Kudi Arasu — 1925
Kolathur Mani – Kudi Arasu Collection
“குடி அரசு”
தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குரியார். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் 'என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே. வலிமையால் இப்பத்திரிகை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.
இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ் நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இதுகாறும் எத் துணையோ பத்திரிகைகள் தோன்றின ; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல. பத்திரிகைகள் பல தோன்று வதற்குக் காரணம் தமிழ்மக்கள் உலகியலை அறிய உளங் கொண்டமையே யாகும். 'கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்' என்ற குறுகிய நோக்கம் அருகி வருகின்றது. 'இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டா லென்ன' என்று எண்ணி வாழ்நாட்களை வீண் நாட்களாக்கி வந்த காலம் கழிந்துவிட்டது. உறங்கிக் கிடந்த நமது நாட்டார் புத்துயிரும், புத்துணர்ச்சியும் பெற்று நாட்டின் விடுதலையைக் கருதிப் பல துறைகளிலும் உழைக்க முன்வந்து நிற்கிறார்கள். அவ்வுணர்ச்சி நன்றாக வேரூன்றி, மேன்மேலும் தழைத்தோங்க ஒவ்வொருவரும் பாடுபடல் வேண்டும். இக்கடனை ஆற்றப் பல வழிகள் உண்டு. அவைகளுள் பத்திரிகையும் ஒன்றாகும். மேனாட்டார் மேன்மையுற்று விளங்குவதற்குக் காரணம் அந்நாடுகளில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்து உலவுவதேயாகும். அந்நாடுகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கின்றார்க ளென்றும், பத்திரிகை நுழையாத சிறு குடிசைகளும் இல்லையென்றும் நாம் அந்நாட்டுச் சரித்திரங்களில் காண்கிறோம். தமிழ் மக்களின் தொகையை நினைக்கின், இப்பொழுது உலவி வரும் பத்திரிகைகள் மிகக் குறைவாகவே
தோன்றும். இன்னும் பல பத்திரிகைகள் காணப்படல் வேண்டும். ஆகை யினால் எமது பத்திரிகையை மிகையென்று கருதமாட்டார்களென நம்புகிறோம்.
எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய
எல்லாத் துறைகளிலும் மேன்மையற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.
ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய.......அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு
வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நந்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ் வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எற்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம். ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்க மன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடைய
றாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.
மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும் : மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச்சண்டைகள் ஒழியவேண்டும்; கடவுளர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லும் இழிதகைமை தொலையவேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவதும் எமது நோக்கமாகும்.
இதுகாறும் விதந்தோதிய நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றியே ஒழுகுவோம். அன்பு நெறியே எமக்கு ஆதாரம். பொய்ம்மை நெறியையும், புலையொழுக்கத்தையும் எமது அன்பு நெறியால்
குடி அரசு - 1925 4
தகர்த்தெறிவோம். இவர் எமக்கு இனியர், இவர் எமக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்புக்கள் இன்றிச் செம்மை நெறி பற்றி ஒழுகி எம்மாலியன்ற தேசத் தொண்டாற்றி வருவோம்.“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற் சென்றிடித்தற் பொருட்டு” எனும் தெய்வப் புலமை திருவள்ளுவரின் வாக்கைக் கடைபிடித்து, நண்பரேயாயினுமாகுக ! அவர்தம் சொல்லும், செயலும் தேசவிடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித் தொதுக்கப்படும்.
மேற்கூறிய உயரிய நோக்கங்களைத் தாங்கித் தாய்த்திருநாட்டிற்குத் தொண்டியற்ற வெளிவந்துள்ள எமதருங்குழவியைத் தமிழ்மக்கள் அனை
வரும் முழுமனதுடன் ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடையோம்.
இப் பத்திரிகையின் வருடச் சந்தா ரூபா மூன்றே தான். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று வெளிவரும். இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள
எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக.
குடி அரசு - தலையங்கம் - 02.05.1925.
5 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
திரிகாயைத் திறப்புவிழா
சகோதரர்களே!
நானும் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளை” அவர்களும் இப் பத்திரிகை நடத்துவதைப்பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து இப்பொழுதுதான்
நடத்தத் துணிந்தோம்.
இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம்:
தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவை களைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். இப் பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்.
குடி அரசு - சொற்பொழிவு - 02.05.1925
* வா.மு. தங்கப்பெருமாள் பிள்ளை B.A, B.L
இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் 'வாத்தியார் வீடு என்று சொல்லக் கூடிய சைவவேளாள செல்வக்குடும்பத்தில் பிறந்தவர். தன் தந்தையை 12 வயதிலேயே இழந்த இவர், அவரது சிறிய தந்தையார் ஆதரவினால் கல்வி கற்பிக்கப்பட்டு 21 ஆவது வயதில் 8.&.பட்டமும் 24 ஆவது வயதில் 8.டபட்டமும் பெற்று 1921 ஆம் வருஷத்தில் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். கருங்கல்பாளையத்தில் வாசகசாலை ஒன்றினைத் தொடங்கி நடத்தி வந்ததோடு அதன்வழியே பொதுநலச் செய்திகளையும், தமிழர் பெருமையையும் பாரதியார், வரதராஜுலு நாயுடு, திரு.வி.க, ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோரை அழைத்துவந்து பேசச்செய்து வந்தவர். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை: மிக்கவர்.
குடி அரசு - 1925 6
நமது பத்திரிகாயைத் திறப்பு விழா ubeouh ௬ுவாமிகனிண் சாற்வபாழிவ
மெய்யன்பர்களே !
உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்ப தற்கும், நல் உணர்ச்சியை மக்களிடையெழுப்புதற்கும் பத்திரிகைகள் இன்றியமையாதன; கிராமாந்திரங்களில் விஷயம் யாதொன்றும் தெரிந்து கொள்ள இயலாதவர்கள் பத்திரிகைகளினால் வியாபாரம், அரசாங்க முறை, தற்கால நிலை முதலியவைகளைத் தெரிந்து கொள்வார்கள்; பல பெரியார் களின் கருத்தை அறிந்து கொள்வார்கள். வியாபாரம், விவசாயம் முதலிய ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பத்திரிகையிருத்தல் அவசியமாகும்.பல ஜனங்களுக்குப் பிரயோஜனமாகும். விஷயங்கள் பலவற்றிற்குப் பல பத்திரிகைகள் அவசியம். ஸ்ரீமான் நாயக்கரால் ஆரம்பிக்கப்படுகின்ற இக்
*குடி அரசு” பத்திரிகையின் தன்மையைக் கவனித்தால் மிகுந்த ஆராய்ச்சி யுடன் ஆரம்பிக்கப்போகும் ஒரு பத்திரிகையாகக் காணப்படுகின்றது. ஸ்ரீமான் நாயக்கரவர்கள் பேசியதிலிருந்து பல நாள் யோசித்து ஆரம்பிக்கப் படும் பத்திரிகை என்று தோன்றுகிறபடியால் முன்யோஜனையுடன் இறங்குப வர்கள் என்றும் பின் வாங்காது தைரியமாய் நிலைபெற்று நிற்பார்கள் என்பது உறுதி. மிகுந்த செல்வாக்கையுடைய ஸ்ரீமான் நாயக்கர் அவர்கள் நடத்தும் இப்பத்திரிகை உங்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிகுந்த பயனை அளிக்குமென நம்புகிறேன். பல பத்திரிகைகளிருந்தும் இப்பத்தி ரிகை போன்ற கருத்தையுடைய பத்திரிகை வேறொன்றுமில்லை. அதனு டைய பெயரே அதற்குச் சான்றாகும்.
வழக்குரைஞர் தொழில் தொடங்கிய சில மாதங்களிலேயே, வழக்குரை
ஞர் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டார்: கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், மாநில நிர்வாக சபை உறுப்பினர், கோவை மாவட்டத் தலைவர், மாநிலச் செயலாளர் என காங்கிரஸ் கட்சியில் பல. பொறுப்புக்களை வகித்தார். புகழ்பெற்ற கள்ளுக்கடை மறியலில் பெரியாரோடு சிறைபட்டார். எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக்கொண்டு பெரியார்
“ குடிஅரசைத் தொடங்கியபோது இவரும் பெரியாரோடு ஆசிரியராக இருந்தார். ஆனால் உடல் நலம்சீர்கெட்டதால்19.7:125 இதழோடு அவர் விலகிக் கொண்டார். மருத்துவம் பயனின்றி முப்பது வயதுகூட நிரம்பாத நிலையில் 6.31926 இல்
மறைந்தார்.
7 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நாம் நாளாக ஆக நமது நிலையைக் கீழாக்கிக் கொண்டே வருகி றோம். நல்ல குணம், நம்பிக்கை முதலியவைகளை யாமிழந்து விட்டோம். இந்நிலையில் யாமிருந்தால் முடிவு என்னாகும் என்பதை நாம் கவனிக்க வில்லை. கெட்டவர்களிந்நாளில் மிகுந்து விட்டனர். நன்மையடையும் வழி கள் தடைபட்டுக்கொண்டே வருகின்றன. மேன்மை அடையும் வழியைக் கானோம். கண்டபடி ஆட்சிமுறை நடக்கக் கூடாது. தன்னால், தன் பரிசனத்
தால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் உண்டாகும் துன்பங்களைத்
துடைத்துக் காத்தலே ஆட்சி முறையின் ஒழுங்கு. “குடிஅரசு” இத்தன்மைக்கு நம்மைக் கொண்டு வரும் என நினைக்கிறேன். அவரவர். களுடைய கருத்துக்களை யாதொரு நிர்ப்பந்தமுமின்றி வெளியிடச் சுதந்திரம் வேண்டும்.
நமக்குள் இருக்கும் அவநம்பிக்கை நீங்கிச் சகோதர பாவம் வளரவேண்டும். இப்பொழுது நாம் பேச்சளவிலும், சிற்றுண்டி முதலிய சில் லரை விஷயத்திலும்தான் சகோதரபாவத்தைக் காண்பிக்கிறோம். உண்மைச் சகோதரத்துவம் எங்கும் காணோம். பிறரது சொத்தைப் பறிப்பதற்கே சகோதர பாவத்தைக் காண்பித்து வருகின்றனர். உயர்வு, தாழ்வு என்ற ஆணவம் மிகுந்து கிடக்கின்றது. பணக்காரராக இருப்பினும் ஏழையாக இருப்பினும் அன்பு என்பது ஒருவருக்கொருவர் மிகுந்திருக்க வேண்டும். சுதந்தரம், சமத்வம், சகோதரத்வம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். “குடி அரசி”ன் கருத்தும் இதுவே என நான் அறிந்து கொண்டேன். தேசோத்தார ணத்தில் கவனம் வைத்தல் அவசியமாகும்.
தேச சுதந்தரத்தினால் பாஷை, சமயம் முதலியவற்றிற்கு உத்தாரணம் பிறக்கும். சமயத்திலிருக்கும் கேட்டை ஒழிப்பது மிகவும் அவசியமாகும். இவையெல்லாம் “குடிஅரசி”ன் முதல் கொள்கைகளா யிலங்கவேண்டும். யான் இப்பத்திரிகாலயத்தைத் திறந்து வைப்பதால் ஸ்ரீமான் நாயக்கரவர்: களுக்கு இதில் எவ்வளவு சிரத்தையுண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு. பொது ஜனங்களின் நன்மையைக் கோரி உழைக்கும் பத்திரிகையாகையால் எல்லோரும் ஆதரித்தல் அவசியம். இதுகாறும் கூறிய கருத்துக்களில் மாறாது உண்மையான பத்திரிகையாக விளங்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகின்றேன்.
குடி அரசு - சொற்பொழிவு - 02.05.1925
குறிப்பு : 'குடி அரசு' செய்தித்தாள் அலுவலகத்தைத் திறந்து வைத்து திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீசிவஷண்முக மெய்ஞ்ஞான. சிவாசாரியசுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - 1925 8
ம்ஙீமாண் பி. தியாகராய கெட்முயாரிண் மரணம்
பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கிவந்த
ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியார் அவர்கள் 284 25 ௨ இரவு 9.45 மணிக்கு இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகெய்திய செய்தியைக் கேள்வி யுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். இச்செய்தி தமிழ்மக்கள் அனைவரை யும்
பெருந்துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமின்று. அவரது இடது கன்னத்தில் முளைத்த ஒரு சிறு கொப்புளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! என்னே மனிதர்தம் வாழ்நாளின் நிலை! அரசியல் உலகில் எமக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம், தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும், அப்பெரியாரின் அருங் குணங்களையும், அளவில்லா தேசபக்தியையும், ஆற்றலையும் நாம் போற்று கிறோம். ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் இவரது அரசியல் கொள்கை களை வெகு தீவிரமாகக் கண்டித்துப் பேசின ஸ்ரீமான் திருவி.கலியாணசுந்தர: முதலியார் அவர்களை மறுநாள் காலையில் சென்னைத் தெருவில் சந்தித்த போது: ஸ்ரீமான் முதலியாரை விளித்து “நண்பனே! நேற்று கடற்கரையில் நீ என்னை வாய்மொழிகளால் கண்டித்தது போதாது: இக்கழி கொண்டு என்னைப் புடைத்திருத்தல் வேண்டும்” என்று தமது கையிலிருந்த கழியை ஸ்ரீமான் முதலியாரிடம் கொடுத்தனராம். அரசியல் கொள்கையில் தம்மினும் வேறுபட்டாரிடம் இப்பெருந்தகையார் நடந்து கொண்ட பெருந்தன்மையைப் பாராட்டுகிறோம்.
சென்னை நகர பரிபாலன சபையில் நாற்பதாண்டுகள் அங்கத்தினராக அமர்ந்து இவர் ஆற்றிய அருந்தொண்டுகள் யாவராலும் மறக்கற் பாலதல்ல. தமது முதுமையிலும், உடல்வலி குன்றித் தளர்வெய்திய காலத்திலும் நகர:
மாந்தர் நலத்தையே மனத்துட் கொண்டு சென்னை நகர பரிபாலன சபையின் தலைமையையேற்று உழைத்து வந்தமையே இதற்குத் தக்க சான்றாகும்.
நமது நாட்டுப் பண்டைக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதில் மிக்க ஊக்கங் காட்டி வந்த பெரியார் ஆவார். தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுச் சங்கம் ஒன்று கண்டு அதில் முதன் முதலாக விசைத்தறியை (1 shutle) உபயோகிக்க முயற்சி செய்தவராவார். தமது வாழ்நாள் முழுவதும் வைதிகநெறி பற்றியே வாழ்ந்து வந்தார் என்றும், ஆலயத் திருப்பணிகளில் ஆர்வமிக்குடையராய் அரும்பொருள் உதவிவந்தன ரென்றும் அவரையும், அவரது குடும்பத்தையும் அறிந்தோர் நமக்கறிவிக்கின்றனர்.
9 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தமது இளவயதில், டாக்டர் நாயர் அவர்களின் கூட்டுறவு பெறும் வரையில் காங்கிரஸ்வாதியாகவேயிருந்து தேசத் தொண்டு ஆற்றி வந்தார். நமது தமிழ்நாட்டுத் தவப்பேற்றின் குறைவினால் பார்ப்பரைல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார்; இறக்கும் வரையில் அதன் தலைவராக விளங்கி வந்தார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழிநின்று தேசத் தொண்டி
யற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எமது கொள்கை. அதுகிடக்க, அவரது அரசியல் கொள்கைகளையும், முறைகளையும் ஆராய்ச்சி செய்வதற்காக நாம் இன்று முற்படவில்லை: அவைகளைக் கண்டித்தெழுதவும் கருதவில்லை.
அப்பெரியாரின் அரசியல் கொள்கைகள் எவ்விதமிருப்பினும். அவருடைய தேசபக்தியையும், அருங்குணங்களையும், உறங்கிக் கிடந்த பார்ப்பனரல்லாதார்களை உயிர்ப்பிக்கச் செய்த பேராற்றலையும் நாம் போற்றி அப்பெரியாரைத் தமிழ்நாடு இழக்க நேர்ந்தமைக்குப் பெரிதும் வருந்துகின்றோம். அவரது புதல்வருக்கும், புதல்விகளுக்கும், மனைவிக்கும் எமது அனுதாபத்தை இதன் வாயிலாக அறிவித்துக் கொள்ளுகிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக.
குடி அரசு - இரங்கல் செய்தி - 02.05.1925
குடி அரசு - 1925 10
யந்திரமும் கை கராட்முனமும்
நூல் நூற்கும் விஷயத்தில் விசை இயந்திரத்திற்கும் கை இராட்டினத் துக்குமுள்ள தார தம்மியத்தை நமது நாட்டாரில் சிலர் நன்கு அறிந்து கொள்ளவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இராட்டை சுற்றுவதினால் நமக்கு வேண்டிய அளவு நூல் உற்பத்தி செய்வது கஷ்ட மென்றும், போதுமான கூலியும் இதில் கிடைக்காதென்றும், இயந்திரத்தினால் அதிக நூல் உற்பத்தி செய்யக்கூடுமென்றும், கூலிக்காரர்களுக்கு அதிகக் கூலி கிடைப்பதுடன், முதலாளிகளுக்கும் நல்ல லாபம் வருகிறதென்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். நமது நாட்டின் கொடிய வறுமைக்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இயந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயந்திரப் பெருக்கினால் ஒருசில கூலிகளும் தனிப்பட்ட முதலாளிகள் சிலரும், பிறநாட்டு இயந்திர வியாபாரிகளுந்தான் பிழைக்க முடியுமே தவிர ஜனங்கள்: பிழைக்க முடியாது.நமது ஏழை நாட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோர். எத்தனையோ பேர் குறைந்த அளவு கூலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் இயந்திர ஆலைகளில் வேலை கொடுக்க முடியாது. ஒவ்வொரு தொழிலிலும் இம்மாதிரியே அநேகம் பேருடைய கூலியை இயந்திரங்கள் விழுங்கி விடுகின்றன. நம் தேசம் உள்ள நிலைமையில் பெரு வாரியான ஏழைக் கூலிக்காரர்களுக்கு வேலை கிடைத்தால்தான் வறுமை:
நீங்கும். ஒரு சில முதலாளிகளும், அந்நிய நாட்டு இயந்திரத் தொழிலாளரும் பிழைப்பதினால் தேசத்தின் தரித்திரம் நீங்காது. உதாரணமாக, நம் நாட்டில் மில்கள் என்று சொல்லப்படும் நூல் ஆலைகள் அதிகமான நூல் உற்பத்தி செய்கின்றன. ஆனால், இவை எவ்வளவு பேருடைய கூலியைக் கெடுத்து விடுகின்றனவென்பது யோசித்துப் பார்த்தால் தெரியும்.
சாதாரணமாக 20 அல்லது 25 லட்சம் ரூபா மூலதனத்துடன் ஆரம்பிக் கப்பட்ட ஒரு நூல் யந்திர ஆலையை எடுத்துக்கொள்வோம். இவ்வாலையில் ஒவ்வொன்றிலும் 400 - ராத்தல் எடையுள்ள 40 - சிப்பம் (Bale ) நூல் உற்பத்தி யாகக்கூடும். அதாவது, மொத்தம் 16,000 - ராத்தல் நூல் உற்பத்தியாகலாம். இவ்வளவு நூல் உற்பத்தி செய்யும் ஓர் ஆலை சுமார் 2000 கூலிகளுக்கும் வேலை கொடுக்க முடியும். தலைக்கு 4 அணா முதல் 1 ரூபாய் வரையில்
கூலி கிடைக்கும். முதலாளிகளுக்கு 100 - க்கு 50 சதவீதம் வருஷந்தோறும்
லாபம் கிடைக்கலாம். (இதற்கு மேலாகவும் ஆலை முதலாளிகளுக்குச் சில
சமயம் லாபம் கிடைத்திருக்கிறது. ) இதனால் ஏழைகளுக்கு ஏற்படும்
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நஷ்டத்தைப் பற்றி யோசிப்போம். மேற்சொன்ன 16,000 - ராத்தல் நூலும் கிராமத்தில் வேலையில்லாமல் தவிக்கும் ஏழைக் கூலிக்காரர்களைக் கொண்டு. கை இராட்டினத்தில் தயார் செய்து கொள்வதா யிருந்தால் ஒரு நாளில் ஒரு ராத்தல் நூலுக்குக் குறைந்தது மூன்று பேர் வேலை செய்ய வேண்டும்.
ராத்தலுக்குக் குறைந்த விகிதம் 4 - அணா கூலி கொடுப்பதாயிருந்தாலும் நபர் ஒன்றுக்கு1- அணா 4 - பைசா கிடைக்கும். இப்படியாக 16,000 - ராத்தல் நூல்
உற்பத்தியில் 48,000 பேருக்கு 1- அணா 4- பைசா கூலி கிடைக்கிறது.
இவ்வளவு நூலையும் ஓர் ஆலை நூற்றுவிடுவதினால் வேலை செய்யக்கூடிய 46,000 பேருக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. இவ்வளவு பேருக்கும் கிடைக்கவேண்டிய கூலியில் சிறுபகுதி ஒரு சில வேலைக்காரர்களுக்கும் பெரும்பகுதி முதலாளிகள், அந்நிய நாட்டு இயந்திர.
வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கும் போய்விடுகின்றது. மகாத்மாவினுடைய சுயராஜ்யத்திற்குப் பொருள் ஏழைகள் பிழைக்க வேண்டுமென்பதே. முதலாளிகளும், அந்நியநாட்டு இயந்திர வியாபாரிகளும் பொருள் சேர்க்க வேண்டுமென்பது மகாத்மாவினுடைய சுயராஜ்யத்தின் கருத்தன்று. சிலருக்கு உத்தியோகமும், அதிகாரமும் கிடைக்க வேண்டுமென்பதும் அன்று. இந்த அம்சத்தை நாம் மனதிலிருத்திக் கொண்டால் இராட்டை இயக்கத்தின் கருத் தைச் சரியாக அறிந்து கொள்ளலாம்.ஏழைகளிடத்திலும் கூலிக்காரர் களிடத்
திலும் அன்பில்லாதவர்களுக்கு மகாத்மா கூறும் சுயராஜ்யத்தின் பொருள். நன்கு விளங்காது. உத்தியோகமும் அதிகாரப் பதவியும் பொருள் தேடலும் தான் சுயராஜ்யமென்று அவர்கள் கருதுவார்கள். இத்தகைய அபிப் பிராயம் தேசத்தில் பரவக் கூடாதென்பதை மனதிற் கொண்டே மகாத்மா காந்தி காங் கிரஸ் அங்கத்தினருக்கு நூல் நூற்பதை முக்கிய கடமையாக ஏற்படுத்தி
யிருக்கிறார். இந்த முக்கிய கடமையை தேசத்தார் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதியே வேறு சில விஷயங்களில் தமது உறுதியான கொள்கைகளையும் ஓரளவு விட்டுக் கொடுத்திருக்கிறார். நூல் சந்தாவின் முக்கியத்தை நமது ஜனங்கள் கொஞ்சங் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாதா மாதம் நூல் சந்தா செலுத்து வோரின் தொகை பெருகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் மற்ற திட்டங் களில் மகாத்மாவின் அபிப்பிராயத்திற்குத் தமிழ்நாடு எவ்வளவு ஆதரவா யிருந்ததோ அவ்வளவு இவ்விஷயத்தில் ஊக்கங்காட்ட வில்லையென்றே சொல்ல வேண்டும். இனியேனும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாய் இருந்து வருவோமானால் நூல் சந்தாவை எடுத்துவிட வேண்டுமென்று இதற்குள்ளாகவே கூற ஆரம்பித்துவிட்ட சிலருக்கு அனுகூலமாகிவிடும். மற்ற விஷயங்களில் தமிழ்நாடு பெற்றிருக்கும் நற்பெயருக்கும் இதனால் தீங்கு ஏற்பட்டுவிடும்.
நிற்க, நமது தேசத்தின் நிலைமையில் இயந்திரத்தொழில் ஏன் பொருந்தாது என்பதற்கு ஒரு காரணம் மட்டும் கூறி இதை முடிக்கிறேன்.
குடி அரசு - 1925 12
இயந்திர மோகமுள்ளவர்கள் தேச முழுவதையும் இயந்திரமயமாக்கி
விட்டால் எல்லா ஏழைகளுக்கும் நல்ல கூலி கிடைக்குமென்று எண்ணலாம். 48,000 பேர் செய்யக்கூடிய வேலையை 2,000 பேரின் உதவி கொண்டு ஓர். இயந்திரம் செய்து விடுவதால் பாக்கி 46,000 பேருக்கும் வேலையில்லாமல் போய்விடுகிறது என்று மேலே கூறினேன். ஆனால், இவர்கள் எல்லோருமே வேலை செய்யும்படி நாட்டில் ஆலைகளைப் பெருக்கி விட்டால் எல்லோருக் குமே நல்ல கூலி கிடைக்குமே என்று நினைக்கலாம்.
இந்தியா இன்றைய தினம் துணி வாங்க மறுத்துவிட்டால் ஆலைத்தொழில் நிலைமை ஆபத்தாகிவிடும். இங்ஙனமிருக்க 33 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியாவில் வேலை வேண்டி நிற்கும் கோடிக்கணக்கான ஜனங்கள் ஆலைத் தொழிலில் ஈடுபட்டால் எவ்வளவு துணி உற்பத்தியாகும்? அவ்வளவு துணி யையும் விற்பனை செய்யக்கூடிய பெரிய சந்தை நமக்குக் கிடைக்குமா ? என்று யோசிக்க வேண்டும். இந்த அம்சத்தைக் கவனித்தால் நமது நாட்டின் நிலைமையில் கோடிக்கணக்கான ஏழைகளுக்குத் தொழிலளித்துக் காக்கக் கூடிய சாதனம் இராட்டை ஒன்றே என்பது நன்குவிளங்கும்.
குறிப்பு : குடிநூவில் எழுதிய கட்டுரை
குடி அரசு - கட்டுரை - 02.05.1925
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குடி அரசு - 1925 14. 15 வ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -1
93 . 33. நூல் வலை
மகாராஷ்டிரர்கள் “நூல்வலை”யில் வீழாமல் தப்ப உறுதி கொண்ட
தன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண
மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபை யென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய “பக்தி வலை” யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே இவ்வாறு இவர்களிக் கூத்தாடுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் சுயராஜ்யக் கட்சியினர். பெல்காம் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்கும் நேர்மையைப் பற்றி மட்டும் இங்கு சிறிது ஆராய்வோம். சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைப் பற்றி ஒத்துழையாதோர் சற்றே வாயைத் திறந்து “இம்” என்றால் போதும்; உடனே
“குடி முழுகிற்று” “ஒற்றுமை குலைந்தது” என்று கூக்குரல் கிளம்புகிறது. ஆனால் மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினரோ தங்கள் மாகாண மகாநாட்
டில் நூல் சந்தா ஒழிய வேண்டுமென்று பகிரங்கமாகத் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள். காந்தியடிகளைக் காங்கிரஸை விட்டு விரட்டி விடுவதே இவர்கள் நோக்கமென்பதை அக்கிராஸனர் தமது உரையில் தெளிவாகக் கூறிவிட்டார்.
லோகமான்யர் பிறந்த மகாராஷ்டிரம் இந்நிலைக்கோ வந்துவிட்ட
தென்று நமது நேயர்கள் வருத்தமுறுதல் கூடும். ஒரு விஷயம்அவர்களுக்கு ஆறுதலையளிக்குமென நம்புகிறோம். மாகாண மகாநாட்டில் கூடிய மேதாவி களின் அபிப்பிராயம் மகாராஷ்டிரர்களின் உண்மை யபிப்பிராயம் அன்று என்றும், அம்மாகாணத்தில் பெரும்பான்மையோர் காந்தியடிகளிடத்தும் இராட்டையிடத்தும் அன்பு பூண்டவர்களென்றும் பம்பாய் “கிரானிகல்” பத்திரிகை கூறுகிறது. நூல் சந்தா விஷயமாக விவாதம் நேரிடலாமென்று எண்ணி ஒத்துழையாதார் எவரும் அம்மகாநாட்டுக்குப் போகவில்லை. இதில் நகைச்சுவை பொருந்திய அம்சம் யாதெனில் ஒத்துழையாதார் இம்மகா நாட்டுக்கு போகாமலிருந்ததும் அவர்களுடைய குற்றமாகிவிட்டது. “வேண்டாமென்ற மனைவி கைபட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம்” என்பார்கள். ஒத்துழையாதார் மகாநாட்டுக்குச் சென்றிருந்து நூல் சந்தாவை ஆதரித்திருந்தால் “சண்டையிட்டு ஒற்றுமையைக் கெடுக்க வந்தார்கள்” என்று குறை கூறப்பட்டிருக்கும். மகாநாட்டுக்கு வராதிருந்ததால் அவர்கள் அஹிம்சையைக் கைவிட்டு ஹிம்சைக் குற்றத்துக்கு ஆளாகி விட்டனர். என்று அக்கிராசனர் தேசமுகர் இப்போது கூறுகிறார். அஹிம்சையின் தத்துவத்தைப் பற்றி உபதேசங் கேட்க காந்தியடிகள் இவரிடந்தான்
குடி அரசு - 1925 16
வரவேண்டும். சட்டசபைக்குச் செல்லாதிருத்தலே ஹிம்சையென்று இனி இவர் சொல்வார் போலும்! ஏன் ? ஒத்துழையாதார் உயிருடன் இருத்தலே ஒரு
குற்றமாய் விடுதலுங்கூடும்.
காந்தியடிகள் தலைமையின் கீழ் ஒத்துழையாதார் ஒவ்வொரு தடவையிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கு விட்டுக்கொடுத்து வந்திருக்கும் விஷயம் உலகமறியும். இவர் பொருட்டு பகிஷ்காரப் பிரசாரத்தை - ஏன்? ஒத்துழையாமையையே ஓராண்டிற்கு நிறுத்தி வைத்ததோடன்றி, தமது திட்டத்தில் உயிர்நிலையான கதர் விஷயத்திலும் மகாத்மா இவர்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தத்தை உண்மையுடன் நிறைவேற்றி வைப்பார்களென்று காந்தியடிகள் மனப்பூர்வமாக நம்பினார். ஆனால் சுயராஜ்யக் கட்சியினரோ தொடக்கத்திலிருந்து நூல் சந்தா திட்டம் தோற்றே போய் விடுமென்று உறுதிகொண்டுவிட்டார்கள் . இவ்விஷயத்தில் இவர்: களுக்கு “விருப்பம் எண்ணத்திற்கு தந்தை ”யாயிருந்திருக்கின்றது. மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினர் தீர்மானத்தைப் பற்றி முன்னர் கூறி னோம். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் அய்யங்கார் இவர்களைவிட ஒருபடி முன்சென்றுவிட்டார். இவர் இந்தியா சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியின் பிரபல அங்கத்தினராயிருப்பவர். காங்கிரஸ் காரியக்கமிட்டி அங்கத்தினர். நாகபுரி புகைவண்டி நிலயத்தில் இவர் காந்தியடிகளைப் பார்க்க வந்த போது கதராடை அணிந்து வரவில்லையாம். தாம் காங்கிரஸ் காரியமாக வரவில்லை யென்று சமாதானமும் கூறினாராம். இச்சம்பவத்தைப்பற்றிக் காந்தியடிகள் “எங் இந்தியா” வில் மனம் வருந்தி எழுதியுள்ளார். தமது குடும்ப நலத்தை அறியும் பொருட்டு அவர் தம்மைப் பார்க்கவர நியாய மில்லையென்றும், அவர் கூறியது போலிச் சமாதானமென்றும் காந்தியடிகள்.
எடுத்துக் காட்டுகிறார். சுயராஜ்யக் கட்சியார் நூல் சந்தா திட்டத்தை மனப்பூர்வ மாக நடத்தி வைப்பார்களென்று எண்ணி, மகாத்மா காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அநேகமாக எல்லோரையும் சுயராஜ்யக் கட்சியினராகவே பொறுக்கி எடுத்துக் கொண்டார். ஆகவே ஸ்ரீமான் அய்யங்காரின் செயல் அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
குடி அரசு - தலையங்கம் - 17. 051925
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கருங்கல்பானையம் வாசகசாலை
ஈரோட்டின் ஒருபகுதியாகிய கருங்கல்பாளையத்தில் சென்ற சில காலமாக நடைபெற்றுவரும் வாசகசாலையின் ஒன்பதாவது ஆண்டு நிறைவிழா நேற்றயதினம் இனிது நடந்தேறியது. நமது அருந்தலைவர் ஸ்ரீமான் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் இவ்வைபவத்தின் அவைத் தலைமையை ஏற்று நடத்தியது இவ்வாசக சாலையின் பாக்கியமென்றே கூறுவோம். ஸ்ரீமான் ஆச்சாரியாரின் தலைமையில் அறிஞர் இருவர் அரிய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். கருங்கல்பாளையம் வாசிகள் நேற்றைய தினம் காட்டிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஆண்டு முழுதும் தொடர்ந்து காட்டினார்களாயின் இவ்வாசக சாலை அண்மையில் பெரிதும் முன்னேற்ற மடைந்து விடுமென்று திட்டமாகக் கூறலாம்.
இத்தகைய வாசக சாலைகளின் அவசியத்தைப்பற்றி நாம் விரிவாகக் கூறவேண்டுவதில்லை. உலகில் மேம்பாடுற்று விளங்கும் நாடுகளில் வாசக சாலைகள் மிகுதியும் வளர்ச்சிபெற்றிருக்கின்றன. லட்சக்கணக்கான புத்தகங்க ளையும், ஆயிரக்கணக்கான அங்கத்தினரையுங் கொண்டவாசகசாலைகளை மேனாடுகளில் ஒவ்வொரு சிறு நகரத்திலும் காணலாம். இலவச புத்தகாலயங் களும், பத்திரிகைக் கூடங்களும் எண்ணிறந்தன. அரசாங்கத்தாரும், பொது ஜனங்களும் தாராளமாக நன்கொடைகள் வழங்கி இவ்வாசகசாலைகளைப் போற்றி வளர்த்து வருகின்றனர். ஆனால் அடிமை நாடாகிய இந்தியாவில் அரசாங்கத்தாரின் உதவியை எதிர்பார்த்தல் வீண் ஆசையாகவே முடியும். பொதுவாழ்வில் பற்றுக்கொண்ட அன்பர்கள் ஆங்காங்கு முன்வந்து இத்தகைய வாசகசாலைகளை வளர்க்க முற்படவேண்டும்.
சுயராஜ்யப் போராட்டம் ஒருபுறம் நடந்துவருகையில், நாட்டாரின் கவனத்தை இச்சிறு விஷயங்களில் புகுத்துதல் சரியாமா என்று சிலர். ஐயுறலாம். தனிமனிதன், தனிக்குடும்பம், தனிப்பட்ட ஊர் இவர்களின் முன்னேற்றத்தின் வாயிலாக தேசத்தின் முன்னேற்றத்தை நாடுவதே எமது நோக்கமென்று தொடக்கத்திலே கூறியுள்ளோம். முக்கியமாக, ஸ்ரீமான் ஆச்சாரியார் தமது முடிவுரையில் எடுத்துக்காட்டிய வண்ணம், நமது நாட்டின் தற்போதைய நிலைமையில் வாசக சாலைகளும், இராப் பள்ளிக்கூடங்களும், இராட்டைச் சங்கங்களுமே பெரிதும் வேண்டற்பாலன. ஒரு தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் சிறிதுகாலம் பெருங்கிளர்ச்சியும், உத்வேகமும் தோன்றுவதுண்டு. இக்காலத்தில் பெருங் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும்
குடி அரசு - 1925 18
மிகுந்திருக்கும். சிறு சங்கங்கள் ஒளி மழுங்கித்தோன்றும். ஆனால், இவ்வுத்வேகக் கிளர்ச்சி என்றும் நீடித்திருக்கமுடியாது. பெருங் கிளர்ச்சியின் வேகம் குன்றுங்காலத்து நாட்டில் சோர்வு மிகுந்திருப்பது இயல்பு. இக்காலத்தில் சிறு சங்கங்களினாலேயே நாட்டிற்கு நீடித்த நன்மைகள். விளையும். இச்சிறு சங்கங்களின் மூலமாகவே மக்களின் குணத்தைப் பண்படுத்தவேண்டும். சத்தியம், உறுதி, தைரியம், விடாமுயற்சி முதலிய உயர். குணங்களை இச்சங்கங்களின் மூலமாகவே வளர்த்தல்கூடும்.
ஆகவே, நமது நாட்டின் தற்போதைய நிலைமையை உய்த்துணர்ந் தோர் இன்று நமது பெருந்தேவை சிறு சங்கங்களே என்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம். காந்தியடிகள் நிர்மாண திட்டத்தைப் பெரிதும் வலியு
நுத்தி வருவதும் இக்கருத்துப் பற்றியே என்பது எமது உறுதி. ஆர்ப்பாட்டமும், உற்சாகமும் அடங்கிய இக்காலத்தில் பொதுஜனங்களிடையே திறமை, தைரி.
யம், சத்தியம் முதலிய உயர்குணங்களை வளர்த்து நிலையான அடித்தளத்தின் மீது சுரராஜ்ய மாளிகையை எழுப்புவதற்கான திட்டம் நிர்மாண திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றி வைப்பதற்குச் சிறு சங்கங்கள் பெருந்துணை: யாயி ருக்கும். ஆகவே, தேச நன்மைக்கு இவ்வளவு இன்றியமையாததொரு விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் கருங்கல்பாளையம் வாசகசாலை நிர்வாகிகளுக்குத் தமிழ்நாட்டார் கடமைப்பட்டுள்ளார்.
இவ்வாசகசாலையில் சென்ற ஆண்டில் 1146 புத்தகங்கள் இருந்திருக் கின்றன. இவற்றுள் ஆங்கிலப் புத்தகங்கள் 463. தமிழ்ப்புத்தகங்கள் 683. தமிழ்ப்புத்தகங்கள் 643ம், ஆங்கிலப் புத்தகங்கள் 145ம் அங்கத்தினர். களுக்குப் பயன்பட்டன. தினசரி, வாரப் பத்திரிகைகளும், இரண்டொரு சஞ்சிகைகளும் தருவிக்கப்படுகின்றன. சென்ற ஆண்டில் அங்கத்தினரின் தொகை 76. வாசகசாலையின் ஆதரவில் இலவச இராப் பள்ளிக்கூடம் ஒன்று நடத்தப்படுகிறது. பெரியவர்களும் சிறுவர்களும் சேர்ந்து மொத்தம் 42 மாணவர்கள் கல்வி பயின்றனர். வரவு செலவுக் கணக்குகள் ஒழுங்காக வைக்கப் பட்டிருக்கின்றன.
காரியதரிசிகள் தங்கள் அறிக்கையில் எடுத்துக்காட்டுவதுபோல் அபிவிருத்திக்கு இடமில்லாமலில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இவ் வாசகசாலை நடந்து வருவதே மகிழ்ச்சிதரத்தக்க விஷயமாயினும் இத்துடன் திருப்தியடைந்திருத்தல் முறையன்று.கருங்கல்பாளையத்திலுள்ள பெரியோர். வாசகசாலை விஷயத்தில் அசிரத்தை காட்டுகின்றனர் என்று காரியதரிசிகள் வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கின்றனர். கருங்கல்பாளையம் வாசிகள் பெரும்பாலும் தனவந்தர்கள், மிராசுதாரர்கள், “தொழுதுண்டுபின் செல்பவரல்லர். இவர்கள் வயல்வேலை கவனித்த நேரம்போக மிகுதி ஓய்வு நேரத்தில் இவ்வாசக சாலை விஷயத்தைச்சிறிது கவனித்தாலும் எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆண்டுவிழா அன்று மட்டும் வந்துவிட்டுப் பின்னர் வாசக சாலை யொன்றுண்டென்பதையே
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மறந்துவிடுவதால் யாது பயன்விளையும்? ஆகவே, இனியேனும் சிறிது ஊக்கங்காட்டி இளைஞர்களின் முயற்சிக்கு வலுவளிக்கும்படி கருங்கல் பாளையம் வாசிகளைப் பெரிதும் வேண்டிக்கொள்கிறோம்.
இனி வாசகசாலை நிர்வாகிகளுக்கு நாம் கூறவேண்டிய விஷயமும். ஒன்றுண்டு. அவர்கள் தேசத்தின் நிலைமையையறிந்து வாசகசாலையின் நடைமுறையை மாற்றி அமைத்துக்கொள்ளல் வேண்டும். அங்கத்தினர்கள். சில புத்தகங்களைப் படிப்பதற்காக மட்டும் வாசகசாலை ஏற்பட்டது என்று எண்ணுதல் கூடாது. நாட்டின் விடுதலைக்காக நடைபெறும் பெரிய தேசீய இயக்கத்திற்கு இவ்வாசகசாலையை ஒரு துணைக்கருவியாக அவர்கள் கருதவேண்டும். முக்கியமாக கதர் திட்டத்தை வளர்ப்பதற்கு இவர்கள். பெரிதும் துணைசெய்யலாம். அங்கத்தினர் அனைவரும் கதர் அணியும் படியும், இராட்டை சுழற்றும் படியும் இவர்கள் தூண்டுதல் வேண்டும். ஓர் இராட்டைச் சங்கம் காண்பதற்கு வாசகசாலை ஏற்ற இடமாகும். வாசக சாலை
யில் இராட்டை, கதிர், கொட்டிய பஞ்சு முதலியவைகளைச் சேகரித்து வைத்து அங்கத்தினர் நூல் நூற்பதற்கு வேண்டிய வசதி செய்துகொடுக்க வேண்டும். விழாக்கள் நடத்துதல், பெரியாரை அழைத்துவந்து உபந்யாசம் செய்வித்தல்
இவற்றுடன் தமது கடன் முடிந்து விட்டதாக அவர்கள் கருதுதல்கூடாது.இராப் பள்ளிக்கூடங்களில் “தீண்டாதா"ருக்கும் இடங்கொடுத்துத் தீண்டாமை விலக்குத்திட்டத்திற்குத் துணைசெய்யவும் இவர்கள் முன்வரவேண்டும்.
ஸ்ரீமான் ஆச்சாரியர் தமது முடிவுரையில் கூறிய உபதேச மொழிகளை மனதிற்கொண்டு வரும் ஆண்டில் இவர்கள் காரியம் செய்வார்களென்று நம்புகிறோம்.
ஈரோடு நகரசபையாரின் பெருந்தன்மையைப்பற்றி இங்குக் குறிப்பிடா மலிருக்க முடியவில்லை. மக்களின் அறிவுப் பயிற்சிக்கு ஆதாரமாயுள்ள இத்தகைய பொது ஸ்தாபனங்களை ஆதரிக்க, நகர வாசிகளின் பிரதிநிதி களாய் விளங்கும் நகர பரிபாலன சபையார் வலிய முன்வரவேண்டும். ஆனால்,நமது ஈரோடு நகரசபையாரோவெனில் வாசகசாலைக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும் மனங் கொள்கிறார்களில்லை. சென்றவாண்டில் வாசகசாலையின் சொந்த செலவில் ஒரு தண்ணீர்க் குழாய் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், இக்குழாய்க்கு மீடர் வைத்துக்கொள்ளவேண்டுமென்று இவ்வாண்டில் நகரசபையார் கூறுகிறார்களாம். தங்களுடைய நற்பெயரை முன்னிட்டேனும் இவர்கள் இந்த யோசனையை வற்புறுத்தமாட்டார்களென நம்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925
குடி அரசு - 1925 20
பூச்சாண்டி
“பூச்சாண்டி வந்து பிடித்துக்கொள்வான்” என்றுகூறி அறியாத
தாய்மார் குழந்தைகளைப் பயமுறுத்துவதுண்டு.அரசியல்திருத்தமென்னும் பூச்சாண்டி வரப்போவதாக நம்மையும் தற்போது அச்சுறுத்தி வருகிறார்கள். தாஸ் - பர்க்கென்ஹெட் சமிக்ஞைகளின் கருத்து இஃதேயென்று சிலர். ஊகிக்கின்றனர். அரைகுறைச் சீர்திருத்தத்தை அங்கீகரிக்க வேண்டாமென்று அன்னிபெசன்ட் அம்மையார் எச்சரிக்கை செய்கிறார். அரசியல் திருத்தம் அதிகமாக அளிக்கப் பட்டேயாகவேண்டுமென்றும், ஆனால் ஆங்கிலோ இந்தியரின் உரிமைகளைப் புறக்கணித்து விடக்கூடாதென்றும் கர்னல் கிட்னி கழறுகிறார். மன்னர் பெருமானே இவ்வாண்டினிறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து விசேஷ உரிமைகள் வழங்கப்போகிறாரென்பது மற்றும் சிலரின் நம்பிக்கை. எம்மைப் பொறுத்தவரையில், இவர்களின் ஊகம் மெய்யாகி அரசியல் திருத்தம் வழங்கப்பட்டால் நாம் ஒரு சிறிதும் வியப்புறோம். வேற்றுமையும், தளர்ச்சியும் நாட்டில் நிலவி நிற்கும் இவ்வேளையில் சொற்ப சீர்திருத்தங்கள் வழங்கி நம்மைச் சரிப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷார் கருதுவது இயல்பே. ஆனால், அவைகளை ஏற்றுக்கொண்டு பாரத மக்கள் மீண்டுமொரு முறை ஏமாந்துபோவார்களா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அஞ்சுதல் ஒழிக
அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கதர் அணிய அஞ்சுவதைப் பற்றி
ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் “நெஞ்சு பொறுக்குதிலையே” என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள அரிய கட்டுரையை மற்றொரு பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். மற்றவர்களைவிட உத்தியோகஸ்தர்களே இராட் டையை ஆதரிக்கப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏழை எளிய வர்கள் உள்படப் பொது ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான் இவர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆகவே, ஏழை எளியவர்களுக்கு உணவளித்துக் காக்க வல்லதான இராட்டையை ஆதரித்தல் இவர்கள் கடனன்றோ? ஸ்ரீமான் ஆச்சாரியார் எடுத்துக்காட்டுகின்ற வண்ணம் இவர்கள். கதரணிய பயப்படுபவதற்குச் சிறிதும் ஆதாரமில்லை. ஆதாரம் ஓரளவு இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், ஆடை அணியும் விஷயத்தில்கூட நமது சுதந்திரத்தைப் பறிகொடுத்தல் பேதமையேயாகும். உத்தியோகஸ்தர்கள் அஞ்சி அஞ்சிச் சாவதொழிந்து தமது கடனாற்ற முன்வருவார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925
குடி அரசு - 1925 22
ஒரோ திட்டம்
காந்தியடிகள் சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை அங்கீகரித்துவிட்டார். என்று கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகும் என்று சென்ற வாரம் எழுதி னோம். சித்தகாங்கில் மகாத்மா கூறிய அருள்மொழிகள் நமது கூற்றை உறுதிப் படுத்துகின்றன. அவை பின்வருமாறு :-
“போருக்கு என்றும் சளைக்காத ஒரு சாதியாரோடு நாம் சண்டை யிடுகிறோம். அந்த ஜாதியார் பணிந்துபோவதென்றால் இன்னதென்று அறியார்கள். இராஜதந்திர முறைகளைக் கையாண்டு நாம் எவ்வளவுதான்
முயன்றாலும் அவர்களை நாம் இந்தியாவைவிட்டு ஓட்டிவிடமுடியாது. நமது வெற்றிக்குச் சாதனமாக நான் தேசத்தார் முன் வைத்திருப்பது ஒரே திட்டந்தான். அஃது இராட்டையேயாகும்.””
அரசியல் கிளர்ச்சி முறைகளில் காந்தியடிகளுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லையென்பது இதிலிருந்துதெள்ளிதின்விளங்குகின்றதன்றோ?'
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
'z 5 ; & தமிழ்ப் பக் வருடக் கக்க ம் ர:
b & i
குடி அரசு - 1925 24
நமது அரசியல் நிலை 11
இரு கரையும் புரண்டோடும் வெள்ளப்பெருக்கு இடைமறித்துப் பலமாகத் தடுக்கப்படின், பின்னால் எதிர்த்துத் தாக்கி இருமருங்கிலும் உடைப் பெடுத்து நாலா பக்கங்களிலும் ஓடிச்சென்று சிதறுண்டு போதல் இயற்கை. அதுபோன்று இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற மாபெரும் இயக்கமாகிய ஒத்துழையாமை இயக்கம் இடையில் ஓடுக்கப்பட்டவுடன், தேச விடுதலை யொன்றிலேயே குறிக்கொண்டு நின்ற மக்கள் மனம் வேற்றுமை:
யுற்று மிகச் சிறுசிறு விஷயங்களில் தம் மனத்தைச் செலுத்துவராயினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் துரும்பென மதித்து உதறித் தள்ளியெறிந்த பட்டங்களிலும், பதவிகளிலும், அதிகாரங்களிலும் மீண்டும் மக்கள் மனம் வைப்பாராயினர். பொதுநல எண்ணம் குறைந்தது; தன்நலம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்துவிட்டது. சாதிப்பற்று என்ற மாயையில் மக்கள் அழுந்துவா ராயினர். “எனது கடமை”, “எனது கடமை” என்றதற்குப் பதிலாக “எனது உரிமை”, “எனது உரிமை” என்ற முழக்கம் எங்கும் கேட்கிறது. ஒவ்வொரு சாதியினரும் தமது சாதியின் உரிமைகளுக்காகப் போராட முனைந்து
நிற்கின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தமது முன்னேற்றத்திற்காக முற்பட்டு உழைத்தல் சாலவும் சிறந்ததே. தமது உழைப்பால் பிற சாதியினர்களின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படாதிருத்தல் வேண்டும் என்ற எண்ண மின்றி எவர் எக்கேடு கெடினும் தாம் மட்டும் பல உரிமைகளைப் பெற வேண்டுமென்ற குறுகிய நோக்கம் இதுகாலை நாட்டில் தலைவிரித்தாடுகிறது.. சிறந்த அறிவாளிகளும், உயர்ந்த தேசாபிமானிகளும் இக்குறுகிய நோக் கத்தை அடிப்படையாகக் கொண்ட சாதிப்பற்று என்னும் மாயவலையில் சிக்கி உழலுகின்றார்கள். “நீ யாவன்?” என என்னை ஒருவன் கேட்பானாயின் “இந்தியன், இந்தியன், இந்தியனே” என்று முக்காலும் மொழிவேன் எனக் கூறிய திரு மகம்மதலி ஜின்னாவுங்கூட சாதிப்பற்று என்ற மாயையில் பாவம்! அழுந்திவிட்டார். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் அரசினர் சட்டசபையில் பெறும் பிரதிநிதித்துவ தொகையை வரம்பறுத்து, சென்ற 1916-ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதற்குத்தான் “லக்ஷமணபுரி ஒப்பந்
தம்” என்று பெயர். அவ்வொப்பந்தத்தை தமது சாதிக்கு சாதகமாக மாற்ற வேண்டுமென்று முஸ்லீம்கள் ஒரு பெரும் கிளர்ச்சி செய்து நிற்கின்றனர். சாதிமத பேதங்கடந்து சிறந்த தேசீயவாதியாக இருந்து வந்த, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நாட்டின் நலனைக் கெடுப்பதாகும் என்ற கொள்கையைக்
ஐ ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கைக்கொண்டிருந்த திரு ஜின்னா நாட்டின் தற்கால நிலையில் தமது கொள்கைகளைச் சிறிது மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது என்று கூறி முஸ்லீம்களின் கிளர்ச்சிக்குத் துணை செய்து வருகின்
றார். சாதிப்பற்றின் வலிமையே வலிமை !இப்பெருஞ் சமூகத்தினரும் ஒருங்கு
கூடிச் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தக்க காரணமின்றி மாற்றுதல் கூடா தென்றும் அவ்விதம் மாற்றுதல் அவசியமாயின் தமது ஜாதியினரின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படக் கூடாதென்றும் இந்துக்கள் எதிர். வாதம் புரிந்து வருகின்றனர். இவ்விரு வாதங்களையும் முறையே ஆராய்ந்து முடிவுசெய்யக் கூடின கூட்டமும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டம் போல் ஒன்றும் செய்யாமல் பயனில்வாதம் நிகழ்த்திக் கலைந்து விட்டது.
தமிழ்நாட்டிலோ அரசியல் உலகத்தை சாதிச் சண்டை என்ற படாம்
மூடிக் கொண்டிருக்கிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றி மக்களுக்குள் ஒற்றுமையைக் குலைத்து, வேற்றுமையை நாட்டி, தேச விடுத லைக்குப் பெருந்தடையாக நின்று நாளடைவில் ஒருவாறு ஓடுக்கமுற்று வந்த சாதிச்சண்டை மீண்டும் உயிர்த்தெழுந்து உறுமி நிற்கிறது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், ஆரியர் - தமிழர் என்ற பிரிவுச் சொற்களே எங்கும் முழங்குகின்றன. சுதந்திர வீரர்கள் சுயராஜ்ய வீரர்களாக இலங்கிய நம்மவர் இதுகாலை சாதி வீரர்களாகக் கோலங்கொண்டு நிற்கிறார்கள். தலைவர்களின் சொற்பொழிவுகளிலும், தமிழ்ப் பத்திரிகைகளிலும் காங்கிரஸ் என்ற பேச்சைக் காணோம்! கதர் என்ற பேச்சைக் காணோம்! எல்லாம் சாதி மயமாகவே விளங்குகின்றன. “எல்லாருமோர் குலம், எல்லாரும் இந்திய மக்கள்” என்ற உயரிய கொள்கை, சிறந்த எண்ணம் மக்களை விட்டு அகன்றோடிப் போய் விட்டது. பிறப்பால் உயர்வு, தாழ்வு என்ற கீழ் எண்ணம் நாட்டில் பரவி விட்டது. எல்லாரும் ஒன்றென்று எண்ணி நாட்டின் நலத்திற்காக ஒன்றிய மனத்தினராய்த் தமிழ் மக்கள் உழைக்கும் நாள் எந்நாளோ?
இதுகாறும் நாட்டின் அரசியல் நிலையைப் பற்றிப் பொதுநோக்காக ஆராய்ச்சி செய்தோம். இனி நாட்டின்கணுள்ள பற்பல அரசியல் கட்சியினர் களைப் பற்றிச் சுருக்கமாக ஆராய்தல் செய்வோம்.
நமது நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சிமுறையில் எவ்வித தொடர்பும் இன்றி, புறத்தே நின்று ஒத்துழையாமை செய்வதில் எவ்வித பயனுமில்லையெனக் கூறி, அரசினர் சட்டசபைகளில் நுழைந்து ஆங்கு ஒத்துழையாமையை நிகழ்த்தி ஆட்சிமுறை நடைபெறாவண்ணம் இடைய
றாது முட்டுக்கட்டை போட்டு, ஆட்சிமுறையை உடைத்தெறிதலே சாலவும் சிறந்ததெனக் கொண்டு காங்கிரஸ்வாதிகளில் ஒரு கூட்டத்தினர் “சுயராஜ்யக்
கட்சி ” என்ற ஒரு கட்சியைத் தோற்றுவித்தனர். மத்திய மாகாணம், வங்காளம் என்னும் இரண்டு இடங்கள் தவிர மற்றைய இடங்களில் சுயராஜ்யக் கட்சி யினர் போதிய ஆதரவு பெறவில்லை. இடத்திற்கும், காலத்திற்கும் தமது கட்சி
யின் பலத்திற்கும் தக்கவாறு தமது கொள்கைகளையும் முறைகளையும்
குடி அரசு - 1925 26
மாற்றிக்கொண்டே வரலாயினர். சட்டசபைகளில் முழு ஒத்துழையாமை, இடையறாமல் முட்டுக்கட்டை என்று கூறியது பேச்சளவிலே நின்றுவிட்டது.
இந்திய சட்டசபையில் தமது கட்சிக்குப் பலமின்மை கருதி சுயேச்சை வாதிகள் சிலரோடு ஒருவகை ஒப்பந்தம் செய்துகொண்டு முட்டுக்கட்டை முறையை ஓராண்டு கையாண்டு வந்தனர். அதுவும் ஒருசில காரியங்களில் மட்டுமே. ஓராண்டுக்குப் பின்னர் சுயேச்சை வாதிகள் சுயராஜ்யக் கட்சியி னரைக் கைவிட்டு விட்டனர். பாவம்! தன்னந் தனியராய் எடுத்த காரியம். யாவினும் தோல்வி மேல் தோல்வியே பெற்று வந்தனர். இவர்கள் அரும் பாடுபட்டு அரிதிற் பெற்ற சில வெற்றிகளும் அரசப் பிரதிநிதியின் தனி அதிகாரம் எனும் வாளுக்கு இரையாயின. சட்டசபைகள் ஏற்படுத்தும் சிறு கமிட்டிகளில் பதவி பெறலாகாதென்று கொண்டிருந்த நோக்கம் வெறும் எழுத்தளவிலேயே நின்றுவிட்டது. மத்திய மாகாணத்திலும் வங்காளத்திலும். சுயராஜ்யக் கட்சியினரின் முட்டுக்கட்டை ஒருவாறு நிறை வேறிற்றென்றே கூறுதல் வேண்டும். இருந்தாலும், என்? மத்திய மாகாணத்தின் சட்டசபைத் தலைமையைப் பெற சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டு, அதனையும் பெற்று விட்டனர். பதவிபெறுதல் கூடாது என்ற அவர்தம் கொள்கைக்கு வியாக்கி
யானம் போலும்! சென்னை மாகாணத்தைப் பற்றிய மட்டிலும் சுயராஜ்யக் கட்சியினரை பத்திரிகைகளிலும், பிரசங்க மேடைகளிலும் கண்டோமே
யல்லாது சட்டசபையில் காணவே இல்லை. சென்னை சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியினரும் பிற கட்சியினரும் கையாண்டு வந்த முறைகளில் எவ்வித பேதமும் எள்ளளவும் எமக்குப் புலனாகவில்லை. இது போன்றே மற்றை மாகாண சட்டசபைகளிலும் சுயராஜ்யக் கட்சியினர் இருந்து வருகின் றனர் எனக் கூறுதல் மிகையாகாது.
“சட்டசபைகளில் ஒத்துழையாமை நிகழ்த்துவோம்; முட்டுக்கட்டை போடுவோம்; ஆட்சிமுறையை அழிப்போம்” என்று சுயராஜ்யக் கட்சியினர். வீராவேசம் கொண்டு கூறிய முழக்கச் சொற்கள் பயனிலவாயின; பேச்சில் ஒத்துழையா வீரர்களாகவும், செய்கையில் ஒத்துழைப்பு வீரர்களாகவும் விளங்கி வருகின்றார்கள்.அதுமட்டுமோ? பேச்சிலுங்கூட அவ்வீரத்தன்மை ஒழிந்து வருகின்றது. காந்தியடிகளுக்கும், சுயராஜ்யக் கட்சியினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒழித்துவிட சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டு விட்டனர். அக் கட்சியினர்களுக்குள்ளேயே பற்பல மாறுபட்ட அபிப் பிராயங்கள் தோன்றிவிட்டன. தாஸர் ஒன்று கூறுகிறார்! மகாராஷ்டிர சுய ராஜ்யக் கட்சியினர் ஒன்று கூறுகின்றனர். நிர்மாண திட்டத்தை நிறைவேற்றி வைத்தல் வேண்டுமென திரு தாஸர் கூறுகிறார். நூல் சந்தா தீர்மானத்தை எடுத்துவிட வேண்டுமென்றும், காந்தியடிகளை காங்கிரஸை விட்டு ஓட்டிவிட வேண்டுமென்றும் மகாராஷ்டிரத்தார் கூறுகின்றார்கள். இன்னும் சில நாட் களுக்குள் சுயராஜ்யக் கட்சியினர்களுக்குள்ளேயே பிளவு ஏற்படும் அறிகுறி
கள் காணப்படுகின்றன. திரு தாஸர் இந்தியாவிலிருந்து கண் சிமிட்டுகிறார்;
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
திரு பர்க்கன் ஹெட்டு பிரபு இங்கிலாந்திலிருந்து கண் சிமிட்டுகிறார். யாரை
யார் மயக்கப் போகிறார்களோ காலந்தான் காட்டும். தன்னைக் கண்டாரை மயக்கமுறச் செய்து கீழே வீழ்த்தும் கொல்லிப்பாவையென விளங்கும் அரசி
னர் சட்டசபைகளில் அடி வைத்தவர்களின் வழி இந்நிலையுறாது பின் எந் நிலையுறும்? சுருங்கக்கூறின் சுயராஜ்யக் கட்சியினர் தமது பண்டைக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டனர்; ஒத்துழைப்பாளர்களாயினார்கள். நிர்மாணத் திட்டத்திலும், காந்தியடிகளிடத்திலும் நம்பிக்கையிழந்தனர்; அவர்களுக்குள்ளும் அபிப்பிராய பேதங்கள் தோன்றலாயின; பிளவு அதி விரைவில் ஏற்படுதலுங்கூடும். சுயராஜ்யக் கட்சியினரின் தற்கால நிலை இதுவேயாகும்.
ஸ்ரீமதி அன்னி பெஸண்டும், அவரது கூட்டத்தினரும் இந்திய அரசியல் உலகில் இதுகாலை மிக்க பாடுபட்டு வருகிறார்கள். “அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் ” என்ற கொள்கையுடையவர்கள். இந்தியாவில் மட்டும் கிளர்ச்சி செய்தல் பயன் தராது என்றும் இந்திய அரசியல் கிளர்ச் சியை இங்கிலாந்திலும் நடத்துதல் வேண்டும் என்ற நோக்கமுடையவர்கள். இந்திய மக்கள் உண்மையாகவே சுதந்திரதாகங் கொண்டுள்ளார்கள் என்று ஆங்கிலர்கள் அறிவார்களாயின் இந்தியாவின் ஆட்சி முறையில் இந்தியர்: களுக்குப் பெரும் பங்கு கொடுக்க ஆங்கிலர்களே முன் வருவார்களென்றும், இந்திய அரசியல் நிலையின் உண்மையையும், இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையையும் ஆங்கிலர் அறியாத குறையே அவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதற்குக் காரணமென்றும், ஆங்கிலர்களை வற்புறுத்தினால் அல்லாது அவர்கள் இணங்கமாட்டார்களென்றும், ஆகையினால் உருப்படியான அரசியல் திட்டமொன்றைத் தயாரித்து ஆங்கில நாட்டுப் பாராளுமன்றத் தாரிடம் சமர்ப்பித்தல் வேண்டுமென்றும் இக்கூட்டத்தினர் கூறுகின்றனர். “இந்திய சுயஆட்சி மசோதா” ஒன்றினைத் தயாரித்து அதற்கு இந்திய
மக்களின் ஆதரவைப் பெற இந்நாடு முழுவதும் ஸ்ரீமதி அன்னி பெஸண்டு சுற்றுப்பிரயாணம் செய்து வருகின்றனர். ஸ்ரீமான் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி போன்ற பெரியார்களினுடையவும், மகாராஷ்டிர மாகாண மகாநாடு போன்ற வைகளினுடையவும் ஆதரவைத் தமது மசோதாவிற்குப் பெற்றிருக்கின்றார். இதுகாறும் வெளிவந்துள்ள இந்திய அரசியல் திட்டங்களைக் காட்டிலும் இவர். தயாரித்த மசோதா பெரிதும் முற்போக்குடையதாகவும், இந்திய மக்களுக்கு ஆட்சி முறையில் அதிக அதிகாரமும் பொறுப்பும் தரத் தக்கதாகவும் இருக் கிறதென்றே கூற வேண்டும். எனினும் இந்திய நாகரிகத்திற்கும் அரசியல் கொள்கைகளுக்கும் பெரிதும் மாறுபட்ட அம்சங்களைத் தன்னகத்துத் தாங்கி நிற்கிறது. ஆங்கிலர்களை எந்நாளும் சார்ந்து இந்திய மக்கள் பிழைக்க வேண்டுமென்ற கொள்கையை இம்மசோதா ஒப்புக் கொண்டு நிற்கிறது. இந்தியாவிற்கு ஆங்கில நாட்டுத் தொடர்பு இன்றியமை யாததென்று வலியுறுத்திக் கூறுகிறது. இந்தியாவின் காவலன் (Protector ) ஆக ஆங்கில மன்னன் இருந்தேயாக வேண்டுமாம். இந்தியாவின் மீது ஆணை
குடி அரசு - 1925 28
செலுத்திவரும் ஆங்கில நாட்டுப் “பிரிவி கவுன்ஸி”லின் ஆதிக்கம் இம் மசோதாவினால் ஒழிந்தபாடில்லை. பிறநாட்டாரின் வியாபாரப் பெருக்கால் இந்தியக் கைத்தொழில்கள் நாசமாக்கப்படாமல் நமது தொழில்களைக் காப்பாற்றிக் கொள்ள காப்புவரி முதலானவை விதிக்கும் உரிமைகள் இம்மசோதாவில் காணப்படவில்லை. இதுகாலை நடைபெற்று வரும் இந்திய அரசாங்கத்தார் கண்மூடித் தனமாகவும், தந்நலத்தைப் பேணியும் பெருக்கி வைத்திருக்கும் கடன்களையும் வேறுசில பொறுப்புகளையும் ஆராய்ந்து உண்மையறிந்து ஏற்றுக் கொள்ளுவனவற்றை ஏற்றுக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ள முடியாதனவற்றைத் தள்ளவும் இம்மசோதா இந்திய மக்களுக்கு உரிமை அளிக்கக் காணோம். இதுபோன்ற குறைகள் பலவும் இந்திய நாகரிக, அறிவு வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள குறைகள் பலவும் இம் மசோதாவில்
மல்கிக் கிடக்கின்றன. ஆங்கில நாட்டுத் தொடர்பை எக்காலத்தும் இந்தியா விடக்கூடாதென்று அம்மையார் கூறுதல் இயல்பே: அவரும் ஒரு ஆங்கிலராதலின். செருப்புக்கடியின் துன்பத்தை செருப்பணிந்தவனன்றோ அறிவான் ? ஆங்கில நாட்டுத் தொடர்பை அறுத்தெறிய வேண்டுமென்பது இந்தியர்களின் எண்ணமுமன்று. அத்தொடர்பு இரு நாட்டிற்கும் நன்மை பயப்பதாயின் யாவரே வேண்டாமெனக் கூறுவர்? அத்தொடர்பால் நமது நாட்டின் நலத்திற்குக் கேடு விளைவதாயின் நாம் தனித்து நிற்கும் உரிமை நமக்கில்லையா? என்பதே கேள்வி. இக்கேள்விகளுக்குத் தக்க விடை இம்மசோதாவில் காணோம்.
நாட்டில் இன்னும் வேறு பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவைகள் தொகையில் சுருங்கினவாகவும் செல்வாக்கில் குறைந்தன வாகவும் வெறும் பெயரளவிலேயே நின்று வருகின்றன. “கடப்பார் எவரே கடு வினையை” என்ற கொள்கையையுடைவர்கள்.அதிகம் கேட்போம்; கொடுத்
தால் அநுபவிப்போம்; சிறிது கொடுப்பினும் வந்தனம் கூறுவோம்: மேலும் மேலும் கேட்டுக் கொண்டேயிருத்தல் வேண்டும்; அதுதான் நமது கடமை யென்ற சித்தாந்தமுடையவர்கள். இவர்கள்தான் நிஷ்காமியகர்ம யோகிகள்
போலும்.
இதுதான் இந்தியாவின் அரசியல் உலகம்! இதுதான் நமது நாட்டின் அரசியல் நிலை! இத்தகைய காட்சியை வேறெந்நாட்டு அரசியல் உலகினும் காண்பதரிது. இங்கனம் பலதிறப்பட்ட அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளைக் கண்டு மக்கள் மனங்கலங்கி நிற்பதில் எவ்வித ஆச்சரிய முமில்லை.அடுத்த கட்டுரையில் காந்தியுலகைப் பற்றியும் மக்கள் கடைப் பிடித்தொழுக வேண்டிய அரசியல் நெறியைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.05.1925
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நமது அரசியல் நிலை 111
காந்தியடிகள் இந்திய அரசியல் உலகில் தலையிடுவதற்கு முன்னர் மேனாட்டு அரசியல் முறைபற்றி நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி நடை பெற்று வந்தது. மேனாட்டு அரசியல் நூல்களைக் கற்று அந்நாட்டு இராஜ தந்திரத்தில் மோகங்கொண்ட படித்த வகுப்பினர்களே நமது நாட்டின் அரசி
யல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கில ஆட்சியில் நமது நாட்டின் பல வளங்களும் அழிந்து போயிற்று என்ற உண்மையை உணர்ந்தவர்கள் தாம். எனினும் நமது நாட்டின் விடுதலை ஆங்கிலர்களின் உள்ளங் கைக்குள். அடங்கிக்கிடக்கிறதென்ற கொள்கையுடையராய் உழைத்து வந்தனர். தன்னம். பிக்கையும், தன் கையே தனக்குதவி என்ற சீரிய எண்ணமும் இலராய் ஆங்கிலர்களின் புன்சிரிப்பிலேயே தவழ்ந்து தேச விடுதலை வேண்டி நின்றனர். சுயராஜ்யம் ஆங்கிலர் கொடுக்க நாம் பெற வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் மிக்கு இருந்தது. படித்த வகுப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் கூட்டமே காங்கிரஸ் மகாசபையாக விளங்கி வந்தது. ஆங்கில அரசாங்கத்தாருக்கு “எமக்கு இன்ன குறை உளது, அதனை தயவு செய்து நீக்க வேண்டும்” என்று அடிமைக்குணம் அரும்பிய விண்ணப்பத் தீர்மானங்களும், வேண்டுகோள்களுமே காங்கிரஸ் மகாசபையில் செய்யப்
பட்டுத் தாழ்மையுடன் அனுப்பப்பட்டு வந்தன. இந்திய அரசாங்க ஊழியம் இந்தியமயமாக்கப்படின் அதுவே தேசவிடுதலையெனக் கருதி உத்தி யோகங்கள் பெறப் பாடுபட்டு வந்தன. படித்த வகுப்பினரே இந்திய மக்கள். என்றும், சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பட்டினங்களே இந்தியாவென்
றும் கருதி அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கிலர்களின் மனப் பான்மையை உள்ளபடி ஒருவரும் அறிந்தவர்களில்லை. அறிந்த ஒரு சில
ரும் அதற்கேற்ப தக்க முறைகளை மக்களுக்குக் காட்டத் துணிந்து முன் வந்தார்களில்லை.
ஆங்கிலர்களின் உண்மையான மனப்பான்மையை உள்ளபடி அறிந்த
வர் உத்தமர் காந்தியடிகளேயாவார். ஆங்கில ராஜதந்திரிகள் போன்ற நிபுணர்: களை இவ்வுலகில் எங்கும் காண்டல் அரிது என்றும், அவர்களை அம்முறை கொண்டே வெல்லுதல் அரிது என்றும் இந்திய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். சுயராஜ்யம் வேண்டி ஆங்கிலர்களிடத்து அடிபணிந்து நிற்பது இழிவு என்றும், சுயராஜ்யம் என்பது ஒருவர் கொடுக்க ஒருவர் பெற்று அநு. பவிக்கும் பொருள் அல்லவென்றும், தாமாகவே அடைந்த சுயராஜ்யமே நிலைத்து நிற்கும் என்றும் காந்தியடிகள் மக்களுக்கு எடுத்தோதினர்.
குடி அரசு - 1925 20
சுயநலமும் இலாபமும் கருதியே ஆங்கிலர்கள் இந்நாட்டில் அரசு செலுத்தி வருகின்றார்கள் ஆதலின் அவர்களாகவே மனமிரங்கி இந்தியா
விற்குச் சுயராஜ்யம் அளிப்பார்களென எதிர்பார்ப்பது பகற்கனவேயாகும். தற்கொலை செய்துகொள்ள விரும்பும் மனிதன் ஒருவனையேனும் இவ்வுலகில் காண்டல் அரிது. தமது நாட்டின் மக்கள் திரண்ட செல்வம் அடைந்து இன்பம் நுகர்வதற்குக் கருவியாக அமைந்திருக்கும் இந்தியாவை விட்டுச் செல்லவும் ஆங்கிலர் ஒருப்படுவரோ? ஆகையினால் அவர்பால் உதவியை எதிர்பார்ப்பது இந்தியரின் தன்மதிப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் பெரியதோர் குறைவு என்று இடித்துக் கூறினார். நூற்றைம்பது ஆண்டுகளாக இந்தியர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைக்குழியில் வீழ்த்தின இந்திய ஆங்கில அரசாங்கத்தோடு ஒத்துழையாமையைக் கைக்கொள்வதே சுயராஜ்
யம் பெறும் வழியென ஓர்ந்து இந்திய மக்களுக்கு அரிய உபதேசம் செய்த
னர். காங்கிரஸ் மகாசபை படித்த வகுப்பினர் கூட்டமாக விளங்காமல் உண்மையான இந்திய மக்களின் பிரதிநிதி சபையாகத் திகழல் வேண்டுமா னால் இந்தியமக்கள் அனைவரும் அதில் சேர்ந்து கலந்து உழைத்தல் வேண்டுமென வழிகள் வகுத்தனர். தேசமும், தேச உரிமையும் இன்னதென்ற நியாது கிணற்றுத் தவளையென வாளாக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி தேச விடுதலையில் ஆர்வங்கொண்டு உழைக்கும்படிச் செய்தனர். இந்தியாவிற்கு சுயராஜ்யம் வேண்டுவது பல்லாயிரக்கணக்கான ஏழை இந்திய மக்கள் விடுதலை பெறவே என்ற உண்மையைக் கண்டு, இதுகாறும் இந்திய மக்களைப் புறக்கணித்து நடைபெற்றுவந்த இந்திய அரசியல் நெறியை மாற்றி படித்த வகுப்பினருக்கும் பாமர மக்களுக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கி வைத்தனர். இந்தியா என்பது படித்த வகுப்பினரும் பட்டினங்
களும் அல்ல; ஏழு லட்சம் கிராமங்களும் அங்கு வாழ்ந்து வரும் முப்பது கோடி மக்களுமேயாவார். சுயராஜ்யம் படித்த வகுப்பினர்க்கு மட்டுமல்ல; உத்தியோகங்களை இந்தியமயமாக்குவதும் சுயராஜ்யமாகாது, வறுமைக்கும், பிணிகளுக்கும், பஞ்சத்திற்கும் அகால மரணத்திற்கும் ஆளாகி எலும்பும் தோலுமாக அலைந்து திரியும் எண்ணற்ற கிராமவாசிகள் நந்நிலையடைந்து உண்ண உணவிற்கும் உடுக்கத் துணிக்கும் வாடி நிற்காமல் நிமிர்ந்த தலையினராய் ஏறுபோல் நடையினராய் வாழ்ந்து இன்பம் நுகரச் செய்வதே சுயராஜ்யமாகும். நமது கிராம வாழ்க்கை மீண்டும் பழைய நந்நிலைமை அடைந்தால் அல்லாது சுயராஜ்யம் பெறமுடியாது என்பது காந்தியடிகளின் முடிந்த கொள்கை. இவ்வாக்க வேலைக்கு இந்திய அரசாங்கம் உதவி புரியுமென எதிர்பார்த்தல் வீணே; கிராம வாழ்க்கையைக் குலைத்து, கிராம வாசிகளின் கைத்தொழிலைத் தொலைத்து, அதன்மேலேயே இவ்வரசாங்கம் கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காந்தியடிகள் கண்டார். இவைகளையெல்லாம் நன்றாய் ஆராய்ந்த பின்னரே தேசம் விடுதலை பெற வேண்டுமானால், சுயராஜ்யம் அடையவிரும்பினால் ஆக்க முறைகளையும் அழிவு முறைகளையும் இந்திய மக்கள் ஒருங்கே கைக்
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கொண்டு உழைக்க வேண்டுமெனக் கூறினார். அப்பெரியாரின் கொள்கை யைக் காங்கிரஸ் மகாசபையும் ஏற்றுக்கொண்டு ஒழுகியது. அழிவு முறை எனப்படுவது இந்நாட்டில் ஆங்கில அரசாங்கம் நடை பெறுவதற்கு உதவி யாக இருப்பவைகளோடு மக்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளா
மல் ஒதுங்கிநிற்பது ஆகும். ஆக்க முறையாவது கயராஜ்யத்தை நல்குவதான நிர்மாண வேலைகளை நிறைவேற்றி வைப்பது ஆகும். அரசாங்கத்தார். அளிக்கும் பட்டங்களையும் கெளரவப் பதவிகளையும் துறத்தல், சட்டசபை களை விட்டு விலகல், அரசாங்க பாடசாலைகளையும் நீதிமன்றங்களையும் விலக்குதல் ஆகிய இவைகளே அழிவு முறைகளாம்.இவ்வரசாங்கத்தாரின் அட்டூழியங்களினால் நசுக்கப்பட்டு இறந்துபோன குடிசைத் தொழிலாகிய இராட்டினத்தில் நூல் நூற்று கைத்தறியில் நெசவு செய்தல், உயிர்ப்பித்தல், இருபெரும் வகுப்பினராகிய இந்துக்களும், முஸ்லீம்களும் எவ்வித வேற்றுமையுமின்றி நட்புரிமை பூண்டு உடன் பிறந்தார்களைப்போல் ஒன்றி வாழ்தல், இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பதும், கேவலம் மனித உரிமையை மறுப்பதும் ஆகிய தீண்டாமை என்னும் கொடிய வழக்கத்தை
ஒழித்தல் ஆகிய இவைகளே ஆக்க முறைகளாகும்.
பற்பல காரணங்களினால் காந்தியடிகள் கோலிய அழிவுமுறைகள். மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. ஆக்கமுறைகளும்கூட புறக்கணிக் கப்பட்டு வருகின்றன. இவ்விரு முறைகளே இந்தியாவிற்கு சுயராஜ்யம் தரவல்லது; வேறு எம்முறையும் தராது என்பது உறுதி. ஆங்கிலர்களின்
ராஜதந்திரத்தின்முன் நம்மவர் தந்திரம் ஒருக்காலும் தலைதூக்காது; காலத்திற் கேற்ற பேச்சும், வாக்குறுதியைக் காக்கும் குணமின்மையும், வஞ்சகமும், பொய்க்கோட்டையும் பொதிந்துகிடக்கும் ஆங்கில இராஜதந்திரத்தின் வலிமை பாவம்! ஏழை இந்தியர் அறியமுடியுமோ? சட்டசபை சென்றவர்
களின் கதி என்னவாயிற்று? “பழைய கருப்பனே கருப்பன்” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். ஆங்கில நாட்டுத் தொழிலாளர் கட்சியினரை எதிர்பார்த்து நின்றவர்களின் கதி என்ன ? ஏமாற்றமல்லாது வேறுண்டோ? இது காலை பர்க்கன் ஹெட்பிரபுவை எதிர்பார்த்து நிற்பவர்களின் கதி என்ன ? இந்தியா வைப் பாதுகாக்கும் திறமை இந்தியர்களுக்கில்லை யாதலின் ஆங்கிலர் ஆட்சி இன்றியமையாதது என்றும், மாண்டேகு சீர்திருத்தத்தை ஏற்று நடத்தினால் அல்லாது மேலும் சீர்திருத்தம் வழங்குவதைப்பற்றி ஆலோசிக்க இயலாதுஎன்றும் வாய் கூசாமல் பிதற்றித்திரிகின்றார், காந்தியடி களை உதறித் தள்ளி விட்டு மீண்டும் அடிமை குணத்திற்காளாகி ஆங்கிலர்களை எதிர்
பார்க்கும் அறிவாளிகளின் கதி இந்நிலையுற்றதில் ஒரு சிறிதும் வியப்பு இல்லை.ஆகையினால் தமிழ் மக்களுக்கு நாம் அறிவிக்க வேண்டியதொன் றுண்டு. இவ்வழிவு முறைகளை மீண்டும் காங்கிரஸ் மகாசபை ஏற்று நடத்தும் வரையில் ஆக்க முறைகளைக் கைக்கொண்டு இடைவிடாது அல்லும் பகலும் உழைத்து வரல் வேண்டும். காங்கிரஸ் மகாசபை வேறு கட்சிகள் வயப்பட்டு விடுமாயினும் நாம் கவலையுறவேண்டுவதில்லை, அழிவு முறையில்
குடி அரசு - 1925 32
நம்பிக்கையுள்ளோர் அதனை நடத்தியே வரல் வேண்டும். சட்டசபை செல்வோர் செல்க: பட்டங்களையும், பதவிகளையும், பெற்றுமகிழ்வோர். மகிழ்க; உயிரைக் கொல்லும் உடலைக்கொல்லும், அடிமைக் குழியில் வீழ்த்
தும் மானிட இயந்திரங்களை உண்டாக்குவிக்கும் பள்ளிகளுக்குப் போவோர் போக;நீதிமன்றம் ஏறுவோர் ஏறுக; ஆங்கிலமாயைகளாகிய இவைகளினின்
றும் விடுபட்டு நல்லுணர்வு பெற்று மீண்டும் காந்தியடிகளைச் சாண்புகும் வரையில் மற்றையோர் பொறுத்துக் கொண்டிருத்தல் கடன்: ஆக்க முறை களை வெகு தீவிரமாக நடத்தி வருதல் வேண்டும்.
ஒத்துழையாமை இயக்கம் இறந்துபடவில்லை. ஒத்துழையாமை ஒடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய இன்னும் அறவே ஒழிக்கப்படவில்லை. ஒத்துழையாமை நெறியை விட்டுவிடுவதாக எண்ணவேயில்லை என காந்தியடிகள் கூறுகின்றார்.ஆக்க முறைகளை நடத்துங்கள், சுயராஜ்யம் பெறு வீர்கள் எனக் கதறுகிறார். உண்மை! உண்மை!! காந்தியடிகளைவிட வேறு துணை இந்திய மக்களுக்கு இல்லை என்பது உறுதி. மற்றத் தலைவர்கள். அரும் பாடுபட்டுச் சுயராஜ்யம் பெறுதலும் கூடும். அவர்களின் சுயராஜ்யம் இந்திய நாகரீகத்திற்கும், அறிவிற்கும், கலை வளர்ச்சிக்கும் ஏற்றதாக இரா தென்பது திண்ணம். உண்மை இந்தியா இன்னதென உணர்ந்தவர் காந்தி யடிகள் ஒருவரேயாவார்; மற்றையோர் மேனாட்டுக் கண்ணாடியால் இந்தியா வைப் பார்க்கின்றனர். இஃது தான் காந்தியடிகளின் முறைக்கும் , மற்றை யோரின் முறைக்கும் உள்ள வேற்றுமை,
காந்தியடிகளின் ஆக்க முறையில், காங்கிரஸ்மகாசபை இதுகாலைத்
தழுவிநிற்கும் ஆக்க முறையில் அரசியல் மணம் இல்லை? ஆதலின், அது சுயராஜ்யம் நல்காது என்று மிதவாத நண்பர்களும், பெஸண்டம்மைக் கூட்டத்தாரும், சுயராஜ்யக்கட்சியினருங்கூடக் கூறுகின்றார்கள். பர்க்கன் ஹெட்பிரபுவோடும் பாராளுமன்றத்தினரோடும் வறிதே வாதாடுவதும், கொஞ்சிக் கூத்தாடுவதும் தான் அரசியல் ஞாபகம் போலும்!
நாட்டின் செல்வ நிலையைப் பெருக்கும் தேச மக்களின் பொருள் வருவாயைப் பெருக்கும் வழி அரசியலின் பாற்படாதோ? ஆங்கில ஆட்சிக்கு ஆதார மாக இருக்கும் வியாபார பெருக்கைத் தொலைக்கும் முறை அரசியலின் பாற்படாதோ? குடியின்றேல் கோல் உண்டோ? நாட்டில் வாழும் மக்கள் நல் வாழ்வுபெற நாடும்வழி அரசியல் முறையாகாதோ? நாட்டிலுள்ள மக்கள் குடிக்கக்கஞ்சியும், உடுக்க கூறையும் இல்லாமல் நாசமுற்று ஒழிந்துபோய்விடின் சுயராஜ்யம் எற்றுக்கு? ஆங்கில ஆட்சியின் கொள்கைகளும் “பிரித்தாளுதல்” என்ற கொள்கை முதன்மையான தல்லவோ? “பிரித்தாளும் கொள்கை” யை ஒழிக்க இந்து முஸ்லீம் ஒற்றுமை யைப் பலப்படுத்தவும், உயர்வு தாழ்வு என்ற வேற்றுமையின் வேராக விளங்கும். தீண்டாமையை ஒழித்து மக்கள் ஒற்றுமையாக வாழவும் பாடு படுதல் அரசியல் முறையின் பாற்பட்டதாகாதோ ? சுயராஜ்யம் எனின்
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இதுபோழ்து நடைபெறும் ஆட்சிமுறையைத் திருத்தியோ ஒழித்தோ மக்கள். பிறப்புரிமைகளைப் பெற்று எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமெய்தி வாழ்வதுதானே. இதுபோழ்து நடைபெறும் ஆட்சிமுறையின் அடிப்படை களாக இருக்கும் நாட்டின் செல்வத்தை கொள்ளை கொள்ளும் வியாபாரம், பிரித்தாளுதல் ஆகியவை களை ஒழிக்கும் முறைகள் அரசியல் முறைகள். அல்லவெனின் பின் எதுதான் அரசியல் முறையோ? தமிழ்மக்களே! பட்ட வேட்டையிலும், பதவி மோகத் திலும் அமிழ்ந்து அலைந்து திரிவோர்களின் மயக்க வார்த்தைகளில் ஈடுபட்டு ஏமாந்து போகாதீர்கள். “கதர், இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழித்தல் ஆகிய இம்மூன்றுமே சுயராஜ்யம்
நல்கும். இதுவே எனது சித்தாந்தம்” எனக் காந்தியடிகள் கூறும் அரிய மொழிகளை ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையைக் கண்டு தேறி, காந்தியடிகள்
வழிநின்று தேசவிடுதலைக்காக உழைப்பீர்களாக L
குடி அரசு - தலையங்கம் - 31.05.1925
குடி அரசு - 1925 34
ஈோட்மல் நாடக வரி
கடந்த இரண்டு நாட்களிலும் ஈரோடு அதிகார வர்க்க உலகில் ஒரே பரபரப்பு. எல்லாம் ஓட்டமும் நடையுந்தான் ! மேலதிகாரி முதல் அடியிலுள்ள தோட்டி வரையிலும் வெயிலென்று பாராமலும், வியர்வை ஒழுகுவதைக் கவனியாமலும், ஓடித் திரிந்த வண்ணமாகவே இருந்தனர். ஈரோட்டில் இடிதான் விழுந்துவிட்டதோ? பெரும் புயல்காற்று கொடுமைகள் பல இழைத்ததோ? என்ன விபத்து நிகழ்ந்ததோ? என்று நேயர்கள் ஐயுற வேண்டும். நமது அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்தோர் இங்ஙனம் நினையார். ஒரு நாடகக் கூட்டத்தார் எமது அதிகார தெய்வங்களை இவ்வளவு ஆட்டமும் ஆட்டிவைத்துவிட்டனர் ! நாடக புருஷர்கள் யாரென்று எண்ணு
கிறீர்கள்? சென்னை செக்ரெடேரியட் ஊழியர்களே! இவ்வூர் நாடக சாலை
யில் நேற்றிரவு “*புத்ரோத்ம ராமன்” என்ற நாடகம் நடத்தினார்கள். மாப் பிள்ளைகளைப்போல் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.மயிலாப்பூரில் நிருவப்பட்டிருக்கும் “இராமகிருஷ்ண மாணவர்” இல்லத்திற்குப் பொருள். சேர்க்கவே இந்நாடகம் நடைபெற்றதாம் | அநுமதிச்சீட்டு (டிக்கட்) ஒன்றின் “விலை” ரூபா பத்துதான் I
ஒரு நாடகக் கூட்டத்தாருக்குப் பொருள் சேர்க்கும் “ஏஜெண்டு'களாக அதிகாரிகள் விளங்கின காட்சியை ஈரோட்டில் கண்டோம். சென்னை செக்ரெ டேரியட் ஊழியர்களே, நாடக புருஷர்களாக வருவார்களாயின் ஸ்தல அதி காரிகள் அவர்களுக்கென அநுமதிச்சீட்டு விற்றுக்கொடுக்கும் “ஏஜண்டு* களாக இருப்பதில் குற்றமென்ன? இவர்களின் ஆதரவு இன்றேல் 600 அநுமதிச் சீட்டுகளுக்கு ரூபா 6000 சம்பதிப்பதெப்படி? நாடகக் கூட்டத்தார். சாதாரண மக்களா? சென்னை செக்ரெடேரியட் ஊழியர்கள் அன்றோ? இவர்கள் இட்ட பணியை ஸ்தல அதிகாரிகள் எவ்வாறு மறுப்பது? மறுக்க வேண்டிய அவசியம் தான் என்ன? அதிகாரிகளின் அடி வருடி வாழும் மணியக்காரர்களும், கர்ணங்களுமான கிராமதிகாரிகள் மலிந்து கிடக்கும் போது மேலதிகாரிகளுக்கு என்ன குறை? என்ன கவலை? தத்தம் கிராமங்களில் வாழும் குடிமக்களில் தனவந்தர்களைப் பிடித்து அவர்களின் விருப்பத்திற்கு விரோதமாக “மடியைப்பிடித்து மாங்காயைப் போட்டு மயிரைப்பிடித்து பணம் வாங்குவதற்கொப்ப' சீட்டு ஒன்றுக்கு பத்துரூபா பகற்கொள்ளையடித்த செய்தியை அதிகாரிகள் அறிவரோ? அதிகாரிகள் விரும்பினால் நாடகத்திற்கும் “வரி” விதிக்கலாம் போலும்!
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மேலதிகாரிகளின் வெறுப்புக்கும், சீற்றத்திற்கும் ஆளாகாமல் இருக்க. வேண்டுமென்ற அச்சத்தால், தம்மிடம் கொடுக்கப்பட்ட சீட்டுகளை பெற்றுக் கொள்வோர் இலாமையினால் கைப்பணம் இழந்த மணியக்காரர்களும் கர்ணங்களும் எத்தனை பேரோ? நாடக “வரிக்காக வைத்துக்கொள்ளும்படி கூறித் தங்கள் சம்பளப்பட்டியில் கையெழுத்துமட்டும் பொறித்துவிட்டு வெறுங்கையினராய் வீட்டுக்குத் திரும்பின கிராமதிகாரிகள் எத்தனை பேரோ? மேலதிகாரிகளில் எத்தனை பேர் பணம் கொடுத்து நாடகம் பார்த்தனர் என்று அறிய எமக்கு ஆவல் உண்டு.
ஈரோடு அதிகார வர்க்கப் பேய் எமது நகரசபையையும் விட்ட பாடில்லை.நகரசபையின் கீழ்த்தர சிப்பந்திகள் ஸ்தல அதிகாரிகளின் தலைக் கடையில்தான். ஊரிலுள்ள நாற்காலிகளும், விசுப் பலகைகளும் இந்நகர சபைச் சிப்பந்திகளின் தலைமேல்தான்! நகரசபையில் சுகாதார உத்தி யோகஸ்தர்களும் உளரோ என்ற ஐயம் எமக்கு அடிக்கடி நிகழ்வதுண்டு.இந்த ஐயத்தை நீக்கிய டி நாடகக்கூட்டத்தாருக்கு எமது பெரும் வந்தனம். ஊருக்கு வந்த விருந்தினர்களுக்காவது சுகாதார வசதிகள் செய்து கொடுத் தமைக்கு மகிழ்ச்சியடைகிறோம்.
புத்திர உத்தமனான ஸ்ரீ ராமபிரானின் புண்ணிய சரிதையால் இவ்வூர் அதிகாரிகள் கற்றுக்கொண்ட படிப்பினை அதிகார பலத்தாலும், செருக்காலும் குடிமக்களை வருத்தி நாடக “வரியும் வசூலிக்கவேண்டுமென்பதுதான் போலும் !
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.05.1925
குடி அரசு - 1925 36
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் கூடிச்செய்த “பிறப்பினால் மனிதர்களில் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது” என்ற "தீர்மானத்தைப் பற்றியும் அதைக் குறித்துச் சிலர் செய்த ராஜீனாமாவைப்பற்றியும், “நவசக்தி”
பத்திரிகையில் மேற்படி தீர்மானத்தைப்பற்றி எழுதியிருந்த தலையங்கத் தைப்பற்றியும், இவ்வாரம் நமது பத்திரிகையில் வெளியிடவேண்டி எச்சரிக்கை என்ற தலைப்பின் கீழ் ஓர் குறிப்பு எழுதிவைத்திருந்தோம். ஆனால், நேற்று பத்திரிகைகளில் டாக்டர் வரதராஜுலு நாயுடு கல்கத்தா வினின்றும் அனுப்பிய தந்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் சமூகவாழ் விலும், குருகுலத்திலும் (மனிதர்கள் தங்களுக்குள்! பிறப்பினால் வித்தியாசம். பாராட்டக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் நிறைவேற்றிய தீர். மானத்தையும், அதன்மேல் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் எழுப்பிய ஆட்சேபனைகளையும் காந்தியடிகள் நன்கு பார்த்து அத்தீர்மானம் ஒழுங்கா
னதுதானென்றும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அக்கமிட்டி அதிகாரமுள்ள தென்றும் சொல்லியதாகக் கண்டிருக்கிறது. இதைவிட நமது
குறிப்பு இவர்களின் மனமாற்றத்திற்கு அதிக உதவிசெய்யாதெனக் கருதி நமது குறிப்பைநிறுத்திக் கொண்டோம்.
குடி அரசு - குறிப்புரை - 31.05.1925
* திருச்சியில் 29.1.25 ௨ கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம்
இந்திய சமூக வாழ்க்கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்ற தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும் இக்கொள்கையை தேசீய இயக்கத்தில் ஈடு பட்ட ஸ்தாபனங்கள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்
கப் பட்டது. இக்கொள்கையை சேரன்மாதேவி குருகுலத்தில் அனுஷ்டானத் தில் கொண்டுவரவேண்டிய முயற்சிகளைச் செய்ய கீழ்கண்ட சப் கமிட்டியை இக்கமிட்டியார் ஏற்படுத்துகிறார்கள்,
ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஈரோடு.
எஸ். ராமநாதன், மாயவரம். அ. வெ. தியாகராஜா, தேவகோட்டை
குடி அரசு - 17.05.1925 - பக்கம்.11
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காரைக்குமு வில்லை முதலாவது அரசியல் மகாநா௫
சகோதரிகளே ! சகோதரர்களே !
காரைக்குடி ஜில்லா முதலாவது ராஜீய மகாநாட்டுக்கு அக்கிராசனம் வகிக்கும் கவுரவத்தை எனக்களித்ததற்கு உங்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறேன். அல்லாமலும் இந்த தனவைசிய நாட்டில் நடந்த - அதாவது பள்ளத்தூர் மகாநாட்டுக்கும், தேவகோட்டையில் நடந்த. திருவாடானை தாலுகா மகாநாட்டிற்கும் அக்கிராசனம் வகிக்கும் கவுரவங் களையும் எனக்கே அளித்திருந்து, மறுபடியும் நடக்கும் இந்த மகாநாட்டு அக்கிராசன கவுரவத்தையும் எனக்கே அளித்திருப்பதைக் கொண்டு என்னிடம் தங்களுக்கு இருக்கும் அன்பைப்பற்றி நான் பெருமை பாராட்டிக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.
தேசத்தில் ஒற்றுமைக் கெட்டு, ஊக்கம் குன்றி, விடுதலை மறந்து, சுயநலம் மேலிட்டு தலைவிரித்தாடும் இந்தச் சந்தர்ப்பங்களில் மகாநாடுகள் நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம். அதிலும் செல்வந்தர்களும், கஷ்டமென்பதே இன்னதென்றறியக்கூடாத சீமான்களும் நிறைந்துள்ள. இப்பேர்ப்பட்ட குபேர பட்டணங்களில் மகாநாடுகள் நடத்த நண்பர்கள்
ஏற்படுவதும், அப்படி ஏதாவது ஒன்று இரண்டு தேசபக்தர்கள் நடத்தினாலும் பொதுஜனங்கள் அதில் கலந்து மகாநாட்டைப் பலனுண்டாக்கும்படி யாக்கு வதும் மிகவும் துர்லபம்; அப்படியிருந்தும் இம்மகாநாடு இவ்வளவு சிறப்பாக நடக்கிறதோடு இவ்வளவு மகாஜனங்கள் வந்திருப்பதையும் பார்த்தால் யாரும். பாராட்டாமலிருக்க முடியாது.
கனவான்களே !
காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பானது நமது நாட்டில் வெகு காலமாக நம்மனோர் சம்பந்தப்படுவதற்கில்லாததாய், படித்த வகுப்பார் என்று சொல்லப்படுகிற வக்கீல்கள் முதலிய கூட்டத்தாருக்கு உரியதாய் இருந்து, அவர்களுக்கே பலனைக் கொடுத்துக் கொண்டு வந்தது. அவர்களோடு நில்லாமல் நாட்டின் இரத்தத்தையும் உரிஞ்சிக் கொண்டே வந்தது.ஏதோ நம். பாக்கிய வசத்தால் மகாத்மா காந்தி அரசியல் விஷயங்களில் தலையிட ஆரம்பித்தன் பலனாய் அரசியல் விஷயம் இந்திய மக்கள் யாவருக்கும்
குடி அரசு - 1925 38
பொதுவாய் எல்லோருக்கும் விளங்கவும், எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ளவும், எல்லோரும் பலனடையக் கூடியதாயுமாகிவிட்டது. அதன் பலனாகத்தான் நீங்களும் நானும் இன்று இங்கு கூடியிருக்கிறோம்.
அரசியல் விஷயத்தைப்பற்றி உங்களுக்கு நான் இப்பொழுது அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். நாம் செய்யவேண்டிய அரசியல் திட்டங்களும் வெகு சலபமானதும், யாவருக்கும் புரியக்கூடியதும், யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதும், எவரும் கஷ்டமின்றி எளிதில் செய்யக்கூடியதும், பெரும்பாலும் எதிர்வாதமற்றதுமானவைகள். அதாவது ஒற்றுமை - கதர் - தீண்டாமை - மதுவிலக்கு முதலியவைகளே. இவற்றைப்பற்றி உபசரணைக் கமிட்டியாரால் தயாரிக்கப்பட்டிருக்கும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்ட பின், என்னுடைய அபிப்பிராயத்தை முடிவு ரையில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இன்று இவ்வூரில் நடக்கப்போகும் உற்சவத்திற்கு நீங்கள் போக ஆசை கொண்டிருப்பீர்கள் ஆனதால் இத்துடன். மகாநாட்டின் இன்றைய நடவடிக்கைகளை முடித்துவிடுகிறேன்.
நாளை காலை 8 மணிக்கு மகாநாடு மறுபடியும் கூடும். ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்கள் கதர் காட்சியைத் திறந்து வைப்பார். அது முடிந்த வுடன் ஸ்ரீமான் சென்னை சுரேந்திரநாத் ஆரியா அவர்கள் அக்கிராசனத்தின்.
கீழ் தொண்டர் மகாநாடு நடக்கும். அது முடிந்தவுடன் மகாநாட்டுத் தீர்மானங் கள் உங்கள் அங்கீகாரத்திற்கு வரும். கோவை ஸ்ரீமதி மீனாட்சியம்மாள் அவர்கள் பெண்கள் கடமையைப் பற்றி பேசுவார்கள். இன்று இரவும் நாளை: இரவும் நாகை ஸ்ரீமான் ராஜாராம் பாகவதர் அவர்களால் “மகாத்மா காந்தி” காலக்ஷேபம் நடக்கும். கனவான்கள் இதுபோலவே வந்து இருந்து எல்லா விஷயங்களையும் கேட்டு மகாநாடு சிறப்பாய் நடப்பதற்கு எனக்கு வேண் டிய உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டு இப்பொழுது இக்கூட்டத்தைக் கலைக்கிறேன்..
குறிப்பு:- 23,24.05.1925 இரண்டு நாள்கள் பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - தலைமையுரை
(தொடர்ச்சி குடிஅரசு 07.06.1925)
குடி அரசு - சொற்பொழிவு - 31. 05 1925
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இம்மாதம் வெளியான “மாடர்ன் ரிவ்யு” எனும் மாதச் சஞ்சிகையில் கோரமான ஒரு பெண் கொலையைப்பற்றிக் கீழ்காணும் விவரங்கள் காணப் படுகின்றன. அவை வருமாறு :-
“பத்துவயதுள்ள லீலாவதியெனும் பெயருள்ள தனது மனைவியைக் கொன்றதாக ஜோகேந்திரநாத்கான் என்பவன் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிபதி பேஜ் என்பவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டான்.
இப்பெண்ணின் பெற்றோர் கல்கத்தாவிலுள்ள சங்கரிதோலா சந்தில் மிட்டாய்க்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்பெண்
ணுக்கும், ஜோகேந்திரநாத் கானுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மணம் நடந்தது. பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்துவந்தாள். மனைவியைத் தன்னூருக்கு அழைத்துச்செல்லக் கணவன் சென்ற பிப்ரவரி 1579 ௨மாமனார்: வீட்டுக்கு வந்தான். அடுத்த ஐந்து நாட்களும் சுபதினமல்லவென்று கூறி சின்னாட் கழித்து மனைவியை அழைத்துச் செல்லும்படி பெண்ணின் பெற்றோர் விரும்பினார்கள். அதற்கிசைந்து அவன் மாமனார் வீட்டிலேயே
தங்கியிருந்தான். முதல் இரண்டுநாள் இரவிலும் புருஷனும் மனைவியும் ஒரே அறையில் படுக்கை கொண்டனர். மூன்றாம் நாளிரவு, புருஷனுடன் ஒரே அறையில் உறங்கப் பெண் மறுத்து தாயாருடன் படுக்கை கொண்டாள். பிப்ரவரி 15712 ௨ இரவு வெற்றிலை பாக்கு வேண்டுமென ஜோகேந்திரன் கேட்க, அவைகளைக் கொடுத்துவரும்படி தாயார் மகளை அனுப்பினாள். பெண் அறைக்குள் சென்றதும் கணவன் கதவைத் தாளிட்டுக்கொண்டான். சற்றுநேரம் பொறுத்து பெண்ணின் அழு குரலையும், வரிசையாக அடிகள். விழும் சத்தத்தையும் பெண்ணின் தாயாரும், பக்கத்திலுள்ளவர்களும் கேட்டனர். தாயார் அறைக்குள் ஓடிப் பார்க்க இரத்த வெள்ளத்தில் தன்மகள் தரைமேல் முகம் கவிழ்ந்து கிடப்பதைக் கண்ணுற்றனள். இரத்தம் தோய்ந்த
கல் குழவியொன்று பக்கத்தில் கிடந்தது. இக்குழவியால் மண்டை உடைக்கப்பட்டு மூளை தெறித்துக் கிடந்தது”.
ஆ! கொடுமை! கொடுமை!! இக்கோரமான கொலையை, பாதகச் செயலைக் கேள்வியுற்ற இந்தியமக்கள் அனைவரும் மனம் பதை பதைப்பர்: உள்ளமுருகுவர்; உடலம் நைவர்; கண்ணீரை ஆறாய்ப் பெருக்குவர்; கரைகாணாத் துன்பக்கடலில் வீழ்வர்; இளஞ்செல்வச் சிறுமியர்களாக
குடி அரசு - 1925 40
இருப்பின், நெருப்பில் வீழ்ந்த புழுப்போல் துடிதுடிப்பர். பெண்மக்கள் எனுஞ் செல்வம் படைத்த தாயரும், தந்தையரும் மனங்கலங்கி, மாழாந்து, வெய்துயிர்த்து நிற்பர்: விம்மி, விம்மி அழுவர். இக்கொலைக் கொடியோ னுக்கு விதித்த தண்டனை போதாது, போதாது என ஒவ்வொருவரின் உள்ளமும் அறைகூவா நிற்கும். இக்கொலைப் பாதகனைச் சித்திரவதை செய்தலே சிறந்த தண்டனையென ஒவ்வொருவரும் எண்ணுவர்.
இக்கொடிய நிகழ்ச்சி எமதுள்ளத்தில் தோற்றுவித்த எண்ணங்களை யெல்லாம் எடுத்துரைக்கப் புகின் இவ்வேடு முழுவதும் போதாதென்றே கூறுவோம். இக்கொடுஞ் செயலை எண்ணி, எண்ணி அழுவதாற் பயனென்ன? உள்ளமுருகுவதால் பயனென்னை? கொலைப்பாதகன் ஜோகேந்திரநாத் கானைக் கடிந்து நோவதாற் பயனென்ன? இத்தகைய கொடியசெயல்கள் நிகழ்வதற்குக் காரணமென்னவென ஆராய்ந்து இனியும் அவ்வாறு நிகழாவண்ணம் ஏற்ற முறைகளைக் கையாள முற்படுவதே அறிவுடைமையாகும். கடந்த செயலைக் கருதி மனம் புழுங்குவதால் ஒரு பயனும் விளையாது. இத்தகைய செயல்களின் விளைவுக்குக் காரணமாக உள்ள இழிதகைமையை, கொடிய வழக்கங்களை ஒழிக்க வழி கோலுதல் அறிவாளிகளின் கடன்; தாய், தந்தையரின் கடன் ; சமூகத்தினரின் கடனாம்..
இக்கோரமான கொலைச் செயல்களுக்குக் காரணமாக இருப்பது பால் மணம் மாறாச் சிறுமியர்களை காமவிகாரத்தாற் கட்டுண்டு விலங்குகளைப் போல் திமிர் கொண்டலையும் இளம் வாலிபர்களுக்கு வதுவை செய்து அவர்.
பால் ஒப்புவிக்கும் கொடிய, குற்றமான வழக்கமென்று நாம் திண்ணமாகக் கூறு வோம்.இத்தகைய கொடிய, அக்கிரமமான வழக்கம் இந்து சமயத்தின் பேரால் நடைபெறுவது நமக்குப் பேரவமானம்; நமது சமயத்தின் நற்பெயரை நாசமாக்கி, நாமும் அழிவென்னும் பெருங்குழியில் வீழ்ந்து இறப்போம். உண்பதும், உறங்குவதும், பூண்டதும், மணவினைசெய்வதும், மக்கள் பெறுதலும் சமயக் கோட்பாடுகள் எனக் கூறின் இதனினும் அறியாமை வேறுளதோ? ஆண்டவனிடத்து மக்களைக்கொண்டு உய்விக்கும் அறிவு வழியே, ஆன்ம நெறியே சமயமல்லாது, சமூகக் கட்டுப்பாடு குலையாமல்,
சமூகம் என்றும் அழிவுறாமல் நின்று நிலவுதற்கான முறைகளில் சேர்க்கப் படுவனவாகிய இவையெல்லாம் சமயநெறி எனக்கூறுதல் மடமையேயாகும். நமது நாட்டின்கண் தோன்றிய அறநூல்கள் எல்லாம் ஒரு சிறிது ஆண்ட வனைப் பற்றியும், அவனை அடையும் நெறியைப் பற்றியும் கூறிப் பெரும்
பாலும் சமூக வாழ்க்கையை மக்கள் இன்னவிதமாக நடத்துதல் வேண்டு மெனக் கூறா நிற்பன; அவ்வற நூல்களில் காணும் சமூக வாழ்க்கையைப்
பற்றிய விதிகள், காலம், இடம், மக்களின் மனப்பான்மை இவற்றிற்கேற்ப மாறி
மாறி இருக்கும். அவ்விதிகள் இவ்விந்திய நாட்டிலேயே ஒரே பெற்றத்தாய் இருக்கக் காண்கிறோமல்லோம். அவ்விதிகளை காலத்திற்குத் தக்கவாறும், இடத்திற்கேற்றவாறும் மாற்றியமைத்துக் கொள்ளுதல் கூடாதென்று நியதி
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இல்லை. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகை யினானேன்” என ஆன்றோர் கூறியுள்ளார். மக்கள் செய்யும் மணவினை சமூக வாழ்க்கையைச் சார்ந்தே நடைபெறுவதாகும். குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்றப் பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்து, குடும்பம் என்னும் குழியில் வீழ்த்தி கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும், எந்த தர்மசாஸ்திரமும் போதிக்கவில்லை என்பதை மக்கள் உணரல்
வேண்டும். மணவினை நிகழுங் காலத்தில் ஓதப்பெறும் மந்திரங்களே எமது கூற்றின் உண்மையை உள்ளங்கை நெல்லியென விளக்கிக்காட்டும். ஒன்றுமறியாத, விளையாட்டு விருப்பம் அசலாத பத்து வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுமியர்களுக்கு மணமுடிக்கவேண்டுமெனச் சாஸ்திரங்கள் கூறுகிறதெனக் கூறுபவர்கள் விரிந்த கல்வியும், பரந்த அறிவும், மக்கள் மேம்பாடுறுவதில் பெருங்கவலையும் உடையராயிருந்த நமது முன்னோர்களின் மீது பெரும் பழிசுமத்துபவர்களாவார்கள். இக்கொடிய விதிகள் எல்லாம் பிற்காலத்தவரால் சுயநலங்கருதியும், பொருளாசை கொண்டும் எழுதி வைக்கப்பட்டனவேயாம். இளஞ்சிறுமியர்களுக்கு மணஞ் செய்யாவிடில் பெற்றோர் எரிவாய் நரகிடை வீழ்வர் என யாரோ சில மானிடப் பதர்கள் கூறியதை வேதவாக்காகக் கொண்டு நம்மவர் அறிவிழந்து, கண்மூடி, வைதிகம், வைதிகம் என்று வாயாற்
பிதற்றி “கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பது” போல் தமதருமைச் செல்வச் சிறுமியர்களை படுகுழியில் தள்ளி, சமூக நாசத்தையும், நாட்டின் அழிவையும் தேடும் பாதகச்செயலை விடக் கொடுமையான செயல் வேறுண்டோ? இக் கொடுஞ்செயலினும், ஜோகேந்திரன் கொலை கொடிதோ? பால் மணம் மாறாக் குழந்தைப் பருவமுள்ள, கணவன் இன்னானென அறிந்து கொள்ளவும் முடியாத புருடபாரியர் இயல்பு இத்தன்மைத்து என்றறிந்து கொள்ள இயலாத காமஞ்சாலா இளமையுடையளாய் கணவனுடன் உடலின்
பம் நுகரும் பருவமும், ஆற்றலும் பெற்றிலாத மக்களைப் பெறுதற்குப் போதிய உடல் உரமும், உறுப்புக்களின் வளர்ச்சியும் படைத்திராத நம தருமைப் பெண்மணிகளுக்கு, பொம்மைக் கல்யாணம் செய்வது போன்று மணமுடித்து, மணமகன் பால் விடுத்து வைக்கும் கொடிய வழக்கத்தை நமது நாட்டு மக்கள் கைக் கொண்டிருக்குமட்டும். இத்தகைய கொடிய, கோரமான கொலைகள் நடைபெற்றுத்தான் வருமென்பதை நமது மக்கள் உணரல் வேண்டும். “சமயம் அழியும், சமூகம் அழியும்” என்ற மூடக் கொள்கை களினால் கட்டுப்பட்டு மக்கள் அறியாமை என்னும் இருளில் கிடந்துழலும் வரையில் இத்தகைய கொலைகள் நிகழ்ந்து தான் வரும். அந்தோ! இந்திய மக்களே! உமது நிலைக்கு இரங்குகின்றோம். சமய உண்மையை உணரார்கள்; சமூக வாழ்க்கை நிலையை அறியார்கள். மூடக்கொள்கைகளும், மூட நம்பிக்கையும் தான் இவர்கள் கண்ட உண்மைகள். “விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது” போல், எல்லாமறிந்திருந்தும் இளஞ் சிறுமியர். களுக்கு மணஞ்செய்து, பின்னர் அவர்களுக்கு நேரும் கதியைக் கண்டு ஏன்
குடி அரசு - 1925 42
அழுகிறீர்கள்? மாய்ம்மாலக் கண்ணீர் விடுகிறார்களென உலகம் உங்களைப் பழித்துரைக்காதா? இளம்வயதில் மண முடிப்பதினால் நேரும் துன்பங்களை நேரில் தாமாகவே அநுபவித்திருந்தும், தாய்மார்கள் இக்கொடிய வழக்கத்தை அறவே ஒழிக்க முன்வராதிருப்பது பெருங் குற்றமாகும். “வேலியே பயிரை: மேய்ந்தால்” வேறு யார் துணை பயிருக்கு! பத்துமாதம் சுமந்து, பெற்று,
சீராட்டித் தாலாட்டிப் பொன்னேபோல் போற்றி வளர்த்த பெண் செல்வங் களுக்குத் தாய்மார்களே எமனாக ஏற்பட்டுவிட்டால் அவரைக் காப் பாற்றுபவர் யாவர்?
ஆண்மக்கள்தான் உயர்ந்தவர்கள்; பெண்மக்கள் தாழ்ந்தவர்கள் ; ஆண்மக்கள் தான் அறிவு நிறைந்தவர்; பெண்மக்கள் அறிவில்லாதவர் என்ற கீழான எண்ணமும் இக்கொடுஞ் செயல்களுக்குக் காரணமாகும். இந்தத் தாழ்ந்த எண்ணம் நம்மவர்களை விட்டு அகலல்வேண்டும்; ஆண்மக்களும், பெண்மக்களும் “சரி நிகர், ஸமானம்” என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். ஆண்மக்களைவிடப் பெண்மக்கள் எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர்: சமூக வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில் ஆண்மக்களுக்கு உள்ள உரிமைகள், பொறுப்புகள் பெண்மக்களுக்கும் உண்டு என்ற உயரிய, பரந்த, விரிந்த நோக்கம் நம்மவரிடை உதயமாதல் வேண்டும். அன்றே, அப் பொழுதே, அக்கணமே இத்தகைய கோரமான, மனதைப் பிளக்கும் கொடிய கொலைகள் நிகழா வண்ணம் செய்துவிடலாம். தமிழ்நாட்டுத் தாய்மார்களே! தந்தைகளே!! உங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடவுங்கள். வங்காளத் தில்தான் இக்கொலையென்று நினையாதீர்கள். நமது கண்முன் நாடோறும் நடைபெறும் கொலைகளும், சித்திரவதைகளும் உங்களுக்குத் தோன்ற வில்லையா? இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க முற்படா விடில் பல்லா யிரக்கணக்கான இளஞ்சிறுமியர்களின் சாபங்கள் உங்களைச் சூழ்ந்து கொடிய வேதனைக்குள்ளாவீர்கள்! அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத் தைத் தேய்க்கும் படை, என்பதை உணருங்கள்.
இக்கொடிய வழக்கத்தைத் தொலைக்க அந்நிய ஆங்கில அரசாங் கத்தார் துணை புரியார்கள். நிச்சயம், இஃது அவருக்கு நன்மையையும், வரு வாயையும் கொடுக்காதல்லவா? சமயம், சமயம் என்று வறிதே கூக்குரலிட்டு ஏமாற்றித் திரியும் அர்த்தமில்லா வைதிகர்களாகிய திரு. டி. அரங்காச் சாரியார்கள் போன்ற சட்டசபை அங்கத்தினர்களின் உதவியை நாடாதீர்கள்! தெய்வத் திருக் கோயில்களில் தேவதாசிகள் இருந்தே ஆகவேண்டுமென்று வாய் கூசாது சட்ட சபையில் கூறும் படிற்றொழுக்கமுடைய அங்கத்தவர். களை எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்! இது உங்கள் கடமையல்லவா? நீங்களே சீர்திருத்தஞ் செய்து கொள்ளுங்கள்! நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நமது நாடு சுய ஆட்சி பெற்று நடக்கும் காலையில் இக்கொடிய வழக்கங்கள் புதைக்கப்படும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 07.06.1925
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காரைக்குமு வில்லை முதரைவது அரசியல் மகாநா௫
சகோதரர்களே !
நமது மகாநாடானது இவ்விரண்டு நாளாக அதிக உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடைபெற்று முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு மிகவும் வந்தனம் செலுத்துகிறேன். இனி என்னு டைய முடிவுரையை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆவலைத்திருப்தி செய்யத்தகுந்ததாக யான் விசேஷமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. இன்று முடிவு பெற்ற தீர்மானங்களைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லி இக்கூட்டத்தைக் கலைப்பதற்கு நீங்கள் எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்.
முதலாவது தீர்மானம் நமது பெரியார் சென்னை ஸ்ரீமான் பி.தியாக ராயரின் மரணத்திற்கு அனுதாபம் காட்டிச் செய்த தீர்மானமாகும். அதைப்
பற்றி உங்களுக்கு அதிகமாய் யான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய தன்னலத் தியாகத்தையும், அவர் தமது சமூகத்திற்காகச் செய்த தொண்டையும் போற்றாதாரில்லை. அவருடைய ராஜீய அபிப்பிராயங்களில்
நமக்கும் அவருக்கும் வடகோடி தென்கோடி யென வித்தியாசமிருந்த போதிலும், வரவர அவர்களும் சுயராஜ்யம் அவசியமென்றும், சீக்கிரத்தில் வேண்டுமென்கிற நிலைமையில் வந்துவிட்டார்கள். நாமும் சுயராஜ்யம் பெறுவதற்கு இன்ன இன்ன வேலைகள் செய்தாக வேண்டுமென்று கண்டு பிடித்து விட்டோம். ஆனால், அதை அடைகிற வழியில் மாத்திரம்தான்
இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவ்வித்தியாசங்கள் ராஜியத் துறையி லுள்ள ஒவ்வொரு கட்சிக்கும் இருந்து கொண்டேதானிருக்கும். சமூக விஷயத்தில் அவருடைய உழைப்பினால் பிராமணரல்லாதார் எவ்வளவோ
முன்னுக்கு வந்திருக்கிறார்களென்பதை மறுக்க முடியாது. பிராமணரல்லா தாரின் சுயமரியாதைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர்தான். அப்பேர்ப் பட்டவருக்காக நாம் அனுதாபப்படுவது நமது கடமையேயாகும்.
இரண்டாவது தீர்மானம் மகாத்மாவிடம் அன்பு செலுத்துவது என்பதே. மகாத்மா அவர்கள் பிறந்து உயிரோடிருக்கிற இந்தக்காலத்தில் நாமிருந்தோம் என்கிற பெருமையே நமக்குப் பெரிய சொத்தாகும்.நம் பின் சந்ததியார்கள் மகாத்மாவை நேரில் கண்ட நமது பெருமையைப் பற்றிப்
குடி அரசு - 1925 44
பேசிப் பெருமையடைவார்கள். இப்பெரியார் வேறு தேசத்தில் பிறந்திருப் பாராயின் அத்தேசம் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கும். அவர் நமது ராஜீயத் தலைவர் மாத்திரமல்ல, உலகத்திற்கே அவர் ஒரு பெரியவர். அவரைப் பூஜிக்கிறோம், புகழ்கிறோம், அவர் பெயரால் பெருமை பாராட்டிக் கொள்கிறோம். அவர் சொல்லுகிற வேலையை நாம் செய்வதில்லை. ஆனால் நமது சுயநலத்திற்கு அவருடைய பெயரை உபயோகப்படுத்துகிறோம்.சட்ட சபைகளுக்கும், ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு நுழையப் பார்க்கின்றோமே தவிர தியாகம் என்று சொன்னால் ஓடி விடுகின்றோம். அவருடைய நிர்மாண திட்டமென்பது தேசத்தின் முன்னேற் றத்திற்கான வேலைகள். அவருடைய அழிவு வேலையென்பது தேசத்திற்குக்
கெடுதி தரும் காரியங்களை அழித்தல். இதை நன்றாய் அறிந்திருந்தும் ஆற்றலில்லாத காரணத்தாலும், சுயநலத்தாலும் அலட்சிய மாயிருக்கிறோம். மஹாராஷ்டிர தேசத்தில் மகாத்மாவைக் காங்கிரஸை விட்டு வெளியில் போகும்படி சொல்லுவதும், நூலையும் கதரையும் அவர்கள் அலட்சியம் செய்வதும் அத்தேசத்தில் உள்ள பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டை
தான். எப்படியிருந்த போதிலும் மகாத்மாவின் கொள்கைகளால்தான் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்கப் போகின்றது. அன்னார் நீடித்திருக்க கடவுள் அனுக்கிர.
கம் செய்யப் பிரார்த்திப்பது நமது முக்கிய கடமை.
மூன்றாவது நூல் சந்தாவைப் பற்றியது. ஒவ்வொருவரும் நூல் நூற்க வேண்டு மென்று மகாத்மா சொல்வதின் தாத்பர்யம் ஒவ்வொருவரும் கைத் தொழில் செய்யவேண்டுமென்பது தான். உலகமே தொழிலாளிகளுடையது தான்.காங்கிரஸ் தொழிலாளிகளுடையதாகத்தான் இருக்க வேண்டும். இவ்வ ளவு நாள் காங்கிரஸ் பணக்காரர்களுடையதாகவும், ஆங்கிலம் படித்தவர்களு டையதாகவும் இருந்தது.மகாத்மா சொல்லும் சுயராஜ்யம் தொழிலாளிகளுக் குத்தான் வேண்டுமே தவிர ஆங்கிலம் படித்தவருக்கும், பணக்காரர்களுக்
கும் அல்ல. அதனால்தான் பேச்சும் பணமும் காங்கிரஸிற்குக்குத் தேவை யில்லையென்று சொல்லிவிட்டார். காங்கிரஸில் சேர இஷ்டப்படுகிற ஒவ் வொருவரும் குறைந்தது அரைமணி நேரமாவது தொழில் செய்ய வேண்டு. மென்பது அவருடைய விருப்பம். படித்தவர்களும், பணக்காரர்களும் தொழிலாளிகள் அல்லவானாலும், தங்களுக்குத் தொழிலாளிகளிடத்தில் அன்பு இருக்கின்ற தென்பதைக் காட்டிக் கொள்ளவாகிலும் இதைச் செய்ய வேண்டுவது அவசியமென்று கருதுகிறார். அநேக தொழில்களில் நூல்
நூற்பது தற்காலம் நமது தேசத்திற்கு இன்றியமையாதது என்று கருதுகிறா ராகையால் அந்தத் தொழிலையே எல்லோரையும் இப்போது செய்யும்படிச் சொல்லுகிறார். சுயநலக்காரர்களுக்குத் தொழிலாளிகளிடத்திலும், ஏழை களிடத்திலும் எப்படி அன்புவரும்? அப்படிப்பட்டவர்கள் ஒருக்காலும் நூல் சந்தாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏழைகளும், தொழிலாளிகளும் கூஷமமடைவதும் சுயநலக்காரர்களுக்கு விரோதமாகத்தானிருக்கும். அதனால் தான் சிலர் நூல் சந்தாவை எதிர்க்கிறார்கள். எந்தக் காரணத்தைக்
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கொண்டானாலும் நூல் சந்தாவை எதிர்ப்பதை நாம் கண்டிக்காமலிருக்க
முடியாது. ஒவ்வொருவரும் நூல் நூற்று நூல் சந்தாச் செலுத்தி அங்கத்தின ராவதுதான் நமது தேசத்திற்கும் ஏழைகளுக்கும் தொழிலாளிகளுக்கும் நன்மை செய்ததாகும்.
நாலாவது தீர்மானம் கதரைப் பற்றியது. நமது ஜனங்களுக்குக் கதருக்கும், தேசவிடுதலையாகிய சுயராஜ்யத்திற்கும் என்ன சம்பந்த மென்பதே தெரியாது. சுயராஜ்ய மென்றால் என்ன என்பதைப் பற்றி நமக்குள். பெரிய அபிப்பிராய பேதமாயிருக்கிறது. நம்மில் படித்தவர்கள் சுயராஜ்ய மானது நம்மை ஆள்வோர்களால் சீமையிலிருந்து அனுப்பப்படுமெனக் கருதுகிறார்கள். நம்மை ஆளுகிறவர்கள் யாரென்பதை நாம் நன்றாய் கவனிக்க வேண்டும். அநேகர் போலீசாரும் கலெக்டரும்தான் நம்மை ஆளுகிறவர்களென்று கருதுகிறார்கள். சிலர் கவர்னரும், நிர்வாகசபை மெம்
பர்களும், மந்திரிகளுமென்று கருதுகிறார்கள். வேறுசிலர் வைஸிராயும், பார்லிமெண்டும், இந்திய மந்திரியுமென்று கருதுகிறார்கள். இவர்களில்
யாரும், சுதாவாய் நம்மை ஆளுகிறதில்லை, பின்னையாரென்று கேட்பீர்கள்; ஐரோப்பாவிலுள்ள வர்த்தகக் கூட்டத்தார் அரசாட்சி என்கிற பெயரால் நம் நாட்டில் செய்யும் வர்த்தகத்தைத்தான் நாம் அரசாங்கம் என்று கருதி வருகிறோம்.
ஒரு வியாபாரி எப்படி அயலூரிலுள்ள தன்னுடைய வியாபாரத்திற்குத் தன்னூரிலிருந்து ஒரு ஏஜண்டை அனுப்பிக் காரியம் பார்க்கச் செய்கிறானோ, அதுபோலவே ஐரோப்பிய வியாபாரிகள் இந்திய வியாபாரத்திற்கு வைஸிராய் என்ற பெயரால் தங்களது ஏஜண்டு ஒருவரை அனுப்பி விடுகிறார்கள். அவர். தனக்கு வேண்டிய காரியஸ்தர்களையும், கணக்குப் பிள்ளைகளையும், காவல் காரர்களையும்,எடுபிடி ஆள்களையும், கவர்னர், நிர்வாக சபை மெம்பர்கள், மந்திரிகள், ஜட்ஜிகள், கலெக்டர்கள், தாசில்தார்கள், மாஜிஸ்ட்ரேட்டுகள்,
டாக்டர்கள், போலீஸ்காரர்கள், பாரஸ்டுகாரர்கள், ஆப்காரி இலாகாதார்கள் என்கிற பெயர்களால் சிப்பந்திகளாக நியமித்து மேற்சொன்ன தங்கள் வியா பாரத்தை நடத்துகிறார்கள். இவ்வளவு உத்தி யோகஸ்தர்களும், இவர் களுடைய தொழில்களும், ஐரோப்பிய வியாபாரி களுக்குத்தான் பொருப்பே தவிர நமக்கு எந்த வழியிலும் ஜவாப்தாரி களென்று சொல்லுவதற் கில்லை. உதாரணமாக, ஓர் வைஸிராய் என்ற ஏஜண்ட் புதிதாக இந்தியாவிற்கு வருவாரேயானால் இந்தியாவிலிருக்கிற ஐரோப்பிய வியாபாரிகளிடம் போய் அவர்கள் நன்மைகளைக் கவனிக்கத் தானிருப்ப தாகவும், அது விஷயத்தில் கவலைப்பட வேண்டியதில்லையென்றும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றுத்தான் ஆசனத்தில் அமருவதைப் பார்க்கிறோம். இதுமாதிரியே ஒவ்வொரு குட்டி அதிகாரி ஏஜண்டும் அந்த
குடி அரசு - 1925 46
வியாபாரிகளுக்குத்தான் ஜவாப்தாரிகளாயிருப்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த முறையில் அவர்கள் நம் நாட்டில் செய்யும் வியாபாரமென்பது கேவலம் நம்மிடமிருந்து வரி வசூல் செய்கிறார்களே அது அல்லவே அல்ல. அதனால் அவர்களுக்கு ஒன்றும் பெரிய லாபம் கிடையாது. தங்கள். வியாபாரத்தின் செலவுக்கு நமது வரிப்பணங்களை உபயோகித்துக் கொள்ளு
வது தவிர அதுவே அவர்களுடைய நோக்கமும் லாபமும் அல்ல. ஆனால், அவர்களுடைய லாபமெல்லாம் நம்நாட்டு விளைபொருள்களை தங்கள்: நாட்டிற்கு அள்ளிக்கொண்டு போவதும், அவற்றை அங்கு சாமான்களாகச் செய்வதும், அந்தச் சாமான்களை நம் நாட்டில் கொண்டுவந்து விற்பதும் அவைகளை நாம் வாங்கும்படிச் செய்வதும், அதனால் 100-க்கு 100-ம் சில தருணங்களில் 100 -க்கு 1000-மும் லாபம் சம்பாதிப்பதுதான் அவர்களின் நோக்கம். இந்த வகையாய் அவர்கள் செய்யும் வியாபாரத்தினால் நம் தேசத்திலிருந்து தங்கள் நாட்டிற்கு அவர்கள் கொண்டுபோகும் செல்வம் ஆயிரக்கணக்கான கோடிரூபாய்களாய் விடுகின்றது. இப்படி நமது செல்வம் கொள்ளை போவதால் தான் நம் தேசத்தில் வறுமையும், பஞ்சமும், பிணியும் ஏற்படுகிறதே தவிர வேறுவிதமாகத் தாங்கமுடியாத வரிப்பளுவினா லென்றோ, உத்தியோகமும் அதிகாரமும் இல்லாததினாலென்றோ மாத்திரம் சொல்லமுடியாது. நம் நாட்டுச் செல்வம் அந்நிய நாட்டிற்குப் போகாத
முறையில் நம்மை யாராண்ட போதிலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நம் செல்வங்களெல்லாம் இப்படிக்கொள்ளை போய்க் கொண்டிருக்க நம்மை நாமே ஆண்டு கொண்டாலும் ஒருக்காலும் அது சுயராஜ்யமேயாகாது. ஆகையால்தான் மகாத்மா காந்தி அவர்கள் சுயராஜ்ய மென்பதை நம்நாட்டுப் பொருள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாதென்பதைத்தான் முதலாவதாகக் கருதுகிறார். அந்நிய நாட்டு சாமான்கள் நமக்கு வேண்டாமென்று நாம் சொல்லிவிட்டால் அந்நியர்கள் உங்களுடைய தேசம் எங்களுக்கு வேண்டிய தில்லை.அநாவசியமாய் நாங்களிங்கு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க முடியாதென்று மூட்டை கட்டிக்கொண்டு சவாரி அடிக்கப் பார்ப்பார்கள். அப்பொழுது நாம் அவர்களைப் பார்த்து அவசரப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு இருங்கள்: எங்களுக்குள்ளிருக்கும் தகராறுகளைத் தீர்த்துவிட்டுப் போங்கள் என்றுதான் சொல்ல வேண்டிவரும். ஆகையால்
சுயராஜ்யம் பெறுகிற நிலையில் யார் நம்மை ஆளுகிறார்கள். ஆங்கிலர்கள். என்பதைப் பற்றி நாம் கவலையெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நம்மை
யும் நம் தேசத்தையும் யாருடைய சாமான்கள் ஆளுகிறது? நம் தேசத்து ஏழைகளை, தொழிலாளர்களை எந்த எந்த தேசத்துச் சாமான்கள் பட்டினி போட்டு அவர்களது சுயமரியாதையையும் ஆண்மையையும் கெடுக்கின்றது என்று யோசித்து அந்தச் சாமான்களை விலக்கி நம் சாமான்களை நம்மை ஆளும்படி செய்வதுதான் சுயராஜ்யம். இந்த சுயராஜ்யம் சம்பாதிப்பதற்கு முதலாவது நம்மையும் நமது மானத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறதும் நம் தேசத்திலிருந்து வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ரூபாய்க்கு மேலாகக்
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கொள்ளை கொண்டு நம் நாட்டு ஸ்திரீகளுக்கும், தொழிலாளிகளுக்கும் வேலையில்லாமல் செய்வதான அந்நிய நாட்டுத் துணிகளுக்குப் பதிலாக நம் நாட்டு ஸ்திரீகளைக் கொண்டு கைராட்டினத்தால் நூல் நூற்கச் செய்து நம் நாட்டு நெசவாளர்களைக் கொண்டு கைத்தறியால் நெய்வித்த துணியை நாம். எல்லோரும் உபயோகிப்பதுதான் மகாத்மா அவர்கள் கதர், கதர் என்று சொல்லுவது. இந்தக் கதர் மாத்திரம் மகாத்மாவினிஷ்டப்படி நம்மெல் லாராலும் அங்கீகரிக்கப்படுமேயானால் நம் நாட்டின் தாங்கமுடியாத வரி யென்று சொல்லப்படுகின்ற 150 கோடி ரூபாயில் அரைவாசியாகிய 75 கோடி ரூபாய் நம் நாட்டுக்கு மிகுதியாகி விடும். அந்நிய சாமான்களால் நம் நாட்டிலிருந்து போகிற பணம் ரசவாதத்தைவிட அதிக தந்திரமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.20 கெஜமுள்ள அந்நிய நாட்டு மல் துணியாகிய பீஸை. எடைபோட்டுப் பார்த்தோமேயானால் 2 '/, இராத்தல் கனம் தான் இருக்கும். அதை வண்ணானுக்குப் போட்டுத் துவைத்து அதன் பேரிலிருக்கும் கொழுப் பையும், வெள்ளைக் களிமண்ணையும் நீக்கி எடைபோட்டுப் பார்த்தால் இரண்டு இராத்தல் தானிருக்கும். இந்த இரண்டு இராத்தல் எடையுள்ள இருபது கெஜம் துணியை நமக்கு விற்பது 15 ரூபாய்க்கு. இதற்காக அந்நிய நாட்டார். நம்மிடமிருந்து வாங்கிக் கொண்டுபோகும் பஞ்சிற்கு நமக்குக் கொடுப்பது இரண்டு இராத்தல் எடைக்கு 1Y, ரூபாய். இந்த 1, ரூபாய்க்கு நம்மிடமிருந்து பஞ்சு வாங்கிக் கொண்டு போய்ச் செய்த துணியை நம்மிடமே 15 ரூபாய்க்கு விற்று 13 Y, ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார்களானால் நம் தேசத்தில் இப் பொழுது உபயோகப்படுத்துகிற இவ்வளவு அந்நிய நாட்டுத் துணிக்கும் இன்னும் மற்ற மருந்துச் சாமான்கள், கண்ணாடி, பீங்கான்கள் முதலிய எண்ணிறந்த சாமான்களுக்கும் எவ்வளவு பணத்தைக் கொடுத்து நம் தேசம் ஏழையாய்ப் போய்விடுகிறது? அது மாத்திரமல்லாமல் நம் ஏழைத் தொழி
லாளிகள் வேலையில்லாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? ஆகை யால் உண்மையாய் நமக்குச் சுயராஜ்யம் வேண்டுமானால் நம் தேசத்தி லிருக்கும் ஏழைகளிடமும் தொழிலாளிகளிடமும் நமக்கு அன்பிருக்குமே யானால் நாம் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டியதும், கதர் உற்பத்திக்கு வேண்டிய அனுகூலம் செய்யவும் வேண்டியதும்தான்.
குறிப்பு: 23,24.05.1925, பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு- நிறைவுரை தொடச்சி!
குடி அரசு -சொற்பொழிவு - 07.06.1925
(தொடச்சி. குடி அரசு - 21061925)
குடி அரசு - 1925 48
வைக்கம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரை:
வில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிய வருகிறது. அதாவது அச் சமஸ்தானத்துத் திவானான ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணபிள்ளையவர்களை சமஸ்தானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாக தமது அபிப்பிராயமென்னவென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட பதில் பகர்ந்திருப்பதாவும் அறிகிறோம்.
“இவ்விவகாரத்திலுள்ள ரோடுகளை சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லாப் பிரஜைகளும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டியதென்று யான் அபிப்பிராயப்படுகிறேன். அம்மாதிரி செய்வதை சமஸ்தான அரசாங்கத்தார் எப்பொழுதுமே எதிர்க்கவில்லை. இந்த உரிமை யை சிலர் பலாத்காரத்தினால் அடைய முயற்சி செய்ததால் கலகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே அரசாங்கத்தார் தடை உத்தரவு போட்டனர். இந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஸநாதன இந்துமதம் கூறவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள இந்துக்களல்லாதவர்கள் அந்த ரஸ்தாக்களின் வழியாக நடக்கச் சம்மதம் கொடுத்திருக்கின்றபொழுது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பதில் கொஞ்சமும் ஒழுங்கிருப்பதாகக் காணப்படவில்லை. கூடிய விரைவில் ஒரு அரச விளம்பரத்தின் மூலம் இந்த வித்தியாசத்தைப் போக்க வேண்டுவது அவசியமென்று யான் அபிப்பிராயப்படுகிறேன்” .
இவ்வண்ணமாக திவான் அவர்கள் அபிப்பிராயம் கொடுத்த பிறகு, கூடிய விரைவில் மகாராணி அவர்களுடைய அனுகூலமான ஸ்ரீமுகம் எதிர்பார்ப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இதிலிருந்தே நமது முயற்சிகளை விட்டுவிட வேண்டுமென யாரும் நினைத்தல் கூடாது. திருவாங்
கூர் அரசாங்கத்தாரிடமிருந்தே ஒருவேளை அரைகுறையான ஸ்ரீமுகம் வெளியாயினும் ஆகலாம். ஏனெனில் இரண்டு கட்சியாரையும் சமாதானப் படுத்த வேண்டுமென நினைத்து அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்ததை யாம் அறிவோம். அம்மாதிரி திருடருக்கும்- திருட்டுக் கொடுத்தவருக்கும் நல்லவர்களாக வேண்டுமென நினைத்து ஏதாவது கொஞ்சம் இடம் வைத்துக் கொண்டு மேற்சொல்லியபடி ஸ்ரீமுகம் வெளியாகுமேயாகில் பூரண வெற்றி பெறும்வரை நமது நிலையினின்றும் தளரக்கூடாது. ஒருவேளை பூரண: வெற்றி கிடைத்துவிடினும் அதனுடன் உலகத்தினிடை இம்மாதிரி நிறைந்
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
துள்ள அக்கிரமங்களெல்லாம் ஒழிந்து விட்டனவென்று நினைக்கக் கூடாது. எங்கு எங்கு இவ்விதக் கொடுமைகள் உள்ளனவோ ஆங்காங்குச் சென்று நமது சத்தியாக்கிரகக் கொடியை நாட்டி இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க அஹிம்சையுடன் பாடுபடுதல் வேண்டுமென்பதை தெரிவித்துக் கொள்: கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.06.1925
குடி அரசு - 1925 50
தமிழ்நாடு
ஒத்துழையா இயக்கம் காந்தியடிகளால் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் தமிழ்நாடுதான் அவ்வியக்கத்திற்கு முதன்முதலாக ஆதரவளித்தது. எண்ணிக்கைக்குக் கிடைக்காத ஏதோ சிலர் தேச முன்னேற் றத்திற்கல்லாது வேறு பல காரணங்களைக் கொண்டு பின் வாங்கியிருந்த போழ்தினும் தமிழ்மக்கள் சாதி, வகுப்பு வித்தியாசமின்றி ஒத்துழையாமை
யின் திட்டங்களில் உடல், பொருள், ஆவி மூன்றையும் சிறிதும் மதியாது தியாகமே கடவுள், தியாகமே வீட்டைப் பெறுவிப்பது, தியாகமே உலகம் என நினைத்து எல்லாவற்றையும் துறந்த துறவிகள் போன்று தொண்டாற்றி வந்ததை உலகம் நன்கு அறியும். பெருந்தலைவர்களெனப்படுவோராகிய
தாஸர், நேரு, அலி சோதரர், லஜபதிராய், அஜ்மல்கான் முதலிய பெரியோர் களெல்லாம் ஒத்துழையாமைக்கு மாறுதலாக நின்ற காலத்திலும் வணங்கா
முடி மன்னனாய் நின்று ஒத்துழையாமையின் தத்துவத்தை அழியவிடாமல் நிலையிலிருத்திவந்ததும் உலகம் அறிந்ததே. அந்நிலையிலிருந்த தமிழ்நாடு. (G e e U S RS 'வேட்டையிலும், உத்தியோக வேட்டையிலும் ஆழ்ந்து கிடக்கக் காரணம்.
னரா? அதுகாலை இருந்த தமிழ் மக்கள் இதுகாலை வேறு மக்களாக மாறி விட்டனரா? அவ்வமயம் தியாகத்திற்குத் துணிந்து நின்றவர்கள் இவ்வமயம் அத்தியாகத்திற்குப் பயந்துவிட்டனரா? அல்லது அப்பொழுது நமக்கு ஒத்துழையாமை தேவையாகவிருந்தது; இப்பொழுது அரசாங்கத்தார் ஒத்துழையாமை நமக்குத் தேவையில்லாத நிலைக்கு நல்லவர்களாகி விட்டனரா? இவற்றை ஆராய்ந்தால் ஒன்றும் மாறவில்லையென்றும், சிலரின் சுயநல சூழ்ச்சியால் ஏற்பட்ட மக்களில் ஒருவருக்கொருவர் சந்தேகமும், நம்பிக்கையின்மையும்தான் காரணமென்றும் தோன்றும். இக்காரணம் தமிழ்நாட்டு அரசியல் வாழ்வை மட்டும் அழிக்காது இந்தியாவின் அரசியல் 'வாழ்வையும்பின்னப்படுத்திவிட்டது அரசியல் வாழ்வில் தீவிரமாய்வேலை செய்து வந்தவர்கள் அவ் வேலை நின்றவுடன் சமூக வாழ்வில் பிரவேசிக்க
நேர்ந்ததும், சமூக வாழ்விலுள்ள ஊழல்கள் வெளியானதும், அவை திருந்த ஒருப்படாத பலர் தேசத்தில் மறைந்து நின்று செய்யும் விஷமங்களும்,
தந்திரங்களும், மக்கள் மனதைக் கெடுத்துவிட்டன.
நமக்கு எதற்காக சுயராஜ்யம் வேண்டும் என்றும், தற்பொழுது
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இருக்கும் அரசாங்கம் மாறிவிட்டால் பிறகு நமக்கு எக்கெதி நேரிடுமென்றும். ஐயுற வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்துவிட்டன. இந்நிலை மாறாது நிலைத்து வருமானால் தேசத்தில் இனியும் ஒற்றுமைக் குறைவும் அவநம்பிக் கையும் பலப்பட்டு கிளர்ச்சிகளும், பயங்கரக் கலாபங்களும்தான் நடை
பெறும். காந்தியடிகளும் இதற்கு என் செய்வதெனத் தோன்றாமலோ அல்லது இவை ஓரளவிற்குச் சென்றவுடன்தான் தாம் தலையிட வேண்டு மென்றோ அவற்றைக் கவனியாதவர்போல் இருந்து வருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் புது நன்மைகள் ஒன்றும் ஏற்படாவிடினும் திமைகளாவது ஏற்படாமலிருக்கவேண்டுமாயின் சாதி, மதம், கட்சி பேதம் இல்லாமல்
தமிழ்மக்கள் எல்லோரும் ஒன்று கூடி மனதிலுள்ளவற்றை வெளியிற் கூறி
தங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை ஒழியுமாறு தமிழ்நாட்டிற்கேற்ற ஓர். திட்டத்தைக் கண்டு அதை மனம், மொழி, மெய்களால் நிறைவேற்றப் போதிய களங்கமற்ற ஓர் கூட்டத்தார் வெளிக்கிளம்ப வேண்டும். அப்படியின்றி, மக்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கூட்டம் கூடிக்கொண்டு, தேசத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டும், சமூகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டும் ஓட்டும் உத்தியோகமும் சம்பாதிப்பதற்கு அலைவது தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் கடைசியில் முடியும்.
நிற்க, சிறிது காலமாய் நாட்டினிடை பிராமணர், பிராமணரல்லாதார். என்றவருக்குள் தோன்றியிருக்கும் உணர்ச்சியானது தமிழ்நாட்டைக் கலக்கியதுமன்றி வெளிநாடுகளையும் கலக்கி வருகின்றது. உதாரணமாக, மத்திய மாகாணத்தில் நடந்த பிராமணரல்லாதார் மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீ பாக்தே அவர்களின் பேச்சு அந்நாட்டு பிராமணரல்லாதாரின் உணர்ச்சியைக் காட்டுகின்றது.அதுபோலவே தமிழ்நாட்டிலும் ஸ்ரீமான்கள். வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார், ராமசாமி நாயக்கர் முதலி யோர் செய்துவரும் பிரசாரங்கள் தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதாரின் உணர்ச்சியைக் காட்டுகின்றது. இப்படி ஒரு சமூகத்தாருக்கு திருப்தி அளிக்கக் கூடாததான பிரசாரத்தை இவர்கள் ஏன் நடத்துகின்றனர்? இவர்களுக்கு
முன்பின் துவேஷமா? அப்படி இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு சகோதரர்
கள் போன்று அந்நியோந்நியமாய் வேலைசெய்து வந்தவர்களுக்கு திடீரென இப்படிப் படுவானேன்? இவர்களில் எவராவது தங்கள் சுய நலத்திற்காவது அல்லது தங்கள் தனிப்பட்டவருடைய இலாபத்திற்காகவாவது ஆர்வம் கொண்டு தொண்டு செய்கின்றனரா? இவர்கள் கிளர்ச்சி வெற்றிபெற்றால் இவர்களுக்கு ஏதாவது சுயநல லாபம் ஏற்படுமா? ஏன் தங்கள் சிநேகிதர் முன்னிலையிலும் அன்பர்கள் முன்னிலையிலும் அவர்கள் மனம் வருந்தும் படி நடந்து கொள்கின்றனர் என்பதைக் கவனித்தல் வேண்டும். மற்றொரு பக்கம் பம்பாயில் சில நாட்களுக்கு முன்னர் கூடிய ஒரு வைதீகக் கூட்டத்தில் மகாத்மா காந்தியை இதுவரை உயிருடன் வைத்திருந்தது தப்பு என்றும், அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் சொன்னார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரி
யார் போன்ற பிராமணத் தலைவர்கள் ஒருவேளை சாப்பாடு ஒரு பிராமண:
குடி அரசு - 1925 52
ரல்லாதார் குழந்தையுடன் ஒரு பிராமணக் குழந்தை உட்கார்ந்து சாப்பிட்டு விடுமேயாகில் யான் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும், மனிதனுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்று சொன்னால் அரை நிமிடம் கூட காங்கிரஸில் இருக்கமாட்டேன் என்றும், காந்தியடிகள் இதை ஒப்புக்கொள்வார்களாயின் அவரையும் எதிர்த்துதான் ஆகவேண்டும். என்றும் எதற்காகச் சொல்லுகிறார்? பாரத தர்ம மண்டலம் என்று சொல்லு கின்ற ஓர் பெரியலவைதீக சபையார் மனிதனுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்ற தீர்மானத்தை ஏன் கண்டனம் செய்கின்றனர்? திருச்சி யில் கூடி இத்தீர்மானம்” செய்தபின் சிலர் ஏன் ராஜிநாமாச் செய்தனர்? இது இந்நாட்டுப் பிராமணர்களின் உணர்ச்சியைக் காட்டுகிறது. இவர்களுக்கு எல்லாம் மற்ற சமூகத்தாரின் மீது துவேஷமா? அல்லது விரோதமா? ஒவ்.
நம்பி வாதாடுகின்றனரேயன்றி இதனால் ஒருவருக்கொருவர் மீது துவே. ஷமோவிரோதமோவென்று நாம் கருதக்கூடாது ஆயினும் இப்படித் தாங்கள் நம்புவதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு இரு கட்சியாரின் பிரசாரங்
களும் கிளர்ச்சிகளும் வளர்ந்து கொண்டே போகுமாயின் முடிவு எங்கே? கடைசியாக பலமுள்ளவன் வெற்றி பெறுவான், பலமற்றவன் தோல்வி அடைவான் என்பதையும் அல்லது ஒருவேளை நமது அரசாங்கத்தார் பீரங்கி, வெடிகுண்டு, ஆகாயக் கப்பல்களை நம்பியிருப்பது போன்று இவ்விரு கட்சிகளிலேயும் ஒருவருக்கொருவர் தங்களுடைய தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் நம்பிக் கலகத்தை நடத்த ஒருப்படுவார்களாயின் முடிவில் சத்தியம்தான் வெற்றிபெறும் என்கின்ற வாசகம் என்னாகும் என்பதையும் கவனித்தல் வேண்டும். நமது நாடு இப்பொழுது கோருவதெல்லாம் சமத்து வமும், ஒற்றுமையும்தான். இவ்விரு குணத்திற்காக நமது தினசரி வாழ்க்கை
யில் உண்மையாக நாம் என்ன செய்தோம், என்ன செய்ய நினைத்தோம், என்ன செய்யப் போகின்றோம் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும். மற்றவர்களுடைய மெப்புதலுக்காக “யான் இதைச் செய்தேன், யான் இதைச் செய்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்வதினால் சத்தியம் ஏமாந்து போகாது. ஒன்று சத்தியத்திற்கு யோக்கியதை இல்லை என்று சொல்லியாக வேண்டும் அல்லது நாம் சத்தியமாய் நடக்கவில்லை யென்று சொல்லியாக வேண்டும். இதையன்றி வேறு ராஜி கிடையாது.
குடி அரசு - தலையங்கம் - 14.06.1925.
* இந்திய சமூக வாழ்க்கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும், இக்கொள்கையை தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட ஸ்தாபனங்கள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.
29125 திருச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (குடி.அரசு17.51925பக்கம் 1)
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ரி புறப்பாடு 6
- சித்திரபுத்திரன்
சென்ற வாரத்திற்கு முந்திய *குடி அரசு” இதழில் நாடக வரியைப் பற்றி எழுதியிருந்ததைக் கவனித்த அன்பர்கள் மனம் வருத்தப்படாதிருக்க முடியாது. அவ்வருத்தம் மறைவதற்குள் மற்றொரு வரி தலை விரித்தாடி விட்டது.அஃதாவது ஈரோடு நகரசபை வைத்தியர் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றமாகிப் போவதை உத்தேசித்து இவ்வூர் அதிகார வர்க்கமும் பிரபுக்
கூட்டமும் மற்றொரு வரியை ஜனங்கள் தலையில் சுமத்தினார்கள். இச்சிறிய
ஓர் காரியத்திற்காக இந்நகரத்தில் சுமார் ஐநூறு ரூபாய் வரை வசூல் செய்யப் பட்டிருப்பதாக அறிகிறோம். காரியத்தின் யோக்கியதையையும் அவசியத் தையும் அறிந்து மனப்பூர்வமாய் பொருள் உதவிய கனவான்கள் வெகு சிலரே இருப்பர். ஏனையோர் பிரபுத்துவத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் பயந்து உதவியவர்களே என்பதில் ஐயமில்லை.
நாடக வரி வசூலான காலத்தில் நாமும் நாடகத்திற்குச் சென்றி ருந்தோம். நமது சமீபத்தில் ஒரு பக்கம் ஒரு வியாபாரியும் மற்றோர் பக்கம் கிராம அதிகாரி ஒருவரும் வீற்றிருந்தனர். வியாபாரி நம்மை நோக்கி தாங்க
ளும் வந்துவிட்டீர்களே, தங்களுக்குமா வரி? என வினவினார். “இல்லை. யான் வேறு ஒருவரிடம் மிகுதியிருந்த அனுமதிச் சீட்டைக் கொண்டு அவருடைய வற்புறுத்தலுக்காக வந்தேன்” என்று கூறியவுடன், அப்படியா
யின் நம்மிடம் இன்னும் நான்கு அனுமதிச் சீட்டுக்கள் மிகுதியாக உள்ளன, ஆறு அனுமதிச் சீட்டுக்களை நமது தலையில் கட்டி அறுபது ரூபாய் வாங்கி விட்டார்கள் என்று கூறி, அவற்றையும் கொடுத்து தங்கள் நண்பர் எவரேனும் வெளியிலிருப்பின் வரும்படிச் சொல்லுங்கள் எனக் கூறினார். அதே
தருணத்தில் பக்கத்திலிருந்த கிராம அதிகாரி நமது தலையிலும் மூன்று அனுமதிச் சீட்டுக்களைக் கட்டி முப்பது ரூபாய் பெற்றுக் கொண்டனர். யான் வந்த ஒரு அனுமதிச் சீட்டுப் போக மிகுதி இரண்டு என்னிடம் இருக்கிறது. “இவற்றையும் எடுத்துக்கொண்டு தங்கள் நண்பர்களிருப்பார்களாகில் வரும் படி சொல்லுங்கள்” என்றார். (நமது சர்க்காரார் கள்ளு வரியை ஜனங்களின்
கல்விக்குச் செலவு செய்வது போல் சர்க்கார் ஊழியர்கள் நாடக வரியில் தர்ம விடுதி நடத்துகிறார்கள் போலும்?
குடி அரசு - 1925 54
நிற்க, அதைப் போலவே நமது ஊர் வைத்தியர் அவர்களின் பிரிவு பசாரத்திற்காக நடந்த கொண்டாட்டத்திற்கு யாம் சென்றிருந்த காலையில் “உங்களுக்கு என்ன வரி, உங்களுக்கு என்ன வரி” என ஒருவருக்கொருவர்: கேட்டுக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் கொடுத்த வரியைச் சொல்லிக் கொண்டு, வரும்படியில்லாத காலத்தில் அதிகாரிகளுடைய தொந்தரவுக்கு என் செய்வது என வருத்தமுற்றனர். அக்காட்சியைக் காணும் போது மனத்திற்குச் சங்கடமாகத்தான் இருந்தது. உள்ளூரிலும், நாட்டிலும் முக்கியமாகச் செய்ய வேண்டிய எவ்வளவோ பொதுக் காரியங்களுக்கு எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லிக் கேட்பினும் பணம் பிரிவது கடினமாக
இருக்கின்றது. முயற்சி எடுத்து வேலைசெய்வதற்குத் தகுந்த ஆட்களும் கிடைப்பதில்லை. உதாரணமாக, இவ்வூரில் வெகுகாலமாக நின்று போயிருந்த
கிராம தேவதையான மாரியம்மன் ரத உற்சவம் எவ்வளவோ கடினங்களுக்
கிடையில் இவ்வருடம் நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது. அதை நடத்துவதற்கு செலவுக்காகப் பணம் திரட்ட அதிகமான முயற்சி எடுத்தும், பணம் திரட்டப் போனவர்களுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத காரணத்தால் சரியானபடி பணம் திரட்ட முடியாமல் போயிற்று. அதனால் உற்சவத்திற்கு செலவு சாமான் கொடுத்த கடைக்காரர்கள் பஞ்சாயத்துக் கச்சேரியில் நிர்வாகி
கள் மீது பிராது கொடுத்திருக்கின்றனர். இதை நினைக்கும் பொழுது நமது ஜன சமூகத்தின் நிலையைப்பற்றி நாம் வெட்கப்படாமலிருக்க முடிய வில்லை. நமது மக்களுக்கு தங்களது மனச்சாட்சிப்படி நடப்பதற்கு தைரியமும் தகுதியறிந்து செலவு செய்யும் மனமும் அதிகாரிகளுக்கும் மற்றும் பிரபுக் களுக்கும் பொதுமக்களின் மனதைப் புண்படுத்தாமலும் நிர்பந்தப்படுத் தாமலும் தங்கள் அதிகாரத்தை இம்மாதிரி துர்வினியோகப்படுத்தாமலும் இருக்கக்கூடிய அறிவும் கடவுளால் என்று கொடுக்கப்படுகின்றதோ அன்றுதான் நமது நாடு சுதந்திரமுடையது எனச் சொல்லத் தினை அளவும்
பின்வாங்கமாட்டோம்..
குடி அரசு - கட்டுரை - 14.06.1925
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
துக்கம் காண்டாட௫ம் வகை:
ஸ்ரீமான் வ.வெ.சு.அய்யர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாயக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் அய்யர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என் போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சி
யில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள் முன் இருக்கக்கூடாது என்று நினைத்துப் போய்விட்டீர்களோ என்றும், பணம் எவ்வளவு வேண்டுமானா
லும் சம்பாதிக்கலாம் ஒரு அய்யரை சம்பாதிக்க முடியுமா என்று வரதராஜுலு நாயுடுவைக் கேட்பது போலவும் எத்தனையோ விதமாய் பெண்கள் ஜாடை பேசுவதுபோல் பேசி மகிழ்கிறார்கள். இதே ஆசாமிகள், இதே சமயத்தில், வரதராஜுலு நாயுடும், ராமசாமி நாயக்கரும் பிரயாணத்தில் ரயில் எங்காவது விழுந்து ஒழிந்து போயிருப்பார்களானால் அப்போது என்ன பேசியிருப்
பார்கள்?
டாக்டர் நாயர் லண்டனில் இறந்தபொழுது சிலர் பேசியதையும் பொது ஜனங்கள் நினைத்து பார்க்கட்டும். இவர்கள் இப்படிப் பேசி மகிழ்ந்தால் எதிர். கட்சியிலிருக்கிறவர்கள் என்ன பேசி மகிழ்வார்கள் என்பதையும், இப்படிப் பேசுகிறவர்கள் இறந்தவர்களுக்கு நன்மை செய்கிறார்களா? தீமை செய்கிறார். களா? என்பதையும் யோசித்துப் பார்க்கட்டும்.
