய்‌ வேலை செய்வதென்ற குணம்‌ பிராமணரல்லா தாருக்குள்‌' இல்லவே இல்லை. உதாரணமாக, ஸ்ரீமான்கள்‌ சி.ராஜகோபாலாச்சாரியார்‌, எஸ்‌.சீனிவாசய்‌ யங்கார்‌. சர்‌. சி.பி. ராமசாமி அய்யர்‌ ஆகிய மூவரும்‌ ராஜீய விஷயத்தில்‌ ஒரே கொள்கையிலில்லை. ஆனால்‌ தங்கள்‌ சமூக சுயநல விஷயத்தில்‌ மூவரும்‌ ஒன்று சேர்ந்து உழைக்கிறார்கள்‌. ஸ்ரீமான்‌ ராஜகோபாலாச்சாரியார்‌ வைதீக ஒத்துழையாதார்‌ என்று சொல்லிக்‌ கொண்டு தன்னாலேயே, “அயோக்கியன்‌” “துரோகி” என்று சொல்லப்பட்ட பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுக்க எவ்வளவு குரல்‌, எவ்வளவு நாடகம்‌, எவ்வளவு சம்பாஷணை, எவ்வளவு சூழ்ச்சி, எவ்வளவு தூரம்‌ தன்‌ மனசாட்சியை விற்று ஒத்துழையாமை தத்துவத்‌ தால்‌ அடைந்து பலனை உபயோகித்தல்‌ முதலிய காரியங்கள்‌ பாலும்‌ பழமும்‌ சாப்பிடுவது போல்‌ செய்துவருகிறார்‌. இந்தியாவிலுள்ள பிராமணர்களிலெல்‌ லாம்‌ பிராமணரல்லாதாருக்குக்‌ கொடுமை செய்வதில்‌ பண்டித மாளவியாவை குடி அரசு - 1926 N 390 விட முன்னிற்கிறார்‌. ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ எவ்வளவு பணம்‌ சிலவு செய்கிறார்‌? எத்தனை பேர்‌ காலில்‌ விழுகிறார்‌? எத்தனை பேர்‌ தனக்கு அயோக்கியர்‌ என்று தெரிந்தாலும்‌ அவர்களுக்கு நல்ல வார்த்தை சொல்லி ஏமாற்றி அவர்களுக்குப்‌ பணம்‌ கொடுத்து வேலை செய்கிறார்‌. ஸ்ரீமான்‌ சர்‌. சியி.ராமசாமி அய்யர்‌ ஷெ இரண்டு அய்யங்கார்களுக்கும்‌ முற்றும்‌ மாறுபட்ட வர்‌. ஒருவருக்கொருவர்‌ எவ்வளவோ குரோதத்தோடு இருந்தவர்கள்‌. பிராமணர்‌ நன்மை என்கிற விஷயத்தில்‌ கொஞ்சமும்‌ தங்கு தடையின்றி ஒருவருக்‌ கொருவர்‌ உள்‌ ஆளாயிருந்து கொண்டு ஒருவரை ஒருவர்‌ கைதூக்கி விட்டு உத்தியோக விஷயத்திலும்‌ எவ்வளவோ அநுகூலமாகவும்‌, ஒற்றுமையாக வும்‌ எவ்வளவோ காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொள்ளுகிறார்கள்‌. பிராமணரல்லாதாரிலே ஒரு நாயுடு, ஒரு முதலியார்‌, ஒரு நாயக்கர்‌ ஆகிய மூவருக்குள்‌ ஒருவருக்கொருவர்‌ உத்தியோகப்‌ போட்டியில்லை; தலைவர்‌ போட்டியில்லை; வியாபாரப்‌ போட்டியில்லை: சொந்த விரோத மில்லை; சந்தேகமில்லை; கொள்கையிலும்‌ வித்தியாசம்‌ இல்லை. ஆனால்‌ மூன்று பேருக்கும்‌ ஒருவருக்கொருவர்‌ ஒற்றுமையில்லை: நாயக்கருக்கும்‌ நாயுடுகாருக்கும்‌ ஒற்றுமையில்லை; நாயுடுகாருக்கும்‌ முதலியாருக்கும்‌ ஒற்றுமையில்லை; முதலியாருக்கும்‌ நாயக்கருக்கும்‌ ஒற்றுமையில்லை. அய்யங்கார்‌ கோஷ்டியார்‌ இப்படி பிரித்து வைத்துவிட்டு நன்னிலத்தில்‌ பேசும்‌ போது, “முதலியார்‌ “மாரீசன்‌”, அவரை காங்கிரசை விட்டு ஒழிக்க வேண்டும்‌.சென்னையில்‌ பேசும்‌ போதுநாயுடு மாறிவிட்டார்‌. அவரை வெளி யாக்கி காங்கிரசை பரிசுத்தப்‌ படுத்தவேண்டும்‌”. கோபியில்‌ பேசும்‌ போது நாயக்கரை இன்னும்‌ காங்கிரஸில்‌ வைத்திருக்கிறீர்களே, இது உங்களுக்கு தர்மமா? என்று கேட்பதுமாயிருக்கிறார்கள்‌. இதன்‌ காரணமென்ன? நமது கொள்கை கள்‌ ஒன்றாயிருந்தாலும்‌ நம்மை ஒன்று சேர விடாமல்‌ பிரித்து வைத்து தனித்தனியாக சுலபமாய்‌ கொன்றுவிடுவதற்கு செய்த சூழ்க்ஷி யல்லாமல்‌ வேறென்ன? கடைசியாக, நாம்‌ வாசகர்களுக்கு விண்ணப்பம்‌ செய்து கொள்ளுவ தென்னவென்றால்‌, ஸ்ரீமான்‌ முதலியாரவர்களைப்பற்றி நாம்‌ எழுதியதெல்‌ லாம்‌ ஸ்ரீமான்‌ முதலியாருக்கு பிராமணர்களின்‌ யோக்கியதை தெரிந்திருந்தும்‌ அவர்களைப்‌ பற்றி நமக்குக்‌ கூட தெரியாத பல விஷயங்கள்‌ நமக்கு சொல்லியிருந்தும்‌, பின்னும்‌ பின்னும்‌ பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்‌ பிராமணர்களுக்கு உதவி செய்கிறாரே, இது காங்கிரஸ்‌ கொள்கையை பிரதான மாய்‌ மதித்து காங்கிரசுக்கு பக்தி காட்டுவதன்‌ மூலம்‌ நடந்து கொள்ளுவதா யிருந்தாலும்‌ அது குடியிருந்த வீட்டிற்கு நெருப்பு வைப்பது போன்ற பலனைக்‌ கொடுக்கின்றதே என்கிற ஆத்திரத்தினாலேயே அல்லாமல்‌ வேறல்ல. இப்போது அவர்கள்‌ வெளியிட்டிருக்கும்‌ கொள்கையும்‌ அதையே கடை பிடிக்கப்‌ போவதாய்‌ குறிப்பிட்டிருக்கும்‌ உறுதியும்‌ நமது மனதைக்‌ கவர்ந்து விட்டது. கொள்கை காரணமாகவே ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்களை: 391 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நாம்‌ தாக்க நேர்ந்ததும்‌, நம்மை ஸ்ரீமான்‌ முதலியார்‌ அவர்கள்‌ தாக்க நேர்ந்தது மாகும்‌. இப்போது இருவர்‌ கொள்கையும்‌ ஒன்றென்றே தெரிவதால்‌ இனி ஒருவரை ஒருவர்‌ தாக்க நேராது என்பதையும்‌ வாசகர்களுக்குச்‌ சொல்ல வேண்டியதில்லை. ஆனால்‌ நமது அய்யங்கார்‌ கோஷ்டிக்கும்‌ மற்றும்‌ பார்ப்பன கோஷ்டிக்கும்‌ தென்னாட்டு காந்தியாய்‌, உண்மை அந்தணராய்‌, உத்தமப்‌ பிராமணராய்‌, தியாக மூர்த்தியாய்‌ விளங்கிய ஸ்ரீமான்‌ திரு.வி.கலி யாணசுந்தர முதலியார்‌ அவர்கள்‌ இனி எப்படித்‌ தோன்றுவாரோ அறிவோம்‌. ஒரு சமயம்‌ “சூத்திரராகவும்‌', “தேசத்‌ துரோகியாகவும்‌” தோன்றினாலும்‌ தோன்றலாம்‌. நாயக்கருக்கு ஒரு அண்ணனாகத்‌ தோன்றினாலும்‌ தோன்ற லாம்‌.யார்‌ எப்படி நினைத்தாலும்‌ பழய ஒத்துழையாமையும்‌ நிர்மாணத்‌ திட்ட மும்‌ நாட்டில்‌ அமலுக்கு வரும்காலத்தில்‌ முதலியாரும்‌, நாயுடுகாரும்‌, நாயக்‌ கரும்‌ முன்‌ போல்‌ ஒன்று கூடி தங்கள்‌ தங்களாலான கருமங்களைச்‌ செய்ய கொஞ்சமும்‌ அஞ்ச மாட்டார்கள்‌. அதுவரை கோவில்‌ நெல்லுக்குப்‌ பெருச்‌ சாளிகள்‌ அடித்துக்‌ கொள்வது போல்‌ பிராமணர்கள்‌ பிழைக்க, உத்தியோகம்‌ சம்பாதிக்க, ஆதிக்கம்‌ பெற நாம்‌ ஒருவருக்கொருவர்‌ காங்கிரசின்‌ பெயரால்‌ போட்டி போட்டு சண்டை போட்டுக்‌ கொள்ளாமல்‌ ஒற்றுமையுடன்‌ சும்மா இருந்தால்‌ அதுவே பிராமணரல்லாதாரின்‌ நல்ல காலம்‌ என்றே சொல்லு வோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 13.06.1926. குடி அரசு - 1926 N 392 ஒரு 6சதி திருவாரூர்‌ திருத்‌ தியாகராசரின்‌ திருத்தேர்‌ திருத்‌ தீக்கிரையாயிற்று தியாகராஜ பெருமானின்‌ தேரானது 9626 - ௨ தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக்‌ கேட்க இந்துக்களில்‌ பலர்‌ மிகுதியும்‌ துக்கப்படுவார்கள்‌.ஆனால்‌ நாம்‌ அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக்கிறோம்‌. தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும்‌ விட மிகப்‌ பெரியது திருவா ரூர்‌ தேரேயாகும்‌. இதை இழுத்துச்‌ செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங்‌ களும்‌ 5000 த்துக்குக்‌ குறையாமல்‌ பதினாயிரம்‌ ஆட்கள்‌ வேண்டும்‌. இவர்‌ கள்‌ படிச்‌ செலவும்‌ சுமார்‌ 20,000 ரூபாய்க்குக்‌ குறையாதென்றே சொல்லலாம்‌. தற்காலமுள்ள நிலைமையில்‌ இவ்வளவு ஆர்ப்பாட்டம்‌ எதற்கு? இதை நினைக்கும்போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது:- ஒரு குருவுக்கு நான்கு சிஷ்யர்கள்‌ இருந்தார்கள்‌. ஒரு நாள்‌ குரு வானவர்‌ கடையில்‌ ஊசி வாங்கிக்கொண்டு வரும்படி தன்‌ நான்கு சிஷ்யர்‌. களிடம்‌ கட்டளையிட்டார்‌. அவர்கள்‌ ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும்‌ வாங்கிவர கட்டளையிட்டிருக்க ஒருவர்‌ மாத்திரம்‌ இதை எடுத்துப்‌ போனால்‌ கோபித்துக்‌ கொள்ளுவார்‌ என்று ஒரு நீண்ட பனைமரத்‌ துண்டில்‌ ஊசியைக்‌ குத்தி நால்வரும்‌ வழிநெடுக இறக்கி இறக்கி சுமந்துச்‌ சென்று குருவை அடைந்ததும்‌ அவர்‌ அறியும்படி தொப்பென்று போட்டு ஊசியைத்‌ தேடி காணாமல்‌ போகவே நடந்ததைச்‌ சொன்னார்கள்‌. குரு கோபித்துக்‌ கொண்டு, உங்களுக்குள்ள பக்திக்குத்‌ தகுந்த புத்தியில்லையென்று சொல்லி, வேறொரு ஊசி வாங்கி பனைமரத்தோடு சேர்த்துக்‌ கயிறால்‌ கட்டித்‌ தூக்கி வரும்படி கட்டளையிட்டார்‌. உடனே அவர்கள்‌ இதனால்‌ ஒரு நல்ல புத்தி கற்றுக்‌ கொண்டதாக சந்தோஷித்து மறுபடியும்‌ ஊசி வாங்க கடைக்குப்‌ போகும்‌ போது, ஒருவன்‌ குரு ஊசிக்கு மாத்திரம்‌ காசு கொடுத்தாரேயல்லாமல்‌ கயிறு வாங்க காசுக்கு என்ன செய்கிறது என்று கேட்க மற்றவர்கள்‌ “தோஷம்‌, தோ ஷம்‌ இதெல்லாம்‌ நினைக்கவே கூடாது; நினைப்பது குருத்‌ துரோகமாகும்‌” என்று சொல்லி நினைத்ததற்குப்‌ பிராயச்சித்தம்‌ செய்து கொண்டார்கள்‌. 393 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அதே போலிருக்கிறது திருவாரூர்‌ தேரில்‌ சுவாமியை வைத்து இழுக்கும்‌ கதை.தேசம்‌ வறுமைப்‌ பிணியால்‌ வதையற்று கல்வியற்று சிறுமைச்‌ செயலால்‌ சீரழிந்து இருக்கும்‌ இதுகாலை 2000 வேலி நிலமுள்ள தியாகராஜ சுவாமிகளின்‌ தேர்‌ உற்சவத்திற்குச்‌ சிலவிடும்‌ பணத்தைக்‌ கொண்டு தொழிலா லயங்களும்‌ கல்லூரிகளும்‌ அமைத்து வறுமைப்‌ பிணியால்‌ வாடும்‌ மக்க ளுக்கு வேலை கொடுத்து போஷித்தும்‌, கல்வி போதித்து சன்மார்க்க பேதாம்‌ புரிந்துவர பிரயோஜனப்படுத்தலாகாதோ? குடி அரசு - துணைத்‌ தலையங்கம்‌ - 13.06.1926 குடி அரசு - 1926 N 394 ST கடமை யாங்மாண்‌ எஸ்‌.சீணிவாச ஊமைங்கார்‌ ராவிணாமா செய்ணாரா? இல்லாதவரை அவரை ராசணாமா செய்யும்பம வற்புறுத்த வேண்டும்‌ -சித்திரபுத்திரன்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவர்‌ ஸ்ரீமான்‌ சீனிவாச ஐயங்கார்‌ தமிழ்‌ மக்களின்‌ மதிப்பை இழந்து விட்டார்‌. பார்ப்பனரல்லாதாரை எப்படியாவது ஒடுக்கி. பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும்‌ என்கிற கெட்ட எண்ணம்‌ கொண்டு மகாத்மா காந்தியின்‌ கருத்துக்கு விரோதமாகவும்‌, காங்கிரஸின்‌ அடிப்படையான கொள்‌ கைகளுக்கு விரோதமாகவும்‌, வேண்டுமென்றே சர்க்கார்‌ பட்டதாரிகளையும்‌. சர்க்கார்‌ நியமன கெளரவ உத்தியோகம்‌ பெற்றவர்களையும்‌ காங்கிரசுக்குள்‌ புகுத்திக்‌ கொண்டு, அவர்களை சட்டசபைக்கு அபேக்ஷகர்களாக நிறுத்தியும்‌, அவர்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுக்க காங்கிரஸையும்‌, காங்கிரஸ்‌ பணத்‌ தையும்‌ உபயோகித்துக்‌ கொண்டு வருவதின்‌ நிமித்தம்‌ காங்கிரஸின்‌ மதிப்பும்‌ யோக்கியதையும்‌ குறைந்து வருவதோடு காங்கிரஸை திருத்த முடியாத நிலைமையில்‌ கொண்டு போய்‌ விட்டுக்‌ கொண்டிருப்பதாலும்‌, காங்கிரஸ்‌ என்பதே பொது நலத்திற்கல்லாமல்‌ ஒரு வகுப்பாரை அழித்து, மற்றொரு வகுப்பாரை ஆதிக்கம்‌ பெறச்செய்ய நிரந்தரமான ஆயுதமாக ஆக்கப்படுகிற படியாலும்‌, தமிழ்நாட்டில்‌ பார்ப்பனரல்லாத பெரும்பான்மையோர்க்கு ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரிடம்‌ நம்பிக்கைக்‌ குறைவு அதிகரித்துவிட்டது. ஆதலால்‌ ஸ்ரீமான்‌ அய்யங்கார்‌ அவர்களைக்‌ கண்ணியமாய்‌ விலகிக்‌ கொள்ள வேண்டுகிறேன்‌. அப்படிக்கில்லாத வரை ஆங்காங்குள்ள பார்ப்பன. ரல்லாத காங்கிரஸ்‌ வாதிகள்‌ மகாநாடு கூட்டி ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரிடம்‌ தங்க ளுக்கு நம்பிக்கை இன்மையைத்‌ தெரிவிப்பதோடு, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டியின்‌ தலைமையை இராஜீனாமா செய்துவிடவேண்டும்‌ என்று தீர்மானம்‌ செய்தனுப்ப வேண்டியது. அப்படி அவர்‌ செய்யாதவரை: 395 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 தமிழ்நாடு மாகாண கமிட்டி கூட்டுவித்து, ஸ்ரீமான்‌ ஐயங்காரைத்‌ தள்ளிவிட்டு, வேறு தலைவரை நியமிக்க வேண்டியது. அப்படிச்‌ செய்யாதவரை: காங்கிரஸினால்‌ பார்ப்பனரல்லாதார்கள்‌ மிகுதியும்‌ துன்பமடைய நேரிடும்‌. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌ நிர்வாகக்‌ கமிட்டியில்‌ இராஜீனாமா செய்து விட்டார்‌; ஸ்ரீமான்‌ திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும்‌, தான்‌ இராஜீனாமா செய்து தீரவேண்டிய நிலைமையை ஏற்படுத்திக்‌ கொண்டார்‌: ஸ்ரீமான்‌ ஈவெ. இராமசாமி நாயக்கரும்‌ காங்கிரஸை விட்டு விட்டதாகத்தான்‌ முடிவு கட்ட வேண்டியிருக்கிறது. இனி யார்‌ காங்கிரஸில்‌ இருக்கிறார்கள்‌? மற்றபடி காங்கிரசுக்கு உழைத்த பார்ப்பனல்லாதார்கள்‌ கமிட்டிக்கு வேண்டுமானால்‌ கூலிக்கு ஆள்‌ பிடித்தால்‌ தான்‌ உண்டு. ஆகையால்‌ பார்ப்பனரல்லாதார்‌ இது சமயம்‌ உறங்கக்‌ கூடாது. குடி அரசு - கட்டுரை - 20.06.1926. குடி அரசு - 1926 N 396 வகுப்புவாரி பிரதிநிதித்துவம்‌ II சென்ற வாரத்திற்கு முன்‌ 5-ம்‌ இதழ்‌ தலையங்கத்தில்‌ “வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ 1' என்ற தலைப்பின்‌ கீழ்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி லால்குடியில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தைப்‌ பற்றி கூறின ஆக்ஷபனைகளை 37 பாகங்களாக வகுத்து, அவற்றுள்‌ முதல்‌ 2 பாகங்களுக்கு மட்டிலும்‌ தக்கவாறு பதில்‌ எழுதியிருந்தோம்‌. மிஞ்சிய 25 பகுதிகளுக்கும்‌ இவ்வாரம்‌ சில எழுத முற்பட்டுள்ளோம்‌. அவையாவன- 1B - வது, ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி, தற்சமயம்‌ நடக்கும்‌ வகுப்பு மகாநாடு களைப்‌ பார்த்தால்‌ அரசாங்க விஷயமாக யார்‌ என்ன நினைக்கிறார்கள்‌ என்றே தெரியவில்லை என்கிறார்‌. இதை தைரியமாய்‌ ஒப்புக்கொண்டதற்கு நன்றி செலுத்துகிறோம்‌. இவற்றிலிருந்து நாடெங்கும்‌ வகுப்புணர்ச்சி மலிந்திருப்பதும்‌ அக்காரணத்‌ தால்‌ அரசாங்கத்தைப்‌ பற்றி ஜனங்களுக்கு அவ்வளவு கவலை இல்லை என்பதும்‌ புலனாகிறது. ஆதலால்‌ “இரண்டொருவர்‌ தங்களது சுயநலத்திற்காக வகுப்பு துவேஷத்தைக்‌ கிளப்பி விடுகிறார்களேயல்லாமல்‌ பொது மக்களிடம்‌ அவ்வுணர்ச்சி இல்லை” என்று பிராமணப்‌ பத்திரிகைகள்‌ சொல்லுவது யோக்கியப்‌ பொறுப்பற்றத்தனமென்பதும்‌, நாடு பூராவும்‌ அதே கவனத்தில்‌ இருக்கிறதென்பதும்‌ நன்கு புலனாகும்‌. ஏன்‌ அப்படி வகுப்புக்‌ கவலையில்‌ இருக்கிறது என்று யோசிப்போமானால்‌, ஒரு வகுப்பாருக்கு மற்றொரு வகுப்‌ பார்‌ செய்யும்‌ கொடுமையும்‌ சூழ்ச்சியும்‌ தாங்க முடியாமலேயே யல்லாமல்‌ வேறென்னவென்று சொல்லமுடியும்‌? 14-வது, ஒவ்வொரு வகுப்புக்குள்ளும்‌ உப வகுப்புகள்‌ ஏற்படுவதால்‌ பிரதிநிதித்துவம்‌ எல்லையில்லாமல்‌ போகும்‌ என்கிறார்‌. இதற்கு ஆதாரமில்லை. அப்படியிருப்பதாக வைத்துக்‌ கொண்டாலும்‌ பாதகமில்லையென்றே சொல்லுவோம்‌. ஆனால்‌ தமிழ்நாட்டில்‌ இந்துக்களும்‌ மூன்று வகுப்புதான்‌ இதுபோழ்ந்து வகுக்கப்பட்டிருக்கிறது. இதை அரசாங்கம்‌ முதல்‌ பிராமணர்‌ மற்றும்‌ பலர்‌ ஈறாக எல்லோராலும்‌ ஒப்புக்கொள்ளப்‌ பட்டிருக்கிறது. அதாவது:- (அ) பிராமணர்‌ என்று சொல்லிக்‌ கொள்ளப்பட்ட நமது நாட்டுப்பார்ப்பனர்‌. 397 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 (ஆ) க்ஷத்திரியர்‌, வைசியர்‌, சூத்திரர்‌ என்று பார்ப்பனர்களால்‌ சொல்லப்பட்ட பார்ப்பரைல்லாதார்‌. @ பஞ்சமர்‌ என்றும்‌, தீண்டக்கூடாதவர்‌ என்றும்‌, சண்டாளர்‌. என்றும்‌ பார்ப்பனர்களால்‌ பெயரிடப்பட்ட ஆதி திராவிடர்கள்‌. இம்மூன்று வகுப்புக்களுக்குத்தான்‌ இப்போது வகுப்பு வாரியாகப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்கப்படுகிறது. இப்போதுள்ளவையும்‌ இம்மூன்று வகுப்பு களேயாகும்‌. இதைவிட அதிகப்‌ பிரிவுகள்‌ ஏற்பட ஆதாரமில்லை. வகுப்பு வித்தியாசங்களின்‌ அஸ்திவாரமெல்லாம்‌ ஒருவன்‌ உயர்ந்தவன்‌, மற்றவன்‌ தாழ்ந்தவன்‌ என்கிற உயர்வு தாழ்வு வித்தியாசத்தைக்‌ கொண்டதேயல்லாமல்‌; செட்டியார்‌, நாயுடு, நாயக்கர்‌, முதலியார்‌, பிள்ளை, கவுண்டர்‌, உடையார்‌, நாடார்‌, தேவர்‌, ஐயர்‌, ஐயங்கார்‌ என்கிற பட்டத்தை ஆதாரமாகக்‌ கொண்ட தல்ல என்பதை ஞாபகத்தில்‌ வைத்துக்கொள்ளவேண்டும்‌. பல காரணங்களால்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கூடாது என்று சொல்லும்‌ ஸ்ரீமான்‌ திரு.வி.கலியாணசுந்தர முதலியார்‌ போன்றவர்களும்‌ இம்‌ மூன்று பிரிவையே ஒப்புக்கொள்ளுகிறார்கள்‌. சர்க்காரும்‌ இம்மூன்று பிரிவை ஒப்புக்கொண்டிருக்கிறது. பார்ப்பனர்களும்‌ இம்மூன்று பிரிவை ஒப்புக்‌ கொண்டு, மாண்டேகு - செம்ஸ்‌ போர்டு சீர்திருத்தத்தின்‌ கீழ்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஒரு வகையில்‌ வழங்கி இருக்கிறது. காங்கிரசும்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டு முஸ்லீம்களுக்குக்‌ கொடுத்ததோ டல்லாமல்‌,மகாத்மாவும்‌ ஒப்புக்கொண்டு காங்கிரஸ்வாதிகளிலேயே முஸ்லீம்‌ களுக்கும்‌ கிறிஸ்தவர்களுக்கும்‌, தாழ்ந்த வகுப்பார்‌ என்போர்களுக்கும்‌ பிரதிநிதித்துவம்‌ பிரித்து கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி விதிகளில்‌ 8-வது விதியில்‌ அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டிக்கு உள்ள 25 ஸ்தானங்களில்‌ மகம்மதியர்களுக்கு நான்கு, கிறிஸ்தவர்களுக்கு ஒன்று, தீண்டாதவர்‌ என்கிற வகுப்பினருக்கு ஒன்று என்று பிரித்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ்‌ கமிட்டி என்பது தற்சமயம்‌ எப்படியிருந்தாலும்‌ மகாத்மா தலைமையின்‌ போது அதுதான்‌ இந்தியாவின்‌ அரசியல்‌ ஸ்தாபனம்‌. அதைத்தான்‌ இந்திய தேசிய பார்லிமெண்ட்‌ என்றும்‌ சொன்னோம்‌. அதில்‌ வகுப்பையும்‌ பிரித்து பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திய பிறகும்‌ இந்திய தேசீய சமூகம்‌, சிறப்பாய்‌ தமிழ்நாடு தேசீய சமூகம்‌ முழுவதும்‌ ஒப்புக்‌ கொண்டு அதனால்‌ யாதொரு இடையூறுமில்லாமல்‌ தேசீய காரியங்கள்‌ நடந்து வரும்போதும்‌, ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்திக்கு எல்லையில்லாமல்‌ போய்விடும்‌ என்கிற பயம்‌ அப்பொழுது ஏற்படாமல்‌ இப்பொழுது ஏற்பட்ட காரணம்‌ என்ன என்பது தெரியவில்லை. 5-வது, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஏற்பட்டதானால்‌ சட்டசபைகள்‌ வகுப்புக்‌ காட்சியாய்‌ முடியும்‌ என்கிறார்‌. குடி அரசு - 1926 N 398 இந்தியா தேசமெங்கும்‌ வகுப்புக்‌ காட்சியாய்‌ இருக்கும்‌ போது அதற்கு ஏற்பட்ட சட்டசபை அதைப்‌ போலவே தான்‌ இருக்க முடியும்‌. அப்படிக்‌ கில்லாமல்‌ எல்லா வகுப்புக்கும்‌ ஒரே வகுப்பார்‌ பிரதிநிதியாய்‌ இருக்கிறார்கள்‌ என்றால்‌, இந்தியாவை இந்தியர்களின்‌ நன்மைக்கு இந்தியர்களே ஆள வேண்டும்‌ என்று கூறுவதற்கும்‌, இந்தியாவிற்கு முழு சுதந்திரம்‌ வேண்டும்‌ என்று கேட்பதற்கும்‌ பொருள்‌ என்ன? வகுப்பு நன்மையைப்‌ பற்றி கவலை யில்லை, ஜாதியைப்‌ பற்றி கவலையில்லை என்று சொல்லுவோமானால்‌ உத்தியோகத்தை ஐரோப்பிய மயமாய்‌ இருப்பதைக்‌ களைந்து இந்திய வகுப்பு மயமாய்‌ ஆக்கவேண்டும்‌ என்று நாம்‌ ஏன்‌ பிரயத்தனப்பட வேண்டும்‌? ஐரோப்பியர்களை விரட்டி விட்டு அவர்களுடைய உத்தியோகத்தைப்‌ பார்ப்பனர்கள்‌ அதுபவிக்கவா? அல்லாமல்‌ இந்தியர்கள்‌ அநுபவிக்க என்று சொன்னால்‌, இந்தியர்கள்‌ என்றால்‌ என்ன? பல மதம்‌ பல வகுப்புகள்‌ கொண்‌ டது. அப்படியானால்‌ எல்லா மதங்களும்‌, எல்லா மதஸ்தரும்‌, எல்லா வகுப்‌ பினரும்‌ ஆளுவதுதான்‌ இந்தியர்‌ ஆளுகை, இந்தியர்‌ அநுபவம்‌ என்று சொல்லலாம்‌. 16 -வது, (இதைக்‌ கொடுத்தால்‌) இதோடு நிற்காமல்‌ உத்தியோகங்‌ களிலும்‌ ஸ்தல ஸ்தாபனங்களிலும்‌, கல்வி போர்டுகளிலும்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்பார்கள்‌ என்கிறார்‌. ஆம்‌, கேட்போம்‌. வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவத்தின்‌ தத்துவமே அதுதான்‌. பல வகுப்பார்கள்‌ கொண்ட இந்தியாவின்‌ ராஜரீக உத்தியோகத்‌ திற்கு ஒரு வகுப்பார்‌ மாத்திரம்‌ எப்படி வார்சுதாரர்களாக ஆகக்‌ கூடும்‌? “ஐயோ! கேட்பார்களே!” என்று ஏன்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தி ஆத்திரப்பட வேண்டும்‌? யார்‌ வீட்டுச்‌ சொத்து? “பிச்சைக்கு வந்தவன்‌ பெண்ணுக்கு மாப்பிள்ளையா” என்பது போல்‌ ஸ்ரீமான்‌ சத்தியமூர்த்தியின்‌ வகுப்புக்கு இந்திய உத்தியோகத்தில்‌ ஏக போக பாத்தியமேது? உத்தியோகங்களிலும்‌, ஸ்தல ஸ்தாபனங்களிலும்‌, கல்வி போர்டிலும்‌ கண்டிப்பாய்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இருப்பதாயிருந்தால்‌ தான்‌ இந்தியா இந்தியர்களால்‌ ஆளப்பட வேண்டும்‌ என்று கேட்க உரிமை உண்டு. அதிலும்‌ கல்வி போர்டில்தான்‌ கண்டிப்பாய்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்‌ டும்‌. அதில்‌ சரியான பிரதிநிதித்துவம்‌ இல்லாததால்தான்‌ இன்றைய தினம்‌ பிராமணரல்லாதாரும்‌ சிறப்பாய்‌ தீண்டாதார்‌ என்போரும்‌ நமது நாட்டில்‌ இவ்வளவு கேவலமான நிலைமையிலிருக்கக்‌ காரணம்‌. கல்வி இலாக்காவை எடுத்துக்‌ கொண்டால்‌ வைஸ்சான்சலர்‌ ஒரு சிவசாமி ஐயர்‌, செனட்‌ மெம்பர்‌. களோ பல சீனிவாச ஐயங்கார்கள்‌, சர்வகலாசாலை அங்கத்தினர்களோ பல ராமசாமி சாஸ்திரிகள்‌, கல்வி இலாக்கா இன்ஸ்பெக்டர்களோ பல பிராமண சாஸ்திரி சர்மாக்கள்‌, தலைமை உபாத்தியாயர்களோ பல ஐயர்‌, ஐயங்கார்‌. ஆச்சாரியார்‌, சர்மா சாஸ்திரிகள்‌. இவற்றின்‌ செலவுக்கு பணம்‌ மாத்திரம்‌ கவுண்டர்‌, முதலியார்‌, செட்டியார்‌, உடையார்‌, நாயக்கர்‌, நாயுடு, பிள்ளை, 399 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நாடார்‌, கோனார்‌ முதலியவர்கள்‌ தங்கள்‌ குடித்தனம்‌ கெடும்படி கள்ளும்‌ சாராயமும்‌ குடித்துக்‌ கொடுக்க வேண்டும்‌. சர்க்கார்‌ அந்த வரும்படி யிலிருந்தே செலவு செய்ய வேண்டும்‌. இத்தனைப்‌ பார்ப்பன ஓநாய்களையும்‌ தப்பி பார்ப்பனரல்லாத பறையர்‌, பள்ளர்‌, சாம்பன்‌, புலையன்‌, சக்கிலிநாயக்கர்‌, கவுண்டர்‌, பிள்ளை, முதலியார்‌, சாயபு, இன்னாசிமுத்து முதலிய ஆட்டுக்‌ குட்டிகள்‌ கல்வியில்‌ உருப்படி ஆவதென்றால்‌ லேசான காரியமா? இவ்வருஷம்‌ ஒரு பள்ளியின்‌ அரிவிரி வகுப்பில்‌ 98 பார்ப்பனரல்லாத குழந்தைகளும்‌ 2 பார்ப்பன குழந்தைகளுமாகச்‌ சேர்ந்து படிக்குமானால்‌ இன்றைக்கு 14-வது வருஷம்‌ இவர்களின்‌ படிப்பைக்‌ கவனித்தால்‌ 98 பார்ப்ப னப்பிள்ளைகள்‌ 2 பார்ப்பனரல்லாத பிள்ளைகள்‌ வீதமாகவே பி.ஏ.வகுப்பில்‌ படித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌ இதன்‌ காரணமென்ன? கல்வி இலாக்கா போர்டில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ இல்லாததுதான்‌. அல்லாமல்‌ வேறு காரணம்‌ என்ன சொல்லக்கூடும்‌? பிராமணரல்லாத பிள்ளைகளுக்குப்‌ புத்தி யில்லை என்று சொல்லிவிடமுடியுமா? ஒவ்வொரு இலாக்காவிலும்‌ பள்ளிக்‌ கூடங்களிலும்‌ வகுப்புப்படி உபாத்தியாயர்களை நியமித்தால்‌ கண்டிப்பாய்‌ எல்லா வகுப்புப்‌ பிள்ளைகளும்‌ சமமாக படிக்க வசதி ஏற்படும்‌. இப்போது கல்வி இலாக்காவில்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ ஏற்படாத காரணமே பிராமணரல்லாதார்‌ கல்வி கற்காமலிருப்பதற்கும்‌, முக்கியமாக, தேசத்திற்கு உபயோகமான கல்வி ஏற்படாமலிருப்பதற்கும்‌, கற்ற கல்வியும்‌ அடிமைத்‌ தனத்திற்கும்‌ இழி தன்மைக்கும்‌ நீச்ச புத்திக்கும்‌ சுயநலத்திற்கும்‌ உதவவும்‌ கொடுமையான சூழ்ச்சி முறையை ஏற்படுத்துவதற்கும்‌ காரணமாயிருந்து வருகிறது. நமது நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள்‌ “அந்நிய அரசாங்‌ கத்தார்‌: நமது நாட்டுக்குக்‌ காவற்காரர்களாய்‌ ஏற்பட்டவர்களோ நமது பார்ப்ப னர்கள்‌; கொள்ளைக்காரர்களும்‌ காவற்காரர்களும்‌ ஒன்றுபட்டு விட்டால்‌ நமது கதி என்னவாகுமென்பதை சொல்ல வேண்டுமா? 17-வது, 18-வது, உத்தியோகம்‌ பெற்றால்‌ பெற்றவருக்குத்தான்‌ நன்மை யே தவிர வகுப்புக்கு நன்மையில்லை என்கிறார்‌. மேலும்‌, 19, 20-ல்‌ ஒவ்வொரு வகுப்பைச்‌ சேர்ந்த உத்தியோகஸ்தரும்‌ தங்கள்‌ வகுப்புக்கு என்ன நன்மை செய்வது என்று எண்ணுவார்களே தவிர தேசத்தைக்‌ கவனிக்க மாட்டார்கள்‌ என்றும்‌ சொல்லுகிறார்‌. இங்கு முன்னுக்குப்‌ பின்‌ முரண்படப்‌ பேசியுள்ளார்‌ என்பது வாசகர்‌. களுக்கே தெரியும்‌. ஒவ்வொரு வகுப்பாரும்‌ தத்தம்‌ வகுப்பைப்‌ பார்த்துக்‌ கொண்டுதான்‌ தேசத்தைப்‌ பார்க்க முடியும்‌. அவரவர்‌ பெண்டு பிள்ளை களைப்‌ பட்டினி போட்டு வைத்துவிட்டு பிராமணர்களுக்கு சமாராதனை செய்தால்‌ அதைப்போல முட்டாள்தனமான காரியம்‌ வேறொன்று இருக்காது. பல வகுப்புகள்‌ சேர்ந்ததுதான்‌ நம்‌ நாடு. ஒவ்வொரு வகுப்பும்‌ அதனதன்‌ குடி அரசு - 1926 N 400 நன்மையை நூடிவிட்டால்‌ எல்லா வகுப்பும்நன்மையை அடைந்து விட்டதாகி விடும்‌. அப்போது நாடு முழுவதும்‌ நன்மையை அடைந்ததாகிவிடும்‌. 