குடி அரசு - கட்டுரை - 14.06.1925
குடி அரசு - 1925 56
தியாகமூர்த்தியிண் கறுதித் தியாகம்
பாரத தேவியின் மணிவயிறு வாய்த்த துணிவுடை வீரமைந்தன் - தாய்த்திருநாட்டின் தவப்பேறு - வங்கநாட்டுச் சிங்கம் - உலகில் தியாகம் அனைத்தும் ஒரு வடிவு எடுத்தாலன்ன விளங்கிய விழுமியோன் - இரவலர்க்கு வரையாது கொடுக்கும் வள்ளல்- தேசபந்து சித்தரஞ்சன் தாஸர். ஆருயிர் அன்னையாம் பாரதியைப் பரிதவிக்க விட்டு வானுலகு ஏகின கொடுஞ் செய்தி இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து வெந்துயர்க் கடலில் வீழ்த்திவிட்டது. இடிமுழக்கம் கேட்ட நாகமே போன்று கொடுங்காலன் இடி கேட்டு இந்தியமக்கள் நவிலொணா நடுக்கத் திற்காளாயினர். இந்திய நாட்டின் - இந்திய மக்களின் வல்வினைதான் இருந்த வாறு என்னே! நம தருமைத் தாய்த்திருநாட்டிற்கு இஃதோர் எண்ணுதற்கரிய பெருஞ் சோதனைக் காலம் போலும்! கொடுங் கூற்றுவனின் கூத்தினைக் கண்டு தமிழ் நாடும், தமிழ் மக்களும் துயருழந்து வாடுங்காலையில், தனது வண்மையைக் காட்டுவான் விரும்பி அக்கொடியோன் வங்க நாடுற்றனன் போலும். வங்க நாட்டுச்சிங்கத்தின் வீர முழக்கம் ஓய்ந்துவிட்டது: தாய் நாட்
டின் விடுதலைப் போரில் வீரிட்டு எழுந்து நின்ற ஊக்கக் குன்று தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது: வீரத்தை உணர்த்த, வீரரை ஆக்க, வீரரை வளர்க்கத் தோன்றிய வீர உடல் மடிந்தது. வறுமை நோய்வாய்ப்பட்டுச் சிறுமையிற்
நாழ்ந்து சொல்லொணாத் துன்பத்தில் ஆழ்ந்து அரற்றும் அன்னையை மறந்து பிரிந்து செல்லவும் உள்ளம் ஒருப்பட்டமையை எண்ணுந்தோறும் எமது உள்ளம் உருகுகிறது. தாஸரின் வீரமொழிகளும், தீரச் செயல்களும் எம்முன் தோன்றித் தோன்றி எம்மை ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்குகின்றன. இத்தகைய வீரரை- வள்ளலை - தியாகச் செல்வரை இனி எந்நாள் காண்போம் என்று எமதுள்ளம் ஏங்குகின்றது.
தாய்நாட்டின் விடுதலைக்காக இடையறாது அல்லும் பகலும் உழைத் தமையினால் உடல் நலம் இழந்த தாஸர் உடல் நலம் பெறுவான் வேண்டி
தார்ஜிலிங்கில் மலைவாசம் செய்ய மனைவி, மக்களுடன் சென்றிருந்தார். சென்ற செவ்வாயன்று மாலை 5.30 மணிக்கு அவர்தம் ஆவியைக் கொடுங்கூற்றுவன் கொள்ளை கொண்டனன். என்னே மனிதர் நிலை!
திரு.தாஸர் வங்கநாட்டில் வறியோர்க்கீந்து வறுமை யெய்திய பெருங்
குலத்தில் தோன்றியவர்; சிறந்த தேசாபிமானி; தாய்நாட்டின் விடுலையையே
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தமக்கு அணியாகப் பூண்டவர்; தியாகமே வடிவாக வந்தவர்; அருளே
உருவாக எடுத்தவர்: “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனர்'
: தஞ்ச மென்றடைந்தவரை அஞ்சல் எனக்கூறும் அருங்குணம் வாய்ந்தவர். தமது இளம்வயதில் கல்வி கற்றார் : பாரிஸ்டர் உத்தியோகம் செய்ய வேண்டுமென்ற ஆவல் தூண்ட ஆங்கில நாடுசென்றார்; அப்பரிகைஷயிற் றேறினார். ஆங்கில நாட்டில் வதியும் அவ்விளம் பருவத்திலேயே தாய் நாட்டின் தொண்டில்
ஈடுபட்டார். நமது பெருங்கிழவர் தாதாபாய் நெளரோஜி, பாராளுமன்றத்தின் அங்கத்தினராதற் பொருட்டு அரும் பெரும்பாடுபட்டார். அரிய சொற்பொழி வுகள் நிகழ்த்தினார். இவ்விளம் வயதில்... தமது குடும்பத்தின் வறுமையை அகற்றவும், தந்தையார்க்கு நேர்ந்த இழிசொல்லைப் போக்கவும் பொரு ளீட்டுந் தொழில் கற்பான் புகுந்த காலையில் தாய்நாட்டை மறந்தாரல்லர். தாய்நாடு திரும்பி வந்ததும், வக்கீல் தொழிலில் அமர்ந்தார். புதுப் புதுப் புதையல்களைக் கண்டெடுப்பாரே போன்று தமது தொழிலில் பெரும்
பொருள் ஈட்டினார். திங்கள் ஒன்றுக்கு 50,000 ரூபாவுக்குக் குறையாமல் பொருள் ஈட்டினாராம். இப்பெரும் பொருளை என் செய்தார்? செழுங்கிளை: தாங்குவதில் தமது பொருளைச் செலவிட்டு, கடனும்பட்டு, நீதிமன்றத்தின் காப்புப் பெற்ற (இன்சால்வெண்டு கொடுத்த) தம் தந்தைக்கு நேர்ந்த பழிச்சொல்லை அகற்றுவதில் இப்பெரும் பொருளை செலவிட்டார். 16 இலட்சம் ரூ. இவ்வாறு கொடுத்து “நீதிமன்றக் காப்புப் பெற்ற கடனாளி” என்னும் பழிச்சொல்லை தம் தந்தையாருக்கில்லா தொழித்தார். என்னே இவரது பெருந்தன்மை! என்னே இவரது அறவொழுக்கம்! இவ்வற வொழுக் கமன்றோ இவரது பிற்காலத் துறவொழுக்கத்திற்கு அடி கோலிற்று? “மகன் றந்தைக்காற்று முதவி யிவன்றந்தை என்னோற்றான் கொல் லெனுஞ் சொல்” என்று ஆசிரியர் திருவள்ளுவர் கூறிய மகனிலக்கணத்திற்கு இலக்கியமாக இலங்கியவர் ஆவர் நமது தலைவராய தாசர்.
திரு. தாசரின் வண்மை அளவிடற் பாலதன்று ; தாம் ஈட்டிய பொருள் அனைத்தினையும், தமக்கென ஒரு சிறிதும் சேர்த்து வையாமல் தாய் நாட்டிற்
காகவும், இரவலர்களுக்காகவும் ஈந்து உவந்தனர். “முல்லைக்குத் தேரும், மஞ் கைக்குப் போர்வையும்” அளித்த தமிழ் நாட்டு வள்ளல் பாரியே அனைய வள்ளல் ஆவர் திரு தாஸர். இப்பெரியாரது தாராள உள்ளம் கடலினும்பெரிது. இல்லையென்றார்க்கு இல்லை என்னாது ஈந்த வள்ளல். அதிகார வர்க்கத்தாரின் அடக்குமுறைப் பாணங்களுக்கு ஆளாகிச் சிறைக் கோட்டம் நண்ணின தேச பத்தர்களின் குடும்பங்கள் பல தாஸரின் ஆதரவைப் பெற்று வாழ்வு நடாத்தின. இவரால் ஆதரிக்கப் பெற்ற மாணவர்கள் பல்லாயிரவர். ஆவர். ஒரு காசும் ஊதியம் பெறாது தேசத் தொண்டே தமது பெரும் ஊதியம் எனக்கொண்டு எத்துணையோ தேசபக்தர்களுக்காக நீதிமன்றங்களில் வாதித்துள்ளார். வக்கீல் தொழிலில் உயரிய நிலை இவர் உறுவதற்குக் காரணமாக இருந்தது திரு. அரவிந்தகோஷ் எனும் பெரியார் கலந்திருந்த அலிப்பூர் வெடிகுண்டு வழக்காகும். இவ்வழக்கில் இவர் வாதித்து
குடி அரசு - 1925 58
வெற்றிபெற்றார் ; பின்னர் இவர் தம் புகழ் எங்கும் பரவலாயிற்று. இத்தகைய அரசியல் வழக்குகளினால் தாஸர் கடன் படவும் நேர்ந்ததெனில் இவரது தேசபக்தியின் ஆழத்தை யாவரே அளக்க வல்லார்?
திரு. தாஸர் நேராக அரசியல் உலகில் இறங்கிய காலம் காந்தியடிகள் அரசியலில் தலையிட்ட காலத்தோடு ஒக்கும். பாஞ்சாலப் படுகொலையின் விவரங்களை நன்றாக ஆராய்ந்து அறிக்கையொன்று எழுதும்படி ஏற்படுத்தப் பட்ட பெரியார்களில் திரு. தாஸர் ஒருவர். இவ்வேலையில் இவர்காட்டிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும், தேசாபிமானத்தையும் காந்தியடுகளே வாயாரப் புகழ்ந்துள்ளார்களெனின் யாம் யாது கூற வல்லோம். தமது சொந்தத்
தில் இதற்காக ரூபா 50,000 செலவிட்டிருக்கிறார் எனின் திருதாஸரின் தயாள குணத்தை எவ்வாறு எடுத்துரைப்பது?
தேச விடுதலையை அளிப்பது ஒத்துழையாமையே எனக் காந்தியடி
கள் கண்டார். காங்கிரஸ் மகாசபையும் அந்நெறியை ஏற்றுக் கொண்டது. இந்திரபோகம் நுகர்ந்து இன்ப வாழ்வில் மூழ்கித் திளைத்துக் கிடந்த திரு. தாஸர் என் செய்தனர்? “இன்பமருஞ் செல்வமும், இவ்வரசும் யான் வேண் டேன்” எனக்கூறி இந்திர போகத்தைத் துறந்து, இன்ப வாழ்வை நீத்து, பெரும் பொருள் ஈட்டிவந்த வக்கீல்தொழிலை உதறித்தள்ளி, தேசத்தொண்டு ஒன்றே தமது வாழ்க்கையின் பயனாமெனக் கொண்டு ஒத்துழையாமை நெறி நின்று, காந்தியடிகளைப் பின்பற்றி உழைத்து வருவாராயினர். தமது அருமை மனைவி வசந்தாதேவியையும், செல்வச் சிறுவனையும் சிறைக்கனுப்பவும் ஒருப்பட்டனர். தாமும் இவ்வரசாங்கத்தினரின் விருந்தினராக ஆறு திங்கள். சிறைச்சாலையாம் தவச்சாலையில் வதிந்தனர்.
இந்நிலையில், காந்தியடிகள் சிறைசென்றனர்; தாஸர் வெளிப்
போந்தனர். நாட்டின் நிலைமை ஒத்துழையாமையில் மாறுதல் செய்ய வேண்டு மெனஅவர் உள்ளத்தில் ஒரு எண்ணத்தை உண்டாக்கிற்று. சட்டசபை புகுந்து, ஆங்கு முட்டுக்கட்டைப் போட்டு ஒத்துழையாமை நிகழ்த்த வேண்டுமென எண்ணினார். இவருக்குப் பல பெருந்தலைவர்களும் துணை போயினர். “சுயராஜ்யக் கட்சி” யென ஒரு கட்சி கண்டார். தமது கட்சியை வலுப்படுத்த நாடெங்கும் மின்னல்போல்தோன்றி, வீரச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி தமது கொள்கை உரம்பெறச் செய்தார். “சட்டசபையில் முட்டுக்கட்டை போடுவேன்; இரட்டையாட்சியை ஒழிப்பேன்” என வீரமொழிகள் புகன்று உட்சென்றார் தாஸர். வங்கநாட்டில் இரட்டையாட்சியை ஒழித்து வெற்றிபெற்றார். இதன் பயனாய் விளைந்த நலம் யாது என்பது வேறு விஷயம். அவர் எடுத்த காரியத்
தில் வெற்றியடைந்தார் என்பதை எவரும் மறுக்கமுடியாது. தமது எண்ணம் நிறைவேறியதாமெனக் கொண்டே இறைவன் திருவடிநீழல் அடைந்தார்.
போலும்.
திரு. தாஸர் கல்விக் கடல்; அறிவுக்கடல்; உலகவியல் அறிவு மட்டு
மன்று சமயஅறிவும், ஆன்ம ஞான அறிவும் நிறைந்த பெரியார். வங்கமொழி
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யில் பாட்டியற்றவல்ல பெரும் புலமை மிக்கார். இனிய சுவையும், இறைவன
நிவும் புகட்ட வல்ல இனிய பாடல்கள் இயற்றியுள்ளார் எனக் கூறுகின்றார்கள்.
இவ்வரும் பெருங் குணங்கள் படைத்த பெரியார் - இதுகாறும் தமது உடலாலும் பொருளாளும், தேச சேவை செய்துவந்த தியாகமூர்த்தி - தாய் நாட்டின் தொண்டில் தம் இன்னுயிரையும் இறுதியாகத் தியாகம் செய்து தமது தியாக வாழ்க்கையின் முடிவெய்தினார். இப்பெரியாரின் வண்மையை எண்ணிக் காந்தியடிகள் கண்ணீர்விட்டுக் கதறினரெனின், இவரது வண்மை
யில் வாழ்ந்து வந்த பல்லாயிரவர்களின் உள்ள நிலை எவ்வாறிருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ? சுயராஜ்யக் கட்சி தனது உயிரை இழந்து விட்டது.
நாம் ஒரு பெருந்தலைவரை இழந்துவிட்டோம். தேசம் உற்ற பந்து ஒருவரை: இழந்தது. இந்திய மக்கள் ஓர் உண்மைத் தாசனை இழந்தனர். இவரது பிரிவாற்றாமையால் கண்ணீர்ப் பெருக்கி வருந்தி நிற்கும் இவரது அருமை மனைவியாருக்கும், புதல்வனுக்கும் எமது அநுதாபத்தைக் காட்டுவதல்லாது வேறென் செய்ய வல்லோம். தேசபந்து சித்தரஞ்சன் தாஸரின் ஆன்மா சாந்தியடையுமாறு எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.06.1925
குடி அரசு - 1925 60
தாசர் தினம்
தேசபந்துவினிடம் இத்தேசத்தார் வைத்திருந்த பேரன்பையும், அவருடைய மரணத்தினால் அடைந்துள்ள துக்கத்தையும் காட்டும்பொருட்டு. ஜுலை மீ”முதல் தேதி மாலை 5 மணிக்குத் தேசமெங்கும் பொதுக்கூட்டங்
கள் கூட்டித் தீர்மானங்கள் செய்யவேண்டுமென்று மகாத்மா காந்தி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசபந்து காலஞ்சென்று அன்றுடன் பதினாறுநாள் ஆகின்றமையால் அன்று அவரது சிரார்த்த தினமும் ஆகும். தமிழ்நாட்டார் இத்தினத்தைத் தகுந்தவண்ணம் நடத்திவைக்க வேண்டுமென
நாம் சொல்ல வேண்டுவதில்லை. எல்லாக் கட்சியினரும், எல்லாச் சமூகத் தினரும் அன்று ஒன்றுபட்டு விண்ணுற்ற பெரியாரின் ஆன்மா சாந்திய டையுமாறு இறைவனை வழுத்துவார்களென நம்புகிறோம். தேசபந்துவின் ஞாபக தினத்தில், தேசத்திற்குத் தற்போது இன்றியமையாததாயிருக்கும் ஒற்றுமை விதை விதைக்கப்படுமாக.
கைம்மாறு யாது ?
இமயம் முதல் கன்னியாகுமரிவரையில் இந்நாட்டு மக்கள் தேச பந்துவின் எதிர்பாரா மரணத்தினால் துயரக்கடலில் மூழ்கியிருக்கின்றனர். என்று கூறுதல் மிகையாகாது.நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இதற்குச் சான்றாகும். லோகமான்ய திலகரின் மரணத்திற்குப் பிறகு இந்தியர் இத்துணைப்பெரிய துக்கம் அடைந்ததில்லை யென்று திட்டமாகக் கூறலாம். ஆனால், துக்கப்படுவதோடு
நமது கடமை முடிந்துவிட்டதா என்பது ஆராயற்பாலது- நாட்டிற்கு இத்தகைய அரிய தொண்டுகள் செய்த ஒருவருக்கு நாம் செய்யும் கைம்மாறு யாது? அவருடைய ஞாபகத்தை இந்நாட்டில் நிலைபெறுத்துவதெங்ஙனம்?' நாட்டிற்கு நலன் எதுவும் செய்யாத பட்டதாரிகளுக்கும், ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உருவச் சிலைகள் நாட்டப்பட்டிருக்கின்றன. ஆதலால் நமது அருந்தலைவருக்கு உருவச்சிலை நாட்டுதல் போதாதென்று நாம் சொல்லவேண்டுவதில்லை. பின்னர் என் செய்வது? அவருடைய வாழ்க்கை நெறியை ஓரளவேனும் மேற்கொண்டு ஒழுகுதலே அவருக்கு நாம்
செலுத்தும் நன்றியாகுமெனக் கருதுகிறோம்.
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இரு பெருங் குணங்கள்
தேசபந்துவின் உயர்ந்த குணங்கள் பலவற்றுள் தியாகமும், செயல் திறனுமே தலையாயவையென்பது வெள்ளிடைமலை. உண்மையில் உரம் அற்றதான சுயராஜ்யக் கட்சி, சிறிது காலத்தில் நாட்டில் இணையற்ற பலமுள்ள கட்சியானது எவ்வாறு? தேசபந்துவின் தியாகமும், கருமஞ் செய்வதில் அவருக்குள்ள ஆற்றலுமன்றோ இதற்குக் காரணங்கள்? மகாத்மா காந்தியின் கொள்கைகட்கு விரோதமான கட்சியொன்றை - பயனற்றதென்று நாட்டார். நன்கறிந்து தள்ளிவிட்ட திட்டமொன்றை - இவ்வளவு திறமுடன் அமைத்து நடத்த இக் குணங்களில்லாத பிறரால் முடிந்திருக்குமோ? தேசபந்துவின் இவ்விரு குணங்களையும் தேசமக்கள் மேற்கொள்ளுவதுதான் அவருக்கு
நாம் செலுத்தக்கூடிய சிறந்த கைம்மாறாகும். சுயநலமும், சோம்பரும் மிகுந் துள்ள இந்நாளில், தேசமக்கள் தாஸரின் தியாகத்தையும், செயல்திறனையும் ஓரளவேனும் பின்பற்றி ஒழுக முன்வந்தால் நாட்டிற்குப் பெருநலம் விளை:
யும் என்பதில் ஐயமில்லை.
நமது கடமை
தேசபந்துவைப்போல் லட்சக்கணக்கான வருமானத்தைத் துறக்க எல்லாராலும் முடியாது. எல்லாரும் அவ்வளவு வருவாய் உள்ளவர்களு மல்லர். ஆனால், எத்துணை எளிமையில் ஆழ்ந்தவராயினும், மில் துணி களை அறவே விலக்கிக் கதர் உடை தரிக்கலாம். தாஸரின் பெரிய தியாகத்தை நினைந்து நாம் ஒவ்வொருவரும் இச்சிறு தியாகமேனும் செய்ய ஒருப் படுவோமாக.எல்லாரும் தேசபந்துவைப்போல் ஒருபெரும் அரசியல்கட்சி கண்டு ஜெயம்பெற நடத்த முடியாது. ஆனால், ஒவ்வொரு வரும் தினம் அரைமணிநேரம் நூல் நூற்பதில் தமது செயல்திறனைக் காட்டலாம். கருமஞ் செய்வதில் தேசபந்து காட்டிய பேராற்றலை நினைந்து நாம் இச்சிறு தொண் டேனும் செய்து வரலாகாதா? தாசர் தினத்தன்று இந்நாட்டார் ஒவ்வொருவரும் அவருடைய நினைவை நிலை நாட்டும் பொருட்டு இவ்விரண்டு விரதங் களையும் மேற்கொள்வார்களென நம்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.06.1925
குடி அரசு - 1925 62
வைக்கம் நிலைமையைப்பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றிச் செல்லலாமென்று மகாராணியார் கட்டளைப் பிறப்பித்துவிட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால், அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று
வீதிகளில் “தீண்டாதார்” செல்வதற்கு மட்டுமே கட்டளைப் பிறப்பிக்க சமஸ் தான அரசாங்கத்தார் முடிவு செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும். மற்ற சமஸ்தானங்களுக்கும் வழிகாட்டியாயிருக்கும் பெருமை திருவாங்கூர் சமஸ்தானத்துக்குக் கிடைக்காமலே போய்விடு மோவென ஐயுறுகிறோம். சத்தியாக்கிரஹிகளின் உமை என்னவோ தெளி வாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத் தையும், அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவரவேண்டும்.
குடி அரசு - குறிப்புரை - 21.06.4925
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காரைக்குமு வில்லை முதரைவது அரசியல் மகாநா௫
தீண்டாமை
தீண்டாமையைப் பற்றி ஓர் தீர்மானம் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள். தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லு வதும்.சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லு
வதும், சிலர் பழக்கவழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வரு ணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக் கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாச்சிரமமானது பிராமணன், க்ஷத்திரியன், வைசி யன். சூத்திரன், பஞ்சமன் என ஐந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக் கின்றனவென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனுஸ்மிருதி என்றும் சொல்லப் படுகின்றது. தமிழர்களாகிய நம்மை இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்ற வில்லை.ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், சாதி என்பதும் , பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமோ, மனுஸ்மிருதியோ என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல.. தமிழ் நாட்டினர்க்கோ, தமிழர்க்கோ இவ்வன்னிய பாஷைப் பெயர்கள். பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த சாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோம். ஏன் அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பொழுது ஆராயத் தேவையில்லை. சூத்திரர் என்பது என்ன? நாம்
குடி அரசு - 1925 64
சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் “விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப் பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன்” முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டிருக்கிறது. அப் பெயரை நாம் ஏற்றுக் கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப் படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, க்ஷத்திரிய, வைசிய,
சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேலேகண்ட முறைப்படி கொடுமை யாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்வதையும் கேட்கிறோம். அநேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தின போதிலும் “சூத்திரர்கள்” என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களை. விட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப் பட்டபடி “சூத்திரர்” என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன், என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.
இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊணிற்கு வெளியில் குடியிருக்கும்படியும் ஸ்நானம் செய்வதற்கோ, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கோ, வீதியில் நடப்பதற்கோ, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லு கிறவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர். களை அதற்கு மேற்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை யென்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களோடு பேசுவ
தும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் க்ஷத்திரியர்கள், பிராமணர்கள் நடந்துகொள்ளுவதையும், அதே
மாதிரி க்ஷத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்துகொள்வதையும், பிராமணர்: களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும்
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள்.
தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார். நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கின்ற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் க்ஷத்திரி யனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசு
கின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் போகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கொண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணுலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரை யாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக் கூடாதவராகவும் இருப்பது வழக்கமா யிருப்பது மாத்திரம் அல்லாமல், இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற சாதியாயிருக்கிற ஐரோப்பியருக்குத் தீண்டாதவராகவும், கிட்ட வரக்கூடாதவராகவும் இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம் பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்ப தல்லாமல் அவர்களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.
இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரி யப்பட்டுவிடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ[நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜமீந்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாளனாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம் மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத்தனையோ உயர்குணங் களும் எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங் களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக்கொள்ளுவதில் பெருமை அடைகின்றனர். இந்த இழிவு சூத்திரர் கள் என்பவரை எப்படிக் கட்டிக்கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும் படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து
குடி அரசு - 1925 66
மகிழ்ந்துகொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடு கிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட்டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக்கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே யென்றுகூட கவலைப்படுவதேயில்லை.இது எதைப் போலிருக்கிறதென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு “இந்துக்கள்” என்று சொல்லுவதற்
கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப் பது போலவும் நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை “அல்லாதார்” என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு “மகமதியரல்லாதார்” பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள். என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.
(தொடர்ச்சி 28.06.1925 குடிஅரசு)
குறிப்பு: 23.24.051925 இரண்டுநாள்கள் பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - நிறைவுரை (தொடர்ச்சி!
குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1925
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காரைக்குமு வில்லை
முகலனாவது அரசியல் மகாநா௫
தீண்டாமை
ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப்பெயர்கள் இருப் பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சிய மாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும்
இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.
பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன் மீது துர்நாற்றம்
வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாம்சம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் “கள்” உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்
கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.
இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளு டனும், துர்வாடை யுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப் பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர். குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக் கவோ வழி எங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்து விட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட் டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவு கரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறோம்.
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாதவனாய்
குடி அரசு - 1925 68
விடுவான் ? ஐரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா ? அவர்: களை நாம் தீண்டாதார். பார்க்காதார் என்று சொல்லக்கூடுமா ? அப்படியே சொல்வதானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப் போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாடு தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதைவிட உயிரற்ற செத்துப் போன பிராணியின் மாம்சத்தை, மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?'
கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது என்று சொல்வதும் எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக்கொண்டிருக்கிறவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக் கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வதால் குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படி தொடக்கூடிய வர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறோம். இந்தப்பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக்கியர்கள்: தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங் களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மை யானால் இப்படி கொடுமைப்படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்க
ளுக்கு விடுதலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள். இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கொண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கெனியா, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவருக்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம். பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டிருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்டும், ரெளலட் ஆக்டும், ஆள்தூக்கி சட்டமும், 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையை விடவா அன்னியர் கொடுமை பெரிது.
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மதுரைக் கோவிலில் குடிகாரன், மாம்சம் சாப்பிடுகிறவன், குஷ்ட ரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோதரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்.
களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்தவர்களுமாயிருந் தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்து போகு
மாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரெளலட் சட்டத்திற்கும், ஆள்
தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வா னேன். இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக் கூடிய மாதிரியாவது நாம் நடக்குகிறோமா?'
(தொடரும)
குறிப்பு:23.2405 025 இரண்டு நாள்கள் பள்ளத்தூரில் நடைபெற்ற காரைக்குடி மாவட்ட முதலாவது அரசியல் மாநாடு - நிறைவுரை (தொடர்ச்சி!
குடி அரசு - சொற்பொழிவு - 28.06.1925
குடி அரசு - 1925 70
சத்தியாக்கிரகம் ராலிக்கு உட்படாது
பல்லூழிகளாக நின்று நிலவி வரும் இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பான் பிற்காலத்தில் ஒரு சில அறிவிலிகளால் அதனுள் புகுத்தப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பேயை நாட்டினின்றும் ஓட்டி, இந்துசமயத்தின் தூய தன்மையையும், மக்களின் உரிமைகளையும், சமத்துவத் தன்மையும், நிலைநாட்ட வேண்டுமென்ற உயரிய எண்ணங்கொண்டு திருவாங்கூர் சமஸ் தானத்திலுள்ள வைக்கம் என்னும் ஊரில் சத்தியாக்கிரகம் தொடங்கப் பெற்று நடைபெற்று வருவது நேயர்கள் நன்கு அறிவார்கள். இவ்வுண்மைப் போர். ஓராண்டாக நடைபெற்று வருகிறது ; இன்னும் வெற்றிபெறவில்லை. ஆனால், விரைவில் வெற்றியுறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. இச் சத்தியாக்கிரக நிகழ்ச்சியைப் பற்றி இவ்வொரு வாரமாக ஒன்றுக் கொன்று முரண்பட்ட செய்திகள் வெளிப்போந்து ஒருகாலை இன்பமுட்டியும், மற்றொரு காலை துன்பமூட்டியும், இறுதியில் மக்களைப் பெருங் கவலையில் ஆழ்த்தி விட்டன என்பதே எமது கருத்து. மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு எவ்வாற்றானும் இல்லையென்ற உயரிய சிறந்த உண்மையை உலகினர்க்கு அறிவுறுத்தும் பெரும் பேறு - ஒரு பெண்ணரசிக்கு வாய்க்கும் என்று யாம் கொண்டிருந்த பேரவா நிறைவுறுங்காலம் நீட்டிக்கப்பட்ட மையைக் காணக் கவற்சியுறுகின்றோம். இத்தகைய பெருமையினை திருவாங்
கூர் பெண்ணரசியார் பெறுதற்கில்லாமற் போய்விடுமோ என்றும் அஞ்சுகின் றோம். இது கிடக்க, இதுகாறும் வெளிப்போந்த செய்திகளில், சத்தியாக் கிரகிகள் காந்தியின் உடன் படிக்கையைப் புறக்கணித்து வரம்புமீறி ஒழுகத் தலைப்பட்டுவிட்டனர் என்ற செய்தி பொய் ஆயினமை கண்டு மகிழ்ச்சி உறுகின்றோம்.
வைக்கம் சத்தியாக்கிரகத்தின் வரலாற்றினை ஈண்டுச் சுருக்கமாக நினைவுகூர்தல் இன்றியமையாதது. வைக்கம் கோவிலின் மதிற்சுவர்களைச் சுற்றிலுமுள்ள நான்கு வீதிகளிலும் தாழ்ந்த வகுப்பினர் எனப்படுவோராகிய
ஈழுவர் முதலானோர் செல்லுதல் கூடாதென்றிருந்த கொடிய சமூக வழக்கத்தை ஒழித்து, மக்கள் யாவருக்கும் பொதுவான பாதைகளில் எல்லாச்
சாதியினரும், சமயத்தினரும் செல்லும் உரிமையை நிலைநாட்ட எழுந்ததாகும். இவ்வைக்கம் சத்தியாக்கிரகப்போர். இப்போரினை எதிர்த்து நின்ற வைதீகக் கூட்டத்தினருக்கு திருவாங்கூர் அரசினர் முதலில் துணை போந்து
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தலைவர்களைச் சிறைக்கனுப்பி விட்டு “கோஷா” வீதிகளுக்குக் கொண்டு விடும் நான்கு வீதிகளையும் நடுவில் கழிகள் கொண்டு அடைத்து, போலீஸ். காவலர்களைக் காவல் செய்ய நியமித்துச் சத்தியாக்கிரகிகள் மேற்செல்லா வாறு மறித்தனர். சத்தியாக்கிரகிகள் நாடோறும் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிமறித்துள்ள விடத்தில் நின்று மழையென்றும், வெயிலென்றும் கருதாமல் சத்தியாக்கிரகம் புரிந்து வந்தனர். வைதீகக் கூட்டத் தினரால் பல்வித அல்லல் களுக்கு ஆளாகியும் சத்தியாக்கிரகிகள் அன்புநெறி, அறநெறிகளினின்றும் ஒரு சிறிதும் வழுவாது காந்தியடிகளின் ஆணையின்படி ஒழுகி வந்ததும், வருவதும் பெரிதும் போற்றத்தக்கது. உள்ளன்புடனும், உண்மையாகவும் உழைத்துவரும் சத்தியாக்கிரகிகள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்பது திண்ணம்.
இவ்வாண்டின் தொடக்கத்தில், சத்தியாக்கிரகிகளுக்கு ஊக்கமும், உண்மைநெறியும் ஊட்ட காந்தியடிகள் வைக்கம் போந்தார். திருவாங்கூர். பெண்ணரசியையும், இளவரசரையும் நேரில் கண்டு வைக்கம் சத்தியாக்கிரகத்
தின் உண்மையையும் அதனை அவர்கள் ஆதரிக்கவேண்டிய கடமை யினையும் உள்ளத்தில் பதியும்படி எடுத்துரைத்தனர். வைக்கம் சத்தியாக்
கிரகம் தற்காலம் உற்ற நிலைமைக்கு காந்தியடிகள் வைக்கம் போந்ததே. ஆகும் எனக் கூறுதல் மிகையாகாது. திருவாங்கூர் அரசாங்கத்தின் போலீஸ். கமிஷனர் பிட் என்பாருடன் காந்தியடிகள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். சத்தியாக்கிரகிகள் முன்னேறாவண்ணம் தடுப்பதற்கென வைக்கப்பட்டிருக்கும் போலீஸ் காவலை அரசினர் எடுத்துவிடவேண்டு மென்பதும், சத்தியாக்கிரகிகள் அரசினர் அனுமதியின்றி முன்னேறுதல் கூடாதென்பதும்தான் அவ் உடன்படிக்கையின் முடிவுகள். இம்முடிவுகளை இருகட்சியினரும் ஏற்று அவ்வாறே நாளிதுவரை ஒழுகிவந்தனர்.
வைக்கம் கோவிலைச் சுற்றிலும் உள்ள நான்கு வீதிகளில் கீழ்வீதி ஒன்றினைத் தவிர மற்றை மூன்று வீதிகளிலும் தாழ்ந்த வகுப்பினர் எவ்வித. தடையுமின்றிச் செல்லலாமென்று திருவாங்கூர் அரசினர் உத்திரவு செய்திருப் பதாக இதுகாலை யாம் அறிகின்றோம். இச்செய்தியில் யாம் ஒரு சிறிதும் மகிழ்ச்சி உறவில்லை. இது சத்தியாக்கிரகத்தின் வெற்றியுமாகாது. சத்தியாக் கிரகத்தின் உண்மையினை அறியாதாரே இதனை வெற்றியெனக் கொள்வர்.
சத்தியாக்கிரகத்தின் உண்மை யாது? சத்தியாக்கிரகம், உண்மை என்பன ஒரு பொருட் கிளவிகள். சத்தியாக்கிரகம் வெற்றிபெற்றதெனக் கூறின் உண்மை வெற்றிபெற்றதெனப் பொருள். உண்மை எக்காலத்தும் வெற்றி உறும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று; உண்மைக்குத் தோல்வி என்பது எக்காலத்தும் இல்லை. ஆதலால், சத்தியாக்கிரகத்தில் - உண்மையில் “ராஜி” என்பதே கிடையாது. அரசினர் மூன்றுவழிகளில் சத்தியாக்கிரகிகள். செல்லலாமெனக் கூறியது சத்தியாக்கிரகம் அவர்தம் உளத்தைக் கரையச் செய்துவிட்டது என்பதைக் காட்டுகிறதேயன்றிச் சத்தியாக்கிரகம்
குடி அரசு - 1925 72
வெற்றிபெற்றது என்பதை ஒரு சிறிதும் குறிக்கவில்லை என்ற உண்மையை ஒவ்வொரு சத்தியாக்கிரகியும் உளத்தமைத்தல் வேண்டும்.
ஆகவே, உண்மை முழுவெற்றியுறும்வரை சத்தியாக்கிரகிகள். உழைத்தல் கடனாகும்.சத்தியாக்கிரகத்தின் ஆற்றலை அறியாது மயங்கினவர். கள் கண்முன் அதன் ஆற்றலைக் கண்ட பின்னரும் எவ்வித மயக்கமும் உறுதல் வேண்டுவதின்று. அரசினர் குழாத்தினர் உளங்கரையச் செய்த உண்மைப்போர் வைதிகக் கூட்டத்தாரின் உள்ளத்தையும் கரைத்து உண் மையை உணர்ந்து ஒழுகச்செய்யும் என்பதில் ஐயப்பாடில்லை. சத்தியாக் கிரகிகளின் பொறுப்பு முன்னைவிட இதுகாலை பெருகி நிற்கிறதென்றே கூறுவோம். சிறு வெற்றியினைக் கண்டு தலைத் தடுமாறிப் பேய்க் கூத்தில் வீழ்ந்து மாயா வண்ணம் சத்தியாக்கிரகிகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அன்பு நெறியையும், அறநெறியையும் ஒரு சிறிதும் கை நெகிழ விடாமல் காந்தியடிகளின் ஆணைக்கடங்கி நின்றும், காந்தி - பிட் உடன்படிக் கைக்கு உட்பட்டும் சத்தியாக்கிரகத்தை மிக்க ஊக்கத்துடனும், உற்சாகத் துடனும் சத்தியாக்கிரகிகள் நடாத்திவரும்படியாகக் கேட்டுக்கொள்ளுகிறோம். உண்மையின் வலிமையை உணராமல் எள்ளி நகையாடி ஒதுங்கி நின்ற பொது மக்களும் தமது குறுகிய நோக்கத்தை அறவே நீக்கிவிட்டுச் சத்தியாக்கிரகி களுக்குத் தம்மாலியன்ற உடல் உதவியும், பொருள் உதவியும் புரிவார்களென
எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 28.06.1925
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சர்மா சாய்ந்தார்
தமிழ்நாட்டு அருந்தவப்புதல்வர் ஸ்ரீமான் கிருஷ்ணசாமி சர்மா இம்மாதம் 24 - ந் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்குக் காஞ்சியிலுள்ள தமது இல்லத்தில் காய்ச்சலினால் இறந்துவிட்டாரென்ற செய்தியைக்கேட்க ஆற் றொணாத் துயர்க்கடலில் மூழ்கினோம். தேசம் தற்பொழுதுள்ள நிலைமையில் பாரதத்தாயின் உண்மை மக்கள் ஒவ்வொருவராக மடிந்து வருவது நாட்டின் தீவினையேயன்றி வேறல்ல. நமது சர்மா அவர்கள் ஏனைய தேசபக்தர்களைப் போன்று தனது வாழ்நாளில் வேறு ஒரு தொழிலிலிருந்து தேசசேவைக்குக் குதித்தவரன்று. மாணவராக இருக்கும்பொழுதே தேச சுதந்திரத்தில் நாட்டம் உடையவராய் தமது வாலிபகாலத்திற்கு முன்பே தியாகத்தின் வாயிலாய்ச் சிறைவாசம் ஏற்றார். சிறைச்சாலைக் கைதிகளை இக்காலத்தைப் போலல்லாது கொடுமையாகவும், இழிவாகவும் நடத்திவந்த காலமாகிய 1908 -ம் ஆண்டி லேயே மாதக்கணக்கில்லாமல் வருடக்கணக்காய் தண்டனை அடைந்தார். சிறையினின்றும் வெளிவந்ததும் மீண்டும் தேசத்தொண்டிலேயே ஈடுபட்டு ழைத்ததனால் யுத்த காலமாகிய 1917 - ம் ஆண்டில் ஒருவருட காலம் வாய்ப் பூட்டப்பட்டிருந்தார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்ததின் பயனாக நமது அரசாங்கத்தாருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்து ஓராண்டு சிறையில் வதிந்தார். அவர் அரசியல் நூல்கள் எழுதுவதில்
மிகத் தேர்ச்சி உடையவர். தற்பொழுது நமது கிராம மக்கள் அரசியல் அறிவுபெற அவரது நூல்களே ஆதாரமாகும். அவர் அகில இந்திய காங்கிரஸ் சபையின் அங்கத்தினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் சபையின் நிர்வாக அங்கத்தினராகவும் இருந்து காங்கிரஸிற்கு அரிய தொண்டாற்றி வந்திருக்
கின்றார். கிலாபத்துக்காகவும் அதிக சேவை செய்துள்ளார். ஒத்துழையாமை யின் ஒவ்வொரு தத்துவத்திலேயும் அவர் உண்மையான நம்பிக்கைகொண்ட
வர். பெல்காம் காங்கிரஸில் ஒத்துழையாமையை அடியுடன் ஒழிக்கும்வரை: பூரண ஒத்துழையாதாரராகவே இருந்து முடிவுவரை தமது தொண்டை ஆற்றி வந்தவர். காங்கிரஸின் தற்கால நிர்மாணத் திட்டமாகிய கதர், தீண்டாமை இவ் விரண்டையும் மேடைத் திட்டமாய்க் கொள்ளாமல் உண்மைத் திட்டமாகவே
கருதி மனப்பூர்வமாக ஏற்று உழைத்தவர். குருகுல விவாதத்தில் பிராமண: சமூகத்தாரிலேயே நம தண்பர் சர்மா ஒருவர்தான் தனது அபிப்பிராயத்தை தைரியமாகவும், வெளிப் படையாகவும் கூறியவர். இப்பேர்ப்பட்ட ஓர்.
பக்தரை, தமிழ்நாடு தனது சோதனை காலத்தில் இழந்தது பெருத்ததோர்
குடி அரசு - 1925 74
நஷ்டமாகும். சர்மாவின் குடும்பத்தாருக்கு எமதனுதாபத்தைத் தெரிவிக் கிறோம். அவரது ஆன்மா சாந்திஅடைக!
குடி அரசு - இரங்கலுரை - 28.06.1925
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அரவிந்தருக்கு அழைப்பு
தேசபந்து தாசர் காலஞ் சென்றதும் ஸ்ரீ பாபு அரவிந்தரை, தாசரின் தலைமைப்பதவி யேற்றுக்கொண்டு தேசத்தை நடத்தும்படி பலர் வேண்டு. வதாய்த் தெரிகின்றது. அரவிந்த கோஷர் தலைமை வகித்து தேசத்தை நடத்துவதற்கு மிகவும் தகுதியுள்ளவர் என்பதை எவரும் மறுக்கமாட்டார். ஆனால் காந்தியடிகள் உழுது செய்னேத்தி செய்து வைத்திருக்கும் நிலத்தில் அரவிந்தரின் விளை முளைப்பது கடினம்.அரவிந்தர் வருவாராயின் இந்தியா
முழுவதும் மறுபடியும் ஓர் முறை உழுது அவரது விதைக்கேற்றவாறு பண் படுத்தவேண்டும். காந்தியடிகளின் திட்டம் முற்றிலும் பயனற்றதாகி காந்தி யடிகளே இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஏற்றதல்ல என விலகிவிட்டால்
மாத்திரம், அரவிந்தர் முதலியோர் தாராளமாக வரலாம். வந்துதான் ஆக வேண்டும். இப்பொழுது அரவிந்தர், காந்தியடிகள் இருவரும் தேசத்தை நடத்துவார்களாயின், பசுவையும், புலியையும் ஓர் வண்டியில் கட்டி ஓட்டுவது போல் தான் ஆகும்.காந்தியடிகளே அரவிந்தரை அழைக்கிறாரெனின் அது ஒரு கோமாளி வேடமன்றி வேறல்ல.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.06.1925
குடி அரசு - 1925 76
செண்ணை முணிசியல் ஓட்டர்களுக்கு
எச்சரிக்கை
- சித்திரபுத்திரன்
சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்
தின் மேல் மகாத்மா பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சுயராஜ்ய கட்சியின் பெயரையும் சொல்லிக் கொண்டு சிலர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
அதோடு மாத்திரம் நில்லாமல் தாங்கள் யோக்கியமான கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு எதிரிடையாய் நிற்கும் அபேட்சகர்கள் யோக்கியப் பொருப்பில்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், கட்சிப் பிரசாரம் செய்து, ஒரு கட்சியார் பேரில் வெறுப்புண்டாக்கவும் பாடுபடுகிறார்.
கள். முனிசிபாலிட்டிகளுக்கு கட்சிப் பிரதானம் பார்க்க வேண்டியதே இல்லை. அபேட்சகர்கள் யோக்கியர்களா என்று பார்ப்பதுதான் உங்கள் கடமை. இப் பொழுது பெயருக்கு முனிசிபல் விவாதத்தில் பிரஸ்தாபிக்கப்படும் கட்சிகள் இரண்டேதான். ஒன்று பிராமணரல்லாதார் கட்சி என்று சொல்லப்படும் ஜஸ்டிஸ்கட்சி: மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவ்விரு கட்சிகளும் ஒன்றை யொன்று தூற்றிக்கொண்டு பலமான பிரசாரங்கள் நடத்தி வருகின்றன.
இரு கட்சியின் தத்துவங்களும் தேசத்திற்கு விடுதலை உண்டாக்காது. தற்கால நிலையில் கட்சிப் பேர்கள் சொல்லிக் கொள்வதாலேயே ஜனங்கள் ஏமாறக்கூடாது. சென்ற வருஷம் சென்னை முனிசிபல் தேர்தல்களில் ஜனங்கள் கட்சிப் பெயர்களைக்கேட்டு ஏமாந்துவிட்டார்களே அல்லாமல், உண்மை அறிந்து தங்கள் ககமைகளைச் செய்யவேயில்லை. ஆனாலும், அவர்கள் முன்னிருந்தவர்களைவிட என்ன சாதித்து விட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். காங்கிரசானது சுயராஜ்யக் கட்சியாரை முனிசி பாலிட்டியைக் கைப்பற்றும்படி ஒரு தீர்மானமும் செய்யவேயில்லை. மகாத்மாவும் கட்டளையிடவில்லை. யோக்கியர்கள் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அவர் கருத்து.
இப்பொழுது காங்கிரஸ், மகாத்மா பெயரைச் சொல்லிக்கொண்டு அபேட்சகராய் நிற்கும் கனவான்களும் ஜஸ்டிஸ் கட்சி கனவான்களைவிட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்ல.
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுயராஜ்யக் கட்சி அபேட்சகரில் பெரும்பான்மையோர் உங்களிடம் ஓட்டுக் கேட்க வரும்போதுதான் கதர் கட்டிக்கொண்டு மகாத்மா பெயரைச் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியில் கதரில் நம்பிக்கை உள்ளவர்கள். கட்டுகிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் கட்டுவதில்லை. சுயராஜ்யக் கட்சியிலும் அநேகருக்கு கதரில் நம்பிக்கையேயில்லை.அவர்கள் உங்களை: ஏமாற்ற கதர் கட்டுவதேயல்லாமல், தேச க்ஷேமத்திற்கு கட்டுபவர் வெகுசிலர். அவர்களின் வெளி வேஷம்தான் இப்படியென்றால் உள் வேஷமோ, மகாத்மாவை (இம்பீச்மெண்ட்) குற்றவாளியாக்கி தண்டிக்கவேண்டும் என்று சொன்னவர்களும், ஸ்ரீமான் தியாகராஜ செட்டியாரை பஞ்சாப் படுகொலைக்
குக் காரணமாயிருந்த டயர் என்று சொன்னவர்களும், தீண்டாமை விலக்கில் நம்பிக்கையில்லாதவரும், பிறப்பினால் தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள்.
தாழ்ந்தவர்கள் என்கிற ஜாதி இறுமாப்புடையவர்களும், ஒத்துழையாமை ஏற்பட்டது முதல் நாளது வரை பெயரே கேள்விப்பட்டிராதவர்களும், தேச
நலத்துக்குக் கூட்டமாய் தலைவர்களும் தொண்டர்களும் ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் மறைந்து கொண்டிருந்தவர்களும், “ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக் குழந்தை ஒரு பிராமண ரல்லாத பிள்ளை கூட உட்கார்ந்து சாப்பிட்டால் ஒரு மாதத்திற்கு பட்டினி விரதம் இருப்பேன்” என்று சொன்னவரும், மகாத்மா தீண்டாமையைப் பற்றிப் பேசினால் அவரை: எதிர்த்துக் கவிழ்த்துவிட வேண்டுமென்று சொன்னவரும் மற்றக் கட்சி யாரைவிட தாங்கள் யோக்கியர்களென்று சொல்லிக் கொண்டு உங்களிடம் வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சியிலிருக்கும் சில்களைவிட எத்தனையோ மடங்கு யோக்கியர்கள் மிதவாதக் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சியிலும் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஒத்துழையாமை என்கிற தத்துவம் காங்கிரஸிலிருந்து ஒழிக்கப்பட்ட பிறகு கதர், தீண்டாமை விலக்கு என்கிற இரண்டு திட்டங்களைத்தவிர மற்றபடி எந்த விதத்திலும் ஒரு கட்சிக்கு மற்றொரு கட்சி வித்தியாசப் பட்டதல்ல. இந்த இரண்டு திட்டங்களைப் பொருத்தவரை சுயராஜ்யக் கட்சியானது ஜஸ்டிஸ், மிதவாதக் கட்சியைவிட மேலானதென்று சொல்ல
முடியாது.
சுயராஜ்யக் கட்சியாரின் பிடிவாதத்தால்தான் காங்கிரசும் வெளி வேஷத்திற்கு மாத்திரம் கதர் கட்டினால் போதும் என்கிறது போல் மீட்டிங்கு களுக்கு வரும்போது மாத்திரம் கதர் கட்டினாலும் அவர் காங்கிரஸ் அங்கத்தி னராகலாம் என்றும், தாங்களே ராட்டினம் சுற்றாவிட்டாலும் வேறு ஒருவர். சுற்றிய நூலைக் கொண்டாவது காங்கிரஸ் அங்கத்தினராகலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீண்டாமை விஷயத்திலோ சுயராஜ்யக்
கட்சியாரின் மனோபாவத்தை நாம் சொல்லவே வேண்டியதில்லை. குருகுல சம்பந்தமான விவகாரம் சென்னையில் மகாத்மா வந்திருந்தபொழுது அவரி
டம் பிரஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில் நடந்த வாக்குவாதங்களால் தெரிந்திருக்
குடி அரசு - 1925 78
கலாம். அன்றியும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் கூற்றினாலும் தெரிந்திருக் கலாம். வர்ணாசிரம தர்மக் கூட்டங்கள், பிராமணர் சங்கங்கள் இவைகளில் சுயராஜ்யக் கட்சியாரின் உள்குணத்தாலும் அறியலாம். ஆகையால் சென்னை ஓட்டர்களும், வெளி ஜில்லாக்களில் உள்ள ஓட்டர்களும் தேர்தல் காலங் களில் கட்சியின் பேரைக்கண்டு ஏமாந்து போகாமல், நிற்கும் கனவான்களின் யோக்கியதாபட்சத்தை அறிந்தும், அவர் நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார், என்ன செய்யக்கூடும், நாட்டை நடத்த இவர்களுக்கு எவ்வளவு பாத்தியதை உண்டு என்பதைக் கவனித்து தங்கள் ஓட்டுரிமைகளை உபயோகிப்பார். களென்று நம்புகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 28.06.1925
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இந்தியத் வதாழிலானர்
- ஒரு தொழிலாளி
தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடையவணாகவிருக்கிறேன். பொதுவாய் நமது நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர்களைக் குறிக்கின்ற தேயன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை.தொழிலா என் என்றால் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத்தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும். தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு
முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உப கருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அதுபோல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வஸ்துவும் அதற்கு உப கருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆகமாட் டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத்
திலும் சம்பந்தப்பட்டதேயல்ல. இவர்களாகவே கூலிக்கு அமர்ந்து கொண்டு அடிமைபோல் சொல்லுகிறதைச் செய்கிறதாகவும் சம்மதித்து, பிறகு எஜமா னன் அதிக இலாபம் அடைவதைப் பார்த்துப் பொறாமை கொண்டோ, தொழில் திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்குப் போதாது என்ற காரணத் தினாலோ தாங்கள் இல்லாவிட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிக கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம், வேலைநிறுத்தம் செய்தபின் வேறு ஒருவன் அந்த வேலை செய்யவும் சம்ம திக்கமாட்டோம், முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடைய வேண்டும் என்கின்ற முதலியனக் காணப்படும் செயல்களையும் அதன் பலன்களையும்தான் தொழிலாளர் இயக்கமென்பதும், தொழிலாளர் இயக்கத்
தின் வெற்றி தோல்வியாய்க் கருதப்படுவதுமாகவிருக்கிறது. இதைக் கூலிக் காரர்கள் இயக்கம் என்றுதான் கூறலாம். இவ்வித இயக்கம் உண்மை யில் நம் தேசத்திற்கோ, நம் தேச மக்களுக்கோ எவ்விதத்திலும் அனுகூலமான இயக்கம் என்று சொல்லமுடியாது. இது மேனாட்டு வழக்கத்தை அனுசரித்து.
குடி அரசு - 1925 80
அங்குள்ள முதலாளிகளும், கூலிக்காரர்களும் கீழ்நாட்டுப் பணத்தையும், பதவியையும் கொள்ளையடித்து அதை எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்கிற சண்டைதான் அங்கு தொழிலாளர் இயக்கமாய் விளங்குகின்றது. நம் நாட்டிலோ தொழிலாளி அதிகக்கூலி கேட்க கேட்க முதலாளி, மக்கள்: வாங்கும் பொருள்களின் மேல் அதிக விலையை வைத்து, மக்களிடம் பொருள்பறித்து, சிறிது தொழிலாளிக்குக் கொடுத்து மிகுதியைத் தான் எடுத்துக்கொண்டு முன்னிலும் தான் அதிக இலாபம் சம்பாதித்தவனாகி
விடுகிறான். உதாரணமாக, ரயில்வே, டிராம்வே தொழிலாளர்களின் இயக்கங் களை எடுத்துக்கொள்வோம். சென்னை டிராம்வே, ரயில்வே தொழிலாளர்
கள் தங்கள் எஜமானர்களான கம்பெனிக்காரர்களிடத்தில் அதிகக்கூலி கேட்டார்கள். எஜமானர்களும் முதலாளிகளுமான கம்பெனிக்காரர்களோ கட்டணமாகிய டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தினார்கள். இவ்வகையில் ஜனங்களின் பணத்தைப் பறித்து தொழிலாளர்களுக்குக் கொஞ்சம் கொடுத்து விட்டு மேற்கொண்டும் தாங்கள் இலாபம் அடைந்தார்கள். இதில் எவருடைய பொருள் நஷ்டமடைந்தது? முதலாளிகள் பொருளா? இம்மாதிரியான நடவடிக்கைகளை சுருக்கமாகக் கூறின் கூட்டுக்கொள்ளை யென்றுதான் சொல்லவேண்டும். இவ்வித இயக்கங்களாலும், நடவடிக்கைகளாலும் தேசம் ஒருபொழுதும் முன்னேற்றமடையாது. ஏழைகளும் பிழைக்க முடியாது. இவ்வித இயக்கங்கள் நடத்துவதைவிட பொதுவுடமைத் தத்துவங்கள் நடத்து
வது குற்றமென்று சொல்ல முடியாது. இம்மாதிரி இயக்கங்கள் நாட்டின் உண்மைத் தொழில் அபிவிருத்திக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் கொஞ்சமும் உதவி செய்யாது. இதுமாத்திரமன்றி இவ்வியக்கங்களை நடத்தும் தொழிலாளர்களின் தலைவர்களோ வென்றால் பெரும்பாலும் முதலாளிகளும். எஜமானர்களுமாகவேதான் இருக்கிறார்கள். தொழிலாளி களின் கஷ்டமும் கூலிக்காரர்களின் கஷ்டமும் ஒரு சிறிதும் அறியாமல் தொழிலாளரின் உழைப்பினாலும், கூலிக்காரரின் அறியாமையினாலும் பிழைக்கின்ற இவர்: கள் இவ்வியக்கத்தை நடத்துகின்றனர். இது எப்படி முன்னுக்கு வரும்? இதுவரை நம் நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் எவ்வளவு முன்னுக்கு வந்தன? எவ்வளவு மறைந்தன? எவ்வளவு வெற்றியடைந்தன? எவ்வளவு தோல்வியடைந்தன? எவர் ஒழுங்காக நடத்தினர்? என்பதைக் கவனித்தால் இவற்றின் பலனை நன்கு அறியலாம்.
தொழிலாளிகளும், தொழிலாளர் இயக்கங்களும் இந்த நாட்டில் முன்னுக்கு வரவேண்டுமாயின், தொழிலாளர்கள் தாங்கள் கற்ற தொழிலைக் கொண்டு தாங்களே ஒரு தொழில் தங்களிஷ்டம்போல் செய்து தொழில்
திறத்தையும் ஊழியத்தையும் அறிந்து அத்தொழிலின் பலன்களை நாட்டாருக்குக் கொடுத்து நாட்டாரை அனுபவிக்கச் செய்து, அதன் ஊதிய
முழுவதும் தாங்களே அடையும்படியான நிலைமை நாட்டிற்கு என்று வரு கின்றதோ அன்றுதான் தொழிலாளரின் நிலைமை முன்னேற்றமடையுமே அல்லாமல் கைத்தொழில் அழிக்கப்பட்டுப்போன காரணத்தால் முதலாளிகள்.
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இயந்திரங்களை அதிகம் அமைத்து திக்கற்றவர்களை கூலிக்கமர்த்தி, அவர்களிடம் கொடுமையான வேலை வாங்கி, அதன் பயனாய் கொள்ளை அடிப்பது போன்று இலாபத்தைச் சம்பாதித்து அவை வேலைக்காரர்களும் பொதுஜனங்களும் அடையாதபடி நடுவிலிருந்துகொண்டு முதலடித்து, தானே அனுபவித்து வருவதால் ஒருநாளும் முன்னேற்றமடைய முடியாது. இதுவரை தொழிலாளரின் கதி இப்படியாயினும் இனி எதிர்காலத்திலாவது தொழிலாளர் தங்கள் குழந்தைகளையும் மற்றும் தொழில் வேண்டியவர்களும் தாங்கள் கற்கும் தொழிலைக்கொண்டு மற்றொருவர் பிழைக்கும் மார்க்கமான தொழிலா யல்லாமல் தாங்கள் செய்யும் தொழிலின் பலன்களை முற்றிலும் தாங்களே அனுபவிக்கும் படியான தொழில்களைக் கற்றுக் கொடுப்பதுடன் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் இயக்கங்களை முதலாளிகளும் எஜ மானர்களும் தலைமை வகித்து நடத்த விடாமல் தானே தன் கையைக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளியோ, அல்லது கூடுமானால் தன் கைக் கொண்டு வேலை செய்து அதன் முழுப்பயனையும் தானே அடையும் படியான உண்மையானதும் சுதந்திரமுடையதுமான ஒரு தொழிலாளியோ இயக்கத்தை தலைமை வகித்து நடத்தும்படி வந்தால், இன்றைக்கே இல்லா
விடினும் கூடிய விரைவிலாவது தொழிலாளிகளும், தொழிலாளரின இயக்கங்களும் நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடியவைகளாக விளங்கும். இல்லாதவரையில் தலைவர்கள் என்போர் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்: ளவோ, முதலாளிகள் கொள்ளை அடிக்கவோ, தொழிலாளிகள் என்போர் சண்டித்தனம் செய்து வயிறு வளர்க்கவோதான் முடியும்.
குடி அரசு - கட்டுரை - 28.06.1925
குடி அரசு - 1925 82
நிர்மாண திட்டம்
அரசியல் வாழ்வில் தற்காலம் நிர்மாண திட்டங்கள் என்று சொல்லப்படுவது கதர், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு ஆகிய இம் மூன்றையே குறித்துக்கொண்டு நிற்கிறது. இவற்றை ஏறக்குறைய இன்றைக்கு நான்கு ஐந்து வருடங்களாக மகாத்மா விடாமல் வலியுறுத்தி வந்தும் கோரிய அளவு நிறைவேற்றப்பட்டதாக நாம் சொல்ல முடியாது.
அரசியல்வாதிகள் பலரால் இத்திட்டங்கள் ஊக்கமளிக்கவல்லதல்ல வென்றும், சுயராஜ்யத்திற்கு அவைகளே போதியவை அல்லவென்றும், இத்திட்டங்கள் அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்டவையல்லவென்றும், பலவாறாகப் பழிக்கப்பட்டும், மக்களுக்கு இவற்றில் மனம் செல்லாதவாறு கலக்கப்பட்டு வருகின்றது. மகாத்மா அவர்கள் இத்திட்டங்களில் கதர்த் திட்டம் ஒன்றுக்கே தனது முழு பலத்தையும் உபயோகிக்கின்றார். இரவும் பகலும் அவ்வொரு கருமத்திலேயே கண்ணாயிருக்கின்றார். நாம் அதன் தத்துவம் என்ன என்று பார்க்கின்றோமா? இல்லவே இல்லை. வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ருபாய் நம் நாட்டிலிருந்து அன்னிய நாட்டிற்குப் போகக்கூடியதும், லட்சக்கணக்கான நமது சகோதரிகளுக்கும், சகோதரர். களுக்கும் உணவளிக்கக்கூடியதான இக் கதரை நாம் ஆதரிக்காவிட்டால் பிறகு நமக்கு என்ன தேசபக்தி, என்ன சகோதர பக்தி என்பதை நாமே சிந்திப்போம். ஒரு நாடு முதலில் அது தன் பொருளாதார விஷயத்தில் மேம் பாடடையாவிடில் மற்ற விஷயங்களில் மேம்பாடடையவே முடியாது. நம் நாட்டில் மக்கள் தங்கள் மனசாட்சிப்படி நடக்கமுடியாமல் இருப்பதற்கே.
தரித்திரம்தான் காரணம். கோடிக்கணக்கான மக்கள் தொழிலில்லாமலும், உணவில்லாமலும் கஷ்டப்படுகிறபடியால் எவ்வகையாயினும் தங்களுக்கு தொழில் கிடைத்தால் போதுமென்றும் உணவு கிடைத்தால் போதுமென்றும் தங்கள் மனசாட்சியை விற்று ஜீவிக்கிறார்கள். கதர், படித்தவர்கள் என்போருக்கும், பணக்காரருக்கும் தொழிலும், உணவும் அளிக்காது என்பது உண்மையே.ஆனால் சுயராஜ்யம் என்பது உண்மையில் அவர்களுக்கு ஆக அல்ல. அவர்கள் இருவரும் உண்மை சுயராஜ்யத்திற்கு விரோதிகளே. படித்தவர்களுக்கு உத்தியோகம் வேண்டும். பணக்காரருக்கு பணமும் பிரபுத்துவமும் வேண்டும். கதரினால் இவ்விரண்டும் சித்திக்காது. ஆனால்
நம் நாட்டில் ஏழை மக்களுக்குத்தான் சுயராஜ்யம் வேண்டும். அவர்கள். வாழ்வதையே மகாத்மா சுயராஜ்ய மெனக் கருதுகிறார். அவர்களுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் வழங்குகிறார். அத்திட்டங்கள் நிறைவேற்றி
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வைப்பதையே சுயராஜ்ய சித்தியெனக் கருதுகிறார். இவற்றை ஏற்றுக் கொள்: ளாமல் படித்தவர்களான அரசியல்வாதிகளோ ஆங்கிலேயனிட மிருந்து அதிகாரமும், பதவியும் பெறுவதே சுயராஜ்யமெனக் கருதி தங்களுக்கு செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ள மாத்திரம் மகாத்மாவையும், நிர்மாண திட்டத்தையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். பதவியினாலும், அதிகாரத்தினாலும் நமது நாடு ஒரு நாளும் கஷமமடையாது..
மகாத்மாவின் காங்கிரசுக்கு வருமுன் நாம் கிளர்ச்சி செய்து ஆங்கி லேயரிடமிருந்து இருவகையாக சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படும் அதிகாரங்களும், பதவிகளும் கிடைக்கப் பெற்றோம். அவைதான் இந்திய மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் மற்றும் சில 1000, 2000, 3000, 5000 ரூ. சம்பளமுள்ள ஸ்தானங்களுமாகும். அவற்றால் நம்நாடு அடைந்த பலன் என்ன? பொறாமைகளும், தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் தன்மை களும், ஒற்றுமையின்மையும், இந்து முஸ்லீம் சச்சரவும், பிராமணர் - பிராமண
ரல்லாதார் வேற்றுமையுமேதான் மலிந்தன..
இவ்வுத்தியோகங்களும், பதவிகளும் இப்பெரும் சம்பளங்களும் இல்லாவிட்டால் நம்நாட்டில் மிதவாதக்கட்சி ஏது? ஜஸ்டிஸ் கட்சி ஏது?
சுயராஜ்யக் கட்சி ஏது? ஒத்துழையாமை இறப்பதேது? பதவிகளும், அதிகாரங் களும் மக்களை எவ்வளவு பிரிவாக்கிவிட்டன, எவ்வளவு துவேஷத்தையும் அவநம்பிக்கையும் உண்டாக்கிவிட்டன?'
மகாத்மாவால் முன்னோக்கிச் சென்ற நம் நாட்டின் விடுதலை எவ்வ ளவு பின்னடைந்துவிட்டது? இவற்றால் பொதுமக்களுக்கும், ஏழைகளுக்கும் என்ன லாபம் உண்டாயிற்று? வரிப்பளுவு குறைந்ததா? உண்மைக் கல்வி அறிவு ஏற்பட்டதா? தேசத்திற்கு அதிக வரியும் அதிக கஷ்டங்களுமே ஏற்பட்டன.
இச்சீர்திருத்தங்கள் என்னும் சுயராஜ்யம் நமக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்படுமுன், நம் நாட்டிற்கு ஏற்பட்டிருந்த வரி சுமார் 30, 40 கோடி யிலிருந்து இப்பொழுது ஒன்றுக்கு நான்காய் 150, 160 கோடிக்கு வந்து விட்டது. இந்திய ராணுவச் செலவு சீர்திருத்தம் இல்லாத காலத்தில் சுமார் 20 கோடி ரூ. இருந்தது. சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகோ 60, 70 கோடிரூபாய் வரையில் உயர்ந்
திருக்கிறது. இவ்வளவும் நாம் கொடுக்கும் வரி மூலமாய்த்தான் செலவு செய்யப்படுகிறது. நம் படித்தவர்கள் மேலும் மேலும் இதையே தான் சுயராஜ்
யம் என்று சொல்லிக்கொண்டு இதற்காகவே பாடுபடுகிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் இவ்வித அபார செலவிற்கு சர்க்காரால் வசூல் செய்யப்படும் பணங்களெல்லாம் பெரும்பாகம் ஏழைகளிடமிருந்தே அல்லா
மல் படித்தவர்களிடமிருந்தல்ல என்பதுதான். அதனால்தான் படித்தவர்கள். தங்கள் சுயநலத்தை கவனிக்கும்போது ஏழைகளை மறந்து விடுகிறார்கள். சாதாரணமாய் நம் நாட்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த காலத்தில் படித்த வர்களும், பணக்காரரும் அத்தேர்தல்களுக்காக எவ்வளவு ரூபாய் செலவ
குடி அரசு - 1925 84
ழித்தார்கள் என்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். பத்தாயிரம், இருபதா
யிரம், முப்பதாயிரம், சிற்சில தேர்தலுக்கு 50 ஆயிரம் ரூ. கூட செலவழித்
ததாகச் சொல்லப்படுகிறது. ஆறுமாத காலத்தில் இவ்வளவு பணம் செலவழிக் கப்பட்டிருக்கிறது. இவற்றை ஓட்டு சம்பாதிப்பதற்கு என்று செலவழிக்காமல் இதில் ஏற்பட்ட செலவையும், சிரமத்தையும், ஊக்கத்தையும் தீண்டாமை
விலக்கு, கதர், மதுவிலக்கு ஆகிய இம்மூன்றின் பிரசாரத்திற்கும் செலவழித்
திருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கும்? இப்பொழுது சென்னையில் நடக்கும் ஓட்டு வேட்டையை கதர் பிரசாரத்திற்கு நடத்தி வந்
தால் எவ்வளவு தூரம் நமது நிர்மாண திட்டங்கள் முற்போக்கடைந்திருக்கும்? இவற்றை அவர்கள் கவனிக்காமல் இவ்விதம் செலவும், சிரமமும் படுவதன் காரணம் ஏழைமக்கள் தங்கள் ஞாபகத்துக்கு வந்ததோ அல்லது சுயநலம் இவற்றைவிட முக்கியமானதாகக் காணப்படுவதோ இவ்விரண்டி லொன்றைத் தான் சொல்லியாக வேண்டும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் மகாத்மா வின் நிர்மாண திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் படித்தவர்
களாலும், பிரபுக்களாலும் முடியவே முடியாது. கிராமத்தில் இருக்கும் ஏழை களும், தொழிலாளிகளும்தான் இவற்றை மேற்கொண்டு நடத்த வேண்டும்.
கதர் திட்டம் நிறைவேறாமல் தரித்திரம் ஒழியவே ஒழியாது.
தீண்டாமை ஒழிக்கப்பட்டால் அல்லாது ஒற்றுமை உண்டாகவே உண்டாகாது. மதுபானம் விலக்கப்பட்டாலல்லாது ஒழுக்கம் ஏற்படவே ஏற்படாது.
குடி அரசு - தலையங்கம் - 05.07.1925.
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கோபுரத்து மீதிருந்து கூஷவேன்
“சித்திரபுத்திரன்
லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்
குக் காட்டி செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர்.
“இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம் - ஒழித்து விட்டோம்” என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு பொய் வெற்றிமுரசு அடிக்கிறார்கள். லார்டு லிட்டனோ இவர்களுக்குப் புத்தி வரும் வரை இதுதான் இவர்கள். தலையெழுத்து என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கு இனிமேல் என்ன செய்கின்றதென்கிற விஷயத்தில் தங்களுக்கும் புத்தி இல்லாமல் போய்விட்டது. சொல்புத்தி கேட்பதற்கும் சொல்லுவாரற்றுப் போய்விட்டது. சுயராஜ்யக் கட்சியார் முட்டுக்கட்டை போடுவோம் என்று ஜனங்களிடை வீரப்பிரதாபம் பேசும்பொழுதே எப்படிப் போடப்போகிறீர்களென்று பொது ஜனங்கள் கேட்டார்கள். மந்திரிகளை: ஒழித்து அரசாங்கத்தை அழித்துவிடூவோம் என்று சொன்னார்கள். மந்திரி களை ஒழித்துவிட்டால் அரசாங்கத்தாருக்கு லாபமேயன்றி நஷ்டமில்லை. அதற்குமேல் என்ன செய்யப் போகின்றீர்களென்று கேட்டார்கள். செய்வதின் னதென்று அந்த சமயத்தில் நாங்கள் சொல்லுவோம் என்று சொன்னார்கள். அந்த சமயமும் வந்துவிட்டது: இன்னது செய்வதென்று தெரியாமல் விழிக்
கிறார்கள். யாரிடத்தில் போனாலும் ஆதரவைக் காணோம். மகாத்மா காந்தி யோ இவர்களுக்குப் புத்தி வரும்வரை ஒன்றும் சொல்லப்போவதில்லை யென்கின்ற முடிவின் பேரில் இவர்கள் கூடவே சும்மா இருந்து கொண்டிருக் கிறார்கள். மிஞ்சியிருக்கும் தலைவர்களோ எல்லாருக்கும் மூக்குப்போய் விட்டால் யாரை யார் மூக்கரையன் என்று கூப்பிடுவார்களென நினைத்துக் கொண்டு எல்லோரையும் தங்கள் கட்சியில் சேருங்கள் என்று ஜனங்களைக்
கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். “வேகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்” என்பதுபோல் சிலர் இந்த சமயத்தில் முனிசிபாலிட்டியிலும், தாலூகா போர்டிலும்,ராஜாங்க சபையிலும் பதவி பெற மிகவும் அவசரமாய் அலைந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் சுயராஜ்யக் கட்சிக்கோ கட்சி எப்படி ஆயினும் சரி, சுயராஜ்யம் எப்படி ஆயினும் சரி, பிராமணர்களுக்கு
குடி அரசு - 1925 86
எப்படி உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பது என்பதுதான் அவர்களுடைய
திட்டம்.
அவர்கள் சென்ற வருஷத்தில் சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலின்போது முதல் முதல் ஜனங்களை ஏமாற்ற வேண்டியிருந்ததால் எல்லா அபேட்சகர்களையும் பிராமணரல்லாதவர்களாகவே போட்டு தங்களுக்கு வகுப்பு வித்தியாசம் இல்லையென்று ஜனங்கள் நம்பும்படியாக நடந்து நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்கள். இப்பொழுது இந்த வருஷத்திய தேர்தல்களுக்கோ பிராமண அபேட்சகர்களையே அளவுக்கு மிஞ்சி கொண்டுவந்து நிறுத்தி அபாரப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. ஒரு வருஷத்திலேயே இவ்வளவு மாறுதல்கள் இருக்கும்பொழுது இன்னும் அடுத்த வருஷம் எப்படி நடக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.ராஜாங்க சபையிலும் இதே மாதிரியாகவே சுயராஜ்யக் கட்சி என்கின்ற பெயர் வைத்து எல்லா ஸ்தானங்களும் பிராமணர்களுக்கே கிடைக்கும்படியான மாதிரிக்கு பிரசாரங்கள் ஆரம்பமாகிவிட்டன. “பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பதுபோல்” சுயராஜ்யக் கட்சியின் பெயரால் தமிழ்நாட்டில் அட்டகாசம் செய்யப்பட்டு வருகின்றது. பிராமணர்: களே கூடாதென்றாவது, பிராமணரல்லாதார்களே இருக்க வேண்டுமென்றா வது என்னுடைய அபிப்பிராயமல்ல. மிதவாதக் கட்சியின் பெயர் சொல்லிக் கொண்டு பிராமணர்கள் பட்டமும், பதவியும், உத்தியோகமும் பெறுவதைப் பற்றியாவது. ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணரல் லாதார் பட்டமும், பதவியும், உத்தியோகமும் சம்பாதிப்பதைப் பற்றியாவது நமக்குக் கவலையில்லை. அதற்காகவே அவர்கள் கட்சி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் சொல்லிக்கொண்டு எத்த னையோ தேசபக்தர்களும், தொண்டர்களும் செய்த தியாகத்தையும், அவர்கள் ஜெயிலுக்குப்போய் அனுபவித்த கஷ்டங்களையும் “கரையான் புற்றெடுக்க பாம்பு குடிவருவதுபோல்” சில பிராமணர்கள் உபயோகப்
படுத்திக் கொள்ளப் பார்ப்பது யோக்கியமாகுமா? இதை அனுமதிக்கலாமா? என்பதுதான் எனது கேள்வி. அல்லது காங்கிரஸ்காரர்கள் போய்த்தான் ஆக வேண்டும். அவர்கள் ழி இரண்டு கட்சிக்காரரைவிட யோக்கியர்கள் என்று சொல்லவருவார்களேயானால் அவரவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பதவி, பட்டங்கள் உபயோகப்பட வேண்டுமென்பதுதான். பிராமணரல்லாத மற்றவர்களில் இந்த ஸ்தானத்திற்குத் தகுதி உள்ளவர்கள் இல்லையென்கின்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டால் பிறகு என்ன வேண்டு. மானாலும் செய்து கொள்ளலாம்.தகுந்த ஆட்கள் இருக்கிறார்களென ஒப்புக் கொண்டு அவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக வேஷமும் போட்டு,
சமயம் வருகிற காலத்தில் இம்மாதிரி மோசம் செய்வதும் அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கட்சியை அமைத்துக்கொண்டு பொது நன்மைக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தால் எத்தனை காலத்திற்கு ஜனங்கள் ஏமாறுவார்கள்! கொஞ்ச
காலத்திற்கு எல்லோரையும் ஏமாற்றலாம். கொஞ்சம் பேரை எப்பொழுதும்
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஏமாற்றலாம். எப்பொழுதும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழி சுயராஜ்யக் கட்சிக்காரருக்கு ஞாபகத்திற்கு வரும்படியாக தமிழ் மக்கள் எப்பொழுது நடந்துகொள்கின்றனரோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கும், தமிழர்க்கும் விடுதலையும், சுயமரியாதையும் ஏற்படும் என்பதை கோபுரத்து மீதிருந்து கூவுவேன்.
குடி அரசு - கட்டுரை - 05.07.1925
குடி அரசு - 1925 88
தமிழர் கதி
வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்ட மும்
தமிழ் மக்களுக்கு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்து மதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரிட்சை காலமாகும். வைக்கம் சத்தியாக்கிரகமோ தமிழரைப் பார்த்து நான்கு வீதியில் மூன்று வீதிகளை உங்களுக்குத் திறந்து விட்டாய்விட்டதே ஓர் வீதியில்தானா உங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே இதென்ன பயித்தியமா என்று கேட்கிறது. குருகுலப் போராட்டமோ பதினெட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பதினேழு பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு ஓர் பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள். பார்க்கக் கூடாதென்றால் என்ன குடி முழுகிப் போய் விட்டது? இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதல்லாமல், உட்சண்டைகளையும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப் போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்கிற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக்கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாதென்று சொல்லுகிற பொழுதும், சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்லுகின்றனர். என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். அன்னிய மதஸ்தர்களான மகம்மதியர்கள், கிருஸ்தவர்கள், பார்சிகள் முதலியோர்கள் நடக்கலாம். பன்றி
யும், நாயும், பூனையும், எலியும் வீதியில் நடக்கலாம்; சாப்பிடும் பொழுதோ இதர சமயங்களிலோ பார்க்கலாம்; ஆயிரக்கணக்கான வருஷங்களாக
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தமிழ் நாட்டைத் தன்னுடைய தாக்கிக் கொண்டிருக்கும் இந்துவாகிய தமிழனை அவனுடைய நாட்டில் மற்றொருவன் “நீ வீதியில் நடக்காதே, என் முன் வராதே” என்று சொன்னால் மனித உடல் தரித்திருக்கும் ஒரு ஜீவன் அதை எப்படி சகித்துக் கொண்டி ருக்கிறது என்பதுதான் வைக்கம் சத்தியாக்கிரகத் தினுடையவும் குருகுலப் போராட்டத்தினுடையவும் தத்துவம். இதே தத்துவத் திற்காகத்தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் செய்த சத்தியாக் கிரகமும், கெனிய
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஏகாதிபத்திய பகிஷ்கார தினக் கொண்டாட்டமும் நடத்தப் பட்டனவென்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
குடி அரசு - கட்டுரை - 05.07.1925
குடி அரசு - 1925 90
ஈரோடு நகராசயை நிர்வாகம்
- பழைய கறுப்பன்
ஈரோடு நகரசபையின் அமைப்பும், நிர்வாகமும் மிகவும் சீர்கேடான நிலைமையில் இருக்கின்றன. தற்போது உள்ள நகரசபையின் நிர்வாகத் திறனைக் காண்போர் ஒவ்வொருவரின் உள்ளத்தினும் நகரமாந்தரின் நலத்திற்காக நகர சபையா? நகர சபைக்காக நகர மாந்தரா? நகரசபை நிர்வாகி களுக்காக நகரசபையும், நகர மாந்தர்களுமா? என்ற எண்ணங்கள் குடி கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.நகரசபையின் அமைப்பைப் பற்றியும், நிர்வாகத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்பு கின்றேன். அவைகளை நன்கு ஆலோசித்து தக்கது செய்ய வேண்டியது ஈரோடு நகர மாந்தர்களின் கடன்.
தத்துப்பிள்ளைகள் தலைவரான!
நகரசபையின் தலைவர் ஒரு வக்கீல், உபதலைவர் ஒரு டாக்டர். இவ்விருவர்களும் சில வருஷங்களுக்கு முன் தங்களுடைய தொழிலை முன்னிட்டு பிறந்த ஊர்களை விட்டு விட்டு இவ்வூரில் குடி ஏறினவர்கள். ஆகவே இவர்கள் ஈரோட்டார் அல்ல. ஆனால், பிற ஊரார் வேறு ஊரில் சில வருஷங்கள் வசித்தால் தாம் அண்டின ஊரின் தத்துப்பிள்ளைகள் ஆய் விடுகின்றனர் என்ற விதி சில நாடுகளில் இருக்கக் காண்கிறோம். அவ் வகையில் இவ்விருவர்களும் ஈரோட்டின் தத்துப்பிள்ளைகளாக ஆயினர். ஈரோட்டாரின் உரிமைகள் இவர்களுக்கும் உண்டு. ஆகவே, தற்காலம் இவர்கள் வகித்துவரும் பதவிகளுக்கு இவர்களுக்கு உரிமை உண்டு. அதை மறுக்க நமக்கு உரிமையில்லை. ஆனால் “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்
குக் கொண்டாட்டம்” என்ற பழமொழி தமிழில் உண்டு. இத் தமிழ்ப் பழ மொழியைப் பெற்ற தமிழர்கள் தத்துப்பிள்ளைகளின் ஆதரவிற்கு உட் படாமல் என் செய்யமுடியும் ? ஈரோடு மாந்தரின் தலைவிதி. இதுநிற்க..
நகர சபையில் இரட்டை ஆட்சி
“இரட்டை ஆட்சி” என்பதை அறியாத தமிழர் கிடையாது:ஆகை
யால் ஈரோட்டாரும் இதை அறிந்துதான் இருக்க வேண்டும். இந்திய ஆங்கில அரசாங்கத்தில்தான் இந்த முறை என்று அநேகர் நினைத்துக் கொண்டி
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ருப்பார்கள். இந்த விதமான ஆட்சி நகரசபைகளில் இருப்பதை ஒருவரும் அறியமாட்டார்கள். பாவம்! ஈரோடு நகரசபை ஒன்று இருப்பது இவர்க
ளுக்குத் தெரியாது. அதனால் அந்த மூட எண்ணம் “இரட்டை ஆட்சி” ஈரோடு நகரசபையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டு விட்ட சந்தோஷகரமான
செய்தியைத் தமிழ்நாட்டாருக்கு இந்தக் குடி அரசின் மூலம் அறிவித்துக் கொள்ளுகிறேன்.
எந்த நகரசபையிலும் காணாத “இரட்டை ஆட்சி” எங்களூர் நகரசபையில் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிய அநேகர் ஆவல் கொள் வார்கள். அவர்களுக்கு அதன் பிறப்பு, வளர்ப்பைப் பற்றிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நகரசபையின் தலைவருக்கும், உபதலைவருக்கும் ஏற்பட்ட ஊடல் இரட்டை ஆட்சி என்னும் குழந்தையைப் பெறத் துணை செய்தது. ஊடல் உண்டாவதெல்லாம் இரண்டு உயிர் அன்பர்களுக்குள்தான். இது உலக இயற்கை. இயற்கை எங்கும் - எவ்விஷயத்திலும் மாறாது. இரு தலைவர்களும் முதலில் ஒரே கட்சியில் மும்முரமாக உழைத்து வந்தார்கள். எமது தலைவர் தமது தற்காலப் பதவியைப் பெற எமது உபதலைவர் பட்டபாடுகள் விவரிக்க முடியாது. அல்லும் பகலும் ஓயாமல் உழைத்து எமது தற்காலத் தலைவரை எமக்குத் தந்தார். ஆகவே, இருவர்களின் நேசத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இருவரும் அதிகாரப் பதவி பெற்றார்.
கள். மனமொத்து ஒரே கட்சியில் இருந்து வந்த இரு நண்பர்களுக்கிடையே அதிகாரம் என்ற பேய் குறுக்கிட்டு ஊடலை உண்டாக்கிற்று. இந்த ஊடல் நகரசபைக்கு சிப்பந்திகள் நியமிக்கும் விஷயத்தில் சண்டையை விளைவித்
தது. தலைவர் நியமித்த சிப்பந்தியை உபதலைவர் ஓட்டி விடுகிறது; உப தலைவர் நியமித்த சிப்பந்தியை தலைவர் வெளியே தாட்டி விடுகிறது.இவர் களின் ஊடல் நகரசபைச் சிப்பந்திகளுக்குச் சனியனாக விளைந்தது. இது எப்படி முடியும் என்று அநேகர் நினைக்கலாம். காரணம் சொல்லுகிறேன். எங்கள் தலைவருக்கு வெளியூரில் அடிக்கடி வேலையுண்டு. அவர் இல்லாத காலத்தில் உபதலைவர் அவர் வேலைபார்த்து வருவதென்பது சட்டம். ஆகவே, தலைவர் ஊரில் இல்லாவிட்டால் உபதலைவருக்குக் கொண்டாட் டம்தான். அவர் இஷ்டத்தை முடித்துக் கொள்ள அதுதான் காலம். சிப்பந்தி நியமன விஷயத்தில் இவ்வளவு சண்டைகள் போட்டுக்கொள்ள என்ன காரணமோ? ஈஸ்வரனுக்குத்தான் தெரியும். நாம் தலைவராகச் செய்து வைத்த ஒருவர் தமது இஷ்டம் போல் நடக்க மறுக்கிறார் என்ற காரணமாக இருக்க
லாம் உபதலைவருக்கு. தலைவரின் அதிகாரத்தில் ஒருவர் தலையிடக் கூடா தென்ற காரணமாக இருக்கலாம் தலைவருக்கு. இருவரும் எனக்கு அந்தரங்க நண்பர்கள் அல்ல. ஆகையினால் உண்மைக் காரணம் இன்ன தென்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இப்படித்தான் இருக்கக்கூடும் என்று தானே இந்த நிலைமையில் சொல்லக்கூடும். இருவர்களும் இந்த மர்மத்தை ஈரோடு. நகர மாந்தர்களுக்கு விளக்க முன் வருவார்களானால் அவர்களுக்கு ஆயிரம் நமஸ்காரம். “இரட்டை ஆட்சி'யை மறந்து விட்டதாக நேயர்கள் நினைக்க
குடி அரசு - 1925 92
வேண்டாம். இந்த சண்டைகளினால் அலுத்துப்போய் இருவர்களும் ராஜி செய்து கொண்டார் போலத் தெரிகின்றது. நகரசபை நிர்வாகத்தில் சில இலாகாக்களைத் தலைவரும், சில இலாகாக்களை உப தலைவரும் வைத்துக் கொள்வதென்பதுதான் ராஜியின் முடிவு. இவ்வாறு “இரட்டை ஆட்சி”
ஸ்தாபிதமாயிற்று.
இவ்விதம் இருவரும் ஒருவாறு ஒன்றானார்கள். ஊடலின் முடிவு கூடல்தானே. இரட்டை ஆட்சிக் குழந்தை பிறந்து இரண்டொரு மாதங்கள் தான் ஆயின.ஆகையினால், அதன் வளர்ப்பைப் பற்றி என்னை ஒருவரும் கேட்கக்கூடாது. இன்னும் சில நாள் சென்றால் நானே சொல்லுகிறேன். அது வரை நீங்கள் பொறுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். இவ்வளவு கண்டிப்புக்காக மன்னிக்க வேண்டும்.
நகரசபை ஆபிஸ் தலைவர் வீடு
எங்கள் தலைவருக்கு நகரசபைக் கட்டிடம் தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மாத்திரம் தெரியும். நகரசபை வேலை யெல்லாம் தலைவர் வீட்டிலேயே நடந்து வருகின்றன. நகர சபை சிப்பந்தி களைத் தினந்தோறும் காகிதக் கட்டுகளுடன் தலைவர் வீட்டில் காணலாம். நகரசபை வேலைகள் தலைவர் வீட்டிலேயே நடக்கும்போது, நகரசபை கூடும் கட்டிடத்தைத் தவிர வேலை செய்யும் கட்டிடத்தை வாடகைக்குக் கொடுத்து விட்டால் நகர சபைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் ஒரு தடை, இரட்டை ஆட்சி இல்லாமல் இருந்தால் இந்த யோசனையை ஒருவேளை நகரசபையார் அங்கீகரிக்கக்கூடும். உபதலைவர் இலாகா வேலைகள் நகர சபைக் கட்டிடத்தில் கவனிக்கப்பட்டு வருவதாகக் கேள்வி. கட்டிடத்தை வாடகைக்கு விட்டுவிட்டால் பாவம் !அவர்கதி என்ன வாகும். எதற்கும் என் யோசனையை நகரசபை அங்கத்தினர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
பெருமாளுக்குப் பதிலாக “பெத்த” பெருமாள்
எங்களூர் நகரசபையாருக்கு சுகாதார விஷயத்தில் மிக்க கவலை. ஆகவே, சுகாதாரக் கேடான காரியங்களைக் கவனிக்காமல் இருக்க முடியா தல்லவா? லார்டு நேப்பியர் வீதியும், ஈஸ்வரன் கோவில் வீதியும் சந்திக்கு மிடத்தில் ரோட் மார்ஜனில் சிலர் பலகாரக் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். அவைகள் எல்லாம் “மிலிடேரி” கடைகள். பக்கத்தில் விநாயகர் கோவில். பின்னால் நகரசபை அங்கத்தினரும் பணக்காரருமான. ஒருவருடைய வியாபாரக்கடை. பலகாரக் கடைக்காரர்கள் அங்கு இருந்த தினால் சுகாதாரக் கேடான காரியங்கள் நிகழ்ந்ததென்பது வாஸ்தவமே. கடை களோ மிகச் சிறியது; எப்பொழுதும் குளம்போல முன்னால் தண்ணீர் இருந்த வண்ணம் தான் கொசுக்களுக்குத் தாயகம். இவ்வளவு சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் கடைகளை எடுத்துவிட வேண்டுமென நகரசபையார்.
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தீர்மானித்தனர். “சிவில்” விநாயகருக்கு “மிலிடேரி” உணவு பக்கத்தி லிருப்பது இந்துக்களுக்குப் பிடிக்கவில்லை. இந்துக்களின் உணர்ச்சியை மகம்மதிய நண்பர்கள் மதித்து அவைகளை எடுத்துவிட வேண்டுமென்று கூறியதற்கு என்னுடைய வந்தனம். கடைகளை எடுத்துவிடக் காரணம் சுகாதாரக்கேடு - விநாயகர் ஆகிய இரண்டும்தான். இந்த இரண்டு காரணங்
கள் தீர்மானித்த காலத்தில் வாயாரச் சொல்லிக்கொண்டது. கடைகள் எடுக்கப் பட்டு விட்டன. மிகவும் சந்தோஷம்! போதும் உங்கள் சந்தோஷம்; தயவு செய்து அடக்கிக் கொள்ளும்படியாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். பலகாரக் கடை விஷயம் இன்னும் முடியவில்லை. டி கடைக்காரர்கள் எல்லாம் இப்பொழுது முன்னிருந்த இடத்திற்கு 50 அடி தள்ளி குடிசைகள் கட்டி வியாபாரம் செய்து வருகிறார்கள். எங்கே? ரோட் மார்ஜனிலா? இல்லை, இல்லை. ரோட்டின் மேலே சாக்கடைகளை மூடி. பழைய நிலைமை யில் ஷெயார் உபயோகிக்கும் தண்ணீர் சாக்கடையிலாவது போயிற்று. இப் பொழுதோ நடுரோட்டிலே தான். எச்சில் இலைகளெல்லாம் நடுரோட்டில் தான். நகரசபையாரின் சுகாதார உணர்ச்சியை நேயர்கள்தான் மெச்ச வேண் டும். சுகாதாரம் சுகாதாரம் என நகரசபையில் முன்னமே கூச்சல் போட்ட தெல்லாம் மாய்மாலம் என்பது வெளியாய்ப் போய்விட்டது. “விநாயகர்” கூச்சல் எல்லாம் வெறும் வார்த்தைகள் என்பதும் நிச்சயம். “மிலிடேரி” உணவின் வாசனை 50 அடி தூரத்திலுள்ள விநாயகருக்கு எட்டாமல் போனால் அவருக்கு இந்துக்கள் “கெளரவமான கல்லறை அடக்கம்” செய்ய வேண்டியது. ஆகவே, அவர்கள் கூறின இரண்டு காரணங்களும் சரியல்ல என்பது நிச்சயம். வேறே காரணம் அவசியம் இருக்க வேண்டும். ஷி கடை
கள் பழைய இடத்தில் இருந்த காலத்தில் அவைகளுக்குப் பின்னால் இருந்த மண்டி வியாபாரக் கடையாருக்கும் இடைஞ்சல் இருந்திருக்கலாம். நண்பர்.
கள் உதவி செய்தார்கள் போலும்! இல்லையென்றால், தங்கள் நடவடிக்கைக்
குத் தக்க சமாதானம் ஈரோடு மாந்தருக்குச் சொல்ல நகரசபையார் கடமைப் பட்டிருக்கிறார்கள் - கடமை ஏட்டுச் சுரைக்காய்தான் என்றால் நான் ஒன்றும் பேசவில்லை.
ஜனங்கள் நொண்டியடிக்கிறார்கள்
வேறு சங்கதிக்குப் போகலாம். ஈரோட்டில் நகரசபை ரோட்டுகளில் நடக்கப்போகிறார் என்று வீட்டை விட்டவுடனே எப்படியோ என்னுடைய கால்கள் அறிந்து கொள்ளுகின்றன. பாவம்! அவைகள் கெஞ்சுவதைக் காண எனக்கு மனம் வருந்துகிறது. ஆனால் என்ன செய்வது? காலா சோறு போடுகிறது? கொஞ்ச நாளாக எங்களூரில் வருண பகவானுடைய கிருபை அதிகம். வறண்டு கிடக்கிற காங்கயம் முதலான இடங்கள் அந்த பகவானுக்
குக் கண் தெரியவில்லை. வேண்டாம் வேண்டாம் என்றாலும் எங்களை விடுவதில்லை - பாவம்! எங்களூர் நகரசபையாரின் நிர்வாகத்திறன் அந்தப் பகவானுக்குத் தெரியவில்லை. பீஷர் வீதி கொஞ்சம் முக்கியமான வீதி.
குடி அரசு - 1925 94
சந்தைப்பேட்டை அந்த வீதியில்தான் இருக்கிறது. சந்தை வியாபாரப் போக்குவரத்தும் அங்கேதான் அதிகம். நகரசபையாரை சற்று சந்தைப் பேட்டைக்கு முன்னால் எழுந்தருளி தங்கள் பாத தரிசனத்தை அந்த ரோட்டுக்குத் தந்தருளுமாறு வேண்டுகின்றேன். கருங்கல்பாளையம் ரோடு களில் ஓடுகின்ற நாய்கள் எல்லாம் கொஞ்ச தூரத்தில் காலை நொண்டி அடிக்க ஆரம்பித்து விடுகின்றன. மனிதர் சங்கதி சொல்ல வேண்டுமா? நகர சபையாருக்கு ஒரு யோசனை.நகரசபையின் ஆதரவில் ஒரு பாதரட்சைக் கடை திறந்து வைத்து விலையில்லாமல் - முடியாதென்றால் குறைந்த விலைக்காவது நகர மாந்தர்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யும்படியாகக் கேட்டுக் கொள்ளுகின்றேன். அவ்விதம் செய்வார்களானால் பல்லாயிரம் ஜனங்களின் ஆசீர்வாதத்தையும் வாழ்த்தையும் பெற்று நெடுங்காலம் சுக ஜீவர்களாக இருப்பார்கள். பெரும் புண்ணியமும் உண்டு. ஆனால் இந்த வம்பனுடைய யோசனையையார் கேட்கப்போகிறார்கள்.
இருட்டுக்கு வரி
எங்களூர் முழுவதிலும் மின்சார விளக்குப் போடவேண்டுமென்ற உத்தேசம் நகரசபையாருக்கு இருப்பதாக அறிகிறேன். அவ்விதம் ஏற்பட்டு விட்டால் ஈரோட்டை என்னவென்று அழைப்பது என்று எனக்கு இப் பொழுதே யோசனை. தேவலோகத்தில்தான் இருட்டே இல்லை என்கிறார்கள். ஆகையினால் ஈரோட்டை “தேவலோகம்” என்று அழைக்கலாம் என்று யோசனை கூறுகிறேன். இந்த யோசனையின் கதி அதோகதி தான் என்பதும்
தெரியும். காரணம் அறிய விரும்பலாம். தேவலோகம் இந்து பெயராயிற்று. இங்கிலிஷ்காரர்கள் கோபித்துக் கொள்வார்கள். என்ன செய்வது? கொஞ்ச வருஷங்களுக்கு முன் நமது ஊரில் நகரசபையார் கட்டின மார்க்கெட்டுக்கு நாமகரணஞ் செய்தது ஞாபகம் இருக்கலாம். ஹெம்மிங்வே மார்க்கெட் என்பது அதன் திருநாமம். இங்கிலீஷ்காரர்கள் பெயரை வைக்காவிட்டால் அவர்கள் கோபித்துக் கொண்டு இந்தியாவை விட்டுப் போய்விடுவார்களே! அப்பொழுது நம் கதி என்ன? முட்டாள் நான், இந்த யோசனை எனக்கு முன்னமே தோன்றாமல் என்னமோ உளறினேன். நகர சபையார் மன்னிப்
பார்களாக..
ஆனால் இன்னொரு விஷயம். மின்சார விளக்குதான் வரப்போ கிறதே:அதற்குள் கொஞ்சம் இருட்டில்தான் நம்மவர் இருந்தால் என்ன என்று தற்காலம் நகரசபையார் நினைக்கிறார்கள் போலும். வாஸ்தவம். நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும். இருட்டில் இருந்து வந்தால்தானே மின்சார வெளிச்சத்தின் வேகம் தெரியும். நகரசபையார் இந்த ஊரில் சுமார்.
15 காஸ் லைட்டுகள் போட்டு வருகிறார்கள். அவ்வேலை காண்ராக்ட்டில் நடந்து வருகிறது. சென்ற அமாவாசையன்று காலை 3.30 அல்லது 4 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேசனுக்குப் போக வேண்டியிருந்தது. பெண்டு
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பிள்ளைகளுமாகச் சுமார் 12 பேர்கள் போனோம். எங்கள் வழி லார்டு நேப்பியர் வீதிதான். அந்த வீதியில் 6 காஸ் லைட்டுகள் இருப்பதாக என்னு டைய நம்பிக்கை. தப்பாயிருந்தால் தயவு செய்து திருத்தினால் ஒப்புக் கொள்ளுகிறேன். ஈரோடு மரப்பாலத்தருகில் ஒரே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எல்லா விளக்கும் தூங்கிக் கொண்டிருக்கும்போது இந்த விளக்குக்கு வந்த கேடென்ன என்று யோசித்து இங்குமங்கும் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனேன். இன்னும் இரண்டு விளக்குகள் கண்ணுக்குத் தென்பட்டன. எங்கே ? காரை வாய்க்கால் ரோட்டில். இந்த மூன்று விளக்குகள். மாத்திரம் எரிய என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே முடிவுக்கு
வராமல், ரயிலுக்கு டிக்கட் வாங்கி எல்லோருமாக குப் போய் விட்டோம். ஆனால், இந்த சங்கதி மாத்திரம் என் மனதைவிட்டு அகலவே யில்லை. என் மூளைக்கும் எட்டவில்லை. ஒரு நண்பரிடம் இதைப்பற்றிச் சொன்னேன். அவர் ஒரு காரணம் சொன்னார். அது என்னமோ எனக்கு அவ்வளவுநல்ல காரணமென்று தோன்றவில்லை. ஆனால், அவர் சொன்ன காரணத்தைச் சொல்லி விடுகிறேன். இதைப் படிப்பவர்கள் என்ன முடிவு செய்து கொண்டாலும் சரி.காரணம் இதுதான். நகரசபைத் தலைவர் வீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் தான் அமாவாசை ராத்திரியிலுங்கூட காஸ் லைட் எரியாவிட்டால் காண்ராக்டர் கதி என்னவாகிறது என்பதுதான். அது எப்ப டியோ போகட்டும். இன்னொரு முக்கியமான சங்கதி. காஸ் லைட் காண் ராக்ட்டு வருஷா வருஷம் கொடுப்பது வழக்கம். இந்த வருஷம் இரண்டு வருஷத்திற்கு ஒட்டுக்காக நகரசபையார் கொடுத்து விட்டார்களாம். இப்பொ முதுள்ள காண்டிராக்டர் தான் போன வருஷமும் இவ்வேலை செய்தவர். அக்காலத்தில் அவருடைய வேலையின் திறமையைப்பற்றி அப்பொழு துள்ள நகரசபை அங்கத்தினர்களும், தலைவரும் ழெயாருக்குக் கொடுத்
திருக்கும் “நற்சாட்சி” பத்திரங்களை இப்பொழுதுள்ள நகரசபையார் வெளியிடுவார்களா என்று கேட்கிறேன்.எனக்குப் பதில் யார் சொல்வார்களோ தெரியாது.
திருடனுக்குப் பதிலாக பக்காத் திருடன்
தற்கால நகரசபையார் ஈரோட்டாரின் சுகாதாரத்திற்காகப் பாடுபடுகிற சங்கதியை முன்னமே சொன்னேன். இன்னொரு சங்கதி. ஈரோட்டிற்குப் புதிதாக ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். நமது நகரசபையாரின் தண்ணீர். தர்மத்தைக் காணவே வந்திருக்கிறார். மலேரியா ஜுரம் ஈரோட்டில் கிடைய வே கிடையாது. தண்ணீர்க் குழாய் ஏற்பட்ட நாள் தொட்டு மலேரியா ஜுரம் நடமாடுகிறது. ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருந்தால் போதாது. வீணாகிற தண்ணீரும் கெட்ட தண்ணீரும் நகர எல்லையை விட்டு ஓடிப் போனாலல்லவோ கொசு ராஜாவின் பரிபாலனம் இல்லாமல் இருக்கும். குழா
யில் இருந்து வரும் ஜலமெல்லாம் குழாய்க்கு அடியிலே குட்டையாகத்தான்; மீறினாலோ, ரோட்டிலேதான். சரியாக சாக்கடைகள் கட்டி, தண்ணீரை
குடி அரசு - 1925 96
வெளியேற்றினால் அல்லவோ நிலம் காய்ந்து கொசுக்கள் இல்லாமல்
இருக்கும். கொசு ராஜாவின் இளங்குமாரன்தான் நமது மலேரியா ஜுரம். நகரசபை ஆஸ்பத்திரிகளில் எத்தனை பேர் மலேரியா ஜுரத்திற்காக வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நகரசபையார் ஒரு நாளைக்குச் சென்று பார்த்தால் சங்கதி தெரியும்.நல்ல தண்ணீர் ஜனங்களுக்குக் கொடுத்து காலரா என்ற வியாதியை ஊரை விட்டு ஓட்டின புண்ணியம் நகரசபை யாருக்கு உண்டென்பதை மறக்கவில்லை.திருடனைத் துரத்திவிட்டு பக்காத் திருடனைக் கொண்டு வந்த மாதிரியல்லவோ இருக்கிறது காலராவை யோட்டி மலேரியாவைக் கூட்டிவந்தது. காலராவோ மனிதனை இரண்டொரு நாளில்
முடிவு செய்துவிடுகிறது. மலேரியா மனிதனை வாட்டி, வாட்டி சித்திரவதை செய்கிறதென்பதை நகரசபையாருக்கு நான் சொல்ல வேண்டிய தில்லை.
* தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான் ஒருவன்”
என்பார்கள். அந்த மாதிரி இருக்கிறது நமது நகரசபையார் காரியம். மலேரியா ஜனங்களை வாட்டுகிறது. சாக்கடை கட்டுகிற சத்தமே காணோம். குளிர் காய்ச் சலினால் வருந்துகிற ஜனங்கள் முக்காடு போட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு நல்ல காற்று வாங்குவதற்காக “சிங்கார நந்தவனங்கள்” ஏற்படுத்தும் முயற்சி
யில் நமது நகரசபையார் இறங்கியிருக்கிறார்கள்! உண்மையாக இந்த ஊரின் சுகாதாரத்தைத் தேடினால் இந்தக் கடைகளையெல்லாம் கட்டிவிட வேண்டும், அவைகளைப் பின்னால் திறந்து கொள்ளலாம்.அவசியமான செலவு போக மிச்சமாகும் ஒவ்வொரு தம்பிடியையும் சாக்கடை கட்டுவதில் செலவிட நகரசபையார் முன்வர வேண்டும். ஏழை அழுதகுரல் அம்பலம் ஏறுமா?
சிங்கார நந்தவனம்
இதேது இவன் நிறுத்தமாட்டான் போல் இருக்கிறதே என்று நினைக் காதீர்கள். “அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்” என்று என் தாயார் சொல்ல
நான் கேட்டிருக்கிறேன். என் தாயார் போய்விட்டார்கள்.நகரத் தந்தையாரிடம் அழுதால் ஏதாவது கிடைக்காதா என்று முன் வந்திருக்கிறேன். தந்தையின் யோக்கியதை உலகம் அறிந்ததே. அடித்தாலும் அணைத்தாலும் தாய் என்பது தெரியும். ஆனால் வேறுகதி இப்போது இல்லையே. “சிங்கார நந்தவனம்” என்று மேலே சொன்னேன். அந்த வனம் ஏற்படுத்தப்போகும் இடங்களில் உள்ள சொந்தவனமான கள்ளிகளை எடுக்க காண்டிராக்ட் கொடுத்திருக் கிறார்களாம். இந்த வேலைக்கு நகரசபையின் அநுமதியுண்டோ இல்லையோ தெரியாது.அவர்களின் அநுமதியை எதிர்பார்த்து தலைவரே செய்கிறாரோ என்னவோ அதுவும் தெரியாது. உண்மையை யாராவது சொன்னால் மிக்க வந்தனம். இதற்காக 500 செலவாகுமாம். இதுவும் கேள்வித்தொகைதான். திருத்தினால் வந்தனத்துடன் ஒப்புக் கொள்ளுகிறேன். இந்தத் தொகை: உண்மையாக இருக்குமானால் ஈரோட்டாரின் வரிப்பணம் நாசமாகப் போவ
தைக் குறித்தும் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வடி இடத்திலுள்ள கள்ளியை எடுக்க எவ்வளவு அதிகமானாலும் ரூ.250க்கு மேல் தேவை
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யில்லை. ஏன் இரட்டிப்புச் செலவு என்று கேட்கிறேன்? அநியாயமாக ஏழை களின் பணத்தை இப்படி நாசமாக்கலாமா? என்று கேட்கிறேன். அவர்கள். தானே வாயில்லாப் பூச்சிகள். பணக்காரனுக்கு வரி போட்டால் அப்பீல் என்கிறான் - பெரிய இடத்து சிபார்சுகள் பறக்கின்றன - அடுத்த எலக்ஷனில் வோட்டு பயம் உண்டாக்குகிறான் - தன் காரியத்தைச் செயித்து விடுகிறான் - ஏழையோ? வரி போட்ட சங்கதியும் தெரியாது, அப்பீல் போட்டாலும் ஆதரிப் பாரைக் காணோம் - அவனுடைய தயவு யாருக்கு வேண்டும்? ஆனால் நகரசபையாருக்கு ஒரு வார்த்தை. “ஏழை அழுத கண்ணீர் . அதற்கு மேல் அவர்கள் இஷ்டம் இவ்வளவோடு போதும்- அழுது அழுது தொண்டையும்
காய்ந்து விட்டது; உடலும் சலித்து விட்டது; ஊற்றுப் பேனாவில் இங்கியும்
தீர்ந்து விட்டது - பாக்கி அழுகை பின்னால்.....
குடி அரசு - கட்டுரை - 05.07.1925
குடி அரசு - 1925 98
பர்க்கண்ஹைத் யிரபுவிண் பரீட்சை
இந்தியா மந்திரி பர்க்கன் ஹெத் பிரபு “உங்களுக்குக் கொடுத்த சீர்திருத்தத்தை ஒழுங்காக நடத்தவில்லை. இனியாவது இரட்டை ஆட்சியை ஒழுங்குடன் நடத்துவீர்களாயின் 1929 ம் வருஷத்திற்கு முன்னர் சீர்திருத்தம் கொடுக்கலாமா என யோசிப்பேன்” என்று கூறிய உரைகளைக் கண்டு இந்திய அரசியல்வாதிகள் என்போரும் இந்திய அரசியல் பத்திரிகைகள் என்பவை களும் கண்ணீர்விட்டுக் கரைகின்றதை நோக்குழி பாஞ்சால வீரர்களான டயர், ஓட்வியர் போன்றார் மனதும் இளகிவிடும். ஆயினும், யாம் அதைப்பற்றிச்
சிறிதும் கவலை உறக் காரணத்தைக் கண்டிலம். பர்க்கன் ஹெத் பிரபு கழறுவது போன்று மாண்ட் - போர்டு சீர்திருத்தம் என்னும் சர்வகலா சாலையில் யாம் மாணாக்கராய் ஒருபொழுதும் இருந்ததில்லை. மழைக்கும்
சற்று நேரம் அக்கலாசாலைக்குச் சென்று ஒண்டியிருந்தோமில்லை.
சீர்திருத்தப் பரீட்சை கொடுத்து நற்சாட்சிப்பத்திரம் பெறவும் எமது மனம் ஒருப்படவில்லை.அச்சர்வ கலாச்சாலையில் கற்ற மாணாக்கர்களும் அதன் பரீட்சைக்குச் சென்ற வித்தியார்த்திகளுமே தங்கள் பரீட்சையில் பர்க்கன் ஹெத் பிரபு கழித்து விட்டாரே என அழவேண்டுமே அல்லாது யாம் கவலை உறுவதில் சிறிதும் பொருள் இல்லை.பர்க்கன்ஹெத் பிரபுவினாலோ பிரிட்டி ஷாரின் மற்றைய எவரினாலோ இந்தியாவிற்குச் செய்யக்கூடியதோ அன்றி ஆகக்கூடியதோ ஒன்று உண்டோ என ஐயுறுகிறோம். உண்மையான ஒரு பிரிட்டிஷ் மகனிடம் இந்தியா இதுகாலை இவ்வித ஆணவ வீரப்பிரதாபமான உரைகளை அன்றி வேறு என்ன கருத்தை எதிர்பார்க்கமுடியும்? பர்க்கன் ஹெத் பிரபு உண்மையாளராயிருப்பதைக் கொண்டு பிரிட்டிஷாரின் கருத்தை தெளிவான மொழியில் விளக்கினார். சற்று கபடமும் தந்திரமும் உள்ள வேறு ஒரு பிரிட்டிஷ் மகனாய் இருந்தால் இதே கருத்துக்களை நமது அரசியல் வாதிகள் ஆனந்தக்கூத்தாடு வண்ணம் வேறு மொழியில் பொழிந்திருப்பார். மாண்ட் - போர்டு சீர்திருத்தம் என்னும் கலாசாலையை மாண்டேகு துரை மகனார் திறக்கும்பொழுது முகவுரையாகக் குறிப்பிட்ட உரைகளும் இக்கருத்தை உடையவை தான். அதாவது :- “புதிதாய் அரசாங்க பாரத்தைச் சுமக்க விரும்பும் இந்தியர் அவ்வரசாங்கப் பொறுப்பைச் சுமக்க எவ்வளவு தகுதியுடையவர்கள் என்று தங்கள் செய்கைகளால் நிரூபிக்கின்னனரோ அதை அனுசரித்துத்தான் வழங்கப்படும்” என்றும் பிரதம மந்திரியாயிருந்த லாயிட்
ஜார்ஜ் துரை மகனும் இதே கருத்தைத்தான் கூறியுள்ளார். அதாவது :-
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
“இந்தியர்களுக்கு பிரிட்டிஷாரைத் தான் தர்மகர்த்தர்களாக கடவுள் நியமித்திருக்கிறார். அவர்களை எப்படி ஆள்வது என்பதின் பொறுப்பை நிர்ணயிக்க பிரிட்டிஷாருக்குத் தான் அதிகாரம் உண்டு ; சீர்திருத்தத்தின் தத்துவத்தைச் சரிவர அறிந்துகொள்ளாமல் இந்தியர்கள் கூக்குரல் இடுகின்றனர். சீர்திருத்தத்தின் முகவுரையிலேயே இவற்றை எல்லாம் விளக்க
மாகச் சொல்லியுள்ளோம். இரும்புச்சட்டத்திற்குள் அடக்கித்தான் ஆளு வோம்” என்று பகர்ந்திருக்கின்றார். ஆதலின் பிரிட்டிஷாரின் எண்ணத்தில் ஒன்றும் களங்கம் இல்லை. உள்ளதை உள்ளவாறே கூறி வருகின்றனர்.
ஒருவேளை பர்க்கன்ஹெத் பிரபு நமது வித்தியார்த்திகளை தமது
பரீட்சையில் தேறியவர்களாக மதித்துச் சர்வகலாசாலைப் பட்டம் வழங்கி யிருப்பாராயின் அது எதற்கு உதவும் எனின் மற்றோர் சர்வ கலாசாலை “பர்க்கன்- ரீடிங்" அல்லது “ரீடிங் -ஹெத்” என்ற பெயருடன் திறக்கப்பட்டு அதில் சென்று கல்வி கற்க அனுமதிக்க உதவுமே அல்லாது வேறு என் செய்ய உதவும்? நாட்டில் தரித்திரத்தாலும், பிணியாலும், தொழிலின்மையாலும் இடர்ப்படும் எளிய மக்களுக்கு ஒரு வேளைக் கஞ்சியின் உப்பிற்கு உதவுமா? ஒரு வேளை கஞ்சிக்கு தங்களது கற்பையும் இழக்க அவதிப்படும் நமது ஏழைச் சகோதரிகளின் கற்பைக் காக்கமுடியுமா? மனிதனுக்கு மனிதன் தொட்டால், பார்த்தால், அருகில் வந்தால், பேசினால் பாவம், தனது மதத் தத்துவத்தைப் படித்தால் பாவம் என்று சொல்லும்படியான கொடுமைகளுக்
கும் இழிவுகளுக்கும் ஏதாவது விடுதலை உண்டாகுமா? நமது எளிய மக்கள்: மெய்வருந்திச் சம்பாதிக்கும் தங்களது சிறு கூலியைக்கூட, கள்ளுக்கும், சாராயத்திற்கும் கொடுத்து வீட்டிலுள்ள குழந்தைகளின் கஞ்சிக்கும் வகையன்றி மானம்கெட்டு, ஒழுக்கம் கெட்டு, அல்லற்பட்டுத் திரியும் அவதியை ஒழிக்கமுடியுமா என்பதைப் பொதுமக்கள் சற்றேனும் சிந்தித்துப் பார்ப்பார்களாயின் இவ்வரசியல்வாதிகள் எனப்படுவோர் படும் துக்கத்தில் சிறிதளவு கலந்துகொள்ள முற்படார். சுயராஜ்யத்திற்கு மாண்ட் - போர்டு சீர்திருத்தந்தான் வழி என்று தாலாட்டி, முத்தமிட்டு வளர்த்திய மிதவாதி
களாலும், சீர்திருத்தத்தினாலேயே கடை ஏறி விடலாம் என நினைத்து பிரிட்டிஷாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடந்துவந்து, நற்சாட்சிப்பத்திரம் பெற்ற ஜஸ்டிஸ் கட்சியினராலும் நாட்டிற்கு என்ன விளைந்தது? இவர்களால் என்ன செய்யமுடிந்தது? கேவலம் மதுபான விஷயத்தில் என்ன செய்தனர்? சென்னை மாகாணத்தில் தான் மந்திரிகள் என்கின்ற பரீட்சைக்கொடுத்த. மாணாக்கர்கள் எல்லோரும் “பிராமணரல்லாதார் ஜஸ்டிஸ்காரர் தேசத்தைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள்; இவர்கள் தேசத்தைப்பற்றிக் கவனிக்க வில்லை” என்று சொல்லுவதாயிருப்பின் பிராமணர்களை மந்திரிகளாகக் கொண்ட மத்திய மாகாணம், பம்பாய், வங்காளம் முதலிய மாகாணங்கள். என்ன சாதிக்க முடிந்தது? இதை நடுநிலை நின்று ஒருவர் நோக்குவாராயின் இச்சீர்திருத்தக் கலாசாலைகள் அரசியல்வாதிகள் என்கின்ற ஆங்கிலம் படித்த
சிலருக்கு உதவுமே அல்லாது நாட்டின் உண்மையான தேவைகளை அளிக்க
குடி அரசு - 1925 100
எவ்வகையிலும் உதவாது என்பது விளங்கும். பர்க்கன் ஹெத் பிரபு சென்னை மாகாணம்தான் சீர்திருத்தப் பரீட்சையில் முதலாவதாகத் தேற இருப்பதாகக்
கூறி, சென்னையைப்பற்றிப் புகழுகின்றார். இதற்காக இவர் அளிக்கப்போகும் பட்டம் யாது? BR, MR, DR, என்பது போன்ற பட்டங்கள்தான் அளிப்பார். அதன் பொருள் “பாட்ச்லர் ஆப் ரிபார்ம்” “மாஸ்டர் ஆப்ரிபார்ம்” “டாக்டர். ஆப்ரிபார்ம்” ஆகிய இப்பட்டங்கள்தான் அளிக்கக்கூடும். இதற்கு கவர்னர். உத்தியோகம் வரையிலும் கிடைப்பினும் கிடைக்கலாம். தேசத்திற்கு ஏழை கட்கு இதனால் யாது பலன்கிடைக்கும்? இவற்றையெல்லாம் காந்தியடிகள் நன்கு அறிந்தே அச்சீர்திருத்தம் என்னும் கலாசாலைகளை விடுத்து தமது நிர்மாணத் திட்டம் ஒத்துழையாத்திட்டம் என்னும் கலாசாலைக்கு எல்லோரையும் அழைக்கிறார். காந்தி அடிகளின் இந்நிர்மாண ஒத்துழையாக் கலாசாலையில் சேர நமது ஆங்கிலம் கற்ற அரசியல் வாதிகளுக்கு மனமில்லை. இதில் நாம் உண்மையாய் ஒரு மனதுடன் சேர்ந்தோமாயின் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் யோக்கியதை பர்க்கன் ஹெத்
பிரபுவிற்கு ஏது, பர்க்கன் ஹெத் பிரபுவிடம் வாங்கும் இழிமை இந்தியாவிற்கு ஏது என்பதை உணருவோம். இத்தருணத்தில் எமது நினைவிற்கு வரும் கம்பர். அங்கதன் தூதுப்படலத்தில் சொன்ன ஒரு சிறு கவியைச் சொல்லி
முடிக்கிறோம்.
வாய்த்தரத்தக்க சொல்லி என்னையுன்
வசஞ் செய்வாயேல்,
ஆய்தரத் தக்க தன்றோ தூது வந்த
ரசதாள்கை:
நீ தரக்கொள்வேன்யானோ இதற்குகினி
நிகர்வே றென்னில்,
நாய்தரக் கொள்ளுஞ் சீய நல்லர
சென்று நக்கான்...
குடி அரசு - தலையங்கம் - 12.07.1925.
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குருகுமை
குருகுல விஷயமாய் எனது அபிப்பிராயம் என்ன என்பதைப்பற்றி நான் தெளிவாய்க் கூறவில்லை என்றும், வேண்டுமென்றே அவ்விதம் கூறாமலிருக்கின்றேன் என்றும், முக்கியமான சில கனவான்கள் என்னை, எழுதியும் நேரிலும் கேட்கிறார்கள். இவர்கள் என்னைப்பற்றிச் சரியாய் உணர்ந்து கொள்ளாதவர்கள் என்றுதான் நான் சொல்லக்கூடும். அதோடு தமிழ்நாட்டு நடப்புகளையும் சரிவர கவனித்திருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்.
குருகுல விஷயமாய் டாக்டர் வரதராஜுலு நாயுடு பத்திரிகையின் வாயிலாக எழுதுவதற்கு ஒரு வருஷகால முன்னிருந்தே இதைப் பற்றிய சகல விஷயங்களையும் அநேகக் கூட்டங்களில் தெரியப்படுத்தி யிருக்கிறேன். (சென்ற வருஷம் விருதுப்பட்டியில் ரத்தினசாமி நாடார் ஞாபகச்சின்ன வாசகசாலை ஆண்டு விழாவிலும் பேசியிருக்கிறேன் குருகுலத்திற்கு தமிழர்கள் பணம் கொடுக்கக் காரணங்களாயிருந்த நவசக்தி, தமிழ்நாடு முதலிய பத்திரிகை ஆசிரியர்களிடமும், அவர்கள் குருகுலத்திற்குப் பணம் கொடுக்கும்படியாயும், பாரத மாதா கோவில் கட்டுவதற்குப் பணம் கொடுக்கும் படியாயும் தங்கள் பத்திரிகைகளில் எழுதி வருவதைப் பலமாய்க் கண்டித்தும் வந்திருக்கிறேன். ஸ்ரீமான் கலியாணகுந்திர முதலியார் அவர்கள் நான் சொன்ன காலத்தில் நிரம்பவும் பரிதாபமாய் ஏதோ தேசத்திற்காகக் கஷ்டப்பட்டவர்கள்; அவர்கள் விஷயத்தில் நாம் இவ்வளவு கணக்குப் பார்க்கக்கூடாது: பொது ஜனங்களுக்கே இவையெல்லாம் தெரியும்; நாம் இவர்கள் காரியத்திற்குத் தடையாய் நிற்பதாய் அவர்கள் ஏன் நினைக்க
வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
டாக்டர் நாயுடு சொன்னதாவது: பாரத மாதா கோவில் கட்டுகிற விஷயத்தில் நான் தெரிந்தேதான் செய்து வருகிறேன். குருகுல விஷயத்தில் நீங்கள் சொல்லுகிற மாதிரி ஸ்ரீமான் அய்யர் அவர்கள் அவ்வளவு மோசமாயிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஸ்ரீமான் அய்யர் அவர்கள்.
ஏற்படுத்தியிருக்கிற மாதிரி ஒரு ஆசிரமம் நம் தமிழ் நாட்டிற்கு வேண்டியது தான்.நீங்கள் சொல்லுகிற மாதிரி வித்தியாசங்கள் அங்கு நடக்குமேயானால், அதை 5 நிமிஷத்தில் நிறுத்திவிட என்னால் முடியும் என்று சொல்லிவிட்டார். நான் கொஞ்சம் மன வருத்தத்தையும் காட்டிக் கொண்டு சிநேக முறையில் சில கடின பதங்களை உபயோகித்தேன். பிறகு கொஞ்ச நாளைக்குள்
குடி அரசு - 1925 102
திருச்சியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான் வ.வெசு.அய்யர் அவர்கள் மறுபடி 5000 ரூபாய் காங்கிரசிலிருந்து கொடுக்க. வேண்டும் என்று கேட்டபோது, நானும் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை: அவர்களும் கண்டிப்பாய் பணம் கொடுக்கக்கூடாது; முன் கொடுத்த பணமே தமிழர்களின் இழிவுக்கு உபயோகப்படுகிறது என்று சொல்லி அங்கு நடக்கும் சில கொடுமைகளை எடுத்துச் சொன்னோம். ஸ்ரீமான் வ.வெ.௬ு. அய்யர் அவர்கள் நான் அப்படிச் செய்வேனா, அந்த இடம் நிரம்பவும் வைதீகர்கள் நிறைந்துள்ள இடமானதாலும், சமையல் செய்கிறவர்கள் ஒப்புக்கொள்ளா ததாலும், இவ்வித வித்தியாசங்கள் இனிக் கொஞ்ச நாளைக்கு இருக்கும்:
சீக்கிரம் மாற்றி விடுகிறேன். அதுவரையில் நானும் சாதம் சாப்பிடுவதில்லை. அதற்காகத்தான் நிலக்கடலை சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வரும்போது, ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தாங்கள். நிலக்கடலை சாப்பிடுவதால் நாயக்கர் சொல்லுகிற ஆட்சேபனை தீர்ந்து போகுமா? இவ்வளவு தூரம் இவர்கள் சொல்லும்படியாய் வைத்துக் கொள்ளக் கூடாது; அதனால் தங்கள் பேருக்குக் கெடுதல் வந்துசேரும். என் குழந்தைகளைக்கூட ஆசிரமத்திற்கு அனுப்பலாம் என்றிருந்தேன். இவை களைக் கேட்ட பின் நானும் அனுப்பப் போவதில்லை. இந்த ஆவலாதிகளைச்
சரி செய்து விட்டு, மேல் கொண்டு காங்கிரசைப் பணம் கேளுங்கள் என்று சொன்னார்கள். இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் நாயுடு, எனக்கும் இம்மாதிரி ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால்
ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சீக்கிரத்தில் ஆவலாதிகளுக்குக் காரணமான வித்தியாசங்களையெல்லாம் ஒழித்து விடுவதாய்ச் சொன்னார். ஸ்ரீமான் அய்யர் அவர்கள் இவ்வித வித்தியாசமெல்லாம் பாராட்டுகிறவர்கள் அல்ல. ஆனால் எப்படியோ திருநெல்வேலி பிராமணர் செல்வாக்குள்ள இடத்தில் குருகுலம் அமைக்கப்பட்டுப் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் ஸ்ரீமான் அய்யர் அவர்கள் சொல்கிறபடி நடக்கும் என்கிற நம்பிக்கையின் மேல்தான் நான் சும்மாயிருக்கிறேன் என்று சொன்னார்.
நான், இவையாவும் ஒழுங்கான பிறகுதான் மேல்கொண்டு ரூபாய் கொடுப்பதைப் பற்றி யோசிக்கப்படும். இந்த நிலைமையில் யோசித்தால் முன் ரூபாய் கொடுத்ததே தப்பு. தங்களுக்கு ரூபாய் கொடுக்கத் தீர்மானித்த மீட்டிங்கில் நான் இல்லை. இருந்திருந்தால் சரியானபடி ரிக்கார்டு செய்து கொண்டுதான் ரூபாய் கொடுத்திருப்பேன். அதுசமயம் செக்கில் கையெழுத் துப்போடும் வேலை எனக்கென்று ஒதுக்கப்பட்டு வைத்திருந்தும், இந்த ஒரு செக்கு மாத்திரம் ஏற்பாட்டுக்கு விரோதமாய் எப்படியோ என் கூட்டுக் காரிய தரிசியால் கையெழுத்துப் போட்டு செக்கு வெளியாகிப் பணம் வெளிப்பட்டு போய்விட்டது. கிரமமாய்ப் பார்த்தால் அந்தப் பணத்தைத் திருப்பி வாங்க வேண்டும் என்று சொன்னேன். ஸ்ரீமான் அய்யர் அவர்கள் மனவருத்தத் துடன் உலகில் எல்லாரும் தர்மம் செய்வார்கள், நமது நாயக்கரோ செய்த தர்மத்தைத் திருப்பி வாங்க வேண்டுமென்கிறார் என்று சொன்னார்கள்.
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நிற்க,பின்னால் கொஞ்சநாளைக்குள்ளாகவே மறுபடியும்.“தமிழ்நாடு”' பத்திரிகை குருகுலத்தைப் பற்றிய விளம்பரங்களும் வசூல் குறிப்புகளும் பிரசுரித்து வந்தது. இதனால் இழிவுபடும் பிராமணரல்லாதாரே தமிழ் நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் பணம் கொடுத்து வருவதாய் அறிந்து டாக்டர் நாயுடு இந்த மாதிரி தமிழர்களின் இழிவுக்காக நடத்தப்படும் குரு குலத்திற்குப் பண உதவி செய்யும்படி எழுதுகிறார். அதனால் ஏமாந்த வெகுஜனங்கள் பணம் கொடுத்துவிடுகிறார்கள். இதைப் பற்றிப் பல தடவை களில் நான் சொல்லியும் கேட்கவில்லை என்று பல பேரிடம் நான் டாக்டர். நாயுடு பேரில் குற்றம் சொல்லிக் கொண்டு அதற்கு ஓர் எண்ணத்தையும் கற்பித்து வந்தேன். டாக்டர் நாயுடுவுக்கும் எனக்கும் பொதுவான ஒரு சினேகிதர் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது டாக்டர் நாயுடுவிடம் உங்களுக்கு ஏன் தப்பபிப்பிராயமிருக்கிறது? நீங்கள் இரண்டு பேரும் இப்படி இருக்கலாமா என்று கேட்டார்.நான் குருகுலத்தை விளம்பரம் செய்வதைப்
பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்லி குருகுலத்திலிருந்து வெளியான ஒரு பையன் சொன்ன சில விஷயங்களையும் சொல்லி மலேயா நாட்டில் குருகுலத்திற்குத் தமிழர் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாய் வெளியான ஒரு பத்திரிகையையும் காட்டினேன். அதோடு தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சி சூழ்ச்சிகளையும் சொல்லி அதையும் டாக்டர் நாயுடு ஆதரிக்கிற விஷயத் தையும் சொன்னேன். அதற்கு அவர் டாக்டர் நாயுடு அவர்களுக்கு இவ் விஷயங்களை எடுத்துச்சொல்லி வேண்டியது செய்கிறேன். ஆனால் சில
பிராமணர் தந்திரம் தங்களுக்குத் தெரியாததா? டாக்டர் நாயுடு இதை வெளிப் படுத்தினால், வேறு சில பிராமணரல்லாதாரையே டாக்டர் நாயுடுவுக்கு விரோதமாய்க் கிளப்பிவிட்டு நமக்குள்ளேயே சண்டைபிடித்துக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டுத் தாங்கள் காரியத்தை நடத்தி கொள்வார்களே பிறகு எழுதினவர்தான் தனியாக நிற்க வேண்டும் என்று சொன்னார். உடனே நவசக்தி முதலிய பிராமணரல்லாத பத்திரிகைகள் எல்லாம் கண்டிப்பாய் நாயுடுவை ஆதரிக்கும். அநேக பிராமணரல்லாத பத்திரிகைள் இந்த விஷ யங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் யார் முன்னே எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. ஆகையினால் இந்த விஷயத்திற்கு எதிரிடையாய் யோக்கியப் பொறுப்புள்ள பிராமணரல் லாத பத்திரிகைகளோ, பிராமண ரல்லாத பிரமுகர்களோ முன்வர மாட்டார்கள் என்பது எனது உறுதி என்று சொல்லி உடனே குருகுல நடவடிக்கையை வெளிப்படுத்தும்படி டி நண்பரைக் கேட்டுக்கொண்டேன். அதற்கேற்றாப் போல் டாக்டர் நாயுடுக்கும்,
குருகுலவாசி ஒருவரிடமிருந்து ஒரு கடிதமும், மலேயா நாட்டிலிருந்து ஒரு கடிதமும் வந்திருந்த சமயமும் ஒத்துக் கொண்டது: உடனே உண்மையை வெளியிட்டார்; நானும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்களுக்கு இது விஷயத்தில் நியாயம் செய்யும்படி எழுதினேன். அவர்களும் மற்றும் நான் எழுதாத சில பத்திரிகை கனவான்களும் இந்த முதல் வியாசத்தை தமிழ்நாடு பத்திரிகையிலிருந்து தங்கள் பத்திரிகையில் எடுத்துப் போட்டும், மற்றும் தங்கள் மனசாட்சிக் கொப்ப ஆதரித்தும் வந்தனர். இவை எல்லாவற்றிலும்
குடி அரசு - 1925 104.
*தனவைசிய ஊழியன்”, “குமரன்” இவ்விரு பத்திரிகைகளின் ஆசிரியர் களும் தங்கள் மனசாட்சிப்படி தைரியமாய் உதவி செய்ததைத் தமிழ் மக்கள் மறக்கமுடியாது. இவற்றின் பலனாய், தமிழர் வசிக்கும் வெளிநாடுகளிலும் இவ்விஷயங்கள் பரவி தற்காலம் குருகுல விஷயமாய் மாத்திரம் அல்லாமல் பிராமணர் பிராமணரல்லாதார் என்போருக்குள் வெகுகாலமாய் அடங்கிக்
கிடந்த வேதனைகள் எல்லாம் வெளிக்கிளம்பின. இவைகளை எல்லாம் நான் திருவண்ணாமலையில் கூடிய தமிழ்நாடு மாகாண காங்கிரஸில் தலைமை வகித்த காலத்தில் முகவுரையிலும், முடிவுரையிலும் தெளிவாய் சொல்லியிருக்கிறேன்.
(அதற்கேற்றாற்போல் மகாத்மாவும், இவை ஒழியாமல் வெறும் “ஒத்து ழையாமை ஒத்துழையாமை” என்று வாயில் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனமென்று கருதி கதர், தீண்டாமை இவை இரண்டும் மாத்திரம் நடக்கட்டும், மற்றதெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிடலாம் என்று பெல்காம் காங்கிரசில் காலம் குறிப்பிடாமல் ஒத்துழையாமையை ஒத்தி வைத்துவிட்டார். இனி ஒத்துழையாமையை ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, காங்கிரஸில் காரியத்திலோ, தத்துவத்திலோ, கொள்கையிலோ இல்லை.)
இதோடு கூடவே “தேவஸ்தான ஆக்ட்” என்று சொல்லப்படும் இந்துமத தர்மபரிபாலன மசோதா ஒன்றும் வந்தது. இதைப்பற்றியும் ஜனங்கள். ஒன்றும் அறியாதபடி “மதம் போய்விட்டது,” “மடம் போய் விட்டது”, *கோயில் போய் விட்டது'என்று வெறும் பச்சை அழுகை அழுதுகொண்டு மந்திரிகளையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மாத்திரம் திட்டுவதோடல்லாமல், அந்த மசோதாவையே தொலைத்துப் போட பிராமண பத்திரிகைகளும் பிராமண ராஜீயத் தலைவர்கள் என்போர் பலரும் தங்கள் பத்திரிகைகளில் எழுதவும், மேடைகளில் நின்று பேசவுமாய் அட்டகாசம் செய்துவந்தனர். இதை நம்பிக்கொண்டு பிராமணரல்லாத ராஜீயத் தலைவர் என்போர்கள். பலரும் ஒத்துப்பாடிக் கொண்டு வந்தார்கள். இதையும் பார்த்துச் சகிக்காமல் ஒத்துழையாமையோ ஒத்திப்போடப்பட்டாய் விட்டது. இனி இதைப்பற்றி சும்மா இருப்பது ஒழுங்கல்லவென்று நினைத்தே டாக்டர் நாயுடுவுக்கும், ஸ்ரீ கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் நான் காயலாவாய்ப் படுக்கையில் இருந்துகொண்டே சொந்தமாய் இனி நீங்கள் வாய்மூடிக் கொண்டிருக்கக் கூடாது, மந்திரிகளையும் ஜஸ்டிஸ் கட்சியையும் பிராமணர்கள் வைவதைப் பற்றி நமக்கு ஒன்றும் அவ்வளவு வருத்தமில்லை, ஆனால் நல்ல சட்டத்தைப் பாழடிக்கப் பார்க்கிறார்கள். இதை நீங்கள் சகித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கண்டிப்பான கடிதம் ஒன்று எழுதிவிட்டு, நானும் என் அபிப்பிரா
யத்தைக் கேட்டிருந்த “திராவிடன்” பத்திராதிபருக்கு பதில் எழுதுகின்ற முறையில் எழுதிவிட்டேன். டாக்டர் நாயுடுவும் உடனே தனது அபிப்பி ராயத்தை எழுதிவிட்டார். மறுபடியும் சில பிராமணர்கள் சென்னையில் ஒரு கூட்டம் கூட்டி மசோதாவை கட்டுப்பாடாய் எதிர்ப்பதற்கென்று ஒரு சபை
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அமைத்ததைப் பார்த்து ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கும் டாக்டர் நாயுடுவுக்கும் “ஒரு பகிரங்கக் கடிதம்” என்று ஒன்று எழுதி எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி அவர்களுக்கும் அனுப்பினேன். அதற்கு இவ்விரண்டு தலைவர்களும் பதிலெழுதவேயில்லை. (அதன் காரணத்தைப்
பற்றிச் சாவகாசமாய் பேசிக் கொள்ளலாம் ) மாறுதல் வேண்டாதார் என்று சொல்லப்படும் அநேக பிரமுகர்கள் இதை ஆதரித்து இது சம்பந்தமான எவ்வித பிரசாரத்திற்கும் தாங்கள் உதவி செய்வதாய் எனக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.
பிறகு,டாக்டர் நாயுடு குருகுலத்தைப் பற்றி வெளியில் பிரசாரத்திற்குப் போயிருந்த காலத்தில் அங்கு நடந்த சம்பவங்களும், பத்திரிகைகளில் வெளிவந்த சம்பவங்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக் கூட்டம் கூட்ட வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டன. அந்தக் கூட்டத்திலும் பலவித தீர்மானங்கள் வந்தன. அவைகளில் ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிநிர்வாகக் கூட்டத்தாரால் கொண்டு வரப்பட்டது. அதாவது குருகுலம் ஒரு குறிப்பிட்டகொள்கைப்படி நடக்காததால் அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 5000 ரூபாய் கொடுத்ததற்காக வருந்துகிறது என்பது. இது நிர்வாகக் கமிட்டியில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் அவர்களால்
திருத்திச் சொல்லப்பட்டு எழுதியது.
இரண்டாவது , ஆசிரம நிர்வாகங்களில் மற்றவர்கள் பிரவேசிக்கக் கூடாது. ஆச்சாரியார் சொல்லுகிறபடியே விட்டுவிட வேண்டும். ஆனால் இவ்வளவு தூரம் குருகுல விஷயம் விவாதத்திற்கிடமாய் விட்டதால் அங்கு சமபந்தி போஜனம் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வது போல் ஒரு திருத்தப் பிரேரேபனை ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு டாக்டர் ராஜன் அவர்களால் ஆமோதிக்கப்பட்டது.
மூன்றாவது, மனிதன் பிறவியினால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளக்கூடாது, இந்தக் கொள்கைகளை தேசீய விஷயங்களிலும் தேசீய ஸ்தாபனங்களில் பொருள் பெற்று தேசீய உணர்ச்சியுடன் நடத்திவரும் குருகுலத்திலும் நடைபெறும்படி செய்ய வேண்டுமென்றும் இது நடைபெற
சப் கமிட்டி ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்றும் என்பது போன்ற ஒரு திருத்தப் பிரேரேபனை ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்களால் கொண்டுவரப் பட்டது. இது நானும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களுமாய் சேர்ந்து எழுதப் பட்டதாகும்.
இவைகளில் ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்கள் தீர்மானம்தான் நிறை வேறியது. உடனே டாக்டர் நாயுடுவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் கமிட்டிக்கு நம்பிக்கை இருப்பதாய் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் நடக்கும் போதும், நடந்து முடிவடைந்து கொண்டிருக்கும்போதும் சிலர் ராஜினாமாச் செய்துவிட்டார்கள். பிறகு, இவர்களைப் பின்பற்றி 4, 5 பேர் ராஜினாமாக் கொடுத்து விட்டார்கள்.
குடி அரசு - 1925 106
இதற்குப் பிறகு குருகுல வாதம் ஒரு விதமாய் முடிவு பெறுமா என்கிற கவலையுடன் நானும், ஸ்ரீமான்கள் எஸ்.ராமநாதன், எ.வி.தியாகராஜா ஆகிய மூவருமாய் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் கமிட்டியாரால் நியமிக்கப் பட்ட சப் கமிட்டியார் என்கிற தன்மையில் ஒரு தடவையும், குருகுலத்திற்குப் பொருள் உதவி செய்த தமிழர் கூட்டத்து நிர்வாக சபையார் * அழைப்புக் கிணங்கி, அவர்களுடன் ஒரு தடவையுமாக இரண்டு தடவை குருகுலத்
திற்குப் போயும் வந்திருக்கிறேன். இதன் ரிப்போர்ட்டுகள் பின்னால் வரும். வாசகர்களும் நண்பர்களும் இதிலிருந்து குருகுல விஷயமாய் எனதபிப் பிராயத்தையும் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளக்கூடும் என்று நினைக்கிறேன்.
குடி அரசு - கட்டுரை - 12.07.1925
க தமிழர் கூட்டம்
30.425 தேதியில் திருச்சிராப்பள்ளி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் திருவாளர் மு.கா. விஸ்வநாதம் செட்டியார் அவர்கள் அக்கிரா சனத்தின் கீழ் சேரன் மாதேவி குருகுலத்தை சீர்திருத்த பிராமணரல்லாதாரின் மகாநாடு நடைபெற்றது. அடியில் கண்ட தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின :
(௧) சேரமாதேவி குருகுலத்துக்குப் பணவுதவி செய்தது ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களை நம்பியேயாதலால், ஐயரவர்கள் பணங் கொடுத்தவர்களைக் கூட்டி ராஜினாமாக் கொடுக்க வேண்டியது நியாயமா யிருக்க, அவ்வாறு செய்யாமல் அங்கு வேலை செய்பவரிடம் தமது தலைமை ஸ்தான ராஜினாமாவைக் கொடுத்ததை இக்கூட்டம் கண்டிக்கிறது.
(௨) ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவே சிறிதும் அதிகாரமில்லாத சிலர் அதனை ஏற்றுக்கொண்ட தோடும் அமையாது. குருகுலக் கிளர்ச்சிக்கே பெருங் காரணமாயிருந்த ஸ்ரீ மகாதேவய்யரவர்களைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்ததை இக்கூட்டம் பலமாகக் கண்டிக்கிறது.
() குருகுல நடைமுறையானது நேரான வழியில் நடை பெற வில்லையா தலால், அதனைத் திறம்பட நடத்துவதற்குப் பின்வரும் கமிட்டி யை இக்கூட்டம் அமைக்கிறது. இக்கமிட்டியாரிடம் குருகுல சம்பந்தமான சகல பொறுப்புக்களையும். ஒப்புவித்துவிட வேண்டுமென்றும், இதற்கு ஐயரவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இணங்காராயின் வாங்கிய பணத்தைக் கேட்பவர்கட்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்றும், ஐயர் அவ்வாறு செய்யாவிட்டால், ஐயரவர்களிடமிருந்து குரு குலச் சொத்துக்களைப் பெறு வதற்குரிய முறைகளை இக்கமிட்டி யார் அநுஷ்டிக் கலாமென்றும் இக் கூட்டம் தீர்மானிக்கிறது. கமிட்டி அங்கத்தினர்கள் பின்வருமாறு:
ஸ்ரீமான்கள் பி.வரதராஜுலு நாயுடு, வயி.கஷண்முகம் செட்டியார், ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், மு.காசிவிஸ்வநாதம் செட்டியார், ராய சொக்கலிங்கம் செட்டி யாரை இக்கமிட்டிக்கு காரியதரிசியாகவும் நியமிக்கிறது.
குடி அரசு - 02051925
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஒவ்வவாரு மாகாணத்தினும் தேவஸ்தான
சட்டம் கவை
- சித்திரபுத்திரன்
ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பனகால் ராஜா கொண்டுவந்த சென்னை இந்து தேவஸ்தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரியங்கள் நடந்து வருகின்றன என்பது நேயர்கள்.
அறிந்த விஷயம். திருப்பதி தேவஸ்தான நிதியிலிருந்து சந்திரகிரியில் ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதாக பனகால் ராஜா சமீப காலத்தில் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டதைக் கேட்டதும், இச்சட்டத்தின் விரோதிகள்: அவர் மேல் சீறி விழ ஆரம்பித்துவிட்டார்கள். 63 -வது சட்டம் இப்படிச் சொல்லுகிறது, 76-வது சட்டம் அப்படிச் சொல்லவில்லை என்றவாறு சிற்சில பத்திரிகைகளின் நிரூபங்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டிருக்கின்றன. சர்வகலாசாலை ஏற்படுத்துவதைக் காட்டிலும், முதலில் திருப்பதி கோயில் கோபுரத்தையும் ஏழுமலைப் படிகளையும் ஏன் பழுது பார்க்கவில்லையென்ற கேள்விகளை இதுசமயத்தில் சிலர் கிளப்பி விடுவது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த விதண்டாவாதக்காரர்கள் இவ்வளவு நாள் எங்கு பதுங்கிக் கிடந்தார்களோ தெரியவில்லை. திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சுமார் 17-
18 லட்சம் ரூபாய் வருஷ வரும்படி இருப்பதாகத் தெரிகின்றது. இதில் 7 அல்லது 8 லட்ச ரூபாய் செலவாகிறபடியால் வருஷா வருஷம் பத்து லட்சம் ரூபாய் மீதப்படுகிறது. இந்த மீதிப் பணம் சிற்சில ஆடம்பரச் செலவுக்கும், சிற்சில பள்ளிக்கூடங்களை நடத்தவும் செலவு செய்யப்படுகிறது. அப்படி யிருந்தும் இன்னும் நாற்பது லட்சம் ரூபாய் மொத்தமாக மீதியிருக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதை கல்கத்தா பாபு ராமானந்த சாட்டர்ஜி அவர்கள் “மாடர்ன் ரெவ்யூ” என்ற தம் சஞ்சிகையில் மனப்பூர்வமாய் ஆதரித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சென்னையில் இருப்பது போல ஒவ்வொரு ராஜதானியிலும் தேவஸ்தானச் சட்டம் ஏற்பட வேண்டுமென்றும் அப்பெரியார் அபிப்பிராயப்படுகிறார். அவரது அபிப்பிராயத்தைச் சந்தோஷத்துடன் ஆமோதிக்கிறேன். பனகால் ராஜாவின் நல்ல யத்தனத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யும்
குடி அரசு - 1925 108
சுயநலப்புலிகள் ஒரு பக்கமிருக்க, சிறந்த தேச பக்தர்களில் ஒருவராகிய ராமானந்தபாபுவின் பாரபட்சமில்லாத அபிப்பிராயத்தை பொதுமக்கள் கவனிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன்...
குடி அரசு - கட்டுரை - 12.07.1925
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
லஞ்சம்
சமீபத்தில் கோயமுத்தூரில் காட்டிலாகா கல்லூரியில் தேறிய மாணவர்களுக்கு நடந்த பரிசளிப்புக் கொண்டாட்டத்தில் காட்டிலாகா தலைமை அதிகாரியான மிஸ்டர் டயர்மன் என்பவர் பின்வரும் புத்திமதியை மாணவர்களுக்குக் கூறினாராம்:-
“நான் உங்களுக்குச் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். காட்டிலாகாவில் குறைந்த சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தி யோகஸ்தர்கள் மட்டுமல்லாமல், பெரிய உத்தியோகஸ் தர்களும் யோக்கிய மற்ற செயல்களைப் புரிகின்றனர் என்று சொல்லு வதற்காக வருந்துகிறேன். ஒரு ரேஞ்சர் தனது கீழுள்ளவர்கள் வீட்
டில் இலவசமாகப் பல மாதங்கள் உணவு உட்கொண்டதுமன்றி, அவர் களுக்குக் கிடைக்கும் அல்ப சம்பளத் திலிருந்து மாதா மாதம் சிறு தொகையும் வசூல் செய்தும் வந்தார். உயர்தர உத்தியோகஸ்தர்கள் இவ்விதமான இழிந்த நிலையில் இருக்கையில் குறைந்த சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தியோகஸ்தர்களைக் குறை கூறுவதில் பயன் உண்டா? ஜனங்கள் நம் இலாகாவைப்பற்றி பேசுவதற்குக்கூட வெட்கப்படுகிறார்கள் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இப் பொழுது புதிதாகப் பரீட்சை கொடுத்துப்போகும் நீங்களே இம் முறை களைப் பரிசுத்தம் செய்தல் வேண்டும்”.
இவ்விதமான செயல்களை அறிந்தே சென்னை சட்டசபையில் ஒரு அங்கத்தினர் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் லஞ்சம் வாங்குவதைக் கண்டிக்க ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று ஓர் தீர்மானம் கொண்டு போன காலத்தில் அரசாங்க நிர்வாக அங்கத்தினர் அவர் மீது பாய்ந்து அப்பிரேரே பனையைத் திருப்பி வாங்கிக் கொள்ளும்படியான விதத்தில் விரட்டி அடித்து விட்டார். சர்க்கார் இலாகாக்களில் இவ்வித ஊழல்களைப் பரிசீலனை செய்து பஞ்சாப் மாகாண அரசாங்கத்தார் யாதாஸ்து வெளியிட்டிருக்கிறார்களே; அதுபடி சென்னையிலும் செய்ய என்ன தடை ஏற்பட்டது?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.07.1925
குடி அரசு - 1925 110
செண்ணைத் கேர்தல்
சென்னையில் இப்பொழுது நடந்துவரும் தேர்தல் பிரசாரங்களின் யோக்கியதையைப் பார்த்தால் புதுச்சேரி தேர்தலுக்கு சமமாய் வந்துவிடும் போல் இருக்கிறது. கூட்டங்களில் ஒரு கட்சியார் மற்றொரு கட்சியார் மீது காலிகளைவிட்டுக் கல்லெறியச் செய்வதும், நூற்றுக்கணக்கான போக்கிரி களை விட்டுக் கூட்டத்தைக் கலைப்பதும் போன்ற காரியங்கள் நடைபெறுவ
தாய் இரண்டு கட்சிப் பத்திரிகைகளிலும் பார்த்து வருகிறோம். யார் கலகத்
திற்குக் காரணம்? யார் தூண்டுதலின் மேல் இம்மாதிரியான காரியங்கள் நடக்கின்றன என்கின்ற விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வராவிடினும் இம்மாதிரியான காரியங்கள் நடந்தன என்பதைப்பற்றிச் சந்தேகங் கொள்ள இடமில்லை. “குருட்டுக் கோமுட்டிக்கடையில் திருடாதவன் பாவி” என்பது போல், சரியான கல்வி அறிவும், நன்மை தீமைகளை அறிய ஆற்றலும் இல்லாத ஜனங்களிடமிருந்து ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டு. மாயின் கையில் பலத்தவன்தான் காரியத்தை அடைவான். எவனுக்குப் பொய் சொல்லத் தைரியம் இருக்கின்றதோ, எவனுக்குப் பொருள் செலவு செய்யச் சக்தியிருக்கின்றதோ எவனுக்குப் பொய்ப் பிரசாரம் செய்ய செளகரியமிருக் கிறதோ அவனுக்குத்தான் வெற்றி கொடுக்க நம்நாடு தயாராயிருக்கிறது. எவ்வளவோ சீரும் சிறப்பும் பண்டைப் பெருமையும் உள்ள நாடு என்று சொல்லிக்கொள்ளும் நமது இந்தியா இக்கதியில், “பிடித்தவனுக்கெல்லாம் பெண்சாதியாயிருக்கின்ற'” தெனச் சொன்னால் நாம் எதற்குத் தகுதியுடைய வர்களாவோம்? விடுதலை, விடுதலை என்று சொல்லிக் கொண்டு வெள்ளை யரோடு தகராறு செய்வதும் அவர்கள் ஏதோ நமக்குப் பெரிய உதவி செய்வதாய் வேஷம் போட்டுச் சில உபயோகமற்ற பதவிகளை நமக்கு அளிப்பதும் அதை எவர் அடைகிறது என்று நாம் சண்டை போட்டுக் கொள்: வதும் திரும்பத் திரும்ப மாறி மாறி தேசத்தின் தலைவிதியாய்ப் போய் விட்டது.
சுயராஜ்யக் கட்சியின் பெயரால் பிராமணர்களும், ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் பிராமணரல்லாதாரும் தேசநலத்திற்கே பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டு இவ்வளவு இழிவான காரியங்களுக்கெல்லாம் இடம் கொடுப்பதைப் பார்த்தால் வடநாடுகளில் இந்து - முஸ்லீம் சண்டை நமக்கு ஒரு அதிசய மாகத் தோன்றவில்லை. இவ்வித விவகாரங்கள் நாட்டில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், டாக்டர் கிச்சிலு அகில இந்திய முஸ்லீம் மகாநாட்டில்
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கூறியிருப்பது போல் ஒற்றுமையில்லாமல் சுயராஜ்யம் இல்லை என்பதையும், ஒற்றுமை வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர வேறு
ஒரு வழியால் ஒற்றுமையடைய முடியாதென்பதையும் நாம் மனப்பூர்வமாக
ஆதரித்துத்தான் தீர வேண்டியிருக்கிறது. தென்னாட்டில் இந்துக்களுக்கும், மகமதியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சில விஷயங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டுவிட்டுப் போன படியால் அதைப் பொறுத்தமட்டில் ஒருவருக்கொருவர் வேற்றுமைக்கும், துவேசத்திற்கும் இடமே இல்லாமற் போய்விட்டது.அதுபோலவே பிராமணர், பிராமணரல்லாதாருக்கும் ஒரு விதி ஏற்பட்டுப் போய்விடுமேயாகில் வேற்றுமை இல்லாது போவதோடு கூட இவ்வளவு இழிவான காரியங்களும், காலித்தனமான காரியங்களும், சூழ்ச்சி
களும், போலிப் பிரசாரங்களும் செய்ய வேண்டிய அவசியமே இராது. நம் மக்களையும் இவ்வளவு மோசமாக ஏமாற்ற வேண்டிய அவசியமே இருக் காது. ஆனால் இந்தக் கொள்கை தற்கால அதிகாரத்தில் இருக்கும் பிராமணர்: களுக்கும் அவர்கள் புன்சிரிப்பில் மூழ்கியிருக்கும் மற்றவர்களுக்கும் அவசியமானதாகத் தோன்றாது. எனினும் தோன்றுங் காலம் சீக்கிரம் வரும்.
குடி அரசு - தலையங்கம் - 19.07.1925
குடி அரசு - 1925 112
தேர்தல்கனிண் யோக்கியதையும்
s o ம்
தேர்தல் சம்பந்தமான ஆட்சேபனை விண்ணப்பங்கள் கொஞ்சகாலத்
திற்கு முன்நிர்வாக அதிகாரிகளாகிய கலெக்டர், அரசாங்க முனிசிபல் நிர்வாக அங்கத்தினர் இவர்களுக்குள்ளாகவே முடிவு பெறக்கூடிய தாகவிருந்தது. ஆனால் இப்படி நடப்பதில் தாட்சண்யங்களும், விருப்பு வெறுப்புகளும், சப்ளைகளும் சில்லரை அதிகாரிகளை விலைக்கு வாங்கப் படக்கூடியது களும் நியாயத்தைக் கெடுத்துவிடுகின்றனவென்கிற அனுபோகங்கள் ஏற்பட்டு, இந்த அதிகாரங்களை நிர்வாக அதிகாரிகளிடமிருந்து பிடுங்கி நீதிபதிகளுக்குக்கொடுக்கவேண்டுமென்று பொதுஜனங்களில் சிலர் வாதாடி னார்கள். அவைகளில் ஒன்றுதான் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தன் முனிசிபல் சேர்மன் பதவியையும், ஜில்லாபோர்டு, தாலூகா போர்டு முதலியவைகளில் வகித்துவந்த பதவிகளையும் ராஜீனாமாச் செய்தது. முனிசிபல் புதுச் சட்டம் இயற்றும்போது இவற்றைக் கவனித்து. தேர்தல் சம்பந்தமான ஆக்ஷேபனைகள் இனிமேல் நீதிபதிகளிடம்தான் தெரிவிக்க வேண்டுமென்று சட்டமும் செய்தார்கள். இந்த சட்டம் செய்யப்பட்ட பிறகு விலங்கைத் தறித்துக் குட்டையில் போட்டதுபோல் ஆகிவிட்டது. நீதி ஸ்தலத்திற்குப் போகிற விஷயத்தில் நிர்வாகஸ்தர்களிடம் அனுபவிக்கிற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்ட தென்று சொல்வதற்கு இல்லாமல் இருப்பதோடு புதுக்கஷ்டங்கள் அநேகம் ஏற்பட்டுவிட்டன.அதாவது வக்கீல் களை வைத்து வக்கீல்களுக்குப் பணம் கொடுப்பது ஒன்று, சாட்சிகளை அழைத்துக்கொண்டு ஜில்லா கோர்ட்டுக்குப் போவது மற்றொன்று, ஜில்லாக். கோர்ட்டு தீர்ப்பிற்கு மேல் ஐகோர்ட்டுக்குப் போவது வேறொன்று, அதற்கு வக்கீல்களுக்கும், சிப்பந்திகளுக்கும் பணம் கொடுப்பது இன்னொன்று; இவைகளை அல்லாமல் நியாயத்தை விலைக்கு வாங்க அவஸ்தைப்படுவதும், அதற்காகப் பணம் செலவு செய்வதும் இவ்வ வும் செய்து முடிவு தெரி
வதற்குள், தேர்தல் காலம் இரண்டு வருடமோ, மூன்று வருடமோ கடந்து எப்படித் தீர்ப்பானாலும் பிரயோஜனப்படாமல் போகிற பெரிய அக்கிரமம் ஒன்று. புதுச்சட்டம் ஏற்பட்ட பிறகு கோர்ட்டுக்குப் போகாத முனிசிபா லிட்டியோ, தாலூகாபோர்டோ இருப்பது நிரம்பவும் அபூர்வம் என்று சொல்லத்தக்க நிலைமையில் வந்துவிட்டது. மனச்சாட்சி உள்ளவர்களும், யோக்கியப்பொறுப்பு உள்ளவர்களும் தேர்தல்களுக்கு நிற்கப் பயப்
113 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
படத்தகுந்த மாதிரிக்குச் சட்டங்கள் இடங்கொடுத்துக்கொண்டு வருகின்றன. நியாயமான முறையில் ஓட்டர்களின் அபிப்பிராயத்தைப் பெற அநேக சமயங்களில் சாத்தியமில்லாமலேயே போய்விடுகிறது. சிற்சில தேர்தல்களின் கதையைக் கேட்டால் உடல் நடுங்குகிறது. ஒரு முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு எலக்ஷன்களுக்குப் பத்தாயிரம், பனிரண்டாயிரம், சில தருணங்களில் இருபதினாயிரமும் செலவாகிவிடுகின்றது. தேர்தல் ஆட்சேபனை மனுக் களுக்கு அதிகாரிகளுக்கும், வக்கீல்களுக்குமாகவென்று ஐயாயிரம், பத்தாயிரம் செலவாகின்றது. இதுதான் இப்படி ஆகிவிட்டது என்று முடிவு செய்துவிட்டு, சட்டசபை போன்றவைகளின் தேர்தல்களைப் பார்த்தாலோ “விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்” என்கிற கதையில் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலின் பொழுது ஒரு நகரத்தில் ஒரு தேர்தலுக்கு எழுபதினாயிரம் ரூபாய்வரை செலவாயிற்று என்றும் மற்றோரிடத்தில் ஒரு தேர்தலுக்கு முப்பதினாயிரம் ரூபாய் செலவாயிற்று என்பதும், வெளிப் படையான இரகசியங்களாய் விளங்குகின்றன. இவற்றை நிவர்த்திக்க எந்தச் சட்டத்தினாலும் முடிவதில்லை. பணம் இருந்தால் எந்தப் பதவியும், எந்தப் பட்டமும், எந்த உத்தியோகமும் யாரும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற முறையில் நமது சர்க்கார் இடங் கொடுத்துக் கொண்டு வருவது முழுவதும் உண்மைக்கு விரோதமானது என்று சொல்ல முடியாது. ஆகையால் மக்களுக்குள் ஒழுக்கமும் கண்ணியமும் கற்பிக்கப்பட்டால் அல்லது, எவ்வித சட்டங்களாலும் இவ்விதக் குற்றங்களை நீக்கமுடியாது. கூடிய சீக்கிரத்தில் சட்டசபைத் தேர்தல்கள் வரப்போகின்றன. ஓட்டர்களும், ஏஜண்டுகளும் அதை ஒரு வெள்ளாமைக் காலமாக நினைத்துக் கொண்டிருந்தாலும், காங்கிரஸில் ஈடுபட்ட தொண்டர்களென்று சொல்லிக் கொள்ளும் சிலர். கைமுதல் இல்லாது வெள்ளாமை வரப்போகிறது என்று காத்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த நிலைமையில் தேர்தல்கள் ஜனப்பிரதிநிதித்துவம் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஜனப்பிரதிநிதிகள் என்று நாம் எப்படிச் சொல்லிக் கொள்ளமுடியும்? இதனால்தான் சர்க்காரை ஒழுங்கு படுத்துவதைவிட ஜனங்களை ஒழுங்குபடுத்தவேண்டுவது மிகவும் அவசர மென நினைத்து ஒத்துழையாமையோடு நிர்மாணத் திட்டத்தை இந்திய மக்களுக்கு மகாத்மா வற்புறுத்தி வந்தார். முன்சொன்ன தத்துவத்தில் வாழு கின்றவர்களுக்கு இது பிடிக்காமல் ஒத்துழையாமையை உடைத்தெறிந்து விட்டார்கள். நிர்மாணத் திட்டத்தையும் அழிக்கப்பார்க்கிறார்கள். பொது
ஜனங்கள் இதை அறிந்து நிர்மாணத் திட்டத்தை ஈடேற்றி வைத்து தேசத்தை ஒழுக்கமுடையதாகவும், கண்ணியமுடையதாகவும், சுயமரியாதை உடைய தாகவும் ஆக்கி, பிறகு தேர்தல்களில் கவலை செலுத்த விரும்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.07.1925
குடி அரசு - 1925 114
திருவாங்கூர் ராஸ்யத்தில் சாதிக் வவா௫ுமை
ராஜ்யத்தின் விஸ்தீரணம் சதுர மைல் - 7625
அதிலுள்ள கிராமங்கள்: - 3,897
இவற்றின் பட்டணங்கள் - 38
பட்டணங்களிலுள்ள வீடுகள் - 7201
கிராம வீடுகள் - 681816
ஜனத்தொகை மொத்தம் - 4,006,062
இதில் மலையாள பிராமணர்கள் - 15,000
நம்பூதிரிகள்!
பரதேச பிராமணர்கள் - 45000
பிராமணரல்லாத தீண்டக்கூடியவர்கள்- 800,000
தீண்டாத வகுப்பார். - 1650000
மகம்மதியர் - 275000
கிருஸ்தவர். - 1200000
தீண்டாதவர்கள் என்பவர்களின் பிரிவு
ஈழுவர்கள். - 675000
நாடார்கள். - 200,000
கம்மாளர் - 163,000
புலையர்கள். - 200,000
குரவர்கள் - 75,000
பறையர்கள் - 63,000
வண்ணார்கள் - 14,000
நாவிதர்கள். - 27,000
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வாணியர்கள். - 19,000
தண்டான் - 30,000
வேலன் - 13,000
வாலன் - 18,000
குயவர்கள். - 9,000
பரவர். - 11,000
பள்ளர். - 16,000
மாரன் - 12,000
கணியான் - 12,500
கிருஷ்ணவகார். - 10,000
அரையான் - 9,000
இடையன் - 7500
இலவாணியன் - 4500
மன்னான் - 9500
மறவன் - 10,000
குடுமி - 7500
சக்கிலி - 5500
சாலியன் - 8500
வேதன் - 6500
இந்தக் கணக்குகளின்படி தென்னாட்டில் தீண்டக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிற அநேக வகுப்பார்களை, திருவநந்தபுரத்தில் தீண்டாதார். வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவைகளில் கம்மாளர், இடையர், வாணியர், நாடார், இலவாணியர் முதலிய அநேக நல்ல சாதிகளையும், சுபாவத்திலேயே எவ்விதத் தனிக்குற்றமும் சொல்லுவதற்கில்லாமல் பரிசுத்த மாகவும் இருக்கிற அதாவது, தமிழ்நாட்டில் தீண்டக்கூடியவர்களென்று பழக்கத்தில் சொல்லப்படுகிற அநேகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர். களல்லாத அநேக சாதியார்களான ஈழுவர், கணியர், கிருஷ்ணவகார், மாரன், சாலியன், வேலன் முதலிய அநேக நல்ல சாதியார்களையும் தீண்டாதவர் களைப் போலவே நடத்தி வருகிறார்கள். இந்தக் கொடுமைகளால் 40 லட்சம் ஜனத்தொகையில் எட்டு லட்சம் தீண்டக்கூடியவர்கள் என்போர் 16 லட்சம் பேரைத் தீண்டாதவர்களாக நடத்திக் கொடுமைப்படுத்துவதோடு அல்லாமல்,
குடி அரசு - 1925 116
சென்ற முப்பத்தைந்து வருஷங்களுக்குள்ளாக T லட்சம் பேர் இந்து மதத்தை விட்டு அந்நிய மதத்திற்குச் சென்றுமிருக்கின்றனர். அது எப்படியென்றால் 1891-ம் வருஷத்திய ஜனக்கணிதப்படிக்கு திருவாங்கூர் சமஸ்தானத்திலுள்ள கிறிஸ்தவ மகாஜனங்களின் எண்ணிக்கை 526,000 பேர்.1921-ம் வருஷத்திய ஜனக்கணிதப்படி 1200,000 பேர். இதே வீதப்படி 1920 முதல் 1925 வரையில் உத்தேசமாய்க் கணக்கிட்டோமாகில் ஒரு லட்சம் பேருக்குக் குறையாது. ஆக நாளது தேதி வரை கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை 1300,000 என்று ஏற்படுகிறது. முப்பத்தைந்து வருஷத்திற்குள் 770,000 பேர்கள் திருவாங்கூர் சமஸ்தானமென்கிற ஒரு சிறு ராஜ்யத்தில் இந்து மதத்தை விட்டுக் கிறிஸ்தவ
மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். இது 10 வருஷத்திற்கு 100 -க்கு 35 ஆகிவிடுகிறது. இதல்லாமல் மகம்மதிய மதத்தையும் அநேக இந்துக்கள் தழுவி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த முப்பத்தைந்து வருஷத்திய அனுபவத்தை பார்க்கிறபொழுது திருவாங்கூர் சமஸ்தானமானது பொதுஜனங்களுக்கு, கல்வி அறிவு தாராளமாய் புகட்டி வந்த பிறகுதான் இம்மாதிரி மத மாறுதல் ஏற்பட்டிருக்கிறதே அல்லாமல் அதற்கு முன்பு இவ்வளவு அதிகமில்லை என்றே சொல்லலாம். உதாரணமாக இவ்வளவு
கல்வி அபிவிருத்தி ஏற்படாத 1891 -ம் வருஷத்திற்கு முந்திய பத்து வருஷத் தில்100-க்கு 5 பேர் வீதம் தான் கிருஸ்தவ மதத்தில் அதிகமாயிருக்கிறார்கள். 1891-ம் வருஷம் திருவநந்தபுரத்தில் ஜனக்கணிதக் கணக்குப்படி கிறிஸ்தவ
மகா ஜனங்களின் எண்ணிக்கை 500,000.1891ல் 526,000. இதே மாதிரி இனியும் நடக்குமானால் இன்னும் 50 வருஷத்தில் இந்துக்களே இருக்கமாட்டார்கள். ஆகவே அதிகமாக ஜனங்கள் அந்நிய மதத்தைத் தழுவ ஆரம்பித்தது கல்வி அறிவு ஏறி, சுயமரியாதை ஏற்பட்ட பிறகுதான் என்று உறுதியாய்ச் சொல்ல
லாம். இவ்விதம் சுயமரியாதை அடைந்த ஓர் பெரிய சமூகத்தை இந்து மதத்
தில் இருக்கக்கூடாது என்று உதைத்துத் தள்ளுவதுபோல் “நீ இந்து மதத்தில் இருக்கும் வரை உன்னைத் தொடமாட்டேன், பார்க்கமாட்டேன், தெருவில் நடக்க விடமாட்டேன், உன்னுடைய மதத் தத்துவங்களைப் படிக்கவும் சம்
மதிக்க மாட்டேன் என்று கொடுமைப்படுத்தி அந்நிய மதத்தில் சேர நாமே கட்டாயப் படுத்தியவர்களாவோம். இந்தப்பழிக்கு முக்கியமாய்ப் பாத்திய
மானவர்கள் 15,000 நம்பூதிரி பிராமணர்களும், 45,000 பரதேசப் பிராமணர்: களில் பெரும்பான்மையோரும், அந்த ராஜாங்கத்தில் இவர்களுக்குள்ள ஆதிக்கமும்தான் காரணம், ஏனெனில் மேற்படி சமஸ்தானத்தில் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லப்படுபவர்களில் பிராமணர் தவிர மற்றவர் அநேக
மாய் நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜனசங்கியில் ஏழு லட்சம் உள்ளவர்கள். இவர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக நாயர் சமாஜம் என்று ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். அச்சங்கத்தார் வருஷா வருஷம் ஒன்றுகூடி தங்களுடைய முன்னேற்றத்திற்காகவும், மற்றும் பொது நன்மைக்காகவும் பற்பல தீர்மானங்கள் செய்து வருகிறார்கள். அவ்வித, கூட்டங்களில் தீண்டாத வர்களுக்குத் தெருவில் நடப்பதற்கு உரிமை கொடுக்கவேண்டுமென்றும்,
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அதுமட்டுமல்லாமல் ஆலயப்பிரவேசமும் அனுமதிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்திருக்கிறார்கள்.அரசாங்கத்தாருக்கும் இதை அனுப்பி அந்தப் படி செய்யக் கேட்டுக்கொண்டு மிருக்கிறார்கள். சட்டசபையில் இதுவிஷயம் விவாதத்திற்கு வந்த காலத்தில் நாயர் கனவான்கள் அநேகமாய் இந்த தீர் மானத்திற்கு அனுகூலமாகவே இருந்திருக்கிறார்கள். பரதேசப் பிராமணர்கள். என்பவர்களிலும் சிலர் இதற்கு அனுகூலமாகவே இருக்கிறார்கள். இந்தக் கொடுமையைப்பற்றி திருவாங்கூர் அரசாங்கத்தாருடைய கொள்கை இன்ன தென்பதும் ஆக்டிங்கு திவான் ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணப் பிள்ளை அவர். களால் தெரிந்து போய்விட்டது.
அவர் சமஸ்தானத்து புதிய ராணியார் அவர்களுக்கு எழுதின கடிதத்தின் சுருக்கமாவது :-
“தெருவில் நடக்கக்கூடிய உரிமையை இந்துக்களில் யாருக்காவது கொடுக்கக்கூடாது என்று சனாதன இந்து மதம் கூறவில்லை. சமஸ்தான அரசாங்கத்தாரும் அதை எப்போதும் எதிர்த்ததேயில்லை. பலாத்காரம் உப யோகித்தால் கலகம் ஏற்படுமே என்று அஞ்சித்தான் தடை உத்திரவு போட்டது”.
இந்த வாக்கியங்களில் இருந்து யாவர் எவரிடம் பலாத்காரம் உயபயோ கிப்பது, எவருக்குள் கலகம் ஏற்படும் என்று அரசாங்கத்தார் அஞ்சியது என் பதை நிதானமாய் யோசித்தால் விளங்கும்.
ஆகையால் இந்தக்கொடுமைக்கு ஏதாவது பாவமேற்படுமானால் இந்த 15,000 நம்பூதிரி பிராமண கனவான்களைத்தான் முதலில் சேரும். இதைப்
பார்த்தால் இந்து சமூகத்திற்கு இந்தப் பிராமணர்கள் தர்மகர்த்தர்களாக இருப்ப தைவிட டயர், ஓட்வியர், லாயிட் ஜார்ஜ், பர்க்கன் ஹெத் சாதியார் தர்மகர்த் தர்களாய் இருப்பது அதிக கெடுதலாகத் தோன்றவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.07.1925
குடி அரசு - 1925 118
ஊழியன்
காரைக்குடியினின்றும் வாரந்தோறும் வெளியாகும் “தனவைசிய ஊழியன்”” தனது சிறிய தொண்டை விடுத்து உலகிற்கெல்லாம் தொண்டு செய்தல் வேண்டுமென்ற பரந்த நோக்கத்தோடு இவ்வாரம் “ஊழியன்” என்ற பெரிய பெயர் தாங்கி வெளிப்போந்துள்ளான். “தனவைசிய ஊழியன்”
முதலில் தன் சமூகத்திற்கு அதிக ஊழியம் புரிந்து வந்தானாயினும் எம்பெருமான் அறவாழி அந்தணன் காந்தி அடிகளின் ஒற்றுழையா இயக்கம். அத் தனவைசிய நாட்டின்கண் பரவி, அச்சமூகத்தினர்க்குச் சுதந்தர உணர்ச்சி யைக் கொடுத்தவன் தனவைசிய ஊழியனே.அதுவும் ஈராண்டுகளாகத் தன் சமூகத்தைவிடத் தேசமே பெரிதெனக்கொண்டு கதர், தீண்டாமை ஒழித்தல் முதலிய தொண்டுகளில் தனது கவனத்தை இடைவிடாது செலுத்தி வருகின்றான். ஊழியனின் ஆசிரியரைப்பற்றி யாம் அதிகம் கூறவேண்டு வதில்லை. நமது அன்பர் திருவாளர் ராய. சொக்கலிங்கன் அவர்கள் தமிழ் ஆராய்ச்சி மிக்குடையார். காந்தி அடிகளிடத்தில் அளவற்ற பற்றுடையார். “காந்தி பிள்ளைத்தமிழ்” என்ற ஓர் நூலும் ஆக்கியுள்ளார். சீரிய ஒழுக்க முடையார். இளம்வயது உடையவர். சுமார் நான்கு ஆண்டுகளாக இப் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்து அவர் செய்திருக்கும் தொண்டினை யாம்
விரிக்கிற் பெருகும். தனவைசிய நாட்டில் “தேசபக்தி” உண்டாக்கியதற்கு ஊன்றுகோலாக நமதன்பரே விளங்கினார். எதற்கும் அஞ்சாது உண்மையாக நின்று தமது அபிப்பிராயத்தை வெளியிடு வார். இதற்கு இவர் குருகுல விஷயமாகத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டதே போதிய சான்றாகும். இவர் விரிந்த நோக்கத்துடன் தமிழ்நாட்டிற்குத் தனது “ஊழியன்” மூலமாகச் செய்யப்போகும் அரிய தொண்டினைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியுறு கிறோம். “ஊழியன்” டிம்மி அளவுடன் பதினாறு பக்கங்களோடு, பல பெரியார். களின் சிறந்த கட்டுரைகளோடு வெளியாகி உள்ளான். சந்தாவைச் சிறிதும் உயர்த்தவில்லை. முன்இருந்ததுபோலவே வருடம் ஐந்து ரூபாய். தமிழ் நாட்டினர் எல்லோரும் நமது “ஊழியனை” ஆதரித்தல் இன்றியமையாக் கடனாகும்.ஊழியன் நீடுழி வாழ்க !
குடி அரசு - மதிப்புரை - 19.07.4925
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குடி அரசு - 1925 120
தெய்வ வாரி
நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க
சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி. துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்: லாமல் தெய்வத்திற்காகவும்,மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால்
தத்துவ விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிராயணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு தெய்வத்திற்கு மாத்திரம் வருடம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும் மற்றும் சில தர்மத்திற்காகவும் அங்கு போகும் ரயில் சத்தம், வண்டிச் சத்தத்திற்காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இதுபோலவே இமயம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தீர்த்தம், ஸ்தலம், கோவில் முதலியவைகளுக்கு மக்கள்: போக்குவரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம், வாழ்வு, சாவு,திதி இவைகளுக்காகவும் அதை நடத்திவைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூடநம்பிக்கையும் தானே செய்விக்கின்றது. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வ யாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலா மென்றும், தாங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினும் பெற்று விட லாமென்றும் நினைக்கிற பேராசை நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குணகர்ம
191 ௨... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யோக்கியதையைப் பொறுத்தல்லாமல், தாம் வைதிகச் சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்
திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கச் செய்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இட முண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும், தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும் மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும், செலவும் தெய்வத்தின் பெயராலும் ஏமாற்றுதலாலும். ஏற்பட்டிருக்கவே முடியாது. தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கை
கள் என்னவாகின்றன? வைதிகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன?' இவ்விரு கர்மங்களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதை என்ன என்பதை மக்கள் கவனிப்பதில்லை. “காளை மாடு கன்று போட்டதென்றால் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு” என்றே சொல்லி விடு கிறோம். காளை மாடு எப்படி கன்று போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கைப் போடுவதாலும், நமது குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும்? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம்,காசு கொடுப்பதாலும் அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச் சுகப் படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை.இவைகளால் நமது பொருள், நேரம்,
தத்துவம் வீணாகப் போவதல்லாமல், ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் பொழுது தன்னுடைய பணச் செருக் கையும், வக்கீல்களையும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையும் நினைத்துக் கொண்டு, இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாய்ச் செய்கிறானோ அப்படியே இந்த க்ஷேத்திரங்களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக்கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்டகாரியங்களும் வளருகின்றன. நல்ல யாத்திரை ஸ்தலம் என்று சொன் னால் நல்ல வியாபார ஸ்தலம் என்பதுதான் பொருளாக விளங்குகிறது. தேர்த்திருவிழா ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும், யாத்திரை ஸ்தலங்
களுக்குப் போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்கா திருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை விபசா ரத்திற்கும். சூதுக்கும், போதை வஸ்துகளுக்குமே பெரும்பான்மை யாக உபயோகித்து வருகின்றனர். வைதீகச் சடங்கைப் பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கிறோம்.
ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீககர்மம் செய்து வைத்துக்கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்குமுகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும்
குடி அரசு - 1925 122
தண்ணீரை அள்ளி இறைத்தார்.
புரோகிதர் : ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்துத் தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர் 2
பெரியார் : நீங்கள் கிழக்கு முகமாகப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?
புரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்த
மாக்கும்.
பெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.
புரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்தி லுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச்சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே !
பெரியார் : நீர், இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத் தைவிட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும் ?
புரோகிதர் : ( வெட்கத்துடன் ) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டுவிடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்து விடாதீர்கள்.
இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டி டைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு - கட்டுரை - 26.07.1925.
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுதேசமித்திரணின் மதுவிலக்குப் பிரசாரம்
சென்ற 22.7.25 ல் வெளியான சுதேசமித்திரன் மதுவிலக்கு விஷய
மாகச் “சென்னை பிஷப்பின் யோசனை” என்று மகுடமிட்டு எழுதிய குறிப்பைக் காண எமக்கு பெரும் நகைப்பு உண்டாயிற்று. கட்டாயப்படுத்திக் கட்குடியைத் தடுக்க முடியாதெனப் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோத ரர்களை முக்திக்குச் செலுத்தும் உபதேசியாகிய ஷே பிஷப் கூறியது சுதேச
மித்திரனுக்கு அடக்கமுடியாத ஆத்திரத்தையும் கோபத்தையும் மூட்டி விட்டது. சுதேசமித்திரனின் இக்கோபக்குறிப்பு எமக்கு வெறுஞ் சிரிப்பையே விளைவித்தது. “கண்ணாடி வீட்டில் வசிப்பவன் பிறன் வீட்டின் மேல் கல்
எறிதல் கூடாது என்ற சிறிய அறிவும் சுதேசமித்திரனுக்கு இல்லாமற் போனது எமக்குப் பெருத்த ஆச்சரியம். அதே சுதேசமித்திரனின் இதழில் முதல் பக்கத்தில் கண்ணைப் பறிக்கும் பெரிய எழுத்துகளில் “புட்டி” படத்துடன் “எக்ஸ்ஷாஷ்” பிராண்டியைப் பற்றிப் புகழ் மிகுந்த விளம்பரஞ் செய்து பொருள் சம்பாதித்துவரும் சுதேசமித்திரன் மெய்மறந்து பாவம் எழுதி விட்டான் என்றே நினைக்கிறோம். இத்தகைய விளம்பரங்களின் வாயிலாகத் தான் நமது சுதேசமித்திரன் மதுவிலக்குப் பிரசாரம் செய்து வருகின்றான்.
போலும்! சுதேசமித்திரன் அகராதியில் “மதுவிலக்கு” என்ப தற்கு “மதுவருந்த விளம்பரஞ் செய்தல்” என்பதுதான் அர்த்தம் போலும் பணத்திற்குமுன் அறிவு, தேசாபிமானம், சுயஉணர்வு எல்லாம் பறந்து விடுவது சகஜமே. பணமென்றால் பிணமும் வாய் திறக்குமல்லவா? சொல்வதொன்று செய்வ தொன்று என்பதுதான் எமது கொள்கை என்று சுதேச மித்திரன் பெரிய விளம். பரஞ்செய்து விடுவானாகில் எமக்குக் கவலையே இல்லை.“கட்டாயத்தினால் குடியை வெருட்டினாலொழிய கல்வி அறிவைக் கண்டு அது ஓடுமென்று நினைக்க உலகின் அனுபோகம் இடங்கொடுக்கவில்லை” என்று வெகு சமத்காரமாகச் சுதேசமித்திரன் செய்த முடிவை நாமும் ஆமோதிக்கிறோம். சுதேசமித்திரனின் சொந்த அனுபோகமே இடங்கொடுக் காமல் இருக்கிறதை.
நேரில் அறிந்திருந்தும் உலகின் மீது குற்றத்தைச் சுமத்துவானேன் என்று நாம் கேட்கிறோம்? சுதேசமித்திரனின் கல்வியறி வைக் கண்டு ஓடாத கட்குடி, பாமர ஜனங்களின் கல்வியறிவைக் கண்டு ஓடுமென சென்னை பிஷப் கூறியது மிகுதும் அறியாத்தனம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குடி அரசு - தலையங்கம் - 26.07.1925
குடி அரசு - 1925 124
FEIM®G முணிசியல் நிர்வாகம்
- பழைய கறுப்பன்
நான் யார் ?
பழைய கறுப்பன் என்பவர் யார்? என்று அநேகர் என்னையே கேட்டார்கள். அவ்வப்பொழுது என் மனதில் தோன்றின பதிலை அவரவர்:
களுக்குச் சொன்னேன். சிலருக்கு திருப்தி, சிலருக்கு அதிருப்தி. உலகத்தில் எல்லாருக்கும் நல்லவனாய், எல்லாரையும் திருப்தி செய்ய நினைப்பது முடியாத காரியம். அவ்வித முயற்சி “கிழவனும், மகனும், கழுதையும்” என்ற கதையாய்த்தான் முடியும். ஆகையினால் அதிருப்தியினால் நான் கவலைப்படவேயில்லை. ஆனால் இந்தக் கேள்வியில் அடங்கிக் கிடக்கிற ஒரு உண்மையை எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும். விஷயம் முக்கி யமா? விஷயகர்த்தா முக்கியமா? என்பதுதான். விஷயகர்த்தா முக்கியத் தினால்தான் இந்தக் கேள்வி பிறந்தது என்று அறிந்தேன். விஷயகர்த்தாவைக் குறித்துதான் விஷயம் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்று நமது ஜனங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய மனப் பான்மைதான் நம்மையும் நமது நாட்டையும் தற்கால கதிக்குக் கொண்டுவந்து விட்டது. நான் யாராயிருந்தாலென்ன? சொன்னதெல்லாம் சரியென்று தோன் நினால் அந்தக் குறை நிவர்த்திக்கப் பாடுபடுங்கள். இல்லையேல் இன்னமும். பாடுபட்டுக் கொண்டிருங்கள். சரியில்லையென்று தோன்றினால், ஏதோ பைத் தியக்காரன் உளறுகிறான் என்று தள்ளி விடுங்கள். என்னுடைய வீரப்பிரதாப வியாக்கியானம் போதும். நிற்க,
முனிசிபல் கட்சிகள்
தற்கால முனிசிபல் நிர்வாகிகளுக்கு விரோதக் கட்சியில் நானிருப்
பதால் அவ்விதம் எழுதினதாகச் சிலருடைய எண்ணம். முனிசிபல் வேலை
யில் எனக்குக் கட்சியில்லை. என் வார்த்தையை நம்பாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? உங்கள் இஷ்டம். முனிசிபல் நிர்வாகத்தில் கட்சி பேதத்
திற்கே இடமில்லை. முனிசிபல் வேலை ராஜீய வேலையல்ல. ராஜீயக் கட்சிக்
கும் முனிசிபல் வேலைக்கும் வெகுதூரம். காந்தி சொல்லுகிற மாதிரி ஏதாவது ஒருராஜியக் கட்சியின் பலத்தைத் தெரிந்து கொள்ள முனிசிபல் எலக்ஷன்கள் சாதகமாக இருக்குமே ஒழிய வேறு பிரயோஜனம் ஒன்றுமில்லை. ஈரோடு முனிசிபலில் ராஜீயக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்களா என்றால் அதுவு
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மில்லை. ஆனால், இருக்கிறதாகச் சொல்லிக்கொள்ளலாம். அதெல்லாம் வேஷம்தான். நமது முனிசிபாலிட்டியில் எத்தனை கவுன்சிலர்கள் இருக் கிறார்களோ அத்தனை அல்லது ஒன்றிரண்டு குறைந்த கட்சிகள் இருக்கின் றன என்பது என் எண்ணம். எல்லாம் சுயநலக் கட்சியே. எப்படியாவது தங்கள். தங்கள் சொந்த இஷ்டங்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்ற
கட்சியின் மேல் நமது முனிசிபல் நிர்வாகம் நடைபெறுகிறது. இத்தனைக் கட்சியில் நான் எந்தக் கட்சியைச் சேர்வது? உள்ளுக்கு இருந்தால் நானும் ஒரு சுயநலக்கட்சி ஸ்தாபிதம் செய்து கொள்வேன். அந்தப் பாக்கியம் இல்லை. முனிசிபாலிட்டியில் தற்காலம் நடக்கும் அரசாங்கத்தை முன்னிட்டு இரண்டேகட்சிகள்தான் இருக்க முடியும். ஒன்று அரசாங்கக்கட்சி,மற்றொன்று ஜனங்கள் கட்சி. இதைத்தவிர வேறு கட்சிகள் இருக்க வழியே கிடையாது. ஆனாலோ, மேலே சொன்னமாதிரி நமது முனிசிபாலிட்டியிலோ ஒவ்வொரு வரும் தனிக்கட்சி, இதுவும் ஒரு காட்சி தான். ஈரோடு ஜனங்கள் இந்தக் காட்சியைக் கண்டு களிக்கும்படியாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
சென்னை கவர்னர் நீ௫ழி வாழ்க
சென்னை கவர்னர் நீடூழி வாழ ஈரோட்டார் ஒவ்வொரு கோயிலிலும் அர்ச்சனைகளும், பூஜைகளும் செய்யும்படியாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். அந்தப் புண்ணியவானால் அல்லவா லார்டு நேப்பியர் வீதி நடக்கிறதற்கு யோக்கியமாயிற்று? ஈரோடு ஜனங்களின் எலும்பு தோல் போர்த்த பாதங்க
ளுக்குப் பரிதாபப்படாமல் போனாலும் கூட சென்னை கவர்னருடைய மோட்டார் வண்டி சக்கரத்தின் ரப்பர் தேய்ந்து வருத்தப்படுமேயென்று தங்கள். கண்ணில்பட்டதுபோல எண்ணி முனிசிபாலிட்டியார் இந்த உபகாரம் செய்ததற்கு என்னுடைய மனப்பூர்வமான வந்தனம்.
கவர்னருக்கு ஒரு வேண்டுகோள்
கவர்னருக்கு ஒரு வேண்டுகோள் செய்துகொள்ள விரும்புகிறேன். ஈரோட்டாரும் என்னோடு “கோவிந்தா” போடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. கூடிய சீக்கிரத்தில் ஈரோடு வீதிகளில் சென்னை கவர்னர் மோட்டார்.
களில் ஒரு தெருவுகூட விடாமலும் ஊர்கோலம் வரும்படியாகத் தம்முடைய அலுவல் திட்டத்தைப் (Programme ) போட்டுக்கொள்ள வேண்டுமென்பதே எனது வேண்டுகோள். அவ்விதம் அவர் வருவாரானால் வீடு தவறாமல் பூர்ணகும்பம், ஆலாத்தி முதலியவைகள் எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள். செய்ய என் முழுமனதுடன் “நாய்போல்” உழைக்கிறேன். கேட்டால்
முனிசிபல் கவுன்சிலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
என்னுடைய, நான் நம்புகிறபடி ஈரோட்டு ஜனங்களுடைய வேண்டு. கோளின்படி சென்னை கவர்னரை ஈரோட்டுக்கு அழைத்து வரத் தங்களால்
குடி அரசு - 1926 126
ஆன முயற்சி செய்யும்படி வேண்டுகிறேன். அவ்விதம் செய்வார்களாகில் அவர்களுக்கும் கவர்னருக்குச் செய்யும் மரியாதைகளை வேறொரு நாளில் செய்ய வஞ்சகமில்லாமல் பாடுபடுகிறேன். இப்பொழுது 100 ரூபாய் செலவ ழித்தார்கள் என்று கேள்வி. அப்பொழுது அந்த தொகைக்கு முன்னால் இன் னொரு பூஜ்ஜியம் சேர்த்துக்கொள்ள மனப்பூர்வமாய் ஆதரவளிக்கிறேன்.
ரோட் போட்ட செலவு என்ன ?
கவர்னர் மோட்டார்கள் போக ரிப்பேர் செய்த ரோட்டிற்கு என்ன செலவு ஆயிற்று என்பதை அறிய ரொம்ப ஆவல். என் ஆசை நிராசை என்பது தெரியும். ஆவலை அடக்க முடியாமல் வெளியிட்டேன். அவ்வளவு தானே நான் செய்யமுடியும். இதற்கு முன்னால் அந்த ரோட்டிற்கு ஆன ரிப்
பேர் செலவுகளையும் இப்பொழுதான செலவையும் பார்த்து உண்மையை வெளியிடுவார்களா? என்று கேட்கிறேன். ஆனால் இன்னொரு சங்கதி, மேட்டூர் அணைப் பணத்திலிருந்து இந்த ரோட்ரிப்பேர் செய்தார்கள் என்று ஒருவர் சொல்லுகிறார். எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாம் அறிந்தவர்கள் மெளனவிரதம் சாதிக்கிறார்கள். ஈரோடு ஜனங்கள் வாயில்லாப் பூச்சிகள் மாதிரி இருக்கிறார்கள். யாரை நோவது என்று தெரிய வில்லை.என்னைப் பொறுத்த மட்டிலும் “கல்லைக் குத்தி கை நோவது” என்று சொல்வது வெட்கமாக இருக்கிறது. எலக்ஷன் காலத்தில் ராப்பகலாக ஓடி ஆடித் திரிந்து ஆசை வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றினவர்களைப் பிரதி நிதிகளாக அனுப்பிவிட்டு நமது வார்த்தைகளுக்குக் காது கொடுத்துக் கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று ஜனங்கள் முணு முணுக்கிறதில் பிரயோஜன மென்ன? இனி மேலாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்களா என்றுதான் ஈரோடு ஜனங்களை நான் இப்போது கேட்கிறேன்.
வரவேற்புக்கு 100 ரூபாய்
நமது முனிஸிபல் கவுன்ஸிலர்களின் ராஜாபிமானத்தை எந்த அளவு கோல் கொண்டு அளப்பதென்று தெரியவில்லை.இவ்வளவு ராஜாபிமானத்
திற்கு, அவசியம் சன்மானங்கள் பெறவேண்டியவர்களே. ஆனால் பாவம். இன்னும் 5, 6 மாதங்கள் காத்திருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய வருத்தம். நமது ராஜாவின் பிறந்த தினம் போய்விட்டது. அப்பொழுதே பட்டங்களும் செலவாய் விட்டன. இந்தப் பாழுங் கவர்னர் இராஜா பிறந்த
தினத்திற்கு முன்னாலேயே வந்திருக்கக்கூடாதா? சிந்தின பாலுக்கு அழுது என்ன செய்வது? புதுவருஷப் பிறப்பை நான் எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதைத்தவிர வேறு வழியில்லை. விதி யாரை விட்டது?
கவர்னர் வரவேற்பு அலங்காரத்திற்கு 100 ரூ. நமது கவுன்சிலர்கள் சாங்ஷன் செய்தார்களாம்.இந்தத் தொகையை ஜில்லா கலெக்டர் அநுமதித்து இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் நமது முனிசிபா
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
லிட்டியார் காந்தியடிகளுக்கு வரவேற்பு செய்தது எனக்கு ஞாபகத்திற்கு வரு கின்றது. அப்பொழுது ரூ.50 போல் செலவழிக்க கவுன்சிலர்கள் தீர்மானித்தார்கள். சரியான தொகை நினைவில்லை. அப்போதைய கலெக்டர்: கண்ணுக்கு காந்தி கவர்னராகத் தோன்றவில்லை. ஆனபடியால் “இவ்வளவு ரூபாய் வேண்டாம். இதை அநுமதிக்க மாட்டேன், முனிசிபாலிட்டியில்
காகிதம் இருக்கிறது, பேனா இருக்கிறது,மை இருக்கிறது, சைக்கிளோ ஸ்டைல் எந்திரம் இருக்கிறது. அவைகளைக் கொண்டு வரவேற்புப் பத்திரம்
தயாரித்துக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டாராம் - இந்த அவமானம் இன்னும் நீங்கவில்லை. அதற்குள் கவர்னருக்காக ரூ.100 செலவழித்து நல்ல பிள்ளைகளாக நமது கவுன்சிலர்கள் முன்வந்துவிட்டார்கள். ஆனால் அப் பொழுது இருந்த கவுன்சிலர்கள் வேறு இப்போது இருப்பவர்கள் வேறு என்று சொல்லலாம். வாஸ்தவம்; ஆனால் முழுவதும் வாஸ்தவம் அல்ல; பழைய புலிகளில் சிலர் இப்போதும் இருக்கிறார்கள் - தம்பிக்கு வந்த அவமானம் தமயனுக்கு இல்லையா? என்று கேட்கிறேன். அதுதான் போகட்டும். முனி
சிபல் கவுன்சிலுக்கு அவமானம் என்றால் ஈரோட்டு ஜனங்களுக்கு அவ மானம் என்றுதானே அர்த்தம் - அப்போதுள்ள ஜனங்கள்தானே இப்போதும் இருக்கிறார்கள். பழைய ஈரோட்டார் புது உயிரும், புது உருவமும் பெற்று விட்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது.
நமக்கும் ஒரு காரியதரிசி
இனியும் நமது கவுன்சிலர்கள் முனிசிபல் நிர்வாகத்தில் கவலை கொள்ளவில்லை என்று யார் சொல்ல முடியும்? நமது முனிசிபாலிடியில் எப்படியோ திடீரென்று வேலை அதிகமாகப் போய்விட்டது என்று கண்டு கொண்டார்கள் - உடனே தலைவர் - உபதலைவர்களுக்கு உதவியாக ஒரு காரியதரிசி கொடுத்திருக்கிறார்கள். என்னமோ உளறுகிறேன். ஏன் வேலை யில்லை? சிங்கார நந்தவனம் - நீந்து கட்டம் ( Swimming ல் இவைகள். எல்லாம் ஏற்படப் போகின்றன. மின்சார விளக்கும் வந்து விடும். நெருப்ப ணைக்கும் கருவியும் வந்துவிட்டது. ஈரோட்டிற்கு அக்கினி பகவான் பிரவேசம் செய்ய நமது கவுன்சிலர்கள் விண்ணப்பம் போட்டு விட்டார்களோ என்னமோ இன்னமும் தெரியவில்லை. அது கிடக்கிறது. இவ்வளவு புதிய வேலைகள் உண்டாகும்போது உதவிக்கு இன்னொருவர் வேண்டாமா? வேண்டும்! வேண்டும்! ஊரார் பணம்தானே? பதவிக்கு சண்டை போட்ட வர்கள் வேலை செய்ய உதவி ஆள் தேடுகிறார்கள். ஆனால் காரியதரிசியை நினைக்கும் போதெல்லாம் தாங்கமுடியாத வருத்தம் எனக்குண்டாகிறது. நமது முனிசிபல் ஆட்சியோ இரட்டை ஆட்சி; இதில் எந்தப் பகுதி ஆட்சிக்கு அடங்கினவர் அவர் என்பதுதான் எனது பிரச்சனை. இரண்டு ஆட்சிக்கும் ஆளாக இருக்க முடியுமா என்று சந்தேகம் - பாவம் - காரியதரிசியின் பாடு தான் பரிதாபம் - ஒருவள் இரண்டு புருஷர்களைக் கல்யாணம் செய்து கொண்ட மாதிரிதான். ஒருவனுக்கு இரண்டு பொண்டாட்டிகள் இருந்தால்
குடி அரசு - 1925 128
கூடுமான வரையில் சண்டை அடுப்பங் கரையில்தான். ஒருவளுக்கு இரண்டு.
புருஷர்கள் இருந்தால் நடுவீதியில் தான் மல்யுத்தம். “ஊருக்கு ஒரு தேவடியாள் யாருக்கென்று ஆடுவாள்” என்ற பழமொழியும் உண்டு. இந்தச் சங்கடத்தில் இருந்து நீங்கிக் கொள்ள ஒரு வழியுண்டு. அந்தக் காரியம் கவுன்சிலர்களால்தான் ஆகவேண்டும். வேலை மிகுதியாய் விட்டது என்று
நிச்சயம் வந்து விட்டது.ஏன் இன்னொரு உப காரியதரிசியையும் நியமிக்கக் கூடாது? கவுன்சிலர்கள் பெரிய மனது செய்தால் முடியாத காரியமுண்டோ?' தலைவர் - உபதலைவர் சண்டையும் ஒழியும்! காரியதரிசிகள் பாடும் நிவர்த்தி யாகும். இந்த யோசனையைக் கவுன்சிலர்கள் ஏற்பார்களா என்பதுதான் எனக்குச் சந்தேகம் - ஏன் ? அவர்களைத்தான் கேட்க வேண்டும்.
நன்றி மறவாமை
நமது கவுன்சில் ஹாலில் சில கனவான்களைத் தொங்க விடுவதாக நமது கவுன்சிலர்கள் தீர்மானித்திருக்கிறார்களாம் - இதேது இவன் நிறுத்த மாட்டான் போலிருக்கிறதே என்று வாசகர்கள் சலிப்புக் கொள்ளுகிறார்கள். நிறுத்தி விட்டேன். பாக்கி பின்னால்;அதுவும் வாசகர்கள் விரும்பினால்தான்.
குறிப்பு:-
கவுன்சிலர்களிடமும், வாசகர்களிடமும் மன்னிப்புக்கேட்க வேண்டிய வனாக இருக்கிறேன். காரணத்தோடுதான். சென்ற வியாசத்தில் *கள்ளிவனம் "எடுக்கரூபாய் 500 செலவு செய்வதாகக் கேள்விப்படுகிறேன் என்று எழுதினேன். அப்பொழுதும் நிச்சயமாக ஒன்றும் சொல்லவில்லை.உண்மை தெரியாததினால் தான். ஆனால் அந்த உண்மையை நான் கேட்டுக் கொண்டபடி எவரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்புறம் உண்மையை அறிய நானே இதைப் பற்றித் தெரிய வேண்டியவரான ஒரு நண்பரைக் கேட்டேன். அவர்ரூ.235தான் செலவு என்றார். சரிஎன்றேன். இப்பொழுது என் மன்னிப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.
குடி அரசு - கட்டுரை - 26.07.1925
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குரோதன வருஷத்தின் பன்
இவ்வருஷம் சங்கராந்தி வியாபாரிகளின் மேலும், லேவாதேவிக் காரர்கள் மேலும், ஜாதி ஆணவத்தின் மேலும் வந்திருக்கிறது போல் காணப் படுகிறது. ஏனெனில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று லட்சக்கணக்கான துகைக்குச் சில வியாபாரிகளும், 25 லட்சம், 50 லட்சம்,75 லட்சம் என்று பத்து லட்சக்கணக்கான துகைக்கு லேவாதேவி செய்யும் சில நாட்டுக்கோட்டை செட்டிமார் முதலியவர்களும் தீவாளி ஆகிவருவதாகவும், பார்ப்பது தோஷம், தெருவில் நடப்பது தோஷம் என்கின்ற ஆணவத் தத்துவங்கள் அழிந்து வருவதாகவும், இன்னும் அடியுடன் அழியப் பொதுமக்கள் உணர்ச்சியுடன் முயர்ச்சி செய்வதாகவும் பத்திரிகைகளில் பார்த்துவருகிறோம்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 26.07.1925
குடி அரசு - 1925 130
காகவோரி அணை
ஈரோட்டிற்கு முப்பத்தேழு மைல் தூரத்தில் மேட்டூர் என்னும் கிராமத்
திற்கு அருகில் ஓடும் காவேரிநதியின் இருகரைகளிலும் இரண்டு பெரிய மலைச்சரிவுகள் இருக்கின்றன. அவ்விரு சரிவுகளுக்கு இடையில் ஓடும் காவேரிநதியின் பிரவாக ஜலத்தை இச்சரிவுகளை ஆதாரமாகக்கொண்டு அணை கட்டி நிறுத்திவிட்டால், வேடைகாலத்திற்கு நீர்ப்பாசனத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்று சுமார் 50, 60 வருஷ காலமாக சென்னை அரசாங்கத்தாருக்கு நிபுணர்களால் யோசனை சொல்லப்பட்டு வந்தது. அந்த யோசனையின் மேல் சுமார் 25 வருடத்திற்கு முன்பாக ஸ்ரீமான் பி.வி.மாணிக்க நாயக்கர் முதலிய இஞ்சினியர்களால் இந்த அணைக்குத் திட்டம் போடப்பட்டிருந்தும் நாளது வரையிலும் வேலைத் துவக்கப்படாமல் இப்பொழுதுதான் வேலைத் துவக்கத்திற்கு ஏற்பாடாக, சென்னை கவர்னர். அவர்களால் மேட்டூரில் சூலை 20 தேதி அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது. இவ்வேலைக்கு 6 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வேலை
முடிய குறைந்தது பத்து வருஷம் ஆகும் என்று கருதப்படுகிறது.
இந்த அணையின் நீளம் ஆறாயிரம் அடி நீர்தேக்கத்தின் பரப்பு சுமார் இருபது சதுரமைல். இதன் நீர்ப்பாச்சலினால் மூன்று லட்சத்து முப்பதாயிரம். ஏக்கர்களுக்கு ஒரு போகமும் 70 ஆயிரம் ஏக்கராவுக்கு இரண்டாம் போக
மும் தண்ணீர் பாய்ந்து விளைவு உண்டாகும். இவ்வணையின் நீர்பாசனம்
முழுதும் தஞ்சை ஜில்லாவுக்கே மிகுதியும் உபயோகப்படுமேயல்லாது கோயமுத்தூர், சேலம் ஜில்லாக்களுக்குக் கொஞ்சமும் உபயோகமில்லை. இவ்வளவு பூமியும் பட்டுக்கோட்டை தாஜூக்காவில் தான் திட்டம் போடப் பட்டிருக்கிறது. இந் நீர்ப்பாசனத்திற்கு ஏக்கரா ஒன்றுக்கு 15 ரூ. வீதம் தான் தீர்வை விதிக்கப்படும்.
கோயமுத்தூர். சேலம் ஜில்லாக்களில் டை நீர்ப்பாசன வசதி செய்வ தாயிருந்தால் செலவு அதிகமாகுமென்றும் அதனால் ஏக்கரா ஒன்றுக்கு 30
ரூ. தீர்வை விதிக்கவேண்டிவரும் என்றும் கருதி இந்த யோசனையைக் கைவிடப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதை புனராலோசனை செய்யும்படி கோயமுத்தூர் ஜில்லாவாசிகள் கூடி யோசித்து ஏக்கரா ஒன்றுக்கு 22 ரூ. தீர்வை கொடுக்கத் தாங்கள் சம்மதிப்பதாயும் கோயமுத்தூர் ஜில்லாவுக்கும் பாசன வசதிசெய்துகொடுக்க வேண்டுமென்றும் தீர்மானித்து அரசாங்கத்திற்கும்
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தெரிவித்திருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே மேட்டூர் காவேரிஅணையைப் பெரிய அணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
நமது தேசத்தில் உள்ள நீர் வசதியைக் கவனித்தால் இம்மாதிரி அனேக அணைகள் கட்டி சமுத்திரத்தில் போய் வீணாக விழும் தண்ணீரைத் தேக்கிக் கோடிக்கணக்கான ஏக்கரா பூமிகளைச் சாகுபடி செய்ய எவ்வளவோ செளக ரியமிருக்கிறது. நமது அரசாங்கத்தார் இத்தேசத்திற்குப் பிழைக்க வந்திருக் கிறவர்களானதாலும், நமது தேசத்தின் வாழ்வுகளில் லட்சியம் செலுத்த வேண்டிய அவசியமில்லாதவர்களாயிருக்கிறவர்களானதாலும் பெரிய கூட்ட மாகிய 33 கோடி ஜனங்களை வெகு சிலபேர் ஆளவேண்டி யிருக்கிறதான தினாலும் சந்துபொந்து மூலை முடுக்குகளுக்கெல்லாம் தங்கள் பீரங்கியும், துப்பாக்கியும், பட்டாளங்களும் போகத்தக்கவண்ணம் ரயில் போடுவதி லேயே கவலை செலுத்தி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை அதர்க்கே. செலவிட்டு ரயில் வசதிகளைப் பெருக்கி வந்தார்களே ஒழிய, இவ்வணை: கட்டுகிற விஷயத்தில் இவர்களுக்கு இஷ்டமும் கவலையும் மிகுதியாக இருக்கவேயில்லை. அன்றி மற்றொரு காரணமும் கூறலாம். இந்நாட்டில் நீர்ப்பாசன வசதி அதிகமேற்பட்டுவிட்டால் மக்களுக்கு கூலி வசதியும் பிழைப்பு வசதியும் அதிகமாய்விடும். வெளிநாட்டில் உள்ள அன்னிய தோட்டக்காரர்களுக்கு நம் நாட்டிலிருந்து கூலியாட்கள் ஏற்றுமதியாக இடமில்லாமல் போய்விடுமே என்கிற பயமும் இருக்கலாம். நமது சட்டசபை அங்கத்தினர்களுக்கும் இது விஷயங்களில் கவனம் செலுத்தத்தக்க புத்திவரும்படியான கல்வியும் நமது தேசத்தில் இல்லை. மின்சார விசை கொண்டுவந்து விளக்குப்போடவும், யந்திரம் வண்டி கொண்டுவந்து குப்பை வாரவும், இயந்திரம் வைத்து நூல் நூற்கவும் நெசவு செய்யவும், பூமிக்குள்
ரயில் போடவும் அல்லாமல், தேச நலத்திற்கோ ஏழைகள் பிழைப்பிற்கோ என்ன செய்வது என்று யோசிக்க நேரமோ புத்தியோ இல்லாமல் போகும்படி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
பயங்கொள்ளியாகவும் எப்பொழுதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வ திலேயே கருத்துள்ளதாகவும் குடிகளிடத்தில் சதாகாலமும் சந்தேகமுள்ள தாகவும் அன்பினால் அல்லாமல் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டினால் ஆளுவதாகவும் இருக்கிற ஒரு அரசாங்கத்தினிடை இவற்றைத் தவிர நாம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
குடி அரசு - கட்டுரை - 26.07.1925
குடி அரசு - 1925 132
ஸ்ரீ சிவம் மறைந்தார்
சென்ற இரண்டு மூன்று வாரங்களாக மறைந்திருந்த துக்கம் நம்மை மீண்டும் சூழ்ந்து விட்டது. இது, தேசத்தின் பிற்கால வாழ்வில் மேலும், மேலும் சலிப்பிற்கே இடம் கொடுத்து வருகின்றது. சின்னாட்களுக்கு முன்பாக ஸ்ரீ
ஐத் சுப்பிரமணிய சிவனார் மதுரையில் நோய்வாய்ப்பட்டு மிக வருந்துகிறார். எனப் பத்திரிகைகளில் பார்த்தோம். கொடிய கூற்றுவன் இவ்வளவு விரைவில் நமது அரிய தேச பக்தரைக் கொள்ளை கொள்வான் எனக் கனவினும் கருதவில்லை. நமது சிவனார் பழைய தேச பக்த வீரர்களில் ஒருவர். 1907ம் ஆண்டில் நமது நாட்டிடை ஏற்பட்ட சுதேசியக் கிளர்ச்சியின் பொழுதே முக்கியமானவராக நின்று தொண்டாற்றியதன் பலனாய் ஸ்ரீமான்கள்: வஃசிதம்பரம்பிள்ளை, குருதாதய்யர் முதலிய நண்பர்களுடன் ஆறு வருட தண்டனை அடைந்து சிறையில் பட்ட கடினங்கட்கு ஓர் அளவில்லை. அப்பொழுது அவரைக் கொண்ட நோய்தான் இதுகாலை அவரை வீழ்த்தியது. அக்காலத்தில் சிறை என்றால் எவ்வளவு இழிவும் பயமும் என்பது யாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. அப்படி யிருந்தும் சிறையினின்றும் வெளிவந்து மீண்டும் அஞ்சாது தேசப் பணியிலேயே தனது காலத்தைக் கழிக்கலானார். சிவம் அவர்கள் ஒத்துழையாத் தர்மத்தில் ஏனையவற்றை ஏற்றுக்கொள்ளினும் சாத்வீகம் என்பதைச் சிறிதும் ஏற்றுக் கொள்ளவே யில்லை. ஒத்துழையாமை ஓங்கி வளர்ந்து நின்ற காலத்தினும் சிவம் அவர்கள் பொழிந்த சொற்பெருக்குகளெல்லாம் வீரத்தை அடிப்படையாகவே கொண்டிருந்தன என்றும் எவரையும் அஞ்சாது எதிர்த்து நிற்பது அவரது வாழ்நாளின் ஓர் பெரிய லட்சியமாகும். இரண்டாம் முறையாக சிவம் அவர்கள் 1921-ம் ஆண்டு சின்னாள் சிறையிலிருந்து உடல் வலி குன்றி உயிர் போகும் நிலையிலிருந்த காரணத்தால் வெளியில் வந்து விட்டார். மீண்டும் அரசாங்கத்தார் சிவம் அவர்களைச் சிறையிலிட வேண்டிய முயற்சிகளெல்லாம் செய்தனர். சிவம் அவர்கள் அரிய நூல்கள் பல எழுதியுள்ளார். அவர் எப்பொழுதும் இளைஞர்களை வீரர்களாக்க வேண்டும் என்ற கருத்துடையார், அக்கருத்துப்படி இன்றுவரை பல இளைஞர்களைப் பயிற்றுவித்து வந்தார். அவரது இளம் சீடர்கள் மனத் தளர்ச்சி உறாமல் தேசப் பணியிலேயே தங்கள் காலத்தைச் செலுத்த வேண்டுகிறோம். எமது அநுதாபத்தை அவர்கட்குத் தெரிவிக்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1925.
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சாஸ்திரியாரிண் தேசாயிமானம்
திரு.வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரை அறியாத இந்தியர் இரார் என்பது உறுதி. நமது தேசாபிமானிகளில் ஒருவராக அவரும் விளங்கி வருகின்றார். ஆங்கிலேயர் இதுவரையிலும் இந்தியர்களுக்கு அளித்த பட்டங்களில் உயரிய பட்டத்தைப் பெற்றவராவர். இரண்டொரு நாட்களுக்கு
முன்னர் அவர் தமது தேசாபிமானத்தின் ஆழத்தை இந்தியருக்கு அளந்து காட்டியிருக்கிறார். நாட்டின் தற்கால அரசியல் நிலையைப் பற்றிச் சிறந்த தேசாபிமானிகளின் அபிப்பிராயங்களை அறிய வேண்டி “பம்பாய் கிரானி
கல்” பத்திரிகை சில கேள்விகளை விடுத்திருக்கிறது. அக்கேள்வி களுக்குப்
பதில் அளித்த பெரியார்களில் நமது சாஸ்திரியாரும் ஒருவர். அக் கேள்வி களில் ஒன்று பின்வருமாறு:- “அந்நிய நாட்டு ஆடை அணிவதை விட்டு விடத் தாங்கள் தயாராக இருக்கிறீர்களா? தாங்கள் அந்நிய ஆடையை உபயோகித்துக் கொண்டு வரின், சுதேசி இயக்கம் முன்னேற்றமடைய அதை விட்டுவிட ஒருப்படுகிறீர்களா?” இக்கேள்விக்கு “இல்லை” என்று ஒரே வார்த்தையில் நமது சாஸ்திரியார் பதில் கூறிவிட்டார். என்னே இவரது தேசாபிமானம்! என்னே ஏழை இந்திய மக்களிடத்து இவருக்குள்ள பேரன்பு! ஏழை இந்திய மக்கள் பாடுபட்டுக் கொடுத்த வரிப்பணத்தில் உலகஞ்சுற்றி வந்த நமது சாஸ்திரியாரா இந்திய ஏழை மக்க ளுக்கு இரங்கப்போகிறார்?'
எல்லாம் வெறும் பகற்கனவே. ஆங்கில மாயையில் அழுந்திக் கிடக்கிறார்
பாவம் நமது சாஸ்திரியார். ஆங்கில மோகத்தின் வலிமையே வலிமை! பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் உதறித் தள்ளிவிடும்படி சாஸ்திரியார். போன்ற உத்தமர்களையும் வெருட்டி விடுகின்றது. சாஸ்திரியார் நீடுழி வாழ்க!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1925
குடி அரசு - 1925 134
தேசபந்து தாசர் இரவு பகலாய்ச் செய்யவேண்டுமெனக் கருதி வந்த கிராமநிர்மாண வேலை செய்யும்பொருட்டு இந்நிதி வசூலிக்க காந்தி அடிகள், பண்டித மதிலால் நேரு, சரோஜனி தேவியார், ஜம்னாலால் பஜாஜ், பி.ஸி.ரே, செளகத் அலி, ஜவஹரிலால் நேரு முதலிய அரிய தலைவர்கள் ஓர் வேண்டு கோள் விடுத்துள்ளார்கள். இந்நிதியைப் பிரசாரத்திற்குச் செலவு செய்யப்படப் போவதில்லை. படித்தவர்களை கிராமங்களுக்கு அனுப்பி அங்கு அவர்கள் கிராம நிர்மாண வேலைகள் செய்வதற்கே செலவு செய்யப்படும். தாசர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தார்ஜிலிங்கில் “எனது நோய் குணப்பட்டவுடன் கிராமங்களில் இராட்டினங்களைப் பரவச் செய்வதற்கே வேண்டிய முயற்சி செய்யப்போகிறேன்” என்று காந்தி அடிகளிடம் கூறி னாராம். உணவில்லாது வாடும் மக்களைக் காப்பதற்கு இந்நிதி வேண்டு வது
மிகவும் அவசியமாகும். இக்கிராம நிர்மாண வேலையே நமக்குச் சுதந்த ரத்தை அளிக்கக்கூடியது. நகரங்கள் என்னும் பேய்களின் நாகரீகம் என்னும் மாயை ஒழித்து மக்கள் எல்லோரும் கிராம வாழ்வு வாழ்ந்து, பண்டைக் கைத்தொழிலை உயிர் பெறச்செய்தல் வேண்டும். இந்நிதியானது இந்தியா வெங்கும் கிராம நிர்மாண வேலை செய்வதற்கு உபயோகப்படுமாகையால் ஒவ்வொருவரும் எளியவராயினும் சரி, செல்வந்தராயினும் சரி தங்களது சக்திக்கேற்றவாறு உதவி செய்து தாசரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுவது அவசியமென யாம் கூறவேண்டுவதில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1925.
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
[நான்கு சித்திரங்கள்
ஒரு தமிழ் நாட்டுப் பெண் நாட்டியமாடுவது போலவும் ஒரு தமிழ் நாட்டு... ஆட்டுவிப்பது போலவும் சித்திரம் எழுதி, இங்கிலாந்தில் தேசியக் கூத்து என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இது தமிழ்நாடு சுயராஜ்யக்கட்சி காரியதரிசியாய் இருந்த ஒருவர். இங்கிலாந்துக்கு தேசிய பிரசாரத்திற்கு போவதாகச் சொன்னதையும், அவர். போகும்போது ஒரு நாட்டியப் பெண்ணும் கூடப் போயிருக்கிறது என்று சொல்வதையும் குறிக்கிறது போல் இருக்கிறது.
மற்றொன்று
ஒருவர் ஒரு மாளிகையில் அன்னிய உடையுடன் ஒரு கையில் சிகரெட்டும் மற்றொரு கையில் பிராந்திக் கோப்பையும் பக்கத்தில் ஒரு
சாராயக் குப்பியும் அருகில் ஒரு பொட்லரும் இருக்க அதுசமயம் மகாத்மா உள்ளே வர உடனே வேலைக்காரனைக் கூப்பிட்டு மீட்டிங்குக்குப் போக வேண்டும், மீட்டிங்குக்கு உடுத்துவதான கதர் உடை கொண்டுவா என்று சொல்வது போல் ஒரு சித்திரம் மகாத்மாவின் புது சிஷ்யர்களின் பெருமை யைக் காட்டுவதுபோல் வரையப்பட்டிருக்கிறதுபோல் இருக்கிறது. இது கல்கத்தாவில் மகாத்மாவின் பிரயத்தனத்தால் மேயர் ஆன ஸ்ரீமான் சென்குப்தா அவர்களின் தன்மையைக் காட்ட குறிப்பிட்டது.
இனியும் ஒன்று சேரமாதேவி குருகுலத்தில் ஒருவர் தாடியுடன் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பராக்கிரமத்துடன் ஒரு கையில் மீசையைத் தொட்டுக்கொண்டு மற்றொரு கையில் பயப்படாதிருங்கள் ஒரு கை பார்ப்போம் என்று அபயாஸ்
தம் காட்டிக்கொண்டும், குருகுலவாசிகள் தாங்கள் இருக்கும்போது எங்களுக்கு என்ன பயம் என்றும் சொல்லுவதுபோலவும் உத்திரவில்லாமல் வரக்கூடாது என்று குருகுல வாயிலில் ஒரு பலகை எழுதிக் கட்டித் தொங்க. விட்டு இருப்பது போலவும் வரையப்பட்டிருக்கிறது. இது தமிழர்களிடம் அதிகமாய்பணம் வசூலித்துக்கொண்டு தமிழ்க் குழந்தைகளை இழிவுபடுத்து வதைப் பற்றிக் கேட்டால் அதற்கு வீரியம் பேசுவதைக் குறிக்கிறது போல்
இருக்கிறது.
குடி அரசு - 1925 136
இன்னும் ஒன்று
ஒரு பக்தி நிறைந்த கணவனும் மனைவியும் தன் முன்னோர்களுக்கு திதிகொடுப்பது போலவும், அவற்றை புரோகிதர்கள் வாங்கி மூட்டைக் கட்டிக் கொண்டு -.... வீட்டுக்குப் போவது போலவும் ஒரு சித்திரம் வரையப்பட்டி
ருக்கிறது. இது நம்மவர் யோசனையில்லாமலும் பாத்திரமறியாமலும் திதி கொடுக்கும் பயித்தியக்காரத் தனத்தைக் காட்ட குறிப்பிட்டதுபோல்
இருக்கிறது. இவை முறையே தமிழ்நாடு, வங்காளி, ஊழியன் இவைகளில் காணப்படுகிறது.
குடி அரசு - கட்டுரை - 26.07.1925
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
லஞ்சம்
நமது நாட்டிடை இதுகாலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடையே இவ்வித வழக்கங்களை இழி வாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது. அரசாங்க ஊழியர்கள். என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊணிற்கு மாற்றப்பட்டு வந்தால் முதன் முதலாக அந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவது
தான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது. பொதுமக்களும். அரசாங்க நீதிமன்றங்களிலோ, நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங்களிலிருந்தே தரகர்கள். தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் நியாய மன்றங்களில் விவகாரங் களைத் தாக்கல் செய்யவேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதி பதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லு கின்றனர். சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு, நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லிக் கொண்டு சிற்சில வக்கீல்களிடம் சிநேகமாகவும், தாட்சண்யமாகவும், பாரபட்சமாகவும் நடந்து கொண்டு, அதன் மூலமாக வக்கீல்களுக்கு வரும்படி செய்து வைத்து அவர்களிடம் பணமாக அல்லாமல் வேறு வழிகளில் தாங்கள் லாபம் அடைகின்றனர். இதை வழக்கத்தில் லஞ்சம் என்று சொல்லாவிடினும், இதுபோன்ற செயல்கள் உண்மையான லஞ்சத்தின் பலனையே உண்டாக்கு கின்றது. தாட்சண்யம் காட்டப்படும் வக்கீல்கள் இதன் பலனாய் லஞ்சம் என்கிற பெயரால் இல்லாவிடினும், வேறு வழியில் கட்சிக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் அநேகமாய் இவ்வழக்கமுள்ள வக்கீல் களிடம்தான் கட்சிக்காரர்கள் செல்லுகின்றனரே அன்றி, கெட்டிக்காரர்களா
கவும், யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களிடம் செல்லுவதில்லை. அரசாங்க ஊழியர் என்று சொல்லும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில் பலவித தத்துவங்களை உபயோகிக்கின்றனர். சிலர் இரண்டு கட்சிக்காரரிடம் வியாபா
ரம் பேசுவது போல் பேசி, அதிக தொகை கொடுத்தவனுக்கு அனுகூல மாகவே தங்கள் தீர்ப்பைக் கொடுக்கின்றனர். சில சமயங்களில் இரண்டு
குடி அரசு - 1925 138
பேரிடமும் வாங்கிக்கொண்டு இருவரையும் திருப்தி செய்யும்படி ராஜி செய்து அந்த ராஜிக்கு ஏற்றவிதமாய் தங்கள் தீர்ப்பை அளித்து விடுகின்றனர். சில தருணங்களில் ஒரு கட்சிக்காரருக்குத் தெரியாமல் மற்றொரு கட்சிக்காரரிடம் இவ்வளவிற்குக் குறைவில்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும், இன்னொரு கட்சியாரிடம் இவ்வளவுக்கதிகமல்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும் இருவரிடமும் வாங்கிக் கொள்ளுவதும், சில தருணங்களில் பெரிய தண்டனை செய்ய வேண்டியதையோ பெரிய தொகைக்குத் தீர்ப்புச் செய்யவேண்டியதையோ குறைந்த அளவிற்குச் செய்வதாய்ச் சொல்லி வாங்குவதும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் தங்களிடமுள்ள விவகாரங்களில் நியாயம் இன்னாருக்குத் தான் என்று தெரிந்து அந்தக் கட்சியாரிடம் வாங்கிக் கொள்ளுவதும் இப்படி இன்னும் அநேக விதமாய் வாங்கப்படுகின்றன. இப்படி வாங்கப்படும் லஞ்சங்கள் பெரும்பான்மையாய் முழுவதும் தாங்களே அடைவதில்லை. மேல் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க நேரிட்டு விடுகின்றது.அந்தப் பங்கு என்பது தொகையாகவோ, சப்ளைகள் மூலமாகவோ, சாமான்களாகவோ, வேறுவிதமாய் அவரைத் திருப்தி செய்வதன் மூலமாகவோ பங்கு செலுத்தி யாகிவிடுகின்றது. அப்படிச் செலுத்தி மேலதிகாரிகளுக்கு நல்லவனாய் நடந்து கொண்ட இவ்வதிகாரிகள் வெகு தைரியமாய் தங்களுடைய தீர்ப்புகளைக் கடை வைத்து வியாபாரம் செய்வது போல் விற்று வருகின்றனர். பொது ஜனங்களும் கடைகளில் கத்தரிக்காய், வாழைக்காய் விலைபேசி வாங்குவது போல தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர். இவை பெரும்பாலும் வெளிப் படையான இரகசியங்களாய் விளங்குகின்றன. வியாஜ்யங்களும், விவகாரங் களும் அதிகமாகிக் கொண்டு வருவதற்கு நமது நாட்டு வக்கீல்கள் முக்கியக் காரணமென்று சொல்லுவது ஒரு பக்கமிருந்தபோதிலும், இந்த லஞ்சம்
வாங்கலும் கொடுக்கலும் அதற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்லவென்றே சொல்லலாம். மேல் அதிகாரிகள் என்று சொல்லப்படுவோர் லஞ்சம் வாங்கும்
கீழ் அதிகாரிகளிடம் பங்கு வாங்காவிட்டாலும் குருட்டுத்தனமான அபி மானத்தாலோ, வேறு சிபார்சின் காரணங்களாலோ, தங்கள் இஷ்டம் போல்
நடக்கிறார்கள் என்பதினாலோ, அல்லது தாம் வாங்குவது போலவே அவரும் வாங்கிவிட்டுப் போகட்டும் என்று கருணை காட்டுவதினாலோ, தம்முடைய மேல் அதிகாரிக்கு வேண்டியவராகவும் இருக்கின்றார்கள் என்ற காரணத்தி னாலோ, அன்றியும் ராஜீய விஷயங்களில் சர்க்காருக்கு அனுகூலமாய் அவரது மனசாட்சிக்கு விரோதமாய் அநேகம் பேரைத் தண்டனை செய்துள்.
ளார் என்றோ, வெள்ளையருக்கும் இந்தியருக்கும் நடந்த விவகாரங்களில், வெள்ளைக்காரருக்கு அனுகூலமாகத் தீர்ப்புச் செய்துள்ளார் என்றோ இத்தியாதி காரணங்களால் எவ்வளவு வெளிப்படையாயும், எவ்வளவு மக்கள். வருந்தும்படியாயும், லஞ்சம் வாங்கினாலும் கவனிக்காமல் விட்டு விடுகின்
றனர். லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சி னியர், வைத்தியம், பாரஸ்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக்களுக்குப் பிறவிக்
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குணமாய் இருந்து அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக்
கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங்
களின் வாழ்வு - தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரிமினல் இலாகாக்களில் கூட தலைவிரித்தாடி வருகின்றன. இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்க ளைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தர்களில் லஞ்சம் வாங்கா தவரை மற்ற அதிகாரிகளும் முட்டாள் என்றே கருதுகின்றனர். அநேகமாய் அவர்களுக்கு மேல் உத்தியோகமும் கிடைப்பதில்லை. தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்கிற அகம்பாவத்தால் மேல் அதிகாரிகளை இவர்களும் இலட்சியம் செய்யாதிருந்துவிடுவது. அதனால் மேல் அதிகாரிகள் இவர் களைக் கெடுத்து விடுகின்றனர். இவை இப்படியிருக்க, அதிகாரிகளிலேயே சிலரும், படித்தவர்களில் சிலரும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் உத்தி யோகமும் மேல் உத்தியோகமும் சம்பாதிப்பதற்காகவே ஆயிரம் பதினாயிரக் கணக்காகவும் கொடுக்க வேண்டி ஏற்பட்டுப் போய்விடுகின்றது. சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர்களாயிருந்தாலும் மேல் உத்தி யோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார்கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூ லாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள். இவ்விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத்தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவ
தற்கு ஒரு தொகையே இல்லாமல் போய்விட்டது.
சில்லறை உத்தியோகஸ்தர்கள் வாங்கும் லஞ்சம் அவ்வளவு கெடுதியை உண்டாக்காவிட்டாலும், அதன் விபரங்களைப் பற்றிப் பின்னர். எழுதுவோம். கவுரவ உத்தியோகஸ்தர்களும் லஞ்சம் வாங்குவது சகஜமாகி விட்டதல்லாமல், அரசாங்கமும் அனுமதித்துவிடும் போலிருக்கிறது. லஞ்சம் விஷயமாய் ஒரு பெரிய அதிகாரிக்கும், ஒரு பெரிய மனிதருக்கும் நடந்த சம்பாஷணையைமாத்திரம் எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்.
பெரிய மனிதர் : என்ன ஐயா, உங்கள் இலாகாவைச் சேர்ந்த ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இவ்விதமாக லஞ்சம் வாங்குகிறாரே, எங்களுக்கு எல்லாம் வெளியில் தலை நீட்டுவதற்கு வெட்கமாய் இருக்கிறதே,
இதைப்பற்றிக் கேள்விமுறை இல்லையா ?
பெரிய உத்தியோகஸ்தர்: ஆம்! எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால்
குடி அரசு - 1925 140
நான் என்ன செய்யமுடியும்? வேண்டுமானால் அந்த உத்தியோ கஸ்தரை வேறு ஊருக்கு மாற்ற முடியும். கேஸ் எடுத்து நடவடிக்கை நடத்தவே முடியாது. அப்படி ஏதாவது ஆரம்பித்து விட்டால் சாதி அபிமானங்களும், சிபார்சுகளும் வந்து கழுத்தை முறித்து விடுகிறது. அதற்கும் துணிந்தால் நமது பேரில் ஏதேனும் கெட்ட எண்ணத்தைக் கற்பித்துப் பழியையும், ஏதாவது ஒரு கெட்ட பெயரையும் ஏற்படுத்தி விடுவதோடு நம்முடைய விருத்தியையும் கெடுத்துவிடுகின்றனர்.
பெரிய மனிதர் : அப்படி ஆனால் அவரை வேறு ஊருக்காவது மாற்றித் தொலைப்பதுதானே!
பெரிய உத்தியோகஸ்தர்: இதனால் என்ன பொது நன்மை விளையும்? இந்த ஊரில் வாங்குபவர் அங்குபோய் வாங்குகிறார். இப்பொழுது அவர். இருக்கும் ஊராவது பணக்காரர்களும், லஞ்சம் கொடுக்கப் பழகி னவர்களாகவும், லஞ்சம் கொடுக்கிறோமே என்று வருத்தப் படாதவர்களும் இருக்கிற ஊராகும். இனி அவரை இதைவிட்டு வேறு ஊரிற்கு மாற்றினால் அங்கு போய் கடைவைத்து வியாபாரம்: ஆரம்பிப்பதற்குள் வீண் கெட்ட வாசனை ஏற்பட்டுவிடும்.
பெரிய மனிதர் : சரி, சரி அப்படி ஆனால் ஒத்துழையாதார் பேரில் தப்பிதமே இல்லையே?
பெரிய உத்தியோகஸ்தர் : யார் தப்பிதம் சொல்லுகிறார்கள்?
குடி அரசு - கட்டுரை - 26.07.1925.
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நவாத்தினம்
- சித்திரபுத்திரன்
1 சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோ
தரரிடமாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென்போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள்.
2உபிராமணர்களும், அவர்களைப்போல் நடிப்பவர்களும் தங்கள் பெண்கள் விதவை ஆகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை விகாரப்படுத்த வேண்டுமென்ற எண்ணங்கொண்டே, கட்டாயப்படுத்தி மொட்டையடிப்
பதும், நகைகளைக் கழற்றிவிடுவதும், வெள்ளைத்துணி கொடுப்பதும், அரைவயிறு சாப்பாடு போடுவதுமான கொடுமைகளைச் செய்து வருகிறார். கள்.ஆனால், இவர்களுக்கடங்காத சில ஸ்திரீகள் வயது சென்றவர்களாகியும் மொட்டையடித்துக் கொள்ளாமலும், நகைகள் போட்டுக்கொண்டும், காஞ்சி
புரம், கொரநாடு முதலிய ஊர்களினின்றும் வரும் பட்டுப்புடவைகளைக் கட்டிக்கொண்டும் நான்கு பேர் நன்றாய் சாப்பிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.
3.ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கு இல்லாதி ருப்பதற்குக் காரணம், அவர்கள் சர்க்கரை வைவது போல வேஷம் போடக் கூட பயப்படுவதுதான்.பாமர ஜனங்கள் சர்க்காரை வைதால்தான் சந்தோஷப் படுவார்கள். ஏனெனில் சர்க்காரின் நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்க வில்லை.
4.ஆங்கிலம் படித்துப் பரீட்சையில் தேறுவதே புத்திசாலித்தன மென்றும், கெட்டிக்காரத்தனமென்றும் சொல்வது அறியாமையாகும்.உருப் போடப் பழகினவனும், ஞாபகசக்தியுள்ளவனும் எதையும் படித்து பாஸ் பண்ணிவிடலாம். உருப்போடப் பழகாதவனும், ஞாபகசக்தியில்லாதவனும் பரீட்சையில் தவறிவிடலாம். ஆனால், படித்துப் பாஸ் பண்ணினவன் அயோக்கியனாகவும், முட்டாளாகவும் இருக்கலாம். படித்தும் பாஸ் செய்யா தவன் கெட்டிக்காரனாகவும், யோக்கியனாகவுமிருக்கலாம்.
5. பள்ளிக்கூடங்களும், காலேஜு களும் அடிமைகளை உண்டாக்கும் உற்பத்திசாலை. லா காலேஜ் என்னும் சட்டப் பள்ளிக்கூடம் தேசத் துரோகத்
குடி அரசு - 1925 142
துக்கு உபயோகப்படக்கூடியவர்களை உண்டாக்கும் உற்பத்தி சாலை. மெடிக்கல் காலேஜ் என்னும் வைத்தியப் பள்ளிக்கூடம் நாட்டு வைத்தி
யத்தைக் கொல்ல எமன்களையும், சீமை மருந்துகளை விற்கத் தரகர்களையும் உண்டாக்கும் உற்பத்திசாலை.
6.இந்தியாவில் ஜாதி அகம்பாவம் இருக்கிறவரையில் இந்தியர்கள் தங்களுடைய யோக்கியதையினாலோ, ஒற்றுமையினாலோ, சாமர்த்தியத் தினாலோ அன்னிய ஆட்சியிலிருந்து விலக முடியவே முடியாது. ஒரு சமயம் ஆங்கிலேயரின் கொடுமையினாலோ, முட்டாள்தனத்தினாலோ இந்தியா ஆங்கிலேயர்களை விட்டு விலகினாலும் விலகலாம். ஆனால் இந்தியர் கைக்கு வருமா என்பது மாத்திரம் அதிக சந்தேகந்தான்.
7. தமிழர்கள் தங்கள் அறியாத்தனத்தினால் வெள்ளைக்காரரைத் துரை. யென்றும், பிராமணர்களை சாமியென்றும் கூப்பிடுவதோடு இவர்களைக் கண்டால் தாமே முன் மரியாதை செய்ய வேண்டுமென்றும், அதிலும் பிராமணச் சிறுவனைக் கண்டாலும் கும்பிடவேண்டியது மத தர்மமென்றும் எண்ணுகிறார்கள்.
8.ஒரு வேலைக்காகப் போடப்பட்ட விண்ணப்பங்களில் ஆங்கிலத்
தில் பெரிய பரீட்சை பாஸ் செய்தவனோ மற்றும் பல பாஸ் செய்தவனோ போட்ட விண்ணப்பத்தைத்தான், எஜமானணாயிருப்பவன் கவனிக்க வேண்டு மென்பதும், அவருக்குத்தான் வேலை கொடுக்கவேண்டுமென்பதும் பொறுப்
பற்றதும் முட்டாள்தனமானதுமாகும். வேலைக்கு வேண்டிய யோக்கியதை இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதுதான் கிரமமானதாகும். கெட்டிக்
காரரும், யோக்கியருமானவர்களும் மெட்ரிகுலேசன் படித்தவர்களில் இருக் கிறார்கள். சோம்பேறியும், அயோக்கியர்களும் பி.ஏ. எம்.ஏ. படித்தவர் களில் இருக்கிறார்கள்.
9.தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சி என்பது தற்காலம் சட்டசபை, ஜில்லா
போர்டு, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய ஸ்தல ஸ்தாபனங்களில் பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்டிருக்கும் ஆதிக்கத்தை ஒழித்து மறுபடியும் பிராமண ஆதிக்கத்தை ஏற்படுத்தவே தோன்றியிருக்கும் ஒரு சூழ்ச்சியாகும்.
குடி அரசு - கட்டுரை - 02.08.1925.
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இதற்குப் வயவுாண்ண ?
சுயராஜ்யக் கட்சியார் காங்கிரஸ் ஒத்துழையாமையைக் கைவிட்ட போதிலும் தாங்கள் ஒத்துழையாமையை விடப்போவதில்லையென்றும், மிதவாதக் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியும் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகவும், ஒத்துழையாதாருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்றும், தேர்தல் சமயங்
களில் மேடைமீது நின்று பேசி பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறார்
கள். சுயராஜ்யக் கட்சியின் எல்லா இந்தியத் தலைவ ரான மோதிலால்நேரு அவர்கள் திடீரென்று சர்க்காரால் ஏற்படுத்தப்பட்ட ராணுவக் கமிட்டியில் அங்கத்தினர் வேலையை ஒப்புக்கொண்டார். இதற்கு மாதக்கணக்கான சம்பளம் வராவிட்டாலும் தினக்கணக்கான சம்பளம் உண்டு. தினம் 100, 200
வீதம் சர்க்காரார் கொடுப்பார்கள். “மட்டிமன்' கமிட்டியில் அங்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி சர்க்காரார் சொன்னபோதும், தங்கள் அபிப்பிராயத்தையாவது சொல்லுங்கள் என்று கேட்டபோதும், அங்கம் பெற முடியாதென்றும், சர்க்கார். கமிட்டியின் முன் சாட்சியம் சொல்ல முடியா தென்றும் சொன்னவர் அதற் குள்ளாக சர்க்காரிடத்தில் என்ன நல்ல யோக்கிய தையைக் கண்டுவிட்டார்? சர்க்காரோடு ஒத்துழைத்து கமிட்டியில் அங்கம் பெற்று சர்க்கார் அதிகாரி களோடு ஊர் ஊராய்த் திரிந்து சாட்சிகளை விசாரித்து கூட்டு மெம்பர். களுடைய அபிப்பிராயத்தோடு கலந்தோ அல்லது தனி யாதாஸ்து எழுது வதன் மூலமாகவோ தன்னுடைய அபிப்பிராயத்தை தெரியப்படுத்தப்
போகிறார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. ஜின்னா, சாஸ்திரி, சிவசாமி அய்யர், ராமலிங்கஞ் செட்டியார், ராமசாமி முதலியார் முதலியவர்கள் இதைவிட வேறு என்ன செய்தார்கள்? செய்யப் போகிறார்கள்? நேரு அவர். களுக்கு ராணுவக்கமிட்டி முக்கியமானதாகத் தோன்றலாம். ஜின்னா அவர்: களுக்கு மட்டிமன் கமிட்டி முக்கியமானதாகத் தோன்றலாம். நாளைக்கு ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கும், எம்.கே. ஆச்சாரியாருக்கும் சில பேருக்கு உத்தியோகம் சம்பாதிப்பதும் சில ஜாதியார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லு வதற்கும் ஒரு கமிட்டி தேச நன்மையை உத்தேசித்து ஏற்பாடு செய்ய வேண்டியது முறையே அவசியம் என்பதாகத் தோன்றலாம். அது சரியா,
தப்பா என்கிற விஷயத்தைப்பற்றி நமக்குக் கவலை இல்லாவிட்டாலும் இது ஒத்துழைப்பா, ஒத்துழையாமையா என்பதுதான் தெரியவேண்டும். நேரு அவர்கள் ராணுவக்கமிட்டியில் தன்னுடைய அபிப்பிராயங்களை எழுதி இந்தியர்களுக்கு ராணுவ உத்தியோகம் வாங்கிக் கொடுத்து விட்டால் அவர்க.
ளைக் கொண்டே இந்தியாவை ஜெயித்து விடலாமென்றும் நினைக்கிறாரா?
குடி அரசு - 1925 144
அல்லது வெள்ளைக்காரப் பெரிய ராணுவ அதிகாரிகள் நம்முடைய ராணுவ அதிகாரிகளிடம் நம்மைச் சுடு என்று சொன்னால் இந்திய ராணுவ அதிகாரி
கள் சுடாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறாரா? அல்லது சில பேருக்குப் பெரிய பெரிய சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டால் அவர்கள் யோக்கியர். களாய் விடுவார்கள் என்றாவது, இந்தியாவின் தரித்திரமே அதனால் ஒழிந்து போய்விடு மென்றாவது நினைக்கிறாரா? “பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பது போல” மகாத்மா காந்தி தங்கள் வசம் இருக்கிறார்களென்று. இறுமாப்புடன், தங்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் வேதவாக்கென்று நினைத்துக் கொண்டு தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிவார்களேயானால் இந்தியர்களெல்லாம் சுத்தப்பைத்தியக்காரர்கள், முட்டாள்கள் என்று இவர்கள் நினைத் திருப்பதாகத்தான் அதற்கு அர்த்தம். மகாத்மா காந்தியை வேண்டுமானால் இவர்கள் கஷ்டநிலைமையில் கொண்டு வந்து விட்டுவிடக் கூடுமேயல் லாமல், மகாத்மா இவர்கள் பக்கத்தி லிருக்கிற காரணத்தினால் இவர்கள் சொன்னதெல்லாம் ஜனங்கள் கேட்பார்களென்று நினைப்பது பகற்கனவாகத்தான் முடியும்.
குடி அரசு - தலையங்கம்- 02.08.1925
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சீணர்களிண் கதி
நாகரீகத்தில் சிறந்து விளங்கிய சீனர்களின் நிலை வரவரத் தாழ்மை யுற்று வருகின்றது. இந்தியர்களைக் காட்டிலும் கீழ்நிலை அடைந்து வருகின் றார்கள். தங்கள் நாட்டில் சுதந்திரமில்லாது அந்நியர்களால் மிருகங்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களது நிலையைக் கூறுங்கால் உள்ளம் துடிக்கின்றது. என்று முதலாளிகளின் எதேச்சாதிகாரம் உலகினின்றும் ஒழியுமோ அன்றே உலகிற்கு விடுதலை. ஏழைகள் புத்துயிர் பெற்று இன்: புறுவார்கள். ஜப்பான் உட்பட இருபது அந்நிய நாட்டினர் சீனத் தேசத்தினின்
றும் மூலப்பொருள்களை சுரண்டுவதில் குந்தகம் ஏற்படுமோ? என்கிற பயத்தால் சீன மக்களைப் பல அட்டூழியங்களுக்கு ஆட்படுத்தி வருகின்ற
னர். அக்கொடுமைகளைச் சொல்லவேண்டுவதில்லை. சீனத் தொழிலாளர் களை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். இவர்கள் தங்களது நாட்டைக் காட்டிலும்
சீன தேசத்தில் அதிகம் உரிமை பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், சீனர்கள் ஆட்படும் கொடுமைகளை அறியாது, அவற்றைக் களையவும் வழி தேட ஆற்றல் இல்லாத பர்க்கன் ஹெத் பிரபு சீன மாணவர்கள் மீது பாய்கிறார். ஏழை மாணவர்கள் கொடுமை செய்கின்றனரா? இரக்கமற்ற எதேச்சாதி காரமே உருவாய்த் திரண்டு விளங்கும் இம்முதலாளிகள் கொடுமை செய் கின்றனரா? என்பதை அம் முதலாளிக் கூட்டத்தைச் சேர்ந்த பர்க்கன் ஹெத்
பிரபு அறிவது கடினமே. இனம் இனத்தைத்தான் சேரும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.08.1925
குடி அரசு - 1925 146
கைம் போற்றும் மகாத்மா
அரசியல் விஷயத்தில் பேதம் கொண்ட சிலர் காந்தியடிகளுக்கு செல்வாக்குக் குறைந்து வருகின்றதெனக்கூறி வருகின்றனர். இக்கூற்று ஆதாரமற்றது. காந்தியடிகளின் அன்பரும், சீடருமாகிய பூஜ்யர் ஆண்டுரூஸ் ஒரு பத்திரிகையில் இந்திய சட்டசபையின் அங்கத்தினர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அங்கத்தினர்கள் போன்று தற்கால நாகரீகத் தில் மயக்க முற்றுள்ளார்கள். பாமர ஜனங்களே, காந்தியடிகளின் உண்மை உபதே சத்தை. அறிந்து நிர்மாண வேலையில் திளைத்து நிற்கின்றனர் என வரைந்துள்ளார். இதை உண்மையென்று எவரும் கூறுவர். மேனாட்டு நாகரிகத் தில் மயக்க முற்றுநிற்கும் அரசியல்தந்திரிகளுக்கு.எம்பெருமானின் திட்டம் கூடாதுதான். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமே.நம் நாட்டைப் போன்றே
சீன தேசத்தில் இதுகாலை வாடும் எளிய மக்கள் மகாத் மாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள். உலகில் சுதந்திரமற்று வாடும் நாடுகள் எல்லாம் காந்திய டிகளைத் துணைக்குக் கூவுகின்றன. எல்லாச் சுதந்திரம் பெற்ற மேல்நாட்டி னரும் காந்தியை ஏசுநாதர் எனப் போற்றிப் புகழ்கின்றனர். இந்நிலையில் அப் பெரியாருக்கு மதிப்புக் குறைந்து வருகின்றதெனக் கூறும் அரசியல் தந்திரக் காரர்களைக் கண்டு இரங்காது நாம் வேறு என் செய்வது ?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.08.1925
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மலையானச் சம்பிரதாயம்
- சித்திரபுத்திரன்
“கேரளம் வானர வாசாரம்” என்றவோர் இழிச்சொல் இந்நாட்டின் வழக்கத்திலுண்டு. இக்கேரளத்தை நேரில் கண்டு பழகும் பாக்கியம் எனக்குச் சென்றவாண்டில் கிடைத்தது. ஆங்கு நான் கண்டும் கேட்டவைகளில் சில வற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்.
௮௮
நீர் நில வளப்பமுள்ள நாடுகளில் மலையாளம் முதன்மையானது. தென்னை, கமுகு, மா, பலா, முந்திரி, வாழை முதலியனவும் மரவள்ளிக்
கிழங்கும், நெல்லும் ஏராளமாயுண்டு. வருடத்தில் 6 மாதம் நல்ல மழை பெய் கிறது. இயற்கை தேவியின் வனப்பை அந்நாட்டில் தான் கண்டுகளிக்க வேண்டும். ஆண்களும், பெண்களும் அதிசெளந்திரியமுள்ளவர்கள். நகரங்
களிலும் கிராமங்களிலும் வீடுகள் விட்டு விட்டு விசாலமாகவே இருக்கின்றன.
௮௮
மலையாளிகள் மிகச் சிக்கனமுள்ளவர்கள். ஆடம்பர வாழ்க்கை அவர்களிடமில்லை. ஆடவருக்கும், பெண்களுக்கும் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே ஆடையாகும். பெண்கள் தங்கள் மார்பை மூடுவதை நாகரிகமென்று கருதுவதில்லை. அவர்கள் உணவும் மிகச் சிக்கனமானதே.. தமிழரைப்போல் பற்பல சாம்பார் தினுசுகளும், வெகு பல பொறியல்களும் அவர்களுக்குத் தேவையில்லை. வெந்த பருக்கையை, கஞ்சியைத் திருவலிட்டும் ஆனந்தமாய்க் குடிப்பார்கள். நன்னாடு
உணவிலும், உடுப்பிலும் மட்டும் சிக்கனமல்ல. அவர்கள் பேசும் பேச்சிலும் சிக்கனமுடையவர்களே. வார்த்தையை அதிகமாகச் செலவழிக்க மாட்டார்கள். பற்பல விஷயங்களையும் கைவிரல் சாடையாலும் கண்களின் மாற்றத்தாலும் முகவாய்க் கட்டையின் அசைவாலும் ஒருவர்க்கொருவர். அறிவித்துக்கொள்வார்கள். நன்னாடு
சிக்கனம் இவ்வளவுடன் நிற்கவில்லை. கல்யாணத்திலும் அவர்கள் சிக்கனம் காட்டுவார்கள். அண்ணன் தம்பிகள் இரண்டு மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து பாண்டவரைப்போல் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளு
குடி அரசு - 1925 148
கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வொரு மனைவியுடனிருந்
தால் சந்ததியும் செலவும் அதிகமாகவிடுமெனவஞ்சி இச்சிக்கன முறையைக் கையாளுகிறார்கள்.
௮௮
கல்யாணத்திலும் இரண்டு வகையுண்டு. ஒன்று முறைப்படி செய்யப்
படும் விவாகம். மற்றொன்று முறையில்லாச் சம்பந்தம். நாயர் பெண்கள் நம்பூதிரியென்னும் பிராமணர்களைச் சம்பந்தம் செய்து கொள்வதிலே பெருமை கொள்ளுகிறார்கள். இப்பிராமண வகுப்பாரின் ஜனசங்கை மிகவும் சொற்பம். சம்பந்தம் செய்து கொள்ளும் நாயர்ப் பெண்டீர்களின் சங்கையோ அதிகம். இக்காரணத்தால் ஒவ்வொரு நம்பூதிரிக்கு நாலைந்து பெண்கள். சம்பந்தப்பட வேண்டியதாகிறது. aaa
நம்பூதிரிகள் செய்த பாக்கியமே பாக்கியம். பிறந்தால் கேரளத்தில் நம்பூதிரியாய்ப் பிறக்கவேண்டும். இல்லையேல் இம்மானிடப் பிறவியெடுப்
பதில் சிறப்பில்லை. நம்பூதிரி சாட்சாத் சச்சிதானந்த சொரூபியாய் விளங்குகிறார். அவருக்கு இருக்கும் மதிப்பும், வந்தனை வழிபாடுகளும் வேறெந்த மானிடப் பிறவிக்கும் கிடையாது.
PPN
முறைப்படி ஒரு கணவனைப் பெற்ற நாயர்ப் பெண்ணும், நம்பூதிரி யைக் கலப்பதற்குப் பேராவலுடையவளாயிருக்கிறாள். மகாபாரதத்திலும், புராணங்களிலும் வருணிக்கப்பட்டுள்ள கிருஷ்ணனைக் காணுவதற்காக கோபிகள் தவஞ்செய்தது போல், நாயர்ப் பெண்களிற் பெரும்பாலர் நம்பூதிரி களின் சம்பந்தத்துக்காகத் தவஞ் செய்து வருகிறார்கள். ௮
இம்மோகத்துக்கு நாயர் வகுப்பில் பெண்கள் மட்டுமல்ல பாத்திர மானவர்கள். ஒரு நம்பூதிரி ஒரு நாயரைப் பார்த்து “உன் பெண்சாதி நல்ல அழகுடையவளாயிருக்கிறாள்; நாளைக்கு உன் வீட்டுக்கு வருகிறேன்” என்று சொல்லி விட்டால் நாயருக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். தேவனே பிரசன்னமாகி இத்திருவாக்கைப் பகர்ந்ததுபோல் எண்ணுவான். ஓடோடியும் வீடு செல்வான். தன் பெண்சாதியிடம் நம்பூதிரித் தம்பிரானுடைய திருமன சைத் தெரிவிப்பான். அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கோ அளவிராது. உடனே வீட்டை அலங்கரிப்பாள், விளக்குவாள், பெறுக்குவாள் தன்னாபர: ணாதிகளைப்பூட்டிச் சிங்காரித்துக் கொள்வாள். நம்பூதிரித் திருமேனியுடைய வரவை எதிர் நோக்கியிருப்பாள். (தொடரும்!
குடி அரசு - கட்டுரை - 02.08.1925
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மானிஸ்மூரறேட்முண் மயக்கம்
- குட்டிச்சாத்தான்
ஒரு மாஜிஸ்ட்ரேட் வீட்டுக்கு ஒரு கிழ வக்கீல் வருகிறார்.
மாஜிஸ்ட்ரேட்: வாருங்கோ சார், செளக்கியமா?
வக்கீல்: என்ன செளக்கியம் போங்கள், குளிக்கவும் விபூதி பூசவும் சரிஅதற்குமேல் சாப்பாடு முதலியதைப்பற்றிக் கேட்காதீர்கள்; வக்கீல்களுக்கு ஏதாவது வேலையிருந்தால்தானே.
மாஜிஸ்ட்ரேட்:- ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? கொஞ்சகால மாகத்தான் நம்ம கோர்ட்டுக்கு நீங்கள் வருகிறதில்லை. முனிசீப்கோர்ட் டெபுடி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு இதெல்லாம் இல்லையோ?
வக்கீல்: முனிசீப்கோர்ட் டெபுடி கெலக்டர் கோர்ட்டு விசேஷம் சாவ
காசமாய்ச் சொல்லுகிறேன். எஜமானர் கோர்ட்டுக்கோ முன்போல் கேசே வருகிறதில்லை. வந்தாலும் பிராது வாங்கும்போதே தள்ளிவிடப் பார்க்
கிறீர்கள். இல்லாவிட்டால் வாதி பிரதிவாதி இரண்டுபேரையும் தண்டித்து விடு.
கிறீர்கள். எஜமானர் கோர்டுக்கே கட்சிக்காரர்கள் வர பயப்படுகிறார்கள். ஏதா வது தைரியமாய் வக்கீல் வைத்துக் கொண்டு வந்தால் அந்த வக்கீலை எஜ
மானர் மதிப்பதேயில்லை. அவனை வாயெடுக்க விடுவதில்லை. எல்லாக் கேள்விகளையும் கிராசுகளையும் எஜமானரே கேட்டு முடிவு செய்து விடு
கிறீர்கள். பிறகு எங்களுக்கு வேலையேது?
மாஜிஸ்ட்ரேட்:- ஓ, ஹோ என்னாலா கெட்டுப்போய்விடுகிறது? நான் உண்மை அறிய வேண்டாமா? அநேக பிராதுகள் எழுதிக்கொண்டு வருவ தொன்று, பிரமாண வாக்குமூலம் கொடுப்பதொன்று, பிராதுக்காரர்கள் பிராதில் எழுதியிருப்பதொன்று, வாக்குமூலம் கொடுப்பதொன்று. ஏன் இப்படி என்று கேட்டால் நான் இப்படித்தான் சொன்னேன் நீ சொல்லுகிறபடி எழுதினால் கேஸ் ஜெயமாகாதென்று சொல்லி வக்கீல் தன்னிஷ்டப்படி எழுதிக்கொடுத்து அந்தப் படியே சொல்லச்சொன்னார். எஜமானரை நிஜம் சொல்லும்படி சொன்னதால் நிஜம் சொல்லிவிட்டேன் என்று சொல்லுகிறான். இப்படிப்பட்ட பிராதுகளை நான் என்ன செய்வது நீங்களே சொல்லுங்களே.
வக்கீல்- எஜமானர் இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் பிழைப்ப
குடி அரசு - 1925 150
தெப்படி? பிராதுக்காரர்கள் சொல்லுகிறபடி எழுதினால் ஒரு கேசுகூட நிற்காது, எஜமானரை கேசை வாங்கிப் பதியசெய்து சம்மன் அனுப்பி 4, 5 வாய்தாப் போட்டு பிறகு என்னமோ செய்துவிடுங்களே, எதோ எங்களுக்கும் அரைக் கஞ்சிகிடைக்கும் எஜமானருக்கும்.....
மாஜிஸ்ட்ரேட்: என்னையா, எஜமானருக்கு என்று வாய்க்குள் ளாகவே முணுமுணு என்று பேசிக் கொள்ளுகிறீர்களே.
வக்கீல்- எஜமானருக்குத் தெரியாதது நான் என்ன சொல்லப் போகிறேன்?
மாஜிஸ்ட்ரேட்:- என்ன சொல்லுங்களே.
வக்கீல்: எஜமானர் தகப்பனார் பெரிய எஜமானர். மாஜிஸ்ட்ரேட்டா யிருக்கும் போது முதலே நான் வக்கீலாயிருக்கிறேன். அவர் யாரையும் நம்ப மாட்டார். என்னைத்தான் நம்புவார். வீட்டுக்குக் காய்கரி சாமான் முதல் கொண்டு நான்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும். எஜமானர் இப்போது இருக்கிறது போல் பெரிய எஜமானரும் இருந்திருந்தால் வீடேது, வாசலேது, எஜமானர் சகோதரிகளுக்கு இப்படிப்பட்டதக்க இடத்து மாப்பிள்ளைகளேது. எஜமானர்தான் படித்துப் பாஸ் செய்து இந்த உத்தியோகத்திர்க்கு வருகிறதேது. இந்த சமயத்தில் எதோ உத்தியோகத்தில் நாலு காசு சம்பாதித்தால்தானே பின்னாடிக்கு உதவும்.
மாஜிஸ்ட்ரேட்: இப்பொழுது எனக்கு என்ன குறவு? மீ” 150 ரூபாய் சம்பளம் வருகிறது. 100 அல்லது 110 ரூபாய் செலவாய்விடுகிறது. மீதி
15740 ரூபாய் பாங்கியில் போட்டு வருகிறேன்.
வக்கீல்:- மீ£40ரூ.மீதி செய்தால் அது எதர்க்கு உதவும்? எஜமானர் சம்சாரம் என்கிற பேருக்காவது அம்மாவுக்கு நகை வேண்டாமா? குழந்தைகள் படிக்க வேண்டாமா? 4, 5 பெண்கள் இருக்கிறாப்போல் இருக்கிறது. (மாஜிஸ்ட்ரேட்:-இல்லை இல்லை 3 தான், மற்றது என் மச்சனி குழந்தைகள்! அதுகளுக்கு ஏதாவது நகை செய்து போட வேண்டாமா? 2000,
3000 கொடுக்காமல் இதுகளுக்கு நல்ல படித்த மாப்பிள்ளைகள் கிடைப் பார்களா? இப்பொழுது இதெல்லாம் கவனிக்காமல் இருந்து விட்டு நாளைக்கு பெண்களை மிட்டாய் கடைக்காரர்களுக்கோ, அல்லது பரிசாரகர்களுக் கோவா கட்டிக் கொடுப்பது?
மாஜிஸ்ட்ரேட்: அதற்கு நாம் என்ன செய்யலாம். இதற்கு மேல் எப்படிப் பணம் மீதி செய்ய முடியும்? வீட்டு வாடகை 17ரூ, வண்டிமாட்டுக்கு 10ரூ. ஆளுக்கு 8ரூ. (வ: சேவகர்கள் இருந்துகூடவா? மாஃ ஆம் ரீடிங் ரூம் முதலிய சப்ஸ்கிருப்ஷன் 7, 8 ரூ. ஆய் விடுகிறது. குழந்தைகளுக்கு துணிமணி செலவு எனக்கும் வீட்டிற்கும் துணிமணி செலவு இதெல்லாம் குறைக்க முடிகிறதா? அப்புறம் சாப்பாட்டு செலவு, அதுவும் கூடியவரை:
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுருக்கம் தான். குழந்தைகளுக்குக் காப்பிகூட இல்லை. பழையசோறுதான், எனக்குமாத்திரம் ஒரேஒரு டம்ளர் வெறுங் காப்பி, வீட்டிலோ அதுவும் சாப்பிடுகிற வழக்கமில்லை. நீங்கள் சொன்ன அப்பா சம்பாதித்த வீடு ஊணிலிருக்கிறது. அதற்கு L5715 ரூ. வாடகை வருகிறது. அதன்பேரில் 1700 ரூ. கடன் இருக்கிறது. வாடகையை வட்டி கட்டி வர ஏற்பாடு செய்திருக்கிறேன். முனிசிபாலிட்டி வரி இங்கிருந்தனுப்புகிறேன். வீணாய் அதிக ஆசைப்பட்டு என்ன செய்வது?
வக்கீல்- எஜமானரு இந்த சம்பளத்தையே நம்பிக்கொண்டிருந்தால் நாளைக்குக் குடும்பம் என்ன கதியாவது?
மாஜிஸ்ட்ரேட்: சம்பளத்தைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க
முடியும்?
(பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்த
மாஜிஸ்ட்ரேட் சம்சாரம்!
எஜமானருக்கு எல்லாம் விவரமாய் சொல்லவேணுமாக்கும். வக்கீல் தாதா அவர் பிழைக்கவோ இவ்வளவு சொல்லுகிறார். நம்முடையை நிலைமை தெரிந்து பரிதாபப்பட்டுத்தான் இவ்வளவும் சொல்லுகிறார். மாசத்
திற்கு எத்தினை பெரிய கேசுகள் வருகிறது? எத்தினை பேர் கேசுக்காரர்கள் நம்ம வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்க்கணும் அம்மாவைப் பார்க்கணும் என்று சேவகர்களை கேழ்க்கிறார்கள். சேவகர்களுக்கும் ஒவ்வொரு கேசுக் காரர்கள் வரும்போது பார்த்தால் நாக்கில் ஜலம் ஊருகிறது. எஜமானருக்கு பயந்து கொண்டு அம்மா இல்லை ஆட்டுக்குட்டி இல்லை என்று விரட்டி முடிக்கி அனுப்பிவிடுகிறது. நீங்கள் ஒன்றுக்கும் போகவேண்டாம். நானும், வக்கீல் தாதாவும் பார்த்துக் கொள்ளுகிறோம். நான் பார்த்து கேசை விடு என்றால் விட்டு விடுங்கள், தண்டி என்றால் தண்டித்து விடுங்கள், இவ்வளவு தானே மற்றப்படி என்ன வேப்பெண்ணையா குடிக்கப் போகிறீர்கள்?
சேலத்தில் ஒரு மாஜிஸ்ட்ரேட் உங்களைப்போல்தான் கவனிக்காமல் இருந்தார். திடீரென்று கச்சேரியிலேயே செத்துப்போய்விட்டார். ஊரார்: அதுவும் கடைவீதிக்காரர்தான் ஆளுக்கு 1, 2, வரி போட்டு வசூல் செய்து பிரேதத்தை வெளிப்படுத்தி பெண்ஜாதி பிள்ளைகளுக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்து பிறந்த வீட்டுக்கு அனுப்பிக் கொடுத்தார்களாம்.
இங்கே வந்தால் நின்று கொண்டே இருக்கிறாரே அந்த அடுத்தவீட்டு
சப் இனிஸ்பெக்ட்டரைப் பாருங்கள். உங்கள் சம்பளத்தில் பகுதிதானாம். அவர் குழந்தை நகையும் உடுப்பும் வெள்ளைக்காரக் குழந்தைகளும் போலவும் பெண்களைப்போலவும் நடக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு தள்ளு வண்டியை போலீசுகாரர் உடுப்போடவே தள்ளுகிறார்கள். நம்ப எஜமானருக்கு மாத்திரம் சேவகன் பில் போட்டுக்கொண்டு காய்கரிகூட வாங்கக் கூடாதாம். நல்லா சொல்லுங்க தாத்தா.
குடி அரசு - 1925 152
வக்கீல்-எஜமானருக்கு அனுபோகம் போதாது, சிறுவயதில் கல்யாண
மாய் விட்டது. பெரிய எஜமானர் தயவிலே போர்டாபீசில் வேலை கிடைத்து விட்டது. அங்கேயே நாலைந்து வருஷம் இருந்துவிட்டார். அங்கு இருப்பவர்கள் ஆனஸ்ட்டு ஆனஸ்ட்டு என்று அர்த்தமில்லாத வார்த்தை யைக் கற்றுக் கொடுத்து விட்டார்கள். அதை கட்டிக்கொண்டு அழுகிறார். நம்ம டிப்டி கலெக்ட்டர் எஜமானரு பி.ஏ. கூட படிக்கவில்லை. அட்டண்டர் காப்பீஸ்டர் வேலையிலிருந்து வந்தவர், மாதம் 2000ரூ. மச்சினனுக்கு அனுப்புகிறார். இதற்கு ஒரு காசு குறைந்தால் ஆபீசு குமாஸ்தாக்கள் மேலும் சேவகர்கள் மேலும் நெருப்பு மாதிரி விழுவார். பெரிய கலெக்டருக்கும் அந்த எஜமானர் இடத்தில் ரொம்பப் பிரியம்
மா: சம்சாரம்) ஆமா தாத்தா அவர்கள் வீட்டுக்கு அன்னைக்குகூட பெரிய கலெக்டர் வந்து காப்பி சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டு அம்புஜத்தை வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டுப் போணாராம்.நம்ம எஜமானர் போனதற்கு திரும்பிக்கூட பார்க்கவில்லையாம். ஒருமணி நேரம் மரமாட்ட நின்று விட்டு தெய்வமே என்று வந்துவிட்டார். என்னண்டை வந்து துக்கப்பட்டார்.
வக்கீல்:- அது மாத்திரமா? இப்படி இருந்தால் எஜமானருக்கு மேல் உத்தியோகம் (பிரமோஷன்) ஆகவா போகிறது? இப்பொழுதே எஜமானருக்கு கீழே இருந்த இரண்டு மூன்று பேருக்கு தாசில் ஆய்விட்டது. அதில் இரண்டு பேருக்கு காயமும் ஆய்விட்டது. அவர்கள் பெயர் டிப்டி கலெக்டர் உத்தியோகம் கொடுக்கக் கூடியவர்கள் பெயர் ஜாப்தாவிலும் பதியப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லாம் கர்மராஜாக்கள், அவர்கள் இங்கு மாஜிஸ்ட்ரேட்டாயிருக்கும் போது கையெழுத்து மாத்திரம் தான் அவர். களுடையது. மற்றதெல்லாம் சேவகர்களும் மாஜிஸ்ட்ரேட் கிளார்க்கும் வைத்ததுதான் சட்டம். நானும் என்பிள்ளைகள் கல்யாணமெல்லாம் அப்பொழுதுதான் செய்தேன். எஜமானர் பெயர் தாசில்தார் ஜாப்தாவில் கூட சேர்க்கப்படவேயில்லை.
மாஜிஸ்ட்ரேட் என் பெயர் சேர்க்கப்படவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
வக்கீல்:- நம்ம மாப்பிள்ளை கலெக்டர் ஆபீசு சிரஸ்தாரிடம் குமாஸ்தா. இந்த வருஷ முதலில் போர்ட்டுக்கு ஜாப்தா போடும்போது கலெக்டர் சிரஸ்தாரை வைத்துக்கொண்டு போட்டாராம். அப்பொழுது எஜமான் பெயர் அதிலில்லை என்பது தெரிந்து சிரஸ்தார் எஜமானர். பெயரைச்சொல்லி எஜமானர் நடவடிக்கையைக் காட்டும் ரிக்கார்டுகளைக் கூட காட்டினாராம். கலெக்டர் கோபமாக (He is an honestfool) அவன் ஒரு பயித்திக்கார முட்டாள் என்று சொல்லிக்கொண்டு ரிக்கார்டுகளை கீழே தள்ளிவிட்டாராம்.இது ரொம்பவும் ரகசியம். வெளியில் தெரிந்தால் நம்ம மாப்பிள்ளைக்கு வேலை போய்விடும்.
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மாஜிஸ்ட்ரேட்:- (கொஞ்ச நேரம் யோசித்து) இன்னம் கொஞ்ச நாள் பார்ப்போம், என்னை மாஜிஸ்ட்ரேட்டாய் அனுப்பின சிவிலியனை இந்த. ஜில்லாவுக்குக் கலெக்டராய் போட்டிருப்பதாய் போர்டாபீசிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. இன்னும் இரண்டொரு மாதத்திர்க்குள் வந்துவிடுவார். அதற்குப் பிறகு என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிப்போம்.
கோர்ட்டுக்கு நேரமாகி விட்டது, தயவுசெய்து போய்வாருங்கள். டேய் ராமா,
வண்டிக்காரன் எஜமா,
வண்டி கட்டு, பெட்டி எடுத்து வை. சாயந்தரம் வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இன்றைக்கு பட்டணமிருந்து வெள்ளைக்கார பாரிஸ்டர் வருகி
றார். சரியாய் 11- மணிக்கு வந்துவிடுவார்.
வக்கீல் (அம்மாவைப் பார்த்துக்கொண்டே மாஜிஸ்ட்ரேட்டை காட்டி தலையில் அடித்துக்கொண்டே! போய்விட்டார்.
அம்மாள்:- சாப்பாடு ஆகிவிட்டது, குளிக்காவிட்டாலும் பரவாயில்லை. சாப்பிட்டு விட்டுப்போங்களே. அன்றைக்கு ஒருநாள் பெரிய கொலை கேசு சர்க்கார் வக்கீல் வருகிறார்கள் என்று சொன்னீர்கள். 12 மணிக்குத்தானே போனீர்கள்.
மாஜிஸ்ட்ரேட்: அவர்கள் எல்லாம் நம்மவர்கள்தானே, இன்று வருபவர் வெள்ளைக்காரர். கலெக்டரிடம் என்னத்தையாவது சொல்லி வைப்
பார். அப்புறம் அதுதான் அவர்களுக்கு வேதவாக்கு என்று சொல்லிக் கொண்டே கச்சேரிக்குப் போய்விட்டார்.
குடி அரசு - உரையாடல் - 02.08.1925
குடி அரசு - 1925 154
ஒரு கோழு ரூபாயும், இருபத்தோரு நான் உண்ணாவிரதமும் முப்பதிணாயிரம் கபர்
சிறைவாசமும்
இந்தியாவானது அந்நிய ஆட்சிக்குட்பட்டு அடிமைத்தன்மை அடைந்து அவதிப்பட ஆரம்பித்தக் காலமுதல் இதுவரையிலும் விடுதலை பெறுவதற்காக மகாத்மாவின் காலத்தில் கொடுத்த விலைபோல் ஒரு பொழுதும் கொடுத்திராதென்றே நினைக்கிறோம். ஆனால், நமது தேசத்திற்கு
மாத்திரம் இன்னமும் விடுதலை பெறும் காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும். மூன்று மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், ஐம்பதினாயிரம் ரூபாய் வரும்படி உள்ள வக்கீல்கள் உள்பட சுமார் ஐநூறு பேர் தங்கள் தொழிலை நிறுத்தி தேசத் தொண்டில் இறங்கியும், அரசபோகத்தில் இருந்தவர்கள் முதற்கொண்டு ஜமீன்தார்கள், பிரபுக்கள், வியாபாரிகள் உள்பட ஏழைகள் வரை முப்பதி ணாயிரம் பேர் சிறைக்குச் சென்றும் மகாத்மாவே இரண்டு வருடங்கள் சிறை
யில் வதிந்தும் சிறையினின்று வெளிப்போந்து இருபத்தொருநாள் உண்ணா விரதமிருந்தும் இந்தியா சுயராஜ்யம் அடையவில்லை என்று சொன்னால் இனி எப்படி, எப்பொழுது, எவரால் விடுதலை அடையமுடியும்? இனி
மறுபடியும் இந்தியா சுயராஜ்யமடைய நாம் பாடுபட வேண்டுமானால் முன் அனுபவங்களை ஆதாரமாக வைத்து அவற்றிலுள்ள பிழைகளைத் திருத்தி
யும், ஏன் நமக்கு சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கண்டு பிடித்தும் அதற்கு வேண்டிய முறைகளைக் கையாள வேண்டுமே அல்லாமல் வீணாக இடித்த மாவையே இடித்துக் கொண்டிருப்பது பயித்தியக்காரத் தனமேயாகும். மகாத்மா காந்தி “ஸ்டேட்ஸ்மென்” பத்திரிகைக்கு எழுதிய
பதிலில் ஒத்துழையாமை இயக்கம் தோல்வி உற்றதற்குத் தகுந்த காரணத்தைக் காட்டியிருக்கிறார். “படித்த வகுப்பார் நான் சொல்லுகிறபடி கேட்பார்களே யானால் இப்பொழுதே ஒத்துழையாமைத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து சித்தி பெறச் செய்துவிடுவேன்” என்று சொல்லி யிருக்கிறார். இதிலிருந்தே இவ்வளவு ரூபாயும், இவ்வளவு தியாகமும், இவ்வளவு பேர் சிறை சென்றதும், மகாத்மா சிறையில் வதிந்ததும், உண்ணா விரதமிருந்ததும் இப்படித்த வகுப்பினராலேயே பாழடைந்து விட்டதென விளங்கவில்லையா? அஃதோடுமாத்திரம் அல்லாமல் எவ்வளவு பெரிய தத்துவத்திற்காக
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வசூலிக்கப்பட்ட பணமும், செய்யப்பட்ட தியாகங்களும் சிலர் சட்டசபைக்
கும், முனிசிபாலிட்டி, தாலுகா போர்டிற்குப் போவதற்கும், சிலர் மேயர்: ஆவதற்கும் அது உதவினதோடு அல்லாமல் விபசாரத்தன்மை (Immoral ) என்று சொல்லத் தகுந்த மாதிரி, மேடைகளுக்கு வரும் போது மாத்திரம் கதர் உடுத்தி வந்தால் பெரிய காங்கிரஸ்காரனும் தேச பக்தனும் ஆகிவிடலாம் என்ற தீர்மானத்திற்கு விடுதலைச் சபையாகிய காங்கிரஸில் மகாத்மா காந்தியே இடம் கொடுக்கும்படி வந்து விட்டதென்றால் இனி மறுபடியும் பணம் கொடுப்பதும் மக்கள் தியாகம் செய்வதும் என்பது சுலபத் தில் ஜனங் களிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய காரியமா? ராவணன், இரண்யன் போன்ற பலாஷ்டியர்கள் அருமையாய் செய்த தவத்தின் பலனையும், அற்புதமான கல்வி அறிவையும் - சீதையைக் கற்பழிக்கவும், தன்னையே தெய்வமெனக் கொள்ளவும் முறையே உபயோகப்படுத்திக் கொண்டது போல் மக்களின் தியாகமும், அறிவும் உபயோகப்படுத்தப் படாமல் எவ்வகையிலும் சந்தேக
மற்றதும், பாமர ஜனங்களுக்கு நம்பிக்கை உள்ளதும், யோக்கியமானவர் களுடைய தியாகமே தேவை உள்ளதாகவும் அடிக்கடி மாறுபாடுபடக் கூடாத துமான ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு அத்திட்டத்திற்கு ஒத்த வர்களை மாத்திரம் அதில் சேர்த்துக் கொண்டு படித்த வகுப்பினர் எனப் படுவோரை விலக்கி, பலனைப்பற்றி பயப்படாமல் நடத்தக் கூடிய காலம் என்று மகாத்மாவுக்கு வருகிறதோ, அன்றுதான் இந்தியாவின் ஏழை மக்களுக்கு விடுதலை ஏற்படும்.
குடி அரசு - தலையங்கம் - 09.08.1925
குடி அரசு - 1925 156
சுரேந்திர நாதரிண் மறைவு
வங்கத்தின் முடி சூடா மன்னன் என அழைக்கப்படும் ஸ்ரீ சுரேந்திர நாத பானர்ஜி வியாழனன்று இம்மண்ணுலகினின்று மறைந்தார் என்ற செய்தியைக் கேட்க மிகுந்த விசனத்திலாழ்கிறோம். அப்பெரியார் ஐம்பது
ஆண்டுகள் தேசத்திற்குத் தனக்குத் தோன்றிய வழி நின்று சலியாது தொண்டு புரிந்தார். முதன்முதலாக கலெக்டர் உத்தியோகத்தில் சில மாதங்களிருந்து பின்னர் விலக்கப்பட்டார். உடனே கல்வி வளர்ச்சிக்காக உழைக்க முற்பட்டு. ரிப்பன் கல்லூரியைக் கண்டு அதில் போதகாசிரியராகவுமிருந்தார். தேசீய உணர்ச்சி பரவாத அக்காலத்தில் இளம் வங்க வாலிப வீரர்களுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தார். பழைய காங்கிரஸில் ஓர் முக்கியத் தலைவராக. நின்று ஊழியம் புரிந்தார். இரண்டுமுறை காங்கிரஸில் தலைமையும் வகித்
துள்ளார். ஒத்துழையாமை தோன்றிய காலத்தில், நம் தேசமானது அவ்வியக்
கத்திற்குத் தயாராக இல்லை எனப் பலர் கருதியதுபோல் சுரேந்திர நாதரும். கருதிமிதவாதக் கொள்கையையே பின்பற்றி வந்தார். ஸ்ரீ சுரேந்திர நாதர் மீது இந்திய மக்கள் ஏதாவது ஒரு வழியில் அதிருப்தி அடைய வேண்டு மானால், ஒத்துழையாமையின் பலனாய் பின்னர் நடக்கப்போவதை முன்னரே அறிந்து கொண்டார் என்கின்ற ஒரு விஷயத்தில்தான் அவ்வித அதிருப்தி ஏற்படும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பர்களுக்கும் எமது அநுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.08.1925
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
திராவிட சங்கம்
நாகப்பட்டிணத்தில் திராவிட சங்கமென ஓர் சங்கம் நிறுவப்பட்டி ருப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் முன்பு பிராமணரல்லாதார் சங்கமென்ற பெயருடன் இருந்த ஒரு சங்கத்தையே திராவிட சங்கமெனப் பெயர் மாற்றிப் புதிதாக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். சங்கத்
தின் அக்கிராசனர் ஸ்ரீமான் கே.ஸி.சுப்பிரமணியஞ் செட்டியார் அவர்கள். கதரை ஆதரிக்க வேண்டுமென்றும், தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென ஸ்ரீமான் திருஞானசம்பந்தன் அவர்களும் பேசியிருப்பதாகத் தெரியவரு கிறது. இப்படி வெரும் வாய் வார்த்தையுடனே நின்று விடுவதாயிருந்தால் இச்சங்கம் முன்பு இருந்த பெயருடனேயே இருந்து உத்தியோகத்தை எதிர் பார்த்துக்கொண்டே இருக்கலாம். புதிதாக இவர்கள் பெயரை மாற்றிச் சங்கத்தை நிறுவியதற்கு ஏதாவது ஒரு காரணமாவது, நன்மையாவது அதில் ஏற்படவேண்டாமா? அப்படி ஏற்படவேண்டுமாயின் சங்கத்தின் அங்கத்தி னர்கள் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டுமென்றும். சங்கத்தின் அங்கத்தினர்களாய் இருப்பவர்களுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்திருப்பார்களானால் புதுச்சங்கம் ஏற்படுத்தியது சரியென்று சொல்லலாம்.காங்கிரஸ் சம்பந்தப்பட்ட பிராமணர் அல்லாதாரும் இச்சங்கத்தில் சேருவார்கள். ஒவ்வொரு ஊரிலும் இவ்வித சங்கத்தை பொதுமக்களும் ஆதரிப்பார்கள். அப்படியில்லாமல் பழைய தோசையையே திருப்பிப் போட்டுக்கொண்டு இதற்கு வேறு பெயர்: சொன்னால் பொதுமக்கள் எப்படி நம்புவார்கள்? இதற்குள் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றதெனத்தான் நினைப்பார்கள். ஆகையால் அவ்வித சந்தேகத்
திற்கு இடமில்லாமல் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவார்களென நம்பு கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.08.1925
குடி அரசு - 1925 158
அர்தணார்ப்போட்டை
அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும் மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர்.
நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்தி சாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நான் ஸ்ரீமான் சாரநாதனுடன் சென்றி ருந்தேன். ஆண்டு விழாவின் ஊர்வலத்தையும் அதில் வாசித்த உபசாரப் பத்திரங்களையும் இங்கு எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இச்சிறு கிராமத்தில் உள்ள ஜனங்களுக்கு கதரின் மீதுள்ள ஆர்வத் தைக் காட்டுவதற்கு இது குறிக்க வேண்டியதாயிற்று. ஆண்டு விழாவில் அதன் நிர்வாகிகளால் வாசிக்கப்பட்ட கதர் உற்பத்தி சாலையின் யாதாஸ்தி லிருந்து நான் தெரிந்துகொண்ட சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அவ்வூர் பிரமுகர்கள் பங்கு முறையில் மூவாயிரம் ரூபாய் சேர்த்து வியாபார முறையில் நடத்தி வருகிறார்கள். இதற்காக கதர்ச்சாலையாரின் இராட்டினம் நாற்பத்தேழும், கூலிக்கு நூற்பவர்கள் இராட்டினம் நாற்பத்தைந்தும் ஆக
இராட்டினங்கள் தொண்ணூற்றிரண்டு சுழலுகின்றன. ஆறு தறிகளுக்கும் பூரா வேலை கொடுக்கப்பட்டு வருகின்றது. பங்குக்காரர்களுக்கு இலாபமும் நூற்றுக்கு ஆறு வட்டிவீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியமாக
ஸ்ரீமான்கள் சபாபதி முதலியார், விஜயராகவலு நாயுடு, விநாயகமூர்த்தி முதலியார் இன்னும் சிலரும் இடைவிடாது உழைத்து வருகின்றனர். இதில் உற்பத்தியாகும் கதர் மெல்லியதாகவும், கெட்டியாகவும் இருக்கிறது. மெல்லிய
கதர் வேண்டியவர்களின் ஆசையை இக்கதர்ச்சாலை திருப்தி செய்யக்கூடும் எனக் கருதுகிறேன். இங்கு நூல் நூற்பவர்களுக்கு ஒரு ராத்தலுக்கு பன்னி ரண்டு அணா கூலி கொடுக்கப்படுகின்றது. பெரும்பாலும் மகம்மதிய சகோதரிகளே இங்கு நூல் நூற்கின்றனர். இது விஷயமாய்ப் பொது ஜனங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். நமது நாட்டில்
கதர் விர்த்தியாக வேண்டுமானால், அந்த அந்த ஊரில் உள்ள பிரமுகர்கள் ஒன்று கூடி பங்கு முறையில் கைப்பணம் சேர்த்து தங்களுக்கு வேண்டிய கதரை அதில் உற்பத்தி செய்வித்து, தாங்கள் அதைக் கட்டிக் கொள்வது என் கிற பழக்கம் வந்தால் கதர் இயக்கம் மகாத்மாவின் கோரிக்கைப்படி நமது நாட்
டில் வெற்றியுறும். இம்மாதிரி செய்வதில் நமக்கு என்ன கஷ்டமிருக்கிறது? வருஷத்தில் பத்து ரூபாய்க்குக் குறைவில்லாமல் துணி வாங்கக்கூடிய
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குடும்பங்கள் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவோ இருக்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் ஒரு வருஷச் செலவிற்கு உண்டான துணிக் கிரயத்தை அட்வான்ஸ் கொடுப்பதுபோல் நினைத்து அதை முதலாக வைத்து அதைக்கொண்டு உற்பத்தி செய்வதும், தங்களுக்கு வேண்டிய துணிகளை அங்கேயே வாங்கிக் கொள்வதுமாக நடைபெற்று வருமாகில் விலையைப் பற்றியோ, துணியின் நயத்தைப் பற்றியோ கொஞ்சமும் அதிருப்தி ஏற்பட இடம் இருக்காது. உதாரணமாக, கானாடுகாத்தானில் உள்ள நாட்டுக் கோட்டைச் செட்டியார்களில் அநேகர் ஒன்றுகூடி கூட்டுறவு பங்கு முறையில் பணம் சேர்த்துத் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்து வருகின்றனர். ஆனால் அது மின்சார விளக்குப் போடவும், ஐஸ் உற்பத்தி செய்யவும், இன்னும் இதுபோன்ற மேனாட்டு நாகரீகச் செயல்களுக்கு உபயோகப் படுகிறதேயன்றி தேச நன்மைக்கோ, ஏழைகள் பிழைப்புக்கோ உற்றதல்ல. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டுவது தங்கள் தங்களுக்கு வேண்டிய தேவைகளைத் தங்கள் தங்கள் ஊரிலேயே தங்கள் தங்கள் கூட்டுற வினால் செய்து கொள்ளவேண்டும் என்பதுதான். அந்தணர்ப்பேட்டையில் கதர் விஷயத்தில் ஏற்பட்ட கூட்டுறவு முறையானது முனிசிபாலிட்டி, யூனியன் முதலிய ஸ்தல ஸ்தாபன முறை அல்லாமல் தங்களுக்குள்ளாகவே பஞ்சாயத்து முறை வைத்து தாங்களே வரிவசூல் செய்வதுடன் ஊர் சுகாதாரம் முதலிய விஷயங்களையும் தாங்களே நடத்தி வருகிறார்கள். “குடிநூல்” “குடி ஆட்சி” என்கிற பதங்களுக்குள்ள தத்துவங்கள் இதுதான்.
*குடி” என்கிற பதத்தின் பொருளே அங்குள்ள குடிஜனங்களைத் தான் குறிக்கிறது. கிராமங்கள் ஒழுங்குபட்டுப் படிப்படியாகத்தான் தேசம் ஒழுங்குபடவேண்டும். ஆகையினால் ஒவ்வொரு கிராமத்தாரும் தங்கள். தங்கள் ஊரில் கூட்டுறவு முறையில் ஒவ்வொருவரும் கதர் உற்பத்திக்கு வேண்டிய முயற்சி செய்தல் அவசியமாகும். ஆரம்பத்திலேயே பெரிதாக ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்து கஷ்டப்படாமல் கூடிய வரையில்
சீக்கிரத்தில் ஆரம்பிக்கத் தகுந்தாற்போல் எவ்வளவு சிறிய மூலதனத்தைக் கொண்டானாலும் முதலில் ஆரம்பிக்க வேண்டியது, பிறகு தானாகவே எல்லாம் கைகூடிவரும்.
(குடி நூலில் எழுதியது)
குடி அரசு - கட்டுரை - 09.08.1925
குடி அரசு - 1925 160
மதூயாணம
1920-ம் ஹு சென்னை ராஜதானியில் உள்ள கள்ளுக்கடைகள் 11,034 இவைகளில் விற்ற கள்ளு 11 கோடி காலன். 8 திராம் புட்டி 1 க்கு 2 அணா
வீதம் 66 கோடி பட்டிக்கு கிரயம் ரூ. 8 '/, கோடி கிரயம் ஆகிறது. இதற்கு அனுகூலமாய் செலவாகும் மாமிசம், புட்டு, தோசை, முட்டை முதலிய உபகருவிகளுக்கு 2 கோடி ரூபாய் ஆக ரூ.101, கோடி.
சென்னை ராஜதானியில் உள்ள சாராயக்கடைகள் 6,352. இவைகளில் விற்ற சாராயம் 16,75,000 காலன்கள்.காலன் ஒன்றுக்கு 12 ரூ.வீதம்2 கோடியே
1லட்சம் ரூபாய். இதற்கு மாமிசம், தோசை, புட்டு முதலிய உபகருவிகள் 25 லட்சம்.ஆக இரண்டும் சேர்ந்து 12, கோடி ரூபாய் செலவாகிறது.
இந்தப் பனிரண்டரைக்கோடி ரூபாய் நமது ராஜதானியில் கள், சாராயத் திற்காக 3 /,கோடி ஜனங்களால் சிலவு செய்யப்படுகிறது. இது அல்லாமல் ஏழை மக்களால் குடியின் பொருட்டு களவு - சூது - பொய் - கொலை, கொள்ளை முதலிய காரியங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு? கோர்ட்டு,
வக்கீல், லஞ்சம், சப்ளை, மாமூல் வகைகளில்ஆகும் செலவுகள் எவ்வளவு?
மக்கள் ஒழுக்கம், கற்பு முதலிய குணங்கள் ஒழிந்து தேசத்திலும், நாட்டிலும், குடும்பத்திலும் ஏற்படும் கலகங்கள் ஒற்றுமைக் குறைவுகள். எவ்வளவு? இவைகளுக்கு விலைமதித்தால் எந்தக் கணக்கிலடக்கமுடியும்?' இவ்வளவு கொடுமைகளையும் செய்வித்து வரும்படிக்காக நமது சர்க்கார். நமது மாகாணத்தில் இதனால் சம்பாதிக்கும் பொருள் எவ்வளவு என்று கணக்குப் பார்த்தால் கள்ளில் 2 கோடியே 31 லட்சமும், சாராயத்தில் 88/, லட்சமும்,ஆக3 கோடி ரூபாய்19'/, லட்சம் ரூபாய்தான். இதல்லாமல், கஞ்சா, அபினி, சீமை சாராயம் விற்கும் கணக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை. இதிலிருந்து சர்க்கார் 3 கோடி ரூபாய் சம்பாதிக்க ஜனங்கள் எவ்வளவு
கஷ்டமும் நஷ்டமும் அடைய வேண்டி வருகிறது 2
இதே மாதிரி இந்தியா முழுமைக்கும் 1923 - 1924 -ம் வருஷத்திற்கு நமது சர்க்காருக்கு மது வியாபாரத்தில் வந்த ஆதாயம் 19,40,51,689 ரூபாய். சர்க்காருக்கு 19 ', கோடி வரவேண்டுமானால் பொது ஜனங்களுக்கு டி கணக்குப்படி கள்ளும் சாராயமும் குறைந்தது 80 கோடி ரூபாய்க்குக் குறை வில்லாமல் விற்பனை ஆகியிருக்க வேண்டும். இதற்கேற்ற மற்ற சடங்கு களின் செலவையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய தொகை நாட்டின்
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
க்ஷேமத்திற்கல்லாமல் நாட்டினுடையவும், ஒழுக்கத்தினுடையவும் அழிவுக்
குச் செலவாகிறது என்பது விளங்கும். சட்டசபை மெம்பர்கள் என்று சொல்லிக் கொள்வோரும், மந்திரிகள் என்று சொல்லிக்கொள்வோரும் இதற்காக என்ன செய்திருக்கிறார்கள்? கேள்வி கேட்பதும் பத்திரிகையில் எழுதிக் கொள்ளு வதுமான காரியங்களைச் செய்து பொதுஜனங்களை ஏமாற்றி சர்க்காருக்கு அனுகூலம் செய்துகொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல் உண்மையில் யோக்கியமான வேலை எதுவும் செய்திருக்கிறார்களா 2
சட்டசபையிலேயே குடிக்கும் மெம்பர் சில பேர்கள்; சாராயக்கடை குத்தகையெடுத்துப் பிழைக்கும் மெம்பர்கள் சிலபேர் : கள்ளுக்கு மரம் குத்தகை விட்டுப் பணம் சம்பாதிக்கும் மெம்பர்கள் சிலபேர்; குடியினால் ஏற்படும் கொடுமைகளினால் பிழைப்பவர்கள் சிலபேர். குடியை விளம்பரப்
படுத்தி “நல்ல சாராயம்”, டாக்டர் சிபார்சு செய்தது, உடம்புக்கு நல்லது என்று ஜனங்களைக் குடிக்கச் சொல்லிப் பிழைக்கும் மெம்பர்கள் சிலபேர். இப் பேர்ப்பட்ட சிகாமணிகளால் பெரும்பாலும் நிரப்பப்பட்ட சட்டசபை (இவைகளில் சம்பந்தப்படாத சில பேர் இருக்கலாம்) ஜனங்களுடைய பிரதி நிதிசபையென்று இப்படிப்பட்டவர்களே பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி இவைகளை ஒழிப்பதாய் அங்கு போய் உட்கார்ந்து கொண்டு தங்கள். பிள்ளைக் குட்டிகளுக்கும், இனத்தாருக்கும் பிழைப்புக்கு உத்தியோகம் சம்பா
திக்கப் பாடுபடுவதல்லாமல் வேறு என்ன பலனை உண்டாக்குகிறார்கள்?
சட்டசபைகள் ஏற்பட்டு மதுபானத்தை ஒழிக்க நம்மவர்கள் பிரயத் தனப்பட்டதாக சொல்லிக் கொள்வதன் பெருமையைக் கீழ்க்கண்ட கணக்கு களால் தெரிந்துகொள்ளலாம். ஜனப்பிரதிநிதிகள் பெரும்பாலும் உள்ள சட்டசபை இல்லாத காலத்தில் நமது சர்க்காருக்கு இந்தியாவில் மொத்தம் கள்ளு சாராயத்தால் வரும்படி:-
அதாவது 1880 - 1881 வருஷத்தில் 37, கோடி
அதற்கு வேண்டிய இலாகாக்கள் அமைத்து ஒழுங்குபடுத்தின பிறகும், சட்டசபை ஏற்பட்ட பிறகும் 6 கோடி
1910- ல் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தின் பிறகு 10 கோடி.
1918 - ம் வருஷத்தில் மாண்ட் போர்ட் சீர்திருத்தத்தின் பிறகு 18/, கோடி
1924 - ம் வருஷத்தில் 19/, கோடி.
இப்படியே நாளுக்குநாள் உயர்ந்துகொண்டு வருவதல்லாமல் குறைவுபடுவது எங்கே ? இதை நிருத்திவிட வேண்டுமென்று சொன்னால் நமது சட்டசபை மெம்பர்களும் மந்திரிகளும் கூட இந்த வரும்படி போனால்
சர்க்கார் நடைபெறாதே என்று விசனப்படுகிறார்களே அல்லாமல், தேசமும்
குடி அரசு - 1925 162
ஜனங்களும் கெட்டுப் போகிறதே என்கிற கவலையே இவர்களுக்கு இல்லை. தவிரவும்,மதுவரும்படி நின்றால் ஜனங்கள் படிக்கப் பணமில்லையே என்றும் விசனப்படுகிறார்கள். இரண்டு பிள்ளையுள்ள தகப்பனை உன் ஒரு பிள்ளை படிக்க வேண்டுமானால் ஒரு பிள்ளை கள்ளு சாராயம் குடிக்க வேண்டும்; சம்மதமா ? என்று கேட்டால், தகப்பன் ஒரு பிள்ளை குடித்தாலும் சரி ஒரு பிள்ளை படிக்கத்தான் வேண்டும் என்று எவனாவது சொல்லுவானா? ஒருக்காலும் சொல்ல மாட்டான். அதுபோலவே நமது மந்திரிகளும். சட்ட சபை மெம்பர்களும், ஏழை மக்களும், தாங்களும் ஒருவருக்கொருவர் சகோதரர் என்கிற உணர்ச்சி இருக்குமானால் வெகுகாலத்திற்கு முன்பே இந்த மது வியாபாரத்தை சர்க்காரிலிருந்து ஒழித்திருப்பார்கள் அல்லது சட்ட சபையை விட்டு விலகி இருப்பார்கள். மதுவருந்துபவர் பெரும்பாலும் ஏழைகள். சட்டசபைக்குப் போகிறவர்கள் பணக்காரரும்,மதுவருந்துபவர்கள் கொடுக்கும் பணத்தால் படித்தவர்களாயுமிருப்பதால் மதுபானமென்பது அவர்களுக்கு ஒரு கவலையற்ற விஷயமாயிருக்கிறது. சட்டசபைப் பயித்தி யம் இருக்கிறவர்கள் மற்றெல்லா விவகாரங்களையும் விட்டுவிட்டு மது விலக்கு என்கின்ற ஒரு காரியத்தில் மாத்திரம் தாங்கள் எல்லாரும் ஒன்றா யிருந்து ஒரேயடியாய் இதை ஒழிப்பதுதான் தங்கள் வேலைத்திட்டம் என்கிற கொள்கையை வைத்துக் கொண்டு சர்க்காரின் அதிகச் செலவைக் குறைத்து கள்ளு வரும்படி இல்லாமலே சர்க்கார் நடக்கும்படியாக வரவு செலவு திட்டத்தைச் சரிசெய்துகொண்டு இதை சர்க்காரை ஒப்புக்கொள்ளச் செய் வோம்; ஒப்புக் கொள்ளாவிட்டால் ராணுவச் சட்டம் வந்தாலும் சரி, சட்ட சபையை வேறுகாரியம் பார்க்கவிடுவதில்லையென்று பிடிவாதம் செய்வ தாக தீர்மானித்துக் கொண்டால் மதுபானம் நமதுநாட்டில் இன்னும் ஒழியாமல் இருக்குமா? ஒருக்காலும் இருக்காது என்றுதான் சொல்லுவோம்.
கள் மரம் வளர்ப்பது நாம், சாராயம் காய்ச்சுவது நாம், விற்பது நாம், குடிப்பது ஏழைகள். யார் பேரில் குற்றம் சொல்வது? மரம் வளர்த்து குத்த கைக்கு விட்டுக் கடை யெடுத்து கள் விற்று, குடிகாரன் போதையில் செய்த காரியத்திற்குக் கோர்ட்டில் ஏற்பட்ட வழக்குக்கு பீசு பெற்று வாழுபவர்கள், சட்டசபைக்குப் போனால் சர்க்கார் பேரில் குற்றம் சொல்லி ஜனங்களை ஏமாற்றுவார்களே அல்லாமல், தங்கள் குற்றங்களை ஒருக்காலும் திருத்திக் கொள்ள மாட்டார்கள். ஆகையால் யாராவது சட்டசபைக்குப் போவதற்காக ஏழை மக்களிடத்தில் வந்து ஓட்டுக் கேட்பார்களானால் அவர்களை சட்ட சபையில் நம்பிக்கை உள்ள ஓட்டர்கள் உங்களுக்கு எத்தனை தென்னை மரம்? அதில் எவ்வளவு கள்ளுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது? நீங்கள் எத்தனை குடிகாரர் கேசுக்கு ஆஜராகி எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள்?
குடி விலக்க நீங்கள் இந்த 6 வருஷ காலமாய் சட்டசபையிலும், வெளியிலும் என்ன செய்தீர்கள்? எங்களுக்கு வேறு ஒரு நன்மையும் வேண்டாம்: குடி ஒழிந்தால் போதும்; அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் சொல்வதை சர்க்கார் கேட்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இம்மாதிரியான கேழ்விகளைக் கேட்டு அதற்கு ஏற்ற உண்மை யோக்கியர். களை ஆராய்ந்துப் பார்த்து ஓட்டர்கள் தங்கள் கடமையைச் சரியாய்ச் செய்வார்களானால் மாத்திரம் சட்டசபையால் மதுபானம் ஒழிக்கலாம் என்று ஓட்டர்கள் நம்புவதற்கும், மதுபானம் ஒழியாவிட்டால் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதற்கும் அர்த்தம் உண்டு.
குடி அரசு - தலையங்கம் - 16.08.1925
குடி அரசு - 1925 164
பெரிய வக்கீல்கள்
ஒரு வக்கீல் வீட்டிற்கு ஒரு ககஷிக்காரர் வருகிறார்.
வக்கீல்- வாங்க கவுண்டரே, சவுக்கியமா என்ன விசேஷம்?
கட்சிக்காரன் ஒரு கேசு கீழ் கோர்ட்டில் நமக்கு விரோதமாய்ப் போய் விட்டது. அப்பீல் போடவேண்டும் தயவுசெய்து கட்டை பாருங்கள்.
வக்கீல்:- கட்டில் ஒரு ரிகார்ட், அதாவது ஜட்ஜ்மெண்டை எடுத்து பார்த்துக்கொண்டு தன்னுடைய குமாஸ்தாவிடம் பேசுவதுபோல் “ஏண்டா ரங்கநாதா, யாரடா ஜட்ஜிமெண்ட் எழுதிய சப்ஜட்ஜி சுத்த முட்டாளாயிருக் கிறானே. அவன் தனக்குமேல் ஏதாவது கோர்ட்டு இருப்பதாக நினைத்தானா அவனேதான் முடிவான ஜட்ஜி என்று நினைத்துக்கொண்டானா? இந்த ஜட்ஜ்மெண்ட் நம்ம ஜட்ஜி துரையிடம் அரை நிமிஷம் நிற்குமா? அல்லாமலும் இந்த சப்ஜட்ஜை சும்மா விட்டுவிடுவார்களா?”
கட்சிக்காரன் (என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே கட்சிக்காரன் ஆனந்தத்துடன் ஏனுங்கொ எஜமான்றே எதிர்கட்சிக்கு நோட்டீசு அனுப்பி மாற்றுவார்களா? அதில்லாமலே கீழ்கோர்ட் தீர்ப்பை மாற்றிவிடுவார்களா?
வக்கீல்:- அதெல்லாம் உங்களுக்கெதற்கு? நான் பார்த்துக் கொள்ளுகிறேன். 700 ரூ. பீசு கொடுத்தால் கேசு அப்பீல் போடுவேன்.
கட்சிக்காரன் 700ரூ. கேழ்க்கிறீர்களே, சொத்தே 2000ரூ. தான் பொரும். கீழ்கோர்ட்டில் 1000ரூ. க்கு மேலாகவே செலவாய் விட்டது. கேசு போட்டு இரண்டரை வருஷமாச்சுது. கீழ்கோர்ட்டு செலவு பிரதிவாதிக்கு 440ரூ. கொடுக்கும்படி தீர்ப்பாயிருக்கிறது. ஆகையால் 500ரூ. வாங்கிக் கொள்ளுங்கள்.
வக்கீல்-கீழ்கோர்ட்டு செலவை வேறே மாற்றவேண்டும். 700க்கு குறையாது.
இதற்குள் வக்கீல் குமாஸ்தாவும் தரகனும் கட்சிக்காரனுக்கு கண்ண
டித்து உடனே ரூ.கையில் கொடுத்துவிடும்படி ஜாடை செய்கிறார்கள். கட்சிக் காரன் சரி 700ரூ.க்கு ஒப்புக்கொள்ளுகிறேன். 500ரூ. எடுத்துக்கொள்ளுங்கள்..
மீதி அனுப்புகிறேன். மறுபடியும் நான் வரவேண்டுமா?
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வக்கீல்:-.அநேகமாய் வரவேண்டியதில்லை. ஒருசமயம் நோட்டீஸ் வந்தால் வாரும். பாக்கி பீசு எப்போது அனுப்புவது?
கட்சிக்காரன் நான் ஊருக்குப்போன உடன் அனுப்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு குமாஸ்தாவுக்கும் தரகனுக்கும் 15ரூ. கொடுத்து விட்டுப் போய் விட்டார் - போனவுடன் 200ரூ.யும் அனுப்பிவிட்டார். பிறகு
4 மீ£கழித்து நோட்டீஸ் வந்த பிறகு விசாரணைக்கு முதல் நாள், கட்சிக்காரர். மறுபடியும் வக்கீல் வீட்டுக்கு வருகிறார்.
வக்கீல்:- எந்த ஊரையா நீர்?
கட்சிக்காரன்: நான் தான் 4 மாதத்திற்கு முன் வந்து ஒரு அப்பீ லுக்கு 700 ரூ. பீசு பேசி 500ரூ. கொடுத்து விட்டுப் போய் மறுபடி 200ரூ. அனுப்பினேனே தங்களுக்கு ஞாபகமில்லையா?
வக்கீல்:- (குமாஸ்தாவை! ரங்கநாதா இந்த ஆள் யார் பாரு?
குமாஸ்தா: இவர்தான் 108 நெம்பர் அப்பீல்வாதி. இந்த கேசு நாளைக்கு போட்டிருக்கிறது.
வக்கீல்:- நாளைக்கு கேசு இருக்கும் போது இன்றைக்கே வந்து உபத்திரவம் செய்கிறீரே. நாளை வாரும் போம்.
கட்சிக்காரர் போய்விட்டார்.
வக்கீல்:- (குமாஸ்தாவை! ரங்கநாதா இந்த கேசு என்ன பார்த்தையா?'
குமாஸ்தா:- பார்த்தேன். அது ஒன்றும் மாறாது. ஜட்ஜிமெண்டு ரம்பவும் சரியாய் எழுதியிருக்கிறார். அதிலொன்றும் பிசகு இல்லை.
வக்கீல் நாளைக்கு கோர்ட்டில் வேறு ஏதாவது வேலை இருக்கிறதா?
குமாஸ்தா :- இல்லை.
மறுநாள் கட்சிக்காரர் சிரித்துக்கொண்டே வருகிறார்.
வக்கீல்: உன்னுடைய கேசைப் பார்த்தேன். கீழ்க் கோர்ட்டில் சரியான வக்கீலை வைத்து வேலை செய்யாமல், எவனையோ ஒரு முட்டாளை வைத்து வேலை செய்திருக்கிறாய், சரியான “இஷுக்களை” போடவில்லை சரியான
படி சாட்சிகள் விடவில்லை. கேசை பாழாக்கிவிட்டு இங்குவந்து முட்டிக் கொண்டால் என்ன பிரயோஜனம்? ஒரு ஐந்து நிமிஷமாவது கேசைப்பற்றிச் சொல்வதற்கு ஏதாவது பாயிண்டுகள் வேண்டாமா? இன்றைக்கு கோர்ட்டுக்
குப் போவதில் ஒன்றும் பிரயோசனமில்லை...
கட்சிக்காரன் ஐய்யய்யோ, தாங்கள் அன்று ஜட்ஜிமெண்டைப்
பார்த்து இது அரை நிமிஷம் கூட நிற்காது. ஜட்ஜிக்குக்கூட ஏதாவது கெடுதி வரும் என்று சொன்னீர்களே, இப்பொழுது 700ரூ. வாங்கிக் கொண்டு
குடி அரசு - 1925 166
கோர்ட்டுக்குப்போவதில் பிரயோசனமில்லை என்கிறீர்களே. இந்த கேசு ஜெயிக்காவிட்டால் என் குடித்தனமே முழுகிப்போகுமே; கை முதலும் போய் கடன்காரன் ஆகிவிடுவேனே; அப்பீலுக்காகவென்று ஆயிரம் ரூபாய் என் மைத்துனன் ஜாமீன் பேரில் கடன்வாங்கி செலவு செய்து விட்டேன். இப்பொழுது இப்படிச் சொல்லுகிறீர்களே சாமி சாமி இது தர்மமா!
வக்கீல்:- ஓய். நீர் அன்று கட்டுப் பூரா என்னிடம் எப்பொழுது காட்டி
னீர்? ஜட்ஜ்மெண்டு மாத்திரம் காட்டினீர். அதில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். இப்போது மற்ற ரிகார்ட்டுகளைப் பார்க்கத்தான் விஷயம்.
தெரிந்தது.
கட்சிக்காரன்- (அழுதுகொண்டு) எப்படியோ இருக்கட்டும், தாங்கள் இன்று கோர்ட்டுக்கு வாருங்கள், அப்புறம் என் விதிப்படி ஆகட்டும்.
வக்கீல்:- மறுபடியும் முட்டாள்த்தனமாய் உளருகிறீரே. கோர்ட்டில் எடுத்து சொல்லவே ஒன்றும் இல்லை என்று சொன்னால் திரும்பவும் கோர்ட்
டுக்கு வாருங்கள் என்று கூப்பிடுகிறீரே உமக்கு புத்தி இருக்கிறதா இல்லையா?
குமாஸ்தா: (கட்சிக்காரரைப் பார்த்து) நீங்கள் போய் இருங்கள், நான் வக்கீலை வரும்படி செய்கிறேன்.
அழுதுகொண்டே கட்சிக்காரர் கோர்ட்டுக்குப் போகிறார். கோர்ட்டில் ஜட்ஜி வந்தவுடன் இந்த கேசையே முதலில் கூப்பிடுகிறார். குமாஸ்தா இல்லை,
வக்கீல் இல்லை. கட்சிக்காரர் நேரில் போய் வக்கீல் வருவார் கொஞ்ச நேரம். பொறுக்க வேண்டும் என்று கேழ்க்கிறார். ஜட்ஜு கேசை வீட்டிலே படித்து வந்தவராதலால் அப்பீலுக்கு ஒன்றும் சரியான காரணமில்லை. காத்திருப்
பதிலும் பிரயோஜனமில்லை என்று சொல்லி அப்பீலை செலவுடன் தள்ளி
விட்டார். கட்சிக்காரர் வக்கீல் வீட்டிற்குக் கடப்போகாமல் ஊருக்குப் போய்
பாப்பராய் விட்டார்.
குடி அரசு - உரையாடல் - 16.08.1925
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரி வந்தார்.
பெரியமனிதர்:- வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டு மென்றிருந்தேன்.நீங்களே வந்துவிட்டீர்கள்.
சாஸ்திரிகள்:- அப்படியா, என்ன விசேஷம்?
பெரியமனிதர்:- ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான்.இதர்க்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?
சாஸ்திரிகள்:- ஆஹா உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும். இல்லாவிட்டால் அந்தப் பையனை பார்க்கவே கூடாது.
பெரியமனிதர்:- தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன்தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.
சாஸ்திரிகள்:- ஓஹோ! பிராமண பையனா அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.
குடி அரசு - உரையாடல் - 16.08.1925
குடி அரசு - 1925 168
கன்ளுக்கும் விஷத்திர்க்கும் வாக்குவாதம்
விஷம்- ஓகள்ளே!நீ என்ன மகா கெட்டிக்காரன்போல் பேசுகிறாய், ஒரு கடுகளவு ஒரு மனிதனுக்குள் பிரவேசித்தேனேயானால் உடனே அவன் உயிரை வாங்கி பிணமாக்கிவிடுவேன். நீ பீப்பாயளவு உள்ளே போனாலும் ஒன்றும் செய்வதில்லை.
கள்ளு:- அப்படியா, உன்னால் என்ன செய்யமுடியும்? ஒரு மனிதன் உயிரை மாத்திரம் தான் வாங்கமுடியும். இது யாரும் செய்து விடுவார்கள். என் சங்கதியைக் கேள். நான் ஒரு மனிதனுக்குள் சென்றேனேயானால் அவன் புத்தி, மானம், சொத்து இவ்வளவையும் பிடுங்கிக் கொள்வதோடு
உயிர் இருக்கவே பிணமாக்கிவிடுவேன். இது உன்னாலாகுமா?
குடி அரசு - உரையாடல் - 16.08.1925
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
“சித்திரபுத்திரன்
தற்காலம் இந்தியாவின் அபிப்பிராய பேதத்திற்கும், ஒற்றுமை யின்மைக்கும், வகுப்புத் துவேஷங்களுக்கும் ஒரே மருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான் என்று சில நாட்களுக்கு முன்னர் “குடி அரசி”ன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பற்றி வெளிப்படையான ஆட்சேபங்கள் ஒன்றும் வரவில்லை. ஆனாலும், அதனால் பாதிக்கப்படக் கூடிய வகுப்பைச் சேர்ந்ததான “சுதேசமித்திரன்” பத்திரிகை மந்திரி ஒப்புக்கொள்ளுகிறார் என்கிற தலைப்பின் கீழ் ஒரு சொற்பெருக்கில் தனக்கு அநுகூலமான பாகத்தை மட்டும் எடுத்து எழுதி ஜனங்களை ஏமாற்றி, யோசித்துப்பாருங்கள் என்று கேட்டிருக்கிறது. “அதாவது பிரதிநிதிச் சபைகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே ஜஸ்டிஸ் கட்சியாரின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது தற்கால ஏற்பாடு. அதை ஒரு ஸ்திரமான ஏற்பாடாகக் கொண்டால், அது நம் தேசிய இயக்கம் சிதருண்டு போகும்படி செய்யக்கூடியது”. “திராவிடன்” பத்திரிகை மேற்படி மந்திரியின் சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு வெளியிட்டிருக்கிறது. “சம நியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றிமையாதது. இக் கொள்கை புதிதானதல்ல. சீர்திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்தபின்னர் ஏற் பட்டதுமல்ல, இம்மாகாணத்தைத் திறமையாய் முன்னர் ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே இதை ஒப்புக் கொண்டு 1840
-ம் ஆண்டில் போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் 125ல் அமைத் திருக்கிறார்கள். ஆனால் தற்கால முறையாய் ஏற்பட்டதென்பதை நீங்கள் உணரவேண்டும். நிலையாகவோ, முதன்மையாகவோ அஃதிருப்பின் தேசிய அபிவிருத்திக்குக் கெடுதி விளைவிக்கும். எல்லா சமூகத்தார்களும் சமூக அரசியல் பொறுப்பு களை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும்” என்று பேசியிருக்கிறார். இவற்றி லிருந்து “சுதேசமித்திரன்” பத்திரிகை ஜனங்களை எப்படித் தனது சூழ்ச்சி களால் ஏமாற்றி வருகிறதென்றும், அதை நம்பி ஜனங்கள் எவ்வளவு பேர். ஏமார்ந்து போகின்றார்களென்றும் வாசகர்களே அறிந்துகொள்ளலாம். மந்திரி
ஸ்ரீமான் பாத்ரோ அவர்கள் தற்கால நிலை மைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் தேவையென்று சொல்லுவதோடு நிரந்தரமாய் அது நமக்கு இருக்க
குடி அரசு - 1925 170
வேண்டியதில்லையென்றும், எல்லா சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும் என்றும் சொல்லுகிறார். நமது தேசத்தில் எல்லா சமூகத்தாரும் ஒற்றுமைப்பட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாகி, ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்கும் வழக்கம் நீங்கி எல்லோரும் சமம் சகோதரர்கள் என்கிற உணர்ச்சிவரும்பொழுது ஒரு தேசத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியதில்லைதான். “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா” என்று கூப்பிடுவதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால்
தற்காலம் தேச முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பது ஒற்றுமைக்குறைவு என்பதையும், ஒற்றுமைக்குறைவிற்குக் காரணம் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் தாழ்த்தி ஏமாற்றி மோசம் செய்துதான் முன்னுக்குவரப் பார்ப்பதுதான் என்றும் வியக்தமாய் தெரிந்துகொண்ட பிறகு தர்ம சாஸ்திரம் பேசுவது ஒழுங்காகுமா? இந்தியக் கிறிஸ்தவர்களுக்கும், மகம்மதியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆங்கிலோ இந்தியருக்கும் சில இலாகாக்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்துவிடவில்லையா? அதுபோல், பிராமணர், பிராமணரல்லாதார் என்போருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்து வம் ஏற்பட்டுவிடின் தேசத்திற்கு என்ன கெடுதி சம்பவிக்கும்? இந்து,
மகம்மதியர், கிறிஸ்தவர் முதலியவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும், நம்பிக்கையும் பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற வகுப்பினருக்குள். இருக்கிறதா? ஒரு மதஸ்தர்களுக்குள்ளாகவே ஒருவர் தான் பிறவியினா லேயே உயர்ந்தவரென்றும், தான் எவ்வளவு ஈனராயிருந்த போதிலும்
பிறவியின் காரணமாகவே தனக்குச் சில பெருமைகளும் உரிமைகளும் உண்டென்றும், பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவராயிருந்த போதிலும் அவர்கள் தாழ்ந்தவர்களென்றும், அவர்களைத் தொட்டால், பார்த்தால், நெருங்கினால், தெருவில் நடந்தால் பாபமென்னும் தத்துவங் களையும், கொள்கைகளையும் மத ஆதார மூலமாக வைத்துக்கொண்டு இருக்கிறவரையில் இரு வகுப்பாருக்குள்ளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை
யும் அன்பும் எப்படி உண்டாகும்? மகம்மதியரும், பிராமணரல்லாத இந்துக்
களும், இந்தியக் கிறிஸ்தவர்களும், ஐரோப்பியரும், ஆங்கிலோ இந்தியரும்
ஒரு சமயம் ஒற்றுமை ஆனாலும் ஆகலாம். ஆனால் பிராமணரும், பிராமண ரல்லாத இந்துக்களும் ஒற்றுமையாக ஏதாவது இடமிருக்கிறதா? இந்துக்களில் பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் சூத்திரர்களென்றும், அவர்கள் பிராமணர்: களுக்கு ஊழியர்களென்றும், அடிமைகளென்றும், தாசி மக்களென்றும், அவர்கள் சொத்துக்கள் வைத்திருப்பதற்குப் பாத்தியமில்லையென்றும், சூத்திரர்களின் சொத்துக்களைப் பிராமணர்கள் பலாத்காரமாய்ப் பிடிங்கிக் கொள்ளலாமென்றும் மனுதர்ம சாஸ்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் 413, 415, 417 சுலோகங்களாக எழுதி வைத்துக்கொண்டு அவற்றையே இந்து சமூகத்திற்கு ஆதாரமாக்கி, அதர்க்குத் தகுந்த மாதிரியாக வாழ்க்கையையும் நடத்திக்கொண்டு அதையே தங்கள் தந்திரங்களாலும், செல்வாக்கினாலும்
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பாமர ஜனங்களையும் நம்பும்படி செய்து கொண்டிருக்கும் ஒரு சாதியுடன் எப்படி மற்றொரு சாதி ஒருமைப்படமுடியும்? பிரிட்டிஷ் அரசாங்கம்
இந்தியாவிற்கு வந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் ஆறு ஏழு கோடி ஜனங்கள் தங்கள் நாட்டில் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்காதவர்களாகவும், பார்க்காதவர்களாகவும் கருதப்படுகிறார்களென்றால் இனி எந்தக்காலத்தில் இவர்களுக்கு விமோசனம் உண்டென்று நம்ப இடமிருக்கிறது? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தப்பு என்பாரும், உயர்ந்த சாதி என்பாரும், இந்த அரசாங்கத்தாரும் நாளது வரையில் இந்தத் தீண்டா தாருக்கு என்ன செய்திருக்கிறார்கள்? இனிமேலும் என்ன செய்வார் கள்: என்று நம்ப இடமிருக்கிறது? சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்னராவது இந்தத் தீண்டாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்திருந்தால் இவர்களின் நிலை இன்று இப்படி இருக்குமா? இந்துக்களில் சிலர் மகம்மதி யர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்கள் என்று எண்ணிக் கொண்டி ரந்த மனப்பான்மை இப்பொழுது எப்படி மாறிற்று? அவர்களுக்குப்
பிரதிநிதித்துவம் கொடுக்காமலிருந்திருந்தால் அவர்கள் முன்னுக்கு வந்திருப் பார்களா? நாமும் அவர்களைத் தொட்டால் தொட்ட விரலை வெட்டி எறிய வேண்டும் என்று தானே நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றதெனச் சொல்லிக் கொண்டிருப்போம். ஒன்றரை நூற்றாண்டு பிரிட்டிஷ் ராஜ்யபாரம் நடந்தும் பிரிட்டிஷார் வருமுன் ராஜியபாரம் செய்து கொண்டிருந்த சாதியெல்லாம் பிற்போக்கான சாதிகளில் தானே சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம், இவர். களை நம்பி வாழ்ந்தவர்களெல்லாம் முற்போக்குள்ள சாதிகளில் சேர்க்கப்
பட்டுப் போய்விட்டது. இந்தத் தீண்டாதவர்களும், பிற்பட்ட சாதிகளும் எந்தக் காலத்திற்குத் தீண்டக்கூடியவராகவும் முற்போக்குள்ள சாதியர்களாகவும் ஆகப்போகின்றனர்? சட்டசபைகளில் சகல சாதிகளுக்கும் உத்தியோகங்கள்
சரி வர நிரப்பிக்கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானித்தார்களே, அது அமுலில் வருகிறதா? சர்க்காருக்கு சம்பந்தப்பட்ட சகல தெருக்களிலும்,
சர்க்காரின் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை உண்டென்று ஒரு தீர்மானம் செய்தார்களே, அது அமுலில் வருகிறதா? காங்கிரஸில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று தீர்மானம் செய்தார்களே, அதைக் காங்கிரஸில் உள்ளவர். களாவது ஒப்புக்கொண்டு அமுலில் கொண்டு வந்தார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி கூட்டத்தில் பிறவியினால் ஒருவருக்கொருவர். உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம் செய்யப்பட்டதைக் காங்கிரஸ் வாதிகளாவது ஒப்புக்கொண்டார்களா? பறையனுடனும் சாப்பிடுவேன், இன்னும் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவேன், என்ன வேண்டுமானாலும். சாப்பிடுவேன், என் இனத்தார்கள் மாத்திரம் பிராமணரல்லாத பையன்களுடன் உடனுண்ணலை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொல்லித் தியாகிகள். என்போரும் யோகிகள் என்போரும் காங்கிரஸில் தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஓடிப் போகவில்லையா? எங்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மனப்பான்மையே
குடி அரசு - 1925 172
இப்படியிருந்தால் ஒருவேளை ஒரு பிராமணரல்லாத பிள்ளையுடன் ஒரு பிராமணப் பிள்ளை உட்கார்ந்து உணவுண்டதாகக் கேள்விப்பட்டால் ஒருமாதம் பட்டினி விரதம் இருப்பேன் என்று சொல்லும் கூட்டத்தாரிடம் நாம் எப்படி ஒத்து வாழமுடியும்? நமக்கும் அவர்களுக்கும் எப்போதாவது ஒற்றுமை ஏற்படும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? இம்மாதம் திருச்சியில் நடந்த கூட்டத்தில் சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற தத்துவத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னதில் சுயராஜ்யக் கட்சியின் தலைவர் இத்திட்டத்தை நீங்கள் அதில் சேர்க்கப் பிரயத்தனப்படுவீர்களானால் கொஞ்சம் நஞ்சமுள்ள பிராமணர்களும் காங்கிரசை விட்டுப்போய் விடுவார்களென்று பயமுறுத்தி
னார். தீண்டாமை யை ஒழிக்க வேண்டுமென்று மகாத்மா வாயளவில் சொன்னபொழுது கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டிருந்தவர்கள் அது அமுலில் வருகிற காலத்தில் ஒரு பக்கம் மகாத்மாவின் பெயரைச் சொல்லிப் பதவிகள் அடைந்து வந்தாலும், மற்றொரு பக்கம் மகாத்மாவின் செல் வாக்கைக் குறைக்கப் பாடுபட்டு வருகிறார்கள், குறைத்தும் விட்டார்கள். இவற்றை யெல்லாம் அறிந்த பிராமணரல்லாதாரில் சிலரும், பிராமணர் களிடத்தில் தங்களுக்குச் செல்வாக்குக் குறைந்து விடும் என்கிற பயத்தி னாலும், அவர்களால் தங்களுக்குப் புகழும் கீர்த்தியும் இல்லாமற் போய் விடுமே என்கிற பயத் தினாலும் விபூஷணாழ்வாரைப்போல் நடிக்கிறார்கள். ராமர் ராஜ்யத்திலேயே விபூஷணர் இருந்தால் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் விபூஷணர்கள் இருப்பது அதிசயமா? அடிமை வியாபாரத்தை ஒழிக்க சட்ட மேற்படுத்தப்பட்ட காலத்தில் அடிமைகளே அச்சட்டத்தை எதிர்த்தார் களென்று சொல்லப்படுகின்றது. ஆனபோதிலும் வாஸ்தவத்திலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வந்தால் தேச முன்னேற்றம் தடைப்பட்டுப் போய்விடுமோ என்று தெரிந்தோ தெரியா மலோ பயப்படுகிற உண்மையாளர்
சிலர் இருக்கிறார்களென்பதை நாம் மறுக்க வில்லை. மகம்மதியர், கிறிஸ்தவர்: முதலானவர்களுக்கும் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் ஏற்பட்டபின் எவ்வித முற்போக்கிற்குத் தடை ஏற்பட்டுவிட்டது? கடைசியாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாயிருக்கின்றவர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். இவர்கள் எப்பொழுதாவது பிராமணர்களும் பிராமணர்: அல்லாதாரும் ஒன்றுபடுவார்கள், பிராமணரல்லாதாரை அவர்கள் சுய மரியாதைக்குப் பங்கமில்லாதபடிக்கு எப்பொழுதாவது மதிப்பார்கள், பிராமணரல்லாதாருக்கும் தீண்டாதாருக்கும் இப்பொழுது இருக்கும் குறைவுக ளெல்லாம் நீங்குவதற்கு பிராமணர்கள் அனுகூலமாய் இருப்பார்கள் என்று உண்மையாய் நம்புகிறார்களா? தீண்டப்படாதார் என்னும் 7 கோடி ஜனங் களுக்கு பிராமணரல்லாத இந்துக்கள் என்கிற முறையில் இன்னும் நாம் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க மறுப்போமேயானால் மகம்மதியர்கள் என்கிற பெயராலோ கிறிஸ்துவர்கள் என்கிற பெயராலோ சீக்கிரத்தில் நாம் அவர்களுக்கு கொடுக்கப் போகிறோம்.