18-வது, நூற்றுக்கு ஐந்து பேருக்கு மேல்‌ உத்தியோகம்‌ கொடுக்க முடியாது என்கிறார்‌. அப்படியே வைத்துக்‌ கொள்வோம்‌. அந்த நூற்றுக்கு ஐந்து வீதத்‌ தையே வகுப்பு எண்ணிக்கைக்குத்‌ தகுந்த வீதம்‌ வைத்துக்‌ கொள்ளுவதில்‌ ஆக்ஷபனைஎன்ன? 21-வது, ஸ்தல ஸ்தாபனம்‌, கல்வித்துறை இவைகளுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அனணாவஸ்யம்‌ என்கிறார்‌ . இதனால்‌ மற்ற துறைகளுக்கு அவசியம்‌ என்பதை இவரே ஒப்புக்‌ கொள்ளுகிறார்‌. ஸ்தல ஸ்தாபனத்திற்கும்‌ கல்வித்துறைக்கும்‌ மாத்திரம்‌ இவர்‌. ஏன்‌ பயப்பட வேண்டும்‌? முன்‌ சொன்னது போல பிராமணர்களின்‌ அட்டூழி யத்திற்கு அவர்களுக்கு முக்கிய ஆதாரமாயிருப்பது கல்வித்துறையே. ஆத லால்‌ எது போனாலும்‌ அதுமாத்திரம்‌ தங்கள்‌ கையை விட்டுப்‌ போகக்கூடாது என்று இவ்வளவு தூரம்‌ மாயக்‌ கண்ணீர்‌ வடிக்கிறார்‌. 22 - வது, தாழ்ந்த வகுப்புக்குநியமனமே போதுமென்கிறார்‌. அப்படிப்‌ போதாவிட்டால்‌.... 23 - &, அவர்கள்‌ ஓட்டுரிமையை தாராளமாக்கி மற்ற தொகுதிகளுடன்‌ சமமாய்‌ தேர்தல்‌ நடத்துவது நலம்‌ என்கிறார்‌. இவைகளில்‌ இருக்கும்‌ திருட்டுத்தனம்‌ படிப்பவருக்கு விளங்காமல்‌ போகாது. அதாவது தாழ்ந்த வகுப்பாரை சர்க்கார்‌ நியமனத்தையே எதிர்பார்த்‌ துக்‌ கொண்டிருக்கும்படி செய்து விட்டால்‌ பிராமணரல்லாதாருடன்‌ சேர மாட்டார்கள்‌ என்கிற தந்திரம்‌ ஒன்று. தாழ்ந்த வகுப்பாரின்‌ ஓட்டுரிமையைத்‌ தாராளமாக்கி வைத்துவிட்டால்‌ அவர்களைத்‌ தங்களோடு சேர்த்துக்‌ கொண்டு ஏமாற்றி அந்த ஓட்டின்‌ பலனாயும்‌ பிராமணரல்லாதார்‌ தலையில்‌ கையை வைத்துவிட்டு எல்லா ஸ்தானங்களையும்‌ தாங்களே அபகரித்துக்‌ கொள்ள லாம்‌ என்கிற தந்திரம்‌ மற்றொன்று. மற்றவைகளுக்கு மறுமுறையில்‌ எழுதுவோம்‌. குடி அரசு - கட்டுரை - 20.06.1926. 401 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கணி தாமதம்‌ வேண்டாம்‌ தற்கால காங்கிரஸையும்‌ சுயராஜ்யக்‌ கட்சியையும்‌ பார்ப்பன ஆதிக்கத்‌ திற்காக தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனர்களால்‌ சிருஷ்டிக்கப்பட்ட சூழ்ச்சி ஸ்தாபன மென்று பல தடவைகளில்‌ எழுதி வந்திருக்கிறோம்‌. ஆனால்‌ அது சமயம்‌ சிலர்‌ நம்மீது காய்ந்து வந்தார்கள்‌. எனினும்‌ சீக்கிரத்தில்‌ நாட்டிற்கு உண்மை நிலை வெளியாகுமென்றே அவற்றில்‌ கவனம்‌ செலுத்தாமல்‌ நமது கருத்தை ஒளியாது வெளியிட்டு வந்தோம்‌. இப்போது நமது கருத்தைத்‌ தழுவி மற்றும்‌ இரண்டொரு ஆதரிப்புகள்‌ நேர்ந்திருப்பது பற்றி நாம்‌ கழிபேருவகை அடைகின்றோம்‌. அவ்விரு பெரும்‌ ஆதரிப்புகளும்‌ திருவாளர்களான திரு. வி.கலியாணசுந்தர முதலியார்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌ ஆகியவர்‌. களின்‌ உண்மை உணர்ச்சிகளினின்றி எழுந்தவைகளேயாகும்‌. திரு. முதலியாரவர்கள்‌ பார்ப்பனத்‌ தலைவரான திரு. சீனிவாசப்‌ பார்ப்பனருக்கு விடுத்துள்ள இறுதிக்‌ கடிதத்திலும்‌, பார்ப்பனக்‌ கமிட்டியான காங்கிரஸ்‌ கமிட்டிக்கு அனுப்பியுள்ள தீர்மானத்திலும்‌ * (தீர்மான நகலை மற்றோர்‌ பக்கத்தில்‌ காண்க! தொக்கியிருப்பது என்ன? தெளிந்த சிந்தையுடன்‌ சுருக்கமாயும்‌ நுட்பமாயும்‌ நோக்குங்கால்‌ அதன்‌ உண்மை புலனாகும்‌. அஃதாவது “தங்களது (ஐயங்கார்‌ தலைமையில்‌ நடக்கும்‌ இயக்கத்தில்‌ ஒத்துழையாமைத்‌ தத்துவம்‌ காணக்‌ கிடைக்கவில்லை; சில சுயநலப்‌ புலிகள்‌ ஒத்துழைப்பு நாட்டங்‌ கொண்டு காங்கிரஸை வயப்படுத்திக்‌ கொண்டார்கள்‌. நான்‌ இதை அறியாமல்‌ உங்களையெல்லாம்‌ நம்பி மோசம்‌ போயினேன்‌. இதுகாலை விழித்துக்‌ கொண்டேன்‌; விடை தாருங்கள்‌” என்பதேயாம்‌. டாக்டர்‌ வரதராஜுலு நாயுடுகார்‌ அவர்களோ இப்‌ பார்ப்பனர்களிடம்‌ ஆதிமுதல்‌ நம்பிக்கையில்லாதிருந்தும்‌ “தேசம்‌” “தேசம்‌” என்னும்‌ பெயரால்‌ தன்னால்‌ இயன்றவரை இப்பார்ப்பனர்களையும்‌, அவர்‌ தம்‌ சூழ்ச்சி முறை களையும்‌ ஆதரித்தே வந்தார்‌. எவ்வளவு ஆதரித்தும்‌ டாக்டர்‌ நாயுடுகார்‌ கண்ணுக்கு தேசம்‌ உருப்படுவதாய்‌ தோன்றாததோடு, தன்னையே பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஒரு ஆயுதமாய்‌ உபயோகித்துக்‌ கொள்ளுவதாகவே தோன்றி விட்டது. ஆதலால்‌ அவர்‌ விடை கேளாமலே விலகிவிட்டார்‌. அஃதாவது, தமிழ்நாடு கமிட்டியிலிருந்து ஒரே முடிவாய்‌ விலகிக்‌ கொண்டார்‌. அவரது ராஜினாமாக்‌ கடிதத்தில்‌ தொக்கியிருப்பது யாதெனில்‌ * * (இதையும்‌ மற்றோர்‌ பக்கத்தில்‌ காண்க! “பார்ப்பன ஆதிக்கத்திற்காக காங்கிரஸை உபயோகித்துக்‌ குடி அரசு - 1926 N 402 கொண்டு நீங்கள்‌ செய்யும்‌ காரியத்திற்கு நான்‌ உடந்தையாயிருக்க முடியாது” என்பதேயாம்‌. யோக்கியமான பார்ப்பனரல்லாதாருக்கு இனி என்ன சான்று வேண்‌: டும்‌? எனினும்‌ இவைகள்‌ இப்படியே முடிவுறுமா? இவர்கள்‌ இந்‌ நிலையிலே இருக்க நமது பார்ப்பனர்கள்‌ விட்டுவிடுவார்களா? எனப்‌ பலர்‌ ஐயுறலாம்‌. ஏனெனில்‌ நமது பார்ப்பனத்‌ தலைவர்களின்‌ மோட்டார்‌ வாகனங்களும்‌ அவசரத்‌ தந்திகளும்‌ இராயப்பேட்டைக்கும்‌ குற்றாலத்திற்கும்‌ பறந்து கொண்‌ டிருக்கின்றன. மீண்டும்‌ அவர்களை இழுத்து சேற்றில்‌ நுழைத்து மிதித்தாலும்‌ மிதிப்பார்கள்‌. எது எவ்வாறாயினும்‌ ஆக அதன்‌ முடிவைப்‌ பற்றி இனி நமக்கு கவலையில்லை... ஆனால்‌, “காங்கிரஸ்‌ கட்டளை”, “காங்கிரஸ்‌ கட்டளை” என்றும்‌ “தேசத்திற்கு ஏதாவது ஒரு தேசீய காரியம்‌ வேண்டாமா?” என்றும்‌ “இப்‌ போது உள்ள இயக்கங்களில்‌ சுயராஜ்யக்‌ கட்சி ஒன்றே முற்போக்குள்ள கட்சியாய்‌ - நாணயமுள்ள கட்சியாய்‌ - கட்டுப்பாடான கட்சியாய்‌ இருக்கிற” தென்றும்‌ சொல்லிக்கொண்டு பார்ப்பனர்களைத்‌ தொடர்ந்து நடந்து தூது சென்று வயிறு வளர்த்த தரகர்களான தேச பக்தர்கள்‌, தேசீயத்‌ தொண்டர்கள்‌, காங்கிரஸ்‌ பிரசாரகர்கள்‌ ஆகியோரின்‌ கதி என்னவாகுமென்பதே இது போழ்து நம்மிடை எழுந்த வினா. உண்மையிலேயே இப்பொல்லாப்‌ பார்ப்ப னர்களின்‌ சூழ்ச்சிகளை அறியாமல்‌ திரு. முதலியார்‌, டாக்டர்‌ நாயுடுகார்‌. முதலிய தலைவர்களைப்‌ போன்று நம்பி மோசம்‌ போன சுயநலம்‌ பேணாத உண்மை தேசப்‌ பக்தர்கள்‌, தொண்டர்கள்‌, பிரசாரகர்கள்‌ சிலர்‌ இருக்கலாம்‌. அன்னோரும்‌ இவர்களைப்‌ போன்றே இனி விழித்துக்‌ கொள்வார்‌ என நம்புகிறோம்‌. இதுவரை நாம்‌ தனித்து நின்று இப்போலி இயக்கத்தையும்‌ பார்ப்பனர்‌ தம்‌ சூழ்ச்சியையும்‌ தாக்கியதன்‌ பயனாக நம்மைப்‌ பலர்‌ போற்றி யிருப்பினும்‌, சிலர்‌ தூற்றலுக்கும்‌, பொய்ப்‌ பழிகளுக்கும்‌, வசைமொழிகளுக்‌ கும்‌ உள்ளாகியிருக்கும்‌ விஷயம்‌ வாசகர்களுக்கு விளங்கியிருக்கலாம்‌. அது பற்றி ஒரு சிறிதும்‌ நாம்‌ கவலையுறவில்லை. சர்க்காரைத்‌ தாக்குபவருக்கு சிறைவாசமும்‌, நமது பார்ப்பனரைத்‌ தாக்குபவர்களுக்கு பழிச்சொல்லும்‌ கிடைக்காமற்‌ போகா.. சர்க்காருக்குப்‌ பலமிருக்கின்றமையான்‌ அவர்கள்‌ தைரியமாய்‌ முன்‌ வந்து நம்மைப்‌ பிடித்துத்‌ தண்டித்துச்‌ சிறைக்கனுப்புகிறார்கள்‌. ஆனால்‌, நமது பார்ப்பனர்களுக்கோ அத்தகைய பலமில்லை. சூழ்ச்சியும்‌ தந்திரமுமே அவர்களது பலம்‌.அதையே அவர்கள்‌ உபயோகித்து வெல்லப்‌ பார்ப்பார்கள்‌. அம்முறையில்‌ தாங்களும்‌ தங்களால்‌ ஆகாத சமயங்களில்‌ சில “ஓட்டு” களுக்கும்‌ “காலி” களுக்கும்‌ பணம்‌ கொடுத்துத்‌ தூற்றவும்‌ பொய்ப்பழி சுமத்தவுமே செய்யக்கூடும்‌. இவை அனைத்தையும்‌ எதிர்பார்த்தே நாம்‌ இத்துறையில்‌ இறங்கினோமேயன்றி, நம்மை இப்பார்ப்பனர்கள்‌ பூஜிப்பார்கள்‌. என்ற அவாவுடன்‌ இறங்கினோமில்லை. எனவே, இப்பழிகளாலும்‌ 403 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 குழ்ச்சிகளாலும்‌ நமக்கு எவ்வித கஷ்டமோ அன்றி நஷ்டமோ ஏற்படினும்‌ அவற்றையும்‌ தைரியத்துடன்‌ சகித்தே தீருவோம்‌. இனியும்‌ நமது சொந்த நஷ்டம்‌, கஷ்டம்‌, நமக்கு நாணயக்‌ குறைவு முதலியன ஏற்படுத்த வேண்டும்‌ என்பதாகச்‌ செய்யும்‌ பழிப்‌ பிரசாரத்தின்‌ பலன்‌ ஆகிய இவையனைத்தையும்‌ இக்கருமத்திற்கு ஆகுதியாய்விடத்‌ தயாராகவே இருக்கிறோம்‌. நாம்‌ எடுத்துக்‌ கொண்ட கருமம்‌ நமக்கு பெரிதேயன்றி அதன்‌ பலனாய்‌ நமது கதி என்ன வாகும்‌ என்பது நமக்குப்‌ பெரிதல்ல. ஆதலால்‌ நமது நண்பர்களும்‌ அதைப்‌ பற்றி கவலையுற வேண்டியதில்லை. நண்பர்கள்‌ நம்மை ஆதரித்து எழுதிய பல கட்டுரைகளைப்‌ பிரகரிக்காதது பற்றி பொறுத்தருள வேண்டுகிறோம்‌. இந்நிலைமையில்‌ தமிழர்களான பார்ப்பனரல்லாதார்‌ இனிச்‌ செய்ய வேண்டியது என்னவென்பதுதான்‌ நாம்‌ இது போழ்து முக்கியமாய்க்‌ கவனிக்‌ கத்தக்கது. பார்ப்பனர்கள்‌ முன்னேற்றத்திற்கு காங்கிரஸ்‌, ஹிந்து மகாசபை, வருணாஸ்ரம தர்ம சபை ஆகிய எத்தனையோ ஸ்தாபனங்கள்‌ இருக்கின்றன. மற்றும்‌ வேறு எத்தகைய பொது நலச்‌ சபைகள்‌ என்று ஏற்படுத்தினாலும்‌ அவற்றிற்குள்ளும்‌ தாங்கள்‌ நுழைந்து கொண்டு அவற்றையும்‌ தங்கள்‌. வயப்படுத்திக்‌ கொள்ளுகிறார்கள்‌. பார்ப்பனரல்லாதாருக்கோ இவ்வுலகிலேயே “தென்‌ இந்திய நல உரிமைச்‌ சங்கம்‌” என்கிற ஸ்தாபனம்‌ ஒன்றே சென்னையிலிருக்கிறது. அதுவும்‌ நல்ல வேளையாய்‌ பார்ப்பனர்களைச்‌ சேர்ப்பதில்லையென்ற விதி விலக்குடனிருப்பதால்‌ அதைப்‌ பார்ப்பனர்கள்‌ வசப்படுத்திக்‌ கொள்ள இயலாது போயிற்று. ஆயினும்‌ பார்ப்பனர்களின்‌ எவ்வளவோ சூழ்ச்சிகளால்‌ அதைத்‌ தலையெடுக்கவொட்டாமல்‌ அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதை. அடியோடு ஒழிப்பதற்காகவே, பார்ப்பனரல்லாதாரில்‌ சிலரை வயப்படுத்தி, சிலவுக்குப்‌ பொருள்‌ கொடுத்து ஏற்பாடு செய்து, சென்னை மாகாண சங்கத்‌ தைத்‌ தோற்றுவித்து அதனாலான கொஞ்ச சகாயத்தையும்‌ சாதித்துக்கொண்ட பிறகு இவர்களின்‌ சூழ்ச்சி வெளியாகும்‌ சமயம்‌ பார்த்து அதை ஒழித்து ஆகவே, இப்போது பார்ப்பனரல்லாதாருக்கென சமூகவியலுக்கும்‌, அரசியலுக்கும்‌ ஸ்தாபனம்‌ வேண்டுமானால்‌ ஜஸ்டிஸ்‌ கட்சி எனப்படும்‌ தென்னிந்திய நலஉரிமைச்‌ சங்கமாகிய மிதவாதக்‌ கொள்கை கொண்ட ஸ்தாபனம்‌ ஒன்றேயிருக்கிறதென்று கூறினோம்‌. ஆதலால்‌, பார்ப்பனரல்‌. லாதார்‌ சமூக நன்மையையும்‌ தீவிர அரசியல்‌ கொள்கையையும்‌ விரும்பு கிறவர்கள்‌ அத்தென்னிந்திய நல உரிமைச்‌ சங்கமான ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌: சேர்ந்து அதை சுவாதீனப்படுத்திக்‌ கொண்டு, அதினின்றே தீவிர கிளர்ச்சி செய்தல்‌ வேண்டும்‌. அக்கட்சியினிடத்து வெறுப்பு இருக்குமேயானால்‌ சமூகவியலுக்கும்‌, அரசியலுக்கும்‌ பொதுவான கொள்கைகளை அமைத்து “தேசீயப்‌ பார்ப்பனரல்லாதார்‌ கழகம்‌” என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதன்‌ வாயிலான்‌ இக்காரியங்களை நடத்தல்‌ வேண்டும்‌. இஃதல்லாது பார்ப்பனர்‌: குடி அரசு - 1926 (N 404 மெச்சும்படி ஜஸ்டிஸ்‌ கட்சியை திட்டுவதும்‌ பார்ப்பனரல்லாதார்‌ மெச்சும்படி பிராமணியத்தைத்திட்டுவதுமான குள்ளநரி வேலை இனி உதவவே உதவாது. உறுதியாய்‌. தைரியமாய்‌, ஆண்மையுடன்‌ வெளி வந்து தான்‌ ஆகவேண்டும்‌. நமது நோக்கமும்‌ கருத்தும்‌ என்னவென வாசகர்கள்‌ அறிய விரும்பு வரேல்‌ பார்ப்பனல்லாதார்‌ சமூக முன்னேற்றங்‌ கருதி உழைக்கும்‌ தென்னிந்‌ திய நல உரிமைச்‌ சங்கத்தைக்‌ கைப்பற்றி, அதில்‌ மகாத்மாவின்‌ நிர்மாணத்‌ திட்டத்தைப்‌ புகுத்தி, அதையே பார்ப்பனரல்லாதாரின்‌ சமூகவியல்‌-அரசியல்‌ ஸ்தாபனமாக ஆக்கிக்‌ கொள்ளலாம்‌ என்றே தோன்றுகிறது. அது இயலாது என்று தோன்றினால்‌ திரு. கலியாணசுந்தர முதலியார்‌, டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு, ஜனாப்‌ மெளலானா சாஹிபு, திருவாளர்கள்‌ சக்கரைச்‌ செட்டியார்‌, ஆரியா, எஸ்‌.