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இவர்கள் எப்படி நம்மை நம்புவார்கள்? நம்முடன் ஒத்துழைப்பார்கள். சர்க்காரோடு ஒத்துழைக்கக் கூடாது என்கிற நாம் நம்மை சூத்திரர் என்றும் அடிமை என்றும் தாசிமக்களென்றும் தொட்டால், பார்த்தால், தெருவில் நடந்தால் பாபம் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிற ஒரு ஜாதியாருடன் எப்படி ஒத்துழைக்க முடியும்? ஒரு காலத்தில் ஒத்துப் போகலாம் என்றாவது எப்படி எதிர்பார்க்க முடியும். ஒரு வக்கீலும் ஒரு போலீஸ்காரனும் தம்மை பிராமணன் என்றும் உயர்ந்த ஜாதியான் என்றும் எண்ணிக்கொண்டிருப் பானானால் உலகில் சண்டாளரென்று யாரைத்தான் சொல்ல முடியும்? உண்மையாய் பிராமண தர்மத்தோடு இருக்கும் யாரிடத்திலும் நமக்குத் துவேஷமில்லை. இவர்களை வணங்கவும் பின்வாங்கவில்லை, நம்மைப் போலவே நம்மிலும் கீழாகவே இருக்கிற நடக்கிற ஒருவன் நம்மை கீழ்ஜாதி என்று சொல்வதை எப்படி சகிக்கமுடியும்? - என்பதுதான் கேள்வி. இதை நிவர்த்தித்துக் கொள்ளாமல் நமக்கு என்னதான் ராஜிய சுதந்திரம் வந்தாலும் என்ன பலன்? இரண்டு சீர்திருத்தம் வந்தும் தாழ்த்தப்பட்டவர்கள் என்போருக்கு என்ன பலன் கிடைத்தது என்பதை யோசிக்கக் கோருகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 16.08.1925
குடி அரசு - 1925 174
o o
ஒத்துழையாமை திட்டத்தில் சர்க்காரும் பொது ஜனங்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பாகம் ஒன்று உண்டு. அதாவது, விவகாரங்களைக் கோர்ட்
டுக்குப் போய் பைசல் செய்து கொள்ள நினையாமல் உள்ளூர் பஞ்சாயத்தார். மூலம் வழக்குகளைப் பைசல் செய்து கொள்வது, இருகட்சிக்காரருக்கும் அனுகூலம் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். இந்த யோசனை கொஞ்
சமும் புதிதானதல்ல ஆதியில் ஜனங்கள் பஞ்சாயத்து மூலமாய் தான் தங்கள். வழக்குகளை பைசல் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தனக்குத் தானே பஞ்சாயத்தாராகத்தான் இருந்திருக்கிறார்.
இந்த தன்னுடைய பஞ்சாயத்தை ஒப்புக்கொள்ளாத காலத்தில் மனிதன் பலாத்காரத்தினால் அதை அமுலுக்குக் கொண்டுவரப் பார்க்கிறான். இது ஒருவருக்கொருவர் இரத்தம் சொரியக் கொண்டு வந்துவிட்டதினால்,
தனக்குத் தானே பஞ்சாயத்தாராக இருக்கக்கூடாது என்று அறிந்து மூன்றாவது மனிதரை பஞ்சாயத்தாராக ஏற்படுத்திக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. அது நாளா வட்டத்தில் வளர்ந்து கிரமமான உபயோகமான பஞ்சாயத்தாக ஏற் பட்டது. பொதுஜனங்கள் தற்கால நிலையில் வக்கீல்களின் ஆசை வார்த்தை களையும் கோர்ட்டின் அக்கிரமங்களையும் நம்பியே பஞ்சாயத்தை அலட்சி
யம் செய்து வருகிறார்கள். வக்கீல்களும் கோர்ட்டுகளும் அயோக்கியத் தனமான முறையில் காரியங்களை நடத்துகிறவரையில் ஜனங்களுக்குப் பஞ்சாயத்தில் இஷ்டம் ஏற்படாது, ஏனெனில் கோர்ட்டுகளில் கிரமத்திற்கு விரோதமான அதிக லாபத்தை சம்பாதித்துவிடலாம் என்கிற ஆசை கிரமத்தை ஒப்புக்கொள்ளவோ, கிரமப்படி நடக்கவோ மனிதனைக் கட்டுப்
படச் செய்வதில்லை. நியாயம் செய்வதனாலும் நியாயப்படி நடப்பதனாலும் கோர்ட்டுகளுக்கும் வக்கீல் களுக்கும் வேலையே ஏற்படாது.
செலவு செய்து நியாயம் சம்பாதிப்பதற்கு பதிலாய், ஜனங்கள் செலவில் லாத நியாயத்தை சம்பாதிக்க பஞ்சாயத்திற்குத்தான் போவார்கள். இருவரில் ஒரு கட்சிக்காரனுக்காவது கோர்ட்டில் நியாய விரோதமான லாபத்தை அடையலாம் என்கிற ஆசை இல்லாவிட்டால் கண்டிப்பாய் கோர்ட்டுகள் அடைபட்டே போய்விடும்.
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
Quingains நமது நாட்டுப் பஞ்சாயத்துக்கு முட்டுக்கட்டையாய் இருப் பது வக்கீல்களும் கோர்ட்டுகளுமே அல்லாமல் ஜனங்களின் அறியாமை
என்று நாம் ஒருக்காலும் சொல்லவே மாட்டோம்.
குடி அரசு - கட்டுரை - 16.08.1925
குடி அரசு - 1925 176
கோயமுத்தூர் வாக்காளர்களுக்கு ஓர்
வேண்டுகோன்
(யங்மாண் ஈ.வை.ராமசாமி நாயக்கர்)
நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கும், அழிவுத் தன்மைக்கும் நமது ஒற்றுமைக் குறைவுதான் காரணமாயிருப்பதென்பதை எல்லோரும் அறிந்த விஷயம்.அரசாங்கத்தாரால் நமக்குக் கொடுக்கப்படும் கல்வியும் அக்கல்வி கற்றதற்காக நமக்குக் கொடுக்கப்படும் உத்தியோகமும், பதவியும், அரசாங்கத்
தாரால் நமக்கு வழங்கப்பட்டதெனச் சொல்லும் இத்தேர்தல் முறைகளும் ஆகிய இம்மூன்றும் நமது ஒற்றுமையின்மைக்குப் பிறப்பிடமாயிருக்கிறது. முதலிரண்டு காரியமும் படித்தவர்களைப் பற்றிக்கொண்டு ஒற்றுமைக் குறைவும் அடிமைத் தன்மையும் அவர்களால் உண்டாக்கப்பட்டு வந்தாலும் மூன்றாவதான தேர்தல் முறைகளான ( எலக்ஷன்கள்) படித்தவர்களோடு அல்லாமல் சாது ஜனங்களையும், வியாபாரிகளையும், பொது மக்களையும் ஒற்றுமையோடு வாழ்வதற்கில்லாமல் பிரித்து வைக்கவும், துவேஷங்களை
யும், குரோதங்களையும் உண்டாக்கி கட்சிப் பிரதிகட்சிகளை ஏற்படுத்தவும் சாத்தியமாயிருக்கிறது. இக்காரணங்களால்தான் பொதுநலத்திற்கு உண்மை
யாய் உழைக்கிறவர்கள் இத்தேர்தல்களை காங்கிரஸின் வேலைத் திட்டங் களில் புகவிடாமல் தள்ளிவைத்துக் கொண்டே வந்தார்கள். இப்பொழுது நியாயமாகவோ, அநியாயமாகவோ எப்படியோ காங்கிரஸிற்குள்ளாக தேர்தல்
கள் வந்து புகுந்துவிட்டதாய் காங்கிரஸ்காரர்களும், பொது ஜனங் களும் எண்ணும் படியாய் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாய்ப் பொது ஜனங்கள். காங்கிரஸையும், காங்கிரஸ்காரரையும் எதிர்க்கத் துணிந்து விட்டார் கள். காங்கிரஸிற்கே குறைவுண்டாகும்படியான எதிர்ப்புகள் பலமாக உண்டா வதைக் காங்கிரஸ்காரர்கள் நன்கு அறிந்திருந்துங்கூட காங்கிரஸ்காரர்கள் என்போரில் சிலர் காங்கிரஸின் முக்கிய கொள்கைகளைக் கூடலட்சியம் செய் யாமல், தேர்தல்களில் பிரவேசித்து காங்கிரஸின் பெயரால் அவற்றை நடத்தி மக்கள் ஒருவருக்கொருவர் துவேஷத்தையும், மாச்சரியத்தையும் அடை
வதற்கு ஆதாரமாய் நிற்கிறார்கள். சென்னை, மதுரை முதலிய அனேக இடங் களில் இவ்விதமாக நடைபெற்று வந்தாலும் தமிழ்நாட்டுக் காங்கிரஸிற்குப் பேராதரவாயும் வழிகாட்டியாயுமிருந்து தமிழ் நாட்டிற்கே பெருமை உண்டாக்.
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கியதென்று சொல்லப்பட்ட இக்கோயம்புத்தூர் ஜில்லாவும், இதிலுள்ள காங்கிரஸ் பிரமுகர்களும் இத்தேர்தல் சேற்றில் உலவும்படியான காலம் ஏற்பட்டுப் போய்விட்டதென்றால் என்போன்றவர் துக்கப்படாமலிருக்க முடியவில்லை. காங்கிரஸில் எனக்குள்ள பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நான் இதில் பிரவேசிக்க வேண்டியதை அலட்சியம் செய்து
விட்டாலும், ஒரு சாதாரண மனிதன் என்கிற முறை யிலாவது இதைக் கவனிக்காமலிருக்க முடியவில்லை. இம்மாதம் 18-ந் தேதி எனது சொந்த வேலையாய்க் கோயம்புத்தூரிற்குப் போயிருந்தேன். அங்கு நடத்தப்படும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் என் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டின. காதுகளுக்கு எட்டியவைகளையெல்லாம் விட்டுவிட்டு நேரில் கண்டவற் றையும் காங்கிரஸ் நண்பர்கள் மூலமாய் நேரில் அறிந்தவற்றையும் மாத்திரம் குறிப்பிடுகிறேன். காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் பெயரால் கோயம்புத்தூர். நகரசபைத் தேர்தலுக்கு எட்டுக் கனவான்களை நிறுத்தி உள்ளார்கள். இவர்: களில் சிலரை நான் சந்திக்க நேர்ந்தது. அவர்களில் ஒருவர் தமக்குத் தீண்டாமை விலக்கு என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை யென்றும்,
தாம் அதற்குக் கட்டுப்படமுடியாதென்றும், காங்கிரஸ்காரர்களிடம் இதைத் தெரிவித்ததாகவும், அவர்கள் அதை ஒப்புக் கொண்டுதான் தம்மை நிறுத்தி யிருக்கிறார்களென்றும், மற்றொருவர் கொள்கைகளைப்பற்றி தமக்கு அபிப் பிராயபேதம் இருப்பதைத் தெரிவித்தும் தமக்கு எப்படியும் ஜெயம் கிடைக்
கும் என்கிற காரணத்தால் தம்மிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்
தார். வேறொருவர் இதுவரையில் கதரே கட்டவில்லையென்றும் மேடைமீது இருக்கும்போது கூட கதர் கட்டவில்லையென்றும் ஜில்லா காங்கிரஸ் காரியதரிசியின் முன்னரே சொல்லப்பட்டது. அதைக் காரியதரிசி அவர்கள் ஒப்புக்கொண்டு, நவம்பர் மாதம் முதல் கட்டிக்கொள்ளுவதாய்ச் சொன்னா ரென்றும் அவ்வளவாவது அவர் ஒப்புக்கொண்டதைப் பெரிதாக நினைத்து
தாம் அவரிடம் கையெழுத்து வாங்கியதாகவும், அதற்கும் வேறு ஆட்கள் கிடைப்பதில்லையென்றும் என்னிடம் சொல்லிக் கையெழுத்தையும் காட்டினார். இன்னுமிரண்டொரு விஷயங்களை இதில் எழுதுவதற்கு எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இவையெல்லாம் முனிசிபல் நிர்வாகத்தை நடத்த யோக்கியதை அற்றதென்றாவது இந்தக் கனவான்கள் முனிசிபல் நிர்வா கத்தை நடத்தத் தகுதியற்றவர்கள் என்றாவது நான் கூறவில்லை. ஆனால் இதே மாதிரி குணமுள்ளவர்களும் எந்தவிதத்திலும் இவர்களுக்குக் குறை வில்லாதவர்களுமான பல கனவான்களுக்கு விரோதமாய்ச் சில கனவான் களை மாத்திரம் தங்கள் கட்சியார் என்று சொல்லிக்கொண்டு வீண் மனக் கசப்புக்கும்,மாச்சரியத்திற்கும் இடந்தரும்படியாயும், கோயம்புத்தூர் ஜில்லா
வின் பிற்கால காங்கிரஸின் வாழ்விற்கும் விரோதமாய் இதுவரை எவ்வித புகாருக்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காத சில காங்கிரஸ் பக்தர்கள். ஏன் இப்படி செய்யவேண்டுமென்பது தான் நமது கவலை; அல்லாமல் இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேரில் எவ்வித உள் எண்ணத்
குடி அரசு - 1925 178
தைக் கற்பிக்க நான் துணியாவிட்டாலும் நான் நேரில் அறிந்த மேற்படி காரியங்களைப் பொறுத்தவரையிலாவது இவை பிற்போக்கான காரிய மென்று சொல்லாமலிருக்க முடியவில்லை. இந்த நிலைமையிலும் இந்தச் சந்தர்ப்பத்திலும் கோயம்புத்தூர் காங்கிரஸ்காரர்களான என்னுடைய நண்பர். களிடமும் என்னுடன் காங்கிரஸ் வேலை செய்த எனதூப்த நண்பர்களிடமும் யான் செய்யும் வேண்டுகோள் பயனை அளிக்குமோ, அளிக்காதோ என்ற பயமிருப்பினும் பொதுஜனங்களாகிய உங்களிடம் யான் செய்து கொள்ளும் விண்ணப்பம் பிரயோஜன மற்றதென்றும், உசிதமற்றதென்றும் யான் நினைக்கவில்லை. ஆதலால் இவ் விண்ணப்பம் மூலமாய் எனது வேண்டு கோளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதாவது, நீங்கள் ஒவ்வொரு தேர்தல் அபேட்சகர்களையும் கட்சிப் பலத்தையோ, பிரசாரப் பலத்தையோ, செல்வாக்குப் பலத்தையோ சேர்த்துப் பார்க்காமல் தனித்தனி யாய் அவர்களுக்குள்ள ஆற்றலையும், பரோபகார சிந்தையையும் கவனித்து யாரைத் தெரிந்தெடுத்தால் முனிசிபல் நிர்வாகத்தை ஒழுங்காய் நடத்தவும், பொது நன்மைக்கு உழைக்கவும் உதவுவார் என்பதை நன்கு தெரிந்து தக்க ஞானமுள்ளவர்களாகவே பார்த்து உங்களது ஓட்டைக் கொடுங்கள். மற்ற எந்தக் காரணங்களுக்காகவும், எவரையும் விலக்காதீர்கள். காங்கிரஸின் பெயரால் நிற்பவர்கள் எல்லோரும் உண்மையான காங்கிரஸின் கொள்கைக்
குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை நான் ஒரு நாளும் நம்ப மாட்டேன். உங்க ளையும் நம்பும்படி சொல்லமாட்டேன். காங்கிரஸின் பெயரால் நிற்காதவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்றோ, காங்கிரஸ் விரோதிகள் என்றோ நினைத்து விடாதீர்கள். இந்தக் காரணங்களால் மாத்திரம் எவரும் முனிசிபல் கவுன்சிலுக்குத் தகுதியுள்ளவர்கள் அல்லர் என்று நினைத்து விடாதீர்கள். இரண்டு பாகத்திலும் நல்லவர்களும், நல்லவர் அல்லாதவர்களும் இருக்கி றார்கள்.பிறர் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு உங்களது ஓட்டை தப்பான. வழியில் உபயோகப்படுத்தி விடாதீர்கள். எனது அபிப்பிராயத்தை இதற்கு முன்னர் அனேக காங்கிரஸ் மேடைகளிலும் கூறியிருக்கிறேன். இனிமேலும் இதையே மற்ற காங்கிரஸ் தேர்தல்களின் தகரார் உள்ள ஊர்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறேன்.
குடி அரசு - வேண்டுகோள் - 23.08.1925
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குடி அரசு - 1925 180
நேர்தல் பேய்
இதைப்பற்றி பல தடவைகளில் நமது பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தேர்தல்கள் என்பது ஒரு பாத்தியமற்ற, கேள்வியற்ற சொத்தைப்போல் பிடித்தவனுக்குப் பொண்டாட்டி என மதித்து பலாத் காரமான செய்கைக்கொப்ப பல கொடுமைகள் நமது நாட்டில் இதுசமயம் நடந்து வருகின்றன. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும் இன்னும் மற்ற இடங்களிலும் நடக்கும் தேர்தல் பிரசாரங்கள் இந்தியா நாகரீகமற்ற தேசம் என்பாருக்கும் இந்திய மக்கள் சுயராஜ்யத்திற்கு யோக்கியதையற்ற வர்கள் என்பாருக்கும் தங்கள் கட்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உபயோகப்படுத்திக்கொள்ளத்தக்கதான சாட்சியாய் விளங்குகிறது.ஆனபோ
திலும் நமக்கு இவைகளை மறுக்கும் மார்க்கம் ஏதாவது உண்டா என்று பார்த் தால் பிரஞ்சு தேசத்தில் இப்படி இல்லையா? பிரிட்டிஷ் தேசத்தில் இப்படி இல்லையா? என்று சொல்லித்தான் தப்பித்துக் கொள்ளக் கூடுமாயிருக்கிறதே. அல்லாமல் அவர்கள் சொல்லுவதைப் பொய்யென்றும் மறுக்க யோக்கியதை இல்லாதவர்களாயிருக்கிறோம். இதோடு மாத்திரம் அல்லாமல் இந்தியாவின் விடுதலைக்கேற்பட்டதும் 2 ஹுத்திற்கு முன்பு மிகமிக பரிசுத்தத் தன்மையுடையதென்று சொல்லிக் கொள்ளப்பட்டிருந்ததுமான காங்கிரஸின்
பெயரும் உலகப்பெரியார், சத்தியாக்கிரக அவதாரம், அஹிம்சையின் சொர
பம் மகாத்மா என்று உலகோர்களாலேயே சொல்லிக்கொள்ளும் உத்தமரான காந்தியடிகளின் பெயரும், இந்தியா அநாகரீக தேசம் என்றும் சொல்வதற் காதாரமான செய்கைக்கும் சுயராஜ்யத்திற்கு அருகதையற்றது என்று சொல்வ தற்காதாரமான செய்கைக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதென்றால் நாட்டுக்கு யோக்கியதை விடுதலை எங்கேயிருக்கிறது? இதற்குக் காரணம். என்ன வென்று யோசிப்போமேயானால், இத்தேர்தல் கருமங்களில் பிரவேசித் திருக்கும் யாரையும் சொல்ல இங்கு நாம் முன்வரமாட்டோம். ஆனால், இதைப் பார்த்துக் கொண்டு மவுனம் சாதித்துக் கொண்டிருக்கும் யோக்கிய மான, உண்மையான என்று சொல்லப்படும் சில பத்திரிகைகளையும், யோக்கியமானவர்கள், உண்மையானவர்கள் என்று சொல்லப்படும் சில தலை வர்களையும்தான் இப்பாதகத் தொழிலுக்குக் காரணம் என்று சொல்லுவோம். துரெளபதையை துர்ச்சாதனன் துகிலுரிந்ததையும், மானபங்கப் படுத்தினதையும் தர்மபீமாதிகள் பார்த்து மவுனம் சாதித்துக் கொண்டேயிருந்
19] ௨... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தார்கள் என்றால் இப்பாரததேவியை சில துர்ச்சாதனர்கள் துகிலுரிவதையும், மானபங்கப்படுத்துவதையும் பார்த்துக் கொண்டிருப்பது அதிசயமா அல்லது அது தப்பிதமாகுமா என்று சிலர் ஐயுறலாம். ஆனால் துரெளபதையின் துகிலுரிவதை பொறுத்துக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்குப் பலமிருந்தும் பொறுமையின் பலத்தால் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். பாரதமாதாவின் துகிலுரியப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பெரும்பான்மையோர். சுயநலத்தாலும் பேடித்தன்மையாலும் அலட்சியப் புத்தியாலும் தாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம். இதன் பலணாய் தேசம் என்ன ஆகிறது என்பதைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்தித்துத் தாங்கள் செய்த தியாகங்களையும் தங்களது உழைப்புகளையும், தாங்கள். எதற்காகச் செய்தோம், பட்டோம் என்று நினைத்துப்பார்த்து, தேச விடுதலைக் கேதான் செய்தோம், செய்துகொண்டிருக்கிறோம் என்கிற முடிவுக்கு வருவார்களானால் இவர்கள் எப்படி மவுனம் சாதிக்க முடியும்? இவ்வளவு பெரிய அக்கிரமத்திற்குக் கேள்வியில்லையா? எல்லோருமா அறியாமையில்
- அலட்சியப் புத்தியில் மூழ்கிவிட்டார்கள்? எல்லோருமா பயங்கொள்ளிகள்?' எல்லோருமா சுயநலப்பேயால் ஆட்டப்படுகிறார்கள்? இப்படிச் சொல்வது தர்மமாகுமா? என்று யோசித்தால், மகாத்மாவின் பேரால், காங்கிரஸ் பேரால் நடத்தப்படும் இந்தத் தேர்தல் அக்கிரமங்கள் ஒழுங்கானதா என்கிற எண்ணம். வாட்டுகிறதே; யாரைக் கேட்டாலும் நேரில் பேசும்போது இது அக்கிரமம்தான் என்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஒரு கோடி ரூபாயும் 30 ஆயிரம் பேர் சிறை வாசத்தையும் மகாத்மாவின் சிறை வாசத்தையும், ராஜ போகத்தையும், ராஜ சம்பத்தையும், பெருத்த தியாக புத்தியையும் ஆகுதியாய்க் கொண்டு செய்த விடுதலை யாகத்தில் இத்தேர்தல் சூட்சி என்கிற ராட்சஸன்தானா உண்டாக வேண்டும்? உண்மையான சுயமரியாதையும், வீரமும், பொது நல எண்ணமும் தேசபக்தியும் ஒரு இரண்டு மூன்று பேருக்காவது நம் தமிழ்நாட்டில் என்றைக்கு ஏற்படுகின்றதோ அன்றைக்குத்தான் இத்தேர்தல் ராட்சஸன் மாய்வான். அதுவரை தமிழ்நாட்டில் கல்மாரியும், கல்லடியும், தடியடியும், மண்டை உடைவும், உயிர்ச்சேதமும் இன்னும் பல இழிகுணங்களும் தாண்டவமாடிக் கொண்டிருப்பது கொஞ்சமும் ஆச்சரியமல்ல. ஆனால் ஒன்று மாத்திரம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறோம். அதாவது யோக்கியமான பத்திரிகைகள் என்பது மவுனம் சாதித்துக் கொண்டிருந்தாலும் நமது சகோதரப் பத்திரிகையாகிய “ஊழியன்” எழுதியி ருப்பது “அவரவர் கட்சிப் பத்திரிகைகள் அவரவர்கள் சார்பில் பேசுகின்றன” என்பதை பொது மக்கள் மனதில் வைத்து பத்திரிகையில் காணப்படுவதை நம்பி அவசரப்பட்டு அபிப்பிராயம் கொள்ளாமல் பொறுமையோடிருந்து உண்மையை அறியும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.08.1925
குடி அரசு - 1925 182
சுயாராஸ்யக் கட்சிக்கு கருவேப்பிலை
வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த முஸ்லீம்களெல்லாம் ஒருவர்:
பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள். கடைசியாக வங்காள முஸ்லீம்களின் தலைவரும் வங்காள நகர சபையின் டிப்டி மேயருமான டாக்டர் அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் ஸ்தானத்தை ராஜிநாமாக் கொடுத்து விட்டார். அவர் மேற்படி ராஜிநாமாவுக்குக் காரணம் கூறுகையில் சுயராஜ்யக்கட்சியின் தத்துவம் தமக்குப் பிடிக்கவில்லை யென்றும், அதனால்தான் தாம் ராஜிநாமாக் கொடுத்து விட்டதாகவும், தாம் இன்னமும் தேசத்திர்க்கு உழைக்கத் தயாராயிருப்பதாகவும், தாம் ராஜிநாமாக் கொடுத்ததின் காரணமாக தனக்கு ராஜிய உலகிலிருந்த செல்வாக்குகள் குறைந்தபோதிலும் ஒரு புதிய கொடுமைக்கு உட்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருப்பதைவிட அரசியல் தற்கொலை செய்துகொள்வது மேல் என எண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார். வங்காளத்தில் இப்படியென்றால், பம்பாயிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கும், சிந்து முஸ்லீம்களுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருவருக்குள்ளும், ஒத்துழைக்க முடியாதெனக் கூறி அவர்களுடன் ஒத்துழையாமை ஆரம்பித்திருப்பதாய் தெரியவருகிறது. நமது மாகாணத்திலும் மதுரையில் சில சுயராஜ்யக் கட்சியார் சில முஸ்லீம்கள்: விஷயமாய் நடந்துகொண்டது மதுரையில் சுயராஜ்யக் கட்சியின் பிரசாரம் என்ற தலைப்பின்கீழ் தினசரிப் பத்திரிகைகளில் பார்த்தால் தெரியவரும். அதுமாத்திரம் அல்லாமல் முஸ்லீம்களுக்குப் பெரிய உத்தியோகங்கள். வருகிறகாலத்தில் இவர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்களென்பதை
முஸ்லீம் பெரிய உத்தியோகஸ்தர்களைக் கேட்டால் தெரியவரும். குழம்பு,
காய் கரி முதலிய பதார்த்தங்களுக்கு வாசனை உண்டாக்கிக் கொள்ளவேண்டி தாளிதம் செய்யும்போது கருவேப்பிலையை உபயோகித்துக்கொண்டு, சாப்பிடுகிற போது அதை எடுத்து தூர எறிந்து விடுவதுபோல் சமயத்திற்குச்
சேர்த்துக் கொண்டு சமயம் தப்பியவுடன் வெளியில் தள்ளிவிடுவதை நமது
நாட்டு முஸ்லீம்கள் மாத்திரம் அல்லாமல் நமது நாட்டு இதர மக்களும் அறிய வேண்டுமாய் ஆவல் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.08.1925
183 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
“பகற்லகான்னைக்காரருக்க அராத்திரிக் கொள்னைக்காறர்களே சாட்சி”
இம்மாதம் இருபதாந்தேதி தமிழ் சுயராஜ்யா பத்திரிகையில் வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபித்து எழுதுவதில் ஜனங்களை மகம்மதியர் என்றும், இந்தியக் கிறிஸ்தவரென்றும், ஐரோப்பியரென்றும், ஆங்கிலோ இந்தியரென்றும், ஒவ்வொரு வகுப்புக்காரர்களால் அவ்வவ் வகுப்பிலுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதால் தங்கள் வகுப்புக் காரியங் களைப் பார்க்கிறார்களே யல்லாமல் பொதுக்காரியம் பார்ப்பதில்லை என்றும். இதனால் வகுப்புத் துவேஷமும் வகுப்புப் பிரிவினையும் ஏற்படுகின்றன
என்றும் எழுதியிருக்கிறது. இதற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒரு சாஸ்திரி யாரின் உபதேசத்தைக் காட்டுகிறது. சுயராஜ்யா பத்திரிகையோ தேசீய பிராமணர் என்று சொல்லப்படும் “பகற்கொள்ளை”க்காரருடைய பத்திரிகை.
திரு சாஸ்திரியார் அவர்களோ மிதவாதப் பிராமணர் என்று சொல்லப்படும். “இராத்திரிக் கொள்ளைக் கட்சியைச் சேர்ந்த பிராமணர். இப்பகற் கொள்ளைக் கட்சிக்கு ராத்திரிக் கொள்ளைக் கட்சியார் சாட்சியைத்தான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். போராக் குறைக்கு ஒரு பெரிய பிரட்டு என்னவென்றால் ஒரு பிராமணரல்லாத மந்திரியான ஸ்ரீமான் பாத்ரோ
வும் இதை அங்கீகரித்திருக்கிறாராம். இந்த ஒரு விஷயம் பிராமணப் பத்திரிகைகளின் சூழ்ச்சி என்று குடிஅரசும் அதன் சக பத்திரிகைகளும் எழுதி
வரும் ஒவ்வோரெழுத்துக்களையும் கல்லின்மேல் எழுதச் செய்கிறது. மந்திரி பாத்ரோ அவர்கள் சம நியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். இன்றியமையாதது என்றும், இக் கொள்கை புதிதானதல்ல என்றும், எல்லா சமூகத்தார்களும் சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக் கொள்ளும். காலம்வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீர வேண்டும் என்றும், ஆனால் இது நிரந்தரமாய் இருப்பது நன்மை அல்ல கெடுதி என்றும் பேசியிருக்கிறார். அப்படி இருக்க சுயராஜ்யாவின் கூற்றை எந்த வார்த்தை
யால் மந்திரி அங்கீகரிக்கிறார் என்பதை பொது மக்கள் கவனிக்கவேண்டும்?
சுயராஜ்யா பத்திரிகையின் மற்ற கூற்றுகளுக்கு மறுமுறை பதிலெழுதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.08.1925
குடி அரசு - 1925 184
வக்கீல்கன் வாய்தா வாங்குவது
வக்கீல்:- வா கவுண்டா என்ன சங்கதி.
கட்சிக்காரன் எசமான்று கிட்டதான் ஒரு காரியமாய் வந்தேன்.
வக்கீல்:- என்ன காரியம்.
கட்சிக்காரன் நான் ஒருத்தருக்கு 1000 ரூபாயும் வட்டியும் கொடுக்க வேண்டும் வாங்கி 2 வருசமாச்சிங்கோ. வாய்தா சொல்லி கடந்தும் ஒரு வருச மாச்சிங்கோ. கடைசியா 2 மாச வாய்தா கேட்டேன் அதுக்குள்ளே பிராது போட்டுட்டானுங்கோ. எசமான்று எப்படியாவது ஒரு இரண்டு மாச வாய்தா வாங்கி கொடுத்தாக்க பணம் கட்டிப்போட்ரனுங்கோ.
வக்கீல்:- இரண்டு மாதம் தானா இரண்டு வருஷ வாய்தா வாங்கிக் கொடுக்கிறேன் கடைசியாய் அவன் உன்னிடம் பணம் வாங்குகிறதையே நான் பார்த்து விடுகிறேன்.
கட்சிக்காரன் சாமி சாமி அப்படிச் செய்யாதிங்கோ. அவன் மொதுலுக்கு நானா பிள்ளை. எம் மொதுலை எத்தனையோ பேர் திங்கி ராங்கோ. இரண்டு மாசம் இல்லாட்டா மூணு மாச வாய்தா கிடைத்தால் போரும்.
வக்கீல்:- சரி, பீசு என்ன கொடுக்கறே.
கட்சிக்காரன்:- எசமாங்க சொன்னாச் சரி.
வக்கீல்:- நூறு ரூபாய் கொடுக்கனும் வாய்தா வாங்குகிறது என்றால் விளையாட்டு காரியமல்ல...
கட்சிக்காரன்- 50ரூ.தாரனுங்கோ.
வக்கீல்- வாய்தா வாங்குவதில் உள்ள கஷ்டம் உனக்கு தெரியாது. நான் செய்யும் வேலையினால் முனிசீப்பே 1 வருஷம், 2 வருஷம் வாய்தா கொடுத்தாலும் கொடுப்பார் ஆனதால் பீசு100-க்கு குறையாது.
கட்சிக்காரன்- அத்தனை நாள் வாய்தா வாண்டாம். 2, 3 மாசம் கிடைச்சால் போதும்.
வக்கீல்:- நீ என்ன பயித்தியக்காரனாக இருக்கிறாய்? கடன் கொடுத்த வன் 2 மீ” வாய்தா கேட்டதர்க்கு கொடுக்காமல் பிராது போடுவதென்றால்
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அவனுக்கு அத்தனை ஆணுவமா? அவனை விடக்கூடாது. பீசைப் பற்றி நீ கவலைப்படாதே நான் வாங்கும் வாய்தாவினால் உனக்கு மிச்சமாகும். வட்டி யைக் கொடுத்தால் போதும்.
கட்சிக்காரன்:- அப்படியானால் எசமாங்கோ கேக்கிரபடி தாரேனுங்க. இந்தாங்கோ இப்ப 50ரூ. வாங்கிக்கோங்க.
வக்கீல்:- சரி, என்று குமாஸ்தாவை கூப்பிடுகிறார். றாமச்சந்திரா.
குமாஸ்தா:- சார்.
வக்கீல்: இவனிடம் ஒரு வக்காலத்து வாங்கி ஒரு ஸ்டேட்மெண்டு நான் சொல்கிறபடி எழுதி கையெழுத்து வாங்கிகொள்.
குமாஸ்தா:- காகிதம் இங்கி பெட்டி பேனாவுடன் வந்து வக்கீல் பக்கம் நின்று கொண்டு வக்கீல் சொல்வதை எழுதுகிறார்.
வக்கீல்- சொல்வதாவது - இந்த பிராது மோசடியும் சுத்தப் பொய்யு மானது. இந்தப் பிராம்சரி நோட்டு நான் எழுதிக் கொடுக்கவில்லை. இது போர்ஜரி - என்று சொல்லிக்கொண்டு வரும்போது,
கட்சிக்காரன்:- சாமி, சாமி அதெல்லாம் எளுதாதிங்கோ. இந்த பாவத்தை எங்கெ கொண்டுபோய் தொலப்பேன்.3 மாசமா நடந்து கை நீட்டி சொளையாட்ட பணம் வாங்கி ஊடு கட்டி கல்யாணம் பண்ணி இருக்கிறேன். இப்படி எளுதினா கண்ணும் வாயும் வெளங்க வாண்டாமா?
வக்கீல்- கோபித்துக் கொண்டு, என்னடா மகா சத்திய கீர்த்திபோல் பேசறே. அப்படியானால் வாங்கின பணத்தை கொடுத்தவன் கேட்டதும் எரிஞ்சு போடரதானே. இத்தினை நாளாயி இன்னும் வாய்தா என்ன.
கட்சிக்காரன்:- சாமி சாமி கோவிச்சுக்காதிங்கோ, கைக்கு பணம் வர வாண்டாமா 2 மீ£த்தில் வந்தரப் போகுது, கொண்டு போய் குடுத்து கெஞ்சி
கிட்டு வந்தடப்போரே. அதுக்குள்ளே நான் எழுதிக் கொடுக்கால போரு சரி என்னு எழுதினா நல்லாவாயிருக்கும்.
வக்கீல்-அப்படியானால் வாய்தா கிடைக்காது, உனக்காக வேணு மானால் எழுதி கொடுத்ததை ஒப்புக்கொண்டு வேறே மாதிரியாய் எழுது
கிறேன்.
கட்சிக்காரன்:- சரி அப்படி எழுதுக்கோ சாமி. நமக்கெனத்துக்கு ஊரா முதலு.
வக்கீல்:- றாமச்சந்திரா, அந்த 2வது பாராவை அடிச்சி இந்த மாதிரி. எழுது- நான் வாதியிடம் ஒரு கூட்டு வியாபாரம் செய்ய ஜாமீனுக்காக இந்த பிராம்சரி எழுதிக் கொடுத்தேன்.
கட்சிக்காரன்:- சாமி சாமி அப்படிக்கூட இல்லெங்கே.
குடி அரசு - 1925 186
வக்கீல் கோபித்துக்கொண்டு றாமச்சந்திரா, இத்தனை நேரம் வேலை யைக் கெடுத்ததற்கு 15 ரூ. பிடித்துக்கொண்டு அவன் பணத்தை தலையைச்
சுற்றி எறிந்துவிடு. இதெல்லாம் கிளித்தெரி. இந்த சத்தியகீர்த்தி சாவகாசம். நமக்குவேண்டாம். இவன் சொல்கிறபடி எழுதினால் நாளைக்கு நம்மிடம் ஒரு கட்சிக்காரன்கூட வரமாட்டேன்.
குமாஸ்தா:- கடன் வாங்கினவனுக்கு ஜாடைகாட்டி பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்கச் சொல்லுகிறார்.
கட்சிக்காரன்:- சாமி சாமி எசமாங்கோ இப்படி கோவிச்சிக்கலாமா. நாங்கல்லா காட்டாள்தானே? கோரட்டு சங்கதி எங்களுக்கெப்படி தெரியும். எசமாங்க தானே சொல்லிக்கொடுக்கணும். நீங்க என்னமோ எழுதிக் கொங்கோ. நம்மை ஏதாவது சத்தியம் கேட்டுடப்போறாங்கொ. அது மாத்திரம். பாத்துக் கொங்கோ.
வக்கீல்: சரி, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். றாமச்சந்திரா எழுது பிராம்சரியில் கண்டபடி பரிகாரம் பெரவில்லை. கூட்டு வியாபாரக் கணக்குகள் இருக்கிறது. இதை கமிஷன் வைத்து லாப நஷ்டம் பார்த்து முடிவு செய்யவேண்டும்.
கட்சிக்காரன்:- சாமி சாமி அப்படி எழுதினா நாளைக்குக் கணக்கு
காட்ட வாண்டாமா?
வக்கீல்:- அதெல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். நம்மிடம் எத்தனையோ கணக்குகள் இருக்கிறது. குமாஸ்தாவைப் பார்த்து 0.5.43-க்கு காட்டினமே அந்த கணக்கு புஸ்தகங்கள் எல்லாம் நம்மிடம் இருக்கிறதல்லவா.
குமாஸ்தா:- ஆம். அதுவும் இருக்கிறது, வேறு கேசுகளுக்கு வந்த கணக்குகளும் இருக்கிறது.
கட்சிக்காரன்:- சாமி சாமி இதெல்லாம் நமக்கு எப்படி ஒதவுமுங்கோ..
வக்கீல்: அடப் பயித்தியக்கார ஏதோ இரண்டு மூட்டை கணக்குகளை கொண்டு போய் திடீரென்று முனிசீப்பு முன்னால் போட்டால் பயந்து கொள்ள வாண்டாமா? நம்ம முனிசீப்பு கணக்கு மூட்டையை கண்டதும் 6 மீ£வாய்தா தானாகவே கொடுத்து விடுவரார்.
கட்சிக்காரன் அய்யோ சாமி கணக்கை தொறந்து பாக்க மாட் டாங்களா? கம்மிசனர் நேமிக்க மாட்டாங்களா? அப்பரம் சிக்கிக்கிட்டாக்க..
வக்கீல்- அது என் வேலையல்லவா. அப்படி பாக்கரதாயிருந்தால் மூட்டையை பிரிக்க 2 மணி நேரமாகும். அதுவும் மிஞ்சி அதைப் பிரித்தாலும் அந்தக் கணக்கை பார்த்து என்ன கணக்கு யாருடைய கணக்கு என்று கண்டு. பிடிக்கவே முடியாது. இன்னும் எத்தனையோ வழி இருக்கிறது. கமிஷனர்
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஏற்பட்டாலும் அவரையும் சரிபண்ணிக்கொள்ளலாம். அதைப்பற்றி நீ கவலைப்படாதே. கமிஷனர் ஏதாவது தகரார் பண்ணினால் அவர் கேசுகளில் நான் கமிஷனரா வந்தா அவரை இழுத்து விட்டு விடுவேன். எதிர். வக்கீலுக்கும் இப்படியெல்லாம் செய்யாவிட்டால் கோர்ட்டுக்கு கேசே வராதென்று தெரியும். அவரும் இப்படி எத்தனையோ தடவை செய்திருப்பார். முனிசீப்பும் ரம்ப நல்லவர் அவரும் வக்கீலாயிருந்து வந்தவர் தானே. இத்தெல்லாம் வாய்தா வாங்க சகஜம்தான் என்று அவருக்கும் தெரியும். உனக்கு எப்படியானாலும் 2 வருஷத்திற்கு கம்மியில்லாத வாய்தா பாத்துக்கோ. அதற்குள் கடன் கொடுத்தவன் அசலில் 100, 200 தள்ளிக் கொண்டாவது கொடு என்று உன் காலை வந்து பிடிக்கிறான் பார்த்துக்கோ. ஒன்றுக்கும் பயப்படாதே.
கட்சிக்காரன்- அய்யய்யோ, அதல்லாம் வாண்டாஞ் சாமி கொடுத்த வனுக்கு நல்ல பிள்ளையாய் போகணும்.நீங்க என்னமோ எழுதிக்கோங்க எனக்கெல்லாம் இரண்டே மாசம் வாய்தா போதும்.
வக்கீல்: சரி எழுதப்பா. பாக்கி 0.5 21-க்கு ஸ்டேட்மெண்டு எழுதி னோமே அதைப்பார்த்து எழுதி கையெழுத்து வாங்கிக்கொள். கோர்ட்டுக்கு வரும் போது பாக்கி பணத்தையும் கொண்டு வரச்சொல்லு.
கட்சிக்காரன்:- சாமி நாளைக்கு பாக்கிபணங் கொண்டாரனுங்கோ.
குடி அரசு - உரையாடல் - 23.08.1925
குடி அரசு - 1925 188
சுயாான்யக் கட்சியும் யங்மாண் ப6டலிண்
உத்தியோகமும்
சுயராஜ்யக் கட்சியார் தங்கள் கட்சியை ஆரம்பிக்கும்போதே கயா காங்கிரஸ் தீர்மானத்தை மீறிக் கலகம் செய்து காங்கிரசுக்கு விரோதமாய் ஆரம்பித்தார்கள். அதுசமயம் காங்கிரஸில் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்களின் கோழை மனத்தாலும் ஜாதியபிமானத்தாலும் சுயராஜ்யக் கட்சியாருக்கு சட்டசபைப் பிரவேசம் பிறகு அனுமதிக்கப்பட்டுப் போய்விட்டது. காங்கிரஸ் அனுமதித்தாலும் பொது ஜனங்களில் மிகுதி யானவர்கள் தங்கள் பேரால் சட்டசபைப் பிரவேசத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்யலானார்கள்.
ஆனாலும் அதுசமயம் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையைப் பற்றி ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நம்பிப் பலர் அனுமதித்தார்கள். சுயராஜ்யக் கட்சியாருக்கே ஓட்டும் செய்தார்கள். இவ்வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டனவா? அல்லது பிரிட்டிஷாரின் வாக்குறுதிகள் போலாயினவா? அன்றி அதைவிடமோசமாயினவா? என்று பார்ப்போம்.
வாக்குறுதிகளாவன :
1. தாங்கள் சட்டசபைக்குப் போவது சர்க்காரின் ராஜ்யபாரம் நடை பெறவிடாமல் செய்வதற்கென்றும்,
2௨. அதற்காக எவ்வித தீர்மானங்கள் வந்தாலும் முட்டுக்கட்டை போட்டு எதிர்ப்பது என்றும்,
3. தங்களுக்கு (மெஜாரிட்டி) பெரும்பான்மையோர் கிடைக்கா விட் டால் தாங்கள் சட்டசபை வேலைகளில் கலந்துகொள்வதில்லை என்றும்,
4. காங்கிரஸ் ஒத்துழைத்தாலும் தாங்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்றும்,
5. தங்கள் போக்குவரவு செலவுபடியும் கூட பெறுவதில்லை என்றும்,
6. எவ்விதக் கமிட்டியிலும் அங்கத்தினராவதில்லை என்றும்,
7. எவ்வித உத்தியோகத்தையும் பெற்றுக் கொள்வதில்லை என்றும்
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இன்னும் பலவிதமாய் ஜனங்கள் ஏமாறத்தகுந்த மாதிரியெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஸ்தானங்களைப் பெற்றார்கள். பெற்ற பின்பு தங்கள். வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.
ஒத்துழைப்புக் காலத்தில் சட்டசபையில் சிலர் வாயாடிகளாயிருந்து அடிக்கடி ஒவ்வொரு தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக்கொண்டு எப்படி மறு தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டு வந்தார்களோ அதுபோல் இவர்கள். நடவடிக்கை வந்துவிட்டது. அதுமாத்திரமல்லாமல் சென்னையிலும், மத்திய மாகாணத்திலும் பிராமணரல்லாதாருக்கு விரோதமாயும்.பம்பாயில் பிராமண:
ரல்லாதாருக்கும், மகமதியருக்கும் விரோதமாயும் வேலை செய்வதை சுய ராஜ்யக் கட்சியார் தங்கள் கொள்கைகளாய் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை பிராமணர் கட்சி என்று நாம் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்ததற்கொப்ப சென்னை சட்டசபை எலக்ஷன் தீர்ந்தவுடன் சுதேசமித்திரன் பத்திரிகை எழுதியது ஞாபகமிருக்கும். அதாவது: -
நமது வேலை பிராமணரல்லாதாரை எதிர்க்க வேண்டியதுதான் என்று எழுதியிருந்தது. இதை அப்போதே சில பத்திரிகைகள் கண்டித்திருக்கின்றன. இப்பொழுதும் அதன் பொதுத்தலைவர் பிராமணர், உப தலைவர் பிராமணர்,
காரியதரிசி பிராமணர் மற்ற மாகாணங்களிலும் பிராமணர்களும், அவர் கை: ஆயுதமான சில, அதாவது தங்களையும் பிராமணர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும்தான் அதன் மாகாண நிர்வாகிகளாகவும் இருக்கிறார்.
கள். நிற்க, கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்ரீமான் நேரு அவர்கள் தங்கள். வாக்குத்தத்தத்திற்கு விரோதமாய் இந்திய சட்டசபையினரால் நியமிக்கப்பட்ட ஒரு கமிட்டியில் ஸ்தானம் ஒப்புக்கொண்டார் என்பதைப்பற்றி எழுதியிருந் தோம். இப்போது ஸ்ரீமான் படேல் அவர்கள் இந்திய சட்டசபை அக்கிராசனா திபதி உத்தியோகத்தை ஒப்புக்கொண்டார்கள். முன் சொல்லப்பட்ட கமிட்டி மெம்பர் உத்தியோகத்திற்குத் தினச் சம்பளம். இரண்டாவதான அக்கிராச னாதிபதி உத்தியோகத்திற்கு மாதச் சம்பளம். அதுவும் மாதம் 4000, 5000 கிடைக்கக்கூடியது. வருஷம் ஒன்றுக்கு 50 அல்லது 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மூன்று வருஷத்திற்கு 150,000 அல்லது 2,00,000 ஓடு மீன் ஓடி உருமீன் வருமளவும் வாடி இருக்குமாங் கொக்கு என்கிறபடி ஜனங்கள் இவர்கள் வாக்குத்தத்தத்தை மறக்கிறவரையிலும், தக்க உத்தியோகம் கிடைக். கிற வரையிலும் காத்திருந்து சமயம் பார்த்து உத்தியோகத்தைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அதிலும் ஸ்ரீமான் படேலின் உத்தியோகம் எவ்வளவு மானக் கேடானது? தமது மனசாட்சியையே விட்டுவிட்டுப் போய்விட வேண்டியது. உத்தியோகம் பெற்றதும் சுயராஜ்யக் கட்சியை ராஜினாமாச் செய்யவேண்டியது. தாம் பம்பாய் கார்ப்பரேஷன் பிரசிடெண்டாய் இருந்த காலத்தில் பஹிஷ்காரம் செய்த ஒரு கனவான் வீட்டுக்கு நாள் ஒன்றுக்குப் பத்து தடவையானாலும் நடக்கத் தயார் என்கிறார் . அதாவது, கூப்பிட்ட
குடி அரசு - 1925 190
போதெல்லாம் ஓடுவது; ராஜப் பிரதிநிதியுடனும் மற்றும் ஐரோப்பியருடனும், உத்தியோகஸ்தருடனும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன் என்கிறார்.
தமக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்த சுயராஜ்யக் கட்சியார். தம்மை உடனே விடுதலை செய்துவிடவேண்டுமென்கிறார். அவர்களும் அவ்வாறே விடுதலை செய்தாகிவிட்டதென்கிறார்கள். இவ்வித நடவடிக்கை களை பத்திரிகைகள் சிலாகிக்கின்றன.மகாத்மாவும் ஸ்ரீமான் படேலுக்கு ஆசி
கூறுகிறார்.
அப்படியானால் மிதவாதக் கட்சியாரும், ஜஸ்டிஸ் கட்சியாரும், சுயேட்
சைக் கட்சியாரும் இதைவிடக் கேவலமாய் எவ்விதத்தில் நடந்து கொள்ளு கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
அன்றி இவ்வித நடவடிக்கைகளை பொதுஜனங்கள் அறிந்து கொள்ளாதபடி, வெற்றி என்கிற தலைப்பின்கீழ் பத்திரிகைகள் பிரசுரித்து தந்திரங்கள் செய்துவருகிறபடியால் ஜனங்கள் ஏமாந்து போகிறார்கள். இவற் றைத் தாராளமாய் வெறுப்பவர் யாரையும் காணோம்.
“நிர்வாண தேசத்தில் கோமணம் கட்டியவன் பயித்தியக்காரன் என்பது போல்” காங்கிரஸில் யாம் ஒரே ஒரு பயித்தியகாரர்தான் உண்டு போல் தோன்றுகிறது.
குடி அரசு - தலையங்கம் - 30.08.1925
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
செண்ணையில் சர்வகலாசாலைப்
பட்டமனிப்பு விழா
இவ்வருடம் சென்னை மாகாணத்தில் 84 ஸ்திரீகளுள்பட, 1744 பேருக்கு அடிமை முத்திரை வைக்கப்பட்டது.
மணிகளாகவும், மாணிக்கங்களாகவும் உள்ள பல வாலிபர்களும், ஸ்திரீரத்னங்களும், அடிமை முத்திரையைப் பெற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அதாவது இவ்வருடம் சர்வகலா சாலைப் பட்டம் வழங்கிய விழாவில்;
எம்.எல். பரீட்சையில் 4 பேர்கள்
பி.எல். - 234 ,,
பி.எஸ்.எஸ்ஸி. 1
எம்.பி.பி.எஸ். 22
எல்.எம்.எஸ் 14
பிஇ. 11
பி.எஸ்.ஸி. " 74
எல்.டி. . 50
எம்.ஏ. . 52
பி.ஏ.(ஆனர்ஸ்) . 89
பி.ஏ. ம 750 .
கீழ் நாட்டுக்கலை " 17
பொருளாதார சாஸ்திரம் . 6
மாதர்களில் 84 பேர்களும் பட்டம் பெற்றனர். ஒவ்வொரு வருடமும் இப்படியே இந்தியா முழுவதும் பதினாயிரம் இருபதினாயிரக்கணக்கான பேர்களுக்கு நமது அரசாங்கத்தார் அவர்களது கல்வியான, அடிமைத்
குடி அரசு - 1925 192
தன்மையைப் போதித்து, அடிமை முத்திரையைத் தலையிலடித்து, அடிமைச் சின்னத்தையும் கையில் கொடுத்து, அடிமைக்குத் தக்கவன் என்ற நற்சாட்சிப்
பத்திரமும் அளித்து வெளியிலனுப்பி விடுகிறார்கள். இவ் அடிமைகளால் உலகும், உலகிலுள்ள ஜீவன்களும், சத்தியம், தர்மம், நீதி, அன்பு, பரோபகாரம், தேசபக்தி இன்னோரன்ன பிறவும், கடவுள் ஒருவர் இருக்கிறாரா என்றும், சந்தேகப்படத் தக்க வண்ணம் நாசமடைந்து வருகிறது.
பெண்களையும் பற்றிக்கொண்டது
இவ் அடிமை என்னும் ப்ளேக் வியாதி புருஷர்களைப் பீடித்து, மேல் சொன்னவைகளைவெல்லாம் பாழ்படுத்துவதோடல்லாமல், இந்தியாவின் பெருமைக்கு நாயகமாய் இலங்கும் ஸ்திரீ ரத்னங்களையும் பற்றிப் பாழாக்க ஆரம்பித்து விட்டது. இதனால், மேல்சொன்ன தர்மங்கள் அழியக்கிடப்பது
மல்லாமல், மேலும் அநேக தர்மங்கள் அழிவதற்கு அடிகோலியாகிவிடுமோ என்று ஐயுறும் நிலையில் இருக்கிறது. இதனால், ஸ்திரீகள் கல்வி கற்கக் கூடா தென்பது நமது அபிப்பிராயமல்ல. புருஷர்களே கற்கக்கூடாது என்றும், இக் கல்வியே இந்தியாவையும், இதன் அரசியல் சுதந்திரங்களையும் பாழாக்கி அடிமையில்ஆழ்த்தியிருக்கிற தென்றும், முன்னே குறிப்பிட்ட தர்மங்களைப்
பாழாக்கிற்றென்றும் கருதி, காங்கிரஸ் பகிஷ்காரத் திட்டங்களிலே முதன்மை: யானதாக வைத்து, ஆண் மக்களைப் பகிஷ்கரிக்குமாறு வேண்டிக்கொண்ட ஒரு கல்வியை பெண் மணிகளும் கற்க ஆரம்பித்து விட்டார்களென்றால், பிற்கால வாழ்வில் மனித தர்மத்திற்கும், தேசவிடுதலைக்கும் நம்பிக்கை எங்கிருக்கிறது? நமது ஸ்திரீகளையாவது இவ் அடிமைக் கல்வியிலும், அதர்மக் கல்வியிலும் புகவிடாமல் காப்பாற்ற முடியவில்லையானால், புருஷர்களை நாம் எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?
பட்டதாரிகள் என்னசெய்யப் போகிறார்கள்?
எம்.எல்.
நிற்க, இப்பட்டம் பெற்ற 1744 பேர்களும் என்ன செய்யப்போகிறார். களென்று கவனிப்போம். நால்வர் எம்.எல்.பரீகைஷயில் தேறியிருக்கிறார்கள். இவர்கள் அனேகமாய் நமது சர்க்காரில் உத்தியோகம் பெறுவார்கள். இவ் உத்தியோகம் பெறுவதினால் சர்க்காருக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து, வண்ணான் வாகனம் போல் வைத்த பாரத்தைச் சுமந்து பலவிதத்திலும் கிடைக்கும் வருமானத்தால் தமது பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்றிக் காலங் கழிப்பார்களேயொழிய வேறென்ன செய்வார்? இவர்களால் தேசத்
திற்கு யாதொரு பயனும் விளையப் போவதில்லை என்பது மாத்திரம் திண்ணம்.
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பி.எல்.
அடுத்தபடியாக பி.எல். வகுப்பில் 234 பேர்கள் தேறியிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வக்கீல் தொழில் செய்யவே அமருபவர்கள். இவ் வக்கீல்களால் தேசம் எக்கதியை அடைந்திருக்கிறதென்பதை நாம் சொல்லா மலே விளங்கும். மதுபானக் கடைகளாலும், சூதாடுமிடங்களாலும், விபசாரக் கோஷ்டிகளாலும் செய்யமுடியாத அவ்வளவு அதிகமான கொடுமைகளை இவ்வக்கீல் தன்மை நமது தேசத்தில் விளைவித்து வருகிறது. தேசத்தின் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கோர முடியாததான இவ்வக்கீல் தொழிலை நம்மில் அனேக உத்தமமானவர்களுக்கு நமது சர்க்காரார் இதற்கென்றே பள்ளிக் கூடங்கள் வைத்து, கற்றுக்கொடுத்து, தேசத்தைக் கெடுக்கத் தகுதியுடையவர்கள் என்று நற்சாட்சிப் பத்திரமும் கொடுத்து வெளி
யில் அனுப்பிவிடுகிறார்கள். இது சமயம் நமது தேசத்தில் இக்கோஷ்டியார்.
சுமார் இருபதினாயிரம் பேர்களுக்குக் குறைவுபடாமலும் முப்பதாயிரம் பேர்களுக்கு அதிகப்படாமலும் இருக்கலாம். இக்கோயமுத்தூர் ஜில்லாவில் மாத்திரம் 250 வக்கீல்கள் இருக்கிறார்களென்றால், நமது மாகாணத்தில், இது போல் இருபத்தி நான்கு ஜில்லாக்கள் இருக்கின்றன. சென்னையில் சுமார். 500 அல்லது 600 வக்கீல்கள் வரை இருக்கிறார்கள். ஆக இம்மாகாணத்தில் மட்டுமே, எவ்விதத்திலும் ஐயாயிரம் வக்கீல்களுக்கு குறைவுபடாது. இப்படியே பார்த்துக்கொண்டு போனால், இன்னும் எத்தனையோ மாகாணங்
கள் நமது தேசத்தில் இருக்கின்றன. ஆக சற்று ஏறக்குறைய, சராசரி இருபத் தையாயிரம் வக்கீல்களுக்கு குறைவுபடமாட்டார்களென்றே நம்புகிறோம்.
ஆறு கோடி ரூபாய்
இவர்களின் சராசரி வரும்படி, பத்தாயிரம் பதினாயிரம் என்று சம்பா திப்பவர்களும் நூறு, இருநூறு என்று சம்பாதிப்பவர்களும் உள்பட நபர். ஒன்றுக்கு, மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் வரும்படி என்று வைத்துக் கொண்டாலும், இவ் இருபத்தையாயிரம் வக்கீல்களுக்கும் மாசமொன்றுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்கள் வீதம் வருடமொன்றுக்கு ஆறு கோடி ரூபாய்கள் பொதுமக்களுடைய பணம் செலவாகிறது. இப்படியிருக்க வருடமொன்றுக்கு 250 பேர்களும், இஃதல்லாமல் முதல் வகுப்பு வக்கீல்கள் என்பவர்கள் ஐம்பது, அறுபது பேர்களும், ஆக முன்னூறு வக்கீல்கள் இம்மாகாணத்திற்கு மட்டும் புதிதாக ஏற்பட்டால், மற்றும் பிற மாகாணங்களிலும் இதே போல் கணக்கிட்டுப் பார்த்தால் வருடமொன்றிற்கு இரண்டாயிரம் பேர்களுக்குக் குறையாமல் புது வக்கீல்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள். இக்கணக்கு இவ் வண்ணமே வருடா வருடம் பெருகிக்கொண்டே போகுமானால் இதற்கு
முடிவு எப்பொழுது? இதன் பலனாய் தேசத்தின் பிற்கால கதியென்னவாகும்?'
குடி அரசு - 1925 194
வயிறு வளர்க்கும் விதம்
இத்தனை பேரும் இச்சர்க்காரைத் தாங்கிக் கொண்டு, இதன் அதிகாரி களை பிரபுவே! பூஜிக்கத் தகுந்தவர்களே!! துரைகளே!! கனவான்களே!!! என்று ஒருபக்கம் ஸ்துதி பண்ணிக்கொண்டும், மற்றொரு பக்கம் பாமர ஜனங்களைக் கூட்டிவைத்து மேடையின் மேலேறி இச்சர்க்காருக்குச் சரியான புத்தி கற்பிக்கவேண்டும், லாயிட் சார்ஜ் துரைக்கு சரியான பதில்சொல்ல வேண்டும், லார்ட்பர்கென் ஹெட் பிரபுவிற்கு பதில் சொல்லவேண்டும், ஜஸ்டிஸ்கட்சியை நம்பாதீர்கள், அன்னார் சர்க்காரைத் தாங்குபவர்கள், மிதவாதக்கட்சியினர் தேசத்தைக் காட்டிக்கொடுத்து பட்டம் பதவிகளைப் பெறுபவர்கள். சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் உண்மையற்றவர்கள், யோக்கியரல்லாதவர்கள் என்று ஒருவரை யொருவர் தூற்றிக்கொண்டு வயிறு வளர்ப்பதற்கும், பெருமை பெறுவதற்கும் அலைவதுதானே இவர்கள் கதி.
எல். எம். அண்ட் எஸ்.
இவர்கள் கதி இதற்கடுத்தால் போல், எம்.பிஃபி.எஸ்.எல்.எம்.எஸ் என்ற பரீகைஷயில் தேறினவர்கள்.
இவர்களால் தேசத்திற்கு உண்டாகும் நன்மையென்ன? இவ் வயித்தி யர்கள் எனச் சொல்லப்படும் டாக்டர்களின் கதியென்ன? இவர்களேற் படாத.
காலத்தில் ஓர் அரை அணா மருந்தில் தீர்ந்துபோகக்கூடிய ஒரு வியாதி இவர் களேற்பட்டபின் ஒருவனுக்கு வந்தால், இவரைக்கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுவதற்கு மூன்று ரூபாய். இவர் சொல்லுகிறபடி மருந்து வாங்குவதற்கு ஒன்று, பத்து என்று சொல்லக்கூடிய ரூபாய்கள் செலவு செய்து மருந்து வாங்குவதில், செலவழிக்கச் செய்யும் பணம் எவ்வளவு? இப்படியாக இவர்கள் அன்னியநாட்டு மருந்துகளை விற்கும் தரகர்களாகி நமது நாட்டுப் பெண்களுக்குக்கூட தெரிந்திருந்த சாதாரண வைத்தியக் கைமுறைகளையும், நாட்டு வைத்தியங்களையும், அழித்து ஏழைகளுக்கு வியாதிவந்தால்,
பார்த்துக் கொள்ளமுடியாத நிலையில் ஆக்கி தாங்கள் மட்டும் பிழைப்பதற்கு உபயோகப்படுவார்களேயல்லாமல் தேசத்தின் வேறு எவ்வித நன்மைக்கு உபயோகப் படப்போகிறது?
பி. ஏ., எம். ஏ.
பிறகு, தொளாயிரம் நபர்கள் வரையும் பி. ஏ. எம். ஏ. முதலிய பரிகை்ஷ களில் தேறி பட்டம் பெற்றதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் கதி யென்ன என்று பார்ப்போமேயானால், பட்ட விழாவில் அடிமை முத்திரை: பெற்றதும், முதல்முதலாக பத்திரிகைகளில் எங்காவது விளம்பரங்கள் இருக்கின்றனவா என்று தேடுவதும், வக்கீல் உத்தியோகத்திற்கு போகலாமா, வியாபாரம் செய்யலாமா அல்லது ராஜீய விஷயத்தில் புகுந்து ஏதாவது ஜீவனத்திற்கு வழிதேடலாமா எனவும் மற்றும் பலவிதமாக யோசித்து
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஒருபங்கு வக்கீலுக்கும், ஒருபங்கு சர்க்கார் உத்தியோகத்திற்கும், ஒருபங்கு தருதலையாகவும் பிரிந்து வீடுவீடாக ஆபீஸ் ஆபீஸாக அலையவும், நினைத்தபடி யெல்லாம் விண்ணப்பங்கள் போட்டுக்கொண்டு அலையவும், இன்னும் மேலே சொன்ன விபரங்களுக்கல்லாமல் வேறு எதற்கு உபயோகப் படப் போகிறார்கள்? இதைத்தான் நமதுநாட்டில் கல்வியென்றும், இக்கல்வி கற்றோர்கள்தான் கற்றவர்களென்றும், மேதாவிகளென்றும் சொல்லிக் கொண்டும் நமது ஜனங்கள் இக்கல்வியையே பயிலல் வேண்டுமென மோகங் கொண்டு தங்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். இவற்றை நன் கறிந்துதான் மகாத்மா காந்தியவர்கள் இக்கல்விதான் தேசத்தை இந்நிலைக்குக் கொண்டுவந்துவிட்ட தென்றும், இதை பகிஷ்கரித்தாலல்லது நமது தேசத்திற்கு விடுதலையும் சுயராஜ்யமும் இல்லையென்றுசொல்லி, இதை ஒத்துழை யாமைத் திட்டத்தில் ஓர் முக்கிய பாகமாக வைத்தார்கள். இதைநிறைவேற்ற இப்படிப்புப் படித்தவர்களையே ஆயுதமாக உபயோகித்ததால் ஆரம்பித்த ஒத்துழையாமை தர்மமும் அழிக்கப் பட்டு, தேச முன்னேற்றமும் பாழடைந்து, மகாத்மா காந்திக்கும் இனி நமக்கு சுயராஜ்யம் கிடைக்கவா போகிறதென
சந்தேகித்து நடக்கிறபடி நடக்கட்டும் என்று விட்டுவிட்டு, புதுத்திட்டத்திற்கு யோஜனை பண்ணிக்கொண்டிருக்கிறார். நமது தேசம் சுயராஜ்யமடைய வேண்டுமானால், விடுதலைபெற வேண்டுமானால் இக்கற்ற வகுப்பார் தேசத் தொண்டிலிருந்து தொலைந்து, இக்கல்வி முறைகளும் ஒழிந்துபோக
வேண்டும். மற்றவைகளைப் பற்றி சமயம் நேரும் பொழுது எழுதுவோம்.
குடி அரசு - கட்டுரை - 30.08.1925
குடி அரசு - 1925 196
வேம்பு இணிக்கமா?
தஞ்சை பிராமணரல்லாதார் மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தணிகாசலஞ் செட்டியாரவர்கள் தமது அக்கிராசனப் பிரசங்கத்தில் தாம் சென்னை நகரசபையில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனதற்கு காரணம் கூறு கையில், தம்முடைய வண்டியில் 649 ஓட்டர்கள் போனதாகவும், 358 ஓட்டுகள் தான் தமக்குக் கிடைத்ததாகவும், அவர்களில் 108 பேர்கள்தான் பிராமணர்: களென்றும், பெரும்பாலோர்கள் தமக்கு ஓட்டுக் கொடுக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு தேர்தலில் நிற்கும் ஓர் பார்ப்பனரல்லாதார் எப்படி பிராமணர்களுடைய ஓட்டுகளை எதிர்பார்க்கலாம்? ஆகையால், பிராமணர்களுடைய ஓட்டுகளை: எதிர்பார்த்தது முட்டாள் தனமா? இவருக்கு ஓட் செய்வதாய் சொல்லி இவர். வண்டியிலேயே வந்து மற்றொருவருக்கு ஓட்டு செய்திருந்தால் அது அயோக்கியத்தனமா? என்பதை வாசகர்களே கவனிக்கவேண்டும்.
குடி அரசு - குறிப்புரை - 30.08.1925
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மதுரையில் ஸ்ரீமாண் சீணிவாசய்யாங்காரின்
கற்று
ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரவர்களை மதுரை பொதுமக்கள் பகிரங்க
மாகத் திறந்தவெளியில் பேசுவதற்கில்லாமல் செய்துவிட்டதின் பலனாய், ஒரு கட்டத்திற்குள் பேச நேரிட்டு அதை ஸ்ரீமான் அய்யங்கார் பொதுமக்கள் நிறைந்த கூட்டமல்லவென்றும், ஆதலின் அங்கு என்ன வேண்டுமானாலும் பேசலாமென்று நினைத்துப் பேசி இருப்பதாகத் தெரிகிறது. அவ் விஷயத்தைப் பொது ஜனங்கள் சரியாய் அறிந்துகொள்ளக்கூடாதவாறும், தந்திரமாய் ஜனங்களை ஏமாற்றத்தக்க மாதிரியாயும், தேசீயப் பத்திரிகை யென்ற போர்வையைப் போர்த்துக்கொண்டிருக்கும் சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிகை கீழ்க்கண்டவாறு பிரசுரித்திருக்கிறது. ஸ்ரீமான் அய்யங்கார் பிரசங்கத்தின் சாராம்சமாவது:- “பெஜவாடாவில் கூடிய சென்ற காங்கிரஸில் எல்லா ஸ்தாபனங்களையும் காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சியினர்.... மகாத்மா காந்தியும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆகவே, எதிரிகளின் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு மோசம் போகாதீர்கள். அவர்கள். நமக்குள் கட்சிகளை உண்டாக்கப் பலவிதங்களிலும் வழி தேடுவார்கள். அதற்குநீங்கள் கவலைப்படவாவது கவனஞ்செலுத்தவாவது கூடாது” என்று பேசியிருக்கிறார். இவற்றில், முதல் வாக்கியத்தில் நிருபர் ஏதாவது இரண்டொரு வார்த்தைகளை விட்டு விட்டாரோ, அல்லது அங்குள்ள மீதி வாக்கியங்களை பிரசுரித்தால், பின்னர் ௬சு செய்யவேண்டிய பொறுப்பு ஸ்ரீமான் அய்யங்காருக்கு ஏற்பட்டுவிடுமே யென்று நினைத்து, அவரைத் தப்புவிக்க மற்ற வார்த்தைகள் விட்டுவிடப் பட்டனவோ, அல்லது ஸ்ரீமான் அய்யங்காரவர்களே அந்த இடத்தில் “பெஜவாடாவில் கூடிய சென்ற காங்கிரஸில் எல்லா ஸ்தாபனங்களையும் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியினர்” என்று பேசி, பிறகு பொருளில்லாது எதையாவது மெதுவாய்ச் சொல்லி, “மகாத்மா காந்தியும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்று பலமாய் சொல்லி இருக்கவேண்டும். எப்படி இருந்தாலும், நாம் ஏதோ அங்கு சில வார்த்தைகள் விட்டுப்போனதாகவே நினைத்துக் கொண்டு அங்கு என்ன வார்த்தைகள் இருந்திருக்கலாம் என்று யூகித்துப்பார்த்தால் “காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சியினர் கைப்பற்றவேண்டும் என்று ஓர் தீர்மானம் நிறைவேறி
யிருக்கிறது. இதை மகாத்மா காந்தியும் ஒப்புக்கொண்டிருக்கிறார்'” என்றுதான் பேசியிருக்கவேண்டும். அப்படியில்லாமல், வேறு என்ன வார்த்தைகள்.
குடி அரசு - 1925 198
அங்கிருந்த போதிலும், “எதிரிகளின் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு மோசம் போகாதீர்கள்” எனச் சொல்லியிருக்கவேண்டுவதில்லை. அப்படி யானால் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காராவது அல்லது அவரது நண்பர்களாவது பெஜவாடா காங்கிரஸில் எந்தத் தீர்மானத்தில் “காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியினர் எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்றவேண்டும்” என்ற தீர்மான மாயிற்று என்கிற விபரத்தை தெரிவிக்க விரும்புகிறோம். நம்மைப் பொறுத்த அளவில் நாம் காங்கிரசுக்குச் சென்றிருந்தோம். இதைப்பற்றிய எவ்வித. தீர்மானமும் காங்கிரஸில் நிறைவேறவில்லை என்பதைத் தெளிவாய்ச் சொல்லுகிறோம். அப்படியிருக்க பொறுப்புள்ள தலைவர்கள் என்று சொல்லப் படுபவர் இம்மாதிரிநடந்துகொள்வார் களேயானால், பொதுஜனங்கள் எப்படி மோசம் போகாமல் இருக்கமுடியும்? ஆகவே நாமும் ஸ்ரீமான் அய்யங்கார வர்கள் சொல்லிய கடைசி வாக்கியங்களின்படியே தலைவர்களென்று வரும் பிராமண எதிரிகளுடைய பொய்யான வார்த்தைகளைக்கேட்டு மோசம் போய்விடாதீர்கள். அவர்கள் நமக்குள் கட்சிகளைக் கிளப்ப பலவிதத்திலும் வழிதேடுவார்களென்றும், அதற்கு நீங்கள் கவலைப்படவாவது கவனஞ் செலுத்தவாவது கூடாது என்றும் பிராமணரல்லாதார்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 30.08.1925
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஜஸ்முஸ்கட்சி மகாநா௫
தஞ்சையில் நடைபெற்ற ஜஸ்டிஸ்கட்சி மகாநாட்டின் நடவடிக்கை. களையும் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரின் புலம்பலையும் பத்திரிகைகள் வாயிலாக நேயர்கள் வாசித்திருக்கலாம். இவரது பிரசங்கத்தினின்று ஜஸ்டிஸ்கட்சியின் நிலை எல்லோருக்கும் நன்கு விளங்கிவிட்டது. பிராமணரல்லாதார்களில் அநேகர் இக்கட்சியில் சேராம லிருந்ததற்குக் காரணம் கூலிக்கு ராஜபக்தியும் உத்தியோகவேட்டையும் மிகுந்திருப்பதேயன்றி வேறல்ல. இக்குணங்கள் இக்கட்சியினின்றும் ஒழிந்து இக்கட்சிக்கு இவ்வரசாங்கத்தினிடம் இருக்கும் கூலிபக்தியும் ஒழியுமானால் பிராமணரல்லாதார் எல்லோரும் இதில் சேருவார்கள். இல்லாவிடின் செட்டி யாரைப்போன்ற இக்கட்சியார் எல்லோரும் மந்திரிகளுள்பட ஒவ்வொரு வராய் ஒப்பாரியிட வேண்டியதாகத்தான் முடியும். சுயராஜ்யக்கட்சியாரும் இவர்கள்போலவே உத்தியோக வேட்டையிலும் பதவிவேட்டையிலும் நுழைந்துள்ளார்கள். இவர்களது ஆர்ப்பாட்டங்களைக்கண்டு தேசமக்கள்
முதலில் ஏமார்ந்து போனாலும் இவர்களது யோக்கியதையையும் விரைவில் அறிந்துவிடுவாரர்கள்.
பாமரஜனங்களை ஏமாற்றுவதால் எந்தக் கட்சி முன்னுக்கு வருவதா
யிருந்தாலும் அது வெகு நாளைக்கு நீடித்திருக்காது என்பதை ஜஸ்டிஸ் கட்சியாரும் சுயராஜ்யக்கட்சியாரும் அறியவேண்டுமென விரும்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.08.1925
குடி அரசு - 1925 200
தஞ்சையில் பிராமணால்லாதார்
மகாநாட்டுக்குப் போட்முயாண தேசீய
பிராமணால்லாதார் மகாநா௫
ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏமாறப்பட்ட தேசீய பிராமணரல்லாதார். களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். தேசீயவேலை தீவிரமாய் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவர்கள் எங்கு போயிருந்தார்கள்?
தேசீயபிராமணரல்லாதாரென்பதற்கு என்ன யோக்கியதை வைத்திருக் கிறார்கள்?
சுயராஜ்யக்கட்சியைப் போல் கைச்சாத்து மட்டும் போட்டால் போதுமா? அல்லது காரியத்தில் ஏதாவது பரீகைஷ உண்டா?
அப்படியானால் இக்கூட்டத்தைத் தவிர வேறு யாரும் அக்காரியப் பரீகை்ஷயில் தேறினவர்கள் இல்லையா?
தேசீயம் என்கிற வார்த்தைக்கு என்னதான் அர்த்தம்?
உத்தியோகத்திற்கு ஆசைப்படுவதாக இருந்தாலே போதுமா?
பிறரை ஏமாற்றுவதாக இருந்தால் போதுமா?
மற்றொருவரைத் திட்டுவதாக இருந்தால் போதுமா?
அல்லது ஏழைகளின் நன்மைக்கு ஏதாவது செய்யவேண்டுமா?
இன்னும் எப்படி இருந்தாலும் சரி. ஒரு விசேஷம் என்னவென்றால் மகாத்மா பெயரையும் காங்கிரஸ் பெயரையும் சொல்லிக்கொண்டு சுயநலத்திற் காகத் திரியும் தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சியைவிட எத்தனையோ மடங்கு இது மேலானதுதான், மற்றொரு விசேஷம் என்னவெனின் சில தேசீய பிராமணரல்லாதாரைப்போல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றாலே உடம்பு சிலிர்க்கவும் மனச்சான்றுக்காக வருந்துவதும் போலல்லாமல் சுயராஜ்யத்தைச் சீக்கிரத்தில் அடைவதற்கு சகல வகுப்பாரும் உத்தியோகம் முதலியவைகளை அவரவர் வகுப்புகளுக்கு ஏற்றவாறு சமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டு மென்றும் ஒற்றுமையடைய வகுப்பு வித்தியாசமில்லாமல் எல்லோருக்குள்ளும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் ஓர்.
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இம்மகாநாட்டைக் கூட்டினவர். யாராக இருந்தாலும், அவருடைய உத்தேசம் ஏதாயிருந்தாலும் தற்காலம் தேசத்திற்கு வேண்டியதும் இன்றியமையாததுமான ஓர் தீர்மானத்தை தேசீய பிராமணரல்லாதார் பெயரால் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தமட்டில் நாம் உண்மையாக மகிழ்ச்சி அடைகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 30.08.1925
குடி அரசு - 1925 202
எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்மு 28.12.24
தேதியின் ஆறாவது தீர்மாணத்திண் உண்மை
இதற்கு முன் நான் பேசியும் எழுதியும் வந்ததில் முனிசிபாலிட்டி தாலூகா போர்டு டிஸ்டிரிக்ட் போர்டு முதலிய ஸ்தாபனங்களை காங்கிரஸின் பெயரால் கைப்பற்ற எல்லா இந்திய காங்கிரசோ மாகாண கான்பரன்சோ
ஜில்லா கான்பரன்சோ உத்திரவு கொடுக்கவில்லை என்று வெகு காலமாய்
நான் சொல்லி வந்திருப்பதோடு அவ்விதமான ஒரு உத்தரவோ சிபார்சோ காங்கிரஸ் ஸ்தாபனங்கள் செய்யக்கூடாதென்றும் நானும் எனது நண்பர்கள் சிலரும் வாதாடி வந்திருக்கிறோம். அவ்வித ஒரு தீர்மானம் காங்கிரஸில் இல்லாமல் செய்துமிருக்கிறோம். அப்படி இருக்க கோயமுத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் பேரால் 22. 8.25 ல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு துண்டு பிரசுரத்தில் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒரு தீர்மானத்தை. தமிழில் தப்பாய் வெளியிட்டு ஜனங்களை ஏமாறும்படி செய்திருப்பதைக் கண்டு நான் வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. அத்தோடு பொது ஜனங்களும் இந்தத் தப்பு பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இருக்கும்படி ஒரு தெளிவு பிரசுரம் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. அதாவது டி
நோட்டீசில்.
“எங்கெங்கே காங்கிரஸின் திட்டங்களை நிறைவேற்றி வைக்கக் கூடுமோ, அவ்விடங்களிலெல்லாம் காங்கிரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங் களுக்கு (முனிசிபாலிடி ஜில்லா, தாலூக்கா போர்டுகளுக்கு அபேக்ஷகர்களாக நிற்பது விரும்பத்தக்கது என இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மா னிக்கிறது” என்று தமிழில் எழுதியிருக்கிறது.
ஆனால் இங்கிலீஷில்
“Resolved that in the opinion of the Committee it is desirable for Congress- men to offer themselves for elections to local bodies whereever it is likely to further the programme of the Congress.”
Congress men to offer themselves for election
என்றிருப்பதை தப்பு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். Offer themselves என்கிற பதத்தின் அர்த்தத்தையே தமிழ் மொழிபெயர்ப்பில் மறைத்து விட்டார்கள். அதனுடைய அர்த்தம் தாங்களாகவே நிற்க வேண்டும். அதாவது காங்கிரசின் பேரைச் சொல்லிக்கொண்டு நிற்கக் கூடாது
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
என்பதுதான். ஆதலால் காங்கிரஸின் பேரால் அபேக்ஷகர்கள் நிற்பதும்
காங்கிரஸ் சபையார் இவர்களுக்காக பிரசாரம் செய்வதும் தீர்மானத்தின் படியே பெரியதப்பு.
இத்தீர்மானம் பெல்காம் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமாகும்போது நானும் இருந்தேன். இதற்கு ஆதி தீர்மானம் கொண்டு வந்தவர்கள்;காங்கிரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிமுதலியவைகளைக் கைபற்ற வேண்டுமென்று காங்கிரஸ் கட்டளை இடுவதாய் கொண்டு வந்ததை நானும்
மற்றும் சிலரும் காங்கிரஸ்காரருக்கு பரிகைஷயேயில்லாமல் போய்விட்டதால் இத்தீர்மானம் நிறைவேறினால் விரும்பத்தகாதவர்களும் யோக்கியதை அற்றவர்களும் வந்து புகுந்து காங்கிரஸ் பெயரைக் கெடுத்து விடுவார்கள் என்றும் யோக்கியர்கள் தள்ளப்பட்டு போவார்கள் என்றும் இதனால் அந்தந்த ஊர்களில் கக்ஷி ஏற்பட்டுவிடுமென்றும் ஆகேஷ்பித்ததின் பேரில் அதை. மாற்றி இங்கிலீஷில் எழுதியிருப்பது போல் நிறைவேறிற்று. அதன் அர்த்தம் உள்ளூர் ஸ்தாபனங்களில் எங்கெங்கே காங்கிரஸ் திட்டங்களை முன்னேறச் செய்யக் கூடுமோ அங்கெல்லாம் காங்கிரஸ் மெம்பர்கள் தாங்களாக (அதா வது காங்கிரஸ் பெயர் சொல்லிக்கொள்ளாமல்) அபேக்ஷகர்களாக நிற்பது விரும்பத்தக்கது என்று இருக்கிறது. இதில் தாங்களாக என்கிற பதத்தை விட்டுவிட்டு மொழி பெயர்த்து உங்களுக்குக் காட்டப்பட்டிருக்கிறது. தாங்க ளாக என்றால் காங்கிரஸ் பெயரை உபயோகித்துக்கொள்ளாமலும், காங்கிரஸ் பிரசாரத்தை உபயோகித்துக் கொள்ளாமலும் என்றுதான் அர்த்தம் என்று விளங்கவில்லையா? அப்படியிருக்க கோவை நகர் காங்கிரஸ்காரரின் இப்பேர்ப்பட்ட நடவடிக்கை கோவை மகாஜனங்களாகிய நீங்கள் ஏமாற்றப் படுவதோடு அல்லாமல் என்னுடைய எழுத்துக்களையும் வார்த்தைகளையும் உண்மையற்றதாகவும் உபயோகப்படக் கூடியதாயிருப்பதால் இதை வெளிப் படுத்தாமல் இருக்கமுடியவில்லை. ஆகையால் ஓட்டர்களாகிய நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு செய்யுங்கள். எனக்கு வேண்டாதவர். களோ முனிசிபாலிட்டிக்கு உதவாதவர்களோ இப்பொழுது எலக்ஷனுக்கு
நிற்கும் சுமார் 20 கனவான்களில் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் எனது நம்பிக்கை. காங்கிரஸ்காரர் அல்ல என்பதர்காக மாத்திரம் யாருக்கும் ஓட்டு செய்யாமல் இருந்து விடாதீர்கள். காங்கிரஸ்காரர் என்பதர்க்கு மாத்திரம் மற்ற விஷயங்களை கவனியாமல் நீங்கள் ஓட்டு செய்துவிடாதீர்கள். இந்த வேண்டுகோளை நீங்கள் ஆதரித்தால் மாத்திரம் தான் நீங்கள் உங்கள் ஓட்டை யோக்கியமான வழியில் உபயோகிக்கிறவர்களாவீர்கள்.
ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - அறிக்கை - 30.08.1925
குடி அரசு - 1925 204.
சுயாராஸ்யக்கட்சியிண் முக்கிய வலை
சுயராஜ்யக் கட்சியென்று சொல்லப்படும் ராஜுயகட்சி அங்கத்தினர். களுக்கு வேலையென்னவென்றால் தாங்கள் யோக்கியர்களென்பதிலும் தங்கள் கட்சிக்கு பலம் குறையவில்லையென்பதிலும்,தங்களுக்கு செல்வாக்கு இருக்கிற தென்பதிலும் சந்தேகமேற்பட்ட காலங்களிலெல்லாம் மகாத்மா விடம்போய் நற்சாட்சிப் பத்திரம் வாங்குவதான வேலையையே அவர்களது தலையில் கடவுள் விதித்து விட்டார் போலும்! இப்படியே இருந்தால் இக்கட்சியின் “செல்வாக்கும் , பலமும், பெருந்தன்மையும்” மக்களுக்கு உபயோகப்படுவது தான் எப்பொழுது என்று தெரியவில்லை.
குடி அரசு - குறிப்புரை - 30.08.1925.
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஸ்ரீமாண் ஆதிநாராயணாண் சட்முயாரின் ௯ற்று
மாயவரம் தாலூகா ராஜீய மகாநாட்டில் அக்கிராசனம் வகிக்க நேர்ந்து ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் நிலைமையயைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லி இருக்கிறார். அதாவது:- “மாகாண காங்கிரஸ் கமிட்டியுடன் நில்லாமல் ஜில்லா, தாலூகா கமிட்டிகளும் மிக்க துரதிர்ஷ்டமான நிலையில் இருக்கின்றன. இப்பொழு துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகத்தைக் கவனித்தால் இதைவிடக் கேவலமாக இனி நடத்த முடியாது. முக்கிய நிர்வாக உத்தி யோகஸ்தர்கள் ஜாதிக் கொள்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருவர்.
(ஸ்ரீமான். பி.வரதராஜலு நாயுடுவை மனதில் வைத்துக்கொண்டு! பகிரங்க மாகவே மிகவும் பிற்போக்கான (ஜஸ்டிஸ் கட்சியில் கோஷ்டியில் தாம் சேரத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், பிராமணர்களை எதிர்த்துப் போராடுவதற்காகவே சேர்வதாக பத்திரமாகக் கூறுகிறார். ஏனெனில் பிராமணர்களை எதிர்த்துப் போராடுவது காங்கிரஸ் கொள்கைகளில் ஒரு
பாகம் போலும்! மற்றொருவர் (ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை மனதில் வைத்துக்கொண்டு! ஸ்தலஸ்தாபனங்களின் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியாரை தேர்ந்தெடுக்கக்கூடாதென்று விளம்பரப்படுத்துகிறார். வகுப்பு வாரி ஓட்டர்கள் பகுதி ஏற்படுத்த வேண்டுமென்றும் சொல்லுகிறார். காங்கிரஸ் நிதியெல்லாம் செலவழிந்து விட்டது. கொஞ்சம் நஞ்சம் உள்ளதும் யோக் கியதையற்ற தாலூகா காரியதரிசிகளுக்காகச் செலவழிக்கப்பட்டு வருகிறது. அவர்களோ உருப்படியான வேலை ஒன்றும் செய்யாததுடன், தமக்குப் பணம் கொடுப்பவருக்கு (அதாவது ஸ்ரீமான். பி. வரதராஜலு நாயுடுவை மனதில் வைத்துக் கொண்டு! எதிரான அபிப்பிராயம் கொண்டவர்களை அடித்தும் பயமுறுத்தியும் வருகிறார். மிகவும் குறைவாகவுள்ள காங்கிரஸ் பணத்தை நிர்வாகிகளுக்கு (ஸ்ரீமான்கள், பி. வரதராஜலு நாயுடுவையும், ஈ.வெ. இராம சாமி நாயக்கரவர்களையும் மனதில் நினைத்து) வேண்டியவர்களா யுள்ள சிலர். சாப்பிட்டு வருகிறார்கள். நாட்டிற்காகச் சிறைசென்ற அநேக வாலிபர்கள். தங்களுக்கு ஏதாவது உபயோகமுள்ள வேலை கொடுக்கும்படி விண்ணப்பங்
கள் போட்டும் அதை இவர்கள் கவனிக்கவில்லை.”
குடி அரசு - 1925 206
இதற்கு சமாதானம் கமிட்டி நிர்வாகம்
இவற்றில் நிர்வாகத்தைப்பற்றிச் சொல்லியிருக்கும் வார்த்தை களுக்கு டாக்டர் பி.வரதராஜலு நாயுடு தலைவர் என்ற முறையில் தகுந்த சமாதானம் சொல்லப்போகிறார்களானாலும், நாம் சில வார்த்தைகள் சொல்ல விரும்பின் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியாரும் ஓர் அங்கத்தினர்தான் என்பதையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நடவடிக்கைகள் முழுவதும் ஒவ்வொரு மாதத்திய நிர்வாகக் கூட்டங்களிலும் செட்டியாரவர்களால் ஆமோதிக்கப்பட்டதே யல்லாமல் செட்டியாரவர்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாகவாவது கமிட்டியின் ஆமோதிப்பில்லா மலாவது ஒரு காரியமும் நடத்தப்படவில்லை என்பதைப் பொதுஜனங்கள் அறியவேண்டும். பணம் செலவுசெய்யும் விஷயத்தில் இதற்குமுன் இருந்த காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டிகள் எந்த முறையைக் கையாடி வந்ததோ அந்த முறையை அனுசரித்
தும், ஸ்ரீமான் செட்டியாரின் இஷ்டங்களை அனுசரித்துமே செய்யப்பட்டு வந்திருக்கிறது. சில விஷயங்களை உத்தேசித்து ஸ்ரீமான் செட்டியாரவர்கள் வசமும் அவர்கள் சிபாருசுப்படியும் தாராளமாகப் பணம் கொடுக்கப்பட்டுத்
தான் வந்திருக்கிறது. ஏதோ ஒரு விஷயத்தில் இவரிடம் கொடுத்திருந்த பணத்தை அவசர நிமித்தம் திருப்பிவாங்க வேண்டி ஏற்பட்டதினால் செட்டியாரவர்களுக்கு கமிட்டியின் பணச்செலவு விஷயத்தில் வருத்தம் ஏற்பட்டு விட்டதுபோலும்!.
பழைய வருத்தம்
அல்லாமல் செட்டியாரவர்களுக்கு சில வருடங்களாகவே, அதாவது 19206 காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்கள் கும்பல் கும்பலாய் சிறைசென்று கொண்டிருந்த காலத்தில் செட்டியார் அனுசரித்து வந்த முறையினால் இவர்கள்பேரில் காங்கிரஸில் ஈடுபட்டிருந்த அனேகருக்கு அதிருப்தி ஏற்பட்டு சிலருக்குள் அபிப்பிராய பேதங்களும் ஏற்பட்டன. அதன் பலனாகவே ஸ்ரீமான்களான பி. வரதராஜலு நாயுடும், சி. ராஜகோபா லாச்சாரியாரும்,ஈ.வெ.இராமசாமி நாயக்கரும் மற்றும் சிலரும் செட்டியாரின் அதிருப்திக்கு ஆளானார்கள். சாதாரண வாழ்க்கையில் உள்ளதுபோலவே ராஜீய வாழ்க்கையிலும் மேற்கண்ட மூவரிடமும் அதிருப்தி உள்ளவர்கள் செட்டியாரைத் துணைக் கருவியாகக் கொண்டு காங்கிரஸ் நிர்வாக சபையை சென்ற இரண்டு மூன்று வருஷங்களாகத் தாக்கி வந்திருக்கிறார்கள். அது வுமல்லாமல் ஒருவரைத் தாக்குவதற்காகவோ சுயநலத்திற்காகவோ சமயத்
திற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு கட்சியிலேயோ, ஒவ்வொரு வகுப்பா ருடனேயோ ஒவ்வொரு தனி கனவான்௧ளோடேயோ சேர்ந்து கொண்டு அவர்களுக்கு திருப்தி உண்டாக்க மற்றவர்களையும் மற்ற ஸ்தாபனங் களையும் தாக்கி வருவது அனுபவத்தில் கண்டு வந்திருக்கிறோம். இக் குணங்களெல்லாம் விதிவிலக்கில்லாமல் ராஜீயவாழ்வில் பிரவேசித்ததின்
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பலனாய்த்தான் ராஜீய வாழ்வே அன்னியர் பார்த்து சிரிக்கும்படியான நிலைமைக்கு வந்துவிட்டது. ஸ்ரீமான் செட்டியாரவர்கள் மனதில் வைத்துக் கொண்டு ஜாடைபேசும் இரு கனவான்களும் செட்டியாரின் தேச பக்திக்கும் தியாகத்திற்கும் ஒழுக்கத்திற்கும் எவ்விதத்திலும் பின்வாங்கியவர்கள் அல்லவென்பதை தமிழ்நாடு நன்றாய் அறிந்திருக்கும். இதை செட்டியாருக்கு ஞாபகப்படுத்திவிட்டு அடுத்த விஷயத்திற்கு வருகிறோம்...
ஜஸ்டிஸ் கட்சியில் சேருவது
அதாவது ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடு பிராமணர்களை எதிர்ப்ப தற்காக ஜஸ்டிஸ் கட்சியில் சேர்வேனென்பது: இவ்விஷயத்தில் கொஞ்சமும் குற்றமிருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை. என்றைக்கிருந்தபோதிலும் ஜஸ்டிஸ் கட்சியாரும் ராஜீய வாழ்விலிருக்கும் பிராமணரல்லாதாரும் தான்
ஒன்றுசேர்ந்து சகோதரபாவமாய், சமத்துவமாய் வாழ முடியுமேயல்லாமல் பிராமணர்களோடு சமத்துவமாய் வாழ முடியாது. நாம் அவர்களோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டாலும், பிராமணர்களின் கொள்கை நம்மை எக்காலத்திலும் சமத்துவமாய் ஏற்றுக் கொள்ளாததாய் இருக்கிறது. அவர்களது தர்மமோ தாங்கள் உயர்பிறப்பென்றும் (பிராமணர்கள் ஒழிந்தி மற்றவர் தாழ்ந்த பிறப்பு என்றும் அடிமைகளென்றும் தாசி மக்களென்றும் மிலேச்சர்களென்றும் தொட்டால், பார்த்தால், தெருவில் நடந்தால், அருகில் வந்தால் பாவம் என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறது. இந்நிலையில் இவ்விதக் கொள்கைகளை எதிர்க்காமலோ இவ்வித கொள்கைகளற்ற சகோதரர்கள் ஒன்று கூடாமலோ இருப்பார்களென்று ஸ்ரீமான் செட்டியாரவர்கள் எப்படி நினைத்தார்களோ வென்பது நமக்கு ஆச்சரியமாகவிருக்கிறது. ஒருக்கால் தம்மையும் பிராமணராக நினைத்துக் கொண்டாரோ என்னவோ! அல்லது தன்னை பிராமணர்கள் சமமாய் நடத்துவார்களென்று நினைத்தாரோ!! தெரியவில்லை.
சுயராஜ்யக் கட்சி
நிற்க, “ஸ்தல ஸ்தாபனங்களின் தேர்தல்களில் சுயராஜ்யக்கட்சியாரைப் பகிஷ்கரிக்குமாறு பிரசாரம் செய்கிறார்” என்று பேசியிருக்கிறார். இது ஸ்ரீமான் ஈவெ.ராமசாமி நாயக்கரையேதான் மனதில் வைத்துக்கொண்டு பேசி இருக்கிறார் என்பதில் வாசகர்கள் சந்தேகப்படமாட்டார்கள். சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் ஒருவர் தேர்தலில் நிற்பதனால் அது காரணமாய் அவரைத் தெரிந்தெடுக்கக்கூடாதென்று ஸ்ரீமான் நாயக்கர் எந்தக் கூட்டத்தில் பேசி
இருக்கிறார்? அல்லது எந்த சந்தர்ப்பத்தில் எழுதி இருக்கிறார்? இதைச் செட்டி
யார் மெய்ப்பிக்க முடியுமா?
காங்கிரஸ் தீர்மானம்
அன்றியும் சுயராஜ்யக்கட்சியாரோ அல்லது காங்கிரஸ்காரரோ காங்கிர. ஸின் சார்பாய் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிற்கலாமென்றாவது காங்கிரஸ்
குடி அரசு - 1926 208
காரர்கள் இவர்களுக்காகப் பிரசாரம் செய்து ஓட்டு சம்பாதித்துக் கொடுக்கலா மென்றாவது, காங்கிரஸின் கட்டளை இருக்கிறது என்று இவர் மெய்ப்பிக்க
முடியுமா?
செட்டியார் சட்டசபைக்குப் போனது
ஒத்துழையாமைத் தீர்மானமும் சட்டசபை பகிஷ்காரமும் அமுலில் இருக்கும் காலத்தில் காந்தி ஆணைப்படி ஆதிநாராயணஞ் செட்டியாரவர் களுக்கு ஓட்டுச் செய்யுங்களென்று விளம்பரம் செய்து கொண்டு தாம் ஓட்டுப் பெற்றாரே அது போல் நாம் செய்யவில்லையென்று வருத்தப்படுகிறாரா?
தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சியின் முறை
சுயராஜ்யக்கட்சியில் இன்னாரைத்தான் சேர்த்துக்கொள்வதென்றும், இன்னென்ன யோக்கியதையுடையவர்கள்தான் சேரலாமென்றும், ஒழுங்குமுறை இல்லாமல் ஸ்தல ஸ்தாபனங்களுக்குப் போக விரும்புகிறவர்: களையெல்லாம் சேர்த்துக் கொண்டு வேடத்திற்குக் கூட கதர் கட்டா விட்டாலும் நவம்பர்முதல் கட்டுவதாய் ஒப்புக்கொண்டால் சரியென்றும், நூல் சந்தாவில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதற்குண்டான பணத்தைக் கொடுப்பதாய் ஒப்புக்கொண்டால் போதுமென்றும், தீண்டாமை ஒழிப்பதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லா விட்டாலும், பிராமணர் ஒழிந்த மற்றெல்லோ ரையுமே தீண்டாதவராக பாவிப்பவராக இருந்தாலும் கையெழுத்து மாத்திரம் போட்டால் போதும் என்றும், இவ்வாறாகச் சொல்லி அவர்களோடு வியா பாரம் பேசி அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு காங்கிரஸின் பெய
ராலும், மகாத்மாவின் பெயராலும், தியாக மூர்த்திகள் பெயராலும் இவர்: களுக்கு ஓட்டுக் கொடுக்கும்படி செய்து யோக்கி யர்களையும், உண்மை யானவர்களையும் நிர்வாகத்தைத் திறமையாக நடத்தக் கூடியவர்களையும் சாதாரண ராஜீய அபிப்பிராயபேதம் காரணமாக இழிவாய்ப் பேசியும் அவர். களுக்கு விரோதமாய் அவர்கள் எதிரிகள் நலத்திற்காக உபயோகப்படுத்தி தக்கோர்களைத் தடுத்து தகாதவர்களை ஏற்பதுமான முறைக்கு காங்கிரசை உபயோகப்படுத்திக்கொள்ள எந்த மனிதன்தான் சம்மதிக்க முடியும்?
இதைப்பற்றி நாயக்கர் ஆதியிலிருந்தே கண்டித்து வந்திருக்கிறார்
ஸ்ரீமான் நாயக்கரவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களை காங்கிரஸ் கைப்பற்று வது பற்றி 1922-ம் வருடத்திலிருந்தே ஆட்சேபித்து வந்திருக்கிறார். அப்படி இருக்க மேற்சொன்ன கொள்கையையுடைய சுயராஜ்யக்கட்சியார் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற மற்றவர்கள் ஒருப்படுவாரென்று எப்படி எதிர். பார்க்கிறார்களோ தெரியவில்லை.
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வகுப்புவாரி ஓட்டர்கள் தொகுதி
இதைப்பற்றியும் ஸ்ரீமான் செட்டியாரவர்கள் நாயக்கரை உத்தேசித்து ஜாடை பேசி இருக்கிறார். 1919 வருடத்தில் சில தேசீய பிராமணரல்லாதார். என்போர் நடத்திவந்த சென்னை மாகாணச்சங்கம் என்று சொல்லப்பட்ட ஒரு பிரதிநிதித்துவசபையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தப்பட் டிருக்கிறது. ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு அவர்களும், ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும் இதை ஆதரித்து வந்திருக்கிறார். களென்றே எண்ணுகிறேன்.
மெஸ்டன் தீர்ப்பு
ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியாரவர்களும் பிராமணரல்லாதா ருக்கு இத்தனை ஸ்தானங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொள்வதற்காக மெஸ்டன் துரையவர்களிடம் சென்ற பிராமணரல்லாத பிரதிநிதிகளில் தாமும் ஒருவர்தானென்பதை மறந்து விட்டார் போலும்.
தேசீய பிராமணரல்லாதார் தீர்மானம்
அன்றி சென்றவாரம் தஞ்சையில் நடந்த தேசீய பிராமணரல்லாதார். மகாநாட்டில் தானும் பிரசன்னமாய் இருந்தே “தேசீய முன்னேற்றத்தை அடைய தேசீய ஒற்றுமையும் வகுப்பு வித்தியாசமின்மையும் மிகவும் அவசியமென்றும், இம்மாதிரி ஒற்றுமைக்கு உத்தியோகங்கள் முதலியது எல்லா வகுப்பாரும் அவரவர்கள் வகுப்புக்கேற்றவாறு சமமாக அடையும்படியான மார்க்கங்களைத் தேடி வகுப்பு வித்தியாசங்களில்லாமல் சமத்துவத்தை ஏற்படுத்துவது அவசிய மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். ஆனால் பிராமணப் பத்திரிக்கைகள் இதை யாரும் தெரிந்து கொள்ளாதபடி பிரசுரித்து விட்டது.
இதன் முடிவு
இப்படியெல்லாம் இருக்க சில பிராமணர்களின் புன்சிரிப்பும் முகஸ் துதியும் பெறுவதர்க்காக ஏதேதோ பேசி இருக்கிறார். சர்க்காருக்கு நல்ல பிள்ளையாய் நடந்து ஏமாற்றமடைந்த ஸ்ரீமான் ஒ. தணிகாசலம் செட்டியார் தஞ்சை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் அழுதது போல் நமது ஆதிநாராயணஞ் செட்டியாரவர்களும் இப்பொழுது பிராமணர்களுக்கு நல்ல பிள்ளையாக நடக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசுவதின் பலனாய் இருவரும் ஏமாற்றமடைந்து பின்னர் ஒரு காலத்தில் அழுவாரே என்ற பரிதாபத்தோடு இதை முடிக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 30.08.1925
குடி அரசு - 1925 210
பதவியா? வாது கசசவைமா?
பொதுவாக ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகத்தையும் பொறுப் பையும் உத்தேசிக்கையில் ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெறுவது தொண்டு செய்வதற்காகவா பதவியை அனுபவிப்பதற்காகவா என்பதை பெரும்பான்மையான ஓட்டர்கள் உணர்வதே இல்லை. நம்மைப் பொறுத்தவரையிலும் நாம் அதை ஒரு பதவியெனக் கருதுகிறோமேயன்றி அதை ஒரு பொது ஜனசேவையென நாம் கருதுவதேயில்லை. உதாரணமாக, எவ்வித பொது ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற்றாலும் அங்கம் பெற்றவர் அதை ஒரு பதவியாகவே மதித்து அதைப் பிறருக்குக் காட்டிப் பெருமை அடைவதின் பொருட்டாக தம்முடைய பெயருக்குக் கீழ் அப்பதவியின் பெயரையும் அச்சடித்துக் கொள்ளுகிறார். தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளு
கிறார். அந்நியர் இவருடைய கவுரவங்களைப் பற்றிப் பேசும் பொழுதும் அதை சுட்டிக் காட்டுகின்றனர். அல்லாமலும் இந்தத் தேர்தல் ஸ்தானம் பெறுவதின் பொருட்டு ஆயிரம், பதினாயிரம், இருபதினாயிரம் செலவும் செய்கின்றனர். யாரைப்பிடித்தால் தாங்கள் தேர்தலில் வெற்றி பெறலாமெனக் கருதி லஞ்சம் கொடுத்து ஏஜண்டுகளையும் நியமிக்கிறார்கள். தேர்தல் காலங்களில் தங்களுக்கு எதிராக நிற்கும் அபேட்சகர்களை உண்மைக்கு மாறாகவும் மனச்சாட்சிக்கு விரோதமாகவும் வேண்டுமென்றே தூஷிக்கின்
றனர். தேர்தல்களில் ஸ்தானம் பெறுவதை ஒரு வெற்றி தோல்வியென மதிக்கின்றனர். தங்களால் செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செய்வ
தாகப் பொய் பேசி ஜனங்களை ஏமாற்றுகின்றனர். ஓட்டர்களுக்குநிலைமைக்
குத் தகுந்த விதமாக லஞ்சம் கொடுக்கின்றனர். உண்மையில் பொது நன்மையின் பொருட்டு இவர்கள் தேர்தலுக்கு நிற்பார்களேயானால் இவ்வித. அயோக்கியச் செயல்கள் புரிய அவர்களது மனம் ஒருப்படுமா? நூறுபேர்.
தேர்தலில் வெற்றி பெற்றிருப்பின் அதில் ஒருவராவது உண்மையாளராயிருப் பாரென நம்ப இடமிருக்கின்றதா? பொதுநன்மைக்குப் பாடுபடுபவர்களின் யோக்கியதை இப்படித்தானிருக்குமா? உண்மையாக பொதுஜன சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையிருப்பின் தேர்தலில் போட்டிபோட்டு இழி வான செயல்கள் பல செய்தேதான் பொது மக்களுக்கு உழைக்க வேண்டுமா? வெளியிலிருந்துகொண்டு ஒரு நகர பரிபாலன சபையின் உள்ளிருந்து
செய்யும் செயல்களைச் செய்யமுடியாதா? ஒரு நகர பரிபாலன சபையை எடுத்துக்கொண்டால் அதற்குப் பல அங்கத்தினர்களும் ஒரு தலைவரும்
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இருந்தால்தான் அது நடைபெறுமா? இவர்கள் இல்லாவிடின் நகர பரிபாலன சபை நடைபெறாதூ! நகர பரிபாலன சபை சட்டப்படி சிப்பந்திகளை நியமித்து விட்டு கையெழுத்துப்போடத் தெரிந்த ஒரு இயந்திர பொம்மையும் அது ஆட்டுகிறபடி தலை ஆட்டுவதற்குப் பத்துப் பூனைக் குட்டிகளையும் உட்காரவைத்துவிட்டால் நகர பரிபாலன சபை இயந்திரம் ஓடுமா ஓடாதா? நகர பரிபாலன சபையில் மனிதர்கள் சென்று உட்காருவதனாலும் அவர்களில் ஒருவருக்கொருவர் உள்ள துவேஷத்தாலும் சுயநலத்தாலும் கலகம் விளைகின்றதே அன்றி நகர பரிபாலன சபையின் நிர்வாகத்தில் கலகம் விளைவதற்குச் சிறிதும் இடமில்லை. தாஜூகாபோர்டு, டிஸ்டிரிக்டு போர்டு, முனிசிபாலிட்டி, யூனியன் என்று சொல்லப்படுவது கிரமப்படி சர்க்காரார். செய்யவேண்டிய வேலை. அவர்கள் செய்வதாயிருப்பின் இவற்றிற்கென்று ஒரு தனி வரி வசூலிக்க வேண்டிவருமே என்றும், நிர்வாகத்தில் ஏதாவது குறை ஏற்பட்டால் ஜனங்களுக்கு நேராகத் தெரிந்துவிடுமென்றும், சாதாரண ஜனங்கள் வெகு சுலபமாக சர்க்காரை குறைகூறி விடுவாரே என்றும் யோசித்து இவ்விதக் கஷ்டங்களினின்றும் தப்புவதற்காக தந்திரமாய் பொது ஜனங்கள் கையில் ஒப்புவித்துவிட்டார்கள். இதனால் சர்க்காருக்கு மற்றொரு லாபமும் ஏற்பட்டுப் போய்விட்டது. அதாவது எலெக்ஷன் என்றும் அதற்கு ஓட்டு என்றும் பல முறைகளை ஏற்படுத்தியதால் பட்டணங்களிலோ, கிராமங் களிலோ உள்ள செல்வாக்குள்ளவர்கள் ஒன்று சேராதபடி தேர்தல்களில் நின்று போட்டிபோட்டு ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு ஒற்றுமை இல்லாமல்
ஊர் இரண்டுபட்டிருப்பதற்கு ஒரு அனுகூலமாகிவிட்டது. இவற்றைத்தவிர, இந்தத் தேர்தல்களினாலோ ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெறுவதினாலோ தேசத்திற்கு ஒருவித நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகையினால் ஓட்டர்களாயிருப்பவர்கள் தாங்கள் ஓட்டுச்செய்யும்போது பொது நன்மை செய்வதற்குரியவர்கள் யார் என்று தேடிக்கொண்டு அர்த்தமில்லாது கஷ்டப்படுவதைவிட இந்தப்பதவியை வகிப்பதற்கு - அந்தஸ்து உடையவர். எவர், அருகதை உடையவர் எவர், பாத்தியம் உடையவர் எவர் என்பதை யோசித்து அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ளுவார்களே ஆனால் ஓட்டர்கள். தங்கள் கடமையைச் செய்தவர்களாவார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 06.09.1925
குடி அரசு - 1925 212
யலநான் திருடண் ஒருநான் அகபய்படூணாண்
சுயராஜ்யக் கட்சியாரின் நிலை நாளுக்கு நாள் கேவலமாகி வரு வதைப் பொது மக்கள் நன்கு அறிந்து வருகின்றனர். சுயராஜ்யக் கட்சியினர். அரசாங்கத்தோடு உறவாடும் எண்ணத்தோடுதான் தங் கட்சியைத் தோற்று வித்தார் என்பதின் உண்மை இப்பொழுது வெளியாகிவிட்டது. முதலில் சட்டசபையில் புகுந்து மானத்தை வில்லாய் வளைத்துவிடப் போவதாகக் கூறிய இப்புலிகள் அரசாங்கத்தோடுக் கட்டிக் குலாவ முற்பட்டு விட்டனர். இவர்களால் தேசத்தில் கட்சிபேதங்களும், உலக சிரேஷ்டர் எம்பெருமான்
காந்தி அடிகளின் தூய இயக்கத்திற்கு அழிவுந்தான் ஏற்பட்டதே அன்றி வேறல்ல. இரண்டாண்டிற்கு முன் தேசமிருந்த நிலையை நன்கறிந்த உண்மையாளரின் மனம் இச் சுயராஜ்யக் கட்சியினரின் செயல்களைக் கண்டு நோகாமலிராது. சிறிது சிறிதாக தம் மனத்தில் கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படையாகவே செய்ய முற்பட்டு விட்டனர். பண்டித நேரு ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றார். ஸ்ரீமான் படேல் இந்திய சட்டசபைக்குத் தலைவரானார். மீண்டும் நேரு, ஸ்ரீமான்கள் கெல்கார், அரங்கசாமி அய்யங்கார் மூவரும் “கோர்ட்டு அவமதிப்பு மசோதாவை”ப் பரிசீலனை செய்ய ஏற்பட்டிருக்கும் கமிட்டியில் அங்கம் பெற்றுள்ளார்கள். இது ஒத்துழைப்பா அல்லது முட்டுக்கட்டையா என்பது எமக்கு விளங்கவில்லை. முட்டுக்கட்டை போடப்போகிறோம் என்று தேச மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்ற இவர்கள் குட்டிக்கரணம் போட ஆரம்பித்து விட்டனர். இன்னும் எத்தனைக் கமிட்டிகள் ஏற்படினும் அதிலும் அங்கம் பெறுவதற்குச் சிறிதும் மறுக்க மாட்டார்கள். மிதவாதிகளும் இதர ஒத்துழைப்புக் கட்சிக்காரர்களும் தங்கள் கட்சிகளின் யோக்கியதைகளைப் பொது மக்களுக்கு வெளிப்படை யாகக் கூறிவிடுகின்றனர். பொது மக்களும் அவர்களின் யோக்கியதையை நன்கறிந்து கொண்டிருக்கின்றனர். சுயராஜ்யக் கட்சியினரோ தங்களுக்
கிருக்கும் மோகத்தை மறைத்து பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். உண்மையை அறியாத பலர் இவர்களது வார்த்தைகளைக் கண்டு மயங்கியும் விடுகின்றனர். இவ்விதமாகப் பொது மக்களை ஏமாற்றி வரும் எக்கட்சி யினரும் ஒருநாள் வீழ்ந்து விடுவார்கள் என்பது திண்ணம். பலநாள் திருடன். ஒருநாள் அகப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பதை சுயராஜ்யக் கட்சியினர். உணர்வார்களா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1925
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கோவைத் தேர்தல்
- சித்திரபுத்திரன்
கோயம்புத்தூர் நகர பரிபாலன சபையின் தேர்தல் முடிந்தது. எட்டுக் கனவான்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். தேர்தல் பிரசாரங்களில் இரண்டு கட்சிகளின் பெயர் சொல்லிக் கொள்ளப்பட்டன. ஒன்று சுயராஜ்யக் கட்சி, மற்றொன்று ஜஸ்டிஸ் கட்சி. சுயராஜ்யக் கட்சிக்கென கோயம்புத்தூர். காங்கிரஸ் நிர்வாகிகள் என்போர் பிரசாரம் செய்தனர். ஜஸ்டிஸ் கட்சிக்காக எவ்விதப் பிரசாரமும் நடைபெறாவிட்டாலும் காங்கிரஸுக்காரர்கள். நடந்துகொண்ட மாதிரியே, ஜஸ்டிஸ் கட்சிக்குப் பிரசாரம் தேவையில்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே இப்பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற கனவான்கள் எவ்விதப் பிரசாரத்தினாலும் பாதகமோ, சாதகமோ அடைய முடியாதவர்கள். இவர்கள் எட்டுப் பேரும் உண்மையில் எவ்வித தனிக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. “அரண்மனை நெல்லுக்குப் பெருச் சாளிகள் சண்டையிட்டுக் கொள்வது போல் ” அநாவசியமாய் சொந்த விரோதங்களையும், சுயநலன்களையும் உத்தேசித்து ஒருவரை ஒருவர்:
திட்டியும், பழி சுமத்தியும் ஆசை தீர்த்துக்கொண்டதல்லாமல் வேறு எவ்வித. பொது நன்மையும் பிரசாரங்களில் தோன்றவில்லை. சுயராஜ்யக் கட்சியின் பேரால் வெற்றி பெற்றதாகச் சொல்லப்படும் மூன்று கனவான்களும் காங்கிரஸ் பிரசாரத்தால்தான் வெற்றி பெற்றனர் என்று சொல்ல முடியாது. ஒரு கனவா
னுக்குப் போட்டியே இல்லை. அவர்தான் ஸ்ரீமான் பழனிச்சாமி செட்டியார். அவர்கள். அவருக்கு யாதொரு பிரசாரமும் தேவையில்லாதபடி அவ்வளவு மிகுதி செல்வாக்கும். ஜனங்களிடம் நம்பிக்கையும் பெற்றவர். அவருக்கு ஜெயம் கிடைக்கும் என்கின்ற உறுதியைக் கொண்டே அவரை சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர் என்று விளம்பரம் செய்துவிட்டனர். இரண்டாவதாக, சுயராஜ்யக் கட்சியின் பெயரால் வெற்றிபெற்றவர் என்று சொல்லப்படுபவர்: ஸ்ரீமான் சி.எம்.ராமச்சந்திர செட்டியார். இவருக்கு காங்கிரஸ்காரர்களின் பிரசாரமே கொஞ்சமும் தேவையில்லாமலிருந்ததோடு காங்கிரஸ் பிரசாரம் தமக்கு ஏதாவது தோல்வியை உண்டாக்கிவிடுமோ என்கிற பயத்தால் காங்கிரஸ் பிரசாரகர்கள் தமது வார்டுக்குள் வரக்கூடாதென்று கண்டிப்பான உத்திரவு போட்டுவிட்டார். தாமும் கொஞ்சமும் இப்பிரசாரங்களில் கலந்து கொள்ளவே இல்லை. ஸ்ரீமான் செட்டியார் அவர்களின் செல்வாக்கும்.
குடி அரசு - 1925 214
பொதுநல சேவையும், தமிழுக்காகவும், மதுவிலக்குக்காகவும் மற்றும் பொது நலத்துக்காகவும் சேவை செய்து வருவது காங்கிரஸ் நற்சாட்சிப் பத்திரத்தை விட எவ்வளவோ மடங்கு மேலானது.
மூன்றாவது கனவான் ஸ்ரீமான் குப்புச்சாமி நாயுடு அவர்கள். இவர்: வெற்றியைப் பற்றியும் காங்கிரஸ்காரர்களின் பிரசாரத்தினால்தான் வெற்றி பெற்றார் எனப் பெருமை பாராட்டிக் கொள்ளமுடியாது. ஸ்ரீமான் நாயுடு அவர்கள் வெகு காலமாகவே காங்கிரஸ் அபிமானியாகவும் பொது நல ஊக்க முள்ளவராகவும் இருந்து வந்திருக்கிறார். மற்றும் பல காரணங்களாலும் ஸ்ரீமான் நாயுடு அவர்களின் வெற்றிக்குக் காங்கிரஸ்காரர்கள் காரணமல்ல வென்று காங்கிரஸ்காரர்களுக்கே தெரியும். இம்மூன்று கனவான்களும் நிச்சயமாய் வெற்றி பெறுவார்கள் என்கிற எண்ணத்தைக் கொண்டே சுயராஜ்யக் கட்சியின் ஜாப்தாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நிற்க , காங்
கிரஸ் பிரசாரகர்களுக்கு விரோதமாய் வெற்றி பெற்ற கனவான்கள் ஐவர். இவர்களில் முதலாவதவர் ஸ்ரீமான் சி.வி.சுப்பையா செட்டியார் அவர்கள். இவர் வெற்றிக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் பிரசாரத்தின் போக்குதான். இவருக்கு எதிரிடையாக நின்றவரும், காங்கிரஸ் அபிமானியும் பொதுநல ஊக்கமும் அவர் வார்டில் நல்ல செல்வாக்கும் உள்ளவர். முன்பு கவுன்சில ராகவுமிருந்தவர். இவர் வெற்றி அடைந்திருக்க வேண்டியது தான். அப்படி யிருக்க அதிகப்படியான ஓட்டுகளால் தோல்வி அடையக் காரணம் காங்கிரஸ். பிரசாரத்தின் ஊழலானது ஜனங்களின் மனதை அவ்வளவு தூரம் மாற்றி விட்டது. காங்கிரஸ் பிரசாரம் இல்லாதிருந்தால் இவர் வெற்றியடையப் போது மான சவுகரியம் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் ஒரு
ஸ்தாபனத்திற்கு இரண்டு பேர் நின்றால் ஒருவருக்குத்தான் வெற்றி கிடைக்கும்.
அடுத்தபடியாக, காங்கிரஸ் பிரசாரத்திற்கு விரோதமாக வெற்றி பெற்றவர் ஸ்ரீமான் வி.எஸ். செங்கோட்டய்யா அவர்கள். இவருடைய வெற்றி யைப்பற்றி கோயம்புத்தூர் ஜில்லாவிலேயே எவரும் பொறாமைப்பட மாட்டார்கள். இவர் காங்கிரஸ் அபிமானி. காங்கிரஸிற்கும் பொருள் உதவி வந்திருக்கிறார். கதர் உற்பத்திக்கு சென்னிமலையில் எவ்வளவோ ஏற்பாடு. செய்தார். மற்ற பொது நன்மையான விஷயங்களுக்கும் எவ்வளவோ தாராள
மாகப் பொருள் உதவி செய்து வருகிறார். பொது நன்மைக்குத் தாராளமாகப் பொருள் உதவி செய்வதில் கோயம்புத்தூருக்குள் ஸ்ரீமான் சென்னிமலை க.கிருஷ்ணன் செட்டியாருக்கு அடுத்தாற்போல் ஸ்ரீமான் செங்கோட்டய்யா அவர்களைத்தான் சொல்ல வேண்டும். இவர் கோயம்புத்தூர் பிராமணர் களுக்கும் நல்லவராக நடந்துகொண்டு வருபவர். (ஆனால் இந்தத் தேர்தலில் வெகு பிராமணர்கள் இவருக்கு வாக்குத்தத்தம் செய்தபடி ஓட்டுச்செய்ய வில்லையெனச் சொல்லப்படுகிறது. இது மெய்யானால் கூட இதில் ஒன்றும். அதிசயமில்லை)
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மூன்றாவதாக காங்கிரஸ் பிரசாரத்திற்கு விரோதமாய் வெற்றி பெற்ற வர்ஸ்ரீமான் லெட்சுமணத்தேவர் அவர்கள்.அவருடைய வார்டில் அவர்கள். வகுப்பைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையான ஓட்டர்களானதால் அவ்வகுப்பைச் சேர்ந்தவர்தான் வரமுடியும். இதுபோலவே ஒவ்வொரு வார்டிலும் பெரும்பான்மையான ஓட்டர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர். களோ அவர்கள்தான் எப்பொழுதும் வரவேண்டுமென்று விரும்புகிறோம். இவர் பழைய கவுன்சிலரெனவே தெரிகிறது.
நான்காவது ஐந்தாவதாக வெற்றிபெற்றவர்கள் ஸ்ரீமான்கள் அரி நாராயண பிள்ளை அவர்களும் கேசவப்பிள்ளை அவர்களும் ஆவார்கள். இவர்கள் பழைய கவுன்சிலர்களெனத் தெரிகிறது. ஆகவே இரு கட்சியின் பெயரால் வெற்றி பெற்ற எட்டுக் கனவான்களும் உண்மையில் எத் தனிக் கட்சியையும் சேர்ந்தவர்களல்லர். ஆதலால் அவர்களின் வெற்றி எந்தக் கட்சிக்கும் தோல்வியுமில்லை, வெற்றியுமில்லை.நகர பரிபாலனசபைக்கும் லாபமுமில்லை. காங்கிரஸிற்குச் சிறிது கெட்ட பெயர் ஏற்பட்டதேயன்றி பிரமாதமாக ஒன்றும் முழுகிப்போய்விடவில்லை. காங்கிரஸின் எதிர்கால நிலைமைக்கு தற்காலப் போக்குகள் பலவிதத்திலும் ஆபத்தாகத்தான் இருந்து வருகின்றன. ஆகையால் இதனாலேயே காங்கிரஸ் முழுகிப் போய்விட்ட தென்று சொல்லுவதற்கும் இடமில்லை. காங்கிரஸின் பெயரால் பிரசாரம் செய்தவர்களுக்கும் ஒன்றும் பெரிய தோல்வி வந்துவிடவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு சிலரை ஆசை தீர வைய வேண்டுமென்பதுதான் அவர்களது விருப்பம்.அதுவும் அவர்களுக்கு நிறை வேறிவிட்டது. அவர்களால் திட்டப்பட்டவர்களுக்கும் ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. யாருக்கும் எவ்வித செல்வாக்கும் குறைந்து விடவு மில்லை. எவரோ நான்குபேர் மேடை மீதேறி ஒருவரைத் தூற்றுவதால் அவருடைய செல்வாக்குக் குறைந்து போகுமானால் அவ்விதச் செல்வாக்கு இவர்களுக்கிருந்தும் பயன் என்ன ? முடிவாக கோயம்புத்தூர் நகர பரிபாலன. சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற எட்டுக் கனவான்களையும் நாம் பாராட்டுகின்றோம். அவர்களைத் தேர்ந்தெடுத்த ஓட்டர்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 06.09.1925
குடி அரசு - 1925 216
கும்பகோணம் பிராமணர்கணிண் தேர்தல் ரம்
கும்பகோணம் முனிசிபல் தேர்தலுக்கு காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சி பெயரைச் சொல்லிக்கொண்டு இரண்டு அய்யர்களும் ஒரு அய்யங்காரும் ஒரு சாஸ்திரியாரும் அபேட்சகர்களாய் நிற்கிறார்கள். காங்கிரஸ் வேலைகள் நடந்த காலத்தில் இவர்கள் எங்கு இருந்தவர்கள்? காங்கிரசுக்கு இவர்கள். என்ன செய்தவர்கள்? காங்கிரஸ் கொள்கையில் எதெதை இவர்கள் ஒப்புக் கொண்டவர்கள்? கும்பகோணம் பொது ஜனங்களும் காங்கிரஸ் தொண்டர். களும் செய்த காங்கிரஸ் கைங்கர்யங்கள் இந்த அய்யர்கள் அய்யங்கார்கள் சாஸ்திரிகள் முனிசிபாலிட்டியில் ஸ்தானம் பெறத்தான் உதவவேண்டுமா? தீண்டாமை விலக்கைப்பற்றியும், குருகுலத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்க் காமை விலக்கைப் பற்றியும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு செய்த பிரசாரத்தின் பலனாய் காங்கிரஸ் கமிட்டிக்கு நூல் சந்தாவே அனுப்பக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்ட கூட்டத்தாருக்கும், காங்கிரஸ் பதவியிலிருந்து ராஜீனாமாக் கொடுத்து ஓடிப்போன கூட்டத்தாருக்கும் முனிசிபல் தேர்தல் வந்தவுடன் தங்கள் மானம் வெட்கத்தை யெல்லாம் விட்டு காங்கிரஸ் காரர்களின் தியாகத்தின் மறைவில் ஸ்தானம் பெற ஆசைப்பட்டு, காங்கிரஸ் பேரால் ஸ்தானம் பெற முன் வந்து விட்டால் இந்த சுயமரியாதை இல்லாத வகுப்புள்ள நாட்டுக்கு எப்படி சுயராஜ்யம் கிடைக்கும்? கும்பகோணம் பிராமணரல்லாதார், கும்பகோணம் பிராமணர்களாகிய அய்யர் அய்யங்கார் சாஸ்திரிகளின் மாய வலையில் சிக்காமல், போலிக் கட்சிக்காரர் களை உதரித் தள்ளி, உண்மையாய் அந்த ஸ்தானங்கள் பெற யோக்கியதையும் பாத்தியமும் உடையவர்களுக்கு தங்கள் ஓட்டுகளை கொடுக்கவேண்டும். பிராமண ரல்லாதார் புத்தியில்லாதவர்கள் என்றும், மானம் ரோஷம், ஜாதி அபிமானம் இல்லாதவர்கள் என்றும், பிராமணர்கள் நினைப்பதினாலும் வயிற்று ஜீவனத் திற்கும் பொய்க்கீர்த்திக்கும் ஆசைப்பட்ட பிராமணரல்லாதார் சிலர் பிராமணர்கள் பணத்தினாலும் அவர்கள் விளம்பர சவுகரியத்தினாலும் அவர்களுக்கு அடிமைப்பட்டு பிராமணரல்லாதாருக்கு விரோதமாயும் பிராமணர்களுக்கு அனுகூலமாயும் வேண்டிய ஆள்கள் பிராமணரல்லா தாரிலேயே கிடைக்கும் என்கிற தைரியத்தினாலுமே அவர்கள் இந்த தேர்தல்களில் இவ்வளவு தைரியமாய் நிற்கிறார்கள். பிராமணரல்லாதாரே இதை உணருங்கள்!
குடி அரசு - கட்டுரை - 13.09.1925
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தேர்தல்
ய்ரீமான் வாகரானு நாயுடுவின் அயிப்பிராயம்
ஸ்தல ஸ்தாபனங்களின் தேர்தல்கள் விஷயமாக ஸ்ரீமான் வரதராஜலு
நாயுடு பொதுமக்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கும் விதமாக தன்னுடைய கருத்து இன்னதுதான் என்பதைப் பிறர் அறிந்து கொள்ள முடியாதபடி ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக எழுதிவருகிறார். இரண்டொரு விஷயத்தை மாத்திரம் இங்கு எடுத்துக்காட்டுகிறோம். கோயம்
புத்தூர் தேர்தலின்பொழுது காங்கிரஸ் பிரசாரகர் ஒருவர் எழுதிக் கேட்டதற்கு தேர்தல்களில் நின்ற அபேட்சகர்களை அறிந்தோ அறியாமலோ சுயராஜ்யக் கட்சிக்காரருக்காக வேலை செய்தவர்களைப் பாராட்டியும் சுயராஜ்யக் கட்சிக்காரருக்கே வெற்றி கிடைக்கவேண்டுமென்றும் ஒரு ஆசிர்வாத ஸ்ரீமுகம் அனுப்பினார். அதற்கடுத்தாற்போல் சுயராஜ்யக் கட்சிக்கு விரோத மாக இருந்த ஒருவர் ஸ்ரீமான் நாயுடுவுக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். அந்த விண்ணப்பத்திற்கு மனதிரங்கி அடியிற் கண்டபடி மீண்டும் ஒரு ஸ்ரீமுகம் அனுப்பினார். “சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்கு உள்ளே சென்று அதை ஓடவிடாது தடுக்கவே முன்னால் கைப்பற்றுவதாகச் சொன்னார்கள். சட்ட சபைகளைத் தவிர ஸ்தல ஸ்தாபனங்களில் ஒற்றுழை யாமைக்கோ, முட்டுக் கட்டைக்கோ வழியில்லை. முனிசிபாலிடிகளில் நகர: ஜனங்களுக்கு எந்த எந்த விதத்தில் நன்மை செய்யலாம் என்பதை யோசித்துச் செய்வதே அங்கத்தினர் களின் வேலையாயிருக்கின்றதே யொழிய அங்கு
எதிர்த்துப் போராடுவதற்கு அதிகார வர்க்கம் அங்கு இல்லை. இதனால் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டும் அவருக்கு ஓட்டுக் கொடுத்து விடக்கூடாது” என்றும் முடிவில் “அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள்.
ஓட்டுக் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதியிருக்கிறார். மீண்டும் நான்கு நாட்களுக்குள்ளாக திருச்சியில் கூடிய கூட்டத்திற்குச் செல்லமுடியாதவராய், சாதி பேதத்தைக் கவனியாமல் காங்கிரஸ்காரர்களையே தெரிந்தெடுக்க வேண்டுமென்று அக்கூட்டத்திலிருந்த ஜனங்களுக்கு புத்திமதி கூறி ஒரு செய்தி அனுப்பியதாக இந்துப் பத்திரிகை யிலிருந்து தெரியவருகிறது. பின்னும் இரண்டுநாளில் இந்த விஷயத்தில் தங்களுடைய அபிப்பிராய மென்ன என்று நேரில் கேட்ட இரு கனவான்களுக்கு “ஸ்தல ஸ்தாபனங்களின்
குடி அரசு - 1925 218
தேர்தலுக்கு நகர சபையில் வேலை செய்யத் தகுந்த யோக்கியதை உள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் நிற்பார்களானால் கட்சிப் போக்கு களை கவனியாமல் பிராமணரல்லாதாருக்குத் தான் ஓட்டுச் செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.
செப்டம்பர் 6-ந்தேதி தமிழ்நாடு பத்திரிகையில் “ஸ்ரீமான் நாயுடுவின் போர் முழக்கம் என்கிற தலையங்கத்தின் கீழ் பாம்பன், ராமேச்வரம் முதலிய இடங்களில் செய்த பிரசங்கத்தின் சாரமாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பதில் “சட்டசபைக்கோ, ஸ்தல ஸ்தாபன போர்டுக்கோ தான் போகப்போவ தில்லை யென்றும், ஆனால், காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிரஸ் பெயரைச் சொல்லித் திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்றும்படி நான் விடப்போவ தில்லை” என்றும், தான் எந்தக் கட்சியிலும் சேராமலிருப்பதற்கு இதுவே
முதல் காரணம் என்றும் இவர் கூறியதாகக் காணப்படுகிறது. மறுபடியும் ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி தேர்தல் விஷயமாகத் தனது அபிப்பிராயத்தைக் கேட்டதற்கு காங்கிரஸ்காரர்களுக்கே ஓட்டுக்கொடுக்கவேண்டுமென்று கூறியுள்ளார்.
இவ்விதமான கொள்கைகளோ, அபிப்பிராயங்களோ தேர்தல்கள் விஷயமாய்த் தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், கொடுமை களுக்கும் எவ்வளவு தூரம் உதவியாயிருக்கின்றதென்பதை ஸ்ரீமான் நாயுடு அறிய வேண்டுமாய் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 13.09.1925
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யோர்
சயரான்யா'” எண்று கொல்லப்ப௫ம் பிராமணப்
மத்திரிகை
சுயராஜ்யா என்ற போலிப் பெயரை அணிந்து பிராமணர்களின்
சுயநலத் திற்கும் பிராமணரல்லாதார் சமுகத்திற்கு துரோகம் செய்வதற்குமான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சில பிராமணர்களால் நடத்தப் பட்டுவரும் ஒரு சென்னை தினசரிப் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சமாக தனது விஷத்தை நாலுங் கக்கிக்கொண்டே வருகிறது. அதாவது இம் 15 109256 வெளியான சுயராஜ்யா பத்திரிகையில் ஸ்ரீமான் ஈ.வெராமசாமி நாயக்கர் சில சென்னை ஓட்டர்கள் சுயராஜ்யக் கட்சியினரின் தூண்டுகோளின்படி சென்னைக்குச்சென்று ஓட்டர்கள் மகாநாட்டில் பேசிய பேச்சை அரைகுறை யாக மனதில் வைத்துக்கொண்டு மின்னொளி என்ற தலைப்பின் கீழ் சில வார்த்தைகள் காணப்படுகின்றன. “காவாலித்தனம்” தலை மிஞ்சுகிறது.
நகரசபைகளைக் கைப்பற்ற காங்கிரஸ் முயலுமிடங்களிலெல்லாம். எதிர்க்கட்சியினர் குறும்பு பண்ணுகின்றனர்.
தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்கிக்கொள்வோம் என்கிறார்கள்.
வகுப்பு வேற்றுமைப் பேயைக் கிளப்பி விடுகின்றனர்.
நம்மவரிலே பலர் குட்டிக்கரணம் போடுகின்றனர்.
சின்னாட்களுக்கு முன் மகா தீவிர ஒத்துழையாதாரராகவிருந்தோர் இப்பொழுது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் மயங்கிக் கிடக் கின்றனர்.
சுதந்திரப்போரில் முன்னணியினின்று முதுகு காட்டி ஓடுவோம். என்கின்றனர்.
காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சிக்குப் போட்டியான நண்பர்களைத் தயாரிப் போம். ஆதரிப்போம் என்கின்றனர். சென்னையிலே பிள்ளையார் வேஷம் கிளம்பியுள்ளது. கும்ப கோணத்தில் மூலவேஷம் தோன்றப் போகின்றது. குட்டிக்கரணம் போட்ட
குடி அரசு - 1925 220
பானர்ஜி, வாட்சா முதலியோரின் கதியை அன்னார் எண்ணிப்பார்ப்பரோ என்றும் எழுதியிருக்கின்றது.
ஆனால் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் சென்னையில் செய்த பிரசங் கத்தை இப்பத்திரிகையில் வெளியிட ஆண்மைத் தனம் இல்லாமல் மறைத்து வைத்துவிட்டு, ஆடு நனைகிறதென ஓநாய் அழுவதுபோல் நம் தலைக்கு கொள்ளி விலைக்கு வாங்கிக் கொண்டதாகவும், வகுப்பு வேற்றுமையைக் கிளப்பி விட்டுவிட்டதாகவும் மிகவும் பரிதாபப்பட்டு ஓலமிடுகின்றது. முதலாவது, இப்பத்திரிகைக்கு வகுப்பு வேற்றுமை இருக்கிறதா இல்லையா? ஒரே வார்டிற்கு நிற்கும் ஒரு பிராமணருடைய தேர்தலுக்காக கூடிய கூட்டத்தின் நடவடிக்கைகளை தாராளமாய் வெளிப்படுத்தியுள்ளது. மற்றவர்களுடைய கூட்டத்தைப் பற்றியோ நடவடிக்கைகளைப் பற்றியோ தங்கள் சாதிக்கோ தங்களைத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கோ விரோதமாயிருந்தால் அவற் றைப் பிரசுரிப்பதே இல்லை. இது சாதித் துவேஷ
மும் வகுப்புதுவேஷமும் அல்லவா? கள்ளுக்குடித்தாலும், மாட்டுமாமிசம் சாப்பிட்டாலும் நான் பிராமணன், மற்றவர்கள் அப்படிச் செய்யாவிட்டாலும் அவர் சூத்திரர், தொடக்கூடாதவர் என்று ஒருவர் சொல்வாரானால் இது
வகுப்பு வேற்றுமையா அல்லவா? கோவிலுக்குப் போகும்பொழுதும் குளத்திற்குப் போகும் பொழுதும் குஷ்டரோகியாகவிருந்தாலும், வியபசாரத்
தில் ஜீவிப்பவர்களாயிருந்தாலும் தாங்கள் தான் உள்ளே போக வேண்டும் மற்றவர்கள் உத்தமர்களானாலும், வெளியில்தானிருக்கவேண்டும் மதில் பக்கங்கூட நடக்கக்கூடாது என்று சொன்னால் இது வகுப்பித்துவேஷமா அல்லவா? வியபசாரத்தனம் செய்தாலும், வியபசாரத்தனத்திற்குத் தரகு வாங்கினாலும் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்றும் சொல்லுவது வகுப்புத் துவேஷமா அல்லவா?
திருடினாலும், மோசம் செய்தாலும், லஞ்சம் வாங்கினாலும் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் மேற்சொன்னவற்றை செய்யா திருந்தாலும்
சூத்திரர், தீண்டக்கூடாதவர் என்றால் இது வகுப்புத் துவேஷமா அல்லவா? தாங்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு மூன்றுபேர் இருந்தாலும் மற்றவர்கள் தொன்னூற்றேழு பேர் இருந்தாலும் தாங்கள் தான் எல்லாப் பதவி களையும், எல்லா ஸ்தானங்களையும், எல்லா உத்தியோகங்களையும் அடைய வேண்டும் என்று பேராசைப்பட்டுக் கொண்டு மற்றவர்கள் எவ்வளவு எண்ணிக் கையில் அதிகமும் யோக்கியர்களாயு மிருந்தாலும் அவர்கள் அதை அடையக் கூடாதென்ற கெட்ட எண்ணத்தின் பேரில் பிராமணரல்லாதாரிலேயே சில பொக்கிகளையும் வயிறு வளர்க்கவோ உத்தியோகம் பெறவோ என்ன வேண்டு மானாலும் செய்யத் தயாராக இருப்பவர்களையும் பத்திரிகை விளம்பரத்தினால் வாழுபவர்களையும் பணமும் பத்திரிகையில் இடமுங்கொடுத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டு அதற்குத் தகுந்தவிதமாக ஒரு சூழ்ச்சியான கட்சியையும் ஏற்படுத்திக்கொண்டு ஒரு பெரிய வகுப்பாருக்குத் துரோகமாய் இழிவுப் பிரசாரங்கள் செய்வது வகுப்புத்
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
துவேஷமா இல்லையா? இந்நிலையிலிருக்கும் வகுப்புத் துவேஷிகள் மற்றவர்கள் வகுப்புவாரி உரிமை கேட்பதையும், கொடுக்கிறேன் என்பதையும் வகுப்புத் துவேஷம் என்று சொல்வார்களானால் இவர்களை வைத்துக் கொண்டு ஒருதேசம் எவ்வாறு முன்னேற்றமடையும்? இந்து, சுதேசமித்திரன் முதலிய பிராமணப்பத்திரிகைகள் பிராமணரல்லாதார் விஷயத்திலேயும் தேச விடுதலை விஷயத்திலேயும் யோக்கியமாய் நடக்க வில்லையென்றும், யோக்கியமாய் நடப்பதற்கு ஒரு பத்திரிகை வேண்டுமென் றும் நினைத்து பிராமணரல்லாதார் பணமே பெரும்பான்மையாகவிருந்த காங்கிரசிலிருந்து
ரூபாய் பதினாயிரம் கடனும் கொடுத்து பிராமணரல்லாதா ரிடமே பெரும் பான்மையான பணத்தைப் பங்காய் வசூல் செய்து கொடுத்து நடத்தச்செய்த சுயராஜ்யா என்னுமொரு தமிழ்ப் பத்திரிகை இம்மாதிரி விசு வாசத் துரோகமாய் நடந்தால் பிராமணரல்லாதாருக்கு இவ்வித பிராமணர் களிடத்தில் எப்படி அவநம்பிக்கை உண்டாகாமல் இருக்கும்? வகுப்புவாரிப் பிரதிநிதித்
துவம் கேட்கமுடியாமல் எப்படி இருக்கமுடியும்? இதனாலேயே சுயராஜ்யா எழுதுகிறபடி காவாலித்தனமும் விசுவாசத் துரோகமும் மிஞ்சிப் போய் விட்டதென்றும் (இதற்குப் பணம் கொடுத்ததால் பிராமணரல்லாதார்! தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்கிக் கொண்டது வாஸ்தவம்தான் என்றும் ஒப்புக்கொள்வோம். ஆண்மைத்தனமும் சுத்த இரத்தோட்டமும் உள்ள கூட்டத்தால் அப்பத்திரிகை எழுதப்படுமானால் ஒருவர் கூறியவற்றையும்
எழுதியவற்றையும் தமது பத்திரிகையில் எழுதி அதற்கு மறுப்பு எழுதி பொது ஜனங்களின் அப்பிராயத்திற்கு விடுவது யோக்கியத்தனமாகும். அப்படிக் கின்றி நீச்சத்தன்மையும் மோச இரத்தமும் ஓடுகிறவர்களால் எழுதப்படு வதனால் உண்மையான விஷயங்களை விட்டுவிட்டு இழிவுப் பிரசாரம் செய்யும் அயோக்கியத்தனத்தைக் கைக் கொள்ளவேண்டியதைத் தவிர வேறு
மார்க்கம் இல்லை. சென்னையில் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் இரண்டு தினங்கள் ஓட்டர்கள் மகாநாட்டில் பேசியவற்றில் ஒருவரிகூட தமது பத்திரிகையில் போடாமல் பொதுஜனங்கள் இதை அறிந்துவிட்டால் தங்களுடைய யோக்கியதை வெளியாகிவிடுமே என்று மறைத்து விட்ட தல்லாமல் ஈனத்தனமாய் இழிகுலத்தோர் ஜாடை பேசுவதுபோல் குட்டிக் கரணம் போட்டுவிட்டாரென்றும், முதுகுகாட்டி ஓடி விட்டார் என்றும் எழுதி யிருப்பது இவர்களைப் பற்றி உலகத்தார் எண்ணி யிருக்கும் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. மானம் உள்ள ஆயிரம் வீரரோடு ஒரு ஒத்தைவீரன் சண்டை செய்யமுடியும். மானமில்லாத ஒரு கீழ்மகனோடு ஆயிரம் வீரர்களா
னாலும் சண்டை செய்ய முடியாது. உண்மையானவர்களும், யோக்கியமான வர்களும் எக்குலத்தவராயினும் நமக்கு தெய்வம் போன்றவர் களே: ஆவார்கள். அஃதின்றி அதற்கு எதிரிடையான மற்றவர்கள் நமது எதிரியே ஆவார்கள். நிற்க, மற்ற சில பிராமணப் பத்திரிகைகளும் மேற்கண்ட குணங் களோடு மாறு பெயர்களை வைத்துக் கொண்டு மறைமுகமாய்ப் பேடி யுத்தம் செய்ய ஆரம்பம் செய்து விட்டன. இவைகளையும், இவைபோன்ற இன்னும்
குடி அரசு - 1925 222
பல யுத்தங்களையும் எதிர்பார்த்தே ராஜீய உலகத்திலும், ராஜதந்திர உலகத்திலும் கடுகளவு இடம் நமக்கு இல்லாமற் போயினும் உண்மையான பரோபகாரத் தொண்டு உலகத்தில் கடுகளவு இடம் கிடைத்தாலும் போதுமென்
கின்ற உறுதியின் பேரிலேயே நாமும் போருக்கு ஆயத்தமாகி விட்டோம். உண்மைக்கு யோக்கியதை இருக்கின்றதா இல்லையா என்பதை ஒரு கை பார்த்தே தீர்க்கப் போகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.09.1925.
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கண்ணியமற்ற ஒத்துழைப்பு
மிதவாதக் கட்சியினரும் ஜஸ்டிஸ் கட்சியினரும் வெளிப்படையாக. அரசாங்கத்தினோடு ஒத்துழைத்து வருகின்றனர். அவர்களது கொள்கை: களில் யாம் அபிப்பிராயபேதம் கொள்ளினும் அவர்களது ஒத்துழைப்பு எண்ணம் கண்ணியமாக வெளிப்படையாகவுள்ளது என்றே சொல்லுவோம். அவர்கள் சுயராஜ்யக்கட்சியினரைப் போல் ஒத்துழையாப் போர்வையைத்
தாங்கி ஒத்து ழைக்க முற்படவில்லை. அவர்கள் எப்பொழுதும் பகிரங்கமாகவே ஒத்து ழைத்து வருகின்றனர். சுயராஜ்யக் கட்சியினர் அப்படி அல்லாது தேச மக்களி டம் பொய்யைக்கூறி ஓட்டுப் பெற்றுத் தங்களது பிரதிநிதித்துவத்தை மாறான வழிகளில், காங்கிரஸின் கொள்கைகளுக்கே விரோதமாக உபயோகித்து வருகின்றனர். சட்டசபைகளுக்குச் செல்வதினால் ஒத்துழையாமையை இன்னும் தீவிரமாக அங்கு அனுஷ்டிக்க முடியும் எனக்கூறிய இவர்கள் காங்கிரஸிற்கே உலை வைத்து விட்டனர். ஒத்துழை யாமை என்னும் பதம்கூட இப்புண்ணிய சீலர்களின் சூழ்ச்சிகளால் மறைந்துவிட்டது. சுயராஜ்யக் கட்சியினர் பலம் உடையவர்கள் என்று அரசாங்கத்தினர் கருதியிருப்பார் களாயின் இவர்கள் வேண்டுவதெல்லாம் தாங்களாகவே வலுவில் கொடுக்க முன் வந்திருப்பார்கள். இவர்களது செயல்களினால் இவர்கள் நம்முடன் ஒத்துழைப் பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என அரசாங்கத்தினர் கருதியதால் அரசப் பிரதிநிதி ரீடிங் பிரபுவும் “நீங்கள் மாண்ட்போர்டு சீர்திருத்தத்தை ஒழுங்குடன் பரீட்சித்துப் பார்த்தும் எங்களுடன் ஒத்துழைப்பும் கொள்வீர் களாயின் நாங்கள். உங்களுக்கு வேண்டுவன செய்வதைப் பற்றி யோசிப்போம்” எனக்
கூறிவிட்டார். ஒத்துழையா இயக்கத்தைக் கண்டு பயந்தரிடிங் பிரபு இவ்விதம் லட்சியமில்லாது நம்மைச் சிறிதும் மதியாது பேசுவதற்குக் காரணம் சுயராஜ்யக் கட்சியினர் தான் என்பதில் ஐயம் யாது? ஒத்துழையா இயக்கத்திற்குக் கூற்றுவனாக விளங்கியவர் இச்சுயராஜ்யக் கட்சியினரே என்பதை யாம் பன்னிப் பன்னிக்கம் கூற வேண்டு வதில்லை. சுயராஜ்யக்கட்சியின் மூல புருஷராக விளங்கிய ஸ்ரீமான் பட்டேல் இந்தியா சட்ட சபையின் தலைவர். பதவி ஏற்றுக்கொண்டதைப் பற்றியும், பண்டித நேரு ஸ்ரீமான்கள் அரங்கசாமி அய்யங்கார், கெல்கார் இவர்கள் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகளில் அங்கம் பெற்றதைப் பற்றியும் முன்னர் எழுதியுள்ளோம். நாளாக நாளாக இன்னும் கேவலமாகி வருகின்றனர். அரசாங்கத்தினரைக் கெஞ்சவும் முற்பட்டுவிட்டனர்.
குடி அரசு - 1925 224
பண்டித நேரு அவர்கள் திங்கட்கிழமை கூடிய இந்திய சட்டசபைக் கூட்டத்தில் கனம் முட்டிமன் அரசியல் சம்மந்தமாக கொண்டுவந்த ஒரு
தீர்மானத்திற்கு ஓர் திருத்தப் பிரேரணை ஒன்று கொண்டுவந்தார். அதுவும் நிறைவேறியது. இதில் இந்தியாவுக்கு வேண்டும் தேவைகளை யெல்லாம் கூறியுள்ளாராம். இப்பிரேரணையில் இவர் என்ன வேண்டுமென அரசாங்கத் தினரை வேண்டுகின்றாரோ அதற்கும் மிதவாதிகள் ஜஸ்டிஸ் கட்சியினர். விரும்புவதற்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாக எமக்கு விளங்க வில்லை. சுயராஜ்யக் கட்சியினரின் தேவை இவ்வளவுதான் என்றால் இத் தேவைகளையெல்லாம் முன்னரே அரசாங்கத்தினரின் வாயால் பெற்றி ருக்கலாம். காந்தி அடிகள் ஒத்துழையா இயக்கம் ஆரம்பித்திருக்க வேண்டு வதில்லை. பல தியாகிகள் சிறைக்குச் சென்றிருக்கவேண்டுவதில்லை. வக்கீல்
கள் தத்தம் தொழிலை நிறுத்தித் தவிக்கவேண்டுவதில்லை. வாலிபர்கள். பள்ளியை நிறுத்தியிருக்கவேண்டுவதில்லை. இவைகளையெல்லாம் விழலுக் கிறைத்த நீர்போல் ஆக்கிவிட்டனர். காந்தி அடிகளை பள்ளத்தில் இறக்கி விட்டனர். 1921-ம் ஆண்டில் சர். சங்கரன் நாயர் தலைமையின் கீழ் பம்பாயில் கூடிய சர்வகட்சி மகாநாட்டின் பொழுதாவது தங்களது விருப்பம் அரசாங்கத் தாரை அண்டிக் கெஞ்சுவது எனத் தெரிவித்திருப்பார்களாயின் அரசாங்கத்
தினர் வேண்டுவன செய்வதாகக் கூறியிருப்பார்கள். அப்பொழுதெல்லாம். தங்களது எண்ணங்களை மறைத்து மாறுவேடம் தாங்கிய இவர்கள். இப்பொழுது தங்களது உண்மை உருவத்தைக் காண்பித்து விட்டார்கள். இவர்களால் காந்தி அடி களுக்கு, காங்கிரஸிற்கு தியாகம் செய்த வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள அவ மானத் திற்கு ஓர் அளவில்லை. இவர்கள் இந்தியாவின் விடுதலைக்கே பங்கம் வைத்த வர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இக் கட்சியினரை தேச விடுதலைக் குழைப்பவர்கள் என்று சொல்லி மித வாதிகளைவிடவோ, ஜஸ்டிஸ் கட்சியினரை விடவோ மேலென்று கூறுவது எவ்வாறு ஏற்றதாகும்? இவர்களை உண்மைக்கு மாறானவர்கள் என்றேதான் சொல்லவேண்டும். இனியாவது பொதுமக்கள் இவர்கள் மற்றக்கட்சியினரை: விட மேலானவர்கள் அல்லது தேசபக்தி மிகுந்த வர்கள் எனவெண்ணி ஏமாறாதிருப்பார்களா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1925.
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கஞ்சீவாம் மகாநாட்டுத் தனைவர்
கஞ்சீவரத்தில் நடைபெறப்போகும் தமிழ்மாகாண மகாநாட்டிற்கு தலைவர் தெரிந்தெடுப்பதில் பலவிதமான அபிப்பிராயங்களும் வதந்திகளும். உலவி வருகின்றன. முதன் முதலாக ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவை யாம் சிபார்சு செய்தோம். அதை அவர் மறுத்துவிட்டதோடு நில்லாமல் பொது ஜனங்களுக்கு, தன்னை யாரும் சிபார்சு செய்யக்கூடாது என புத்திமதியும் கூறிவிட்டார். இப்படி அவர் புத்திமதி கூறியது தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. ஸ்ரீமான் தங்கப் பெருமாள்பிள்ளை அவர்களைத் தலைவராகத் தெரிந்தெடுக்கக்கூடுமென்று வதந்தி உலவுவதாக ஜஸ்டிஸ் பத்திரிகையும், திராவிடன் பத்திரிகையும் எழுதியதோடு அதற்குச் சில காரணங்களையும் கூறுகின்றன. இப்படி அப்பத்திரிகைகள் எழுதுவதற்குக் காரணம் ஸ்ரீமான் தங்கப்பெருமாள். பிள்ளை அவர்களை இப்பத்திரிகைகள் நன்கு அறிந்து கொள்ளாததுதான் என்று சொல்லுவோம். ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்கள் குருகுலப் போராட்டத்தில் ஸ்ரீமான் அய்யரை ஆதரித்தார் என்னும்
கூற்றுக்குச் சிறிதும் ஆதாரமில்லை. தமிழ்நாட்டிலுள்ள எவரையும் விட நாம் அவரிடத்தில் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம். சில பிராமணரல்லாத பெரியோர் என்று சொல்லப் படுகின்றவர்களைப் போல் பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டுகிற குணம் அவரிடம் சிறிதும் கிடையாது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் அவருக்குச் சிறிது அபிப்பிராய பேதம் உண்டென்பதை யாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். அதற்காக பிள்ளை: அவர்களைச்சில பிராமணர்கள் சூழ்ந்து போற்றுவதும் உண்மையே. ஆனால் தம்முடைய அபிப்பிராயம் மற்ற பிராமணரல்லாத தலைவர்கள் என்று சொல்லப்படுவோரில் சிலரைப் போன்று, பிராமணரின் போற்றுதலுக்காக
ஏற்படுத்திக் கொண்டதல்ல. பிராமணரல்லாத தலைவர்கள் என்று சொல்லப் படுவோரிலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி யாதொரு அபிப்பிராயமும் கூறாமல் மவுனம் சாதித்து இரு சாராரையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை திராவிடன், ஜஸ்டிஸ் பத்திரிகைகள் கவனித்தனவா? எவ்வளவோ அனுபவம் பெற்ற போழ்திலும் ஜஸ்டிஸ், திராவிடன் பத்திரிகைகளுக்கு உறுதியான தேச பக்தர்களை: அறிந்துகொள்வதற்குப் போதிய ஆதாரம் இல்லையென்றே சொல்லு வோம்.இதை ஒப்புக்கொள்ளாது அவை மறுக்குமானால் பிராமணப்
குடி அரசு - 1925 226
பத்திரிகைகள் போல் சமயத்திற்கு ஏற்றவிதமாய் “குருட்டுக்கண்ணனை செந்தாமரைக் கண்ணன் என்றும்” சுத்த மதியீனனைத் தத்துவஞானி என்றும், எழுதித் தங் கட்சிக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளுகின்ற இழி குணத்தைத் தாமும் அநுசரிப்பதாகவாவது ஒப்புக்கொள்ளவேண்டும். ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்கள் நமது பத்திரிகையின் துணை ஆசிரியர் பதவியினின்றும் விலகிக் கொண்டதை சில விஷமக்கார நிருபர்களும் பிராமணப் பத்திரிகைகளும் தங்களுக்கு அநுகூல மாய் உபயோகப்படுத்திக் கொள்ளுவதற்காக தப்புக் கற்பனைகள் செய்து விட்டதால் பொதுஜனங்கள் கெட்டெண்ணம் கொண்டு விடமாட்டார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஸ்ரீமான் பிள்ளை அவர்களை அக்கிராச னராக அடையும் பாக்கியம் கஞ்சீவரம் மகாநாட்டிற்கு ஏற்படுமாயின் அதைத் தமிழ் நாட்டின் தவப்பயன் என்றுதான் சொல்லுவோம். ஸ்ரீமான் தங்கப் பெருமாள்பிள்ளை போலும் ஸ்ரீமான் மாய வரம் எஸ்ராமநாதனைப் போலும் தங்கள் அபிப்பிராயங்களை தைரியமாய் வெளியிடும் தலைவர்கள் ஒருவருமில்லை. தாங்கள் நன்கு அறிந்துகொள் ளாத ஒருவரைப் பற்றி தாங்கள் அறிந்த தாக எண்ணி அவசரப்பட்டு புகழ்ந்தோ இகழ்ந்தோ எழுதுவது உண்மைப் பத்திரிகைகளின். கடமை அல்ல என்பதை யாம் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1925
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஊனண்றிப்பழுத்து உண்மையை அறியுங்கள்
சென்ற வாரம் “சுயராஜ்யா” பத்திரிகையின் விஷமப்பிரசாரத்தைக்
குறித்து எழுதியிருந்தோம். இவ்வாரம் “சுதேசமித்திரன்” பத்திரிகையினுடை.
யவும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரினுடையவும் விஷமப் பிரசாரங்களுக்குப்
பதில் எழுதும்படி வந்து விட்டது. சுதேசமித்திரன் பத்திரிகையில் சென்னையில் சுயராஜ்யக்கட்சியாரின் வெற்றியைக் கொண்டாட “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” என்றும் “ வேலியே பயிரை: மேய்கிறது” என்கிற தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கும் பல பொய்களுக்கு
பதில் எழுதாவிட்டாலும் ஈரோட்டில் தனது தம்பி முனிசிபல் சபையில் ஸ்தானம் பெறும்படி செய்வதற்காக காங்கிரஸ் பெயரையும் மகாத்மாவின் பெயரையும் ஸ்ரீ நாயக்கர் உபயோகப்படுத்திக்கொண்டது ஞாபகமில்லையா என்று பெரிய பொய்யை எழுதியிருக்கிறது. முதலாவது ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு தம்பியே கிடையாது. சென்ற வருஷத்தில் நடந்த ஈரோடு முனிசிபல் தேர்தலில் அவர் தமையனார் முனிசிபல் அபேட்சகராய் நிற்கிற காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறார். அவர்: திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்த பொழுது முனிசிபல் தேர்தலுக்கு மூன்று நாட்கள்தானிருந்தன. ஈரோட்டிற்கு வந்த உடனே வேறு கேஸின் பேரில் சென்னைக்கு நாயக்கரைப் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். சென்னையிலிருந்து எலக்ஷனுக்கு முன்தினம் பகல்தான் ஈரோட்டிற்கு வந்து சேர்ந்தார். ஒருசமயம் ஒன்று இரண்டு ஓட்டர்களோடு பேசக்கூடிய சமயம் இருந்திருந்தாலும் மகாத்மாவின் பெயரையும் காங்கி ரஸின் பெயரையும் ஸ்ரீமான் நாயக்கர் பயன்படுத்திக்கொண்டார் எனச்... வேண்டுமென்றே காங்கிரஸின் பெயரால் நிற்பதற்கு வேண்டி வேறு சில அபேட்சகர்கள் வேறு ஒரு எலக்ஷனுக்காக அச்சுப்போட்டு வைத்திருந்த காங்கிரஸ் நிபந்தனைப் பிரசுரங்களையும் கிழித்து எறிந்திருக்கிறார். ஈரோட்டில் காங்கிரஸின் பெயரை முனிசிபல் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்து விடக்கூடாது என்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அடுத்தபடியாக “ஸ்ரீமான் நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” எனத் தலையங்கம் போட்டு வெற்றி கொண்டாடி இருக்கிறார்கள். ஸ்ரீமான் நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லையென்பதை ஒரு சமயம் ஒப்புக்கொள்வ தானாலும் அதன் வெற்றியை இவர்கள் பாராட்டிக்கொள்ளமுடியாது.
குடி அரசு - 1925 228
ஏனென்றால் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரவர்களும், ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் செய்த பிரசங்கங்களினாலும் பொதுஜனங்
களுக்குத் தெரிவித்துக் கொண்டு வந்த ஸ்ரீ முகங்களினாலும் முறையேபொது ஜனங்கள் இந்தக் கூட்டத்தாரை நம்பும்படியாகி நம்பிக்கைத் துரோகத்தின் மூலமாய் வெற்றி ஏற்பட்டுவிட்டது. நம்பிக்கை துரோகத்தின் மூலமாய் ஏற்பட்ட வெற்றியைக் கொண்டாடுவது கீழ் மக்களின் பிறப்புரி மையே அன்றி
மேல் மக்களின் தன்மை அல்ல. பொதுமக்கள் ஏமார்ந்த வர்களாய் இருக்கிற வரையிலும் இவ்விதமான காரியங்களைத் திடீரெனத் தடுப்பது சுலபமான காரியமல்ல. ஆயினும் தேசத்தின் பொருட்டு உண் மையை உரைத்து அதனால் ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளவும் சித்தமாயிருக்கிறோம். என்று ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரவர்கள் சீனிவாசய்யங்கார் வசை பொறுக்காமல் தமது நவசக்தியில் எழுதியிருப்பது போல் நமது கடமையைச் செய்யாமலிருக்கப் போவதில்லை.
ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள் நன்னிலத்தில் ஒரு கூட்டத்
தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தபொழுது கூறியிருப்பதானது ஒரு புத்தி சுவாதீன மில்லாதவரிடம் கூட எதிர்பார்க்க முடியாததாயிருக்கிறது.
க. அதாவது:- தென்னாட்டுத் திலகர் கூட மாறி இருக்கிறார். (இது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவைத்தான் மனதில் வைத்துப் பேசியதாகும்,
உ “சீர்திருத்த விஷயத்தில் பண்டித நேருவுடைய தீர்மானம் தீவிர மானதாக இருக்கவில்லையெனச் சிலர் நினைக்கலாம். அப்படி இல்லையானால் சர். பி. சிவசாமி அய்யரும், ஸ்ரீமான் ரெங்காச்சாரியாரும் எவ்விதம் நம்முடன் வருவார்கள்? சீர்திருத்தம் கிடைக்காவிட்டால் அடுத்தபடியில் இறங்குவதாய்ச் சொல்லியிருக்கிறார். ஆகையால் சுயராஜ்யக் கட்சியினரிடம் சந்தேகம் ஏற்பட நியாயமில்லை.
ங. ஸ்ரீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கரும், ஆரியாவும், ஜஸ்டிஸ் கட்சியினர் ஆதரிக்கும் ஒரு சுயேச்சைக் கட்சியாரை சென்னை முனிசிபல் தேர்தலில் ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள்.
ச.ஸ்ரீமான்கள் ஈ.வி.ராமசாமி நாயக்கர், திரு.வி.கலியாணசுந்தர முதலி
யார் முதலியவர்களின் உட்கருத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்ரீமான் முதலியாரும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவருடைய செய்கை மாரீசன் செய்கையாகும். இவர்கள் தீவிர ஒத்துழையாமையை அநுஷ்டிக்க விரும்பினால் பெல்காம் காங்கிரஸில் ஏன் வற்புறுத்தியிருக்கக்கூடாது?
௬. ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் தீவிர ஒத்துழையாமையை விரும்பின் நான் திருவண்ணாமலையில் கொண்டுவந்த சுயேச்சை தீர்மானத்தை ஏன் எதிர்க்கவேண்டும்?
சா. கனம் பனகால் ராஜா கூப்பிட்டுவிட்டார் என்பதற்காக
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சென்னையில் ஸ்ரீமான் நாயக்கர் பிரசங்கம் புரிய வந்துவிட்டார்.
எ.ஆகையால் காங்கிரஸைப் பரிசுத்தப்படுத்த வேண்டியது அவசிய மாயிற்று. நான் அந்த வேலையைத்தான் முதலில் பார்க்கப் போகிறேன்.
அ. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரைப் பற்றித் தகரார் இல்லை.
க்ஷ. குருகுலத்தார் கொள்கையில் எனக்கு அநுதாபம் இருந்த போதிலும் அநுபவத்தில் அது இப்பொழுது சாத்தியப்படாது என்பதனா லேயேநான் ஒதுங்கி நிற்க நேர்ந்தது.
ய. எங்கள் கட்சியில் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. எங்கள் கட்சியின் க்ஷமத்தில் உண்மையாக அபிமானம் உள்ளவர்கள். உள்ளே புகுந்துதான் திருத்தவேண்டும் என்று இன்னும் பலவாறாகக்
குறிப்பிடப் பட்டிருக்கிறது.
பதில்
& தென்னாட்டுத்திலகரென்னும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு ஜஸ்டிஸ் கட்சியாரை ஊர் ஊராய்த் தூற்றி வெற்றிமாலை சூடி வந்தகாலத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் கூட்டத்தினர்தான் ஸ்ரீமான் நாயுடுவுக்கு தென்னாட்டுத்திலகர். என்று பட்டம் கொடுத்ததும் வண்டியில் உட்கார வைத்துக் குதிரையை அவிழ்த்து விட்டுக் கையால் இழுத்ததும் அவர் பின்னால் அய்யர் அய்யங்கார் கூட்டங்கள் போய் அவரைக் கொண்டு தங்கள் பேரில் பொது ஜனங்கள் முன்னால் கவி பாடச் செய்து ஜஸ்டிஸ் கட்சியை ஆழ்த்தி தாங்கள் தலைவர்களாகி விட்டதும் மறந்து விட்டு இப்பொழுது மாறி விட்டார் என்கிறார்கள். ஆனாலும், நாம் அதற்காகச் சிறிதும் கவலைப்படவில்லை. ஏனென்றால், இந்த அய்யர் அய்யங்கார் கூட்டங்களும் அவர்களது பத்திரிகைகளும் மறுபடியும் முன்போலவே ஸ்ரீமான் நாயுடுவின் படத்தை தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யும் படியும் வண்டியில் வைத்து இழுக்கும்படியும் செய்து கொள்ள அவருக்குத் தெரியும்.
உசீர்திருத்த விஷயமாய் இவர் பெருமை பாராட்டிக்கொள்வதற்குக் காரணம் சர்.பி.சிவசாமி அய்யரும், ஸ்ரீமான் ரெங்காச்சாரியாரும் இவர். களுடன் வரும்படி செய்துவிட்டார்களாம். இப்பேர்ப்பட்ட பிரபுக்களு டன் சேர்ந்து செய்து கொள்ளும் சீர்திருத்தத்தை விட ஜஸ்டிஸ் கட்சி யாருடன் சேர்ந்து செய்து கொள்ளும் சீர்திருத்தம் ஒருவிதத்திலும் கேவலமாக இருக் காது. ஏனென்றால் சிவசாமி அய்யருடைய....கோரிக்கைகளுக்கும், அபிப் பிராயங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாருடையவோ இன்னும் ஆங்கிலோ இந்தி யர்களுடையவோ இன்னும் மற்றும் எவருடையவோ ராஜிய அபிப்பிராயம் மோசமாயிருக்குமென்று கடுகளவு புத்தி உள்ளவனும் நினைக்க மாட்டான். இதனாலேயே சுயராஜ்யக் கட்சியின் ராஜியத்திட்டம் எத்தகைய யோக்கியதை உடையதென்பதை பொது ஜனங்களுக்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை...
குடி அரசு - 1925 230
௩. ஸ்ரீமான் ஆரியாவும், ராமசாமி நாயக்கரும் ஒரு சுயேச்சைக் கட்சி யாரை ஆதரித்ததாக சொல்லுவது உண்மையான காரியமல்ல. ஸ்ரீமான் ஆரியாவைப்பற்றி ஸ்ரீமான் ஆரியாவே பதில் சொல்லுவார். ஸ்ரீமான் ராமசாமி நாய்க்கர் சென்னைக்குப் போனது ஓட்டர்களின் கடமையை எடுத்துச்சொல் வதற்காகவே தான். ஒரு அபேட்சகரையும் ஆதரிக்கவில்லை. சுயராஜ்யக் கட்சியார் சென்னைத் தேர்தலில் செய்யும் கொடுமைகளையும் சூழ்ச்சி களையும் ஸ்ரீமான் கலியாணகந்தர முதலியார் போன்றவர்களால் கேள்விப்
பட்டு அதையும் அறிந்து வரவேண்டுமென்கிற கவலையாலுமேதான். அங்குபோய் பார்த்தவரையிலும் சுயராஜ்யக் கட்சியாரின் நடவடிக்கை
ஸ்ரீமான் முதலியாரவர்கள் சொல்லியதைவிட எவ்வளவோ மடங்கு அதிக மாயிருந்தது. இவர்களை சுயராஜ்யக் கட்சியென்று கூப்பிடுவதே வியபசாரி. களை தேவதாசிகளென்று சொல்வது போலும், கொடுமைக்காரரை பிராமணர்: கள் என்று சொல்வதுபோலும் தற்காலக் கோர்ட்டுகளையும், வக்கீல்களையும் நியாயஸ்தலம் என்றும், நியாய வாதி என்றும் சொல்வதுபோலும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களை பொதுஜன ஊழியர்கள் என்று சொல்வது போலும் தேசத்தின் பொருளை கொள்ளை அடித்துக் கொண்டுபோக வந்திருக்கும் ஒரு வியாபாரக் கூட்டத்தாரை அரசாங்கத்தார் என்று சொல்வது போலும் அந்நிய ராஜ்யம் நிலைபெறுவதற்குப் பாடுபடப் பிறந்திருக்கும் ஒரு கூட்டத்தாரை சுயராஜ்யக் கட்சியாரென்று கூப்பிடுவது குற்றமல்லவென்று நினைக்கும்படி ஆகிவிட்டது.
& ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைது தனது தேசபக்தன் பத்திரிகையில் கலம் கலமாய் எழுதி அதற்கு செல்வாக்கில்லாமல் அடித்துக்கொண்டு வந்த காலத்தில் அவருடைய மனப் பான்மையானது இந்த ஐயங்கார்களுக்கு வெகு சுலபமாய்த் தெரியக்கூடிய தாகவிருந்தது. இப்பொழுது சுயராஜ்யக் கட்சியின் பெயரால் இந்த ஐயர். ஐயங்கார்கள் செய்யும் அக்கிரமங்களை எவ்வளவோ தற்காப்புடன் கொஞ்சம் வெளியிடுவதினாலேயே அவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுவதற்கே தைரியம் வந்துவிட்டது. கூட்டத்திலிருந்த ஒருவர் ஸ்ரீமான் முதலியார் கூடவா ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று கேட்க, ஆம், ஏழுகிணற்று வீதியில் வந்து விசாரித்துப்பாருங்களென ஐயங்கார் சொல்லி விட்டார். இதைப் பார்த்த ஸ்ரீமான் முதலியார் அவர்களும் மனம் நொந்து ஏழு கிணற்று மீட்டிங்கில் சுயராஜ்யக் கட்சி சார்பில் தாமே அக்ராசனம் வகித்து சுயராஜ்யக் கட்சியார்க்கே ஓட்டுக்கொடுக்க வேண்டுமென்று சொன்னதாகவும் கீழ்ப்பாக்கத்து மீட்டிங்கிலும் ஸ்ரீமான் இ.எல். ஐயருக்கு ஒட்டுக்கொடுக் கும்படிச் சொல்லியதையும் சுட்டிக்காட்டி ஐயங்கார் கூற்றை முழுவதும் பொய்யென்று மறுத்து பத்திரிகை செய்திக்கும் ஒரு மறுப்பும் எழுதி
யிருக்கிறார். மற்றோரிடத் தில் ஸ்ரீமான் அய்யங்கார் எம்மை (ஸ்ரீமுதலி யாரை! சுயராஜ்யக்கட்சிக்கு எமன் எனக்கருதி மனம் போனவாறு பேசுகிறார். செல்வச் செருக்கும், செல்வாக்குப் பெருக்கும் நிலையில்லாதது என்பதை
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரருக்கு நினைவூட்டுகிறோம் என்று ஒரு பெரிய சாபமும் கொடுத்துவிட்டு மற்றோரிடத்தில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள். தமக்கு தேசமே பெரியதென்றும் தேசத்தின் பொருட்டு உண்மை உரைத்து அதனால் ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் இருக்கிறோம். என்றும் வீரப்போர் முழக்கியிருக்கிறார். இதிலிருந்தே ஸ்ரீமான் ஐயங்காரவர். களையும், முதலியார் அவர்களையும் நன்றாய் அறிந்தவர்களுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் யோக்கியதை எத்தகையது என்பது நன்கு விளங்கும்.
ஸ்ரீமான் நாயக்கரைப்பற்றி சொல்லியிருப்பவைகளுக்கு அதிகமாக.
பதில் சொல்லவேண்டியதில்லை யென்றே நினைக்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கப் பாடுபட்டு அதை ஒழித்து பிராமணர்களுக்கு ஆக்கம் தேடிக்கொடுத்த ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார் போன்றவர்கள் கதிகளே. இப்படி இருக்குமானால் ஜஸ்டிஸ் கட்சியைவிட தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சியார் அரசியல் கொள்கையில் தாழ்ந்தவர்களென்றும் அது பிராமணக் கட்சி என்றும் சொல்லி வருபவரும் எழுதிவருபவரும் சுயராஜ்யக் கட்சி
ஜஸ்டிஸ் கட்சியைவிட மோசமான ராஜீயக் கொள்கை உடைய சுயநலக்காரர்: கள் கட்சி என்றும் காங்கிரஸிலிருந்து கொண்டு உத்தியோகமும் பணமும் பெருமையும் அடைந்து வருகிறார்களென்றும் எல்லாக் கட்சியிலும் அயோக் கியர்களும், யோக்கியர்களும் இருக்கிறார்களென்றும் சொல்லிவந்த நாயக் கரைப்பற்றி இவர்கள் என்னதான் சொல்ல அஞ்சுவார்கள்? தாங்கள் மனிதர்
கள் ஆவதற்காகவும் பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காகவும் நாயக்கர் பின்னால் இவர்கள் ஊர் ஊராய்த் திரிந்து கொண்டிருந்தகாலத்தில் நாயக்கரை பிரம்மரிஷியென்றும் ராஜரிஷியென்றும் துறவியென்றும், சந்நி யாசியென்றும், தமிழ்நாடு காந்தி என்றும் ஸ்ரீமான் நாயக்கர் போன்றவர். களெல்லாம் காங்கிரஸில் இருக்கும்பொழுது ஏன் பொதுஜனங்கள் காங்கிர சைப்பற்றிச் சந்தேகப்படவேண்டும் என்றும் சொல்லியும் விளம்பரப்படுத்தி
யும் வந்தவொரு கூட்டத்தார் தங்களுடைய சுயநலத்திற்குக் கொஞ்சம் விரோதமாக இருப்பதைப் பார்த்தவுடன் ஆரியாவும், முதலியாரும், நாயக்க
௬ம் காங்கிரஸிலிருப்பதனால் இவர்களைக் காங்கிரசைவிட்டு வெளியாக்கி காங்கிரசைப் பரிசுத்தமாக்கவேண்டியது அவசியமாகிவிட்டதெனச் சொல்லு. வது ஓர் அதிசயமா? நாயக்கர் பேசுவதையும் எழுதுவதையும் தாங்கள். சொல்லி எழுதி பதில் சொன்னால் இவர்கள் வீரர்கள்தான். அஃதின்றி கோழைத்தனமாய் உளருவதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? பெல்காம் காங்கிரசில் நாயக்கர் பூரா ஒத்துழையாமையையும் வலியுறுத்தியதை அய்யங்
கார் மறந்து விட்டாரோ?
௬.திருவண்ணாமலையில் ஸ்ரீமான் நாயக்கர் சுயேச்சை தீர்மானத்தை ஏன் எதிர்த்தார் என்று கேட்கிறார்? ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு சுயேச்சை தீர்மானம் கொண்டுவர யோக்கியதை உண்டா? விடிந்து எழுந்தால் அதிகார. வர்க்கத்தினிடம் சென்று கடவுளே பிரபுவே எனக் கெஞ்சுகிறார், அதன்
குடி அரசு - 1925 232
மூலமாகவே பணம் சம்பாதித்து வாழ்கிறார். ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் ஜெயிலுக்குப்போகத் தயார் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை சட்ட விரோதமானது, அதை அடியுடன் ஒழித்துவிடவேண்டுமென சர்க்கா ருக்கு யோசனை கூறினார். சர்க்காரும் இவர் யோசனையை துண்டுபிரசுர மூலம் வெளியிட்டார்கள். காந்தி அடிகள் வக்கீல் தொழிலை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்ட காலத்தில் மகாத்மாவிற்குப் புத்தியில்லை என்று சொல்லிக் கொண்டு லட்சக்கணக்காய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். இப்பேர்ப்பட்டவர்களை வைத்துக்கொண்டிருக்கும் தேசத்திற்கு முழு
சுதந்திரமும் வேண்டுமென்று இவர் கேட்டபொழுது பெரும்பான்மையோர் அதை எதிர்த்தது நாயக்கர்பேரில் ஒரு தப்பிதமாகப் போய்விட்டதாம். மகாத்மா கோரும் ஏழைகளின் சுயராஜ்யமே இவர்களுக்குப் பிடிக்காமல் ஒத்துழையாமையை பாழாக்கிவிட்ட இவர்கள் பூரா விடுதலைக்கு இவர்கள் பாடுபடுவார்கள் என்பதை எந்த மனிதன் நம்புவான்? அப்படித்தான் வேறு யாராவது பாடுபட்டு வாங்கிக் கொடுத்து விட்டால் சுயராஜ்யம் இல்லாத காலத் திலேயே தாங்கள் உயர்ந்த ஜாதியார்கள், மற்றவர்கள் வேசிமக்களென்றும் மனிதருக்கு மனிதர் பார்த்தால், பேசினால், கிட்டவந்தால், தெருவில் நடந்தால் பாபம் என்று நினைத்து அதன்படி நடந்து கொண்டிருக்கிறவர்கள் யோக்கிய மாய் சமத்துவமாய் நடந்துகொள்வார்கள் என்று எப்படி நம்பமுடியும்? அல்லாமல் காங்கிரசாவது தீவிர ஒத்துழையாத் திட்டமாவது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் கொண்டு வந்த சுயேச்சை தீர்மா னத்தை ஒரு திட்டமாய் கொண்டிருக்கிறதா? அல்லது ஆதரிக்கிறதா? இவற்றை கொஞ்சமும் யோசிக்காமல் “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி தண்டப் பிரசண்டன்” என்று சொல்லுவதுபோல் பாமர ஜனங்களிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று வக்கீல் புத்தியைக் காட்டி விட்டார் போலும்!
சா. கனம் பனகால் ராஜா கூப்பிட்டதற்கு ஆக சென்னைக்கு வந்து பேசியது என்பது :- ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து கொண்டனர். பனகால் ராஜா கூப்பிட்டார்: அவரிடம் பேசினார் என்கின்ற இந்த மூன்று. ஆக தங்களா லேயே பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்களை கொன்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு சமயத்திலும் இதை உபயோகிக்கிறார்கள். இந்த குணம் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் மாத்திரம் அல்ல. இந்த ஜாதி பத்திரிகைகளிடமும் காங்கிரஸ்காரரிடமும் இருக்கிறது. இதைப்பற்றி முன்னம் ஒரு தடவையும் இப்படியே சொல்லியும் எழுதியுமிருக்கிறார்கள். அது களுக்கு கொடுத்த பதில், மானம் வெட்கம் உள்ளவர்களாயிருந்தால் மூன்று தலை முறைக்கு இப்பேர்ப்பட்ட நீச்சக் காரியத்தில் மறுபடியும் இறங்கத் துணியவேமாட்டார்கள். சென்னைக்கு வந்து ஸ்ரீமான் நாயக்கரைப் பிரசங்கம் செய்யும் படி பனகால் ராஜா கூப்பிட்டதாக இவர் சொல்லுவதை ௬ஜு செய்தால் யோக்கியமானவர்தான். இல்லையேல். டட
குடி அரசு - தலையங்கம் - 20.09.1925
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
உண்மையான தீயாவணி
தமிழ்நாடு கதர்போர்டு அக்கிராசனர் ஸ்ரீயுத ஈ.வெ.ராமசாமி
நாய்க்கர் எழுதுகிறார்.
தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து பெருவாரியான
இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்து தங்கள் குழந்தை குட்டிகள் மக்கள் மருமக்கள் முதலானவர்களோடு களிக்கும் ஒரு பெரிய பண்டிகையாகும். அப்பண்டிகையன்று ஏழையானாலும் பணக்காரனானாலும், கூலிக்காரனானாலும், முதலாளியானாலும் பண்டி கையை அனுபவிப்பதில் வித்தியாசமில்லாமல் தங்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி ஸ்நானம் செய்வதும், புது வஸ்திரங்களை அணிவதும், பல காரங்கள் உண்பதும் முக்கிய கொள்கையாகும். இக்கொள்கைகள் எந்த தத்துவங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதில் எவ்வளவு அபிப்பிராய பேதங்கள் இருந்தபோதிலும் பொதுவாய் மக்கள் சந்தோஷத்
திற்கு புதிய வஸ்திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதனால் ஏழைத் தொழிலாளருக்கு ஒரு விடுதலையும் ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும் களிப்பும் பலவிதமாயிருந்தாலும் பெரும்பாலும் மேற்படி தீபாவளியானது ஏழை தொழிலாளர்களுக்கு பெருந் துரோகத்தை செய்வ தற்கே வருவதாகவும் போவதாகவும் ஏற்பட்டுவிட்டது. இவ்வித துரோகத்
திற்கு பணக்காரர்களும், உத்தியோகஸ்தர்களுமேதான் பெரும்பாலும் ஆதரவளிப்பவர்களாயிருக்கிறார்கள். காரணமென்னவென்றால் பட்டு சேலைகளும், பட்டு துப்பட்டாக்களும், சரிகை சேலைகளும், சரிகை: துப்பட்டாக்களும், மல்லுகளும், சல்லாக்களும் இவர்கள்தான் வாங்கு கிறார்கள். அதோடு இவர்களைப் பார்த்து இவர்களைப் போல் நடிக்க வேண்டுமென்கிற சிலர் தங்களுக்குத் தகுதியில்லாதிருந்தாலும் கஷ்டப்பட்டு இவற்றையே வாங்க ஆசைப்படுகிறார்கள். கூலிக்காரர்களாகவும் ஏழைகளா
கவும் உள்ளவர்களுக்கு இந்த முதலாளிகளும் பணக்காரர்களுமாயி ருப்பவர்கள் ஏழைகளுக்கும் கூலிக்காரர்களுக்கும் துணிவாங்கிக் கொடுக்கும் முறையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த துணிகளையே வாங்கிக் கொடுக்கவும் செய்கிறார்கள். இத்தியாதி காரணங்களால் தீபாவளி வருகிறது என்றால் பெரும்பாலும் ஏழை நூற்புக்காரர்களுக்கும் கை நெசவுக்காரர். களுக்கும், பெரிய துரோகமும் கொடுமையும் வரப்போகிறது என்றுதான்
குடி அரசு - 1925 234
அஞ்ச வேண்டியதாக இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின் சகாப்தமானது
இத் தீபாவளிப் பண்டிகையை தேசத்திற்கும், ஏழை மக்களுக்கும் உண்மை யான சந்தோஷத்தையும் நன்மையையும் கொடுக்கத் தக்கதான பரிசுத்த பண்டிகையாக்க வேண்டுமென்று மூன்று நான்கு வருஷங்களாக எவ் வளவோ பிரயத்தனங்கள் பட்டும் இன்னும் அது சரியான பலனை கொடுக்கு மென்று நம்புவதற்கு இடமில்லாமலிருக்கிறது. ஒரு பணக்காரருக்குத் தீபாவளி வருவதாயிருந்தால் பெண்டு பிள்ளைகளையும், மருமக்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்து, உனக்கு எந்தமாதிரி பட்டு வேண்டும்? உனக்கு என்னமாதிரி துப்பட்டா வேண்டும்? என்று கேட்பதும், என்னமாதிரியான பட்டோ, துப்பட்டாவோ, சேலையோ வாங்கினால் அவர்கள் திருப்தி அடைவார்கள் என்பதையும் மாத்திரம் யோசிக்கிறார்களே ஒழிய, என்ன மாதிரி துணிவாங்கினால் நம் நாட்டில் தினம் ஒரு வேளை வயிறார கஞ்சி குடிப்பதற்குக் கூட மார்க்கமில்லாமல் தங்கள் மானத்தையும் கற்பையும் விற்று ஜீவிக்க வேண்டி கட்டாயப்படுத்தப்படுகிற ஏழை நூல் நூற்பவர்களையும், கைநெசவுக்காரர்களையும் திருப்தி செய்வதற்கு உதவும் என்று இவர்கள் கொஞ்சம் கூட எண்ணுவதேயில்லை. கிராமங்களில் கஞ்சிக்குக் கஷ்டப்பட்டு பட்டணங்களுக்கு வந்து தெருக்குத் தெருவாய் அலையும் ஸ்திரிகள் நம் சகோதரிகள் என்பதை கொஞ்சமும் கவனிப்பதில்லை. இந்த ஸ்திரீகளின் வாழ்வும் தாழ்வும் நமக்கும் சம்மந்தப் பட்டதென்பதைக் கொஞ்சமும் உணர்வதில்லை. நெசவுத் தொழிற்காரர்கள்
தங்களுக்குச் சரியான தொழிலில்லாமல் வெளிநாடு களுக்குக் கூலிகளாகச் சென்று, வெள்ளைக்காரத் தோட்டக்காரர்களிடமும் கங்காணிகளிடமும் தங்கள் பெண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்து மானங்கெட்டு கற்பிழந்து கஷ்டப்படுகிறார்களேயென்று கொஞ்சமும் கவலைப்படுவதேயில்லை. அவர்களும் நம்முடைய சகோதரர்கள்தானே அவர்கள் கற்பும் மானமும் கெட்டுக் கஞ்சிக்கு அலைய நாம்தானே காரணமாயிருந்து வருகிறோம் என்று கொஞ்சமும் சிந்திப்பதேயில்லை..
உத்தியோகமும், பணமும், அந்தஸ்தும் வந்தால் முதலாவது தேசாபிமானம் ஓடிப்போய் விடுகிறது. ஏழைகளிடத்தில் அன்பும், தயாளமும் ஏற்படும் வழி அடைபட்டுப்போய் விடுகிறது. இவைகளையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு தூக்குத் தண்டனையுள்ளவனுக்கு தூக்கிலிடும் தேதி கிட்டவரவர எவ்வளவு பயமும் கஷ்டமும் ஏற்படுமோ அதுபோல் தீபாவளி வருகிறதென்றால் தீபாவளி நாள் கிட்ட நெருங்க நெருங்க ஐயோ நம் ஏழைக்கூலிக்கார ஸ்திரீகள் வயிற்றிலும் வாயிலும் மண்ணைப் போடுவதான காரியங்கள் நடைபெறப்போகிற நாள் வரப்போகிறதே! வரப்போகிறதே! என்ற பயமும் கஷ்டமும் மனவேதனையும் ஏற்படச் செய்கிறது. எவ்வளவோ நன்மைக்காக ஏற்பட்ட பண்டிகை இக்கொடுமைக்கு உதவவா வரவேண்டும். என்று மனம் பதறுகிறது. நமது நாட்டில் நன்மைக்காக ஏற்பட்ட காரியங்களெல்லாம் எப்படி தீமைக்குதவப்பட்டு வருகிறதோ அதுபோல
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நமது தீபாவளியும் இவ்வளவு பெரிய தீமைக்கு ஆளாகிறதே என்று தேச
சேமத்தில் கவலையுள்ளவர்களும் ஏழைகளிடத்தில் அன்புள்ளவர்களும் கவலைப்படாமலிருக்க முடியாதென்றே நம்புகிறேன். தீபாவளியின்போது அர்த்தமில்லாமல் சுடும் வெடிமருந்து பட்டாசுக்காக நம் நாட்டிலிருந்து எவ்வளவு பணம் வெளிநாட்டுக்குப் போகிறதென்பதை நமது நாட்டு ஜனங்
கள் அறிவதேயில்லை. ஏதோ சிலர் அறிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படுவதேயில்லை. ஒரு தேசம் முன்னுக்கு வரவேண்டுமானால் அத்தேச மக்களுக்கு கடுகளவாவது தேசாபிமானமும், பரோபகார எண்ணமும்
ஏற்பட்டால்தான் முன்னுக்கு வரமுடியும். அது இல்லாத நாடு எவ்விதத்திலும் முன்னுக்கு வராது. ஆதலால் இவ்வருஷ தீபாவளியை தேசவிடுதலைக்கும் ஏழைகளின் கஷ்டம் நீங்குவதற்கும் ஏழைத் தொழிலாள சகோதர சகோதரி.
கள் நன்மைக்கும் உபயோகப்படும்படி கொண்டாட வேண்டுமானால் பணக்காரர்கள், உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், முதலாளிகள் முதல் ஏழை
கள், கூலிக்காரர்கள், நடுத்தர வகுப்பினர் முதலிய எல்லோரும் தீபாவளியின் பொருட்டு தங்களுக்காகவும் தங்கள் பெண்டு பிள்ளைகள் மக்கள்மருமக்கள் வேலைக்காரர்கள் ஏழைகள் முதலியவர்களுடைய ஒவ்வொருவரு டைய திருப்திக்காகவும் செலவு செய்யநினைக்கும் ஒவ்வொரு பைசாவும் நம் நாட்டி லேயே இருக்குமா? நம் நாட்டில் கஞ்சிக்கில்லாமல் திண்டாடும் ஏழை களுக்கும் கூலிக்கார சகோதர சகோதரிகளுக்கும் போய்ச்சேருமா? அவர்கள். திருப்தி அடைவார்களா? என்று யோசித்துப்பார்த்தே செலவு செய்ய வேண்டியது முக்கியமான கடமையாகும்.
அப்படிச் செய்வது வாஸ்தவமானால் துணிவாங்குவதில் வெளி
நாட்டுக்குப் பணம் போகும்படியான பட்டோ, சரிகையோ, வெளிநாட்டு மல்லோ, சல்லாவோ இன்னும் பலமாதிரியான வெளிநாட்டு சாமான்களையோ வாங்காமல் நம் நாட்டில் நம் ஏழைச் சகோதரிகளால் கை ராட்டினத்தில் நூல் நூற்கப்பட்டு ஏழைச் சகோதர சகோதரிகளால் நெய்யப்பட்டதுமான துணி களை வாங்க வேண்டும். அதையே அணியவேண்டும். அதன் தத்துவத்தை நம்மக்கள், மருமக்கள், பெண்டு பிள்ளைகளுக்குச் சொல்லி அதையே அவர்களையும் பின்பற்றச் செய்ய வேண்டும்.
இதனால் எத்தனை ஏழை குடும்பங்களில் தீபாவளி சந்தோஷமாய் நடைபெறும். இப்படிச் செய்யாவிட்டால் எத்தனை குடும்பங்களுக்கு தீபாவளி இல்லாமல் போய்விடும் என்பதையும் அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இப்படியே ஒவ்வொருவரும் நினைத்து எல்லோரும் கதர் வாங்க ஆரம்பித்தால் ஒருசமயம் எல்லோருக்கும் கதர் கிடைப்பது கஷ்டமாய் போனாலும் போகலாம். ஆதலால் இந்த எண்ணம் உள்ள தேசாபிமானிகளும் ஏழைக்கிரங்குபவர்களும் இப்பொழுதே கதர்வாங்கி வைத்துக் கொள்:
ளுங்கள். புதுப்பாளையத்திலும், திருப்பூரிலும் இன்னும் சில இடங்களிலும்
குடி அரசு - 1925 236
மொத்தமாய் கதர் கிடைக்கும். ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், திருச்சி,
தஞ்சாவூர், மன்னார்குடி, கோயமுத்தூர், கடலூர், மதராஸ், மாயவரம், கரூர், ராஜபாளையம், அந்தணர் பேட்டை முதலிய சில இடங்களில் காங்ரஸ் டெப்போவும், காங்ரஸ் நற்சாககி பத்திரம் பெற்ற கதர் கடைகளும் இருக்கின்றன.
குடி அரசு - கட்டுரை - 20.09.1925
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கோயமுத்தூர் ஜில்லாவில் பஞ்சம்
இந்த ஜில்லாவின் தென்பாகம் அதாவது ஈரோடு கோயமுத்தூர் இருப்புப்பாதைக்கு தெற்கேயுள்ள எல்லா தாலூக்காக்களிலும் ஜனங்கள் பஞ்சத்தால் வருந்துகின்றனர். இவ்வருஷம் மழையில்லாததால் புஞ்சை வெள்ளாமைகள் செய்யமுடியாமல் போயிற்று. தோட்டக்கால் புஞ்சைகளில் கிணர் வற்றிப்போய் விட்டமையால் விளைவு கிடையாது. ஒவ்வொரு ஊரிலும் ஜனங்கள் தாகத்துக்குத் தண்ணீரில்லாது தவிக்கின்றனர். தென்னை மரங்களும் பனைமரங்களுங்கூட பட்டுப் போயின. கால் நடைகளுக்கு ஓலைகளையும் வேம்பிலைகளையும் முறித்துப் போட்டு மரங்களும் மொட்டையாயிற்று. மனிதர்களுக்கும் மாடுகளுக்குமாக சேர்ந்து கஷ்டம் வந்துவிட்டது. ஒவ்வொரு குடித்தனக்காரரும் கையிலிருந்த காசும் கடன் வாங்கினதும் எல்லாம் செலவு செய்து கிணர்கள் வெட்டியும் பலனில்லாது கைக்காசுகளையும் இழந்தனர். ஏழை மக்களாயுள்ளவர்கள் ஊருக்கு 20, 30
குடிகள் பெண்டு பிள்ளைகளுடன் மலைப் பிரதேசங்களுக்கு போகிற கொடுமை பார்த்து சகிக்க முடியவில்லை. தாராபுரம் தாலூகாவிலிருந்து
மட்டிலும் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் ஓடிவிட்டன. கோயமுத்தூர்
ஜில்லாக் கலெக்டரும், அதிகாரிகளும் கஞ்சித் தொட்டி வைப்பதாக கிராமங் கள்தோறும் போகின்றனர். கொலைகளும் வழிப்பறிகளும் திருடர்களும் அதிகமாக நடக்கின்றனர். காங்கயத்தில் கஞ்சித்தொட்டி வைக்க யோசனை செய்து ஜில்லாக் கலெக்டர் வந்தார் என்று கேள்விப்பட்டதும் கிராமஜனங்கள். காங்கயத்துக்கு ஓடிவந்து பார்த்துப் போகிறார்கள்.
கதர் நூல் உற்பத்தி செய்யும் வியாபாரிகளிடம் நூல் நூற்க வரும் கூட்டம் அதிகமாயிருப்பதால் வியாபாரிகள் தங்கள் சக்திக்கேற்ற அளவுதான் பஞ்சுகொடுக்க நேருவதால் அநேகம் பெண்கள் பஞ்சில்லாது திரும்பிப் போகின்றனர். ஜனங்கள் கூலிவேலைகள் கிடைக்காது அலைகின்றனர். கிராமத்திலுள்ள ஏழைக்குடிகள் ரோட்டுகளிலும், இட்டேரிகளிலும் ஏராளமாக நின்று பாம்புக்கும் தேளுக்கும் கூடப் பயப்படாது நாகதாளிப் பழத்திற்கு அலைகிறதைப் பார்க்க முடியவில்லை.
தாழ்த்தப்பட்ட குலத்து ஆண்களும் பெண்களும் சுள்ளிப் பழங் களைக் கூடைகளில் நிறப்பிக் கொண்டு போகின்றனர். இக்கொடுமை களைப் பார்க்க வந்த அதிகாரிகளுக்கு காங்கயத்தில் கிராமதிகாரிகள் கலெக்டர்.
குடி அரசு - 1925 238
தங்கியிருந்த பங்களாவிற்கு தாராபுரத்திலிருந்து வாழை கமுகு கொண்டுவந்து கட்டிவிட்டார்கள்,தண்ணீர் 15 மைலிலிருந்து கலெக்டருக்குக் கொண்டு வந்து விட்டார்கள். தண்ணீரில்லாத கொடுமையைப் பார்க்க வந்தவர்கள் கண் ணுக்கு குலையோடு வாழையையும் கமுகையும் ஆற்று ஜலத்தையும் காட்டி னால் அதிகாரிகள் என்ன எண்ணுவார்கள் என்பதை கிராமதிகாரிகள் உண
ராமற் போனது என்ன அறியாமையோ தெரியவில்லை.
குடி அரசு - கட்டுரை - 20.09.1925
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஊனண்றிப்பழுத்து உண்மையை அறியுங்கள்
சென்றவாரம் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் விஷமப் பிரசாரத்தைக்
குறித்து எழுதிய தலையங்கம் முடிவுபெறவில்லை.
அதாவது, நன்னிலத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் பேசியதாக முன் இதழ் தலையங்கத்தில் எழுதியிருந்த 10 குறிப்புகளில் 6-வது குறிப்புவரையிலும் தான் விளக்கியிருந்தோம். ஆறாவது குறிப்புக்கும் கொஞ்சம் சமாதானம் எழுதினோம்.
6. அதாவது சென்னை அரசாங்க பிரதமமந்திரி கனம் பனகால் ராஜா அவர்கள் ஸ்ரீமான் நாயக்கரை சென்னை முனிசிபல் தேர்தலில் ஜஸ்டிஸ் ககஷியாருக்கு அனுகூலமாய் பிரசாரம் செய்யக்கூப்பிட்டு விட்டதாகவும், அதற்காக ஸ்ரீமான் நாயக்கர் சென்னைக்குச் சென்று பிரசங்கம் புரிந்ததாகவும்,
பிறர் நினைக்கும்படி ஸ்ரீமான் அய்யங்கார் பேசியிருக்கிறார். இந்த வாக்கு மூலத்தின்பேரில் ஸ்ரீமான் அய்யங்காரை கோர்ட்டுக்கு இழுத்து அதன்மூலமாய் ஸ்ரீமான் அய்யங்காருக்கு புத்தி கற்பிக்க பலர் ஸ்ரீமான் நாயக்கருக்கு அறிவுறுத் தினார்கள்.
இம்மாதிரியான விஷயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களல்லாது அரசாங்க நீதிஸ்தலத்தை நாடுவது அவசியமில்லாதது என்பது நாயக்கரின் அபிப்பிராயம். அல்லாமலும் வெள்ளைக்காரருக்கும் இந்தியருக்கும் வழக்கேற்பட்டால் இந்தியர்களுக்கு நியாயம் கிடைப்பது எப்படியோ அதே
மாதிரிதான் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் வழக்கேற்படுமா
னால் பிராமணரல்லாதாருக்கு நியாயம் கிடைப்பது. மற்ற இலாக்காக்களில் பிராமணர்கள் அன்னியர்களுக்கு ஏதாவது கொஞ்சம் இடம் கொடுத் திருந்தாலும் நீதி நியாய இலாக்காக்களை மாத்திரம் வெகு ஜாக்கிரதையாக தாங்களே வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இதற்காக சர்க்கார். கோர்ட் டுக்குப் போவதைவிட பொதுஜனங்கள் கோர்ட்டே மேலானது என்பது நமதபிப்பிராயம்.
7. காங்கிரசை பரிசுத்தப்படுத்தவேண்டும் என்பது. தேசத்தை காட்டிக் கொடுத்த ஒருவர் தமிழ்நாட்டில் கொஞ்சமும் செல்லுபடியில்லாமலிருந்த ஒருவர் தேசபக்தியினலாவது ஒழுக்கமான நடவடிக்கைகளினாலாவது தியாகத்தினாலாவது அல்லாமல் அக்கிரமமாய் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்து செல்வாக்கு பெரும் ஒருவர் திருவண்ணாமலை மகாநாட்டில் ஸ்ரீமான்
குடி அரசு - 1925 240
கல்யாணசுந்திர முதலியார் கடாக்ஷத்தினால் காங்கிரசில் செலாமணியாகக் கூடிய நிலைபெற்ற ஒருவர், வாய்கூசாமல் அஞ்சாமல் ஆரியா, முதலியார், நாயக்கர் காங்கிரசிலிருப்பதால் காங்கிரசை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொருள்படப் பேசி “அந்த வேலையைத்தான் நான் முதலில் செய்யப் போகிறேன்” என்று பேசும்படியான தைரியம் வரும்படியேர்ப்பட்டு போய் விட்டது. இது அவசரத்தில் பேசிய பேச்சல்ல. வெகு முன்ஜாக்கிரதையுடனே சதியாலோசனை செய்து பேசிய பேச்சாகும். ஸ்ரீ முதலியார், நாயக்கர், ஆரியா போன்றவர்களை யெல்லாம் காங்கிரசைவிட்டு விலக்கிவிட்டால் காங்கிரஸ் பரிசுத்தமான பிராமண காங்கிரசாகிவிடும், அதுசமயம் வயிற்றுக் கொடுமைக்
கும் மாலைக்கும் வண்டியிலிழுப்பதற்கும் ஆசைப்பட்ட சில அம்மிஞ்சி களை வைத்துக்கொண்டு மற்ற பிராமணரல்லாதாரை யெல்லாம் ஜஸ்டிஸ் கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்று இந்த அம்மிஞ்சிகளைவிட்டே திட்டும்படி செய்து தங்கள் இஷ்டம்போல் காங்கிரசை நடத்தி அதுதான் தமிழ்நாட்டு அபிப்பிரயா மென்று சொல்லிக்கொண்டு சகல பதவிகளையும் உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் தாங்களே வைத்துக்கொண்டு மீதி இருக்கும் பிராமண: ரல்லாதாரையெல்லாம் பஞ்சமராக்கிவிடலாம் என்கிற எண்ணம் கொண்டு தான் இப்படிப் பேசியிருக்கிறார்.
8. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவரைப்பற்றித் தகரார் இல்லை என்று
சொல்லுகிறார். தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரான ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு ஸ்ரீமான் அய்யங்காரிடம் இந்த நற்சாட்சிப் பத்திரம் வாங்கக் கொடுத்த. விலை எவ்வளவு என்பது வாசகர்களுக்கே தெரியும். அதாவது சுயராஜ்யக் கட்சியின் பேரால் சில போலிகள் தேர்தலில் வெற்றிபெற அனுகூலமாயும்
ஸ்ரீமான் நாயக்கர் பிரயத்தனங்களுக்கு விரோதமாயும் அவ்வப்போது எழுதிக்கொடுத்த அபிப்பிராயங்களுக்கு கைமாறாக கொடுக்கப்பட்டது. மற்றவர்களும் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமைப்பட்டு.
என் செய்வது? வேலைக்குத் தகுந்த கூலிதானே கிடைக்கும்.
9. குருகுலத்தரார் கொள்கையில் ஸ்ரீமான் அய்யங்காருக்கு அனுதாபம் இருந்தாலும் அனுபவத்தில் இப்போது சாத்தியப்படாது என்பது.
சர்க்காரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். இந்தியர் சுயராஜ்யம் பெறவேண்டும் என்பதில் தங்களுக்கு அனுதாபம் இருந்தாலும் காரியத்தில் அது இப்போது சாத்தியப்படாது என்றுதான் சொல்லுகிறார்கள். சர்க்காரைவிட இவர்கள் எந்தவிதத்தில் யோக்கியர்களோ நமக்குத் தெரியவில்லை. 33 கோடி ஜனங்களை பீரங்கி வெடிகுண்டு ஜயில் இதுகளை வைத்துக்கொண்டு
சர்க்காரார் அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த அய்யர். அய்யங்கார் கூட்டங்கள் கிழிந்த புராணத்தையும், தர்ப்பைப் புல்லையும் கையில் வைத்துக் கொண்டு சர்க்காரார் நம்மை நடத்துவதைவிடக் கேவல மாய் நடத்துகிறார்கள். இதன் தத்துவத்தை வாசகர்களே கவனித்துக் கொள்ளவேண்டும்.
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
10. தங்கள் கட்சியில் (சுயராஜ்யக்கட்சியில்) குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. தங்கள் கட்சியில் அபிமானமுள்ளவர்கள் உள்ளே புகுந்து திருத்துவது தானே என்கிறார். தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சியில் அளவுக்கு மிஞ்சின அபிமானமுள்ளவர்களான ஸ்ரீமான்கள் நாயுடு முதலியவர்களா லேயே ஆகாத திருத்துப்பாடு நம்போன்றவர்களால் ஆகும் என்று நினைப்பதும் சுலபமான காரியமா என்பது நாம் சொல்லாமலே விளங்கும். இதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலும் உள்ள குறைகளை பிராமணர் அல்லாதார் உள்ளே புகுந்து திருத்துவதுதானே என்று யாராவது சொன்னால் உடனே அவர்களை ஜாதியை விட்டுத்தள்ளிவிடுகிறார்கள். பொதுவாய் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்களின் நன்னில உபன்யாசமானது திடீரென்று செய்யப் பட்டது அல்ல. அது பெரிய சதியாலோசனையின்பேரில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பிராமண ரல்லாதாரை சட்டசபையைவிட்டு வெளியாக்க இப்பொழுதிருந்தே அஸ்தி வாரம் போடுவதற்காக செய்த பிரசங்கம் என்பதை. பிராமணரல்லாதார்கள் உணரவேண்டும். சட்ட சபைத் தேர்தல் வருவதற் குள்ளாக பிராமணரல்லாதாரில் வெகுபேரை விலைக்கு வாங்கி நம்மையே வைவதற்கும் வைது பத்திரிகைகளில் எழுதுவதற்கும் ஏவிவிடப் போகிறார்.
கள். பொதுவாய் காங்கிரசுக்கு இப்பொழுது எவ்வித ராஜிய திட்டமும் கிடையாது. நமது சுயராஜ்யக்கட்சிக்கோ கதரும் இல்லை, ராட்டினமுமில்லை. தீண்டாமை விலக்கும் இல்லை. ஆனால் ஒரு திட்டம் மாத்திரம் உண்டு. அது என்னவென்றால் பிராமணரல்லாதார்களை ஸ்தல ஸ்தாபனங்களில் இருந்தும் சட்டசபைகளிலிருந்தும் வெளிப்படுத்தி விட்டு தாங்கள் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டியது என்பதுதான். இதுவே முதலாவதும் கடைசியானதும் முக்கியமானதுமான திட்டம். ஆதலால் பிராமணரல்லாதார்களே! இனி என்ன செய்யப்போகிறிர்கள்?
குடி அரசு - தலையங்கம் - 27.09.1925
குடி அரசு - 1925 242
ஸ்தஸ் னில் லஞ்சம்
வரவர நமது நாட்டு முனிசிபாலிட்டிகளும், டிஸ்டிரிக்ட் போர்டு
களும், தாலூகா போர்டுகளும், மனிதர்கள் பதவியை அனுபவிக்க ஒரு சாதன மாயிருப்பதோடல்லாமல் அதன் தலைவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும் ஒரு சாதனமாகிக்கொண்டு வருகிறது. இவை கொஞ்ச காலங்களுக்கு முன்பாக நூற்றுக்கு பத்து பதினைந்து பேர்கள்தான் இம்மாதிரி தப்புவழியில் நடக்கக் கூடிய தலைவர்களை உடைத்தாயிருந்தன. இப்பொழுது பணம் சம்பாதிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகப்பட்டுக்கொண்டு வருவதோடல்லாமல் பொதுஜனங்களுக்கும் சர்க்கார் காரியங்களில் நீதி பெறுவதுபோல் பணம் கொடுத்தால் எந்தக் காரியத்தையும் ஸ்தல ஸ்தாபனங்களில் சாதித்துக் கொள்ள லாம் என்கிற தைரியம் வந்துவிட்டது. இம்மாதிரியான காரியங்கள் இரட்டை ஆட்சி ஏற்பட்டபிறகு அதிகப்பட்டுப்போய்விட்டது. இரட்டை ஆட்சிக்கு முன்பாகவும் இம்மாதிரி காரியங்கள் இருந்துவந்தது என்றாலும் சேர்மன் முதலானவர்கள் இவ்வளவு தைரியமாய் அந்தக் காலத்தில் லஞ்சம் வாங்கத் துணியவே இல்லை. லஞ்சம் வாங்குவதென்பது சகஜமாய் போய்விட்டால் பிராதுகளும், புகார்களும் எப்படி உண்டாகும்? இம்மாதிரியான காரியங்களை அடக்குவதற்கு அரசாங்கத்தால் பிராது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது சுத்தப் பயித்தியக் காரத்தன மென்பதோடு வேண்டுமென்றே சும்மா இருப்பதற்கு பிராது வரவில்லையே என்ற சாக்கை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்வோம். எவ்வளவோ உபயோகமில்லாத காரியங்களுக்கு ஸி.ஐ.டி. என்று சொல்லுகிற வேவுக்காரர்களையும் வைத்து வரிகொடுப் போரின் பணத்தைப் பாழாக்குகிற நமது சர்க்காருக்கு லஞ்சம் வாங்குபவர். களைக் கண்டுபிடிப்பதற்கு வேவுக்காரர்களை வைப்பது கஷ்டமென்றோ அதிக செலவென்றோ சொன்னால் எவரேனும் ஒப்புக்கொள்வார்களா?' ஜனங்களெல்லாம் யோக்கியமாய் இருப்பார்கள் என்று “அரசாங்கத்தார். நினைப்பார்களானால் கோர்ட்டுகளும், நிர்வாகமும் தேவையே இல்லையே.
சர்க்காரார் வேண்டுமானால் இது விஷயங்களுக்குச் சுலபமாக ஒரு பதில் சொல்லிவிட முடியும். என்னவென்றால், அப்படிப்பட்ட சேர்மன்களையோ பிரஸிடெண்டுகளையோ அங்குள்ள கவுன்ஸிலர்கள் ஏன் தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்கள், என்று கேட்கலாம்.
கவுன்சிலர்களும், மெம்பர்களுமே ஆயிரம் பதினாயிரக்கணக்காய் ஓட்டர்களுக்கு லஞ்சம் கொடுத்து பதவி பெறுகிறபொழுது சேர்மன்
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
முதலியவர்கள் வாங்குகிற லஞ்சம் இவர்களுக்கு எப்படிக் கிரமமாகத் தோன்றும்? இவர்கள் லஞ்சம் கொடுத்து பதவி பெறுகிற காரணத்தினால் லஞ்சம் வாங்குகிற சேர்மனை அநுமதிக்க வேண்டியதாகப் போய்விட்டது. இதுதான் உண்மையான கர்ம பலன் என்று சொல்லுவது.
ஜனங்கள் சுயராஜ்யத்திற்கு அருகர்களாகப் போய்விட்டார்கள். ஆதலால் சுயராஜ்யம் கொடுக்க வேண்டுமென்றும் பிரிட்டிஷார் ஒரு அதிகாரத்தைக்கூட தங்கள் கையில் வைத்துக்கொள்ளாமல் முழு சுதந்தரத் தையும் குடிகளுக்கே வழங்கிவிட வேண்டுமென்றும், கேட்டுக் கொண்டி ருக்கும் இக்காலத்தில் கொஞ்சம் நஞ்சம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படும்
குட்டி சுயஆட்சி ஸ்தாபனங்களிலெல்லாம் இம்மாதிரி லஞ்சங்களும் ஒழுங் கீனமான காரியங்களும் தாண்டவமாடுவதானால் அதற்குப் பொதுஜனங்களே. உடந்தை யாயுமிருப்பார்களானால் சுய ஆட்சிக்கு நாம் அருகதை உடைய வர்கள் என்று சொல்லுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
தேசத்தின் சுதந்தரத்திற்காக ஏழைமக்கள் கஷ்டப்படுவதும், தேச பக்தர்கள் தியாகம் செய்வதும் இம்மாதிரி படித்தவர்களும், பணக்காரர்களும் லஞ்சம் வாங்கவும் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கவும்தானா உபயோகப் படுத்த வேண்டும்? மகாத்மா சொல்லுகிறபடி தமது சுயராஜ்யத் திட்டத்திற்கு படித்த வகுப்பார் தான் எதிரியாயிருக்கிறார்கள் என்பதோடு மாத்திரம் அல்லா
மல் சுயராஜ்யத்திற்கு நாம் அருகர்களல்ல என்பதற்கும் இந்தப் படித்த கூட்டத் தாரே தான் ஆதாரமாயிருக்கிறார்கள் என்பதை நாம் வருத்தத்துடன் சொல்லாமலிருக்க முடியவில்லை.
குடி அரசு - கட்டுரை - 27.09.1925
குடி அரசு - 1928. 244.
தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை
சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும்.
ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத் தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவுபெறாமல் இருக்கும்பொழுதே தமிழ்நாடு பத்திரிகை
யும் இதுதான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது. இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக்கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலிய வரும் சண்டை களுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக்கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப்படுத்திக் கொண்டு ஸ்தல ஸ்தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்து
வரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு உதவி செய்யாவிட்டாலும், நமது முயற்சிக்கக் கெடுதலாவது செய்யாது இருக்கவேண்டாமா என்றுதான் பிராமணரல்லா தலைவர்களிடம் நாம் உண்மையாய் எதிர்பார்த்தது. இந்த நிலையில் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவின் தேர்தல் சம்பந்தமான அபிப்பிராயங்கள் நமது முயற்சிக்கு சில இடங்களில் “கொசவனுக்குப் பல நாளைக்கு வேலை, தடியடிக்காரனுக்கு ஒரேநாள் வேலை” என்பது போல் பல தொந்தரவுகளை விளைவிப்பதாகப் பட்டதால் ஸ்ரீமான் நாயுடுவின் அபிப்பிராயங்களை
எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. அதற்கு, சரியான சமாதானம் ஒன்றும் சொல்லாமல் ஸ்ரீமான் பட்டாபிராமய்யர் அவர்கள் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் சுயராஜ்ய க௯ஷி தேசத்துரோகம். செய்துவிட்டது என்று சொன்னபொழுது ஸ்ரீமான் நேரு அதற்கு தகுந்த சமாதானம் சொல்வதற்கு யோக்கியதையில்லாமல் நான் உன்னை ஒரு தூசிபோல் மதிக்கிறேன் என்று சொன்ன அகம்பாவமும் ... பொருந்திய பதில்போல் ஸ்ரீமான் நாயக்கரின் கோபத்திற்கும், பயமுறுத்தலுக்கும் பயந்து ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு தம்முடைய கொள்கையை மாற்றிக்
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கொள்ளப்போவதில்லை என்று தமிழ்நாடு பத்திரிகை வம்புச் சண்டைக்கு இழுக்கின்றது. சாதாரணமாக பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் தான் ஒருவரைப்பற்றி ஏதேனும் குறைகூற வேண்டு மென்று நினைத்துக்கொண்டால் ஒருவர் என்ன சொன்னார், என்ன பேசினார். என்பதை தங்கள் பத்திரிகையில் எடுத்துக் காட்டாமலும், அதைப் பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமலும் தங்களுக்குத் தோன்றியபடி பத்திரிகை களில் எழுதி அவர்கள் இஷ்டத்திற்கு அனுசரணையான
பிரசாரம் செய்வது வழக்கம். அதைப்பற்றி நாமும் பலதடவை கண்டித் திருக்கிறோம். அதே கொள்கையை தமிழ்நாடு பத்திரிகையும் பின்பற்றுவ தென்றால் பிறகு நாம் அதை என்னவென்று நினைப்பது? அதனிடத்தில் இனி என்னதான் எதிர்பார்க்க முடியாது? எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயக்கர் கோபித்துக்கொண்டார். எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயுடுவை பயமுறுத் தினார் என்று எழுதி அதன்பேரில் ஸ்ரீமான் நாயுடுவின் வீரப்பிரதாபத்தைக் காட்டியிருந்தால் ஒழுங்காயிருக்கும். அப்படியில்லாமல் வீண்வம்புச் சண்டைக்கு இழுப்பது தர்மமா? நாம் எழுதியதில் ஏதேனும் குற்றமிருக் கின்றதா என்பதை பொது ஜனங்கள் அறியும்படி மறுபடியும் எழுதி இதற்குத் தமிழ்நாடு பத்திரிகை சொல்லும் பதிலையும் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்ளுகிறோம். இதைப்பற்றி மறுபடியும் தமிழ்நாடு கண்டனமோ, மறுப்போ, சமாதானமோ எழுதுகிற பொழுது முன்போல் நடந்துகொள்ளாமல்
நாம் எழுதியதைப் போட்டு சமாதானமோ கண்டனமோ, மறுப்போ எழுது மென்று எதிர்பார்க்கிறோம்.
ஸ்ரீமான் நாயுடுவின் பழைய அபிப்பிராயமாவது
கோயமுத்தூர் தேர்தலின்பொழுது தேர்தலுக்கு நிற்பவர்களின் யோக்கியதையை அறிந்து ஓட்டுச்செய்ய வேண்டுமென்று ஸ்ரீமான் நாயக்கர். கூறிவந்த பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு “காங்கிரஸ்காரருக்கே வெற்றி ஏற்படுமாறு ஈசனைப் பிரார்திக்கிறேன்” என்று ஒரு ஸ்ரீமுகம் விடுவித்தார்.
அதற்கு எதிர்க்கட்சியார் ஒரு கடிதமெழுதியபொழுது (அக்கடிதம் ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி தமிழ்நாடு பத்திரிகையின் 9-வது பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது) சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர ஜனங்களை போலிகள் ஏமாற்றிவிடாமல் பார்த்துக் கொள்வது தேசீய வாதிகளின் கடமையாகும்........சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குச் சென்று அதை ஓடவிடாது தடுக்கவே கைப்பற்றுவதாகச் சொன்னார்கள். சட்டசபைகளைத் தவிர முனிசிபாலிட்டிகளில் ஒற்றுழையாமைக்கோ முட்டுக் கட்டைக்கோ வழி இல்லை. நகர சபைகளில் எந்த விதத்தில் ஜனங்களுக்கு வேலை செய்யலாம் என்பதே அங்கத்தினர்களின் வேலையாயிருக்கிறதே ஒழிய எதிர்த்துப்போராடுவதற்கு அதிகாரவர்க்கம் அங்கு இல்லை. இதனால்
குடி அரசு - 1925 246
ஸ்தல ஸ்தாபனங்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்கு மட்டும் ஓட்டுக்கொடுத்து விடக்கூடாது... அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டுக் கொடுக்க வேண்டும். நீடித்த காங்கிரஸ்வாதியாயும், வெளிவேஷத்திற்கு மாத்திரமல்லாமல் எப்பொழுதும்
கதர் கட்டிக் கொண்டிருப்பவராகவும் பார்த்து ஓட்டுச்செய்யவேண்டும் என்று 30825 தமிழ்நாடு பத்திரிகையில் மேற்படி கோயம்புத்தூர் நண்பருக்கு பதில் கூறுமுகத்தான் ஒரு வியாசம் வரைந்துள்ளார். அதற்கு நான்கு நாளைக்குள் திருச்சியில் ஸ்ரீமான் சீனிவாசய் யங்கார் தலைமையின் கீழ் கூடிய ஒரு பொதுக்கூட்டத்திற்கு “ஜாதிபேதமின்றி காங்கிரஸ்காரருக்கே ஓட்டுச் செய்ய வேண்டு” மென்று ஒரு செய்தி அனுப்பினார். பாம்பன் பிரசங்கத்தில் காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிரஸ் பெயரைச் சொல்லித் திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்ற விடக் கூடாது.........நான் ஒரு கட்சியிலும் சேர்ந்தவ னல்ல எனது வேலைத் திட்டம் எனது நண்பர்களின் யோசனை
யிலிருந்து வருகிறது... என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“நகரசபையில் வேலை செய்யத்தகுதியுள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் அபேட்சகர்களாய் நிற்பார்களானால் கட்சிப்போக்கை. கவனியாமல் பிராமணரல்லாதாருக்கேதான் ஓட்டுச் செய்யவேண்டும்” (இது சென்னையில் இரண்டு கனவான்கள் நேரில் கண்டு கேட்டபோது சொல்லியது?
அதற்கு அடுத்தநாள் தமது அன்புள்ள ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் நிர்மாண: திட்டத்தில் நம்பிக்கை இருப்பதாகத் தான் நம்புவதாயும், நிர்மாணத் திட்டத்தை நம்புபவரும் அனுஷ்டானத்தில் செய்து காட்டுபவரும் காங்கிரஸ் அபேட்சகர் என்று தான் நம்புவதாகவும், அவரை ஆதரிக்கவேண்டுவது பொதுஜனங்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாவது
1 சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் வாதிகளை ஸ்ரீமான் நாயுடு ஆதரித்து எழுதிய கடிதங்களை ஸ்ரீமான் நாயக்கர் கண்டிக்கப் புறப்பட்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.
2. உண்மை தேசீயவாதியான ஒரு பிராமணனும் காங்கிரசைச் சேராத ஒரு தமிழனும் தேர்தலுக்கு நின்றால் தேசீய பிராமணனைத்தான் தேசம் ஆதரிக்க வேண்டும். உண்மை தேசீயவாதியான ஒரு பஞ்சமனுக்கும், மிதவாதியான ஒரு பிராமணனுக்கும் போட்டி ஏற்பட்டால் பஞ்சமனைத்தான் பொதுமக்கள் ஆதரிக்கவேண்டும்.
3. ஸ்தலஸ்தாபனங்களில் முட்டுக்கட்டைக்கு இடமில்லை என்பது வாஸ்தவமே. அவ்வித அபிப்பிராயம் நாம் அடிக்கடி கூறுவது உண்டு .
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஆனால் அடிமைப்பட்ட நாட்டில் சர்க்காரால் ஏற்பட்டிருக்கும் சகல ஸ்தாப னங்களிலும் தேசீயவாதிகள் நுழைந்து உட்கார்ந்து கொண்டால் சமயம் வாய்ந்தபோது உள்ளிருந்து நாமும் சர்க்காரைக் காக்க அனுகூலமாக இருக்குமன்றோ?'
4. அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டுமாம்.
5. ஆனால் ஒருவர் ஒழுக்கத்தில் தர்ம ராஜனாயிருந்தாலும் சர்க்கா
ரக்குச் சாதகமானவராயிருந்தால் அவருக்கு ஓட்டு கொடுக்கக்கூடாதாம்.
6. வேறொருவர் ஒழுக்கத்தில் குறைந்தவராயிந்தாலும், தேசீயவாதியா யிருந்து நம்முடைய ஓட்டினாலும், பேச்சினாலும் சர்க்காரின் செல்வாக்கைக் குறைக்கக் கூடியவராயிருந்தால்,ஜனங்கள் அவரை ஆதரிக்கவேண்டுமாம்.
காங்கிரஸில் உயர்வு, தாழ்வு கொள்கையை பிராமணர்கள் செய்கை
யில் காட்டினால், நிர்த்தாட்சண்யமாக அப்படிப்பட்டவர்களை காங்கிரசி னின்று துரத்தி விட வேண்டுமாம். இதைக் குருகுலப்போராட்டத்தில் செய்து காட்டியிருக்கிறாராம் -.......... மேற்கூறியவைகள் தான் ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாம். மேலும் மேலும் இவ்வித அபிப்பிராயங்கள். ஸ்ரீமான் நாயுடுவுக்கு எவ்வளவு தெளிவான அபிப்பிராயமாய் இருந்த போதிலும் பொதுஜனங்களுக்கு எவ்வளவு தெளிவைக்கொடுக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேணுமாய் கோருகிறோம்.
மற்றபடி இவ்வபிப்பிராயத்தின் தத்துவங்களைப் பின்னால் எழுது
வோம்.
ஸ்ரீமான் நாயுடு
தன்னைப்பற்றி அதிகமாய் நினைத்துக்கொண்டார் என்பதற்குபதில், நாயக்கர் நாயுடுவைப்பற்றி அதிகமாய் நினைத்தாராம் , அதனால் தன்னைப்
பற்றி அதிகமாய் நினைத்துக்கொள்வது மேலோர் தன்மை போலும்!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.09.1925
குடி அரசு - 1925 248
பாமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை
-நாரதர்
பார்வதி:- பிராணனாதா !
'பரமசிவன்:- என்ன பிராணனாயகி.
பா-தி:- சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வைஸ்சேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக?
ப-கி- என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப்போட்டுக்கொண்டால் அது எதற்காக?
பா-தி:- நாதா! இது எனக்குத் தெரியாதா? திருட்டு சொத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான். முனிசிபாலிட்டிகளில் எப்படி சண்டை வரும்?
ப-சி:- அதே மாதிரிதான் முனிசிபாலிட்டியிலும் பொதுஜனங்களி டம் இருந்து வாங்கும் லஞ்சத்திலும் உத்தியோகம் கொடுப்பதற்கு ஆக வாங்கும் தரகிலும் காண்டிராக்டர்களிடமிருந்து வாங்கும் வீதாச்சாரத்திலும் இருவரும். பிரித்துக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் சண்டை வரவேண்டியது தானே?
பா-தி:- இதெல்லாம் சேர்மெனுக்கும் முனிசிபல் சிப்பந்திகளுக்கும் தானே சேரவேண்டியது. வைஸ்சேர்மெனுக்கு இதிலென்ன பாத்திய
மிருக்கிறது?
ப-சி - நீ என்ன திரேதாயுகத்து சங்கதி பேசுகிறாய்? அந்த மாதிரி
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இருவருக்குள்ளும் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால்? அல்லாமலும் அதெல்லாம் பழைய காலம்..
திரேதாயுகத்தில் சிப்பந்திகள் மாத்திரம் தான் மேற்படி ஆதாயங்களை அனுபவித்து வந்தார்கள். திரேதாயுகத்தில் சிப்பந்திகளும் சேர்மெனுமாய் சாப்பிட்டு வந்தார்கள்.
துவாபரயுகத்திலேயே சிப்பந்திகளும் சேர்மெனும் வைஸ்சேர்மெனும் சாப்பிடவேண்டியது. இந்தக் கலியுகத்திலோ சிப்பந்தி, சேர்மென், வைஸ்சேர். மென், கவுன்சிலர்கள் ஆக நான்குபேரும் சாப்பிடவேண்டியது. இந்தப்படி
மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தபோதிலும் இன்னும் இது பூராவும் அமுலுக்கு வரவில்லை.
பா-தி- அப்படியானால் எனது கேள்விகளுக்கு பொறுமையோடு பதில்சொல்லவேண்டும். முதலில் இருந்து வருகிறேன். முனிசிபல்
சிப்பந்திகள் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்க காரணம் என்ன? அது யாருடைய குற்றம்?
ப-சி- சர்க்கார் வழக்கமும் சேர்மெனுடைய குற்றமும்தான் காரணம்.
பா-தி:- சேர்மெனும் வைஸ்சேர்மெனும் லஞ்சமும் தரகும் மாமூலும் வாங்கவும் பங்கு பிரித்துக்கொள்வதில் சண்டை போட்டுக் கொள்ளவும் யார்.
காரணம்?
ப-சி:- அப்படிப்பட்ட சேர்மெனையும் வைஸ்சேர்மெனையும் நியமித்த கவுன்சிலர்கள் தான் பொறுப்பாளிகளாவார்கள்.
:- இப்படிப்பட்ட சேர்மென் வைஸ்சேர்மென்களை நியமித்த கவுன்சிலர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?
ப-சி:- இவர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்கள்தான் பொறுப்பாளி
களாவார்கள்.
பா-தி:- இம்மாதிரி கவுன்சிலர்களுக்கு ஓட்டு செய்த ஓட்டர்களின் நடவடிக்கைக்கு யார் பொறுப்பாளி?
பாசி- அனேகமாய் இந்த காரியத்திற்கு ரூபாய்கள்தான் பொறுப் பாளி என்று சொல்லவேண்டும்.
குடி அரசு - 1925 250
பா-தி:- கேவலம் ரூபாய்க்கு இவ்வளவு பெரிய யோக்கியதை ஏற்பட்டு போய்விட்டது என்கிறீர்களே, ரூபாய்கள் இப்படிச்செய்யுமானால் இதற்கு யார் பொறுப்பாளி?
L8t ரூபாய்க்கு நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் ஏற்பட மனிதர் களின் ஒழுக்கக் குறைவும் வயிற்றுக் கொடுமையும்தான் பொறுப்பாளி.
பா-தி:- ஒரு நாட்டில் இம்மாதிரி ஒழுக்கக் குறைவும், வயிற்றுக் கொடுமையும் ஏற்படயார் பொறுப்பாளி?
ப-சி:- சர்க்கார்தான் பொறுப்பாளி.
பா-தி:- இம்மாதிரி சர்க்கார் ஏற்பட யார் ஜவாப்தாரி?
ப-சி:- ஜனங்களின் ஒற்றுமைக்குறைவுதான்.
பா-தி:- ஜனங்களின் ஒற்றுமைக்குறைவிற்கு யார் பொறுப்பாளி?
பாசி: அவர்களுக்குள்ளிருக்கும் ஜாதி வித்தியாசமும் உயர்வு தாழ்வு என்று சொல்லிக்கொள்வதும் மக்களை ஒன்று சேர்வதற்கில்லாமல் செய்து கொண்டு வருகிறது.
பா-தி:- அப்படியானால் இதற்கு என்னதான் செய்வது?
ப-சி:- செய்வதென்ன இருக்கிறது? நாட்டிற்கு நல்லகாலம் வரும் போது இவையெல்லாம் தானாக ஓடிப்போகும். அதுவரை நிர்மாண திட்டத் தைநிறைவேற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
குடி அரசு - உரையாடல் - 27.09.1925
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யாட்ணாத் தீர்மாணம்
சென்ற மாதம் 22 -ந் தேதி பாட்னாவில் கூடிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தையும், அதைப்பற்றி மகாத்மாவின் தனி அபிப்பிராயத்தையும் நிதானமாய் யோசனை செய்து பார்த்தோம். அவற்றுள் காணப்படும் தத்துவத்தை சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரஸை சுயராஜ்யக் கட்சியார் வசம் ஒப்படைத்து விடவேண்டும் என்பதாக முடிவு செய்துக்கொண்டு, அந்தப்படியே ஒப்புவித்துவிட்டாரென்றுதான் சொல்ல வேண்டும்.
தீர்மானத்தின் சாரம் என்னவென்றால் நான்கணா கொடுத்தவர்க ளெல்லாம் காங்கிரஸ் மெம்பராகலாம். காங்கிரஸில் பதவி வேண்டியவர்கள். காங்கிரஸ் காரிய சமயங்களில் கதர்கட்டிக் கொண்டிருக்க வேண்டும். சட்ட சபை முதலிய தேர்தலுக்கு நிற்கிறவர்கள் சுயராஜ்யக் கட்சியாரின் தவவைப் பெறவேண்டும். இந்தத் தீர்மானத்தின் மேல் மகாத்மாவின் அபிப்பிராயமோ, இதற்குச் சம்மதமில்லாதவர்கள் காங்கிரஸை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமேயல்லாமல், உள்ளே இருந்துகொண்டு சுயராஜ்யக் கட்சியின் வேலைகளுக்கு இடையூறாயிருக்கக் கூடாதென்பது தான்.அத்துடன் பழைய நிலை ஒன்றும் மாறவில்லையென்றும், நிர்மாணத் திட்டம் பாதிக்கப்பட வில்லையென்றும் கூறுகிறார். மற்ற விஷயங்களைப்பற்றி நாம் அதிகக் கவலைப்படாவிட்டாலும் நிர்மாணத் திட்டம் பாதிக்கப்படவில்லையென் பதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறோம். ஏனெனில் பாட்னா காங்கிரஸின் அதிகாரத்தை சுயராஜ்யக் கட்சியார் கையில் முற்றிலும் ஒப்ப டைத்தாகிவிட்டது என காந்தியடிகளே அக்டோபர் 1- ந் தேதி “யெளவன இந்தியாவில்” கூறியிருக்கின்றார்.
சுயராஜ்யக் கட்சியாருக்கோ நிர்மாணத் திட்டங்களாகிய கதரிலும், தீண்டாமையிலும் முழு நம்பிக்கையுமில்லை. இந்த நிலைமையில் நிர்மாண: திட்டம் எப்படிப் பாதிக்கப்படவில்லையென்பது நமக்குப் புரியவில்லை... சுயராஜ்யக் கட்சியினரல்லாத காங்கிரஸ் வாதிகளுக்கோ சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் நம்பிக்கையில்லை. இருந்தால் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்திருப் பார்கள். தங்களுக்கு நம்பிக்கையில்லாததும் தேச நன்மைக்கு ஏற்றதல்ல என்று நினைப்பதுமான திட்டத்தை தேசத்தில் நடத்துவிப்பதற்கான முயற்சிகள் செய்யப்படுவதை, காங்கிரஸில் இருக்க வேண்டுமே என்னும் ஒரு
குடி அரசு - 1925 252
காரியத்திற்காகச் சகித்துக் கொண்டிருப்பதைவிட, அதை எதிர்க்க வேண்டு மென்றும், அவசியமுள்ளவர்கள் காங்கிரஸை விட்டு வெளியில் போய்
தங்கள் மனசாக்ஷிப்படி நடந்து கொள்ளலாமென மகான் சொல்லு வதை
காங்கிரசும் ஒப்புக் கொள்ளுமானால் அப்படி செய்வது மேலான தென்றே நினைக்கிறோம்.
அதற்கடுத்தாற்போல், நிர்மாணத் திட்டத்தில் ஒரு பாகமாகிய கதரை: உத்தேசித்து நூற்போர் சங்கம் ஒன்று தனியாக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இது பெரும்பாலும் மாறுதல் வேண்டாதாருக்கும், ஒத்துழையாதார் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கும் தேச நன்மையை உத்தேசித்து அதிக திருப்தியைக் கொடுக்குமென்பதில் ஆக்ஷேபனையில்லை.
ஆனால், சுயராஜ்யக் கட்சியார் இதையாவது ஒழுங்குபெற நடக்க விடுவார்களாவென்பதுதான் நமது சந்தேகம். நூற்பதில் நம்பிக்கையில்லாத
வர்களும் நூற்பதைக் கேவலமாகக் கருதுபவர்களும் கதரில் நம்பிக்கை: யில்லாதவர்களும் உறுதிமொழியில் கையெழுத்திட்டு, உள்ளே வந்து புகுந்து
இதிலும் சிறிது சிறிதாக மகாத்மாவை விட்டுக்கொடுத்துக் கொண்டே போகச் சொல்லுவார்களோவென்று நாம் சந்தேகப்படாமலிருக்க முடியவில்லை.
கடைசியாக ஒரு வார்த்தை, நூற்போர் சங்கம் ஏற்படுத்தியதால் நிர்மாணத் திட்டத்தில் ஒரு பாகமாகிய கதர் திட்டம் பாதிக்கப்படவில்லை யென்று சொல்வதானாலும் தீண்டாமை விலக்குத் திட்டம் சுயராஜ்யக் கட்சியார் கருத்துப்படியே தானே மறைந்து போய்விட்டது. பெல்காமில் மதுவிலக்கு மறைந்தது. பாட்னாவில் தீண்டாமை விலக்கு மறைந்தது. இனி
கதரின் தலையெழுத்து எந்த ஊரில் முடியப்போகிறதோ தெரியவில்லை. ஆனாலும், சுயராஜ்யக் கட்சியார் அதை ஒழிக்கவும் ஒரு ஊர் மனதில் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் செய்ய வேண்டியது என்ன வென்பதை யோசிக்க வேண்டும்.நம் நாட்டில் சுயராஜ்யக் ககஷியாரில்லாமல், காங்கிரஸ்காரருக்குள்ளேயே சுயராஜ்யக் கடியை ஆதரிக்கிறவர்களும், அதன் திட்டமானது தேசத்திற்கு கெடுதியை விளைவிக்கக் கூடியதென்று நம்பி காங்கிரஸ் அதன்வழி செல்ல விடாமல் தடுத்து, உண்மையான வழியில் நிறுத்த வேண்டுமென்று அந்தரங்க சுத்தியுடன் வேலை செய்பவர்களுமிருக் கிறார்கள். இதில் யார் பெரும்பான்மையோர், சிறுபான்மையோர் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களிருவருக்கும் காங்கிரஸில் இடமிருக்கின்றதா? இல்லையா? இரண்டாவதவர்களுக்கு இடமில்லை யென்ற தீர்மானம் ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டியது என்ப தைப்
பற்றியும் அல்லது தனிச் சங்கமொன்று கண்டு அதன் மூலமாக உண்மை ஒத்துழையாமைத் திட்டத்தையும் நிர்மாணத் திட்டத்தையும் நிறைவேற்ற முயற்சி செய்வதா? என்கிற விஷயத்தைப் பற்றியும் கஞ்சீவரம் மகாநாட்
டிலும், கான்பூர் காங்கிரசிலுமே நாம் முடிவு செய்யவேண்டியவர்களாயிருக்
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கிறோம். இது விஷயத்தை தமிழ் நாட்டிலுள்ள தேசீயவாதிகளும் தேசத் தொண்டர்களும் ஆழ்ந்து யோசித்து ஓர் முடிவுக்கு வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
லாலாஜி அவர்களும் தமது “பீபிள் ” பத்திரிகையில் பாட்னா தீர்மானங்களை ஆக்ஷபித்து விரிவாக எழுதியிருக்கின்றார்.
குடி அரசு - தலையங்கம் - 11.10.1925
குடி அரசு - 1925 254
ஆரியாவிண் அயிப்பிறாமம்
ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியாவை நேயர்கள் நன்கறிவார்கள். இவர். உத்தம தேசாபிமானி. அரிய தியாகம் பல நம் நாட்டிற்கென்று செய்தவர். இவர் சமீபத்தில், சென்னை “ஜஸ்டிஸ்” பத்திரிகையின் நிருபருக்குப் பேட்டி கொடுத்து தம் அபிப்பிராயத்தை வியக்தமாகக் கூறியிருக்கின்றார். இதன் சாராம்சத்தை வாசகர்கள் நமது பத்திரிகையின் வேறொரு பக்கத்தில் காண
லாம். பிராமணரல்லாதாரின் இப்போதுள்ள தற்கால நிலைமை எதுவோ, இனி நாம் செய்யவேண்டிய வேலை என்னவுண்டோ, அவைகளை நன்றாய் ஆராய்ச்சி செய்து தீர்க்கதரிசனத்துடன் ஸ்ரீமான் ஆரியா அவர்கள் கூறி யிருப்பதை நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் கவனிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
வைதீகப் பிராமணர்கள் ஜாதிச் செருக்குக்கொண்டு மதவிஷயத்திலும், தேசீய பிராமணர்கள் அரசியலிலும் பிராமணரல்லாதாரை தாழ்த்திவைத்து பொய்ப்பிரசாரம் செய்வதையும், இதில் தங்கள் காரியம் வெற்றி பெருவதற்கு அநுசரணையாக, இரண்டொரு பிராமணரல்லாதாரை சேர்த்துக்கொள்வ தையும் நாம் வன்மையுடன் பலதடவைகளில் கண்டித்து வருகின்றோம்.
கடவுளால் படைக்கப் பெற்றுள்ள மாந்தரில் ஒருசாரார் மட்டும் ஏகபோகமாக சுதந்தரங்களை அனுபவித்துக்கொண்டு, பிறரை தாழ்த்தி மோச மான நிலைமையில் வைத்திருப்பதைக் காண, ரோஷமுள்ள தாழ்த்தப் பட்டவர்களின் மனம் ஏன் துடியாது?
ஸ்ரீமான் ஆரியா பிராமணருக்காக உழைத்து பெற்ற பலனை நன்கு கூறியிருக்கின்றார். நன்றி கெட்டவர்களும், ஜாதிக்கெர்வம் படைத்தவர். களும் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள இழிவான முறைகளைக் கைக்கொள்ள சற்றேனும் பின் வாங்காதவர்களுமான, சில தேசீயபிராமணரை ஆரியா போன்ற அநேகர் நம்பி மோசம் போனது பிரத்தியக்ஷம்.
“இக்கொடுமைகளை உணர்ந்தே டாக்டர். நாயர் அவர்கள், ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்றுவித்தனர். அக்கட்சியானது, இதுவரையிலும் எவ்வித வேலை செய்து கொண்டிருந்தபோதிலும் சரியே. இனியேனும் ஓர் கட்டுப் பாடான முறையைக் கொண்டு, தேசீய பிராமணரல்லாதாருடன் சேர்ந்து இந் நாட்டின் க்ஷமத்திற்கென்றும், பிராமணரல்லாதாரின் விடுதலைக்கென்றும்
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
உழைக்க வேண்டுமென” ஆரியா அவர்கள் கூறியிருப்பதை நாம் முற்றிலும் ஆதரிக்கிறோம்.
ஜஸ்டிஸ் கக்ஷியானது அதிகாரவர்க்கத்தாரை ஆதரிக்கும் கக்ஷி' யாகவே இராமல் பிராமணரல்லாதாரின் க்ஷமத்துக் கென்று உழைக்கக் கூடிய தாயுமிருப்பதுடன் முற்றிலும் தேசீய மயமாக்கப்படவேண்டும். அதற்காக காங்கிரஸில் பிராமணரல்லாதார் எல்லாரும் சேர்ந்து, சுயநலப் பற்றுடன் செய்யும் சூழ்ச்சிகளை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். மகாத்மாவின் நிர்மாணங்களாகிய கதர், மது விலக்கு, தீண்டாமை, ராட்டினம் முதலியவை களில் தீவிர முன்னேற்றமடைவார்களானால் அன்றே பிராமணர்களின் ஆதிக்கம் அடங்கி விடுமென ஆரியா அவர்கள் கூறுவதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
அன்றியும், பிராமணரல்லாதார் ஒரு விஷயத்தை நன்றாய் கவனிக்க வேண்டும். அதாவது ஜஸ்டிஸ் கட்சி என்று சொன்னால், திடீரென்று தம் மனதில் ஓர்வித வெறுப்பை உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். அக்கட்சி என்ன பாவத்தைச் செய்துவிட்டது? சர்க்காரோடு ஒத்துழைப்பதே ஓர் பெரிய பாவமென்று சொல்லுவோமானால் பிராமணர்கள், தங்களுக்குள் சர்க்காரு
டன் ஒத்துழைக்கும் மிதவாதிகளிடமும் மிதவாத கக்ஷியிடமும் அவ்வளவு வெறுப்பு கொள்ளுகின்றார்கள்? மிதவாத பிராமணர்களும், தேசீய பிராமணர்:
களும், மாறுதல் வேண்டாத ஒத்துழையாத பிராமணர்களும், ஒத்துழைப்பை
யும், உத்தியோகத்தையும் இரகசியமாக விரும்பிக்கொண்டு, காங்கிரசை அதற்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் சுயராஜ்யக் கடி பிராமணர்களும்.
தங்கள் பிராமணாதிக்கம் நிலைபெறுவதற்காக வேண்டி வர்ணாசிரம தர்மசபை என்று ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு எல்லா பிராமணர்களும்
ஒன்றாய்க் கலந்து வேலை செய்யவில்லையா? தங்கள் ஜாதி நன்மையின் பொருட்டு ஸ்ரீமான்கள், ரங்காச்சாரியாரும், எம்.கே. ஆச்சாரியாரும், ஸர். பி.எஸ்.சிவசாமி ஐயரும், மகாகனம் ஸ்ரீனிவாச சாஸ்த்திரிகளும், ஸ்ரீமான்கள். சத்தியமூர்த்தி, ஸி.பி.இராமசாமி ஐயர், ஏ.ரங்கசாமி அய்யங்கார், சக்ரவர்த்தி ஐயங்கார் முதலியோரும் ஒன்றுகூடிப் பேசுவதில்லையா? ஸ்ரீமான் ரெங்காச் சாரியார் சர்க்காருக்கு அனுகூலமாய் இருந்துகொண்டு தன் பிள்ளைகளுக்கு உத்தியோகம் சம்பாதித்துக்கொடுத்துக் கொண்டாரென் றாவது, ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி ஐயங்கார் ஒத்துழையாமையை ஒழித்துவிடப் பாடுபட்டதின் பலனாக தன் மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தா ரென்றாவது இருவர்களையும் எந்த ராஜீய சபையாவது தள்ளிவைத்து விட்டதா? இவை களைப் பார்த்தாவது, பிராமணரல்லாதாருக்குப் புத்திவரவேண்டாமா? எந்த பிராமணனாவது எந்த சந்தர்ப்பத்திலாவது ஓர் பிராமணன் மீது குற்றத்தைச் சொல்லவோ, அவன் ராஜீய அபிப்ராயத்தில் தப்பு வியாக்கியானம் செய்யவோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கவோ ஒருவருக்கொருவர். விரோதமான பிரசாரம் செய்யவோ முதலிய தங்கள் சமூகத்தாருக்கு
குடி அரசு - 1925 256
விரோதமான காரியங்களைச் செய்கின்றார்களா? பிராமணரல்லாதாரிடம்
கூலி பெற்று பிராமணர்களை வைகிறார்களா? இவற்றையெல்லாம், பிராமண:
ரல்லாதார் கொஞ்சமும் கவனிப்பதேயில்லை. நாமும் ஏன் அம்மாதிரியான நமது சமூக முன்னேற்றத்திற்கென்று, அரசியல் வித்தியாசங்களைக் கவனியாமல், ஒன்றுபட்டிருக்கக் கூடாது? பெரும்பாலும், பிராமணர்கள், சில பிராமணரல்லாதாரைத் தாங்கள் வசப்படுத்திக்கொண்டு அவர்கள் கையைக் கொண்டே ஜஸ்டிஸ் ககரிக்காரர்களின் கண்ணைக் குத்தச் செய்து ஜஸ்டிஸ் ககஷியென்றால் தீண்டாத வகுப்பைவிட கேவலமானது என எண்ணும்படி செய்துவிட்டார்கள். அரசியல் முன்னேற்றத்திற்கு ஒத்துழை யாமை அன்றி வேறொரு சாதனத்தால் பலனில்லையோ, அதுபோல் சமூக முன்னேற் நத்திற்கு, பிராமணரல்லாதார் ஏதாவது செய்யவேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியின் ஒத்துழைப்பில்லாமல், ஒரு காரியமும் செய்யமுடியாது. காங்கிரஸ் காரர்கள், சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகவும், ஜெயிலுக்குப் போனதாகவும் சொல்லிக்கொண்ட போதிலும், உண்மையில் ஜஸ்டிஸ் கட்சியே சமூக முன்னேற்றத்தில் கண் விழிப்புக்கான வேலைகளைச் செய்
திருக்கிறது. ஆனாலும் சுயராஜ்யக் கட்சியினிடமிருக்கும் குற்றங்கள், ஜஸ்டிஸ்
கட்சியில் இல்லையென்று சொல்லமுடியாது. சுயராஜ்யக் கட்சியார், தந்திரமாக
வும், மறைவாகவும் சூழ்ச்சியாகவும் செய்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார். வெளிப்படையாகச் செய்கிறார்கள். ஆதலால் அரசியல் விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார். காங்கிரஸ்காரர்களின் ஒத்துழைப்பை விரும்புவார்களா னால் தங்களுக்கும் சர்க்காருக்குமுள்ள சம்மந்தங்களில் சில மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுயராஜ்யக் கட்சியைவிட, ஜஸ்டிஸ் கட்சி
யார் மோசமில்லையென்று சொல்வதினாலேயே அதன் அரசியல் கொள்கை: களை நாம் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளமுடியாது. சுயராஜ்யக் கட்சி அரசியல் கொள்கையை நாம் வெறுப்பது போலவே இதையும் வெறுப்பதா யிருந்தாலும் பிராமணரல்லாதார் சுயராஜ்யக் கட்சியாயிருந்த போதிலும், ஒத்துழையா கக்ஷியாயிருந்தபோதிலும் இரண்டுக்கும் மத்தியிலுள்ள வெளவால் ககஷியாயிருந்த போதிலும் சமூக முன்னேற்றத்திற்காக ஜஸ்டிஸ் ககஷியைப் பலப்படுத்துவதில் யாரும் பின்வாங்கவே கூடாது. எப்படி சில தேசீய பிராமணரல்லாதார் அரசியல் விஷயத்தில் சுயராஜ்யக்கட்சிதான் சர்க்காரை: எதிர்க்கிறது என்பதாகக் கூறிக் கொண்டு சுயராஜ்யக் கட்சியாரை ஆதரிப்பது
தங்கள் கடமையெனச் சொல்லுகிறார்களோ அதுபோலவே ஜஸ்டிஸ்
கட்சிதான் பிராமணரல்லாதாரின் நன்மைக்காக வேலை செய்கிறது என்று சமூக முன்னேற்றத்தை உத்தேசித்து அதை ஆதரிக்க வேண்டியது நம்முடைய கடமையென்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். சமூக
வியலும் அரசியலும் ஒன்றுக்கொன்று அதிகார தம்மியமுடையதல்ல. மனிதனுக்கு எப்படி இரண்டு கைகளும் அவசியமோ அதுபோலவே ஓர்
நாட்டுக்கும் சமூக முன்னேற்றமும் அரசியலும் முக்கியமானதுதான். அதிலும்
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தமிழ்நாட்டுக்கு அரசியலைவிட சமூகமுன்னேற்றம்தான் முதலாவதானது. இவற்றைக் கவனியாமல் வெறும் அரசியல் அரசியலென்று கூறிக் கொண்டு பிராமணர்களின் பின்னால் திரிந்து கொண்டு பெருமை பெற்றதின் பலன், இன்றைத் தினமும். பிராமணரல்லாதார் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் பார்க்கக் கூடாதவரென்றும், தீண்டக்கூடாதவரென்றும், தெருவில் நடக்கக் கூடாதவரென்றும் சொல்லத் தகுந்த இழிவான நிலையில் இருந்து கொண்டிருப்ப தோடல்லாமல், ஸ்ரீமான்கள் ஆரியா, கல்யாணசுந்திர முதலி
யார், ராமசாமி நாயக்கரவர்களை காங்கிரசிலிருந்து வெளியாக்க வேண்டிய தவசியமாய் விட்டது. இக்கொடுமைகள் நம் நாட்டிலிருந்து ஒழிந்து, நாமும் பிராமணர்களென்போரும், பஞ்சமர்களென்போரும், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்களென்போரும் சகோதரர்கள், நம்மில் ஒருவருக்கொருவர். உயர்வு தாழ்வில்லை. நாம் எல்லோரும் சமம் என்கிற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பிராமணரல்லாதார் எல்லோரும் ஒன்றுகூடி தங்கள். முன்னேற்றத்துக்குப் பாடுபடும்படியான ஓர் பிராமணரல்லாதார் சங்கத்தை பலப்படுத்தவேண்டியதோடு தங்கள் முன்னேற்றத்துக்காக ஒழுங்கான எழுத்துக்களை ஒற்றுமையுடன் தெரிவிப்பதற்கும் பிராமணர்கள் இடம் துவேஷமில்லாமல் கட்டுப்பாடாய் பிரசாரம் செய்வதற்கும் ஓர் பிராமண:
ரல்லாதார் பத்திராதிபர் சங்கமும் காலதாமதமில்லாமல் உடனே ஏற்பாடு செய்ய வேண்டியது பிராமணரல்லாத அறிவாளிகளினுடையவும், தலைவர்:
கள் என்று சொல்வோருடையவும் முக்கியமான கடமையென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.10.1925
குடி அரசு - 1925 258
அனுப்பபானையம்
ஸ்தல ஸ்பனங்களின் நிர்வாகங்களில் பலவித ஊழல்களிருக்கின்.
றது. அவைகளை நிவர்த்தி செய்யவேண்டுமானால் தேர்தல்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமென்றும், தேர்தல் மனஸ்தாபத்தின் காரண மாகவேஸ்தல ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளில் கட்சி வேற்றுமைகளும், காரியக் கெடுதிகளும் ஏற்படுகின்றதென்றுங் கூறியதுடன், இக்குறைகள் அகற்றப்பட வேண்டுமானாலும், பொதுஜனங்களின் வரிப் பணமானது முறை
யுடன் செலவழிக்கப்பட வேண்டுமானாலும், நிர்வாகத்தை யோக்கியமாய் நடத்தக்கூடிய திறமைசாலிகளையே தெரிந்தெடுக்க வேண்டுமெனக் கூறினார். மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகத்தில் அரசியல் கட்சி களைப் புகவிடுவது, வேலைக்கே கெடுதியைத் தருமென்றும், இதை மகாத்மா வும்பலதடவைகளில் வற்புருத்தியிருக்கிறாரென்றும் சொன்னார்.
பின்னர் கதர், மதுபானம் தீண்டாமை முதலியவைகளைப்பற்றி சுருக்க மாகவும் தெளிவாகவும் கேட்போர் மனதில் உணர்ச்சி உண்டாகக்கூடிய வாறு பேசியபின் காங்கிரஸைப்பற்றி ஸ்ரீமான் நாயக்கர் கூறியதின் சாரமாவது:-
காங்கிரஸைப்பற்றி நீங்கள் அதிகமாகக் கவலை கொள்ளவேண்டிய தில்லை, ஒத்துழையாமைக் கொள்கைக் காங்கிரஸினின்று எடுபட்டபிறகு காங்கிரஸினால் படித்தவர்களுக்கும் அவர்கள் பிள்ளை குட்டிகள் இரண் டொருவருக்கும் உத்தியோகம் கிடைக்கலாமே தவிர தேசத்திற்கு அதனால் ஒரு காரியமும் உண்டாகாதென்பது என்னுடைய அபிப்பிராயம். பழயபடி காங்கிரஸை ஒத்துழையாமை தர்மத்திற்குக் கொண்டு வரவேண்டு மானால்
நாம் யாவரும் காங்கிரஸில் சேர்ந்து உழைப்பதற்கு அர்த்தமுண்டு. அப்படிக்
கின்றி யாரோ சில பிராமணர்களும் படித்தவர்களும் உத்தியோகத் திற்குப் போவதற்காக நாம் எல்லாரும் ஜெயிலுக்குப் போவது முட்டாள் தனமென்றே நினைக்கிறேன். இனி பொதுத்தொண்டு செய்பவர்களுக்கு நிர்மாணத் திட்டம் தான் முக்கியமானது. பாட்னா, அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி மீட்டிங்கில், நிர்மாணத்திட்டம் அடியோடு கைவிடப்பட்டுப் போய் விட்டது. காங்கிரசின் பேரால் பொதுமக்களிடத்தில் பணம் வசூல் செய்யவும், அதை எலெக்ஷன்
களுக்குச் செலவு செய்யவும் சுயராஜ்யக் கக்ஷியாருக்கு முழு அதிகாரமும் கொடுத்தாகிவிட்டது. மகாத்மா அவர்களும் காங்கிரசை வைத்துக் கொண்டி
ரப்பதால், நமக்கு ஒரு பிரயோஜனமில்லையென்று கருதி, கலகக்காரர்
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
களிடமே ஒப்புவித்து விட்டார். நூல்நூற்கும் சங்கத்தில் தனது முழு கவனத் தையும் செலுத்தி வருகிறார். அதற்கு ஒவ்வொருவரும் தங்களா லான உதவி யைச் செய்யவேண்டும்.
குறிப்பு:30.09.1925 இல் திருப்பூரை அடுத்த அனுப்பபாளையம் கிராமத்தில்
யூனியன் பஞ்சாயத்துத் தலைவர் அளித்த ஓர் உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து பேசிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 1140.1925
குடி அரசு - 1925 260
தெண் ஆப்பிரிக்கா திணம்
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப்
பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும், சென்ற 1 ந் தேதி இந்தியாவெங்கும் பொது தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண்: டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதா ரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக் கூடாதாரென்றும், தங்களு டைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார் இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது
பலன் உண்டாகுமா?
இதையறிந்த தென்னாப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார். களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால் வீணாக ஓர் நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே யென்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 18.10.1925.
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அம்பலத்து அதிசயம்
( தேசீய பிராமணர்கனினண் கண்டனம் )
தேச விடுதலை விஷயத்தில், பிராமணரல்லாதார் பொது நன்மையை உத்தேசித்து, அநேக பிராமணர்களுடைய, கொடுமைகளையும், சூழ்ச்சி களையும் கூட்டாக்காமல் கபடமற்று பிராமணர்களுடன் ஒத்துழைத்து வந்தி ருந்தாலும், அவர்களுடைய உழைப்பையெல்லாம் தாங்கள், தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அநுபவித்து கொள்வதல்லாமல் உழைக்கின்ற பிராமண: ரல்லாதாருக்கு எவ்வளவு கெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்திருக்கின்றார்களென்பதை - செய்து வருகின்றார்களென்பதைப் பொறு மையோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம். முதலாவது, பழைய காலத்திய தேசீயவாதிகளில் சிறந்தவர்களில் ஸர்.சி. சங்கரன் நாயர் என்கிற
பிராமணரல்லாதார் முக்கியமானவர் ஆவார். அவர் காங்கிரஸிலும் தலைமை: வகித்தவர். அப்பேர்ப்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற்
காகப் பிராமணர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வந்தார்கள். அவருக்கு கிடைக்கவிருந்த ஹைக்கோர்ட் ஜட்ஜ்பதவியை கிடைக்கவொட்டாதபடிக்குச் செய்ய எவ்வித பொது நலத்திலும் தலையிட்டிராத, ஸர்.வி.பாஷ்யம் ஐயங்கார். போன்றவர்களும் மற்றும் அநேக பிராமண வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்த தோடல்லாமல், அவர் பேரில் எவ்வளவோ பழிகளை யெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன் காரணமாக நான்கு, ஐந்து வருஷங்களுக்கு முன்னதாகவே கிடைக்க வேண்டிய ஹைக்கோர்ட் ஜட்ஜ் பதவி வெகு காலம் பொறுத்துத்தான் கிடைத்தது.
டாக்டர் டி.எம்.நாயர் அக்காலத்திய தேசீயவாதிகளில் மிகவும் முக்கிய மான பிராமணரல்லாத தேசீயவாதி. அவர் எவ்வளவோ பொதுக் காரியங் களில் ஈடுபட்டிருந்தவர். அவரையும், மைலாப்பூர் பிராமணர்கள் ஓர் முனிசி பாலிட்டியில் கூட அவர் உட்காருவதை பொறுக்காமல், அவருக்கு விரோத மாகச் சூழ்ச்சிகளைச் செய்து அவரையும் உபத்திரவப்படுத்தினார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்துவதற்கு நமது நாட்டில் ஏற்பட்ட முக்கியமான காரணங்களில் இவையிரண்டும் முதன்மையானதென்று, ஓர் காங்கிரஸ் பிராமண பிரசிடெண்டே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.
இவ்விதமான கஷ்டங்களிலிருந்து பிராமணரல்லாதாரைக் காப்பாற்றுவதற்காக வேண்டி முக்கிய காங்கிரஸ்வாதிகளாயிருந்த டாக்டர்.
குடி அரசு - 1925 262
நாயர் போன்ற பிராமணரல்லாத தலைவர்களால் ஜஸ்டிஸ் கட்சியென்னும் ஓர். ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அதை ஒழிப்பதற்காகப் பிராமணர்கள் சூழ்ச்சி செய்து அதற்கு எதிரி டையாக பிராமணரல்லாதார் சிலரைப் பிடித்தே சென்னை மாகாணச் சங்க மென்று ஒன்றை ஆரம்பிக்கச் செய்து அதற்கு வேண்டிய பொருளத் தனையும் பெரும்பான்மையாகப் பிராமணரே உதவி, “தேசபக்தன்” என்ற
தமிழ் தினசரி பத்திரிக்கையையும், “இந்தியன் பேட்ரியட்” என்ற ஆங்கிலத் தினசரிப் பத்திரிக்கையையும், ஜஸ்டிஸ் கட்சியைக் கொல்லுவதற்காகவே பிரசாரம் செய்யும் பொருட்டு, ஏற்பாடு செய்து கொடுத்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் செல்வாக்கில்லாமல் அடித்தார்கள். “இந்தியன் பேட்ரியட்” பத்திரிக்கையைத் தங்கள் வேலையை முடித்துக் கொண்டவுடனே ஒழித்துவிட்டார்கள்.
எஞ்சியிருந்த “தேசபக்தன்” பத்திரிகையை, தேசத்தில் அதற்கு கொஞ்சம் செல்வாக்கு ஆரம்பித்தவுடனே, அதில் ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் ஆசிரியராயிருப்பதை ஒழிக்க வேண்டுமென்னும் முக்கியக்
கருத்துடன் அவருக்கு விரோதமாகச் சில பிராமணரல்லாதாரையே கிளப்பி
விட்டு, சில பிராமணர்களும் இரகசியமாக அப்பத்திரிகைக்கு விரோதமாகத் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்து ஸ்ரீமான் முதலியாரவர்களே “தேசபக்தனை” விட்டு ஓடிப்போகும்படியாகச் செய்துவிட்டார்கள்.
அதற்குப்பிறகு, அப்பத்திரிகைக்கு பிராமணர்களே ஆசிரியர்களும், எஜமானர்களுமாகி மெதுவாக நழுவவிட்டுக் கொண்டார்கள். இதே மாதி ரியே சென்னை மாகாணமச் சங்கத்திலும், பிராமணர்களின் சொற்படி நடந்து கொண்டிருந்த சிலர் ஆதிக்கம் பெற்றிருந்ததை ஆதாரமாக வைத்து அவர்களைக் கொண்டே தங்கள் காரியமெல்லாம் முடிந்து போனவுடன் மறையும்படி செய்துவிட்டார்கள்.
இவையெல்லாம் பழைய காங்கிரஸின் கொள்கைப்படி ஏற்பட்ட திரு விளையாடல்களென்றாலும், ஒத்துழையாமை ஏற்பட்ட காலத்தில் பிராமண: ரல்லாத தேசபக்தர்களுக்குச் செய்த கொடுமைகளில் சிலவற்றைக் கீழே
குறிக்கிறோம்:-
ஒத்துழையாமை ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்பதாக சென்னையில் தேசீயவாதிகளின் சங்கமொன்று (ஸ்ஸ் Association) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அதற்கு ஸ்ரீமான் சி.விஜயராகவாச்சாரியார் அவர்: களை அக்கிராசனராக வைத்து, உப அக்கிராசன ஸ்தானத்துக்கு ஸ்ரீமான் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரை பிரேரேபித்தவுடன் அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி அதை அவர் அடைய விடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத்தனங்கள் பிராமணர்கள் செய்
தார்கள்.
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இதைப் பிராமணரல்லாதாரில் சிலர் தெரிந்து அப்போதே கூச்சல் போட்டதின் பலனாக அநேக உப அக்கிராசனாதிபதிகளை ஏற்பாடு செய்து அந்த ஸ்தானத்திற்கு ஒரு மதிப்பில்லாமல் அடிக்கப் பார்த்தார்கள். இதன் பலனாக, அதன் நிர்வாக சபைகளில் பிராமணரல்லாதாரை அதிகமாகப் போடும்படி நேரிட்டது. இதன் காரணமாக தேசியவாதிகளின் சங்கமென்பதை குழந்தைப் பருவத்திலேயே கழுத்தைத் திருகிக் கொன்று போட்டார்கள்.
பிறகு, திருப்பூரில் கூடிய தமிழ்நாடு மாகாண கான்பரன்ஸுக்கு ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு அவர்களை அக்கிராசனம் வகிக்க வேண்டு மென்று சிலர் பிரேரேபித்தார்கள். அதற்கு விரோதமாக ஹிந்து, சுதேச மித்திரன், சுரராஜ்யா ஆகிய மூன்று பத்திரிகைகளும், அதுசமயம் நாயுடு அவர்கள் கான்பரன்சில் தலைமை வகிக்கத் தகுதியற்றவரென்று எழுதி வந்ததோடு பிரேரேபித்தவருக்கும் இம்மாதிரியே பிரேரேபித்தது தப்பித மென்று சொல்லியும், அநேக ஜில்லாக்கள் பெரும்பான்மையாய் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவையே தெரிந்தெடுத்திருந்தும் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியாரவர்களைக் கொண்டும் ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி ஐயங்கார் திருப்பூ ருக்குச் சென்றதன் பலனாயும் உபசரணைக் கமிட்டியாரை வசப்படுத்தி இவருடைய தேர்தலை ஒப்புக்கொள்ளாமல் நிராகரிக்கும்படிச் செய்து
விட்டார்கள்.
பிறகு, மாகாண காங்கிரஸ் கமிட்டியார் பிரவேசித்து அவரை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று, தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு நிர்பந்தப் படுத்தினதின் பேரில் சுயமரியாதையுள்ளவர் ஒப்புக்கொள்ள முடியாதவாறு உள்ள ஓர் தீர்மானத்தைப் போட்டு, அவரையே ஒப்புக்கொண்ட மாதிரியாய் தெரியப்படுத்தினார்கள்.
இத்தீர்மானத்தின் போக்கு யோக்கியதையற்றதாயிருந்தபடியால் ஸ்ரீமான் நாயுடு அதைத் தமக்கு வேண்டாமென நிராகரிக்கும் படியாயிற்று. பிறகு, திடீரென்று ஸ்ரீமான் எம்.ஜி.வாசுதேவய்யரவர்களைக் கொண்டு அம் மகாநாட்டை நடத்திக் கொண்டார்கள்.
அதற்கு அடுத்தாற்போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கிராச னாதிபதியாக பெரும்பான்மையோரால் ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டபோது, தெரிந்தெடுத்த ஒரு மணி நேரத்திற் குள் ஸ்ரீமான் வ.வே.௯ஐயரவர்கள் “நம்பிக்கையில்லை” என்னும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்த சமயத்தில், ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியாரிருந்து இது ராஜீய நோக்கத்துடன் கொண்டுவந்த தீர்மானமல்ல வென்றும், அது ஓர் பிராமணரல்லாதார் இந்த ஸ்தானம் பெறுவதை எப்படியாவது ஒழிக்க வேண்டுமென்கிற வகுப்புத் துவேஷத்தின் மேல் கொண்டு வந்ததென்றும் பொருள்பட உக்ரமாய் அப்பொழுதே பேசியிருக்
கிறார்.
குடி அரசு - 1925 264
இத்தீர்மானம் ஸ்ரீமான் வவே.௯.ஐயர் கொண்டு வந்ததின் பலனாய், சில நாட்களுக்குள் ஸ்ரீமான் என்.ஸ்ரீனிவாசய்யங்காரால் டி ஐயரவர்களுக்கு குருகுலத்திற்கென்று ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது.
இவ்வருஷம் காஞ்சீபுரத்தில் நடக்கப்போகும் தமிழ் மாகாண மகா
நாட்டிற்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியாரை சில ஜில்லா கமிட்டிகள் தெரிந்தெடுத்திருந்தும், அதை வெளியாருக்குத் தெரிவிக்காமல் இரகசியமாய் வைத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆகும்படி இரகசிய பிரசாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னெல்லாம்
யார் யாரை எந்தெந்த ஜில்லாக்கள் தெரிந்தெடுத்தனவென்பது பத்திரிகை களில் வருவது வழக்கம்.
இப்பொழுது உபசரணைக் கமிட்டியாரும் தெரிவிக்காமல் பத்திரி கைக்காரர்களும் தெரிவிக்காமல் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. தவிர, கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு தமது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை இராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று தீர்மானமொன்று செய்திருக்கிறது.
சென்னை காங்கிரஸ் கமிட்டி ஸ்ரீமான்கள் ஈ.வி.இராமசாமி நாயக்க ரையும், சுரேந்திரநாத் ஆரியாவையும் கண்டித்து ஓர் தீர்மானம் செய்திருக் கிறது. நன்னிலம் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீமான்கள் ஈவி.இராமசாமி நாயக்கர், கலியாணசுந்திர முதலியார். ஆரியா இவர்களைக் காங்கிரசினின்று வெளி யாக்க வேண்டுமென ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் பேசியிருக்கிறார்.
சட்டசபையில் காங்கிரஸ் பிராமண மெம்பர்களுடைய வேலை, பிராமணரல்லாதாருடைய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்பதும் , பிராமணரல்லாதாருக்கு எதிரிடையாய் நிற்கவேண்டுமென்பதுமே என்று சட்டசபையில் எலக்ஷன் ஆனவுடனேயே “சுதேசமித்திரன்” பத்திரிகை எழுதியுமிருக்கிறது. சட்டசபையில் ஒரு பிராமணர், எங்களுக்கு உத்தி யோகம் கொடுக்காவிட்டால், ஒத்துழையாமைக் ககஷியில் சேர்ந்து விடுவோ மென சர்க்காரை மிரட்டியிருக்கிறார்.
அன்றி, வைக்கம் சத்தியாக்கிரகத்தின் மூலமாய் அடைந்த தண்டனை யிலிருந்து ஸ்ரீமான் வி. இராமசாமி நாயக்கர் விடுதலையாகி தமிழ் நாட்டுக்கு வந்தவுடன், மறுபடியும் வைக்கம் போகாமலிருப்பதற்காக வேண்டி, ஓர். பிராமண சட்ட மெம்பரையும், ஓர் பிராமண அட்வோகெட் ஜென்ரலையும் கொண்ட கவர்ன்மெண்டு எட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன்னால் பேசிய, பழைய குப்பைகளை ஆதாரமாக வைத்து ராஜத்துரோக முதலிய கேஸ் எடுத்து அதன் மூலமாகக் கைதியாக்கிக் கொண்டு போனார்கள்.
பிராமணர்களின் பொல்லாத வேளையாய் ஓர் பிராமணரல்லாத மேஜிஸ்திரேட்டிடம் அந்த கேஸ் நடந்தபடியால், கேஸ் ஒன்றும் ருஜுவாக வில்லையென்றும், அவர் கேஸை முடித்துத் தண்டிக்காமல் திருப்பி ஓட்டி
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
விட்டார். இவ்வளவுமில்லாமல், பிராமணரல்லாத மந்திரிகள், பெரிய உத்தி யோகஸ்தர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்குகிறவர்கள் அது செய்கிறார்கள். இது செய்கிறார்களென்று கிராமம் கிராமமாய் ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்வதற்குப் பணம் செலவு செய்து, ஆட்களை ஏற்படுத்திப் பிரசாரம் செய்து, அவர்கள் பேரில் தப்பபிப்பிராயத்தைக் கற்பித்து வரு கிறார்கள்.
குருகுலம் சம்மந்தமாய் நடந்த மீட்டிங்குகளில் பிராமணர்கள் கல்லெ
டுத்துப் போட்டார்கள். சென்னைக் கார்ப்போரேஷன் தேர்தல்களில், ஸ்ரீமான் ஆரியாவை ஆட்களை விட்டு அடித்தார்கள். பொதுவாய் ஏழைகளுக்கும்,
முக்கியமாய் பிராமணரல்லாதார்களுக்கும்,அவசியமானதாகிய மதுவிலக்கு, தீண்டாமை முதலிய திட்டங்களைக் காங்கிரசை விட்டு ஓட்டி விட்டார்கள். போதாக் குறைக்குக் கதரும் காங்கிரஸில் இருக்க கூடாதென்று, பூனா பிராமண பத்திரிகைகள் இப்பொழுதே எழுத ஆரம்பித்து விட்டன. இதைப் பற்றிச் சென்ற வாரமே *குடிஅரசில்” ஜோசியம் கூறப்பட்டிருக்கிறது..
பிராமணரல்லாதார் தெய்வத்தின் பேராலும், க்ஷேத்திரங்களின் பேராலும் காணிக்கை வேண்டுதல் மூலமாகக் கொடுக்கின்ற பணங்கள். ஒழுங்கான வழியில் செலவழிப்பதற்காக ஏற்பட்ட தேவஸ்தான ஆக்ட் டானது, பிராமணர்களுடைய எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும் கண்டனங்க ளுக்கும் தப்பி நிறைவேற்றி விட்டபடியினால், இப்போது அந்த ஆக்ட்டே செல்லாதென்றும் அதை எடுத்துவிட வேண்டுமென்றும், அதை இப்போது அமுலில்லாமல் சஸ்பெண்டு செய்வதற்கு இன்சக்ஷன் தடை கோரி ஹைக் கோர்ட்டில் மகந்துக்கள் பேரால் வியாஜ்யந் தொடுத்திருக்கின்றார்கள். இதற்கு வக்கீல்களோ, ஸ்ரீமான்கள் எஸ். ஸ்ரீனிவாசய்யங்கார், டிரங்காச்சாரியார், டி.ராமச்சந்திர ஐயர் மகந்து பக்கமும், இதற்கு எதிர் வக்கீலாய் ஏற்பட்டவரோ அட்வோகெட் ஜெனரலான ஸ்ரீமான் டி.ஆர்.வெங்கிட்டரமண சாஸ்திரிகள் என்ற பிராமணருமே.இந்த ஆக்ட் ஒழிய வேண்டுமென ஹைக் கோர்ட்டில் பிராது தொடுத்திருந்தாலும் இந்த ஆக்ட்டின் மூலமாய் ஏற்பட்ட உத்தியோ கங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று, தேவஸ்தான போர்டு ஆபீஸையும், மந்திரி வீடுகளையும் பிராமணர்கள் சுற்றிக் கொண்டு
வருகிறார்கள்.
இவையெல்லாமிருக்க மகாத்மாவையே ஒழிப்பதற்காக “ப்ராமணன்” என்கிற ஓர் பத்திரிகையையும் சங்கராச்சாரியார்கள், மகந்துகள் முதலிய பிராமண சிரேஷ்டர்களென்போரின் ஆதரணையில் ஆரம்பித்திருக்கி றார்கள். மற்றொரு பக்கம் மகாத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு பதவிகளையும், சட்டசபை ஸ்தாபனங்களையும் பெறுவதற்கு பிராமணரல்லா தாரை ஏமாற்றியும், அலைந்து கொண்டுமிருக்கிறார்கள். இதற்குச் சில பிராமணரல்லாதாரையும் மிரட்டி சுயாதீனப்படுத்திக் கொண்டார்கள்.
குடி அரசு - 1925 266
தினசரி பத்திரிகைகள் தங்கள் கைகளில் இருக்கிற காரணங்களால் பாமர ஜனங்களை ஏமாற்றித் தங்கள் வசப்படுத்திக் கொள்வதோடு, சில முக்கி யமான பிராமணரல்லாதாரைத் தலையெடுக்கவொட்டாதபடி பத்திரிகைகளில் ஊர், பேர் தெரியாது பிராமணல்லாதாரின் பொய்ப் பெயர்களை இட்டு தூற்றுதலான வியாசங்களை எழுதுவதும், பிராமண வக்கீல்களிடம் (அப்ரென்டிஸ்) அதாவது வேலை படிக்கும் பிராமணரல்லாத வக்கீல்களான, வாலிபர்களின் கையெழுத்தைப் போடச் செய்து அவர்கள் பெயரால் பிராமணரல்லாதாரை வைது பத்திரிகைகளில் எழுதுவதும், வயிற்றுக்கில்லாத வர்களினுடையவும் பணத்தாசை பிடித்தவர்களினுடையவும் தேசபக்தி யையும் விலைக்கு வாங்கிக் கொண்டுஅவைகளை பிராமணரல்லாதாருக்கு விரோதமாக உபயோகப்படுத்தி பணச்செறுக்கால் செய்து வருவது, சென்னைத் தேர்தல்களிலும், மற்ற தேர்தல்களிலும் தெரிந்து போயிருக்கிறது.
ஸ்தல ஸ்தாபனங்களில், பிராமணரல்லாதாருக்குள் கட்சிப் பிரதி கட்சிகளை உண்டாக்கி, இவர்களைக் கோர்ட்டுக்குச் செல்லும்படி செய்வதும்
சில பிராமணர்களேயாகும்..
தேசீய பிராமணர்கள், பிராமணரல்லாதாருக்குச் செய்துள்ள கொடுமை
கள் இவ்வளவுதானென வரையறுத்துவிட முடியாது. அவர்கள் செய்தவை
யும், இன்னும் செய்யப்போகின்றதுமான காரியங்கள் எவ்வளவோ இருக்கின் றன. அவைகளை சமயம் நேரும்போது வெளியிட நாம் பின் வாங்கப் போவதில்லை. இவ்வளவெல்லாமிருக்கும் போது சென்னை காங்கிரஸ் கமிட்டியார் ஸ்ரீமான்கள் இராமசாமி நாயக்கரவர்கள் மீதும், ஆரியா அவர்கள் பேரிலும் கண்டனத் தீர்மானம் செய்திருப்பதை நாம் இலட்சியம் செய்ய வேண்டியதில்லை என எண்ணுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.10.1925
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
“௬யரான்யக் கட்சியின் பரிசுத்தம்”
விளம்பரம்
பாட்னா முடிவிற்குப் பிறகு, சுயராஜ்யக் கக்ஷியார் வெற்றிக்கொடி பிடித்து திக்விஜயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காரியத்தில் எப்படி யிருந்த போதிலும், இவர்கள் போகிற பக்கங்களில் எவ்வளவு இழிவு பட்டுக் கொண்டு வந்தாலும் பத்திரிகைகளில் மாத்திரம், “சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி
மேல் வெற்றி, சுயராஜ்யக் கட்சி ஸ்தாபனம் செய்தது, சுயராஜ்யக் கட்சியில் அவர் சேர்ந்தார், இவர் சேர்ந்தார்” என்கிற விளம்பரங்களுக்குக் குறை வில்லை. ஆனால் கட்சிக்குள்ளிருக்கிற பழைய தலைவர்களோ ஒருவ ருக்கொருவர் அபிப்பிராய பேதங்களால் சண்டைபோட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.
தினந்தோறும் விடிந்தெழுந்தால் சுயராஜ்யக் கக்ஷியாரின் நடபடிக் கைக்குச் சமாதானம் சொல்லுவதும், சரியான சமாதானம் ஒன்றும் கிடைக்காத
சந்தர்ப்பங்களில் மகாத்மாவின் பெயரைச் சொல்லி மழுப்பி விடுவதுமான தந்திரங்களோடே, பாமர ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு வரப்படுகிறது.
அச்சில்லாமல் தேரோட்டம்
சுயராஜ்யக் ககஷி, சுயராஜ்யக் ககஷியென்ற பேர் மாத்திரம் இருக்கிற தேயல்லாமல், சுயராஜ்யக் கட்சிக்கென ஏற்பட்டிருக்கும் திட்டமென்ன?
ராஜீயத் திட்டம் ஏதாவது இருக்கிறதா? பொருளாதாரத் திட்டம் ஏதாவது இருக் கிறதா?சமூக முன்னேற்றத் திட்டம் என ஏதாவது இருக்கின்றதா? வென ஊன்றிப் பார்த்தால் உத்தியோகத்தையெல்லாம் தாங்களே கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்பதைத்தான் ராஜீயத் திட்டமாகவும், அதன் சம்பள மெல்லாம் தங்களுக்கே வரவேண்டு மென்பதுதான் பொருளாதாரத் திட்ட
மாகவும் இந்த உத்தியோகமும் சம்பளமும் பிராமணர்களாகிய தங்கள் ஜாதி யாருக்கே வந்துவிட வேண்டுமென்பதுதான் சமூகத் திட்டமாகவும் வைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வேறொன்றும் காணோம். இதைத் தவிர தேசநலத்தை யுத்தேசித்தாவது, ஏழை ஜனங்களையும், தொழிலாளரையும் உத்தேசித்தாவது, தாழ்த்தப்பட்டவர்களும், கொடுமை செய்யப்பட்ட வர்களுமான தீண்டாதார் முதலியோர் முற்போக்கைப் பற்றியாவது ஏதாவது
ஓர் திட்டம் சுயராஜ்யக் ககஷியினர் வசமிருக்கிறதா? என்றாவது பார்த்தால்,
குடி அரசு - 1925 268
கதரிலும் நம்பிக்கையில்லை. தீண்டாமையும் காங்கிரசில் இருக்கக்கூடாது. பிராமணரல்லாதார் வசம் இருக்கும் உத்தியோகங்களையும் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்கிற கொள்கைதான் நிறைந்து கிடக்கிறது.
ஆனால், இந்த விஷயம் பாமர ஜனங்களுக்குத் தெரியாமலிருக் கும்பொருட்டாக, கூட்டங்களுக்கு வருகிறபோது மாத்திரம் இரண்டொருவர். கதர்த்துணிகளை உடுத்தியும், கதர்க் குல்லாயைப் போட்டும், பொது ஜனங் களை ஏமாற்றுவதும் “தன்னைப் பொறுத்தவரையில் ஜாதி வித்தியாசம் கிடை யாது. ஆனால், தன் ஜாதியார் ஒப்புக்கொள்ளாததினால் அதை இப்போது ஒரு கொள்கையாய் எடுத்துக் கொள்ளுவதற்கில்லை” என்று சொல்லிவிட்டு மகாத்மா காந்தியை வைவதற்கும், தங்கள் ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்து வதற்கும், “பிராமணன்” என்ற ஓர் பத்திரிகையைநடத்தப்பணங்கொடுப்பதும், வருணாசிரமமென்னும் பிராமணாதிக்கத்தை நிலை நிறுத்த சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு அக்கிராசனாதிபதியாயிருப்பதும் ஆன காரியங்களைச் செய்துகொண்டு, பிராமணரல்லாதாரில் சில சுயநல அபிமானி களையும், உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டவர்களையும் தங்கள் சுயாதீனம் செய்து கொண்டு அவர்களைக் கொண்டே தங்களை விளம்பரம் செய்து கொள்ளுவதும், அவர்களைக் கொண்டே தங்கள் கட்சிப் பிரசாரம் செய்து கொள்ளுவதும், வயிற்றுக் கொடுமையினால் கஷ்டப்படுகிறவர்களையும்,
கீர்த்திக்கு ஆசைப்படுகிறவர்களையும், நிலையில்லாத பயங்கொள்ளிகளை
யும் காசுபணம் கொடுத்தும், விளம்பரங்களுக்கு இடம் கொடுத்தும் தங்கள் சுயாதீனப்படுத்திக் கொண்டு, பிராமணரல்லாதாரையும் மற்றும் பல ககஷிக் காரர்களையும் காட்டிக் கொடுக்கும் படியும், வையும் படியும் செய்து அச்சில் லாமல் தேரை ஓட்டிக் கொண்டு போகிறார்கள்.
இதுவரையில் செய்தது
சுயராஜ்யக் கட்சி ஆரம்பித்த காலத்தில் சர்க்காரை ஸ்தம்பிக்கச் செய்ய வெளியில் ஒத்துழையாமை செய்தால் மாத்திரம் போதாது, உள்ளே போயும் ஒத்துழையாமை செய்ய வேண்டும். சட்டசபைகளைக் கைப்பற்றி முட்டுக்கட்டை போட வேண்டும்.
சர்க்கார் எந்தத் தீர்மானம் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும். எதிர்க்கச் சக்தியில்லாவிட்டால் ஒரு நடவடிக்கையிலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்க வேண்டும்.
கமிட்டிகளிலோ அல்லது வேறு எந்தத் தெரிந்தெடுப்பிலோ ஸ்தானம் பெறக்கூடாது. போக்குவரத்து படிச்செலவு ரயில் சார்ஜ் கூட வாங்குவதில்லை என்று இன்னும் பலவாறாக சொல்லிப் பாமர ஜனங்களை நம்பும்படிச் செய்து சட்டசபை ஸ்தானங்களை வெகுவாகக் கைப்பற்றினார்கள்.
ஒருவாறாக உள்ளே சென்று இரட்டையாட்சியை ஒழிக்கிறோம், ஒழிக்கிறோமென்று சொல்லிக்கொண்டு, சட்டசபையிலுள்ள மந்திரி முதலிய
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இந்திய உத்தியோகஸ்தர்களை மாத்திரம் குறை கூறிக்கொண்டும், அவர் களை உபத்திரவப்படுத்திக்கொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சட்டசபை களின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்து எவ்வளவு உத்தியோகங்களை யும்,பணங்களையும் சம்பாதிக்கச் சாத்தியப்படுமோ அவ்வளவிற்குத் தகுந்த
படி, கிடைக்கக் கூடாத இடத்தில் வேண்டாமெனச் சொல்லிக் கொண்டும், கிடைக்கக் கூடிய இடத்தில் அதுவேறே சங்கதி, இதுவேறே சங்கதி. அது வேறே விஷயம், இது வேறே விஷயம். அந்த மாகாணத்தின் நிலை வேறு, இந்த மாகாணத்தின் நிலை வேறு எனச்சொல்லிக் கொண்டும், இது கக்ஷி சம்மதத்தின் பேரில் செய்யப்பட்டது, அது கட்சி சம்மதமில்லாமல் செய்யப் பட்டது எனச் சொல்லிக்கொண்டும் அகப்பட்ட வரையிலும் அபகரித்துக் கொண்டு வருகிறார்கள். கேட்டால் சுயராஜ்யக் கட்சியாரின் தீர்மானமென்றும், சமயத்துக்குத் தக்கப்படி நடந்து கொள்வது ராஜதந்திர மென்றும் சொல்லிக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்.
இதுவரையில் சில மாகாணங்களில் தங்கள் உத்தேசப்படி பெரும் பான்மை ஸ்தானங்களைக் கைப்பற்றி மந்திரி பதவிகளை ஒழித்தார்கள். மேலே இனி என்ன செய்வதென்று அதைப்பற்றி யாதொரு வார்த்தையும் காணோம். ஆனால், அதையார் பெறுவதென்கிற ஓர் முடிவுக்கு தங்களுக்குள் இன்னும் வராததால், மந்திரி பதவியை ஒப்புக்கொள்ள வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டுமெனச் சிலரும், தங்கள் மாகாணத்தில் தங்களுக்குக் கிடையாதென்னும் எண்ணமுள்ளவர்கள் கிடைக்கிற சந்தர்ப்பம் வரையில் வேண்டாம், வேண்டாமெனச் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்கக்கூடிய இவர்களில் வெகு சீக்கிரம் பெற்றுக் கொள்ளப் போகிறார்.
கள். அதிலொன்றும் ஆக்ஷேபனையில்லை. தவிர, 4000, 5000 சம்பளம் பெறும் உத்தியோகங்கள் பல பெற்றாகிவிட்டது. தினம் 100, 200 கமிஷன் கிடைக்கக்கூடிய கமிட்டிகளில் ஸ்தானம் பெற்றாகிவிட்டது. சில ஸ்தானங்கள். உத்தியோகம் ஏற்றுக்கொண்டது, கட்சி கொள்கைகளை மறந்து கட்சியையே விலகும்படியாகிவிட்டது. உதாரணமாக, ஸ்ரீமான்கள் படேலும், தாம்பேயும் சட்டசபைத் தலைவர்கள் ஸ்தானங்களைப் பெற்ற காரணங்களால், தாங்கள். இனி அக் கட்சிக்காரர்களென்னும் கொள்கைகளிலிருக்கமுடியாமல், ஒரு
கட்சியிலும் சேராத பொது மனிதர்களாயிருக்க வேண்டியதென்றும் அதனால் ஒருவர் வைஸிராய் வீட்டுக்கு பத்து தடவை போவதினால் குற்றமில்லை யென்றும்,மற்றொருவர் நிர்வாக சபை அங்கத்தினர் பதவியை ஒப்புக்கொள்: வதில் குற்றமில்லையென்றும் நியாயம் சொல்லி அந்தப்படிக்குச் செய்துமாகி விட்டது.
இவற்றை கட்சியின் முக்கியஸ்தர்களான தலைவர், உபதலைவர், மாகாணத் தலைவர், காரியதரிசி முதலியோர்களும் ஒப்புக்கொண்டும் ஆகி விட்டது. பொது ஜனங்களுக்குப் பயந்து கொண்டு ஸ்ரீமான் தாம்பே விஷயத்
தில் மட்டும் கட்சியின் சம்மதமிராமல் போனது மாத்திரம் தப்பிதமென்றும். அதைத் துரோகம் என்றும், வெட்கம் என்றும் சொல்லி வருகிறார்கள். ஸ்ரீமான்
குடி அரசு - 1925 270
தாம்பேக்கோ, கக்ஷியின் சம்மதம் பெறுவதில், ஒருவித ஆக்ஷேபனையில்லா விட்டாலும், சுயராஜ்யக் கட்சியின் சம்மதங் கேட்க ஆரம்பித்தால், தன்னை ஏமாற்றிவிட்டு வேறு சுயராஜ்யக் கட்சிக்காரர் அதை ஏற்றுக்கொண்டால் என்ன செய்வதென்னும் பயத்தைக் கொண்டு, சட்டசபை அக்கிராசன ராயிருக்கச் சம்மதம் கொடுத்ததே போதுமென்று சொல்லுகிறார்.
பம்பாய் மாகாண சுயராஜ்யக் கக்ஷித் தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சி நிர்வாக சபை மெம்பருமான, ஸ்ரீமான் ஜெயகர் அவர்கள்,
“ஸ்ரீமான் படேல் இந்தியா சட்டசபை அக்கிராசனப் பதவியை ஒப்புக் கொண்: டதற்கும், ஸ்ரீமான் தாம்பே நிர்வாக சபைப் பதவியை ஒப்புக் கொண்டதற்கும். வித்தியாசமில்லை” என்று சொல்லிவிட்டார். இவர் பம்பாய் மாகாணத்தில் சட்ட ஞானத்திலும் வரும்படியிலும் சென்னை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின்
சட்ட ஞானத்திலும், வரும்படியிலும் இளைத்தவரல்ல..
இனி மகாராஷ்டிர தேசத்திய தலைவரும், அகில இந்திய சுயராஜ்யக் கட்சியின் உபதலைவருமான ஸ்ரீமான் கேல்கர், “சுயராஜ்யக் கட்சியின் தலைவரும் காரியதரிசியுமான ஸ்ரீமான்கள் மோத்திலால் நேரு, ஏ.ரெங்க சாமி ஐயங்கார் இவர்கள் ராணுவக் கமிட்டியிலும், கோர்ட்டு அவமதிப்பு மசோதா கமிட்டியிலும் ஸ்தானம் பெற்றதைவிட, ஸ்ரீமான் தாம்பே நிர்வாக சபை ஸ்தானம் பெற்றது மோசமல்ல”வெனச் சொல்லி விட்டார். இவர் சென்னையிலுள்ள ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கும் மத்திய மாகாணத்
திலுள்ள பண்டித நேருவுக்கும் ஒரு விதத்திலும் இளைத்தவரல்ல. அதோடு ஸ்ரீமான் திலகருடைய மருமகப் பிள்ளையென்றும், பிரதம சிஷ்யரென்றும் தனி யோக்கியதைப் படைத்தவர். சென்னையிலுள்ள சுயராஜ்யக் கட்சிக்காரர். களோ. ஸ்ரீமான் தாம்பேயின் நியமனத்தைப் பற்றிக் கண்டிக்கக் கொண்டுவந்த. கண்டனத் தீர்மானத்தின் போது, சுயராஜ்யக் கட்சித் தலைவர்களிலொருவர். டி தீர்மானத்தைக் கண்டித்ததாகவும், இவ்விதம் கண்டித்தால் நமது செல்வாக்கு குறைந்து போய்விடும் என்று அவரைக் கண்டித்ததாகவும், அதனால் அவர் எழுந்து வெளியில் வந்து விட்டதாகவும் ஒரு குருவி வந்து சொல்லியிருக்கிறது. இது உண்மையற்றதாயிருந்தாலும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. அல்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் விருந்து முதலிய வற்றுக்குப் போகக் கூடாதென்று, சென்னை சுயராஜ்யக் கட்சிக்காரர் பறை
யடித்துக் கொண்டது பொது ஜனங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கும்.
இப்போது, சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் ஓர் தபால் இலாகா அதிகாரிக்கு நடந்த விருந்திற்கு, சென்னை சுயராஜ்யக் கட்சித் தலைவர்களெல்லாம் போயிருந்தார்கள். இதன் காரணம் விருந்தாளிக்கு
பூணூல் இருந்ததினாலும், தங்கள் வகுப்பாருக்கு உத்தியோகங்கள் கொடுக்கத் தகுந்த அதிகாரம் அவர் கையில் இருந்ததினாலும் குற்றமில்லையென்றும். நினைத்துவிட்டார்கள் போலும். இதர மாகாணங்களிலேயும் இதைப்
பின்பற்றுவதோடு விருந்துகள் நடத்துவதற்குப் பணமுங் கொடுத்திருக்கிறார்.
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கள்.பணம் கொடுப்பதற்கு ஒரு நிபந்தனை மாத்திரம் வைத்துக்கொண்டிருக் கிறார்களாம்.அதென்ன வென்றால், தாங்கள் கொடுக்கும் பணத்தில் மாத்திரம் சாராயம் வாங்கக் கூடாதாம். வேறு யார் பணத்தில் வாங்கிக் கொண்டாலாவது உபயோகப்படுத்திக் கொண்டாலாவது தங்களுக்கு தோஷமில்லையாம்.
உள்ளே ஒத்துழையாமை
ஒத்துழையாமையென்பது சென்னையில் சர்க்காருக்கனுகூலமாய், பிராமணரல்லாதாருக்கு விரோதமாய், பிராமணரல்லாதாருடன் ஒத்துழை யாமை என்பதுதான் சென்னை, பம்பாய், மராட்டா முதலிய சுயராஜ்யக் கட்சி யாரின் அகராதியில் ஏற்பட்டுப் போய்விட்டது. அல்லாமல் சுயராஜ்யக் ககஷி ஸ்தாபனம் செய்யும் இடங்களிலெல்லாம் ராவ் பகதூர், ராவ் சாகிப் முதலிய பட்டதாரிகளையும் ஒத்துழைப்புக்காரர்களையும், பூணூல் போட்டவர். களையும் பார்த்தே அவர்கள் வசம் ஸ்தாபனங்கள் ஒப்படைக்கப்பட்டு
வருகிறது. ஏனெனில் அடுத்த தேர்தலை உத்தேசித்து ஸ்தல ஸ்தாபனங்களில் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் ஒரு மூச்சுப் பறந்து பார்த்தாய் விட்டது. இனி அடுத்தாற் போல் சட்டசபைத் தேர்தல்கள் இருக்கிறது. இப்பொழுதே. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பணங்களும் லக்ஷக்கணக்காய்ச் சேகரிக்க முற்பட்டாகிவிட்டது. காங்கிரசையும் சுயாதீனம் செய்துகொண்டாகிவிட்டது. மகாத்மாவின் சம்மதமும் கிடைத்துவிட்டது.
இனி நடக்க வேண்டியதென்ன ?
பிராமணர்களும், அவர்கள் இஷ்டம் போல் நடப்பதாய் வாக்குக் கொடுத்துள்ள பிராமணரல்லாதார்களும், சட்டசபை ஸ்தானங்களைக் கைப்பற்ற வேண்டியதுதான் . கைப்பற்றி, பிராமணரல்லாதார்களுக்காக பிராமணரல்லாத மந்திரிகளும், செய்து வைத்துள்ள பிராமணரல்லாத அங்கத்தினர்களும், தேவஸ்தான மசோதா, சர்வகலாசாலை மசோதா, தொழி லாளரின் அனுகூலங்கள், தீண்டாதாருக்கென ஏற்பட்ட அனுகூலங்கள், சகல சமூகத்தாரும் சமத்வமாய் அநுபவிக்கக் கூடிய சில ஸ்தானங்கள், இவற்றை அடியோடு தலைகீழாகக் கவிழ்த்தி வருணாச்சிரம தருமமென்கிற பிராமணா திக்கத்தை நிறுத்தி வெற்றிக் கொடி நாட்டி, பிராமண சுயராஜ்யம் அடைவது
தான் பாக்கியாயிருக்கிறது. பிராமணரல்லாதாரின் தலையெழுத்து எப்படி யிருக்கிறதோ, அதை அனுசரித்துத்தான் இப்போது அவர்கள் புத்தியும் போகும். ஆனால், பாமர ஜனங்கள் ஏமாந்து போகாமலிருக்கும்படி கேட்டுக் கொள்ளுவதைவிட நாம் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.
குடி அரசு - தலையங்கம் - 25.10.1925
குடி அரசு - 1925 272
சுதேசமித்திரணின் லாதி புத்தி
சுதேசமித்திரன் பத்திரிக்கை “அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை” என்கிற தலைப்பின்கீழ் “ ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பாட்னா முடிவுக்கு விறோதமாய் தஞ்சையில் சுயராச்யக் கக்ஷியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்லவென்றும் சுயராச்யக் கக்ஷியாரும் இதரர்களும் கோருகிற சுயராச்யம் இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்று சொன்னாராம் என்றும், காங்கிரஸ்காரர் இப்படிச் சொல்லுவது அழகல்லவென்றும் சென்னை கீழ்ப்பாக்கம் தேர்தல் ஸ்ரீமான் நாயக்கர் மனதை வாட்டி வருகிறதென்றும் இப்படிப்பட்டவர் ஜஸ்டிஸ் கட்சி யிலோ வேறு கட்சியிலோ சேர்ந்து கொள்ளலாம் என்றும் எழுதி, நாயக்கர் சுயராச்யமே வேண்டாமென்று பேசியதாக பொது ஜனங்கள் நினைக்கும்படி எழுதியிருக்கிறது. இவ்வெழுத்துக்களில் எவ்வளவு அயோக்கியத்தனமும் அற்பத்தனமும் நிறைந்திருக்கிறது என்பதை வாசகர்களே கவனித்துக்
கொள்வார்கள்.
இதற்குமுன் பல தடவைகளில் நாம் குறிப்பிட்டிருப்பதை, இந்த பிராமண பத்திரிகை கவனிக்காமல் மானம் ஈனமின்றி மறுபடி அதே காரியத்தைச் செய்கிறது. தஞ்சையில் நமக்கு வேண்டிய சுயராச்யம் என்ன என்பதைப் பற்றியும், நமக்கு வேண்டாத சுயராச்யம் என்ன என்பதைப் பற்றியும், கதர் தீண்டாமையைப் பற்றி பேசும் பொழுது 2, 3 மணி நேரம் விபரமாய் பேசியிருக்கிறார்.
அந்தப் பேச்சுக்களைக் கிரமமாய் எடுத்துப் போடாமல் அவர் பேசிய பேச்சிலுள்ள எழுத்துக்களைப் பிரித்து தனக்கு வேண்டியபடி வார்த்தை களைக் கோர்த்துக் கொண்டு தங்கள் ஜாதி புத்தியை காட்டியிருக்கிறது.
சுயராச்யம் வேண்டாமென்று இந்தியாவில் ஒரு கட்சியும் சொல்ல வேயில்லை. சுயராச்யம் என்பது என்ன என்பதுதான் இப்போது தகராரி லிருக்கிறது. பிராமணர்கள் படிப்பதும் சர்க்காரில் உத்தியோகம் உண்டாக் குவதும், தம்பிக்கும், மகனுக்கும், தங்கள் கூட்டத்தாருக்கும் உத்தியோகம் சம்பாதித்து கொடுப்பதும்தான் சுயராச்யம் என்று சிலரும் சில கட்சிக்காரரும் நினைக்கிறார்கள். ஏழைகள் வயிராரச் சாப்பிடுவதும், நாட்டில் கைத் தொழில்
கள் ஓங்கி தொழிலாளர் பிழைப்பதும், நாட்டில் தரித்திரம் ஒழிவதும்,மனிதர். எல்லோரும் சமம் என்ற உணர்ச்சியில் சுயமரியாதையுடன் வாழ்வதும் தான்
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுயராச்யம் என்று மகாத்மா உள்பட சிலர் நினைக்கிறார்கள். அதைத்தான் நாம் தேடுகிறோம்.
இரண்டாவதான சுயராச்யம், சுயராச்யக் கட்சியாரால் வருமானால் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று மகாத்மா சொல்வது உண்மைதான். ஆனால் சுயராச்யக் கட்சியார் திட்டத்தில் இவ்வித சுயராச்யம் வருமென்கிற நம்பிக்கை எனக்கில்லை. அதினால்தான் நான் அதில் சேரவில்லை என்கிறார். இந்த இரண்டாவது பாகத்தை விட்டுவிட்டு முதல் பாகத்தை மாத்திரம் தங்கள் பத்திரிக்கைகளில் எழுதி ஏமாற்றப் பார்த்தால் யார் ஒப்புவார்கள். இதைப்பற்றி விவரமாக அடுத்த வாரம் எழுதுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.10.1925
குடி அரசு - 1925 274
செண்ணை லோகல் 6யோர்டு சட்டம்
ம்ரீமாண். விரையணிண் திருத்த மசோதா
1820-ம் வருடத்திய ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தைத் திருத்தும்படி, ஸ்ரீமான். வீரையன் எம்.எல்.ஸி. கீழ்கண்ட மசோதாவை அடுத்த சட்டசபையில் கொண்டு வரப்போவதாகவும், அதை எல்லா அங்கத்தினர்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் அறிவிக்கிறார்.
சென்னை ஸ்தல ஸ்தாபன போர்டு சட்ட திருத்த மசோதா
1320-ம் வருடத்திய சென்னை ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தை அடியிற் கண்டவாறு மாற்றவேண்டும்.
(1) இந்தச் சட்டமானது 1925-ம் வருடத்திய சென்னை லோகல் போர்டு திருத்தப்பட்ட சட்டம் என்று அழைக்கப்படலாம்.
(2)3167வது பிரிவுக்குப் பின் 17(ஏ) எந்த பொது ரஸ்தா, தெரு அல்லது பாதை வழியாக நடந்து போகிற அல்லது அதைச்சட்டப் பிரகாரம் உபயோகிக்கிற எந்த நபரையும் எவரும் தடை செய்யக்கூடாது என்னும் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்படவேண்டும்.
033124-1-பிரிவில் “குடியிருப்பவர்களின் செளகரியம்” என்னும் வாசகத்திற்கு அடுத்தாற்போல் “மேற்கண்ட காரணங்களுக்காக அவை ஜாதி மத வித்தியாசமின்றி, சகல ஜனங்களாலும் தாராளமாய் உபயோகிக் கப்பட்டதாய் இருக்க வேண்டும்” என்னும் வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
(49167- பிரிவிலுள்ள, “பொது மார்க்கட்டுகள்” என்ற வார்த்தை களுக்கு அடுத்தாற்போல், “அந்த மார்க்கட்டுகளை சகல ஜனங்களும் ஜாதி, மத வித்தியாசமின்றி தாராளமாய் உபயோகப்படுத் தலாம்” என்னும் வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
8-வது ஷெடியூலில்
(1) 128(1-வது பிரிவில் குறிக்கப்பட்டிருக்கிற தண்டனைக்குப் பின் “எந்த ஜாதி, மதம் வகுப்பு முதலியவற்றைச் சேர்ந்த எந்த ஆளையானாலும் சரி தடை செய்தால் அபராதம் ரூ.50” என்று சேர்த்துக் கொள்ளவேண்டும்.
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
(2)3157-வது பிரிவில் குறிக்கப்பட்ட தண்டனைக்குப்பின் 157(ஏ)) “எந்த பொது ரஸ்தா, தெரு அல்லது பாதையை உபயோகிக்கிற எந்த நபரையாவது, சட்ட விரோதமாய் தடை செய்தால், அபராதம் ரூ.50” என்று
சேர்த்துக் கொள்ளவேண்டும்.
(8)166(1)-augy பிரிவில் ஏற்படுத்தியிருக்கிற தண்டனைக்குப்பின் “எந்த பொது மார்க்கட்டையாவது உபயோகிக்கிற எந்த ஆளையாவது சட்டத்துக்கு விரோதமாகத் தடை செய்தால் அபராதம் ரூ.100” என்று சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நகரம் அல்லது கிராமத்திலுள்ள பொது ரஸ்தா, தெரு அல்லது பாதை வழியாக எந்த வகுப்பைச் சேர்ந்த ஆட்களும் நடந்து போவதைப்பற்றி, தடையொன்றுமில்லையென்றும், மேலும் எந்த பொது ஆபீஸ் கட்டிடம், கிணறு, குளம் பொதுஜன வேலை நடக்கிற கட்டிடங்கள் முதலியவைகளை ஏனைய ஜாதி இந்துக்கள் எந்தவிதமாய் உபயோகிக் கிறார்களோ, அதைப்போலவே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும், அவைகளை உபயோகித்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை யென்றும், சென்னை சட்ட சபையில் 1924-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 22- ந்தேதி ஓர்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே தீர்மானத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு சென்ற செப்டம்பர் மீ£25-ந்தேதி கவர்ன்மெண்டார் ஓர் உத்திரவு பிறப்பித்துள்ளார்கள். அந்த உத்திரவு ஸ்தலஸ்தாபன போர்டு தலைவர்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது. எனினும், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆகவே அந்த உத்திரவை சட்ட ரூப மாக்கி ஊர்ஜிதப்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.
குறிப்பு:-
ஸ்ரீமான். வீரையனின் சென்னை லோகல்போர்டு சட்டத்திருத்த மசோதாவை மேலே வெளியிட்டிருக்கிறோம். இம்மசோதா, இம்மாகாணத்
திற்கு எவ்வளவு அவசியமென்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். நமது தேசமக்களில் ஒரு சாராரை ஓடுக்கப்பட்டவர்களென ஒதுக்கி வைத்து, அவர்களுக்கு சமத்வம் காட்டாது, அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோ மென எதைப்பற்றி யெல்லாமோ பேசுவது வெறும் ஜம்பமேயன்றி வேறல்ல.
1924-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி நடந்த சென்னை சட்ட சபையில் பொது ரஸ்தா, வீதி, பாதை, குளங்கள், கிணறுகள் முதலியவைகளை எல்லா
ஜாதியாரும், ஜாதி மத பேதமின்றி அநுபவித்துக்கொள்ளலாம் என ஓர் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தண்டனையின் போக்கு காட்டப்படாத
தால், அத்திர்மானம் சாரமற்றதாகிவிட்டது. அதனை ஊர்ஜிதத்துக்குக் கொண்டுவர வேண்டுமாயின் இத்தகைய திருத்தம் முற்றிலும் அவசியமே யாகும். இம்மசோதாவை ஒத்துழைப்பை விரும்பும் சட்டசபை மெம்பர்கள். யாவரும் ஏகமனதுடன் ஆதரிப்பார்களென எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - குறிப்புரை - 25.10.1925
குடி அரசு - 1925 276
நமது பத்திரிக்கை
நமது “குடி அரசுப்” பத்திரிக்கை ஆரம்பித்து ஆறு மாதங் களாகின்றது. அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய மகாத்மா வின் நிர்மாண திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது. இத்தொண்டில் “குடி அரசு” சிறிதுங் கள்ளங் கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது தனது ஆத்மாவையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி தொண்டு செய்து வந்திருக்
கின்றது - வரவும் உத்தேசித்திருக்கிறது. “குடி அரசு” குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரசாரப் பத்திரிகையேயல்லாமல்; வெறும் வர்த்தமானப் பத்தி ரிக்கை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப் பதையோ தனது சுயவாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ சுயநலத்திற்காக
கீர்த்திபெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும் வாசகர் களுக்கு போலி ஊக்கமும் பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றாற்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர்: வேடிக்கைப் பத்திரிக்கையுமன்று. பிரதி வாரமும் “குடி அரசு” தனது ஆத்மாவை வெளிப்படுத்தும்போது கண்ணீர் சொட்டாமலிருக்க முடிவதே யில்லை. இதன் பலனாக உயர்ந்தோரென்று சொல்லிக்கொள்ளுவோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர்களென்று சொல்லிக் கொள்ளுவோர்களாகிய பல ராஜதந்திரிகளுக்கும் விரோதியாகவும் அவர். களுடைய சூழ்ச்சிப் பிரசாரங்களுக்கு நமது “குடிஅரசு” ஆளாக வேண்டிய
தாகவும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வித நிலையில் “குடி அரசு” சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் போதிய அளவு பெற முடியாமலிருப்பது
ஓர் ஆச்சரியமல்ல.
உண்மையில் “குடி அரசு” க்கு எந்த பிராமணரிடத்திலும் குரோதமோ வெறுப்போ கிடையாதென்பதை உறுதியாகச் சொல்லுவோம். ஆனால் பிராமணன் உயர்ந்தவனென எண்ணிக் கொண்டிருப்பதிலும், மற்றவர்கள். தீண்டாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள், “இழிவான” மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்
திலும், தங்கள் வகுப்பார்தான் முன்னணியிலிருக்க வேண்டும், மேன்மை
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யுடன் பிழைக்க வேண்டும் மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாகவே யிருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அதற்காக மற்றவர்களை உபயோகித்துக் கொண்டும் செய்யும், கொடுமையான சூழ்ச்சி களிடத்திலும்தான் “குடி அரசுக்கு வெறுப்பு இருப்பதுடன், அதை அடி யோடே களைந்தெறிய வேண்டுமென்று ஆவல் கொண்டு உழைத்து
வருகிறது.
பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்வோரிடத்தில் “குடி அரசி” ன் தற்காலப் பத்திராதிபர் எவ்வளவோ அன்புடனும், பக்தியுடனும், நட்புடனும் வெகு காலமாக நடந்து கொண்டு வந்திருக்கிறார். அநேக பிராமணர்: களுடைய அன்புக்கும் பாத்திரமாயிருந்திருக்கிறார். இன்னும் இருந்து வருகிறார். தேசீய வேலையிலும், பல தேசீய பிராமணர்களுடன் ஒன்றுபடக் கலந்தே ஒத்துழைத்தும் வந்திருக்கிறார். உதாரணமாக, ஒத்துழையாமைக்கு முன்பு சட்டசபைப் பிரவேசங்களுக்கு தனது குடும்ப சகோதரர்கள் போன்ற ஆப்த நண்பர்களான ஸ்ரீமான்கள் கோவை எம். சம்மந்த முதலியார், டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், எம்.வேணுகோபால் பிள்ளை முதலியோர் களுக்கு விரோதமாகவும், அதற்குமுன் அதிகப் பழக்கமில்லாத ஸ்ரீமான் பி.வி. நரசிம்மய்யருக்கு “தீவிர தேசீயவாதி” என்கிற ஒரு காரணத்திற்காகவே அவருக்கு சட்டசபை அங்கத்தினர் பதவி கிடைக்கவேண்டிய வேலை செய்திருக்கிறார். இதில் ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கு சொல்வது குற்றமாகாதென்று நினைக்கிறோம். அதாவது, ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளைக்காக ஸ்ரீமான் நரசிம்மய்யரை தம் அபேக்ஷகர் ஸ்தானத்தை வாபீஸ். வாங்கிக் கொள்ளும்படி ஒரு சட்டசபைத் தேர்தலில் கேட்கப்பட்டபோது ஸ்ரீமான் பி.வி.நரசிம்மய்யர் ஸ்ரீமான். வேணு கோபால் பிள்ளை தாம் காங்கிரஸ்வாதியென்றும், ஹோம்ரூல் கக்ஷியைச் சேர்ந்தவரென்றும் வெளிப் படையாகப் பத்திரிகைகளுக்கு எழுதினால் தாம் அபேக்ஷகர் ஸ்தானத்தி லிருந்து விலகிக்கொள்வதாகப் பகிரங்கமாகச் சொன்னார். அந்தப்படியே ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளையும் தாம் காங்கிரஸ்வாதியென்றும், ஹோம்.
ரூல் கட்சியைச் சேர்ந்தவரென்றும் பத்திரிக்கைகளுக்கு எழுதிவிட்டார். பேச்சுப்படி ஸ்ரீமான் நரசிம்மய்யர் பின்வாங்கிக் கொள்ளவேண்டுமென்று சொன்ன காலத்தில் முடியாதென்று சொல்லிவிட்டார். இது விஷயங்களைப் பத்திரிகைகளுக்கு எழுதின காலத்தில் “நியூ இந்தியா” “ஹிந்து” “சுதேசமித்திரன்” இம்மூன்றும் பிரசுரிக்கவேயில்லை. இம்மாதிரி நாணயத்
தவறுதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலுங்கூட ஸ்ரீமான். நாயக்கர்,தம்முடைய ஆப்த நண்பராயிருந்து கொண்டு வந்த ஸ்ரீமான் வேணுகோபால் பிள்ளையவர் களுக்கு விரோதமாகவும், ஸ்ரீமான் நரசிம்மய்யருக்கு அநுகூலமாகவுமிருந்து தம்முடைய வோட்டுகளையும், தம் நண்பர்களுடைய வோட்டுகளையும், ஸ்ரீமான் நரசிம்மய்யருக்கே கொடுத்து அவரை சட்டசபை மெம்பராக இருப்பதற்கும் உதவி செய்தார்.
குடி அரசு - 1925 278
அல்லாமலும், ஒத்துழையாமை காலத்திலும் தேசீய பிராமணர்களுடன் ஒன்றுபடக் கலந்தே, பரிசுத்தமாய் சில பிராமணர்களைப் பின் பற்றியும், அவர்களைத் தலைவர்களாக்கியும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்:
டும் உழைத்து வந்திருக்கிறார். இவையெல்லாம் தேசத்தையும் தேச க்ஷமத்
தையும் முன்னிட்டேயல்லாமல் வேறெவ்வித சுயநலத்திற்காகவும் அல்ல வென்பதை ஸ்ரீமான். நாயக்கரின் எதிரிகளுங்கூட அறிவார்கள். இப்படி யிருக்க, இப்பொழுது, திடீரென்று சில தேசீயவாதிகளென்போரிடமும்
முக்கியமாய் பிராமண சமூகத்தில் பலரிடமும் அருவருப்புத் தோன்றக் காரணமென்ன வென்பதை வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளுவது சுபாவ மேயாகும். நமக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவத்தில், பிராமண தேசீயவாதி களென்போரில் பெரும்பாலோர், தங்கள் சுயநலத்திற்கும், தங்கள் வகுப்பு
முன்னேற்றத்திற்கும், பிராமணரல்லாத மற்ற எல்லா சமூகத்திற்கும் துரோகம் செய்வதற்குமே உழைத்து வந்திருக்கின்றார்களென்றும் - ஸ்ரீமான். நாயக்கர். போன்றாரை உபயோகப் படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்களென்றும் நினைக்கும்படியாகவே ஏற்பட்டுப் போய்விட்டது. பிராமணர்களின் தியாக மென்று சொல்லப்படுவதும் பிராமணரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப் படுவதாய்க் காணப்படுகிறது. இந்நிலையில் தேசத்தின் பெரிய சமூகத்தாரான, பிராமணரல்லாதாரைப் பலி கொடுத்து பிராமணர்களுக்கு நல்ல பிள்ளை களாய் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் தோன்றமாட்டே னென்கிறது. அல்லாமல், இவற்றைப் பற்றிய கவலை எடுத்துக்கொள்ளாமல் எப்படியோ போகட்டும் என விட்டுவிடுவதற்கும் மனம் ஒருப்படுவதில்லை. என்றைக்கிருந்தாலும் இரு சமூகத்தினரும் ஒன்றுபட்டுதானாக வேண்டும். அங்ஙனம் ஒன்றுபடுவதற்கு அவரவர்களுடைய குற்றங்குறைகளை எடுத்துச் சொல்லப் பயந்து கொண்டு மேற்பூச்சுக்கு மாத்திரம் பிராமணர்களிடம் அன்பர்களாய் நடந்து கொள்ளுவதில் இரு சமூகத்தாருக்கும் ஒரு பிரயோ ஜனமுமேற்படாது எனக் கருதியே, யாருடைய நிஷ்டூரம் ஏற்பட்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லாமல் உண்மையை எடுத்துக் கூறி குற்றங்களைக்.
கீறி ஆற்றி திருத்துப்பாட்டடையச் செய்து இரு சமூகமும் உண்மையான சகோதர அன்பில் கட்டுப்பட்டு நமது நாடு உண்மையான விடுதலை பெறவே
உழைத்து வரப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே “குடி அரசின்” முதலாவது இதழ் தலையங்கத்தில் “மக்களுக்குள் தன் மதிப்பும், சமத்வமும், சகோதரத் வமும் ஓங்கி வளரல்வேண்டும், மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும், உயர்வு. தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச்சண்டைகள் ஒழியவேண்டும், ஆனதுபற்றியே, “நகுதற்பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்மேற் சென்றிடித்தற் பொருட்டு” எனும் தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் வாக்கை கடைபிடித்து, நண்பரேயாயினுமாகுக, அவர் தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக்
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித் தொதுக்கப்படும்” என நமது அபிப்பிராயத்தைத் தீர்க்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
இந்நிலையில், நமது “குடி அரசு” பாமர ஜனங்களின் ஆதரவைப்
பூரணமாகப் பெறுவது சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல, உதாரண: மாக, “குடி அரசு” ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும் இதுவரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள். இது நஷ்டத்தில் தான் நடைபெற்று வருகின்றதெனச் சொல்ல வருந்துகிறோம். அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லையென்பதே நமது அபிப்பிராயம். பெரும்பாலும் பிராமணர், செல்வந்தர், முதலாளிகள், வைதீகர் முதலியோ ருடைய குற்றங்களை எடுத்துச் சொல்லிவருவதால் அவர்கள் நமது பத்திரிக்கையை ஆதரிப்பார்களென்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தன மாகவே முடியும். ஆதலால், நமது பத்திரிக்கையை ஆதரிக்க வேண்டியது பிராமணரல்லாதார், ஏழைகள், தொழிலாளிகள், தீண்டாதாரெனப்படுவோர் முதலிய ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்ட முக்கிய கடனாகும். அந்தப்படி இக்கூட்டத்தார் நமது “குடிஅரசை” ஆதரிக்கவில்லையானால், “குடி அரசு” தானாகவே மறைந்து போக வேண்டியதுதான் அதனுடைய கடமையேயல்லாமல், முன்சொன்னது போல் சுயநலம் முதலியவைகளுக் கென்று இப்பத்திரிக்கையை நடத்துவதில் பிரயோஜனமில்லை. ஏனெனில்
“குடி அரசானது தன்னுழைப்பினாலும், தனது தியாகத்தினாலும் மக்கள்.
சிறப்பாய் பிராமணரல்லாதார், தீண்டாதார் முதலியோர் விடுதலை பெற்று சுயமதிப்புடன் வாழ்ந்து தேசம் உண்மையான சுயராஜ்யமடைய வேண்டு
மென்றும், சகலரும் சமமாய் வாழவேண்டுமானால், தாழ்த்தப்பட்டவர்களெல்
லாம் சமநிலைக்கு வரவேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் இன்றி யமையாதெனக் கருதி அதையெல்லா வகுப்பாரும் அடைய வேண்டுமென எதிர்பார்க்கிறதேயொழிய பொது மக்கள் வாழ்வால் “குடி அரசு” வாழ வேண்டுமென்று அது கருதவேயில்லை. ஆதலால், “குடி அரசி”ன் வாழ்வைக் கோருகிற ஒவ்வொருவரும், தங்களாலியன்றளவு புதிய சந்தாதாரர். களைச் சேர்த்துக் கொடுத்தும், மற்றும் தங்களால் கூடிய உதவி செய்தும் இதனை ஆதரிக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.111925
குடி அரசு - 1925 280
சுதேசமித்திரணின் ஊாதிப் புத்தி
சென்ற வாரம் இத்தலையங்கத்தின் கீழ் “சுதேசமித்திரன்” என்னும் பிராமணப் பத்திரிக்கை, பிராமணரல்லாதாருக்கும், மிக முக்கியமாய்ப் பிராமணரல்லாத தேசத் தொண்டர்களுக்கும், விரோதமாய் வேண்டுமென்றே செய்து வரும் சூழ்ச்சிகளைப் பற்றி எழுதி, மற்றும் மறுமுறையென்று எழுதியிருந்தோம். அவற்றில் முக்கியமாக ஸ்ரீமான்.ஈ.வெ.இராமசாமி நாயக்கரைப்பற்றி தன்னாலும் தான் ஆட்கொண்டவர்களாலும் பொது ஜனங்களுக்கு எவ்வளவு கெட்ட அபிப்பிராயத்தைக் கற்பிக்க வேண்டுமோ, அவ்வளவையும் செய்து பார்ப்பதென்றே முடிவு கட்டிக்கொண்டிருக்கிறது. ஸ்ரீமான். நாயக்கர் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், என்ன பேசினாலும் அவற்றைத் திரித்துப் பொதுஜனங்களுக்குத் தப்பபிப்பிராயப்படும்படி கற்பனை செய்து பத்திரிக்கைகளிலெழுதுவதும் அவற்றிற் கேற்றார்போலவே சில ஈனஜாதி நிருபர்களை அங்கங்கே வைத்துக்கொள்ளுவதும், அவர்கள் பேரால் ஸ்ரீமான் நாயக்கர் சுயராஜ்யம் வேண்டாமென்கிறார். ஜஸ்டிஸ் கட்சி
யில் சேர்ந்துவிட்டார், அதிகார வர்க்கத்தோடு கலந்துவிட்டார், காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாயிருக்கிறார் என்று இவ்வாறாக அப்பத்திரிக்கை எழுதி வருகிறது. உதாரணமாக, பொள்ளாச்சி, மதராஸ், அநுப்பபாளையம், தஞ்சை, மாயவரம் இந்த இடங்களில் ஸ்ரீமான் நாயக்கர் பேசிய பேச்சைப்
பற்றி சுதேசமித்திரன் பத்திரிக்கை தாறுமாறாகவும் பிரசுரம் செய்து அதையனுசரித்துப் பல குட்டித் தலையங்கங்களும் எழுதி வந்திருக்கிறது. போதாக்குறைக்கு தன் இஷ்டம் போல் பலவற்றை எழுதிக்கொண்டு சில பிராமணரல்லாதாரிடம் கையெழுத்துப்பெற்று, அவர்கள் பேரால் பிரசுரம் செய்து கொண்டும் வருகிறது. இப்பிராமணப் பத்திரிகைகள், பிராமணரல்லா தாருக்கு விரோதமாய் இங்ஙனம் செய்யும் அயோக்கிய பிரசாரத்தையும், பிராமணர்கள் சிலர் செய்யும் முறையற்ற சூழ்ச்சிப் பிரசாரங்க ளையும் நாம் கண்டித்து எழுதும்போது கடின பதங்களைப் பிரயோகிப்பதாய் சிலர் கூறு கின்றனர். மனிதர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பதம் உபயோகப் படுத்தவேண்டுமேயென்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். மான வெட்க முள்ள ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டிய பதம் வேறு, அஃதில்லா தவர்களுக்கு உபயோகப்படுத்தவேண்டிய பதம் வேறு. ஒவ்வொரு பதத்தையும் நாம் மனிதர்களுக்குத் தக்கபடிதான் அளந்து உபயோகிக்கிறோம்.
நாம் உபயோகப்படுத்துகிற பதங்கள் கடினபதங்களென்று சொல்லப்படுவது
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கூட, சிலருடைய குணத்தைக் கொஞ்சமும் மாற்ற முடியாததாய் இருக்கிறது. இன்னும் இதிலும், கடினமாகப் பதங்களைத் தேடும்படியாகி விட்டதேயென்று
நமக்கு வருத்தமாக தானிருக்கிறது. இந்த நிலையில் பிராமணரல்லாத நம்மவர் களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுப்பதால், விஷமஞ் செய்கிறவர்களுக்குமிகுந்த சவுகரியமேற்பட்டுப் போய் விடுகிறது. அவரவர். களைப்பற்றி வரும்போது தான் அவரவர்கள் கவனிக்கின்றார்கள். உதாரண மாக “சுயராஜ்யா” பத்திரிக்கை ஸ்ரீமான். நாயக்கரின் சென்னைப் பிரசங்கத் தைப் பற்றி நாயக்கரின் குட்டிக்கரணமென்றும், பிள்ளையார் வேஷமென்றும், கீர்த்திக்காக தியாகம் செய்தவரென்றும் எழுதின காலத்தில், பிராமணரல்லாத மற்ற பத்திரிக்கைக்காரர்கள் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். இதன் பலனாய் மற்றவர்களையும் தனித்தனியாய் ரெ பத்திரிக்கை தாக்க ஆரம்பித் தது. இப்படியே ஒவ்வொரு சமயத்தில் ஒருவரைப்பற்றி எழுதும்போது
மற்றவர் பார்த்துச் சிரிப்பதால் பொதுவாக பிராமணரல்லாதாருடைய நிலை மையே தாழ்வடையக் காரணமாய்ப் போய்விட்டதென்பதை ஒவ்வொரு வரும் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இவ்விஷயத்தை யோசித்துப் பார்த்தால் பிராமணரல்லாத தேசத்தொண்டர்களுடையவும் தேசீயத்தலைவர்களு டையவும் ஒற்றுமையின்மையும் சுயநலமுமே பிராமணரல்லாதாரை இக் கெதிக்குக் கொண்டுவந்து விட்டது. இனியாவது இம்மாதிரியான சந்தர்ப்பங்
களில், பிராமணரல்லாதார் தகுந்த ஜாக்கிரதையுடன் நடந்து, பிராமணரல்லாத
சமூகமும் தீண்டாதாரென்று கூறப்படுவோர்களின் நிலைமையையும், முன்னேற்றமடையச் செய்வித்து சுயமதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுவார். களென உறுதியாய் நம்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.41.1925
குடி அரசு - 1925 282
ஈடோ௫ முணிசியாவிட்மு
ஈரோடு முனிசிபாலிட்டியைப் பற்றி அதன் கொடுமைகளை வெளி யிடாமல் கொஞ்சநாளாக “குடி அரசு” மெளனம் சாதிப்பதாகவும் இதற்கு ஏதோ காரணங்கள் இருப்பதாகவும் சிலர் குறை கூறுகிறார்கள். மற்றும் சிலர். தற்கால முனிசிபல் நிர்வாகத்தை குறை கூற வேண்டுமென்றே பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பழி சுமத்துகிறார்கள்.
இவ்விரண்டையும் நாம் பொருட்படுத்தவில்லை. நமக்கு தோன்றியதை யாருடைய விருப்பு வெறுப்பையும் லக்ஷியம் செய்யாமல் அவசியம் நேரும்போது வெளியிட்டு வருவோம். உள்ளூர் விஷயத்தில் இன்னும் பல பொது ஸ்தாபனங்களும் புகாருக்கு இடம் வைத்துக் கொண்டு. ஒழுங்கீனமாகவும் நடந்து வருகிறது. அவற்றில் பல விஷயங்களை: பத்திரிக்கைகளில் வெளியிடாமலே திருத்திக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை கொண்டே விட்டு வைத்திருக்கிறதே அல்லாமல், வேறு எவ்வித தயவுக்கோ தாக்ஷண்ணியத்துக்கோ அல்ல. இவ்விஷயமாக நிரூபர்கள் அனுப்பிய பல நிரூபங்கள்கூட பிரசுரிக்காமல் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். ஆதலால் உள்ளூர் நிரூப நேயர்கள் மன்னிக்க வேண்டுகிறோம்.
நமது ஈரோடு முனிசிபாலிட்டியானது மிக சிறிய முனிசிபாலிட்டி, ஆனால் வரும்படியில் கோயமுத்தூர் சேலம் முதலிய முனிசிபாலிட்டி யைவிட விகிதத்தில் அதிகமானது. தற்கால நிலைமையைப் பார்த்தால் உண்மையாகவே வரி விகிதங்கள் சராசரி பொது ஜனங்கள் தாங்கக் கூடாத தாயிருக்கிறது. இப்படி தாங்கக்கூடாத வரியை பொது ஜனங்களிடம் வசூலித்தும் அதை சரியான வழியில் பொது ஜனங்களுக்கு உபயோகப்
படுத்தாமல் ஜனங்கள் மனம் பதறப் பதற தாறுமாரான வழியிலும் சிலருடைய
சுயநன்மைக்கும் சிலருடைய பிழைப்புக்குமே உபயோகப்படுத்திக் கொள்ளப் படுகின்றது. இதை சில கவுன்சிலர்கள் தெரிந்திருந்தும் இம்மாதிரி அக்கிரமங் களுக்கு உடந்தையாயிருக்கிறார்கள் என்று சொல்லுவதை மன்னிப்பார்களாக.
சிங்காரவனம் (பார்க்)
நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் உத்தியோகஸ்தர் வக்கீல்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் நன்கறிந்ததே,
இப்பஞ்சத்தின் கொடுமையைப் பற்றி சென்னிமலை, கோ-வாப்ரேடிவ்
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யூனியன் செக்ரட்டேரி ஸ்ரீமான் . எஸ். கே. ராமசாமி முதலியார் நமக்கு அனுப்பியுள்ள பஞ்ச ரிப்போர்ட்டை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்
கிறோம். இந்த விதமான நிலைமையில் தொழிலாளருக்கு தொழில் இல்லை. கூலிக்காரருக்கு கூலி இல்லை. ஏழைகளுக்கு கஞ்சி இல்லை. அநேக இடங் களில் குடிக் கவே தண்ணீர் இல்லை. இப்படியிருக்க ஈரோட்டு ஜனங்களுக்கு மாத்திரம் சிங்காரவனமாம். இதற்கு ஏழை வரி கொடுப்போர் பணம் பதினா யிரக்கணக்காய் செலவு செய்வதாம். இந்த வனம் முடிவுபெற்றால் அனுபவிப் பவர்கள் யார்? வரிகொடுக்கும் ஏழைகளா? கூலிக்காரரா? தொழிலாளிகளா? ஒருக்காலும் இல்லை. இவர்களுக்கு வயிற்றுக்கு கஞ்சிக்கு வழி தேடுவது வைகுண்டமா இருக்கும் போது சிங்காரவனத்திற்குப் போய் காற்றுவாங்க. நேரம் எங்கே? மற்றபடி நமது வியாபாரிகள் அனுபவிக்கக்கூடுமா என்று
பார்த்தால் அதுவும் முடியவே முடியாது. காலையில் 6 மணிக்கே கடை திறக்க. வேண்டும்.சிலர் இரவு 8மணிக்கும் சிலர் 10 மணிக்கும் கடையை பூட்டிவிட்டு. வீட்டுக்கு போகவேண்டும். மத்தியில் வீட்டுக்கு சாப்பாட்டுக்குப் போக. ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பகலில் எடுத்துக் கொள்வதையே பெரிய அன்னச் சத்திரம் கட்டுவதுபோல் நினைக்கிறவர்கள் மாலை நேரத்தில் தான் இவர்களுக்கு வியாபார மும்மரம். இந்த சமயத்தில் காற்றுவாங்கப் போய்விட்டால் நாளைக்கு கடன் காரனுக்கு பதில்சொல்ல வேண்டாமா? அல்லது பெரிய மிராஸ்தார்கள் காற்று வாங்குவார்கள் என்றாலோ இந்த காலத்தில் மிராஸ்தார்கள் என்போர் யார் என்றால் அப்பன் தேடி வைத்த அரும்பொருளனைத்தையும் ட... என்று டம்பாச்சாரி சொன்னது போல... . செலவுசெய்யும் வீரர்களைத்தான் மிராஸ்தார்கள் என்று சொல்வது. இவர்கள் நமது நகரில் தாராளமாய் கணக்குப் போட்டாலும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள்தான் இருப்பார்கள். இவர்களுக்கும் மாலை நேரங்களில் பல ஜோலிகள் இருக்கும். அவற்றையெல்லாம் விட்டு காற்று வாங்க வருபவர்கள் இரண்டொருவர்தான் இருப்பார்கள். வரிகொடுக்காத உத்தியோகஸ்தர்களாவது அனுபவிப்பார்களா என்றால் அதுவும் முடியாத காரியம்.கச்சேரியில் சாதித்தது போதாமல் வீட்டுக்கும் காகிதங்களை கத்தை கட்டிக்கொண்டு போவது ஆதலால் அவர்களுக்கு வழக்கமாய் போய் விட்டது.1000, 500 என்று சம்பளம் வாங்குகிற இரண்டொருவர்களைத் தவிர. மற்றவர்களால் முடியாத காரியம். இந்த இரண்டொருவரும் தொழில் வரிகூட கொடுக்காமல் ஏமாற்றுகிறவர்களாயிருப்பார்கள். பின் யார்தான் அனுபவிப்
பார்கள் என்று யோசித்தால் ஒரு சமயம் நமது தேசத்திற்கே பெரிய வினை யாய் முளைத்திருக்கும் நமது வக்கீல் சகோதரர்கள் அனுபவிக்கலாம். அதுவும் முன்சீப் காற்று வாங்க போகாவிட்டால் பாதி பேர் போகமாட்டார்கள்.
டிப்டி கலெக்டரோ மேஜிஸ்ட்ரேட்டோ போகாவிட்டால் கால்வாசிபேர் போக மாட்டார்கள். ரங்கு, பரிலா, பிரிட்ஜ் இதுகளை ஆடுவதை விட்டு அரைகால் வாசிப்பேர் போகமாட்டார்கள். இந்த நிலைமையில் உள்ள சிங்காரவனம் ஏழைகளின் வரிப்பணத்தை எவ்வளவு சாப்பிடுகிறது என்று கணக்குப்
குடி அரசு - 1925 284
பார்த்தால், ஏழைகள் கஷ்டம் எப்படி இருக்கும் என்று அறியாத நமது
கவுன்சிலர் பிரபுக்கள் முதல் முதலாக பார்க்கு 3000 ரூபாயில் முடியுமென்று நினைத்து 3000ரூ. சாங்கிசன் செய்தார்கள்.2000 ரூ. குழந்தைகள் விளையாடு. மிடத்திற்கென்று சாங்கிசன் செய்ததையும் அதற்கு உபயோகப்படுத்தாமல் கவுன்சில் சம்மதம் இல்லாமலே பார்க்குக்கு உபயோகப்படுத்தியாய்விட்டது. இதைப்பற்றியும் நமது கவுன்சிலர் பிரபுக்கள் கவனித்தவர்களே அல்ல. அல்லாமல் மாதம் 60, 70 சம்பளமுள்ள சூப்பரின்டெண்டு ஓவர்சீயர்கள். வேறே சாங்கிஷன் செய்யப்பட்டது. இஃதன்றி கவுன்சில் சம்மதமில்லாமல், சம்மதத்தை எதிர்பார்த்து செலவு செய்திருக்கும் தொகை சுமார் 3000 அல்லது 4000. இனி செலவு செய்ய சம்மதம் கேட்கும் தொகை 3000 அல்லது 4000. ஆக பதினாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சிங்காரவனம் விழுங்கப்போகிறது. இதை நிர்வகிக்க L5100, 150 வீதம் வருசத்திற்கு 2000 ரூபாய்க்கு குறையாமல் செலவாகப் போகிறது.
தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு கால் அணா வாவது வரி கொடுப்பவர்களாயிருந்தால் இப்படி அக்கிரமமாய் செலவு செய்ய கவுன்சிலர்களுக்காவது சேர்மேனுக்காவது மனம் வருமா? இவர்கள் வரிகொடுப்பவர்களின் உண்மையான பிரதிநிதிகளாய் இருந்தால் இம்மாதிரி. ஏழைகளின் வரிப்பணத்தை பாழாக்க சம்மதிப்பார்களா?
கவுன்சிலர் சாங்கிஷன் இல்லாமல் கவுன்சிலர் சம்மதத்தை எதிர்
பார்த்து சேர்மென் செலவுசெய்ததாக சொல்லும் அயிட்டங்களை இனிமேல் கவுன்சிலர்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது என்றும் சேர்மெனும் இனி அவ்விதம் கவுன்சில் உத்திரவு பெறாமல் எவ்வித செலவும் செய்யக்கூடாது என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பு கவுன்சிலர்களும் சேர்மெனும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்களாம். அதற்கு பிறகு அனேக தொகைகள் இது விஷயத்தில் மறுபடியும் கவுன்சில் சம்மதத்தை எதிர்பார்த்து சேர்மனால் செலவு செய்யப்பட்டிருக்கிறதாம். சுயமரியாதை உள்ள நமது சில கவுன்சிலர்: களாவது ஒப்பந்தப்படி நடக்கப்போகிறார்களா அல்லது தலையாட்டி கவுன் சிலர்களாயிருந்து ஏழைகள் பணம்தானே போகிறது நமக்கென்ன நஷ்டம், நாமும் இரண்டு மூன்று செடிகள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகலாம். என்று நினைத்து இதையும் ஒப்புக்கொண்டுவந்து விடுகிறார் களோவென்பது அடுத்த மீட்டிங்கில் தான் தெரியவேண்டும். இம்மாதிரி மனம் பதறப் பதற ஏழைகள் பணம் பாழாவதை பார்த்துக்கொண்டு இந்த கவுன்சிலர் பதவி வகிப்பதை விட வேறு வேலைக்குப் போனாலும் லாபமுண்டாகும்.
நமது ஊரில் எங்கு பார்த்தாலும் கொசுக்கள் உபத்திரவமும் வீட்டுக்கு வீடு குளிரும் காய்ச்சலும் வந்து அவஸ்தைப்படும் ஜனங்கள் கணக்கில்லாமல் கிடக்கின்றன. இவைகளை போக்க வேண்டுமானால் சுகாதார வசதியை நன்றாய் கவனித்துப் பார்ப்பதோடு இன்னும் அநேக இடங்களில் ஜலதாரை:
கள் கட்டவேண்டும். ஓடையில் ஜலதாரைத் தண்ணீர் தேங்கி கொசுக் களை
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
உற்பத்தி செய்கிறது. அதன் பக்கத்தில் குடியிருப்பவர்கள் மலைக்காய்ச்ச லினால் அதிக கஷ்டப்படுகிறார்கள். இவற்றை கவனிக்கப் பணம் இல்லை, ஆளில்லை. சிங்காரவனத்திற்கு மாத்திரம் ஆள்களும் பணமும் கொள்ளை போகிறது. நமது முனிசிபாலிட்டி நிர்வாகிகளின் பொதுநல அறிவையும் பரோபகாரச் சிந்தையையும் பரிசுத்தத் தன்மையையும் படியை படுக்க வைத்துத்தான் அளக்க வேண்டும். இதல்லாமல் மற்றும் அநேக வழிகளிலும் துறைகளிலும் நமது வரிப்பணம் பாழாவதை அவசியம் நேரும்போது வெளி யிடுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 0111925
குடி அரசு - 1925 286
சத்தியமூர்த்தியிண் அட்டகாசம்
| “ஊெனந்திரிய மஹாலின் கரகசியம்'
“மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம்” என்னும் தலைப்பின் கீழ் செளந்திரிய மஹாலில் சில தினங்களுக்கு முன் நடந்த மீட்டிங்கைப் பற்றி ஒரு நிருபர் அக்டோபர் மீ” 15-ந்தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் எழுதி யிருப்பதின் சாராம்சமாவது:- சென்னை சுயராஜ்யக் கட்சியின் பிரதம புருஷராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும், வைதீகப் பிராமண கோஷ்டியின் தலைவரும், சமுதாய முன்னேற்றத்துக்கு எதிரிடையாயுள்ளவருமான, ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரும், புதிதாக இக்கோஷ்டியில் சேர்க்கப்பட்ட
ஸ்ரீமான்.டி.குழந்தையும் சில நாட்களுக்குமுன் செளந்திரிய மஹாலில் நடைபெற்ற மீட்டிங்குக்கு வந்திருந்தனர். ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார். அக்கூட்டத்தில் தலைமை வகித்தார். இவர் முன்னுரை பேசுகையில் ஜஸ்டிஸ். கட்சித் தலைவர்கள் சிலரைத் தாக்கிச் சில வார்த்தைகளுரைத்தார். இங்ஙனம் கூறியதற்குக் காரணமென்னவென்றால், காலஞ்சென்ற டாக்டர்.டி.எம்.நாயர், ஸர்.பி.டி.செட்டியார் முதலிய தலைவர்களின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியானது பிராமணர்களின் செல்வாக்கை ராஜீய விஷயத்திலும், சமூக விஷயத்திலும் மற்றும் இரண்டொரு துறைகளிலும் குறைத்துக் கொண்டு வருகிறதினாலேயாம். பிராமணரல்லாதாரும், ஆதிதிராவிடர்களும் தங்கள் நிலைமையை நன்கறிந்து உஷாராய் நடந்து கொள்ளச் செய்ததும் இக்கக்ஷியேயாகும். காரியம் இப்படியிருக்க, ஸ்ரீமான். ஆச்சாரியாரின்
தூக்குதல் ஓர் அதிசயமுமன்று.
சத்தியமூர்த்தி செளந்திரிய மஹால் கூட்டத்தில் பேசியவர்களில் ஸ்ரீமான். சத்திய மூர்த்தி பிரதானமானவர். இவர் தன் பிரசங்கத்தை ஆரம்பிக்கும்போதே, ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்கத் துவங்கினார். பிறரைத் தாக்க வேண்டுமானால் மரியாதையின்றி அசட்டுத்தனமாகவும், கண்ணியக்குறைவாகவும் பேசுவதில் இவர் சமர்த்தரென்று கூறலாம். இவர் கூறுவதில் மெய்யும், பொய்யும் நிறைந்து இருக்கும். தான் சட்டசபையிலாகட்டும், சர்வகலாசாலைக் கூட்டத்தி
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
லாகட்டும், மற்றும் எந்த மேடையிலும் பேசும்போது பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்துக்குப் பலத்த சாதனமுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய்ப் பேசுவதில் மட்டும்பின் வாங்குவதில்லை. இப்பேர்ப்பட்டவரும் ஓர் தேச பக்தராம்!
ஆச்சாரியாரின் அதிகப் பிரசங்கம்
அக்கூட்டத்தின் அக்ராசனர், ஸ்ரீமான் ஏ. இராமசாமி முதலியாரை
தாக்கிப் பேசினார். ஸ்ரீமான் முதலியார் இங்கிலாந்தில் ஒருவிதமாகவும் இந்தியாவிற்கு வந்ததும் வேறு விதமாகவும் பேசுகின்றாரென்றும், இவருக்கென்று இங்கிலாந்தில் ஒரு கக்ஷியும், இந்தியாவில் மற்றொரு ககஷியும் இருக்கின்றதா வென்றும் சுட்டிக்காட்டி அலக்ஷியமாய்ப் பேசினார். இவர் இவ்வித முறையில் பேசுவதற்குக் காரணமென்னவென்பது முன்னரே கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீமான் முதலியார், இங்கிலாந்தில் பேசும்போது, ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியா தேசத்தின் விடுதலையைப் பற்றிக் கூறினார். இங்கு வந்ததும், அக்கொள்கை களைக் கொண்டேதான், பிராமணர்களின் கொடுமைகளைத் தகர்த்து பிராமணரல்லாதாரின் விடுதலைக்கென்று பேசிவருகிறார். பிராமணரல்லாத: சமூகத்தினுடையவும், தீண்டாதாரல்லாத சமூகத்தினுடையவும், தீண்டாதார். களினுடையவும் விடுதலையே தேச விடுதலையென்பது அவருடைய கருத்து. சென்னை மாகாணத்தில் ஆச்சாரியர்கள், சத்தியமூர்த்திகள், ஐயங் கார்கள் செய்யும் அட்டூழியத்தைக் காணும் எந்தப் பிராமணரல்லாதாரின்
மனந்தான் நோகாமலிருக்கின்றது. பிராமணரல் லாதாரின் தலைவர்கள், இந்தப்
பாழும் பிராமணர்களைப்போல் வேஷதாரிகளல்ல. உண்மைக்கும் யோக்கிய தைக்கும் பாடுபடுகின்ற பெரியோர் என்பது இந்த ஆச்சாரியாருக்கும் தெரிந்தேயிருக்குமென்பது எனது நம்பிக்கை. இப்பிராமணர்களின் சொல்லொன்று, செயலொன்று என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அடுத்த பாகத்திற்குச் செல்லலாம். ஸ்ரீமான்கள் ஆச்சாரியார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார் முதலியவர்களின் கோஷ்டியினர், மந்திரிகளும், நிர்வாக சபை மெம்பர்களும், கவர்னர்களும் ஆங்காங்கு திக் விஜயம் செய்து வேண்டுவன செய்வதைக் கண்டியாமலிருப்பதில்லை. இந்த பெரிய உத்தியோகஸ்தர்கள், பொது ஜனங்களின் பணத்தைப் பிரயாணத்திலேயே பாதி கழித்து விடுகின் றார்கள் எனக் குறைகூறுவதற்கும் இவர்கள் பின்வாங்குவதில்லை. இதற் கெல்லாம் காரணமென்னவென்றால், இந்த உத்தியோகஸ்தர்கள் “சைத்தான்” கவர்ன்மெண்டில் வேலைபார்க்கிறார்களாம். ஆனால் அதே கவர்ன்மெண்
டில் பூணூல் தரித்துள்ள தங்கள் இனத்தானொருவன் உத்தியோகத்திலிருந்
தால், முன் கூறிய ஞானம் போய்விடுகிறது. ஜாதி அபிமானம் வந்து ஒன்று சேர்ந்துவிடச் செய்கிறது. பூணூல் தரித்துள்ள ஐயங்கார்கள், ஐயர்கள் மற்றும் எந்த பிராமணனான போதிலும் சரியே, அவர் மிதவாதியோ, காங்கிரஸ் வாதியோ, கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தரோ அதைப்பற்றிக்
குடி அரசு - 1925 288
கவலையில்லை, வேண்டியது பூனூல் கோஷ்டிதான். இந்த யோக்கியதையை அநசரித்தே, தபால் இலாகா அதிகாரி ஸ்ரீமான். ராய்க்கு நடந்த விருந்தில் இந்த பிராமணர்கள் ஆஜராயிருந்தார்கள் போலும். சபாஷ்! இத்தகைய பெயர்: வழிகளையா “சுயராஜ்யக்” கட்சியினரென்று கூறுவது? இவர்களில் இங்ங
னம், யார் எந்த கொள்கையைக் கொண்டிருந்தபோதிலும், பிராமணன் என்றதும் ஒன்றுகூடிக் கொள்வதற்கெல்லாம் காரணம் உத்தியோக வேட்டை யேயாகும். ஐயங்கார் மகன், ஐயர் மருமகன், ஆச்சாரியார் தம்பி என்று இப்படியே அவர்கள் உற்றார் உறவினர் யாவரும் சம்பிரமமாக உத்தி யோகங்கள் யாவையும் பெற்று சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வதை பிராமண ரல்லாதார் ஊன்றி கவனிக்க வேண்டும்.
ஜஸ்டிஸ் கட்சியர் செய்துள்ள நன்மைகள்
ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஜனங்களுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது? அதனுடைய திட்டங்களெவை? எனக் கேட்டார். இவர் இங்ஙனம் கேட்டது, இக் கட்சியின் மீதுள்ள துவேஷத்தினால் ஏற்பட்டதே என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிடலாம். ஆனால், அக்கட்சியானது என்னென்ன நன்மைகளைச் செய்திருக்கின்றது என்பதை மீண்டும் பொது ஜனங்களுக்குக் கூறுவதால் நன்மையுண்டு என எண்ணுகிறேன். இக்கட்சி தோன்றுவதற்கு முன் கவர்ன்மெண்டு ஆபீஸ்களெல்லாம் பிராமண அக்ராகரமாகவும், பூனூல் கோஷ்டியாகவும், சுக்லாம்பாதரக் கூட்டமாகவும் நிறைந்து இலங்கிக் கொண்டிருந்தது. பெரும்பான்மையாக, டபேதார் வேலையொன்றில் தவிர, மற்ற ஹைகோர்ட்டு ஜட்ஜ், டிஸ்டிரிக் முன்சீப், டெப்டிக் கலெக்டர், தாசில்தார்,
சிரஸ்தார், குமாஸ்தாக்கள் முதலிய சகல உத்தியோகங்களும் இவர்கள் காணியாக ஏகபோகமாகயிருந்தன. ஜஸ்டிஸ் கட்சி தோன்றவே இந்த விஷயத்
தில் இவர்களின் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. பிராமணரல் லாதாரும், ஆதிதிராவிடர்களும் படிப்படியாக மேலேறி இந்த ஸ்தானங்களைக் கைப்பற்றி வருகின்றனர். பிராமணரல்லாத ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளின் ஆக்ஷியில் அநேக ஸ்தல ஸ்தாபனங்களில் கட்டாய இலவசக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. பிராமணரல்லாத ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளின் காலத்திலேயே இந்து தேவஸ்தான சட்டம், சர்வகலாசாலை சட்டம், தொழி
லாளரின் அனுகூலச் சட்டம், இன்னும் பல அரிய நன்மைகள் செய்யப் பட்டிருக்கின்றது. ஜஸ்டிஸ் கட்சிதான் இந்தியாவில் உருவகமானதும், நியாய மானதுமான காரியங்களைச் செய்திருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய உதார ணம், இந்துமத தேவஸ்தான சட்டமேயாகும். இன்னும் என்னென்ன நன்மைகளை “ஜஸ்டிஸ்” கட்சி செய்திருக்கிறது என்பது ஸ்ரீமான்.எம்.கே. ஆச்சாரியாருக்குத் தெரியவேண்டுமானால், “ஜஸ்டிஸ்” பத்திரிகை ஆரம்ப மானது முதற்கொண்டு இதுவரை உள்ள பிரதிகளைப் பார்வையிடும்படி கேட்டுக்கொள்கிறேன். அக்கிரமமாயும், அனாவசியமாகவும் ஓர் உண்மை
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யான கட்சியைப் பற்றி மாறுபாடாகப் பேசுகிற இவர்கள்தானா சுயராஜ்யக்
காரர்!
மரியாதை தெரியாத சத்தியமூர்த்தி
ஸ்ரீமான். சத்தியமூர்த்தி பேசியதில் சிலவற்றையும் கவனிக்க வேண்டும். இவர் எத்தகைய மனப்பான்மையுடையவர் என்பது இந்த வியாசத்தின் துவக்கத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. இவர், கனம் பனகல் ராஜா, ஸர். பாத்ரோ, ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியார் முதலியவர்களைப்
பற்றிக் கூறும்போது, கொஞ்சமும் மரியாதையின்றி பனகல், பாத்ரோ, ராமசாமி முதலியார் என்று கூறினார். ஒவ்வொருவருக்கும் கெளரவமாக உள்ள ராஜா,
ஸர், ஸ்ரீமான் என்பன போன்றவைகளிருக்க இவர் இப்படிப் பேசியது தான் ஒரு சுயராஜ்யக் கட்சிக்காரர் என்ற எண்ணத்தினாலேயா? அல்லது இவருக்
குத் தெரிந்த வித்தை இவ்வளவு தானாவென்பது நமக்கு விளங்கவில்லை.
ஸ்ரீமான். சத்தியமூர்த்தி, பலதடவை இங்கிலாந்துக்குப் போயிருக்கிறார். அங்கு “மரியாதை” இன்னது தானென்பதை இவர் கற்றிருந்திருக்கவேண்டும். இங்கிலாந்தில், மரியாதையாகப் பேசுவது, ஜனங்களுக்குரிய விசேஷ இலக்ஷ ணம். இந்தியாவிலும் இப்பான்மை உண்டு. ஆனால் இம்மூர்த்தியினிடம் தான் அந்தக் கலம் சூன்யமாய் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகிய பனகல் ராஜா இந்த நாட்டிற்கு எத்தகைய உருவகமான வேலைகளைச் செய்திருக்கின்றாரென்பதை பொது ஜனங்கள் அறிவார்கள். ஆனால், சுயராஜ்யக் கட்சி தேசாபிமானியாகிய மரியாதையற்ற சத்தியமூர்த்தியோ ஜஸ்
டிஸ் கட்சி தலைவர்களின் பாதரட்சையின் வாரையும் அவிழ்க்க யோக்கியதை யுடையவரல்ல. இனியேனும் மூர்த்தியும் அவர் கோஷ்டியினரும் மரியாதை இன்னதென்பதைக் கற்றுக்கொள்ளுவார்களாக. மரியாதை தெரியாதவரும். உண்மையற்றவருமான இவர்கள்தானா சுயராஜ்யக்காரர்!
அடுத்து வரும் சட்டசபை தேர்தல்
அடுத்து நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தல்களுக்கு சுயராஜ்யக்
கட்சியினர் பெரும்பான்மையான ஸ்தானங்களுக்கு பிராமணரல்லாதாரையே நிறுத்தபோவதாகத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் பேசியிருக்கின்றதெனக்
கூறுகிறார். இவர் கூறுவது பெறும் பித்தலாட்டமேயன்றி வேறல்ல. இம்மாதிரி. கூறுவதால் பிராமணரல்லாதார் ஏமாந்து போவார்களென்பது ஐயருடைய எண்ணமானால், அவருடைய புத்திப் போக்குக்காக நாம் இரங்காது வேறென்ன செய்வது? பிராமணர்களே கயராஜ்யக்கட்சியின் சார்பாக சகல ஸ்தானங்களுக்கும் நிற்கட்டுமென நான் கூறுகிறேன். அப்போதுதான், பொது ஜனங்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களென்பது தெரியவரும். பிராமணர்கள் அடியோடே தோல்வியடைவார்களென்பது அப்போது தெளிவாகும். மற்றும் எங்கெங்கு தங்களுக்கு ஜெயம் கிடைக்காதோ,
குடி அரசு - 1925 290
அங்கங்கே வேண்டாமென்றும், எந்த இடங்களில் சுலபமாக ஜனங்களை ஏமாற்றிவிடலாமோ அந்த இடங்களில் தங்கள் ககஷியினரை நிறுத்தி வெற்றி கொள்வதும் இவர்கள் வழக்கமென்பது வாசகர்கள் அறிந்ததேயாகும்.
சுத்தப் பொய்
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எலெக்ஷன் காலத்தில் ஜஸ்டிஸ் கக்ஷியாவது அல்லது அதைச்சேர்ந்த மந்திரிகளாவது தேர்தல் ஸ்தானங்களுக்கு அபேக்ஷ கர்களை நிறுத்தவில்லையென்றும் ஜெயமடைந்த பிரதிநிதிகளைத் தங்கள் ககஷிக்குள் இழுத்துக் கொண்டார்களென்றும் கூறினார். இது சுத்தப் பொய்யான வார்த்தைகளேயாகும். தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியினர் தகுந்த அபேக்ஷகர்களை நிறுத்தி பெரும்பான்மையான வோட்டுகளைக் கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். உண்மையைத் திரித்துக் கூறுவதினால்தான் இவருக்கு அசத்தியமூர்த்தி எனச் சிலர் பெயர் வைத்துவிட்டனர் போலும். மற்றும் மந்திரிகள் சுற்றுப் பிரயாணம் செய்வதிலேயே பொது ஜனங்களின் பணத்தைப் பெருமிதமாகச் செலவழித்துவிட்டனரென்று கூறுகிறார். இதுவும் அசட்டு வார்த்தையென்றே கூறுவோம். மந்திரிகள், தங்கள் இலாகாவைச்
சேர்ந்த பல ஜோலிகளைக் கவனிக்கப் பல இடங்களுக்கும் போகாமலிருக்க. முடியுமா? அங்ஙனம் போகும் போது, பிரயாணத்திற்கெனப் பணம் செல வழிக்காமலிருக்க முடியுமா? இதெல்லாம் சத்தியமூர்த்திகளுக்குத் தெரியா
மல், மந்திரிகள் எலக்ஷன் பிரசாரம் செய்கின்றார்களென்றால் இதுவும் அவர்களுடைய பிதற்றல்களிலொன்று எனத் தள்ளிவிடுதலே உசிதம்.
சத்தியமூர்த்தியின் வீண் பேச்சு
இந்து தேவஸ்தான பரிபாலன மசோதாவைப் பற்றி நமது சத்தியமூர்த்தி பேசும்போது பேசிய பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாகக் கண்டிக்கத்
தக்கதேயாகும். இந்து தேவஸ்தான மசோதா அடுத்த வரும் தேர்தலுக்கென்று செய்யப்பட்ட சூழ்ச்சி என்கிறார். ஒருவர் ஒரு காரியத்தைச் செய்தால் அதற்கு அர்த்தம் இப்படிச் செய்கிறார். அவர் வேறொன்றும் உருவகமான வேலை செய்திராவிட்டால், இந்த மந்திரிகளால் பிரயோஜனமே கிடையாதென்கிறார். மந்திரிகள் தங்கள் தேசத்திற்குச் செய்யவேண்டிய நன்மைகள் எதுவோ, அவைகளை நன்கு கவனித்து அதற்கென்று, திட்டங்களும் சட்டங்களும் சாதனங்களும் ஏற்படுத்தினால் மூர்த்தி கோஷ்டியார் இவையெல்லாம் எலெக்ஷன் தந்திரமென்கிறார்கள். இவ்விஷயங்கள் யாவையும் ஊன்றிக் கவனிக்கும்போது இவர்களின் பித்தலாட்டம் இன்னதென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகின்றது.
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
விஷம பிரசாரம்
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இன்னொரு விஷயத்திலும் பொருந்தாத வார்த்தைகள் சில கூறியிருக்கிறார். அதாவது “டாக்டர் வரதராஜுலுவும், ஸ்ரீமான் வாசுதேவையாவும் ஜெயிலில் கேழ்வரகு அரைக்கும்படி நேரிட்டது இந்த மந்திரிகளின் காலத்திலேயே” என்கிறார். இவர் சில தினங்களுக்கு முன்பாக, டாக்டர் வரதராஜுலுவை முதற்தடவையாக பிராசிகியூஷன் செய்த
தற்கு அட்வோகேட் ஜெனரலாக அப்போதிருந்தவர் காரணமில்லையெனக் கூறினார். சட்டரீதியான விஷயங்களுக்கு அட்வோகேட் ஜெனரல்தான், காரணஸ்தரென்பதை யாவரும் அறிவார்கள். இம்மாதிரி விஷயங்களுக்கும், மந்திரிகளின் ஆட்சிக்கும் எவ்வித தொந்தமுமேயில்லை. அப்படியிருக்க
முன் பின் யோசியாமல், வாய்க்கு வந்தபடி பேசிவிடுவது யோக்கியமா வென்று கேட்கிறேன். எந்த மந்திரியாவது,“டாக்டர் வரதராஜுலுவும், ஸ்ரீமான் வாசு தேவையாவும் தினம் இவ்வளவுதான் கேழ்வரகு அரைக்கவேண்டு மென எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறார்களா”வென்பதை ஸ்ரீமான் மூர்த்தி
ருசுச் செய்ய முடியுமா? இவையெல்லாம் வேண்டுமென்று ஒருவர் பேரில் கெட்ட எண்ணம் கற்பிப்பதற்கு செய்யும் பொய் பிரசாரமேயாகும்.
நமது தீர்மானம்
இந்த ஆச்சாரியார்கள், மூர்த்திகள், ஐயங்கார்கள் போன்ற பூனூல் கோஷ்டியினர் என்ன கூச்சல் செய்யினும் பிராமணரல்லாதாராகிய நாம் அவைகளை லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. அடுத்த எலெக்ஷனில்
நம் கக்ஷிக்கு வெற்றியேற்பட்ட போதிலும், தோல்வி நேரிட்டபோதிலும் சரியே நாம் யாரும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நமது
கக்ஷியின் நோக்கமெதுவோ, நமது லக்ஷியம் என்னவோ, அவற்றைமட்டும். குறியாகக் கொண்டு உழைப்போம். அப்போது சமுதாய சீர்திருத்தம் மேலோங்க நாட்டிற்கு விடுதலையும் ஏற்படும்.
குடி அரசு - கட்டுரை - 01.111925
குடி அரசு - 1925 292 293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தமிமுர் மகாநாடு
நமது நிலை
இவ்வாண்டு காஞ்சீபுரத்தில் நடக்கும் தமிழ்நாட்டு 31 - வது ராஜீய மகாநாடானது தென்னிந்தியத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகவும்
நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கூடுகிறது. அதன் முக்கிய நோக்கம் நமது நாடு சுயராஜ்யம் பெறுவதற்கென்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும் சுயராஜ்ய மென்பது சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ள சமூகத்துக்குத்தான் பயன் படுமேயல்லாது அஃதில்லாதவருக்கு சுயராஜ்யமென்பதும் பர ராஜ்ய மென்பதும் வித்தியாசமற்றதேயாகும். தென்னாட்டுத் தமிழ்மக்கள் பெரும்
பாலும் சுயமரியாதையற்று சுயேச்சையற்று மிருகங்களுக்கும், பக்ஷிகளுக்
கும், புழுக்களுக்கும், பூச்சிகளுக்குமுள்ள சுதந்திரமும், கயாதீனமும் இன்றி கோடிக்கணக்கான மக்கள் உழல்வதை யாரும் மறுக்கமுடியாது. இவர்களின் பொருட்டும்,தேச முழுவதிலுள்ள இவர் போன்றார் பொருட்டும் விடுத லையைஉத்தேசித்து மகாத்மா காந்தியடிகளால் ஐந்து வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட ஒத்துழையா இயக்கமானது பல்வேறு காரணங்களால் டெல்லி
யில் ஆக்கங் குன்றி நாளுக்கு நாள் கருகி வந்து பாட்னாவில் வேருடன் களைந்தெறிந்தாகிவிட்டது. இதன் பலனாய் ஏற்பட்ட நிலைமையானது சுயேச்சையும் சுயமரியாதையும் சுவாதீனமுமற்ற சமூகத்துக்கு அதிலும்
முக்கியமாய் தென்னாட்டுத் தமிழ்மக்களுக்கு முன்னிலும் அதிகக் கேவல மான நிலையில் கொண்டுவந்துவிட்டுவிட்டது..
பிராமணர்கள்
பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்நாட்டு ஜனங்களென்று சொல்லிக் கொள்வோரிலேயே ஒரு வகுப்பார் தங்களுடைய சுயநலத்தையே உத்தேசித்து பொதுஜனங்களிடையே வகுப்பு வித்தியாசத்தையும் துவேஷத் தையும் உண்டு பண்ணி தங்களை உயர்ந்தோரென்று சொல்லிக் கொண்டு
தங்கள் உயர்விலும் வாழ்விலுமே கண்ணுங் கருத்துமாயிருந்து தேசத்தையும், மதத்தையும், மற்ற சமூகங்களையும் பாழக்கியதுடன், அந்நிய தேசத்தார். நம்நாட்டிடையே படையெடுத்துவந்த போதெல்லாம் தங்கள் நன்மையின் பொருட்டே எதிரிகளுக்கு உளவு சொல்லியும் தேசத்தையும், மதத்தையும் காட்டிக்கொடுத்தும் அவர்களிடமே மந்திரி முதலிய உத்தியோகங்கள் பெற்று
குடி அரசு - 1925 294
செல்வாக்கடைந்தும் நமது நாட்டாரை அடக்கியாள அவர்கள் ஓர் ஆயுதமா கவும் பயன்பட்டு வந்திருக்கிறார்கள். இதற்குதாரணமாக இச்சுயநலக் கூட்டத்தார் தங்கள் சூழ்ச்சியாலும், தந்திரத்தாலும் தாங்களே நமது மதாச்சாரி யார்களாகவும்,குல குருக்களாகவும்,படித்தோர்களாகவும் தேச நன்மைக்கும், சமூக நன்மைக்கும் ஏற்பட்ட இயக்கங்களுக்கு தலைவர்களாகவும், அரசாங்
கத்தை நடத்த அவர்களுக்கு ஊழியர்களாயுமிருந்து அரசாங்கத்தை நடத்திக் கொடுத்துக்கொண்டும் மற்றும் அரசாங்கத்திற்கு ஒற்றர்களாயிருந்து நாட்டின் உயிர்நாடியைக் காட்டிக்கொடுத்தும் ஆகிய இவ்வளவு காரியங்களையும் செய்துவருவது இக்கூட்டத்தார்தான் என்பதை இப்பொழுதும் காணலாம்.
மகாத்மாவின் அபிப்பிராயம்
ஆதிகாலத்தில் மக்கள் ஒற்றுமைக்கும், சமத்துவத்துக்கும் சகோதரத் துவத்துக்கும், ஜீவகாருண்யத்திற்கும், அஹிம்சைக்கும் ஏற்பட்ட இயக்கங் களுக்கும், சாதனங்களுக்கும் இக்கூட்டத்தாரே விரோதிகளாயிருந்து தங்கள். சுயநன்மைக்காகவே அவைகளை ஒழித்து தேசத்தை இக்கெதிக்கு கொண்டு வந்தவர்களும் இவர்களே தானென்பதைச் சரித்திர மூலமாகவும் நேரிலும் காணலாம். மகாத்மாவால் ஏற்படுத்தப்பட்ட அஹிம்சா தர்மத்தோடு கூடிய விடுதலை இயக்கத்தை ஆரம்ப முதல் இன்று வரையிலும் பல சூழ்ச்சிகளா
லும் பாழாக்கினவர்கள் இவர்களே யென்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இதை மகாத்மா அவர்களே தம்முடைய இயக்கம் சீர்குலைந்ததற்குக் காரணம் படித்த வகுப்பினர்தான்! படித்த வகுப்பினர்தான்!! எனப் பலமுறை கதறி யிருக்கிறார். நாட்டில் படித்த வகுப்பார் யாரென்பதை நாம் சொல்லத் தேவை யில்லை. அல்லாமலும் பெல்காம் காங்கிரஸின் அக்கிராசனப் பிரசங்கத்தில்
“ இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிட பிராமணர்கள் செய்த கெடுதிகுறைவானதல்ல வென்று மகாத்மாவே சொல்லியிருக்கிறார். ஆதலால் நமதுநாடு முன்னேற்ற மடையவோ, நமது சமூகம் முன்னேற்ற மடையவோ மக்கள் யாவரும் சமம் என்னும் உணர்ச்சி அடையவோ எல்லோரும் சமமாய் வாழவோ நம்மால் ஏற்படுத்தப்படும் இயக்கம் தங்கள் சூழ்ச்சி யால் பொது மக்களை ஏமாற்றி தங்கள் மாயவலையில் கட்டுப்படுத்தி எதற்கும் தாங்களே. முன்னணியிலிருந்துகொண்டு எதையும் தங்கள் சவுகரியத்துக்கு உபயோகப் படக்கூடிய மாதிரியில் திருப்பிக்கொள்ளும் நய வஞ்சகர்களான சுயநல வகுப்பார் கையில் சிக்காமல் தப்ப வழிதேட வேண்டும். அங்ஙனம் நாம் வழி தேடாவிட்டால் நம் விடுதலைக்கென ஆரம்பிக்கப்படும் எந்த இயக்கமும் அதற்காக நம்மால் செய்யப்படும் எவ்வித தியாகமும், அனுபவிக் கப்படும் எவ்வித கஷ்டமும் பயன் தராததோடு இப்பொழுது நாமிருக்கும் நிலைமை: யிலும் இன்னும் கீழிறங்க உதவியாகி விடும். ஆகையினால் காஞ்சீபுரம் மகாநாட்டில் கூடும் பொதுஜனப் பிரதிநிதிகள் சுயராஜ்யத்துக் கென்றோ தேச முன்னேற்றத்திற் கென்றோ கருதி ஏமாந்துபோய் மறுபடியும் இக் கூட்டத் தாரின் சூழ்ச்சிக்கு ஆளாகி அவர்கள் சொல்லுகிறபடி நடந்து நமது
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நன்மைக்கென்று நினைத்து அவர்கள் நன்மைக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டு போகாமலிருக்கும்படி நாம் எச்சரிக்கை செய்கிறோம்.
பிராமணர் - பிராமணரல்லாதார்
தென்னாட்டில் பொதுவாக இக்கூட்டத்தாரை நீக்கிய பொது ஜனங்க
ளுக்கு பிராமணரல்லாதார் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. முக்கிய மாக இதில் கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஆங்கிலோ - இந்தியர்கள் முதலிய இந்துக்களல்லாதவர்களும் பிராமணரல்லாதவர்களே. இந்துக்களுக்குள்ளும் பிராமணர் நீங்கிய மற்றவர்கள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட பல ஜாதிப் பெயர்கள் சொல்லிக்கொள்ளப்பட்டாலும் அவர்களும் பிராமணரல்லாத வர்களே. அல்லாமலும் தீண்டாதாரெனக் கூறித் தொடக்கூடாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள் என்று தள்ளி வைத்திருக்கும் ஒரு பெரும் கூட்டத் தாரும் பிராமணரல்லாதவர்களே. இவர்கள் யாரும் நாம் மேற்சொன்ன பிராமணர்களின் மாயவலையினின்றும் தப்பி சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் சிறுசிறு வகுப்பு வித்தியா சங்களையும் பொருளற்ற ராஜீய அபிப்பிராய வித்தியாசத்தையும் மறந்து விடுவதோடு தங்கள் சுயநன்மைக்காக பிராமணர்களுக்கு ஒற்றர். களாகவும், காட்டிக் கொடுப்பவர்களாகவும் இருக்கும் சிறுமைக் குணங்களை. விட்டு எல்லோரும் முன்னுக்கு வரவேண்டுமென்ற எண்ணத்துடன் சூழ்ச்சி யன்றியிலும், துவேஷமின்றியும் மனப்பூர்வமாக ஒன்றுபட்டு பாடுபட முன் வர வேண்டும். இவர்களுள் காங்கிரஸ்காரர்களென்போரும், மாறுதல் வேண்டாதாரென்போரும் சுயராஜ்யக் ககஷிக்காரர்களென்போரும், ஜஸ்டிஸ் கக்ஷியென்போரும், சுயேச்சைக் கக்ஷி என்போரும், பழய மிதவாதக் கக்ஷி யென்போரும், பெசண்டம்மைக் ககஷியாரென்போரும், மதாபிமானிகளென் போரும், அரசாங்க உத்தியோகஸ்தர்களென்போரும் ஆகிய பல பிரிவினர் களிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ராஜீய விஷயத்திலோ மத விஷயத்திலோ தனது வாழ்வு விஷயத்திலோ ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதமுடையவர்களாயிருந்த போதிலும் தாங்கள் எல்லோரும். பிராமணரல்லாதாரென்பதையும், பிராமணர்களின் சூழ்ச்சிகளினின்றும், தந்திரங்களினின்றும் விலகி தாங்கள் சுயமரியாதையுடன் மனிதனாக வாழ வேண்டும் என்கிற ஒரே பொதுவான நோக்கத்தை வைத்து பாடுபடுவதற்கு ஒரு பொது இயக்கத்தைக் காண வேண்டியது தற்சமயம் மிகவும் அவசிய மென்பதை பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளுவார்கள். இதைப்பற்றி நம்மாலும்,
மற்றும் பல அறிஞர்களாலும் தற்கால நிலைமையை உத்தேசித்து தீவிரமாய் சொல்லப்பட்டு வந்திருக்கிறதை யாவரும் அறிவார்கள். ஆதலால் இவ்வெண் ணத்தை ஈடேற்றிக் கொள்ள காஞ்சீபுரத்திற்கு வந்து இதற்கென ஓர் தனி மகாநாடு கூட்டித் தங்களது கொள்கை இன்னதென்பதையும் ராஜீய மகா
நாட்டில் பிராமணரல்லாதார் நிலைமை என்னவென்பதையும் முடிவு செய்து கொண்டு அந்த முடிவை ராஜீய மகாநாட்டில் வலியுறுத்த ஒருப்பட
குடி அரசு - 1925 296
வேண்டுமாய் மிகவும் வினயத்துடன் வேண்டிக் கொள்ளுகிறோம்.
காஞ்சீபுரம் ராஜீய மகாநாடானது காங்கிரஸ் அமைப்பின் கீழ் ஏற்பட்ட விதிகளின் பிரகாரம் நடத்தப்படுமாகையால், நாம் அழைக்கும் வகுப்பில் சிலருக்கு அதில் கலந்துகொள்ள சந்தர்ப்பமேற்படாது. ஆகையால் இதற் கென பிரத்தியேகமாக ஓர் மகாநாடு அதே சமயத்தில் அதே இடத்திலேயே கூட்டி அதில் நமது நோக்கத்திற்குப் பாடுபட முன் வரும் சகலருக்கும் ஆதரவளிக்க ஏற்பாடு செய்யப்படும். தற்காலம் ஏழை மக்கள் இருந்துவரும் கஷ்டநிலையை நிவர்த்திக்க முன்வரும் தேசபக்தர்கள் அனைவரும் இம்மகாநாட்டில் கலந்து கொள்வார்களென்று நம்புகிறோம்.
ஒற்றுமைக் குறைவிற்குக் காரணம்
ராஜீய மகாநாட்டில் பிராமணரல்லாதாரும் உணரவேண்டியது ஒன்றுண்டு. முக்கியமாக ராஜீய வாழ்வில் பிராமணருக்கும், பிராமணரல் லாதாருக்கும் ஏற்படுகிற மனஸ்தாபத்திற்கும், சூழ்ச்சிகளுக்கும் காரண மாயிருப்பதும் பிராமணரல்லாதாரில் இந்து முகமதிய கிறிஸ்தவ சமூகங்க ளுக்கு இந்துக்களில் தீண்டக்கூடியவர், தீண்டாதார் இவர்களுக்குள்ளும்
ஏற்படும் மனஸ்தாபங்களுக்கும், ஒற்றுமையின்மைக்கும் காரணமாயிருப்
பதும் உத்தியோகங்களைப் பற்றியும் தெரிந்தெடுத்த ஸ்தானங்களைப் பற்றி
யும் உள்ள போட்டிகள்தான். இந்தப் போட்டிகள் ஒரு வகையாக முடிவு பெறுமானால் பிறகு இந்தியருக்குள் எவ்வித ஒற்றுமையின்மையும் அபிப்பிராய பேதங்களும் ஏற்படக் காரணமேயில்லை. ஆதலால் உத்தி யோக விஷயங்களில் ஆகட்டும், மற்றும் தெரிந்தெடுப்பு பதவிகளிலாகட்டும் அல்லது இதர பொது ஸ்தாபனங்களிலாகட்டும் அவரவர்கள் இன்னின்ன அளவுக்கு உரியவர்கள் என்கிற தீர்மானம் ஏற்பட்டுப் போய்விட வேண்டி
யது. சாதாரணமாக சில விஷயங்களில் மாத்திரம் இந்துக்களுக்கும், மகமதி யர்களுக்கும் உரிமையளவு ஏற்பட்ட பிறகு அநேக விஷயங்களில் இந்து - முகமதிய - கிறிஸ்தவ விரோதங்களே பெரும்பாலும் மறைந்து விட்டது டனல்லாமல், ஒருவரை ஒருவர் தாழ்ந்தவர்களென்று சொல்லி அடக்கியாளுந் தன்மையும் மறைந்துவிட்டது. இப்பொழுது இந்துக்களில் பெரும்பான்மை:
யாய் பிராமண, பிராமணரல்லாதார், தீண்டாதார் என்கிற மூன்று பெரிய பிரிவினைகள் இருந்து வருகிறது. இப்பிரிவினைகளை அரசாங்கத்தாரும், பொதுமக்களும் ஒப்புக் கொண்டுமாகிவிட்டது. அதற்குத் தகுந்த ஆதாரங் களும் ஏற்பட்டுவிட்டது.இம் மூன்று வகுப்பார்களுக்கும் உத்தியோகங்களில் இன்னின்ன அளவென்றும் தெரிந்தெடுப்பு பதவிகளிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் இன்னின்ன அளவென்றும் ஏற்பட்டுப் போய் விடுமே யானால் வகுப்புத் துவேஷம், சமூகத் துவேஷம்,மதத் துவேஷம் இவைகள்
நம் நாட்டை விட்டே பறந்து ஓடிப்போகும்.
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பிராமணர்கள் ஒப்பமாட்டார்கள்
இம்முறையானது சிறிய தொகையினராயிருந்து பெரிய பங்கை அனுபவித்துக் கொண்டு வரும் வகுப்பாருக்கு பெருத்த வேதனை யாய்த்தானிருக்கும். அதற்காக பிராமணரல்லாதார் சிலருக்கும், தீண்டாதார். சிலருக்கும் லஞ்ச லாவணம் கொடுத்தாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம், தேசம் கெட்டுப்போய்விடும் என்று பொய்யழுகை அழச்செய்து மாய்மாலக் கண்ணீர் விடும்படியும் செய்விப்பார்கள். இதையெல்லாம் நாம் கவனிக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் உதவி நின்றவுடனே இவர்கள். மறுபடியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொல்ல வந்து விடுவார்கள். எப்படியென்றால் நேற்று தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் வேண்டுமென்று கேட்டவர்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை. காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் நான் காங்கிரசில் இருக்க மாட்டே னென்று சொன்னவர்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ராஜீயக் கூட்டங்களில் பிரேரேபித்தவர்களும் பிராமணர்கள் காலுக்குள் நுழைந்து இன்றைய தினம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்று கூறுவதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். உலகமுள்ள வரையும் இக்கூட்டம் இருந்துதான் வரும். ஆதலால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை...
தீண்டாதார்
பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானதென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்திலோ மற்றும் பல பொது வாழ்க்கையிலேயோ அவர்கள். முன்னேறவேயில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-ல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப் புலிகளுக்கு இதைப்பற்றிக் கவலையிராதுதான். பொறுப்புள்ள. பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை. இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான் சொல்லவேண்டும். சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங் களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமேயானால் இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிராமணக் கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்கக் கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறியக்கூடாத மனிதனும், அவனவன் தெய்வத்தைக் காணக் கூடாத
குடி அரசு - 1925 298
மனிதனும் இந்தியாவில் இருக்கக்கூடுமாவென்பதை பொது நோக்குடைய ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டுவதோடு ராஜீய மகாநாட்டில் இதை வலியுறுத்தி அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேச பக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.11.1925
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தீண்டாமை
செண்ணை மாகாண தீண்டாமை மகாநா௫
சென்னையில் தீண்டாமை மகாநாடென்று ஓர் மகாநாடு சென்ற மாதம்
31-ந் தேதி கூடிற்று. பல பெரியோர்களும், பல தீண்டாதார்களும் மற்றும் பலரும் விஜயம் செய்திருந்தார்கள். பல கனவான்கள், வெகு உக்ரமாகவும்
பேசினார்கள். தீண்டாமையை விலக்கவேண்டுமென்று பல தீர்மானங்களும் செய்தார்கள். இவற்றினால் தீண்டாமை ஒழிந்து விடுமென்று, நாம்
நம்புவதற்கில்லை. இவ்வித மகாநாடு இதற்கு முன் ஆசாரத்திருத்த மகா நாடென்ற பெயரால் எவ்வளவோ நடந்திருக்கிறது. எவ்வளவோ சாஸ்திர ஆதாரங்களெல்லாம் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. எத்தனையோ தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றின் பலனாய் என்ன நடந்தது? தீண்டாமை என்னும் கொடுமைநம் நாட்டிலிருந்து நீங்கி மக்கள் எல்லோரும் பிறவியில் சமம் என்கிற உணர்ச்சி பரவி ஒத்து வாழ வேண்டுமானால், ஸ்ரீமான்கள். டி.வி.சேஷகிரி ஐயரும், டிவிஜயராகவாச்சாரியாரும், மகாதேவ சாஸ்திரியாரும், பனகால் இராஜாவும், பாத்ரோவும் போன்றவர்கள் மீட்டிங்கு கூட்டி உபந்யாசம் செய்து தீர்மானங்கள் செய்துவிட்டுப் போவதினால்,
ஒருக்காலும் நன்மை யேற்படவே மாட்டாது. அல்லாமலும், சட்டசபை முதலிய இடங்களில் போய் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை யொழியத் தீர் மானங்கள் செய்து பத்திரிக்கைகளில் போட்டு விடுவதினாலும் ஒருக்காலும் நன்மை யேற்படவே மாட்டாது. காங்கிரஸில் தீண்டாமை யென்பது ஓர் முக்கியமான திட்டமெனப் போட்டுத் தீர்மானம் செய்து விடுவதினாலும் முடியக்கூடிய காரியமல்ல. இவைகளை நாம் அனுபவத்தில் பார்த்தாகி விட்டது. இவைகளின் கூட இருந்து வேலை செய்கிறவர்களே வெளியே வந்ததும் இதற்கு விரோதமாய் சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். உதாரணமாக ஆசாரத்திருத்தக் கூட்டங்களிலிருந்தவர்கள் எத்தனையோ பேர் இன்றையத்தினம் பிறவியில் உயர்வு, தாழ்வு உண்டு என்கிற வருணாசிரம தர்மத்தை ஆதரித்துக் கொண்டு வருகிறதைப் பார்க்கிறோம்.
சட்டசபைகளில், பொதுத் தெருக்களில் எல்லோரும் போகலாமெனத் தீர்மானம் செய்துவிட்டு பின் அவசியமிருந்தால்தான் போகலாமென்று அதற்கொரு வியாக்கியானம் செய்து, தெருக்களில் நடக்கிறவர்களைப் பிடித்துத் தண்டித்துக் கொண்டு வருவதை நாம் பார்க்கவில்லையா?
குடி அரசு - 1925 300
அதுபோலவே காங்கிரஸிலும் தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்று தீர்மானம் செய்து விட்டு அதற்காகவே தியாகம் செய்கிறோம், கஷ்டப்படு கிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களெல்லாம், பிறவியினால் ஜாதி வித்தியாசமில்லையென்றும்.பொது ஸ்தாபனங்களில் பொதுப்பணங்களில் நடக்கும் சந்தர்ப்பங்களிலாவது ஒருவர் சாப்பிடுவதை மற்றவர் பார்த்தால் பாவம் என்று சொல்லக்கூடாதென்று தீர்மானம் செய்து சேரமாதேவி குரு
குலத்தில் குழந்தைகள் மத்தியிலாவது அமுலுக்குக் கொண்டுவரப்பார்த்த வுடனே, நான் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன், எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவேன், ஆனால் குழந்தைகள் ஒருவர் பார்த்து
ஒருவர் சாப்பிடச் சொல்ல மாட்டேனென்றும், ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை பார்க்குமானால் நான் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொல்லிக்கொண்டும், காங்கிரஸ் ஸ்தாபனங்களில் தம் பதவிகளை ராஜீநாமாச் செய்து ஓடினவர்கள் எத்தனை பெயரைப் பார்க்கிறோம்? இன்னும் பெரிய ஆசார சீர்திருத்தக்காரரென்றும், பஞ்சமர்களுக்கு உழைக்கிறவர்களென்றும் சொல்லிக்கொண்டு, பஞ்சமர்களுடன் திரிந்துகொண்டும் இருந்த ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார். போன்றவர்களெல்லாம் மதத்திற்கும், ஒழுக்கத்திற்கும் விரோதமான காரியங்கள் தாங்கள் எவ்வளவு செய்து கொண்டபோதிலும் கூட, சமயம் வந்த
காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டியது கிரமந்தான். ஆனால் அது இப்போது சாத்தியப்படக்கூடிய காரியமல்லவென்று சொல்லவில்லையா? இந்தக் காரணங்களால் மீட்டிங்குகளாலும், சட்டசபைகளாலும், காங்கிர ஸினாலும் ராஜீயவாதிகளாலும் தீண்டாமை ஒழியுமென்றாவது, தீண்டாத, பார்க்காத, தெருவில் நடக்காத, அண்டாத, கோவிலுக்குள் நுழையாத, தங்களுடைய வேதத்தைப்படிக்கக் கூடாத, சகோதரர்களுக்கு விடுதலை கிடைத்து விடுமென்று எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனமே யென்பதுதான் நம்முடைய அபிப்பிராயம். ஏனெனின், வைக்கத்தில் தெருக்களில் நடக்க, தீண்டாமை விலக்கு மகாநாடோ, சட்டசபை தீர்மானங்களோ, காங்கிரஸ் திட்டங்களோ இந்த உரிமையை வாங்கிக் கொடுக்கவில்லை. முடிவாக, கொஞ்சம் அநுகூல மேற்பட்டிருக்கின்றதென வைத்துக் கொண்டாலும்
சத்தியாக்கிரகத்தின் மூலமாகவும், மகாத்மாவின் உதவியாலும் ஏற்பட்ட தேயல்லாமல் வேறொன்றினாலுமல்ல வென்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆதலால், இனியேனும் நம் நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்னும் எண்ணம் யாருக்காவது இருக்குமேயானால், அவர்கள் சத்தியாக்கிரகத்தைத் தான் கடைப்பிடிக்க வேண்டியது. தீண்டாமை ஒழிப்பதற்கு பொருள் உதவி செய்கிறவர்களா யிருந்தால் சத்தியாக்கிரகத்துக்கே கொடுக்கவேண்டியது. தீண்டாமைக்காக தமது வாழ்நாளை அர்ப்பணம் செய்ய வேண்டுமென்றிருந்
தால் அவர்கள் சத்தியாக்கிரகத்துக்குத் தான் அர்ப்பணம் செய்ய வேண்டும். இதல்லாமல் வேறு என்ன நினைத்தாலும் மந்திரத்தில் மாங்காய் விழுந்து விடாது. சில சமயங்களில் மாத்திரம் தீண்டாதாரோடு சாப்பிட்டு
301 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
விடுவதினாலேயோ, சம மாய் உட்காருவதினாலேயோ, அவர்களைத் தொட்டுவிடுவதினாலேயோ தீண்டாமை ஒழிந்துபோகாது. நமக்குத் தெரிய எத்தனையோ பெயர் தீண்டாதவர்களுடன் சரீர சம்மந்தம் வைத்துக் கொண்டிருப்பவர்களும், தீண்டாதார் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தில் மதுபானம் செய்கிறவர்களும், தீண்டாதாரிடத்தில் அடிமைகளாயிருப்பவர். களும், அவர்களிடத்தில் கூலிக் காரர்களாயிருப்பவர்களும் அந்த சமயம் தீர்ந்ததும் தங்களை உயர்ந்த ஜாதிக் காரர்களென்றுதான் சொல்லிக்கொள்ளு
கிறார்கள். ஆகையினால் முடிவாக, தீண்டாமை ஒழிவது தான் நமது தேசத்தின் விடுதலைக்கு முக்கிய சாதனமென்றும், அதற்காக உழைப்பதும், சத்தியாக்கிரகம் செய்வதுந்தான் தேசவிடுதலைக்கு உழைப்பதென்றும், நாம் உறுதியாகச் சொல்லுகிறோம். இதற்காக, மாயவரம் ஸ்ரீமான் கார்குடி சின்னையா பிள்ளை தலைமையில் தீண்டாமை விலக்க சத்தியாக்கிரக கமிட்டியென்று ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. உண்மையான தியாகத்திற்கும், கஷ்டத்திற்கும் தைரியமுள்ளவர்கள் அதிற்சேர்ந்து, எங்கெங்கு தீண்டாத, தெருவில் நடக்காத, கோவிலுக்குள் செல்லாத கொடுமைகள் இருக்கின்றதோ அங்கங்கு அகிம்சா தர்மத்தோடு, சத்தியாக் கிரகம் செய்து ஆயிரக்கணக்கான சகோதரர்கள் சிறைக்குச் செல்லவேண்டும். இது விஷயத்தில் சர்க்காருக்கும், வர்ணாசிரம தர்மிகளுக்கும் நாம் ஒன்றும் வித்தியாசம் கற்பிக்கமுடியாது. இரண்டு பேரும் நமக்கு எதிரிகளாய்த் தானிருப்பார்கள். பின்னும், சர்க்காரைவிட பிறவியில் உயர்ந்தவரென்று எண்ணிக் கொண்டிருக்கும் பிராமணர்களே, நம்முடைய விரோதிகளென்று சொல்லுவதுடனல்லாமல் டி பிராமணர்களைவிட இது விஷயத்தில் சர்க்காரார் கொஞ்சம் மேலானவர்களென்றுகூட சொல்லுவோம். இப்படிச் சொல்லுவது குற்றமென்று யாராவது சொல்லுவார்களேயானால் அவர்களை
நாம் தாழ்ந்தவர்களென்போருக்கும், தீண்டாதவர்களுக்கும் துரோகியென்று அழைக்க பின்வாங்கமாட்டோம்..
குடி அரசு - துணைத் தலைங்கம் - 08.11.1925
குடி அரசு - 1925 302
காஞ்சீபுரம் மகாநாட்டுத் தனைவர்
ஓர் பிராமணர் காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அக்ராசனம் வகிக்க வேண்டு மென்று சில பிராமணர்களும், சில பிராமணப் பத்திரிக்கைகளும் அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட மற்றவர்களும் எவ்வளவோ சூழ்ச்சிகளும், தந்திரங்களும் ஒழுங்கீனமான முறைகளும் செய்தும் கடைசியாக ஓர் பிராமணரல்லாதாரே மகாநாட்டுக்கு அக்ராசனம் வகிக்கத் தேர்ந் தெடுக்கப்பட்டுப் போனதைப்பற்றி பிராமணரல்லாதார் இரண்டொருவர் தவிர. மற்ற எல்லாரும் ஏகமனதாய் சந்தோஷப்படுவார்களென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அத்துடன் இதற்கு விரோதமாயிருந்த சிலர் வருத்தப்ப டுவார்களென்பதைப் பற்றியும் நாம் சொல்லத் தேவையில்லை. தமிழ் நாட்டிலுள்ள மொத்தம் 13 ஜில்லாக்களில் 10 ஜில்லாக்களே வோட் செய்திருப்பதாய்த் தெரியவருகிறது. இவற்றில் ஸ்ரீமான். வி.சக்கரைச் செட்டியாரை சென்னையும், ஸ்ரீமான். தங்கப்பெருமாள் பிள்ளையை
திருச்சியும் தெரிந்தெடுத்து. பாக்கி 8 ஜில்லாக்களில் ஸ்ரீமான் முதலியாருக்கு
4 ஜில்லாக்களும், ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கு 4 ஜில்லாக்களும் வோட் செய்திருப்பதாகத் தெரியவருகிறது. ஸ்ரீமான் அய்யங்காருக்கு வோட் செய்த நாலு ஜில்லாக்களில் கும்பகோணமும் சேலமும் சேர்ந்துதான் நாலு
ஜில்லாக்களானதாகத் தெரியவருகிறது. கிரமப்படி இந்த இரண்டு ஜில்லாக்கள். வோட்டையும் செல்லுபடியாக எடுத்துக்கொண்டது கொஞ்சமும் ஒழுங் காகாது. ஏனெனில், சேலம் ஜில்லா வோட்டானது அக்ராசனத் தேர்தலுக்காக ஏற்பட்ட மீட்டிங்கு சட்டப்படி செய்யப்பட்டதல்ல வென்றும், நிர்வாக சபை மெம்பர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் யாரோ இரண்டுபேர் சேர்ந்து தந்தி கொடுத்துவிட்டதாக ஓர் நிர்வாக சபை மெம்பர் ஆக்ஷபித்திருந்தார். இதற்கு சேலம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியார் எவ்வித ஒழுங்கான பதிலும் கூறவே யில்லை. இதைப்பற்றி நமக்குக் கவலையில்லை என்று விட்டுவிட்டாலும், அவர்களுடைய தேர்ந்தெடுப்பில் குறிப்பாக ஓர் பெயர் இல்லாமல் பல பெயர்கள் சிபார்ஸ் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. அப்படியிருக்க அதை செல்லுபடியுள்ளதாகக் கருதி அதிலும் ஸ்ரீமான். ஏ.ரெங்கசாமி ஐயங்காரவர்களுக்கு அதைச் சேர்த்துக்கொண்டது எப்படி ஒழுங்காகுமோ தெரியவில்லை. அல்லாமல், கும்பகோணத்தில் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியே கிடையாது. ஜில்லா காங்கிரஸ் கமிட்டி அக்ராசனராயிருந்த கனவானை ஒருவர் கண்டு மாகாணக் கமிட்டிக்குத் தலைவர் தேர்தல் செய்தாகி
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
விட்டதாவென்று கேட்டபோது, இங்கு ஜில்லா காங்கிரஸ் கமிட்டியே கிடையா தென்றும், ஆதலால் தெரிந்தெடுக்க முடியாதென்றும் சொல்லி விட்டார். அல்லாமல், காஞ்சீபுரம் மகாநாட்டு உபசரணைக் கமிட்டியார் தெரிவித்திருந்த காலாவதியாகிய அக்டோபர் மாதம் 20-ந் தேதி வரையிலும் கும்பகோணம் “ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிலிருந்து”” யாருடைய பெயரும் ஒழுங்காகவோ தப்பாகவோ அக்ராசனாதிபதி ஸ்தானத்துக்கு அனுப்பிக்கப்படவேயில்லை. இந்த நிலைமையில் கும்பகோணம் வோட் செல்லுபடியென்றும், அதை ஸ்ரீமான் ரெங்கசாமி அய்யங்காருக்குச் சேர்த்து கணக்குப் பார்க்கப் பட்டிருப்பதாயிருந்தால், இவ்விதத் தேர்தல்களை ஜனப்பிரதிநிதித்வ தேர்தலென்றும் ஒழுங்கான தேர்தல்களென்றும் எப்படி பொது ஜனங்கள். நினைக்கக் கூடும்? தாயைக் கொன்றவனுக்கும் ஊரில் பாதிப்பேர். சேருவார்களென்ற பழமொழிபோல் சுய நன்மையின் பொருட்டு ஒத்துழை யாமையை ஒழித்துத் தேசத்தைப் பாழாக்கினவர்களுக்கும், சர்க்காருக்கு அடிமையாகி தேசத்தைக் காட்டிக் கொடுத்து தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம் சம்பாதித்தவர்களுக்கும், மகாத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு தினப்படி சாராயம் முதலிய மதுபானம் விற்கிறவர்களுக்கும், முன்னணியிலிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கும் 4 வோட்; தேச நன்மையின் பொருட்டு ஒத்துழையா மையின் காரணமாய் தன்னையே தியாகப்படுத்திக் கொண்டு ஏழைகளின் பொருட்டும், தொழிலாளர்களின் பொருட்டும் தனது சுயநலத்தை மறந்து லக்ஷக்கணக்காய் சம்பாதிக்கக்கூடிய உத்தியோகங்களையும், தொழிலையும்
விடுத்து தேசமே முக்கியமானதெனக் கருதி, தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் மனப்பூர்வமாய் அர்ப்பணஞ் செய்த உண்மை தியாகிகளிலொரு வரான ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்கும் நான்கு வோட் என்று சொல்வோமானால், தேசத்தில் ஒழுக்கம், உண்மை, பகுத்தறிவு இருக்கின்றதென்று எப்படிச் சொல்லக்கூடும்? எப்படியோ, ஸ்ரீமான் முதலியார் தெரிந்தெடுக்கப்பட்டு விட்டாரென்று சொல்வதால், இனி இதைப்
பற்றிக் கிளற வேண்டிய அவசியமில்லை.
காஞ்சீபுரம் மகாநாடானது ஒரு விதத்தில் மிகவும் முக்கியமான மகாநா டென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் சென்ற வருடம் நடைபெற்ற திருவண்ணாமலை மகாநாடானது பிராமணரல்லாதாருடைய நிலைமை இன்னதென உணர்வதற்கு அநுகூலமாயிருந்த போதிலும், காஞ்சீபுரம்
மகாநாட்டில் பிராமணரல்லாதாருடைய கடமை இன்னதென நிர்ணயஞ்செய்ய வேண்டியதாயிருக்கும். ஆதலால் மகாநாட்டுக்கு பிராமணரல்லாத காங்கிரஸ்:
வாதிகள் யாவரும் விஜயம் செய்வது அவசியமாய் இருப்பதோடு மனசாக்ஷி முதலிய எந்தக் காரணங்களாலாவது காங்கிரஸில் மெம்பர்களல்லாதிருந்து தேச முன்னேற்றத்திலும், பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத்திலும், கவலையுள்ள ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் விஜயம் செய்யவேண்டியது அவசியமாயிருக்கின்ற படியால் அந்தப்படி விஜயம் செய்வதற்கு, அக்ராசனர்.
குடி அரசு - 1925 304
கக்ஷி வேற்றுமையின்றி ஸ்ரீமதி பெசண்டமையார் உள்பட யாவருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்ப வேண்டுமாயும் அதில் எல்லாக் ககஷியாரிடமும்
தாம் அன்பாய், சமரசமாய் நடந்துகொள்வதாகவும் எழுதி அனுப்பவேண்டு மாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1925
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காஞ்சீபுரம் தமிழர் மகாநா௫கன்
காஞ்சீபுரத்தில் 31 - வது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21,
22 -ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை நவசக்தி ஆசிரியர் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் அக்கிராசனத்
தின் கீழ் கூடும்.
அது சமயம் சர்வ கக்ஷியார்களும் அடங்கிய பிராமணரல்லாதார். மகாநாடொன்றும் கூடும்.
பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ் நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்கு கொண்டு வரவும், ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.
இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுரியங் காரணமாகவாவது அலக்ஷியமாய் இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத் தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்ய மடையும். ஆதலால் தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டா தாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சீபுரத்திற்கு வந்து அதற் கென்று ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஈரோடு ஈ.வெ.ராமசாமி
157125
குடி அரசு - வேண்டுகோள் - 15111925
குடி அரசு - 1925 306
சுதேசமித்திரணின் சின்னபுத்தி
நாளது 1925-ம் ஹ அக்டோபர் மீ£30-ம் உசுதேசமித்திரன் 4-வது பக்கம் 3- வது பத்தியில் " தர்ம சொத்திலிருந்து ககஷிப் பிரசாரமா' “நாம் எதிர்பார்த்தபடி ஜரூராக காரியங்கள் நடக்கின்றன” என்ற வாசகத்தின் தொடர்ச்சியாக “இந்துமத தர்ம சொத்து பரிபாலன சட்டம் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பிடிவாதமாக இயற்றியது” பரிசுத்தமான நோக்கமுடன் செய்யப் பட்டதாக சொல்லப்படுவதானது எலக்ஷனுக்கு ஓர் முக்கியக் கருவியாக செய்யப்பட்டிருக்கிறதென்று நிரம்பிய அனுபோகம் பெற்ற நிரூபர் சொல்லுகின்றார்.
அதன் உண்மையாதெனில் டெசட்டப்படி நியமிக்கப்பட்ட கமிஷ னர்களில் ஒருவராகிய ஸ்ரீமான் பி.வி.நடராஜ முதலியார் அவர்கள்சில தினங் களுக்கு முன் கோயமுத்தூர் டவுன் ஹாலில் ஸ்ரீமான்!1.சம்பந்த முதலியார் BABL. அவர்கள் தலைமையின் கீழ் சில பொது ஸ்தாபனங்களிலிருந்து கமிஷனர் அவர்களுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் காலத்தில் கமிஷனர் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சாரமாவன :-
“இந்துமத தர்ம பரிபாலன சபைகளிலும், ஆலயங்களிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் நடந்து வந்த அக்கிரமங்களையும், நடக்கின்ற அக்கிரமங்களையும் எடுத்துரைத்து இப்பேர்க்கொத்த தியசெயல்கள் இனி நடவாதிருக்கும் பொருட்டும், நடைபெற வேண்டியவைகள் கிரமப்படி நடத்தி வைக்கும் பொருட்டும் இச்சட்டம் ஆக்கப்பட்டதேயன்றி இதன் சொத்திலிருந்து சர்க்கார் கொள்ளையடித்துக் கொண்டு போகவேண்டு மென்கிற கெட்ட எண்ணத்தினால் செய்யப்பட்டதல்ல வென்றும், இதற்காக ஜனங்களும் கூடிய வரை ஒத்துழைக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டு தன் சொற்பொழிவை நிறுத்திக் கொண்டார்.
ஆனால் 30.10. 1925- 6 சுதேசமித்திரனில் வெளிவந்த வியாசத்தைக் கவனிக்குமிடத்து, ஆதிகாலம் தொட்டு ஏகபோகமாக கேள்வி கேட்பாரின்றி அனுபவித்து வந்ததுமல்லாமல் தெலுங்கு பாஷையில் செப்பும் பழமொழிக் கிணங்க “மீக்குச் சூப்பு நாக்கு மேப்பு”” என்று சொல்லுகிற படியாக நிவேதனத்தை சில ஆலயங்களில் சுவாமிக்குக் காண்பித்தும், காண்பியா மலும் கூட கொள்ளையடித்துத் தின்ற கோலில் பெருச்சாளிகளுக்கும், அவர்களுக்கு ஏவல்காரர்களாக அவர்களின் கீழ் வயிறு வளர்த்து வந்த பணியாளர்களுக்கும், இவர்களுக்கெல்லாம் மேல்பட்ட அந்தஸ்தில் இருந்து கொண்டு அவர்கள் இஷ்டம்போலும் தங்கள் இஷ்டம் போலும்
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காரியாதிகளை நடத்திக் கொண்டும் திருடிக் கொண்டும் இருந்த சிற்சில பொது ஸ்தாபனங்களின் உத்தியோகஸ்தர்களுக்கும், ஷே சட்டமானது அருவருப்பைக் கொடுக்க கூடியதேயாகும். இவ்வருத்தம் காரணமாக கக்ஷிகளை ஒன்றோடொன்று இணைத்து ஒருவருக்கொருவர் மனத்தாங் கலை யுண்டு பண்ணி பின்னால் மாச்சரியத்தையும் உண்டுபண்ணி வைத்து அவைகளுக்கிடையில் தங்களுடைய “சாண் வயிறு வளர்க்க சலாம் போடும் குலாம்கள்” நேரில் பார்த்தவற்றை எழுதாது ஏதேதோ தாறுமாறாக எழுதத் தலைப்படுகின்றார்கள். இவர்களையும் பத்திரிகை நிரூபர்களாகக் கொண்ட பத்திரிகைகளுக்கு எந்தக் காலத்தில், எந்த நேரத்தில், எந்த வியாசத்தைக் கொண்டேனும் பத்திரிகைக்கு இடையூறு விளைத்து கெடுத்துவிடுவார்களோவென்கிற சந்தேகம் எம் போன்ற பத்திரிகை வாசிக்கும் மித்திரன் நேயர்களுக்கு உண்டாவது சகஜமே.
அல்லாமலும் நமது விரோதிகள் என்னென்னவோ சூழ்ச்சி செய்வ தாகவும் அதையும் எதிர்த்துப் போராட எல்லோருடைய ஒத்துழைப்பையும் வேண்டுவதாகவும் மற்றும் பலவாறாகவும் ஸ்ரீமான் நடராஜ முதலியார் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது என்கிறார். மேல்கண்ட வாசகத்தின்படி பார்க்குமளவில் டிவியாசத்தை எழுதிய நிரூபர்தான் நேரில் அப்பிரசங் கத்தைக் கேட்காமலும், ஆனால் யாரோ ஒருவர் சொல்லக் கேட்டும் அதைக் கொண்டு தன்னுடைய நீண்டகால அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்ட விஷயங்களில் கொஞ்சம் கலந்தும் வியாசம் வரைய அரம்பித்துவிட்டார் போலும். அதாவது “புலியைக் கண்டவரைக் கண்டு கலங்கிய கல் நெஞ்சர் போலும்” எனச் செப்பும் பழமொழிக் கொப்பாகத் தோன்றிவிட்டார்.
நிற்க, தேவஸ்தான பணத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் பிரசாரம் செய்வதும் தேவஸ்தான சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாவெனத் தெரிய வேண்டுமென்றும் ஓர் அதிகாரி தோரணையில் எழுதியுள்ளவர் டே தர்மச் சொத்துக்களை “உத்தியோக வேட்டைக்காரர்களைக் ” கொண்ட ஒரு கக்ஷி
யார் துஷ்பிரயோகம் செய்வதை நாட்டார் அழுத்தமாக கண்டிக்க கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் என்னென்ன விபரீதங்கள் நடக்கப் போகின்றனவோ அறியோம் என்றும் மனமானது நைந்து நைந்து துரும்பு போல் இருந்த திரேகம் தூண்போலாக வீங்கவும் கதறுகின்றார்!
உத்தியோக வேட்டைக்காரர்களைக் கொண்ட ககஷியார் என்பதாக அவர் சொல்லும் விஷயத்திலிருந்து கவனித்தால் அவருக்கே ஓர் சாதாரண உத்தியோகம் கிடைக்கப் பெறாதிருந்த நிலைமையினாலோ அல்லது அவருடைய உறவினர்கள், நண்பர்கள் எவர்களுக்கேனும் உத்தியோகங் கள் கிடைக்காதிருந்த வருத்தத்தினாலோ தான் சித்த சுவாதீனமிழந்த நிலைமையில் மனதிலுதித்த நிலைமையில், மனதில் உதித்தவற்றையெல் லாம் கொட்டிக் குறை கூற அரம்பித்துவிட்டார். இவ்விதம் அசம்பாவித மாகவும், அநாகரீகமாகவும் நிரூபத் தொழிலை நடத்திக் கொண்டு வரும் நபர்களை நிரூப நேயர்களாக வைத்துக் கொண்டிருப்பதானது சுதேச மித்திரனுக்கு ஓர் பெருங் குறையேயாம்.
ஆதலால், இனி வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடை
குடி அரசு - 1925 308
பெறாதிருக்குமென்று எண்ணுகிறேன் என ஸ்ரீமான் ஏ.சண்முகசுந்தரம் பிள்ளை எழுதுகிறார்.
குறிப்பு :
மேற்கண்ட வியாசம் கோயமுத்தூர் ஸ்ரீமான் ஏ.சண்முகசுந்தரம் பிள்ளையவர்களால், சுதேசமித்திரனுக்கு அனுப்பப்பட, அப்பத்திரிகை இதைப் பிரசுரியாது திரும்ப அனுப்பிவிட்டதாம். பத்திரிகையொன்றில் தாறு மாறான விசயம் ஏதேனும் வருமாயின், அதை மறுத்துக்கூறி எழுதப்படும் நிரூபங்களைப் பிரசுரியாது திருப்பி விடுவது பத்திரிகை நடத்தும் கொள் கைக்கே விரோதமாகும்.
நிற்க, நமது நேயர் குறிப்பிடும் சுதேசமித்திரன் நிரூுபரைப் போன்ற
பலர் அப்பத்திரிகைக்கு நிரூபர்களாயிருக்கின்றனர். இவர்கள் அயோக்கியத் தனமாகவும், சின்ன புத்திக் கொண்டும், உண்மையைத் திரித்தும் ரிப்போர்ட் செய்வதை நாம் பல தடவைகளில் கண்டித்திருக்கிறோம். இங்ஙனம் கண்டிப் பதில் கடின பதங் கொண்டிருக்கின்றதென சிலர் கூறுகின்றனர். இத்தகைய நிரூபர்களுக்கு நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் தகுதிதானா அல்லது இன்னும் அதிகக் கடின பதம் வேண்டுமாவென்னும் விஷயத்தைப் பொது ஜனங்களே நிர்ணயம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 15.11.4925.
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுயாரால்மாம்
சுயராஜ்யமென்னும் பதம் நமது நாட்டில் பெரும்பான்மையாய் ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கே பயன்படுத்தப்பட்டு வருவதோடு, பாமர ஜனங்கள் அதை அறியாதபடி சுயகாரியப் புலிகளால் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. சுவராஜ்யமென்பதைப் பலர் பலவாறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடர்கள் தாங்கள் திருடுவதைப் பிறர். கவனியாமல் விட்டுவிடுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். சிறை யிலிருக்கும் கைதிகள் தங்களை வெளியில் விட்டு விடுவது தான் சுயராஜ்ய மென்று நினைக்கிறார்கள். குடிகாரர்கள் தாங்கள் தாராளமாகவும், விலை நயமாகவும் வேண்டிய அளவு குடிக்க வசமுள்ளதாய் கலால் வரி எடுபட்டுப் போவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். பாமர ஜனங்கள் பலர். இந்தியாவை விட்டு வெள்ளைக்காரரை விரட்டி விடுவது தான் சுயராஜ்ய மென்று நினைக்கிறார்கள். ஏழைகள் ரூபாய் 1-க்கு 8 படி அரிசி விற்பதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். தரித்திரர்கள் பணக்காரர் சொத்துக்களை. யெல்லாம் பிடுங்கித் தங்களுக்குச் சரி சமானமாய்ப் பங்கிட்டுக் கொடுப்பது தான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள்.
இவையெல்லாம் அறியாமையால் நினைப்பதாக வைத்துக் கொண்டா
லும் அறிந்தவர்கள், படித்தவர்களென்போரோ வெள்ளைக்காரர் உத்தியோ கங்களையெல்லாம் தாங்களே அனுபவித்துக் கொண்டு 500,1000,5000, 10000 ரூபாய் சம்பளம் பெறுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள்.
உயர்ந்தோர்களென்கிற பிராமணர்களோ பாமர ஜனங்களைக் கொண்டு கிளர்ச்சி செய்வித்து டே சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகங் களையும், பதவிகளையும் தாங்களே பெறுவதும், தாங்கள் பிறவியில் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்களென்பதை நிலைநிறுத்தி, ஆதிக்கம் பெறுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள்.
ராஜதந்திரிகளென்போரும், ராஜீயவாதிகளென்போரும், சீமையி
லிருந்து பார்லிமெண்டார் மூலம் நமக்கு வழங்கப்படும் சில அதிகாரங்களை
யும், பதவிகளையும்தான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். காங்கிரஸில் தற்காலம் பிரதான ஸ்தானம் வகிப்பதாய்ச் சொல்லப்படும் சுயராஜ்யக் ககஷியா ரென்போரும், அரசாங்கத்தாரிடமிருந்து எதையாவது பெறுவதைத் தான் சுயராஜ்யமென்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ! இவற்றையெல்லா மறிந்துதான் இங்கிலாந்தில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் பிரசங்கம் கேட்ட
குடி அரசு - 1925 310
கர்னல் வெட்ஜ் வுட் துரை இந்தியர்கள் இன்னமும் தங்களுக்கு வேண்டியது என்ன ( சுயராஜ்யம் ) வென்பதையே தெரிந்து கொள்ளவில்லையென்று சொன்னார் போலும்!)
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தியடிகள் இவற்றையொன்றையுமே சுயராஜ்யமென்று கருதவேயில்லை. இவ்வித சுயராஜ்யங்களில் எது வரினும், நமது நாட்டில் இப்போதுள்ள கஷ்டங்கள் எதுவும் மாறவே மாறாதென்பது அவருடைய அபிப்பிராயம். இப்போது சுயராஜ்யமில்லையென்று சொல்லுவதற்கறி குறியாக இருப்பது -
1 மக்கள் சுயமரியாதையில்லாமலும், சமத்துவமில்லாமலும் ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவனெனச் சொல்லிக்கொண்டு, பெரும்பான்மையான மனிதர்களை தீண்டாதார்களென்று ஒதுக்கி, இழிவான மிருகங்களிலும் கேடாய் மதித்து, மனித சுதந்திர மில்லாமல் கொடுமைப்படுத்தி வைத்திருப்பது.
2. தினம் ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியில்லாமலும், தங்கள் மானத் தைக் காக்க ஆடையில்லாமலும் கோடிக்கணக்கான ஜனங்கள் பட்டினியாலும், மானாபிமானத்தாலும் சாவது.
3. தேசத்தில் பெரும்பான்மையோரான தொழிலாளிகள் தங்களுக்குத் தொழிலில்லாமல், தங்கள் ஜீவனத்திற்காக எதுவும் செய்ய ஒருப் பட்டு ஜீவனத்திற்காக அந்நிய நாட்டுக்குச் சென்று இழிவாய் வாழ்ந்து மாய்வது.
4. நமது தேவைக்கு வேண்டிய சகல வஸ்துக்களும் அந்நிய நாட்டி லிருந்து வருவதாய் ஏற்பட்டு அதன் பொருட்டு நமது செல்வங்கள். வெளிநாடுகளுக்குப் போய் நமது நாடு தரித்திரத்தில் மூழ்கிக் கொண்டு போவது.
இத்யாதி கெடுதிகள் நம் நாட்டை விட்டு என்று அகலுமோ அன்று தான் நமது நாடு சுயராஜ்யம் பெற்ற நாடு ஆகுமேயல்லாமல் அந்நியர்கள். அரசாகஷி செய்யுங் காரணத்தினாலேயே சுயராஜ்யமில்லை யென்று சொல்லி விடமுடியாதென்றும், மகாத்மா காந்தி அடிக்கடி கதறி வருவதோடு, இவ்வித சுயராஜ்யத்தை அடையவே ஒத்துழையாமையையும், கதர், தீண்டாமை, மதுவிலக்கு முதலிய நிர்மாணத் திட்டத்தையும் உபதேசித்தார்.
311 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
படித்தவர்கள் இதனை மேல் ஜாதியாரென்போரும் படித்தவர்களென்போரும் இவ்விரண்டும் சேர்ந்த சுயராஜ்யக் கட்சியாரென்போரும் ஆதியிலிருந்தே ஒப்புக்கொள்ளவில்லை. இவை ஒப்புக்கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்து பலன் தருவதானால் மேல் ஜாதியாரென்போருக்கும் படித்தவர்களென் போருக்கும் பெரிய ஆபத்தாய்த்தான் முடியும். ஏனெனில், தீண்டாமை யொழிந்தால் மேல் ஜாதியென்பது போய்விடும். கதர், மதுவிலக்கு வெற்றி பெற்றால் ஏழ்மை நிலையும், தரித்திரமும் மறைந்துவிடும். இவ்விரண்டும் மறைந்தால் படித்தவர்களுக்குப் பிழைப்பிருக்காது.
கூட இருந்தே குடியைக் கெடுத்தது
இந்த இரகசியத்தை அறிந்தேதான், உயர்ந்த ஜாதியார்களென்போரும், படித்தவர்களென்போரும் கூட இருந்தே குடியைக் கெடுத்தது போல் மகாத்மாவின் திட்டத்தை, அவருடன் இருந்தே ஒழித்து விட்டார்கள். அது மாத்திரமில்லாமல், ராஜீய சுதந்திரமென்ற பொய்ப்பெயர் வைத்து, உத்தியோ
கம் சம்பாதிப்பதையே பிரதானத் தத்துவமாய்க் கொண்ட சுயராஜ்யக் ககஷியென்று ஒரு கட்சியையும் சிருஷ்டித்துக் கொண்டு, காங்கிரஸிலிருந்து மகாத்மாவையும் விரட்டி விட்டு, உத்தியோக வேட்டையாட காங்கிரஸை ஓர். ஆயுதமாயும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
சுயராஜ்யக் கட்சியாரின் கொள்கையான ராஜீய சுதந்திரமென்னும் பொய் அதிகாரமும், பதவியும் நமக்குக் கிடைக்க கிடைக்க நாடு இன்னும் சீர்கேடடையவும், ஒற்றுமை குலையவும், தரித்திரம் பெருகவும், அடிமைத் தன்மை பலப்படவும்தான் ஆகுமேயல்லாமல் தேசம் ஒருக்காலும் முன்னுக்கு
வர முடியவே முடியாது.
சீர்திருத்தம்
உதாரணமாக, ஒத்துழையாமைக்கு முன்னிட்ட காங்கிரஸ்களின் முயற்சியால், நமது அரசாங்கத்தார் இதுவரை இரண்டு தடவைகளில் ராஜீய சுதந்திரமென்னும் இரண்டு சீர்திருத்தங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது, ஒன்று மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மற்றொன்று மாண்டேகு - செம்ஸ்போர்ட் சீர்திருத்தம். இவைகளின் பலனாய் தேசம் என்ன வாயிற்று ? இவற்றால் ஏற்பட்ட பதவியையும், உத்தியோகத்தையும் ஆயிரம் பதினாயிரக்கணக்கான சம்பளங்களையும் நம்மில் யார் அடைவது என்கிற சண்டைகளும், பொறாமைகளும் வலுத்து வந்ததும், ஒருவரை ஏமாற்றி ஒருவர் அடைய பொது ஜனங்களை உபயோகித்துக் கொண்டதுமல்லாமல் வேறென்ன கண்டோம்?
5500 ரூபாய் சம்பளமுள்ள நிர்வாக சபை மெம்பர் பதவிகளும், மந்திரி
குடி அரசு - 1925 312
பதவிகளும் இந்தியருக்குக் கொடுப்பதென்கிற சீர்திருத்தம் பெறாமலிருந் திருப்போமேயானால், இந்து - முஸ்ஸீம் சண்டைகளும் பிராமணர்- பிராமண:
ரல்லாதார் கக்ஷிகளும் உட்பிரிவு துவேஷங்களும், ஏற்பட்டிருக்குமா ?
சுயராச்யக் ககஷியென்று ஓர் ௧௯ ஏற்பட்டு தெய்வீக இயக்கமாகிய மகாத்மாவின் இயக்கத்தைக் குலைத்து, உத்தியோக வேட்டையாட முன் வந்திருக்குமா? ரெ சீர்திருத்தங்களென்னும் ராஜீய சுதந்திரங்கள் கொடுக்கு
முன் 70 கோடி ரூபாயாக இருந்த வரி, இப்போது 150 கோடி ரூபாயாக மாறி யிருக்குமா? 24 கோடியாகவிருந்த இராணுவச்செலவு இன்று 60,70 கோடியாக மாறியிருக்குமா?'
அரசாங்கத்தாரிடமிருந்து பெற்ற சீர்திருத்தம் என்னும் கயராஜ்யத் தாலல்லவா இவ்வித கஷ்டங்கள் விளைந்தன. மகாத்மாவின் சீர்திருத்தமாகிய நிர்மாணத் திட்டமென்னும் சுயராஜ்யத்தைப் பெற்றிருப்போமேயானால், இக்கெடுதிகள் நமக்கு வந்திருக்குமா ? சுயராஜ்யக் கட்சியார் கோருகிறபடி இன்னுமொரு சீர்திருத்தமென்னும் சுயராஜ்யம் சர்க்காரால் கொடுக்கப் பட்டால், நமது கதி என்னவாகும்? இன்னும் எவ்வளவு கோடி ரூபாய் வரி அதிகமாகும்? எவ்வளவு ஜாதிச் சண்டைகளும், வகுப்புத் துவேஷங்களும் வளரும்.
நாக்கில் ஊறும் தண்ணீர்
இந்த சீர்திருத்தங்களின் பலனால் ஏற்பட்ட உத்தியோகங்கள் தானே, இன்றையதினம் ஸ்ரீமான்களான சி.பி. இராமசாமி ஐயரும், மகமது ஊஸ்மானும், ராமராய நிங்கரும், பாத்ரோவும், சிவஞானம் பிள்ளையும் ஆளொன்றுக்கு மாதம் 5,500 ரூபாய் வீதம் சம்பளம் என்னும் பெயரால் கொள்ளையடிப்பதும், தனி வண்டியில் பிரயாணம் செய்வதுமாயிருக்கிறது.
இதைப் பார்த்துப் பொறுக்காமல், ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்கார். நாக்கிலும், ஏ. ரெங்கசாமி ஐயங்கார் நாக்கிலும், சத்தியமூர்த்தி நாக்கிலும் ஊறின தண்ணீர் தானே - நமது நாட்டில் சுயராஜ்யக் கட்சியாய்க் கிளம்பி, தேசத்தையும் சமூகத்தையும் பாழாக்கிக் கொண்டு வருகிறது.
இந்த உத்தியோகங்கள் இந்திய மக்களுக்கு வீண் தெண்டத்துக் காகத்தானே! “குலைக்கும் நாய்க்கு எலும்பு போடுவதுபோல்” அரசாங்கத் தாரால் வீசி எறியப்பட்டிருக்கிறது! இந்த உத்தியோகங்களால், ஏழைகள் தலையில் கை வைத்து வரியை உயர்த்தி, வசூல்செய்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஒருசிலர் அனுபவிப்பதல்லாமல் வேறென்ன பிரயோஜனம்? இவ்வுத்தியோகங்களில்லாத காலத்தில் ராஜாங்கம் நடக்கவில்லையா?
அந்த ராஜாங்கத்திற்கும், இந்த ராஜாங்கத்திற்கும் வித்தியாசம் தானென்ன? இந்த உத்தியோகங்கள் ஏற்பட்டதின் பலனாய் ஒரு வெள்ளைக்
கார உத்தியோகமாவது, அதிகாரமாவது குறைந்ததா?
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இந்த உத்தியோகத்தின் பலனாய் தேசத்தில் செல்வநிலை பெருகிற்றா? வரி குறைந்ததா? தீண்டாத மக்கள் தங்கள் தெய்வங்களைக் காணவாவது, தெருவில் நடக்கவாவது உரிமை பெற்றார்களா? கோடிக் கணக்காய் அந்நிய நாட்டாரால் வியாபாரத்தின் மூலமாய் சுரண்டப்படும் பணத்தில் முக்கால் துட்டாவது நமது நாட்டில் தங்க வழியேற்பட்டதா? கோடிக்கணக்கான மக்கள் மதுபானத்தினால் பாழாவதையாவது நிறுத்த முடிந்ததா? தேசத்துக்கு என்ன பலனைக் கொடுத்தது?
சுயராஜ்யக் ககஷியாரென்போர், பாமர ஜனங்கள் இந்த இரகசியத்தை. அறியாதபடி பத்திரிக்கைகளில் சதா காலமும் பொய்யும் புளுகும் எழுதியும், மனதறிந்த பொய்ப்பிரசாரங்கள் செய்தும், பொது ஜனங்களை ஏமாற்றி எல்லா உத்தியோகங்களையும் தாங்களே அடைய வேண்டுமென்னும் ஆசைப் பட்டுக்கொண்டும் கூடிக்கூடி எப்படி இந்த உத்தியோகத்தை அடைவது என்று சதியாலோசனை செய்து கொண்டுமிருக்கிறார்களேயல்லாமல், இவ்வித உத்தியோகங்கள் நமக்கு அவசியமா, அவசியமில்லையாவென்பதைப் பற்றி ஒரு நாளாவது பேசியதே கிடையாது.
வேண்டாத சுயராஜ்யம்
சுயராஜ்யக் கட்சியாரின் சுயராஜ்யம் தேசத்திற்கு உண்மையான சுயராஜ்யம் ஆகாது. இவ்வித சுயராஜ்யம் நமது நாட்டிற்கு வேண்டவே வேண்டாம். சுயராஜ்யக் கட்சியார் கேட்கிறபடி சர்க்காரால் கொடுக்கப்படும் சுயராஜ்யமென்னும் சீர்திருத்தம் மறுபடியும் வருமானால் படித்தவர்களுக்
கும், உயர்ந்த ஜாதியாரென்று சொல்லுபவர்களுக்கும் ஆயிரக்கணக்கான. சம்பளமும் உத்தியோகமும் கிடைக்கும்.
இதற்காக மறுபடியும் வரியை அதிகப்படுத்த வேண்டும்.மக்களுக்குள் உயர்வு, தாழ்வு நிலைத்திருக்கும். குடியை ஒழித்தால் சர்க்கார் வரும்படி
குறைவதன் மூலம் தங்களுடைய சம்பளம் குறைந்து போகுமானதால், குடியை நிறுத்த முடியாது. வியாபாரத்தின் மூலமாக அந்நிய நாட்டுக்குப் போகும் செல்வத்தை நிறுத்த இவர்கள் கையில் திட்டமொன்றுமில்லாததால் அதுவும் சாத்தியப்படாது. உத்தியோகத்தைக் குறைப்பதால், படித்தவர்களுக்கு ஜீவனோபாயத்திற்கு மார்க்கமில்லாமல் போய்விடும். ஆகையால், அதையும் இவர்கள் செய்ய முடியாது.
வேண்டிய சுயராஜ்யம்
உண்மையான சுயராஜ்யமே நமக்கு வேண்டும். அது மகாத்மாவின் சுயராஜ்யமான கதர் உற்பத்தி செய்வதிலும், அதை உடுத்துவதிலும், தீண்டாமையை ஒழித்து மக்கள் சமமாய் வாழ்வதிலும், மதுபானம் ஒழிந்து
மக்கள் ஒழுக்கமடைவதிலுமேதானிருக்கிறது.
குடி அரசு - 1925 314
மகாத்மா சொல்லும் சுயராஜ்யமாகிய கதர் உற்பத்தி செய்து உடுத்தினால், அந்நிய நாட்டுக்குப் போகும் 70 கோடி ரூபாயும், மில் இயந்திரக்காரர் அநுபவிக்கும் 70 கோடி ரூபாயும், ஆக 140 கோடி ரூபாயில், குறைந்தது வருடம்1- க்கு 100 கோடி ரூபாயாவது ஏழைகளுக்குப் பங்கு வீதம் கிடைக்கும். மகாத்மா சொல்லும் தீண்டாமை என்னும் சுயராஜ்யத்துக்குப் பாடுபட்டு வெற்றி பெற்றால், மிருகங்களுக்கும், புழுக்களுக்கும் கேவல மாயிருக்கும் தீண்டாதாரென்று சொல்லப்படும் 7 கோடிப் பேர்கள் மனிதர். களாவார்கள். இந்திய மனித சமூகத்துக்கு 7 கோடி மனிதர் லாபமாகும். பிராமணரல்லாதாருக்கும் இழிவான தாசிமக்கள், சூத்திரர் என்கிற பெயரும்
நீங்கும். மகாத்மாவின் சுயராஜ்யமாகிய மதுவிலக்குக்கு வேலை செய்து வெற்றி பெற்றால் தேசத்தில் மதுபானம் ஒழியும். ஏழைகள் சுகமாய் வாழ்வார்.
கள். வருடத்தில் 20 கோடி ரூபாய் ஏழைகளுடைய பணம் மதுபான வகை:
யில் சர்க்காருக்குப் போய் உத்தியோகஸ்தர்கள் பங்கிட்டுக் கொள்வதை
நிறுத்தும். ஆதலால் சுயராஜ்யக் கட்சியின் சுயராஜ்யம் வேண்டுமா? மகாத்மா வின் சுயராச்சியம் வேண்டுமா?
குடி அரசு - தலையங்கம் - 15.11.1925
315 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஈரோடு சேர்மணிண் அடாத வசசய்கை
ஈரோடு முனிசிபாலிட்டியின் பொது ஜனங்களின் வரிப்பணம் தாறுமாறாகச் செலவழிக்கப்பட்டு வருவதைப் பற்றி இதற்கு முன் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம். போதுமான அளவு ஜலதாரை கட்டாததனாலும் ஓடையில் விழுந்து தேங்கும் கசுமாலத் தண்ணீரை ஒழுங்காய் வெளிப்படுத்தாத காரணத்தாலும், அதிலிருந்து கொசுக்களும், விஷக்காற்றுகளும் உண்டாகி, ஊரெங்கும் பரவி, வீடுகள் தோறும் மலைக்காய்ச்சலாலும், குளிர் காய்ச்சலாலும் ஜனங்கள் அவஸ்தைப்படு வதைக் கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல், நமது முனிசிபல் சேர்மன் அவர்:
கள் சிங்கார வனத்தின் பெயரால் வரிப்பணத்தைக் கண்டபடி வாரி இறைப் பதைப் பற்றியும், துர்விநியோகப்படுத்திக் கொள்வதைப் பற்றியும், இதற்கு
முன் குறிப்பிட்டிருக்கிறோம். சென்ற 10-ந் தேதி ஈரோடு முனிசிபாலிட்டியில் சிங்காரவனத்திற்காக இது வரையில் கவுன்சிலர்க ளுடைய அநுமதி பெற்றும், அநுமதி பெறாமலும் செலவு செய்திருக்கும் பணத்தைப் பரிசீலனை செய்வதற்காகவும், சேர்மன் கேட்கிறபடி யெல்லாம் மேற்கொண்டு பணம் கொடுக்கலாமா வென்பதைப் பற்றியும் யோசிக்கவும், 10-11-25-ல் சேர்மனால்
ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருந்தது. அந்த மீட்டிங்குக்கு அதிகப்படியான கவுன்சிலர்கள் வந்து சேர்மனுக்கு விரோத மாய்த் தீர்மானங்கள் செய்து விடுவார்களோவென சேர்மன் பயந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தனக்கு வேண்டிய கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு வந்து தன் இஷ்டம்போலெல்லாம் காரியங்களை முடித்துக்கொள்ள, என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமோ அவற்றை இரகசியமாய் எழுதிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மற்ற கவுன்சிலர்களும் வந்துவிட் டார்கள். இதற்கு மேல் நடந்த விஷயத்தைப்பற்றி கவுன்சிலர்களான ஸ்ரீமான் கள்.கே.ஏ.ஷேக்தாவுத் சாகிப், பழனியப்ப செட்டியார், ஈ.ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆகிய மூன்று கன வான்களும் சேர்மன் மீது ஈரோடு முன்சீப் கோர்ட்
டில் வழக்குத் தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றவொட்டாதபடி இஞ்சங் ஷன் பெற்று விட்டார்கள். அந்த பிராதின் சாராம்சத்தைக் கீழே குறிப்பிடு கிறோம்
1 வருஷாந்தர உத்தேச வரவு-செலவு திட்டமாகிய பட்ஜற்றில், சிங்கார வனத்திற்காக 3000 ரூபாயும், குழந்தைகள் விளையாடும் ஸ்தலத்திற் காக 2000 ரூபாயும் ஒதுக்கி வைக்கப்பட்டது.
குடி அரசு - 1925 316 317
2. இப்படி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் இதை நிறைவேற்றும் போது சேர்மன் ஒவ்வொரு அயிட்டங்களைப் பற்றியும் கவுன்சிலர் களுடைய சம்மதம் பெற்றுத்தான் செலவு செய்யவேண்டும்.
3. இப்படியிருக்க, சேர்மனால் இதற்கென்று இதுவரை 7000 ரூபாய் செலவழிக்கப்பட்டு விட்டது. இவற்றும் 633 ரூபாய் தவிர பாக்கி யெல்லாம் கவுன்சில் சம்மதமில்லாமலே சேர்மென் தன் இஷ்டம் போல் செலவழித் திருக்கிறார்.
இப்படியிருக்க இதுவரை சேர்மனால் செலவு செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு அநுமதி கொடுக்கவும், மேற்கொண்டு 5000 ரூபாய் அநுமதிக்கவும், கவுன்சிலர்களுடைய சம்மதத்தைப் பெற 26:10.25-ல் சேர்மன் ஓர் மீட்டிங்கு போட்டிருந்தார். அந்த மீட்டிங்கை 2-11-25-க்கு தள்ளிவைத்து அதற்குள்ளாக, சேர்மன் செலவு செய்திருக்கும் தொகைகளைப் பரிசீலனை செய்ய ஓர் சப் கமிட்டிநியமிக்கப்பட்டது.
4.சப்கமிட்டி தன்னுடையரிப்போர்ட்டை அறுப்பிவிட்டது.
5.10-11-25-ந்தேதி மீட்டிங்குக்காக குறிப்பிட்ட நேரத்துக்கு வாதிகளான. கவுன்சிலர்களும் மற்ற சில கவுன்சிலர்களும் மீட்டிங்கு நடக்கும் ஸ்தலத்துக்கு வந்து பார்த்தபோது, சேர்மன் மினிட் புஸ்தகத்தில் என்னமோ எழுதிக் கொண்டேயிருந்தார். அந்த சமயம் சேர்மனைப் பார்த்து, நாங்கள் வந்திருக் கிறோம், நீங்கள் மினிட் புஸ்தகத்தில் என்னமோ எழுதிக்கொண்டிருக்கிறீர் களேயென்று கேட்டார்கள். இதை சேர்மன் கொஞ்சமும் கவனிக்காமல் எழுதிக் கொண்டே யிருந்தார். மறுபடியும் கவுன்சிலர்கள் கண்டித்து, அதென்னவென்று கேட்க பின்னால் தெரியும் என்று சொல்லிவிட்டுத் தனக்கு வேண்டி யதை எழுதிக்கொண்டார். கவுன்சிலர் ஸ்ரீமான் ஷேக்தாவுத் சாய்பு சப்கமிட்டி யினுடைய ரிப்போர்ட் என்னவென்பதைப் படிக்கும்படி கேட்டார். அதையும் படிக்கமுடியாதென்று சேர்மன் சொல்லிவிட்டார்.
6பிறகு சேர்மன் அங்கிருந்த ரெவரெண்ட் ஏ.டப்ளியு பிரவ் என்னும் ஐரோப்பிய கவுண்சிலரை, மேல்கொண்டு வேலை செய்வதற்காக பல அயிட்டங்களுக்கு 2700 ரூபாய் அநுமதிப்பதாக ஓர் தீர்மானத்தை பிரேரேபிக்கும்படி அழைத்தார். அவர் அது போலவே பிரேரே
பித்தார். மற்றொரு கவுன்சிலரான ஸ்ரீமான். வி.ஐ.டேவிட் அதை ஆமோதித்தார்.
7. ஸ்ரீமான். ஷேக்தாவூத் சாய்பு அவர்கள், பச்சைக் கொடி பந்தல் போடுவதற்கு 1000 ரூபாய் நீக்கி பாக்கித் தொகையை மாத்திரம் அநுமதிக் கலாமென்று ஒரு திருத்தப் பிரேரேபனை கொண்டு வந்தார். இதை ஸ்ரீமான் பழனியப்ப செட்டியார் ஆமோதித்தார். இதை சேர்மன் வோட்டுக்கு விட்டார். இத்திருத்தப் பிரேரேபனைக்கு 7 கவுன்சிலர்கள்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அனுகூலமாக வோட் கொடுத்ததினால், திருத்தப் பிரேரேபனை நிறைவேறிற்று.
8 ஸ்ரீமான். வி.ஐ.டேவிட் என்பவர், சேர்மன் தூண்டுகோலின்பேரில் எழுந்து இத்திருத்தப் பிரேரேபனை ஒழுங்கானதல்லவென்றும் அசல் தீர்மானம் முன்னமே நிறைவேறிவிட்டதால், திருத்தப் பிரேரே பனையைப் பற்றிக் கவனிக்கவேண்டியதில்லையென்றும் சொல்லி விட்டார். ஸ்ரீமான் ஷேக்தாவூத் சாய்பு, உடனே எழுந்து ஸ்ரீமான். பிரவ் துரையின் அசல் தீர்மானம் வோட்டுக்கு விடப்படவில்லையென்றும், நிறைவேறவில்லை யென்றும் ஆகேஷபித்தார். அசல் தீர்மானத்தைப் பிரேரேபித்த ஸ்ரீமான். பிரவ் துரை தம்முடைய தீர்மானம் வோட்டுக்கு. விடப்படவில்லையென்றும், அது நிறைவேறவில்லை யென்றும் சொல்லியும், சேர்மன் கேட்காமல் ஒழுங்குக்கு விரோதமாய், ஸ்ரீமான். பிரவ் துரையின் தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும், திருத்தப் பிரேரேபனை ஒழுங்குத் தவறென்றும் தீர்மானித்துவிட்டார்.
9.சேர்மன் ஸ்ரீமான்.பிரவ் துரையின் தீர்மானத்தை வோட்டுக்கு விடாமல் நிறைவேறி விட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்யும், ஒழுங் கீனமானதுமாகும். ஆதலால் இ தீர்மானம் ஒப்புக்கொள்ளத்தக்க தல்ல. சேர்மனானவர் திருத்தப் பிரேரேபனையை வோட்டுக்கு விட்டதையும், மெஜாரிட்டி கவுன்சிலர்களால் தீர்மானிக்கப்பட்ட தையும் பதிவு செய்துகொண்டு அதை அமுலில் கொண்டு வரக்
கடமைப் பட்டவர்...
10. இந்தக் காரணங்களால் சேர்மன் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச முதலியாரவர். களுடைய காரியம், கெட்ட எண்ணமுள்ளதும், அயோக்கியத் தனமுள்ளதும், அதிகாரத்திற்கு மேற்பட்டதும், அக்கிரமமானதும், தனது யோக்கிதைக்குப் பொருந்தாததுமாகும்.
1 ஆகையால் வரிகொடுக்கும் பொது ஜனங்களின் நன்மையைக் கோரி ஸ்ரீமான்ஃபிரவ் துரையின் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டு. வராமலிருக்கவும், வரிப்பணத்தை எடுத்து இதற்காக ஒரு சைசா வேனும் செலவு செய்யாமலிருக்கவும் ஸ்ரீமான் ஷேக்தாவூத் சாய்பின்
தீர்மானத்தை ஒழுங்குப்படி நிறைவேறினதாகக் குறிப்புப் புஸ்தகத்தில் எழுதித் தீர்மானித்து, அதை அமுலுக்குக் கொண்டுவரவும் வேண் டியது மிகவும் அவசியமான தாயிருக்கிறது.
12. அல்லாமலும், நீதியையும் கிரமத்தையும் அநுசரித்து, பச்சைக் கொடிப் பந்தலுக்கென்று சேர்மன் வரிகொடுப்போர் பணத்தை எடுத்
துச் செலவு செய்யாமலிருக்கும்படி சேர்மன் மீது ஓர் இஞ்சங்ஷன் கட்டளையும் பிறப்பிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது.
குடி அரசு - 1925 318
என்று இம்மாதிரி ஓர் பிராது கொடுத்ததின்பேரில் கோர்ட்டாரவர்கள் இதை ஏற்றுக்கொண்டு தற்கால சாந்தியாய் ஓர் இஞ்சங்ஷன் கட்டளையும் பிறப்பித்திருக்கிறார். இதைப்பற்றி வரிகொடுப்போருக்கு அதிகம் ஒன்றும் சொல்லவேண்டியதில்லையென்றே நினைக்கிறோம். பொது ஜனங்களுடைய பணத்தை இம்மாதிரி தப்பான வழியில் செலவழிக்கக்கூடாது என்கிற கக்ஷிக்கு அம்மீட்டிங்கில் அநுகூலமாயிருந்தவர்கள், ஸ்ரீமான்கள். கே.ஏ.ஷேக்தாவூத் சாய்பு, மு.ச.முத்துக்கருப்பன் செட்டியார், மு.ச.பழனியப்
பன் செட்டியார், ஈ.வி.நஞ்சப்ப செட்டியார், ஈ.ஜி.சுப்பிரமணிய ஐயர், ஈர்ஜி. காளிதாஸ் சேட், ஆர்.சதாசிவம் செட்டியார் முதலியவர்கள். சேர்மனுக்கு அநுகூலமாயிருந்து சேர்மனுக்கு அநுகூலமாய் வோட் கொடுத்தவர்கள். ஸ்ரீமான்கள். ஸ்ரீனிவாச முதலியார், டேவிட் பிரவ் துரை, பார்க்கர், மைமைதீன் சாய்பு, காதர் சாய்பு இவர்களில் முதல் நால்வரும் உள்ளூர்வாசிகளல்ல. அதற்கடுத்தவர் சேர்மன் தயவால் நியமனம் பெற்றவர். கடைசியாகக் குறிப்பிட்ட ஸ்ரீமான்.காதர் சாய்பு உள்ளூர்வாசியும், பொது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவருமாவார். உயர்ந்தவரென்றும் மக்களுக்கு மோகஷத்துக்கு வழிகாட்டுபவரென்றும், யேசுநாதரின் உண்மைக் கொள்கை களைப் பரப்புபவரென்றும், ஐரோப்பிய மேன்மகனென்றும் சொல்லிக் கொள்ளும் ரெவரெண்ட் பிரவ் துரையவர்கள் இவ்வக்கிரமங்களில் எப்படிக் கலந்திருக்கிறாரென்பதைப் பொது ஜனங்கள் யோசிக்க வேண்டுமாய்க் கோருகிறோம். மற்றவை பின்னால்.
குடி அரசு - கட்டுரை - 15.11.1925.
319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தமிழ் திணசரி பத்திரிகை
இப்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலராகிய ஆதித்தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமாயும் அவசரமாயும் வேண்டியது பொது நோக்குடைய ஒரு தமிழ் தினசரி பத்திரிகையே ஆகும். தமிழ்நாட்டில் தற்
காலம் உலவிவரும் தமிழ் தினசரி பத்திரிகைகள் மூன்று.அதாவது சுதேச
மித்திரன், திராவிடன், சுயராஜ்யா ஆகிய இவைகளே. இவற்றில் சுதேச
மித்திரன் முதலில் தோன்றியது.
இதன் முக்கியக் கொள்கை பழய காங்கிரஸ் கொள்கைகளைப் போல அரசாங்கத்தினிடம் இருந்து பதவிகளும் உத்தியோகமும் மக்கள் அடையக்
கிளர்ச்சி செய்வதாயிருந்தது. இதின்படி பதவிகளும் உத்தியோகங்களும் கிடைக்க கிடைக்க அவையெல்லாம் தங்கள் சமூகமாகிய பிராமணர்களுக்கே.
கிடைக்கும்படியாகவும் பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள், அவர்கள்தான் அறிவாளிகள் என்றும் மற்றும் பிராமண மதம் ஆக்கம் பெறவும் உழைத்து
வந்தது.
இம்மட்டோடல்லாமல் வரவர பிராமணரல்லாதாருக்கு உயர்ந்த உத்தியோகங்களும், பதவிகளும், அந்தஸ்துகளும், கீர்த்திகளும் உண்டா வதைக் கூற்றுவன் போல் நின்று தடுத்துக் கொண்டேயும் வந்தது.
இச்சூழ்ச்சி வெகுகாலமாய் பிராமணரல்லாதாருக்குத் தெரியாமல் இருந்துவிட்டதால் சகல பதவிகளும் அரசாங்க உத்தியோகங்களும், அந்தஸ்தும், கீர்த்தியும், பிராமணர்களுக்கே கிடைத்து, அரசாங்கமே பிராமண மயமாய் போய்விட்டதால், பிராமணரல்லாதார் நிலை தாழ்த்தப் பட்டது. அப்போது படித்திருந்த சில பிராமணரல்லாதார் சிலர் தாங்கள் எவ்வளவு கெட்டிக்காரராயும், யோக்கியர்களாயும், புத்திசாலிகளாயும், தேச பக்தி, பரோபகாரம் முதலிய அறுங்குணங்கள் நிறைந்தவர்களாயுமிருந்தும் தாங்கள் ஏன் தாழ்த்தப்பட்டு கிடக்கின்றோம் என்று யோசனை செய்து பார்த்ததில் இப் பிராமண பத்திரிகைகளும், கட்டுப்பாடான பிராமண சூழ்ச்சிகளுமே இதற்குக். காரணம் என்று கண்டுபிடித்துத் தாங்களும் மற்றவர்களைப்போல முன்னேறு வதற்குத் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும்,
தங்களுக்கும் பிரசாரத்திற்கு ஒரு பத்திரிகை வேண்டுமென்றும் கருதி ஒரு சங்கத்தையும் திராவிடன், ஜஸ்டிஸ் என்கிற பத்திரிகைகளையும் ஏற்படுத்தினார்கள்.
குடி அரசு - 1925 320
இப்பத்திரிக்கையும், சங்கமும், சகலமும் சகல போக்கியங்களையும் தாங்களே ஏகபோகமாய் அனுபவித்து வந்த சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைக்கும், அதன் கூட்டத்தாருக்கும், இவை போட்டியாய்க் கண்டதால் இவற்றைச் செல்வாக்கில்லாமலடித்து ஒழிக்க பல தந்திரங்களும் செய்ததி னால் இத்தந்திரங்களுக்குத் தாக்கு பிடிக்க சுதேசமித்திரன் போலவும், அதன் கூட்டத்தார் போலவும் திராவிடனும் அதன் கூட்டத்தாரும் அரசாங்கத்தை தழுவ நேரிட்டது. என்ன செய்தும் சுதேசமித்திரன் கூட்டத்திற்குள்ள தந்திர.
சக்தி திராவிடன் கூட்டத்திற்கில்லாததாலும், பிராமணரல்லாதாரில் சிலருக்கு தங்கள் தனிப்பட்ட சுயநலத்திற்கும், கீர்த்திக்கும் சுதேசமித்திரன் கூட்டம். இடங்கொடுத்ததால், இவர்களும் அதோடு சேர்ந்து எதிர்ப்பிரசாரம் செய்ததாலும், திராவிடனுக்குப் பாமர ஜனங்கள் உண்மையை உணரும்படிச் செய்யவும், பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்குப் பெறவும் முடியாமல் போய்விட்டதால் இது தக்க பலனை தென்னிந்திய மக்களுக்கு அளிக்கக்
கூடியதாய் இல்லாமலிருக்கிறது.
இதுதான் இப்படி என்றாலோ, மகாத்மா ஏழை மக்கள் விடுதலையின் பொருட்டுக் காங்கிரஸில் சேர்ந்து, ஒத்துழையாமை என்னும் கொள்கையை உண்டாக்கி நிர்மாணத் திட்டம் என சில திட்டங்களைக் கண்டு வேலை செய்த. காலத்தில் ஒத்துழையாமையும், நிர்மாணத் திட்டமும் தங்கள் கூட்டத்தாருக்
கும், சுயநலப்புலிகளுக்கும் கஷ்டத்தைக் கொடுப்பதாய் இருந்ததால் ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டத்தையும் மகாத்மா செல்வாக்கையும் அழிக்க சுதேசமித்திரன் பிரசாரம் செய்து வந்த காலத்தில் ஒத்துழையாமை
யிலும் நிர்மாணத் திட்டத்திலும் மகாத்மாவிடமும் ஈடுபட்டிருந்த சிலர் சுதேச
மித்திரனால் தேசத்திற்கு ஏற்படும் கெடுதியைத் தடுக்க ஒரு தினசரி ஏற்படுத்த எண்ணினார்கள்.
அதுசமயம் ஆங்கில சுயராஜ்ய பத்திரிகை மக்கள் நம்பக் கூடியது போல் நடந்து வந்ததால், பொது மக்கள் பணமாகிய 10000 ரூபாயை தூக்கி அதன் முக்கியஸ்தரான ஸ்ரீமான் பிரகாசத்தினிடம் கொடுத்து தினசரி, ஆரம்பிக்கச் சொன்னார்கள். கடசியாய் சுதேசமித்திரன் திட்டமும், சுயராஜ்யா திட்டமும் வித்தியாசமற்றதாகி இரண்டும் ஒன்றுபடக் கலந்துவிட்டதால் -
புதுத் திருடனைவிட பழய திருடனே மேல் என்னும் பழமொழிபோல் இரண்டும் ஒன்று சேர்ந்துக் கொண்டு, பிராமணர்கள் ஆக்கம் பெறவும் பிராமணரல்லாதாரின் அழிவுக்கும் ஒத்து வேலை செய்கின்றதுகள்.
இதில் ஒரு விஷேஷம் சுதேசமித்திரன் ஒரு விதத்தில் சுயராஜ்யாவை விட யோக்கியன் என்றே சொல்லலாம். எப்படி என்றால் சுதேசமித்திரன், “தான் ஒரு பிராமணனைத்தான் ஆசிரியராகக் கொண்டிருக்கிறேன்” என்று உண்மையே பேசுகிறான்.
சுயராஜ்யாவோ இரண்டு பிராமணரல்லாதாரை ஆசிரியராய் வைத்தி ருப்பதாய் பொய் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி தனது அட்டூழி
321 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
யங்களை நடத்துகின்றது. பத்திரிகைகள் யோக்கியமாய் நடந்திருந்தால் தென்னிந்தியாவில் ஒத்துழையாமை ஒழிந்து சுயராஜ்யக் கட்சியின் சூழ்ச்சி
நடந்தேறுமா?
இந்நிலையில், தென்னிந்தியாவுக்கு தென்னிந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையும் யோக்கியமுமுள்ள தமிழ் தினசரி பத்திரிகை வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்க வேண்டும். வேண்டுமென்றால் சுலபத்தில் நடத்திவிட முடியாது. சுதேசமித்திரனின் போட்டியையும், கெடுதியையும் சமாளிப்பது லேசான காரியமல்ல - அதற்கு பிராமணரல்லாதார் பொருள்:
களும் பிராமணரல்லாதார் சந்தாதாரர்களும் பிராமணரல்லாத சுயநலப்புலிகள்: ஆதரவும், சாராய விற்பனை முதலிய விளம்பர வரும்படிகளும் மலிந்து கிடக்கிறது. ஆதலால் நாம் ஆரம்பிப்பதானால் தக்க மூலதனத்துடனும் தக்க ஏற்பாட்டுடனும்தான் ஆரம்பிக்க வேண்டும்.
குறைந்தது ஒரு லக்ஷ ரூபாய் மூலதனம் வேண்டும். ஒரு வருஷத்தில் 10,000 சந்தாதாரர்கள் சேர வேண்டும். 50000 ரூபாயாவது இல்லாமல்
ஆரம்பிப்பது நிலை பெறத்தக்கதாகாது. குறைந்த அளவு 5 வருஷ காலத்துக் குக் குறையாமல் பத்திரிகை நடத்தக்கூடிய முஸ்தீபுகளை கையில் வைத்துக் கொண்டு ஆரம்பித்தாலல்லாது எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.
ஆதலால் இவைகளைப் பற்றி சில கனவான்௧ளோடு யோசனை செய்து பார்த்ததில் அடியில் கண்ட விஷயங்கள் புலப்பட்டன. அதாவது, பங்கு 1- க்கு 5 ரூபாய் வீதம் 20000 பங்கு கொண்ட ஒரு லக்ஷ ரூபாய் மூலதனம் வேண்டும். 50000 ரூ. வசூலித்த பிறகுதான் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் ஜில்லாக்களாகிய 2 ஜில்லாக்களும், ஜில்லா ஒன்றுக்கு 5000 ரூ.வீதம் முன்பணம் வசூலித்துக் கொடுக்கவேண்டும்.
ஒவ்வொரு ஜில்லாவிலும் 1000 ரூ. கொடுக்கக்கூடிய இரண்டு பேர்கள் அவசியம் முன் வருவதோடு பாக்கி மூவாயிரம் ரூபாயையும் வசூலித்துக் கொடுக்க அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயிரம் கொடுப்பவர்களும், ஊதியமில்லாமல் உழைக்க வருபவர்களும், நிர்வாகிகளாக இருக்க வேண்டும்.
பத்திரிகையின் கொள்கை பிராமணரல்லாதாருடையவும் தீண்டாதா ருடையவும், சமத்துவமும் முன்னேற்றமுமே முக்கியமானதாயிருக்க வேண்டும். பத்திரிகையின் நேரான நிர்வாகமும் பதிப்பும் யோக்கியமான ஒரு
சிறு போர்டினிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இப்போர்டில் உள்ளவர்கள். பத்திரிகை நிர்வாகம் பதிப்பு இவைகளைத்தவிர, வேறு எந்தப் பொதுக் காரியங்களிலும் சம்பந்தப்படாதவர்களாயிருக்க வேண்டும்.
குறைந்தது 5 வருஷத்திற்கு ஒரு தரம் இந்த போர்டை புதுப்பிக்கத் தக்கதாயிருக்க வேண்டும். இக்கொள்கைக்கு இதுவரை சில செல்வாக்குள்ள.
குடி அரசு - 1925 322
கனவான்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இதைப்பற்றித் தமிழ்
மக்கள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தால் தமிழ்மக்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டாகலாம் என்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.11.1925
323 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுயாான்யக் கட்சியும் அதண் தனைவர்களும்
சுயராஜ்யக் கட்சியின் பொதுக்காரியதரிசியாகிய ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்கார் இந்திய சட்டசபையின் மெம்பராயிருப்பதன் பயனாய் இந்தியா கவர்ன்மெண்டின் தயவைப் பெற்று தப்பான வழியில் தன் மகனுக்கு ஓர். பெரிய உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டதையும், அரசாங்க கமிட்டிகளில் தான் மெம்பர் உத்தியோகம் பெற்றுக் கொண்டதையும் இதற்கு முன்பே “குடி அரசில்” குறிப்பிட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
சுயராஜ்யக் கட்சியின் பெருந்தலைவரான ஸ்ரீமான் பண்டித நேரு அவர்களும் இதே மாதிரியே சர்க்காரின் ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றிருப்பதையும், அதற்காகச் சர்க்காருக்கு யோசனை சொல்ல பல விஷயங்களை அறிந்து வர என்கிற சாக்கின் பேரில் சர்க்கார் செலவிலேயே சீமைக்கு போகப் போகிறாரென்பதும் வாசகர்கள் அறிந்ததே. இவை மாத்திரமல்லாமல் இன்னொரு ரகசியத்தையும் ஸ்ரீமான் விபின
சந்திர பாலரவர்கள் வெளியாக்கி விட்டார். அதாவது பண்டித நேரு அவர்கள். சட்டசபை உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தவரும் அவருக்கு நெருங் கின கட்டுப்பட்ட பந்துவுமான ஒருவர் ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரைப் போலவே தனது பதவியின் செல்வாக்கால் சர்க்காரின் தயவுபெற்றுத் தன்னுடைய மகனுக்கு ராணுவ உத்தியோகத்தில் ஒரு பெரிய பதவி பெற்றி ருப்பதாகவும், இதை ஸ்ரீமான் ஷாம்லால் நேரு அவர்களே என்னிடம் சொன்னாரென்றும், இது ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரின் நடத்தைக்குக் கொஞ்சமும் இளைத்ததல்லவென்றும், ஸ்ரீமான் விபின சந்திரபாலரவர்கள் “இங்கிலீஸ்மென்” பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.
இதைப்பற்றி ஸ்ரீமான் ரங்கசாமி ஐயங்காராவது, பண்டிதராவது தங்களுக்காகவாகிலும், கட்சிக்காகவாகிலும் இவ்வித நடவடிக்கைக்கு இது வரையில் எவ்வித மறுப்பாவது, சமாதானமாவது எழுதினவர்களுமல்ல..
மான் தம்பே சுயராஜ்யக் கட்சி மெம்பராயிருந்து மத்திய மாகாண து & ௬ுநது மத; நிருவாக சபை அங்கத்தினர் பதவி பெற்ற துரோகத்தைக் கண்டித்த சுயராஜ்
யக் கட்சியின் மற்ற அங்கத்தினராவது ஸ்ரீமான் ஐயங்காரையும் பண்டித நேருக்களையும் கண்டித்தவர்களுமல்ல.
குடி அரசு - 1925 324
ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி ஐயங்கார் ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டை யாடுகிறது. மிதவாதக் கட்சி உத்தியோக வேட்டையாடுகிறது. சுயராஜ்யக் கட்சியார் ஆகிய நாங்கள் பதிவிரதைகள். சர்க்கார் சம்பந்தமான எந்த உத்தி யோகத்திற்கும் ஆசைப்படமாட்டோம். அது ரொம்பவும் தேசத் துரோக மானது. காங்கிரஸ் ஒத்துழையாமையை விட்டு விட்ட போதிலும் சுயராஜ்யக்
கட்சியார் ஒத்துழையாமையை கைவிடப் போவதில்லையென்றும், எங்களைத் தெரிந்தெடுத்தால் சட்டசபைக்குள்ளே போய் சர்க்காரை எவ்வித நடவடிக் கையையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டைப் போட்டுத் தடுத்து விடூவோ மென்றும், சர்க்கார் காக்காய் கருப்பென்றால் கூட நாங்கள் வெள்ளை: யென்றேதான் சொல்லுவோம் என்றும், எங்கள் காரியம் பலிக்காவிட்டால் உடனே வெளியே வந்து விடுவோம், வெளியில் வந்தவுடன் சட்டமறுப்பு ஆரம்பித்து நாங்களெல்லோரும் ஜெயிலுக்குப் போவோம், எங்களுடைய போக்குவரத்து வழிச் செலவுகூட சர்க்காரிடமிருந்து பெற மாட்டோம் என்றும், பாமர ஜனங்களான ஓட்டர்களிடம் பொய்யையும் புளுகையும் வண்டி வண்டி
யாய் அளந்து ஓட்டர்களை ஏமாற்றி சட்டசபைக்குச் சென்று “அநித்திரானி சரீரானி அந்தரு சொம்மு மனக்கே ரானி” என்பதுபோல் சகல உத்தியோக
மும் சகல பதவிகளும் மிகவும் பாவமானது, ஆனால் அதுகள் முழுதும் எங்களுக்கே கிடைக்க வேண்டும்.
மிதவாதிகளே! உங்களுக்கும் கொடுக்க மாட்டோம். ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களே! உங்களுக்கும் கொடுக்க மாட்டோம். உங்களுக்கேதாவது கண்டிப்
பாய் உத்தியோகம் பெற்றுத்தான் ஆகவேண்டுமென்கிற ஆசையிருக்கு மானால் எங்கள் கட்சியில் வந்து சேருங்கள்.
“அதாவது, வரும்போது நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் எங்களி
டத்தில் உமியிருக்கிறது இரண்டையும் கலந்து ஊதி ஊதி இரண்டு பேரும் சாப்பிடலாம்” என்று சொல்லும் சுயராஜ்யக் கட்சியாரின் யோக்கியதையைப் பொது ஜனங்கள் இப்பொழுதாவது தெரிந்து கொண்டிருப்பார்களென்று எண்ணுகிறோம்.
போதாக்குறைக்கு இந்த தடவையும் ஓட்டர்களை ஏமாற்றி சட்ட சபைக்குப்போய் உத்தியோகம் பெறுவதற்காக தைரியமாய்ப் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதென்னவென்றால் பண்டித நேரு அவர்கள் சட்டமறுப்பு ஆரம்பிக்கப் போகிறோம், எங்களை மறுபடியும் சட்டசபைக்கு அனுப்புங்களென்ற பழைய மந்திரத்தையே இப்பொழுதும் ஜெபிக்கத் தொடங்கி விட்டதுதான். சட்ட மறுப்பு தொடங்குவதாயிருந்தால் இவர்களை
யார் வேண்டாமென்று சொன்னார்கள்.
இதற்கு முன் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா? மகாத்மா சட்ட மறுப்பு ஆரம்பித்த காலத்தில் ஸ்ரீமான்களான ஸ்ரீனிவாசய்யங்காரும், ரெங்கசாமி ஐயங்காரும், சத்தியமூர்த்தியும், எம்.கே. ஆச்சாரியாரும் எந்த உலகத்தி லிருந்தார்கள்?
325 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வங்காளத்தில் மந்திரி பதவியெடுபட்டவுடன் அவ்விலாக்காக்களை
சர்க்காரார் எடுத்துக்கொண்டு ஏகபோகமாய் நடத்த ஆரம்பித்தார்களே அப் பொழுது இவர்கள் எங்கே போய் விட்டார்கள். சட்டசபையில் கொண்டுபோய் நிறைவேற்றிய தீர்மானங்களை வைசிராய்ப் பிரபு குப்பைத் தொட்டியில் போட்டாரே அப்பொழுது எங்கே போய்விட்டார்கள்?
பர்க்கென் எட் பிரபு எவ்வித சீர்திருத்தத்துக்கும் இனிமேல் நீங்கள் லாயக்கில்லையென்று சொல்லிவிட்டாரே அப்பொழுது என்ன செய்து கொண்டிருந்தார்கள். வங்காளத்தில் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து அநேக நிரபராதிகளை ஜெயிலில் பிடித்தடைத்தார்களே அப்பொழுது சட்டமறுப்பு எங்கே போய்விட்டது. சட்டசபைத் தேர்தல்கள் நடக்கிற சமயத்தில் மாத்திரம் சட்டமறுப்பு, சட்டமறுப்பு என்று சொல்லிக்கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி, சட்டசபைக்குப் போனவுடன் தாங்களும், தங்கள். பிள்ளை குட்டிகளும், தங்கள் பந்துக்களும், உத்தியோகம் சம்பாதிப்பதுதான் சட்டசபை மறுப்பாய் போய்விடுகிறது. இதை இன்னமும் பொது ஜனங்கள். உணரவில்லை என்பது பெருத்த ஆச்சரியமாகத்தானிருக்கிறது.
“சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தில் நமக்கு நம்பிக்கையில்லை. அக் கட்சியாரும் யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை. ஆனாலும் அதொன் றுதான் தீவிர அரசியல் கொள்கையுடைத்தாயிருக்கிறது. அதனால் அதை ஆதரிக்க வேண்டியது நமது கடமை” என்று சொல்வோரின் கூற்று அதை: விட நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. நம்பிக்கை இல்லாத திட்டத்தை உடைய
கட்சியும் யோக்கியமாய் நடந்து கொள்ளாதவர்களால் நடத்தும் கட்சியும் எப்படி அதி தீவிரக் கட்சியாய் விடுமோ! எதை உத்தேசித்து - அதை ஆதரிக்க வேண்டியது இவர்கள் ககமையோ! இது கடவுளுக்குத்தான் தெரிய வேண்டும். இவர்களையுடைய தேசம் சுயராஜ்யமடையுமென்று நினைப்பது அமாவாசையன்று பூரணச் சந்திரனைப் பார்க்கலாம் என்பது போலத்தான் முடியுமென்று சொல்ல நாம் வருந்து கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22111925
குடி அரசு - 1925 326
தேவஸ்தான EFIBT
சென்னைமாகாணத்தில் தேவஸ்தானங்களும், தர்ம ஸ்தாபனங்களும், இந்து மத ஸ்தாபனங்களும், மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி உடையவைகளாயிருந்தும், அவைகள் குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும், தாசி, வேசி முதலிய விபசாரிகளும், வக்கீல்களும் அனுபவிக்கவும் - தேவஸ்தான “ட்ரஸ்டி” என்போர்களும், மடாதிபதி யென்போர்களும், சமயாச்சாரி என்போர்களும், லோககுரு என்போர்களும்,மகந்துக்கள் என்போர்களும் சுயமாய்த் தங்கள். இஷ்டம்போல் அனுபவிக்கவும் - கொலை, களவு, கள் குடி, விபசாரம் முதலிய பஞ்சமா பாதங்களுக்கு உபயோகப்படுத்தவும், சோம்பேறிகளுக்கும், விபசாரத் தரகர்களுக்கும், பொங்கிப் போடவும், உபயோகப்படுத்திக் கொண்டு வருவதைத் தென்னிந்தியர்கள் வெகுகாலமாய் அறிந்து வந்திருக் கிறார்களென்பதை நாம் கூறத் தேவையில்லை.
அதன் பலனாய், “காங்கிரஸ் கான்பரன்ஸ்” என்று சொல்லப்படும் ராஜீய ஸ்தாபனங்களின் மூலமாயும், பல சமய சபைகள் மூலமாயும், இவ்வக் கிரமங்களையெல்லாம் அடக்கிக் கோடிக்கணக்கான வரும்படியுள்ள சொத்துக்கள் ஒழுங்காய் பரிபாலிக்கப்படவும், அதன் வரும்படிகள் குறிப் பிட்ட விஷயங்களுக்குக் கிரமமாய் உபயோகிக்கப்படவும் மீதியிருந்தால் இந்துமத சம்பந்தமான ஒழுக்கங் கற்பிக்க பொது ஜனங்களுக்கு உபயோகப் படவும் தக்கதான ஓர் சட்டம் செய்ய வேண்டியது நமது அரசாங்கத்தின்
முக்கியக் கடனென்றும், கொஞ்சமும் காலதாமதம் செய்யாமல் உடனே செய்யப்படவேண்டியது மிகவும் அவசியமானதென்றும், இதுவரை செய்யா
மல் அரசாங்கத்தார் கவலையீனமாயிருந்தது பெரிய குற்றமென்றும், இதற்கு
முன் இதற்காக ஆயிரத்தெட்டு நூற்றுப்பதினேழிலும், ஆயிரத்தெட்டு நூற்று அருபத்திமூன்றிலும் அரசாங்கத்தாரால் செய்யப்பட்டிருக்கும் இந்து மத தர்ம சொத்துக்கள் பரிபாலன சட்டம் போதுமான அளவு பந்தோபஸ் தளிக்கக் கூடியதாயில்லையென்றும் பல தீர்மானங்களைச் செய்து அரசாங்கத்திற்கு
அனுப்பியுமிருக்கிறது. உதாரணமாக, ஈரோட்டில் 1915 வருஷம் ஜுலை மாதம் 24, 25 தேதிகளில் டாக்டர் TM நாயர் அவர்கள் அக்கிராசனத்தின் கீழ் நடந்த கோயமுத்தூர் ஜில்லா இரண்டாவது கான்பரன்ஸ் என்னும் ராஜிய மகா
327 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
நாட்டில் 8- வது தீர்மானமாக அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்
பட்டிருக்கிறது. அதாவது “ தர்ம ஸ்தாபனங்கள் மத சம்பந்தமான தேவாலயங்கள் சரிவர பரிபாலனம் செய்யப்படாததால் கிரமமாய் நடக்கும் வண்ணம் இப்போ திருக்கிற சட்டத்தைக் கொஞ்சமேனும் தாமதிக்காமல் சீர்திருத்தம் செய்து மாற்றிவிட வேண்டுமென்று கவர்ன்மெண்டாரை இக்கூட்டம் வற்புறுத்து கிறது” ( இந்தத் தீர்மானத்தை ஸ்ரீமான் 83/.நரசிம்ம ஐயர்தான் பிரேரேபித்
திருக்கிறார் என்பது நமது ஞாபகம் )
இவற்றை அனுசரித்தே சர்க்காரிலுள்ள இது சம்பந்தமான அதிகாரம்,
ஒரு இந்திய மந்திரியின் கைக்கு வந்ததும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து “சென்னை இந்துமத பரிபாலன மசோதா” என்னும் பெயரால் ஓர். சட்டத்தை இயற்றி பொதுமக்கள் பிரதிநிதியென்று சொல்லும் சட்டசபை அங்கத்தினர்களின் சம்மதம் பெற்று நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டமானது மேலே குறிப்பிட்டபடி தர்ம சொத்துக்களை அதன் கிரமமான உபயோகத்திற்கு அன்றி, தங்களுடைய சுயநலத்துக்காக உபயோகித்துக்கொண்டு வந்த சில மடாதிபதிகளுக்கும், பொதுமக்கள் தர்ம சொத்தைத் தங்கள் வகுப்பார்களே உண்ணவேணும் என்னும் கருத்தின் பேரில் சூழ்ச்சி செய்து பொதுமக்களிடம் பணம்பறித்து, தங்கள் வகுப் பார்க்கே பொங்கிப்போட்டுக் கொண்டிருந்த சில சமயாச்சாரிகளென்போரான
சில பிராமணர்களுக்கும், அதன் பலனாய்த் தின்று கொழுத்துத் திரிந்து கொண்டிருக்கும் சில திண்ணைத் தூங்கிகளுக்கும், இவர்களின் தீச்செயல் களுக்கு அனுகூலமாயிருந்து பணம் பறித்துக் கொண்டிருந்த வக்கீல்கள், பஞ்சமகா பாதகத் தரகர்கள் முதலியவர்களுக்கும் விரோதமாயிருந்த படி யாலும் இக்கூட்டத்தார் பெரும்பாலும் பிராமணர்களென்று சொல்லப்படு வோராயிருந்து விட்டபடியாலும், இவைகளுக்கு ஏராளமான சொத்துக்கள். விட்டவர்களும், இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களும், பிராமணரல்லாதாராயிருப்பதனாலும் இந்த சட்டமானது பிராமணர்களுக்கு விரோதமாகவும் பிராமணரல்லாதார்களுக்கு அனுகூலமாகவும் இருப்பதாக ஏற்பட்டுப் போய்விட்டது.