இராமநாதன்‌, தண்டபாணிப்‌ பிள்ளை முதலியோரும்‌ மற்றும்‌ ஒத்துழையாமையில்‌ ஈடுபட்டு கஷ்ட, நஷ்டங்களை ஏற்று உறுதியுடன்‌ உழைத்து வந்த பார்ப்பனரல்லாத தேசபக்தர்களும்‌ ஒன்று சேர்ந்து எவ்வித திட்டங்கொண்டஸ்தாபனம்‌ வேண்டுமென்கிறார்களோ அவ்விதமாகவாவது ஏற்பாடு செய்தல்‌ வேண்டும்‌. இனித்‌ தாமதித்தால்‌ ஆபத்துக்குள்ளாக நேரும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - தலையங்கம்‌ - 20.06.1926 * பட்டங்‌ கூடாது தமிழ்‌ நாட்டுக்‌ காங்கிரஸ்‌ கமிட்டித்‌ தலைவர்‌ திரு. எஸ்‌. ஸ்ரீநிவாச ஐயங்காருக்கு திரு. கல்யாணகந்திர முதலியார்‌ காங்கிரஸ்‌ கமிட்டிக்‌ குதான்‌ கொண்டுவர இருக்கும்‌ தீர்மானத்தைப்பற்றி எழுதுவதாவது.- அன்பார்ந்த தலைவரே, வணக்கம்‌. வரப்போகுஞ்‌ சென்னைச்‌ சட்ட சபைத்‌ தேர்தலுக்கு காங்கிரஸ்‌ சுயராஜ்யக்‌ கட்சித்‌ தொடர்பு கொண்டு அபேட்சகராக நிற்கும்‌ சகோதரருள்‌ சிலர்‌ பட்டஞ்‌ சுமப்பது பற்றியும்‌, அரசாங்கத்தார்‌ தயவால்‌ நியமனம்‌ பெற்றிருப்பது பற்றியும்‌, கதருடையில்‌ பற்றிழந்திருப்பது பற்றியும்‌, தமிழ்நாட்டு அன்பர்‌ சிலர்‌ கடிதம்‌ விடுத்திருக்‌ கிறார்‌. அதைப்பற்றிப்‌ பொது ஜனங்கட்கு (11 - 6 - 26) “நவசக்தி” வாயி லாகப்‌ பதிலிறுத்தேன்‌. அப்‌ பதிலை நோக்குமாறு தங்களை வேண்டுகிறேன்‌. தங்களைப்போல மற்ற அபேட்சகர்களுமிருந்தால்‌ ஐயப்பாட்டிற்கு இடம்‌ ஏற்படல்‌ அரிது.சில அபேட்சகர்கள்‌ பட்டதாரிகளாகவும்‌, அரசாங்கத்‌ தார்‌ தயவால்‌ நியமனம்‌ பெற்றவர்களாகவும்‌, கதரில்‌ பற்றில்லாதார்களாகவும்‌ இருத்தல்‌ உண்மை. இவர்கள்‌ நாளை பதவி ஏற்கமாட்டார்கள்‌ என்பதற்கு என்ன உறுதி? இவர்கள்‌ பட்ட முதலியவற்றைத்‌ துறந்து, கதருடையில்‌ பற்றுக்‌ காட்டினாலன்றி என்‌ போன்றார்க்கு நம்பிக்கை ஏற்படாது. இப்பொழுது நாம்‌ வழவழவென்று இருப்போமாயின்‌ பின்னே வருந்த நேரும்‌. இப்பொழுதே எச்சரிக்கையாயிருத்தல்‌ வேண்டும்‌. கட்டுப்‌ 405 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 பாடுகளைத்‌ தளர விட விட நமது கட்சியின்‌ ஆக்கங்‌ குன்றுவது திண்ணம்‌. காங்கிரசில்‌ ஒத்துழைப்பு நுழையாதவாறு காத்தல்‌ வேண்டுமென்னும்‌ குறியோடு தங்களுடன்‌ சேர்ந்து உழைக்கின்றேனேயன்றி வேறு எக்குறி யோடும்‌ உழைக்கின்றேனில்லை என்பது தங்கட்குத்‌ தெரியும்‌. பட்டத்தை இழித்து இழித்துக்‌ கூறி பட்டதாரிகளை ஆதரிப்பது அறமாகத்‌ தோன்ற வில்லை. கூர்த்த மதியுடைய தங்கட்கு நிலையை இன்னும்‌ விரித்தோத வேண்டுவதில்லை. தமிழ்‌ நாட்டுக்‌ காங்கிரஸ்‌ காரிய நிர்வாகக்‌ கூட்டத்திலாதல்‌, பொது கூட்டத்திலாதல்‌ கீழ்வரும்‌ தீர்மானங்‌ கொணர உறுதி கொண்டிருக்கிறேன்‌. அதற்குத்‌ தாங்கள்‌ துணை புரிவீரென நம்புகிறேன்‌. அத்தீர்மானத்தை வரப்‌ போகுந்‌ தமிழ்நாட்டுக்‌ காங்கிரஸ்‌ காரிய அல்லது பொதுக்கூட்டத்தில்‌ கிளத்துமாறு வேண்டுகிறேன்‌. தீர்மானம்‌ கான்பூர்‌ காங்கிரஸ்‌ தீர்மானத்துக்கிணங்கிச்‌ சென்னைச்‌ சட்டசபை அபேட்சகராக நிற்பவருள்‌ எவரேனும்‌ பட்டதாரியாகவும்‌, அரசாங்கத்தார்‌. தயவால்‌ எவ்வமைப்பிலாதல்‌ நியமனம்‌ பெற்றவராயும்‌, கதருடையில்‌ பற்றில்லாதவராயு மிருப்பரேல்‌ அன்னார்‌ முறையே பட்டத்தையும்‌, நியம னத்தையும்‌ துறக்குமாறும்‌, கதருடையில்‌ பற்றுக்‌ கொள்ளுமாறும்‌ இக்கூட்டந்‌ தீர்மானிக்கிறது. 13-6-26. திரு.வி.கலியாணசுந்தரன்‌ * * டாக்டர்‌ வரதராஜுலு நாயுடு மாகாண காங்கிரஸ்‌ நிர்வாகக்‌ கமிட்டியிலிருந்து விலகுகிறார்‌ தமிழ்நாடு மாகாண காங்கிரஸ்‌ நிர்வாகக்‌ கமிட்டியிலிருந்தும்‌, கான்பூர்‌ காங்கரஸ்‌ தீர்மானப்‌ பிரகாரம்‌ அமைக்கப்பட்ட செலக்டு கமிட்டியிலிருந்‌ தும்‌ தம்முடைய பதவிகளை டாக்டர்‌ பி. வரதராஜுலு நாயுடு அவர்கள்‌ இராஜி நாமாச்‌ செய்துவிட்டார்‌. தேசீயவாதியாக இருக்கும்‌ தாம்‌ காங்கரஸ்‌ பெயரால்‌ தலைவர்கள்‌ செய்யும்‌ பற்பல தவறுதல்களுக்கு அனுமதித்துக்‌ கொண்டு இருக்கமுடியாதெனக்‌ கூறுகிறார்‌. சமூகச்‌ சண்டைகள்‌ அதிகரிப்‌ பதும்‌, பட்டதாரிகளுக்கு காங்கரஸ்‌ அபேட்சகர்களாக நிற்க அனுமதி கொடுத்ததும்‌ இவர்‌ இராஜிநாமா செய்ததற்குக்‌ காரணங்களென்று கூறப்‌ படுகின்றது. குடி அரசு - 1926 N 406 வகுப்புணாரி பிரதிங்தித்துவத்தின்‌ வற்று தாழ்ந்த வகுப்பாருக்கும்‌ தொழிலாளர்களுக்கும்‌ தனிப்‌ பிரதிநிதித்து வம்‌ ஏற்படுத்த வேண்டும்‌ என்பதை நமது பார்ப்பனர்கள்‌ எவ்வளவோ தங்கள்‌ சூழ்ச்சியின்‌ மூலம்‌ எதிர்த்தும்‌, ஸ்ரீமான்‌ ஜயவேலு போன்றவர்களை விலைக்கு வாங்கி தங்களுடன்‌ சேர்த்துக்கொண்டு தங்களுக்கு வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டாம்‌ என்று சத்தம்‌ போடச்செய்தும்‌, சர்க்கார்‌ அவ்‌ வகுப்புக்கென்று பிரதிநிதித்துவம்‌ கொடுக்க பார்லிமெண்டில்‌ சம்மதித்து விட்டார்கள்‌. தொழிலாளர்களுக்கும்‌ அதுபோலவே பார்ப்பனர்களின்‌ எவ்வ ளவோ சூழ்ச்சிகளை மீறி தனிப்‌ பிரதிநிதித்துவம்‌ கொடுக்கத்‌ தீர்மானித்து விட்டார்கள்‌. இதைப்பார்த்த பார்ப்பனப்‌ பத்திரிகைகள்‌ தங்கள்‌ சூழ்ச்சிகளும்‌ முட்டுக்கட்டைகளும்‌ பலிக்காமல்‌ போய்விட்டதை மூடிவைத்துவிட்டு தொழிலாளர்களுக்கும்‌ தாழ்த்தப்பட்ட வகுப்பார்களுக்கும்‌ நல்ல பிள்ளைகள்‌ போல்‌ “இனி சும்மாயிருக்கக்‌ கூடாது; அந்தந்த வகுப்பார்‌ வற்புறுத்த வேண்‌: டும்‌” என்று “கோழி திருடியும்‌ கூடக்‌ குலாவுவது” போல்‌ “சுதேசமித்திரன்‌” முதலிய பத்திரிகைகள்‌ எழுதுகின்றன. எப்படி இருந்த போதிலும்‌, வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கிடைப்‌ பதற்கு யார்‌ எந்த வகுப்பார்‌ உதவியாயிருந்தா லும்‌, எந்த வகுப்பார்‌ விரோதமாயிருந்தாலும்‌, இனி அதைப்‌ பற்றி கவனிக்‌ காமல்‌ இவ்வகுப்பினர்‌ ஒற்றுமையாயிருந்து தங்கள்‌ வகுப்பைச்‌ சேர்ந்த உண்மைத்‌ தலைவர்களைப்‌ பின்பற்றி, இதை நிலைநிறுத்தி, அதனால்‌ ஏற்படும்‌ முழு பலனையும்‌ தங்கள்‌ வகுப்பு முன்னேற்றத்திற்கு ஆதாரமாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌. எந்த காரணத்தைப்‌ பற்றியும்‌ சர்க்கார்‌ நியமனத்திற்கோ பொதுத்‌ தேர்தலில்‌ தங்களுக்கென்று ஸ்தானங்கள்‌ ஒதுக்கி வைப்பதற்கோ கண்டிப்பாய்‌ ஒப்புக்‌ கொள்ளக்கூடாது. தங்கள்‌ வகுப்புத்‌ தனித்‌ தேர்தல்‌ மூலமே தங்களுக்கு பிரதிநிதித்துவம்‌ கிடைக்கும்படி பிரயத்தனப்பட வேண்டும்‌. இதைப்பற்றி சீர்திருத்தக்‌ கமிட்டியார்‌ செய்துள்ள சிபார்சுகளில்‌ தாழ்ந்த வகுப்பாருக்கு தங்கள்‌ பிரதிநிதிகளை தெரிந்தெடுக்க ஏற்பாடு செய்ய சென்னை கவர்மெண்டுக்கு ஏற்கனவே அதிகாரமிருப்பதாய்த்‌ தெரிகிறது. ஆனால்‌ இதுவரை அது அமலுக்கு வரவொட்டாமல்‌ மூடி வைக்கப்பட்டு விட்டது. இனியாவது அதை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டியது தாழ்ந்த வகுப்பார்‌ என்று சொல்லப்படும்‌ சமூகத்தைச்‌ சேர்ந்த தலைவர்‌. களுடைய கடமை என்பதை தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌. குடி அரசு - கட்டுரை - 20.06.1926 407 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 து எண்ண மானக்கே௫ சென்னைக்‌ கார்ப்பரேஷனில்‌ சுயராஜ்யக்‌ கட்சித்தலைவர்‌ ஸ்ரீமான்‌ சாமி வெங்கடாஜலம்‌ செட்டியார்‌ புளுகுவதில்‌ கோவை ஸ்ரீமான்‌ சி.வி.வெங்‌ கட்டரமணய்யங்காரை ஜெயித்துவிட்டார்‌. ஸ்ரீ ஐயங்கார்‌ முதலில்‌ தனது தென்னை மரத்தில்‌ கள்ளுக்கு முட்டியே கட்டவில்லை என்றார்‌. பிறகு தெளுவுக்கு மாத்திரம்‌ முட்டி கட்டினதாய்ச்‌ சொன்னார்‌. “சென்ற வருஷம்‌ கோபி மகாநாட்டில்‌ தென்னை மரங்களை ஐந்து வருஷக்‌ குத்தகைக்குக்‌ கொடுத்துவிட்டேன்‌. குத்தகைக்காரன்‌ கட்டினால்‌ நான்‌ என்ன செய்யட்டும்‌ என்று சொன்னீரே இப்பொழுது அடியோடு இல்லை என்கிறீரே இது என்ன பொய்‌” என்று கேட்க தலை குனிந்து கொண்டார்‌. கடைசியாக வேறு வழி யில்லாத போது “நாயக்கர்‌ என்னை மோட்டார்‌ கார்‌ கேட்டார்‌, நான்‌ கொடுக்‌ காததற்காக என்னைக்‌ கெடுக்கப்‌ பார்க்கிறார்‌” என்று அழுதார்‌. நமது சென்னைக்‌ கார்ப்பரேஷன்‌ தலைவர்‌ சாமிவெங்கிடாசலம்‌ செட்டியாரோ கார்ப்பரேஷன்‌ பணத்தில்‌ தன்‌ வீட்டுக்கு டெலிபோன்‌ வைத்துக்‌ கொண்‌ டதைப்‌ பற்றி கேட்டால்‌ சர்‌.பி.தியாகராய செட்டியார்‌ வைத்துக்‌ கொண்டார்‌, அதனால்‌ நானும்‌ அப்படியே வைத்துக்கொண்டேன்‌ என்றார்‌. சர்‌.பி.டிசெட்‌ டியார்‌ கார்ப்பரேஷன்‌ பணத்தில்‌ டெலிபோன்‌ வைத்துக்‌ கொள்ளவில்லை என்று ஆதாரம்‌ காட்டியபின்‌, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டு தணி காசலம்‌ செட்டியார்‌ வைத்துக்கொண்டார்‌, அதனால்‌ வைத்துக்‌ கொண்டேன்‌ என்றார்‌. அவரும்‌ வைத்துக்‌ கொள்ளவில்லை என்று ஆதாரம்‌ காட்டினால்‌ இப்போது திருமலைபிள்ளை வைத்துக்கொண்டார்‌. அதனால்‌ வைத்துக்‌ கொண்டேன்‌ என்கிறார்‌. இப்படியே இது எங்கு போய்‌ நிற்குமோ தெரிய வில்லை... தவிற, தான்‌ ஒருபோதும்‌ ஜஸ்டிஸ்‌ கட்சியில்‌ சேரவில்லை என்கிறார்‌. சேருவதற்காக தான்‌ போட்ட விண்ணப்பத்தை காட்டினால்‌, தெலுங்கர்‌ ககஷி உண்டாக்குவதற்காக ஜஸ்டிஸ்‌ ககஷியில்‌ சேர்ந்தேன்‌ என்று சொல்லுகிறார்‌. இது என்ன மானக்கேடு? பரிசுத்தமும்‌ கட்டுப்பாடும்‌ ஒற்றுமையும்‌ இருப்ப தாய்‌ சொல்லப்படும்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ பொய்‌ சொல்லுகிற விஷயத்தில்‌ தான்‌ பரிசுத்தமான பொய்யும்‌, எல்லோரும்‌ கட்டுப்பாடாகச்‌ சொல்லும்‌ பொய்யும்‌, அய்யங்கார்‌ சென்ற வழியிலேயே செட்டியார்‌ செல்லுகிறது என்கிற ஒற்றுமையான பொய்யுமாய்‌ இருக்கிறதே தவிற வேறுயோக்கிய மான குடி அரசு - 1926 N 408 காரியத்தில்‌ ஒன்றையும்‌ காணோம்‌. ஐயோ! சுயராஜ்யக்ககஷியே ! உன்னை மதிக்கும்‌ ஜனங்களும்‌ இருக்கிறார்களே! அவர்களை நினைத்து அழுவதா? அல்லது உன்னை நினைத்து அழுவதா? குடி அரசு - கட்டுரை - 20.06.1926. 409 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 கோபியில்‌ திரு. சீணிவாசய்யாங்கார்‌ நாடகக்‌ கம்வாணி கோபிசெட்டிபாளையம்‌ என்பது பல பிரபல குடியான மிராசுதார்‌: களை யுடையது. அங்குள்ள பூமிகள்‌ ஆதியில்‌ அந்த தாலூகா பார்ப்பன ரல்லாத வேளாளர்களுக்கே யிருந்து வந்தது. இப்பொழுதோ அவை ஏறக்குறைய முழுவதும்‌ அடமானம்‌, போக்கியம்‌, கிரயம்‌ மூலியமாய்‌ கோபி. பார்ப்பனர்களைச்‌ சேர்ந்திருப்பதுடன்‌ மிகுதியும்‌ சேலம்‌, கோயமுத்தூர்‌, சென்னை முதலிய ஜில்லாக்களில்‌ இருக்கும்‌ பார்ப்பன வக்கீல்களுக்கும்‌, உத்தியோகஸ்தர்களுக்குமே சொந்தமாயிருக்கிறது. குடித்தனக்காரர்கள்‌ இந்தப்‌ பார்ப்பனர்களை “சுவாமிகளே” என்று கூப்பிட்டுக்கொண்டு அவர்‌ கள்‌. பின்னால்‌ சுற்றுகிறவர்களாகவேயிருக்கிறார்கள்‌. அல்லாமலும்‌ பெரும்‌ பாலும்‌ இந்தக்‌ குடியானவர்களை தப்பு வழிக்குக்‌ கூட்டிபோவதும்‌ வக்கீல்‌ வீட்டுக்குக்‌ கூட்டிப்‌ போவதும்‌ சூதாடக்‌ கூட்டிப்போவதும்‌, அவர்கள்‌ கலி யாண காலங்களில்‌ அவர்களுக்கு வெளி ஊர்களில்‌ இருந்து தாசி, வேசிகளையும்‌ பார்ப்பன வித்வான்‌௧ளையும்‌ அழைத்துவரச்‌ செய்து அவர்‌ களுக்கு ஆயிரம்‌ பத்தாயிரமாகச்‌ செலவு செய்யச்‌ செய்வதும்‌ சிலர்‌ அவர்‌ களிடம்‌ தரகு வாங்குவதுமாகிய இவைகளினால்‌ குடியானவர்களைக்‌ கடன்‌ கரராக்கி சிலரைப்‌ பாப்பராக்கி அவர்கள்‌ பூமிகளை எழுதிவாங்குவதும்‌ இந்த சில பார்ப்பனர்களேயாகும்‌. இவ்வளவு யோக்கியதையில்‌ உள்ள தங்கள்‌ கூட்டத்தைச்‌ சேர்ந்த ஒரு ஐயங்காருக்கு ஓட்டு வாங்கிக்‌ கொடுப்பதற்கு அந்த ஊர்களில்‌ வாயில்லாப்‌ பூச்சிகளும்‌ சாதுக்களுமான இரண்டொரு குடியான வர்களைக்‌ கை ஆயுதமாக வைத்துக்கொண்டு, கான்பரன்ஸ்‌ என்ற அரசியல்‌ விஷயத்தின்‌ பேரால்‌ ஒரு திருட்டுக்‌ கூட்டம்‌ கூட்டி, அதற்கு ஒரு பார்ப்ப னரை தலைவராகத்‌ தெரிந்தெடுத்ததாய்‌ ஏற்பாடு செய்து, சில பார்ப்பன ரல்லாத பேராசைக்காரர்‌, அதாவது ஓட்டு வேட்டைக்காரரையும்‌ கூட்டி வைத்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதாரிலும்‌ காலிகளான இரண்டொரு ஆள்களையும்‌ கூட்டிவைத்து இவர்கள்‌ பெயரால்‌ ஓட்டு பெறச்செய்யும்‌ சூழ்ச்சி நாடகத்தின்‌ யோக்கியதையை என்னவென்று சொல்லுவது? நாடகத்தின்‌ அயன்‌ ராஜபார்ட்டான தலைவர்‌ திரு. சீனிவாசய்யங்கார்‌. பேசியதாவது: “பார்ப்பனரல்லாதார்‌ கட்சியான ஜஸ்டிஸ்‌ கட்சியை வெட்டிப்‌ புதைக்கவேண்டும்‌.