இதனால், இக்கூட்டத்தைச் சேர்ந்த பிராமணர்களெல்லாம் ஒன்று
சேர்ந்து இந்தச் சட்டமானது மதத்திற்கு விரோதமானது என்றும், மதமே போய்விட்டதென்றும், சர்க்காரார் இந்துமதத்தில் பிரவேசித்து விட்டார். களென்றும், ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களும் மந்திரிகளும் இச்சட்டத்தை உண்டாக்க அனுகூலமாயிருந்தார்களென்றும், பொய்யழுகை அழுதும், பொய்ப்பழி சுமத்தியும், தங்கள் ஜாதிப் பத்திரிக்கைகளான, “இந்து”, “சுதேச
மித்திரன்”, “சுயராஜ்யா” முதலிய பிராமணப் பத்திரிக்கைகள் மூலமாய்ச்
சூழ்ச்சிப் பிரசாரம் செய்தும் பிராமணரல்லாதாரான சில அப்பாவிகளை
குடி அரசு - 1925 328
ஏமாற்றியும், பிராமண கீர்த்திக்கு ஆசைப்பட்ட சில பயங்கொள்ளிகளைச் சுவாதீனம் செய்து கொண்டும் இச்சட்டத்தை ஒரேயடியாய் தொலைத்துவிடத் தங்களாலான முயற்சிகளெல்லாம் செய்து பார்த்தார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள், மெம்பர்கள் முதலானவர்களுடைய உறுதியினாலும், முயற்சியினாலும், ஸ்ரீமான்களான ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் இந்தச் சட்டத்தின் அனுகூலத்தைப் பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டி - இந்து மதத்திற்கும் இந்துமத பரிபால னத்திற்கும் இச்சட்டத்தால் யாதொரு கெடுதியும் உண்டாகாது என்றும், ஆனால் “ஊரார் முதலைத் தின்று வாழ்வதுதான் தர்மமென்ற” கொள்கையை உடைய பிராமண மதத்திற்குத்தான் ஒரு சமயம் ஆபத்து வந்தாலும் வரலாம். என்றும் பத்திரிகை மூலமாகவும், பிரசங்க மூலமாகவும் பொது ஜனங்களுக்கு வெளிப்படுத்தியதன் பேரில், பிராமணர்களின் விஷமப் பிரசாரம் ஒருவாராய் வெளிப்படையாய்க் குறைந்தது என்றாலும் இன்றைக்கும் ரகசியத்தில் எவ்வளவோ தந்திரங்களும், மந்திரங்களும் நடந்து கொண்டுதான் வருகிறது.
இதற்கு அநுகூலமாய் நமது மடாதிபதிகளும், மகந்துக்களும் பொது ஜனங்களின் தர்மப் பணத்தை அள்ளி புளியங்கொட்டை போல் இரைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
ஐக்கோர்ட்டிலும் இச்சட்டம், சட்டப்படி செல்லாதென்றும், இதைத் தள்ளிவிட வேண்டுமென்றும் வியாஜ்யம் தொடுத்திருக்கிறார்கள். இந்தச் சட்டத்தில் என்ன கெடுதல் இருக்கிறது என்பதையாவது, இந்தச்சட்டத்தின் எந்தப் பிரிவின்படி இந்துமதத்திற்கோ தர்மபரிபாலனத்திற்கோ என்ன ஆபத்திருக்கிறது என்பதையாவது இதுவரை எந்த பிராமணரும் எடுத்துச் சொன்னதேயில்லை.“ மதம் போச்சு ; தர்மம் போச்சு; இந்துமதத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்கள்” என்று பொய்யமுகை அழுகிறது தவிர வேறொன்றும் சொல்வதே கிடையாது.
எந்த உலகத்தில் மதவிஷயங்களை அரசாங்கத்தார் திருத்த பிரவேசிக் காதிருக்கிறார்கள்? 1817 - லும், 1863 - லும் பிரவேசித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போயிருந்தார்கள். அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்துத் தக்கது செய்யவேண்டும் என்று காங்கிரசிலும், கான்பரன் ஸிலும் தீர்மானித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போனார்கள்?
“ சட்டம் செய்யும் அதிகாரம் நம் கைக்கு வந்துவிடும் நம்மிஷ்டம் போல் நம்ம ஜாதிக்கே எல்லா உரிமைகளும் இருக்கும்படியாகச் சட்டம் செய்து கொள்ளலாம் ” என்று நம்பியிருந்தார்கள் போலும் அல்லது பிராமண
ரல்லாதார் இவற்றைக் கவனியாமல் இன்னும் பிராமணர்களே ஏக போகமாய் உண்ணும்படி விட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தார்கள் போலும். எந்தக் காரியத்திற்கு நாம் அரசாங்கத்தாரிடம் போகாமல் இருக்கிறோம்? நம்முடைய சாமிக்கு வைக்கும் நாமம் வட கலையா, தென் கலையா என்பதை
329 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சர்க்காரிடம் போய்த்தான் தீர்மானித்துக் கொள்ளுகிறோம். மடாதிபதியார். இவரா, அவரா என்று தீர்மானிக்க சர்க்காரிடம்தான் போகிறோம்.
நாம் கோவிலுக்குள் போகலாமா, வேண்டாமா என்பதற்கு சர்க்காரி டம்தான் போகிறோம். என் ஜாதி பெரியதா, உன் ஜாதி பெரியதா என்பதற்கு சர்க்காரிடம்தான் போகிறோம். ஏழ்மைப்பட்ட தேசத்து “ பொது ஜனங்களின் பணம் வருஷம் ஒண்ணரைக் கோடி ரூபாயுக்கு மேல் மதத்தின் பேரால் வசூலித்து அயோக்கியர்களுக்கும், பஞ்சமா பாதகத்துக்கும் உபயோகப் படுத்துவதைக் கவனிக்க ஒரு சட்டம் வந்தால் அதுகூடாது” என்று சொல்லு பவர்கள் யோக்கியர்களா? நமக்குள் நாமே பார்த்துக் கொள்ளக்கூடாதா என்றால் இது விஷயத்தில் நமக்குள் என்ன யோக்கியப் பொருப்பு
இருக்கிறது?
10 லக்ஷம், இருபது லக்ஷம் போட்டு நீ கோயில் கட்டிக்கொடுத்து சொத்தும் விட வேண்டும் - நான் செங்கல்லை அடுப்பில் போட்டுச் சூடேற்றி ஈரத்துணி மேல்போட்டு ஆவியுண்டாக்கி, சுடுசாதம் என்று வெறும் பாத்திரத் தைச் சாமிக்கு வைத்து ஆராதனை செய்ய வேண்டும். அது சாதத்தின் ஆவியா, சுடு செங்கல் ஆவியா என்பதைக் கூட நீ பார்க்கக் கூடாது,
பார்த்தால் பாவம் ” என்று சொல்லுகிற ஜனங்களை வைத்துக் கொண்டு
நமக்குள் எப்படி சரிசெய்து கொள்ளுகிறது?
வைக்கத்தில் தெருவில் நடக்க எத்தனை பேர் ஜெயிலுக்கு போக வேண்டிவந்தது? கல்பாத்தியில்” தெருவில் நடக்க144 யார் வேண்டுகோளின் பேரில் போடப்பட்டது? அதற்காக சர்க்காரிடம் யார் போனது? நமக்குள் சரி
படுத்திக் கொள்ளக்கூடாதா? என்கிற யோக்கியர்கள் இந்த சமயம் ஏன் சர்க்காரிடம் போக விட்டார்கள்? பொது ஜனங்கள் பணத்தில் நடத்தப்படும் வேதபாடசாலைகளில் பிராமணன்தான் படிக்கலாம். சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்று சொல்லுகிறபோது நமக்குள் சரிபடுத்திக் கொள்ளக்கூடாதா என்கிற பிரபுக்கள் எங்கே போயிருந்தார்கள்?
இவற்றை பிராமணரல்லாதார் தயவு செய்து கருத்தாய்க் கவனிக்க வேண்டும். பிராமணரல்லாதாருக்குள் கொஞ்சம் பிளவு ஏற்பட்டவுடன் சட்டசபையால் இந்து தேவஸ்தான சட்டத்தை மாற்ற பிராமணர்களால் தீர் மானம் கொண்டு வந்தாய்விட்டது.
இனி வரப்போகும் சட்டசபைக்கும் தேவஸ்தான சட்டத்தை மாற்ற சம்மதிக்கும் அங்கத்தினர்களுக்குச் சாதகமாய் பிரசாரம் செய்யவும், அவர்:
கள் செலவுக்குப் பணம் கொடுக்கவும் மகந்துகளும், மடாதிபதிகளும் இப்போதிருந்தே ஏற்பாடு செய்து வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சி பிரசாரத்
திற்கு இந்தப் பணம்தான் தாண்டவமாடும்.
சில பிராமணரல்லாதாரும் இப்பொழுதிருந்தே இதற்குச் சம்மதம் கொடுத்து சில மகந்துகள் தயவையும், மடாதிபதிகள் தயவையும் சம்பாதித்துக்
குடி அரசு - 1925 330
கொண்டு வருகிறார்கள். பிராமணரல்லாத ஓட்டர்களே! ஜாக்கிரதை! ஜாக் கிரதை! கோட்டையை விட்டீர்களானால் பிறகு வெகு நாளைக்கு பிடிக்க
முடியாது.
குடி அரசு - கட்டுரை - 22.11.1925
* பாலக்காட்டுக்கு அருகிலுள்ள கல்பாத்தியில் பார்ப்பனத் தெருக்களில் ஈழுவர்கள் (தீண்டத்தகாதார், பார்க்கத்தகாதார்! நடக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள். தடைசெய்து வைத்திருந்ததையும் , ஈழுவர்களின் ரதம் அவ்வழியே செல்லக்கூடாது. என்று அரசாங்கம் விதித்திருந்த தடையையும் பற்றி காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு
நாயுடுவின் * தமிழ்நாடு * என்ற நாளேடு எழுதிய தலையங்கத்தை * குடி அரசு" 27.12.1925 ஆம் தேதியிட்ட இதழ் மறுபிரசுரம் செய்தது. அப்போது ஆளுநரின் நிர்வாக சபையில் சட்டத்துறை உறுப்பினராக (சட்டமந்திரி) இருந்த சர்.சி.பி. ராம சாமி அய்யர், ஈழுவர்களின் ரதம் சென்றால் அங்கு கலவரம் ஏற்படும் என்று கருதியே அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக நியாயம் கூறினார்.சென்னை நகரில் பார்ப்பனப் பிரமுகர்களின் கூட்டமொன்றைக் கூட்டி, எல்லாக்கட்சிப் பார்ப்பனர்களும் ஒன்றுசேர வேண்டும் என்று அவர் பேசியிருந்ததையும் “தமிழ்நாடு” சுட்டிக்காட்டியிருந்தது. சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றுடன் தோழமை கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு (நியமன! உறுப்பினர் ஆர். வீரையன், பொதுச்சாலை களில் எல்லாச் சாதியினரும் நடக்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது அதை எதிர்த்துப் பேசிய சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பன உறுப்பினர் நரசிமாச்சார்லு “ இன்று சாலையில் நடக்க உரிமை வேண்டும். என்பார்கள், நாளை ஆலயப்பிரவேச உரிமை கேட்பார்கள், பிறகு கலப்பு மணம். வேண்டும் என்பார்கள். அதனால் கலவரம் ஏற்படும்” என்று பேசியதையும். “தமிழ்நாடு” தலையங்கம் சுட்டிக்காட்டியது.
இந்த பிரச்சனையில் வீரைய்யனுக்கு உறுதுணையாக சுயமரியாதை இயக்கம் நின்றது. 28. 11. 1927 இல் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் பெரியாரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில். தீர்மானம் 27, கல்பாத்திப் பிரச்சனையில் கிடைத்த வெற்றி பற்றிக்கூறுகிறது.
“ கல்பாத்தி பார்ப்பனர்கள் வசிக்கும் பார்ப்பனச்சேரியில் வெகு காலமாய்த் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நடக்கக்கூடாதென்று பார்ப்பனர்கள் செய்து வந்த. கொடுமை நீங்கி, எல்லா மக்களும் அவ்வீதி வழி நடக்கத் தகுந்த வெற்றி கிடைத்த.
மைக்கு இம்மகாநாடு சந்தோஷத்தை அறிவிக் கிறதுடன் அதுவே நமது கயமரியாதை இயக்கத்திற்கு ஓர் வெற்றிக் குறியென்றும் கருதிகின்றது.”'
குடி அரசு - 1112.1927
331 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தீண்டாமைக்கு மார் வராறூப்பாணி
யாலக்காட்மல் 144-56& யார் வாறுப்பாணி?
தீண்டாமை யென்பது நமது நாட்டில் இந்து மதத்தில் மாத்திரம் மனிதனுக்கு மனிதன் பிறவியிலேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றும், மனிதனுக்கு மனிதன் பார்த்தால், கிட்டவந்தால், பேசினால், தெருவில் நடந்தால், தொட்டால், கோவிலுக்குள் நுழைந்தால், சாமியைப் பார்த்தால், மத தத்துவ மென்னும் வேதத்தைப் படித்தால் பாவம் என்னும் முறைகளில் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது. இதன் பலனாய் 33 கோடி ஜனசமூகத்தில் 60, 70 லக்ஷம் ஜனங்கள் உயர்ந்தவர்களென்றும், பிராமணர்கள் என்றும் தங்களை சொல்லிக் கொண்டு மற்றவர்களை சூத்திரர்களென்றும் பஞ்சமர். களென்றும் மிலேச்சர்க ளென்றும் அழைப்பதோடு மிருகங்களுக்கும். பட்சிகளுக்கும் பூச்சிபுழுக்களுக்கும் உள்ள சுதந்திரங்கூட கொடுப்பதற் கில்லாமல் கொடுமைப்படுத்தி வைத்திருப்பதை நாம் பார்த்து வருகிறோம். ஒற்றுமையினாலும் அரசாங்கத்தாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடந்து கொள்ளுவதினாலும் கிருஸ்துவர்களும் மகமதியர்களும் பிராமணர்களாலும் அவர்களது தர்மமான சாஸ்திரங்களாலும் மிலேச்சர்களென்று அழைக்கப்
பட்டாலும் தெருவில் நடத்தல் முதலிய சில உரிமைகளை பெற்றிருக்கிறார்கள். இதைப் பொருத்தவரையிலும் கிருஸ்தவர்களும் மகம்மதியர்களும் நமது அரசாங்கத்தாருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டவர்களென்பதை நாம் மறுக்கமாட்டோம். அரசாங்கத்தாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்காததாலும் அரசாங்க மதமாகிய கிருஸ்துவ மதத்தைத் தழுவாத “பாவத்தினாலும்” 60,
70 லக்ஷம் பிராமணர்களால் 7 கோடி இந்திய சகோதரர்கள் பஞ்சமர்களென்றும் சண்டாளர்களென்றும் கருதி தீண்டல், தெருவில் நடத்தல் முதலிய மேற்கண்ட உரிமைகள் அற்று உழலுவதை பார்க்கிறோம். இதல்லாமல் சுமார் 16 கோடி இந்தியர் டெ 60,70 லக்ஷம் பிராமணர்களால் (யுத்தத்தில் ஜெயித்து அடிமை யாக்கப்பட்டவன்! தன் தேவடியாள் மகன் குலவழியாக பிராமணருக்கு தொண்டு செய்பவன், அடிமை வேலைக்கு விலைக்கு வாங்கினவன் என்னும் பொருள் அடங்கிய (மனு 8-ம் அத். 415 -வது சுலோகம்) சூத்திரர் என்று கருதப்படுகிறார்கள். (பிராமணன் சம்பளம் கொடுத்தேனும், கொடாமலேனும்
சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம், ஏனெனில் சூத்திரன் பிராமணர்களுக்கு வேலை செய்வதற்காகவே கடவுளால் சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறான். மனு சாஸ்திரம் 8-வது அத்.413 -வது சுலோகம்)
குடி அரசு - 1925 332
அதோடு மாத்திரமில்லாமலும் இவ்வுயர்வு தாழ்வு என்னும் தொத்து வியாதி பிராமணர்களிடம் இருந்து உண்டாயிருந்தாலும் அவர் ஒழிந்த மற்ற வகுப்புகளுக்குள்ளும் அது பரவி அனேகமாய் ஒவ்வொரு வகுப்பும் மற்ற வகுப்பை தாழ்ந்தவர்கள் என்றும் தீண்டக்கூடாதவர்கள் என்றும் கருதிக் கொண்டு வருவதையும் பார்க்கிறோம். உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட
தும் புல்பூண்டு, பூச்சி, புழு, மரம், கல், பக்ஷி, மிருகம் யாவும் கடவுள் மய மென்றும் ஒவ்வொன்றும் பூசிக்கத் தக்கதென்னும் கொள்கைளைக் கொண்டதுமான இந்து மதம் என்று சொல்லப்படுவது சிலரின் நன்மைக்காக அவர்களின் தந்திரத்தினாலும் மோசத்தினாலும் பாழாக்கப்பட்டு ஒரு பெரிய சமூகமே சின்னா பின்னப்பட்டு அன்னியர் வசமாகி ஒற்றுமையிழந்து துவேஷமேற்கொண்டு மீளா நரகம் என்னும் அடிமைக் குழியில் ஆழ்ந்து கொண்டுபோகிறது. மிகவும் கொடுமையான இவ்வித பிராமண தர்மம், இந்தியாவுக்குள் நுழையாதிருந்திருக்குமானால் இன்றைய தினம் இந்தியா இக்கெதியில் இருந்திருக்கவே மாட்டாது. அப்படி இருந்தும் இப்பிராமண தர்மத்தால் தாங்கள் உயர்ந்த ஜாதியார் என்கிற காரணத்தால் உயர்வாய் அதாவது மற்றவர்களைப் போல் கஷ்டப்படாமல் வாழ சந்தர்ப்பம் கிடைத்து விட்டதாலும் அன்னிய அரசாங்கத்திற்கு அனுகூலிகளாகவும் ஒற்றர். களாகவும் இருக்கிற காரணத்தால், அதில் தங்களுக்கு செல்வாக்கு ஏற்பட்டுப் போய்விட்டதாலும் தீண்டாமை என்னும் கொடுமையால் தேசத்தின் நிலை யையும் அதில் உள்ள மக்கள் படும் துன்பத்தையும் கொஞ்சமும் கவனி யாமல் மேலும் மேலும் அதை நிலை நிறுத்தவே பாடுபடுகிறார்கள். இவ்வித பிராமண தர்மம் என்பது நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாமல் அல்லது அவர்கள் மற்றவர்களிலும், பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்னும் கொள்கையாவது நம்நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாமல் (என்றைக்காவது ஒரு நாளைக்கு இந்தியாவில் பிராமண கொள்கை இல்லாமல் போகத்தான் போகிறது. ஆனால் அதற்குள் இந்து மதமே போய் இந்தியா முழுவதும் மகமதியர்களும், கிருஸ்தவர்களும் இந்துக்கள் அல்லாதவர்களுமே ஆய்விடப்போகிறார்கள். அப்பொழுது இக்கொள்கை போனாலென்ன இருந்தாலென்ன?) இந்தியர்கள் விடுதலையடைவதோ சுயராஜ்யம் பெறு வதோ அன்னிய அரசாங்கத்தின் கொடுமைகளிலிருந்து மீள்வதோ சூரியன் மேற்கிலுதிப்பது போலத்தான்! ஏனெனில் இவ்வித பிராமண தர்மம் நாடெங்கும் பரவுவதால் தாய்க்கு பிள்ளை தொட்டால் பாவமாகிவிடுகிறது!.
இப் பிராமணர்களைப் பார்த்தே மக்கள் எல்லோரும் பிராமணர்களாக பார்க்கிறார்கள். பிராமணர்கள் என்றால் மற்றவனைத் தாழ்ந்தவன் என்றும் தொடக்கூடாதவன் முதலியவன் என்று எண்ணுவது தான் என நினைக்கிறார்.
கள். உதாரணமாக ஒரு தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவரும் ஒரு பிராமண ஸ்திரீ குடத்தில் கொஞ்சம் தண்ணீரும் கையில் கொஞ்சம் புளியும் கொண்டு வருவதோடு, முகத்தையும் கோணிக்கொண்டு வருகிறாள். குழாயண்டை வரும்போதே நிலத்திலெல்லாம் தண்ணீர் தெளித்துக்கொண்டு. குழாயின் மேலும் தண்ணீரைக் கொட்டி புளியால் குழாயை தேய்த்து
333 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கழுவியபிறகு தண்ணீர் பிடிக்கிறாள். இதை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பிராமணரல்லாத இந்து ஸ்திரீ தானும் அரைக்குடம் தண்ணீரும் கையில் ஒரு புளி உருண்டையும் கொண்டு முகத்தை இழுத்துக்கொண்டு டெ பிராமணி ஸ்திரீ செய்ததுபோலவே செய்துவிட்டு தண்ணீர் பிடித்து கொண்டு போகிறாள். இதை பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு மகமதிய ஸ்திரீயும் கிருஸ்தவ ஸ்திரீயும் அது போலவே வரும்பொழுதே முக்கால் குடம் தண்ணீரையும் முன்னையதிலும் பெரிய புளி உருண்டையும் கொண்டு
முகம் கோணிக்கொண்டு வருவதோடல்லாமல் வாயில் முணுமுணுத்துக் கொண்டே வந்து தெருவெல்லாம் தண்ணீர் தெளித்து குழாயையும் தேயத்தேய கழுவித் தண்ணீர் பிடித்து போகிறாள். பஞ்சம ஸ்திரீ அந்த வீதியில் இல்லாததால் அவர்கள் இதைப் பழக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இப்படி ஒருவரைப்பார்த்து ஒருவர் பழகியே தீண்டாமையென்னும் தொத்து நோய் தேசம் முழுவதும் பரவி வருகிறது. தீண்டாமை ஒழியவேண்டும் என்று மகாத்மா காந்தியும் மற்றும் பலஜீவகாருண்ணியமுள்ளவர்களும் ஒரு பக்கம் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாலக்காடு முனிசிபல் பொது வீதியில் ஈழுவ சகோதரர்கள் நடக்கக்கூடாது என்று 144 உத்திரவுபோட்டதும் ஈழுவர்கள் என்பது சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ் ஸ்ரீமான். 0.கிருஷ்ணன் அவர்களுடைய ஜாதியார்தான்) எவ்வளவு அக்கிரமமாகும். இதை நாம் யார். பேரில் சொல்லுவது. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் எந்த விதத்தில்
காரணமாவார்கள். பிராமண அரசாங்கத்தார்தானே இவ்வக்கிரமங்களுக்கும், கொடுமைக்கும் பாத்திரமாகவேண்டும். இந்த பிராமண அரசாங்கம் தொலைய வேண்டும், இந்த பிராமண தர்மம் தொலைய வேண்டும் என்று பாடுபடுவதை விட மக்களுக்கு வேறு என்ன தேச சேவையிருக்கிறது? இதை விட வேறு ஜீவ காருண்யம் என்ன இருக்கிறது? இதைவிட வேறு தர்மம் என்ன இருக்கிறது? இதை அறிந்துதான் “தேசபந்து தாசர்” என்னுடைய சுயராஜ்யம் பிராமண ஸ்திரீகளை பிடித்து தீண்டாதாருக்கு கொடுப்பது தான் என்றார் போலும்! இதை அறிந்துதான் சர்.பி.சி.ரெ அவர்கள் பிராமணர்களை. எல்லாம் சாக்கில் போட்டுக் கட்டி வங்காளக்குடாக் கடலில் போடவேண்டும். என்று சொன்னார்கள் போலும்! சுவாமி விவேகாநந்தர் பிராமண மதம் இருக்கும்வரை இந்தியா அடிமைத்தனத்திலிருந்து மீளாது என்று சொன்னார்போலும்! மகாத்மா காந்தி - இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிட பிராமணர்கள் செய்த கெடுதி குறைந்ததல்லவென்று சொன்னார் போலும்! சுவாமி சிரத்தானந்தர் - இந்து மதத்திற்கு நாசத்தை விளைவித்தவர்கள் பிராமணர்தான் என்று சொன்னார் போலும்! இனி யார். இவர்களுக்கு நற்சாகி பத்திரம் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை! இவர்கள்தான் சட்டசபைக்கும், மந்திரி வேலைக்கும், தாலூக்கா போர்டு, முனிசிபாலிட்டிக்கும், சர்க்கார் உத்தியோகங்களுக்கும் போய் நமக்கு நன்மை
செய்பவர்களாம்.
குடி அரசு - கட்டுரை - 22.11.1925
குடி அரசு - 1925. 334
குமானும் ஊழியனும்
சுயராஜ்யக் கட்சியைப்பற்றி குமரன் தலையங்கத்திலுள்ள சில குறிப்புகள்:-
“சுயராஜ்யக்கட்சியானது தற்போதைய நிலைமையில் மிகப் பாராட்டத் தக்கதாயிருந்தும் நமது மாகாணத்தைப் பொருத்தமட்டில் அக்கட்சியானது நல்ல நிலையிலில்லை. அது இங்கு வளர்ச்சியடைகிறதென்று கூறவும் முடியவில்லை. இக்கட்சியானது சென்னைப் பத்திரிகைகளின் ஆரவாரத்
தாலும், வாசாலகமாகப் பேசும் வல்லமையுள்ள சத்தியமூர்த்தி போன்றவர்:
களாலும், செல்வாக்கு பெற்ற இரண்டொரு பிராமணத் தலைவர்களாலுமே இயங்கி வருகின்றதென்று கூறுவார் கூற்றை மறுப்பது எளிதன்று.
சென்னை மாகாண சுயராஜ்யக்கட்சியாரின் செல்வாக்கு பிராமண: ஜாதியின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்குப் பெரிதும் உபயோகப்படுத்தப் படுகிறதென்ற உரையும் பொய்யென்று மறுப்பதற்கில்லை. இம்மாதிரியான நோக்கங்கள் அக்கட்சியின் முன்னணியில் நிற்பவர்களது உள்ளத்தில் பதிந்து கிடக்குமாயின் அக்கட்சி ஒரு நாளும் தமிழ்நாட்டில் வேரூன்றப் போவ தில்லை. ஜாதிக் கொடுமையால் நைந்து புண்பட்டுக்கிடக்கும் தமிழ்நாட்டில் புதிய பிராமண சகாப்தத்தை உண்டாக்க சுயராஜ்யக் கட்சித் தலைவர்கள் எண்ணங் கொண்டு அரசியல் பேச முன்வருகிறார்களென்பது உண்மை யானால் அத் தலைவர்களது செல்வாக்கை அடியோடு ஒழித்தற்கு முயலல் வேண்டும்.
ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார் போன்ற மகான்கள் தோன்றி ஜாதீ வெறி
பிடித்து தலைகால் தெரியாது மகாத்மாவையும் இகழ்ந்து வாய்கூசாது புன்மொழி வழங்கி வருவதையும் பார்த்து வருகிறோம்.
அவர் சென்னை சுயராஜ்யக்கட்சியில் ஒரு முக்கிய அங்கத்தினராவர். அவருக்கு சுயராஜ்யக் கட்சியின் முன்னணியாளர் ஆதரவளித்து வருகிறார். களென்பதையும் அறிகிறோம். இம்மாதிரியான சிறுமைக் குணங்களும் ஜாதி
யிறுமாப்பும் கொண்டவர்கள் கையில் இக்கட்சியின் பொருப்பு இருக்கிறவரை உண்மையாக ஒன்றும் நடைபெறப்போவதில்லை”.
இவைகளில் சுயராஜ்யக் கட்சியானது தற்போதைய நிலைமையில் மிகப் பாராட்டத்தக்கதாயிருந்தும் என்னும் வாக்கியம் தவிர மற்றதை நாம் ஒருவாறு ஒப்புக்கொள்ளுவோம்.
335 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வெளவால் கட்சியாரின் தந்திரமாகிய “சுயராஜ்யக்கட்சி ஒன்றுதான் தற்கால நிலையில் பாராட்டத்தக்கது, தீவிர நோக்கமுள்ளது, அரசியல் கொள்கையுள்ளது”” என்று பலவாராக தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாய் அடிக்கடி பாடிவரும் பல்லவியை குமரனும் பாட ஆரம்பித்திருப்பது நமக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.
ஊழியனாவது “காந்தியடிகள் ஆணை” என்னும் சாக்கைக்கொண்டு ஒதுங்கி நிற்கப் பார்க்கிறான். குமரனோ அதைவிட ஓரடி முன்வந்து சுயராஜ்யக் கட்சி பாராட்டத்தக்கது என்கிறான். இராஜீய தந்திரத்தால் வாழவேண்டிய அவசியமில்லாதவர்களும், பயங்கொள்ளித்தனமில்லாத வீரர்களும் உள்ளன்போடும், பரோபகார சிந்தையோடும் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் மந்திரமே கொடியாய்க் கொண்டவர்களுமான குமரனும், ஊழியனும் கூட இத்திருவிளையாடல் புரிவார்களானால் உலகில் என்னதான் எதிர்பார்க்க முடியாது.
சுயராஜ்யக் கட்சியாரின் எந்த நடவடிக்கையை குமரன் பாராட்டுகிறான் என்பதை உலகத்துக்கு விளங்கவைத்தால் குமரனைக் குருவாய்க் கொள்ளத் தயங்கோம்.
சுயராஜ்யக் கட்சியார் காந்தியடிகளின் கொள்கைகளை பாழாக்கி னதையா? ஒத்துழையாமையைக் கொன்றனதையா? காங்கிரசை ஏழைமக்கள். கையிலிருந்து தங்கள் சுயநலத்துக்காக பிடுங்கிக் கொண்டதையா? காந்தியடிகளை காங்கிரசை விட்டு ஓட்டினதையா? கதரில் நம்பிக்கையில்லை. என்று சொல்வதையா? ராட்டினம் சுற்றுவதால் சுயராஜ்யம் வரும் என்னும் நம்பிக்கை எங்களுக்கில்லையென்று சொல்லுவதையா? கல்கத்தா சட்ட சபையில் மந்திரி பதவிகளை ஒழித்து சர்க்காருக்கே அவ்வதிகாரங்களையும் ஏகபோகமாய் பொருப்பின்றி நடத்தவிட்டுக்கொண்டு மேலே என்ன செய்வதென்று தெரியாமல் ஆப்பசைத்த குரங்கைப்போல் விழிப்பதையா? போக்குவருத்துக்காக வழிச்செலவு கூட வாங்கப்போவதில்லை என்று சொல்லி ஏமாற்றி சட்டசபைக்குப் போய் 4000,5000 சம்பளமுள்ள பதவிகள் பெற்றதையா? பெற விழைவதையா? கமிட்டிகளில் உத்தியோகம் அடைந்ததையா? தொழிலாளர் மசோதா சட்டசபையில் வந்த காலத்தில் தொழிலாள சகோதரிகளான கருப்ப ஸ்திரீகளுக்கு பிள்ளைப்பேறு சமயத்தில் கூலியுடன் லீவு கொடுக்கவேண்டும் என்று வந்த தீர்மானத்தை நிறைவேறச் செய்யாமல் செய்த பாதகத்தையா? பிராமணரல்லாதாரை எதிர்க்கவேண்டியது தான் என்றும் அவர்களோடு ஒத்துழையாமை செய்யவேண்டியது தான் என்றும் சென்னை சுயராஜ்யக் கட்சியாரும் பம்பாய் சுயராஜ்யக்கட்சியாரும் முறையே சொல்லுவதையா? சுயராஜ்யக்கட்சித் தலைவர் ஸ்ரீமான் நேரு தனது. உறவினருக்கு உத்தியோகம் வாங்கிக்கொடுத்ததையா? காரியதரிசி ஸ்ரீமான். ரங்கசாமி ஐயங்கார் தமது மகனுக்கு உத்தியோகம் வாங்கிக் கொண்டதையா? சென்னை சுயராஜ்யக் கட்சித் தலைவர் ஸ்ரீமான்.சீனிவாச ஐயங்கார்.
குடி அரசு - 1925 336
தீண்டாமை ஒழியவேண்டியதுதான் ஆனால் இப்பொழுது அது சாத்தியப் படாது என்று புகல்வதையா? தீண்டாமை ராஜீய திட்டமாயிருக்கக்கூடாது
என்று முணுமுணுப்பதையா?'
தீண்டாமை ஒழிக்கும் கமிட்டிக்கு 25 ரூபாய் கொடுத்து விட்டு தீண். டாமை நிலைநிறுத்த ஏற்பட்ட கமிட்டிகளான வருணாச்சிரமதர்ம ஆதரிப்பு சபை முதலிய பிராமண சபைகளுக்கு மறைமுகமாய் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து எதிர்ப்பிரசாரம் செய்யச் செய்வதையா? ஆதியில் அவர்கள் தம்பட்டம் போட்டுச் சொன்னதுபோல் நடந்து கொள்ளாததையா? சென்னை மாகாணத்தில் சுயராஜ்யக் கட்சி நல்ல நிலையில் இல்லாமல் “பத்திரிக்கை” ஆரவாரத்தாலும், பிராமணத் தலைவராலும் இயங்கிவருவதையா? சென்னை சுயராஜ்யக் கட்சியின் செல்வாக்கால் பிராமண ஜாதியின் ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதையா? ஜாதிக் கொடுமையால் நைந்து புண்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டில் புதிய பிராமண சகாப்தத்தை உண்டாக்க எண்ணங்கொண்டு அரசியல் பேசுவதையா? அக்கட்சியின் முக்கியஸ்தரான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்கள் ஜாதி வெறி பிடித்து மகாத்மாவை இகழ்ந்து வாய் கூசாது புன்மொழி வழங்குவதையா? டி ஆச்சாரியாருக்கு சுயராஜ்யக் கட்சி யிலுள்ளவர்களும் ஆதரவளிப்பதையா? இம்மாதிரி ஜாதி இறுமாப்புக் கொண்டவர்கள் கையில் சுயராஜ்யக் கட்சியிருப்பதையா? இவைகளில் எதை நமது அன்புள்ள சகோதரனான குமரன் பாராட்டுகிறான் என்பது நமக்கு விளங்க வில்லை.
குடி அரசு - கட்டுரை - 22.11.1925
337 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வகுப்புணாரிப் பிரதிநிதித்துவம்
இதைப்பற்றி கொஞ்சகாலத்துக்கு முன்பு நமது 16-8-25 குடி அரசின் இதழில் சித்திரபுத்திரன் யெழுதிய ஒரு கட்டுரை வாசகர்கள் பார்த்திருக்கலாம். இன்று நடக்கப்போகும் காஞ்சி மகாநாட்டில் ஒரு தீர்மானம் வருவதாய்த் தெரிகிறபடியால் அதனவசியத்தைப்பற்றி வாசகர்கள் மறுபடியும் அதைப் பற்றி றியுமாறு சில வாக்கியங்கள் எழுதுகிறோம். வகுப்பவிப்பிரதிித். இவம்என்பது ஒரு தேசத்தின் ஆட்சியின் பொது உரிமையும் அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றி. சமமாய் அடையவேண்டிய தென்பதுதான். இதன் அரசாங் கத்தாரும் குடி மக்களுக்கு சரியாய் வழங்குவதாய் 1840-ம் வருஷத்திலேயே ஒப்புக்கொண்டு. (போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் 125 -ன் மூலமாய்) வெளியிட்டுமிருக்கிறார்கள். ஆதலால் இந்தியர்களுக்கு பெரிய உத்தியோகங்கள் ஏற்பட்டதன் பிறகோ சீர்திருத்தங்கள் ஏற்பட்டதன் பிறகோ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பேச்சு பிறந்ததல்ல. ஆனால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டால் யாருடைய செல்வாக்கும் போகங்களும் ஆதிக்கங்களும் குறைந்துவிடுமோ அவர்கள் வசமே அரசாங்கத்தின் ஆதிக்கமிருந்து அவர்களே அநுபவித்துக் கொண்டேவந்த தினால் வகுப்புவாரி பிரதிநிதித்துவமென்பது சர்க்கார். உத்தரவளவிலும் காயிதவளவிலும் நின்று போய்விட்டது. அதன் பலனாய்
பிரிவுகளும், வேற்றுமைகளும், துவேஷங்களும், தந்திரங்களும், பகைமை களும் வளர்ந்து கொண்டே வந்து இப்பொழுது அதுகள் பலனளிக்க
ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பித்திருக்கும் முறையைப் பார்த்தால் இதனு டைய முடிவு என்னவாகுமோ என்று எண்ணுகிறபோது பயமாகவே இருக்
கிறது. இந்தியா ஒழிந்த மற்ற நாடுகளுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிக அவசியம் இல்லாத போதிலும் சிற்சில விடங்களில் தொகுதிகள் பேராலும் வகுப்புகளின் பேராலும் இருந்து கொண்டு தான் வருகிறது. குடியேற்ற நாடுகளிலும் இவ்வழக்கமிருந்து கொண்டுதான் வருகிறது. நமது நாட்டில் சிலர் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வந்தால் ஜனங்களை பிரித்து
விடும் என்று சொல்லுகிறார்கள். நமது நாட்டில் மகமதியர்களுக்கும் கிருஸ்து வர்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டதின் பிறகு என்ன பிரிவினை புதிதாய் ஏற்பட்டுப் போய்விட்டது? பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 150 வருஷத்துக்கு மேலாகியும் இன்னமும் தீண்டாதாராகிய ஏழு கோடி மக்களுக்கு ராஜீய வாழ்வில் சுதந்தரம் பெற யோக்கியதை
குடி அரசு - 1925 338
யில்லையென்றுதானே சொல்லவேண்டியிருக்கிறது. அதன் பலனாய் அவர்களத்தனை பேரும் அரசாங்கத்தைதானே நத்திக்கொண்டிருக்க வேண்டியதாய் போய்விட்டது. பிராமணரல்லாதாரென்னும் 24 கோடி
இந்துக்கள் ராஜீய வாழ்வில் சமஉரிமை பெறுவதற்கில்லாமல் பிற்போக்கான வகுப்பில் சேர்க்கப்பட்டு அரசாங்கத்தாரையும், பிராமணர்களையும் நத்திக் கொண்டு தானே இருக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. இதற்கு காரண மென்ன? பிறவியிலேயே அவர்களுக்கு இவ்வுரிமையை பெற யோக்கிதை இல்லாததா? அல்லது அவர்கள் இவ்வுரிமைபெற வொட்டாமல் உயர்பதவி யிலிருக்கிறவர்கள் தங்கள் செல்வாக்கால் கொடுமைப்படுத்தி முன்னேற வொட்டாமல் அடக்கி வைத்திருப்பதா? குறைந்தது 50 வருஷத்திற்கு முன் பாவது பிராமணரல் லாதாருக்கும், தீண்டாதாரென்போருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தால் இன்றைய தினம் இவர்களிருவரின் நிலைமையும் இப்படி யிருக்குமா? ஸ்ரீமான்களான 8.1! சர்மாவுக்கும், 6.0. ராமசாமி அய்யருக்கும், கொடுத்திருக்கும் உத்தியோகங்களை ஸ்ரீமான்களான
14.6. ராஜாவுக்கும், R. வீரய்யனுக்கும் கொடுத்தால் பார்க்கமாட்டார்களா? 0. ராமசாமி அய்யர் அவர்கள் இருக்கும் உத்தியோகத்தில் ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் இருந்தால் பாலக்காடு தெருவில் நடக்க 144 ஏற்பட்டிருக்குமா?' கோவிலுக்கு போனதற்காக தண்டனை அடைந்திருக்க முடியுமா? என்ன காரணத்தால் இவர்களுக்கு அந்த உத்தியோகம் கிடைக்காமல் போய் விட்டது? யோக்கியதை இல்லாததாலா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததாலா? ஜனாப் சர் முகம்மது ஆபீபுல்லா சாய்புக்கும், டாக்டர்: முகம்மது உஸ்மான் சாய்புக்கும் 5000 ம், 6000 ம், சம்பளம் கிடைக்கக்கூடிய பதவிகள் எப்படி கிடைத்தது. இப்பொழுதுதான் அந்த ஸ்தானத்திற்கு அவர்கள் யோக்கியதை உடையவர்களாய் விட்டார்கள் என்கிற காரணத் தாலா? வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையின் வாசனையினாலா? இவற்றை பொது மக்கள் சிந்தித்துப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும். பிற்பட்ட வகுப்பார்கள் என்று கருதப்பட்டவர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாமல் எப்படி சமத்துவம் ஏற்படும் என்பதை அறி வார்கள். இப்போது பிற்பட்டவகுப்பார் என்று அழைக்கிற வகுப்பாரெல்லாம் பிரிட்டிஷார் நம் நாட்டுக்கு வரும்போது பிற்பட்ட வகுப்பாராகவா இருந்
தார்கள்? பல பிராமணர்கள் அரசாங்கத்திற்கு அனுகூலமாயிருந்ததாலும்
மற்றவர்கள் அப்படியில்லாததாலும் அரசாங்கத்தார் பிராமணர் களுக்கே சகல சவுகரியமும், உரிமையும் கொடுத்ததனால் பிராமணர்கள் முற்பட்ட வகுப்பாராகவும் பிராமணரல்லாதவர்கள், பிற்பட்ட வகுப்பார்களாகவும் ஏற்பட்டுப்போய் விட்டது. இந்த பிற்பட்ட வகுப்பார் வகுப்புவாரி பிரதிறிதித் துவம் இல்லாமல் வேறு எந்த வழியில் முற்பட்டவர்கள் ஆகக்கூடும். இப்போது அவர்களுக்கு புத்தியில்லையா? சக்தியில்லையா? கல்வி யில்லையா? ஏன் தங்கள் தொகைக்குத் தகுந்த உரிமை அடையாதிருக் கிறார்கள். இந்தியர்கள் அநேக ஜாதியார்கள் நாள்போகப்போக உரிமை
339 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வளர்ந்துகொண்டேபோகும். பிறகு எத்தனை பேருக்கு கொடுப்பது என்று
சிலர் பேசுவார்கள். ஆனால் தற்காலம் அரசாங்கத்தில் தென்னாட்டில் ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், கிருஸ்தவர், மகமதியர், பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள், தீண்டதார்கள் என இவ்வெட்டு வகையாய்த்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐரோப்பியர், ஆங்கிலேய இந்தியர், கிருஸ்தவர், மகமதியர் இவர்களுக்கு பிரித்து கொடுத்தாய்விட்டது. இவர்.
நீங்கிய மற்றவர்களான பிராமணர் பிராமணரல்லாதார் தீண்டாதார் என மூன்று வகுப்பாரையும் மகமதியரல்லாதார் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மாத்திரம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படாமலிருக் கிறது. இம்மூன்று வகுப்பாருக்கும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு மறுபடியும் உள் வகுப்புகள் ஏற்படுமே என்கிற பயமிருக்குமானால், அதற்கும் நாம் தயாராயிருக்க வேண்டியதுதான். உத்தியோகங்களுக்கு பெருத்த சம்பளங்கள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டோமேயானால் எத்தனை வகுப்புகளுக்கு வேண்டுமானாலும் பிரதிநிதித்துவம் கொடுப்பதில் நமக்கு கஷ்டம் ஏற்படாது. மேல் நாடுகளில் பார்லிமெண்டு முதலிய சபைகளுக்கு 500, 1000 என்கிற கணக்குள்ள மெம்பர்கள் இருந்து காரியம் நடத்தவில்லையா அது செய்வது நமக்கு கஷ்டமே இருக்காது. சண்டை வருவதெல்லாம் பெரும் சம்பளத்தை உத்தேசித்துத்தானே. சம்பளமில்லாத அதிகாரத்தை அனேக மாய் யெல்லாரும் விரும்பமாட்டார்கள். ஒருவருக் கொருவர் சண்டைபோட்டு கொள்ளமாட்டார்கள். ஒருவரைக் கெடுக்க ஒருவர் தந்திரங்கள் செய்ய மாட்டார்கள். தேசம் நம்முடையது என்கிற எண்ணமும் தேசத்தின் பொது நலத்திற்கு யெல்லோரும் ஒன்றுசேர்ந்து உழைக்கவேண்டும் என்கிற எண்ண மும் தானாகவே ஏற்படும். இப்போது ஜனங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் ஒழியும்.சர்க்காராரும் ஒருவரை:
விட்டு ஒருவரை கொடுமைப்படுத்தச் சொல்லமுடியாது. ஆதலால் தேச
நலத்திலும் சமூக நலத்திலும் அக்கரையுள்ளவர்கள் காஞ்சீபுரம் மகாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 22111925
குடி அரசு - 1925 340
காஞ்சீபுரம் மகாநாடுகன்
காஞ்சீபுரத்தில், ராஜீய மகாநாடென்று ஒரு மகாநாடு கூடிக் கலைந் தது.பெயர் ராஜீய மகாநாடென்று சொல்லிக்கொள்ளப் பட்டாலும் அஃதொரு சூதாட்ட மகாநாடாகவே முடிந்தது. சூதாட்டமாட நன்கு தெரிந்த வர்கள் நல்ல லாபமடைந்தார்கள். அது தெரியாதவர்கள் லாபமடையவில்லை. சூதாட்டத் தினால் சம்பாதித்த பொருள் எவ்வளவு காலம் நிற்குமென்பதையும் இச்சூதின் தன்மையை பொது ஜனங்கள் அறிந்து கொண்டால் பிறகு இவர்கள் யோக்கியதை என்னாகு மென்பதையும் இச்சூதாட்டக்காரர்கள் அறியாமல் போனது அவர்களுடைய பொல்லாத காலமேயல்லாமல் மற்றபடி யாருக்கும் ஒன்றும் நஷ்டமாய்ப் போய் விடவில்லை.
தலைமை உபந்யாசங்கள்
உபசரணைத் தலைவர் ஸ்ரீமான் முத்துரங்க முதலியார் வாசித்த வரவேற்பு பிரசங்கம் அவரெழுதியதல்லவென்றும் அவர் கருத்தல்ல வென்றும் அவர் வாசிக்கும் பொழுது கேட்டுக் கொண்டிருந்தவர்களுக் கெல்லாம் நன்றாய் விளங்கியிருக்கும்.
எவரோ ஒரு பிராமணர் தன்னிஷ்டம் போல் பிராமணரல்லாதாரை நன்றாய் வைது எழுதி அவர் கையில் கொடுத்து அவரை வாசிக்கச் சொல்லி அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஐயோ பாவம்! அவரை வையும் படியும், அவரைத் தலைகுனியும் படியும் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பிராமண சூழ்ச்சிக்கு ஒரு உதாரணமாய் விளங்கிற்று. இந்தப் பிரசங்கத்தில் சில பாகத்துக்காக ஸ்ரீமான் முதலியார். பேரில் பலர் கொண்டு வந்த கண்டனத் தீர்மானங்களையும் நிறுத்திக் கொள்ளும்படி சொன்னதற்கு இந்த சமாதானம்தான் சொல்லப்பட்டது.
அதாவது இந்த உபந்யாசம் அவர் எழுதியது அல்லவென்றும், இதற்காக பிறகு அவரே வருத்தப்பட்டார் என்றும், ஆதலால் கண்டனம் வேண்டியதில்லை என்றும் சில முக்கியஸ்தர்களால் சொல்லி நிறுத்தி விடப் பட்டது. ஆதலால் அதைப்பற்றி ஆராய்வது வீண் வேலையானாலும் அதில் பிராமணர், பிராமணரல்லாதார் பிணக்கு காங்கிரஸில் இருப்பதாய் ஒப்புக்கொண்டது மாத்திரம் குறிப்பிடத்தக்கது.
341 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மகாநாட்டுத் தலைவர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் உபன்யாசம்
இது 20 பக்கம் கொண்டது. இவற்றில் ஏறக்குறைய 10 பக்கம் தமிழ் நாட்டின் பெருமையைக் காட்டு முகத்தான் தனது கல்விப் பெருமையை காட்ட, புராணங்களின் நாட்டுப்படலமாய் உபயோகித்துக் கொள்ளப்பட்டது. அதின் பாஷையைப் பற்றியோவென்றால் கேழ்ப்போர் ஸ்ரீமான் முதலியார். என்ன பாஷையில் படிக்கிறார் என்று கவனித்து அறியாமலிருக்கும்படியான அவ்வளவு சாமர்த்தியமாயிருந்தது. கருத்தைப் பற்றியோவென்றால் “முன்னால் பார்த்தால் நாயக்கர் குதிரையைப் போல் இருக்கிறது. பின்னால்
பார்த்தால் அய்யங்கார் குதிரை போலிருக்கிறது” என்கிற பழமொழிப்படி குள்ள நரி சாக்ஷியாய் இருந்தது. கண்ணோக்கமோ எப்படி நடந்து கொண்
டால் பிராமணர் பிராமணரல்லாதார் இரண்டு பேரையும் ஏமாற்றலாம் என்கிற தத்துவத்திலேயே இருந்தது.
சென்னையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் கூட்டம் ஸ்ரீமான் ஆரியாவை அடித்துத் துன்புறுத்திய பிறகு நமது முதலியாரின் கதி ஸ்ரீமான் அய்யங்காரைக் கண்டால் நடுங்க வேண்டியதாய்ப் போய்விட்டது.
ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தான் பயங்காளி என்றும், தான் ஒரு பெண் ஆத்மா என்றும், ஆண் ஆத்மா அல்லவென்றும் அடிக்கடி ஒளிக்காமல் சொல்லிக் கொள்வதுண்டு. அதை காஞ்சியின் தலைமைப் பதவியில் நன்றாய் காட்டி விட்டார்.
இவ்வித சந்தேகம் சிலருக்கு முன்னமேயே யிருந்திருந்தாலும், இவ்வளவு மோசமாய் கொல்லை வழியில் புகுவாரென்று அவர்கள் நினைக்க. வேயில்லை. ஸ்ரீமான் முதலியார் தலைவராய் வீற்றிருந்த ஸ்தானத்தில் ஒரு அய்யங்காரோ, ஆச்சாரியாரோ வீற்றிருப்பார்களானால் இவ்வளவு அக்கிர
மம் செய்ய அவர்களுக்கு சவுகரியம் கிடைத்திருக்காது. ஸ்ரீமான் முதலியார் தலைவராயிருந்ததால் பயங்காளித் தனத்தோடு ஒரு அய்யங்கார் கையிலும் ஒரு ஆச்சாரியார் கையிலும் குழந்தைபோல் உட்கார்ந்து கொண்டதால் அவர்கள் தங்கள் இஷ்டப்படி முதலியாரை உபயோகப் படுத்திக்கொண்டு. சூதில் ஜயித்து விட்டதாக நினைத்துக் கொண்டார்கள். இந்த சூது முதலியார். பெயரைக் கெடுக்கத்தான் அய்யங்கார், ஆச்சாரியார் முதலியோருக்கு உபயோகப்பட்டதே ஒழிய சூது ஆடிகளுக்கு பெரியலாபம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.
ஆனால் ஒன்று, முதலியார். நாயுடு, நாயக்கர் என்கிற மூவரின் ஒற்று மையைக் கெடுக்கவும் (நாயக்கருக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும்! முதலியார், நாயுடு இவர்கள் ஆச்சாரியார் அய்யங்கார் இவர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்க போட்டி போடவும் உபயோகப்பட்டது.
குடி அரசு - 1925 342
எப்படி இருந்த போதிலும் ராஜீய மகாநாடுகள் என்பது ஒரு வகுப் பாரை ஏமாற்றி ஒரு வகுப்பார் ஆதிக்கம் பெறத்தான் உபயோகப்படக் கூடிய நிலைமையில் இருக்கிறதே அல்லாமல் விடுதலைக்கு இல்லை என்பது உறுதி யாய் விட்டது. பாமர ஜனங்களை யார் ஏமாற்றுவது என்பது தான் மகாநாடு
களின் பெரிய கொள்கையாய் விட்டது. இனி தேசத்துக்கு உண்மையாய் உழைக்கிறவர்கள் காங்கிரஸ் நிர்வாகத்தில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நாலணா மெம்பராய் மாத்திரம் இருந்து காங்கிரஸில் நடைபெறும் சூழ்ச்சிகளையும் பிரட்டுகளையும் வெளியில் சொல்லிக் கொண்டிருந்தால் போதும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனி தேசத்தில் எந்தக்கட்சிக் காவது எந்தத் தலைவர்களுக்காவது சமீபத்தில் பொதுமதிப்பு ஏற்பட்டு உபயோகமான எந்தக் காரியமும் செய்யப்போவதில்லை என்பது மட்டும் உறுதியாய் விட்டது. வேண்டுமானால் தனிப்பட்ட மனிதர்களுக்கு தங்களுக் குள்ள பிறரை ஏமாற்றக்கூடிய சக்தியினாலும் சவுகரியத்தினாலும் பணத்தை
வாரி தாராளமாக இரைப்பதனாலும் ஜெயம் கிடைத்தால் கிடைக்கலாம். வரப்போகும் தேர்தல்களிலும் பணச்செலவும், லஞ்சமும் கொடுத்து ஓட்டு வாங்குவதுமான காரியங்கள்தான் அநேகமாய் வெற்றி கொடுக்கப் போகிறது.
இவர்களின் “பாக்கியவசமாக* நாட்டில் தொண்டர்கள் காங்கிரஸ் வேலைக்காரர்கள் என்று ஒரு கூட்டத்தார் ஒத்துழையாமை வேகத்தின் போது ஆவேசத்தில் ஜெயிலுக்குப்போயும் தங்கள் தொழிலை விட்டு காங்கிரசுக்கு உழைத்து வந்தும் இப்போது ஒத்துழையாமை அடங்கி விட்டதாலும்
தியாகமும் காங்கிரசுக்கு ஊக்கமான வேலையும் தேவையில்லாததாலும் பலர்: வயிற்றுக்கில்லாமலும், தொழில் இல்லாமலும் சும்மா திரிகிறார்கள். இக் கூட்டம்தான் வரப்போகும் சட்டசபை முதலிய ( எலக்ஷன் ) தேர்தல் யுத்தத்திற்குசேனைகளாக உபயோகப்படப் போகிறார்கள்.
இவர்களுடைய தைரியத்தினால் பணக்கொழுப்புள்ள அநேக தற்
குறிகள் தேர்தலுக்கு நின்று வெற்றி பெறப்போகின்றதுகள். இதுதான் மகா நாட்டுவைபவம். தொண்டர் மகாநாட்டைப்பற்றியும் வகுப்புவாரிப் பிரதிநிதித் தீர்மானத்தைப் பற்றியும் காஞ்சி மகாநாடுகளின் மற்றும் பல விஷயங்க ளையும் பின்னர் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.11.1925
343 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காஞ்சீபுரம் இராவீய மகாநா௫
ஸ்ரீமான். ஈவெராமசாமி நாயக்கர் அடியோடு அசல் தீர்மானத்தையே"
எதிர்த்து பேசுகையில் தீர்மானமே ஜனங்களை ஏமாற்றுகிற மாதிரியில் எழுதியிருக்கிறதென்றும் பாட்னா தீர்மானம் என்ன என்பதும் சுயராஜ்யக்கட்சி திட்டம் என்ன என்பதும் இங்குள்ள அனேகருக்கே தெரியவில்லை என்றும். தெரியும்படி யாரும் எடுத்து சொல்லவில்லையென்றும் காங்கிரசின் பெயர். கெடாமலிருக்கவே சுயராஜ்யக்கட்சி திட்டத்தை காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வில்லை யென்றும் காங்கிரசுக்காவது மகாத்மாவுக்காவது சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் நம்பிக்கையில்லையென்றும் டில்லி காகிநாடா முதலிய தீர்மானங்களாலும் மகாத்மாவின் சலுகையாலும் தாங்கள் வேண்டியளவு பிரசாரம் செய்ய சவுகரியமேற்படுத்திக்கொண்டதோடு வேறுயாரும் எதிர். பிரசாரம் செய்யக்கூடாதென்று மகாத்மாவிடம் சிபார்சு பெற்றுக்கொண்ட தாலும் மீறி எதிர் பிரசாரம் செய்பவர்களை சுயராஜ்யக் கட்சிக்காரரும் அவர்கள் பத்திரிக்கையும் தூற்றி வருவதாலும் அதற்கு பயந்து கொண்டு யாரும் வெளியில் வராமல் வெகுசிலரே துணிவாய் அதன் தந்திரங்களையும் தப்பிதங்களையும் எடுத்துச் சொல்வதாலும் பொது ஜனங்களுக்கு சுயராஜ்யக்
கட்சி ரகசியம் ஒன்றுமே தெரிவதற்கில்லாமல் போய்விட்ட தென்றும் இதனால் ஜனங்களுக்கு சட்டசபை என்கிற விஷமே தலைக்கேரி வருகிறதென்றும் இந்த லக்ஷணத்தில் காங்கிரசே சுயராஜ்யக் கட்சி திட்டத்தை ஏற்று வேலை செய்ய வேண்டும் என்பது “குதிரை கீழே தூக்கிப்போட்டது மல்லாமல் ஆளையே புதைத்துவிட குழி பறித்தது” போல் ஆகிவிடும் என்றும் 3 வருஷமாகியும் இதுவரையில் சுயராஜ்யக் கட்சி என்ன வேலை செய்தது? பத்திரிக்கையில் மாத்திரம் வெற்றி மேல் வெற்றி என்று பெரிய எழுத்தில் எழுதிக்கொள்ளுகிறது. யாருக்கு வெற்றி என்று பார்த்தால் சர்க்காருக்குத்தான். என்று தெரிகிறது. “இரட்டை ஆக்ஷியை ஒழித்தாய் விட்டது” இதனால் லாபமென்னவென்று பார்த்தால் ஒத்தையாட்சி பலப்பட்டது, “வரவு செலவு பட்ஜட் நிராகரிக்கப்பட்டது. இதனால் லாபமென்ன வென்று பார்த்தால் முன்னிலும் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. “சட்டசபை அக்கிராசனர் பதவி சுயராஜ்யக் கட்சியாருக்கு வந்துவிட்டது.” இதனால் லாப மென்னவென்றால் சட்டசபையை ஒழுங்காய் நடத்த சுயராஜ்யக்கட்சியில் இருந்தே ஒரு ஆள்
சம்பளத்துக்கு கிடைத்துவிட்டது. அந்த ஆள் ஒழுங்காய் நடத்தித்தருகிறேன் என்று சத்தியமும் செய்து கொடுத்திருக்கிறது. “மந்திரிகள் சம்பளத்தில் கொஞ்சம் ரூ. குறைந்தாய் விட்டது.” இதனால் என்ன லாபம் என்றால் வேறு
குடி அரசு - 1928. 244.
வேலைசெய்ய சர்க்காருக்கு ரூ. கிடைத்தது. இப்படியே சுயராஜ்யக் கட்சியார். செய்யும் ஒவ்வொரு வேலையும் சர்க்காருக்கு வெற்றி மேல் வெற்றியும்
தேசத்திற்கு தோல்வி மேல் தோல்வியுமே அல்லாமல் எந்த உத்தியோகம் குறைந்தது? எந்த வெள்ளைக்காரர் சம்பளம் குறைந்தது? எந்த வழியில் நம்ம பணம் சீமைக்குப் போகாமல் இருக்கிறது?
சுயராஜ்யக் கட்சிக்கு இப்போது தேசத்தில் யோக்கியதையும் நாணையமும் செல்வாக்கும் குறைந்து அது சாகப்போகும் தருவாயிலிருந்து தப்புவதற்காக காங்கிரசையே சுயராஜ்ஜியக் கட்சியாக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். சுயராஜ்யக் கட்சி ஓட்டர்களிடம் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்றும் இப்பொழுது கொஞ்சம் சுயராஜ்ய கட்சிக்கு இடம் கொடுத்ததிலேயே தேசத்தில் எவ்வளவு கட்சிகளும் மனஸ்தாபங்களும் வலுத்து நிர்மாணத் திட்டங்கள் கெட்டு ஒத்துழையாமை என்பதே ஜனங் களுக்கு ஒரு பழைய கதையாய் போய்விட்டதென்றும் இனியும் இடம் கொடுத்து காங்கிரசே சட்ட சபைக்கு போவதானால் மறுபடியும் பத்து வருஷ மானாலும் ஜனங்களை திருப்ப முடியாதென்றும் ஆகையால் தீர்மானத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும்.
குறிப்பு:22.11925 இல் நடைபெற்ற காஞ்சீபுரம் ராஜீய மாநாடு தீர்மானத்தின்
மீது சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 29111925
* முதலாவது தீர்மானம்
1 பாட்னாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை கதராடை எப்போதும் கட்டாயமாய் உடுத்த வேண்டும் என்ற மாறுதலுடன் காங்கிரஸ் உறுதி செய்யவேண்டுமாய் இம் மகாநாடு சிபார்சு செய்கிறது.
2 இப்போது சுயராஜ்யக்கட்சியார் நடத்திவரும் ராஜீயத்திட்டத்தில் குறைவுபடாமல் இன்னும் தீவிரமாக காங்கிரஸ் ராஜீய வேலைத்திட்டத்தை நடத்தி சட்டசபை தேர்தல்களையும் நடத்தவேண்டுமென்றும் இனி சுயராஜ்
யக் கட்சி என்ற பெயரே வேண்டாமென்றும் இம்மகாநாடு கான்பூர் காங்கிர
சுக்கு சிபார்சு செய்கிறது.
என்ற தீர்மானத்தை ஸ்ரீமான். 5. சீனிவாசய்யங்கார் பிரேரேபித்து பேசியதின் சுருக்கம்.
இத்தீர்மானமானது தமிழ்நாட்டிற்கே புதியது என்றும் அதனால்தான் தான் பிரேரேபிப்பதாயும் நமக்கு எதிரிகள் பலமாயிருப்பதால் காங்கிரசும், சுயராஜ்யக்கட்சியும் ஒன்றாகிவிடவேண்டும் என்றும் சுயராஜ்யக்கட்சி சட்ட சபை ஒத்துழையாமை செய்வதில்லை என்று சிலர் சொல்வதை கவனிக்கக்
345 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கூடாது என்றும் இதெல்லாம் நாம் சரிசெய்துகொள்ளக்கூடிய சிறு விஷயங் கள் என்றும் முட்டுக்கட்டை போடுவதுதான் சுயராஜ்யக்கட்சி கொள்கை யென்றும் வகுப்பு நன்மைகளைப் பற்றிக்கூட சுயராஜ்யக்கட்சியார் கவனிப்
பார் என்றும் சொல்லித்தீர்மானத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
குடி அரசு - 1925 346
காஞ்சீபுரம் பிராமணறல்லாதார் மகாநா௫
இன்று தினம் பிராமணரல்லாதாராகிய நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். இத்தகைய பெரிய மகாநாடு எதன் பொருட்டு கூட்டப் பட்ட தென்பது பற்றியும் இதில் என்னென்ன விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படும் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள இங்கு கூடியுள்ள பலரும் அவாக் கொண்டிருக்கக் கூடும். இம்மகாநாடு எந்த வகுப்பாரிடத்தும் அதிருப்தியாவது துவேஷமாவது காரணமாகக் கொண்டு கூட்டப்பட்டதன்று.. தேசவிடுதலைக்காக ராஜீய விஷயத்தில் நமது நிலைமையைத் தெளிவாக்கி ஒரு திட்டம் நமக்கென அமைத்துக்கொள்வது நியாயமேயாம். நம்முடைய உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுவதன்
நிமித்தம், இத்தகைய மகாநாடுகள் கூட்டவேண்டியது அத்தியாவசிய மென் றேற்படுகின்றது. இதுபோன்ற மகாநாடுகள் சென்ற ஐந்தாறு ஆண்டுகளாக மாகாண மகாநாடும் காங்கிரசும் கூடும்போது அவ்வவ்விடத்திலேயோ பிறிதோரிடத்திலேயோ கூட்டப்படுவது வழக்கமாய் வருகிறது. இத்தகைய மகாநாடுகளில் நமது முன்னேற்றத்திற்கான வழிகளைக் குறித்து ஆலோசித்து
முடிவு செய்ய வேண்டுவது முதற் செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமானதாகிறது. தேசத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும். இவ்வாறு பிரிவினைகள் இல்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலும்கூட இத்தகைய பேதமுண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது. இதனை வரவேற்புச் சபைத் தலைவர் பிரசங்கத்
திலும், தலைவர் பிரசங்கத்திலும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். பிராமணர்: பிராமணரல்லாதாரென்னும் பிரிவினை இல்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கொப்பாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து உடல் நலத்தைக் கெடுக்கும் புண்ணை ஆற்றமுயலுவதே பொது நோக்குடைய அறிஞர் கடமையாகும். இத்தகைய பிரிவேற்பட்டுள்ளதால் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்திற்கான விஷயங்களைக்குறித்து ஆலோசிக்கப்படவேண்டுவது ஒவ்வொரு பிராமணரல்லாத மக்களின் கடமை என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. லக்னோ ஒப்பந்தத்தின் மூலமாக முகம்மதியர்களுக்குத் தனிப்பிரதிிதித் துவமளிக்கப் பட்டதன் பலனாக அங்கே இந்து முஸ்லீம் வேற்றுமை பெரிதும் ஒழிந்து ஒற்றுமைக்கு இடமேற்பட்டது. அது போன்றே நமது உரிமைகளைப் பாதுகாத்து நாம் முன்னேற்றமடைவதற்கான மார்க்கம் இன்னதென
347 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தெளிவாக்குவதன் பொருட்டே இப் பெருங்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. இக்கூட்டத்தைச் செவ்வனே நடத்தி வைக்க ஸ்ரீமான். ராமலிங்கள் செட்டி யாரை தலைமை வகிக்கக்கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு: 22111925 இல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற பிராமணரல்லாதார். மகாநாட்டில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 29.11.1925
குடி அரசு - 1925 348
வைக்கம் சத்தியாக்கிரக
வெற்றிக் வகாண்டாட்டம்
“எங்களுக்குச் (தனக்கும் தனது மனைவிக்கும் ) செய்த உபச்சாரத்திற் காக நன்றி செலுத்துவதோடு சத்தியாக்கிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிட வில்லை ”.. தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அநுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மா விற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக ஆரம் பத்தில் பிராமணர்கள் ககஷியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்: களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே. சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது.
சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அநுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத் திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாக் கிரகத்தின் உத்தேசம் கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தி
யாசம் இருக்கக் கூடாதென்பதுதான் அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்த தோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூப்பித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா
காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத் மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள்.
மகாத்மா அவர்கள் ஆம், அதுதான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள் போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக் கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பேனென்றும் சொன்னார்.
349 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர் களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக்
காட்டி விட்டார்கள்.மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது
மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிருஸ்துவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத் த்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.
குறிப்பு :- 29 77. 25 ஆம் நாள் வைக்கம் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆற்றியதலைமைச் சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 06.12.1925
குடி அரசு - 1925 350
ஆதி முதற்காண்டே சூழ்ச்சி
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது நேற்றா ? இன்றா?
காஞ்சீபுரம் மகாநாடு நடந்து இரண்டு வாரங்களாகிவிட்டது.மகாநாட்
டின் சம்பவங்களும் பழைய கதை ஆகிவிட்டன. ஆனால் அம் மகாநாட்டின். சம்பவங்களால் ஒவ்வொரு நிமிஷமும் புதிய எண்ணங்களே தோன்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு காங்கிரஸ் ராஜீய நாடகத்தில் பிராமணரல் லாதவர்களின் சார்பாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்திர
முதலியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய இம்மூவர்களின் வேஷமும், விளம்பரங்களும்தான் அடிக்கடி விசேஷமாய்த் தோன்றும். இம் மூவர்கள்
தான் காங்கிரஸில் பிராமணரல்லாதாருக்கு உள்ள பற்றுதலுக்கும் காங்கிரஸை: பிராமணரல்லாதார் ஆமோதிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரமாய் எடுத்துக்
கொள்ளப்பட்டவர்கள்..
தென்னிந்திய நல உரிமை கூட்டுறவு சங்கம்
அதோடு மாத்திரமல்லாமல், காங்கிரஸ் “பிராமண ராஜ்யம் ” ஸ்தாபிக் கத்தகுந்த சாதனமென்றும் சுய ஆட்சி என்பது - பிராமண ஆக்ஷிதானென்
றும் கருதிய பெரியோர்களான டாக்டர் டி.எம்.நாயர், ஸர்ஃபி.தியாகராய செட்டி
யார் போன்ற தேசாபிமானமும், அநுபவமும் வாய்ந்த பல பெரியோர்களால் சொல்லி, காங்கிரஸை ஒதுக்கி “தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம்” என்பதாக ஓர் சங்கத்தைக் கண்டு அதன்மூலமாய் பிராமணரல்லாதார். நன்மைக்கென ஜஸ்டிஸ், திராவிடன் என்கிற இரண்டு பத்திரிகைகளையும் தோற்றி, தீவிர பிரசாரங்களைச் செய்து, அதுகாலையில் பிராமணர்கள். வயப்பட்டுக் கிடந்த பெருவாரியான பல அதிகாரங்களையும் பதவிகளையும் பிராமணரல்லாதார் தங்கள் உரிமைக்குத் தகுந்த அளவு அடைய வேண்டும் எனக்கருதி பிரசாரமும் தொடங்கினார்கள்.
சென்னை மாகாண சங்கம்
அச்சமயத்தில் ரெ சங்கமும், பிரசாரங்களும் தென்னிந்திய மக்கள் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்றும், ஏதோ சிலர் அரசாங்கத்தின் வயப் பட்டு அவர்கள் தூண்டுகோலால் நடைபெறுகிற சங்கமென்றும், இதில்
351 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பிராமணரல்லாதார் கலந்துக்கொள்ளக்கூடாது என்றும் தென்னிந்திய பிராமணரல்லாத மக்களுக்கு நன்மை செய்யவும், வகுப்புவாரிப் பிரதி நிதித்வ உரிமை அளிக்கவும் சென்னை மாகாணச் சங்கம் என்பதாக ஓர் சங்கத்தை தோற்றியிருக்கிறோம்: அதில் பிராமணர்கள் யாரும் கலப்பில்லை. அதன் தத்துவமே காங்கிரஸ் மூலமாகச் சுயராஜ்யம் பெறுவதும், பிராமண: ரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் பெறுவதும்தான் முக்கியமானது என்றும் அதன் அக்கிராசனாதிபதி திவான்பகதூர் பி. கேசவப் பிள்ளை யாகவும், உப அக்கிராசனாதிபதி ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர். முதலியோராகவும், காரியதரிசி ஸ்ரீமான் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு முதலியோராகவும் இதற்குப் பிரசார பத்திரிகைகள் “இந்தியன் பேட்ரியாட்” என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் “தேசபக்தன்” என்கிற தமிழ்ப் பத்திரிகையையும் இவற்றிற்கு திவான் பகதூர் சி.கருணாகரமேனன், திரு. வி. கலியாணசுந்திர முதலியார் ஆகியவர்கள் முறையே பத்திராசிரியர்களாகவும், இருந்து நடந்துவரப்பட்டதோடு, இதன் பலனால் ஜஸ்டிஸ் ககஷிக்கு. பிராமணரல்லாத பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கில்லாமற் செய்ததுடன், காங்கிரஸ்தான் தேச விடுதலைக்குச் சாதனமென்றும், சென்னை மாகாணச் சங்கம்தான் பிராமணரல்லாதாரின் நன்மையைக் கருதக்கூடிய தென்றும் சென்னை மாகாணத்திலுள்ள பிராமணரல்லாத மேற்கண்ட முக்கியஸ்தர்கள்தான் தென்னாட்டுப் பிராமணரல்லாதார் பிரதிநிதிகளென்றும் சன்னது கிடைத்ததாய்விட்டது.
வகுப்புவாரி பிரதிநிதித்வம் இதோடு மாத்திரமல்லாமல், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாரும், சென்னை மாகாணச் சங்கத்தாரும் போட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்வ கூச்சல்களினால் கிறிஸ்தவர்,மகமதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ - இந்தியர். முதலிய வகுப்பாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வமும், விவசாயிகள், லேவா
திக்காரர், இந்திய வியாபாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள் முதலிய தொழி லாளிகளுக்கு தொழில்வாரி பிரதிநிதித்வமும், தேர்தல்களில் கொடுக்கப்பட்ட தோடல்லாமல், பிராமணரல்லாதாருக்கென பல ஸ்தானங்களையும் ஒதுக்கி வைக்கப்பட அரசாங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காங்கிரஸில் வகுப்புவாரி பிரதிநிதித்வம்
இது இப்படி இருக்க, ராஜீய சபைகளான காங்கிரஸ் முதலிய சபை களிலும் மகமதியர், கிறிஸ்துவர் முதலியோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்
வம் கொடுக்க வேண்டும் என்று அவர்களோடு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது. இதுமாத்திரமேயல்லாமல் காங்கிரஸ் ஸ்தாபனங்களிலும் உதாரணமாக எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், மகமதியர்களுக்கு இத்தனை ஸ்தானம், கிறிஸ்துவர்களுக்கு இத்தனை ஸ்தானம், தீண்டா தாருக்கு
குடி அரசு - 1925 352
இத்தனை ஸ்தானம், இவை நீக்கிய மற்றவர்களுக்கு இத்தனை ஸ்தானம் என மாகாணவாரியாக ஒதுக்கி வைக்கப்பட்டு - அந்தப்படி இப்பொழுது காங்கிர
ஸிலும் அமுலில் நடந்து வருகிறது. இவ்வளவிருந்தும் மேலும் மேலும் இவை போதாதென்றும் இன்னும் சில ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் ஏற்பட வேண்டு மென்றும், ராஜீய காங்கிரசி லும், கான்பரஸ்களிலும் கிளர்ச்சிகளும் முயற்சிகளும் செய்து கொண்டே வரப்பட்டிருக்கிறது.
காக்கிநாடா காங்கிரஸ்
உதாரணமாக, காக்கிநாடா காங்கிரஸில் ஸ்ரீமான் தாஸ் அவர்களால் கொண்டுவரப்பட்டு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரால் ஆமோதிக்கப்பட்ட கல்கத்தா பேக்டினாலும் (அது தோற்றதிற்கும் ஒரு காரணம் உண்டு. ஆனால்
ரகசியம். ) டாக்டர் அன்சாரி, லாலா லஜபதிராய் முதலியோர்களை இந்து - முஸ்ஸீம் ஒற்றுமைக்கு வழி காண ஒரு ஏற்பாடு கண்டுபிடிக்கும்படி காக்கினாடா காங்கிரசில் ஏற்படுத்திய கமிட்டியினாலும், அதன் குறிப்பு களினாலும் நன்றாய் விளங்கும்.
இன்னமும் தமிழ்நாட்டில் நடந்த மாகாண கான்பரன்ஸ்களின் போதெல்லாம் நடந்த பிராமணரல்லாத தனி கூட்டங்களாலும் நன்றாய்
விளக்கலாம். அதாவது:-
25- வது ராஜீய மாகாண மகாநாடு
1919 - 1b வருடத்தில் திருச்சியில் நடைபெற்ற 25 - வது ராஜீய மாகாண: கான்பரசின் போது அதே கொட்டகையில் ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியாரின் அக்கிராசனத்தின் கீழ் இதைப்பற்றிப் பேசி, ஈரோட்டில் சென்னை மாகாணச் சங்கத்தை நடத்த வேண்டுமென்றும், அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டு அது போலவே தீர்மானமும் நிறைவேறியும் இருக்கிறது.
26 - வது ராஜீய மாகாண மகாநாடு
1920-ம் வருடம் திருநெல்வேலியில் நடந்த 26-வது ராஜீய மாகாண: கான்பரஸின் போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில் ஸ்ரீமான் ஈ.வி.இராம சாமிநாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி “ சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப்
பிரதிநிதித்வம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகத்திலும் ஜனசங் கைக்குத் தகுந்தபடி வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் ” என்கிற தீர்மானத்தைக் காலஞ் சென்ற ஸ்ரீமான் சோமசுந்தரம்பிள்ளை, ஸ்ரீமான்கள் வி.ஓ.சிதம்பரம்பிள்ளை, தண்டபாணி பிள்ளை மற்றும் திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களிலுள்ள சில வக்கீல்களும் ஆகச் சேர்ந்து உடனே விஷயா
353 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
லோசனைக் கமிட்டிக்கு அனுப்பிய அத்தீர்மானத்தை- ஸ்ரீமான் ஈ.வி. இராம சாமி நாயக்கர் பிரேரேபிக்க, ஸ்ரீமான்கள் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை, தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் ஆமோதிக்க, காலஞ்சென்ற ஸ்ரீமான் எஸ்.கஸ்தூரி ரெங்கய்யங்கார் எழுந்து வீதாச்சாரம் ( Fercentage) என்கிற வார்த் தைக்குப் பதிலாக “போதுமான” என்னும் அர்த்தத்தைக் கொடுக்கத் தகுந்த *அடிகுவேட்லி” (Adequately) என்கின்ற பதத்தை போட்டுக்கொள்ளும்படி
ஒரு திருத்தப் பிரேரேபனை கொண்டு வந்தார். இந்த *அடிகுவேட்லி' என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் அம்மகா நாட்டிற்கு அக்கிராசனாதிபதியாயிருந்த இதே ஸ்ரீமான் எஸ்.ஸ்ரீனிவாச யங்காரவர்களைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தம் தான். ஆனால் *பெர்சண்டேஜ்” என்பதைவிட “அடிகுவேட்லி” என்பது நல்ல வார்த்தை யென்று சொல்லித் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார். இதுசமயம் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் முதலியோர்களும் அக்கூட்டத்தில் ஆஜராகித்தான் இருந்தார்கள். அதோடு “ராஜாங்கக் கல்வித்துறைகளில் சமஸ்கிருதக் கல்விப் பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும், செய்முறையும், தமிழ் கல்விக்கும் இருக்கவேண்டுமென்று ” ஒரு தீர்மானம், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு, ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம்பிள்ளையால் ஆமோதிக்கப் பட்டு நிறைவேற்றப்பட்டது.ஆனால் விஷயாலோசனைக் கமிட்டிக்கூட்டம்
முடிந்ததும் வெளியில் வந்து ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சில ஆங்கிலம் படித்தவர்களைக் கண்டு “அடிகுவேட்லி” என்பதற்கும் “பர்சண்: டேஜ்” என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, அவர்கள் *அடிகுவேட்லி” என்பது இருபொருள் கொண்டதென்றும், அதாவது *யோக்கியதைக்கு தகுந்த” என்கிற பொருள்கூடக் கொள்ளலாம் என்றும், “பர்சண்டேஜ்” என்கிற வார்த்தைதான் மிகத் தெளிவானது என்றும் சொன் னார்கள். பிறகு மகாநாட்டில் இத்தீர்மானம் வரும்போது, “பெர்சண்டேஜ்” என்கிற வார்த்தையையே போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீமான்கள் நாயக்கரும், தண்டபாணி பிள்ளையும் அக்கிராசனர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங் காரிடம் சொன்னார்கள். அவரும் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்
டார். கடைசியாக மகாநாட்டில் இது தவிர மற்ற தீர்மானங்கள் முடிந்தவுடன் அக்கிராசனாதிபதி எழுந்து திடீரென்று தமது முடிவுரையை ஆரம்பித்து விட்டார். ஸ்ரீமான் தண்டபாணிபிள்ளை தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்வ தீர்மானம் என்ன ஆயிற்றென்று அக்கிராசனரைக் கூட்டத்தில் கேட்டார். அக்கிராசனர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் அது பொது நன்மைக்கு விரோதமான தீர்மானமாதலால் அவற்றை ஒழுங்குத் தவறானது என்று தீர்மானித்து விட்டதாகச் சொல்லிவிட்டார். உடனே ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை எழுந்து விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தன் தீர்மானம் இங்கு எப்படி ஒழுங்குத் தவறு என்று கேட்டார். அப்போது அங்கிருந்த பிராமணர்கள் ஸ்ரீமான் பிள்ளையை உட்காரும்படிக் கூச்சல் போட்டு அடக்கிவிட்டார்கள். கடைசியாக முடிவுரையில் ஸ்ரீமான் அய்யங்
குடி அரசு - 1925 354
கார் காஞ்சி மகாநாட்டில் ஸ்ரீமான் முதலியாரைக் கொண்டு சமாதானம் சொல்லச் சொன்னது போல் வருத்தப்படுவதாகப் பொய்வேஷம் போட்டு மறைத்துவிட்டார்.
27 - வது ராஜீய மாகாண மகாநாடு
பின்னர் 1921- ம் @ தஞ்சையில் நடந்த 27 - வது தமிழ் மாகாண: மகாநாட்டில் கோயம்புத்தூர் ஜில்லா பிரதிநிதிகள் கொட்டகையில் ஸ்ரீமான் சர்க்கரை செட்டியார் அக்கிராசனத்தில் தமிழ்நாடு பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசி ஸ்ரீமான்கள் சென்னை சிங்காரவேலு செட்டியார், கல்யாணசுந்தர முதலியார், சர்க்கரை செட்டியார். வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாய்க்கர் ஆகியவர்கள் அடங்கிய
கமிட்டி ஒன்று நியமித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்திற்கு வேண்டிய வேலை செய்யவும், ஜஸ்டிஸ் கட்சிக்குப் போட்டியாய் ஆரம்பித்த சென்னை மாகாண மகாநாட்டைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
28 - வது ராஜீய மாகாண மகாநாடு
1922-ம்ஹு திருப்பூரில் கூடிய 28-வது மாகாண மகாநாட்டிலும் நாடார்கள் முதலியோர்க்கு ஆலயப் பிரவேஷம் கொடுக்க வேண்டும்
என்றும் அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும், பழைய ஆசார வழக்கங் களையும் மாற்ற வேண்டும் என்றும் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு, விஷயாலோசனைக் கூட்டத்தில் தீர்மானமானதை வெளி மகாநாட்டில் பிரேரேபிக்க முடியாதபடி பல பிராமணர்கள் செய்தும், கடைசியாக பெரிய தகராறின் பேரில் ஸ்ரீமான்கள் கல்யாணசுந்திர முதலியார். பிரேரேபிக்க, ஈவெராமசாமி நாயக்கர் ஆமோதிக்க அதின் பேரில் ஸ்ரீமான்
கள் எஸ்.சத்தியமூர்த்தி, மதுரை ஏ.வைத்திய நாதய்யர், கும்பகோணம் பந்துலுவய்யர் முதலியோர் ஆகேஷபித்து கூச்சல்களையும், கலகத்தையும் உண்டாக்கி எப்படியோ அத்தீர்மானத்தை அப்படியே ஓட்டுக்கு விடாமல் அதன் ஜீவநாடியை எடுத்துவிட்டு ஒரு சொத்தைத் தீர்மானத்தை நிறை வேற்றினார்கள். அதுசமயம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு மதில் மேல் பூனை போலவே நடந்து கொண்டார் என்கிற பழியும் அவருக்கு வந்தது.
மதுரை - இராமனாதபுரம் மகாநாடு
1923 - ம் வருஷத்திய மதுரை - இராமநாதபுரம் மகாநாட்டிலும்,
பிராமணர் - பிராமணரல்லாதார் தகரார் ஏற்பட்டது. ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியார் இதில் சிக்கிக்கொண்டு வெகு பாடுபட்டார்.
1923- ம் வருஷத்தில் திருச்சியில் டாக்டர் ராஜன் வீட்டில் கூட்டிய மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
355 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அத்தீர்மானத்தை அடுத்த மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாம் என்று ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் தந்திரமாய்த் தள்ளி வைத்துவிட்டார்.
29- வது ராஜீய மாகாண மாநாடு
1923 -ம் ஹுத்தில் சேலத்தில் கூடிய 29-வது தமிழ் மாகாண மகாநாட்டு விஷயாலோசனைக் கமிட்டியில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அதுசமயம் இல்லாவிட்டாலும், அவருக்காக அவர் நண்பர்கள் ஸ்ரீமான்கள் தண்டபாணி பிள்ளையோ அல்லது பவானி சிங்கோ இதே தீர்மானத்தைப் பிரேரேபித்த போது, ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் இது சமயம் ஒத்துழையாமையே போய்விடும் போல் இருக்கிறது. டெல்லி மகாநாடு தீர்ந்த பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அதை நிறுத்தச் செய்து
விட்டார்கள்.
30 - வது ராஜீய மாகாண மகாநாடு
பின்னர் கூடிய 1924 - ம் வருடத்திய திருவண்ணாமலையில் கூடிய
30 -வது தமிழ் மாகாண மகாநாட்டில் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் ஈவெராமசாமி நாயக்கருடைய அக்கிராசனப் பிரசங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி விஷேஷமாய் சொல்லப்பட்டுமிருக்கிறது.
பெல்காம் காங்கிரஸ்
பெல்காமில் கூடிய ராஜீய காங்கிரஸின் போதும் பிராமணரல்லா தாருக்கெனத் தனியாக ஓர் மகாநாட்டைக் கூட்டி வகுப்புவாரிப் பிரதிநிதித் வத்தைப் பற்றி பேசியதோடு, ஜஸ்டிஸ் க௯ஷியைப் பற்றியும் தீர்மானம் செய்தி ருக்கிறது. அதே சமயம், மகாத்மாவினிடமும் இதைப்பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதோடு ஸ்ரீமான்கள் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், பி.வரதராஜுலு நாயுடு, ஈவெராமசாமி நாயக்கர் முதலியவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித் வத்தைப் பற்றிச் சொல்லியுமிருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் யோசித்து தக்கது செய்வதாய் சொல்லியுமிருக்கிறார்.
தஞ்சை தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு
இவ்வருடம் தஞ்சையில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் உட்பட பிரதிநிதிகளாயிருந்த தேசீய பிராமணரல்லாதார் மகாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தியிருக்கிறது.
இன்னும் எத்தனையோ விஷயங்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ சரித்திரத்தைப் பற்றியும், தலைவர்களென்று சொல்லப்படுவோரின் தந்திரம்,
சூழ்ச்சி, குட்டிக்கரணம், குலத்தைக் கெடுக்கும் கோடாரிக்காம்புத்தன்மை முதலியவற்றைப் பற்றியும் விரிவாய் எடுத்துச் சொல்ல அடுத்த சந்தர்ப்பத்தை
குடி அரசு - 1925 356
எதிர்பார்க்கிறோம். அல்லாமலும் பிராமணரல்லாதார் வகுப்பைச் சேர்ந்த உண்மைத் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அடுத்தூற்
போல் எழுதலாமென்றிருக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.12.1925.
357 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
காஞ்சீபுரம் பிராமணறல்லாதார் மகாநா௫
“தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும், தேசீய ஒற்றுமையை
உத்தேசித்தும் அரசியல் சம்மந்தமான சகல பதவிகளிலும் இந்து சமூகத்தில் பிராமணர் - பிராமணரல்லாதார், தீண்டாதார் என்போர் ஆகிய இந்த மூன்று
சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத்தொகையை அனாசரித்து பிரதிநிதி ஸ்தானம். கிடைக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டுமாய் மாகாண மகாநாட்டை கேட்டுக் கொள்வதோடு இத்தீர்மானத்தை மாகாண மகாநாடு மூலமாய் காங்கிரசையும் வலியுருத்தும்படி தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தை பிரேரேபித்துப் பேசியதாவது:-
நாம் ஒவ்வொருவரும், சுயராஜ்யம் அடைய பாடுபடுவதாய் சொல்லு கிறோம், அதற்காக எவ்வளவோ கஷ்டத்தையும் அனுபவிக்கிறோம். சுயராஜ்
யம் கிடைத்தால் அது பொதுமக்கள் ராஜ்யமாயிருக்க வேண்டாமா? நாட்டின் தற்கால நிலைமையைப் பார்த்தால், சுயராஜ்யமென்பது பிராமண ராஜ்யம்தான்' என்னும் பயம், இப்போது மக்களிடை உண்டாகி வருகிறது. பிரிட்டிஷ்ஆட்சி
புரிகிற இக்காலத்திலேயே, மனிதர்களைத் தெருவில் நடக்கவிடக்கூடாது குளம் குட்டைகளில் தண்ணீர் எடுக்கவிடக்கூடாது என்னும் பல கொடுமைகள் நடை பெறுகிறபோது ராஜ்ய அதிகாரம் ஒருவகுப்பார் கைக்கே வந்து விடுமானால் இனி என்ன கொடுமைகள் செய்ய அஞ்சுவார்களென்று, ஜனங்கள் பயப்படுகிறார்கள். தேச விடுதலைக்கு தியாகம் தேவையாயிருந்த
காலத்தில் புறமுதுகு காண்பித்து ஓடிப்போன ஆசாமிகளெல்லாம் ஏதோ சிலர் செய்த தியாகத்தினால் ஏற்பட்ட பலனை அனுபவிக்க வெட்கமில்லாமல் முன்வந்து சூழ்ச்சிகள் செய்து பலனடைவதை பார்க்கிறபோது இவர்களை: எப்படி நம்ப முடியும்? வெட்கங்கெட்டவன் சொந்தக்காரன் என்பது போல விவஸ்தையற்ற ஒரு கூட்டத்தார் தேசத்திலிருந்துகொண்டு, தேசத்தைப் பாழ்பண்ணிக் கொண்டுவருவதை நாம் பார்த்துக்கொண்டே வருகிறோம். சாதுக்களான ஏழுகோடி ஜனத்தொகை கொண்ட ஒரு பெரிய கூட்டம், மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்படுவதையும் பார்த்து வருகிறோம். இப்படி ஏனிருக்க வேண்டும்? அந்தந்த கூட்டத்திற்கு தகுந்த அளவு, அவர வர்களுக்கு அரசியல் முதலிய உரிமைகளை ஒதுக்கிவைத்து விடுவோமே யானால் சாதுக்களெல்லாம் மிருகங்களாகவும், அயோக்கியர்களெல்லாம் சுவாமிகளாகவும் ஆகிவிட முடியுமா? கட்டுதிட்ட அளவில்லாததனால், கையில் பலத்தவன் காரியமென் பதுபோல், ஏமாற்ற சக்தியுள்ளவனும்;
குடி அரசு - 1925 358
செல்வாக்குள்ளவனும் மேலேவந்து விடுகிறான். இதனால் ஒருவருக்கொ
ரவர், பரஸ்பர நம்பிக்கையில்லாமலும், ஒற்றுமையில்லாமலும் இவர்களை
எப்படி ஏமாற்றலாமென்பதே ஒரு கூட்டத்தாருடைய ஜென்மக் கூறாகவும்,
இவர்கள் தந்திரத்திலிருந்து எப்படி தப்புவதென்பது மற்றக் கூட்டத்தாருடைய கவலையாகவும் போய்விடுகிறது. இந்நிலைமை, அரசாட்சி புரிபவர்களுக்கு வெகு அனுகூலமாய் ஏற்பட்டுப் போய்விடுகிறது. அதோடு மாத்திரமல்லாமல், அரசாங்கத்தை நடத்துவிக்க வகுப்புக்கு வகுப்பு போட்டி போட்டுக்கொண்டு. ஒற்றர்களாகவும், அடிமைகளாகவும் அரசாங்கத்தையே நாடுவதாய் விடு கிறது. இக்குணங்கள் நமது நாட்டை விட்டு அகல வேண்டுமானால், ஒருவகுப்புக்கு மற்றொரு வகுப்பு நம்பிக்கை ஏற்படும்படி ஒருவர் பாத்தியத்
தில் மற்றொருவர் பிரவேசிக்காதபடி பந்தோபஸ்த்து ஏற்பட்டுப் போக வேண்டும். அவ்வித பந்தோபஸ்துதான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மென்பது நான் பிரேரேபித்திருக்கிற தீர்மானத்தில் இந்த தத்துவம் தான் அடங்கியிருக்கிறது. இது இப்பொழுது மாத்திரம் ஏற்பட்டதல்ல. நீண்ட நாளாகவே இக்கிளர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்டிருந்தாலும் எப்படியெப் படியோ அதை ஒரு வகுப்பார் கட்டுப்பாடாய் சூழ்ச்சிகள் செய்து சமயத்திற் கேற்றவாறு நடந்து பாமர ஜனங்களை சுவாதீனப் படுத்திக்கொண்டு, வெளிக்கு தெரியாமல் அடக்கிக்கொண்டு வருகிறார்கள். ஆகையால் நீங்களெல் லோரும் நன்றாய் யோசித்து பார்க்கவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
- 29111925 குடி அரசு தொடர்ச்சி
குறிப்பு: 22.11.1925 இல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற பிராமணரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 06121925
359 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ம்ரீமாண் சக்கரவர்த்தி
ராககோயாலாச்சாஙியாரிண் 10 கற்பணைகன்
27-11-25 -6 ஸ்ரீமான். ராஜகோபாலாச்சாரியார் “நவசக்தி” பத்திரி கைக்கு ஒரு வியாசம் எழுதியிருக்கிறார். அதை நவசக்தி பொய்மான் வேட்டை என்ற தலைப்பில் பிரசுரித்திருக்கிறது. இது நீண்ட வியாசமா யிருப்பதால், அதில் உள்ள முக்கிய 10 விஷயங்களை மாத்திரம் எடுத்து ஆராய்வோம்.
1 “பல காரணங்களால் உயர் பதவியடைந்த ஒரு ஜாதியாரைக்கண்டு பொறாமை கொண்டு மற்ற ஜாதியாரைச் சேர்ந்த பெரியோர்கள் அவர்களைத் தூஷித்து அவர்களை ஒஓடுக்குவதாக கிளர்ச்சி செய்தால் ....நன்மை விளைவதாக தோற்றம் காட்டலாம்; விரைவில் அப்பொய்த் தோற்றம். மறைந்துபோய் பழைய கதையாய் முடியும்”.
2. “நாட்டிலுள்ள மற்ற சமூகங்களின் வெறுப்புக்கும் துவேஷத்
திற்கும் பார்ப்பனர் ஆளாகும்படி தீவிர பிரசாரம் சிலர் செய்து வருகிறார்கள். இக்கிளர்ச்சியும், இதனால் உண்டாகும் துவேஷமும், நாட்டிற்கு கேடு விளைவிக்குமென்பதில் ஐயமில்லை”.
3.“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் ஒரு ஜாதியாரேயல்லாமல் பல ஜாதியார்கள் அதிகார சபையில் இருப்பது மாத்திரம் அல்லாததோடு, பிராமணர்களை பிராமணர் மாத்திரம் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதும், மற்ற ஜாதியார்கள் பிராமணரல்லாதார்களைத்தான் தேர்ந்தெடுக்கலாம் என்ப
தும் இந்த கிளர்ச்சியின் முழுப்பொருளாம் .. பார்ப்பனர்களில் பெரும் பாலோர் பிராமண சமூகத்தின் பிரத்தியேக நன்மைக்காகவே தெரிந்தெடுப்
பார்கள்”.
4. “சில பிரதிநிதிகள் தான் உட்புகலாம். பார்ப்பனரல்லாதவர்கள் எந்தப் பார்ப்பனனுக்கும் வாக்குக் கொடுக்க முடியாது, இவ்வகையில் தெரிந்தெடுக் கப்பட்ட சபைகள் அதிகாரம் செலுத்தி வந்தால் நாடு பிற்போக்கு அடையும். என்பதில் ஐயம் இல்லை”.
5.“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இளி நீங்கள் நாட்டுக்குத்தொண்டு. செய்யக்கூடாது என்று பார்ப்பனர்களுக்கு பெருந்தடையுண்டாக்குவதே யாகும். பல்லாயிர வருஷங்கள் நாட்டிற்கு தொண்டு செய்து வந்த ஒரு
குடி அரசு - 1925 260
ஜாதியை இவ்வளவு எளிதில் குற்றவாளிகளாகத் தீர்மானித்து ஒடுக்கிவிட முடியாது. அறிவு, பயிற்சி, தொண்டு செய்யும் திறமை கொண்ட எவரும்
நாட்டிற்கு வேண்டும்...
6.“தற்காலத்தில் பார்ப்பனர்களின் மேல் சிலர் கொண்ட கொடுஞ் சினத்தின் காரணம் பண்டை கலை ஒழுக்கம், வேதம், சாஸ்திரம், கோயில், மடம் அனைத்துக்கும் கேடு விளையும் போல் இருக்கிறது. சமஸ்கிருத பாஷைக்கும், தமிழுக்கும் போட்டி: இத்தகைய மயக்கம் தமிழ் மக்களுக்குள்
சிலர் உண்டாக்கி வருகிறார்கள்”.
7 “பார்ப்பனர்களுடன் புரியும் போரில் கோயில் வேண்டாம், நோன்பு வேண்டாம், ஹிந்து மதமே பொய், பழைய ஒழுக்கங்களே அநாகரிகம் என்ற நாஸ்திக எண்ணங்களைப் பரப்புதல் ஏழை தமிழ் மக்களுக்கு பெருங்கேடாய்
முடியும்”.
8 “ஜாதிப் பொறாமையை அஸ்திவாரமாகக் கொண்ட கட்சிகள் பயன் பெறாமல் போனபின்னும் உண்மை தேசத்தொண்டு செய்து வந்த என் நண்பர்கள் சிலர் இந்த ஜாதிச் சண்டையை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்”..
9.“நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் பழய புஸ்தகங்களில் இம்மாதிரி எழுதி இருக்கிறது என்ற வீண் சண்டைகள் யாதொரு நன்மையும் பயவா.
10 “அரசாங்க விஷயங்களில் ஜாதிப்பேச்சுகள் கூடாதென்றும், ஆனால் மதஆசார விஷயங்களில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க தாம் போர். புரிவதாயும், ஒருவர் வீராவேசப்பேச்சுகள் பேசுகிறார். அரசாங்க விஷயத் திலாவது விஷம முறைகள் அவ்வளவு கேடு விளைவியா, மதாசார சம்பந்த
மாய் சாந்தமற்ற முரட்டு முறைகளை பின்தொடர்ந்தால் துவேஷம் அளவு கடந்து பரவி நாட்டில் வேற்றுமையும், பகைமையும், தீமையுமே உண்டாகும்.”
என்ற இவைகள் முக்கியமானவைகளாகக் கருதி அவற்றிற்கு சமாதானம் சொல்லுவோம்.
இவற்றிலிருந்து, ஸ்ரீமான். ஆச்சாரியாரின் மனப்பான்மை இன்ன தென்று அறிய சவுகரியமேற்பட்டு போய்விட்டது. அதாவது:-
1 பல காரணங்களால் உயர் பதவியடைந்த பிராமணர்களிடம் பொறாமை கொண்டு அவர்களை ஒடுக்குவதற்கு தீண்டாமை விலக்கு பிரசாரத்தின் பேரால் கிளர்ச்சி செய்வதாகவும், அது பலன் கொடுக்காது என்றும் பந்தயம் கூறுகிறார். இவருடைய தத்துவப்படி பார்த்தால் பல காரணங்களால் இந்தியாவை ஜயித்து தங்களது வாழ்க்கைக்கு ஆஸ்பதமான நாடாக்கி ஆண்டு வருவதைப் பார்த்து, பொறாமைப்பட்டுத்தான் சுயராஜ்யம் என்னும் பேரால் கிளர்ச்சி செய்கிறார் போலும். இவரும் பொறாமையால் தான் “இங்கிலீஷ்காரர் வாயில் மண்விழும் படியான” கதர் வேலையில் இவர்:
361 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஈடுபட்டிருக்கிறார் போலும். சீமைக்குப் போகும் பணத்தை நிறுத்துவது பொறாமைதான் போலும். வெள்ளைக்காரரில் அயோக்கியனாயிருந்தாலும் பல காரணங்களால் ஜெயித்து விட்ட ஜாதியானதால் அவனைக் கண்டால் நாம் சலாம் போடவேண்டுமென்பதும், அவன் 1000, 500 ரூ. சம்பளத்துக்கு அருகன் என்பதும் நாம் எவ்வளவு யோக்கியனாணாலும் நாம் கூலி என்பதும் 10,20 ரூ. சம்பளத்துக்குத்தான் லாயக்கென்பதும் மாற வேண்டுமென்று கிளர்ச்சி செய்தால் அது பொறாமை போலும். நீயும் நானும் மனிதன் தானே தென் ஆப்பிரிக்கா வீதியில் நீ மாத்திரம் நடக்கலாம், நான் மாத்திரம் ஏன் நடக்கக் கூடாது என்பது பொறாமை போலும், இதெல்லாம் வெள்ளைக்காரரைத் தூஷித்து அவர்களை ஒடுக்கத்தான் ஸ்ரீமான்கள். ராஜ கோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி போன்றார்கள் கிளர்ச்சி செய்கிறார்கள் போலும். அப்படி யானால் அது கண்டிப்பாய் ஜெயம் பெறாது போலும்.
தன்னைப்போல் பிறரை நேசிக்கும் குணமோ, எண்ணும் குணமோ இருக்குமிடங்களில் இவையெல்லாம் பொறாமை என்கிற எண்ணம்
உதிக்குமா?'
2 நாட்டிலுள்ளவர்களின் வெறுப்புக்கும் துவேஷத்திற்கும் பிராமணர்: ஆளாகும்படி சிலர் பிரசாரம் செய்கிறார்கள், இது நாட்டிற்குத்தான் கேடு என்பது, பஞ்சாபிற்கு சர்க்கார் செய்த அக்கிரமத்திற்கு மகாத்மா கிளர்ச்சி செய்து ஒத்துழையாமை ஏற்படுத்தினது வெள்ளைக்காரர் மேல் நாட்டாருக்கு துவேஷம் ஏற்படத்தான் செய்தது போலும். இக்கிளர்ச்சியால்தான் இந்தியாவுக்கு கேடு விளைந்தது போலும்.
3, 4. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால், பிராமணர்களைப் பிராமணர் மாத்திரம் தெரிந்தெடுக்க வேண்டுமென்பது மற்ற ஜாதியார். பிராமணரல்லாதாரைத் தெரிந்தெடுக்க வேண்டுமென்கின்ற பொருளாதலால் இவ்வகை தெரிந்தெடுப்பால், நாடு பிற்போக்கடையும் என்பது, கிருஸ்தவர். களை கிருஸ்தவர்கள் தெரிந்தெடுத்தாலும், மகமதியரை மகமதியரே தெரிந்
தெடுத்தாலும், இந்துக்களை இந்துக்கள் தெரிந்தெடுத்தாலும்தான் நாடு பிற்போக்கடைந்து விட்டது போலும்; அதற்கு முன் நாடு முற்போக் கிலிருந்தது போலும்; இவற்றிலெல்லாம் ஏற்படாத பிற்போக்கு பிராமணர்: களைப் பிராமணர் தேர்ந்தெடுப்பதாலும், பிராமணரல்லாதார்களை பிராமண: ரல்லாதார் தெரிந்தெடுப்பதினாலும் ஏற்பட்டு விடும்போலும்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இனி நீங்கள் நாட்டுக்கு தொண்டு செய்யக் கூடாது என்று பார்ப்பனர்க்கு பெரும் தடையுண்டாகுவதோடு பல்லா யிரக்கணக்கான வருஷங்களாய் நாட்டுக்கு தொண்டு செய்து வந்த ஜாதியை இவ்வளவு சீக்கிரத்தில் ஒடுக்கிவிடமுடியாது என்கிற பந்தயமும், அறிவு. பயிற்சி, தொண்டு செய்யும் திறமை கொண்ட எவரும் நாட்டுக்கு வேண்டும் என்பதும், சர்க்காரை, எங்களை நாங்களே தெரிந்தெடுத்துக் கொள்ளும் பாத்தியம் கேட்பது, வெள்ளைக்காரரே நாட்டுக்கு வேண்டாம் என்று
குடி அரசு - 1925 362
சொல்வதுதான்போலும்; அல்லாமலும் 200 வருஷம் நாட்டுக்குப் “பிராமணர் களைவிட அதிகமாகத் தொண்டு செய்த” ஒரு சர்க்காரை வெகு எளிதில் நாட்டை விட்டு போங்கள் என்று சொல்லுவது போலத்தான் போலும். அறிவு, பயிற்சி, தொண்டு செய்யும் திறமை வெள்ளைக்காரருக்கு மாத்திரம் உண்டு. மற்றவர்களுக்கு இல்லை போலும்; ஆகையால் பிராமணரை நாம் தெரிந்தெடுக்காவிட்டால் அறிவு, பயிற்சி, தொண்டுசெய்யும் திறமை உள்ள வர்கள் வேறு வகுப்பில் சுத்தமாய் கிடைக்கவே மாட்டார்கள் போலும்.
6 பார்ப்பனர்மேல் உள்ள கொடுஞ் சினத்தால் பண்டைக்கலை, ஒழுக்கம், வேதம், சாஸ்திரம், கோவில், மடம் அனைத்துக்கும் கேடு விளையும்போல் இருக்கிறது என்பதும், சமஸ்கிருத பாஷைக்கும் தமிழுக்கும் போட்டி என்பது.
வெள்ளைக்காரர் மேல் உள்ள கோபத்தால்தான் பைபிளை நமது பிள்ளைகளுக்குநாம் வேண்டாம் என்கிறோம் போலும். நாம் படிக்கக்கூடாது என்றும் சொல்லப்படும் வேதம் நமக்கு எதற்கு? பார்ப்பான் உயர்ந்தவன் மற்றவன் சூத்திரன் தாசி மகன் என்கிற கலையும், சாஸ்திரமும் பார்ப்பனரல்லாதாருக்கு எதற்கு? பார்ப்பனர் தவிர மற்றவர் உள்ளே போவதால் கோவில் அசுத்தமாய்ப் போய்விடுமானால் பார்ப்பனர் தவிர மற்றவர் கிட்டப்போனால் சுவாமிக்கு சக்தி குறைந்தபோகுமானால், அந்த. கோவில் நமக்கு எதற்கு? பார்ப்பனரல்லாதார் பணத்தை வாங்கி விபசாரத் தரகுக்கும், தாசி வேசிக்கும், கள்ளு சாராயத்திற்கும் செலவு செய்யவும் வெறும் சோம்பேறிகளுக்கு பொங்கிப்போடவும் செலவழிப்பதும் அல்லாமல் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கோ சுயமரியாதைக்கோ ஒரு காரியமும் நடவாதிருக்குமானால் அம்மாதிரி மடம்தான் எதற்கு? அதற்கு ஏனோ பார்ப்பனரல்லாதார் பணம் கொடுக்கவேண்டும்? தமிழ்நாட்டு பாஷையாகிய தமிழைப் பற்றி அக்கரையில்லை. தமிழர் கொடுக்கும் வரிப் பணத்தை அள்ளி சமஸ்கிருத பாஷைக்குத்தான் செலவு செய்யவேண்டும். சமஸ்கிருதத்
திற்கு சமமாகக் கூட தமிழுக்கு யோக்கியதை கொடுக்கக்கூடாது என்று சொல்வதை ஒப்புக்கொள்ளா விட்டால் அது போட்டி போலும். தமிழ் அகராதி எழுதுவதற்கு 10ஹு காலமாய் லக்ஷக்கணக்கான ரூபாய் செலவு செய்து பார்ப்பனரைத்தான் வைக்கவேண்டும், அவர்கள்தான் தமிழுக்கு உரை: எழுதவேண்டும், பார்ப்பனரல்லாதார் அதில் இருக்கக்கூடாது என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டால், அது தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் போட்டி போலும். அப்படியானால் பள்ளியில் பாடங்களை தேசபாஷையாகிய தமிழில் தான் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று சொல்வதுகூட இங்கிலீஷுக்கும்
தமிழுக்கும் போட்டி போலும்.
7 பார்ப்பனருடன் புரியும் போரில் கோயில் வேண்டாம், நோன்பு வேண்டாம், ஹிந்து மதம் வேண்டாம், பழைய ஒழுக்கங்கள் அநாகரிகம் என்ற எண்ணங்களை பரப்புதல் ஏழைத் தமிழ் மக்களுக்கு பெரும் கேடாய் முடியும் என்பது. 363 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பிராமணன் தவிர மற்றவன் உள்ளே போகக்கூடாது என்பதுதான் கோவிலானால் அது வேண்டவே வேண்டாம். பார்ப்பனருக்குக் கொடுப்பது தான் புண்ணியம்: பார்ப்பனருக்குக் கொடுத்தால்தான் மோக்ஷம் என்பதுதான் நோன்பானால் அந்நோன்பு வேண்டவே வேண்டாம்.
தனது மதத்தில் இருக்கும் வரை ஒருவன் தீண்டாதவன், பார்க்கத் தகா தவன், தெருவில் நடக்கத் தகாதவன், சண்டாளன் வேறு மதத்திற்கு போனால், அவன் பரிசுத்தன் என்கிற கொள் கையை உடையதுதான் இந்து மதம் என்றால், அம்மாதிரியான இந்து மதம் வேண்டவே வேண்டாம். அந்த மாதிரி மதம் பொய்யே பொய்தான்.
திருடினாலும் பிராமணன், குடித்தாலும் பிராமணன், லஞ்சம் வாங்கி
னாலும் பிராமணன், பொய் சொன்னாலும் பிராமணன், வக்கீல் வேலை செய்தாலும் பிராமணன், கொடுமை செய்யும் அரசாங்கத்திற்கு உளவாளி யாயிருந்தாலும் பிராமணன் என்று சொல்வதுதான் பழைய ஒழுக்கமும், தர்மமுமாயிருக்குமானால், அவ்வித ஒழுக்கமும், தர்மமும் நமது நாட்டுக்கும், எதிரியின் நாட்டுக்கும்கூட வேண்டவே வேண்டாம். இவைதான் நாகரீகமா
னால் இவையல்லாத அநாகரீகமே மேலானது. இதை ஏழை மக்களிடம் பரப்புவதால் தமிழ் மக்களுக்கு கேடு வருவதோடு நரகம் வந்தாலும் அதற்காக பயப்படுபவன் மனிதனல்ல.
8. ஜாதிப் பொறாமையை அஸ்திவாரமாகக் கொண்ட கட்சிகள் பயன் பெறாமல் போன பின்பும், உண்மை தேசத்தொண்டு செய்து வந்த என் நண்பர்.
கள் இந்த ஜாதிச் சண்டையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. இது ஜஸ்டிஸ் கட்சியையும், ஸ்ரீமான்கள். எஸ்.ராமநாதன், ஈ.வெராமசாமி நாய்க்கர். முதலியோர்களை குறிப்பது.
இந்நாட்டில் தற்கால மாதிரியான பிராமண ஆதிக்கம் உள்ள வரையில்
ஜஸ்டிஸ் கட்சி ஒழியவே ஒழியாது; பயன் பெறாமலும் போகாது. அதுசெய்த
பயன் அளவிட்டு சொல்லமுடியாது; ஒத்துழையாமை எவ்வளவு தூரம் நாட்டு பாமர மக்களுக்கும் அரசாங்கத்தின் அக்கிரமம் விளங்கும்படி செய்து அரசாங்கத்தின் அகம்பாவம் ஒழிந்து பிரித்தாளும் தந்திரத்திலும், குழ்ச்சியிலும் ராஜ்யபாரம் நடக்கச்செய்திருக்கிறதோ, அதுபோல் ஜஸ்டிஸ்
கக்ஷி, பிராமணரல்லாத பாமர ஜனங்களுக்கு பிராமண ஆதிக்கத்தின் அக்கிரமங்களை விளங்கும் படி செய்து பிராமணர் தாங்கள் உயர்ந்த ஜாதி என்று சொல்லி ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் அகம்பாவத்தை ஒழித்து பிராமணரல்லாதாரில் சிலரைச் சுவாதீனப்படுத்தி ஒருவர்மேல் ஒருவரை ஏவிவிட்டு பிரித்தாளும் தந்திரத்திலும், சூழ்ச்சியிலும் தங்கள். ஆதிக்கத்தை காப்பாற்றும்படியான நிலைமையில் இறக்கிவிட்டது. ஆயிரக் கணக்கான வருஷங்களின் அக்கிரமங்களை பத்து வருஷத்தில் அஸ்திவாரத் தையே ஆட்டிவிட்டதானால், இனி பாக்கியுள்ள வருஷங்களில் அது எவ்வளவு வேலை செய்யக்கூடும் என்பதை ஆச்சாரியார் அறியாமலில்லை..
குடி அரசு - 1925 364
ஆனாலும் பாமர ஜனங்களுக்கு சொல்லுவதுதானே என்கிற முறையில் சொல்லுகிறார். ஸ்ரீமான்கள். எஸ்.ராமநாதனும், ஈ.வெ.ராமசாமி நாயக்கரும்
செய்யும் தொண்டு, ஜாதிச்சண்டையானால் ஸ்ரீமான்கள். சீனிவாசய்யங்காரும், ஏ.ரங்கசாமி அய்யங்காரும், எம்.கே. ஆச்சாரியாரும், ளு. சத்தியமூர்த்தியின் மகந்துக்களும், லோககுருக்களும், சி.ராஜகோபாலாச் சாரியாரும் செய்யும் தொண்டுகள் என்ன பெயரை உடையதோ! வாசகர்கள்தான் அறிந்து கொள்ள வேண்டும்.
9. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் பழைய புஸ்தகங்களில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்ற வீண் சண்டை பலன் தராது என்று பந்தயம் கூறுவது. இதைக்குறிப்பாய் சொன்னால் நன்றாயிருந்திருக்கும். அம்மாதிரி மனு முதலியபழைய புஸ்தகங்களை இவர் ஒப்புக்கொள்ளுகிறாரா அல்லது தள்ளி விடுகிறாரா? பிராமண ஆதிக்கம் வந்தால் இந்த புஸ்தகம் அமுலுக்கு வருமா வராதா? (திருப்பூர் கான்பரன்சில் ஒரு தகராரின்போது அந்த புஸ்தகங்கள்தான் இன்றைக்கில்லாவிட்டாலும் மற்றொரு நாளைக் காவது தர்மங்களை காக்க உபயோகப்படும் என்று ஸ்ரீமான் ஆச்சாரியார். சொன்னவுடன் வெள்ளைக்கார ஆட்சி அடங்கி பிராமண ஆக்ஷி ஏற்பட்ட உடன்தானே என்று ஸ்ரீமான். ஈவெராமசாமி நாயக்கர் சொன்னதும் ஆச்சாரி
யார் புன்சிரிப்பு சிரித்தார். அது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
10. அரசாங்க விஷயங்களில் ஜாதிப் பேச்சு கூடாது, ஆனால் மத ஆச்சார விஷயங்களில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க தாம் போர்புரிவதாய் ஒருவர் வீராவேச பேச்சுக்கள் பேசுகிறார். அரசாங்க விஷயத்திலாவது, விஷம முறைகள் அவ்வளவு கேடுவிளையா. மத ஆச்சார சம்பந்தமாய் தொடர்ந்தால் துவேஷம் அளவுகடந்து பரவி தீமையை உண்டாக்கும்
என்பது. இது ஸ்ரீமான். ?. வரதராஜுலு நாயுடுவைக் குறிப்பது. ஜாதி வித்தி யாசக் கொடுமையை ராஜீய விஷயத்தில் நுழைத்தால் ஸ்ரீமான்கள். ஸ்ரீனி வாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி அய்யங்கார், MK ஆச்சாரியார் இவர்கள் “நாடு கெட்டுப் போகும்” என்று சொல்லுகிறார்கள். சமூக மத விஷயத்தில் நுழைத்தால் ஸ்ரீமான் .ராஜகோபாலாச்சாரியார் “நாட்டில் தீமை விளைந்துவிடும்” என்று சொல்லுகிறார். அப்படியானால் ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுவையும், ஈ.வெ.ராமசாமி நாயக்கரையும், 5ராமநாதனையும் இவர்கள் என்னதான் பண்ணச்சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஒருசமயம் ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார்போல் திருகணி பீரங்கி
யாய் இருக்கச் சொல்லுகிறார்களோ என்னமோ தெரியவில்லை. அப்படி இருந்தால் அவரவர்கள் பத்திரிகைகளுக்குகூட வாரம் ஒருமுறை கற்பனைகள் வெளியிடக் கொடுத்து உதவுவார்கள்போல் இருக்கிறது.
குடி அரசு - கட்டுரை - 06.12.1925
365 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
இந்து மகாசபயையும் வகுப்புவாரிப்
பிரதிந்தித்துவமும்
அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுமே அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக் கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்பொழுது தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையென்று ஒன்றுகூட்டி,
அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதம் என்றும், மநு தர்மவிதியென்றும், வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றவேண்டும் என்றும், இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்க வேண்டு மென்றும் தீர்மானங்கள் செய்வதை நாம் பார்க்கிறோம்.
சென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத்தலைவர் ஸ்ரீமான் டி.ஆர்.ராமச்சந்திர ஐயர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். அவர். வருணாசிரம தர்மத்தினுடையவும், பிறவியில் தான் உயர்ந்த பிராமண: ஜாதியாமென்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில் நடக்கக் கூடாது, கண்களில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம்.அதே மாதிரி கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டணம், கோயமுத்தூர் முதலிய இடங்களி லுள்ள இந்து மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருக்கு இளைத்
குடி அரசு - 1925 366
தவர்களல்ல. கும்பகோணம் இந்து மகாசபையிலேயே தீண்டாமை சாஸ்திர சம்மதமானதென்றும், அதை ஒழிக்கக்கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகமிருக்கிறது. இப்படியிருக்க இந்து மகா சபையை நாட்டில் பரப்புவது எப்படி இந்துமதத்திற்கு நன்மை பயப்பதாகும்?
ஓர் கொள்கைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால் அந்தக் கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர்களாவது, அந்த ஸ்தாபனத்தை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டாமா? ஸ்ரீமான் டி.ஆர். இராமச்சந்திர ஐயர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்கிராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவதாகுமா? அல்லது அச்சபையின் புரட்டுகளை காட்டுவதாகுமா? நமது நாட்டிலுள்ள சில வைதீகர்கள் எப்படி பாமர ஜனங்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறலாம் என்கிற கொள்கைக்கு ஸ்தாபனங் கண்டுபிடிக்க கருத்தாய் இருக்கின்றார்களேயல்லாமல் உண்மை யாக ஓர் காரியத்தைச் செய்வதற்கு ஒருவருமில்லை. இந்து மகாசபையின் ஸ்தாபகர் ஸ்ரீமான் மாளவியா அவர்களே, தீண்டாதாரைப் பற்றி பேசும்போது, கண்களில் ஜலம் விடுகின்றாரேயல்லாமல், பிறவியில் தனக்கும், தீண்டாதா ருக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுவதே இல்லை. தன்னை பெரிய வருணாச்சிரமத் தர்மியாகத்தான் ஒப்புக்கொள்ளுகிறார். முஸ்ஸீம்களின் உபத்திரவங் காரணமாக இந்து மகாசபையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று என்று சொன்ன காரணத்தால், பஞ்சாபில் முஸ்ஸீம்கள் நடத்தையால் அதிருப்தி கொண்ட லாலா லஜபதிராய் அவர்களும் இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மகாசபைக்கு உழைக்க முன் வரவேண்டிய
தாயிற்று.
இந்துக்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில், இந்துக்களல்லாத வர்களைத் தாழ்மையாகக் கருதுவதும், இந்துக்களில் பிராமணர்கள் அதிகமா யிருக்கிற பாகங்களில் பிராமணரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும், மகமதியர் அதிகமாயிருக்கிற பாகங்களில் மகமதியரல்லாதாரைத் தாழ்மை
யாகக் கருதுவதும், கிறிஸ்தவர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் கிறிஸ்தவ ரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும் பெரும்பாலும் உலக சுபாவமா கவே கருதுகிறோம். அத்தோடு, கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர்களும் செல்வாக் கில்லாதவர்களைத் தாழ்மையாகவே கருதுவதும் சுபாவமாகத் தானிருக்கிறது. உதாரணமாக, இந்துக்கள் மகமதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர் களென்று சொல்லுவதையும், மகமதியனைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச் சொல்லி வந்ததையும், இந்துக்களுக்குள் பிராமணனை, பிராமணரல்லாதார் மிலேச்சர்களென்று அகராதியில் எழுதியிருப்பதையும், பிராமணர் பிராமணரல்லாதாரை விபசாரி மகன், வேசி
மகன், சூத்திரன் என்று எழுதிவைத்துக் கொண்டிருப்பதையும் மகமதியர் இந்துக்களை “காபர்” அதாவது “நாஸ்திகர்” என்று சொல்லுவதையும், கிறிஸ்தவர்கள் இந்துக்களை “அஞ்ஞானிகள்” என்று சொல்லுவதையும்,
367 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தினமும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இத் தத்துவத்தினாலேதான், இன்றைய தினம் நாம் நமது ராஜ்யத்தை இந்திய அரசாங்கமாகச் செய்து கொள்ளாமல், பிரிட்டிஷ் அரசாங்கமாகச் செய்து வைத்துக் கொண்டிருக் கிறோம். நமது பொய்க் கிளர்ச்சிகளின் பலனாக ஒருசமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைந்தாலும், ஜெர்மனி அரசாங்கமோ, ஜப்பான் அரசாங் கமோஅல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல் ஒருக்காலும் இந்திய அரசாங்கம் ஏற்படுமென்று கருதுவதற்கே வகையில்லா
மல் இருக்கிறது.லாலா லஜபதிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில், “ முஸ்லீம்
கள், முஸ்லீம் ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டுமென்று ஏதோ ஓர் பத்திரிகை எழுதுவதாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாகவும், ஆதலால் இடங்கொடுக்கக் கூடாதென்றும்” வெகு எளிதில் சொல்லிவிட்டார்.
இந்திய அரசாங்கத்தில் இந்திய ஜனசங்கையில், நாலிலொரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய மகமதிய சகோதரர்களுக்கு பங்கு உண்டா? இல்லையா? அவர்கள் ஏழரைக் கோடிப்பேரும் இனிமேல் இந்தியாவை
விட்டுப் போய்விட முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டு மானால், ராஜீய விஷயத்திலும், மதவிஷயத்திலும் நமக்கு சரியான அந்தஸ்
துப் பெற்றுத்தானே ஆக வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லா விட்டால் அவர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடுமா ? வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம் மகமதியர்களுக்கு ஏற்படாததற்கு முன் மகமதியர் கொஞ்சமா யுள்ள எந்தப் பிரதேசத்திலாவது, தேர்தல்களில் ஒழுங்கான பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்களா? அல்லது எந்த கிறிஸ்தவர்களாவது அப்படிப் பெற்றிருக்கிறார்களா? உதாரணமாய், நம் நாட்டிலுள்ள திண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? பிரிட்டிஷ் அரசாங்
கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருடங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டி போட்டு ஜெயம் பெற சக்தி யுண்டாக்கியிருக்கிறானா? எந்த ஒரு தீண்டாதானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும் நமது சமூகத்தில் மூன்றிலொரு பங்கு எண்ணிக்கை உள்ள
வன் தானே,அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய ஓட்டைக் கொடுத்து, நமது அரசியல், சமூகவியல் இவைகளில் அவனுக்குள்ள பங்கைக் கொடுக்க. வேண்டுமென்று ஸ்ரீமான்கள் மாளவியா, லஜபதிராய் போன்ற யாராவது அநுபவத்தில் காட்டியிருக்கிறார்களா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்
கும் சமசுதந்திரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படி யிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப்படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா? இந்தியாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும் சம உரிமையும் பெற்றாலல்லாது, இந்தியா விடுதலையடை யுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே
குடி அரசு - 1925 368
சொல்லுவோம். சம உரிமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மனம் ஒப்பிக் கொடுப்பதுதான் ஏற்ற மருந்
தாகும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலா மென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்துபோடாமல் மூடிவைத்து விடுவதினால் அது ஆறிப்போகுமென்று நினைப்பதுபோல்தான்
முடியும். இந்து மகாசபைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விரோதமென்று சொல்வதானால் அவ்விந்து மகாசபை, நமது தேசத்தின் ஒற்றுமைக் குறைவுக்
கும், துவேஷத்திற்கும் ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி “இந்து"ப் பத்திரிகை யென்னும் பிராமணப் பத்திரிகை எழுதியிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். அதாவது:-
“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஜனங்களிடை சுயமதிப்பை உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்திற்கு காரணமாயிருக்கிறதென்பதையும், அது ஏற்படுவதற்கு முன் ராஜீய வாழ்வில் அலட்சிய மாயிருந்த வகுப்பினர்க்கு ராஜீய அறிவு புகட்டு வதற்கான வசதிகளை அது உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும்
மறுக்க முடியாது” என்று எழுதியிருக்கிறது.
இந்தக் குணங்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உண்டாக்கி யிருக்குமேயானால், இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங்களையும் விட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிக பலன் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா
குடி அரசு - தலையங்கம் - 13.12.1925
369 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
தியாகராயர் திருநான்
இம்மாதம்16,17.18-ந்தேதி ஆகிய மூன்று நாட்களையும், காலஞ் சென்ற பெரியாரான ஸ்ரீமான். பி. தியாகராய செட்டியாரின் நினைவுக்குறிய திரு நாளாகக் கொண்டாடவேண்டுமென்று, கனம். பனகல் இராஜா ஓர் அறிக்கை. வெளியிட்டிருக்கிறார். இதனைப் பற்றி “லோகோபகாரி” பத்திரிக்கை பின்வருமாறு எழுதுகிறது:-
“டிசம்பர் மாதம் 16,1 7,18-ந்தேதிகளை காலஞ்சென்ற பெரியாரான திரு. பி. தியாகராய செட்டியாரவர்களின் திருநாளாகக் கொண்டாட வேண்டு. மென்று தீர்மானித்திருக்கிறார்கள். காலஞ்சென்ற பெரியாருக்கு ஞாபகச் சின்னம் ஓன்று ஏற்படுத்தவேண்டுமென்றும், அவர் கொள்கைகளை நாடெங்கும் பரப்பவேண்டுமென்றும், அதற்காக நன்கொடைகள் வசூலிக்க வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காலஞ்சென்ற தியாகராயர். நாட்டின் நல்வாழ்வு கருதியும், சிறப்பாகப் பிராமணரல்லாதாரின் பெரு வாழ்வு கருதியும், பெருந்தொண்டு செய்தாரென்பதை யாரும் மறக்கமுடி யாது. அவர் திரு நாளைத் தக்கதோர் முறையில் கொண்டாடவேண்டும். அவர்நினைவை மற்றவர்கள் எவ்வாறு கொண்டாடினும் கொண்டாடட்டும். தியாகராயர் பெயரால் நாட்டிலே தகுதியான பல இடங்களில், கதர் நெசவுச் சாலைகள் ஏற்படுத்தவேண்டுமென்று நாம் சொல்லுவோம். இதனால் பிராமணரல்லாதார் பெரும்பயனடைவார்கள். காலஞ்சென்ற செட்டியார், சென்னையில் சுமார் பதினைந்து வருடங்களுக்குமுன் ஒரு நெசவுச்சாலை யைத் தமது சொந்தப் பொறுப்பில் நடத்தி வந்தமை இதனையொட்டி நமது நினைவுக்குவருகிறது.”
நமது சகோதரப் பத்திரிக்கையின் ஆசைகளை நாம் மனதார ஆமோ திக்கிறோம். காலஞ்சென்ற பெரியாரின் திருநாளை, உண்மைப் பிராமண: ரல்லாதார் யாவரும் தக்க சிறப்புடன் கொண்டாடவேண்டுமென் பதே நமது விருப்பமாகும். இதனை அறிந்தும், பிராமணரல்லாத பத்திரிக்கைகள் பல மெளனஞ் சாதித்திருப்பதை நோக்கும்போது, இப்பத்திரிகைகள் இத்திரு நாளைக் கொண்டாடவேண்டுமென எழுதினால், பிராமணப் பத்திரிக்கை. களும், அப்பத்திரிக்கைக் கோஷ்டியினரும் இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்கள் எனக் கூச்சலிடுவார்கள் எனப் பயந்து இருக்கின்றார்கள். போலும்; யார் எப்படியிருந்த போதிலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை யில்லை. பிராமணரல்லாதார் இத்திருநாளைக் கொண்டாடவேண்டு மென மீண்டும் வலியுருத்துகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13121925
குடி அரசு - 1925 370
காஞ்சீ மகாநாட்டுத் தனைவர்
காஞ்சீ மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான். திரு.வி.கலியாணசுந்தர
முதலியார், தமது “நவசக்தி” பத்திரிகையில் “மகாநாட்டுத் தலைவர் ஐயங்கார், ஆச்சாரியார் கைப்பிள்ளையாக நடந்தார் என்னும் உரைகளை “குடி அரசு” பத்திரிகை திரும்ப வாங்கிக்கொள்வது அதன் பெருந்தகைமையைக் காப்பதாகும். ஒருவர் தனது மனச் சான்றுப்படி நடந்ததை மற்றொருவர்.
திரித்துத் தம் மனம் போனவாறு கூறுவது அறமாகா. “குடி அரசு” ஆசிரியர்பால் எமக்கு நிரம்பிய அன்பு உண்டு. அவ்வன்பு காரணமாகவே இவ்வாறு எழுதத் துணிந்தோம்”” என்று எழுதியிருக்கிறார்.
ஆனால் *குடி அரசு” அதன் பெருந்தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதிலோ, சிறுந்தன்மை அடையாதிருப்பதிலோ கருத்துவைத்து அது
தமிழ் நாட்டில் உலாவவில்லை. பெருந்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அனேக சிறுந்தன்மைக் காரியம் செய்யவேண்டுமென்பது அதற்குத் தெரியும். பெருந்தன்மை வந்தாலும் சரி சிறுந்தன்மை வந்தாலும்
சரி அல்லது குடி அரசே மறைந்து போவதாயிருந்தாலும் சரி உண்மையை -
தன் மனதுக்கு உண்மை என்று பட்டதை - எடுத்துச் சொல்லுவதுதான் அதன் தொண்டாக உடையது என்பதை நவசக்தியும் அதன் ஆசிரியரும் உணரட்டும்.
அல்லாமலும், இது உண்மைக் கலியாணசுந்தர முதலியார் எழுதியிருப் பாராயின், நிபந்தனையில்லாத மன்னிப்புக் கேட்டுக்கொண்டு எழுதியவை களைப் பின்வாங்கிக்கொள்ள வேண்டியது உண்மையை உத்தேசித்து குடி அரசின் கடமையா என்றாவது யோசிக்கும். ஆனால், தமிழ்நாட்டை ஏமாற்றி பிராமணர்களுக்கு தலையையும், பிராமணரல்லாதாருக்கு வாலையும் காட்டும். போலிக் கலியாணசுந்திர முதலியார் எழுதியதைக் “குடி அரசு” எப்படி ஏற்கும்? போலிக் கலியாணசுந்திர முதலியாரின் அரசியல் நடவடிக்கை களைத் திராசின் ஒரு தட்டில் வைத்துக் “குடி அரசு” “தமிழ்நாடு” “ஸைபுல் இஸ்லாம்” “சுகோதயம்” “ஸ்வராஜ்யா” “லோகோபகாரி” “ஊழியன்” “நவ இந்தியா” “தீனபந்து” “வஞ்சிகேசரி” முதலிய பத்திரிக்கைகள் எழுதி யிருப்பவைகளையும் மற்றொரு தட்டில் வைத்தால், ஸ்ரீமான் போலிக் கலியாணசுந்திர முதலியாரின் தட்டு நிலத்தை விட்டுக் கொஞ்சங்கூட அசையாது என்பதோடு, ஸ்ரீமான் முதலியாரின் நடத்தைக்கு “குடி அரசு”
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
முதலியவைகளெழுதியது ஆயிரத்திலொரு பங்குகூட நிகராகாது என்பது விளங்கும். ஸ்ரீமான். முதலியாரவர்களுக்கு மனச்சாக்ஷியென்னும் பேரால்,
தாம் நடந்து கொண்ட காரியத்தை மறுபடியும் நினைப்பு மூட்டுகிறோம். இதுதானா ஸ்ரீமான். முதலியாரின் மனச்சாக்ஷி யென்பதை மற்றொருமுறையும் ஸ்ரீமான் முதலியாரைச் சிந்தித்துப் பார்க்கும்படி தாழ்மையாய்க் கேட்டுக் கொள்கிறோம். இதனால் அவருக்கு உண்மை கிடைக்காவிட்டால், தமிழ் நாட்டிலுள்ள ஏதாவதொரு ஐந்து பத்திராதிபர்களைப் பஞ்சாயத்தாராக நியமித்து, அவர்களைக் கொண்டு சொல்லப்படும் முடிவுக்கு ஸ்ரீமான் உண்மைக் கலியாணகந்திர முதலியார் தயாராயிருக்கிறாராவென்று கேட்கி
றோம். பஞ்சாயத்தார் சொல்லும் முடிவுக்கு “குடி அரசு” கட்டுப்படத் தயாரா யிருக்கின்றதென்று இதனால் உறுதி கூறுகிறது. அன்றியும் ஸ்ரீமான். முதலியாரவர்களை “குடி அரசின்” நடத்தைக்காகச் சர்க்கார் நியாய ஸ்தலத்
திற்குப் போகும்படி ஒரு நண்பர் அவருக்கு யோசனை சொன்னாராம். அப்படியானாலும், தனது நடபடிக்கையை, நியாயமானதாக்கிக் கொண்டா லுங்கூட சம்மதமே. குடி அரசுக்காவது, அதன் பத்திராதிபருக்காவது நவசக்தியிடமோ, அதன் பத்திராதிபரான ஸ்ரீமான். முதலியாரிடமோ எவ்வித துவேஷமோ, பகைமையோ இல்லையென்பதையும் “குடி அரசும்” அதன் பத்திராதிபரும் உறுதி கூறுகிறார்கள். நிற்க, காஞ்சீயில் கூடின பிராமண
ரல்லாதார் மகாநாட்டிற்கு ஸ்ரீமான் முதலியாரவர்கள் வரவேயில்லை. ஸ்ரீமான்.
டாக்டர். வரதராஜுலு நாயுடு வந்திருந்தார். டாக்டர் வரதராஜுலு நாயுடுவை ஸ்ரீமான் நாயக்கர் மகாநாட்டுக்கு வரும்படி அழைத்தபோது, தான் வருவதில் ஆகே்ஷபணையில்லையென்றும், ஸ்ரீமான். முதலியார் வருவதில்லையெனச் சொல்லிவிட்டாரென்றும் சொன்னார். உடனே ஸ்ரீமான் முதலியாரை, ஸ்ரீமான் நாயக்கர் கேட்டபோது, ஸ்ரீமான் முதலியார் தாம் அப்படி ஒருக்காலும் சொல்லவேயில்லையென்றும், ஸ்ரீமான். நாயுடு வேண்டுமென்றே சொல்லி, நம்மிருவருக்கும் கலகத்தை உண்டாக்கப் பார்க்கின்றாரென்றும், மற்றும் சில விஷயங்களும் சொன்னதோடு, தான் வருவதாகவும் ஒப்புக்கொண்டார். அப்படியிருக்க, பிராமணரல்லாதார் மகாநாட்டிற்கே, ஸ்ரீமான். முதலியார் வராத காரணமென்ன? அதன் நடபடிக்கைகளைக் கூடத் தமது பத்திரிக்கை
யில் நடுநிலைமையுடன் பிரசுரிக்காமல், சுதேசமித்திரனைவிட மோசமான நிலைமையில் பிரசுரிக்கக் காரணமென்ன? அல்லாமல், “ஸ்ரீமான். தண்ட பாணி பிள்ளையின் கடுமையான மொழிப் பிரயோகத்தால் கூட்டத்தில் குழப்பமும், கூச்சலும் ஏற்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது” என்று விஷம நிரூபம் எழுதக் காரணமென்ன? கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுடைய பெயரை ஏன் குறிப்பிட்டிருக்கக்கூடாது? அன்றி, மகாநாட்டின் விஷயா லோசனைக் கமிட்டியிலோ, மகாநாட்டிலோ ஒருவரும் முறைப்படி பிராமண: ரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவர வில்லையென்றும் அவை
மகாநாட்டில் ஆலோசனைக்கே கொண்டுவரவில்லையென்றும் நவசக்தியில் எழுதியிருப்பது உண்மை முதலியாரின் நடவடிக்கையா? அல்லது போலி
குடி அரசு - 1925 372
முதலியாரின் நடபடிக்கையா? நிற்க, பிராமணரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானங்களை மகாநாடு முடிந்தவுடன் விஷயாலோசனைக் கமிட்டியில்,
1 தலைவர் ஸ்ரீமான். முதலியாரிடம் ஸ்ரீமான். நாயக்கர் கொடுத்தாரா? இல்லையா?
2 ஸ்ரீமான். பாவலர் அதைப் பிரேரேபித்தாரா? இல்லையா?
3. ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளை அதை ஆதரித்தாரா? இல்லையா?
4. ஸ்ரீமான். நாயக்கரை ஸ்ரீமான் முதலியார், இரண்டு தீர்மானங் களிருக்கிறதே, உங்களுடைய அபிப்பிராய மென்னவென்று கேட்டாரா? இல்லையா?
5. ஸ்ரீமான். நாயக்கர் எழுந்து பிராமணரல்லாதார் மகாநாட்டுத் தீர்மா
னம், நானும் இருந்து செய்ததாதலால் அதற்கு மாறாக இப்பொழுது நான் பேச முடியாது: ஆகையினால் எந்தத் தீர்மானத்துக்கானாலும், வோட்டுக் கேளுங்கள் என்று ஸ்ரீமான். நாயக்கர் சொன்னாரா? இல்லையா?
6.அதன்மேல் ஸ்ரீமான். எஸ்.இராமநாதன் தீர்மானம் வோட்டுக்கு
விடப்பட்டுத் தோற்றுப் போயிற்றா? இல்லையா?
7. அது தோற்றவுடன், உடனே ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார், ஸ்ரீமான். பாவலரை அவர் பிரேரேபித்த தீர்மானத்தை வாபீஸ் வாங்கிக்கொள் ளும்படி சொன்னாரா? இல்லையா?
8.ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளை எழுந்து, ஸ்ரீமான். பாவலர் தீர்மானத்தைப் பின்வாங்கிக்கொள்ளுவதாய்ச் சொன்னாலும், தான் அதை ஒப்புக்கொள்வதில்லையென்று வலியுறுத்தினாரா? இல்லையா?
9.பிறகு ஸ்ரீமான்.முதலியார் வாபீஸ் வாங்கிக்கொள்ள அநுமதியளித்து விட்டதாகச் சொன்னாரா? இல்லையா?
10..அந்த அநுமதியை ஸ்ரீமான். நாயக்கர் ஒப்புக்கொள்ளாமல் வாதாடி
யதில், மறுபடியும் கொண்டுவர ஸ்ரீமான். முதலியார் அநுமதி கொடுத்
தாரா? இல்லையா?
1 ஸ்ரீமான். நாயக்கரை மறுபடியும் பிரேரேபிக்கும்போது, எழுத்து
மூலியமாய்க் கொடுங்கள் என்று கேட்டாரா? இல்லையா?
2. ஸ்ரீமான். நாயக்கர் முன்னமே உங்கள் கையில் கொடுத்திருக்கிறதே, அதை நீங்கள் கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களேயென்று சொன்னாரா? இல்லையா?
13. அது சமயம் ஸ்ரீமான். முதலியார் கையில் அத் தீர்மானங்கள் இருந்ததா? இல்லையா?
373 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
14 தமது கையில் அத்தீர்மானங்களிருந்தும், அதை ஏற்றுக்கொள்ள. மாட்டேன், வேறு எழுதிக்கொண்டு வாருங்கள் என ஸ்ரீமான். முதலி
யார் சொன்னாரா? இல்லையா?
15.ஸ்ரீமான்.நாயக்கரும், ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளையும் பிராமண ரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது தேர்தலுக்காக ஓர் போர்டு நியமிக்க வேண்டும் என்கிற ஓர் தீர்மா னத்தை ஸ்ரீமான். வரதராஜுலு நாயுடுவைக் கொண்டு பிரேரேபிக்கச் செய்து இத் தீர்மானத்திற்கு என்ன சொல்லுகின்றீர்களென ஸ்ரீமான். நாயக்கரைக் கேட்டாரா? இல்லையா?
16.ஸ்ரீமான். நாயக்கர் தனது தீர்மானம் எழுதிக்கொண்டிருக்கிறது, இதைத்தான் வோட்டுக்கு விடவேண்டும் என அக்ராசனராகிய ஸ்ரீமான். முதலியாரைக் கேட்டுக்கொண்டாரா? இல்லையா?
17-பிராமணரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானம் எழுதி, ஸ்ரீமான். தண்ட பாணி பிள்ளையால் ஸ்ரீமான்.முதலியாரிடம் கொடுக்கப்பட்டவுடன்,
இது ஒழுங்குத் தவறானதென்று ஒரேயடியாய் அடித்து விட்டாரா? இல்லையா?
18.வகுப்புவாரி தீர்மானத்தை ராஜீய மகாநாட்டில் பிரேரேபிக்க
ஸ்ரீமான். ராமநாதன் அனுமதி கேட்டதற்கு, ஸ்ரீமான். முதலியார் அனுமதியளித்தாரா? இல்லையா?
19. டெ தீர்மானத்தை நகல் தீர்மானங்களோடு அச்சடித்து, பிரேரே பிப்பவர் ஸ்ரீமான். எஸ்இராமநாதனென்றும், ஆமோதிப்பவர் ஸ்ரீமான். இராமசாமி நாயக்கரென்றும் குறிக்கப்பட்டதா? இல்லையா?
20. இப்படியிருக்க, மகாநாட்டின் விஷயாலோசனைக்கமிட்டியிலோ, மகாநாட்டிலோ ஒருவரும் முறைப்படி தீர்மானங்களைக் கொண்டுவர வில்லை யென்று நவசக்தியில் ஸ்ரீமான். முதலியார் எழுதியிருப்பது உண்மை முதலியாரின் கூற்றா? அல்லது போலி முதலியாரின் கூற்றா?
மகாநாட்டு நடபடிக்கைகள்
21. மகாநாட்டில் இரண்டாவது தீர்மானமாக, ஸ்தல ஸ்தாபனங்களைக் காங்கிரஸ் கைப்பற்றவேண்டும் என்ற தத்துவத்தோடு கொண்டுவந்
திருந் ததைப் பிரேரேபிக்க, ஆதரிக்க, ஆமோதிக்க மூன்று கனவான்
கள் பெயர் குறிப்பிட்டிருந்ததா? இல்லையா?
22. அந்தப்படிச் செய்யாமல், அக்ராசனாதிபதி தானே எழுந்து அவசர வசரமாய்ப் பிரேரேபித்து நிறைவேறிவிட்டதென்று சொன்னாரா? இல்லையா?
குடி அரசு - 1925 374
23 இதற்குக் காரணம் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர், பின்னால் தண்ணீர். சாப்பிட்டுக் கொண்டிருந்ததும், அவர் வந்தால் ஆக்ஷபிப்பார். என்கிற பயந்தானா? அல்லவா? அல்லாமலும், அவர் வந்ததும் ஸ்ரீமான். முதலியாருட்பட யாவரும் சிரித்தார்களா? இல்லையா?
24. பாட்னா தீர்மானம் பாஸானபிறகு, ஸ்ரீமான். இராமசாமி நாயக்கரை,
ஸ்ரீமான். முதலியார் கூப்பிட்டு உங்கள் தீர்மானம் ஒரு சமயம் தோற்றா
லும் தோற்றுப் போகும்போல் இருக்கிறது. ஆதலால் வாபீஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாரா? இல்லையா?
25. ஸ்ரீமான். இராமசாமி நாயக்கர் தன்னுடைய தீர்மானம் தோற்கா தென்றும், தோற்றுவிட்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லை
யென்றும் சொல்லிவிட்டாரா? இல்லையா?
26. பிறகு கொஞ்சநேரம் பொறுத்து காங்கிரஸ் விதிப்படி இருபத்தைந்து பிரதிநிதிகளின் கையெழுத்திருந்தால்தான் பிரேரேபிக்கலாமென்று
ஸ்ரீமான். இராமநாதனிடம் சொன்னாரா? இல்லையா?
27. இதற்குக் காரணம், 25 கையெழுத்து வாங்குவதற்குள்ளாக மகாநாட்டு மற்ற தீர்மானங்களை யெல்லாம் தானே பிரேரேபித்து அவ சரவசர மாய்த் தீர்மானித்து, மகாநாட்டு நடவடிக்கைகளை முடித்து அத்தீர்மானம் மகாநாட்டுக்கு வரவொட்டாதபடி செய்ய வேண்டு மென்ற எண்ணந்தானா? இல்லையா?
28 அப்படியிருந்தும், கல்பாத்தி தீர்மானத்தின் பேரில் ஸ்ரீமான்.
ஸ்ரீனிவாசய்யங்கார் சிநேகிதர்கள் சிலர் பேசக் கேட்டுக்கொண்டதால் அவர்களுக்குப் பேச அநுமதி கொடுத்தால், மத்தியில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் சுமார் 30 பிரதிநிதிகளுக்கு மேல் ஸ்ரீமான்.நாயக்க
ரால் தீர்மானத்துக்குக் கையெழுத்து வாங்கிக் கொடுக்கப்பட்டதா? இல்லையா?
29. இது கேட்டதும், கொடுத்ததும், கையெழுத்து வாங்கினதும், பாட்னாத் தீர்மானத்தை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் சட்டசபைத் தேர் தலை நடத்த வேண்டுமென்ற தீர்மானத்தை ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய்
யங்கார் பின் வாங்கிக்கொண்டதற்குப் பிறகுதானா? அல்லவா?
இவற்றிற்கு ஸ்ரீமான். முதலியாரவர்கள் தமது மனச்சாக்ஷி வாதத்தில் என்ன பதில் சொல்லியிருக்கிறார்? அல்லது என்னதான் சொல்லப்போகிறார்? மனச்சாக்ஷிக்கு ஓர் அளவுண்டா இல்லையா? திருடவும், கொலைசெய்யவும், கொள்ளையடிக்கவும், ஒரு மனிதனுக்கு அவனுடைய மனச்சாட்சி இடங் கொடுத்துவிட்டால், உலகத்தார் வாய்மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? உலகத்தாருடைய மனச்சாட்சி இவ்விதக் காரியங்களை வெளிப்படுத்தக் கட்டளையிட்டால், அவர்கள் மனச்சாட்சிக்கு மரியாதையுண்டா? இல்லையா?
375 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மனச்சாட்சியென்றால், ஒருவர் மனச்சாட்சியில் மற்றொருவர் எப்படிப் பிரவேசிக்கலாம்? குடி அரசின் மனச்சாட்சியில் ஏன் ஸ்ரீமான். முதலியார் பிரவேசித்துப் பின்வாங்கிக்கொள்ளும்படி கட்டளையிடுகிறார். ஸ்ரீமான். உண்மை முதலியாருடைய மனச்சாக்ஷியைக் குடி அரசும், அதன் பத்திராதி பரும் நன்கு அறிவார்கள். அது மிகவும் பரிசுத்தமான மனச்சாக்ஷி. காஞ்சீபுரம் மகாநாட்டு நடபடிக்கைகள் கண்டிப்பாய் ஸ்ரீமான். உண்மை முதலியாரின் மனசாட்சி அல்லவே அல்ல. ஸ்ரீமான் அய்யங்கார், ஆச்சாரியாரின் மனச்
சாக்ஷிகள் ஸ்ரீமான். முதலியாரின் சரீரத்திற்குள் புகுந்து. ஸ்ரீமான். முதலி
யாரின் மனச்சாகஷியை அடித்துத் துரத்தி அந்த ஸ்தானங்களை ஆக்ரமித்துக் கொண்டு அவைகள் நடத்தின நடவடிக்கைகள் தானென்பதை குடி அரசும், அதன் பத்திராதிபரும், மற்றும் அதன் நண்பர்களும் கோபுரத்தின் மீதிருந்து கூவவும் அஞ்சமாட்டார்கள்.
காஞ்சீபுரம் மகாநாட்டில் ஸ்ரீமான். போலி முதலியார் கண்ணுக்கு ஸ்ரீமான்கள். இராமசாமி நாயக்கரும், இராமநாதனும், தண்டபாணி பிள்ளையும்
ஓர் சிறிய மூட்டைப் பூச்சிபோல் விளங்கினார்களென்பதையும், அவர்களை: மனிதர்களாகக்கூட மதிக்கவில்லையென்பதையும், அவர் மறுக்கவே முடி யாது. ஆனால், ஸ்ரீமான்கள், ராஜகோபாலாச்சாரியாரும் ஸ்ரீனிவாசய்யங்கா
ரும், போலி முதலியார் கண்ணுக்குக் குலகுருவாய் விளங்கினார்களென்பதை
யும், அவர் மறுக்கவே முடியாது. உண்மை முதலியார் உள்ளத்தில் ஸ்ரீமான்
கள். இராமநாதனும், தண்டபாணி பிள்ளையும், நாயக்கரும் எப்படி விளங்கு கின்றார்களென்பதும், ஸ்ரீமான்கள்.ஸ்ரீனிவாசய்யங்காரும், இராஜகோபாலாச் சாரியாரும் எப்படி விளங்குகின்றார்களென்பதும் உண்மை முதலியாருக்கும், அவருடைய அன்பர்களுக்கும் நன்றாய்த் தெரியும். ஸ்ரீமான். முதலியாரின் தியாகமும், அவருடைய தேசபக்தியும் அவரது உழைப்பும் தமிழ்மக்கள். வெகுபேர் அறியமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு ஏதோ அவர் ஓர் தமிழ் படித்தவ னென்று மாத்திரம்தான் தெரியும். வாஸ்தவத்திலேயே ஸ்ரீமான். முதலியார் ராஜீய வாழ்வில் இறங்காமல் தனது தமிழ் உபாத்தியாயர் உத்தி யோகத்திலேயே இருந்திருப்பாரானால், இதுவரையில் லக்ஷக்கணக்கான. ரூபாய்கள் சம்பாதித்திருப்பாரென்பதோடு, மஹாமஹோபாத்தியாய பட்டங் களும், மற்றும் தமிழ் அகராதி எழுதுவதற்கும், தமிழ்ப் பிள்ளைகளைப் பரீட் சித்து அவர்கள் பிராமண பரிக்ஷகர்கள் கையில் சிக்கி பரீக்ஷயில் தவறிப் போகாமல் விருத்தியடைவதற்கும், அரசாங்கத்தில் தமிழுக்குத் தக்க யோக்கி யதை சம்பாதிப்பதற்கும் உதவியாயிருந்திருப்பார். இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகையை மூக்கையும், முலையையும் அறுத்த ராமன், உத்தமன் - விஷ்ணு அவதாரம் என்றும், அதற்குப் பிரதியாய் சீதையைக் கொண்டுபோய் அசோகவனத்தில் வைத்து தன் மகளைக் காவல்போட்டு வைத்திருந்தவன். இராக்ஷஸன் என்றும், காலில்லாதவன் நொண்டி, கண்ணில்லாதவன் குருடன் என்றும், இருக்கிற புஸ்தகப் பள்ளிக்கூடப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்
தால், அளவிட முடியாத பணத்தையும் சம்பாதித்திருப்பார். உண்மையில்
குடி அரசு - 1925 376
தமிழ் நாட்டு ராஜீய வாழ்விலிருக்கும் எவருடைய தியாகத்திற்கும், ஸ்ரீமான். முதலியார் தியாகம் பின் வாங்கியது அல்ல என்று தான் சொல்லவேண்டும். அவர் தன்னைப்பற்றி விளம்பரப்படுத்திக்கொள்ளுங் குணம் கொஞ்சமும் இல்லாதவரானபடியால், அவருடைய தியாகங்களைப் பொதுமக்கள் அறிய வழியில்லாமற் போய் விட்டது. அது மாத்திரமல்ல, அவரிடத்தில் அந்நியரை மன்னிக்கும் குணம் தமிழ் நாட்டிலுள்ள யாரையும்விட அதிகமாயுண்டு. உதாரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய் யங்கார், நன்னிலத்தில் ஓர் கூட்டத்தில் பேசும்போது, ஸ்ரீமான். முதலியார். மாரீசன் என்றும், ஜஸ்டிஸ் ககஷியிலீடுபட்டவரென்றும் அவரை காங்கிரஸை
விட்டு வெளியாக்க வேண்டுமென்றும், சொன்னதை உடனே மறந்து ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய்யங்கார் தலைமையின் கீழ் தமிழ்நாடு நடக்க வேண்டுமென்றும், அவர் அரும் பெரும் தலைவரென்றும் சொல்லி, அவரைக் காங்கிரஸ்
கமிட்டிக்குத் தலைவராக்குவது இலேசான காரியமல்ல. இதற்கு பயங் கொள்ளித்தனம் ஓர் காரணமாயிருந்தாலுங்கூட, மன்னிப்புத் தன்மையின் பெருமையை நாம் மறந்துவிடக் கூடாது. ஸ்ரீமான். ஆச்சாரியாரவர்களைப்
பற்றியும் பல புராணங்கள் சொன்னவர் எவ்வளவு சீக்கிரத்தில் அதை மறந்து அவரிடத்தில் அன்பு கொண்டவர் போல் நடப்பதென்றால், அதுவும் பெருந் தன்மையின் அறிகுறியேயாகும். எப்படியான போதிலும் உண்மை முதலி யாரின் மனச்சாகஷியைப் பற்றியும், அவரது கொள்கைகளைப் பற்றியும்,
நமக்கு ஒருக்காலும் விரோதமோ, துவேஷமோ கிடையவே கிடையாது. உண்மை முதலியாரின் பலவீனத்தால், சிற்சில சமயங்களில் திடீரென்று போலி முதலியாரின் ஆதிக்கம் பலப்பட்டு தேசத்தையும், சமூகத்தையும் பாழாக்கும் நிலைமை ஏற்பட்டுப் போய் விடுகிறதே என்பதுதான் நமது கவலை. அத் தோற்றம் இனித் தோற்றக்கூடா தென்பதுதான் நமது உண்மையான ஆசையே யன்றி, உண்மை முதலியாரின் மனத்தைப் புண்படுத்தவோ, கஷ்டப் படுத்தவோ நாம் ஒரு நிமிஷமும் நினைக்கவேயில்லை; நினைப்பதுமில்லை. நமது கேள்விகளுக்குப் பதில் வந்தவுடன் மற்றவை எழுதுவோம்.
குடி அரசு - கட்டுரை - 13121925
377 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
€சலம் தியாகராய நியையம் திறப்பும் கதர்ச்சாலை திறப்பும்
சிறந்த தேசபக்தரும், உண்மை சமூகத் தொண்டருமான காலஞ்சென்ற ஸ்ரீமான். தியாகராய செட்டியாரின் ஞாபகார்த்தத்திற்காக ஏற்பட்ட தியாகராய நிலயம் என்னும் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் நான் அடைந்ததைப்பற்றி அளவிலாத மகிழ்ச்சி எய்துகிறேன். இக்காரியத்தைச் செய்ய எனக்குக் கட்டளையிட்ட ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களுடைய அன்பையும், விடாமுயற்சியையும் நான் பாராட்டுவதோடு, அவருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன். ஸ்ரீமான். கணபதியா பிள்ளையவர்களின் குணாதிசயங்களை ஸ்ரீமான். வரதராஜுலு
நாயுடுவால் கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜீய விஷயத்தில் அவருக்கும்,
நமக்கும் அபிப்பிராயபேதமிருந்தாலும், அவருடைய அபிப்பிராயம் நமது அபிப்பிராயத்தில் குறுக்கிடுவதாயிருந்தாலும், அவரது உண்மைத் தத்துவத்தையும் ஊக்கத்தையும் நான் பாராட்டாமலிருக்க முடியாது.