பார்ப்பனரல்லாதாரின்‌ நன்மைக்கு பாடுபடும்‌ திரு. ஈ.வெ. குடி அரசு - 1926 N 410 இராமசாமி நாயக்கரை வெட்டிப்‌ புதைக்க வேண்டும்‌.” இவைதான்‌ அக்கிரா சனர்‌ பிரசங்கத்தின்‌ சுருக்கம்‌. இதைப்‌ பேசும்போதே அவர்‌ மூர்ச்சையாகி கீழே விழுந்து ஆவி ஊஞ்சலாடி நிலை பெற்றதாம்‌. நாடகத்தின்‌ அயன்‌ ஸ்திரீ பார்ட்டான திரு. சி.வி. வெங்கட்டரமணய்யங்காரோ “நான்‌ மகா காங்கிரஸ்‌ பதிவிரதை” இன்னமும்‌ கன்னியே கழியவில்லை.ஈ.வெ.இராம சாமி நாயக்கர்‌. பேச்சை நம்பாதீர்கள்‌: அவர்‌ திருடர்‌, பொய்யர்‌, என்னைக்‌ கற்பழிக்கப்‌ பார்த்தவர்‌, நான்‌ ஒரு நாளும்‌ கற்பழியவில்லை.” என்று தலைமயிரை அவிழ்த்து விரித்துவிட்டு, மாரடித்துக்கொண்டதுதான்‌ பெண்‌ வேஷத்தின்‌ நடிப்பு. இந்தப்‌ பதிவிரதைக்கு ஆள்களைக்‌ கூட்டிவிட்டு வயிறு வளர்க்கும்‌ தோழிகளான சில பார்ப்பனரல்லாத பிரசாரகர்களோ “ ஆமாம்‌! ஆமாம்‌)! நாயக்கரை நம்பாதீர்கள்‌. ஸ்ரீமான்‌ வெங்கட்டரமண அய்யங்கார்‌ மகா பதிவிரதை. எனக்குத்‌ தெரியாமல்‌ அவர்‌ ஒரு காரியமும்‌ செய்திருக்க முடியாது. என்னை வைத்துக்கொண்டுதான்‌ என்னால்தான்‌- அவர்‌ எல்லாக்‌ காரியமும்‌ செய்கிறது; இன்னமும்‌ யாருடைய கையும்படவே இல்லை. ஆதலால்‌ நாயக்கர்‌ வார்த்தையை நம்பாதீர்கள்‌,” என்று சொல்லி ஓட்டு வாங்குவது தான்‌ அத்தோழிகளுடைய நடிப்பாய்‌ இருந்தது. இக்காரியங்க ளுக்குத்‌ திரை பிடித்தும்‌ தீவட்டி பிடித்தும்‌ நிற்பதுதான்‌ கோபி பார்ப்பனர்‌. களான ஐயங்கார்‌ நாடகக்‌ கம்பெனியின்‌ சிப்பந்திகளது நடிப்பாய்‌ இருந்தது. உப வேஷக்காரர்களான பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்களோ, யார்‌ நடிப்பு சரியாயிருந்தாலும்‌ சரி, யார்‌ நடிப்பு சரியாயில்லாவிட்டாலும்‌ சரி. எங்களைப்‌ பொறுத்தவரை எங்களுக்கு ஓட்டு கொடுங்கள்‌ என்பதே அவர்கள்‌ நடிப்பாயிருந்தது. இந்நாடகத்தின்‌ பெருமையை விளம்பரப்‌ படுத்தி நோட்டீஸ்‌ வினியோகம்‌ செய்வதே பார்ப்பனப்‌ பத்திரிகைகளின்‌ கடமை யாயிருந்தது. முடிவில்‌ எல்லா யோக்கியதையும்‌ வெளியாகிவிட்டது. அதாவது இந்த நாடகம்‌ நடந்த 4, 5 நாள்களுக்குள்ளாக கோபி பிரமுகர்களும்‌ பொது ஜனங்களும்‌ இவர்களின்‌ யோக்கியதையை அறிந்து, உண்மை அறிய ஆசைப்பட்டு, வேறு ஒரு கூட்டம்‌ கூட்டி, திரு. ஈ.வெ. இராமசாமி நாயக்க ரையும்‌ திரு. என்‌. தண்டபாணி பிள்ளையையும்‌ வரவழைத்து உண்மையை வெளியிடும்படி கேட்டுக்‌ கொண்டார்கள்‌. அந்தப்படியே ஒரு பெரிய பிரதிநிதித்துவக்‌ கூட்டம்‌ கூட்டி அக்‌ கூட்டத்தில்‌ அவ்விருவர்களும்‌ திரு, எஸ்‌. இராமநாதன்‌ அவர்களும்‌ மற்றும்‌ திரு, எஸ்‌.பி.கிருஷ்ணய்யர்‌, திரு.ஜி.வி. நாராயணய்யர்‌ ஆகியவர்களும்‌ பேசினார்கள்‌, பேசிய விஷயம்‌ மறுமுறை வெளியாகும்‌. ஆனாலும்‌ கூட்ட ஆரம்பத்திலேயே திரு. எஸ்‌. பி. கிருஷ்ணய்யர்‌. எழுந்து 4.5 நாளைக்கு முன்‌ இந்த ஊரில்‌ காங்கிரசின்‌ பெயரால்‌ ஒரு நாடகம்‌ நடந்ததென்றும்‌, அது காங்கிரஸுக்கு சம்மந்தப்பட்டதல்லவென்றும்‌, அது பொதுஜனங்களால்‌ நடத்தப்பட்டதல்லவென்றும்‌, யாரோ சிலர்‌ தங்க ளுக்கு 411 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வேண்டிய சிநேகிதர்களுக்காக சட்டசபைக்கு ஓட்டு வாங்கி கொடுக்க செய்த சூழ்ச்சியென்றும்‌, அதில்‌ பல ஒழுக்கமில்லாத காரியங்கள்‌ நடந்திருக்‌ கிறதென்றும்‌, அக்கூட்டத்தில்‌ மகாத்மாவைப்பற்றியோ அவர்‌ கொள்கை: களைப்‌ பற்றியோ ஒரு பிரஸ்தாபமும்‌ இல்லையென்றும்‌, இரண்டொரு தேசபக்தர்களை திட்டுவதும்‌ எப்படி ஓட்டு சம்பாதிப்தென்பதுமே முக்கிய விஷயமாயிருந்ததென்றும்‌, தலைவரை தெரிந்தெடுத்ததில்‌ கொஞ்சமும்‌ புத்திசாலித்தனமாய்‌ நடந்து கொள்ளவில்லையென்றும்‌, இது போலவே உள்ளூர்‌ விஷயங்களிலும்‌ பல தவறுகள்‌ செய்து வருகின்றார்களென்றும்‌, வந்திருக்கும்‌ கனவான்கள்‌ உண்மையான விஷயத்தைச்‌ சொல்வார்கள்‌, கவனமாய்‌ கேட்க வேண்டும்‌ என்றும்‌” சொன்னார்‌. மற்ற விஷயம்‌ பின்னால்‌. ஒரு நிருபர்‌ குடி அரசு - கட்டுரை - 20.06.1926. குடி அரசு - 1926 N 412 கோபியில்‌ மா வபருங்கூட்டம்‌ சகோதரர்களே! சில தினங்களுக்கு முன்‌ இந்த இடத்தில்‌ நடந்த மகாநாட்டில்‌ பலர்‌ என்னை வாயில்‌ வந்தபடி திட்டியதாகக்‌ கேள்விப்பட்டேன்‌. அதைச்‌ சகிக்காத சில பிராமணரல்லாதார்‌ என்னை இங்கு வந்து உண்மை விஷயங்களைப்‌ பற்றி பேசவேண்டுமென்று கேட்டுக்‌ கொண்டதால்‌ இன்று நாங்கள்‌ வந்திருக்‌ கிறோம்‌. முன்னால்‌ வந்தவர்கள்‌ நடந்து கொண்டது போல்‌ நாங்கள்‌ இங்கு யாரையும்‌ திட்டுவதற்கு வரவில்லை; அந்த எண்ணமுமில்லை. ஸ்ரீமான்‌ தண்டபாணிப்‌ பிள்ளையவர்கள்‌ தமது பிரசங்கத்தில்‌ நமது நாட்டிற்கு பிராமணர்களால்‌ ஏற்பட்டிருக்கும்‌ கொடுமையைக்‌ குறிப்பிட்டார்‌. அவர்‌ எடுத்துக்காட்டிய வித்தியாசங்களைத்‌ திருத்த வேண்டுமென்கிற ஆசையினா லேயே பிராமணர்களால்‌ நமது சமூகத்திற்கு நேர்ந்த ஆபத்துகளைச்‌ சொன்‌ னார்‌. மற்றவர்களெல்லாம்‌ தன்னை நல்லவன்‌ என்று சொல்ல வேண்டுமென்‌ கிற சுயநலத்தோடு அவர்‌ பேசவில்லை. எடுத்துக்காட்டிய குற்றங்கள்‌ நீங்க வும்‌, வகுப்புப்‌ பிணக்குகள்‌ ஒழியவுமே அவர்‌ குறிப்பிட்டுப்‌ பேசினார்‌. வகுப்புப்‌ பிணக்கு தற்காலத்தில்‌ வகுப்புப்‌ பிணக்குகள்‌ இல்லையென்று மறைத்து வைத்துப்‌ பேசுவதில்‌ பலனில்லை. நம்‌ திரேகத்தில்‌ ஒரு புண்‌ உண்டானால்‌ அதை மறைத்துக்‌ கட்டிவைத்துக்கொண்டிருந்தால்‌ அது திரேகம்‌ பூராவையும்‌ கெடுத்துவிடும்‌. அதை அறுத்து ஆற்றிவிட்டால்‌ அது உடனே ஆறிவரும்‌. அது போல குற்றங்களையும்‌ குறைகளையும்‌ எடுத்துக்காட்டி மாற்றித்தானாக. வேண்டும்‌. வடநாட்டில்‌ இந்து முஸ்லீம்‌ வகுப்புச்‌ சண்டைகள்‌ அதிகமாக ஏற்பட்டுக்‌ கொண்டே வருகிறது. கல்கத்தாவில்‌ இந்து முஸ்லீம்‌ கலவரம்‌ மூண்டிருக்கிறது: பம்பாயிலும்‌ புகைந்து கொண்டிருக்கிறது: சீக்கிரம்‌ நம்‌ மாகாணத்திற்கும்‌ வந்து விடுமோவென சந்தேகமாயிருக்கிறது. வீரர்களான மகமதலி முதலிய பெரிய தேச பக்தர்கள்‌ கூட இப்பொழுது இருக்கும்‌ நிலை மையைப்‌ பார்த்து தேசத்தைவிட இஸ்லாம்‌ பெரியது என்று சொல்லி விட்‌ டனர்‌. 7 கோடி முஸ்லீம்கள்‌ 24 கோடி இந்துக்களிடம்‌ அடிமையாக முடியா தென்று அவர்கள்‌ எடுத்துக்‌ காட்டுகின்றனர்‌. காரணமென்ன? அவர்கள்‌ வீரர்‌. களல்லவா? கிச்சிலு பெரிய தேச பக்தர்‌, பஞ்சாபில்‌ அவரை கவர்மெண்டார்‌. ரகசியமாய்க்‌ கொண்டு போனதினால்தான்‌ அவ்வளவு ஜனங்கள்‌ உயிரையும்‌ 43 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 விட்டனர்‌. ஒத்துழையாமையே அவரால்தான்‌ அங்கு உண்டானதென்று சொல்லலாம்‌. அத்தகையவரும்‌ தங்கள்‌ வகுப்பு நலனே பிரதானமென்று சொல்லுகிறார்‌. நாளுக்கு நாள்‌ காங்கிரஸை விட்டு எல்லா மகமதிய நண்பர்‌: களும்‌ விலகி நிற்கின்றனர்‌. வகுப்பை மறந்தவர்‌ எவருளர்‌? இப்போது தமிழ்நாட்டிலும்‌ காங்கிரஸ்‌ கமிட்டியில்‌ வகுப்பை மறந்த ஏதாவதொரு மதிப்புள்ள பிராமணரல்லாதார்‌ இருக்கிறார்களா என்று பாருங்‌ கள்‌. ஸ்ரீமான்‌ ஆர்‌.கே. ஷண்முகம்‌ செட்டியாரிருப்பதாக நீங்கள்‌ சொல்லு கிறீர்கள்‌. அவரும்‌ வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டாமென்று சொல்ல வில்லை; வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டுமென்கிறார்‌. ஸ்ரீமான்‌ டி.எ.இராமலிங்கம்‌ செட்டியாரிருக்கிறார்‌ என்று சொல்லுவீர்கள்‌. அவரையும்‌ நேரில்‌ போய்க்‌ கேட்டோம்‌. அவர்‌ “நான்‌ வெகு காலத்திற்கு முன்னேயே வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ வேண்டுமென்று அதற்குரிய இயக்கத்தையும்‌ ஆரம்பித்திருக்கிறேன்‌; நீங்களெல்லாம்‌ இப்போது வந்தவர்கள்‌” என்று எங்களிடம்‌ சொன்னார்‌. ஸ்ரீமான்‌ திரு.வி. கலியாணசுந்தர முதலியார்‌ அவர்‌. களும்‌ காங்கிரஸிலிருந்து விலக ஆரம்பமாய்‌ விட்டது. ஸ்ரீமான்‌ டாக்டர்‌ நாயுடு அவர்களும்‌ முதலியாரவர்களின்‌ அபிப்பிராயத்தை ஒப்புக்‌ கொள்‌ வதாக “தமிழ்நாடு” தலையங்கம்‌ எழுதிவிட்டது. ஸ்ரீமான்‌ முதலியார்‌ பெயரை: வைத்துக்கொண்டு தான்‌ சுயராஜ்யக்‌ கட்சி தமிழ்நாட்டில்‌ நடந்து வந்தது. அவரும்‌ இப்போது உண்மை அறிந்து விலகப்‌ போகிறார்‌. இனி சுயராஜ்யக்‌ கட்சி தமிழ்நாட்டிலும்‌ சாக வேண்டியதுதான்‌. ஆனால்‌, அவரை விலைக்கு வாங்க பிரயத்தனம்‌ செய்கிறார்கள்‌. வட இந்தியாவில்‌ பம்பாய்‌ வரை சுய ராஜ்யக்‌ கட்சி செத்துவிட்டதென்றே சொல்லலாம்‌. வட நாட்டில்‌ இந்து முஸ்லீம்‌ கலவரம்‌; தென்னாட்டில்‌ பிராமணர்‌ - பிராமணரல்லாதார்‌ கலவரம்‌. இந்த நிலைமையில்‌ வகுப்புப்‌ பிணக்கு இல்லை என்று மறைத்துவைப்பதில்‌ என்ன பிரயோஜனம்‌. தற்கால காங்கிரஸ்‌ உத்தியோகத்திற்கு மனுபோடும்‌ தபாற்பெட்டி தியாக உணர்ச்சி நிறைந்திருந்த காங்கிரஸ்‌ போய்விட்டது. 35 வருஷத்திய பழய உத்தியோக காங்கிரஸ்‌ இப்போது தலையெடுக்க ஆரம்பித்‌ திருக்கிறது.ஆகையால்தான்‌ தற்கால காங்கிரஸ்‌ துலைந்து ஒத்துழையாமைக்‌ காங்கிரஸ்‌ உண்டாக வேண்டுமென்று சொல்லுகிறேன்‌. மகாத்மா காந்தி காங்கிரஸ்‌ மாறியதால்தான்‌ மகாத்மா நம்மை விட்டுப்போய்‌ மூலையில்‌ ஒதுங்கி உட்கார்ந்து கொண்டார்‌. இப்போதைய காங்கிரஸ்‌ உத்தியோகத்திற்கு மனு போடும்‌ தபால்‌ பெட்டி. மகாத்மா காந்தியடிகள்தான்‌ ஒத்துழையாமைத்‌ தத்துவத்தை காங்கிரஸில்‌ புகுத்தினார்‌. அது சமயம்‌ காங்கிரஸினிடத்தில்‌ ஜனங்களுக்கும்‌ நம்பிக்கையிருந்தது, ஒத்துழையாத்‌ திட்டம்‌ வந்ததினால்‌ குடி அரசு - 1926 (N 414. அநேகம்‌ சுயநலக்காரர்களுக்கும்‌ உத்தியோக வேட்டைக்காரார்களுக்கும்‌ உயர்ந்த ஜாதி என்று சொல்லுபவர்களுக்கும்‌ காங்கிரஸில்‌ இடமில்லாமல்‌ போயிற்று. ஆதலால்‌ அவர்கள்‌ இப்போது பழைய உத்தியோக காங்கிரஸைக்‌ கொண்டுவந்து விட்டார்கள்‌. நான்‌ வகுப்பு உரிமை கேட்கக்‌ காரணம்‌ காங்கிரஸிலும்‌ முஸ்லீம்லீக்‌ சபை ஏற்பட்டு அவர்களுக்கென தனிப்‌ பிரதிநிதித்துவமிருக்கிறது. அதற்குக்‌ காரணம்‌ முஸ்லீம்களின்‌ வகுப்பு நலத்தை நாடுவதேயாகும்‌. அது போல்‌ பிராமணரல்லாதாருக்கும்‌ காங்கி ரஸில்‌ தனிப்பங்கு வேண்டும்‌ என்பதுதான்‌ எனது நோக்கம்‌. நமது உரிமை நமக்கு வந்துவிடவேண்டும்‌. சென்னை மாகாணச்‌ சங்கம்‌ நமது உரிமை வீதத்தைக்‌ கவனிப்பதற்காகவே ஏற்பட்டது. நாளைக்கு சுயராஜ்யம்‌ வந்தா லும்‌ நமது நிலைமை என்ன? வெள்ளைக்கார அடிமை நீங்கி பிராமண ரின்‌ அடிமை ஆவதா? என்பதுதான்‌ எனது கேள்வி. மகாத்மாவின்‌ ஒத்துழையாத்‌ திட்டம்‌ நாட்டில்‌ அமலுக்கு வந்திருக்குமானால்‌ நான்‌ வகுப்பு வாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ கேட்டிருக்க மாட்டேன்‌. மகாத்மாவின்‌ நிர்மாணத்‌ திட்டம்‌ நிறைவேறினால்‌ சண்டைக்கு வழியில்லாமற்‌ போகும்‌. இப்போது மகாத்மாவின்‌ திட்டங்கள்‌ மாறிப்‌ போகவே, எப்படி ஒரு வகுப்பார்‌ ஆதிக்கம்‌ பெறுவது - உத்தியோகம்‌ சம்பாதிக்கிறதென்கிற நிலைமை வந்து விட்டது. ஆதலால்‌ சண்டை ஏற்பட வேண்டியிருக்கிறது. பதவி ஆசை யாருக்கில்லை? கஷ்டப்பட்ட காலத்தில்‌ கஷ்டத்திற்குப்‌ பங்கெடுத்துக்‌ கொள்‌: வாரில்லை; லாபத்திற்கு மட்டிலும்‌ பங்குத்‌ தகறார்‌ வந்துவிட்டது. உத்தியோக ஆசையில்லாத தலைவர்கள்‌ இப்போது காங்கிரஸில்‌ இல்லை. ஸ்ரீமான்கள்‌ டி.எ.இராமலிங்கம்‌ செட்டியாரும்‌, ஆர்‌. கே. ஷண்முகம்‌ செட்டியாரும்‌ காங்கிரஸில்‌ இருக்கிறார்களே, அவர்களும்‌ உத்தியோக ஆசைக்காரர்களா? என்று கேட்கிறீர்கள்‌. ஆம்‌! அவர்களும்‌ உத்தியோகத்திற்கு இரகசியமாய்‌ உள்ளுக்குள்‌ ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்காரிடம்‌ கண்ட்றாக்டு பேசி ஏற்பாடு செய்து கொண்டுதான்‌ சுயராஜ்யக்‌ கட்சியில்‌ சேர்ந்து இருக்கின்றனர்‌. சும்மா யிருக்கவில்லை; இன்றைக்கும்‌ அவர்கள்‌ ஹிருதயத்தில்‌ வகுப்புநலன்‌ துடித்துக்‌ கொண்டுதானிருக்கும்‌. என்ன செய்வார்கள்‌ பாவம்‌! எப்படியிருந்‌ தூல்‌ இது சமயம்‌ தங்கள்‌ காரியம்‌ ஆகும்‌ என்பது தெரிந்துதான்‌ சமயம்‌ போல்‌ நடக்கிறார்கள்‌. இவர்கள்‌ எல்லோரும்‌ பழைய காங்கிரஸை உண்டாக்கப் பார்க்‌ கின்றனர்‌. காரணமென்ன? பழைய காங்கிரஸ்‌ ஏற்படுத்தியபோதே அதன்‌ மூல மந்திரம்‌ உத்தியோகம்‌ பெறுவதுதான்‌. 415 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சீர்திருத்தத்தாலுண்டான லாபம்‌ உத்தியோக காங்கிரஸின்‌ பலனால்‌ நமது நாட்டிற்கு சீர்திருத்தம்‌ இரண்டு தடவை சர்க்காரால்‌ கொடுக்கப்பட்டது. முதல்‌ சீர்திருத்தம்‌ வந்ததும்‌ இந்து முஸ்லீம்‌ கலகம்‌ ஏற்பட்டது. சம்பளங்களை உயர்த்தியதால்‌ வரியதிக மாய்ச்‌ செய்யப்பட்டது. 2- வது சீர்திருத்தமும்‌ வந்து நமக்கு என்ன கிடைத்‌ தது? பிராமணர்‌ பிராமணரல்லாதார்‌ கக்ஷியை உண்டாக்கிற்று. மீண்டும்‌ வரி உயர்ந்தது. இந்த சீர்திருத்தங்கள்‌ காங்கிரஸில்‌ போட்ட சத்தத்தால்‌ ஏற்பட்டது. உத்தியோக காங்கிரஸ்‌ இல்லாதிருந்தால்‌ நாட்டிற்கு இத்தனை கெடுதல்‌ ஏற்பட்டிருக்காது. உத்தியோக காங்கிரஸ்‌ இல்லாத போது 50,60 கோடி ரூபாய்தான்‌ நாம்‌ வரி கொடுத்து வந்தோம்‌. உத்தியோக காங்கிரஸ்‌ பெற்ற சீர்திருத்தத்தின்‌ பலனாய்‌ இப்போது 150 கோடி கொடுக்க வேண்டியதாகி விட்டது. காங்கிரஸ்‌ இல்லாத போது 24 கோடி ரூபாயில்‌ வைத்திருந்த ராணுவச்‌ செலவு, உத்தியோக காங்கிரஸில்‌ சீர்திருத்தம்‌ வேண்டுமெனப்‌ படித்தவர்கள்‌ சத்தம்‌ போட்டதால்‌ இன்றைக்கு 70 கோடி ரூபாய்‌ ராணுவச்‌ செலவில்‌ நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்தனையும்‌ ஏழைகள்‌ பணந்தான்‌. 1000-க்கு 5 பேர்தான்‌ பணக்காரர்களாயிருப்பார்கள்‌. அவர்கள்‌ வரி கொடுப்‌ பதைப்‌ பற்றிக்‌ கவலை யில்லை. தேசத்தில்‌ 1000-க்கு 900 பேர்‌ 10 ரூபாய்க்கு, கீழ்ப்பட்டவரி கொடுப்போராயிருக்கிறார்கள்‌. அவர்கள்‌ வரி கொடுப்பது தான்‌ சர்க்கார்‌ வரும்படி இரண்டாவது சீர்திருத்தத்தால்‌ வரி உயர்ந்தது. ராணுவச்‌ செலவு அதிகமாயிற்று; சம்பளங்கள்‌ உயர்ந்தது; 3 பைசா கார்டு அரையணா வாயிற்று; உத்தியோகச்‌ சண்டைகள்‌ மலிந்தன; ஒவ்வொரு ஜாதியாருக்கும்‌ எனக்கு - உனக்கு என்ற சண்டைகள்‌ மிகுந்தன; இந்த உத்தியோகங்களும்‌ நியமனங்களும்‌ எலக்ஷன்களும்‌ இல்லையானால்‌ சண்டையே இல்லை. இதற்கு முன்‌ ஒரு கவர்னர்‌, 2 நிர்வாக சபை மெம்பர்‌ ஆக மூவர்‌ ஒரு மாகாணத்தை ஆண்டு வந்தார்கள்‌. சுமார்‌ 20 ஆயிரம்‌ ரூபாய்‌ சம்பளத்தில்‌ நமது மாகாணக்‌ கவர்ன்மெண்டு நடந்து வந்தது. உத்தியோக காங்கிரஸின்‌ பலனாக 3 மந்திரி, 4 நிர்வாக சபை மெம்பர்‌ ஆக பேர்‌ மிகுந்து விட்டார்கள்‌. ஆள்‌ ஒன்றுக்கு 5500 ரூ.வீதம்‌ சம்பளத்தில்‌ நமது மாகாணம்‌ நிர்வகிக்கப்பட வேண்டியதாகிவிட்டது. இந்த சம்பளம்‌ ஏழைகள்‌ தலையில்‌ கை வைத்து அவர்களிடம்‌ வசூல்‌ செய்யப்படுகிறது. இத்தனைக்‌ கெடுதலும்‌ படித்த பிராமண வகுப்பாரால்‌ வந்தது. ஆகையால்‌ தான்‌ மகாத்மா இந்தக்‌ குறைகளை மாற்ற வேண்டுமென்று சொன்னார்‌. எல்லாம்‌ ஏமாற்றமே இப்போது உங்களிடம்‌ ஓட்டுக்‌ கேட்பவர்கள்‌, “அவன்‌ சட்ட சபைக்‌ குப்‌ போனான்‌ ஒன்றும்‌ செய்யவில்லை; இவன்‌ போனான்‌ ஒன்றும்‌ செய்ய வில்லை; நான்‌ போகிறேன்‌: பண்ணிப்‌ போடுகிறேன்‌” என்று உங்களை முட்டாள்கள்‌ என்று நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர்‌. வேளாளப்‌ குடி அரசு - 1926 N 416 பிரபுக்கள்‌ ஏமாற்றமடையக்‌ கூடாது. அவர்கள்‌ சொல்வது பொய்‌.அங்கு யார்‌. போனாலும்‌ உங்களுக்கு ஒன்றும்‌ செய்ய முடியாது. அதில்‌ தங்களுக்கு உத்தியோகம்‌ தேடிக்கொள்ளத்தான்‌ முடியும்‌. அதற்கு நீங்கள்தான்‌ அதிக வரி கொடுக்க வேண்டி வரும்‌. சட்டசபையில்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது என்று சொல்லி வெளியில்‌ வந்தவர்கள்‌ மறுபடி எதற்காகப்‌ போக வேண்டும்‌? சுயராஜ்யமென்றால்‌ என்ன? நமது மகாத்மா காந்தியடிகள்‌ தமது “சுயராஜ்ய”த்திற்கு இன்னும்‌ அர்த்தம்‌ சொல்லவில்லை. ராஜப்‌ பிரதிநிதி கேட்டபோது கூட அவர்‌ சொல்ல வில்லை. சுயராஜ்யம்‌ கிடைத்தால்‌ அதை அடைய யோக்கியதை வேண்டு மென்றுதான்‌ நிர்மாணத்‌ திட்டத்தையே “சுயராஜ்யம்‌” என்று சொன்னார்‌. அதை விட்டுவிட்டு உத்தியோகம்‌ அடைவதை சுயராஜ்யம்‌ என்று உங்களை. பிராமணர்கள்‌ ஏமாற்றுகிறார்கள்‌. நாம்‌ உண்மையை உணர வேண்டும்‌; உண்‌ மையை எடுத்துச்‌ சொல்ல வேண்டும்‌; உண்மையை எடுத்துச்‌ சொல்லுவதில்‌ என்ன வந்தாலும்‌ பொறுத்துக்‌ கொள்ளத்தான்‌ வேண்டும்‌. நம்‌ பயித்தியக்‌ காரத்தனம்‌ நீங்கவேண்டும்‌. இப்போது நாளுக்கு நாள்‌ “மகாத்மா காந்தி யென்பவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌” என்று சொல்லும்‌ ஸ்திதிக்குக்‌ கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்‌. இப்போது நமது யோக்கியதை என்ன என்பதுதான்‌ நமது கவலை. நாம்‌ இத்தனை கஷ்டப்பட்ட ஒத்துழையாமைக்‌ காங்கிரஸின்‌ பயனை சுயநலக்காரர்கள்‌ உபயோகப்படுத்திக்கொள்ள விடுவதா என்பதுதான்‌ எனது கவலை... வித்தியாசம்‌ ஒழிய வேண்டும்‌ மறுபடியும்‌ ஏதாவது ஒத்துழையாமை இயக்கத்திற்குப்‌ புத்துயிரளிக்க வழியுண்டா என்பதுதான்‌ இனி யோசிக்க வேண்டிய வேலை. பெருமைக்கு ஆசைவேண்டாம்‌. பெருமை என்றால்‌, பணத்தாலும்‌, சதையாலும்‌, பலத்தா லும்‌ உண்டாகக்‌ கூடியதல்ல. மகாத்மாவை நாம்‌ எதற்காக மதிக்கிறோம்‌? அவருடைய உத்தமமான கொள்கைக்காகவே “இந்த ராஜாங்க முறை சரியல்ல, இதை தகர்த்து விடவேண்டு மென்று நாம்‌ சொல்லும்போது “நமது தற்கால காங்கிரஸ்‌ முறை சரியல்ல, அதை ஒழித்து ஒத்துழையாமைக்‌ காங்கிரஸை மீண்டும்‌ உண்டாக்க வேண்டு” மென்று ஏன்‌ நாம்‌ சொல்லக்‌ கூடாது? இத்தனை பலமுள்ள கவர்ன்மெண்டு முறையை ஒழிக்கும்‌ சக்தி நமக்கிருக்குமானால்‌ தற்கால உத்தியோக காங்கிரஸ்‌ முறையை நாம்‌ ஏன்‌: ஒழித்து விட முடியாது? நாமும்‌ மனிதரென்று சொல்லிக்‌ கொள்ளுகிறோமே தவிர, உண்மையில்‌ அதற்கு அர்த்தமில்லை. உத்தியோகக்‌ காங்கிரஸால்‌ நமது பிராமணரல்லாதாரின்‌ முன்னேற்றத்திற்கு ஏற்படுகிற தடைகள்‌ பூராவும்‌ நீக்கப்படவேண்டும்‌; மனிதனுக்கு மனிதன்‌ வித்தியாசமிருக்கக்‌ கூடாது; சம உரிமை வேண்டும்‌ என்கிற காங்கிரஸை ஏற்படுத்த வேண்டும்‌. நமக்குள்‌. 417 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 வித்தியாசமில்லையென்று மூடி வைப்பதனால்‌ என்ன நன்மை ஏற்படும்‌? இப்பொழுதிருக்கும்‌ நிலைமையில்‌ பிராமணராயிருந்தாலும்‌ யாராயிருந்தா லும்‌ இந்த வித்தியாசங்களை ஒழிக்க முதலில்‌ பாடுபட வேண்டும்‌. நாம்‌ இந்த வித்தியாசங்களை மறைத்து வைத்தாலும்‌ நம்‌ சந்ததியார்கள்‌ காலத்தில்‌ கலவரம்‌ வந்தே தீரும்‌. அவர்கள்‌ காலத்திலாவது இந்த வித்தியாசம்‌ ஒழிந்தே தான்‌ தீர வேண்டும்‌. விடுதலை வேண்டுமானால்‌ முதலில்‌ இந்த வித்தியா சங்களை ஒழிக்க வேண்டியது முதல்‌ வேலையாகும்‌. 100- க்கு 97 பேர்‌ “சூத்திரர்‌”, “தாசி மக்கள்‌”, “அடிமைகள்‌” என்ற வித்தியாசம்‌ இன்னும்‌ ஒரு வகுப்பாரிடம்‌ இருந்து கொண்டிருக்கிறது. இவைகள்‌ ஒழிய வேண்டாமா? ஏன்‌ இவைகளை ஒழிக்கக்‌ கூடாது? உயர்வு தாழ்வு நிலைக்குமா? உயர்ந்தவர்கள்‌ தாழ்ந்தவர்கள்‌ என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது? ஒரு தாழ்ந்த ஜாதியானுடம்பில்‌ இருப்பதும்‌ ரத்தந்தான்‌, நமது நண்பர்‌ தாலூகா போர்டு தலைவர்‌ ஸ்ரீமான்‌ ராஜுக்‌ கவுண்டரவர்கள்‌ உடம்பிலிருப்பதும்‌. ரத்தந்தான்‌, ஸ்ரீமான்‌ வெங்கிட்டரமணய்யங்கார்‌ உடம்பிலிருப்பதும்‌ ரத்தந்‌ தான்‌. இம்மூன்று ரத்தத்திற்கும்‌ என்ன வித்தியாசம்‌? இன்றைக்கு பெரிய ஜாதியாரென்று தாழ்ந்த ஜாதியாரை அவமதிக்கிறார்கள்‌? அதே “பஞ்சமன்‌” கிறிஸ்து மதத்தில்‌ சேர்ந்து கொஞ்சம்‌ படித்து “டானியல்‌” என்று பெயர்‌: வைத்துக்‌ கொண்டு ஒருரிவினியூ இன்ஸ்பெக்டராக வந்தால்‌ பெரிய ஜாதி மணியக்கார்‌ குனிந்து கும்பிட்டுவிட்டுக்‌ கூப்பிட்ட விடத்திற்கெல்லாம்‌. கட்டைக்‌ கக்கத்தில்‌ வைத்துக்‌ கொண்டு பின்னால்‌ ஓடுவார்‌. வைதீகப்‌ பிராமணன்‌ ஒருவன்‌ ரிவினியூ இன்ஸ்பெக்டராக வந்தால்‌ ஒரு பஞ்சமன்‌ கிறிஸ்து மதத்தில்‌ சேர்ந்து வேறு பெயர்‌ கொண்டு டிப்டி கலெக்டராக வந்து விட்டால்‌ சாஸ்திரியான இன்ஸ்பெக்டர்‌ கும்பிட்டுக்‌ கூப்பிட்ட இடமெல்லாம்‌. பின்னால்‌ ஓடுவார்‌. இந்த வித்தியாசங்கள்‌ அப்பொழுது எங்கே போய்‌ விடுகிறதென்று தான்‌ நான்‌ கேட்கிறேன்‌. இன்றைக்கு நாம்‌ இதே நிலையில்‌ இருந்துவிடலாம்‌ என்றால்‌ அது நிலைக்குமா? உதாரணமாக, ஒரு சூதாடி இன்னொருவனிடம்‌ இருக்கும்‌ பணத்தை சூதாடிக்‌ கெலித்தி விட்டால்‌ தோத்தவன்‌ விடுவானா? மீண்டும்‌ சூதாடிக்‌ கெலிக்கத்தான்‌ கூப்பிடுவான்‌. மரியாதையாய்க்‌ கெலித்தவன்‌ சூதாடாமல்‌ கெலித்த பணத்தைக்‌ கொண்டு ஓட்டம்‌ பிடிக்கப்‌ பார்த்தால்‌ அவனை உதைத்தாவது, கொலை செய்தாவது அந்தப்‌ பணத்தைப்‌ பிடிங்கிக்கொள்ள எண்ணுவான்‌. அதுபோல்‌ இன்றைக்கு ஒரு கூட்டத்தார்‌ உயர்ந்த ஜாதியாராகி விட்டால்‌ மற்றவர்கள்‌ நாளைக்குப்‌ பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? ஒருவரையொருவர்‌ உதைத்தாவது சமத்துவம்‌ தேட எண்ணமுண்டாகும்‌. குடி அரசு - 1926 N 418 ஜஸ்டிஸ்‌ கட்சியில்லாவிட்டால்‌.... . பிராமணரல்லாதார்‌ கட்சியை சில சுயநலக்காரர்களும்‌, பிராமணப்‌ பத்திரிகைகளும்‌, பிராமணத்‌ தலைவர்களும்‌ போன விடங்களிலெல்லாம்‌ எழுத்தினாலும்‌ சொல்லினாலும்‌ தூற்றிவருகின்றனர்‌. இன்றைக்கு பிராமணரல்‌ லாதார்‌ கட்சி இல்லாவிட்டால்‌ நம்‌ பிராமணரல்லாதார்‌ நிலை எப்படியிருந்தி ருக்கும்‌? நமது மகமது உஸ்மான்‌ அவர்களும்‌ சிவஞானம்‌ பிள்ளையவர்‌' களும்‌ இந்த உயர்ந்த ஸ்தானத்திலிருக்க முடியுமா? நமது வீரய்யன்‌ சட்ட சபைக்குப்‌ போயிருக்க முடியுமா? இதை நன்றாக யோசித்துப்‌ பாருங்கள்‌. நான்‌ இந்த இடத்தில்‌ வந்து பேச எனக்கு வழியேற்பட்டிருக்குமா? ஸ்ரீமான்‌ ராஜுக்‌ கவுண்டரும்‌ பட்டக்காரரும்‌ பிரசிடெண்டாக முடியுமா? இவை களையும்‌ யோசித்துப்‌ பாருங்கள்‌. ஆதலால்‌ பிராமணரல்லாதார்‌ கட்சியில்லா விட்டால்‌ பிராமணரல்லாதார்‌ பாடு இன்னும்‌ ஆபத்தாய்‌ போயிருக்கும்‌. தீண்டாமை வளர்ந்த விதம்‌ உயர்வு தாழ்வு வித்தியாசங்கள்‌ பிராமணரிடத்தில்‌ மாத்திரம்‌ இல்லை. பிராமணரல்லாதாரிடத்திலும்‌ இந்த வித்தியாசம்‌ இருந்துதானிருக்கிறது. நாம்‌ பிராமணர்களை மட்டும்‌ ஏன்‌ சொல்லுகிறோமென்று நீங்கள்‌ கேட்கலாம்‌. அவர்கள்தான்‌ வழி காட்ட வேண்டும்‌. முடிச்சுப்‌ போட்டவன்‌ அவிழ்த்தால்‌ சீக்கிரம்‌ அவிழ்க்கலாம்‌. பிராமணர்‌ பார்த்து விமோஜனம்‌ செய்வதானால்‌ சீக்கிரம்‌ ஒழிந்து விடும்‌. காரணம்‌, இவர்களைப்‌ பார்த்துத்தான்‌ மற்ற ஜாதியார்‌. காப்பியடித்தார்கள்‌. எங்கள்‌ ஊரில்‌ தண்ணீர்‌ குழாயை பிராமணப்‌ பெண்கள்‌. கால்‌ குடம்‌ தண்ணீர்‌ கொண்டுவந்து குழாயைக்‌ கழுவித்‌ தண்ணீர்‌ எடுப்ப தைப்‌ பார்த்த பிராமணரல்லாத பெண்கள்‌ அரைக்குடம்‌ தண்ணீர்‌ விட்டு குழாயைக்‌ கழுவுகிறார்கள்‌. இதைப்‌ பார்த்த மகமதியப்‌ பெண்கள்‌ தாங்களும்‌. முக்கால்‌ குடம்‌ தண்ணீர்‌ ஊற்றிக்‌ கழுவ ஆரம்பித்துவிட்டார்கள்‌.