ஸ்ரீமான். தியாகராய செட்டியார் தென்னாட்டுக்கே பழுத்த தேசாபி மானி. அவர் நமது சமூகத்துக்கு உண்மையாய்த் தொண்டு செய்தவர். பிராமணரல்லாதாருக்கு மறக்க முடியாத தலைவர். அவருடைய காரியங்க ளெல்லாம் கொஞ்சமும் சுயநலமற்றது. ராஜீய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் அபிப்பிராய பேதங்களிருந்தாலும், சமூக முன்னேற்றத்தில் எங்களுடைய அபிப்பிராயம் ஒன்றாகவே இருந்து வந்தது. சமூக விஷயத்தைப் பற்றியும், ராஜீய விஷயத்தைப்பற்றியும், அவருக்குள்ள அபிப்பிராயங்களை ஓர் பெரிய தீர்க்கதரிசனமென்றேதான் சொல்ல வேண்டும். சமூக விஷயத்தைப்பற்றி அவர் சொன்ன அபிப்பிராயந்தான், இன்றைய தினம் காங்கிரசிலுள்ள பிராமணரல்லாத பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ராஜீய விஷயத்தில் அவரது அபிப்பிராயங் களை இன்னமும் என் போன்றார் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், காங்கிரசில் பிரதானமானவர்களென்றும், செல்வாக்குள்ளவர்களென்றும் சொல்லப்படும் சுயராஜ்யக்கட்சியாரென்போரும் அதையே பின்பற்றுகிறார்கள். பாஷையில் ஏதாவது வித்தியாசமிருந்தாலும், தத்துவத்தில் வித்தியாசமில்லையென்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுவீர்கள். இந்திய பொதுஜன சேவையில் ஒரே அபிப்பிராயத்தோடு கிளம்பி தொண்டுசெய்து அதே அபிப்பிராயத்தோடு
குடி அரசு - 1925 378
காலஞ்சென்றவர் ஸ்ரீமான். தியராகராயசெட்டியார் என்று சொல்லுவது ஒரு விதத்திலும் மிகையாகாது. 5000, 6000 ரூபாய் சம்பளம் வரும் மந்திரி உத்தியோகம் போன்ற பெரும் பதவிகளெல்லாம், தனது காலடியில் வீழ்ந்து கிடந்த காலத்தில் தனக்கென்றாவது, தனது மக்களுக்கென்றாவது, தனது பந்துக்களுக்கென்றாவது எடுத்துக்கொள்ளாமல், அந்நியர்களுக்கே அவை களை வழங்கி வந்தார். இவ்வித சுயநலமற்ற தன்மையுடைய தலைவர்: யாராவது இருக்கின்றார்களாவென்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு நேர்மையான பெரியாரை இதுவரை நான் சந்தித்துப் பேசிய தில்லையானாலும், அவருடைய மாசற்ற உள்ளத்தினிடம் எனக்கு எப்பொழு
தும் பக்தி உண்டு. அப்பேர்ப்பட்ட பெரியாரின் ஞாபகார்த்தத்திற் காக
ஏற்படுத்தியிருக்கும் கட்டிடத்தைத் திறந்துவைப்பதை நான் ஓர் பெரும் பாக்கியமாகவே கருதி இத் தொண்டைச் செய்கிறேன். எனக்குக் காயலாவாய் இருப்பதால் அதிகமாகப் பேசமுடியாததற்கு வருந்துகிறே னென்று சொல்லி வெள்ளிச் சாவியினால் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
குறிப்பு:05.12.1925 இல் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கட்டப்பட்ட தியாகராயர்நினைவு கட்டடம் மற்றும் கதர்ச்சாலை திறப்புவிழா உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 13.12.1925
379 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மநுநீதி கண்டமூறை
“உதைத்துக் காொன்றதற்க ரூயாய் 200 அயறாதம்”
அஸாம் தேயிலைத்தோட்டத்தில், வேலை செய்த ஓர் இந்தியக் கூலியை உதைத்துக்கொன்ற ஓர் ஐரோப்பியருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்ததைக் கேட்க இந்தியர்கள் மனம் பதறுமென்பதில் ஆக்ஷபனை யில்லை. ஆனபோதிலும், இதுமுதல் தடவையல்ல. இதற்கு முன் பல தடவை களில் இதைவிடக் கொடுமையான சம்பவங்கள் பலவற்றைப் பார்த்திருக் கிறோம்.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பாக, செயில்காட் என்கிற இடத்தில் ஓர் இந்திய ஸ்திரீயை நிர்வாணமாய் இழுத்துக்கொண்டுபோய் இரத்தம் வரும் படியாகப் புணர்ந்த ஓர் ஐரோப்பிய சோல்ஜருக்கு, 25 ரூபாய் அபராதம் விதித்த மாஜிஸ்திரேட் தீர்ப்பு எழுதுகையில், “ஓர் இந்திய ஸ்திரீயை, ஓர் ஐரோப்பியர் புணர்ந்ததை ஓர் பெரிய தப்பென்பதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இரத்தம் வரும்படி புணர்ந்ததற்காக அபராதம் விதிக்கும்படியிருக்கிறது. ஆதலால் அதற்காக 25 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது நேயர்கள் ஞாபகத் திலிருக்கும். வெள்ளைக்காரருடையவும், அரசாங்கத்தாருடையவும், இதுபோன்ற செய்கைகள், மதிக்கத்தகுந்ததும், இந்து தர்மத்திற்கே ஆதார மானதுமான மநுதர்ம சாஸ்திரத்தை நமக்கு ஞாபக மூட்டுகிறது. ஏறக்குறைய வெள்ளைக்காரருடையவும், அரசாங்கத்தாருடையவும், செய்கையும், மநுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்துத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்கிற விஷயத்தில், நமக்கு அதிகமான சந்தேகம் தோன்றுவதே கிடையாது. ஏனெனில், மநு 8-வது அத்தியாயம் 380-வது சுலோகத்தில் “பிராமணன் எப்பேர்ப்பட்ட பாவமான செய்கை செய்தாலும், அவனைக் கொல்லக்கூடாது, காயமும் செய்யக்கூடாது, வேண்டுமானால் அவன்பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அநுப்பிவிடலாம்” என்றும், 381-வது சுலோகத்தில் “எவ்வளவு பெரிய குற்றமானாலும், பிரமணனைக் கொல்லவேண்டுமென்று அரசன் மனதிலும் நினைக்கக்கூடாது” என்றும், 379 - வது சுலோகத்தில், “பிராமணனுடைய தலையை மொட்டை யடிப்பது, கொலை தண்டனையாகும்” என்றும், ஸ்திரீ விஷயங்களில் சூத்திரன் காவலில்லாத பிராமண ஸ்திரியைப் புணர்ந்தால் ஆண்குறியை அறுத்து அவன் தேக
குடி அரசு - 1925 380
முழுவதையும் துண்டு துண்டாக வெட்டி அவனுடைய எல்லாப் பொருள். களையும் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்றும், “ஒரு பிராமணன் கற்புடைய ஒரு ஸ்திரீயை துராக்ரதமாகப் புணர்ந்தாலுங்கூட ஆயிரம் பணத்திற்குள் அபராதம் விதிக்க வேண்டும்” என்னும் கொள்கையுள்ள இந்து தர்ம சாஸ்திரங்களைப் பிரிட்டிஷார் பின்பற்றுவதில் நமக்கு ஒன்றும் ஆச்சரிய மாகத் தோன்றவில்லை. ஆனால், இவற்றை அநுமதித்துக் கொண்டு ஓர். பெரிய சமூகம் உயிர் வாழ்கிறதே யென்பதைப்பற்றித்தான் நாம் கவலை கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.12.1925.
381 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கொல்லை வழிப்பிரவேசம், சாக்கடை வழிப்பிரவேசத்தைவிட மோசமானதா?
சென்னை ஜஸ்டிஸ் கக்ஷியைச் சேர்ந்த ஸ்ரீமான். தணிகாசலம். செட்டியாரவர்கள், சென்னை கார்ப்போரேஷனுக்குள் நியமனம் மூலியமாய் பிரவேசித்ததைக் கொல்லை வழியென்று சில பிராமணப் பத்திரிகைகள் கூக்குரலிடுகின்றன. ஆயினும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. சுயராஜ்யக் கட்சியாரும், அதன் தலைவர்களும் சாக்கடை வழியில் பிரவேசிக்கிறார்களே, இதை விட ஜஸ்டிஸ் கக்ஷிக்காரருடைய நடவடிக்கை எப்படி மோசமாகும்? கோயமுத்தூர் ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சுயராஜ்யக்கக்ஷித் தலைவருமான ஓர் பிராமணர், பிராமணருக்கு விரோதமான கக்ஷியென்றும், நாட்டிற்குப் பிற்போக்கான கக்ஷியென்றும்,
சர்க்கார் உத்தியோகத்துக்கும், சுயநலத்துக்கும் ஆசைப்பட்ட கக்ஷியென்றும், தன்னால் சொல்லப்படுகிற ஜஸ்டிஸ் கக்ஷியின் ஆதிக்கத்திலிருக்கிற இலாகாக்களிலொன்றான, ஜில்லாபோர்டு அங்கத்தினர் ஸ்தானத்துக்கு. ஒத்துழையாமையையும் முட்டுக்கட்டையையும் ஆதரிக்கிற தத்துவங்களைக் கொண்டவர், பனகால் இராஜாவைக் கெஞ்சி அவரை ஏமாற்றி, ஜில்லா போர்டுமெம்பர் பதவி பெறுவது சாக்கடை வழியில் செல்லுவதா? அல்லவா? ஜஸ்டிஸ் ககஷியாரின் கொள்கைப்படி ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் பெறுவது கடுகளவு அறிவு உள்ளவனும் ஒருக்காலும் கொல்லைவழியென்று சொல்லவே மாட்டான். ஒருக்கால் தேர்தலில் தோற்றுப்போய் நியமனம் பெற்றது குற்றமென்று நினைப்பார்களேயானால், டாக்டர். நாயர் போன்றவர். களெல்லாம் காரியத்தின் அவசியத்தைக் கோரியும், தேர்ந்தெடுக்கும் ஜனங் களின் அறியாமையை உத்தேசித்தும், போட்டியாய் நிற்பவர்களின் தந்திரங் களையும், சூழ்ச்சிகளையும் கண்ணியக் குறைவான நடத்தைகளையும் அறிந்
தும், இம்மாதிரியான காரியங்களில் வழி காட்டியிருக்கிறார்கள். ஆனால், தேர்தல்களில் நிற்கக்கூட யோக்கியதையற்றவர்களும் நிற்பதானால்
பத்தாயிரம், இருபதினாயிரம் செலவழித்தாலல்லாமல் வெற்றிபெற முடியாமலிருக்கிற ஒரு கூட்டத்தார், இம்மாதிரி நடப்பதற்கு வேறு யாராவது வழிகாட்டியிருக்கிறார்களா? இவையெல்லாம் ஒரு ஜாதியாரின் ஆக்கத்தைக் குறைக்கவேண்டுமென்ற சூழ்ச்சியும், யோக்கியதையற்றவர்கள் முன்னுக்கு வரவேண்டுமென்ற பேராசையும், தங்கள் ஜாதியாரிடத்தில் செல்வாக்குள்ள பத்திரிக்கைகள் இருக்கின்றதென்கிற அகம்பாவமும், இப்படி எழுதச்
குடி அரசு - 1925 382
செய்கிறதே அல்லாமல், யோக்கியமானவர்களுக்கு இதில் எவ்விதமான உண்மையும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை. ஒத்துழையாமை என்பது இல்லையானால், சுதந்தர புத்தியுள்ளவர்களுக்குத் தேர்தலுக்கும், நியமனத் துக்கும் அளவு கடந்த வித்தியாசமில்லையென்பதுதான் நமது அபிப்ராயம். இரண்டு பேரும் தங்களிஷ்டம் போல் வேலைசெய்ய ஸ்தல ஸ்தாபனங்கள். அமைக்கப்பட்டிருக்கின்றது. மொத்தத்தில் தற்காலமுள்ள எந்த ஸ்தாபனங்
களிலும், தேர்ந்தெடுப்பு மூலியமானாலும், நியமனம் மூலியமானாலும் உள்ளே செல்லுவதால் பிரமாதமான அரசியல் காரியம் எதுவும் செய்ய முடியாதென்பதோடு அதைத் தனது சுயநன்மைக்கு ஓர் பதவியாக மாத்திரம் உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்பதுதான் நமது தாழ்மையான அபிப்ராயம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.12.1925
383 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுயாான்யக் &53afidba Fraai
கவர்ன்மெண்டை முட்டுக் கட்டை போட்டு ஸ்தம்பிக்கச் செய்ய ஆரம்பித்த சுயராஜ்யக்கட்சி, கவர்ன்மெண்டுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த கட்டையும் அவிழ்த்து விட்டுவிட்டு, தனக்கே முட்டுக்கட்டை போட்டுப் பிரசாரம் கூட செய்ய முடியாமல் தன்னையே ஸ்தம்பிக்கச் செய்து கொண்டது.
சுயராஜ்யக் கட்சி இந்த நிலைமைக்குத்தான் வருமென்று முன்னமேயே பலர்: சொல்லிவந்தது உலகம் அறிந்ததே. ஆனாலும், ஆசை வெட்கமறியாது என்பது போல் பதவிகளும், உத்தியோகங்களும் பெற ஆசை கொண்ட வர்கள், உலகத்தார் முன்னிலையில் தங்கள் சுயமரியாதை எவ்விதம் மதிக்கப் படுகிறது என்பதையே லக்ஷியம் செய்யாமல், ஒன்றுகூடி பொய்ப் பிரசாரத்
தையும், பாமர ஜனங்களின் அறியாமையையும் தங்களுக்கு ஆஸ்தியாக வைத்துக்கொண்டு, பதவி வேட்டையையும், உத்தியோக வேட்டையையும் அடைய ஆரம்பித்தார்கள். இதன் பலனால் தேசத்தின் ராஜீய வாழ்விலுள்ள கட்டுப்பாடும், கண்ணியமும், மதிப்பும் நீங்கி சுயநலங்கள் மலிந்து, சுயராஜ்யக் கட்சிக்குள்ளாகவே போட்டிகள் ஏற்பட்டு, ஒருவரையொருவர் வெளிப்
படுத்திக் கொள்ளவேண்டியதாயிற்று.
சுயராஜ்யக் கட்சியார் பம்பாயில் கூடி ஒருவரையொருவர் வெளிப் படுத்தாமல் உத்தியோகம் சம்பாதித்துக்கொள்ள வழியுண்டா என்று யோசனை
செய்து பார்த்து, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது தான் ராஜியென்று சொல்வது.
அதென்னவென்றால், “நான் உன் யோக்கியதையை வெளியில் சொல்வதில்லை; நீ என் யோக்கியதையை வெளியில் சொல்ல வேண்டாம்” என்பதற்கிணங்க, கொஞ்ச காலத்திற்கு இரு கட்சியாரும் தங்கள் கொள்கை: களைப் பிரசாரம் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டார்களாம். இதன்கருத்து என்ன? பொது ஜனங்களுக்கு, இவர்கள் யோக்கிதையைத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதுதானே.
ஒத்துழையாமைத் தத்துவத்திற்குக் கேடு வருவதற்கும், இம்மாதிரி யாக ஒரு தீர்மானம் ஆமதாபாத்தில் செய்து கொண்டதுதான் காரண
மாயிருந்தது.
குடி அரசு - 1925 384
சுயராஜ்யக் கட்சிக்கும் அதே மாதிரி பம்பாயில் ஏற்பட்டு இருக்கிறது. பாமர ஜனங்களை ஏமாற்றித்தான் உத்தியோகம் பெற, காங்கிரசும், ராஜீயக் கட்சிகளும் இருக்கிறதே அல்லாமல், உண்மையான சுயராஜ்யம் பெறுவதற்கு அல்ல என்பதை இனியாவது பொது ஜனங்கள் உணர்வார்களாக.
குடி அரசு - கட்டுரை - 13.12.1925
385 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஈரோடு முணிசியாவிட்மு
ஈரோடு முனிசிபல் சேர்மன் மீது சில கவுன்சிலர்கள் சென்ற மாதம் ஈரோடு முன்சீப் கோர்ட்டில், உண்மையில் நிறைவேறிய தீர்மானத்தை
நிராகரித்து விட்டு , ஒழுங்கற்ற ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியதாக தனது மினிட்புஸ்த்தகத்தில் சேர்மன் குறித்துக் கொண்டாரென்றும் ஆதலால் அதை அமுலுக்குக் கொண்டுவரக்கூடாதென்றும், ஓர் தற்காலத்தடை உத்தரவு பெற்றதைப்பற்றி 15. 11. 25 “குடி அரசு” பத்திரிக்கையில் வாசகர்கள் வாசித்திருக்கலாம். அவ்வழக்கு நாளது மாதம் 8 -ந்தேதி ஈரோடு டி.மு. கோர்ட்டில் மறுபடியும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இது விஷயத்தில் பிரவேசிக்க முன்சீப் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை யென்றும், அக்ராசனாதிபதி என்ற ஹோதாவில் தான் செய்ததற்கு தானே தான் எஜமானென்றும், தன்னுடைய காரியத்தைச் சரியென்று நிரூபிக்க, சில கவுன் சிலர்களின் பிரமாண வாக்கு மூலங்கள் ஆஜர் செய்யப்பட்டிருக்கின்ற தென்றும், பிரஸ்தாபத் தடை உத்திரவினால், சிங்காரவனத்தின் வேலைகள். தடைப்பட்டு அதற்கென்று வாங்கி வைத்திருக்கும் செடிகளும், கொடிகளும் காய்ந்து வருகிறதென்றும், ஜில்லா கலெக்டரும் தனது காரியத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டிருக்கின்றாரென்றும் ஆகிய இவை முதலிய காரணங்களால், தடை உத்திரவை நீக்கவேண்டு மென்றும், சேர்மன் சார்பாக வாதிக்கப்பட்டது. மற்றொருபுறம், சேர்மன் சொல்லுவது தப்பென்று ௬ஜுப் படுத்துவதற்கும். ஒழுங்காய் நிறைவேறிய தீர்மானம் இன்னதெனக்கண்டு பிடிப்பதற்கும்.
மீட்டிங்கின் தீர்மானப் புஸ்தகமே போதுமான ஆதாரமென்றும், அதில் கிரமமான தீர்மானங்கள் எழுதப்பட்டும் அடிக்கப்பட்டுமிருக்கின்ற தென்றும் சேர்மன் செய்த காரியங்கள் சரியா, தப்பாவென்று சொல்லுவதற்கு சேர்மனே
தான் அதிகாரியென்று ஏற்படுமானால், உலகிலுள்ள முனிசிபாலிடி களெல்
லாம் சேர்மேனுடைய சொத்தாகிவிடலாமென்றும், கலெக்டருக்கு இதை
பற்றிக் கவுன்சிலர்கள் எழுதியதற்குத் தனக்கு அதிகாரமில்லையென்று கலெக் டரிடமிருந்து பதில் வந்துவிட்டதென்றும், மற்றபடி அவர் எழுதியிருப்பது ஒரு பக்ஷத்தை மாத்திரம் கேட்டுக்கொண்டு எழுதிய எழுத்துக்களென்றும் கவர்மெண்டுக்கு எழுதியதற்கு இன்னும் பதில் வராமலிருக்கின்றதென்றும், செடி கொடிகள் காய்ந்து போவதால் 20, 30 ரூபாய் நஷ்டம் தான் வரு மென்றும், தடைஉத்திரவை இப்போது நீக்கிவிட்டால், விவகாரம் தங்கள் பக்ஷ
மாய் ஜெயித்தால் ஆயிரக்கணக்கான நஷ்டத்தை ஈடு செய்ய முடியா
குடி அரசு - 1925 386
தென்றும், இம்மாதிரியான விஷயங்களில் நியாயஸ்தலத்திற்கு அதிகார மில்லாமற் போய்விட்டால், முனிசிபல் நிர்வாகமே பாழ்பட்டுப் போய்விடு
மென்றும், இது முதலான காரணங்களால், தடை உத்திரவை இவ் விவகாரம்
தீரும் வரையில் காயமாக்க வேண்டுமென்று சில கவுன்சிலர்களின் சார்பாக வாதிக்கப்பட்டது. கோர்ட்டார் இருவருடைய விவாதங்களைக் கேட்டு, இவ்விஷயத்தில் பிரவேசிக்கத் தனக்கு அதிகாரமிருக்கின்ற தென்றும், தற்
காலம் தன்முன் விஷயங்களிருக்கும் நிலைமையில், தடை உத்திரவைக் காயப்படுத்த வேண்டியது அவசியமென்றும் சொல்லி, இவ் விவகாரம் தீரும் வரை தடை உத்திரவைக் காயப்படுத்தி விட்டார். முனிசிபல் தீர்மானப் புஸ்தகத்தைச் சேர்மன் திருப்பிக் கேட்டபோது, எதிர் கவுன் சிலர்கள், அதைச் சேர்மெனிடம் கொடுக்கக்கூடாதென்றும், திருப்பிக் கொடுத்தால், அதில் ஏதாவது திருத்தங்கள் ஏற்பட்டு விடலாமென்றும், ஆக்ஷபித்ததின் காரணமாகத் தீர்மான புஸ்தகத்தில் கண்ட விஷயங்களை பொட்டகிறாப் படம் எடுத்துக்கொண்டு வாபீஸ் செய்யப்பட்டது.
குடி அரசு - கட்டுரை - 13121925
387 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுகோதயம் பத்திரிக்கை
சுகோதயம் என்னும் தமிழ் வாராந்தரப் பத்திரிகை ஆரணியிலிருந்து ஸ்ரீமான். வி.என். ரெங்கசாமி ஐயங்காரவர்களை ஆசிரியராகக் கொண்டு
சுமார் நான்கு வருட காலமாக தமிழ்நாட்டில் உலவி வருவது தமிழ் மக்கள்: அறிந்த விஷயம். அப்பத்திரிக்கையின் ஆசிரியர் யாதொரு ஊதியமும் இல்லாமல் கெளரவ ஆசிரியராய் இருந்துகொண்டு குறைந்த சந்தாவாகிய
வருடம். ரூ 2-8-0 வீதம் ஏழைகளும் படிக்கும்படியான கவலையின் பேரில், எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நடத்தி வந்திருப்பதைத் தமிழ்
மக்கள் பாராட்டாமலிருக்க முடியாது. அதனுடைய ராஜீயக் கொள்கைகள். தமிழ் நாட்டிலுள்ள மற்ற பெரும்பான்மையான பத்திரிக்கைகள் போல் காற்றடித்த பக்கம் சாயாமல் ஒரே உறுதியாகவே இருந்துவந்தது மற்றுமோர். பாராட்டத்தக்க விஷயம்.
வகுப்பு விஷயங்களில் ஒருக்கால் நமக்கும் அதற்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருந்தபோதிலும், ராஜீய விஷயங்களில் பெரும்பாலும் மகாத்மாவையும், சில சமயங்களில் தீவிர ஒத்துழையா தத்துவத்தையுமே அனுசரித்து வந்திருக்கிறது. அவ்விதப் பத்திரிக்கை இது சமயம் சென்னை பிரசிடென்ஸி மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு ஒரு வழக்கில் இழுக்கப்பட்டு பத்திராதிபர்களின் உரிமைக்கும், சுயமரியாதைக்கும் பங்கம் வரத்தக்க மாதிரியில் கஷ்டப்படுத்தப்பட்டு வருகிறது. இது சமயம் பொறுப்புள்ள பத்திராதிபர்களும், பத்திரிக்கையின் சுதந்திரத்தில் கவலையுள்ளவர்களும் முன்வந்து, டெ பத்திரிகைக்கு ஆதரவு அளிக்கவேண்டியது ஒவ்வொரு வரின் கடமையென்பதை நாம் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்: ளுகிறோம். சுகோதயம் பாதுகாப்பு நிதிக்காக நம்மால் கூடிய ஓர் சிறுதொகை: யாகிய ரூ.10 இன்று அனுப்பியிருக்கிறதை, ஷி பத்திராதிபர் அன்புடன் ஏற்றுக்கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். சுகோதயம் பத்திரி கைக்கு வெற்றி உண்டாகுக.
குடி அரசு - குறிப்புரை - 13.12.1925
குடி அரசு - 1925 388
காங்கிரஸ்
நமது நாட்டில் ராஜீய முன்னேற்றங்களுக்கும், சமுதாய முன்னேற் றங்களுக்கும், பொருளாதார முன்னேற்றங்களுக்கும், மகாத்மாவின் ஒத்துழை யாமை சம்பந்தப்படாததற்கு முன் உள்ள காங்கிரஸ் காலங்களில், இவற்றிற்குத் தனித்தனியாக ஸ்தாபனங்களும், மகாநாடுகளும் நடந்து வந்தன. ஆனால் மகாத்மா அவர்கள் காங்கிரஸில் பிரவேசித்து காங்கிரஸின் மூலமாக ஒத்துழையாமையை வலியுறுத்தியபின், ராஜீய, சமுதாய, பொருளாதார விஷயங்களோடு மாத்திரமல்லாமல், இன்னும் அநேக நன்மைக்கான காரியங்களும் சேர்த்ததுதான் சுயராஜ்யமென்றும், அவ்வித சுயராஜ்யத்தை
காங்கிரஸ் மூலமாகவே அடையக்கூடிய நிலைமையில் கொள்கைகளும் திட்டங்களும் அமைத்து அவற்றிற்கனுகூலமான பல காரியங்கள் தேசத்தில் நடைபெற்று வந்தன. ஆனால், மகாத்மா அரசாங்கத்தாரால் சிறையிலடைப் பட்ட பின்பு, மகாத்மாவின் கொள்கைக்கும், திட்டங்களுக்கும் விரோதமா யிருந்து, அதை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டு சமயத்தை
எதிர்பார்த்து, மகாத்மா கூடவே இருந்துவந்த சில பேர் மகாத்மா திட்டத்தை ஒழிக்க வெளிக்கிளம்பி பொதுச் சட்ட மறுப்புக்கு ஜனங்கள் தயாராய் இருக் கின்றார்களா? இல்லையாவென்பதைக் கண்டறிவதென்னும் சாக்கைக் கொண்டு “சிவில் டிசொபிடியன்ஸ்” கமிட்டி என்ற சட்டமறுப்புக் கமிட்டி யெனப்பெயர் வைத்துக்கொண்டு மகாத்மா செய்துவந்த காரியங்களையெல் லாம் அதற்கு நேர் விரோதமாய் இருந்து அடியோடு கவிழ்ப்பதற்கான முயற்சிக்கு அதை உபயோகப்படுத்திக்கொண்டு, ஒத்துழையாமைக்கு விரோதமான தத்துவங்களில் புகுந்து, மகாத்மாவின் உழைப்பால் இரண்டு, மூன்று வருடங்களில் ஏற்பட்ட நன்மைகளையெல்லாம் இடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.
கயா காங்கிரஸில் ஒத்துழையாமை கட்டிடம் உருக்குலையத் தொடங்கி, டில்லியில் அஸ்திவாரமே தளர்ந்து, காக்கினாடாவில் தரை மட்ட மாக்கி விடப் பட்டது. ஜெயிலிலிருந்து வந்த மகாத்மா காந்தி அவர்கள், தான்
சிறைக்குச் சென்றபிறகு, தனது கட்டிடத்தை இடிக்கவிடாமல் காக்க வேண்டு. மென்று நினைத்துப் பல வழிகளிலும் அவஸ்தைப்பட்டு தங்களால் கூடுமான வரையில், அதன் சின்னமாவது தேசத்தில் இருக்கட்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு வந்தவர்களை அலட்சியம் செய்து, இடித்தவர்கள் தானும் கூடவே சேர்ந்து கொண்டு, கொஞ்ச நஞ்ச மீதியுள்ள ஒத்துழையாமையின்
389 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அஸ்திவாரங்களையும் இடித்தெறிய “கல்கத்தா பேக்ட்” மூலமாக முகூர்த்தம் வைத்து, பெல்காம் காங்கிரசில் அடியோடே அஸ்திவாரத்தையும் தொலைத்து, அதை உழுது, ஒத்துழைப்பு விதையையும் விதைத்து, தானே கூட இருந்து தண்ணீரும் பாய்ச்சி, பாட்னாவில் பூவும் பிஞ்சும் விடக்கூடிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்.
மகாத்மா அவர்களை, இம்மாதிரி மூன்று வருடத்து வேலையை இப்படி இடித்துவிடலாமாவென்று கேட்டால் என்னுடைய இயக்கத்துக்கு, விரோதமாயிருந்தவர்களின் செய்கை ஒரு புறமிருந்த போதிலும், என்னு டைய இயக்கத்துக்கு அனுகூலமாயிருந்து எனக்கு உண்மையாக உதவி செய்து கொண்டு வந்த என்னுடைய பிரதம சிஷ்யர்கள் என்போரே ரிப்பேர். செய்யக் கூடாத நிலைமையில் கெடுத்துவிட்டதால், ரிப்பேர் செய்ய முடியாத இடிபட்ட ஸ்தாபனத்தை நான் அதை அடியோடு ஒழிப்பதைத்தவிர வேறு வேலை செய்வதற்கில்லை. ஏனெனில்,
1. நான் சிறைக்குப் போன உடனே நான் செய்து கொண்டு வந்த காரியத்தை விட்டு விட்டு நான் யாரை முக்கியமாய் நம்பியிருந் தேனோ அவர்களே சட்டமறுப்புக் கமிட்டிக்கு இணங்கி விட்ட தொன்று.
2. கயாவில் சட்டமறுப்பு ஆரம்பிப்பதென ஓர் தீர்மானம் செய்து கொண்டு, பொது ஜனங்களை ஏமாற்றிப் பணம் வசூல் செய்து சொன்னபடி நடக்காமல், வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து பொது ஜன நாணயத்தை இழந்ததொன்று.
3. பிறகு, கொஞ்ச காலம் வரையிலும் பிரசாரத்தை நிறுத்தி வைத்திருப் பதென்று ஒப்புக்கொண்டு பொது ஜனங்களுடைய கவனத்தை வேறுவழியில் செல்ல இடங்கொடுத்ததொன்று.
4. டில்லியில் தனிக்காங்கிரசொன்றை ஏற்படுத்தி, அந்தக் கொள்கைக்கு விரோதமான காரியங்களை அநுமதித்ததொன்று.
5. பிறகு, காக்கினாடாவில், நான் சீக்கிரத்தில் விடுதலையாகி வந்து விடுவேனென்ற விஷயம் தெரிந்திருந்தும் எனது சகாக்கள். பொது ஜனங்களை ஏமாற்றி, எனது தத்துவத்துக்கு விரோதமான காரியங்களை ஒப்புக்கொள்ளும்படிக் கட்டாயப்படுத்தினதொன்று,
இந்த நிலைமையில் நான் ஜெயிலிலிருந்து வந்த பிறகு, வேறொன்
றும் செய்வதற்கில்லாமல், ஒத்துழையாமையை ஒழித்துவிடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லையெனக் கண்டுகொண்டேன். எனது இயக்கத்தின்
குடி அரசு - 1925 390
எதிரிகளின் மனப்பான்மை ஒரு விதமாயிருந்த போதிலும் எனது சகாக்களிலேயே மாகாணங்களுக்கு இரண்டொருவர் தவிர மற்றவர்களுக் கெல்லாம் ஒத்துழைப்பு மனப்பான்மையே வளர்ந்துக் கொண்டு வருவது
நன்றாய்த் தெரிகிறதென்றும், ஆதலால் ஒத்துழைப்புக்கே வழியைத் திறந்து விட்டுவிட வேண்டுமென்னும் முடிவுக்கு வந்துவிட்டேன். சரியாகவோ, தப்பாகவோ நான் கட்டின கட்டிடத்தை இடிக்க எனக்கு பாத்தியமுண்டு. இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் வேண்டுமானால் தாங்களே வேறு கட்டிடம் கட்டிக் கொள்ளட்டும் என்றும் சொல்லி முடிந்துவிட்டதோடு தேசத்தின் நன்மையைக் கோரி, முன் சொன்ன ராஜீய - சமூக - பொருளாதார விஷயங்களுக்கு காங்கிரஸை எதிர்பார்ப்பது உபயோகமற்ற காரியமென்றும் கருதி, தனது முக்கியத் திட்டங்களாகிய இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை, மதுவிலக்கு. தீண்டாமை முதலிய காரியங்களையும் காங்கிரஸ் திட்டத்திலிருந்து அப்புறப்
படுத்தி விட்டு, இந்நான்கில் ஏதாவதொரு காரியத்தை மாத்திரம்தான் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி, நூல் நூற்கிற விஷயத்தை மாத்திரம் தன் சொந்தத்தில் வைத்துக்கொண்டு மற்றவைகளை விட்டு மெல்ல விலகிக் கொண்டார்.
இந்த நிலைமையில் காங்கிரசானது பழைய கால காங்கிரஸை விட சாதாரண நிலைமைக்கு வந்து விட்டது. காங்கிரசின் கொள்கை இந்திய மகா ஜனங்கள் சுயராஜ்யமடைய வேண்டுமென்றும். அதற்கு “நீதியும் அமைதியும்” பொருந்திய எல்லா முறைகளையும் அனுசரிக்க வேண்டு மென்பதுதான்.
இதற்குத் திட்டமாக தற்காலம் காங்கிரசிலிருப்பது, “ சட்ட சபைகளைக் கைப்பற்றி, அவற்றை சுயராஜ்யத்திற்கு ” உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
நமது நாட்டில் ராஜீய விசயமாக மற்றும் பல ஸ்தாபனங்களுமிருக் கின்றன.அவைகளில் முக்கியமானது மிதவாதக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி, ஐக்கிய தேசீயக் கட்சி, பிராமணரல்லாதார் தேசீயக் கட்சி, சுயேச்சைக் கட்சி, பெஸண் டம்மையார் கட்சி முதலியன.
இவற்றில் ஒவ்வொரு கட்சியும் மேற்கண்ட காங்கிரஸ் கொள்கைக்கும் மாறுபட்டவை அல்லவே அல்ல. உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சியும், பிராமண: ரல்லாத தேசீயக் கட்சியும் தனது ராஜீயக் கொள்கையை காங்கிரசின் கொள் கையைப் போலவே ஏற்படுத்திக் கொண்டிருப்பதோடு ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டும், சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும் எவ்வளவு சீக்கிரத்தில் பெற முடியுமோ அவ்வளவு விரைவில் சுயராஜ்யம் பெறுவதென்ற கொள்கையை உடையதாயிருக்கிறது.
ராஜீய விஷயத்தில் மற்ற கட்சிகளுக்கும், காங்கிரசுக்கும் வித்தியாச மிருந்ததெல்லாம் ஒத்துழையாமை திட்டம் ஒன்றுதான். இது பெல்காமில் எடுபட்டாகிவிட்டது. சட்டத்திற்குக் கட்டுப்பட்டு சுயராஜ்யம் பெறுவதையும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதற்கறிகுறியாக சட்டசபைப் பிரவேசத்தையும்
391 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -1
அனுமதித்துவிட்டது. பிரிட்டிஷ் சம்பந்தமில்லாமலே சுயஆக்ஷி இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் அபிப்பிராயமல்லவென்பதற்கு அறிகுறியாக
ஜனாப் மெளலானா, ஹஸரத் மோகினி முதலானவர்கள் கொண்டு வந்த சுயேச்சைத் தீர்மானத்தையும் காங்கிரஸ் தோற்கடித்து விட்டது.
ஆதலால், தற்காலமுள்ள காங்கிரஸ் கொள்கைகளும், அதன் திட்டமும், ஜஸ்டிஸ் ராஜீயக் கொள்கைகளையே அனுசரித்து இருப்பதுடன் அல்லாமல், காங்கிரஸ் கொள்கையைவிட ஜஸ்டிஸ் கொள்கையானது ஒரு அடி முற்போக்குடையதாயிருக்கின்றதென்று கூட சொல்லலாம். எப்படி யெனில் “ காலதாமதமில்லாமல் சீக்கிரம் சுயராஜ்யம் பெற வேண்டும்” என்
கிற ஓர் அவசர காலாவதியும் ஜஸ்டிஸ் திட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி, சர்க்காரோடு ஒத்துழைப்பதிலும் சுயராஜ்யக் கட்சியினுடைய அனுபவமானது ஜஸ்டிஸ் கட்சி முதலியவைகளை ஒத்ததாகவே இருக்கிறது. சுயராஜ்யக் கட்சியார், சர்க்கார் கமிட்டிகளிலும் அங்கம் பெற்றிருக்கிறார்கள்.
சர்க்கார் சம்பளம் பெறத்தக்க உத்தியோகப் பதவிகளிலும் அமர்ந்திருக் கிறார்கள்; சர்க்காரால் அளிக்கப்பட்டுள்ள பட்டங்கள் பெற்றவர்களும், சுயராஜ்யக் கட்சியிலிருக்கின்றார்கள். முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, தாலூகா போர்டு முதலியவைகளில் சர்க்கார் நியமன ஸ்தானத்தை ஏற்றுக் கொண்டவர்களும் சுயராஜ்யக் கட்சியில் இருக்கின்றார்கள். கதரில் நம் பிக்கை இல்லாதவர்களும், சுயராஜ்யக் கட்சியிலிருக்கின்றார்கள். மதுபானம் உற்பத்தி செய்கிறவர்களும், அதனை விற்கிறவர்களும், அதை விளம்பரப் படுத்துகிறவர்களும், அயல்நாட்டுத் துணி வியாபாரிகளும், பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்று சொல்லுகிறவர்களும் சுயராஜ்யக் கட்சியில் இருக்கின்றார்கள். இத்தகைய சுயராஜ்யக் கட்சியாரை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பிரதான ஸ்தானமும் அளிக்கப்பட்டாய் விட்டது.
இந்த நிலைமையில், இந்தியாவிலுள்ள ராஜீய ஸ்தாபனங்கள் சகலமும்
- காங்கிரஸ் உட்பட ஒரே கொள்கையைத்தான் கொண்டதாயிருக்கிறது. ஆகையால் தேச முன்னேற்றத்திற்குக் காங்கிரஸ் மகாசபை யொன்றுதான் உள்ளது என்று சொல்வது இனி பொருளற்ற வார்த்தையாகும். எனவே பொது
மக்கள், காங்கிரஸில் சேராவிட்டால் நாம் தேசபக்தர்களாக மாட்டோமோ வென்று பயப்பட வேண்டியதும்,ஜஸ்டிஸ் கட்சியிலிருந்தால் காங்கிரசில் இருப்பவர்களைவிடத் தாழ்ந்தவர்களாகிவிடூ௭வாமோமென்றும் பயப்ப டுவதும் அறியாமையேயாகும்.
இந்தியர் ஒவ்வொருவரும் சுயமரியாதை அடைவதும், விடுதலை பெறுவதும், தனது முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும். இந்நோக்கம் கொண்ட ஸ்தாபனம் எதுவோ அதெல்லாம், தேசீய காங்கிரஸ்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.12.1925
குடி அரசு - 1925 392
ஸ்ரீமாண் திரு.வி.கலியாண௬ந்தா முதலியார்
காஞ்சீபுரம் மகாநாட்டு விஷயத்தைப் பற்றி நமது பத்திரிக்கையில் “காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்” என்னும் தலைப்பின் கீழ் எழுதி வந்தோம். இனி, திரு.வி.கலியாணசுந்தர முதலியார் என்னும் தலைப்பின் கீழ் எழுத அவசியமேற்பட்டுப் போனதைப் பற்றி நாம் இதுவரையில் அடைந்திராத.
வருத்தத்தையும், கவலையையும் உண்மையிலேயே அடைகிறோம். ஆனா
லும், கடமையைவிட்டு நழுவி அசத்தியத்தைத் தாண்டவமாடச் செய்ய மனம் ஒருப்படேனென்கிறது..
சென்ற வாரம் ஸ்ரீமான். முதலியாரவர்கள் தன்னுடைய தலைமைப் பதவியை மனச்சாட்சிப்படிநடத்தினாரா? என்கிற விஷயத்தைப் பொது ஜனங்
கள் அறிவதற்காக, பல விஷயங்களுக்கு, ஸ்ரீமான். முதலியாரைப் பதிலெழு
தும்படி எழுதியிருந்தோம். அவற்றிற்கு நேர்முகமாகப் பதில் சொல்லாமல், இரண்டு, மூன்றுவிஷயங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றிச் சில விஷயங்களை எழுதியிருக்கிறார். அவைகளில் பெரும்பான்மை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோலவேயிருக்கிறது. அதற்குப் பதில் ருஜுவோடு எழுத வேண்டியது நமது கடமையாய்ப் போய் விட்டதாதலால் பின்னால் அவற்றைப்பற்றி எழுதுவதோடு, ஸ்ரீமான். முதலியார் விடை அளிக்காமல் விட்டுவிட்ட விஷயங்களை, மறுபடியும் அவர் ஞாபகத்துக்குக் கொண்டுவர எண்ணியிருக்கிறோம்.
இதன் மத்தியில், இதுவிஷயத்தைப்பற்றி பல கடிதங்கள் நமது
கருத்தைத் தழுவி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிற்கு நமது பத்திரிக்கை யில் இடமில்லாததற்கு வருந்துகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.12.1925
393 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
*பிராமணர்கனைவிட வன்னைக்காரணோ மேல்”
கல்பாத்தியில் தீண்டாத வகுப்பாரென்று சொல்லப்படும் இந்து சகோதரர்களை அந்தத் தெருவில் நடக்கக்கூடாதென்று 144 தடை உத்திரவு பிறப்பித்தது பற்றி இச்செய்கைக்கு ஸ்தல அதிகாரிகள் பொறுப்பாளிகளல்ல வென்றும், சென்னை கவர்ன்மெண்டாரே இச்செய்கையின் பெரும் பாகத்
திற்குப் பொறுப்பாளிகளென்றும், அதிலும் ஸ்ரீமான். ஸர்.சி.பி.இராமசாமி ஐயர் என்கிற ஓர் பிராமண கனவான் சட்ட இலாகாத் தலைவராயில்லாமலிருந்தால், இம்மாதிரி காரியங்கள் நிகழ்ந்திருக்காதென்றும், பொதுஜனங்கள் அபிப் பிராயப்பட்டிருந்த விஷயமானது, இப்போது அடியோடு பொய்யென்று சொல்வதற்கில்லாமல், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, சென்னை சட்டசபையில் கேட்ட கேள்விகளினாலும், அதற்கு ஸர்.சி.பி. இராமசாமி அய்யர் அளித்த விடைகளினாலும் இருக்கிறது. அதாவது:- பாலக்காடு மாஜிஸ்திரேட் 144 உத்திரவு போடும்படி கவர்ன் மெண்டார் தூண்டவில்லையானால், கவர்ன் மெண்டுக்கும், பாலக்காடு மாஜிஸ் திரேட்டுக்கும் நடந்த கடிதப் போக்கு வரத்துக்களை காண்பிக்கமுடியுமா என்ற கேள்விக்கு, ஸர்.சி.பி. இராமசாமி
ஐயர், அக்கடிதப் போக்குவரத்துகள் இரகசியமானபடியால் காட்ட முடியா தென்று பதிலிறுத்தியிருக்கிறார்.
பாலக்காடு மாஜிஸ்திரேட் கல்பாத்தியில் இவ்விதமான உத்திரவு போட வேண்டிய அவசியமில்லையென்று ஒரு சமயத்தில் வெளியிட்டிருக்கிறாரா? இல்லையா? என்று ஸ்ரீமான். சி.ஆர்.ரெட்டி கேட்ட கேள்விக்கு, சட்டமெம்பர், ஸர்.இராமசாமி ஐயர் தான் பதில் சொல்லத் தயாராயில்லை யென்று சொல்லி
விட்டார்.
இந்த கல்பாத்தி விஷயத்தில் என்ன செய்வதென்பதைப் பற்றி கவர்ன் மெண்டை பாலக்காடு மாஜிஸ்திரேட் அபிப்பிராயம் கேட்டாரா? இல்லையா? என்று ஸ்ரீமான். சசிபூஷண ராவ் கேட்ட கேள்விக்கு, சட்ட மெம்பர் ஆம் என்று சொன்னதோடு, பொது நன்மையை உத்தேசித்து, வெகு காலமாக நடந்த வர்த்தமானங்களை வெளியிட தாம் தயாராயில்லையென்று சொல்லிவிட்டார்.
இந்தக் கேள்விகளும், பதில்களும் பொது ஜனங்களைச் சர்க்காரிடத்
திலும், பிராமண சட்ட மெம்பரிடத்திலும் சந்தேகங் கொள்ளாமல் எப்படி
குடி அரசு - 1925 394
இருக்கச் செய்யும்? இந்த இந்திய பிராமணர் இருந்த ஒரு ஸ்தானத்தில் ஸ்ரீமான்கள். எம்.ஸி.ராஜாவோ, ஆர். வீரையனோ இல்லாமலிருந்தாலுங்கூட ஒரு வெள்ளைக்கார மெம்பராவது இருந்திருப்பாரானால், இம்மாதிரி சம்பவங் கள் நடந்திருக்குமா வென்பதை யோசிக்கும்போது பல காரணங்களுக்கு, பிராமணர்களைவிட வெள்ளைக்காரர் கொஞ்சம் மேலென்றுதான் தோன்று
கிறது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.12.1925
395 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
செண்ணை தேர்தல் கலனைம்
சென்னையில் நடந்த கார்ப்போரேஷன் தேர்தல்களின்போது, கலவரங்களும், பலாத்காரச் செய்கைகளும் நடந்ததாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் காணப்பட்டு வந்தன. ஆனால் அவற்றின் உண்மையை ஜனங்கள் அறியாதபடி ஓர் ககஷியாரைப் பற்றியே குற்றமாய் நினைக்கும்படி சென்னை பிராமணப் பத்திரிக்கைகளும், சுயராஜ்யக் க௯ஷி பிராமணர்களும், சூழ்ச்சிப்பிரசாரம் செய்து வந்தனர். அதன்பின் இது சம்பந்தமாய் ஏற்பட்ட நீதிஸ்தலத்தின் விசாரணையின் போக்கைக் கவனித்தவர்களுக்கு பலாத் காரத்துக்கும், குழப்பத்திற்கும் யார் பொறுப்பாளிகளாயிருந்தார்க ளென்பது விளங்கியிருக்கும். சுயராஜ்யக் கட்சியார் மீது, மற்ற ககஷியார் சென்னை பிரசிடென்ஸி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த இரண்டு மூன்று விவகாரங்களின் முடிவினால் சுயராஜ்யக் கட்சியார்தான் அதற்குப் பொறுப் பாளிகளென்பதை விளக்கியிருக்கிறது.
அதாவது:- கொஞ்ச நாளைக்கு முன் பைசலான ஒரு வழக்கில் சுயராஜ்
யக் கட்சியார் ஒருவர் மற்றக் கட்சியாரைப் பிடித்துத் தள்ளியதும், திட்டியதும் ருஜுவானபோதிலும், தேர்தல்களில் இவைகளெல்லாம் நடப்பது சகஜந்தா னென தீர்ப்புச் சொல்லப்பட்டுவிட்டது.
மற்றொன்றில், அடைத்து வைத்தது பற்றி விஷயங்கள் தெளிவான போதிலும், அதுவும் அவ்வளவு பெரிய குற்றமல்லவென்று தள்ளிவிடப் பட்டது. மற்றொன்றில், எதிரிகள் தங்கள் நடவடிக்கைக்கு வருத்தப்படுவதி னால் வழக்குத் தொடர்ந்தவர் வாபீஸ் வாங்கிக்கொள்ளவே எதிரிகள். விடுவிக்கப் பட்டனர்.
இவ்விஷயங்கள் இப்படியிருக்க, பொது ஜனங்களுக்கு ஒரே கட்சியார். பேரில் குற்றம் காணும்படியாக பிரசுரஞ் செய்த பிராமணப் பத்திரிகைகளின் சூழ்ச்சிகளை நினைக்கும்போது அவைகளுக்கு நம் நாட்டை ஆக்கவும், அழிக்கவும் சக்தியிருக்கின்றதென்பதை மறுக்க முடியாது. ஆதலால், பொது மக்கள் பிராமணப் பத்திரிக்கைகளின் விஷமப் பிரசாரங்களைக் கண்டு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்துவிடாமல், நிதானமாய் யோசித்து உண்மை அறிய பிரயத்தனப்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 20.12.1925
குடி அரசு - 1925 396
நம்பிக்கை துரோகம்
தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத்
திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ் வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல.
சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற
10 வருடங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார். நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர். களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லா தாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும்,
இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் ஸ்ரீமான் டி.எம்.நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமான சாக்ஷியம் சொல்லும்படி செய்தது மில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாதவர்களுக்குப் பிரதிநிதி களல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச் செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லா தாரை தங்களிஷ்டம்போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரசைப் பின்பற்றுவது: தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது; பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே.
இக்கொள்கைகளைத் தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்ததோடல்
லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவே யிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்பொழுது “மீக்கு பெப்பப்பே. நீவு தாத்தாக்கு பெப்பப்பே”” என்பது போல்
397 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு,
இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற் குக்கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும்,மனச் சாட்சியையும் கூடமறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள். ஜஸ்டிஸ் கக்ஷியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச்
சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது.
ஆனால், சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்ட
வுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது.
ஈரோட்டில், சென்னை மாகாணச் சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷ யாலோசனைக் கமிட்டியில் ஸ்ரீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரி யாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரத ராஜுலு நாயுடுவாலும், வி.ஓ.சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார்: செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு வாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.
ஸ்ரீமான்கள் முதலியாரும் நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர். ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணம் சங்கக் கட்சியில் சேர்ந்தது. பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்: களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். இப்படியிருக்க இன்றையதினம் இவர். களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது சாண் போனா லென்ன ? முழம் போனாலென்ன என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது. ஸ்ரீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்க முண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடி வாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத்தெரியும்.
நமது முதலியாரோ, துணிந்து “ வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப்
குடி அரசு - 1925 398
படியே கிடைத்து, அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?” என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார்.
ஸ்ரீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப் பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகி விட்டது போலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பது போலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலும் உபதேசிக்கிறார்.
இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலை யுரிமையையும் அடைய உத்தேசங்கொண்டு ஆரம்பித்த “தேசபக்தன்” ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த “நவசக்தி” ஆசிரிய ரமான ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா ? இது தருமந்தானா ? என்று கேட்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய் விட்டது! இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாணகுந்திர முதலியா ரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்?
பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா? வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேப னைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது? இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்லுகிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும்.
ஸ்ரீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று
பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள். அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா ? என்று முதலியாரை வணக்கத்
துடன் கேட்கிறோம். இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு ?
துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்திக் கொள்வது ஜனங்களை
399 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை:
- சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும் மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக் கூடிய சாதனமாகப் போய்விட்டது.
இப்பொருள் கொண்ட சாதனங்களை ஸ்ரீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது. ஆனால், நமது ககமையை நினைக்
கும் போது சும்மாயிருக்க முடியவில்லை.
குடி அரசு - கட்டுரை - 20.12.1925
குடி அரசு - 1925 400
ஒத்துழையாமை மருந்து
ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், நிர்மாணத் திட்டத்தில் ஒன்றாகிய மதுவிலக்குக்கு சட்டசபையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு வந்திருப்பதாக அவர் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி யிருக்கும் கட்டுரைகளிலிருந்து வாசகர்களுக்கு விளங்கியிருக்கும். அத் தோடு தீண்டாமை ஒழிப்பதற்கும், கோர்ட்டுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகக் கருதியிருப்பதாய் அவர் சென்ற சில தினங்களுக்கு முன் சித்தூர் ஜில்லா சப்டிவிஷனில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஓர் ஆதி திராவிட ஆலயப்பிரவேச வழக்கில் ஆஜராகி ஜெயம் பெற்றதன் மூல
மாகவும் அறியலாம். இனி மகாத்மாவின் மூவகைப் பகிஷ்காரத்தில் முக்கிய மாயுள்ளது, சர்க்கார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடாது என்பதுதான். ஆனால் அது அநுபவத்தில் இப்போது அடியோடு இல்லவே இல்லை. அதில் இப்போது நம்பிக்கை வரவேண்டிய அவசியமும் இல்லை. கோர்ட்டு, சட்டசபை ஆகிய இவ்விரண்டிலும் ஸ்ரீமான் ஆச்சாரியார் அவர். களுக்கு நம்பிக்கை வந்திருப்பது தற்கால நிலைமையில் அதிசயமுமல்ல, அது
ஓர் வகையில் குற்றமுமல்லவென்றே சொல்லுவோம். ஆனால் காரியத்தில் இவையிரண்டும் தேசீய சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுமா என்பதுதான் நமது கவலை. ஸ்ரீமான் சி.ஆர். தாஸ் அவர்கள் சட்டசபையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற காலத்தில்,சட்டசபையால் தேசத் திற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று மனப்பூர்வமாய் நம்பித்தான் நாம் ஆக்ஷபித்தோமேயல்லாமல் மற்றபடி ஸ்ரீமான் தாஸ் முயற்சிக்கு விரோத
மாய் இருக்க வேண்டுமென்கிற எண்ணத்தோடல்ல. அதுபோலவே தேசத் துக்காகத் தொண்டு செய்த நிரபராதிகளை நமது சர்க்கார் வேண்டு மென்றே கூட்டங்கூட்டமாய்ப் பிடித்துத் தண்டித்து ஜெயிலிலடைத்த காலத்தில் அநேகர் எதிர் வழக்காடும் படி அறிவுறுத்தியபோதும் சர்க்கார் கோர்ட்டு களில் தேசீய சம்பந்தமான வழக்குகளுக்கு நியாயங்கள் கிடைக்காதென்கிற உறுதியின் பேரில்தான், நாம் எதிர் வழக்காட மறுத்தோமேயல்லாமல், வேண்டு மென்றே சிறைக்குப்போக வேண்டுமென்கிற எண்ணத்தினாலல்ல. அப்படி யிருக்க, இவ்விரண்டு தத்துவங்களும் இப்பொழுது நம்பிக்கைப் பாத்திரமாகி விட்டதற்கு காரணம் என்னவென்று யோசிக்கும் போது, மகாத்மா காந்தி தனது இயக்கம் வெற்றிப்பெற முடியாமற் போனதற்குக் காரணம் படித்தவர்களென்று சொல்லப்படுவோரின் மனப்பான்மையை மாற்ற தனக்குச் சக்தியில்லாமல்
401 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
போனதுதானென்று பல முறையும் சொல்லி வந்திருப்பது ஸ்ரீமான்.
சி. ராஜகோபாலாச்சாரியாரின் புது தோற்றத்தால் கல்லின் மேல் எழுத்து போலாகி விட்டது. அப்படி இல்லையென்று சொல்ல வேண்டுமானால் ஒத்துழையாமை தத்துவம் பொய்த்துப்போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்விதம் ஸ்ரீமான் ஆச்சாரியார் சொல்ல மாட்டார்.ஆனால் ஒரு
சமயம் சட்டசபைகளில் பொறுப்பில்லாதவர்களும், சுயநலக்காரர்களுமாகக் கூடிக்கொண்டு ஒருவரையொருவர் தேசத்தின் பேரால் வைது கொண்டும் வழக்காடிக்கொண்டும், சர்க்காருக்கு அனுகூலமாய் இருப்பதின் பலனாய், பொது ஜனங்களைப் பிரிப்பதற்கும், வகுப்பு வேற்றுமைகளையும் உண்டாக்கு வதற்கும் காரணமாயிருக்கிறது. ஆதலால் பொறுப்புள்ள ஒரு சிலர் இந்த ஸ்தானங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தேச நலத்திற்கு நன்மையொன்று மில்லாவிட்டாலும், கெடுதியாவது உண்டாகாமல் மதுவிலக்கு என்கிற ஒரு நல்ல காரியத்தின் பெயரையாவது சொல்லிக் கொண்டு, காலத்தைக் கடத்தி வரலாம் என்று ஒரு சமயம் கருதி இருக்கலாம். அக்கருத்து ஒழுங்கான தென்றே வைத்துக் கொண்டாலும், காரியத்தில் அது எவ்வளவு தூரம் சாத்தியப்படுமென்பதைக் கவனிக்க வேண்டும். இப்பொழுது சட்டசபையில் நாலைந்து கொள்கைக்காரர்கள் இருக்கின்றார்கள். ஒன்று ஜஸ்டிஸ் கட்சியா ரென்போர் மற்றொன்று சுயராஜ்யக்கட்சியார். இன்னுமொன்று சுயராஜ்யக் கட்சியில் சேராமலிருக்கும் சிலரும், ஜஸ்டிஸ் கட்சியில் சேராமலிருக்கும்
சிலரும், இவ்விரண்டிலிருந்து பிரிந்து வந்த சிலரும் ஆக மூன்று முக்கியக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் மதுவிலக்கு என்கிற ஒரே காரியத்திற்குப் பாடுபடுவதைத் தவிர வேறு காரியம் பார்க்கக் கூடாதென் பதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஒத்துழையாமை மனப்பான்மை யுள்ள ஆசாமிகளைப் பிடித்து சட்டசபைக்கு புதிதாக அனுப்பலாமென்று நினைப்போமேயானால், ஒரு நாலைந்து பேருக்கு மேல் சட்டசபையில் ஸ்தானம்பெற சவுகரியமே கிடைக்காது. ஒவ்வொரு ஜில்லாக்களிலும் ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம், இருபதினாயிரம் செலவு செய்து கொண்டு சட்ட சபைக்குப் போகிற சுயநலப்புலிகள் போட்டி போடும்போது பெரும்பாலும் தாராளமான பணம், காசு இல்லாத வெறும் ஆசாமியாயிருக் கின்ற ஒத்துழையாதாருக்கு எப்படி ஸ்தானங்கள் கிடைக்கும்? அது மாத்திர மல்லாமல், ஒத்துழையாதாருக்குள்ளேயே வகுப்பு விஷயங்களில் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கை ஏற்பட்டு ஆளுக்காள் ஜாக்கிரதையாய் இருக்கிற நிலைமை யில் இந்தக் காரியம் ஒழுங்காய் நடைபெறுமென்று எப்படி என்ன
முடியும்? இப்பொழுதிருக்கிற வகுப்புக் கட்சி வாதங்களெல்லாம் அதிலும் பிரவேசிக் குமா? பிரவேசிக்காதா? இவ்வளவையும் தாண்டிக் கொண்டு சட்டசபையில் போய் பத்துப்பேர் உட்காருவதாய் வைத்துக்கொண்டாலும், நான்கு வருடமாய் ஒத்துழையாமையின் நிமித்தம் மகாத்மா காந்தி அவர் களும் இன்னும் பல தேசபக்தர்களும் செய்த தொண்டுகளையும், தியாகத்தை
யும், அனுபவித்த கஷ்டத்தையும், சிறைவாசத்தையும் தங்கள் சுய நன்மைக்கு
குடி அரசு - 1925 402
அனுபவித்துக் கொள்ள சுயராஜ்யக் கக்ஷியாரென்கிற ஒரு கூட்டத்தார். எப்படித் திடீரென்று வந்து உட்கார்ந்துக் கொண்டார்களோ, அதுபோலவே சட்டசபையிலும் ஒரு பத்துபேர் கஷ்டப்பட்டு சட்டசபையில் ஸ்தானம் பெற்று வாதாடுவதினால் சர்க்காருக்கு ஏதாவது இடைஞ்சல் நேரிடுவதாய் தோன்றி, அவர்கள் ஏதாவது ஒன்றிரண்டு துண்டு வீசுவதாயிருந்தால் அதற்கு ஆசைப்பட்ட சில ஆசாமிகள், அதை உபயோகப்படுத்திக் கொண்டு நம் காரியத்தை கெடுக்க மாட்டார்களென்பது என்ன உறுதி ?
அல்லது, ஒத்துழையாமையில் நம்பிக்கையுள்ளவர்கள் என்று சொல் வோர் தாங்கள் போகவில்லையானாலும் தங்கள் திட்டத்திற்கு அனுகூலமா யிருப்பவர்களை சட்டசபையில் ஸ்தானம் பெற உதவி செய்வதாக வைத்துக் கொண்டாலும், ஒத்துழையாதாரின் உதவிபெற்று சட்ட சபைக்குப் போகிறவர்.
கள் யோக்கியமாய் நடந்து கொள்பவர்களென்பதற்கு என்ன ஆதாரமிருக் கிறது? தற்காலம் தேர்தல்களுக்கு நிற்கிறவர்கள் சொல்லுகிற வாக்குறுதி களும், ஸ்தானம் பெற்ற பிறகு அவர்கள் நடந்துகொள்ளும் யோக்கியதையும் தலைவர் முதல் தொண்டர் வரையில் உள்ளவர்களின் யோக்கியதையையும் நாம் பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். காஞ்சீபுரம் மகாநாட்டைக் கவனித்தவர்களுக்கு நமது ஜனங்களின் நாணயத்தைப்பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆதலால், இம்மாதிரி திட்டங்கள் போட்டுக் கொண்டிருப்பதைவிட காரியத்தில் பலன் தரத்தக்கதானத் திட்டங்களை வைத்து, பழைய ஒத்துழையா மையையே உயிர்ப்பித்துப் படித்த கூட்டத்தாரை விலக்கி, சட்ட மறுப்பு, சத்தியாக்கிரகம் முதலிய காரியங்களைச் செய்து ஒரே உறுதியாய் அதில் நம்பிக்கையுள்ளவர்களை மாத்திரம் சேர்த்துக் கொண்டு, அதற்கு விரோத மான மனச் சாட்சியுள்ளவர்களையெல்லாம் வெளியில் தள்ளி, பரிசுத்தமான எண்ணத்தோடு பழையபடி மகாத்மா சாரதியாயிருந்து அஹிம்சா தர்ம தேரை: ஓட்டினாலல்லாது வேறு எந்த காரியத்தாலும் நாடு விடுதலையும், சுயமரியா
தையும் பெறுமென்று எண்ணுவது வெறுங் கனவேயாகும். ஆதலால், இந்நிலை வரும்வரை மனிதரை மனிதர் தின்றும், ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் தின்றும் ஏப்பம் விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உண்மை மனிதனின் கடமை.
குடி அரசு - தலையங்கம் - 27.12.1925.
403 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மஙீமாண் திரு.வி.கலியாணகந்திர முதலியார்
ஸ்ரீமான். முதலியார் தனது “நவசக்தி”யில் “எனது நிலை” என்ற தலைப்பிட்டு நமது “குடி அரசின்” 29 கேள்விகள் கொண்ட கட்டுரைக்கு
மறுப்பு எழுதுவது போல் எழுதியிருக்கிறார். அதற்கு எமது குடி அரசிலும் எமது நிலை என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதக் கருதி, இவ்வாரம் “குடி அரசுக்கு” எனது நிலை ஸ்ரீமான் முதலியார் நிலை ஆகிய இருவர் நிலை முழுவதையும் விவகரிக்க இடம் போதானெக்கருதி இவ்வாரத்திய “குடி அரசு” பன்னிரன்டு பக்கத்தை, இதற்கென்றே பதினாறு பக்கமாக்கப்பட்டது. வெளிப்படுத்த முடியாத பல இடங்களிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும்,
கடிதங்கள் வந்ததாலும், ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கும், எனக்கும் பொது வான நண்பர்கள் சிலர் நேரில் வந்து 144 தடை உத்தரவு போட்டதாலும், கருதிய படி நடக்கமுடியவில்லை. ஆனாலும், ஸ்ரீமான். முதலியாரின் மறுப்பில் காணும், விஷயங்களை சுமார் 30 கூறுகளாய் பிரித்திருந்தாலும், இரண்டு ஒன்றை மாத்திரம் பொது ஜனங்களுக்கு விளக்க நண்பர்களின் அநுமதி பெற்று ஓர் சிறு குறிப்பை எழுதி முடித்து விடுகிறேன்.
ஸ்ரீமான். முதலியார் மறுப்பில் காணும் முக்கிய விஷயங்களில் சில கீழே விவரிக்கிறேன்:
1 “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து ஸ்ரீமான். முதலியார் எங்கும் பேசவில்லை, எழுதவில்லை” யென்பது.
2 “ஸ்ரீமான். கிருஷ்ணசாமிப் பாவலர், ஸ்ரீமான். இராமநாதன் பிரேரேபனைக்கு 100-க்கு 90 பேர், பிராமணரல்லாதாராயிருக்க வேண்டு மென்று ஒரு துண்டு ஒட்டவைத்தார்” என்பது.
3.“ஸ்ரீமான். இராமநாதனின் தீர்மானம் விஷயாலோசனைச் சபையில் தோற்றுப்போய் விட்டதால், மகாநாட்டில் வலியுறுத்தப்போவதாக அறிவித் ததை ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்பது.
4. “மகாநாட்டில் முதல் தீர்மானம் விவாதத்திலிருந்த காலத்தில், 25
பிரதிநிதிகள் கையெழுத்துக் கேட்டதாகச்” சொல்லுவது.
5.“ஸ்ரீமான்.நாயக்கர் காங்கிரஸோடு சுயராஜ்யக்கக்ஷி கலந்து விடுவ தற்கு சம்மதிக்காமல், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எப்படி கேட்கலா மென்று கருதி வகுப்புவாரி தீர்மானத்தை ஒழுங்குத்தவறென்று
குடி அரசு - 1928. 404
நிராகரித்ததாகச் சொல்வதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை காங்கிரஸ் மகாநாட்டில் அநுமதிப்பது அநாவசியம்” என்பது.
பதில்
1 சென்னை மாகாணச் சங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் ஓர் முக்கியமான கொள்கையென்பதும் அச்சங்கத்தின் முக்கியஸ்தராகவே ஸ்ரீமான் முதலியார் விளங்கினாரென்பதும் அச்சங்கத்தை ஆதரித்த முக்கிய பத்திரிகையான “ தேசபக்தனுக்கு”க்கு ஸ்ரீமான் முதலியார் ஆசிரியரா யிருந்தாரென்பதும் அதற்குள் உலகம் மறந்திருக்காது. இந்நிலையில் இவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தான் ஆதரிக்கவில்லை யென்று சொல்லுவது, சரியா யென்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ளட்டும்.
மற்றும் “தேச பக்தன்” பத்திரிக்கையின் பிரதிகளை ஸ்ரீமான். முதலியாரே சாவதானமாய் படித்துப் பார்க்கட்டும்.
2 ஸ்ரீமான். பாவலர், ஸ்ரீமான். இராமநாதன் தீர்மானத்திற்கு ஒரு துண்டு ஒட்டவைத்தாரென்று சொல்லுவது உண்மைக்கு விரோதமானது. ஸ்ரீமான். இராமநாதன் தீர்மானம் விஷயாலோசனை சபையில் தோற்றுப்போன பிறகு தான், ஸ்ரீமான். பாவலர் தன்னுடையதைப் பின் வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் பின்வாங்கிக்கொள்ள ஸ்ரீமான். முதலியார் அநுமதி கொடுத்தது, ஒப்புக்கொள்ளத்தக்கதல்லவென்று கூட நானும் ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளையும் விஷயாலோசனைக் கமிட்டியில் வாதாடியிருக்கிறோம். இவை யெல்லாம் ஸ்ரீமான். முதலியார் ஞாபகமில்லாமற் சொல்லுகின்றாரென்றுகூட சொல்ல மனம் வரவில்லை. உண்மைக்கு நேர்விரோதமாகப் பேசுகின்றா ரென்பது தான் தனது அபிப்பிராயம்.
3 84. ஸ்ரீமான். இராமநாதனின் விஷயாலோசனைக் கமிட்டியில், தோற்றுப் போன தீர்மானத்தை மகாநாட்டில் வலியுறுத்த அநுமதித்ததாகச் சொல்லுவது ரொம்பவும்சரி. ஆனால் அப்படி ஒப்புக்கொண்ட அவர்.
மகாநாட்டிற்கு வந்தபிறகு @y தீர்மானத்தைப் பிரேரேபிக்க, 25 பிரதிநிதிகள் கையெழுத்து வேண்டுமென்று சொன்னதை மாத்திரம் ஒப்புக்கொள்ளு கிறாரே தவிர, அப்படிச்சொல்ல நேர்ந்த அவசியமென்னவென்பதை அவர். சொல்லவில்லை. அல்லாமலும், முதல் தீர்மானம் மகாநாட்டில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், 25 கையெழுத்துக் கேட்டதாகச் சொல்வது மனதறிந்து சொல்லும், உண்மைக்கு மாறுபட்ட விஷயமாகும். முதல் தீர்மானத்தின், இரண்டாவது பாகம் பின் வாங்கிக்கொள்ளப்பட்டு, முதல் பாகம் நிறைவேற்றப்பட்ட பின்பு நானும், ஸ்ரீமான். எஸ். ஸ்ரீனிவாசய் யங்காரும், பிராமணர் - பிராமணரல்லாதார் விஷயத்தைப்பற்றி தனியாக ஓர். இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சமயத்தில் இது சொல்லப்பட்டது என்பது உறுதி. ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய்யங்கார் பக்கத்தில் பேசிக்கொண்
405 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
டிருக்கும்போதுதான், ஸ்ரீமான். இராமநாதன் என்னிடம் வந்து, ஸ்ரீமான். முதலியார் திடீரென்று 25 பிரதிநிதிகள் கையெழுத்துக் கேட்கிறாரென்று சொன்னது. அதன் பிறகுதான் கையெழுத்து வாங்க ஏற்பாடு செய்து சுமார். 30 கையெழுத்து வாங்கிக் கொடுத்தது. அது சமயம், கல்பாத்தித் தீர்மானம் விவாதத்திலிருந்தது. இதற்கு வேண்டிய ௬ுஜுக்களும் இருக்கின்றது.
5. காங்கிரசோடு சுயராஜ்யக் கட்சி கலருவதற்கும், வகுப்புவாரிப் பிரதி நிதித்வம் கேட்பதற்கும் என்ன சம்மந்தம்? வகுப்புவாரிப் பிரதிநிதித்வ மென்பது சட்டசபைப் பிரவேசம் மாத்திரந்தானா? நமது நாட்டில் சட்டசபை ஸ்தாபனங்கள் தேர்தல்களில் ஒட்டுமொத்தம் ஒரு நூறு ஸ்தானங்கள்கூட இருக்காது. சட்டசபைகளின் மூலம் ஊதியம் பெறும் ஸ்தானம் ஒரு பத்து ஸ்தானங்கள்கூட இருக்காது. நான் கேட்கும் வகுப்புரிமை ஸ்தானங்கள் ஸ்தல ஸ்தாபனங்களுட்பட பொதுஜன ஊழியம், அரசியல் ஊதிய அதிகாரப் பதவி களுட்பட காங்கிரஸ் முதலிய பொது ஸ்தாபனங்களின் ஆதிக்கங்கள் உட்பட, ஆகிய இவைகளில் சுமார் லட்சக்கணக்கான ஸ்தானங்களுக்குக் குறையாமல் உள்ள பதவிகளுக்கும், அதிகாரத்திற்கும், நான் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம். கேட்பது. இவ்வளவு பொறுப்புள்ள உரிமைகளையும் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சியார் வசம் ஒப்படைத்திருக்கிறதா? ஸ்தல ஸ்தாபனம் முதலியவை களைக் காங்கிரஸ்காரர்கள் கைப்பற்ற வேண்டு மென்று, காஞ்சீபுரம் மகாநாடு தீர்மானித்திருக்கிறதேயல்லாமல், சுயராஜ்யக் கட்சியார் கைப்பற்ற வேண்டு மென்று தீர்மானிக்கவில்லை. லக்னோ பேக்டும், சுயராஜ்யக்கட்சி ஏற்பட்ட
தற்குப் பிறகுகூட கல்கத்தா பேக்டும், காங்கிரஸ் மூலியமாகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு வகுப்புரிமையும், காங்கிரஸ் மூலமாய் பிரேரே பிக்கப்பட்டதேயல்லாமல், சுயராஜ்யக்கட்சியின் தவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. காங்கிரஸ் சார்பாக கூட்டப்பட்ட இம்மகாநாடு, வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தை எடுத்துக் கொள்ளவேண்டியது அனாவசிய மென்று தான் தள்ளிவிட்டேனென்று ஸ்ரீமான். முதலியார் சொல்வதில் எவ்வளவு ஒழுங்கிருக்கிறதென்பதை வாசகர்கள் கவனிப்பார்களென்று நினைக்கிறேன்.
இதே ஸ்ரீமான். முதலியாரவர்கள் காஞ்சீபுரம் மகாநாட்டுத் தலைமை தனக்குக் கிடைக்கும் முன்பாகத் தனது பத்திரிக்கையிலும், பல மேடைகளிலும் நமது நாட்டில் சுயராஜ்யக் கட்சி ஒன்று தோன்றினபிறகுதான் வகுப்புச் சண்டைகளும், வகுப்புப் பூசல்களும், வகுப்புப் பிணக்குகளும் ஏற்பட்டதாகக் கை ஓய்வுரும்படியும், வாய் ஓய்வுரும்படியும் எழுதியும், பேசியும் வந்திருக்கிறார். அப்படியிருக்க, சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைக் காங்கிரஸ் எடுத்துக்கொண்டு நடத்திவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தைத் தானே பிரயத்தனப்பட்டுக் கொண்டு வரச்செய்ததாகவும், அதை ஸ்ரீமான். நாயக்கர் எதிர்த்தால், வகுப்புரிமை கேட்பதற்கு அர்த்தமில்லையென்றும்,
ஸ்ரீமான். முதலியார் எழுதுவதற்கு என்ன அர்த்தமென்று விளங்கவில்லை.
குடி அரசு - 1925 406
கல்பாத்தியில் தெருவில் நடக்காமைக்காக சர்க்கார் சமாதானத்தின் பேரால் போடப்பட்ட 144 உத்திரவும், காஞ்சீபுரம் மகாநாட்டில் வகுப்புவாரிப்
பிரதிநிதித்வ தீர்மானத்தைப் பிரேரேபிக்கக்கூடாதென்று ஸ்ரீமான். திரு.வி. கலியாணகுந்தர முதலியார், ஒழுங்கின்பெயரால் போடப்பட்ட 144 உத்தரவும், ஒரேசக்தியை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான் நமது முடிவு.அந்த சக்தி என்று நம் நாட்டைவிட்டு ஒழியுமோ அன்றுதான் நமது நாட்டுக்கும்,
சமூகத்துக்கும் விடுதலையும், சுயமரியாதையும் உண்டாகும். மற்றப்படி
ஸ்ரீமான். முதலியாரவர்கள் என்னைப்பற்றி எழுதியிருக்கும் பல விஷயங்கள் என்னையே பொறுத்திருப்பதால், நான் அவற்றிற்கு சாவதானமாக நண்பர்.
களின் விடைபெற்றுப் பதிலெழுதுகிறேன்.
- ஈ.வெ.ரா
குடி அரசு - அறிக்கை - 27.12.1925
407 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சுயராஜ்யக் ககூறியிண் 6பராசையும் அதன்
முயற்சியும்
“எச்சில் சாப்பிட்டாலும் வயிறு நிறைய சாப்பிடவேண்டும், ஏய்த்து பலனடைவதானாலும் ஆசை தீர அடையவேண்டும்” என்று ஒரு பழமொழி யுண்டு, அதுபோலவே நமது சுயராஜ்யக் கட்சியார் ஆதியில் காங்கிரசை மீறிவிட்டு போனார்கள்; பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடக்க தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று காங்கிரசைக் கேட்டார்கள். பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடப்பதை பிறர் ஆக்ஷபிக்கக்கூடாது என்றனர்.
பின்பு தங்களுக்கு வேண்டிய உதவியைக் காங்கிரஸ், தனது மன சாக்ஷிக்கு விரோதமில்லாமல் செய்யவேண்டும் என்று கேட்டனர்.
பிறகு காங்கிரசில் தாங்களும் ஒரு சரியான பாகமாயிருக்க வேண்டு மென்று கேட்டனர்.
பிறகு காங்கிரசில் தாங்களே முக்கியஸ்தர்களாக வேண்டும் என்று கேட்டனர். இவ்வளவும் அடைந்தார்கள். இப்போது தாங்களே காங்கிரசாகி விட வேண்டும்; தங்களுக்கு பதவிகளும், உத்தியோகமும், காங்கிரசே வாங்கி கொடுக்க வேண்டும்; அப்படி காங்கிரஸ்காரரே எல்லா பதவியும், உத்தியோ கமும் சம்பாதித்து கொடுப்பதானாலும், தங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது; தங்கள் உத்திரவில்லாமல் காங்கிரஸ்காரரும் அனுபவிக்
கக் கூடாது; என்கிற நிலைமைக்கு இப்போது வந்து விட்டார்கள். இதுகள் எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் சம்மதிக்கலாம்; ஆனால் இதன் பலனாய் தேசத்தில் காங்கிரசுக்கு யோக்கியதையும், பெருமையும் போய்விடுமென்பது மாத்திரம் சத்தியம்.
கல்கத்தாவில்
சுயராஜ்யக் கட்சியார் தாங்கள் நிராகரித்த மந்திரிகளின் சம்பளத்தை. மறுபடியும் அனுமதிக்க, மிதவாதக் கட்சியார் எதிர்த்தும், சர்க்கார் மெம்பர். களோடு, தாங்களும் சேர்ந்துகொண்டு மிதவாதிகளைத் தோற்கடித்து சம்ப ளத்தை அனுமதித்துக் கொண்டார்கள்.
குடி அரசு - 1925 408
முன்பு தாங்கள் குறைத்த மந்திரிகளின் சம்பளத்தை மறுபடியும் உயர்த்த ஒரு தீர்மானம் கொண்டுவந்துவிட்டார்கள்.
இவ்விரண்டு காரியங்களும் அடுத்த தேர்தல்களில் தாங்களே ஜெயிக்கப் போகிறோம் என்கிற உறுதியும், அப்படி ஜெயித்தால் மந்திரி பதவி
கள் தங்களுக்கே கிடைக்கும் என்கிற ஆசையும், இப்பொழுது தங்களுக்கு இருப்பதையும், அதற்காக முன் ஜாக்கிரதையாய் இப்பொழுதிருந்தே சம்பளத் தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கிற தந்திரத்தையும் காட்டுகிறது அல்லவா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.12.1925
409 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஐமீண்தார்கள் விட்முல் பிராமண எலிகன்
டில்லி ராஜாங்க சபைக்கு இவ்வருடம் நடந்த தேர்தல்களுக்கு அபேக்ஷகர்களிலொருவரான ஒரு பிராமணரல்லாத பிரபு கோயமுத்தூர் ஜில்லாவிலுள்ள பெரிய ஐமீன்தாரொருவருக்கு தனக்கு வோட் செய்யும்படி கேட்டு இரண்டு மூன்று கடிதங்கள் எழுதியிருந்தார். மற்றொரு பிராமண: கனவானும் தனக்கு வோட் செய்ய வேண்டுமாய் ஒரு கடிதம் போட்டிருந்தார். தேர்தல் காலம் சமீபத்திலிருக்கும்போது பிராமணரல்லாத கனவானுக்காக கோயமுத்தூரிலுள்ள ஒரு பிரபல யந்திரசாலையின் நிர்வாகி ஒருவர் வோட் கேட்பதற்கு ஜமீன்தாரிடம் நேரில் சென்று, விஷயத்தை எடுத்துச்சொன்னார். உடனே ஜமீன்தார் இதைப் பற்றி, தனக்குத் தகவலே தெரியாதே; ஒருபிராமணர்தான் கடிதம் எழுதியிருந்தார்; அவருக்கு வோட் செய்வதாக நமது குமஸ்தாவிடமும் சொல்லிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குமஸ்தாவான பிராமணர் தங்களுக்கு நான்கு வோட் இருக்கிறது; ஒரு வோட் தாங்கள் சொன்னபடி பிராமணருக்குச் செய்துவிட்டாலும், மற்றும் ஓரு வோட் செட்டியாருக்கும் கொடுக்கலா மென்றார். உடனே வோட்டுக் கேட்கப்போன கனவான் தங்களுக்கும் இது விஷயத்தைப்பற்றி 2, 3 கடிதம் எழுதப்பட்டிருக்கிறது, அது தங்களுக்குச் சேராத காரணமென்னவென்று கேட்டார். ஜமீன்தார் ஆத்திரப்பட்டு, ஐயர் குமாஸ்தாவைப் பார்த்து, என்ன ஐயரே, தபால் வந்ததா? என்று கேட்டார். ஐயர், ஒன்றோ, இரண்டோ வந்ததாக ஞாபகம், ஆனால் அதைத் தங்களிடம் சொல்லமறந்து விட்டேனோ என்னமோ என்று சொல்லி மழுப்பிவிட்டார். உடனே, ஜமீன்தாரும் கனவானும் பிராமண சூழ்ச்சிகளைப்பற்றி, ஞாபகப் படுத்திக் கொண்டார்கள். எவ்வளவுதான் பிராமணரல்லாத ஜமின்தார்களும், பிரபுக்களும் ஜஸ்டிஸ் ககஷியில் சேர்ந்திருந்தாலும், ஜமீன்தாரென்கிற பெரு மைக்குண்டான சுகங்களெல்லாம், அனுபவிக்க வேண்டுமானால், பிராமணர்களில்லாமல் இவர்களால் ஒன்றும் முடியவே முடியாது. ஆதலால் ஒவ்வொரு ஜமின்தார்களும், மிராஸ்தார்களும், பெரிய பண்ணைகளும் தங்கள் நன்மையின் பொருட்டு ஓவ்வொரு பிராமணருக்குள் தான் அடக்கமாயிருக்கிறார்கள் இவையெல்லாம் மாறாமல் ஜஸ்டிஸ் ககஷியின் வெறுந் தீர்மானங்கள் மாத்திரம், பெரிய நன்மையொன்றும் செய்து விடாது.
டி.எஸ்.பி
குறிப்பு: இதை நாம் நமது அநுபவத்திலேயே பார்க்கிறோம். நமது “குடி அரசுப் பத்திரிக்கைக்கூட பிராமணாதிக்கமுள்ள சில ஜமீன்தார்களிடமிருந்தும், பல பிரபல மிராஸ்தார்களிடமிருந்தும் திருப்பியனுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம்.
குடி அரசு - 1925 410
அவர்களை நேரில் காண சந்தர்ப்பம் நேர்ந்த காலத்தில் தங்களுக்கு பத்திரிகை வந்ததும், திருப்பியனுப்பப்பட்டதும் இரண்டும் தெரியாதென்றே சொல்லியிருக் கிறார்கள். இப்படி சொன்னதோடு ஒரு பெரிய ஜமீன்தார் தனது வருத்தத்தைத் தெரிவித்தும் கொண்டார். ஆனால், இவர்களை உங்கள் பிரைவேட் செக்கரடேரி பிராமணர்தானேயென்று கேட்டதற்கு மிராஸ்தார்கள்ஆம் என்று சொல்லிக்கொண்டு சிரித்தார்கள். (பாஸ்
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 27.12.1925
411 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கோயமுத்தூர் ரீ.தியாகராய ஊட்முயார் முணிசிபல் ஆஸ்பத்திரி
திறப்பு விழா
நமது பெரியாரும் பூஜிக்கத்தகுந்தவருமான காலஞ்சென்ற ஸர்.பி. தியாகராய செட்டியாரவர்களின் பேரால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை. ஸர்.பி.தியாகராய செட்டியாரவர்களின் திருநாள் சமயத்திலேயே திறந்து வைக்கும் பெருமை எனக்கு அளித்ததற்கு நான் பெருமையடைவதோடு, என் மனப்பூர்வமான நன்றியறிதலையும் செலுத்துகிறேன். பெரியோர்களுடைய திருநாளைக் கொண்டாடுவது நமக்குப் பூர்வீகமான வழக்கம். ஆனால், அப் பெரியார்களைப் பின்பற்றுவதில் நாம் கிரமமாய் நடந்து கொள்வதில்லை.
ஸ்ரீமான். தியாகராய செட்டியாருக்கு, அவருடைய தேச சேவைக்காக இந்
நாட்டு மக்கள் எல்லோரும் கடமைப்பட்டிருந்த போதிலும், சிறப்பாக பிராமண: ரல்லாதார் என்போர் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்று சொல்லு வேன். தென்னாட்டில், பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்துக்குழைத்து, பிராமண:
ரல்லாதாரின் சுயமரியாதையை உணரும்படி செய்தவர், நமது தியாக ராயரே
யாவார். அவர் கொஞ்சமும் சுயநலமில்லாமலும் அடிக்கடி மாறுபட்ட அபிப் ராயமில்லாமலும், விடா முயற்சியோடு உழைத்து வந்தவர். அப் பேர்ப் பட்ட
வர் பேரால் இது போன்ற விஷயங்கள் மாத்திரமல்லாமல், இன்னுமநேக காரியங்கள் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். அவருடைய பெருமை அவர் இருந்தபோது விளங்கியதைவிட அவர் இறந்தபிறகுதான் அதிகமாக விளங்கிக்கொண்டு வருகிறது. இங்குள்ள ஒவ்வொருவரும், நமது தியாக ராயரைப் பின்பற்றி உழைக்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அது தான் நாம் அவருக்குச் செய்யும் மேலான ஞாபகக்குறிப்பு என்று சொன்ன தோடு, இவ்வித ஆஸ்பத்திரிகள் நமது நாட்டில் பெருகுவதானது, நாட்டில் வியாதிகள் அதிகமாய்ப் பெருகி வருவதையும், நாட்டு பழைய வைத்திய முறைகள் அழிக்கப்பட்டுப் போவதையும், காட்டுவதற்கு நிதர்சனமாக விளங்கினாலும், நமது ஸ்ரீமான். வெரிவாட செட்டியார் தர்ம சிந்தையோடும், உதாரண குணத்தோடும் செய்திருக்கும் இக்கைங்கிரியத்தை நாம் பாராட்டா மலிருக்க முடியாது. கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த
குடி அரசு - 1925 412
செல்வத்தையும் கொடுத்து மென் மேலும் பல தர்ம கைங்கரியத்தைச் செய்ய கடவுள் அருள் புரிவாராக.
குறிப்பு:16:12:925 இல் கோயமுத்தூர்தியாகராய செட்டியார் மருத்துவமனைக் கட்டடத்திறப்புவிழா சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 27.12.1925
412 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
கோயமுத்தூரில் வதண்ணிந்திய நலை ரிமைச்
சங்க கிளை ஸ்தாபனம் திறப்புவிழா
தான் இக்கூட்டத்திற்கு வரக்கூடுமென்றாவது, இதில் பேச சந்தர்ப்பம் கிடைக்குமென்றாவது ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லையென்றும், திறப்பு விழாவிற்கு வந்தவனை திடீரென்று அழைத்ததிற்காகவும், இங்கு பேசும்படி கட்டளையிட்டதற்காகவும், அழைத்தவர்களுக்கும், அக்ராசனாதிபதிக்கும், வந்தனம் செய்வதாகவும், இக்கூட்டத்திலுள்ள பிரமுகர்களெல்லாம் பழைய ஆப்த நண்பர்களென்றும், இவர்களில் அநேகம் பேர் நெருங்கிய பந்துக் களைப் போன்றவர்களென்றும், ராஜீய அபிப்பிராயங் காரணமாக இங்குள்ள அத்தனை பேரையும் நாலைந்து வருட காலமாக தீண்டாதவர் போல் நினைத்து, தான் ஒதுங்கியிருந்ததாகவும், இப்பிரிவினை ஏற்படுவதற்கு முன் கோயமுத்தூருக்கு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு சிநேகிதர் வீட்டிலும் நாலு
நாள், ஐந்து நாள் தங்கி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், கொஞ்சக் காலமாக இவ்வூருக்கு வந்தால் பிராமணன் ஹோட்டலுக்காவது போய்ச் சாப்பிடுவதேயொழிய, இந்த அருமையான சிநேகிதர்கள் வீட்டுக்குப் போகாமல் கூட தான் அவ்வளவு ராஜீய பத்தியமாய் இருந்ததாகவும், இப்பொழுது காங்கிரசில் சுயராஜ்யகட்சி தோன்றியபின், இவ்வளவு நாள்: கொடுமையான பத்தியமாயிருந்தது அவசியமில்லாத தென்று தோன்றும்படி செய்து விட்டதாகவும், ஜஸ்டிஸ் கக்ஷியின் ஆரம்ப ராஜீய திட்டத்திற்கும் சுயராஜ்யக்ககஷியின் தற்கால ராஜீயத் திட்டத்திற்கும், உள்ள பெரிய வித்தியாச
மெல்லாம், ஜஸ்டிஸ் க்ஷி உண்மை பேசுகிறது. சுயராஜ்யக் கக்ஷி ஸ்திரமாய்ப்
புரட்டு பேசுகிறது என்பதை தவிர வேறு பிரமாதமான வித்தியாசம் எதுவு மில்லையென்றும், இந்தக் காரணத்தால் தான் காங்கிரஸிற்கும் வரவர மதிப்புக் குறைந்துகொண்டு போவதோடு, மங்கிக் கிடந்த ஜஸ்டிஸ் கட்சிக்கும் தேசத்தில் செல்வாக்கு இப்பொழுது கொஞ்சம் ஏற்பட்டு வருகின்றதென்றும், இந்த சந்தர்ப்பத்தை ஜஸ்டிஸ் கட்சியார் இழந்து விடாமல், தேசத்திற்கும், பிராமணரல்லாதார் சமூகத்திற்கும் உண்மையாய் உழைக்க முன்வர வேண்டு மென்றும், காங்கிரஸ் தேசத்திற்கு அநுகூலமான கொள்கைகளையும், பிராமணரல்லாதாருக்கு மிகவும் அநுகூலமான திட்டங்களையும் வைத்து, உண்மையாய் வேலை செய்து பிற தியாகங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தயாராயிருந்து சிலபேராவது உழைத்து வந்ததின் பலனாகத்தான் காங்கிர ஸிற்கு அதிக மதிப்பேற்பட்டதோடு, ஜஸ்டிஸ் கட்சியையும், யாரும் லக்ஷியம்
குடி அரசு - 1925 414
செய்ய அவசியமில்லாததாய்ப் போய்விட்டது என்றும், இப்போது சுயராஜ்யக் கட்சி தோன்றியதின் பலனாய், தேச நன்மைக்கான கொள்கைகளும் போய் நிர்மாணத் திட்டங்களும் பின்பட்டு, உத்தியோக ஆசையும், பிராமணாதிக் கத்திற்கனுகூலமான கொள்கைகளும் காங்கிரஸில் முற்பட்டு நிற்பதற்கு, சுயராஜ்யக் கட்சியார் பிரயத்தனம் செய்வதாலும் காங்கிரகம் அதற்கு இணங்கு வதாலும் சுயராஜ்யக் கட்சியைவிட ஜஸ்டிஸ்கட்சி மோசமானதல்லவென்னும் எண்ணம் தேசத்தில் உதிக்க ஆரம்பித்துவிட்டதென்றும், ஜஸ்டிஸ் கட்சியின்.
முன்னேற்றத்திற்கு இந்த எண்ணம் மாத்திரம் போதாதென்றும், இதுவரையில் ஜஸ்டிஸ் கட்சிக்கு பொதுஜன அநுகூலமான திட்டம் எதுவும் இல்லை யென்றும், பாமர ஜனங்களிடம் இதற்குச் செல்வாக்கில்லாததற்கு இதுவொரு காரணமென்றும், தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு கதர் முதலிய திட்டம் ஜஸ்டிஸ் கட்சியில் தாண்டவமாட வேண்டுமென்றும், தென்னாடு முழுவதும் இவைகளைப் பரப்பச் சரிவர பிரசாரம் செய்யவேண்டுமென்றும் இவ்வித காரியங்கள் ஜஸ்டிஸ் கட்சியார் செய்யாவிட்டால், எதிரிகள் விஷமத்தால் கட்சியே மறைந்து போகுமென்றும், வெறும் உத்தியோகமும், ஆங்கிலப்
படிப்பும் பிராமணரல்லாதாருக்கு நன்மை உண்டாக்கிவிடாதென்றும். நீங்கள் சில உத்தியோகங்களை அடைந்ததினால் தேசத்தில் என்ன பலன் உண்டாய் விட்டதென்றும், நீங்கள் அதிகமதிகமாய் ஆங்கிலம் படிக்கப்படிக்க, உத்தி யோகம் பெறப்பெற, நமது நாடு பிராமணர்களால் எவ்வளவு கஷ்டப்படு கிறதோ, அவ்வளவு கஷ்டம் உங்களாலும் படவேண்டியதாகிவிடுமென்றும், பிராமணரல்லாதார் முன்னேற்றத்துக்கு உழைக்கவேண்டுமானால், இங்குள்ள
வர்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றும், கிராம ஜனங்களைக் கலகம் செய்துகொள்ளாமலும், கோர்ட்டுக்குப் போகும்போதும் பெரும்பாலும் பிராமண வக்கீல்களிடமும், அதிகாரிகளிடமும் சிக்கித் தங்களுடைய பொருள்களை பீஸாகவும், லஞ்சமாகவும் கொடுத்து பாழாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென்றும், ஆங்கிலப் பள்ளிக்கூடம் பரவியதின் காரண மாகவே, கிராமங்களில் குடியானவர்கள் பேரால் இருந்த பூமிகளெல்லாம், இப்போது பிராமண வக்கீல்கள் பேராலும், அதிகாரிகள் பேராலும், லேவா தேவிக்காரர் பேராலும், மாறிக் கொண்டு வருகின்றதென்றும், இதற்கு சாகி வேண்டுமானால் கவர்ன்மெண்டு செட்டில்மெண்ட் ரிஜிஸ்டரைப் பாருங் களென்றும், இவற்றைத் தடுக்காமல் மந்திரி உத்தியோகம் பெறுவதினாலும், பட்டங்கள் பெறுவதினாலும், உங்கள் பிள்ளைகள் சிலருக்கு உத்தியோகங்கள் சம்பாதிப்பதினாலும், உங்கள் கட்சி எந்த விதத்தில் பிராமண சுயராஜ்யக் கட்சியைவிட மேலானதாகி விட்ட தென்றும், இந்த நிலைமையில் ஜஸ்டிஸ் கட்சி இருந்துகொண்டே வருமானால், என் போன்றவர்கள் தொண்டை நீங்கள் எதிர்பார்க்க முடியாதென்றும், மகாத்மாவின் நிர்மாணத் திட்டங்களை ஏற்றுக் கொண்டு, காரியத்தில் அதைச் செய்யக் கட்டளையிடுவீர்களானால், அதை நான் சிரமேற்கொண்டு தொண்டு செய்யக் காத்துக் கொண்டிருக்கிறே னென்றும் சொன்னதோடு, தான் சொன்னவைகளில் ஏதாவது தங்கள்
415 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மனதிற்கு வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்குமேயானால், மன்னிக்க வேண்டுமென்றும், தான் தன் மனதில் உண்மையென்று பட்டதைத் தான் ஒளிக்காமல் சொல்லவேண்டுமென்கிற ஆசையால் சொன் னதே யொழிய, யாருக்கும் வருத்தம் உண்டாக்க வேண்டுமென எண்ணி சொல்லவில்லை யெனக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.
குறிப்பு- கோவையில் 1621925 இல் தென்னிந்தியநலஉரிமைச் சங்கக் கிளை: அமைப்பு திறப்புவிழா சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 27.12.1925
குடி அரசு - 1925 416
கோயமுத்தூரில் 17-ந்தேதி மாலை டவுண்
ஹாலில் வபாதுக் கூட்டம்
நமது நாட்டுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தைப்
பற்றியும், காஞ்சீபுரம் மகாநாட்டு நடவடிக்கைகளைப் பற்றியும், நிர்மாணத் திட்டங்களைப்பற்றியும் எடுத்துச்சொல்லி வருகையில் அவர் முக்கியமாய்க்
குறிப்பிட்டதாவது:-
தற்சமயம் நமது தேசத்திலுள்ள பல கட்சிகளுக்கும் ராஜீய திட்டம் ஏறக்குறைய ஒன்றாகி விட்டது. நிர்மாணத்திட்டத்தை நடத்திவைப்பதில், எந்தக் கட்சிக்காரராயிருந்த போதிலும், நிர்மாணத்திட்டம் நடத்துவதற்குப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. காங்கிரசை ஒப்புக் கொள்ளாதவர். களும் காங்கிரசில் சேரப் பயப்படுபவர்களும் கூட நிர்மாணத்திட்டத்தை நடத்திக் கொண்டு போகலாம். காங்கிரஸில் சேர்ந்தால்தான் நிர்மாணத் திட்டத்தை நடத்தலாம், இல்லாவிட்டால் நடத்தமுடியாது என்னும் பயம் உங்களுக்கு வேண்டாம். மகாத்மாவின் நிர்மாணத்திட்டத்தை ஆதரிக்கக் கூடிய கட்சி எதுவாயிருந்தாலும் அவைகளெல்லாம் எனக்கு ஒன்றுதான். நிர்மாணத் திட்டமில்லாத எந்த ராஜீயக் கட்சியையும் தேசத்திற்கு அநுகூல மானதென்று சொல்லமாட்டேன். நிர்மாணத்திட்டத்தில்தான் தேசத்தின் விடுதலை இருக்கிறது. காங்கிரசிலும் நிர்மாணத்திட்டத்தின் ஆதிக்கமிருந்த தினால்தான் காங்கிரசிற்கும் மூலைமுடுக்குகளிலெல்லாம் மதிப்பு இருந்து கொண்டு வந்தது. இப்போது நிர்மாணத் திட்டத்தின் ஆதிக்கம் ஒழிந்து, காங்கிரசினால் ஒரு காலத்தில் உமிழ்ந்து ஒதுக்கித்தள்ளப்பட்ட சட்டசபைப் பைத்தியத்தையும், உத்தியோகப் பைத்தியத்தையும் மறுபடியும் காங்கிரஸ் எடுத்துக்கொள்ளுமானால், பழைய காலத்துக் காங்கிரஸ் யோக்கியதைக் குத்தான் மறுபடியும் வந்து விடுமென்றும், ஆகையால் நிர்மாணத் திட்டத் தைப் பிரதானமாகக் கொண்ட எந்தக் கட்சியானாலும், நீங்கள் அதிற் சேர்ந்து மனப்பூர்த்தியாய் உழைக்க வேண்டுமென்றும், தீண்டாமை விஷயத்தில் ஏற்படும் எதிர்ப்புக்களை தைரியமாய் முன்னின்று தாக்க வேண்டுமென்றும், அவற்றை அஜாக்ரதையாய் விட்டு விட்டீர்களேயானால் நமது மதமும்,
சமூகமும் அடியோடு போய்விடுமென்றும், கதர் விஷயத்தில் கவலை எடுத்துக்கொள்ளாமல் சட்டசபைப் பிரவேசத்திலும், உத்தியோக வேட்டை யிலுமே கவனத்தைச் செலுத்துவீர்களானால், தேசத்தில் ஏழைகள் அதிக
417 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
மாய்ப் போய் கொலை, கொள்ளை முதலியதுகள் பரவிவிடுமென்றும், மதுவிலக்கும் நமது தேச மக்களின் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கிய மானதென்றும் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு பிராமணர் மத்தியில் எழுந்து,நீங்கள் ஒத்துழையாதாரராச்சே, எப்படி வகுப்புவாரிப்பிரதிநிதித்வம் கேட்கலாம்? என்று சொன்னார். அதற்கு ஸ்ரீமான். நாயக்கர் ஒத்துழையாமை பெல்காம் காங்கிரசின்போதே ஒதுக்கிவைத்தாகி விட்டதென்றும், சட்டசபைப் பிரவேசம் காங்கிரஸ் அனுமதித்து விட்டதென்றும், சுயராஜ்யக் கட்சிக்கு மாத்திரம் சம்பந்தமில்லாத தாலூகா போர்டு, ஜில்லாபோர்டு முதலிய ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கிறதென்றும் இவைகளுக்குப் போக இஷ்டப்படும் ஜனங்களுக்கு அவரவருக்கு உண்டான உரிமைகள் அவரவருக்குக் கிடைப்ப
தில் ஒருவருக்கொருவரை ஏமாற்றவும், சூட்சிகளும். கலவரங்களும் நடக்க.
வும் செய்ய இடம் வைக்கக்கூடாதென்றும், ஆனதால் வகுப்புவாரிப் பிரதி
நிதித்வம் கேட்பது காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாகாதென்றும், தேசத்தில் பல வகுப்பாரின் ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித் வம் அவசியமானதென்றும் சொன்னார். பிறகு மற்றொருவர் தேவஸ்தான மசோதாவைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்று, அக்ரா சனாதிபதிக்குச் சீட்டு அனுப்பியதின்பேரில், அதைப் பற்றியும் சில வார்த்தை
கள் சொல்ல அக்கிராசனாதிபதி கட்டளையிட்டார். அதன்பேரில் ஸ்ரீமான். நாயக்கர் பேசுகையில் தேவஸ்தான சட்டமானது நமது நாட்டில் வெள்ளைக்
காரர் வந்த பின்புங்கூட அதாவது 1817-1863 வருடங்களிலேயே இந்துமத தர்ம பரிபாலனத்தைப் பற்றி சர்க்காரார் என்கிற முறையில் சட்டம் செய்திருக் கின்றார்களென்றும், அந்தச் சட்டம் போராதென்றும், இனியும் கண்டிப்பான சட்டங்கள் செய்யவேண்டுமென்றும் அநேக வருஷங்களாக காங்கிரஸ் கான்பரன்ஸ் முதலிய ராஜீய மகாநாடுகளின் தீர்மானங்கள் மூலியமாகச் சர்க்காரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமென்றும், 1914-ம் வருஷத்திய கோயமுத்தூர் ஜில்லா கான்பரன்ஸிலும்கூட ஒரு தீர்மானம் இதைப்பற்றி ஸ்ரீமான். பி.வி.நரசிம்ம ஐயரால் பிரேரேபிக்கப்பட்டு தீர்மானமாயிருப்பது தமக்கு ஞாபகமிருக்கின்றதென்றும், ஜஸ்டிஸ் கட்சியார் இந்த சட்டத்தைச் செய்தார்களென்கிற காரணத்திற்காக அதைச் சிலர் தூற்றுவதற்கு நாம் காதுகொடுப்பது பைத்தியக்காரத்தன மென்றும், நமது மதம் தற்காலம் சிரிப்புக் கிடமாய் கோர்ட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றதென்றும், யானையின்
பின் தொடையில் போடுகிற நாமம், வடகலையா, தென்கலையாவென்பது
ஓர் வெள்ளைக்கார அதிகாரி சொன்னால் தான் நமது மனம் திருப்தி யடைகின்றதென்றும், இன்னும் பல முக்கியமான விஷயங்களுக்கு சர்க்கார். பிரவேசத்தையும் எதிர்பாராமலிருப்பதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்பதை தினம் காட்டிக்கொண்டிருக்கிறோமென்றும், இந்து மதத்தில் ஒரு இந்து பொதுத் தெருவில் நடப்பதற்குச் சர்க்கார் தயவிருந்தாலுங்கூட நம்மவரே செய்யும் சூட்சிகளால் முடியாமலிருப்பதோடு, இன்னும் பல கெடுதிகள் நம்மவரே செய்கிறார்கள் என்றும் இம்மாதிரியான
குடி அரசு - 1925 418
ஜனங்களிடையில் வாழவேண்டுமானால் சர்க்கார் சட்டமில்லாமல் எப்படி வாழ முடியுமென்றும், மதத்தின் பேரால் வசூல் செய்யப்படுகிற கோடிக் கணக்கான ரூபாய்களை சரிவரச் செலவழிப்பதற்குக் கணக்குக் கேட்காம லிருக்கக்கூடிய அவ்வளவு யோக்கியர்களா நாம். நமது மடாதிபதிகளையும், மகந்துக்களையும், பூஜாரிகளையும் அடையதகுந்த யோக்கியதைக்கு வந்துவிட்டோமா வென்றும், நமது மதத்தைப்பற்றி நமக்கு என்ன ஞானமிருக். கிறதென்றும், “சுவாமி ஏன் பன்றி அவதாரமெடுத்தார்? உலகத்தைப் பாயாய்ச்
சுருட்டிக்கொண்டு ஒரு இராக்ஷசன் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான், அதைப் பிடுங்கிக்கொண்டு வரத்தான் பன்றி அவதாரம் எடுக்கப் பட்டதென்று” சொன்னால், “அப்போது தண்ணீர் எதன் மேலிருந்தது”” என்று
கேட்கும் பிற மதஸ்தர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்து, நமது மதத்தை இழந்து, அன்னிய மதத்துக்குப் போய்ச்சேரும் பாமரர்களைத் தடுக்கத் தகுந்த மதக் கல்விக்காவது, நமது பணத்தை ஆயிரம், பதினாயிர:
மாகக் கொள்ளையடித்து காலைக் கழுவி பாத தீர்த்தமென ஒரு உத்ரணித் தண்ணீரைக் கொடுத்து சோம்பேறிகளுக்குப் பொங்கிப் போட்டுக் கொண்டும், தங்கப் பல்லக்கில் சவாரி செய்து கொண்டும், தாசி வேசிகளை வைத்துக் கொண்டும், மற்றும் கூடா ஒழுக்கத்தில் திரியும் நமது மடாதிபதிகளென் போரும், மற்றோரும் இதுவரை என்னவழி செய்திருக்கிறார்கள் என்றும், இவற்றையெல்லாம் நினைக்கும் போது இப்போதுள்ள தேவஸ்தானச் சட்டம் கூட போதாதென்றே சொல்லி முடித்தார்.
பிறகு அக்ராசனரால் முடிவுரை சொல்லப்பட்டுக் கூட்டம் கலைந்ததும், அக்ராசனருக்கும், உபன்யாசகருக்கும் வந்தனம் சொல்லப்போவதாய் கோய
முத்தூர் டவுண் காங்கிரஸ் காரியதரிசியென்ற முறையால், ஒரு பிராமணர்: எழுந்து தன்னைக் கேட்காமல் இக்கூட்டம் கூட்டியதென்றபோதிலும், அதைத்
தான் ஒப்புக்கொள்ளுவதாகவும், ஸ்ரீமான். நாயக்கர் நிர்மாணத் திட்டத்தைப் பற்றி வெகு அற்புதமாகச் சொன்னாரென்றும், ஆனால் காங்கிரசில் சேராதீர்களென்று சொன்னதை மாத்திரம் தான் ஒப்புக்கொள்ள முடியா தென்றும் பத்திரிக்கை நிருபர்களைப் பார்த்துச் சொன்னார். உடனே அங்கிருந்த ஜனங்களெல்லாம் அவரை, “நீர் சொன்னது தப்பு, ஸ்ரீமான். நாயக்கர் சொல்லாத பொய்யான வார்த்தைகயைச் சொல்லி பத்திரிக்கையில்
ஸ்ரீமான். நாயக்கருக்கு விரோதமான பிரசாரம் செய்வதற்கு அநுகூலமாகப் பிராமணத் தந்திரம் செய்திருக்கிறீர், ஸ்ரீமான். நாயக்கருக்கு வந்தனங் கூறுவதாகச் சொல்லி தந்திரமாக மேடையில் ஏறிக்கொண்டு இம்மாதிரி பொய்யான சங்கதிகளைப் பேசுவது மிகவும் ஒழுங்கீனமென்றும், காங்கிரஸ் பெயரைச் சொல்லிக்கொண்டு திரியும் பிராமணர்கள் யோக்கியதையே இப்படியிருக்குமானால், மற்றவர்கள் சங்கதி எப்படியிருக்குமென்றும்” சொன்னார்கள். பிறகு அந்த பிராமணர், தனக்கு அந்தமாதிரி பட்டதாக நினைத்து, அவ்விதம் சொன்னேன் என்று சொல்லிக் கொண்டார். உடனே அக்ராசனர் பொது ஜனங்களை அமர்த்தி, கூட்டத்தைக் கலைத்தார். பிறகு,
419 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
டி பிராமணர் ஸ்ரீமான். நாயக்கரிடம் வெளியில் வரும்போது சமாதானம். சொல்லிக்கொள்ளுவதற்காகப் பேச வந்தார். ஸ்ரீமான். நாயக்கர் உங்கள். சமாதானத்தைப்பற்றி எனக்கு அக்கரையில்லை, கூட்டத்தில் அம்மாதிரி பேசிவிட்டு, தனியாக இங்குவந்து என்னிடம் பல்லைக்கெஞ்சுவதில் என்ன பிரயோஜனம்? ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தவுடனேயே இவ்வளவு விஷமம் செய்துவிட்டீர்களே, பெரிய யோக்கியதை கிடைத்தால் பிராமணரல்லாதார் களை அடியோடு ஆலையில் வைத்தல்லவா நசுக்கி விடுவீர்கள் என்று சொன்னார். உடனே அந்த பிராமணர் தனக்குக் காங்கிரசிலிருக்கும் சம்பந் தத்தை ராஜீனாமாச் செய்வதாகத் தீர்மானம் செய்து, ராஜீனாமாக் கடிதத்தை எழுதி ஜோப்பில் போட்டுக்கொண்டுதான் உங்கள் கூட்டத்திற்கு வந்தே னென்று சொல்லி அக்கடிதத்தை எடுத்துக் காட்டினார். பக்கத்திலிருந்த வர்கள், “மீட்டிங்குக்கு வரும்போதே இம்மாதிரி கலகம் செய்யலாம், அங் கிருக்கிறவர்கள் ஏதாவது சொன்னால், உடனே ராஜீநாமாக் கொடுத்து
விடுவதாய்ச் சொல்லிவிடலாமென நினைத்து ராஜீநாமா எழுதி ஜோப்பில் போட்டுக் கொண்டு, கலகத்திற்குத் தயாராக வந்திருக்கிறீர் என்பது இந்த ராஜீநாமாவால் ௬ுஜுவாகிறதா இல்லையா” வென்று கேட்டார்கள்.
பிறகு அந்தப் பிராமணர் வெட்கி தலைகுனிந்துகொண்டு பேசாமற் போய்விட்டார். கூட்டத்திலிருந்தவர்களுக்கு தேசீய பிராமணர்கள் சூழ்ச்சியின் முறை நன்றாய் விளங்கிற்று.
இப்படியிருக்க, சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிக்கை
ஸ்ரீமான், நாயக்கர் பேசியதுபற்றி சரியாய் எழுதாமலும், நடந்த வர்த்தமானங் களைப்பற்றி சரியாய்க் குறிப்பிடாமலும், ஸ்ரீமான். நாயக்கர் பேரில் பழிகமத்தி எழுதியிருக்கிறது. பிராமணப் பத்திரிகைகளின் வல்லமைகளை அறிவதற்
கும், ஆக்கவும், அழிக்கவும் கூடிய சக்திகள் அவைகளுக்குண்டென்பதைக் காட்டவும் இந்த உதாரணமே போதுமானதா? இல்லையாவென்பதை வாசகர்: களே யூகித்துக் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
குடி அரசு - சொற்பொழிவு - 27.12.1925
குடி அரசு - 1925 420
புது ஆண்டு சண்மானம்
1926-ம் ஆண்டு பிறக்கப்போகிறது; வருடப் பிறப்பிற்காக “குடி அரசு” பத்திரிகைக்கு என்ன சன்மானம் செய்யப் போகிறீர்கள்? ஒன்றா, “குடி அரசுக்கு அதன் நண்பர்கள் ஒவ்வொருவரும் 3 சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுங்கள் அல்லது நமது சமூகத்துக்கே கேடு சூழும்படியான பிராமணப் பத்திரிக்கைகளின் ஒரு சந்தாதாரையாவது குறையுங்கள். இதை நீங்கள். செய்தால், “குடி அரசுக்கு” மாத்திரமல்லாமல், நாட்டுக்கும், பிராமணரல்லாத சமூகத்துக்கும் விடுதலை அளிக்க உங்கள் கடமையைச் செய்தவர். களாவீர்கள்.
குடி அரசு - அறிவிப்பு - 27.12.1925
421 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பிராமணால்லாதார் மகாநாட்டைப்பற்றி
யிராமணய் பத்திரிக்கைகனின் ஓலம்
சென்னையில் இம்மாதம் 20, 21-ந் தேதிகளில் நடைபெற்ற பிராமணரல்லாத 9-வது மகாநாட்டு நடவடிக்கைகளைப்பற்றி, “சுதேச மித்திரன்”. “ஸ்வராஜ்யா” முதலிய பிராமணப் பத்திரிகைகள் ஆத்திரம் பொறுக்காமல் வயிறு வயிறாய் அடித்துக்கொண்டு ஓலமிடுகின்றன. அவற்றில் சுதேசமித்திரன் பத்திரிகை “வசவு மகாநாடென்று” தலையங் கமிட்டு அடியிற் கண்ட ஒப்பாரியைச் சொல்லிக்கொண்டு அழுகின்றது. அவற்றில் முக்கிய மான சிலவற்றைக் கீழே குறிப்பிட்டு அதற்குச் சமாதானம் எழுதுவோம்.
1 “இந்த மகாநாட்டிற்கு ஜனங்கள் அதிகமாக வரவில்லையே யென்று
ஸ்ரீமான். டாக்டர். சி. நடேசமுதலியார் சொன்னதால், இம்மகாநாட்டிற்கு பிராமணரல்லாதார் ஆதரவு இல்லை” யென்பது.
2 “சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதி கனம் யாதவரும் கூடி பிராமணர்களை நன்றாகத் திட்டினார்கள்” என்பது.
3.“இந்த மாகாணத்திலும் பம்பாய் மாகாணத்திலும் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரப் பதவியிலிருக்கின்றது, ஜனங்களுக்கு இவர்களால் என்ன செய்யப் பட்டிருக்கிறது” என்பது.
4.“பம்பாய் மாகாணத்தில் மதுவிலக்கு விஷயமாய் ஜஸ்டிஸ் கட்சி யாரின் ஒரு லக்ஷியத்தை அந்த கவர்ன்மெண்டார் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இந்தியா கவர்ன்மெண்டார் அதை நிராகரித்துவிட்டனர். அதன் மேல் பம்பாய் மந்திரி ராஜிநாமாச் செய்தாரா?” என்பது.
“தென்னாப்பிரிக்கா இந்தியரிடம் அநுதாபம் கூறி ஓர் தீர்மானம் செய்யப்பட்டது. அதை அமுலுக்குக் கொண்டுவர கவர்னர் ஜெனரலோ, அரசர் பெருமானோ நிராகரித்துவிட்டால், கனம் பனகால் இராஜா, கனம் யாதவர் தங்கள் கவர்ன்மெண்டின் மூலமாக இராஜப்பிரதிநிதிக்கு வலியுறுத்த ஏற்பாடு செய்வார்களா?” என்பது.
6.“பிராமணர்களைத் திட்டினால் மாத்திரம், கவர்ன்மெண்டார் சுய ஆட்சி அதிகாரம் கொடுத்துவிட மாட்டார்கள், வருடமொருமுறை தீர்மானம் செய்தாலும் கொடுத்துவிட மாட்டார்கள், உடனே சுயராஜ்யம் பெற வேறு என்ன செய்வார்கள்? எனவே, ஜனங்கள் மெச்ச சுயராஜ்ய அதிகாரம்
குடி அரசு - 1925 422
கேட்டுவிட்டு: அதிகாரவர்க்கம் மெச்ச அவர்களுக்குத் துணை நிற்பார்கள்.” என்பது.
ஸ்வராஜ்யா பத்திரிக்கையின் மாரடிப்பு
சுதேசமித்திரன் சொன்னதில் சிலதையே சொல்லி, இப்பத்திரிகை அடித்துக்கொண்டதோடு, “தொழிலாளருக்கு என்ன செய்தார்கள்?” “ஒடுக்கப் பட்டவருக்கு என்ன செய்தார்கள்?” “வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு என்ன செய்தார்கள்?” “யாராவது சிறைக்குப் போனார்களா?” “ஜில்லா, தாலூக்கா சபைகளில் அக்கூட்டத்தினரைச் சேர்ந்தோரே அதிகம். ஸ்தல சுய ஆட்சி இலாகா அந்தக் கட்சித் தலைவர் கையிலேயே இருக்கின்றது; அதனால் ஜனங்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?” என்று கேட்கிறது.
“மகாநாட்டுக்கு ஜனங்கள் அதிகமாய் வரவில்லையென்று ஸ்ரீமான் டாக்டர் நடேச முதலியாரே சொன்னதால், இம்மகாநாட்டுக்குப் பிராமணரல் லாதார் ஆதரவில்லையென்பது விளங்குகிறதென்று” இரண்டு பத்திரிகைகளும் கேட்கிறது.
பதில்
*ஸ்வராஜ்யா' வாவது, “சுதேசமித்திரனா "வது இன்னும் எந்த பிராமண பத்திரிக்கையாவது அந்த மகாநாட்டிற்கு இத்தனை பெயர்கள் தான் வந்தார். களென்று எழுதவேயில்லை. யாரார் வந்தார்களென்று அவர்கள் பெயராவது எழுதவே இல்லை. இவ்வளவு அல்ப புத்தி தம்மிடம் இருப்பதை மறந்து விட்டு, மரியாதைக்காக பெருந்தன்மையோடு நமது கூட்டத்திற்கு வர: வேண்டிய ஜனங்கள் வரவில்லையேயென்று ஸ்ரீமான். நடேச முதலியார் சொன்னால், அந்த வார்த்தையை முன்னூற் பிடித்துக்கொண்டு, பிராமண ரல்லாதார் மகாநாட்டுக்குக் கூட்டம் வரவேயில்லை; அது சரியான பிரதிநிதித் துவமல்லவென்று சொல்லுவது, எவ்வளவு சின்னத்தனம். 21-ந்தேதி ஜஸ்டிஸ் பத்திரிக்கையில் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் முக்கியமானவர்களென்று சொல்லி சுமார் 150 கனவான்களுடையவும், சீமாட்டிகளுடையவும், பெயரைக் குறிப்பிட்டு விக்டோரியா பப்ளிக் ஹால் பிடிக்காமல், திரளான பிரதிநிதிகள் வந்தார்களென்று எழுதியிருக்கிறது. அதில் ஏறக்குறைய, சட்டசபை மெம்பர்.
கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், மகாராஜாக்கள், தாலூகா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இவைகளின் தலைவர்கள், அங்கத்தினர்கள்,ஜட்ஜ், திவான்முதலிய வேலைகள் பார்த்து இளைப்பாறும் கனவான்கள், பெரிய மிராஸ்தாரர்கள், பிரபல வர்த்தகர்கள், கிறிஸ்தவ கனவான்கள், மகமதிய கன வான்கள், தாழ்ந்த வகுப்பாரென்று கூறப் படும் வகுப்பைச் சேர்ந்த கனவான்
கள், சர்வ கலாசாலை அதிகாரிகள், வைதீக ஒத்துழையாமையைச் சேர்ந்த வர்கள், சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர்கள், முதலிய கனவான்களாகவே
சுமார் 150 பேரும், மற்றும் தொழிலாளிகள், ஏழைக் குடியானவர்கள், நடுத்தர
423 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
வகுப்பார்கள் ஆகிய அனைவருமாய் மகாநாட்டின் ஸ்தலம் எவ்வளவு இடம் கொள்ளுமோ அவ்வளவும் நிறைந்து, மேற்கொண்டும் வெளியில் இடம் பிடிக்காமல் கூட்டமாகவும் ஜனங்களிருக்க, அவற்றை இம் மாதிரி தங்கள். பத்திரிக்கையில் திரித்துக்கூறி விஷமப்பிரசாரம் செய்திருக்கிறது. இவற்றை நாம் ஓர் கேள்வி கேட்கிறோம். அதாவது தேசத்துக்கே பொதுவான தென்றும், மிகுந்த செல்வாக்குடையதென்றும், யாரோ சிலர் தவிர, மற்றும் எல்லோராலும். ஆதரிக்கப்படுகிறதென்றும் சொல்லுகிறதும், 33 கோடி ஜனங்களுக்கு பிரதிநிதி சபையாயிருக்கிற காங்கிரஸ் மகாசபையின் பேரால், தமிழ் நாட்டில்
2 கோடி ஜனங்களுக்கு மேலாக பிரதிநிதி ஸ்தானம் பெற்றதும், பிராமணர்: களால் தமிழ்நாடு காந்தியெனக் கொண்டாடத்தக்கவருமான, திரு.வி. கலியாணசுந்தர முதலியார் தலைமையில் நடந்ததுமான, காஞ்சீபுரம் மகா
நாட்டுக்கு எத்தனை பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்? அதற்கு முன் நடந்த திரு வண்ணாமலை, மகாநாட்டுக்கு எத்தனை பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்? இதன் கணக்கைப் போட்டு 2 Y, கோடி ஜனங்களுக்கு வீதாசாரம் பிரித்துப் பார்த்து, பிராமணரல்லாதார் மகாநாட்டுக்கும் வந்திருந்த ஜனங்களை கணக் கெண்ணி வீதாச்சாரம் பிரித்துப் பார்த்திருந்தால், தேசத்தில் எதற்கு யோக்கி யதை வளர்ந்து கொண்டு வருகின்றதென்பது நன்றாய் தெரியவரும். திருவண் ணாமலை மகாநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சுமார் 250 கூட இல்லை யென்பது நமது ஞாபகம். அவற்றில் பல ஜில்லாக்களுக்கும், தாலூகாக் களுக்கும், வேறு ஜில்லாக்காரரும், வேறு தாலூக்காக்காரரும் பிரதிநிதிகளாய்க் கூட இருந்தார்கள். சில ஜில்லாக்களுக்கு இரண்டொருவர்தான் வந்திருந் தார்கள். சென்னையிலிருந்து ஒரு கனவான் தனது கட்சிக்கு மெஜாரிட்டி சம்பாதிப்பதற்காக, தனது ஆட்கள் வசம் ரூபாய்களைக் கொடுத்து அனுப்பி, ஆள் சேர்த்துக்கூட, சரியான படி கூட்டம் சேர்க்க முடியாமற்போய்விட்டது. காஞ்சீபுரத்திலும் மகாநாடு நடந்ததென்று பெயரேயொழிய அங்கும் 250 பிரதிநிதிகள்கூட சேரவேயில்லை. அங்கு வந்திருந்த பிரதிநிதிகளிலேயும், பொது ஜனங்களுக்கு உண்மையான பிரதிநிதிகள் எவ்வளவு பேர்? வரப் போகும் தேர்தல்களில் நின்று ஸ்தானம் சம்பாதிக்க வந்த பிரதிநிதிகள். எவ்வளவு பேர்? தேர்தல்களில் ஏஜண்டு வேலை சம்பாதித்துப் பணமடைய வந்த பிரதிநிதிகள் எவ்வளவு பேர்? ஒரு சமூகத்தாரை ஏமாற்றி தாங்கள். ஆதிக்கம்பெறலாமென்று நினைத்து சூழ்ச்சி செய்ய வந்தவர்கள் எவ்வளவு பேர்? அவர்கள் சொற்படி ஆடவந்தவர்கள் எவ்வளவு பேர்? தங்கள் விளம்பரத்துக்காக வந்தவர்கள் எத்தனைபேர்? என்பதாகக் கணக்குப்போட்டு அவரவர்களையும் கழித்துத்தள்ளி உண்மையாய் தேசத்தின் குறையை எடுத்துச்சொல்லி, அதற்கு வேண்டிய தீர்மானங்களைச் செய்து அந்தப்படி மனப்பூரணமாய், உண்மையாய், உழைக்க வந்தவர்கள் எத்தனை பேர்? என்று கணக்குப்பார்த்தால், பிராமணரல்லாதாரின் மகாநாட்டு யோக்கியதை, காங்கி
ரஸ் மகாநாட்டைவிட சிறந்ததா இல்லையாவென்பது தெரியும். அதைவிட
காஞ்சீபுரம் மகாநாடு கண்ணியமாய் நடந்ததா? சென்னை பிராமணரல்லாதார்
குடி அரசு - 1928. 424.
மகாநாடு கண்ணியமாய் நடந்ததா? என்று பார்ப்பதற்கு, காஞ்சீபுரம் மகாநாட்டில்நிர்வாகம் செய்த தலைவர்களென்போர் நடந்துகொண்ட யோக்கி யதையையும், சென்னை பிராமணரல்லாதார் மகாநாட்டு நிர்வாகிகள் நடந்து கொண்ட யோக்கியதையையும், “குடி அரசு” “தமிழ்நாடு” “நவசக்தி” முதலிய பத்திரிக்கைகளை படித்துப்பார்த்தால் பொது ஜனங்களுக்குத் தெரிய
வரும். அல்லது இந்தப் பிராமணப் பத்திராதிபர்களே, கொஞ்ச நேரமாவது தங்களுடைய ஜாதிப் புத்தியை மறந்து, சத்தியத்தை நினைத்து, நெஞ்சில் கை. வைத்துப் பார்த்துக்கொண்டார்களானால், அவர்களுக்கும் உண்மை
விளங்கும். இப்பொழு தாவது அவர்களுக்கு யோக்கியதை இருக்குமானால், பிராமணரல்லாதாரில் எந்தத் தொழிலுக்கு, எந்த வகுப்புக்கு, எந்த நாட்டுக்கு, எந்த அந்தஸ்துக்கு, எந்தஜில்லாவுக்கு, எந்த தாஜூகாவுக்கு பிராமணரல்லாதார் சார்பாக அம்மகாநாட்டுக்கு பிரதிநிதிகள் வரவில்லையென்பதை எடுத்துக் காட்டட்டும். தேசத்திலும், காங்கிரசிலும், செல்வாக்குள்ளதாய்ச் சொல்லப் படுவதும், காங்கிரசையேதன் சுவாதீனப்படுத்திக்கொண்டதாய்ச் சொல்லப்படு.
வதும், 33 கோடி ஜனங்களின் ராஜீய நன்மைக்குப் பிரதிநிதித்வமாயிருக்கிற தென்று சொல்வதுமான சுயராஜ்யக் கட்சியின் மகாநாடு கூடுகிற காலத்தில் எத்தனை பிரதிநிதிகள் வருகின்றார்கள்? அதில் எந்தெந்த ஜாதியார், எந்தெந்த வகுப்பார், எந்தெந்த தொழிலாளர், எந்தெந்த வகையில் தேசத்திற்காகத் தியாகம் செய்தவர்கள் அதில் கூடுகிறார்கள். முதலாவது, சுயராஜ்யக் கட்சி மாநாடு கூட்டினால் அதன் உண்மைக் கொள்கைகளைப் பற்றி கதவைத் தாழ் போட்டுக்கொள்ளாமல் இவர்களால் பேச முடிகிறதா? மற்றும் 25 கோடி இந்துக்
களின் பாரமார்த்தீக சம்பந்தமான, வருணாசிரம தர்ம முதலிய மகாநாடுகள். கூட்டும்போது எத்தனை பேர் வருகிறார்கள்? எந்தெந்த ஜாதியார் வருகிறார். கள்? இவர்களும், ஏதாவது கூடிப் பேசும்போது கதவைத் திறந்து வைத்துப் பேசக்கூடிய யோக்கியதை இருக்கிறதா? இவற்றையெல்லாம் யோசிக்காமல், மானங்கெட்டவன் சொந்தக் காரன் என்கிற தைரியத்தில் கைவசம் பத்திரிகை. இருக்கிறது, படிப்பதற்கு ஏமாந்த ஜனங்களிருக்கின்றார்கள், சத்தம் போடுகிற வர்களைச் சுவாதீனப்படுத்திக் கொள்ள பணம் இருக்கிறது என்கிற தைரியத்
தின் பேரில் நினைத்தபடியெல்லாம் எழுதியிருக்கிறதே தவிர, வேறு என்ன கடுகளவு யோக்கியம் இருக்கிறது.?
2 “சில பிராமணரல்லாதாரும் அக்ராசனாதிபதி கனம் யாதவரும் கூடி பிராமணர்களை நன்றாய்த் திட்டினார்கள்” என்று எழுதியிருக்கிறது.
சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதியுந்தான் பிராமணர்களைத் திட்டுகிறார்களா? அல்லது தேசமே அவர்களைத் திட்டுகிறதாவென்பதை இவர்கள் கவனிக்கவேண்டும். இந்தியாவிற்கே அருந்தனமாய் மதிக்கப்படு
பவரும், உலகப்பெரியாருமான மகாத்மா காந்தி, இந்தப் பிராமணர்களைப்
425 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
பற்றி சொல்லும்போது, இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த அக்கிரமத்தைவிட நமது பிராமணர்கள் செய்தது குறைந்ததல்ல வென்று சொல்லியிருக்கிறார். ஸ்வாமி விவேகாநந்தர், பிராமணர்கள் கக்கின விஷத்தால் தான் இந்தியா கெட்டதென்றும், அவர்கள் விஷத்தைத் திரும்ப அவர்களேதான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அந்தப் பிராமண விஷம் எடுபட்டாலல்லாது, இந்தியாவுக்கு விடுதலையில்லையென்றும், சொல்லியிருக்கிறார். பெரிய தியாகியும் தேசபக்தருமான தேசபந்து தாஸ் அவர்கள் தனக்கு அதிகார மிருந்தால், பிராமண ஸ்திரீகளையெல்லாம் பிடித்து, தீண்டாதவர்களுக்கு ஒப்புவித்து விடுவேன் என்று தனக்கு அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தைக்
காட்டியிருக்கிறார். இந்திய ரிஷியான ஸர்.பி.ஸி.ரே அவர்கள், இந்தியாவுக்கு
சுயராஜ்யம் வேண்டுமானால் பிராமணர்களையெல்லாம், மூட்டையில்
போட்டுக்கட்டி, அத்லாந்திக் மகாசமுத்திரத்தில் போட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இவையெல்லாம் புகழுரைகளா? இன்னும் இந்தப் பிராமணர்களால் மதிக்கப்பட்டவர்களும், மதிக்கப்படுகிறவர்களுமான ஸ்ரீமான்கள். டாக்டர். வரதராஜலு நாயுடு, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், வி.சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆரியா, வி.ஓ.சிதம்பரம் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை, எஸ். இராமநாதன், இராமச்சந்திரச் செட்டியார், சுப்பிரமணிய நாயினார், இராமசாமி ரெட்டியார், இராமநுஜ ரெட்டியார், ஆதிகேசவலு நாயக்கர், சிங்காரவேலு செட்டியார், கந்தசாமி பிள்ளை, சுப்பையா, சாமிநாதஞ் செட்டியார், வெங்கிடகிருஷ்ண பிள்ளை, பவானி சிங், சொக்கலிங்கம்பிள்ளை, வயிசு. ஷண்முகம் செட்டியார், ராயசொக்கலிங்கம் செட்டியார், தியாகராய ஞானியார், சுந்திரம் பிள்ளை, ஹமீத்கான் ஆகிய தேசபக்தர்கள், தேசத்துக்காக ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை, நான்கு தடவை சிறைக்குச் சென்றவர்கள், ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் தேசத்துக்காக ஜெயிலுக்குச் சென்றவர்கள், பீ.ஏ.எம்.ஏ.,பி.எல் முதலிய பட்டதாரிகள், வைதீக ஒத்துழையாதார், நடுக் கட்சியார், சுயராஜ்யக் கட்சியார் தொழிலை விட்டவர்கள், தங்கள் வரும் படியை விட்டவர்கள் என்று சொல்லப்படும் இவர்களும், இன்னும் அநேக பெரியார்களும், இன்னும் சில ஜில்லா காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், தாலூகா காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், காங்கிரஸ் நிர்வாக மெம்பர்களும், மாகாண காங்கிரஸ் தலைவர்களும், காரியதரிசிகளும், நிர்வாக மெம்பர்களும், மாகாண
ஜில்லா, தாலூக்கா மகாநாட்டுத் தலைவர்களும் எல்லாருந்தான் இந்தப் பிராமணர்களைத் திட்டுகிறார்கள். ஸ்ரீமான். கலியாணசுந்தர முதலியார். போன்ற இரண் டொருவர் (அதுவும் வெளியில் மாத்திரம் சொல்வதில்லையே யொழிய மனதில் அடக்கியடக்கியே இளைத்துப் போகின்றார்களென்று சொல்லலாம்.) தவிர, வேறு யார் இவர்களை வாழ்த்துகின்றார்களென்பது
நமக்குத் தெரியவில்லை. இந்த நிலைமையில், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல், ஜஸ்டிஸ் கட்சிக்காரரை மாத்திரம், தங்களை வைகிறார்கள், வைகிறார்களென்று ஓலமிடுவதில் அர்த்தமென்ன?
குடி அரசு - 1925. 426
3.“இந்த மாகாணத்திலும், பம்பாய் மாகாணத்திலும், ஜஸ்டிஸ் கட்சி அதிகாரப் பதவியிலிருக்கிறது: ஜனங்களுக்கு இவர்கள் என்ன நன்மை செய்து விட்டார்களென்று” எழுதியிருக்கிறது.
பதில்
இந்த இரண்டு மாகாணத்திலும், உள்ள பிராமணர்கள், இவர்களை எதிர்த்து, இந்த ஸ்தானங்களைப்பிடுங்கிக் கொள்ளவேண்டுமென்ற கருத்துக் கொண்டே பிராமணரல்லாத மந்திரிகளை, ஒரு வேலையும் செய்ய வொட்டா
மல் தடுப்பதே தங்கள் கொள்கையாக வைத்துக்கொண்டு, அதற்கு ஒரு கட்சியை உண்டாக்கி, தங்கள் பணத்தினாலும், பத்திரிக்கையினாலும், தப்பான
வழியில் பாமர ஜனங்களையும் ஏமாற்றி சதா சர்வ காலம், மந்திரிகளோடு தொல்லை கொடுப்பதும், இவர்களுக்குப் பதில் சொல்லுவதிலேயே மந்திரிகளுடைய காலத்தைக் கழிக்க வேண்டி வருவதும், கொஞ்ச நஞ்சம் ஏதாவது வேலை செய்யலாமென்று ஆரம்பித்தால், இந்த இடமே போய் விடுமே. பிறகு அதில் பிராமணர்கள் வந்து உட்கார்ந்து கொண்டு, அடியோடு தங்கள் சமூகத்தை ஒழித்துவிடுவார்களே, இதுசமயம் நல்லது ஒன்று செய்ய முடியாமற் போயினும், கெட்டது செய்யவாவது கொடு மைக்காரர்களுக்கு இடம் கொடுக்காமல் தப்பித்துக் கொண்டால் போதும், என்கிற நிலைமையில், அவர்களிருக்கும்படி இவர்கள் செய்துவிட்டதோடல்லாமல், இவ்வளவையும்
தப்பி, தேவஸ்தான மசோதா, கல்வி மசோதா, தொழிலாளருக்கு உபகார மசோதா முதலியதுகளைச்செய்யத்தான் இரண்டொரு நன்மைகளைக்கூட தொலைப்பதற்கு பல சூழ்ச்சிகளும், தந்திரங்களும் செய்து கொண்டு, மந்திரிகள் என்ன செய்தார்களெனக் கேட்பது யோக்கியமாவென்பதை வாசகர்களே கவனிக்கட்டும்.
4.“பம்பாய் மாகாணத்தில் கவர்மெண்டார் ஜஸ்டிஸ் கட்சியாரின் மது விலக்குத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டாலும், இந்தியா கவர்ண்மெண்டார். அதை நிராகரித்து விட்டார்களே: அதன்மேல், ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள். ராஜீநாமாச் செய்தார்களா?” என்பது.
பதில்
இது எவ்வளவு சுவாதீனம் கெட்ட கேள்வியென்பதை, கொஞ்சமாவது தங்களுக்கு மானம், வெட்கம் இருந்திருக்குமேயானால், நன்றாய் உணர்ந் திருப்பார்கள். ஜஸ்டிஸ் கட்சியாரை ஏன் ராஜீநாமாச் செய்யவில்லையென்று கேட்கிற சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த இந்தப் பிராமணர்கள் தங்கள் பிரயத் தனத்தால் இந்தியா சட்டசபையில் நிறைவேறின, ஒரு சத்தில்லாத ராஜீய அமைப்புத் தீர்மானத்தை ராஜப்பிரதிநிதி நிராகரித்துவிட்டாரே; அப்பொழுது இவர்கள் ராஜிநாமாச் செய்தார்களா? இவர்களாவது, தங்கள் காரியம் அரசாங்
கத்தில் செல்லாவிட்டால், ராஜீநாமாச் செய்து விடுகின்றோமென்று, பாமர
427 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
ஜனங்களான ஏழை வோட்டர்களிடம், வாக்குத் தத்தம் செய்து, மகாத்மாவின் ஒத்துழையாத் திட்டத்தையும் பாழாக்கிவிட்டு, சட்டசபைக்குச் சென்ற பொய் சத்தியகீர்த்திகள்! அப்படியிருக்க, இவர்களே ராஜீநாமாக் கொடுக்காமல், இன்னமும் தொங்கிக் கொண்டு, போதாக்குறைக்கு சம்பளம் வருகிற உத்தி யோகத்தையும் பெற்றுக் கொண்டு, சட்டசபைகளை ஒழுங்காய் நடத்திக் கொடுக்க, அடிமைத்தனத்தையும் பூண்டு கொண்டு, இருப்பதைக் கவனிக் காமல், ஜஸ்டிஸ் கட்சியார் ஏன் ராஜீநாமாக் கொடுக்கவில்லை யென்று கேட்க வந்து விட்டார்கள். இது தான் நிர்வாணமாய் நின்றுகொண்டு எதிரில் நிற்பவனைப் பார்த்து நீயேன் கோவணங் கட்டிக்கொண்டிருக்கிறாய், உனக்கு வேஷ்டியில்லையா? என்று கேட்பது போலிருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சிக்காரர், தங்கள் காரியங்களை ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்ளாவிட்டால் ராஜிநாமாக் கொடுத்துவிட்டு வெளியில் வந்து விடுகிறோமென்று, எங்காவது, எப்போ தாவது, யாரிடத்திலாவது சொல்லியிருக்கிறார்களா? இதை வாசகர்களே நன்றாய்க் கவனிக்க வேண்டும்.
5.“தென்னாப்பிரிக்கா, இந்தியரிடம் அநுதாபம் காட்டி ஓர் திட்டம் ஏற்பாடு செய்து தீர்மானம் செய்திருக்கிறது, இதை அரசாங்கத்தார் நிராகரித்து விட்டால் கனம் பனகல் இராஜா, கனம் யாதவர் வலியுறுத்த ஏற்பாடு செய்வார். களாவென்று” கேட்கிறது.
பதில்
இந்தியர்கள் கல்பாத்தித் தெருவில் நடக்கக்கூடாதென்று பிராமணர்கள். தடுத்தபோது, சர்க்காரும், சட்டசபையும் அநுகூலமாயிருந்தும், பிராமண மந்திரியான ஸர்.சி.பி.இராமசாமி ஐயர் என்ன சாதித்துவிட்டார்? நல்லது செய்யாவிட்டாலும், கெடுதி செய்யவில்லையென்றாவது ஜனங்கள் நினைப் பதற்கு யோக்கியமாய் நடந்து கொண்டாரா? பிராமண கக்ஷி மந்திரிக்கு ஓர்.
சட்டம், பிராமணரல்லாத மந்திரிக்கு ஓர் சட்டம் நமது நாட்டுப் பிராமணர்:
களுக்கு ஏற்பட்டிருக்கிறது போலும். இது கண்ணாடி வீட்டில் குடியிருக்கிற வன், கல்வீட்டின் மேல் கல்லெடுத்துப்போடுவதுபோல் இருக்கிறது.
6.“பிராமணர்களைத் திட்டினால் மாத்திரம், சுயராஜ்யம் கொடுத்து விட
மாட்டார்கள்; வருடமொருமுறை தீர்மானம் செய்ததினால் மாத்திரம் சுயராஜ்
யம் கொடுத்துவிடமாட்டார்கள்; இதெல்லாம் ஜனங்கள் மெச்சுதலுக்குச் செய்யப்படும் தீர்மானங்கள்தான்; கடைசியாக இவை அதிகாரவர்க்கத்துக்குத் தான் துணையாகும்” என்று எழுதியிருக்கிறது.
பதில்
இது எப்படியோ இருக்கட்டும். இதைவிட இந்தப் பிராமணக் கட்சியா ரான சுயராஜ்யக் கட்சியார் என்ன சாதித்து விட்டார்கள்? இரவும், பகலும்,
தூக்கத்திலும் கனவிலும், பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், அவர்களைப்
குடி அரசு - 1925 428
பற்றிப் பத்திரிக்கைகளில், பொய்யும், புளுகும் எழுதி அயோக்கியப் பிரசாரம் செய்வதும், இதற்குதவியாய், ஆங்காங்கு கீழ் மக்களையும், மான வெட்க மில்லாதவர்களையும் நிரூபர்களாக வைத்துக்கொள்ளுவதும், ஆங்காங்கு வயிற்றுக்கில்லாதவர்களுக்கு ரூபாயைக் கொடுத்து, பிராமணரல்லாதாரை: வைவதும், தங்களுக்கு வோட் சேகரித்துக் கொடுக்கும்படி செய்வதும், அதோடு பொது மக்கள் ஏமாறத்தகுந்த இரண்டொரு தீர்மானங்களைப் பற்றி வாயால் பேசுவதுமல்லாமல், வேறென்ன இவர்கள் சாதித்தார்கள்! சாதிக்கிறார்.
கள்! சாதிக்கப் போகிறார்கள்!
ஸ்வராஜ்யப் பத்திரிகைக்குப் பதில்.
இதல்லாமல், ஸ்வராஜ்யப் பத்திரிகை “தொழிலாளருக்கு என்ன செய்தார்கள்?” “ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள்?” “வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு என்ன செய்தார்கள்?” யாராவது சிறைக்குப் போனார். களா?” ஜில்லா, தாலூகா ஸ்தல ஸ்தாபன சபைகள் ஆதிக்கம் தங்கள் கையி லிருக்கும்போது என்ன நன்மை ஜனங்களுக்குச் செய்து விட்டார்கள்?” என்று
கேட்டு அழுகிறது.
பதில்
தொழிலாளருக்காக வேலைசெய்த, ஸ்ரீமான்கள். கலியாணசுந்தர முதலியார், சுரேந்திரநாத் ஆரியா, வி.சக்கரைச்செட்டியார், சிங்காரவேலு
செட்டியார், ஜே.என்.ராமநாதன் இவர்களெல்லாம் பிராமணர்களா? பிராமண: ரல்லாதவர்களா? இவர்களுக்கு மேல், பிராமணர்கள் என்ன சாதித்திருக்
கின்றார்கள்? மேலும்,
இப்பொழுது ஐயராய்ப் போகப்பார்க்கும் ஸ்ரீமான்.கலியாணசுந்தர முதலியாரவர்களே, தொழிலாளர் கலவரத்தின் போது தங்கள் விஷயத்தில் பிராமணர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், ஸர்.பி.தியாகராய செட்டியாருட். பட பிராமணரல்லாத அதிகாரிகளும், மந்திரிகளும், தலைவர்களும் எப்படி நடந்து கொண்டார்களென்பதைப் பற்றிப் பலதடவை சொல்லியிருக்கிறார். இது இரகசியமென்றும் சொன்னதினால், இதைப்பற்றி பூராவும் வெளியிட முடியவில்லை, சுருக்கமாய்ச் சொல்வதானால் பிராமணரல்லாத மந்திரிகளின் பிரயத்தனம் இருந்திராவிட்டால், நாங்களெல்லாம் நாடு கடத்தப்பட்டிருப் போமென்று சொல்லியிருக்கிறார்..
ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஸ்தல ஸ்தாபனங்களில், கூடுமானவரையில் ஸ்தானங்கள் அளித்தது, பிராமண ஸ்தலஸ்தாபன நிர்வாகிகள் காலத்திலா?' பிராமணரல்லாத ஸ்தல ஸ்தாபன நிர்வாகிகள் காலத்திலா?'
வைக்கம் சத்தியாக்கிரகத்தில் தொண்டு செய்த ஸ்ரீமான்கள். ஈவிஇராம சாமி நாயக்கர், எஸ்.இராமநாதன், அய்யாமுத்துக் கவுண்டர் முதலியவர்க
ளெல்லாம் பிராமணர்களா? பிராமணரல்லாதார்களா?
429 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
சிறைக்குப்போன ஸ்ரீமான்கள். ஆரியா, தண்டபாணி பிள்ளை, டாக்டர். நாயுடு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, இராமசாமி நாயக்கர் இன்னும் எத்த னையோ எழுத முடியாத கனவான்கள் சிறைக்குப் போனது பிராமணரல்லாத வர்களல்லவா? இன்றையத்தினம் சுயராஜ்யக் கட்சியென்று பேர் வைத்துக் கொண்டு, தாண்டவமாடும் பிராமணர்களில் எத்தனைபேர் இதுகளுக்கு உதவினார்கள் என்பதை இந்தப் பிராமணப் பத்திரிக்கைகள் சொல்லட்டுமே!
ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் ஜனங்களுக்கு என்ன நன்மை என்று கேட்பதாயிருந்தால், ஸ்ரீமான்கள். வி.கிருஷ்ணசாமி ஐயரும், ஸர்.பி.எஸ். சிவசாமி ஐயருமான பிராமணர்கள் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் இருந்து நடத்தினதைவிட, பிராமணரல்லாதார் இருந்து நடத்தினதில் என்ன மோசம். ஏற்பட்டுப்போய்விட்டது? பிராமணர்களிருந்த காலத்தில், பிராமணர்களையே நியமித்துக்கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் இருக்கிற காலத்தில், பிராமணர்களுக்கும் ஒன்றிரண்டு ஸ்தானங்களைக் கொடுத்துவிட்டு, பிராமண ரல்லாதாரில், தீண்டாதார் உட்பட பலரையும் நியமித்துக்கொண்டு வருகிறார்.
கள். வேறு என்ன செய்யவேண்டும்? வேறு என்னதான் செய்ய அந்த ஸ்தானங்கள் உதவும்? இவைகளையெல்லாம் கவனிக்காமல், தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பதுபோல், பிராமண: ரல்லாதாரை மூளை இல்லாதவர்களென்றுநினைத்துக்கொண்டு, பத்திரிக்கை
யினாலும், பணத்தினாலும், பிரசாரத்தினாலும் எப்படியாவது ஏமாற்றிவிடலா மென்கிற ஆணுவத்தின் பேரில் செய்கிற விஷமப் பிரசாரம் என்பதை பிராமணரல்லாதார் உணர வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு பிராமணப் பத்திரிக்கைகளையும், பிராமணப் பிரசாரங்களையும், பிராமணரல்லாதார். வெறுக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு பிராமணரல்லாதாருடைய முன்னேற்றம் சமீபத்திலிருக்கின்றதென்பதையும் உணர வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 27.12.1925
குடி அரசு - 1925 430
பெரியார் கருத்துக்கருஷலம் மகத்தாண ொகுப்புப்பணி
பழைய “ குடிஅரசு ", “பகுத்தறிவு”, “புரட்சி” ஆகியவற்றில் 1925 முதல் அய்யா அவர்கள் எழுதிய எழுத்துக்கள், பேச்சுக்கள், குறிப்புக்கள் ஆகியவற்றை ஆண்டுவாரியாகத் தொகுக்கும் அரிய பணி திருச்சியில்
துவங்கியது.
பகுத்தறிவுப் பேராசிரியர்களும், ஆசிரியர் அணி நண்பர்களும், பெரியார் நூற்றாண்டு வளாகக் கல்வி நிலையங்களின் செயலாளர் புலவர் கோ. இமயவரம்பனின் ஒத்துழைப்போடு இப்பணியை நடத்தினர். பெரியார் கருத்துக் கருஷலத் தொகுப்புப்பணியில் ஈடுபட்ட மானமிகு தோழர்கள்.
புலவர் கோ.இமயவரம்பன்,
பெரியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி.
முதல்வர் கோ. கலியராஜுலு,
திருச்சி பேராசிரியர் க. நெடுஞ்செழியன்,
பேராசிரியர் திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன், பகுத்தறிவு ஆசிரியர் அணிச் செயலாளர்
நண்பர் மெ. ஆரோக்கியசாமி,
பேராசிரியர் செ. ஆ வீரபாண்டியன்,
திருச்சி ந.வெற்றியழகன், புதுக்கோட்டை வீ.செல்லப்பன்,
தஞ்சை பெ.மருதவாணன், தஞ்சை பகுத்தறிவாளர் கழகச்
செயலாளர் இரா.இரத்தினகிரி,
தஞ்சை இரா. பாண்டியன்,
லால்குடி ப. ஆல்பர்ட்
ஆகியோர் தலைமையில், சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து) கீழ்க் கண்ட தோழர்கள் உதவியாளர்களாகப் பொறுப்பேற்றுச் செம்மையான பணியாக குடியரசிலிருந்து பெயர்த்து எழுதும் பணி நடைபெற்றது.
431 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
புதுக்கோட்டை வி.அருள்செல்வன், கு.மலர்க்கண்ணன், இரா.நட ராசன், திருச்சி தாளக்குடி ஆஃபி விக்டர், கோமாகுடி பா.இராசேந்திரன், அவெற்றிவேந்தன், கஇராமகிருட்டிணன், ஆறு. இராமலிங்கம், ப.சரவணன், இரா.உமாபதி, லால்குடி பேரின்பச்செல்வன், துறையூர் ஏஜான், புள்ளம்பாடி
ஆர்.ஜான்ராஜ், தாளக்குடி ஆர்.தனபாலன், பநடராசன், இர.அருள்மொழித் தேவன்,அ, திருமாவளவன், பி.எம்.கரிகாலன், திருச்சி ஆர்.திருமாவளவன், தஞ்சை ஆசிரியர் நஆறுமுகம், வேதாரண்யம் க.நடராசன், வேதாரண்யம் ஆசிரியர் சி.புகழேந்தி, புல்லவராயன் குடிகாடு ஆசிரியர் ச.அறவானந்தன், பாப்பாநாடு வெ.சின்னையன், தஞ்சை ம.லெனின், கடன்குடி இரா.இளங் கோவன், சின்னசேலம் கு.மாரிமுத்து, சேலம் உழவர்பட்டி ந. மதிவாணன், தெங்கிய நத்தம் ஏ. கலைமன்னன், புள்ளம்பாடி ஆசிரியை நவமணி, வேதாரண்யம் செல்லத்துரை.
(விடுதலை தந்தைபெரியார் 105 வது பிறந்தநாள் மலரில்(17.9:1983)
கழக டைரி, திராவிடர் கழக வெளியீடு.
'குடிஅரசு' 1925 எழுத்துப்படியிலிருந்து அறிந்து கொள்ளமுடிந்த படியெழுதிய தோழர்கள் மா. அழகிரிசாமி, சோலை.இளையபாரதி, பிமார்ட்டின், இராமலிங்கம், நடேசன், சுநடராசன்.
குடி அரசு - 1925 432
பிற்சேர்க்கை 11
வரியார் கருத்துக்கருஷலம்
( வதொகுப்புப்பணி )
Collected
Works of Periyar E.V.Ramasamy
( Compilation Work )
தந்தை பெரியார் அவர்களின் எழுத்து, பேச்சு முதலியபடைப்புக்கள் அனைத்தையும் ஆண்டு வாரியாகத்தொகுத்துப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரநிறுவனம் சார்பில் வெளியிடல்.
நோக்கம்
துவக்கம்
திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்விவளாகத்தில் 251983 இல் முதல்கட்டப் பணி துவங்கிற்று.
முதற்கட்டப்பணி 40 நாட்கள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 40 முதல் 50 வரையிலான தொண்டர் களைக்கொண்டு நடைபெற்று இதுவரை கிடைத்துள்ள குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களில் உள்ளவை படி எடுக்கப்பட்டன.
பணிக் காலம் :
ஏறத்தாழ 18 ஆயிரம் பக்கங்களில் 4 லட்சத்து
முதற்கட்டப் பணி :
50 ஆயிரம் வரிகள் எழுதிமுடிக்க, 22,400 மனித மணிநேரங்கள் இதுவரை செலவாகியுள்ளன.
முழுத்தொகுப்புப் பணியின் பக்கங்கள் உத்தேச அளவு
:75,000. வரிகள் : 18,75,000.
: தொகுதிகள் :750 பக்கங்களைக் கொண்ட (டெம்மி? 100 வால்யூம்கள். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்
பதிப்பு ஆசிரியர்:
செயலாளர் கி.வீரமணி
தொகுப்பு ஆசிரியர்
புலவர் கோ. இமயவரம்பன் அவர்கள்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
433
வேண்டுகோள்: இப்பணிக்குப் பெரியாரின் படைப்புக்கள் (பேச்சு, கட்டுரை, நாடகம், உரையாடல் , கடிதங் கள்.வாழ்த்துச் செய்திகள், அறிக்கைகள், பதிப்பு ரைகள், அணிந்துரைகள் மற்றும் புகைப்படங்
கள்! முதலியன வைத்திருப்போர் அனுப்பி உதவுக.
- பெரியார் மாளிகை, திருச்சி - 620 017.
(1984 ஆம் ஆண்டு திராவிடர்கழகம் வெளியிட்ட பெரியார் - பகுத்தறிவு நாட்குறிப்பிலிருந்து )
குடி அரசு - 1925 434
பிற்சேர்க்கை 111
வரியார் கருத்துக்கருஷலம்
( தொகுப்புப்பணி )
Collected Works of Periyar E.V.Ramasamy
( Compilation Work )
நோக்கம்
தந்தை பெரியார் அவர்களின் எழுத்து, பேச்சு முதலிய படைப்புக்கள் அனைத்தையும் ஆண்டுவாரியாகத் தொகுத்துப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வெளியிடல்.
துவக்கம்
திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்விவளாகத்தில் 251983 இல் முதல்கட்டப் பணி துவங்கிற்று.
முதற்கட்டப்பணி 40 நாட்கள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 40 முதல் 50 வரையிலான தொண்டர் களைக்கொண்டு நடைபெற்று இதுவரை கிடைத்துள்ள குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களில் உள்ளவை படி எடுக்கப்பட்டன.
பணிக் காலம் :
ஏறத்தாழ 18 ஆயிரம் பக்கங்களில் 4 லட்சத்து
முதற்கட்டப் பணி :
50 ஆயிரம் வரிகள் எழுதிமுடிக்க, 22,400 மனித மணிநேரங்கள் இதுவரை செலவாகியுள்ளன..
முழுத்தொகுப்புப் பணியின் பக்கங்கள் உத்தேச அளவு
:75,000. வரிகள் :18.75,000. தொகுதிகள் : 750 பக்கங்களைக்கொண்ட (டெம்மி) 100 வால்யூம்கள்.
இரண்டாவது கட்டப்பணி :
20.5.84 முதல் 315.84 முடிய இருபதுக்கும்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
435
மேற்பட்ட தோழர்கள் முனைந்து முதல் அய்ந்தாண்டுக் கருஷலத் தொகுப்புகளை அச்சுக்கு ஆயத்தம் செய்து வழங்கியுள்ளனர்.
பதிப்பு ஆசிரியர்:
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி
தொகுப்பு ஆசிரியர்
புலவர் கோ. இமயவரம்பன் அவர்கள்.
வேண்டுகோள்:
இப்பணிக்குப் பெரியாரின் படைப்புக்கள் (பேச்சு, கட்டுரை, நாடகம், உரையாடல், கடிதங்கள், வாழ்த்துச் செய்திகள், அறிக்கைகள், பதிப்புரை
கள், அணிந்துரைகள் மற்றும் புகைப்படங்கள்? முதலியன வைத்திருப்போர் அனுப்பி உதவுக.
- பெரியார் மாளிகை, திருச்சி - 620 017.
(1985 ஆம் ஆண்டு திராவிடர்கழகம் வெளியிட்ட
பெரியார் - பகுத்தறிவு நாட்குறிப்பிலிருந்து )
குடி அரசு - 1925 436
அருஞ்கசால் வாருன்
அகலாத அரிய செல்வமாய்
அசலாத
அருந்தனமாய் அனுஷ்டானமாய்
ஒழுக்கம், வழக்கம், கடைபிடித்தல், சடங்கு செய்தல் உள்ளங்கையை உயர்த்தி ஆசீர்வதித்தல்
அனுஷ்டித்தல் அபயாஸ்தம்
ஆப்த ஆப்காரி இலாகா
நம்பகமான
மதுவரித்துறை இடம், பற்றுக்கோடு
ஆஸ்பதம் இட்டேரி
நில எல்லைகளில் செல்லும் குறுகிய வழி மற்றவர்கள், பிறர் விளங்கிக்கொண்டு
இதரர்கள் இலங்கிக்கொண்டு
உத்தாரணம் உத்ரணித்தண்ணீர். கண்ணோக்கம் சகோதரப்பாவம்
முன்னேற்றம், ஏறுதல் கரண்டித் தண்ணீர் நோக்கம் சகோதர மனப்பான்மை
சந்தியா வந்தனம்
சூரியத் தோற்ற, மறைவு வேலை
களில் செய்யும் சடங்கு
களிப்பு, நிறைவு (கல்விப்) பட்டம், அணி தானாக, தன்னிச்சையாக,
சம்பிரம் சன்னது
சுதாவாய்
சுயாதினம் சொருபம்
உரிமை, தன்வசமாக்கல்
உருவம், சாயல் தாழ்வானது
தம்மியமுடையது
தர்ம பீமாதிகள்.
தர்மன், பீமன் முதலியோர்
தார தம்மியம்
ஏற்றத்தாழ்வு
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
437
துவேஷம்.
வெறுப்பு பெறற்கரியது
துர்லபம் தேசோத்தாரணம்
நாட்டு முன்னேற்றம்
தொந்தம் நிவேதனம்.
பந்தம், கட்டு படையல்
நிர்த்தாக்ஷண்யம். நிஷ்காமிய கர்மம்
கருணையில்லாமல் பயன் கருதா பணி கொடுமை
நிஷ்டுரம்
முடுதுணி மெய்ப்பொருள் - உலகியல்
படாம்
பராமார்த்தீகம்
அறிவின்றி
(பரிலா. ரங்கு, பிரிட்ஜ்) சீட்டு விளையாட்டு வகைகள்
பரிலா
பிரவாகம்
வெள்ளம் கணவன் மனைவி
புருடபாரியர் மஞ்ஞை
மயில் பொறாமை, பகைமை:
மாச்சரியம் முன்னுற்பிடித்துக்கொண்டு யத்தனம்
முன் நூல் பிடித்துக்கொண்டு.
முயற்சி சீட்டுவிளையாட்டு வகை
ரங்கு
வதியும் வதுவை
வசிக்கும், குடியிருக்கும்
திருமணம் வரையறைத்து
வரம்பறுத்து வாக்குத்தத்தம்
வாக்குறுதி பேச்சுத்திறன்
வாசாலகம் விதந்தோதிய
பாராட்டிப்பேசிய
வித்யார்த்தி வியக்தமாக
மாணவர் வெளிப்படையாக
வழக்கு கோடை காலம்
வியாஜ்யம் வேடைகாலம் ஜட்கா
குதிரை வண்டி
குடி அரசு - 1925
438 439 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1
குடி அரசு - 192 டி அரசு 5 440