நாம்‌ பார்த்து வித்தியாசங்களை ஒழித்தால்‌ ஏன்‌ ஒழியாது? கல்லைச்‌ சாமியாக்கும்‌ நமது மந்திரங்கள்‌ ஏன்‌ தாழ்ந்தவர்களை உயர்ந்தவர்களாக்க முடியாது? தாழ்ந்தவர்‌. களை உயர்ந்தவர்களாக்க முடியாத மந்திரம்‌, கல்லை எப்படி சுவாமியாக்கும்‌ என்பதுதான்‌ ஆச்சரியமாயிருக்கிறது. காசியிலிருக்கும்‌ சுவாமியை எல்லோரும்‌ கட்டித்‌ தழுவி கும்பிடலாம்‌.மதுரையிலிருக்கிற சுவாமி மாத்திரம்‌ நாடார்‌ கோவிலுக்குள்‌ வந்தால்‌ ஓடிவிடுமாம்‌. தனது பக்தர்கள்‌ கோவிலுக்குள்‌ வந்தால்‌ ஓடிப்போகும்‌ படியான சுவாமிக்கு நம்மைக்‌ காப்பாற்றும்‌ சக்தி எப்படி வரும்‌? அப்படி மனிதரைக்‌ கண்டு ஓடும்‌ சுவாமியைக்‌ கும்பிட்டாலென்ன? திருப்பிப்போட்டு வேஷ்டி துவைத்தாலென்ன? நாம்‌ பார்த்து சுவாமியையும்‌ பயித்தியகாரத்தனமாக்கி விடுகிறோம்‌. கடவுளுக்கு வித்தியாசமான மனிதர்‌: களில்லை யென்பதை நீங்கள்‌ உணர வேண்டும்‌. 419 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 சுயராஜ்யம்‌ யாருக்கு வேண்டும்‌? ஜமீன்தாரர்களுக்கும்‌ பணக்காரர்களுக்கும்‌ சுயராஜ்யம்‌ வேண்டிய தில்லை. ஏழைகளுக்குத்தான்‌ சுயராஜ்யம்‌ வேண்டும்‌. சில கவுண்டர்கள்‌ பணக்காரர்களாயிருக்கலாம்‌, நமது பெரும்பான்மையான வேளாள மக்கள்‌ நிலைமை என்ன? ஒரு போலீஸ்காரன்‌ “சுமையைத்‌ தூக்கு” என்றால்‌ உடனே தூக்க வேண்டும்‌. தூக்காமல்‌ கொஞ்சம்‌ ஆக்ஷேபித்தால்‌, போலீஸ்காரன்‌ பட்டையைக்‌ கழட்டி ஓங்கினால்‌ “எடுப்பதற்குள்‌ என்னையா அவசரம்‌” என்றுதான்‌ பதில்‌ சொல்லுகிறார்கள்‌. நம்‌ நாட்டில்‌ இன்றைக்கு விவசாயத்தில்‌ சம்பாதிப்பவர்களெல்லாம்‌ வேளாளர்களேயாகும்‌. ஆனால்‌ அவர்கள்‌ சம்பாதித்து அதை மற்றவர்‌ அநுபவிக்கச்‌ செய்துவிடுகிறார்கள்‌. வேளாள மக்கள்‌ சம்பாதிப்பது பூராவும்‌ வக்கீல்‌ வீட்டுக்கும்‌, கோர்ட்டுக்கும்‌ போய்‌ விடுகிறது. அவர்களில்லாவிட்டால்‌ வியாபாரமேது? இத்தனை வக்கீல்க ளேது? ஆகையால்‌ சுயராஜ்யம்‌ அவ்வித ஏழைகளுக்குத்தான்‌ வேண்டும்‌ என்பது மகாத்மாவின்‌ நோக்கமாகும்‌.ஒரு சி.பி. ராமஸ்வாமி ஐயருக்கும்‌, ஒரு சிவஞானம்‌ பிள்ளைக்கும்‌ ஆயிரக்கணக்கான சம்பளம்‌ கிடைத்தால்‌ ஏழை களுக்கு என்ன பலன்‌ உண்டு. ஏழை மக்களுடைய க்ஷேமத்திற்குரிய சுய ராஜ்யம்தான்‌ நமக்கு வேண்டும்‌. ஏழைகளுக்காக உயிரைக்‌ கொடுக்கும்‌ தியாகிகளே தேசத்திற்குத்‌ தேவை. நாம்‌ யாரையும்‌ சுலபமாக நம்பி விடுகி றோம்‌. அம்மாதிரி நம்பி இனி ஏமாற முடியாது. சி.பி. ராமசாமி ஐயர்‌ ஸ்தானத்‌ தில்‌, வீரய்யனிருந்திருந்தால்‌ கல்பாத்தி உத்திரவுக்கு ராமசாமி அய்யர்‌. அர்த்தம்‌ செய்தது போல்‌ செய்திருப்பாரா? என்பதை எல்லோரும்‌ கவனிக்க. வேண்‌ டும்‌. இதுவரை நான்‌ சொல்லி வந்ததை யாரும்‌ வித்தியாசமாக நினைக்காம லிருக்கும்படி கேட்டுக்‌ கொள்ளுகிறேன்‌. எனக்கு வகுப்புத்‌ துவேஷத்தை உண்டாக்க வேண்டுமென்கிற எண்ணமில்லை. வெள்ளம்‌ வருமுன்‌ அணை போட வேண்டுமென்பதுதான்‌ என்னுடைய நோக்கமாகும்‌. கதர்‌ ஏழைகளுக்கு சுயராஜ்யம்‌ வேண்டுமென்றுதான்‌ மகாத்மா காந்திய டிகள்‌ தமது சுயராஜ்யத்‌ திட்டத்தில்‌ ராட்டினத்தையும்‌ கதரையும்‌ பிரதானமாக வைத்தார்‌. ஏழைகளின்‌ பசிக்‌ கொடுமை தீரவேண்டுமென்பதுதான்‌ மகாத்மாவின்‌ முக்கிய நோக்கம்‌. நம்‌ நாட்டில்‌ வீட்டுத்‌ தொழில்கள்‌ மறைந்து போனதால்‌ ஏராளமான ஜனங்கள்‌ கஞ்சிக்கு வாடுகின்றனர்‌; மலைகளுக்கு ஓடிப்‌ பிழைக்க வழி பார்க்கின்றனர்‌. நாம்‌ கதர்‌ கட்டவும்‌, நூல்‌ நூற்கவும்‌ ஆரம்‌ பித்தால்‌ ஏழைகள்‌ பசி ஆறும்‌. வீட்டில்‌ தொழிலில்லாததினால்‌ கிராமத்துப்‌ பெண்கள்‌ புல்லையும்‌ தட்டையும்‌ எடுத்துக்கொண்டு டவுன்களில்‌ போய்‌ கற்பிழந்து விட சந்தர்ப்பம்‌ ஏற்பட்டு விடுகிறது. ராட்டினத்தை நாம்‌ விர்த்தி செய்தால்‌ கற்பும்‌ கெடாது; கஞ்சிக்கும்‌ வழியுண்டு; புண்ணியமும்‌ உண்டு. நம்‌ நாட்டுப்பொருள்‌ அந்நியத்‌ துணியால்‌ 60 கோடி போகிறது.அதைநிறுத்தலாம்‌. குடி அரசு - 1926 N 420 ஏழைமக்களுக்கு கஞ்சி வார்த்த பலனை அடையலாம்‌. இத்தனை அநுகூலம்‌ கதராடைக்‌ கட்டுவதால்‌ உண்டாகும்‌. நாம்‌ கதர்‌ கட்டி ஏழைகளைக்‌ காப்பாற்‌ றும்‌ தர்மம்‌ மேலா, பாயாசத்திற்கு பாதாமிப்பருப்பு இல்லையென்பவர்களுக்கு சமாராதனை செய்வது மேலா என்பதை ஆராய்ந்து பாருங்கள்‌. கதர்‌ கொஞ்சம்‌ விலை அதிகமென்று எண்ணக்கூடாது. ஒரு நாள்‌ காப்பி குடிப்பதை நிறுத்தினால்‌ ஒரு கொத்து வேஷ்டி நஷ்டத்தை சரிக்‌ கட்டலாம்‌. ஒரு நாளைக்கு நாடகத்துக்குப்‌ போகாதிருந்தால்‌ ஒரு கொத்து வேஷ்டியே வாங்கி விடலாம்‌. ஒரு நாளைக்கு வக்கீல்‌ வீட்டிற்குப்‌ போகாமலிருந்தால்‌ ஒரு குடும்பத்திற்கு ஒரு வருஷத்திற்கு வேண்டிய கதர்‌ துணி வாங்கி விடலாம்‌. ஆகையால்‌ எல்லோரும்‌ கதர்‌ கட்டவேண்டுமென்று கேட்டுக்கொண்டும்‌, இதுவரை நான்‌ சொல்லி வந்த விஷயங்கள்‌ பூராவும்‌ தற்கால நிலைமையில்‌ நாம்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப்‌ பொருத்ததாகையால்‌ உண்மையை உணர்ந்து உங்கள்‌ புத்திக்கு சரி என்று தோன்றியபடி நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌. குறிப்பு:கோபிச்செட்டிபாளையம்‌ வேளாள விடுதி கட்டிடத்தில்‌ 13:61926இல்‌ நடைபெற்ற மாநாட்டில்‌ சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 27.06.1926 421 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 நமது யார்ப்பணர்‌ “ஜாட்டை ஆட்சி” யைக்‌ கொல்ல முயல்வதிண்‌ கரகசியம்‌ “இரட்டை ஆட்சி” யென்றால்‌ என்ன என்பது நமது ஜனங்களில்‌ அனேகருக்குத்‌ தெரியாதென்றே சொல்லவேண்டும்‌. இரட்டை ஆட்சியைத்‌ தகர்க்க வேண்டும்‌, ஒழிக்க வேண்டும்‌ என்று பார்ப்பனர்கள்‌ சொல்லும்போது பார்ப்பனரல்லாத பாமர மக்களும்‌ அரசியல்‌ நடை முறையினை அறியாத பல காங்கிரஸ்காரர்‌, பிரசாரகர்‌ என்று சொல்லிக்‌ கொள்பவரும்‌, இரட்டை ஆட்சி என்பதை ஒரு இராணுவ ஆட்சியென்றும்‌ வெள்ளைக்காரரே நேரிலிருந்து செய்யப்படும்‌ காரியமென்றும்‌ இதை ஒழித்துவிட்டால்‌ அரசாங்‌ கம்‌ நம்‌ கைக்கே வந்துவிட்டதென்றும்‌ நினைத்துக்‌ கொண்டு, கூடவே ஒத்துப்‌ பாடுகிறார்கள்‌. இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிற பார்ப்பனர்கள்‌ இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று இது வரையில்‌ ஒரு வார்த்தையும்‌ சொல்லவேயில்லை. பார்ப்பனர்களுக்கு விபூஷ ணாழ்வார்‌ போல்‌ விளங்கின தேசபந்து தாஸரவர்கள்‌ இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று சொல்லவேண்டிய அவசியமேற்பட்ட காலத்தில்‌ விண்ணவர்க்கு விருந்தினராகி விட்டார்‌. ஆதலால்‌ இரட்டை ஆட்சி என்ன வென்பதும்‌, அதை அழித்த பிறகு என்ன செய்ய வேண்டு மென்பதும்‌ பாமர ஜனங்கள்‌ தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்‌. தமிழ்நாட்டுப்‌ பார்ப்பனக்‌ கூட்டத்தினரது தந்திரத்தின்‌ சாமர்த்திய மானது நமது பார்ப்பனரல்லாதார்‌ இரட்டை ஆட்சியின்‌ தத்துவம்‌ தெரியா மலே அதை “அழிக்கிறேன்‌” என்று சொல்லுகிறவர்களின்‌ பின்னால்‌ திரியவும்‌ அவர்கள்‌ ஆட்டுவிக்கிறபடி ஆடவும்‌ குழந்தைகள்‌ போலும்‌, “சொன்னதைச்‌ சொல்லும்‌ கிளிப்பிள்ளை” என்பது போலும்‌ நடந்து கொள்ளுகிறார்கள்‌. இரட்டை ஆட்சி என்பதன்‌ பொருள்‌ 35-வருஷ காங்கிரஸ்‌ கேட்டுக்‌ கொண்ட தற்கிணங்க சர்க்காரால்‌ ஜனங்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட ஒரு “உரிமை” (யதவி) என்பது பொருள்‌. அஃதாவது “சுயஆட்சி செலுத்த இந்திய மக்களாகிய நாங்கள்‌ தயாராகி விட்டோம்‌. ஆதலால்‌ அரசாங்கத்தின்‌ பொறுப்‌ பை எங்கள்‌ வசம்‌ ஒப்புவித்து விடுங்கள்‌” என்று நம்முடைய தலைவர்கள்‌ என்போர்‌ சர்க்காரை விண்ணப்பம்‌ மூலமாய்க்‌ கேட்டுக்‌ கொண்டதால்‌, குடி அரசு - 1926 N 422 அதாவது ஸ்ரீமதி பெசண்டம்மையாரின்‌ ஆதிக்கத்திலிருந்த காங்கிரஸின்‌ போது “19 பேர்‌ விண்ணப்பம்‌” என்று சொல்லப்பட்ட நமது பிரதிநிதிகளான *தலைவர்கள்‌” ஒன்று கூடி யோசித்துத்‌ தீர்மானஞ்‌ செய்து எழுதி அதில்‌ 19 இந்திய “தலைவர்‌” கள்‌ கையெழுத்துப்‌ போட்டனுப்பியதும்‌, மாண்டேகு துரை மகனார்‌ இந்தியாவிற்கு வந்த காலத்தில்‌ அவரிடம்‌ சமர்ப்பிப்பதின்‌ பொருட்டு பத்து லக்ஷக்கணக்கான பாமர மக்களிடம்‌ கையெழுத்து வாங்கி சமர்பித்த விண்ணப்பத்திலும்‌ கண்ட விஷயங்களேயாகும்‌. இம்மாதிரி கையெழுத்து வாங்க யோசனை கூறியவருள்‌ நமது மகாத்மா காந்தியடிகளும்‌ ஒருவராகும்‌. மாண்டேகு துரையிடம்‌ “நமது தலைவர்கள்‌” சாக்ஷியம்‌ கூறியபோது, “சில அதிகாரங்களை நீங்கள்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌, சில அதிகாரங்களை எங்க. ளுக்குக்‌ கொடுங்கள்‌” என்று சொன்னவையே இரட்டை ஆட்சிக்கு ஆதார மாகும்‌. சர்க்காருக்கு இந்தத்‌ தலைவர்கள்‌ வார்த்தையில்‌ நம்பிக்கையில்லா விட்டாலும்‌, “ஏதோ கொஞ்சம்‌ கொடுத்துப்‌ பார்ப்போம்‌, கொடுக்கப்படும்‌ கொஞ்சத்தையும்‌ இவர்கள்‌ சரியாய்‌ நடத்தாமல்‌ கெடுத்து விட்டால்‌ என்ன செய்கிறது?” என்ற பயத்தின்‌ பேரில்‌ அவர்களுக்குக்‌ கொடுக்கும்‌ அதிகாரத்‌ திலும்‌ தங்களுக்குக்‌ கொஞ்சம்‌ ஆதிக்கமிருக்க வேண்டுமென்னும்‌ கருத்‌ தோடு, “மேற்பார்வை பார்க்கும்‌” அதிகாரத்துடன்‌ சில இலாக்காக்களின்‌ நிர்வாகத்தை பொதுஜனங்களுக்கு கொடுத்திருப்பதும்‌, சில இலாக்காக்களைத்‌ தாங்களே வைத்துக்கொண்டு இருப்பதும்‌ ஆகிய இந்த இரண்டு நிர்வாகத்‌ திற்குமே “இரட்டை ஆட்சி” என்று பெயர்‌. இது நமது காங்கிரஸ்‌ தலைவர்கள்‌. சர்க்காரைக்‌ கேட்டுக்கொண்ட தத்துவப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறதே யல்லாமல்‌ சர்க்கார்‌ இஷ்டப்படி கொடுக்கப்பட்டதல்ல. இதை நமது காங்கிரஸ்‌ காரர்களும்‌ ஏற்றுக்‌ கொண்டதுதான்‌. ஆனால்‌, இது போதாது (Inadequate) என்பதாக மட்டும்‌ சொன்னார்களே தவிர இரட்டை ஆக்ஷித்‌ தத்துவமே கூடாது என்று இதற்கு முன்‌ எப்போதும்‌ சொல்லப்படவேயில்லை. இப்போது “தலைவர்கள்‌” கான்பூர்‌ காங்கிரஸின்‌ பிரகாரம்‌ கேட்கும்‌ சுயராஜ்யத்‌ திட்டத்‌ தில்‌ சர்க்காருக்கு ஒருவித அதிகாரமுமின்றி முழுப்பொறுப்பையும்‌ கொடுக்‌ கும்படி எவரும்‌ கேட்கவில்லை. இராணுவம்‌, போலீஸ்‌, பொது ஜனங்‌ களின்‌ பத்திரம்‌, சமாதானம்‌, ஒழுங்குமுறைகள்‌ ஆகியவைகளின்‌ பொறுப்பை சர்க்காரே வைத்துக்கொள்ள வேண்டுமென்றுதான்‌ சொல்லிக்கொண்டு அவை நீங்கலாக மற்றவைகளை கொடுக்கும்படி கேட்கிறார்களே தவிர வேறில்லை. இன்னும்‌ இப்போது வர வர நீதி நிர்வாக இலாக்காக்களையும்‌ சர்க்காரே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும்‌ இந்திய சட்டசபையில்‌ தமிழ்‌ நாட்டுப்‌ பிரதிநிதி சொல்ல ஆரம்பித்துவிட்டார்‌. அல்லாமலும்‌ இரட்டை ஆட்சியில்‌ மந்திரிகளுக்குள்ள அதிகாரத்தின்‌ மேல்‌ சர்க்காருக்கு ஆதிக்கம்‌ வேண்டுமெனச்‌ சொல்லி இந்திய சட்டசபையிலிருக்கும்‌ ஒரு சென்னை பிரதிநிதி கூறி வாதாடியிருக்கிறார்‌. இந்த நிலைமையில்‌ இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்வதன்‌ பொருள்‌ என்ன? இதன்‌ இரகசியம்‌ என்னவென்பதை அறிய வேண்டாமா? 423 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அதாவது, இரட்டை ஆட்சியைக்‌ காங்கிரஸ்‌ கேட்கும்‌ போதும்‌ “19 பேர்‌” கையெழுத்துப்‌ போடும்‌ போதும்‌ அதற்காக கிராமம்‌ கிராமமாய்‌ சென்று பாமர மக்களிடம்‌ கையொப்பம்‌ வாங்கும்‌ காலத்திலும்‌ நமது “தலைவர்களான” பார்ப்பனர்களுக்கு பார்ப்பனரல்லாதார்‌ கட்சி ஒன்று முளைக்குமென்றாவது, முளைத்தாலும்‌ தம்மை மீறி மற்றவர்களால்‌ ஓட்டர்கள்‌ ஏமாற்றப்பட்டு அது செல்வாக்குப்‌ பெறுமென்றாவது, அதன்‌ பலன்‌ முற்றிலும்‌ பார்ப்பனர்களே அடைய முடியாது போகுமென்றாவது அவர்களுக்கு அதுபோழ்து தோன்ற 'வேயில்லை. ஆதலால்‌ இதன்‌ பலனாய்‌ ஏற்படும்‌ அதிகாரங்கட்குக்‌ கொழுத்த சம்பளங்களனைத்தையும்‌ தாங்களும்‌ தங்கள்‌ பிள்ளை குட்டிகளும்‌ இனத்தார்‌. களுமே அடையலாமென்ற பேரவாவுடன்‌ தீர்மானித்திருந்தனர்‌. இவ்வளவு கொழுத்த பணத்தையும்‌ அதிகாரத்தையும்‌ பார்த்த பின்னர்‌ இப்போது பார்ப்பனரல்லாதார்‌ இயக்கம்‌, மகமதியர்‌ இயக்கம்‌, கிறிஸ்துவர்‌ இயக்கம்‌, தாழ்த்தப்பட்டவரியக்கம்‌, வகுப்புவாரிப்‌ பிரதிநிதித்துவ இயக்கம்‌ என இத்தகைய பல இயக்கங்கள்‌ இதன்‌ பயனாகத்‌ தோன்றவும்‌, இவ்வதிகாரங்‌ களும்‌ சம்பளமும்‌ பார்ப்பனர்களுக்கு முழுமையும்‌ கிடைக்காமல்‌ பல வழி களில்‌ பிரியவும்‌, பல வகுப்புகளுக்குப்‌ போகவும்‌, அதனால்‌ பார்ப்பனர்‌. களுக்கு ஏமாற்றமேற்பட்டதால்‌, இப்பொழுது பார்ப்பனர்கள்‌ விழித்துக்‌ கொண்டு “முழு அதிகாரங்களும்‌ வெள்ளைக்காரர்களிடமேயிருக்க வேண்டுமேயொழிய, இந்திய மக்கள்‌ கைக்கு வரக்கூடாது: வந்தால்‌ அதற்கு முன்‌ நமக்கு கிடைத்துக்‌ கொண்டிருந்த உத்தியோகங்கள்‌ கூட இப்போது கிடைப்பதற்கில்லாமல்‌ பல வகுப்புகளுக்குப்‌ போய்விடுகிறதென்றும்‌, மற்ற வகுப்பாரும்‌ தங்கள்‌ வகுப்பினருக்குச்‌ சமானமாய்‌ வருவதற்கு வழியேற்‌ பட்டுப்‌ போகிறது” என்றும்‌ நினைத்தே இப்பொழுது ஜனங்களுக்குக்‌ “கொஞ்சமாவது கொடுத்திருப்பதாய்‌”ச்‌ சொல்லப்படும்‌ அதிகாரத்தையும்‌ வெள்ளைக்காரரே எடுத்துக்‌ கொள்ளவேண்டுமென்று கிளர்ச்சி செய்ய இரகசியத்தில்‌ தீர்மானித்துக்‌ கொண்டனர்‌. எனவே, இப்போதுள்ள இரட்டை ஆட்சி ஒழிய வேண்டிய அவசியம்‌ நமது பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டு விட்டது. கல்கத்தாவில்‌ இரட்டை ஆட்சியை ஒழித்ததற்கு அவசியமாய்‌ நின்ற காரணம்‌, அங்கு மகமதியர்கள்‌ மந்திரி பதவிக்கு வந்துவிட்டதாலும்‌; சென்னையில்‌ இரட்டை ஆட்சியை ஒழிக்கவேண்டிய காரணம்‌ இங்கு பார்ப்பனரல்லாதார்‌ மந்திரி பதவியை வகித்திருப்பதாலுமேயல்லாமல்‌ வேறல்ல. மத்திய மாகாணத்தில்‌ இரட்டை ஆட்சியை ஒழித்த காரணம்‌ அங்குள்ள ஒரு வகுப்புப்‌ பார்ப்பனர்களுக்கு அதிகாரமில்லாமல்‌ போனதேயாகும்‌. ஆகவே, கல்கத்தாவிலும்‌ மத்திய மாகாணத்திலும்‌ இரட்டை ஆட்சியை ஒழித்தாகி விட்டது; மகம்மதியரையும்‌ பார்ப்பனரல்லாத மந்திரிகளையும்‌ வீட்டுக்கனுப்பியாகி விட்டது: இனி தமிழ்‌ நாட்டில்‌ ஒழிக்க வேண்டியதுதான்‌ பாக்கியாயிருக்கிறது. இரட்டை ஆட்சியை ஒழித்த பார்ப்பனர்களின்‌ வேலை யென்ன? முற்கூறிய இரண்டு இடங்களிலும்‌ இரட்டை ஆட்சி அழிந்து முற்றும்‌ சர்க்கார்‌. குடி அரசு -1926 (0 424. ஆட்சியான ஒத்தை ஆட்சியாக மாறி விட்டது. சென்னையிலும்‌ இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டதாகவே வைத்துக்‌ கொள்ளுவோம்‌; மந்திரிகளை வீட்டுக்கனுப்பி விட்டதாகவும்‌ வைத்துக்‌ கொள்ளுவோம்‌; பிறகு இந்தப்‌ பார்ப்பனர்கள்‌ சாதிக்கப்‌ போவதென்ன? வரி கொடாமைக்கு வருகிறார்களா? சட்ட மறுப்புக்கு வருகிறார்களா? தேசமே சட்டமறுப்புக்கு லாயக்கில்லை என்று காங்கிரஸிலேயே வெட்கமில்லாமல்‌ தீர்மானித்து விட்டனர்‌. தேச மக்களை சட்டமறுப்புக்கு தயார்‌ செய்யும்‌ வேலையும்‌ காங்கிரசுக்கு இல்லை யென்று “அகில இந்திய தலைவர்‌” ஸ்ரீமான்‌ சீனிவாசய்யங்கார்‌ மாயவரம்‌ வாக்காளர்‌ மகாநாட்டில்‌ விளம்பரப்படுத்தி விட்டார்‌. அதாவது “கான்பூர்‌ காங்கிரஸ்‌ திட்டமெல்லாம்‌ சட்டசபை என்கிற ஒரு அம்சந்தான்‌” என்று சொல்லிவிட்டு, அதில்‌ நம்பிக்கையில்லாதவர்கள்‌ -தீவிர ஒத்துழையாதார்கள்‌ -ஓதுங்கிக்‌ கொள்ளலாம்‌ என்று உத்திரவும்‌ பிறப்பித்து விட்டார்‌. (இவ்‌ விஷயம்‌ 23-6-26 ௨ “சுதேசமித்திரன்‌” பத்திரிகை 7-ம்‌ பக்கத்தில்‌ வெளிவந்திருக்கிறது? ஆகலான்‌, எதற்காக இரட்டை ஆட்சியை ஒழிப்பது? பனகால்‌ ராஜாவும்‌, பாத்ரோவும்‌, சிவஞானமும்‌ பதவி வகிக்கும்‌ இரட்டை ஆட்சியை ஒழிப்பதற்கு வேலை செய்வதற்குப்‌ பதிலாய்‌, ஸ்ரீமான்‌ சர்‌.சி.பி. இராமசாமி ஐயர்‌ வகித்துவரும்‌ ஒத்தை ஆட்சி ஏன்‌ ஒழியக்‌ கூடாது? அதைப்பற்றி நமது பார்ப்பனர்கள்‌ ஒரு வார்த்தையாவது பேசுவதேயில்லை. ஏன்‌? சர்‌.சி.பி.இராம சாமி ஐயர்‌ வகித்திருக்கும்‌ உத்தியோகம்‌ இரட்டை ஆட்சியுமல்ல, ஒத்தை ஆட்சியுமல்ல; அது சுத்தமான - கலப்படமில்லாத பார்ப்பன ஆட்சி. அதன்‌ பலனாய்‌ பார்ப்பனர்‌ உயர்ந்த ஜாதி என்பதை நிலை நிறுத்தவும்‌ மற்றவர்‌. தீண்டாத ஜாதி என்று ஒதுக்கவும்‌ சகல உத்தியோகங்களும்‌ பார்ப்பனரே அநுபவிக்கவும்‌ மிக்க அநுகூலமாயிருக்கிறது. உதாரணமாக, இந்த வாரத்தில்‌ 10 ஜில்லா ஜட்ஜி பதவியும்‌, 10 ஐப்‌ ஜட்ஜி பதவியும்‌ கொழுத்த சம்பளமாகிய மாதம்‌ 1000, 2000 ரூபாயில்‌ சர்‌.சி.பி. இராமசாமி ஐயரால்‌ வழங்கப்பட்டன. யாருக்கு? எல்லாம்‌ பார்ப்பனருக்கு! ஒரு சமயம்‌ அதிலும்‌ இரட்டை ஆட்சி நுழைந்து விட்டால்‌ இருபது ஜட்ஜி பதவிகளும்‌ பார்ப்பனருக்கே கிடைக்குமா? போலீஸ்‌ இலாகாவில்‌ சர்‌.சி.பி. இருப்பதால்‌ “சர்வம்‌ பார்ப்பன மயம்‌ ஜகத்‌” என்பது போல எல்லா உத்தியோகங்களும்‌ பார்ப்பனருக்கே வினியோ கிக்கப்படுகிறது. அதேபோல்‌ நீதி இலாகாவிலும்‌ சர்‌.சி.பி.இராமசாமி ஆட்சி இருப்பதால்‌ ஜில்லா முனிசீபுகள்‌ முழுதும்‌ மாதத்திற்கு 20.30 “சர்வம்‌ பார்ப்பன மயம்‌ ஜகத்‌” என்று ஏற்படுகிறது. அல்லாமலும்‌ பார்ப்பனப்‌ பிள்ளைகள்‌ படித்துவிட்டு உத்தியோகமில்லாமல்‌ திண்டாடித்‌ திரிவதால்‌ அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே ஒவ்வொரு தாலூகாவிற்கு இரண்டு மூன்று முனிசீப்‌ கோர்ட்டுகளும்‌, ஒவ்வொரு ஜில்லாவிற்கு இரண்டு, மூன்று, நான்கு ஜட்ஜி கோர்ட்டுகளும்‌, அடிஷனல்‌ ஜட்ஜி கோர்ட்டுகளும்‌, சப்‌ கோர்ட்டு 425 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 களும்‌ சிருஷ்டிக்க சர்‌.சி.பி.இராமசாமி பிர்ம்மாவாக விளங்குகிறார்‌. இதன்‌ பயன்‌ என்ன? ஊரெங்கும்‌ அக்கிரகாரத்‌ தெருக்களிலுள்ள வீடுகள்‌ தோறும்‌ பார்ப்பன வக்கீல்களின்‌ போர்டுகள்‌ (கருப்புப்‌ பலகை! தொங்கவும்‌, இவர்கள்‌ பிழைக்க ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார்‌ தங்களுக்குள்ளாகவே ஒருவர்‌. பேரில்‌ ஒருவர்‌ வழக்குத்‌ தொடர்ந்து முட்டிக்‌ கொள்ளவும்‌, கைப்‌ பணத்தை பார்ப்பனருக்கு அழுதுவிட்டு தலையில்‌ கையை வைத்துக்‌ கொண்டு போகவுமே ஏற்படுகிறது. இரட்டை ஆட்சியை ஒழிப்பதன்‌ இரகசியம்‌ பார்ப்ப னர்‌ பிழைப்புக்கு வழி தேடுவதற்கேயல்லாமல்‌ வேறொன்றும்‌ அல்லவே யல்ல. அப்படிக்கில்லாதவரை இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டு, அதற்கு மேல்‌ என்ன செய்வது என்பதைக்கண்டிப்பாய்‌ சொல்லியிருப்பார்கள்‌. இந்தப்‌ பார்ப்பணிடம்‌ பணம்‌ வாங்கிக்கொண்டு அவர்கள்‌ பின்னால்‌ வாலை ஆட்டிக்‌ கொண்டு பார்ப்பனரல்லாதாரைப்‌ பார்த்து குலைக்கும்‌ கனவான்களையும்‌ உண்மையிலேயே விஷயம்‌ அறியாமல்‌ எப்படியாவது ராஜீய வாழ்வில்‌ தனது பெயர்‌ அடிபட்டால்‌ போதுமென்று நினைத்துத்‌ திரிகிற அப்பாவிகளையும்‌ நாம்‌ ஒன்று கேட்கிறோம்‌, இரட்டை ஆட்சியை எதற்காக அழிப்பது? அழித்து விட்டதன்‌ மேல்‌ என்ன செய்வது? இரட்டை ஆட்சியை அழித்து ஒத்தை ஆட்சி செலுத்தும்‌ படி விட்டு விட்ட - விடப்போகிற - கிளர்ச்சி செய்வதை நிறுத்தி விட்டு ஒத்தை ஆட்சியே அழியும்படி செய்தாலென்ன? அல்லது இரட்டை ஆட்சியை அழிப்பது என்கிற வார்த்தையில்‌ அரசியலில்‌ எவ்விதத்‌ திலும்‌ இரட்டை ஆட்சியே கொஞ்சமும்‌ கூடாது என்கிற கருத்து அதில்‌ இருக்கிறதா? அப்படி இல்லையானால்‌ சில அதிகாரங்கள்‌ சர்க்கார்‌. கையிலேயே இருந்துதானே தீரும்‌. இரட்டை ஆட்சியை ஒழிக்க இந்திய சட்டசபைக்குப்‌ போன ஸ்ரீமான்‌ எம்‌.கே. ஆச்சாரியாரும்‌ எ.அரங்கசாமி ஐயங்காரும்‌ இந்திய சட்டசபையில்‌ பேசியதின்‌ அர்த்தமென்ன? இரட்டை ஆட்சியைப்‌ பற்றி இவ்வளவு எழுதியதின்‌ கருத்து இரட்டை ஆட்சியை நாம்‌ ஒப்புக்‌ கொள்ளுகிறோம்‌ என்பதைக்‌ காட்டுவதற்கு அல்ல. தற்காலம்‌ நம்நாட்டில்‌ அரசியல்‌ தத்துவத்தில்‌ இரட்டை ஆட்சிக்கும்‌, ஒத்தை ஆட்சிக்கும்‌, தற்கால உத்தியோக காங்கிரஸ்‌ கோரும்‌ பார்ப்பன ஆட்சிக்கும்‌ யாதொரு வித்தியாசமே இல்லையென்‌ பதோடு பார்ப்பன ஆட்சியை விட இரட்டை ஆட்சி மோசமானதல்ல என்பதுந்தான்‌ நமது அபிப்பிராயம்‌. ஆதலால்‌ மேற்கண்ட மூவாட்சியிலும்‌ ஏழைமக்களுக்கு - கிராமத்துக்‌ குடியானவர்களுக்கு - தொழிலாளர்களுக்கு - யாதொரு நன்மையும்‌ ஏற்படாததோடு இவைகளின்‌ பலனால்‌ இனியும்‌ அதிகமான கஷ்டம்‌ ஏற்படப்‌ போகிறதென்பதே நமது கருத்து. ஆனால்‌, நம்‌ நிர்வாக சபையிலாகட்டும்‌ மந்திரி சபையிலாகட்டும்‌ மற்ற நீதி இலாக்காக்‌ களிலாகட்டும்‌ ஒத்தை ஆட்சியின்‌ பெயரினாலோ, இரட்டை ஆட்சியின்‌ பெயரினாலோ, நரசிம்ம சர்மா, இராமசாமி ஐயர்‌, வெங்கட்டராம சாஸ்திரியார்‌, சீனிவாசய்யங்கார்‌, இராஜகோபால ஆச்சாரியார்‌, மோதிலால்‌ நேரு, மதன்‌ மோகன்‌ மாளவியா என்கிற பெயர்‌ உடையவர்கள்‌ இருந்து நடத்தும்‌ படியான குடி அரசு - 1926 N 426 ஆட்சியை விட வீரய்யன்‌, செளந்திர பாண்டியன்‌, அப்துல்‌ ரஹீம்‌, இன்னாசி முத்து, வரதராஜுலு என்கிற பெயர்‌ உடையவர்களிருந்தால்‌ நமது நாட்டில்‌ 6 கோடி மக்கள்‌ கண்ணில்‌ பட - தெருவில்‌ நடக்க-சுவாமி தரிசனம்‌ செய்ய - சுதந்திரமில்லாதவர்களாகவும்‌ 28 கோடி மக்கள்‌ “வேசி மக்கள்‌”, “அடிமை கள்‌” என்று சொல்லப்படக்‌ கூடியவர்களாகவும்‌ 7 கோடி மக்கள்‌ “மிலேச்சர்‌ கள்‌” என்று சொல்லப்படக்‌ கூடியவர்களாகவும்‌ “ஈன ஜாதிக்காரர்கள்‌” என்று சொல்லப்படக்‌ கூடியவர்களாகவும்‌ இருக்கமாட்டார்கள்‌ என்கிற ஒரே எண்ணந்தான்‌. நமது நாட்டில்‌ எந்த ஆட்சி இருந்தாலும்‌ பார்ப்பனர்‌ ஆட்சி கூடாது என்பதின்‌ - என்று நாம்‌ சொல்லுவதின்‌ - முக்கிய கருத்து. குடி அரசு - தலையங்கம்‌ - 27.06.1926. 427 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 அருவ்கால்‌ வாருன்‌ அங்குரார்ப்பண விழா - ஆரம்ப விழா அனுகூலம்‌ - உதவி, சாதகம்‌,நன்மை, காரியசித்தி அஞ்ஞாதவாசம்‌. - பிறர்‌ அறியாமல்‌ மறைந்து வாழ்தல்‌ அரிவிரி வகுப்பு - பள்ளியில்‌ தொடக்க வகுப்பு அருகர்‌ - தகுதியுடையவர்‌, பக்குவ நிலையில்‌ உள்ளவர்‌. அன்னவரை - ஒத்தவரை, நிகரானவரை, அவரை: ஆக்கினை - கட்டளை, தண்டனை ஆகுதி - வேள்வியில்‌ இடப்படும்‌ நெய்‌ ஆத்மஸ்துதி - தற்புகழ்ச்சி ஆசாபங்கமடைந்த - விரும்பியது பெறாத, ஏமாற்றமடைந்த ஆவலாதிகள்‌: - குறை கூறும்‌ கடிதங்கள்‌ ஆவாகனப்படுத்திக்கொண்டு - ஆட்கொண்டு ஈனஸ்திதி - கீழ்நிலை, இழிநிலை உபசரணைக்‌ கமிட்டி - வரவேற்புக்குழு உருபு - வடிவம்‌ காலக்ஷேபம்‌. - பிழைப்பு, கதையை இசையோடு கூறல்‌ காயமாக்க - உறுதிப்படுத்த, நிரந்தரமாக காயலா - காய்ச்சல்‌, உடல்நலக்குறைவு கூற்றுவாய்‌ இருந்து - எமனாய்‌ இருந்து எமன்‌ - இறப்புக்கான புராணக்‌ கடவுள்‌ ) கோஷித்து - முழக்கமிட்டு சயத்திற்கு - வெற்றிக்கு குடி அரசு - 1926 () 428 சந்தானம்‌ சமாராதனை சைனியத்தை சிவாஜிநாமா சுற்றுத்திரவு தவசிப்பிள்ளை திரவிய அபேட்சை துலக்கம்‌ தூஷணன நட்டுவாங்கம்‌ நாராசம்‌ பங்கா பத்தா பண்டித நேரு பரநிந்தை பிரதிகூலம்‌ பிரேரேபணைன ரஸ்தா வாக்குத்தத்தம்‌ வாத்சல்லியத்தாலும்‌ வியாஜ்யம்‌ வேதப்‌ பிரஷ்டன்‌ க்ஷயரோகம்‌. க்ஷனித்து ஸ்பஷ்டமாக 429 மகப்பேறு, மரபு, சந்ததி பார்ப்பனருக்கு உணவளித்தல்‌ சேனையை தீர்வை செய்யப்பட்ட தரிசு சுற்றறிக்கை சைவருக்குச்‌ சமையற்காரர்‌, பூசைப்‌ பணியாள்‌ பொருளாசை மெருகூட்டுதல்‌ பழி, இகழ்ச்சி நாட்டியம்‌ பழக்கி ஆட்டுவித்தல்‌ இரும்பாணி கூரையில்‌ தொங்கவிடப்‌ பட்டு வெளியில்‌ இருக்கும்‌ ஆள்‌ கயிற்றை இழுக்க விசிறிபோல்‌ காற்றை வீசும்‌. ஓர்‌ அமைப்பு படிப்பணம்‌ மோதிலால்‌ நேரு பிறரை இகழ்தல்‌ (பாதகம்‌) தீமை, தடை. முன்மொழிதல்‌ சாலை, பாதை வாக்குறுதி பேரன்பினாலும்‌ வழக்கு, நீதிமன்ற வழக்கு வேதத்தை இழிப்பவன்‌, வேதத்தை தள்ளியவன்‌ ஈளைநோய்‌, உருக்கிருமல்‌, காசநோய்‌ அழிந்து தெளிவாக பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 குடி அரசு - 1926 ) 420 431 பெரியாரின்‌ எழுத்தும்‌ பேச்சும்‌: தொகுதி - 2 குடி அரசு - 1926 (1) 432